செம்மொழிச் செம்மல்கள் 1 முனைவர் பா. இறையரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : செம்மொழிச் செம்மல்கள் - 1 ஆசிரியர் : முனைவர் பா. இறையரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 184 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 115/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : குட்வில் கம்ப்யூட்டர்சு அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : :tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழின் தொன்மையை, தமிழரின் மேன்மையைஉலகுக்குக் காட்டிய பெருந்தமிழ் அறிஞர்களின் வாழ்க்கைச்சுவடுகள் “செம்மொழிச் செம்மல்கள்” எனும் தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளிவருகின்றன. மறைக்கப்பட்டும், புதைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கப்பட்டதும் போக எஞ்சிய தமிழறிவுக் கருவூலங்களை வருங்காலத் தமிழினத்துக்குத் தேடி எடுத்துப் புதையலாக வழங்கிச் சென்ற அருந்தமிழ்ப் பெரியோரை இந்த நேரத்தில் நன்றிப் பெருக்குடன் வணங்குவோம். ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொகை தொகையாய் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரைப் பதித்து வருவதை தமிழுலகம் அறியும். எம் முத்திரைப் பதிப்புகளின் வரிசையில்‘செம்மொழிச் செம்மல்கள்’ நூலும் வெளி வருகின்றன. தமிழர்கள் தம் முன்னோரின் உழைப்பை அறிந்து தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்மண்ணுக்கும் தொண்டாற்ற முன்வர வேண்டும் எனும் விருப்பத்தால் இப்பதிப்பு வெளிவருகிறது. நூலுக்கு பேரா.முனைவர் மா.நன்னன் அவர்களின் அணிந்துரையும், நூலாசிரியரின் “சொல்லவும் பெரிதே” எனும் தன்னுரையும் நூலுக்கு வலிமையூட்டி உள்ளன. கோ.இளவழகன் பதிப்பாளர் அணிந்துரை பேராசிரியர் முனைவர் மா. நன்னன் இந் நூலாசிரியர் திரு பா. இறையரசனுக்கு ஆசிரியர் என்னும் முறையில் இந்நூலுக்குப் பாயிரம் எழுத ஒப்புக்கொண்டோம். திரு பா. இறையரசன் மாநிலக் கல்லூரியில் எமக்கு மாணாக்கரா யிருந்து தமிழ் முதுகலை பயின்றார். அப்போதே எம்மைக் கவர்ந்த நன்மாணாக்கருள் ஒருவராய் அவர் விளங்கினார். அங்கு படிக்கும்போதும், அதன் பின்னரும் தம் பணிகளுக்கிடையே தலையாய பணியாகத் தமிழ்க் காப்புப் பணியையும் தொடர்ந்தும், சிறந்தும் செய்துவருபவராவார். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, இதழாளர் பாரதியார், மேடு பள்ளம் (சிறுகதைத் தொகுப்பு), பாலை நானூறு (புதுக் கவிதை), பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள், கல்வித் தமிழ் மலருமா?, தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி முதலிய பற்பல பயனுள்ள நூல்களை எழுதிச் சிறந்துள்ளார். தமிழர் யாவரும் அறிந்திருக்க வேண்டிய சான்றோர் வரலாறு களையும் தேனீ போல் திரட்டி இளஞ்சூட்டில் இறக்கி எடுத்த சுவைக் கட்டிகள் போல் இந்நூல் வாயிலாகத் தந்துள்ளார். ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுள்ளும் சிலவற்றை மட்டும் தேர்ந்துச் சுருங்கச் சொல்லல் எளிதன்று. ஒரு நாளேட்டில் அவர்கள் இதற்காக ஒதுக்கும் இடத்தில் அடங்கும்படியும் கருத்து முழுமை இருக்கும் வகையிலும் எழுதுவது மிகமிக அரிய செயலே. இவ்வரிய செயலைத் திரு இறையரசன் இந்நூலை உருவாக்கியதன் வாயிலாகச் சிறக்கச் செய்துள்ளார். இந்நூலால் அறியப்படும் பெருமக்கள் அத்தனைபேரும் நற்றமிழ்ப் பெருமக்களே! இவர்களில் பலர் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டோராவர். ஆனால் அவர்கள் யாவரும் நம்மால் மறக்கத்தகாதோருமாவர் என்பதை நன்கு உணர்ந்ததாற்றான் திரு இறையரசன் அப் பெருமக்களின் வரலாறுகளை தூசுதுடைத்து மணியமைப்பது போல் அமைத்துத் துலங்கச் செய்துள்ளார். துளக்கமின்றித் துலங்கச் செய்யும் பணியை இறையரசன் நன்றாகச் செய்துள்ளார். பயனுள்ள பணிசெய்துள்ள முனைவர் இறையரசன் அவர்களை உளமாரப் பாராட்டி வாழ்த்துகிறோம். ‘சிறு குடி’ மா. நன்னன் அரங்கராசபுரம், சென்னை - 600 015 சொல்லவும் பெரிதே! செம்மொழி என்று தமிழை நடுவண் அரசு அறிவித்து விட்டதனாலேயே தமிழுக்குப் பெருமை வந்து சேர்ந்துவிட வில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் செம்மொழிதான். வடமொழியை - சமற்கிருதத்தை உயர்த்திப் பிற மொழிகளைத் தாழ்த்திச் சொன்னபொழுது தமிழை உயர்த்திப் பிடித்து அறிவிக்க வேண்டிய கட்டாயம் திரு ஞானசம்பந்தருக்கும் (பிற நாயன்மார்களுக்கும், ஆழ்வார் களுக் கு ம் ) ப ரஞ் சோதி முனிவ ரு க் கு ம் த மிழ் வி டு தூது ஆசிரியருக்கும் கால்டுவெல், போப்பு முதலான வெளிநாட்டு அறிஞர்களுக்கும் வடலூர் இராமலிங்க வள்ளலாருக்கும் மாகறல் கார்த்திகேயனார்க்கும் ஞானப் பிரகாச அடிகளா ருக்கும் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் மறைமலை அடிகளுக்கும் பாவாணருக்கும் பெருஞ்சித்திரனார்க்கும் என இன்ன பிறர்க்கும் தேவை ஆகியது. சமயத்தின் பெயரால் சமற்கிருதம் செய்து வந்த வல்லாண் மையை ஆட்சி மொழியின் பெயரால் இந்தியும் உலக மய மாக்கலின் பெயரால் ஆங்கிலமும் செய்து வருகின்றன. சமற் கிருதத்திற்கும் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் கிடைக்கிற — செய்யப்படுகிற சிறப்புகளும் பெருமைகளும் அரசின் உதவியும் வலிமையும் தமிழுக்குக் கிடைக்க வேண்டும். ஏனென்றால் அம்மொழிகளைவிட தொன்மையும் சிறப்பும் ஆற்றலும் வரலாறும் வலிமையும் கொண்ட மொழி தமிழ்மொழி என்பதால்! ஆனால் தமிழுக்கு உரிய பெருமைகளைச் சேர்க்கவும் வளர்க்கவும் தமிழனால் முடியவில்லை. ஆட்சியில் ஆவணத்தில் காட்சியில் அறிவியலில் சமயத்தில் என அனைத்துத் துறை களிலும் தமிழுக்குத் தமிழ்நாட்டிலேயே வளர்ச்சியில்லை; வாழ்வுமில்லை! தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு என்று கூறும் பெற்றோர்கள்! ஆங்கிலத்தின் மூலம் தான் தமிழை வளர்க்க முடியும் என்று கூறும் பெரியோர் கள்! பிற மொழிகளை அறிந்து தமிழன் உலகெங்கும் பரந்து பட்டுச் சென்று தன் வாழ்வையும் தமிழ் மொழி வளத்தையும் முனைவர் பா. இறையரசன் பரப்புவது வேறு; பிற மொழிகளை ஏற்றுத் தாய்த் தமிழையும் தன் அடையாளத்தையும் உரிமைகளையும் இழப்பது வேறு. பழந்தமிழ் அறிஞர்கள் செய்த தொண்டு அளவிட்டுரைக்க முடி யாதது! தமிழ்த்தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! அவர்கள் செய்த தொண்டில் அணு அளவேனும் நாம் செய் தோமா? அவர்கள் செய்த பணிகள் நிலைக்கச் செய்தோமா? அவர்கள் செய்த நூல்கள் முழுதும் இன்றைக்குக் கிடைக் கின்றனவா? அனைத்து நூல்களையும் முதற் பதிப்புகளையும் பழைய ஏட்டுச் சுவடிகளையும் செப்பேடுகளையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க - அறிவியல் வளர்ந்துள்ள நிலை யில் ஆவணப் படுத்த - நுண்படச்சுருள் (மைக்ரோஃபிலிம்), குறுந்தகடு ஆக்கம் செய்ய வேண்டும். அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்தம் வரலாற்றையும் அவர்தம் நூல்களையும் கூட நாம் முழுமையாக ஆவணப்படுத்தவில்லை. நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் பார்ப்பனர்களுக்குச் சமற்கிருதத்தின் பால் பரிவும் தமிழின் பால் தாழ்வுமனப் பான்மையும் உண்டு. ஆயினும் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை பாராட்டுவது போல் ‘சமற்கிருதத்தில் பற்றும் தமிழைத் தாழ் வாகக் கருதும் மனப்பான்மையும் கொண்ட குலத்தில் பிறந்தும் தமிழின் பெருமையை உலகறியச் செய்த பரிதிமாற் கலைஞரை நாம் மறக்க முடியாது. பாரதியாரும், மு. இராகவையங்காரும், இரா. இராகவையங்காரும், உ.வே. சாமிநாத அய்யரும், பி.டி.சீனிவாச அய்யங்காரும், வி.ஆர். இராமச்சந்திர தீட்சதரும், கிருட்டிண சாமி அய்யங்காரும் செய்த தமிழ்த் தொண்டுகளை மறக்க முடியாது; மறுக்க முடியாது. அவர்கள் செய்த சிறு தவறு களைச் சுட்டிக் காட்டித் திருத்தங்களைச் சொல்லலாம்; அதற்காக அவர்கள் செய்த மாபெரும் பணிகளைத் தூக்கி எறிய முடியாது; கூடாது. சாதியின் பெயரால் அவர்களை உயர்த்திப் பிடிக்கி றார்கள் என்றால், உண்மையின் பெயரால் நாம் தமிழர்களை உயர்த்திப் பிடிக்கவும் தவறக்கூடாது. பாரதியாரின் பாடல் களைப் பாராட்டியது போல் கவிமணி, நாமக்கல்லார் பாடல் களைப் பாராட்டுங்களேன்! உ.வே.சா. ஏடு தொகுத்ததுபோல் சி.வை. தாமோதரம் பிள்ளையும், வெ.ப.சு. முதலியாரும், சி.கனகசபைப்பிள்ளையும் தொகுத்த செய்தி வெளியிடப் பட்டதா? சங்கநூல்களை இராமலிங்க அடிகளாரும் பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் ஆறுமுகநாவலரும் முன்னரே அறிந்திருந்தனர் என்ற புகழ்பாட வேண்டியதுதானே! சாதி, மதம், இனம், ஊர், கட்சி, கொள்கைகள், சிறு வேறுபாடுகள் இவற்றால் பிளவுபட்டு நிற்பது தவறு. தமிழ் மொழியும், தமிழ்நாடும், தமிழ் இனமும் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க பெருமையை நிலைநாட்டுவோம். திருவையாற்றில் தெலுங்கு இசை கொண்டாடப் படுகிறது என்றால் தமிழிசையை ஏன் நீங்கள் கொண்டாடவில்லை? ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் குடந்தை சுந்தரேசனாரும் செய்ததுபோல் உங்கள் முயற்சி ஒற்றுமையால் இனத்தின் முயற்சி ஆகட்டும்! தமிழோசை நாளிதழில் தமிழ் மக்கள் நலம் நாடும் பொது வாழ்வியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதினேன்; பின் தமிழோசை இதழின் ஞாயிற்றுக் கிழமை இணைப்பிதழாகிய ‘களஞ்சியம்’ பகுதிக்குத் தொடர்ந்து தமிழறிஞர்களைப் பற்றிச் “செம்மொழிச் செம்மல்கள்” என்று எழுதலானேன். களஞ்சியம் இதழாசிரியர் திரு. யாணன் தந்த ஊக்கம் பெரிது! நான் “தமிழ் இலக்கிய வரலாறு” எழுதிய காலத்திலிருந்து (1982) தொகுத்து வந்த தொல் தமிழ் அறிஞர் வரலாற்றைப் பண்டே பதிந்திருந்த இதழ்கள் நூல்கள் முதலியவற்றின் படைப் பாளர்கள், கட்டுரை ஆக்கும் காலத்தே உதவிய பேராசிரியர் அன்பழகனார் ஆய்வு நூலகத்தின் நூலகர் சுந்தரராசன், தமிழறிஞர்களின் ஓவியம் வரைந்தளித்த நெய்வேலி கோவிந்தன், தமிழோசை இதழிலிருந்து ‘செம்மொழிச் செம்மல்கள்’ கட்டுரைகளை எடுத்து வெளியிட்ட அமெரிக்க இதழ் ‘ தி தமிழ் டைம்ஸ்’, அணிந்துரை அளித்த ‘தமிழைத் தமிழாக்குவோம்’ என இயக்கமாக வாழும் என் பேராசிரியர் மா. நன்னன் ஐயா, ‘செம்மொழிச் செம்மல்கள்’ என நூலாகப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பகத்தார் ஆகிய அனைவரின் பெருமையும் பெரிது! தமிழ்த்தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! - பா. இறையரசன் கைப்பேசி : 9840416727 மின்னஞ்சல் : : iraiarasan@gmail.com இணைய தளம் : http//iraiarasu.blogspot.com உள்ளடக்கம்  பதிப்புரை .............................................................................................  அணிந்துரை .........................................................................................  சொல்லவும் பெரிதே ............................................................................. 1. பெரியாருக்கும் பெரியார் ...................................................................... இராமலிங்க அடிகளார் 2. நூல் விற்ற பாவலர் ............................................................................... செய்குத்தம்பிப் பாவலர் 3. மருத்துவம் பார்த்த இசைஞானி! .......................................................... தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 4. நீதி வழங்கிய புதினத்தந்தை! ............................................................... மயிலாடுதுறை வேதநாயகர் 5. கண்ணகி போற்றிய யாழ் .................................................................... விபுலானந்த அடிகளார் 6. அரிசி வாங்கி அச்சகம் ........................................................................... ஆறுமுக நாவலர் 7. தமிழ் விருந்து தந்த ஏழை .................................................................... பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 8. தமிழ்த் தாத்தாவுக்குத் தாத்தா ............................................................. சி.வை. தாமோதரம் பிள்ளை 9. கதவடைத்த வள்ளல்! ............................................................................ சி. தியாகராசச் செட்டியார் 10. தமிழை அறியாத தெய்வம் பேய்! .................................................. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 11. தமிழுக்காக நடந்த கால்கள்!................................................................ 12. ஒரு நாடகத்தால் உலகப்புகழ்! ................................................ மனோன்மணியம் சுந்தரனார் 13. ஞானப்பழத்தைப் பிழிந்து...! ..................................................... சங்கரதாசு சுவாமிகள் 14. இந்தி இசையைத் திணிக்காதே! ...................................................... பம்மல் சம்பந்தனார் 15. முழங்கிய சங்கம்! .................................................................................... பாண்டித்துரைத் தேவர் 16. ஆகமமா? தமிழா? .................................................................................. மன்னர் பாஸ்கர சேதுபதி 17. பாரதிக்குப் பதவி தந்தவர் .................................................................. அரசஞ் சண்முகனார் 18. தமிழர் திருநாள் பரப்பியவர் ................................................................ கா. நமச்சிவாய முதலியார் 19. தமிழ் பல்லக்கு ஏறலாமா? ................................................................. ஞானியாரடிகள் 20. தமிழ்க் கணக்கு ................................................................................. பூண்டி அரங்கநாத முதலியார் 21. இலங்கை வேல்!.................................................................................. நா. கதிரைவேற் பிள்ளை 22. சங்குசக்கர சாமிவந்து ........................................................................ இரா. இராகவையங்கார் 23. நெஞ்சில் எழுந்த நெருப்பு .................................................................. மு. இராகவையங்கார் 24. பழங்காலைத் தூர்க்காதே! ................................................................. திருமணம் செல்வகேசவராயர் 25. தமிழ்ப் பாடத்தைக் குறைக்கலாமா? ................................................ மு.சி. பூரணலிங்கம் பிள்ளை  1. பெரியாருக்கும் பெரியார் பெரியாருக்கும் அம்பேத்காருக்கு முன்னோடியாய்ச் சமுதாயச்சீர்திருத்தம் பேசியவர்; சமயச்சீர்திருத்தத்தில் அப்பருக்கும் அன்னிபெசண்டுக்கும் விவேகானந் தருக்கும் முன்னோடி: தேவாரம் திருப்புகழை அடியொற்றிச் சீர்த்தனை (கீர்த்தனை)ப் பாக்களைப் படைத்ததில் கோபால கிருட்டிண பாரதிக்கும் மயிலாடுதுறை வேதநாய கருக்கும் முன்னோடி; எளிய பாடல்கள் இயற்றிக் கவிமணி தேசிக விநாயகத்துக்கும், நாமக்கல் கவிஞருக்கும், பாரதியாருக்கும் முன்னோடி; சிவனியத் தமிழ் பரப்பியதில் ஆறுமுகநாவலருக்கும் மறைமலை அடிகளாருக்கும் முன்னோடி! இவர் ஓர் கவிஞர், சித்தர், அருளாளர் , சமயச்சீர்திருத்தவாதி, சமுதாயப் புரட்சியாளர், தமிழின் சீர்பரவுவார், உரைநடைஆசிரியர், உரைஆசிரியர், இதழாளர். இந்தப்பெரியார் யார்? திருவொற்றியூர்த் தேரடி வீதியில் ஒரு துறவி இருந்தார். அழுக்கடைந்த மேனி; கரடு தட்டிப்போனமுடி; பல நாளாகத் துவைக்காத ஆடை: எதிரே பாதி தின்றும் தின்னாமலும் சிதறி கிடக்கும் உணவுப் பொருள்கள். அவர், தெருவின் வழியே போவார் வருவோரைப் பார்த்து ஒவ்வொருவரையும் சுட்டிக் காட்டி, ``அதோ போகிறது பார்..........நாய்! அங்கு வருவது .....நரி!” என்று அவர்களின் பண்பு நலன்களைத் தம் மனத்தால் கணித்து `இன்னவிலங்கு` எனக்கூறுவார். அப்படிப் பட்ட துறவி ஒரு நாள், “அதோ......அதோ......மனிதர் வருகிறார்!” என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார். இவ்வாறு அந்தத் துறவியால் அடையாளம் காணப்பெற்ற அந்தப் பெரியார் தான் இராமலிங்க அடிகளார்1 இவர் இரண்டு ஆண் இரண்டு பெண்ணுக் குப்பின் ஐந்தாவதாகப் பிறந்தவர்; ஆறாம் திங்களில் தந்தை இறந்து விட்டதால், தாய் தம் ஊராகிய பொன்னேரிக்குத் தம் பிள்ளை களுடன் வந் தார் . மூத்த பிள்ளை சபாபதி குடு ம் ப த்தை உழைத்துக் காப்பாற்றத் தாய் தம்பி தங்கைகளுடன் சென்னை ஏழுகிணறு வந்து சேர்ந்தார்.பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத இராமலிங்கர் கந்தக்கோட்டம் (கந்தசாமி கோயில்), திருவலி தாயம் (பாடி), திருமுல்லைவாயில்,திருவொற்றியூர் கோயில் களுக்குச் சென்று வழிபட்டுப் பாடல்கள் இயற்றிக் கொண்டு திரிந்தார். முத்தியாலுப்பேட்டையில் சமயச்சொற்பொழிவு செய்து வந்த அண்ணன் சபாபதி காய்ச்சலால் ஓர் நாள் பேசச் செல்ல முடியவில்லை.அதனால் இராமலிங்கர் பேசச் சென்றார். அவர் பேசியதைக் கேட்டதும், நாள் தோறும் இராமலிங்கரே பேச வேண்டும் என்று கூறிவிட்டார்கள். இவ்வாறு சமயத்துறை யில் புகுந்தவர்க்குக் கட்டாயப்படுத்தி அக்கா உண்ணாமலை மகள் தனம் என்பவரைத் திருமணம் (1850) செய்து வைத்தார்கள். ஆனால் இராமலிங்கர் திருமண வாழ்க்கையில் ஈடுபாடில்லாமல் துறவியானார். மயிலாடுதுறை வேதநாயகரின் நீதிநூலுக்குச் சாற்றுக் கவி தந்த போது, `சென்னைப்பட்டணம் வித்துவான் ‘ஸ்ரீஇராம லிங்கம் பிள்ளையவர்கள் இயற்றியது’ என்று குறித்துள்ளார். வாடிய உயிர் : திருவொற்றியூர் தியாகராசப் பெருமான் கோயில் சத் திரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார், இராமலிங்க அடிகளார். ஒருக்கணித்துப் படுத்திருந்த அவரது வலது காதில் இருந்த கடுக்கனைத் திருடன் ஒருவன் கழட்டினான். இதை உணர்ந்த அடிகளார் தூக்கத்தில் புரள்வது போலத் திரும்பினார். மகிழ்ச்சியுடன் இடது காதில் இருந்த கடுக்கனையும் திருடன் கழட்டிக் கொண்டு சென்றான். துறவு ஏற்றபின் ஏன் பொன் அணிகலனை அணிந்திருந்தோம்? என வருந்தினார் இராமலிங்கர். தூய வெள்ளாடை ஒன்றால் முகம் தவிர உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு வாழலானார். தெரு ஓரத்தில் ஒதுங்கி நடந்தார். கை வீசி நடக்க மாட்டார். உயரத்தில் அமர மாட்டார். உரத்துப் பேச மாட்டார். அறியாமையால் துன்புறுவோரையும் பசியினால் வருந்துவோரையும் இரந்து வாழும் பிச்சைக்காரர் களையும் ஏழை எளியவரையும் கண்டு மனம் வாடினார். சென்னைக் கோயில்களைக் கண்டு மகிழ்ந்து ‘தருமமிகு சென்னை’ என்று பாடிய வள்ளலார், படிப்படியே சென்னை மக்களின் பணத்தோட்டத்தை உணர்ந்து ‘தேட்டிலே மிகுந்த சென்னை’ எனப் பாடிவிட்டுச் சென்னையை விட்டுப்புறப் பட்டு நடைப்பயணமாகத் தில்லை சென்றடைந்தார். தில்லை இறைவனைக் கண்டு மகிழ்ந்து பாடிக் களித்த வள்ளலார் தில்லைப் பார்ப்பனர்களின் அட்டூழியங்களைக் கண்டு மனம் வெதும்பி வெளியேறினார். கருங்குழி என்ற ஊரின் மணியக் காரர் வேங்கட ரெட்டியார் இல்லத்தில் தங்கி (1858-1867) இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். பார்வதிபுரம் என்னும் பகுதியில் ‘வடலூர் சமரச சுத்த சன்மார்க்கச் சத்திய தருமச்சாலை’ (1867) உருவாக்கினார். தில்லைக்கோயில் பார்ப்பனர்களுக்கே சொந்தம், சூத்திரர் கள் காலை வைக்கக் கூடாது! என்று இழிவு செய்தபோது ‘வடலூர் வாருங்கள், எல்லோரும் வாருங்கள் என அனை வரையும் அழைத்தார் இராமலிங்கர். இதனால் அவரை ‘வள்ளலார்’ என்று மக்கள் அழைக்கலாயினர். ஞானம் வழங்கிய தோடு பசிப்பிணி போக்க எல்லோர்க்கும் சோறிட்டார். இவர் சித்துகள் பல செய்தார்; தண்ணீரில் விளக்கு எரியச் செய்தார் என்றெல்லாம் கூறுவர். ‘தனித்திரு, பசித்திரு, விழித்திரு’ என்று கூறித் தவமியற்றிய உண்மைத்துறவி இராமலிங்கர் ஆவார். ‘ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்’ என்றார். ‘மரணமிலாப் பெருவாழ்வு’ பெற மன ஒருமைப்பாடு, ஒளி வழிபாடு, தூய வாழ்வு என வழிகாட்டினார். புலால், உயிர்க் கொலை; உயிர்ப்பலி கூடாது; திதி, கருமாதி, ஈமச் சடங்குகள் தேவையில்லை; கணவனை இழந்த மனைவி தாலி வாங்க வேண்டாம்; சிறு தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு வேண்டாம்; வேதங்களும் சாத்திரங்களும், புராணங்களும் ஆகமங்களும் உண்மையைக் காட்ட மாட்டா! சாதி, மதம், குலம், கோத்திரம் தேவையில்லை என்று புரட்சி பேசியவர் இராமலிங்கப் பெரியார். வழக்குமன்றில் இவர் இயற்றிய பாடல்கள் 5818 ஆகும். இவை 6 திரு முறைகளாக பகுக்கப் பெற்று ‘திருவருட்பா’ என வெளிவந்தன. ‘திருவருட்பா அருட்பா அல்ல, மருட்பா’ என்று சைவத் துறவியும் பெரும்புலவருமாகிய ஆறுமுக நாவலர் வழக்குத் தொடுத்தார். அருட்பா என்று வாதிட்டும் மருட்பா என்று எதிர்த்தும் தமிழகமே இரண்டு அணியாக மாறியது. தமிழனைத் தமிழனே எதிர்ப்பது ஒன்றும் புதிது இல்லையே! ‘கடலூர் மஞ்சக்குப்பம் வழக்கு மன்றத்தில் 1869-இல் இறுதிக் காட்ட உசாவல் (விசாரணை) வந்தது. இரு அணி யினரும் பெருங்கூட்டமாகத் திரண்டிருந்தனர். ஏவலன் வாயி லில் நின்றுகொண்டு ‘இராமலிங்க ஸ்வாமி’ என்று மூன்று முறை கத்திக் கூப்பிட்டான். அப்போதுதான் இராமலிங்க அடிகளார் வழக்கு மன்றத்தின் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டதும் ஏவலர்களும் காவலர்களும் வணங்கினர்; பொது மக்கள் வணங்கினர். அமர்ந்திருந்த வழக்குரைஞர்கள் எழுந்து நின்று கை கூப்பினர். இராமலிங்கரை ஆதரிக்கும் அன்பர்கள் எழுந்து நின்று கும்பிட்டனர். அடுத்து மருட்பா என்று வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து நின்று தொழுதார். இவற்றையெல்லாம் பார்த்ததும் ஆங்கிலேய நீதியரசரும் எழுந்து நின்று வணங்கினார். பின் எல்லோரும் வணங்கும் பெருமை மிக்கவருடைய பாடல்கள் அருட்பாடல்களே என்று தீர்ப்பு எழுதினார். தமிழன் தமிழனை மதிக்கமாட்டான். மாற்றான் காலில் விழுந்து அவனை நத்திப் பிழைக்கும் அடிமை மனப் பான்மை கொண்டவனாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்டான். இராமலிங்கப் பெரியாரை மறந்து அவர் தமிழ்ப்பாடல்களை வழிபாட்டு முறைகளை வாழ்வியல் அறிவுரைகளை மறந்து பிற இனத்தாரை / பிற மொழியாரை / பிற நாட்டாரைத் தெய்வ மாகக் கொண்டாடி வருகிறான். இராமலிங்க அடிகளாரிடம் மாணவராக இருந் த தொழுவூர் வேலாயுத முதலியார் தம் இறுதிக் காலத்தில் எழுதியது ‘சங்கர விசயம்’. இராமலிங்கர் தம் இறுதிக்காலத்தில் ‘கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்’ என்று வருந்தினார். எரிவிளக்கு வள்ளலார் ஏற்றிவைத்த ஞான ஒளிவிளக்கும், பசித்து வருவோருக்கெல்லாம் உணவு வழங்குங்கள்! என ஏற்றி வைத்த அடுப்பும் எப்போதும் எரிந்து கொண்டேதான் உள்ளன. தைப்பூசத்தன்று அவர் ‘சோதியில் கலந்து விட்டார்’ என்று கூறிவிட்டனர். ‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’ கீழ வெண்மணி போன்று வெவ்வேறு வடிவில் இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது! இராமலிங்க அடிகளார் இராமலிங்க அடிகளார் இயற்பெயர் : இராமலிங்கம் சிறப்புப் பெயர் : சென்னைப் பட்டணம் வித்துவான் இராமலிங்கம் பிள்ளை, சிதம்பரம் இராமலிங்க சுவாமி, திருவருட்பிரகாச வள்ளலார், வடலூர்இராமலிங்க சுவாமிகள் பெற்றோர் : சின்னம்மாள், இராமையாப்பிள்ளை பிறந்த நாள் : 05-10-1823(`சுபானு`ஆண்டு, புரட்டாசி 21) மறைந்த நாள் : 30-01-1874(`சீர்முக`ஆண்டு, தை 19, பூசம்) பிறந்தஊர் : தில்லை (சிதம்பரம்)அருகில் மருதூர் வாழ்ந்த ஊர்கள் : சென்னை ஏழுகிணறு, (1824-1858) மருதூர் அருகில் கருங்குழி, (1858-1867) பார்வதிபுரம் (வடலூர்) (1867-1870) மேட்டுக் குப்பம் (சித்தி வளாகம்) (1870-1874) படைப்புகள் : சென்னை கந்தர் மணிமாலை - சரணப்பத்து (1851), ஒழிவிலொடுக்கம் (1851), தொண்ட மண்டல சதகம் (1856), சின்மய தீபிகை (1857), திருவருட்பா 1-4 திருமுறை (1867), திருவருட்பா 5- ஆம் திருமுறை (1880), திருவருட்பா 6-ஆம் திருமுறை (1885), உரைநடை : மனுமுறை கண்ட வாசகம் (1854), சீவ நூல்கள் காருண்ய ஒழுக்கம் (1879), உரை (ஒரு சொல் விளக்கம்) : உலகெலாம், தமிழ். பணி (நிறுவியவை) : சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865, கருங்குழி) சமரசவேததருமச் சாலை (23.05.1867,பார்வதிபுரம்/ வடலூர்) சத்திய தருமச் சாலை (1870, வடலூர்) சத்தியஞான சபை (25.01.1872, வடலூர்) சன்மார்க்கக்கொடி (22.10.1873) பிற : சன்மார்க்க விவேக விருத்தி (இதழ்) 2. நூல் விற்ற பாவலர் ‘திருவருட்பா அருட்பா அல்ல, மருட்பா’ என்றும், அதை மறுத்து ‘அருட்பாவே’ என்றும், ஊர்தோறும் மேடைகளில் தமிழறிஞர்கள் வாதிட்டு வந்தனர். ‘அருட்பாதான்’ என்று உள்ளம் உருக விளக்கம் கூறி அறிவார்ந்த வாதங்களையும் முழங்கி வந்தார் மகமதிய இளைஞர் ஒருவர். இருபத்தாறே அகவையான அந்த இளைஞர்தான் செய்குத் தம்பிப் பாவலர். ஆ. கதிரைவேற்பிள்ளை திருவருட்பாவை எதிர்த்து ஓர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார் — “நாதர் முடிமேலிருக்கும் வெண்ணிலாவே! - அங்கு நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!” என்று இராமலிங்கர் பாடியது தவறு. சிவபெருமான் ஆகிய இறைவன் தலைமேல் இருக்கும் நிலவில் நாம் கால் வைக்கலாமா?” என்று கிண்டல் செய்து பேசினார். அந்த மேடையில் தாமே ஏறிய பாவலர், “நாதம் என்பது தவறாக நாதர் என்று அச்சாகியுள்ளது. நாதம் என்றால் பிரணவம். முடி என்பது அதன் மேல் உள்ள சந்திரமண்டலம்” என்று பேசினார். திருவருட்பாவை எதிர்த்த ஆ. கதிரைவேற்பிள்ளையின் கருத்துகளை எதிர்த்து வாதிட்ட பாவலரைக் ‘கதிர்வேலருக்கு எதிர் வேலர்’ என்று மக்கள் பாராட்டினர். காஞ்சிபுரத்தில் ‘இராமலிங்க சுவாமிகள் பாடலாபாச தருப்பணம் (மருட்பா மறுப்பு)’ என்ற புத்தகம் வெளியிடும் விழா நடந்தது. அடுத்த நாள் அதே இடத்தில் மேடையிட்டுச் செய்குத் தம்பிப் பாவலர் பேசினார். ‘உங்கள் நூலின் தலைப்பே இராம லிங்க சுவாமிகள் பாடலா, பாச தருப்பணம் (பாச தருப்பணம் = அன்புக் கண்ணாடி) என்று பொருள். மருட்பா மறுப்பு என்றால் அருட்பா என்றுதான் பொருள்’ என்று பேசினார். இதற்காகத் ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்ற பட்டம் தந்து, அவர் பேசியவற்றை ‘குதர்க்காரண்ய நாச மகா பரசு” என நூலாகவெளியிட்டனர். இளமையில் தமிழ்க் கல்வி தந்து, பாவலர் ஆக்கிய சங்கர நாராயணரைப் பற்றி இகழ்ந்து பேசிய, கணபதி ஆசாரி என்பவர் செய்குத்தம்பிப் பாவலரைப் பார்த்து “அவர் மாணவனா நீ? என் பாடல்களைப் பார், உனக்குப் புரியுமா?” என்று கிண்டல் செய்தார். நூலைப் புரட்டிப் பார்த்து மனத்தில் வாங்கிக் கொண்ட பாவலர், “இவை ஏற்கெனவே நான் படித்தவை. உம்முடைய பாடல்கள் என்று பொய் சொல்கிறீரா?” என்று கேட்டு அப்பாடல்களை ஒப்பிக்கலானார். அதிர்ந்து போன ஆசாரி ஓட்டமெடுத்தார். தாய் வழிப்பாட்டனார் அசரத்து ஞானியார் அப்பாவின் ‘மெய்ஞ்ஞானத் திரட்டு’ என்ற நூலைப் பதிப்பிக்கும் பணியில் உதவச் சென்னை சென்றார். அச்சக உரிமையாளர் இட்டா பார்த்தசாரதி நாயுடு அச்சுப் பிழை திருத்தும் பணி கொடுத்துத் தங்கவைத்து விட்டார். சென்னையில் இவ்வாறு தங்கியிருந்த போதுதான் மருட்பா கட்சியினரை எதிர்த்து வாதாடிப் புகழ் பெற்றார். ஆயிரம் கவனகர் சென்னைக்கு வந்த முதுகுளத்தூர் கலியாணசுந்தரம் பிள்ளை பாவலரைப் பார்க்க வந்தார். அவர், “அவதானம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?” என்று கேட்டார். “அவதானமா? அது பெரும்புரட்டு” என்றார் பாவலர். மறுநாள் காலை கலியாணசுந்தரம் பிள்ளை கவனகத்தின் (அவதானத்தின்) ஒரு பகுதியாகிய ‘கண்டப் பத்திரிக்கை’ என்பதைச் செய்து காட்டி னார். உடனே மன்னிப்புக் கேட்ட பாவலர், “நீங்கள் அட்டாவ தானி! தெரியாமல் பேசிவிட்டேன்! இதற்குத் தண்டனையாக முறையான அவதானம் கற்று ஊருக்கு வந்து உங்கள் முன்னால் செய்து காட்டுவேன்” என்று உறுதி கூறினார். தொடர்ந்து பயிற்சி செய்து பதினாறு கவனகம் (சோடச அவதானம்) தேர்ந்தார். 1906-இல் கோட்டாற்றுக்குச் சென்று தம் ஆசிரியர் முன்னிலையில் கவனக நிகழ்ச்சியைச் செய்து காட்டினார். மேலும் தொடர்ந்து பயிற்சி செய்து 10.03.1907-இல் சென்னை ‘விக்டோரியா’ மக்கள் மன்றத்தில் நூறு கவனகம் செய்தார். புலவர் கண்ணபிரான் முதலியார் தலைமையில் காஞ்சிபுரம் பெரும் புலவர் இராமசாமிநாயுடு, புலவர் கா. நமச்சிவாய முதலியார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யர், டி.கே.சி, பூவை அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார், திருவேட்டீசுவரன் பேட்டை வடி வேலுச் செட்டியார், தஞ்சை நூறு கவனகர் சுப்பிரமணிய அய்யர் முதலிய பெரும் அறிஞர்கள் முன்னிலையில் நூறு கவனகம் செய்தார். சதாவதானி (நூறு கவனகர்), மகா மதி (பேரறிவாளி) என்று பட்டம் தந்தனர். அப்போது அவர் அகவை 33. ‘விக்டோரியா’ மன்றத்திலிருந்து குதிரை வண்டியில் இட்டா பார்த்தசாரதியுடன் வந்து கொண்டிருந்த பாவலர், வழியில் திடீரென்று “வண்டியை நிறுத்துங்கள், இறங்குங்கள்” என்றார். கீழே இறங்கிய பின் பாய்க்குக் கீழே இருந்த புல்லை உருவினார். அதிலிருந்து பாம்பு ஒன்று ஓடியது. “இன்றைக்கு நூறு கவனகத்தில் மூக்குக்கு மட்டும் வேலை தரவில்லை; மூக்கு இப்போது பாம்பைக் கண்டுபிடித்தது” என்றார் பாவலர். உடனே பார்த்தசாரதி “நீர் நூறு கவனகர் இல்லை... ஆயிரம் கவனகர் (சகஸ்ர அவதானி)” என்று பாராட்டினார். நூல் விற்பனை நச்சுக்கடியால் ஏற்பட்ட நோயால் சென்னையை விட்டு, 1909-இல் சொந்த ஊர் சென்று நூல் கடை நடத்தினார். தம் வறுமையும் நோயும் தீர ஞானியார் அப்பா மீது திருக்கோட் டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி பாடி வேண்டினார். தம்மை நாடி வந்தவர்க்குத் தமிழ் கற்பித்து வந்தார். “ஒன்று தெய்வம் ஒன்று மதம் ஒன்று மக்கள் சாதிஎன நன்றுஅறம் கூறி அவை நாட்ழ்வில் நான்மறையும்” என்று வள்ளலாரின் பொதுநிலைச் சமயத்தைத் தம் நபிகள் நாயக நான்மறையாகப் பாவலர் பாடியுள்ளார். பெண் ணின் பெருமையைப், “பெண்ணே பெண்ணே பெண்மணியே! பெருமை நிறைந்த பெட்டகமே! பண்ணே நிகர்த்த மொழிமறவாப் பைம்பொற் கிளியே பசுந்தேனே!” எனப் போற்றியுள்ளார். காந்தி அடிகளின் கொள்கை களைப் பின்பற்றிப் பரப்பிவந்த பாவலர் மதுவிலக்கை வலியுறுத்திக் “கள்ளைக் குடியாதே ஐயா, நீ கள்ளைக் குடியாதே! கொள்ளை வியாதிமிகும், கொண்ட அறிவழியும் சள்ளை மலிந்த பல சங்கடங்கள் சூழ்ந்துவரும்!” என்று ஊர்தோறும் மேடைதோறும் பாடி வந்தார். இவர், 1937 தேர்தலில் பேராயக் (காங்கிரசு) கட்சி வெற்றி பெற உழைத்த பேச்சாளர். சீறாப்புராண விரிவுரை நிகழ்த்திய போது ‘சீ’ என்பதற்கு மட்டும் 9 நாள் உரை சொன்னார். திருநெல்வேலியில் திரு.வி.