தொன்மைச் செம்மொழி தமிழ் பி. இராமநாதன் க.மு., ச.இ. பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு பொருளடக்கம் அணிந்துரை தமிழ் முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும் வகையில் அதன் தொன்மையையும் பண்டைத் தமிழிலக்கியங்களின் தனிச் சிறப்புகளையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கி அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் எழுதியுள்ள 'தொன்மைச் செம்மொழி தமிழ் என்னும் இந்நூல் செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களைத் தாங்கி யுள்ளது. நூலாசிரியர் பி. இராமநாதன் மொழியியல், வரலாறு, அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர்; தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர். 'சிந்துவெளித் தொல் தமிழ் நாகரிகம் A New Account of the History and Culture of the Tamils' என்னுந் தமிழ், ஆங்கில ஆய்வு நூல்களை எழுதி வெளி யிட்டிருக்கும் அவர், மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள்' என்னுந் தலைப்பில் 'செந்தமிழ்ச் செல்வியில் 1977-80இல் எழுதி வந்த தொடர்கட்டுரைகளை (தலைமைத் தமிழ் என்னும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் தனி நூலாக வெளி யிட்டுள்ள து)"Nostratics : The Light from Tamil According to Devaneyan '' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பன்னாட்டு மொழியியல் வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர்; பாவாணர் பெரிதும் பாராட்டும் வரலாற்றுப் பேரறிஞர்களான வி. ஆர். இராமச்சந்திரனார், பிடி சீனிவாசனார் ஆகியோர் Originad Spread of Tamils ' எனவும் His - ory of the Tamils ' எனவும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல்களுக்கு இராமநாதன் செய்துள்ள தமிழாக்கமான தமிழர் தோற்றமும் பரவலும்', 'தமிழர் வரலாறு' என்னும் நூல்களும், சோவியத்து அறிஞர் அலெக்சாண்டர் காந்திரதாவ் எழுதிய முப்பெருங்கடற்புதிர்கள் (Riddles of Three Oceans ) என்னும் ஆய்வு நூலில் கடல் கொண்ட தென்னாட்டுக் கோட்பாட்டுக்கு அரண் செய்யும் வகையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடல் பற்றிய அதன் இடைப்பகுதியின் தமிழாக்கமான அவர்தம் 'தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் - தென்பெருங்கடல் ஆய்வுகள்' என்னும் நூலும் தமிழ்மண் பதிப்பக வாயிலாக வெளிவந்துள்ளன. அவ்வரிசையில் ஒன்றான இந்நூல் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் இன்றைய செயற்பாடுகள்' என்பது முதல் 'தமிழின் எதிர்காலம் - ஒரு தொலைநோக்கு' என்பது ஈறான ஏழு இயல்களைத் தாங்கியுள்ளது. கிரேக்க இலத்தீன் மொழிகளின் பண்டைய இலக்கியங்களைச் செவ்விலக்கியங்கள் என்றும் அம்மொழிகளைச் செம்மொழிகள் என்றும் அழைத்த ஐரோப்பியர்கள் சீனம், சமற்கிருதம், பாரசீகம், அராபியம் ஆகிய மொழிகளையும் அவ்வாறே கருதியதோடு, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த பண்டைத் தமிழிலக்கியங்கள் கிரேக்க இலத்தீன சமற்கிருதத் தொல் இலக்கியங்களுக்குச் சமமான நிலையில் - சில கூறுகளில் அவற்றையும் விஞ்சும் நிலையில் உள்ளதை உணர்ந்ததும் - 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழைச் செம்மொழியாகக் கொண்டன ரேனும், தமிழ் அறிஞர் பெருமக்களும் அமைப்புகள் சிலவும் தமிழைச் செம் மொழியாக ஏற்றுத் தக்க முறையில் போற்றுமாறு குரல் எழுப்பியபோதிலும், சமற்கிருதம், பாரசீகம், அராபியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கென அக்கறை யோடு பொருளுதவி செய்து ஊக்குவித்த இந்திய அரசு தமிழைக் கண்டு கொள்ளவே இல்லை. தமிழ்நாட்டில் நயன்மைக் கட்சியிலும் பேராயக் கட்சியிலும் முதன்மை பெற்றிருந்தவர்கள் தமிழரல்லாதார் ஆதலால் அக்கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவிக்குமாறு இந்திய அரசுக்குக் கோரிக்கைதானும் வைத்திலர்; மக்கள் அமைப்புகளும் கண்டு கொள்ளவில்லை. (தமிழர்கள் சிலர் பொறுப்பேற்பினும் அந்நிலையே தொடர்ந்தது.) என்னும் வரலாற்று உண்மையை இராமநாதன் கூர்ந்து நோக்கி இந்நூலில் தோற்றுவாயிலேயே தெளிவாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு நடுவம் மேற்கொண்டுள்ள எழுவகைப் பணிகளும் தெளிவுற எடுத்துரைக்கப் பட்டிருப்பதோடு, தமிழ் செம்மொழி என்பது குறித்து கடந்த நூற்றாண்டின் தொடக்க முதலே அறிஞர்கள் வழங்கிய கருத்துரைகளும், அமைப்புகள் எழுப்பிய கோரிக்கைகளும், பிறவும் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. கால்டுவெல் காலம் வரை தமிழிய (Tamulian ) மொழிக்குடும்பம் என்றே வழங்கி வந்த பெயரைத் திராவிட மொழிக் குடும்பம் என மாற்றி வழங்கியவர் அவரே என்பதைக் குறிப்பிடும் இராமநாதன், தமிழ் என்பதன் கொச்சைத் திரிபு வடிவமே திராவிடம் என்பதைத் தெளிவுறுத்துவதோடு ஏ. சி. பருனெல் இந்தியன் ஆன்டிகுவாரி முதல் தொகுதியில் ( 1872) குமாரிலபட்டிரின் தந்திரவார்த்திகத்தில் கண்ட 'அப்படித் தமிழ் மற்றும் பிறமொழிகளில்' எனப் பொருள்படும் 'தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ' என்னும் வாசகத்தைப் படுமோசமாக 'ஆந்த்ர திராவிட பாஷாயம் ஏவ என்று அச்சிட்டத்தையும் அத் தவறான வாசகத்தையே கால்டுவெல், தென்கோனா போன்றோர் பின்பற்றினர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அன்றியும் இது தவறானது என்பதை இந்தியன் ஆன்டிகுவாரி 42 ஆம் தொகுதியில் (1913) பி.டி. சீனிவாசனார் தெளிவுறுத்தி நிறுவிய பின்னும், ''குமாரில் பட்டர் தமிழையும் தெலுங்கையும் ஒரு சேரக் குறித்தார்' என்று தமிழறிஞர்கள் பலர் தவறாகவே எழுதி வருவதைச் சுட்டியுள்ளார். தொல்காப்பியமும் கழக (சங்க) இலக்கியங்களும் வெளிப்படாதிருந்த காலத்திலேயே எல்லிசுத்துரையும் கால்டுவெலும் தம் ஆராய்ச்சி வன்மை யால் தமிழின் தொன்மையையும் பிற சிறப்புகளையும் கண்டுரைத்ததையும் அப் பண்டைத் தமிழ் நூல்கள் வெளிவந்து பரவிய நிலையில் தமிழ் செம்மொழி என்பதை மொழியியல் வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டதையும் சுட்டிக் காட்டும் ஆசிரியர், கழகம் பற்றியும் கழக இலக்கியங்களின் தனிச் சிறப்புகள் குறித்தும் பன்னாட்டு அறிஞர்கள் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துத் தந்திருப்பது பாராட்டத் தக்கது. செம்மொழித் தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் பெயர்த்தல் என்னும் பகுதியில், இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் உள்ள இடர்ப்பாடுகளைக் கூறப்புகுந்து, 'திருக்குறளை மொழிபெயர்த்தல் என்னும் நூலில் கழக இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களை விளக்கும் பகுதியை எடுத்துக் காட்டியிருப்பது மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுவோரின் தனிக் கவனத்திற்கு உரியதாகும். தமிழின் தொன்மையைச் சிந்துவெளி நாகரிக அகழ்வாய்வு, அந்நாகரிக எழுத்தாய்வு உள்ளிட்ட பிற அறிவுப் புலங்களுடன் இணைந்த ஆய்வின் மூலம் நிறுவுவதும் பல்வேறு அறிஞர்களின் ஆய்வுரைகளை எடுத்துக்காட்டி விளக்கியிருப்பதும் ஆசிரியரின் பரந்துபட்ட நூலறிவையும் நுண்மதியையும் தெள்ளத் தெளிய வெளிப்படுத்துவனவாகும். தமிழ், தமிழர்ப் பற்றிய செய்திகளைக் கொச்சைப்படுத்தி எழுதுவதையே வழக்கமாகக் கொண்டோர் சிலர், 'கண்டம் அளவிற்குப் பெரிய நிலப்பரப்பு எதுவும் எக்காலத்திலும் கடலுள் மூழ்கியதில்லை' என்று இற்றை அறிவியல் நிறுவியுள்ளதைத் தலைக்கீடாகக் கொண்டு, கடல் கொண்ட தென்னாடு பற்றி நூல் எழுதியோர் அனைவரையும் தாக்கி ஏளனம் செய்வதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர், கி.மு. 8000ஐ ஒட்டிய பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து ஏறத்தாழ இருநூறு முந்நூறு கல் அளவிற்குக் கரைநிலப்பகுதி (கண்டத்திட்டு - Continental Shelf) கடலுள் மூழ்கிவிட்டது பற்றியும், அக்கடற்கோளுக்கு முன்பு கண்டத் திட்டுப் பகுதி வழியாகத் தமிழிய மொழி பேசுநர் சில பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தென்னிந்தியாவில் இருந்து பல பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்பதற்கு அறிவியலாரின் இன்றைய முடிவுகள் உடன்படுவதை மேற்படியார் கண்டுகொள்ளாதது குறித்து நயமாகக் கழறுகிறார்; "உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்து கண்டம் அளவிற்கு இருந்திருக்க வேண்டியதே இல்லை. முன்பத்தியில் கூறியது போலக் கண்டத் திட்டுப் பகுதி கடலுள் முழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு களுக்குக் கழக இலக்கியக் கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும்" என்று தெளிவுறுத்துகிறார். இது தொடர்பாக நாம் மேலும் சிலவற்றை எண்ணிப் பார்க்கலாம். கண்டம் என்றவுடன் ஆசியா, ஆப்பிரிக்கா முதலியன போன்ற தாகவே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இந்தியா இன்று தீவக்குறை ( தீபகற்பம் ) என்றும் துணைக் கண்டம் என்றும் கூறப்பட்டாலும் பரதகண்டம் (பரத கண்டே ) என்றும் நாவலந் தீவு (சம்புத் தீவு ) என்றும் கூறப்படும் முந்தைய வழக்கு நோக்கத் தக்கது. அவ்வாறே நாடு என்பதையும் சீனா, இந்தியா போன்றதாகக் கருத வேண்டியதில்லை. தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டாலும் சேர சோழ பாண்டிய நாடுகள் என்றும், தொண்டை நாடு, கொங்குநாடு என்றும் வழங்கப் பெறுவன உள. ஒல்லையூர் நாடு, காட்டு நாடு, கோனாடு, பறம்பு நாடு, பெண்ணை நாடு, முக்காவனாடு, வேங்கடநாடு என்பன புறநானூறு சுட்டும் நாடுகளுட் சில. ஏறத்தாழச் சென்னை மாநகர அளவே கொண்ட சிங்கப்பூர் இன்றும் ஒரு தனிநாடாக உள்ளது; நகர நாடு (City State) எனப்படுகிறது. வாத்திகனும் ( Vatican City ) அத்தகையதே. ஆத்திரேலியா இயற்கை யமைப்பால் ஒரு கண்டம் என்றாலும் அரசாட்சி நிலையைப் பொறுத்து அது ஒரு நாடேயாம். பண்டு குமரியகத்து ஏழ்தெங்க நாடு ஏழ்மதுரை நாடு முதலியனவாக ஏழேழ் நாடுகள் எனப்படுவனவே நாற்பத்து ஒன்பது நாடுகளாக உறழ்ந்து கூறப்படுகின்றன. ஓர் ஏழ்நாடு என்பது ஏழு கோட்டங்களைக் கொண்ட ஒரு மண்டிலம் அல்லது ஏழு வட்டங்களைக் கொண்ட ஒரு மாவட்டம் போல்வது எனலாம். கடற்கோளால் குமரிநாட்டை இழந்தமையின் "அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும், சேரமான் நாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னும் இவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன்" என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றும் இதனை வலியுறுத்தும். இவ்வாற்றான் அறிவியலார் (கண்டத்திட்டு) என்றும் கடல் கோட்பட்டதென்றும் கூறும் குமரிநிலப் பரப்பைக் குமரிநாடு என்று கூறுவது -- குமரிக்கண்டம் என்றே கூறுவது கூட -- அன்றும் இன்றும் உலக வழக்கிற்கும் நூல் வழக்கிற்கும் எவ்வாற்றானும் ஒவ்வாததன்று என்பது தெளியப்படும். இனிப் 'பஃறுளி யாற்றொடு' எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பகுதியால் பாண்டியன் வடதிசைக்கண் கங்கையாற்றையும் பனிமலையையும் தனது ஆட்சிக்குரியனவாகக் கொண்டது. தென்றிசைக்கண் கடல்கோளால் தான் இழந்த பஃறுளியாற்றுக்கும் குமரிமலைக்கும் ஈடாகவே என்பது தெளியப் படுதலால், தென்பால் குமரி நிலத்தின் நீட்சியானது வடபால் பாண்டி நாட்டுக்கும் பனிமலைக்கும் இடைப்பட்ட தொலைவின் அளவினது (ஏறத்தாழ ஈராயிரங்கல்) என ஊகிக்கலாம். ஆனால் இற்றை நிலையில் அறிவியல் துறைகளின் கொள்ள இடந்தராமையால் சிலப்பதிகாரம் கூறியாங்குப் பாண்டியன் தான் இழந்த தென்றிசையாற்றுக்கும் மலைக்கும் ஈடாக வடதிசையாற்றையும் மலையையுங் கொண்டான் என்றும், அவ்விரண்டுந் தவிர்ந்த நாட்டுக்கு ஈடாக 'மலிதிரையூர்ந்து எனத் தொடங்கும் கலித்தொகைத் தரவும் மேற்கண்ட அடியார்க்கு நல்லார் உரையும் கூறியாங்குச் சேர சோழ நாடுகளின் ஓரோர் பகுதியைக் கொண்டான் என்றும், கடல் கொண்ட தென்னாடு இவற்றின் அளவினதே என்றும் இயைபுறக் கொள்ளுதல் சாலும். ஆயினும், ஞால முதன்மொழிக்கு அணுக்கமானது எனப்படும் தமிழுக்கும், கடந்த 10000 ஆண்டுகளாக உலகின் பிற பகுதி மக்களோடு யாதொரு தொடர்பும் இன்றியிருந்த ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் உள்ள தொடர்புகளையும் ஊன்றி நோக்கின், மேற்படி ஊகம் முற்றிலும் பொருளற்றது என்று புறந்தள்ளிவிட முடியாது. இது நிற்க! சிந்துவெளி நாகரிகம் தமிழரதே என்பது ஞாலமுதன்மொழி பற்றிய மொழிநூல் வல்லுநர்களின் பல்வேறு ஆய்வுகள் முதல், அண்மையில் மயிலாடுதுறையை அடுத்த செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலக் கருவியாகிய கற்கோடரியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் ஈறாக உள்ள அடுக்கடுக்கான சான்றுகள் மூலம் நிறுவப் பெற்றுத் தமிழின் தொன்மை மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொல் திராவிடம் (Proto Dravidian ) என்பது பழந்தமிழே யன்றிச் சிலர் கூறுவது போல் வேறன்று என்னும் பாவாணர் கருத்து வழி நின்று "இந்நூலில் தொல் திராவிடம் எனக் குறிப்பிடப்படுவனவெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாகக் கொள்க'' என்று ஆசிரியர் தெளிவுறுத்தியிருப்பது நன்று. இப்பொழுது பலர் கொண்டுள்ள (தவறான) கருதுகோளின்படி தொல் திராவிட மொழி பேசுநர் தாயகம் வடகிழக்கு ஈரான் பகுதி என்றும் அங்கிருந்து அவர்கள் இந்தியா தென்னாடு இலங்கை என்று கி.மு. 3000 அளவில் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர் என்றும் கூறும் 'திராவிடர் இறக்கக் கொள்கைக்கு நேர்மாறாகத் தொல்திராட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் 'திராவிடர் ஏற்றக் கொள்கைக்கு ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு' எனச் சிறப்புப் பெயர் சூட்டியிருப்பது பெரிதும் நன்று. குமரிக்கண்டம் பற்றியும், சிந்துவெளி நாகரிகம் பற்றியும் தக்க மேற்கோள்களுடன் இராமநாதன் கூறும் செய்திகள் எல்லாம் அவர்தம் முந்தைய நூல்களிலும் விரிவாகக் கூறப்பட்டிருப்பனவேயாயினும் செம் மொழி என்னும் நிலையில் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் வலிவுற எடுத்துரைக்கும் வகையில் இந்நூலிலும் இடம் பெற்றிருப்பது தக்கதே. இந்தியாவில் உள்ள தமிழிய, இந்தோ ஆரிய, முண்டா மொழி களிடையே பொதுமைக் கூறுகள் உள்ளன என்றும், இந்தி முதலிய வட இந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகள் இந்தோ ஆரிய மொழிக்கு உரியனவல்ல என்றும் வட இந்திய மொழிகள் சமற்கிருதத்தினின்றும் மாறுபட்டுள்ளன என்றும் அம்மாறுபாட்டுத் தன்மைகள் பெரிதும் இந்தோ ஆரியம் அல்லாத மொழிகளைச் சார்ந்தவை என்றும் வடமொழியில் ( இருக்கு வேதம் உட்படக்) கணிசமான அளவுக்குத் தமிழ்ச் சொற்களும் தமிழியக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன என்றும் கூறும் வயவர் வில்லியம் சோன்சு, கால்டுவெல், பரோ, எமனோ ஆகிய மொழியியல் அறிஞர்களின் ஆய்வுரைகளை எடுத்துக்காட்டித் தமிழின் இலக்கண அமைதியும் தமிழ்ச் சொற்களும் சமற்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் பரவியுள்ளன என்பதை விளக்கியிருப்பதோடு, பாவாணரின் ஆய்வுரைகள் மட்டுமன்றி அருளி, அரசேந்திரன் ஆய்வுரைகளும் அவற்றைப் பெரிதும் வலியுறுத்துவதை எடுத்துக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழின் எதிர்காலம் பற்றித் தொலைநோக்காகக் கூர்ந்துரைக்கும் நூலின் இறுதிப்பகுதி தமிழுணர்வாளர் ஒவ்வொருவரும் - குறிப்பாக இளைய தலைமுறையினர் உன்னிப்பாகக் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். உலக அளவில் கிரேக்கம், இலத்தீனம் முதலிய ஏனைச் செம்மொழிகள் போலாது தொன்றுதொட்டு இன்றுகாறும் பெரும்பாலும் சிதைவின்றி வழங்கி வரும் செம்மொழியாகிய தமிழை அரைச் சமற்கிருதக் கலவை மொழியாக்க 13 ஆம் நூற்றாண்டளவிலேயே தொடங்கப்பட்ட நச்சு முயற்சி வெற்றி முகட்டை எட்டுஞ் சூழலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்ட தேனும், கால்டுவெல் ஊன்றிய வித்து மனோன்மணீயம் சுந்தரனார், மறைமலை யடிகளார் முதலிய அறிஞர் பெருமக்கள் ஆற்றிய அரும்பணி களாலும் அரசியல் குமுகாய இயக்கங்கள் சிலவற்றின் எழுச்சியாலும் தமிழ்ப் பாதுகாப்பும் வளர்ச்சியும் ஆலமரமாக உருக்கொண்டனவேனும் பயிற்று மொழி நிலையிலும் ஆட்சி மொழி நிலையிலும் தமிழுக்கு என்றோ செய்திருக்க வேண்டிய பணிகள் இன்றுவரை ஒழுங்காகச் செய்யப் பெறாமை யால் தொய்வு நிலை உள்ளது என்பது நன்கு தெளிவுறுத்தப்பட்டிருக்கிறது. உலகமயம் - பன்னாட்டு வணிகம் என்னும் செயற்பாட்டினால் உலகில் ஆங்கிலத் தவிரப் பிறமொழிகள் அனைத்திற்கும் ஏற்பட்டுள்ள பேரிடரைக் கூறுமிடத்துப் பல்வேறு நாட்டவர்க்கும் நேர்ந்துள்ள பத்து வகையான மாபெருங்கேடுபாடுகள், மபுவென், கிரெநோபிள் போலும் மொழியியல் அறிஞர்கள் வழி நின்று விண்டுரைக்கப்படுள்ளன. இந்தியாவில் பிறமொழிக்கு இல்லாமல் தமிழுக்கு மட்டும் உள்ள உட்பகைகளாகத் தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைக் கலப்பதும் கொச்சை வழக்கு இழிவழக்குகளை எழுத்து நடையில் புகுத்துவதும் ஆகிய தமிழ்ப்பகைவர் செயல் ; எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்குள்ள சிறந்த வரிவடிவத்தைச் சிதைத்துத் தமிழை அழிக்கத் துடிக்கும் முழுமக்கள் செயல்; தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றில் கைவைத்து மூலப் பாடத்தைச் சிதைத்தும் மூலநூல் அமைப்பை மாற்றியும் வெளியிடும் நச்சுப் போக்கு; ஆகிய முப்பெருந் தீங்குகள் சுட்டிக் காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. உலகமயச் சுரண்டலின் ஒரு கூறாகவே பொருளியல் பண்பாடு ஆகியவற்றையும் சேர்த்து மொழிகளும் ஆங்கிலத்தால் அழிக்கப்படுவதால் மொழியளவில் மட்டும் முயற்சிகளை மேற்கொள்வது நிழலுடன் போராடுவதே என்றும், மரபுவழிப் பொருளியலை வளர்ப்பதும் உலகமயமாக்கலின் பல்வேறு நாசகாரக் கூறுகளை எதிர்ப்பதுமே உண்மையான கழுவாய் என்றும், அரசுகளும் கட்சிகளும் மேலை நாட்டுப் பெரு முதலாளியக்குழுமங்களுக்கு அடிமையாகிவிட்ட நிலையில் அவற்றை நம்பிப் பயனில்லையாதலால் மக்கள் விழிப்புணர்வுதான் வழி என்றும், ஒவ்வொரு தேயத்தவரும் தத்தம் மொழியின் பாதுகாப்புக்குப் போராட வேண்டிய நிலை இருப்பதால் தமிழ்ப் பாதுகாப்பாளர்கள் அண்டை அயல் மாநிலத்தவரொடும் கலந்து செயற்பட்டு உலக மயமாக்கத்தாலும் ஆங்கிலத்தாலும் இந்திய மொழிகள் அனைத்தும் அழிவுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முயல வேண்டும் என்றும் கருத்துகள் தெளிவுற எடுத்துரைக்கப் பட்டுள்ளன. இவ்வாற்றான் நூலின் இறுவாய் ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு முன்மொழிவதாக அமைந்துள்ளது. மொழிஞாயிறு பாவாணர் நூற்றாண்டு விழாவையொட்டி அவர்தம் நூல்கள் அனைத்தையும் மறுபதிப்பாக ஒருசேர வெளியிட்ட தோடு, தனிக் கட்டுரைகள் பலவற்றையும் தேடித் தொகுத்துப் பல தொகுதிகளாக வெளியிட்டுப் பரப்பிய பெருமைக்கு உரியவரும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளருமான தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள் பாவாணர் நூல் வெளியீட்டைத் தொடர்ந்து பாவாணர் கருத்துகளுக்கு அரண் செய்யும் வகையிலான அப்பாத்துரையாரின் நூல்கள், ந.சி.கந்தையாவின் நூல்கள் முதலியவற்றையும் முழுமையாக வெளியிட்டு அருந்தமிழ்ப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து வருவது பெரிதும் பாராட்டி மகிழத் தக்கது. தமிழ்மண் பதிப்பக வெளியீடுகளான பி. இராமநாதன் நூல்வரிசையில் இடம் பெற்றுள்ள இந்நூல் தமிழின் பல்வகைச் சிறப்பு களையும் எடுத்துரைத்து வலியுறுத்துவதோடு அவற்றைக் குறித்துப் பன்னாட்டு மொழி யியல் வல்லுநர்களும் பிறருங் கூறியுள்ள கருத்துமணி களைத் தாங்கியுள்ள பெட்டகமாகவும் தமிழ்ப் பாதுகாப்புக் கேடய மாகவும் அமைந்துள்ளது. - இறைக்குருவனார் முன்னுரை செம்மொழித் தமிழ் சார்பான செய்தி களைக் கொண்டு இந்நூல் வெளிவருகிறது. வழக்கம் போல இதனையும் எழுத என்னை ஊக்குவித்த தமிழ்மண் பதிப்பக இளவழகனாருக்கு எனது நன்றி. திறமான புலமையும், நுண்மாணுழை புலமும், மதுகையும் உடைய தமிழறிஞர் இறைக்குருவனார் எழுதியுள்ள அணிந்துரைக்கும் நன்றியுடை யேன். அவர் என்னைப் பற்றிக் கூறியுள்ளவற்றை என்பால் உள்ள அன்பாலும் என்னை ஊக்குவிக்கவும் கூறிய தாகக் கருதுகிறேன். அணிந்துரைக்காக நூல் முழு வதையும் படித்துள்ளதுடன் ஆங்காங்கு தேவையான திருத்தங்களைச் செய்து எனது நடையைச் செப்பனிட்டுள்ளார். அதற்கும் நன்றி எளிதில் ஒரே இடத்தில் கிட்டாதனவும், இன்றைய பல்துறை அறிவியற்புல வல்லுநர்கள் மறுக்கொணாதவையுமான செய்திகள் சிலபல வற்றை ஓரிடத்தில் தொகுத்துப் பலரின் பார்வைக்கும் கொண்டு வருவதே இந்நூலின் நோக்கமாகும். பி. இராமநாதன் பதிப்புரை கால்டுவெல் 1856 இல் தமது "தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வெளியிட்டதுமே உலக மொழியியலறிஞர்கள் தமிழின் தொன்மை, முன்மை, செம்மை முதலியவற்றையும், ஞால முதன்மொழிக்குத் தமிழ் மிக நெருங்கியதாக நிறுவப்பட வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்தனர். எனினும் "செம்மொழி' என ஒரு மொழியை ஏற்றிடத் தொன்மொழியாயினும் அம்மொழி இலக்கியம் சிறந்ததாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும், பிறமொழி இலக்கியங்களை அடியொற்றி உருவாகாததுமாகவும் இருக்க வேண்டும். 1850 க்குப் பின்னர்தான் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கியங்கள் அச்சிட்டு வெளியிடப் பட்டன. 1900 அளவிலேயே மொழி அடிப்படையிலும் சரி, இலக்கிய அடிப்படையிலும் சரி, தமிழ் செம்மொழியே என்பதை உலக அறிஞருலகம் ஏற்றுக் கொண்டது. இந்திய நடுவண் அரசு அளவில், தமிழ்மொழி செம்மொழி என மிகக் காலம் தாழ்ந்து 2004 இல் தான் ஏற்கப்பட்டது. இதற்குப் பலரும் காரணமாவர் - தமிழர்களாகிய நாம் உட்பட. செம்மொழிக் கோரிக்கை வரலாற்றை இந்நூல் இயல் இரண்டில் காண்க. காலப் பழமையால் வைரம் பாய்ந்தது! நாகரிகத்தின் நாற்றங் காலது எம்மொழிக்கும் அது ஈடிணையற்ற செம்மொழி உலகச் சிந்தனைக்கெல்லாம் ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை! என்றார் பாவேந்தர். பாவேந்தரின் கனவை நனவாக்கி தமிழைச் செம்மொழியாக நடுவண் அரசு ஏற்று அறிவிக்கச் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்குத் தமிழர் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள். செம்மொழித் தமிழ்த்திட்டத்தில் ஏற்கெனவே தொடங்கி 2005 இலிருந்து ஊக்கத்துடன் நடத்திவரும் பணிகளின் விவரங்களை இந்நூலின் பல்வேறு இயல்களில் காணலாம். செம்மொழித் தமிழ்ப்பணிகளை, நடுவண், மாநில அரசுகளின் திட்டம் என்று கருதாமல் கற்றறிந்த தமிழர் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பையும் ஆதரவையும் தர வேண்டும். படிப்படியாக செம்மொழித் தமிழ்த் திட்டத்தின் பணிகள் விரிவாக்கப்பட்டு மேலும் பல பணிகள் தொடங்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு தொடங்கு முன்னர் பலதுறை அறிஞர்களுடன் கலந்து செம்மொழித் தமிழ்த் திட்ட சிறப்பு நடுவமும் நடுவண், மாநில அரசுகளும் பின்வரும் எண்ணங்களையும் கருதிட வேண்டும். 1. ஞால முதன்மொழி ஆய்வுகளுக்குத் தமிழே வழிகாட்ட வல்லது என்பதை இயல் 4 விளக்குகிறது. இத்துறையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு அறிஞர்களுடன் தமிழக மொழியியல் ஆய்வு நிறுவனங்களும் தனிப்பட்ட அறிஞர்களும் தொடர்பு கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். 2. தமிழிசையே உலக இசை வளர்ச்சிக்கு அடிப்படை என்று 'கருணாமிர்த சாகரம்' என்ற தனது ஆராய்ச்சி நூலில் உறுதிப்படுத்தி யுள்ளார் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர். இன்று தமிழிசை பிறந்த நாட்டிலேயே உரிமையிழந்து நலிந்துவிட்டது. இசை நூல்கள் எல்லாம் மொழிமாற்றம் பெற்று வடமொழியில் காணப்படுகின்றன. தமிழிசை மறுமலர்ச்சி பெற வேண்டும். தமிழிசை நூல்களைத் தமிழாக்கம் செய்து தமிழோடு சேர்க்க வேண்டும். 3. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் நெடிதுயர்ந்த கோபுரங் களோடு கூடிய கோவில்கள் மிகுதி. இவை தமிழர்களின் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் நேரடியான சான்று, என்றாலும் - கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலை பற்றிய நூல்கள் தமிழில் ஒன்று கூட இல்லை. அத்தனைப் பழந்தமிழ் நூல்களும் வட மொழிக்குச் சென்று விட்டன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ்வளம் பெருக்க வேண்டும். 4. தமிழ் மருத்துவம் - தமிழுக்குரிய அத்துணைத் தொன்மைச் சிறப்புகளையும் கொண்டது. பழந்தமிழ் மக்களின் அறிவுக்குச் சான்றாக அமைவது. பிற்காலத்தில் சித்தர்களால் வளர்க்கப்பட்டு 'சித்த மருத்துவம் என்றானது. தமிழ் மருத்துவத்தைக் கொண்டு வளர்ந்தவைதான் இந்தியாவில் லுள்ள மற்ற மூலிகை மருத்துவ முறைகள். இன்று தமிழ் மருத்துவம் ஓரளவு மறுமலர்ச்சி பெற்று வருகிறது. தமிழ் மருத்துவம் விரிவாக ஆராயப்பட்டு - பழந்தமிழ் மருத்துவச் சுவடிகளிலும் - நூல்களிலுமிருந்து தமிழ் மருத்துவக் கலைக் களஞ்சியம்' உருவாக்கப்பட வேண்டும். 5. எண்ணும் - எழுத்தும் வாழும் உயிர்களுக்குக் கண்கள் என்றார் திருவள்ளுவர். முதன் முதல் எண்களை உருவாக்கிப் பயன்படுத்தியவர்கள் பழந்தமிழர்களே. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கும் - 'கணினிக் கலைச் செழிப்புக்கும் அவ்வெண்களே அடிப்படை. பண்டைத் தமிழகத்தோடு தொடர்புடைய அரபு நாட்டு வணிகர் மூலம் அவ்வெண்கள் உலகெங்கும் பரவி - இன்று அரபு எண்' என்ற பெயரில் வழங்கி வருகின்றன. எண் கணிதமுறை ஆராயப்பட்டு - இது தமிழர்களின் கண்டுபிடிப்பு என்பதை உலகறியச் செய்ய வேண்டும். 6. இந்திய அரசு 'செம்மொழிகளுக்கு வழங்கும் அத்தனைச் சிறப்புகளையும் நன்மைகளையும் காலந்தாழ்த்தாது செம்மொழித் தமிழுக்கும் உரித்தாக்க வேண்டும். பின்வரும் செயல்பாடுகளும் இதில் அடங்கும்: அ) பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவிட நிதி உதவி தருதல் ஆ செம்மொழித் தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவர நிதி உதவித் திட்டம் (தமிழிலிருந்து பிற மொழிகளிலும், பிறமொழிகளில் லிருந்து தமிழிலும்) இ) தமிழ்ச் செம்மொழி சார்ந்த சிறந்த கருவி நூல்களை மூலமாகவோ, மொழிபெயர்ப்பாகவோ வெளியிடும் அறிஞர்களுக்கும் நிறுவனங் களுக்கும் நிதி உதவித் திட்டம். ஈ) வளர்ந்துவரும் இளைய தலைமுறை செம்மொழித் தமிழ் மரபையும், பண்பாட்டையும் அறிவதற்கு உதவும் வகையில், அத் தமிழ் மரபுசார் வெளியீடுகளை எளிய நடையில் வண்ணப்படங்களுடன் வெளிக் கொண்டுவர நிதி உதவித் திட்டம். சங்கத் தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றுக்கும் செம்பதிப்புகள் (Critical Editions) வெளிவரத் தக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உ) அயல் நாடுகளிலுள்ள சிறந்த தமிழறிஞர்களாகிய கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட், ஆர். ஈ. ஆஷர், குரோ, சான்போர்டு ஸ்டீவர், ஹரால்டு ஷிப்மான், ஸ்டெபான் லெவிட், ஈவா வில் தன் போன்றவர்கள் பயன்பெறும் வகையில் நம் நாட்டு நிறுவனங்களில் '' வருகைப் பேராசிரியர் " ( Visiting Professorship ) பணியிடங்கள் ; இந்தியாவிற்கு வந்து போவதற்கான பயணக் கட்டண உதவித் தொகைகள் போன்றவற்றை ஏற்படுத்துதல். 7. (அ) இலக்கியப் பழமைக்கும், அறிவியல் புதுமைக்கும் ஏற்ற சொல்வளம் கொண்ட மொழி தமிழ். அறிவியல் சார்ந்த தொழிற் கல்வியைத் தமிழால் கற்பிக்க முடியும். உலகளவில் விரைந்து வளரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் தமிழாக்க முடியும். தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் வல்ல அந்தந்தத் துறை வல்லுநர்கள் இப்பணியில் ஈடுபட ஊக்குவித்தல் வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அறிவியல் கலைச்சொல் களஞ்சியமும் உருவாக்கப்பட வேண்டும். (ஆ) சிறந்த கலைக்களஞ்சியங்கள் மருத்துவம், அறிவியல், சிறுவர் கலைக் களஞ்சியங்கள் முதலியவை உருவாக உதவி செய்தல். (இ) ஆங்கிலம் - தமிழ் அகராதியைப் பொறுத்தவரை 1960களில் சிதம்பரநாதனார் - அப்பாத்துரையார் தொகுத்து வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்குப் பின் இவ்வகையில் தரமான புது முயற்சிகள் இல்லை. தகுந்த அறிஞர்களை இப்பணியில் ஈடுபடுத்தி இன்றைய நிலைக்கு ஏற்புடைய, உலகத்தரம் வாய்ந்த ஆங்கிலம் - தமிழ் அகராதி தொகுத்து வெளியிடப்படவேண்டும். 