உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் பி.இராமநாதன் க.மு.ச.இ., தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 17 நூற் குறிப்பு நூற்பெயர் : உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் ஆசிரியர் : பி.இராமநாதன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2009 தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 192 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 120 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை தமிழ்மொழியின் தனித் தன்மை, தொன்மை, முன்மை, தென்மை, சிறப்பு ஆகியவற்றைப் பற்றி மொழியியலறிஞரும் பிற துறையறிஞரும் கூறியுள்ளவற்றுள் சிறந்தவற்றைத் தொகுத்துத் தருமாறு நமது பதிப்பக நூலாசிரியர்களுள் ஒருவரான அறிஞர் பி.இராமநாதன் அவர்களைக் கேட்டுக் கொண்டேன், அவரும் தொகுத்துத் தந்துள்ளார். கருத்துக்களைத் தொடர்புபடுத்திக் காட்டும் வகையில் ஆங்காங்கே சில விளக்கங்களையும் தந்துள்ளார். பல்துறை அறிவியல்புலங்கள் சார்ந்த வல்லுநர்கள் எவர் முன்னிலையிலும் இன்று நிலைநாட்டக்கூடிய கருத்துரைகளே தரப்பட்டுள்ளன. கூறியது கூறலாக வந்தவையும், வெறும் முகமனுக்காக கூறப்பட்டவையும் விடப்பட்டுள்ளன. முக்கியமானவற்றையெல்லாம் யார் எங்கு எப்பொழுது செப்பியது என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. ( ஆங்கில நூல்கள், இதழ்கள் ஆகியவற்றிலிருந்து எடுத்தவற்றைப் பொறுத்தவரை அவற்றின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே தரப் பட்டுள்ளன -- மூலத்தைத் தேடி மேலும் பயில விரும்புவார் நலன் கருதி). இச் செய்திகளுள் பெரும்பாலானவை ஏற்கனவே நமது பதிப்பகம் வெளியிட்டுள்ள “தொன்மைச் செம்மொழி தமிழ்” (2007) “தமிழர் வரலாறு: இன்றை நோக்கில் - பண்டு முதல் இன்று வரை ” (2008) ஆகிய நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. சில புதிய செய்திகளும் இடம் பெறுகின்றன. இணைப்புகள் I, II ஆகியவை சார்ந்த ஆங்கில மூலங்களுக்கு இது வரைத் தமிழாக்கங்கள் எவையும் வந்ததாகத் தெரியவில்லை. இப்பொழுது முதன் முதலாக வருகின்றன எனலாம். 2. சில இடங்களில் (எ.கா: ஒரு பால் தமிழுக்கும் மறுபால் உலகிலுள்ள ஏராளமான மொழிகள், பல்வேறு மொழிக் குடும்பங்கள் ஆகியவற்றுக்கும் இடையில் உள்ள உறவு பற்றிய நூற்றுக்கணக்கான அறிஞர்கள் நூல்களைப் பொறுத்தவரை அவர்கள் பெயர்ப் பட்டியலைத் தர மட்டுமே இடமிகுந்தது. இவ்விவரத்தைத் தரும் உலகப்படம் ஒன்றும் இயல் 2- இல் உள்ளது. 3. சங்க இலக்கியச் சிறப்புப் பற்றிய அறிஞர் கருத்துக்கள் இயல் 4இல் தரப்பட்டுள்ளன. இச்செய்திகள் மொழியியல் சார்ந்தவையன்றெனினும் இந்நூலைப் படிப்பவர்கள் பயன்கருதிச் சேர்க்கப்பட்டுள்ளன; 4. இந்நூலை உருவாக்கிய அறிஞர் பி. இராமநாதன் அவர்களுக்கு என் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். கோ. இளவழகன் பொருளடக்கம் பக்கம் பதிப்புரை 3 இயல் - 1 தமிழியமொழிக் குடும்பம் 7 இயல் - 2 தமிழின் தனித்தன்மை,தொன்மை, முன்மை, தென்மை, சிறப்பு, ஞால முதன்மொழிக்கு அதன் நெருக்கம் 19 இயல் - 3 செம்மொழித் தமிழிலக்கியச் (சங்க இலக்கியச் ) சிறப்பு 64 இயல் - 4 தமிழர், பண்பாடு, கலை, சமுதாயம் மெய்யியல் 76 இணைப்புகள் I. எல்லிஸ் குறிப்பு (1816): ‘தமிழிய (திராவிட) மொழிக் குடும்பம் தனியானது’ என முதலில் நிறுவிய ஆய்வுரை -- தமிழாக்கமும் ஆங்கில மூலமும் 86 II. ஹொய்சிங்டன் 1853 ல் “கீழ்த்திசையியல் ஆய்வுகளுக்கான அமெரிக்க சங்க ஆய்விதழில்” (Journal of the American Oriental Society Vol -3) வெளியிட்ட தமிழ் மொழி பற்றிய கட்டுரை - தமிழாக்கமும் ஆங்கில மூலமும் 166 இயல் – 1 தமிழிய மொழிக் குடும்பம் 1. பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (1816) இல் தமிழிய (திராவிட) மொழிக் குடும்பம் தனியானது என்று முதலில் நிறுவியவர்) “தமிழோ, தெலுங்கோ அவற்றின் இனமொழிகளோ சமற்கிருதத்திலிருந்து கிளைத்து உருவானவை அல்ல; சமற்கிருதம் இம்மொழிகளை மெருகூட்டப் பயன்படுத்தப் பட்டிருந்த போதிலும் அவற்றின் இருப்புக்குத் (நிலைப்புக்குத்) தேவையற்றது; அவை ஒரு தனியான மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. அம்மொழிகளில் சமற்கிருதச் சொற்கள் (குறிப்பாகப் பிற்காலங்களில்) கலந்துள்ள போதிலும் வேர்ச்சொற்கள் நிலையில் அவற்றோடு சமற்கிருத்துக்குத் தொடர்பில்லை. -Francis Whyte Ellis (1816): “Note to the introduction” (31pages) in A Grammar of the Teloogoo language by A.D.Campbell; Thomas R.Trautmann (2007): Languages and Nations : “The Dravidian proof in Colonial Madras” தமிழில் இராம.சுந்தரம்(2007) “திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிட மொழிகளும்” சென்னை வளர்ச்சி – ஆராய்ச்சி நிறுவனம் சென்னை; மற்றும் காலச்சுவடு பதிப்பகம்; பக்.340. எல்லிஸ் குறிப்பின் தமிழாக்கம் இணைப்பு I ல் உள்ளது. (அதன் ஆங்கில வடிவம் - மூலத்தின் நிழற்படி - “திராவிடச்சான்று”) இறுதியில் தரப்பட்டுள்ளது. 2. பெஞ்சமின் கை பாபிங்டன் (1830) பழந்தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறும் பொழுது அவற்றின் மிகுந்த எளிமையைத் தான் நான் முதலில் குறிப்பிட வேண்டும். அந்த எளிமையும் வேறு சில தன்மைகளும் தாம் தமிழ்மொழி அளவிறந்த தொன்மை வாய்ந்தது என்பதை நிறுவுகின்றன. தமிழி வரிவடிவத்திலிருந்து (லிபியிலிருந்து) உருவாக்கப்பட்ட கிரந்த லிபியில் தான் தென்னிந்தியாவில் சமற்கிருதம் எழுதப்படுகிறது; கிரந்த லிபி சிக்கலானதாக இருப்பதே அது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாகும். தமிழ்மொழி சமற்கிருதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட மொழியமைப்பைக் கொண்டது; கனைத்து ஒலிக்கும் (aspirated) மெய்கள் இல்லை; சமற்கிருத நெடுங்கணக்கில் இல்லாத ஒலிகளும் எழுத்துக்களும் தமிழில் உள்ளன. தமிழில் உள்ள பல வழக்குமொழிகளில் ஒன்றில் (செந்தமிழில்) சமற்கிருதச் சொற்கள் மிகச்சிலவே; தமிழ் இந்தியாவின் தென்கோடிப் பகுதியில் இருப்பது ஒன்றே தமிழ் தானாக உருவாகியது என்பதையும் குறைந்தபட்சம் “சமற்கிருதம் உருவான காலக் கட்டத்திலேயே உருவான தொன்மை உடையது அது” என்பதையும் காட்டுவதாகும். இவ்விஷயம் இக்கட்டுரைப் பொருளைச் சார்ந்ததல்ல; இதைப் பற்றி மேலும் நெடிய விளக்கம் அளித்திட இங்கு இடமில்லை. - Benjamin Guy Babrngton(1830) An account of the sculptures and inscriptions at Mahamalaipur TRANSACTIONS OF THE ROYAL ASIATIC SOCIETY.Vol II (Paper read on 12.07.1828) 3. ஹென்றி ஹொய்சிங்டன் (1853) செந்தமிழை விடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது. தென்னிந்தியாவில் மொத்தம் ஏறத்தாழ இரண்டு மூன்று கோடி பேர் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் மற்றும் சில மொழிகளைத் தோற்றுவித்தது தமிழே என்று கருதப்படுகிறது;ஆகவே தமிழைத் தென்னிந்தியத் (தொன்) மொழியாகவே கருதலாம். -Reverend Henry Hoisington (1853) : Brief notes on the Tamil Language. JOURNAL OF THE AMERICAN ORIENTAL SOCIETY III Article (ix) (Paper read on 19.05.1852) இதன் முழுமையான தமிழாக்கம் இணைப்பு II ல். 4. ஜி.யூ.போப் (1855) “(தமிழிய, அதாவது திராவிட மொழிகள்) சமஸ்கிருதம் தோன்றிய காலத்தில் தோன்றியதும் சமற்கிருதம் எந்த முன்மொழியிலிருந்து தோன்றியதோ அதே முன்மொழியி லிருந்தே தோன்றியதும் ஆன ஒரு மொழியிலிருந்து உருவாகிப் பின் பிரிந்தவை ஆகும். அந்தத் தமிழிய மொழிகளுக்கும் (இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த) கிரீக், காதிக், பாரசீகம் முதலிய மொழிகளுக்கும் இடையே ஒப்புமை இருந்ததைக் காட்டும் பல சான்றுகள் உள்ளன. சமற்கிருத் தத்துக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஒப்புமை இல்லாத நேர்வுகளிலும் கூட அத்தகைய ஒப்புமைகள் உள்ளன.)” - தமிழ் மொழிக் கையேடு, A Hand book of Tamil Language 1855. 5. இராபர்ட் கால்டுவெல் (1856/1875): திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் முன்னுரையிலிருந்து திராவிட மொழிகளின் இலக்கணங்களை ஒப்புநோக்கி முறையான ஆழ்ந்த அறிவியல் பூர்வமான ஆய்வை உருவாக்குவதே இந்நூலில் எனது முக்கியமான நோக்க மாகும். அம்மொழிகளுக்கும் பிறமொழிகளுக்கும் உள்ள உறவுகள் பற்றி இன்று பல்வேறு கருதுகோள்கள் உள்ளன வெனினும் மேலும் ஆய்வு தேவை. வாய்ப்பு நேரிட்ட இடங்களில் எல்லாம் ஒரு பால் திராவிட மொழிகளுக்கும் மறுபால் பிறமொழிகள், மொழிக் குடும்பங்களுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் மொழியியல் இலக்கணக் கூறுகள், சொற்கள், வேர்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்; காரணம் அவைகளுக்கிடையிலான உறவு பற்றிய சிக்கல்களைத்தீர்க்க இது உதவும் என்ற நம்பிக்கைதான்.அச்சிக்கலுக்கு இன்னும் அறிவியல் பூர்வமான விடை கிட்டவில்லை; எனினும் ஒருநாள் கிட்டும் என நம்பலாம். இதுவரை விடைகளாகக் கூறப்படுபவை வெறும் கருதுகோள்களே - ஓரளவு ஏற்கத்தக்கவை சிலவும், ஏனைய சிலவும். இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்துக்கும் துரானிய அல்லது ஸ்கிதிய மொழிக் குடும்பத்துக்கும் [இன்று உரால் - அல்தாய்க் எனப்படுவது] நடுவில் வைக்கத்தக்கது திராவிடக் குடும்பம் என்பதே எனது முடிவு; “நடுவில்’’ என்பதை விட “ஸ்கிதியனுக்கு சற்று அருகில் ” எனலாம். திராவிட மொழி களுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலுள்ள மொழியியல், இலக்கணவியல் உறவுகளும், சொல், வேர்ச்சொல் உறவுகளும் ஏராளமானவையும் வியக்கத் தக்கவையுமாம். சில உறுபுகளைத் பொறுத்த வரையில் அவை தற்செயலாக நேர்ந்தவை என்று ஒதுக்கிவிட இயலவே இயலாது. எனினும் அவ்வுறவுகளின் தன்மையைப் பார்க்கும்பொழுது இவ்விரு மொழிக் குடும்பங்களுக்கும் இடையிலிருந்த உறவு கழி பழங்காலத்தைச் சார்ந்ததாகவும்எத்தன்மை வாய்ந்த உறவு எனத் திட்டவட்டமாகக் கூற இயலாததாகவும் உள்ளது என்பதே எனது கருத்து. திராவிட மொழிக் குடும்ப மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம், உரால்-அல்தாய்க் மொழிக்குடும்பம் ஆகிய இரண்டு மொழிக் குடும்பங்களுக்கும் இடையே உள்ள உறவை விளக்குவனவாக உள்ளன. அது மட்டுமா? மாந்தன் முதன்மொழி தோன்றிய பின்னர் - அம் முதன்மொழியிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பமும் , உரால்-அல்தாய்க் மொழிக் குடும்பமும் பிரிவதற்கு முன்னர் - இருந்த காலத்திய நிலைகளை இன்றும் காட்டுவனவாக உள்ளன எனத் தோன்றுகிறது. பதிலிப் பெயர்கள் (Pronouns) போன்றவற்றில் திராவிட மொழிகளின் தன்மைகள் கழிபழங்கால நிலைமையைக் காட்டுவனவாக உள்ளன. தமிழிய மொழிகளில் உள்ள சில சொற்களும் வேர்களும் மாந்தன் முதன் மொழியில் இருந்திருக்கக்கூடியவடிவங்களிலேயே இன்றும் உள்ளனவாகக் கருத இடமுண்டு. நூலின் பக்கங்கள் 63-79 ( III ம் பதிப்பு 1913) லிருந்து:-ஸ்கிதியன் மொழிகள் மட்டுமல்ல, ஐரோப்பா, ஆசியா இரண்டு கண்டங்களிலும் உள்ள அனைத்து மொழிகளுமே ஒரே மூலத்திலிருந்து தோன்றியவை என்பது எல்கின்ஸ் முடிவு ஆகும். மாந்தன் மொழி வரலாற்றைப் பற்றி நமக்குத் தெரிந்துள்ள செய்திகள் பெருமளவுக்கு அம்முடிவை ஆதரிப்பனவாகவே உள்ளன. ஆயினும் அறிவியல் பூர்வமாக இம்முடிவு நிறுவப்பட இன்னும் காலம் ஆகும். திராவிட மொழி பேசுநர், இந்தியாவில் வெப்ப மண்டலத்தில் உள்ளனர்; ஸ்கிதியன் மொழிகளைப் பேசும் பின் (Finn) மக்கள் ஐரோப்பாவின் வடகோடியிலும், ஆஸ்தியாக், உக்ரியன் (Ostiak, Ugrian) மக்கள் ஆசியாவின் வடகோடியாகிய சைபீரியாவிலும் உள்ளனர். தியூத்தானியர்(Teutons) ஹெலனியர் (Hellens) அதாவது கிரேக்கர், கெல்ட்கள் Celts) ஆகிய இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுநர் ஐரோப்பாவிற்குப் புலம் பெயர்ந்து சென்று குடியேறுவதற்கு முன்னர் ஐரோப்பா முழுவதும் ஸ்கிதியன் மொழி போன்ற (இந்தோ ஐரோப்பியமல்லாத) வகைமொழி பேசுநரே தொல் குடிகளாக இருந்திருக்க வேண்டும். அந்த இந்தோ ஐரோப்பிய (ஆரிய) மொழி பேசுநர் புலம் பெயர்ந்துவந்து இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர்த் தென்னிந்தியாவின் தொல்குடிகளாக திராவிடர் இருந்திருக்க வேண்டும். திராவிட மொழிகளுக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிகள் ஐரோப்பாவில் பரவுவதற்கு முன்னர் அங்கு வழங்கி வந்த ஸ்கிதியன் முதலிய (இந்தோ ஐரோப்பியமல்லாத) மொழிகளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை மொழியியல் நிறுவியுள்ளது எவ்வளவு வியக்கத்தக்கது! வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட உறவாகையால் வரலாற்றிலிருந்து இதைப்பற்றி ஒன்றும் தெரிய முடியாது. மேம்போக்காகப் பார்த்தால் இத்தகைய உறவு நம்பமுடியாத புதிராகத்தான் தோன்றும். “இந்த நிலவுலகம் முழுவதும் பரவி வாழ அனைத்து இன மக்களையும் ஒரே ரத்தமாக கர்த்தார் படைத்தார்” என்னும் விவிலிய வாசகத்தை இது மெய்ப்பிக்கிறது. ”இந்தோ ஐரோப்பிய மொழிகளிலிருந்து கடன் பெறப்படாதவையும், என்றாலும் அம் மொழிகளின் தொல்பழங்காலத் தன்மைகளையொத்தனவாக இருப்பனவும், ஆன பின்வருவனவற்றை இன்றும்திராவிட மொழிகள் கொண்டுள்ளன. [அதாவது ,இக்கால மொழியியல் நடையில் கூறுவதானால், தொல் இந்தோ-ஐரோப்பிய மொழித்தன்மை களைத் திராவிட மொழிகள் தாமாகவே கொண்டுள்ளன.] ஒலிப்பு எளிமை, இனிமைக்காக ‘ந’வின் பயன்பாடு - கிரேக்க மொழியில் உள்ளது போல படர்க்கையிடப் பிரதி பெயர்களிலும், வினைச் சொற்களிலும் பால் வேறுபாடு இருப்பது - குறிப்பாக பொதுப் பால் இருப்பது. சுட்டுப் பதிலிப் பெயர்களிலும், படர்க்கைப் பதிலிப் பெயர்களிலும் பொதுப்பால் ஒருமையைக் காட்ட d /த் பயன்பாடு. லத்தீனில் உள்ளது போல பொதுப்பால் பன்மையைக் காட்ட அ பயன்பாடு. சேய்மைச் சுட்டுக்கு அ; அண்மைச் சுட்டுக்கு இ பயன்பாடு. பெர்சியன் மொழியிற்போல, பெரும்பாலும் இறந்த காலத்தைக் காட்ட த் பயன்பாடு வேரில் ஒரு ஒலியனை இரட்டித்து சில சொற்களில், இறந்த காலத்தைக் காட்டுதல். வினைச் சொல்லில் ஓர் உயிரெழுத்தை நீட்டி ஒலித்து வினையாலணையும் பெயர்களை அமைத்தல். “Primitive underived Indo-Europeanisms discoverable in the Dravidian Languages [in current parlance:: ‘proto-Indo European features derived from Dravidian”] The use of n, as in Greek to prevent hiatus. The existence of gender in the pronouns of the third person, and in verbs and in particular the existence of a neuter gender. The use of d or t as the sign of the neuter singular of demonstrative pronouns or pronouns of the third person. The existence of a neuter plural, as in Latin, in short a. The formation of the remote demonstrative from a base in a; the proximate from the base in i. The formation of most preterites, as in Persian by the addition of d The formation of some preterites by the reduplication of a portion of the root. The formation of a considerable number of verbal nouns by lengthening the vowel of the verbal root. 6. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (1929, 1953) “ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன் மொழியின் தோற்றத்திற்கான ஆதாரங்கள் தமிழில்தான் கிட்டும்” (Tamil supplies this long looked for clue to finding the true origina of the prot Indo European language) - சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழ் 1929 “இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ‘வேர்கள்’ என உன்னிக்கப்படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறியீடுகள்தாம். திராவிட மொழி வேர்களோவெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளையும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்டமுள்ள முளைக்கரு போலத் தோன்றும்; எந்தக் கருத்தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின என்பதைத் தெற்றென அவை காட்டுவனவாக அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல்லாததால் இந்தோ ஐரோப்பிய ‘வேர்கள்’ இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக்குவியல்களாகவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளிகாட்டி உயிரூட்டம் தரக்கூடியவை திராவிட மொழி வேர்கள்தாம்.” - Tamil Culture 1953 [பிறமொழி வேர்களுக்கும் இக்கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும்] 7. பெ. சுந்தரம் பிள்ளை (1891) “கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்” - மனோன்மணியம் பாயிரம். 8. மாகறல் கார்த்திகேய முதலியார் “தமிழ், உலகில் முதல் முதல் உண்டான இயற்கை முதன்மொழி” “ஆரியத்துக்கு முன் தமிழ் இருந்ததென்பது கடுக்கனுக்கு முன் பொன் இருந்ததென்பது போலக் கொள்ளல் வேண்டும்.” -மொழிநூல் (1913) ப. 86 மறைமலையடிகள் “ஆரியர் இந்திய நாட்டிற்கு குடிபுகுதற்கு முன் இவ் இந்திய நாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர்” “இங்ஙனத் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமும் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலே தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ் உபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து போந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற்பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவா மென்பதற்கு அவ் வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் உள்ளன.” - முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (1903) இருக்குவேத காலந்தொட்டே பல்லாயிரந் தமிழ்ச் சொற்கள் வடமொழிக்கட்புகுந்து வழங்கலாயின” [வேதம்’ என்னும் வடமொழிச் சொல் தமிழ் வேர்ச் சொல்லில் உருவானதே என்றும் தெரிவித்துள்ளார்.] - தமிழர் நாகரிகம் அல்லது வேளாளர் யார்? - 1923. ஞா.தேவநேயப் பாவாணர் “தமிழல்லாத ஒரு மொழி திராவிடத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை” - தமிழ் வரலாறு ( 1967) பக்.35 “தமிழ் உண்மையில் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகுமென்றும் அறிந்து கொள்க” - தமிழர் வரலாறு (1972) பக். 58 “இந்தியாவில் மட்டுமன்று உலகத்திலேயே முதன் முதல் நெடுங்கணக்கு வகுத்ததும் அதற்கு முறை அமைத்ததும் தமிழரே” “வடமொழி வண்ணமாலை (alphabet) தமிழ் நெடுங் கணக்கு முறையை முற்றிலும் தழுவியது.” - வடமொழி வரலாறு (1972) பக். 300 “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு உடைய மிகச்சில உலக மொழிகளில் தமிழ் ஒன்று. உலகின் பாரிய மொழிக் குடும்பங்கள் ஒன்றில் அதுதான், மைய இடம் வகிக்கின்றது. திராவிட மொழிக் குடும்பம் சார்ந்த, எம்மொழியை ஆய்பவருக்கும் தொடக்கத்திலிருந்தே தமிழ், தமிழ் வரலாறு தமிழின் பண்டை இலக்கணம் ஆகியவற்றைத் தெரிய வேண்டியது இன்றியமையாதது. தமிழ் இலக்கியச் செல்வத்தை விஞ்சும் இலக்கியம் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. எனவே தமிழ் இலக்கியச்சிறப்பை உலகெங்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வகை செய்யும் மொழிபெயர்ப்புப் பணிகள் தேவை.” - ஆர். ஈ. ஆஷர் (2004) “திராவிட” மொழிக் குடும்பமா? “தமிழிய” மொழிக் குடும்பமா? மொழியியலில் தமிழிய (Tamulian) மொழிக்குடும்பம் என்றே கால்டுவெல் காலம் வரை வழங்கிய பெயரை அவர் தான் “திராவிட” மொழிக் குடும்பம் என மாற்றி வழங்கினார். தமிழ் என்பதன் கொச்சைத் திரிபுவடிவமே திராவிடம்என்பதாகும். மகாவம்சத்தில் “தமிள” , தண்டி எழுதிய அவந்திசுந்தரி கதையில் “த்ரமிள” என்ற சொல்லும்வருகின்றன. இக்ஷ்வாகு குடிமரபினரின் பிராகிருதக் கல்வெட்டிலும் ‘தமிள’ தான் வருகிறது. பின்னர் குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகத்தில் “தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ” (அப்படி திராவிட (=தமிழ்) மற்றும் பிறமொழிகளில்) என்னும் இடத்தில் தமிழ்-தமிள -த்ரமிள-த்ரமிட -த்ரவிட - த்ராவிட என்று மாறிவிட்டது. ஏ.சி.பர்னெல் 1872 இந்தியன் ஆன்டிகுவாரி முதல் தொகுதியில் மேற்கண்ட தந்திர வார்த்திகப் பகுதியை அச்சிட்டபொழுது அபத்தமாக, “ஆந்த்ர த்ராவிட பாஷாயம் ஏவ” என்று அச்சிட்டார் (மேலும் பற்பல பிழைகளுடன்). இந்தத் தவறான வாசகத்தை கால்டுவெல் (1875) ஸ்டென் கோனோ (Linguistic Survey of India : 1906) போன்றோர் பின்பற்றினர். இத்தவறை பி.டி.சீனிவாசஐயங்கார் இந்தியன் ஆன்டிகுவாரி 42ஆம் தொகுதியில் (1913) தெள்ளத்தெளிவாக நிறுவியுள்ளார். (குஞ்ஞ&ண்ணிராஜா Annals of Oriental Research தொகுதி 28 (1979) கட்டுரையில் குறித்துள்ளது போல பர்னெல் உடைய தவறான வாசகத்தைத் தமிழறிஞர் பலரும் இன்றும் பின்பற்றித் “தமிழையும், தெலுங்கையும் ஒருசேரக் குமாரிலபட்டர் குறித்தார்” என்று தவறாக எழுதிவருகின்றனர்.) “திராவிடம்” என்னும் சொல்லில் இருந்து “தமிழ்” உருவானது என்று கால்டுவெல் தவறாகக் குறிப்பிட்டது பற்றி அவரைக் குறை கூறல் ஒல்லாது. அக்காலத்தில் தமிழ் சார்ந்த மொழியியல் ஆய்வுகள் இருந்த நிலை அவ்வளவுதான். ஆனால் அவருக்குப் பின்னர் 1887இல் கலித்தொகைப் பதிப்புரையில் சி.வை.தாமோதரனார் தொடங்கி, கமில் சுலெபில் (Journal of the Institute of Asian Madras IV -2 :1987) முடிய நூற்றுக்கணக்கான மொழியியலறிஞர் அனைவரும் “தமிழ்” என்னும் சொல்லின் திரிபுற்ற வடிவமே “திராவிடம்” என்று ஆணித்தரமாக நிறுவியுள்ள நிலையில் இன்றும் “திராவிடம்” என்னும் சொல்லிலிருந்து “தமிழ்” என்னும் சொல் உருவாகியது என கூறிக்கொண்டிருப்பது அறியாமையே ஆகும். திராவிடம் (Proto - Dravidian) என்று வண்ணனை மொழி நூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றன என்பதையும், பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் பாவாணர் நிறுவி விட்டார். தமிழின் திரிபுகளே பிற திராவிட மொழிகள். பழந்தமிழினின்றும் வேறுபட்டதாக தொல் திராவிடம் என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே திராவிடம், தொல் திராவிடம் என குறிப்பிடப்படுவன வெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாக உணர்க. எனினும் உலக அளவில் “திராவிட மொழிக் குடும்பம்” என்பது ஒரு குறியீட்டுச் சொல் ஆகிவிட்ட நிலையில் அதை நாம் பயன்படுத்துவதில் தவறில்லை. அதன் உண்மைப் பொருள் ‘தமிழிய மொழிக் குடும்பம்’ என்பதே. இயல் – 2 தமிழின் தனித்தன்மை தொன்மை, முன்மை, தென்மை, சிறப்பு, ஞாலமுதன் மொழிக்கு அதன் நெருக்கம். (கால்டுவெல் ஒப்பிலக்கண நூலில் இருந்து எடுத்த பகுதிகள் - இயல் 1இல் கண்டவை- இவ்வியலின் பொருண்மையும் சார்ந்தவைவேயாம். அவருக்குப் பின் வந்த ஆய்வுகளும் குறிப்பாகஅண்மைக்கால ஆய்வுகளும் இப்பொருண்மையை வலுவாக ஆதரிப்பதை இவ்வியலில் உள்ள கருத்துத் தொகுப்புகளிலிருந்து அறிக.) 1. ஹெச்.ஆர்.ஹால் (1913) “சுமேரிய உருவச்சிலைகள், புடைப்புச் சிற்பங்களைப் பார்க்கும் பொழுது பண்டைச் சுமேரியர் உடலமைப்புத் தோற்றம் அவர்களைச் சூழ இருந்த செமித்தியர், ஆரியர் போன்றவர்களிடமிருந்து மாறுபட்டு இருந்தது - செமித்திய, ஆரிய மொழிகளிலிருந்து சுமேரிய மொழியும் மாறுபட்டு இருந்தது போல. சுமேரியர் உடலமைப்புத் தோற்றம் இந்தியர் போன்றே இருந்தது. இன்றும் சராசரிஇந்தியனுடைய தோற்றம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுடைய அவனுடைய திராவிட முன்னோருடைய தோற்றம் தான்; (இந்தியாவிற்குள் வந்தேறிய) ஆரியர் உடலமைப்புத் தோற்றம் எப்பொழுதோ மறைந்து விட்டது. (இது போலவே ஐரோப்பாவிலும் கிரீஸ், இத்தாலிய நாட்டு மக்களின் பொதுவான உடலமைப்புத் தோற்றம் அந்நாடுகளில் குடியேறிய ஆரியர்களுடையதைப் போன்று இல்லாமல், அவர்களுக்கு முந்தைய - ஐரோப்பிய ஆரியரல்லாத - பழங்குடிகளின் தோற்றம் ஆகவே உள்ளது.) ஆகவே தென் இந்தியாவில் இன்று வசித்துக் கொண்டு திராவிட மொழி பேசி வரும், திராவிடன் உடலமைப்புத் தோற்றம் தான் சுமேரியன் தோற்றமும். இந்தியாவிலிருந்து தரை வழியாகவும் [கடல் வழியாகவும்?] பாரசீகம் வழியாக மெசொபொதாமியா சென்று குடியேறிய (திராவிட) இனத்தவரே சுமேரியர் எனக் கருத இடமுள்ளது...இன்றும் பலூசிஸ்தானத்தில் திராவிட மொழியான பிராஹுய் பேசும் மக்கள் உள்ளனர்; பாரசீகத் தென் பகுதியில் திராவிடர் போன்ற உடலமைப்புள்ள மக்கள் வசிக்கின்றனர். பாரசீகத்தில் பண்டு வாழ்ந்ததாக கிரேக்கர் கூறும் “அனாரியகோ” (Anariakoi) மக்களும் (இந்தியாவிற்கும் பாபிலோனுக்கும் இடைப்பட்ட பகுதியில் பண்டு தங்கிவிட்ட) திராவிடர்களாக இருக்கலாம். பண்டைசுமேரிய நகரங்களான எரிது போன்றவற்றுக்கு முதன்முதலில் நாகரிகத்தை கிழக்கிலிருந்து பாரசீக வளைகுடா வழியாக வந்த ஒயானஸ் என்னும் மீன் - மனிதன் கொண்டு வந்ததாக (கி.மு. 5ஆம் நூ.சார்ந்த) பெரோசஸ் கதையின் உட்கருத்து என்ன? சுமேரியாவுக்கு கடல் வழியாகவும் (திராவிட) நாகரிகம்சென்றிருக்கலாம் என்பதே அது. இந்தியாவில் தான் (சிந்துவெளியில்?) திராவிடநாகரிகம் முதலில் வளர்ந்திருக்க வேண்டும். அங்கு தான் எழுத்துக்கு வரிவடிவம் (Script) முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, முதலில் படவெழுத்தாக இருந்து பின்னர் திருந்திய எளிய வரி வடிவம் உருவாக்கப்பட்டு, சுமேரியாவுக்கும் பரவி அங்கு நாளடைவில் குனேபார்ம் ஆப்பெழுத்து உருப்பெற்றிருக்க வேண்டும். சுமேரியா செல்லும் வழியில் திராவிடர் எலாம் பகுதியிலும் தங்கள் நாகரிகத்தை விட்டுச் சென்றிருக்க வேண்டும். எனவே சுமேரியாவுக்கு நாகரிகத்தைப் பரப்பியதாகக் கூறப்படும் (செமித்தியரும் அல்லாத, ஆரியரும் அல்லாத) புதியவர்கள் இந்தியாவிலிருந்து அங்கு சென்ற திராவிடராக இருக்கலாம். ஆனால் இதற்கு நேரடி ஆதாரம் இல்லை. எனவே இதை ஒரு முற்றான முடிவாக அல்ல; ஒரு கருதுகோளாக நான் முன் வைக்கிறேன்.” -H.R. Hall (1913) Ancient History of the Near East மெசபொதாமியாவில் குடியேறிய தமிழரே சுமேரிய நாகரிகத்தை உருவாக்கியிருக்கலாம் என்னும் இக்கருத்தை பி.டி.சீனிவாச ஐயங்கார் தமது History of the Tamils (1929) நூலில் ஏற்றுள்ளார். காந்திரதாவ் (The Riddles of the Three Oceans; (1974) தமிழாக்கம் “தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்: தென் பெருங்கடல் ஆய்வுகள்(2007)) அவர்களுக்கும் இக்கருத்து ஏற்புடையதே. 2. எஸ்.ஹென்றி ஹீராஸ் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர் என்று தன்னை அழைத்துக் கொண்ட எஸ்.ஹீராஸ் பாதிரியார் (11.09.1888 - 14.12.1955) தொன்மை இந்தோ -நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Proto-Indo Mediterranean Culture 1953) என்னும் நூலில் சிந்துவெளி நாகரிகம் திராவிடருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி என்பதை நிறுவியுள்ளார். மிகப் பழங்காலத்தில் (கி.