க. தலைமையில் சைவ மாநாட்டில், ‘சைவம் வளர்த்த தமிழ்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பேசினார். “திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?” என்று ஒருவர் கேட்ட வினாவிற்குத் “திருவள்ளுவர் தம் சமயத்தைச் சேர்ந்தவர்” என்று சுவைபட விடை தந்தார். நண்பர் ஒருவரின் மகன் கடன் கேட்டு வந்தான் — “அப்பா நூறு உரூபாய் கடன் கேட்டார்” “ஒரு, நூறு உரூபாய் தருகிறேன்” “இரு நூறு உரூபாய் கொடுங்களேன்” “இரு, நூறு உரூபாய் தருகிறேன்” “முந் நூறு உரூபாய் கொடுங்களேன்” “முன் (சொன்ன), நூறு உரூபாய் தருகிறேன்” “நானூறு உரூபாய் கொடுங்களேன்” “நான், நூறு உரூபாய் தருகிறேன்.” “ஐநூறு உரூபாய் கொடுங்களேன்” “ஐ, நூறு உரூபாய் தருகிறேன்” “அறு நூறு உரூபாய் கொடுங்களேன்” “அறு (நிறுத்து)! நூறு உரூபாய் தருகிறேன்” “எழு நூறு உரூபாய் கொடுங்களேன்” “எழு, நூறு உரூபாய் தருகிறேன்” “எண்ணுறு உரூபாய் கொடுங்களேன்” “எண்(ணு), நூறு உரூபாய் தருகிறேன்” என்று நூறு உரூபாய் கொடுத்து அவ்விளைஞரின் ‘விடாக் கண்டன்’ பேச்சுக்காகத் தட்டி கொடுத்தார். ஒருவர், “எவ்வூர்ப் பயணம்?” என்று கேட்டார். “தஞ்சாவூர்ப் பயணம்” என்று கூறித் தஞ்சாவூர் சென்றவர் அங்கேயே இறந்தார். (தன்+சாவு+ஊர்ப்பயணம்) சமய ஒற்றுமையும், தமிழின் பெருமையும் போற்றிய மகமதியர் மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் ஆவார்! செய்குத்தம்பிப் பாவலர் செய்குத்தம்பிப் பாவலர் இயற்பெயர் : செய்குத் தம்பி சிறப்புப்பெயர் : தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் பெற்றோர் : ஆமினா, பக்கீர் மீரான் சாகிபு பிறந்த நாள் : 31-07-1874 மறைந்த நாள் : 13-02-1950 பிறந்த ஊர் நாகர்கோயில்(கோட்டாறு) அ ரு கி ல் இலங்கடை பணி : அச்சகத்தில் பிழை திருத்துநர், கவனகர், பேச்சாளர், நூல் விற்பனையாளர், தமிழ் கற்பிப்பவர். படைப்புகள் : குதர்க்காரண்ய நாச மகாபரசு, திருக் கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி, வள்ளல் சம்சுத்தாதீன் கோவை, காரைக்குடி அழகப்பர் கோவை, நபிகள் நாயக மான்மியமஞ்சரி, நாகைக் கோவை, திருநாகூர் திரிபந்தாதி, கீழக்கரை கல்வத்துநாயகம் இன்னிசைப் பாமாலை, சீறாப்புராண உரை இதழாசிரியர் : எதார்த்தவாதி, இசுலாமியமித்திரன் 3. மருத்துவம் பார்த்த இசைஞானி! வடமொழிக்கு உட்பட்ட மொழி தமிழ் என்ற தவறான கருதுகோள் போல், வடநாட்டு இசைக்கு உட்பட்டது தென் னாட்டு இசை என்ற மயக்கம் அக்காலத்தே இருந்தது. வடநாட்டு (இந்துஸ்தானி) இசையிலிருந்து தென்னாட்டு (கருநாடக) இசை வேறுபட்டது என்று மீட்டெடுத்ததோடு, தமிழிசையே தென் னிசை (கருநாடக இசை)யின் தாய் என்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நிறுவினார். பள்ளிப்பருவத்தே சடையாண்டிப் பத்தர் என்பவரிடம் இசை கற்றுத் தேர்ந்திருந்த ஆபிரகாம் தாமே பாடல்கள் இயற்றி இசையோடு பாடினார். திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பயின்று அங்குள்ள மாதிரிப் பள்ளியிலேயே ஆசிரிய ராகப் பணியாற்றினார். சித்த மருத்துவத்தையும் தொண்டாகச் செய்து வந்தார். பண்டுவர் ஞானமுத்து என்ற நண்ப ரின் அழை ப்பின் n ப ரி ல் தஞ்சாவூர் சென்று, நேப்பியர் சீமாட்டி பெண்கள் பள்ளியில் ஆபிரகாம் தமிழாசிரியர் ஆனார். அவர் மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனார். பள்ளியை நடத் திய அருள்மிகு பிளேக் கு பெரும கனா ர் இலண்டன் சென்றதால் ஆபிரகாமும் அவர் மனைவியும் பள்ளியிலிருந்து விலகினர். ஆபிரகாம் தாம் செய்து வந்த மருத்துவத் தொண்டில் முழுதும் இறங்கினார். மருத்துவ மறைப்புகளை (இரகசியங் களை)த் தமக்குக் கற்றுக் கொடுத்த துறவி சுருளிமலை கருணா னந்தர் பெயரில் மருத்துவமனை தொடங்கி மருத்துவத்தில் புகழ் பெற்றார். இதனால் மக்கள் அவரை ஆபிரகாம் பண்டிதர் என்றே அழைக்கலாயினர். (பண்டுவர் : மருத்துவர்) பண்டிதரின் மனைவி பொன்னம்மாள் 1911-இல் இறந்தார். எனவே, கோயில் பாக்கியத்தம்மாளை மணந்தார். அப் பெண்மணி பண்டிதரின் இசை ஆராய்ச்சிக்கும் மருத்துவப் பணிகளுக்கும் உதவி புரிந்தார். கொள்ளை (காலரா) நோயால் கொள்ளை கொள்ளை யாய் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் பலியானபோது, பெற்ற பிள்ளைகள் பதின்மூன்றில் பதினொரு பிள்ளைகள் இறந்ததால் மிஞ்சிய இருபிள்ளைகளுடன் கிறித்துவை நாடி மன அமைதி பெற்றவர்தான் ஆபிரகாம்பண்டிதரின் தாத்தா. கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார் பண்டிதர். பண்டிதர் செய்து அளித்து வந்த குழந்தைகளுக்கான மருந்துகள் (கத்தூரி, கோரோசனை) வெளி ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பரவின. மூலிகைகள் அனைத்தையும் பயிரிடும் நோக்கத்துடன் ‘கருணானந்தபுரம்’ எனப் பெரிய வேளாண் பண்ணையை ஏற்படுத்தினார். மூலிகைகளையும் பலவகை மரம், செடி கொடிகளையும் உருவாக்கினார். எரிபொருள் வளம் குறைந்து அணுமின்சக்திக்கு அஞ்சி, மின்சக்தி போதாமல் காற்றாலைகளை ஏற்படுத்தலாமா என்று எண்ணிப்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அக்காலத்திலேயே மிகப்பெரிய காற்றாலைகளை அமைத்துத் தம் தோட்டத்துக்கு நீர் இறைக்கச் செய்தவர் பண்டிதர். வயல்கள், பழத்தோட் டங்கள், பூத்தோட்டங்கள், மாந்தோப்பு, தென்னந் தோப்பு, கா ய்கறித் தோட்டம் ஆகி யவற்றையு ம் ஆட்டு ப் பண்ணை, மாட்டுப்பண்ணை, பட்டுப்பூச்சிப் பண்ணை முதலியவற்றையும் அமைத்தார். வேளாண்மையிலும் தோட்டக்கலையிலும் புதிய புதிய அறிவியல் தொழில் நுட்பங்களைத் தாமே கண்டுபிடித்துச் செயற்படுத்தினார் பண்டிதர். பதினைந்து அடி உயரம் வரை வளரக்கூடிய ‘இராச கரும்பு’ என்னும் புதிய வகைக் கரும் பினையும், புதிய கலப்பினச் சோளத்தையும் கண்டுபிடித்தார். இவற்றை நேரில் வந்து பார்த்துப் பாராட்டிய சென்னை ஆளுநர் சர் ஆர்தர்லாலி 1909-இல் ‘இராவ் சாகிப்’ என்ற பட்டம் வழங்கினார். பண்டிதர் மின்விசையால் இயங்கும் முதல் அச்ச கத்தைத் தஞ்சையில் 1912-இல் அமைத்து அதற்கு ஆளுநர் ‘லாலி’ பெயரை இட்டார். இந்த அச்சகத்திற்கு ஒன்பது குதிரை ஆற்றல் உள்ள வளியுந்துக் கருவி (கேஸ் என்ஜின்) அமைத்து அதிலிருந்து மின்விசை ஆக்கப்பெற்றது. இதன் ஆற்றலில் மின்விளக்குகளும் அச்சுக் கருவிகளும் இயங்கின. இசை, மருத்துவம் என்ற இரண்டிலும் தலை சிறந்து விளங்கிய பண்டிதர், வேளாண்மை, தோட்டக்கலை, காற்றாலை, அச்சகம், ஒளிப்படக்கலை என அறிவியல் தொழில்நுட்பத் துறைகளிலும் தேர்ந்து விளங்கினார். செல்வச்செழிப்பில் மிதந்த ஆபிரகாம் பண்டிதர் மிகப் பெரிய குதிரை வண்டியில் (சாரட்டில்) சென்றார். புலவர்களும், இசைக் கலைஞர்களும் அவர் வீட்டுக்கு வந்து வெந்நீர்க் குளிய லும், பன்னீர்த் தெளியலும், விருந்தும் பரிசுகளும் பெற்றுச் சென்றனர். தஞ்சையில் தோன்றிய கதைப்பொழிவை (கதாகாலட் சேபம்) வளர்த்தெடுத்த அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவத ரும், இலாவணியில் தேர்ந்தவரும் 14 மொழிகளில் நினைத்த வுடன் ஆசுகவி படைக்கக் கூடியவரும் ஆகிய தஞ்சை சித்திரகவி சிவராவும் பண்டிதரால் போற்றி வளர்க்கப்பட்டவர்கள் ஆவர். தமிழ் இசை பண்டிதர் தஞ்சாவூரில் ‘சங்கீத வித்யா மகா ஜன சங்கம்’ என அமைத்து, 1912 முதல் 1916 வரை ஏழு இசை மாநாடுகளைத் தம் சொந்தச் செலவில் நடத்தினார். பரோடாவில் 1916 மார்ச்சு மாதம் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டில் கலந்து கொண்டு பண்டிதர் தமிழிசையின் மேன்மையை நிலை நாட்டினார். பின்னர் தஞ்சையில் 1916 ஆகத்து மாதம் 19, 20 ஆகிய இரண்டு நாளும் மிகப் பெரிய இசை மாநாட்டைக் கூட்டினார். ஆபிரகாம் பண்டிதரின் உரையின் போது, செயல்விளக்கமாக அவருடைய நான்காம் மகள் மரகதவல்லி துரைப்பாண்டியன் பாடியும், ஏழாம் மகள் கனகவல்லி நவமணி வீணையில் வாசித் தும் நிறுவினர். மூன்று அமர்வுகளில் அவரது உரை முடிவுகளை அலசி அறிஞர்கள் ஏற்றனர். மாநாட்டுத் தலைவர் பரோடா சிற்றரசின் ஆளுநர் (திவான்) வி.பி.மாதவராவ், பண்டிதரின் ஆய்வு முடிவுகள் சரியானவை என்று தீர்ப்பளித்தார். பண்கள், அலகுகள் (சுரங்கள்) பற்றி மாநாட்டில் தாம் நிறுவிய ஆய்வு முடிவுகள், யாழின் அமைப்பு, தமிழ்ப்பண்கள் வடமொழிப் பெயரிடப் பெற்றுக் கருநாடக இசை எனத் தவறாக வழங்கப்படும் நிலை போன்றவற்றை விளக்கி 1917-இல் 1200 பக்கம் கொண்ட ‘கருணாமிருத சாகரம்’ என்ற ஆரய்ச்சி நூலைத் தாமே வெளியிட்டார். பண்டிதர் பழந் தமிழிசையில் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோவைப்பாலை, சதுரப் பாலை என்ற நான்கு இசைமுறைகள் இருந்தன என்று வகைப் படுத்திச் சூத்திரங்களின் சான்றுகளோடு முதன்முதல் நிறுவி னார். சாரங்கதேவர் 22 அலகுகள் எனச் சிலப்பதிகார வழி நிறுவினார் பண்டிதர். முதற்பண் ஆகிய செம்பாலைப்பண் என்பது சங்கராபரணம் என்று பண்டிதர் நிறுவியது உலக இசையில் பழந்தமிழிசைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி யாகும் என்று முனைவர் சேலம் ஜெயலட்சுமி கூறுவார். ‘தமிழிசையின் முன்மையையும், தாய்மையை யும் நிறுவியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரே’ என்று பாரட்டுவார் தேவநேயப் பாவாணர். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இயற்பெயர் : ஆபிரகாம் சிறப்புப் பெயர் : தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், இராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் பெற்றோர் : அன்னம்மாள், முத்துசாமி நாடார் பிறந்த நாள் : 02-08-1859 மறைந்த நாள் : 31-08-1919 பிறந்த ஊர் : நெல்லை மா.தென்காசி அருகில் சாம்பவர்வடகரை கல்வி : பன்றிக்குளம், சுரண்டை : பள்ளிக்கல்வி; திண்டுக்கல், நார்மல் ஆசிரியப் பயிற்சிப்பள்ளி. பணி : ஆசிரியர், திருலாபுரம் பள்ளி (1870-72) திண்டுக்கல் நார்மல் மாதிரிப் பள்ளி தமிழாசிரியர், தஞ்சை நேப்பியர் சீமாட்டி பெண்கள் பள்ளி (1884-90), கருணானந்தர் மருத்துவச்சாலை, சங்கீத வித்யாமகாஜன சங்கம். படைப்புகள் : கருணாமிருத சாகரத் திரட்டு(96 கீர்த்தனைகள், 1907) கருணாமிருத சாகரம் - முதல் புத்தகம் (1200 பக்கம், 1917) க ரு ணாமி ரு த சாகரம் - இ ர ண் டாம் புத்தகம் (256 பக்கம், 1946) நன்மறை காட்டு நன்னெறி (கிறித்துவ சமயநூல்) பிற : அச்சுக்கலை, ஒளிப்படக்கலை, தோட்டக் கலை, வானியல், கணியம் (சோதிடம்) - வல்லுநர், இசைஞானி. 4. நீதி வழங்கிய புதினத்தந்தை! வேதநாயகர், திருச்சிராப்பள்ளியில் 1948-இல் மாவட்ட நீதிமன்றப் பத்திரப் பாதுகாப்பாளராகப் பணி செய்து கொண் டிருந்தார். ஆவணங்கள் சரிவர அனுப்பப்படவில்லை என்று தவறாகக் கருதி வேதநாயகரைப் பணிநீக்கம் செய்தனர். வேலை இழந்து உடல் நலம் குன்றியிருந்த அவரைப் பாம்பு தீண்டியது. சிறிது நலம்பெற்று மாட்டுவண்டியில் சென்ற பொழுது வண்டி குடை சாய்ந்தது. வண்டிமாடு இறந்தது. வேதநாயகரின் தந்தையார் இறந்தார். அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்தாலும் இறைவனை வழிபட்டு மனத்தைத் தேற்றிக் கொண்டார். வேத நாயகரின் மேல் தவறில்லை என்பதை அறிந்த அரசினர் மீண்டும் வேலை தந்தனர். திருச்சிராப்பள்ளியில் இருந்த காலத்தே பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றவர் வேதநாயகர். வேதநாயகர் 31-ஆம் அகவையிலேயே (வயதிலேயே) அறமன்றத் தலைவர் (முனிசீபு) ஆனார். நடுவுநிலைமையுடன் பணியாற்றி ஏழை எளியவரிடம் பண்புடன் பழகியவர் வேதநாயகர். நீதித்துறையில் போலி யரையும், பொய் வழக்காடும் புரட்டர்களையும் கையூட்டு வாங்கும் கயவர்களையும் வேதநாயகர் வெறுத்து ஒதுக்கியதால் பகைவர்களும் எதிரிகளும் பெருகினர். எனவே வேலையை உதறிவிட்டுத் தமிழ் இலக்கியப் பணியும் மக்கள் தொண்டும் புரியலானார். பஞ்சம் ஏற்பட்டு (1876-1879) மக்கள் துன்புற்ற போது ஏழைகளுக்கு உதவக் கஞ்சித் தொட்டிகள் வைத்துக் கூழ் ஊற்றச் செய்தர்; மற்றவர் களிடமிருந்தும் தொண்டு அமைப்பு களிடமிருந்தும் உதவிகள் கிடைக்கச் செய்தார். மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவராகச் சிலகாலம் தொண்டு செய்தார். கையூட்டு (இலஞ்சம்) வாங்குவது தவறு என்பதை, “ஏதுக்கு வாங்குறீர் இலஞ்சம் - உமக்கு இதைவிட வேறுண்டோ பஞ்சம்? வாதுக்கு வீணே வழக்குரை பேசி வாங்குறீர் என்ன பிழைப்பது சீசீ!” என்று வெகுண்டு எழுதியுள்ளார். தமிழ் வழக்கு “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்” வந்துவிடக் கூடாது எனத் தமிழ்நாட்டில் தமிழர்களே தடுத்து வருகிற நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழிலும் வழக்காடலாம் என்பதை வழக்குத் தொடுத்தே தடுத்து விட்டார்கள் அல்லவா! 120 ஆண்டுகளுக்கு முன்னரே— “நியாயாதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலும் தமிழர்! மற்ற வக்கீல்களும் கட்சிக்காரர் முதலியவர்களும் தமிழர்கள்! இப்படியாக எல்லாரும் தமிழ் மயமாயிருக்க அந்த வக்கீல்கள் யாருக்குப் பிரீத்தியார்த்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை” என்று வேதநாயகர் எழுதியுள்ளார். கரிகாலன் காலத்திற்கு முன்னிருந்தே தமிழர்கள்... அறத்தில்... நீதியில்... தேர்ந்தவர்கள். ஆனால் சட்டத்தமிழ் நூல்கள் இல்லை என்று இன்று சிலர் கூறுகின்றனர். வேதநாயகர் 1801 முதல் 1861 வரை வந் த சட்டங்கள், வழ க் குகள், தீ ர்ப் பு கள் ஆகி யவற்றை த் தொகுத்து மொழிபெயர்த்துச் “சித்தாந்த சங்கிரகம்” என நூலாக வெளியிட்டார். தமது வழக்கு மன்றப் பட்டறிவையும் வாழ்வியல் உண்மை அறிவையும் கொண்டு ‘நீதிநூல்’ என்ற செய்யுள் இலக்கியம் படைத்தார். இந்நூலுக்கு இராம லிங்க அடிகளார் தந்த சாற்றுக் கவி ‘சென்னைப் பட்டணம் வித்துவான் சிறீ இராமலிங்கம் பிள்ளை எழுதியது’ என்று வெளி வந்துள்ளது. திருமணங்களில் பாடப்படும் நலுங்கு, ஊஞ்சல், இலாலிப் பாடல்களை இயற்றும் ஆற்றல் இளமையிலேயே வேதநாயக ருக்கு இருந்தது. தமிழில் இசைப்பாடல்கள் இல்லை என்ற குறையைப் போக்க நிறைய தமிழ்ச் சீர்த்தனைகள் (கீர்த்தனைகளை) எழுதிக் குவித்தார் வேதநாயகர். ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ பாடிய கோபாலகிருட்டிண பாரதியார் வேதநாயகரின் நண்பர் ஆவார். திருவருள் அந்தாதி, தேவதோத்திர மாலை முதலிய கிறித்தவ சமயப் பாடல்களைப் பாடியிருந்தாலும், வடலூர் இராமலிங்க அடிகளாரின் பொதுநிலைச்சமய (சமரச சன்மார்க்க) நெறிகொண்ட வேதநாயகர் ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’ எனப்பாடியுள்ளார். தமிழில் உரைநடைநூல்கள் இல்லை என்ற குறையைப் போக்க வேண்டும் என்ற முனைப்புடன் எழுதி 1879-இல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ வெளியிட்டார். இது தமிழ் நாட்டில் தோன்றிய முதல் புதினம் (நாவல்) ஆகும். எனவே ‘தமிழ்ப் புதினத்தின் தந்தை’ என்று வேதநாயகர் பாராட்டப் பெறு கிறார். 1887-இல் சுகுண சுந்தரி என்ற புதினமும் எழுதி வெளி யிட்டார். பெண்கள் முன்னேற்றம் இன்றி யமையாதது என்ற கருத்தைப் பரப்பி வந்த வேதநாயகர் ‘பெண்மதி மாலை’ என்ற செய்யுள் நூலைப் பெண்கல்வி, பெண் மானம் என்ற இரு கட்டுரைகளுடன் இணைத்து வெளியிட்டார். இவை பாரதியார், திரு.வி.க. ஆகியோரின் மாதர் முன்னேற்றம் பற்றிய கருத்துகளுக்கு முன்னோடி ஆகும். சீர்காழியில் வழக்கு மன்றத் தலைவராக இருந்தபோது பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ‘சீர்காழிக் கோவை’ அரங்கேற்ற உதவினார். இறைவனைப் புகழ்ந்து தலபுராணங்கள் பாடிய மகாவித்துவான் தம் மாணவரைப் புகழ்ந்து ‘குளத்தூர் வேதநாயகன் கோவை’ (1853) பாடியுள்ளார். இதேபோல் ‘பரனைப் பாடிய வாயால் நரனைப் பாடேன்’ என்ற கொள்கையுடைய கோபாலகிருட்டிண பாரதியார் “நீயே புருஷ மேரு” என்று வேதநாயகரைப் பாடினார். “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆமோ? - ஐய, நின் பெருமையை அளந்திடப் போமோ?” என்று கோபாலகிருட்டிண பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் வேதநாயகர். பாகவதர் சரவணபவானந்தர் ‘வேத நாயகம் பிள்ளை முத்தமிழ் வித்தகர்’ என்ற இசைப்பாடல் நூல் இயற்றியுள்ளார். புதுக்கோட்டையில் தலைமை நீதியரசராய் இருந்த யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை, சென்னை சுப்பராயலுச்செட்டியார், புதுவை சவரிராயலு நாயகர், பாளையங்கோட்டைக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த எ.ஆ. கிருட்டிணப்பிள்ளை முதலியோருடன் நெருங் கிய நட்பினராக விளங்கினார். பொதுநிலை உணர்வுடைய திருவாவடுதுறை மடத்தின் (ஆதினத்) தலைவர் சுப்பிரமணிய தேசிகருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1876-இல் மறைந்தபின் அவரது குடும்பம் ஏழைமையில் வாடிய போது, அவர் ம கன் சி த ம் பர ம்பிள்ளைக் கு வேலை கிடைத் திட உதவிகள் செய்தார். ‘ தமிழ் ப் புதினத் தின் த ந்தை ’ வேதநாயகர் புதினம் (புதுமை) செய்தவர். சட்ட நூல் தமிழில் தந்தார். சட்டத் தமிழ் இன்று வென்று உள்ளதா? தமிழிசை வளர்க்கச் சீர்த்தனைகள் பாடிக் குவித்தார்; சீர்தனைத் தந்தோமா? பொதுநெறி (சர்வ சமய சமரசம்), பெண்ணுரிமை பாடினார். அடைந்தோமா? தமிழ்வழிக் கல்வியில் என்ன செய்தோம்? இதோ, வேத நாயகரின் சுகுண சுந்தரி பேசுகிறாள்: ‘தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் வாழக் கூடாது; அவர்கள் எந்த ஊர் மொழியைப் படிக் கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால், தாய்மொழியைப் படிக்காமல் ஆங்கிலம் மட்டும் படிக்கிறவர்களை ஆங்கில நாட்டுக்கு அனுப்பி விடுவோம். பிரெஞ்சு மட்டும் படிப்பவர்களானால் பாரிசுப் ப ட் டணத் தி ற் கு அனுப்புவோம். இ ல த் தீனுக் கு ம் சமஸ்கிருதத்திற்கும் சொந்த ஊர் இல்லாத படியால் அந்த மொழிகளைப் படிப்பவர்களைப் பெயரில்லாத தீவுக்கு அனுப்புவோம்!’ சிந்திக்கத் தெரியாதவர்கள் மூடர்கள் என்றும் வேத நாயகர் பாடுவார். மயிலாடுதுறை வேதநாயகர் மயிலாடுதுறை வேதநாயகர் இயற்பெயர் : வேதநாயகம் சிறப்புப் பெயர் : குளத்தூர் வேதநாயகர், மாயூரம் முனிசீபு வேதநாயகம் பிள்ளை பெற்றோர் : ஆரோக்கிய மரி, சவரிமுத்துப் பிள்ளை பிறந்த நாள் : 11-10-1826 மறைந்த நாள் : 21-07-1889 ஊர் : திருச்சிராப்பள்ளி அருகில் குளத்தூர் கல்வி : உள்ளூர்த் தொடக்கப்பள்ளி திருச்சிராப்பள்ளி : தென்மாநில நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் தியாகப்பி ள்ளை வீட்டில் தங்கி அவரிடம் :ஆங்கிலக் கல்வி; ஆங்கிலப் பள்ளி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யிடம் தமிழ்க்கல்வி பணி : மாவட்ட நீதிமன்ற ஆவணப் பாதுகாப்பாளர், மொழிபெயர்ப்பாளர், திருச்சிராப்பள்ளி (1846-1856) மாவட்ட நீதிமன்றத் தலைவர் (முனிசீபு) தரங்க ம்பாடி (1856), சீர்காழி (1860), மயிலாடுதுறை (மாயூரம்) (1860-1872) மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர். படைப்புகள் : சித்தாந்த சங்கிரக ம் (சட்டத்தொகுப்பு) (1862), நீதிநூல் (செய்யுள்) (1859), திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதா அந்தாதி, பெரியநாயகி அம்மைப் பதிகம், (1873), தேவதோத்திர மாலை; ச த் தி ய வேத கீ ர் த் தனை; சோபனப் பாடல் கள், தனிப் பா ட ல் கள், ச ர்வச ம ய சமரசக் கீர்த்தனைகள் (1878), பெண்மதி மாலை ( 1 8 6 9 ) , பி ரதாப முதலியார் சரித்திரம் (புதினம்) (1876), சுகுண சுந்தரி (புதினம்) (1887) 5. கண்ணகி போற்றிய யாழ் “அம்மா!... இந்தக் கண்ணகிக் கோயிலுக்கு ஏன் அடிக்கடி அழைத்து வருகிறீர்கள்? நாம் சிவன் வழியினர்தானே?” “கண்ணே!... என் செல்வமே! நன்றாகக் கேட்டாயடா! அப்பன் சிவனை வழிபடும் மரபினர் என்றாலும் அன்னை சக்தியையும் தமிழ்மகன் முருகனையும் போற்றுகிறோமே! கண்ணகித்தாய் கற்பின் தெய்வம்; தமிழினத்தின் அடையாளம்!” “தாயே! நம் இலங்கையில் நிறைய கண்ணகிக் கோயில்கள் உள்ளன என்று என் கணக்காயர் (ஆசிரியர்) குஞ்சித்தம்பியார் கூறியுள்ளார்” “என் கண்மணியே! சேரன் செங்குட்டுவன் இமயமலையில் கல்லெடுத்துக் கனகவிசயர் தலையில் ஏற்றி வந்து தமிழ்நாட்டில் கம்பம் மலையில் கண்ணகிக்குக் கோயில் கட்டினார். அப்போது சேரரால் வெல்லப்பட்ட ஆரிய மன்னர், கொங்கணர், கலிங்கர், கொடுங்கருநாடர், வங்காளர், கங்கர், குடகர், கொங்கர், மாளுவர், உத்தர நாட்டினர் ஆகியோரும், சேரரின் நண்பர்கள் நூற்றுவர் கன்னரும் நம் இலங்கை மன்னர் கயவாகுவும் சென்ற னர். அவர்கள் தம் நாடுகளிலும் கண்ணகிக்குக் கோயில் கட்டி னர். நம் நாட்டிலும் கண்ணகிக் கோயில்கள் வந்தன.” - என்று கூறிய கண்ணம்மை தம் மகன் மயில்வாகனனை மடியில் அமர்த்திக் கொண்டார். இளமையிலேயே பாடல் இயற்றும் புலமை பெற்று விளங்கினார் மயில்வாகனன். ஆரிய திராவிட பாசாபிவிருத்தி சங்கம் என்று 1920-இல் மணிப்பாயில் தொடங்கித் தமிழ்ப் புலவர்களுக்கான படிப்பை அளித்தார். தம் நண்பர் திருவிளங்கம் இறந்ததால் மனம் உடைந்தார். இலங்கைக்கு வந்த இராமகிருட்டிண மடத்துத் துறவி சர்வானந்தர் நிலையாமையை உணர்த்தினார். மயில்வாகனன் சென்னை இராமகிருட்டிண மடத்தில் சேர்ந்தார். ‘பிரபோத சைதன்யர்’ என்று பெரியரிடப் பெற்று இளந்துறவியானார். முழுத்துறவு நிலை அடைந்து 1924-இல் விபுலானந்த அடிகளார் (சுவாமிகள்) எனப் பெயரிடப் பெற்றார். விபுலானந்தர் இலங்கைக்கு வந்து இராமகிருட்டிண மடத்தின் பள்ளிகளை வளர்த்தெடுத்தார். கல்லடி உப்போடை யில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக விளங்கியதோடு ஆரையம்பதி, ஆனைப்பந்தி, காரைத்தீவுப் பள்ளிகளையும் கவனித்து வந்தார். இலங்கைக்குச் சென்ற அண்ணாமலை அரசர் அழைத்த தனால், விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். சிலப்பதி காரம் பற்றியும் தமிழிசை பற்றியும் பேசியதுடன் இசை பற்றிய தம் அறிவை மேம்படுத்திக் கொள்ள கருநாடக இசையையும் கற்றார். இராமகிருட்டிண மடத்தில் கல்வித் தொண்டு புரிந்த வராதலால், தில்லை (சிதம்பரம்) சுற்றிலும் உள்ள ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிந்தார்; தில்லை அருகில் திருவேட்களச் சேரியில் இரவுப்பள்ளி நடத்தி அவர்களுக்குக் கற்பித்தார். சிங்களம், ஆங்கிலம், வங்காளம், அரபி, கிரேக்கம், இலத் தீன் முதலியமொழிகளிலும் திறம் பெற்றிருந்தார். குழந்தைப் பருவத்திலேயே அன்னை கண்ணம்மையாரிட மிருந்து கண்ணகி பற்றியும் சிலப்பதிகாரம் பற்றியும் தமிழர் வரலாறு பற்றியும் அறிந்திருந்த விபுலானந்தர், தென்கோடியி லிருந்து வடகோடி வரை - இலங்கை முதல் இமயம் வரை - சென்று தமிழின் பெருமையையும் தமிழின வரலாற்றின் பெருமையையும் அறிந்து கொள்ளவும் கற்பிக்கவும் சொற் பொழிவாற்றவும் செய்தார். “பள்ளியிற் பயிலும் தமிழ்ச்சிறார் முதல் பல்கலை கற்றுத் தேறிய முதுதமிழ்ப் புலவர் ஈறாக அனைவரும் தமிழ்க் குலத்தாரின் உண்மை வரலாற்றினை உளங் கொண்டு உணர்தற்கு வேண்டிய சிறியவும் பெரியவு மாகிய வரலாற்று நூல்கள் பல தமிழ்மொழியிலே எழுதப் படல் வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய தமிழ்த் தொண்டுகளுக்குள்ளே முதலில் வைத்து எண்ணுதற் குரியதென்பது எனது உள்ளக் கிடக்கை.” என்று விபுலானந்தர் எழுதியுள்ளார். காந்தி அண்ணல் 1927-இல் இலங்கைக்கு வந்தபோது கண்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றி னார். மேடைதோறும் சிலப்பதிகாரத்தின் சிறப்பு, பாரதியின் புகழ், காந்தியம், தீண்டாமை ஒழிப்பு, மனிதநேயம் ஆகிய வற்றையே பேசினார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் 1933-இல் நடந்த முத்தமிழ் மாநாட்டிலும் திருவண்ணாமலையில் 1935-இல் சைவ சித்தாந்த மாநாட்டிலும் தலைமையுரை ஆற்றினார்.சென்னை மாநிலத்தமிழ்ச் சங்கத்தினர் 20-09-1936-இல் நடத்திய தமிழ்க் கலைச் சொல்லாக்க மாநாட்டில் விபுலானந்தர் தலைமை ஏற்று வழிகட்டினார். யாழ்நூல் விபுலானந்தர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1936-இல் உ.வே.சாமிநாத அய்யர் தலைமையில் யாழ் பற்றிப் பேருரை செய்தார். அதனை நூலாக எழுதுமாறு உ.வே.சா. கேட்டுக் கொண்டார். அதன்படி விரிவாக எழுதலானார் விபுலானந்தர். புளியந்தீவுக் கோட்டைக்கும் கல்லடிப் பாலத்துக்கும் இடையே 48 கி.மீ நீளமுள்ள ஏரியில் மீன்கள் இன்னிசை பாடுவதுபோல் ஒலிவரும். இந்த அரிய மீன் இசையும் தாயிடம் அறிந்த சிலப்பதிகாரத்தில் ஆழக்கற்றுணர்ந்த இசைப் பேரறி வும் ‘யாழ்நூல்’ என விரிவாக எழுதச் செய்தன. இராம கிருட்டிண மடத்தின் தொண்டிலும் கல்விப் பணியிலும் தம் ஊதியத்தைச் செலவு செய்திருந்த விபுலானந்தர், 14 ஆண்டுகள் உழைத்து யாழ்நூலை எழுதி முடித்தபின் அதனை அச்சிடப் பணம் இல்லாமல் வருந்திக் கொண்டிருந்தார். கடும் காய்ச்சலில் கிடந்தபோது “யாழ் நூலை அச்சில் பார்த்து விட்டால் நான் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வேன்” என்றார். விபுலானந்தர் இமயமலைச் சாரலில் இராமகிருட்டிண மடத்தின் கிளையில் சில காலம் தொண்டு புரிந்தார். உலகப் போர் நெருக்கடி சூழ்ந்த நிலையில் கல்கத்தாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கல்கத்தாவிலிருந்து புத்தக வெளியீட்டுக்காக விபுலானந் தரைக் கோனூர் சமீன்தார் வரவழைத்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கப் புரவலர் கோனூர் சமீன்தார் நற்சாந்துப்பட்டி பெ.ராம .ராம.சித. சிதம்பரம் செட்டியாரின் பொருளுதவியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ‘யாழ்நூல்’ அச்சாகியது. திருக்கொள்ளம் பூதூர்க் கோயிலில் 05-06-1947 அன்று யாழ்நூல் அரங்கேறியது. யாழ், வீணை ஆகியவற்றையும் யானை மேல் யாழ்நூலையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரா.பி.சேதுப் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கரந்தைக் கவியரசு வேங்கடா சலம் பிள்ளை, அவிநாசிலிங்கம் செட்டியார் எனப் பேரறிஞர் பலர் அரங்கேற்றத்துக்கு வந்தனர். தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் “கருணாமிருத சாகரம்” என்னும் இசைப் பெருநூலை அடுத்து விபுலானந்தரின் ‘யாழ் நூல்’ தமிழிசையின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றியது. கரியமேனியும் காவிஉடையும் கொண்ட விபுலானந்த அடிகள், துறவி என்றாலும் தமிழ் இனப்பற்று மிகுந்தவர். பாரதியாரின் படத்தைப் பார்த்த ஒரு செல்வந்தர், “யார் இந்தத் தலைப்பாக் கட்டு ஆள்?” என்று கேட்டார். “இவரைத் தெரியாதவன் தமிழன் இல்லை! பெருங்கவிஞன் பாரதியைத் தெரியாதவன் தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்” என்று விபுலானந்தர் வெகுண்டார். ஒவ்வொரு தமிழனும் தமிழின் பெருமையையும் தமிழிசை யின் உயர்வையும் தமிழினத்தின் சிறப்பையும் தமிழக வரலாற் றின் தொன்மையையும் உணர வேண்டும் என்று உழைத்தவர் விபுலானந்த அடிகள். யாழ்ப்பாணம் சிவானந்தர் பாடசாலையில் உள்ள இவரது கல்லறையின் மேல் பொறிக்கப்பட்டுள்ள இவர் இயற்றிய பாடல் : “வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடி இணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” விபுலானந்த அடிகளார் விபுலானந்த அடிகளார் இயற்பெயர் : மயில்வாகனன் சிறப்புப்பெயர் : பிரபோத சைதன்யர், விபுலானந்தர், சுவாமி விபுலானந்தர், விபுலானந்த அடிகள் பெற்றோர் : கண்ணம்மை, சாமித்தம்பி பிறந்த நாள் : 29-03-1892 மறைந்த நாள் : 03-07-1947 ஊர் : இலங்கை, மட்டக்களப்பு அருகில் காரைத் தீவு, காரேறு கல்வி : குஞ்சித்தம்பி, வசந்தராசப்பிள்ளை, சிவ குருநாதப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ்க் கல்வி, கைலாசப்பிள்ளையிடம் சிலப்பதி காரம் , ம ட் ட க் க ள ப் பு தூய மைக்கேல் பள்ளியில் பள்ளிப்படிப்பு, பின் அறிவியல் பட்டம், பொறியியல் பட்டயம் (1916), ஆசிரியப்பயிற்சி (1917), மதுரைத் தமிழ்ச் சங்கப் ‘பண்டிதம்’ (1930), அண்ணா மலைப் பல் கலை க் க ழ க த்தில் ( 1 91 6 ) பொன்னையாப் பிள்ளையிடம் கருநாடக இசை (1931-1937). பணி : அறிவியல் ஆசிரியர், தூய மைக்கேல் பள்ளி, மட்டக்களப்பு (1913-1914, 1917-1918); த லை மைஆசி ரி ய ர் , இ ந் து க் கல்லூரி , மணிப்பாய் (1918-1920); இராம கிருட்டிண ம ட த் து ப் பள்ளி, க ல் ல டி (1925-1930); தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலை க் க ழ க ம் , தில்லை (சிதம்பரம்)(1931-37) த மி ழ் த் துறைத் தலைவர், இ லங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்(1943-1949) படைப்புகள் : விவேகானந்த ஞானதீ பம், க ர்மாயாக ம், ஞானயோகம், ந ம் ம வ ர் நாட் டு ஞா ன வாழ்க்கை, விவேகானந்தர் சம்பாசனைகள், கீதாஞ்சலி (தாகூர் நூலின் மொழி பெயர்ப்பு), பாவலர் விருந்து (பிளேட்டோ நூலின் மொழிபெயர்ப்பு), மதங்க சூளா மணி (நாடக இலக்கணம்), யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூல் (1947) இதழாசிரியர் : இராமகிருஷ்ண விஜயம் (தமிழ் இதழ்)(1924-25) வேதாந்த கேசரி (ஆங்கில இதழ்) (1924-25) பிரபுத்தபாரதா (ஆங்கில இதழ்) (1937-1942) 6. அரிசி வாங்கி அச்சகம் யாழ்ப்பாணத்து நல்லூர். கி.பி.1830. பனை ஏட்டில் புலவர் கந்தப்பிள்ளை நாடகம் எழுதிக் கொண்டிருந்தார்; எழுத்தாணி பிடித்தபடி இறந்தார். இளைய மகன் ஒன்பது அகவை (வயது) உடைய ஆறுமுகம் மீதி நாடகத்தை எழுதி முடித்தார். தாம் படித்த பள்ளியிலேயே 16 அகவையில் ஆசிரியப் பணியேற்ற துடன், தமக்கு ஆங்கிலம் கற்பித்த பீட்டர் பெர்சிவல் குருமார் (பாதிரியார்) தமிழ்த்திறமை பெற விரும்பியதால் அவருக்கு முறையாகத் தமிழைக் கற்பித்தார். இவரிடம் நன்கு தமிழ் கற்றபின் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பெர்சிவல் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். பெர்சிவல் செய்து வந்த மறைநூல் (விவிலியம்) மொழி பெயர்ப்பில் துணையாக இருந்து நிறைவு செய்தார். சென்னை அமெரிக்கக் கிறித்துவச் சங்கம் ஓர் மொழிபெயர்ப்பு செய்து வைத்திருந்தது. மழவை மகாலிங்கையர் ஆறுமுகம் செய்த மொழி பெயர்ப்பே சிறந்தது என்று மதிப்பிட்டார். எனவே பெர்சிவலுடன் சென்னை வந்து தங்கி மொழி பெயர்ப்பை அச்சேற்றும் பணியிலும் ஆறுமுகம் உதவினார். சிவநெறி காட்டி சென்னை வந்து திரும்பியதும் நாவலர் வாழ்வில் திருப்பு முனை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் (சென்னையில்) கால் வைத் தது தன் தாய்நாட்டில் தாய் வீட்டில் தாயின் கருவறையில் இருப்பதான உணர்வை அவருக்குத் தந்திருந்தது. அச்சுத் துறையிலும் கல்வித்துறையிலும் கிறித்துவர்கள் ஈடுபட்டுத் தம்சமயம் வளர்க்கும் பெருந்தொண்டை உணர்ந்தார்; தாமும் தம் சமயத்தை அவ்வாறே வளர்த்திடப் புத்துணர்வு பெற்றார். தம் வீட்டிலேயே சிவநெறி கற்பிக்கத் தொடங்கினார். மணிப்பாய் கிறித்துவக் குருமா ர் கள் சி வ ம தத்தை எதிர்த்துப் பரப்புரை (பிரசாரம்) செய்து வந்தனர். சிவ சமயப் பரப்புரையை மேற்கொள்வதற்காக ஆறுமுகம் துறவு ஏற்றார். கிறித்துவ நூல்கள் இதழ்கள் வெளியிட அச்சகம் இருப்பது போல், தாமும் அச்சகம் தொடங்க முடிவு செய்தார். சிவ மதத்தவர்களின் வீடுகளில் பானை வைத்து நாள்தோறும் கைப்பிடி அரிசி போடச் செய்தார். அதனைத் திரட்டிப் போது மான பணம் கிடைத்ததும் அச்சகம் தொடங்கினார். சிவநெறி பரப்பப் பள்ளியும் தொடங்கினார். அவரிடம் முன்பு வீட்டில் படித்தவர்களே ஊதியமின்றி ஆசிரியர்களாகப் பணியாற்ற முன் வந்தனர். யாழ்ப்பாணத்துச் சிவச் செல்வர்கள் உதவியால் பள்ளிகள் பெருகின. திருவாவடுதுறை மடத்தின் தலைவர் அம்பலவாண தேசிகர் ‘நாவலர்’ என்ற பட்டம் அளித்ததால் ‘ஆறுமுக நாவலர்’ எனப் பெற்றார். அவரது இனிய பேச்சைக் கேட்டுக் குடிகாரர்கள் திருந்தினர்; புலாலைக் கைவிட்டனர்; கோயி லுக்கே செல்லாதோர் கூட கோயிலுக்குச் செல்லத் தொடங்கினர். நாவலர் நான்கு மணிநேரம் கூட பேசுவார். “ஒழுக்கம் பற்றிப் பேசுகிறீர்! நீர் சொல்கிற அவ்வளவையும் அப்படியே பின்பற்றி நடக்கிறீரா?” என்று ஆறுமுகநாவலரிடம் சிலர் கடுமையாக வினாத் தொடுத்தனர். அதற்குச் சிரித்துக் கொண்டே, “நான் கைகாட்டி மரம். எந்த இடத்துக்கு எந்த ஊருக்குச் செல்லும் வழி என்று காட்டும். காட்டும் வழியில் அது போகிறதா?” - என்று விடையளித்தார் நாவலர். கள்குடிப்பதைக் கைவிட வழிசொல்கிறார் நாவலர், அதைச் செய்து காட்டவா முடியும்? இல்லறத்தார் சிவநெறியில் மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார், மற்றாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அவ்வளவும் செய்து காட்டவா முடியும்? நாவலர் பேச்சாலும் எழுத்தாலும் சிவநெறியும் தமிழ்அறிவும் ஊட்டி யவர். முன்னோடி தமிழ்நாட்டிலும் ஆறுமுக நாவலர் சிவநெறிப்பணியும் தமிழ்த் தொண்டும் புரிந்தார். சென்னையில் இவரிடம் தமிழ் கற்றுப் பலர் புலமை பெற்றனர். யாழ்ப்பாணத்துச் செல்வர்களும் திருவாவடுதுறை மடத்தின் தலைவரும், இராமநாதபுரம் சேது பதிகளும் பண உதவி புரிந்ததால் 39 நூல்கள் பனை ஏட்டிலிருந்து அச்சேற்றினார். இவ்வகையில் சி.வை.தாமோதரம் பிள்ளைக்கும் உ.வே.சாமிநாத அய்யருக்கும் முன்னோடி ஆவார். பாலவநத்தம் சமீன்தார் பொன்னுசாமித்தேவர் (பாண்டித்துரைத் தேவரின் தந்தை) உதவியால் திருக்குறள் பரிமேலழகர் உரையை (1861) அச்சிட்டார். பழந்தமிழ் இலக்கியங்கள், சிவநெறி நூல்கள், சிவ புராணங்கள் முதலியவற்றை அச்சிட்டு வெளியிட்டதோடு இலக்கண வினாவிடையும் நன்னூல் காண்டிகை உரையும் அவர் எழுதிவெளியிட்டதால் தமிழ்க்கல்விக்குப் பெரும் பயன் விளைந் தது. இவரது பெரிய புராண வசனம், கந்த புராண வசனம், திருவிளையாடற்புராண வசனம் முதலிய உரைநடை நூல்கள் தமிழ் உரைநடையை வளர்த்ததோடு, ஐரோப்பியக் கிறித்துவக் குருமார்களுக்கு இணையாக எழுதத் தொடங்கி, அவர்களை விட மேம்பட வளர்த்தெடுக்க முடியும் என்று காட்டின. அவர் களது கல்வித் தொண்டுக்கு இணையாக மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய பாடநூல்களைப் ‘பால பாடங்கள்’ என வெளியீட்டுக் கல்வித் துறையில் தமிழுக்கு இடத்தைப் பெற்றுத் தந்தார். மொட்டைத் தலை; பட்டை பட்டையாய்த் திருநீறு; தலையிலும் கழுத்திலும் உருத்திராக்க மாலை; இடுப்பில் வேட்டியும் அதன் மேல் இறுக்கிய துண்டும் இந்தக் கோலத்தில் ஆறுமுக நாவலர் சாட்சிக் கூண்டில் ஏறி நின்று ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினார். நீதிமன்றத் தலைவர் ஆங்கிலேயர். ‘பரதேசிகள் ஆங்கிலத்தில் பேசுவதா?’ என்று சீற்றம் கொண்ட அந்த ஆங்கிலேயர், தமிழில் பேசுமாறு கட்டளையிட்டார். தமிழில் சாட்சிகள் பேசினால் மொழி பெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் நீதிமன்றத் தலைவருக்குச் சொல்ல வேண்டும். (ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னும் தமிழ் நாட்டில் தமிழராகிய நீதிமன்றத் தலைவரிடமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி வழக்காடும் கொடுமை இன்றும் உள்ளதே!) நாவலர் தமிழில் சாட்சி கூறலானார்: “எல்லி எழ நானாழிப் போதின் வாய் ஆழி வரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி...” மொழிபெயர்ப்பாளர்கள் விழித்தனர். வேறு வழி யில்லாமல் அந்த ஆங்கிலேயர் நாவலரை ஆங்கிலேயத்திலேயே பேசச் சொன்னார். நாவலர் மறுத்ததால், அவரது பழந்தமிழ் இலக்கிய நடையை அவர் மாணவர் ஒருவர் எளிய தமிழில் எடுத்துச் சொன்னார் : “சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகைக்கு முன் கடற்கரை ஓரமாக நான் காற்று வாங்குவதற்காக நடந்து சென்றுவரப் புறப்பட்ட பொழுது...” பீட்டர் பெர்சிவல் குருமார் சென்னை வந்தார். கிறித்துவத் தொண்டு புரிந்ததோடு நாவலரிடம் கற்ற தமிழ் நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மாநிலக் கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். நாவலர் தம் சொற்பொழிவுகளில் கிறித்துவ மதத்தை குறைகூறிப் பேசுவது பற்றிக் கேட்டார். ‘நீங்கள் சிவ சமயத்தை - இந்து மதத்தை குறை கூறிப் பேசுவதில்லையா?’ என்று நாவலர் கேட்டதும் பெர்சிவல் அமைதியாகிவிட்டார். பெர்சிவல் 1855-இல் ‘தினவர்த்தமானி’ என்ற வார இதழைத் தொடங்கினார்; சி.வை.