8. (அ) சிந்து வெளியில் அகழாய்வுகள் நடத்திய தகுதி வாய்ந்த அறிஞர்கள் கண்டுள்ள சிந்துவெளி ஆய்வு முடிவுகளை மேலும் ஆராய்ந்து உண்மை நிலையை உலகறியச் செய்ய ஏற்கெனவே செம்மொழித் தமிழ் நடுவம் கருதியுள்ளது அம்முயற்சிகளைத் தொடர வேண்டும். (ஆ) தமிழின் தொன்மை, தமிழர் பண்பாட்டு வளர்ச்சிக்கான சான்றுகளாகிய கிபி 600க்கு முற்பட்ட பொறிப்புகள் - கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு ; தமிழர் நாகரிகம் , வணிகம் முதலியவற்றுக்கு ஆதாரமான தமிழகக் கடல், கடலோரப் பகுதிகளில் அகழ்வாய்வு ; ஆகியவற்றை முனைப்புடன் செய்ய வேண்டும். (9) தமிழர் பெரும் அளவில் வாழும் அயல் நாடுகளில் தூதர்களாகத் தமிழர்களை அமர்த்துவது அந்நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பாதுகாப்பு அரணாக அமையும். இது குறித்துத் தமிழக அரசு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும். அயலகத் தமிழர்களிடையே தமிழ் நிலை பெறுவதற்கான பல்வகை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். உலகின் ஏனைய செம்மொழிகள் வாழ்ந்து செழித்த காலத்தில் எம். தமிழ்மொழியும் வாழ்ந்தது. இன்று அம்மொழிகள் அழிந்த நிலையில் இளமைகுன்றா உயிர்ப்புடன் உள்ளது நம் தாய்மொழியாம் தெள்ளிய தீந்தமிழே... "உலகின் தலைசிறந்தனவாகக் கருதப்பெறும் அறு செம்மொழிகளுள் - உயிர்ப்போடும், ஊட்டத்தொடும், செம்மாப் பொடும், சீரொடும், சிறப்பொடும், தொல்பழந்திருவொடும், கலங்கறாக் கருவோடும், வளத்தோடும், நலத் தொடும், ஒட்பொடும், திட்பொடும், உலகந் தரீஇய நட்போடும், எண்ணத் தினிக்கும் இனிய பெட்போடும் உலவி உவப்புறுத்துவதாக, நம் தெள்ளிய தீந்தமிழே இன்று - நன்று நீடி நின்று நிமிர்ந்தெழுந்து நடை சிறந்து இயங்கி வருகின்றமையை, முதலில் நந்தமிழர் நெஞ்சம் நிறக்க உணர்தல் வேண்டும்!'' என்ற சொல்லாய்வு அறிஞர் அருளியின் நெஞ்சக் கூற்றைத் தமிழர்கள் நினைக்க வேண்டுகிறேன். தமிழ் மொழி, இன நாட்டுணர்வு என் எலும்போடும் நரம்போடும் மூளையோடும், குருதியோடும் இரண்டறக் கலந்து ஊறிப் போனது. அதுவே எனக்கு உணவாகவும் உயிராகவும் வாழ்வாகவும் ஆனது. தமிழ் மொழியின் செம்மாப்பினை உலகமெலாம் பறைசாற்றும் வகையில் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் எழுதிய தொன்மைச் செம்மொழி தமிழ் என்னும் இவ்வருந்தமிழ் நூலினை தமிழ் கூறும் உலகுக்குப் புதுவரவாகக் கொடுத்துள்ளோம். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பாவாணர் வழிநிலை அறிஞர் தனித்தமிழ்க் குரிசில், தென் மொழிக் குடும்ப மரபின் மூத்தவர் திருக்குறள் மணி இறைக்குருவனாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. மற்றும் கணினி செய்து உதவிய மு.ந. இராமசுப்பிரமணிய ராசாவும், "குட்வில் செல்வியும், பாராட்டுக்குரியர். வீறுடைய செம்மொழி தமிழ்மொழி - உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி! வீறுடைய செம்மொழி ... மாறுபடும் மொழிகளைப்போல் மாறவில்லை மங்கிவரும் மொழிகளைப்போல் மங்கவில்லை வேறுபடும் மொழிகளைப்போல் வேறாகவில்லை வீழ்ந்துபடும் மொழிகளைப்போல் வீழவில்லை வீறுடைய செம்மொழி ... கூறுபடும் மொழிகளைப்போல் குலையவில்லை கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை! சாறுபட்ட மரங்களைப்போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதரைப் போல் தாழவில்லை! வீறுடைய செம்மொழி ... என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் வரிகளைத் தங்கள் நெஞ்ச வயலில் விதைக்கிறேன். விளைவின் பயனைத் தமிழ் உலகம் கொள்ளட்டும். இந்நூல் தமிழர்களின் இல்லந்தோறும் இருக்கவேண்டிய தமிழ்க்காப்பு நூல் வாங்கிப் பயன் கொள்வீர். கோ. இளவழகன் இயல் 1 தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் இன்றைய செயற்பாடுகள் மேலை ஐரோப்பிய நாடுகளில் பண்டைக் காலத்திலேயே (இப்போதைய ஐரோப்பிய மொழிகளில் இலக்கியங்கள் எவையும் தோன்றுவதற்கு முன்னரே) சிறந்த இலக்கியங்களாக விளங்கிய கிரேக்க, இலத்தீன் மொழி இலக்கியங்களைச் "செவ்விலக்கியம் " Classical literature என ஐரோப்பியர் அழைத்தனர்; அவ்விரு மொழிகளையும் "செம்மொழிகள்" Classical languages என்றனர். Classical என்பதன் அடிப்படைப் பொருள் "முதல் தரமான / செவ்விய / செம்மையான " என்பதே யாகும். அவ்விரு மொழிகளின் (கி.மு. 500 - கி.பி. 300 சார்ந்த) சிறந்த பல்துறை இலக்கியங்களும் அந்தந்த மொழியிலேயே தாமாக உருவானவை; பிறமொழித் தாக்கத்தினால் அல்ல. அவ்விலக்கியங்களும் அவற்றின் கருத்துக்களுமே பிற்றை ஐரோப்பிய மொழிகளுக்கு (ஆங்கிலம், பிரெஞ்சு, செரு மானியம், ஸ்பானியம், உருசியன் முதலியவற்றுக்கு முன்மாதிரி யாக அமைந்தன. 2. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து உலகின் பிற பகுதிகளில் இருந்த இத்தகைய மொழிகளையும் செம்மொழிகள் என ஐரோப்பிய மொழியியலறிஞரும் இலக்கிய அறிஞரும் ஏற்கலாயினர்; அழைக்கலாயினர். சீனம், சமற்கிருதம், பாரசீகம், அரபு முதலியவை 1800 தொடக்கத்தில் இருந்தே இவ்வாறு கருதப்பட்டு வருகின்றன. தமிழ் தொன்மை யான மொழி என 1816 - லிருந்துதான் (பிரான்சிஸ்வைட் எல்லிஸ்) உணரப்பட்டது; 1856-லிருந்துதான் (கால்டுவெல்) ஏற்கப்பட்டது. ஆனால் 2000 ஆண்ட '' வரை ஏற்கப்பட்டது. ஆனால் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட கழக (சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவை - அச்சிட்டு வெளிவந்த காலம் கி.பி. 1870-1900 ஆண்டு களேயாகும். கிரேக்க, இலத்தீன், சமற்கிருதத் தொல் இலக்கியங்களுக்குச் சமமான - சில கூறுகளில் விஞ்சிய - பண்டைத் தமிழ் இலக்கியம் உள்ளதை உணர்ந்ததும் தமிழைச் செம்மொழி என மேனாட்டறிஞர் 1920 களிலிருந்தே நடைமுறையில் ஒத்துக் கொண்டுள்ளனர். இந்திய அரசு1800 -லிருந்தே சமற்கிருதம், பாரசீகம், அரபு ஆகியவற்றைச் செம்மொழியாக "ஆளுமை நடைமுறைப்படி" (Executive action) ஏற்றுக் கொண்டு அவற்றை அரசு நிதியிலிருந்து செலவு செய்து ஊக்குவித்து வந்தது. தமிழ் பற்றி அத்தகைய கோரிக்கைகள் (தமிழும் செம்மொழி என அறிஞர் ஏற்ற) 1900 - லிருந்து அவ்வப்பொழுது எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் தமிழகப் பகுதியின் அரசியலதிகாரத்தைக் கைக்குள் வைத்திருந்த நடுவங்களில் அல்ல! தமிழ் செம்மொழி என்பதைக் கடந்த நூறாண்டுகளில் விளக்கிய அறிஞர் பலர் கருத்துகள், அக்கால கட்டத்தில் செம்மொழியாக ஏற்க விடுத்த கோரிக்கைகள் பற்றிய வரலாற்றை இயல் 2-இல் காணலாம்) 3. சென்னை மாகாணத்தில் 1920 திசம்பர் மாதம் நயன்மைக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சென்னை மாகாண அரசு 1950 சனவரியில் சென்னை மாநில அரசு ஆனது. 1956 நவம்பரிலேயே சென்னை மாநில அரசு 'தமிழக அரசு' ஆகிவிட்டதாகக் கருதலாம் (பெயர் மாற்றம் 1967 -ல் தான் வந்தது என்ற போதிலும்). நயன்மைக் கட்சியிலும் பேராயக் கட்சியிலும் முதன்மை பெற்றிருந்தவர்கள் தமிழரல்லாதார் ஆகையால் தமிழைச் செம்மொழியாக ஏற்க நடுவணரசுக்கு அவர்கள் கோரிக்கை தானும் வைத்திலர். சாமானியத் தமிழருள் பெரும்பான்மையினர் (அன்றும் இன்றும்) தமிழ், தமிழர் நலனைப்பற்றிக் கவலைப்படுபவர் அல்லர்; தந்நலம், குடும்ப நலம், சாதிநலம், கட்சி நலம் இவற்றுக்கு அப்பாற்பட்டவை பற்றி "எங்கெழிலென் ஞாயிறு எமக்கு" என்று இருப்பவர்கள்; எனவே அவர்களும் தாம் சார்ந்திருந்த கட்சித் தலைவர்களிடம் செம்மொழிக் கோரிக்கையை வைக்கவில்லை. நல்லூழ் காரணமாக 2004 அத்தோபரில் தமிழை நடுவணரசு நிலையில் "செம்மொழியாக ஏற்பளித்தது. 2005 சூலை முதல் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தை நடுவணரசு திறம்படச் செயல்படுத்தி வருகிறது. இவ்வருஞ்செயலுக்குக் காரணமானவர் அனைவரும் மாநில, மைய அரசினரும் நமது நன்றிக்குரியராவர். 4. தமிழ்ச் செம்மொழித் திட்டச் செயல்பாட்டுப் பொறுப்பை மைசூரிலுள்ள (நடுவணரசு மாந்த வள அமைச் சகம் : உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும்) ''இந்திய மொழிகளுக்கான நடுவணரசு நிறுவனத்தின்" அமைப்பான ''தமிழ்ச் செம்மொழிச் சிறப்பாய்வு நடுவம், அதாவது Centre of Excellence for Classical Tamil Central Institute of Indian Languages Manasa gangotri; Mysore 570 006; Karnataka State ஏற்றுச் செவ்வனே நடத்தி வருகிறது. நிறுவன இயக்குநர் உதய நாராயணசிங் அவர்களும் துணை இயக்குநர் கே. இராமசாமியும் இவ்வகையில் பாராட்டுக்குரியவர். விரைவில் இந்நிறுவனம் சென்னையிலிருந்து செயல்பட விருக்கிறது. 5. தமிழ்ச் செம்மொழிச் சிறப்பாய்வு நடுவம் பல்துறை அறிஞர், பல்கலைக் கழகங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் கலந்தாய்வு செய்து, பின்வரும் சிறந்த திட்டங்களை ஏற்கெனவே 2005 சூலை முதல் தொடங்கி நடத்தி வருகிறது. (1) தமிழ்ச் செம்மொழி இலக்கிய (சங்க இலக்கிய) நூல்கள் 41 - இல் ஒவ்வொன்றுக்கும் ஆய்வுப் பதிப்பு வெளி யிடுதல் - முதலில் மூலம் ; பின்னர் உரையுடன் Critical Editions of Ancient Tamil Works. இப்பணியை 21 தமிழறிஞர்களைக் கொண்டு நடுவம் தொடங்கியுள்ளது (நாற்பத்தொரு நூல்கள் பட்டியலை இயல் மூன்றில் காண்க.) (2) கழக இலக்கிய நூல்களைப் பிற மொழிகளில் பெயர்த்து வெளியிடுதல். (Translation of Ancient Tamil Works.) கழக இலக்கிய நூல்கள் பலவற்றுக்கு ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புகள் உள்ளன. சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகளும் உள்ளன. திருக்குறளுக்கு ஆங்கில மொழி பெயர்ப்புகள் சுமார் முப்பது உள்ளன; 1794இல் லண்ட னில் வெளியான Specimens of Hindoo Literature நூலில் என். ஈ. கின்டர்ஸ்லி குறள் முதல் 12 அதிகாரங் களிலிருந்து சில குறள்களை எடுத்து ஆங்கிலப்படுத்தி வெளி யிட்டார். 1819 இல் 120 குறள்களுக்கு விரிவான விளக்கவுரையுடன் எல்லிஸ் தம் மொழி பெயர்ப்பை வெளியிட்டார். 1840-1886 கால அளவில் துரு (Drew), இலாசரஸ், போப் போன்ற பல முழுமை யான ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வெளியாயின. ஐரோப்பிய மொழிகளில் முதலில் இலத்தீனில் தான் 1730 இல் வீரமாமுனிவர் குறளின் முதல் இருபால்களை மட்டும் பெயர்த்து வெளியிட்டார். குறளின் ஏனைய ஐரோப்பிய மொழி ஆக்கங்களுள் குறிப்பிடத் தக்கவை பிரெஞ்சு - ஏரியல் (1848); செருமன் - கிரால் (1856 ஆகும். இக்குறள் மொழிபெயர்ப்புகள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின (காண்க இயல் 3: திருக்குறள்) கழக இலக்கிய அகப்பொருள் பாடல்கள் வேறு எம் மொழிப் பாடல்களிலும் இல்லாத தனிச்சிறப்புடையவை என்பதை ஏ. கே. இராமானுசனுடைய குறுந்தொகையின் அருமையான ஆங்கில ஆக்கம் 1967 இல் (The Interior Landscape) வெளிவந்ததும் பன்னாட்டு இலக்கியவாணரும் தெள்ளிதின் உணர்ந்தனர். கழக இலக்கியங்களில் சிலவற்றுக்கு ஏற்கெனவே உள்ள (ஆங்கில மொழிபெயர்ப்புகளை) அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்து அவற்றுள் சிறந்தவற்றை நடுவம் விரைவில் அச்சிட்டு வெளியிடவிருக்கிறது. அடுத்த கட்டமாகப் புதிய ஆங்கில மொழி பெயர்ப்புகளும் செய்யப்படும். புதிய மொழிபெயர்ப்புக்காக ஒவ்வொரு நூலுக்கும் தமிழ் அறிஞர் ஒருவர், மொழி பெயர்ப்பாளர் ஒருவர், ஆங்கில அறிஞர் ஒருவர் ஆகியோரைக் கொண்ட மூவர் குழுவை நடுவம் அமைக்கும். பிறமொழிகளில் : இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்சு முதலிய மொழிகளிலும் கழக இலக்கியப் பெயர்ப்புகளை நடுவம் விரைவில் கொணரவிருக்கிறது. கழக இலக்கியங்களின் சிறப்புகள், குறிப்பாக வேறு எந்தச் செம்மொழி இலக்கியத்திலும் காணவியலாதனவற்றைப் பற்றிய அறிஞர் கூற்றுக்களை இயல் 3இல் காணலாம். கழக இலக்கிய நூல்களைப் பிற மொழிகளில் பெயர்ப்பது பற்றியது இயல் 4. (3) வரலாற்றுமுறைத் தமிழிலக்கணம் வெளியிடுதல் Historical Grammar of Tamil தமிழ் ஒலியனியல், ஒலியியல், பெயர்ச்சொல்லியல், வினைச் சொல்லியல், இடைச்சொற்கள், தொடர்பனியல் (Phonetics, Phonology, Noun morphology, Verb morphology, particles. Syntax) ஆகிய ஆறு துறைகளிலும் மொழியிலறிஞர் அறுவரைக் கொண்டு ஆளுக்கொரு இயலை எழுதுவித்து, தொகுத்து இவ்விலக்கண நூலை நடுவம் வெளியிட விருக்கிறது. கால வரம்புகள், செம்மொழிக்காலம் கிமு. 300 - கி.பி. 600; இடைக்காலம் கி.பி. 601-1600; இக்காலம் கி.பி. 1601 முதல் - என்றவாறு அமையும். (4) தமிழின் தொன்மை : பிற அறிவுப்புலங்களுடன் இணைந்த ஆய்வு : Antiquity of Tamil: an interdisciplinary Approach. தமிழ் இசையியல், கழகக்காலம் சார்ந்த குகைக் கல் வெட்டுகள், கழகக் காலப் பானை ஓடுகள், காசுகள், முத்திரை கள், நடுகற்கள் போன்றவற்றில் உள்ள பொறிப்புகள் கல்வெட்டு கள் இவை சார்ந்த ஆய்வுகளை நடுவம் ஊக்குவிக்கும் சிந்து வெளி நாகரிக எழுத்தாய்வுகளையும் ஊக்குவிக்கும். புதிய அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவும் வழிவகைகள் காணப் படும். பழந்தமிழ் இசைப்பாடல்களை இசைக்கும் (90 மணித் துளி) குறுந்தகடு ஒன்று அணியமாகியுள்ளது. இன்றைய நாஸ்திராதிக் / யூரேசியாடிக் ஆய்வாளர்கள், ஞால முதன் மொழி ஆய்வாளர்கள், தொல்லியலாளர், மரபணு ஆய்வாளர் ஆகியோர் பார்வையில் தமிழின் தொன்மை பற்றி இன்றைய அறிஞருலகம் கொண்டுள்ள கருத்துக்களை இயல் 4இல் காணலாம். (5) தமிழின் வட்டார வழக்குகள் : (க) காலந்தோறும் இருந்தவை (இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகளின் படி ) மற்றும் (உ) இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளவை : Diachronic and synchronic study of Tamil dialects. இப்பொருள் சார்ந்த 1100 நூல்கள் கட்டுரைகளை நடுவம் தொகுத்துள்ளது. வட்டார வழக்குச் சொல் அகராதி வட்டார வழக்கு நிலப்படம் (Dialect Atlas) ஆகியவற்றை உருவாக்குவது நோக்கமாகும். பல அடிப்படைகளில் இதுவரைத் தொகுத்த 40,000 வட்டார வழக்குச் சொற்கள் (பல்வேறு தொழில் களுக்குரிய சிறப்புச் சொற்கள், குமுகப் பிரிவுகளுக்குரிய சொற்கள் உட்பட) கணினியில் ஏற்றப்படுள்ளன; பணி தொடர்கிறது. (6) இந்திய மொழிக் குடும்பங்களிடையே பொதுமை India as a Linguistic Area இது பற்றிய ஆய்வுகளுக்கு உதவும் வகையில் தமிழ் - பிறமொழி அகராதிகள், பிற இந்திய மொழி இலக்கணங்கள் போன்றவை வெளியிடப்படும். பண்டாரகர்கள் தாமஸ் பரோ - மர்ரே பார்ன்சன் எமெனோ தொகுத்த திராவிடச் சொற்பியல் அகரமுதலி Dravidian Etymological Dictionary (1961 / திருத்திய பதிப்பு 1984க்கு இணைப்புத் தொகுதி ஒன்றை நடுவம் உருவாக்கி வருகிறது. வட இந்தியாவிலுள்ள இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம், முண்டா மொழிக்குடும்பம் போன்றவற்றின் மொழி களில் உள்ள தமிழியக் கூறுகள் பற்றி இதுவரை மொழியியல் அறிஞர் கண்டுள்ள முடிவுகளின் சுருக்கத்தை இயல் 5 இல் காணலாம். (7) செம்மொழித் தமிழ் ஆய்வு குறித்த கணினி நூலகம் உருவாக்குதல் Digital library for ancient Tamil Studies: இவ்வாய்வு சார்ந்த 3800 நூல்கள் பற்றிய விளத்தங்கள் தமிழ் எழுத்திலும் உரோமன் எழுத்திலும் தொகுக்கப் பட்டுள்ளன. ஆய்வுச் செய்திகளைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ உடனுக்குடன் பெறக்கூடிய விளத்தக் களஞ்சியமும் Tamil - English Bilngual Thesaurus உருவாகி வருகிறது. தேவையான மென் பொருள் முதலியனவும் அணியமாகின்றன. (8) செம்மொழித் தமிழ் இலக்கியத்தை "ஆன்லைன்" வழிக் கற்பித்தல் . Online Teaching of Classical Tamil அகப்பாடல், புறப்பாடல், இலக்கியம், அறநூல், இலக்கணம் (செய்யுளியல் உட்பட) ஆகிய ஐந்து வகைச் கழக இலக்கியங்களும் மொத்தம் 300 மணிநேரம் ''ஆன்லைன்' வழி கற்பிக்கத் திட்டமிட்டு, பணி தொடங்கிவிட்டது. (9) செம்மொழித் தமிழிலக்கியத் தொகுப்பைக் கணினியில் உருவாக்குதல். Corpus development for Classical Tamil works. செம்மொழித் தமிழ் இலக்கிய நூல்கள் 41 இன் ஆய்வுப் பதிப்புகள் வெளியானதும் இப்பணி தொடங்கி நிறைவேறும் ; அதற்கான திட்டம் உருவாகிவிட்டது. (10) செம்மொழித் தமிழ் சார் படக்காட்சிகளை உருவாக்குதல். Visual episodes on Classical Tamil தமிழ் மொழி, கழக இலக்கியம், இலக்கணம், கல்வெட்டியல், காசியல், கலை, கட்டுமானம், சமயம், தமிழ் அயல்நாடுகளில் பரவல் போன்ற பொருண்மைகளில் ஏறத்தாழ 100 படக்காட்சிகள் உருவாக்கப்படும். முதற்கண் 13 படக்காட்சிகள் தெரிந்தெடுக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் - 4 திராவிட மொழிகள் - 2 ; தமிழர்காசியல் - 2; தமிழ் இலக்கணத் தொல்வரவு - 2; கழகக் காலத் துறைமுகங்கள் / தலைநகரங்கள் / வணிக நடுவங்கள் - 3 6. தமிழ் நாட்டில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பாய்வு நடுவம் கடந்த ஓராண்டுக்கு மேலாகப் பல கருத்தரங்குகளையும் ஆய்வரங் கங்களையும் நடத்தி வருகிறது. அந்நடுவத்துடன் இணைந்து தமிழறிஞர்களும், தமிழ்ப்பற்றாளரும், தமிழ் இலக்கியம், மொழி, பண்பாடு இவற்றின் மேம்பாட்டுக்கும் பொது மக்களிடையே இவை பற்றிய ஆர்வத்தை ஊட்டுவதற்கும் முயல்வார்களாக 7. தமிழ் வளர்ச்சியின் அனைத்துப் பொருண்மைகளையும் குறித்து நடுவண் அரசுக்கு அறிவுரை தருவதற்கு அறிஞர் முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் வல்லுநர் பதின்மரைக் கொண்ட 'தமிழ்மொழிவளர்ச்சி ஆயம் Tamil language Promotion Board” ஒன்றை நடுவண் அரசு அமைத்துள்ளது. தமிழ்ச் செம்மொழி அறிஞர்களுள் சிறந்தவர்களுக்கும் அயல் நாட்டவர்க்கும், நம் நாட்டவர்க்கும் ஆண்டுதோறும் சில சிறப்பு விருதுகள் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் செம்மொழி அறிஞர்களில் சிறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் மதிப்புச் சான்றிதழும் வழங்கப்படும். இளம் அகவை அறிஞர்களை ஊக்குவிக்கப் பரிசுத் தொகைகளும் வழங்கப்படும். முனைவர் பட்டத்துக்கு மேல் நிலையிலான ஆய்வுப் பணியிடங்கள் ஐந்து முனைவர் பட்ட ஆய்வுப் பணியிடங்கள் பத்து ஆகியவற்றையும் ஆண்டுதோறும் வழங்குவதாக நடுவண் அரசு மனிதவள அமைச்சகம் 14 - 7 - 2005 அன்று அறிவித்துள்ளது. விரைவில் செம்மொழித் தமிழ் நடுவம் சென்னையிலிருந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும் மைய அரசும் செய்து வருகின்றன. இயல் 2 ''தமிழ் செம்மொழியே': கருத்துரைகள், கோரிக்கைகள் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை 1. தமிழ் தனிமொழி, தென்னிந்திய மொழிகள் (தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் முதலியவை) தமிழிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதை முதலில் 1816 இல் நிறுவியவர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் . பின்னர் 1828 இல் பி.ஜி. பாபிங்டனும் 1853 இல் ஆர். ஹொய்சிங்டனும் இக்கருத்தைக் கூறியுள்ளனர். 1856 இல் கால்டுவெல் தமது "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்" நூலை வெளியிட்டு தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முற்பட்டதாகலாம் என்றும் ஞாலமுதன் மொழிக்கு மிக நெருங்கியதாக இருக்கலாம் என்றும் நிறுவினார். வரலாற்று மொழியியலில் அந்நூல் உலக அளவில் மிகச் சீரிய இடத்தைப் பெற்றிருப்பதாகும். (ஏற்கனவே சொன்னபடி) 1870-1900 கால அளவில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் அச்சில் வெளி வந்ததும் பழந்தமிழ் இலக்கியம் செவ்விலக்கியம் என்பதையும் தமிழ்மொழி செம்மொழி என்பதையும் நடைமுறையில் பன்னாட்டு அறிஞரும் ஏற்பாராயினர் (நடுவணரசை ஏற்கச் செய்ய 2005 வரை ஆனதற்குத் தமிழரின் ஊக்கக் குறைவே காரணம் என்பதையும் கண்டோம். கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் செம்மொழி எனப் பகர்ந்த அறிஞர் சிலர் கூற்றுக்களை இவ்வியலில் காண்போம்: 2. பல்கலைக்கழக வகுப்புகளில் இந்தியாவெங்கும் செம்மொழியாகிய சமற்கிருதம் மட்டும் கற்றுத்தந்தால் போதும், உண்ணாட்டு மொழிகள் Vernaculars கற்றுத் தரவேண்டாம் என கர்சான் பிரபுவின் நடுவணரசு 1902ஐ ஒட்டிக் கட்டுப்பாடு செய்ய முயன்ற பொழுது அதற்கு எதிரான பரப்புரைகளை வி.கோ.சூரிய நாராயண சாத்திரியார், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை , லாசரஸ் முதலியவர்கள் செய்தனர். அக்கால கட்டத்தில் தமது தமிழ்மொழி வரலாறு (1903) நூலில் தமிழ் செம்மொழியே என பின்வருமாறு கூறி வற்புறுத்தினார் சாத்திரியார் : ''வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ் மொழியும் 'உயர்தனிச் செம்மொழி' யாமாறு சிறிது காட்டுவாள். தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பல மொழிகட்குத் தலைமையும் அவற்றினும் மிக்க மேத கவுடைமையுமுள்ள மொழியே 'உயர்மொழி. இவ் விலக்கணத்தான் ஆராயுமிடத்துத் தமிழ், தெலுங்கு முதலியவற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே 'தனிமொழி' எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியினுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குதலொல்லா; மற்றுத் தமிழ் மொழி அவற்றினுதவியில்லாமலே சிறிது மிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய மொழி நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்ப முடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது? ''திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்" என்பது இலக்கணம் இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன் முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதினுணர வல்ல தாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின் கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிற பாஷைச் சொற்களன்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித்தமிழ் மொழிக்குப் பொருந்துவன வாம் ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழியென்பது திண்ணம் இதுபற்றி யன்றே தொன்று தொட்டுத் தமிழ் மொழி 'செந்தமிழ்' என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதா யிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ் மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் 'உயர்தனிச் செம்மொழி ' யே யாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டுயர்தனிச் செம்மொழி சமற்கிருதமெனக் கொண்டாற் போலத் தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்'' 3. மொழியியலில் தமிழிய (Tamulian) மொழிக்குடும்பம் என்றே கால்டுவெல் காலம் வரை வழங்கிய பெயரை அவர் தான் ''திராவிட மொழிக் குடும்பம் என மாற்றி வழங்கினார். தமிழ் என்பதன் கொச்சைத் திரிபுவடிவமே திராவிடம் என்பதாகும். மகாவம்சத்தில் "தமிள", தண்டியின் எழுதிய அவந்திசுந்தரி கதையில் 'த்ரமிள' என்ற சொல்லும் வருகின்றன. இக்ஷ்வாகு குடிமரபினரின் பிராகிருதக் கல்வெட்டிலும் 'தமிள' தான் வருகிறது. பின்னர் குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகத்தில் "தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ'' (அப்படி திராவிட ( தமிழ் ) மற்றும் பிற மொழிகளில்) என்னும் இடத்தில் தமிழ் - தமிள் - த்ரமிள - த்ரமிட-த்ராவிடம் என்று மாறிவிட்டது. ஏ.சி.பர்னெல் 1872 இந்தியன் ஆன்டிகுவாரி முதல் தொகுதியில் மேற்கண்ட தந்திர வார்த்திகப் பகுதியை அச்சிட்ட பொழுது அபத்தமாக "ஆந்த்ர த்ராவிட பாஷாயம் ஏவ" என்று அச்சிட்டார் (மேலும் பற்பல பிழைகளுடன்). இந்தத் தவறான வாசகத்தை கால்டுவெல் (1875) ஸ்டென் கோனோ (Linguistic Survey of India: 1906) போன்றோர் பின்பற்றினர். இத்தவறை பிடி சீனிவாச ஐயங்கார் இந்தியன் ஆன்டிகுவாரி42 ஆம் தொகுதியில் (1913) தெள்ளத் தெளிவாக நிறுவியுள்ளார். (குஞ்ஞ ண்ணிராஜா Annals of Orental Research தொகுதி 28 (1979) கட்டுரையில் குறித்துள்ளது போல பர்னெல் உடைய தவறான வாசகத்தைத் தமிழறிஞர் பலரும் இன்றும் பின்பற்றித் "தமிழையும், தெலுங்கையும் ஒருசேரக் குமாரிலபட்டர் குறித்தார்" என்று தவறாக எழுதிவருகின்றனர்) 4. சைவசித்தாந்த மகாசமாசம் தனது 1918 மாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. கரந்தைத் தமிழ்ச்சங்கம் 25/5/1919 - லேயே உலகச் செம்மொழி களின் முதன் மொழியெனக் கருதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் தமிழ்மொழி உடையதாயிருப்பதால் அதனை அத்தகைய மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ் பட்டத் திற்கு அதை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஒரு தீர்மானமும், தமிழ் மொழியானது, தொன்மையும் சீர்மையும் செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியெனப் பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படு வதால், சென்னைப் பல்கலைக்கழகத்தார், தாம் இது நாளும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி ஓர் உயர் தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு இத்தென்றமிழ் நாட்டுப் பல்கலைக் கழகத்தில் அதற்கு முறைப்படி முதல் இடமும் (First Place) ஏற்பும் (Recognition) தர வேண்டும் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றி இரண்டு பொருண்மை களையும் அந்நாளைய இந்திய அரசுக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பியது. புலவர் சுந்தரராசன் வழிகாட்டுதலில் பல ஆண்டுகளாக முனைந்து செயல்படும் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும் பிறவும் தமிழைச் செம்மொழி என நடுவணரசு அறிவிக்க வேண்டுமென 2000 -லிருந்து எடுத்த முயற்சிகளில் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து செயல் பட்டது. இது தொடர்பாக தில்லி சென்ற சாலினி இளந்திரையன் 2000 - இல் தில்லியில் பேருந்து மோதி உயிர் துறந்தது ஒரு துயர நிகழ்வு ஆகும். 5. 15.03.1951 ஆம் நாளன்று நடைபெற்ற இந்திய இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாடமி) தொடக்க மாநாட்டில் அந்நாள் நடுவணரசுக் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பேச்சின் பகுதி வருமாறு: "இந்திய அரசியற் சட்டம் (தேசிய மொழிகளாக) ஏற்றுள்ள பதினான்கு மொழிகளில் சமற் கிருதமும் தமிழும் அடங்கும். சமற்கிருதம் தனித்தன்மை வாய்ந்தது எனவே சிறந்த செம்மொழியாக அது ஞாயப் படி ஏற்கப்பட்டுள்ளது. தமிழும் வளமான தொன்மையான இலக் கியங்களைப் பெற்றுள்ளது. அதன் செய்யுள் இலக்கியங்களும் அயல் மொழிகளில் பெயர்க்கப்படும் சிறப்பு வாய்ந்தவை. தமிழ் உண்மையாகவே ஓர் உயர்தனிச் செம்மொழி என்பதையும் செம் மொழித் தகுதி பழங்காலத்திலேயே எய்திவிட்டது என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்" 6.1960க்குப் பின்னர்க் கழக இலக்கியத்தில் துறை போயவர் களும் ஏனைய செம்மொழி இலக்கியங்களை உணர்ந்தவர்களும் ஆன அறிஞர்கள் கமில் சுவெலெபில், ஜார்ஜ் ஹார்ட், ஏ.