மு.5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக்கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக் கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஹீராஸ் கொள்கை. [அவர் வாதத்துக்கு ஆதாரமாகக் கொண்ட செய்திகள் சில இப்பொழுது தவறாகத் தோன்றலாம்; சிந்துவெளி முத்திரைகளை அவர் திராவிட மொழி சார்ந்தவை என்று சொன்ன முடிவு சரியென்றாலும் அவர் முத்திரைகளில் படித்துக் கண்ட வாசகங்கள் இன்று ஏற்கத்தக்கனவாக இல்லை. இருந்தாலும் அவர் கண்ட அடிப்படை உண்மை இன்றும் வலுவுடைய தாகவே உள்ளது] 3. என்.லகோவாரி i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை ஒரே மாதிரியான “பல சொல் பிணிப்பு ஒட்டுநிலை” (Polysynthetic suffixal) மொழிகள், இடையீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற்களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன.பொதுச்சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாம், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்தி, போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு, ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர் போல அமைந்திருந்தன. ii) இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநர் (கி.மு.2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன் மொழிகளுடனும் உறவுடையது. iii) இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய் மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். - N. Lahovary (1963) திராவிடர் தோற்றமும் மேல் நாடுகளும் (Dravidian origins and the west) “திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரைப் பரவினர்” என்ற அபத்தக் கொள்கையை அவர் (விவரம் புரியாமல்) பின்பற்றியிருந்த போதிலும் இந்நூல் சிறந்த மொழியியல் மெய்ம்மைகளை உணர்த்துவதாகும். 4. பிரிட்ஜட் & ரேமண்ட் ஆல்சின் (1988) “தென்னிந்தியா இன்று திராவிடமொழிகள் வழங்கும் பகுதி. அம்மொழிகளைப் பேசுவோர் பூர்வீகம் என்னவாக இருந்திருக்கலாம்? அவர்கள் (வடமேற்கிலிருந்து) தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறும்போது தம்முடன் இரும்பையும் பெருங் கற்படை நாகரிகத்தையும் கொணர்ந்தனர் என (வலுவான ஆதார மின்றிக்) கூறப்படுகிறது. தொல்லியல் சான்றுகளின்படி இப்படி நடந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரும்புப் பயன் பாட்டிற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கருநாடகத்தில் (தென் இந்தியாவில் பிற பகுதிகளிலும் கூட இருக்கலாம்) பெருங்கற்படை நாகரிகக் குடியிருப்புகள் இருந்துள்ளன;அவை இடையீடு இன்றித் தொடர்ந்து இருந்து வந்துள்ளன; வியக்கத் தக்க பண்பாட்டுத் தொடர்ச்சியுடன் இன்றும உள்ள பண்பாட்டுக் கூறுகள் பல அந்தப் பழைய நாகரிகக் கூறுகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகின்றன. உடற்கூறு அமைப்பிலும் அந்தப் பழைய நாகரிக மக்களும் இன்றைய மக்களும் பெரும் அளவுக்கு ஒன்று போலவே உள்ளனர். எனவே தென்னிந்தியாவில் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே) புதுக்கற்கால நாகரிகம் படைத்த மக்களிடையே உருவானவையே திராவிடமொழிகள் என்பதை மறுப்பது கடினமாக உள்ளது. தென்னிந்தியாவில் பற்பல பகுதிகளில் இருந்த புதுக்கற்கால நாகரிக மக்களிடையே தொடர்பு இருந்திருக்கும்; பொதுவான திராவிட மொழியும் இருந்திருக்கும். கி.மு.3000-1000 கால அளவில் தென்னிந்தியாவில் இருந்த புதுக் கற்கால குடியிருப்புகளில் இருந்து பிறந்தவையே வரலாற்றுக் காலத் தொடக்கத்தைச் சார்ந்த குடியிருப்புகளும் எனலாம். The southern part of the peninsula is today the homeland of the Dravidian Language, and we may well enquire what- speaking in broadest terms-is likely to have been their history. It has been claimed, though not on very solid grounds, that the earliest speakers of these languages brought with them into Peninsular India both Iron and the custom of making megalithic graves. In the light of archaeological evidence this appears to be extremely improbale. We now know that atleast for a millennium prior to the arrival of iron, there were established settlements in Karnataka, and probably also in other parts of the peninsula, and these settlements show evidence of a remarkable continuity of culture. Many modern culture traits appear to derive from them, and a substantial part of the populations shows physical affilation to the Neolithic people. In the Light of all this it is difficult to believe that the Dravidian languages do not owe their origin to the same people who produced the Neolithic culture there. xxxx the several regional cultures.... had throughout a degree of interaction and probably originally a common language family, Dravidian. xxxx the settlements of the third - second millennia appear to be ancestral to those which we encounter there from the beginnings of history onwards (p.353) - Bridget and Raymond Allchin (1988) The rise of Civilisation in India and Pakistan ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.மு. 1500 - 1300ஆகும். இந்தோ ஆரிய மொழிப் படைப்புகளில் மிகப்பழையது அதுவே. அவ்வேதத்திலேயே இந்தோ- ஆரியமல்லாதனவும், திராவிடத் தன்மை வாய்ந்தனவுமான பல கூறுகள் – ஒலியன் மாற்றங்கள், திராவிடத்திலிருந்து கடன்பெற்ற சொற்கள், இடப்பெயர்கள், மக்கட் பெயர்கள் ஆகியவை உள்ளன. கி.மு.1500க்கு முன்னர் சில நூற்றாண்டுகள் காலம் வடமேற்கு இந்தியாவில் வேதமொழி பேசியவர்களும் திராவிட மொழி பேசியவர்களும் நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. - மேலது The earliest Indo - Aryan text, the compiled Rg Veda, shows several influences of a non -Indo - Aryan, Dravidian element in the form of phonetic changes. introduction of loan words and names etc. These presuppose the coexistence of the Vedic and Dravidian speaking peoples in a cultural contact situtation for a period, perhaps of centuries, before the compilation of the Rg Veda (circa 1500 - 1300 BC) [அடுத்து வரும் பக்கங்களில் “புடவியின் தோற்றத்தி லிருந்து இன்றைய மாந்தன் வரை” என்னும் விளக்கப் படம் தரப்பட்டுள்ளது. மாந்த இனத் தோற்றம் , மொழியின் தோற்றம் போன்றவை குறித்து பல்வேறு அறிவியற் புலங்களில் இன்றைய அறிஞர்கள் ஏற்கும் முடிவுகளை அது காட்டுகிறது. ] 5. ஞால முதன்மொழி குறித்தும் அதற்குத் தமிழ் மிக நெருங்கிய தென்பது குறித்தும் அண்மைக்காலத்தில் உருவாகியுள்ள கருத்தோட்டங்கள்: (1) இன்று உலகில் பேசப்படும் 6000 மொழிகளும் பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவையாக வகைப் படுத்தப்பட்டள்ளன. அக்குடும்பங்களுள் முக்கியமானவை இந்தோ-ஐரோப்பியம், திராவிடம், உரால்-அல்தாய்க், ஆப்ரோ ஆசியன் (ஹமைதோ - செமித்திக்) ஆகியவையாகும். இந்நான்கு மொழிக் குடும்பங்களுமே பொதுவான ஒரு மொழிப் பெருங்குடும்பத்திலிருந்து Macrofamily தோன்றியிருக்க வேண்டும் என்று 1900 ஐ ஒட்டி ஐரோப்பிய மொழியிலறிஞர் சிலர் கருதினர். அம்மொழிப் பெருங் குடும்பத்துக்கு 1904-இல் டென்மார்க் அறிஞர் ஹால்தெர் பெதர்சன் நாஸ்திராதிக் என்று பெயர் சூட்டினார். லத்தீன் மொழியில் நாஸ்திராஸ் என்றால் நம்மவன் என்று பொருள். அச்சொல்லிலிருந்து நாஸ்திராதிக் (நமதுமொழி) என்ற சொல்லை பெதர்சன் உருவாக்கினார்; இவ்வாய்வுகளைக் குறித்திட நாஸ்திராதிக்ஸ் என்னும் சொல் உருவாக்கப் பட்டுள்ளது. 1960களில் ரசிய மொழியியல் அறிஞர் இலிச் சுவிதிச் இத்துறையில் விரிவான ஆய்வுகள் செய்தார். அந்தோ! அவர் 1965இல் உந்து விபத்தில் இறந்து விட்டார். நாஸ்திராதிக் தவிர ஏனைய மொழிப் பெருங்குடும்பங்களாக மொழியியலறிஞர் இன்று ஏற்றுள்ள ஏனைய மொழிப் பெருங்குடும்பங்கள் வருமாறு: சீன - காகேசியன், ஆஸ்திரிக், அமெரிக்கஇ ந்தியன், இந்தோ-பசிபிக், கோய்சான், காங்கோ-சகாரா 2. பெதர்சன், சுவிதிச் ஆகியோர் நிறுவிய நாஸ்திராதிக், அமெரிக்கர் கிரீன்பெர்கு 2000இல் நிறுவிய யூரேசியாடிக் இவ்விரண்டுக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை. காண்க: 1. நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்பத்தில் அடங்கிய மொழிக் குடும்பங்கள்: 1965இல் சுவிதிச் கருத்துப்படி: இந்தோ-ஐரோப்பிய மொழிகள், உராலிக் (பின்னிஷ் முதலியவை), அல்தாயிக் (துருக்கியம் முதலியவை), திராவிட மொழிகள், கார்ட்வெலியன் (ஜார்ஜிய மொழி முதலியவை) ஆப்ரோ-ஆசியன் (செமித்திய மொழிகளும் ஹாமித்திய மொழிகளும்) 2. பிற்றை நாஸ்திராதிக் ஆய்வாளர் கருத்துப்படி: ஆப்ரோ-ஆசிய மொழிகளை நீக்குக:- ஸ்தாரோஸ்தின், செவரோஸ்கின், அலெக்சிஸ் மானாஸ்டர் ரேமர் சுகோதியன், எஸ்கிமோ-ஆல்யூத் சேர்க்க : தால்கோபால்ஸ்கி; சப்பானியம், கொரியம் சேர்க்க (அல்தாயிக் குடும்பத்தில் அல்லது தனியாக) பாம்ஹார்டு, ஸ்தாரோஸ்கின் கார்ட்வெலியனை நீக்குக:- பாம்ஹார்டு, கெர்ன்ஸ் எலாமைட்டை சேர்க்க:- தால்கோபால்ஸ்கி சுமேரியத்தைச் சேர்க்க:- பாம்ஹார்டு (2) கிரீன் பெர்க்-இன் யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பத்தில் அடங்கியவை;- எத்ரஸ்கன், இந்தோ-ஐரோப்பிய மொழிகள், உராலிக் - யூகாகிர், அல்தாயிக், கொரியன்-ஜப்பானியம்-ஜனு, சுகோதியன், எஸ்கிமோ-அல்யூத். 3. ரோஜர் பிளெஞ்ச் & மாத்யூ ஸ்பிரிக்ஸ் பதிப்பித்த தொல்லியலும் மொழியும் (1997/1999 ரௌட்லெட்ஜ்) நூல் நான்கு மடலங்கள் கொண்டது. நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்பத்தில் திராவிட மொழிகளின் இடம் குறித்து இரண்டு வேறுபட்ட கருத்துக்களை அந்நூலில் காணலாம்:- மடலம் I பக். 65-67: ஹெக்தெயஸ் எழுதி “ஆப்ரோ- ஆசியாடிக்கும் நாஸ்திராதிக்கும்” தொல் நாஸ்திராதிக் ஆப்ரோ-ஆசியாடிக் மேற்குப் பிரிவு கிழக்குப் பிரிவு எஸ்கிமோ-அல்யூத் இந்தோ - கார்ட் திராவிட உரால் அல்தாய்க் ஐரோப்பியன் வெல்லியன் மொழிகள். மடலம் IV பக்.48-78 வாக்லாவ் பிலாசக் எழுதிய “எலாம்மொழி: பண்டைய மையக் கிழக்குப் பகுதியையும் திராவிட இந்தியாவையும் இணைத்த பாலம்” தொல் நாஸ்திராதிக் ஆப்ரோ- இணைப்பு தொல் ஆசியாடிக் தொல்சுமேரியன் மொழி திராவிட (12000 இ.மு.) மொழிகள் - எலாம் (6000 இ.மு.) இ.மு. = இன்றைக்கு முன்னர் BP (திராவிட மொழிக்கும் எலாம் மொழிக்கும் இடையிலான ஒப்புமையை விட எலாம் மொழிக்கும் ஆப்ரோ ஆசியாடிக், தொல்சுமேரியன் மொழிகளுக்கும் இடையே இருந்த ஒப்புமை நெருக்கமானது என்பர் பிலாசக்) 4. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் 2000 அக்டோபர் மாதம் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தியிடம் பேசும்பொழுது கிரீன்பெர்கு “திராவிட மொழிக் குடும்பம் யூரேசியாடிக்கின் உடன்பிறப்பாக (சகோதரியாக) இருக்க முடியுமேயொழிய மகளாக இருக்க முடியாது” என்றார். (கிருஷ்ணமூர்த்தி The Dravidian Languages 2003 பக்.46) இதன் பொருள் என்ன? இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் பிறந்த உட்குடும்பங்களே ஸ்லாவ், இரானியன்; வேதமொழி; சமற்கிருதம், கிரீக், லத்தீன், கெல்டிக், செருமானியம் முதலியவை. திராவிட மொழிகள் இவற்றுக்கு மட்டுமல்ல, இவற்றின் தாயான, இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்துக்கும் முந்தைய பழமை வாய்ந்தது என்பதே கிரீன்பெர்க் கருத்து. 5. நாஸ்திராதிக் தொன்மொழிக்கும் முந்தியதாகிய ஞாலமுதன்மொழி (Mother Tongue of man அல்லது Proto- World) பற்றி இன்று மொழியியலறிஞர் கோட்பாடு என்ன? அட்லான்டிக் மன்த்லி என்னும் அமெரிக்க இதழில் (1991 ஏப்ரல்: பக்.39-68) ராபர்ட் ரைட் என்பவர் இதுபற்றி நயம்பட எழுதியுள்ளார். அத்தகைய ஞால முதன்மொழி சார்ந்த ஆய்வுகளில் இன்று ஈடுபட்டுள்ளவர்கள் மெரிட் ரூலன், ஜான் பெங்ட்சன், வாக்லாவ் பிலாசக், விதாலி செவரோஷ்கின் (Merrit - Ruhlen, John Bengtson, Vaclav Blazek, Vitaly Shevoroshkin) போன்றவர்களாவர். யூரேசியாடிக் பற்றி கிரீன்பெர்க் இறப்பதற்கு முன் கடைசியாக எழுதிய நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் அவற்றோடு நெருங்கிய உறவுடையனவும் - யூரேசியாடிக் மொழிப் பெருங் குடும்பம். Indo-European and its closest relaties: the Eurasiatic Language Family: Vol 1; Grammar; Vol II: Lexicon” (ஸ்டான் போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2000/2002) என்பதாகும். 6. பல்வேறு மொழிக் குடும்பங்களுக்கிடையேயுள்ள உறவு (அதாவது தொல் பழங்காலத்தில அவை எவ்வாறு ஒன்றாக இருந்து படிப்படியாகப் பிரிந்து ஒன்று – பலவாகி யிருக்கலாம் என்பது) பற்றி எழுதும் மொழியியலாளர்களிடையே ஆர்.எல்.திராஸ்க் (R.L.TraskHistorical Linguistics; Arnold, London 1996) உடைய பின்வரும் கருத்தே விருப்பு வெறுப்பற்றதும் சிறந்ததும் ஆகும் “தொல்-நாஸ்திராதிக் சுமார் 15000-10000 ஆண்டு களுக்கு முன்னர் பேசப்பட்டிருக்கலாம், மொழிக் குடும்பங்களின் கால்வழி பற்றிய கருதுகோள்களிலேயே நாஸ்திராதிக் தான் பெருமளவு ஏற்கத் தக்கதாயுள்ளது. இன்னும் பத்தாண்டுகளில் (திராஸ்க் இதை எழுதியது 1996இல்)நாஸ்திராதிக் கொள்கை பலராலும் ஏற்கப்படலாம்” (திராவிட, உரால்-அல்தாய்க், சப்பானிய மொழிகள் 10000 ஆண்டுகட்கு முன்னர்ப் பிரிந்திருக்கலாம் என்பர் சுவெலபில் (1990) (Dravidian Linguistics - an Introduction.) 7. இன்று உலகில் உள்ள 660 கோடி மக்களுமே ஹோமோ சேபியன்ஸ் அல்லது “தற்கால உடலமைப்பு மாந்தர்” (Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவ்வினம் சுமார் ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்பதும், மொழி என்பது 50,000 ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றியிருக்கலாம் என்பதும் பல்வேறு அறிவியல் துறை விஞ்ஞானிகளின் இன்றைய ஒருமித்த முடிவாகும். முதல் தாய்மொழி தோன்றிய ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்துதான், தற்கால மாந்த இனம் விரைந்து உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் பரவுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்பதும், அப் பரவல் தென் இந்தியா வழியாக நடைபெற்றிருக்கலாம் என்பதும் அவர்கள் கருத்தாகும். தொல் தமிழ் (திராவிட) தோற்றமானது மொழி உருவாகியதும் தற்கால மாந்த இனம் உலகெங்கும் பரவத் தொடங்கியதுமான ஐம்பதாயிரம் ஆண்டுத் தொன்மை உடையதாகலாம்.( Christiansen M.H.et.al (2003) Language Evolution:Colin Masica (2001) etc.. இந்துமாக்கடலில் இந்தியாவுக்குத் தெற்கிலிருந்த தென்னாட்டுப் பகுதிகள் பண்டு கடல்கொள்ளப்பட்டுத் தமிழகப் பரப்பு சுருங்கியதாகப் பழந்தமிழ் இலக்கியங்களும் மரபுச் செய்திகளும் கூறுவது ஏறத்தாழ கி.மு.8000ஐ ஒட்டியும் பின்னரும் உலகெங்கும் கண்டத்திட்டுப் பகுதிகள் (Continential shelf) கடலுள் மூழ்கியதையே குறிப்பிடுவதாகக் கொள்வது மட்டுமே இன்றைய அறிவியலுக்கு ஒத்தது என்பதை இராமநாதன் Dravidian studies (திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம்) 2003 கட்டுரையில் காண்க. அடுத்துள்ள படம் மாந்த இனப்பரவலிலும் மொழியின் பரவலிலும் தென்னிந்தியாவும், தமிழகமும் இன்றைக்கு 50,000 ஆண்டுகட்கு முன்னர் வகித்த முக்கிய பங்கைக் காட்டுவதாகும்:- 8. அண்மையில் மொழியியலறிஞர் ஸ்தெபான் ஹில்யர் லெவிட் தமது 2007 கட்டுரையில் மேற்கண்ட கோட்பாடடை ஆதரிக்கிறார். “கடல் மட்டம் இப்பொழுதுள்ளதைவிட மிகக் குறைவாக இருந்த பனியூழிக் காலத்தில் ஆப்பிரிக்கா – தென்னிந்தியாவை இணைத்த வால் போன்ற நில இணைப்புகள்/தீவுகள் வழியாக ஆப்பிரிக்காவிலிருந்து தென் ஆசியாவிற்கு திராவிட மொழி பேசுநர் வந்திருக்கலாமென்னும் கோட்பாட்டை பி.இராமநாதன் வலியுறுத்துகிறார். அக் கோட்பாட்டைநானும் ஆதரிக்கிறேன். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வுசெய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளவை எனக் கண்டுள்ளனர். உறவுமுறை (Kinship), பூமராங் (வளைதடி) பயன்பாடு ஆகியவையும் Image of page no. 32 Image of page no. 33 Image of page no. 34 அம்மக்களுக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு.6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டனர் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 40,000ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய அறிஞர்.இதிலிருந்து குறைந்தது 40,000 ஆண்டுகட்கு முன்னரே திராவிடர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகின்றது. இந்த [“திராவிடர் ஏற்றம்”] கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத்திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உராலிக், அல்தாயிக், இந்தோ-ஐரோப்பியம் ஆகிய மொழிக்குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்ட வட்டமாகக் கூற இயலாது” - International Journal of Dravidian Linguistics; June 2007 ஓப்பன் ஹைமர் 2003இல் எழுதிய The Real Eve: Modern Man’s Journey out of Africa Carroll and Graff Publishers, New york நூலின்படி மரபணு ஆய்வும் இந்தியாவிலிருந்து வடக்கு வடமேற்காக ஏறத்தாழ 50000 ஆண்டுக்கு முன்னர் மைய கிழக்கு- மைய ஆசியா –ஐரோப்பா என்றவாறு படிப்படியாகப் பரவியிருக்கலாம் என்ற கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. (9) மிக அண்மையில் தான், முதன் முதலாக மேனாட்டு மொழியியலறிஞர் பாவாணர் கோட்பாடுகளை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்; காண்க. 1. ஸ்தெபான் ஹில்யர் லெவிட்: “இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்புகள்” (இந்தோ ஐரோப்பிய மொழியியல் ஆய்விதழ்) மடலம் 28: எண்.3,4 சூன் டிச.2000 பக்.407-438)பாவாணர் தமது “The Primary classical language of the world(1966)” நூலில் தமிழ் மொழியிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிகளிற் புகுந்துள்ளனவாகக் குறிப்பிடுவனவற்றுள் நூற்றுக்கு மேற்பட்டவை ஏற்கத்தக்கனவென்பது இவர் கருத்து. 2) தமது (2000) நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72-ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20-க்கு மேற்பட்டவற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன. 3) ஹெச்.பி.ஏ.ஹகோலா (பின்லாந்து) (i) ஆயிரம் துரால்ஜன் (DURALJAN) வேர்ச்சொற்கள் (2000); இந்நூலில் திராவிட மொழிகள், உரால்-அல்தாய்க் இன மொழிகள், சப்பானிய மொழி, தென் அமெரிக்க பெருநாட்டு கொஷுவா மொழி, ஆகியவற்றிடையே 1000 அடிப்படை ஒப்புமைச் சொற்களைத் தந்துள்ளார். 4) சுமேரிய மொழியும் தொல்துரால்ஜன் மொழிகளும் (2003): ஹஜத் அசாதியன் உடன் இணைந்து எழுதியது. முந்தைய நூலிற் கண்ட 1000 ஒப்புமைச் சொற்களில் 410 சொற்கள் (கி.மு.3500-1800 காலக்கட்டத்தைச் சார்ந்த) சுமேரிய மொழிச் சொற்களோடும் ஒத்திருப்பதை நிறுவுகிறது: 10) திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்து இதுவரை நிகழ்ந்துள்ள ஆய்வுகளின் பட்டியல் வருமாறு:- நாஸ்திராடிக் / யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1. திராவிடமும் இந்தோ கால்டுவெல், போப், ஞானப் ஐரோப்பிய மொழிகளும் பிரகாசர், தேவநேயன், இளங்குமரன், மதிவாணன், இலியிச்-சுவிதிச், அருளி, அரசேந்திரன், ஸ்தெபான் ஹில்யர் லெவிட் (பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ்-இந்தோ ஐரோப்பிய / ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக்கணக்கானவை ஏற்கத் தக்கவை (reasonable and perceptive ) என்று முனைவர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் இந்தோ ஐரோப்பிய (மொழியியல்) ஆய்விதழில் (மடலம் 28:3-4; 2000 சூன் - திசம்பர் பக்கம் 407-438இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். மேலும் 2000இல் வெளியான “இந்தோ ஐரோப்பிய மொழிகளும் அவற்றொடு நெருங்கிய உறவுடையனவும்: யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம்: மடலம் II இலக்கணம்” என்னும் நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72-ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20க்கு மேற்பட்டவற்றுக்கு திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன.) 2. திராவிடமும் உரால்- கால்டுவெல், பரோ, அல்தாய்க் மொழிக் மெங்கெஸ், டைலர், குடும்பமும் அந்திரனாவ், வாசக், பி.ஏ.ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மக்-அல்பின், மொழியும் (கி.மு.3000க்கு கே.வி.சுவலெபில் முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் நாட்டில் பேசப்பட்டது) 4. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓனோ; பொன்.கோதண்டராமன்; ஹெச்.பி.ஏ. ஹகோலா, சுவெலபில் 5. திராவிடமும் கொரிய ஹுல்பர்ட்; பவுண்துரை மொழியும். 6. திராவிடமும் எத்ரஸ்கன் ஸ்டென் கோனோ; மொழியும் (கி.மு.1000-300 இரா.மதிவாணன் அளவில் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990 இல் வெளியிட்ட திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் என்னும் நூலின் பக்கங்கள் 99-122 இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிட மொழி, எலாமைட், தொல் உரால்-அல்டாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு.10,000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரிய ஹீராஸ், ஏ.சதாசிவன், மொழியும் (கி.மு.3000க்கு ஜே.வி.கின்னியர் வில்சன்; முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ. ஹகோலா 8. திராவிடமும் மிதன்னியும் ஜி.டபுள்யூ.பிரவுன் (1930) (கி.மு.1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி; மொழியும் (ஸ்பெயின்) பெனான் ஸ்பிக்னு சாலெக் 10. திராவிடமும் ஆப்பிரிக்க செல்வி லிலியாஸ் மொழிகளும் ஹாம்பர்கர்; டட்டில், ந்டியா ( Ndiaye ) உபாத்யாயா 11. திராவிடமும் ஆஸ்திரேலியப் நாரிஸ், பிரிச்சார்டு, பழங்குடி மக்கள் மொழிகளும் ஆர்.எம். டபுள்யூ .டிக்சன், பி.இராமநாதன் (1984) (இப்பழங்குடி மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள் இவர்கள் மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையிலுள்ள நெருங்கிய தொடர்பு தான் தமிழின் தொன்மை பத்தாயிரம் ஆண்டுகட்கு குறையாதது என நிறுவ மறுக்கொணாச் சான்று ஆகும். 12. திராவிடமும் பபுவா - கே.வி.எஸ். கிருஷ்ணா நியூகினி Papua New (சென்னை - 17) தமிழகத் Guinea தீவில் (உத்திரப் தொல்லியல் துறையில் பிரதேசம்போல் இரு 25.2..2009 ல் ஆற்றிய மடங்கு பரப்பு;மக்கள் ஆய்வுரை Antiquity தொகை 60 இலட்சம்; of Indian Languages பேசப்படும் 700 மொழிகள் - Hirimotu குடும்பம் 13. திராவிடமும் கொஷுவா டாக்டர் சீனிவாசன்; மொழியும் (தென் சாமன்லால், ஹகோலா அமெரிக்க பெருநாடு) (இப்பத்திச் செய்திகளை விளக்கும் உலகப் படத்தை- “ஞால முதன்மொழி - தமிழ்” அடுத்துக் காண்க) 11) ஞாலமுதன்மொழி ஆய்வாளர் மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடி வழி ஆய்வு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994 நூலின் பக்கம் 277 இல் கூறுவது வருமாறு: “பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளாவிடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர்நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன் மொழியிலிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது.” அந்நூலின் பக்கங்கள் 277-366இல் 27 முக்கியமான கருத்து களுக்கு பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் உள்ள சொற்கள் “Global Etymologies” தரப்பட்டுள்ளன. அக்கருத்துகளுக்கு ஞால முதன்மொழியில் என்ன வேர்ச்சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடியாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்கு) த் தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தனவாகவும் ஞாலமுதன்மொழியின் வேர்ச் சொல் வடிவை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன; “தமிழே இயன் மொழி’ எனப் பாவாணர் செப்பியதை இது மெய்ப்பிக்கிறது) “பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளா விடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன்மொழியிலிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது”. “ஞாலமுதன்மொழி வேர் திராவிடச் (தமிழ்) சொல் 1. Aja (Mother, older female relative) ஆய் : Mother 2. Bu (N) KA (knee, to bend) வாங்கு: to bend 3. BUR (Ashes, dust ) பூழி : powder 4. KOLO (hole) ஓள்: to pierce, to make hole [குழி (மதிவாணன் 2006] 5. KUAN (dog) குக்கல்/குக்கன் (குரைப்பது) 6. KUNA (woman) பெண் - கிரேக்கம் gune [கன்னி (மதிவாணன் 2006] (4,5,6 க்கு ரூலன் “திராவிட” மொழிச் சொல் தரவில்லை. மேலே தந்துள்ள தமிழ்ச் சொற்கள் இந்நூலாசிரியன்தந்தவையே) 7. MAKO (Child) மகன் (< -மழ = இளமை) 8. MALIQA (to suck, suckle, nurse, breast) மெல்லு (தல்) 9. MANA ( to stay in a place) மன்னு(தல்) : to be Permanent 10. MANO (man) மன் : (கசடிஅ மகன்) 11. MENA (to think about) முன்னு(தல்) : to think 12. Pal ( 2) பால்: part, portion 13. PAR (to fly) பற : to fly 14. PUTI (vulva) பொச்சு 15. TEKU (leg, foot) தாவு =: jump; (பர்ஜி: tak தாக் = நட) 16. TIK (finger, one) ஒண்ணு-ஒண்டி தெலுங்கு - ஒகடி உரால்: odik 17. TIKA (earth) துகள்: dust 13. செந்தமிழ்ச் செல்வி ஒன்பதாம் மடலம் (1931-32) 308ம் பக்கத்தில் பாவாணர் ‘வடமொழிச் சென்ற தென் சொற்கள்’ கட்டுரையில் “எத்தனையோ தென்சொற்கள் வடமொழிச் சென்று வாகுகராய் வழங்கி வருகின்றன. அவை நளராகும் காலமும் நண்ணும்” என்றார். அக்கட்டுரை வடமொழி பற்றியது மட்டுமே யாதலின் அவ்வாறு கூறினார். பின்னர் அடுத்த 50 ஆண்டுகளில் இந்தோ, ஐரோப்பிய மொழிகள், பிறமொழிக் குடும்பம் சார் மொழிகள் ஆகியவற்றிலும் மிகப்பல தமிழ்ச் சொற்கள் ஏறியுள்ளதைப் பாவாணரே நிறுவியுள்ளாராகலின், “வடமொழிச் சென்று” என்பதை “பிறமொழிக் குடும்பங்களிடைச் சென்று” எனக் கொள்வது பொருத்தம். ஞாலத்தின் பல்வேறு மொழிக் குடும்பங்களிடைச் சென்று வாகுகராய் வழங்கும் தமிழ்ச் சொற்கள் நளராகும் காலம். (அதாவது பாவாணரின் கனவு நனவாகும் காலம்) நண்ணிவிட்டது எனலாம். 