தொல்தமிழியச் சிந்து நாகரிகம் பி. இராமநாதன் க.மு., ச.இ., தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : தொல்தமிழியச் சிந்து நாகரிகம் ஆசிரியர் : பி. இராமநாதன் க.மு., ச.இ., பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 200 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 125/- படிகள் : 1000 நூலாக்கம் : மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் & வி. சித்ரா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் 7/2, செம்படத் தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை - 600 015. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. உள்ளடக்கம் நுழையுமுன் 4 முன்னுரை 7 1. தோற்றுவாய் : (மாந்த இனத்தின் தொல் வரலாறு; மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்; முதலியன) 15 2. சிந்து நாகரிக அகழ்வாய்வுகள் 49 3. நகரமைப்பு, கட்டடக் கலை, வீடமைப்பு 56 4. சிந்து நாகரிக மக்கள் வாழ்வியல் 61 5. சிந்து நாகரிக எடை அளவுகள் 73 6. சமயம் 78 7. சிந்து நாகரிகத்துக்கும், எலாம், சுமேரிய, எகிப்து முதலிய நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஹீராஸ் 1953 நூலின் கருத்துகள் 95 8. சிந்து நாகரிகமும் ஆரியர் வருகையும்; அதன் பின்னரும் சிந்து நாகரிக மரபுச் செல்வம் நின்று நிலவும் பாங்கும் 109 9. சிந்து நாகரிக முத்திரை எழுத்துகள் 133 10. வரலாற்றுக்குச் சற்று முந்தைய Proto historic காலத் தமிழக வரலாறு 174 முக்கியமான நூல்கள் கட்டுரைகளின் பட்டியல் அ. ஞால முதன் மொழி ஆய்வு சார்பான நூல்களும் கட்டுரைகளும் 177 ஆ. அகழ்வாய்வு அறிக்கைகளும் சிந்து நாகரிகம் சார்ந்த ஆய்வு நூல்களும் 185 இ. சிந்து நாகரிக எழுத்துகளைப் பற்றிய ஆய்வுகள் 192 இணைப்பு படங்கள் (இருபக்க அளவில் - மடிக்கப்பட்ட - 4 தாள்கள்) நுழையுமுன் தமிழிய மொழி பேசுநர் தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருபவர்கள். (தமிழிய என்பதற்கு, திராவிட என்பது இன்று மொழியியலறிஞர் வழங்கும் இடுகுறிப்பெயர்). ஞால முதன்மொழிக்கு [ஏறத்தாழ 70000 - 50000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியது] மிக நெருங்கியது தமிழ் என்று 1856லேயே கால்டுவெல் கருதினார். தொல்தமிழிய மொழியினரின் வடபாற் பெயர்ச்சியின் Dravidian Ascent ன் பொழுது ஏனைய மொழிக்குடும்பங்கள் (இந்தோ - ஐரோப்பியம், உராலிக், அல்தாய்க், செமித்திக், ஹாமைத்திக் அமெரிக்கப் பழங்குடி மக்களின் மொழிகள்) கார்ட் வெலியன் ஆகியவை கிளைத்தன. இவற்றையெல்லாம் உரிய ஆய்வுப் புலங்கள் (Disciplines of Humanities and Sciences) அண்மைக்காலத்தில் ஏற்றுள்ளன. இந்நூலின் முதல் இயல் இதை விரிவாக விளக்குகிறது. தென்னிந்தியாவிலிருந்து பரவிய தமிழிய நாகரிகமே வடபாற் பெயர்ச்சியில் சிந்து, எலாம், சுமேர், எகிப்து, அனதோலியா - கிரீட், எத்ருஸ்கன் முதலிய நாகரிகங்களாக உருக்கொண்டது என்று ஹால் (1917), ஹீராஸ் (1940) முதலியவர்கள் அன்றே கூறியதை இன்றைய நல்லறிஞர் பெருமளவுக்கு ஏற்கின்றனர் என்பதும்; சிந்து நாகரிகம் [கி.மு. 7000-2000; உச்ச நிலைக்காலம் கி.மு. 2900 - 1900] எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் தொல்தமிழிய நாகரிகமே என்பதும் விளக்கப்படுகின்றன. 2 (i). சிந்து முத்திரைப் பொறிப்பு (ஏறத்தாழ 4000 –பெரும் பாலும் மாக்கல் வில்லைகளில், ஓரிரு சொற்கள் உள்ளன --) வாசகங்கள் தமிழிய (திராவிட) மொழியே என்பது இன்றைய பன்னாட்டு நல்லறிஞர் அனைவருமே (ஹீராஸ், மார்ஷல், பரோ, எமெனோ, சுவெலபில், வால்பர்ட், ராபர்ட்ஸ், ஹபீப், தாபர்) ஒரு முகமாக ஏற்றுள்ளதாகும். எனினும் அப்பொறிப்புகளை தம் வாழ்நாட்பணியாகக் கொண்டு ஆய்வு செய்த / செய்துவரும் ஹீராஸ், நாரசாவ், பேர்சர்வீஸ், வின்டர்ஸ், பர்போலா, மகாதேவன், மதிவாணன், பூர்ணசந்திர ஜீவா, சாலெக் முதலியவர்களுள் எவர் வாசிப்பையும் அறிஞருலகம் முழுமையாக ஏற்கவில்லை; சிற்சில உன்னிப்புகள் சரியாக இருக்கலாம் என்பதை மட்டும் ஏற்கின்றனர். எகிப்திய ரொசெட்டா மும்மொழி பொறிப்பு போன்ற மும்மொழி அல்லது இருமொழிப் பொறிப்பு வருங்காலத்தில் கிட்டினால்தான் இந்நிலை மாறும் . (ii) ஆயினும் இந்நூல் முதல் இயலில் விளக்கியுள்ளதைப் போல, “சிந்துநாகரிகம் தொல்தமிழிய நாகரிகம்” என்ற கோட்பாட்டை 360o வட்டமாக வைத்துக்கொண்டால் 350 பாகை அளவுக்கு ஏனைய (வரலாறு, சமூகவியல், மாந்தவியல், தொல்லியல், மாந்த மரபணுவியல், ரிக்வேதம் முதலிய தொல் இலக்கியங்கள் சார்ந்த) சான்றுகள் ஆதரிக்கின்றன. ‘பொறிப்புகளை வாசிக்க இயலும் அளவுக்கு அவை இல்லை’ என்னும் ஆட்சேபனை 10 பாகை அளவே எனலாம். இந்த உண்மையின் அடிப்படையில் தான், சிந்து நாகரிகம் தொல்தமிழிய நாகரிகம்; அந்நாகரிகப் பொறிப்புகளும் - இன்னும் அனைத்து அறிஞரும் ஏற்கும்படி வாசிக்கப்படாவிட்டாலும் – தமிழிய மொழியாகத்தான் இருக்கவேண்டும் என நேர்மையான அறிஞர் ஏற்கின்றனர். உறங்குவது போல் நடிப்பவர்களைத் தெருட்டல் ஒல்லாது. 3. எமது பதிப்பகம் இந்நூலாசிரியர் எழுதிய தொன்மைச் செம்மொழித் தமிழ்; தமிழர் வரலாறு (இன்றைய நோக்கில் – பண்டு முதல் இன்று வரை) ; உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் ஆகிய சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழரின் தோற்றமும் பரவலும் (வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர்); தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் - தென்பெருங்கடல் ஆய்வுகள் (அலெக்சாந்தர் காந்திரதாவ்); தமிழர் வரலாறு (பி.டி. சீனிவாச ஐயங்கார்) ஆகிய சிறந்த ஆங்கில நூல்களை அவரைக்கொண்டு செம்மையாகத் தமிழாக்கம் செய்து தமிழுலகுக்கு வழங்கியுள்ளது. இந்நூல்கள் அனைத்துமே தமிழ், தமிழர் தொன்மையையும் முன்மையையும் ஆதாரங்களுடன் நிலைநாட்டுவனவாகும். 4. சிந்து நாகரிகத்தைப் பற்றி முழுமையான செய்திகளை, அதுவும் இன்றுவரை வெளிவந்துள்ள நூல்கள், ஆய்விதழ்க் கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூல் ஆதாரங் களுடன் தருகிறது. சிந்து நாகரிகம் தொல்தமிழிய நாகரிகம் என்பதை பிறமொழியறிஞர்களிடம் தெரிவிக்க உதவியாக ஆங்காங்கே (தமிழாக்கத்துடன்) ஆங்கில மூலங்களும் தரப்பட்டுள்ளன. கோ. இளவழகன் முன்னுரை தொல்தமிழிய நாகரிகமாகிய சிந்து நாகரிகம் 1947க்கு முந்திய இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கும் அதிகமான பெருநிலப் பகுதியில் வடமேற்கு இந்தியாவில், 5 இலட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. மெசபொதாமிய, எகிப்திய நாகரிகங்களின் பரப்பைவிட அது அதிகம். சிந்து நாகரிகப் பகுதியில் கி.மு. 2000 ஐ ஒட்டி, மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம். (அப்பொழுது உலகில் இருந்த மொத்த மக்கள் தொகையே 9 கோடி இராது). சிந்து நாகரிகச் சின்னங்கள் உள்ள 1500 இடங்களில் சுமார் 20 இடங்களில் மட்டுமே - மொகெஞ்சோதரோ (அன்றைய மக்கள் bஎதாகை 40,000) ஹரப்பா (25,000 மக்கள்) உட்பட – அகழ்வாய்வு நடந்துள்ளது. அந்நாகரிகம் தொடங்கியது கி.மு. 78000 லிருந்து; சிறப்புற்ற நிலை ஏறத்தாழ 3000-18000. 2. (i) தமிழும் தமிழிய (திராவிட) மொழிக் குடும்பமும் தென்னாட்டிலும் இந்தியாவிலும் “இன்றைக்கு முன் 10000” (10000 இ.மு. = 10,000 B.P) ஆண்டுக்கும் கழிபழங்காலத்துக்கு முன்னரே – ஏறத்தாழ இ.மு. 50000 லிருந்தே இருந்து வந்துள்ளன என்பதை பல்வேறு அறிவியற் புலங்களின் இன்றைய ஆய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. அக்கழிபழங்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வடக்கு, வடமேற்கு நோக்கி நிகழ்ந்த திராவிட மொழி பேசுநர் ஏற்றத்தில் (Dravidian Ascent) அவர்களிடமிருந்தே இந்தோ ஐரோப்பியம், உரால் - அல்தாய்க், முதலிய மொழிக் குடும்பங்களும், சப்பான், கொரியம் முதலிய மொழிகளும் உருவாகியிருக்க வேண்டும் என்பதையும் நுண்மாணுழை புலமிக்க மொழியியலறிஞர் ஏற்கின்றனர். (ii) அதுமட்டுமன்றிப் பின்வருவனவும் ஏற்கப்படும் நிலை உருவாகி வருகிறது. (அ) அந்த திராவிடர் ஏற்றத்தின் வழியாக நேரடி அல்லது மறைமுகத் தாக்கத்தால் உருவானவையே சிந்து நாகரிகம், மற்றும் எலாம், சுமேரியம், எகிப்து, கீழை நண்ணிலக் கரையில் கிரேக்கருக்கு முன்னர் வழங்கிய (லிசியன், லிதியன், காரியன், பெலாஸ்ஜியன், கிரீட் போன்ற) நாகரிகங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்பது ஜெ.எப். ஹெவிட் (1888), ஹெச். ஆர். ஹால், மறைமலையடிகள்; ஹீராஸ், லாகோவாரி போன்றவர்களுடைய கருதுகோள் ஆகும். (ஆ) கடந்த 10000 ஆண்டுகளாக உலகின் வேறெந்தப்பகுதி மக்களுடனும் யாதொரு தொடர்புமின்றி வாழ்ந்த ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் தமிழுக்கும் ஒலியனியல், சொல்லியல், சொற்றொகுதி முதலியவற்றில் இன்றும் காணப்படும் நெருங்கிய ஒப்புமையின் அடிப்படையில் “திராவிடர் ஏற்றம்” கோட்பாடே ஏற்கத்தக்கது என்பதும், அதற்குமாறான `திராவிட மொழி பேசுநர் சுமார் கி.மு. 3000க்குப் பின்னர் மைய கிழக்கு ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள்ளும் தென்னிந்தியாவிற் குள்ளும் இறங்கினர்’ என்று செப்பும் - திராவிடர் இறக்கம் (Dravidian Descent) கொள்கை முழு அபத்தம். 3. இந்நூலின் முதல் இயலில் முன்பத்தியிற் கண்டவற்றை நிறுவுமுகத்தான் பல்வேறு அறிவியற் புலங்களில் இன்றுள்ள நிலையின்படியான தெளிவான ஆதாரங்களுடன் மாந்த இனத்தோற்றமும் பரவலும்; மொழியின் தோற்றமும் பரவலும் பற்றிய செய்திகள் தரப்படுகின்றன. (அவ்வியலின் இறுதியில் பின் இயல்களில் வரும் செய்திகளின் சுருக்கமும் தரப்படுகிறது.) இயல்கள் 2-7ல் சிந்து நாகரிகம் சார்ந்த பல்வேறு கூறுகள் (வாழ்வியல், கலை, எடை - அளவுகள், கலை, பண்பாடு, சமயம்) பற்றிய செய்திகள், அந்நாகரிகம் பற்றிரிக் வேதம் முதலிய வேத புராணங்களிலிருந்தும் சுமேரிய நாகரிக எச்சங்களிலிருந்து மறைமுகமாகத் தெரிய வருபவை ஆகிய வற்றிலிருந்து அந்நாகரிகம் தமிழிய (திராவிட) நாகரிகம் என்பதையும் அந்நாகரிக முத்திரைப் பொறிப்புகளின் மொழி கண்டிப்பாக தமிழிய (திராவிட) மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் பன்னாட்டு அறிஞர்களும் ஏற்பது தெற்றென விளங்கும். 4. சிந்து நாகரிகம் தொல்தமிழிய (தொல்திராவிட) நாகரிகம் என்பதற்கான முழுமையான அனைத்துப் புலங்கள் சார்ந்த சான்றுகளை 3 6 0o கொண்ட வட்டமாகக் கருதினால் பின்வரும் வட்டத்தில் கண்டவாறு அவற்றைப் பகுக்கலாம். சிந்துப் பொறிப்புகள் அனைவரும் ஏற்கும்படி வாசிக்கப்படாமல் இருக்கும் தற்போதைய நிலைவெறும் 10o அளவு ஆகவே கருதுவது சரி; அந்த 10o அளவு சான்றை விட்டுவிட்டாலும் ஏனைய 3 6 0o சான்றுகளே அந்நாகரிகத்தைத் தொல்திராவிட நாகரிகம் என ஏற்றிடப் போதுமானவை என்பதை நல்லறிஞர் ஏற்பர். [ஒவ்வொருவகைச் சான்றுக்கும் இத்தனை பாகை (டிகிரி) என்று தந்துள்ளது. ஒரு குத்துமதிப்பு விளக்கத்துக்காக மட்டுமே! ஒவ்வொருவகைக்கும் பாகை எண்ணிக்கையை வேறுவகையிலும் அமைத்துக் கொள்ள மறுப்பில்லை!!]:- சான்றுகள் விவரம் A: 90o கி.மு. 10000லிருந்து உள்ள காலம் சார்ந்த வரலாற்றுச் சான்றுகளாக கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகக் கிட்டியுள்ளவை: மாந்த இன மரபணுவியல் முதலியவை அடிப்படையில் தற்கால மாந்தர் AMH இ.மு. 70000க்குப் பின்னர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உலகின் பல்வேறு பிற பகுதிகளில் எந்தெந்தக் கால கட்டங்களில் குடியேறினர் என்பது பற்றிய முடிவுகள். வரலாற்று மொழியியல் - தொல்லியல் இரண்டு வகைச் சான்றுகளின் மூலம் பல்வேறு மொழிப் பெருங் குடும்பங்களின் தோற்றமும் பரவலும் பற்றிய முடிவுகள் (குறிப்பாக வேதமொழி சம்ஸ்கிருதம் உள்ளிட்ட இந்தோ - ஐரோப்பிய மொழிகள் இ.மு. 8000 - 2000 கால அளவில் பரவிய வரலாறு B : 90o சிந்து அகழ்வாய்வில் கிட்டிய சான்றுகள் பின்வரும் கூறுகள் தமிழியம் சார்ந்தவை ஆரியமல்ல என நிறுவப்பட்டுள்ளன. 1) கட்டடவேலைகள் (செங்கல் பரிமாணம்; வட்டக்கிணறுச் செங்கல் மட்பாண்டங்கள்; போன்றவற்றுக்கும் (ஆதிச்ச நல்லூர் முதலிய) தென்னாட்டுத் தலங்களில் கிட்டியவற்றுக்கும் இடையில் உள்ள ஒப்புமை; நீர்மேலாண்மை. 2) எடை அளவுகள் இன்றும் தமிழரிடையே உள்ள சிற்றிலக்க முறை சார்ந்தவை. 3) ஏனங்களின் செப்புக் கலவையில் 4% ஆர்செனிக் காணப்படுவது. 4) மொகஞ்சொதரோவிலும் ஆதிச்சநல்லூரிலும் குதிரை எச்சங்கள் இல்லாத நிலை. C: 90o சிந்து அகழ்வாய்வில் கிட்டியவற்றையும் இன்றைய இந்தியப் பண்பாட்டுத் தன்மைகளையும் ஒப்பு நோக்கும் பொழுது பண்பாடு, சமயம், பல்வேறு கலைகள், அறிவியற் கூறுகள், தொன்மங்கள் வாணிபப் பொருள்கள் முதலியவை யெல்லாம் திராவிடச் சார்பாகவே உள்ளமையும் அந்தத் திராவிடச் சார்புத் தன்மையானது கி.மு. 1500ஐ ஒட்டி உருவாகிய ரிக்வேத த்திலேயே காணக்கிடப்பதும்) மேலும் சிந்து நாகரிக, சங்ககால நாகரிக, சுமேரிய, எலாம் பிணைப்புகள் -- இடப்பெயராய்வு உட்பட. D: 10oசிந்து எழுத்துப் பொறிப்புகள் எம்மொழி? (இதுவரைத் திட்டவட்டமாக தமிழிய மொழி என யார் வாசிப்பின் மூலமும் நிறுவப்படவில்லை. ஆனால் தமிழியாகத்தான் இருக்க முடியும் என்பது நல்லறிஞர் கருத்து. E: 35o சிந்துப் பொறிப்புகளின் மொழி கண்டிப்பாக தமிழ் போன்ற ஒட்டுநிலைமொழிதான் என்பது அனைவர் முடிவு. F:45o வேதமொழி, சம்ஸ்கிருதம் இவற்றிலேயே திராவிட ஒலியன்கள் (phonemes) சொற்கள், இலக்கண மொழியியற் கூறுகள் இருப்பதை பரோ, எமனோ, கைப்பா, மறைமலையடிகள் பாவாணர், லெவிட் போன்றோர் நிறுவியுள்ளனர். (அக்கூறுகள் சிந்துநாகரிக மக்களிடமிருந்து தான் சென்றிருக்க வேண்டும்). மேலே கண்டவற்றின் விரிவைப் பின் இயல்களில் காணலாம். 5. சிந்துப்பொறிப்பு வாசகங்களை (ஏறத்தாழ மொத்தம் 3000: பெரும்பாலானவை முத்திரைகளில்) வாசிப்பதின் இன்றைய நிலையை இயல் 8 தருகிறது. அப்பொறிப்பு முழுவதையும் வாசித்து விட்டதாக ஒரு சிலரும் சிலவற்றை வாசித்துள்ளதாகப் பெரும்பாலான ஏனையோரும் கூறுகின்றனர். (அவ்வாசகங்களைத் திராவிட மொழியாக வாசிக்க முயன்றுள்ளவர்கள் முயற்சிகளையே உலக அறிஞர் கருதிடும் நிலை உள்ளது) யாருடைய வாசிப்பையும் அறிஞருலகம் முழுமையாகத் திட்டவட்டமாக ஏற்றிடும் நிலை இல்லை. வருங்காலத்தில் இருமொழி, மும்மொழிப்பொறிப்பு ஏதாவது (எகிப்தில் ரொசெட்டாவில் கிடைத்த மும்மொழிப் பொறிப்பு போன்று) கிடைத்தால் தான் வாசிப்பு முயற்சி வெல்லும் என்பதே பலருடைய கருத்தாகும். 6. இந்நூலைப் படிப்பவர் பயன்கருதி ஆங்காங்கு தலைசிறந்த ஆய்வறிஞர்தம் முக்கியமான ஆதாரக் கருத்துகளின் ஆங்கில மூலங்களும் தரப்பட்டுள்ளன. இந்திய நாகரித்தில் ஏன் உலக நாகரிகத்திலேயே முக்கியமான பங்கு வகிக்கும் (தொல்தமிழியச்) சிந்து நாகரிகம் குறித்து தமிழறியாதாரிடம் பேச, தெரிவிக்க நேரும்பொழுது அவ்வாங்கில மூலங்களை உடனடியாகச் சுட்ட இயலும் வகையில் அவை தரப்பட்டுள்ளன. எளிதில் கிட்டாத பல்வேறு ஆய்வு நூல், கட்டுரைக் கருத்துகளை அவ்வறிஞர் சொன்னவாறே உடனடியாக இந்நூலிலேயே காண இயல்வது நன்மைதானே! 7. சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக மேலாண்மை இயக்குநர் திரு. முத்துக்குமாரசாமி ஊக்குவித்ததன் காரணமாக 1999 இல் 118 பக்கங்களில் இதுபற்றி ஒரு சிறுநூல் வெளியிட்டேன். பின்னர் ஆங்கிலத்தில் இப்பொருள் சார்ந்து PILC Journal of Dravidic Studies (2002,2005) 12 ஆம் மடலத்திலும் அரிமா நோக்கு 2.2. (சூலை 2008) பக்கங்கள் 16-26லும் சுருக்கமான ஆங்கிலக் கட்டுரைகளை வரைந் துள்ளேன். தமிழகத் தொல்லியல்துறை 2009ல் வெளியிட்ட (தொகுப் பாசிரியர் டி.எஸ். ஸ்ரீதர்) “Indus Civilization and Tamil Language” நூலிலும் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை மேலும் விரிவாக எழுதியுள்ளேன். இப்பொழுது (கடந்த15 ஆண்டுச் செய்திகளையும் சேர்த்து விரிவாக்கிய) இப்புத்தகத்தை வெளியிட அன்புடன் முன் வந்த உயர்திரு இளவழகனார் அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன். பி. இராமநாதன் தொல்தமிழியச் சிந்து நாகரிகம் இயல் 1 தோற்றுவாய் [மாந்த இனத்தின் தொல்வரலாறு; மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்; தமிழிய மொழி, பண்பாட்டின் கழிபழந்தொன்மை; இ.மு. 10000க்கும் மிக முந்திய பழங்காலத்தில் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடக்கு நோக்கிப் பரவியமை (திராவிட ஏற்றம் Dravidian Ascent ); அப்பரப்பில் உருவான சிந்து முதலிய பண்டை நாகரிகங்கள்.] சிந்து நாகரிகம் 1947 க்கு முந்திய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் சேர்ந்த இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெருநிலப் பகுதியில் வடமேற்கு இந்தியாவில் பரவி இருந்தது. அதாவது, சுமார் 5 லட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. பண்டைய மெசபொதாமிய, எகிப்திய நாகரிகங்களின் பரப்பைவிட அதிகமான பரப்பில் சிந்து நாகரிகம் வழங்கியது. அந்நாகரிகம் இருந்த பகுதியில் கி.மு. 2000 வாக்கில் மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது பொசெல், பர்போலா போன்றவர்கள் கருத்து ஆகும் (அப்பொழுது உலகில் இருந்த மொத்த மக்கள் தொகையே 9 கோடிக்கும் குறைவு). 2. சிந்து நாகரிகச் சின்னங்கள் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. அவற்றில் சுமார் 20 இடங்களில் மட்டுமே - மொகெஞ்சொதரோ, அரப்பா உட்பட - அகழ்வாய்வு நடந்துள்ளது. சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் கி.மு. 700லிருந்து என்பதை மெகர்கார் அகழ்வாய்வு நிறுவியுள்ளது. அந்நாகரித்தின் சிறப்புற்ற நிலை கி.மு. 320 - 1800 கால அளவைச் சார்ந்தது. மொகஞ்சொதரோ மக்கள் தொகை 40,000 என்றும் அரப்பா நகர மக்கள் தொகை 25, 000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. 3. சிந்து நாகரிகச் செய்திகளைக் கூறும் பிற்றை இயல்களுக்கு முன்னதாக இவ்வியலில் தோற்றுவாயாக சில பொதுவான பின்புலச் செய்திகள் தரப்படுகின்றன. அண்மைக்காலங்களில் (i) மாந்தனின் தோற்றமும் பரவலும்; (ii) மொழியின் தோற்றமும் பரவலும்; போன்ற அறிவியல் துறைகளில் நிகழ்ந்துள்ள வளர்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டு சிந்து நாகரிகம் தொல்தமிழிய நாகரிகமே, அந்நாகரிக மக்களின் மொழியும் தமிழிய மொழியே என்று திட்டவட்டமாக நிறுவுவதற்கான சான்றுகள் இன்று கிட்டியுள்ளவை சற்று விரிவாகக் கூறப்படும். மாந்த இனத்தோற்றமும் பரவலும் 4. இப்பிரபஞ்சத்தின் அகவை சுமார் 1400 கோடி ஆண்டுகள் ஆகும். அன்று முதல் இன்றுவரை நிகழ்ந்தவற்றின் சுருக்கத்தை இறுதியில் “From Big Bang to Present day man” என்றும் வரைப்படத்தில் காண்க (நூல் இறுதியில்). இன்றைக்கு 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக் கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்து விட்டன. (மிகப் பெரிய விண்கொள்ளிகள் (meteors) பூமியில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்). இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய (எலி போன்ற பருமனுடைய) விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மூதாதையான லெமூர் (Lemur) விலங்கு (சுமார் 250 கிராம் எடை) உருவானது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். (பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள், தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டும், கரையான் தோன்றி 28 கோடி ஆண்டும் ஆகின்றன.) 5. மனிதன் எப்படித் தோன்றினான்? மாந்தக் குரங்கினத்துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மனிதனுக்கும் பொதுவான வேறொரு உயிரினம் இன்றைக்கு சுமார் 50 லட்சம் ஆண்டுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. கண்டநகர்வுக் கொள்கையின்படி (Continental drift ) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இப்பொழுதுள்ள கண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ இப்போதுள்ள உருவைச் சுமார், ஒருகோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர் கண்டம் அளவுக்கு (Continental proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை. அலெக்சாந்தர் காந்திரதாவ் அவர்களும் தமது “முக்கடற்பபுதிர்கள்” நூலில் இதை 1974 லேயே சுட்டியுள்ளார். எனினும் இதை யாரும் கண்டுகொள்வதில்லை! “தொன்மை நாகரிகங்களைப் படைத்த மாந்த இனங்களைக் கொண்டிருந்த (கண்டம் போன்ற) பெரு நிலப்பரப்புகள் எவையும் எந்தக்காலத்திலும் இந்திய, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம். “It is highly improbable that big land masses, inhabited by large numbers of people who created ancient civilisations ever existed in the Indian, Pacific or Atlantic oceans”. (p267) இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and Plate techtonics)யாகும். இதனை விளக்கும் உலகப் படங்களை நூல் இறுதியில் காண்க. ஆயினும் பனியூழி முடிவில் கி.மு. 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம் சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதி (Continental Shelf) சுமார் நூறு - இருநூறு மைல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்கால கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும் (தென் திசை உட்பட) சில நூறு மைல் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே சங்க இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். இன்று உலகெங்கும் உள்ள 700கோடி மனிதர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், நீக்ரோவர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்சு (Homo Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இற்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார் அனைவரும் ஏற்ற முடிவு. எனினும் ஏறத்தாழ மனிதனை யொத்த `முன்மாந்த’ (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்ச ஆண்டு வாழ்ந்த பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. [அவற்றுள் ஹோமோ எரக்டசு (17 லட்சம் - 30000 BP இ.மு) என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன், பீகிங் மனிதன், ஹீடல்பர்க் மனிதன், ஜாவா மனிதன். இந்தியாவில் அத்திரம்பாக்கம் போன்ற இடங்களில் கண்ட இ.மு. 50000 க்கு முந்தைய பாசில் மனிதன், ஆகியவர்கள் (சுமார் 3 லட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோ எரக்டசு வகையைச் சார்ந்தவர்களே; நமது AMH இனத்தவரே அல்ல. ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிந்து போன நியாண்டர்தல் (Neandarthal ) இனமும் ‘முன்மாந்த’ இனமே) இந்த ‘முன் மாந்த’ இனங்கள் வெற்றிடையேயும் மொழி உருவாகவில்லை.(None of them had the faculty of speech)] 6. இன்றைய அறிவியல் துறைகள் அனைத்தின் முடிவின்படி இப்பொழுதுள்ள மனிதர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மனித இனம் கடந்த ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது. அதாவது:- தென்னிந்தியாவுக்கு இன்றைக்கு 50000 ஆண்டுகளுக்கு முன்னரும் ஆஸ்திரேலியாவுக்கு ” 50000 ” ஐரோப்பாவுக்கு ” 40000 ” சைபீரியாவுக்கு ” 30000 ” அமெரிக்காவுக்கு ” 30000-12000 ” சப்பானுக்கு ” 30000 ” நியூகினி தீவுக்கு ” 32000 ” பசிபிக் தீவுகளுக்கு ” 4000 - 1000 ” பரவினர் என்பது வல்லுநர் கருத்து ஆகும். 7. அவ்வாறு பரவுவதற்கு முன்னரே - ஏறத்தாழ இ.மு. 60000 - 50000 அளவிலேயே - தற்கால மாந்தர் AMH ஆகிய நம்மிடம் மொழி உருவாகிவிட்டது என்பது இன்றைய அறிஞர் முடிவு ஆகும். (ஆப்பிரிக்காவிலிருந்து நமது மாந்த இனம் சுமார் 50000 ஆண்டுகட்கு முன்னர் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்குச் சென்றது, தென்னிந்தியக் கரை வழியாகத்தான் ஆகையால், இந்தியக் கரைசார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் (Continental Shelf) ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இதுபற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் பிளெமிங் (2004). அத்தகைய ஆய்வுகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கியுள்ளது. 8. கண்டங்கள் நகர்வுக்கொள்கை, மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் சங்க நூல்களிற் காணும் கடல்கோள் செய்திகளை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்குத் தெற்கில் கண்டத்திட்டு நிலப்பகுதியானது கடல் கோளில் மூழ்கிய செய்தியைக் கலித்தொகை 104ம், சிலப்பதிகாரம் காடு காண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய (கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) இளம்பூரணரும் இதைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுபடுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு: i) ச. சோமசுந்தரபாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழுகுமும்,சித்தாந்த தீபிகா XIV. ii) வி.ஜே. தம்பி பிள்ளை (1913): மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு, தமிழியன் ஆண்டிகுவாரி II-I. iii) மறைமலையடிகள் (1930): மாணிக்கவாசகர் வரலாறும் காலமும். iv) ஏ.எஸ். வைத்தியாநாத ஐயர் (1929): “கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள்”: பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II-1. v) ஜே. பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI vi) ஹீராஸ் பாரதிரியார் (1954) தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக். 411-439. சதபதபிராமணம் 1, 8 முதலியவற்றில் கூறப்படும் “மனுபிரளயம்” திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) உம் (iv) உம் கூறுகின்றன. சுமெரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (i) ம் (vi) ம் கருதுகின்றன. தமிழிய மொழிகளின் தொன்மை; இன்றைக்கு முன்னர் (இ.மு.) 70000 - 50000 வரைச் செல்வது 9. தற்கால மாந்த இனம் (AMH) ஆப்பிரிக்காவை விட்டு இ.மு. 70000-50000 கால அளவில் வெளியேறி அன்றையத் தென் னிந்தியக் கரையோரக் கண்டத்திட்டு (Continental Shelf) வழியாக ஆஸ்திரேலியா வரைச் சென்று பரவிய காலகட்டத்திலேயே தமிழிய மொழி (முந்து தமிழ்) / தொல்தமிழ் Pre Tamil / Proto Tamil என்றும் கூறலாம்) பேசுநர் தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் குடியேறி விட்டனர் என்னும் இன்றைய பல்துறை அறிஞர்கள் கருத்து இப் பகுதியில் விளக்கப்படும். 10. விஞ்ஞானிகள் இன்று நிறுவியுள்ளது: இன்றைக்கு 70,000 - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் ஆப்பிரிக்காவை விட்டு தற்கால மாந்த இனம் (AMH)புலம்பெயர்ந்து உலகின் பிற கண்டங்களுக்குப் பரவியது என்பதாகும். அவ்வாறு பரவு முன்னரே மாந்தன் முதன்மொழி Mother Tongue of Man உருவாகி விட்டது என்று வரலாற்று மொழியியலாளர் உட்பட பலதுறை அறிஞரும் கருதுகின்றனர். H.H. Hock and B.D. Joseph (2009: II Revised edition) “Language history, Language change and Language relationships (Historical and Comparative linguistics” Mouten do Gruyter: Berlin. p474: “Language originated about 1,00,000 -- 50000 Before Present.... by way of gestural shift to oral channel... vocal sounds at first were emphasisive attachments” (சுட்டுகளின் முதன்மை பற்றி கால்டுவெல், ஞானப்பிரகாசர்/ பாவாணர் ஆகியோர் கருதியதும் அதுவே)... 11. இன்றைய தமிழ்நாட்டு மக்களுள் அவ்வாறு இன்றைக்கு 70000-50000 ஆண்டு முன்னர் ஆப்பிரிக்காவை விட்டு நீங்கி ஆஸ்திரேலியா வரைச் சென்றடைந்த மாந்தரின் பிறங்கடைகள் பெருமளவில் உள்ளனர் என்பதை மைடகான்டிரியல் DNA மாந்த மரபணு ஆய்வு திட்டவட்டமாக நிறுவிவிட்டது. அவ்வாய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் மதுரையைச் சார்ந்த முனைவர் இராமசாமி பிச்சப்பனும் ஒருவர். 23.8.2007, 16.4.2008 நாள்களில் அவர் செய்தித்தாள் நேர்காணல்களில் தெரிவித்த செய்திகள் வருமாறு:- “ஆப்பிரிக்காவை விட்டு இன்றைக்கு 70000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய ஒரு குழுவினரிடம் மை DNA அடையாளக் குறியீடு M130 தோன்றியது. இன்றுள்ள ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள் தொகையினருள் இரண்டில் ஒருவரிடம் இந்த M130 உள்ளது. “மதுரைப் பகுதியில் உள்ள மக்கள் பலருடைய மை DNA-வை ஆய்வு செய்ததில் அவர்களில் 5லிருந்து 7 நபர்களிடம் இந்த M130 உள்ளது என்று தெரிய வந்தது. அன்றைய கடற்கரைப் பகுதி வழியாக மாந்த இனத்தின் ஒரு பிரிவு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு நோக்கிப் புலம் பெயர்ந்தது என்பதை இந்த ஆய்வு மெய்ப்பித்தது (Proceedings of the National Academy of Sciences; USA; 2001) பிரிட்டன் நாட்டு மரபணுவியலறிஞர் சர் வால்டர் பாட்மர் சொன்னது போல். “உலகில் இன்றுள்ள மக்கள் அனைவரும் (700 கோடி பேருமே) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் பிறங்கடைகளே.” “இந்திய மக்களிடையே காணப்படும் மை DNA அடையாளக் குறியீடுகளில் மிகத் தொன்மை வாய்ந்தது M130 தான். அதைவிடப் பழைமையான மை DNA குறியீடுகள் இந்தியாவில் எவரிடமும் இல்லை. ஆப்பிரிக்காவில் இக்காலமாந்த இனம் AMH உருவாகிய பின்னர் அக்கண்டத்தை விட்டு முதலில் புலம் பெயர்ந்து இந்தியாவில் முதலில் குடியேறியவர்களின் பிறங்கடைகள் இன்றும் தமிழ் நாட்டில் உள்ளனர் என்று நிறுவப்பட்டுள்ளது.” 12. பல்வேறு மொழிக் குடும்பங்களுக்கு இடையிலுள்ள உறவையும் பல்வேறு கால அளவுகளையும் (மிக மிகத் தோராய மாக) ஓராற்றான் பின்வருமாறு வகுக்கலாம்:- மாந்த முதன்மொழி பிறமொழிக் குடும்பங்கள் (தோன்றிய காலம் இ.மு. 60000?/ 50,000?/ 1. தொல்தமிழியம், கோய் சான்; காங்கோ - சகாரா, சீன -காகேசியன், (100 கோடி பேர் பேசுவது), ஆஸ்தி ரி க் , அமெரிக்கச் செவ்விந்தியம், இந்தோ - பசிபிக். 2.நா ஃ தி ரா தி க் / யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம் Macro family (200 கோடி பேர் பேசுவது) 3. ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளின் தாய், 4.பபுவா பழங்குடி மொழி களின் தாய்; ஆகிய இந் நான்கின் மூதாதை இ.மு.?? - 20000/12000 (ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளும் தமிழிய மொழிக்குடும்பமும் மிக நெருங்கியவை; ஏறத்தாழ இ.மு. 50000-20000 என்னும் கால அளவிலேயே தொடர்புடையவை) 13. நாஸ்திராதிக்: (இந்தோ - ஐரோப்பியன் - 140 கோடி பேர்; தமிழிய (திராவிட) மொழிகள் = 25 கோடி பேர்; உராலிக் – அல்தாய்க் கார்த்வெல்லியன்; ஆப்ரோ - ஆசிய அதாவது செமித்திய - ஹாமித்திய குடும்பம்; ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும். மொத்தம் பேசுவோர் 200 கோடி) கிரீன்பெர்க் வகுத்துள்ள யூரேசியாடிக் பெருங்குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. தமது (2000) நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20-க்கு மேற்பட்டவற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன. அந்த இருபதும் வருமாறு: 1. தன்மை மறுபெயர் ஈறு - ம் 3 தன்மை மறுபெயர் ஈறு - ன் 6 முன்னிலை மறுபெயர் ஈறு - ன் 9 சுட்டு - அ,இ 17 பன்மை ஈறு - ர் 20 தொகுப்புச் சொல் ஈறு - ல் 21 மனிதனைக் குறிக்கும் ஈறு - ன் 25 உடைமைப் பொருளில் - இன் 35 விளி - ஏ 36 இனத்திற் சிறுமை குறிக்கும் ஒட்டு க் (குன்/ற்) 47 கட்டளை ஈறு - க (உண்க) 56 + 57 + 58 எதிர்மறை - ன்/ம்/ இல (Chuvan : alla = not) 61 + 64 வினா - ஜா (யா) ன் (என்ன) 65 “ஐந்தாவது” என்பது போல வரிசைப்படுத்தி எண்ணுதலில் (Ordinal) ந் த் 68 கொடு என்னும் பொருளில் - தா 14. ஸ்தான்போர்டு பல்கலைக்கழகத்தில் 2000 அக்தோபரில் பத்ரிராசு கிருட்டிணமூர்த்தியை கிரீன்பெர்க் சந்தித்தபொழுது “திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் சகோதரியாக இருக்கலாம். மகளாக இருக்க முடியாது” எனத் தெரிவித்தார். (கிருஷ்ணமூர்த்தி The Dravidian Languages 2003 பக்.46) இதன் பொருள் என்ன? இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் பிறந்த உட்குடும்பங்களே ஸ்லாவ், இரானியன்; வேதமொழி; சமஸ்கிருதம், கிரீக், லத்தீன், கெல்டிக், செருமானியம் முதலியவை. தமிழிய மொழிகள் இவற்றுக்கு மட்டுமல்ல, இவற்றின் தாயான, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் முந்தைய பழமை வாய்ந்தவை என்பதே கிரீன்பெர்க் கருத்து. 15. “தமிழர் தமிழகத்தின் (ஏன் தென்னிந்தியாவின், இந்தியாவின்) தொல்குடிகள்; அவர்களின் தொன்மை தென்னாட்டிலும் இந்தியா விலும் இன்றைக்கு 50000 ஆண்டுகட்கு முன்னர்ச் செல்கிறது; என்பது மாந்த மரபணு அறிவியலின் தேற்றமான, உறுதியான இன்றைய முடிவு ஆகும். ஞால முதன்மொழிக்கு மிக நெருங்கியதாகிய தமிழின் தொன்மை கி.மு. 10000க்கும் முன்னர்ப் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்கிறது” என்று கண்டோம். அம்முடிவுக்கு ஆதாரமான முக்கியமான காரணங்களுள் ஒன்று தமிழுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 1770இல் 3 இலட்சத்திற்கும் 10 இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக இருந்தது எனக் கருதப்படுகிறது. 1960க்குள் அவர்கள் எண்ணிக்கை 50,000 அளவுக்குக் குறைந்தது. இப்பொழுது ஒரு இலட்சம் அளவுக்கு உள்ளனர். அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது பற்றிய ஆய்வாளர்கள் கருத்துக்கள் பொதுவாகப் பின்வருவன போன்றவை யேயாகும்:- “கிடைத்துள்ள சான்றுகளின்படி (ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள்) தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்ததாகவே தெரிகிறது.” - எல்கின் (1938) “இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முன்னர்ப் புலம் பெயர்ந்து சென்றவர்களின் வழித் தோன்றல்களே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் (அண்மைக்கால ஆய்வுகளின்படி 15000 ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கொள்ள வேண்டும்.) – லாக்வுட் (1963) 16. a) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் அக்கண்டத்தில் 60000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வசித்து வருகின்றனர். அன்று அவர்கள் தம்முடன் கொணர்ந்த தொன்மொழி இன்று 200 மொழிகளாகப் பிரிந்துள்ளது. எனினும் அவை அனைத்தும் மூலமொழியின் அடிப்படைக் கூறுகளைப் பெருமளவுக்கு இன்றும் கொண்டுள்ளன என்கிறார் ஆர்.எம்.டபுள்யூ. டிக்சன் (The Languages of Australia 1980; Australian Languages 2002) டிக்சன் மற்றும் பிற அறிஞர்கள் கருத்துப்படி தொல் ஆஸ்திரேலிய மொழியானது உலகின் மிகப் மிகப் பழைய மொழி, எடுத்துக்காட்டாக “தொல் இந்தோ ஐரோப்பிய மொழி” (Proto-Indo European) உருவானதாகக் கருதப்படும் கிமு. 8000க்கு மிக முற்பட்ட காலத்திலேயே அது பேசப்பட்டு வந்தது. தொல் ஆஸ்திரேலிய மொழியை வேறு எம்மொழிக் குடும்பத்தோடு தொடர்பு படுத்தலாம் என்று கருதுங்கால் திராவிட மொழித் தொடர்பு ஒன்றே எண்ணத்தக்கது” நாரிசு, பிரிச்சார்டு, கால்டுவெல் ஆகியோர் ஆய்வுகளைப் பின்பற்றி 1885-லேயே சி.டி. மக்ளீன் ஆஸ்திரேலிய மொழிகள் - திராவிட மொழித் தொடர்பு பற்றிப் பின்வருமாறு எழுதியிருந்தார். “திராவிட மொழிகளுக்கும் (தெற்கு, மேற்கு) ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களின் மொழிகளுக்கும் இடையிலே நெருங்கிய இலக்கண ஒற்றுமை உள்ளது. பதிலிப் பெயர்கள் (pronouns) வருமாறு. தமிழ் ஆஸ்திரேலியன் தன்மை: நான், யான், நாஎன், ஞா, ஞாய், ஞாட்ஸ, முன்னிலை: (thou) நீன் நின் ஞான்ய, ஞின்னே, ஞிண்டு, நின்ன, (thou) நன், நிம், நீர், நும் ஞிண்டே நிமிடு, நுரே, நுவ, நீவு ஞீர்லே தமிழ் ‘என்னை’யுடன் ஆஸ்திரேலிய ‘ம்மோ’வை ஒப்பிடுக. பின்வரும் இனங்களில் இவ்விரு குடும்ப மொழிகளுக்கும் இடையே பொதுவான இலக்கண ஒற்றுமை உள்ளது; முன் னொட்டுக்களுக்குப் பதிலாகப் பின்னொட்டுகள் பயன்பாடு; தன்மைப் பன்மையில் உளப்பாட்டுப் பன்மை உள்ள நிலை; வேர்ச்சொல்லோடு சில ஒட்டுக்களைச் சேர்த்து (அடி - அடிப்பி, செய் - செய்வி போல) செயப்பாட்டு வினை, பிற வினை போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளுதல்; ஒட்டு நிலைமொழிச் சொற்றொடரமைப்பு; வாக்கிய அமைப்பு போன்றவை அவ்வொப்புமைகள்.” b) டிக்சன் 1980 நூலில் பின்வரும் கூடுதல் ஒப்புமை களையும் சுட்டுகிறார்:- i) ஒலியன்களில் வியத்தகு ஒற்றுமை ii) ட, ற, ர, ல, ள போன்ற ஒலியன்கள் சொல் முதலில் ஒரு பொழுதும் வரமாட்டா iii) நான்காம் வேற்றுமை உருபு தமிழில் உள்ளதுபோல் கு (gu) தான். iv) சொல் முதலில் ஒருமெய் மட்டுமே வர இயலும் c) சொல் வடிவிலும் பொருளிலும் தமிழுக்கும் ஆஸ்திரேலிய மொழிகளுக்கும் இடையே உள்ள வியத்தகு ஒற்றுமையைக் காட்டும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மொழிச் சொற்பட்டியல் சிலநூறு சொற்களுக்கு மேல் கொண்டது. இங்கு தர இடமில்லை. மேலும் விரிவான செய்திகளை “நாசுதிராதிக் - ஞால முதன்மொழி ஆய்வு களுக்குப் பாவாணர்தரும் ஒளி’ (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2008) நூலில் காண்க. 17. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் அக்கண்டத்திற்குள் நுழைந்தபொழுது கடல் மட்டம் இப்பொழுதுள்ளதைவிட 400 அடி - 600 அடி குறைவாக இருந்தது. தற்பொழுது கடல் நீரால் மூடப்பட்டுள்ள கண்டத்திட்டு (Continental Shelf) அப்பொழுது நிலப்பரப்பாக இருந்தமையால் எல்லாக் கண்டங்களின் பரப்பளவுமே அதிகம். ஆஸ்திரேலியா, நியூகினி, தாசுமேனியா அனைத்தும் இணைந்து ஒரே கண்டமாக (“சாகுல்”) இருந்தன. மொத்தப் பரப்பு இப்பொழுதுள்ளதை விட 1/7 பங்கு அதிகம். திமோர் தீவுக்கும் தொல் ஆஸ்திரேலியா கண்டத்துக்கும் இடையே கடல் ஒரு சில மைல் அளவுதான் இருந்திருக்கும். இப்பொழுது உள்ள ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் முன்னோர்கள் அனைவரும் திமோர் மற்றும் இந்தோனேசியத் தீவுகளிலிருந்து கட்டுமரம் போன்றவற்றில் சில மணி நேரத்தில் கடலைத் தாண்டிச் சென்று ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும். நுழைந்த பின்னர் சுமார் 500 ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆஸ்திரேலியா - தாசுமேனியா முழுமையும் பரவிவிட்டனர் என்று தொல்லியல் சான்றுகள் நிறுவுகின்றன. 18. கி.மு. 15000 அளவில் கடல் மட்டம் 200 அடி உயர்ந்தது. அதன் பின்னர் மேலும் உயர்ந்து கி.மு. 10000ஐ ஒட்டித் தற் போதைய நிலையை அடைந்தது. ஆக, கடந்த 10000 ஆண்டு களுக்கு மேலாக ஆஸ்திரேலியா தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கண்டமாக இருந்து வந்துள்ளது. அக்கண்டம் வாழ் பழங்குடிகள் கடந்த 10000 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் பிற பகுதிகளில் வாழும் எந்த மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாது வாழ்ந்து வருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அக்கண்டத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் அதுதான் நிலைமை). இப்பொழுது அறியாமை காரணமாக பன்னாட்டு மொழி யியலாளரும் பின்பற்றி வரும் Dravidian descent “திராவிடர் இறக்கம்” கொள்கைப்படி மத்தியக் கிழக்கு நாடுகளைவிட்டுக் கி.மு. 3000இல் நீங்கித் தொல் திராவிடர் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து பரவி கி.மு. 1000இல் தமிழ்நாடு அடைந்தனர் என்ற உண்மைக்கு மாறான கருதுகோளைக் கைக்கொண்டால் (i) தமிழுக்கும் (ii) கடந்த 10000 ஆண்டுகளுக்கு மேலாக எந்த மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாமல் வாழும்) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாமல் வாழும்) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் எப்படி அவ்வளவு வியத்தகு ஒப்புமைகள் இருக்க முடியும்? எனவே கி.மு. 10000க்கும் கழிபழங்காலத் திலேயே தமிழிய மொழி பேசுநர் தமிழகத்தில், தென்னிந்தி யாவில், இருந்தனர்; அதற்குப் பின்னர் இந்தியாவிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய திராவிடர் ஏற்றம் (Dravidian Ascent) காலக் கட்டத்தில்தான் (வேதமொழி, சமஸ்கிருதம் இவற்றின் தாயான) இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம், உரால், அல்தாய்க் மொழிக் குடும்பம், செமித்திய மொழிக்குடும்பம் போன்ற மொழிகள் தொல்தமிழிய (தொல் திராவிட) மூல மொழியிலிருந்து பிரிந்தன என்ற உண்மையை நிலைநாட்டு வதற்கு மேலே விளக்கிய “தமிழ் - ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிகள்” இடையேயான உறவு முதன்மைப் பங்கு பெறுவதை உணர்க. தொல் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் வடக்கிலிருந்து தெற்காக (கி.மு. 5000ஐ ஒட்டி), இந்தியாவிற்குள் நுழைந்த வர் அல்லர் (அதற்கு நெடுங்காலத்துக்கு - சில பதினாயிரம் ஆண்டுகட்கு - முன்னரே) தெற்கிலிருந்து வடக்காக இந்தியாவிலிருந்து பரவியவரே. 19. இப்பொழுது பல நாடுகளிலுமுள்ள பல்துறை அறிஞர்களும் பொதுவாக (அண்மைக் கால ஆய்வு முடிவுகள் விரைவாக உணர்ந்து பின்பற்றப்படாததால்) ஏற்றுக் கைக்கொண்டு வரும் கருதுகோளின்படி தொல்திராவிட மொழி பேசுநர் தாயகம் வடகிழக்கு ஈரான் பகுதியாகும். அங்கிருந்து சுமார் கி.மு. 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர், செல்லும் வழியில், பேருந்து வரும்பொழுது ஆங்காங்கு சிலர் இறக்கிவிடப்படுவதுபோல, திராவிட மொழி பேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டுவரப்பட்டன! (கே.வி. சுவலெபில் (1972); “திராவிடர்கள் இறக்கம்” The descent of the Dravidians ;திராவிட மொழியியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (IJDI) தொகுதி 2; பக். 57- 63. பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் அவர் இக்கருத்தையே கூறுகிறார். பெரும்பாலான இந்தியப் பலதுறை (வரலாறு, மொழியியல் முதலியவை) அறிஞரும் இதனையே இன்றும் கிளிப்பிள்ளை போலக் கூறி வருகின்றனர். 20. இதற்கு நேர்மாறான கொள்கை திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் “திராவிடர் ஏற்றம்” கொள்கையாகும். Dravidian ascent (from south) இப்பொழுது அது பழைய பாணிக் கொள்கையாகத் தவறாகக் கருதப்படினும் அதனை வலியுறுத்தியுள்ள அறிஞர்களுள் எச்.ஆர்.ஹால்; ஈராசு பாதிரியார், பி.டி.சீநிவாச ஐயங்கார், வி.ஆர். இராமசந்திரதீட்சிதர், மறைமலை அடிகள், பி.ஆர்.எஹரென்பெல்ஸ், சேவியர் தனிநாயகம் அடிகளார், க.த. திருநாவுக்கரசு, தேவநேயப்பாவாணர், பிரிஜெட் & ரேமாண்ட் ஆல்சின் (1988), கே.கே. பிள்ளை ஆகியோரும் அடங்குவர். (சுவிராஜெயசுவால் (1974), ஜே.ஆர்.மார் (1975), பர்டன் ஸ்டெய்ன் (1998) ஆகியோர் “திராவிடர் ஏற்றக்” கொள்கையை ஏற்காவிடினும் “திராவிடர் இறக்கக்” கொள்கை யையும் ஏற்க மறுக்கின்றனர்.) 21. “திராவிட மொழி பேசுநர் கி.மு. 3000ஐ ஒட்டி இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்ற சுவெலபில் கோட்பாடு மேலே கண்ட (அண்மைக் காலத்தில் அறிவியற் புலங்களும், மொழியியல் ஆய்வுகளும் நிறுவியுள்ள) உண்மைகளுக்கு மாறானது. மொழிப்பெருங் குடும்பங் களுக்கிடையேயுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர் பலர் இத்தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர். பிளெஞ்ச் (எம். ஸ்பிரிக்ஸ் 1997இல் தொகுத்து வெளியிட்ட தொல்லியலும் மொழியும்: (1) கோட்பாடு ஆய்வு நெறிக் கருத்தோட்டங்கள் என்னும் நூலில் ரென்புரு பின்வரும் முடிவைக் கூறுகிறார். “(மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் மக்கள் பண்டு பரவத் தொடங்கியது பற்றிய) தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப்பியன், தொல் ஆப்ரோ-ஏசியாடிக், தொல்எலாமைட் திராவிடம், தொல் அல்தாய்க் மொழிகள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனைவரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப்பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம் மொழிகள் எல்லாம் (நாஸ்திராதிக் மொழியலாளர் கூறுவது போல்) தொடர்புடையவையாக இருப்பது உண்மையானால் அவர்களெல்லாம் அப்பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு. 8000-6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒருசில ஆயிரம் ஆண்டுகள் இம் மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராதிக் மொழி அந்நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஒத்து வரும் வாதமாகும்.” 22. (i) இவ்வாறு தொல் - நாசுதிராதிக் பேசியவர்கள் அனை வரும் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே மையக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டையும் (அதன் தொடர்பான “இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர்கள் இறங்கியது சுமார் கி.மு. 3000ஐ ஒட்டித்தான்” என்ற கோட்பாட்டையும்) பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு என்பதை மேலே கண்டோம். இதுபற்றி காலின்பி. மாசிகா 1999இல் கூறியது குறிப்பிடத்தக்கது. “தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (சுமார் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல்திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம் (It may be a question of a very ancient common substratum in South Asia, pre-Dravidian going back even to the original peopling of the world; The year book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi.) (ii). ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தற்கால மாந்த இனம் Anatomically Modern Humans, ஆப்பிரிக்காவில் தோன்றிய பின்னர் இ.