கே. இராமானுசன் ஆகியோர் கழக இலக்கியமானது பிற செம் மொழிகளின் இலக்கியங்களிலும் சிறப்பு வாய்ந்த தனித்தன்மை வாய்ந்தது என்பதை விளக்கியுள்ள பகுதிகள் விரிவாக இயல் 3இல் தரப்பட்டுள்ளன. 7. அண்மையில் செம்மொழித் தமிழ் பற்றியும் நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக் கடந்த கால் நூற்றாண்டாகப் பல இயக்கங்களும் பிறரும் செய்த முயற்சிகள் பற்றியும் வெளிவந்துள்ள நூல்களில் குறிப்பிடத்தக்கவை வா. செ. குழந்தைசாமி (2004, 2005) அருளி (2005) முதலியவையாகும். மைசூரிலுள்ள தமிழ்ச் செம்மொழிச் சிறப்பாய்வு நடுவம் வெளியிடும் காலாண்டு இதழ் "செம்மொழியும் 1-1&2 (அக். திசம்பர் 2006; சனவரி - மார்ச் 2007) இன்று நடந்துவரும் செம்மொழித் திட்டச் செயற்பாடுகளின் விளத்தங்களைச் செவ்வனே தந்து வருகின்றது. இயல் 2க்கான நூற்பட்டியல் Ellis, Francis Whyte (181) "Note to the introduction" in A grammar of the Teloogoo language by A.D. Campbell Babington, Benjamin Guy (1830)An account of the sculptures and inscriptions at Mahamalaipur; Transactions of the Royal Asiatic Society Vol II (Paper read on 12 - 7 - 1828) : “I cannot touch on the subject of ancient Tamil characters without remarking, that their extreme simplicity seems one among many circumstances, which indicate that the language is of very high antiquity. The Sanscrit of the South of India is written in characters (the Grantha) derived from the Tamil, but they are much more complicated, and therefore probably posterior in point of antiquity. The peculiar structure of the Tamil language, wholly dissimilar from the Sanserit, its deficieney in aspirated consonants, its possession of letters and sounds not found in Sanscrit, its division into dialects, one of which contains but few words of Sanscrit derivation; and sounds not found in Sanscrit, its division into dialects, and lastly, its locality at the southern extremity of India, would seem likewise to indicate an independent origin, and one of at least equal antiquity with the Sanscrit itself; but this is a subject foreign to that now under consideration, and deserving a more, lengthened discussion than the limits of a note will allow." Hoisington, Rev Henry (1853) Brief Notes on the Tamil language. Journal of the American Oriental Society III; Article ix. (Paper read on 19 - 5 - 1852): “No language can be more concise, copious, pliant or mellifluous than Shen Tamil” (Tamil)“is believed to be the radix of the Telugu, the Canarese, the Malayalaim, the Tuluva and other dialects, which constitute the speech of some twenty or thirty millions of people. So that it may will be considered as occupying Southern India” Caldwell, Robert (1856; II Edn 1875) A Comparative grammar of the Dravidian or South Indian family of languages. Sriw at JTW 00 from 1. Chin (1903) gwin Owny வரலாறு Meenakshisundaram, T.P. (1956) Address to Tamil section of All India oriental conference 1955 at Annamalainagar; TAMIL CULTURE V - 2 April 1956 [Reference to Abul Kalam Azad's 15.5.1951 address (“Tamil is really a classical language”] ஜான் சாமுவேல் (1988) "செம்மொழிகள் வரிசையில் தமிழ் களஞ்சியம்; சூலை 1988 மணவை முஸ்தபா (2004) செம்மொழி : உள்ளும் புறமும் வா. செ. குழந்தைசாமி (2004) உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் (2005) Tamil among the Classical languages of the world. இயல் 3 செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் (சங்க இலக்கியங்களின்) தனிச்சிறப்பு முச்சங்கங்கள் பற்றிய பின்வருவனவற்றை முதன் முதலில் கி.பி. 10ம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளுக்கு உரை யெழுதிய (பிற்கால) நக்கீரரும், அவருக்குப் பின்னர் சிலப்பதி காரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லாரும், குறிப்பிடுகின்றனர் : தமிழ்ச்சங்கம் ஆண்ட பாண்டிய சங்கப் புலவர் பாடிய புலவர் சங்கம் மன்னர் எண்ணிக்கை எண்ணிக்கை செயல்பட்ட எண்ணிக்கை ஆண்டுகள் தலைச்சங்கம் 89 549 4449 4440 (தென்மதுரை) இடைச்சங்கம் 59 59 3700 3700 (கபாடபுரம்) கடைச்சங்கம் 49 49 449 1800 (மதுரை = கூடல் ) 197 657 8598 9940 இவற்றுள் முன்னிரு கழகங்கள் பற்றியவற்றை வரலாற் றாசிரியர், வரலாற்றுணர்வு உடையவர்கள் ஏற்பதில்லை . 2. பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் பிற துறை அறிஞர்களும் கிறித்துவ ஊழித் தொடக்கத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்னும் பின்னும் மதுரையில் தமிழ்க் கழகம் - அதையொத்த இலக்கிய பீடம் இருந்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். "மதுரையில் பாண்டிய வேந்தர் ஆதரவில் சிலகாலம் தமிழ்ப்புலவர் அமைப்பு (சங்கம்) ஒன்று செயல்பட்டு வந்தது உண்மையான செய்தியாக இருக்கலாம்" - அ. நீலகண்ட சாஸ்திரி. ' 'தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. (இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்கும் இல்லை.) தமிழ்ச் செவ்விலக்கிய ('சங்க'') காலத்தில் இலக் கியங்களை வளர்த்து, தரம் கண்டு ஊக்குவித்த ஒரு அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது" - சேவியர் எஸ். தனிநாயகம். ''கழக இலக்கியப் பாடல்களில் தனிப்பாடல் களாயினும் அவற்றிடையே நடை, சொற்றொகை, யாப்பு, பாடுபொருள் போன்றவற்றில் ஒற்றுமை காணப்படுகிறது. 'இலக்கிய அமைப்பு சார்ந்த தன்மை " "academism" என இதைக் கூறலாம். அகாதெமி போன்ற இலக்கிய அமைப்பு இல்லாமல் அத்தகைய ஒற்றுமை ஏற்பட்டிருக்காது. கி.பி. 1ஐ ஒட்டி மதுரையில் அத்தகைய அகாதெமி, அதா வது கழகம் இருந்தது என முடிவு செய்வதற்கான பல பிடிபாடுகள் உள்ளன. - கே.வி. சுவெலபில் Tamil literature (1974) Otto HarrassOvitz. Wiesbaden. இக்கருத்தை மேலும் அரண் செய்வன மதுரையில் (கூடலில்) கழகம் இருந்ததையோ அல்லது அக்கழகத்தின் செயல் பாட்டையோ குறிக்கும் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ஆகும். அவை வருமாறு. "தமிழ் கெழு கூடல்' புறம் 58:13 ''தொல்ஆணை நல் ஆசிரியர் புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலம் தரு திருவின் நெடியோன்” - மதுரை க. 761-3 ' 'தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மருகின் மதுரை - சிறுபாண். 66 - 7 "தமிழ் வையை” - பரிபாடல் 6:63 "தமிழ் வேலி" மதுரையைக் குறித்தது - பரிபாடல் 6:63 நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி - திருநாவுக்கரசர் அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும் - திருஞானசம்பந்தர் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ - மாணிக்கவாசகர் திருக்கோவையார் 20 தென்மதுராபுரம் செய்தும் அங்கதனில் அருந்தமிழ் நற் சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும் - தளவாய்புரம் செப்பேடு (பராந்தக வீரநாராயணன் கி.பி. 9ம் நூ) "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்ததும் பெரிய சின்னமனூர்ச் செப்பேடு (பராந்தக வீர நாராயணன் மகன் இராச சிம்மன்) ''தமிழ்கெழு கூடல் சங்கப் பலகையில் அமர்ந்திருந்த புலவர் பரம்பரையைச் சார்ந்த எட்டிச்சாத்தனைப் பற்றிய குறிப்பு. 9 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (ARE 334/1929-30) எருக்கங்குடி, சாத்தூர் வட்டம். 3. பொதுவாகக் கழக இலக்கியங்களாக ஏற்கப்படும் நூல்களும் அவற்றின் காலவரம்பும் (பெரும்பாலான பன்னாட்டுப் பல்துறை அறிஞர்களும் இன்று ஏற்பது) வருமாறு: நூல்கள் அளவு காலம் தொல்காப்பியம் 1610 நூற்பா கி.மு. 300 (4018 அடி) அல்லது அதற்கு முன்னர் எட்டுத்தொகையும், 2381 பாடல்கள் இவற்றுள் அடங்கிய பத்துப்பாட்டும் (473 புலவர் தனித்தனிப் பாடல்கள் (இவை எழுதியவை) எழுதப்பட்ட காலம் தொகுக்கப்பட்ட கி.மு. 300 கிபி. 300 காலம் கி.பி. 3- ஆம் (கலித்தொகையும் நூற்றாண்டு பரிபாடலும் கிபி 300 அல்லது வாக்கில் அதையொட்டி ) எழுதப்பட்டவை) திருக்குறள் 1330 குறள் கிபி. முதல் வெண்பா நூற்றாண்டுத் தொடக்கம் சிலப்பதிகாரம், ஒவ்வொன்றும் கிபி. 300ஐ ஒட்டி மணி மேகலை 30 காதைகள் (கமில் சுவெலபில் தமது 1995 நூலில் இவற்றின் காலம் கிபி. 350 450 என்கிறார்) முத்தொள்ளாயிரம் 108 பாடல்கள் கி.பி. 6 ஆம் நூ. இறையனார் களவியல் 60 நூற்பா கி.பி6 ஆம் நூ. சேவியர் எஸ் தனிநாயகம் தனது 'இயற்கையும் தமிழ்ச் செய்யுளும்" (1996) என்னும் நூலில் வெளியிட்டுள்ள பின்வரும் கருத்து மிக இன்றியமையாதது. "தமிழ்ச் (சங்க) செய்யுள் தமிழகத்திலேயே கருக்கொண்டு வளர்ந்தது என்பதற்கான அனைத்துச் சான்றுகளையும் கொண் டுள்ளது. தமிழ் பேசுநர் வெளிநாட்டிலிருந்து வந்து இங்குக் குடியேறியவர்கள் என்றோ, வரும் பொழுதே வளர்ச்சியடைந்த தமிழ் மொழி, இலக்கியத்தை உடன் கொண்டு வந்தனர் என்றோ கூறுவதற்குக் கழக இலக்கியம் இடம் தரவில்லை என்பதே இதன் பொருள்.'' 4. மிகப் பழைய கழக நூல்களிலேயே (தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களில் அடங்கிய பாடல்களில் தொன்மை சான்றவை) தமிழ் வரிவடிவம், எழுத்துமுறை குறித்தும் பண் பட்ட இலக்கியம் குறித்தும் தெளிவாக, விரிவாகக் கூறப் பட்டுள்ளது. ஐ. மகாதேவன் (2003) கருத்து , அசோகனுடைய தமிழ் - பிராமி எழுத்துக்களிலிருந்து தமிழ் வரிவடிவம் உரு வாக்கப்பட்டது என்பதாகும். இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. காரணம் மேற்சொன்ன கி.மு. 300 சார்ந்த தமிழ் நூல்கள், பாடல்கள் உருப்பெறுவதற்குச் சில பல நூறு ஆண்டு களுக்கு முன்னரே தமிழ் வரிவடிவமும் இலக்கியங்களும் தோன்றத் தொடங்கியிருக்க வேண்டும். கொற்கையில் 1970இல் அகழ்ந் தெடுக்கப்பட்ட பானை ஓட்டில் உள்ள தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 700 என அப்பொழுதே உறுதியாக்கப் பட்டது. கொடுமணலில் அண்மையில் அகழ்ந்த பானை ஓட்டு எழுத்துக் களின் காலமும் கி.மு. 500க்கு முந்தியதாக இருக்க வேண்டும் என இராசன் (2004) நிறுவியுள்ளார். ஆதிச்சநல்லூரில் 2004 இல் நடந்த அகழ்வாய்வில் கண்ட பானை ஓட்டுப் பொறிப்பின் காலமும் கரிமக் கணிப்பின்படி கி.மு. 700ஐ ஒட்டியதாக அமைய லாம் எனச் செய்தி வந்துள்ளது. இவற்றையும் பிற சான்று களையும் சுட்டி இராசன் (2004), நடன காசிநாதன் (2004) ஆகியோர் "தமிழுக்குக் கி.மு. 800ஐ ஒட்டியே ஒரு தனி வரி வடிவம் இருந்திருக்கவேண்டும். அதனைப் பின்பற்றியே அசோக தமிழ் - பிராமி வரிவடிவம் (லிபி) கி.மு. 300 இல் உருவாக்கப் பட்டிருக்கும்" என்பதற்கான வலுவான காரணங்களை முன் வைத்துள்ளனர். சிந்துவெளி நாகரிக வரிவடிவம் திராவிட மொழி சார்ந்தது ஆனபடியால் பிராமி வரிவடிவமும் அதிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்பர் ஹீராஸ் (New Review; சூலை 1936). தமது பண்டைத் தமிழ் எழுத்துக்கள் 1938 நூலில் தி.நா. சுப்பிரமணியன் கூறியதையும் நினைவு கொள்ள வேண்டும். "பிராமி லிபி முதலில் வடமொழிக்காக ஏற் படவில்லையென்றும் உயிர் எழுத்துக்களுள் அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் அதிகச் சிறப்பையளிப்பதும், மெய்யெழுத்துக்களுள் வர்க்க எழுத்துக்களைக் கொள்ளாததுமான ஒரு பாஷைக்கென அமைக் கப்பட்டுப் பின்னால் வடமொழிக்கு உபயோகப்படும் படி புதிய குறிகள் உண்டாக்கப்பட்டனவென்றும் எண்ண வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுள் இவ்விதம் உள்ளது தமிழ் ஒன்றுதான். அங்ஙனமாயின் பிராமி முதலில் தமிழுக்கென அமைந்த லிபியாக இருத்தல் கூடுமா? இஃது ஆராய்தற்குரியது'' வடநாட்டு வரலாற்றறிஞர் எஸ். ஆர். கோயல் (1979) கருத்தும் அசோக பிராமி எழுத்து படிப்படியாக (வடநாட்டில்) உருவான தன்று; அது ஒரு கால கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 300 எனக் கூறலாம்) புதிதாக உருவாக்கப்பட்டது என்பதாகும். 5. தமிழ்நாட்டில் இருந்த கி.மு. 1900 - கி.மு. 300 சார்ந்த பெருங்கற்கால நாகரிகத்தின் தொடர்ச்சியே கழக இலக்கிய காலம்; அந்நாகரிகக் கூறுகளில் பெரும்பாலானவை கழக இலக்கியத்தில் காணப்படுகின்றன என்பதும் இராசன் போன்றவர் களுடைய அடுத்த முடிவாகும். ஆக இவ்வாராய்ச்சிகள் மேலும் முன்னேறும் பொழுது தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 300க்கும் சில நூற்றாண்டுகள் முற்பட்டது என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 6. இத்தறுவாயில் இன்னொன்றையும் கூற வேண்டும். கி.மு. 300க்கு முற்பட்ட கழக இலக்கியங்கள் எவையுமே நமக்குக் கிடைக்கவில்லை . கி.மு. 300 - கிபி. 300 காலகட்டத்தைச் சார்ந்த கழக இலக்கியங்களும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி. 300ஐ ஒட்டிக் கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் எவ்வெவற்றை விட்டு வைக்கலாம் என்று கருதினார்களோ அவற்றை மட்டும் தொகுத்து விட்டு மற்றவற்றை நீக்கிவிட்டனர். தொகுத்தவற்றிலும் மாற்றங்கள் செய்திருக்கலாம். நுண்ணறி வுடையவர்கள் இதுபற்றி 1877-லிருந்து தெரிவித்துள்ளவற்றைக் காண்போம் : - சார்லஸ் ஈ கோவர் : தென்னிந்திய நாட்டார் பாடல் கள் (The Folk Songs of Southern India) 1871: திட்ட மிட்டுச் சிதைக்கப்படாத அல்லது மாற்றி யெழுதப்படாத தொல்பழங் காலத் தமிழ் நூல் எதையும் இன்று காண்பது அரிது. தமிழ் மக்கள் - திராவிட (பழந்தமிழ் இலக்கியத்தைக் கைவிட்டுத் தொன்ம (புராணக்கதைகளை நம்பினால்தான் தங்களுக்குப் பிழைப்பு உண்டு என்று உணர்ந்தவர்களே இவ்வாறு பழந்தமிழ் இலக்கியத்தைச் சிதைத்தவர்கள் ஆவர். (தனித் தமிழ்ச் செய்யுள் நூல்கள் பல மதிப்பிழந்து ஒழியும்படி அவர்கள் செய்தனர். அறவே ஒழிக்க முடியாத நேர்வுகளிலும் அந்நூல்களை கயவாளித் தனமாகச் சிதைத்து உருமாற்றி உலவவிட்டு மூலநூல் களின் கருத்தை உணர முடியாதவாறு செய்துவிட்டனர். சிவத்தம்பி (1986யுெம் இக்கருத்தினரே. ஹயூநெவில் : தி தப்ரொபேனியன் (The Taprobanian) சூன் 1896 "மதுரைத் தமிழ்க் கழகமும் அதன் நூலகமும் அழிக்கப் பட்டபொழுது பழந்தமிழ் நூல்கள் சகட்டுமேனிக்கு அழிக்கப் பட்டன. (அவற்றுள் சமணக் கொள்கை வாடை இருக்கலாம் என்ற கருத்தில்). ஈழத்தில் மகாவம்சம் இருந்ததுபோல் பாண்டி யர்கள் வரலாற்றைக் கூறும் ஒரு நூல் மதுரைக் கழக நூல்களில் ஒன்றாக இருந்த அழிக்கப்பட்டு அதற்கு மாற்றாக திருவிளை யாடற் புராணம் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அழிக்கப் பட்ட வரலாற்று நூலின் சிதைவுகளுடன், சங்கமர்கள் (பார்ப் பனிய சிவ மதத்தவர்கள் ) எண்ணம், சமயம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான புனைகதைகளுடன் பின்னிப் பிணைந்து அப் புராணம் உருவாக்கப்பட்டது". ஜான் ஸ்பியர்ஸ் "ஞானம் தோன்றிய இடத்திலிருந்து" வால்யூஸ் Values II - 10 சூலை 1957 : "சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் நூற்றுக்கணக்கான (தொல்தமிழ்) வாசகங்கள் உள்ளன. கடல் கொண்ட (அழிந்துபோன) பண்டை நூல்களைப் பற்றித் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் புத்தர் காலமாகிய கி.மு. 600க்கு முந்திய நூல்களுள் ஒன்றுகூட கிடைக் காததற் கான காரணத்தை நாம் உணர முடிகிறது. (தொல் தமிழருடைய) பண்டைய ஆவணங்களை ஆரியர்கள் ஒன்று விடாமல் அழித்துவிட்டனர் என்பதே அது. தெ.பொ. மீனாட்சி சுந்தரன் : தொல்காப்பியம் - சொல்லதிகாரம் : கல்லாடர் உரை (1971) : "தொல்காப்பியத்தை அதன் ஆசிரியர் எந்த உருவத்தில் விட்டுச் சென்றாரோ அந்த வடிவத்தில் அது நமக்கு வந்து சேர வில்லை" (தொல்காப்பியம் : பொருளதிகாரம் மரபியலில் பல இடைச் செருகல்கள் உள்ளன என்பது தொல்காப்பிய அறிஞர்கள் தி. சவரிராயன், கா.சுப்பிரமணிய பிள்ளை, சோமசுந்தர பாரதி, வெள்ளைவாரணன், இலக்குவனார், கமில் சுவெலபில், இரா. இளங்குமரன், செ.வை. சண்முகம் போன்றவர் ஏற் றுள்ளதாகும். குறிப்பாக நால்வரணம் பற்றிக் கூறும் மரபியல் நூற்பாக்கள் 71-85 இடைச் செருகல் என்பது இவ்வறிஞர்களும் (ஏன் நடுநிலையாளர் அனைவரும்) ஏற்பதாகும். தொல்காப்பியம் 7. தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை என்பதைப் பெரும்பாலான நடுநிலை அறிஞர் ஏற்கின்றனர். சமற்கிருதத்துக்கு (பாஷைக்கு) இலக்கணம் வரைந்த பாணினியின் காலம் கி.மு. 5 ஆம் நூற் றாண்டு. பாணினிக்கு முந்திய சமற்கிருத இலக்கணங்களும் உண்டு. வட இந்தியாவிற்குள் நாகரிகமற்ற ஆரியர் நுழைந்த கி.மு.1500க்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவெங்கும் தமிழிய மொழிகள் இருந்தன. இவற்றுக்கு வரிவடிவமும் இருந்தது. இலக்கிய வடிவங்களும் இருந்து அவற்றின் வடிவங்களும் கருத்துக்களும் இருக்கு வேதத்திலும் ஏறியுள்ளன என்பது உண்மை. எனவே தொல்காப்பியமோ அல்லது அதற்கு முந்திய தமிழ் இலக்கணங்களோ " என்ப" "என்மனார் புலவர்" போன்றவை இவற்றைச் சுட்டுகின்றன) பாணினிக்கு முற்பட்டவையாக இருந் திருக்கலாம் எனச் சில தமிழறிஞர் கருதுவது சான்றில்லாத கூற்றன்று. "தொல்காப்பியர் எழுதியதனால் "தொல்காப்பியம்" எனப் பெயர் பெற்றது என்பது பண்டு தொட்டு வரும் மரபு. ஆயினும் தொல்காப்பியம் வல்ல அறிஞர்கள், இலக்குவனார், ச.வே.சுப்பிரமணியன், பொற்கோ, சுலெவபில் போன்றவர்கள் "தொல் + காப்பு + இயம்" - தொல்காப்பியம், அதாவது தொன்மரபைக் காக்கும் நூல் எனக் காரணப் பெயர் பெற்றது என்பதும் பொருத்தமாகவே உள்ளது. தொல்காப்பிய எழுத்து, சொல் அதிகாரங்களிலும் பொருள் அதிகார அகத்திணை, புறத்திணை இயல்களிலும் சில மாற்றங்கள் / இடைச் செருகல்கள் பிற்காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் பொருளதிகாரத்தின் இறுதி ஏழு இயல்களிலும் மாற்றங்கள் / இடைச்செருகல் மிகப்பல என்பதும் சுவெலபில், மார் போன்றோர் கருத்து. பிராமணிய ஆதிக்கம் மிகுந்த காலத்தில் தொல்காப்பியம் முழுமையாக அழித்தொழிக்கப்படாமல் பாதுகாப்பதற்கென்றே தமிழ், தமிழர் பால் பற்றுள்ளவர்களும் சில இடைச்செருகல்களை விரகாகச் செய்திருக்கலாம் என்பர் பாவாணர். (எனினும் தொல்காப்பிய முதலுரைகாரர் இளம் பூரணர் காலமாகிய கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்ச் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும்) தொல்காப்பியம் "மாந்தன் அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்ச நிலை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று' One of the finest monuments of human intelligence TUI என்பர் சுவெலபில். இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல் பொருள். செய்யுளியல் கூறுவதை சுவெலபில் (1991) கட்டுரை விளக்குகிறது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் கடை ஆறு இயல்களும் புணர்ச்சி பற்றியன. "தமிழில் புணர்ச்சி பற்றிய இலக்கணம் தனித்தன்மை கொண்டது. ஒட்டுநிலை விட்டுத் தளராது, இன்றளவும் ''கன்னித் தமிழாக" விளங்குவது, இப்புணர்ச்சி பற்றிய அறிவியல் அணுகு முறைகளினாலேயாம்'' (தமிழண்ண ல், 2004) தொல்காப்பியச் செய்யுளியல் கோட்பாட்டுச் சிறப்புப் பற்றி சுவெலெபில் (1974) கூறியுள்ளது வருமாறு: தொல்காப்பியம் அடிப்படை நூலாக இருப்பது இலக் கண இலக்கிய ஆய்வுகளுக்கு மட்டுமன்று; மாந்த இனப் பரவல் சார்ந்த புவியியல், குமுகாய மாந்தவியல், பண்பாடு, சூழ்நிலையியல், உளவியல் ஆகிய புலங்கள் சார்ந்த அரிய செய்திகள் அந்நூலில் உள்ளன ; எனவே தமிழர் நாகரிகம் - பண்பாடு சார்ந்த (ஏன் பொதுவான மாந்த இன நாகரிகம் - பண்பாடு சார்ந்த) ஆய்வுகளுக்குத் தொல்காப்பியம் மிக இன்றியமையாதது. எனினும் இலக்கியம் கூறுவதெல்லாம் (அக்காலத்தில் நிலவிய) உண்மைக் குமுகாய நிலையை நேரடியாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் தவறு; உண்மை நிலையை விருப்பு வெறுப்பின்றி அறிவியல் பூர்வமாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் மேலும் தவறாகும். அக்கால ஆண் பெண்மக்களின் அகம், புற வாழ்க்கையை உள்ளது உள்ளபடி தத்ருபமாகச் சங்கப் புலவர்களுடைய பாடல்கள் காட்டுவதாகக் குமுக வரலாற்றாசிரியர் சிலர் முன்னர் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன? செய்யுள் 'உண்மை வாழ்க்கை" நிகழ்ச்சிகளை அந்தந்த நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்ற இலக்கிய மரபு உள்ளதோ அந்த மரபுக்குக் கட்டுப்பட்டே சித்திரிக்கிறது. அதாவது மரபுக் கேற்ற மாற்றங்களுடன் தான் சித்திரிக்கிறது. ''உண்மை வாழ்க்கை " வேறு; அதை இலக்கியத்தில் காட்டும் மரபு வேறு; என்பதைப் புலவர்களும் பொருளிலக்கணவாசிரியரும் உணர்ந் திருந்தனர். உணர்ந்திருந்ததனால்தான் உண்மை வாழ்க்கையின் கூற்றுக்கள் செய்கைகளை 'உலகியல் வழக்கு" என்றும் இலக்கியத்தில் (செய்யுளில்) வாழ்க்கையைச் சித்திரிக்கும் மரபைச் செய்யுள் வழக்கு "புலனெறி வழக்கு" என்றும் குறித்தனர். சில நிகழ்ச்சிகள், செய்திகளை இப்படி இப்படித் தான் காட்ட வேண்டும் என்று இலக்கியப் படைப்பாளர்களும் வாசகர்களும் தமக்குள் இசைந்து உருவாக்கும் மேல்வரிச் சட்டமாகிய மரபே இலக்கிய மரபாகும். (எ.கா. ஒவ்வொரு திணைக்கும் உரிய முதல், கரு, உரிப்பொருள்கள்). நிகழ்ச்சி / செய்தி வாசகருக்குத் தெரிந்தது தான்; அதனை ஒரு புதிய பார்வையில், கோணத்தில் (மரபை அடிப்படையில் மீறாமல்) காட்டும் பொழுது வாசகர் அந்த நயத்தை நன்கு உணர்ந்து பாராட்ட இயல்கிறது. (இதனை பி.மருதநாயகம் தமது Poetics of the lyrics in classical languages" (Chemmozhi 1-2 Jan - March 2007) கட்டுரையில் மேலும் தெளிவாக்குகிறார்) அகப்பாடல் எதுவும் ஒருதடவை கூடத் தலைவன், தலைவி பெயரைச் சுட்டு வதில்லை. தலைவனும் தலைவியும் எப்பொழுதும் இன்னார் என்று குறிப்பாக அடையாளம் காட்ட முடியாதவர்களே. எனவே அகப்பாடல்கள் சித்திரிக்கும் உணர்வுகள் (டபிள்யு. எச். ஹட்சன் தமது "இலக்கியப் பயிற்சிக்கான முன்னுரை' 1946 நூல் பக்கம் 97 இல் சொல்வது போல) "பொதுவாக எந்த ஆடவனுக்கும் பெண்ணுக்கும் பொருந்துவதாக இருக்கு மேயன்றி இவனுக்குத் தான் இவளுக்குத்தான் பொருந்தும் என்று இருக்காது. (உள்ள உணர்வுகளை விளக்காது) வெளியுலகை விரித்துரைக்கும் புறப்பாடல்களில் சில பொதுவாக அனைவரும் நோக்கும் பார்வையில் இருக்கும்; சில அந்தந்தப் புலவருடைய தனி நோக்கில் அமைந்ததாக இருக்கும். பின்னவற்றுக்கு எடுத்துக் காட்டு கையறுநிலைப் பாடல்கள். வள்ளல்கள், நண்பர்கள் இறந்தால் புலவர்கள் தம் நெஞ்சின் ஆழத்திலிருந்து உணர்வுகளைக் கொட்டிப் பாடும் துயரப் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை; பொது வான நாட்டுப்புற ஒப்பாரிகளின் வாலாயப் படிமங்களைக் கொண்டவையல்ல". 8. தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தின் முகாமை நூல் களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றின் (வேறு எந்தச் செம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத) சிறப்புகளாக கமில் சுவெலபில், ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட், ஏகே. ராமானுசன் பி. மருத நாயகம் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சில வருமாறு. (இந்நால்வருமே கழக இலக்கியத்தை ஆழ்ந்து பயின்றவர்கள்; பிற செம்மொழி இலக்கியங்களைப் பற்றியும் தெரிந்தவர்கள் ; நுண்மாணுழைபுல மிக்கவர்கள்) : "எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் (மொத்தம் 2300 பாடல்கள்) அச்சிட்டு உலகின் பார்வைக்கு முதலில் வந்தது 1880 - 1910 கால அளவில் ஆகும். அவை வெளிவந்த அக்கணமே (அதுவரை எளிதான பிற்கால இந்திய மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நிலை மாறி உலகின் சிறந்த செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது. பிரெஞ்சு ஆசியவியலறிஞர் பியர் மெய்ல் "கிரேக்க உணர்ச்சிப் பாக்களில் தலை சிறந்த நவமணிகளுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல் கள்; இந்தியாவில், ஏன் உலகில், இலக்கியப் படைப்புகளின் சிகரங்களில் ஒன்று சங்க இலக்கியம்" என்று செய்துள்ள மதிப்பீட்டை சங்க இலக்கியப் பாடல்களை ஆழ்ந்து பயி ன்றுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர்.'' - சுவெலபில் (1960) "உலகின் நாகரிகம் - பண்பாட்டுக்குத் திராவிடர்கள், குறிப் பாகத் தமிழர்கள் செய்துள்ள சிறந்த பங்களிப்புகள் பல்லவ, சோழர் காலக் கோயிற் கட்டடக்கலை ; சோழர் காலச் செப்புப் படிமங்கள் ; பரத நாட்டியம் என அழைக்கப்படும் தமிழர் நடனக் கலை ; கருநாடக இசை என அழைக்கப்படும் தமிழ் இசை முதலிய பலவாம்; அவற்றுள்ளும் தலைமை சான்ற சிறப்பு வாய்ந்தது (சங்க காலச் செம்மொழித் தமிழ் இலக்கியம். பிறமொழி, பிற நாட்டு அறிஞர் இதை உணர்ந்து இவ்விலக்கி யத்தைப் பயின்று உலக மாந்த இனத்தின் இன்றியமையாத உயரிய மரபுச் செல்வமாக மகிழ்ந்து போற்ற வேண்டும். உச்சநிலைக்கு முழுத் தகுதியுடைய அவ்விலக்கியத்திற்கு இது வரை அந்நிலை தரப்படவில்லை .'' - சுவெலபில் (1973) "இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டது என்பது மட்டுமன்றிப் பண்டைத் தமிழ் (சங்க) இலக்கியம் உயரிய இலக்கிய நயமும் வாய்ந்தது. உலகின் சிறந்த செம்மொழிகள் வரிசையில் தமிழுக்குரிய இடத்தைக் கழக இலக்கியத்தின் 26350 வரிகள் கொண்ட பாடல்கள் பெற்றுத் தந்துவிட்டன. அவ் விலக்கியத்தின் சிறப்பை இப்பொழுதுதான் உலகு உணரத் தொடங்கியுள்ளது.'' ''அசை, சீர், தளை அடிப்படையிலான யாப்பியல், அகம் புறக் கோட்பாடு; உவமவியல், ஆகிய அனைத்திலும் தனித் தன்மை வாய்ந்த சிறந்த இலக்கியக் கொள்கை கொண்ட கழக நூல்களை உருவாக்கிய பெருமை தமிழ்ப் பண்பாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும். "இந்தியாவில் தோன்றி வளர்ந்த செவ்வியல் இலக்கியம் - செவ்வியல் மொழிப் பெரும் பண்பாடுகள் இரண்டு - ஒன்று சமற்கிருதம்; மற்றது தமிழ் ; அவை ஒன்றை ஒன்று சார்ந்தவை யல்ல - தற்சார்பானவை. "இந்திய மொழி இலக்கியங்களிலேயே தமிழிலக்கியம் மட்டுமே செவ்விலக்கியமாகவும், நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்தது; அது சமற்கிருதச் செவ்வியல் இலக்கியம் அளவு தொன்மை வாய்ந்தது; பண்டை கிரேக்க மொழிச் செய்யுள்களை எப்படிச் செவ்விலக்கியம் என உலகு கருதுகிறதோ அதே தன்மை வாய்ந்தது தமிழ்க் கழக இலக்கியம். உயிர்த் துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் உள்ளது. "தமிழ்ச் செவ்விலக்கியம் (சங்க இலக்கியம்) மக்களைப் பற்றிய இலக்கியம் ; மக்கள் உருவாக்கியது - ஆனால் "நாட்டுப் புற இலக்கியமன்று" - சுவெலபில் (1973) ''வாழ்க்கை இனியது; மகிழ்ச்சி தருவது. சாவு எல் லோருக்கும் வருவது. இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற முயற்சியெல்லாம் இல்லை. வள்ளண்மை யும் நன்மையும் இயல்பாக அமைகின்றன - ஆதனிய (ஆன்மீக) நலனுக்காகவோ கழுவாயாகவோ அல்ல. இறந்தபின்னர் வீரரும் சான்றோரும் துறக்கத்தில் நிலையாக வாழ்வர்; தீயோர் மீளா நிரயம் எய்துவர் எனக் கருதினர். நில உலகில் புகழை நிறீஇச் சென்றவர் துறக்கத்தில் இனிய வாழ்வு என்னும் வெகுமதி பெறுவர் : காதல், புணர்ச்சி, திருமணம், மக்கட்பேறு இவை மாந்த வாழ்வில் நிறைவு பெறுவதற்கான வழிமுறைகள் எனக் கருதப்பட்டன. வள்ளன்மை, வீரச்செயல், பிறர்க்குரியாளனாக வாழ்தல் - இவற்றில் ஒருவன் செலவிட்ட நாட்களை நினைத்துப் புலவரும் பிறரும் கூறும் புகழ் மொழிகள் மட்டுமே ஒருவன் சாவுக்குப் பின்னர் நிலைநிற்பவையாகும்.'' - சுவெலபில் (1974) ''கழக இலக்கியங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள், விழுமங்கள் ஆகியவற்றை நிரம்பக் கொண் டவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்த அவ்விலக்கியங்கள் பிற்காலத்தில் (அதாவது அண்மைக்காலத் திறனாய்வாளர்) வகுத்துள்ள இலக்கிய நயக்கோட்பாடுகளின் படியும் உயர் நிலையில் ஏற்கப்படுவனவாக உள்ளன. ''கழக இலக்கியத்தைப் பயிலும் ஒரு குமுகாயமே (தனிநபர் மட்டுமல்ல) அவ்விலக்கிய விழுமங்களை எய்த இயலும் வகையில், எய்த விழையும் வகையில் அவ்விலக்கியம் அமைந் துள்ளது. எனவே தான் இக்கால இலக்கியத் திறனாய்வாளரும் போற்றும் வகையில் உலக மாந்தர் அனைவரும் மதிக்கத் தக்க என்று முள் (சிரஞ்சீவி)த்தன்மை கொண்டுள்ளது கழக இலக்கியம்'' - சுவெலபில் (1974) "பழந்தமிழ் இலக்கியமும் பண்பாடும் படைத்த அகம் - புறக்கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன்மையும் சிறப் பும் வாய்ந்தவை. சில பொருண்மைகளில் தமிழிலக்கியத்துக்கும் சமற்கிருத இலக்கியத்துக்கும் ஒப்புமை காணப்படலாம். பட்டால் என்ன? சமற்கிருத இலக்கியத்திலிருந்து தான் தமிழ் இலக்கியம் கடன் பெற்றிருக்கும் என ஏன் கருத வேண்டும்? (நேர்மாறாகவும் நிகழ்ந்திருக்கலாம் அன்றோ ?)" - சுவெலபில் (1975) "பொதுவான செய்தியைத் தெளிவாக, முழுமையான நுண்ணிய பார்வையில் நோக்கி, எளிய ஆனால் வயிரம் போன்ற சொற்களில், ஆழ்ந்த பொருளுடன் தருவதே சிறந்த பாடல் என இக்காலத்தில் கருதப்படுகிறது. வெளிப்படையான ஒரே செய்தியைத் தருவதைவிட அடுக்கடுக்கான பல பொருளைத் தரவல்லதான சொற்செட்டுமிக்க பாடலே சிறந்த பாலத் தன்மையுடையதாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியம் நோக்கு, பயன், எச்சம் (சொல்லெச்சம், குறிப்பெச்சம்) உள்ளுறை, இறைச்சி என்று கூறுவதெல்லாம் இது தான் ; - பி. மருதநாயகம் (2007) 9. இறுதியாகச் செவ்வியல் மொழிகளான தமிழ், சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய நான்கும் தெரிந்தவரும் - அம் மொழிகளின் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றவருமான ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட் தமிழ் செம்மொழி என்பதற்கான காரணங்களைப் பின்வருமாறு 2003இல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது : ''முதலாவதாக, தமிழின் தொன்மை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திய பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ். தமிழின் ஆதி நூல் ஆகிய தொல்காப்பியத்தின் பகுதிகள் கி.