14. அண்மையில் செம்மொழி அக்-திச2007 இதழில் ஸ்தெபான் லெவிட் ஞாலமுதன்மொழி சார் ஆய்வுகளில் திராவிட மொழிகளின் முக்கியத்துவத்தைப் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்:- நாஸ்திராதிக் ஆய்வுகளை 1960-70 களில் தொடங்கிப் பெரும் அளவில் வளரச் செய்தவர்கள் (ரசியர்) விலாதிஸ்லாவ் இல்லிச் - சுவிதிச், இந்தியாவில் தேவநேயன் ஆகியோராவர். பல்கலைக்கழக நிலை மொழியியல் துறைகளில் கோலோச்சியவர்கள், “நாஸ்திராதிக்” ஆய்வுகளைத் தீண்டத்தகாதன வாகக் கருதிய காலம் அது. இல்லிச்-சுவிதிச், தேவநேயன் இருவரும் இத்துறையில் உண்மை ஒளி காண வழி காட்டிய முன்னோடிகள். பல்வேறு மொழிக் குடும்பங்களை இணைத்து, “மொழிப் பெருங்குடும்பங்கள் Superfamilies ஆக வகைப் படுத்திச் செய்யும் ஆய்வுகளைப் பல்கலைக்கழக நிலை மொழியியலறிஞரும் ஏற்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. அத்தகைய ஆய்வுகளில் முதலிடம் பெற வேண்டிய திராவிட மொழிகளின் முக்கியத்துவம் இன்னும் உணரப்படவில்லை.. தமிழ்ச் சேர்ச்சொற்களின் அடிப்படையில் தேவநேயன் முன் வைத்துள்ள மொழியியல் வாதங்கள் பலவும் நாஸ்திராதிக் போன்ற ஆய்வுகளில் திராவிடமொழிகள் வகிக்கும் முக்கிய இடத்தை விளக்குகின்றன. அத்தகைய ஆய்வுகளில் ‘திராவிட இந்தோ ஐரோப்பிய” சொல் உறவு ஆய்வும் ஒன்று; அவற்றுள் முக்கியமானதும் கூட” மொழியியல் சார்ந்த அறிஞர் சிலர் கருத்துகள் (இவ்வியலோடு தொடர்புடையவை) 6. “இந்திய ஒரு மொழியியற்புலம்” ஆய்வாளர்கள் திராவிட மொழிகளிருந்து இந்தோ ஆரிய மொழிகளுக்குச் சென்றுள்ளனவாகக் கருதும் இலக்கணக் கூறுகளும், மொழியியல் கூறுகளும் இந்திய மொழிக் குடும்பங்களிடையே பொதுமை குறித்து முதன் முதலில் விரிவாக 1956 இல் (Language, 32; பக் 2-16) “இந்தியா ஒரு மொழியியற் புலம் India as a Linguistic Area என்னும் கட்டுரையில் எழுதியவர் எமெனோ இந்தியாவில் உள்ள தமிழிய, இந்தோ ஆரிய, முண்டா இன மொழிகளிடையே பொதுமைக் கூறுகள் (பெரும் பாலானவை தமிழிய மொழிகளிடமிருந்து பிறவற்றுக்குப் பரவியவை) உள்ளதை அக்கட்டுரை நிறுவியது. இக்கோட் பாட்டின் கரு வெகு முன்னரே உருவானது. (1788லேயே சர்வில்லியம் ஜோன்ஸ் இந்தி முதலிய வட இந்திய மொழிகளின் இலக்கணக்கூறுகள் இந்தோ ஆரியமொழிக் குரியவையல்ல [அப்பொழுது “தமிழிய மொழிக் குடும்பம்” பற்றி மேனாட்டறிஞருக்கு தெரியாது] என்று கூறியுள்ளார்: (Regarding modern Indo - Aryan Languages) : “and this analogy might induce us to believe, that the pure Hindi, whether of Tartarian or Chaldean origin, was primeval in upper India, into which the Sanskrit was introduced by conquerors from other kingdoms in some very remote age” தமிழிய மொழிகளிலிருந்து வேதமொழி, சமற்கிருதம் வட இந்திய (இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினவாகக் கருதப்படும்) மொழிகள், ஆகியவற்றில் ஏறியுள்ள ஒலியனியல், இலக்கணவியல் மொழியியல் கூறுகள் பலவற்றை எமனோ தமது 1956 கட்டுரையில் நிறுவினார். ஒலியனியல் : ட;ள (ரிக்வேதத்தில்), ன ஆகிய வளை நாவொலிகள் (retroflex/cerebral/domal தமிழிய மொழி களிலிருந்து கடன் பெற்றவை. அவ்வொலிகளைக் கொண்ட சொற்களைத் தமிழிலிருந்து கடன் பெற்ற பின்னர், ஒலிகளையும் வண்ணமாலையில் சேர்த்தனர். வினையெச்சம் (gerund/absolutive/incomplete verb/ past nonfinite verb/converb/indeclinable participle/ adverbial participle/past participle (Jothimuthu), conjunctive participle (Grierson) ரிக்வேத காலத்திலேயே ஏறிவிட்டது. நேர் கூற்று முடிந்தவுடன் “என” என்று தமிழில் வருவது போல் (“தன்செய்வினை முடித்தெனக் கேட்பல்-” புறநானூறு 27:9-10) சமற்கிருதத்தில் கூற்றுக்குப் பின்னர் “இதி” iti (= இப்படிக் கூறினார்) என வருதல். எதிரொலிச் சொற்கள் (echo words ) “புலி கிலி” போன்றவை ஒலிக்குறிப்புச் சொற்கள் - சளசள, பட பட போன்றவை. ஓடு, ஓட்டு, ஓட்டுவி; நட, நடத்து, நடத்துவி போன்ற வாய்பாட்டு (simplex, causative, causative of causative) வினை வடிவங்கள். எமெனோ 1974 கட்டுரை; தமிழ் உம் பயன்பாடு போன்ற சமற்கிருத அபி api ஐ பயன்படுத்துதல். மேலது கட்டுரை: திராவிட உறவு முறைச் சொற்களிலும் சரி இந்தோ ஆரிய உறவுமுறைச் சொற்களிலும் சரி பெரும்பாலும் தொழிலைக் குறிக்கும் சாதிப்பெயர் ஆணுக்கு உள்ளது. ஆனால் பெண்ணைக் குறிக்கும் பொழுது இந்தச் சாதிக்காரனுடைய மகள்/மனைவி/ தாய்/பிற உறவு என்ற அளவிலேயே அமைந்து விடுகிறது. மேற்கண்ட செய்திகளை காலின் மாசிகா தமது Defining a Linguistic Area : South Asia (1976) நூலில் விரிவாக விளக்கி யுள்ளார். தமிழிய மொழிகளை யொட்டிய மாற்றங்களே இந்தோ ஆரிய மொழிகளில் ஏறியுள்ளன என்பது அவர் கருத்து “(India) is a fairly stable typological area where the brunt of the burden of adaptation is borne by intrusive rather than local languages.” பாவாணருடைய வடமொழி வரலாறு (1967) 295-321 பக்கங்களில் இலக்கணவதிகாரம் என்னும் பகுதியில் பின்வரும் இலக்கண/ மொழியியல் கூறுகளை வேதமொழியும் சமற்கிருதமும் தமிழிய மொழிகளிடமிருந்தே கடன்பெற்றுள்ள எனத் தெளிவாக நிறுவுகிறார். எழுத்தியல் 1. வண்ணமாலை (தமிழிய மொழியையொட்டி உருவாக்கிக் கொண்டது.) 2. ஒலியும்பிறப்பும் 3. எழுத்துச் சாரியை 4. எழுத்துவைப்பு முறை, 5. எழுத்தொலி மாத்திரை/ அளபு 6. எழுத்துவடிவம் 7. புணர்ச்சி. சொல்லியல் “வடமொழி வேற்றுமையமைப்பும் தமிழைத் தழுவியது” “வடமொழி திரிமொழியாதலின் அதன் வினைகட்கு வேர்ச் சொற்கள் அம்மொழியில் இல்லை. அவைபெரும்பாலும் இயல்மொழியாகிய தமிழில் தான் உள்ளன.” (தாது பாட வேர்களின் தன்மை பற்றி ஏற்கெனெவே மேலே இயல் 1ல், கண்டோம்). குறிப்புச் சொற்கள் - அசைகள்; இணைப்பிடைச் சொல் (உம் - உந்து Skt - உத்த; OE, Eng and) சுட்டு/ வினாச்சொற்கள், வினையெச்சம். தொடரியல் தொகைச் சொல் (ஸமாஸ); சொற்றொடர் வரிசை (“பெரும்பாலும் தமிழ் முறையை ஒத்ததே”) The Primary Classicial Language of the World பக்கங்கள் 279 - 286 ல் தமிழிலிருந்து இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் ஏறியுள்ள (முன்னொட்டுகள், பின்னொட்டுகள், சுட்டுகள், வினை ஈறுகள் முதலிய) மேலும் பல மொழியியல், இலக்கணக் கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். மொழி படிப்படியாக உருவானதா? அல்லது திடுமென உருவானதா? திடுமெனத்தான் என்று 1783 ல் கருதியவர் டாக்டர் ஜான்சன் : மொழி ஒருவர் அல்லது ஒரு சிறு குழுவினரிடம் திடுமெனத் தோன்றியிருக்க வேண்டும். ஆயிரம் குழந்தைகளோ அல்லது ஏன் பத்து லட்சம் குழந்தைகள் சேர்ந்தோ மொழியை உருவாக்கியிருக்க இயலாது. குரல்வளையும் ஒலிக்கும் உறுப்புகளும் அதற்கேற்ற பக்குவ நிலையில் இருக்கும் குழந்தைப் பருவத்தில் அதற்கான அறிவு குழந்தைகளிடம் இராது; அறிவுவளர்வதற்குள் குரல்வளையும் பிற உறுப்புகளும் பேச்சொலிகளை ஒலிக்க இயலாத நிலை எய்திவிடும். It must have come by inspiration. A thousand, nay a million of children could not invent a language. While the organs are pliable there is not understanding enough to form a language; by the time there is understanding enough the organs are become stiff. ஹாரி ஹாய்ஜர் கருத்தும் அதுவே: [மொழிக்கு முந்தைய நிலையிலிருந்து (ஒலிக்குறிப்புகள் போன்றவை) மொழி தோன்றியதனால்] மாந்த இன வரலாற்றில் நினைத்துப்பார்க்க இயலாத எண்ணிறந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அத்தகைய உருவாக்கம் ஒரே ஒரு முறை தான் ஒரே இடத்தில் தான் நிகழ்ந்திருக்க இயலும். உருவானதும் அது கடும் விரைவில் மாந்தர்கள் அனைவரிடமும் பரவியிருக்கும் அதாவது ஞால முதன்மொழி ஓரிடத்தில் ஒரு முறைஉருவானதே; மாந்த மரபியலின் படி அனைத்து மாந்தரும் உடன் பிறப்பினர், அதே போல் முதன்மொழியடிப்படையிலும் உடன்பிறப்புகளே யாவர்.” [The cirucumstances under which pre - language could have become language are] so far - reaching. so revolutionary and so fruitful as to suggest that it was created only once and in only in one place. Once created. it would have spread to all hominids irresistibly and speedily. It suggests, in other words the unitary origin of language, and the unitary origin of language suggests in turn,. that men are cultural as well as genetic and biological brothers Harry Hoijer (1969) “The origin of language”. ஞாலமுதன்மொழி ஒன்றே என்பதை வலியுறுத்தி மாரிஸ் சுவாதெசு 1972 ல் The Origin and Diversification of Language என்ற விரிவான நூல் எழுதியுள்ளார். ஆர்.எம். டபிள்யூ. டிக்சன் The rise and fall of languages (1977) நூலில் ஞால முதன்மொழிதிடுமென, வெடி வெடித்தது போலத் (like an explosion) தோன்றியிருக்கும் என்கிறார். மாந்த இன மூளைவளர்ச்சி தக்க தகுதி பெற்ற நிலையில் மாந்தமூளை திடுமெனக் கட்டுக்கோப்பான ஒரு முழு அமைப்பாக மொழியைத் தோற்றுவித்திருக்கும் என்கிறார்(The human brain would have invented it, almost as a complete system; “Language would have burst forth”) தமிழ் ஒன்றே இயல்மொழி என்றும் எனவே அம்மொழியில் தான் சொற்கள் (ஏன் பிற மொழிச் சொற்களும்) அனைத்தும் சில அடிப்படை வேர்களிலிருந்து ஏரண முறைப்படி படிப்படியாக அறிவுபூர்வமாக ஏற்கத்தக்க வகையில் வளர்ந்து பெருகி வந்துள்ளதனை மெய்ப்பிக்க முடியும் என்ற பாவாணர் கோட்பாட்டுக்கு டிக்சன் கருத்து ஒரளவு ஆதரவு தருவதைக் காணலாம். [“இயல்மொழி என்று பாவாணர் கூறியது மாந்த இன முதல் தாய்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் என்ற கருத்தில்.]” 10. மொழி திடுமென உருவாகியதாயின். ஞானப் பிரகாசர் (1927) முதலிற் கூறியதும் பாவாணர்(1943,1950,1953,1967 நூல் பக்கம் 70-83 திட்பமாக விரிவாக வடிவமைத்ததும் ஆன சுட்டடிக் கொள்கையானது ஞானமுதல் மொழி ஆய்வாளர் கருதுதற்கு உரியது. தமிழ்ச் சொற்களுள் முக்காற் பகுதி சுட்டடிச் சொற்களிலிருந்து உருவாகியது என்பார் பாவாணர் (1950). சுட்டடிக் கொள்கையை மிகச் சுருக்கமாக பின்வருமாறு தரலாம். (ஆ - ஈ - ஊ) ---------------- ( அ - இ - உ) அ. சேய்மைக் கருத்துச் சொற்கள் இ. அன்மை, பின்மை, இழிகை உ (முன்மைச் சுட்டு) உல் மற்றும் உகரத்துடன் க்,ச்,த்,ந்,ப்,ம் ஆகிய மெய்களைச் சேர்த்து(Plenary operation of the principle of consonental prosthesis) உருவாகும் உல், குல், சுல், துல், (நுல்), புல், முல் ஆகிய மூல வேர்களில் இருந்து தோன்றல் (முன்வருதல்) முன்மை, முற்செல்லல் (செல்லுதல்), நெருங்கல், (செறித்தல், கூடுதல்); பொருந்துதல் (கூடுதல், ஒத்தல்), வளைதல், வளைத்தல், துருவுதல் ஆகிய எட்டுப் பெருங்கருத்துக்களும். (இவற்றிற்கு இடைப்பட்டனவும் இவற்றிற்கிளைத்தனவுமான) எத்துணையோ நுண்கருத்துக்களும் அவற்றிற்கான எண்ணிறந்த தமிழ்ச் சொற்களும் அவற்றின் பன்மடித்திரிபுகளான பல்வேறு “குடும்ப” மொழிச் சொற்களும் பிறக்கின்றன என்பார் அவர். இக்கொள்கையின் விரிவைப் பாவாணர் முதல்தாய்மொழி (1953) நூலில் தந்துள்ளார். 1979 ல் பாவாணர் எழுதிய “An epitome of the Lemurian Language and its ramifications”என்னும் ஆங்கிலக் கட்டுரையில் இக்கருத்தின் ஆங்கிலச் சுருக்கத்தை பின்வருமாறு தந்துள்ளார்: “The three fundamental ideas, viz., remoteness, proximity, and frontality (or forwardness) expressed by the three demonstrative vowels have generated a million words which go to make up Tamil, and have also produced subsequently and genealogically a confused multiplicity of dependant languages of varying degrees of richness and importance, through the process of mutation and derivation.... Of the words contained in any language, the greatest majority owe their origin to the idea of frontwardness.” எச். எஸ். டேவிட் (1966) கட்டுரைகளில் குறிப்பிடும் 21 அடிப்படைத் தமிழ்வேர்களும் (வள்/வண், உள் (உண்) உண்டு, கேள்/ கேளிர், கேண்மை, கொள்/ கொடு/கோடல்; கீழ்; போழ்; ஒல், கல், கால், சால், நில், பால், பல்சில், தொல் வல், எள், ஒள், விள்) அவை சார்ந்த சொற்றொகுதிகளும் ஒரு பான்மை பாவாணர் கருத்தோடு ஒத்து நோக்கத்தக்கன வாகும். மாந்தன்மொழி (ஏறத்தாழ 50000 ஆண்டுகட்கு முன்னர்) ஒரே இடத்தில் திடுமெனத் தோன்றியிருக்கலாமென்றும் அதிலிகுந்து படிப்படியாக உருமாறித் தோன்றியவையே இன்றுள்ள 6000 மொழிகளும் எனக்கருதும் அறிஞர் கருத்துகளை மேலே கண்டோம். இந்த இடத்தில் தமிழகத்தில் பலரும் இன்று செப்பிவரும் ஒருஆதாரமற்ற கூற்றைக் குறிப்பிட வேண்டும். அது என்ன? நோவாம் சாமஸ்கியும் ‘உலக மொழிகள் அனைத்திற்கும் தமிழ்மொழியே தாயாக இருக்கக்கூடும் என்று கூறிவிட்டார்’ என்பதே அது. அப்படி அவர் கூறவே இல்லை. கூறக்கூடியவரும் அல்லர். சமணமுனிவர் ஊன் சோறு செய்தார் என்பது போல உள்ளது சாம்ஸ்கி பற்றிய இக்கூற்று!’அவர் ஆய்வுப்புலம் வேறு; மாந்தனிடம் எந்த உளவியல் - உடலியல் அடிப்படையில் மொழி ஆற்றல் தோன்றியிருக்கலாம் என்பதே அவர் ஆய்வுப் புலமாகும்; வரலாற்று மொழியியல் பக்கமோ, ஞால முதன்மொழி எதுவாக இருக்கலாம் என்பது பற்றியோ வண்ணனை மொழியியலறிஞரான அவர் செல்பவரல்லர். மேலும் சாம்ஸ்கி போன்றோர் தாக்கத்தினால் தான் வரலாற்று மொழியியல் சார்ந்த ஆய்வுகளின் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் ஞால முதன்மொழி ஆய்வுகள் போன்றவற்றில் தேக்க நிலை ஏற்பட்டது என்பதை விளக்குவர் ஆண்ட்ரூஸ் கார்ஸ்டார்ஸ் - மக்கார்தி போன்றோர். தமிழில் இருந்து உலகமொழிகள் அனைத்தும் தோன்றின என்று சாம்ஸ்கி கூறினார் என்ற பிழைச்செய்தி எப்படிப் பரவியது. 22.11.2001 Frontline இதழில் சாம்ஸ்கி கல்கத்தாவில் பேசியது வெளிவந்தது. ஆங்கில அறிவு நிரம்பாத வரும் மொழியியல் பற்றித் தெரியாதவரும் ஆனஒரு அன்பர் ஓம்சக்தி ஏப்ரல் 2002 இதழில் அந்தப் பேச்சைத் தமிழில் தமிழாக்கம் செய்த பொழுது இப்பிழைக் கருததை அச்சிட்டார் சாம்ஸகி பேச்சின் சரியான தமிழாக்கமும் ஆங்கில மூலமும் அடுத்துத தரப்படுகின்றன. வலுவான ஆதாரங்கள் இருக்கும் பொழுது கற்பனைச் செய்திகளைக் கூறுவது கனியிருப்பக் காய்கவர் வதாகும். [உலகில் உள்ள 6000 மொழிகளில் 3340 மொழிகளில் ஒவ்வொன்றையும் பேசுவோர் பத்தாயிரத்துக்கும்குறைவானவர்களே. அவற்றுள் 3000 மொழிகள் 2100க்குள் அழிந்துவிடும் என்று மொழியியலறிஞர் கருதுகின்றனர். இது தெரியாமல் “அழிவுறும் நிலையில் உள்ள மொழிகள் பட்டியலில் 6 கோடி மக்கள் பேசும் தமிழையும் யுனெஸ்கோ சேர்த்துள்ளது” என்ற பேதைமைக் கருத்தைப் பலரும் பரப்பலாயினர். இது முழுத் தவறு என்பது. தொன்மைச் செம்மொழி தமிழ் 2007 நூலில் இறுதி இயலில் தெளிவாக்கப் பட்டுள்ளது. அது போலவேசாமஸ்கி பற்றிய பிழைக்கருத்தையும் தெளிவாக்குவது இன்றியமையாதது. சாம்ஸ்கியிடம் யாராவது எழுதிக் கேட்டால் ‘என்னது? நானா? எப்பொழுது சொன்னேன்” என்று அல்லவா கூறி நகைப்பர்.] உலகமொழிகள் அனைத்திற்கும் தமிழே தாய் மொழியாக இருக்கக்கூடும் என்று இன்றுவரை மேனாட்டு மொழியியலறிஞர் எவரும் கூறவில்லை. கால்டுவெல் 1856/1875ல் கூறியதும் ஞாலமுதன்மொழிக்குத் தொல் தமிழ் (திராவிடம்) மிக நெருங்கியதாக இருக்கலாம் என்பதே. (விவரங்களே மேலே கண்டோம்) ஞால முதன்மொழி தமிழ் என்ற மாகறல் கார்த்திகேய முதலியார், ஞானப்பிரகாசர், தேவநேயப் பாவாணர் கொள்கை இனி உலகில் விரைவில் நிறுவப் படலாம். -- இளைஞரான மொழியியலறிஞர் (தமிழோடு ஏனைய குடும்பமொழி ஒன்றிரண்டில் ஆழ்ந்த புலமை பெற்றவர்) மேலை நாடுகளில் இன்று இவ்வாய்வுகளில் ஈடுபடுவோருடன் ஒருங்கிணைந்து பாவாணர் வழியில் ஆய்வுசெய்தால். நோவாம் சாம்ஸ்கி 22.11.01 அன்று கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை [ஆங்கில மூலம் Frontline 21.12.01] மொழி பற்றிய அறிவியல் உண்மைகள். (“கல்கத்தாப் பல்கலைக் கழகம் தரும்”) இந்த முனைவர் பட்டத்தை இந்தியாவில் பெறுவது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. இந்தியாவில் தான் நான் சார்ந்திருக்கும் “மொழியியல்” என்னும் விஞ்ஞானப் புலத்தில் கணிசமான பகுதி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப் பட்டது என்பது உங்களுக்கும் தெரியும். இப்பொழுது நாம் ‘தொடரியல் இலக்கணம்’ (generative grammar) என்றுஅழைக்கும் வகையைச் சார்ந்த முதலாவது இலக்கணம்என்று ஒரளவுக்குக் கூறத்தக்கது பாணினியின் சம்சுக்கிருத இலக்கணம் தான். 50 ஆண்டுகளுக்கு முன் எனது புதிய ‘தொடரியல் இலக்கணக் கொள்கையை நான் நிறுவிய பொழுது பாணினியத்திலும் இதையொத்த சில கருத்துக்கள் இருந்தது தெரியாது, அந்தப்புதுக்கொள்கை மொழியியலில் வேரூன்றிய பின்னர் தான் பழைய இலக்கண மரபுகளிலும் இருந்த அதுபோன்ற கருத்துக்கள் இனம் காணப்பட்டு இன்றைய மொழியியலில் விஞ்ஞான அடிப்படையில் புது வியாக்கியானங்கள் தரப்பட்டன. பண்டைய இலக்கணச் செல்வங்கள் பலவற்றில் (பாணினீயம் உட்பட) இக்கருத்துக்கள் அடையாளம் காணப்பட்டன. எனினும் அப்பழைய நூல்களின் கூற்றுக்களில் இன்னும் தெளிவு பெற வேண்டியன பல உள்ளன; மேலும் ஆராய்ச்சி செய்தால் நற்பயன் கிட்டும். இதற்கிடையில் தற்கால மொழியியல் ஆய்வுகள் தனித்துவமான பாதையில் செல்கின்றன. மனிதனின் உடற்கூற்றியல் சூழலின் ஒரு பங்காகவே மொழியை அவ்வாய்வுகள் கருதுகின்றன. “உடற்கூற்றியல்சார் நோக்கு” (biolinguistic approach) என்பது இதற்கு ஒரு பெயர் ஆகும். உடலின், குறிப்பாக மூளையின் ஒரு ஆற்றல் என்றே மொழி கருதப்படுகிறது. கண்களின் பார்க்கும் ஆற்றல், தசை நரம்புகளின் இயங்கியல் ஆற்றல் போன்றதுதான் மூளையின் மொழி ஆற்றல் என்பதே இந்நோக்கு. மனித இனத்துக்கேயுரிய “மொழி ஆற்றல்” இரண்டு வகையில் தனித்தன்மை பெற்றது. 1.அது மனித இனத்தில் அனைவருக்கும் ஒரு சீராக அமைந்துள்ளது. 2. உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே மொழி உரியது. சிறப்பியல்பு I சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சற்று வியப்புடனேயே கருதப்பட்டு வந்தது. இப்பொழுது அப்படி அல்ல. மொழி ஆற்றலில் மனித இனத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள் எந்தவேறுபாடும் இல்லை என்பதை அண்மை ஆய்வுகள் காட்டு கின்றன. இன்றைக்குச் சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆண்- பெண் தம்பதியரின் ( அல்லது ஒரு சில ஆடவர் – மகளிர் குழுவின்) வாரிசுகளே இன்று உலகில் வாழும் அனைத்து (600 கோடி) மனிதர்களும் என்ற முடிவைப் பொதுவாக எல்லா விஞ்ஞானிகளும் ஏற்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? வளமான செறிவான மொழித்திறனை அடைவதற்கான இயல்பான ஆற்றல் அனைவருக்கும் சமமாகவே அமைந்துள்ளது. அவ்வாற்றலில் வேறுபாடு இருக்குமாயின் அது மிகமிகச் சிறிய வேறுபாடேயாகும். இன்றுள்ள முறைகளின் படி அவ்வேறுபாட்டைக் கண்டுபிடிக்கவே முடியாது. சிறப்பியல்பு II வியப்பிற்குரியது. மனிதன் தவிர வேறு எந்த உயிரினத்துக்கும் “மொழி” யென்று குறிப்பிடத்தக்க ஆற்றல் இல்லவே இல்லை. ஒரு சில பூச்சியினங்களிடையே (தேனீ, எறும்பு) மட்டும் மொழியின் தன்மையில் ஒரு நுண்ணிய பங்கு ஒருவேளை இருக்கலாம். மனிதன் தவிர ஒவ்வொரு உயிரினமும் தத்தமக்குள் தொடர்பு கொள்ளும் முறைகளைப் பட்டியலிட்டால் அதில் “மொழி” இல்லை! “மொழி என்பது அடிப்படையில் செய்திப் பரிமாற்றக் கருவி” என்ற பொதுவான நம்பிக்கையும் ஆதாரம் அற்றதேயாகும். மனித இனத்தின் பிற தன்மைகளைப் போல் “மொழி” என்பதையும் பரம்பரை மரபியல்(genetics) தான் நிர்ணயிக்கிறது. அவரவர் வாழ்க்கை அனுபவத்திற்கேற்றபடி மொழித்திறன் வளர்ச்சி வேறுபடலா மெனினும் வேறுபாடுகள் வரம்புக்குட்பட்டவை. மனிதனாகப் பிறந்தவுடனேயே அனைவருக்கும் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளும் அடிப்படை ஆற்றல். ஒரே மாதிரி அமைந்துவிடுகிறது. எனவே தான் “வேறுபாடுகள் வரம்புக்குட்பட்டவை” என்ற நிலை. மனிதனின் மொழிகள் (நேற்றைய, இன்றைய, நாளைய மொழிகள்) அனைத்தும் ஏறத்தாழ ஒரே அச்சில் வார்த்தவையே. நாம் விலங்குகளைப் பற்றி ஆய்வு செய்கிறோம். செவ்வாய்க் கிரக உயிரியான (செவ்வாயில் உயிரினமே கிடையாது! நாம் சொல்வது கற்பனை உயிரி!) ஒன்று இங்கு வந்து மனிதனை ஆய்வு செய்தால் “மனித இனம் முழுவதும் ஒரே மொழியைத்தான் பேசுகிறது - சில வேறுபாடுகளுடன்” என்று தான் கூறும். நம் மொழிகளிடையே உள்ள வேறுபாடுகள் அன்றாட வாழ்கையில் முக்கியம் ஆனவை. ஆனால் அவையனைத்திடமும் உள்ள அடிப்படை ஒருமைப்பாட்டை (அது என்ன என்று புத்தி பூர்வமாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும்) உணர்வு பூர்வமாக உட்கொண்டுதான் எல்லா மனிதரும் செயல்படுகின்றனர். மொழிகளைக் கற்பிக்கப் பயன்படும் மரபிலக்கணங்களும் அகரமுதலிகளும் மொழிக்கு மொழி உள்ள தற்செயலாக வாய்த்த வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. அவற்றின் நோக்கத்தில் அது சரிதான். விஞ்ஞான முறையில் மொழியை ஆய்வு செய்வதில் ஒன்றுக் கொன்று தொடர்புடைய இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. என்றும் மாறாத ஒலி, பொருள், இலக்கண அமைப்பு வரிச்சட்டங்கள்மனித மூளையின் அமைப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. 2. ஒவ்வொருவரும் தம் அனுபவத்திற்கேற்ப எய்தும் மொழித்திறனும் (சிற்சில வேறுபாடுகள் இருப்பினும்) அந்த மாறாத நிர்ணயத்திற்குள் தான் வேரூன்றி இருக்கும். மனிதனின் மூளையில் மொழித்திறன் மாறாத வண்ணம் நிர்ணயிக்கப்பட்டு விட்ட நிலையில் சிறு அளவிலான மாறு பாடுகளுக்கு மட்டுமே வாய்ப்பு (options) உண்டு. இவற்றின் தன்மைகளை ஆய்வு செய்தபின் செய்ய வேண்டியது மாறுபாட்டு வாய்ப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் ஒரு மொழியும், வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் வேறு ஒரு மொழியும் ஒரு மனிதனின் மொழியாக அமைந்துவிடுகின்றன என்று காட்டுவதுதான். ஒரு இடத்தில், ஒரு காலத்தில் அவ்வாய்ப்பு தமிழ் என்ற மொழியாக அமைந்துவிடுகிறது. கறாராகச் சொன்னால் தமிழின் வட்டார வழக்குகளில் ஒன்று எனச் சொல்ல வேண்டும் [அதாவது தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை தமிழ் பேசுகிறது; அதுவும் வட்டாரத்துக்குத் தக்கவாறு அத்தமிழின் தன்மையும் வேறுபடுகிறது என்று சொல்ல வருகிறார் சாம்ஸ்கி]. இன்னொரு இடம், காலத்தில் அவ்வாய்ப்பு “சுவாஹிலி” மொழி ஆகிவிடுகிறது. ஏனைய மொழிகளுக்கும் அவ்வாறே கூறிக் கொள்க. இந்தத் தத்துவத்தை வேறு சொற்களில் பின்வருமாறு கூறுலாம். மனித மொழியின் நிர்ணயிக்கப்பட்டு விட்ட அடிப்படை, சிறு சிறு மாறுபாட்டு வாய்ப்புகள், இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மொழியிலும் எத்தனை வாக்கியங்களையும் சொல் – சொற்றொடர் களையும் அமைக்கலாம்? அவற்றின் லி, பொருள் என்ன? கருத்தைத் தெரிவிக்க, தகவல்கோர, கதை சொல்ல, போன்ற பல காரியங்களுக்கு எந்தெந்த வழிகளில் அம்மொழியில் வாக்கியங்களையும் சொற் றொடர்களையும் அமைக்கச் சாத்தியமுண்டு? இவற்றைக் கண்டு பிடிப்பதே மொழியியலின் வேலை. இது எளிதல்ல. கடினமானது. வருங்காலத்தில் பல தலைமுறை ஆய்வாளர்களின் ஆற்றலும் முயற்சியும் இவ்வாய்வுக்குத் தேவை என்பதில் ஐயமில்லை. எனினும் ஆய்வு வளர்ச்சி ஊக்கம் தருவதாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மாறுபட்ட இலக்கணக்கட்டமைப்புக் கொண்ட மொழிகள் பலவற்றைப் பற்றிய உண்மைகள் பல தெரியவந்துள்ளன. முன்னரே ஆய்வுக்குட்படுத்தப்பட்ட (சமசுக்கிருதம் போன்ற) மொழிகள் அளவுக்கு, இம்மொழிகளிலான புதிய ஆய்வுகளும் ஆழமாகநடந்துள்ளன. வியத்தகு மொழியியல் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நினைத்துக் கூடப் பார்க்காத வினாக்கள் எழுந்துள்ளன. பலவற்றுக்குப் பொருத்தமான விடைகள் தோன்றிப் புதிய ஆராய்ச்சிப் பாதைகளுக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. அண்மையில் தோன்றியுள்ள ஒரு ஆய்வுப்புலத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு. மொழியானது லட்சிய வடிவமைப்பு (optional design) கொண்டதா? என்பது அது.புறச்சூழ்நிலையின் நிபந்தனைகளுக்குட்பட்டே மொழியைப் பயன்படுத்த முடியும். (எ.