மு 70000-50000 கால அளவில் தென்னிந்தியா, இந்தியா வழியாக உலகின் பல பகுதிகளுக்கும் பரவினர் என்க. இவ்வாறு வடக்கு, வடமேற்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் தமிழிய மொழி பேசுநருக்கு மையமான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம், Dravidian ascent பற்றிய இந்தக் கோட்பாட்டை “ஞானப் பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு” என அழைக்கலாம். (திராவிட மொழிகளுக்கு ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் - (ஏன் மொழிக்குடும்பங்கள் பிறவற்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும்) - விளக்க வல்லது இக்கோட்பாடேயாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்து நாகரிகமாகும் (ஹீராஸ் 1953 மேலும் பலர்) அவர்களுக்கு எலாம், சுமேரியம், எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். தமிழிய (திராவிட) மொழிகளுக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றிய ஆய்வுகள் (குறிப்பாக: முந்து இந்தோ - ஐரோப்பியத்தில் தமிழியக் கூறுகள்.) 23. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்து இதுவரை நிகழ்ந்துள்ள ஆய்வுகளின் பட்டியல் வருமாறு:- நாஸ்திராதிக் / யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1. திராவிடமும் இந்தோ - கால்டுவெல்,போப், ஐரோப்பிய மொழிகளும் ஞானப்பிரகாசர், தேவநேயன், இளங்குமரன், மதிவாணன், இலியிச்-சுவிதிச், அருளி, அரசேந்திரன், ஸ்தீபன், ஹில்யர் லெவிட் (பாவணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ்இ ந்தோ ஐரோப்பிய/ ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக் கணக்கானவை ஏற்கத் தக்கவை ( reasonable and perceptive) என்று முனைவர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் இந்தோ ஐரோப்பிய (மொழியியல்) ஆய்விதழில் (மடலம் 28:3-4; 2000 சூன் – திசம்பர் பக்கம் 407-438இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். தமது IJDL 2013 ஜூன் “Indo - European and Dravidian : some considerations” கட்டுரையில் பல அடிப்படையான தமிழிய (திராவிட) மொழிக்கூறுகள் இந்தோ - ஐரோப்பிய நிலையிலும், அதற்கு முந்திய நாஸ்திராதிக் நிலையிலும் ஏறிவிட்டன என்பதை லெவிட் நிறுவியுள்ளார். 2. திராவிடமும் உரால்- அல்தாய்க் கால்டுவெல், பரோ, மொழிக் குடும்பமும் மெங்கெஸ், டைலர், அந்திரனாவ், வாசக், பி.ஏ.ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மக்-அல்பின், மொழியும் (கி.மு.3000க்கு கே.வி.சுவலெபில் முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் நாட்டில் பேசப்பட்டது) 4. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓநோ; பொன். கோதண்டராமன்; ஹெச்.பி.ஏ. ஹகோலா, சுவெலபில் 5. திராவிடமும் கொரிய மொழியும் ஹுல்பர்ட்; பவுண்துரை 6. திராவிடமும் எத்ரஸ்கன் ஸ்டென்கோனோ; மொழியும் (கி.மு.1000-300 அளவில் இரா. மதிவாணன் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990இல் வெளியிட்ட திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் என்னும் நூலின் பக்கங்கள் 99-122இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிட மொழி, எலாமைட், தொல் உரால்-அல்தாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு. 10,000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரிய ஹீராஸ், ஏ.சதாசிவன், மொழியும் (கி.மு. 3000க்கு ஜே.வி. கின்னியர் வில்சன்; முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ. ஹகோலா 8. திராவிடமும் மிதன்னியும் ஜி.டபுள்யூ.பிரவுன் (1930) (கி.மு. 1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி; மொழியும் (ஸ்பெயின்) பெனான் ஸ்பிக்னு சாலெக் 10. திராவிடமும் ஆப்பிரிக்க செல்வி லிடியாஸ் மொழிகளும் ஹாம்பர்கர்; டட்டில், ந்டியா (Ndiaye) உபாத்யாயா 11. திராவிடமும் ஆஸ்திரேலியப் நாரிஸ், பிரிச்சார்டு, பழங்குடி மக்கள் மொழிகளும் ஆர்.எம். டபுள்யூ. டிக்சன், பி.இராமநாதன் (1984) (இப்பழங்குடி மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள் இவர்கள் மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையிலுள்ள நெருங்கிய தொடர்பு தான் தமிழின் தொன்மை பத்தாயிரம் ஆண்டுகட்கு குறையாதது என நிறுவிட மறுக்கொணாச் சான்று ஆகும். 12. திராவிடமும் பபுவா-நியூகினி கே.வி.எஸ். கிருஷ்ணா Papua New Guinea தீவில் (உத்திரப் (சென்னை-17) தமிழகத் பிரதேசம்போல் இரு மடங்கு பரப்பு; தொல்லியல் துறையில் மக்கள் தொகை 60 இலட்சம்; 25.2.2009 ஆய்வுரை பேசப்படும் 700 மொழிகள் - Hirimotu குடும்பம் 13. திராவிடமும் கொஷுவா டாக்டர் சீனிவாசன்; மொழியும் (தென் அமெரிக்க பெருநாடு) சாமன்லால், ஹகோலா 24. தமது International Journal of Dravidian Linguistics சூன் 2007 கட்டுரையில் ஸ்தீபன் லெவிட் பின்வருமாறு “திராவிடர் ஏற்றம்” கொள்கையை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. “கடல் மட்டம் இப்பொழுதுள்ளதை விட மிகக் குறைவாக இருந்த பனியூழிக் காலத்தில் ஆப்பிரிக்கா - தென்னிந்தியாவை இணைத்த வால்போன்ற நில இணைப்புகள் / தீவுகள் வழியாக ஆப்பிரிக்காவி லிருந்து தென் ஆசியாவிற்கு திராவிட மொழி பேசுநர் வந்திருக்கலா மென்னும் கோட்பாட்டை பி.இராமநாதன் வலியுறுத்துகிறார். அக் கோட்பாட்டை நானும் ஆதரிக்கிறேன். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வுசெய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளவை எனக் கண்டுள்ளனர். உறவு முறை ( Kinship) பூமராங் (வளைதடி) பயன்பாடு ஆகியவையும் அம் மக்களுக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு. 6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப் பகுதிகளின் பரப்பு சுருங்கியபொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங் களிடம் இருந்து ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் துண்டிக்கப் பட்டனர். அவர்கள் தென்னிந்தியா விலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 40,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்பர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 40000 ஆட்டுகட்கு முன்னரே திராவிடர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்த (“திராவிடர் ஏற்றம்”) கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத்திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப் பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக குடும்பத்திலிருந்து பிரிந்து உராலிக், அல்தாயிக், இந்தோ - ஐரோப்பியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக் கூற இயலாது.” 25. ஒப்பன் ஹைமர் (2003The Real Eve: Modern Man’s Journey out of Africa நூலின்படி மரபணு ஆய்வும் (காகசஸ் இனத்தைச் சுட்டும் M 17) தொல் திராவிட மொழி பேசுநர் இந்தியாவிலிருந்து வடக்கு வட மேற்காக ஏறத்தாழ 40000 ஆண்டுக்கு முன்னர் மைய கிழக்கு – மைய ஆசியா - ஐரோப்பா என்றவாறு படிப்படியாகப் பரவியிருக்கலாம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இல்லை என்பதைக் காணலாம். 26. தமது 1990 நூலில் சுவெலபில் “சுமார் கி.மு.10000க்கு முன்னர் திராவிடம், உரால் - அல்தாய்க், சப்பானியம் மொழி பேசுநர்களிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்’ என்று கருதியுள்ளார். அத்கைய தொடர்பையும் “திராவிடர் ஏற்றக் கோட்பாடு” விளக்க வல்லது. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி கி.மு.10000க்கு முன்னரே தொல் இந்தோ - ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்துவிட்டனர். மைய ஆசிய ஸ்தெப்பி புல்வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர், அவர்களில் சில குழுவினர் கி.மு.4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர் (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக், லத்தீன், கெல்திக், செர்மானிக், சிலாவிய மொழிக் குடும்பங்களாகும்) வேறு சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு.2500 ஐ ஒட்டி ஆகும். அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு.10000 க்கு முன்னர் தொல்திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்த காலத்தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக கூறுகளோடு சேர்த்து வடமேற்கு இந்தியா விலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழி பேசுநர்களிடம் இருந்து (இரண்டாவது கட்டமாக ரிக் வேதத்திலேயே புதிதாக மேலும் பலதிராவிட மொழிக கூறுகள் சேர்க்கப்படலாயின. திராவிட மொழி பேசுநர் ஏற்றம் (Dravidian Ascent ) பற்றிய இக் கோட்பாடானது தொல்மாந்தர் மொழியியல் முடிவுகளை மேலும் சீர்மை பெறச் செய்ய வல்லது; நாளடைவில் - மாந்த இன (AMH) தோற்றமும் பரவலும் மொழிப் பெருங்குடும்பங்கள் உருவாக்கமும் பரவலும், வரலாற்றுக்கு முந்திய தொல்லியல் ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்தையும் விளக்கத்தக்க ஒருங்கிணைந்த ஒரு பெருங் கோட்பாடு (Grand Synthesis) உருவாக்க வழி வகுக்கவும் வல்லது. 27. காலின் ரென்புரு தமது 1999 கட்டுரையில் தற்கால மாந்த இனப்பரவல் வரலாறு’ பற்றிய பெருங்கோட்பாட்டை மரபணு ஆய்வு, வரலாற்று மொழியியல், நாகரிக வளர்ச்சி பற்றிய தொல்லியல் சான்றுகள் ஆகிய மூன்றையும் இணைத்துப் பின் வருமாறு உருவாக்கலாம் என்பர். வரலாற்று மொழியியலைப் (c) பொறுத்தவரை இத்தகைய ஆய்வுக்கு இன்றியமையாதது தமிழ் - தமிழிய மொழிகளை ஏனைய மொழிக் குடும்பங்களுடன் ஒப்பிடும் ஆய்வே. 28 (i) ஆக தமிழே இந்தியாவின் தொன்மொழி என்பதையும் அம்மொழியம் அம்மொழி பேசுநரும் தெற்கிலிருந்து வடக்காகவும், (ஆத்திரேலியப் பழங்குடிமக்களைப் பொறுத்தவரை கிழக்கு நோக்கி யும்) கழிபழங்காலத்தில், குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் பரவியிருக்கவேண்டும் என்பதையும் அறியாதவர்களும் தமிழில் திறமான (அன்று கால்டுவெல், போப் போன்றவர்களுக்கு இருந்த புலமையில்காற்பங்கு அளவு கூடப்) புலமை இல்லாதவர்களும் ஆன இற்றை (வெளிநாட்டு - உண்ணாட்டு) மொழியியலாளர்பலரும் தமிழிய மொழிககுடும்ப மொழிகளுக்குப் பின்வருமாறு அபத்தமான பரம்பரைவரலாறு கூறிவருவது நகைப்பிற் கிடமானது:- தொல் திராவிடம் (இது மாயை என்பது பாவாணர் கருத்தாகும்: காண்க அடுத்துவரும் பத்தி) வடதிராவிடம் மைய திராவிடம் தென் திராவிடம் குருக், மால்தோ, பிராஹுய் தெலுங்கு, கூய், கோண்டி, கோலாமி, பார்ஜி தமிழ், கன்னடம், துளு, மலையாளம் (ii) தொடக்கக் காலத்தில் இக்கொள்கையினராக இருந்தவர்தான் கே.வி.சுவெலபில். ஆயினும் தமது “Dravidian Linguistics an Introduction” 1990 நூலில் (பக் 59) பின்வருமாறு கூறுவதிலிருந்து அவர் பிற்காலத்தில் ஓரளவுக்கு உண்மை நிலைமையை உணர்ந்தார் என்று அறியலாம். “தொல்திராவிட மொழியின் நிலைமைகளை மிக அதிகமான அளவுக்கு இன்றும் கொண்டுள்ளவை தென்திராவிட மொழிகளே. அதுவும் குறிப்பாக 2000 ஆண்டுக்கு முற்பட்டு வழங்கிய தமிழ் மொழியே என்று சில அறிஞர் கருதுகின்றனர்... மூல திராவிட மொழியின் நிலைமைகளை, அதுவும் குறிப்பாக ஒலியனியலில், இன்றும் காப்பாற்றி வைத்து நமக்குத் தெரிவிப்பது பழந்தமிழே.” [One group of scholars] is inclined to look to the Southern Dravidian group of languages particularly represented by Old Tamil of some 2000 years ago, as manifesting more clearlythe proto – Dravidian state of affairs... On the whole, Old Tamil has indeed preserved, particularly, in Phonology, a very archaic state of affairs. (iii) வியத்தகு பன்மொழிப் புலமை பெற்றிருந்த எல்.வி.ராமசாமி ஐயர் இதனை அன்றே உணர்ந்து தமது Educational Review சூலை 1928 Notes on Dravidian கட்டுரையில் பின்வருமாறு ஆணித் தரமாகக் கூறி யிருந்தார் (அவருடைய கருத்து தொல்திராவிடம் என்பது மாயை என்ற பாவாணர் முடிவுக்கு வலுவான ஆதரவு தருவதாகும் என்பதை ஓர்க:- “குறிப்பிடத்தக்க வகையில் தமிழில் பெருமளவுக்கும், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஓரளவுக்கும் காணப்படும் தனித் தன்மையானது அம் மொழிகளின் சொற்கள் அனைத்துக்கும் வேர்களாக அமையும் ஓரசை / ஈரசைச் சொற்களை நாம் தெளிவாக உணர்ந்து கண்டு நிறுவமுடியும் என்பதாகும்; தமிழ்மொழியின் கழிபழந் தொன்மையை இது நிறுவுகிறது. இதுவரை நமக்குக் கிட்டியுள்ள சான்றுகளின் அடிப்படையில் தமிழ்தான் தொல் திராவிடம் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. எனினும் தமிழில் உள்ள மாபெரும் சொற்களஞ்சியத்தில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் மூல வேர்களை எளிதில் காண முடியும்; தமிழில் வழங்கும் பல சொற்கள் தொன்மை வடிவங்களிலேயே மாற்றமின்றி இன்றும் வழங்குகின்றன; என்ற நிலைமைகளின் அடிப்படையில் நாம் திராவிட மொழிகளிலேயே தொன்மை நிலையை இன்றும் கொண்டுள்ள மொழி தமிழ்தான் எனலாம். தமிழிற் காணும் அடிப்படை வேர்களில் பல (சிற்சில மாற்றங்களுக்கு உட்பட்டு) ஏனைய திராவிட மொழிகள் பலவற்றிலும் இன்றும் காணப்படுவதே இக்கருத்தை மெய்ப்பிக்கிறது. ஆகவே, தமிழ்ச் சொல் ஒன்றைத் தமிழ் வேர் அல்லது வேர்களிலிருந்து உருவானதாக நன்கு நிறுவ இயலும்பொழுது தொல் திராவிட வேரைக் ‘கண்டுபிடித்து நிறுவுவது’ அபத்தமாகும்; தமிழ் வேர்கள், சொற்கள் ஆகியவற்றுக்கும் ஏனைத் திராவிட மொழிகளில் உள்ள அந்தந்தப் பொருள் சார்ந்த வேர்கள், சொற்கள் ஆகியவற்றுக்கும் நெருங்கிய ஒப்புமை அல்லது தொடர்பு இருக்கும் நேர்வுகளில் மட்டுமே அவ்வாறு தொல்திராவிட வேர் ஆய்வில் நுழைதல் பொருத்தமாகும். “It is a striking feature of Tamil, and of Kannada and Telugu in a lesser degree, that a large majority of the words constituting their vast vocabulary could by diligent enguiry be traced ultimately to one or other of their one-syllabled or two-syllabled elementary roots. This fact attests to the primitive and ancient character of Tamil. Though in the present state of our knowledge, it would be foolish to say that Tamil represents proto-Dravidian, it will be more or less correct to say that, considering the fact that its vast word - hoard could be traced to its own elementary native roots, and further that some of the most ancient forms (so far as we know) have been handed down to us in their pristine nature. Tamil represents within certain limits the most conservative of Dravidian dialects. This view receive confirmation from the fact that many of the elementary roots of Tamil are found (with modifications and alterations of various degrees) in a large number of other dialects. In this view, then, if a Tamil word could be satisfactoriy explained as being normally derived from a native Tamil root itself, or a combination of roots, it would be futile to construct proto-forms of words obscuring the relationships of root and word in Tamil, unless indeed the affinities of Tamil words and roots with those of other dialects demand it. (iv) மேலும் சுவெலபில் (1990) பக்கங்கள் 84-122இல் உள்ள இயல்கள் “6. திராவிட மொழிகளும் ஹாரப்பன் மொழியும், 7. திராவிட மொழி களும், உரால் - அல்தாய்க் மொழிகளும், 8. திராவிட மொழிகளும் எலாம் மொழியும், 9. திராவிட மொழிகளும் சப்பானிய மொழியும்” ஆகிய நான்கு இயல்களிலும் மிக விரிவாகவும் வலுவான ஆதாரங் களின் அடிப்படையிலும், ஒருபால் திராவிட மொழிகளும், மறுபால் மேற்சொன்ன நான்கு மொழிகளும் / மொழிக் குடும்பமும் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்திலிருந்து உருவாகி யிருக்கலாம் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பதைக் காணலாம். 29. மொழியியலில் “தமிழிய” மொழிக் குடும்பம் என்றே கால்டுவெல் காலம் வரை வழங்கிய பெயரை அவர்தான் “திராவிட” மொழிக் குடும்பம் என மாற்றினார். மாற்றாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். “தமிழ்” என்பதன் கொச்சைத் திரிபு வடிவமே “திராவிட” என்பதாகும். “திராவிட” என்பது முதலில் குமாரில பட்டரின் தந்திர வார்த்திகத்தில் “தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ” (“அப்படி திராவிட மற்றும் பிறமொழிகளில்”) என்ற அடிகளில் அச்சொல் வருகிறது. (இவ்வடியை “ஆந்திர திராவிட பாஷாயம் ஏவ’ என பர்னல் முதலில் அச்சிட்டது பிழை - (Annals of Oriental Research, University of Madras, XXVIII -1-- டாக்டர் குஞ்ஞஜுண்ணி ராஜா). குமாரில பட்டருக்கு முன்னர் மகாவம்சத்தில் தமிள என்னும் சொல்லும், தண்டின் எழுதியஅவனி சுந்தரி கதையில் ‘த்ரமிள’ என்ற சொல்லும் வருகின்றன. ‘த்ரமிள’ மேலும் உருமாறி த்ரமிட, திராவிட என ஆனது. பழந் தமிழின் திரிபே பிற திராவிட மொழிகள்; பழந் தமிழினின்றும் வேறுபட்ட தொல் திராவிடம் என்பது கற்பனை; அறியாமை காரணமாக தொல்திராவிடம் Proto Dravidian என்று வண்ணனை மொழியியலாளர் மீட்டுருச் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றன; பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்படவேண்டும்; இவற்றையெல்லாம் பாவாணர் நிறுவியுள்ளார். 30. தமிழர்கள் உலகில் இன்றுள்ள மற்ற எந்த மொழி, பண்பாட்டையும்விட அதிகத் தொன்மையானதும் இடையீடு இல்லாததும் ஆன மொழி - பண்பாட்டின் வாரிசுகள் ஆவர். மாந்த இன நாகரிக வளர்ச்சியின் மிகச் சிறந்த இயல்களில் ஒன்று தமிழர் மரபுச் செல்வம் ஆகும். இன்றுள்ள மொழிகளில் மாந்தன் தொன் மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் மட்டுமே. “முதல் தாய்மொழி” ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்கு ஒளி தரவல்லதும் தமிழே. ஒருசிறு நிலப்பரப்பின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இப்படி மாந்த இனத்தின் ஒட்டுமொத்தஇன, மொழி வரலாறுகளுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ள (தமிழகம்போன்ற) பகுதிகள் உலகில்சிலவே; தமிழ் தனித் தன்மை வாய்ந்தது. எஸ்.ஏ. டைலர் கூறியுள்ளது போல் இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி – பண்பாடு ஆகியவையேS.A. Tyler: “India, an Anthropological perspective (1973):” “All ofIndian civilisation is built on an underlying base of Dravidian language and culture”. ஆகவே, இந்திய நாட்டைப் பற்றிய சரியான, முழுமையான ஆய்வு களுக்கும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. 31. (i) தமிழிய மொழி பேசுநர் கி.மு.20000க்கு முன்னர்இருந்தே தமிழகத்திலும் தென்னாட்டிலும் இடைவிடாது வசித்துவந்த மண்ணின் மைந்தரே என்பதையே தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன என்பதைஆல்சின் தம்பதியர் (1988) தம் நூலில் பின்வருமாறு கூறுவர். “தென்னிந்தியா இன்று திராவிட மொழிகள் வழங்கும் பகுதி. அம்மொழிகளைப் பேசுவோர் பூர்வீகம் என்னவாக இருந்திருக்கலாம்? அவர்கள் (வட மேற்கிலிருந்து) தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறும் போது தம்முடன் இரும்பையும் பெருங் கற்படை நாகரிகத்தையும் கொணர்ந்தனர் என (வலுவான ஆதாரமின்றிக்) கூறப்படுகிறது. தொல்லியல் சான்றுகளின்படி இப்படி நடந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரும்புப் பயன்பாட்டிற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கருநாடகத்தில் (ஏன், தென்இந்தியாவில் பிற பகுதிகளிலும் கூட). பெருங்கற்படை நாகரிகக் குடியிருப்புகள் இருந்துள்ளன; அவை இடையீடு இன்றி தொடர்ந்து இருந்து வந்துள்ளன; வியக்கத்தக்க பண்பாடுத் தொடர்ச்சியுடன் இன்றும் உள்ள பண்பாட்டுக் கூறுகள் பல அந்தப் பழைய நாகரிகக் கூறுகளின் தொடர்ச்சியாகவே தோன்று கின்றன. உடற்கூறு அமைப்பிலும் அந்தப் பழைய நாகரிக மக்களும் இன்றைய மக்களும் பெரும் அளவுக்கு ஒன்று போலவே உள்ளனர். எனவே தென்னிந்தியாவில் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே) புதுக்கற்கால நாகரிகம் படைத்த மக்களிடையே உருவான வையே திராவிடமொழிகள் என்பதை மறுப்பது கடினமாக உள்ளது. தென்னிந்தியாவில் பற்பலபகுதிகளில் இருந்த புதுக்கற்கால நாகரிக மக்களிடையே தொடர்பு இருந்திருக்கும்; பொதுவான திராவிட மொழியும் இருந்திருக்கும். கி.மு.3000 - 1000 கால அளவில் தென்னிந்தியாவில் இருந்த புதுக் கற்கால குடியிருப்புகளில் இருந்து பிறந்தவையே வரலாற்றுக் காலத் தொடக்கத்தைச் சார்ந்த குடியிருப்புகளும் எனலாம்.” The southern part of the penisula is today the homeland of the Dravidian language, and we may well enquire what - speaking in broadest terms - is likely to have been their history. It has been claimed, though not on very solid grounds, that the earliest speakers of these languages brought with them into peninsular India both iron and the custom of making Megalithic graves. In the light of archaeological evidence this appears to be extremely improbable. We now know that at least for a millennium prior to the arrival of iron, there were established settlements in Karnataka, and probably also in other parts of the peninsula, and these settlements show evidence of a remarkable continuity of culture. Many modern culture traits appear to derive from them, and a substantial part of the populations shows physical affiliation to the Neolithic people. In the light of all, this it is difficult to believe that the Dravidian languages do not owe their origin to the same people who produced the Neolithic culture there. xxxxx the several regional cultures ... had throughout a degree of interaction and probably originally a common language family, Dravidian, xxxx the settlements of the third - second millennia appear to be ancestral to those which we encounter therefrom the beginnings of history onwards. (p. 353) (ii) பெருங்கற்படை நாகரிகம் தமிழ்நாட்டிலிருந்தே வடக்கே தக்காணத்திற்குப் பரவியது என்று தொல்லியலறிஞர் ஹ. சத்தியமூர்த்தி 26.5.2007 இந்து நாளிதழில் தெரிவித்துள்ளார். இவற்றுக்கு நேர்மாறாக உள்ளது பர்போலாவின் 2002 Journal of American Oriental Society கட்டுரைக் கருத்து. ‘பெருங்கற்படை நாகரிகத்தை கி.மு.800-600 அளவில் சிந்து, குஜராத் வழியாகத் தென்னிந்தியா விற்குள் நுழைந்த இரானிய மொழி பேசுநர் சிலர்தான் பரப்பியிருக்க வேண்டும்; சிறு எண்ணிக்கையில் வந்த அந்த இரானியர் திராவிட மொழி பேசுநருடன் முற்றிலும் கலந்துவிட்டனர்’ என்பது பர்போலா கருத்து. இது ஏற்கத்தக்கதல்ல. திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவியபொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்து நாகரிகப் பகுதியாகும் என்பது பற்றிய விளக்கம் 32. மாந்த இனப் (Anatomically Modern Humans: AMH) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவியபொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்து நாகரிகப் பகுதி என்று கொள்வதற்கான ஆய்வுகளின் இன்றைய நிலையின் படியான ஆதாரங்களை இதுவரைக் கண்டோம். சிந்துநாகரிகத் தாக்கத்தால்தான் எலாம் சுமேரியம் முதலிய நாகரிகங்களும் உருவாயின என்ற கருத்தையும் கண்டோம். 33. எலாம் (Elam) மொழி கி.மு.3000க்கு முன்னர் இருந்தோ சுமேரியாவுக்குக் கிழக்கில் வழங்கிவந்த ஒரு ஒட்டுநிலை Agglutinative மொழியாகும். அது திராவிட மொழி சார்ந்தது என்றும் திராவிட மக்களே தெற்கு, கிழக்கிலிருந்து எலாம் பகுதியில் குடியேறியிருக்க வேண்டும் என்பதையும் பின்வருமாறு “கேம்பிரிட்ஜ் பழங்கால வரலாறு ” (1970) 154-5 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளது:- “அம்மொழி (எலாம்) பேசுவோர் வடக்கிலிருந்து குடியேறினவர் கள் என்று கொள்ள எந்த ஆதாரமும் இல்லை. (பலூசிஸ்தானத்தில் இன்றும் பேசப்பட்டு வரும் பிராஹுய் மொழி போல்) ஒட்டுநிலை மொழிகளான திராவிட மொழிகளைப் போன்ற அமைப்பைக் கொண்ட எலாம் மொழி திராவிட மொழிகளோடு தொடர்புடையது. ஹாரப்பா, மொஹெஞ்சொதரோவில் சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இம் முடிவு வலுவேறியுள்ளது. சிந்துநதிக்கு மேற்கே 400 மைல் தொலைவு பாரசீக எல்லைவரை ஹாரப்பாவுடன் தொடர்புடைய துறைமுகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கராச்சிக்குத் தென்கிழக்கே கட்ச் சதுப்பு நிலத்திலிருந்து (Rann of Kutch) பம்பாய்க்கு வடக்கே 150 மைல் வடக்கிலுள்ள ஓர் இடம் வரை மொத்ம் நூற்றுக்கணக்கான சிந்து வெளிநாகரிக இடங்களை இந்தியத் தொல்பொருளாய்வாளர் கண்டு பிடித்துள்ளனர். திராவிடர்களுக்கும் எலாம் மக்களுக்கும் இன ஒற்றுமை இருந்தது எனக் கருத இது மேலும் இடம் தருகிறது. அதாவது சிந்து வெளி நாகரிகப் பகுதியின் கடலோரப் பகுதி முழுவதும் திராவிடர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். சிந்துப் பகுதிக்கு மேற்கே சுமார் 400மைல் வரை அத்திராவிடர்கள் தங்கள் மொழியின் கூறுகளை விட்டுச் சென்று இருக்கவேண்டும். பெயர்ச் சொற்களுடனும் வினைச் சொற்களுடனும் விகுதிகளை எளிதில் சேர்க்கும் ஒட்டுநிலைப் பண்பு; செய்வி, நடப்பி போன்ற பயன்பாடு (Passival treatment of Transitive verbs) ஆகியவை எலாம் மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையிலுள்ள பொதுப் பண்புகள் ஆகும். இரு மொழிகளிடையே பொதுவான சொற்கள் காலப் போக்கில் எந்த விகிதப்படி மாறுபாடு அடையும் என்பதைக் கணக்கிடும் Glottochronology முறைப்படி எம். அந்திரனாவ் அண்மையில் ஆய்வு செய்து பிராஹூய் மொழி திராவிட மொழிகளில் இருந்து பிரிந்த காலம் கி.மு.4000 ஐ ஒட்டி இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளார். இது தேற்றமாக இல்லா விடினும் ஏறத்தாழ சரியாக இருக்கும் என்று தொல்லியல் மற்றும் தொல்லெழுத்தியல் சான்றுகளிலிருந்து தெரியவருகிறது. அச் சான்று களின் படி சிந்து நாகரிகம் இறுதியாக இந்தோ ஆரியர்களால் கி.மு. 1950 - 1750 காலத்தில் அழிந்தது என்று தெரியவருகிறது. திராவிட மொழிகளின் ‘ஒப்பியல்மொழி ஆய்வின்’ மூலம் சிறந்த அறிவியல் முடிவுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அவ்வாய்வுகளை மேற் கொள்வது உடனடித் தேவையாகும்.” 34. ஹெச். ஆர்.ஹால் 1913ல் எழுதியமைய கிழக்கு நாடுகளின் பண்டை வரலாறு (Ancient Historyof the Near East) என்னும் நூலிலேயே இந்தியாவிலிருந்து சென்ற திராவிடர்களே சுமேரிய நாகரிகத்தை உருவாக்கியிருக்க வேண்டும் என்ற கருத்தைப் பின்வருமாறு கூறியிருந்தார்:- “சுமேரிய உருவச் சிலைகள் போன்றவற்றைப் பார்க்கும் பொழுது பண்டைச் சுமேரியர் உடலமைப்புத் தோற்றம் திராவிட இன அமைப்பையே பெரிதும் ஒத்துள்ளது. தென் இந்தியாவில் திராவிட மொழிபேசும் திராவிடனைப் போலவே சுமேரியரும் இருந்தனர். இந்தியாவிலிருந்து தரை வழியாகவும் (கடல் வழியாகவும் இருக்கலாம்) பாரசீகம் வழியாக மெசபொதாமியா சென்று குடியேறிய இந்திய (திராவிட) இனத்தவரே திராவிடர் எனக் கருத இடமுள்ளது. இந்தியா வில் தான் இந்நாகரிகம் முதலில் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அங்குதான் எழுத்து கண்டுபிடிக்கப்பட்டு முதலில் படவெழுத்தாக இருந்தது பின்னர் திருந்திய எளிமையான எழுத்துமுறை உருவாக்கப் பட்டு சுமேரியாவிற்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நாளடைவில் குனேபார்ம் ஆப்பெழுத்து உருப் பெற்றிருக்க வேண்டும். திராவிடர் சுமேரியா செல்லும் வழியில் எலாம் பகுதியிலும் தங்கள் நாகரிகத்தை விட்டுச் சென்றிருக்கவேண்டும். மிகப்பழைய நாகரிகத் தொட்டில்களில் இந்தியா ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே கிழக்கிலிருந்து வந்து சுமேரியாவில் நாகரிகத்தைப் பரப்பியதாகக் கூறப்படும் (காண்க: கி.மு.5ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரோசஸ் “கிழக்கிலிருந்து ஓயானஸ், ஓடக்கோன் ஆகியோர் நாகரிகத்தைக் கொணர்ந்ததாகக்” கூறும் கதை) செமித்தியரும் அல்லாத, ஆரியரும் அல்லாத புதியவர்கள் இந்தியாவிலிருந்து வந்த திராவிடர் ஆக இருக்கலாம் எனக் கருதுவது பொருத்தமாகும்”. 35. (i) சுமேரிய ஆப்பெழுத்துப் பொறிப்புகள் மெலுகா Meluhha என்னும் நாட்டிலிருந்து பின்வரும் பொருள்கள் இறக்குமதியானதாகக் கூறுகின்றன: Mgilum <-- மாகலம் boat; mes = கருமரம் நடெடி லே மா மா, மை, மசி; gi simmar (= ஈந்து date - palm) ஈந்து, ஈசல் (கன்னடம்), சீந்து (பார்ஜி); சகரம் ககரமாக மாறி; கிசிமரம்; gug (= carmelian) <--- செம், கெம், செக்கச் செவேல், செக்க (மலையாளம்); சகரம் சகரமானது); Guskim (=தங்கம்) <--- செம், செக்; கிசன் xisun (பிராஹுய்), சகரம் ககரமானது; dar (=பறவை) தாரா (duck, heron) பர்போலா, மகாதேவன், ரோமிலா தாபர், அலோகா பராஷர் சென், லெவிட் ஆகியோர் அனைவரும் மெலுகா என்பது சிந்துப் பகுதியின் அன்றையப் பெயராக வழங்கிய (தமிழ்) (the country above, the eminent / excellent / superior country; சீன Zhong-guo = the central country, நடுவண் நாடு) ஆகும் என்றும்; சம்ஸ்கிருதத்தில் mleccha வாகவும், பாலியில் milakka வாகவும் அச் சொல் மாறியது என்றும் கருதுகின்றனர். ii. இதுபற்றிய விரிவான ஆய்வை லெவிட் (2009 The Ancient Mesopotamian place name ‘Meluhha’ (Studia Orientalia) பின்லாந்து: 135- 177 இல் காணலாம். ‘மேலகம்’ ஆகவும் இருந்திருக்கலாம்; அன்று சிந்துப் பகுதியில் தமிழே வழங்கியதால் ‘தமிழகம்’ ஆகவும் இருந்திருக்கலாம். 36. ‘ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட ஈராசு பாதிரியார் (11.9.1888 - 14.12.1955)தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Proto – Indian Mediterranean Culture 1953) என்னும் நூலில் ‘சிந்து நாகரிகம் திராவிட ருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி’ என்பதை நிறுவினார். மிகப் பழங்காலத்தில் (கி.மு.5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக் கரை வழியாகத் தமிழர்களால்சிந்து வெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள்வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஈராசு கொள்கை (அவர் வாதத்துக்கு ஆதாரமாகக் கொண்ட செய்திகளுள் சில இப்பொழுது தவறாகத் தோன்றலாம்; சிந்து முத்திரைகள் திராவிடமொழி சார்ந்தவை என்று அவர் கொண்ட முடிவு சரியென் றாலும், முத்திரைகளில் அவர் படித்த வாசகங்கள் இன்று ஏற்கத் தக்கனவாக இல்லை; இருந்தாலும் அவர் கண்ட அடிப்படை உண்மை இன்றும் வலுவுடையதாகவே உள்ளது.) 37. என் லாகோவரி 1963 இல் வெளியிட்டதிராவிடர் தோற்றமும் மேலை நாடுகளும் (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்மைகளை உணர்த்துவதாகும். “திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவில் முதற்கண் குடியேறினர் என்ற கொள்கையை அவர் விவரம் புரியாமல் பின்பற்றியிருந்த போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்மைகள் முக்கியமானவை: அ. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல் வரை ஒரே மாதிரியான “பல சொல் பிணிப்பு ஒட்டு நிலை” (Polysynthetic Suffixal) மொழிகள் இடையீடு இன்றிப் பரவி யிருந்தன. அவற்றின் சொற் களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிககு மொழி மாறுபட்டு இருந்திருக்லாம். திராவிட மொழிகள், எலாம், சுமேரியம், ஹர்ரி, காகேசியன், ஹல்டி, ஹட்டி போன்றவை ஒரே மொழியமைப்பைக் கொண்டு ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர் போல அமைந்திருந்தன. ஆ. இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுவோர் (கி.மு.2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப் பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல்திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டு மின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன் மொழிகளுடனும் உறவுடையது. இ. இம் மொழிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை; ஒரே பொதுவான தாய்மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 38. சிந்து நாகரிகம் திராவிடச் சார்புடையதே என்பதற்கான பல துறை சார்ந்த ஆதாரங்களைப் பின்வரும் இயல்கள் விரிவாகத் தருகின்றன. இரத்தினச் சுருக்கமாகச் சில வருமாறு: (i) சிந்து நாகரிக எச்சங்களில் தமிழியக் கட்டடக்கலை வீடமைப்பு, நீர்மேலாண்மை, அணைக்கட்டுக் (கற்சிறைக்) கலை, போன்றவற்றைக் காணலாம். சிந்து நாகரிகக் காலத்திலேயே உலகிற்குத் தமிழிய நாகரிகம் பருத்தித் துணியை வழங்கத் தொடங்கிவிட்டது. வீடுகளில் பயன்பட்ட பொருள்கள் (அம்மி, குழவி உட்பட), நகைகள், சிற்பங்கள் ஆகிய அனைத்தும் தமிழியச் சார்புடையவை. இன்றை இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ. கோஸ்வாமிஇந்திய இசை வரலாறு , 1957). இயல்கள் 2, 3, 4 ஆகியவற்றில் இவற்றின் விரிவைக் காண்க. (ii) தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்து நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடாசலம் நிறுவியுள்ளார். (இயல் 5) (iii) இன்றைய இந்து மதத்தின் முதன்மைக் கூறுகள் அனைத்தும் திராவிட / தமிழ் / சிந்து நாகரிகக் கூறுகளே ஆகும். சமண, பௌத்த மதங்களின் தோற்றத்திற்கும் சிந்து மற்றும் வடநாட்டில் பண்டு வாழ்ந்த திராவிட - தமிழ் ஞானிகளே காரணமாவர். (இயல் 6) (iv) சிந்து நாகரிக மொழி திராவிட (தமிழிய) மொழிதான்; அந் நாகரிக முத்திரை எழுத்துகளும், திராவிடமொழி சார்ந்த எழுத்துகளே யாம் (இயல் 8) சிந்து நாகரிகம் இந்தோ - ஆரிய மொழி பேசுநர் நாகரிகமாக இருக்க வாய்ப்பில்லை என்பதை இயல் 7ல் தெளிவுறக் காணலாம். அதுபற்றிய சுருக்கம் அடுத்த பத்தியில். 39. சிந்து நாகரிகம் இந்தோ ஆரிய மொழி பேசுநர் உருவாக்கிய தாக இருக்கலாம் என இன்றைய இந்திய அறிஞர் (குறிப்பாக வடநாட் டறிஞர் சிலர்) வல்லடி வழக்காக வாதிடுகின்றனர். ‘வேதமொழியாகிய இந்தோ ஐரோப்பிய மொழி இந்தியாவில் உருவாகியிருக்கலாம்’ என்று வேத சமஸ்கிருதப் பற்றாளர் கூறுவது அபத்தம்[இது வேறு; கி.மு. 10000க்கு முன்னர் தொல்தமிழிய மொழியிலிருந்து கிளைத்த மொழிக் குடும்பங்களுள் இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பமும் ஒன்று என்னும் ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு வேறு]. கி.மு.1700 - 1500 காலக்கட்டத்தில் இந்தியாவிற்குள் வடமேற்கிலிருந்து நுழைந்தவர்கள் வேதமொழி (Vedic Language) ஆகிய இந்தோ – ஆரிய மொழி பேசுநர் ஆவர். இவர்கள் சிந்து நாகரிக மக்களோடு ஒப்பிடும் பொழுது சிறு எண்ணிக்கையினராகவே இருந்திருக்கவேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிப் பெருங்குடும்பத்தில் அடங்கியவை இந்தோ ஆரிய மொழியாகிய வேதமொழி தவிர இரானியன், (அவெஸ்தன்), அனதோலியன் (ஹிட்டைட்), அர்மீனியன், தோக்காரியன் A, B, அல்பேனியன், கிரீக், இத்தாலியம் (லத்தீன் முதலியவை) கெல்திக் (ஐரிஷ், வெல்ஷ் உட்பட). ஜெர்மானியம் (இங்லிஷ் உட்பட) பால்டிக் (லட்வியன், லித்துவேனியன்), ஸ்லாவ் (ரஷ்யன் முதலியவை) ஆகியவையாகும். இந்தப் பல்வேறு இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் ஒருங்கு சேர்ந்து கி.மு.4000 - 3000 அளவில் கருங்கடல் - காஸ்பியன் கடல் பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய ஐரோப்பிய ஸ்தெப்பி புல்வெளிகளில் வசித்து வந்த நாடோடிகள் (Nomads) ஆவர். அக் கால கட்டத்தில் அவர்கள் இந்தோ ஐரோப்பியத் தொன் மொழியைப் (Proto Indo - European) பேசிவந்தனர். கி.மு.3000 – 2000 கால அளவில் அவர்களில் சில குழுக்கள் மேற்காகவும், சில குழுக்கள் கிழக்கு - தென் கிழக்காகவும் நகரலாயினர். மேற்கில் சென்ற நாடோடிக் குழுவினருள் ஒன்றான கிரீக் மொழி பேசுநர் நுழைந்த பகுதியில் (தமிழியச் சார்பான பலாய்க், லிதியன், லிசியன், காரியன் மொழிகளைப் பேசிய) அப்பகுதிப் பழங்குடி மக்களுடன் கலந்துவிட்ட கிரீக் மொழி பேசுநர் உடனடியாக நாகரிகம் பெற்றனர். கிழக்கு – தென்கிழக்காகப் பெயர்ந்த நாடோடிக் குழுவினருள் இந்தோ - ஆரியமொழி பேசும் குழுவும் ஒன்று. கி.மு.1700-1500 இல் அவர்கள் இந்தியாவுக்குள் இரானிலிருந்து நுழைந்தபொழுது அவர்களும் சிந்துப் பகுதித் தொல்தமிழ நாகரிகத்தினரிடமிருந்து விரைவில் நாகரிகம் பெற்றனர். சிந்துப் பகுதித் தமிழிய அறிஞர்கள் (அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் ஏற்கப்பட்டனர்) உருவாக்கிய படைப்புகளும், நேரடியாகவோ, மொழி பெயர்த்தோ ரிக்வேதத்திலேயே ஏறியுள்ளன என்பது மறைமலையடிகள் (1903, 1923, 1930; குஞ்ஞன் ராஜா 1940; வால்பர்ட் போன்றோர் கருத்தாகும் (இயல் 7). The rise of civilisation in India and Pakistan (1988) நூலில்பிரிட்ஜட் மற்றும் ரேமாண்ட் ஆல்சின் தம்பதியர். கருத்தும் இதுவே: இந்தோ ஆரிய மொழியில் மிகத் தொன்மை வாய்ந்தரிக் வேதம் கூட இந்தோ ஆரியமல்லாத (திராவிடம்) தாக்கங்களை ஒலியனியலிலும் திராவிட மொழிகளிலிருந்து கடன்பெற்ற சொற்கள், பெயர்கள் ஆகியவற்றிலும் பெற்றுள்ளது. ரிக் வேதம் தொகுக்கப்பட்ட காலமாகிய கி.மு. 1500க்கு முன்னர் சில நூற்றாண்டுகாலம் வேதமொழி பேசுநரும், திராவிட மொழி பேசுநரும் பண்பாட்டுத் தொடர்புடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. (The earliest Indo-Aryan text, the compiled Rg Veda, shows several influences of a non - Indo - Aryan, Dravidian element, in the form of phonetic changes, introduction of loan words and names etc. These presuppose the coexistence of the Vedic and Dravidian speaking peoples in a cultural contact situation for a period, perhaps of centuries, before the compilation of the Rg Veda (circa 1500). 40. சிந்து நாகரிக நகர்ப் புறங்களின் வீழ்ச்சியும் அழிவும் கி.மு.1900க்கு முன்னரே தொடங்கிவிட்டது என்பார் பொசெல் (2002). அறுநூறு ஆண்டுகள் சிறந்து விளங்கிய சிந்து நாகரிக அழிவுக்குக் காரணம் அந்நாகரிகத்தின் சமூகப் பண்பாட்டுக் கோட்பாட்டின் வீழ்ச்சி failed Indus Socio-Cultural ideology தான் என்பார் அவர். (2002:244). இந்தோ ஆரிய மொழி பேசுநர் இங்குவந்த பின்னர் அவர்களுக்கும் சிந்துப் பகுதித் தமிழருக்கும் இடையே முதலில் மோதலும் வன்முறையும் ஏறபட்டபோதிலும் விரைவில் இருவகையாரும் கலந்துவிட்டனர். சிந்து நகரங்களை ஆரியர் தாக்கியிருக்கலாம்; இந்திரன் பெயரே புரந்தரன் (நகரங்களை அழிப்பவன்) தானே! இர்பான் ஹபிப் தனது The Indus Civilization (2011: 64) நூலில் சிந்து நாகரிக நகரங்களின் அழிவுக்கு ரிக்வேத கால இந்தோ ஆரிய மொழி பேசிய குழுக்களுக்கு முன்னரே (அதாவது 2000ஐ ஒட்டியே) அவர்களுக்கு முந்தியே சிந்துப் பகுதியில் நுழைந்த இந்தோ ஆரிய மொழி பேசிய குழுக்களின் தாக்குதலும் சிந்து நாகரிக அழிவுக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். எனினும் அதுமட்டுமன்றி கி.மு.1700க்கு முன்னர்நிகழ்ந்த இயற்கை, சுற்றுச் சூழ்நிலை மாற்றங் களும் காரணமாயிருந்திருக்கலாம் என்பர் ஆலசின் (1995): “சிந்து நாகரிக இறுதிக் காலத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய பின்வரும் நான்கு வகையான காரணங்களில் ஒன்றிரண்டோ, அனைத்துமோ அந் நாகரிகம் நகரப்பகுதிகளில் அழிந்திடக் காரணமாக இருந்திருக்கலாம்: 1. இயற்கை மாற்றம் (மழைவளம் குறைவு) 2. இயற்கை உற்பாதங்கள் (பூமி அதிர்ச்சியால் நிலப் பகுதிகளின் நிலையில் மாற்றம்; கக்கார் (சரஸ்வதி) ஆறு வற்றி மறைந்தமை) 3. மாந்தர் செயல்கள் (இந்தோ-ஆரிய மொழிபேசுநர்; இனக் குழுவினர் (tribesmen) நுழைவு; எலாம் சுமேரியா போன்றவற்றுடன் வாணிகத் தொடர்பு அற்றுப் போனமை. 4. தொற்று நோய்கள் 41. இன்றைய நிலையில் ஆல்சின் உடைய இக்கருத்து ஏற்கத்தக்கதாக உள்ளது. ஏறத்தாழ இதே கருத்துடையவர்களே, பர்டன் ஸ்டெய்ன் 1988 கெனோயர் (1998 : Ancient Cities of the Indus Valley civilization கராச்சி OUP, பக். 19) நயன்ஜோத் லாகிரி (2000) தாபர் (2002) டி.என்.ஜா (2004) முதலியவர்களுமாவர். இத்துடன் பொசெல் (2002) சொல்வது போல சுமார் 600 ஆண்டுகள் வலுவாக இருந்த சிந்து நாகரிகத்தினரின் கோட்பாடு ideology வலுவிழந்ததும் ஒரு காரணம் எனக் கொள்ளலாம் (கீழே இயல் 4ன் கடைசிப் பத்தி) சிறு எண்ணிக்கையில் கி.மு.1500 க்கு முன்னர் சிந்துப் பகுதியில் நுழைந்த ஆரியரால், சிந்து நாகரிகம் பரவியிருந்த (பெரும்பரப்புடையதான) கிராமப் பகுதிகளில் பெருந் தாக்கம் ஏற்படுத்தியிருக்க இயலாது. சிந்து நாகரிக நகரங்கள் வீழ்ச்சியுற்ற போதிலும் அந்நாகரிகக் கிராமப் புறப் பகுதிகளின் பெரிய மாற்றம் எதுவும் நடந்திராது என்பர் பர்போலா: “It must be borne in mind that the collapse of the cities did not cause any profound changes in the life of the Harappan villages” Studia Orientalia 57 (1985): பக். 13. சிந்து நாகரிக மக்கள் பெருமளவு வாழ்ந்த கிராமப்புறங்களில் அந் நாகரிகம் தொடர்ந்து வாழ்ந்தது. சுநீதி குமார் சட்டர்ஜி, வால்டர் பேர்சர்வீஸ், எஸ்.ஏ. டைலர் போன்றோர் கூறுவது போல, சிந்து நாகரிகமே இன்றைய இந்திய நாகரிகம், பண்பாடு, இந்துமதம் ஆகியவற்றின் அடித்தளம் (ரூபாய்க்கு 12 அணா அளவுக்கு என்பர் சட்டர்ஜி) ஆக அமைந்தது. சர் ஜான் மார்ஷல் ராக்கல்தாஸ் பானர்ஜி தயாராம் சாஹ்னி சர் மார்டிமர் வீலர் ஆர். எஸ். பிஷ்ட் இயல் 2 சிந்து வெளி நாகரிகத்தை வெளிக் கொணர்ந்த அகழ்வாய்வுகள் சிந்துநாகரிக நகரங்களின் எச்சங்கள் 1000க்கு மேற்பட்ட இடங்களில் இருப்பினும் 1921க்குப் பின்னர் இதுவரை நடந்த அகழ்வாய்வில் வெளிப்பட்டுள்ளவை ஏறத்தாழ 97 மட்டுமே. அரபிக் கடலில் சிந்து ஆறு கடலில் கலக்கும் இடம் தொடங்கி மாபெரும் சிந்துச் சமவெளியை உள்ளடக்கி டெல்லி வரை உள்ள மாபெரும் பரப்பில் இந்நாகரிகம் விளங்கியது. இன்றைய பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தானத்தில் பெரும்பகுதி ஆகியவற்றை மட்டுமன்றி வடக்கே இமயமலை அடிவாரம் வரையும், கிழக்கே (கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட) ஆலம்கீர்பூர் வரைக்கும் தெற்கே மகாராட்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டம் தைமாபாத் வரைக்கும் உள்ள பெருநிலப்பகுதி இது. ஏறத்தாழ 5 லட்சம் சதுர மைல் பரப்புள்ளது. இம்மாபெரும் பரப்பு முழுவதும் ஒரே மாதிரியான எடைகளும் அளவுகளும் விளங்கின; எழுத்து முறை ஒன்றே; எங்கும் ஒரே மாதிரியான முத்திரைகள்; எங்கும் பல பொருள்களில் வணிகம் விரிவாக நடந்ததற்கான சான்றுகள்; சமய, கலைத், துறைகளில் ஒருமை; எனவே சிந்து நாகரிகம் செறிவான சமூக - பண்பாட்டு அமைப்பாக well developed complete socio - cultural form ஆக இருந்திருக்கவேண்டும் என்பர் பொசெல். முழு அதிகாரம் வாய்ந்த ஒரு மைய அதிகார அமைப்பும் இருந்திருக்கலாம் என்பது சில அறிஞர் கருத்து. ஆனால் பொசெல் (2002:57) கருத்து அப்படி வலுவான அதிகார அமைப்பு அரசன் / அரசர்கள் தலைமையில் இருந்திருக்காது; (எகிப்து, மொசொபொதாமியாவில் போல அரசர்களையும் அவர்கள் குடும்பத்தினர் பிணங்களையும் பெருஞ்செலவில் ஆடம்பரமாகப் புதைத்த கல்லறைகள் இங்கு இல்லை; பல்வேறு மட்டங்களில் அதிகாரக் குழுக்கள் ஒவ்வொரு நகரத்திலும் இருந்திருக்கும்; நகரங்களுக்கு அடுத்து வட்டார அதிகாரி மையம் ஒன்றும், அம்மையங்களுக்கும் மேலாக உச்சப்பொறுப்பில் ஒரு குழுவும் இருந்திருக்கலாம்’ என்பதாகும். (City councils for individual settlements; regional councils for the domains or the politial unit above the civic; and possibly a supreme ‘Indus Counci l’) 2. ரோம் சாம்ராஜ்யத்துக்கு முன்னர் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ஒரு முகப்பட்ட ஆட்சி முறை - நாகரிகம் – பண்பாடு உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. பழைய எகிப்து நாகரிகப் பரப்பை விட இது இரு மடங்கு பெரியது. இந்த நகர நாகரிகத்தின் தொடக்க நிலை (கி.மு.3000-2500) பற்றிய சான்றுகள் கிடைத்துள்ள முக்கிய இடங்கள் அம்ரி, கோட்-டிஜி, கலிபங்கன் போன்றவை. சிறப்புற்ற நிலை - Mature phase - (கி.மு. 2500-1800) பற்றிய சான்றுகள் கிடைத்துள்ள முக்கிய இடங்கள் மொகெஞ் சொதரோ, ஹரப்பா, கலிபங்கன், சன்ஹூதரோ, லோதல் போன்றவை ஆகும். மொகெஞ்சொதரோவில் 40000 மக்களும் ஹரப்பாவில் 25000 மக்களும் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்த நகர நாகரிகத்திற்கு முன்னோடியாக சிந்துப் பகுதியில் நாகரிக வளர்ச்சி இடையறவு இன்றி கி.மு.7000த்திலிருந்து தொடர்ந்து நிகழ்ந்து வந்தது என்பதற்கான சான்றுகளை போலன் கணவாய்க்குக் கிழக்கே மெஹர்கார் என்னும் இடத்தில் அண்மையில் நடந்த அகழ் வாய்வுகள் தந்துள்ளன. அக் கழிபழங்காலத்தில் இருந்தே சிந்து வெளியிலேயே புதுக் கற்கால நாகரிகம் வேளாண்மை நாகரிகமாக மாறிப் படிப்படியாக நகர நாகரிகமாக வளர்ந்து வந்ததற்கான சான்றுகள் அவை. 3. முக்கியமான இடங்களில் நடந்துள்ள அகழ்வாய்வு விவரங்கள் வருமாறு: இடம் அகழ்ந்தவர் ஆண்டு ஹரப்பா சர்ஜான் மார்ஷல் தலைமையில் (150 ஹெக்டேர் ராய்பகதூர் தயாராம் சாஹ்னி 1923 - 34 = 371 ஏக்கர்) & மாதோ ஸ்வரூப் வாட்ஸ் சர் மார்டிமர் வீலர் 1946 கெனோயர் 1986 - (ஹரப்பா எச்சங்களில் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. 1856ல் லாகூரிலிருந்து மூல்தான் வரை ரயில்பாதை அமைக்க தண்டவாளத்திற் கடியில் பரப்புவதற்காக ஹரப்பாவிலிருந்து செங்கற்களை எடுத்துச் சென்று பயன்படுத்தினர்! அண்டை ஊர்மக்களும் அவ்வப் பொழுது செங்கற்களை எடுத்துக் கொள்வர்! மிஞ்சிய அழிவுகளிலேயே அகழ்வாய்வு நடந்தது) இடம் அகழ்ந்தவர் ஆண்டு மொகெஞ்சொதரோ மார்ஷல்தலைமையின் கீழ் (100 ஹெக்டேர்) ராகால்தாஸ் பானர்ஜி 1923 - 30 (கண்டுபிடித்தவர்) காசிநாத் நாராயண் தீட்சித் 1927 - 31 ஈ.