தாமோதரம் பிள்ளை 1856-இல் இவ்விதழின் ஆசிரியர் ஆனார். அவர் ‘தினவர்த்தமானி’ இதழில் “நாவலர்க்கு ஒப்பாரும் மிக்காரும் தமிழ்நாட்டில் எ வருமில்லை ” என்று பாராட்டி எழுதினா ர் . இதனா ல் ‘அருட்பா - மருட்பா’ போராட்டம் இன்னும் அதிகமாகியது. ஒரு தமிழன் புகழப்பட்டால் இன்னொரு தமிழனின் சிறப்பைக் கொண்டே சண்டையிட்டுக் கொள்வது தமிழ்நாட்டில் வழக்கம் தானே! வள்ளலாரின் அருட்பாக்கள் அருட்பாக்கள் அல்ல; மருட்பாக்கள் என்று எதிர்த்துப் பேசியும் வழக்கிட்டும் ஆறுமுக நாவலர், புகழ்பெற்றார். வள்ளலார் மேலோ அவர் பாடல்களின் மேலோ அவருக்கு வருத்தமில்லை; தாம் போற்றும் தேவார திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளே அருட்பாடல்கள் என்ற நம்பிக்கையால் வள்ளலாரின் பாடல்களை எதிர்த்துப் பேசி வந்தார். இதனால் அருட்பா இயக்கமும் வள்ளலாரின் கருத் துகளும் பரவின. வள்ளலார் போலவே ஆறுமுகநாவலரும் சென்னையின் தாக்கத்திற்கு உள்ளானார். சென்னை நகரத்தைத் தமிழ் மண் ணாகக் கண்டு மகிழ்ந்து தம் அண்ணனுக்கு எழுதிய மடலில் “இச்சென்னைப் பட்டினம் என்சென்ம பூமியிற் சிறந்தது” என்று எழுதினார்; அவரே சென்னைத் தின்மைகளுக்கு ஆளானபின் “பொருள் பணம் யாவும் கொடுத்தே இழந்தேன்” என்று மடல் எழுதினார். சென்னையை விடுத்துத் தில்லையில் (சிதம்பரத்தில்) தங்கிச் ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ தொடங்கி நடத்தி வந்தார். தமிழ் ஏற்றம் குன்றக்குடி திருவண்ணாமலை மடத்துக்கு நாவலர் சொற் பொழிவு செய்யப் போயிருந்தார். மடத்தின் தலைவர் கேட்டுக் கொண்டார்: “நாவலர் பெருமானே! தாங்கள் ஏறிவரப் பல்லக்கு அளித் திருக்கிறோம். இதோ! ஏறி அமர வேண்டுகிறோம்” “தம்பிரான் மன்னிக்க வேண்டும். நான் துறவி, மனிதர்கள் அதுவும் சிவ அன்பர்கள் தூக்கும் பல்லக்கில் ஏற மாட்டேன்.” “தமிழும் சைவமும் பல்லக்கு ஏற வேண்டுமா, வேண்டாமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.” திகைத்தார் நாவலர். தமிழ் மொழி இழிமொழி (நீசபாசை), தமிழில் வழிபடக் கூடாது என்று கூறிக் கொண்டு, தமிழ் வடமொழி இரண்டிலுமே அரைகுறைச் சாமியார்கள் பல்லக்கு ஏறும்போது தமிழ் பல்லக்கு ஏறக்கூடாதா? ‘உம்’ என்றார் நாவலர். பல்லக்கில் நாவலரை ஏற்றிக், கட்டியத்தடி, வாணத்தடி, கோணத்தடி, வெள்ளிக் கைப்பந்தி முதலிய சீர்களும் (விருது களும்) பெரிய மேளம் முதலிய இன்னிசை முழக்கங்களும் முன்னே செல்ல, பல்லக்கின் பின்னால் தம்பிரானும் சமற்கிருதச் சாத்திரிகளும் சென்றனர். திருக்குறள் வழி அறவோர் வழிப் பின் சென்றால்தான் தமிழினம் முன்னேறும். இலங்கை அரசு 1971-இல் இவருக்குத் ‘தேசியவீரர்’ எனப் பாராட்டு அளித்ததுடன் அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது. யாழ்ப்பாணத்தில் தனிநாயக அடிகளார் தலைமையில் நடந்த நான்காவது உலகத்தமிழ் மாநாட்டில் (1974) ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகளார், ஞானப் பிரகாச அடிகளார் ஆகியோர்க்குச் சிலைகள் வைக்கப்பெற்றன. (இம்மாநாட்டில் ஈப்பு வண்டிகளை ஏற்றிச் சிங்களக் காடையர்கள் தமிழரைக் கொன்றனர்; இன்று வரை கொன்று வருகின்றனர்.) “தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாது உஞற்றுங்கள்! அஃதொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு!” என்றார் ஆறுமுக நாவலர். ஆறுமுக நாவலர் ஆறுமுக நாவலர் இயற்பெயர் : ஆறுமுகம் சிறப்புப்பெயர் : யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், நாவலர் (திருவாவடுதுறை மடம் அளித்தது), வசன நடை கைவந்த வள்ளலார் (பரிதிமாற் கலைஞர் பாராட்டு), தமிழ் உரை நடையின் தந்தை. பெற்றோர் : சிவகாமி அம்மையார், புலவர் கந்தப்பிள்ளை பிறந்த நாள் : 18-02-1822 (சித்திரபானு, மார்கழி 5) மறைந்த நாள் : 05-12-1879 (பிரமாதி, கார்த்திகை, 21,மகம்.) ஊர் : யாழ்ப்பாணம் அருகில் நல்லூர் கல்வி : சுப்பிரமணியப் பிள்ளை, சரவணமுத்துப் புலவர், சேனாதிராய முதலியார் ஆகி யோரிடம் தமிழ்க்கல்வி ; ‘மெத்தடிஸ்ட் மிசன்’ பள்ளியில் பள்ளிப்படிப்பு பணி : ஆசிரியர், ‘மெத்தடிஸ்ட் மிசன்’ பள்ளி, யாழ்ப்பாணம். நிறுவனர் - சைவப் பிரகாச வித்தியா சாலை (இப்போது ஆறுமுக நாவலர் உயர் நிலைப் பள்ளி): வண்ணார் பண்ணை, கோப்பாய், கொழும்புத்துறை, பருத்தித்துறை, ஏழாலை, முல்லைத்தீவு (யாழ்),தி ல்லை ( சி த ம்ப ர ம்) வித்தியாநுபாலன யந்திரசாலை (அச்சகம்): வண்ணார் பண்ணை(யாழ்) , த ங் க ச்சாலை(சென்னை). மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நூல் வெளியீட்டாளர், கவிஞர், உரையாசிரியர், தமிழாசிரியர். படைப்புகள் : இயற்றியன 23, உரை 8, பதிப்பு 39, பாடல் 14 செய்யுள் : கதிர்காம சுவாமி கீர்த்தனைகள், தனிப்பாடல்கள் உரைநடை : போலியருட்பா மறுப் பு, சைவ தூடண பரிகாரம், சுப்பிரபோதம், சைவ பாலபாடம், இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை , சை வ வினா விடை , சூ சனம் ,சிவாலய தரிசன விதி, அனுட்டான விதி, க ந் த பு ராண வ சனம் , தி ருவிளை யாட ற்புராண வசனம். உரை : நன்னூல் காண்டிகை உரை, கோயில் புராண உரை, சிவ தருமோத்திர உரை, மருதூர் அந்தாதி உரை, திருச்செந்தில் நிரோட்ட கயமக அந்தாதி உரை, சைவ சமய நெறி உரை. மாணவர்கள் : கதிரைவேற்பிள்ளை, வடகோவை சபாபதி நாவலர், செந்திநாதையர், சாமி நாதையர், கந்தசாமிப்பிள்ளை, பொன்னம்பலப் பிள்ளை, சதாசிவப்பிள்ளை, காரைக் குடி சொக்கலிங்க ஐயா முதலியோர். 7. தமிழ் விருந்து தந்த ஏழை ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப் போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும் இளந் தொந்தியும் முழங்கால் வரை நீண்ட கைகளும் பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்தியிருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வர் எனத் தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர் களுக்குள்ள பூரிப்பு இல்லை. ஆழ்ந்து பரந்த கடல் அலை அடங்கி நிற்பதுபோல் அமைதியே தோன்றியது. ஆம்! வந்தவர் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை! தமிழ்ப் பேரறிஞர்களுக்கும் பெரும் பேராசிரியர் (மகா மகோ பாத்யாய) என்ற பட்டம் பெற்ற உ.வே.சாமிநாத அய்யருக்கும் ஆசிரியர்! கொங்குதேர் வாழ்க்கை தம்முடைய தந்தை மதுரைக் கணக்காயர் (ஆசிரியர்) சிதம்பரம் பிள்ளையிடமே திண்ணைக் கல்வி பயின்ற மீனாட்சி சுந்தரம், தாமாகவும் கற்றுத் தேர்ந்தார். எட்டு அகவை (வயது) யில் தந்தையுடன் ஒரு செல்வர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அவரது ஆசுகவி (உடனடியாகப் பாடும்) திறமை பற்றிக் கேள்விப் பட்டிருந்த செல்வர் நெல் என்ற சொல் கொடுத்துப் பாடச் சொன்னார். நெல்லுக்கும் மும்மூர்த்திக்கும் சிலேடை பாடினார் சிறுவர். செல்வர் மகிழ்ந்து பரிசாக ஒரு வண்டி நெல் புலவர் வீட்டுக்கு அனுப்பினார். மீனாட்சி சுந்தரம் தமிழ் அறிஞர்களைத் தேடிக் கண்டு வணங்கி வழிபட்டுக் கைகட்டி வாய்பொத்திச் செவிதிறந்து நெஞ்சமெல்லாம் அறிவால் நிறைந்தார். திருவாவடுதுறை மடத் தின் தலைவர் வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடமும், சென்னை சென்றிருந்தபோது தாண்டவராயத் தம்பிரான், எழும்பூர் திருவேங்கடாசல முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருவம்பலத்து இன்னமுதம் பிள்ளை, போரூர் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார், புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், மழவை மகாலிங்கையர் ஆகியோரிடம் பூக்கள் தோறும் சென்று தேன் உண்ணும் வண்டுபோல் பாடம் கேட்டுக் கொண்டார். குல்லை (கஞ்சா) வாங்கிக் கொடுத்துப் பிச்சைக்கார னிடமிருந்து தண்டியலங்காரம் என்னும் இலக்கணம் படித்தவர் மீனாட்சிசுந்தரம். திருவாவடுதுறையில் அம்பலவாண முனிவ ரிடம் பல நாள் அலைந்து கெஞ்சிக் கேட்டுக் ‘கம்பர் அந்தாதி’ படித்தார். உடனே அதைத் தம் மாணவர்களுக்குப் பாடம் சொன்னார். ‘ஒருமுறை கூறுவது நூறுமுறை படிப்பதற்குச் சமம்’ என்பார். எனினும் மாணவனின் ஆர்வத்தையும் அறி வாற்றலையும் அளந்தறிய அலைக்கழிப்பதும் அவர் வழக்கம். இப்படித்தான் உ.வே.சாமிநாத அய்யர் இளம் பருவத்தில் படிக்க வந்தபோது, உடனே தாம் பாடம் சொல்லாமல் தம் மாணவர் சவேரிநாதப்பிள்ளையைச் சொல்லித் தரச் செய்தார். கையில் ஏடு இல்லாமலே பாடம் நடத்துவார்; எல்லாம் அவர்க்கு மனப்பாடம். குளிக்கும் போதும், சாப்பிடும்போதும், நடக்கும்போதும், பயணம் செல்லும்போதும் எப்போதும் தம் மாணவர்களுக்குப் பாடம் சொல்வார். பலருடைய தமிழ்ப்பசி தீர்த்த இவருக்கு வறுமைப்பிணி இருந்தது. அமர்ந்து பாடம் சொல்ல நாற்காலி வேண்டும் என்று ஞானப்பிரகாசம் என்ற அன்பருக்குச் சீட்டுக்கவி அனுப்பினார். நாற்காலி இல்லை. நல்ல சாப்பாடு இல்லை. இருக்க நல்ல வீடில்லை. ஆனால் எப்போதும் தம் குருகுல மாணவர்களுக்கும் தமிழ் நாடிவரும் அன்பர்களுக்கும் தமிழ் விருந்து அளித்தார் பெரும்புலவர்; அவர் மனைவி காவேரி ஆச்சி, இருந்தால் விருந்தும் இல்லையென்றால் வெறும் சாப்பாடும் போட்டார். பெரும்புலவர் தம் மாணவர்களுடன் மடத்தில் வயிறாரச் சாப்பிட்டார். பின்னர் மாணவர்களிடம், “இன்று மடத்தில் சாப்பிட்டதால் நெய் கிடைத்தது” என்றார். ஓர் நாள் இரவு இலக்கியம் படித்துக் கண்ணீர் விட்டு அழுதார். வந்திருந்த ஒரு செல்வர் நூலைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, “அழாதீர்கள்! உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்” என்றார். உண்மையி லேயே அருணாசல முதலியார் என்ற அன்பர் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைத் தெற்குவீதியில் ஓர் மாடி வீட்டை இவருக்கு அளித்தார். விரல் ஒடித்த ஆசிரியர் பெரும் புலவர் தமிழிலக்கியம் படித்துக் கொண்டே இருந்தார்; படிப்பித்துக்கொண்டே இருந்தார்; படைத்துக் கொண்டே இருந்தார். புராணங்களும் சிற்றிலக்கியங்களும் பாடிக்குவித்தார். சிவப்பிரகாசர் திருவண்ணாமலையை ஒரு முறை வலம் வருவதற்குள் 100 பாடல்களைக் கொண்ட ‘சோண சைல மாலை’ பாடினாராம். அதேபோல் ஒரே மூச்சில் 100 பாடல்களைப் பாடக் கூடியவர் பெரும்புலவர். புதிய மாணவன் கோபாலப் பிள்ளை “நான் எழுதும் விரைவுக்கு உங்கள் ஆசிரியரால் பாடல் சொல்ல முடியாது” என்று கூறிக் கொண்டிருந்தான். இது காதில் விழுந்ததால் மறுநாள் காலையில் பெரும்புலவர் அவனைக் கூப்பிட்டு ஏட்டில் எழுத்தாணியால் எழுதச் சொல்லிவிட்டுப் பாடல்கள் கூறலானார்; சொல்லிக் கொண்டே இருந்தார். மாணவன் கைவிரல்களில் குருதி (இரத்தம்) கட்டிப் போயிற்று. தாங்க முடியாமல், “அய்யா, மன்னியுங்கள். எழுத முடியவில்லை” என்று காலில் விழுந்தான். கீழ்சாதிக்காரன் என்று அறிந்ததும் தன்னிடம் வில்வித்தை கற்ற மாணவன் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியது சாதிவெறி! மாணவனின் கை ஒடிய எழுத வைத்து ஆணவத்தை ஓட வைத்தது தமிழ் நெறி! விறல் தந்த ஆசிரியர் பெரும்புலவர் தாம் வறுமையில் வாடினாலும் மாணவர் களைத் தமிழ்ச் செல்வர் ஆக்கினார். வெங்காலூர் (பெங்களூர்) சென்று வல்லூர்த் தேவராசப் பிள்ளைக்குத் தமிழ் கற்பித்தார்; அவர் கவிபாடும் திறமை(விறல்) பெற்றுக் ‘குசேலோ பாக்கி யானம்’ பாடினார். தம் மாணவர் மயிலாடுதுறை வேதநாயகர் மேல் ‘குளத்தூர் வேதநாயகன் கோவை’ பாடிப் பெருமை செய்தார். பண்டாரங்கள் சிலர் பெரும்புலவரிடம் பாடல் வாங்கி மடத்தில் பாடிப் பரிசில் பெற்றனர்; பாடல்களின் அமைப்பைக் கொண்டு அவை பெரும்புலவர் இயற்றியவை என்று தெரிந்தாலும் பரிசு வழங்குவாராம் மடத்தின் தலைவர். திருவனந்தபுரம் அரசர் கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரிய ராகப் பணியாற்றப் பெரும்புலவரை அழைத்தனர்; மறுத்துக் கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த தம் மாணவர் சாமிநாத தேசிகரை அனுப்பினார்; கும்ப கோணம் கல்லூரியில், தம் இன்னொரு மாணவர் தியாகராச செட்டியாரைத் தமிழ்ப் பேராசிரியராக அமரச் செய்தார் பெரும்புலவர். வேங்கடராமன் (திருமாலின் பெயர்) என்ற மாணவன் பெயரைச் சாமிநாதன் எனச் சிவப் பெயராக மாற்றினார். அந்த மாணவன்தான். உ.வே.சாமிநாத அய்யர். திருமால் (விண்ணு) புராணம் பாட மறுத்த வீரசைவப் பற்றாளர் பெரும்புலவர் ஆவார். கும்பகோணத்தில் இவரது குடந்தைப் புராணம் அரங் கேறியபோது நூலை யானை மேல் வைத்துப் பெரும்புலவரைப் பல்லக்கில் ஏற்றிவந்தார்கள். தமிழை, தமிழ் அறிஞரை மதித்துப் போற்றுவதால் நாம் உயரலாம்; நாடும் உயரும். சாந்துணையும் தமிழ் பெரும்புலவரின் உயிர் நீங்கும் தறுவாயில் அவருடைய மாணவர்கள் சுற்றிச் சூழ்ந்து நின்றனர். பெரும்புலவர் உ.வே. சாமிநாதரைத் திருவாசகம் படிக்கச் சொன்னார். சிவ நெறியாளர்கள் திருவாசகத்தைப் படிக்கக் கேட்டவாறே உயிர் நீப்பது சிறப்பு எனக் கருதுவர். பெரும்புலவரிடமிருந்து அரிய தமிழ் இலக்கண இலக்கிய அறிவையும் ஆற்றலையும் நுணுக்கத் தையும் பெற்ற தலைமாணாக்கர் உ.வே.சா. ஆவார். தம் ஆசிரியர் சாகப்போகும் நிலையிலும் அய்யம் கேட்டு விளக்கம் பெற்றார் உ.வே.சா. திருவாசகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது அதில்வரும் ‘நொந்த கன்றாய்’ என்பது புரியவில்லை. நொந்து அகன்றாய், நொந்த கன்றாய் என எப்படிப் பிரித்து என்ன பொருள் கொள்வது எனப் புரியாமல் படிக்கத் தடுமாறினார். பெரும் புலவர் விளக்கத் தொடங்கினார் : “தாய்ப்பசுவால் உதைத்துத் ‘தனியே வாழக்கற்றுக் கொள்’ என்று அனுப்பப் பெறும் கன்றின் நொந்த மனம்.....” ஆசிரியர் சாம்போதும் தமிழ் படிப்பித்துக் கொண்டிருந் தார். ஆசிரியர் சாந்துணையும் (சாகும் வரையிலும்) தமிழ் படித்த மாணவர்கள். நொந்த கன்றாய்’க் கண்ணீர் சிந்திக் கதறினார்கள். பெரும்புலவரின் ஊனோடும் உயிரோடும் கலந்து உவட்டாமல் இனித்த தமிழ் இயற்கையோடு பெரும்புலவரின் உயிர் கலந்து விட்டது. பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்பெயர் : மீனாட்சிசுந்தரம் சிறப்புப்பெயர்கள் : திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மகாவித்துவான் (திரு வாவடுதுறை மடம் அளித்தது), பத்துக் கம்பன், 19ஆம் நூற் றாண்டின் கம்பன்,தமிழ்க்காளிதாசன், நிமிடகவி, கவிக்கங்கை. பெற்றோர் : அன்னத்தாச்சி, புலவர் சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள் : 06-04-1815 மறைந்த நாள் : 01-02-1876 பிறந்த ஊர் : திருச்சிராப்பள்ளி (திரிசிரபுரம்) அருகில் எண்ணெய்க் கிராமம்(எண்ணெய் மகாணம்) வாழ்ந்த ஊர்கள் : திருச்சிராப்பள்ளி அருகில் அதவத்தூர், சோமரச ம்பேட்டை , திருச் சி ராப்பள்ளி மலைக்கோட்டை தெற்குவீதி, திருவாவடுதுறை, மயிலாடுதுறை பணி : திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவர், ஊர்தோறும் சென்று (தலபுராணம்) பாடுதல். மாணவர்கள் : பு ல வர் கொட்டையூர் ச் சிவக்கொழுந்துதேசிகரின் மகன் சாமிநாத தேசிகர், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், தியாகராசச் செட்டியார், சதாவதானி சுப்பராயச்செட்டியார், மயிலாடுதுறை வேதநாயகர்,நாகூர்க் குலாம்காதிர் நாவலர், வல்லூர்த்தேவராசப் பிள்ளை, வெ. சவராயலுநாயகர். படைப்புகள் தலபுராணம் : 1. அம்பர்ப் புராணம் 2. ஆற்றூர்ப் புராணம் 3 உறையூ ர் ப் பு ராணம் 4 . கண்டதேவி ப்புராணம் 5. குறுக்கைப் புராணம் 6. கோயிலூர் புரணம் 7. சூரை மாநகர்ப் புராணம் 8.தனியூர்ப் புராணம் 9. குடந்தைப் புராணம் 10.திருத்துருத்திப் புராணம் 11. திருநாகைக் காரோணப் புராணம் 12. திருப்பெருந்துறைப் புராணம் 13. திருமயிலைப் புராணம் 14. திருவரன் குளப் புராணம் 15. பட்டீச்சரப் புராணம் 1 6 . ம ண் ணி ப் ப டி க் கரைப் புராணம் 17. மாயூரப் புராணம் 18. வாளொளிப் புற்றூர் ப்புராணம் 19. விளத் தொட்டிப் புராணம் 20. வீரவனப் புராணம் 21. சிறீகாசி ரகசியம் 22.தியாகராசலீலை. சரித்திரம் : 1. ஆதிகுமரகுரு சுவாமிகள் சரித்திரம் 2. சிவ ஞான யோகிகள் சரித்திரம் 3. மயில் ராவணன் சரித்திரம் 4. குருபூசை மான்மியம் 5. குசேலோபாக்கியானம். 6. திருஞானசம்பந்தர் ஆனந்தக் களிப்பு. 7. குருபரம்பரை அகவல். பதிகம் : 1. கச்சி விநாயகர் பதிகம் 2. சுப்பிரமணிய சுவாமி பதிகம் 3. திட்டக்குடிப் பதிகம் 4. மருதவாணர் பதிகம் பதிற்றுப்பத்தந்தாதி : 1. தண்டபாணி பதிற்றுப்பத்தந்தாதி 2. திரு ஞானசம்பந்தமூர்த்தி பதிற்றுப்பத் தந்தாதி 3 . தி ரு வூரைப் பதிற்றுப் பத்தந்தாதி 4. பழசைப் பதிற்றுப் பத்தந்தாதி 5. பாலைவனப் பதிற்றுப் பத்தந்தாதி 6. பூவாலூர்ப்பதிற்றுப் பத்தந்தாதி திரிபந்தாதி : 1. குடந்தைத் திரிபந்தாதி 2. திருப்பைஞ் ஞீலித் திரிபந்தாதி 3. திருவானைக்கா திரிபந்தாதி 5. திருவிடைமருதூர்த் திரிபந்தாதி யமக அந்தாதி : 1. திரிசிரமலை யமக அந்தாதி 2. திருவாவடுதுறை யமக அந்தாதி 3. தில்லை யமகஅந்தாதி வெண்பா அந்தாதி : எறும்பீச்சரம் வெண்பா அந்தாதி மாலை : 1. அகிலாண்ட நாயகி மாலை 2. கற்குடிமாலை 3. சிதம்பரேசர் மாலை 4. சுப்பிரமணிய தேசிகர் மாலை 5. சச்சிதானந்ததேசிகர் மாலை 6. சவராயலு நாயகர் மாலை 7. சித்திரச் சந்திரப் புகழ்ச்சி மாலை பிள்ளைத்தமிழ் : 1. அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் 2. காந்திமதியம்மைப் பிள்ளைத்தமிழ் 3. சேக்கிழார்ப் பிள்ளைத்தமிழ் 4. திருவிடை கழிமுருகர் பிள்ளைத்தமிழ் 5. திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ் 6. பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் 7. பிரம்ம வித்தியாநாயகி பிள்ளைத் தமிழ் 8 . b பருந்திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ் 9. மங்காளம்பிகை பிள்ளைத்தமிழ் 10. அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ் கலம்பகம் : 1. வாட்போக்கிக் கலம்பகம் 2. அம்பலவாணர் கலம்பகம் கோவை : 1 . சீகாழிக் கோவை 2 . கு ள த் தூ ர் க் கோவை 3. வியாசைக் கோவை உலா : திருவிடை மருதூர் உலா தூது : 1. சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது 2. தானப்பாசாரியார் தச விடுதூது குறவஞ்சி : திருவிடைகழி குறவஞ்சி சிலேடை : திருவாவடுதுறைச் சிலேடைவெண்பா மொழிபெயர்ப்பு : சூத சங்கிதை (3000 பாடல்கள்) தனிப்பாடல்கள் : கப்பற்பாட்டு, பொன்னூசல், மங்களம், லாலி, வாழ்த்து, சிறப்புப்பாயிரம், முதலிய பல. (என் பேராசிரியர் முனைவர் குரு கோவிந்த ராசன் (வடுகசாத்து, ஆரணி) திரட்டித் தந்த செய்தி) 8. தமிழ்த் தாத்தாவுக்குத் தாத்தா தமிழிலக்கியங்களைப் பனை ஓலைகளில் எழுதிப் பாது காத்து வைத்திருந்தனர் நம் முன்னோர். மேலை நாட்டார் வரவால் அச்சுக் கருவிகள் வந்தன. இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சில் தமிழ் இடம் பெற்றது. கிறித்துவ நூல்கள் தமிழில் அச்சிடப் பெற்றபோது சிவ சமய நூல்கள் வெளிவர வேண்டும் என்று ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சகம் தொடங்கினார். பதிப்புப்பணியில் அவரைப் பின்பற்றி உருவானவர்தான் சி.வை. தாமோதரம் பிள்ளை. அவர் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்நாளின் நோக்கமாகக் கொண்டிருந்தார். இரவு பகல் பாராது நாடு முழுவதும் சுற்றி ஏடுகளைத் தேடிக் கண்டுபிடித்து அச்சில் பதிப்பித்துத் தமிழ் இலக்கியங்களை வாழ வைத்தார். தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி மக்கள் பனை ஓலைச் சுவடிகளைப் பரண் மேல் வைத் திருந்தனர். தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. தெரிந்தாலும் படிப்பார் இல்லை. பாதுகாப்பாரும் இல்லை. இவை போதா வென்று மூட நம்பிக்கையால், வீட்டுப் பரண்களில் கிடக்கும் ஓலைச் சுவடிகளை அள்ளி ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று ஆற்றிலும், பொங்கலுக்கு முதல்நாள் தீயிலும் போட்டு அழித் தனர். மக்களுக்கோ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லை; செல்வர்க்கோ உதவவேண்டும் என்ற மனமில்லை; ‘துரைத் தனத்திற்கோ அதன் மேல் இலட்சியமில்லை’ என்று வருந்தி னார் சி.வை.தா. “தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்க லாமா?” - எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார். நீர்வாய்ப்பட்டும், தீவாய்ப்பட்டும், செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை, அரிதின் முயன்று தேடிப்பிடித்து அச் சிட்டுக் காத்தார். சி.வை.தா. தமது இருபதாவது அகவையிலேயே (வயதிலேயே) நீதிநெறி விளக்கம் எனும் நூலை உரையுடன் முதன்முதலாக 1853ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளிக் கொண்டுவந்தார். ஏடு பதிப்பிக்கும் இடர் ஏட்டிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையான தன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துகளைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். தவறின்றி அச்சில் வெளியிடத் தனிப் புலமை வேண்டும். எடுக்கும்போதே ஓரம் ஒடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே துண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துகளோ வாலும் தலையு மின்றி நாலுபுறமும் - பாணக்கலப்பை உழுது - இராமபாணம் என்னும் செல்லுப்பூச்சிகள் அரித்துக் கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளைப் பிரித்துப் படியெடுத்துச் சொற்களைச் சரியாக அடையாளங்கண்டு பதிப்பித்தார். ஏடுகளைப் படித்து ஆராய்ந்து, பிழையின்றிப் படி எடுக்கிற போது, சில ஐயங்கள் தோன்றிவிடும். அவற்றைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காததால் மன உளைச்சலில் உணவும் கொள்ளாது உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக் கொண்டே இருப்பாராம். தில்லைப் பார்ப்பனர்கள் தேவாரப் பாடல்களைப் பூட்டி வைத்துச் செல்லரிக்க விட்டு எஞ்சியவற்றை யார்கண்ணிலும் படாமல் பூட்டி வைத்திருந்தபொழுது, போராடி மீட்டான் பேரரசன் இராசஇராச சோழன். தமிழ்ச் சங்கங்களையும் இழந்து, உலக அளவிலான இலக்கண நூல்களில் தொன்மையானதும் சிறப்பானதும் ஆகிய தொல்காப்பியத்தின் பொருளதிகார ஏட்டுச் சுவடிகளையும் இழந்து தவித்தான் பாண்டிய மன்னன். அந்தப் பொருளதிகாரத்தை மீட்டவர் சி.வை.தா. “தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிக் கண்டவரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்து விடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்” - எனத் தமது தொல்காப்பியச் சேனாவரையர் உரைப் பதிப்பின் முன் னுரையில் எழுதியுள்ளார் சி.வை.தா. திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களைப் பதிப்பித்துத் தமிழுக்கும், சிவ மதத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளைக்குப் பதிப்புத்துறையில் வழிகாட்டியாக அமைந்தார். பதிப்புத்துறைக்கு ஆறுமுக நாவலர் கால்கோள் நாட்டினார்; தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார்; உ.வே.சா மேற்கூரை இட்டார் என்று திரு.வி.க. கூறுவார். தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும் பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல் லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பன வற்றின் மூலங்களையும் உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. தொல்காப்பியத்தையும் கலித்தொகையையும் 1854 முதல் 1887-க்குள் மூலச் சுவடிகளை ஒப்பிட்டு முதன் முதல் பதிப்பத்தார் சி.வை.தா. தாம் தேடிவைத்திருந்த சிந்தா மணி ஏட்டுச் சுவடி இரண்டையும் கொடுத்து உ.வே.சாமிநாதரை 1887 முதல் பதிப்புத்துறையில் ஈடுபட வைத்தார். “இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங் களாகும். இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்” என்று உ.வே.சாமிநாதையர் பாராட்டியுள்ளார். சி ந் தாமணியை அச் சி ட த் தாள் கி டைக்காம ல் உ.வே.சா. தவித்தபோது சி.வை.தா. தமக்குத் தெரிந்த தாள் வணிகர் ஒருவர் மூலம் கடனில் பெற ஏற்பாடு செய்தார். ஆசிரிய மாணவர் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க ‘மிசன்’ கல்விச்சாலையில் அக்காலத்தில் கிறித்துவர்களுக்கு மட்டுமே கல்வி தந்தனர்; எனவே சி.வை.தா. கிறித்துவராக மாறி “சார்லஸ் வின்சுலோ கிங்சுபெரி” எனத் தம் பெயரை மாற்றிக் கொண்டு பயின்றார். திருக்கோகர்ணம் நூலகத்தில் உள்ள புத்தகம் ஒன்றில் சி.வை.தா. ‘விநாயகர் துணை’ என்பதனை அடித்து ‘இமானுவேல் துணை’ என எழுதியுள்ளார். பிற்காலத்தில் இந்து மதத்திற்கு மீண்டும் மாறிக் கொண்டார். இலங்கையில் சி.வை.தா., கறோல் விசுவநாதப் பிள்ளை ஆகியோர் உழைத்துச் செய்த ஆங்கிலம் - தமிழ் அகராதி, திருஷ்ட்டாந்த சங்கிரகம் (2000 பழமொழிகளின் தொகுப்பு) ஆகியவற்றைப் பெர்சிவல் குருமார் வெளியிட்டார். பின் சென்னைக்குக் குடியேறி, தினவர்த்தமானி எனும் வார இதழை நடத்தி வந்தார். அவர் தாமோதரம் பிள்ளையைச் சென்னைக்கு அழைத்து இதழில் முதலில் துணை ஆசிரியர் பணியும் பின் ஆசிரியர் பணியும் அளித்தார். சி.வை.தா. ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். இதழ் ஆசிரியராகவும், கல்லூரித் தமிழாசிரியராகவும் பணி யாற்றிக் கொண்டிருந்த போது, சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்று, முதன் முதலாகத் தொடங்கிய இளங்கலை (பி.ஏ.) தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார். பிற்காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் குழுவிலும் பாடத்திட்டக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி, சுலோசனை (1896) ஆகிய இரண்டு நாடக நூல்களிலிருந்து ஐம்பது பக்கங்களைச் சென்னைப் பல்கலைக் கழக நுழைமுக (எப்.ஏ) தேர்வுக்குப் பாடமாக வைப்பதற்குப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையைத் தாமோதரம் பிள்ளை ஒப்புக்கொள்ளச் செய்தார். சென்னைப் பல்கலைக்கழகம் தன்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது அதுவே முதல் முறை. “தேசாபிமானம், மதாபிமானம், பாஷாபிமானம் என்றிவை இல்லாதார் பெருமை ஒரு பெருமையாமோ?” என்பார் சி.வை.தா. எழுபது அகவை வரை வாழ்ந்து தொல்காப்பியத்தையும், கலித்தொகையையும் அறிமுகம் செய்து சங்கத் தமிழ் இலக்கியத் தேடலைத் தொடங்கி வைத்தவர் சி.வை.தா. ஆவார். சி.வை.தாமோதரம் பிள்ளை சி.வை.தாமோதரம் பிள்ளை இயற்பெயர் : தாமோதரன் சிறப்புப் பட்டம் : இராவ் பகதூர் (1895-இல் ஆங்கில அரசுஅளித்தது) பெற்றோர் : பெரு ந் தேவி அம் மாள், வைர வநாதன் பிள்ளை. பிறந்த நாள் : 12-09-1832 மறைந்த நாள் : 01-01-1901 ஊர் : இ ல ங்கை யாழ் ப் பாணத்தைச் சார் ந் தசிறுபிட்டி கல்வி : வட்டுக்கோட்டை - பள்ளிக்கல்வி, சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர், கறோல் விசுவநாதப் பிள்ளை - ஆகியோரிடம் தமிழ்க கல்வி. யாழ்ப்பாணம் - ‘செமினறி சாத்திரக்கலாசாலை’சென்னைப் பல்கலைக்கழகம் – நுழை முகத் தேர்வு (1857) இளங்கலை (1858), சட்டப்படிப்பு (1871) பணி : கோப்பாய்- போதனா சக்தி (ஆசிரியப் பயிற்சி)க் கல்லூரி - ஆசிரி யர் (1852); சென்னை - இராசதானி (மாநிலக்) கல்லூரி - தமிழாசிரியர்; கள்ளிக்கோட்டை – அரசுக் கல்லூரி - தலைமை ஆசிரியர் (1858); சென்னை அரசு - வரவு செலவுக் கணக்கு நி லை ய த் தi ல வ ர் ; கு ம்பகோணம் - வழக்குரைஞர் (1871); புதுக்கோட்டை - நீதிமன்றத் தலைவர் (1884-1890); ‘புரசை இந்து சனோபகார சாசுவத நிதி’ - தலைவர்; இதழாசிரி யர் : தினவர்த்தமானி (1853), உதயதாரகை. படைப்புகள் : கட்டளைக் கலித்துறை, சைவ மகத் துவம், நட்சத்திர மாலை, சூளாமணி வசனம், ஆதியாகம கீர்த்தனம், காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம் : நாவல்), சிறுவர் களுக்கான பாட நூல்கள். பதிப்பித்தவை : நீதி நெறி விளக்கம் - உரையுடன் (1854) தொல் காப்பியம் சொல்லதிகாரம் - சேனா வரையர் உரை யுடன் (1886) வீரசோழியம் - பெருந்தேவனார் உரை யுடன் (1881) தொல்காப்பியம் சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் உரையுடன் (1882) திருத்தணிகைப் புராணம் (1883) இறையனார் அகப்பொருள் - நக்கீரர் உரையுடன் (1883) தொல்காப்பியப் பொருளதிகாரம் - நச்சி னார்க்கினியர் உரையுடன் (1885) கலித்தொகை - நச்சினார்க்கினியார் உரை யு ட ன் ( 1 8 8 7 ) , இ ல க் கண வி ள க் க (1889), சூளாமணி (1889)தொல்காப்பிய எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரையுடன் (1891) 9. கதவடைத்த வள்ளல்! பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் களில் உ.வே.சாமிநாத அய்யரும், அய்யருக்கு வழிகாட்டியாக அமைந்த பூவாளூர் சி.தியாகராசச் செட்டியாரும் குறிக்கத் தக்கவர்கள். வேளாண்மை (உழவுத்)த் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தியாகராசர் தமிழ், கல்வி, அன்பு, கொடை, விருந்து ஆகியவற்றிலும் வேளாண்மை (வள்ளல் தன்மை) கொண்டவ ராக விளங்கினார். தமிழ் படிக்காதே! “அட கெடுவாய்... சனியான தமிழை விட்டுத் தையலார்தம் இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை! என்னசென்மம் எடுத்துலகில் இரக்கின்றோமே!” என்று பாடினார் படிக்காசுத தம்பிரான். தமிழ்படித்தால் வேலைகிடைக்காது என்று அயல் மொழி நாடும் கொடுமை தானே இன்றும் உள்ளது! “தமிழும் வறுமையும் பிரிக்க முடி யாதன; எனவே தமிழ் படிக்காதே!” என்றார் தந்தை. இவர் களுடைய ஊருக்கே பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வந்திருந்து பூவாளூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி அரங்கேற்றினார். முன்னரே அவரைப் பற்றி அறிந்திருந்த தியாகராசர் அவருடைய மாணவரானார். பதினெட்டு அகவையில் படிக்கத் தொடங்கி னார். திருச்சிராப்பள்ளி சின்னக்கடைத் தெருவில் இருந்த தன் சிற்றப்பர் வீட்டில் தங்கிப் படித்தார். ஆழமாகக் கற்றதோடு ஆசிரியரைப் போலவே பேசவும் பாடவும் பாடம் சொல்லவும் கற்றார். ஒரு நாளைக்கு ஒரு பாடல் மேனிக்கு (வீதம்) 95 பாடல்கள் தம் ஆசிரியர் மேல் பாடினார். படைப்பள்ளி ஆசான் (பட்டாளத்து வாத்தியார்) திருச்சிராப்பள்ளி படைப் (இராணுவப்) பள்ளியில் தம் ஆசிரியர் பரிந்துரையால் வேலை கிடைக்கப் பெற்றார். ஊதியம் 10 உருபாய் பெற்றார். 5 உருபாய்தான் செலவாகும். ‘சம்பளம் ரூபாய் மாசம் பத்து மா சம்பத்து’ (மா :பெரிய;சம்பத்து=செல்வம்) என்பார். தம் ஆசிரியர் போல் திறமையுடன் பாடம் நடத்தினார். குருகுலத்தில் பெற்ற அன்பையும் படைப்பள்ளிக்கு உரிய கண்டிப்பையும் காட்டினார். திருவரங்கம் அரசுப் பள்ளி யில் வேலை கிடைத்தது. இவர் பின்னால் எப்போதும் மாணவர் படை இருக்கும். குளிக்கப் போகும்போது ஊற்றுப்பட்டை, துவைக்கும் கல், சொம்பு முதலியவற்றை மாணவர்கள் எடுத்துக் கொண்டு வருவார்கள். துணி துவைக்க, குளிக்க, துணி ஊறப் போட என 3 ஊற்றுகள் தோண்டுவார்கள். போகும்போதும், வரும்போதும் பாடம் சொல்வார். பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரி எதைக் கேட்டாலும் மாணவர்கள் விளக்கமாக விடை சொன்னதால், “ஏன் மாணவர்களை அதிகம் கற்பித்துத் துன்பப் படுத்தினீர்கள்!” என்று சினந்தார். “கற்பிக்காமல் இருந்தால் குறறமா? அதிகம் கற்பித்தால் குற்றமா?” என்று தியாகராசர் கேட்டதால் அவர் அடங்கிப் போனார். ஆற்றில் குதிப்பேன் திருவாசகத்திற்கு உரை எழுதும்படி ஓர் அன்பர் வலி யுறுத்தி வந்தார். அந்த அளவிற்குத் தமக்குப் பக்குவம் இல்லை என்று தியாகராசர் கூறி வந்தார். காவிரிக் கரையில் மாட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தபோது அவர் வற்புறுத்திக் கூறவே, “இனிமேலும் கட்டாயப்படுத்தினால் ஆற்றில் குதித்து விடுவேன்” என்றார். முடிந்ததை மட்டுமே செய்வது அவர் வழக்கம். திருச்சிராப்பள்ளிக்கு வந்திருந்தார் ஆறுமுக நாவலர். சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு அழைத்துச் சென்று காட்டினார் தியாகராசர். அப்போது கண்டமனூர் முத்துக்கருப்பன் செட்டி யார் சாக்கோட்டை (அழகாபுரி) உமையம்மை மேல் பிள்ளைத் தமிழ் பாடும்படி நாவலரை வேண்டினார். நாவலர் தியாக ராசரை எழுதச் சொல்லிவிட்டார். தியாகராசர் அதனை ஏற்று நூல் செய்தார். ஆசிரியரை அரங்கேற்றியவர் தியாகராசர் தம் ஆசிரியரின் வாட்போக்கிக் கலம்பகத்தை அவ்வூருக்குச் சென்று அரங்கேற்றி வந்தார். ஆசிரியரிடம் பாடம் கேட்டறிந்ததோடு அவருள்ளமும் அறிந்தவர். அவர் சொல்லச் சொல்ல ஏட்டில் எழுதியவரும் அவரே. ஒரு நாள் எழுதிக் கொண்டே இருந்தார். பகல் போய், இரவு ஆயிற்று. விளக்கு ஏற்றி வைத்து விட்டு எழுதினார்.விளக்கில் எண்ணெய் குறைந்தது. திரியைத் தூண்டியும் பின்னர் திரிமேல் திரிபோட்டும் எழுதினார். எட்டு மணிக்கு ஏட்டை மூட்டை கட்ட வேண்டியதாயிற்று. ஏன்? மாணவரால் எழுத முடியவில்லையா? அல்லது ஆசிரியர் கற்பனை நின்றதா? இல்லை! பெரும் புலவரின் பெரும் வறுமையால் விளக்குக்கு எண்ணெய் இல்லை! ஆசிரியர் இயற்றிப் பாதியோடு நின்று போன வியாசைக் கோவையின் பிற்பகுதியை இவர் பாடி முடித்தார். பாடம் நடத்தும் போதும் அடிக்கடித் தம் ஆசிரியரைப் புகழ்ந்து பேசும் இவர், ஒரு நாள் தம் ஆசிரியரைக் கல்லூரிக்கு அழைத்து வந்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் அறிமுகம் செய்த தோடு , அனைவ ர் முன்னாலும் அவ ர் காலில் விழுந்து வணங்கிப் பெருமை செய்தார். சிதைக்கலாமா? கிறித்துவ சமயப் பரப்புநர் புதுவை செ.சவராயலு நாயகர் பாடல் திரட்டுக்குச் சமய வேறுபாடு பாராட்டாமல் சிறப்புப் பாயிரம் எழுதிக் கொடுத்தார். குறையுடைய நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் பாட மறுத்துவிடுவார். குடந்தை நாகேசுவரன் கோயில் பெரிய நாயகி பிள்ளைத் தமிழ் பாடிக் கொண்டு வந்தவருக்குச் சிறப்புப் பாயிரம் தர மறுத்து விட்டார். மேலும் வற்புறுத்தியதால் குறைகளைச் சுட்டினார். தம்மைத் திட்டிய தாக வழக்குப் போட்டார் வந்தவர். நீதிமன்றத் தலைவர், “நீர்தானே அவர் வீட்டுக்குப் போனீர்?” என்று கூறிவிட்டார். ஓர் வழக்குரைஞர் நன்னூலை 200 நூற்பாக்களை நீக்கிவிட்டு முறை மாற்றிப் பதிப்பித்துக் கொண்டு வந்தார். குறைகளைச் சுட்டித் திட்டி விரட்டி விட்டார் தியாகராசர். நல்ல நூல்களை அச்சில் கொண்டு வரமுடியாமல் பலர் தவிக்கும் போது வெளி வந்த நல்ல நூல்களைச் சிதைத்துப் பதிப்பிப்போரை என்ன செய்வது? அதிலும் மிக உயர்ந்த திருக்குறளையும் தொல் காப்பியத்தையும் சிதைப்போரை என்ன செய்வது? கதவடை மதுரையிலிருந்து சுகாத்தியர் (ஸ்காட்) என்ற குருமார் தாம் திருத்திச் சிதைத்த திருக்குறள் பதிப்புடன் பெரும் புலவர் களைச் சந்தித்து வந்தார். தியாகராசர் சாய்வு நாற்காலியில் பனைவிசிறியால் விசிறிக் கொண்டு இருந்தார். அப்போது சுகாத்தியர் திண்ணையில் வந்து அமர்ந்தார். அவருடன் வந்த ஒருவர் உள்ளே வந்தார். “இங்கே புலவர் தியாகராசச் செட்டியார் இருக்கிறாரா?” “உம். நான்தான்.” “துரை வந்திருக்கிறார். சட்டை போட்டுக் கொண்டு வாருங்கள்.” விசிறிக் கொண்டே வெளியே வந்தார் தியாகராசர். “தாங்கள்...” “என்னைத் தெரியாதா...? நான்தான் சுகாத்தியர், திருக் குறளைத் திருத் தி நூலாக அச்சிட்டிருக்கிறேன். தாங்கள் அதனைப் பார்த்து...???...!!! “படார்” என்று பெரும் ஒலியுடன் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே போய்க் கத்தினார் தியாகராசர் : “தமிழர்களின் பெருஞ்செல்வமாம் திருக்குறளைச் சிதைத்த அந்தப் பாவியைப் போகச் சொல்லுங்கள்... போகச் சொல்லுங்கள்!” வந்தவர்க்கெல்லாம் - அறிவிலிகளுக்கும் போக்கிலிக ளுக்கும் கூட கல்வியையும் காசையும் சோற்றையும் வாரி வழங்கிய வள்ளல் கதவடைத்தார். தமிழுக்குச் சிறு பிழை செய்தாலே சினக்கின்ற அப்பெரியார் அவரை விரட்டி விட் டார். இதை அறிந்த பாண்டித்துரைத் தேவர் சுகாத்தியர் கெடுத்துப் பதிப்பித்த நூல்களை வாங்கித் தீயிட்டு எரித்து விட்டார். கல்லூரியில் கல்லாகி நின்றார் கும்பகோணம் வட்டாரப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த சாமிநாத தேசிகர் திருவனந்தபுரம் சென்றதால் உதவித் தலைமை ஆசிரியர் தண்டலம் கோபால்ராவ் தமிழ் நடத்தி வந்தார். சிறப்பாக விடை சொன்னான் ஒரு மாணவன். “முன்பு எங்கு படித்தாய்?” “திருவரங்கத்தில்!” “தமிழ் ஆசிரியர் யார்?” “வித்துவான் தியாகராசச் செட்டியார்!” கோபால்ராவ் அன்றே பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கூறி அவரை அழைக்கச் செய்தார். கும்ப கோணம் பள்ளிக்கு வந்தார் தியாகராசர். பள்ளி கல்லூரி ஆயிற்று. மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்ப் பெரியவர்களும் அவரது அறிவாற்றலைப் போற்றினர். தமிழ்நாடே அறியும் புகழ் பெற்றார் தியாகராசர். இவரிடம் அன்பு கொண்ட சிற்பி கல்லூரியின் தெற்குத் தாழ்வாரத்தில் இவரது உருவத்தைச் செதுக்கினார்; பக்கத்தில் கோபால்ராவும் இடம் பெற்றார். தியாகராசர் ஆறுமாத காலம் இடைக்கால விடுப்பு எடுத்தபோது சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரைக் குடந்தைக் கல்லூரியில் அமர்த்தினார். தாம் ஓய்வு பெறப் போகும்போது உ.