கா. நேரடியாகவோ கருவி மூலமாகவோ உணர்வுப்புலனுக்கு Sensorimotor system எட்டுவதாக மொழி இருக்க வேண்டும்) அந்நிபந்தனைகளுக்குத் தீர்வாக அமையக் கூடியதாக எந்த அளவுக்கு மனிதனின் மொழி இருக்கிறது என்பதே இந்த ஆய்வுப்புலம். “இயற்கை முழுமைபெற்றது” என்று உள்ளுணர்வு பூர்வமாக உணர்ந்து சொன்னான் கலீலியோ. மொழி இதற்குப் பொருந்தி வருகிறதா என நிரூபிக்குமாறு நாம் கேட்கலாம். நவீன விஞ்ஞானக் கருத்துக்கள் பலவற்றிலும் இந்த உள்ளுணர்வுக் கருத்து வழி காட்டியாக இருப்பதால் இதை நிரூபிக்கும் பணி விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டிய பணிதான். அற்ப உயிரினங்களைப் பொறுத்தவரையில் அத்தகைய வினாக்களுக்குச் சில விடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ன. வைரஸ் நுண்கிருமிகளின் புறப்பரப்பு ‘பல சமபக்கப்பட்டை வடிவம்’ (polyhedral) கொண்டது எதனால் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர். மொழியின் தன்மைகளுக்கும் இது போன்ற விளக்கம் கிடைக்கலாம் என்று நம்பக்கூடிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. உயிரினப்பரிணாம வளர்ச்சியில் கடைசியாக அண்மையில் தோன்றியவன் மனிதன். அம்மனித இனத்தில் மட்டுமே தோன்றியுள்ள (மனித உடல் - உளவியல் வெளிப் பாடான) மொழியானது மனித இயல்பிலும் வாழ்விலும் மையப்பகுதி வகுக்கிறது. இது சார்ந்த அண்மை ஆய்வுக் கண்டுபிடிப்புகள் பல பொருத்தமானவையாக உள்ளன. அவை பொதுவாக உயிரினப் பரிணாம வளர்ச்சி குறித்தும் குறிப்பாக மனித இனம் குறித்தும் பல வினாக்களை எழுப்புகின்றன. மொழி, அதை மனிதன் எய்திப்பயன் படுத்தும முறைகள், மனித வாழ்வில் அதன் பங்கு பற்றியெல்லாம் நெடுங்காலமாக எழுந்து வந்துள்ள பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆய்வுகள் புதிய வியத்தகு தீர்வுகளைத் தந்துள்ளன. மொழிபற்றியும் மூளையின் ஏனைய உயர்நிலைச் செயல் பாடுகள் பற்றியும் ஆன ஆய்வுகளில் வரும் ஆண்டுகளில் பரபரப்பான ஆய்வு முடிவுகள் வெளிவரலாம். இன்று நுட்பமான சிக்கலான விஞ்ஞானத்துறையாக வளர்ந்துவரும் ‘மொழியியல்’ ஆய்வுகளில் முக்கியமாக ஆய்வுப் பாதைகள் சிலவற்றுக்குப் பண்டைக் காலத்திலேயே கால்கோள் செய்யப்பட்ட இந்த (இந்திய) நாட்டைவிட வேறு எந்த இடம் பொருத்தமானது இவ்வாய்வுக்ளைத் தொடர! என்னைப் பொறுத்த வரை இத்தகைய மொழியியல் ஆய்வுகளைக் கூர்ந்து நோக்கவும், அவற்றில் பங்கு பெறவும் ஆர்வமான எதிர்பார்ப்புடன் நான் காத்திருக்கிறேன். Understanding Human Language Address by professor Noam chonsky at the special convocation of the University of Calcutta held on November 22, 2001 to award the degree D.Litt - Honoris Causa. I would like to express my gratitude at being welcomed into this distinguished intellectual community, with its vibrant and rich tradition. It is particularly gratifying to receive this honour in India. My professional field, as I am sure you know, was in large part created in India, 2,500 years ago. The first “generative grammar” in something like the modern sense is Panini’s grammar of Sanskrit. Nothing was known about these similarities at the origins of the modern versions 50 years ago. It was only after the modern field had taken shape that earlier tradition, long forgotten, began to be explored and reinterpreted in the light of recent insights. Many treasures were discovered, among them Panini’s classic – though crucial issues of interpretation remain obscure, and there are surely research topics that could prove highly rewarding. Meanwhile contemporary inquiries proceeded along their own distinctive course. Characteristically, they view language in a biological setting, adopting what is sometimes called a “biolinguistic approach”. From this point of view, the human faculty of language is regarded basically as an organ of the body, mostly the brain, more or less on a par with the visual system or the system of motor organization. The language faculty is a “species property” in a dual sense. First, it is close to uniform for the species; second, it is apparently unique to humans in essentials. The first of these properties is less surprising than it seemed a few years ago. Recent studies indicate that there is remarkably little genetic variation within the human species, so little that it is now commonly assumed that contemporary humans are all descendants of a very small breeding group, perhaps about 100,000 years ago, a conclusion that has broad implications, With regard to language, apart from the margins, variation in the capacity to acquire a rich and highly articulated knowledge of language is so slight as to be virtually undetectable, at least by present means. The uniqueness property is more surprising. There are no known analogues to human language elsewhere in the animal world. The closest analogies, and these are very weak, are remote: perhaps in some species of insects. Human language does not even find a place in standard taxonomies of animal communication systems; and in fact, there is no strong reason to think of it as primarily a system of communication, contrary to common belief. Language is like other biological systems, however, in that its basic character is genetically determined. Each person, of course, undergoes a specific course of development, shaped by individual experience, but in highly limited ways. The outcomes are largely a result of shared initial endowment. The human languages, existing or possible, are pretty much cast to the same mould. A rational Martian scientist, studying humans the way we study other animals, could reasonably conclude that there really is only one language, with only minor variations. The variations are very important for our lives; the far deeper uniformities we simply take for granted, without awareness. Similarly, traditional and pedagogical grammars and dictionaries are concerned with the unpredictable and somewhat accidental variation, rightly for their special purposes. The interests of the scientific study of language are virtually complementary: the invariant principles of sound, meaning, and structure that are rooted in our mental nature and that determine the fundamental nature of the languages that each person comes to acquire under normal circumstances. One basic problem, then, is to discover the invariant principles of the language faculty and the limited options of variation, and then to show that the possible human languages are determined by selecting among the options: one choice yields Tamil (more exactly, a specific variety of Tamil) another yields Swahili, etc. Putting it differently, the task is to show that with a specific choice of options by adhering to the fixed principles one can literally deduce the infinite array of expressions of language; their sound, their meaning, the ways in which they can be used to express thoughts, to request information, to tell stories, and numerous others. The task is immensely challenging and difficult. It will doubtless occupy the efforts and energies of many generations of researchers. Nevertheless, there has been quite encouraging progress. In the past 20 years particularly, there has been a flood of discoveries about languages of virtually every known typological variety. Like the well – studied languages, these have been investigated in far greater depth than ever before, revealing many entirely unexpected properties. New questions have arisen that had never been envisioned before. In many cases there have also been plausible answers, sometimes opening new directions for inquiry. One novel question that has come to the fore in recent years, and that happens to be of particular interest to me, is the question of “optimal design”. To what extent is human language an optimal solution to externally – imposed conditions that language much satisfy to be usable at all (for example, accessibility to sensori motor systems). Equivalently, we may ask to what extent language satisfies the Galilean intuition that “nature is perfect” and it is the task of the scientist to prove it, a guiding intuition for the modern sciences. There are some answers to such questions for very simple organisms: for example, an explanation of the fact that the shells to viruses are polyhedral. Current work suggests that something similar may be true for human language, a biological system that has emerged in the last moment of evolutionary time, in the most complex organism known, and is surely at the core of our nature and life. Such conclusions, which by now have considerable substance, raise many questions about biological evolution and development generally, and about the human species in particular. These research efforts have also provided new and often surprising solutions to long- standing problems,\ of language, its acquisition and use, and its place in the biological world. There should be very exciting years ahead in the study of language and other higher mental faculties. There is no better place to pursue these questions than in the land that was the original home of some of the major strands of inquiry that are now being woven into a most intriguing fabric. Speaking personally, I look forward with much eagerness and anticipation to observing, and participating in, these very promising developments. Front line, December 21, 2001. எல்லிஸ் கல்லறைக் கல்வெட்டு எச். ஆர். ஹொய்சிங்டன் மைரன் உவின்சிலோ “ உவின்சிலோ தமிழ் - ஆங்கில அகராதி” (1862) ஆசிரியர் மறைமலையடிகள் கால்டுவெல் பெருமகனார் மொழிஞாயிறு பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஞா. தேவநேயப்பாவாணர் டாக்டர் எமேனோ டாக்டர் கே.வி. சுவெலெபில் அமெரிக்கா செக் குடியரசு டாக்டர் ஹார்ட் டாக்டர் ஆஷர் ஸ்காட்லாந்து அமெரிக்கா டாக்டர் ஹகோலா டாக்டர் லெவிட் பின்லாந்து அமெரிக்கா டாக்டர் ஏ.கே. இராமானுஜம் டாக்டர் ஜரோஸ்லாவ் வாசெக் (செக் குடியரசு) இயல் – 3 செம்மொழித் தமிழிலக்கியச் (சங்க இலக்கியச்) சிறப்பு தொல்காப்பியம் தொல்காப்பியம் “மாந்தன் அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்ச நிலை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று” One of the finest monuments of human intelligence . இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல் பொருள். செய்யுளியல் கூறுகிறது. கே.வி. சுவெலெபில் தொல்காப்பியச் செய்யுளியல் கோட்பாட்டுச் சிறப்பு : தொல்காப்பியம் அடிப்படை நூலாக இருப்பது இலக்கண இலக்கிய ஆய்வுகளுக்கு மட்டுமன்று; மாந்த இனப் பரவல் சார்ந்த புவியியல், குமுகாய மாந்தவியல், பண்பாடு, சூழ்நிலையியல், உளவியல் ஆகிய புலங்கள் சார்ந்த அரிய செய்திகள் அந்நூலில் உள்ளன; எனவே தமிழர் நாகரிகம்- பண்பாடு சார்ந்த (ஏன் பொதுவான மாந்த இன நாகரிகம்- பண்பாடு சார்ந்த) ஆய்வுகளுக்குத் தொல்காப்பியம் மிக இன்றியமையாதது. எனினும் இலக்கியம் கூறுவதெல்லாம் (அக்காலத்தில் நிலவிய) உண்மைக் குமுகாய நிலையை நேரடியாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் தவறு; உண்மை நிலையை விருப்புவெறுப்பின்றி அறிவியல் பூர்வமாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் மேலும் தவறாகும். அக்கால ஆண் பெண்மக்களின் அகம், புற வாழ்க்கையை உள்ளது உள்ளபடி தத்ருபமாகச் சங்கப் புலவர்களுடைய பாடல்கள் காட்டுவதாகக் குமுக வரலாற்றாசிரியர் சிலர் முன்னர் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன? செய்யுள் ‘உண்மை வாழ்க்கை” நிகழ்ச்சிகளை அந்தந்த நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்ற இலக்கியமரபு உள்ளதோ அந்த மரபுக்குக் கட்டுப்பட்டே சித்திரிக்கிறது. அதாவது மரபுக்கேற்ற மாற்றங்களுடன் தான் சித்திரிக்கிறது. “உண்மை வாழ்க்கை” வேறு; அதை இலக்கியத்தில் காட்டும் மரபு வேறு; என்பதைப் புலவர்களும் பொருளிலக்கணவாசிரியரும் உணர்ந்திருந்தனர். உணர்ந்திருந்ததனால்தான் உண்மை வாழ்க்கையின் கூற்றுக்கள் செய்கைகளை ‘உலகியல் வழக்கு” என்றும் இலக்கியத்தில் (செய்யுளில்) வாழ்க்கையைச் சித்திரிக்கும் மரபைச் செய்யுள் வழக்கு “புலனெறி வழக்கு” என்றும் குறித்தனர். சில நிகழ்ச்சிகள், செய்திகளை இப்படி இப்படித்தான் காட்ட வேண்டும் என்று இலக்கியப்படைப் பாளர்களும் வாசகர்களும் தமக்குள் இசைந்து உருவாக்கும் மேல்வரிச் சட்டமாகிய மரபே இலக்கிய மரபாகும். (எ.கா. ஒவ்வொரு திணைக்கும் உரிய முதல், கரு, உரிப்பொருள்கள்). நிகழ்ச்சி/ செய்தி வாசகருக்குத் தெரிந்தது தான்; அதனை ஒரு புதிய பார்வையில், கோணத்தில் (மரபை அடிப்படையில் மீறாமல்) காட்டும் பொழுது வாசகர் அந்த நயத்தை நன்கு உணர்ந்து பாராட்ட இயல்கிறது. அகப்பாடல் எதுவும் ஒருதடவைகூடத் தலைவன், தலைவி பெயரைச் சுட்டு வதில்லை. தலைவனும் தலைவியும் எப்பொழுதும் இன்னார் என்று குறிப்பாக அடையாளம் காட்ட முடியாதவர்களே. எனவே அகப்பாடல்கள் சித்திரிக்கும் உணர்வுகள் (டபிள்பு. எச். ஹட்சன் தமது “இலக்கியப் பயிற்சிக்கான முன்னுரை” 1946 நூல்பக்கம் 97இல் சொல்வது போல) “பொதுவாக எந்த ஆடவனுக்கும் பெண்ணுக்கும் பொருந்துவதாக இருக்குமேயன்றி இவனுக்குத் தான்/இவளுக்குத்தான் பொருந்தும் என்று இருக்காது. (உள்ள உணர்வுகளை விளக்காது) வெளியுலகை விரித்துரைக்கும் புறப்பாடல்களில் சில பொதுவாக அனைவரும் நோக்கும் பார்வையில் இருக்கும்; சில அந்தந்தப் புலவருடைய தனி நோக்கில் அமைந்ததாக இருக்கும். பின்னவற்றுக்கு எடுத்துக் காட்டு கையறுநிலைப் பாடல்கள். வள்ளல்கள், நண்பர்கள் இறந்தால் புலவர்கள் தம் நெஞ்சின் ஆழத்திலிருந்து உணர்வுகளைக் கொட்டிப் பாடும் துயரப் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை; பொதுவான நாட்டுப்புற ஒப்பாரிகளின் வாலாயப் படிமங்களைக் கொண்டவையல்ல”. கே.வி. சுவெலெபில் 2. திருக்குறள் “இந்திய மக்களிடையே பண்டைக் காலத்திலிருந்தே பிற உயிர்கள் அனைத்துக்கும் அன்புகாட்டி உதவும் அறக் கொள்கைன (the idea of active love) ” இருந்து வந்ததை, இந்தியப் பண்டைய இலக்கியங்களிலும் காணும் கதைகளில் இருந்து அறிகிறோம். அத்துடன் குறிப்பாகத் திருக்குறள் என்னும் நூலில் காணும் அறவுரைச் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம். “(உலகில் பிற உயிர்களிடத்து அன்பு காட்டிச் செயல்படுவதை (life Affirmation) அவ்வளவாக வலியுறுத்தாத மனுதர்ம சாத்திரம் போன்றவற்றிலிருந்து மாறுபடும்) குறளில் உலகையும் வாழ்க்கையையும் வெறுத்து ஒதுக்கும் போக்கு (World and life negation) பரவலாகக் காணப்படுவது அல்ல. எங்கோ ஓரிரு இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம். “பிராமணீயம், புத்தமதம் பகவத்கீதை போன்றவற்றைப் போல் இம்மை மறுமைப் பயன் கருதியே அறநெறியில் நிற்றல் வேண்டும் என்ற வாணிகக் கொள்கையைக் குறள் வலியுறுத்துவது இல்லை. நல்லது செய்வதே தக்கது என்ற உணர்வினாலேயே நல்லது (அறம்) செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது (குறள்கள் 222,211 பகவத்கீதையோ கருமம் செய்து கொண்டிருப்பது பிரபஞ்சநியதி என்று வறட்டுத் தனமாக வலிந்து கூறுகிறது. ஆனால், என்ன வியப்பு, குறளோ மனிதன் உழைப்பதும் ஈட்டுவதும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் அவன் நன்மை செய்வதற்காகத்தான் என்று சாற்றுகிறது. (குறள்கள் 81,212) பகவத் கீதைப்படி கடமை ஜாதிக்கு தக்கபடி வேறுபடும். குறளோ மக்கள் அனைவரும் ‘நல்லவை செய்தொழுகக் கூறுகிறது’. “ஏனை இந்திய தர்மசாஸ்திரக்காரர் உழைப்பதில், முயற்சி செய்வதில் மகிழ்வோடு ஈடுபடு என்று கூறவில்லை. குறள்கள் 619,630 போன்றவையோ உலகியலிலும், வாழ்க்கையிலும், ஆர்வத்துடன் ஈடுபடும் படிஅறிவுறுத்துகின்றன.” “(பௌத்தமும் கீதையும் போலப் பற்றின்மை, வெறுப்பின்மை, கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றையும் குறள் வலியுறுத்தினாலும் கூட அதே சமயத்தில்) குறள் அதிகமாக வலியுறுத்துவது அன்பும் அருளுமே யாம் (the living ethic of love). காண்க குறள்கள் 72,78,79,103226,241.” “அறநெறிசார் உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம்படச் சுட்டுகிறது குறள். மனிதனின் தனி வாழ்க்கை. பிற உயிர்களோடும் உலகத்தோடும் உறழும் அவன் வாழ்க்கை ஆகியவற்றில் கைக்கொள்ள வேண்டிய நெறிகளைக் குறள் வியத்தகு பண்புடனும் சால்புடனும் நடைமுறைக்கு கந்த வகையில் வகுத்துள்ளது ((characterised by nobility and good sense). உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த ஒளிமயமான அறவுரை வாசகங்களை வழங்கும் நூலைக் காண இயலாது; (குறள்கள் 92, 105, 108, 121, 159, 162, 216, 298, 319, 578,594, 628, 757, 782, 874, 931, 973, 999, 1007, 1024, 1032” “ஆக கிறித்துவ ஊழித் தொடக்கக் காலத்திலேயே இந்திய மக்களிடையே உலகவாழ்க்கையிடமும் உயிர்களிடமும் பண்பும் அன்பும் காட்டும ஒரு தன்மை இயல்பாக இருந்து வந்துள்ளதைக் குறளிலிருந்து அறிகிறோம். பிராமணியம், பௌத்தம், பகவத்கீதை சார் இந்து மதம் ஆகியவற்றின் கோட்பாடுகளில் இல்லாதது அது. ஆனால் கீழ்சாதியினரிடமும், சாதாரண மக்களிடமும் தோன்றி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிறந்த சமயப் போதகர்கள் மூலமாக அத்தன்மை மெதுமெதுவாக நாளடைவில் இந்து மதத்தில் இடம்பெறலாயிற்று.” - ஆல்பர்ட் சுவைட்சர்: இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும் Indian Thought and its development; 1936 3. எட்டுத்தொகை, பத்துப்பாட்டின் சிறப்புகள் (வேறு எந்தச் செம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாதவை) “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் (மொத்தம் 2300 பாடல்கள்) அச்சிட்டு உலகின் பார்வைக்கு முதலில் வந்தது 1880 - 1910 கால அளவில் ஆகும். அவை வெளிவந்த அக்கணமே (அதுவரை எளிதான பிற்கால இந்திய மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நிலை மாறி உலகின் சிறந்த செம்மொழி களில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது. பிரெஞ்சு ஆசியவியலறிஞர் பியர் மெய்ல் “கிரேக்க உணர்ச்சிப் பாக்களில் தலை சிறந்த நவமணிகளுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல்கள்; இந்தியாவில், ஏன் உலகில், இலக்கியப் படைப்புகளின் சிகரங்களில் ஒன்று சங்க இலக்கியம்” என்று செய்துள்ள மதிப்பீட்டை சங்கஇலக்கியப் பாடல்களை ஆழ்ந்து பயின்றுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர்.” - சுவெலபில் (1960) “உலகின் நாகரிகம் - பண்பாட்டுக்குத் திராவிடர்கள், குறிப்பாகத் தமிழர்கள் செய்துள்ள சிறந்த பங்களிப்புகள் பல்லவ, சோழர் காலக் கோயிற் கட்டடக்கலை; சோழர் காலச் செப்புப் படிமங்கள்; பரத நாட்டியம் என அழைக்கப்படும் தமிழர் நடனக்கலை; கருநாடக இசை என அழைக்கப்படும் தமிழ் இசை முதலிய பலவாம்; அவற்றுள்ளும் தலைமை சான்ற சிறப்பு வாய்ந்தது (சங்க காலச் செம்மொழித் தமிழ்) இலக்கியம். பிறமொழி, பிற நாட்டு அறிஞர் இதை உணர்ந்து இவ்விலக்கியத்தைப் பயின்று உலக மாந்த இனத்தின் இன்றியமையாத உயரிய மரபுச் செல்வமாக மகிழ்ந்து போற்ற வேண்டும். உச்சநிலைக்கு முழுத் தகுதியுடைய அவ்விலக்கியத்திற்கு இது வரை அந்நிலை தரப்படவில்லை.” - சுவெலபில் (1973) “இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டது என்பது மட்டுமன்றிப் பண்டைத் தமிழ் (சங்க) இலக்கியம் உயரிய இலக்கிய நயமும் வாய்ந்தது. உலகின் சிறந்த செம்மொழிகள் வரிசையில் தமிழுக்குரிய இடத்தைக் கழக இலக்கியத்தின் 26350 வரிகள் கொண்ட பாடல்கள் பெற்றுத் தந்துவிட்டன. அவ்விலக்கியத்தின் சிறப்பை இப்பொழுதுதான் உலகு உணரத் தொடங்கியுள்ளது.” “அசை, சீர், தளை அடிப்படையிலான யாப்பியல், அகம் புறக் கோட்பாடு; உவமவியல், ஆகிய அனைத்திலும் தனித் தன்மை வாய்ந்த சிறந்த இலக்கியக் கொள்கை கொண்ட கழக நூல்களை உருவாக்கிய பெருமை தமிழ்ப் பண்பாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும். “இந்தியாவில் தோன்றி வளர்ந்த செவ்வியல் இலக்கியம் - செவ்வியல் மொழிப் பெரும் பண்பாடுகள் இரண்டு – ஒன்று சமற்கிருதம்; மற்றது தமிழ்; அவை ஒன்றை ஒன்று சார்ந்தவை யல்ல - தற்சார்பானவை. “இந்திய மொழி இலக்கியங்களிலேயே தமிழிலக்கியம் மட்டுமே செவ்விலக்கியமாகவும், நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்தது; அது சமற்கிருதச் செவ்வியல் இலக்கியம் அளவு தொன்மை வாய்ந்தது; பண்டை கிரேக்க மொழிச் செய்யுள்களை எப்படிச்செவ்விலக்கியம் என உலகு கருதுகிறதோ அதே தன்மை வாய்ந்தது தமிழ்க் கழக இலக்கியம். உயிர்த் துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் உள்ளது. “தமிழ்ச் செவ்விலக்கியம் (சங்க இலக்கியம்) மக்களைப் பற்றிய இலக்கியம்; மக்கள் உருவாக்கியது – ஆனால் “நாட்டுப்புற” இலக்கியமன்று” - சுவெலபில் (1973) “வாழ்க்கை இனியது; மகிழ்ச்சி தருவது. சாவு எல் லோருக்கும் வருவது. இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற முயற்சியெல்லாம் இல்லை. வள்ளண்மையும் நயன்மையும் இயல்பாக அமைகின்றன - ஆதனிய (ஆன்மீக) நலனுக்காகவோ கழுவாயாகவோ அல்ல. இறந்தபின்னர் வீரரும் சான்றோரும் துறக்கத்தில் நிலையாக வாழ்வர்; தீயோர் மீளாநிரயம் எய்துவர் எனக் கருதினர். நில உலகில் புகழை நிறீஇச் சென்றவர் துறக்கத்தில் இனியவாழ்வு என்னும் வெகுமதி பெறுவர்: காதல், புணர்ச்சி, திருமணம், மக்கட்பேறு இவை மாந்த வாழ்வில் நிறைவு பெறுவதற்கான வழிமுறைகள் எனக் கருதப்பட்டன. வள்ளன்மை, வீரச்செயல், பிறர்க்குரியாளனாக வாழ்தல் - இவற்றில் ஒருவன் செலவிட்ட நாட்களை நினைத்துப் புலவரும் பிறரும் கூறும் புகழ் மொழிகள் மட்டுமே ஒருவன் சாவுக்குப் பின்னர்நிலைநிற்பவையாகும்.” - சுவெலபில் (1974) “கழக இலக்கியங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள், விழுமங்கள் ஆகியவற்றை நிரம்பக் கொண்டவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்த அவ்விலக்கியங்கள் பிற்காலத்தில் (அதாவது அண்மைக்காலத் திறனாய்வாளர்) வகுத்துள்ள இலக்கிய நயக்கோட்பாடுகளின் படியும் உயர்நிலையில் ஏற்கப்படுவனவாக உள்ளன. “கழக இலக்கியத்தைப் பயிலும் ஒரு குமுகாயமே (தனி நபர் மட்டுமல்ல) அவ்விலக்கிய விழுமங்களை எய்த இயலும் வகையில், எய்த விழையும் வகையில் அவ்விலக்கியம் அமைந்துள்ளது. எனவே தான் இக்கால இலக்கியத் திறனாய்வாளரும் போற்றும் வகையில் உலக மாந்தர் அனைவரும் மதிக்கத் தக்க என்று முள (சிரஞ்சீவி) த்தன்மை கொண்டுள்ளது கழகஇலக்கியம்” - சுவெலபில் (1974) “பழந்தமிழ் இலக்கியமும் பண்பாடும் படைத்த அகம் - புறக்கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தவை. சில பொருண்மைகளில் தமிழிலக்கியத்துக்கும் சமற்கிருத இலக்கியத்துக்கும் ஒப்புமை காணப்படலாம். பட்டால் என்ன? சமற்கிருத இலக்கியத்திலிருந்து தான் தமிழ் இலக்கியம் கடன் பெற்றிருக்கும் என ஏன் கருத வேண்டும்? (நேர்மாறாகவும் நிகழ்ந்திருக்கலாம் அன்றோ?)” - சுவெலபில் (1975) “பொதுவான செய்தியைத் தெளிவாக, முழுமையான நுண்ணிய பார்வையில் நோக்கி, எளிய ஆனால் வயிரம் போன்ற சொற்களில், ஆழ்ந்த பொருளுடன் தருவதே சிறந்த பாடல் என இக்காலத்தில் கருதப்படுகிறது. வெளிப்படையான ஒரே செய்தியைத் தருவதைவிட அடுக்கடுக்கான பல பொருளைத் தரவல்லதான சொற்செட்டுமிக்க பாடலே சிறந்த பாநலத் தன்மையுடையதாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியம் நோக்கு, பயன், எச்சம் (சொல்லெச்சம்,குறிப்பெச்சம்) உள்ளுறை, இறைச்சி என்று கூறுவதெல்லாம் இது தான்; - பி. மருதநாயகம் (2007) “ஆரியருக்கு முற்பட்ட தென்னிந்தியாவை, ஏன் பெருமளவுக்கு ஆரியருக்கு முந்திய இந்தியாவையேவிவரிக்கும்  72  உலகஅறிஞர்கள் பார்வையில் தமிழ் ஆவணம் புறநானூறு a testament of pre- Aryan South India and, to a significant extent of pre - Aryan India.” “முதலாவதாக, தமிழின் தொன்மை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திய பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ். தமிழின்ஆதி நூல் ஆகிய தொல்காப்பியத்தின் பகுதிகள் கி.மு. 200ஐ ஒட்டியவை என்பது மிகப் பழைய ஸதமிழிக்] கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. பழந்தமிழ்ப் பெருநூல் களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலியவை கி.பி ஒன்று - இரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இந்தியாவின் மிகு தொன்மை வாய்ந்த, சமயம் சாராத (secular) பாடல்கள் அவையே; காளிதாசன் இலச்சியங்களுக்கு இருநூறு ஆண்டு முற்பட்டவை.” “இரண்டாவதாக, தமிழ் இலக்கியமரபு மட்டும் தான் (சமற்கிருதத்திலிருந்து பெறப்படாத) இந்திய மண்ணுக்குரிய இலக்கிய மரபு ஆகும். தென்னாட்டில் சமற்கிருதத் தாக்கம் வலுப்படுவதற்கு முன்னரே முகிழ்த்தது அது. சமற்கிருத/பிற இந்திய மொழி இலக்கியங்களிலிருந்து மாறுபட்ட தன்மை யுடையது அது. தமிழ் தனக்கென்று தனி இலக்கியக் கொள்கை, இலக்கணமரபு, முருகியல் (aesthetics) உடையது; இவற்றின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் செம்மொழி இலக்கியம் வேறு எம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்தது (unique). சமற்கிருதத்திலோ வேறு இந்திய மொழி களிலோ உள்ள உணர்வுகளிலிருந்து மாறுபட்ட உணர்வை (sensibility) - இந்திய மண்ணுக்கே உரிய உணர்வைப் பழந்தமிழ் இலக்கியத்தில் காணலாம்; தமிழ்ப்புலவர்கள் பன்னெடுங்காலம் வளர்த்தெடுத்த செழுமையான உணர்வு மரபுநிலை அது. “மூன்றாவதாக, சமற்கிருதம் - இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியம் நுண்மாணுழைபுலமிக்கது; பல்வேறு பாடு பொருள் கொண்டது (முற்கால இந்திய இலக்கியங்களில் பொது மக்களைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே); மாந்த இனத்துக்குப் பொதுமையான விழுமியங்களைக்கூறியது. எனவே பிற செவ்வியல் மொழிகளின் மரபுகளுடனும் இலக்கியங்களுடனும் சமமாக நிற்கும் உரன் வாய்ந்தது அது. உலகின் தலைசிறந்த அறநூல்களில் ஒன்று திருக்குறள். தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் அது போன்று பல துறைகளிலும் சிறந்த நூல்கள் உண்டு. அவ்விலக்கியம் பாடித் துலக்கம் தராத மாந்த இன பட்டறிவு ஒன்றும் இல்லை. “இறுதியாக இக்கால இந்தியப் பண்பாட்டையும் மரபையும் உணர்வதற்குப் பயிலவேண்டிய இலக்கியங்களில் தமிழிலக்கியம் முதன்மை வாய்ந்தது. சமற்கிருத இலக்கியங்களில் தென்னக மரபுத் தாக்கம் உள்ளது குறித்துநான் விரிவாக எழுதியுள்ளேன். கழகக்காலம் தொடங்கித் தமிழிலில் பாடப்பட்ட சிறந்த இந்து சமய பத்தி இலக்கிய நூல்கள் தாம் தற்போதைய இந்து சமயத்துக்கு அடித்தளமாக இருக்கின்றன. தமிழ் பத்தி இலக்கியக் கருத்துகள் பாகவராணத்திலும் பிற (தெலுங்கு/கன்னட/ சமற்கிருத) பத்தி நூல்களிலும் ஏற்றப்பட்டு இந்தியா முழுவதும் பரவின. வேதத்துக்குச் சமமாகக் கருதப்படும் தமிழ் திவ்ய பிரபந்த பத்தி இலக்கியப் பாடல்கள் தென்னிந்தியாவில் பெரிய திருமால் கோயில்களில் (திருப்பதி போன்றவை) வேதத்தோடு சேர்த்துஓதப்படுகின்றன. இக்கால இந்தோ ஆரியமொழிகளுக்கு சமற்கிருதமே மூலமொழி; அதுபோல இக்காலத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் செவ்வியல் தமிழே மூல மொழியாகும். “உலகத்தின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது இத்துறையில் வல்ல அறிஞருக்கு உள்ளங்கைநெல்லிக்கனி போலத் தெரிந்த உண்மையாகும்” - ஜார்ஜ் எல்.ஹார்ட் 11.4.2000 (இ. மறைமலை வேண்டுகோளுக்கிணங்க வரைந்தது) “சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் முடியவுள்ள செவ்வியல் தமிழ் இலக்கியம் மாந்த இனச்சாதனைகளுள் மிகச் சிறந்தவற்றுள் ஒன்று. கருத்துகள், இலக்கிய அமைப்பு, சொற்களஞ்சியம் ஆகியவற்றிற்கு இன்றைய தமிழ்ப் படைப்புலகத்துக்கு சங்க இலக்கியம் வற்றாத கருவூலமாக உள்ளது. தென் ஆசியாவில் இன்று வழங்கும் வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு இது. பழைய செவ்வியல் இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டே இக்காலத்தமிழ் இலக்கியம் உருவாகியுள்ளது; இன்றைய தமிழ்ப்படைப்பாளிகள் (வடமொழி இலக்கியம் மேலை நாட்டிலக்கியம் ஆகியவற்றையும் உளங் கொண்டிருந்த போதிலும் தெளிவாகஉணர்ந்து கொண்டோ அல்லது ஆழ்மனநிலையில் உள்ளதாக்கத்தாலோ தமிழ்ச் செவ்விலக்கியத்தையும் வழிகாட்டியாகக் கொண்டு தான் உள்ளனர். இன்றைய தமிழிலக்கியத்தின் நாம் காணும் சொற்களஞ்சியம், குமுதாய/ மெய்யியல்/ சமய பண்பாட்டு நோக்கு, தொனி (tone) ஆகியவற்றில் பெரும் பகுதியின் வேர்கள் ஓரளவுக்கு சங்க இலக்கியம் வரைச் செல்வதைக் காணலாம். தங்கள் படைப்பாற்றலை வியக்கத்தக்க அளவுக்கு மேம்படுத்தக்கூடிய செழுமையான பல்துறைவளங்கள் சங்க இலக்கியக் கருவூலத்தில் உள்ளன என்பதை இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை; உணர்ந்தால் அதில் அதிக நாட்டம் செலுத்துவர், என்பதையும் நான் இவ்வேளையில் சொல்லாமலிருக்க முடியவில்லை.” ஆஷர் (2004) - “Negotiaions with the past: Classical Tamil in contemporary Tamil; Edrs Kannan M and Carlos Mena Institute Francais de Pondichery” சங்க கால அகப்பொருள் நூல்களின் தன்மை “தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங்கும் இந்த (சங்க இலக்கிய) அகப் பாடல் களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறியிலும், விளக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக்கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன: காதலோடு கனி வும் பண்பாடும்; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ளுறை, இறைச்சி, அங்கதம் ஆகியவையும்; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற நுண்ணிய வண்ணனை; அடிகள் சில அவை சுட்டும் பொருளோ பெரிது. தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ்வகப்பாடல்கள்; அது மட்டுமன்று கடந்த ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை.” - ஏ.