ஜே.எச். மக்கே சர் மார்டிமர் வீலர் 1946 ஜார்ஜ் எப், டேல்ஸ் (பென்சில்வேனியா 1964 - 66 பல்கலைக்கழகம்) [மொகெஞ்சொதரோவில் பத்தில் ஒரு பகுதியில் மட்டுமே அகழ் வாய்வு நடந்துள்ளது. அங்குள்ள எட்டு - அடுக்கு எச்சங்களில், கீழ் மூன்று அடுக்குகளில் நீர்மட்ட உயர்வு காரணமாக அகழ்வாய்வு செய்ய இயலவில்லை] ஜெர்மனியைச் சார்ந்த மைக்கேல் ஜான்சன் அகழ்வாய்வு செய்யாவிடினும் 1979-85 ஆண்டுகளில் பழைய அகழ்வாய்வறிக்கைக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அகழ்வாய்வு செய்யாமலே சில பல செய்திகளைத் தரவல்ல நவீன ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்திப் பல செய்திகளை அறிந்து வெளியிட்டுள்ளார். சன்ஹூதரோ மக்கே 1935 கோட்-டிஜி எப்.ஏ.கான் 1955-57 ரூபார் சர்மா 1953-50 கலிபங்கன் (கங்காநகர் கோஷ் 1953 மாவட்டம்; ராஜஸ்தான்) ஆலம்கீர்பூர் சர்மா 1958-59 ரங்பூர் எஸ்.ரங்கநாத ராவ் 1953-50 லோதல் (குஜராத்) ” 1953-54 தோலாவிரா (கச்) ஜே.பி.ஜோஷி 1969-70 & பின்னரும் ஆர்.எஸ்.பிஷ்ட் 1990-98 [படங்களுடன் தோலாவிரா பற்றிய கட்டுரையை குசடிவேடiநே சூலை 12, 2013ல் காண்க.] மெஹர்கார் ஜாரிஜ் 1970-80 ரோஜ்தி (சவுராஷ்டிரா) ராக்கிகார் (ஹரியானா) பொசெல் 1980களில் 80 ஹெக்டேர் பிர்ரானா (ஹரியானா)* எல்.எஸ்.ராவ் 2003 – 06 *மெகர்கார்போல தொடக்க நிலைச் சிந்து நாகரிகச் சின்னங்களும் கிட்டியுள்ளன. கிர்சாரா Khirsara 2012லிருந்து கச் மாவட்டம் [கிர்சாரா பற்றிய கட்டுரையை Frontline சூன் 28, 2013இல் காண்க.] 4. இதுவரை ஹரப்பா (சிந்து) நாகரிகச் சின்னங்கள் இருக்கும் இடங்களை 1500க்கு மேல் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் பெரும் பாலானவை இன்றைய இந்தியாவில் உள்ளன. (அவற்றுள் சுமார் 20 இடங்களில் மட்டுமே அகழ்வாய்வு நடந்துள்ளது) கி.மு.3000 வரை சிந்து ஆற்றுக்கு கிழக்கே சுமார் 100 மைல் தொலைவில் சரஸ்வதி என்ற ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது; சட்லஜ் அப்பொழுது அதன் கிளைநதி; பின்னர் நிலமட்ட மாற்றங்கள், இமாலயப் பனிப் பாளங்கள் இடப்பெயர்வு, போன்ற காரணங்களால் சட்லஜ் ஆறு சிந்து நதியின் கிளையாக மாறியது; இமாலயத்தில் வேறு பகுதிகளிலிருந்து சரஸ்வதிக்கு வந்த நீர் யமுனைக்குத் திசை மாறியது; இவற்றின் காரணமாக சரஸ்வதி வற்றத் தொடங்கி கி.மு.1500 அளவில் முற்றும் காய்ந்துவிட்டது” என்பர் புவியிலாளர். சரஸ் என்றால் குளம், கண்மாய், ஏரி என்று பொருள். சரஸ்வதி ஆற்று நீரைப் பல குளங்களில் பாய்ச்சிப் பயன்படுத்தியதால் அவ்வாற்றுக்கு அப்பெயர் (கண்மாய் ஆறு) ஏற்பட்டு பழைய பெயர் மறைத்திருக்கலாமோ? (ரிக் வேதம் சரஸ்வதி ஆற்றையும் குறிப்பிடுகிறது) சிந்து நாகரிக வளர்ந்த நிலை (mature phase) இடங்கள் பழைய சரஸ்வதி ஆற்றுத் தீரத்தில் (மேற்கு ராஜஸ்தானில்) 140க்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மறைந்த சரஸ்வதி ஆற்றுப் படுகைக்கு இப்பொழுது வழங்கும் பெயர் கக்கார் / ஹக்ரா (Ghaggar / Hakra) என்பதாகும். 5. நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் சிந்துவெளி நாகரிக மக்கள் வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் அத்தகைய கிராமப்புற மக்களின் வாழ்விடங்கள் இன்னும் அகழ்வாய்வில் அகப்படவில்லை. நகரங்கள் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் தவிர நாடோடிகளாக வாழ்ந்தவர்களும் இருந்திருக்கவேண்டும். இவர்கள் வாழ்க்கை முறைகளையெல்லாம் காட்டும் அகழ்வாய்வுச் சான்றுகள் இல்லை. எனினும் பெருமளவு ஊகிக்க இடமுண்டு. இயல் 4ஐக் காண்க. 6. 1999-இல் கிரிகரி எஸ். பாசெல் எழுதியுள்ள சிந்துயுகம்: தொடக்க நிலை - Indus Age - The Beginnings; என்னும் ஆயிரம் பக்க நூல் சிந்து அகழாய்வின் வரலாற்றை விரிவாகத் தருகிறது. அத்துடன் கி.மு.7000 - 4000 காலச் செய்திகளையும் தருகிறது. சிந்துச் சின்னங்கள் காணப்படும் இடங்களின் பட்டியல் (108 பக்கங்கள்) நூற்றொகை (178 பக்கங்கள்) ஆகியவையும் உள்ளன . லோதல் துறைமுகம்? தோலவிரா சுர்கோதடா இயல் 3 நகரமைப்பு, கட்டடக்கலை, வீடமைப்பு சிந்து நாகரிக நகரங்களில் மிகப் பெரியவை சிந்து மாநிலத்தில் சிந்து ஆற்றின் மேற்குப் பக்கத்தில் உள்ள மொகெஞ்சொதரோவும், மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில் முன்னர் ராவி ஆறு ஓடிய (ஆனால் இப்பொழுது காய்ந்து கிடக்கும்). நீர்த்தடத்தின் கிழக்கில் உள்ள அரப்பாவும் ஆகும். சிந்து வெளிநாகரிகம் நிலவிய மாபெரும் நிலப் பகுதி முழுவதும் பல துறைகளிலும் ஒருமைப்பாடு நிலவியமையால் அவ்விரு பெரு நகரங் களிற் கண்டவை ஏனைய நகர்ப் பகுதிகளுக்கும் பொருந்துமென்க. எனினும் அவை இரண்டும் ஒரு பேரரசின் இரட்டைத் தலைநகரங்கள் எனக் கருதத் தக்கனவல்ல (not twin capitals of a vast empire) என்பர் பொசெல் 2002 : 247. ஏறத்தாழ அவ்விரண்டுக்கும் சமமான மூன்று பிற நகரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: [பாகிஸ்தானில்] கன்வெரிவாலா 80 ஹெக்டேர் பரப்பு (சோளிஸ்தானில் - மொகஞ்சொ (இதுவரை அகழ்வாய்வு தரோவுக்கும் ஹரப்பாவுக்கும் நடத்தவில்லை) இடையில்); தோலவீரா 60 ஹெக்டேர் ராக்கிகார் (ஹரியானாவில் 80 ஹெக்டேர் பரப்புள்ள ஹிசார் மாவட்டத்தில்) மேடு; 17 மீ உயரம்) 2. மொகெஞ்சொதரோ, அரப்பா, கலிபங்கன் இம்மூன்றைப் பொறுத்தவரை ஒவ்வொரு நகரமும் மேற்கில் உயர்வான குடியிருப்புப் பகுதியும், கிழக்கில் அதைவிட விசாலமான தாழ்வான குடியிருப்புப் பகுதியும் (வெகுமக்கள் குடியிருந்த பகுதி) அமைந்திருந்தன. மொகெஞ்சொதரோ 3. சிந்து நாகரிகத்தின் சிறந்த எடுத்துக் காட்டும் அந்நாகரிகத்தின் தன்மையைத் தெற்றென விளக்கும் மையமும் மொகஞ்சொதரோ தான் என்பர் பொசெல் (2002: இயல்11:185-213). சிந்து நாகரிக நகரங்களிடையே செல்வச் செழிப்பைக் காட்டுவது இதுதான்; 600 ஆண்டு காலம் அது செழிப்புற்று விளங்கியது. தமிழகத்தில் பாண்டியர் ஆட்சி வீழ்ந்தது 1311 இல்; அதிலிருந்து 1911 வரை தமிழ்நாட்டு நகரம் ஒன்று சிறப்புற்று இருந்திருந்தால் எப்படி இருக்கும்! அதுபோல. 4. (i) சிந்து ஆற்றில் ஆண்டுதோறும் வரும் கடும் வெள்ளம் பாதிக்காமல் இருக்கும் வகையில், உயரமான, விசாலமான மேட்டுத் தளங்களை களிமண், செங்கற்கள், சுட்ட செங்கற்களால் அமைத்து அம் மேட்டுத் தளங்களின் மேல் மொகெஞ்சொதரோ முதலிய நகரங்கள் கட்டப்பட்டன. உயர்ந்த பகுதியில் கோட்டை Citadel அமைந் திருக்கலாம் என வீலர் முதலியோர் கருதினர். அது கோட்டை அல்ல; நகரத்தின் முக்கியம் வாய்ந்த பகுதியைக் கண்கூடாக உயர்ந்த இடத்தில் கட்டவேண்டும் என்று கருதி அமைத்த பகுதியே அது என்பர் பொசெல் (2002 : 103-4, 237, 247) (The walls around the mound variously called Stupa mound, Citadel mound, mound of the Great bath were to hold the earthen filling in place, not to protect priest kings. p. 185) (ii) மொகெஞ்சொதரோ அமைந்துள்ள செங்கல் மேடைகளின் அளவு பின்வருமாறு என்பர் பொசெல்: மீட்டர் x மீட்டர் பரப்பு ஹெக்டேர் உயர்ந்த மேடு (15 மீ உயரம்) 400 X 200 8 தாழ்ந்தமேடு 1100 X 650 72 (தோராயமாக) பிறபகுதிகள் . . . . . . . . . 20 100 இரண்டு மேடுகளையும் (பெரும்பாலும் சுடாத செங்கற்களாலும், ஓரப் பகுதிகளில் சுட்ட செங்கல் வரிசைகளாலும் அமைத்திடப் பின் வருமாறு உழைப்பு நிகழ்ந்திருக்கும் என்பர் பொசெல். வேலையாட்கள் நாள் 10000 X 400 அதாவது 40 லட்சம் அல்லது வேலைநாள் 2500 X 1600 இந்த மேடைகளை அமைக்க ஏறத்தாழ 10 லட்சம் கனமீட்டர் செங்கல் ஆகியிருக்கும் (ஏறத்தாழ, எகிப்தில் உள்ள கூபு Khufu பிரமிடின் கன அளவுக்குச் சமம் என்பர் விதால் (2007:358). மொகெஞ்சொதரோ நகரம் செவ்வனே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பர் பொசெல். 5. மொகெஞ்சொதரோ குடியிருப்புப் பகுதியில் பெரிய தெருக்கள் (33 அடி அகலம் வரை) தென் வடலாக நேராக அமைந்திருந்தன. கிழக்கு மேற்கான குறுக்குத் தெருக்களும் (18,’ 13,’ 9’) நேராக அமைந் திருந்தன. சில தெருக்கள் மட்டும், உடைந்த செங்கல் துண்டுகளையும் மட்பாண்டச் சிதைவுகளையும் கொட்டி, கெட்டிப்படுத்தப்பட்டிருந் தன. வீடுகளைக் கட்ட வெயிலிற் காய்ந்த (சுடாத) செங்கற்களும் சூளை யிட்ட செங்கற்களும் இரண்டுமே பயன்பட்டன. மொகெஞ்சொதரோ வில் சுடாத செங்கல் ‘நிரப்பு’ வேலைக்கே பயன்பட்டது. ஹாரப்பாவில் ஓர் அடுக்கு சுட்ட செங்கல், மறு அடுக்கு சுடாத செங்கல் என்றவாறு இரண்டும் கலந்து எல்லாக் கட்டட வேலையிலும் பயன்பட்டது. 6. கலிபங்கனில் சுட்ட செங்கல் பெரும்பாலும் கிணறு, கழிநீர்க் குழாய், குளியலறை போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு, ஏனைய வேலைகளுக்கெல்லாம் சுடாத செங்கல்லே பயன்படுத்தப் பட்டது. நாடெங்கும் 28 செமீ X 14 செமீ X 7 செ.மீ என்ற ஒரே அளவுள்ள செங்கற்களே பயன்படுத்தப்பட்டன. இத்தகைய சிறந்த சுட்ட செங்கற்கள் மத்திய கிழக்கு ஆசிய நாகரிகங்களில் இல்லை. கற் கட்டடங்கள் எவையும் சிந்துவெளி நகரங்களில் இல்லை. 7. பெருந்தெருக்களை ஒட்டிக் கட்டிய வீடுகளுக்கும் வாயிலை அப்பெருந் தெருக்களில் வைப்பதில்லை. சிறிய குறுக்குத்தெருக் களில்தான் வாயில் இருந்தது. பலவீடுகள் மாடிவீடுகளாக இருந்தன. சராசரி 900 சதுர அடிக்குக் குறையாமல் பரப்பளவு இருந்தது. பல வீடுகள் மிகப்பெரியவை. அனைத்திலுமே முற்றங்கள் இருந்தன. முற்றங்களில் மாடுகளும் கட்டியிருந்திருக்கலாம். இரண்டு வீடுகளின் வெளிச் சுவர்களுக்கிடையே இரண்டு அடி காலி இடம் விடப்பட்டு இருந்தது; தகராறுகளைத் தவிர்க்கவோ? பெரிய வீடுகள் சில, இடையே நெடுஞ்சுவர்களால் பிரிக்கப்பட்டிருந்தன. உடன்பிறந்தார் பாகம் பிரித்தனர் போலும். வீடுகளில் உயரத்தில் பல துளைகள் (கண்கள்) அமைந்த சிறு சன்னல்கள் இருந்தன. சன்னலுக்கு இன்றும் தூய தமிழ்ச் சொல் பலகணிதான். 8. வீடுதோறும் ஒரு குளியலறை இருந்தது. கழிவுநீர் ஓட வடி கால்கள் இருந்தன. வீட்டுக் கழிநீர் தெருக்களில் ஓடும் பெரிய கழிவுநீர்க் கால்வாய்களில் (செங்கல் பதித்து மூடப்பட்டவை) சேர்ந்து ஒழுங்காக ஓடிச் செல்ல அழகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வீட்டுக் கழிநீர் சேரும் இடத்தில் செங்கற் குழிகள் அமைத்து அவற்றில் துளைகள் உள்ள தாழிகளைப் புதைத்திருந்தனர் (குப்பை கூளங்கள் கழிவு நீருடன் சென்று தெருக் கால்வாயை அடைக்காதவாறு). உலகில் பண்டை நாகரிகங்கள் எவற்றிலும் இத்தகைய சிறந்த கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்ததில்லை; பொதுவாக இவ்வளவு சிறந்த நகரமைப்பு முறையும் இருந்ததில்லை. 9. பெரிய வீடுகள் ஒவ்வொன்றிலும் தனியே ஒரு கிணறு இருந்தது. கிணறுகளை வட்டமாக ⃞ ❍ (Please Check) வடிவுள்ள செங்கற்களால் (இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது போல) கட்டினர். சில கிணறுகள் ஒரு பாதியில் வீட்டில் உள்ளவர்களும், (வெளித்தெருவை ஒட்டிய) மறு பாதியில் அயலாரும் நீர் எடுக்கும் வகையில் கட்டப்பட்டு இருந்தன. 10. (i) மொகஞ்சொதரோ உயர்ந்த (கோட்டைப்) பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தெப்பக்குளம் (Great Bath) வியக்கதக்கது என்பர் மார்ஷல். 12மீ X 7 மீ நீண்டசதுர வடிவான அக் குளம் 3மீ ஆழ முள்ளது. வடக்கிலும் தெற்கிலும் படிக்கட்டுகள். செங்கற்களால் அழகுறக் கட்டியது. தளத்தில் நிலக் கீலை (bitumen) பயன்படுத்தி நீர்க் கசிவைத் தடுத்திருந்தனர். குளத்தைச் சுற்றி நடைபாதையும் தாழ்வாரங் களும் அறைகளும் உள்ளன. அருகிலுள்ள ஒரு பெரிய கிணற்றி லிருந்து குளத்துக்கு நீர் பெறப்பட்டது. தெய்வ வழிபாட்டுக்கு முன்னர் நியமப்படி குளிப்பதற்காக இத் தெப்பக்குளம் கட்டப்பட்டிருக்கலாம் என்பர் சிலர். கோட்டையில் தற்போதுள்ள (கி.பி. 200 குஷானர் கால) புத்த ஸ்தூபியின் அடியில் உள்ள சிந்து நாகரிகக் காலக் கோயிலுடன் இணைந்த தேவதாசிகளுடன் சேர்ந்து நடாத்திய சடங்குகளுக் கானவை இக் குளியலறைகள் என்பர் கோசம்பி (1965). ஐ. மகாதேவனும் (Bulletin of the Indus Research Centre: Roja Muthaiah Research Library ஆகஸ்ட் 2011) இந்தத் தெப்பக்குளமும், குளியலறைகளும் - primitive fertility rites - களுக்காகப் பயன்பட்டிருக்கலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறார். (ii) தெப்பக் குளத்தருகே இன்னொரு பொதுக் கூடம் இருக்கிறது. ஹாரப்பாவில் உள்ளது போன்ற களஞ்சியம் இது என்கிறார் வீலர். 11. ஹாரப்பா உயர் பகுதியில், ஒவ்வொன்றும் 16மீ X 6மீ அளவுள்ள 6 + 6 தானியக் களஞ்சியங்களைக் காண்கிறோம். அருகில் தானியம் அடிக்கும் களமாகப் பயன்பட்ட, வட்ட வடிவமான செங்கல் தளங்கள் உள்ளன. 12. லோதல் நகரில் 219மீ X 37 மீ பரப்புள்ளதும் 45 மீ உயரச் செங்கற்சுவர்களால் கட்டியதும் ஆன கப்பல்துறை ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். (இது குடிநீர் தேக்கிவைக்கும் குளம்தான் என்பது லெஷ்னிக், ஆல்சின், பொசெல் ஆகியோர் கருத்து ஆகும்) 13. ஹாரப்பாவும் மொகெஞ்சொதரோவும் 15.08.1947 முதல் பாகிஸ்தானுக்குட்பட்டவையாயின. இந்தியாவில் அவற்றுக் கொப்ப முக்கியமான சிந்து நாகரிகத்தலம்தான் 1969ல் அகழத் தொடங்கிய தோலாவிரா ஆகும். அது குஜராத்தில் கச் பகுதியில் உள்ளது. அங்கு அணைக்கட்டுகளும் அவற்றுக்கருகே அவற்றின் காவலர்(?) இல்லங் களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தோலாவிராவில் கண்டெடுத்த 10 அடி நீளப் பெயர்ப் பலகை எழுத்துகளை நாதன் பண்ணியன் நன் மன்னவன் என மதிவாணன் படிக்கிறார். தெப்பக்குளம் –மொகெஞ்சொதரோ மொகெஞ்சொதரோவில் ஒரு கிணறு இயல் 4 சிந்து நாகரிக மக்கள் வாழ்வியல் 1. கி.மு.300 -- கி.பி.300 சார்ந்த (சங்ககாலத் தமிழக மக்கள் வாழ்வியல்பற்றி எழுதுபவரும் சரி, அதற்கும் மிகமுந்திய கி.மு.3000 - - 1500 சார்ந்த தொல்தமிழியச் சிந்து நாகரிக மக்கள் வாழ்வியல் பற்றி எழுதுபவரும் சரி, ஒன்றை மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.) கி.பி.2013ல் உலக மொத்த மக்கள்தொகை 700 கோடி (இந்தியா 120 கோடி உட்பட). இந்தியர் 120 கோடியினரில் தமிழ்நாட்டினர் 61/2 கோடி. சங்ககாலத் தமிழக / சிந்துநாகரிக காலத்திய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் அவரவர் சார்ந்துள்ள கொள்கையை ஒட்டிப் பல்வேறு நிலைமைகளைத் தம் விருப்பு வெறுப்புக்கேற்ப உன்னித்து எழுதும்பொழுது முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை என்ன? தொன்மைக் காலம் நோக்கிச் செல்லச் செல்ல மக்கள்தொகை இன்று உள்ள அளவில் அன்றிப் பின்வருமாறு மிகக் குறைவாகவே இருந்திருக்கும்; மக்கள்தொகையும் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிக மந்தமாகவே வளர்ந்துவந்தது; என்பவையே அவை. [பர்போலா Frontline 24.11.2000) கருத்துப்படி சிந்துநாகரிகப் பகுதியின் மொத்த மக்கள்தொகை பத்து லட்சமே இருந்திருக்கும்; அப்பகுதிக்குள் கி.மு.1500ஐ ஒட்டி வந்த இந்தோ ஆரியமொழி பேசுநர் தொகையோ மிகமிகக் குறைவாகவே இருந்திருக்கும் (only a small fracton of the native Harappan population)] ஆண்டு இன்றைய இந்தியா உலகம் தமிழகம் கி.மு.70000 ? ? வெறும் 58000 கி.மு.10000 ? ? 50 லட்சம் கி.மு.3000 ? ? 4 கோடி கோடிகளில் கி.மு.500 30 லட்சம் 1 10 கோடி கிறித்துவுக்குப் பின்னர் 1 40 லட்சம் 2 கோடி 20 கோடி 300 50 லட்சம் 2.50 22 1000 (50 லட்சம் முதல் 5 27 1300 80 லட்சம் வரை) 6 40 1600 80 லட்சம் 15 65 கோடிகளில் 1800 1 18 100 1871 முதல் சென்சஸ் 1.47 21 120 2001 6 10 600 2011 7 120 700 உலக மக்கள் தொகை விவரங்கள் பல்வேறு நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. கி.மு.500, கி.பி.1, கி.பி. 1600 ஆகிய ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை விவரங்கள் ரோமிலா தாபர் எழுதிய பண்டைய இந்தியாவின் பெங்குயின் வரலாறு (2002) புத்தகத்திற் கண்டவை. 2. மெகர்கார் என்னும் இடத்தில் செய்த அகழ்வாய்களுக்குப் பின், சிந்து நாகரிகத்தின் முந்தைய தொடக்க நிலைக்கான சான்றுகள் கி.மு.7000 லிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்கின்றன. சிந்து நாகரிகம் இந்தியாவிற்குள்ளேயே தோன்றி இடையீடின்றிப் படிப்படியாக முதிர்ச்சி பெற்று வேத காலத்துக்கு (கி.மு.1500-) வெகுமுன்னர் இருந்தே நிலைபெற்று இருந்தது. 3. ஆடு மாடு வளர்த்தல், தவசங்கள் பயிரிடுதல், பருத்தி பயிரிடுதல்போன்ற துறைகளில் சிந்து நாகரிகத்தின் தொல்வரவுக்கான ஆதாரங்களை மெகர்கார் ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது வேளாண்மையே நாட்டுப்புற மக்களின் பெருந் தொழிலாக இருந்திருக்க வேண்டும். ஆடு மாடு மேய்த்துக் கொண்டு அவ்வப் பொழுது குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தவர்களும் (pastoral nomads and cattle keeping tribes) இருந்திருப்பர். சிந்துப் பகுதியில் கி.மு.3000இல் இருந்த தட்பவெப்ப நிலை இன்று உள்ளது போல்தான் இருந்திருக்கும் என்பர் பொசெல் (2002:15 the climate of this region was not markedly different in the third millennium B.C. from the one we have today”. 4. கலிபங்கனில் 5000 ஆண்டுகட்கு முன்னர் உழுது பாத்தி கட்டிய அமைப்பு (தொடக்ககாலச் சிந்து நாகரிகத்தைச் சார்ந்தது) கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோதுமையும் பார்லியும் முக்கியப் பயிர்களாகவும், உணவுப் பொருள்களாகவும் இருந்தன. சோளம், கம்பு, கேழ்வரகும் பயிராயின. லோதலில் நெல் உமி அகழ்வாய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. உலகிலேயே முதலில் பருத்தித் துணி உற்பத்தி செய்த நாடு இந்தியாவே. மெகர்காரில் பருத்தி கி.மு.5000 க்கு முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளது. (சுமேரியாவில் பின்னர் பருத்தித் துணிக்கு ‘சிந்து’ என்றே பெயர் வழங்கியது) கிராமப் புறங்களில் வேளாண்மை செழிப்பாக இருந்தமையினால்தான் மொகஞ்சொதரோ, ஹாரப்பா முதலிய பெரு நகரங்களுக்குத் தேவையான தவசங்கள் தடையின்றிக் கிடைத்தன. மொகஞ்சொதரோ, ஹாரப்பா நகரங்களில் கண்டுபிடித்த சில கட்டட எச்சங்கள் முன்னர் தானியக் களஞ்சியங்கள் எனக் கூறப் பட்டு வந்தன. ஆனால் அண்மைக்காலக் கருத்து அவை பல பொருள்களையும் வைக்கும் கிடங்குகள் (warehouses) தாம், தானியக் களஞ்சியங்கள் அல்ல என்பதாகும் (பொசெல்: 2002. பக் 247) 5. குதிரை தவிர இன்று சிந்துப் பகுதியில் உள்ள அனைத்து விலங்குகளும் அன்றும் இருந்தன. இன்று அப்பகுதியில் இல்லாத யானைகளும் காண்டாமிருகங்களும்கூட அன்று சிந்துப் பகுதியில் இருந்தன. 6. (i) கனிமப் பொருள்களில் இரும்பு தவிர ஏனைய பண்டை மாழைகளினால் ஆன பொருட்கள் (வெண்கல அரம், கோடரி, அம்பு முனைகள்; ஈட்டிமுனைகள், ஊசிகள், ஏனங்கள்) கிடைத்துள்ளன. இரும்பும் உருக்கும் தென்னிந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் தான் உலகிலேயே முதன் முதலில் இரும்புத் தாதுவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டவையாகத் தோன்றுகின்றன. எனினும் சிந்துவெளி நாகரிக முடிவு காலமாகிய கி.மு.1800 அளவில் அங்கு இரும்பு குறிப்பிடத்தக்க அளவுக்குப் பரவவில்லை. அதற்குப் பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களும் இரும்பைக் கொண்டு வந்தவர்கள் அல்லர். ‘ஆரியர்கள் இரும்புக் கருவிகளுடன் வந்தனர். எனவே எளிதில் வென்றனர்’. என்பது கற்பனை என்று கார்டன் கூறுகிறார். (D.H. Gordon: The Prehistoric background of Indian culture; 1960) ரிக் வேதம் ‘அயம்’ எனக் கூறுவது பொதுவாக செம்பு போன்ற மாழையையே; இரும்பை அல்ல. தமிழில் பொன் என்பது மாழைக்குப் பொதுப் பெயராக வழங்கியதன்றோ. [இரும் (கருப்பு) + பொன் - இரும்பொன் - இரும்பு] செப்புக் கருவிகளோடு கற் கருவிகளையும் தொடர்ந்து பயன்படுத்தினர் சிந்து வெளியினர். (ii) அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகளிலிருந்து செம்பு, வெண்கலப் பொருள் கம்மியர், கற்கருவிகளில் செய்த கட்டட வேலைக்காரர், முத்திரை செய்யுநர் போன்ற பலவகைத் தொழில் விற்பன்னர்கள் அன்று இருந்தமை தெளிவாகிறது. (iii) தி. சத்தியமூர்த்தி (2009) கட்டுரை Indus to Tamaraparni – இல் செப்புக்கலவை (Copper alloy) பயன்பாட்டில் மொகஞ்சொதரோவுக்கும் ஆதிச்சநல்லூருக்கும் இருந்த ஒரு ஒப்புமையைச் சுட்டுகிறார். செம்பில் 1% ஆர்செனிக் - ஐ வேண்டுமென்றே கலந்து அக் கலவையின் வன்மையை (hardness) 124 VHN லிருந்து 177VHN அதிகரித்துள்ளனர். இந்தியாவில் தொன்மைச் செப்புக்கலவை ஏனங்களில் மொகெஞ்சொதரோவிலும், ஆதிச்சநல்லூரிலும் கிடைத்தவற்றில் மட்டுமே ஆர்செனிக் 4% ம், அதற்கு மேலும் உள்ளது. ஆதிச்ச நல்லூர், மொகஞ்சொதரோ நாகரிகங்களின் ஒருமைப்பாட்டுக்கான சான்றுகளில் ஒன்றாக இதையும் கருதலாமென்பார் அவர். 7. (i) சிந்து நாகரிகப் பெருநகர மக்கள் செழித்து வாழ்ந்ததற்கு வாணிகமே அடிப்படை. உள்நாட்டு வாணிகத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் கொணர்ந்த விலைமதிப்புள்ளப் பொருட்கள் பங்கேற்றன. அமெசான் என்னும் பச்சைக்கல் நீலகிரிப் பகுதியிலிருந்தும், சங்கு, முத்து முதலியவை பாண்டிய நாட்டினின்றும் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். கடல் வழியாகவும், ஆறுகள் வழியாகவும் பொருள்கள் படகுகளில் அனுப்பப்பட்டதுடன், உள்நாட்டில் எருதுகளையும் கழுதைகளையும் வணிகச் சாத்து விலங்குகளாகப் பயன்படுத்தியிருப்பர். மலைப் பகுதிகளிலிருந்து சக்கி முக்கிக் கல் (flint) ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து செம்புத்தாது, மஹாராஷ்டிரத்தி லிருந்து செவ்வந்திக்கல், சௌராஷ்டிரத்திலிருந்து அகேட் ((Agate) கற்கள்; கருநாடகத்திலிருந்து தங்கம் போன்றவை உள்நாட்டு வாணிகப் பொருள்களில் சிலவாகும். (ii) சிந்து நாகரிகப் பகுதிகளிலிலேயே சிறந்த பாசிமணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. 1200 டிகிரி செல்சியஸ் வரைச் சூடேற்றி மணிகளைத் தயாரிக்கும் உலைகள் கலிபங்கனில் கிடைத்துள்ளன. 8. அயல்நாடுகளோடு, குறிப்பாக மெசபொதாமியாவுடன் பெருமளவு வாணிகம் நடந்துள்ளது. மெசபொதாமியாவில் சுமார் 24 ஹாரப்பா முத்திரைகள் கிடைத்துள்ளன. மெசபொதாமிய சிலிண்டர் முத்திரைகள் சில மொகெஞ்சொதரோவில் கிடைத்துள்ளன. மெசபொ தாமிய சாசனங்களில் மெலுகா (Meluhha) என்னும் நாட்டிலிருந்து கருங்காலி மரம், ரத்தினக் கற்கள், தந்தம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மெலுகா என்பது சிந்து வெளியைத் தான் குறித்தது என்பதை அனைவரும் ஏற்கின்றனர். (பர்போலா, 1975; ரோமிலா தாபர் 1975, ஆல்சின் 1988, லெவிட் 2009) மெசபொதாமியா வுக்கு பருத்தித் துணி பெருமளவுக்கு ஏற்றுமதியாகி யிருக்கவேண்டும். வாணிகத்தில் (வெளிநாடு மற்றும் உள்நாடு) சிப்பங்களைக் கட்டி முத்திரைகள் இட்டனர். ஆயிரக்கணக்கான முத்திரைகள் எழுத்துகளுடன் கிடைத்துள்ளன. இவைபற்றி பின் இயலில் காண்க. வாணிகத் திற்காக ரத்தினக் கற்கள் கிட்டும் (வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள) ஷோர்த்துகய் (Shortugai) என்னும் இடத்தில் சிந்து வெளி நாகரிக மக்கள் (வணிகர்?) குடியிருப்பு இருந்தது அகழ்வாய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிக எடை அளவுகள் தமிழரிடையே வழங்கியவையே. இதை பின்வரும் இயலில் காண்க. 9. சிந்து நாகரிகத்துக்கும் எலாம், சுமேரிய நாகரிகங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு கி.மு.4000 த்திலிருந்தே இருந்து வந்தது என்பதை மார்ஷல் முதல் பொசெல் வரை அனைவரும் ஏற்கின்றனர் [எனினும் திராவிட மொழிபேசுநர் ஏற்றத்தில் Dravidian Ascent தெற்கிலிருந்து சென்ற திராவிடர்கள் தாம் சிந்துப்பகுதியில் சிறந்த நாகரிகத்தைத் தோற்றுவித்துப் பின்னர் எலாம் சுமேரிய நாகரிகங்களையும் உருவாக்கினர் என்னும் ஹீராஸ் போன்றவர் களுடைய கருத்து இன்றைய வரையில் இத்துறையில் வல்ல பன்னாட் டறிஞர் பெரும்பாலோர் ஏற்பினைப் பெறவில்லை] ஆயினும் அம் மூன்று நாகரிகங் களுக்கும் இடையிலான வாணிகத் தொடர்பு பெரும் பாலும் மேட்டுக்குடியினர் பயன்படுத்தும் ஆடம்பரப் பொருள்கள் (ரத்தினக் கற்கள், கலைப்பொருள்கள், மாழைப் பொருட்கள், பருத்தித் துணி முதலியவை) சார்ந்ததாகவே இருந்தது. கி.மு.2000 இலிருந்து ஒருபால் இம் மூன்று நாகரிகங்களுக்கும், மறுபால் அவற்றுக்கு வடக்கில் இருந்த பாக்டிரியானா மார்ஜியானா தொல்லியல் பண்பாட்டு (பா.மா.தொ.-BMAC) நாகரிகத்துக்கும் வாணிகத்தொடர்பு இருந்திருக்கும் என்றும், மொகஞ்சொதரோவின் இறுதி நூறு, இருநூறு ஆண்டுகளில் பா.மா.தொ. பண்பாட்டு மக்கள் சிந்து நாகரிகப் பெரும்பரப்பிற் குள்ளும் வரத்தொடங்கியிருக்கலாம் என்றும் பொசெல் (2002:235) கருதுகிறார். 10. சிந்து முத்திரைகளில் ஒன்று விலங்குகள் சூழ இருக்கும் சிவனைக் (பசுபதியைக்) காட்டுவதாகக் கொள்ளப்படுகிறது. வட ஐரோப்பாவில் செர்மனிக்கு வடக்கே டென்மார்க் நாட்டில் கண்தஸ்திரப் என்னும் இடத்தில் 28-5-1891 இல் கண்டெடுக்கப்பட்ட 21/4அடி குறுக்களவுள்ள வெள்ளிக் கொப்பரையின் மேலே பொறிக்கப்பட்டுள்ள உருவங்களில் அந்த பசுபதி போன்ற உருவமும் உள்ளது. அக்கொப்பரை கி.மு.200இல் செய்யப்பட்டது. சிந்து வெளிக் கால பொன் - வெள்ளிக் கலைஞர்கள் பையப்பைய மேலை நாடுகளிலும் பரவியிருந்ததன் காரணமாகத் தான் அவ்வுருவம் அப் பாத்திரத்தில் பொறிக்கப்பட நேர்ந்தது என்பதை விளக்கும் ‘கண்தஸ்திரப் கொப்பரை’ என்னும் கட்டுரையைசயன்டிபிக் அமெரிக்கன் 1992 மார்ச் இதழில் திமோத்தி டேலர் எழுதியுள்ளார். 11(i) சிந்துவெளி மக்கள் வீடுகளில் அம்மியும் குழவியும், உரலும் பயன்படுத்தினர். மட்பாண்டக் கலை சிறப்பாக இருந்தது. பானைகளில் சித்திர வேலைப்பாடு இருந்தது. பல துளைகள் இட்ட கனற்சட்டி பயன் படுத்தினர். வீடுகளில் தானியங்களைக் கொட்டி வைக்கத் தாழிகளை (குதிர்களை) பயன்படுத்தினர். குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் (பறவை வடிவில் ஊது குழல்கள்; தலை அசைக்கும் எருதுகள்; கோலிகள்) ஏராளமாகக் கிடைத்துள்ளன. (ii) களிமண்ணாற் செய்த பொம்மை வண்டிகள் சில கிடைத்துள்ளன. ஆரக்கால் இல்லாத சக்கரங்களைக் கொண்டவை. இதே போன்ற வண்டிகள் இன்றும் சிந்து மாநிலத்தில் உள்ளன. (iii) அம்மக்கள் பொன், வெள்ளி, வெண்பொன் (Electrum) செம்பு, வெண்கலம், தந்தம், எலும்பு, மாக்கல், இரத்தினக் கற்கள், சுட்டகளிமண், சங்கு முதலியவற்றைக் கொண்டு தத்தம் தகுதிக்கேற்ற அணிகளை விதம் விதமாகச் செய்து அணிந்து வந்தனர். கிடைத்துள்ள அழகிய அணிகலன்களில் சில: கழுத்து மாலை, ஒட்டியாணம், ஆறு சரக்கை யணி, அரக்கு உள்ளீடு கொண்ட காப்பு, பலவகை வளையல், கால் காப்பு (தண்டை), நெற்றிச் சுட்டி, காதணி, மோதிரம், பொத்தான், தலைநாடா, கொண்டை ஊசி போன்றவை ஆகும். 12. இந்தியாவின் தற்காலக் கலை, தொழில் நுட்பவியல் துறைகள் பலவற்றிலும் சிந்து நாகரிகக் கால வேர்களைக் காணலாம் என்பார் டி.பி. அகர்வால் (2009, Harappan Technology and its legacy).. பலதுறைகளிலும் அம் மாபெரும் சிந்து நாகரிகப் பகுதி முழுவதிலும் எய்தியிருந்த தொழில்நுட்பச் சாதனைநிலை பண்டைய உலக நாகரிகம் எதிலும் காணாதது எனலாம். (ஆல்சின்: “the technical level achieved over so great an area as is demonstrated in the Harappan civilisation is probably unique in the ancient world”). கற்பனைவளமிக்க கலைப் படைப்புக்களை மிகுதியாகக் காண இயலவில்லை என்பதை ஆல்சின் சுட்டிக் காட்டிவிட்டு “ஒரு வேளை அவர்கள் தங்கள் கற்பனைக் கலைத் திறனைக் காட்டும் சாதனைகளைத் துணிகள் ஆடைகள் போன்ற துறைகளில் காட்டியிருக்கலாம். (அவை நமக்கு இன்று கிட்டவில்லை)” என்று கருதுகிறார். கலை வளர்ச்சி 13. ஹாரப்பாவில் கிடைத்த 10 செ.மீ. உயரச் செவ்வந்திக்கல் Red Jasper ஆடவன் சிலை (கழுத்திலிருந்து தொடைவரை) கி.மு. 2200 - 1900 காலத்தது, (தலை, கைகளை இணைப்பதற்கான துளைகளும் உள்ளன.) 14. மொகஞ்சொதரோ DK 1909 பகுதியில் கிட்டிய சுண்ணாம்புக் கல்லில் செதுக்கிய பூசாரி - அரசன் Priest - King’ 18 செ.மீ. படிவமும் குறிப்பிடத்தக்கது, அதில் சித்திரப் பூ வேலை செய்த போர்வை, ஒழுங்கான தாடி, தலையில் முடியைச் சீவிப் பட்டை கட்டியுள்ளது ஆகியவற்றைக் காண்கிறோம். அது பூசாரியுமல்ல, அரசனுமல்ல, கற்பனை வடிவமே என்பர் பொசெல். 15. வெண்கலத்தாற் செய்யப்பட்ட (11 செ.மீ. உயர) நடனமாதின் சிலையும் சிந்து வெளி நடனக் கலைக்குச் சான்றாகும். ஹரப்பாவில் கிட்டிய 10 செ.மீ உயர சாம்பல் நிறக்கற் சிலை ஒன்று உணர்ச்சியுடன் நடனம் செய்ய தொடங்குவது போல இடது காலைத் தூக்கி வலக்கால் மீது நின்று நடனம் ஆட நிற்பது போலத்) தோன்றுகின்றது. பிற் காலத்தில் தமிழ் நாட்டில் கி.பி.1000 ஐ ஒட்டி ஆடவல்லானுக்கு (நடராச னுக்கு) சிறந்த படிமங்கள் அமைக்கப்பட்டனவன்றோ அவற்றுக்கான தோற்றுவாய் சிந்து வெளியிலே செய்யப்பட்டிருக்கலாமோ என்பது சங்காலியா போன்றவர்கள் கருத்து. 16. இந்திய இசையின் வரலாறு என்னும் நூலில் ஓ. கோஸ்வாமி இசைத் துறையிலும் ஆரியர் நுழைந்த காலத்தொடக்கத்திலிருந்து ஆரியருக்கு முந்திய (தமிழ்) இசைக்கூறுகள் [அன்று தமிழியச் சிந்து நாகரிகத்திலும் அவை இருந்திருக்கும்] பெருமளவில் சேர்ந்துள்ளதை விளக்குகிறார். “இந்திய இசைக்கு சாமவேதமே பிறப்பிடம் என்ற) கற்பனைக் கூற்றை முன்வைத்துக்கொண்டு இசை அறிவுக்கும் பயிற்சிக்கும் ஆரியர் தமக்கு முன் அத்துறையில் வல்லோராக இருந்த ஆரியரல்லாதாரிடம் கடன்பட்டிருப்பதை மறக்கடிக்க முடிந்துள்ளது” என்கிறார். [By this fiction (that Saman is the source of all Indian music) alone it was possible to forget conveniently the debt the Aryans owed to the non – Aryans for their musical knowledge and practice.” The Story of Indian Music; 1957] சாமவேத இசைக்கும், பொதுவாக இந்திய இசை முழுமைக்கும், தமிழிசையே அடிப்படையானது என்பதை Tamil Culture இதழில் 1958- 59ல் (VII-1 & VIII-3) எழுதிய கட்டுரைகளிலும் ‘தமிழிசை தந்த பெரு வெள்ளம்’ [1978: தமிழக நுண்கலைகள் (தமிழ்ப் பண்பாட்டு மன்றம் / பாரி நிலையம், நூலின் பக். 12-66] என்னும் கட்டுரையிலும் கு. கோதண்டபாணி பிள்ளை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். 17. கி.மு.3200 - 2600 காலத்திய தொடக்கநிலை (Early Harappan) சிந்து நாகரிகமானது நூறு ஆண்டுகாலம் (2600 - 2500) வளர்நிலைச் சிந்து நாகரிகமாக உருமாறத் தொடங்கிப் பின்னர் கி.மு.2500 – 1900 (மொத்தம் 600 ஆண்டுகள்) வளர்நிலை சிந்து Mature Harappan நாகரிக மாக ஆனது எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பது பற்றிய பொசெல் உன்னிப்புகளைச் (2002: 47-53, 55-58) சுருக்கமாகக் காணலாம். சிந்து நாகரிக மக்களிடம் மட்டுமே விளங்கிய ஒரு தனி லட்சியக் கோட்பாடே (ideology) வளர்நிலைச் சிந்து நாகரிகத்தை உருவாக்கியது. சிந்து நாகரிகத்தில் மட்டுமே காணும் பின்வரும் நான்கு தன்மைகளை யும் உள்ளடக்கியது அக் கோட்பாடு:- 1. சிந்துநாகரிகப் பகுதி மக்கள் The Indus people were Nihilists, who பழைய சமூக, பண்பாட்டு sought to bring a new socio-cultural முறையைக் கைவிட்டுப் புதிய order to the Greater Indus region (முற்றிலும் மாறுபட்ட) சமூக, (Nihilists are those who attempt to deny பண்பாட்டு முறையை வலிந்து their heritage and replace it with a new புகுத்தி யவர்கள் (கோட் டிஜி, order / or ideology) கும்லா, அம்ரி, நௌஷாரோ முதலிய இடங்களில் கி.மு.2600- 2500 காலத்தில் தீயால் ஏற்பட்ட அழிவுகள் தொல்லியல் எச் சங்களாகக் காணப்படுகின்றன. முந்தைய நாகரிகம் சாதாரண இனக் குழு நாகரிகமாகவும் 2500இல் தொடங்கிய வளர் நிலை நாகரிகம் நகர நாகரிக அமைப் பாகவும் (Single civilisational rubric) காணப்படு கின்றது. அது சிந்துப் பகுதியில் மட்டுமன்றி உலகிலேயே ஒரு புதிய கோட்பாடு கொண்ட நாகரிகமாக இருந்திருக்கலாம். 2. நகரமயமாக்கலும், நகர வாழ்க்கை Urbanization and city life were a part of யும் புதுக்கோட்பாட்டின் கூறாக this new ideology அமைந்தன. 3. நீரைப் பயன்படுத்துவது, நீருக்கு The Physical and symbolic aspects of மதிப்பு ஆகியவை முக்கிய water formed a part of the Indus மானவையாகக் கருதப்பட்டன. ideology. M.Jansen calls it wasserluxus, எம். ஜான்சன் அதனை ஜெர்மன் a term Possehi has integrated into his மொழியில் wasser -luxus என்பார். position on Indus ideology. 4. வளர்நிலைச் சிந்து நாகரிகம் The Indus ideology promoted techno- தொழில்நுட்ப வளர்ச்சியை logical prowess and innovation. வலுவாக்கி புதுவதுபுனை வதை ஊக்குவித்தது. 18. அந்தக் காலகட்டத்தில் (கி.மு.3000 - 2000) பண்டைய நாகரிக நாடுகளில் அரசு State என்பது எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி தொல்லிய லாளர், வரலாற்றாசிரியர் போன்ற பல்துறை அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. எனினும் அவ்வரசின் தன்மைகளில் பின்வரு வனவும் இருந்திருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்: பெரிய அளவு பொருளாதார, வணிக நடவடிக்கைகள்; தனித்தனிக் கைத்தொழில்களில் விற்பன்னர்கள்; நிருவாகப் பணியைக் கவனித்தவர்கள் (கணக்கர், மேற்பார்வையாளர் உட்பட) பொது மக்களிடையே மேல் / கீழ் பிரிவுகள் (பெரும்பாலும் அரசர் என அழைக்கப்பட்ட) தலைவர் / தலைவர்கள் – பொதுமக்களைக் கட்டுப்படுத்தி ஒறுக்கும் அதிகாரத்துடன்; அத் தலைவர்களுக்கு பெரிய முக்கியத்துவம்; அரசு சார்ந்த சமயம், கோயில்கள் பற்றிய தடயங்கள் இப்படிப்பட்ட கூறுகளைக் கொண்ட அரசு சிந்து நாகரிகத்தில் இருந்ததற்கான தடயங்கள் இல்லை என்பர் பொசெல் (2002:6) “The socio - cultural form that the Indus polity took is not known”. எனவே சிந்து நாகரிகம் அற்றை மொசொபொதாமிய, எகிப்து நாகரிகங்களைப் போலும், பிற்றை (கி.பி.நூற்றாண்டுகளில் இருந்த வட அமெரிக்க மயா, தென்அமெரிக்க பெரு நாட்டு இங்கா நாகரிகங்களைப் போலும் பன்முக வளர்ச்சியடைந்திருந்தபோதிலும் (மேற்கண்ட அடையாளங்களை உடைய) அரசு எதுவும் சிந்து நாகரிகத்தில் இல்லை. பூசாரி - அரசர்களும் Priest Kings சிந்து நாகரிகத்தில் இல்லை. பின் எப்படிப்பட்ட அமைப்பு அந் நாகரிகத்தைப் பல நூறு ஆண்டுகள் அங்கு பேணி நடத்திவந்தது என்பதை இன்னும் தொல்லியலாளர்கள் ஒருமித்த கருத்துடன் நிறுவவில்லை; உலகிலேயே இத்தன்மை வாய்ந்த நாகரிகம் வேறு எதுவும் எங்கும் என்றும் இருந்தது “To my knowledge, there is, for example, no close parallel to it, in either the Archaeological or Ethnographic record.” எனினும், சிந்து நாகரிகத்தை நிருவகித்து வந்த அமைப்பு (ஏனைய கீழை நாடுகளைப் போன்று) கொடுங்கோன்மை வாய்ந்ததாகத் தோன்றவில்லை. அம்மக்களின் அனைத்துப் பிரிவினருமே ஓரளவு சமத்துவத்துடன் செழித்து வாழ்ந்தனர் எனக் கருதலாம் (There is no reason for us to believe that it was despotic, in the oriental fashion p.247 [no basis] to rule out the notion that the entire Indus population was generally well-off, possibly relatively egalitarian (p.175) இவையே பொசெல் கருத்துகள்.) 19. உலகில் வேறு பண்டைய நாகரிகம் எதிலும் இல்லாத ஒரு தனிக் கோட்பாட்டைக் னைநடிடடிபல கொண்டு உருவான சிந்து நாகரிக வீழ்ச்சிக்கு அந்தக் கோட்பாட்டின்படி செயல்பட்ட அமைப்புகளே சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் அக்கோட்பாட்டைத் தொடர்ந்து பேணி வரமுடியாத நிலை ஏற்பட்டதே (a flaw in internal structure) காரணமாகலாம். எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் ஒரு கோட்பாடு நிரந்தரமாக நிலைபெற்று, அழிவில்லாமல் இருக்க முடியுமா? மேலே விளக்கியதும், நெடுங்காலம் முரண்பாடு conflict இன்றி நிலைத்திருந்த சிந்துக் கோட்பாடும் Indus ideology) ஒரு காலத்தில் முடிவுக்கு வந்து தானே ஆகவேண்டும்; (“too well adapted for its own good;” too much of a good thing) எனவே சிந்து நாகரிகம் முடிவடைந்ததற்கு மேலே இயல் 1 இன் இறுதியில் ஆல்சின் குறித்த காரணங்களுடன் இக்காரணத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். 20. மைக்கேல் வுட் (2007: The story of India) நாலாயிரம் முத்திரைகள் முதலியவை கிடைத்திருப்பினும் போர், கொலை, கொள்ளை, ரத்தக் களரி, ‘வென்றவன் முன் கைதிகள்’ போன்ற காட்சிகள் சித்தரிக்கப் படாததை வியக்கிறார். கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக் சாண்டருடன் இந்தியாவுக்கு வந்த கிரேக்கர்களும்‘இந்தியர்கள் அக்கிரமப் போரை வெறுத்தனர்; அறநெறி போற்றினர்’ என எழுதுகின்றனர். வன் முறையை வெறுத்த பிற்றை இந்திய சமயங்கள் சமணம், பௌத்தம் (அவ் விரண்டுக்கும் முந்தியதாக க. நெடுஞ்செழியன் முதலியவர்கள் கருதும் ஆசீவகம்) ஆகியனவெல்லாம் சிந்து நாகரிகக் காலத்திலேயே கருக் கொண்டவை என்று பல அறிஞர் கருதுவதைச் சமயம் பற்றிய பின் வரும் இயலில் காண்க. இக் கருதுகோள் சரியென்றால் வன் முறையே அடிப்படையாகக் கொண்ட இம் மாந்த இனத்தின் வரலாற்றில் சிந்து நாகரிகம் தனிப்பட்ட சிறப்புடையது என்பர் வுட் (But if anything like that were true, it would be unique in the violent history of humanity) வண்டி பொம்மை நடன மாதின் படிவம்- வெண்கலம் தாழிப் புதைப்பு (மொகெஞ்) இயல் 5 சிந்துவெளி எடை அளவுகள் (தமிழரின் எடை அளவுகளை ஒத்தவை) தமிழரிடையே அண்மைக் காலம் வரை நடைமுறையில் இருந்த “சிற்றிலக்க” அடிப்படையில் அமைந்த எண் முறையே சிந்து வெளி நாகரிகத்திலும் நடைமுறையில் இருந்தது என்று கண்டறிந்து வெளியிட்ட பெருமை பொறியியல் அறிஞர் செங்கம் வளையாம்பட்டு கு. வேங்கடாசலம் உடையதாகும். (A study of the Weights and Measures of the Indus valley civilisation; 1983 தமிழ்ப் பல்கலைக் கழகக் கருத்தரங்குக் கட்டுரை) இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எடை அளவு முறைகளிலேயே தொன்மையானது இதுதான் (Berriman: Historical Metrology; 1953) 2. சிந்துவெளி எச்சங்களில் ஏராளமான அகேட் மற்றும் சக்கி முக்கிக்கல் எடைக் கற்களும் அடங்கும். மக்கேயின் அறிக்கை (1938) யின் 17வது இயலில் ஹெம்மி இவ்வெடைகளைப் பின்வருமாறு பட்டிய லிட்டுள்ளார்: சராசரி எடை (கிராம்) மடங்கு 0.871 1 1.770 1 2.235 8/3 3.434 4 6.829 8 13.731 16 27.405 32 54.359 64 136.020 160 174.500 200 271.330 320 546.700 640 1417.500 1600 5556.000 6400 6903.000 8000 10865.000 12800 லோதலில் எஸ்.ஆர்.ராவ் மேலும் சில எடைகளைக் கண்டு பிடித்தார். அவற்றையும் சேர்த்து சிந்துவெளி எடைகளைப் பின்வரும் இரண்டு வரிசைகளாக மெயின்கார் V.B.Mainkar; “Metrology in the Indus civilsation” in “Frontiers of Indus civilisation” 1984) அமைக்கிறார். வரிசை 1 சராசரி எடை (கிராம்) மடங்கு ஒருகுன்றிமணி 109 மில்லிகிராம் எனக் கொண்டால் எத்தனை குன்றிமணி எடை என்பது 1.2184 0.05 12 2.285 0.10 24 5.172 0.20 48 13.792 0.50 120 *27.584 1.00 55.168 2.00 137.900 5.00 271.330 10.00 546.700 20.00 1417.500 50.00 2701.400 100.00 5556.000 200.00 10865.000 500.00 *இவ் வரிசையில் இதுவே அடிப்படை அலகாகக் கருதத்தக்கது. பின்னர் 27.2 கிராம் கொண்ட கிரீஸ் நாட்டு அன்சியாவுக்கும் ஆங்கில அவுன்சுக்கும் இதுவே அடிப்படை என்க. வரிசை 2 0.871 0.05 8 1.770 0.10 16 3.434 0.20 32 8.575 0.50 80 *18.165 1.00 160 33.305 2.00 320 174.500 10.00 6903.000 500.00? *இவ்வரிசையில் இதுவே அடிப்படை அலகு. இதை விட முன் வரிசையில் கண்ட 27.584 என்பது 50% அதிகம் என்பதைக் காண்க. தமிழ் நாட்டு “பலம்” 320 குன்றிமணி எடையாகும். 3. முதல் வரிசை எடைகளின் மடங்குகள் 1, 2, 5/10/20/50/100/ 200/500 என்றவாறு நிரல்பட அழகாக அதிகரித்துச் செல்வதைக் காண்க. ஏறத்தாழ இதே போன்ற மடங்கில் தான் தமிழ்ச் சிற்றிலக்க எண்களின் மடங்குகளும் அமைந்து இருந்தன. முழு ஒன்றை 320 பங்கு வைத்தால் பெறும் 1/320 க்கு முந்திரி என்று பெயரிட்டனர். 1/320 லிருந்து 1 வரையுள்ள எண்கள் “மேல்வாய்ச் சிற்றிலக்கம்.” முந்திரியை (1/320) மேலும் 320 கூறிட்டால் கிடைப்பது கீழ் முந்திரி 1/320 X 1/ 320 = 1/1,02,400. கீழ் முந்திரியிலிருந்து முந்திரி வரை “கீழ்வாய்ச் சிற்றிலக்கம்”. இவ்விரண்டு வரிசைகளிலும் முக்கியமானவை வருமாறு கீழ்வாய் பெயர் பின்னம் தமிழ் எழுத்து 1. Kil-Mundri 1/1,02,400 கீவத 2. 1/64000 3. 1/51200 4 Kil-Kani 1/25000 கீ 5. 1/12800 6. Kil-Ma 1/64000 7 Kil-Visam 1/5120 கீ 8 Kil-Araikkal 1/2560 கீ 9. 1/1600 10. Kil-kal 1/1280 கீ 11. Kil-Arai 1/640 கீ 12. 1/512 கீழ்வாய் 13. Mundri 1/320 வ 14. Araikkanii 1/160 கீ 15. Kani 1/80 16. Kal-visam 1/64 ல 17. Arai-ma 1/40 சபு(சு) 18. Arai-visam 1/32 சம 19. Oru - Ma 1/20 ப 20. Oru-Visam (Ma-Kani) 1/16 பல(வ) 21. Araikkal 1/8 ஹ 22. Araikkale-Visam 3/16 23. Kal 1/14 வ 24. Kale-Visam 5/16 25. Kale-Araikkal 3/8 26. Kale-Maruvisam 7/16 27. Arai 1/12 இ 28. Araie-Visami 9/16 29. Arai-e-Araikkal 5/8 30. Arai-e-Munruvisam 11/16 31. Mukkal 3/4 ளு 32. Mukkal-e-Visam 13/16 33. Mukkal-e-Araikal 7/8 34. Mukkal-e-Munru-Visam 15/16 35. Onru 1 க மேற்கண்ட பின்னங்களுக்கு இடைப்பட்ட சில மடங்குகளும் தமிழ் நாட்டில் இருந்தன. சிந்து வெளியில் கண்டெடுத்த எடைகளெல்லாம் இச் சிற்றிலக்க வாய்ப்பாட்டு எண்மான அடிப்படையில் அமைந்தனவே என்பதை வேங்கடாசலம் தெளிவாக விளக்கியுள்ளார். எடை அளவுகள் பற்றி வேதங்கள், அர்த்தசாஸ்திரம் போன்றவற்றுள் அரைகுறையாகச் சொல்லப்பட்டுள்ளவையும் சிந்துவெளி எடைகளைப் (சிற்றிலக்க அடிப்படையில மைந்தவை) பின்பற்றியவையே என்பதையும்; இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் (1956 ல் மெட்ரிக் எடைச் சட்டம் நடைமுறைக்கு வரும் வரை) நடைமுறையிலிருந்த எடை அளவுகள் எல்லாமே சிந்துவெளி (தமிழிய) எடை அளவுகளைப் பின்பற்றி யவையே என்பதையும் அவர்நிறுவியுள்ளார். கி.மு.500க்கு முந்திய தொல்காப்பிய சூத்திரங்களிலேயே எடை, எண்மான, அளவீட்டுச் சொற்கள் பல குறிப்பிடப்பட்டு அவற்றுக்கான புணர்ச்சி முதலிய இலக்கண விதிகள் கூறப்பட்டுள்ளதை வேங்கடாசலம் விளக்கி தமிழரிடையே இக்கோட்பாடுகளின் தொன்மையைச் சுட்டுகிறார். 4. தமிழருக்கேயுரிய 84செமீ (33 அங்குல = இரண்டேமுக்கால் அடி) தச்சுமுளம் சிந்துவெளிக் காலத்திலிருந்து கடந்த 5000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளமையை கொடு முடி சண்முகம் குறித்துள்ளார். (Journal of Tamil Studies, சூன் 1980) சிந்து வெளித் தெருக்களில் பல 33’, 11’ அடி என்ற அளவில் இருந்ததைக் கண்டோம். 11 என்பது 23/4 அடியின் நான்கு மடங்கு லோதலில் கண்டெடுக்கப்பட்ட சங்கு ஓட்டில் செய்த ஒரு சிறிய அடிக்கோலில் 1.32 அங்குலம் 5 பகுதிகளாக (ஒவ்வொன்றும் 0.264 அங்குலம்) பிரிக்கப்பட்டுள்ளது. தச்சுமுழம் 33 அங்குலத்தை 25 ஆகப் பிரித்தால் ஒவ்வொரு பிரிவும் 1.32 அங்குலம் வரும் என்பதை நோக்குக. தஞ்சைப் பெருவுடையார் கோவிலும் திருவண்ணாமலையார் கோயிலும் இரண்டே முக்கால் அடி தச்சுமுழ அளவின் படியே கட்டப்பட்டுள்ளன. இயல் 6 சமயம் 1. சமயம் (மதம்) என்பது தெய்வங்களைக் குறித்து மாந்தர் நம்புவதைக் (மறுபிறவி, மறுஉலகு, தொன்மங்கள் உட்பட) குறிப்ப தாகும். அந்நம்பிக்கைகள் மெய்ப்பிக்கவோ, பொய்ப்பிக்கவோ முடியாதவை (can be neither affirmed nor falsified) கடவுள், ஆன்மிகம் சார்ந்த இந்த நம்பிக்கையைப் போன்றவையே அரசியல், பொருளாதாரம் பற்றி அவ்வப்பொழுது நிலவி வரும், பல்வேறு “இசங்களும்” (isms) அவை பற்றிய நம்பிக்கைகளும் ஆகும். 2. சிந்து நாகரிகச் சின்னங்கள் 1921 லிருந்து அகழ்வாய்வில் வெளிப்படத் தொடங்கின. ஆயினும் அதற்குமுன்னரே (ஏன் 19-ம் நூற்றாண்டின் இடையிலிருந்தே) கால்டுவெல், மறைமலையடிகள் உள்ளிட்ட அறிஞர் பலர் ஆரியர் கி.மு.1500 ஐ ஒட்டி இந்தியாவுக்குள் நுழையுமுன்னர் சிறந்த தமிழிய / திராவிட நாகரிகம் இந்தியா முழுவதும் பரவியிருந்திருக்க வேண்டும் என்றும் பிற்கால இந்தியர் வாழ்வியல், சமயம் உட்பட, தமிழிய நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டதே என்ற கருத்தை தெரிவித்திருந்தது பற்றிய முழுவிவரங்கள் பிற இயல் களிலும் உள்ளன. 3. சிந்து நாகரிக சமயத்தைப் பற்றி 2001 இல் ஆர்.சி.தண்டா ‘ஹாரப்பாவில் தோன்றிய இந்து சமயம்’ Harappan origin of Hindiusm முக்கியமான நூலாகும் இந்தியாவில் இன்றும் வழங்கிவரும் இந்து சமயத்தைப் போன்ற சமயமே சிந்து நாகரிகத்திலும் வழங்கியது என்ற சர்ஜான் மார்ஷல்கருத்தை இன்று அனைத்து அறிஞரும் ஏற்கின்றனர். (“Their religiion is so characteristically Indian, as hardly to be distinguished from the still living Hinduism”) 4. சிந்து நாகரிகத்தில் சுமேரியா, எகிப்து நாகரிகங்களில் இருந்தது போன்ற பெரிய கட்டுமானக் கோயில்கள் இல்லை எனினும் சங்ககாலத் தமிழகத்தில் இருந்ததுபோல மரத்தடி வழிபாடு போன்றவை பரவலாக இருந்திருக்கும். வீடுகளிலும் கடவுள் உருவங்கள், தகடுகள், தாயத்துக்கள் போன்றவை வழிபாட்டுக்குப் பயன்பட்டிருக்கலாம். முத்திரைகளில் உள்ள உருவங்களிலிருந்து அரசமரம் போன்ற மரவழிபாடு எருது, யானை போன்ற விலங்குகள் வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு போன்றவை இருந்தது உணரப்படுகிறது. ‘பசுபதி’ முத்திரை (மொகஞ்சொதரோ: 420) யோகி உருவில் அமைந்த சிவனைக் குறிப்பது என்பது மார்ஷல் கருத்து. மாறாக அது பெண்தெய்வம் என்று கருதுபவர்கள் எச்.பி.சல்லி வான் (1964), ஏ.ஹில்தெபெய்தல் (1978), சுபங்கணா ஆத்ரே (1987) ஆகியோர் ஆவர்; இக்கருத்து பொதுவாக ஏற்கப்படவில்லை. ஆடவல்லான் படிமத்திற்கு முன்னோடியெனக் கருதத்தக்க சிலை ஹாரப்பாவில் கிடைத்தை மேலே கண்டோம். லிங்க வடிவங்கள் பலவும் கிடைத் துள்ளன. முத்திரைகளில் ஒன்று சமண ரிஷப தேவரைக் குறிப்ப தாகலாம் - (ஆர்.