வே.சாமிநாத அய்யருக்குப் பரிந்துரைத்தார். மடத்தில் அன்பால் விட மறுத்தபோது, உ.வே.சா.உயர்வு பெற, விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திக், குடந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தினார். அந்நன்றி மறவாமல் உ.வே.சா. சென்னை திருவேட்டீசுவரன் பேட்டையில் உள்ள தம் வீட்டு க் குத் “தியாகராச விலாச ம் ” எனப் பெ ய ரிட்டா ர் . சென்னை மாநி ல க் க ல்லூரி க் கு அழை ப் பு வ ந் த போது தியாகராசர் மறுத்து விட்டார். அதே மாநிலக் கல்லூரிக்குப் பேராசிரியராகச் சென்று புகழடைந்தார் உ.வே.சா. ஆசிரியர்களுக்கே பாடம் தியாகராசர் ஓய்வு பெறுகிறார்; தியாகராசருடைய இடைவிடா முயற்சியால் மறுநாள் உ.வே.சா. (ஆசிரியர்க் கெல்லாம் ஆசிரியர் - மகாமகோபாத்யாய - என்று பின்னாளில் பட்டம் பெற்றவர்) கல்லூரி ஆசிரியராகப் பணி ஏற்க உள்ளார். அந்நிலையில், தியாகராசர் அவரிடம், “உலகம் பொல்லாதது. ஜாக்கிரதையாக இருந்து நல்ல பெயர் வாங்க வேண்டும். நமக்குக் கவுரவம் உண்டாவது படிப்பினாலேதான். அந்தப் படிப்பைக் கைவிடாமல் மேன் மேலும் ஆராய்ந்து விருத்தி செய்துகொள்ள வேண்டும். காலேஜ் பிள்ளைகளிடம் நாம் நடந்துகொள்ளும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய அன்பைப் பெறலாம். பாடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அடிக்கடி நடந்த பாடங்களில் கேள்வி கேட்க வேண்டும். மற்ற ஆசிரியர்களிடம் ஜாக்கிரதை யாகப் பழக வேண்டும்” என்று கூறினார். இது ஆசிரிய உலகத் துக்கே உரிய அறிவுரை ஆகும். கடைசிப் பாடம் தியாகராசரின் மனைவி பெயர் செல்லம்மாள். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கும்பகோணம் மாநிலப் பள்ளியில் தமிழாசிரியராக வேலைக்குச் சேர்ந்தபோது அவருக்கு ஊதியம் இருபது உரூபாய். அப்பள்ளி கல்லூரியாகித் தமிழ்ப் பேராசிரியராக அவர் ஓய்வு பெற்றபோது அவர் உரூபாய் ஐம்பது ஊதியம் பெற்றார். ஓய்வூதியம் பெற்றதும் தம் சொந்த ஊர்க் கோயி லுக்குச் செலவிட எண்ணினார். ஆனால் ஓய்வூதியம் பெறப் பலமுறை அலைய வேண்டியதாயிற்று. “இது சாமி பணம்; பெற வேண்டியது அவர் பொறுப்பு” என அலுத்துப் போய் விட்டுவிட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் வந்த அப் பணத்தைப் பெற்று (உரூ.403) தம்மூர்க் கோயில் திருப்பணிக்குக் கொடுத்துவிட்டார். கண் பார்வை குறைந்த நிலையிலும் பாடம் சொல்லியும் பாடல் சொல்லியும் வந்தார். சென்னை மயிலை அரிசிக்காரத் தெருவில் நண்பர் வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்துக் கொண்டார். மருத்துவர் பிராக்மென் (ஜி.யூ.போப்பின் மருகர்) ‘இனி மருத்துவம் இல்லை’ என்றதால் ஊர் திரும்பினார். திருவாவடுதுறை சின்ன பட்டத்துக்குப் பாடம் நடத்தினார். அப்போது “வட்ட ஆட்சியர் மடத்துக்கு வருகிறார்; அறையைக் காலி செய்யுங்கள்” என்று ஏவலன் விரட்டினான். “மேலிடத்தில் சொல்” என்று அனுப்பிவிட்டார் தியாகராசர். மறுநாள் தியாகராசர் நடந்து வருவதைப் பார்த்த வட்ட ஆட்சியர் திண்ணையிலிருந்து குதித்தார். மற்றவர்களும் கீழே குதித்தனர். வட்ட ஆட்சியர் ஓடிவந்து வணக்கம் சொல்லி, “நான் நாதமுனி கிருஷ்ண அய்யங்கார். உங்கள் மாணவன். என்னைத் தெரிகிறதா?” என்றார். “உம்... உம்... பாடமெல்லாம் நினைவில் இருக்கிறதா?” எனக் கேட்டார் தியாகராசர். ஏவலன் ஓடோடி வந்து காலில் விழுந்தான். அறிவிலிகளுக்கு ஆடிய பின் ஆணவம் அடங்குவது கடைசிப் பாடம்; அறிஞர்களுக்கோ எப்போதும் ஆணவம் அடங்கி நடப்பதுதன் கடைசிவரை பாடம்! சி.தியாகராசச் செட்டியார் சி.தியாகராசச் செட்டியார் இயற்பெயர் : தியாகராசன் சிறப்புப் பெயர் : வி த் து வான் பூ வாளூர் சி . தியாகராசச் செட்டியார் தந்தை பெயர் : ச. சிதம்பரம் செட்டியார் பிறந்த ஆண்டு : 1826 மறைந்த நாள் : 19-01-1888 ஊர் : திருச்சிராப்பள்ளி (மா) திருத்தவத்துறை (இலால்குடி) (வ) பூவாளூர் கல்வி : பூவாளூர் - திண்ணைப் பள்ளி; திருச் சிராப்பள்ளி - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் குருகுலம் (1844) பணி : தமிழாசிரியர் - திருச்சிராப்பள்ளி - படைப் பிரிவு (இராணுவப்)பள்ளி; திருவரங்கம் - அரசுப்பள்ளி (12-09-1857 முதல்); கும்பகோணம் - மாகாணப் பள்ளி (03-07- 1865 - 1 8 6 6) , பின்னாளில் அர சு க் கல்லூரி (1866 -15-02-1880) படைப்புகள் : வீரை உமைய ம்மை பதி க ம் , சவரா யலு நாயகர் இரட்டைமணி மாலை, திருச் சிற்றம்பல வெண்பா அந்தாதி, திருவாரூர் பாதி தி ரு வொற்றி யூ ர் பாதி வெண்பா அந் தா தி , திருவாரூர் மருந்து வெண்பா மாலை, வியாசைக் கோவை (பிற்பகுதி) பதிப்பித்த நூல்கள் : 7 மாணவர்கள் : உ.வே.சாமிநாத அய்யர், எஸ்.இராதா கிருஷ்ண அய்யர் (புதுக்கோட்டைக் க ல்லூரி மு த ல் வ ர் ) , சீதாராம அ ய் ய ர் (நெல்லை இந்துக் கல்லூரிப் பேராசிரியர்), தஞ்சை சீனிவாசன் பிள்ளை (வழக் குரைஞர்) - முதலியோர். 10. தமிழை அறியாத தெய்வம் பேய்! வடலூர் இராமலிங்க அடிகளார் வாழ்ந்த அதே காலத் தில் அவரைப் போலவே துறவு ஏற்றுச் சமய ஒருமைப் பாட்டையும் முருகபக்தியையும் தமிழ்ப் பற்றையும் தமிழ் வழி பாட்டையும் (தமிழ் அருச்சனையையும்) வடமொழியைவிட தமிழ் உயர்ந்ததென்பதையும் சமய சீர்திருத்தக் கருத்துகளையும் முன்னெடுத்துப் பரப்பியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் ஆவார். பெரும்புலவர் (மகாவித்துவான்) மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் போல தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இல்லை என்றாலும் அவரைப் போலவே பாடிக்குவித்தார். வள்ளலார், மயிலாடுதுறை வேதநாயகர் ஆகியோர் போல் வண்ணப் பாக்களை - சந்தப் பாக்களை - சீர்த்தனைகளை (கீர்த்தனைகளை)ப் பாடியவர். வண்ணம் பாடுவதில் திறன் மிக்கவர் என்பதல் வண்ணச்சரபம் என்று புகழப் பெற்றார். சரபம் என்பது சிங்கத்தை வெல்லும் ஆற்றல் பெற்ற எண்கால் பறவை ஆகும். தேசியகவிகளின் முன்னோடி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் தியாகராசச் செட்டியார் திருக்குறளைத் தவறாகப் பதிப்பித்த ஆங்கிலேயரை எதிர்த்தார். பாரதியார் புறநானூற்றுத் தாயின் வீரத்தைப் பற்றி உ.வே.சா. எழுதியதைப் பாரட்டினார். ஆனால் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஆங்கிலேயரை எ தி ர் த்து ஒ ரு க ரு த்தும் கூ றி ய தி ல்லை. வண்ணச் ச ர ப ர் ஆங்கிலியர் அந்தாதி என்ற நூலை இந்திய விடுதலைக்கு இறைவன் அருள் வேண்டிப் பாடியுள்ளா ர். அதே போல் பாரதியார் தம் இறுதிக் காலத்தில் இந்திய விடுதலையை வேண்டிக் கடவுளிடம் வேண்டிப் பாடினார். சிவகங்கை முத்துவடுகநாதப் பெரிய உடைய தேவர் 25-12-1772இல் ஆங்கிலேயனை எதிர்த்துப் போர் புரிந்த போது கையெறி குண்டுக்குப் பலியானார். மருது உடன் பிறப்புகளும் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் ஊமைத் துரையும் வெள்ளையத்தேவனும் புலித்தேவனும் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். நெற்கட்டும் செவ்வல் குறுநில மன்னராக விளங்கிய புலித்தேவன் அயல்நாட்டானால் கொடிய முறையில் கொல்லப்பட்டார். அதே மண்ணில் - நெற்கட்டும் செவ்வலில் பிறந்தவர்தான் வண்ணச்சரபர். மேலும் அவருடைய தந்தையார் நெற்கட்டும் செவ்வல் புலித்தேவன் வழியில் வந்த சமீன்தாரின் தளவாய் ஆவார். எனவே வரி கேட்டு அடக்குமுறை செய்த அயலான்-ஆங்கிலேயன்-அழியவேண்டும் என்றும் அதற்கு உழைக்கும் வீரர்களே தெய்வங்கள் என்றும் பாடினார். துறவி யாதலின் வள்ளலாரும் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்றுதானே பாடினார்! சீர்திருத்தக் கவிகளின் முன்னோடி வள்ளலாரைப் போலவே சமய ஒருமைப் பாட்டையும் சமயச் சீர்த்திருத்தத்தையும் வண்ணச் சரபர் வலியுறுத்தினார். உயிர்ப்பலி, சிறுதெய்வ வழிபாடு, வடமொழியில் வழிபடல், சாதிப் பாகுபாடு முதலியவற்றை எதிர்த்தார். கணவனை இழந்த பெண்ணின் தாலியை வாங்கும் சடங்கு தேவையில்லை. அப் பெண் பூ, வளையல் அணியலாம் என்றார் வள்ளலார். அப் பெண் மறுமணம் பு ரிந்து கொண்டு வாழலாம் என்றார் வண்ணச்சரபர். மேலும் கலப்புத் திருமணத்தையும் ஆதரித் துள்ளார். சமய ஒருமைப்பாட்டுக்கு வள்ளலார் புறக்கோலங்கள் எதையும் வற்புறுத்தவில்லை. ஆனால் வண்ணச்சரபர் சமய ஒருமைப்பாட்டை மக்களுக்கு வலியுறுத்த அனைத்து அடையாளங்களையும் புனைந்து கொண்டார். உடல் முழுதும் திருநீறும், வலத் தோளில் தென்கலை நாமமும், இடத்தோளில் வடகலை நாமமும், நெற்றியில் கோபியும் குங்குமமும், கழுத்தில் உத்திராக்க மாலையும், துளசி மாலையும் தாமரை மணி மாலை யும் புனைந்திருந்தார். கொலை, புலால், இன்னா(இம்சை) அற்ற எச்சமயங்களும் கொள்வோம் என்பதைக் குறிக்க முழங்கால் இரண்டிலும் மும்மூன்று கரும்புள்ளிகளும் வைத்திருந்தார். பாரதியாரும் இதைப் போலவே திருநீறு, குங்குமம், நாமம் என அனைத்தையும் நெற்றியில் வைத்திருந்தார். வண்ணச்சரபர் துறவி என்பதால் இடுப்பில் கோவணம் மட்டுமே அணிந்து கையில் தண்டு ஏந்தியிருந்தார். ஊர் கண்ட தமிழ்த் தலைமகன் ஊர் ஊராய் உலா வந்து நாளும் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் போல் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வண்ணச்சரபரும் தமிழ் பாடி வந்தார்கள். சமயம் என்றும் புராணம் என்றும்போற்ற வேண்டிய சைவர் களும் மடங்களும் கோயில்களும் இத்தமிழ்ப் பாடல்களைப் பாதுகாக்கவில்லை. சமயப்பற்றுக்கு அப்பாற்பட்டு வரலாற்று உணர்வுள்ள தமிழர்களும் காக்க முற்படவில்லை. பத்துக் கம்பன் எனப்பெறும் பெரும் புலவர் 20,000 பாடல்கள் பாடினார் என்றால் வண்ணச்சரபர் 50,000 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் கிடைப்பன 25,697 ஆகும். தென்காசி அருகில் சுரண்டை என்ற ஊரில் பெரியப்பா வீட்டில் வளர்ந்தபோது சித்திரா நதிக்கரையில் பூமிகாத்தாள் என்ற அம்மன் பெயர்க்காரணம் கேட்டுப், பலர்க்கும் தெரியாத தால் தம் எட்டாம் அகவையிலேயே பாடத் தொடங்கினார். பதின்மூன்றாம் அகவையிலேயே சந்தப் பாக்களைப் படைக்கத் தொடங்கினார். ஊர்தோறும் சென்று பாடுகையில் திருமலை முருகன் மேல் திருப்புகழ் பாடியதால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் முருகதாசர் என்றும் பெயர் பெற்றார். மயிலம் முருகன் முன் னிலையில் சுந்தரத்தம்மையை மணந்து, மூன்று குழந்தைகள் பெற்றுப் பின்னர், இல்லற வாழ்வைத் துறந்தார். திருவா மாத்தூரில் கௌமார மடம் நிறுவிய பின்னர் ஊர்தோறும் செல்லத் தொடங்கினார். ஒவ்வொரு ஊரிலும் தலபுராணம் மட்டுமல்லாமல் அவ் வூர்க் கோயில் பற்றிப் பல்வேறு வகைச் சிற்றிலக்கியங்களும் பாடியுள்ளார். எண்ணற்ற ஊர்களில் காலடிகள் பதித்துப் பாவடிகள் பாடிக் குவித்தாரே, மேற்கண்ட ஊர்க்காரர்கள் அப்பாடல்களைப் பாதுகாத்துள்ளார்களா? அவ்வூர்க் கோயில்களில் பாதுகாத்து வைத்துள்ளார்களா? தமிழையே கடவுளாகக் கருதிய அடிகள் பாடல்களைப் பாதுகாப்பதே தமிழர்களின் வரலாற்று உணர்வை எடுத்துக் காட்டும். வடமொழியா? தமிழா? வடமொழியே உயர்ந்தது என்று வடநாட்டானோ ஆரி யனோ சொல்வதற்கு முன், அவர்களுக்கு அடிவருடிகளாய் விளங்கும் சில தமிழ் இரண்டகர்களே (துரோகிகளே) வட மொழிதான் உயர்ந்தது, தமிழ் இழிவானவர்கள் (நீசர்) பேசும் மொழி என்று கூறினர். கடவுள் தன்மையும் சமயச்சார்பும் ஏற்றப்பட்டிருந்ததால் வடமொழியை எதிர்க்க முடியாத சூழ லில், மணிவாசகரும் சேக்கிழாரும் கம்பரும் வடமொழிக்கு நிகர் என்று கூறுவதற்கே பெரும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் தமிழின் தெய்வத் தன்மையையும் சிறப்பை யும் வள்ளலாரும், வண்ணச்சரபரும் நிலைநாட்டிப் பாடி வந்தனர். வேலூரில் வண்ணச்சரபரை எதிர்க்க முற்பட்ட ஓர் அந்தணனும் வேளாளனும் வடமொழியே உயர்ந்தது என்று வாதிட்டனர். ஆ கொன்று வேள்வி செய்யும் வேதத்தைவிட கொல்லாமை கூறும் தமிழ் வேதம் உயர்ந்தது என்றார் வண்ணச் சரபர். காலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து வண்ணச் சரபர் எவ்வளவு எடுத்தோதியும் உடன்படவில்லை. எனவே இறைவன் முன்னிலையில் சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தமிழே உயர்ந்தது என்று சீட்டு வந்தது. “தமிழே உயர்ச்சி என்று சீட்டுக் கொடுத்த பெருமாளே” என்ற திருப்புகழ் பாடியதோடு தமிழலங்காரம் என்ற நூலும் பாடினார். “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற்றிருப்போன் வெறும்புல வோனே” என்று வண்ணச்சரபர் கூறுவார். தேவக்கோட்டைத் திருப்புகழில் வடமொழி கலவாது விளங்கும் தனித்தமிழைப் பாராட்டியுள்ளார். தமிழ் தெரியாதது பேய் திருவாமாத்தூரில் கௌமார மடம் அமைத்துத் தமிழும் சைவமும் வளர்த்தவர் வண்ணச்சரபர் ஆவார். தமிழ்நாட்டு மடங்களைச் சேர்ந்தவர்களே தமிழில் வழிபாடு (அருச்சனை) கூடாது; தேவாரம் திருவாசகம் முதலியவற்றைக் கோயில்களில் ஓதக்கூடாது என்று தடுத்து வழக்குப் போடுகிறார்கள். தமிழர் கள் கண்ட அன்பு நெறியாம் சமய வழிபாட்டில் தமிழர்கள் கட்டிய கோயிலில் தமிழில் வழிபடக்கூடாது என்று தடுப்பவன் தமிழனா? அந்தத் தமிழ்த் தெய்வத்திற்குத் தமிழ் தெரியாதா? உலகெலாம் நிறைந்த எல்லாம் அறிந்த பொதுவான ஓர் கடவுள் எல்லா மொழியும் அறிந்தவராகவே இருப்பார். எனவே தமிழ் தெரியாத தெய்வம் உண்டென்பதுதவறு. தமிழ் தெரியாத தெய்வம் பேய் என்பதை, “தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில் அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே” என்று வண்ணச்சரபர் பாடுவார். மேலும் இறைவன் ஒருவனே எனப் பொது நிலை (சமரசம்) உணர்த்துவனவாகவே தம்பாடல்களை யாத்துள்ளதோடு, அதனை உணர்த்தும் ஆற்றல் வாய்ந்த தமிழே தெய்வம் என்பதையும் முழங்கியவர் வண்ணச்சரபர். தமிழ்த் தெய்வத்தை வாழ்த்தித் ‘தமிழ்த் துதிப் பதிகம்’ பாடியுள்ளார். தமிழை மதிக்கச் செய்தவர் ஊர்தோறும் சென்று பாடிப் பரிசை நம்பி வாழும் புலவ ராகவும் துறவியாகவும் இருந்ததால் வண்ணச்சரபர் செல்வர் களை நாடவேண்டியிருந்தது. சேதுபதியும், கேரளனும் மதித்து அழைத்துப் பரிசில் நல்காத போது இலங்கை சென்று உரூபாய் ஆயிரத்தைம்பது திரட்டி வந்தார். கந்தக்கோட்டம் முருகன் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின் போது காஞ்சிபுரம் பெரும் புலவர் சபாபதி முதலியார் சந்தப்பிழை இருப்பதாகச் சொன்ன போது அவ்வாறாயின் என் காதிழப்பேன் என்றார். என் இரு காதும் இழப்பேன் என்று கூறிய அவர்முன் தன் பாவடியில் பிழையில்லை என்று நிறுவினார். கச்சிக்கலம்பகம் பாடிய அறிஞர் பூண்டி அரங்கநாத முதலியார் வண்ணச்சரபரை வழி யில் கண்டதும் நடுவீதியில் கீழே விழுந்து வணங்கினார். வண்ணச்சரபர் வள்ளலாரைச் சந்தித்ததுடன் பாராட்டி யும் பாடியுள்ளார். அவர் இருட்டறையில் மறைந்ததற்கு வருந்தி, “வாழைநறுங் கனியினைப் பாகினிற் குழைத்தாங் கினித்த செஞ்சொல் வனைந்து போற்றும் ஏழைஅன்பன் ஒருவனைப் பாழ்இருட்டறைக்குள் செல்ல உய்த்தாய் என்செய் தாயோ?” என்று பாடியுள்ளார். ஆறுமுக நாவலரையும், பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையையும் சந்தித்துள்ளார். செந்தமிழ்ப் புலவர்கள் வரலாற்றை விளக்கிப் ‘புலவர் புராணம், பாடி யுள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்பெயர் : சங்கரலிங்கம் சிறப்புப்பெயர் : திருப்புகழ் சுவாமிகள், முருகதாசர், தண்ட பாணிப்பரதேசி, வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், நல்விதிக்காரன், ஓயாமாரி பெற்றோர் : பேச்சிமுத்தம்மை, செந்தினாயகம்பிள்ளை பிறந்த நாள் : 28-11-1839 மறைந்த நாள் : 05-07-1898 ஊர் : நெல்லை(மா) நெல்கட்டும் செவ்வல் கல்வி : தென்காசி அருகில் சுரண்டை – திண்ணைப் பள்ளிப்படிப்பு; சமயக்கல்வி - சீதாராம நாயுடு அவர்களிடம் படைப்புகள் : ஆங்கிலியரந்தாதி, வண்ணத்தியல்பு, அறு வகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், புலவர் புராணம், மயிலலங்காரம், தமிழலங் காரம், வேல ல ங் காரம், வாளல ங் காரம், தமிழ்த் துதிப்பதிகம், வருக்கக்குறள், மனு நெறித் திருநூல், அரசாட்சி நூல், அருளாட்சி, குருபர தத்துவம் (தன் வரலாறு), சகத்திரதீபம், சென்னைப் பிள்ளைத்தமிழ், அருண கிரிநாதபுராணம், கௌமாரமுறைமை, முசு குந்த நாடகம் (சீர்த்தனை) சத்தியவாசகம் (உரைநடை) மாணவர்கள் : சிரவணபுரம் இரமானந்தர், நாடகத் தந்தை சங்கரதாச சுவாமிகள், ஊற்றுமலை சமீன் கந்தசாமிப்புலவர், அரியூர் வரதராசப்பிள்ளை முதலியோர். 11. தமிழுக்காக நடந்த கால்கள்! ஊர் ஊராய்ச் சென்று இசை பாடியும், புராணக் கதை சொல்லியும் வாழ்க்கை நடத்தி வந்தார் வேங்கட சுப்பையர். அவர் மகன் வேங்கடராமனுக்கோ திருவாவடுதுறை மடத்தில் இருந்த பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படிக்க வேண்டும் என்று ஆசை. பெரும்புலவரிடம் அழைத்துச் சென் றார் தந்தை. பெரும்புலவர் கேட்டார் : “உங்கள் பெயரென்ன? “வேங்கட சுப்பையர்” ‘வேங்கட சுப்பு என்பது வேங்கட சுப்பிர மணியன் என்பதன் மரூஉ பார்த்தீர்களா? திருவேங்கடம் என் னும் திருப்பதி மலை மேல் இருப்பது திருமால் இல்லை, சுப்பிர மணியன். அதாவது முருகன். எங்கள் சைவம்தான் அங்கும்.” மாணவரைப் பார்த்து சில வினாக்கள் கேட்டுத் திறமையை அறிந்து தம் குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். பிறகு ஒருநாள் கேட்டார், “உன் பெயரென்ன?” “வேங்கடராமன்” ‘இராமனா?... உனக்கு வேறு பெயருண்டா?” “உம்... வீட்டில் சாமா என்று கூப்பிடுவார்கள்” “சாமா.... சாமிநாதன் என்பதன் மரூஉ. சரி, இனிமேல் உன் பெயர் சாமிநாதன்” என்றார் பெரும்புலவர். அன்று முதல் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்தது. கற்றது கைம்மண்ணளவு பெரும்புலவரிடம் படித்த தியாகராசச் செட்டியார் கும்பகோணம் மாநில (மாகண)ப்பள்ளியில் வேலைபார்த்து வந்தார். தாம் பணி ஓய்வு பெறும் நிலையில், சாமிநாதரை அப்பணியில் அமர்த்த ஆவன செய்தார். தமிழ்ப் பற்றாளரும், கும்பகோணம் நீதிமன்ற நடுவரும் ஆகிய சேலம் இராமசாமி முதலியாரைத் தமிழ்ப் பற்று காரணமாகச் சாமிநாதர் சந்திக்கச் சென்றார். “தமிழ்ப் பேராசிரியரா? என்னென்ன படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார் நீதிமன்ற நடுவர். சாமிநாதர் தாம் படித்த ஆத்திசூடி தொடங்கி, சூடாமணி நிகண்டு, நன்னூல், தண்டி, காரிகை, பாட்டியல்கள் முதலிய இலக்கணங்கள், அந்தாதிகள் 20, கோவைகள் 15, பிள்ளைத் தமிழ் 30, உலா 20 என நூல்களின் பட்டியலைக் கூறினார். “அவ்வளவுதானா?” “உம்... கம்பராமாயணம் முழுவதும் படித்திருக்கிறேன்.” “அவ்வளவுதானா? வேறு பழைய நூல்கள் படித்த தில்லையா?” “ என் ஆசி ரி யர் ம காவித்துவான் மீனாட்சி சு ந்த ர ம் பிள்ளை அவர்கள் அறியாத நூல் இல்லை. அவர் கற்பித்த எல்லாம் படித்திருக்கிறேன்.” இராமசாமி முதலியார் தாம் வைத்திருந்த சிந்தாமணி, சில சங்க இலக்கியங்களின் கையெழுத்துச் சுவடிகள் ஆகியவற்றைக் கொடுத்து “இவற்றைப் படித்து எமக்கும் வந்து விளக்கம் சொல்லுங்கள். பல புரியவில்லை” என்றார். வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது, அந்நூலின் முத லடியோ அதற்கான நச்சினார்க்கினியரின் உரையோ மேற் கோள்களோ ஒன்றும் புரியவில்லை. பழைய நூல்களைத் தேடிப் படிப்பதென்று அக்கணமே முடிவு செய்தார். அதுவே பழந் தமிழ்ச் சுவடிகளை மீட்டெடுக்கும் பணியில் அவரை ஈடு படுத்தியது. கல்லூரி தந்த பெருமை கும்பகோணத்தில் கணக்குப் பேராசிரியராகப் பணி யாற்றிச் சென்னை சென்ற பூண்டி அரங்கநாத முதலியார், சாமிநாதரைச் சென்னை மாநிலக் கல்லூரியில் வேலையில் சேரும்படி வற்புறுத்தியதோடு, உரிய உதவிகளும் செய்து சேரச் செய்தார். தம்முடைய இவ்வளவு புகழுக்கும் கும்பகோணம் கல்லூரியும் அதில் வேலை பெறச் செய்த தியாகராசச் செட்டி யாரும் காரணம் என்பதால், சாமிநாதர் சென்னைத் திரு வேட்டீசுவரன் பேட்டையில் தமது இல்லத்திற்குத் “தியாகராச விலாசம்” என்று பெயரிட்டார். சிந்தாமணிப் பதிப்பு சீவக சிந்தாமணியோ பிற காப்பியங்களோ அந்தக் காலத் தில் முழுதும் அச்சேறவில்லை. ஆயினும் ஆங்கிலேய அரசு தமிழ் இலக்கியங்களைப் பாடநூல்களில் தமிழக மாணவர் களுக்கு அறிமுகப் படுத்தியது. பள்ளியிலோ கல்லூரியிலோ சாமிநாதையர் படிக்கவில்லை என்பதால் அவர் சங்க நூல் களைப் பற்றியோ சிலப்பதிகாரம் பற்றியோ அறிந்திருக்க வில்லை. சேலம் இராமசாமி முதலியார் கொடுத்த சிந்தாமணி கையெழுத்துப் படியில் நிறைய பிழைகள் இருந்ததால், ஏட்டுச் சுவடிகளைத் தேடத்தொடங்கினார். அதே நேரத்தில் சிந்தா மணியைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை நீதிமன்ற நடுவராக இருந்த சி.வை.தாமோதரம் பிள்ளை அப் பணியைத் தம்மிடம் விட்டுக் கொடுக்குமாறு கேட்டார். சாமிநாதர் விட்டு கொடுக்காததால் சி.வைதா தம்மிடமி ருந்த சிந்தாமணி ஏட்டுச்சுவடிகளையும் கொடுத்து உதவினார். அவர் தம்மிடமிருந்த கலித்தொகையைப் பதிப்பித்தார். சாமி நாதர் முதன் முதலில் சிந்தாமணியைப் பதிப்பித்ததால் வெள்ளக் கால் சுப்பிரமணிய முதலியார், வி.கனகசபைப்பிள்ளை, மனோ மணியம் சுந்தரம் பிள்ளை, பம்மல் விசயரங்க முதலியார் முதலிய பல பெரியோர்களின் நட்பையும் உதவிகளையும் பெற்றார். ஜி.யூ. போப் முன்னரே சிந்தாமணியில் தமக்குக் கிடைத்த ஓர் இலம் பகத்தை மட்டும் கல்லூரித் தமிழ்ப் பாடநூலில் சேர்த்து விட்டு, மீதி இலம்பகங்கள் கிடைக்கவில்லையே என்று தேடிக் கொண் டிருந்தார். முழுவதும் கிடைத்ததால் மகிழ்ந்து. இலண்டனி லிருந்து போப் அவர்களும் பாரிசிலிருந்து தமிழ்ப் பேராசிரியர் சூலியன் வின்சோன் என்பவரும் பாராட்டி மடல் எழுதினர். சிந்தாமணி அச்சில் வரவில்லையே தவிர அதன் ஏட்டுச் சுவடி கள் திருவாடுதுறை மடத்திலும் மதுரைத் தமிழ்ச்சங்கம் கண்ட பாலவநத்தம் சமீன்தார் வீட்டிலும் சமணர் கோயில்களிலும் வீடுகளிலும் இருந்தன. சமணப் பெண்மணி ஒருவர் திரைக்கு அப்பால் இருந்து கூறக்கூற, இப்பால் இருந்த உ.வே.சா கேட்டுத் தம்முடைய சுவடியைத் திருத்திக் கொண்டார். சிலம்பு தேடிப் பயணம் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் மாணவர்களுக்குப் பாடமாக இருந்ததால், அடியார்க்கு நல்லார் உரையுடன் மாநிலக்கல்லூரிப் பேராசிரியர் சீனிவாச ராகவாச்சாரி ‘சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்’ என்று 1880-இல் பதிப்பித்திருந்தார். பிழைகள் இல்லாமல் முழுநூலையும் பதிப்பிக்க ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சிலம்போடு புறப்பட்ட கண்ணகியின் பயணம் போல், சிலம்பு தேடிப் பயணம் புறப்பட்டார் சாமிநாதர். வரகுண பாண்டியன் ஆண்ட கரிவலம்வந்த நல்லூருக்குச் சென்றார். புலவர் வழிமுறை வந்த ஒருவரின் வீடு. “பனைஓலைச் சுவடிகள் நிறைய இருந்தன. குப்பை போல் சேர்ந்து விட்டதால் என்ன செய்வதென்று கேட்டேன். ஆகம விதிப்படி ஆகுதியில் போடச் சொன்னார்கள். போட்டுக் கொளுத்திவிட்டேன்.” “அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தை அல்லவா கொளுத்த வேண்டும்” என்று வருந்தி மீண்டார் சாமிநாதர். நெல்லையில் வய்க்காட்டு (வயற்காட்டு) வாத்தியார் வீட்டில் நிறைய சுவடிகள் இருந்ததை அறிந்து திரிகூட ராசப்பக் கவிராயர் என்பாருடன் அங்குச் சென்றார். “ஆடிப் பதினெட்டாம் பெருக்கு அன்றைக்கு மிகப்பழைய ஏட்டுச்சுவடிகளைத் தேர்போல் கட்டி ஆற்றிலும் வாய்க் காலிலும் விட்டுவிட்டோம்” என்றார் வாத்தியார். இவ்வாறு நெருப்புக்கும் நீருக்கும் கரையானுக்கும் இரையாகிக் கொண் டிருந்த பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளை முதலை வாயிலிருந்து மீட்டெடுத்த சாமிநாதர், முதலைப்பட்டி என்று வழங்கிய மிதிலைப்பட்டியில் சிலப்பதிகார ஏட்டுச் சுவடி கிடைத்து 1892- இல் பதிப்பித்தார். மயிலை சண்முகம் பிள்ளையால் மணி மேகலை முதன் முதலாக 1894-இல் பதிப்பிக்கப்பட்டது; உ.வே.சா 1896-இல் பதிப்பித்தார். தமிழுக்குக் கண் வடமொழியில் (சமற்கிருதத்தில்) மிகச்சிறந்த புலமை வாய்ந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த ‘மகாமகோ பாத்தியாய’ (பெரும்பேராசிரியர்) என்ற பட்டத்தை ஆங்கிலேய அரசு முதன் முதலாக 1906-இல் தமிழில் சிறந்தவர்க்கும் அளிக்க முடிவு செய்து, உ.வே.சாமிநாதருக்கு வழங்கியது. தமிழ் ஏடுகள் தேடித் தமிழ் இலக்கியங்களை அச்சில் கொண்டு வந்து வாழ வைத்த சாமிநாதரைப் பாராட்டிச் சென்னைப் பல்கலைக்கழகம் அளித்த சிறப்பு முனைவர் பட்டத்தைப் பெறச் சென்றபோது பல்கலைக்கழக மண்டபத்தின் படிகளில் ஏறி வந்து கொண் டிருந்தார். அப்போது அவரை அழைத்துச் சென்ற இளைஞர் “தாத்தா... படி... படி... படி...” என்று அவருக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். தமிழ்த்தாத்தா சொன்னார் : “தம்பி... தாத்தா இந்த தள்ளாத வயதிலும் படித்துக் கொண்டுதான் இருக் கிறேன்.” ஏட்டுச்சுவடிகள் கிடைப்பதும் அரிது. ஒடிந்தும் முறிந்தும் கிடைக்கும் அந்தச் சுவடிகளைப் படித்தலும் மிகவும் கடினம். தூசு தட்டிப் படிக்க முற்பட்டால், புள்ளியில்லா எழுத்துகள் படியெடுப்போரால் பலவகையாகவும் பல பிழைகளோடும் எழுத்தாணியால் கீறப்பட்டிருக்கும். இவற்றைப் படித்துப் படித்து சாமிநாதரின் கண்பார்வை குறைந்துவிட்டது. மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை, “தாங்கள் தமிழுக்குக் கண். தங்கள் கண்ணுக்கு வருத்தம் என்று கேட்க மனம் சகிக்கிறதில்லை. இனியும் தங்களால் ஆகவேண்டுபவை அனந்தம்” என்று மடல் எழுதினார். உலகப்போரின் போது எம்டன் கப்பல் சென்னை மேல் குண்டு வீசியதால், சென்னை விட்டு நீங்கித் திருக்கழுக் குன்றம் சென்றிருந்தார். படி... படி என்று படித்த தமிழ்த்தாத்தா மாடிப்படியில் தவறி விழுந்து நோயுற்றுப் பின் மறைந்தார். அவர் தேடித் தொகுத்த சுவடிகளையும் புத்தகங்களையும் வைத்து உ.வே. சாமிநாதையர் பெயரில் நூலகம் ஒன்றைத் திருவான்மி யூரில் ருக்குமணி அருண்டேல் 1949-இல் அமைத்தார். இந் நூலகத்திலும் தஞ்சாவூரிலும் மைசூரிலும் என ஆயிரத்துக்கு மேற்பட்ட சுவடிகள் அச்சில் வராமல் மக்கி மடிந்து கொண் டிருக்கின்றன. தமிழ்த்தாத்தா வந்துதான் அச்சிட வேண்டுமோ! உ.வே.சாமிநாதையர் உ.வே.சாமிநாதையர் இயற்பெயர் : வேங்கடராமன் சிறப்புப்பெயர் : சாமிநாதன், உ.வே.சாமிநாதையர், மகா மகோபாத்யாய (ஆங்கிலேய அரசு வழங் கியது 01-01-1906), திராவிட வித்தியா பூசணம் (1917), தட்சிணாத்ய கலாநிதி (சங்கரச்சாரியார் வ ழ ங் கி ய து 1 9 2 5 ) , முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியது 21-03-1932), தமிழ்த்தாத்தா. பெற்றோர் : சரசுவதி அம்மையார், வேங்கடசுப்பையர் பிறந்த நாள் : 19-02-1855 மறைந்த நாள் : 28-04-1942 ஊர் : உத்தமதானபுரம் அருகில் சூரியமூலை கல்வி : கோட்டூர்-திண்ணைப்பள்ளி, தந்தை யிடமும் அரியிலூர் சடகோப அய்யங் காரிடமும் இசை, திருவாவடுதுறை பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் மடத்தின் தலைவர் மேலகரம் சுப்பிர மணிய தேசிகரிடமும் தமிழ்க்கல்வி பணி : திருவாவடுதுறை மடத்தின் புலவர், கும்ப கோணம் மாநில (மாகாண)க் கல்லூரியில் தமிழாசிரியர் (16-02-1880 — 1903) சென்னை மாநில க் க ல்லூரி யி ல் தமி ழ் ப் பேராசிரியர் (1903-1919) தி ல்லை ( சிதம்பரம்) மீனாட்சி தமிழ்க்கல்லூரி முதல்வர் (1924-1927) படைப்புகள் : பௌத்த மும்மணிகள் (1898); மணிமேகலை க் கதை ச் சுருக் க ம் , உதயணன் க தை ச் சு ரு க் க ம் , ச ங் க கால த் த மிழு ம் பிற்காலத்தமிழும், கோபால கிருட்டிணபாரதியார் சரித்திரம், கனம் கிருட்டிணய்யர், மகாவைத்திய நாதையர், மகாவித்து வ ன் மீனா ட் சி சு ந் த ர ம் பி ள்ளை ச ரி த் தி ர ம் ( 1 9 3 3 , 3 4 ) தியாகராச செட்டி யார் சரித்திரம், என் சரித்திரம், நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை, நினைவு மஞ்சரி(1940,42) செய்யுள் : நீ லி இ ர ட் டை ம ணி மாலை , த மி ழ் ப் பாமஞ்சரி (1961 கி.வா.ச.பதிப்பு) பதிப்புப்பணி : சீவகசிந்தாமணி (1887), சிலப்பதிகாரம் (1892), புறநானூறு (1894), மணி மேகலை (1896), பத்துப்பாட்டு (1899), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), பரிபாடல் (1918), பெருங்கதை (1920), குறுந்தொகை (1937), மகா வித்துவானின் தியாகராசலீலை (1905), மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குமரகுருபரர் கொட்டையூர் சிவக் கொழுந்து தேசிகர் ஆகியோரின் சிற்றிலக்கி யத் திரட்டுகள் , பலபு ராணங்கள் முதலியவை. மாணவர்கள் : ம.வீ. இராமானுசாச்சாரியார் (பாரதம் பதிப்பித்தவர் ) , தி ரு ப் ப ன ந் தாள் ம ட த் தின் தலைவர் சொக்கலிங்கத் தம்பிரான், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், இ.வை. அனந்த ராமையர் முதலியோர். 12. ஒரு நாடகத்தால் உலகப்புகழ்! இந்தியாவில் உள்ளவை வடமொழியும் அதன் கிளை மொழிகளும் மட்டுமே என்று உலகம் கருதிக் கொண் டிருந்தபொழுது தென்னிந்திய மொழிகளை அடையாளம் கண்டு அவற்றுள் தமிழே தலைமையான மொழி என்று முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் ‘கால்டுவெல்’ என்னும் குருமார் ஆவார். அதேபோல் இந்திய நாகரிகம் என்பது ஆரிய நாகரிகம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்த போது, சிந்துவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்து இது தமிழர்களின் நாகரிகம் என்று உலகுக்கு உணர்த்தினார் ‘ஈராசு’ என்னும் குருமார். ஆரியத்தை விட உயர்ந்தது தமிழ் என்ற பெருமையை உலகுக்கு உணர்த்திய தோடு தமிழை அன்னை என உருவகப்படுத்தித் தெய்வமாக்கி வாழ்த்திப் பாடியவர் சுந்தரனார் ஆவார். “ஆரியத்தின் செருக் கடக்கியவர் சுந்தரனார்” என்று பாராட்டுவார் பாவாணர். வர லாற்றுத் துறையிலும் தத்துவத் துறையிலும் தலை சிறந்த இவர், ‘மனோன்மணீயம்’ என்னும் ஓர் நாடகம் இயற்றி உலகப் புகழ் பெற்றார். ஆசிரியர் விரும்பிய ஆசிரியர் இளங்கலையில் முதல்நிலை மாணவராய்த் தேறியதால் கல்லூரி முதல்வர் ‘ராஸ்’ அவர்களும் ஆசிரியர்களும் சுந்தர னாரை ஆசிரியர் பணிக்கு அழைத்தனர். “மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன். ஆசிரியர்கள் தெய்வத்துக்கு மேலானவர்கள். எனவே நான் அவர்கள் சொற்படி ஆசிரியர் ஆகின்றேன்” என்று ஏற்றுக்கொண்டார். பணியில் இருந்துகொண்டே படிக்கலாம் என்று முதல்வர் கூறியதால் முதுகலைப் படிப்பும் படித்தார். திருவனந்தபுரம் பகுதியில் முதன் முதல் முதுகலை படித்தவ ராகவும் முதல் மதிப்பெண் பெற்றவராகவும் தேறினார். இதனால் எம்.ஏ.சுந்தரம்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். ஆசிரியர்களும் மாணவர்களும் விரும்பும் ஆசிரியராக விளங் கினார். சுந்தரனாரை நெல்லையிலுள்ள பள்ளியின் தலைமை யாசிரியர் பணிக்குக் கல்லூரி முதல்வரே அனுப்பினார். அப் பள்ளியில் நன்கு பணியாற்றிக் கல்லூரி யா க் கினா ர் . திருவனந்தபுரம் கல்லூரியினர் அவரைத் தம் கல்லூரிக்கே அழைத்து விரிவுரையாளராய் அமர்த்தினர். முதலில் வரலாற்று ஆசிரியராகத்தான் பணியில் சேர்ந்தார். சுந்தரனார் திருவாங்கூர் வரலாற்றைத் தேடப்புகுந்தார். கல்வெட்டறிஞர் கோபி நாத ராவுடன் பல இடங்களுக்குச் சென்று தேடிக் கண்டு பிடித்துக் கல்வெட்டுகளைப் படியெடுத்து வந்தார். திருவாங்கூர் அரசிடம் கூறித் தொல்பொருள் துறை ஏற்படுத்தச் செய்தார். அதன் மதிப்புறு தலைவராக இருந்தார். திருவாங்கூர் வரலாற்றையும் மன்னர் வரலாற்றையும் எழுதிய சுந்தரனார் குடும்பத்துக்கு அரண்மனையிலிருந்து மாதக் கொடை வழங்கப் பெற்றது. திருவாங்கூர் மன்னர் விசாகத் திருநாள் சுந்தரனாரை ஆசிரியராக ஏற்றார்; அவர் வற்புறுத் தலால் அரண்மனை வருவாய் அதிகாரியாகப் பணியாற்றினார். ஆயினும் இவருடைய ஆசிரியர் முனைவர் ஹார்வி இவரை ஆசிரியப் பணிக்கே அழைத்ததால் மீண்டும் விரிவுரையாளர் ஆனார். ஹார்வி தாம் ஓய்வு பெற்று இலண்டன் சென்றபோது தாம் பணிபுரிந்த தத்துவத் துறையின் தலைவராக இவரை அமர்த்திச் சென்றார். நாடகத்தமிழ் நல்கியவர் தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கப் புறப்பட்ட சுந்தரனார், நாடகத்துறையில் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் நாடக நூல்கள் இல்லை என்ற குறையைப் போக்க வேண்டும் என்று ‘மனோன்மணீயம்’ என்னும் செய்யுள் நாடகத்தை எழுதினார். தமிழ், வரலாறு, கல்வெட்டு, தத்துவம், சமயம் என்னும் அனைத் தும் சேர்ந்து இவரை ‘மனோன்மணீயம்’ நாடகத்தை எழுத வைத்தன. தமிழ்ப் பற்றாளர் மனோன்மணியத்தின் பாயிரத்தில் உள்ள ‘நீராரும் கட லுடுத்த நிலமடந்தைக்கு’ என்று தொடங்கும் பாடல் தமிழ் நாட்டின் பொது வாழ்த்துப் பாடலாகத் தமிழக அரசால் சூன் 1970 முதல் ஏற்கப் பெற்றுள்ளது. தமிழைத் தெய்வமாகக் கொண்டு தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகப் பாடியுள்ளார். மேலும் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ்த்தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கிளைமொழிகள் என்று பாடியுள்ளார். தமிழுக்குத் தொண்டு செய்வோர் இரண்டு கடமைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டும். இரண்டு, புதிய துறைகளில் நூல்கள் இயற்றல் வேண்டும் - என்று கூறி நாடகத்தமிழ் நூல்கள் இல்லை என்ற குறை போக்க இந்த நூலை இயற்றினார் சுந்தரனார். நாட்டுக்கும் மொழிக்கும் ஏற்படும் குறை நீக்காமல் அமைதியாக இருப்பவன் உயிரற்ற பிணத்திற்குச் சமம் என்பதனை, “பாஷாபி மானமும், தேசாபி மானமும் பொருளெனக் கருதாது உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சாந்தம் பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம்” எனப் பாடுவார் சுந்தரனார். பல்கலை அறிஞர் “சுந்தரம் பிள்ளை நடுத்தரமான உயரமுள்ளவர். சற்றே ஸ்தூலித்த சரீரம். மாநிறம். அபூர்வ சோபையோடு வசீகரமாய் அமைந்த முகம். அறிவொளியும் அன்பும் மிளிர்ந்து அமர்ந்து நோக்கும் கண்கள். புன்னகை தவழும் இதழ்கள். இனிமையும், அழகும், நகைச்சுவையும் ததும்பும் பேச்சுவன்மை” என்று கூறுவார் ச.