கே.இராமானுசன் “அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு கூற்று: தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலிய சிலருள் ஒருவர், நாடக மாந்தர்போல், கூறுவதாக அது அமையும். அவர்கள் ஒருவருக் கொருவரோ, தனக்குத் தானாகவோ, நிலவை நோக்கியோ கூறுவதை வாசகர்களாகிய நாம் கேட்கிறோம்; அவ்வளவே. நாடகக் காட்சி ஒன்றை முழுமையாக அகப்பாடல் ஒன்றில் உள்ள கூற்று விளக்கிக் காட்டிவிடும்.இவை நாட்டுப்பாடல்கள் போல் விரைந்து பாடியவை அல்ல; ஒரு நிகழ்ச்சியைக் கண்ட அல்லது எண்ணிப்பார்த்த ஒரு பாவலர் அது பற்றிய தம் எண்ணங்களை நேராகவோ உருமாற்றியோ வெளிப்படுத்திய பாடல்களும் அல்ல. இவை அரசவைப்பாடல்களின் நளினம் உடையவை; “வைகலும் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் போல்” நுண்ணிய புலமைத்திறனுடன்யாக்கப்பட்டவை. - சுவெலபில் 4. தமிழர், பண்பாடு, கலை, சமயம், மெய்யியல் இன்று இந்திய நாகரிகம் என்று வழங்கப்படும் நாகரிகக் கூறுகளில் பெரும்பாலானவை உண்மையில் தமிழர், தமிழிய நாகரிகக் கூறுகளே “இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி - பண்பாடு ஆகியவையே” என்பர் டைலர். All of Indian civilisation is built on an underlying base of Dravidian language and culture” - S.A. Tyler (1973) India an Anthropological perspective. 1. சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியில் உருவாக்கியது சிந்துவெளி நாகரிகம், அந்நாகரிகம் 1947 க்கு முந்திய இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் சேர்ந்த இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெருநிலப்பகுதியில் வடமேற்கு இந்தியாவில் பரவி இருந்தது. அதாவது சுமார் 5 லட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. பண்டைய மெசபொதாமிய, எகிப்திய நாகரிகங்களின் பரப்பைவிட அதிகமான பரப்பில் சிந்து வெளி நாகரிகம் வழங்கியது. அந்நாகரிகம் வழங்கிய பகுதியில் கி.மு.2000 வாக்கில் மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது பொஸெல், பர்போலா போன்றவர்கள் கருத்து ஆகும் (அப்பொழுது உலகில் இருந்த மொத்த மக்கள் தொகையே 9 கோடிக்கு குறைவு). சிந்து வெளி நாகரிகச் சின்னங்கள் 1500 க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. அவற்றில் சுமார் 20 இடங்களில் மட்டுமே மொகெஞ்சொதரோ, ஹரப்பா உட்பட –அகழ்வாய்வு நிறுவியுள்ளது. அந்நாகரிகத்தின் சிறப்புற்ற நிலை கி.மு. 3200 - 1800 கால அளவைச் சார்ந்தது. மொகஞ்சசோதரோ நகர மக்கள் தொகை 40,000 என்றும் ஹரப்பா நகர மக்கள் தொகை 25000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. மாந்தர் இன (AMH) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது குடியேறிய பகுதியே சிந்து வெளி நாகரிகப் பகுதி என்று Dravidian Ascent மேலே கண்டோம். அந்நாகரிகம் திராவிடச் சார்புடையது என்பதற்கு உள்ள மேலும் பல வலுவான ஆதாரங்களில் சில வருமாறு :- i. மொகஞ்சொதரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிடக் கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள், நகைகள், பருத்தி ஆடைகள் அனைத்தும் திராவிடச் சார்புடையவை. சங்க நூல்களில் காணும் கட்டடக்கலை சிந்துவெளி நாகரிகக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே. எடை அளவுகள்; சிற்றிலக்க முறை; 4.செ.மீ (= அங்குலம்) கோல்; 2 3/4 X 4 = 11 ஆகும் 11,22,33, என்றவாறு 11ன் மடங்காக வரும் அளவுகள், போன்றவை யெல்லாம் சிந்துவெளிக் காலத்திலிருந்து தொடர்ந்து வருபவையே (எஸ். சண்முகம் 1980; கு. வேங்கடாசலம் 1983, தெய்வ நாயகம் 2002) ii. தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடாசலம் நிறுவியுள்ளார். iii. இன்றைய வேதமதக் கருத்துக்கள் – அவற்றிற்கு எதிரான சமண, புத்தம் முதலிய கருத்துக்கள் இவற்றிற்கு இடையே முதலில் உறழ்வு, பின்னர் இணைப்பு என்றவாறு இந்துமதம் உருவானது என்று கருதுவது அவ்வளவு சரியான தல்ல. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த, பண்டைய தொல்லிந்திய (தமிழிய) நாகரிகத்தின் புத்துயிர்ப்பே, மறுமலர்ச்சியே இன்றைய இந்து மதம் ஆகும். (The Hindu synthesis was less the dialectical reductionof orthodozy and heterodoxy than the resurgence of the ancient aboriginal Indus civilisation) மறைமலையடிகள் (1903, 1923,1930) பி.டி. சீனிவாச ஐயங்கார் 1929 ஆகியோர் இக்கருத்தினரே, iv. இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ.கோஸ்வாமி “இந்திய இசை வரலாறு”, 1957) v. சிந்துவெளி முத்திரைகள் சுமார் மூவாயிரத்தில் உள்ள எழுத்துக்கள் பழந்தமிழே (பழந்திராவிடமே) என்பதை இத்துறை வல்லுநர் அனைவரும் ஏற்கின்றனர். (அவர்களுள் இன்றுள்ள வர்கள் அஸ்கோ பர்போலா, ஐ.மகாதேவன், கமில் சுவெலபில், பொஸெல்) சிந்துவெளி முத்திரை எழுத்துக்களைத் தொல் தமிழ் ஆகப்படித்துள்ள அறிஞர்கள் வாசித்துள்ள மாதிரிகள் இறுதியில் தரப்பட்டுள்ளன. இவ்வறிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக வாசித்துள்ளனர். முத்திரையைக் குத்தியபின் கிடைக்கும் முத்திரைப்பதிவில் உள்ள வாசகங்களை (impression) வலமிருநது இடமாகவே பெரும்பாலோர் படிக்கின்றனர். (அறிஞர் மதிவாணன் இடமிருந்து வலமாகப் படித்துள்ளார்) எனினும் இம் முத்திரை எழுத்துக்கள், திராவிட மொழியைச் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்து பற்றி மட்டும் அறிஞர்களிடம் ஒரு மித்த கருத்து உள்ளது காண்க :- ஸ்டான்லிவால்பர்ட் : இந்தியாவுக்கு ஓர் அறிமுகம் “பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பது ஆகும்.” “We assume from various shreds of evidence that they were Proto - Dravidian possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert : An Introduction to India, University of California press 1991) ஜே.எம். ராபர்ட்ஸ் : பெருங்குயின் உலக வரலாறு “தென்னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழி களோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்துவெளி முத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது.” It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used in Southern India (J.M. RobertsHistory of the world, pelican 1992) கமில் சுவெலபில்: திராவிட மொழியியல் – ஓர் அறிமுகம் “ சிந்து வெளி எழுத்துகளின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப் படும்பொழுது அது திராவிடமொழி சார்ந்ததாக அமைவதற்கே வாய்ப்பு மிக அதிகம்” “The most probable candidate is and remains some form of Dravidian” (Dravidian Linguistics - An introduction, Pondicherry 1990;) Chap VI : Dravidian and Harappan) சிந்து வெளி முத்திரை எழுத்துக்களிலிருந்தே பிற்காலத் தமிழ் எழுத்துக்கள் உருவாயின் என்பது மதிவாணன் கருத்து, ஏறத்தாழ கி.மு.700 ஐ ஒட்டியே தமிழுக்கு ஒரு லிபி இருந்தது; அதைப்பின் பற்றியே அசோகபிரமி எழுத்து உருவாக்கப் பட்டது; எனக் கொள்வதற்கான ஆதாரங்களை ராஜன் (2004) நடன காசிநாதன் (2004) ஆகியோர் தந்துள்ளனர். அண்மையில் கண்டுபிடித்த ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வுப் பானை ஒட்டின் காலமும் கி.மு. 700க்கு முந்தியது. 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை – செம்பியன் கண்டியூரில் வி.சண்முகநாதன் கண்டெடுத்த புதுக் கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் “முருகுஅன்” (முருகன்) என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு. 2000 - 1500 ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். “புதுக் கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினர் என்றும் அம்மொழி திராவிட மொழியே இக் கண்டுபிடிப்பு நிறுவுகிறது என்பர் மகாதேவன்.” (“The Neolithic people of Tamilnadu and the Indus vallyey people shared the same language which can only be Dravidian and not Indo- Aryan”) : 1.5.2006 இந்து நாளிதழ். 2. சமயம், மெய்யியல் (இன்றைய “இந்து” சமயக்கடவுள் வழிபாட்டு முறைகள், மெய்யியல் ஆகியவை முற்றிலும் தமிழிய (திராவிடச்) சார்புடையவையே ஆரியரிடமிருந்து பெற்றவை அல்ல என்பதை 1900க்கு முன்னர் இருந்தே நல்லறிஞர் கூறுவருகின்றனர். மறைமலையடிகள் (1903 : முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, 1923 தமிழர் நாகரிகம், 1941 தமிழர் மதம்); பி.டி. சீனிவாச ஐயங்கார் (1929: History of the Tamils கா. சுப்பிரமணிய பிள்ளை (1940 தமிழர் சமயம்) தேவநேயப் பாவாணர் (1972 : தமிழர் மதம்) ஆகியோர் உட்பட. ஆரிய வேதங்களி லிருந்து மாறுபட்ட, அவற்றுக்கு முந்திய ‘தமிழ் நான்மறைகள்’ இருந்தன வென்னும் கோட்பாட்டையும் கா. சுப்பிரமணியர் (1927 : The Madras Christian College Magazine, பின்னர் 1929 (செந்தமிழ்ச்செல்வி) முதலியோர் கொண்டிருந்தனர். “அறியாமை காரணமாக ‘ ஆரிய’ மெய்யில், நாகரிகம் என்று அழைக்கப்படுவது, அடிப்படையில் திராவிடர் அல்லது தமிழருடையது என்பதே உண்மை. Most of what is ignorantly called Aryan philosophy and civilisation is literallyDravidian or Tamilian at bottom..” மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை. 19.12.1896 கடிதம்) : Siddhantha Deepika , 11- 5; Oct 1898 P .113). ரிக்வேத காலத்திலிருந்தே (கி.மு. 1000) “குடி கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறுதெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச் செய்த தமிழ்ச் சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே; முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு, ஏகர், சாம அதர்வண வேதப்பதிகங்கள் சில பலவும்; உண்மை விழா உபநிடதங்களும், சாங்கிய, யோக, வைசேடிக, நையாயிக, வேதாந்த சூத்திரங்களும்; மற்சம், வாயு முதலான சில புராணங்களும் பௌட்கரம், மிருகேந்திரம் முதலானசில சிவாகமங்களும் பிறவுமாம்.” -மறைமலையடிகள்; மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (1930) “இருக்கு வேதத்திற் “பரதர்” முதலிய பெயர்களால் வழங்கப்பட்ட பண்டைத் தமிழ் நன்மக்களே ஞாயிறு, திங்கள் , தீ என்னும் முத்தீ வடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவ பிரானை வழிபடும் நுட்ப முறையைக் கண்டோராவர்.(அடிகள் : 1930)” “விசுவாமித்திரர் என்னும் தமிழரசு முனிவரால் செய்து சேர்க்கப்பட்ட இருக்கு வேத மூன்றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திரமானது ஞாயிற்று மண்டிலத்தின் கண் முளைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவபிரான் மேற்றாய் விளங்குகிறது” (அடிகள் : 1923) “விசுவாமித்திரர் என்னும் தமிழரச முனிவரால் செய்து சேர்க்கப்பட்ட இருக்கு வேத மூன்றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திரமானது ஞாயிற்று மண்டிலத்தின் கண் முளைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவபிரான் மேற்றாய் விளங்குகிறது” (அடிகள் : 1923) “கொல்லா அறத்தை முதன் முதற்கண்டறிந்து அதற்கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன் மக்களாய் இருந்த ஒரு பெரும்பகுதியாரே... மற்றை மக்கட் பிரிவினரிலுள்ளஎந்த மேலோரும் இவ்வருமருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர் - வடக்கிருந்த சமணர், சாக்கியர், சாங்கியர், யோகர் முதலாயினாருங் கொல்லா வறத்திணை விடாப்பிடியாய்க் கொண்ட ஒழுகினரல்லரோ வெனில்; சமண சாக்கியர் முதலான அவரெல்லாம் ஆரியர் வருதற்கு முன்னமே இமயமலை வரையிற் பரவி நாகரிகத்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத் தமிழ்மேன் மக்களின் மரபில் வந்தவரே” அடிகள் (1940) [சமண, புத்தக்கருத்துக்கள் ஆரியருக்கு முற்பட்ட வடநாட்டுத்திராவிட மெய்யியலின் பிற்கால வளர்ச்சிகளே என்பர் சர் ஜான் மார்ஷலும் (1934).] “தமிழர் பண்டைச் சமய வாழ்வு இன்றைய பல சமயங்களின் உருவாகா மூலக் கரு முதலைத் தன்னிடமாகக் கொண்ட வாழ்வேயாகும். அதில் எல்லாச் சமய மூலமும் காணலாம். புத்த சமண, சைவ, வைணவக் கருத்துக்கள் உருவாகுமுன், அச்சமயப் பெயர்கள் வேறுவேறாகத் தமிழர் நெறியினின்று பிரியுமுன், ஆரியம் இடைநின்று தமிழரின் ஒரு நெறியைப் பலவாறு பிரிக்குமுன், அவ்வெல்லா நெறிகளுக்கும் வழிகாட்டிய மிக ஏற்பட்ட காலத் தமிழ் அறிவர் மரபு சார்ந்த அறிஞருள் ஒருவரே திருவள்ளுவர் என்பது உய்த்துணரத் தக்க உண்மையாகும். “கா. அப்பாத்துரையார்; 1956 (“ 1800 ஆண்டு கட்கு முற்பட்ட தமிழகம்”) தமிழாக்கத்தின் அடிக்குறிப்பு. பிராக்கிங்டன் (1981) : இந்தியாவில் சமய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் என்பது புத்த மதத்தின் முக்கிய கொள்கை. புத்தமதம் தோன்றிய காலத்தில் தோன்றிய சமணமும் ஆசீகவமும் அக்கொள்கையுடையவையே. பிறவித்தளையிலிருந்து விடுபடுவது சமயத்தின் குறிக்கோள் என்பது அம்மதங்களின் கொள்கை.” “பழைய உபநிடதங்களில் மறுபிறவிக் கொள்கை புதுமையானதாகவும் சிலருக்கு மட்டும் தெரிந்த மறை பொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்தும் பின்னர் அக்கொள்கை புத்த சமய சயமங்கள் வழியாக விரைந்து அனைவராலும் பின்பற்றப்பட்டது எவ்வாறு? எந்த மக்கள் சமூகத்தினரிடம் இருந்து புத்தர் தோன்றினாரோ, அவர்களிடையே அக்கொள்கையாக இருந்து இருக்க வேண்டும். எனவே தான் அது விரைவில் அனைத்து மக்களின் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.” J.L. Brockington 1981 : The Sacred thread ஹென்ரிச் சிம்மர் (1951) : “வடமேற்கிலிருந்து நுழைந்த ஆசிரியர்களால் மகதம் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன் மக்கள் குடும்பங்கள் வலுவிழந்து வீழத் தொடங்கிய பின் முந்தைய உள்ளூர் ஆளும் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றன. எடுத்துக்காட்டாக சந்திரகுப் மௌரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே. - Heinricimmer 1951: Philosophies of India லெவின் (1986) : “இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியர் அல்லாதார் வழிபாட்டு முறைகளில் இருந்தே பிராமணீயத்துக்கு வந்தது” G.M. Bongard Levin (1986) A complex study of Ancient India வால்பர்ட் (1982) : மொகஞ்சோதரோ முத்திரையில் காணப்படுபவர்போன்ற (ஆரியர்களுக்கு முந்தைய இந்திய) யோகிகள், வந்தேறிகள் மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக் கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கி விட்டனரோ) - Stanley Wolpert 1982: A new history of India. வால்பர்ட் (1991) : ஆரிய நாடோடிகளின் முரட்டுப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய கடுமையான பெரும் போர்கள் ஆகியவற்றுக்கும் அஹிம்சைக்கும் (உயிர்களுக்கு ஊறு செய்யாமை) நெடுந்தொலைவு ஆகையால், யோகம், தாய்த்தெய்வ வழிபாடு போன்றவற்றைப்போல அஹிம்சையும் ஆரியர்களுக்கும் முற்பட்ட (சிந்து வெளித்தமிழ்) மக்களிட மிருந்தே அவர்கள் பெற்றதாக நாம் கருத வேண்டியுள்ளது. “சிவன் வழிபாடுவட இந்தியாவை விட தென்னாட்டில் தான் மக்களிடம் முதன்மை பெற்றுள்ளது. தென்னாட்டுத் திராவிட மக்கள் ஆரியர்களுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அங்கு நிலைபெற்று இருந்தமையை இது காட்டுவதாகலாம். தாய்த்தெய்வ வழிபாடும் தென்னாட்டில்தான் மிகுந்து காணப்படுகிறது” - Stanley Wolpert (1991) An introduction to India. 3. நடனமும் இசையும் (தமிழர் நடனமும் தமிழிசையும் இன்று கருநாடக இசை, பரதநாட்டியம் என்ற பெயரில் வழங்கி வருகின்றன.) “பாணர் தமிழரிடையே தொன்றுதொட்டு இருந்த வருபவர்; சமுதாயத்தில் தாழ்ந்த நைலயில் இருந்தவர்; எனவே பண் அடிப்படையில் அமைந்த தென்னிந்தியத் தொன்மை இசை வடவரிடமிருந்து கடன் பெற்றதாக இருக்க இயலவே இயலாது. “பண் என்னும் சொல்லிலிருந்து “பாணன்” என்னும் சொல் தோன்றியது. மாறாகப் பிற்கால இந்திய இசையின் ராகங்கள் (அவை பண்களின் உருமாற்றங்களோ) தென்னிந்தியத் தொல் இசையிலிருந்து உருவாயின என்பதே சரி. தக்காணப் பெருங்கற்கால நாகரிகம் சார்ந்த வாய்மொழி இலக்கியமானது பாணர்கள் மற்றும் எழுத்தறிவு பெறாத நாட்டுப்புறப் பாடகர்களிடையே உருவாகிக் கி.பி.1 முதல் நூற்றாண்டை ஒட்டி மகாரஷ்டிரப் பிராகிருதத்தில் பரவி, அங்கிருந்து இவ்விலக்கியத்தின் தாக்கம் சமஸ்ருதக் கவிஞர்களிடம் ஏற்பட்டதன் காரணத்தால் தான் சமஸ்கிருதத்தில் தரமான காவியச் செய்யுளிலக்கியம் தோன்றியது என்பதை இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் காணலாம். இக்கால கட்டத்தில் அல்லது இதற்குச் சற்று முன்னர்த் தென் இந்திய இசைக்கலையும் வட இந்தியாவில் பரவியிருக்க வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது இது பற்றி விரிவான, ஆழ்ந்த ஆய்வுகள் இதுவரை செய்யப் படவில்லையாகையால் இதைத்திட்டவட்டமான முடிவு என்று இன்றைய நிலையில் கூற இயலாது. இக்கருத்தின் அடிப்படையில் வியக்கத்தக்கதும் மன நிறைவு தருவதுமான ஒரு செய்திவெளிவருகிறது. அதாவது தென் இந்தியச் சாதியினரில் தாழ்நிலையில் இருந்த பாணரிடையே இருந்து தான் இந்தியாவின்இசையும் பாடல்களும் பெருமளவு உருவாயின என்னும் செய்தியே அது ” - ஜி.எல். ஹார்ட் “பழந்தமிழ்ச் செய்யுள்கள்: அவை தோன்றிய சூழலும், அவற்றை அடியொற்றிய சமற்கிருதப் படைப்புகளும்” 1975) “இசையறிவை ஆரியரல்லாதவர்களிடமிருந்து ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே, சாமவேதத்திலிருந்து இந்திய இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர்.” “By this fiction that Saman is the source of all Indian music alone it was possible to forget conveniently the debt the Aryans owed to the non- Aryans for their musical knowledge and practice.” - ஓ. கோஸ்வாமி (1957) History of Indian music    இணைப்பு I ஏ.டி. காம்பெல் 1816இல் வெளியிட்ட “தெலுங்கு மொழி இலக்கணம்” என்னும் நூலுக்குத் தானே ஒரு அறிமுகவுரை Introduction வரைந்ததுடன் தமது நண்பர் பன்மொழி அறிஞர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் அவர்களிடம் ஒரு குறிப்பையும் Note to the introduction எழுதி வாங்கி அச்சிட்டார். அக்குறிப்பைப் பாராட்டி அவர் எழுதியது: “தெலுங்கு மொழியின் அமைப்பு, அம்மொழியின் பூர்விகம் பற்றிய எனது முன்னுரைக் கருத்துகளுக்கு வலுவூட்டு வதற்காக என் நண்பர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (புனிதர் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி மேலாண்மைக் குழுத்தலைவர்) அன்புடன் எழுதியுதவிய பின்வரும் ஆய்வுரையை மகிழ்வுடன் அச்சிடுகிறேன். தென்னிந்திய மொழிகளில் முக்கியமானவை அனைத்திலும் ஆழ்ந்த ஞானம் உடைய அவர் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர் ஆகையால் இவ்விஷயத்தில் தீர்ந்த முடிவு செப்பிட அவர் முழுத்தகுதி வாய்ந்தவர் ஆவார்.” எல்லிஸ் தந்த குறிப்பு Note to the Introduction - by Ellis தெலுங்கு மொழி எந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்பது பற்றி இதுவரை ஆய்ந்தோர் எவரும் உண்மை நிலையைக் கண்டறிந்திலர். டாக்டர் காரி Carey சம்ஸ்கிருத இலக்கண முன்னுரையில் கூறுவது: “ஹிந்துஸ்தானியும், தமிழும், குஜராத் நாட்டு மொழியும், மலையாள நாட்டு மொழியும், சம்ஸ்கிருதத்திலிருந்து உருவானவை என்பது தெளிவாகத் தெரிகிறது; ஆயினும் முதலிரண்டு மொழிகளில் சம்ஸ்கிருதம் அல்லாத பிறமொழிச் சொற்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துள்ளன. பெங்காலி, ஒரிசா,மராத்தா, கர்நாடக, தெலிங்க மொழிகளைப் பொறுத்தவரையில் அவையனைத்துமே ஏறத்தாழ முற்றிலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்டவையே” அண்மையில் காரி வெளியிட்டுள்ள தெலுங்கு இலக்கணத்தின் முன்னுரையில் அவர் கூறுவது வருமாறு: “இந்திய மொழிகள் அனைத்துமே பெருமளவுக்கு சம்ஸ்கிருதத்திலிருந்து உருவானவையே எனலாம். மத்திய இந்தியாவிலும் வட இந்தியாவிலும் வழங்கும் மொழிகள் அனைத்தின் அமைப்பும் structure பொதுவாக ஒரே மாதிரி உள்ளது; அவற்றிடையே காணும் மாறுபாடுகள் பெரும்பாலும் (i) பெயர்ச்சொல் / வினைச்சொல். விகுதி மாற்றங்களும், (ii) சம்ஸ்கிருதச் சொற்களின் எழுத்தமைப்பில் அந்தந்தப் பிரதேச மக்களிடையே காலப்போக்கில் உருவான வேறுபாடு களுமேயாம். தென்னிந்திய மொழிகள் ஆகிய தெலிங்க, கர்நாடிக், தமிழ், மலையாள, சிங்கள மொழிகளின் தோற்றமும் வடஇந்திய மொழிகளைப் போன்றதேயெனினும் அவற்றிலிருந்து சில விஷயங்களில் மாறுபடுகின்றன - குறிப்பாக எந்த மொழி வேர்களிலிருந்து தோன்றினவென்று அறிய இயலாத ஏராளமான சொற்களை அவை கொண்டுள்ளன.” டாக்டர் வில்கின்ஸ்-உம் இக்கருத்தை வழிமொழிந்து. “தமிழ், தெலுங்கு, கர்நாடிக், மலபார் மொழி களிலும் மராத்தா, குஜராத் பகுதி மொழிகளிலும் சம்ஸ்கிருதச் சொற்கள் பெருமளவுக்கு உள்ளனச ம்ஸ்கிருதச் சொற்களின் உதவியின்றி இம்மொழிகளில் ஒரு வாக்கியம் கூட அமைக்க முடியாது என்னும் அளவுக்கு” என்று கூறுகிறார். Asiatick Researches ஆய்விதழ் 7ஆம் மடலத்தில் கோல்புரூக் எழுதிய “சம்ஸ்கிருத – பிராகிருத மொழிகள் பற்றிய ஆய்வுரை” யில் காரி, வில்கின்ஸ போன்றவர் களைப் போல திட்டவட்டமாக முடிவு கூறவில்லை எனினும் அவர்கள் முடிவை ஆதரிப்பது போலவே தோன்றுகிறது. மேலும் சம்ஸ்கிருதத்திலிருந்து உருவான / அமைக்கப்பட்ட மொழிகளை மட்டுமே சேர்க்க வேண்டிய “பிராகிருத மொழி களின் பட்டியலில்” அவர் தென்னாட்டு மொழிகளையும் சேர்த்துள்ளார். தற்போதைய தேவநாகரி லிபியிலிருந்து உருவாகி திரிபடைந்தது தான் தமிழ் லிபி என்பதும், “கர்னாட”, “தெலிங்கான” மொழி லிபிகளும் தேவநாகரியிலிருந்து பிறந்தவை என்பதும் கோல்புரூக் கருத்துகள். (திருநெல்வேலியில் ஓடும் ஆற்றின் சம்ஸ்கிருதப் பெயர் ஆன)தாம்ரபர்ணி என்னும் பெயரிலிருந்துதான் தம்லா Tamla என்னும் சொல் உருவானதாக ஊகித்து அச்சொல்லால் தமிழ் மொழியைச் சுட்டுகிறார். உண்மையில் கன்னட, தெலுங்கு லிபிகள் (இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான்) நாகரி ஒழுங்கு முறையைப் பின்பற்றுகின்றனவெனினும் எழுத்துவடிவம், கூட்டெழுத்து வடிவம் முதலியனவற்றில் அவை நாகரி லிபியைப் போன்றவை அல்ல; தமிழோ நாகரி லிபியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது -- பிறங்கெழுத்துகள் அறவே இல்லை; மேலும் சம்ஸ்கிருதம் எழுதப்படும் எந்த லிபியிலும் எழுதவியலாத சிறப்பு ஒலிகளைக் கொண்டது தமிழ். 2. இந்த ஆய்வுக் குறிப்பின் நோக்கம் முன்பத்தியிற் சுட்டிய கருத்துகள் பிழையானவை என்பதைக் காட்டுவதுதான். அத்துடன் பின்வருவனவும் நிறுவப்படும் - அதாவது, தமிழோ, தெலுங்கோ அவற்றின் இனமொழிகளோ சம்ஸ்கிருதத்திலிருந்து கிளைத்து உருவானவை அல்ல. சம்ஸ்கிருதம் இம்மொழிகளை மெருகூட்டப் பயன்படுத்தப் பட்டிருந்த போதிலும் அவற்றின் இருப்புக்குத் (நிலைப்புக்குத்) தேவையற்றது; அவை ஒரு தனியான மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. அம்மொழிகளில் சம்ஸ்கிருதச் சொற்கள் (குறிப்பாகப் பிற்காலங்களில்) கலந்துள்ள போதிலும் வேர்ச்சொற்கள் நிலையில் அவற்றோடு சமஸ்கிருதத்துக்குத் தொடர்பில்லை. 3. “தென்னிந்திய மொழிக் குடும்பம்”என்று பொருத்தமான பெயரிட்டு வழங்கத்தக்கவையான இக்குடும்பத்தில் அடங்கிய மொழிகள்: செந்தமிழும் வழக்குத் தமிழும் High and low Tamil; தெலுங்கு (பண்டித நடையும் பாமரர் நடையும் Grammatical and vulgar); கர்னாடகா அல்லது கன்னடி(பழைய மொழியும் இன்றைய மொழியும்) மலையாள்மா அல்லது மலையாளம்; (சென்னை ராஜதானிப்படத்தில் கன்னட Canara மாவட்டம் என வழங்கும் பகுதியில் உள்ள துளுவம் ஆகியவையாம். (மலையாளத்தை பாலினஸ், பரி பர்தொலொமியோ ஆகியவர்கள் இரண்டாகப் பிரிப்பர்: சம்ஸ்கிருத (ஆடம்பர) மலையாளம், grandonico Malabarica, சாதாரண மலையாளம் என்று. எனினும் பின்னதிலிருந்து முன்னது வேறுபடுவது சகட்டு மேனிக்கு சம்ஸ்கிருதச் சொற்களைப் புகுத்துவதில் மட்டும்தான். 4. மேற்சொன்னவற்றோடு இக்குடும்ப மொழிகளாகச் சேர்க்கத்தக்கவை சில உண்டு: குடகு (Coorg) மாவட்டத்தில் வழங்குவதும் துளு மொழியின் கிளைமொழியும் ஆன “குடகு” மொழி அவற்றுள் ஒன்று. சிங்களம், மகாராஷ்டிரம், ஒடிய மொழி ஆகியவை இம் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவல்ல; எனினும் தென்னிந்திய மொழிச் சொற்கள், சொற்றொடர்களுள் பலவற்றைக் கடன் பெற்றுள்ளன. அண்டை நாடுகளின் மொழிகளிடையே (அவை வெவ்வேறு குடும்ப மொழிகளாக இருப்பினும்,) ஓரளவு மொழிக் கலப்பு ஏற்பட்டுத்தான் தீரும். ஆனால் வட இந்தியாவிலுள்ள நாகரிகமடையாத மலைப்பகுதி வாழ் இனக்குழுவினரின் மொழிகளிலும் தென்னிந்திய இந்துக்களின் மொழிக் குடும்பச் சாயல் இருப்பது வியப்புக்குரியது. ராஜ்மகால் பகுதி மலைவாழ் பழங்குடிமக்கள் மொழியானது தென்னிந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒருவேளை அதை நிறுவ இயலாவிட்டாலும் தமிழ்/தெலுங்குச் சொற்களையொத்த சொற்களைப் பெரும் எண்ணிக்கையில் அம்மொழி கொண்டுள்ளது என்பது உண்மை. 