பி.சந்தா: மாடர்ன் ரிவியூ , ஆகஸ்டு 1932). சக்கரமும் ‘சுவத்திகமும்’ ஞாயிற்றைக் குறிப்பதாகலின் ஞாயிறு வழிபாடும் இருந் திருக்கும் என்பர் சிலர். கிடைத்துள்ள சிறு சிறு பதுமைகளில் சில நேர்த்திக் கடனாகக் கோயில்களுக்கு வழங்கப்பட்டவையென்றும் கருது கின்றனர். தெப்பக்குளம், நீராடல் முதலியவற்றின் முதன்மையி லிருந்தும் பிற்கால இந்துசமய முன்னோடி இந் நாகரிகத்தில் காணக் கிடக்கிறது. 5. திராவிடரின் தாய்த் தெய்வம் கொற்றவை, பழையோள், கானமர் செல்வி, காடு கிழாள், கடல்கெழுசெல்வி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டாள். அவளே சேயோனாகிய முருகனின் தாய் (பெரும் பாணாற்றுப் படை : 457) ஹாரப்பா நாகரிக தாய்த் தெய்வமும் கொற் றவையின் வடிவே என்பது பி.எல். சாமி கருத்து. லோதலில் வழிபட்டதாக அறியப்படும் ‘வனவாசி கொட்டரிமாதா’ வடிவம் கானமர் செல்வியே; எல்லையம்மன் (எல்லம்மன்) மறு உருவமே ரேணுகா என்பதும் அவர் கருத்து. இவ்வனைத்துப் பெண் தெய்வங்களின் இணைப்பின் காரண மாகவே பிற்காலத்தில் லஜ்ஜ கௌரி போன்ற பெண் தெய்வங்கள் வடநாட்டில் உருவாயினர் என்கிறார் அவர் (Journal of Tamil Studies December 1992.) ‘மொ. 430’ முத்திரை போன்றவற்றில் காணப்படும் ஏழுகன்னியர் வடிவங்கள் கார்த்திகைப் பெண்களைக் குறிக்கலாம் என்பர் பர்போலா (South Asian Archaeology, 1987) வட இந்தியர் தாய்த் தெய்வத்தை Hoi (She happened : ஆய்?) என்ற பெயரில் வழிபடுகின்றனர் என்பர் தண்டா (பக். 190) 6. இந்தியாவில் சமய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. உயிர்கள் தம் வினைப் பயனுக்கேற்ப மீண்டும் மீண்டும் பிறவி யெடுக்கும் என்பது பௌத்த மதத்தின் முக்கிய கொள்கை. புத்தமதம் தோன்றிய காலத்தில் தோன்றிய சமணமும் ஆசீவகமும் அக் கொள்கை யுடையவையே. பிறவித் தளையிலிருந்து விடுபடுவது சமயத்தின் குறிக்கோள் என்பது அம்மதங்களின் கொள்கை. இம்மூன்று சமயங் களும், சாங்கிய - யோகா கோட்பாடுகளும் மட்டுமன்றி, வேதாந்தக் கொள்கையும் ஆரியரல்லாதவருடையவை என்பது வல்லுநர் கருத்து:- ஆல்பர்ட் சுவைட்சர்: ‘Vedanta is Brahminized Sankhya’ ஹெய்ன்ரிச் ஜிம்மர்‘Sankhya - Yoga, Jainism and early Buddhism represent the thinking of non - Aryan people of India’. இந்த மறுபிறவிக் கொள்கையை சர் வில்லியம் ஜோன்ஸ் பாராட்டியுள்ளார். தத்தமது கடவுள் சொன்னதாகக் கூறப்படும் சமயக் கோட்பாடுகளை மீறும் மனிதர் மீளா நரகத்தில் என்றென்றும் முடிவின்றிச் சித்திர வதைக்குட்படுவர் என்ற குரூரமான கோட்பாட்டைக் கொண்டவை (கிறித்துவம், இசுலாம் போன்ற) செமித்திய மதங்கள்; அக்கோட்பாட்டை விட இந்திய சமயங்களின் மறு பிறவிக் கொள்கை எவ்வளவோ அறிவு பூர்வமானது; கடவுள் உணர்ச்சிக்குகந்தது; தீமையின்பாற் செல்லாது மனிதரைக் தடுக்கவல்லது என ஜோன்ஸ் கூறியுள்ளார். 7. ஜே.எல். பிராக்கிங்டன் இதுபற்றிக் கூறுவது ( The Sacred Thread); வினைப் பயனை நம்புவது என்பது மனிதன் சுயமுயற்சியைக் கைவிட்டு ‘நடப்பது நடக்கட்டும்’ என வாளா இருக்கச் செய்யும் நிலை (fatalism) எனப் பொதுவாகக் கருதுவது அறியாமையாகும். ‘முந்தைச் செயல்களால் இன்றைய நிலை எற்பட்டுள்ளது. இன்று நாம் செய்யும் செயல்கள் வருங்காலத்தை நிர்ணயிக்கும்’ என்று சொல்லும் பொழுது ‘மனிதனின் இன்றைய நிலை தன் செயலால் ஏற்பட்டது; வருங் காலத்தையும் தன் செயலால் நிர்ணயிக்கலாம்” என்று அறிவுறுத்துவ தாகவே கொள்ள வேண்டும். பழைய உபநிடதங்களில் மறுபிறவிக் கொள்கை புதுமையான தாகவும் சிலருக்கு மட்டும் தெரிந்த மறை பொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்தும் பின்னர் அக்கொள்கை புத்த சமண சமயங்கள் வழியாக விரைந்து அனைவராலும் பின்பற்றப் பட்டது எவ்வாறு? எந்த மக்கள், சமூகத்தினரிடம் இருந்து பௌத்தர் தோன்றினாரோ அவர்க ளிடையே அக் கொள்கை பரவலாகத் தொன்று தொட்டு வழங்கி வந்த கொள்கையாக அது இருந்திருக்கவேண்டும். எனவேதான் அது விரைவில் அனைத்து மக்களின் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது 8. “வடமேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்களால் மகதம் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன்மக்கள் குடும்பங்கள் பல தொடர்ந்து இருந்தன. ஆரிய ஆளும் குடும்பங்கள் வலுவிழந்து வீழத் தொடங்கிய பின் முந்தைய உள்ளூர் ஆளும் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றன. எடுத்துக்காட்டாக சந்திரகுப்த மௌரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே” என்று ஹெய்ன்ரிச் சிம்மர் (Heinrich Zimmer: The Philosophies of India; 1951) செப்பியுள்ளதையும் கருதுக. 9. இந்து சமயக் கோட்பாடுகளில் அடிப்படையாகவும் சிறந்தன வாகவும் உள்ளவையெல்லாம் வடநாட்டில் பரவலாக 3000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழ் மேன்மக்களிடமிருந்து பெறப்பட்டவை என்பதை யும் அவற்றை ஆரியருடையனவாகக் கொள்வது அறியாமை என்பதையும் மறைமலை அடிகள் தமிழர் நாகரிகம் அல்லது வேளாளர் யார்? (1923); மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (1930); தமிழர் மதம் (1941) போன்ற நூல்களில் நிறுவியுள்ளார். கா.சுப்பிரமணிய பிள்ளைதமிழர்சமயம் (1940) தேவநேயப் பாவாணர்தமிழர் மதம் (1972) ஆகியோருக்கும் அடிகள் கருத்து உடன்பாடேயாகும். 10.ரிக் வேத காலத்திலிருந்தே (கி.மு.1000) “குடி, கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறு தெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச் செய்த தமிழ்ச் சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு, எசுர், சாம, அதர்வ வேதப் பதிகங்கள் சில பலவும்; உண்மை வழா உபநிடதங் களும்; சாங்கிய, யோக, வைசேடிக, நையாயிக, வேதாந்த சூத்திரங் களும்; மற்சம், வாயு முதலான சில புராணங்களும்; பௌட்கரம், மிருகேந் திரம் முதலான சில சிவாகமங்களும் பிறவுமாம்’ என்பது அடிகள் 1930 இல் எழுதிய முடிவு. இம் முடிவுக்கான எடுத்துக்காட்டுகளாக மறை மலை அடிகள் தந்துள்ள பலவற்றுள் முதன்மையான சில வருமாறு:- ‘இருக்கு வேதத்திற் ‘பரதர்’ முதலிய பெயர்களால் வழங்கப் பட்ட பண்டைத் தமிழ் நன்மக்களே (“பரதர்’ என்னும் பெயரிலிருந்தே ‘பாரதம்” உருவானது). ஞாயிறு, திங்கள், தீ என்னும் முத்தீ வடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவபிரானை வழிபடும் நுட்ப முறையைக் கண்டோராவர்’ (1930) ‘விசுவாமித்திரர் என்னும் தமிழரச முனிவரால் செய்து சேர்க்கப்பட்ட இருக்கு வேத மூன்றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திரமானது ஞாயிற்று மண்டிலத்தின் கண் முளைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவபிரான் மேற்றாய் விளங்குகிறது’ (1923) “கொல்லா அறத்தை முதன்முதற் கண்டறிந்து அதற் கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன்மக்களாய் இருந்த ஒரு பெரும் பகுதியாரே ... மற்றை மக்கட் பிரிவினரிலுள் எந்த மேலோரும் இவ்வருமருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர் ... வடக்கிலிருந்த சமண, சாக்கியர், சாங்கியர், யோகர் முதலாயினாருங் கொல்லா வறத்தினை விடாப்பிடியாய்க் கொண்டு ஒழுகினரல்ல ரோ வெனில்; சமண சாக்கியர் முதலான அவரெல்லாம் ஆரியர் வருதற்கு முன்னமே இமயமலை வரையிற் பரவி நாகரிகத்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத தமிழ் மேன்மக்களின் மரபில் வந்தவரே’ (1940) 11. தமது சாதி வேற்றுமையும் போலிச்சைவரும் (1923) நூலில் மறைமலையடிகள் விரிவாக விளக்கும் பின்வரும் செய்திகள் இவ்வியல், அடுத்த இயல் இரண்டின் பொருள்களுக்குமே தொடர்புடை யனவாகும். எனினும் வசதி கருதி இவ்வியலிலேயே தரப்படுகின்றன. (நுண்மாணுழைபுலமிக்க அக்கருத்துகள் வேத / சமஸ்கிருத மொழி, பண்பாட்டு ஆய்வாளர்கள் (இந்நாட்டவரும் சரி, மேனாட்டவரும் சரி) யாராலும் இவ்வளவு தெளிவாக தெரிவிக்கப்படவில்லை): நால்வகை மக்கட்பிரிவினரின் பெயரை அவ்வவர் தொழில் வெறுபாடுபற்றி எடுத்தோதும் பதிகம் இப் புருடசூத்த மந்திரத்தைத் தவிர வேறேதும் இருக்கு வேதத்தில் எங்குங் காணப்படாமை யானும், ஒன்பதாஞ் செய்யுளில் இருக்கு, எசுர் சாமம் என்னும் மூன்று வேதங்களின் பெயரை எடுத்துச் சொல்லும் இப் புருட சூத்தம் அம் மூன்றுவேதங் களுந் தோன்றிய பின்னன்றி முன்னிருந்தது ஆகாமை யானும், நால்வேறு மக்கட் பாகுபாடும் அதனை யெடுத்துக் கூறும் புருடசூத்தமும்இருக்கு, எசுர் ,சாமம் என்னும் மூன்று வேதங்களும் இயற்றப்பட்டகாலத்தில் இருந்தன அல்ல என்பதும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி, மாபாரதப் போரில் முனைந்து நின்ற குருகுல பாஞ்சால அரசர் களையும், அவர் வழியில் வந்த ஜனகன் அஜாதசத்துரு, ஜனமேஜய, பரிக்ஷித், இவற்கு ஆசிரியனாகிய வைசம்பாயனன் முதலியோரை யும் எடுத்தோதும்கிருஷ்ண சுக்லயஜுர் வேதமும் அதனோடு ஒரு காலத்தாகிய சாம வேதமும் அம் மாபாரதப்போர் நிகழ்ந்ததற்குப்பின் ஆக்கப் பட்டனவாதல் தெளியப்படும். இவ்விரண்டு வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தையடுத்தே, அவ் வேதங்களுக்கு விளக்க உரைகளாய் எழுந்த ‘பிராமணங்’களும் அவற்றையடுத்த வேள்வி வேட்டலை மறுத்து முழு முதற்கடவுளின் மெய்ம் மையைப் புலப்படுத்தவும் பன்னிரண்டு பழைய உபநிடதங்களும் ஆக்கப்பட்டன. இவைகளுண்டான காலத்திலுங் கூடப், பிறப்பளவில் சாதிவேறுபாடு சொல்லப்பட வில்லை. சுக்ல யசுர் வேதத்தின் முப்பதாம் இயலிற் பல வேறு தொழில்களைச் செய்யும் பல்வேறு மக்கட்கூட்டத்தினர் பெயர்கள் மட்டுமே எடுத்துரைக்கப்பட் டிருக்கின்றன; இங்ஙனமே தைத்திரீய பிராமணத்திலுஞ் சொல்லப் பட்டிருக் கின்றன; ஆனால், அவற்றுட் சாதிவேறுபாடுகளும், அவற்றின் உயர்பு இழிபுகளும் பேசப்பட வில்லை. அதற்கு ஒரு சான்று எடுத்துக் காட்டுதும்: முன்னொரு கால் சரசுவதி யாற்றங்கரையிலே இருடிகள் ஒரு வேள்வி வேட்கலாயினர். அப்போது ‘இல்லூஷை’ என்னும் ஓர் அடிமைப் பெண்ணின் புதல்வரான ‘கவஷா’ என்பவர் அவ் வேள்விக்கு வந்திருந்தனர். அவர்கள் அவரை ஓர் அடிமையின் பிள்ளை என்பது பற்றி இகழ்ந்து, அவ் வேள்விக்களத்தினின்றுந் துரத்த, அவர் சென்ற இடத்திற்கே அவ்யாற்று நீர் செல்லுமாறு கடவுள் அருள்செய்தனர்; அதனையுணர்ந்த இருடிகள் அவரையிகழ்ந்த தமது அறியாமைக்கு வருந்திப் பின்னர் அவரை ஒரு சிறந்த இருடியாக ஏற்று வணங்கினர்; என்று ஐத்ரேயபிராமணம் (2, 19) புகலுகின்றது. இக் ‘கவஷா’ என்பவரே இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டிலத்திற் பல பதிகங்களை இயற்றி யிருக்கின்றனர். இவ்வாற்றாற்பிராமணங்கள் எழுதப்பட்ட காலத்திலும் சாதி வேற்றுமை நிலைபெறவில்லை யென்பது புலனாகின்றதன்றோ? இன்னும், பல வேள்விகளைச் செய்து முடித்தவனும், அவ் வேள்விகளில்முனிவரர்க்கும் பிறர்க்கும் ஏராளமான நன்கொடை வழங்கினவனும், விசுவா மித்திர முனிவரைப் பாதுகாத்தவனும், இருக்கு வேத ஏழாம் மண்டிலத்தின் 18 ஆம் பதிகத்திற் பாராட்டப் பட்டவனு மான ‘பைஜவனன்’ என்பான் ஒரு சூத்திரனே என்று மாபாரதம் சாந்திபர்வம் 2304 ஆம் செய்யுளிலிருந்து நுவல்கின்றது. இன்னும்,இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய முனிவரர் பலரும் அரச வகுப்பினையும் வணிக வகுப்பினையுஞ் சேர்ந்தோர் ஆவரென்று மற்சபுராணத்தின் 132ஆம் இயல் வகுத்துரைக்கின்றது. இருக்கு வேத த்தின் மூன்றாம் மண்டிலத்தை ஆக்கிய விசுவாமித்திரரும், மற்றை மண்டிலங்களிற் பதிகங்கள் பலவற்றை ஆக்கிய வைவசுவ தமனு, இடன், புரூரவர் முதலாயினாரும் அரச வகுப்பினரே ஆவர்; பலந்தர், வந்தியர், சங்கீர்த்தி முதலியோர் வைசிய வகுப்பின ராவர்.இருக்கு வேத த்தின், முதல் மண்டிலத்துள்ள 100 ஆம் பதிகத்தை இயற்றிய ரிஜ்ராசுவர், அம்பரீஷர், சகதேவர், பயமா நர், சுராதர் முதலான இருடிகள் ஐவரும் விருஷாகிர் அரசன் புதல்வராவர் என்று இருக்கு வேதத்தின் அநுக் கிரமணிகையே புகல்கின்றது. இங்ஙனமே, அவ் விருக்குவேதத்தின் 6 ஆவது மண்டிலத்திலுள்ள 15 ஆம் பதிகத்தைச் செய்த வீதஹவ்யரும், 10 ஆவது மண்டிலத்து 9 ஆம் பதிகத்தை ஆக்கிய அம்பரீடர் மகனான சிந்துத் வீபரும், அதன் 75 ஆம் பதிகத்தை இயற்றிய பிரிய மேதர் மகனான சிந்துக்ஷித்தரும், அதன் 179 ஆம் பதிகத்தைப் பாடிய உசீநரரின் மகன் சிபியும், காசிமன்னன் திவோதாசன் மகன் பிரதர்த்தனரும், அதன் 98 ஆம் பதிகத்தைப் புகன்ற சந்தநுவின் மகன் தேவாபியும் எல்லாம் அரச இனத்தைச் சேர்ந் தோரேயாவர். இவ்வாறே இன்னும் பலர் உளர். மேற்சொல்லிய இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய சத்திரிய வைசியர் என்பார் தமிழ வேளாள வகுப்பினரே யாவர். யாங்ஙன மெனிற் கூறுதும்: மேற்காட்டிய ரிஜ்ராசுவர் முதலான அரச முனிவர் ஐவரும் சேர்ந்தியற்றிய பதிகத்தின் 12 ஆம் செய்யுளில் ‘சோமன்’ என்னுங் கடவுள் ஐந்து இனத்தாரைக் காப்பவராகச் சொல்லப்படு கின்றனர். இச் ‘சோமன்’ என்னுஞ் சொல் ‘ச உமா’ என்னும் இரு மொழிப் புணர்ச்சியாற் றோன்றி ‘உமையோடு கூடினவர்’ என்று பொருள்படும் என அதர்வசிரஸ் உபநிடத உரையிலே விளக்கப்பட்டிருத்தலின், அச் சொல் சிவபிரான் மேற்றாதலும், ‘சோமநாதம்’ என்னும் வடநாட்டுச் சிவ பிரான் திருக்கோயில் அப் பெயர்பெற்றிருத்தலின் அஃது அதற்குப் பின்னும் ஒரு சான்றாதலும் நன்கு விளங்கும். இனிச் சிவபிரானாற் காக்கப்படும் ஐவகை இனத்தினர் ஆவார் துருவாசர் களும் யதுக்களும் அணுக்களும் துருகியர்களும் பூருக்களும் என ஐவர் அவரென்று கிரிபித் என்னும் ஆசிரியர் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார். (ரிக் வேத ஆங்கில வடிவம், I பக். 10) இவ் வைவகை இனத்தினரும் தமிழ்மக்கட் பிரிவினரே யாவ ரென்று ராகொசின் என்னும் வரலாற்று நூலாசிரியர் தாம் ஆழ்ந்தாராய்ந்தெழுதிய வேத இந்தியா (பக். 323-9) என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றார். 2 வடக்கிருந்து வந்து இந்திய நாட்டுள் நுழைந்த ஆரிய மக்களை எதிர்த்த பத்து அரசர் களுக்குத் தலைவராய் நின்றோர் பூருக்களும், அவர்க்குத் துணைவராய் அஞ்சாநெஞ்சினராய் நிலவிய பரதர்களும் ஆவர். இத் தமிழ அரசர் பதின்மருட் சிவர் (சைவர்) விஷாநியர் (வைஷ்ணவர்) என்பார் இருவரும் சேர்த்துச் சொல்லப் படுகின்றனர் (ரிக்வேதம் 7, 18). ஆகவே, அத்துணைப் பழைய காலத்திலேயே தமிழருட் சிவ பிரானை வணங்குஞ் சைவரும், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவரும் வலியராயிருந்து ஆரியரை எதிர்த்து நின்றமை புலனாகும். பழைய தமிழ் மக்களுட் போர் வலிமையில் மிகச் சிறந்துநின்ற பரதர் தம் குடியிற் றோன்றிய அரசர்களே இவ் இந்திய நாடு முழுமையும் ஆண்டுவந்தனர்; அதுபற்றியே, அவர்களின் செங்கோல் நிழலில் வந்து வைகிய ஆரிய மக்கள் இவ் இந்திய நாட்டைப் “பாரத வர்ஷம்’ என்று அழைப்பாராயினர். குமரி நாடு கடல்கொண்டபின் அங்கிருந்த தமிழர்களே வடநாடு வரையிற் சென்று ஆங்காங்குக் குடியேறிப் பத்துவகை அரசியலை நாட்டி னார்கள். அவர்களுள் வடமதுரையில் அரசாண்ட யது குலத்தவர்களே பின்னர்க் கண்ணனைத் தலை வனாய்க் கொண்டு துவாரகையில் வந்து குடியேறினர். அவ் யது குலத்தவரில் ஒரு பகுதியாரே பெயர்த்துந் தமிழ்நாட்டிற் போந்து எருமையூரிற் குடியேறினர்(R.C.Dutt: ஐ பக். 19) எருமையூரிற் குடியேறிய யதுகுலத்தவராகிய வேளிர்க்குத் தலைவனே புறநானூற்றிற் கூறப்படும் இருங்கோ வேள் என்னும் மன்னன் ஆவான். இவ்வாறு இவர் போற் றமிழ் நாட்டினும் பிறநாடுகளினும் அந் நாளிற் பரவியிருந்த வேளாள மன்னர்கள் வரலாறுகளை உரைக்கப் புகின் இது மிக விரியும். இத் தமிழ வேளாள அரசர்களையே பழைய வடமொழிவேதங்களும் உபநிடதங்களும் ‘ராஜந்யர்’, ‘சத்திரியர்’ என்னும் பெயர்களாற் குறிப்பவாயின என்பதற்கு, மனு திராவிடர்களைச் ‘சத்திரியர்’ என்று கூறுதலே (10, 43, 44) சான்றாம். தமிழ வேளாளரில் உழவுத்தொழில் செய்தாரும், உழவுத் தொழிலாற் பெற்ற பண்டங்களைக் கொண்டு விற்றாருமே வடநூல்களில் ‘வைசியர்’ என்று நுவலப்படுவாரா யினர். இவ்வாறு காட்டப்பட்ட சத்திரியரும் வைசியருமாகிய தமிழ வேளாளரே தொன்று தொட்டுச் சிவபிரானை வணங்கி வருபவராய் இருத்தலின், அம் மக்கட்பிரிவினர் ஐவரையுங் காப்பவர் ‘சோமன்’ என்னும் சிவபிரானாக இருக்கு வேதம் புகலுவதாயிற்றென்க. எனவே, இருக்கு வேதத்திற் பலப்பல பதிகங்கள் இயற்றிய சத்திரிய வைசியர்கள் அனைவரும் தமிழ வேளாளர்களே யாதலைத் தெற்றென உணர்ந்துகொள்க. இவ்வாறு சத்திரிய வைசியராகிய வேளாளர்களும் இவர் தமக்குக் குற்றேவற்றொழில் புரிவாரான சூத்திரரும், மற்றை ஆரியரும் கலந்து வேதங்களையும் பிராமணங்களையும் பன்னிரண்டு உபநிடதங்களை யும் ஆக்கிவைத்த காலத்திற், பிறப்பளவில் தமக்குள் உயர்வு தாழ்வு காணாது, உயிர்வாழ்க்கைக்கு இன்றி யமையாத நால்வேறு தொழில்களையம் செய்து கொண்டு உண்ணல் கலத்தல்களில் ஏதொரு வேறுபாடு மின்றி ஒருமித்து வாழ்ந்தனராகலின், அக் காலத்திற் பிறப்பளவில் உயர்வு தாழ்வு கொள்ளும் சாதி வேற்றுமை சிறிதுமில்லையென்று தெளிக. இதனா லன்றோவாயுபுராணமும் (8, 190-3) ‘தீயவனுக்கு, மனத்தூய்மை இழந்தவனுக்கு வேதங்களும் அவற்றின் சடங்குகளும் வேள்விகளும் பட்டினி கிடத்தலும் தென் புலத்தார் கடனிறுத்தல் முதலான வினைகளும் பயனைத் தருகின்றில; அகத்தே இழிந்த இயற்கையுடையவனாயிருப்போன் புறத்தே எத்துணை முயற்சியோடு சடங்குகளைச் செய்தானாயினும், அவை சிறிதும் பயன்படா. ஒருவன் அழுக்கு நெஞ்சத் தோடு தனக்குள்ள பொருள் முழுதுங் காடுத்தானேனும், அதனால் நன்மை எய்தமாட்டான்; ஆதலால் நல்ல தன்மையே உயர்ச்சிக்கு ஏதுவாகும்,” என்று கூறுவதாயிற்று. இனி, மூன்று வேதங்களுக்கும் பிற்பட்டதாகிய புருட சூத்தத் திலும், அதற்கும் பிற்பட்டதாகிய பிருக தாரணியக உபநிடதத் திலும் (1, 4, 15) நால்வகைச் சாதிப்பெயர் காணப்படினும், முன்னையதில் அந் நாற் சாதியினரும் ஒரு முழுமுதற்கடவுளின் பிள்ளைகளாதலும், பின்னையதில் அந்நாற்சாதியினரிடத்தும் இறைவன் நிறைந்து விளங்குதலும் நன்கு வற்புறுத்து உரைக்கப் படுதலின், இந் நூல்கள் தோன்றிய காலத்தில் நால்வகைச் சாதிகள் இருந்தமை பெறப்படினும், அவருள் உயர்வு தாழ்வுகள் இருந்தமை புலனாக வில்லை. பிராமணங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வேதகாலத் தில் பூணூல் அணியும் வழக்கங் காணப்படாமையால், அதுபற்றி யுண்டான சாதி வேற்றுமையும் அஞ்ஞான்று இருந்ததில்லை. சதபதபிராமணத் திலும் (2, 4, 2), கௌஷீதகி உபநிடதத்திலுமே (2, 7) பூணூல் அணியுங் குறிப்பு முதன்முதற் காணப்படுகின்றது. இவ்விரண் டிலுங்கூடப் பகலவன் கீழ்பால் எழும்போது அவனை வணங்குங் காலைப்பொழுதிலும், வேள்வி வேட்கும் பொழுதிலுமே மாந்தர் பூணூல் அணிந்து மற்றைக் காலங்களில் அதனைக் கழற்றிவிடும் வழக்கம் நன்கு தெரிந்தோதப் பட்டமையால், இந் நூல்கள் உண்டான காலத்திலும் சாதிவேற்றுமை யின் பொருட்டுப் பூணூல் அணியப்படவில்லையென்பதும், இறைவனை வழிபடுந் தொழிலிற் புகுந்திருப்போர் அத்தொழிலிற் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப்போதற்கு ஒர் அடையாள மாகவே அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்திருந்தனரென்பதும் இனிது விளங்கும். ஆரியர் மட்டுமன்றி ஆரியரல்லாத பிறரும் (திராவிடரும்) ரிக்வேத காலத்திலேயே பிராமணராக, ரிஷிகளாக ஏற்கப்பட்டனர் என்பது தாமோதர தர்மாநந்த கோசம்பி (1950-51 On the Origin of the Brahmin gotras Jounal of the Bombay Branch of the Royal Asiatic Society 26.21-80ல்) உடைய முடிவும் ஆகும். அத்தகை திராவிட ரிஷிகள் தாங்கள் எந்த ஆரிய அரசனிடம் சேர்ந்துகொண்டனரோ அவன் கோத்திரத்தையே தமது கோத்திரமாகக் கொண்டனர் (பிற்காலத்தில் இதைத் தலைகீழாக மாற்றி குருவான பிராமணனின் கோத்திரமே அரசனுக்கும் என்று புனைந்து கொண்டனர்.) உண்மைநிலை இதுவாகையால்தான் இந்தியாவில் பலபகுதிகளிலும் உள்ள பிராமணரும் உடலமைப்பு, தோற்றம் ஆகிய உடலியற் கூறுகளில் பெருமளவு மாறுபட்டு உள்ளதோடு, ஒரு மாநில பிராமணர் இன்னொரு மாநில பிராமணருடன் மண உறவு கொள்ளாத நிலைமையும், ஒரு மாநிலத்திற்குள்ளும் உள்ள பலவகை பிராமணச் சாதியினர் தத்தமக்குள் மண உறவு கொள்ளாத நிலைமையும் உள்ளதென்பர் கோசம்பி. “My thesis is that, specifically as regards some important Brahmins, the gotra system is adopted by small groups of pre-Ksatriya and pre - Aryan people from Aryan invaders; as these groups take the functions of priesthood, they are most logically assigned to the patriarchal clan-group of those for whom they officiate. They consequently acquire the same gotra; only afterwards does the rule become its opposite, when the Vedic Kshatrias have died out by the rise of settlements and the emergence of other warriors of obscure origin who fight their way to the top. At that stage, it becomes quite possible to assign to these newcomers, the same gotra as that of the priests, who have maintained a continuity of tradition and acquired a monopoly of scripture by long and arduous study. I do not mean to imply that all gotras, or even all Brahmin gotras originated in this way. xxx. gotra lists could not be closed, and newcomers were obviously being recruited into the ranks of the priesthood. The Nagara Brahmins of Gujarat are supposed to be medieval immigrants. If the institution of marriage were so stricty bounded by caste and gotra rules, it would be difficult to explain the strong racial heterogeneity of Brahmins in India, as well as the existence of endogamous regional units within them (amounting to sub - castes) which have no basis in scripture) - D.D. Kosambi, 1950 - 51 12. அடிகளாரின் மேற்சொன்ன கருத்துக்களின் கருவைப் பின்வரு மாறு கா. அப்பாத்துரையார் 1956 இல் “1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் ” தமிழாக்கத்தின் அடிக் குறிப்பில்) சுருங்கக் குறித்தார்: “தமிழர் பண்டையச் சமய வாழ்வு இன்றைய பல சமயங்களின் உருவாகாமூலக் கரு முதலைத் தன்னிட மாகக் கொண்ட வாழ்வே யாகும். அதில் எல்லாச் சமயமூலமும் காணலாம்... புத்த, சமண, சைவ, வைணவக் கருத்துக்கள் உருவாகுமுன், அச் சமயப் பெயர்கள் வேறு வேறாகத் தமிழர் நெறியினின்று பிரியு முன், ஆரியர் இடைநின்று தமிழரின் ஒருநெறியைப் பலவாறு பிரிக்குமுன் அவ்வெல்லா நெறி களுக்கும் வழிகாட்டிய மிக முற்பட்ட காலத் தமிழ் அறிவர் மரபுசார்ந்த அறிஞருள் ஒருவரே திருவள்ளுவர் என்பது உய்த்துணரத்தக்க உண்மையாகும்.” 13. மறைமலையடிகள் கருத்துக்களைப் போன்றே வேறுபல அறிஞர் தெரிவித்துள்ள இசைந்த கருத்துக்கள் வருமாறு:- (i) “நமக்குக் கிடைக்கும் தகவல்களெல்லாம் ஒருபக்கத்திலிருந்து கிடைக்கும் (பிராமணச் சார்பான) தகவல்களே. முழுத் தகவல்களும் கிட்டியிருந்தால் இந்தியர் சமயம் திராவிடர் சமயமே (இங்குவந்த ஆரியர்கள் சிந்தனைக்கேற்பச் செய்யப்பட்ட சில மாற்றங்களுக்குட் பட்டு) என்பதை உணர்ந்து இருப்போம். “பிராமணச் சமுதாயத்தோடு முழுமையாக ஒப்பிடக்கூடிய அமைப்பு உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. கத்தோலிக்கப் பாதிரிகளைப் போலவோ, முகமதிய முல்லாக்களைப் போலவோ ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கிளிப்பிள்ளை போல காலா காலமும் தூக்கிப்பிடித்து வலியுறுத்தி வருவதல்ல பிராமணர் தன்மை. இந்தியா வில் உருவாகும் அல்லது நுழையும் எந்தச் சமயத்தையும் கோட் பாட்டையும் காலத்துக்குத் தக்க மாற்றங்களுடன் தங்கள் தலைமையில் செயல்படுத்தக் கருதும் சிந்தனையாள மேட்டுக்குடிப் பரம்பரை தாங்கள்தாம் என்பவர் அவர்கள்”. “பிராமணருடைய நோக்கம் ‘குறிப்பாக இந்த சமயத்தைத்தான் பரப்ப வேண்டும்’ என்பதாக என்றும் இருந்ததில்லை. இந்தியாவில் பரவும் எந்தச் சமயமாயினும் சரி அதனை வழிநடத்திக் கையாளுபவர்கள் தாங்களாக இருக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்”. – சர் சார்லஸ் எலியட்Buddhism and Hinduism’ vol 2; p.9 “Were our knowledge less one-sided, we might see that it would be more correct to describe Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of Aryan invaders” “The Brahmans are an interesting social phenomenon without exact parallel elsewhere. They are not like the Catholic or Muslim clergy, a priesthood pledged to support certain doctrines, but an intellectual, hereditary aristocracy who claim to direct the thought of India, whatever forms it may take.” ‘The guiding priciples of the Brahmins have alway been not so much that they have a particular creed to enforce, as that whatever the creed of India, they must be its ministers’ (ii) விஷ்ணு தென்னாட்டில் திராவிடர் வழிபட்ட ஒரு தெய்வம். பின்னர் ஆரியர் விஷ்ணுவைத் தம் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டனர் (ஜே. பிரிஸ்லஸ்கி 1934-35 The name of the God Visnu and the Krsna legend” Quarterly Journal of the Mythic Society; pp 39-48. (iii) ரிக்வேத காலத்திலேயே ஆரியர் பண்பாடு ‘முழு ஆரியத்’ தன்மையை இழந்துவிட்டது என்பதை அவ்வேத 8 ஆம் மண்டலத்தி லிருந்து உன்னிக்கலாம். ஆரியரல்லாதார் பண்பாடு ரிக்வேதத்தில் உள்ளது - அதுவும் குறிப்பாகப் பெருமளவுக்கு எட்டாம் மண்டலத்தில். (குஞ்ஞன் ராஜா 1940 கே.வி. ரங்கசாமி ஐயங்கார் பாராட்டு மலர்) The presence of the eighth book leads one to the hypothesis that even at the time of the Rig Veda, the Aryan culture had ceased to be purely an Aryan one. There is a good deal of non-Aryan element in the Rig Veda, mostly in the eighth book. (iv) இல்திகோ புகாஸ் கருத்து: ரிக்வேத ரிஷிகளில் பெரும் பாலோர் ஆரியரல்லாதாராகத்தான் இருந்திருக்கவேண்டும். South Asian Archaelogy 1981 (Cambridge, 1984) (v) ‘இந்தியாவில் வேதகாலத்துக்கு முந்தைய காலச் சமயம் பெருமளவுக்கு ஹாரப்பா நாகரிகத்தில் வழங்கிய திராவிடசமய மாகவே இருந்தது. அச்சமயத்தை முதலில் கடைப்பிடிக்கத் தொடங் கியவர்கள் ‘ரிக்வேத ’ ஆரியருக்கு முன்னரே சிந்துப்பகுதிக்கு வந்து விட்ட ஆரியர்கள் (பிற்றை ‘ரிக்வேத ’ ஆரியர் இவர்களை, தாஸ்யு, விராத்ய என அழைத்தனர்) அந்த ‘முந்தை ஆரியர்’ தாக்கத்தினால் அக் கொள்கைரிக்வேத ஆரியரிடமும் பரவி அவ் வேதத்திலும் ஏறியது’. “சாவித்திரி தொன்மமும் அதனுடைன் தொடர் புடைய சடங்குகளும் சிந்து நாகரிக காலத்திலேயே உருவானவை.” - அஸ்கோ பர்போலா The religion of pre-Vedic India goes back to a large extent to a Dravidian sub-stratum (linked with the Harappan culture) whose tradiitons were transmitted to Vedic times by an earlier wave of non-Vedic Aryans, the Dasa and Vratyas: Asko Parpola. 1981 Studia Orientalia, 50) There is new evidence for the Harappan and Dravidian origin of many conceptions and cultic practices that are central in later Indian religions, not only in Saivism and Sakti - Tantrism, but in the Vedic ritual too. Asko Parpola (1985). The sky garment: A study of the Harappan religion and and its relation to the Mesopotamian and later Indian religions’ Studia Orientalia 57. “Savitri and Resurrection: the ideal of devoted wife, her forehead mark, Sati and human sacrifice in Epic - Puranic, Vedic, Harappan - Dravidian, and Near - Eastern perspectives”: Asko Parpola; Studia Orientalia (1998). (vi) 1985 இல் வெளிவந்த South Asian Ardraeology 1983 நூலில் ஆல்சின் கருத்து “சிந்து நாகரிக முதுநிலைக் காலத்திலேயே (2900 - 1500). இந்தோ - ஆரிய மொழி பேசுநர் இங்கு வந்து சிந்து சமயம் - பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு பின்னர் ரிக்வேதம் இறுதி வடிவம் பெற்ற கி.மு.1000த்தில் சிந்துச் சமயக் கோட்பாடுகள் ரிக் வேதத்தில் ஏறியிருக்கவேண்டும் என்பதாகும். (vii) இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியரல்லாதார் வழிபாட்டு முறைகளில் இருந்தே பிராமணீயத்துக்கு வந்தது. (G.M. Bongard Levin: A complex study of Ancient India, 1986). (viii) மொகஞ்சொதரோ முத்திரையில் காணப்படுபவர் போன்ற (ஆரியர்களுக்கு முந்தைய இந்திய) யோகிகள் வந்தேறிகளுடைய மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக்கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கிவிட்டனரோ?” (வால்பர்ட்: A New History of India; 1982) (ix) ஆரிய நாடோடிகளின் முரட்டுப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய கடுமையான பெரும்போர்கள் ஆகியவற்றுக்கும் அஹிம்சைக்கும் (உயிர்களுக்கு ஊறு செய்யாமை), நெடுந்தொலைவு ஆகையால் யோகம், தாய்த் தெய்வ வழிபாடு போன்றவற்றைப்போல அஹிம்சையும் ஆரியர்களுக்கு முற்பட்ட (சிந்துத் தமிழ்) மக்களிட மிருந்தே அவர்கள் பெற்றதாக நாம் கருதவேண்டியுள்ளது. (வால்பர்ட்: An Introduction to India; 1991) (v) ஆர்.சி. தண்டா கருத்துப்படி பிருகு (சைந்தவர்), சுக்ர, ச்யவன, ஆங்கிரஸ், மஹிதாஸ், வசிஷ்டர் முதலியவர்கள் திராவிடரே. இந்து மதத்தில் உள்ள முனிவழிபாடு, பெண்தெய்வவழிபாடு, பூசை, கோயில், உருவ வழிபாடு, தந்திரம் (Tantrism) முதலியவை திராவிடக் கூறுகளே; என்றும் பல பழைய திராவிடக் கூறுகள் அதர்வ வேதத்தில் உள்ளன என்றும் அவர் கருதுகிறார். மேலும் அவர் வேத கால ஆரியரிடம் இந்தியாவில் உருவாகிய பிராமண வகுப்பு போன்று ஏனை நாடுகளில் இந்தோ ஐரோப்பியரிடம் உருவாகவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். “The institution of Brahmins is unique to the Vedic Aryans. It has no parallels in pre-Christian Indo-European traditions. - R.C. Dhanda; p 166. 14. இன்று உலகில் உள்ள சமயங்களில் எல்லாம் தொன்மையானது சிவ வழிபாடே என்று மொகஞ்சொதரோ அகழ்வாய்வு பற்றிய 1931 ஆண்டு நூலிலேயே மார்ஷல் சாற்றினார். அண்மைக்கால வரலாற்றறிஞர் சிலர் கருத்தும் இதுவே: வால்பர்ட் (1991) ‘சிவன் வழிபாடு வட இந்தியாவைவிட தென்னாட்டில்தான் மக்களிடம் முதன்மை பெற்றுள்ளது தென்னாட்டுத் திராவிடமக்கள் ஆரியர்களுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அங்கு நிலைபெற்று இருந்தமையை இது காட்டுவதாகலாம். தாய்த் தெய்வ வழிபாடும் தென்னாட்டில்தான் மிகுந்து காணப்படுகிறது.’ ஜி.எம். ராபர்ட்ஸ்:புதிய பெங்குயின் உலக வரலாறு (2007) ‘இன்று வழிபடப்படும் இந்துக் கடவுளர்களில் தலைமைச்சிறப்பு வாய்ந்தவர் களில் ஒருவன் சிவன். தொல்பழங்காலத்தில் இருந்தவையும் மக்கள் இனப்பெருக்கம், அவர்கள் செல்வப்பெருக்கம் ஆகியவற்றை குறிக் கோளாகக் கொண்டவையுமான வழிபாட்டு முறைகள் பல சிவன் வழி பாட்டில் இணைந்துள்ளன. தொன்மையான சிவன் வடிவம் போன்ற ஒன்றை மொகஞ்சோதரோ முத்திரை ஒன்று கொண்டுள்ளது. சிவன் அடையாளமாகக் கொள்ளப்படுவதும், தற்காலக் கோயில்களில் மக்கள் வழிபடுவதுமான லிங்கம் போன்ற கற்கள் ஹாரப்பா நாகரிக எச்சங்களில் உள்ளன. எனவே இன்று உலகத்தில் நின்று நிலவிவரும் சமயங்களில் சிவன் வழிபாடே அனைத்தையும்விடத் தொன்மைவாய்ந்தது என உய்த்துணரச் சான்றுகள் உள்ளன. 15. தமிழியச் (திராவிட) சமயங்கள் அல்லாத ஏனையவையெல்லாம் விலங்குகளைக் கொன்று கடவுளர்க்குப் படைப்பதைச் சிறந்த வழி பாட்டுச் செயலாக விதித்ததுடன் மனிதன் உண்ணவும், கடவுளர்க்குக் கொன்று படைக்கவுமே விலங்குகளை அவரவர் கடவுள் படைத்தனர் எனத் தமது புனித நூல்களில் எழுதி வைத்துள்ள நிலையில், திராவிடர் சமயங்களான சமணமும் பௌத்தமுமே கொல்லா நோன்பை அறிவுறுத்திய மாண்புடையவை என்று கண்டோம். அச் சமயங்களின் வேர்கள் சிந்து வெளி நாகரிகத்தில் இருந்திருக்கவேண்டும். 16. சாங்கியம் ஆரியரல்லாதாருடையது; உபநிஷத்துக்கள்; சாங்கியக் கருத்துகளைக் கடன் கொண்டுள்ளன; என்பதை மேலே கண்டோம். யோகமும் ஆரியல்லாதாரிடம் (திராவிடர் - ஆஸ்திரிக்) உருவான தென்பர் ஏ.பி. கர்மர்கர் (Religions of India) ‘குடலை’ என்னும் சொல்லிலிருந்து குண்டாலினி’ உருவாகியது என்பர் அவர். விவியன் வொர்த்திங்டனும் (A History of Yoga; Routledge and Kegan Paul; 1982) இக்கருத்தினரேயாவர்: 1922ல் சர் ஜான் மார்ஷல் மொகொஞ்சொதரோவில் அகழ்ந்த பொழுது யோகம் பற்றிய மிகப் பழங்காலச் சான்றுகள் கிடைத்தன. [பிராமணர்களின் வேத மதத்திற்கு எதிரானவர்களும் அதற்குப் புறம்பானவர்களும் ஆன ஸ்ரமண சுயசிந்தனைவாதிகள்] வேத மதத்திற்கு முற்பட்ட சமயக் கோட்பாடுகளிலும் அற்றை நாள் உலகில் பரவலாக இருந்து வந்த கோட்பாடுகளான விலங்குகளை (ஏன் மனிதர்களையும்?) பலியிட்டு கடவுளர்களைத் திருப்திப்படுத்துதல், பயிர்கள் நல்ல விளைச்சல் தருவதற்கான சடங்குகள் போன்றவற்றுக்கும் எதிரானவர்களாக இருந்திருக்கவேண்டும். இத்தகைய பலவகைப்பட்ட சமயச் சுயசிந்தனை இயக்கங்களில் யோகப் பயிற்சி பொதுவான கூறாக இருந்தது. சாங்கிய தத்துவமும் வேதகாலத்திற்கு முந்தியே இந்தியாவில் தோன்றியதாகத் தெரிகிறது. 17. சிந்துநாகரிக மக்களைப் பூசாரி அரசர்கள் Priest - kings ஆண்டு வந்தனர் என்ற மார்ஷல், வீலர் ஆகியோர் கருத்து ஆதாரமற்றது என்பர் பொசெல். (2002: 114-115) பூசாரி - அரசன் என அவர்கள் சுட்டும் உருவம் (DK 1909) பூசாரியுமன்று, அரசனுமன்று, இரண்டும் கலந்தது மல்ல; கற்பனை உருவம் என்பார் பொசெல். 18. பிற்கால இந்திய சமூக - சமய அமைப்பின் முதன்மைக் கூறுகள் பலவும் சிந்துவெளி நாகரிகத்தில் காணப்பட்டன என்ற வால்பர்ட் (1991)ன் கூற்று இவ்வியலுக்கு முடிவுரையாக அமையும். 19. மதம் பற்றிக் கூறும்பொழுது இன்னொன்றையும் இறுதியாகக் கருத்திற் கொள்வது நலம்: பல்வேறு சமயங்கள், அவற்றின் மெய்யியல் போன்றவை பற்றிய உணர்வெல்லாம் எக்காலத்திலும் எந்நாட்டிலும்பொது மக்களில் பத்துவிழுக்காட்டுக்கும் குறைவானவர்களிடையேதான் ஓரளவுக்கு இருந்திருக்கும். ஏனைய 90 விழுக்காட்டினர் நிலைவேறு. இவ்வுண்மையை கனகசபைப் பிள்ளை (1904) அன்றே கூறினார்: ‘எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் (பண்டும், இன்றும்) உள்ளதுபோல் தமிழரிடையேயும் இத்தகைய சமயக் கோட்பாடுகளுக்கும் வெகுமக்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கும் சமய நம்பிக்கைகள், சடங்குகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு (As usual among all nations, ancient and modern, the philosophic doctrines of the Tamils were far apart from the popular beliefs and ceremonies). ‘முந்து தமிழ்ச்’ சிந்து நாகரிக மக்கள் சமயத்துக்கும் இது பொருந்துவதுதான். இதே கருத்தை ஹெச். ஆர். பேட் தமது திருநெல்வேலி கெசட்டியரில் (1917) பின் வருமாறு கூறியுள்ளார்: ஊர்தோறும் பொதுமக்கள் மனப்பூர்வமாக ஊக்கத்துடன் வழிபடும் ஏராளமான உள்ளூர்த் தெய்வங்களைப் பற்றி அடுத்து விளக்கப்படுகிறது. மிகப்பெரும்பான்மையான மக்களைப் பொருத்தவரைத் தங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிர்ணயிப்பவர்களும், (மாந்தன் தெய்வமாக ஆனால் எப்படி நடப்பானோ அப்படி) சினம் எற்பட்டால் கேடுவிளைக்கக் கூடியவர்களும், பொந்திகை ஏற்பட்டால் கேடு வராமல் தடுத்தும், வந்தால் நீக்கியும் நலம் செய்யக் கூடியவர்களும் ஆக அவர்கள் நம்புவது சிவன், திருமாலை அல்ல: பல்வேறு உருவங்களில் வழிபடப்படும் தாய்த் தெய்வமாகிய காளி, மற்றும் உள்ளூர்த் தெய்வங்களான சுடலைமாடன் மற்றும் அதுபோன்ற ‘துடியான’ தெய்வங்களையே “The accounts which will shortly be given of the hosts of lesser deities and of the enthusiasm with which they are worshipped, may serve to show that the gods who for the mass of the people rule and direct their daily lives, who bring evil and can if willing remove it, who are intelligible beings - men on the grand scale are not Siva and Vishnu but Kali in her various forms, and (local gods like) Sudalaimadan and his horrid crew. பிற்கால ஆடவல்லான் படிமத்தின் யோகி (?) அடிப்படை (?) - ஹரப்பா சிவன் - பசுபதி இயல் 7 சிந்து நாகரிகத்துக்கும், எலாம், சுமேரிய, எகிப்து முதலிய நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்புபற்றிய ஹீராஸ் (1953) நூலின் கருத்துகள் பொதுவாக இன்று பன்னாட்டறிஞர் ஏற்கும் கருத்து எலாம் – சுமேரிய - எகிப்து நாகரிகத் தாக்கத்தால் தான் தமிழியச் சிந்து நாகரிகமும் உருவாகியிருக்கும்; அல்லது சிந்து நாகரிகம் உட்பட அனைத்துமே ஏறத்தாழ சமகாலத்தில் சிறப்படைந்திருக்கும் என்பதுதான். சிந்து நாகரிகத்திலிருந்து ஏனையவை தோன்றியிருக்கலாமென்னும் கருதுகோளை எண்ணிப் பார்ப்பதற்கு இசைவோர்கூட ஒரு சிலரே; எனினும் அக்கருதுகோளை வலுவாக முன் வைத்து 1953ல் Studies in Proto Indo Mediterraneam Culture என்னும் நுண்மாணுழைபுலமிக்க ஆய்வு நூலை (551 பக்கம்) வெளியிட்டவர் ஹென்றி ஹீராஸ் பாதிரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். பல்வேறு அறிவியற் புலங்களில் கடந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள வளர்நிலையின் அடிப்படையிலும் கூட அந்நூற் செய்திகளிற் சில ஆழ்ந்து கருதத் தக்கவையாய் இருப்பதால், அவற்றின் சுருக்கத்தை இவ்வியல் தருகிறது. [ ] குறிகளுக்குள் உள்ளவை மட்டுமே அவர் எழுதியவை பற்றிய சில கருத்துகள். (ஹீராஸ் நூலின்) அறிமுகம் 1 – 26 [இந்தோ ஆரிய மொழி பேசுநரின் (சிறுஎண்ணிக்கையில்) நுழைவுக்கு முன்னர்] இந்தியாவெங்கும் திராவிடமொழி பேசுநரே வசித்து வந்தனர் (ஹெவிட் 1889; ஹால் 1913). ரிக்வேதம் உபநிஷத்துக்கள் காலத்தி லிருந்தே திராவிடத்தாக்கம் (வினைக்கொள்கை, மறுபிறப்பு, யோகம்) உள்ளது. வேத, புராணப் பகுதிகளில் பல பண்டைத் திராவிட நூல்களின் மொழிபெயர்ப்புகளே. [ஹீராசுக்கு 22.11.1942 அன்று எழுதிய கடிதத்தில் வி.எஸ். சுக்தங்கர் ‘யுதிஷ்டிரன் கதை ஆரியர் வரவுக்கும் ரிக்வேத த்துக்கும் முந்தியது என்பது சரியான கருத்தே’ எனத் தெரிவித்தார்.] நாகரிகமற்ற நிலையில் இந்தியாவிற்குள் நுழைந்த இந்தோ ஆரியர் தமது மொழியை சம்ஸ்கிருதமாக (திருந்திய மொழியாக) ஆக்கிக்கொண்டனர் (They converted their rude matter - of - course speech -- a speech of shepherds and husbandmen - into a classical Sanskrit language) திராவிடமொழி பேசுநர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கும் தென்இந்தியாவிற்கும் வந்தவர்கள் அல்லர். இங்கிருந்து அங்கு சென்று பின்னர் உலகெங்கும் நாகரிகத்தைப் பரப்பியவர்கள் இவர்களே. இத்துறை ஆய்வுகள் நிறைவடையும் பொழுது திராவிட நாகரிகமாகிய சிந்துநாகரிகம் உலகநாகரிகத்தின் தொட்டில் என்பது ஏற்கப்படும். “the Dravidians of India, after a long period of development in this country, travelled westwards, and settling successively in the various lands, they found their way from Mesopotamia upto the British isles, spread their race – afterwards named Mediterranean owing to the place where they were known anthropologically -- through the west and made their civilization flourish in two continents, being thus the originators of the modern world civilization. The Mediterranean nations of the ancientworld were racial off-shoots of the mighty proto-Indian race” [After the problems of decipherment of Indus script and those of the migration of Dravidian civilisation out of India to Elam, Sumeria and the west are solved.] India will be acknowledged as the cradle of human civilization. இயல் I: மொகெஞ்சொதரோ எழுத்தை வாசித்தல் 29-158. சிந்து எழுத்திலிருந்து தான் பிரமி எழுத்து தோன்றியது. அது கருத்தெழுத்து ideo-phonographic; லிபியானது Picto – Phonographic . அவை அசையெழுத்து அல்ல; மெய்யெழுத்து (மட்டும்) அல்ல; முழுமையான சொற்களைக் குறிப்பவை; விவரணைகள், கூற்றுகள் முதலியவை ஆகும். சிந்து எழுத்துப்பொறிப்புகளைப் பின்வருவனவற்றின் அடிப்படையில் படிப்பதுதான் பொருத்தமாகும்: (1) சிந்து நாகரிகம் ஆரியருடையது அன்று; திராவிடர் உடையது; (திராவிடர் நண்ணிலக்கரை நாகரிகங்களின் மக்களுடன் தொடர் புடையவர்கள். எனவே சிந்துப் பொறிப்புகளுக்கும் சுமேரியம், எகிப்து, எத்ருஸ்கன், மினோவன் முதலிய பொறிப்புகளுக்கும் சில ஒப்புமைகள் இருக்கும்); சிந்துநாகரிக மக்கள் பேசியது தொல்திராவிட மொழி. (2) (சிந்து நாகரிகத்) தொல் திராவிடமொழியின் இலக்கணம் வளர்ச்சியடையாத நிலையில் இருந்திருக்கும். (3) (i) முத்திரைகளைப் பதித்துப் படிக்கும் வாசகங்களை வலமிருந்து இடமாக L<--- R படிக்கவேண்டும். Symbol பெரும்பாலும் இடது கோடியில் ஈற்று வடிவமாக வருவது ‘அது’ (மாறனது) என்பதிற் போல் உடைமைப் பொருளில், அல்லது சிலவடிவங்களில் – வலக்கோடியில் வந்தால் (சுட்டுப் பொருளில்). (ii) படவெழுத்துகள் சில . Symbol ஆள் . Symbol மீன் . Symbol மரம் . Symbol கோ உருவகப்படுத்திய (Conventionalised) படவெழுத்துகள் சில:- . Symbol பாழி . Symbol ஊர் . Symbol கலக்கூர் (united countries) . Symbol நலம் (iii) படவெழுத்திலிருந்து, ஒலிக்குறிப்பெழுத்தாக மாறியவை (சுமேரியம், எகிப்துப் பொறிப்புகளுடன் இயைபுடையவை):- கெய் செய் கல் கண் பக்=பிரி பாழி கோன் முகில் (clouds) (iv) கூட்டுவடிவங்கள் மீனவன் மூணென் நிலம் அது மீன் ஊர் (v) சில முழு வாசகங்களில் சிலவற்றைப் பின் இயல் ஒன்றில் காண்க. ஆக, இவ்வியலில் தந்த சான்றுகளின் அடிப்படையில் சிந்து நாகரிக மக்கள் திராவிட மொழி பேசிய திராவிடர்தாம். அவர்கள் பேசியமொழி ‘தொல் திராவிடம் proto Dravidian’. அவ்வாறு தொல்திராவிடமாக வாசித்த சொற்களுள் பல தமிழ் போன்றுள்ளமைக்குக் காரணம் தொல் திராவிடத் தன்மையை மிகவும் தக்க வைத்துக் கொண்டிருப்பது தமிழ்தான் (பக் 135) இயல் II மொகஞ்சொதரோவும் சுமெரியாவும் 159 - 282 சுமெரியப் பொறிப்புகளுக்கும், சிந்துப் பொறிப்புகளுக்கும் இடையே படிவ ஒற்றுமைகள் பல. சி.ஜி.பால் (க்ஷயடட) 1913 தனது Chinese and Sumerian நூலில் சீனமொழியின் ஆதி வரி வடிவம், சுமேரிய வரி வடிவம் ஆகிய இரண்டுமே பொதுவான ஒரு மூல வரிவடிவத்தி லிருந்து வந்திருக்கவேண்டும் என்று கருதினார். அந்தப் பொதுவான மூல வடிவம் சிந்து வரி வடிவம்தான் எனலாம். ((both the Sumerian and Chinese writing proceed at least in their greatest portion from the Mohenjodaro - script of the proto Dravidian people p 278) 2. 18.3.1935 அன்று பம்பாயில் ஆற்றிய உரையில் சுமேரிய லிபி மொகஞ்சொதரோ படவெழுத்துகளிலிருந்து உருவாகியது என்று ஹீராஸ் கூறினார் (Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, VII - 1 சூலை 1938: 1-27 = பக் 248-278, ஹீராஸ் 1953) சுமெரிய வடிவங்களில் பலவற்றை சிந்து வரிவடிவப் படங்கள் (அவற்றின் அர்த்தம், ஒலிப்பு உட்பட) தான் விளக்க இயல்கிறது. எனவே சுமெரிய வடிவங்களுள் பெரும்பாலானவை சிந்து வரிவடிவங்களிலிருந்து உருவானவையே (the greatest number of signs of the Sumerian script owe their origin to the Mohenjodaro signs). ஆகவே உலகின் வரிவடிவங்களில் மிகு தொன்மை வாய்ந்தது சிந்துநாகரிக வரி வடிவமே. 3. திராவிட மொழிகள் போல சுமேரியமும் ஒட்டுநிலை மொழியாகும்; சொல் ஒப்புமைகளும் இலக்கண ஒப்புமைகளும் பல. 4. சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்படு முன்னரே சுமேரிய நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட சுமேரிய நாகரிகம் மிகப்பழையது என்ற [ஆதாரமற்ற] கருத்தை மேலை அறிஞர் பலரும் (ஹால் தவிரப் பிறருள் பெரும்பாலோர் - அதாவது லியோனார்டு வுல்லி, அர்னால்டு, டாயின்பி முதலியவர்கள்) கொண்டுள்ளதால், “சிந்து நாகரிகம்தான் சுமேரியத்திற்கும் பழையது; இங்கிருந்துதான் சுமேரியத்துக்கு நாகரிகம் மேற்கு நோக்கிப் பரவியது’ (சிந்து எழுத்து வரிவடிவத்திலிருந்து சுமெரிய வரி வடிவம் உருவானது போல) என்ற உண்மையை நாம்தான் நிலை நாட்ட வேண்டியுள்ளது. நாகரிகம் சிந்துப் பகுதியிலிருந்து மேற்காகச் சென்றது என்பதை (கி.மு.2500 ஐ ஒட்டி சுமேரியாவில் வாழ்ந்த) பெரோசஸ் எழுதிய தொன்ம வரலாற்றிலிருந்தே உணரலாம். அத்தொன்மத்தில் ‘கிழக்கில் இருந்து மேற்காகச் சென்று’ சுமேரியாவிற் குடியேறிய உவனன் (ஊவணன் / பூவண்ணன்) ஓடக்கோன் போன்ற வர்கள் சிந்து நாகரிகப்பகுதியிலிருந்தே சென்றவர்கள் ஆகலாம். பாவேரு ஜாதக க்கதை அச்செய்தியை மெய்ப்பிக்கும் இந்தியத் தொன்மம் எனலாம். 5. சிந்துப் பகுதியிலிருந்தே கட்டுமானக்கலை உட்பட்ட பலதொழில் நுட்பங்கள் சுமேரியாவுக்குப் பரவின என்பதை சிந்து நாகரிகத் தொல்லியல் தடயங்களுள் பல நிறுவுகின்றன. சிந்து நாகரிகம் கி.மு.5000-4000 கால அளவிலேயே முன்னேறி விட்டதால் இது இயல்வது தான். 6. சிந்து நாகரிகத்தின் தாக்கம் சுமேரியத்தைத் தாண்டி சிரியா எகிப்து, சைப்ரஸ், கிரீட், இத்தாலி, ஸ்பெயின் என்றவாறு சென்றுள்ளது. இயல் III : ஹாமித்திய நாகரிகம் எகிப்தில் பரவுதல்: 283-410 ஆரியர் நுழைவதற்கு முன்னர் சிந்துப்பகுதியில் வாழ்ந்து வந்த திராவிடர்களுடைய பெருங்கடவுள் ஆண்: அதே கடவுள் ‘ஆண்’ வழிபாடு நெடுங்காலத்துக்கு முன்னர் எகிப்துக்குச் சென்றேறிய ஹாமித்திய திராவிடர்களால் (Proto - Dravidian Hamitic race) கொண்டு செல்லப் பட்டிருந்து. (ஆனு Anuவை வென்ற திருவிழா பாரோ வோக்கள் காலத் திலும் கொண்டாடப்பட்டு வந்தது). பாரோவாக்கள் காலத்துக்கு முந்திய எகிப்தியரும் சுமேரியரும் ஒரே இனத்தவர் என்பது கீத் (Keith) கருத்து. [சுமேரியா நாகரிகத்தை இந்தியாவிலிருந்து சென்ற திராவிடர் உருவாக்க உதவினர் என்று இயல் II கூறியது] முந்து எகிப்தியர் காலத் தாழிகளும் தமிழகப் புதுக்கோட்டைப் பக்கத்துத் தாழிகளும் ஒன்று போல் உள்ளன (பக்.297). தொடக்கக் காலங்களில் சுமேரிய – எகிப்திய அரசர்கள் தொடர்புடையவர்களாக இருந்திருப்பர் என்பர் கார்டன் சைல்டு, மார்கன், நைட் (Knight) முதலியவர்கள். பிற் காலத்தில் (பாரோ வாக்கள் காலத்தில்) பாபிலோனியப் பாணிக் கலைப் பொருள்கள் கைவிடப்பட்டன. ஜி.