வையாபுரிப்பிள்ளை. ஆங்கிலம், வரலாறு, தத்துவம், கல்வெட்டு, தொல் பொருளியல் முதலிய பாடங்களை மாணவர்களுக்குச் சுவை யுடன் நடத்தியவர் சுந்தரனார். அதனால் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம், தமிழ், வரலாறு, தத்துவம் முதலிய துறைகளுக்குப் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்தார். இங்கிலாந்தின் அரசாண்மை வரலாற்றுச் சங்க மதிப்பு உறுப்பினராகவும் (எப்.ஆர்.எச்.எசு), அரசாண்மை ஆசியவியல் சங்க உறுப்பினராகவும் (எம்.ஆர். ஏ.எசு) சென்னைப் பல்கலைக்கழக மதிப்பு உறுப்பினராகவும் பட்டம் வழங்கப்பட்டார். நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர் த்ததாலும் தமிழன்னைக்கு வாழ்த்து பாடியதாலும் தமிழுலகில் நிலையான புகழ் பெற்றார் சுந்தரனார். துறவிகளுடன் நட்பு சு ந் த ரனா ர் சைவ த் திலும் த த்துவத் திலும் நாட்ட ம் கொண்டவர்களை இணைத்து 1885-இல் திருவனந்தபுரம் சைவப் பிரகாச சபை ஏற்படுத்தினார். தமக்குத் தத்துவப் பாடம் சொன்னவரும் பேராசிரியப் பணியளித்தவரும் ஆகிய தம் பேராசிரியர் முனைவர் ஆர்வி. அவர்கள் மேல் உள்ள பற்றால் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி ‘ஹார்வி புரம்’ என்று பெயரிட்டு அப்பகுதியில் தம் இல்லத்தை அமைத்துக் கொண்டார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து சுந்தரனாரும் அவர் மனைவி சிவகாமி அம்மையாரும் துறவி களைத் தம் இல்லத்திற்கு அழைத்து மதிப்பளித்து வந்தனர். விவேகானந்தர், தைக்காடு ஐயா சுவாமிகள், சட்டாம்பி சுவாமி கள், நாராயணகுரு, திருவாங்கூர் திவான் தாணுப்பிள்ளை, மறைமலை அடிகள் முதலியோர் சுந்தரனார் இல்லத்திற்கே வந்து பேசியிருந்து சென்றுள்ளனர். விவேகானந்தர் சுந்தர னாரிடம் பலமணி நேரம் தத்துவ விளக்கம் கேட்பார். “அன்பிற்குப் பாத்திரமானவர்களை ஆண்டவன் அற்ப ஆயுளிலேயே ஆட்கொண்டு விடுவான் என்பதற்குச் சுந்தரம் பிள்ளையின் மறைவே சான்று பகரும்” என்று விவேகானந்தர் கூறியுள்ளார். பாரதிதாசனார் பாடு வார்; தமிழன்னை கூறுவதாக : “நான் பெற்ற மக்களிலே சுந்தரன் சிறந்தவன் நற்றமிழ் காக்கத் தன்னைத் துறந்தவன் தேன் போன்ற தமிழை வளர்க்கப் பிறந்தவன் செந்தமிழ்க் குழைத்தே இறந்தவன்.” மனோன்மணியம் சுந்தரனார் மனோன்மணியம் சுந்தரனார் இயற்பெயர் : சுந்தரம் சிறப்புப்பெயர் : எம்.ஏ.சுந்தரம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திராவிட ஆராய்ச்சித் தந்தை, இராவ்பகதூர் (1894) பெற்றோர் : மாடத்தி அம்மாள், பெருமாள் பிள்ளை பிறந்த நாள் : 05-04-1855 மறைந்த நாள் : 26-04-1897 ஊர் : திருவனந்தபுரம் அருகில் ஆலப்புழை கல்வி : ஆலப்புழை - தொடக்கக்கல்வி, பள்ளிக்கல்வி திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி - இளங் கலை (1876) முதுகலை (1880) நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை யிடம் - தமிழ் கோடக நல்லூர் சுந்தரசுவாமிகளிடம்- சமய தத்துவம் பணி : திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி - வர லாற்று விரிவுரையாளர் (1877). நெல்லை ஆங்கிலம் தமிழ் (வெர்னா குலர்) கல்லூரி முதல்வர் (1878-1880) (இதுவே பின்னாளில் மதுரை திரவியம் தாயு மானவர் இந்துக் கல்லூரி) திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி : தத்துவ விரிவுரையாளர் (1880-1883), திரு வனந்தபுரம் அரண்மனை : ‘பிறவகை சிரசு தார்’ (வருவாய் அதிகாரி) (1883-1885) திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி : தத்துவப் பேராசிரியர் (1885-1897) படைப்புகள் : சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம் (1888), மனோன்மணீயம் (1891) சிவகாமியின் சபதம், ஒரு நற்றாயின் புலம் பல், பொதுப்பள்ளி யெழுச்சி, அன்பின் அக நிலை முதலிய செய்யுள் நூல்கள் ஆங்கிலத்தில் : பண்டைய திருவாங்கூர் முடிமன்னர் களின் காலம் (1894), திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி (1895) மொழிபெயர்ப்பு : திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, ம துரை க்காஞ்சி (சென்னை கிறி த்துவக் கல்லூரி இதழ்) மாணவர்கள் : சி.வி.இராமன் பிள்ளை (புதின ஆசிரியர்) ஆர். ஈசுவரப்பிள்ளை, கே.வி. சங்கரமேனன் முதலியோர். 13. ஞானப்பழத்தைப் பிழிந்து...! இங்கிலாந்தில் செகப்பிரியரின் நாடகங்கள் நடந்த காலங் களில் மேடை, திரைச்சீலைகள் இல்லை; பெண்கள் நடிப்ப தில்லை. சங்க காலத்திலேயே பெண்கள் இசை, நடனம், நாடகம் முதலிய கலைத்துறைகளில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் பிற்காலத்தில் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் எளிதாக உணர்ச்சிகளுக்கு இரையானதாலும் ஆணாதிக்கச் சமுதாயத் தில் பெண்கள் சுரண்டப்பட்டதாலும் கலைஞர்களுக்கே உரிய ஏழைமையாலும் கலைமகளிர் விலைமகளிர் ஆயினர். கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் உணர்ச்சிவயப்பட்டு நடிக்க வேண்டி யவர்கள். நடனம் இசை ஆகிய இனிமையுடன் ஆண்களும் பெண்களும் எப்போதும் இணைந்து செயற்படுவதால் தங்களை மீறித் தவறுகளுக்குப் பலியாகிவிடக் கூடிய சூழ்நிலை உண்டு. எனவே கலைத் துறையில் ஆண்களும் பெண்களும் தனித்தனியே பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண்கள் நடிப்புத் துறையில் அதிகம் ஈடுபடவில்லை. ஆண்களை மட்டுமே கொண்ட நாடகக் குழுக்கள் தோன்றின. சிறுவர்களைச் சேர்த்து அமைக்கப் பெற்றதால் பாலர் நாடகக் குழுக்கள் (பால நாடக சபா, பாய்ஸ் கம்பெனி) எனப் பெற்றன. வண்ணச்சரபம் தண்டபாணி அடி களாரின் மாணவர் துறவி சங்கரதாசர் வந்ததால் நாடகத் துறை நற்பெயர் பெறலாயிற்று. விட்டும் விடாமை சங்கரதாசர் அரசு உப்பள வேலையைவிட்டு 1884-இல் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கினார். இராமாயணப் புலவர் என்று புகழ் பெற்றிருந்த தம் தந்தையிடமிருந்தும் தம் ஆசிரியரிடமிருந்தும் இசையோடு கூடிய பாடல்களை இயற்றக் கற்றிருந்தார். எனவே நாடகப் பாடல்களை இயற்றத் தொடங்கி னார். முரட்டுத் தோற்றம் கொண்டவர். ஆகையால் எமன், சனீசுவரன், இராவணன், இரணியன் முதலிய முரண் பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். ஒருநாள் கோயில்பட்டி அருகில் உள்ள நாலெட்டின் புதூரில் ‘நளதமயந்தி’ நாடகத்தில் உடலெல்லாம் கரி பூசிச் சனீசுவரனாக நடித்தார். மிகக் கடுமையான கொடுமையான இத்தோற்றத்துடன் நாடகம் முடிந்தபின்னர் நள்ளிரவில் கிணற்றுப்பக்கம் சென்றார். கருவுற்றிருந்த ஒரு பெண் இவரைப் பார்த்து அச்சத்தால் அலறி அதே இடத்தில் உயிரை விட்டாள். அன்பும் அருளும் இரக்கமும் கொண்ட சங்கரதாசரின் உள்ளம் இதனால் மிகவும் வருந்தியது. அதனால் நடிப்பதை அன்றோடு கைவிட்டார். முழுத்துறவியாகிக் கோவணத்துடன் காசி, கயா, கதிர் காமம் எனச் சுற்றிப் பின் மதுரை வந்தார். ஓர் இழப்பு இன்னொரு வகையில் ஆதாயம் ஆவதுண்டு. அவ்வகையில் நடிப்பை விட்ட தால் நாடக எழுத்துப் பணியில் அதிகம் இறங்கினார். அவர் படைத்த எண்ணற்ற நாடகங்கள் தமிழகத்தை மகிழ்வித்தன. எண்ணற்ற நாடகக் கலைஞர்கள் உருவாயினர். ஒழுக்கமுடைமை நடிகர்கள் என்றாலே கூத்தாடிகள் என்றும் ஒழுக்கக் கேடர்கள் என்றும் குறைசொல்லப்பட்ட இழிவுகள் சங்கரதாசர் வரவால் நீங்கின. 1891-இல் பால மீன ரஞ்சினி சங்கீத சபா என நாடகக் குழு தொடங்கினார்; சிறுவர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டார்; பெண்களை நாடகக்குழுவில் சேர்த்துக் கொள்ள வில்லை. இறுதி வரை தூய துறவியாகவே வாழ்ந்து, நாடகத் துறையின் பெருமையை உயர்த்தினார். வெற்றிலை, பாக்கு, புகையிலை, பொடி, பீடி, வெண்சுருட்டு (சிகரெட்டு) முதலிய தீமைகளை மறந்தும் நினைக்கக் கூடாது என்று கண்டித்துத் தம் மாணவர்களை வளர்த்தார். அவரது நாடகக் குருகுலம் தூய்மை யின் இருப்பிடமாய் விளங்கியது. இவரைப் பின்பற்றிச் சிறுவர் நாடகக் குழு (பாய்ஸ் கம்பெனி) பல தோன்றின. அக்காலத்து நாடகக் குழுக்கள் அனைத்துக்கும் இவரே நாடக ஆசிரியராக அழைக்கப் பெற்றார். தாம் எழுதி இயக்கிய நாடகங்களிலும் தமிழ்ப் பண்பாடு காத்தார். மாணவர்களுக்குத் தாயும் தந்தையு மாய் அன்பு பாராட்டி அதே நேரத்தில் கண்டிப்பான ஆசானா கவும் திகழ்ந்தார். ஆற்றலுடைமை சங்கரதாசர் படைத்த நாடகங்கள் பழமைக்கும் புதுமைக் கும் பாலமாய் அமைந்தன. சீர்காழித் தமிழிசை மூவர் (முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை), முடிகொண்டான் கோபால கிருட்டிண பாரதியார் ஆகி யோரின் பாடல்களே அக்கால நாடக மேடைகளில் முழங்கி வந்தன. இவர்களது பாடல்களின் இசை நாடகக் கூறுகளை யும் இராமலிங்க வள்ளலார், தம் ஆசிரியர் வண்ணச் சரபர் ஆகியோரின் இசை, சமரச சன்மார்க்கம் ஆகியவற்றையும் இணைத்துச் ‘சமரச சன்மார்க்க நாடக சபை’ (1910) தொடங்கி யவர் சங்கரதாசர். வண்ணச்சரபர் பாடிக் குவித்தது போல நாடகங்களை எழுதிக்குவித்தார். கண்டிப்பு, ஒழுக்கம், மிகச் சிறந்த நடிப்புப் பயிற்சி கிடைக்கு மிடம் என்பதால் சங்கரதாசரின் சிறுவர் நாடகக் குழுவில் திருவனந்தபுரத்திலிருந்து வந்து தம் பிள்ளைகள் நால்வரையும் நடிகர் டி.எசு.கண்ணுசாமிப்பிள்ளை சேர்த்துவிட்டார். அந் நால்வரில் ஒரு பிள்ளையாகிய சண்முகம் மிகுந்த திறமையுடன் இருந்தான். அவன் கதைத் தலைவனாக (கதாநாயகனாக) நடிக்க நாடகம் ஒன்று எழுதித்தர வேண்டுமென்று நாடக நிறுவனத் தின் முதலாளி சங்கரதாசரிடம் வேண்டினார். புத்தகக் கடையி லிருந்து அபிமன்யு சுந்தரி அம்மானை வாங்கி வந்தார் சங்கர தாசர். இரவு ஓர் புயல் தாங்கி (அரிக்கேன்) விளக்கை ஏற்றி வைத்து எழுதலானார். விடியலில் அவர் உறங்கிக் கொண் டிருந்தார். பக்கத்தில் நான்கு மணி நேரம் நடிப்பதற்குரிய ‘அபிமன்யு சுந்தரி’ நாடகம் தொடக்கப் பாடலிலிருந்து கடைசி வாழ்த்துப் பாடல் வரை எழுதி முடிக்கப் பெற்றிருந்தது. அத் தகைய ஆற்றல் மிகுந்த நாடக ஆசிரியர் சங்கரதாசர் ஆவார். முத்தமிழுடைமை ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யும் ‘இராமநாடகக் கீர்த்தனை’யும் தமிழ்நாட்டின் ஊர்தோறும் பாடவும் நடிக்கவும் பெற்று வந்தன. இதேபோன்று நடத்தப்பட்ட பிற நாடகங்களும் ஆட்டமும் பாட்டுமாக இருந்தன. இவற்றில் உரையாடல் இடம்பெறவில்லை. பாடல் புரியாத இடங்களில் நடிகர்கள் தங்கள் விருப்பப்படி முறையற்ற தவறான கொச்சைப் பேச்சு களைப் பேசி வந்தனர். நாடக ஆசிரியராகிய சங்கரதாசர் இசை (பாட்டு) கூத்து (நடனம்) இரண்டுடன் உரையாடல்களையும் அமைத்து முத்தமிழும் சேர்ந்ததாக நாடகத் துறையை மாற்றி னார். தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரும், புதுச்சேரியில் தங்கி இவர் நாடகங்களை நடத்தியுள்ளதால் பாரதியாரும் பாரதிதாசனாரும் பார்த்திருக்கலாம் என்பர். அக்கால நாடகக் குழுக்கள் பலவற்றிலும் இவர்தான் நாடக ஆசிரியராகவும் சூத்திரதாரி (நாடகத்தைப் பற்றி முன்னும் பின்னும் இடையிலும் விளக்கிக் கூறுபவர்) ஆகவும் இருந்தார். அதனால் இவருடைய நாடகக் குழுவில் பெண்கள் சேர்க்கப்படவில்லை என்றாலும் பிற நாடகக் குழுக்களுக்கும் இவர் ஆசிரியராக விளங்கிய தால் பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி.சானகி, கோரங்கிமாணிக்கம், டி.டி.தாயம்மாள் முதலிய நாடக நடிகைகள் சங்கரதாசரிடம் பயிற்சி பெற்ற மாணவிகளே. பழமை புதுமையுடைமை விசயநகரப் பேரரசர் ஆட்சிக் காலத்திலிருந்துதான் இசையும் நாடகமும் தமிழ்நாட்டில் வளர்ந்தன என்று சிலர் பேசி வருகின்றனர். அதேபோல் பார்சி நாடகக் குழுக்களைப் பார்த்தே மேடை அமைப்புகள் வளர்ந்தன என்றும் கூறு கின்றனர். கிரேக்க நாட்டிலேயே தமிழ் நாடகம் இடம் பெற் றுள்ளது. சங்ககாலத்திலேயே நாடகங்கள் நடந்துள்ளன. சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்றெல்லாம் பழைய பெருமை தமிழுக்குண்டு. பழமையைப் புதுமைக்கு இணையாக மீட்டுருவாக்கம் செய்தவர் சங்கரதாசர் ஆவார். உரை யிடையிட்ட சிலப்பதிகாரம் போல பாடல்களுடன் உரை யாடல்களும் இடம் பெறச் செய்தார். கரி, சுண்ணாம்பு, செம் மண் முதலியன முகப் பூச்சுக்குப் பயன்படுத்தியமையை மாற்றி ‘அரிதாரம்’ என புதிய பூச்சு பூசிக் கொள்ளச் செய்தார். தெருக்கூத்தாக நடந்தவற்றை மேடைநாடகங்கள் ஆக்கி னார். திரைச்சீலைகளைப் பயன்படுத்தியதோடு அவற்றில் அழகிய பின்னணிக் காட்சிகளைத் தீட்டச் செய்தார். அவற்றில் நாடகக் காட்சி விளக்கம் எழுதித் தட்டிகளாகக் கட்டிப் புதிய விளம்பர உத்தியை அறிமுகம் செய்தார். இவருடைய மாணவர் நவாபு இராசமாணிக்கம் பிள்ளை கண் கவரும் மிகப் பெரிய மேடைகளையும் திரைச்சீலைகளையும் உருவாக்கிப் புகழ் பெற்றார். பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ (1895) நாடகத்துக்குப் பாடல் எழுதித் தந்துள்ளார். மதுரையில் ‘கோவலன் சரித்திரம்’ நாடகம் நடந்து கொண்டிருந்தது. கோவலன் பூம்புகாரைவிட்டு மதுரைக்குப் போகலாம் என்ற போது, கண்ணகி தடுத்து, “மா பாவியோர் வாழும் மதுரைக்கு - மன்னா, நீர் போகாதீர்” என்று பாடினாள். நாடக அரங்கில் இருந்த மதுரை மக்கள் எதிர்த்துக் கூக்குரல் எழுப்பினர். மேடை ஏறிய சங்கர தாசர், “மா என்றால் திருமகள், பா என்றால் மலைமகள், வி என்றால் கலைமகள்” என்று விளக்கம் கூறியதும் மக்கள் அமைதியடைந்தனர். கே.பி.சுந்தராம்பாள் குரலில் உலக மெல்லாம் பரவிப் புகழ்பெற்ற “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடல் இவரியற்றியதாகும். தமிழுக்குரிய அறம், சமயம், பண்பாடு, நாகரிகம் ஆகிய ஞானப்பழத்தைப் பிழிந்து இயல், இசை, நடிப்பு ஆகிய முத்தமிழ்ச் சுவையுடன் (ரசத்துடன்) தந்தவர் சங்கரதாசர். சங்கரதாசு சுவாமிகள் சங்கரதாசு சுவாமிகள் இயற்பெயர் : சங்கரன் சிறப்புப்பெயர் : தமிழ் நாடக உலகின் தந்தை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தந்தை பெயர் : தாமோதரத் தேவர் (தாமோதரக் கணக்கப் பிள்ளை) பிறந்த நாள் : 07-09-1867 மறைந்த நாள் : 13-11-1922 ஊர் : தூத்துக்குடி அருகில் காட்டுநாயக்கன் பட்டி கல்வி : தந்தையிடமும் வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகளிடமும் : தமிழ் + இசை புதுக்கோட்டை கஞ்சிரா மான்பூண்டியாப் பிள்ளையிடம் : தாளச் சொற்கட்டு பணி : தூ த் துக்கு டி உ ப்பளத்தி ல் கணக்கு ப் பிள்ளை, இராமுடு அ ய் ய ர் கலியாண ராமை ய ர் குழுவில் நடிக ர் , சாமி நா யுடு நாடகக்குழுவில் நடிகர், வள்ளி வைத்திய நாதய்யர், அல்லி இராமேசுவரய்யர், வேலு நாயர் முதலியோரின் நாடகக் குழுக்களில் ஆசிரியர், பால மீனரஞ்சினி சங்கீத சபா (1 891) , ச மரச சன்மார்க் க நா டக சபை (1910), தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா, மதுரை (1918) படைப்புகள் : ஏறத்தாழ 50, கிடைப்பன 20. அபிமன்யு சுந்தரி, சீமந்தனி, சுலோசனா சதி, ஞான சவுந்தரி, பவளக்கொடி, சிறுத் தொண்டர், வள்ளித்திருமணம், சதி அனுசுயா, பிரக லாதன், சத்தியவான் சாவித்திரி, லவகுசா, அல்லி அர்ச்சுனா, இலங்காதகனம், பாதுகா பட்டாபிஷேகம், தாரா சசாங்கம், கோவலன் சரித்திரம், மணிமேகலை, பிரபுலிங்க லீலை, நல்லதங்காள், கட்டப் பொம்மன். மொழிபெயர்ப்புகள் : மிருச்ச கடி, ரோமியோ ஜுலியட், ஜுலியசு சீசர், சிம்பலைன் மாணவர்கள் : மதுரை மாரியப்பா சுவாமிகள், எசு.ஜி. கிட்டப்பா உடன்பிறப்புகள், அவ்வை டி . கே. சண்முக ம் உடன் பி ற ப் பு கள் , கே.சாரங்கபாணி, நவாபு டி.எசு. இராச மாணிக்கம், யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, எம்.ஆர்.இராதா, கே.சாரங்க பாணி. பாடகர்கள் : விசுவநாத தாசு, டி.ஆர். இராமநாதன் 14. இந்தி இசையைத் திணிக்காதே! அந்தக் காலத்தில் நடிகர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும், நடனம் ஆடத் தெரிய வேண்டும், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தெரியவேண்டும், மிக நீளமான உரை யாடல்களையும் பேசத் தெரிய வேண்டும்; உரையாடல்களை இடத்திற்கு ஏற்றாற்போல தாமாகவும பேசத் தெரிய வேண்டும், இட்டுக்கட்டிப் பாடவும் தெரிய வேண்டும், ஒலி பெருக்கி வராத காலமாதலால் மேடையில் நடிப்போர் வெகுதொலையில் இருப்போர் காதிலும் விழுகிற அளவுக்கு எட்டுக் கட்டைக் குரலில் பாடவும் கத்திப் பேசவும் தெரிய வேண்டும். இப்படிப் பட்ட கலைஞர்கள் தமிழகத்தில் நிறைந்திருந்தனர். தெலுங்கும் வடமொழியும் அரசவைகளிலும் கோயில் களிலும் இடம்பிடித்ததால் தமிழ்க் கலைஞர்களும் புலவர்களும் தாழ்நிலை உற்றனர். துறவி சங்கரதாசர் நாடகத்துறையில் இனிய இசைப்பாடல்களை இயற்றித் தாமே பாடி நடித்து நாடகங்களை மதுரையிலும் தென்னாட்டின் பல பகுதிகளிலும் அரங்கேற்றியதால் தமிழ் நாடகக் கலையும் இசைக்கலையும் புத்துயிர் பெற்றன. இதே காலக் கட்டத்தில் படித்தவரும் நீதிமன்ற நடுவரும் ஆகிய பம்மல் சம்பந்தனார் சென்னையில் நாடகத் துறையில் ஈடுபட்டதால் நாடகக் கலை உயர்வடைந்தது. நடித்த பெரியோர்கள் அக்காலத்தில் நடிகர்களைக் கூத்தாடிகள், கூத்தாடிச்சி கள், ஒழுக்கமற்றவர்கள் என்று இழிவாகக் கூறி அவர்களுக்கு வீடு தரமாட்டார்கள்; நடனம் ஆடுவோரைத் ‘தேவடியாள்கள்’ என்றும் பரதநாட்டியத்தை ‘தேவடியாள் கச்சேரி’ என்றும் கூறுவார்கள். (பம்மல் சம்பந்தனாரின் சபாபதி நாடகத்திலும் திரைப்படத்திலும் கூட இவ்வாறுதான் குறிப்பிடப்படுகிறது.) இந்த இழிநிலையைப் போக்கி நடிகர்களை ஒழுக்கமுள்ளவர் களாக வளர்த்த பெருமை சங்கரதாசருக்கு உண்டு. செகப் பிரியரின் நாடகத்துக்கு இணையான ‘மனோன்மணியம்’ தமிழ் நாடகத்தைப் படைத்துக் கொடுத்துப் படித்தவர்களிடையே தமிழ்நாடகத்தைக் கொண்டு வந்தார் பெ.சுந்தரனார். பம்மல் சம்பந்தனார் செகப்பிரியர் நாடகங்களை மொழி பெயர்த்தும் பழைய புராண நாடகங்களை புதுக்கியும் உரை யாடல் (வசன) நாடகங்களை உருவாக்கினார். படித்தவர்களை யும் பதவியில் உள்ளவர்களையும் பணம் படைத்தவர்களையும் அரசியல் தலைவர்களையும் நாடகத்துறையில் ஈடுபட வைத் தார். எ.எசு.சத்தியமூர்த்தி, ஆர்.கே.சண்முகம் செட்டியார், சி.பி.இராமசாமி அய்யர், வி.ஜி.கோபாலரத்தினம், எம்.கந்தசாமி முதலியார் (நடிகர் எம்.கே.இராதாவின் தந்தை) முதலியோரைத் தம் நாடகமேடையில் ஏற்றியவர் சம்பந்தனார். ஒப்பித்தலால் நடிகர் தாயார் மடியில் கதை கேட்டு வளர்ந்ததாலும் தந்தை யோடு கோயில்களுக்குச் சென்று கடவுட்கதைகளைக் கேட்ட தாலும் கதைகளில் நாட்டம் உள்ளவராக வளர்ந்தார் சம்பந்த னார். ஒருமுறை பள்ளியில் செகப்பிரியரின் ஆங்கில நாடகத்தில் வரும் ‘அந்தோணியின் சொற்பொழிவு’ என்னும் பகுதியை ஓர் மாணவர் ஒப்பித்தல் போட்டியில் கூறக்கேட்டு தாமும் பங்கு பெறப் பயிற்சி மேற்கொண்டார். பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று ஓர் நாடகப் பகுதியை ஒப்பித்துப் பரிசும் பெற்றார். மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது செகப்பிரியரின் நாடகங்களைப் படித்தார். அந்நேரம் ‘ஆந்திர நாடகப் பிதா மகன்’ வழக்குரைஞர் வெ.அனந்தாச்சார்லு பல்லாரியிலிருந்து சென்னைக்குத் தம் ‘சரச வினோதினி சபா’ என்னும் நாடகக் குழுவுடன் வந்து தெலுங்கு நாடகம் நடத்தினார். அதனைத் தம் தந்தையுடன் சென்று பார்த்தார் சம்பந்தனார். படித்தவர்களும் பெரும்பதவியில் உள்ளவர்களும் பெரும் திரளாக வந்திருந் ததைக் கண்ட சம்பந்தனார் தாமும் அதே போன்று தமிழ் நாடகத்துக்குத் தொண்டு செய்ய நினைத்தார். அதன் விளைவாக ‘சுகுண விலாச சபை’யில் நண்பர்களுடன் சேர்ந்தார். நடிப்பில் தேர்ச்சி பெற்றதுடன் நிறைய நாடகங்களை எழுதினார். இயக்க வும் தொடங்கினார். காளிதாசனின் நாடகங்களைத் தாமே படித்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காகத் தனியே ஆசிரியர் அமர்த்திக் கொண்டு வடமொழியைக் கற்றார். மனைவி இறந்த அன்றைக்கும் கல்லூரியில் படிக்கும்போதே (1890) இவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. சட்டம் படித்து முடித்த பின்னர் வழக் குரைஞராகப் பணியாற்றிப் பேரும் புகழும் பெற்றார். ஆயினும் மாலையிலும் இரவிலும் நாடகக் குழுவில் தொடர்ந்து பணி யாற்றி வந்தார். இதனால் பகலில் மட்டும் வழக்கு கொண்டு வரும் கட்சிக்காரர்களைச் சந்தித்தார். நேர்மையான வழக்கு களை மட்டுமே எடுத்துக் கொண்டு உண்மைக்காக மட்டுமே வாதாடியதால் நல்ல பெயர் கிடைத்தது. இவருக்கு நாடகத்துக்கு வழிகாட்டியாக இருந்த அனந்தாச்சார்லு ‘நாடகத்தை விட்டா யானால் இன்னும் பெரிய வழக்குரைஞராகி நிறைய செல்வம் பெறலாம்’ என்று கூறியதை இவர் கேட்கவில்லை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று வழக்குகளையும் ஒழுங்காகக் கவனித்துத் தம் உயிரோடு ஒன்றிய நாடகக் கலைக் கும் தொடர்ந்து பணி புரிந்து வந்தார். நடுவராகப் பதவி உயர்வு பெற்றிருந்தபோது இவருடைய மனைவி உடல்நலமில்லாமல் 1926- இல் இறந்தார். முதல் நாளிரவு இறந்ததால் மறுநாள் காலை இறுதிக் கடன்களை முடித்துவிட்டு 11 மணிக்கு வழக்கு மன்றத் திற்கு வந்து பணியாற்றினார். அன்றிரவு விக்டோரியா பொது மன்றத்தில் நாடகம் நடத்தவும் வந்தார். 1928-இல் ஓய்வு பெற்ற பின் மேலும் வழக்காடிச் செல்வம் திரட்டலாம் என்று சிலர் சொன்னதை உதறிவிட்டு நாடகத்துறையிலேயே மூழ்கினார். இந்தி இசையைத் திணிக்காதே தமிழ்த் திரைப்படங்களில் இந்துஸ்தானி இசையையும் மேலைநாட்டு இசையையும் திணிப்பதைக் கண்டித்தார். ‘சரி யாகக் கற்காமலும் தேவையில்லாமலும் செய்யப்படும் இத் திணிப்புகளைக் கண்டு வடநாட்டாரும் மேலை நாட்டாரும் சிரிப்பார்கள்; தென்னாட்டு இசைதான் உணர்ச்சி வெளிப் பாட்டுக்கு ஏற்றது’ என்று சம்பந்தனார் எழுதினார். இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியும் பிராமணர் பிராமணர் அல்லாதார் போராட்டம் பற்றியும் பட்டும் படாமலும் கருத்துத் தெரிவித்துள்ளார். கொடுங்கோல் ஆட்சியை எதிர்ப் பது போல் நாடகங்களில் உரையாடல் வரும். சாதி வேறு பாடுகள் தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்திக் கூறிய துடன் தம் பெயரின் பின்னால் முதலியார் என்று எழுதுவதைக் கைவிட்டார். மதுவிலக்குச் சங்கத்தில் உறுப்பினராகிச் சிற்றூர் களுக்குச் சென்று பரப்புரை புரிந்து வந்தார். நாடக அடித்தளம் சிவாஜிகணேசனுக்கும் கலைஞருக்கும் நாடகத்துறை அடித்தளமாகும். இருவரையும் பராசக்தி, மனோகரா என்ற இரண்டு திரைப்படங்களும் புகழின் உச்சாணிக்குக் கொண்டு சென்றன. 1895-இல் மனோகரன் என்ற பெயரில் சம்பந்தனார் எழுதி இயக்கி நடித்த நாடகமே 1959-இல் கலைஞரின் உரை யாடலிலும் சிவாஜியின் நடிப்பிலும் மனோகரா என்ற திரைப் படமாகியது. மனோகரன் நாடகத்தில் மனோகரனாக நடித்த சம்பந்தனார் பிறகு மனோகரனின் தந்தையாக நடித்தார். இந்நாடகத்துக்கு மதுரை சங்கரதாசு சுவாமிகள் பாடல்கள் எழுதிக் கொடுத்துள்ளார். மனோகரன் நாடகம் பிற தொழில் முறை நாடகக் குழுக்களால் நாடு முழுவதும் பலமுறை அரங் கேறியது. அதனால்தான் கலைஞர் இதனைத் திரைப்பட மாக்கினார். சம்பந்தனாரின் திரைக்கதை உரையாடலில் சபாபதி திரைப்படமாக வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. தமது யயாதி நாடகத்தை சம்பந்தனாரே திரைப்படமாக்கும் போது (1938) உரையாடல் எழுதியதுடன் இயக்கவும் செய்தார். ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் சம்பந்தனாரின் 80ஆம் அகவை நிறைவு விழா சென்னை நாடகக் கலைமன்றத்தால் சிறப்புற நடத்தப்பட்டது. யானை மேல் அவரை அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். தமிழ்க்கலை போற்றப்பெறும் நாளே தமிழர் நன்னாள். பம்மல்சம்பந்தனார் பம்மல் சம்பந்தனார் இயற்பெயர் : திருஞானசம்பந்தன் சிறப்புப்பெயர் : பி.டி.சம்பந்தம், சம்பந்த முதலியர் , நாடகத் தந்தை, இராவ்பகதூர்(1927), ஆங்கிலேய அரசு வழங்கியது), நாடகப் பேராசிரியர் (1944, நாடகக் கலைமன்றம் வழங்கியது) பெற்றோர் : மாணிக்கவேலு அம்மாள், பம்மல் விசயரங்க முதலியார் பிறந்த நாள் : 01-02-1873 மறைந்த நாள் : 24-09-1964 ஊர் : சென்னை (70, ஆச்சாரப்பன் வீதி) கல்வி : தந்தையிடம் தெலுங்கு, திண்ணைப் பள்ளி களில் தமிழ், பிராட்வே இந்து புரொபரைடரி பள்ளி, கோவிந்த நாயுடு பிரைமரி பள்ளி (1880-1883), பி.டி. செங்கல்வராய நாயக்கர் பள்ளி, பச்சையப்பன் பள்ளி (1883-1887), மாநிலக்கல்லூரி (எஃப்ஏ, 1889 பி.ஏ., 1891, வரலாறு (1893) சட்டக்கல்லூரி (1897) பணி : சுகுண விலாச சபா (1891) நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், வழக்குரைஞர் (1898), சிறுகுற்றவியல் நீதிமன்ற நடுவர் (1924- 1928) நாடகங்கள் : மொத்தம் 94, புட்பவல்லி (1893, முதல் நாடகம்), இரத்தினாவளி, கள்வர் தலை வன், காதலர் கண்கள், சபாபதி (4 பாகங் கள்), மனோகரன், யயாதி, சாரங்கதரன், உத்தமபத்தினி, லீலாவதி, சதி சுலோசனை, வேதாள உலகம், சந்திரஃகரி, அரிச்சந்திரன், நல்லதங்காள், வள்ளித் திருமணம், சங்கீதப் பைத்தியம், நான்கு குற்றவாளிகள். செகப் பிரியரின் ஆங்கில நாடகங்களின் மொழி பெயர்ப்புகள் : அமலாதித்தன் (1908), மக பதி (1910), விரும்பியவிதமே (1913), சிங்களநாதன் (1914); வடமொழி நாடகங் களின் மொழி பெயர்ப்புகள் : சாகுந்தலம், மாளவிகாக்கினி மித்திரம். திரைப்படமாகியவை : மனோகரன், யயாதி, சாரங்கதாரா, உத்தம ப த் தி னி , லீ லாவ தி , ச தி சுலோசனா, வேதாள உலகம். பிற நூல்கள் : நாடகமேடை நினைவுகள் ( 6 பகுதி ) , நாடகத்தமிழ், நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?, பேசும்பட அனுப வங்கள், சிறுகதைகள், பல்வகைப் பூங் கொத்து, கீத மஞ்சரி, சிவாலயங்கள், சுப்பிர மணியர் ஆலயங்கள், சிவாலயச் சிற்பங்கள், நீண்ட ஆயுளு ம் தேக ஆரோக்கியமும், தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை, யான்கண்ட பு ல வர் கள், என் சு ய சரிதை (1963) 15. முழங்கிய சங்கம்! இராமநாதபுரம் அரண்மனையின் மேலாளர் பொன்னு சாமித் தேவர் தமிழில் தேர்ந்த புலமை பெற்றிருந்தார். சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் முதலியவர் களின் நூல் பதிப்பு முயற்சிகளுக்குப் பொருள் உதவி புரிந்த தமிழ்ச் செம்மல் அவர். அத்தகைய பொன்னுசாமித் தேவர் சென்னைக்குப் புறப்படுகிறார் என்றால் ஆறு பெரிய குதிரைகள் பூட்டிய மிக நீண்ட வண்டியில் செல்வார். அக்காலத்தில் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்படவில்லை. வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் புலவர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் கொண்டாட்டம்தான்! பொன்னுசாமித் தேவர் தம்மூன்று குழந்தைகளையும் தவிக்கவிட்டுத் திடீரென்று மறைந்தார். அவருடைய மூன்றாவது பிள்ளைக்கு மூன்று அகவை. அப்பிள்ளைகளைப் பாலவநத்தம் சமீன் முகவர் (ஏஜண்ட்) சேசாத்திரி அய்யர் வளர்த்தார். மூன்றாவது பிள்ளை பாண்டித்துரை இராமநாதபுரம் அரண் மனை அவைப் புலவர் சதாவதானி முத்துசாமி அய்யங்கார் வீட்டில்தான் பெரும்பாலும் வளர்ந்தார். முத்துசாமி அய்யங் காரிடம் தமிழும் வடமொழியும் கற்றார். முத்துசாமி அய்யங் காரின் தங்கை மகன் இரா.இராகவனும் பாண்டித்துரையும் படித்துவந்தனர். முத்துசாமி அய்யங்கார் தம் மகன் மு.இராக வனை இளமையில் தவிக்க விட்டு இறந்தபோது அவரைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பாண்டித்துரைத் தேவர் ஏற்றார். பதினேழாம் அகவையில் பாலவநத்தம் வளநாட்டின் (சமீன்) பொறுப்பையும் இராமநாதபுரம் அரண்மனையில் தந்தை பார்த்த மேலாளர் பொறுப்பையும் ஏற்றார். சோமசுந்தர விலாசம் பாண்டித்துரைத் தேவர் இராமநாதபுரத்தில் சோமசுந்தர விலாசம் என்ற பெரிய மாளிகை கட்டி வாழ்ந்தார். தேவார திருவாசகம் பாடி மிகுதியான நேரம் வழிபடுவார். பின்னரே நாள் கடமைகளில் ஈடுபடுவார். அவரைக் காணப் பெருங் கூட்டம் காத்திருக்கும். அவர் பாடும் தேவார திருவாசகப் பாடல்களைப் பருகிய அனைவரும் அவரது தமிழ்க்கடலில் மூழ்கி மகிழ்வார்கள். தேவரின் அரண்மனை வேலையாட்கள் சமையற்காரர்கள் குதிரை வீரர்கள் என அனைவரும் கவிதை பாடத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் அல்லவா! பாண்டித்துரைத் தேவரின் அரண் மனைக் கணக்குகளும் நாட்குறிப்பும் மடல்களும் அரசாணை களும் கவிதைதான். செந்தமிழே தேவரின் வாழ்வாகக் கனிந் திருந்தது. திருக்குறள் இல்லாத மதுரை தந்தையைப் போலவே தமிழ் புரந்து வந்த பாண்டித் துரைத் தேவர் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கினார். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நான்மாடக் கூடலில்தான் மயிலையில் பிறந்த திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். உயர்ந்த தமிழ்ப்புலவர்கள் எல்லோரும் நயந்துவந்து தம் இலக்கியங்களை அரங்கேற்றிய மதுரையில் திருக்குறளும் கம்பராமாயணமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சொற்பொழிவாற்ற மதுரைக்கு வந்திருந்த பாண்டித்துரைத் தேவர் ஒரு சில குறிப்புகள் பார்க்க அந்நூல்களைக் கேட்டிருந்தார். சங்கம் வைத்துத் தங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் திருக்குறள் கிடைக்கவில்லையா? மனம் கொதித்தார் பாண்டித்துரைத் தேவர். அந்த நேரத்தில் மாநில அரசியல் மாநாடு மதுரையில் நடந்தது. வந்த தலைவர்களையும் அறிஞர்களையும் தம் மாளிகையில் அழைத்துப் பேசினார் தேவர். தமிழ்ச் சங்கம் மறுபிறவி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முழங்கிய சங்கம் முதல், இடை, கடை என மூன்று சங்கம் கண்ட முத் தமிழுக்குப் பாண்டித்துரைத் தேவர் நான்காம் சங்கம் மதுரை யில் தொடங்கினார். வடக்கு வெளி வீதியில் இருந்த தமது மாளிகையைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்தார். இராமநாதபுரம் மன்னர் பாசுகர சேதுபதி முன்னிலையில் 14-01-1901 அன்று தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தமிழ்ச்சங்கம் தொடங்கி யது. சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் விழா நடைபெற்றது. கரந்தைக் கவியரசு நீ. கந்தசாமிப்பிள்ளை, உ.வே.சாமிநாதர், பரிதிமாற் கலைஞர், சோழவந்தான் அரசஞ்சண்முகனார் முதலிய பெரும் புலவர்கள் பங்கேற்றனர். ஆ.தா. (சர்.ஏ.டி.) பன்னீர்ச்செல்வம், கரந்தை உமாமகேசுவரனார், மதுரை வழக் குரைஞர் டி.சி.சீனிவாச அய்யங்கார் முதலியோர் உறுதுணை புரிந்தனர். தமிழ் ச்ச ங்கத்தின் சார்பில் செந் தமிழ் க் கலாசாலை (கல்லூரி), செந்தமிழ் மாத இதழ், பாண்டியன் புத்தக சாலை ஆகியன தொடங்கப் பெற்றன. இரா.இராகவ அய்யங்கார் கல்லூரித் தலைவராக இருந்தார். மு.இராகவஅய்யங்கார் செந்தமிழ் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம்’ என்ற மூன்று நிலை களில் ஒவ்வொன்றும் இரண்டு ஆண்டு எனப் படிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது. இத்தேர்வுகளில் தேறி முதல் நிலையில் வந்த மாணவர்க்குத் தங்கப் பதக்கம் வழங்கப் பெற்றது. மாணவர்களுக்கு இலவயமாக உணவு, உடை, உறையுள், புத்தகம் யாவும் வழங்கித் தமிழ் படிக்கச் செய்தார் தேவர். தமிழ்க்கேட்டை எரித்தவர் மதுரையில் வழக்குரைஞராக இருந்த சுகாத்தியார் (டி.எம்.ஸ்காட்) என்னும் ஆங்கிலேயர் திருக்குறளைத் திருத்திச் சிதைத்து வெளியிட்டிருந்தார். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு’ என முதற்குறள் தொடங்கிச் சிதைத் திருந்தார். இதைக் கண்டதும் இலக்கணப் பெரும் புலவர் அரசஞ் சண்முகனார் கண்சிவந்தார். பாண்டித்துரைத் தேவர் சி னத் தை வெளிக்காட்டாமல் சுகாத்தியாரிடம் இ ரு ந் த அனைத்துப் படிகளையும் கொண்டு வரச் சொன்னார். தமது புதிய குறளை மதுரைத் தமிழ்ச் சங்கமே மதித்து வாங்குவதாக மகிழ்ந்தார் சுகாத்தியார். ஆனால் பணம் கொடுத்து வாங்கிய அந்த சிதைவுப் பதிப்பு நூல்களைத் தேவர் தம் வீட்டுக்குப் பின்னால் குழியில் கொட்டச் சொல்லி எரித்தார். தமிழ் வள்ளல் சங்கத்தில் தமிழ் கற்பிக்கும் தலைமை ஆசிரியராக இருந்த திருநாராயண அய்யங்கார் ஒருமுறை தேவரைக் காண மாளிகைக்கு வந்திருந்தார். காத்திருந்த அவர் தேவரின் படுக்கை யில் அசதியால் உறங்கிவிட்டார். அரச முரசுக் கட்டி லில் அறியாது ஏறி, நடந்த களைப்பால் உறங்கிவிட்ட மோசி கீரனாரை, அரசமுரசக் கட்டிலுக்கு அவமானம் செய்தவனை வெட்டுவேன் என வந்து, புலவர் எனக் கண்டு கவரி வீசினான் சங்ககாலச் சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை. அச்சேரமானைப் போன்று பாண்டித்துரைத் தேவர் தமிழாசிரியர் திருநாராயண அய்யங்கார் எழும்வரை விசிறி வீசினாராம். கும்பகோணம் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் உ.வே. சாமிநாதையர் மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை மு த லி ய வ ற்றைப் ப தி ப் பி க் க ப் பாண்டித்துரை த் தேவர் . பொருள் உதவி செய்தார். சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர், யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் ஆகியோர் தம் நூல்களை வெளியிடவும் உதவியுள்ளார் தேவர். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் தனிமனித முயற்சி யாகப் பேருழைப்பால் ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலை உருவாக்கி வெளியிட இயலாமல் மனத்துயரில் இருந்தார். இதனை அறிந்த தேவர் தாமே நேரில் அப்பணியின் தகுதி கண்டு பெரும் பொருள் கொடுத்து ‘அபிதான சிந்தாமணி’ அச்சில் வரச் செய்தார். தமிழ் பரப்புவதையே தலையாய பணியாகக் கொண்டிருந்த பாண்டித்துரைத் தேவர் கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் முயற்சிக்கு ஆதரவாக அந்தக் காலத்தி லேயே உரூபாய் ஐம்பதினாயிரம் கொடுத்தார். பாண்டித்துரைத் தேவர் பாண்டித்துரைத் தேவர் இயற்பெயர் : பாண்டித்துரை சிறப்புப் பெயர் : பாலவநத்தம் சமீன்தார், வள்ளல் பாண்டித் துரைத் தேவர் பெற்றோர் : பர்வதவர்த்தினி அம்மையார், பொன்னுசாமித் தேவர் பிறந்த நாள் : 21-03-1867 மறைவு நாள் : 02-12-1911 ஊர் : பாலவநத்தம் கல்வி : மதுரைப் புலவர் இராமசாமிப் பிள்ளை யிடம் தமிழ், சதாவதானி முத்துசாமி அய்யங் காரிடம் தமிழும் வடமொழியும், திருவாவடு துறை மடத்தின் தலைவர் பழனிக்குமாரத் தம்பிரானிடம் சிவ மத நூல்கள் பணி : மதுரைத் தமிழ்ச்சங்கம், செந் த மி ழ் க் கல்லூரி, ‘செந்தமிழ்’ இதழ் நிறுவனர். படைப்புகள் : சிவஞானபுரத்து முருகன் காவடிச் சிந்து, தனிச் செய்யுள் சிந்தாமணி, பன்னூல் திரட்டு, சைவமஞ்சரி பதிப்புகள் : சிவஞான சுவாமி பிரபந்தத் திரட்டு, சிவ சமவாத மறுப்புரை, வில்லிபாரதம், யாழ்ப் பாணத்துக் கதிரை வேற்பிள்ளை தமிழக ராதி, சிங்காரவேலு முதலியாரின் அபி தான சிந்தாமணி. 16. ஆகமமா? தமிழா? உலகத்தின் மிகத் தொன்மையான தமிழினம் பண்டைய குடி எனப்பெற்றது. பண்டைய குடி பாண்டியர், சோழர், சேர குடிகளாயின. தென் தமிழ் நாடு ஆண்டு வந்த பாண்டியர்கள் குமரித்தமிழ் வளர்க்கச் சங்கம் கண்ட பெருமை உடையவர்கள். பாண்டியர்களின் மரபு வழி வந்தவர்கள் மறவர்கள் என்றும் தேவர்கள் என்றும் கூறப்பெற்றனர். அவ்வீரவழி வந்த மறவர்குல மன்னர்களாகிய சேதுபதிகள் இராமநாதபுரத்தை ஆண்டனர். முற்காலப் பாண்டியர் வழியில் இவர்களுடைய நாளோலக்கம் (அரசவை) சங்கத்தமிழ் வளர்ப்பதாகவே விளங்கியது. இரண் டாம் முத்துராமலிங்க சேதுபதியும் அமைச்சராக இருந்த அவருடைய அண்ணன் பாலவநத்தம் வளநாட்டார் (சமீன்தார்) பொன்னுசாமித் தேவரும் வளர்த்தனர். அதே போல் அவர் களுடைய மகன்கள் பாசுகர சேதுபதியும் பாண்டித்துரைத் தேவரும் சேதுகாவலராகவும் செந்தமிழ்க் காவலராகவும் இயங்கினர். முன்னேர் இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி தாய்மொழியாகிய தமிழில் மட்டுமன்றித் தெலுங்கு, சமற்கிருதம், இந்துத்தானி, ஆங்கிலம் ஆகியவற்றிலும் தேர்ந்த புலமை மிக்கவர். நீதிபோதம், பாலபோதம், பிரபாகர மாலை, முருக அனுபூதி, வள்ளி மண மாலை, சரச சல்லாப மாலை முதலிய நூல்களையும் தெலுங் கிலும் இந்துத்தானியிலும் சில சீர்த்தனைகளையும் இயற்றி யுள்ளார். பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், முதுகுளத்தூர் சரவணப் பெருமாள் கவிராயர், பழனி மாம்பழச்சிங்கக் கவிராயர், சந்திரசேகர கவிராச பண்டிதர் முதலிய பெருந்தமிழ்ப் புலவர்களுக்கும் இராமசாமி சிவன் முதலிய இசைக் கலைஞர்களுக்கும் பொருளுதவி புரிந்து வந்தார். இராமநாதபுரம் இராமநாதசாமி கோயிலுக்கும் திருவாவடு துறை மடத்துக்கும் அதனைச் சார்ந்த கோயில்களுக்கும் சேதுபதி மன்னர்கள் வழி வழி அறங்காவலர்களாக இருந்து வந்தனர். திருவாடுவடுதுறை மடத்தில் நாள்தோறும் பகல் உணவின் முன் பூசை செய்கையில் “காவிரி நீரும் சேதுபதி மன்னர் அன்னமும் ஆவுடையப்பர் நிழலும் என்றும் உடையேம்” எனத் தவறாது கூறி வழிபடுவர். முத்துராமலிங்க சேதுபதியின் மகன் பாசுகர சேதுபதி பாண்டித் தமிழை எல்லை தாண்டியும் வளர்க்கத் தோன்றினார். இலக்கு எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் “என்ன தவம் நோற்ற னரோ?” என்ற பெருமையும் சான்றோன் என்ற புகழும் பெறு வேன் என்ற இலக்கு ஒவ்வொரு நற்குடி மகனுக்கும் வேண்டியது ஆகும். உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் ஆற்றவேண்டிய இலக்குகளைக் கொண்டார் பாசுகர சேதுபதி. தாய் தந்தைக்கு நிகரான அண்ணன் பாண்டித்துரைத் தேவருக்கு முன்னரே தாம் இறக்க வேண்டும் என்று விரும்பினார். தமிழ்ச்சங்கம் அமைத்தல், குறைந்தது தமிழ்ச்சுவடிகள் பன்னிரண்டு அச்சேற்றுதல், சென்னையிலும் மதுரையிலும உயர்ப்பட்டப்படிப்புப் படிக்க வரும் தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கான விடுதி அமைத்தல் முதலியவற்றை இலக்குகளாகக் கொண்டார். இவற்றைத் தமிழர் திருநாளாம் தைப் பொங்க லன்று 1893-இல் தமது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். தமிழ்ச் சங்கம் தொடங்கும் இலக்கைத் தம் அண்ணன் பாண்டித்துரைத் தேவர் உதவியுடன் 1901 தைப்பொங்கலன்று நிறைவேற்றினார். தமிழ்ச் சுவடிகள் அச்சேற்ற அரசஞ்சண் முகனார், சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர் முதலி யோர்க்குப் பொருளுதவி செய்தார். தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கும் தொண்டாற்றினார். அண்ணன் பண்டித்துரை தேவர் இறப்பதற்கு முன்னரே மறைந்தார். சேதுகாவலர் கச்சத்தீவு உள்ளிட்ட தீவுகள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு உரிமையானவை. சிங்கள அரசுக்குக் கச்சத்தீவை இந்திய அரசு தாரைவார்த்துக் கொடுத்ததால், இன்று கச்சத் தீவு, இராமேசுவரம் பாம்பன் கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினராலும் சிங்களக் கடையராலும் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்; அடித்து உதைத்து விரட்டப்படுகிறார்கள். பாசுகர சேதுபதி தம் முன்னோர் போலவே தம் சேது நாட்டு மீனவர்களையும் பாதுகாத்தார். இலங்கை சென்று வந்தார். இராமேசுவரம் இராமநாதசாமி கோயிலுக்கு வரும் சமய அன்பர்கள் தங்கவும் உணவுண்ணவும் இலவச வழித் தங்குமனைகளைத் தம் சேதுநாட்டில் இராமேசுவரம் செல்லும் வழி நெடுகிலும் அமைத்தார். தார் சிற்றரசின் பேரரசியார், விவோகனந்தர், காஞ்சி சங்கர/ சிருங்கேரி மடத் தலைவர்கள், தமக்குத் தனிப்படிப்பு தந்த ஆங்கிலேய ஆசான்கள் கிரீட்டன் இணையர் (தம்பதியர்) ஆகியோரை இராமநாதபுரம் அரண் மனைக்கு அழைத்து மிகப்பெரிய வரவேற்பு அளித்தார் சேதுபதி. யாழ்ப்பாணம் சிவசம்புக் கவிராயர் சேதுபதி மன்னர் மீது கல்லாடக் கலித்துறை, பதிகம், இரட்டை மணிமாலை, நான் மணி மாலை முதலியன பாடியுள்ளார். பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்) தமது ‘கலாவதி’ நாடகத்தை இராமநாதபுரம் அரண்மனையில் மேடையில் அரங்கேற்றினார். சூளை சோமசுந்தர நாயகருக்குத் தங்கத் ‘தோடா’ வழங்கிச் ‘சைவ சித்தாந்த சண்ட மாருதம்’ என்ற பட்டம் அளித்தார் சேதுபதி. இரா. இராகவய்யங்காரைத் தம் அரசவைப் புலவராக ஏற்றதுடன், அவரை மதுரை மாநகரில் முத்துப்பல்லக்கில் சுமந்தார். அவருக்குக் கொடை அளித்து மதுரை ஆவணக் களரியில் பதிவு செய்தார். அந்த ஆவணத்தில், “சேர சோழ பாண்டியர்களுக்குப் பிறகு சுத்த தமிழ் அரசர்களாகிய சேதுபதிகளே, தமிழ் பாசா அபி விருத்தி செய்பவர்களும் தமிழ் வித்துவான்களை ஆத ரிப்பவர்களும் ஆகின்றனர். இக்காலத்துத் தமிழ் வித்து வான்கள் மிகச் சிலரானமையாலும், அச்சிலருக்கும் கவர்மென்டார் தக்க உதவியொன்றும் செய்யாமை யாலும்” தமிழ்ப் புலவர்களையும் சொத்துகள் இல்லாத கோயில், சத்திரம், பாடசாலை, ஏழைகள் முதலியோரைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வால் இவ்வாறு சங்கத்தமிழ் வேந்தரையும் கடை ஏழு வள்ளல்களையும் தென்காசிப் பாண்டியரையும் போன்று கொடைபுரிவதாகவும் மாதம்தோறும் உரியதொகை தாம் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து இரா. இராகவையங்கார் குடும்பத்துக்குத் தவறாமல் தரப்பட வேண்டும் என்று ஆவணம் பதிந்துள்ளார். உ.வே. சாமிநாதர் சேதுபதி போர்த்திய பொன் னாடையை விற்றுச் சிலப்பதிகாரம் பதிப்பிக்கப் பயன் படுத்தினார். இஃதறிந்த சேதுபதி மன்னர் மேலும் பண உதவி புரிந்தார். கொடையாளர் அரண்மனைப் பணியாளர்கள் வீரபத்திரன் சேர்வை, ஆறுமுகம் சேர்வை ஆகியோர்க்குப் பெரும் மாளிகைகள் கட்டித் தந்தார். அப்துல் காதர் என்ற பணியாளரின் மனநிலை அறிந்து, நாகூர் சந்தனக்கூடு கந்தூரித் திருவிழாவிற்குச் சென்று வரச் சொன்னார். ‘காதர், நாகூர் போகவர எவ்வளவு பணம் வேண்டும்?’ ‘நூறு ரூபாய் போதும் மகாராசா!’ ‘இந்தா, இராண்டாயிரம் ரூபாய்’ என்று கொடுத்து அனுப்பினார். தனக்குப் பணம் கிடைக்க வில்லையே என்ற பொறாமையால் கொல்லவந்த நீலமேகம் என்ற வேலையாளைஅழைத்து, ‘உன்கையால் சாக வேண்டும் என்பது இறைவன் விருப்பமானால் கொன்றுவிடு!’ என்றார். அவன் கதறி அழுதான். தானே அறிந்து உத வாதது தன் தவறு என்று கூறிய சேதுபதி அவனுக்கும் இரண் டாயிரம் ரூபாய் கொடுத்தார். வறுமையில் அரண்மனை நகை களை அடகு வைத்து எதிரிகளின் வழக்கில் இருந்த காலத்திலும் சேதுபதி கொடுக்கத் தவறியதில்லை. பொதுமையாளர் இராமநாதசாமி கோயிலுக்கு மட்டுமல்லாது தமிழகத் தின் பிற கோயில்களுக்கும் வாரி வழங்கியுள்ளார் சேதுபதி. மயிலை கபாலீசுவரர் கோயிலுக்கு வெள்ளிப்பல்லக்கு அளித் துள்ளார். தாம் பயின்ற கிறித்துவக் கல்லூரிக்கு மாணவர் விடுதி கட்டக்கொடை புரிந்துள்ளார். இராமநாதபுரத்தில் வாழ்ந்த மகமதியர்களும், கிறித்துவர்களும் அரசரின் அன்புக்கு உரியவர் களாக இருந்தனர். கமுதியில், தாழ்த்தப்பட்டோர் மீனாட்சியம்மன் கோயி லுக்குள் நுழையக் கூடாது என்று உயர்சாதியினர் தடுத்தனர். 14-05-1897-இல் தாழ்த்தப்பட்டோர் நுழைந்தனர். வழக்குத் தொடுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டது. சேதுபதி கூப்பிட்டு அமைதி ஏற்படுத்தி நுழைவுரிமை அளித்தார். தம்பி தினகரன் பிறரால் தூண்டப்பட்டுச் சூழ்ச்சி செய்து வழக்குத் தொடுத்தார். அவரைக் கூப்பிட்டு அமைதியாகப் பேசித் திருத்தினார் சேதுபதி. ஆகமங்கள் என்பன கோயில் கட்டும் முறை, வழிபடும் முறை, பூசனை முறை கூறும். வழிபாடு செய்யும் முறையையும் தூய்மையையும் ஒழுங்கையும் கைவிட்ட பார்ப்பனக் குருக்கள் மார் வடமொழியை அறியாதபோதும் அவற்றை ஒப்பித்து வழிபாடு செய்தனர்; முறைகேடுகளையும் ஊழல்களையும் புரிந்தனர். அவற்றைக் கடுமையாகக் கண்டித்தார் சேதுபதி. பார்ப்பனர்கள் எதிர்த்ததால் இராமநாதசாமி கோயில் அறங் காவலர் பதவியைத் தூக்கி எறிந்தார். தம் சமயப் பற்றைத் தமிழ்த் தொண்டாகவும் பொதுத் தொண்டாகவும் மாற்றிக் கொண்டார் . இதனா ல் தமிழுக் கு மேலும் ந ன்மைகள் விளைந்தன. மன்னர் பாஸ்கர சேதுபதி மன்னர் பாஸ்கர சேதுபதி இயற்பெயர் : பாஸ்கரன் பட்டங்கள் : மகாராஜா (1891, ஆங்கிலேய அரசு அளித்தது) இராஜ ரிஷி (1897, விவேகானந்தர் அளித்தது). பெற்றோர் : முத்தாத்தாள் நாச்சியார், இரண்டாம் முத்து ராமலிங்க சேதுபதி பிறந்த நாள் : 03-12-1868 மறைந்த நாள் : 27-12-1903 கல்வி : சென்னை - எழும்பூர் ஆங்கிலேயர் பள்ளி, இராமநாதபுரம் அரசினர் கல்விச்சாலை, அரண்மனையில் தனிப்படிப்பு ஆங்கி லேய ஆசிரியர்களிடம், சென்னை கிறித் துவக் கல்லூரி மணம் : 13-5-1888, மங்களேசுவரி நாச்சியார், சிவ பாக்கியம் நாச்சியார்; 1896 சிவகாம சுந்தர நாச்சியார் மக்கள் : இராசராசேசுவரன், இராசாராம் பாண்டியன் பணிகள் : இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலின் அறங் காவலர். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கியது, அமெரிக்கா வில் நடந்த உலகச்சமய மாநாட்டிற்கு விவேகானந்தரை அனுப்பியது, தமிழ்ப் புலவர் களையும், இசைக் கலைஞர் களையும் புரந்தது. படைப்பு : திரு ஆலவாய்ப் பதிகம். 17. பாரதிக்குப் பதவி தந்தவர் எட்டயபுரத்திலே கட்டிப்போட்ட கடிவாளமிட்ட குதிரை யாகக் கிடந்த பாரதியாரை ஊரை விட்டு வெளியே இழுத்தது சங்கத் தமிழ் மதுரைதான்! புதியவர்களுக்குப் பணி வாய்ப்பு தருவதற்காக மூத்தோர் விடுப்பு எடுப்பது வழக்கம். தில்லை யம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் வேலை பார்க்கட்டும் என்று கும்பகோணம் மாநிலப் பள்ளியில் மூன்று மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார் தியாகராசச் செட்டியார். அதேபோல் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இருந்த இலக் கணப் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் விடுப்பு போட்டு (01-08-1904 - 10-11-1904) வாய்ப்பு தந்ததால்தான் எட்டயப்பரின் அவைப்புலவரான பாரதியார் பள்ளிக்கூடத் தமிழ்ப் புலவராக - தமிழாசிரியராக முடிந்தது; அதையொட்டிச் சுதேசமித்திரன் இதழ்த் தொடர்பைப் பெற இயன்றது; உலகப் பட்டயக் கவிஞ ராக உயர வாய்த்தது. பாரதி எழுதி அச்சில் வெளிவந்த முதல் கவிதை ‘தனிமை இரக்கம்’ என்பதாகும். இதனை வெளியிட்ட இதழ் விவேகபாநு. இதன் ஆசிரியர் சேற்றூர்க்கவிராயர் மு. இரா. கந்தசாமிக் கவிராயர் ஆவார். இவர் சேதுபதிமன்னரோடும் பாண்டித் துரைத் தேவரோடும் தொடர்புள்ளவர். கந்தசாமிக் கவிராயரும் அரசஞ்சண்முகனாரும் எழுதிய ‘வந்தே மாதர’ வாழ்த்துப் பாடல்களைப் பாராட்டிப் பாரதியார் எழுதியுள்ளார். மன்னர் வாழ்த்துகள் பாடிக் கொண்டிருந்த பாரதியை இந்திய அன்னை வாழ்த்துப் பாடவைத்தவை பங்கிம் சந்திரரின் வந்தேமாதரப் பாடலும் சுதேசமித்திரன் இதழியல் பணியும்தான். சண்முக னாரின் இடத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதியார் இலக்கணம் அதிகம் பிடிக்காதவர், படிக்காதவர். அதனால் மூன்றே மாதத்தில் சென்னை நோக்கிச் சென்று விட்டார். சோழ வந்தான் சண்முகம் பிள்ளை இலக்கணத்தில் புகழ் பெற்று விளங்கினார். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த மயிலை சண்முகம் பிள்ளையிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்ள அரசஞ் சண்முகம் பிள்ளை என்று தம்மைக் குறித்துக் கொண்டார். நக்கீரன் நெற்றிகண் சேதுபதிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயண அய்யர், ஆங்கிலம் படித்தால்தான் மாணவர்கள் அதிக சம்பளத் தில் பெரிய வேலைகள் பெற முடியும், தமிழ் படித்தால் வேலை கிடைக்காது, ஆங்கிலம்தான் காப்பாற்றும் என்று கூறி, ஆங்கிலத்துக்கு அதிகப் பாடவேளைகள் (நேரம்) ஒதுக்கினார். இதனால் தமிழுக்கான பாடநேரம் குறைந்தது. தமிழ் உணர் வுள்ள சிலருக்கு நெஞ்சு பதைத்தது. எதிர்க்க வேண்டும் என்று நினைத்தபோது வயிறு புடைத்தது. வயிற்றைத் தடவிக்கொண்டு வாளா (சும்மா) இருந்துவிட்டார்கள். தமிழாசிரியர் அரசஞ் சண்முகனார் மெல்லென பூங்காற்றாய் வந்து பணிவுடன் வணக்கம் சொல்லிக் கைகூப்பி ஓரமாக ஒதுங்கிப் போய்விடும் பண்பினர். சீறிவந்த அவரைப் பார்த்த அய்யர், “அமருங்கள்” என்றார். “நான் அமர்வது இருக்கட்டும்! தமிழை அமரச் செய்யுங்கள்! இறைவனுக்கும் அரசனுக்கும் நிகராகச் சங்கப்பலகையில் தமிழ்ப் புலவர்கள் அமர்ந்த மதுரைத் திருநகரில் தமிழைக் குறைத்து ஆங்கிலத்தை அரி யணை ஏற்றியிருக்கிறீர்கள்! என்ன ஞாயம்?” என்று சீறினார் அரசஞ்சண்முகனார். தொல்காப்பியம் ஆகட்டும், நிகண்டுகள் ஆகட்டும், எந்த இலக்கணப் பகுதியாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் மாணவர்கள் தவறு செய்தால் திருத்திக்கொள்ளச் சொல்வார்; ஆசிரியர்கள் தவறு செய்தால் கடுமையாகச் சுட்டிக் காட்டுவார். அஞ்சா நெஞ்சமும் ஆழ்ந்த இலக்கணப் பயிற்சியும்சிறந்த பேச்சாற்றலும் கொண்ட அவரை எதிர்த்து யாரும் வாய்திறக்க முடியாது. ஆனால் ஆங்கிலத்துக்கு வால் பிடித்த அய்யரோ கிண்டல் செய்தார். “ஏங்காணும், ஒய்! தமிழ் புலவரே! புறநானூறு சோறு போடுமா? ஆங்கிலம்படித்தால் எங்காணும் எழுத்தர்... கிளார்க்கு வேலையாவது கிடைக்கும். குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுறீர்! கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் தெரியுமா? கல்கத்தா, பம்பாய் போயிருக்கீரா? விமானம்ன்னா தெரியுமோ! இங்கிலாந்து பிரான்சு ஜப்பான்னாவது கேள்விப்பட்டிருக்கீரா? போங்காணும்!” நக்கீரரைப் பார்த்து இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந் தான். ஆனால் அரசஞ் சண்முகனார் நெற்றிக் கண் திறந்த நக்கீரர் ஆனார். “எங்கள் தொல்காப்பியமும், திருக்குறளும் உலகத் துக்கே சோறு போடும் அய்யரே! இங்கிலாந்து, பிரான்சு நான் போகவில்லை என்றால் என்ன? உலகம் முழுதும் தமிழர்கள்தான் இருககிறார்கள். உலகம் முழுதும் கப்பல் ஓட்டியவன் தமிழன். தமிழ் நம் தாய்மொழி!” “தாய்மொழியாவது, சேய்மொழியாவது? போய்ப் பிழைப்பைப் பாரும்! போங்காணும்!” “சரி போகிறேன். தமிழ்தான் என் பிழைப்பு! என் வாழ்வு!” என்று கூறிய அரசஞ் சண்முகனார் வேலையை உதறிவிட்டு அன்றே வெளியேறினார். வேலையை உதறிய அரசஞ்சண்முகனார் சென்னை சென்று மறைமலையடிகள் இல்லத்தில் தங்கினார். மறைமலை அடிகள் ‘நம் உண்மை நண்பர் சண்முகம்பிள்ளை’ என்று பாராட்டுவார். அவர் அரசஞ் சண்முகனாரைத் தாம் பணியாற்றிக்கொண்டிருந்த கிறித்துவக் கல்லூரியின் முதல்வர் மில்லரிடம் அறிமுகப்படுத்தி “இவர் என் ஆசிரியர்” (போன்றவர்) என்று கூறினார். அரசஞ் சண்முகனாரின் தமிழ்க்கல்வி பற்றிக் கேட்டறிந்த மில்லர், “நீங்கள் இங்கு பணியாற்ற வேண்டுமானால் ஆங்கிலமும் தெரிந் திருக்க வேண்டும்” என்றார். “ஆங்கிலம் எம்மை அடிமைப் படுத்தக் கூடாது என்றுதானே வேலையைத் தூக்கி எறிந்து வந்தேன், இங்கும் ஆங்கிலமா?” என்று கூறிவிட்டு மதுரைக்கே திரும்பினார். இதனை அறிந்த பாண்டித்துரைத் தேவர் தமிழ்ச் சங்கத்தில் அவருக்கு வேலை கொடுத்தார். உம்மையே நீ அறிவாய் அ ர ச ஞ்சண்மு க னாரி ன் இ ல க் கணப் புலமையோ அளவிடற்கரியது. உம்மைத் தொகை பற்றி வீண்வாதம் செய்து கொண்டிருந்த ஒரு புலவரிடம், உம்மைத் தொகை பற்றி விளக்கிக் கூறி, ‘உம்மைநிலை அறியும்’ என்று கூறினார். உம்மை என்றது உம்மைத் தொகையைக் குறித்தது. இலக்கணத் தெளி வில்லாத அப்புலவரையும் குறித்தது கண்டு அவர் வாயடைத் தார். அரசஞ்சண்முகனார் வகுப்பறையிலும் சொற்பொழிவு மேடையிலும் பார்வைக்குத் தூசையும் பூசையும் (பூனையும்) போல் இருப்பார். பேசத் தொடங்கிவிட்டால் புலியும் சிங்கமும் அன்னமும் மயிலும் தோன்றும். தொல்காப்பியரும் வள்ளுவரும் கம்பரும் பாண்டித்துரைத் தேவரிடம் கொண்டநன்றியும் பெருக் கெடுத்து அருவியாகும். கம்பனை விஞ்சிய கொம்பனாகத் தோன்றுவார். பரிமேலழகரை விஞ்சிய உரையாசிரியராக மிளிர்வார். வயிற்றுக்கட்டி திருவாவடுதுறை மடத்தின் தலைவர் அரசஞ் சண்முகனா ரின் சைவத்தமிழ்ப் பற்றையும் இலக்கணஆற்றலையும் கண்டு வியந்து பாராட்டிப் பொன்னாடை போர்த்தினார். தாயன் போடு தமிழன்பையும் கலந்து வழங்கும் அரசஞ்சண்முகனார் எதிரேவந்த கந்தலாடை அணிந்து குளிரில் நடுங்கிய ஏழைப் பெண்மணிக்கு அப் பொன்னாடையைப் போர்த்தி மனம் மகிழ்ந்தார். வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி வாழ்ந்த ஏழைக் குடும்பத்து அரசஞ்சண்முகனார்க்கு வயிற்றுக் கட்டி (கழலைநோய்) வந்தது. இலக்கணக் கடலாக இருந்த அவர் துன்பக்கடலில் மூழ்கினார். தம் நோயும் வறுமையும் தீரவேண்டி ‘இன்னிசை இருநூறு’ பாடினார். வேலை பார்க்க இயலாத அரசஞ்சண்முகனார்க்கு மாதம்தோறும் உருபாய் இருநூறு அளித்தார் பாண்டித்துரைத் தேவர். தஞ்சாவூர் யுனானி மருத்துவர் எச்.எம்.ஃஅக்கீம் அறுவை செய்ததால் அரசஞ்சண்முகனார் நலம் பெற்றார். தேவரிடமும் தெய்வத் தமிழிடமும் பற்று கொண்டிருந்த அரசஞ்சண்முக னார் மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபையும் செந்தமிழ்க் கல்லூரியும் தொடங்கினார். இவரிடம் இலக்கணம் கற்றுத் தெளிந்த புலவர் மணி (பண்டிதமணி) கதிரேசன் செட்டியார் மேலைச்சிவபுரிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அரசஞ் சண்முகனார் அரசஞ் சண்முகனார் இயற்பெயர் : சண்முகம் சிறப்புப்பெயர் : அரசஞ் சண்முகனார், இலக்கணப் பெரும் புலவர் பெற்றோர் : பார்வதி அம்மையார், அரசப் பிள்ளை பிறந்தநாள் : 15-09-1868 மறைவு நாள் : 10-01-1915 பிறந்த ஊர் : சோழவந்தான் (சோழாந்தக நல்லூர்), மதுரை மாவட்டம் கல்வி : அழகர்சாமி தேசிகரிடம் தொடக்கக்கல்வி, சிவப்பிரகாச அடிகளாரிடம் தமிழ்க்கல்வி பணி : தமிழாசிரியர் : மதுரை சேதுபதி கல்விச் (கலா) சாலை (பள்ளி) 1890-1904 மதுரை செந்தமிழ்க் கல்விச் (கலா) சாலை (கல்லூரி) 1905-1908 மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை (13-05-1909 முதல்) படைப்புகள் : சிதம்பர விநாயகர் மாலை (1888), மாலை மாற்று மாலை, இன்னிசை இருநூறு , மீனாட்சி அம்மை சந்தத் திருவடி மாலை, சிதம்பர விநாயகர் மாலை, சிதம்பரப் பத்து, ஏ க பாத நூ ற் ற ந் தாதி , மு ரு க க் க ட வுள் கலம்பகம், மதுரைச் சிலேடை வெண்பா, பஞ்ச தந்திர வெண்பா, திருவள்ளுவர் நேரிசை, நவமணிக் காரிகை நிகண்டு நுண் பொருட்கோவை. உரைகள் : தொல்காப்பியம் பாயிரவிருத்தி, திருக் குறள் சண்முக விருத்தி, நுணுக்கச் சிற்றுரை 18. தமிழர் திருநாள் பரப்பியவர் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. பல்கலைக்கழகம் சென்று படித்ததில்லை. ஆனால் கற்றுக் கொண்டே இருந்தார். கற்பித்துக் கொண்டே இருந்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனார்; கல்லூரிப் பேராசிரியர் ஆனார், பல்கலைக் கழகத்துறைத் தலைவரும் ஆனார். அக்காலத்தில் தமிழில் பாட நூல்கள் இல்லை என்ப தால் முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு வரைக்கும் வரிசையாகத் தமிழ்நூல்கள் எழுதினார். ஆங்கிலேயர் ஆண்ட அந்நாளில் அவை பாடநூல் ஆயின. (இன்று தமிழ் நாட்டில் மழலையர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரை தமிழ் படிக்காமலேயே கற்கலாம் என்னும் இழிநிலை உள்ளது.) பாடநூல்கள் எழுதி எழுதி விற்பனையால் கிடைத்த செல்வம் மிகப் பெற்றார். தமிழ்ச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் வாரி வழங்கினார். தமிழால் உயர்ந்த அத் தமிழர் சி ற்றூர் களில் சி ற ப்பாகக் கொண்டாடப் பெறும் பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்று உலகம் முழுதும் பரப்பினார். இத்தகு தமிழ்ப் பணிகள் புரிந்த செம்மல் கா. நமச்சிவாய முதலியார் ஆவார். படிப்படியே நமச்சிவாயரின் தந்தை திண்ணைப் பள்ளி ஆசிரியர். ம கனும் தொடக்கப்பள்ளி ஆசி ரியரானானா ர் . ஆனாலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியேற்ற பின்னர் ‘வித்தியா வினோதினி’ இதழாசிரியரும் (1889-1892), உ.வே. சாமிநாத அய்யருக்கு முன்னரே 1894-இல் ‘மணிமேகலை’யைப் பதிப் பித்தவரும் ஆகிய திருமயிலை பெரும் புலவர் சண்முகம் பிள்ளையிடம், மாணவராகச் சேர்ந்து தமிழ் இலக்கண இலக் கியங்களில் தேர்ச்சி பெற்றார். வள்ளுவர் கூறிய வண்ணம் ‘சாந்துணையும்’ தமிழ்க்கல்வி பயின்ற நமச்சிவாயர், தம் ஆசிரி யரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்து கற்றார். பிள்ளை யில்லாத பெரும்புலவருக்குத் தாமே மகனாகவும் இறுதிக்கடன் செய்ததோடு அவர் குடும்பத்துக்கும் பொருள் உதவி செய்து வந்தார். எப்போதும் படித்துக் கொண்டே இருந்து படிப்படியே உயர்ந்த அவர் மற்ற ஆசிரியர்களுக்குக் கல்வித் துறையிலும், பண்பாட்டிலும் வழிகாட்ட ‘நல்லாசிரியன்’ என்ற மாத இதழை 15 ஆண்டுகள் நடத்தினார். ‘ஜனவினோதினி’ மாத இதழ் நூல்களைத் தொகுதிகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. நமச்சிவாயர் எழுதிய ‘திருவிளையாடற் புராண வசனம்’ அவ்விதழில் வந்து பின் நூலாகியது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிக் ‘கமல பந்தம்’ என்ற நூலியற்றிய நமச்சிவாயர், தாம் பணியாற்றிய வேப்பேரி பவுல் பள்ளித் தலைமை ஆசிரியர் பாட்சு மூலம் மொழி பெயர்த்து மன்னருக்கு அனுப்பினார். அதைப் பெற்று மகிழ்ந்து இங்கி லாந்து மன்னரும் விடை மடல் நமச்சிவாயருக்கு விடுத்திருந்தார். தமிழ்க் கடலகம் படித்துப் படித்துப் படிப்படியே உயர்ந்த நமச்சிவாயர். படிப்படியே வகுப்புகளுக்கு ஏற்ப மொழிநடை, தரம், அளவு கூடிய வகையில் மாணவர்களுக்கான பாடநூல்கள் எழுதி, அவை நிறைய விற்பனை ஆகி நிறைய வருமானம் பெற்றார். தம் ஆசிரியர் திருமயிலை சண்முகம் பிள்ளை வீட்டருகே, சாந்தோம் கடற்கரையில் “கடலகம்” என்ற மாளிகை கட்டி வாழ்ந்தார். நீலமலை (நீலகிரி) உதகை மலைப்பகுதிகளிலும் இரண்டு மாளிகைகள் கட்டிக் கோடைக் கால வாழ்விடங் களாகக் கொண்டார். கடலகம் என்ற தம் மாளிகையில் அச்சகம் தொடங்கித் தனியார் நிறுவனம் வெளியிட்ட தம் பாடநூல்களைக் “கடலக நூல் வரிசை” எனத் தாமே வெளியிட்டார். இதனால் மேலும் வருவாய் பெருகியது. ‘தமிழ்க்கடல்’ என்ற இதழையும் நடத்தி னார். பனை ஓலைச் சுவடிகள், கல்வெட்டுப் படிகள், நூல்கள் முதலியவற்றைத் தொகுத்துத் தம் இல்லத்திலேயே நல்ல நூலகமும் அமைத்தார். (திருமலை - திருப்பதியையும் தெய்வத் தமிழ்க் கல்வெட்டுகளையும் ஆந்திரத்திற்கே கொடுத் தது போன்று நமச்சிவாயரின் நூலகத்தையும் திருப்பதிக்கே கொடுத்துவிட்டனர்.) நமச்சிவாயர் தமிழ்ப் புலவர்களை அழைத்து விருந்தளித்தார். வறிய புலவர்களுக்கு வாரி வழங்கி னார். அவர் வீடே தமிழ்ச் சங்கம் ஆயிற்று. ‘கடலகம் தமிழ்ப் புலவர்களின் தாயகம்’ என்று பெரும்புலவர் வேங்கடராசுலு ரெட்டியார் பாராட்டுவார். பொய்யானாலும் தமிழ் நமச்சிவாயரின் கடலகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தமிழ் முத்துக்குளித்தனர். வறியவராய் இருந்து வள்ளலாய் ஆகிய நமச்சிவாயர், புலவராகவும், புரவலராகவும் விளங்கினார். மற்றவர்களுக்கு அதிகம் தெரியாத பாடல்கள் என்று கருதிக் காஞ்சிபுராணத்திலிருந்தும், கைலைபுராணத்திலிருந்தும் சில பாடல்களைத் தாம் இயற்றிய பாடல்கள் எனச் சில புலவர்கள் பாடி விரிவாக விளக்கமும் கூறுவர். அவர்களது வறுமை கருதிப் பணம் கொடுத்து அனுப்பி விடுவார் நமச்சிவாயர். பிறகு மற்றவர்களிடம் அவர்கள் பாடியவை இன்னின்ன நூல்கள் என்று கூறிப் பாடல் சிறப்பையும் அவர்கள் கூறிய சுவையான விளக்கத்தையும் அளவிட்டு “பொய்யானாலும் தமிழ் அல் லவா? என்னருமைத் தமிழ் அல்லவா?” என்று நெக்குருகுவார். ஒருமுறை ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற பாடலைக் கம்பர் பாடல் எனக் கூறி விளக்கிப் பரிசு பெற்றுச் சென்றார் ஒரு புலவர். அவர் சென்ற பின் நமச்சிவாயர் மற்ற புலவர்களை நோக்கி, “இது கம்பன் பாடியதில்லை. இடைச்செருகல்” என்று கூறியதோடு, “கடன் பட்டவர் யார்? கொடுத்தவரா? வாங்கியவரா?” என்று கேட்டுச் சுவையான பட்டிமன்றமே நடத்திவிட்டார். வடமொழி கட்டாயமா? சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்புலவர் (வித்து வான்) படிப்புக்கு வடமொழியும் கட்டாயம் படிக்க வேண்டும். இதனால் பார்ப்பனப் பிள்ளைகள்தான் படிக்கலாமே தவிரத் தமிழர் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை அன்றிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவரானதும் நமச்சிவாயர் இதனை எதிர்த்துப் போராடி, 1928 முதல் வட மொழிக் கட்டாயப் பாடத்தை நீக்கச் செய்தார். தமிழ் தெய்வமொழியா? வடமொழியைத் தேவபாடை (பாடை-பாசை-மொழி) என்று ஆரியர்கள் பரப்பி வந்ததால் வடமொழி தேவமொழி யென்றால் “தமிழ் மகாதேவன் மொழி” என்ற இராமலிங்க வள்ளலார் கூறுவார். மனோன்மணியம் சுந்தரனாரும் வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளாரும் தமிழைத் தெய்வத்தமிழ் என்று கூறித் தமிழ் வாழ்த்துப் பாடினர். சைவப் பற்றாளராகிய நமச்சிவாயர் பகுத்தறிவாளராகவும் இருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புப் சொற்பொழிவு ஆற்றியபோது “தமிழுக்குத் தெய்வத்தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறு கின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை. தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன” என்று முழங்கினார். பேச்சு வழக்கற்ற இலக்கண வரம்பில்லா வட மொழியைத் தேவமொழி என்று கூறுவோர் என்றுமுள தென்ற மிழின் இலக்கிய இலக்கணப் பெருமையையும் தொன் மையையும் அறியாதவர் என்று நிறுவினார். பொங்கும் தமிழ் ஆரியக் கலப்பால் தமிழர்களின் பெயர்கள், கடவுளரின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள் வடமொழியில் மாற்றப் பட்டன. அதேபோல் தமிழர்களின் சமயமும் விழாக்களும் வடமொழி ஆக்கப்பட்டன. தை முதல் நாளாகிய பொங்கலைச் சங்கராந்தி என்று திரித்தனர் ஆரியர். அதற்கு முதல் நாளை “போகிப் பண்டிகை” என்று கூறித் தமிழ் ஓலைச் சுவடிகளைக் கொளுத்தித் தமிழ் அழிப்பையும் சுற்றுச் சூழல் மாசையும் செய்தனர். ஏமாளித் தமிழனைக் கரையேற்றத் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள், திரு.வி.க., கா.சு.பிள்ளை, கா. நமச் சிவாயர் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரியில் 1924-இல் தமிழறிஞர்களைக் கூட்டிப் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாள் என்றும் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கநாள் என்றும் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தனர். இதனால் அனைத்து மதத்தினர்க்கும் சாதியினர்க்கும் உரிய பொது விழாவாகப் பொங்கல்விழா ஆகியது. “தமிழர்கள் தங்களுக்குள் பொங்ககல் வா ழ் த்து அனுப் பும் வழ க்கத்தை ஏற் படுத் திக் கொள்ள வேண்டும்” என்று திரு.வி.க. தாம் நடத்திய ‘நவசக்தி’ நாளிதழில் (1928) வேண்டுகோள் விடுத்தார். பெ. தூரன் பனை ஓலையில் பொங்கல் வாழ்த்து எழுதி திரு.வி.க. நமச்சிவாயர் ஆகியோருக்கு அனுப்பினார். கா. நமச்சிவாயர் திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் தலைவராக (1935) விளங்கினார். உலகத் தமிழர்கள் அனைவரும் தை முதல் நாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று பரப்பியதோடு, குடும்ப விழாவாக மட்டும் கொண்டாடாமல், தம் வீட்டிற்கு அனைவரையும் அழைத்துப் பொது விழாவாகவும் நடத்தினார். ஏழை மாணவர்களுக்கு வழக்கமாகவே உதவிகள் செய்யும் நமச்சிவாயர், பொங்கலன்று அவர்களுக் குப் பு த் தாடையும் புதுப் பொங்கலும் புதுப் புத்தகங்களும் வழங்கினார். புலவர்களின் புதுப்பாடல்களுக்குப் பரிசுகளும் அளித்தார். திருவள்ளுவர் போற்றியது உழவு. உலகின் முதல் உழவன் தமிழன். சொல்லேருழவன் வள்ளுவன். ஆழ்வார்கள் வள்ளுவரைத் ‘தமிழன்’ என்றுதான் குறிப்பிடு கின்றார்கள். எனவே உழவர் விழாவை - திருவள்ளுவர் விழாவை - பொங் கல் விழாவைத் தமிழர் திருநாள் என்று ப ரப்பிய நமச்சிவாயர், தமிழர்தம் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழ் இன முன்னேற்றம், திருக்குறள் கருத்து பரப்பும் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தை முதல் நாள் திருவள்ளுவர் ஆண்டு பிறக்கிறது. தமிழர் திரு நாளாக - உழவர் - தமிழின ஒற்றுமை நாளாகக் கொண் டாடுவோம். கா.நமச்சிவாய முதலியார் கா.நமச்சிவாய முதலியார் இயற்பெயர் : நமச்சிவாயம் சிறப்புப்பெயர் : காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார், பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் பெற்றோர் : அகிலாண்டவல்லி அம்மையார், இராமசாமி முதலியார். பிறந்தநாள் : 20-02-1876 மறைவு நாள் : 13-03-1936 ஊர் : காவேரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம்) கல்வி : தந்தையின் தி ண் ணைப் பள்ளியில் தொடக்கக்கல்வி, திருமயிலை புலவர் சண்முகம் பிள்ளையிடம் தமிழ் இலக் கியக் கல்வி (1892-1905) பணி : சென்னை தொண்டியார் (தண்டையார்)ப் பேட்டை தொடக்கப்பள்ளி ஆசிரியர் (1891- 1894) சென்னை உயர்நீதிமன்ற எழுத்தர் (1895), சென்னை பிராட்வே தூயசேவியர் ப ள்ளித் த மி ழாசி ரி ய ர் ( 1896 - 1900) சென்னை யுனைட் டடு பிரி ச ர் ச் மி சன் (நார்த்விக்) பெண்கள் பள்ளி (1901-1906), சென்னை வேப்பேரி பவுல் (எசு.பி.ஜி) பள்ளி (1906-1914), இராணி மேரிக் கல்லூரித் தமிழாசிரியர் (1914-1920), சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் த லை வ ர் (1920 - 1924) , சென்னைப் பல்கலைக்கழகப் பாடநூற் கழகத் தலைவர் (1924-1936) இதழாசிரியர் : நல்லாசிரியன், தமிழ்க்கடல், ஜன வினோதினி படைப்புகள் : சிறுவர்களுக்கான வாக்கிய வசனம், கமல பந்தம் நாடக நூல்கள் : பிரிதிவிராசன், சனகன், தேசிங்குராசன், கீசகன் முதலாம் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ்ப்பாட நூல்கள் (குமாரசாமி அண்டு சன் வெளியீடு, பின்னர் ‘தமிழ்க் கடல்’ பதிப்புகளாக) பதிப்புகள் : குறுந்தொகை மூலம், தொல்காப்பியம் பொருளதி காரம், இறையனார் களவியல், நன்னூல், தணிகைப் புராணம் உரை யுடன், ஆத்திசூடி, வாக்குண்டாம், நல் வழி, நன்னெறி, வெற்றிவேற்கை, உலக நீதி, நீதிவெண்பா. 19. தமிழ் பல்லக்கு ஏறலாமா? கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேசுவரத்தில் பிறந்து, பிறந்த ஆறாம் மாதத்திலேயே திருப்பாதிரிப்புலியூரில் உள்ள திருக்கோவலூர் மடத்தின் நான்காம் பட்டத் தலைவர் ஆறுமுக சிவாச்சாரிய சுவாமிகள் அழைத்ததால் இடம் பெயர்ந்த பெற்றோருடன் சென்று வளர்ந்தார். ஆசைகளை அறுத்துத் துறவியாக வாழ்ந்தார். ஆயினும் தமிழ் மொழி யுடனும் தமிழ் மக்களுடனும் தமிழ்ச் சமயத்துடனும் தமிழ் மண்ணுடனும் தமிழ் மரபுகளுடனும் தமிழ்க் கல்வியுடனும் அவர் கொண்டிருந்த ஆசையை - பற்றை - தொடர்பை அறுக்க வில்லை. நாளும் சிவிகை (பல்லக்கு) ஏறிச்சென்று தமிழைப் பரப்பாமல் இருக்கவுமில்லை. தமிழன் பல்லக்கு தூக்கிட, தமிழனையும் தமிழையும் தாழ்த்தி வந்தேறிகள் பரப்புரை செய்து கொண்டிருந்த காலத் தில், அவர் ஊர் ஊராகச் சென்று தமிழ் பரப்பி வந்தார். வடமொழியை வாழ்த்தியதோடு அமையாமல் தமிழைத் தாழ்த் தியும் பேசி வந்த மடத் தலைவர்கள் பலரிருக்கச் சைவ மடத்தின் தலைவரானாலும் தமிழிடத் தலைமையகமாகத் தம் மடத்தை யும் தம் இருப்பிடத்தையும் மாற்றியவர். பல்வேறு பட்ட குழுக்களாய்க் கிடந்த தமிழர்கள் அனைவரும் மதித்த ஒரு தமிழ்த் துறவியாக, மறைமலை அடிகளாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் முன்னோடியாக வாழ்ந்த அவர் யார் தெரி யுமா? அவர்தான் ஞானியாரடிகள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு, ஆகியவற்றையும் அறிந்தவர் ஞானியார். வள்ளல் பாண்டித் துரைத் தேவர் 1899-இல் சென்னை சென்று திரும்புகையில் திருப்பாதிரிப்புலியூர் மடத்திற்கு வந்திருந்தார். அப்போது, ‘தமிழின் தற்கால நிலை’ என்று ஞானியார் ஆற்றிய சொற் பொழிவு, மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பாண்டித்துரைத் தேவருக்கு ஓர் தூண்டுகோலாக இருந்தது. தமிழ் வளர்க்க வாரந்தோறும் தமிழ் அறிஞர்களை அழைத்துக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டு, திருப்பாதிரிப்புலியூர் மடத் திற்குள்ளேயே, 1900-இல் ‘வாணிவிலாச சபை’ என்ற சங்கத்தை ஞானியார் அமைத்தார். இதனை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் வந்திருந்து தொடங்கி வைத்தார். மடத்திற்குள்ளேயே ஞானியார் பாடசாலை என்ற பெய ரில் ஓர் பள்ளிக்கூடத்தையும் உருவாக்கினார். தமிழனுக்குத் தமிழன்தானே எதிரி! ஞானியார் சுற்றுப் பயணம் சென்றிருந்த காலத்தில் தலைமை ஆசிரியர் பள்ளியைச் சரிவர நடத்தாமல் மூடுவிழா நடத்திவிட்டார். ஆங்கில அரசு ஏற்படுத்தியிருந்த பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இந் நிலையில் ஞானியார் ஊருக்குள் ‘பாடலேசுவரர் தரும பாட சாலை’ என்ற பள்ளியை ஏற்படுத்தி இலவயக் கல்வியை அளித் தார். அரசு உதவியின்றியே செந்தமிழ்க் கல்லூரி தொடங்கி நடத்தினார். பச்சையப்பன் பள்ளித் தலைமை ஆசிரியர் க. வச்சிரவேலு முதலியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் மு. இராசாக்கண்ணனார், புதுவை அறிஞர் சுந்தர சண்முகனார் முதலிய பலர் ஞானியாரின் மாணவர்கள்ஆவர். தமிழ்ப் பயணம் மடங்களின் தலைவர்கள் ம க் க ளோ டு ஒட்ட h ம ல் கடவுளுக்கும் அரசர்களுக்கும் நிகரானதாகத் தம்முடைய தலைமையைக் காட்டிக்கொண்டு, கோயில் நிலங்களைக் கட்டிக் காக்கும் நிலக்கிழார்களாகக், குட்டித் தம்பிரான்கள் என்னும் பெரும்படையுடன் வாழ்ந்து வந்தனர். ஞானியார் மக்களுடனும் பல துறைகளைச் சா ர்ந்த தலைவர்களுடனும் அன்புடன் நெருங்கிப் பழகி வந்தார். பிற மடங்களின் தலைவர்களைத் தாமே நேரில் சென்று சந்தித்துத் தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தார். இவர் தூண்டுதலால், மயிலம் மடத்தின் தலைவர் சிவஞான பாலைய சுவாமிகள் 1916-இலும், பேரூர் மடத்தின் தலைவர் சாந்தலிங்க அடிகளார் 1925-இலும் தமிழ்க் கல்லூரிகள் தொடங்கினர். திருவையாறு அரசர் கல்லூரியில் வடமொழியும் தெலுங்கு இசையும் கற்பிக்கப்பட்டு வந்தன. கரந்தை உமா மகேசுவரனார், (சர்.ஏ.டி.) ஆ.தா. பன்னீர் செல்வம் ஆகியோர் துணையுடன் போராடித் தமிழையும் கற்பிக்கலாம் எனக் கொண்டு வந்தார். (தமிழ் நாட்டில் மிகவும் போராடித்தான் தமிழையும் - தமிழிலும் - தமிழும் கூட - படிக்கலாம், பாடலாம், வழிபடலாம், வழக்காடலாம், பெயர் வைக்கலாம் என்று கொண்டவரவேண்டியிருக்கிறது. தென் ஆர்க்காடு வழக்குமன்ற நடுவர் ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை துணையுடன் 1905-இல் ‘சைவ சித்தாந்த மகாசமாசம் தொடங்கினார் ஞானியார். அந்த அமைப்பின் சார்பில் ‘சித்தாந்த தீபிகை’ என்ற இதழ் வெளிவரச் செய்தார். சைவசித்தாந்த மகாசமாசத்தின் சார்பில் திருப் பாதிரிப்புபுலியூரில் ஞானியாரடிகள் முன்னிலையில் மறை மலையடிகள் தலைமையில் நடந்த சைவமாநாட்டில் 02.09.1918இல் தமிழை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.) தமிழர் ஒற்றுமை “பல்லக்கில் எங்கள் மடத்தலைவர் மட்டுமே உலா வரலாம். ஞானியார் எப்படிஉலா வரலாம்? எங்கள் தெருவுக்குள் பல்லக்கில் வரக்கூடாது, நடந்து வேண்டுமானால் போகட்டும்” என்று கும்பகோணம் மடத்தினர் எதிர்த்தனர். சிவ - மாலியத் - தமிழ்த் துறவிகளை வடமொழியின் வேதநெறி ஆகம நெறி களைப்போற்றுவோர் எதிர்த்தனர். சாதி மதம் இனம் கட்சி முதலிய வேறுபாடுகளை மேற் கொண்டு தமக்குள் பகை பாராட்டிக் கொண்டிருந்த தமிழர்களை ஒற்றுமையாக்க முனைந்தார் ஞானியார். ஈரோட்டில் நடந்த விழாவில் 1924-இல் ‘குடி அரசு’ மாத இதழை முதன்முதல் வெளியிட்டவர் ஞானியார்தான். பாரதியாரின் பாடல் வரிகளும் இராட்டையும் அட்டையில் கொண்டு, ஆங்கிலேய அரசை அகற்றி இந்தியக் குடி அரசை ஏற்படுத்தத் தோன்றிய இதழ் ‘குடி அரசு’. அவ்விதழின் ஆசிரியராக இருந்தவர் பிற்காலத்தில் ‘நாத்திகர்’ ஆகிய பின்னரும் அவருடன் மேடைகளில் தோன்றி னார் ஞானியார். அந்த ‘நாத்திகத்’ தலைவர் வேறுயாரும் அல்லர். தந்தை ஈ.வே. இராமசாமிப் பெரியார்தான் அவர்! தமது 60-ஆம் அகவை நிறைவு விழாவில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்திய உமா மகேசுவரனார்க்குச் ‘செந்தமிழ்ப் புரவலர்’ என்ற பட்டமளித்துச் சிறப்பித்தார். தமிழ்ப் பெரியார் மதவாதிகள் பலரும் வடமொழிக்கு வால்பிடித்துக் கொண்டு, வடமொழி கலந்து மணிப்பவழ நடையில் பேசிக் கொண்டிருக்க, நல்ல தமிழில் பேசியவர் ஞானியார் ஆவார். கொச்சை வழக்கு நடையை ஒதுக்கி இலக்கிய நடையில் செந் தமிழில் பேசுவார். மேடையில் தொடர்ந்து ஐந்து ஆறு மணி நேரம் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். தமிழ் இலக்கிய மாநாடு களிலும் சிவ சமய மாநாடுகளிலும் ஞானியாரின் சிறப்புச் சொற் பொழிவு தவறாது இடம் பெற்று வந்தது. காலம் தவறாமையும் தமிழ்ப் பற்றும் எளிமையும் இவரது நற்பண்புகள். பழனி முருகனை வேண்டிப் பிறந்ததால் பழனியாண்டி என்று பெயரிடப் பெற்றிருந்த இவர், இறுதியாகப் பழனி சென்று ‘சிவராசயோகம்’ என்ற சொற்பொழிவாற்றிப் பழனிமலையில் இருந்து இறங்கி வருகையில் மறைந்தார். இராயப்பேட்டை தமிழ் முனிவர் என்றும் சாது என்றும் வழங்கப்பெற்ற திரு.விக. ‘ஞானியரடிகளை மட்டுமே விழுந்து வணங்கியுள்ளேன்’ என்று கூறியுள்ளார். புலவர்மணி கதிரேசன் செட்டியார் ஞானி யாரடிகளைப் பாராட்டி “இவர்கள் நினைவுக் குறியாக ஒரு தமிழ்க் கலைமாடம் சென்னையம்பதியில் நிறுவப்படுமாயின் தமிழர் நன்றியறிவு சிறந்ததொன்றாகத் திகழ்வதாகும்” என்று கூறினார். தமிழர்கள் நன்றியுணர்வைக் காட்டுவார்களாக! ஞானியரடிகள் ஞானியரடிகள் இயற்பெயர் : பழனியாண்டி சிறப்புப்பெயர் : சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகர், புலிசை ஞானி யாரடிகள், திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள் பெற்றோர் : பார்வதி அம்மையார், அண்ணாமலை ஐயா பிறந்தநாள் : 17-05-1873 மறைவு நாள் : 31-01-1942 கல்வி : திருப்பாதிரிப்புலியூர் - தூயவளனார் (செயிண்ட் சோசப்) பள்ளி, சென்ன கேசவலு நாயுடுவிடம் - தெலுங்கு (4 ஆண்டுகள்), கடலூர் நேடிவ் கல்லூரி வடமொழி ஆசிரியர் இராமநாத சாத்திரி களிடம் - வடமொழி (15 ஆண்டுகள்) பணி : திருக்கோவலூர் (திருப்பாதிரிப்புலியூர் கிளை) மடத்தின் தலைவர் (5ம் பட்டம்) 07- 11-1889; திருப்பாதிரிப்புலியூர் பாட லேசுவரர் தரும பாடசாலை, திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் பாடசாலை, திருப் பாதிரிப் புலியூர் செந்தமிழ்க் கல்லூரி படைப்புகள் : திலகவதி அம்மை துதி, ஞான தேசிக மாலை, குரு துதி, கந்தர் சட்டிச் சொற் பொழிவுகள் பதிப்புகள் : திருப்பாதிரிப்புலியூர் புராணம், திருப் பாதிரிப் புலியூர் தோத்திரக் கொத்து, அற்புதத் திருவந்தாதி, அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து, நிட்டானுபூதி சாரம். 20. தமிழ்க் கணக்கு பூண்டி என்ற ஊர்ப் பெயரைக் கேட்டதுமே பூண்டி நீர்த்தேக்கம், பூண்டி மரி அன்னை (மாதா) கோயில், பூண்டி திருமலர்க் (புட்பம்) கல்லூரி ஆகியவை நினைவுக்கு வரும். அதேபோல் தமிழறிஞர்கள் வரிசையில் பூண்டி அரங்கநாத முதலியார் நினைவில் தோன்றுவார். அவர் கணிதப் பேராசிரிய ராகப் பணியாற்றியவர் என்றாலும் தமிழுக்கும் தமிழ்ப் புலவர் களுக்கும் அரணாக இருந்தவர். கணிதத் துறையில் பேராசிரிய ராக அரங்கநாதர், கணிதத்தில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தத்துவம், வரலாறு முதலிய துறைகளிலும் திறமை மிகுந்தவராக விளங்கினார். கல்லூரியில் அப்பாடங்களையும் மாணவர் களுக்கு கற்பித்து வந்தார். தமிழிலும் பற்றும் புலமையும் கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றோர்களின் அரசர் என்று பாராட்டப் பெற்றார். இளமைக் கணக்கு அரங்கநாதர் இளமைப் பருவம் முதலே தமிழில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். தமிழ்ப் புலவர்களை நாடிச் சென்று பாடங் கேட்டுக் கொண்டார். அரங்கநாதர் மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த பொழுது, இவரது திறமையைக் கல்லூரி முதல்வர் எட்மண்டு தாம்சன் பாராட்டினார். இறுதித் தேர்வில் மதிப்பெண் குறைவாய் இருப்பதைக் கண்ட முதல்வர் சரி பார்க்கச் சொன்னார். இணைப்புப் பக்கங்கள் திருத்தப்படாமல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது; அரங்கநாதர் கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்ததால் தங்கப் பதக்கமும் பெற்றார். தம் மாணவரின்கணக்கு தவறாது என்று கணித்த ஆசிரியரின் கணக்கும் தவறவில்லை. படித்த மாநிலக் கல்லூரியிலேயே அவருக்கு வேலை கிடைத்தது. குடந்தைக் கல்லூரியில் பணி யாற்றுகையி ல் முது கலை ப டி த் துப் ப ட் ட ம் பெற் றார் . ஆங்கிலத்திலும் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் அரசு மொழி பெயர்ப்பாளர் பணி கிடைத்தது. ஆசிரியப் பணியே அவருக்குப் பிடித்திருந்ததால் மீண்டும் கல்லூரிக்கே வந்தார். பிடித்த கணக்கு பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் பூவாளூர் தியாகராசச் செட்டியார் கும்பகோணம் அரசு கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அn த கல்லூரியில் கணித த் துறையில் பணியா ற்றி வந் த பேராசிரியர் அரங்கநாதர், அவரைப் பற்றிக் கேள்விப் பட்டதைக் கொண்டும் அவரிடம் பழகியும் அவரது தமிழ்ப்புலமையை உணர்ந்து மிகவும் மதிப்புக் கொடுக்கலானார். அவர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று தமிழ் இலக்கியங்கள் பற்றி உரையாடி வந்தார். அரங்கநாதருக்கு தியாகராசரின் தமிழ்ப்புலமையும் ஆற்றலும் பழகும் பண்பும் பிடித்திருந்தன. அரங்கநாதர் மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் அனைவரையும் கவரும். அவருடன் எப்போதும் ஆங்கிலப் பேராசிரியர்கள் இருப்பார்கள். அவர்களுக்குத் தமிழ் மட்டுமே தெரிந்த தமிழ்ப் பேராசிரியர் தியாகராசர் வீட்டுக்கு அரங்கநாதர் அடிக்கடிச் சென்று வருவது பிடிக்கவில்லை. தேசியக் கணக்கு “உங்களுக்கு பெரிய பெரிய அரசு அதிகாரிகளும் வக்கீல்களும் மேதைகளும் பழக்கம். ஆங்கிலேய நாட்டிலிருந்து வந்துள்ள பேராசிரியர்களே உங்கள் ஆங்கில உச்சரிப்பையும் பேச்சு நடையையும் பாராட்டு கிறார்கள். நீங்கள் போயும் போயும் தமிழ் மட்டுமே தெரிந்த தியாகராசச் செட்டியார் வீட்டுக்கெல்லாம் ஏன் போகிறீர்கள்?” என்று அவர்கள் கேட்டனர். அந்தப் பேராசிரியர்களை நோக்கி அரங்கநாதர் கூறலானார் : “நண்பர்களே, தியாக ராசர் நம்மை ப்பே hல் வயிற்றுப் பாட்டுக்காகப் படித்தவரில்லை. நாமெல்லாம் ஆங்கிலேயனிடம் அடிமைவேலை கிடைக்க வேண்டும் என்று பள்ளி கல்லூரிகளில் படித்தோம். தமிழ் படிப்பதை விட்டு ஆங்கிலம் பிரஞ்சு படித்தால்தான் வேலை கிடைக்கும் எ ன்று பே சுப வ ர்க ள் எ த் தனை பே ர் இருக்கின்றனர். தியாகராசர் வேலையைத் தேடி வர வில்லை. அவரைத் தேடி வேலை சென்றது. அவரைத் தேடிப்பிடித்து இங்கு அழைத்து வந்தவர் கோபால்ராவ் அல்லவா? மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யிடம் படித்தவர் என்ற ஒன்றே போதுமே! மிகப்பெரிய தமிழ் அறிஞர் அவர் என்பதை நான் புரிந்துகொண்ட தால்தான் அவர் வீட்டுக்கே போய் வருகிறேன்” என்று அரங்கநாதர் விளக்கமாகக் கூறியதும் தியாகராசரைத் தாழ்வாக நினைத் தவர்கள் தமது அறியாமைக்கு வெட்கிச் சென்றனர். கல்விக் கணக்கு அரங்கநாதர் கணிதப் பேராசிரியராக இருந்தாலும் ஆங் கி ல ப் பாட ம் ந ட த் துவ தில் ஆங்கிலேயர்களாலும் பாராட்டப் பெற்றார். அரங்கநாதரின் தத்துவப் பாடம் நடத்தும் சிறப்பை, தத்துவப் பேராசிரியர் முனைவர் டங்கன் பாராட்டி யுள்ளார். ஆங்கில நாடகம் நடத்தும் திறமையைப் பாராட்டி இவரிடம் மாநிலக் கல்லூரியில் பாடம் பயின்றார் பம்மல் சம்பந்த முதலியார். தாம் பெரும் பேராசிரியராக இருந்தாலும் திருமணம் சுப்பராய முதலியாரிடம் (திருமணம் செல்வ கேசவராயரின் தந்தை) தமிழ்ப்பாடம் கேட்டுக்கொண்டார். சி.வை. தாமோதரனார், பூவாளூர் தியாகராசர், உ.வே. சாமி நாதர், பெ. சுந்தரனார் முதலிய பெரும்புலவர்கள் இவரது இல்லத்திற்கு வந்துள்ளனர். பெ. சுந்தரனாரின் மனோன்மணியம் நாடகத்தை அவர் படிக்கக் கேட்டு மகிழ்ந்து சுந்தரனாரின் தமிழ்ப்பற்றையும் பாராட்டினார். தமிழ்ப் புரவலராகவும் விளங்கிய அரங்கநாதர், தம்மில்லத்தில் புலவர்களுக்கு விருந் தளிப்பது வழக்கம். ஒருமுறை சென்னையில் அரங்கநாதர் தம் இல்லத்தில் அளித்த விருந்தில், வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளாரின் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் சொற்பெருக்கு ஆற்றினார். அதனைக் கேட்ட அரங்கநாதர் அன்றே அவரைத் தம் ஞானகுருவாக ஏற்றார். நெற்றியில் திருநீறணிந்து முழுச் சைவராகவும் வள்ளலார் நெறியினராகவும் மாறினார். உதவிக் கணக்கு அரங்கநாதர் குடந்தைக் கல்லூரியில் பணியாற்றிக் கொண் டிருந்த காலத்தில்தான், தியாகராசச் செட்டியார் ஓய்வு பெற்ற இடத்தில் உ.வே. சாமிநாதையர் புதிதாக வேலையில் சேர்ந்தார். தமிழ்ப்பற்றால் தியாகராசரிடம் கொண்டிருந்தது போலவே, சாமிநாதரிடமும் அன்பும் மதிப்பும் பாராட்டினார் அரங்க நாதர். கும்பகோணத்திலிருந்த பெரும் மேதைகளும் பணக் காரர்களும் அரங்கநாதருக்குப் பழக்கமாதலின், உ.வே. சாமி நாதரின் தமிழ்ப் பணிகளுக்கு உதவுமாறு அவர்களை அறிமுகப் படுத்தினார். இதனைக் குறிப்பிட்டு உ.வே. சாமிநாதர், “பணத்தினால் மட்டும் ஒருவன் சிறப்படைய மாட்டான். தக்க மனிதர்களுடைய பழக்கம் பல பெருங் காரியங்களைச் சாதித்துக் கொள்ளஅனுகூலமாக இருக் கும். பணத்தால் முடியாத காரியத்தை இந்தப் பழக் கத்தினால் நிறைவேற்றிக் கொள்ளலாம். அரங்கநாத முதலியாருடைய நட்பினால் இந்தப் பலம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய பழக்கம் எனக்கு இருந்ததனால் நான் பலருடைய மதிப்புக்குப் பாத்திரமானேன். அவர் எனக்குப் பழக்கம் பண்ணி வைத்த கனவான்களால் நான் பல நன்மைகளை அடைந்திருக்கிறேன்” என்று எழுதியுள்ளார். உ.வே.சா தாம் தேடித் தொகுத்த சீவகசிந்தாமணியை அச்சிடச் சென்னை வரும்போதெல்லாம் அரங்கநாதர் இல்லத் திற்கு வந்து உதவிகள் பெற்றார். இவ்வாறு பல நன்மைகளைப் பெற்று உயர்வடைந்த உ.வே. சாமிநாதரை, மேலும் உயர் வடைய ஏதுவாகச் சென்னை மாநிலக் கல்லூரிக்கு இடம் மாறச் செய்தார் அரங்கநாதர். அத்துடன் சென்னையிலும் பலரையும் அறிமுகப்படுத்தி வைத்ததுடன் பல உதவிகளும் செய்தார். தாம் ஞானாசிரியராக ஏற்ற தொழுவூர் வேலாயுதர் சென்னை மாநிலக் கல்லூரியில் வேலை பெறவும் ஆவன செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடநூல் எழுதும் வாய்ப்புத் தமிழாசிரியர்களுக்கு அப்போது தரப்படுவதில்லை. அச்சுக் குழுவில் அரங்கநாதர் பொறுப்பேற்ற பிறகு தமிழ்ப் பாடநூல்களைத் தமிழாசிரியர்கள் மூலம் எழுத வைத்தார். புலமைக் கணக்கு சென்னை நகரத் ‘தலைமகன்’ (“செரீஃப்”) ஆக விளங்கிய முதல் இந்தியர் அரங்கநாதர். இந்திய விடுதலைக்கு வித்திட்ட அடிப்படையான மக்களுரிமைக் கருத்துகளைப் பரப்பிய முதல் இதழ் என்ற பெருமைக்குரிய ‘தி நேடிவ் பப்ளிக் ஒப்பீனியன்’ என்ற இதழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகளைக் கொண்ட இருமொழி இதழாக நடத்தினார். இவ்விதழே ஜி. சுப்பிரமணிய அய்யர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழையும் பின் ‘சுதேசமித்திரன்’ தமிழ் நாளிதழையும் தொடங்கத் தூண்டு தலாக அமைந்தது. அரங்கநாதர் பலதுறை வ ல்லுநராக இரு ந்தாலும் தமிழ்பால் கொண்டிருந்த மாறாத காதலால் புலமை நலம் சார்ந்த பாடல்களைப் படைக்க விரும்பினார். சிவப்பிர காசர் இயற்றிய “கச்சிக் கலம்பகம்” போன்று தாமும் கச்சிக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியத்தை இயற்றினார். சென்னைத் தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் பாடசாலையில் கச்சிக்கலம்பகம் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பெரும்புலவர்கள் அவ்வரங்கேற்றம் நிறைவேறியதும் அவருக் குப் ‘ பண்டித ர் ’ என்ற பட்டம் அளித்தனர். அவரது இளமைத் தமிழ்க் கனவு நிறைவேறியது. கணக்கு ஆசிரியர் ‘கலம்பகம் இயற்றிப் புகழ் பெறுவதா? என்று சிலர் பொறாமை கொண்டு அந்நூலைக் குறை கூறினர். தமிழ் அறிஞரும், கலித் தொகையை முதன் முதலில் ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சேற்றிச் சங்க இலக்கியத் தேடலைத் தொடங்கி வைத்தவரும் புதுக்கோட்டை அறமன்ற நடுவரும் ஆகிய சி.வை. தாமோதரனார் ஆங்கிலத்தில் கச்சிக் கலம்ப கத்தின் சிறப்பை விளக்கி நூல் ஒன்று வெளியிட்டார். 1895-இல் அரங்கநாதர் அறக்கட்டளை ஏற்படுத்தப் பெற்று, சென்னை மாநிலக் கல்லூரியின் பின்புறம், அரங்கநாதர் நினைவாக விக்டோரியா மாணவர் விடுதி கட்டப்பெற்றது. பூண்டி அரங்கநாத முதலியார் பூண்டி அரங்கநாத முதலியார் இயற்பெயர் : அரங்கநாதன் சிறப்புப்பெயர் : இராவ்பகதூர் (ஆங்கில அரசு அளித்தது), பண்டிதர் (1889) தந்தை : சுப்பராய முதலியார் பிறந்தநாள் : 1844 மறைவு நாள் : 10-12-1893 பிறந்த ஊர் : பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கல்வி : பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, சென்னை, மாநிலக் கல்லூரி - இளங் கலை கணக்கு, குடந்தை அரசுக் கல்லூரி - முதுகலை கணக்கு பணி : வட்டாரப் (புராவின்சியல்) பள்ளி, பெல் லாரி; குடந்தை அரசுக் கல்லூரி - உதவிக் கணிதப் பேராசி ரி ய ர் , சென்னை அரசு மொழி பெயர்ப்பாளர் (1880), சென்னை மாநிலக் கல்லூரி - கணிதப் பேராசிரியர் (1881-1884), சென்னை மாநிலக் கல்லூரி கணிதம் இயல்பு தத்துவவியல் துறைத் தலைவர் (1884- 1893), சென்னை பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர், சென்னை நகரத் ‘தலை மகன்’ (செரீஃப்) (1892) இதழாசிரியர் : தி நேடிவ் பப்ளிக் ஒப்பீனியன் படைப்பு : கச்சிக் கலம்பகம் (1889 சூன்) 21. இலங்கை வேல்! குமரிக் கண்டம் மாந்தன் பிறந்தகம். குமரிக் கண்டத்தில் குமரி மலைப் பகுதியில் குமரி ஆற்றங்கரையில் நாகரிகம் வளர்த்த மொழி தமிழ். உலகத் தாய்மொழியாம் தமிழ் பாண்டிய மண்டலத்தில் மட்டுமல்லாமல் சோழ மண்டலத்திலும் ஈழ மண்டலத்திலும் சேர நிலத்திலும் முக்கடற்கரை ஓரத்திலும் எனத் தென்னகத்திலும் பின் வடபுலத்திலும் பரவி உலகளாவி உள்ளது. ஈழத்து இலக்கியங்கள் ஈழத்துப் பூதனார் முதலிய சங்ககாலப் புலவர்களிலிருந்து அண்மைக் காலத்துப் புலவர்கள் வரை எண்ணற்றோர் இயற்றியன தமிழுக்கு வளம் சேர்த்து வருகின்றன. முதற் சங்க காலத்தும் இடைச் சங்க காலத்தும் ஏற்பட்ட கடல் கோள்களால் குமரி நிலத்து இலக்கண இலக் கியச் செல்வங்கள் மறைந்தன. நான்காம் உலகத்தமிழ் மாநாடு 1974-இல் யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற போது சிங்களக் காடையர்கள் மாநாட்டுத் திடலில் தமிழர்கள் மேல் ஈப்பை (ஜீப்பை) ஏற்றிப் பலரை கொன்றனர்; தமிழர் பலரை அழித்ததோடு 1981 சூன் திங்களில் தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுத் தொன்மை வாய்ந்த இலக் கிய வளத்தைக்கூறும் மிக அரிதான பழமையான 94,000 நூல்களைக் கொண்ட யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்தார்கள். தமிழ் இனம் அழிக்கப்பட்டு வரும் இலங்கையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான வித்துக்குக் குறைவில்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள் நல்ல தமிழை இனிமையாகப் பேசுபவர்கள். விபுலானந்த அடிகள், ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, வேலுப் பிள்ளை, கு. கதிரைவேற்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, ஞானப்பிரகாச அடிகளார், சர் பொன்னம்பலம் இராமநாதர், தனிநாயக அடிகளார், திரிகோணமலை கனகசுந்தரம் பிள்ளை முதலிய பல பெருந்தமிழ்ப் புலவர்கள் இலங்கையில் தோன்றி அருந்தமிழ் வளர்த்தார்கள். முதல் தமிழ் கிறித்துவமறையை (விவிலியத்தை) முழுமையாக முதன் முதலில் தமிழாக்கம் செய்தது இலங்கைதான். பெர்சிவல் குருமார், ஆறுமுக நாவலரின் துணை கொண்டு இதனைச் செய்தார். முதன் முதல் தமிழ் இடம்பெற்ற இதழ் ‘சிலோன் கெசட்’ (1802) ஆகும். தமிழில் தொடக்கக் காலப் புதினம் என்ற பெருமைக்குரிய ‘மோகனாங்கி’ என்ற நூலை எழுதியவர் திரிகோணமலை சரவணமுத்துப் புலவர் ஆவார். தமிழில் அகர முதலி (அகராதி) தோன்றியதும் இலங்கையில்தான். யாழ்ப்பாணத்துச் சரவணமுத்துப் புலவர், சந்திரசேகர பண்டி தர் என்னும் இருவர் முயற்சியால் 1842-இல் தமிழ் அகர முதலி முதன் முதல் வெளிவந்தது. வீரமாமுனிவரின் ‘சதுர் அக ராதி’க்குப் பின்னர் தோன்றிய முறையான முழுமையான தமிழ் அகரமுதலி இதுதான். வடமொழிக் கலப்பு மத அடிப்படையிலான ஆதிக்கம் தமிழில் வடமொழிக் கலப்புக்கு வழி கோலியிருந்தது. யாழ்ப்பாணம் தமிழ் அகராதி யில் பெரும்பாலும் நல்ல தமிழ்ச் சொற்களே இடம் பெற் றிருந்தன. ஆனால் கு. கதிரைவேற்பிள்ளை (1829-1904) வெளி யிட்ட அகராதியில் அனைத்துத் துறைகளிலிருந்தும் குறிப்பாக மதத் துறை நூல்களிலிருந்தும் நிறைய சொற்களைச் சேர்த்த தால் வட மொழிச் சொற்கள் நிறைய சேர்ந்தன. கு. கதிரை வேற்பிள்ளை பள்ளி ஆசிரியராகவும், யாழ்ப்பாண நடுவண் (மத்திய) கல்லூரி ஆசிரியராகவும் வழக்குரைஞராகவும் நீதிமன்ற நடுவராகவும் இருந்தவர். இவர் கிறித்துவ மதத்திற்கு மாறி உவைமன் (சி.டபிள்யு, கதிரைவேற்பிள்ளை) என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். இவர் சிவப்பிரகாசம், தத்துவக் கட்டளை ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட ஒய்சிங்டன் என்னும் அறிஞருக்கு உதவினார். இவர் தொகுத்த அகராதியில் வடசொற்கள் மிகுதி என்ற குறை இருப்பினும், சொற்களுக்கான விளக்கமாகத் தமிழ்இலக்கிய மேற்கோள்களை இவர் காட்டியிருப்பது சிறப்பாகும். இவருடைய அகராதியை மதுரைத் தமிழ்ச் சங்கம் மூன்று பாகங்களாக (1910, 1912, 1913) வெளியிட்டது. தமிழ்ச் சங்க அகராதி என்று இவ்வகராதி பெயர் பெற்றது. பேரகராதி கு. கதிரைவேற்பிள்ளை அகராதியை (1904) அடுத்து நா. கதிரைவேற்பிள்ளையால் யாழ்ப்பாணத் தமிழ்ப் பேரகராதி 1911- இல் வெளியிடப் பெற்றது. இதனை வண்ணக் களஞ்சியம் காஞ்சி நாகநாத முதலியார் மேலும் பல சொற்கள் சேர்த்து விரிவாக்கி 1918-இல் வெளியிட்டார். இந்த அகராதி பலரால் மேலும் பல சொற்கள் சேர்க்கப் பெற்றும், உருமாற்றியும் பல பெயர்களில் வெளிவந்தது. ஆயினும் நா. கதிரைவேற் பிள்ளை யின் பேரகராதியே சிறப்புடையதாகப் பரவியது. பிற்காலப் பேரகராதிகளுக்கு இவர் அகரமுதலியே எடுத்துக்காட்டாய் விளங்கியது. இன்றும் விளங்குகின்றது. நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாலவநத்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவர் இந்த அகரமுதலியை வெளியிடப் பொருள் உதவி செய்ததோடு வாழ்த்துப் பாயிரமும் பாடி அளித்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராகவும் பேரகராதித் (லெக்சிகன்) திட்டத்தின் தலைவராகவும் இருந்த ச. வையா புரிப்பிள்ளை, திருத்தமும் செப்பமும் கொண்ட பிழைகளில்லா மல் பதிப்பித்த முதல் அகராதி நா. கதிரைவேற் பிள்ளையின் பேரகராதிதான் என்று பாராட்டுவார். இளமைத் தமிழ் குடும்பத்தின் வறுமைச் சூழலால் ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலாத கதிரைவேலர் ஒரு வீட்டில் கணக்கர் வேலை பார்த்தார். எப்படியாவது தமிழில் புலமை பெற வேண்டும் என்ற ஆவலால் பிழைப்பதற்காகத் தமிழ் நாட்டுக்கு வந்தார். சென்னையில் பெரும் புலவர் திரிகோண மலை கனகசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியம் பயிலும் மாணவராகச் சேர்ந்தார். சென்னையில் குய ப் பேட்டையில் இருந்த ‘மதராஸ் ரிப்பன் பிரஸ்’ என்ற அச்சகத்தின் உரிமையாளர் சிவசங்கரன் செட்டியாரிடம் ஏற்பட்ட பழக் கத்தால், அவருடைய அச்சகத்தில் மெய்ப்பு திருத்துநராக வேலையில் சேர்ந்தார். படிப்புக்கு வேண்டிய பணத்தை அதன் மூலம் ஈட்டிக் கொண்டார். தமிழ் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் சிவ மத நூல்களையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தார். சென்னை இலக்குமி விலாச மண்டகத்தில் தமிழ் அறிஞர்களும் புலவர்களும் கூடிய அவையில் கவனகம் (அவதானம்) செய்து ‘சதாவதானி’ என்ற பட்டம் பெற்றார் அருட்பா எதிர்ப்பு ஆறுமுக நாவலரின் ‘சைவப் பிரகாச சபை’யில் படித்தவர் நா. கதிரைவேலர். ஆறுமுக நாவலர் சிவ மதத்தில் கொண்ட ஆழ் ந் த ப ற் றால் , வடலூர் வள்ள லாரின் அருட்பாவை எதிர்த்துச் செய்த போராட்டத்தை, நா. கதிரைவேலர் மீண்டும் தொடங்கி வைத்தார். இவரைப் போலவே அச்சக மெய்ப்புப் பணி பார்த்துக் கவனகத்தில் சிறந்து சொற்பொழிவாளராக விளங்கிய செய்குத் தம்பிப் பாவலர் இவரை எதிர்த்துப் பேசி னார். நா. கதிரைவேலர் ‘மருட்பா மறுப்பு’ என்று எழுதியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. இவ்வழக்கிற்குக் கதிரைவேலரின் மாணவராகிய திரு.வி.க. சாட்சி கூறினார். பள்ளி இறுதி வகுப்புத் தேர்வன்று சாட்சி சொல்ல நேர்ந்ததால் திரு.வி.க. தமது தேர்வை எழுத முடியாமற் போயிற்று. அருட்பா மருட்பா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, மறை மலைஅடிகளார் தலைமையில் மயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை, மாயூரம் நமச்சிவாயம் பிள்ளை, கோ. வடிவேலுச் செட்டியார், அனவரத விநாயகம் பிள்ளை, வண்ணக் களஞ் சியம் நாகநாத முதலியார் முதலியோர் ஒன்று கூடி அருட்பாவின் சிறப்பை ஏற்று வள்ளலார் பாடியவை அருட்பாவே என்று அறிவித்தனர். தமிழ்வேலர் வேல் வைத்து முருகவேளை வழிபடும் மரபினராகிய கதிரைவேலர் பாடிய ‘சுப்பிரமணிய பராக்கிரமம்’ என்ற நூலின் அடிப்படையில் பழனி (பொதினி) மலைமுருகன் கோவிலில் ஓவியக்கூடம் வரையப்பட்டது. கதிரைவேலர் என்னும் தமிழ் வேலரிடம் உருவானவ தமிழ்த்தென்றல் திரு.வி.க. ‘யாழ்ப் பாணம் தந்த சதாவதானி நா. கதிரைவேற் பிள்ளை சரிதம்’ என்ற நூல் இயற்றிப் போற்றியுள்ளார். “சென்னை வெஸ்லி கலா சாலையில் யான் மாணாக்கனாயிருந்தபோது, யாழ்ப் பாணம் நா. கதிரைவேற் பிள்ளையவர்களது அன்புக்கு உரியவ னானேன். ஆங்கிலத்தில் பித்துக் கொண்டு திரிந்த எனக்கு தமிழில் வேட்கையை எழுப்பியவர் அவரேயாவார்” என்பார் திரு.வி.க. நா.கதிரைவேற் பிள்ளை நா.கதிரைவேற் பிள்ளை இயற்பெயர் : கதிரைவேல்/ கதிரவேல்/ கதிர்வேல் சிறப்புப்பட்டங்கள் : சதாவதானி, மகாவித்துவான், பெருஞ் சொற்கொண்ட ல் , அத்துவித சி த் தா ந் த மகோத்தாரணர், மயாவாத துவம்ச கோளரி, சைவ சித்தாந்த மகா சரபம் பெற்றோர் : சிவகாமி அம்மையார், நாகப்பப் பிள்ளை பிறந்த ஆண்டு : 1874 மறைவு ஆண்டு : 1907 ஊர் : யாழ்ப்பாணம் அருகில் மேலப்புலோலி கல்வி : சைவப்பிரகாச வித்தியாசாலை : 6-ஆம் வகுப்பு வரை, நல்லூர் தியாகராசப் பிள்ளை யிடம் தமிழ் இலக்கியம், சென்னையில் சபா ப தி நாவ ல ர் , பூவை கலியாண சு ந் த ர முதலியா ர் , தி ரிகோணமலை த . கனக சு ந் தர ம் பிள்ளை ஆகி யோரிட ம் நட் பு ம் தமிழ்க்கல்வியும். மணம் : வடிவாம்பிகை (1892) பணி : மேலப்புலோலி :எழுத்தர், தொடக்கப்பள்ளிஆசி ரி ய ர் ; சென்னை; குயப்பேட் டை ; ‘மதராஸ் ரிப்பன் பிரஸ்’ மெய்ப்பு திருத்துநர் (1895-96); இராயப்பேட்டை : வெசுலி கலாசாலை (1897), சாந்தோம் : உயர்நிலைப் பள்ளி (1898), வேப்பேரி : சிதம்பர முதலியார் அச்சகம் மெய்ப்பு திருத்துநர் (1899); தனி ஆசிரியராகத் தமிழ் பயிற்றுநர் கிளைடன் துரைக்கு; சிவ சமயச் சொற்பொழிவாள்h; மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்; ஆரணி அரசரின் அவைப்புலவர். படைப்புகள் : மருட்பா மறுப்பு, சுப்பிரமணிய பராக் கிரமம், ஏகாதசிப் புராணம், சைவ சித் தாந்தச் சுருக்கம், புத்தமதக் கண்டனம், சிவாலய மகோற்சவ விளக்கம், யாழ்ப் பாணத் தமிழ்ப் பேரகராதி(1911) உரைகள் : நைடத ம் , கூர் ம புராணம் , ப ழனித் தல பு ராணம் , திரு வ ரு ணைக் க ல ம் ப க ம் , சிவராத்திரி புராணம். பதிப்பு : கதிர்காமக் கலம்பகம். 22. சங்குசக்கர சாமிவந்து சிங்கு சிங்குன்னு ஆடுதாம்! இராமநாதபுரம் சிற்றரசு (சமத்தானம்), கச்சத்தீவு உள் ளிட்ட சில தீவுகள், இலங்கையின் சில பகுதிகள் உள்ளடக்கிய அரசைக் கொண்டவர்கள் சேதுமன்னர்கள்; சோழ மண்டலமும் ஈழமண்டலமும் கொண்டு ஆண்ட சோழர் பெருமையைத் தொடர்ந்தவர்கள். இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயி லின் அறங்காவலர்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப் பட்ட காலத்தில் இராமேசுவரம் கோயிலின் புகழ்பெற்ற சுற் றாலை மண்டகமாகிய “சொக்கட்டான் சேரி மண்டபம்” சேது மன்னரால் கட்டப்பெற்றது. இதனைக் கட்டி முடித்திட மேற் பார்வை செய்த பிரதானி முத்திருளப்பப் பிள்ளை, துணை அமைச்சர் கிருட்டிண அய்யங்கார் ஆகியோர் சிலைகளும் சேதுமன்னர் முத்து இராமலிங்கர் சிலையும் மண்டகத் தில் உள்ளன. கிருட்டிண அய்யரின் வழிவந்தவர் பதுமாசனி அம்மையார். அவருக்கும் இராமானுச அய்யங்காருக்கும் பிறந்தவர் சேதுமன்னரின் அவைக்களப் புலவர் இரா. இராகவ அய்யங்கார் ஆவார். தாய்மாமன் பதுமாசனி அம்மையாரின் உடன் பிறந்தவர் கவனகர் (சதாவதானம்) முத்துசாமி அய்யங்கார். ஐந்து அகவையில் தந்தையை இழந்த இரா. இராகவன் அவரது தாய்மாமன் வீட்டில் வளர்த்தார். முத்துசாமி அய்யங்காரிடம் தங்கைமகன் இரா. இராகவனும் பொன்னுசாமித்தேவர் மகன்களும், சொந்த மகன் மு. இராகவனும் கல்வி பெற்றனர். சேதுபதி மன்னரின் அவைக்களத் தலைமைப் புலவராக முத்துசாமி அய்யங்கார் விளங்கினார். தமிழ், வடமொழி, கன்னடம், தெலுங்கு, இசை முதலியவற்றில் தேர்ந்த புலமை கொண்டவர் முத்துசாமி அய்யங்கார். தாய் மாமனிடம் தாய் மொழியாம் தமிழைக் கற்றதோடு வடமொழியும், இசையும் கற்ற இரா. இராகவன் இராமநாதபுரம் பதின்மப் (மெட்ரிக்) பள்ளி யில் பயின்று ஆங்கிலத்திலும் பிற பாடங்களிலும் தேறினார். ஆசிரியப் பணி மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் இரா. இராகவ அய்யங்கார் ஆசிரியர் பணி ஏற்றார். பின் திருச்சிராப்பள்ளி சேச அய்யங்கார் பள்ளியில் சில காலம் பணி செய்தார். சென்னைக் கிறித்துவக் கல்லூரிக்கு மாணவர் விடுதியும், உயர்நிலைப் பள்ளியும் அமைக்கச் சேதுபதி மன்னர் நாற்பதினாயிரம் உரூபாய் அளித்தார். 1891-இல் கிறித்துவக் கல்லூரியில் ஓர் முறை இரா. இராகவர் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். பின் பூண்டி அரங்கநாத முதலியாரைச் சந்தித்தார். அரங்கநாதர் நற்சான் றிதழ் எழுதிக் கொடுத்து வாழ்த்தினார். அச்சான்றிதழைக் கண்டசேதுபதி மன்னர் தம் அவைக்களப் புலவராக இராகவரை ஏற்றார். தாய்மாமன் முத்துசாமி அய்யங்கார் 1897-இல் மறைந்த தால், இரா. இராகவர் தலைமைப் புலவரானார். விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் என்ற மூன்று அரசர்களின் அவையிலும் ஒட்டக்கூத்தர் தலைமைப் புலவராக விளங்கினர். அதுபோல இரா. இராகவரும் பாசுகர சேதுபதி, இராசராசேசுவர சேதுபதி, நாகநாத சேதுபதி ஆகிய மூவர் அவையிலும் தலைமைப் புலவராக விளங்கினார். சேதுபதி இராகவர் புலவர் மணி கதிரேசன் செட்டியார் தாம் நடத்தி வந்த மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் இராகவருக்குப் பாராட்டு விழா செய்து, ‘மகாவித்துவான்’ என்ற பட்டமளித்தார். சேது காவலர் முத்துவிசய ரகுநாதராசா பாசுகர சேதுபதி 04-11-1901 அன்று மதுரையில் முத்துப் பல்லக்கில் இரா. இராகவரைச் சுமந்து வந்து பெருவிழாச் செய்தார். அத்துடன் அன்றே ஆவணப்பதிவகத்தில் ஆண்டுதோறும் ரூ.635 கொடை பெறும் வகையில் ஆவணம் (பத்திரம்) எழுதி அளித்தார். மன்னரின் தாயார் முத்தாத்தாள் நாச்சியார் இரா. இராகவருக்கு இராம நாதபுரததில் ஓர் வீடும், பரமக்குடி வட்டத்தில் வைகை ஆற்றுப் பாசனமுள்ள விளைநிலங்களும் கொடையாக அளித்தார். பாசுகரசேதுபதியின் மகன் இராசராசேசுவர சேதுபதி இராகவரிடம் படித்தவர். இவர் 1910-இல் மன்னரானதும் தேவக்கோட்டை சென்று 1904 முதல் அங்குத் தங்கியிருந்த இராகவரை இராமநாதபுரத்திற்கு அழைத்துக் கொண்டார். இராகவரின் பெருமையறிந்த அண்ணாமலை அரசர் தமது பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக 65 அகவை ஆகியிருந்த இராகவரை அமர்த்தினார். இராகவர் இயற்றிய ‘பாரிகாதை’ என்ற செந்தமிழ்க் காப்பியத்தை அண்ணாமலை அரசர் தம் பிறந்த நாள் பெருமங்கல விழா அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் கூடிய அவையில் வெளியிடச் செய்து பொற்கிழி அளித்துப் பாராட்டி னார். எழுத்தும் பேச்சும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பாண்டித்துரைத் தேவருடன் இருக்கும்போதும், இராமநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்னருடன் இருக்கும்போதும் அவர்களைக் காண வரும் எண் ணற்ற புலவர்களிடம் பழகி நட்பு பூண்டிருந்தார் இராகவர். பலரிடமிருந்தும் ஏட்டுச் சுவடிகளையும், நூல்களையும் தொகுத் தார். பல தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கவும் செய்தார். உரை எழுதி விளங்கவும் வைத்தார். இராகவர் ஆசிரியராக இருந்து ‘செந்தமிழ்’ என்னும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியத் திங்கள் இதழை நடத்தித் தமிழினச் சிறப்பை உலகறியச் செய்தார். உயர்ந்த திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியதோடு, பிற பேரறிஞர்கள் எழுதிய கட்டுரைகளையும் வெளியிட்டார். தமிழ்நாடு முழுதும் பல ஊர்களுக்கும் சென்று இலக்கியச் சொற்பொழிவுகள் செய்தார். எழுத்தும், பதிப்பும், பேச்சும் மட்டுமல்லாது நன்கு இசையுடன் பாடவும் செய்தார். ‘கலைமகள்’ முதல் இதழ் 1931-இல் இராகவர் எழுதிய கடவுள் வாழ்த்துடன் வெளியாகியது. இராகவர் எழுதிய ‘தொழிற் சிறப்பு’ என்னும் நூல் கலைமகள் இதழில் மூன்று பகுதியாய் வந்தது. ‘சங்கு சக்கரசாமி வந்து சிங்கு சிங்குன்னு ஆடுதாம்’ என்னும் இவரது குழந்தைப் பாடல் கலைமகள் இதழில் வெளிவந்தது. தமிழின் பெருமை இரா. இராகவர் தமது ‘பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும்’ என்ற நூலில் பொருநர் ஆற்றுப்படை கூறும் கரிகாலன் வேறு, பட்டினப்பாலை கூறும் கரிகாலன் வேறு என்று நிறுவினார். திருவல்லிக்கேணி ‘சீறி வேத வேதாந்த வர்த்தன மகாசபை’யில் நம்மாழ்வாரின் “அண்டகோளத் தோரணுவாகி” என்ற பாடலுக்கு விளக்கம் கூறிச் சொற் பெருக்காற்றினார். மிகச் சிறந்த அவரது சொற்பொழிவை அந்த அவையினர் நூலாக வெளியிட்டனர். கதவு என்பது வடசொல் என்றும் வேளிர் என்னும் குறு நிலத் தலைவர்கள் காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள் என்றும் இவர் எழுதிய பிழையான கருத்துகளை அரசஞ் சண்முகனார் முதலிய அறிஞர்கள் மறுத்தனர். சி.வை. தாமோதரனார் தேடிக்கண்டுபிடித்துப் பதிப்பித்த தொல்காப்பியம் பொரு ளதிகாரம் நச்சினார்கினியார் உரை என்பதில், பின் நான்கு இயல்கள் பேராசிரியர் உரை என்று தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளைக் கொண்டு வெளிப்படுத்தினார். சேதுபதி மன்னரும், பாண்டித்துரைத் தேவரும், அண்ணா மலை அரசரும் மூவேந்தராய் முத்தமிழைப் புரந்ததால் உருவான பல பேரறிஞர்களில் இரா. இராகவரும் ஒருவர். ஒப்பற்றவர். ஆரியத்தையும் வடமொழியையும் உயர்த்தியதுடன் தமிழைப் பைசாச (பிசாசு) மொழி என்றும் தமிழரை தஸ்யூ (அடிமை) என்றும் அசுரர் என்றும் கூறிய பழி மொழிகளை மறுத்து ஆராய்ச்சித் திறனுடனும் தமிழ்ப் பற்றுடனும் நிலைநாட்டியவர் இரா. இராகவர். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் மூன்று நிலையிலும் தமிழைப் பெருமை செய்து இரா. இராகவர் எழுதிய ‘தமிழ் வரலாறு’ என்ற நூலும், ‘வஞ்சி மாநகர்’ முதலிய வரலாற்று நூல்களும், செந்தமிழ் இதழில் எழுதிய மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளும் செந்தமிழுக்குரிய செம்மொழிப் பெருமை சேர்ப்பன. இரா.இராகவையங்கார் இரா.இராகவையங்கார் இயற்பெயர் : இராகவன் சிறப்புப்பட்டங்கள் : மகாவித்துவான் (மேலைச்சிவபுரி சன் மார்க்க சபையில் உ.வே.சா அளித்தது) பெற்றோர் : ப து மாசனி அ ம்மையார் , இராமானு ச அய்யங்கார் பிறந்தநாள் : 20-09-1870 மறைவு நாள் : 11-07-1946 ஊர் : தென்னவராயன் புதுக்கோட்டை சிவ கங்கை கல்வி : சதாவதானி முத்து சாமி அய்யங்காரிட ம் தமிழ், வடமொழி; இராமநாதபுரம் ஆங் கிலப் பள்ளி; பதின்மப் படிப்பு ( மெட்ரி குலேசன்) மதுரை : சேதுபதி உயர் நிலைப்பள்ளி (1888-1890) திருச்சிராப் பள்ளி; சேசையங் கார் பள்ளி (1891) மனைவி : சானகி அம்மையார் பணி : ம து ரைத் த மி ழ் ச் ச ங் க ச் செய ற் கு ழு உறுப்பினர் (1901) படைப்புகள் : செய்யுள் : புவி எழுபது (1927), தொழிற் சிறப்பு (1932), திருவடிமாலை (1933) நன்றியில் திரு, பாரிகாதை (1937), இராச ராச சேதுபதி ஒருதுறைக் கோவை, சீராம நாமப்பாட்டு. அச் சேறாதவை : திருவேங் கடமாயோன் மாலை, பகவத்கீதை தாழிசை, பல்லட சதகம், பாரத நீதி வெண்பா, கடவுள் மாலை, திருப்பு ல் லாணி ய ம க அந்தாதி , காவல் தலைமை உரைநடை :சேது நாடு ம் த மி ழு ம் , வ ஞ்சிமா ந க ர் , நல்லிசைப் புலமை மெல்லியலார், அண்ட கோளமெய்ப் பொருள், தித்தன், கோசர் உ ரை : குறுந்தொகை விளக்கம், பெரும் பாணாற்றுப் படை ஆராய்ச்சியும் உரை யும், பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரை யும், ஆத்திசூடி உரை மொழி பெயர்ப்பு : அபிஞ்ஞான சாகுந்தலம், இரகுவம்சம் (சில சருக்கங்கள்), வால்மீகி இராமாயணம் (சில சருக்கங்கள்), சிவசுலோகம் பதிப்புகள் : அகநானூறு நித்திலக் கோவை (1901), திணைமாலை நூற்றைம்பது, முத் தொள்ளாயிரம், நேமிநாதம் பழைய உரை யுடன் (1903), தொல்காப்பியம் நச்சினார் கினியம் செய்யுளியல் (1917), பன்னிரு பாட்டியல், கனாநூல் 23. நெஞ்சில் எழுந்த நெருப்பு பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தில் பணி யாற்றியவர்களில் இரா. இராகவையங்காரும், மு. இராகவையங்காரும் குறிப்பிடத் தக்கவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தையும் அதன் செந்தமிழ்க் கல்லூரியையும், செந்தமிழ் இதழையும் வளர்த்தெடுத்தவர்கள். மூத்தவராகிய இரா. இராக வரைப் பெரிய அய்யங்கார் என்றும் இளையவராகிய மு. இராகவையங்காரைச் சின்ன அய்யங்கார் என்றும் அழைப்பர். அண்ணன் பாண்டித்துரைத் தேவர் காட்டிய வழியில் மன்னர் சேதுபதி தமிழ் நடைபோட்டது போன்று மூத்தவர் இரா. இராகவரைப் பின்பற்றித் தமிழ் வாழ்வு வாழ்ந்தவர் மு. இராகவர். நன்றிக்கு நன்றி ‘நன்றி’ என்ற சொல்லுக்கு நன்றி கூறி விடை கொடுத்து, நன்றி மறந்த தமிழர்களாக (‘தேங்சு’ என ஆங்கிலச் சொல் கூறும்) இன்றைய தமிழர்கள் உள்ளனர். மூன்று அகவையி லேயே தந்தையை இழந்த பாண்டித்துரைத் தேவர் தம் சிற்றப்பா இராமநாதபுரம் மன்னரின் பாதுகாப்பில் அரண்மனைத் தலைமைப் புலவர் ஆசிரியர் முத்துசாமி அய்யங்கார் வீட்டில் தமிழோடு வளர்ந்தார். கன்னடமொழியில் (கவனகம்) அவ தானம் செய்து பட்டம் பெற்றிருந்தவர் ஆசிரியர். அவர் இறந்த தும் அவருடைய ம கன் மு. இராகவர்ப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார் தேவர். தாம் தொடங்கிய நான்காம் தமிழ்ச் சங்கத்திலும் ஆசிரியரின் அக்காள் மகன் இரா. இராகவருக்கும் ஆசிரியரின் மகன் மு. இராகவருக்கும் பதவிகள் அளித்து நன்றி பேணினார். தமிழும் சிவ மதமும் வளர்த்த சேதுபதிகளிடமும், தேவர்களிடமும் தமிழும் வைணவமும் போற்றிய இரு இராகவர் களும் தமிழால் ஒன்றுபட்டு நன்றியோடு வாழ்ந்தனர். மதம் பிடித்த மொழி வயிற்றுப் பாட்டுக்காக ஆங்கிலம் படித்துவிட்டு, தம் தாய்மொழியாம் தமிழைவிட ஆங்கிலம் உயர்ந்ததென்று பெருமை பேசுகிற இழிந்த தமிழர்கள் சிலர் உண்டு. மதம் பிடித்த காரணத்தினால் வடமொழி படித்த சிலர், கோயிலில் தமிழ் கூடாது என்றும்தமிழில் சிறப்பு இல்லை என்றும் கூறினர். தமிழோடு வடமொழியும், கன்னடமும், தெலுங்கும், இந்துத் தானியும், ஆங்கிலமும் அறிந்தவர் முத்துசாமி அய்யங்கார். ‘சந்திரா லோகம்’ என்ற நூலின் ஆசிரியர். அவரால் வளர்க்கப் பெற்ற பாண்டித்துரைத் தேவரும், இரா. இராகவரும், மு. இராகவரும் தமிழின் பெருமையை உலகறியச் செய்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட ‘செந்தமிழ்’ இதழில் மதம்பிடித்தோரின் கருத்துகளை மறுத்துத் தமிழின் உயர்வை நிலைநாட்டினர், அவ்விதழின் ஆசிரியர்களாக இருந்த இரா. இராகவரும், மு. இராகவரும். தமிழ் ஒளி மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளும் ஒற்றுமையின்மையும் குமரிக்கண்டம் முதல் சிந்துவெளிவரை பரவிக்கிடந்த தமிழர் களின் உயர் நாகரிகத்தையும், பண்பாட்டினையும், வர லாற்றையும் இருட்டில்தள்ளி இருந்தன. நான்காம் தமிழ்சங்கம் தமிழரின் பழம்பெரும் இலக்கியச் சுவடிகளை மீட்டெடுத்துப் பதிப்பிக்கத் தொடங்கியிருந்தது. இவற்றில் காணும் தமிழ் ஒளியைச் ‘செந்தமிழ்’ இதழ் பரப்பியது. ‘செந்தமிழ்’ இதழில் ‘வீரத்தாய்மார்’ என்ற கட்டுரை எழுதியிருந்தார் மு. இராகவர். தமிழ் அன்னையர் வீரத்தாய்மார்களாக விளங்கினால் தமிழ்க் குழந்தைகள் வீரமும், ஈரமும் பெற்றுத் தாய்த் தமிழின் பாலும் தாய்நாட்டின் மேலும் பற்றுக் கொண்டு வீரவாகையர்களாகத் திகழ்வார்கள் என்று மகிழ்ந்த வ.உ.சிதம்பரனாரும், பாரதி யாரும், உ.வே. சாமிநாதரும் பாராட்டி எழுதினர். தமிழ் உணர்ச்சியற்ற காரணத்தால் குருடர்களாய்ச் செவிடர்களாய், ஊமையராய்த் தமிழர் வாழும் காலம் விரைவில் மாறும் என்று நம்பிப் பாடிய பாரதியார் ‘செந்தமிழ்’ இதழில் மு. இராகவர் எழுதியிருந்த ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ என்ற கட்டுரையைப் படித்துப் பாராட்டினார். “தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகறியும், தங்களுடைய நெஞ்சிலே எழுந்திருக்கும் ‘ஸ்வதேச பக்தி’ என்ற புது நெருப்புக்குத்தான் நான் வணக்கம் செய்கிறேன்... தாழ்நிலை என்ற இருளிலே மூழ்கிக் கிடக்கும் பாரதவாசிகளுக்கு, மகாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளில், உங்கள் நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்! அதற்கு வணக்கம் செய்கிறேன். இது வளர்க!” -என்று மு. இராகவருக்கு மடல் எழுதினார் பாரதியார். அருந்தமிழ் வளர்த்த பெருந்தமிழ் அறிஞர்கள் எழுதிய அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் செந்தமிழ் இதழில் இதழாசிரியர் மு. இராகவரால் தேர்ந்து வெளியிடப் பெற்றுத் தமிழ் ஒளி பரப்பின. வரலாறும் வாழ்வும் மு. இராகவர் தம் மனைவியையும், மூத்த மகனையும், மருமகளையும் 1954-இல் ஏதத்தில் (விபத்தில்) இழந்து மானா மதுரையில் துன்பத்துள் ஒடுங்கினார். சேதுபதி மன்னரும் அண்ணாமலை அரசரும் தமிழால் தேறுதல் தந்தனர். ஆழ் வார்கள் காலநிலை, சேரன் செங்குட்டுவன், வேளிர் வரலாறு முதலிய நூல்கள் எழுதி வரலாற்றுக் களத்தில் நிலையான கருத்துரைகளைத் தந்தார். வரலாற்றில் காலக்கணிப்பு இன்றி யமையாதது என்பதால் அதில் கருத்தூன்றிக் கல்வெட்டுகளை ஆய்ந்து நிறுவினார். கல்வெட்டறிஞர் கோபிநாத ராவுடன் களப்பணி செய்து கல்வெட்டுகளைப் படித்தார். சாசனத் தமிழ்க்கவி சரிதம், இலக்கியச் சாசன வழக்காறுகள், காந்த ளூர்ச்சாலை முதலிய நூல்கள் இவருடைய கல்வெட்டு ஆய் வின் பயன்களாகும். இவருடைய தமிழ்ப் பேரகராதிப் பணிக்காக ஆங்கில அரசு ‘இராவ்சாகிப்’ பட்டம் வழங்கியது. ஆய்வு முன்னோடி சி. கனகசபைப் பிள்ளை, ந.சி.கந்தையாப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, பெ. சுந்தரம் பிள்ளை, மறைமலை அடிகள் முதலியோர் வரிசையில் மு. இராகவரும் ஆய்வுத் தமிழ் வளர்த் தெடுத்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ‘பாண்டியன் புத்தக சாலை’யில் தொகுக்கப்பட்டிருந்த அரிய தமிழ்ச் சுவடிகளும் நூல்களும் மு. இராகவரின் ஆய்வுக்குத் துணை செய்தன. அவற்றுடன் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து அரசர்கள், பு ல வ ர் க ள் , இ ல க் கி ய ங் க ள் ப ற் றி ய வரலாற்றாய்வை வழங்கினார். இவர் எழுதிய ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி’ இலங்கையில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றது. இந்நூல் பழந்தமிழர் தம் செம்மாந்த வாழ்வியலின் படப்பிடிப்பாகவும், தொல்காப்பியத்தின் பெருமையை உல குக்கு அறிவிப்பதாகவும் அமைந்தது. தமிழ்ப் பேரகராதிப் பதிப்புப்பணியும், கம்பராமாயணப் பதிப்புப் பணியும் இவ ருக்குப் புகழ் சேர்த்தன. நாவலர் சோமசுந்தர பாரதியாரும் திருமணம் செல்வ கேசவராய முதலியாரும் தஞ்சை கே. எசு. சீனிவாசன் பிள்ளையும் மு. இராகவரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டினர். தமிழ் வாழ்வு கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் மலையாளமும் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு முன் கன்னடமும், கிபி. 6-ஆம் நூற் றாண்டுக்கு முன் தெலுங்கும் தூய தமிழாகவே விளங்கின என்ற உண்மை வரலாறு தெரியாமல் செம்மொழி பற்றிச் சிலர் பேசி வருகின்றனர். திராவிட வேர்ச் சொல் அகராதி தொகுத்த எமனோ, பர்ரோ ஆகியோர் பாராட்டிய சிறந்த பேரக ராதியைத் தொகுத்த மு. இராகவர் ஆசிரியப்பணி, இதழாசிரியப் பணி, ஆய்வுப் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இவரின் அறுபதாம் அகவை விழா வெளியீடாக வந்த ‘ஆராய்ச்சித் தொகுதி’யும் எண்பதாம் அகவை விழா வெளியீடாக வந்த ‘வினைத் திரிபு விளக்கம்’ என்ற நூலும் போற்றத்தக்கன. மு.இராகவையங்கார் மு.இராகவையங்கார் இயற்பெயர் : இராகவன் சிறப்புப்பெயர் : இராவ்சாகிபு மு. இராகவையங்கார் தந்தை : முத்துசாமி அய்யங்கார் பிறந்தநாள் : 26-07-1878 மறைவு நாள் : 02-02-1960 கல்வி : தந்தையிடமும்,மாமனார் சூரியங்குட்டம் கிருட்ணமாச் சாரியாரிடமும் : தமிழ், வடமொழி, இசை பணி : பாண்டித்துரைத் தேவரின் அரசவைப் புலவர் ம துரைத் தமிழ்ச்சங்கம் : செந்தமிழ்க் கல்லூரித் தமிழ் ஆசிரியர் (1901-03), ‘செந்தமிழ்’ இதழ் உதவி ஆசிரியர் (1902-3), ஆசிரியர் (1904-1912) சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதித் தொகுப்பு (1913-1939) சென்னை இலயோலா கல்லூரி (1944- மதிப்பியல் தமிழாசிரியர், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் (1945) தமிழ்ப் பேராசிரியர் , அண்ணாம லை ப் பல்கலைக்கழகம் : கம்பராமாயணப் பதிப்புக் குழு (1956-1959) தமிழர்நேசன் (மாதஇதழ்), கலைமகள் (மாத இதழ்) - மதிப்பு இதழாசிரியர். படைப்புகள் : வேளிர் வரலாறு ( 19 0 5 ) , சேரன் செங் குட்டுவன், திருவெந்தை எம்பெருமான், ஆழ்வார்கள் கால நிலை, சாசனத் தமிழ்க் கவிசரிதம், கட்டுரை மணிகள், செந்தமிழ் வளர்த்த தேவர்கள், கலிங்கத்துப் பரணி ஆராய் ச் சி , சேரவேந் த ர் தாய வ ழ க்கு, இலக்கியச் சாசன வழக்காறுகள், தொல் காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ஆ ர h ய் ச் சி த் தொகு தி , வினைத் தி ரி பு விளக்கம் (1958). பதிப்புகள் : சந்திராலோகம், நரிவிருத்தம், பெருந் தொகை, சிதம்பரப் பாட்டியல், விக்கிரம சோழன் உலா, அரிச்சந்திர வெண்பா, திருக் குறள் பரிமேலழகர் உரையுடன், நிகண்டக ராதி முதலியன. 24. பழங்காலைத் தூர்க்காதே! மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு, இல்லையென்றால், கண்ணீர்ப்பெருக்கு. ஏரிகளில் வீடு கட்டி, வயல்களில் தொழிற் சாலைகள் அமைத்து, நாட்டைப் பைஞ்சுதைப் (சிமிட்டிப்) பாலைவனங்களாக்கி வருகிறோம். ஆற்றின் தலையூற்று தொடங் கும் இடத்திலிருந்து இறங்கும் பகுதிகளில் ‘பழங்காலைத் தூர்க்காதே புதுக்காலை வெட்டாதே’ என்ற பழமொழியைச் செயற்படுத்திக் கடைமடைப் பகுதிகளும் பின் மேற்பகுதி களிலும் வெள்ளத்தின் வரவுக்கேற்ப புதுக்கால்கள் வெட்டப்பட வேண்டும் என்பது சோழர் காலக் கல்வெட்டுகளில் உள்ள விதி. ஆனால் தலையூற்று உள்ள அண்டை மாநிலங்கள் புதிய அணைகள் கட்டி, புதிய கால்கள் வெட்டி, புதிய பயிர் நிலங் களை ஏற்படுத்தியதுடன், தண்ணீரை விற்பனைப் பொருளாக்கும் பன்னாட்டு நிறுவனங்களைப் பெருக்கி வருவதாலும், நம் நாட்டிலும் நீர்நிலைகளின் பழங்காலைத் தூர்த்து வருவதுடன் நீர் தேக்கும் புதுக்கால்களை வெட்டாததாலும் பயிருக்கும் மனித உயிருக்கும் நீரின்றித் தவிக்கிறோம். பழைய (மூட) நம்பிக்கை களை விடக் கூடாது புதிய (சீர்திருத்தக்) கருத்துகளை ஏற்கக் கூடாது என்று தளைப்படுத்தித் தவறாக இப்பழமொழிக்குப் பொருள் கூறினர் மடத்தலைவர்கள் சிலர். தமிழ்நாட்டில் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி கூடாது ஏழைகளுக்குக் கல்வியே கிடையாது என்று தடுக்கப்பட்ட காலத்தில் கல்விக் கண் திறந்தார் பச்சையப்ப வள்ளல். தமிழ்ப் பயிர் “பச்சையப்பன் கல்லூரிப் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும்” என்பர். தமிழாசிரியர்கள் மாணவக் களத்தில் தமிழ்ப் பயிர் வளர்த்தார்கள். தந்தை கேசவ சுப்பராயர் தமிழாசியராகப் பணியாற்றிய பச்சையப்பன் கல்லூரிலேயே தமிழ்ப் பேராசிரியர் ஆனார், செல்வகேசவராயர். நறை பழுத்த துறை தீந்தமிழின் தொல் இலக்கியங்களையும், புதுமொழியாய் நேற்றைக்குப் பிறந்த ஆங்கிலத்தின் புதிய இலக்கியங்களையும் கற்ற செல்வ கேசவர், பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமை யாய்த் தமிழை வளர்த்த செம்மல் ஆவார். கோடம்பாக்கமும் நுங்கம்பாக்கமும் சிறு சிற்றூர்களாக (கிராமங்களாக) வயல் களும் பனைமரங்களும் சூழ விளங்கிய காலத்தில் பிரம்பூரில் (பெரம்பூரில்) புதுமை மாளிகையாக வளமனை கட்டி வாழ்ந்தார். சங்கத்தமிழ் நூல்களைச் சோழர்காலப் புதுமைத் தமிழில் தந்த உரையாசிரியர்களாகிய பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் பெயர்களைத் தம் மக்களுக்குச் சூட்டினார். பழம்மொழி தமிழில் தோன்றிய பழம் போன்ற பழைய மொழிகள் தொல் தமிழர்களின் பட்டறிவின் திரட்சிகள் ஆகும். பழமொழி நானூறு என்ற நூலைப் பதிப்பித்துள்ளார் செல்வகேசவர். பழைய பழமொழிகளைத் தொகுத்ததுடன், புதிய மொழியாகிய ஆங்கிலத்தின் பழமொழிகளில் இணையானவற்றையும் தந் துள்ளார். பழைய தமிழ்ப் பழமொழிகளைப் புதுமைக் காலத் திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற பெருமை மிக்கன என்றுநிiலை நாட்டியுள்ளார். சுவையும் எளிமையும் சுருக்கமும் கொண்ட பழமொழிகளைத் தம் கட்டுரைகளில் நிறைய பயன்படுத்தி யுள்ளார். தோட்டி போல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும், கையில் உண்டானால் காத்திருப்போர் ஆயிரம் பேர், கடனோடு கடன் கதம்பப்பொடி காற்பணம், ஓடம் விட்ட ஆற்றிலும் அடிசுடும் என எண்ணற்ற பழமொழிகளைச் சுவை யுடன் வழங்கியுள்ளார். பதிப்புப்பணி பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர். பழமொழி நானூறு பதிப்பித்ததில், அச்சும் பதிப்பும் ஆகிய புதுமை வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டுள்ள செப்பமும் திறமையும் பதிப்பு முறையில் மேற்கொண்டுள்ள புதிய நெறியும் புலப்படுகின்றன. பழைய பொழிப்புரையுடன், புதிய பதவுரையும் கருத்துரையும் சேர்த்து, தலைப்புகள், உட்தலைப்புகள் கொடுத்து, இணையான வேறு தமிழ்ப்பழமொழிகளையும் ஆங்கிலப் பழமொழிகளையும் தந்துள்ளார். திமிரி சபாபதி முதலியாரின் ‘நற்புத்தி போதம்’ (1855) என்ற நூலை மாணவர்களுக்கு பயன்படும் கட்டுரை நூலாக ‘வியாச மஞ்சரி’ (1897) என்ற பெயரில் மறுபதிப்பு செய்து பலமுறை வெளியிட்டார். இவற்றிலும் மரபுத் தொடர்கள் ப ழமொழிகள் தொகுத்து வெளியிட்டா ர் . மேலும் பல கட்டுரைகள் சேர்த்துத் ‘தமிழ் வியாசங்கள்’ என்று (1915) வெளியிட்டார். எளிய உரை நடையில் மாணவர்கள் படிக்கக் கதை நூல்களும் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். முதுமை புதுமை பழந்தமிழ் இலக்கணத்தைப் புதிய வரவான மொழி யியலைக் கொண்டு விளக் கினா ர் செல்வகேசவர் . இளம் மாணாக்கர்களுக்குப் பயன்படும் வகையில், பஞ்சலட்சணம் (1903) எனத் தமிழின் ஐந்திலக்கணத்தையும் எளிய தமிழில் புதிய தமிழில் அளித்தார். தமிழக மாணவர்களின் நலனுக்காக ஜி.யூ. போப் உரை நடையில் தமிழ் இலக்கணமும் பாட நூல்களும் அளித்தவர். அவருடைய நண்பராகிய செல்வ கேசவரும் அவரைப் பின்பற்றினார். தம் கல்லறையின் மேல் ‘இங்கு ஓர் தமிழ் மாணவன் உறங்குகின்றான்’ என்று பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய ஜி.யு.போப் அக்கல்லறையும் தமிழ் நாட்டார் பணத்தில் கட்டப்பட வேண்டும் என்று விரும்பினார். தமிழ்நாட்டிலிருந்து பொருள் திரட்டி நண்பர் செல்வகேசவர் அனுப்பினார். இன்று போலவே அன்றும் வடமொழியையும் ஆங்கிலத் தையும் தலையில் வைத்துக்கொண்டு ஆடியதோடு தமிழைக் குறை சொல்வோர் இருந்தனர். வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, உவமைத் தொகை முதலியன தமிழுக்கே சிறப்பாக உரியன என்பதையும், ஆங்கிலத்தில் முறைப்பெயர்களுடனும் உறவுப் பெயர்களுடனும் உருபுகளும் ஒட்டுகளும் தனித்தனிச் சொற்களாக உள்ளன என்பதையும், வடமொழி, ஒலிப்புக் குறைபாடும், இலக்கணக் குறைபாடும் உடைய மொழி என்பதை யும் எடுத்துக் காட்டினார். மொழியியல் என்ற புதிய துறை வளராத அந்தக் காலத்திலேயே தமிழ்மொழி வரலாறு பற்றிச் சுதேசமித்திரன், மனோகரன் முதலிய இதழ்களில் எழுதினார். திராவிடம் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்பதையும் அகத்தியர் தமிழைப் படைத்தார் என்பதையும் மறுத்தார். கம்பராமாயணத்தில் பற்றுள்ள செல்வகேசவர், ‘தழற்புரை கடவுள் தந்த தமிழ் தந்தான்’ என்ற கம்பராமாயண அடியை ஓதத் தன் நாக்கு மறுப்பதாக (அகத்தியர்தான் தமிழைத் தந்தார் என்பதை ஏற்க மறுப்பதாக) எழுதியுள்ளார். உயர்தனிச் செம்மொழி தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதல் உலகுக்குக் கூறியவர் கால்டுவெல். ஆயினும் வடமொழியி லிருந்தே தமிழும் தமிழ் இலக்கியங்களும் வந்தன என்றும் வடமொழியின்றித் தனித்து இயங்க இயலாது என்றும் பொய் கூறிச் சிலர் தம் வடமொழிப் புலமையாலும் ஆங்கிலத்தாலும் மருட்டி வந்தனர். வடமொழிக் கலப்பின்றித் தமிழ் தனித்து இயங்கவல்லது என்பதை நிலைநாட்ட தமிழ் இலக்கியங்களில் படிப்படியே முற்காலம் நோக்கினால், மிகக் குறைவான வட சொற்களே உள்ளன என்று செல்வகேசவர் நிறுவினார். பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றேயாயினும் வட மொழியிலிருந்து வந்ததுண்டா என்று கேட்டு, என்ன கூறியும் ‘திருந்தாமல் தமிழைப் பழிப்பவர், அழிந்துபோக, ஆணை சொல்கிறார் செல்வகேசவர். தமிழ்மொழி தமிழர் நாகரிகம் ஆகியவற்றின் சிறப்பைப் புதுமைத் துறைகளாம் மொழியியல், வரலாற்று ஆய்வியல், திறனாய்வியல், வாய்மொழி இலக்கிய வியல், பதிப்பியல் முதலிய துறைகளின் வழி நிறுவியுள்ளார். தமிழ்நாட்டு மரபுவழிக் குடிகள் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களை, ஆரியர் உருவாக்கிய குலம் கோத்திரம் சாதி என நச்சினார்க்கினியர் இடர்ப்பட்டுப் பொருத்த முயல்வதாகக் கூறியுள்ளார். வடமொழிவழிப் பாகுபாடு கொண்டது திருக் குறள் என்று பரிமேலழகர் கூறுவதை மறுத்தும், காமத்துப்பால் வடமொழியில் உள்ள இழிந்த காமநூல்களின் வழியினதில்லை என்று நிறுவியும் 1901-இல் மாநிலக் கல்லூரியில் திருக்குறள் பற்றிப் பேசினார்; இது ‘திருவள்ளுவர்’ என நூலாக வெளி வந்தது. உரை இலக்கியம் உரைநடையில்கதை, கட்டுரை, வரலாறு, இலக்கியச் செய்திகள் முதலியவற்றை தந்து மாணவர்கள் உரைத்திறன் பெறச் செய்தார் செல்வகேசவர். பழந்தமிழ்ப் புலவர் வரலாறுகளை எழுத ஆவணங்கள் சரிவரஇல்லையே என்று வருந்தினார். திருவள்ளுவர், கம்பர் என்ற தலைப்புகளில் அறிமுக நூலாகவும், வாழ்க்கை வர லாற்று நூலாகவும் எழுதியுள்ளார். வ.வே.சு. ஐயரின் ‘மங்கையர்க் கரசியின் காதல்’ என்ற கதை நூல் வருவதற்கு முன்னரே செல்வகேசவரின் ‘அபிநவக் கதைகள்’ வெளி வந்தது. அவ் வகையில் ‘சிறுகதையின் தந்தை செல்வகேசவராயர்தான்’ என்று கமில் சுவலபில் கூறுவார். அராபிக் கதைகள், குசேலர் சரிதை முதலிய கதை நூல்களும் எழுதியுள்ளார். இவ்வாறு பல துறைகளையும் தமிழுக்குக் கொணர்ந்து தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை நிலை நிறுவியவ ராகவும் தமிழ் உரைநடை முன்னோடியாகவும் திகழ்கின்றார் செல்வகேசவர். ‘தமிழின் புதுமுறைத் திறனாய்வுத் துறைக்கு அடிக்கல் நாட்டியவர் செல்வ கேசவராயர்’ என்று முனைவர் சாலை இளந்திரையன் பாராட்டுவர். திருமணம் செல்வகேசவராயர் திருமணம் செல்வகேசவராயர் இயற்பெயர் : செல்வகேசவராயன் சிறப்புப்பெயர் : திருமணம் செல்வகேசவராயர், ஆயுர் வேத பாஸ்கரன் (புனை பெயர்) பெற்றோர் : பாக்கியம் அம்மையார், கேசவ சுப்பராய முதலியார் பிறந்த ஆண்டு : 1864 மறைவு நாள் : 02-10-1921 பிறந்த ஊர் : சென்னை அருகில் ‘திருமணம்’ என்ற ஊர் மனைவி : வேதவல்லி கல்வி : சென்னை பச்சையப்பன் கல்லூரி இளங் கலை (பி.ஏ.), மாநிலக் கல்லூரி முதுகலை (எம்.ஏ.) தமிழ் இலக்கியம் பணி : சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ் ஆசிரியர் படைப்புகள் : குசேலர் சரிதை (1897), வியாச மஞ்சரி (1897), இணைப் பழமொழிகள் (1898), திருவள்ளுவர், குசேலர் சரிதை, (1901) பஞ்சலட்சணம் (1903), கம்பர், தமிழ், தமிழ் வியாசங்கள் (1915), கலிங்கத்துப் பரணி கதாசங்கிரகம் (1928), அராபிக் கதைகள், அக்பர், மகாகோவிந்த ரானடே பதிப்புகள் : பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை, அறநெறிச்சாரம், அரிச் சந்திர புராணம், குசேலோபாக்கியானம் மாணவர்கள் : இரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் முதலியோர் 25. தமிழ்ப் பாடத்தைக் குறைக்கலாமா? பூரணலிங் கர் கி றித்துவக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியப் பட்டய வகுப்பில் சேர்ந்து, மதிப்பெண் தகுதியால் முதல்வர் வில்லியம் மில்லரின் உதவித் தொகை பெற்றுப் படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படிக்கும் போதே, அங்குப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த தமிழ்ப் பேரா சிரியர் சபாபதிப் பிள்ளையிடம் தனிப் படிப்பில் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றிருந்தார். இளங்கலை மாணவராக ஆங்கில இலக்கியம் படிக்கத் தொடங்கியபோது மற்ற மாணவர்களின் தனிப்படிப்புக்கு உதவும் எண்ணம் கொண் டார். இரவு பகலாகப் படித்து முன்னிலை (எஃப்.ஏ) வகுப்புக்கான ஆங்கில இலக்கியங்களுக்கு உரைநூல்கள் எழுதினார். தன் பெயரில் வெளியிட்டால் மற்ற மாணவர்கள் தரம் குறைந்ததாகக் கருதி வாங்க மாட்டார்கள் என்பதால் த ம் பெய ரின் ஆங் கி ல எழுத் துகளை முன் பின்னாக் கி (PURNALINGAM – MAGNILAN RUP) ‘மேக்னிலன் ருப்’ எனப் புனைபெயரிட்டு அச்சில் வெளியிட்டார். யாரோ ஓர் ஆங்கிலப் பெருமகனார் எழுதியது என நினைத்து மாணவர்கள் வாங்கினர். நல்ல விற்பனை. பணம் கிடைத்தது. அவரின் படிப்புச் செல வுக்கும் ஈடுகட்டியது.இன்னொரு பெருமையும் கிடைத்தது. ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும் ஆங்கிலப் பேரா சிரியரும் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவரும் முதல்வரும் ஆகிய மில்லர் இந்த உரைநூலைப் பாராட்டி இதை வைத்துக் கொண்டு பாடம் நடத்தினார். நல்ல வருவாயும் பெருமையும் கிடைத்ததால் பூரணலிங்கர் தான் படிக்கும் இளங்கலை வகுப்புக்கும் உரைநூல் எழுதி வெளியிட்டார். உரைநூல் வெளியிட்டதால் கிடைத்த பணத்தைக் கொண்டு ‘ஞான போதினி’ என்ற மாத இதழைத் தமிழ் வளர்ச்சிக்காக நடத்தத் தொடங்கினார். ஆங்கிலேயர்போல் மிடுக்காக நாகரிக உடை அணிந்தார். அதே நேரத்தில் பழஞ்சோற்று நீரை ‘காப்பி’ எ ன்று உ ர க் க ச் சொல் லி ய வாறு கு டி த் து எளிமையாக வாழ்ந்தார். நூல் நம்பு ‘படிக்காத நாளெல்லாம் பிறவா நாளே’ என்று எப் போதும் நூல்களுடன் வாழ்ந்தவர் பூரணலிங்கர். கிறித்துவக் கல்லூரி நூலகத்தில் தமிழ் நூல்களை மலைபோல் குவித்துக் கொண்டு ஆங்கிலப் பேராசிரியரான பின்பும் பூரணலிங்கர் படித்துக் கொண்டிருந்தார். அதே கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியேற்றிருந்த சூரிய நாராயண சாத்திரியார் தமிழ் நூல்கள் நடுவில்இருந்த ஆங்கிலப் பேராசிரியர் பூரண லிங்கரிடம் வலிய வந்து தாமே நட்பு பூண்டார். அவர்கள் இருவரின் நட்பும் தமிழுக்கு நலம் சேர்த்தது. தமிழ் மொழி வரலாறு இளங்கலை வகுப்புக்குப் பாடமாக இருந்தும் போதிய பாடநூல்கள் இல்லை. எனவே தமிழ்மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை பற்றிக் குறிப்புகள் திரட்டிக் கொண்டிருந்தார் பூரணலிங்கர். சென்னைக் கடற்கரை மணலில் கொள்ளிவாய்ப் புகை சுருட்டினர் பலர் குழுமிச் சுற்றுச் சூழலுக்குப் பகை விளைத் தனர். அங்குத் தமிழ் நடை பயின்று ஆங்கிலம் வல்லாராகிய பூரண லிங்கரும் சமற்கிருதம் வல்லாராகிய சூரிய நாராயணரும் தமிழ் வல்லமை விளங்கும் கலங்கரை விளக்கம் ஏற்றினர். தமிழ் வரலாற்றைப் பூரணலிங்கர் ஆங்கிலத்தில் எழுதுவது எனவும், சூரிய நாராயணர் தமிழில் எழுதுவது எனவும் முடிவு செய்தனர். ஞானபோதினி இதழின் ஆசிரியராகிய பூரண லிங்கருடன் உதவி ஆசிரியராகச் சூரிய நாராயணர் இணைந்தார். இருவரும் ஞானபோதினி இதழிலும் கிறித்துவக் கல்லூரி இதழிலும் தமிழ் வரலாற்றை எழுதினர். பூரணலிங்கர் ஆங்கில உரை நூல்கள் எழுதியமை போல் சூரிய நாராயணர் தமிழ் உரை நூல்கள் எழுதி மாணவர்களுக்கு உதவினார். செம்மொழித் தமிழ் செம்மொழி சமற்கிருதமே என்று கூறி ஆகமங்களையும் புராணங்களையும் மேம்படுத்தித் தமிழைக் குறைசொல்லி ஒதுக்கிவந்தனர் ஆரியச்சார்பினர். பூரணலிங்கர் அதனை எதிர்த்து ஞானபோதினி இதழில் எழுதி வந்தார். தமிழே செம்மொழி, சமற்கிருதம் குறைபாடுள்ள மொழி என்று பூரணலிங்கரும் சூரிய நாராயணரும் ஞானபோதினி இதழில் எழுதினர். வடமொழியின்றித் தமிழ் தனித்தியங்க வல்லது என்று திருமணம் செல்வகேசவராயர் சுதேசமித்திரனில் தொடர்ந்து எழுதினார். வடமொழி வல்லாண்மையை எதிர்த்த சூரிய நாராயணர் புராணக் கதைகள் வெறும் கற்பனைகள் என்று எழுதினார். சமற்கிருத ஆதிக்கத்தையும் ஆரியச் சூழ்ச்சியையும் எதிர்த்த பூரணலிங்கர் நீதிக் கட்சியில் சேர்ந்தார். திராவிட நீதி திராவிடக் கட்சியில் இணைந்து தமிழ் மொழியின் பெரு மையைப் பறை சாற்றினார் பூரணலிங்கர். சமற்கிருத மாயை யிலும் புராணக் கதை மயக்கத்திலும் சாதிக் கொடுமைகளிலும் சிக்கித் தவித்த தமிழர்களைக் கரையேற்றத் திருக்குறளே உதவும் என்று எழுதினார். ஆரிய நீதி என்பது பொய்யும் சூழ்ச்சியும் கொண்டதும் என்று பேச்சிலும் எழுத்திலும் நிறுவினார். நீதிக்கட்சி (ஜஸ்டிஸ்) இதழில் தொடர்ந்து இலக்கியத் தரத் தோடும் உரிய தரவுகளோடும் எழுதினார். தமிழர்களின் ஒற்றுமையின்மை தெரிந்த கதைதானே! சிறுவேறுபாடுகளை முன் வைத்துச் சில தமிழர்களே இவரை எதிர்த்ததால் திராவிடக் கட்சியை விட்டு நீங்கி, ஆங்கிலப் பேராசிரியராக மீண்டும் பணியாற்றத் தொடங்கினார். கொண்ட தமிழ்க் கொள்கையில் அவர் மாறவில்லை. சிவசித்தாந்தத்தில் திளைத்தவராக அவர் இருந்ததால் வள்ள லாரின் சமயப் பொதுமையையும் திருக்குறளின் அறநெறியையும் போற்றினார். இராவணனைப் பாராட்டி ஆங்கிலத்தில் நூல் எழுதினார். இவரெழுதிய ஆங்கில நூல்கள் திருக்குறளின் பெருமையையும் தமிழ்மொழியின் சிறப்பையும் உலகறியச் செய்தன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில இதழ்களும் ஆங்கில அறிஞர்களும் அவரின் ஆங்கில நூலைப் பாராட்டி எழுதினர். கனவு கரைந்தது தான் பயின்ற பொருநை ஆற்றங்கரையில் தமிழ் மக்களைக் கல்வியால் உயர்த்தக் கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு பல்கலைக் கழகங்களுக்கு நிகரான கல்வி நிறுவனம் அமைக்க முற்பட்டார். ஆங்கிலக் கல்வியுடன் கல்வியியல் (எல்.டி) படிப்பும் படித்திருந்த பூரணலிங்கரை ‘எல்.டி. பிள்ளை’ என்று மக்கள் அழைத்தனர். தாம் தரும் கல்வி முறையால் நெல்லையில் உருவாகும் மாணவர் களை ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத் தேர்வுக்கு அனுப்பி வெற்றி பெறச் செய்யத் திட்டமிட்டார். நெல்லையில் அவர் தொடங்கிய புதுமைக் கல்லூரி வெற்றி பெறவில்லை. வளர் தமிழ் பாண்டித் துரைத் தேவரின் தந்தை பொன்னுசாமித் தேவர் இதழியல் தமிழை வளர்க்க’நாகை நீலலோசனி’ இதழுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். மன்னர் பாசுகர சேதுபதி அவ்விதழின் அலுவலகத்துக்கே வருகை புரிந்தார். அவரது அரண்மனையில்தான் சூரிய நாராயணரின் ‘கலாவதி’ அரங்கேறியது. நாடகக் கலையைப் பெருமை செய்ய மன்னர் சேதுபதி சென்னை ‘உட்லண்சு’ உணவகத் தங்குமனையில் தங்கியிருந்து பம்மல் சம்மந்தனாரின் நாடகத்தைக் கண்டு களித்ததோடு முந்நூறு ரூபாய் அளித்தார். பூரணலிங்கர் தப்பிலி, காமாட்சி என்ற நவநகை நாடகம் முதலியவற்றை இயற்றினார். கால்டுவெல் அவர்கள் தமிழ் செம்மொழி என்று உலகுக்கு அறிவித்தவர் என்றாலும் அவருக்குப் போதிய தரவுகள் கிடைக் காததால், சில தவறான கருத்துகளையும் கூறியிருந்தார். திரா விடம் என்ற சொல்லே ‘தமிழ்’ ஆயிற்றும் என்றார். திருவிடம் என்பதே திராவிடம் ஆயிற்று என்பது பூரணலிங்கர் கருத்து. தமிழ் இலக்கியங்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் மொழி பற்றித் தாம் தொகுத்த கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதித் தமிழின் செம்மொழித் தன்மையைப் பூரணலிங்கர் உலகுக்கு வெளிப் படுத்தினார். தமிழைக் குறை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழை நீக்கிவிட்டுச் சமற்கிருதமே செம்மொழி என்பதால் கற்பிக்க வேண்டும் என்று ஆரியச் சார்பினர் திட்டம் கொண்டு வந்தனர். இதனை எதிர்த்துத் தமிழ் செம்மொழியே என்று ஆசிரியர் பேரவையில் பூரணலிங்கரும் சூரியநாராயணரும் வாதிட்டதால் 1902-இல் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் அவ்வப்போது சமற் கிருதத்தையும் இந்தியையும் ஆங்கிலத்தையும் திணிப்பதற்கு ஏதுவாகத் தமிழ்ப் பாடத்திட்டத்தை நீக்கவும் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை எதிர்த்து அரசஞ்சண்முகனாரும் பூரணலிங்கரும் மறைமலை அடிகளும் இலக்குவனாரும் தம் வேலையைத் தூக்கி எறிந்தனர்; கா. நமச்சிவாய முதலியார், பூண்டி அரங்கநாதர் சர்.ஏ.டி. பன்னீர்ச் செல்வம் , தமிழ வேள் உ மாமகேகசுவரனா ர் முதலியோர் எதிர்த்துப் போராடினர். அண்மையில் கூட திருக்குறள் பாடம் குறைக்கப்பட்டது. வணிகவியல் பட்டப்படிப்பிற்குத் தமிழ் அறவே நீக்கப்பட்டது. தாய்த் தமிழைப் படிக்காமல் இந்தி, சமற்கிருதம் மொழிப் பாடமாக எடுத்து ஆங்கில வழியில் குழந்தைகளைப் படிக்க வைக்கும் தமிழனின் குறையை உணர்த்து வார் யார்? மு.சி.பூரணலிங்கம் பிள்ளை மு.சி.பூரணலிங்கம் பிள்ளை மு.சி. பூரணலிங்கம் பிள்ளை இயற்பெயர் : பூரணலிங்கம் சிறப்புப்பெயர் : முந்நீர்ப்பள்ளம் சி. பூரணலிங்கம் பிள்ளை, எம்.எஸ். பிள்ளை, எல்.டி. பிள்ளை பெற்றோர் : வள்ளியம்மை, சிவசுப்பிரமணியப் பிள்ளை பிறந்தநாள் : 24-05-1866 மறைவு நாள் : 16-06-1931 பிறந்த ஊர் : நெல்லை மாவட்டம் முந்நீர்ப்பள்ளம் கல்வி : உள்ளூர் செல் வப் பெருமாள் பி ள்ளை திண்ணைப் பள்ளி, மேலப்பாளையம் பள்ளி, தருவை ஆங்கிலப் பள்ளி, சிந்துப்பூந்துறை ப ள் ளி , இ ந் து க் க ல்லூ ரி , சென்னைக் கிறித்துவக் கல்லூரி, இளங்கலை ஆங்கிலம் (1886), முதுகலை ஆங்கிலம் பணி : நெல்லை உதவி ஆணையர் அலுவலக எழுத்தர் பாளை : இந்து ப் பள்ளி : தமி ழாசி ரி ய ர் + எட்டயபுரம் மன்னரின் பிள்ளைக்கு ஆசிரியர் சென்னை : கிறித்துவக் கல்லூரி. ஆங்கிலப் பேராசிரியர் கோவை : மைக்கேல் கல்லூரி; ஆங்கிலப் பேராசிரியர் மதுரை : அமெரிக்கன் கல்லூரி; ஆங்கிலப் பேராசிரியர் நெல்லை : இந்துக்கல்லூரி ; 1904-1911 திருச்சிராப்பள்ளி : பிஷப் ஹீபர் கல்லூரி ; 1919-1926 ஞானபோதினி : இதழாசிரியர் : 1890-1903 நீ தி க் க ட் சி இ த ழ் ( ஜஸ்டிஸ்: துணைஆசிரியர் (1912-1919) படைப்புகள் : தமிழ் 23, ஆங்கிலம் 40, தமிழகமும் தமிழ்ப் புலவர்களும், நபிநாயகமும் கவிவாணர் களும், தப்பிலி, காமாட்சி என்ற நவநகை நாடகம், நவராத்திரி விரிவுகள், மருத்துவன் மகள், சூரபதுமன் வரலாறு. A primer of Tamil Literature(1904) History of Tamil Literature The Tamil Literature Ravana the Great. 