5. இவ்வாய்வுரை குறிப்பாகத் தெலுங்கு பற்றியது. அம்மொழிச் சொற்களின் வேர்கள் அதன் இன மொழிகளான தமிழ், கன்னட மொழிச் சொற்களின் வேர்களைப் போன்றே உள்ளன; (சிற்சில சில்லரை ஒலி மாற்றங்களுடன்) சம்ஸ்கிருதத்துடனோ வேறு எந்த மொழியுடனுமோ தொடர்பற்றவை. தெலுங்கு, தமிழ், கன்னடம் இம்மூன்று மொழிச் சொற்களிடையே நாம் காணும் வேறுபாடானது வேர்களிலிருந்து உருவாக்கப்படும் சொல் வடிவங்களில் உள்ள வேறுபாடுகள் தாம்; மூன்றிலும் வேர்கள் ஒத்துள்ளன. ஏன் வேர்கள் ஒன்றே எனலாம். the roots themselves are not similar merely, but the same. 6. தெலுங்கு வேர்கள் (சம்ஸ்கிருத வேர்களைப் போல) பெரும்பாலும் வினைகளே; அவ்வினைகளை அப்படியே பயன்படுத்தலாம்; அல்லது சிறு விகுதி ஒன்றைச் சேர்த்து பெயர்ச் சொல் அல்லது பெயரடையாகப் பயன்படுத்தலாம். பெரும் பாலானவை அப்படி பெயர்ச்சொல்/பெயரடையாகவே பயன்படுத்தப்படுகின்றன:- குத்தடமு (வினைச்சொல்) to strike with the fist குத்து guddu (பெயர்ச்சொல்) a blow with the fist நடவடமு(வி) to walk நடக (பெ) nadaka a step, progress, conduct, manner வேர்களைப் பலவகையிலும் பயன்படுத்தும் விதங்களில் இம்மொழிகள் மாறுபடுகின்றன; தமிழிலும் தெலுங்கிலும் பெயர்ச்சொல் ஆகப் பயன்படும் வேர் ஒன்று கன்னடத்தில் வினையாகப் பயன்படும் (அல்லது இதற்கு நேர்மாறாகவும் அமையும்); தமிழ் அக்கறை எனக்கு அக்கறையில்லை (It is not a want to me / I do not require it) கன்னடம் அக்கறீயி  (to be desired / to be endeared to) பல நேர்வுகளில் ஒரு மொழிச் சொற்களின் பொருளை விளக்கும் வேர் அம்மொழியில் இல்லாவிடினும் சகோதர மொழியில் இருக்கும்:- தெலுங்கு அகப்படடமு (to take) அதி தூமமுகா நாக் அகப்படிந்தி (I take it to be smoke) தானிகிந்அந்தமூ நா க(g)ப்படலேது (I do not take or comprehend the sense of it) தமிழ்: அகப்படு = to take in general, seize, obtain குருவி எனக்ககப்பட்டது (I have caught the bird) (தெலுங்கில் aga, agu ஆகியவற்றுக்கு தனிநிலையில் பொருள் இல்லை. ஆயினும் தமிழில் அகம் = interior; மேலும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் படு = to suffer) 7. சம்ஸ்கிருதத்துக்கும் தெலுங்குக்கும் வேர்ச்சொல் நிலையில் தொடர்பு இல்லை என்பதை காட்டு முகத்தான் பின் வரும் பட்டியலிலே-. அ, க, ப,வ இவற்றில் தொடங்கும் சம்ஸ்கிருத தாது பாட மாலை யிலிருந்து எடுத்த நாற்பது ( 4 X 10 ) வேர்களுடன் பட்டாபிராம சாஸ்திரி (புனித ஜார்ஜ் கல்லூரி தலைமை சம்ஸ்கிருத - தெலுங்கு பண்டிதர்) தொகுத்த தெலுங்கு தாது தாதுமாலையிலிருந்து எடுத்த நாற்பது வேர்களுடன் ஒப்பிடப்படுகின்றன. அப்பட்டியலைப் பார்த்த அளவிலேயே தெலுங்கு வேர்ச் சொற்கள் 40-இல் ஒன்றின் பொருள் ஒன்றுகூட சம்ஸ்கருத வேர்ச் சொல்லுக்கு பொருந்தி வரவில்லை என்பது தெளிவாகத் தெரியும். [ஆங்கில மூலத்தில் எழுத்துப் பெயர்ப்புக்கு transliteration சர் வில்லியம் ஜோன்ஸ் உடைய Asiatic Researches முதல் மடல முறையைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது ] சம்ஸ்கிருதம் தெலுங்கு அ அக் to mark - move - move tortuously அக்கலு to contract the abdominal muscles அக் (g) to move - move tortuously அகலு to separate, break அங்க / அங்க (g) to mark Aggu - to worship அக் (gh) to move despise-begin- Aggalu: to be insufferable - be move quickly excessive Ag, ha - to sin அச் to give by compulsion - incur debt. Ach to honour - serve அண்டு to touch or stick - adhere-anoint the head Anch - to move - speak unintelligibly- அடங்கு to be destroyed speak intelligibly - submit - be subdued or sup pressed. அஜ் - to throw - move - shine அடரு to shine - shoot at. அட் or at, h - to move அடலு to weep bitterly. அட் (d) to occupy - undertake அடு to slap க கக் to hint desire - go கக்கு to vomit கக் to laugh கச் to play dice, chess etc. கக் (k,h) to laugh க்ரத் ஸ் to want கக்க(k,h) to laugh கட்டு to tie - build - become pregnant கக் (g) to move கடுகு to wash கச் to tie - shine கதங்கு / கநங்கு to swell, boil கஜ் to hiccup கடகு to lick as a dog கட் to move, skreen, rain கடரு to call aloud, exclaim கட்(t h) to fear - recollect- anxiously கடரு to move or shake கட்(d) to eat, rejoice - divide - preserve கடி to approach, obtain ப பச் to cook-explain-stretch பகலு / பங்கலு to break - make forked பட் (d) to shine - move பங்சு to divide into shares - send away - appoint - divide by figures. பட் (t, h) to speak பட்டு to seize - touch - begin - knead the limbs - understand - contain - unite intimately, as colour with that which is coloured etc. பண் to traffic - praise படு to suffer - fall பத் to rule - move பண்டு to reprove - produce - lie down பத் (th) to move படயு to obtain பத் (d) to move - be fixed பந்தங்கு to vow Pan to praise படறு to act precipitately - speak nonsense - threaten. Pamb to move பந்து to join steers to a plough - prepare. Parbb to move பந்ட்ச்சு to send - employ. வ வக் to be crooked - move வக / வகு to grieve - pretend grief - consult வக் (g) to be lame வகீர் to speak deceitfully - bark as a dog வச் to speak - order வங்கு to stoop வஜ் to move - renew or repair வட்சு to come வட் to surround - share - speak வந்சுக்ஷ் to bind - to pour water from a vessel வட to surround - share வரச் to divide Vanta to share வடு to become lean வாட் (th) to go alone - be able வட்டு to dry up வாட் (d) to shine - surround வட்டரு to shine வந் to sound வொட்டு (dd) to serve food தெலுங்கு, பிற தென்னிந்திய மொழிகள் இவற்றின் வேர்களுக்கிடையே நெருங்கிய உறவு இருப்பதைக் காட்டு முகத்தான் மேற்கணட் தாது மாலையிலிருந்து அகர முதற் சொற்கள் 15ஐயும் க கரமுதற் சொற்கள் 15-ஐயும் எடுத்து அவற்றோடு கன்னட, தமிழ் மொழிகளில் அவ்வற்றுக்கு இயைபுடைய வேர்களுடன் பின்வரும் பட்டியலில் ஒப்பிட்டுள்ளேன். தமிழ்வேர்களை பரி ஜார்ஜ்கோட்டைக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் தொகுத்து சதுரகராதி மற்றும் நிகண்டுகளுடன் சரிபார்த்துள்ளார். கன்னடத்தில் சம்ஸ்கிருத விளக்க உரையுடன் அமைந்த ஒரு பட்டியலிலிருந்து எடுத்தவை கன்னடவேர்கள். தெலுங்கு கன்னடம் தமிழ் அக்கறை to feel affection for, love. தெலுங்கு (அக்கறை) தமிழ் (அக்கறை) மொழிகளில் இச்சொல் பெயர்ச்சொல்லாக மட்டுமே உள்ளது. அக்களு to contract அக்களு (தெலுங்கு The abdominal போலவே) Muscles. இவ்வேரைத் தெலுங்கு intsu என்னும் ஒட்டு சேர்த்தும் கன்னடம் isu என்னும் ஒட்டு சேர்த்தும் பயன்படுத்து கின்றன. இந்த ஒட்டுகள் ஆக்கப் பொருளையும் பிறவினைப் பொருளையும் (causal sense) தருகின்றன. அக்க (gg)லு அகலு to separate- to separate to separate to become extended - also to keep at a to extent - lament distance - pass beyond. அகவு to call, play அகளு to dig அகழ்(கன்னடத்தில் ழ் – ள்) அக்க(gg) லு to அகை to be afraid அகை to beat, cut, become insufferable - be pleased break in two - be excessive அக்கு (gg) to worship அஃகு to decrease , அங்கார் to gape அட்ச் to give by அட்சு(தெலுங்கில் Compulsion –incur உள்ள பொருள் தான்) Debt. இந்த ‘ச’ பலுக்கப்படும் முறை வருமாறு. தெலுங்கில் tsa, cha. கன்னடத்தில் ச; தமிழில் ஸ சொல் இறுதியில், ஷ சொல் நடுவில், ச தனியாக வரும் பொழுது, ஐ இரட்டிக்கும் பொழுது [தமிழில் அன்று பெரும் எண்ணிக்கையில் வழங்கிய வடமொழிச் சொற்கள் பலுக்கப்படு வதைக் கேட்டு எல்லிஸ் இவ்வாறு கூறினார் என்க] அஞ்சு to be alarmed அஞ்சு (கன்னடத்தில் fear - frighten போல) அந்து to touch, அண்டு to join – stick அண்டு to join - stick or adhere - together adjoin- approach - anoint the head befit. தமிழில் அண் (du)என பலுக்கப்படும் அடங்கு , to be destroyed அடகு / அடங்கு to be அடங்கு அணங்கு, - submit - be contained – enclosed (கன்னடத்தில் போல) ஆணுகு - subdued or subdued or suppressed suppressed - submit – recede அடரு to shine, அடரு to ascend, அடரு to to shoot at (இந்சு climb, ride throng - press சேரும் பொழுது மட்டுமே together - be இரண்டாவது பொருள்) connected அடலு to weep bitterly அடு to cook அடு to join - be அடு to slap (அடெ to slap) near, be connected - to obtain, move to kill - fight - cook. (அடை = to obtain, to tie, unite) குறிப்பு: அட்+ என இம்மூன்று மொழிகளிலும் தொடங்கும் வேர்களனைத்துக்கும் மூலம் இந்த அடு என்பதே; அவ்வேர்களனைத்திலும் நெருக்கம், இணைப்பு, இவை சார்ந்த பொருள்களே சுட்டப்படுகின்றன. மூல வேரில் பின்வரும் சிறுமாற்றங்கள் பொருள் மாற்றத்துக்கு வகை செய்கின்றன:- இறுதி அசையின் முன் மூக்கொலி சேர்த்தல் அண்டு (antu,andu) பல்வேறு ஒட்டுகளைச் (ஐ,இ, அர், அல், கு, அங்கு போன்றவை) சேர்த்தல் – மேலே கண்டது போல. இப்படி (அகரம், ககரம் முதலிய எந்த எழுத்தில் தொடங்கும்) எந்த அடிப்படை வேரிலும் சிறு சிறு மாறுதல்களைச் செய்து ஏராளமான இரண்டாம் நிலை வேர்ச் சொற்களை உருவாக்கும் முறையைப் பரவலாகக் காணலாம். ஆதிவேர் சில நேரம் தமிழ்/கன்னடம்/தெலுங்கு இம்மூன்றில் ஒன்றிலும், சில நேரம் இம் மூன்று மொழிகளிலும் காணப்படுகின்றது. சில வேளைகளில் ஆதிவேர் இன்று இம்மூன்று மொழிகளில் எதிலும் காணப்படுமாறில்லை. அடுகு to ask-beg alms அட்டகு (addagu) to interrupt - prevent அட்டகு (தெலுங்கில் போல) கக்கு to vomit கக்கு (to vomit) கக்கு (to vomit) கங்கெடு (to become lean) கர்கு to become black, கருகு by fire etc (கன்னடத்தில் போல) கட்ச் to play கச to be modest or dice, chess etc diffident கசங்கு to be bruised by the hand - squeezed கட்டு to tie - build - கட்டு to tie - build கட்டு (கன்னடத்தில் become pregnant போல) said of cattle only. to wash off, தமிழில் இவ்வேர் “கழுவு” as dust from the என்பது. தமிழ் ழ hands -wash out தெலுங்கில் ட ஆகவும் as stains from a cloth.. கன்னடத்தில் ள ஆகவும் மாறுகிறது. (தமிழ் “தழுவு” stroke gently caress என்பது தெலுங்கில் தடுகு என்று ஆகும்; பிறவும் அவ்வாறே) கடங்கு/கணங்கு வடி to கடங்கு (தெலுங்கில் தமிழில் இவ்வேர் இல்லை. swell - boil or bubble போல) தெலுங்கிலும் ஆயினும் இதன் அர்த்தமும் கன்னடத்திலும் இது அடுத்துவரும் இரண்டின் நீரைக் குறித்துப் பயன் அர்த்தமும் ஒன்றுதான். படுகிறது. உள்ள இது அவற்றுடன் உணர்வுகள் நீர் போல் ஒன்றாகத் தோன்றியது வழிவதைக் குறிக்கவும் எனலாம். இம்மூன்று பயன்படும். the sea மொழிகளிலும் ‘கட்’ எனத் swells, his anger boils, தொடங்கும் அனைத்துச் his wealth overflows சொற்களுக்கும் தமிழ் ‘கடு’ என்பதே ஆதி வேர் ஆகும். கடி to cut – bite கடி to cut, bite , guard swell or be angry fL tocut - plough - snatch orseize suddenly - steal – be angry கடகெய் to hurry, கடகு (கன்னடத்தில் போல) hasten கடெ to churn கடை to stir up with a stick etc. –to turn by a lath. கன்மலை to think - கண்/கணி (கன்னடத்தில் conceive in the mind. போல) அத்துடன் to consider – mark – deter ( ‘கண்’ + மலை இங்கு mine. ‘மலை’க்குத் தனிப் பொருள் இல்லை. கத்து to kill கத்து to call aloud – roar or bellow – croak கதடு to dissolve in liquids கதறு –to call aloud from கதறு to call aloud- bellow கதறு (கன்னடத்தில் போல) any affection of the as a beast mind – to exclaim கதலு/கதுலு to move or கதலு (தெலுங்கில் போல) கதலு (தெலுங்கில் போல) or shake கதி to approach – obtain கதி to steal கதி to sound – make a noise – be haughty. கது to draw gold or silver கதுமு to push away கத்ருசு/கதுருஞ்சு கதுவு to be confused or to peck as a bird or perplexed. கந்து to fade or decay as கந்து (தெலுங்கில் போல) காந்து (கான்று – என்று flowers and fruit by heat எழுதி காந்து – என்றும் பலுக்கும்பொழுது தெ.க. வில் உள்ளது போன்ற பொருள். “காந்து”என்றே எழுதினால் பொருள்: to be spoiled, to perish generally. கநம் to become rancid –to acquire a bad taste or smell by smoke or keeping. தெலுங்கில் இது பெயர்ச் சொல். அதே பொருளில், கநலு to becom angry, கநலு to kindle as fire – to கனல்/காந்தல் to become fade become angry, angry கனல் (பெ) = கசைந கநு to see – to bring “பார்” என்னும் பொருளில் கன்னடத்திலும் forth a child. தமிழிலும் காண்/காணு என்னும் சொல் வருகிறது. இறந்த காலம் கண்டேன்/ கண்டெனு (தெ) “ஈனுதல்” என்னும் பொருள் தெலுங்கில் மட்டுமே உள்ளது. தமிழில் கன்று (candu) – a calf இதிலிருந்து வந்தது எனலாம் [ எல்லிஸின் இக் கருத்து தவறு] கப்பு to cover கப்பு to dig a pit – excavate – hollow out. தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கும் பொருளில் இவ்வேர் தமிழில் இல்லை எனினும் தமிழில் இன்று வழங்கும் கப்பரை ( = a hollow basin carried by beggars), கப்பல் (- a ship) என்னும் சொற்கள் (தெலுங்கு, கன்னடத்தில் உள்ள) இந்த “கப்பு” என்னும் வேரி லிருந்து தான் பிற்காலத்தில் உருவாகியிருக்க வேண்டும். இப்படி அம் மொழிகளிடையே வேர்ச்சொல் நிலையில் நெருங்கிய உறவு உள்ளதை நிறுவ முடியும் என்றாலும் அம்மொழிகளில் பல்வேறு பொருண்மைகளைக் குறிக்க வழங்கும் சொற்களிடையே நெருங்கிய ஒப்புமை இருப்பதாக எடுத்த எடுப்பில் தோன்றாது. எனவே இதை (வேர்ச்சொல் ஒற்றுமை) திட்டவட்டமாக நிறுவ வேண்டுமாயின் இம்மூன்று மொழிகளின் சொற்களையும் வேர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்றியமையாதது. மாமிடி வெங்கய்யா ஆந்திர தீபிகா என்ற பெயரில் அருமையான தெலுங்கு அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அவ்வகராதியின் முன்னுரையில் தெலுங்கு மொழியின் அமைப்பைச் சுருக்கமாக விளக்கியுள்ளார். மேற்சொன்ன ஒப்பீட்டைச் செய்திட உதவும் வகையில் வெங்கய்யாவின் அந்த விளக்கம் ஆங்கிலத்தில் தரப்படுகிறது; “ஆந்திர (தெலுங்கு) மொழியில் உள்ள சொற்கள் மூலங்கள் நான்கு வகையின. அவையாவன: தத்சமந், தத்பவந், தேஸ்யம், கிராம்யம். தெலுங்கில் வழங்கும் தூய சம்ஸ்கிருதச் சொற்கள். இவை (தேவலோகத்தில் பேசப்படுவது போன்ற) தூய சம்ஸ்கிருதச் சொற்கள்; தெலுங்கில் “தத்சமம்” எனப் பெயரிட்டு வழங்கப்படுகின்றன. எனினும் சொல் ஈறுகள்தெலுங்கில் சற்று மாற்றப்பட்டு வழங்குகின்றன. எடுத்துக்காட்டுகள்: சம்ஸ்கிருதம் தத்சமம் ராமஹ ராமண்டு ஆள் பெயர் வனம் வநமு காடு கங்கா கங்க ஆற்றின்பெயர் ஹரிஹ் ஹரி பெயர் பஹவதி பகவதி பெண் தெய்வம் ஸ் ரீஹ் ஸ்ரி திரு ஸம்புஹ் செம்புவு/செம்புண்டு பெயர் வதூ(dh) வத்ஹு பெண் gauh கோ (g)வு ஆ (பசு) glau glau நிலவு வாக் வாக்கு a word பி(b) ஷக்(ப) பிஷக்கு மருத்துவன் Bhubhrut பூ(bh) ப்ருத்து அரசன் ஹநுமான் ஹநுமா, ஹநுமந்துடு, பெயர் ஹநுமாநுடு ஸம்பத்(d) ஸம்பது (d), ஸம்பத்து செல்வம் க்ஷுத்/d க்ஷத்து வேட்கை பசி ஆபஹ் அப்பு நீர் Dyau திவமு விண்ணுலகம் பயஹ் பயஸு பால் அநத்வாந் அநத்வாஹமு காளை மாடு தத்பவச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து நேரடியாகவோ அல்லது பின்வரும் ஆறு பிராகிருதங்கள் வழியாகவோ கடன் பெற்று சில மாற்றங்களுடன் பயன்படுத்துபவை “தத்பவம்” ஆகும். அம்மாற்றங்களாவன: சில அசைகளை நுழைத்தல், எழுத்துக்களை மாற்றுதல், தேய்த்தல் அல்லது நீட்டுதல் போன்றவையாம். (விவரங்களை வைக்ரூத சந்திரிகா வில் காண்க. எடுத்துக்காட்டுகள் பின்வரும் பட்டியல்களில் தரப்படுகின்றன.) சம்ஸ்கிருதத்திலிருந்து நேரடியாகப் பெற்ற தத்சமங்கள் : ஸமுத்ரஹ ஸந்தரமு கடல் சந்திரஹ சந்துருந்டு நிலா காநநம் காந காடு கத்யம் கோ(g) ட சுவர் யாத்ரா ஜாத்ரா புனிதப்பயணம் ஆதுரம் ஆத்ரமு hurry பங்க்தீஹ் ப(b) ந்தி வரிசை குரலி க (g) ரிடி சிலம்பப் பள்ளி மகாராஷ்டிரத்தில் பேசப்படும் பிராகிருதத்தின் மூலமாக சம்ஸ்கிருதத்திலிருந்து பெற்ற தத்சமங்கள். சமஸ்கிரும் பிராகிருதம் தெலுங்கு சக்ரவாஹ சக்கவாயோ ஜக்காவு ஒரு வகை நீர்ப்பறவை உபாத்யாய ஒஜ்ஜாவோ ஒத்ஜா ஆசான் பிரஹ்மா bamba பொ(b)ம்மா பிரஹ்மா த்வீப திவோ திவி தீவு கம்ஸயம் கம்ஸோ கந்சு வெண்கலம் யாஸாஹ் ஜாஸோ அசமு புகழ் சூரசேன நாட்டில் பேசப்படும் சௌரசேனிப் பிராகிருதத்தின் மூலமாகக் கடன் பெற்ற தத்பவங்கள் சம்ஸ்கிருதம் சௌரசேனி தெலுங்கு யக்ஜோபவீதம் ஜன்னோவீதம் ஜானூயிதாமு பூணூல் ப்ரதிஜாயதம் பதிந்நாதம் பந்நிதமு சூளூரை ஹிந்தலாஹ் ஹிந்தலா ஈந்து பேரீச்சை ஹரிதலாஹ் ஹரிதலா அரிதாளமு அரிதாரம் தா(dh)து தாது ஜாது நிறம் மகத நாட்டில் வழங்கும் மாகதிப் பிராகிருதத்தின் மூலமாகக் கடன் பெற்ற தத்பவங்கள் சம்ஸ்கிருதம் மாகதி தெலுங்கு நெதிஷ்டம் நெதிஸ்தம் நேஸ் நட்பு கெ(g)ஹஸ்த கெஹஸ்தெ கேஸ்த இல்லறத்தான் கஷ்டம் கஸ்டம் கஸ்தி இன்னல் ரமா லமா லேமா ஒரு பெண் பாண்டய, கேகய நாடுகளில் வழங்கும் பைசாசி பிராகிருதத்தின் மூலமாகக் கடன் பெற்ற தத்பவங்கள் சம்ஸ்கிருதம் பைசாசி தெலுங்கு அலக்தா அலத்தோ லட்டுக செவ்வாக்குச் சாயம்: மகளிர் பாதத்தில் பூசியது. சஷ்குலி சக்குலி சக்கிலமு a contorted cake ஊர்நா உந்ந உந்நி கம்பளம் த்ரிலிங்க திலிங்கோ தெலுங்கு, தெலுங்கு மொழி தெலுகு, தெநுகு ஸ்வர்ணம் சந்ந சொந்ந தங்கம் நிஸ்ரேநி நிசேந நித்சேந ஏணி காந்தாரம், நேபாளம், குந்தளம் நாடுகளில் வழங்கும் சூலிக/சூலிக பைசாசி பிராகிருதத்தின் மூலமாகக் கடன்பெற்ற தத்பவங்கள் : சம்ஸ்கிருதம் சூலிக தெலுங்கு ப்ருந்தாஹ் புந்தோ பிந்து கூட்டம் புத்தாஹ் புத்தோ பெத்த(dd) பெரிய; (intelligent) பெத்தவாண்டு ஞானி ஸ்வர்ணம் பநவோ பொந்நு தங்கம் ம்ருக(gh) மிகோ மேகமு விலங்கு ப்ரத்னஹ் பத்தோ (dd) ப்ரொது/பொத்துஅதிகாலை அபிரா நாட்டிலும் மேலைக் கடற்கரையிலும் வழங்கும் ஆபப்ரம்ஸ பிராகிருதத்தின் மூலமாகக் கடன்பெற்ற தத்பவங்கள் : சம்ஸ்கிருதம் ஆபப்ரம்ஸ தெலுங்கு பிராகிருதம் ப்ராஹ்மண பம்பாடு பாப(b)டு பிராமணன் bambhadu அபத்தம் அபத்து பட்டு (baddu) பொய் ஸ்தனம் தாநு சந்நு முலை ஸ்ருதம் சுது சதுவு ஓதுதல், கற்றல் heard குறிப்பு: ஆபப்ரம்ஸம் என்ற சொல்லுக்கு வேர்ப் பொருள் ‘சிதைந்த மொழி’ corrupted language என்பதாகும். ஆயினும் இந்தப் பொருளில் அச்சொல்லை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மாமிடி வெங்கய்யா கூறுகிறார். ஒரு குறிப்பிட்ட வட்டார வழக்கின் இயற்பெயராக அதனைக் கொள்ளவேண்டும் என்கிறார். நன்னயபட்டிய நூலுக்கு உரையெழுதிய ஆப்பகவியின் பாடல் ஒன்றில் இக்கருத்து உள்ளதையும் ‘சரஸ்வதி தேவி சிறுமியாக இருந்த போது பேசிய மொழியே அது’ எனவே அம்மொழியில் உள்ள அனைத்துச் சொற்களும் சுத்தமானவையே என்று அப்பாடல் கூறுவதையும் சுட்டுகிறார். எனினும் ஆபப்ரம்ஸம் மூலமாகத் தெலுங்கில் நுழைந்த சொற்களைப் பிராமணர்களை விட சூத்ரமக்களே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். மேற்சொன்னவாறு தெலுங்கில் நுழைந்த தத்சமச் சொற்களின் வகைப்பாடு வருமாறு. அவற்றைச் சிதைக்கப் பட்ட சொற்கள் என்பதைவிட உருமாறிய சொற்கள் என்பதே பொருத்தம். சமஸ்கிருத தத்பவம் 1/2, பிராகிருதம் 1/4, சௌரசேனி 1/10, மாகதி 1/20; பைசாசி, சூலிக ஆபப்ரம்ஸம் 1/10, “சமஸ்கிருதம் - பிராகிருதம் பற்றிய தமது ஆய்வுரை”யில் கோல்புரூக் சமஸ்கிருதம், பிராகிருதம், மாகதி (=ஆபப்ரம்ஸம்) ஆகிய மூன்று வகைப்பாடுகளையேஏற்கிறார். மேலே (மாமிடி வெங்கையா சொன்ன) ஆறு பிராகிருதங்களும் தனித் தனிமொழிகள். அவற்றுள் ஒவ்வொன்றுமே தத்தமக்கு உகந்த சிற்சில மாற்றங்களுடன், சமஸ்கிருதச் சொற் களஞ்சியம் சமஸ்கிருதத் தொடரமைப்பு சமஸ்கிருதஇலக்கணம் - சில விதிவிலக்குகளுக்குட்பட்டு. ஆகியவற்றைப் பின்பற்றி உருவானவையேயாம். லட்சுமிதரன் ஆறு பிராகிருதங்களுக்கும் பொதுவாக எழுதிய ஸத்பாஷா சந்திரிகா (Shadbasha - Chandrica) வானது முதலில் ஆறு பிராகிருதங்களுக்கும் பொதுவான இலக்கண விதிகளைத் தருகிறது; பின்னர் “சம்ஸ்கிருதத்திலிருந்து நேரடியாக உருவாகியதாகிய” பிராகிருதத்தின் (ப்ராக்ருதம் மஹாராஷ்டிர உத்பவம்) விதிகளைத் தருகிறது; பின்னர் “சம்ஸ்கிருதம் = பிராகிருதம்” இவற்றிலிருந்து உருவாகிய சௌரசேனி பற்றிக் கூறுகிறது. இப்படியே அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக உருவானவையாக மாகதி, பைசாசி, சூலிகபைசாசி, மற்றும் ஆபப்ரம்ஸ ஆகியவை பற்றி கூறுகிறது. ஒன்றிலிருந்து அடுத்தடுத்து படிப்படியாக சுத்தம் குறைந்ததாகக் கூறப்படுகிறது; எல்லாவற்றையும்விட ஆபப்ரம்ஸம்தான் சம்ஸ்கிருதத்திலிருந்து மிகுதியும் வேறுபட்டது. கோல்புரூக் ஆபப்ரம்ஸத்தை முறையான இலக்கணமற்ற கொச்சை மொழி a jargon destitute of regular grammar என்று குறிப்பிட்டிருந்தார்; மாறாக லட்சுமீதரன் பின்வருமாறு கூறிவிட்டு அதற்கும் இலக்கண விதிகளை வகுக்கிறார்: ஆபப்ரம்ஸமொழி அபிர நாட்டிலும் பிறநாடுகளிலும் பேசப்படும் மொழியாகும்; அது கவிகள் பயன்படுத்தும் மொழியாகலின் அது எவ்வகையிலும் சிதைவுற்றதாகக் கருதத்தக்கதன்று அபப்ரம்சஸ்து பாஷா ஸ்யாத் அபிரா கிரஞ்சயகவி ப்ரயோகநெர் ஹெத்வாந் ந அபசப்தஸ் ஸ து க்வசித் மேற்சொன்னஸத்பாஷா சந்திரிகா இன்றுள்ள (சம்ஸ்கிருத) நாடகநூல்களில் காணப்படும் மேற்கண்ட வகைப் பிராகிருதங் களை மட்டுமே விளக்குவதால், அது விளக்குவதெல்லாம் சம்ஸ்கிருதத்திலிருந்து பெற்ற தத்சமங்களையும், தற்பவங்களையும் மட்டுமே. எனினும் பிராகிருதங்கள் ஒவ்வொன்றுமே சம்ஸ்கிருதத்திலிருந்து பெற்ற தத்சம, தத்பவசொற்களோடுகூட அந்தந்த பிராகிருதம் வழங்கிய நாட்டுக்கேயுரிய தேசிய Desyam சொற்களையும் கொண்டிருந்தனவென்பதையும் தெளிவாகக் கூறுகிறது. ஒன்றுக்கொன்று தொலைவிலிருந்த “பிராகிருத” நாடுகளின் “தேசிய” மொழிகள் ஒன்றுக் கொன்று வேறுபட்டமையால் தத்சம, தத்பவச் சொற்களோடு தத்தம் தேசியச் சொற்களையும் கலந்து அந்தந்த தேசங்களில் உருவாகிய பேச்சுமொழிகள். ஒன்றுக்கொன்று பெருமளவுக்கு வேறுபட்டன என்றும் கூறுகிறது. பைசாசியைப் பொறுத்த வரை இந்த நிலைமை பின்வருமாறு மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. “இந்தியாவின் தென்கோடியிலுள்ள பாண்டிய, கேகய, சூலிக, தேசங்கள் மற்றும் சஹ்ய (சயாம்) நேபாள, குந்தள, சுதேச, போத, காந்தார (வடக்கில்) கனோஜ (கனோஜன) ஆகிய நாடுகளிலும் இருவகைப் பைசாசி மொழிகளும் வழங்கி வருகின்றன; இவையெல்லாம் பைசாச தேசங்கள்; அந்தந்த தேசத்தின் பைசாச மொழியில் உள்ள தேசியச் சொற்கள் குறிப்பிட்ட தேச மொழியின் தன்மைக்கேற்ப அமைந்துள்ளன. “ஆந்திர (அல்லது தெலுங்கு) மொழியின் தேசியச் சொற்கள் இருவகைப்படும்: முதல் வகை தெலிங்கான தேசத்திலேயே உருவானவை; இரண்டாவது அந்நிய தேசியம் அதாவது பிறநாடுகளில் உருவாகி (அந்தந்த பிராகிருதத்தின் ஒரு கூறாக) தெலுங்கில் புகுந்தவை. திரிலிங்க தேசத்தில் உருவான தேசியச் சொற்கள் “தெலுங்கு மொழியில் எவ்வெவை தேசியச் சொற்கள் என்று சொல்லுமுன்னர் திரிலிங்க தேசத்தின் எல்லைகளைக் கூறும் அதரவன வியாகரணத்தின் பின்வரும் பாடல்களைக் காண்க. [எல்லிஸ் அந்தப் பாடல்களைத் தாம் அச்சிடவில்லை என்று குறிப்பிட்டுவிட்டுத் தொடர்கிறார்]திரிலிங்க தேசத்தின் எல்லைகளைப் பின் வருமாறு அவ்வியாகரண ஆசிரியர் வரையறுக்கிறார்: ‘சிரீசைலம், திராட்சாராமத்தில் பீமேஸ்வர nக்ஷத்ரம், மஹா காளேஸ்வரம், நாலாவதாக மஹேந்திரமலை ஆகியவற்றுக்கிடையே மூன்று லிங்கங்கள் இருந்தன. திரிலிங்க தேசம் என வழங்கப்பட்ட இந்த தேசத்தில் உருவான மொழியையே இங்கு குறிப்பிடுகிறோம். அதுவே அச்ச தெலுகு. அப்பகாவியப் பாடல் இதைப் பின்வருமாறு கூறுகிறது. “ஆந்திர பிரதேச பூர்வ குடிகளான சகல ஜாதியினரிடையேயும் வழங்கி வரும் தெளிவானவையும் (தோற்றம் குறித்த) ஐயத்திற்கிடமில்லாதவையுமான சொற்கள் எல்லாம் சுத்த ஆந்திர தேசியச் சொற்கள் ஆகும். அவற்றுக்கு எடுத்துக் காட்டுகள் வருமாறு:- பாலு பால் பெ ருகு தயிர் நெய் நெய் ரோலு உரல் ரோகலி உலக்கை உட்டி உறி புடமி பூமி படதுக பெண் பசிடி பைண்டி தங்கம் பங்காரு தங்கம் கொடுக்கு மகன் கோடலு மருமகள் தல தலை நெல நிலா, மாதம் வேசவி/வேசங்கி வேனில் குடி (gudi) கோயில் மடி வயல் புலி புலி சளி சளி மடுகு குளம், ஏரி ஊரு ஊர் மகவண்டு மனிதன் ஆண்டதி பெண் அலுகா அலப்புதல், நோதல் பிற நாடுகளிலிருந்து தெலுங்கில் நுழைந்த சொற்களைப் பற்றி அப்பா காவீயப் பாடல் கூறுவது: “ஓ கேசவா! ஆந்திர தேசத்தவர் பிற தேசங்களில் வசித்து அந்த தேசச் சொற்களையும் தெலுங்குடன் கலந்து புழங்கியதால் இவை தெலுங்கில் ஏறிய ‘அந்நிய தேசச் சொற்கள்’ ஆயின. “ஆந்திரம், அதாவது திரிலிங்கத்தைச் சார்ந்த மக்கள், ஆப்பகவி சொல்வது போல, பிற தேசங்களில் வசித்து அந்தந்த தேசச் சொற்களையும் தெலுங்கில் சேர்த்துக் கொண்டனர். அத்தகைய அந்நிய தேஸ்யச் சொற்களில் சிலவற்றைக் காண்போம். (i) சுத்த தெலுங்கிற்கு உரிய 30 எழுத்துக்களில் அடங்காத ஹ (aspirate) மெய்யொலியைக் கொண்ட சொற்கள்: bhale பலே an eulogistic exclamation; அவதாரு /( avadharu) an exclamation of entreaty; தாவு (thavu) a place - station, தாக (dhaca) a haughty, high spirited man;; [ இவற்றின் வேர்கள் தெளிவாகத் தெரியவில்லை.] (ii) சொல் இறுதியில் நெடில் உயிர் உள்ள சொற்கள்: அணா the sixteenth of a rupee, நவலா an excellent woman,, கொடீ a flag; ஜிரா armour[இவற்றில் சில இந்துஸ்தானிச் சொற்கள்; ஏனையவற்றில் கடைசி உயிர் தற்செயலாக நெடிலாக்கப்பட்டுள்ளது ] கோடியும் கொடியும் ஒன்றுதான். நவலா என்பது சம்ஸ்கிருத நவ (=புதிய) அல்லது தமிழ் நவம் (= affection) லிருந்து உருவாகியிருக்கலாம். (iii) கடைசியாக கலநு (= battle) தொய்யலி (= a woman) மேநு (= the body) உள்ளமு ( = athe mind) ஆகிய கடினமான சொற்கள் அந்நிய தேசச் சொற்களாகத் தவறாகக் கருதப்பட்டன. இவைபோன்ற சொற்கள் தென்னிந்திய மொழிகளுக்குப் பொதுவானவை: தமிழ் : கல - to join - கல் - கலநு ( கல தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்றுக்கும் பொதுவான வேர்.) தமிழ் : தை - to beautify - தையல் - தொய்யலி தமிழ்: மேல்- upward / outward - மேனி - மேநு தமிழ்: உள் inward / mind [உள்ளம் ] - உள்ளமு கிராமிய மக்கள், பாமரர் வழக்குச் சொற்கள் இவை, பொதுவான இலக்கண விதிகளுக்கு அடங்காதவை; அறியாமை காரணமாகப் புதிய எழுத்துக் களைப் புகுத்திய, அல்லது பழைய எழுத்துக்களை நீக்கிய கிராமியச் சொற்களே. அவை சிதைந்த சொற்கள்.அப்பகாவியப் பாடல் அவற்றைப் பின்வருமாறுவிளக்குகிறது: “கிராமத்து மக்கள் பொதுவாக வழங்கும் தெனுகுச் சொற்கள் கிராம்யச் சொற்கள் எனப்படுகின்றன. இவற்றில் சில எழுத்துக்கள் நீக்கப்படுகின்றன. இச்சொற்களை செய்யுளில் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை – வசை கூறும் பொழுது நீக்க முடிவதில்லையாகையால் வசைச் சொற்களில் மட்டும் அவை பயன்படுத்தப்படுகின்றன. “வஸ்தாடு ஹரி சோமுலு தெஸ்தாடா கொல்லதண்டி திட்டக கருணன் சூஸ்தாடா கௌங்கிலி நிட் இஸ்தாடா சேபமநந்ந இவி கிராம்யோக்தல்” (வத்ஸூந்நாண்டா - வஸ்தாடா; தெல்சுச்சுநாண்டா - தெஸ்தாடா சூத்சுத்சுந்நாண்டா - சூஸ்தாடா இச்சுச்சுந்நாண்டா - இஸ்தாடா செப்புமு - செப்பமு) மேலே கண்டவற்றில் மாமிடி வெங்கையா (தமக்கு முந்தைய இலக்கணக்காரர் ஆதாரங்களையும் சுட்டி) சொல்வது என்ன? சம்ஸ்கிருதத்திலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தெலுங்கு பெற்றுள்ள சொற்களையும், ஏனைய அயல்மொழிகளிடமிருந்து கடன் பெற்றுள்ள சொற்களையும் நீக்கி விட்டால் மீதி இருக்கும் சொற்கள் தேசத்தின் சுத்தமான தேசியச் சொற்களாம் என்பதே அது. தெலுங்குச் சொற்களில் பெரும்பாலானவை இத்தகைய சுத்த தெலுங்குச் சொற்களே. இவற்றைக் கொண்டே எந்தக் கருத்தையும் விளக்கலாம்; உடலின் செயல் எதனையும் விவரிக்கலாம்; எந்த உறவையும், பொருளையும் குறிப்பிடலாம் -- மதம் சார்ந்த சில சொற்களையும், சில தொழில் நுட்பச் சொற்களையும் தவிர, சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்த வேறு எந்தச் சொற்களும் தெலுங்கு மொழிககு இன்றியமையாதவை அல்ல. இப்படிப்பட்ட “தூய தென்னாட்டு மொழி” தெலுங்கு , தமிழ், கன்னடம் போன்ற தென்னாட்டு மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதாகும் - மேம்போக்கான சில வேறுபாடுகளுக்கும் சொல் ஈறு மாற்றங்களுக்கும் உட்பட்டு ஆப்பகாவிய த்திலிருந்து எடுத்து மாமிடி வெங்கய்யா சேர்த்துள்ள தெலுங்கு தேஸ்யச் சொற்களை அதே பொருள் களுக்குரிய தமிழ், கன்னடச் சொற்களோடு ஒப்பிட்டு இதனை நிலைநாட்டலாம். இம்மூன்று மொழிகளுமே பொதுவான வேர்ச்சொற்களைக் (சிலவற்றில் மட்டும் சிறு சிறு மாற்றங்கள்) கொண்டவை என்பது மேலே நிறுவப்பட்டது; இம் மும்மொழிகளின் பொதுவழக்கு தேசியச் சொற்களும் ஒன்று போலவே இருப்பதைக் காண்போம். பின்வருவன மட்டுமன்றி இம்மூன்று மொழிகளுக்கும் பொதுவான போலுள்ள ஏராளமான சொற்களை எடுத்துக் காட்டுகளாகத் தந்திருக்கலாம்; எனினும் தெலுங்கில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுவதும் சம்ஸ்கிருதத்தின்பால் அல்லது தேசிய மொழிகளின்பால் பாரபட்சம் காட்டுவதாகக்குறை கூறவொண்ணாததும் ஆன வெங்கய்யா நூலில் உள்ள பின்வருவன மட்டுமே தரப்படு கின்றன. அவர் சம்ஸ்கிருத வல்லுநர் எனினும் தெலுங்கைத் தவிரத் தென்னிந்திய மொழி வேறு எதனையும் அறிந்தவர் அல்ல. தெலுங்கு கன்னடம் தமிழ் பாலுMilk ஹாலு பால் தமிழ்/தெலுங்குச் சொல்லில் பகர முதல கன்னடத்தில் ஹ ஆக மாறும். த.பள்ளி; தெ.பள்ளி; க. ஹள்ளி Small Village ஆயினும் பழங் கன்னடத்தில் பகர முதலே மாறாமல் இருந்தது. பெருகு curdled milk பெருகு நெய் கன்னடத்தில் “நெய்” பால், நெய் clarified butter என்னும் சொல் தனியாக இவை தமிழில் வழங்குவதில்லை. புலமை வழக்கிலும் பெண்ணெ (-வெள் நெய்) = பாமரர் வழக்கிலும் White ghee - better உள்ளன; பெருகு என்பதில் உள்ளது. புலமை வழக்கில மட்டுமே உள்ளது) ரோலு a mortar ஒரலு உரல் (பு.த.) ரோங்கலி a pestle ஒணகே உரங்கலி (பு.த.) (தெலுங்குச் சொல்லில் முதல் ஒலி நீங்கியது. பிற. எடுத்துக்காட்டுகள் த.இரா - தெ.ரா. பி. இராமநாதன்  113  த. இரண்டு two தெ. ரெண்டு த. அவன் that man தெ. வாண்டு த. இவன் this man தெ. வீண்டு உட்டி a long இச்சொலலைக் உறி. தமிழ் ‘ற்ற’ என்பது net for holding கன்னடத்திலும் ட்ட எனப் பலுக்கப் pots or other பயன்படுத்தலாம். படுகிறது. தெலுங்கில் household utensils ஆனால் “நெலு”வே இவ்வொலி ட்ட எனப் அதைவிடச் சிறந்தது பலுக்கப்படுகிறது. எனக் கருதப்படுகிறது. புடமி the earth பொடவி புடவி (புலமைத் தமிழ்) படத்துக்கா a woman. இது கூட்டுச் சொல் போலும். இதில் அடங்கிய தனிச் சொற்களைப் பிரித்து அறிவது கடினம். பஸிடி/பைண்டி பசரு , ஹஸரு பசுப்பு golden colour) gold தெலுங்குச் சொல்லுக்கும் பசுமை - பசுப்பு. பசுமை இதற்கும் மூலம் ஒன்றே. Green colour என்பது கன்னடத்தில் பொருள் அழகு, தூய்மை “பச்சை நிறம்” மட்டுமே. beauty purity யையும் குறிக்கும் பசுமை உரிச் சொல்லாக வரும் பொழுது சுருங்கி பசும்பொன் - பைம் பொன் pure gold என வரும். பங்காரு gold பங்காரு பங்காரு (பாமரர் வழக்கு) கொடுக்கு a son குழந்தை /குழவி (பு.த.) கோடலு a daughter கொழந்தை (பா.த) a in law child of either sex தெலுங்குச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் ஒன்றே. வழக்கம் போல தமிழ் ழ தெலுங்கில் ட ஆக மாறியதுடன் உகர ஈறும் சேர்ந்துள்ளது. தல the head தலெ தமிழில் ஐயில் முடியும் சொற்கள் தெலுங்கில் அ என்று முடிகின்றன. நெல the moon, a month நிலவு, the moon வே சவி/வேசங்கி, பே(b) சகி இது தமிழில் sultry weather, the (வழக்கம்போல் பெயர்ச்சொல் ஆக hot season வகரம் பகரமாகியது) இல்லை. எனினும், “வேசவி காலம்” போன்ற சொற்றொடர்களில் வருகிறது;வே=வெப்பம்; சவி=ஒளி. குடி (gudi) குடி குடி,Gudi தமிழில் a temple இது எந்த வகைக் குடியிருப்பையும் சுட்டுகிறது.“திரு....குடி;” “தேவர் குடி” என்னும் பொழுது கோவிலைக் குறிக்கிறது. தெலுங்கில் கோவிலை “தேவர் குடி” என்றும் கூறலாம். “குடி’ என்றும் கூறலாம். மடி a field மடி மடி a field என்ற காய்கறிச் செடிகள் வளரும் அர்த்தத்திலும் பயன் பாத்தியைக் குறிக்கிறது.; மடு = to divide into உப்பளப் பாத்தியையும் கூட. sections என்னும் வேரிலிருந்து இது உருவாகியதால் ‘மடி’ தமிழில் “பிரிவு” section ஐக் குறிக்கிறது. புலி a tiger ஹூலி புலி சளி a cold சளி [ தமிழிலும் சளி தான் ஆனால் எல்லிஸ் குறித்திலர்.] மடுகு a natural pool or மடுகு மடு lake ஊரு, avillage ஊரு ஊர் மகவண்டு, a man மகநு மகன் தமிழ் அன் (மூவிட (தமிழில் உள்ள முதற்கண்:- மனிதன்; ஆண்பால் ஒருமை இரண்டாவது அர்த்தம் மாந்த இனத்தில் ஆண். சுட்டுவது) என்பது மட்டும்) ஆண்மகவு மகன். இரண்டாவதாக தெலுங்கில் வாண்டு ஆண்மகவு, ஆகியது. வெறும் மகன். “மக” = எந்த உயிரி வகையிலும் ஆணைச் சுட்டும் ;மகடு = கணவன். (ஆண்பால்) ஆண்டதி - பெண் - ஆடவள் (ஈறு மட்டும் மாறுகிறது. தெலுங்குச் சொல்லைப் பலுக்கும் பொழுது ண் தெளிவாகப் பலுக்கப் படுவதில்லை.) அலுக்கா vexation அலப்பு (ஈற்றில் displeasure - மட்டுமே மாற்றம்) தெலுங்கு மொழியில் அடங்கிய சொற்களின் தன்மைகளை மேலே பார்த்தோம். அச்சொற்களைப் அவற்றின் பிறப்புஅடிப்படையில் பின்வருமாறு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1) தேஸ்யம் / அச்ச தெலுகு: இவை தூய தெலுங்குச் சொற்கள் தெலுங்குக்கு அடிப்படை இவையே. இவையும் இவையொத்த சொற்களும் தென்னிந்தியாவிலுள்ள பிற மொழிகளிலும் உள்ளன. 2) அந்ய தேஸ்யம் (பிற தேசங்களிலிருந்து கடன் பெற்றவை): இவையும் பெருமளவுக்கு, முதல் வகையைப் போன்றவையேயாம். 3) தத்சமம் ( தூய சமஸ்கிருதம்) : இவற்றின் சொல் ஈறுகளில் மட்டும் சம்ஸ்கிருதத்தை நீக்கித் தெலுங்கு ஈறுகளைச் சேர்த்துள்ளனர். 4) தத்பவம் (சம்ஸ்கிருதத்திலிருந்து கடன்): இவை சம்ஸ்கிருதத்திலிருந்து நேராகவோ, பிராகிருதங்கள் ஆறில் ஒன்று மூலமாகவோ கடன் பெற்றவை, இவையனைத்தும் அதிகமாகவோ குறைவாகவோ சிதைக்கப்பட்டவை. [ “கிராம்ய”ச் சொற்களை(கிராமம் (சம்ஸ) - ஊர்; அதாவது பாமரர் சொற்கள்) தனிப்பிரிவாகக் கூற இயலாது; அச்ச தெலுங்குச் சொற்கள் சுருக்கியோ அல்லது (இலக்கண முறைக்கு மாறான) ஒலிமாற்றம் செய்தோ வழங்கப்படுகின்றன. கிராமியச் சொற்களில் 1/2 பங்கு அச்ச தெலுங்கு; 1/10 பங்கு அந்ய தேஸ்யம்; 3/20 பங்கு தத்சமம்; 1/4 பங்கு தத்பவம்] தமிழ், கன்னட மொழிச் சொற்களின் அமைப்பும் தெலுங்கு போல்தான் உள்ளன; எனவே அம்மொழிகளின் இலக்கணவாசிரியர்களும் தெலுங்கைப் போலவே சொற்களை நான்காகப் பகுக்கின்றனர். தமிழை விட தாராளமாக தெலுங்கும் கன்னடமும் தத்சமச் சொற்களை ஏற்கின்றன; அவ்விரு மொழிகளிலும் எழுதுபவர் தம்விருப்பத்திற்கேற்ப எத்தனை விழுக்காடு வேண்டுமானாலும் சம்ஸ்கிருதச் சொற்களைத் தத்சமமாகப் பயன்படுத்தலாம். ஆனால் தமிழில் புலமை நடையைப் பொறுத்தவரை நிகண்டுகளில் காண்பனவும் தமிழ்ப் பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கியவையும் ஆன தத்சமச் சொற்களை மட்டுமே பயன்படுத்தலாம் என்ற வரன்முறை உண்டு. தமிழ் சாதாரண வழக்கில் இத்தகைய வரம்பேதுமின்றி சம்ஸ்கிருதச் தத்சமச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர் - பிராமணர் பெரும் அளவிலும், சூத்திரர் சற்று குறைவாகவும். தத்பவச் சொற்களைப் பொறுத்தவரை ஏனைய மொழிகளை விட கன்னடம் சற்று அதிகமாகவும், தமிழ் சற்று குறைவாகவும் இச்சொற்களைப் பயன்படுத்துகின்றன. தமிழைப் பொறுத்தவரையில் சம்ஸ்கிருதச் சொற்கள் ஈற்றெழுத்துக்களில் மாற்றமடைவதோடு நின்றுவிடாமல் வேறுபல மாற்றங்களையும் அடைகின்றன. தமிழ் அரிச்சுவடியில் கனைப்பொலிஹ ஏறிய மெய் இல்லை; சம்ஸ்கிருத வர்க்க எழுத்துக்களின் முதல் மற்றும் மூன்றாவது மெய்களைக் குறிக்க ஒரே எழுத்தே தமிழில் பயன்படுகிறது; மெய்கள் தாமே இரட்டும் பொழுதும் ங் க என்பது போல வல்லினத்தின் இனமான மெல்லினம் மட்டும் சேர்ந்து வரும் பொழுதும் தவிர (க்த; ட்ச;போல) பிற மெய்கள் சேர்ந்து வர இயலாது. ஆகவேதான் மிகச் சில சம்ஸ்கிருதச் சொற்கள் மட்டுமே மாற்றமின்றித் தத்சமம் ஆகத் தமிழில் நுழைய முடியும்; ஏனையவை தமிழ் அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி உரிய ஒலி மாற்றங்களுடன் தான் தமிழில் நுழைய இயலும்; என்றாலும் அவ்வாறு மாறிய வடிவங்களையும் தத்சமம் என்றே சுட்டுகின்றனர். பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளைத் தவிர வேறு இனமொழிகளைப் பொறுத்த வரையில் வேர்களும் சொற் களும் ஒன்று போலவே இருப்பினும் மரபு வழக்குப் பொருள் ‘பல நேர்வுகளில் முற்றிலும் வேறுபட்டு இருக்கும். எந்த அளவுக்கு என்றால் - இன மொழிகள் இரண்டில் ஒரே மாதிரி உள்ள சொற்களுக்கு ஒரு மொழியில் உள்ள அர்த்தம்தான் மற்றதிலும் இருக்கும் எனக் கருதிட இயலாது. ஆனால், தென்னிந்திய மொழிகளிடையே நிலைமை அப்படி இல்லை; சொல் அடுக்குமுறை, இலக்கணக்கூறுகள், தொடரமைப்பு முதலியவற்றின் அடிப்படையில் மரபுவழக்கு idiom என்று குறிக்கப்படுவது அவற்றிடையே ஒப்புமையுடையதாக மட்டுமன்றி ஒன்றுபோலவே உள்ளது. இதை நிறுவிட (அதாவது தென்னிந்திய மொழிகள் தமக்குள் ஒற்றுமை யுடையவை, சம்ஸ்கிருதத்திலிருந்து மாறுபட்டவை என்பதைக் காட்ட டாக்டர் வில்கின்ஸ்-இன் சம்ஸ்கிருத இலக்கணத்தில் தொடரமைப்பு பற்றிய உதாரண வாக்கியங்களில் ஒன்றும் அதன் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி பெயர்ப்புகளும் கீழே தரப்படுகின்றன. அவற்றிலிருந்து நுண்மையான இலக்கணக் கூறுகளிலும், செயப்பாட்டு வினை ஈறுகள், காலங்காட்டும் ஈறுகள் போன்றவற்றிலும் இம்மூன்று மொழிகளிடையேயுள்ள இயைபு விளங்கும். சம்ஸ்கிருதம் 1 2 3 4 5 6 குமாரஸ் ஸேரதே ஸ்வைராந் ரோருயுந்தே ச நாரகாஹ் 7 8 9 10 11 ஜேகியந்தி ச கீதங்ஜ மேம்ரியந்தி ருஜாஜிதாஹ் ஆங்கில மொழிபெயர்ப்பு 1 2 3 5 6 6 The children sleep freely and the infernal beings 4 4 4 9 7 are continually crying The songsters are always singing, 8 11 11 11 11 10 10 10 and those overcome by disease are always dying தெலுங்கு 1 3 2 6 குமாருலு ஸ்வேச்சக நித்ரைத்ச்சுந் நாரு நரகமுலோந் 6 5 4 4 9 உண்டேதிவருந்நு மிக்கிலி அருஸ்துந் நாரு காயகலு 9 7 11 8 10 மிக்கிலி பாடுசுந்நாரு ரோகமுசேத கொட்டப்பட்டவருந்நு பஹூ 10 சேஸ்துந்நாரு கன்னடம் 1 3 2 6 4 குமாரெரு யதேச்சையாகி நித்ரிசுத்தாரே நரகதல்லி இருவருந்நு 4 4 9 7 7 ஹேரலா கூகுத்தாரே காயகரு அதிகவாகி ஹாடுத்தாரே 11 11 10 ரோகதிண்ட ஹொதையல்பட்டவருந்நு பஹல ஸயித்தாரே தமிழ் 1 2 3 4 2 குழந்தைகள் தம் மனதின் படிக்கு நித்திரைபண்ணுகிறார்கள் 6 6 5 4 4 நரகத்தில் உள்ளவர் களும் நில்லாமல் கூப்பிடுகிறார்கள் 9 7 7 11 பாடுவார் மிகவும் பாடுகிறார்கள் ரோகத்தினால் 11 8 10 10 ஒடுக்கப் பட்டவர்களும் குறையாமல் சாகிறார்கள் சம்ஸ்கிருத வாக்கிய அமைப்பு வருமாறு (எண்கள் எல்லா இடங்களிலும் சம்ஸ்கிருத வாசக எண்களைச் சுட்டுகின்றன) 1. பெயர்ச்சொல்: எழுவாய் வேற்றுமை, பன்மை [அதன் வினை =2] 2. ஸேரதே = he sleeps; படர்க்கைப் பன்மை நிகழ்கால வினைச்சொல் 3. பெயர்ச்சொல்: இரண்டாம் வேற்றுமை அலிப்பால் பெயரடையாகப் பயன்படுத்தப்பட்டது. ஸ்வ own + இரம் motion 4. ரௌதி he roars என்னும் சொல்லின் படர்க்கைப் பன்மை நிகழ்கால (அழுத்தந் தரும் வடிவம்) medial voice 5. இணைப்புச் சொல் 6. நரக உடன் தத்தித ஒட்டு ஆஹ் (7ஆம் வேற்றுமை (இடப் பொருள்) = being in a place சேர்ந்து வந்தது. 7. 4இல் உள்ளது போல: காயதி வடி ளiபே இலிருந்து 8. (=5) 9. கீத ளடிபே என்ற சொல் + (க்ஞானதீ = to know என்ற சொல்லில் இருந்து உருவான) gnyah (part past active கப்ரதேய) 10. 4இல் உள்ளது போல் ம்ருத்யதி to die இலிருந்து 11. ruja = நோய் (பெண்பால்) + jitah ஜயதி ( to conquer )- ஜிதாஹ் (Past Participle pasive) தெலுங்கு வாக்கிய அமைப்பு வருமாறு 1. (சம்ஸ்) பெயர்ச்சொல்; எழுவாய் வேற்றுமை பன்மை 3. ஸ்வச்சக (வினையடை) < (சம்ஸ்)ஸ்வ own + இச்சா desire; காவடமு to become என்பதில் உள்ள கா சந்தியில் ga என மாறியது. 2. (Sans) நித்ரா sleep - இதன் வினையெச்ச வடிவம் நித்ரைஞ்சுச்சு (படர்க்கை நிகழ்காலம்) + உந்நாரு (உண்டதமு = to be, exist) 6. (சம்ஸ்) ஏழாம் (இடப்பொருள்) வேற்றுமைப் பெயர்ச் சொல் 6. உண்டதமு  உண்டதி (aorist part) + படர்க்கைப் பதிலிப் பெயர் வாடு (அவன்) 5. இணைப்புச் சொல் 4. அடுத்து வரும் வினைச் சொல்லுக்கு வினையடை 4. தெலுங்கு வினை அரவடமு to roar அருச்சுந்நாரு (2ஐப் போன்று அமைந்தது) 9. காயகுலு (1.குமாரலு போன்று) 7. வினையடை adverb தெலுங்கு வினை பாடதமு to sing - பாடுச்சுந்நாரு (2ஐப் போல) 11. சம்ஸ் பெயர்ச்சொல், மூன்றாம் (கருவிப்பொருள்) வேற்றுமை 11. தெ கொட்டதமு - infinitive கொட்ட to beat; (பட்டதமு to suffer - பட்ட இறந்த காலப் பெயரெச்சம் சந்தி காரணமாக badda செயப்பாட்டு வினையாக ஆகியது. வாடுவின் பன்மை வாரு. 8. 5ஐப் போன்றது 10 (சம்ஸ்) வினையடை 10. சாவடமு to die - என்பதிலிருந்து; 2 போன்றது கன்னட வடிவம் அசல் தெலுங்கு வடிவத்தைப் போலவே உள்ளது - கூட்டுச் சொற்கள் சில தவிர. 3. சம்ஸ் வினையடை யதா as + இச்ச 2, 4,7,10 இவ்வினைகள் கூட்டுச் சொற்கள் அல்ல 6 நரகம் - நரகத (உடைமைப் பொருள்) அல்லி place ஏழாம் வேற்றுமை உருபாகச் சேர்ந்தது 7. கூட்டுச் சொல் (சம்ஸ்) அதிக excessive ( Crude noun) + (ஆகுவது to become  ) ஆகி இறந்தகால வினையெச்சம் gerund 11. (தொழிற்பெயர்) ஹொடையல் வாந the beating [தெலுங்கிலோ எச்சப்பொருள் infinitive வினை வந்துள்ளது] தமிழ் வாசக அமைப்பு வருமாறு: 1. பெயர்ச் சொல் - எழுவாய் பன்மை – தெலுங்கிற் போல் 2. தமிழ்ப் பதிலிப் பெயர் தன் himself – உடைமைப் பொருள் பன்மை தம் (தெலுங்கு 3 போல) 3. (சம்ஸ்) மனஸ் mind, will - மனது – மனதின் (genitive உடைமைப் பொருள்) 3. படி a measure - படிக்கு according to என (முன்னுருபு preposition போல) வந்தது. 4. (சம்ஸ்) நித்ரா – nidra - நித்திரை + (பண்ணுதல் to make) பண்ணுகிறார்கள். சம்ஸ்கிருத வினைச்சொல் நெடிலில் முடியும்பொழுது அதை அப்படியே தெலுங்கு வினையாகக் கொள்ளும். தமிழ் அவ்வாறு கொள்ளாது. 6. தமிழ் குறைவினை defective verb நரகத்தில் (தெலுங்கு போன்றதே)( உள்  (to be, have)  உள்ள (பெயரெச்சம் indefinite participle) ; அவன் hந (=that man) 5. உம் (தெலுங் கில் போலவே) இணைப்புச் சொல் 4. நில்லுதல் to stand , stay - நில்லாமல் எதிர்மறை வினையடை negative participle 4. நில்லாமல், 7 மிகவும், 10 குறையாமல் : இவை மூன்றும் (கன்னடத்தில் போல) தனி வினைச் சொற்கள். தெலுங்கில் போல் compound அல்ல. 9. பாடுதல் to sing - பாடுவார் (வினையாலணையும் பெயர் attributive noun) 7. (மிகுதல் to increase )  மிக (எச்சப்பொருள் infinitive) + உம் வினையடையாக ஆயிற்று. 7. =(க) அதிகவாகி 11. =(தெ) ரோகமுசேத 11. = (ஒடுக்குதல் to oppress  ஒடுக்க (எச்சப் பொருள்) + பட்ட (தெ., க. மொழிகளிற் போலவே) 10. குறைதல் to lessen - குறையாமல் (எதிர்மறை negative participle) 10. சாகிறார்கள் = (க) சாயித்தாரே மேற்சொன்ன உதாரண வாக்கியத்தில் தென்னிந்திய மொழிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது சம்ஸ்கிருதம். அடுத்து வரும் வாக்கியத்தில் (வேற்றுமையை உணர்த்துவதில் தவிர) அப்படிப்பட்ட பெரும் வேறுபாடுகள் இல்லை. சம்ஸ்கிருதம் 1 2 3 4 5 6 சமயமாய ஸ்ருதம் தத்தே நரோ தர்மாய சமயமம் 7 8 9 10 11 12 தர்மம் மோக்ஷாய மேதாவி தநம் தநாய புக்தயே ஆங்கிலம் மொழிபெயர்ப்பு 9 4 3 2 2 1 A wise man keepeth the divinelaw for constraint, 6 5 7 8 Constraint for religion(and)religion for salvation; 10 11 12 wealth for donation(and)for enjoyment. தெலுங்கு 9 4 1 2 மேதாவியாய்ன நருடு சம்யமாமுகொரகு ஸ்ருதமுநு 5 6 8 7 தர்மம்புகோரகு சமயமாமுநு மோக்ஷம்புகோரகு தர்மமுநு 11 12 10 3 தானமுகொரகுநு புக்திகொரகுநு தனமுந்நு தரிஸ்சுச்சுந்நடு கன்னடம் 9 4 1 3 மேதாவியாத மனுஷ்யநு சமியமகோஸ்கர ஸ்ருதவந்நு 5 6 8 7 தர்மக்கோஸ்கர சமயமவந்நு மோக்ஷகோஸ்கர தர்மவந்ந 11 12 10 3 தாகோஸ்காரவாகியு புக்திகோஸ்கரவாகியு தனவந்நு தரிசுசுத்தானே த மி ழ் 9 4 1 2 5 அறிவுள்ள மனிதன் அடக்கத்துக்காக வேதத்தையும், தர்மத்துக்காக 6 8 7 11 அடக்கத்தையும் முத்திக்காக தருமத்தையும் தானத்துக்காகவும் 11 10 3 போகத்துக்காகவும் தனத்தையுங் காக்கிறான். சம்ஸ்கிருத வாக்கிய அமைப்பு 1. சம்யமாய: 4வது (கொடை) வேற்றுமையில் பெயர்ச்சொல் (எழுவாய்; அலிப்பால்) 2. ஸ்ருதம்; 2வது (செயப்படுபொருள்) வேற்றுமையில் பெயர்ச்சொல் (என்ன செய்யப்படுகிறது என்பதை அடுத்து வரும் வினை காட்டும்) 3. இவ்வாக்கியத்தில் உள்ள அனைத்துச் செயல்படு பொருள்களும் என்ன வினைக்கு ஆளாகின்றன என்பதைச் சுட்டும் வினை.(படர்க்கை ஒருமை, நிகழ்காலம், Medial voice) 4. நரோ: பெயர்ச்சொல் எழுவாய், ஆண்பால், முதல் வேற்றுமை 5,6,7,8 : இவற்றில் 5-6 இரண்டும் 1-2 போல அமைந்தவை. 7-8 இரண்டும் கூட 1-2 போல அமைந்தவையே. 9. பண்புப்பெயர்; இதுவே பெயராயிருப்பினும் “நர” வுக்கு பெயரடைபோல வருகிறது. 10. தானம் - 2 (ஸ்ருதம்) போன்றது 11,12 : 1-2 போன்றது. தெலுங்கு வாக்கிய அமைப்பு 9. (காவடமு = to become) aina (Past participle) சம்ஸ்கிருத மேதாவியின் இறுதியில் சேர்த்து பெயரடை போல் பயன்படும் கூட்டுச்சொல் ஒன்று உருவாக்கப்பட்டது. 4. (சம்ஸ்) நரோ + (தெ) உடு = நரடு: சம்ஸ்கிருதம் 4 போன்றதே. 1. சம்யமாமுகொரகு: சம்ஸ்கிருதம் 1 போன்றதே. சம்ஸ்கிருதத்தில் வேற்றுமை, எண், பால், இவற்றுக்காக பெயர்சொல் உருமாற்றம் declension அடையும். தெலுங்கில் இம்முறை இல்லை. ஆறாம் வேற்றுமை உருபு கு, -உடன் ஒத்த ஒருகு (=for the sake of) சேர்த்து தானமு கொருகு (=தானமுகோசரம்) என்று ஆகிறது. 2. சம்ஸ்கிருதத்தில் போல் 5,6,8,7,11,12 சம்ஸ் போல்தான் - ஆனால் தெலுங்கு ஈறுகளுடனும் ஒட்டுகளுடனும் . 11,12 இரண்டையும் இணைக்க ஒவ்வொன்றின் இறுதியிலும் நு யனே என்னும் இணைப்புச் சொல் வருகிறது. 10. சம்ஸ், போல்தான் - அடுத்துவரும் சொல் னாய வில் தொடங்குவதால் druttam( nunnation)பெற்றுள்ளது. 3. தரிஞ்சிச்சுந்நாடு= (சம்ஸ்dharintsadamu to dress - assume என்னும் சொல்லின் தெலுங்கு வடிவம்; படர்க்கை ஒருமை நிகழ்காலம். குறிப்பு: நான்காம் வேற்றுமையான ‘கு’ பிறனுக்காக’ என்ற பொருளில் வரும்பொழுது compound dative எனப்படும். இது ஆங்கிலத்தில் for என்ற முன்னொட்டு பெற்று for x (பெயர்) என்றவாறு வரும். சம்ஸ்கிருதத்தில் இதை தாதர்த்ய சதுர்த்தி என்பர். த, தெ, க மொழிகளில் கு வுடன், இப்பொருள் தரும் சில பின்ஒட்டுகள் சேர்க்கப்படுகின்றன:- ஆ = be, become ஆய், ஆகி (வினையெச்சங்கள்); ஆக ‘செய்’ என்னும் எச்ச வடிவம். தெலுங்கு: ஆய், ( to join, obtain ஒருகு, ஓசரம் )= a side, inclination, bias). ஒரை ( = to join obtain) - ஒருகு) பின் இரண்டும் ஆங்கில sake -ன் பொருளில்தான் வருகின்றன. அதுவும் இந்த வேற்றுமைக்கு மட்டுமே. இன்னாருக்காக (for the sake of) என்ற சொற்றொடரையும் இக்காரியத்துக்கு நன்கு பயன்படுத்தலாம். கன்னடம்: ஆகி, ஓஸ்கரம் தமிழ்: ஆகி, ஓசரம் கன்னட வாசக அமைப்பு இது தெலுங்கைப் போன்றே உள்ளது. நான்காம் வேற்றுமை கு வுடன் ஓஸ்கர கடிச வாந ளயமந டிக சேர்க்கப்படுகிறது. 11, 12 ஆகுவது வடி நெஉடிஅந  ஆகி (இறந்தகால வினையெச்சம் பநசரனே ) என்பது இவ்விரண்டின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இணைப்பிடைச் சொல் நு என்பது யு என மாறியுள்ளது - அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்திற்கேற்ப. தமிழ் வடிவ அமைப்பு 9. அறிவு, knowledge + (உள் to have) உள்ள 4. சம்ஸ்கிருதம் போன்ற அமைப்பு 1. அடக்கத்துக்காக: ஆதல் to become- ஆக (செய வெனெச்சம்) நான்கன் உருபு கு + ஆக ; (இவற்றைத் தவிர தெலுங்கு வாக்கியத்துக்கும் தமிழ் வாக்கியத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை) பின்வரும் சிறு வாக்கியத்திலும் அதைப் போன்றவற்றிலும் தென்னிந்திய மொழிகளைப் போலவே சம்ஸ்கிருதமும் அமைவதைக் காண்க:- சம்ஸ்கிருதம் 1 2 3 4 தஸ்ய பஹூ தனம் எஸ்தி லத்தீன் இல்லி மல்தா ரெஸ் எஸ்த் தெலுங்கு வாணிகி பகு தனம் உந்நதி கன்னடம் அவங்கெ ஹேரள தன விதே தமிழ் அவனுக்கு மிக்க பொருள் உண்டு [ஆங்கிலம்; He possesses, or hath much wealth] பின்வருவன போன்றவற்றில், அதாவது (i) ஸதி ஸப்தமி லத்தீனில் ablative case absolute (ஐந்தாம் வேற்றுமை நீங்கற் பொருள்) (ii) இணைப்பிடப் பெயர் relative pronoun வருமிடம் ஆகிய நேர்வுகளில் தென்மொழிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்புள்ளது சம்ஸ்கிருதம். தென் மொழிகளில் இணைப்பிடப் பெயர் இல்லை; எனினும் அதற்குப் பதிலாக வினா வடிவைப் பயன்படுத்தலாம் - பின்வரும் எடுத்துக்காட்டுகளில் உள்ளது போன்று. சம்ஸ்கிருதம் 2 1 3 4 5 6 7 யஸ் ஸ சர்வேஷூ பூதேஷூ நாஸ்யேச்சு ந வியாஸ்யதி ஆங்கிலம் 1 3 5 7 6 7 He who upon all things perishing does not perish லத்தீன் 2 2 3 3 5 7 ille qui omnibus entibus periuntibus non perit தெலுங்கு 1 4 5 1 6 7 2 சமஸ்த்மாய்ந பூதமுலு நசிஞ்சுசுநதாக யெவடு ந ஸிஞ்சாதோ? வாண்டு கன்னடம் 1 2 1 2 சமஸ்த பூதங்களு நாஸிஸுத்திரல் ஆகி யாவேநுநஸிசேனோ? ஆவேநு த மி ழ் 1 3 4 5 5 1 பூதங்கள் எல்லாமும் நாசம் அடையும் பொழுதில் நாசமடையான் எவனோ? அவனே சம்ஸ்கிருத வாக்கியத்தில் 3-4, 5 ஆகியவை ஏழாம் வேற்றுமை (இட வேற்றுமை) வடிவில் உள்ளன; எனினும் நீங்கல் (ablative absolute) வேற்றுமைப் பொருளில் வருகின்றன. தெலுங்கு ‘நஸிஞ்சதமு என்னும் வினையின் நிகழ்காவ வினையெச்சம் + உண்டாதமு to be இன் ‘செய’ வென் எச்ச வடிவும் + காவதமு வடி to become ன் வினையெச்ச வடிவம் வந்துள்ளன. இச் சொற்களின் தனித்தனிப் பொருளை மட்டும் பார்த்தால் (literally) = the destroying becoming to be கன்னடமும் தெலுங்கு போல்தான் உள்ளது. ஒரே மாற்றம்: நசிதலைத் குறிக்கும் தொழிற்பெயர் வருகிறது. தமிழ்: நாசம் destruction (சம்ஸ்) + (அடைதல் to ob tain- arrive+ வினைச் சொல்லின் எதிர்கால வடிவம் ஆகிய அடையும் + (“பொழுது” time இன் ஏழாம் வேற்றுமை ஏறிய வடிவம்) பொழுதில் ஸசொற்களின் தனித் தனிப் பொருளில் in the time in which (when) destruction shall have reached] தென்மொழிகள் மூன்றிலுமே சம்ஸ் யஸ் ஸ வுக்குப் பதிலாக வினாப் (பதிலிப்) பெயர் யாவது + ஓ (ஐயம் தொனிக்கும் வினா ஒட்டு) ஸசில நேர்வுகளில் இந்த ஓ வினைச் சொல்லிறுதியில் சேர்க்கப்படும்.] வருகிறது. அடுத்து எந்தச் சொல்லைப் பற்றி ஐயம் அல்லது வினா எழுப்பப்பட்டுள்ளதோ அந்தச் சொல் வருகிறது. ஆகwho may it be that he is not destroyed? என்றவாறு வாக்கியம் அமைகிறது. இணைப்பிடப் பெயர்கள் வரும்பொழுது சம்ஸ்கிருதத்தில் முன்னொட்டாக வரும் சொல்லை பின்னொட்டாக அமைத்தும் (இன்னும் நயமாக) மொழி மாற்றம் செய்யலாம். தெலுங்கில் இதனை 3 4 5 1-2-6 சமஸ்தாமாய்ன பூதமௌலு நஸிஞ்சுந்நதாக நசி ஞசனி வாண்டு என்றும் மொழி பெயர்க்கலாம். ( நஸிந்தமு X நஸிஞ்சநி negative) ; நஸிந்சதமு + வாண்டு = நஸிஞ்சநிவாண்டு.) இத்தென்மொழிகள் ஒவ்வொன்றிலும் சம்ஸ்கிருத வாடைமிக்க நடையும் உண்டு; அந்த வாடை குறைந்த நடையும் உண்டு. இதுவரை மேலே கண்ட மொழிபெயர்ப்புகள் எல்லாம் முந்தைய நடையில் செய்யப்பட்டன- புழக்கத்திலுள்ள சம்ஸ்கிருதச் சொற்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன. ‘மகா கடின சம்ஸ்கிருதம்’ எனப் பிறர் குறை கூற இயலாத நேர்வுகளில் மூலத்திலுள்ள அதே சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்து வரஇருக்கும் சம்ஸ்கிருத வாக்கியத்தை மூன்று தென் மொழிகளிலும் அந்தந்த மொழிக்குரிய இயல்பான தென் சொற்களையே பயன்படுத்திச் செய்த மொழி பெயர்ப்புகளைக் காண்க:- சமஸ்கிருதம் 1 2 3 4 5 6 ததாது ஸத்பயாஹ் ஸ ஸூகம் ஹரிஸ் ஸ்மராத் 7 8 9 10 11 கோபி (g)கானோ சுயதி சுபயதி இர்ஷதி 12 13 14 15 ஸ்மரோகதே த்ருஹ்யதி திஷ்டதே ஹ்நுதே 16 17 18 19 20 ஸ்லகிஷ்ட யஸ்மய ஸ்பிரீஹயதி அஸப்த ச ஆங்கில வடிவம் 1 5 1 4 2 2 2 11 Let Hari grant happiness to the just, for whom 7 7 the females of the cowherds 6 9 9 10 10 12 from desire were calumnious, shewed anger, were pleasant, 11 17 shewed malice, 14 15 13 16 18 20 19 waited, were sly and insidious , flattered, hoped and cursed (குறிப்பு: சம்ஸ்கிருத மூலத்தின் அர்த்தத்தை இவ்வாங்கிலப் பெயர்ப்பு சரியாகக் கொணரவில்லை. அந்த அர்த்தம் பின்வரும் மூன்று மொழிகளில் சரியாக வருகிறது. எனவே, இவ்வாங்கிலப் பெயர்ப்பும் பின்வரும் பெயர்ப்புக்களும் வேறுபட்டுத்தான் தோன்றும்) தெலுங்க 17 17 7 6 8 6 6 யேவநி குரிஞ்சி பகொல்லா -ஆடவரி பகும்பு தமகாமு வெல்லா 9 10 11 லேநி-தப்புல்-எஞ்சேநோ அளுகேனோ ஒர்ச்சக்கபோயேநோ 12 13 14 15 இம்பயநோ செதகோரேநோ கால்ஸியுண்டெநோ பொங்கெநோ 16 18 19 3 5 பொகடெதநோ கொரிநோ திட்டிநோ ஆ ஹரி 3 1, 2 பெத்தளகு ஹைநச்சுஹக கன்னடம் 17 7 8 6 யாவநந் குரித்து கொல்லத்திக கும்பு ஸொக்குநிந்த 9 10 11 அல்காஜம்பட்டிதோ முநியதோ ஸநஸிதோ 12 13 14 பைதோ கெட-கொரித்தோ காதகொண்டித்தோ 15 16 18 19 பொங்கிதோ ஹொகலிதோ கோரித்தோ பைதோ 3 5 2 4 1 அந்த ஹரி நல்லவங்கே சம்பந்நு கோடலி தமிழ் 17 7 8 எவனுக்காக விடையாள்(இடையாள்) கூட்டம் 6 9 நசையினால் அழுக்காறுபட்டதோ 10 11 முனிந்ததோ பொறுத்திருந்ததோ 12 13 வின்பானதோ(இன்புஆனதோ) கெடக்கோரினதோ 14 15 15 காத்துக் கொண்டிருந்ததோ பொக்கஞ்சொன்னதோ 16 18 புகழ்ந்ததோ கோரதோ(கோரியதோ) 19 3 5 2 தூற்றியதோ அவ்வரி நல்லவுக(நல்லவர்களுக்குச்)ளுக்குச் 4 1 செல்வம் கொடுக்கவும் இதற்கு முந்தைய பாட்டின் மொழிபெயர்ப்புகளின் இறுதியில் சம்ஸ்கிருத இணைப்பிடப் பெயர் relative clause அமைப்பு, antecident அமைப்பு ஆகியவற்றைத் தென்மொழிகளில் எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றிப் பார்த்தோம். மேற்கண்ட சம்ஸ்கிருத வாசகம் வரும் நூலில் அது நான்காவது கொடை வேற்றுமைக்கேற்ப பல்வேறு வினைச்சொற்களை எவ்வாறு எழுதுவது என்பதை விளக்க வந்தது. தெலுங்கு கன்னட மொழி பெயர்ப்புகளில் வரும் வினைகள் அவ்வேற்றுமையினவல்ல; (சம்ஸ்) ‘உபபத த்வ்த்ய,’ ‘உபஸர்க ப்ரதி’ ஆகியவையே வருகின்றன. அம்மொழிகளில் செயப்படுபொருளை ‘குரிஞ்சி’ அல்லது குரிது mark, determine என்னும் முன்னொட்டு நிர்ணயிக்கிறது. தமிழிலும் அப்படியே அமைக்கலாம். அல்லது மேலுள்ள தமிழ்ப் பெயர்ப்பில் கண்டவாறு ‘ஆக’ (எவனுக்காக) என்னும் முன்னொட்டுச் சொல்லைப் பயன்படுத்தியும் அமைக்கலாம். [முந்தைய உதாரண விளக்கத்தில் கண்டது போல] சம்ஸ்கிருத மூலத்தில் கண்ட ஏராளமான வினைச்சொற்களுக்கு (ஒவ்வொன்றும் நுணுக்கமான அர்த்தம் கொண்டது) சரியான தென்மொழிச் சொற்களைக் கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருந்தது. தெலுங்கு, கன்னடமொழிகளில் பல கருத்துகளை பெருமளவுக்கோ, குறைவாகவோ சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்தினாலன்றி தெளிவாக, திட்டவட்ட மாகக் கூறுவது பொதுவாக கடினமாகும். தமிழ் அப்படியல்ல; அதுவும் (புலமை வழக்கான) செந்தமிழில் எந்தக் கருத்தையும் தகவுற எளிமையாகக் கூறலாம்.இவ்வுதாரணத்தில் ஸ்மரஹ் (=மன்மதன்) - ஆகுபெயராகி காதலைக் குறித்தது; எனவே sexual love எனத் தமிழாக்கினேன். தெலுங்கு, கன்னடத்தில் அத்தகைய சொல் இல்லை; “தமகாமு” எனத் தெலுங்கில் வருவது. காமம் lust -ஐயே குறிக்கும்; கன்னட சொக்கு ஆசை desire ஐயே குறிக்கும். அதுபோல, சபதி he curses என்பதிலிருந்து படர்க்கை இறந்த காலம் காட்டும் அசப்த சம்ஸ்கிருதத்தில் வந்தது. தென்மொழிகள் மூன்றில் எதிலும் சம்ஸ்கிருத வினை வேரைப் பயன்படுத்தாமல் அந்த அர்த்தத்தை அப்படியே கொணர முடியாது. தெலுங்கு திட்டதமு, கன்னட பை (b) வது இரண்டும் vilify, abuse என்னும் பொருளை மட்டுமே கொண்டவை யெனினும் பயன்படுத்த வேண்டியதாயிற்று. தமிழிலும் திட்டுதல், வைதல் என்று சொல்லியிருக்கலாம். எனினும் அவற்றைவிட பொருத்தமான தூற்றுதல் (பொதுவாகப் பெண்கள் வசவுகள்) என்னும் சொல்லைப் பெய்தேன். சம்ஸ் ஹ்நுதி = to dissemble என்பதற்கு தெலுங்கிலும் கன்னடத்திலும் சமமான சொல் பொங்கடமு என்பதாகும். தமிழில் (அதே வேரிலிருந்து வந்த) ‘பொக்கம்’ ஹ்நுதியின் பொருளை முழுமையாகத் தரவில்லை; அது பொதுவான வழக்கில் உள்ள சொல்லும் அல்ல. தென்மொழிகளில் சிறந்தவையான இம்மூன்றையும் ஒன்றோ டொன்று ஒத்துப் பார்க்கவும். அவற்றை சம்ஸ்கிருதத்தோடு நோக்கவும் ஏந்தாக ஆங்கில வாக்கியம் ஒன்றை இம்மொழிகளில் தந்துள்ளேன். (அம்மொழிகளின் இயல்பை நன்கு காட்டும் வடிவம் செய்யுளேயாகையால் அவை செய்யுளில் தரப்பட்டுள்ளன) மேலே விவரித்தவை அனைத்துடன் சேர்த்து அவற்றையும் நோக்கினால் இக்குறிப்பின் தொடக்கத்தில் தெலுங்கு எம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று கூறப்பட்டதோ அது தெற்றென விளங்கும். 1 2 3 4 5 6 When thou art an anvil endure like an anvil; 7 8 10 12 when a hammer, strike like a hammer. தமிழ் குறள் வெண்பா 6 4 1 2 3 அடையல் அடித்தால் அடங்கு அடையலாய் 8 10 சுத்தியாய் ஆகி னத்தால் அடி தெலுங்கு த்விபாத 6 5 4 1-2-3 10 தேய் வெலந் அநிகி திய்யை வெங்க 12 11 10 தீயக சுத்திய திரநா கொட்டு. கன்னடம் த்விபாத அடிகல்லு ஸரி பக்கி யாகி யா கல்லு மண்டி திரஸத சமலிகே ஸரிபதி சம்ஸ்கிருதம் (அநுஷ்டுப் வ்ருத்தம்) குதோ பூத்வா குட இவ விநம்ய த்வம் அயோ க(gh)நஹ் பூத்வாயோகாநவத் கதனாம் தைர்யவாந் ப்ரஹர த்விஷா. [அடுத்து ஆங்கில மூலமும் தரப்படுகிறது ]    Pages 135 to 165 Images not clear இணைப்பு II தமிழ்மொழிபற்றிய சில குறிப்புகள் ஹென்றி ஆர். ஹாய்சிங்டன் (1853) (ஹாய்சிங்டன் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க கிறித்தவ விடையூழியராகப் பணியாற்றியவர். தமிழைக் கற்று அம் மொழியிலும் இலக்கியத்திலும் புலமை பெற்றவர். அமெரிக்க கீழைநாட்டியல் ஆய்வுச்சங்கக்கூட்டத்தில் 19.5.1852 அன்று அமெரிக்காவில் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. Journal of the American Oriental Society இதழின் 3ம் மடலத்தில் 1853 ம் ஆண்டில் பக் 389 - 97 ல் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. 1856 கால்டுவெல் ஒப்பிலக்கணம் வெளிவருவதற்கு முன்னரே நிகழ்ந்தது இது) தமிழ்மொழியின் தன்மை 1. தமிழில் இரண்டு வழக்குகள் அல்லது கிளைகள் உள்ளன. தமிழர் அவற்றைச் செந்தமிழ், கொடுந்தமிழ் என்பர்; அவற்றை நாம் உயர்நிலைத்தமிழ் (புலமைத் தமிழ்) சாதாரணத் தமிழ் (High Tamil / Low Tamil) எனலாம். 2. செந்தமிழ் (நயமான, சிறந்த தமிழ்) மூன்று பிரிவு களைக் கொண்டுள்ளது. 1. இயல் தமிழ்; இயற்கையான, சரியான தமிழ். உரைநடையில் தமிழ்ச் செய்யுள் நூல்களுக்கு உரை எழுதுவதற்கு மட்டுமே இது பெருமளவுக்குப் பயன்படுகிறது. இத்தகைய நடை பொதுவான பேச்சு வழக்கிலிருந்து மாறுபட்டு செய்யுள் நடையை ஒட்டியதாக உள்ளது. 2. இசைத் தமிழ்; செய்யுள் நடையில் அமைந்த இயல் தமிழே இது. 3. நாடகத்தமிழ்; பொதுமக்கள் முன் நடத்தும் நாடகங்களில் வரும் எளிய நடைப்பாடல்களை எழுதப் பயன்படும் இயல் தமிழை இது குறிக்கிறது. 3.செந்தமிழை விடச் செறிவு. சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகியதன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது. தமிழறிஞர்கள் தம் நூல்களை இம்மொழியிலேயே எழுதுகின்றனர். 4. கொடுந்தமிழ் என்பது பொதுமக்கள் அன்றாட வழக்கில் பயன்படுத்தும் மெருகூட்டப்படாத தமிழ் ‘கொடுந்தமிழ் (கொடிய தமிழ்) என்று அந்தவழக்கைச் சுட்டுவது பொருத்தமல்ல. நல்ல முறையில் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் அது இனிமையும் நயமும் வாய்ந்த தாகவே உள்ளது - தமிழ்ப் புலவர்களுடைய “அறப்படித்த” செவிகளுக்குத் தவிர. எக்கருத்தையும் சொல்லக்கூடிய திட்ப நுட்பத்தைப் பொறுத்தவரையில் செந்தமிழ் அளவுக்கு அது வளம் பெற்றது அல்ல; எனினும் இத்தமிழிலும் நுட்பம், ஆற்றல், அழகு ஆகியவை மிளிரச் சொல்ல இயலாத எந்தக் கருத்தும் இல்லை. எந்தக் குறையுமின்றி ஆற்றொழுக்காக நயமாகப்பேச, எழுதக் கூடியதாகவே அது உள்ளது. 5. செந்தமிழ் வழக்கும் கொடுந்தமிழ் வழக்கும் மிக வேறுபட்டவை. சாதாரணப் பேச்சு/ எழுத்து வழக்குத் தமிழில் முற்றிலும் வல்லவன் (கடுமையான புலமை நடைச்) செந்தமிழ்ச் செய்யுள் நூல்களை முறையே கற்றால் ஒழிய, அவற்றைத் தானே வாசித்த அளவில் ஒரு பக்கம் – ஏன் (சிலநேர்வுகளில்) ஒருவரிகூடப் புரிந்து கொள்ள முடியாது. தமிழ் வழங்கும் நாடுகள் 6. (இந்தியாவில்) தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் சேர்த்து மொத்தம் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை (1852 ல்) 80 லட்சமாகும்.தென்னிந்தியாவில் மொத்தம் ஏறத்தாழ இரண்டு மூன்று கோடி பேர் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் மற்றும் சில மொழிகளைத் தோற்றுவித்தது தமிழே என்று கருதப்படுகிறது; ஆகவே தமிழைத் தென்னிந்தியத் (தொன்) மொழியாகவே கருதலாம். தமிழர் இதனைத் “தென்மொழி” (Southern Speech) என்பர். வடமொழி என அவர்கள் சுட்டும் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபடுத்துவதற்காக. ங. தமிழின் வரலாறும் பிற மொழிகளுடன் அதன் தொடர்பும் [விவிலிய பழைய ஏற்பாட்டில் வரும் நோவாவின் மூன்று மகன்களாகிய சேம், ஹாம், யாபேத், Shem, Ham, Japhet ஆகியோருள் ஒருவனாகிய] சேமின் குடி வழியினரில் இருகிளையினர் இந்தியாவிற்கு வந்து குடியேறினர் – ஒரு பிரிவு சிந்துவெளிப் பகுதியாகிய வடமேற்கு இந்தியாவில் குடியேறியது; மற்றப்பிரிவு தென்மேற்கு இந்தியப்பகுதிக்குக் கடல்வழியாக வந்து குடியேறியது. 8. இரண்டாவது பிரிவான இந்தோ – செமித்தியப் பிரிவின்மொழி தமிழ் ஆகும். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. செந்தமிழை உருவாக்கியவர் அகத்திய முனி என்கின்றனர்; அவரே அம்மொழிக்கு இலக்கணம் எழுதி நயமாக்கினார்; பாண்டிய நாட்டில் அடங்கிய பொதியமலையில் அவர் வசித்து வந்தார். இவ்வாறு தமிழர் கருதுகின்றனர். (வடக்கில் திபேத்தும் பொதியம் எனச் சுட்டப்படுகிறது. அது வேறு, இது வேறு). இந்துக்களின் ஆதிகாவியமாகிய இராமாயணத்தில், காவியத்தலைவன் இராமன் முதலில் தென்னாடு போந்த பொழுது அவன் அகத்தியனை ரிஷிகள் (முனிகள்) குழுவினரிடையே தென்னாட்டில் கண்டதாக வருகிறது; எனவே குறைந்த அளவு கி.மு. 1200 லிருந்தே தென்னிந்திய மொழியாகச் தமிழ் வழங்கியது உறுதியாகிறது. அந்தக் காலக் கட்டத்திலேயே தமிழ் உயரிய செய்யுள் நடை வாய்ந்த செந்தமிழாக வழங்கியதாகை யால், அதற்கு முன்னரும் மிகப் பல ஆண்டுகள் பொது மக்கள் பேச்சு வழக்கு மொழியாகத் தமிழ் இருந்திருக்கவேண்டும். 9. தமிழ் நாட்டவராகிய பெரும்புலவர், அறிஞருள் தலை சிறந்தவர்கள் தங்கள் செந்தமிழ் வழக்குத் தந்தையாகிய அகத்தியர் அப்பொழுது தமிழே அங்கும் நாட்டு மொழியாக வழங்கிய வட நாட்டில் இருந்துவந்தவர் என்றும், அங்கே சமஸ்கிருதத்தையும் அவர் கற்றுக் கொண்டார் என்றும் கருது கின்றனர். வட இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையில் உள்ள நெருக்கம்பற்றி அண்மையில் வெளிவந்துள்ள உண்மைகள் அவர்கள் கருத்தை ஆதரிக்கின்றன; எனவே அனைத்திந்தியாவிலும் பண்டு வழங்கிய ஆதிமொழி தமிழே என்பது என்பது வலுவாக நிறுவப்படுகிறது. (Tamil was the aboriginal language of all India). இந்துக்கள் [இந்தோ ஆரிய மொழிக்கு முதன்மை தந்தவர்கள் என்ற பொருளில்] வடமேற்கு இந்தியாவிலிருந்து தொடங்கி இந்நாட்டு ஆதிக்குடிகளை வென்று தம் கீழ்ப் படுத்தியது போல, மொழித்துறையிலும் வடநாட்டில் பண்டு வழங்கிய தமிழ் மொழியையும் தம் கீழ்ப்படுத்தினர்; அவர் களுடைய இத்தகைய ஆதிக்கம் வடமேற்கு இந்தியாவிலும் வட இந்தியாவிலும் ஏறத்தாழ முழுமைபெற்றது; ஆனால் தென்னிந்தியாவில் அப்படியில்லை. 10. மேற்சொன்னதற்கு விவிலியம் 1 இராஜாக்கள் X 22 -ல் வரும் “22. ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல் களோடே கூடத் தர் ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒரு தரம் பொன்னையும் வெள்ளியையும் யானைத் தந்தங்களையும் (Shen habbim Habb இன்பற்கள்”) குரங்குகளையும், மயில்களையும் கொண்டு என்னும் வசனத்தில் ஆதாரம் உள்ளது. அவ்வசனத்தில் குறித்துள்ள ஐந்து பொருள்களுமே ஒரே இடத்தில் ஒரு சேரக் கிடைக்கும் இடம் இலங்கை - தென்னிந்தியா மட்டுமே; வேறு எங்குமல்ல. அங்கு மயிலைக் குறிக்கும் துகி (தோகை) தூயதமிழ்ச்சொல், அச்சொல் சமஸ்கிருதத்திலும் இல்லை; தமிழிய மொழியல்லாத வேறு இந்திய மொழி எதிலும் இல்லை. (சமஸ்கிருத Sikhi தான் இது என்கின்றனர் சிலமொழியியலாளர்; ஆனால் அந்ச சமஸ்கிருதச் சொல்லை சிகி என்ற வடிவில் பிற்காலத்தில் தமிழும் கடன் பெற்று வழங்குகிறது. தோகையும் சிகியும் ஒரு பொருள் பற்றிய வெவ்வேறு சொற்கள் என்பது தமிழறிஞர் எவருக்கும் தெரியும்) கபி என்னும் எபிரேயச் சொல் (ape என்று பொதுவாக விவிலிய ஆங்கிலப் பெயர்ப்புகள் குறித்த போதிலும்) குரங்கைக் குறிக்கத் தமிழில் அப்படியே வழங்குகிறது; அது சமஸ்கிருதத்திலும் உள்ளது. ஆயினும் சாலமொன் காலத்திற்கு முன்னரே சமஸ்கிருதம் தென்னிந்தியாவிற்கு வந்துவிட்டது ஆகையால் தமிழ் மூலச்சொல்லே எபிரேயத்தில் ஏறியுள்ளது எனலாம். ‘தோகை’ தமிழ் ஆகையால் கபியும் தமிழாகவே இருக்கும். மேற்சொன்ன வசனத்தில் வரும் ‘கபி’ [எகிப்திய மொழியில் Kaf - ape என்பதால்] ஆங்கிலத்தில் ape என்று மொழி பெயர்க்கப்பட்டபோதிலும் ‘குரங்கு’ என்பதே சரி. தமிழில் கபி குரங்கையே குறிக்கும். ‘கபி’ சமஸ்கிருதத்திலும் ஏறியுள்ளது. சாலமன் காலத்துக்கு முன்னாலேயே சமஸ்கிருதம் தென் இந்தியாவிற்குள் - வந்துவிட்டபடியால் அது நிகழ்ந் திருக்கலாம். தூயதமிழ்ச் சொல்லான ‘கபி’ யையே (தோகை போன்று) எபிரேயம் பயன்படுத்துகிறது எனக் கருதலாம். யானைத் தந்தத்தைக் குறிப்பிட Shen habbim = habb ன் பற்கள் (tooth of elephants) என்ற சொல் வருகிறது. யானையைக் குறிக்க தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் முறையே இபம் Ibham என்னும் சொற்களும் பயன்படுகின்றன. இப்பொருள்களை யெல்லாம் எந்நாட்டிலிருந்து தர்ஷீஸ் கப்பல்களில் சாலமன் கொணர்ந்தான் என்பதையும், எம்மொழியேபசும் மக்களிடம் இருந்து அவற்றைக் கொள்முதல் செய்து வந்தான் என்பதையும் தெரிவிப்பனவாக இவ்விவரங்கள் உள்ளன. 11. தென்னிந்தியாவின் தொல்குடிகளின் மொழி தமிழே என்பதை நிலைநாட்ட வேறு சான்றுகளும் உள. தென்னாட்டு ஊர்ப்பெயர்கள், நிலத்திணைப் பெயர்கள் எல்லாம் (சமஸ்கிருதத்துடன் தொடர்பேயில்லாத) தூய தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன. பிராமணிய சமய ஆதிக்கத்தால் அப்பெயர்களுள் பல சமஸ்கிருதச் சொற்களாகப் பிற்காலத்தில் மாற்றப்பட்டுள்ளன; ஆலவாய் - மதுரை; முகவை - இராமநாதபுரம்; கல்லணை- ராமசேது; மலையாளம் -திருவாங்கூர். (பழந்தமிழ்த் தொல் குடியினரின் ஒரு பகுதியினரான சாணார் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வரும்) Tinnevelly என்பதும் உண்மையில் திருநெல்வேலி என்னும் தூய தமிழ்ப்பெயரே. Point Calimere என்பதும் தமிழ்க் கோடிக்கரையே. 12. மேற்சொன்ன செய்திகளை “தமிழ் செமித்திய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது” என்ற நிலைமையை (மேலும் ஆய்வுகளை நிகழ்த்தியபின்) நிலை நாட்டுவதற்கான ஆதாரங்களாகக் கொள்ளலாமெனக்கருதுகிறேன். 13. தமிழில் அடிப்படைச் சொற்கள் பெரும்பாலும் வினைகளே. அவ்வினைச்சொல் வேர்கள் மூன்று எழுத்து, இரண்டு அசை Triliteral and disyllabic ஆக அமைந்துள்ளன. சிலவேர்களில் இரண்டு எழுத்துகளே உள்ளன; இரண்டு அசைகளுக்கு அதிகமாகக் கொண்ட வேர்ச்சொற்கள் மிகச் சிலவே 14. சில தமிழ்ச் சொற்களை எபிரேயச் சொற்களோடு ஒப்பிடும்பொழுது இருமொழிச் சொற்களும் ஒரே வேரிலிருந்து தோன்றினவோ எனக் கருதத் தக்க அளவுக்கு ஒத்துள்ளன; இருமொழிச் சொற்களையும் ஒப்பிட்டபொழுது கண்ட,பின் வரும் இணைகள் எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. (பத்துச்சொற்களை ஒப்பிட்டால் அவற்றில் ஒன்று இத்தகைய ஒப்புமை உள்ளதாக அமைந்தது). இத்தகைய ஒப்புமைச் சொற்கள் மேலும் பல இருக்க வேண்டும். தமிழ் எபிரேயம் பாரி to produce, to form to create அற (அறு) to reap, to reap, to pluck ஏற to ascend /increase to be high அரி lion lion எரி light, heat light, heat அரன்/ஆதன் Lord Lord எலேகர் minor gods gods பட்டி house house ஊர் town town பண்ண to make to build மாய்வு death death [செமித்திய மொழிகளின் சொற்களோடு உறவுடைய தமிழ்ச் சொற்களாக 1856 ல் கால்டுவெல் தம்ஒப்பிலக்கணத்தில் குறித்தவை வருமாறு: அப்பா, அம்மா, ஆறு, அல், அவா, இரு, இறங்கு, எரி, ஊர், எறி, எருமை, கூர், சாய், சினம், சிறு, சுமை, சுவர், செவ்வை, நாட்டு, நீட்டு, நோக்கி, பழு, பால் (பகுதி) பெறு, வா (கன்னடத்திலும், பாபிலோனியத்திலும் ba எபிரேயத்தில் bo) மாய், மாறு, மெத்தை.] 15. என்று முள இறையை eternal god குறிக்க தமிழர் அது என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். பொத்தாம் பொதுவாக இறையை undeveloped or unorganized deity குறிக்கும் தமிழ்ச் சொற்களில் ‘அது’ வும் ஒன்று ஆகும். அறிஞர் லௌத் Lowth இன் பின்வரும் கருத்து இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கதாகும் “எபிரேய மொழியில் அவன் [தமிழில் ‘அவர்’ எனலாம்] என்பது பல இடங்களில் மெய்யான கர்த்தரை (தேவனை) குறிக்கிறது. உபாகமம் Deuteronomy xxxii. 39; ஏசாயா xiii. 10,13; XIviii.12; குறிப்பாக சங்கீதம் Cii. 27” தமிழ் இலக்கணத்தின் தன்மைகள் 16. தமிழ் வினைச்சொற்கள் காட்டும் காலங்கள் மூன்று: இறப்பு, நிகழ்வு, எதிர்வு. இடம், எண், பால் ஆகியவற்றை வினைச் சொல் விகுதிகள் காட்டுகின்றன. (பால்வேறுபாட்டை (i)படர்க்கை உயர்திணை ஒருமை வினையும், (ii)படர்க்கை அஃறிணைப்பன்மை வினையும் மட்டுமே காட்டுகின்றன. எடுத்துக்காட்டுகள் (எழுவாயாகிய பதிலிப்பெயர் சொற்றொடருக்கு முன்னர் கரந்து நிற்பதாகக் கொள்க):- நடக்கிறேன் I walk நடக்கிறாய்/ரீர் Thou walkest நடக்கிறான் He walks நடக்கிறாள் She walks நடக்கின்றது It walks நடக்கிறோம் We walk நடக்கிறீர்/றீர்கள் Ye walk நடக்கிறார்கள் They walk நடக்கின்றன Things walk முக்கால வினைச்சொற்களுக்கும் வினை விகுதிகள் ஓரே மாதிரித்தான் உள்ளன. அஃநிணை வருங்காலத்தில் மட்டும் மாற்றம் உண்டு:- நடக்கிறேன் I walk நடந்தேன் I walked நடப்பேன் I will Walk நடக்கும் It will walk 17. தமிழ் விளைச் சொல்லின் பாங்கு mood ஐந்து வகையில் அமையும்; வினை நிலையுரைத்தல், ஏவல், செயல் எஞ்சுவினை, வியங்கோள், கருத்துப்புனைவியல் பாங்கு (இப்படி நடக்குமாயின்/ நடந்துவிட்டால் என்பது போல்) indicative, imperative, infinitive, Optative, Subjunctive) கடைசி மூன்று பாங்குகளும் முதற்பாங்கு வடிவத்தைப் பல வழிகளில் சற்றே மாற்றி உருவாக்கப்படும். வியங்கோள் பெரும்பாலும் வருங்கால வினையொட்டோடு ஆக ( = to be, to become இன் செயல் எஞ்சுவினைவடிவம்) சேர்த்து உருவாக்கப்படும். நடப்பேனாக May I walk or let me walk நடப்பீராக Mayst thou walk etc நடப்பார்களாக May they walk etc ஏவல் வினைக்குப் பல வடிவங்கள் உண்டு. ஒருமையில் வினையின் வேரே ஏவல் ஆக அமையும். பன்மையில் அந்தந்த இடப்பன்மைக்குரியப் பதிலிப்பெயர் ஈறை வேர் உடன் சேர்த்து வழங்கப்படுகிறது. நட Walk (thou) நடவுங்கள் Walk (Ye) நடவுங்கள் (நட + வ் + உங்கள்) என்பதில் வரும் வ் ஆனது ட (ட் + அ) வின் இறுதி உயிருக்கும் உ என்னும் உயிருக்கும் இடையில், விட்டிசை நீக்கத்திற்காக மட்டும் (to prevent hiatus) வரும் மெய்யெழுத்தாகும். வேறு சில இடர்களில் வ் க்கு பதிலாக ய் உம் வரும். 18. தமிழ் மொழியில் இணைப்பிடப் (பதிலிப்) பெயர்கள் Relative Pronouns இல்லை. அப்பதிலிப் பெயர்கள் செய்யும் வேலையை தமிழில் பெயரெச்சம் செய்கிறது. “வந்த குதிரை” the horse which came என்னும் பொழுது “வந்த” வில் வரும் ‘அ’ என்பதே, அடுத்து வரும் “குதிரை” தான் “வந்த” என்னும் செயலைச் செய்ததுஎன்பதைத் தெரிவித்து விடுகிறது, பெயரெச்சத்தை ஆங்கிலத்தில் பெயர்க்கும் பொழுது ஒரு வினை முற்றும், ஒரு Relative Pronoun உம் உருவாகிவிடும். நடக்கிற (‘நட’ வின் நிகழ்காலப் பெயரெச்சம்) மனுசன் = the man who walks / is walking ஆங்கிலச் சொற்றொடரைப் போலவே தமிழ்ச் சொற்றொடரும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும்அமைந்துள்ளது. 19. வினைச் சொல்லுக்குப் பலவழிகளில் எதிர்மறை வடிவங்கள் உருவாகின்றன. வினையின் வேரோடு நேரடியாக பதிலிப்பெயர் ஈறுகளை (ஏன், ஆய், ஆன் ஆன், ஆள் போன்றவற்றைச் சேர்த்துவிடுதல் : நடவேன் = I will not walk நடவாய் = Thou wilt not walk நடவான் = he will not walk etc எதிர்மறை வினைச்சொல்லை “செயல் எஞ்சுவினை” வடிவத்தின் இறுதியில் இல்லை (no, not) என்பதைச் சேர்த்தும் உருவாக்கலாம்:- நடக்க (=to walk) - நடக்கவில்லை = do, did not Walk இம் முறையை மூவிடங்களுக்கும் ஒருமை – பன்மை இரண்டுக்கும் அப்படியே பின்பற்றலாம். இவ்விரண்டு எதிர்மறை வடிவங்களும் காலம் காட்டும் வகை வருமாறு: முதல் வடிவம் (நடவேன்) - பெரும் பாலும் வருங்காலம் இரண்டாவது வடிவம் (நடக்கவில்லை) – பெரும் பாலும் இறந்த காலம் ஆயினும் இரண்டு வடிவங்களையும் மூன்று காலங்களில் எதற்கும் பயன்படுத்தலாம். 20. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதியில் “இருக்கிறது” (to be) போன்ற இன்னொரு வினைச் சொல்லைச் சேர்த்தும் எதிர்மறை வினைச் சொல்லை உருவாக்கலாம். அப்படி உருவாக்கும் சொல்லில் எதிர்மறைப்பெயரெச்சம் மாறாது; அடுத்து வரும் வினைச் சொல் மட்டுமே காலங்காட்டும் வகையில் மாற்றம் அடையும்: நடவாதிருக்கிறேன் I do not walk நடவாதிருந்தேன் I did not walk நடவாதிருப்பேன் I will not walk இவையெல்லாம் சாதாரணத் தமிழில் வழங்குகின்றன. புலமைச் செந்தமிழ் நடையில் வேறு முறைகள் கையாளப்படுகின்றன. 21. அனைத்து வினைகளின் “செயல் எஞ்சுவினை” வருங்காலம் காட்டும் வடிவிலிருந்து செயப்பாட்டுவினை Causative form உருவாக்கப்படுகிறது. செயப்பாட்டு வினை செய்வினை போன்றே முழுமை வாய்ந்த வினையாகஅமைந்து, அது போலவே வினை விகற்பமும் Conjugation அடைகிறது. நடப்பிக்கிறேன் I cause to walk நடப்பிக்கிறாய் Thou causest to walk நடக்கிறான் He causes to walk, etc, etc சில வினைச் சொற்கள் இன்னொரு முறையில் செயப்பாட்டுவினை வடிவம் அமைக்கவும் இடந்தருகின்றன; நடத்துகிறேன் I cause (any business - matter) to walk - i.e. to advance சுமக்கிறேன் I bear (a burden etc) சுமத்துகிறேன் I cause (a burden) to be borne இவ் வடிவமும் பிறவினைகளைப் போல அனைத்து இடங்கள், காலங்கள் முதலியவற்றுக்கான வினை விகற்பங்களையும் அடைகிறது. இறுதியாகச் சொன்ன செயப்பாட்டு வினை வடிவத்தின் மூலம் ‘செயப்படு பொருள் குன்றும் வினையை’ செ.பொ. குன்றாவினையாக்கலாம். வருகிறேன் I come வருத்துகிறேன் I cause to come 22. குறிப்பு வினை என்னும் (Appellative verb)கள் ஏராளமானவை தமிழில் உள்ளன. அவை பொதுவான பெயர்ச் சொற்களைப் போல வேற்றுமை உருபேற்றல் முதலிய பெயர்த் திரிபுகளை அடைகின்றன. குறிப்பு வினையிலிருந்து மாறுபட்ட Symbolic verbs தமிழில் காணப்படும் தனி வகை வினைச் சொற்கள் ஆகும். அவை பெரும் பாலும் புலமை நடைத் தமிழிலேயே வருகின்றன. சிலவேர்ச் சொற்கள், இப்பொழுது அடைகளாக adjectives மட்டும் பயன்படும் பழைய பெயர்ச் சொற்கள் ஆகியவற்றிலிருந்து அவ்வினைச் சொற்கள் அமைக்கப் படுகின்றன. எனினும் எந்தப் பெயர்ச் சொல்லில் இருந்தும் அவற்றை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக. அடி (step, foot, root, servitude - அடியேன் I you Servant உடை (possession) - உடையேன் I the Possessor இவற்றை அனைத்து இடம், எண், பால்களிலும் பயன் படுத்தலாம். 23. எழுவாயையும் செயப்படுபொருளையும் உள்ளடக்கிய ஒரே சொல்லை பொதுவான ஏனைப் பெயர்ச் சொற்களைப் போல கையாளலாம். கொடியை சிறியேனை அடித்தாய் thou who art a cruel manhast beaten me who am a small man “கொடியை”என்பது கூட்டுச்சொல் எழுவாய்; ‘சிறியேனை’ என்பது கூட்டுச் சொல் செயப்படுபொருள் - ஐ என்னும் வேற்றுமை உருபை ஏற்றுள்ளது. ‘அடித்தாய்’ பொதுவான இறந்தகால வினைமுற்று. 24. தமிழ் வினைச்சொற்களில் உள்ள இன்னொரு சிறப்புக் கூறையும் குறிப்பிட வேண்டும். அது தான்வினையெச்சம் (gerund, verbal participle, first indefinite mood) பல செயல்களைப் பற்றிய ஒருவாக்கியத்தில் இறுதி வினையைக் குறிக்கும் சொல்லைத் தவிர ஏனைய வினைகள் வினையெச்சமாகவேவரும்: நாளைக்கு நாம் சென்று, நெற்பயிரை அறுத்துக் கதிர்க் கட்டுகளைக் களத்துக்கு உய்த்து, அவற்றை அடித்து நெல்லாக்கி, விற்றுண, வரிகளைக் கட்டுவோமாக என்னும் பொழுது முந்தைய வினைகள் எல்லாம் வினையெச்சமாக இருக்க கடைசி வினை (கட்டுவோமாக) மட்டுமே வினைமுற்றாக இருப்பதைக் காணலாம். வினைமுற்றை யொத்த அதேகாலம் , எண், இடம் முதலியவை வினையெச்சங்களுக்கும் அமைகின்றன. சுட்டு (சிறப்பு/ பொதுமை) சொற்கள் (Articles) 25. தமிழில் இவை இல்லை. (The போன்ற சிறப்புச் சுட்டுச் சொல்லுக்குப் பதிலாக சுட்டுப் பதிலிப் பெயர்கள் (இவன், அவன், இது, அது) அல்லது வேறு வகை வழக்குகள் பயன்படுகின்றன. (a, an போன்ற ) பொதுமைச் சுட்டுச் சொல்லுக்குப் பகரமாக ஒரு/ஓர் பயன்படுகிறது. வேற்றுமை உருபேற்கும் பொழுது பெயர்ச் சொற்கள் அடையும் திரிபுகள் Declensions 26. தமிழில் பெயர்ச் சொற்களுக்கு எட்டு வேற்றுமைகள் உள்ளன. (ஒரு சிலவற்றைத் தவிர) அனைத்துப் பெயர்ச் சொற்களுக்கும் வேற்றுமை உருபுகள் பொதுவானவையே. அவ்வேற்றுமைகளால் பெயர்ச்சொற்கள் அடையும் பொருள் மாற்றத்தை முறையே பின்வருமாறு தரலாம்: அவன் He; அவனை him; அவனை / அவனோடு by or with him;அவனுக்கு To him; அவனிலிருந்து from him, அவனது of him or his; அவனில்/ அவனிடத்தில் at or in him; விளிவேற்றுமை Vocative பதிலிப்பெயர்கள் Pronouns 27. மூவிட நபர்களைச் சுட்டும் பதிலிப்பெயர்களும், சில பெயர்ச்சொற்களும் இரண்டு வகைப் பன்மை வடிவங்களைக் கொண்டுள்ளன; அவ்விரு வகைகளுமே சுட்டப்படுவான் உயர்வைக் காட்டப் பயன்படுகின்றன. அப்பன்மைப்பெயர்களுக்குரிய வினைச் சொற்களும் அவற்றுக்கு இயைபாகவே அமைகின்றன:- நான் I நாம், நாங்கள் = We, அல்லது (மரியாதை கொடுத்துச் சுட்டும்) நான் நீ thou நீர், நீங்கள் = ye அல்லது (மரியாதை கொடுத்துச் சுட்டும்) நீ அவன் he அவர், அவர்கள் = they அல்லது மரியாதை கொடுத்துச் அவள் she சுட்டும் அவன் / அவள் 28. தன்மைப்பன்மையில் நாம்/ நாங்கள் ஆகிய சொற்களைப் பயன்படுத்தும் பொழுது அவற்றில் அடங்கு பவர்கள் வேறுபடுவர் நாம் = பேசுபவன், கேட்பவர்கள் (நாம் எல்லாம் பாவிகள்) We are all sinners நாங்கள் = பேசுபவன் மட்டும் (“நீங்கள்” மாதிரி) 29. கடவுளிடம் ‘நீ’ என்று கூறாமல் ‘தேவரீர்’ (= கடவுளர்களாகிய நீங்கள்) என்று கூறுவதும் பெருவழக்கில் உள்ளது. (தேவர் = கடவுள் + ஈர் (முன்னிலை பதிலிப்பெயர் பன்மை மரியாதை வடிவு) = தேவரீர். முன்னிலைப் பதிலிப் பெயர்ப் பன்மையில் ‘ஈர்’ வருவது போல வினையிலும் ஈர்வரும் (நீர் வந்தீர்) கடவுளைக் குறிக்கும் “சுவாமி” பன்மைப் பொருளில் (Pluralis excellentias) சுவாமியார் என்று வரும். படர்க்கைப் பன்மையில் வினைச்சொல் ஈறாகவரும் ஆர், ஆர்கள் (வந்தார், வந்தார்கள்) என்பவற்றில் முதல்வடிவமாகிய ஆர் இப்படி பெயர்ச்சொல் ஈறாகச்சேர்க்கப்படுகிறது – மரியாதைக்காக வாக்கிய அமைப்பில் சொற்களும் சொற்றொடர் களும் வரும் வரிசை 30. சொல்லொட்டுகள் யாவுமே பெயர்ச் சொல்லுக்குப் பின்னர் மட்டுமே வருவதால் தமிழில் அவை பின்னொட்டுகளே (Postpositions) ஆகும். 31. ஆறாம் வேற்றுமையாகிய உடைமைப் பொருள் வேற்றுமையில் ‘அவனது மாடு’ என்பது போல் ‘அது’ என்னும் வேற்றுமை உருபு எது உடைமை எனச் சொல்லப்படுகிறதோ (மாடு) அதற்கு முன்னர் வரும். 32. செயப்படுபொருள் குன்றாவினையில் எழுவாய், செயப்படுபொருள் இவற்றுக்குப் பின்னரே வினைச் சொல் வரும்: நான் அவனை அடித்தேன் (I him beat) 33. பலவகைச் சொற்களின் (Parts of speech) வரிசை முறை ஆங்கிலத்தில் உள்ளதற்கு ஏறத்தாழத் தலைகீழாகவே இருக்கும். “The man who came here yesterday” = நேற்று இங்கே வந்தவன் (yesterday here who came the man) பெயரடைகள் (Adjectives) 34. பெயரடைகள் பெயர்ச் சொற்களுக்கு முன்னர் வருகின்றன. பால், எண், வேற்றுமை இவற்றுக்கேற்ப பெயரடைகள் எந்த மாற்றமும் பெறுவதில்லை. 35. ஒப்புமையைக் காட்டவோ, தனிச்சிறப்பைக் காட்டவோ (Comparative, Superlative degree களுக்கு ஆங்கிலத்தில் உள்ளது போல் பெயரடைகள் தமிழிலில் உருமாற்றம் பெறுவதில்லை. ஒப்புமையைக் காட்டும் பொழுது நான்காம்/ ஐந்தாம் வேற்றுமை Dative / Ablative உருபுகளைப் பயன்படுத்தி தமிழில் “அதற்கு இது நல்லது” என்பது போல் வரும். (ஆங்கிலத்தில் அம்மொழியின் அமைப்புக்கேற்க) this is better than that என்று வரும் பொழுது- “than that” இல் ஒப்புமைச் சொல் முதலில் வரும்; ஆனால் தமிழில் அதற்கு என்று ஒப்புமைச் சொல் ஈற்றில் வரும்) 36. “பார்க்க” என்னும் வினைச் சொல்லைப் பயன் படுத்தியும் தமிழில் ஒப்புமை விளக்கப்படும் “அதைப்பார்க்க இது நல்லது” (to look at that/while we look at that, this is good) 37. தனிச்சிறப்பானது “எல்லாவற்றினும்/ எல்லோரினும்” என்னும் சொல்லைப் பயன்படுத்தி ஐந்தாம் Ablative) வேற்றுமை உருபுடன் விளக்கப்படும். “எல்லோரினும் கடவுள் உயர்ந்தவர்”; “அனைத்திலும் இது சிறந்தது.” 38. தமிழின் பிற தன்மைகளையும் விரிவாக விளக்கலாம். ஆயினும் இந்த ஆய்வின் நோக்கத்திற்கு இது போகும். அந்நோக்கமானது தமிழ் சிறந்த, முக்கியமான மொழிகளுள் ஒன்று என்பதை அறிஞர்களுக்குத் தெரிவிப்பதும், அம்மொழியை உலக மொழிகளின் வகைப்பாட்டில் எவ்விடத்தில் வரும் என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்ய உதவுவதுமே ஆகும். [அடுத்து ஆங்கில மூலமும் தரப்படுகிறது ] .   Images not clear and convertable from pages 183 to 192