எலியட் ஸ்மித் (1911The ancient Egyptians and their influence upon the civilization of Europe நூலில் ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ள மண்டையோடுகளுக்கும் பாராவோக்களுக்கு முந்திய காலம் சார்ந்த எகிப்திய மண்டையோடுகளும் ஒன்றுபோல் உள்ளதைச் சுட்டியுள்ளார். W.M. பிளின்டர்ஸ் பெட்ரியும் (1928: “Ancient Egypt” XIII pp 40-44: Osiris in the Tree and Pillar) பண்டை எகிப்தியரும் இந்தியரும் தொல் இந்தியர் ஆகிய திராவிடர்) ஒரே இனத்தவர் என்பார்“The Indians and the Egyptians come from the same stock” 2. இரண்டு புலிகளை வெல்லும் ‘புலிகடி மாலை’ச் சிந்து முத்திரைகளில் ஒன்று குறிக்கிறது. சுமேரியாவில் அவ்வாறே கில்காமெஷ் இரண்டு சிங்கங்களை வெல்லும் காட்சி வரையப் பட்டுள்ளது. ஜெப்ல் - எல் - அராக் இல் கிடைத்த பிளின்ட் கத்தியின் பிடியிலும் ஒருவீரன் இரண்டு சிங்கங்களைக் கொல்லும் காட்சி உள்ளது. 3. தென்னிந்தியாவில் இன்றும் பரவலாகக் காணும் பிணைந்த நாக வடிவுகளை சுமேரிய முத்திரைகளிலும் எகிப்து நாட்டுத் தந்தப் (Ivory) பிடிகளிலும் காணலாம். 4. சிந்துப் பகுதியிலிருந்து மேற்கே கடல்வழிச் சென்ற (திராவிடர்கள் சுமேரியா மட்டுமன்றி) செங்கடல் வழியாக வடக்கே சென்று தென் எகிப்துக்கும் சென்று இருக்கலாம். 5. தென்னிந்தியாவிலிருந்து சென்ற தமிழர் கழிபழங்காலத்தில் தென் அராபிய ஏமன் [அராபிய மொழியில் யாமின் (= வலக்கை) ->யெமன் / ஏமன்] நாட்டில் தங்கி ஆiயேநளே (மீனவர்) என்று அழைக்கப் பட்டிருக்கவேண்டும். தமிழ மீனவர் ஏமன் சென்றபோது அந்நாடு அவர்களுக்கு ‘வலக்கைப் பக்க’ நாடு. அவர்கள் அவ்வாறு வைத்தபெயர் அரபியிலும் நிலைத்துவிட்டது. அரபிக்கடலைத் தாண்டி ஏடன் [கிரேக்க மொழியில் Eudaimon (= நற்கடவுள்) என முதலில் அழைக்கப்பட்டது. பின்னர் ‘ஏடன்’ ஆனது] துறைமுகத்தையும் தாண்டி செங்கடலின் கீழைக்கரைத் தென்பகுதியை அடைந்து அங்கு குடியேறியிருந்த மீனவர் தமிழரேயெனலாம் (The Hindu, 13.10.1946 ல் ராஜா ராவ் கட்டுரையையும் காண்க). எகிப்திய அரச பரம்பரைகளில் 18-வது பரம்பரையைச் சார்ந்த ஹதேப்சத் அரசி (கி.மு 1503-1481) டெர்- எல்-பஹ்ரி கல்வெட்டில் குறிப்பிடும் பண்ட் நாடு [வேர் pwn + t (அயல்நாட்டைக் குறிக்கும் பெயருடன் சேர்க்கும் பெண் பால் விகுதி = punt இந்த ஏமன் பகுதிதான். ஏடன் வளைகுடா வாயிலில் உள்ள சொகொத்ரா தீவின் பண்டைப்பெயர் ‘சுகாதார த்வீபம்’ (இது நன்னிமித்தத் தீவு என்ற பொருள்கொண்ட தமிழ்ப் பெயரின் சம்ஸ்கிருதப் பெயர்ப்பு) 6. எகிப்து நாகரிகத்தில் தொடக்க காலத்திலிருந்து கருடன் (கலுழன் -> கருடன் hawk), நாகம் இவற்றுக்கு முதன்மை தரப்படுகிறது. தமிழிய சிந்து நாகரிகக் காலக்கதைகளையும் உள்ளடக்கிய மகாபாரதத்தில் காளி நதியாகிய நைல் பற்றிய குறிப்புகள் உள்ளன. விசுவகர்மன் மகரர்களுக்காக உருவாக்கிய ராமணீயக நாட்டிற்கு காதுருவின் மக்கள் சென்று குடியேறியதாக மகாபாரதம் கூறுகிறது) தட்சன் மகள் காதுருவின் மக்களே நாகர்கள். எகிப்தியச் சின்னங்கள், ஓவியங்கள், பொறிப்புகள், முதலியவற்றில் பாரோவாக்களிடம் தோற்றவர்களாகக் குறிக்கப்படும் முதலைகள் (மகரம்), மீனைத் தின்னும் முதலைகள் முதலியவையெல்லாம் சிந்துப்பகுதியிலிருந்து வடக்கு / தெற்கு எகிப்துப் பகுதிகளில் அக்காலத்திற் குடியேறியிருந்த திராவிடமொழிபேசுநரைச் சுட்டியவையாக இருக்கவேண்டும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அலெக்சாண்டர் காலமாகிய கி.மு.4ம் நூற்றாண்டில் தெற்குப் பலுசிஸ்தான் கடலோரப் பகுதியில் மீனுண்ணிகள் Icthyophagi, என்னும் மக்கள் வசித்ததை கிரேக்க ஆசிரியர் குறிக்கின்றனர். மீனுண்ணிகளை அடுத்து மகர மக்கள் இருந்தனர். (மகரம் -> ‘மகரான் கடற்கரை’ = பலூ சிஸ்தான் கடலோரப் பகுதி). தென் அரபியாவிலிருந்து பாம்புகள் (நாகர்) எகிப்து மீது படையெடுத்தனர் என்பர் ஹெரதோதஸ். 7. பழங்காலத்தில் எதியோப்பிய மக்கள் லிபியாவில் குடியேறி, ஹெஸ்பிரியா ( = ஸ்பெயின்) சென்ற கரமந்தர் [garamantes (கிராமம் = குடியிருப்பு]; தெரியாதியஸ் - ஐ Deriadus (துர்யோதனன்?) வெறுத்தவனான Blennys (<-பலராமன் (சேஷ நாகத்தின் அவதாரம்) தலைமையில் எகிப்தில் குடியேறியவர்களாக நன்னஸ் எழுதிய டயனிசியாக னுiடிலேளயைஉய குறிப்பிடுபவர்கள்; இவர்களெல்லாம் இந்தியர்கள் என்றே அழைக்கப்பட்டனர். கி.மு.4000 – 2000 காலத்தில் அவ்வாறு சென்றவர்கள் (சிந்துமக்கள் -> இந்தியர்) சிந்துப்பகுதித் திராவிடர்களேயாவர். 8. எகிப்து பாரோவாவின் ‘மகளுக்குத்தான் அரசுரிமை’ என்னும் மகள்வழி அரசுரிமைதான் எகிப்தில் வழங்கியது. ஆயினும் மகனை மகளுக்குக் கணவனாக்கி மகனும் பாரோவா ஆக ஆனதுடன் பெரும்பாலும் நடைமுறையில் மகனே அரசனாகி ஆண்டான். புத்த ஜாதகம் கூறும் சாக்கியர் கதைகள், மகாபாரதக் கதைகள் ஆகியவை சகோதர - சகோதரி திருமணங்கள் நடந்ததைக் குறிப்பிட்டுள்ளன. மெனஸ் Menes என்ற பெயரில் குறிக்கப்படும் பண்டைய எகிப்து அரசன் பெயர் மீனா என்றுதான் உண்மையில் பலுக்கப்பட்டது. மீனா (=மின்னுவது) என்பது பட்டப் பெயர்தான். கிரீட் தீவின் அரசன் பெயர் மீனாஸ் Minos என்பது அதேபொருளில்வழங்கிய பட்டப் பெயர்தான். 9. எகிப்தில் கழிபழங்காலத்தில் ராசிகள் 8 ஆக இருந்து பின்னர் 12 ஆகப் பெருகியது. பின்னர் கிரேக்கரும் 12 ராசி எனக் கொண்டனர். 8 ராசி எனக் கொண்ட காலத்தின் எச்சங்களை தமிழர் வானியலில் ராசிக்கு வழங்கும் பெயர்களிலிருந்து உன்னிக்கலாம். ஆக ராசிகள் 12 இன் பெயர்களை கல்தேயர் / கிரேக்கரிடமிருந்து தமிழர் கடனாகப் பெற்றனர் என்று எல்.டி.சுவாமிக்கண்ணுப் பிள்ளை (1922) Indian Ephemeris - இல் கருதுவது சரியல்ல. சர்வில்லியம் ஜோன்ஸ் (The Works of Sir William Jones IV: 71-92) கிரேக்கர், அராபியர் ஆகியோருடைய ராசி zodiac கணக்கைவிட இந்தியர் ராசிக்கணக்குத்தான் பழமை வாய்ந்தது என்று கூறியுள்ளதுதான் சரி. இயல் IV பிரளயமும் பெருமீனும் 411 – 439 தமது ‘‘Indo-Aryan and Hindi’, கட்டுரையில் சுநீதிகுமார் சட்டர்ஜி கூறுவதுபோல் ‘இந்தியப் பண்டை வரலாறு மற்றும் தொன்மம்’ சார்ந்த சமய, பண்பாட்டுச் செய்திகளுள் பெரும்பகுதி ஆரியரல்லாதவர் களுடைய (திராவிடர்களுடைய) மொழி நூல்களிலிருந்து சமஸ்கிருதத் தில் பெயர்த்து எழுதிக் கொண்டவைதாம். மனுவின் பிரளயக் கதைபற்றி ரிக்வேதத் தில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. முதன்முதலில்சதபத பிராமணம் 1, 8.1: 1-10 தான் அதைக் குறிப்பிடுகிறது; பின்னர் மகாபாரதம், மத்ஸய புராணம் ஆகியவையும் அதைக் குறிப்பிடுகின்றன. அது ஆரியர் கதை அல்ல என்று முதலில் குறிப்பிட்டவர் பர்னோ Burnouf. பாகவதபுராணம் மனு ‘திராவிட மன்னன்’, அவன் பெயர் சத்யவிரதன் என்கிறது. பாரதமும் பாகவத புராணமும் அவனை (முடிதுறந்த) ரிஷி என்கின்றன. துறவு, முனிவன் / ரிஷி முதலியவையெல்லாம் திராவிடரைச் சார்ந் தவையே, ஆரியருடையவையல்ல. இந்த மனுவை வைத்து சுமேரிய / பைபிள் பிரளயக்கதை போன்ற ஒன்றை சதபதபிராமண ம், பாரதம் முதலியனவும் கட்டியுள்ளன. ஒருசிறுமீனை மனு காப்பாற்றுகிறான். பின் அது மாபெரும் மீனாகி, பிரளயம் வரும்பொழுது ஒரு கப்பலில் மனுவை ஏற்றித் தானே கயிறு கட்டி இழுத்துச் சென்று மலையுச்சிக்கு உய்த்துக் காப்பாற்றுகிறது. கிரீட்தீவில் கண்ட தந்த (Ivory) முத்திரை ஒன்றில், இக்காட்சி வருகிறது. “சத்யவிரதன் மீன் கண்டெடுத்தது மதுரையில் வைகையுடன் சேரும் கிருதமால் ஆற்றில்தான்” என்ற புராணக் கதையின் அடிப்படையில் மதுரை மீனாட்சி கோயிலில் தெப்பக் குளத்தில் ஆண்டு தோறும் வலைவீசு திருவிழா நடக்கிறது. சுமேரியத் தொல்லியல் ஆய்வாளர்கள் மெசெபொதாமியாவில் இதிக்லாத் - பாராநுன் (யூபிரடிஸ் - டைகிரிஸ்) ஆற்று வெளியில் நிகழ்ந்த பிரளயத்தைச் சுமேரிய பிரளயக்கதை சுட்டுவதாகக் கருதுவது சரியல்ல. அக்கதை சிந்து வெளித் திராவிடரிடமிருந்துதான் சுமேரியரிடத்துச் சென்றிருக்க வேண்டும். இயல்-V ஹாமைத்திய இந்திய-நண்ணிலக்கரை இனத்தார். 440-493. தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் உருவான திராவிடர் (திராவிட மொழிபேசும் இனத்தினர்) ஒரு பிரிவினர்தாம் நிலவழியாக படிப்படியாக மேற்கே சென்று சுமேரிய நாகரிகம், சிரியாவில் ஹிட்டைட் நாகரிகம் பொனிசிய (= பாணி) நாகரிகம்; சின்ன ஆசியாவில் பெலாஸ்ஜிய நாகரிகம்; (கிரீட் தீவில்) மினோவன் நாகரிகம் - இத்தாலியில் எத்ரஸ்கன் Tyrrenoi (திரையர்?) நாகரிகம் ஆகியவற்றை உருவாக்கினர். இன்னொரு பிரிவினர் கடல் வழியாக ஏமன் (எகிப்தியர் ‘பண்ட’ என்று அழைத்தது), தென் எகிப்து, லிபியா (காரமாந்தெஸ்), ஐபீரியா (ஸ்பெயின்), பிரிட்டிஷ் தீவுகளில் துரூயித் னுசரனை, என்றவாறு பரவினர். [தற்கால மாந்த இனம் AMH ஆப்பிரிக்காவில் 1,50,000-இல் தோன்றி கி.மு.70,000 ஐ ஒட்டி உலகெங்கும் பரவியது; ஒரு பிரிவு தென்னிந்தியக் கரையோரமாகச் சென்று கி.மு.50000 க்குள் ஆஸ்திரேலியாவரைச் சென்றடைந்தது; மைடகான்டிரியல் மரபணு (mitochondrial DNA) அடிப்படையில் இன்றைய மரபணு ஆய்வாளர்கள் அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ள முடிவுகள் ஹீராஸ் 1953ல் தெரிவித்த இக்கருத்திற் கெதிரானதாக இல்லை என்பதை ஓர்க] மேற்சொன்ன அனைத்துப் பண்டை இனத்தவரும் ஹாமித்தியப் பேரினத்தைச் சார்ந்தவர்களேயாவர். ஹெரோதோதஸ் நண்ணிலக்கரைக் கிழக்குப்பகுதியில் வாழ்ந்ததாகக் குறிப்பிடும் தெர்மிலய் Termilai என்பவர்களும் தமிழரும் ஓரினத்தவரே. இந்நூலின் இயல் 7 க்கு இணைப்பு ‘நான் அறிந்த திருத்தந்தை ஹீராஸ்’ [திருத்தந்தை வி. லாரன்ஸ் சுந்தரம் (யேசு சபை) 1993Anjali - Essays in homage” என்னும் நூலில்] (i) திருச்சி பரியோசேப்பு கல்லூரி மாணவனாக இருந்தபொழுது திருத்தந்தை ஹீராஸ் அவர்களை முதன்முதலாக நான் சந்தித்தேன். அப்பொழுது அவர் 40 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். பிராமணராக இருந்து கிறித்தவ மதத்துக்கு மாறியவரான (காலஞ்சென்ற) வின்சென்ட் மகாதேவஐயரின் பேரன் என்ற முறையில் நான் அவர் கவனத்துக்கு வந்தேன். அவர் என் குடும்பத்தினரைச் சந்திக்க விரும்பியதால் நான் அவரை அழைத்துச் சென்ற நினைவு இருக்கிறது. அதன் பின்னர் அவர் திருச்சிக்கு வரும்பொழுது எல்லாம் தவறாது அவரைச் சந்திப்பேன். இந்தியவரலாறு, குறிப்பாகத் தென்னிந்திய வரலாறு, இந்தியப்பண்பாடு, குறிப்பாகத் தமிழ்ப் பண்பாடு ஆகிய வற்றில் அவருககு இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டைக் கண்டு வியந்தேன். 2. (i) பம்பாயில் (இன்றைய மும்பாய்) மே - சூலை தென்மேற்குப் பருவக்காற்று மழைக்கு முன்னர்த் தாங்க முடியாத கோடை வெயில் இருக்கும்; அதிலிருந்து தப்பிக்க ஆண்டுதோறும் கோடை விடு முறையில் ஹீராஸ் தென்னாடு வந்து பழனிமலையில் செம்பகனூரிலும் கோடைக்கானலிலும் தங்கித் தன் ஆய்வையும் பணியையும் தொடர்வார். அங்கு போகும் வழியில் திருச்சியில் தங்கிச் செல்வார். மாணவப் பருவம் முடிந்தபின் பரி யோசேப்புக் கல்லூரியில் நான் ஆசிரியராகப் பணியாற்றினேன். அவர் திருச்சியில் தங்கும் பொழுது அக்கல்லூரியில் அடிக்கடி (அவருக்கு மிகப் பிடித்த பொருண்மை யாகிய) மொகெஞ்சொதரோ, ஹரப்பா தொல்லியல் அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் பற்றி உரையாற்றுவார்; நானும் கேட்டுள்ளேன். அவ்வுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அவ்வகழ்வாய்வில் சர் ஜான் மார்ஷல் கண்டெடுத்த (படம், எழுத்துகள் பொறித்த) முத்திரைகளை ஹீராஸ் கரும்பலகையில் வரையும் ஓவியத் திறனும் வியக்கத்தக்கதாக இருந்தது. பின்னர் அவர் (சிந்து நாகரிகம் பற்றி 1953இல் வெளியிட்ட Studies in proto Indo - Mediterranean Culture என்னும் படங்கள் நிறைந்த புத்தகத்தில் காணும் ‘மீன் கண்’ முத்திரைப் படம் போன்று நயமாக வரைவார் அவர். சிந்து முத்திரைகளில் காணும் மீன் வடிவம் ‘அனைத்தையும் கண்டுகொண்டிருக்கும் கடவுளைக் குறிக்கும்’ என்பது அவர் கருத்து. மீன்கள் ஒருபொழுதும் கண்ணை மூடுவதில்லையே! மாத்யூ அர்னால்டு பாடல்: ‘திமிங்கிலங்கள் உலகைச் சூழ்ந்துள்ள கடல்முழுவதும் அலைகின்றன; துஞ்சாக் கண்ணுடன், நிரந்தரமாய்’ the great whales, come sailing by, sail and sail, with unshut eye; Round the world for ever and ever [ஹீராஸ் பாதிரியார் சுந்தரம் பாதிரியாருடன் உரையாடிய அந்தக் காலக் கட்டத்தில், இக்கருத்தைக் கொண்டிருக்கலாம். பிற்காலத்தில் வடிவத்தை விண் மீனின் ஒலி கொள் வடிவம் என்று முடிவு செய்தார்.] (ii) மதுரைக் கோயில் தெய்வம் மீனாட்சியுடன் (கயல்கண்ணி, மீன் கண்ணி) அந்த சிந்து எழுத்தை ஹீராஸ் தொடர்பு படுத்தியது தமிழர்களுக்கு ஆர்வமான வியப்பை ஊட்டியது. சிந்து எழுத்து உருவங்களைத் தம் விருப்பம்போல் தமிழ்ச் சொற்களாக, தமிழ்ப் பெயர்களாகப் படித்து அவை தொல்திராவிட மொழி என ஹீராஸ் உறுதியுடன் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது; அவர் முடிவுகளை மதிப்பீடு செய்யும் அளவுக்கு நான் அத்துறையில் புலமைபெறவில்லை. ஆண்டுதோறும் அவர் தமிழ்நாடு வந்து சென்றபோதிலும் தமிழ் பேச, எழுதக் கற்றுக்கொள்ளவில்லை. எனினும் சிந்துத் தொல்லியல் கண்டு பிடிப்புகள் திராவிடம் சார்ந்தவை என்ற அவர் வாதங்களை வலுப் படுத்துவதற்குத் தேவையான அளவுக்குத் தமிழ்ச் சொற்களை அவர் அறிந்திருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் வைல்டு Wyld “ஆங்கிலோ - சாக்சன் மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை” என்பதை மாணவர்களுக்கு விளக்கு வதற்குத் தேவையான அளவுக்கு கிரேக்க, லத்தீன் சொற்களுடன் இயைபுடைய சமஸ்கிருதச் சொற்களைத் தெரிந்திருந்திருந்தார் என வைல்டுவின் மாணவர் ஒருவர் கூறக் கேட்டுள்ளேன். ஹீராஸ் எனக்கு வைல்டுவை நினைவூட்டினார். 3. பின்னர் நான் செம்பகனூர் மறையியல் கல்லூரியில் படித்து சமயப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போதும் ஆண்டு தோறும் ஹீராஸ் கோடை விடுமுறைக்கு அங்கு தங்கவரும்போது அவருடன் ஆர்வமாகப் பேசுவேன். தமிழுணர்வாளர் மகிழக்கூடிய பல செய்திகளை அவர் கூறுவார். சில கதைகளையும் கூறுவார். ஒருமுறை காட்டு பங்களாவில் அவர் தங்கியிருந்தபொழுது புலி ஒன்று நுழைய அவர் அதை நோக்கிச் சிலுவை அடையாளம் காட்ட புலி போய்விட்டதாம்! குழந்தை போன்ற எளிமை 4. வரலாறு ஹீராசுக்கு ஏட்டுச் சுரைக்காய் மட்டும் அல்ல. ஞாயிறு தோறும் எங்களுள் சிலர் மலைப்பகுதிகளில் குறுநடைப் பயிற்சிக்கும், முழுநாள் பயணத்துக்கும் செல்வோம், தமது முதுமை, பருத்த உருவம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அவரும் வருவார்; மெதுவாக நடப்பார். அவருடன் பேசுவதற்காகவே நானும் கூடவே மெதுவாக நடப்பேன். அவர் (தனது சிரமத்தைக் கருதாமல்) யாருடனும் பேச, விவாதிக்கத் தயங்காதவர். அப்பொழுதே இந்திய வரலாற்றறிஞர் களில் புகழ்பெற்ற சிலரில் ஒருவர் அவர்; (பின்னர் அவர் பெயரே சூட்டப்பட்ட) இந்தியவியல் ஆய்வு நிறுவனத்துககும் அவர் தலைவர்; இருப்பினும் குழந்தை போன்ற எளிய மனநிலை உடையவர்; தம்முடன் பேசுபவர்களைவிடப் பேரறிவு பெற்றவர்தாம் என்பதைக் காட்டிக் கொள்ளவேமாட்டார். 5. சிந்து நாகரிகம் தொல் திராவிடம் என்பதற்கு அவர்சுட்டிய காரணங்கள் சில எனக்கு அவசர முடிவுகளாகத் தோன்றின. எனினும் சிந்து நாகரிகம் தமிழ நாகரிகத்தோடு தொடர்புடையது; இந் நாகரிகங் களுக்கும் கிரீட் தீவு நாகரிகம், (இத்தாலியில்) எத்ருஸ்கன் நாகரிகம், (ஸ்பெயின் நாட்டில்) பாஸ்கு நாகரிகம், (பிரான்ஸ், பிரிட்டிஷ் தீவுகளில்) கெல்டிக் நாகரிகம் ஆகிய வற்றுக்கும் தொடர்பு உண்டு என்ற ஹீராஸ் முடிவு தமிழ்நாட்டுத் திராவிட இயக்கத்தினருக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்தது. 6. இவ்வாறு பொதுமக்கள் தமது முடிவுகளை ஆதரித்ததனால் அத்துடன் மகிழ்ந்து ஹீராஸ் நின்றுவிடவில்லை. தமது கருது கோள்களைத் திறம்பட நிறுவிடத் தொடர்ந்து ஆய்வுசெய்து வந்தார். அவர் தமிழ்நாட்டில் செய்த பேருரைகள் விரிவான ஆதாரங்களுடன் ஆனால் எளிதில் புரியும் இனிய நடையில் அமைந்திருந்தன; பட விளக்கங்களும் இருந்தன; அவருடைய முடிவுகளைப் பிறர் ஏற்கும் வகையில் இருந்தன அவை. ஐயவினாக்களையும் திறனாய்வுகளையும் அவர் நன்கு சமாளித்தார். தமது முடிவுகளை நிறுவ முயலும் சிறந்த அறிஞருக்குத் தேவையான பொறுமை அவருக்கு இருந்தது. 7. 1948 சூன் மாதம் சென்னையிலிருந்து மும்பாய்க்குத் திரும்பிச் சென்ற அவரும் ஐரோப்பாவிற்குச் செல்ல மும்பாயிலிருந்து கப்பலேறச் சென்ற நானும் (சுற்று வழியாக) பங்களூர், பெல்காம் வழியாகத் தொடர்வண்டியில் மும்பாய் போகும் பொழுது உடன் சென்றோம். ஹைதராபாத் நிஜாம் ராஜ்யத்தின் வழியாகச் சென்ற தொடர்வண்டிப் பயணிகளை முகமதிய ரசாக்கர் குண்டர்கள் இழுத்துப் போட்டுக் கொன்று வந்த காலம் அது. நல்ல காலம் ஹீராஸ் உயிரோடு மும்பை திரும்பினார். இரண்டு ஆண்டு கழித்து, பெல்ஜியம் நாட்டில் எங்கியன் நகரில் யேசுசபைக் கல்லூரி ஒன்றின் நான் தங்கிச் சமயவியல் பயின்று வந்தபொழுது, அங்கு எதிர்பாராதவிதமாக எங்கள் விருந்தினராக ஹீராஸ் வந்தார். அவருடைய தாயாரின் தாய்மொழி பிரெஞ்சு, தந்தையின் தாய்மொழி ஸ்பானிய மொழி; எனினும் அவர் தம் தாய்மொழியைக் கற்றிலர். எங்கியன் நகரோ பெல்ஜியம் நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியில் இருந்ததால் அவர் அங்குப் பயணம் செய்யும் பொழுது சிரமப்பட்டார். ஹவாய்த் தீவில் தொழு நோயாளிகளுக்குத் தொண்டுசெய்து உலகப் புகழ்பெற்ற டேமியன் பாதிரியார் ‘பிக்பஸ் Picpus பாதிரியார்கள்” என்ற அமைப்பைச் சார்ந்தவர்; அவ்வமைப்பு எங்கியன் நகரிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பிரெய்ன் - லெ - காம்தெ நகரில் இருந்தது. அவ்வமைப்புப் பாதிரி களுடன் அவர் பேச விரும்பியதால் அவரை எங்கியன் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து விட்டார், தவறான தொடர் வண்டியில் ஏறி விட்டதாகக் கூறிக் கொண்டு! அறிஞர்களுக்கேயுரிய கவனக் குறைவோ (absent mindedness), மொழி புரியாத ஊரின் குழப்பமோ தெரியவில்லை. அவர் விருப்பம் அன்று நிறைவேறவில்லை; அது பற்றி வருத்தம் இருந்தபோதிலும் நடந்ததை நகைச் சுவையோடு ஏற்றுக் கொண்டார். எங்கள் ஏசு சபையினரிடம் அவரைப் பேச வைக்கலாமென்றாலோ அவருக்கு பிரெஞ்சு தெரியாது; அங்கிருந்த எங்கள் சபையினருக்கு அவர் பேசும் ஆங்கில உரை புரியாது! 8. நான் இந்தியா திரும்பியபின்னரும் எங்கள் நட்புத் தொடர்ந்தது; அவரும் ஆண்டுதோறும் கோடைக்கானல் வருவார். 1955 கோடையில் அவர் கடும் நோய்வாய்ப்பட்டார். மதுரையில் அமெரிக்க விடையூழியர் மருத்துவமனையில் அவரைச் சோதித்த அவரது நண்பர் டாக்டர் தாமஸ் என்பவர், ஹீராஸ் மூளையில் கட்டி இருந்ததைக் கண்டுபிடித்தார். அந்தக் கட்டம்வரையில் ஹீராஸ் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும்தான் இருந்தார். எங்கள் ஏசு சபைப் பாதிரியார் ஒருவருடன் அவரை மும்பைக்கு அனுப்பினோம். அங்கே அவர் உலக வாழ்வை நீத்தார். ஆழ்ந்த சமயப்பற்றுடையவர் அவர்; இந்தியாவையும் இந்தியரையும் குறிப்பாகத் தமிழ் மக்களையும் நேசித்தவர் – வரலாற்றாசிரியன் என்ற முறையில் மட்டும் அல்ல; ஸ்பெயின் நாட்டிலிருந்து இங்கு வந்து இந்நாட்டுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் தொண்டு செய்வதில் தம் வாழ்நாளையே அர்ப் பணித்தவர் என்ற முறையில். திருத்தந்தை ஹென்றி ஹீராஸ் 11-9-1888 -- 14-12-1955 மன்றம் IV - 18 பொங்கல் மலர் (14-1-1956) நாவலர் இரா. நெடுஞ்செழியன் நோட்டுப்புத்தகத்தில் ஹீராஸ் எழுதித் தந்தது இயல் 8 சிந்து நாகரிகமும் ஆரியர் வருகையும்; அதன் பின்னரும் சிந்து வெளி நாகரிகம் நின்று நிலவும் பாங்கும் சிந்து நாகரிகம் என ஒன்று இருந்ததாக 1921க்கு முன்னர் கனவுகூடக் காணப்படாத நிலையிலும் நல்லறிஞர் பலர், ஆரியர் இந்தியாவிற்குள் நுழைந்த கி.மு.1500க்கு முன்னர் சிறந்த தமிழிய நாகரிகம் இந்தியா முழுவதும் பரவியிருந்திருக்க வேண்டும் என உன்னித்துணர்ந்து அறுதியிட்டது பற்றி மேலே கூறப்பட்டது. 2. ஜார்ஜ் ஷர்ட் 1878 திசம்பர் இந்தியன் ஆன்டிகுவாரி இதழிலேயே ‘சிந்திமொழியில் திராவிடக் கூறுகள்’ என்ற கட்டுரையில் எழுதியது வருமாறு. “சிந்தி மொழியில் காணும் திராவிட மொழிக் கூறுகள்) அம்மக்கள் திராவிட மொழி பேசியவர்களின் வழித்தோன்றல்கள் என்பதைக் காட்டுகின்றன. ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் திராவிடமொழி பேசுநரில் ஒரு பகுதியினர் சிந்து சமவெளியில் தொல்குடியினராக வாழ்ந்து வந்தனர் என்னும் உண்மையை அது காட்டுகிறது எனலாம்.” [They = Dravidian features of Sindhi] are a pure inheritance of the Sindhi people; and I believe they point to the fact that the Indus valley was a home to some part of the Dravidian race before the Aryan immigration.” - Rev George Shirt “Traces of a Dravidian element in Sindhi” The Indian Antiquary, VII December 1878: 293- 295. 2. சிந்து மொழியில் இன்றும் ஏராளமான திராவிட இலக்கணக் கூறுகள் உள்ளன: (எ.கா. ஆண்பால் ஒருமை ஈறு அன் ; பன்மை ஈறு - ஆர் ) அடிப்படைச் சொற்களும் (எ.கா ஆயி / ஆயாள் / அமாள்; மாமா, நீரு, மூசா (மீசை); மண்டி (நொண்டி / மொண்டி) தூணி (தூண்); தொனோ (தொன்னை); நார் (கயிறு); கோட் (கோட்டை); தரோ (மேடு) சிந்து மொழியின் திராவிடக் கூறுகளை விரிவாக டாக்டர் பர்சோ கித்வானியின் Similarities in Sindhi and Dravidian languages (1996) என்னும் நூலில் காணலாம். 3. சிந்துப் பகுதிக்கு மேற்கே பலூசிஸ்தானிலும் அதனை ஒட்டிய ஈரான் - ஆப்கானிஸ்தான் பகுதிகளிலும் பிராஹுய் என்னும் திராவிடமொழியை (மொத்தம் சுமார் 5 இலட்சம் மக்கள்) இன்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சிந்து நாகரிகக் காலத்திலிருந்தே அங்கே வாழ்ந்து வரும் திராவிட மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என்பர் ஜே.ஆர்.மார் (“The Early Dravidians ”; ஏ.எல்.பஷாம் (1975) A Cultural History of India நூலில்) 4. ஜே.எப். ஹெவிட் J.F. Hevitt: “Notes on the Early History of Northern India” Journal of Royal Asiatic Society, vol. xx) 1888 இல் ஆரிய மொழி பேசுநர் சிறு எண்ணிக்கையிலேயே நுழைந்திருக்க வேண்டும்; போரிட்டு வெற்றி கொண்டதெல்லாம் மிகச் சிறு அளவே இருந்திருக்க வேண்டும்; ஏற்கெனவே இருந்த (நாகரிகத்தில் சிறந்திருந்த) திராவிடருடைய சமூக, சமயக் கூறுகள் போன்றவற்றை விரகாகத் தாங்களும் ஏற்றுக் கொண்டதுடன் ஆரியர் அல்லாதாரையும் பிராமணர் ஆக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்; என்பது போன்ற நுண்ணிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் சிந்தாந்த தீபிகா; தமிழியன் ஆன்டி குவாரி போன்ற இதழ்களிலும் வேறு நூல்களிலும் சவரிராயன், மனோன் மணீயம் சுந்தரம்பிள்ளை, எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, மறைமலை யடிகள் (1903) போன்றவர்கள் இந்த அடிப்படையில் மேலும் பல கருத்துக்களைத் தந்துள்ளனர். திராவிடர்நாகரிகம் பற்றி 1913ல் ஹால் எழுதியதை முதல் இயலில் கண்டோம். 5. 1921ல் (சிந்து நாகரிக அகழாய்வுக்கு முன்னரே) ஆற்றிய தமது உரையை 1923ல் ‘வேளாளர் நாகரிகம் ’ என்று நூலாக மறைமலை யடிகள் வெளியிட்டார். அந்நூலிலேயே சிந்துப் பகுதியில் ஆரியர் நுழைந்த காலைப் பரவியிருந்த (தமிழருடைய) நகர நாகரிகத்தைத் தாக்கியதை ரிக் வேத ச் சான்றுகளைக் கொண்டே நிறுவியுள்ளது வியக்கத்தக்கது. 6. ஆரியர்கள் (அதாவது இந்தோ- ஆரிய மொழி பேசுநர்) யார்? இவர்கள் கி.மு. 4000 - 3000 கால அளவில் கருங்கடல் – காஸ்பியன் கடல் பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளிகளில் வசித்து வந்தவர்கள். இந்தோ ஐரோப்பியத் தொன்மொழியைப் பேசியவர்கள். 7. கி.மு.3000க்குள் அதுவரைக் காட்டு விலங்காக இருந்த குதிரையைப் பழக்கிப் போருக்குப் பயன்படுத்தினர். ஆரக்கால் கொண்ட சக்கரங்களை மாட்டிய தேர்களைக் குதிரைகள் இழுத்தன. அவர்களிடம் இருந்த மாழைகள் செம்பு, வெண்கலம் போன்றவையே. இரும்பு கிடையாது. கி.மு.3000 - 2000 கால அளவில் இவர்களில் சில குழுக்கள் மேற்காகவும், சில குழுக்கள் கிழக்கு, தென்கிழக்காகவும் நகரலாயினர் (மேற்கில் சென்ற குழுக்கள் பேசிய இந்தோ – ஐரோப்பிய மொழிவடிவம் பின்னர் கிரீக், லத்தின், கெல்திக், ஜெர்மானியம், ஸ்லாவ் ஆகிய தனிக் குடும்பங்களாகப் பிரிந்தது). பின்னர் ஈரானிலும் இந்தியா விலும் புகுந்து இந்தோ - ஈரானியர் எனப் பெயர் பெறவிருந்த குழுவினர் கி.மு.2500 ஐ ஒட்டி இந்தோ - ஐரோப்பியப் பெருங்குழு விலிருந்து பிரிந்து விட்டனர். கி.மு. 2000ஐ ஒட்டி இரானியரும் இந்தோ ஆரியரும் தனித்தனியே பிரிந்து விட்டனர். (இவர்கள் மிகப் பிற்காலத்தில் பிரிந்ததனால்தான் இரானிய ‘ஜென்ட் அவெஸ்தா ’வின் மொழியும் இந்தோ ஆரியர் ‘ரிக்வேத ’ மொழியும் பெருமளவு ஒப்புமையுடைய வாய் இருக்கின்றன.) 8(i). இந்தோ ஆரியர் சில காலம் இரானில் வாழ்ந்து பின்னர் வடமேற்கு இந்தியாவுக்குள்ளும் சிந்து சமவெளிக்குள்ளும் நுழைந்ததாகத் தெரிகிறது. இக்கால கட்டம் சுமார் கி.மு.2000-1500 ஆகும். சில ஆசிரியர்கள் கருத்துப்படி இந்தோ ஆரியர்களில் முதல் அலையினர் கி.மு.2000ஐ ஒட்டியும் இரண்டாம் அலையினர் கி.மு.1500ஐ ஒட்டியும் நுழைந்தனர். வேறு சிலர் ‘இரண்டு அலைகள்’ கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. எனினும் கி.மு.1800 ஐ ஒட்டி இந்தோ ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். (ii) இந்தோ - இரானிய மொழிக் குடும்பத்தினரில் கிழக்குப் பிரிவினரே தெற்கு ஆப்கானிஸ்தானத்தில் கி.மு.1700லும் வடமேற்கு இந்தியாவில் கி.மு.1400லும் குடியேறிய ஆரிய மொழி பேசுநர் என்பது ராஜேஷ் கோச்சார் கருத்து The Vedic people - Their history and geography (Sangam Books; Delhi; 2000) கி.மு.1700 - 1400 கால அளவில் தெற்கு ஆப்கானிஸ்தானத்தில் வாழ்ந்தபொழுதே ரிக்வேதத்தில் பெரும்பகுதி உருவாகிவிட்டது; ரிக்வேத ‘சரஸ்வதி’ ஆறு யமுனைக்கும் சிந்து வுக்கும் இடையில் ஓடி பின்னர் மறைந்துவிட்டதாகக் கருதப்படும் கக்கார் (Ghaggar) ஆறு அல்ல; தெற்கு ஆப்கானிஸ்தானில் பாயும் ஹெல்மாந்த் (Helmand ) ஆறுதான் ரிக்வேத ‘சரஸ்வதி’ ஆகும். ரிக்வேதம் கூறும் சரயு ஆறு ஆப்கானிஸ்தான ‘ஹரி ரூத்’ (Hari - rud) ஆறுதான். இந்தியாவில் யமுனை - கங்கைப் பகுதியிலும் அதற்குக் கிழக்கும் ஆரியர் பரவத்தொடங்கியது கி.மு. 850க்குப் பின்னரே; ரிக்வேத த்தின் ஒரு சில (பிற்காலப்) பகுதிகளும் ஏனைய வேத வேதாங்கப் பகுதிகளும் மட்டுமே இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்தபின்னர் இயற்றப் பட்டவை; என்பர் கோச்சார். ரிக் வேதம் 10 மண்டலங்களில் மொத்தம் 1028 சூக்தங்களைக் கொண்டது (10417 ரிக்குகள்; 74000 சொற்கள்) 1,8,9,10 தவிர பிற மண்டலங்கள் கி.மு.1500 ஐ ஒட்டித் தொகுக்கப்பட்டன. (அதற்குமுன் இருநூறு முன்னூறு ஆண்டுகளில் இயற்றப்பட்டவை பெரும்பாலானவை; சில இன்னும் முற்பட்டவை) 1,8,9,10 மண்டலங்கள் பின்னர் கி.மு.1000 ஐ ஒட்டித் தொகுக்கப்பட்டன. அவ்வேதம் இறுதி வடிவம் பெற்றது கி.மு.1000ல் என்பர் சிலர். 9. சிந்து வெளி நாகரிகத்தின் அடிப்படைச் சமூக, சமய, பண்பாட்டுக் கூறுகள் இடையறாது தொடர்ந்து இன்றும் ‘இந்திய” சமூக, சமயப் பண்பாடாக நிலவுகின்றன என்பதை (மேலே கண்டோம்). எனினும் அந்நாகரிகத்தின் நகர நாகரிகக் கூறுகள் கி.மு.1700 ஐ ஒட்டி அழிந்தன. [அதற்குப் பின்னர் வட இந்தியாவில் சுமார் 1000 ஆண்டுகள் கழித்த பின்னரே நகரங்கள் (பாடலிபுத்திரம், தட்சசீலம், மதுரா போன்றவை) மீண்டும் உருவாயின.] இயற்கைச் சீற்றமும் அந்நகர நாகரிகம் அழிந்திடக் காரணமாக இருந்திருக்கலாம் என்பர் பல அறிஞரும். எனினும் ஆரிய மொழி பேசுநர் தாக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க இயலாது, ‘வேத மொழி (பின்னர் இதிலிருந்து சம்ஸ்கிருதம் உருவாகியது) போன்ற இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் தொடக்க காலத்தில் நாடோடிகள் (nomads). பண்டைக் காலத்தில் பலநூறு ஆண்டுகளாக அவர்களுடைய வேலை எந்தெந்த நாடுகளுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் “ஏனையோர்களுடைய சிறந்த நாகரிகங்களைச் சிதைப்பது; பின்னர்க் காலப் போக்கில் படிப்படியாகத் தாங்களும் நாகரிகம் அடைவது என்பதேயாகும்” என்பதே நல்லறிஞர் ஒருமித்த முடிவாகும். (“The earliest speakers of the Indo - European languages were nomadic barbarous looters and cattle – rustlers whose fate it was through the centuries to disrupt older civilisations but to be civilised by them’ - M.B.Emenpau 1956). 10. இயல் 1இல் விளக்கியபடி மைய ஆசியப் பகுதியிலிருந்து பல திசைகளிலும் பரவிய இந்தோ ஐரோப்பிய மொழி பேசிய சில பல குழுக்களில் (ஏற்கெனவே ஆரிய மல்லாதவர்களும் நாகரிகத்தில் சிறந்தவர்களும் வசித்து வந்த) கிரேக்கம், சிந்துப் பகுதிகளில் நுழைந்து அந்நாகரிகங்களில் கலந்து விட்ட இந்தோ ஐரோப்பியர் மட்டுமே நாகரிகம் எய்திட முடிந்தது. இந்த நல்லூழைப் பெறாத ஏனைய இ.ஐ.மொழிக் குழுக்கள் பல ஐரோப்பாவிலும் பிற பகுதிகளிலும் கி.பி. 1000 வரைக் கூட காட்டுமிராண்டிகளாகவே இருந்தன, என்பதை ஜாஸ்பர் கிரிபின் The Spectator (27-10-2001) East is East and West is West கட்டுரையில் விளக்கியுள்ளார். 11. ஏ.எல்.பஷாம் 1975ல் தொகுத்து வெளியிட்ட “A cultural History of India”வில் சம்ஸ்கிருத வல்லுநர் பரோ தமது ‘தொடக்க கால ஆரியர்’ என்னும் கட்டுரையில் கூறுவது: இந்தோ ஆரியர் மொழி பேசுநர் இந்தியாவுக்குள் நுழைந்தது குறித்து எந்தப் பழைய நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. அது பற்றி தொல் பொருளாய்வின் மூலமும் வரையறுக்க இயலாது [எனினும் கி.மு.2300 - 1500 சார்ந்த, ‘பாக்டிரியா - மார்ஜியானா தொல்லியல் எச்சங்கள்’ இவர்களுடையனவே என்பது இற்றைத் தொல்லியலாளர் கருத்து.] எனினும் ஒப்பியல் மொழி நூல் சான்றுகளின் அடிப்படயில் அது வரலாற்று உண்மை என உறுதியாக நிலை நாட்டப்பட்டுள்ள ஒன்றாகும். வேதமொழி இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் மிகப் பழைய மொழிகளில் ஒன்று. அம்மொழிக் குடும்பம் ஐரோப்பா - ஆசிய மையப் பகுதியில் தோன்றியதாகும். வேதமொழி நெடுந்தொலைவு இந்தியா வரைச்சென்று பரவியது என்றால் அதற்கு ஒரே வாய்ப்பு அம்மொழி பேசுவோர் இந்தியா வரைக்கும் சென்று குடியேறியது மட்டுமே’ [1995ல் ஆல்சின் கருத்தும் இதுவே: “அந்தக் கால கட்டத்தில் பழைய மொழி ஒன்று ஒரு புதிய நிலப்பரப்புக்குள் புகுகிறது என்றால் அதற்கு காரணம் அம்மொழி பேசுவோர் அங்கு நுழைந்தது மட்டுமேயாக இருக்க முடியும்.” (the initial introduction of an ancient language to a new area can only have been as a result of the movement of the speakers of that language into that area”] “வேதப் பாடல்களில் இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்தது பற்றிய தெளிவான நினைவுக் குறிப்புக்கள் இன்மையால் அப்பாடல்கள் இயற்றப்படுவதற்கு ஓரளவு முன்னதாகவே அந்நுழைவு நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் வடமேற்கு இந்தியப் பகுதியின் தொல்குடிகளான ‘தாசர்’ தஸ்யூ”க்களுடன் நிகழ்ந்த போர்கள் பற்றியும், அவர்களுடைய நாடுகளையும் உடைமைகளையும் கைப்பற்றியது பற்றியும் வேதப் பாடல்களில் நிறைய குறிப்புகள் வருகின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் யார் என்கிற பொழுது அவர்கள் சிந்து நாகரிக மக்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான கருத்து; சரியான கருத்து. இந்நாகரிகம் கண்டுபிடிக்கப்படுமுன்னர் அப்படி ஒரு நாகரிகம் இருந்திருக்கும் என யாரும் எதிர்பார்க்பப்படவில்லை. கண்டிப்பாக அந்நாகரிகம் வேத காலத்துககு முற்பட்டது. ஆரியர்கள் அந்நாகரிக வீழ்ச்சிக்குக் காரணமானார்களா? அல்லது வீழ்ச்சிக்குப் பின்னர் சில காலம் கழித்து அவர்கள் வந்தனரா? என்பது குறித்துச் சிறிது வாதங்கள் நிகழ்ந்துள்ளன. வேதங்களில் உள்ள ஆதாரங்களிலிருந்து முதலிற் சொன்னதே நிகழ்ந்திருக்கக் கூடியது. நகரங்களை அழித்ததாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஆரியர் போர்க் கடவுள் இந்திரனின் பெயரான புரந்தரன் என்பதன் பொருள் ‘நகரங்களை அழிப்பவன்’ என்பது. சிந்துவெளி நாகரிக நகரங்கள் சில தீயால் அழிக்கப் பட்டதற்கான தடயங்கள் உள்ளன. எனவே தான் நகரங்களை அழித்த செயல்களுக்காக அக்நியும் புகழப்படுகிறான். இத்தகைய அழிவுச் செயல்களைச் செய்தவர்கள் ஆரியர்களே என்ற முடிவு தவிர்க்க முடியாதது’. “சிந்து வெளி நாகரிகச் சின்னங்களிலிருந்து அந்நாகரிகம் ஆரியர் நாகரிகத்தை விட உயர்ந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. அது மிகச் சிறந்த நகர நாகரிகம்; ஆரியர்களோ நகர வாழ்க்கையை அறியாதவர்கள். போர் வன்மையில் ஆரியர் கை ஓங்கியிருந்தது. அவர்கள் குதிரை பூட்டிய தேர்களைப் போரில் பயன்படுத்தினர். ரோமானியர் பிரிட்டனில் சில நூறு ஆண்டுகள் நகர நாகரிகத்தைப் புகுத்திச் செயல்படுத்திய பின்னர் (ஜெர்மனியிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டில்) பிரிட்டனுக்குள் நுழைந்த ஆங்கிலோ சாக்சனியர் அந்நாகரிகத்தை ஒழித்தது போல, ஆரியர் வெற்றிக்குப் பின்னர் சிந்து வெளி நகர நாகரிகம் அழிந்தொழிந்து அந்நகரங்களும் கைவிடப் பட்டன. வென்ற நகரங்களைத் தாங்கள் வசிப்பதற்குப் பயன்படுத்திட ஆரியருக்கு எண்ணமில்லை என்பது மட்டுமல்ல; நாகரிக நகர வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பக்குவமான தொழில் நுட்ப, பண்பாட்டு நிலையை அவ்வாரியர்கள் எய்தவில்லை. ஆரியர் குடியிருப்புகள் மரத்தால் அமைந்தவை; வேதகாலம் முழுவதுமே ஆரியர்கள் சிறு கிராமங்களிலேயே (நகரங்களில் அல்ல) வாழ்ந்து வந்தனர்.” 12. இது குறித்து 1968இல் வீலர் கூறிய கருத்து மிகத் தெளிவானது; வேத கால ஆரியர்கள் அழித்ததாக அவ் வேதங்கள் கூறும் நகரங்கள் சிந்து வெளி நாகரிக நகரங்கள் அல்லவென்று கொண்டால் என்ன நிலைமை ஏற்படுகிறது? சிந்து வெளி நகர நாகரிக முடிவுக் காலமாகிய கி.மு.1700க்கும் ரிக்வேதத் தொகுப்புக் காலமாகிய கி.மு.1000க்கும் இடைப்பட்ட சில நூறு ஆண்டுகளுக்குள் ஏதோ பெயர் தெரியாத ஒரு சிறந்த நகர நாகரிகம்புதிதாக உருவெடுத்து அப் புதிய நாகரிக நகரங்களையும் கோட்டைகளையும் தான் ஆரியர் அழித்திருக்க வேண்டும்(!) அபத்தமானது. ஆகவே சிந்துவெளி நாகரிகம் ஏற்கெனவே இறங்குமுகத்தில் இருந்திருக்கக் கூடிய கி.மு.1700 ஐ ஒட்டி சிந்து வெளி நகர மக்கள் ஆரியர்களிடம் அவ்வாரியர் வேதங்கள் கூறுகின்ற வகையில் தோல்வியுற்றிருக்க வேண்டும் என்ற கருத்தே பொருத்த மானது என்றார் வீலர். (“It seems better, as the evidence stands, to accept the identification (of Harappans with Dasas etc of Rig Veda) and to suppose that the Harappans of the Indus valley in their decadence, in or about the 17th c.B.C fell before the advancing Aryans in such fashion as the Vedic hymns proclaim.”) 13. சிந்து நாகரிகமும் மொழியும் திராவிடருடையவை என்ற கொள்கையினர்தான் அஸ்கோ பர்போலா. ஆயினும் அவருடைய 1988. ஸ்டடியா ஒரியண்டலியா 64: 195-302 கட்டுரையில் விரிவாக விளக்கும் கருத்து என்ன? மைய ஆசியாவிலிருந்து கி.மு.1500 ஐ ஒட்டி வடமேற்கு இந்தியாவுக்குள் நுழைந்த ‘தொல் இந்தோ – ஈரானிய மொழி பேசுநர் (கி.மு.2300 - 1500 காலத்தில் மைய ஆசியத் தென் பகுதியில் வாழ்ந்த பாக்டிரியா - மார்ஜியானா தொல்லியல் பண்பாடு (Bactria Margiana Archaeological Complex) மக்களின் வாழ்விடத்தைத் தாண்டித்தான் இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பதே அக்கருத்து. அவ்வாறு வரும்பொழுது பா.மா.தொ.ப. பண்பாட்டு மக்களுடைய மொழிச்சொற்கள் சிலவற்றையும் தமது ‘தொல் இந்தோ – ஈரானிய மொழியில்’ சேர்த்துக் கொண்டனர்; அப்படி உருவாகிய மொழி யிலேயே ரிக் வேதம் எழுதப்பட்டது; என்பர் பர்போலா. அவர்கள் (ரிக்வேத ஆரியர்) தமக்குச் சற்று முன்னரே - அதாவது கி.மு.1500க்கு முன்னரே - வடமேற்கு இந்தியாவுக்கு வந்திருந்தவர்களும் ஏறத்தாழ ரிக்வேத ஆரியர் பண்பாட்டு நிலையை ஒத்தவர்களுமான மக்களை (earlier come wave of Indo Iranian speakers, who had also a BMAC substratum) தாஸர் என்று அழைத்தனர் என்பர் பர்போலா. [பெரும்பாலான ஏனைய அறிஞர் தாஸர் என ரிக்வேதம் குறிப்பிடுவது சிந்து நாகரிகத் திராவிடர்களையே கருதுகின்றனர்.] 14. 1964ம் ஆண்டில் ஜார்ஜ் எப்.டேல்ஸ் (Expedition 6:3) இதழில் “The mythical massacre at Mohenjodaro’ என்னும் கட்டுரையிலும் ஆர்.எல்.ரைக்ஸ் என்பவர் 1964லிருந்து பல்வேறு கட்டுரைகளிலும் சிந்து வெளி நாகரிக நகரங்கள் அழிவுக்கு ஆரியர் காரணமே அல்ல; தட்ப வெப்ப நிலை மாற்றம்; சிந்து ஆறு கடலில் கலந்த இடத்தில் நில மட்டம் உயர்ந்ததால் சிந்து மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது; போன்றவையே காரணம் ஆக இருந்திருக்கலாம் என்ற வாதத்தை எழுப்பினர். இவ்வாதங்கள் பின்னர் நிகழ்ந்த அறிவியல் ஆய்வுகளின் படி ஏற்கத் தக்கவையல்ல என்பர் மாலதி எம்.செண்டுகே (1990) Floods and the decline of the Indus civilisation in ABORI 1990 LXXI) சிந்துவெளி நாகரிக நகரங்கள் அழிவுண்டது பற்றிய விரிவான விவரங்களை அவ்வம்மை யாருடைய ‘நாகரிக அசுரர்கள் - ரிக் வேதத்தில் அரப்பா மக்கள்’ The Civilized Demons: The Harappans of Rig veda; 1977) என்னும் நூலில் காணலாம். [மாலதி செண்டுகேயின் 1996, 1997 நூல்களில் உள்ள கருத்து: ரிக்வேத மொழி இந்தோ - ஐரோப்பிய மொழியன்று; ‘இ-ஐ மொழிக் கோட்பாடே’ ஆதாரமற்றது; ரிக்வேத மொழி பேசியவர் ஈரான் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி வந்தவர்கள், அம்மொழியும் சுமேரிய - அக்காதிய மொழியோடு தொடர்புடையது; ரிக்வேதக்காரர்கள் நுழைந்தபொழுது சிந்துப் பகுதிகளில் வாழ்ந்த வர்கள் திராவிடர்கள் அல்ல; - ரிக் வேதக்காரர்களின் இனத்தவர் களான அசுரர்கள்தாம்; என்பதாகும்.] ஆர்.என்.தண்டேகர், தாமோதர் தர்மானந்த கோசம்பி, தேவி பிரசாத் சட்டோபாத்யாய, குருவிக்கரம்பை வேலு போன்றவர்களும் ஏற்கெனவே குறித்தபடி மறைமலையடிகளும் சிந்து நாகரிக நகரங்களைச் சிதைத்தவர் ஆரியர் என்ற கொள்கையுடைய வர்களே. ஆயினும் கி.மு.1500 ஐ ஒட்டி வடமேற்கு இந்தியாவில் நுழைந்த ‘ஆரியர்’ (அதாவது இந்தோ - ஆரிய மொழியாகிய வேதமொழி பேசுநர்) எண்ணிக்கை மிகக்குறைவான எண்ணிக்கை யிலேயே இருந்திருக்க வேண்டும். E. Bryant 2005: “Small scale migration of Indo - Aryan Speakers into Punjab and North West - India” 15. சிந்துவெளியில் அகழ்ந்து கண்ட நகரங்களில் அக்காலத்தில் வசித்து வந்த ‘நாகரிகம் வாய்ந்த’ திராவிட மக்களைத்தான் ஆரியர் தமது வேதங்களில் அசுரர், இராட்சகர், கந்தருவர், யட்சர், பிசாசர் என்று இகழ்ந்துரைத்தனர். அம் மக்களோடு நெடுநாள் கடும்போர்கள் செய்தும் பல்வேறு சூழ்ச்சிகள் செய்தும் தான் ஆரியர்கள் வெற்றி பெற்றமையால் அந்நிகழ்ச்சிகளை ரிக் வேதப் பாடல்களில் கூறியுள்ளனர். 16. சிந்துவெளித் தமிழர்களை (திராவிடர்களை) ஒழிப்பதில் முன்னணியில் நின்ற ஆரியத் தலைவன் ஒருவன்தான் பின்னர் இந்திரன் என்னும் பெயரில் ஆரியக் கடவுளர்களில் ஒருவன் ஆக்கப்பட்டவன். ‘புரந்தரன்’ “புரம்பேட்டா” (கோட்டைகளை அழிப்பவன்); மற்றும் தாஸ்யோ ஹந்தன் (தாசர்க் கொல்லி) ஆன இந்திரனால் கொல்லப்பட்ட ‘அசுரர்கள்’ மற்றும் ‘தாசர்கள்’ ஆக ரிக் வேதம் குறிப்பிடுபவர்கள் - கரஞ்சன்; பர்ணயன்; வங்கிருதன் (புரங்கள் 100 உடையவன்); அஹிசுவன்; சிரிபிந்தன்; அனர்சனி; பிப்ரு (கரு நிறத்தவர்களான போர் வீரர்கள் 50000 பேர்களையுடையவன்); விருத்திரன்; ஒளர்ணவாபன்; அற்புதன்; இலிபிசன்; அசுரபிரகச் சிராவன்; அசுர விருக்கடவாரன்; சம்பாரன் (99 கோட்டையுடையவன்); சுஷ்ணன் (செழியன்?- அசையும் கோட்டை - கப்பல்? - உடையவன்); அரரு; நமுசி; உரணு; ஸ்வர்பானு; ஆகியோராவர். 17. தொடக்கக் காலத்தில் நேரடிப் போர்கள் சில நடை பெற்ற பின்னர் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஆரியரால் கொல்லப்பட்ட ‘தாச’ அரசர்களும் பலர். நமுசி முதலில் இந்திரனோடு நட்பாக இருந்து பின்னர் அவனால் கொல்லப்பட்டவன். கதாசன் உடன் சேர்ந்து சம்பாரனையும் பின்னர் பத்து அரசர்களையும் இந்திரன் கொன்றான். ரிஜிஸ்வான் உடன் சேர்ந்து பிப்ருவையும்; நமிசாப்யனோடு சேர்ந்து நமுசியையும் வென்றுள்ளான். விஷ்ணுவும் உசானகவியும் (சுக்கிரன்) அசுரர்களைப் பற்றி ஆரியர்களுக்கு உளவு அறிவித்தவர்களாக இருக்க வேண்டும். ‘சிந்துபதி’ என்றும் ‘சாம்ராஜ்‘ என்றும் அழைக்கப்படும் ‘அசுர” வருணன் சிந்துவெளி மன்னனாகவே இருந்திருக்க வேண்டும்; காட்டிக் கொடுப்பான்களால் தனது வலிமை குன்றிய பிறகு அவன் ஆரிய இந்திரனுடன் சமாதானம் செய்து கொண்டு இருக்க வேண்டும். ‘அசுர” என்னும் பெயர் ரிக் வேதத்தில் நல்ல பொருளில் (வருணன், மித்ரன், போன்றவர்களுக்கு அடையாகவும்) 60 இடங்களில் வருகிறது. இந்திரனே அசுரத்துவம் வாய்ந்தவனாகப் புகழப்படுகிறான். பின்னர் தாசர்கள், தஸ்யுக்களுக்கும் அந்த அடைமொழி பயன்படுத்தப்பட்ட பிறகு ‘அசுர’ என்பது கெட்டவர்கள் என்ற பொருளில் 12 இடங்களில் ரிக்வேதத்தில் வருகிறது. 18. அசுரர்கள் ‘மாயை’ உடையவர்கள் என ரிக் வேதம் கூறுகிறது. “மாயை”யின் ஆதிகால வேர்ப்பொருள் சிருஷ்டி ஆற்றல் (ஆக்க ஆற்றல்) என்பதே சதபத பிராமணம் (Vi.8.1.1-2) அசுரர்கள் மாளிகைகளில் இருந்ததாகவும் தேவர்கள் வண்டிகளில் திரிந்ததாகவும் (தேவஸ் சக்ரமசாரஞ் சாலாமசுரா ஆசன்) கூறுகிறது. அசுரர்களுடைய மாளிகைகளையும் கோட்டைகளையும், அணைக் கட்டுகளையும், வேளாண்மையையும் கண்டு மருண்ட ஆரியர்களுக்கு அசுரர்கள் மாயை உடையவர்களாகத் தோன்றியது வியப்பன்று. பின் காலத்தில் தான் ‘மாயை’க்குத் தற்பொழுது உள்ள ‘போலித் தோற்றம்’ என்னும் பொருள் வந்தது. 19. ரிக்வேதத்தில் அக்னி ‘அசுரக்ந’ (அசுரர்க்கொல்லி) என்று அழைக்கப்படுகிறான். நகரங்கள் (ஆரியரால்) நெருப்பிலிடப் பட்டதற்கான தடயங்கள் மொஹெஞ்சொதரோவில் கிட்டியுள்ளன. நெருப்பில் கும்பலாக மாண்டவர்கள் எலும்புக்கூடுகளும் கிட்டியுள்ளன. முயன் ஜோ தரோ என்னும் சிந்து மொழிச் சொற்றொடரின் பொருள் பிணமலை (முயன்=பிணம்; ஜோ = உடைய; தரோ = மேடு) என்பதாகும். ரிக்வேதம் ஐ 133, 1 - 3இன் ஆங்கில வடிவத் தமிழாக்கம்: “ஓ மகவான்! அழிந்துபட்ட வைலஸ்தானக நகரத்திலும், அழிந்துபட்ட மகாவைலஸ்த நகரத்திலும் உள்ள சூனியக்காரிகள் கும்பல்களை அழித்து ஒழிப்பாயாக” [அவஸாம் மகவாந் ஜஹி ஸர்தோ யாதுமதீநாம், வைலஸ்தாநகே ஆர்மகே, மகாவைலஸ்தே ஆர்மகே] “நான் மேலுலகத்தையும் பூமியையும் சத்தியத்தினால் தூய்மைப்படுத்துகிறேன். வைலஸ்தான நகரில் இந்திரனால் தோற்கடிக்கப்பட்டு கொலையுண்டு கிடக்கும் (இந்திரனை எரித்த) ஆற்றல் மிக்க துஷ்டப் பிசாசுகளை நான் எரித்து ஒழிக்கிறேன்’ (வைலஸ்தானம் = பிணமலை (சாயன பாஷ்யம்) ஆரியர்கள் நாசமாக்கிய நகரத்தின் பெயரான ‘வைலஸ் தானம்’ என்பது ஆரியமொழியல்லாத பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பது டாக்டர் பரோ கருத்து ஆகும். (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிஸ்டரி XII- 1 ஏப்ரல் 1963,) ஒருக்கால் ‘வைலஸ்தானம்’ என்பது வேளிருடைய ஊர் / நகரைக் குறித்திருக்கலாம். 20. ரிக்வேதம் 1.14.9.3 நார்மிணி என்னும் கோட்டையை அக்னி அழித்ததைப் புகழ்கிறது. போலந்து நாட்டறிஞர் சாலெக் சிந்துப் பொறிப்புகளை ரீபஸ் அடிப்படையில் பழந்தமிழாக வாசித்து 1999 இல் வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு The Narmini Report என்றே பெயரிட்டுள்ளார். 1111 எனவரும் சிந்து முத்திரை வாசகத்தை (iஅயீசநளளiடிn) நால் மீன் (=ந( ர)ல் (ர்) மீன் = நல்ல மீன்) என்றே சாலெக் படிக்கிறார். மொகஞ்சொதரோவில் கிடைத்த 242அடி X 112 அடி கட்டுமான எச்சம் நார்மிணி கோட்டையாக இருக்கலாம் என்பர் குருவிக் கரம்பை வேலு (2001:123) புறநானூறு 201 – 202 இருங்கோவேள் முன்னோர் ஆண்டதாகக் கூறப்படும், ‘செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை’ சிந்துவெளி நாகரிகக் கால நகரமாக இருக்கலாம் என்று ஐ. மகாதேவன் 1970-ல் கருதினார். வேளகம் அழிக்கப்பட்டுப் பிணமலையான பொழுது ‘வைலஸ் தானம்’ என்றாலே பிணமலை என்னும் பொருள் உண்டாகி இருக்கலாம். 21. சிந்து நாகரிக நகரங்களை அழிக்கத் தீயை மட்டுமன்றி வெள்ளத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பர் சிலர். சிந்து வெளியில் சில பல அணைக்கட்டுகளைக் கட்டி நல்ல நீர்ப்பாசன வசதிகளைச் சிந்து நாகரிக மக்கள் செய்திருக்க வேண்டும் என்பதற்கான (அக்கால அணைக்கட்டுத்) தடயங்கள் இப்பொழுதும் உள்ளன. இந்திரனால் அழிக்கப்பட்டவனாக ரிக்வேதம் 1.32 குறிப்பிடும் விருத்திரன் என்னும் தாசன் அணைக்கட்டுக் காவல் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும் ‘விருத்திராநி’ என்று அழைக்கப்படும் விருத்திரன் ஆட்கள் துணை அதிகாரிகளாக இருக்க வேண்டும். விருத்திரனைக் கொன்று, மூடியிருந்த தண்ணீர் வாயிலை இந்திரன் திறந்தான் ‘அபம் பிலம் அபீஹிதம் யதாசித், வ்ருத்ரம் ஜகந்வாந் அபா தத்வவாரா’ என்கிறதுரிக்வேதம் . செயற்கைத் தடைகளை (அணைகள், கரைகள்) நீக்கினான் இந்திரன் ‘ரீநாக் ரோதாம்ஸி கிரத்ரிமாணி ஏசாம்’ என்றும் சொல்லப்படுகிறது. அணைகளை உடைக்கும் இந்தத் திருப்பணியை இந்திரன் பல ஆண்டுகளாகச் செய்து வந்ததாக ரிக்வேதம் IV 19,8 புகழ்கிறது! இந்திரன் புகழில் தலைசிறந்ததாகக் கூறப்படுவது விருத்திரனை அழித்தது தான். 