மு. 200ஐ ஒட்டியவை என்பது மிகப் பழைய (தமிழில்) கல் வெட்டுகளிலிருந்து தெரிகிறது. பழந்தமிழ்ப் பெருநூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலியவை கி.பி ஒன்று - இரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இந்தியாவின் மிகு தொன்மை வாய்ந்த , சமயம் சாராத (secular) பாடல்கள் அவையே; காளிதாசன் இலச்சியங்களுக்கு இருநூறு ஆண்டு முற்பட்டவை.'' "இரண்டாவதாக, தமிழ் இலக்கிய மரபு மட்டும் தான் (சமற்கிருதத்திலிருந்து பெறப்படாத) இந்திய மண்ணுக்குரிய இலக்கிய மரபு ஆகும். தென்னாட்டில் சமற்கிருதத் தாக்கம் வலுப்படுவதற்கு முன்னரே முகிழ்த்தது அது. சமற்கிருத பிற இந்திய மொழி இலக்கியங்களிலிருந்து மாறுபட்ட தன்மை யுடையது அது. தமிழ் தனக்கென்று தனி இலக்கியக் கொள்கை, இலக்கண மரபு, முருகியல் (aesthetics) உடையது; இவற்றின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் செம்மொழி இலக்கியம் வேறு எம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்தது (unique). சமற்கிருதத்திலோ வேறு இந்திய மொழி களிலோ உள்ள உணர்வுகளிலிருந்து மாறுபட்ட உணர்வை (sensibility) - இந்திய மண்ணுக்கே உரிய உணர்வைப் பழந்தமிழ் இலக்கியத்தில் காணலாம்; தமிழ்ப்புலவர்கள் பன்னெடுங்காலம் வளர்த்தெடுத்த செழுமையான உணர்வு மரபுநிலை அது. "மூன்றாவதாக, சமற்கிருதம் - இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியம் நுண்மாணுழைபுலமிக்கது; பல்வேறு பாடு பொருள் கொண்டது (முற்கால இந்திய இலக்கியங்களில் பொது மக்களைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே); மாந்த இனத்துக்குப் பொதுமையான விழுமியங்களைக் கூறியது. எனவே பிற செவ்வியல் மொழிகளின் மரபுகளுடனும் இலக்கியங் களுடனும் சமமாக நிற்கும் உரன் வாய்ந்தது அது. உலகின் தலைசிறந்த அறநூல்களில் ஒன்று திருக்குறள். தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் அது போன்று பல துறைகளிலும் சிறந்த நூல்கள் உண்டு. அவ்விலக்கியம் பாடித் துலக்கம் தராத மாந்த இன பட்டறிவு ஒன்றும் இல்லை. "இறுதியாக இக்கால இந்தியப் பண்பாட்டையும் மரபையும் உணர்வ தற்குப் பயில வேண்டிய இலக்கியங்களில் தமிழிலக்கியம் முதன்மை வாய்ந்தது. சமற்கிருத இலக்கியங்களில் தென்னக மரபுத் தாக்கம் உள்ளது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். கழகக்காலம் தொடங்கித் தமிழிலில் பாடப்பட்ட சிறந்த இந்து சமய பத்தி இலக்கிய நூல்கள் தாம் தற்போதைய இந்து சமயத்துக்கு அடித்தளமாக இருக்கின்றன. தமிழ் பத்தி இலக்கியக் கருத்துகள் பாகவத புராணத்திலும் பிற (தெலுங்கு கன்னப்சமற்கிருத) பத்தி நூல்களிலும் ஏற்றப்பட்டு இந்தியா முழுவதும் பரவின. வேதத்துக்குச் சமமாகக் கருதப் படும் தமிழ் (திவ்யபிரபந்தப் பத்தி இலக்கியப் பாடல்கள் தென்னிந்தியாவில் பெரிய திருமால் கோயில்களில் (திருப்பதி போன்றவை) வேதத்தோடு சேர்த்து ஓதப்படுகின்றன. இக்கால இந்தோ ஆரிய மொழிகளுக்கு சமற்கிருதமே மூலமொழி; அது போல இக்காலத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் செவ்வியல் தமிழே மூல மொழியாகும். ''உலகத்தின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது இத்துறையில் வல்ல அறிஞருக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரிந்த உண்மையாகும்" சங்க கால அகப்பொருள் நூல்கள் 10. சங்க இலக்கிய அகப்பொருள் பாடல்களின் தனிச் சிறப்பை ஏ. கே. ராமானுசன் (1969) பாராட்டியுள்ளது வருமாறு: "தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங்கும் இந்த (சங்க இலக்கிய) அகப் பாடல் களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறி யிலும், விளக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக் கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன : காதலோடு கனி வும் பண்பாடும் ; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ளுறை, இறைச்சி, அங்கதம் ஆகியவையும்; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற நுண்ணிய வண்ணனை; அடிகள் சில அவை சுட்டும் பொருளோ பெரிது. தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ் வகப்பாடல்கள் ; அது மட்டுமன்று கடந்த ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை." 11. அகப் பாடல்களின் அமைப்புப் பற்றி சுவெலபில் (1986) விளக்கமும் கருத்திற் கொள்ளத் தக்கது. "அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு கூற்று : தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலிய சிலருள் ஒருவர், நாடக மாந்தர் போல், கூறுவதாக அது அமையும். அவர்கள் ஒருவருக்கொருவரோ, தனக்குத் தானாகவோ, நிலவை நோக்கியோ கூறுவதை வாசகர் களாகிய நாம் கேட்கிறோம்; அவ்வளவே. நாடகக் காட்சி ஒன்றை முழுமையாக அகப்பாடல் ஒன்றில் உள்ள கூற்று விளக்கிக் காட்டிவிடும். இவை நாட்டுப்பாடல்கள் போல் விரைந்து பாடியவை அல்ல; ஒரு நிகழ்ச்சியைக் கண்ட அல்லது எண்ணிப் பார்த்த ஒரு பாவலர் அது பற்றிய தம் எண்ணங்களை நேராகவோ உருமாற்றியோ வெளிப்படுத்திய பாடல்களும் - அல்ல. இவை அரசவைப்பாடல்களின் நளினம் உடையவை; ''வைகலும் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் போல்" நுண்ணிய புலமைத்திறனுடன் யாக்கப்பட்டவை. 12. மேற்கண்ட இருவர் கூற்றுக்களின் ஆங்கில மூலங்கள் வருமாறு: “In their antiquity and in their contemporaniety, there is not much else in any Indian literature equal to these quiet and dramatic Tamil poems. In their values and stances they represent a mature classical poetry : passion is balanced by courtesy, transparency by ironies and nuances of design, impersonality by vivid detail, leanness of line by richness of implication. These poems are not just the earliest evidence of the Tamil genius. The Tamils in all their 2000 years of literary effort wrote nothing better”. - A.K. Ramanujan. An Aham poem is always a “Kurru”, an utterance by one of the limited number of dramatis personale, (hero, heroine, heroine's girl-friend, foster mother ete). The reader only overhears what the characters say to each other, to themselves, or to the moon. A poem in this tradition implies, evokes, enacts a drama in a monologue. The poems are not the result of rapid composition like oral epics or as lyrical expessions or sublimations of the poet's own feelings triggered by some romantic event. They are the result of skillful and subtle care, the sophistication of court poetry, “like a chariot wheel made thoughtfully over a month by a carpenter who tosses off eight chariots in a day.'' - K.V. Zvelebil. புறப்பாடல்கள் : 13. புறநானூறு : இந்நூலில் இன்று கிட்டியுள்ள 368 பாடல்களின் வகைப்பாடு வருமாறு : சேரர் - 22; சோழர் - 61; பாண்டியர் - 31; குறுநில மன்னர் -134; பிற -120. ஹார்ட் (1999) ''ஆரியருக்கு முற்பட்ட தென்னிந்தியாவை, ஏன் பெருமளவுக்கு ஆரியருக்கு முந்திய இந்தியாவையே விளக்கிக் காட்டும் ஆவணம் புறநானூறு என்பர்" - a testament of pre-Aryan South India and, to a significant extent, of preAryan India. "அவரும் ஹாங்க் ஹைபெட்ஸ் - ம் சேர்ந்து 1999 இல் புறநானூறு முழுவதையும்ம ஆங்கிலத்தில் பாடல்களாக பாநயத்துடன் மொழிபெயர்த் துள்ள னர் : - "The four hundred Songs of war and wisdom'' (Columbia universitiy Press; New york). பதிற்றுப்பத்து : இந்நூலில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் தவிர எட்டுப்பத்துகளைச் சார்ந்த 80 பாடல்களே இன்று கிட்டியுள்ளன. வரலாற்றுச் செய்திகள் பல இருப்பினும் சேர மன்னரைப் புகழ்வதற்கென்றே எழுதிய இப்பாடல்கள் புறநானூற்றில் உள்ள சிறந்த பாநயம் வாய்ந்த பாடல்களின் தரம் உடையனவாக இல்லை. பதிற்றுப்பத்து முழுவதையும் ஆங்கிலத்தில் உரைநடையில் பெயர்த்துள்ளவர் ஏ.வி. சுப்பிரமணியன் (1980). திருக்குறள் - 14. ''அறிதோரறியாமை கண்டற்றால்" என்பது திருக் குறளுக்கும் பொருந்துவதாகும். குறளின் சிறப்புக்களைப் பாராட்டிப் பல மொழி, பல நாட்டு அறிஞர்கள் கூறியவற்றைத் தொகுத்தால் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும்! உலகப் பெரியார்களில் ஒருவரான ஆல்பெர்ட் சுவைட்சர் 1936இல் வெளியிட்ட "இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்" (Indian Thought and its Development; Hodder and Stoughton; London; PP. 272) என்னும் நூலின் 200 - 205 பக்கங்களில் இந்திய மெய்யியல் அறிவர்களில் திருவள்ளுவர் தலைசிறந்து விளங்கு வதைப் பாராட்டியுள்ளார். சில பகுதிகள் வருமாறு: "இந்திய மக்களிடையே பண்டைக் காலத்திலிருந்தே பிற உயிர்கள் அனைத்துக்கும் அன்பு காட்டி உதவும் அறக்கொள்கை (the idea of active love) இருந்து வந்ததை, இந்தியப் பண்டை இலக்கியங்களில் காணும் கதைகளில் இருந்து அறிகிறோம். அத்துடன் குறிப்பாகத் திருக்குறள் என்னும் நூலில் காணும் அறவுரைச் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம். ' '(உலகில் பிற உயிர்களிடத்து அன்பு காட்டிச் செயல் படுவதை (life Affirmation) அவ்வளவாக வலியுறுத்தாத மனு தர்ம சாத்திரம் போன்றவற்றி லிருந்து மாறுபடும்) குறளில் உலகையும் வாழ்க்கையையும் வெறுத்து ஒதுக்கும் போக்கு (World and life negation) பரவலாகக் காணப்படுவதன்று. எங்கோ ஓரிரு இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம். ''பிராமணீயம், புத்தமதம், பகவத்கீதை போன்றவற்றைப் போல் இம்மை மறுமைப் பயன் கருதியே அறநெறியில் நிற்றல் வேண்டும் என்ற வாணிகக் கொள்கையைக் குறள் வலியுறுத்து வது இல்லை. நல்லது செய்வதே தக்கது என்ற உணர்வினா லேயே நல்லது (அறம்) செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது (குறள்கள் 222, 211). பகவத்கீதையோ கருமம் செய்து கொண் டிருப்பது பிரபஞ்சநியதி என்று வறட்டுத்தனமாக வலிந்து கூறுகிறது. ஆனால், என்ன வியப்பு, குறளோ மாந்தன் உழைப் பதும் ஈட்டுவதும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் அவன் நன்மை செய்வதற்காகத்தான் என்று சாற்றுகிறது. (குறள்கள் 81,212 ) பகவத் கீதைப்படி கடமை சாதிக்குத் தக்கபடி வேறுபடும் குறளோ மக்கள் அனைவரும் 'நல்லவை செய்தொழுகக் கூறுகிறது.'' ''ஏனை இந்திய தர்ம சாத்திரக்காரர் உழைப்பதில், முயற்சி செய்வதில் மகிழ்வோடு ஈடுபடு என்று கூறவில்லை . குறள்கள் 619, 630, போன்றவையே உலகியலிலும், வாழ்க்கையிலும், ஆர்வத் துடன் ஈடுபடும்படி அறிவுறுத்துகின்றன. "(பௌத்தமும் கீதையும் போலப் பற்றின்மை, வெறுப் பின்மை, கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றையும் குறள் வலியுறுத்தினாலும் கூட அதே சமயத்தில்) குறள் அதிகமாக வலியுறுத்துவது அன்பும் அருளுமேயாம் (the living ethic of love). காண்க குறள்கள் 72, 78, 79, 103,226, 241. "அறநெறிசார் உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம் படச் சுட்டுகிறது குறள்.மாந்தனின் தனி வாழ்க்கை , பிற உயிர் களோடும் உலகத்தோடும் உறழும் அவன் வாழ்க்கை ஆகிய வற்றில் கைக்கொள்ள வேண்டிய நெறிகளைக் குறள் வியத்தகு பண்புடனும் சால்புடனும் நடைமுறைக்குகந்த வகையில் வகுத் துள்ளது. (Characterised by nobility and good sense). உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த ஒளிமயமான அறவுரை வாசகங்களை வழங்கும் நூலைக் காண இயலாது. (குறள்க ள் 92, 105, 108, 121,159, 162, 216,298,319,578,594,628,757, 782, 874,931,973, 999, 1007,1024,1032)". "ஆக, கிறித்துவ ஊழித் தொடக்கக் காலத்திலேயே இந்திய மக்களிடையே உலகவாழ்க்கையிடமும் உயிர்களிடமும் பண்பும் அன்பும் காட்டும் ஒரு தன்மை இயல்பாக இருந்து வந்துள்ளதைக் குறளிலிருந்து அறிகிறோம். பிராமணியம், பௌத்தம், பகவத்கீதை சார் இந்துமதம் ஆகியவற்றின் கோட்பாடுகளில் இல்லாதது அது. ஆனால் கீழ்சாதி யினரிடமும், சாதாரண மக்களிடமும் தோன்றி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிறந்த சமயப் போதகர்கள் மூலமாக அத்தன்மை மெதுமெதுவாக நாளடைவில் இந்து மதத்தில் இடம் பெறலாயிற்று". 15. கிராலின் திருக்குறள் செருமன் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் ஆல்பர்ட் சுவைட்சர் (1936) மேற்கண்ட வாறு வியந்து பாராட்டினார்; "Free Hindusthan" என்ற பெயரில் தாரகநாத் தாஸ் (1884-1958) அமெரிக்காவில் நடத்திய இதழுக்கு தால்ஸ்தாயிடம் ஒரு கட்டுரை கேட்டார். தாசுக்கு 14-12-1908 அன்று தால்ஸ்தாய் ஒரு கட்டுரை அனுப்பினார்; "மாந்தர் வாழ்க்கைக்குத் தேவையான ஒரே விதி அன்புடைமை ; அன் புடைமைக்குக் கட்டளைக்கல் தீயவை செய்தார்க்கும் இன்னா செய்யாமையேயாகும்" [Great religious teachers have laid down) one invariable condition of love, namely the enduring of injuries, insults and violence of all kinds without resisting evil by evil. TOTO அக்கட்டுரையில் எழுதியிருந்தார். மேலும் தம் கருத்துக்கான பல சான்றுகளில் ஒன்றாகத் திருக்குறளிலிலிருந்து "இன்னா செய்தார்க்கும்..." "அஃகி அகன்ற... "பிறர்க்கு இன்னா ... முதலிய நாலைந்து குறள்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் தந்திருந்தார். மேலும் அதே கட்டுரையில் தால்ஸ்தாய் "மறு பிறவி' உட்பட பல மூட நம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும் என்றும் எழுதினார் ("If only people freed themselves from their beliefs in all kinds of Ormuzds, Bhramas and their incarnation as Krishnas and Christs, from belief in paradise and hell, in reincarnations and resurrections, interference of gods in external affairs and infallibility of Veda, Bible, Koran etc”) 'பிரீ இந்துஸ்தான்'' இதழில் வந்த இக்கட்டுரையைப் படித்த அண்ணல் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தால்ஸ்தாய்க்கு 1 - 10 1909 அன்று கடிதம் எழுதினார் தால்ஸ்தாயின் 14 - 12 - 1908 கடிதத்தை அச்சிட்டுப் பரப்ப அனுமதி கேட்டு. (இந்தியர் பலரும் மறுபிறவியை (reincarnation) நம்புவதால் மேற்கண்ட வாசகத்தில் reincarnation ஐ நீக்கிவிட தால்ஸ்தாயிடம் அனுமதி கேட்டார் காந்தி ; " நீக்கவேண்டாம், என்பது என் கருத்து எனினும் தாங்கள் விரும்பினால் நீக்கிக்கொள்க'' என்று தால்ஸ்தாய் மறு மொழிவிடுத்தார் 7-10-1909 அன்று அனுமதி வந்தவுடன் தால்ஸ்தாயின் 14-12-1908 கடிதத்தைக் காந்தியடிகள் அச்சிட்டு ஆயிரக்கணக்கில் பரப்பினார். இச்செய்தியின் விரிவைப் பின்வரும் நூலில் காணலாம் : Christian Bartolf (Ed) 1997: Letter to a Hindoo : Tarakanath Das, Leo Tolstoy and Mahatma Gandhi Gandhi - Information Zentrum; Berlin; Selbstverlag; pp. 80 சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 15. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பொதுவகை குடி மக்களைக் இலக்கியத் தலைவியராகக் கொண்டவை; தனித் தன்மை வாய்ந்தவை. இவ்விரு காவியங்களின் காலம் கி.பி. 350 - 450 ஆகலாம் என்பர் சுவெலபில் (1995). காஞ்சிபுரத்தில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திக்ஞானர் சமற்கிருதத்தில் நியாயப்பிரவேச என்னும் அளவை நூலை எழுதினார். அந்நூலுக்கும் மணிமேகலையின் சில பகுதிகளுக்கும் நெருங்கிய ஒப்புமை இருப்பதால் மணிமேகலையின் காலத்தை கிபி 5ஆம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளுகிறார் வையாபுரி. ஆனால் மணிமேகலையை ஆங்கிலத்தில் பெயர்த்த ஆலன் தானியலோ (Alain Danielou) இக்கருத்தை மறுத்துத் தமிழர் அளவை நூற்கருத்துக்களையே மணிமேகலை ஆசிரியரும், திக்ஞானரும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் மணிமேகலை கிபி. இரண்டாம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்றும் கருதுகிறார். 16. மேலே பத்திகள் 7, 8ல் குறித்த அறிஞர்களின் தொல் காப்பியம் கழக இலக்கியச் செவ்வியல் தன்மைச் சிறப்புப் பற்றிய ஆங்கில மூலங்கள் வருமாறு; பிற மொழியாளருக்கு இக்கருத்துக் களை ஆங்கிலத்தில் தெரிவிக்க ஏந்தாக ஈண்டு ஒரே இடத்தில் தரப்படுகின்றன : As a source book not only of grammatical and literary study but also of human goography, social anthropology, culture, ecology and psychology, Tholkappiam contains very valuable data, and its importance for the study of Tamil culture, and of cultures in general, can hardly be exaggerated. However one must beware of taking the literary conventions as a kind of direct report, or even worse, as an objective explicit and ‘scientific treatment of 'real life'. In some works it was assumed that the bardic court-poetry reflected directly and with utmost fidelity and realism the conduct of men and women of that age in love and war. But the poetry, based on conventions, reflects “real life' only obliquely, since a literary convention was a pattern of fictional (or 'ideal') behaviour. The poets and the theoreticians had a clear understanding of the relationship between “Real life and its reflection in literature, since they clearly differentiated between the two: ulakiyal valakku denoted things said and done in ‘real life’: Ceyyul valakku (or pulaneri valakku) denoted the practice in poetry of reflecting it. A literary convention is an agreement between writer and reader that certain themes will be represented in a certain way. The reader is thus truly able to appreciate the poet's skill in handling a familiar theme by means of improvisation. The poetry of the 'interior' the subjective akam poetry is totally anonymous in the sense that akam poems never mention the hero or heroine by name, not in a single stanza. Hence they“embody what is typically human rather than what is merely individual and particular W.H.Hudson. An introduction to the study of literature, London. 1946.p97). The objective external Puram poetry is partly impersonal. partly personal. Thus, e.g. the elegies are highly personal tributes to dead patrons and friends, genuine and spontaneous, expressing intimate and personal grief, “free from any conventional bucolic machinery” - K.V. Zvelebil (1974) Tamil Literature (in series: A History of Indian literature) Otto Harrassowitz. Wiesbaden. pp 35-36 “The discovery of this body of roughly 2300 verses (of Ettuthogai and Pathuppattu, during 1880-1910) raised the Tamil language at one stroke, from an insignificant neo-Indian Language to the standing of one of the great classical languages of the world. Whoever has made a more intimate acquaintance with this ancient poetry, will readily subscribe to the assessment of the French Indologist Pierre Meille, when he states that this poetry is comparable with the choicest gems of old Greek lytical poetry, and that this “cycle of Sangam poetry' represents one of the summits of literary creation in India and the whole world' - K.V.Zvelebil (1960) New Orient (bi-monthly) 5, 1960pp 3. reprinted in Tamil Culture x-2: April-June 1963. “The Dravidians, and in particular, the Tamils have contributed a great deal to the cultural richness of the world: Pallava and Chola temple architecture, Chola bronze sculpture, the dance form known as Bharatanatyam the so called Carnatic system of music. But proba bly the most significant contribution is that of Tamil literature. which still remains to be “discovered” and enjoyed by the non-Tamilians and adopted an an essential and remarkable part of universal heritage” - K.V. Zvelebil (1973) The smile of Murugan--on Tamil literature of South India; Leiden: E.J.Brill. Preface “The early Tamil poetry was rather unique not only by virtue of the fact that some of its features were so unlike everything else in India, but by virtue of its literary excellence, those 26350 lines of poetry promote Tamil to the rank of one of the great classical languages of the world--though the world at large only just about begins to realise it. “it is only the Tamil culture that has produced - uniquely so in India, an independent indigenous literary theory of a very high standard, including metrics and prosody, poetics and rhetoric” “there exist in India only two great specific and independent classical and historically attested cultures--the Sanskrit culture and the Tamil culture.” “Tamil literature is the only Indian literature which is both classical and modern; while it shares antiquity with much of Sanskrit literature, and is as classical, in the best sense of the word as for example the ancient Greek poetry, it continues to be vigorously living modern writing of our days. "Classical Tamil literature is literature about and of people. but not a Volksliterature" - K.V. Zvelebil (1973) The smile of Murugan; pp 1, 4 "Life is condidered pleasent and joyful, death an inevitable end. There is no attempt to obtain release from life. Liberality and goodness are indulged in without motives of penance or recompense. About old age thereis a note of nostalgic resignation. “Life after death is represented as an abode of permanent happiness for the brave and good. and permanent suffering for the wicked. The happiness of future life is a reward of those who by their bravery and altruism established their glory (pukal) in this world. Love and courtship, marriage and children are considered necessary modes of personal perfection. If at all anything remains after death, it is the glory and honour, the praise due the memory of the days passed in heroism and in the service of fellow men.” - K.V.Z. (1974) Tamil literature otto Harrassovitz, p.44. “Ancient Tamil poetry is multivalent: it is so rich and comprehensive that it includes aesthetic structures and values which give high satisfaction to later ages and periods. It is conceived so that rather a community than a single individual could and can realize all its strata and systems. That is why it has survived generational tastes, and has acquired a permanent and universal position" - K.V.Z (1974) ibid pp 35-36 In the depth and width of erotic experience and in the conceptual framework of the entire phenomenal world, perceived as akam and puram, Tamil culture is unique andoriginal. And as. for the parallels between Tamil and Sanskrit literature-why must it always be presumed that it was the Tamil works that borrowed from Aryan?” - K.V. Zvelebil (1975) Tamil Literature (annals of Tamil literature, abstaining from value judgements) Leiden: E.J.Brill. p107 The ideal modern poem is expected to be objective, precise, organically complex and as well written as prose. Free from cliches an straddled adjectives, it should have the prose virtues of simplicity and hardness in a language charged with meaning to the utmost possible degree. XXxx A poem of indirection, yielding more than one layer of meaning, is a product of excellent craftsmanship. Tolka-- ppiyar's insistence on the three aspects nokku, payan and eccam, is clearly indicative of his predilection for a poetry that works subtly, indirectly and sugge stively. Nokku demands every syllable, every word and every line to be in harmony with the poem as a whole. By payan is meant the implicit statement on the purpose of an object. Though eccam which is pf two types--colleccam and kurippeccam - interpreted in diverse ways by the commentators, it is used to avoid explicit complete statements and to exploit the suggestive potential of the minimum number of words employed in the poem. The concept of poetry as expressed in Tolhappiyar's Porulathikaram and the practice of Sangam poets as evidenced in the still cherished anthologies would reveal that the ancient Tamils had a poetics of the lyric which Elder Olson was looking for but could not find in the well known languages of the world. (Elder Olson:1962 “Sailing to Byzantium; Prolegomena to a poetics of the lyric” in Willbur Scot (ed) FIVE APPROACHES OF LITERARY CRITICISM; London-Macmillan.) - P. Marudanayagam; CHEMMOZHI I - 2 Jan-Mar 2007 “First, Tamil is of considerable antiquity. It predates the literature of other modern Indian languages by more than a thousand years. Its oldest work, the Tolkappiyam, contains parts that, judging from the earliest Tamil inscriptions, date back to about 200 BCE. The greatest works of ancient Tamil, the Sangam anthologies and the Pattupattu, date to the first two centuries of the current era. They are the first great secular body of poetry written in India, predating Kalidasa's works by two hundred years. “Second, Tamil constitutes the only literary tradition indigenous to India that is not derived from Sanskrit. Indeed, its literature arose before the influence of Sanskrit in the South became strong and so is qualitatively different from anything we have in Sanskrit or other Indian languages. It has its own poetic theory, its own grammatical tradition, its own esthetics, and, above all, a large body of literature that is quite unique. It shows a sort of Indian sensibility that is quite different from anything in Sanskrit or other Indian languages, and it contains its own extremely rich and intellectual tradition. “Third, the quality of classical Tamil literature is such that it is fit to stand beside the great literatures of Sanskrit, Greek, Latin, Chinese, Persian and Arabic. The subtlety and profundity of its works, their varied scope (Tamil is the only premodern Indian literature to treat the subaltern extensively), and their universality qualify Tamil to stand as one of the great classical traditions and literatures of the world. Everyone knows the Tirukkural, one of the world's greatest works on ethics; but this is merely one of a myriad of major and extremely varied works that comprise the Tamil classical tradition. There is not a facet of human existence that is not explored and illuminated by this great literature. “Finally, Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition. I have written extensively on the influence of a Southern tradition on the Sanskrit poetic tradition. But equally important, the great sacred works of Tamil Hinduism, beginning with the Sangam Anthologies, have undergirded the development of modern Hinduis. Their ideas were taken into the Bhagavata Purana and other texts (in Telugu and Kannada as well as Sanskrit), whence they spread all over India. Tamil has its own works that are considered to be as sacred as the Vedas and that are recited alongside Vedic mantras in the great Vaishnava temples of South India (such as Tirupati). And just as Sanskrit is the source of the modern IndoAryan languages, classical Tamil is the source language of modern Tamil and Malayalam. “The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to any one who knows the subject" - George L. Hart (quoted by V.C. Kulandaiswamy 2005) இயல் 4 செம்மொழித் தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் பெயர்த்தல் 1. நம் மனத்திலுள்ள எண்ணத்தைப் பிறருக்குத் தெரிவிப் பதற்குப் பேசுகிறோம் (ஒரே மொழியில் பேசினாலும் யாரிடம் பேசுகிறோமோ (நண்பர் குழந்தை தாத்தா - பாட்டி ஆசிரியர் முதலாளி தொழிலாளி) அதற்குத் தக்கவாறு பேச்சு நடை அமைகிறது. இதுவே ஒரு வகையில் மொழி பெயர்ப்புத்தான் என்பார் ஆக்டேவியோ பாஸ் (Octovio Paz: "actual act of speech is a translation of thought') ஆயினும் இவ்வியலில் கருதப்போவது ஒரு மொழி நூல்களைப் பிறமொழிக்கு இன்னாருக்கு என்று குறிப்பாக இல்லாமல் அனைவருக்குமாக பெயர்ப்பது பற்றியது. 