22. சிந்து மற்றும் பிற ஆறுகளுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைக் கட்டுகளை ஆரியர்கள் உடைத்து நாட்டை வெள்ளக் காடாக்கியதையே ரிக் வேதம் குறிப்பிடுகிறது என்பார் கோசம்பி. The culture and civilisation of Ancient India in historical outline (1964). வால்பர்ட் (இந்திய வரலாறு - புதிய வடிவ ம்; 1982) என்னும் நூலில் கூறுவதும் அதுவே வ்ருத்ரன் பிசாசு அல்ல. வெள்ளக் கட்டுப் பாட்டுக்காகவும் வேளாண்மைக்காகவும் ஆற்றைக் கட்டுப்படுத்த சிந்து மக்கள் கட்டியிருந்த அணையையே ‘வ்ருத்ர” குறித்தது. அந்த ‘வ்ருத்ர’ என்பதனை (தடையை) இந்திரன் அழித்து நாட்டையும் நகரங்களையும் வெள்ளக் காடாக்கிச் சீரழித்து அவற்றை வெற்றி கொள்ள வழி செய்ததை ரிக்வேதம் குறித்தது என்பது வால்பர்ட் கருத்து. 23. இந்திரன் சோமச் சாற்றை மொக்கி விட்டு சிந்து மக்கள் சிரா (sirah)களை இடித்து நீரைத் தாராளமாக ஆற்றில் போக விட்டான் (bala dhana sirah) என ரிக் வேதம் புகழ்கிறது. ‘கற்சிறை” சங்க இலக்கியத்தில் அணையைக் குறிப்பதை பி.எல்.சாமி (செந்தமிழ்ச் செல்வி; நவ 1994 ‘கற்சிறையும் அரப்பாவும்) சுட்டுகிறார்: “வருபுனற் கற்சிறை கடுப்ப இடையறுத்து ஒன்னார் ஒட்டிய செருப்புகல் மறவ” -மதுரைக் காஞ்சி 725-6 (நச்சி உரை: ‘மிக்கு வருகின்ற யாற்று நீரிடத்துக் கல்லணை நின்று தாங்கினாற் போல”) “வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை மீது அழி கடுநீர் நோக்கிப் பைய பைய” -அகம் 346 (உரை: வருத்தமுற்று இயற்றிய வலிய இடத்தினையுடைய வளைந்த அணையில்) இவ்வாறு சிறை என்ற தூய தமிழ்ச் சொல் நீரைத் தேக்க ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணையைக் குறிப்பதையும் அச்சொல் ரிக் வேதத்தில் ஏறியுள்ளதையும் சாமி நிறுவியுள்ளார். 24. “தாஸ்யோ ஹந்தன்” (தாசர்க் கொல்லி) ஆகிய இந்திரனால் கொல்லப்பட்டவர்களுள் ஹரியூபியாவில் இருந்த வரசிகனும் ஒருவன்; ‘ஹரியூபியாவில் இருந்த விரிசிவானுடைய முன்னணிப் படையைக் கொன்றும், பின் படை அஞ்சிச் சிதறச் செய்தும் வரசிகனுடைய பரம்பரையை அழித்து இந்திரன் சயமானன் மகன் அபயவர்த்தனனை ஆதரித்தான்’ - ரிக்வேதம் 6.27.5. இந்த ஹரியூபியா, ஹரப்பாவைக் குறிக்கலாம் என்று பி.பி.ராய் 1928 இல் தெரிவித்தார் (Journal of the Bihar and Orissa Research Society XIV - 25). 25. புறநானூறு 201 இல் இருங்கோவேளின் முன்னோர் 49 தலைமுறைக்கு முன் அதாவது “கழிபழங்காலத்தில்” செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு’ வந்ததாகக் கபிலர் குறிக்கிறார். அம்முன்னோர் ‘வடவான் முனிவன் தடவினுள்’ தோன்றி யவர்கள் அதாவது “வடக்கே கல்லால் அடியில் எழுந்தருளியுள்ள சிவன்” வழியினர். புறம் 202ல் அவனைப் ‘புலிகடிமால்’ என அழைத்து “இருபால் பெயரிய உருகெழு மூதூர்க் கோடி பல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய நீடு நிலை அரையம்” அவன் முன்னோருக்கு உரிமையாக இருந்து பின்னர் அழிந்ததைக் கூறுகிறார். அந்த அரையத்தின் சரியான பெயர் அரையகப்பா (அரையம் = அரசமரம்; பா - கோட்டை; அரைய + அகப்பா = அரையகப்பா - ஹரப்பா). பண்டைய அரப்பாவே அரையகப்பா என்பர் பி.எல்.சாமி (செந்தமிழ்ச் செல்வி சனவரி 1994). தமது தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் வேளிர் துவாரபதி (துவாரகை) யிலிருந்து வந்தவர்கள் என்கின்றார். அரையம் ஹரப்பாவைத் தான் குறிப்பதாகக் கொண்டால் ஹரப்பா பற்றியும் துவாரகை பற்றியம் கபிலர் காலத்தில் வழங்கிய (ஒரு நகருக்குரியதை மற்றதற்குரியதாக மாற்றி வழங்கிய) தொன்மக் கருத்தைப் புறம் 201, 202 பாடல்கள் கூறுகின்றன என்க. இதனை பூரணசந்திர ஜீவா மேலும் ஆய்வு செய்து, வேள்வேட்- பேட் (Bet) - பேட் துவாரகா என்பதே ‘துவாரகை’யின் பெயர் வரலாறு என்பர். 26. சுமேரிய நாகரிக முத்திரைகளில் சிங்கங்கள் இரண்டைக் கொல்லும் கில்காமெஷ் உருவம் காணப்படுகிறது. கில்காமெஷ் பற்றிய தொன்மக் கதையும் சுமேரியப் பொறிப்புகளில் தரப்படுகிறது. சிந்துவெளி முத்திரைகள் இரண்டில் (கில்காமேஷ் சிங்கங்களைத் தாக்குவது போலவே) இந்திய வீரன் ஒருவன் புலிகள் இரண்டை கைக்கு ஒன்றாகக் கொல்வது போல் சித்திரிக்கப்பட்டுள்ளான்.புறம் 201 இருங்கோவேளைப் ‘புலி கடிமால்’ என்று சுட்டுவது அம்முத்திரை களுடன் தொடர்புடையதாகலாம். இருங்கோவேளின் முன்னோர் காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என ஐ. மகாதேவன் Journal of Tamil Studies மே 1970 இதழில் உன்னித்திருந்தார். [தமது 9.10.2009 ஆய்வுரையில் அவர் புலிகடிமால் தொன்மத்தை பாபிலோனுக்குக் கொண்டு செல்லத் தேவையில்லை என்பர்] இத்தொன்மத்தின் தாக்கத்தைப் பிற்கால இந்தியத் தொன்மங்களிலும் (சகுந்தலை சிறுவன் பரதன் புலி, சிங்கங்களைக் கட்டிப் போட்டது போன்றவற்றிலும்) காணலாம் என்பார் அவர் இருங்கோவேள் வழி வந்தோர் இன்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பத்து கிராமங்களில் மொத்தம் சுமார் 50,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். (“Irunkovel and Kottai Velalar, the possible origins of a closed community” BSOAS 1969 II) சங்க கால வேளிருடைய முன்னோர் பண்டு வடநாடு சென்று வாழ்ந்து சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புள்ளவர்களாக இருந்து பின்னர் சுமார் கி.மு.1000க்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாடு வந்தவர்களாகலாம் என உன்னிப்பதற்கு வேளிர் தென்னாடு போந்தது பற்றிய நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரையும், 1920-ல் த. ஆறுமுக நயினார் பிள்ளை வெளியிட்ட ‘நற்குடி வேளாளர் வரலாறு’ ம் இடம் தருகின்றன. 27. சதபத பிராமணத்தில் (111.2.1.24) தேவர் - அசுரர் போரைப் பற்றிக் கூறும் பொழுது மிலேச்சர்களாகிய அசுரர்களுடைய ‘வாக்’ஐ (பேச்சை) தேவர்கள் நெருப்பிலிட்டு ஆகுதி செய்ததாகவும் அப்பொழுது அசுரர்கள் ‘ஹெலயோ! ஹெலயோ!” என்று கதறியதாகவும் கூறப்படுகிறது. அசுரர்களை நெருப்பிலிட்டுக் கொளுத்தியதையும் அவர்கள் மொழி நூல்களைக் கொளுத்தி யதையும் இது குறிக்கலாம் என்றார் செண்டுகே. சிந்துவெளித் தமிழர்கள் எழுதுவதற்கு (பனையோலை போன்ற) அழியும் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம்; அவை முற்றும் ஆரியரால் அழிக்கப்பட்டதனால் தான் இப்பொழுது (சில முத்திரைகள் தவிர) அவர்கள் எழுத்துகள் கிடைத்தில எனலாம். இத்தகைய அழிவு நிகழ்ந்திருக்கலாம் என்று ஜான் ஸ்பீயர்ஸ். 1957இல் கூறியிருந்தார். 28. ரிக்வேதம் முதலிய ஆரிய வேதங்களிலும் பிறவற்றிலும் தமிழ்ச் சான்றோர் ஆரிய மொழியில் இயற்றிச் சேர்த்த பகுதிகளும் விரவியுள்ளன என்ற மறைமலையடிகள், பிரிஸ்லஸ்கி, குஞ்ஞன் ராஜா, பர்போலா, ஆல்சின், வால்பர்ட் முதலியவர்கள் கருத்தை அறிஞர் செண்டுகேயும் விரிவாக ஆதரிக்கிறார். ரிக்வேதத்தில் இயற்கைத் தெய்வங்களை வருணிக்கும் பகுதிகள் பல வேதமொழியல்லாத (அசுரர்) மொழியில் அறிவர்களால் எழுதப்பட்டு இருந்திருக்க வேண்டும். பின்னர் அவையோ அவற்றின் தழுவல்களோ வேத ஆரிய மொழியில் எழுதப்பட்டு ரிக்வேதத்தோடு சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். சப்தரிஷிகளுமே அத்தகைய அறிவர்களாக இருக்கக் கூடும். ஆரியல்லாதார் (திராவிடர்) பலர் பெரும் அளவில் தொடக்கக் காலத்தில் பிராமணர் குலத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து பர்ஜிதர், குஞ்ஞன் ராஜா, கோசம்பி ஆகியோருக்கும் உடன் பாடானதே. “அசுரர்கள்” வேத ஆரியத்தில் நேரடியாகவும் சில பாடல்கள் எழுதிச் சேர்த்திருக்கக் கூடும். அக்கால கட்டத்தில் வேத மொழியில் சேர்ந்த பழைய (ஆரியமல்லாத) மொழிச் சொற்களுக்கான பொருள் காலப்போக்கில் மறந்துவிட்டதனால் அவற்றை விளக்க நிகண்டுகள் முதலியவற்றையே நம்ப வேண்டிய தாயிற்று. பிற்கால விளக்கங்களில் சரியானவை சில; தவறான கற்பனைப் பொருள் விளக்கங்களும் பல என்ற நிலைமை உருவாகியது. இது செண்டுகே கருத்து. இழந்துபட்ட பழந்திராவிட நூல்களின் மொழி பெயர்ப்புகள் வேத, புராணங்களின் பல பகுதிகளில் அமைந்துள்ளன என்பது ஹீராஸ் கருத்து. 29. சிந்துவெளி நாகரிக அகழ்வாய்வின் கண்டுபிடிப்புகள் சம்ஸ்கிருதப் பற்றாளர்களுக்கு கடும் அதிர்ச்சி தந்தது. மார்ஷல் ஆய்வு நூல் 1931ல் வெளிவந்தவுடனேயே வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (Journal of Madras university VI) வேதப் பண்பாட்டின் முன் வடிவம் சிந்து வெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்றும், வேதகால ஆரியர்களே (செம்பு - கற்கால) சிந்துவெளி நாகரிகத்தைப் படைத்தனர் என்றும் வினோதமான கருத்துக்களை வெளியிட்டார்! தொல்பழங்கால அகழ்வாய்வு ஆபத்து விளைவிப்பது, தவிர்க்கப்பட வேண்டியது என்ற கருத்தை ஆர்.சி. மஜும்தார் போன்ற பெரிய வரலாற்றிஞர்களே கொண்டிருந்ததை ராமச்சந்திர ஜெயின் குறிப்பிட்டுள்ளார். (ABORI XIII 1961). இத்தகையவர்களைப் பற்றி ஜான் கே என்பவர் (“Into India”; 1973) கூறுவது; ‘வடநாட்டினருக்கு குறிப்பாக சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு சிந்து வெளிநாகரிகம் திராவிடருடையது என்ற உண்மையை வரலாற்றறிஞர்கள் ஏற்றுள்ளது அறவே பிடிக்கவில்லை. உண்மையைத் திரிக்க அஞ்சாத தமது பழைய தன்மையின் படி “சிந்து வெளி நாகரிகம் ஆரியக் கலாசாரத்தின் பாற்பட்டதே” என நிறுவ “ஆராய்ச்சிகளை” மேற் கொண்டுள்ளனர். அவற்றுள் விரிவான ஒன்று: Feurstein Georg; Subhash Kak; and David Frawley 1995; In Search of the Cradle of Civilisation - New Light on ancient civilisation (Quest Books; Wheaton; III; U.S.A; pp 341; $25 30. கே.என்.சாஸ்திரி, புத்த பிரகாஷ், அம்ரித் பான்டே, பி.பி.லால், என்.ஆர். வரத் பாண்டே, கே.டி.சேத்னா (1992) எஸ்.ஆர் ராவ், ஸ்ரீகாந்த ஜி தலகிரி (1993) டாக்டர் என் ஜா(1995) பகவான்சிங் (1995) முதலியவர்கள் சிந்து வெளி நாகரிகம் ஆரியருடையது என்றும் சிந்து வெளி முத்திரை எழுத்துக்கள் ஆரிய வேதமொழி எழுத்துக்கள் என்று வலியுறுத்தியும் ஆய்வுகள் வெளியிட்டுள்ளவர்களாவர். இந்தோ ஆரிய மொழிபேசுநர் பரவல்பற்றிய வரலாற்றிலிருந்தே அவர்கள் கி.மு.2500-1700 இல் உச்ச நிலையில் இருந்த சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்களாக இருக்க முடியாது அல்லவா? எனவே மேற் சொன்னவர்கள். ரிக்வேதம் கி.மு.3000க்கு முந்தியது என்று கூறும் உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். இந்தோ - ஐரோப்பிய மொழிக குடும்ப மொழியியல் உண்மைகளை (கீழே பத்திகள் 35-42ஐக் காண்க.) மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு ஆரிய மொழி பேசுநர் இந்தியாவிலேயே தோன்றி மைய கிழக்கு நாடுகள், மைய ஆசியா, ஐரோப்பா ஆகிய இடங்களுக்குப் பரவினர் என்பதும் அவர்கள் விதண்டாவாதம். சிந்து நாகரிகச் சின்னங்களில் ஆரியருக்கு நெருக்கமான குதிரை இல்லை என்பதை அவர்கள் கண்டு கொள்வதில்லை. கால்டுவெல், மார்ஷல், ஹீராஸ், வீலர் போன்றவர்கள் உண்மையைக் கூறி விட்டதற்காக அவர்களைத் துவஷேங்கொண்டு தூஷிக்கவும் இவர்கள் தயங்குவதில்லை. 31. சிறந்த இந்திய வரலாற்றறிஞர் எனக் கருதப்பட்டுள்ளவர்கள் கூட சிலர் சிந்து நாகரிகம் திராவிடருடையது என்ற உண்மையை ஏற்கவோ அதற்கு முதன்மைதரவோ முன்வருவதில்லை. An Advanced History of India என்னும் நூலில் (1945; 4ம் பதிப்பு 1988) வரலாற்றுக்கு முந்திய காலம் பற்றிய இரண்டாம் இயலை எழுதிய ஆர்.சி. மஜும்தார் உண்மையைத் தெளிவாகக் கூறத் தயங்குவதைக் காணலாம். எனினும் ரோமிலாதாபர் (2002) Early India from the origins to A.D. 1300 நூலில் தெளிவாக “இந்தோ - ஐரோப்பிய (வேத, சமஸ்கிருத) மொழிபேசுநர் இந்தியாவில்தான் தோன்றினர் (பின்னர் இங்கிருந்து மேற்கு, வடமேற்காகப் பரவினர்) என்று நிறுவச் சிலர் முயல்கின்றனர். ஆனால் சான்றுகளோ அதற்கு நேர்மாறான முடிவையே ஆதரிக்கின்றன என்பதைக் கூறியுள்ளார்.” (As regards the current attempts being made by some enthusiasts to prove the indigenous origin of the Indo-European speakers.... the evidence points to the contrary.) 32. ஆக, கி.மு.2000-1500 கால அளவில் வேதமொழி பேசிய இந்தோ - ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்ததன் தாக்கத்தால் சிந்து நாகரிக நகரங்கள் (அவை ஏற்கெனவே ஆரியர் வருமுன்னரே நலிவடையத் தொடங்கியிருக்கலாம்) முழுமையாக அழிவுற்றன வெனினும் வடநாடு முழுவதும் கிராமங்கள் தோறும் பரவியிருந்த சிந்து நாகரிகத்தின் அடிப்படைப் பண்புகளை ஆரியர் அழிக்க இயலவில்லை. அப்பண்புகளை ஆரியரும் நாளடைவில் ஏற்று இந்தியத் தொல்குடியினருடன் கலந்துவிட்டனர். வந்த ஆரியர் எண்ணிக்கையும் ஏற்கெனவே வடமேற்கு இந்தியாவின் (திராவிடத்) தொல் குடியினர் எண்ணிக்கையை விட மிகக் குறைவானதாகவே இருந்திருக்க வேண்டும். எனவேதான் கி.மு.1500க்குப் பின்னர் நாம் இந்தியாவில் இன்று வரைக் காணும் இந்து நாகரிகம், பண்பாடு, சமயம், கலை ஆகிய அனைத்தும் நூற்றுக்கு 75 விழுக்காட்டுக்கு மேல் தமிழிய (திராவிடச்) சார்பானவையாகவே உள்ளன என்பதை மேலே முதல் இயலிலேயே கண்டோம். 33. ஆரியர் நுழைந்த பின்னர் வடஇந்தியாவில் வழங்கி வந்த திராவிட மொழிகள் மெதுவாக நலிவுற்றனவெனினும் அம்மொழி பேசிய மக்கள் வட இந்தியாவில்தான் தொடர்ந்து வாழ்ந்தனர். ‘திராவிடர் உறவு முறை’ (1981) நூலில் டிராட்மன் கூற்றைக் காண்க: “இந்தியாவுக்குள் நுழைந்த இந்தோ ஆரிய மொழி பேசும் ஆரியர்களை விடப் பெரும் எண்ணிக்கையில் தொல்குடியினர் சிந்து வெளியில் மிகப் பெரும் பரப்பில் இருந்த நகர நாகரிகத்தினர் உட்பட - இருந்தனர். ஆரியர் நுழைந்து தாங்கள் தங்கள் ஆதிக்க ஆட்சியை (வடமேற்கு இந்தியாவில்) அமைத்த பொழுது தொல் குடியினர் தொடர்ந்து அவரவர் இடத்தில் இருந்தனர். வட இந்தியப் பகுதியில் வாழ்ந்து வந்த தொல்குடியினர் இந்தோ ஆரிய மொழி பேசுவோருடைய அரசியல், பொருளாதார; சமயத்தாக்கத்தின் கீழ் வந்து, சிலகாலம் இரு மொழி (தமது தொன் மொழியாகிய தமிழிய மொழி - மற்றும் ஆரியர் மொழி) பேசுவோராக இருந்து நாளடைவில் தம் தொன்மொழியைக் கைவிட்டு ஆரிய மொழியைக் கைக்கொண்டனர். வட இந்திய மக்களில் பெரும்பான்மையினராக இருந்த திராவிட மொழி பேசுவோர் தென் இந்தியாவுக்குச் சென்று விட்டதாகக் கருத இடமில்லை. ஆரிய வருகைக்கு முன்னர் இந்தியாவெங்கும் பரவியிருந்த திராவிட மொழிகள் அவ்வருகைக்குப் பின் வட இந்தியாவில் நலிவுற்றன என்பதே நடந்திருக்கக் கூடியது’. வேதமொழியிலும் சம்ஸ்கிருதத்திலும் ஏறியுள்ள தமிழிய மொழிச் சொற்கள் 34. ரிக்வேதத்திலேயே பல திராவிடச் சொற்கள் ஏறி விட்டன பரோ தமது 1945, 1946, 1948- கட்டுரைகளில் சம்ஸ்கிருதச் சொற்கள் ஏறத்தாழ 500 (ரிக்வேதத்திலேயே ஏறியுள்ள சுமார் 200 சொற்கள் உட்பட) தமிழிய மொழிகளிடமிருந்து கடன் பெற்றவை என்று நிறுவினார். அவற்றுள் 85 சொற்களை மட்டும் தமதுசம்ஸ்கிருதமொழி (1973) நூலில் எடுத்துக்காட்டாகக் குறித்துள்ளார். அவற்றுள் சிலவற்றை எமெனோ தனது 1954, 1971 கட்டுரைகளில் வழி மொழிந்துள்ளார். [பரோ, எமனோ சுட்டிய இச்சொற்களில் சில கால்டுவெல்லின் 1856 பட்டியலிலேயே இருந்தவைதாம்.] ட,ள,ண போன்ற வளைநா retroflex ஒலியன்களும் திராவிட மொழியிலிருந்து ரிக் வேதமொழியில் ஏறியவையே. ரிக் வேதத்தில் ஏறிய தமிழ்ச் சொற்களாக பரோ குறிப்பவற்றுள் உலுகல (உலக்கை) கடுக (கடுகு) குண்ட (குழி), கள (களம்), பல (bala), பில (bila - விளவு / பிளவு), மயூர (மயில்) போன்றவையும் அடங்கும். [தமிழே முதல் தாய்மொழி என்ற அடிப்படையில் பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரே முந்து - இந்தோ ஐரோப்பிய மொழியில் ஏறிவிட்டவையும் தொல் தமிழோடு இயைபானவையுமான சொற்களிலிருந்து ரிக்வேத மொழியில் இறங்கிய தமிழ்ச் சொற்களை இக்கணக்கில் சேர்க்கவில்லை. அவ்வாறு இறங்கிய சொற்களையும் தமிழிய இலக்கணக் கூறுகளையும் அடுத்து வரும் பத்திகளில் காண்க. 35. ஆரிய என்னும் சொல்லே அருமை ஆரி (“ஆரிப்படுகர்”: மலைபடுகடாம் 161) ஆரியன் (=மேலோன், உயர்ந்தோன்) என வடமேற்கு இந்தியாவில் பண்டு நிலவிய தொல் தமிழ்ச் சொல் ஒன்றிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்பர் பாவாணர். (“வடமொழி வரலாறு” 1967; பக் 24) என்னை? கி.பி.1800க்கு சில நூற்றாண்டுகள் முன்னர் இருந்து தமிழகக் குறுநில அரசர், தலைவர்களைக் குறித்த துரை என்னும் சொல் 1800க்குப் பின் பெரும்பாலும் ஆங்கிலேயர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியதன்றோ. இது போன்றே கி.மு.2000 ஐ ஒட்டியும் நிகழ்ந்தது என்க. (இரான்அவெஸ்தா மொழியிலும் “ஆர்ய’ இந்தோ ஐரோப்பிய மொழிச் சொல் அல்ல இந்தோ ஐரோப்பிய மொழி அல்லாத மொழியிடமிருந்து கடனாகப் பெற்றது என்பது ஒ.செமரென்யி (O.Szemerenyi) முடிவாகும்.) “வேதம்” என்னும் சொல்லுக்கே வேர் ‘மூடுதல், மறைத்தல்’ என்னும் பொருள் கொண்ட வே - வேய் என்னும் தமிழ் வேர்ச் சொல்தான் என்பது மறைமலையடிகள் மற்றும் பாவாணர் கருத்து ஆகும். 36. ஞா.தேவநேயன் 1931 சூன் - சூலை செந்தமிழ்ச் செல்வி கட்டுரையிலேயே ‘மாந்தன் முதலில் பேசிய மொழி தமிழேயாதல் வேண்டும்’ என்றார். பின்னர் 1940 - இல் வெளிவந்த ஒப்பியன்மொழி நூலில் தமிழ் உலக முதற்பெருமொழியாயிருக்கலாம் என்றார் பாவாணர். 1949இல் எழுதி 1953 இல் அச்சேறியமுதல் தாய் மொழியில் “அம்மூலமொழிகளுள் முதன்மையானது தமிழே” என்றார். பின் 1981 சனவரி வரை வந்த பல்வேறு நூல்களிலும் பாவணர் ‘தமிழே திராவிடத் தாய், ஆரியத்திற்கும் மூலம்: தமிழே உலக முதன்மொழி’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார். 37. வடமொழி வரலாறு (1967) நூலின் பக்கங்கள் 63-269-ல் “வடமொழிப்புகுந்த தென் சொற்கள் என்ற பகுதியிலும் The Primary Classical Language of the World (1966) பக்கங்கள் 224-269 லும் மேலும் ஏராளமானவற்றின் பட்டியலை பாவாணர் தந்துள்ளார் - கால்டுவெல், பரோ போன்றவர்கள் ஏற்கெனவே கண்ட சொற்கள் பலவும் அவற்றுக்கும் மேலாக பாவாணர் தாமே கண்ட சொற்கள் பலவுமாக. மேலும் தென்சொல் மூலத் திரிசொற்கள், தென் சொல்லடிப்புணர்ப்புச் சொற்கள், தமிழிலிருந்து மொழிபெயர்த்துக் கொண்ட சொற்கள் (calx); இருபிறப்பிகள் (hybrids); வடவர் போலியான சம்ஸ்கிருதவேர் காட்டும் சொற்கள்; பல்வகைத் திரிப்புகளால் “வடசொற்கள்” எனச் சாதித்த சொற்கள்; தமிழ்ச் சுட்டுச் சொற்கள் / வினாச் சொற்களைப் பின்பற்றி வடமொழியில் உருவான சொற்கள்; முதலியவை பற்றி அந்நூலின் பக்கங்கள் 269-290ல் காணலாம். வடமொழிச் சொற்களுள், குறைந்த அளவு ஐந்திலிருபகுதி தமிழென்பர் பாவாணர் (வடமொழி வரலாறு : பக்கம் 294) ஸ்தீபன் ஹீல்யர் லெவிட் தமது (2000) கட்டுரையில் பாவாணர் ஆய்விற் கண்ட பல (தமிழ் – இந்தோ ஐரோப்பிய / ஆரிய ஒப்புமைகள் ஏற்கத்தக்கனவாகும் (reasonable and very perceptive) என்கிறார். (இவரே மேலைநாட்டு மொழியியல் அறிஞர்களுள் முதன்முதலாகப் பாவாணர்கருத்துக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அவற்றுள் பல ஏற்கத் தக்கவை என்று கூறியவர் ஆவார். மேலும் தமது IJDL 2013 சூன் “Indo - European and Dravidian - some considerations” கட்டுரையில் பல அடிப்படையான தமிழிய மொழிக் கூறுகள் இந்தோ - ஐரோப்பிய நிலையிலும் அதற்கு முந்திய நாஸ்திராதிக் நிலையிலும் ஏறிவிட்டன என்பதை லெவிட் நிறுவியுள்ளார். இலக்கணக் கூறுகள் 38. திராவிட மொழிகளின் பின்வரும் இலக்கணக் கூறுகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் மூல மொழியின் அத்தகைய இலக்கணக்கூறுகளின் அளவுக்கு கழிபழந் தொன்மை வாய்ந்தவை என்பதையும் கால்டுவெல் 1856 லேயே உணர்த்தினார். தமது நூலின் பக்கங்கள் 149-151 பக்கங்களில் தமிழிய மொழிகளிலிருந்துதான் சம்ஸ்கிருதம் ட், ன, ண் முதலிய வளை நாஒலியன்களை (Retroflex ./ Lingual / Cerebral), அவ்வொலியன்களைக் கொண்ட தமிழ்ச்சொற்கள் பலஉட்படக், கடன் பெற்றது என ஆணித்தரமாக நிறுவினார். மேலும் அவர் தமது ஒப்பிலக்கணத்தின் 1875-ம் ஆண்டு இரண்டாம்பதிப்பில் “வட இந்திய மொழிகள் சம்ஸ்கிருதத்திலிருந்து மாறுபட்டுள்ளன; அவ்வாறு மாறுபட்ட தன்மைகள் பெருமளவுக்கு இந்தோ ஆரியமல்லாத (திராவிட) மொழிகளைச் சார்ந்தவை’ (The direction into which those vernaculars have been differentiated from Sanskrit has to a considerable extent been non - Aryan) என்றார். 39. இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து கடன் பெறப்படாதவையும், என்றாலும் அம் மொழிகளின் தொல்பழங் காலத் தன்மைகளையொத்தனவாக இருப்பனவும், ஆன பின்வருவனவற்றை இன்றும் திராவிட மொழிகள் கொண்டுள்ள என்பதையும் கால்டுவெல் நிறுவினார். [அதாவது இக்காலமொழியியல் நடையில் கூறுவதானால், தொல் இந்தோ - ஐரோப்பிய மொழித்தன்மைகளைத் திராவிட மொழிகள் தாமாகவே (அதற்கு முன்னரே) கொண்டுள்ளதை நிறுவினார்.] (1) ஒலிப்பு எளிமை, இனிமைக்காக ‘ந’வின் பயன்பாடு – கிரேக்க மொழியில் உள்ளது போல (2) படர்க்கையிடப் பிரதி பெயர்களிலும் வினைச் சொற்களிலும் பால் வேறுபாடு இருப்பது - குறிப்பாக பொதுப்பால் இருப்பது. (3) சுட்டுப் பிரதிப் பெயர்களிலும், படர்க்கைப் பிரதி பெயர்களிலும் பொதுப்பால் ஒருமையைக் காட்ட d, த் பயன்பாடு. (4) லத்தீனில் உள்ளது போல பொதுப்பால் பன்மையைக் காட்ட அ பயன்பாடு (5) சேய்மைச் சுட்டுக்கு அ; அண்மைச் சுட்டுக்கு இ பயன்பாடு (6) பெர்சியன் மொழியிற்போல, பெரும்பாலும் இறந்த காலத்தைக் காட்ட த் பயன்பாடு. (7) வேரில் ஒரு ஒலியனை இரட்டித்துச் சில சொற்களில், இறந்த காலத்தைக் காட்டுதல். (8) வினைச் சொல்லில் ஓர் உயிரெழுத்தை நீட்டி ஒலித்து வினையாலணையும் பெயர்களை அமைத்தல். ““Primitive underived Indo-Europeanisms discoverable in the Dravidian languages (in current parlance: ‘proto-Indo European features derived from Dravidian”):- 1. The use of n, as in Greek to prevent hiatus. 2. The existence of gender in the pronouns of the third person, and in verbs and in particular the existence of a neuter gender. 3. The use of d or t as the sign of the neuter singular of demonstrative pronouns or pronouns of the third person. 4. The existence of a neuter plural, as in Latin, in short a. 5. The formation of the remote demonstrative from a base in a; the proximate from the base in i. 6. The formation of most preterites, as in persian by the addition of d. 7. The formation of some preterites by the reduplication of a portion of the root. 8. The formation of a considerable number of verbal nouns by lengthening the vowel of the verbal root.” “இந்தியா ஒரு மொழியியற்புலம்” ஆய்வாளர்கள் திராவிட மொழிகளிருந்து இந்தோ ஆரிய மொழிகளுக்குச் சென்றுள்ளனவாகக் கருதும் இலக்கணக் கூறுகளும், மொழியியல் கூறுகளும்: 40. இந்திய மொழிக் குடும்பங்களிடையே பொதுமை குறித்து முதன்முதலில் விரிவாக 1956 இல் (Language 32; பக்2-16) “இந்தியா ஒரு மொழியியற் புலம் India as a Lingustic Area என்னும் கட்டுரையில் எழுதியவர் எமெனோ, இந்தியாவில் உள்ள தமிழிய, இந்தோ ஆரிய, முண்டா இன மொழிகளிடையே பொதுமைக் கூறுகள் (பெரும்பாலானவை தமிழிய மொழிகளிடமிருந்து பிறவற்றுக்குப் பரவியவை) உள்ளதை அக்கட்டுரை நிறுவியது. இக்கோட்பாட்டின் கரு வெகு முன்னரே உருவானது. (1788லேயே சர்வில்லியம் ஜோன்ஸ்) இந்தி முதலிய வட இந்திய மொழிகளின் இலக்கணக்கூறுகள் இந்தோ ஆரியமொழிக் குரியவையல்ல (அப்பொழுது “தமிழிய மொழிக் குடும்பம்” பற்றி மேனாட்டறிஞருக்கு தெரியாது) என்று கூறியுள்ளார்: (Regarding modern Indo - Aryan Languages): ‘and this analogy might induce us to believe, that the pure Hindi, whether of Tartarian or Chaldean origin, was primeval in upper India, into which the Sanskrit was introduced by conquerors from other kingdoms in some very remote age” 41. தமிழிய மொழிகளிலிருந்து வேதமொழி, சம்ஸ்கிருதம் வட இந்திய (இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினவாகக் கருதப்படும்) மொழிகள், ஆகியவற்றின் ஏறியுள்ள ஒலியனியல், இலக்கணவியல் மொழியியல் கூறுகள் பலவற்றை எமனோ தமது 1956 கட்டுரையில் நிறுவினார். i) ஒலியனியல்: ட;ள (ரிக் வேதத்தில்), ண ஆகிய வளை நாவொலிகள் (retroflex/cerebral/domal தமிழிய மொழிகளிலிருந்து கடன் பெற்றவை. அவ்வொலிகளைக் கொண்ட சொற்களைத் தமிழிலிருந்து கடன் பெற்ற பின், ஒலிகளையும் வண்ணமாலையில் சேர்த்தனர். ii) வினையெச்சம் (gerund/absolutive/incomplete verb/past nonfinite verb/converb/indeclinable participle/ adverbial participle / past participle (Jothimuthu), Conjunctive Participle (Grierson) ரிக்வேத காலத்திலேயே ஏறிவிட்டது. iii) நேர் கூற்று முடிந்தவுடன் “என” என்று தமிழில் வருவது போல் (“தன் செய்வினை முடித்தெனக் கேட்பல்” புறநானூறு 27:9-10) சம்ஸ்கிருதத்தில் கூற்றுக்குப் பின்னர் “இதி” iti (= இப்படிக் கூறினார்) என வருதல். iv) எதிரொலிச் சொற்சகள் (echo words) “புலி கிலி” போன்றவை. v) ஒலிக்குறிப்புச் சொற்கள்-சளசள, பட பட போன்றவை vi) ஓடு, ஓட்டு, ஓட்டுவி; நட, நடத்து, நடத்துவி போன்ற, வாய்பாட்டு (simplex, causative, causative of causative) வினை வடிவங்கள். vii) எமெனோ 1974 கட்டுரை: தமிழ் உம் பயன்பாடு போன்ற, சமஸ்கிருத அபி api ஐ பயன்படுத்துதல். viii) மேலது கட்டுரை: திராவிட உறவு முறைச் சொற்களிலும் சரி இந்தோ ஆரிய உறவுமுறைச் சொற்களிலும் சரி பெரும்பாலும் தொழிலைக் குறிக்கும் சாதிப்பெயர் ஆணுக்கு உள்ளது. ஆனால் பெண்ணைக் குறிக்கும் பொழுது இந்தச் சாதிக்காரனுடைய மகள்/ மனைவி/தாய்/பிற உறவு என்ற அளவிலேயே அமைந்து விடுகிறது. 42. முன் பத்தியிற்கண்ட செய்திகளை காலின்மாசிகா தமது Defining a Linguistic Area: South Asia (1976) நூலில் விரிவாக விளக்கியுள்ளார். தமிழிய மொழிகளை யொட்டிய மாற்றங்களே இந்தோ ஆரிய மொழிகளில் ஏறியுள்ளன என்பது அவர் கருத்து “(India) is a fairly stable typological area where the brunt of the burden of adaptation is borne by intrusive rather than local languages.” 43. பாவாணருடைய வடமொழி வரலாறு (1967) 295-321 பக்கங்களில் இலக்கணவதிகாரம் என்னும் பகுதியில் பின்வரும் இலக்கண/மொழியியல் கூறுகளை வேதமொழியும் சம்ஸ்கிருதமும் தமிழிய மொழிகளிடமிருந்தே கடன் பெற்றுள்ளன எனத் தெளிவாக நிறுவுகிறார். எழுத்தியல்: 1. வண்ணமாலை (தமிழிய மொழினயயொட்டி உருவாக்கிக் கொண்டது. 2. ஒலியும்பிறப்பும் 3. எழுத்துச்சாரியை 4. எழுத்துவைப்பு முறை, 5. எழுத்தொலிமாத்திரை / அளபு 6. எழுத்துவடிவம் 7. புணர்ச்சி. சொல்லியல்: “வடமொழி வேற்றுமையமைப்பும் தமிழைத் தழுவியது”; “வடமொழி திரிமொழியாதலின் அதன் வினைகட்கு வேர்ச்சொற்கள் அம்மொழியில் இல்லை. அவைபெரும்பாலும் இயல்மொழியாகிய தமிழில் தான் உள்ளன.” (தாது பாட வேர்களின் தன்மை பற்றி ஏற்கெனவே மேலே கண்டோம்). குறிப்புச் சொற்கள் - அசைகள்; இணைப்பிடைச் சொல் (உம்-உந்து-skt உத்த; OE,Eng and ) சுட்டு/வினாச்சொற்கள், வினையெச்சம் தொடரியல்: தொகைச் சொல் (ஸமாஸ); சொற்றொடர் வரிசை (“பெரும்பாலும் தமிழ் முறையை ஒத்ததே”) 44. பாவாணர் 1966 இல் வெளியிட்ட The Primary Classical language of the World பக்கங்கள் 279-286ல் தமிழிலிருந்து இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஏறியுள்ள (முன்னொட்டுகள், பின்னொட்டுகள், சுட்டுகள், வினை ஈறுகள் முதலிய) மேலும் பல மொழியியல், இலக்கணக் கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். 45. “இந்தியாவிற்குள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழைப்பிரிவினரான இந்தோ-இரானியமொழி பேசுநர் கி.மு. 1500 ஐ ஒட்டி வடமேற்கு இந்திய பகுதிக்கும் சிந்துப்பகுதிக்கும் வந்தபின்னர் வேத/சமஸ்கிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம்” என்ற அளவுடன் நில்லாமல் அதற்கும் முந்தைய நிலைகளை ஆய்வு செய்த ஞானப்பிரகாசர் - தேவநேயர் கோட்பாடுகளின்படி மூல இந்தோ-ஐரோப்பிய (என் மூல நாஸ்திராதிக் - காண்க லெவிட் 2013) மொழியின் அடிப்படை வேர்ச்சொற்கள் பலவும் கூட ஆதியில் தொல்தமிழிய (தொல்திராவிட) மொழியிலிருந்து (கி.மு.10000க்கும் முன்னர்) பெற்றவை என்னும் வாதத்தையும் மனதிற் கொள்ள வேண்டும். இயல் 9 சிந்து நாகரிக எழுத்துப் பொறிப்புகளை வாசித்தல் முன் இயல்களில் இருந்து சிந்து நாகரிகம் தமிழிய நாகரிகமே என்பதும், அந்நாகரிகத்தினர் தமிழிய மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்பதும், தெற்றென விளங்கும் – இதே முடிவை அண்மையில் இடப்பெயராய்வு அடிப்படையிலும் (2010) ஆர்.பாலகிருஷ்ணன் வலியுறுத்துவதைப் பின்வரும் பத்தியில் காண்க. அந்நாகரிக எழுத்துப பொறிப்புகளை வாசிக்கக் கடந்த 80 ஆண்டுகளில் நடந்துள்ள முயற்சிகளைப் பற்றியது இவ்வியல் ஆகும். அவ்வாறு வாசித்த அறிஞர்கள் ‘அப்பொறிப்புகள் தமிழிய மொழியே’ என்பதைத் திட்டவட்டமாக நிறுவியுள்ளதும் ஆங்காங்கு இடம் பெறும். 2. இவ்வெழுத்துப் பொறிப்புகளை வாசிப்பவர்கள் யாராயினும் பின்வரும் அடங்கல்களைப் பயன்படுத்தியாக வேண்டும்:- ஐ.மகாதேவன் 1977. The Indus Script: Text, Concordance and tables. அஸ்கோ பர்போலா Corpus of Indus seals and Inscriptions:- 1981 மடலம் 1. இந்தியாவில் உள்ளவை (பர்போலா & ஜகத்பதி ஜோஷி) 1991 மடலம் 2 : பாகிஸ்தானில் உள்ளவை (பர்போலா & S.G.M ஷா) (பகுதி 1) (மொகஞ்சொதரோ, ஹரப்பா) 2001 மடலம் 3:1 ஏனையவை (புதியவை உட்பட) (பர்போலா, பாண்டே முதலியோருடன் சேர்ந்து); 3:2 அனைத்துத் தலங்களிலும்) 1994 (b) Deciphering the Indus Script கிரிகரி எல். பொசல் 1996ல் எழுதிய Indus Age: The writing system பக் 244 (University of Pennsylvania Press) நூலில் இதுவரை நடந்துள்ள வாசிப்பு முயற்சிகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. 3. இந்த 3000 பொறிப்புகளைக் கொண்ட முத்திரைகள், செப்புத்தகடுகள், பானை ஓடுகள் போன்றவற்றின் வகைப்பாடு வருமாறு. (தொடக்க நிலை சிந்து நாகரிகக் காலத்தில், கி.மு. 3200- 2600, சிந்து நாகரிக மொழிக்கு வரிவடிவம் உருவாகவில்லை என்பர் பொசெல் (2002:51) மொகஞ்சொதரோ ஹரப்பா பிறஇடங்கள் மொத்தம் முத்திரைகள் 1232 350 232 1814 முத்திரைப்பதிப்பு (Sealings) 119 288 104 511 செப்புவில்லை 135 - - 135 செப்புக்கருவி 5 3 3 11 பானை ஓடு முதலியவை 49 344 42 435 1540 985 381 2906 முத்திரைகளைப் பதித்தால் கிடைக்கும் வாசகங்களை வலம் இருந்து இடம் ஆக L <- R, ஹீபுரு, அரபி போன்று, படிக்க வேண்டும் என்பது பெரும்பாலான அறிஞர்கள் (ஹண்டர், ஹீராஸ், பர்போலா, சாலெக் மகாதேவன், பூரணச்சந்திர ஜீவா) கருத்து ஆகும். இரா. மதிவாணன் முத்திரை வாசகங்களை இடமிருந்து வலமாகப் L-> R, படிக்கிறார். கீழே இதுபற்றி மேலும் சில செய்திகளைக் காணலாம். ஆண்ட்ரு ராபின்சன் தமது 2001 நூலில் முத்திரை வாசகங்களின் (கணினிவழி) வகைப்பாட்டு ஆய்வு, தொல்லியல், தொன்மைப் பண்பாட்டுப்புலமை, பண்டைய வரிவடிவங்களைப் பற்றிய அறிவு ஆகியவை மட்டுமன்றி மொழியறிவும் [சிந்து முத்திரைகளைப் பொருத்தவரை பழந்தமிழிலக்கிய இலக்கணங் களில் - தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு - புலமை] உடையவர்களே சிந்துவெளி முத்திரை வாசகங்களை வாசிக்க வல்லவர்’ என்று செப்பியுள்ளதைக் கருத்திற் கொள்க. 4. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகள் மூவாயிரத்தில் பெரும்பாலானவை, ஸ்டீயட்டைட் (சவர்க்காரக்கல் அதாவது மாக்கல்) முத்திரைகளிலும் ஏனையவை பானை ஓடு, செப்புத் தகடுகள் போன்றவற்றிலும் உள்ளவை. ஒவ்வொரு முத்திரையும் சுமார் 20 மி.மீ. X 30 மி.மீ. அளவுள்ளது. சில சதுரமானவை. பெரும்பாலானவற்றில் ஒரு விலங்கின் உருவமும் அதன் மேற் பக்கத்தில் ஒன்றிலிருந்து பத்துப் பன்னிரண்டு (சராசரி 5) குறியீடுகளும் உள்ளன. மிக நீண்ட தொடரானது 26 குறியீடுகள் கொண்டது. சிந்து வெளியிலிருந்து பருத்தித் துணி போன்றவற்றை சுமேரியா போன்ற மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்பொழுது சிப்பங்கள் கட்டி அவற்றின்மேல் பொருளுக்குரியவர் பெயரைக் களிமண்ணில் முத்திரையிட இம் முத்திரைகளுள் பெரும்பாலானவை பயன்பட்டிருக்கலாம் என்பதே சிறந்த ஆய்வறிஞர்கள் கருத்து. வீலர், ஹண்டர், காட் (Gadd), கோசம்பி, கோ (Coe) ஆகியோர் இந்த அடிப்படையில்தான் முத்திரைக் குறியீடுகளில் உள்ளவை தனி ஆட்களின் பெயர்களாகத்தான் (சில நேர்வுகளில் பட்டங் களுடன்) இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சிப்பத்தைக் கட்டிய கயிறு, பாய் இவற்றின் சுவடுகள் சில களிமண் கட்டிகளில் காணப்படுகின்றன. (சில கட்டிகள் ஒரோ வழி நெருப்பின் வாய்ப்பாட்L -> Rடப்பட்டதால் அவை மட்டுமே இன்று கிடைக்கின்றன. அவற்றில்தான் இவ்வடையாளங்கள் தெரிகின்றன) ஆக, ஆல்சின் (1988) கூறுவது போல் ‘இம் முத்திரைகளின் பயன்பாடு (அல்லது பயன்பாடுகளில் ஒன்று) வாணிக நடவடிக்கைகள் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை” (There can be little doubt that the Harappan seals were – at least as one of their functions - necessary elements in the mechanism of trade.p. 185.) சில முத்திரைகள் தாயத்துக்களாகவும் நேர்த்திக்கடன் வில்லைகளாகவும் அடையாள இலச்சினைகளாகவும் பயன் படுத்தப்பட்டு இருக்கலாம். 5. பல முத்திரைகளில் (ஒற்றைக் கொம்பு மட்டும் தெரியும்) எருது ஒன்றின் முன்னர் என்ற வடிவம் உள்ளது. மகாதேவன் கருத்து (1985, 1084) இவ்வடிவம் சோமச்சாறு வடிக்கப்பட்ட ஏனம்; பின்னர் சோமச்சாறு ஆரியர்களாலும் முக்கியமானதாக ஏற்கப்பட்டது என்பதாகும். பிற்காலத்தில் இவ்வடிவம் இந்திரத் வஜம் ஆனது. அளக்குடி சீதாராமன் கரூரில் கண்டெடுத்த செப்பு முத்திரையிலும் இந்த வடிவம் உள்ளது என்பர் மகாதேவன். 6. சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் ஏறத்தாழ 400 அளவில் உள்ளன. (பர்போலா 385, மகாதேவன் 417). 2906 முத்திரை வாசகங்களில் கண்ட குறியீடுகளை மகாதேவன் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்: குறியீடு ஒவ்வொன்றும் மொத்தம் மொத்தத்தில் எத்தனை அவை விழுக்காடு தடவை எத்தனை தடவை வருகின்றன 1 100ம் அதற்கு மேலும் 1395 10.43 1 999-500 649 4.85 31 499-100 6344 47.44 34 99-50 2381 17.81 86 49-10 1833 13.71 152 9-2 658 4.92 112 ஒரே தடவை 112 0.84 417 13,372 100.00 எண்பது விழுக்காடு தடவைக்கு மேல் வரும் குறியீடுகள் 67 மட்டுமேயாகும். (பாதிக்கு மேற்பட்ட குறியிடுகள் ஒவ்வொன்றும் பத்து தடவைக்கும் குறைவாகவே வருகின்றன. அவற்றுள்ளும் 112 ஒவ்வொன்றும் ஒரு தடவையே வருகிறது). ஆக, இந்த 67 குறியீடுகளுக்கும் முதன்மை தந்து வாசிக்க முற்படுவது நல்லது என்கிறார் மகாதேவன். மொத்தம் சுமார் 400 குறியீடுகளில் அடிப்படைக் குறியீடுகள் 20 என்பது பர்போலா கருத்து. 7. இம்முத்திரைப் படங்கள் சிலவற்றை மார்ஷல் “இல்லஸ்டிரேடட் லண்டன் நியூஸ்” 20.9. 1924 இதழில் வெளியிட்டார். அச் சஞ்சிகை 4.10.24 இதழில் சி.ஏ.காட், சிட்னி ஸ்மித் ஆகியோர் சிந்து வெளி - சுமேரிய நாகரிகங்களின் தொடர்பு பற்றிக் கட்டுரை வெளியிட்டனர். சுமேரியர்கள் ஆரியர்களே என்ற தவறான கருத்துடைய எல்.ஏ.வாடெல் சிந்துவெளி மக்களும் ஆரியர்கள் எனத் தவறாக உன்னித்து, இம்முத்திரை வாசகங்களில் உள்ளவை வேத, இதிகாச காலத் தெய்வங்கள், ரிஷிகளின் பெயர்கள் என்று 1925 ல் நூல் வெளியிட்டார். 1931ம் ஆண்டு வெளியான மார்ஷல் ஆய்வு நூலில் சிந்துவெளி நாகரிகம் ஆரியருடையது அன்று என மார்ஷல் நிறுவியிருந்த போதிலும், எழுத்து பற்றி அந்நூலில் ஒரு இயல் எழுதிய லாங்டன், இவ்வெழுத்துக்கள் இந்தோ ஆரிய மொழி என்று தக்க ஆதாரமின்றிக் குறிப்பிட்டார். (அசோக பிரமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளிலிருந்து தோன்றியவை; சிந்து வெளிக் குறியீடுகள் ஓரசைச் சொற்கள்; என்பன போன்ற ஏற்கத்தக்க கருத்துக்களையும் லாங்டன் கூறியிருந்தார்). பிரான் நாத் போன்ற பிறரும் பின்னர் அவ்வழியே சென்று இழுக்கினர். இவ்வியலின் இறுதிப்பகுதியைக் காண்க. 8. பசிபிக் பெருங்கடல் நடுவேயுள்ள ஈஸ்டர் தீவில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த மரப்பலகைகளில் செதுக்கப் பட்டுள்ள எழுத்துக்களுக்கும் சிந்து எழுத்துக்களுக்கும் உறவு உண்டு என்று டி ஹெவெசி 1933-ல் ஒரு கட்டுரை வெயியிட்டார். இக் கருத்து தவறானது என இன்று அனைவரும் ஒதுக்கிவிட்ட கருத்து. 9. இன்றும் இந்திய நாகரிகத்தின் பெரும்பகுதிக்கு அடிப்படையாக உள்ள (தமிழிய) சிந்து நாகரிகப் பண்பாட்டுடன் சிறு அளவுக்கு இந்தோ-ஆரிய மொழியினர் பண்பாடும் உடன் கலந்த காலமாகிய கி.மு.2000-1500; மற்றும் அதற்குப் பின்னர். சங்க காலத்தமிழகத்துடன் வடமேற்கு, வடஇந்தியப் பகுதிகளுடன் இருந்த தொடர்பு பற்றி இயல் 8ல் கண்டோம். அதற்கும் வெகுமுந்திய காலத்திலும் (கி.மு.3000-2000 அல்லது அதற்கும் முன்னர்) சிந்துப் பகுதிக்கும்/ தமிழகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதையும் அத்தகைய தொடர்புகளைக் காட்டும் சான்றுகள், சங்க இலக்கியத்திலும் உள்ளன என்பதையும் ஆர். பாலகிருஷ்ணன் ‘ஊர் மற்றும் இடப்பெயர் ஆய்வின்’ மூலம் கண்டுள்ளார். Journal of Tamil Studies சூன் 2010 இதழில் “தமிழ்ச்சிந்து நாகரிகம்? வடமேற்கு இந்தியாவில் கொற்கை, வஞ்சி, தொண்டி முதலிய இடப் பெயர்கள்; சங்க இலக்கியத்தில் ஒட்டகம் எலும்பை உண்ணுவது பற்றிய குறிப்பு” என்ற சிறந்த ஆய்வில் தெரிவித்துள்ளார். அவர் சுட்டும் இடப்பெயர் முதலிய ஒப்புமைகள் சில வருமாறு: (i) சிந்து நாகரிகப்பகுதியில் (இன்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்) உள்ள தமிழிய இடப்பெயர்கள்; கொற்கை (Gorkay, Gorkai, Gorkhai), வஞ்சி, தொண்டி, மதுரை (Matrai), உறை (urai), கூடல் (Kudalgarh), கோழி (Koli); கள்ளூர் (“பெரும் பெயர்க்கள்ளூர்” அகநானூறு 256) இந்தியத் துணைக்கண்டத்தில் மொத்தம் 38 கள்ளூர் / கல்லூர்கள் உள்ளனவாம். (ii) மலை, கோடு, குன்று, வரை, முடி, சுனை, ஏனல், காடு, கானல், புலை, புரை, அடவி, ஆ / யாறு, கழனி, மணல், நிலம், நிலை, தரை, தெரு, மனை, திரை, களரி, பாலை, சுரம், குறும்பை போன்ற ஒற்றைச் சொல் ஊர்ப்பெயர் (ஒவ்வொன்றும் சற்றே திரிந்த வடிவில்) அங்கு ஏராளமாக உள்ளன. (iii) உலகெங்கும் பழங்குடிப்பெயர்கள் மன்னர்குடிப் பெயர்கள், குறுநிலத்தலைவர் குடிப் பெயர்கள் ஆகியவை) பெருமளவுக்கு ஊர்ப்பெயர்களில் இருந்தே பெறப்பட்டுள்ளன. பின்வரும் தமிழ் நாட்டுப் பெயர்களின் சற்றே திரிந்த வடிவங்கள் சிந்துப் பகுதியில் ஊர்ப் பெயர்களாக இன்றும் வழங்குகின்றன (அண்டர், ஆயர், களமர், காளை, கொங்கர், துடியன், பாணன், மறவர், அறிவாலா, உதியன், களங்காய், கரிகால் (Garigal) கிள்ளி, கோதை, செலியன்வாலா, சேரன், சேரன்வாலி, சோளா, பாண்டியர், பாண்டியன் வாலா, பொறை, வழுதி, அதியமான், அன்னி, ஆதன், உதியன், கட்டி, கோடன், சாத்தன், திதியன், தித்தன், பன்னி, நள்ளி, நெடுமான், கோடன், பாரி, பிட்டன், பிண்டன், பேகன், மத்தி, மிஞிலி, மூவன், வெளியன். (iv) ஐந்திணைகளில் ஒன்றாகப் பாலையைச் சங்க இலக்கியம் குறிப்பிடினும் உண்மையான பாலை desert தென்னாட்டில் இல்லை. சிந்து நாகரிகம் தார் பாலைவனத்தை ஒட்டிய குஜராத் பகுதியிலும் பரவியிருந்ததை அகழ்வாய்வுகளே நிறுவியுள்ளன. அந்தப்பாலை பொதுமக்கள் நினைவில் நிலைத்து இருந்ததால் தான் ஐந்திணையில் பாலையையும் சேர்த்தனர்; அது மட்டுமல்ல, பாலை விலங்கான ஒட்டகம் சார்ந்த ஒரு வியக்கத்தக்க உண்மையான குறிப்பும் அகநானூறு 245 இல் ‘ததர் வெள் என்பு கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்’ (வேறு உணவு எதுவும் கிட்டாத நிலையில் பசித்த எலும்பையும் தின்னும் என்பது பொருள். ஒட்டகம் எலும்பு தின்பது என்பது விலங்கியலாளர் ஏற்றுள்ளதாகும்) இச்செய்தி ஏட்டில் எழுதாது பொதுமக்கள் நினைவிலும் செவிவழிக்கதை / பாடல்களிலும் நெடுங்காலம் இருந்து பின்னர்ச் சங்கப்பாடலிலும் ஏறியிருக்குமென்பர் பாலகிருஷ்ணன். (இங்கு “தமிழர் வரலாறு, கி.பி.600 வரை (1929) நூலில் பி.டி. சீனிவாச ஐயங்கார் இயல் 5 இன் 19ம் பத்தியில் குறித்துள்ள பின்வரும் கருத்தையும் நினைவு கூர்க. “வேதத்தில் வரும் “பஞ்ச ஜநாஹ்” என்பதை பண்டையோர், நம் காலத்தவர், யாராலும் பொந்திகையாக விளக்க முடியவில்லை. பண்டு வட இந்திய மக்களும் ஐந்திணை இனக்குழுக்களாகப் பிரிந்திருந்ததை இச்சொல் நினைவூட்டுகிறது. எனவே ஆரியச் சடங்கு தோன்றுவதற்கு முற்பட்டு வட இந்தியாவில் இருந்த ஐந்திணை இனக்குழுக்களை அது குறித்திருக்லாம் என்று உன்னிக்கிறேன். ஆயினும் தமிழ் இலக்கிய அறிவற்றவர்களும் “ஆரியத்துக்கு முந்திய இந்தியாவுக்கும், ஆரிய இந்தியாவுக்கும் இடையீடற்ற வரலாற்றுத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதை உணர மறுப்பவர்களும் எனது கருத்தை ஏற்பதில்லை”. (v) பாலகிருஷ்ணனுடைய முக்கியமான முடிவுகள் வருமாறு. (1) சிந்து நாகரிக மொழி மூலதிராவிடம் Proto Dravidan என்பதற்கான சான்றுகள் வலுவானவை. (2) ஊர்ப்பெயர் ஆய்வுகள் தரும் ஒளியைப் பயன்படுத்தினால் சிந்து நாகரிகத் தொடர்ச்சியைக் கண்டறியும் ஆய்வுகளும், அகழ்வாய்வுக்கான இடத் தெரிவுகளும் மேலும் பயனுள்ளனவாக அமையும். (3) ஒரு பால் சிந்து நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பை நிறுவும் முயற்சிகளும் மறுபால் சங்க காலத்திற்கு முந்திய புலப்பெயர்வு மற்றும் பழந்தமிழ்த் தொன்ம மரபு ஆய்வு முயற்சிகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். ஒன்றன் நலிவுகளை நீக்கி, வலிவுகளை மேம்படுத்துவது மற்றது ஆகும். (ஆகவே இருவகை அய்வுகளும் தேவை) 10. சிந்து வெளி முத்திரைகள் 750 ஐ ஆழ்ந்து ஆராய்ந்து 1934ல் நூல் வெளியிட்டவர் ஜி.ஆர்.ஹண்டர். இவர் தான் முதன் முதலில் அவற்றின் மொழி இந்தோ ஆரியம் அல்ல; ஓரசைச் சொல் மிகுந்த (திராவிட மொழி போன்ற) மொழியாக இருக்கலாம் என்று நிறுவியவர். சிந்துவெளி எழுத்தே பிரமியின் தாய் என்ற லாங்டன் கருத்து இவருக்கு உடன்பாடே. சாதாரண காரியங்களுக்கு சிந்துவெளி மக்கள் ஓலைகள் போன்ற அழியும் பொருட்களைப் பயன்படுத்தியிருப்பர் என்கிறார். 11. சிந்து வெளி நாகரிகம் திராவிடருடையது என்ற மார்ஷல் முடிவை வலுப்படுத்தியும், அந்நாகரிகமொழி எழுத்து தொல் 140 தொல்தமிழியச் சிந்து நாகரிகம் திராவிட மொழி எழுத்தே என்பதையும் நேர்மையான அறிஞர் எவரும் மறுக்கவொண்ணா வகையில் பல ஆய்வுக் கட்டுரைகளை இடைவிடாது வெளியிட்டவர் எஸ். ஹீராஸ் பாதிரியார். அவர் 1953ல் வெளியிட்ட சிறந்த நூல்; ‘தொன்மை இந்தோ - நண்ணிலக் கரை நாகரிக ஆய்வு’ என்பதாகும். இவர் சிந்து மொழியை முந்து (புரோடோ) திராவிட மொழியாகப் படித்துள்ளார். இவருக்கு முன் இவ்வாய்வில் ஈடுபட்டவர்களைப் போல இவரும் வலமிருந்து இடமாகவே இவ் வெழுத்துக்களைப் படிக்கிறார். ஒவ்வொரு குறியீடும் அசையையோ மெய்/உயிர் எழுத்தையோ குறிப்பதல்ல; ஒவ்வொரு குறியீடும் ஒரு சொல் (அதாவது படவெழுத்து / சொல்லுருவன்; Logographic); வாசகங்கள் இயற்பெயர் அல்ல; அவை கூற்றுக்களும் விளக்கங்களும் ஆகும்; இவையே அவர் அடிப்படைக் கோட்பாடுகள். மிகப் பெரும் எண்ணிக்கையில் வரும் என்னும் குறி, “மாறனது”, ‘வேலனது’ என்பவற்றிற் போல் உடைமைப் பொருளில் வரும் “அது” என்னும் சொல்லைக் குறிப்பது; சிலவிடங்களில் சுட்டுப் பொருளிலும் வரும்; என்றார். 12. பண்டைய எழுத்துக்களில் “ஒலிகொள் வடிவம்” (Phonograph) அல்லது ரீபஸ் Rebus என்பதில் அடங்குவன: அ) என்று மீன்படம் போட்டு “மீனவனை” (அரசனை) குறிப்பிடுதல் ஆ) ஓவிய எழுத்துப் புதிர் (Rebus / homophony); எ.கா bee leaf = belief (WATER) CAN die date = Candidate 13. பல சிந்துக் குறியீடுகளை இக் கோட்பாட்டின் அடிப்படையில் ஹீராஸ் படித்துள்ளார். அவர் படித்துள்ள சில வாசகங்கள்:- ஆண் அது மீன் குட வாழ்க்கை நண்ட் ஆண் “பசுபதி” முத்திரை ஆண்நண்ட் வால் கெய் குடமீன் அது ஆண் “The Lord of the Water - jar and the Fish is the weakening and strengthening of the Lord” கடவுள் எட் ஓரிட மீன் பேர் தளி அது அது தளிபேர் மீன் ஓரிட எட் கடவுள் This is the (eight) formed God one of whose sides (forms) (is) the sprinkled great fish. அது அரி வலில் மீன் மீன் வலில் அரி அது This is the weak toddy of the Minas சிந்து வெளி எழுத்துக்கு தொல் திராவிடம் என ஹீராஸ் முதற்கண் திட்டவட்டமாக நிறுவியதை இன்று நேர்மையான அறிஞர் அனைவரும் ஏற்கின்றனர். எனினும் இம்முத்திரைகள் பெரும்பாலும் எதற்குப் பயன்பட்டன என்பதைக் கருதும பொழுது ஹீராஸ் படித்துள்ள சொல்லுருவன் logographic வாசகங்கள் பெரும்பாலும் எற்கத் தக்கவையாக இல்லை. சுமேரிய எழுத்து முறை சிந்து எழுத்து முறையிலிருந்துதான் உருவானது என்பது ஹீராஸ் கொள்கை (1953ம் ஆண்டு நூல், பக் 249-278). சீன எழுத்து முறையும் ஓரளவுக்கு அவ்வாறே என்கிறார் அவர். 14. (i) ஹீராசுக்குப்பின் சிந்துப் பொறிப்புகளைத் தமிழிய (திராவிட) மொழியாகப்படித்த சிலரின் வாசகங்களைத் தந்துவிட்டுப் பின்னர், பர்போலா, மகாதேவன், மதிவாணன் ஜீவா முதலியவர் ஆய்வுகள் சற்று விரிவாகத் தரப்படும். (ii) பேர்சர்விஸ் போன்ற சிலர் வாசிப்புகளின் மாதிரிகள் வருமாறு: வால்டர் பேர்சர்வீஸ் (1983) ஓவிய எழுத்துப் புதிர் (ரீபஸ்) கோட்பாட்டின் படி வாசித்துள்ளார். எ.கா: முதலைப்படம் = முதலி Chief = நொறுக்கு / நூறு நெல் பயிர் படம் = நெலா (நிலா Moon) இவர் படித்துள்ள வாசகங்கள் சில வருமாறு: ஆன் படுகாரு ஆரபிரிகை ஆ அம்பர படா சூர் “சூர் படாம்பரஆ ஆரபிரிகை படு காரன்” “Patukaran powerful (noble) chief of the surrounding settlements” ஆன் பிர் (ச)ஆய் = சாய் பிறையாளன் சுப்பிரமணியம் மலையாண்டி (1978) : இவர் தொல்காப்பியச் செந்தமிழாக முத்திரை வாசகங்களைப் படித்துள்ளார். கிளைட் அகமது வின்டர்ஸ் (1985 முதல்): இவர் சொல்லுருவன் logographic எழுத்துக்களாகப் படித்துள்ளார். த செய் உ-இ மின்-இ லு அண்ணல் அண்ணல் லு மின்-இ-உ-இ செய்த Much righteoumess, let it shine, bring here virtue. உஸ் புகள், மின் உஸ்ஸ் காவேஇ காவேஇ உஸ்ஸ் மின்புகள் உஸ் Balance blooms Gods justice - a shining glorious fate பெனான் ஸ்பிக்னியூ சாலெக் (போலந்து) li maa we munnu wuri ka (kaa uuri mun wel maal) = protection end of the world before white great man) Ya mii mii Yiru Ai mil mil Iru = Iru mii mii ai great heavenly heavenly king 15. சிந்துப்பொறிப்புகள் தமிழிய (திராவிட) மொழி சார்ந்தவைதாம் என்பது பற்றிப் பல்துறை, பன்னாட்டு அறிஞர்களிடம் ஒரு மித்த கருத்து உள்ளது – இத்துறையில் நாற்பதாண்டு நுட்பமாகவும் கடினமாகவும் உழைத்த பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா, நம் தமிழ் நாட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் உட்பட. (திராவிட மொழிச் சார்புடையதாகப் பலரும் படித்துள்ள போதிலும் யாருடைய வாசிப்பும் இன்று வரை அறிஞர் உலகில் ஏற்கப்படவில்லை. ஈராஸ், பர்போலா, மகாதேவன், நாரசாவ், பேர்சர்வீஸ், வின்டர்ஸ், சாலெக், மதிவாணன், பூர்ணசந்திர ஜீவா ஆகிய யாருடைய வாசிப்புமே முழுமையாக ஏற்கப்படவில்லை). சிந்து எழுத்துகள் தமிழிய மொழி சார்ந்தவை என்பது மட்டும் உலகளவில் நல்லறிஞர் களால் ஏற்கப்பட்டுள்ளது - காண்க:- ஸ்டான்லி வால்பர்ட் (1991): இந்தியாவுக்கு ஓர் அறிமுகம் ‘பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பதும் ஆகும்.” “We assume from various shreds of evidence that they were proto Dravidian, possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert : An Introduction to India, University of California Press 1991) ஜே.எம்.ராபர்ட்ஸ் (2010) : பெலிகன் உலக வரலாறு “ தென்னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்து முத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது.” It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used inSouthern India (J.M.Roberts History of the World, Pelican 1992) கமில் சுவெலபில் (1990) திராவிட மொழியியல் – ஓர் அறிமுகம் “சிந்துவெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும்பொழுது அது திராவிடமொழி சார்ந்ததாக அமைவதற்கே வாய்ப்புமிக அதிகம்.” (“The most probable candidate is and remains some form of Dravidian” Dravidian Linguistics An Introduction. Pondicherry 1990: Chap VI: Dravidian and Harappan) எம்.பி.எமெனோ சிந்துப்பொறிப்புகளை வாசித்து அறிவதற்கான தடயங்களை வேறு எம்மொழிக் குடும்பத்தையும் விட திராவிட மொழிக்குடும்பத்தில் தான் காண வாய்ப்பு அதிகம் உண்டு. (The most promising language family in which to look for clues that might aid in their tranlation has seemed to be Dravidian” (ENCYCLOPAEDIA AMERICANA; 1999) அஸ்கோ பர்போலா 16. 1960 களிலிருந்து சிந்து எழுத்து ஆய்வையே தமது முக்கியமான வாழ்நாட் பணியாக கொண்டுள்ளவர் இந்த பின்லாந்து நாட்டறிஞர். இத்துறையில் அவர் படைத்துள்ள இன்றியமையாத நூல்களை மேலே இரண்டாம் பத்தியிற் கண்டோம். தமது ஆய்வு முடிவுகளை 2010 சூன் 25 அன்று கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆற்றிய சிந்து எழுத்துச் சிக்கல் திராவிடத் [திராவிட மொழித்] தீர்வு என்னும் பொழிவில் சுருக்கமாகத் தந்துள்ளார். முக்கியமான சிலவற்றைக் காண்போம். 17. தொல் இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுநர் கி.மு. 3000க்குப் பின்னர் தென் - கிழக்கு ஐரோப்பியப் பகுதியிலிருந்து (கருங்கடல் - காஸ்பியன் கடல்களுக்கு வடக்கிலுள்ள பகுதி) மேற்கு, தெற்கு, தென் கிழக்காகப் பரவத் தொடங்கிய பொழுது கி.மு.2300 - 1500 காலம் சார்ந்த பாக்டிரியா – மார்ஜியானா தொல்லியல் நாகரிகத் (Bactria and Margiana Archaeological Complex = BMAC) தொல்லியல் எச்சப்பகுதியைத் தாண்டி கி.மு.1900 – 1600 இல் ஈரான் - சிந்துப் பகுதிக்கு வரலாயினர். (கி.மு 1900 – 1600 என்பது ஹாரப்பா நாகரிகத்தின் கடைப் பகுதியாகும்). வரலாற்று மொழியியல் சான்றுகள் அடிப்படையில் (விரிவான விவரங்கள் முந்தைய இயலின் கடைசிப் பகுதியில்) – குறிப்பாக ரிக்வேத த்திலேயே காணப்படும் திராவிட மொழியியல், இலக்கணக் கூறுகள், திராவிடச் சொற்கள் இவற்றின் அடிப்படையில், ஹாரப்பா நாகரிக மக்கள் பேசியது திராவிட மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும். (Historical Linguistics, thus suggests that the Harappans probably spoke a Dravidian language) 18. சிந்து எழுத்தை வாசிக்க முயல்வோர் பலருடைய பின்வரும் கருதுகோள்கள் தவறு என்பர் பர்போலா:- (i) சிந்து லிபியில் உள்ள வடிவம் போன்ற ஒன்று வேறு எந்த லிபியிலும் இருந்தால் அந்தப் பிற லிபியின் ஒலி / பொருள்தான் சிந்து வடிவத்திற்கும் என்று தவறாகக் கருதிக் கொள்வது. (ii) செமித்திய “மெய்யெழுத்தடிப்படை வண்ணமாலை” Semitic Consonantal alphablet ஐ அடியொற்றி உருவானது பிரமிலிபியாகும். சிந்து லிபியிலிருந்து உருவானதல்ல பிரமிலிபி; எனினும் சிந்துலிபியிலிருந்து பிரமி உருவானதாகத் தவறாக எண்ணிக் கொண்டு பிரமி அடிப்படையில் சிந்துப் பொறிப்புகளைப் படிக்க முயலும் தவறான போக்கு. 19. உலகில் எந்த அசையெழுத்து / வண்ணமாலை வரிவடிவமும் (Syllabic or alphabetic script) தோன்றுவதற்கும் முன்னர் தோன்றிய சிந்து எழுத்து சொல்லசையன் வரிவடிவ மாகத்தான் logo - syllabic writing system) இருக்க வேண்டும். அவை பெரும்பாலும் மேலே விளக்கிய (ஒலி ஒப்புமை homophone அடிப்படையில் உருவாகிய) ரீபஸ் வகைச் சொல்லசையன் Logosyllabic வரிவடிவங்களே, தமிழில் “மீன்” என்பது fish ஐயும் குறித்தது என்க. சிந்து முத்திரைகளில் “10 குறிகளில் ஒன்று மீன்’ என்ற அளவுக்கு மீன் உருவம் (வெறும் மீன் உருவம், மற்றும் அர்த்தம் மாறுவதைக் குறிக்கும் பல்வேறு அடையாளங்களைக் diacritical marks கொண்ட உருவங்கள்) காணப்படுகிறது. 20. தமிழ் வடம் / வடமரம் (=ஆலமரம்) என்பதில் வரும் ‘வட’ கயிறையும் குறித்தது. (கயிறு போன்றது ஆலமர விழுது, எனவே) வடதிசையையும் குறித்தது, “வட மீன்’ வடதிசையில் உள்ள துருவ நட்சத்திரத்தைக் குறித்தது. போன்ற ஆலமரத் தோற்றம் கொண்ட சிந்து வடிவங்கள் ஒலி ஒப்புமை அடிப்படையில் ‘வட’ என்பதைக் குறித்தன. தமிழ் ‘வட’ என்பதற்கு இவ்வாறு இரண்டு அர்த்தம் உள்ளத்தைத் தவறாகப்புரிந்து கொண்டு ரிக்வேதம் (1, 24.7 அது கி.மு.1000 சார்ந்தது ஆகலாம்) வானத்தில் வருணன் தாங்கும் ஆலமரம் ஒன்றின் வேர்களைப்பற்றிக் கூறுகிறது. ஹரப்பா முத்திரை 179ல் ஆலமரத்துக்குள் காணும் மனித உருத்தெய்வம் இந்த மரத்தைக் குறிப்பதாகலாம். 21. வேதக்கதை இன்னொன்று, துருவ நட்சத்திரமானது ஏனை விண்மீன்களோடு காற்றுக் கயிறுகளால் ropes of wind பிணைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த அடிப்படையில் பின்வரும் வாசகங்களை பர்போலா தருகிறார். ஹாரப்பா H-9: I III= எழுமீன் (சப்தரிஷி = Ursa mayor விண்மீன் கூட்டம் மொகெஞ் M.414 வடமீன் = துருவ நட்சத்திரம் 22. திராவிட முரி (-வ்-, -ந்த் -) [=to bend, to be bent] முருவு / முருகு [=கம்மல், வளையல் கடகம் அழகு] முருகன். எனவே வளையத்தைச் சிந்து எழுத்தில் இரண்டு வட்டங்கள் குறித்தன. ஏன் இரண்டு வட்டங்கள்? ஒரு வட்டம் தெளிவான பொருள் தராது; மேலும் கம்மல், வளையல் ஆகியவற்றை இணையாகத் தானே அணிகின்றனர்? தமிழ்நாட்டிலும் ஏன் இந்தியா வெங்கும் (நலமான குழந்தைப் பேறுக்காக) சூலுற்ற தாய்க்கு வளைகாப்பு அணிதல்; புனிதமரங்கள், தெய்வங்களுக்கு வளையல் அணிவித்தல் ஆகிய சடங்குகள் உள்ளன. இப்பின்னணியில் மொ 112 இல் காணும் III மொ 241 இல் அறுமீன் (கிருத்திகா) = காணும் வேள் முருக (முருகன்)(கார்த்திகேயன்) அதே அர்த்தம் என்று கூறலாம். நிநதோவாரி முத்திரை Nd 1 ல் (முதுகில் ஐந்துவரி கொண்ட) அணிற்பிள்ளை ஒன்றைக் காணலாம். அதே போன்ற அணில் மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதை நௌஷாரோ முத்திரை, மொ 1202, ஹா 771 ஆகியவற்றிலும் காணலாம். அவற்றில் காணும் இரண்டையும் முருகப்பிள்ளை எனப்படிக்கலாம். யாழ்ப்பானைத் தமிழ் ஆடவர் பெயர்களில் இதுபோன்று பிள்ளை என்று முடியும் பெயர்கள் பல. 11 என்பதை முருகவேள் எனப்படித்தோம். அதில் II என்பது வேள் தான் என நிறுவிட இன்னொரு சான்றைக் காணலாம்: வேள் முருக மீன் வெள் = வெள்ளிக் கோள் (ஹா 723) ஹா 669 வெள் white; அதனுடைய ஒலியொப்புமைச் சொல் homophone தான் வேள். இவ்விரண்டுக்கும் இன்னொரு ஒலியொப்புமைச் சொல் வெளி (=open public, space (in general), intervening space [தேவ ருலகத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட (சமஸ்கிருத அந்தரீக்ஷம்), உழவில் இருசால்களுக்கும் இடைப்பட்ட பகுதி] என்பதாகும். வேறு இடங்களில் வரும் III கோடுகள் குறியீடு மூவுலகத்தையும் குறிப்பதாகக் கருத இடமுண்டு. தமிழ் “வெள்ளி” வெள்ளிக் கோளை மட்டுமன்றி விண் மீனையும் பொதுவாகக் குறிக்கிறது. (அ.சிதம்பரநாதன் செட்டியார்ஆங்கில - தமிழ் அகராதி 1965: star = விண்மீன்; வான்வெள்ளி) வெள்ளியை விடிவெள்ளி, விடிமீன் என்றும் அழைப்பதுண்டு. 23. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு உரையில் (25-6-2010) பர்போலா இறுதியாகக் கூறுவது வருமாறு: “ஒன்றுக்கொன்று சரியாகப் பொருந்தும் ரீபஸ் முறை வாசிப்புகளைக் கணிசமான எண்ணிக்கையில் கண்டோம். அவற்றுக்கு அடித்தளமாக அமைந்து முழு ஆதரவுதரும் மொழியியல் செய்திகளையும் பண்பாட்டுத தன்மைகளையும் விளக்கி இம்முடிவுகள் தற்செயலான போலி ஒப்புமைகள் அல்லவென்பதையும் நிறுவியுள்ளோம். அறிவியல் ரீதியான கராறான ஆய்வு முறையைப் பின்பற்றி வாசித்துள்ளோம் - மாந்தன் மொழிகளின் எழுத்து வரிவடிவத் (லிபி) தோற்றம் வளர்ச்சி வரலாறு, புரியாத லிபியைப் படித்தறியக் கையாள வேண்டிய அறிவுபூர்வமான முறை, இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டும், வரலாற்று மொழியியலின் (திராவிட மொழிகளின் ஒப்பு நோக்கு மொழியியல் உட்பட) ஆய்வுச் செய்திகளின் பின்புலத்திலும் இவ்வாய்வு நடந்துள்ளது. முத்திரைகளின் பட உருவங்கள் எதைக் குறிக்கின்றன வென்பதையும் மிகக் கவனமாகவே கருதிப் பார்த்துள்ளோம். பண்டை இந்தியப் பண்பாட்டு வரலாறு ஹரப்பா நாகரிகத்தின் (தோற்றம், தன்மை, வளர்ச்சி, பிற பண்பாடுகளுடன் தொடர்பு முதலிய) சூழல் ஆகியவற்றை அடிச்சட்டமாகக் கொண்டு பார்த்தால் ஆய்வில் கூறப்படும் முடிவுகள் நியாயமாக ஏற்கத் தக்கவை என்பது தெற்றென விளங்கும். அம்முடிவுகளும் முழுமையான தெளிவான சான்றுகளும் ஆதாரங்களும் அமைந்த சிற்றளவினவான ஆய்வுப்புலச் செய்திகளின் அடிப்படையில் தான் (மறுக்கொணாத வகையில்) அமைந்துள்ளன. [அப்புலங்கள் அரசமரத்தோடு இணைந்த மகப்பேறு வேண்டுதல் நம்பிக்கை; வானியல், காலக்கணிப்பு இவற்றோடு தொடர்புடைய முக்கியமான பழைய இந்து மதத் தொன்மக்கதை; இந்துமதத்திலும், பழந்தமிழ் மதத்திலும் முதன்மைபெற்ற (முருகன் போன்ற) தெய்வங்கள் முதலியன] மேற்சொன்னவற்றின் அடிப்படையில் சிந்து எழுத்தைப் படித்தறிவதற்கான வாயில் திறக்கப்பட்டுவிட்டது என உறுதியாக நான் நம்புகிறேன். சிந்து முத்திரை வாசகங்கள் தொல்திராவிட மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொண்டோம். அந்த லிபியின் அமைப்பும் எவ்வழிகளில் முயன்றால் அதைப் படிக்கலாம் என்பதையும் அறிந்துள்ளோம். இதுவரைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொண்ட செய்திகளும் அவற்றின் விரிவான சூழல்களும் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆய்வுகளுக்கு வழிகாட்டுகின்றன, எனினும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பல படவெழுத்துகளின் திட்டவட்ட மான பொருள் இன்னும் தெரியவரவில்லை. தொல்திராவிடச் சொற்கள், சொற்றொடர்கள் மரபு வழக்குகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகள் நமக்கு முழுமையாகத் தெரியவில்லையாகை யால், பொருத்தமான வாசிப்பு முயற்சிகள் மூலம் மேலும் பலவற்றைப் படிப்பதற்கும் அப்படிப் படித்து முன் வைக்கப் படுவனவற்றை நன்கு சரிபார்த்து அறிவுலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறுவுவதற்கும் வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளன. இந்த நிலையில் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் தாய்மொழியாகப் பேசுபவர்கள் இந்த ஆய்வில் ஊக்கத்துடன் தலைப்பட்டு மேலும் ஆய்வு செய்ய வேண்டும். (வட அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டில் உள்ள) மயா நாகரிக எழுத்தும் சொல்- அசையன் (logo-syllabic) வரிவடிவத்தில்தான் உள்ளது. மயா மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அந்த லிபியைப் படிக்கும் முறைகளில் பயிற்சி அளித்த பின்னர் ஆய்வு வேகமாக வளர்ச்சியடைந்தது. சிந்து முத்திரை வரிவடிவத்தைப் பொறுத்தும் ஓரளவுக்கு இதுபொருந்தும். பல்கலைக்கழகப் பேராசிரியர் போன்ற வல்லுநர் மட்டுமல்லாது. ஆர்வமுள்ள பொதுமக்களும் சிந்து முத்திரைப்பட உருக்கள் எதைக் குறிக்கின்றன என்பது குறித்து சிந்தித்துப் பொருத்தமான கருத்துகளைத் தெரிவிக்கலாம்; இவ்வாறு செய்ய ஒருவர் திராவிட மொழி பேசுநராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. எனினும் இந்தியப் பண்பாடு தென்ஆசிய இயற்கைத் திணைப் பொருள்கள் ஆகியவற்றைப் பற்றிய திறமான புலமை இருந்தால் இத்தகைய ஆய்வு மேலும் சிறக்கும் தமிழ் மக்கள் இவ்வகையில் தெரிவிக்கும் ஆய்வுக்கருத்துகளையெல்லாம் சென்னையில் (தரமணி மைய பாலிடெக்னிக் வளாகம்) ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ள சிந்து ஆய்வு மையம் ஒருங்கிணைத்து ஊக்குவிக்கலாம். வெளிப்படும் தரமான கருத்துகளை அம்மையம் தனது வலைத்தளத்திலும் வெளியிடலாம். 24. இத்துறையில் மேலும் முன்னேற்றம் காண வேண்டுமாயின் பண்பாட்டு ஆய்வு வல்லுநர், தமிழிய மொழியியல் வல்லுநர், அகழ்வாய்வு - பண்டை நாகரிக ஆய்வாளர் ஆகியோருடைய ஒருங்கிணைந்த உழைப்பு தேவை என்ற ஆண்ட்ரு ராபின்சன் 2001 கருத்தும் இதுவே: Lost languages: the enigma of the world”s undeciphered scripts McGraw Hill; New york (“a reanalysis of the seals and other inscriptions on the basis of their chronological and spatial distribution .... if combined with a more intensive analysis of the signs and their patterns, the inputs of “cultural’ experts like Parpola and Mahadevan, and the linguistic control provided by professional Dravidianists may in due course yield solid results. Collaboration seems to be the name of the game here, since no one scholar can hope to command sufficient knowledge of ancient writing systems, Indus valley and the relevant languages. ஐ. மகாதேவன் 25. பர்போலாவை அடுத்து சிந்து எழுத்து ஆய்வில் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக ஆய்வு நெறி பிறழாமல் முனைப்புடன் ஈடுபட்டுள்ள அறிஞர் ஐ. மகாதேவன் இ.ஆ.ப. ஏழாண்டு கடுமையாக உழைத்து 1977ல் வெளியிட்ட சிந்து முத்திரை வாசகங்களின் நிரல்படுத்திய அடங்கற்பட்டியலை பிற்றை ஆய்வாளர் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இருமொழி வாசகம் / சொற்பட்டியல்கொண்ட பொறிப்பு எதுவும் கிடைத்தா லொழிய சிந்து முத்திரை வாசகங்களை முழுமையாகப்படித்தறிய இயலாது என்னும் (பர்போலா முதலிய) இத்துறை வல்லுநர் பலருடைய கருத்தே இவருடையதுமாம்.. சிந்துப் பொறிப்புகள் “ஒரு சொல்லுக்கு ஒரு எழுத்து” “ஒரு அசைக்கு ஒரு எழுத்து”ஆகிய இருவகை வரிவடிவமும் கலந்ததாக இவர் கருதுகிறார். அம்முத்திரை வாசகங்களின் மொழி பழந்திராவிடம் என்ற பர்போலா முதலிய நல்லறிஞர் கருத்தே மகாதேவன் கருத்துமாகும். பின்வரும் அடிப்படைகளின்மேல் - அதாவது :- (அ) ஒரு சொல்லுக்கு ஒரு எழுத்து ஆக அமையும் சிலவற்றைத் தென்னிந்தியாவில் கிட்டியுள்ள சிந்து எழுத்துகளின் எச்சங்கள் சா [கி.மு. முதல் நூற்றாண்டு சார்ந்த சூலூர் தட்டு; (திண்டிவனம் அருகில் உள்ள) சாணூர் ஈமத்தாழிப் பொறிப்புகள்; கேரள மாநிலம் பட்டணத்தில் (முசிறி?) கிட்டிய ஓட்டுத் துண்டில் உள்ள முருகு குறியீடு; கி.மு.1500 சார்ந்த செம்பியன்கண்டியூர் கற்கோடரியில் உள்ள (மகாதேவன் “முருகு = அன் - எனப்படித்துள்ள) பொறிப்பு; போன்றவற்றின் அடிப்படையிலும்; (ஆ) சிந்துப்பகுதி மக்களுக்கும், அங்கு சிறு எண்ணிக்கையில் இந்தோ ஆரிய மொழி பேசுநருக்கும் கி.மு.2500-1500 கால அளவில் நிகழ்ந்த பலதுறைக் கலப்புப் பண்பாட்டு எச்சங்கள் வேதமொழி / சமஸ்கிருத நூல்கள்; சங்க இலக்கியங்கள்; பிறவரலாற்றுச் சான்றுகள் ஆகியவற்றில்காணப்படுவதால் அவற்றையும் நுணுகி ஆராய்ந்த அடிப்படையிலும்; மகாதேவன் சிந்து முத்திரை வாசகங்கள் காட்டும் பண்பாடு தமிழகப் பண்பாட்டை ஒத்திருந்தது என்ற கருதுகோளுக்கு வந்து அதுகுறித்து தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 16வது கருத்தரங்கில் (9-10-2009; திருச்சி) Vestiges of Indus Civilization in old Tamil என்ற ஆய்வுரையை வெளியிட்டார். 2010 சனவரியில் அவ்வரிய ஆய்வுரையைத் தமிழாக்கி “சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்” என்ற பெயரில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. 26. மேற்சொன்ன 9-10-09 ஆய்விலிருந்தும் இதே அடிப்படையில் மகாதேவன் வெளியிட்டுள்ள வேறுசில ஆய்வுக் கட்டுரைகளில் இருந்தும் சில செய்திகளைத் தருவது பொருத்த மாகும்: (i) முருகு (முருகன்) என அடையாளம் கண்டுள்ள சிந்து னைநடிபசயஅ கருத்துக்குறியீடு செம்பியன் கண்டியூர்கற் கோடரியில் உள்ளது. (ii) பொறு = காவு (புறம் 206 இல் வரும் ‘காவினெம்கலனே’ என்பதில் காவுதல் சுமத்தல் சுமத்தல் என்னும் பொருளில் வந்தது) ->பொறை -> ரிக்வேத பரத Bharata (ஒரு முக்கியமான குடியினர்). காவடியைச் சுட்டிய சிந்து வடிவம் பின்வருமாறு சிறு மாற்றங்களோடு வேத சமஸ்கிருதச் சொற்களைக் குறித்தன எனலாம். பரதர் பரத்வாஜ பரந்த் bharant (இதிலிருந்து (ஆயுதம் நாட்டுப் பெயர் தாங்குவோர்) பாரதம் வந்தது) தொடக்கக் காலத்தில் மௌரியருடைய குறுநில மன்னர் ஆக இருந்த ஆந்திர சாதவாகனர் பெயர்கள் வடமொழியில் பொறுத்தல் / காவுதல் சொற்களின் பெயர்ப்புகளாக ஏறிய சொற்களின் அடிப்படையில் அமைந்தன என்பதையும், இந்தோ ஆரியக் கடன் சொற்கள், நேர்மொழி பெயர்ப்புகள், புராணக் கதைகள் ஆகியவற்றில் சிந்துச் சொற்கள் உள்ளன என்பதையும் பின்வருமாறு மகாதேவன் விளக்கியுள்ளார். (iii) புறநானூறு 201ல் வரும் செய்திகள், (வட பான் முனிவன் தடவு, துவரை, வேளிர்) அதன் தொடர்பாக மு. இராகவையங்கார் (1907)வேளிர் வரலாற்றில் கூறிய செய்திகள்; ‘தடவு = நீர்க்கரகம்” என்ற மகாதேவன் உன்னிப்பு; மற்றும் அகம் (வீடு, இடம், உள் ) கும்பம்; அன் / ஆண்பால் ஒருமை மேல் அகம், உயர்வீடு அம்பு / பெண்பால், அஃறிணை (படைக்கருவி) ஒருமை என்ற வாசிப்புகளின் அடிப்படையில், இலச்சினைகளில் வரும் பின்வருவனவற்றை முதற்குறியீடாகவரும் இறுதிக் குறியீடாக வரும் U வாசகங்களின் முதலில் 298 (வாசகங்களின் முடிவில் 971 முறை வருகிறது; || வேற்றுமைக் முறை வருவது) கும்பத்தில் குறி ஆகும்; மேல் அகத்தில் பிறந்தவன் “கும்பமுனி” அகத்தியர் இருப்பவன் அகத்தி என்றவாறு கொண்டால் சிந்து நாகரிகத்துக்கும் பிற்றை வரலாறுகளுக்கும் (பழந்தமிழக வரலாறு உட்பட) உள்ள தொடர்பு விளங்கும். அகத்தியர் தொன்மம்; சிந்து நாகரிகத்தோடு தொடர்புடையது. [இருங்கோவேள் குலத்தினரின் “புலி கடிமால்” சிந்து முத்திரையில் உள்ளது (மேலே இயல் 8, பத்தி 25 ஐயும் காண்க)] மேலும் தனது IJDL சனவரி 2011 கட்டுரையில் பின்வரும் வாசிப்புகளையும் தருகிறார். 1) பெற் / பெறு / பிற / பிறை (இளநிலா) 2) பெற் உடைய ஒலியொப்புமைச்சொல் புற் / புற (out) 3) = அகத்தில் (கோட்டைக்குள்) புறத்தில் (புறநகரில்) நகரத்தில் (பாழியில்) (iv) பின்வருவன பழந்தமிழ் நகர்ப்பெயர்களைச் சுட்டுவன வாகலாம். பாழி, நான்கு பகுதிகள் உடைய மதில் சூழ்ந்த நகர் கூடல் நான்மாடக் கூடல், மதிரை (மதுரை) IIII சுருங்கி (IIII) ஏழ்எயில்; நன்னனுடைய நகராகிய பாழி எழில் (ஏழ் - இல்) குன்றம் (v) கொம்பன் (=கண்டன் நீள்=பெரிய அதாவது வீரன்) (நீள்குடி அகம் 51 நீள் நிதி புறம் 71) ஆக பெரு வீரன் என்னும் பொருள் கொண்ட வடிவத்தை மகாதேவன் என்ற பொருள் கொண்ட சமஸ்கிருதச் சொல் வடிவமாகக் கொண்டனர். அம்மொழியில் ளகரத்தை லகரமாகக் கொண்டு ‘நீலகண்டன்’ எனத்தவறாகக் கருதிப் பாற்கடலைக் கடைந்து உருவான “(நீல நிற)நஞ்சை உண்ட கழுத்தை உடையவன்” எனப் புராணக்கதையும் பின்னர்ப் புனையப்பட்டு மகாதேவன் நீலகண்டன் ஆனான். (நீள் கண்டன் என்ற தொல்தமிழ்ப் பெயரை மறந்துவிட்ட நிலையில்) கறை / நீல மணி மிடற்று அண்ணல் என்ற புதிய பெயரை வடமொழி “நீல கண்டனின்’ சொற்பெயர்ப்பாகக்கொண்டு, அப்புராணக் கதையையும் ஏற்கும்நிலை புறநானூற்றுக் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. தென்னாட்டில் வழங்கும் நீலகண்டன், மணிகண்டன், நஞ்சுண்டன் முதலிய பெயர்களின் உண்மையான வரலாறு இதுவே. இரா. மதிவாணன் 27. தமிழிய (திராவிட) மொழி பேசுநர் கி.மு.10000 க்கு முன்னரே இந்தியாவெங்கும் பரவியிருந்தனர் என்பதையும் (திராவிடர் இந்தியாவை விட்டு வடக்கே பரவிய) திராவிடர் ஏற்றத்தின் Dravidian Ascent பின்னர் இந்தோ - ஐரோப்பியம், உரால் - அல்தாய்க் முதலிய மொழிக் குடும்பங்கள் அதிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பதையும் முதல் இயலில் கண்டோம். ஞா.தேவநேயன் தமிழ்வரலாறு (1967) இல் கூறியது வருமாறு. “மொகஞ்சொதரோ முத்திரையெழுத்துக்கள் தமிழெழுத்துக் களின் மூல வடிவைக் காட்டுகின்றனவெனின், அது அவை தமிழெழுழுத்துக்கள் வளர்ச்சியடையாத நிலையில் வடக்கே சென்ற தமிழர் கையாண்ட எழுத்து முறை என்பதையல்லாது தமிழர் வடக்கினின்று தெற்கே வந்தார் என்று உணர்த்தாது” 28. தமிழின் இலக்கணக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டும், தமிழ்ச் சொற்பிறப்பு நெறி முறைகளைப் பொருத்தியும் சிந்து எழுத்துக்களை 1990 ஐ ஒட்டிப் படிக்கத் தொடங்கிய இரா. மதிவாணன் முத்திரைகளைப் பதித்தால் கிடைக்கும் வாசகங்களை இடமிருந்து வலமாகப் L-> R படித்துள்ளார். Indus script Dravidian (1995) என்னும் நூலில் சிந்து வெளி நாகரிக முத்திரைச் சொற்கள் 3000த்தையும் பெரும்பாலான தொல்தமிழ் இயற் பெயர்களாகப் படித்துள்ளார். வணிகர், தலைவர், கடவுளர் போன்றவர்களின் பெயர்களை அசையெழுத்துக்களில் (Morpho - syllabic) இம் முத்திரைகளில் பொறித்துள்ளனர் என்பதும், சாத்தன், மாசாத்தன், சானன், வங்கன், நத்தத்தன், நந்தன், ஓமன், சாமன், எவ்வி, அனங்கன், ஒளியன், சேயன், அதியன், அவ்வன், அய்யன், கோ அவ்வன், யானன், பன்னன், அவுணன், காட்டன் போன்ற பெயர்கள் முத்திரைகளிற் பரவலாக வருகின்றன என்பதும் மதிவாணன் கண்டு பிடிப்பு ஆகும். இவர் குறி ஐ ‘க’ என்றும் குறி ஐ ‘ச’ என்றும் படித்துள்ளார். சில முத்திரை வாசகங்கள் பின்னர் தரப்படுகின்றன. என்னும் சுவத்திகம் சிந்துவெளி எழுத்தில் “ஓம்” (ஓம்புக -ஓம்) என்பது இவர் கண்டுபிடிப்பு. பசுபதி முத்திரையை இவர் ‘கா சா கோ அவ்வன்” என்று படிக்கிறார். புகாரில் ஏற்றுமதி, இறக்குமதியான பொருள்கள் மீது சோழனின் புலி முத்திரை பொறிக்கப்பட்டதைப் பட்டினப்பாலை “புலி பொறித்துப் புறம் போக்கி” எனக் குறிக்கிறது. அப்பொருள் களின் மேல் வணிகர்களின் பெயர் முத்திரைகள் பொறிக்கப் பட்டதை, “வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்துக் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதி”என சிலப்பதிகாரம் (5:111-112) குறிக்கிறது. இச்செய்திகள் சிந்துவெளி எழுத்து வாசகங்களை இயற்பெயராக மதிவாணன் படித்ததை அரண் செய்கின்றன. பூர்ண சந்திர ஜீவா அவருடைய (2004) “சிந்துவெளியில் முந்து தமிழ்” நூல் மற்றும் பிற்றை ஆய்வுரைகளில் காணும் முடிவுகள். 29. ஜீவாவின் முடிவுகளின் சுருக்கம் வருமாறு: 1) சிந்து எழுத்து வரிவடிவங்கள் அசைநிலை syllabic வகை சார்ந்தவை. (அந்தசிந்துவரிவடிவங்களிலிருந்துபின்னர் உருவான) சங்க காலத் தமிழி (தமிழ் - பிராமி) வரிவடிவத்திற்கு அவையே மூலமாகும். ii) பின்னர் சிந்து வரிவடிவங்களிலிருந்தே ஒலி நிலை வடிவம் phonetic script கருத்து உருவாகியது. சிந்து மக்களிடமிருந்து இக் கருத்தைக் கடன்வாங்கியே (உலகின் முதல் நெடுங்கணக்கு வரிசை, alphabet எனப் பொதுவாகக் கருதப்படும்) பினீசிய எழுத்து உருவாக்கப்பட்டது. கி.மு.1500 ஐ ஒட்டிய பினீசிய வரிவடிவிலிருந்து பிராமியோ தமிழியோ, உருவாயினவென்பது பிழை. iii) நானூற்றுக்கு மேற்பட்ட சிந்து வரிவடிவங்களில் ஒரு சிலவே சொல்லசையன் logosyllabic வடிவுகள். ஏனையவை இடு குறிவடிவங்கள். அத்தகைய இடுகுறி வவங்கள் 45. அவற்றுள் பல கூட்டெழுத்துக்களாக எழுதப்பட்டன. (தமிழ் மொழியின் சொல்லமைப்பு , புணர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் இக்கூட்டெழுத்துகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆழ்ந்த தமிழறிவு உடையவர் மட்டுமே இக்கூட்டெழுத்துகளில் அடங்கிய குறியீடுகளைப் பிரித்தறிய இயலும்) சிந்துஎழுத்தில் 18 மெய்யெழுத்துக்களுக்கு 16 வடிவங்கள் இருந்தன. மீன்வடிவம் ல,ழ,ள மூன்றுக்கும் பொதுவானது. உயிரொலிகளுக்கு 6 வடிவங்கள் இருந்தன. ஆகமொத்தம் 22 வடிவங்கள். iv) சிந்து வெளி நகர நாகரிகம் சுமார் கி.மு.1500ல் அழிந்து விட்ட போதிலும்கிராமப்புறங்களில் சிந்து எழுத்துக் குறியீடுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தென்னாட்டுப் பெருங்கற்கால Megalithic (கி.மு.1400 - 800) குறியீடுகளாக அவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன (கீழவாலை; பெருமுக்கல்). (2006 பிப்ரவரியில் செம்பியன் கண்டியூர் கற்கருவியில் (கி.மு. 1000-க்கு முந்தியது) உள்ள சிந்து எழுத்துகள் ஸமகாதேவன் கருத்துப்படி முரு(கு) - அன் - ? - ?”] சீவா கருத்தை மெய்ப்பிக்கின்றன. 30. தமிழி எழுத்தின் தோற்றத்தை சிந்துவெளி நாகரிக எழுத்தோடு தொடர்பு படுத்தியுள்ளது மட்டுமின்றி பண்டைத் தமிழக வரலாற்றுக் கூறுகள், தமிழகத் தொல்லியல் எச்சங்கள் போன்வற்றையும் அந்நாகரிகத்தோடு தொடர்பு படுத்திப் பல அரிய செய்திகளைத் தந்துள்ளார் ஜீவா. எனவே சிந்து நாகரிகம், எழுத்து பற்றி ஆர்வம் கொண்டோர் மட்டுமன்றி தமிழ், தமிழர், தமிழக வரலாற்று ஆர்வலர்களும் இந்நூலைப் படித்தால் அவர்களுக்குப் பல அரிய செய்திகளும் கருத்துகளும் கிடைக்கும். 31. பர்போலா உள்ளிட்ட மேலை அறிஞர் பலரும் சிந்து எழுத்தானது படவுருக்களுடன் தொடர்புடைய சொல்லசையன் (Logo Syllabic) என்ற தவறான உன்னிப்பில் ஆய்வு செய்து வருகின்றனர் என்பர் ஜீவா. சிந்து எழுத்து உண்மையில் கூட்டெழுத்து வடிவங்களையே கொண்டது எனினும் அதன் அழகிய ஓவிய - பட உருத்தன்மை யொன்றையே கண்டு, அவர்கள் சொல்லசையன் ஆகக்கருதி இழுக்கியுள்ளனர் என்பதை அவர் பின்வருமாறு விளக்குகிறார். (i) உலக நாகரிகங்களின் தொல்லெழுத்துகள் அனைத்தும் படிக்கப்பட்டுவிட்டன. படவுருத்தன்மை கொண்ட சுமேரிய ஆப்பெழுத்து (Cuneiform), எகிப்திய புனிதப்பொறிப்பு (Hieroglyphs) ‘படவுருத் தன்மை’ அடிப்படையில் படிக்கப் பெற்றுவிட்டன. உயிர்மெய்யன் (Syllabary) எழுத்து முறையான லீனியர் - B மற்றும் சைப்ரஸ் எழுத்துகளும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்பெற்றுவிட்டன. சிந்து எழுத்தும் “முற்றிலும் படவுருவன் முறைக்குரிய சொல்லசையன் எழுத்து முறையாக” இருந்திருப்பின் இதற்குள் படித்திருப்பர். (ii) சிந்து எழுத்தினைப் படிக்க மரபுமுறைப் பார்வையை விடுத்து (மாற்றுச்சிந்தனை அடிப்படையில்) எவற்றுடனும் சாராத, நுண்ணாய்வு தேவைப்படுகிறது. அதன் வடிவம் எந்த ஒரு இயற்கைப் பொருளின் அடிப்படையையும் கொண்டதன்று. அவ்வாறு இருககலாமென மேம்போக்காகக் கருதவைக்கும் ஒன்றிரண்டும் படத்துக்குரிய பொருளைச் சுட்டுவதாகக் கருதமுடியவில்லை. நுணுகி ஆராய்ந்தால் சிந்து எழுத்தை வடிவமைப்பு அடிப்படையில் (1) எளிய அடிப்படை வடிவங்கள், (2) குறியீடேற்ற அடிப்படை வடிவங்கள், மற்றும் (3) கூட்டு வடிவங்கள் என்ற மூன்றாக பகுக்கலாம். (இவற்றைத் தவிர தொடர்நிலையில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப படவுருக்கள், குறியீடுகள், எண்கள் மற்றும் சிந்து எழுத்துமுறைக்கு முந்திய எழுத்து முறைகளின் எச்ச வடிவங்களையும்கலந்து ஓர் ஒருங்கிணைந்த எழுத்து முறையை அமைத்துள்ளனர்.) எகிப்திய எழுத்து முறை இத்தகையதென்று ஸ்வெய்ன் முதலியவர்கள் கூறுகின்றனர். (iii) இம்மூவகை வடிவங்களுக்கும் அடிப்படையான செயற்கையான வடிவ இயல் (Geometric) தன்மையுடைய அடிப்படை வடிவங்கள் வருமாறு இவற்றை ஓவியத் தன்மை கொண்ட படவுருக்களாக எவரும் கருத இயலாது. இவ் வடிவங்களைப்பற்றி நுணுகி ஆராய்வதே முதற்படியாகும். மேற்கண்ட வடிவங்களுடன் மேலும் சில எளியனவும் குறியீடு ஏற்காதனவுமான அடிப்படை வடிவங்களும் சிந்து எழுத்துப்பட்டியலில் உள்ளன. ஐ. மகாதேவன் (1977) சிந்து முத்திரைத் தொகுப்பு நூல் அடிப்படையில் அவற்றையும் தொகுத்து இந்தப் பட்டியலைக் கீழ்க்கண்டவாறு நிறைவு செய்யலாம். (இவை மூன்றுவகை வடிவங்களிலிருந்தும் பிரித்தெடுத்தவை, மாற்று வடிவங்களையும், ஒப்புடை வடிவங்களையும் விலக்கித் தொகுத்தவை; இவற்றைத் தவிர வேறு வடிவம் எதையும் சிந்து எழுத்தில் காட்டஇயலாது என்பது உறுதி. இச்செயற்கை வடிவங்களின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது? பொதுவாக நாகரிக வளர்ச்சியோடு மொழிவளர்ச்சியும், நகர நாகரிக வளர்ச்சியோடு எழுத்து வரிவடிவ முறை வளர்ச்சியும் பிணைந்தது ஆகும். சிந்து நாகரிக நகர வளர்ச்சி நிலைக்கு ஒப்பான வளர்ச்சியை அதன் வரிவடிவ முறையிலும் காண்கிறோம். நகரமைப்பு, கட்டக்கலை, அளவை முறைகள், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறைகளின் வளர்ச்சியின் மூலம் பெற்ற அனுபவ அறிவைஎழுத்து வரிவடிவ அமைப்பிலும் பயன்படுத்தியுள்ளனர் எனலாம். அகமது ஹசன் தானி (Dani) 1963 / II. 1985 நூலாகிய Indian Palelography - இன் 19ம் பக்கமும் ஜீவா கருத்தை ஆதரிக்கிறது. குறியீடு ஏற்காத அடிப்படைவடிவங்கள் 54 தான் என்பர் அறிஞர் தானி. 32. சிந்து எழுத்தின் மிகுவளர்ச்சியும் பரவலும் இருவகை யானது என்பர் ஜீவா. முத்திரை எழுத்தின் பரவல் மகாராட்டிர தய்மாபாத்துடன் (Daimabad) முடிகிறது. எழுத்துத் தொடர்பான பரவல், இலங்கை யாழ்ப்பாணம்வரைச் சென்றது. குஜராத்தில் உள்ள பேட்துவாரகை, தமிழகத்தில் பொதிகை மலைக்குகை, கீழ்வாலை, பெருமுக்கல் முதலியன; இலங்கையில்யாழ்ப்பாணம் இங்கெல்லாம் இந்த எழுத்து முறையையும், அதன் தொடர்வளர்ச்சி நிலையையும் காணலாம். (i) குஜராத் பேட்துவாரகை : வ்வ்ர் ணா ண வர ய் ண் ம = மண்ய்வரணயாவ்வோர் (வலமிருந்து) வடிவங்கள் 1, 3 சிந்து எழுத்து தமிழியாகும் மாற்றத்தைக் காட்டுகின்றன. (ii) பெருமுக்கல் (தமிழ்நாடு) : அ ர ச் ர் = அரசர் எழுத்துகள் 2, 3, 4 இல் தமிழி எழுத்தாகும் மாற்றம் உள்ளது. (iii) கீழ்வாலை (தமிழ்நாடு) : த வ ச ச தவ ரவ் = தவச சதவரவ் தவ சய்ய சரை = தவசய்ய சரை இவ்வடிவங்கள் வட்டார வழக்கு வடிவங்களாக உள்ளன. (iv) பொதிகை மலைக்குகை (தமிழ்நாடு) இந்தியன் எக்ஸ்பிரஸ் 23.3.1985 மூ அய் தவ ண ண் தன் இன் தவ = மூ அய் தவணந்தன் இன் தவ இவ்வெழுத் துக்கள் காலத்தால் முந்தியவையும் சிந்து எழுத்தை நன்கறிந்தவர் எழுதியவையும் ஆகும். (v) யாழ்ப்பாணம் ஆனைக்கொட்டடி (இலங்கை) The Hindu 26.4.1981 இந்திரபாலா கட்டுரை) ம ய ன = மயன த் வே கோ = கோவேத்த இது ஒரு குயவர் முத்திரை. கோவேத்து - வேட்கோவர் = குயவர் மேற்கண்ட ஐந்தும் தெளிவான சிந்து எழுத்து வடிவங்களாகவும், தமிழியாக மாறும் தெளிவான மாற்றங்களுடனும் உள்ளன. தமிழியாகும் மாற்றத்தில் பேட்துவாரகை தொடக்க நிலையையும், பெருமுக்கல் இடைநிலையையும், யாழ்ப்பாணம் முழுமையாகத் தமிழியாகிவிட்ட இறுதி நிலையையும் காட்டுகின்றன. அதன்பின்னர், தமிழியின் முழுவளர்ச்சி கி.மு.800 - 600 கால அளவில் நிகழ்ந்திருக்க வேண்டும். 33. சிந்து எழுத்து தமிழியாகும் மாற்றம் தமிழகத்தில்தான் நடைபெற்றுள்ளது. தமிழகத்துப் பண்டைப் பானையோடுகளில் கூட சிந்து எழுத்து வடிவங்கள் இருப்பதிலிருந்து இதனை அறியலாம். தமிழகப் பெருங்கற்கால வாழிடங்களாகிய கொடுமணல், சாணூர் போன்றவற்றில் கிடைத்துள்ள இவ்விருவகை எழுத்து வடிவங்கள் வெறும்பானைக்கீறல்களாக மட்டும் இருக்க முடியாது எ-டு. சாணூர் (கி.மு.1400-800: எஸ்.ஆர். ராவ்): சாணூர் 1400-800 BC L < - R ஆ ய வர் = ஆயவர். 34. சிந்து எழுத்தும் தமிழி எழுத்தும் ஒன்று கலந்த நிலையில் கிடைப்பது அவற்றின் உறவு - மரபு - வரலாற்றுத் தொடர்பைத் தெளிவாக்குகிறது. இவற்றின் அடிப்படை வடிவங்களிடையே வடிவ - ஒலிநிலை ஒப்புமைகள் மிகப் பொருந்தி வருகின்றன. (ஒன்றிரண்டு வடிவங்கள் மட்டுமே சற்று மாறுபட்டவை) எ-டு. சிந்து ங,ந,ன மெய்கள் தமிழியில் மாறியுள்ளன. மீன் வடிவுடன் ழ மட்டுமே பொருந்துகிறது. ல-ள வடிவங்களுடன் சிந்து எழுத்தேதும் பொருந்தவில்லை. எனவே, இவை பிற்காலத்தில் உருவாக்கப்பெற்றிருக்க வேண்டும். தமிழியின் மொழியாக்க அடிப்படையில் பார்த்தால் சிந்து எழுத்தில் மீன் வடிவம் ல-ழ-ள மூன்றையும் ஒலிக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். அய், அவ் வடிவங்கள் சிந்துவில் அகர எழுத்தடிப்படையில் ஒன்று/இரண்டு கோடுகளிட்டு அமைக்கப் பெற்றுள்ளன. அவ்வொலிகள் தொடர் நிலையில் அவ்வாறே அய், அவ் என ஒலிப்பதால் அப்படியே இங்கு பயன்படுகிறது. (ii) சிந்து எழுத்துக் கூட்டு வடிவங்களும், சிந்து அடிப்படை வடிவங்களைக் கொண்டு அமைக்கப்பெற்றவையே. ஆகையால் அவற்றைப் பிரித்தறிந்து, தமிழியுடன் பின்வருமாறு பொருத்தி யுள்ளார் ஜீவா: இக்கூட்டு வடிவங்கள் சிந்து - தமிழி எழுத்துமுறைகளின் வடிவ - ஒலிநிலை ஒற்றுமையைக் காட்டுகின்றன. சிந்து - தமிழி எழுத்துகளிடையே உள்ள வடிவ ஒப்புமை - ஒலி ஒப்புமை அடிப்படையில் சிந்து முத்திரைப் பொறிப்புகளின் 1977 மகாதேவன் தொகுப்பில் ஆங்காங்கு மாதிரிகளைத் திரட்டி சிலவாசகங்களை தமிழியாகப் படித்துக் காட்டியுள்ளார் ஜீவா (தமது 2010 சூன் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வுக் கட்டுரையில்). ஒவ்வொன்றிலும் இரண்டாவது வரி “தமிழி” ஆகும். 1008 கோழி யார் இரு ள் ளா ய் மு ன் கோழி யார் இரு ழ் ழா ய் மு ன் = கோழியார் இருள்ளாயி முன் 2169 அ ம யார் ட ன ன் தொழு அ ம யார் ட ன ன் தொழு = அமயார்த்தனன் தொழு 7244 கோயில் இட ண்ண ஆ காவ்வ கோயில் இட ண்ண ஆ காவ்வ = கோயில் இடண்ண ஆ காவ்வ 35. சிந்து எழுத்து மெய்யெழுத்தை மிகுதியாகக் கொண்ட செயற்கை உயிர்மெய்யாகிய - அசையெழுத்து முறையென்று உறுதியாகிறது. சிந்து எழுத்து நிலவிய காலத்திலேயே, கி.மு.2250 அளவில் கிரீட் தீவில் மினோவன் அரசின் லீனியர்-B உயிர்மெய்யன் (Syllabary) எழுத்துமுறை வழங்கியது. உயிர்மெய்யன் எழுத்தே ஒலிநிலை எழுத்தின் தொடக்கமாகும். இதிலிருந்தே மெய்யெழுத்து முறைகள் தோன்றின. சிந்து எழுத்து முறையிலும் பழைய உயிர்மெய்யன் எழுத்து முறைக்குரிய சான்றெச்சங்கள் உள்ளன. உயிர்மெய்யன் முறையின் பயன்பாட்டிலுள்ள கடுஞ் சுமையால் மக்கள் மெய்யெழுத்து வரிவடிவங்களைக் உருவாக்கிப் பயன்படுத்தினர். சிந்து மக்களும் கி.மு.2500 அளவில் அதனையே செய்திருக்க வேண்டும். மெய்யெழுத்து முறையே ஒலிநிலை (Phonetic) எழுத்தின் தாயாகையால், சிந்து எழுத்தே உலக அளவில் ஒலிநிலை எழுத்தின் தாயெனலாம். சிந்து எழுத்தைப் படித்தறிய உதவும் “ரோசட்டா பொறிப்பு” ஆகத் தமிழிக் கல்வெட்டு எழுத்துகளைக் கொண்டு, மேற்கண்டவாறு சிந்துப் பொறிப்புகளைத் தமிழி எழுத்துகளின் அடிப்படையில் படித்து இரண்டுவகை எழுத்துகளும் வடிவநிலை - ஒலிநிலைகளில் பொருந்தியுள்ளன என்று ஜீவா கொண்டுள்ளார். 36. ஜீவா ஆய்வின்படி சிந்து, தமிழி, தமிழ் எழுத்து வரிவடிவ ஒப்புமைப்பட்டியல் வருமாறு (82% அளவுக்கு ஒப்புமை உள்ளது. சிந்து எழுத்துகள் நேர் கோட்டு வடிவங்கள்; ஆனால் பனை ஒலையில் எழுதப் பெருமளவுக்கு பொதுமக்கள் பயன்படுத்திய தால தமிழி வடிவங்கள் வளைந்த உருக்களை அடைந்தன) 37. “தமிழி” அசையெழுத்து (syllabic) வரிவடிவம்தான்; எனினும் மெய்யெழுத்து வடிவங்களில் ஒலிமாற்றக் குறிகளைச் diacritic marks சேர்த்து தமிழி உருவாகியது. கி.மு.800க்குப் பின்னர் “தென்னாட்டுப் பெருங்கற்காலத் தமிழ நாகரித்தினரிடம் தமிழி மேலும் மாற்றம் அடைந்தது. சிந்து எழுத்துகளிடமிருந்து நேரடியாக ஒலிநிலை வடிவை phonetic concept, பினிசீயர் கடன் வாங்கி பினீசிய வரிவடிவை அமைத்துக் கொண்டனர்; ஆனால் ஒலிமாற்றக் குறிகளைப் பயன்படுத்தாமல் “மெய் + உயிர் = உயிர்மெய்” என்றவாறு ‘அசையெழுத்தை syllabary அமைத்துக் கொண்டனர். சிந்து மெய் எழுத்து வரிவடிவங்கள் சிலவற்றையும் அவற்கள் தமது பினீசிய வரிவடிவத்தில் ஏற்றுப் பயன்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் ஜீவாவின் ஆய்வு முடிவுகள். சிந்து முத்திரைகளைப் பதித்தபின் கிடைக்கும் வாசகங்களை எப்படிப் படிக்க வேண்டும்? (பெரும்பாலோர் படிப்பது வலமிருந்து இடமாக (L <- R) 38. முத்திரைகளைப் பதித்தபின் கிட்டும் வாசகங்களை வலமிருந்து இடமாகப் படிப்போரே பெரும்பான்மையராவர் (காட் Gadd, ஸ்மித், மார்ஷல், ஹண்டர், ஹீராஸ், பர்போலா, சாலெக், மகாதேவன், ஜீவா உட்பட), அவர்கள் தரும் காரணங்கள் சுருக்கமாக: (1) கலிபங்கன் ஓட்டுப் பொறிப்பில் (காணும்) என்பதில் தான் இறுதி எழுத்து, (லால் : 1966) சிந்து முத்திரைப் பொறிப்புத் தொடர்களில் U இறுதி எழுத்து; / இவ்விரண்டும் தொடக்க எழுத்துகள். (2) முத்திரை வாசகங்களில் உள்ள விலங்குகள் பெரும்பாலும் இடப்பக்கம் நோக்கியுள்ளன. (3) (அ) ஹாரப்பா 103 வாசகத்தைப் பின்வருமாறு படிக்க வேண்டும்: (ஆ) மொஹெஞ்சொதரோ 735 வாசகத்தில் கடைசிக் குறி இடப்பக்கத்தில் கடைசியாக இடுக்கில் வரையப்பட்டுள்ளது. மொ 66 இணை எங்கும் கிட்டவில்லை வரிசை 76 தடவை வருகிறது. (4) இடமிருந்து வலமாகப் படிப்பதே சரி என்பதற்கு ராமன் (1986); மதிவாணன் (2002) ஆகியோர் தரும் காரணங்கள்:- i) கலிபங்கன் பானை ஓட்டுச் சில் முழுமையற்றது; பானையில் எப்படியிருந்தது, வாசகத்தில் எந்தப்பகுதி இந்தச் சில்லில் வந்தது என்பது தெரியாது. ii) கி.மு.1400 வரை உலகில் எந்த லிபியும் L <- R ஆக எழுதப்படவில்லை. அதற்குப்பின்னரும், வட செமித்திக் மட்டுமே அப்படி எழுதப்பட்டது. கி.மு.2600 லேயேஉருவான சிந்துலிபி அக்காலத்திய பிற பொறிப்புகளைப் போலவே L -> R ஆகப்படிக்க வேண்டியதகத் தான் இருந்திருக்கம். திடுமென எவரும் முன்னதைப் பின்னதாக மாற்றியிரார். iii) இன்றும் L <- R ஆக உள்ள மிகச்சில மொழிகளாகிய அரபு முதலியவற்றிலும் எண்கள் (அவை L <- R வழங்கும் இந்தியா விடமிருந்து பெற்றவை) L -> R ஆகவே எழுதப்டுகின்றன. (iv) சிந்துமொழி தமிழிய மொழி என்று ஏறத்தாழ முடிவான நிலையில் தமிழ் இலக்கண மொழியியல் அடிப்படையில் (L -> R) உட்பட) படிப்பதே அறிவுடைமையாகும். அப்படிப்படித்து “அனைத்துச் சிந்துப் பொறிப்புகளையும் தாம் பொருத்தமாக வாசித்து விட்டதே L -> Rக்கு உறுதியான சான்று” என்பர் மதிவாணன். கி.மு.1500க்குப் பிற்பட்ட தென்னிந்தியாவில் காணும் சிந்து லிபிகள் உள்ளிட்ட / சார்ந்த பொறிப்புகளிலும் L -> R ஆகவே உள்ளன என்பது மற்றொரு காரணம் என்பர். (v) இராமனுடைய 1986 கட்டுரையில் முத்திரை வாசகங்களில் தாம் காணும் தன்மைகள் (முத்திரைகளைப் பதித்துக் கிடைக்கும் வாசகங்களில் அல்ல) அதாவது: இடப்பக்க இறுதியில் குறியீடுகள் சிறியதாக இருப்பது, அல்லது இடித்துக் கொண்டிருப்பது. (சொல்லின் முதல் எழுத்தை முத்திரையின் வலப்பக்கத்திலிருந்து பொறிக்கத் தொடங்கி முடிக்கும் நிலையில் இடப்பக்கத்தில் இடக்குறைவு ஏற்பட்டதால் இந்நிலைமை; இடப்பக்க இறுதியில் மார்ஜின் இல்லாதது; இடப்பக்க இறுதியில் ஓரிரு எழுத்துகள் ஒன்றன் கீழ் ஒன்றாக வருதல்; முதலியவை பதிப்பித்த வாசகங்கள் L -> R ஆக இருக்கும் வகையில் முத்திரைகளில் L -> R ஆகச் செதுக்கப்பட்டதை நிறுவுகின்றன என்ற வாதத்தைக் காணலாம். சிந்து எழுத்து வரி வடிவத்துக்கும் பிற்றைத் தமிழி வரி வடிவத்துக்கும் உள்ள தொடர்பு 39. சிந்து வரிவடிவத்திலிருந்து தமிழி (பிரமி) வரிவடிவு உருவாகியது என்று கருதுவது தவறு என்ற பர்போலா கருத்தை மேலே குறித்தோம். மாறாக அவ்வாறு தான் உருவாகியது என்பதற்கான பிற அறிஞர் சிலர் கருத்துகளை இப்பிரிவில் காண்போம். 40. மிகப் பழைய சங்க நூல்களிலிலேயே (தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களில் அடங்கிய பாடல்களில் தொன்மை சான்றவை) தமிழ் வரிவடிவம், எழுத்துமுறை குறித்தும் பண்பட்ட இலக்கியம் குறித்தும் தெளிவாக, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐ. மகாதேவன் (2003)கருத்து, “அசோகனுடைய தமிழ் – பிராமி எழுத்துக்களிலிருந்து தமிழ் வரிவடிவம் உருவாக்கப்பட்டது” என்பதாகும். இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. காரணம் மேற்சொன்ன கி.மு. 300 சார்ந்த தமிழ் நூல்கள், பாடலகள் உருப்பெறுவதற்கு சில பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வரிவடிவமும் இலக்கியங்களும் தோன்றத் தொடங்கியிருக்க வேண்டும். கொற்கையில் 1970 இல் அகழ்ந்தெடுத்த பானைஓட்டில் உள்ள தமிழ் எழுத்தின் காலம் கி.மு.700 என அப்பொழுதே உறுதியாக்கப் பட்டது. கொடுமணலில் அண்மையில் அகழ்ந்த பானை ஓட்டு எழுத்துக்களின் காலமும் கி.மு.500க்கு முந்தியதாக இருக்க வேண்டும் என இராஜன் (2004) நிறுவியுள்ளார். பழனி அருகே பொருந்தல் ஊரில் கிட்டிய பொறிப்புகள் இரண்டின் காலம் கி.மு. 490 / 450 என 2011 இறுதியில் நிர்ணயிக்கப் பட்டுள்ளண (The Hindu 15-10-11). ஆதிச்சநல்லூரில் 2005இல் நடந்த அகழ்வாய்வில் கண்ட பானை ஓட்டுப் பொறிப்பின் காலமும் கரிமக் கணிப்பின்படி கி.மு.700 எனவும் செய்தி வந்தது. இவற்றையும் பிற ஆதாரங்களையும் சுட்டி இராஜன் (2004), நடனகாசிநாதன் (2004) ஆகியோர் “தமிழுக்கு கி.மு.800ஐ ஒட்டியே ஒரு தனி வரி வடிவம் இருந்திருக்க வேண்டும். அதனைப்பின்பற்றியே அசோக தமிழ் - பிராமி வரிவடிவம் (லிபி) கி.மு. 300 இல் உருவாக்கப்பட்டிருக்கும்” என்பதற்கான வலுவான காரணங்களை முன்வைத்துள்ளனர். சிந்து நாகரிக லிபி திராவிட மொழி சார்ந்தது ஆனபடியால் பிராமி லிபியும் அதிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்பர் ஹீராஸ் New Review; சூலை (1936). 41. இந்திய மொழிகளில் தமிழ் ஒன்றில் தான் எழுத்துக்கள் நெடுங்கணக்கு நிலையை அடைவதற்கு முன்னைய காலங்களில் பெற்றிருந்த (சித்திர எழுத்து, உரு எழுத்து, உணர்வு எழுத்து போன்ற) உருவங்களின் இலக்கணம் கூறப் பட்டுள்ளது. இச்செய்திகளை யெல்லாம் விரிவாக தி.நா.சுப்பிரமணியன் தனது ‘பண்டைத் தமிழ் எழுத்துக்கள்’ (1938) நூலில் தந்துள்ளதுடன், இந்திய எழுத்து முறைகள் எல்லாம் தமிழ் எழுத்திலிருந்தே தோன்றியிருக்கலாம் என்பர். “பிராமி லிபி முதலில் வடமொழிக்காக ஏற்படவில்லை யென்றும் உயிர் எழுத்துக்களுள் அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் அதிகச் சிறப்பையளிப்பதும், மெய்யெழுத்துக்களுள் வர்க்க எழுத்துக்களைக் கொள்ளாததுமான ஒரு பாஷைக்கென அமைக்கப் பட்டுப் பின்னால் வடமொழிக்கு உபயோகப்படும் படி புதிய குறிகள் உண்டாக்கப்பட்டனவென்றும் எண்ணவேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுள் இவ்விதம் உள்ளது தமிழ் ஒன்றுதான். அங்ஙனமாயின் பிராமி முதலில் தமிபக்கென அமைந்தலிபியாக இருத்தல் கூடுமா? இஃது ஆராய்தற்குரியது”. வடநாட்டு வரலாற்றிஞர் எஸ். ஆர். கோயல் (1979) கருத்தும் அசோக பிராமி எழுத்து படிப்படியாக (வடநாட்டில்) உருவானதல்ல; அது ஒரு காலகட்டத்தில் (ஏறத்தாழ கி.மு.300 எனக்கூறலாம்) புதிதாக உருவாக்கப்பட்டது என்பதாகும். யாழ்ப்பாணம் ஆனைக் கோட்டையில் 1980ல் இந்திரபாலா கண்டெடுத்த முத்திரைத் தகட்டில் பின்வருமாறு “தீவுகோ” என்னும் சொல் சிந்து எழுத்திலும், பிற்காலத் தமிழ் எழுத்திலும் அமைந்துள்ளது என்பர் மதிவாணன்:- தீ வு கோ சிந்துவெளி எழுத்து தமிழி இதிலிருந்து சிந்து வெளி அசையெழுத்துக்கள் (Syllabic) தொல் தமிழ் எழுத்து வடிவங்களாக இந்தியாவெங்கும் (ஈழத்திலும்) வழங்கின என்றும் பின் இடை / கடைச் சங்கத் தமிழ்ப் புலவர் அவற்றைத் திருத்தி “முதலெழுத்து” என்னும் பெயரில் நெடுங்கணக்காக (Alphabetic) புதிய எழுத்து முறையை கி.மு.1800-1700 ஐ ஒட்டி உருவாக்கியிருக்க வேண்டும்; அதுவே பிற்கால “தமிழி”; அதிலிருந்து வட இந்தியர்கள் “பிராமி” என்ற பெயரில் தம் மொழிக்கு எழுத்துகளை ஆக்கிக் கொண்டனர் என்பது மதிவாணன் கருத்து. இதன் விரிவை அவருடைய “Indus script among Dravidian Speakers” (1995) நூலில் காண்க. கீழவாலை முதலிய இடங்களில் உள்ள பாறை ஓவிய எழுத்துகள் போன்று தென்னாட்டில் வழங்கிய பல்வேறு தொல் எழுத்துகளும் சிந்து வெளி எழுத்துகளுடன் தொடர்புடையவை என்பதை அந்நூலில் விளக்குகிறார். 42. டாக்டர் கே.வி. ரமேஷ் எழுதி ICHR (தென் மண்டலம் பெங்களூர்) 2006இல் வெளியிட்டுள்ள “Indian inscriptions - a study in comparison and contrast” என்னும் நூல் தெளிவாக தமிழி (தமிழ் - பிராமி) லிபி கண்டிப்பாக அசோகனுக்கு முந்தியது; அந்த லிபியைச் சற்றே மாற்றி அசோகன் கல்வெட்டு லிபி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது வலுவான ஆதாரங்களுடன் விளக்குகிறது. அந்நூலின் (பக் 7-8) முடிவு வருமாறு: (1) அசோகன் காலத்துக்கு வெகுகாலத்துக்கு முன்னரே தென்னிந்தியாவின் தென்கோடியில் பாண்டிய நாட்டில் பழந்தமிழின் ஒலியன்களுக்கு phonemes அருமையாகப் பொருந்தும் தமிழி லிபி உருவாகிப் புழக்கத்தில் இருந்தது. (கறாராக எவ்வளவு கழிபழங்காலத்தில் இருந்து அந்த லிபி வழங்கி வந்தது என்பதை நிறுவ இதுவரைச் சான்றுகள் கிட்டவில்லை). (2) வட இலங்ரைக அனுராதபுரம் அகழ்வில் கண்ட (கி.