2. இலக்கியமல்லாத பிற நூல்களை எந்த மொழியில் லிருந்தும் எந்த மொழிக்கும் பெயர்ப்பதில் பெரும் இடர்ப்பாடு இல்லை. இருமொழிகளிலும் புலமையும் நூல் நுதலிய பொருள் குறித்த அறிவும் இருந்தால் போதும். ஆயினும் இவற்றில் கூட நாம் பொதுவாகக் காணும் மொழி பெயர்ப்புகள் தரமானவை யாக இருப்பதில்லை. இதற்குக் காரணம் காசை மட்டும் குறிக்கோளாகக் கொள்வதே என்பார் செம ரென்யி (Szemerenyi: “unable to understand the text, but nevertheless translate for filthy lucre')) 3. இலக்கியங்களைப் பிறமொழிகளில் பெயர்ப்பது சிக்கலான பணி: (1) ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிடையே இப்பணி சற்று எளிது. (எ.கா: தமிழ் - மலையாளம், தமிழ் > கன்னடம் தெலுங்கு) (ii) பிறமொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாயினும் மொழி யியல் தன்மைகளில் பொதுமைக் கூறுகள் கொண்ட பகுதி நாடு (Linguistic area); நாகரிக பண்பாட்டு ஒருமைப்பாடு கொண்ட பகுதி / நாடு என்று வரும் பொழுது மொழிபெயர்ப்பு அவ்வளவு கடினமல்ல (எ.கா: தமிழ் -> இந்தி மராத்தி வங்காளி) (iii) ஏனைய வகைப் பிறமொழிகளில் இலக்கிய மொழி பெயர்ப்புக் கடினமானதுதான்; அதற்குத் தனித்திறமை வேண்டும். அதுவும் கழக இலக்கியம் போன்ற 2000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த செவ்விய இலக்கியத்தைப் பிற மொழியில் பெயர்ப்பது மேற்கண்ட மூன்று நிலைகளிலுமே கடுமையானது தான். தமிழ் - ஆங்கில மொழி பெயர்ப்புப் பற்றிய எடுத்துக் காட்டுகள் மட்டுமே இவ்வியலில் தரப்படுகின்றன. ஆயினும் தமிழிலக்கியத்தை ஆங்கிலமல்லாத பிற மொழிகளில் பெயர்ப் பதற்கும் அடிப்படைக் கொள்கைகள் பொருந்துவனவேயாம். 4. சிறந்த புதினம் எழுதக் கையேடு ஒன்றும் இல்லை . அதுபோலச் சிறந்த இலக்கிய மொழிபெயர்ப்புக்கும் கையேடு இல்லை. எனினும் இலக்கிய நூல்களை, குறிப்பாகச் செய்யுள் நூல்களை மொழிபெயர்க்கும் பொழுது பின்வரும் அறிஞர் கூற்றுக்கள் கருத்திற் கொள்ளத் தக்கன : ''மூலத்தில் உள்ளதை வரிக்கு வரி அப்படியே மொழி மாற்ற வேண்டியதில்லை. மூலத்தின் பாவிய உணர்வு, உவமைகள் - உருவகங்கள், போன்றவற்றின், உயிரோட்டம் மொழிபெயர்ப்பில் வரவேண்டும்; சின்னஞ்சிறு செய்திகளை விட்டு விட்டாலும் கூட '' - சுவெலபில் (1956): "சங்க இலக்கியப் பாடல்களை மொழி பெயர்த்தல் - சில யோசனைகள்" (ஆர். கிரிம் கெய்த் (1971) ம் சொல்லுக்குச் சொல் பெயர்ப்பது சிறந்த மொழி பெயர்ப்பைத் தராது என்பதை விளக்கியுள்ளார்) "மொழியறிவு வேறு, இலக்கிய உணர்வுவேறு. இலக்கிய உணர்வு இருந்தால் தான் உயிருள்ள மொழிபெயர்ப்பு வரும். பிறமொழி நூலைச் சிறந்த மொழி பெயர்ப்பின் (வழி) முதலில் படிக்கும் மாணவன், அடுத்தாற் போல் அம்மொழியையும் கற்க விழையக் கூடும். (மாறாக ஒரு மொழியைக் கற்கத் தொடங்கும் மாணவன் அம்மொழி இலக்கியத்தையும் படிக்கும் அளவுக்குத் தன் முயற்சியைத் தொடரும் வாய்ப்பு குறைவு) ... சிறந்த எழுத்தாளனே சிறந்த மொழிபெயர்ப்பாளன் ஆக முடியும். - கிரிகரி ரபசா (ப்ராலி : 1984 நூலில்) "மொழிபெயர்ப்பு அனைத்துமே மூலத்தைப் போன்ற ''மாயவடிவை" (illusion) உருவாக்கும் முயற்சியே. சில சூழ்நிலை களில் - மொழிபெயர்த்தோன் திறமையால் - மூலத்தைப் போன்றே மாயவடிவும் அமைந்துவிட வாய்ப்பு உண்டு. இது எங்கு இயலும்? மூலமொழிப் பாவின் வடிவம் கருத்து ஆகியவற்றுக்கு ஓரளவு ஒற்றுமை உள்ள வடிவமும் கருத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் நேர்வுகளில் தான் இது இயலும்; அத்தோடு மொழிபெயர்த்து எழுதியது என்று கொஞ்சமும் தெரியாத அளவுக்குச் செய்யுள் அமைய வேண்டும். - ஹிகாம் (1938) ''ஒரு மொழியில் எழுதிய கவிதை இன்னொரு மொழியில் மொழி பெயர்க்கக் கூடியது அன்று. பாவலர்களின் படைப்பு களால்தான் எந்த மொழியும் அழியாமல் நிலைக்கிறது. ஒரு மொழியில் உள்ள அனைத்தையும் அதில் உள்ளவாறே மொழிபெயர்ப்பிலும் கொணரமுடிந்துவிட்டால் அம் மொழியை வருந்திக் கற்க யார் முயல்வார்? ஒரு மொழிக்கே இயற்கையான பா நயத்தை அப்படியே வேறு மொழியில் கொணர இயலாது என்ற நிலை இருப்பதனால் தான் அம் மொழிக் கவிதையைப் படித்து அனுபவிக்க அம்மொழியையே நாம் கற்க விழைகிறோம்.'' - டாக்டர் ஜான்சன் "கிரேக்க இலக்கியத்தை மொழிபெயர்ப்பு வழிப் படித்துப் பயன் இல்லை; மூலத்தை ஓரளவு அடையாளம் காட்டவே மொழி பெயர்ப்பால் இயலும்.'' - வர்ஜினியா உல்ப் ''கல்வியின் ஒரே நோக்கம் என்ன? ஹோமர் காவியங்களை மூல கிரேக்கத்தில் படிக்க ஒருவனை ஆளாக்குவதே." - ஷெப்பார்டு (1949) "ஹோமர் காவியத்தை "கிரேக்க வாசகத்துக்கு இணையான ஆங்கில வாசகம்" என்றவாறு ஆங்கிலப்படுத்தினால் காவியக் கருத்தும் மிஞ்சாது; நடையும் மிஞ்சாது" - ஈ.வி.ரியு "ஆதிசி" ஆங்கில ஆக்க முன்னுரையில்) "மொழிபெயர்ப்பு என்பது என்ன? பிற மொழிப்பாவலனின் அறுபட்டதலை - ஒரு தட்டில்; கிளியின் பேத்தல்; குரங்கின் கூச்சல் இறந்தவனுக்கு இழிவு. - விளாதிமிர் நாபகாவ் "மொழிபெயர்ப்பு மூலத்தை முழுமையாகக் காட்ட வல்லதல்ல என்பது அனைவரும் அறிந்ததே எனினும் உலக நடப்பில் இலக்கியப்பணிகளில் (தரமான) மொழிபெயர்ப் புக்கும் ஒரு தலையாய இடம் உண்டு" - கதே 5. முனைவர் வி. இராமசாமியுடைய "திருக்குறளை . மொழிபெயர்த்த ல்"* (On Translating Thirukural: 2001) நூல் கழக இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் எழும் சிக்கல்களைச் செவ்வனே விளக்குகிறது; அவற்றை இயன்றவரை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் தருகிறது. அவர் விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட திருக்குறள் ஆங்கில ஆக்கங்கள் வருமாறு: 1819 பிரான்சிஸ் வைட் எல்லிஸ் 1840/1852 துரு 1886 ஜி.யு.போப் 1930 வ.வெ.சு. ஐயர் 1962 கே. எம். பாலசுப்பிரமணியம் 1987 பி. எஸ். சுந்தரம் இந்த ஆறு ஆங்கில ஆக்கங்களின் நிறை குறைகளை அறிஞர் இராமசாமி விரிவாக ஆய்வு செய்துள்ளதைப் படிப்பது தமிழ் -> ஆங்கில இலக்கிய மொழி பெயர்ப்பாளர்க்குப் பெரும் பயன்தரும். 6. இறுதியாகப் பின்வரும் புறநானூற்றுப் பாடல்களை, அதாவது 192. "யாதும் ஊரே.'' 252. " கறங்கு வெள்ளருவி '' 271. ''நீரறவு அறியா..'' 159. "வாழும் நாளோடு.'' 188. "படைப்புப் பல படைத்து.'' ஆகிய ஐந்தில் ஒவ்வொன்றுக்கும் போப், மார், இராமானுஜன், ஹார்ட் முதலியோர் செய்த பல்வேறு மொழிபெயர்ப்புகளின் நிறைகுறைகளை பி. மருதநாயகம் (2003) கட்டுரையில் நயம்பட ஆய்வு செய்துள்ளார் அதுவும் கழக இலக்கிய மொழிபெயர்ப்புக்குச் சிறந்த வழிகாட்டியாகும். எடுத்துக்காட்டாக 192ம் பாடலும் அதன் ஆங்கில ஆக்கங்களும் இப்பகுதியின் அடியில் தரப்பட்டுள்ளன. அவை குறித்த கட்டுரையாசிரியர் கருத்துகள் வருமாறு: போப் சானட் (Sonnet) என்னும் கடினமான பாவினத்தில், ஈற்றெதுகைகளுடன், மூலத்தின் பொருள் மாறாமல் ஆங்கிலப் படுத்தியுள்ளார். (ஈற்றெதுகைக்காகவென்றே வந்தது When joyous life seems like a luscious draught) என்ப து "வாழ்தல் இனிது'' என்பதை "உயர்குடிப்புக் குடித்துக் களித்தல் போன்ற இனிய வாழ்க்கை" என்று எதுகைக்காக மாற்றிவிட்டார் ஆதாரமின்றி!) மார்: "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பதை " I receive Wrong doing as though it were good' (= தீமை செய்யப்பட்டாலும் அதை நான் நன்றாகக் கருதி ஏற்பேன்) என அபத்தமாக மாற்றி விட்டார். 'நோதலும் தணிதலும் அவற்றோரன்ன' என்பதை "Pain and relief from pain, are as one" (= நோவும் ஒன்று தான் நோவு நீங்குவதும் ஒன்று தான்) என ஆங்கிலப்படுத்தி யுள்ளதும் சரியல்ல (நோதல் தணிதல் ஆகியவையும் பிறர் தர வருவனவல்ல என்பதல்லவா பொருள்). "The cool drops of rain that fill with lightnings flash are not the same as it is” 6TOOTM தொடரியம் பாடலின் "மின்னொடு ..யாற்று' என்னும் பகுதியைப் புரியாமல் செய்த பிழை. கடைசி இரண்டு வரிகளின் ஆங்கில வடிவில் foolish என்ற கடுஞ்சொல்லை ஆள்வது மூலத்திற்கு எதிரானது. இராமானுசன்: வழக்கம்போலச் சிறப்பாகவே அற்புதமாக ஆங்கிலப் படுத்தியுள்ளார். புறப்பாடலின் கருத்து முழுமையாக உள்ளது; நயமான ஆங்கில நடை; எனினும் ஒரு சிறுகுறை: ''சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்புழி அதனினும் என்னும் சொல்லின் நலத்தை மறந்துவிட்டார். (போப் மறக்கவில்லை : Still less despise we என்று கவனமாக எழுதினார்!) ஹார்ட் & ஹைபெட்ஸ்: ஹார்ட்டின் தாய்மொழி ஆங் கிலம் ; தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆழ்ந்த புலமையுள்ளவர்; அவருக்கு உதவியவர் ஆங்கிலப் பாவலர் ஹைபெட்ஸ். எனவே இவ்விருவரின் ஆங்கில ஆக்கம் முந்தைய மூவர் ஆக்கங்களை விடச் சிறப்பாகவுள்ளது; மூலத்தின் பொருளை முழுமையாக, தெளிவாக அப்படியே காட்டுகிறது -- பாநயமானது போப், இராமானுசன் ஆகியோர் ஆக்கங்களை விடச் சற்றே மாற்றுக் குறைவாக இருப்பினும். ஆருயிர் = அரிய உயிர் ; இதனை "Our lives, however dear'' என்றார் இராமானுசன் ; a life with its hardships என்றார் ஹார்ட் ; பாடலின் நோக்குக்கு இச்சொல்லை ஹார்ட் மொழி பெயர்த்ததே பொருத்தமானது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இறங்கும் மல்லல் பேர் யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆர் உயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. கணியன் பூங்குன்றன் : புறம் 192 To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gift, nor ill; Man's pains and pains' relief are from within, Death's no new thing; nor do our bosoms thrill When joyous life seems like a luscious draught. When grieved, we patient suffer, for we deem This much praised life of ours a fragile raft Borne down the waters of some mountain stream That O'er huge boulders roaring seeks the plain Tho'storms with lightnings' flash from darken'd skies Descend the raft goes on as fates ordain. Thus have we seen in visions of the wise! We marvel not at greatness of the great; Still less despise we men of low estate. - G. U. Pope 191Q All villages are mine and every one my friend I receive wrong doing as though it were good, and do not pay it back. Pain and relief from pain are as one. To die is not new, while not to rejoice because life is sweet is absurd. Poor is the mind that holds it wrong to seek after something. The cool drops of rain that fall with the lightning's flash are not the same as it is. Like the waters of the stream that rushes among rocks is sweet life, set down on the pre-ordained path. Since this has clearly been foreseen by the wise it is foolish to extol the greatness of the great or to censure the lowly. J. R. Marr 1958/1985 Every town our home town, every man a kinsman Good and evil do not come from others Pain and relief of pain come of themselves. Dying is nothing new. We do not rejoice that life is sweet nor in anger call it bitter. Our lives, however dear, follow their own course rafts drifting in the rapids of a great river sounding and dashing over the rocks after a downpour from skies slashed by lightnings We know this from the vision of men who see. So, We are not amazed by the great, and we do not scorn the little - A. K. Ramanujan (1985) Every city is your city. Everyone is your kin, Failure and prosperity do not come to you because others have sent them! Nor do suffering and the end of suffering. There is nothing new in death. Thinking that living is sweet, we do not rejoice in it. Even less do we say if something unwanted happens, that to live is miserable! Through the vision of those who have understood we know that a life, with its hardsdhip, makes it way like a raft riding the water of a huge and powerful river roaring Without pasue as it breaks against rocksbecause the clouds crowded with bolts of lightning pour down their cold drops of the rain, and so we are not amazed at those who are great and even less do we despise the weak - G. L. Hart & Heifetz (1999) 7. மேலே நான்காம் பத்தியிற் கண்டனவற்றின் ஆங்கில மூலங்கள் இன்றியமையாதவை; அவை வருமாறு: “The details are not so important; it is better to keep truly and devotedly the essence and nature of the poet's metaphors than to cling to trifles in a servile way and, at the same time, to lose the spirit and nature of the whole” K. V. Zvelebil (1956) Language learning and the study of literature are two completely different things, and translation has to be a part of the latter if it is to receive the breath that is inherent to it. XXXXX a student is led into language study through literature and not the reverse. There are those who begin Greek after reading Aeschylus XXXXX So, the translator must be a writer above all, with the instincts and drives that go to make a writer.” - Gregory Rabassa in Frawley (1984) All translation is a kind of illusion, more or less perfect according to circumstances and varying also with the skill of the translator... Where there exists in English a corresponding form and manner a high degree of illusion is possible. Those translations are always best in which the illusion is most complete and the idiom least suggestive of translation" Higham (1938) Poetry, indeed, cannot be translated, and therefore, it is the poets that preserve languages; for we would not be at the touble to learn a language, if we would have all that is written in it just as well in a translation. But as the beauties of poetry cannot be preserved in any language except that in which it was originally written, we learn the language." - Dr Samuel Johnson “ It is useless to read Greek in translation. Translators can but offer us a vague equivalent” - Virginia wolf. “If we put Homer straight into English words neither meaning nor manner survives” - E. V. Rieu (in his preface to his translation of Homer's Odyssey) “The only purpose of education is to enable one to read Homer in the original Greek” - Sheppard (1949) “What is translation? On a platter A poet's pale and glaring head A parrot's speech, a monkey's chatter And profanation of the dead. - Vladimir Nabakov “Say what one will of its inadequacy, translation remains one of the most important worthwhile concerns in the totality of world affairs" - Goethe இயல் 4 க்கான நூற்பட்டியல் Chelliah J.V. (1946) Pathupattu - Ten Tamil Idylls pp.370; Tamil University Reprint 1985. Danielou, Alain (1965) The Ankle Bracelet; New york Ellis, F.W (1819 or so) Tirukural: Ellis commentary (1955 reprint Ed R. P. Sethu pillai) Frawley, William (1986) Ed: Translation: Literary, linguistic and philosophical perspectives, London Keith, R. Crim (1917) “Your neck is like the tower of David” The Bible Translator; London Vol 22 - 2 Hart, George L (1975) The poems of ancient Tamil: their milieu and their Sanskrit counterparts. (1999) with co-author Hank Heifetz) The Four hundred poems of war and wisdom; New York. Columbia ppxxxvii; 397 Higham, T. F. (1938) Introduction II to Oxford Book of Greek verse in translation. Marudanayagam (2003) On translating a Sangam Text. PILC Journal of Dravidic Studies 13: 1-2 Marr, John Ralston (1958 Ph.D thesis, published in 1985) The eight Anthologies. Institute of Asian Studies. Chemmancheri (1969) “The translation of Sangam literature” Proceeding of First International Conference - Seminar of Tamil Studies: Kuala Lumpur, 1966; Vol II Mohanty, Panchanan (2006) Two lectures on translation IJDL Xxx V-1 Murugan, (2000) Tolkappiyam in English xxiii, 688, Institute of Asian Studies Parthasarathy, R, (1993) The Cilappathikaram of Ilanko - an epic of South India (New York: Columbia) Ponniah, S.M. (1997) Tamil poetry through the ages: Vol I The Eight Anthologies, Institute of Asian Studies Pope, George Uglow (1886) The sacred Kural of Thiruvalluva Nayanar (1893) The Naladiyar (1910) Tamil heroic poems Radice, William. and another (1987) The Translator's Art Ramanujan, A.K. (1967) The Interior Landscape (1985) Poems of Love and war; OUP Ramaswami, Dr V. (2001) On Translating Thirukkural; International Institute of Tamil Studies; Chennai Savory, Theodore (1958) The Art of translation Shunmugavelayudham, Su (1985) Molipeyarppiyal; IITS; Chennai Sivakami, S (1983) Bibiliography on Translations, IITS Subramanian, A. V. (1984) The bangle and the javelinMuthollayiram pp 135; Sekhar Pathippagam; Chennai - 78 Zvelebil, K. V. 1956 “Translating old Tamil poetry - some suggestions” Tamil Culture; V-3 July 1956 இயல் 5 தமிழின் தொன்மை : பிற அறிவுப் புலங்களுடன் இணைந்த ஆய்வு (சிந்துவெளி நாகரிக அகழ்வாய்வு, அந்நாகரிக எழுத்தாய்வு உட்பட) தமிழர்கள் உலகில் இன்றுள்ள மற்ற எந்த மொழி, பண் பாட்டையும் விட அதிகத் தொன்மையானதும் இடையீடு இல்லாததும் ஆன மொழி, பண்பாட்டின் பிறங்கடைகள் ஆவர். மாந்த இன நாகரிக வளர்ச்சியின் மிகச் சிறந்த இயல்களில் ஒன்று தமிழர் மரபுச் செல்வம் ஆகும். இன்றுள்ள மொழிகளில் மாந்தன் தொன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் மட்டுமே. "முதல் தாய்மொழி" ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்கு ஒளி தரவல்லதும் தமிழே. ஒரு சிறு நிலப்பரப்பின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இப்படி மாந்த இனத்தின் ஒட்டுமொத்த இன, மொழி வரலாறு களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ள (தமிழகம் போன்ற பகுதிகள் உலகில் மிகச் சிலவே; தமிழ் தனித் தன்மை வாய்ந்தது. எஸ் ஏ டைலர் கூறியுள்ளது போல் இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி - பண்பாடு ஆகியவையே (S.A. Tyler. "India, m Anthropological perspective (1973) "All of Indian civilization is built on an underlying base of Dravidian language and culture') இந்திய வரலாற்று ஆய்வு களுக்கும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் மிக இன்றியமையாதவை. 2. தமிழ் என்னும் சொல்லின் திரிபே திராவிடம் (தமிழ், தமிள், த்ரமிள , த்ராமிட, த்ராவிட). திராவிட மொழிக் குடும்பம் என அழைப்பது தமிழிய மொழிக் குடும்பத்தையே. தொல் திராவிடம் (Proto-Dravidian) என்று வண்ண னை மொழி நூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றன என்பதும், பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்பட வேண்டும் என்பதும், பாவாணர் கொள்கை . தமிழின் திரிபுகளே பிற திராவிட மொழிகள். பழந் தமிழினின்றும் வேறுபட்ட "தொல் திராவிடம்' என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே திராவிடம், தொல் திராவிடம் என இந்நூலில் குறிப்பிடப்படுவனவெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாகக் கொள்க. 3. தமிழ், தமிழர் வரலாற்றைச் செவ்வனே அறிய மாந்தர் இனத் தோற்றமும் பரவலும்; மொழியின் தோற்றமும் பரவலும் பற்றி இன்றைய பன்னாட்டு அறிஞர் ஏற்றுள்ள கருத்துக்களைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. அவற்றை அடுத்து வரும் பகுதிகளில் காண்போம். க. மாந்த இனத்தோற்றமும் பரவலும் 4. புடவியின் (பிரபஞ்சத்தின்) அகவை சுமார் 1400 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட ஞாயிற்றுக் குடும் பத்தின் அகவை ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகட்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை 'பாக்டீரியா' போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடி கொடிகளும் விலங்கு - பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலக்கம் தனி இனங்கள் (Species) கண்டு பிடிக்கப்பட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப் படாதவையும், பெயர் சூட்டப்படாதவையும் (குறிப்பாக நிலைத்திணை, நுண்ணுயிர்கள், சிற்றுயிர்கள்) மும்மடங்கு இருக்கும் என்று அறிவிய லார்கள் கருதுகின்றனர். இன்றைக்கு 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. (மிகப் பெரிய விண் கொள்ளிகள் (Meteors) உலகில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்). இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய எலி போன்ற பருமனுடைய) விலங்கிலிருந்து படிமலர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மாந்தனுக்கும் மூதாதை யான இலெமூர் (Lemur) விலங்கு (ஏறத்தாழ 250 கிராம் எடை) உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். (பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள் தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டும், கறையான் தோன்றி 28 கோடி ஆண்டும் ஆகின்றன) இப் பக்கத்திற்கும் அடுத்த பக்கத்துக்கும் இடையில் ஒட்டியுள்ள 'புவியின் தோற்றத்திலிருந்து இக்கால மாந்தன் வரை' என்ற விவரப் படத்தை காண்க. 5. மாந்தன் எப்படித் தோன்றினான்? மாந்தக் குரங்கினத் துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மாந்தனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 இலக்கம் ஆண் டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மாந்தர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப் பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் அல்லது இக்கால மாந்தர் (Home Sapiens Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார் அனைவரும் ஏற்ற முடிவு (Cavalli Sforza and others: The history and geography of Human genes, 1994). ஏறத்தாழ மாந்தனையொத்த "முன்மாந்த (Hominid) " இனங்கள் கடந்த 48 இலக்கம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல இலக்கம் 1 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன், பீகிங் மாந்தன், சாவகமாந்தன், அத்திரம்பாக்கம் பாசில் மாந்தன் ஆகியவர்கள் (ஏறத்தாழ 3 இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சார்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் (Neandarthal) இனமும் முன்மாந்த இனமே. இந்த "முன்மாந்த இனங்கள் " எவற்றிடையேயும் "மொழி" உருவாகவே இல்லை (None of them had the faculty of speech) 6. இப்பொழுதுள்ள மாந்தர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மாந்த இனம், கடந்த ஒன்றரை இலக்கம் ஆண்டு களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின் வருமாறு பரவியது - அதாவது, சைபீரியாவுக்கு இன்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னரும் ஐரோப்பாவுக்கு 40,000 “ வ/தென் அமெரிக்காவுக்கு 30,000 - 12,000 “ ஆத்திரேலியாவுக்கு 50,000 “ சப்பானுக்கு 30,000 “ நியூகினி தீவுக்கு 32,000 “ பசிபிக் தீவுகளுக்கு 4000 - 1000 (மைக்ரோனிசியா, பாலினீசியா) பரவினர் என்பது வல்லுநர் கருத்து ஆகும். இதை விளக்கும் நிலப்படம் அடுத்த பக்கத்தில் உள்ளது. கண்டங்கள் நகர்வுக் கொள்கையின் படி (Continental drift) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ இப்போ துள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர், கண்டம் அளவுக்கு (Continental proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை . ஆயினும் பனியூழி முடிவில் கி.மு. 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகிக் கடல் மட்டம் சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதியாகிய கண்டத் திட்டு (Continental shelf) ஏறத்தாழ - இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும் (தென் திசை உட்பட) சில நூறு கல் (மைல்) தொலைவும் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். ஆப்பிரிக்காவிலிருந்து இக்கால மாந்தன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் ஆத்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம். ஜியாகிராபிகல் மாகசீன் செப்டெம்பர் 2006 இதழில் இக்காலமாந்தர் ஆப்பிரிக்காவை விட்டு தென்னிந்தியாவையொட்டிய கண்டத்திட்டு வழி யாகப் புலம்பெயர்ந்து சென்ற பாதையைக் காட்டும் நிலப் படம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் இப்பொழுது உள்ளது போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன வெனினும் நிலப் பகுதி சில நூறுகல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற் பகுதியில் (Continental Shelf) ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் பிளெமிங் (2004). இன்றைய மாந்தனிடம் உள்ளவை 23x2 'குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் மாந்தக்குரங்கு மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. (ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் மாந்தக் குரங்கிலிருந்து மாந்தன் வேறுபட்டவன் என்றாலும் மாந்தன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான்!) 7. கண்டங்கள் நகர்வுக் கொள்கை, மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் கழக நூல்களிற் காணும் கடல்கோள் செய்தி களை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்குத் தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்தியைக் கலித்தொகை 104ம் சிலப்பதிகாரம் காடு காண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய (கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) இளம்பூரணரும் இதைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுபடுத்திச் சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு: i) ச. சோமசுந்தர பாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV ii) வி.ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு, தமிழியன் ஆண்டிகுவாரி II – iii) மறைமலையடிகள் (1930) : மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் iv) ஏ. எஸ். வைத்தியநாத ஐயர் (1929) : "கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள்'' : பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்ன ல் II -1 v) ஜே. பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூXI vi) ஹீராஸ் பாதிரியார் (1954) தொல் இந்தோ நண்ணிலக் கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக். 411-439 சதபத பிராமணம் 18 முதலியவற்றில் கூறப்படும் "மனு பிரளயம்" திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) உம் (iv) உம் கூறுகின்றன. சுமேரியப் பிரளயக் கதைகூடப் பழந் தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (1) ம் (vi)ம் கருதுகின்றன. 8. இந்திய மாக்கடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஏக்கலும் வேறு சிலரும் கருதி அதற்கு "லெமூரியா" என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவிய லறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன? கண்டம் அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும் கடலுள் மூழ்கிட வில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். காந்திர தாவ் தமது "முக்கடற்புதிர்கள்" நூலில் இதை 1974லேயே சுட்டியுள்ளார். எனினும் இதை யாரும் கண்டுகொள்வதில்லை! "தொன்மை நாகரிகங்களைப் படைத்த மாந்த இனங் களைக் கொண்டிருந்த (கண்டம் போன்ற ) பெருநிலப்பரப்புகள் எவையும் எந்தக் காலத்திலும் இந்தியா, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம்". "It is highly improbable that big land masses, inhabited by large numbers of people who created ancient civilisations ever existed in the Indian, Pacific Or Atlantic Oceans". (p267) இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் நிலப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and Plate techtonics) யாகும். இதனை விளக்கும் உலகப் படங்கள் இரண்டை அடுத்த இரு பக்கங்கள் இல் காண்க. அடுத்த பக்கங்களில். ஆயினும் கி.மு. 8,000ஐ ஒட்டி உரம் (WURM) பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு, முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கிவிட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தியாவையும் இணைத்த வால் போன்ற நிலப்பகுதி களும் சில (பின்னர் மூழ்கி விட்டவை) இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. (வால்டர் பேர் சர்வீஸ் ; The Roots of Ancient India, 1971). இலெமூரியாக் கண்டக் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூட ச. சோமசுந்தர பாரதி, மயிலை சீனி வேங்கடசாமி, எம் ஆரோக்கியசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவின தன்று; சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர். கா. அப்பாத்துரையாரும் 'கடல் கொண்ட தென்னாடு' என்று குறிப்பிட்டதை உணர்க. இப்பொழுது இலெமூரியாக் கண்டக் கொள்கை அடிப்படையற்றது என்று நிறுவப்பட்டு விட்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சுமதி இராமசாமி தமது கற்பனைப் புவியியலாளர்களும், பேரழிவு வரலாறு களும்; மூழ்கிவிட்ட இலெமூரியா : Fabulous geographers, catastrophic Histories : The Lost Lemuria (2004: பெர்மனென்ட் பிளாக், டெல்லி) என்னும் நூலில் "கடல் கொண்ட தென்னாடு " பற்றி எழுதிய தமிழறிஞர்கள் அனைவரையும் தாக்கி ஏளனம் செய்துள்ளார். 1950களுக்குப் பின் "லெமூரியாக் கண்டக்" கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் சுமதி இராமசாமி ஒன்றைக் குறிப்பிட மறுக்கிறார். அது என்ன? கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழக அரசு 1972 இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு - தொல் பழங்காலம் போன்ற நூல்கள் குறிப்பிடுவதை அவர் கண்டு கொள்ளவில்லை. அன்றைய 'நாடு' என்பது இந்தியா' தமிழ் நாடு' போன்ற பெருநிலப் பகுதியன்று. இன்றைய வட்ட (தாலுகா) அளவிற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்து கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டியதேயில்லை. முன் பத்தியில் கூறியது போல கி.மு. 8,000ஐ ஒட்டிக் கண்டத்திட்டுப்பகுதி கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் கழக (சங்க) இலக்கியக் கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றம். (காண்க பி. இராமநாதன் 1998, 2003 2004). 9. இவ்வாறு தமிழ், தமிழர் செய்திகளைக் கொச்சைப் படுத்தி எழுதுவது இவ்வாசிரியருக்கு வழக்கமானதே. தி இந்தியன் எகனாமிக் அண்ட் சோசியல் ஹிஸ்டரி ரிவியூ 38-2 ஏப்ரல் - சூன் 2001 இதழில் சுமதி இராமசாமி "இனங்களின் எச்சங்கள் : தொல்லியல் (தமிழ்த் தேசிய உணர்வு, சிந்துவெளி நாகரிகத்தின்பால் ஈர்ப்பு" என்று ஒரு கட்டுரை எழுதினார். சிந்து வெளி நாகரிகமும் அந்நாகரிகமுத்திரை எழுத்துகளும் திராவிடம் (தொல் தமிழ் ) சார்ந்தவையே என்று சிறந்த ஆய்வாளர்கள் கமில் சுவெலபில் (1990: திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம், இயல் 6: திராவிட மொழிகளும் ஹாரப்பா மொழியும்) அஸ்கோ பர்போலா (ப்ரண்ட் லைன் அக் 24,2000) கருதுவதை யெல்லாம் அக் கட்டுரையில் சுமதி இராமசாமி கண்டு கொள்ளவில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் தமிழச் சார்பை வலியுறுத்தும் தமிழறிஞர்களை யெல்லாம் (பர்போலா, பார்சர்வீஸ், சுவலெபில் போன்றவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதுபவர்கள் உட்பட), அவர் எள்ளி நகையாடியுள்ளார். உ மொழியின் தோற்றமும் பரவலும் 10. முன்மாந்த இனங்கள் அனைத்தும் பேச்சாற்றல் அற்றவை, அவர்களி டையே மொழி உருவாகவில்லை, ஏறத்தாழ 1% இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இக்கால மாந்த இனத்திடையே (AMH) மட்டுமே ஏறத்தாழ 50000 ஆண்டுகட்கு முன்னர் மொழி உருவாகியது என்பது இன்றைய பலதுறை அறிவியலாளரின் ஒருமித்த முடிவாகும். 11. இன்று பின்வரும் விளத்தப்படி ஏறத்தாழ 6000 மொழிகள் உலகில் பேசப்பட்டு வருகின்றன: ஒவ்வொரு மொழிகள் (2)இல் கண்ட மொழியையும் எண்ணிக்கை மொழிகளைப் பேசுநர் பேசுவோர் தொகை எண்ணிக்கை (கோடியில்) (1) (2) (3) (1) 10 கோடிக்கு மேல் 8 மொழிகள் (சீனம், ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி, வங்காளி, போர்ச்சுகீசு, ரசியன், சப்பானியம் 240 கோடி (ii) - 10 கோடி 72 (இந்த 72 மொழிகளையும் (6 கோடி பேர் பேசும் மற்றும் அடுத்த நிலை 239 தமிழ் இப்பிரிவில் மொழிகளில் பேசுவோர் அடங்கும்) எண்ணிக்கை ' அடிப்படையில் முதல் 162 மொழிகளையும் சேர்த்து மொத்தம் 234(72+162) மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை) 336 கோடி (iii) 10 இலட்சம்.1கோடி 239 (iv)1 இலட்ச ம் 10 இலட்சம் 795 ii) இல் எஞ்சிய 77 10000 -1 இலட்சம் 1605 (239-12) மொழிகளையும் 2400 (IV) (v) இல் குறித்த 5740 மொழிகளையும் பேசுவோர் எண்ணிக்கை 24 கோடி (v) பத்தாயிரம் பேருக்கு குறைவு 1000 - 9999 1782 100 – 999 1075 10 - 99 302 1- 9 181 3340 3340 6059 மொழிகள் - 600 கோடி மக்கள் (இந்தி, மைதிலி, இராசத்தானி முதலியவற்றை ஒரே இந்தி மொழியாகக் கொள்வதா? தனித்தனி மொழிகளாகக் கொள்வதா? இது பற்றி எல்லாம் மொழியியலாளரிடம் கருத்து வேறுபாடு உண்டு. 6000 அல்லது 6059 என்பதெல்லாம் ஒரு குத்துமதிப்பேயாகும்.) இந்த 6059 மொழிகளில் 4 விழுக்காடு ஆகிய 242(8+72+162) மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கை யான 576 கோடியானது மொத்தம் 600 கோடி மக்களுள் 95 விழுக்காடு ஆகும். மீதி 96 விழுக்காடு ஆகிய 5817 மொழிகளைப் பேசுவோர் வெறும் 24 கோடி மக்களேயாவர் (அறுநூறு கோடியில் அவர்கள் வெறும் நான்கு விழுக்காட்டினரேயாவர்). 12. இன்று உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் ஒரே முதன் மொழியிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் மாக்ஸ்முல்லருக்கும் இசை வானதே. 20 ஆம் நூற்றாண்டில் ஞால முதன் மொழி ஆய்வில் ஈடுபட்ட மேனாட்டறிஞர்கள் பெதர்சன், திராம் பெத்தி, சுவா தெசு, கிரீன்பெர்க், மெரிட் ரூலன், இல்லிச் சுவிதிச், தால் கோபால்ஸ்கி, செவரோஸ்கின், ஸ்தாரோஸ்தின், பாம் ஹார்டு மற்றும் கெர்ன்ஸ் ஜான், பெங்ட்சன், வாக்லாவ் பிலாசக் போன்ற பலராவர். பல்வேறு மொழிக் குடும்பங்களையும் பின்வருமாறு ஒரு சில பெருங்குடும்பங்களுக்குள் (Super families) அடக்கலாம் என்பது அவர்கள் கண்டுள்ள உண்மையாகும். i) நாஸ்திராடிக் (இந்தோ - ஐரோப்பியன், திராவிட மொழிகள், உராலிக், அல் தாய்க், கார்த்வெல்லியன், ஆப்ரோ - ஏசியாடிக் - அதாவது செமித்திய - ஹாமித்தியக் குடும்பம், ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும்). கிரீன்பெர்க் வகுத் துள்ள யூரேசியாடிக் பெருங்குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. யூரேசியாடிக் - கில் அடங்கியவை எத்ருஸ் கன், இந்தோ - ஐரோப்பியன், உராலிக் - யூகாகீர், அல் தாய்க், கொரியன் - சப்பானியம் - ஐனு, கில்யாக், சுகோதியன், எஸ்கிமோ - அல்யூத் ஆகிய மொழிக்குடும்பங்களாகும். (2000 அக்டோபரில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பத்திரி ராஜ் கிருஷ்ணமூர்த்தியை கிரீன்பெர்க் சந்தித்த பொழுது, "திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் உடன்பிறப்பாக இருக்கலாம். மகளாக இருக்க முடியாது" எனத் Og STJÓTTITII. (Bh. Krishnamurthi. The Dravidian Languages, 2003, பக். 46). இதிலிருந்து ஸ்லாவ், இரானியன், வேதமொழி சமஸ்கிருதம், கிரீக், இலத்தீன், கெல்திக், செருமானியம் போன்ற மொழிக் குடும்பங்களுக் கெல்லாம் தாயான இந்தோ ஐரோப்பியத்தை விடத் தொன்மை வாய்ந்தது திராவிட மொழிக்குடும்பம், அதாவது பழந்தமிழ் என்று உணரலாம்.) ii. சீன - காகேசியன் iii. ஆஸ்திரிக் (முண்டா போன்றவை) iv. அமெரிக்க இந்திய மொழிகள் V. இந்தோ - பசிபிக் vi. கொய்சான் vii. காங்கோ - சகாரா பல்வேறு மொழிக்குடும்பங்களை இணைத்து அவற்றுக்கு மூலமான மொழிப் பெருங்குடும்பங்களைக் காணும் ஆய்வாளர் களுள் சிலர் அதற்கும் மேலே போய் ஞால முதன்மொழி (மாந்தனின் முதல் தாய்மொழி) ஆய்வுக்கும் சென்றுள்ளனர். மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடிவழி ஆய்வு (ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994) நூலின் பக்கம் 277 இல் கூறுவது வருமாறு: "பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளாவிடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன் மொழியி லிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான சான்று உள்ளது" அந்நூலின் பக்கங்கள் 277-366இல் 27 முதன்மையான கருத்துகளுக்குப் பல்வேறு மொழிக்குடும்பங் களிலும் உள்ள சொற்கள் "Global Etymologies" தரப்பட்டுள்ளன. அக்கருத்துக்களுக்கு ஞால முதன் மொழியில் என்ன வேர்ச் சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடி யாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்குத் தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தன வாகவும் ஞாலமுதன் மொழி யின் வேர்ச்சொல் வடிவை விளக்குவன வாகவும் அமைந்துள்ளன. 13. இராபர்ட் கால்டுவெல் 1856இல் தனது திராவிட அதாவது தென் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என் னும் மாபெரும் நூலை வெளியிட்டார். (திருந்திய விரிவான இரண்டாம் பதிப்பு 1875) ஒரு புறம் திராவிட மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள் எலாமைட் மொழி சித்திய (இப்பொழுது 'உரால் - அல்டாய்க் ) மொழிகள் சப்பானிய மொழி ஆத்திரேலியப் பழங்குடி மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள், சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி ஏராளமான செய்தி களை அவர் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன் மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியை ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கிய திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிலிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை அச்செய்திகள் வலுவாக நிறுவின. கால்டுவெல் கோடிட்டுக் காட்டியதை மேலும் நுணுகி ஆராய்ந்து "மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்; மிகத் தொன்மை வாய்ந்த தொல்தமிழே (தொல் திராவிடம் என அழைக்க விரும்புவார் அவ்வாறே அழைக்கலாம், மறுப்பில்லை) அனைத்து மொழிக்குடும்பங்களுக்கும் (இந்தோ-ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும்" என்ற கோட்பாட்டை மேலும் ஆழமாக விரிவாக நிறுவியவர்கள் நல்லூர் ஞானப் பிரகாச அடிகளும் ஞா. தேவநேயப் பாவாணரும் ஆவர். இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளின் (ஏன் பிறமொழிக்குடும்ப மொழிகளுக்கும் தான்) அடிப்படைச் சொற்கள் பலவற்றுக்கு ஞானப்பிரகாசரும் பாவாணரும் நூற்றுக்கணக்கான பொருத்தமான தொல் - திராவிட வேர்ச் சொற்களை இனம் காட்டியுள்ளனர். 1953இல் ஞானப்பிரகாசர் தெரிவித்த கருத்து வருமாறு: "இந்தோ ஐரோப்பிய மொழிகளில் 'வேர் கள்' என உன்னிக்கப்படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறியீடுகள் தாம். திராவிட மொழி வேர்களோ வெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளை யும் காரணத்தையும் காட்டுபவை யாக உயிரோட்டமுள்ள முளைக்கரு போலத் தோன்றும்; எந்தக் கருத் தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின என்பதைத் தெற்றென அவை காட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல் லாததால் இந்தோ ஐரோப்பிய "வேர்கள்" இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக் குவியல்களாகவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளி காட்டி உயிரூட்டம் தரக்கூடியவை திராவிட மொழி வேர்கள்தாம்.'' பிறமொழி வேர்களுக்கும் இக்கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும். சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் (1929) ஞானப்பிரகாசர் "மொழியின் தோற்றம்" என்ற கட்டுரை யில் "இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன் மொழியின் தோற்றத்திற்கான அடிப்படைச் சான்றுகள் தமிழில்தான் கிட்டும்" என முழங்கியிருந்தார். (Tamil supplies this long looked for clue to finding the true origin of the proto Indo - European language) 14. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் இடையே யுள்ள உறவுகள் குறித்து இதுவரை பின்வரும் ஆய்வுகள் நிகழ்ந் துள்ளன: நாஸ்திராடிக்யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1.திராவிடமும் கால்டுவெல், போப், இந்தோ ஐரோப்பிய ஞானப்பிரகாசர், தேவநேயன், மொழிகளும் இளங்குமரன், மதிவாணன், இலியிச் - சுவிதிச், அருளி, அரசேந்திரன்; ஸ்டேபான் ஹில்யர்லெவிட். (பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ் - இந்தோ ஐரோப்பிய / ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக்கணக்கானவை (reasonable and perceptive) என்று முனைவர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் இந்தோ ஐரோப்பிய (மொழியியல் ஆய்விதழில் (மடலம் 28:3-4;2000 சூன் - திசம்பர் பக்கம் 407-438இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். மேலும் 2000 இல் வெளியான "இந்தோ ஐரோப்பிய மொழி களும் அவற்றொடு நெருங்கிய உறவுடையனவும் : யூரேசி யாடிக் மொழிப் பெருங்குடும்பம்: மடலம் I இலக் கணம்" என்னும் நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங் குடும்பத்தின் முதன்மையான இலக்கண ஒப்புமைகள் 72 - ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20க்கு மேற்பட்ட வற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன.) 2. திராவிடமும் உரால் - அல் - கால்டுவெல், பரோ, மெங்கெஸ், டாக்ய மொழிக்குடும்பம் டைலர் , அந்திரனாவ், வாசக், ஹெச்.பி.ஏ. ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மொழியும் (கி.மு. 3000க்கு முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் நாட்டில் பேசப்பட்டது) மக் - அல்பின், கே. வி. சுவலெபில் 4. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓனோ; பொன். கோதண்டராமன்; ஹெச்பிஏ ஹகோலா, சுவெலபில் 5. திராவிடமும் கொரிய மொழியும் ஹுல்பர்ட்; பவுண்துரை 6. திராவிடமும் எத்ருஸ்கன் ஸ்டென் கோனோ; மொழியும் (கி.மு1000 - 300 இரா. மதிவாணன் அளவில் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990இல் வெளியிட்ட "திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம்" என்னும் நூலின் பக்கங்கள் 99. 122 இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிட மொழி, எலாமைட் , தொல் உரால் - அல்டாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு. 10,000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரியா ஹீராஸ், ஏ சதாசிவன், மொழியும் (கி.மு. 3000க்கு ஜே. வி. கின்னியர் வில்சன்; முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ. ஹகோலா 8. திராவிடமும் மின்னியும் ஜி.டபுள்யூ. பிரவுன் (1930) (கி.மு. 1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி ; மொழியும் (ஸ்பெயின்) பெனான்ஸ் பிக்னு சாலெக். 10. திராவிடமும் ஆஸ்தி நாரிஸ், பிரிச்சார்டு, ரேலியப் பழங்குடி மக்கள் ஆர். எம்.டபுள்யூ. டிக்சன், மொழிகளும் (இப்பழங்குடி மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள்) பி. இராமநாதன் (1984) 11. திராவிடமும் கொஷவா டாக்டர் சீனிவாசன்; மொழியும் (தென் அமெரிக்க சாமன்லால், ஹெச்.பி. ஏ. பெருநாடு) ஹகோலா இப்பக்கத்தின் எதிரில் ஒட்டியுள்ள உலகப்படம் இம் மொழிகள் பேசப்படும் நாடுகளையும் இடங்களையும் காட்டும். 15. திராவிட மொழிகளுக்கும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையிலுள்ள மிக நெருங்கிய ஒப்புமையை பி. இராமநாதன் (குப்பம்) திராவிடப் பல்கலைக் கழகத்தின் திராவிடியன் ஸ்டடீஸ் 1-3; ஏப்ரல் - சூன் 2003 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை விரிவாக நிறுவுகிறது. தொல் திராவிட மொழி பேசுநர் தென் இந்தியாவில் கண்டிப்பாக 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இருக்க வேண்டும் என் பதையும் இங்கிருந்து அதற்கு முன்னரே ஆத்திரேலியப் பழங் குடி மக்கள் தொல் தமிழ் மக்களிடமிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும் என்பதையும் அக்கட்டுரை நிறுவுகிறது. ங. தொல் திராவிட மொழி பேசுநர் பரவியது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே யாகும்; தமிழர் இந்தியாவின் தொல்குடிகள். 16. இப்பொழுது பல நாடுகளிலுமுள்ள பல்துறை அறிஞர் களும் பொதுவாக ஏற்றுக் கைக்கொண்டுள்ள (தவறான) கருது கோளின்படி தொல் திராவிட மொழி பேசுநர் தாயகம் வட கிழக்கு ஈரான் பகுதியாகும் ; அங்கிருந்து ஏறத்தாழ கி.மு. 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர்; செல் லும் வழியில், பேருந்து வரும் பொழுது ஆங்காங்குச் சிலர் இறக்கி விடப்படுவது போல், திராவிட மொழிபேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டு வரப்பட்டன. (கே.வி. சுவலெபில் (1972) : "திராவிடர்கள் இறக்கம் " The descent of the Dravidians; திராவிட மொழியியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (IJDL) தொகுதி 2; பக். 57-63. பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் அவர் இக் கருத்தையே கூறுகிறார். தமது தென்னிந்திய வரலாறு (4ம் பதிப்பு 1976) நூலில் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் இது "நடந்திருக்கக் கூடாததன்று" (not unlikely) என்கிறார். 17. இதற்கு நேர்மாறான கொள்கை திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் "திராவிடர் ஏற்றம் கொள்கையாகும் : DRAVIDIAN ASCENT (from South). இப்பொழுது அது பழைய பாணிக் கொள்கையாகக் கருதப் படினும் அதனை வலியுறுத்தியுள்ள அறிஞர்களுள் ஹெர். ஆர். ஹால்; அப்பர் ஈராசு (ஹீராஸ் பாதிரியார்), பி. தி. சீநிவாச ஐயங்கார், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், மறைமலை அடிகள், யு. ஆர். எஹரென்பெல்ஸ், சேவியர் .எஸ் தனிநாயக அடிகளார், க.த.திருநாவுக்கரசு, தேவநேயப்பாவாணர், பிரிட்ஜெட் மற்றும் இரேமாண்ட் ஆல்சின் (1988), கே.கே.பிள்ளை ஆகியோரும் அடங்குவர். சுவிரா ஜெய்ஸ்வால் (1974); ஜே. ஆர்.மார் (1975); பர்டன் ஸ்டெய்ன் (1998) ஆகியோர் திராவிடர் ஏற்றம்' என்ற கொள்கையை ஏற்காவிடினும் "திராவிடர் இறக்கம்" என்ற கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.) 18. திராவிட மொழி பேசுநர் கி.மு. 3000ஐ ஒட்டி இந்தியா வுக்குள் நுழைந்தனர் என்ற கோட்பாடு மேலே பிரிவுகள் (2) (ங்) ஆகியவற்றில் சொன்னவற்றோடு பொருந்தி வருகிறதா? மொழிப் பெருங் குடும்பங்களுக்கிடையேயுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர் பலர் இத்தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர்பிளெஞ்ச் எம்.ஸ்பிரிக்ஸ் 1997 இல் தொகுத்து வெளியிட்ட தொல்லியலும் மொழியும் : (1) கோட்பாட்டு ஆய்வுநெறிக் கருத்தோட்டங்கள் என்னும் நூலில் ரென்புரூ பின்வரும் முடிவைக் கூறுகிறார்: "(நடுக் கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் செய்த மக்கள் பண்டு பரவத் தொடங்கியது பற்றிய) தொல்லியல் சான்று களின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப் பியன், தொல் ஆப்ரோ - ஏசியாடிக், தொல் எலாமைட், திராவிடம், தொல் அல்டாய்க் மொழி கள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனைவரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப்பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம்மொழிகள் எல்லாம் (நாஸ்திராடிக் மொழியியலாளர் கூறுவது போல) தொடர்புடையவையாக இருப்பது உண்மை யானால் அவர்களெல்லாம் அப்பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு. 8000 - 6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் இம்மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராடிக் மொழி அந் நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் ஒத்து வரும்தருக்கமாகும்.'' இவ்வாறு தொல் - நாஸ்திராடிக் பேசியவர்கள் அனை வரும் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே நடுக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டையும் (அதன் தொடர்பான "இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர் கள் இறங்கியது ஏறத்தாழ கி.மு. 3000ஐ ஒட்டித்தான்" என்ற கோட்பாட்டையும் பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும். இதுபற்றி காலின் பி. மாசிகா 1999 இல் கூறியது குறிப்பிடத் தக்கது. "தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண் டும். இப்போதைய மாந்த இனம் (ஏறத்தாழ ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல் திராவிட மொழியின் தொடக்கக் காலம் ஆகலாம்" (It may be a question of a very ancient common substratum in south Asia, Pre-Dravidian going back even to the original peopling of the world; The year Book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi). 19. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் இக்கால மாந்த இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது; முதல் தாய்மொழி ஏறத்தாழ 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது; இன்றைக்கு ஓர் இலட்சம் - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தென்னிந்தியா வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் இக்கால மாந்த இனம் பரவியது என்றும் மேலே கண்டோம். இவ்வாறு வடக்கு, வடகிழக்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் திராவிட மொழி பேசுநருக்கு முகாமையான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இந்தக் கோட்பாட்டை "ஞானப்பிரகாசர் - தேவ நேயன் கோட்பாடு" என அழைக்கலாம். (திராவிட மொழி களுக்கு ஆத்திரே லியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் (மொழிக்குடும்பங்கள் பிற வற்றுடன் உள்ள நெங்கிய தொடர்பையும் விளக்க வல்லது இக் கோட்பாடேயாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிக மாகும். (ஹீராஸ் 1953; மதிவாணன் 1995 ; இராமநாதன் 1999; பூரண சந்திரஜீவா 2004) அவர்களுக்கு எலாம், சுமேரியா, எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். 20. சுவெலபில் (1990) "ஏறத்தாழ கி.மு. 10000க்கு முன்னர் திராவிடம், உரால் - அல்டாய்க், சப்பானியம் மொழி பேசுநர் களிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்" என்று கருதுவதைக் கண்டோம். அத்தகைய தொடர்பையும் "திராவிடர் ஏற்றம்" என்னும் கோட்பாடே விளக்கவல்லது. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி கி.மு. 10,000க்கு முன்னரே தொல் இந்தோ - ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசு நரிடமிருந்து பிரிந்து விட்டனர்; நடு ஆசிய ஸ்டெப்பி புல் வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர்; அவர்களில் சில குழுவினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரேக்கம், இலத்தீன், கெல்டிக், ஜெர்மானிக், ஸ்லாவிய மொழிக் குடும்பங் களாகும்); வேறு சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும்; அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10000க்கு முன்னர்த் தொல் திராவிட மொழியினரிட மிருந்து பிரிந்த காலத் தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக் கூறு களோடு சேர்த்து, வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழி பேசுநர்களிடம் இருந்து (இரண் டாவது கட்டமாக) புதிதாக மேலும் பல திராவிட மொழிக் கூறுகள் சேர்க்கப்பட லாயின. திராவிட மொழி பேசுநர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இக் கோட்பாடானது தொல் மாந்தர் மொழியியல் முடிவுகளை மேலும் சீர்மை பெறச் செய்ய வல்லது; நாளடைவில் மாந்த இனத் (AMH) தோற்றமும் பரவலும்; மொழிப் பெருங்குடும்பங்கள் உருவாக்கமும் பரவலும்; வரலாற்றுக்கு முந்திய தொல்லியல் ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்தை யும் விளக்கத்தக்க ஒருங்கிணைந்த ஒரு பெருங் கோட்பாடு (Grand synthesis) உருவாக்க வழி கோலக் கூடியது ஆகும். 21. தமது IJDL சூன் 2007 கட்டுரையில் ஸ்டெபான் லெவிட் பின்வருமாறு "திராவிடர் ஏற்றம் கொள்கையை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. "கடல் மட்டம் இப்பொழுதுள்ளதை விட மிகக் குறைவாக இருந்த பனியூழிக் காலத்தில் ஆப்பிரிக்கா - தென்னிந்தியாவை இணைத்த வால் போன்ற நில இணைப்புகள் / தீவுகள் வழியாக ஆப் பிரிக்காவிலிருந்து தென் ஆசியாவிற்கு திராவிட மொழி பேசுநர் வந்திருக்கலாமென்னும் கோட் பாட்டை பி. இராமநாதன் வலியுறுத்துகிறார். அக் கோட்பாட்டை நானும் ஆதரிக்கிறேன். ஆத்திரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழி களுடன் மட்டுமே தொடர்புள்ளவை எனக் கண் டுள்ளனர். உறவுமுறை (Kinship) பூமராங் (வளைதடி ) பயன்பாடு ஆகியவையும் அம்மக்களுக்கும் திரா விடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு. 6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டனர் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 40,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்ற னர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 40,000 ஆண்டுகட்கு முன்னரே திராவிடர் இந்தியா வில் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்த ('திராவிடர் ஏற்றம்") கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத் திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்தப் பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உரா லிக், அல் தாயிக், இந்தோ - ஐரோப்பியம் ஆகிய மொழிக்குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக் கூற இயலாது. ஒப்பன் ஹைமர் (2003) The Real Eve : Modern Man Journey out of Africa நூலின்படி மரபணு ஆய்வும் (காகசஸ் இனத்தைச் சுட்டும் M 17) தொல் திராவிட மொழி பேசுநர் இந்தியாவிலிருந்து வடக்கு வடமேற்காக ஏறத்தாழ 40000 ஆண்டுக்கு முன்னர் மைய கிழக்கு - மைய ஆசியா - ஐரோப்பா என்றவாறு படிப் படியாகப் பரவியிருக்கலாம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இல்லை என்பதைக் காணலாம் (டாக்டர் லெவிட் - தகவல்). ச. திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியில் உருவாகிய சிந்துவெளி நாகரிகம். 22. சிந்துவெளி நாகரிகம் 1947க்கு முந்திய இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் சேர்ந்த இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரு நிலப் பகுதியில் வடமேற்கு இந்தியாவில் பரவி இருந்தது. அதாவது சுமார் 5 லட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. பண்டைய மெசபொதாமிய, எகிப்திய நாகரிகங்களின் பரப்பைவிட அதிக மான பரப்பில் சிந்துவெளி நாகரிகம் வழங்கியது. அந் நாகரிகம் வழங்கிய பகுதியில் கி.மு. 2000 வாக்கில் மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது பொஸெல், பர் போலா போன்றவர்கள் கருத்து ஆகும் (அப்பொழுது உலகில் இருந்த மொத்த மக்கள் தொகையே 9 கோடிக்கும் குறைவு). சிந்து வெளி நாகரிகச் சின்னங்கள் 1500க்கும் மேற்பட்ட இடங் களில் உள்ளன. அவற்றில் சுமார் 20 இடங்களில் மட்டுமே - மொகெஞ்சோதரோ, ஹரப்பா உட்பட - அகழ்வாய்வுகள் நடந் துள்ளன. சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் கி.மு. 7000 லிருந்து என்பதை மெஹர்கார் அகழ்வாய்வு நிறுவியுள்ளது. அந் நாக ரிகத்தின் சிறப்புற்ற நிலை கி.மு. 3200 - 1800 கால அளவைச் சார்ந்தது. மொகஞ்சோதரோ நகர மக்கள் தொகை 40,000 என்றும் ஹரப்பா நகர மக்கள் தொகை 25000 என்றும் மதிப் பிடப்பட்டுள்ளன. 23. மாந்தர் இன (A MH) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப் பகுதி என்று கொள்வதற்கான ஆதாரங்களை இதுவரை கண் டோம். அந்நாகரிகம் திராவிடச் சார்புடையது என்பதற்கு உள்ள மேலும் பல வலுவான ஆதாரங்களில் சில வருமாறு: 1) மொகஞ்சோதாரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிடக் கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள், நகை (ஆபரணங்கள், பருத்தி ஆடைகள் அனைத்தும் திராவிடச் சார்புடையவை. ii) தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடாசலம் நிறுவியுள்ளார். iii) இன்றைய இந்து மதத்தின் முதன்மைக் கூறுகள் அனைத் தும் திராவிட - தமிழ் - சிந்துவெளி நாகரிகக் கூறுகளே ஆகும். சமண , - புத்த மதங்களின் தோற்றத்துக்கும் சிந்துவெளி மற்றும் வடநாட்டில் பண்டு இருந்த தமிழ் (திராவிட) ஞானிகளே காரணமாவர். இக்கருத்தை டைலர் (1973) பின்வருமாறு கூறுவார்; இன்றைய வேத மதக் கருத்துக்கள் - அவற்றிற்கு எதிரான சமண புத்தம் முதலிய கருத்துக்கள் இவற் றிற்கு இடையே முதலில் உறழ்வு, பின்னர் இணைப்பு என்றவாறு இந்துமதம் உருவானது என்று கருதுவது அவ்வளவு சரியானதல்ல. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த, பண்டைய தொல்லிந்திய (தமிழிய) நாக ரிகத்தின் புத்துயிர்ப்பே, மறுமலர்ச்சியே இன்றைய இந்துமதம் ஆகும். (The Hindu synthesis was less the dialectical reduction of orthodoxy and heterodoxy than the resurgence of the ancient aboriginal Indus civilisation) மறைமலையடிகளும், சீனிவாச ஐயங்காரும் (1903,1923,1930) இக்கருத்தினரேயாவர். iv) இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ. கோஸ்வாமி "இந்திய இசை வரலாறு, 1957) 24. சிந்துவெளி அகழ்வாய்வுகளுக்கு நெடுங்காலம் முன்னரே ஹெவிட் (1888). மறைமலையடிகள் (1903) போன்ற நுண்மாணுழை புலமிக்க அறிஞர் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் வாழ்ந்து வந்த நாகரிக மிக்க தமிழிய மக்களிடமிருந்தே ஆரியர் நாகரிகம் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாகக் கூறியிருந்தனர். இவற்றின் விரிவை பி. இராமநாதன் : சிந்து வெளித் தொல் தமிழ் நாகரிகம் 1999 இயல்கள் 3-6 மற்றும் 8 இல் காண்க). 25. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர் என்று தன்னை அழைத்துக் கொண்ட எஸ். ஹீராஸ் பாதிரியார் (1191888 - 14.12. 1955) தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Proto - Indo Mediterranean Culture 1953) என்னும் நூலில் சிந்து வெளி நாகரிகம் திராவிடருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி என்பதை நிறுவியுள்ளார். மிகப் பழங் காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஹீராஸ் கொள்கை (அவர் வாதத் துக்கு ஆதாரமாகக் கொண்ட செய்திகள் சில இப்பொழுது தவறாகத் தோன்றலாம்; சிந்துவெளி முத்திரைகளை அவர் திராவிட மொழி சார்ந்தவை என்று கொண்ட முடிவு சரி யென்றாலும் அவர் முத்திரைகளில் படித்துக் கண்ட வாசகங்கள் இன்று ஏற்கத்தக்கனவாக இல்லை. இருந்தாலும் அவர் கண்ட அடிப்படை உண்மை இன்றும் வலுவுடையதாகவே உள்ளது.) 26. என் லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்றமும் மேல் நாடுகளும் (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்ம்மைகளை உணர்த்து வதாகும். 'திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரை பரவினர்" என்ற அபத்தக்கொள் கையை அவர் (விவரம் புரியாமல்) பின்பற்றியிருந்த போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்ம்மைகள் முக்கியமானவை : i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை ஒரே மாதிரியான "பல சொல் பிணிப்பு ஒட்டுநிலை' (Polysynthetic Suffixal) மொழிகள் இடையீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற் களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்டி , போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii) இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் (கி.மு 2000ஐ ஒட்டி ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமன்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழிகளுடனும் உறவுடையது. iii) இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங் கிய தொடர்புள்ளவை; அவை பொதுவான ஒரே தாய் மொழி யின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 27. சிந்துவெளி நாகரிகம் இந்தோ ஆரிய மொழி பேசுநர் உருவாக்கியதாக இருக்கலாம் என இன்றைய இந்திய அறிஞர் (குறிப்பாக வடநாட்டறிஞர்) சிலர் கூறுகின்றனர். இது தவறு என்பதைச் சற்றே விளக்குவோம். வேத மொழியாகிய இந்தோ ஐரோப்பிய மொழி இந்தியாவில் உருவாகியிருக்கலாம் என்று வேத சமஸ்கிருதப்பற்றாளர் கூறுவது அபத்தம் (இது வேறு; கி.மு. 10000க்கு முன்னர் தொல் திராவிட மொழியிலிருந்து கிளைத்த மொழிக்குடும்பங்களுள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பமும் ஒன்று என்ற ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு வேறு!) கி.மு. 1700 -1500 காலகட்டத்தில் இந்தியா விற்குள் வடமேற்கிலிருந்து நுழைந்தவர்கள் வேதமொழி (Vedic Language) ஆகிய இந்தோ ஆரிய மொழி பேசுநர் ஆவர். இவர் கள் சிந்துவெளி நாகரிக மக்களோடு ஒப்பிடும் போது சிறு எண்ணிக்கையினராகவே இருந்திருக்க வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிப் பெருங்குடும்பத்தில் அடங்கியவை இந்தோ ஆரிய மொழியாகிய வேதமொழி தவிர இரானியன் (அவெஸ்தன்), அனடோலியன் (ஹிட்டைட்), அர்மீனியன், தோக்காரியன், அல்பேனியன், கிரீக்கு , இத்தாலிக் (இலத்தீன் முதலியவை), கெல்டிக் (ஐரிஷ், வெல்ஷ் உட்பட), ஜெர்மானிக் (ஆங்கிலம் உட்பட), பால்டிக் (லட்வியன், லித்துவேனியன்), ஸ்லாவ் (ரஷ்யன் முதலியவை) ஆகியவையாகும். இந்தப் பல் வேறு இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் ஒருங்கு சேர்ந்து கி.மு. 4000 - 3000 கால அளவில் கருங்கடல் - காஸ்பியன் கடல் பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய - ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளிகளில் வசித்து வந்த நாடோடிகள் (nomads) ஆவர். அக் காலக்கட்டத்தில் அவர்கள் இந்தோ ஐரோப்பியத் தொன் மொழியைப் பேசிவந்தனர். கி.மு. 3000 - 2000 கால அளவில் தென் கிழக்காகவும் நகரலாயினர். மேற்கில் சென்ற நாடோடிக் குழுவினருள் ஒன்றான கிரீக்கு மொழி பேசுநர் நுழைந்த பகுதி யில் (திராவிடச் சார்பான) அப்பகுதிப் பழங்குடி மக்களுடன் கலந்து கிரீக்கு மொழி பேசுநர் உடனடியாக நாகரிகம் பெற்றனர். கிழக்கு தென்கிழக்காகப் பெயர்ந்த நாடோடிக் குழுவினருள் இந்தோ ஆரிய மொழி பேசும் குழுவும் ஒன்று. கி.மு. 1700 - 1500இல் அவர்கள் இந்தியாவுக்குள் இரானிலிருந்து நுழைந்த பொழுது அவர்களும் சிந்துவெளித் தொல் நாகரிகத்தினரிடம் மிருந்து விரைவில் நாகரிகம் பெற்றனர். சிந்துவெளித் திராவிட அறிஞர்கள் (அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் ஏற்கப்பட்டனர்) படைப்புகளும் நேரடியாகவோ மொழி பெயர்க்கப்பட்டோ ரிக் வேதத்திலேயே ஏறியுள்ளன என்பது மறைமலையடிகள் (1903, 1923, 1930), வால்பர்ட் போன்றோர் கருத்தாகும். தங்க ளுடைய The Rise of Civilisation in India and Pakistan (1988நூலில் பிரிட்ஜட் மற்றும் ரேமாண்ட் ஆல்சின் தம்பதியர். கருத்தும் இதுவே : (The earliest Indo-Aryan text, the compiled Rg Veda, shoWS several influences of a non-Indo-Aryan, Dravidian element, in the form of phonetic changes, introduction of loan words and names etc.These presuppose the coexistence of the Vedic and Dravidian speaking peoples in a cultural contact situation for a period, perhaps of centuries, before the compilation of the Rg Veda (circa 15001300BC) 28. முதற்கண் இந்தோ ஆரிய மொழி பேசுநருக்கும் சிந்து வெளி நாகரிகத் தமிழருக்கும் (திராவிடருக்கும் இடையே வன் முறை ஏற்பட்ட போதிலும் விரைவில் இருவகையாரும் கலந்து விட்டனர். ஆரியரால் நகரங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். இந்திர னின் பெயரே புரந்தரன் (நகரங்களை அழிப்பவன்) தானே நகரங் களின் வீழ்ச்சிக்கு கி.மு. 1700ஐ ஒட்டி நிகழ்ந்த இயற்கை, சுற்றுப் புறச் சூழ்நிலைக் காரணங்களும் ஓரளவு காரணமாயிருந் திருக்கலாம் என்று ஆல்சின் (1995) கூறுகிறார். ஆனால் சிந்து வெளி நாகரிகம் பரவியிருந்த சிற்றூர்ப்புறப் பெருநிலப் பரப்பில் (சிறு எண்ணிக்கையில் நுழைந்த) ஆரியரால் பெருந்தாக் கம் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆகவேதான் சுநீதிகுமார் சாட்டர்ஜி, வால்டர் பேர் சர்வீஸ், எஸ்.ஏ. டைலர் போன்றோர் கூறுவது போல இன்றைய நாகரிகம், பண்பாடு, இந்துமதம் ஆகியவற்றின் அடித்தளம் (ரூபாய்க்கு 12 அணா அளவுக்கு என்பார் சட்டர்ஜி) திராவிட (தமிழ்) மொழி, பண்பாடு ஆகி யவையே. இந்தோ ஆரிய மொழி பேசுநர் பரவல் பற்றிய வரலாற்றிலிருந்தே அவர்கள் கி.மு. 1700க்கு முந்திய சிந்து நாகரிகத்தை உருவாக்கியிருக்க இயலாது என்பது தெரியும். சிந்து வெளி நாகரிகச் சின்னங்களில் ஆரியருக்கு நெருக்கமான குதிரை கிடையாது என்பதும் முக்கியமானது. 29. இந்தோ ஆரிய மொழியின் ரிக்வேத நிலையிலேயே நுழைந்துள்ள திராவிடச் சொற்களாக சுமார் நாற்பது - ஐம்பது சொற்களை பரோ, எமனோ போன்றவர்கள் ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளனர். திராவிட மொழியியல் - ஓர் அறி முகம் (1990) நூலில் இதைக் குறிப்பிடும் சுவெலபில், ரிக் வேதக் காலத்திலிருந்தே இந்தோ ஆரிய மொழி கடன் பெற்றுள்ள ஏறத்தாழ 10 மொழியியற் கூறுகளையும் பட்டியலிட்டுள்ளார். (இவையெல்லாம் வேத சமற்கிருத மொழியில் திராவிட மொழி யின் தாக்கம் என்ற அளவில்தான் இவர்கள் ஆய்வுகள் உள்ளன. ஆனால் ஞானப் பிரகாசரும் பாவாணரும் கண்ட முடிவு கள் இவற்றைவிட மிக விஞ்சியவை. அவ்விருவரும் "இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை வேர்ச் சொற்கள் பலவும் தொல் - திராவிட மொழியிலிருந்து பெற்றவையே" என்ற கருத்துடையவர். 30. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் அந்த நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே என்றும் தகுதி வாய்ந்த அறிஞர் அனைவரும் ஏற்கின்றனர். தமது Indus Script Dravidian (1995) நூலில் இரா. மதிவாணன், சிந்து வெளியில் முந்து தமிழ் (2004) நூலில் பூர்ண சந்திர ஜீவா ஆகியோர் அவ் வெழுத்துக்களைத் தொல்தமிழாகப் படிக்கும் பொழுது தொல் காப்பியத்திலிருந்து கிட்டும் மொழியியல் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். புறநானூறு 201 202 இல் குறிப்பிடப்படும் இருங்கோவேளின் முன்னோர் சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடையவர்களாகக் கபிலரால் கருதப்பட்டனர். புறநானூறு 202 குறிப்பிடும் அரையம் ரிக்வேதம் 6.27.5 இல் சுட்டப்படும் ஹரியூபியா தான் என்பது பி.எல். சாமி கருத்து (செந்தமிழ்ச் செல்வி சனவரி 1994). அரையம் = அரசமரம். அரைய + அகப்பா = அரையகப்பா = ஹரப்பா என்று பெயர் மாறியது என்கிறார் அவர். இருங்கோவேளின் முன்னோர் 49 தலைமுறைகளுக்கு முன்னர் (அதாவது தொல் பழங்காலத்தில்) புகழ்பெற்ற துவரை என்னும் கோட்டை நகரை ஆண்டு வந்தனர் என்று புறம் 201 கூறுகிறது. தமது தொல்காப்பியப் பாயிர வுரையில் நச்சினார்க்கினியர் வேளிர் துவாரபதி (துவாரகையில் லிருந்து வந்தவர்கள் என்கின்றார். அரையம் ஹரப்பாவைத் தான் குறிப்பதாகக் கொண்டால் ஹரப்பா பற்றியும் துவாரகை பற்றியும் கபிலர் காலத்தில் வழங்கிய (ஒரு நகருக்குரியதை மற்றதற்குரியதாக மாற்றி வழங்கிய) தொன்மக் கருத்தைப் புறம் 201,202 பாடல்கள் கூறுகின்றன என்க. இதனை ஜீவா மேலும் ஆய்வு செய்கிறார். வேள் - வேட் - பேட் (Bet) - பேட் துவாரகா என்று துவாரகையின் பெயர் வரலாற்றை அவர் தருகிறார். 31. சுமேரிய நாகரிக முத்திரைகளில் சிங்கங்கள் இரண்டைக் கொல்லும் கில்காமெஷ் உருவம் காணப்படுகிறது. கில்காமேஷ் பற்றிய தொன்மக் கதையும் சுமேரியப் பொறிப்புகளில் தரப் படுகிறது. சிந்துவெளி முத்திரைகள் இரண்டில் (கில்காமேஷ் சிங்கங்களைத் தாக்குவது போலவே) இந்திய வீரன் ஒருவன் புலிகள் இரண்டை கைக்கு ஒன்றாகக் கொல்வது போல் சித் திரிக்கப்பட்டுள்ளான். புறம் 201 இருங்கோவேளைப் 'புலி கடிமால்' என்று அழைக்கிறது. இருங்கோவேளின் முன்னோர் காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தொடங்கி யிருக்கலாம் என ஐ.மகாதேவன் Journal of Tamil Studies மே 1970 இதழில் உன்னித்திருந்தார். ஆயினும் 2002 சனவரியில் அவர் கருத்து அந்த உன்னிப்பிற்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதாகும். 32. ரிக்வேதம் ஐ . 133,1 & 3இன் தமிழ் வடிவம் வருமாறு; "ஓ மகவான் அழிந்துபட்ட வைலஸ்தானக நகரத்திலும், அழிந்துபட்ட மகாவைலஸ்த நகரத்திலும் உள்ள சூனியக் காரிகள் கும்பல்களை அழித்து ஒழிப்பாயாக" "நான் மேலுலகத்தையும் பூமியையும் சத்தியத்தினால் தூய்மைப் படுத்துகிறேன். வைலஸ்தான நகரில் இந்திரனால் தோற்கடிக்கப் பட்டு கொலையுண்டு கிடக்கும் இந்திரனை எரித்த ஆற்றல் மிக்க துஷ்டப் பிசாசுகளை நான் எரித்து ஒழிக்கிறேன்" ஆரியர்களால் நாசமாக்கப்பட்ட நகரத்தின் பெயரான 'வைலஸ் தானம்' என்பது ஆரிய மொழியல்லாத பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பது டாக்டர் பரோ கருத்து ஆகும். (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிஸ்டரி XII -1 ஏப்ரல் 1963) ஒருக்கால் 'வைலஸ்தானம்' என்பது வேளிருடைய ஊர்நகரைக் குறித்திருக்கலாம். 33. சிந்து முதலிய ஆறுகளில் சிந்துவெளித் திராவிடர்கள் கட்டியிருந்த அணைகளை ஆரியர் உடைத்து நாட்டை வெள்ளக் காடாக்கி அழித்திருக்கலாம் என்பர் தாமோதர் தர்மானந்த் கோசம்பி (The culture and Civilisation of Ancient India in historical outline 1974). மதுரைக் காஞ்சி 725 ஆம் அடியிலும் அக நானூறு 346 ஆம் பாடலிலும் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளைக் குறிக்க 'கற்சிறை' என்னும் சொல் பயன்படுகிறது. ரிக் வேதத்தில் அணையைக் குறிப்பிடும் சிரா (Sira) என்னும் சொல் 'கற்சிறையின்' சிதைவே என்பர் பி.எல். சாமி (செந்தமிழ்ச் செல்வி : 1994 நவம்பர்) ரு. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் தமிழிய மொழியாகப் படிக்கத்தக்கவையே என்பதும் தமிழ் வரி வடிவம் சிந்து வெளி வரிவடிவத்திலிருந்தே உருவாகி யிருக்கலாம் என்பதும் 34. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் என்பவை மூவாயிரத்துக்கு மேற்பட்ட "ஸ்டீயட்டைட்" (சவர்க்காரக்கல், அதாவது மாக்கல் ) முத்திரை களிலும் சில செப்புத் தகடுகள் போன்றவற்றிலும் உள்ளவை. ஒவ்வொரு முத்திரையும் சுமார் 20 மி.மீ. x 30 மி.மீ. அளவுள்ளது. சில சதுரமானவை. பெரும் பாலனவற்றில் ஒரு விலங்கின் உருவமும் அதன் மேல் பக்கத்தில் ஒன்றிலிருந்து பத்து பன்னிரண்டு (சராசரி 5) குறியீடுகளும் உள்ளன. மிக நீண்ட தொடர் 26 குறியீடுகள் கொண்டது. சிந்து வெளியிலிருந்து பருத்தித் துணி போன்றவற்றை சுமேரியா போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்பொழுது சிப்பங்கள் கட்டி அவற்றின் மேல் பொருளுக்குரியவர் பெயரைக் களிமண்ணில் முத்திரையிட இம் முத்திரைகளுள் பெரும் பாலானவை பயன்பட்டிருக்கலாம் என்பதே சிறந்த ஆய்வறிஞர் கள் கருத்து. வீலர், ஹண்ட ர், காட் (Gadd), கோசம்பி, கோ (Coe) ஆகியோர் இந்த அடிப்படையில்தான் முத்திரைக் குறியீடுகளில் உள்ளவை தனி ஆட்களின் பெயர்களாகத்தான் (சில நேர்வு களில் பட்டங்களுடன்) இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சிப்பத்தைக் கட்டிய கயிறு, பாய் இவற்றின் சுவடுகள் சில களிமண் கட்டிகளில் காணப்படுகின்றன. (சில கட்டிகள் ஒரோவழி நெருப்பின் வாய்ப்பட்டு சுடப்பட்டதால் அவை மட்டுமே இன்று கிடைக்கின்றன. அவற்றில்தான் இவ் வடையாளங்கள் தெரிகின்றன) ஆக, ஆல்சின் (1998) கூறுவது போல் "இம் முத்திரைகளின் பயன்பாடு (அல்லது பயன்பாடு களில் ஒன்று) வாணிக நடவடிக்கைகள் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை " (There can be little doubt that the Harappan seals were - atleast as one of their functions - necessary elements in the mechanism of trade. p. 185.) சில முத்திரைகள் தாயத் துக்களாகவும் நேர்த்திக் கடன் வில்லைகளாகவும் அடையாள இலச்சினைகளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். 35. பல முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு தெரியும் எருது ஒன்றின் முன்னர் என்ற வடிவம் உள்ளது. மகாதேவன் கருத்து (1985, 1984) இவ்வடிவம் சோமச்சாறு வடிக்கப்பட்ட ஏனம்; பின்னர் சோமச்சாறு ஆரியர்களாலும் முக்கியமானதாக ஏற்கப்பட்டது என்பதாகும். பிற்காலத்தில் இவ்வடிவம் இந்திரத் வஜம் ஆனது. அளக்குடி சீத்தாராமன் கரூரில் கண்டெடுத்த செப்பு முத்திரையிலும் இந்த வடிவம் உள்ளது என்பது மகா தேவன் கருத்து ஆகும். 36. சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் ஏறத்தாழ 400 அளவில் உள்ளன. (பர்போலா 385, மகாதேவன் 417). 2906 முத்திரை வாசகங்களில் கண்ட குறியீடுகளை மகாதேவன் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்: குறியீடு ஒவ்வொன்றும் . மொத்தம் மொத்தத்தில் எத்தனை அவை விழுக்காடு தடவை எத்தனை வருகிறது தடவை வருகின்றன 1 100மும் மேலும் 1935 10. 43 1 67 999 – 500 649 4.85 31 499 – 100 6,344 47.44 34 99 – 50 2,381 17. 81 86 49 – 10 1, 833 13. 71 152 9 – 2 658 4.92 112 ஒரே தடவை 112 0.84 417 13, 372 100.00 80 விழுக்காடு தடவைக்கு மேல் வரும் குறியீடுகள் 67 மட்டுமே யாகும். (பாதிக்கு மேற்பட்ட குறியீடுகள் ஒவ்வொன்றும் பத்து தடவைக்கும் குறைவா கவே வருகின்றன. அவற்றுள்ளும் 112 ஒவ்வொன்றும் ஒரு தடவையே வருகிறது). ஆக, இந்த 67 குறியீடுகளுக்கும் முதன்மை தந்து வாசிக்க முற்படுவது நல்லது என்கிறார் மகாதேவன். மொத்தம் சுமார் 400 குறியீடுகளில் அடிப்படைக் குறியீடுகள் 200 என்பது பர்போலா கருத்து. 37. சிந்துவெளி முத்திரை எழுத்துக்கள் பழந்தமிழே (பழந் திராவிடமே) என்பதை இத்துறை வல்லுநர் அனைவரும் ஏற் கின்றனர். இவற்றைப் படித்துள்ள அறிஞர்கள் (பர்போலா, மகா தேவன், மதிவாணன், பூர்ண சந்திர ஜீவா , பேர் சர்வீஸ் முதலி யோர்) ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக வாசித் துள்ளனர். முத்திரையைக் குத்தியபின் கிடைக்கும் முத்திரைப் பதிவில் உள்ள வாசகங்களை (Impressions) வலமிருந்து இடமாகவே பெரும்பாலோர் படிக்கின்றனர். (மதிவாணன் மட்டும் இடமிருந்து வலமாகப் படித்துள்ளார். எனினும் இம் முத்திரை எழுத்துக்கள், திராவிட மொழியைச் சார்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது; பின்வருவனவற்றைக் காண்க : ஸ்டான்லி வார்பர்ட் : இந்தியாவுக்கு ஓர் அறிமுகம் என்ற நூலில் உள்ள "பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பதும் ஆகும்." “We assume from various shreds of evidence that they are were proto Dravidian, possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert: An Introduction to India, University of California Press 1991) ஜே.எம். ராபர்ட்ஸ் : பெங்குயின் உலக வரலாறு "தென் னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்துவெளி முத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது." It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used in southern India (J.M. Roberts History of the World Pelican 1992). கமில் சுவெலபில் : திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் ''சிந்து வெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும் பொழுது அது திராவிட மொழி சார்ந்ததாக அமைவதற்கே வாய்ப்பு மிக அதிகம்.'' The most probable candidate is and remains some form of Dravidian” (Dravidian Liguistics - An Introduction. Pondicherry 1990; Chap VI : Dravidian and Harapan) 38. சிந்து வெளி முத்திரை எழுத்துக்களிலிருந்தே சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் உருவாயின என்பது மதிவாணன் கருத்து. ஏறத்தாழ கி.மு. 700க்கு முன்னமே தமிழுக்கு ஓர் எழுத்து வரி வடிவம் இருந்தது; அதைப் பின்பற்றியே அசோக பிராமி எழுத்து உருவாக்கப்பட்டது எனக் கொள்வதற்கான ஆதாரங்கள் உண்டு. 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம் பியன் கண்டியூரில் வி. சண்முகநாதன் கண்டெடுத்த புதுக் கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் "முருகு அன்" (முருகன்) என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு. 2000 -1500 ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். புதுக் கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினார் என்றும் அம்மொழி திராவிட மொழியே என்றும் இக் கண்டுபிடிப்பு நிறுவுகிறது என்பதும் அவர் கருத்து . ("The Neolithic people of Tamilnadu and the Indus Valley people shared the same language which can only be Dravidian and not Indo-Aryan"); 152006. இந்து நாளிதழ். சு. வரலாற்றுக் காலத்துக்கு சங்க காலத்துக்கு) முந்தைய (Proto Historic) காலத் தமிழக வரலாறு கி.மு. 1000 - கி.மு. 300) 39. தமிழக வரலாற்றில் வரலாற்றுக் காலத் தொடக்கம் என பொதுவாக இன்று ஏற்கப்படும் சங்க காலம் கிமு. 300 - கி.பி. 300 சார்ந்தது. அதற்கு முந்திய வரலாற்றுக்கு முந்திய காலம்" ஆகிய கி.மு. 1000 - 300 பற்றிய செய்திகளைத் திறம்படத் தருவது ராஜன் (2004) தொல்லியல் நோக்கில் சங்ககாலம் ஆகும். ஆதிச்சநல்லூரில் உள்ள கி.மு. 1000 காலத்திய இடுகாடு 114 ஏக்கர் பரப்புள்ளது. அதில் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. கொடுமணலில் (சங்ககாலக் கொடு மணம்) 50 ஏக்கர் பரப்புள்ள பழைய வாழ்விடத்திலும் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு விழுக்காடு அகழ்வாய்வுகளில் கிடைத்த எச்சங்களிலிருந்தே கிமு 1000 முதல் தமிழகத்தில் வாழ்ந்த மக்களே, இடையீடின்றி, சங்க இலக்கியம் விவரிக்கும் தமிழர் சமுதாய மக்களாயினர் என்று நிறுவ இயன்றுள்ள து. மகாதேவன் (2003) Early Tamil Epigraphy நூலில் தமிழிக் கல்வெட்டுகள் எவற்றையும் கி.மு. 200க்கு முந்தியதாகக் கருதவில்லை. ஆனால் அவற்றை (குறிப்பாக கொடுமணல் பானை ஓட்டுத் தமிழிப் பொறிப்புகளை) கி.மு 4 அல்லது 5 நூற்றாண்டினவாகத் தான் கொள்ள வேண்டும் . என்பதற்கான ஆதாரங்களை ராஜன் தந்துள்ளார். மேலே பகுதி ஆறையும் கீழே பத்தி 42 ஐயும் காண்க. 40. கிமு 1000 - கிமு. 300 காலகட்டமே தமிழகத்தின் இரும்புக்காலம் அல்லது பெருங்கற்படைச் சின்னக் (Megalithic) காலம் என்று குறிப்பிடப் படுகிறது. அக்கால கட்டத்தில் இறந்த வர்கள் தாழியில் புதைக்கப் பட்டனர். கற்பதுக்கைகளில் அடக்கம் செய்யப்பட்டனர். பெருங்கற்படைச் சின்னங்கள் சில விடங்களில் இருந்தன; சில விடங்களில் இல்லை; எனினும் இக்காலம் "பெருங்கற்படைச் சின்னக்காலம்" என்றே பொதுவாக குறிப்பிடப்படுகிறது. 41. கி.மு. 1000 அளவில் மக்கள் பெருமளவுக்கு ஆடுமாடு வளர்ப்பவர்களாகவே இருந்தனர். வேளாண்மை தொடக்க நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது அகழ்வாய்வுகளின் முடிவாகும். கொடுமணல், தாண்டிக்குடி பானை ஓட்டுத் தமிழின் பொறிப்புக் காலம் கி.மு. 5 அல்லது 4 ஆம் நூற்றாண்டாகத்தான் இருக்க வேண்டும் என ராஜன் நிறுவியுள்ளார். அப்பொழுதே எழுத்தறிவு பெற்ற சமுதாயம் தமிழகத்தில் இருந்தது. எனவே வர லாற்றுக் காலமே தமிழகத்தில் கி.மு. 500லிருந்து தொடங்கி யதாகக் கொள்ள இடமுண்டு என்பார் ராஜன். 42. தமிழிய மொழி பேசுநர் கிமு 2000க்கு முன்னர் இருந்தே தமிழகத்திலும் தென்னாட்டிலும் இடைவிடாது வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தரே என்பதையே தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன என்பதை ஆல்சின் தம்பதியர் 1988 தம் நூலில் பின்வருமாறு கூறுவர். "தென்னிந்தியா இன்று திராவிட மொழிகள் வழங்கும் பகுதி. அம் மொழிகளைப் பேசுவோர் பூர்வீகம் என்னவாக இருந்திருக்கலாம்? அவர்கள் (வடமேற்கிலிருந்து) தென்னிந்தியா விற்கு வந்து குடியேறும்போது தம்முடன் இரும்பையும் பெருங் கற்படை நாகரிகத்தையும் கொணர்ந்தனர் என (வலுவான ஆதாரமின்றிக் கூறப்படுகிறது. தொல்லியல் சான்றுகளின்படி இப்படி நடந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரும்புப் பயன் பாட்டிற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கருநாடகத் தில் (தென் இந்தியாவில் பிற பகுதிகளிலும் கூட இருக்கலாம்). பெருங்கற்படை நாகரிகக் குடியிருப்புகள் இருந்துள்ளன; அவை இடையீடு இன்றி தொடர்ந்து இருந்து வந்துள்ளன ; வியக்கத் தக்க பண்பாட்டுத் தொடர்ச்சியுடன் இன்றும் உள்ள பண் பாட்டுக் கூறுகள் பல அந்தப் பழைய நாகரிகக் கூறுகளின் தொடர்ச்சியாகவே தோன்று கின்றன. உடற்கூறு அமைப்பிலும் அந்தப் பழைய நாகரிக மக்களும் இன்றைய மக்களும் பெரும் அளவுக்கு ஒன்று போலவே உள்ளனர். எனவே தென் னிந்தியாவில் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ) புதுக்கற்கால நாகரிகம் படைத்த மக்களிடையே உருவானவையே திராவிட மொழிகள் என்பதை மறுப்பது கடினமாக உள்ளது. தென்னிந்தியாவில் பற்பல பகுதிகளில் இருந்த புதுக்கற்கால நாகரிக மக்களிடையே தொடர்பு இருந்திருக்கும்; பொதுவான திராவிட மொழியும் இருந்திருக்கும். கி.மு. 3000 - 1000 கால அளவில் தென்னிந்தியாவில் இருந்த புதுக் கற்காலக் குடியிருப்பு களில் இருந்து பிறந்தவையே வரலாற்றுக் காலத் தொடக் கத்தைச் சார்ந்த குடியிருப்புகளும் எனலாம்.'' The southern part of the peninsula is today the homeland of the Dravidian language, and we may well enquire what - speaking in broadest terms - is likely to have been their history. It has been claimed, though not on very solid grounds, that the earliest speakers of these languages brought with them into Peninsular India both iron and the custom of making megalithic graves. In the light of archaeological evidence this appears to be extremely improbable. We now know that at least for a millennium prior to the arrival of iron, there were established settlements in Karnataka, and probably also in other parts of the peninsula, and these settlements show evidence of a remarkable continuity of culture. Many modern culture traits appear to derive from them, and a substantial part of the populations shows physical affiliation to the Neolithic people. In the light of all this it is difficult to believe that the Dravidian languages do not owe their origin to the same people who produced the Neolithic culture there. ..... the several regional cultures .... had throughout a degree of interaction and probably originally a common language family, Dravidian. ..... the settlements of the third - second millennia appear to be ancestral to those which we encounter there from the beginnings of history onwards. (p. 353) பெருங்கற்படை நாகரிகம் தமிழ்நாட்டிலிருந்தே வடக்கே தக்காணத்திற்குப் பரவியது என்று தொல்லியலறிஞர் ஏ. சத்தியமூர்த்தி 26.5.2007 அவர்களும் இந்து நாளிதழில் தெரிவித்துள்ளார். இயல் 6 இந்திய மொழிக் குடும்பங்களிடையே தமிழியக் கூறுகள் இப்பொருள் குறித்து முதன் முதலில் விரிவாக 1956இல் (Language. 32; பக் 2 -16) "இந்தியா ஒரு மொழியியற் புலம் India as a Linguistic Area என்னும் கட்டுரையில் எழுதியவர் எமெனோ . இந்தியாவில் உள்ள தமிழிய, இந்தோ ஆரிய, முண்டா இன மொழிகளிடையே பொதுமைக் கூறுகள் (பெரும்பாலானவை தமிழிய மொழிகளிடமிருந்து பிறவற்றுக்குப் பரவியவை) உள்ளதை அக்கட்டுரை நிறுவியது. 2. இக்கோட்பாட்டின் கரு வெகு முன்னரே உருவானது. (1788லேயே சர்வில்லியம் ஜோன்ஸ்) இந்தி முதலிய வட இந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகள் இந்தோ ஆரிய மொழிக் குரியவையல்ல (அப்பொழுது "தமிழிய மொழிக்குடும்பம்" பற்றி மேனாட்டறிஞருக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். கால்டுவெல்லும் தமது ஒப்பிலக்கணத்தின் 1875 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பில் "வட இந்திய மொழிகள் சம்ஸ்கிருதத் திலிருந்து மாறுபட்டுள்ளன. அவ்வாறு மாறுபட்ட தன்மைகள் பெருமளவுக்கு இந்தோ ஆரியமல்லாத (திராவிட) மொழி களைச் சார்ந்த வை " (The direction into which those vermaculars have been differentiated from Sanskrit has to a considerable extent been non - Aryan) என்றார். பரோ தமது 1945, 1946, 1948 கட்டுரைகளில் சமற்கிருதச் சொற்கள் சுமார் 500 (ரிக் வேதத்திலேயே ஏறியுள்ள சுமார் 20 சொற்கள் உட்பட) தமிழிய மொழிகளிலிருந்து கடன் பெற்றவை என்று நிறுவினார். 3. பரோவைப் பின்பற்றி எமெனோ தமது 1954 "இந்திய மொழிக் குடும்பங்களின் பழைய வரலாறு "Linguistic Prehistory of India கட்டுரையில் பின்வரும் வேதமொழி / சமற்கிருதச் சொற்கள் தமிழிய மொழிகளிடமிருந்து கடன் பெற்றவை என்று தெரிவித்துள்ளார் : - தமிழ் சம்ஸ்கிருதம் கைதல் (= தாழை) கேதக, கேதகி ஏலம் ஏல பல்லி பல்லீ மயில், மஞ்ஞை (துளு : மைரு, மயூர , மயூரி கசவர் மொழி : முயிரு) (ரிக்வேதம் 3451 & 8125) புற்று புற்றம் புத்திகா = கறையான்), பிபீலிக = எறும்புப் புற்று) நீர் (பிராஹீய்: தீர்) நீர, நல்/நற் நளநளன் மலை மலய ஐ, ஐயோ, ஐயெனல் (அனைத்தும் தாய் தந்தைக் அயே (வியப்புச்சொல்) கான விளிச் சொற்களிலிருந்து உருவானவை) கல்/கலை (?) கலா களம் களன் கல Khala = கதிரடிக்கும் இடம் ; தவசக்களஞ்சியம் (ரிக்) கண்காண் காணா (?) காணா = ஒற்றைக்கண்ணன் (ரிக் 10.1551) பழு பல Phala = பழம் (ரிக்) வல், வலம், வல்லம், வல்லவன் பல bala (ரிக்) மாலை மாலா எமெனோ (1971: திராவிடமும் இந்தோ ஆரியமும் : கடு = Pungent கடுக (Katuka ரிக்) உலக்கை உலூகல (ரிக்) வெள்ளில் விளம்/விளா பில்வ (bilva) (வினைச் சொல்) தட்டு தட் (tad) = to srike, beat குரை குர்குரா (அதர்வவேதம்) 4. பாவாணர் தமது வடமொழி வரலாறு (1967) நூலின் பக்கங்கள் 63 - 269ல் "வடமொழிப் புகுந்த தென் சொற்கள்" மேலும் ஏராளமானவற்றின் பட்டியலைத் தந்துள்ளார் – பரோ எமெனோ போன்றவர் ஏற்கெனவே கண்ட சொற்கள் சிலவும் அவற்றுக்கும் மேலாக பாவாணர் கண்ட சொற்கள் பலவுமாக) தென்சொல் மூலத் திரிசொற்கள், தென் சொல்லடிப் புணர்ப்புச் சொற்கள், தமிழிலிருந்து மொழிபெயர்த்துக் கொண்ட சொற்கள், இருபிறப்பிகள் (hybrids); வடவர் போலியான சம்ஸ் கிருத வேர் காட்டும் சொற்கள் ; பல்வகைத் திரிப்புகளால் ''வடசொற்கள்'' எனச் சாதித்த சொற்கள்; தமிழ்ச் சுட்டுச் சொற்கள் / வினாச் சொற்களைப் பின்பற்றி வடமொழியில் உருவான சொற்கள் ; தமிழைப் பின்பற்றி வடமொழியில் உருவாக்கிய புணர்ச்சியிலக்கணம் முதலியவை ஆகியவை பற்றி அந்நூலின் பக்கங்கள் 269 - 321 ல் காணலாம். 4. தமிழிய மொழிகளிலிருந்து வேதமொழி, சம்ஸ்கிருதம் வட இந்திய (இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினவாகக் கருதப்படும்) மொழிகள் ஆகியவற்றில் ஏறியுள்ள ஒலியனியல், இலக்கணவியல் கூறுகள் பலவற்றை எமனோ தமது 1956 கட்டுரையில் நிறுவினார். (1) ஒலியனியல் ட; ள (ரிக்வேதத்தில்), ண ஆகிய வளைநாவொலிகள் (retroflex/ cerebral/domal தமிழிய மொழிகளிலிருந்து கடன் பெற்றவை. அவ்வொலிகளைக் கொண்ட சொற்களைத் தமிழில் லிருந்து கடன் பெற்ற பின் ஒலிகளையும் வண்ணமாலையில் சேர்த்த னர். (ii) வினையெச்சம் (gerund/absolutive/incomplete verb/ Past nonfinite verb/ converb / indeclinable Participle/ adverbial Participle/ Past participle (Jothimuthu) / conjunctive Participle (Grierson) ரிக் வேத காலத்திலேயே ஏறிவிட்டது. (iii) நேர் கூற்று முடிந்தவுடன் " என/ என்று தமிழில் வருவது போல் ("தன் செய்வினை முடித்தெனக் கேட்பல் - புறம் 27:9-10) சமஸ்கிருதத்தில் கூற்றுக்குப் பின்னர் "இதி" iti (= இப்படிக் கூறினான்) என வருதல் (iv) எதிரொலிச் சொற்கள் (echo words) - "புலிகிலி'' போன்றவை (v) ஒலிக்குறிப்புச் சொற்கள் - சளசள், படபட போன்றவை (vi) ஓடு, ஓட்டு, ஓட்டுவி; நட, நடத்து, நடத்துவி போன்ற, வாய்பாட்டு (simplex, eausative, causative of causative) வினை வடிவங்கள் (vii) எமெனோ 1974 கட்டுரை : தமிழ் "உம்" மைப் பயன் பாடுகளைப் போன்ற சமஸ்கிருத அபி api ஐ பயன்படுத்துதல் (viii) மேலது கட்டுரை: திராவிட உறவு முறைச்சொற் களிலும் சரி இந்தோ ஆரிய உறவு முறைச் சொற்களிலும் பெரும்பாலும் தொழிலைக் குறிக்கும் சாதிப் பெயர் ஆணுக்கு உள்ளது; ஆனால் பெண்ணைக் குறிக்கும் பொழுது இந்தச் சாதிக்காரனுடைய மகள் மனைவி தாய்/பிற உறவு என்ற அளவிலேயே அமைந்து விடுகிறது. 5. முன் பத்தியிற்கண்ட செய்திகளை காலின் மாசிகா தமது Defining a Linguistic Area: South Asia (1976) நூலில் விரிவாக விளக்கியுள்ளார். தமிழிய மொழிகளை யொட்டிய மாற்றங் களே இந்தோ ஆரிய மொழிகளில் ஏறியுள்ளன என்பது அவர் கருத்து .' (India) is a fairly stable typological area where the brunt of the burden of adaptation is borne by intrusive rather than local languages" 6. அருளி (1985), அரசேந்திரன் 1997 / 2000, 2007 ஆகியோருடைய முறையான, விரிவான, ஆழமான மொழியியல் ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் தமிழ்ச் சொற்கள் / வேர்ச் சொற்கள் இந்தோ ஆரியக்குடும்ப மொழிகளில் (சிங்கள மொழி உட்பட) அதிக எண்ணிக்கையில் நிலவுவதை நிறுவுகின்றன. இயல் 6க்கானநூற்பட்டியல் Burrow, T (1945) "Some Dravidian words in Sanskrit'' Transactions of Philological Society; pp 79-120 (1946) "Loan words in Sanskrit' Trams Phil Soc ; pp 1-30 (1948) "Dravidian Studies VII: Further Dravidian words in Sanskrit” Bulletin of the School of Criental and African Studies; University of London Vol12;365 - 96 Emeneau, M.B. 1954. "Linguistic Prehistory of India" Proceedings of American philocphical Society 98; 282 - 92 1955. India and Linguistics" Journal of American Oriental Society 75; 145 - 53 1956. "India as a Linguistic Area" Language Vol32: pp3-16 1974. "The Indian Linguistic Area revisited" International Journal of Dravidian Linguistics; Thiruvanathapura; II-1; pp92134 1971. "Dravidian and Indo - Aran - The Indian LinguisticArea'' in Symposium on Dravidian civlisation (ed. A.F. Sjoberg Austin and New York; see pp 33-68 1980. Language and Linguistic Area. Stanford 1980, Contais all previous papers. Kuiper. F. B. J. 1955 "Rig Vedic Loan words "Studia Indologica: Festschrift for Willibald Kinfel. Bonn; see pp 137-85; Reprintdin I.J. D. L. XXI-2; June 1992. 1967. "The genesis of a linguistic area" Indo-Iranian Journal II 2-3; pp 81-102 Devaneya Pavanar (1967) Vata Moli Varalaru Masica, Colin (1976) Defining a linguistic area: South Asia, Chicago Turner, R.L. (1989 reprint) A comparative Dictionary of the Indo-Aryan Languages. அரசேந்திரன் (1997/2000) உலகம் பரவிய தமிழின் வேர்: (2007) "தமிழும் வட இந்திய மொழிகளும்". தமிழியல் ஆராய்ச்சி தொகுதி II பக் 8-26. அருளி (1985) மொழியியல் உரைகள் 5 மடலங்கள்; அறிவன் பதிப்பகம், தமிழுர், புதுச்சேரி. இயல் 7 தமிழின் எதிர்காலம்: ஒரு தொலைநோக்கு இன்று வரை நிலைத்துள்ள செம்மொழி தமிழ் செம்மொழிகளில் லத்தீன், கிரீக், எபிரேயம் போன்றவை சுமார் 500 - 1000 ஆயிரம் ஆண்டுகள் வழக்கிலிருந்து பின் வழக்கிழந்து விட்டன. (பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் முதலியவை லத்தீனின் வழிமொழிகள் ) 1900க்குப் பின்னர் கிரீக் மொழியும் 1940 க்குப்பின்னர் எபிரேயமும் முறையே கிரீசு நாட்டிலும் இசுரேலிலும் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வழக்குக்கு வந்துள்ளன). சம்ஸ்கிருதம் என்றுமே உலகில் வழக்கில் இருந்ததில்லை. அது ஒரு இலக்கிய மொழியாகவே இருந்தது. இவையனைத்துக்கும் மாறாகத் தமிழ் மட்டுமே கடந்த 2500 ஆண்டுகளுக்குக் குறையாமல் (ஏறத்தாழ அடிப்படையில் இன்றுள்ளது போலவே) வழங்கி வந்துள்ளது தனிச்சிறப்பாகும். தமிழ் இயன்மொழி (அதாவது ஞாலமுதன் மொழிக்கு மிக நெருங்கியது. ஆதலின் இது இயன்றது. தமிழ் சிந்துவெளி நாகரிக காலத்தில் (கி.மு. 3000 -1500) இந்தியாவெங்கும் வழங்கியது. கி.மு. 1500ஐ ஒட்டி, இந்தோ ஆரிய மொழி பேசுநர் இந்தியாவிற்குள் நுழைந்த பின்னர் அக்காரணத்தாலும், மேலும் எம் மொழியிலும் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வும் தமிழ் வழங்கிய நிலப்பரப்பு படிப்படியாகச் சுருங்கியது. இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் இலக்கண அமைப்பில் தமிழ் (திராவிடத் ) தன்மை வாய்ந்தனவாயினும் சொல்வளத்தில் சமஸ்கிருதச் சார்பு மிகுந்து இன்று அவை இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாகிவிட்டன. தென்னாட்டில் தமிழ் திரிந்து, தெலுங்கு கி.பி. 100 ஐ ஒட்டியும், கன்னடம் கி.பி. 500 ஐ ஒட்டியும், மலையாளம் கி.பி. 1500ஐ ஒட்டியும் தனித்தனி மொழிகளாக உருவாகி விட்டன. தமிழையும் மலையாளம் போன்ற "அரைச் சமஸ்கிருத கலவை மொழியாக்குவதற்கான நச்சு முயற்சிகள் 13ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. மணிப்பிரவாள நடை உரைகள் போன்றவை அவை. அத்தகைய நச்சு முயற்சிகள் வெற்றி பெறும் காலம் நெருங்கும் பொழுது (தமிழர் நல்வாய்ப்பாலும் தமிழ்ப் பகைவர் தீயூழாலும்) கி.பி. 1800க்குப் பின் நிலைமை மாறியது. 1800லிருந்து தமிழகம் முழுமையும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. தமிழ் போன்ற அந்தந்த நாட்டு மக்கள் மொழிகளைத் தாழ்வாகக் கருதும் போக்கை அரசு கைவிட்டது. கால்டுவெல், ஒப்பிலக்கணம் (1856) ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்நூலின் மூலம் கால்டுவெல் தமிழின் தொன்மை, முன்மை, தென்மை, இனிமை, ஆற்றல் ஆகியவற்றை நிலைநாட்டியதோடு பின் வரும் உண்மைகளையும் நிறுவினார் : - "ஞால முதன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் (சம்ஸ்கிருதம் உள்ளிட்டது) உரால் - அல்டாய்க் மொழிக் குடும்பம் போன்ற இனமொழி களின் வேர்ச்சொல் மூலம், அடிப்படை இலக்கணக் கூறுகள் ஆகியவற்றைக் காணத் தமிழுக்குத் தான் வந்தாக வேண்டும்" ''சமஸ்கிருதத் திணிப்பிலிருந்து தமிழ் விடுபட்டால் தமிழின் சிறப்பு இன்னும் மேலோங்கி நிற்கும்.'' 2. இவ்வாறு தமிழ்ப் பாதுகாப்புக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் கால்டுவெல் இட்ட வித்து, பின்னர் மனோன்மணியம் சுந்தரனார், பண்டித சவரிராயர், மாகறல் கார்த்திகேய முதலியார், மறைமலையடிகள், கா. சுப்பிரமணிய பிள்ளை , நல்லூர் ஞானப் பிரகாசர், ஞா. தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் பணிகளால் ஆலமரமாக உருக்கொண்டது. 1930களிலிருந்து தமிழக அரசியல் - சமுதாயத்துறை இயக்கங் களின் பாதுகாப்பும் கிட்டியதால் இன்று தமிழ் இந்நிலையில் லாவது நிற்க இயன்றுள்ளது. பயிற்று மொழி நிலையிலும், ஆட்சிமொழி நிலையிலும் தமிழுக்கு என்றோ செய்திருக்கக் கூடிய பணிகள் இன்றுவரை ஒழுங்காகச் செய்யப்படாமையால் தொய்வு உள்ளதும் தெரிந்ததேயாகும். "உலகமயமாக்கல் " பொருளாதார - அரசியல் செயல் பாட்டினால் உலகில் ஆங்கிலம் தவிர பிற மொழிகள் அனைத் துக்கும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பேரிடர் 3. 1990க்குப் பின்னர் உலக வணிக ஒப்பந்தத்தை உருவாக்கி உலகமயமாக்கல் என்ற பெயரில் மேற்கத்திய வெள்ளை முதலாளித்துவ நாடுகள் (அதாவது அந்நாடுகளில் முத லாளித்துவக் கம்பெனிகள்) ஆசிய ஆப்பிரிக்க கறுப்பர் நாடு களில் உள்ள மேல்தட்டு ஒட்டுண்ணி இனங்களைக் கூட்டுக் கொள்ளையர்களாகச் சேர்த்துக் கொண்டு நடத்திவரும் உலகமயப் பெருங்கொள்ளையில் (இதனை வி ஆர். கிருஷ்ண ஐயர் GLOBAL PILLAGE என்பார்) அம்சங்களான பின்வருவன ஆங்கிலம் - தவிரப் பிற உலக மொழிகளின் (செம்மொழியாயினும் சரி, எம்மொழியாயினும் சரி) அழிவையும் முடுக்கி வருகின்றன என்பதை மப்வென் (2002) கிரெ நோபிள் (1998) போன்ற மொழியியலறிஞர் எழுத்துக்களிலிருந்து அறியலாம் : - (1) சுற்றுப்புறச் சூழ்நிலையை நிரந்தரமாகக் கெடுக்கும் தொழில்மய இயந்திரமயச் செயல்பாடுகள் ; அவை பாரம் பரியத் தொழில்களில் ஈடுபட்டு வந்த கோடிக்கணக்கான மக்களை வேலை இழக்கச் செய்பவை. (2) ஆபத்தான நச்சுத் தொழில்களை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் தொடங்குதல் (கப்பல் உடைத்தல் ; அணுமின் உலைக் கழிவையும் நச்சுக்கழிவைவும் அந்நாடுகளுக்கு அனுப்பிப் புதைத் தல்; அந்நாட்டு மக்கள் சிகரெட் புகைக்க விளம்பர செய்தல்). அவைகள் போபால் பெருநாசம், விவசாய நீர்வளத்தை அழித் தல் போன்ற கேடுகளைச் செய்பவை. (3) வெள்ளையர் நாடுகளில் கோடி கோடியான அர சுமானியத்துடன் விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களை மலிவு விலையில் ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளைக் கட்டாயமாக இறக்குமதி செய்யச் செய்து உழவுத் தொழிலையே நம்பி வாழும் மக்களை 70 விழுக்காடு கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் உழவுத் தொழிலை நாசமாக்கி, மக்கள் தொகையில் முக்கால் பகுதியிரை அன்னக்காவடி பஞ்சம் பரதேசி மக்களாக ஆக்குதல்; மேலும் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம், கோதுமை, பருத்தி போன்றவற்றை அந்நாடுகளில் பரப்பி நாசம் விளைத்தல். (4) கடவுளைப் பற்றியோ, ஆன்மாவைப் பற்றியோ, மனிதனைப் பற்றியோ பிற உயிர்களைப் பற்றியோ கொஞ்ச நஞ்சம் மக்களிடம் உள்ள உணர்வுகளைச் சாகடிக்கும் நுகர் வோர் காமாலை (Consumerism) நோயைப் பரப்புதல். (5) மாந்த இனத்தின் ஒட்டுமொத்த மூளைச் சலவைக்காக உருவாகியுள்ள தொல்லைக்காட்சி நோய்க்கு அனைவரையும் அடிமையாக்குதல். கிராஸ் (1992) தொல்லைக்காட்சியை பண்பாட்டைக் கொல்லும் விஷவாயு "Cultural Nerve gas" என்பார், தமது "சூனியப்பார்வை'' என்னும் நூலில் பிளேபார் The Evil eye 1990 by GL. Playfair) தொல்லைக் காட்சியானது எவ்வாறு சிந்தனை ஆற்றலையும் காரண காரியங்களை யோசித்து முடிவு செய்யும் ஆற்றலையும் மரக்கச் செய்து மூளையை அழுக வைத்துவிடுகிறது என்பதையும் தொல்லைக் காட்சிக்கு அடிமையானவர்கள் சுய இயல்பு, பண்பாட்டை இழந்து குடும்பம், அண்டை அயலாரைப் பற்றி எண்ணவே நேர மின்றி உதவாக்கரைப் பரபரப்பு, பாலுணர்வு நாட்டம், வன்முறை ஈடுபாடு, அல்லது டி.வி பெட்டியைத் தவிர அனைத்தையும் மறந்துவிடும் அரைப்பைத்திய நிலை, முதலியவற்றுக்கு அடிமை யாகின்றனர் என்பதை விளக்கியுள்ளார். ('Making viewers alienated, disoriented, restless and violent or apathetic zombies”). தமிழ் விரைவாகத் தமிங்கிலம் ஆகிவருவது தொல்லைக் காட்சி யினால் தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததேயாகும். 4. இப்பொழுது கடந்த 15 ஆண்டுகளாக உலகில் கொள்ளை நோய் போல் பரவி வரும் உலகமயமாக்கல் என்பது மேற்கண்ட பலவகை அரசியல் - சமூக - பொருளாதார நாசங்களை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படுத்துவதோடு (ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளை (சிறு சிறு எண்ணிக்கை பேசுநர் மொழிகளிலிருந்து தொடங்கி) மிக வேகமாக அழித்து, அரித்து, நாசமாக்கி வரும் பேராபத்துக்கும் காரணமாகும் என்பதை மொழியிலறிஞர்கள் சுட்டுகின்றனர். ("Economics may be the single strongest force influencing the fate of endangered languages": Grenoble) 5. ஒரு மொழி சில நூறு ஆண்டுகளாவது நின்று நிலவிட வேண்டுமானால் குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது அதைப் பேச வேண்டும் என்கின்றனர் மொழி நூலறிஞர் (குறிப்பாக குழந்தைகளிடம் பெற்றோர் பேசும் வீட்டு மொழியாகவும் அது இருந்தாக வேண்டும் என்பது மற்றோர் நிபந்தனை) பத்தாயிரம் பேருக்குக் குறைவாகப் பேசப்பட்டு வரும் 3340ல் மூவாயிரம் மொழிகள் கி.பி. 2100க்குள் அழிந்துவிடும் என அஞ்சுகின்றனர். (அவற்றுள் கால் பகுதி மொழிகள் ஆஸ்திரேலியாவுக்கு வடக் கிலுள்ள நியூ கினி தீவில் உள்ளன. அவ்வாறு அழியும் வேகம் வாரத்திற்கு இரண்டு மொழியாக இருக்கும். அழியும் ஆபத்தில் உள்ள மொழிகள் பற்றி யூனெஸ்கோ அமைத்துள்ள ஆய்வுக் குழுவினர் கருத்தும் அஃதே. "அழிவுறும் நிலை மொழிகள்" பட்டியலில் தமிழும் உள்ளதாக நம்மவர் சிலர் கூறித்திரிவது மூடத்தனம் ஆகும். (அழிவுறும் நிலை மொழிகள் பட்டியலில் உள்ள மொழிகளைப் பொறுத்தும் கூட அவ்வாறு சொல்லிக் கொண்டிருப்பதே விரைவில் அழிவைக் கொண்டுவரும் என்பார் கிரிஸ்ட ல்! (negative attitudes are easily reinforced through repeated casual references to a language's endangered state.) ''உள்ளற்க உள்ளம் சிறுகுவ'' என்றார் வள்ளுவரும். தமிழுக்கும் (அது போன்று சில கோடி மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகளுக்கும்) வரும் சில நூற்றாண்டு களில் ஏற்படவிருப்பதாக மொழியியலறிஞர் கூறும் ஆபத்தும் அதனின்று தப்ப வேண்டுமாயின் அந்தந்த மொழியினரிடையே ஏற்பட வேண்டிய விழிப்புணர்வும். 6. இனிவரும் நூற்றாண்டுகளில் நாளடைவில் தமிழ் போன்ற மொழிகளுக்கும் உலகமயமாக்கச் சுரண்டலில் பன்னாட்டு முதலாளித்துவக் கம்பெனிகள் தம் ஆயுதங் களில் ஒன்றாகப் பயன்படுத்தும் "கொலைகார மொழி", ("Killer Language") ஆகிய ஆங்கிலத்தால் பேராபத்து விளையவிருக் கிறது என்பதை மொழியியலறிஞர், விளக்கும் நூல்விவரங்களை இறுதியில் காண்க. 7. தமிழுக்கு மட்டுமா ஆபத்து? தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டியம், ஒரியா, இந்தி போன்ற நமது சகோதர மொழிகள் அனைத்துக்கும் ஆபத்துதான். ஏன், இவற்றையெல்லாம் விட அறிவியல் புலங்களில் பன்மடங்கு சிறந்த டச்சு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற (சில, பல கோடி மக்கள் பேசுபவை) மொழிகளும் அஞ்சுகின்றன என்று அறிகிறோம். ஹாலந்து, பெல்ஜியம் நாடுகளில் இன்று 2 கோடி மக்கள் பேசுவது டச்சுமொழி. அதைப் பாதுகாக்க அவ்விரு நாட்டு அரசுகளும் ஒரு அமைப்பை நிறுவியுள்ளன. அவ்வமைப்பின் தலைவர் வான் "ஹர்ட் (Van Hoorde)" 1998ல் விடுத்துள்ள எச்சரிக்கையை மனதிற் கொள்ள வேண்டும். ''வருங்காலத்தில் உடனடியாகவோ அல்லது சில நூறு ஆண்டுகளிலோ டச்சுமொழி அழிந்து போகும் ஆபத்து இல்லை. ஆனால் அது பயன்பட்டுவரும் புலங்களின் (domain) எண்ணிக்கை குறையும். இறுதியில் அது வெறும் பேச்சு மொழியாகத் தேய்ந்து விடலாம். வீட்டிற்குள், குடும்பத்திற்குள் பேசுவதற்கும் துயரம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டவும் மட்டுமே பயன்படு வதற்கும் ஆன மொழியாக அது ஆகிவிடும் ஆபத்து உள்ளது. உலகியலிலும் வாழ்விலும் முக்கியமான அம்சங் களாக அரசு, கம்பெனிகள், நிறுவனங்களின் செயல் பாட்டு மொழியாகவோ, வணிகம், பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பவியல், ஆகியவற்றுக் கான மொழியாகவோ டச்சுமொழி பயன்படுத்தப்படாத நிலை வந்துவிடும். 8. தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் பயன்பாட்டுப் புலங்கள் (domains) ஏற்கெனவே குறைவு. தற்காப்பு முயற்சி களை (குறிப்பாக பள்ளிகளிலாவது 1-12 வகுப்புகளில் தமிழை மட்டுமே பயிற்று மொழியாக ஆக்குதல்; திரைப்படம், வானொலி - தொலைக்காட்சிகளால் தமிழ் சீரழிக்கப்படுவதைத் தடுத்தல்; உலகமயமாக்கப் பெருங்கேட்டை தடுத்தல்; மகாத்மா காந்தியடிகளின் சுதேசியப் பொருளாதாரக் கொள்கையை மேற்கொள்ளுதல், போன்றவை) விரைந்து மேற்கொள்ளா விட்டால் டச்சுமொழிக்காரர்கள் அஞ்சும் கேடு தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் ஏற்பட்டுவிடும். தமிழுக்கு ஆங்கிலத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் பிற இந்திய மொழி களுக்கும் உள்ளவைதான். எடுத்துக்காட்டாக "தமிங்கலம்'' போன்றே "இந்திலிஷ்" (Hindlish) மொழியும் நூறு ஆண்டு களுக்கு முன்னரே உருவானதை இன்றைய உத்தரப்பிரதேசத் தின் 1911ம் ஆண்டு சென்சஸ் அறிக்கை" குறிப்பிட்டுள்ளதைக் காண்க. அதாவது ஒரு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் I would give incontrovertible proof of this position and it is my opinion that the argument of the defence cannot hold water”) TTDI சொல்ல விரும்பி அதை நீதிமன்றத்தில் பின்வருமாறு இந்திலிஷ் மொழியில் விளம்பினார் என அவ்வறிக்கை நகைச்சுவைபடக் கூறியுள்ளது. is position ke incontrovertible proof de sakta hu, aur mera opinion yeh hai ki defence ka argument water hold nahi kar sakta hai". 9. இந்தியாவில் பிற மொழிகளுக்கு இல்லாமல் தமிழுக்கு மட்டும் உள்ள சில உட்பகைகளையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. (i) தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைக் கலப்பதை வேண்டுமென்றே ஆதரிக்கும் தமிழ்ப்பகைவர் செயல் : மற்றும் கொச்சை, இழிவழக்குகளை எழுத்து மொழியில் புகுத்துதல். (ii) எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்குள்ள சிறந்த வரி வடிவத்தைச் சிதைத்து தமிழை அழிக்கத் துடிக்கும் முழுமக்கள் செயல். (இந்தியாவில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்கள் தமிழை விட அதிக எண்ணிக்கையில் உள்ள தோடு, அவ்வடிவங்களின் அமைப்பும் தமிழ் வரி வடிவத்தை விட மிகக் குறைபாடு உள்ளவை. எனினும் அம் மொழிகளில் எல்லாம் " எழுத்துச் சீர்திருத்த (அதாவது சிதைப்பு)" மூடர்கள் பேச்சைக் கேட்பார் இலர்) நுண்ணறிவு வாய்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் பாவாணர், சோமசுந்தர பாரதியார், அண்ணா , கி. ஆ. பெ. விசுவநாதம், இ. மு. சுப்பிரமணிய பிள்ளை , வ. சு. ப. மாணிக்கம் ஆகியோர் கருத்துக்களை -- குறிப்பாகப் பின்வருவனவற்றை எழுத்துச் சீரழிப்பாளர் உணர்ந்து தம்முடைய புன்மைச் செயலைக் கைவிடுவாராக. இ. மு. சுப்பிரமணிய பிள்ளை : தமிழ்த்தாய்க் கொலை (செந்தமிழ்ச்செல்வி - தொகுதி 26: 1951 பாவாணர் : தமிழ் எழுத்து மாற்றம் (செந்தமிழ்ச்செல்வி - தொகுதி 26: 1951 மற்றும் 54/1980 வ.சுப. மாணிக்கம் : எழுத்துச் சீர்திருத்தம்" (தென் மொழி: 24:12:1989) (iii) முழுமக்கள் சிலர் தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றில் கை வைத்து மூலபாடத்தைச் சிதைத்தும் மூலநூல் அமைப்பை மாற்றியும் வெளியிடும் நச்சுப் போக்கு 10. உலகமயமாக்கச் சுரண்டலின் ஒரு கூறாகவே பொருளா தாரம், பண்பாடு ஆகியவற்றோடு சேர்த்து மொழிகளும் ஆங்கிலத்தால் ஒழிக்கப்பட்டு வருகின்றனவென்பதை மேலே கண்டோம். மொழியளவில் மட்டும் முயற்சிகளை மேற் கொள்வது நிழலுடன் போரிடுவதுதான். நமது உடன்பிறப்பு இந்திய மொழிகள் அனைத்தும் சேர்ந்து காந்தியப் பொருளா தாரத்தை ஆதரிப்பதும் உலகமயமாக்கலின் பல்வேறு நாசகார அம்சங்களை எதிர்ப்பதும் தான் உண்மையான தொலை நோக்குப் பரிகாரங்களாக அமையும். பொதுமக்கள் விழிப் புணர்வுதான் இதற்கு வழி. ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளின் கட்சி களும் அரசாங்கங்களும் இது பற்றி ஒன்றும் செய்ய இயலாத வகையில் மேல் நாட்டு - முதலாளித்துவக் கம்பெனிகள் அவற்றைத் தமக்கு அடிமைகளாக்கி விட்டபடியால் கட்சி களையும், அரசாங்கங்களையும் நம்பிப் பயன் இல்லை. அந் தந்த மொழியின் பாதுகாப்புக்கு அந்தந்த மாநில மக்கள் போராடுவதுடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மகா ராட்டிரம், ஒரியா, இந்தி, வங்காளி போன்ற மொழி பேசுற ருடனும், தமிழ்ப் பாதுகாப்பாளர் கலந்து செயல்பட்டு உலக மயமாக்கத்தாலும், ஆங்கிலத் தாலும் இந்திய மொழிகள் அனைத்துமே ஆபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முயல்வதே தக்க விடிவாகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றார் பாரதியாரும். இயல் 7க்கான நூற்பட்டியல் Crystal, David (2000): Language Death; Cambridge University Press; PP 198 Dalby, Andrew (2000): Language In Danger; Penguin; London; PP 328 Grenoble, Lenore A and Lindsay I Whaley (Eds) 1998 “Endangered Languages: current issues and future prospects; Cambridge University Press”. Krauss, Michael (1992): The world's languages in crisis; Language Vol 68; PP 4 - 10 Matsumura, Kazuto (1998): Studies in Endangered Languages (1995 November Seminar); Tokyo; Hituzi Syobo Nettle. Daniel and Suzanne Romaine (2001): Vanishing Voices: The extinction of the World's languages; OUP; pp 241 Mufwene, Salikoko S (University of Chicago) 2002 : Colonization, globalization and the plight of weak languages; Journal of Linguistics; Cambridge University Press; Vol 38; pp 375 - 395 - The End -