மு. 5-4 நூற்றாண்டுகள் சார்ந்த பானைஓடு ஒன்றில் (இந்தோ - ஆரிய வர்க்க எழுத்து முதலிய ஒலியன்கள் எதுவும் வராத) அரமா என்ற புத்தமதச்சொல் தமிழி லிபியில் எழுதப்பட்டுள்ளது. ஒரிசா - ஆந்திரக் கரைக்கும் வட இலங்கைக்கும் இடையில் அக்காலத்தில் (ஏன் அதற்கு நெடுங்காலம் முனனர் இருந்தே) வணிகம் செய்து வந்த கப்பல் வணிகர் வசித்து வந்த இடத்தில் தான் அவ்வகழ்வு நடந்தது. [சமணர் பந்நவந சுத்த குறிப்பிடும் 18 பழைய லிபிகளில் தமிழி (Damili: பின்னர் இது Dramila - > Dravida என்று உருமாறியது) பொலிந்தி Polindi ஆகியவையும் உள்ளன. தமிழியைச் சற்றே மாற்றி அக்கப்பல் வணிகர் உருவாக்கிக் கொண்டதே பொலிந்தி]. (3) அந்தக் கப்பல் வணிகர்கள் தாம் தமிழி (பொலிந்தி) லிபியை முதற்கண் தெலுங்குப்பகுதியில் பட்டிப்ரோலுவுக்கும் பின்னர் வங்காளம், இன்றைய உத்தரப் பிரதேசத்தின் கீழைப்பகுதி, ராஜஸ்தான் என்றவாறு படிப்படியாகப் பரப்பினர். அவ்வாறு பரப்பும்பொழுது பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்குத் தேவைப்பட்ட வர்க்க எழுத்துகள் முதலியவற்றுக்கான வடிவங்களையும் படிப்படியாக உருவாக்கிக் கொண்டனர். (4) மேற்சொன்ன தமிழி - பொலிந்தி லிபியைத் தமது பொறிப்புகளுக்குப் பயன்படுத்திய `அசோகன் ஆணைக் கல்வெட்டுப் பொறிப்பாளர்கள்’ -- அவ்வாசகங்களை உருவாக்கி, எழுதிச் செதுக்கியவர்கள் -- வட இந்திய (பிராகிருத - சம்ஸ்கிருத) மொழிகளுக்குத் தேவையான பல முக்கியமான மாற்றங்களைத் தமிழி லிபியில் செய்து கொண்டனர். ஆங்கில மூலம் வருமாறு: 1. There was the Damili script, fully answering to the phonetic needs of ancient Tamil in use in the Pandyan tract of the extreme south of the peninsula even before the days of Asoka, though we have, at present, no means of asserting how much before. 2. The script is found used, without the need for using any Indo – Aryan phonetic symbols, not found in ancient Tamil, for writing out a three - letter word arama, of Buddhist import on a potsherd found at the 5th - 4th century B.C. levels, of an excavated site in northern Sri Lanka, which sherd should have belonged to the boat people who were plying between the eastern coastline of North India and northern Sri Lanka. 3. Those very boat people carried this Damili (Polindi) script first to Bhattiprolu and then to Bengal, eastern UP and Rajasthan, all the time displaying gradual transformations as demanded by Prakrit and Sanskrit phonetics. 4. It is this script that the composers, writers and engravers of the Asokan edicts used in their writings, introducing in that process, many far – reaching changes and developments which we find in the North Indian vernacular script. 43. தமிழ்நாட்டில் இருந்த கி.மு.1900 - கி.மு. 300 சார்ந்த பெருங்கற்கால நாகரிகத்தின் தொடர்ச்சியே சங்க இலக்கிய காலம்; அந்நாகரிகக் கூறுகளிற் பெரும்பாலானவை சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன என்பதும் ராஜன் போன்றவர்களுடைய அடுத்த முடிவாகும். பல்துறை ஆய்வுகள் மேலும் வளரும் பொழுது தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 300க்கும் சில நூற்றாண்டுகள் முற்பட்டது என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 44. இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். கி.மு.300க்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் எவையுமே நமக்குக் கிடைக்கவில்லை. கி.மு.300 - கி.பி. 300 காலகட்டத்தைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி.300ஐ ஒட்டிச் சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் எவ்வெவற்றை விட்டு வைக்கலாம் என்று கருதினார்களோ அவற்றை மட்டும் தொகுத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிட்டனர். தொகுத்தவற்றிலும் மாற்றங்கள் செய்திருக்கலாம். நுண்ணறி வுடையவர்கள் இதுபற்றி 1871-லிருந்து தெரிவித்துள்ளவற்றைக் காண்போம்:- சார்லஸ் ஈ கோவர்: தென்னிந்திய நாட்டார் பாடல்கள் The Folk songs of Southern India) 1871: திட்டமிட்டுச் சிதைக்கப்படாத அல்லது மாற்றியெழுதப்படாத தொல்பழங்காலத் தமிழ் நூல் எதையும் இன்று காண்பது அரிது. தமிழ் மக்கள் - திராவிட (பழந்தமிழ்) இலக்கியத்தைக் கைவிட்டு புராணக்கதைகளை நம்பினால்தான் தங்களுக்குப் பிழைப்பு உண்டு என்று உணர்ந்தவர்களே இவ்வாறு பழந்தமிழ் இலக்கியத்தைச் சிதைத்தவர்கள் ஆவர். (தனித்) தமிழ்ச் செய்யுள் நூல்கள் பல மதிப்பிழந்து ஒழியும்படி அவர்கள் செய்தனர். அறவே ஒழிக்க முடியாத நேர்வுகளிலும் அந்நூல்களை அயோக்கியத் தனமாகச் சிதைத்து உருமாற்றி உலவவிட்டு மூல நூல்களின் கருத்தை உணர முடியாதவாறு செய்துவிட்டனர். சிவத்தம்பி (1986)யும் இக்கருத்தினரே. ஹயூநெவில்:தி தப்ரொபேனியன் (The Taprobanian) சூன் 1896 “மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் நூலகமும் அழிக்கப் பட்டபொழுது பழந்தமிழ் நூல்கள் சகட்டுமேனிக்கு அழிக்கப் பட்டன. (அவற்றுள் சமணக் கொள்கை வாடை இருக்கலாம் என்ற கருத்தில்). ஈழத்தில்மகாவம்சம் இருந்ததுபோல் பாண்டியர்கள் வரலாற்றைக் கூறும் ஒரு நூல் மதுரைச் சங்க நூல்களில் ஒன்றாக இருந்தஅழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக திருவிளையாடற் புராணம் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அழிக்கப் பட்ட வரலாற்று நூலின் சிதைவுகளுடன், ஐங்கமர்கள் (பார்ப்பனிய சிவ மதத்தவர்கள்) எண்ணம், சமயம்ஆகியவற்றுக்குப் பொருத்தமான புனை கதைகளுடன் பின்னிப் பிணைந்து அப்புராணம் உருவாக்கப்பட்டது.” ஜான் ஸ்பியர்ஸ் “ஞானம் தோன்றிய இடத்திலிருந்து” வால்யூஸ் Values II - 10 சூலை 1957 : “சிந்துவெளிநாகரிக முத்திரைகளில் நூற்றுக்கணக்கான (தொல்தமிழ்) வாசகங்கள் உள்ளன. கடல் கொண்ட (அழிந்துபோன) பண்டை நூல்களைப் பற்றித் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் புத்தர் காலமாகிய கி.மு.600க்கு முந்திய நூல்களுள் ஒன்றுகூட கிடைக்காததற்கான காரணத்தை நாம் உணர முடிகிறது. (தொல் தமிழருடைய) பண்டைய ஆவணங்களை ஆரியர்கள் ஒன்று விடாமல் அழித்துவிட்டனர் என்பதே அது” சிந்து முத்திரை வரிவடிவங்களை இந்தோ-ஆரிய (அல்லது வேறு இன) மொழியாகப் படித்துள்ளோர் முயற்சிகளும்; அவை எழுத்து, சொற்களைக் காட்டும் “லிபியே அல்ல” என்று கூறும் சிலருடைய நிலையும். 45. சிந்து முத்திரை எழுத்துகளை இந்தோ ஆரிய மொழியாகவோ, வேறு இன மொழியாகவோ, ஓவியப் பாடங் கற்பிக்க உதவும் கருவிகள் போன்றவையாகவோ கருதும் விநோதமான உன்னிப்புக்கள் வருமாறு: 1) சுவாமி சங்கரானந்தா (1943): சம்ஸ்கிருத தந்திர நூல் வாசகங்களாகப் படித்துள்ளார். 2) பி.எம்.பாருவா : தந்திர வாசகங்களே முத்திரைகளில் உள்ளன. 3) டி.என்.ராமச்சந்திரன் (1956) : வேள்விகளில் தரும் தட்சிணைகளுக்கான டோக்கன்கள் தான் இம்முத்திரைகள் வேள்விக் காட்சிகளே முத்திரைகளில் உள்ளன. 4) ஆர்.எம்.நாத் (ஷில்லாங்) 1959 : முத்திரைகள் தாயத்து எந்திரங்கள் தாம். 5) எஸ்.கே.ரே : பள்ளிகளில் இலக்கணம் கற்றுக் கொடுக்கப் பயன்பட்ட வில்லைகள் தாம் இவை. 6) ஆலன் எஸ்.சி.ராஸ் (1937) : “மொகஞ்சொதரோ எழுத்தின் எண் குறியீடுகள்” (The Numeral signs of the Mohenjadaro script)) என்னும் தனது நூலில் இவை தொன்மையான இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்றார். 7) டாக்டர் என் ஜா (1995) : “சிந்து முத்திரைகளில் வேதச் சொற்கள்” (Vedic glossary on indus seals) 8) ஏ.சுவாமி நாதன் (1995) : “கலைக் கண்ணோக்கில் சிந்து வெளிக் குறியீடுகள்”. இக்குறியீடுகள் எழுத்துக்களே அல்ல. ஓவியம், நடனம், சிற்பம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க உதவியாக உருவாக்கியவை என்கிறார். 9) பி.வி.சுப்பராயப்பா (1996) : “சிந்து வெளி எழுத்து இயல்பும் அமைப்பும்” “Indus script, its nature and structure” - இக்குறியீடுகள் வேளாண் பொருள் உற்பத்தி, பயன்பாட்டு விவரங்களைக் காட்டும் கணக்கு வில்லைகள். 10) எஸ்.ஆர்.ராவ் : இவர் 1982 லும் 1991லும் வெளியிட்ட நூல்களில் சிந்து வெளி முத்திரைகளில் சம்ஸ்கிருத வாசகங்களாகப் படித்துள்ள சில வருமாறு. bhag - rk பாக ர்க் (பாக அர்க்க = தேவ அர்க்க) bag - bhag - rk - a – ha பக் பாக் ர்க் அஹ (பெருந்தேவன் அர்க்க - வின் முத்திரை) rama trida osa ராம திரித ஓச (விரும்பத் தக்கது, மூன்று வழிகளில் ஒளி விடுவது) 11) எக்பர்ட் ரிக்டர் - அஷான்ஸ் (Egbert Richter - Ushans) 1997 வெளியிட்டுள்ள The Indus script and the Rg Veda ஆரியர் கி.மு.1700-ஐ ஒட்டி நுழைந்த பின்னர், ஆரியரல்லாத சிந்துவெளி நாகரிக மக்கள்தாம் வேதகால சம்ஸ்கிருத மொழிக்கு உருக் கொடுத்தனர்; ஆரியரல்லாத (சிந்து வெளி மக்களைச் சார்ந்த) ரிஷிகளும் பிறரும் ரிக்வேத ஸ்லோகங்களை எழுதினர்; அவற்றில் சில பல ஸ்லோகங்கள் சிந்துவெளி முத்திரைகளிலும் பொறிக்கப் பட்டவை; என்றவாறு இவர் ஊகம் செல்கிறது. இந்த அடிப்படையில் இவர் பல முத்திரைகளில் ரிக்வேத ஸ்லோகங்களைப் படிக்கிறார். 12) என்.ஜா மற்றும் என்.எஸ்.(2000) The Deciphered Indus Script - Methodology, Readings, Interpretations இவர்கள் சிந்துப் பொறிப்புகளை வேத கால சமஸ்கிருதமாகப் படித்துள்ளனர். இவர்கள் முடிவுகள் தவறு என்பதை விளக்கும் மைக்கேல் விட்செல், ஸ்டீவ் பார்மர், அஸ்கோ பர்போலா, ஐ.மகாதேவன் ஆகியோர் கட்டுரைகளை Frontline (சென்னை) 13-10-2000, 24.11.2000 இதழ்களில் காண்க. 46. வட இந்திய ஆய்வாளர் பலர் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முந்தியது என்பதை ஏற்க மறுத்து அந்நாகரிகமும் வேதகால நாகரிகமும் ஒன்றே என்று வல்லடி வழக்காக முடிவு செய்து முத்திரை எழுத்துகளை எப்படியாவது வேதகால சம்ஸ்கிருதமாகப் படிக்க முயல்வதை பர்போலாவும் (1994) குறிப்பிட்டுள்ளார். ராவ் படித்துள்ள வாசகங்களைப்பற்றி கமில் ஸ்வெலபில் நகைச்சுவையுடன் கூறியது (1985): “சிந்து வெளி முத்திரைச் சின்னங்களுள் பெரும்பாலானவை சொல்லெழுத்துகள். ஆனால் எஸ், ஆர்.ராவ் அவற்றை எப்படியாவது சம்ஸ்கிருதம் ஆகப் படித்தாக வேண்டும் எனக் கருதி (உட்பிணைப்பு நிலை மொழியாகிய) சம்ஸ்கிருதத்தை ஒரு விநோதமான ‘ஓரசைச் சொல் மொழியாக’ உருமாற்றம் செய்துள்ளார். ராவ் படித்தவற்றைச் சரியென்று ஒப்புக் கொள்ள மூடப்பற்று மட்டும் இருந்தால் போதாது. ஓரளவு மூளைக் கோளாறும் உள்ளவர்களாலேயே இதைச் சரியென்று கூற முடியும்” 47. இறுதியாக ஒன்று. 2004ல் Steve Farmer, Richard Sproat, Michael witzl ஆகிய மூவரும் சேர்ந்து எழுதிய ஒரு கட்டுரையில் ‘சிந்து நாகரிக முத்திரைகளில் உள்ளவை எழுத்துகளே அன்று’ என்ற விந்தைக் கருத்து ஒன்றைத் தெரிவித்தனர். (The collapse of the Indus Script thesis. The Myth of a literate Harapan Civilisation என்பது அக்கட்டுரையின் தலைப்பு. வெளிவந்தது Electronic Journal of Vedic Studies 11-2-2004 பக் 1957). அந்தக் கட்டுரையை மறுத்து வந்துள்ள ஆணித்தரமான மறுப்புகள் வருமாறு: 1) அஸ்கோ பர்போலா: சூலை 2007 அமெரிக்க ஸ்தான் போர்டு பல்கலைக் கழகத்தில் உரை. 16 - பெப்ரவரி 2008 அதே உரையை சென்னையில் ரோசாமுத்தையா நூலகக் கூட்டத்தில் மீண்டும் நிகழ்த்தினார்; (ஐ.மகாதேவன் பாராட்டு மலர் AIRAVATI 2008 இல் அவ்வுரை உள்ளது). 2) மாசிமோ விதால் Massimo Vidale இத்தாலியிலிருந்து வெளிவரும் EAST AND WEST (2007) இதழின் பக்கங்கள் 333-366ல் The collapse melts down – a reply to Farmer, Sproat and Witz என்னும் கட்டுரையில் அங்கதச்சுவைபட அருமையாக மறுத்து அம்மூவரையும் கிண்டல் செய்துள்ளார். 3) ஐ.மகாதேவனும் (மேலும் சில ஆய்வாளர்களும்): அமெரிக்க SCIENCE (24.4.2009) இதழில் அம்மூவர் முடிவுகளை விரிவாக அறிவியல் பூர்வமாக மறுத்துள்ளனர். அக்கட்டுரையின் சுருக்கத்தை ஐ.மகாதேவன் THE HINDU 3-5-2009- இல் தந்தார்; அவருடைய பின்வரும் கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கதாகும். “சுருங்கக் கூறின், சிந்து வெளிப்பகுதியில் (அன்று) வழங்கிய மொழியின் (அது தமிழிய மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும்) வாசகங்கள்தாம் அந்நாகரிக முத்திரைகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிறுவுவதற்கு அசைக்க முடியாத தொல்லியல் மற்றும் மொழியியல் சான்றுகள் உள்ளன என்பதே எனது கருத்து ஆகும்.” `எழுத்தே அன்று’ என்போரைத் தெருட்டுதல் ஒல்லாது; ஆகலின் அவர்களை மறுத்துக் கொண்டிருத்தல் வீண் வேலையாம். இயல் 10 வரலாற்றுக்குச் சற்றுமுந்தைய (Protohistoric) காலத் தமிழக வரலாறு (கி.மு.1500 - கி.மு.300) ஏறத்தாழ இந்தியா முழுவதுமே தமிழிய (திராவிட) நாகரிகமாக இருந்த வரலாற்றுக்கு முந்தைய Prehistoric / Protohistoric காலமான கி.மு.7000 - 1800 பற்றி முன் இயல்களில் கண்டோம். அவை பெரும்பாலும் சிந்து மற்றும் வடமேற்கு இந்திய குஜராத் பகுதிகளைச் மட்டுமே விவரித்தன. (ஏனைய பகுதிகளிலும் ஆங்காங்கு -- குறிப்பாக கடலோரப் பகுதிகளில் -- சான்றுகள் இனி அகழாய்வு முதலியவற்றில் கிடைக்க வாய்ப்பு உண்டு) தமிழகத்தைப் பொறுத்தவரை (கி.பி.300 வரைத் “தமிழகம்” என்பது வேங்கடத்திற்கு தெற்கிலுள்ள தென்னாடு முழுவதையும் கொண்டது). 2. முன்பத்தியில் குறித்த பரப்பிலமைந்த தமிழகத்தின் புரோடோஹிஸ்டரி காலவரலாறு இவ்வியலில் சுருக்கமாக தரப்படுகிறது. காரணம் சிந்து நாகரிகமும் இதுவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. [திராவிடர் ஏற்றத்தில் Dravidian Ascent கி.மு.3000 ஐ ஒட்டி சிந்துப் பகுதியில் நாகரிகம் சிறப்புற விளங்கிய காலத்தவை என்று உறுதியாகத் தொல்லியலாளர் ஏற்கும் சான்றுகள் தென்னிந்தியாவிலும் கிட்டினால் (அவை குமரிக்குத் தெற்கிலும் பிற பகுதிகளிலுமுள்ள (Continental Shift) கண்டத்திட்டுப் பகுதியிலும் கிட்டலாம்) சிந்து நாகரிகக் காலத்திலேயே அது போன்ற சிறப்புற்ற நாகரிகம் தமிழ்நாட்டிலும் விளங்கியது என நிறுவக் கூடிய காலமும் விரைவில் வர வாய்ப்பு உள்ளது]. இதுபற்றிய சில வருமாறு. 3. தமிழக வரலாற்றில் வரலாற்றுக் காலத் தொடக்கம் என பொதுவாக இன்று ஏற்கப்படும் சங்க காலம் கி.மு.300 - கி.பி.300 சார்ந்தது. அதற்கு முந்திய “வரலாற்றுக்கு முந்திய காலம்” ஆகிய கி.மு.1000-300 பற்றிய செய்திகளைத் திறம்படத் தருவது ராஜன் (2004) தொல்லியல் நோக்கில் சங்ககாலம் ஆகும். ஆதிச்சநல்லூரில் உள்ள கி.மு.1000 காலத்திய இடுகாடு 114 ஏக்கர் பரப்புள்ளது. அதில் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. கொடுமணலில் (சங்ககாலக் கொடு மணம்) 50 ஏக்கர் பரப்புள்ள பழைய வாழ்விடத்திலும் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு விழுக்காடு அகழ்வாய்வுகளில் கிடைத்த எச்சங்களிலிருந்தே கி.மு.1000 முதல் தமிழகத்தில் வாழ்ந்த மக்களே, இடையீடின்றி, சங்க இலக்கியம் விவரிக்கும் தமிழர் சமுதாய மக்களாயினர் என்று நிறுவ இயன்றுள்ளது. மகாதேவன் (2003) Early Tamil Epigraphy நூலில் தமிழிக் கல்வெட்டுகள், பொறிப்புகள் எவற்றையும் கி.மு.200க்கு முந்தியதாகக் கருதவில்லை. ஆனால் அவற்றில் பல இன்று கி.மு. 5 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தியவை என நிறுவப்பட்டு வருகின்றன என்பதை மேலே கண்டோம். 4. கி.மு.1000 - கி.மு.300 காலகட்டமே தமிழகத்தின் இரும்புக்காலம் அல்லது பெருங்கற்படைச் சின்னக் (Megalithic) காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அக்கால கட்டத்தில் இறந்தவர்கள் தாழியில் புதைக்கப்பட்டனர். கற்பதுக்கைகளில் அடக்கம் செய்யப்பட்டனர். பெருங்கற்படைச் சின்னங்கள் சிலவிடங்களில் இருந்தன; சில விடங்களில் இல்லை; எனினும் இக்காலம் “பெருங்கற்படைச் சின்னக்காலம்’ என்றே பொதுவாக குறிப்பிடப்படுகிறது. 5. கி.மு.1000 அளவில் மக்கள் பெருமளவுக்கு ஆடுமாடு வளர்ப்பவர்களாகவே இருந்தனர். வேளாண்மை தொடக்க நிலையில் இருந்திருக்க வேண்டும்என்பது அகழ்வாய்வுகளின் முடிவாகும். கொடுமணல், தாண்டிக்குடி பானைஓட்டுத் தமிழின் பொறிப்புக் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டாகத்தான் இருக்க வேண்டும் என ராஜன் நிறுவியுள்ளார். பழனி அருகே ‘பொருந்தல்’ என்னும் ஊரில் கிட்டிய இரண்டு பொறிப்புகள் கி.மு. 490, 450 காலத்தவை என நிறுவப்பட்டுள்ளன. (The Hindu 5-10-2011) அப்பொழுதே எழுத்தறிவு பெற்ற சமுதாயம் தமிழகத்தில் இருந்தது. எனவே வரலாற்றுக் காலமே தமிழகத்தில் கி.மு.500லிருந்து தொடங்கியதாகக் கொள்ள இடமுண்டு என்ற ராஜன் கருத்து வலுவானதாகும். 6. தமிழிய (Dravida) மொழி பேசுநர் கி.மு.2000க்கு முன்னர் இருந்தே தமிழகத்திலும் தென்னாட்டிலும் இடைவிடாது வசித்து வந்த மண்ணின் மைந்தரே என்பதையே தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன என்பதை ஆல்சின் தம்பதியர் 1988 தம் நூலில் தெரிவிப்பதை இயல் 1இல் கண்டோம். 7. சிந்துவெளி முத்திரை எழுத்துகளிலிருந்தே சங்ககாலத் தமிழ் எழுத்துகள் உருவாயின என்பது மதிவாணன், ஜீவா போன்றோர் கருத்து. [பர்போலா போன்றோர் இதை ஏற்பதில்லை.] ஏறத்தாழ கி.மு.700க்கு முன்னமே தமிழுக்கு ஓர் எழுத்து வரி வடிவம் இருந்தது; அதைப் பின்பற்றியே அசோக பிராமி எழுத்து உருவாக்கப்பட்டது; எனக் கொள்வதற்கான (கே.வி. ரமேஷ் (2006) உள்ளிட்டோர் தந்த)ஆதாரங்களை மேலே கண்டோம். 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம்பியன் கண்டியூரில் வி.சண்முகநாதன் கண்டெடுத்த புதுக்கற்காலக்கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கினை ஐ.மகாதேவன் “முருகு அன்” (முருகன்) என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு.2000- 1500 ஆக இருக்கலாம் என்பர். புதுக்கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினர்; அம்மொழி திராவிட மொழியே என்பதை இப்பொறிப்பு நிறுவுகிறது என்பது அவர் முடிவு ஆகும். (The Neolithic people of Tamilnadu and the Indus Valley people shared the same language which can only be Dravidian and not Indo- Aryan; 1.5.2006. The Hindu). முக்கியமான ஆதார நூல்கள் கட்டுரைகளின் பட்டியல் Select Bibiliography அ ) ஞால முதன் மொழி ஆய்வு சார்பான நூல்களும் கட்டுரைகளும் [மாந்தன் தோற்றம் (ஏறத்தாழ இன்றைக்கு முன்னர்: இ.மு; Before Present; B.P.) 1,50,000 ஆண்டுகள் முன்னர்; மொழியின் தோற்றம் (ஏறத்தாழ இ.மு. 50,000); ஞால முதன்மொழி, மற்றும் அதையடுத்த நிலையில் நாஸ்திராதிக் , யூரேஷியாடிக் மொழிப் பெருங்குடும்ப (Macrofamilies) ஆய்வுகள்] Allchins, Bridget and Raymond, (1988). The rise of civilization in India and Pakistan, Cambridge University Press. Andronov, M.S. 1964. On the typological similarity of New Indo- Aryan and Dravidian, Indian Linguistics: 25. Appenzeller Tim et al. (2002) “Peopling the Planet”Nature Vol. 485. 3 May 2012. Asher, R.E. & C. Morley (2007: II edn),Atlas of the world’s languages. Atkinson, Quentin D. “Phonemic diversity supports a Serial Founder Effect model of Language expansion from Africa” Science Vol. 322, 15 April 2011. Aydon, Cyril, (2009) A brief History of mankind: 1,50,000 years of Human history. London: Constable. Arasendiran [in press] Etymological and grammatical connection between Tamil and North Indian languages. Aruli 1985,Moliyiyal Uraikal, Puducherry (5 vols) Balakrishnan R. (2010) “Tamil Indus ? Korkai, Vanji, Tondi in the North –West and a “bone eating camel, in the Cankam text. Journal of Tamil Studies Chennai. Bintliff John (2004) A companion to Archaeology. Oxford. Blackwell. Blazeck Vaclav (1997) Elam :bridge between Ancient near-East and Dravidian India. in Archaeology and language Vol. IV . (Editors; Blench and Spriggs). 2006 Was there an Australian substratum in Dravidian?.Mother Tongue issue XI. Blench, Roger 2004, “Archaeology and language: methods and issues” in Bintliff, 2004. Bomhard Alan R. and J.C Kerns. 1994 The Nostratic Macro family, A study in distant linguistic Relationship Berlin and New York. Mouton de Gruyter. Bomhard, A.R. 2008 Reconstructing Proto Nostratic. Lcidcn : Brill Both, Rudolph & Chris Knight (Edrs) (2009) The Cradle of language : Studies in the evolution of language. Campbell, Lyle and William J. Poser 2008.Language classification, History and Method. Cambridge University Press. Caldwell, Robert 1856/1875 A comparative grammar of the Dravidian or south Indian Family of languages. Carstairs- McCarthy, Andrew (2001) “Origins of language” Chapter 1 of Mark Aronoff and another 2001. The Handbook of Linguistics. London. Blackwell. Cavalli-Sforza et al. (1994)The History and Geography of Human genes. New Jersey: Princeton University press. Christianson, M.H. (Ed) 2003. Language Evolution (see Davidson. 1: The Archaeological evidence of Language Origins London) Deshpande M.M., and P.E. Hook (Edrs) 1979. Aryan and Non Aryan in India. see Aryan and Non Aryan in south Asia. pp 1-9. Devaneyan, G. (2004)Nostrastic - the Light from Tamil according to Devaneyan.SISSWPublishing Society, Chennai. Dixon, R.M.W. (1997) The rise and fall of languages , Cambridge University Press. (2002), Australian Languages Cambridge University Press. Dunn, Michael et al. (2011) Evolved structure of language shows language specific Trends in Word - order universalsNature Vol. 473: 5 May 2011. pp.79-82. Emeneau, M.B. (1956) India as a Linguistic Area. Language Vol. 32 pp.3-16. Flemming, M.C. (2004) Submarine Prehistoric Archeology of the Indian continual shelf - a potential resource.Current Science 86.9 the 1225 – 30. Greenburg, J.H. (2000/2001) Indo-European and its closest relatives – the Eurasiatic language family Vol. I Grammar, II Lexicon. Grierson, G.A. (1986) Linguistic Survey of India vol. (IV) Munda and Dravidian Languages. Hakola Dr. H.P.A: (2009) Lexical Affinities between Tamil and Finnish Kuopio, Finland. (He lists 765 world – pairs). Haspelmath, Martin and others (2003), The world Atlas of Language structures O.U.P. Heras, Father Henry (1953) Studies in Proto-Indo-Mediterranean Culture Bombay Hock, H.H. and B.D. Joseph. (2009) (II Revised Edition)Language history, Language change, and Language relationship. Berlin: Mouton Gruyter. Jones, Martin (2004), “Archaeology and the genetic revolution” at pp. 39-51 of ACompanion to Archaeology (ed. John Bintliff: Oxford-Blackwell). Junghare, Indira Y. 1985. Topic Prominence in Indo-Aryan and Dravidian, IJDL 14: 181-198. Krishnamurthy Bhadirraju (2003) The Dravidian Languages Cambridge University Press. Lahovary, N. (1963) Dravidian origins and the west: Orient Longmans: Madras. Larson, Richard, K. et al. (2010) The Evolution of Human Language: Biolinguistic Perspectives. pp.122 -123 Cambridge University Press. Levin, Roger (2005) (5th edn.) Human evolution, an illustrated introduction London. Levitt, Stephen Hillyer (June 2007) ‘A Word for horse in Chinese and Dravidian” International Journal of Dravidian Linguistics. (Jan. 2010) Fortunatov’s law and Dravidian; IJDL (June 2013) Indo European and Dravidian; some considerations IJDL. Mahadevan, Iravatham (2009). Vestiges of Indus of civilization in old Tamil (paper read at Tamilnadu History Congress). Majumdar, Partha P. (2003) “Peopling of India: Insights from Genetics” in David N. Cooper. Encyclopedia of the Human Genome. Vol. IV. pp 538-41. Masica, Colin, P. (1976) “Defining a linguistic area” (2001) paper in The year book of South Asian and South Asian languages and linguistics presented at Dec 1999 Tokyo seminar on “South Asian languages, contact convergence and typology” New Delhi. Sage Publications. Meenakshi K. Emergence of Classical Sanskrit (A Socio - linguistic study IJDL) 14: 209-223. Oppenheimer, Stephen (2003). The Real Eve-modern man’s journey out of Africa. London, Constable. Pagel, et al (2013) Paper in Proceedings of the National Academy of Sciences (PNAS) – Report in The Hindu 8 May 2013. Parpola, Asko (1994). Deciphering the Indus script. Cambridge Uty. Press. (2010). Dravidian Solution to the Indus script problem. Central Institute of classical Tamil: Chennai. Pichappan, R. Reports in The Hindu 23.8.2007 and 16.4.2008. Possehl, Gregory (2002) The Indus. Civilization - a contemporary perspective New Delhi. Pugach, Irina (2013). “Genome–wise data, substantiate Holocene gene flow from India to Australia” PNAS 29 June 2013. Rajan K. (2004) Tolliyal Nokkil Tamilagam Chennai – IITS 2005. “The emergence of Early Historic period in Tamil Nadu” Proceedings of TN History Congress. Ramanathan P. 2002 “Situating Indus valley civilization in the prehistory of India” PILC journal of Dravidic studies, Pondichery, 12:1-2. 2003 Direction of movement of Dravidian speakers in prehistoric timesDravidic studies (Kuppam, Andhra Pradesh) 1-3 April –June 2003. 2008 Nostratic–gnala mudal moli aayvukalukku Pavanar tharum oli. International Institute of Tamil Studies; Chennai. 2013 Affinities between Dravidian and Australian Aboriginal languages which go back to the original peopling of the world, circa 50000 BP (paper presented at AllIndia Conference of Dravidian linguists, Chennai). Ramesh K.V. (2006) Indian inscriptions: a study in Comparison and contrast : ICHR (SRC). Roberts, Alice (2009) The incredible Human journey –the story of how we colonized the planet. London; Bloomsbury (see pp102,140,331) Renfrew Colin. (1997) World Linguistic diversity and farming dispersals, in Blench, Roger and M.S SpriggsArchaeology and language, vol. I, Technical and Methodological Orientations London; Routledge. (1999) “Reflections on the Archaeology of Language diversity. pp.1- 32 of Sykes,1999. Ruhlen, Merrit (1994), On the Origin of language: Studies in Linguistic taxonomy. (see chapter on “Global Etymologies by John D. Bengtson and Ruhlen). Stanford University Press. Sebeok Thomas A. (1971)Current trends in Linguistics: Vol. 1. Linguistics in Oceania. Part II. Southworth F.C. (2005) Linguistic Archeology of South Asia. London. Sjoberg, Andree F. (2009) Dravidian language and culture Dravidian University Kuppam Andhra Pradesh. _______1991. :”The impact of Dravidian on Indo Aryan -- an overview at pp.507-529 of Edgar. C. Polome 1991, Reconstructing languages and cultures; Mouton de Gruyter; Berlin New york. Stringer, Chris (2000) Palaeoanthropology - coasting out of Africa” Nature vol. 405, 4 May 2000, pp.203-205. Sykes, Bryan (1999). The human inheritance - genes, language and evolution Oxford University press. Swadesh, Morris (1972) The Origin and Diversification of Language: London; Routledge. Tecumseh–Fitch (2010). The Evolution of Language, Cambridge University press. Tollofson, Jeff (2012) “Cultural Roots”, Nature Vol. 482: 16 Feb. 2012. Winston, Robert (2008) Illustrated Encyclopedia of the Human DK Publication : London Wood, Michael (2007). The story of India. BBC Books London. Zvelevil, K.V. (1972) “The descent of the Dravidians”. International Journal of Dravidian Linguistics. Thiruvananthapuram. (1990) Dravidian Linguistics: an introduction. Pondichery: Pondichery Institute of Linguistics and Culture. ஆ ) அகழ்வாய்வு அறிக்கைகளும் சிந்து நாகரிகம் சார்ந்த ஆய்வு நூல்களும் (இன்றைய இந்திய சமுதாயம், பண்பாடு, சமயம் முதலியவற்றின் உருவாக்கத்தில் சிந்து நாரிகத்தின் பங்கு.) Agarwal, D. 2009. Harappan Technology and its legacy New Delhi. Allchin, Bridget and Raymond. 1988. The Birth of Civilisation in India and Pakistan, Cambridge (1996 reprint: Foundation Books, New Delhi) Allchin FR (1995) The Archaeology of Early Historic South Asia - the emergence of cities and states Cambridge Allchin, Bridget and Raymond. 1997. The Prehistory and early Archaeology of South Asia; Penguin Basham, A.L. 1975. A. Cultural History of India, Oxford. Bryant E and L. Patton (2005) Evidence and inference in Indian History. Burrow, T. (1963. “On the Significance of the term armaarmaka in Early Sanskrit Literature” Journal of Indian History XLI: 159-68. _________ 1973. The Sanskrit Language. London: II Edition, Faber, London. _________ 1973-2. “The Proto Indo-Aryans” Journal of Royal Asiatic Society, London 123-40. _________ 1975 “The early Aryans” in Basham (1975). Burrow T. and M.B. Emeneau (1984); A Dravidian Etymological Dictionary; Second Edition; Oxford; O.U.P. Chakrabarti, Dilip, K. 1995. The Archaeology of Ancient Indian Cities. Oxford University Press. _________. 1999. India an Archaeological History: Palaeolithic Beginnings to Early Historic Foundations; Oxford University, Press. ___________2008. The battle for ancient India; an essay on the Socio politics of Indian Archaeology; Delhi Dandekar, R.N. 1987. Harappan Bibliography. Poona. Bhandarkar ORI. pp. 495. Dani.A.H.; M.Hohen and Others (Eds) 1996. History of Humanity. Vol.II. From the III Mellennium to the 7th CBC; Routledge /UNESCO (see pp. 246-265: The Indus Valley 3000 - 1000 BC by B.K.Thapar and M.Rafiq Mugal. Dhanda, R.C. 2001, Harappan Origin of Hinduism. Hyderbad: Book Links Corporation. Dhavalikar M.K. Cultural Imperialism; Indus Civilisation in western India; Delhi Edwards, Mike June 2000. “Indus Civilization - Clues to an Ancient People”.National Geographic108 -29. Fairservis, Walter A. (1971) The Roots of Ancient India, London. Fairservis, W.A. and F.C. South work (1989) Linguistic Archaeology and the Indus Valley culture; at pp 133 - 141 of Kenoyer, Jonathan Mark :Old problems and new perspectives in Archaeology of South Asia. Wisconsin Archaeological Reports Vol. 2 (Conference held in Nov 6.8.1986) Gordon, D.H. 1960 The Prehistoric Background of Indian Culture. Gurumurthy, S. 2010 Cinduveli Nagarikamum Tamilar Nagarikamum, Tamil University. Habib, Irfan 2002 The Indus civilisationNew Delhi, Tulika Books Hall, H.R. 1913) The Ancient History of The Near East. London (Revised 1927) Methuen. Heras, Rev. H. 1953. Studies in Proto Indo Mediterranean Culture Vol. I. Bombay. Hewitt, J.F. 1988. “Notes on the Early History of Northern India” Journal of RAS. London XX London 321-363. Jha, D.N. 2004. Early India a concise history, New Delhi. Janson, Michael, 1986 . “Die Indus Civilization - Wiederent deckung einer fruhen Hoch Kulture” Dumont Buch verlag; Koln: 1986 pp 304. Kazanas, Nicholos, 2009. Indo-Aryan Origins and other Vedic issues; Aditya Prakashan; New Delhi. Kenoyer; V.M., 1998. Ancient cities of the Indus Valley Civilisations; Karachi, OUP Kochchar, Rajesh, 2000. The Vedic People: Their History and Geography. Delhi: Sangam Books. Kosambi, D.D. 1964. The Culture and Civilisation of Ancient India in Historical Outline. Kumar, G.D. 1973. “The Ethnic Components of the Builders of the Indus Valley Civilisation and the Advent of the Indo-Aryans: Journal of Indo- European Studies Vol. I. pp. 66-80. Kunhan Raja 1940. The authors of the Rigveda in Prof K.V. Rangaswamy Ayangar Commemoration Vol. Lahiri, Nayanjot, 2000. The Decline and Fall of the Indus Valley Civilisation New Delhi; Permanent Black. _________ 2005 Finding forgotten cities; Delhi; Permanent Black. Lal B.B and S.P. Gupta 1984. Frontiers of the Indus Civilisation (Wheeler Commemoration Volume Lall, B.B. 1998. Rig. Vedic Aryans: the debate must go on : East and West (Rome). Levitt, S.H. 2009. The ancient Mesopotamian Place name meluhha, Studia Orientalia 107; 135-176. Lorenzen, 2006. Religion, Skin colour and language; Arya and non -Arya indentity in the Vedic period inWho Invented Hinduism New Delhi Marshall, Sir John.1931. Mohenjodaro and the Indus Civilisation, London. Mcintosh, Jane R, 2001. A peaceful realm, the rise and fall of the Indus civilisation. Boulder; Colorado. Nandi, R.N. 1989-90. Archaeology and the RgVeda; Indian Historical Review xvi; 35-79. Pargiter, F.E. 1922. Ancient Indian Historical Tradition, London: Oxford University, Press. Parpola, Asko, 1988. “The Coming of the Aryans to Iran and India and the Cultural and Ethnic Identity of Dasas” . Studia Orientalia. 195-265. Possehl, Gregory. 1979. Ancient Cities Of The Indus. New Delhi: Vikas. (collection of articles and extracts from the earliest.) ___________ 1999. Indus. Age: The Beginnings Oxford. ___________ 2000-01. The Early Harappan Phase and the Mature Harappan Phase”. Bulletin of the Deccan College. Pune Vols 60-61, pp. 227-251. __________ 2002 The Indus Civilisation. A Contemporary Perspective. New Delhi: Vistaar. Przyluski, Jean. 1934-35. The name of the god Visnu and the Krisna legend QJMS (XXV) pp 39-48. Ramachandra Dikshitar, V.R. 1947. Origin and Spread of the Tamils. Madras. Ramanathan P. [see under section m above] Rao, L.S; et al 2003-04. Un earthing Harappan Settlement at Bhirana (2003-04) Puratattva. 34. Ratnagar, Shireen, 1991. Enquiries into the Political Organization of Harappan Society Pune. _________ 2003. Trading encounters from the Euphrates to the Indus in the Bronze Age. Pune. Samy, P.L. Jan. 1994. “Harappavin Tamil Peyar.Centamil Celvi. _________ Nov 1994 “Karcciraiyum Harappavum, Centamil Celvi. Meadow, Richard H 1991. Harappa excavations 1986- 1990. A multi-disciplinary approach to third milleunium urbanism. Satyamurthy, T.2009. “Indus to Tamaraparni” pp247-257 of T.S. Sridhar (Ed) “Indus Civilization and Tamil language” Sen, Aloka Parasher. 2002. “The Sanksrit word “Mleccha” - a Possible Proto-Dravidian Etymology”. Dravidian Studies.(Kuppam.). Vol. I-1. Sesha Iyengar, T.R. 1925. The Ancient Dravidians. Madras. Sharma A.K. 1999.The departed Harappans of Kalibangan; New Delhi; Sharma, D.P. 2007. Harappan Art; Delhi - 35 Sharma, Ram Sharan, 1999. Identity of the Indus Culture, East and West. 49. Shendge, Malati J. 1977. The Civilized Demons: The Harappans in Rg. Veda.New Delhi: Abbinav. _____ 1990 Floods and the decline of the Indus civilisation. Annals of BORI Poona; LXXI (pp. 218-63). ______1996. The Aryas; Facts without fancy and fiction to sanskrit _______1997. The language of the Harappans ; From akkadian to Sanskrit Slater, Gilbert 1914. The Dravidian element in Indian culture. Stain, Burton, 1988. A history of India; Blackwell; Oxford. Srinivasa Iyengar, P.T. 1925. Life in Ancient India in the Age of the Mantras. Madras. ___________ 1929. History of the Tamils from the Earliest Times to 600 A.D. Madras. Sundar Raj. M. 1992. Is the Veda Divine Revelation? Indus Valley and the Veda. Madras: Affiliated East- West Press. Thapar, Romla, 2002. The Penguin history of early India. Thirunavukkarasu, C.D. 1975. Tamil Nattu Varalaru; Tholpalankalam; Govt of Tamilnadu see pp 51-136. Trautmann, Thomas R, 1981.Dravidian Kinship; Cambridge Thaninayagam, Xavier S., 1953. Nature in ancient Tamil poetry Vahia, Mayanh, 2007. The Harappan Question ABORI 88: 43-59. Velu, Kuruvikkarambai, 2001.Harappavil Tamilar Nakarikam. Venkatachalam, K. 1983. “A study of Weights and Measures of the Indus Valley Civilisation”. Tamil University Seminar Paper. Wheeler, Sir Mortimer. 1968. The Indus Civilisation; Cambridge University Press. Wood, Michael, 2007. The story of India; BBC books. Wright, Rita P. 2010. The Ancient Indus : urbanism, Economy and society; Cambridge. இ)சிந்து நாகரிக எழுத்துகளைப் பற்றிய ஆய்வுகள் (சிந்து முத்திரை எழுத்துப் பொறிப்புகளை வாசிப்பதில் இதுவரை நிகழ்ந்துள்ள முன்னேற்றம்.) Fairservis, W.A. & P.C.Southworth. 1989. “Linguistic Archaeology and the Indus Valley Culture” In J.M. Kenoyer Old Problems and New Perspectives in Archaeology of South Asia. Wisconsin Archaeological Report 2: 133-41. Fairservisir, W. A. 1983: “The Script of the Indus Valley Civilisation”. Scientific American. _________(1992) The Harappan Civilisation and its writing - a model for decipherment Delhi: Oxford and IBH. Frontline (Chennai) 13.10.2000 and 24.11.2000 issues contain articles by Michael Witzl, Asko Parpola and I. Mahadevan pointing out the unacceptability of the decipherment (of Indus script as Vedic Sanskrit) made by N.Jha and N.S.Rajaram in their The Deciphered Indus Script (Delhi, 2000). Gurumurthy, Dr.S. 1999.Deciphering the Indus Script from Graffiti on Ancient Indian Poettery. Madras: University of Madras: Heras, Rev. H. 1953. Studies in Proto-Indo-Mediterranean Culture. ____________ 1953. “The Dravidians of Iran” INDICA- The IHRI Silver Jubliee Commemoration Volume. 166-9. Hunter, G.R. 1934. The Script of Harappa and Mohenjodaro and its connection with Other Scripts, London: Kegan Paul, pp.210. Journal of Tamil Studies, 1970. Vol.II-1 Special number on decipherment of Indus Script; pp. 291; Papers by Knorozov; Parpola, Burrow, I. Mahadevan. et al. Kasinathan, Natana, 2004. Date of early Tamil epigraphs Journal of Tamil Studies; June 2004. _________2013 Tamilarin Elutharivu. Kinnier Wilson, J.V. 1974, Indo-Sumerian: A New Approach to the Problems of the Indus Script. Oxford. Lahiri Nayanjot, 2000. The decline and fall of the Indus civilisation, New Delhi Mahadevan, I. 1970 “Dravidian Parallels in Proto-Indian Script” Journal of Tamil Studies III 2-3. 1977. The Indus Scripts Texts; Concordance and Tables. New Delhi: A.S.I. ___________1993. “The Cult Object of Unicorn Seals: A Sacred Filter”. South Asian Arachaeology. 1993. Helsinki; pp. 435-445. __________ 2001. “The Indus - like Symbols in Megalithic Pottery: New Evidence”, Studia Orientalia, Finland; Vol.94. 379-86. __________2007. Vestiges of Indus civilisation in old Tamil Address on 9-10-2009 at 19th session of Tamil Nadu History Congress (Tamil version 2010 சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும் . செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) _________2011. Akam and Puram. Address signs of the Indus script; IJDL.40.1: 81-94. _________2011 August The Indus fish swam in the great bath; A new solution to an old riddle. Bulletin of the Indus research centre, Roja Muthaiya Library. Madhivanan, Dr.R. 1995. Indus Script Dravidian. Tamil Chanror Peravai Adyar Madras, pp. 286. ___________ 1995. Indus Script Among Dravidian Speakers. Madras. _______2002. Direction of witing in indus seal impressions: “Right to Left” dogma and a plea for reconsideration IJDL 31. 1 Jan 2002. Marshall, Sir John. 1931. Mohenjodaro and the Indus Civilisation. London see Chapters XXII and XXIII of Vol. II for Papers on Indus Script by G.S. Gadd, Sidney Smith and S.Langdon. Parpola, Asko, and Joshi, J.P. 1987. Corpus of Indus Seals and Inscriptions. Vol. I Collections in India. Helsinki,. (3900 Photos of 1537 Objects) Parpola Asko and Shah G.M. 1991. Corpus of Indus Seals and Inscriptions: Vol. II- Collections in Pakistan; Helsinki (5453 Photos of 2138 Objects) pp. 448. Parpola, Asko, 1994. Deciphering the Indus Script. Cambridge pp. xxii; 374. _________1997. “Dravidian and the Indus Script: On the Interpretation of some pivotal signs” Studia Orientalia. Vol.82 167-91. Poornachandra Jeeva (2004), Cintu Veliyil Muntu Tamil Matarpakkam: Thaiyal Patippakam, pp. 350. 2010 June, “Connection between the Tamili Script and the Writings of the Indus Age” Journal of Tamil Studies. 77 pp 177-190. Possehl, Gregory. 1996, Indus Age: The Writing System OUP Raman B.S., 1986. “Direction of writing in the Indus script a new approach” Tamil Civilisation 4, 304: 35-45. Rajan, 2004. Tholliyal Nokkil Sanga Kalam : IITS Chennai Ramanathan ,P 2002/2005 “Situating Indus Valley Civilisation in the proto - history of India” “PILC Journal of Dravidic studies Vol. 12 ; Puducery [See also items under section m) ______2008. Hypothesis of Proto Dravidian Provenance of Indus Civilisation Arima Nokku 2.2.16-26. Ramesh, K.V. 2006. Indian Inscriptions; a study in comparison and contrast ICHR. SRC, Bangalore. Robinson, Andrews (2001) Lost languages - the enigma of the world’s undeciphered scripts; New York; McGraw Hill; pp. 265 - 295 __________(2002) Deciphering History, History Today Aug 2002 pp. 35 - 41 Shendge, Malati ,J 1997 The language of the Harappans - From Akkadian to Samskrit; New Delhi. Sridhar T.S. 2009, Indus Civilisation and Tamil language (pp 329) Tamilnadu State department of Archaeology. Szalek, Benon Zbigniew. 1999 . The Narmini Report; University of Szezecin, Poland, pp 121, 319. (He has read the Indus script and the Easter Island script as related and as both Dravidian reviewed by T.M. Menon in IJDL 31.2. 125- 128; June 2002.) Tamil Civilisation IV 3-4. Indus script special (1983 seminar at Thanjavur. Vidale, Massimo, 2007. “The collapse melts down - a reply to Farmer, Sproat and Witzel” East and west Wells B. 1999, An introduction to Indus Writing 2nd Edition, Independence; M.O ;U.S.A. Winters, Clyde Ahmed 1992/93" Ancient Dravidians:An Introductory grammar of Harappan with Vocabularies” JTS Nos. 41 to 44 Zvelebil, KV 1990, Dravidian Linguistics:An Introduction; PILC குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள்