ஐம்பெருங் காப்பியங்கள் சீவகசிந்தாமணி – 2 4 உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இளங்கணி பதிப்பகம் சென்னை- 600 015. நூற் குறிப்பு நூற்பெயர் : ஐம்பெருங் காப்பியங்கள் - 4 சீவகசிந்தாமணி - 2 உரையாசிரியர் : நச்சினார்க்கினியர் பதிப்பாளர் : இ. இனியன் முதற்பதிப்பு : 2009 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 680 = 688 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 425/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 6. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் எண் : 7/2 செம்படத்தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை - 600 015. பதிப்புரை மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு இனத்துக்குப் பீடும், பெருமையும் தருவனவாகும். பெருங்காப்பியச் செல்வங்களாக தமிழர் போற்றிக் காப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி இவை தமிழருக்குக் கிடைத்த அரும்பெரும் கருவூலங்கள். சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும் இது முற்றிலும் தமிழ் தேசியக் காப்பியம். சிந்தாமணியும், வளையாபதியும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த சமயக் காப்பியங்கள். தமிழர் தம் வாழ்வு வளம்பெற அணிகலன்களாக அமைந்தவை. இச்செந்தமிழ்க் காப்பியங்கள். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு நெறிகளும் செவ்வனே அமையப்பெற்றதும், இயற்கை வருணனை, நாடு நகர வருணனை, வேந்தன் முடிசூட்டும் நிகழ்வு, போர்மேற் செல்லுதல், வெற்றி பெற்று விழா எடுத்தல் என்பனவற்றோடு, இன்னும் பல நிகழ்வுகளும் அமையப் பெற்றதே பெருங்காப்பியம் என்பர் தமிழ்ச் சான்றோர். தமிழகம் அன்றும் இன்றும் வேற்றினத்தார் நுழைவால் தாக்குண்டு, அதிர்வுண்டு, நிலைகுலைந்து, தடம் மாறித் தடுமாறும் நிலையில் உள்ளது. தம் பண்பாட்டுச் செழுமையை, நாகரிக மேன்மையை, கலையின் பெருமையை இசையின் தொன்iமயை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் கற்றுணர்ந்து தமிழர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இவ் வருந் தமிழ்ச் செம்மொழிச் செல்வங்களை மீள்பதிப்பாக வெளியிடுகிறோம். இச் செம்மொழிச் செல்வங்களுக்குச் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர். இரா. இளங்குமரனார் செவிநுகர் கனிகள் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வுரையும், பதிப்பு வரலாறும் தந்து எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளார். இப்பெரு மகனாருக்கு எம் நன்றி என்றும் உண்டு. தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், தி.வை சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் இக்காப்பியங்கள் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை இந்நூலுள் பதிவாகத் தந்துள்ளோம். அலங்காரங்களும், ஆடம்பரங்களும், படாடோப வாழ்வும் தமிழ் மண்ணில் தலை ஓங்கி ஆட்டம்போடும் காலமிது. விலை வரம்பில்லா இவ் வருந்தமிழ் கருவூலங்களையெல்லாம் தொகுத்துப் பொருள் மணிக்குவியல்களாகத் தமிழர் தம் கைகளுக்குத் தந்துள்ளோம். எம் தமிழ்ப்பணிக்குக் துணைநிற்க வேண்டுகிறோம். - பதிப்பாளர் சீவகசிந்தாமணி திருத்தக்கத்தேவரால் எழுதப்பட்ட நூல். விருத்தப்பாவில் முதல் முதலாக எழுந்த உயர் நூல். சமண சமயம் சார்ந்து இந்நூல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு இடைவெளிக்குள் வெளி வந்ததாகத் தெரிகிறது. கவிவேந்தர் கம்பர் போன்ற பெரும்புலவர் களுக்குச் சிந்தாமணி ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது. உச்சி மேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் எனும் பெருந்தமிழ்ச் சான்றோரால் உரைவளம் கண்டு பட்டை தீட்டப் பெற்று, வண்ணச் சுடரொளியாய்த் திகழும் நூல். சிந்தாமணி எனும் இப் பெருந்தமிழ்க் காப்பியத்திற்கு மறவுரை கண்டவர்உண்டு; காமவுரை கண்டவர்உண்டு; அறவுரை கண்டவர் உண்டு. ஏழாவது கனகமாலையாரிலம்பகம் 1557. இரங்கு மேகலை யல்கு லின்கனித் தொண்டையந் துவர்வா யரங்கக் கூத்திக ணன்பின் மனையவட் டுறந்துசெல் பவர்போற் பரந்த தீம்புனன் மருதம் பற்றுவிட் டினமயி லகவு மரங்கொல் யானையின் மதநா றருஞ்சுர மவன்செலற் கொழுந்தான். இ-ள்.அல்குலையும் வாயையுமுடைய பரத்தைமேலன் பாலே மனையாளைத்துறந்து செல்வாரைப் போலே மருத நிலத்தைவிட்டு, அகவும் நாறுஞ் சுரத்தைப் போதற்கு அவனெழுந் தானென்க. பயின்று பாம்பையும் பாகனையுங் கோறலின், பரத்தைக்கு, மயிலையும் ஆனையையுமுடையகாடு உவமிக்கும் பொருளாயிற்று. சுரம்-அவன்கூறிய கானவர் குரம்பை சூழ்காடு. (1) 1558. கலவ மாமயி லெருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா வுலக மன்னவன் றிருநா ளொளிமுடி யணிந்துநின் றவர்போற் பலவும் பூத்தன கோங்கம் பைந்துகின் முடியணிந் தவர்பின் னுலவு காஞ்சுகி யவர்போற் பூத்தன மரவமங் கொருங்கே. இ-ள். காயா மயிலின் கழுத்துப் போலே மலர்விரிந்தன; கோங்கம் பலவுஞ் சக்கரவர்த்திமுடிசூடுநாளிலே முடிசூடிச் சேவிக்கும் அரசைப் போலேபூத்தன; மரவம்மயிர்க்கட்டுக்கட்டி அவ்வரசர்பின்னேதிரியுஞ் சட்டையுடையமிலேச்சரைப்போலே சேரப்பூத்தனவென்க. (2) 1559. ஓங்கு மால்வரை வரையா டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன் றாங்கு சந்தனந் தளரத் தழுவி வீழ்வன தகைசா லாங்கண் மாலுல களப்பா னாழி சங்கமொ டேந்தி தேங்கொண் மார்பிடைத் திளைக்குஞ் செம்பொ னாரமொத் தனவே. இ-ள். வரையாடுழக்குதலின், இறாலுடைந்து வலையினின் றொழுகும் பெருந்தேன்விழுகின்ற பொழுது தம்மைத்தாங்கின சந்தனந் தளரும்படிஅம்மலையைத்தழுவிவீழ்வன, மால் உலகை யெப்பொழுது மளப்பான் ஆழியைச் சங்குடனேயேந்தி அவன் மார் டத்தே அசையு மாரமொத்தனவென்க. தேன்வீழ்வன ஒத்தன. அங்கண்-விகாரம். தேம்-கட்கினிமை. வரைதாங்கின சந்தனமுமாம். (3) 1560. வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப் பனபோ லொத்த மற்றவற் றருவி தாழ்ந்து வீழ்ந்தவை முழுவிற் றதும்பின மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயி லாடி நாடகந் துளக்குறுத் தனவே. இ-ள். மஞ்சுபடிந்துதவழுமலை, பெரும்பாம்பு ஊழ்ந்து தோலுரிப் பனபோலேயாய், அம்மஞ்சுபோனபின்பு அப்பாம்பை யொத்தன; அம்மலையில் அருவிவீழ்ந்தவை முழவுபோலே முழங்கின; அது கேட்டு மயில்கள், வண்டுகள் பாட வளைந் தாடிப்பிறராடு நாடகங் களை வருத்தமுறுத்தினவென்க. (4) 1561. கருவி தேனெனத் தூங்குங் கதிரணி யிறுங்கொடு தினைசூழ் பொருவில் யானையின் பழுப்போற் பொங்கு காய்க்குலை யவரை யருவி யைவனங் கரும்பு மடக்கருங் கவைக்கதிர் வரகு முருவ வெட்பய றுழுந்து மல்லவு மெல்லையின் றுளவே. இ-ள். கைத்தாளமும், தேனிறாலுமென்னும்படி தூங்குங் கதிரணிந்த விறுங்கையும், தினையையுஞ் சூழ்ந்த யானையின் விலா வெலும்புபோலுங் காயையுடைத்தாகிய குலையையுடைய அவரையும், அருவியால்விiந்த ஐவனநெல்லும், கரும்பும், கடாவிட்டுக்குவித்தற் கரிய வரகும்,எள்ளும், பயறும், உழுந்தும், ஒழிந்தவுணவுகளும் எல்லையின்றியுளவென்க. கருவித்தேன் பாடமாயின், தொகுதிக்தேனென்க. (5) 1562. யானை வெண்மருப் புலக்கை யறையுர லைவன மிடித்த தேனெய் வாசவற் குவவித் தீங்கனி வாழையின் பழனு மூனை யுண்டவ ருருகும் பசுந்தினைப் பிண்டியு மொருங்கே மானி னோக்கியர் நோக்கி வழிதொறு மீவதவ் வழியே. கனிவாழை-ஓரு பெயர்.ஊனை, ஐ-அசை. இ-ள். அவனொருப்பட்ட அத்தன்மையையுடைய அவ் விடம், மானினோக்கியர், ஐவனநெல்லை மருப்புலக்கையாலே பாறையாகிய வுரலிலேயிடித்த அவலையும், தேனையும், பழத் தையும், உண்ட வரூனருகும் பிண்டியையும்ஒருங்கேகுவித்து இளைத்தவரைநோக்கி வழிகடோறும் ஈயுந்தன்மையை யுடைத்தென்க. (6) பாசவல்-விகாரம். 1563. குறிஞ்சி யெல்லையி னீங்கிக் கொடிமுல்லை மகண்மொழிந் தாடச் செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க் கொன்றையஞ் செல்வற்குக் குரவம் அறிந்து பாவையைக் கொடுப்பத் தோன்றி யஞ்சுடரேந்த நிறைந்தத பூங்குருந் துகுதே னீர்பெய் தார்த்தன சுரும்பே. 1564. அரக்குண் பஞ்சுக டிரட்டி யருமணி மரகதப் பலகைப் பரப்பி யிட்டன போலக் கோபங்கள் பயிர்மிசைப் பரவ வுரைத்த மென்றயிர்ப் பித்தைக் கோவலர் தீங்குழ லுலவ நிரைக்கண் மாமணி கறங்க நீணிலங் கடந்தன னெடியோன். இவையிரண்டுமொருதொடர். இ-ள். முல்லைக்கொடிமகட்பேசிச் செல்லுதலின், அதனை யறிந்து குரவந் தன்பாவையைப் பொன்னிதழாகிய தாரையுடைய கொன்றை யாகிய செல்வனுக்குக் கொடாநிற்க, தோன்றி விளக்கெ டுக்க, சுரும்புகள் குருந்தினின்றுகுந் தேனாகியநீரைவார்த்து ஆர வாரித்தன; அவையாரவாரித்தவளவிலே, செம்பஞ்கையுருட்டி மரகதப் பலகையிலேபரப்பினாற்போலே கோபங்கள் பயிர் மேலே பரவாநிற்க, தயிரைவார்த்த மயிரினையுடைய கோவலரூதுங் குழுலோசைபரக்க, ஆநிரைக்கண்பூண்ட மணிகறங்க நெடியோன் குறிஞ்சி நிலத்தெல்லையினின்றுநீங்கி முல்லைநிலத்தைக் கடந்தா னென்க. முல்லைக்கொடியிரண்டிலும்படர்ந்து. நடுவேநின்ற குருந்திற்சுரும் பெழ, அஃதசைந்து தேனைச்சொரிந்ததனாற் சுப்ரும்பைப் பாவைக்குத் தந்தையாக்கினார். கோபம் பரவவெனவே கார் காலமாம். (7-8) 1565. வள்ளி வாரிய குழியின் வளர்பொன்னும் வயிரமு மிமைக்குஞ் சுள்ளி வேலியி னீங்கித் துறக்கம்புக் கிடுமெனச் சூழ்ந்து வெள்ளி வெண்டிரள் விசித்து நிலத்தொடு தறியுடைத் தவைபோற் றுள்ளி வீழுய ரருவி வனகிரி தோன்றிய தவணே. இ-ள். பக்கத்திற்போகாதபடி, வேலியாகவிட்ட மராமரத்தின் வேலி யினின்றுந் தப்பி மேலே துறக்கத்தே போமென்று நினைத்து வெள்ளிக்கம்பிகளைத் தலையிலே பூட்டி வலித்து நிலத்தோடே தறியைப்புடைத்துக்கட்டினாற்பாலே நாற்றிசையும் விழும் அருவியையுடைய வனகிரி யவ்விடத்தே தோன்றிற்றென்க. வள்ளிக்கிழங்கு அகழ்ந்தகுழியிலே பொன்னும் வயிரமு மிமைக்கும் வனகிரியென்க. (9) 1566. அண்ண றான்செலு முன்னா லணிமலர்ப் பூம்பொழி லதனுள் வண்ண மாச்சுனை மாநீர் மணிதெளித் தனையது ததும்பித் தண்ணென் றாமரை கழுநீர் நீலந் தாதவி ழாம்ப லெண்ணில் பன்மலர் கஞலி யினவண்டு பாண்முரன் றுளதே. ஆல்-அசை. இ-ள். அவ்வனகிரிக்குமுன்னே தலைவன் செல்லுகின்ற பொழிலுக்குள்ளே பளிங்கைக்கரைத்தனையதாகிய நீர்நிறைந்து அதிலே தாமரைமுதலிய பூவும் நெருங்கி பிறவும் வண்டு பாண்சாதி போலே பாடப்பட்டு ஒருசுனை யுளதாயிற்றென்க. (10) வேறு 1567. கானத்தி னேகு கின்றான் கடிபொழிற் கவின்கண் டேய்தித் தானத்தி லிருத்த லோடுந் தையலா ளொருத்தி தானே வானத்தி னிழிந்து வந்த வானவர் மகளு மொப்பா ணானமும் பூவுஞ் சாந்து நாறவந் தருகு நின்றாள். கானத்தினேகுகின்றனேன்று பெயர்கூறவே வனசரித னென்னும் வடமொழிப்பெயரையும், தானமெனவே இருடி களுறை விடமென் பதனையுமுணர்த்திற்று. இ-ள். சீவகன் கடிபொழிலிலே சென்றிருந்த வளவிலே, வானர் மகளுமொப்பாளாகிய தையலாளொருத்தி, அத்தானத்தி னுறைவானோர் வனசரிதன்கவினைக் கண்டு, நானமுதலியநாறத் தானேவந்து அருகேநின்றாளென்க. இங்ஙனங்கூருறாது சீவகன்கவினைக்கண்டு அவளெய்தினா ளென்றுகூறின், மேல் இவற்கு இவள்வேட்கை விளைத்தலின், இவன் நெஞ்சு தன்றன்மைதிரிந்ததனை இவன்றேற்றினா னென்றுகூறுவர்; அங்ஙனங்கூறவே மனோவாக்குக்காய மென்னும் மூன்றினாற்செய்து கொள்ளும் பாவங்களிற் சிறந்த மனத்தாற்செய்துகொள்ளும்பாவஞ் சீவகற்கெய்திற்றா மாதலா னும், உழுவலன்போடுதோன்றிய மகளிரிடத் தல்லது இவற்கு வேட்கைநிகழாதென்பது இத்தொடர் நிலைச் செய்யுட்குக் கருத்தா தலானும்,அது மாறுபடக்கூறிற்றா மென்றுணர்க. (11) 1568. குறிஞ்சிப்பூங் கோதை போலுங் குங்கும முலையி னாடன் நிறைந்தபொற் கலாபந் தோன்ற நெடுந்துகில் விளிம்பொன் றேத்தி செறிந்ததோர் மலரைக் கிள்ளித் தெறித்திடாச் சிறிய நோக்கர் நறும்புகைத் தூது விட்டு நகைமுகங் கோட்டி நின்றாள். குறிஞ்சிப்பூ-குங்குமத்திற்குவமை. தோன்ற, சிறிதேயுடை நெகிழ்தலாலே. ஒன்று-ஒருகை, ஒருகையாலே அத்துகிலின் விளிம்பைத்தாங்கி மற்றைக்கையாலே வினோதந் தோன்றத் தெறித்து. சிறியநோக்கா-கடைக்கணித்துப்பார்த்து. காற்று வாக்கிலேநின்று புகையைத்தூதுவிட்டு. கோட்டி-சாய்த்து. இ-ள். முலையினாள், ஏந்தித் தெறித்துநோக்கி விட்டுக் கோட்டி நின்றாளென்க. (12) 1569. அணிகல வரவத் தாலு மமிழ்துறழ் நாற்றத் தாலும் பணிவருஞ் சிங்க நோக்கிற் பணையெருத் துறழ நோக்கி மணிமலர் நாகஞ் சார்ந்து வழையொடு மரவ நீழற் றுணிவருஞ் சாய னின்றா டோன்றறன் கண்ணிற் கண்டான். இ-ள். தோன்றல் அரவத்தாலும் நாற்றத்தாலும் அத் திசையைச் சிங்கநோக்குப்போலே கழுத்துமாறுபடப்பார்த்து வழையோடுகூடிய மரவத்தினிழலிலே நாகத்தைச்சார்ந்து அங்ஙனநின்றாளாகிய அச்சாயலைக் கண்ணலே சான்றாள். கண்டானென்க. நெஞ்சானோக்கிற்றிலன். துணிவருஞ்சாயல்-தெய்வமோ அல்லளோவென்று துணிவரியசாயல். (13) 1570. கண்டவன் கண்ணி னோக்க நடுங்கித்தன் காதிற் றாழ்ந்த குண்டலஞ் சுடர வொல்கிக் கொடிநடுக் குற்ற தொப்ப நுண்டுகிற் போர்வை சார நுழைமழை மின்னி னிற்ப வெண்டிசை மருங்கு நோக்கி யியக்கிகொ லிவண்மற் றொறான். இ-ள்.அங்ஙனங்கண்டவன் நெஞ்சானன்றிப் பொறியானோக் குதலின், வேட்கையின்மைகண்டு, கொடி நடுக்குற்ற தொப்ப நடுங்கி யொல்கி மஞ்சிலேநுழையுமின்போலே போர்வைசோர அதனுள்ளே மறைந்துநிற்ப, இவளுடன் கூடவந்தாருளரோவென்று எண்டிசை யிடத்தையு நோக்கி, இங்ஙனந்தனியே வஹருதலின், இவள் ஓர் இயக்கிபோலே யிருந்தாளென்று கருதினானென்க. (14) 1571. எண்ணத்தி லியக்கி யென்றே யிருப்பமற் றெழுத லாகா வண்ணப்பபூங் கண்க ளம்பா வாணுதற் புருவம் வில்லா வுண்ணினற யுடைய வெய்வா னுருவச்சா தகத்துக் கேற்பப் பெண்ணலங் கிடந்த பேதை பெண்ணலங் கனிய நின்றாள். வடிவுகூறுமிலக்கணத்திற்கிசைய பெண்ணலங்கிடந்த பேதை. இ-ள். அவன்றன்கருத்திலே இயக்கியென்றேயிருப்ப, பேதை, பின்னர் இவன்நிறைகெடும்படி கண்கள் அம்பாக நுதலிற்புருவம் வில்லாகக்கொண்டு எய்யவேண்டித் தன்பெண்ணலம் முற்றுப் பெறநின்றாளென்க. (15) 1572. முறுவன்முன் சிறிய தோற்றா முகைநெறித் தனைய வுண்கட் குறுநெறி பயின்ற கூந்தல் குறும்பல்கா லாவி கொள்ளாச் சிறுநுதற் புருவ மேற்றாச் சேர்துகிற் றானை சோர வறியுந ராவி போழு மநங்கனைங் கணையு மெய்தாள். இ-ள். அரும்பை யலர்த்தினாலொத்த கண்ணினையுடையகூந்தல், அணுகிப் பல்காலாவிகொண்டு மேற்போர்த் ததுகிலோடே யுடுத்த தானையு நெகிழாநிற்க, அக்காமறானெய்வதற்கு முன்னாகச் சிறியவாக முறுவலையுந் தோற்றுவித்துப் புருவமாகிய வில்லை வலித்துக் காமனெய்யும் ஐந்தம்பையுந் தானெய்தாளென்க. அறியுநராவிபோழுமம்பெனவே இவனெஞ்சு தன்றன்மை திரிகின்றமை பெற்றாம். (16) 1573. வடுப்பிள வனைய கண்ணாள் வல்லவ னெழுதப் பட்ட படத்திடைப் பாவை போன்றோர் நோக்கின ளாகி நிற்ப வடிப்பொலிந் தார்க்குஞ் செம்பொ அணிமணிக் கழலி னானம் மடத்தகை குறிப்பு நோக்கி மனத்திது சிந்திக் கின்றான். பவதத்தனை ‘கழலினா’ னென்றொரு பெயராற் றேவர் கூறினார். இ-ள். பாவை யழியுமளவும் ஒருகருத்தாய் நின்று அழியு மாறு போலே கண்ணாள் இவனைக்கூடுவதோர் கருத்தினளாய் நிற்ப, பவதத்னுடைய அம்மடத்தகை கருத்தை அவ்வனசரிதன் றானறிந்து மனத்தே இதனை நினையாநின்றானென்க. என்றது-தன்றன்மைதிரிந்த நெஞ்சினைத் தேற்றுகின்றா னென்றவாறு. அது மேற்கூறுகின்றார். (17) வேறு 1574. கடிமாலை சூடிக் கருப்பூர முக்தித் தொடைமாலை மென்முலையார் தோடோய்ந்த மைந்தர் கடைமாலை மற்றவரே கண்புதைப்பச் செல்லு நடைமாலை*த் திவ்வுலக நன்றரோ நெஞ்சே. இ-ள். நெஞ்சே! சூடி முக்கி முலையாரைக் கூடின மைந்தர், பின்பு சிலநாளிலே யவர் கண்புனதத்துக் கொள்ளும்படி செல்கின்ற ஒழுக்கத்தை இல்வுலகம் இயல்பாகவுடைத்து; இவ்வியல்பு நன்றா யிருந்த தென்றானென்க. (18) அவரென்றது சாதிபற்றி. 1575. நாவி யகல மெழுதி நறுநுதலா ராவி தளிர்ப்ப வவர்தோண்மேற் றுஞ்சினார் தூவி யொழிபுள்ளிற் றோன்றித் துயருழப்பக் காவி நெடுங்கண்புதைத் தாங்ககல்வ்ர் நெஞ்சே. இ-ள். நெஞ்சே! புழுகை அகலத்தேபூசிநுதலாராவி தழைக்கும்படி அவர் தோண்மேலே தங்கினவர், இளமை சென்ற பின்பு கடை மயிர்கழிந்த பறவைபோலே தோன்றி வருந்துதலாலே அவர் கண்ணைப்புதைத்து அவ்விடத்தினின்றும் அகல்வரென்ற ளென்க. இதனால் இருதலையுமொத்த அன்பின் றிறங்கூறினார். (19) 1576. இன்புகை யார்ந்த விழுதார்மென் பள்ளிமே லன்புருகு நல்லா ரவர்தோண்மேற் றுஞ்சினார் தம்புலன்கள் குன்றித் தளரத்தங் காதலா ரன்புருகு கண்புதைத் தாங்ககல்வர் நெஞ்சே. இழுதார்மென்பள்ளி-யிழுதுபோலே மென்மை நிறைந்த பள்ளி; “வெண்ணெய்போன் றூறினியள்” (சீவக 480) என்றார் முன்பும். இழுதார் இன்புகையுமாம். இ-ள். நெஞ்சே! பள்ளிமேலே அன்பாலுருகும் நல்லாராகிய அவர் தோண்மேலேதங்கினார், மூப்பாற் றம்புலன்கள் குறைந்து தளர்தலாலே, அம்மகளிர் தங்கண்ணைப் புதைத்து அகல்வரென் றானென்க. இதனாற் புலன்குறையுமென்றார். இவள் விரும்பப் பெற்றேமே யென்று புணர்ந்தார்க்குப் பின்வருவது இதுகாணென் றான். (20) வேறு 1577. என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட் டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான் மன்பெருந் தச்ச னல்லன் மயங்கினார் மருள வென்றான். இ-ள். நெஞ்சே! தச்சன் உதிரத்தைத்தோய்த்து நரம்பாலே யென்பினைக்கட்டித் தசையை அப்பிப் புன்புறமறையத் தோலைப் போர்த்து அப்புறம் பொலிவுபெறும்படி மயிராலே வேய்ந்து ஒன்பது வாயிலாக்கி நன்றென்று மயங்கினார் மருளக் குரம்பை செய்தான்; ஆதலான்,மிகவும் நல்லனாயிருந்தானென்றானென்க. (21) 1578. வினைப்பெருந் தச்ச னல்லன் மெய்ம்மைநா நோக்க லுற்றா லெனக்குற்றுக் கிடந்ததென்றாங் கிருகணும் புதைத்து வைக்கு நினைப்பினாற் பெரிய ரென்னா நீந்தினார் கலைக ளென்னான் மனத்தையுங் குழையச் செத்து மாண்பினன் மாதோ வென்றான். இ-ள். நெஞ்சே! படைக்குந்தொழிலையுடையதச்சன், உடம்பினுண்மையை நாம் பார்க்கத்தேடினால் அப்பொழுது எனக்கு உறுகோளாய்க்கிடந்ததென்று பார்க்கும்படி ஞானக் கண்ணையும் ஊனக்கண்ணையும் மறைத்துவையாநிற்கும்; அதுவு மன்றி இயல்பான வறிவுமிக்காரென்னானாய்க் கல்விமிக்கா ரென்னானாய் எல்லாருள்ளங் களையுந் தளரும்படி செத்தும் மாண்பினாதலான், நல்லனாயிருந் தானென்றானென்க. (22) 1579. என்றவ னிருப்ப மாத ரென்வர விசைப்பி னில்லா லொன்றுமற் றுருகல் செல்லா னென்றெடுத் தோது கின்றாண் மன்றலந் தோழி மாருள் வனத்திடைப் பண்ணை யாடக் குன்றிடைக் குளிர்க்கு மின்போற் குழாமழை முகட்டிற் செல்வான். 1580. மயிலின மிதிய வாங்கோர் மடமயி றழுவிக் கொண்ட வெயிலிளஞ் செல்வன் போல விஞ்சைய னெற்கொண் டேகத் துயிலிய கற்பி னாடன் றுணைவிகண் டிடுவித் திட்டா ளயிலியல் காட்டுள் வீழ்ந்தே னநங்கமா விணை யென்பேன். 1581. தாயிலாக் குழவிபோலச் சாதுய ரெய்து கின்றேன் வேயுலாந் தோளி னார்தம் விழுத்துணைக் கேள்வ நிற்கண் டாயினேன் றுறக்கம் பெற்றே னளித்தரு ளாது விட்டாற் றீயினு ளமிர்தம் பெய்தாங் கென்னுயிர் செகுப்ப லென்றாள். இவைமூன்றுமொருதொடர். இ-ள். என்ற நெஞ்சினைத்தேற்றி அவனிருந்த வளவிலே, மாதர் யான்வந்தபடி கூறினல்லது சிறிதும் அருளானென்று கருதிக்கேட்கக் கூறுகின்றவள்,தோளினார்க்குத் துணையாகிய கேள்வனே! மலையிடத்தே தங்குமின்போல் மழைமேலே செல்வானாகிய விஞ்சையன், வனத்திடையிலே மணத்தையுடைய என் றோழி மாருள்ளே யான்விளையாடாநிற்க, மயிற்றிரள்கெட அதற் குள்ளே ஒரு மயிலையெடுத்துக்கொண்ட இளஞாயிறு போல என்னைக் கொண்டு போனானாக, தங்கிய கற்பினாகிய அவன்று ணைவி என்னைக்கண்டு போகவிடுத்தாள்; இக்கொடியகாட்டிலே வீழ்ந்தேன்;யான் அநங்க மாவிணை யென்று பெயர்கூறப்படுவேன்; நின்னைக்காண்பதற்குமுன் தாயிலாக்குழவிபோலத் துயரெய்து கின்றயான் நின்னக்கண்டு துறக்கம் பெற்றேனாயினேன்.இனி என்னையருள்பண்ணி நோக்கி அருளாதேவிட்டாற்றீயினுள்ளே அமிர்தத்தைப் பெய்தாற் போலே என்னுயிரைக்காமத் தீயினுள்ளே பெய்து கெடுப்பே னென்றாளென்க. மயிலுவலுமை-தோழிமாரஞ்சியோடியதற்கு உலாம்-உவமைச் சொல். சந்தியாசியன்மையிற்றோளினார்துணைவ வென்றாள். (23-25) 1582. மணியெழு வனைய தோளும் வரையென வகன்ற மார்புந் தணிவருங் கயத்துட் பூத்த தாமரை யனைய கண்ணும் பணிவரும் பருதி யன்ன முகமுமென்ற யர்ந்து காமப் பிணியெழுந் தவலிக் கின்ற பேதைநீ கேளி தென்றான். தணிவு-வற்றுதல்.பணிவு-தாழ்வு. இ-ள். தோளும், மார்பும், கண்ணும், முகமும்வருத்து மென்று மயங்கிக் காமநோய்தோன்றி வருந்துகின்றபேதாய்! நீ யிங்ஙனங் கருதின இவ்வுடம்பின்றன்மையைக் கேயென்றானென்க. (26) 1583. போதொடு நான மூழ்கிப் பூம்புகை தவழ்ந்து முல்லைக் கோதைகண் படுக்குங் கூந்தல் குரைவளி பித்தோ டையே யேதஞ்செய் மலங்க ணெய்த்தோ ரிறைச்சியென் பீரு ண்மூளை கோதஞ்செய் குடர்கள் புன்றோல் நரம்பொடு வழும்பி தென்றான். இ-ள். நானத்தே மூழ்கிப் புகைதவழப்பட்டுப் போதோடே கோதைதுயில் கொள்ளுங் கூந்தால்! இவ்வுடம்பு ஏதஞ் செய் கின்ற வளியையும், பித்தையும், ஐயையும், பொருந்தின மலங்களையும், குருதியையும், தசையையும், என்பையும், ஈரலையும், மூளை யையும், பொல்லாங்குசெய்யுங் குடர்களையும், தோலையும் ,நரம் பையும், வழும்பையுமுடைத்தாயிருக்குமென்று கூறினானென்க. பூமுதலியவற்றாற் கூந்தல் நன்றாயிற்றென்றான். (27) 1584. விழக்கொடு வெண்ணஞ் சல்லா வுகிர்மயி ருமிழ்கட் பீனை புழுப்பயில் குரம்பை பொல்லாத் தடிதடிக் கீழ்ந்த போழ்தின் விழித்தியார் நோக்கு கிற்பார் பிள்ளையார் கண்ணுட் காக்கை கொழிப்பரும் பொன்னிற் றோன்றுங் கொள்கைத்தாற் கொடியே யென்றான். விழுக்கும் வெண்ணஞ்சும்-ஊன்விசேடம்; நிணமுமாம். அல்லா-இவையொழிந்த.கண்ணுமிழ்பீளை. பிள்ளையார்-கரிக்குருவியார். கரிக் குருவியார்கண்ணுக்குக் காக்கைபொன் னொத்து தோன்று மென்னும் பழமொழி. இ-ள்.கொடியே! விழுக்குமுதலியவற்றையுடைய புழுப்பயில்கின்ற இவ்வுடம்பு வேறுபட்டுக் கிடந்தபொழுது விழித்துப் பார்ப்பார் ஒருவரு மில்லை; இஃது அங்ஙனம் வேறுபடாமையின், விளைகின்ற காமத் தாலேகாக்கை கரிக்குருவிக்குப் பொன் போள்றோன்றுங் கொள்கையை யுடைத் தயிற்றுக்காணென்றா னென்க. 1585. உருவமென் றுரைத்தி யாயி னிற்ந்ததோற் றுருத்தி தன்னைப் புருவமுங் கண்ணு மூக்கும் புலப்பட வெழுதி வைத்தாற் கருதுவ தங்கொன்று ண்டோ காப்பியக் கவிகள் காம வெரியெழ விகற்பித் திட்டா ரிறைச்சிப்போ ரிதனை யென்றான். இ-ள். உள்ளொழியப்புறத்தின்வடிவு நன்றென்றுரைத்தி யாயின், முற்கூறியவெல்லாம் நிறைந்ததொரு தோற்றுருத்தியைப் புருவ முதலியன நன்றாக வெழுதிவைத்தால் நன்றென்று கருதுவதோர் பொருளில்லையே, ஆதலின், இறைச்சித்திளாகியர விதனைக்காப்பியஞ் செய்யுங்விலிகள் மக்கட்குக் காமத் தீயெழும் படி வேறு படுத்தினார்கள் காணென்றானென்க. இவையிவட்குத் தெளிவு நிழு மென்று கூறினான். இவர்களிங்ஙனநிற்பப் பவ தத்தன்கூறி வருந்துகின்றமை மேற்கூறு கின்றார். (29) வேறு 1586. காதன் மாமன் மடமகளே கருங்குழன் மேல்வண்டி ருப்பினு மேத முற்று முரியுநுசுப் பென்றுன்னி யல்பேத்துவே னோதம் போல வுடன்றுடன்று நையநீ யொண்டாமரைக் கோதை போல்வா யொளித்தொழிதல் கொம்பே குணனாகுமே. 1587. வன்னத் திங்கண் மதிமுகத்த வாளோ கருங்க யல்களோ வுண்ணுங் கூற்றோ வொளிவேலோ போதோ வுணர்கலேனாற் பண்ணின் றீஞ்கொலாய் படாமுலைப் பாவாய் கொடியே பாங்கி னுண்ணுந் தேனே யமிர்தே யென்னின் னுயிரே யெங்கணாயே. 1588. இலவம் போதே ரெழிற்றகைய சீறடி களஞ்சி யொல்கிப் புலவன் சித்தி ரித்தபொற் சிலம்பு நகப்பூ நிலத்துமே லுலவும் போழ்து மென்னாவி மலர்மேன் மிதித்தொ துங்குவாய் கலவ மஞ்ஞை யனையாய்கட் காத லொழிகல் லேனால். இவைமூன்றுமொருதொடர். இ-ள். காதலையுடைய என்மாமன்மகளே! திருவை யொப்பாய்! கொம்பே! தீஞ்சொல்லாய்! பாவாய்! கொடியே! தேனே! அமிர்தே! இனிய வுயிரே! சீறடியொல்கிச் சிலம் பொலிப்பப் பூநிலத்துலவும்பொழுதும் அந்நிலத்திலன்றி என்மனமாகிய மலர்மேலே நடப்பாய்! நினது திங்கள்மதித்த முகத்திலுள்ளன வாளோ, கயலோ, கூற்றோ, வேலோ, போதோவென்றும், வண்டி ருப்பினும் இடைமுரியுமென்றும் நின் னியல்பையேத்துவேன்; அந்தப்பூவிலே மிதித்துத்திரிகின்ற யான் கடல்போன் மறுகி நையும்படி மறைந்துநீங்குதல் நினக்குக் குணமாமோ, இதற்குக் காரணமென் அஃதுணர்கிலேன்; நின்னிடத்துக் காதலையு நீக்கமாட்டேன்;இனி நீயெவ்விடத்தாய்? கூறென்றானென்க. என்னென்பது வினா. ஓ-வியப்பு. ஏர்-ஒப்பு. புலவன்-பொன்செய் கொல்லன். (30-32) 1589. பணிசெ யாயத்துப் பந்தாடு கின்றாயைக் கண்டு மாழ்கிப் பிணிசெய் நோயேன் யான்கிடப்பப் பிறர்வாயதுகேட்டலுந் துணிக போது மெனவிடுத்தாய் போந்தேன் றுயரு ழப்பநீ மணிசெய் மேகலை யாய்மாற்றந் தாராய் மறைந்தொ ழிதியோ. இ-ள்.ஆயத்தே பந்தாடுகின்ற நின்னைக்கண்டு மயங்கிப் பிணித் தலைச்செய்யு நோயயேனாய்க்கிடக்க, அந்நோயைப் பிறர்கூறக்கேட்ட வளவிலே, யாமுடன்போகக் கடவேம்; அதனைத் தான்றுணி கவென்று கூறி வரவிட்டாய்; அக்கூற்றாலே போந்த யான் வருந்தும்படி, மேகலை யாய்! மறுமாற்றஞ் சொல்லாயாய் மறைந்து போகின்றாயோ வென்றானென்க. (33) 1590. இயக்கி நின்னோ டிணையொக்கு மென்றுநலஞ் செகுப்பான் மயக்கிக் கொண்டுபோய் வைத்தாயென் மாதரைத் தந்தருளுநீ நயப்ப வெல்லாந் தருவலெனத் தொழுதுநல்லி யானைதன் வயப்பிடி கெடுத்து மாழாந்த தொப்பமதி மயங்கினான். இயக்கி-விளி. இ-ள்.அங்ஙனம்கூறி, இயக்கி! என்மாதரை நின்னோடி ணைத்தற் கண்ணொப்ப ளென்று கருதிஅவணலத்தைக் கெடுத்தற்கு அறிவைக் கலக்கிக் கொண்டு பொய் மறைத்து வைத்தாய்; நீயவளைத் தந்தருளு வாயாக; தந்தால் நீ விரும்பின வெல்லாந் தருவேனென்று வணங்கி, யானை தன் வலிய பிடியைக் கெடுத்து மயங்கினாற்போல மயங்கினா னென்க. (34) 1591. மல்லற் றொல்வளத் துமத்திம நன்னாட்டு வண்டாமரை புல்லும் பேரூர்ப் புகழ்த்தத்தன் காதற்சின தத்தைக்குஞ் செல்வ நாமற் குஞ்சித்திர மாமாலைக் குஞ்சுற் றத்தார்க்கு மல்லல் செய்தே னவட்சென்றா லென்னுரைக் கேனென் செய்கேனே. இ-ள். வளப்பத்தை யுடைய செல்வத்தை யுடைத்தாகிய மத்திமதேசத்திற்பதுமபுரத்தில், என்றந்தை கீர்த்திதத்தனுக்கும், என்றாய் சினதத்தைக்கும்,என்மாமன் ஸ்ரீமானுக்கும், என்மாமி சித்திரமா மாலைக்கும், ஒழிந்தசுற்றத்தார்க்கும் வருத்தஞ் செய்தேன்; யான் அவ்விடத்தே சென்றால் என்னுரைப்பேன்; இனி விவ்முடத்து யான் என்செய்வேனென்றானென்க. (35) 1592. உண்ணு நீர்வேட் டசைந்தேனென வுரைப்பக் காட்டுணாடி நண்ணிப் பொய்கை தலைப்பட்டு நற்றாமரை யிலையினுட் பண்ணி நீர்கொண்டு வந்தேன் படாமுலைப் பாவாயென் றண்ண லாற்றா தழுதழுது வெந்துருகி நைகின்றானே. இ-ள். தலைவன், பாவாய்! நீ தண்ணீர்வேட்டு இளைத்தே னெனக் கூறுதலாலே, காட்டிலே கொய்கையை நாடிக் கிடைத்து அதனை நண்ணித் தாமரையிலையைக்கோலி அதனுள்ளே தண்ணீர்கொண்டு வந்தேன்; நின்னைகண்டிலேனென்றுகூறி யழுது உருகி நையா நின்றானென்க. (36) 1593. குழைகொள்வாண் முகத்துக் கோல்வளையைக் காணான் குழைந்தழுகி வழகன் சொல்லு மணிசேய் கோதை காமமுங் கண்டுங் கேட்டு முழவுத் தோளான் முறுவலித் தீங்கேயிரு நீயென் றிழையச் சொல்லியிளை யானிளை யானை யெய்தினானே. தோளான்-ஒவர்கள் செய்தியைக் கண்டிருந்த சீவகன். இழையச் சொல்லியென்றது-தாமுறைவிடத்தேவந்தார்க்குத் தாம் நுகர்வன வற்றைக் கொடுத்துப் பேணிவிடுத்தல் வனசரிதர்க் கியல்பாதலின், சீவகன் போக்கொருப்பட்டமைகண்டு, அவ்வன சரிதனும் யானுகாவன வற்றை நீயுநுகர்ந்து வழிவரல் வருந்தந் தீர்ந்து ஏகுவாயாக வென்றாற்கு, அவனுந் தனக்குவருத்த மின்மையை அவன்மனம் பொருந்தச் சொல்லியென்றவாறு. ஈங்கே யிருவென்றது-எப்பொழுதும் இப்படியே மனத்தைச் சென்றவிடத்தே செல்லவிடாதே விலக்கியிருக்க வென்றவாறு. ஆங்கு-உவமவுருபாயினமையின், ஈங்கும் உவம வுருபாம்; புறனடையால். இவ்விடத்தேயிருவென்று உபசாரமுமாம். சீவகன் அவளை யிங்கேயிருவென்று பொருந்தக்கூறல் அவற்கு இயையா மையுணர்க. இ-ள். சீவகன், கோல்வளையைக்காணானாய்அழுகின்ற பவதத்தன் கூற்றைக்கேட்டும், அநங்கமாவீணை வனசரிதன்மேல் நிகழ்த்தின காமத்தைக்கண்டும் நக்கு, வனசரிதனுபசாரத்திற்கு இழையச்சொல்லி யவனை யிப்படியே நீ யெக்காலமு மிருவென்று கூறி, அவன் பவத்தனைச் சேர்ந்தானென்க. (37) 1594. என்னை கேளீ ரென்னுற்றீ ரென்ன பெயரீ ரென்றாற்குப் பொன்னங் குன்றிற் பொலிந்ததோ ணம்பி யொருபொற் பூங்கொடி யென்னு நீராளை யீங்கேகெடுத் தேனெ பாவத்தாற் பன்னூற் கேள்வி யுடையேன் யான்பவத் தனென்பே னென்றான். இர் ஈறு-ஓகாரம்பெறுலேயன்றி யீர்பெறுதலும்? அதற்க்கு காரணமென்னை? என்ன பெயரையுடையீர்? என்று கேட்ட சீவகற்கு, நம்பி! இவ்விடத்தே யென்பாவத்தாலே வல்லிபோல் வாளைக் கெடுத்தேன்; யான் நூற்கேள்வியுடையேன்; பவதத்தத னென்று பெயர்கூறப்படுவேனென்றானென்க. (38) வேறு 1595. கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணு மாகு மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையுமாகும் பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழுமாந் துணைவி யாக்கு மிப்பொரு ளெய்தி நின்றீ ரிரங்குவ தென்னை யென்றான். கற்றல்-அல்லீற்றுவியங்கோள்; “இற்றெனக்கிளளத்தல்” (தொல்.கிளவி.19) போல. இ-ள். தனக்கு இடுக்கண்வந்தால் உதவும் பொருளைக் கொடுத்துங் கற்க; கற்ற பின்பு ஞானக்கண்ணுமுண்டாகும் அதுதத்துவத் தினை விளைவிக்கும்; வருத்தத்திற்கு உதவியுமாம்; ஆதலின், இதனை யொழிந்த பொருள்கள் பொருளல்ல; இதனான் மீண்டும் பொருள் களுண்டாம்; கீர்த்தி மகளையுமுண்டாக்கும்; இப்பொருளைப்பெற்று நின்றநீர் அறியாமல் வருந்துதற்குக் காரணமென்னென்றானென்க. புகழுந் துணைவியு மென்றுமாம். (39) 1596. அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காத லின்பஞ்செய் காமச் சாந்திற் கையுனைந் தேற்ற மாலை நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப் பின்செலும் பிறர்க ணுள்ளம் பிணையனார்க் கடிய தன்றே. இ-ள். அன்புநூலாக இன்சொல்லாகியபூவைவைத்துக் கட்டிக் காலாகிய சாந்தாலோ கைபுனைந்து ஏற்றவின்பஞ் செய்கின்ற காம மலையை நங்கைமார்க்குப் பகற்பொழுதுஞ் சூட்டி நீங்காதிருப்பினும் அவர்க்குக்கண்ணு மனமும் பிறர்பின் செல்லும்; அஃது அடியிலே யுள்ளதன்றோ வென்றானென்க. (40) பகல்-வெளியுமாம். 1597. பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா வுண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகு மெண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளு மாங்கே வெண்ணெய்க்குன் றெரியுற் றற்போன் மெலிந்துபின் னிற்கு மன்றே. இ-ள். பெண்ணென்று கூறப்படுவனவற்றினியல்பைக் கேட்பாயாக, மனவலியுடையவல்ல; குடிப்பிறப்புக்கெடுமென்று பாரா; நிறையுடைய வல்ல; ஆயிரமுகமாக வெழுமனத்தவாம்; பத்துப் பொருளை அகங்கை யிலேயிட்டாற் பொருட்குறைபாடில்லா இந்திரன்மகளேயாயினும் உருகி அவர்பின்னே நிற்கு மென்றா னென்க. (41) 1598. சாமெனிற் சாத னோத றன்னவன் றணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவோ டொப்பார் சேர்ந்தவன் செல்ல றீர்ப்பார். இ-ள். கணவன் சாகிற்சாக; நோவின்நோக; அவன் நீங்கினால் கற்றவற்பயன்என்னையென்று மிகவும் பூவும் புனைதலின்றி யழகுடனே தனிப்பத் தங்கிக் காமனென்றுபெயருங்கூறாராய்க் கணவனையே வணங்கி வாழ்வார், அவனுக்குத் திருவோடொப்பார்; செல்லறீர்ப்பா ரென்றானென்க. வாழ்வாரென்னு மெழுவாய்க்கு ஒப்பார் தீர்ப்பாரென்னு மிரண்டு பெயரும், “ பெயர்கொள வருதல்” (தொல் வேற்றுமை 5) என்பதனாற் பயனிலையாயின. ஐ-அசை. இதனாற் கற்புடை மகளிரியல்பு கூறினான். (42) 1599. அன்னணின் றோழி யையாவ வளென்னைக் கண்ட கண்ணாற் பின்னைத்தான் பிறரை நோக்காப் பெருமட மாது தன்னை யென்னையா னிழந்து வாழு மாறென விரங்கி னானுக் கன்னளோ வென்று நக்கா னணிமணி முழவுத் தோளான். இ-ள். ஐயா! நின்றோழி, கணவற்கைதொழுது வாழ்வா ரோடொப்பவள்; அவள் தான் என்னிப்பார்த்தகண்ணாற் பிறரைப்பாராத மாது; அவளையிழந்தும் யான் வாழுமா றெங்ஙனேயென்று வருந்தின வனுக்குத் தோளான் அன்னளோ வென்று நக்கானென்க. அன்னளோவென்துயான்கூறிவற்றாலுந் தெளிவுநிகழாமல் இவனை வருந்துந் தன்மையளோவென்றவாறு. நகை பிறரிளமை பற்றி நிகழ்ந்து. இனி யாம் இவனிடுக்கணுக்கு உதவியானோ மென்று மனமகிழ்ந்தானென்றுமாம். (43) வேறு 1600. இனையல் வேண்டாவிம் மந்திரத்தை யோதி நீயொருவில் லேவள வனைய வெல்லை சென்றா லியக்கி கொணர்ந் தருளுநீ புனைசெய் கோல்வளையைக் கைப்படுதி யென்றாங்கவன் போதலு மனைய மாதரைக் கண்டாங்கடி புல்லிவீழ்ந் தரற்றினான். மந்திரம்-மகளிரை வசீகரிப்பதொரு மந்திரம். இ-ள். நீவருந்தவேண்டா; இம்மந்திரத்தையோதி ஒருவில்லி னது அம்பு சென்றவளவையொத்த எல்லையைப்போனால், அவ் விடத்தே இயக்கிகொண்டுவந்து தரும்; அவளைக்காண்பை யென்றுகூறி அவன்போனவளவிலே. இவனுஞ்சென்று அங்ஙன மெலிந்து பின்னிற்குந் தன்மையையுடைய மாதரை அவ்விடத்தே கண்டு வீழ்ந்து அடியைப்புல்லி யரற்றினானென்க. தான்கண்டமை கூறிற்றிலன்; இவன்றான் நம்மையுந் தீங்கு கருதுவனென்று. (44) 1601. பட்டவெல்லாம் பரியாதுரைத் தானவளுங் கேட்டாள் விட்டாளார் வமவன் கணிவன் மேன்மைந் துறவினான் மட்டார் கோதைமனை துறந்தாண் மைந்தனுமங் கைமேலே யொட்டி விள்ளாவார் வத்தனாகி யுருவ மோதினான். இ-ள். அங்ஙனமரற்றின மைந்தனுந் தானுற்றவெல்லாவற்றையும் வருந்தாதே கூறினான்; கோதை, அடியிலே மனையைத் துறந்து போந்தவள், அவளும் இவன்விள்ளாவார்வத்தனாய் இவளைப்பெற வேண்டு மென்று ஒட்டி அம்மந்திரத்தைப் பலவுருவை யோதினானாகையாலே, அவற்றைக்கேட்டாள்; கேட்டு இவன்மேலன்பு வலியுற்றபடியாலே, அவ்வனசரிதன் மேற்சென்ற வேட்கையை விட்டாளென்க. அவன்கணார்வமென மாறுக.அம்மந்திரம் அவள்நெஞ்சை இங்ஙனம் பிணித்ததென்றுணர்க. (45) வேறு 1602. மெழுகு செய்படம் வீழ்முகின் மத்தகத் தொழுகும் வெள்ளரு வித்திர ளோடைசூழ்ந் திழுகு கொன்மதத் தின்வரைக் குஞ்சந் தொழுது வேய்முதற் றூசங்கொண் டேறினான். இ-ள். படிந்த முகிலாகிய மெழுகுசெய்படத்தையும், ஒழுகும் வெள்ளருவித்திரளாகிய மத்தகத்தோடையினையும், ஏறுவார் காலைச் சூழ்ந்துகிடந்து உரிஞ்சும் பொன்னாகிய மதத்தையு முடைய வலை யாகிய யானையைத்தொழுது மூங்கில்வேராகிய புரோசைக் கயிற்றைப்பிடித்து அம்மூங்கிற்கவையிலே அடியிட் டேறினானென்க. ஸ்ரீகோயிலைத்தொழுதான். யானையேறுவாருந் தொழுதல் இயல்பு. (46) 1603. நிரைத்த தீவினை நீங்கநெ டுங்கணார் வரைக்க யேறலின் வாலரிப் பொற்சிலம் புரைத்து மின்னிருண் மேற்கிடந் தாலுமொத் தரைத்த லத்தக மார்ந்த தொர் பாலெலாம். இ-ள். இடைவிடாத தீவினைபோம்படி தொழுதற்கு மகளிர் வரை யிலேறுதலாலே, அவரடியிற்சிலம்பு உரைக்கப்பட்டு ஒருபாலெல்லாம், மின் இருண்மேற்கிடந்த தன்மையையுமொத்து, அவரடி ஒக்கமிக்கப் பட்டு ஒருபாலெல்லாஞ் செம்பஞ்சு மார்ந்ததென்க. அரைத்த அலத்தகமென விகாரமுமாம். 1604. சாந்துங் கோதையுந் தண்ணறுஞ் சுண்ணமு மாய்ந்த பூம்புகை யும்மவி யுஞ்சுமந் தேந்து பொன்விளக் கேந்தியி டம்பெறா மாந்தர் சும்மைம லிந்ததொர் பாலொம். இ-ள். சந்தனமுதலியவற்றைச்சுமந்து உயர்ந்த பொன்னாற் செய்த விளக்கையுமேந்தி இடம்பெறாத மக்களாரவாரம் ஒருபாலெல்லா மிக்கதென்க. (48) 1605. துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை நிறங்கொ ளாரம்பைம் பூணிழற் குண்டலம் பிறங்கு வெங்கதிர் மின்னொடு பின்னிவீழ்ந் துறங்கு கின்றன போன்றவொர் பாலெலாம். இ-ள். துறந்தவரசர் தம்முடைய முடிமுதலியன கிடந்த வொரு பாலெல்லாம்; கதிரும் மின்னும் பின்னிவீழ்ந்து உறங்கு கின்றன போன்றதென்க. ஈண்டுத் துறப்பதற்குமுன்உண்டான உடைமையாம். (49) 1606. கருவித் தேன்கலை கையுறக் கீண்டுடன் மருவிப் பைங்கறி வாரிப் பழந்தழீஇ வெருவி நாகம் பிளிற்ற விரைந்துரா யருவி நின்றதி ரும்மொரு பாலெலாம். இ-ள் கத்தனளம்போலுந்தேனிறால், ஆண்முசுவின்கையுறு தலாலே சேரக்கிழிந்து விரைந்து பரந்து மிளகைவாரிப் பழத்தைத் தழுவி நாகம்வெருவிக் கூப்பிடும்படி யொருபாலெல்லாம் அருவியாய் நின்றதிருமென்க. (50) 1607. வெங்க திர்க்கட வுள்வியன் றேர்வரைத் தங்கு சந்தனக் கோட்டிடைப் பட்டெனப் பொங்கு மான்குளம் பிற்குடை பொற்றுகண் மங்கு லாய்த்திசை யாவையு மல்கின்றே. இ-ள். வரையிற் றங்கிய சந்தனக்கோட்டிடையிலே ஞாயிற் றின்றேரகப்பட்டதாக, அத்தேரிற்பூண்டமான் தன்னடியை யூன்றி அதனைக் கொண்டுபோகின்ற பொழுது, குளம்பாலே குடைந்த துகள் திசைகளெல்லாம் இருளாகநிறைந்ததென்க. (51) 1608. சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர் நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்க் சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான். சுனையிடத்தனவாகியநீலம். சூழ்மலர்ச்சுள்ளி-மராமரம். நாறிணர்க் கோங்கம். இ-ள். நீலப்பூமுதலியவற்றை வேங்கைப்பூவோடே திருவடி மேலேயேற்றி முனைவன் மேலுள்ள துதிகளை முழுக்கவெ டுத்துத் துதித்தானென்க. மிடறுள்ளவளவும் எடுத்தென்றுமாம். (52) வேறு 1609. முனிமை முகடாய மூவா முதல்வன் றனிமைத் தலைமை தனதுதா னென்ப தனிமைத் தலைமை தனதுதா னென்றாற் பனிமலர்தூய் நின்று பழிச்சாவா றென்னே. முனிமை-குணப்பண்பு. இ-ள். முனித்தன்மைக்குமேலாகிய ஒப்பில்லாததலைமை முதல்வன் றனதேயென்பர்; அங்ஙனங்கூறுதலான், அவனை யுலகம் பழிச்சாதிருக்கின்றது அறியாமை யன்றோவென்றா னென்க. (53) 1610. மலரேந்து சேவடிய மாலென்ப மாலா லரேந்தி யஞ்சலி செய் தஞ்சப் படுவா லரேந்தி யஞ்சலிசெய் தஞ்சப் படுமே லிலரே மலரெனினு மேத்தாவா றென்னே. சேவடிய, அ-அசை; சுட்டுமாம். இ-ள். மலர்தானேந்தின அடியையுடைய மால், இந்திரனால் வணங்கி மதிக்கப்படுவானென்பர்; அங்ஙனமாயின், உலகத்தார் மலரில ரெனினும் ஏத்தாதிருக்கின்றது அறியாமையன்றோ வென்றானென்க. (54) 1611. களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த வளிசே ரறவாழி யண்ணலிவ னென்ப ரளிசே ரறவாழி யண்ண லிவனேல் விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே. இ-ள்.காமனைவென்ற அருள்பொருந்திய அறவாழியை யுடைய தலைவன் இவனேயென்பர்; அங்ஙனம்கூறின், நாம் துதிகளைப்பரப்பா திருத்தல் அறியாமையன்றோவென்றானென்க. அரியுமயனுமரனும் இவனேயென்பதுகருத்து. பா-முற் கூறியவற்றோடொக்கும். (55) வேறு 1612. இன்ன ணமேத்தி யிறைவ னடிதொழு தன்ன முறங்கு மணிவரை மேனின்று பொன்னங் கழலா னிழிந்து பொழிமழை மின்னி னடந்து மிகுசுரஞ் சென்றான். இ-ள். கழலன் இப்படியேத்தித் தொழுது வரையிடத்து நின்று மிழிந்து நடந்து சுரத்தை மின்போலே கடிது சென்றா னென்க. சுரம்-பாலை. இதனானும் தூரகமனம் வல்லனென்றார். (56) 1613. மாலைக் கதிர்வேன் மலங்க மணிமலர்க் கோலை விடுக ணுருகு கொடியிடை யேலங் கமழ்குழ லேழை யவரன்ன வாலைக் கரும்பி னகநா டணைந்தான். இ-ள். வேல்கெடுதலிற் றானும் போர்வேண்டில் வருக வென்று மலர்க்கு ஓலைவிடுங் கண்ணினையும் இடையினையுங் குழலினையு முடைய மகளிரைப்போலலே ஐம்புலனுக்கும் வேண்டும் பொருளை யுடைய மத்திமதேசத்தைச் சேர்ந்தானென்க. அகம்-மருதம்; “அகநாடு புக்கவ ரருப்பம் வெளவி” (மதுரைக் . 149) யென்றார். வேறு 1614. வழைச்சறு சாடிமட் டயின்று மள்ளர்தங் கழைக்கரும் பெறிந்துகண் ணுடைக்கு மெந்திர மழைக்குர லெனமயி லகவ வார்செநெற் புழைக்கடைப் புனலலைத் தொழுகும் பொற்பிற்றே. இ-ள். மள்ளர் இளமையற்ற மட்டையுண்டு கரும்பைக் குறுகத்தறித்து மழைக்குரலென்று மயிலகவச் சாறுகொள்ளும் ஆலையிற்சாறு செந்நெற்செறுவிற் கடைமடையாலே புனலை யலைத்தொழுகும் பொற்பினையுடைத்து அந்நாடென்க. எந்திரமொழுகுமென்று இடத்தினிகழ்பொருளின் றொழில் இடத்திற்கேற்றினவாகு பெயர். (58) 1615. தாமரை மலர்தலை யடுத்துத் தண்கமழ் தூமலர்க் குவளைகா லணைத்துத் தோலடிக் காமரு பெடைதழிஇ யன்னங் கண்படும் தேமலர்த் தடந்தழீஇத் திசைகண் மல்கின்றே. இ-ள். அந்நாடு, அன்னந் தாமரைத் தலையணையாகச் சேர்த்துக் குவளையைக் காலணையாகச்சேர்த்து என்பில்லாத வடியையுடைய பெடையைத்தழுவிக் கண்டுயில் கொள்ளுந் தடங்கள் திசைகளெல்லாந் தழுவி நீர்மல்கா நின்றதென்க. 1616. கண்பயி லிளங்கமு கெருத்திற் காய்பரீஇக் கொண்டிள மந்திக ளெறியக் கோட்டிடைத் திண்கணி முசுக்கலை சிதறுந் தேம்பொழின் மண்டமர் கடந்தவன் மகிழ்வொ டேகினான். இ-ள். அமரைக் கடந்தவன் கோட்டிடையிலே மந்திகளிருந்து கமுகின்காயைவாங்கிக்கொண்டு எறியக் கலை தோற்றுக் கனியைச் சிதறும் பொழிலை மகிழ்ச்சியோடே போனானென்க. இஃது அந்நாட்டின் நகரைச்சூழ்ந்த பொழில். (60) 1617. களிறுமாய் கதிர்ச்செந்நெற் கழனி நாட்டிடை யொளிறுவே னரபதி நகர மொய்யெனப் பிளிறுவா ரிடிமுர சார்ப்பப் பெய்கழல் வெளிறிலாக் கேள்வியான் விருப்பொ டெய்தினான். இ-ள். களிறுமறைகின்ற செந்நெற்கதிரையுடைத்தாகிய கழனியை யுடைய நாட்டிடத்தில் நரபதிநகரைக் குற்றமற்ற கேள்வியான் முரசார்க்கின்றகாலத்திலே விருப்பத்தோடே சேர்ந்தானென்க. முரசார்த்தல்-நன்னிமித்தம். (61) 1618. புறநகர் மணமக னொருவன் போதர்வா னிறைமகன் வினாயினா னென்ன பேரவே துறைவளர் நாட்டொடு நகரஞ் சொல்லென வறிகவென் றலரிவாய் கமழக் கூறினான். இ-ள். இறைமகன், கலமிழியுந்துறைமிக்க நாடும் நகரமும் என்னபெயரையுடையன, சொல்லென்று வாய்விட்டு அலரிப் பூக்கமழ வினாவினான்;அதுகேட்டுப்புறநகரினின்றும் போதரு வானாகிய மணமகனொருவன் அப்பெயர்களை யறிகவென்று கூறினானென்க. (62) 1619. மத்திம தேசமா நாடு மற்றிந்நாட் டெத்திசை நிதியமு மிறைகொண் டில்லவர்க் குய்த்துமூர் கொடுப்பவ ரேம மாபுர மித்திசைக் கையநீ புதியை போன்மென. 1620. அன்னதே யென்றலி னடிசிற் காலமா லென்னொடு பேசினாய் தவிர்மற் றீங்கெனப் பொன்னகர் புக்கபி னறிவல் போகென்றான் வின்மரீஇ வாங்கிய வீங்கு தோளினான். இவையிரண்டுமொருதொடர். அறிவல்-மறுத்தற்பொருட்டாய் இறைபயந்தது. வில்லைப் பயின்று வளைத்த. இ-ள். நாடு மத்திமதேசமென்னும் பெயரையுடைத்தாம்; இந்நாட்டில் எத்திசைநிதியமு மிறைகொள்ளுதலால் இல்லவர்க்கு உய்த்துங்கொடுப்பவரூர் ஏமமா புரமென்னும் பெயரை யுடைத்தாம்; ஐயனே! நீயித்திசைக்குப் புதியைபோலு மென்றவன் கூற, அங்ஙனம் புதியேனென்று சீவகன்கூறுதலின், அவன் என்னுடனே வார்த்தைகூறினாய்; அதனால் நட்பிற்குத் தாழ் வில்லை; அடிசிற்கால முமாயிருந்தது; இவ்விடத்தே தங்கென்று கூற, தோளினான் நகரிலேசென்றபின்பு பார்ப்பேன்; இப்பொழுது போவென்றானென்க. (63-64) 1621. புணம்ருப் பியானையின் புயல்கொண் மும்மத மணமகள் கதுப்பென நாறு மாநகர்த் துணைமலர்க் கண்ணியுஞ் செம்பொன் மாலையு மிணைமலர்த் தாரினா னிடறி யேகினான். இ-ள். தாரினான், பிணையலையும் மாலையினையுமிடறி,யானை யினது மழை போலுமும்மதங் கதுப்பெனநாறுநகரிலே யேகினானென்க. இடறி-நிகழ்காலமுணர்த்திற்று. (65) 1622. வண்டுகொப் புளித்துணு மாலை மார்பனைக் கண்டுவப் பளித்தவர் கடைக்க ணேக்கற மண்டபப் பளிக்கறை மருங்கொர் மாநிழல் கொண்டவற் களித்ததோர் குளிர்கொள் பொய்கையே. இ-ள்.தம்கண்கள் மாலைமார்பினைப்பார்த்து மனத்துக்கு மகிழ்ச்சி கொடுக்கப்பட்டமகளிருடைய அக்கடைக்கண்கள் பின்பு தன்னைக் காட்சியின்றி யேக்கறும்படி போய் மாநிழலை யிருப்பிடமாகக் கொண்டவற்கு ஒருபொய்கை வருத்தத்தைக் கொடுத்ததென்க. ஏக்கற-இளைத்திடைய. மண்டபம்போலும் பளிக்கறை. (66) வேறு 1623. வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடையன்ன மடமைகூரத் தண்கய நீருட் கண்ட தன்னிழல் பிறிதென் றெண்ணிக் கண்டனங் கள்வ மற்றுன் காதலி தன்னை நீர்க்கீழ்ப் பண்iடய மல்லம் வேண்டா படுக்கவென் றூடிற் றன்றே. இ-ள். சிறையினையும் வாயினையுமுடைய பெடையன்னம், அறியாமை மிகுதலாலே நீரிலேகண்ட தன்னிழலை வேறார் பெடை யென்றுகருதி, கள்வனே! நின்காதலிதன்னை நீரின்கீழே கண்டேன் இனி முன்புபோற் தேற்றத்தேறேம்; அகப்படுக்க வேண்டா மென்று ஊடிற்றென்க. (67) 1624. செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலி னகலச் சேவ லயிர்ப்பதெ னின்னை யல்லா லறியலே னன்றி மூக்கி னுயிர்ப்பதுன் பணியி னாலே யூடனீ யென்று பல்காற் பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப் பணிந்து பாண் செய்த தன்றே. இ-ள். அங்ஙனமூடிய பேடை குற்றத்தோடே கோபித்து நோக்கிச் சேவலினின்றுநீங்க, சேவல், யான் நின்னையன்றி வேறொன்றறியேன்; என்னை யயிர்ப்பதென்? அதுவுமின்றி யானுயிர் தாங்கியிருப்பது நின்னேவலாலே; ஆதலின், நீயூடாதே கொள்ளென்று மனங்கொள்ளா திருக்கின்றமை நீங்கப் பல்காற் புல்லி வணங்கித் தாழ்ச்சி செய்ததென்க. (68) 1625. கலையுணர் மகளிர் நெஞ்சிற் காமத்திற் கனிந்தவூட னிலையுணர் மைந்தர் நீக்கி நெறியினாற் புணர்ந்த தொப்ப வலர்மிசைப் பெடை யினூட லன்புகொள் சேவ னீக்கிக் குலவிய புணர்ச்சி நோக்கிக் குன்றனான் சிந்திக் கின்றான். கலை-மகளிர்க்குரியவாக மணிமேகலையிற்கூறிய கலைகள்; கரணமுமாம். கனிந்த-பழத்த. இ-ள். மகளிர்நெஞ்சில் ஊடலைத்தீர்க்கு முறைமையையறிந் தமைந்தர் தீர்த்துப்ஸபுணர்ந்த தன்மையை யொப்ப, சேவல் பெடை யினூடலைநீக்கித் தாழ்ந்த புணர்ச்சியைநோக்கி முன்புசலி யாதவன்இப்பொழுது நினையா நின்றானென்க. (69) 1626. தன்னையான் முகத்தை நோக்கிற் றான்முலை முகத்தை நோக்கும் பின்னையான் பலவு பேசிற் றானொன்று மிழற்றும் பைம்பூட் பொன்னவாஞ் சுணங்கு போர்த்த பொங்கிள முலையி னாளென் முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்று கின்றாள். இ-ள். அவளூடறீர்த்தற்குயான் றன்னைமுகத்தைப் பார்த்தாற் றான் எதிர் நோக்கின் ஊடறீருமென்றிறைஞ்சிநிற்கும்; பின்பு யான் ஊடறீரப்பலவுங்கூறின், அவற்றைக்கெடுத்துத் தான் ஒருமொழியை மெல்லக்கூறும்; இத்தன்மையையுடைய முலையி னாளாகிய தத்தை முன்னையாள்போன்று என்முகத்துள்ளே தோன்றாநின்றாளென்க. அவாம்-விரும்பும்; ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டது. குணமாலையாற்றத்தைக்கு நிகழ்ந்த வூடறீர்த்ததனை நினைந்தான்; ஒழிந்தோர்க்கு அங்ஙனநிகழ்ந்தவூடலின்மையின். முன்னர்ஊடின நிலைமையாகவே தோற்றுதலின், ‘முன்னையா ள் போன்று’ என்றான். (70) வேறு 1627. பரிவுற் றாற்பய னின்றியும் பாவைமார் முரிவுற் றர்களின் மூர்ச்சனை செய்பவாற் பிரிவிற் றோன்றிய பேரன்பெ னப்படு மெரியின் மூழ்கியி றந்துப டுங்கொலோ. இதுமுதல் மூன்றுகயுமொருதொடர். பாவைமாரன்புற்றால் ஒருபயனின்றியும் விருத்தமுற்றார் போல நெட்டுயிர்ப்புக் கொள்வார்கள்; ஈண்டுஅதுவன்றிப் பிரிவாதலின், அப்பிரிவாற்றோன்றிய அன்பென்னு நெருப்பிலே யழுந்தி யிறந்து படுமோவென்க. இவ்வாறு அருள் பிறர்க்காகு மென்றாற்போலக் கருதல் பரிவு. 1628. வாளி யம்பன வாட்டங் கண்ணிதன் றோளு மென்முலைப் பாரமுந் தொன்னல நாளு நாளினு நைந்துநைந் துள்சுடப் பூளை மெல்லணை மேற்புர ளுங்கொலோ. வாளியம்பு-கலம்பு. பூளைமெல்லணையென்றான், பூளை முதலியவற்றாற் சமைத்தலின். தடங்கண்ணி உள்சுடுதலாலே தோளு முலையுந் தம்தொன்னலம் நாடோறுநாடோறுங் கெட்டுப் புரளுமோ வென்க. முன்பு என்றோளாகிய அணைமேற்றுயின்றாள் இப்பொழுது தீயாகியவணையிலே புரளுமோவென்றானென்க. 1629. உருகி வாடியென் னுற்றது கொல்லெனக் கருகி வாடிய காமரு கோதைத னிருக ணீருமி டைமுலை பாய்ந்துகக் குருகு பாய்தட மாகவ ழுங்கொலோ. யான்போந்தபின்பு அவனுற்றதென்னென்றுநினைந்து உருகிவாடு தலாலே கருகி வாடியதோர்கோதைபோல்வாள் தன்முலையிடை தடமாம் படி தன்னிரு கண்ணினீரும் படிந்துவீழ அழுமோவென்க. “கருங்கால் வெண்குருகு மேயும்- பெருங்குள மாயிற்றென் னிடை முலை நிறைந்தே” (குறுந்.325) என்றார் பிறரும். இ-ள். இங்ஙனந்தோன்றின இவள் இறந்துபடுமோ, புரளுமோ, அழுமோ, என்செய்கின்றா ளென்றானென்றா னென்க. (71-73) 1630. வண்டு வாழ்பயில் கோதைம ணமுதற் கண்ட ஞான்றுதன் கண்ணெனுங் கைகளால் நொண்டு கொண்டு பருகிய நோக்கமொன் றுண்டெ னாவி யுருக்கி யிடுவதே. இ-ள். யான்பயின்றகோதை கூட்டத்திற்குமுன்னே கண்ட வன்று தன்கண்ணென்னுங்கைகளாலே முகந்துகொண்டுபருகிய என்னாவியை யுருக்குவதோர் நோக்கமுண்டு; அஃது இப்பொழு தும் உருக்கா நின்றதென்றானென்க. பருகிய நோக்க மென்க. இஃது அவளூடலுடன் றோன்றிய தேயன்றித் தலைநாட்டோன்றியவாறுந் தோன்றினமை கூறிற்று. (74) 1631. காத லாளுட லுள்ளுயிர் கைவிடி னேத மென்னுயி ரெய்தியி றக்குமற் றாத லாலழி வொன்றில ளல்லதூஉம் மாதர் விஞ்சையும் வல்லளு மல்லளோ. இ-ள். யாம் இருதலைப்புள்ளின் ஓருயிரேமாதலிற் காலாளுயிர் நீங்கில் என்னுயிரும் ஏதமெய்திநீங்கும்; இதுநீங்கா மையின், அவளும் இறந்துபட்டிலள்; இதுவும் அறிதற்கோரு பாயம்; அல்லதிலும் விஞ்சையும்வல்லளல்ளோ? அதனாற் பன்னிருமதியினென்று தேவன் கூறியவதனையும் பிற பான்மை களையுமுணர்ந்து ஆற்றுவளென்றா னென்க. அல்லதிலுமென ஏழுனுருபுவிரிக்க.அல்லதூஉமென்றது-முன் வருந்து வளோவென்றதனையுமுணர்த்திற்று. அவட்கு மிக்கவருத்த மின்மை மேல் வரவிடும் ஒலை யானும், இவன் சென்ற காலத்துக் குணமாலையிடத்தே போமென்றதனானு முணர்க. (75) 1632. காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமாற் றாது துற்றுபு தங்கிய வண்டனார்க் கேத மிற்றென வெண்ணுமென் னெஞ்சரோ. இ-ள். தாதையுண்ணாநின்று அதிலேதங்கிய வண்டை யொக்குந் தலைவராயினார்க்குக் காதலான்வருமேதம் இவ்வாறு பெருகுமா யிருந்த தென்று அறிவுடையோர் என்னையிகழ்ந்து கூறும்படி நெஞ்சு எண்ணா நின்றது; இங்ஙனமெண்ணும்படி காதன்மிக்கவிடத்துத் துன்பத் திற்குத் துணையென்று கற்ற கல்வியும் பிறர்குற்ற நீக்குதற்கு உதவுதலன்றி என்குற்றநீக்குதற்கு உதவாதொழிதல் கண்ணினுட்கிடந்த வஞ்சனத்தை யொக்கு மாயிருந்தது; இங்ஙனம் இஃது உதவா தொழிதற்குச்செய்த தீவினை யாதென்றனென்க. பகதத்தன் வருத்தத்திற்கு யானுரைத்தாங்கு என்வருத்தத் திற்கும் உணர்வுடையோர் இவ்வாறுகூறுவரென்று அவர் கூறுமொழியைத் தான்கொண்டுகூறினான். எண்ணுமென்றது-இறந்துபடுமோவென்பது முதலியவற்றை.நெஞ்செனவே எனது நெஞ்சென்பதுபடும். என்- “என்னெனப் படுங்கொ றோழி” (அகநா.206: குறுந்.194) போனின்றது. கண்ணினுட்கிடந்த அஞ்சனம் அதற்குப் பயன் கொடாததுபோலக் கல்வி நெஞ்சிற் கிடந்தும் பயன்றந்த தில்லையென்றான். சச்சந்தனை நந்தகோன்முதலா யினாரும் இழித்துக்கூறினமை கண்டு நமக்கு இது தகாதென்றான். இனி இற்றெனவென்னெஞ்செண்ணும்; இது வண்டனார்க்கு ஏதமென்றுமாம்; இற்றென்றது முற்கூறிய வருத்தத்தை. வண்டன் னார்-உத்தமர். இனி வண்டன்னார்-தபோதனர்; பிரமராசனரா தலின், அப்பெயராயிற்று. அவர்க்கேவருத்தமில்லாத தென்று எண்ணுமென்றுமாம். இன்று-இற்றென விகாரம். (76) 1633. நறவெங் கோதையர் நன்னலங் காதலான் மறவெங் காமத்து வந்துற்ற தீவினைப் பறவைத் தேர்நர கத்துப்ப தைக்குங்கா லறிவ னல்லதங் கார்சர ணாகுவார். இ-ள். மகளிர் நலத்தினுள்ள காதலானும் , அவரைப் புணர்த லானும்வந்து சேர்ந்த தீவினையாகிய பறத்தற்றொழி லையுடைய தேரிலேபோய் நரகத்தே பதைக்குங்கால் அவ்விடத்தே யறிவனல்லது வேறு சரணாவாரில்லையே; ஆதலின், ஈண்டு அவனேயன்றே சரணென்றானென்க. (77) 1634. வேட்கை யூர்தர விம்முற வெய்திய மாட்சி யுள்ளத்தை மாற்றிம லர்மிடை காட்சிக் கின்பொய்கைக் காமர்நலனுண்டு மீட்டு மங்கிருந் தான்விடை யேறனான். இ-ள். ஏறனான் வேட்கை மேலிடுதலாலே, வருத்தமுற்ற மாய்தலையுடைய உள்ளத்தைக்கெடுத்து அப்பொய்கையின் லத்தை நுகர்ந்து மீட்டும் அவ்விடத்தேயிருந்தானென்க. வருத்தத்திற்குக் காரணமாகின்றவிடத்து இருத்தலருமை தோன்ற, மீட்டுமென்றார். (78) வேறு 1635. நேரார் நேரு நீணிதி துஞ்சுந் நிறைகோயி லாரா வெம்போ ராய்தட மித்த னரசற்கு நாரார் கற்பின் னாகிள வேய்த்தோ ணளினைக்குஞ் சீராற் றோன்றிச் செல்வமொ டெல்லாந் திருத்தக்கான். 1636. விண்டார்த் தேய்க்கும் வெம்பரி மான்றேர் விசயன்னென் றுண்டா நின்றான் றன்பு கழூழி யுலகேத்த வண்டார் சோலை வார்மண நாறப் புகுகின்றான் கண்டான் சேர்ந்தான் காளையைக் கல்விக் கடலானே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். அரசனாகிய தடமித்தனுக்கும், நசையார்ந்த கற்பி னையுந் தோளினையுமுடைய நளினைக்குந் தலைமையோடே பிறந்து, செல்வத்தோடே கல்விமுதலியனவெல்லாம் அழகு தக்கவன், விசயனென்று பெயர்கூறப்பட்டு உலகமெல்லாந் தன் புகழ் ஊழிக்கால முண்டாக வேத்தநின்றவன், பகைவர்தரு நிதிதங் குங் கோயிலிற் சோலையிலே தன் மணநாறச்செல்கின்றவன் கல்விக்கடலானாகிய காளையைக் கண்டான் கண்டு சேர்ந்தானென்க. மணநாறுதலாற் கண்டானென்றுமாம். (79-80) 1637. இந்நாட் டிவ்வூ ரிவ்விட மெய்தா ரிவண்வாழ்வா ரெந்நாட் டெவ்வூ ரெப்பெய ராய்நீ யுரையென்றாற் கந்நாட் டவ்வூ ரப்பெய ரல்லாப் பெயர்சொன்னான் பொய்ந்நாட் டேனும் பொய்யல வாற்றாற் புகழ்வெய்யோன். இவண்-இவ்வுலகில். என்றது தனக்கு நடக்குமிடத்தை. இ-ள். அங்ஙனஞ்சேர்ந்தவன் இவ்வுலகில் இந்நாட்டில் இவ்வூரில் வாழ்வார் இவ்விடத்தைச்சேரார்; ஆதலின், இவன் இவ்விடத்தானல்ல னென்று உட்கொண்டு நீ எந்நாட்டில் எவ்வூரில் எப்பெயரையுடையாய்? உரையென்றுவினாயினாற்கு, புகழ்வெய்யோன்றான் சொல்லாற் பொய்யா நாட்டிக் கொள்ளப் பட்டதாயினும் பொருளாற் பொய்யல்லாத தோர் வழியாலே ஏமாகங்தமென்னுநாட்டில் இராசமாபுரத்திற் சீவக னென்னும் பெயரையன்றிப் பொருளான் அப்பெயரேயாகக் கூறினா னென்க, எனவே மறைந்தொழுகுகின்றமை பெற்றாம். (81) 1638. வாமான் றிண்டேர் வள்ளலு முள்ளம் மிகைகொண்டெங் கோமாற் குய்ப்பென் கொள்பயன் மிக்கான் கொலைவேலா னேமா றில்லா விந்திர னேயும் மிவனொவான் போமா றாய்வென் பொற்பொடு கூடும் வகையென்றான். வாமான்-தாவுமான்.கோமாற்கு-உருபுமயக்கம். இந்திரனும், உம்மை-சிறப்பு; ஏகாரம்-பிரிநிலை. இ-ள். ஏத்தொழிலில் நிகரில்லாத விந்திரனும் இவனை யொவ் வானாதலின், இக்கொலைவேலான் யாங்கொள்ளும் பயன்மிக்கவ னென்று வள்ளலுந் தன்னறிவின் மிகையாலே குறிக்கொண்டு எங்கோமானிடத்தே யிவன்நெஞ்சாலே சென்று கூடும் கூற்றாலே செலுத்துவேன்; அங்ஙனஞ் செலுத்துதற்கு இவனெஞ்சுபோம்வழியை ஆராய்ந்து பார்ப்பேனென்று கருதினா னென்க. (82) 1639. பூங்கழ லானைப் புண்ணிய நம்பி முகநோக்கி யீங்கிது நின்னா டிப்பதி நின்னூ ரிதுநின்னில் வீங்கிய திண்டோள் வெல்புக ழாய்நின் கிளையென்றாற் காங்கது வெல்லா மண்ணலு நேர்ந்தாங் கமைகென்றான். இவனையெதிர்ப்படுதலின், விசயனைப் புண்ணிய நம்பி யென்றார். இ-ள். விசயன் சீவகன்முகத்தைப்பார்த்து, வெல்புகழாய்! இங்ஙனநட்புக் கொண்டவிடத்து இந்நாடு நின்னுடையநாடு; இவ்வூர் நின்னுடையவூர்; இந்த இல்நின்னுடையஇல்; யாங்களெல் லாம்நின்னுடைசுற்றமென்றுஉறவுகூறினானுக்கு, அவ்விடத்துக் கூறிய உபசாரத்தினது பன்மையெல்லாவற்றையும் அண்ணலும் அப்பொழுது உடன்பட்டு இனியிவை மொழியற்க வென்றா னென்க. (83) வேறு 1640. மன்னவன் சிறுவ னாங்கோர் மாங்கனி யுண்ணலுற்று மின்னவிர் கணையிற் பல்காற் பிழைப்பெய்து மீண்டு நிற்பப் பொன்னவிர் கழலினானப் பொருசிலை கணையின் வாங்கி யின்னமிர் தூறு கின்ற விருங்கனி யறவெய் திட்டான். இ-ள். விசயன் அவ்விடத்தே ஒருமாங்கனியையுண்ணக் கருதி அதுவருதற்குக்கணையாலே பிழைப்பவெய்துஅக்கருத்து மீண்டு நின்றானாக, சீவகன் வில்லை அம்புடனே வாங்கி அக்கனி யையறும் படி யெய்தானென்க. (84) 1642. எய்தவக் கணையு மாவி னிருங்கனி யதுவும் பூமிக் கெய்தவச் சிலையி னெல்லை யணுகலு மேந்த னோக்கி யெய்தவவ் விடத்து நின்றே யெய்தவத் தடக்கை கொண்டாற் கெய்தச் சென்றைய னாரத் தழுவிக்கொண் டிதனைச் சொன்னான். இ-ள். தானெய்த அவ்வம்பும், மாவினதுகனியாகியவதுவுந் தானெய்த அவ்வில்லினதுயரத்திலே பூமிக்கணுகினவளவிலே, ஏந்தல் பார்த்து எய்தவவ்விடத்தே நின்று எய்தவக்கையிலே வாங்கிக் கொண்டவனுக்கு விசயன் அணுகச்சென்று தழுவிக் கொண்டு இதனைக் கூறினானென்க. (85) 1642. வண்சிலை கொண்ட வாறும் வார்கணை தொடுத்த வாறுங் கண்களை வைத்த வாறுங் கற்செய்தோ ளிருந்த வாறுந் திண்சரம் விட்ட வாறுஞ் சென்றுகோல் பாய்ந்த வாறுங் கண்டெலாம் வியந்து நோக்கி வில்லுடைக் கடவு ளென்றான். இ-ள். முட்டிவிசேடமான படியையும், நிலைவிசேடமாக நின்று கணையைத் தொடுத்தபடியையும், இலக்கடைந்த படியையும், தோள்பிறழாமற் கிடந்தபடியையும், அம்புவிட்ட நொய்ம்மை யையும், கோல் காம்பையறுத்துக் கூடவந்தபடியையும் எல்லாங் கண்டு அதிசயித்து அவனைப்பார்த்து நீ வில்லைப் படைத்த கடவுளென்றா னென்க. (86) 1643. மராமர மேழு மெய்த வாங்குவிற் றடக்கை வல்லி லிராமனை வல்ல னென்ப திசையலாற் கண்ட தில்லை உராமன மிவன்க ணின்றி யுவக்குமா செய்வ லென்று குராமலர்க் காவு நீங்கிக் கோயிலே கொண்டு புக்கான். இ-ள். வில்லைத் தேவிபொருட்டுவளைத்த கையிணை யுடைய இராமனை மராமர மேழும் உருவவெய்த வலிய விற்றொழிலை வல்லனென்பது வார்த்தையன்றிக் கண்ணாற் கண்டதில்லை; இது கண்டேன்; இனி நீங்கிப்போமுள்ளம் இவனிடத்தின்றாக இவனுவக்கு மாறு செய்வேனென்று உட்கொண்டு, தான் காவினின்றுநீங்கி அவனைக் கோயிலிலே கொண்டு புக்கானென்க. (87) 1644. வழிவரல் வருத்த மோம்பி வயிரப்பூ ணணிந்த மார்ப னழிகவுள் யானை வேந்தற் கவன்றிற மறியச் சொன்னான் மொழியெதிர் விரும்பி மன்னன் மூரிவிற் றடக்கை யாற்குக் கழிபெரு முகமன் கூறிக் காதலங் காளை யென்றான். இ-ள். விசயன், வழிவருதலாலுண்டான வருத்தத்தை உணவு முதலிய வற்றாலே தீர்த்துத் தடமித்தனக்கு அவன் கூறுபா டெல்லா மறியக் கூறினான்; அவனும் அக்கூற்றையெதிரே விரும்பிச் சீவகனுக்கு மிகப்பெரிய உபசாரங்களைக்கூறி, காளாய்! நின்மேற் காதலையுடையேமென்றானென்க. (88) 1645. கிலுத்தங்கூர்ப் பரங்க ளென்னு மிரண்டினுட் கிலுத்தஞ் சார்ந்து நலத்தகு விரல்க ளைந்தி னிம்பர்மூ விரலி னீளஞ் சிலைத்தழும் பியானைத் தோலி னூற்றுரை சிறுமீ னொத்த விலக்கணக் கிடக்கை கண்டே யேவினுக் கரச னென்றான். கிலுத்தம் - முன்கைச்சந்து. கூர்ப்பரம் - முழங்கைக்குமுன். யானைத்தோல் காழ்ப்பேறினபடிக்கும், அதிலே நூற்றை யுரைத்தது வெண்மைக்கும், சிறுமீன் தழும்பின் வடிவிற்குமுவமை. இ-ள். அவன் பின்னுங் கிலுத்தங் கூர்ப்பாமென்ற விரண்டிலும் முன்கைச்சந்தைச் சேர்ந்து உத்தமவிலக்கணத்தை யுடைய விரல் களைந் திற்கருகே யானைத்தோலின் நூற்றுரையை யுஞ் சிறு மீனையு மொத்த மூவிரலினீளத்தையுடைய சிலைத்தழும் பாகிய இலக்கணத் தினது கிடக்கையைக் கண்டே விற்றொழிலுக்கு அரச னென்றனென்க. (89) 1646. அண்ணலஞ் சிலைவ லாரு ளமோக வாசா னிற் பின் விண்ணகு வெள்ளி வெற்பின் விஞ்சைய ருலகி னல்லான் மண்ணகத் தில்லை யென்பார் வாயினை மடங்க வந்தான் புண்ணகத் துறையும் வேலா னெனப்புகழ்ந் தரசன் சொன்னான். அமோகமாவாசான் - தப்பாத பெரிய ஆசாரியன். இன் –உருபு மயக்கம். இன்னும், ஐயும் அசை. இ-ள். பின்னுந் தலைமையையுடைய வில்வல்லாரிற் றுரொணா சாரியனுக்குப் பின்பு விஞ்சையருலகினல்லது மண்ணிடத்து வில் வல்லாரில்லை யென்பார் வாய்மடங்கும்படி வேலான் றோன்றினா னென்று புகழ்ந்து, அரசன் பின்னும் ஒருமொழி கூறினானென்க. அது மேற் கூறுகின்றார். (90) 1647. விற்றிற னம்பி தேற்றான் விருந்தின னிவனு மன்றி மற்றுமோர் நால்வ ருள்ளார் மாண்பினால் வளர்ந்த தில்லை கொற்றநீ கொடுக்கல் வேண்டுங் குறையெனக் குருசி னேர்ந்தா னற்றைநா ளாதி யாக வவர்களும் பயிற்று கின்றார். இ-ள். விசயன் வீற்றிறலையறியான்; அதற்குப் புதியன்; இவனு மன்றி வேறுமொரு நால்வருளர்; அவருங் கல்வி மாட்சியோடு வளர்ந்ததில்லை; இவர்களுக்குக் கல்வி நீ கொடுக்க வேண்டும்; இஃது எமக்குக் காரியமெனச் சொன்னானாக, அதற்குச் சீவகனுநேர்ந்தான்; நேர்ந்தபின்பு அற்றைநாள் முதலாக அவர்களும் அக்கல்வியைப் பயில நின்றாரென்க. (91) வேறு 1648. கழலிற் செந்தா மரையடிகள் புல்லித்தங் காதல் கூர நிழலி னீங்கார் நினைத்தன நினைப்பி னமைவா னாக்கி யழலிற் சாரா தகலா தொழுக வொருநா ளவன்போகிப் பொழிலின் மிக்க தனிற்புக்கான் மணமகளிர் போற் பொ லிந்ததே. இ-ள். அங்ஙனம் பயிலுகின்றவர்கள், செருப்புப் போலே யடிகளைப் பொருந்திக் காதல் மிகுதலாலே நிழல்போல் நீங்காராய், அவனினைத்தனவற்றை ஒருகணத்தின் முடித்துத் தீப்போலே யணுகாது. அகலாதொழுகாநிற்க, அவன் ஒருநாளிலே போய்ப் பொழில்களில் நன்மைமிக்கதொன்றைச் சேர்ந்தான்; அதுவும் பலமணத்தால் மணமகளிரைப்போலப் பொலிந்த தென்க. “ஒண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும் - விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும்” (பதிற். 30) என்றார் பிறரும். (92) 1649. பாசிப் பாசத்துப் பைம் பொனிரைத்தாலி பூத்த வேங்கை மாசில் வெண் டுகிலை நீர்தோய்த்து மேற்போர்த்த வண்ண மேபோற் காசின்மட் டொழுகப் பூத்த வழிஞ்சில்கண் ணார்கவின் கொண்டன பேசிற் செந்தலைய வெண்கறைய புன்கம் பொரிய ணிந்தவே. இ-ள். வேங்கை பச்சைக்கயிற்றிலே நிரைத்த பொற்றாலி போலே பூத்தன; அழிஞ்சில் வெண்டுகிலை நீரைத் தோய்த்து மேலே போர்த்தாற்போலே தேனொழுகும் படி பூத்தன; புன்கு செந்தலையவெண்கறையவாகிய பொரிபோலே பூத்தன; இவற்றைக் கூறில் இவைதாங் கண்ணிற்கார்ந்ததொரு கவின் கொண்டனவென்க. (93) வெள்ளைமறுவை யுடையனவென்க. 1650. கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய வோடு தேர்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங் கூடு கோழிக் கொழுமுள் ளரும்பின வங்கோ சிக வாடை பூத்தன பாதிரி வெண்க டம்புபந் தணிந்தவே. குறட்டோடே ஆர்களழுந்தத் தைத்துசெய்த தேருருளை; இ-ள்.மகிழ் தேருருளைபோலே பூத்தன; சண்பகங் கோழி யிடத்தே கூடின முள்ளுப்போலே யரும்பின; பாதிரி கோசிகப் பட்டுப்போலே பூத்தன; வெண்கடம்பு பந்தணிந்தனவென்க. (94) 1651. வெருகு வேட்பச் சிரிப்பனபோன் முகைத்த முல்லை வெய்யவா ளரவு பைத்தா வித்தன்ன வங்காந்த ளவிழ்ந்த லர்ந்தன குரவங் கொண்ட குறும்பூழ்போற்கொழுங்கான் முகைசு மந்தன குருதிக் கூரெயிறு கூத்தியர்கட் கொண்ட கொடித்த ளவமே. இ-ள்.முல்லை வெருகு விரும்பச்சிரிப்பன போலே யரும்பின; குருதிக்காந்தள்பாம்பு படத்தை விரித்துக் கொட்டாவி கொண்டாலன்ன வாக முகைநெகிழ்ந்து பின்பு அலர்ந்தன; குரவங் கையிலேபிடித்த குறும்பூழின் கால்போலே கொழுவிய முகையைச்சுமந்தன; தளவங்கூத்தியரிடத்துக் கூரெயிறு போலே யரும்பினவென்க. கொடுமை தோன்றக் குருதிகூறினார். (95) 1652. சொன்ன நன்மலரு மல்லனவும் வீழ்பல வின்சூழ் சுளைகளு நன்மை நூலி னயந்தோன்ற நன்பொன் விரலி னுதியினாற் பன்மணியு முத்தும் பவளமும் பைம்பொன்னுங் கோத்தா லொப்ப வென்ன வமரரு மருளத் தொடுத்தா னினமா லையே. இ-ள். மாலைகட்டுமாறு கூறிய நூலினயந்தோன்றத் தேவரு மருளமணி முதலியனவற்றைக்கோத்தாற்போலே முற்கூறிய மலர் களையும்ஒழிந்தவற்றையுஞ் சுளைகளைச்யையுங் கொண்டு விரனுதி யாலே ஒருவகைமாலையைக் கட்டினானென்க. (96) 1653. ஊனுண் சிங்கக் குழவி யெயிற்றே ரொளியெ யிற்றினான் றேனுண் போதிற் பிணையலும் பந்தும் புனைந்து தேமார்ந்த நானந் தோய்த்து நனைகலவை நாறு மதந்தெ ளித்தபின் பானுண் டீஞ்சொல் லாளோர் படுவிவண் டார்ப்பவந் திறைஞ்சினாள். இ-ள்.சிங்கக்குழவியின்எயிற்றையொக்குமெயிற்றினான், அவ்வகைமாலையொழியப் போதாலேஒரு மாலையையும் பந்தையும் பின்னுங்கட்டி யிவற்றை யினிமைநிறைந்த புழுகைத் தோய்த்து அவற்றினரும்பு களுக்குச் சந்தனத்தோடு கூடிய பனிநீரையும் புழுகையுந்தெளித்தபின்பு, பாலைப்போலத் தீவிதாகிய கூரியசொல்லை யுடையாள் ஒருதொழில்செய்யுங் குறளி வந்து வணங்கினாளென்க. ஓலைப்பாசுரமான மாலையைப் பிறரயிராதபடி யிவையுங் கூடக் கட்டினான். “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை” என்றதனுட் கொடையென்றதனாற் சிங்கங் குழவியுங்கொண்ட வாறுகாண்க. (97) 1654. நெடிய வாட்கண்கள் வாயா விமைப்பெ னுஞ்சொல் லின்மற்றெங் கொடியிற் கொத்த விவையென்றா ணம்பியுங் கொள்க வென்றான் வடுவும் வேலு மலருங் கயலும் வனப்ப ழித்தகண் ணடியஞ் சிலம்பி னாட்குய்த் திறைஞ்சிக் காட்ட வவள்கொண்டாள். இ-ள். அப்படுவி தன்கண்கள் வாயாக இமைப்பென்னுஞ் சொல்லாலே இம் மாலைகளும் பந்துங் கனகமாலைக்குப் பொருந்தினவென்றாள்; சீவகனுங்கொள்கவென்று கொடுத்தான்; கொடுத்தபின்பு அவனை வணங்கி அவற்றைக் கொண்டுபோய் வடு முதலியவற்றைக்கெடுத்த கண்ணினையும் அடியிலே சிலம் பையு முடையாளுக்குக் காட்ட, அவளும் வாங்கிக் கொண்டா ளென்க. படுவி குறிப்பறிந்து கொடுத்தான். (98) 1655. கொண்டு கோதை மலரெழுத்து மெல்விரலின் மேற்றாங்கி நோக்கும் வண்டு சேர்ந்த குழலாள் வருமுலைகள் பாய வண்டார் விண்டு தேன்று ளிப்ப வேற்றடங்கண் டாமாடு நாடகங் கண்டு வாழா தவர்வாழ்க்கை யெல்லாஞ் சவரர் வாழ்க்கையே. 1656. ஆம்ப னாறு மரக்கார் பவழ வாயார முதன்னார் பாம்பு பைத்தாங் கனைய பவழப் படவர வல்குலார் தாம்ப லருமருட்ட வகி றவழுந் தண்பூ வணைக் காம்பின் மென்றோள் கவின்வளர வைகல் கலப்பென் பவே. 1657. ஆகந் தானோர் மணிப்பலகை யாக முலைக ணாயாகப் போகக் கேற்ற புனைபவழ வல்குல் கழக மாக வேக வின்பக் காமக் கவறாட லியைவ தன்றே லாக நோற்றிட் டடங்க லாண்மைக்க ழகென் பவே. இiவ மூன்றுமொரு தொடர். இ-ள். அம்மாலையைவாங்கிக் கொண்டு விரல்மேலே தாங்கி மலராகிய வெழுத்தை வாசிக்குங் குழலாள், அரக்காம்பல் போல நாறும்பவழவாயார், அமுதன்னார், பாம்பின் படமனைய வல்குலா ராகிய மகளிர்தாம் பலருமாடு நாடகங்களைக்கண்டு வாழாதவர் வாழும் வாழ்வெல்லாம் மக்கட் பிறப்பிற் பிறந்தும் நன்குநுகராத வேடரது வாழ்வாயிருக்கும்; அதுவேயன்றி அவரைக்கலக்குமிடத்து வேற்றடங்கண்டாம் பாம்புபைத்தாங்கு மருட்ட வளவிய தார் தேன்றுளிக்கும்படி வருமுலைகள்பாய அவர்தோள் கவின்வளர அணையிலேதங்குதல் கலப்பென்று கூறுவர்; அங்ஙனங்கலந்து தனதாகம் பலகையாக அவர் முலைகள் நாயாக வல்குல் சூதுபொருமிடமாக இணையில்லாத வின் பத்தையுடைய காமமாகிய கவறாடல் கூடாதாயின், இவை யெல்லாம் மேலுண்டாம்படி தவஞ்செய்தடங்குதல் ஆண்மைக் கழகென்று கூறுவாரென்று வாசித்தாளென்க. குழலாள் வாசித்தாளென்க. விடமேறினாற்போலே மருட்ட. நாடகம் - அவர் வசீகரிக்கிற நிலைமை. (99-101) வேறு 1658. பின்னி விட்ட பிடித்தடக்கை யிரண்டு போன்று திரண்டழகார் கன்னிக் கலிங்க மகிலார்ந்து கவவிக் கிடந்த குறங்கினாண் மின்னுக் குழையும் பொற்றோடு மிளிர வெருத்த மிடங்கோட்டி யென்னு மிமையா ணினைத்திருந்தா ளியக்கி யிருந்த வெழிலொத்தாள் இ-ள். முறைமைப்படநோக்கி யிடைவெளியின்றி யிருத்தலிற் பிடியினுடைய சேர்த்துவிட்ட கையிரண்டையொத்துத் தாந்திரள் வதுஞ் செய்து கணவன் றீண்டாத கலிங்கம் விரும்பிக் கிடந்த குறங்கினாள், அங்ஙனம்வாசித்துக் குழையுந் தோடும் பிறழக் கழுத்தையிடத்தே சாய்த்துச் சிறிதுமிமையாளாய் அவனிடத்துப்புணர்ச்சியை நினைத் திருந்தவள் இயக்கியிருந்த வழகையொத்தாளென்க. இயக்கியுந் தனக்குமேலாமிறைவனைத் தியானித்து இமையா திருப்பா ளென்றுணர்க. (102) 1659. கொடுவெஞ் சிலையைக் கொளையமைத்துக் கொதிநீர்ப் பகழி கொளவாங்கி கடுவெங் குறவ னெயப்பட்ட கன்னிப் பிணையி னிலைகலங்கித் தொடிதோ ணடப்பத் தோடேம்பத் துணைவெம் முலைகள் பசப்பூர நெடுமாத் தோகை மென்சாய னெஞ்சிற் கிவ்வாறு ரைக்கின்றாள். இ-ள்.அங்ஙனமிருந்த பெரிய மயில்போலுஞ் சாயலை யுடையாள் வில்லைநாணேறிட்டு அம்பை நிரம்பவலித்துக் குறவனெய்யப்பட்ட கன்னிப்பிணையினிலையைத் தப்பித் தொடி தோளில் நின்றும் விழும் படி தோண்மெலியாநிற்க, முலைகள் பசப்பூரா நிற்க நெஞ்சிற்கு இப்படிக் கூறாநின்றாளென்க. நிலையைத் தப்புதல் - இறந்துபாடு நீங்குதல். மாலையைத் தன்சேடிகொண்டுவருதலின், அவற்கு நிகழ்ந்த வேட்கை தன்னிடத்தே யென்றுகருதி இறந்துபாடு நீங்கினாள். பிணை போலென்றால் மேல்வருத்தமின்றி யிறந்துபாடு தோன்றுமாம். (103) 1660. ஒன்றே யெயிற்ற தொருபெரும்பே யுலகம் விழுங்க வங்காந்து நின்றாற் போல நிழலுமிழ்ந்து நெடுவெண் டிங்க ளெயிறிலங்க வின்றே குருதி வானவா யங்காந் தென்னை விழுங்குவா னன்றே வந்த திம்மாலை யளியே னாவி யாதாங்கொல். ஏ-அசை. இ-ள். ஓரெயிற்றையுடையதொரு பெரும்பேய் உலகத்தை விழுங்கும்படி வாயையங்காந்து நின்றாற்போலே இம்மாலை திங்களாகியவெயிறு நிழலுமிழ்ந்திலங்கச் செக்கர்வானாகிய வாயையங்காந்து என்னை யின்றேவிழுங்குதற்கு வந்துற்றதல்ல வோ, இனி யென்னாவி இதன்கண்ணதோ, என்கண்ணதோ, அறிகிலே னென்றாளென்க. வந்ததென விரைவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறினாள். (104) 1661. வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற்கேட் \ டில்கடிந்தா முருந்தின் காறுங் கூழையை முனிவார் நின்னை யென்முனிவார் பொருந்திற் றன்றா லிதுவென்னாய் பொன்று மளித்திவ் வுயிரென்னாய் திருந்து சோலைக் கருங்குயிலே சிலம்ப விருந்து கூவிதியால். இ-ள்.நல்ல சோலையிற்குயிலே! நீயருள்செய்து மாலை வரு கின்றகாலத்தே யாங்கூவுதல் பிரிந்தவிவர்க்குப் பொருந்திற் றன்றென்றுங் கருதாயாய் இவருயிர்தான் போமென்றுங் கருதாயாய் முழங்க விருந்து கூவாநின்றாய்; இத்தன்மையை யுடைய நின்னை வருந்திப்பெற்றவள் அவ்வருத்தத்தையுமறந்து உறவைக்கைவிட்டாள்; எடுத்துவளர்த்தவளும் நின்சொல்லின் கடுமையால் இல்லினின்றுங் கடிந்தாள்; நீதான் என்பளவுஞ் செல்லும் மயிர்ப்பாடுமுடையை; ஆதலின், இனி நின்னை வெறுப்பார் நின்பிறப்பையோ, வளர்ப்பையோ, வடிவையோ வெறுப்பாரென்றாளென்க. கருங்குயிலேயென்றது சோலைக்கு மறுவேயென்ற தன்மைத்து. இது செறலின்கட் டிணைமயக்கம். (105) 1662. பெருவெண் டிங்கண் மாலகப்பூ மலைந்து பெட்ப நகுகின்ற துருவு கொண்ட குரலன்றி லுயிர்மே லாம்ப லுலாய் நிமிரு மொருபெண் பாலேன் யானாக வுலக மெல்லாம் பகையாகி யெர்கொன் றீன்ற விலைப்பலிபோ லிருத்தி யாலென் னின்னுயிரே. இ-ள். அன்றில்கள் தங்குரலாலே வடிவைக்கொண்டன; திங்கள்அகப்பூவோடே மலைந்து அதன்கேடு கண்டு மிகவும் நகா நின்றது; ஆம்பலென்னும்பண் சுற்றிலேயுலாவி இவ்வுயிரின் கேடுகண்டு இதன்மேலே நடவாநின்றது; இங்ஙனம் உலகிலுள்ள பொருளெல்லாம் பகையாகுதற்குப் பற்றாதே யானொரு பெண் பாலேனோ யிருந்தேனென்றுட்கொண்டு யானிங்ஙனமாகவுங் கொடிய வுயிரே! நீ தீமேய்ந்து வேறோர் வடிவாகவீன்ற இலைச் சாம்பல் போலே யிராநின்றாய்; நீயிருக்குமளவன்றால்; நினக்கு நினைவு என்னென்றாளென்க. அகப்பூ - இதயகமலம். உலகு - ஆகுபெயர். ஆகி - ஆக. பின்னும் இலை போறலின், ஈன்றவென்றார். இது தொழிலுவமம். (106) 1663. வேமென் னெஞ்ச மெய்வெதும்பும் விடுக்கு மாவி வெய்துயிர்க்கும் பூமென் குழலார் புறநோக்கி நகுவார் நகுவ தாயினேன் தாம மார்பன் றான்புனைந்த தண்ணென் மாலை புணையாக யாமக் கடலை நீந்துவேன் யாரு மில்லாத் தமியேனே. ஏகாரம் - எதிர்மறை. இ-ள். காமத்தீயால்நெஞ்சுவேகலின், மெய் வெதும்பா நின்றது; உடம்பைக் கைவிடுகின்ற ஆவியும் போகாதே நின்று நெட்டுயிர்ப்புக் கொள்ளாநின்றது; யானும் மகளிருடைய பொல் லாங்கைப்பார்த்து நகுவார் நகப்படும் பொல்லாங்கின் வடிவாயி னேன்; இங்ஙனமாகிய தமியேன் மாலைபுணையாக யாமமாகிய கடலைநீந்துவேன்; நீந்துதலரிதென்றாளென்க. அவன்கையாற் புனைதலின் அதுகொண்டுநீந்தலாமோ வென நினைத்து அதனை மறுத்தாள். (107) 1664. செம்பொற் கடம்பன் செவ்வேலுங் காமன் சிலையிற் றொடுத்தலர்ந்த அம்பும் வென்ற வரிநெடுங்க ணம்மா மதிவாண் முகத்தினாள் வம்பு பூத்து முருகுலாய்த் தேன்கொப் புளித்து நின்றதோர் வெம்பு வெந்தீ யிடைப்பட்ட தொத்தாள் விரைசெய் கோதையே. இ-ள். முருகன்வேலையுங் காமனம்பையும்வென்ற கண்ணினை யுடைய முகத்தினாளாகிய கோதை, பூத்தலான் மணந்தங்கித் தேனைக்கொப்புளித்து நின்றதொரு கொம்பு தீயிடைப் பட்ட தொத் தாளென்க. (108) வேறு 1665. மணிநிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும் அணிநிறப் போர்வை யாய வரும்பெற னாணும் விற்றுப் பணிநலம் புதிய துண்டான் பன்மலர் மாலை கொண்டேன் பிணிநிறப் புறஞ்சொ லென்னும் பெருமிஞி றார்ப்ப வென்றாள். இ-ள். நீலமணிபோலும்மாமையினையும், மென்மையையும், வளையையும், மகளிர்க்குப் போர்வையாகிய நாணையுங் கொடுத்து எல்லாருந்தாழ்கின்ற என்னலத்தைப் புதுமையை யுண்டானது வண்டு மூசுமாலையை, நோயைநிறமாகவுடைய புறஞ்சொலென்னும் மிஞிறார்ப்பக் கொண்டேனென்றாளென்க. (109) 1666. காதலான் காதல் போல வகன்றுநீண் டலர்ந்த வாட்கட் போதுலாங் கோதை மாதர் புனைந்தலர் தொடுத்த மாலை யாதலா லலர தாகா தொழியுமே யழுங்க லென்று மாதுலா மழலைச் செவ்வாய் மடக்கிளி மொழிந்த தன்றே. இ-ள். நின்கணவனது காதல்போலே அகன்று நீண்டு மலர்ந்த கண்ணையுங் கோதையையுமுடைய மாதரே! இஃது அலராற்புனைந்து தொடுத்த மாலையாதலின், அலரிடத்ததா காதேபோமோ, இனி வருந்தாதொழியென்று கிளி யாற்றுவித்த தென்க. (110) வேறு 1667. என்னையுள் ளம்பிணித் தென்னலங் கவர்ந்தவீர்ந் தாரினான் றன்னையா னும்பிணிப் பேனெனத் தண்மணிச் செப்பினுண் மன்னுமா லைகொடுத் தவனுக்குய்த் தீயெனத் தொழுதுகொண் டன்னமென் னவொதுங் கிச்சிலம் பரற்றச்சென் றணுகினாள். இ-ள். என்மனத்தை யிறுகப்பிணித்து என்னலத்தையுங் கொண்ட தாரினான் றன்னை யானும் அங்ஙனம் பிணிப்பே னென்று கருதி, மற்றைநாள் தன்செப்பின் மாலையை யநங்க விலாசினி கையிலே கொடுத்துக் கொண்டுபோய் அவனுக்குக் கொடுவென, அவளுந் தொழுதுவாங்கிக் கொண்டு சென்று அவனை யணுகினாளென்க. (111) 1668. அணுகிமுன் னின்றவ நங்கவி லாசினி யங்கைகூப்பிப் பிணையனீட் டப்பெருந் தகையஃதே லான்முக நோக்கலுந் துணையிறோ கையென்னங் கைக்குத்தொங் கறொடுப் பாயுநீ மணிசெய்மென் றோண்மருந் துநீயா ருயிருநீ யேயென்றாள். இ-ள். அங்ஙனமணுகி முன்னேநின்ற அநங்கவிலாசினி தொழுது மாலையைக்கொடுக்க, அதனை யவன்வாங்காதே அவளைப் பார்த்த வளவிலே, அவளும் ஒப்பில்லாத மயிலாகிய என்னங்கைக்குத் தொங்கல் தொடுப்பாயுநீயே; தோண்மெலிவுக்கு மருந்தும்நீயே; உயிருநீயே; ஆதலின், இதனை வாங்கிக்கொள் ளென்றாளென்க. (112) வேறு 1669. மன்னர் கோயி லுறைவார் பொறிசெ றித்த மாண்பினரே யென்ன வஞ்சி னாயென் றவனைநக் காட்கஃ தன்றுகோதா யின்ன கொள்கை யெற்கேலா தென்ன விலங்கெ யிற்றினா ளன்ன மன்ன நடையினா டான்வ ருந்து மெனநேர்ந்தான். இ-ள். அதுகேட்டவன் அரசர்கோயிலிற்றவங்குவார் ஐம்பொறியையு மடக்குவாரே; இதுதகாதுகாணென்றானக, நீயஞ்சினா யென்று அவனையிகழ்ந்தவளுக்கு, அவன் பின்னும் கோதாய்! அதுவன்று; ஆசிரியனாய் நிற்கின்ற தன்மையேனுக்கு இதுபொருந்தாது காணென்றானாக, அவளுங் கனகமாலை யிறந்துபடும் இதுவாங் காதொழியினென்றுகூற, அதற்கஞ்சி நேர்ந்தானென்க. (113) 1670. குலிகா ர்ந்த கொழுந்தா மரையன்ன வண்கை நீட்டி யொலிய லேற்றா னிஃதூழ் வினையாலுள் ளஞ்சுடு மாலென்ன விலைகொள் பைம்பூ ணிளமுலையாள் போகிக் கனக மாலை மெலிய வெம்பி கைநகின்றா ளுய்யும் வகைதொ டங்கினாள். இ-ள். அங்ஙனநேர்ந்து தாமரையன்ன கையைநீட்டி மாலையை வாங்கினான்; வாங்கி உழுவலன்போலே இதுதான் என்னுள்ளத்தைச் சுடாநின்றதென்றானாக, அதுகேட்டபின், அநங்கவிலாசினிபோய், கனக மாலை வருந்துகின்றவள் பிழைக்கு முபாயத்தைச் செய்யத் தொடங்கினா ளென்க. (114) 1671. நீர்செய் காந்த மணிகூந்த ளம்பா வைநீண் டழகிய வேர்செய் சாந்திற் கழுநீர் விரைகம ழும்பூக்கள் கோத்த வார்செய் தண்டா மரைவளைய மைவரை யின்வெள் ளருவிநீர் சீர்செய் கோமகளைச் சேர்த்தினாள் சீதஞ் செய்யா தொழிந்தனவே. இ-ள்.சாந்தோடேசந்திரகாந்தக்கல்லையும், நீண்டு அழகிய கூந்தளம்பாவையையும், கழுநீரையும், ஒழிந்தபூக்களையும், கோத்த நெடிய தாமரைவளையத்தையும் அருவி நீரையும் கோமகளை யணி வித்தாள்; அவை குளிர்ச்சிசெய்யாதே கொதித்தனவென்க. கூந்தளம்பாவை - பூ விசேடம். (115) 1672. பவ்வத் தங்கட் பிறந்து பனிபெயர்க் குந்தண் ணூற்றதாகி யெவ்வ மன்னர் படவுலகம் விற்கு மரும ணியினைச் செவ்வ னூலிற் சித்திரிக்கப் பட்டதனைச் சேர்த்திப் பின்னு மவ்வ னாறுங் குழலாட்கு மற்று மிவைக ணாடினாள். ஊறு - பரிசம். இ-ள். கடலிலேபிறந்து பனியைக்கெடுக்குங் குளிர்ந்த ஊற் றையுடையதாய் மன்னர் வருத்தமுறும்படி உலகைவிற்குமுத்தை நூலிற்கோக்கப்பட்டதனைப்பின்னுமணிந்தூ குழலாட்கு வேறும் இப்பரிகாரங்களை நாடினாளென்க. (116) 1673. களிசெய் கோசிக நீர்விழக் கடிமாலை மேற்றொ டர்ந்துகீழ் நளிசெய் தண்பூஞ் சலசயன மாக்கி நன்னீர் பிலிற்றும்வாய் குளிர்கொள் சாந்தாற்றி பொன்னால வட்டங்கொண் டேந்தி வீசச் சளிகொள் சந்திற் கொழுஞ்சாந்த மாக முழுது மெழுகினாள். இ-ள். மேலேகட்டி நீரைத்தாங்கிநின்ற கஞ்சிதோய்த்த கோசிகப் பட்டின்நீர் மாலையாலே வந்துவிழும்படி மாலையைச் சூழக்கட்டிக் கீழேசெறிவுசெய்த பூவையுடைய நீரிலே படுக்கை யாக்கி நீரைப் பிலிற்றும் வாயையுடைய சாந்தாற்றி ஆலவ ட்டமென்கின்றவற்றை ஏந்திக்கொண்டு வீசாநிற்க, குளிர்கொண்ட சந்தனக் குழம்பைப் பூசினாளென்க. (117) 1674. கொம்மைவெம் முலையிற் சாந்தங் குளிர்செயா தாவி வாட்ட வம்மென் மாலை முகங்கரிய நீர்துளும்ப நின்று நீடி வெம்மை மிக்கது வீரன் றொடுத்த விளங்கு மாலை பொம்ம லோதிக்குத் தானே துணையாம் புணையா யிற்றே. இ-ள். இளையமுலையிற்சந்தனங்கொதித்து உயிரைக் கெடுக்க, சுற்றினமாலை கருக, கீழ்நின்றநீர் வெம்மையாற் கொதித்தெழநீட்டித்து நின்று வெம்மைமிக்கது; அப்பொழுது வீரன்கட்டினமாலைதானே ஓதிக்குத் துணையாவதோர் தெப்பமாயிற்றென்க. (118) 1675. வாச நீலங் கழுநீர் குவளை படைசாற் றிவந் தோச னைக்க ணுடையு நெடுங்கட் கனக மாலை தாசிதூ தாகத் தாமம் புணையாகச் செல்லு நாளுட் காசில் கல்விக் கடலைக் கரைகண்டார் காளை மாரே. இ-ள். நிலப்பூ முதலியன போர்கூறிவந்து ஓரோசனை நீளத்தே யுடையயும் நெடுங்கண்ணையுடைய கனகமாலை, தனக்கு அநங்க விலாசினி தூதாக, மாலைதெப்பமாக நடக்கின்றநாளிலே, விசயன் முதலாயினார் கல்விக்கடலைக் கரைகண்டாரென்க. (119) வேறு 1676. பொருசரஞ் சலாகை வெய்ய புகன்றனர் துரக்கு மாறும் வருகணை விலக்கு மாறும் வாளமர் நீந்து மாறுங் கருவியுட் கரக்கு மாறுங் கணைபுறங் காணு மாறும் விரியமற் றவர்க்குக் காட்ட வீற்றிருந் தவருங்கற்றார். இ-ள்.வெய்யசரத்தையும் இருப்புநாராசத்தையும் விரும்பி யெய்யு மாறும், தம்மேல் வருமம்பை அம்பாலேவிலக்குமாறும், அமரிலே கொள்ளுநிலமறிந்து கொள்ளுமாறும், எய்தாற் கருவியாலே மறைத்துச் சேமஞ்செய்யுமாறும், சேர்ந்தாற் பகைவர்கணை புறமாக்கித் தங்கணைசெலுத்துமாறும் அவர்க்கு விரியக்காட்ட, அவரும் வருத்தமின்றிக் கற்றாரென்க. எனவே “தொடையும் விலக்குஞ் செலவுஞ் சேமமுந் - தவிர்த்துவினை யெலுமெனவை வினையாம்” இவற்றை வடநூலார் பஞ்சகிருத்தியமென்பர்; இவை தலைமை பற்றி வில்லையே கூறினவேனும் படைக்கலங்கட்கெல்லாம் பொது. (120) 1677. வேலுடைத் தடக்கை யார்கள் வேழமேற் சென்ற போழ்திற் காலிடைக் கரக்கு மாறுங் கையிடைத் திரியு மாறும் வாலிடை மறியு மாறும ருப்பிடைக் குளிக்கு மாறு நூலிடைக் கிடந்த வாறே நுனித்தவன் கொடுக்கக் கொண்டார். இ-ள். தம்மேலே வேழஞ்சென்றபொழுது அதன் காலி டையிலே புகுந்து மறையும்படியையும், அது கையாலே வளைத்த பொழுது அதன்கைக்கு நடுவே யுடம்பு பிறழும் படியையும், அது தால வட்டத்தாலே வீசினால் அதுபடாதபடி போய் அதன் காலிடையிற் புகுதும்படியையும், அதுகோறற்கிறங் கினாற் கொம்பிரண்டிற்கு நடுவேயாம்படியையுங் கூரிதாகக் கற்றவன், அத்தொழிலை அந்நூலிற் கிடந்தபடியே கற்பிக்க, அத் தடக்கையார்களுங் கற்றாரென்க. இது தனித்து யானையுடன் போர்செய்யுமாறுகூறிற்று. (121) 1678. கொடிநெடுந் தேரின் போருங் குஞ்சரங் குறித்த போருங் கடுநடைப் புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி யிடனறிந் திலங்கும் வைவா ளிருஞ் சிலை குந்த மூன்று முடனறிந் தும்ப ரார்க்கு முரைப்பருந் தகைய ரானார். இ-ள். தேராற் பொரக்கருதின போரையும், குஞ்சரத்தாற் பொரக் கருதின போரையும் புரவியாற்பொரக்கருதின போரையும் வெளியாகக் கற்றுத் தழும்பியிருந்து, இவ்வூர்திகளிலிருந்தால் ஒன்றற்கொன்று மாறறிந்து வினைசெய்யுமிடமறிந்து, செலுத்தும் பொழுது இலங்கும் வில்லும், எறிகோலும், வாளுமென்கின்ற மூன்றையுஞ் சேரவறிந்து, மேலாய நிலத்திற்றேவர்க்கும் புகழ்தற் கரிய தகையராயினாரென்க. (122) 1679. தானையு ளன்றி நின்ற தனியிட மொற்றி மன்னர் தானைமேற் சென்ற போழ்தும் வென்றியிற் றளர்த லின்றித் தானையை யுடைக்கும் வெம்போர்த் தருக்கினார் மைந்த ரென்று தானைசூழ் மன்னற் குய்த்தார் மன்னனுந் தருக வென்றான். இ-ள். தாம் படையினுளன்றித் தனியேநின்ற விடத்தை யெய்த்துப் பகைவர் படை மேற்சென்ற காலத்தும் வெற்றியிற்ற ளருந்தன்மை யின்றி, அப்படையைக் கெடுக்கும் போர்த் தொழிலிலே பிள்ளைகள் மிகுத்தாரென்று தடமித்தனுக்குச் சொன்னார்; அவனும் யாங்காணும்படி அவரைக் கொணர்க வென்றானென்க. (123) 1680. மழையொடு சூழ்ந்து கொண்ட வான்றுகள் சிலையி னீக்கிக் குழைமுக நெற்றி நக்கக் கோலவிற் பகழி வாங்கி யிழைபக விமைப்பி னெய்திட் டெறிந்துமின் றிரிவ வேபோல் விழைவுறு குமரர் புக்குச் சாரியை வியத்த ரானார். சூழ்ந்துகொண்ட மழையையுந் தூளியையும் வில்லாலே நீக்குதல் - சரகூடங்கட்டி,அதனால் விலக்கிக்காட்டுதல். அத்திரங் கற்ற தன்மையையும், பயன்கொண்ட தன்மையையும் இத்தொடர் நிலைச் செய்யுளுட் கூறாமையின், நெருப்புநீருமாகிய அத்திரங் களைவிட்டா னென்றல் பொருந்தாது. விசயன் காண்டவன மெரித்ததுஞ் சரகூடங் கட்டியென்றுணர்க. இ-ள்.குமரர், சரகூடங்கட்டிப் பின்பு குழையை நக்கும்படி அவ்வில்லை வலித்துப் பகழியாலே நூல்பிளக்கவெய்து வாளாலே நூல் பிளக்கவெட்டி வேலாலே நூல் பிளக்கவெறிந்து பின்னும் மின்றிரியுமாறுபோலச் சாரியைதிரியுந் தொழிலிலே புக்கு வியக்கத்தக் கராயினாரென்க. மழைகூறவே புயமுட்டியும், துகள்கூறவே சிரோமுட்டியும், குழைநெற்றிநக்க வாங்கியெனவே கந்தரமுட்டியுங்கூறினார்; மேனோக்கியுங் கீழ்நோக்கியும் நேருமே யெய்தலாம். (124) 1681. விசயனே விசயன் விற்போர்க் கதம்பனே முருகன் வேற்போர்த் திசையெலாம் வணக்கும் வாட்போர்க் கந்தணன் செம்பொ னாம னசைவிலான் யானைத் தேர்ப்போர்க் கசலனே யசல கீர்த்தி வசையிலன் புரவிச் சேனென்றி யாவரும் புகழப் பட்டார். இ-ள். விற்போருக்கு விசயன் அருச்சுனனே, வேற்போருக்குக் கதம்பன் முருகனே, வாட்போருக்குத் திசையெல்லாம் வணக்கும் கனகன் பரசுராமனே, யானைப்போருக்குந் தேர்ப்போருக்கும் அசல கீர்த்தி அசைவிலானாகிய அசலனென்னும்வீரனே, புரவிக்குச் சேனன் வசையில்லாதவனே யென்று இவ்வைவரும் எல்லோராலும் புகழப்பட்டாரென்க. வசையிலனென்றது நகுலனை. (125) 1682. காவலன் மக்க ளாக்கங் கண்டுகண் குளிர்ந்து நோக்கி யேவலா னரச னொன்றோ விருபிறப் பாள னல்லார்க் காவதன் றின்ன மாட்சி யவனையா னிகளம் பெய்து காவல்செய் திடுவல் வல்லே காளையைக் கொணர்மி னென்றான். இ-ள். அரசன் மக்கள்கல்வியைக் கண்டு மகிழ்ந்துநோக்கி, அந்த வேலான் ஒன்று அரசனாதல், ஒன்று அந்தணனாதலாம்; இரண்டு மொழிந்த சாதியிலுள்ளார்க்கு இக்கல்வியுண்டாகாது; ஆதலால் அவனை யான் நீங்காதோர் தளையிட்டுச் சிறை செய்வேன்; இப்பொழுதே யவனைக் கொணர்மினென்றா னென்க. (126) நிகளம் - மகட்கொடுத்தல் 1683. கல்வியுங் கொடிது போலுங் காவலன் காளை தன்னை யொல்லலன் சிறைசெய் கின்றா னென்றவன் கருதிற் றோரார் பல்சனம் பரிந்து நிற்பப் பார்த்திப குமரன் சேர்ந்தான் வில்வலாற் கொண்டு வேந்தன் வேறிருந் திதனைச் சொன்னான். இ-ள். அரசன் இக்கல்வியுடைய காளை தன்னைப் பொறா னாய்ச் சிறைசெய்யா நின்றானாதலாற் கல்வியுங் கொடிதுபோலே யிருந்ததென்றுகருதி, அவனினைத்ததறியாராய், பலரும் வருந்தி நிற்கின்ற வளவிலே, சீவகன் சென்றான்; அங்ஙனஞ்சென்றவ வனை அவ்வரசன் வேறே கொண்டிருந்து இவ்வார்த்தையைக் கூறினானென்க. (127) 1684. புண்முழு திறைஞ்சுங் கோட்டுப் பொருகளி றனைய தோன்றன் மண்முழு தன்றி வானும் வந்துகை கூடத் தந்தாய் கண்முழு துடம்பிற் பெற்றேன் காளைகைம் மாறு காணேன் பண்முழு துடற்றுந் தீஞ்சொற் பாவைநின் பால ளென்றான். பறவைகளெல்லாம்படியுங் கோட்டையுடைய களிறு. இவர்க்கு நீ கொற்றங் கொடுத்தலின், மண்முழுதும் வந்துகை கூடுதலன்றி மறுமையின் வானும்வந்து கைகூடும்படி ஞான நெறியையுந் தந்தாய்; நல்வினைசெய்தாருடம்பிற்கண்முழுதும் யான் பெற்றேனென்றது - இவர் போர்த்தொழில் காணப் பெறுதலின் ஊனக்கண்ணும், இவரை நன்னெறியைச் சேர்வித் தலின் ஞானக்கண்ணும் பெற்றேனென்றவாறு. இ-ள். தோன்றல்! தந்தாய்; யானும்பெற்றேன்; ஆதலிற் காளாய்! மைம்மாறு காணேன்; என்பாவை நின்பாலளாகின்ற இவ்வளவே கைம்மாறென்றானென்க. இனி வியந்து கூறுகின்றவன் மண்ணும்விண்ணும் கைகூடத் தந்தாய்; யானும் உடம்பெல்லாங் கண்பெற்றேனென்றுமாம். இந்திரனானேனென்றுமாம். (128) 1685. முடிகெழு மன்னன் சொல்ல மொய்கொள்வேற் குருசி றேற்றான் வடிவமை மனனொன் றாக வாக்கென்றா மறுத்த லோடுந் தடிசுவைத் தொளிறும் வேலான் றன்கையான் முன்கை பற்றி யிடிமுர சனைய சொல்லா லிற்றென விளம்பு கின்றான். இ-ள். அங்ஙனமரசன்கூற, குருசில், தன்கருத்தைத் தெளிவி யானாய் அவன் வடிவுபொறித்துக் கிடக்கின்ற மனம் வேட்கை செல்லா நிற்க வார்த்தை வேட்கையின்றாக மறுத்தவளவிலே, அவ்வரசன் றன்கையாலே அவன்கையைப்பிடித்து இத்தன்மைத் தென்று ஒருமொழிகூறா நின்றானென்க. வடியமை பாடமாயின், ஆராய்ச்சியமைந்தவென்க. (129) 1686. பூவியல் கோயில் கொண்ட பொன்னனா ளனைய நங்கை காவியங் கண்ணி வந்து பிறத்தலுங் கணிக ளீண்டி மூவிய றிரித லின்றிச் சாதக முறையிற் செய்தா ரேவியல் சிலையி னாய்க்கே யுரியளென் றுரைப்ப நேர்ந்தான். இ-ள். அவ்வரசன் திருவையொத்த நங்கையாகிய கண்ணி பிறந்த வளவிலே, கணிகளீண்டி யுதயாரூடக் கவிப்புக்களிற் றப்பின் றாகச் சாகத்தை நினக்கேயுரிய முறைமையாற் செய்தாராதலின், நினக்கே யிவளுரியளென்றுகூற, அவனும் நேர்ந்தானென்க. கலைகளும் வடிவுமுதலியனவும் உடையவனொருவ னென்றலின், இவனோயாயிற்று. (130) 1687. வாருலா முலையி னாட்கும் வரிசிலைத் தடக்கை யாற்குஞ் சீருலாங் கோலஞ் செய்தார் செப்பினார் வதுவை நன்னாட் பாரெலா மறிய நின்று படாமுர சார்ப்பத் தீவேட் டேருலாங் கோதை யின்பத் திளநலம் பருகு கின்றான். இ-ள். முலையினாட்குந் தடக்கையாற்கும் மணஞ்செய்யு நாட் செப்பினார்; செப்பி மணக்கோலஞ்செய்தார்; செய்தபின்பு ஒலியவியா முரசார்ப்பத் தீயிலே யாகுதிபண்ணி அவன் அக்கோதை நலத்தைப் பருகாநின்றானென்க. (131) 1688. மோட்டிளங் குரும்பை யன்ன முலைக்கடாக் களிறு முத்தஞ் சூட்டிய வோடை பொங்க நாணெனுந் தோட்டி மாற்றி யாட்டிய சாந்த மென்னு முகபடா மழித்து வெம்போ ரோட்டற வோட்டிப் பைந்தா ருழக்கியிட் டுவந்த வன்றே. பெரிய இளங்குரும்பை: வடிவிற்குவமை. இ-ள். அவன் பருகுகின்றபொழுது அவண்முலையாகிய யானைகள், சூட்டிய முத்தமாலையாகிய பட்டமசையாநிற்க நாணென்னுந் தோட்டியைக்கெடுத்துச் சாந்தமென்னு முகபடாத் தையழித்து விரும்பினமுயக்கத்தில் உறாதவிடமில்லையென்னும் படி மார்பிட மெங்கு முறுவித்து மாலையையுழக்கிப் போகட்டு மகிழ்ந்தனவென்க. கொடிய போரை யினிக்கேடில்லையென்னும்படி கெடுத்துத் தூசியை யுழக்கி யென்றுங் கொள்க. (132) 1689. ஒண்மணிக் குழைவில் வீச வொளிர்ந்து பொன் னோலை மின்ன வண்ணமே கலை களார்ப்ப வான்சிலம் பொலிப்ப முத்துங் கண்ணியும் பசும்பொ னாணுங் கதிர்முலை புடைப்பக் காம ரண்ணலங் குமரன் றன்னொ டாயிழை யாடி னாளே. குமரனோடு ஆயிழையாடினாளெனவே ஒருவினை யொடுச் சொலுயர்பின் வழித்தாய் இருவருமாடினா ரென்பது பட நின்றது. எனவே யவன் மேகலையார்ப்பச் சிலம்பொலிப்ப வாடினா னென்றும், அவள்வீச மின்னப் புடைப்ப வாடினாளென்றுங் கொள்க; இவன்காட்டக் கண்டாளென வேண்டுதலின். (133) 1690. மூசுதேன் வாரி யல்குற் பட்டபின் முலைக ளென்னு மாசறு கந்தின் மென்றோண் மணித்தொடர் கொளுத்தி வாட்க ணாசறு வயிரத் தோட்டி நுதலணிந் தமுதச் செவ்வாய் காசறு கவள மாகக் களிறுகோட் பட்ட தன்றே. போகாமல் வளைத்தலிற் கண் தோட்டியாயிற்று. அதற் கேற்ப நுதலணிந்தென்றார். கூட நிமிராமைக்கு வயிரமென்றார். இ-ள். சீவகனாகிய களிறு, செவ்வாய் கவளமாக வல்குலாகிய கூடத்தே அகப்பட்டபின்பு, தன்முலைகளென்னுங் கம்பத்திலே தோளாகியசங்கிலியாலேபூட்டிக் கண்ணாகிய தோட்டியை நுதலிலே யணிந்து இங்ஙனந் தப்பாமற் பிணிக்கப்பட்ட தென்க. (134) 1691. ஒப்பிணை தனக்கி லாதா னுறுவரை யகல மூழ்கிச் செப்பிணை யனைய செங்கேழ் வனமுலை பொருது சேப்பக் கற்பக மரத்தைப் புல்லிக் கைவிடா தொழிந்து காமத் துப்புர வுமிழுங் காம வல்லியின் றோற்ற மொத்தாள். இ-ள். தனக்கு இணைக்கு மொப்பிலாதான்கலத்தே தன்முலைகள் சிவக்கும்படி பொருது மூழ்கப்பட்டுத் தான் வல்லியின் றோற்றத்தை யொத்தாளென்க. கற்பகத்தைக் கைவிடாதேபுல்லித் தங்கி அதற்கத் துப் புரவைக் கொடுப்பதோர் வல்லி - இல் பொருளுவமை. (135) 1692. காய்வுறு வேட்கை தன்னாற் கங்குலும் பகலும் விள்ளான் வேய்வெறுத் தமைந்த தோளான் விழுத்திரை யமுத மென்று சேய்நலங் கடந்த செல்வன் றிருநலந் தெளித்திட் டாற்ற வாய்விடாள் பருகி யிட்டாண் மடக்கிள்ளை மருட்டுஞ் சொல்லாள். வேய்தானொவ்வாமையான், வெறுத்து மாறின தோள். இ-ள். செல்வன் எரிகின்ற காமத்தாலே விள்ளானாய்த் தோளானை யமிர் தென்றுகருதி அவளூடலாற் கலங்காதபடிநலத்தைத் தேற்றி ஆற்றுவித்தலாலே அவள் நீங்காமற் பருகினா ளென்க. (136) 1693. திரையிடைக் கொண்ட வின்னீ ரமுதுயிர் பெற்ற தென்னு முரையுடைக் கோதை மாத ரொளிநல நுகர்ந்து நாளும் வரையுடை மார்ப னங்கண் வைகின னென்ப மாதோ கரைகட லனைய தானைக் காவலன் காத லானே. உயிர் - சீவகன். இ-ள். வரைதோற்கின்ற மார்பன், அமிர்து தனக்கோருயிரைப் பெற்றதென்று உலகங்கூறுமுரையை யிப் பொழுதுடைய மாதரது நலத்தை நாளுநுகர்ந்து அரசனது காதலாலே அவ்விடத்தே சிலநாள் தங்கினானென்க. (137) 1694. வாளினான் மிடைந்த கண்ணாள் வருமுலைத் தடத்துள் வைகித் தோளினான் மிடைந்து புல்லித் தொண்டைவா யமுத மாந்திக் காளைசெல் கின்ற நாளுட் கட்டியங் காரன் மூதூர் மீளிவேற் குருசிற் குற்றார்க் குற்றது விளம்ப லுற்றேன். மிடைந்து - மிடைய. இ-ள். காளை முற்கூறியவாறே வாளால் போர்செய்யப் பட்ட கண்ணாளது முலைத்தடத்தே வைகிப் புல்லி மாந்தி நடக்கின்ற நாளிலே, இராசமாபுரத்திலிருக்கின்ற அக்காளைக்குற்றார்க்கு உற்ற காரியத்தைக் கூறலுற்றேனென்றாரென்க. 1695. வெண்மதி யிழந்த மீன்போல் விடலைக்குத் தம்பி மாழாந் தொன்மதிச் சூழ்ச்சி மிக்கா னுள்ளுழி யுணர்தல் செல்லான், புண்மதித் துடைந்த போது பொழிந்துமட் டொழுக நன்னாட் டுண்மதி வருந்த நாடி யொளிநக ரெய்தி னானே. இ - ள். சீவகற்கிளையான் மதியையிழந்த உரோகிணி போலே மயங்கி மதியாற் சூழ்ச்சி மிக்கானிருப்பிட மறியானாய் நாட்டின் கண்ணே அறிவுவருந்தத் தேடிப் பின்பு குணமாலையகத்தை சேர்ந் தானென்க. (139) 1696. வெள்ளிவெண் மலைக்கு வேந்த னொருமகள் வேற்கண் பாவை ஒள்ளிழை யவளைக் கேட்பா னுறுவலி செல்லு மாங்கன் வள்ளிதழ்க் கோதை தானே யிட்டதோர் வண்ணந் தன்னைக் கொள்ளத்தான் முரல லுற்றுக் கோலமை வீணை கொண்டாள் இ - ள். ஆண்டு காணாதே கலுடிவேகன் மகன், பாவை ஒள்ளிழையவளைக் கேட்டறக்கு அவன் செல்கின்ற அளவிலே, அக்கோழை தானே புணர்த்ததொரு புணர்ப்பு விசேடத்தைத் தானே மனங்கொள்ளப் பாடலுற்று வீணையைக் கைகொண்டா ளென்க. (140) 1697. ஆடகச் செம்பொ னாணி யானெய்வார்ந் தனைய நுண்கோல் மாடக நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கிச் சூடக மணிந்த முன்னகத் தொருவிரல் சேப்ப வெற்றித் தோடலர் கோதை கீதந் துணிவினிற் பாடுகின்றாள். மாடகம் - பாலிகை வடிவான விசிக்குங்கருவி. இ - ள். கோதை பொன்னாணியிற் கட்டின நெய்யொழுகினாற் போன்ற நரம்பினை மாடகத்தாலே முகந்துகொண்டு நிறைய வீக்கிக் குவிந்தவிரல் சிவக்கும்படி தெறித்துப் பார்த்துக் கீதத்தைத் தெளி வோடே பாடா நின்றா ளென்க. 1698. இறுமருங்குல் போதணியி னென்றினைந்து கையின் நறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார் நண்ணார் துறப்ப நனிவனையுந்தேர் தோடுறப்பக் கண்ணோவா முத்துறைப்பத் தோழி கழிவேனோ. இச்கவி முதல் நான்கும் ஒரு தொடர். (1) தோழி! அவர் துறப்பு, வளையும் துறப்ப, கண் மாராதே யழ இங்ஙகம் கழிவேனோ? கழியாத தொழிநாளும் வருமோ வென்றா ளெறன்க. வகாரம் விhன. ஒழிந்தவற்றிற்கும் இவ்வாறு கூறுக. 1699. பூமாலை சூடிற் பொறையாற்றா நுண்மருங்குல் ஏமாரா தென்றினைவா ரெண்ணார் துறந்தார் எண்ணார் துறப்ப வினவளையுந் தோடுறுப்ப மண்ணார்வேற் கண்டுயிலா தோழி மருள்வேனோ. முலைப்பாரத்தைச் சுமத்தலாற்றாத மருங்குன் மாலை சூடின் முறியும். மண்ணுதல் - மஞ்சனமாடுதல்; கடைதலுமாம்.துயிலா வாவென்க. (138) 1700. வண்டூத வம்மருங்கு னோமென்று பூமாலை கொண்டோச்சுங் காதலார் கூடார் துறந்தார் கூடாரவர் துறப்பக் கோல்வளையுந் தோடுறப்பத் தோடார்பூங் கண்டுயிலா தோழி துயர்வேனோ. வண்டூத - வண்டு இயல்பான மணத்தையூத. ஒப்பனைக்குப் பூவும்மாலையும் வந்த வளவிலே, பூசை யவள் கையினின்றுஞ் சிந்தி மாலையை யவள்சூடாதபடி தன்கைக் கொண்டு, இஃதெடுத்திலே னாயின் மருங்குன் முறியுமென்று கூறி, படிந்தவண்டை அதனா னோட்டினானென்றுணர்க. பா முற்கூறிற்றயாம். வேறு 1701. ஊன்றகர்த் தனைய போன்று மூடெரி முளைப்ப போன்றுந் தோன்றுபூ விலவத் தங்கட் டொகையணி லனைய பைங்காய் கான்றமென் பஞ்சி யார்ந்த மெல்லணை யாழ்கை நீக்கித் தேன்றயங் கிணர்பெய் கோதை சிந்தையி னீட்டி னாளே. தகர்க்கப்பட்ட வூன் போன்றும், எரி பலவாய் முளைப்பன போன்றுந் தோன்றும் பூவையுடைய இலவத்திடத்து அணிலனைய காய்கான்றபஞ்சென்க. இ-ள். அங்ஙனம்பாடுகின்றவள் கழிவேனோ? மருள்வே னோ? துயர்வேனோ? என்று பாடி யாழைவைத்து அணையிலே சாய்ந்து வருத்தத்திலே நீட்டித்தாளென்க. (142-5) வேறு 1702. நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர் கண்மனங் கவற்றிய காமர் தொண்டைவா யண்ணலை நினைந்து வெய் துயிர்ப்ப வாய்நலம் வண்ணத்தின் மழுங்கிவாட் கண்ணி வாடினாள். நுண்ணிய வரியோடே திரண்டு விருப்ப மருவின வாய். இ-ள். வாட்கண்ணி நோக்குநர் கண்மனங்கவற்றிய வண்ணலை அங்ஙனநினைந்து வெய்துயிர்த்தலாலே வாயினதாய் நலம் பழையவண்ணத்தினின்று நீங்கப்பட்டு மேனியும் வாடினா ளென்க. (146) 1703. மின்றவழ் மணிவரை மாலை மார்பனைப் பொன்றவ ழிளமுலை பொருது புல்லுநா ளென்றுகொ லெனநினைத் திருந்த செவ்வியுட் சென்றனன் சீவகற் கிளைய செல்வனே. பொருது - பொர. இ-ள். அங்ஙனம்வாடினவள் வரை போலுமார்பனை இப்பசலை பரந்த முலைகள் புல்லுநாள் என்றுதானென்று சென்ற நாளொழிந்த நாளைத் தன்ஞானத்தால் நினைந்திருந்த காலத்திலே நந்தட்டன் சென்றானென்க. வேறு 1704. ஐவிலி னகல நின்றாங் கடிதொழு திறைஞ்சி னாற்கு மைவிலை பெற்ற கண்ணாண் மைந்தனை மருண்டு நோக்கிக் கைவிலுங் கணையு மில்லாக் காமன்போந் திருக்க வென்ன மொய்வெல் லுங்குரு திவேலான் மூவிற்க ணிறைஞ்சி நின்றான். இ-ள். ஐந்துவிற்கிடைநீளத்தேநின்று அவ்விடத்தே வணங்கிக் கவிழ்ந்துநின்றவனுக்கு மை விலைபெறுதற்குக் காரணமான கண்ணாள் அவனை மருண்டுபார்த்து வேலான்! இங்ஙனே போந்திருக்க வென்றுகூற, அக்காமனும் பின்னை மூன்றுவிற்கிடை நீளத்தேவந்து வணங்கி நின்றானென்க. மொய்-பகை. யிறைஞ்சினாற்குக் கூறவென்க. அவன் கேட்டதற்கு மருண்டாள். வேலான் போந்திருக்கவென்று அவள்கூறக் காமனிறைஞ்சி நின்றானென்று தேவர் கூற்றாக்குக. இனிப் பிள்ளையை யுவந்துகூறுமாறே கூறினாளென்று அவள் கூறலுமாம். (148) 1705. திங்கள்வாண் முகமு நோக்கான் றிருமுலைத் தடமு நோக்கா னங்கதிர்க் கலாப மின்னு மணியல்குற் பரப்பு நோக்கான் செங்கயற் கண்ணி னாடன் சீறடிச் சிலம்பு நோக்கி யெங்குளா ரடிக ளென்னா வின்னணமியம்பி னானே. இ-ள். கயற்கண்ணினாளுடைய, முன்பு திங்களையொக்கு முகத்தில் இப்பொழுது நிகழ்கின்ற வாட்டத்தையுநோக்கானாய், முன்பு நன்றாகிய முலை இப்பொழுது பசந்தபசப்பையு நோக்கா னாய், முன்பு கலாபமின்னு மல்குலிலாடை மாசுண்ட தன்மையையு நோக்கானாய்த் தானிறைஞ்சி நிற்றலின் அடியிற்சிலம்பொன் றையுமே நோக்கி, எங்குளாரடிகளென்று இப்படியொரு வார்த்தை கூறினானென்க. உம்மைகள் வருத்தத்தின் சிறப்புணர்த்தின. அவள்வாடி யிருந்த வருத்தமிகுதியைத் தானுணராதே அவட்குப் பொருந்தாத தோர் மொழி மேற்கூறுகின்றானென்பார், இன்னணமியம்பினா னென்றார். (149) 1706. பொறிகுலாய்க் கிடந்த மார்பிற் புண்ணியன் பொன்றி னானேல் வெறிகுலாய்க் கிடந்த மாலை வெள்வளை முத்த நீக்கி நெறியினா னோற்ற லொன்றோ நீளெரி புகுத லொன்றோ வறியலென் கொழுநன் மாய்ந்தா லணிசுமந் திருப்ப தென்றான். பொறி - மூன்று வரி. இ-ள். புண்ணியன்பொன்றி விட்டானாயின், நீ நோற்ற லொரு காரியம்; அஃதன்றி எரியிலே புகுதலொரு காரியம்; இவ்விரண்டு மன்றிக் கணவனிறந்தால் அணிசுமந்திருப்பது யான்கேட்ட றியே னென்றானென்க. (150) 1707. காய்தழல் கவரப் பட்ட கற்பக மரத்திற் கன்றி யாய்கழற் குருசில் வாடி யற்புத்தீ யழலு ணிற்ப வாய்மொழிந் துரைக்க லுற்றாள் வனைகுழற் கற்றை வண்டார்த் தோய்பிழி துளிக்குங் கண்ணிச் சுரும்புசூழ் கொம்ப னாளே. இ-ள். அங்ஙனங்கூறிக் குருசில் தீமேய்ந்தகற்பகம் போலேயன் பாகிய தீயின் வெம்மையிலே வாடிக் கன்றி நின்றானாக, அதனைக் கண்டு பண்ணியகுழற் பற்றத்தையும், வளவிய தாரினை யும், செறிந்த மதுவைத்துளிக்குங் கண்ணியினையு முடையதோர் கொம்பனாள், முற்பட அவன் மறைந்து வேற்றுருக் கொண்டி ருக்கின்றபடியைக் கூறி விட்டுப் பின் செய்திகூறுதலுற்றாளென்க. (151) 1708. மதுமுகத் தலர்ந்த கோதை மாற்றமைந் தற்கு ரைப்பாள் கொதிமுகக் குருதி வைவேற் குரிசிலோ நம்மை யுள்ளான் விதிமுக மணங்க ளெய்தி வீற்றிருந் தின்ப முய்ப்ப மதிமுக மறியு நாமே வாடுவ தென்னை யென்றாள். இ-ள். கோதை நந்தட்டனுக்கு வார்த்தை கூறுகின்றவள், குருசிலோ நம்மை நினையானாய் ஊழின்முகத்தாலே யுளவாயமணங் களைச்செய்து இன்பத்தைநிகழ்த்த, மதிமுகமென்னும் விஞ்சையை யறிந்திருக்கின்ற நாமே யிதற்குப் புலப்பதன்றி அவற்கு ஏதமுண்டொமென்று வாடுவது என்னென்றாளென்க. நாமெனத் தன்னையுயர்த்துக் கூறினாள். இதனால் அவன் செய்தி கூறினாள். (152) 1709. வேண்டிய தெமக்கு நேரின் வில்வலாய் நுமைய னாரைக் காண்டியென் றுரைப்பக் காளை யெழுமையு மடிமை நேர மாண்டதோர் விஞ்சை யோதி மதிமுகந் தைவந் திட்டா ணீண்டது பெரிது மன்றி நினைத்துழி விளக்கிற் றன்றே. இ-ள். வில்வல்லாய்! யாம்வேண்டிய அடிமைத்தொழிலை நீயெமக்குநேரின் நும்முடைய தமையனாரைக் காண்பையென்று தந்தை யசதியாடிக்கூற, அவனும் இம்மையேயன்றி யெழுமையும் அடிமையாகக்கடவேனென்று நேர்ந்தானாக, அவள் ஒரு விஞ்சையை யோதித் தன்முகத்தைத் தடவினாள்; அவ்விஞ்சை அவனிருந்த விடத்தை இவனுக்கு விளக்கிற்றென்க. நீண்டதென்றது - இவனுக்கு மிகவும் அரியகாட்சியை. அரிதன்றாகவிளக்கிற் றென்றவாறு. பெருமை - அருமை. இனித் தூரியவூர் தூரிதன்றாக வென்றலுமாம். (153) 1710. பொற்புடை யமளி யங்கட் பூவணைப் பள்ளி மேலாற் கற்பக மாலை வேய்ந்து கருங்குழற் கைசெய் வானை முற்படக் கண்டு நோக்கி முறுவல்கொண் முகத்த னாகி விற்படை நிமிர்ந்த தோளான் றொழுதுமெய் குளிர்ந்து நின்றான். அழகிய கள்ளையுடைய பூவணைப்பள்ளியாகிய பொற்புடையமளி யென விசேடித்துநின்ற இருபெயரொட்டு கற்பகம்; அரசர் தமதாணை யால் இவ்வுலகிற் கொணர்ந்த கற்பகந் தேவரது சாபத்தாற் றன்னிலை யன்றிப் பூவளவே யுண்டாயிற் றென்க. மந்தாரமும் அவ்வாறாம்; கவிரமும் அவ்வாறாம். இனி யுத்தரகுருவிலுள்ள கற்பகம் ஈண்டுக் கொணர்ந்தாரென்றுமாம். கனகமாலைக்குக் கற்பகமாலையென்றொரு பெயருமாம். இ-ள். அமளி மேலேயிருந்து வேய்ந்து கைசெய்வானை நந்தட்டன் எதிர்முகமாகக்கண்டு மகிழ்ந்த முகத்தனாய்த் தொழுது குளிர்ந்துநின்றானென்க. நோக்கியென்றது - தத்தை அவன் வேற்றுருக் கொண்டிருப் பானென்று கூறியவதனை மனத்தானோக்கி யென்றவாறு. (154) வேறு 1711. செய்த விஞ்சையைத் தேமொழி மாற்றலு மைய னெஞ்சொடு வண்டிமிர் தாரினான் பொய்ய தன்மையிற் பூங்கழ லானடிக் கெய்து கேனரு ளாயென் றிறைஞ்சினான். அடிக்கு - உருபுமயக்கம். இ-ள். தேமொழி தான்செய்தவிஞ்சையை மாற்றினவள விலே, தாரினான், “வீற்றிருந்தின்பமுய்ப்ப” (சீவக 1708) என்றது பொய்யன் மையாலே, யான் சீவகனடியைச்சார் வேன்; அதற்கருளென்று மையல்நெஞ்சினோடு இறைஞ்சினானென்க. (155) 1712. மதுக்கை மாலையும் வண்டிமிர் சாந்தமும் புதுக்கச் சார்ந்தபொன் வாளுஞ் சுரிகையுங் கதுப்பி னானமுங் காமர் கலங்களும் பதிக்கட் டம்மெனப் பாவையு மேவினாள். கையையுடைய மதுமாலை. மயிருக்கினிய புழுகு. இ-ள். பாவையும் மாலைமுதலியவற்றை யானிருக்கின்ற விடத்தே தாருங்களென்று ஏவல்செய்வார்க்குக்கூறி அவர் கொண்டு வந்தவற்றை நீயணியென்று இவனையேவினாளென்க. (156) 1713. மணியின் மேற்புறம் போர்த்தன்ன மாக்கதிர் துணிய வீசுந் துளங்கொளி மேனியன் பணியிற் பல்கலந் தாங்குபு சென்றபின் னணிசெய் கோதையங் காமினி யோதினாள். இ-ள். பளிக்குமணியின்மேலே இளையகதிரைப் போர்த் தன்னவாகத் தத்தையதுபணியாலே தன் பழைய வடிவிற்குப் புறத்தே யிருடுணியவீசும் ஒளிமேனியை யுடையனாய்க் கலங் களையும் ஒழிந்தவற்றையுந் தாங்கிச் சென்றபின்பு, அவள் அழகிய ஆகாச காமினியை யோதினாளென்க. பல்கலமெனவே படைக்கலங்களுமடங்கின. பணியென்றது - இப்பொழுது சீவகன் கொண்டுநிற்கிற நிறமும் வடிவும் அவனைக் காணுமளவும் இவனுக்குநிற்கவென்று நிருமித்ததனை. இங்ஙனநிரு மித்தது, நந்தட்டனான வடிவுடனே கொண்டுபோய் அரசன் கோயிலில் “ஆடவர் குறுகா வருங்கடி வரைப்பினுள்ளே “ (நெடுநெல் 107) வைத்தாற் சீவகனறிவதற்கு முன்னே தீங்குபிறக்கு மென்று கருதியும், புறம்பே விட்டாற் சீவகனென்னும் பெயர் வழங்காமல் அப்பொருடருவதோர்பெயர் ஆண்டு வழங்குகின்றமையின் இவற்கு அறிந்து கோயிலுட் சேறலரிதென்று கருதியுமென்றுணர்க. அஃது “அந்நாட்டவ்வூரப் பெயரல்லாப் பெயர்சொன்னான்” (சீவக 1637) என்பதனானுணர்க. இதனானே சுதஞ்சணனை நீங்கின பின்பு தன்னை மறைத்தற்கு வடிவும் பெயரும் வேறாகவே நிகழ்த்துகின்றா னென்பதூஉம் பெற்றாம். வடிவுமறையாக்கால் இவைமறைத் ததனாற் பயனின்றாம். இவ்விலம்பகங்களிற் சீவகனென்றபெயர் தேவர் கூற்று. பொரு ளுரைக்குமிடத்தும் அப்பெயரே கூறிப் பொருளுரைக்க வேண்டுதலின் வந்தது. அந்நிலத்தார் அப்பெயரறி யாரென் றுணர்க. இனி இவ்வாறன்றி யரசர்குலத்திலும் வணிகர்குலத்திலும் பிறந்தவர் கட்குச் சிறிதுவடிவொப்பன்றி ஒருவடிவேயென்று மேற்கூறுதல் பொருந்தாது. அது தேவர்க்குக் கருத்தாயின், ஈண்டன்றிப் பிறாண்டு மிருவர்க்குமொரு வடிவென்றே கூறுவர்; அது கூறாமையானும் இதுவே தேவர்க்குக் கருத் தென்றுணர்க. (157) 1714. சாந்தி னான்மெழு கித்தட மாமல ராய்ந்த தாமங்க ணாற்றி யகிற்புகை யேந்தி யிட்டிளை யாரொடு நீங்கினாள் காந்தி வண்டுணுங் கற்பகக் கோதையே. இ-ள். கோதை, அதனையோதி யிவன்கிடக்கின்ற விடத்தை மெழுகி நாற்றிப் புகைத்து ஆயத்தோடே போந்தாளென்க. (158) காந்தி - பசித்து. 1715. தூம மார்ந்த துகிலணைப் பள்ளிமேற் காதன் றம்பியிற் காளை கிடந்தபி னேம மாபுரத் திட்டதோர் மாதெய்வ நாம நல்லொளி நந்தனை யென்பவே. இ-ள். நந்தட்டன் சாமனைப்போலே யப்பள்ளிமேலே கிடந்தபின்பு ஒருதெய்வம் அவனைக் கொண்டுபோய் ஏமமா புரத்தே அரசன் கோயிலுக்குள்ளே யிட்டுவைத்ததென்க. நாமம் - அச்சம்; உரிச்சொல் ஈறுதிரிந்தது. அச்சங்கூர்த லாலும் நிருமித்தவடிவாயிற்று. (159) 1716. மின்னும் பூணும் மிளிர்கதி ராரமும் பொன்னும் பூத்ததொர் கற்பகப் பொன்மரம் அன்ன காளை யமர்துயி றேறினான் மன்னும் வெஞ்சுடர் மாக்க லிவர்ந்ததே. இ-ள். விளங்கும் பூண்முதலியவற்றைப் பூத்ததோர் கற்பக மரத்தையொத்த காளை துயிலுணர்ந்தான்; அவ்வளவிலே, ஞாயிறும் உதயகிரியிலே வந்து பரந்ததென்க. (160) வேறு 1717. செய்யவாய் நெடிய கண்ணாள் செல்கென விடுக்கப்பட்ட வெய்யவாட் டடக்கை வீர னிருத்தலும் விசய ளென்பான் கையவாஞ் சிலையி னானைக் கண்டுவந் தருகு சேர்ந்தான் பையவாய்ப் பரந்த வல்குற் பாவையர்க் கமிர்த மன்னான். கையில் அவாவுதற்குக் காரணமான சிலையினானெனவே காமனாம். இ-ள். தத்தையாலே போவென்றுவிடப்பட்ட நந்தட்டனிருந்த வளவிலே, அமிர்தமன்னானாகிய விசயனென்பான், அவனைக்கண்டு மகிழ்ந்து அருகே சேர்ந்தானென்க. (161) 1718. தெய்வமே கமழு மேனித் திருவொளி கலந்த மார்வி னையநீ யாரை யென்றாற் கவனுரை கொடாது விட்டான் பையவே பெயர்ந்து போகிப் பனிமலர்க் கோதை மார்பின் மையலங் களிறு போலு மைத்துனற் கிதனைச் சொன்னான். சீவகன்கொண்ட வடிவுகொண்டு நின்றதொருதெய்வ மாதலின், தெய்வமே கமழுமேனியாய் அவற்குத் தோன்றிற்கு. வடிவொன்றே யாகவுந் தெய்வத்தன்மையைத் தன்னுணர்பு மிகுதியா னுணர்தலின், இவற்குச் சிறிதுவேறுபாடு முண்றடென்றிந்து நீயாரையென்றான். இ-ள். மேனியையும் மார்பினையுமுடையஐய! நீயா ரென்று வினவினாற்கு அவன் மறுமொழி கொடாதேவிட்டான்; அதனால் யவன் மீண்டுபோய்க் கோதை மார்பினையுடைய மைத்துனனுக்கு இச்செய்தியைக் கூறினானென்க. வசுந்தரி யவற்குக்கூற, அவன் கண்ட செய்தியை யிதனை யென்றார், ஐ-அசை. இவ்விடத்திருந்து உரைகொடாதிருந்ததுவும், அவன்வெறாதபடிகாத்ததுவும் இவன் மேற்றங்கிய தெய்வமென்று ணர்க. (162) 1719. சந்தனக் களியும் பூவுந் தமனியக் குடத்து ணீருங் கெந்தநா றகிலு முத்துங் கிளரொளி விளக்கு மேந்தி யந்தில்விற் பயிற்றுந் தானம் வழிபட வாங்குச் சென்றாண் மந்திர மடந்தை யன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள். 1720. ஆரகிற் சேக்கை நீங்கி வெறுநிலத் தடி கடாமே நீரிதிற் கிடந்த தென்கொ லென்றியா னினைந்து போகிச் சேர்துணை கழறச் சென்றேன் செல்வியோ டாங்குக் கண்டேன் போர்பல கடந்த வேலோய் மாயங்கொல் போற்றி யென்றாள் 1721. கணைகடி கண்ணி சொல்லக் காணிய யானுஞ் சென்றேன் மணியிலங் கொண்பொன் வைவாள் கேடக மருங்குல் வைத்த விணைகடிசீய மன்னா னிளமையும் வனப்பு மேருந் துணையமை வடிவுஞ் சொல்லி னிற்பொறி யொற்றிக் கொண்டான். 1722. நீண்டதோ ணெடிய செங்க ணீலமாய்ச் சுரிந்த குஞ்சி பூண்டதோ ரார மேனிப் பொன்னுரைத் திட்டதொக்குங் காண்டகு காதிற் றாழ்ந்த குண்டலங் குவளைப் பைந்தா ராண்டகை யழகன் யார் கொலறியல னவனை யென்றான். இவைநான்கு மொருதொடர். 1. அந்தில் - அசை. இ-ள். மந்திரமாகிய மடந்தையை யொப்பாளாகிய வசுந்தரி விற்பயிற்றுந் தானத்தை வழிபடுதற்குச் சந்தனக்குழம்பு முதலிய வற்றை யேந்தி யவ்விடத்தேசென்றவள் வந்து எனக்கு ஒருவார்த் தை கூறினாள்; அவள் கூறினபடி: அடிகடாஞ் சேக்கையைநீங்கி வெறு நிலத்தே நீர்மையோடேகிடந்த காரணமென்னென்று நினைத்துப் போய்க் கனகமாலையைக் கோபித்தற்குச் சென்றேன்; சென்றநான் அவளுடனே யவ்விடத்தே கண்டேன்; ஆதலின், வேலோய்! அவர் செய்தி மாயம்போலேயிருந்தது; அந் நிலைமை யைப் பாதுகாத்துக் கொள்ளென்று கூறினாள்; அவள் அங்ஙனங் கூறுதலின், யானும் அச்செய்தியைக் காண்டற்குச்சென்றேன்; சென்றுயான்கண்ட ஒப்பில்லாத சீயமன்னான் றன்னுடைய இளமையையும், வகுப்பழகையும், தோற்றப்பொலிவையும், ஒப்பில்லாத வடிவையுங் கூறில், நின்னுத்தம இலக்கணத்தை யொற்றிக் கொண்டிருந்தான்; அங்ஙனமிகுந்த தோளையுங் கண்ணையுங் குஞ்சியையுங் கல்லிலே பொன்னுரைத்த தொக்கும் ஆரமேனியையுங் குண்டலத்தையுமுடைய வழகன் யார்? அவனை யானறிகின்றலே னென்றானென்க. வசுந்தரி யடிகள்வெறுநிலத்தே கிடந்தாரென்று கழறச் சென்றேனென்றமை யானும், விசயன் நிற்பொறி யொற்றிக் கொண்டானென்றமையானும், உவமை கூறுதலன்றி இருவரும் இருவர்க்குமொருவடிவென்றே கூறினார். உவமை யாவது சிறிதொத்து இரண்டிற்கும் வேறுபாடுணர்த்துவது; இஃது அதுவன்மையுணர்க. பொறியும் ஒன்றிலழுத்தினால் ஒப்பன்றி யதுவேயாயிருக்கு மென்றுணர்க. இவ்வாற்றானும் நிருமித்தமையே கூறிற்றாம். வசுந்தரி மகடூஉவாதலிற் றெய்வத்தன்மை யுணர்ந் திலள். (163-6) 1723. இனத்திடை யேறுபோலு மெறுழ்வலி யுடைத்த மாற்ற மனத்திடை மகிழ்ந்து கேட்டு மைந்தனந் தட்ட னேயாம் புனத்திடை மயில னாளாற் பொருளுரை பெற்று வந்தா னெனத்தவி ராது சென்றாங் கெய்தின னென்ப வன்றே. யாம்என்றேபாடம். மைந்தன் யாமென்பவெனக்கூட்டுக. பொருளுரை - மந்திரம். இ-ள். விசயன் கூறிய கூற்றை யிவன்கேட்டு உட்கொண்டு தாங்கண்ட மைந்தனை நாமென்பர்கள்; அதற்குக்காரணம் தத்தை பொருளுரையாலே யான்கொண்ட விவ்வடிவைப் பெற்று நந்தட்டனே வந்தானென்று கருதி மனத்திடை மகிழ்ந்து தங்காதே யப்பொழுதே யவ்விடத்தே சென்றணுகினானென்க. என்ப வெனப் பன்மையாற்கூறிற்று, வசுந்தரிகூற்றையுங் கருதி, அன்றே அப்பொழுதே. (167) 1724. கருமுகிற் பொடித்த வெய்யோன் கடலிடை நடப்ப தேபோற் றிருமுகஞ் சுடர நோக்கிச் சீவகன் சென்று சேர்ந்தான் றருமனை யரிதிற் கண்ட தனஞ்சயன் போலத் தம்பி திருமலர்த் தடக்கை கூப்பிச் சேவடி தொழுது வீழ்ந்தான். கடலிடைத்தோற்றின விளங்கதிர் கருமுகிலிடத்தே விடாது நடப்பதேபோலுமுகம். முகில் குழலிற்கும், வெய்யோன் முகத்திற்கு முவமை “கடற் - றோற்றுஞ் செஞ்சுடர்போலச் சுடர்ந்ததே” (சீவக 2497) என்றார்பின்னும். இ-ள். சீவகன் றன்முகஞ் சுடரநோக்கிச் சென்றுசேர்ந்தான்; அப்பொழுது தருமனை யரிதாகக் கண்ட விசயனைப்போலே தம்பி தொழுது வீழ்ந்தானென்க. (168) 1725. தாமரைத் தடக்கை கூப்பித் தாண்முதற் கிடந்த தம்பி தாமரைத் தடத்தை யொத்தான் றமையனும்பரிதியொத்தான் றாமரைக் குணத்தி னானை மும்முறை தழுவிக் கொண்டு தாமரைச் செங்க ணானுந் தன்னுறு பரிவு தீர்த்தான். இ-ள். அங்ஙனந்தொழுதுகிடந்ததம்பி தாமரைத்தடத்தை யொத்தான்; தமையனும் அவன்முக முதலியவற்றை யலர்த்தலிற் பரிதியையொத்தான்; அவ்வழிபாட்டின் பின்பு தாமரையென்னு மெண்ணை யுடைய குணத்தினானை அன்பின்மிகுதியான் முக்காற் றழுவிக் கொண்டு பின்பு சீவகனுந் தனக்குற்றவருத்த மெல்லா தீர்ந்தானென்க. என்றது - யான்போந்தபின்பு இருமுதுகுரவருற்ற தென் னென்று தனக்குற்றுக் கிடந்த பரிவும் இவன்வாய்க் கேட்டுத் தீர்ந்தானென்க. (169) 1726. என்னுறு நிலைமை யோரா தெரியுறு தளிரின் வாடிப் பொன்னுறு மேனி கன்றிப் போயினீர் பொறியி லாதேன் முன்னுற விதனை யோரேன் மூரிப்பே ரொக்க லெல்லாம் பின்னுறு பரிவு செய்தேன் போதையேன் கவல லென்றான். எனக்குற்றநிலைமையை யோராதென்றது - தேவன் கொண்டு போந்த நிலைமையை யறிந்தும், உண்மையென்றுணராதே யென்றவாறு. “கொண்டுபோமியங்கன்” (சீவக 1131) என்று இருடி கூறியக் கூற்றைக் கந்துகன்கூறக்கேட்டும் இவர் வருந்துவரென்று இங்ஙனங் கூறினான். பொறியிலாதேனென்றது - இருமுதுகுர வரையும் வழிபட்டிருக்கும் நல்வினையில்லாதே னென்றவாறு. இ-ள். பொறியிலாதேன் கட்டியங்காரனாற் சிறை செய்வித்துப் பிரிவிப்பதோர் தீவினைவந்து முன்னிற்றலாற் குண மாலையது ஓருயிர்க்காகப் பல்லுயிர்க்குந் தீங்குவருகின்றவிதனை யோரெனாய்ப் பேதையேனாகிய யான் மதனன் மேலேவாமையின், மேனிகன்றிப் போன நீங்களும் ஒக்கலும் எல்லாம் என்னுறு நிலைமையோராதே வாடிப் பின்பு முடிய வனுபவிக்குந் துன்பத்தைச் செய்தேன்; இனி நீ வருந்தாதே கொள்ளென்றா னென்க. இதனையென்றது-களிற்றிடையுதவியதனை - முன்னும் “ஊழ்வினையென்றுவிட்டான்” (சீவக 1167) என்றார். இனி முன்னுற வென்றதனை அச்சணந்தியாசாரியர்க்கு நேருகின்ற பொழு தென்னின், அது பொருந்தாது; என்னை! தான்மேல் வருகின்றதறியானாதலானும், ஆசிரியன் கூற்றாலே ஓர்யாண்டு அவனிருப்பனென்றுணர்ந்து “இன்னுயி ரவனை யுண்ணு மெல்லை நாள் வந்ததில்லை” (சீவக 1154) என்று தான் கூறினமையானுமென்பது. (170) 1727. ஆக்கமுங் கேடு முற்றீ ரடிகளே யல்லிர் மேலைப் பூக்குலா மலங்கன் மாலைப் புட்கொடி யாற்கு முண்டே வீக்குவார் முலையி னார்போல் வெய்துயிரத் துருகி நைய நோக்கினி ரென்னை யென்றா னுதியழற் குட்ட மொப்பான். இ-ள். நந்தட்டன், ஆக்கமுங் கேடுமுற்றீர் நீரேயல்லீர்; முன்னுள்ள இராமனுக்குமுண்டு; அவன் இங்ஙனஞ்செய்யாதே கேட்டிற்குத் தம்பியையுமுதவியாகக் கொண்டான்; நீர் உடன் பிறந்த மகளிரைப்போலே உதவாதேயிருந்து வருந்தும்படி யென்னைப் பார்த்தீரென்றானென்க. நோக்கினீரென்றது - தேர்பண்ணிவந்து கண்டவனை மதனன் மேலே செல்லென்னாதே நில்லென்று நோக்கியதனை. (171) 1728. குரவரைப் பேண லின்றிக் குறிப்பிகந் தாய பாவந் தரவந்த பயத்தி னாலித் தாமரைப் பாத நீங்கிப் பருவருந் துன்ப முற்றேன் பாவியே னென்று சென்னி திருவடி மிசையின் வைத்துச் சிலம்பநொந் தழுதிட் டானே. இ-ள். அவன், முற்பிறப்பிற் குரவரைப் பேணலின்றி யவர் கருத்தைக்கடத்தலானுண்டாய பாவந்தருதலான் வந்த பயனாலே, பாவியேன் இப்பாதத்தை நீங்கி மிக்க வருத்த முற்றே னென்று சென்னிமிசையிலே அடியைவைத்து நொந்தழுதா னென்க. (172) 1729. பரிந்தழு கின்ற தம்பி பங்கய மனைய செங்கண் பொருந்து புதுடைத்து வேண்டா புலம்புதல் காளை யென்று மருந்தனா ளுறையுங் கோயின் மடுத்துடன் கொண்டு புக்கா னருந்ததிக் கற்பி னாளை யடிபணிந் தவனுங் கண்டான். இ-ள். காளை! வருந்துதல்வேண்டாவென்று கூறித் தம்பி கண்ணைத்துடைத்து அமுதனாளிருக்குங்கோயிலிலே வலிதிற் கொண்டுபுக்கான்; அவனும் அவளை வணங்கிக் கண்டா னென்க. (173) 1730. கொழுநனைக் குறிப்பி னாலே குமரன்யா ரென்று நோக்கக் கழுமிய கற்பி னாய்நின் மைத்துன னைய னென்ன வெழுமையும் பெறுக வின்ன விளங்கிளைச் சுற்ற மென்றாள் கொழுமலர்த் தடங்கட் செவ்வாய்க் குவிமுலைக் கொம்ப னாளே. இ-ள். கொம்பனாள், தன்கணவனைக் குறிப்பினாலே யிவன் யாரென்றுகேட்ப, கற்பினாய்! ஐயன் நின்மைத்துன னென்றானாக, அவளும் இத்தன்மைத்தான இளங்கிளையாய சுற்றம் எழுபிறப்பும் பெறுவேனாகவென்றாளென்க. (174) 1731. குடவரை யனைய மார்பிற் குங்கும மெழுதிக் கோல வடவரை வைரச் சாதி வாலொளி கலந்த பைம்பூண் தடவரை மார்பின் மின்னத் தம்பியோ டமிர்த முண்டான் படவர வல்கு லாளும் பான்மையால் விருந்து செய்தாள். இ-ள். குங்குமமெழுதலாலே அத்தகிரியையொத்த நந்தட்டன் மார்பிலேயணிந்த சாதிவைரத்தின் ஒளிகலந்தபூண் சீவகனது வரை போலுமார்பிலே மின்னும்படி எதிரேயிருந்து கூடவுண்டான்; அல்குலாளும் விருந்திடு கூற்றாலே விருந்து செய்தாளென்க. (175) 1732. விருந்தவள் செய்த பின்றைத் தம்பியுந் தானம் வேறா விருந்துழி யென்னைக் காணா துற்றதை யெவன் கொலென்று பொருந்தினார் செய்த வெல்லாம் புரைவிடுத் துரைமோ வென்னக் கருங்கழற் செங்கட் பைந்தார்க் காளையீ துரைக்கின் றானே. இ-ள். அவள் விருந்துசெய்தபின்பு தம்பியுந்தானுந் தனித்திருந்த விடத்து, என்னைக் காணாமையினாற் குரவர் முதலாயினார் உற்ற வருத்தமென்னென்று அதனை முதற்கேட்டுப் பின்பு தோழன்மார்செய்த கூறுபாடெல்லாம் வேறுபடுத்திச் சொல்லாயென்று சீவகன்கூற, நந்தட்டனும் இதனைக் கூறாநின்றா னென்க. உரைக்கின்றவன் இடுவித்திட்டாளென்றுரைத்தானெனச் “சொல்லிய” (சீவக 1747) என்னுங்கவியோடு முடிக்க. புரை - கூறுபாடு. கருங்கழல் - கொடியகழல். சீவகன், தான் முன்பு அவர்செய்தி கண்டு போந்தபின்பு அவர் செய்தபடி கேட்கின்றான், குணமாலை யாரிலம் பகத்தில் நந்தட்டனுடன் றோழன் மார்கூடுதற்குமுன்பு அவர் தம்மிற் கூறியவாறு இவனறியா னாதலின், தானும் அவருங்கூடினபின்பு செய்தியிவன் கூறுகின்றான். இதனால் அதற்கிது வேறுபாடாயிற்று. (176) 1733. புண்ணுமிழ் குருதி போர்த்த போர்க்களம் போன்று தோன்றி யண்ணலங் கதிரு மத்த மடைந்துசெவ் வான்கொ ளந்தித் துண்ணெனக் களத்தி னீங்கித் தொன்னகர்ப் புறத்துத் தொக்கே யெண்ணுமின் செய்வ தென்றான் பதுமுக னெரியும் வேலான். இ-ள் கதிரும் அத்தகிரியையடைதலாலே குருதிபோர்த்த களம் போலே தோன்றிச் செக்கர்வான்கொண்டவந்தியிலே எல்லாரும் மழையின் மிகுதியாற் றுணுக்கென்றவளவிலே, பின்பு நின்னைக் காணாமையின், அவ்விடத்துநின்றுநீங்கி நகரிடத்தே குவிந்து யாம் மேற்செய்யுங்காரியத்தை யெண்ணுமினென்றான் வேலானாகிய பதுமுகனென்க. (177) 1734. மின்னென மிளிரும் பைம்பூட் புத்திசேன் வெகுண்டு வெய்ய கன்னவி றோளி னானைக் காண்கலே மாயி னின்னே மன்னனை வாளி னானே வானகங் காட்டி மூதூர் தன்னையுஞ் சவட்டிப் போகிச் சாமியைச் சார்து மென்றான். இ-ள். அப்பொழுது புத்திசேனன்வெகுண்டு தோளி னானைக் காணோமாயின், இப்பொழுதே கட்டியங் காரனைக் கொன்று ஊரையுமழித்துப்போய்ச் சீவகனைச் சேர்வேமென்றா னென்க. (178) 1735. சிலையொடு திரண்ட திண்டோட் டேவமா தத்த னென்பான் மலையுடை யுருமிற் சீறி மாற்றல னுயிரை யுண்ட லிலையுடைக் கண்ணி யீர்க்கிஃ தெளிதுநங் குருசி லுண்மை யுலைவினோ டின்மை யாராய்ந் தொறுப்பதே துணிமி னென்றான். தேவமாதத்தன் - உலோகமாபாலன் (சீவக 395) போற் கொள்க. இ-ள். உலக்கல்லாலே திரண்ட தோளையுடைய தேவ தத்தன் மலையையுடைக்கின்ற வுருமுப்போலே சீறிப் பகைவனு யிரையுண் டலாகிய இத்தொழில் உமக்கெளிதாதலின், நங்குரு சிலுண்மையும் இன்மையும் வருத்தத்தோடே நின்றாராய்ந்து பின் பகையைக் கோறலைத் துணிமினென்றானென்க. அவன்சிறையாயிருக்கின் இஃதாகாதென்றான். (179) 1736. பவ்வத்துப் பிறந்த வெய்ய பரிதிபோற் றிறலி னாற்குத் தெவ்வரைக் கிழங்கினோடுந் தின்றுநீ சொன்ன வாறே யெவ்வத்தைத் தணித்து மென்றான் சீதத்த னென்ன லோடு மவ்வல மணந்த தண்டார் ப்பதுமுக னிதனைச்சொன்னான். பரிதி யிருளையகற்றுமாறுபோலே தன்னைச்சூழ்ந்த பகையை நீக்குதற்குரியனாதலின், அவற்குதீங்குவாராதென்றான். திறலினாற்கு, கு-பகைப்பொருட்கண்வந்த நான்காமுருபு. மக்கள் நூற்றுவரையுஞ் சேரக்கோறற்குக் கிழங்கினோடுமென்றான். இ-ள். சீதத்தன் புத்திசேனன் கூறியவாறே திறலினாற்குப் பகைவரைக் கொன்று எவ்வத்தைத்தீர்ப்பேமென்றான்; என்றவளவிலே பதுமுகன் இதனைக் கூறினானென்க. (180) அம் - அசை. 1737. ம்பிநந் தட்டன் கேட்க நங்கட்குக் குரவ ருள்ளார் தம்பரி வகற்றி யோம்பி நீர்க்கடன் மரபு தாங்கிக் கம்பஞ்செய் பரிவு நீங்கிக் கற்பிப்பார்க் குவர்த்துச் சொல்லா ரிம்பரிவ் வுலக மொப்பாய் கென்னையா னுரைப்ப தென்றான். இ-ள். தம்மைக்கற்பித்தற்குரியார்க்குத் தாம் உவர்த்துச் சொல்லாராதலான், இவ்விடத்து இவ்வுலகொழுக்கந் தன்னை யொக்கு நினக்கு இனி யான் கூறுவதெவன்? ஆயினுங் கூறுகின் றேன்; நந்தட்டன்! இதனைக் கேட்பாயாக; இந்நடுக்கஞ் செய்கின்ற வருத்தத் தினின்று நீ நீங்கி நமக்குக் குரவராயுள்ளார் வருத்தத்தையு நீக்கி அவரிருக்குமளவும் அவரைப்பேணி அவரிறந்தால் நீர்க் கடனாகிய முறைமையைச் செய்வாயாக வென்று கூறினானென்க நீர்க்கடன் - உதகக்கிரியை. எவன் என்னையெனநின்றது. ஐ - அசை. (181) 1738. ஓம்படை சாற்றற் பால துள்ளவர்க் காகு மன்றே யாம்புடை யென்க ணில்லை யங்கையென் கண்க ளாகத் தேம்படு தாரி னீர்க்குஞ் செல்வற்குஞ் செய்வ செய்தேன் காம்படு காட்டுத் தீயிற் கனன்றுட னெழுக வென்றேன். இ-ள். உயிருடனேயிருப்பார்க்கன்றே இவரைப் பாதுகாத்துக் கொள்ளென்று கூறுவது; உயிர் வாழும் பக்கம் என்னிடத்தில்லை; ஆதலின், இது கூறவேண்டா; என்கண்கள் கையாலே அவற்றினீ ராலே நமக்குஞ் செல்வனுக்குஞ்செய்யும் நீர்க்கடன் மரபெல்லாஞ் செய்து விட்டேன்; இனிக் காட்டுத் தீப்போலே சேரவெழுக வென்றே னென்றானென்க. அழுதது-இழவென்னுமெய்ப்பாடு. ‘தாரினீர்க்கு’ எனவே சுற்றமெல்லாமடங்கும். (182) 1739. கோட்டிளங் குழவித் திங்க ளிரண்டன்ன வெயிற்றுக் கோளே வேட்டவோர் சிங்கஞ் சூழ்ந்த வேங்கையி னினத்தின் வெய்ய வாட்படை யெழுந்து வாழ்க சீவக னென்னு மாங்கட் பாட்டினை யொருவ னெங்கள் பரிவறப் பாடி னாளே. கோடு - வளைவு. இ-ள். முன்பு சிங்கத்தைச்சூழ்ந்த புலித்திரள்போலே வெய்ய வாகிய நமது வாட்படை அச்சிங்கத்தினேதந் தீர்த்தற்கு யான் அங்ஙனங்கூறக்கேட்டு எழுந்திருந்து சீவகன் வாழ்க வென்ற வளவிலே, எங்கள் வருந்தந்தீர ஒருத்தன் பாட்டினைப் பாடினா னென்க. நீயும் யாங்களுஞ் சிங்கமும் புலியும்போலிருப்போ மென்றான். (182) 1740. வருவர்நங் கேள்வ ரின்னே வாணுதற் பசலை தீர வுருகிநைந் துடன்று முன்கை வளையுக மெலிய வேண்டா அருவிமும் மதத்த யானை யதிர்ந்துழிக் காரென் றெண்ணித் தெரிவில பேதை முல்லை பூத்தன தெளியி தென்றான். இ-ள். யானை மதத்தவாய் அதிர்ந்துழி அவற்றைக்காரென் றெண்ணி ஆராயாதே முல்லை பூத்தன; இதனைப் பருவமன் றென்று தெளிநீ; இன்னேமெலிய வேண்டா; யானவரிடத்தே சென்றாற் குறித்தபருவத்தே நீட்டித்தாராயின் மெலியவுமையும்; யான்சென்ற பொழுதே நின்பசலைதீரக் கேள்வர்வருவரென்றா னென்க. இது பருவமன்றென்னு தலைவியையாற்றுவித்துத் தூது செல்கின்ற பாணன் கூற்று. “நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை யுரைத்தல் - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய” (தொல், கற்பு 28) என்னுங் கற்பியற் சூத்திரத்தானும், “அரக்கத்தன்ன தேரே” (தொல்.கற்பு 14) என்னுமகப் பாட்டில், “யாங்கா குவங்கொல் பாண வென்ற - மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்-செவ்வழி நல்லியா ழிசையினேன் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந் நிறுத்தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே” என்பதனா னுங்கொள்க. எனவே சீவகன் இப்பொழுது வாரானென்பதூஉம், யாஞ் சென்று பின்புகொண்டுவருவோமென்பதூஉம், இதற்குக் கருத்தென்று தேறிப் போர்த்தொழில் தவிர்தல் பயனாம். இனி ‘என்றா’ளென்று பாடமோதித் தோழி யாற்றுவித்தாளென்றல் ஈண்டைக்குப் பொருந்தாது. இன்னே வருவரெனக்கூட்டி இப்பொ ழுதே வருவரென்றால் இவனும் இப்பொழுதே வருவனென்பது கருத்தாமாதலிற் பொருந்தாது. (184) 1741. பாட்டினைக் கேட்ட லோடும் பழம்பகை நட்பு மாமே யோட்டியுங் கோறு மன்றே நம்பிதா னுண்மை பெற்றா னாட்டிடம் பரந்து போகி நாடுது நாங்க ளென்னா வீட்டமும் வேறு மாகி யிலைப்புரை கிளைத்திட் டேமே. ஆமே, ஏகாரம் - எதிர்மறை. இ-ள். பாட்டினைக் கேட்டவளவிலே, அதன் பொருளைக் கருதிச் சீவகன் பிழைத்த படியையறிந்தாற் பின்பு சிலநாள் கழித்தும் அவனைக் கொல்வேமன்றோ! அஃதென்னெனில், “பழம்பகை நட்பாத லில்” (97) என்னும் பழமொழியுமுளதன்றே; இனி யாம் பரந்துபோய் நாட்டிடமெல்லாம் நாடுதுமென்று கருதித் தனித்துந் திரண்டும் எவ்விடமுந்தேடினோமென்க. நாடு-நானிலத்திற்கும்பொதுப்பெயர். இலைப்புரை கிளைத்தல் - ஒரு பழமொழி. (185) 1742. மணிபொதி துகிலிற் றோன்று மஞ்சுசூழ் வரைக ணாடி யணிநகர் யான்சென் றெய்தி மாலைதன் மனையைச் சேர்ந்தேன் றுணைமலர்க் காந்த ளூழ்த்துச் சொரிவபோற் றோன்றி முன்கை யணிவளை நலத்தோ டேக வங்ஙன மிருந்து நைவாள். 1743. என்னைக்கண் டடிசி லாக்க வையர்க்கென் றவல நீங்கப் பொன்னைக்கண் டனைய சாய லவர்புரிந் தடிசி லேந்தத் துன்னினோ யுற்ற மஞ்ஞைத் தோற்றம்போ லிருந்த நங்கை பின்னைநாட் குவளை நீர்வீழ் பெற்றிய கண்ண ளாகி. 1744. அடிகளை யின்றி நீரே யுண்ணவும் வல்லீ ரானீர் கடியிர்நீ ரைய னீரே யெனக்கசிந் துருகிக் காய்பொற் கொடிதுக ளார்ந்த வண்ணங் குழைந் துமா நிலத்து வீழ்ந்த பெடைமயிற் சாய லாடன் பேதுகண் டாங்கு மீண்டேன். இவைமூன்றுமொருதொடர். இ-ள். யான்சென்று வரைகளைநாடி நகரையெய்திக் குண மாலை மணையைச் சேர்ந்தேன்; அப்பொழுது காந்தட்பூப் பழகி யுதிர்வன போலேதோன்றி வளை நலத்தோடே ஏகவிருந்து அங்ஙனநைகின்றவள் என்னைக்கண்டு எனதவலநீங்கும்படி ஐயர்க்கு அடிசிலாக்குகவென, அவருமாக்கி அடிசிலையேந்தினா ராக, நோயுற்றமயில் போலிருந்த நங்கையணுகிச் செவ்வியழிந்த குவளை நீர்வீழுந்தன்மையையுடைய கண்ணளாய், ஐயரே! அடிகளையின்றி நீரேயுண்ணவும் வல்லீராயினீர்; நீர்கொடியீ ரென்று கசிந்துருகிப் பொற்கொடி துகளார்ந்தாற்போல நிலத்தே விழுந்த சாயலாடன் வருத்தங்கண்டு அவ்விடத்தினின்றும் மீண்டேனென்க. ஆக்குக- விகாரம். என்று - என்ன. பொன் - திரு. பின்னை, ஐ - அசை. பின்னாள் - மற்றைநாள். பெடைமயிலென்றார்; பொலி வழிதலின். (186-8) 1745. செல்வனை யின்று நாடிச் சேவடி தொழுத லொன்றோ வல்லதிவ் வுடம்பு நீங்கி வேற்றுல கடைத லொன்றோ யெல்லைவிவ் விரண்டி னொன்றே யிப்பகன் முடிப்ப லென்னா மல்லிகைக் கோதை யைம்பான் மலைமகண் மனையைச் சேர்ந்தேன். இ-ள். அங்ஙனமீண்டு செல்வனைக்கண்டு வணங்குதல் ஒரு காரியம்; அது கூடாதாயின், இறத்தலொருகாரியம்; இவ்விரண்டி னொன்றை யின்றைப்பகற்பொழுதினெல்லையின் முடிப்பே னென்றுகருதித் தத்தைமனையைச் சேர்ந்தேனென்க. (189) 1746. மணியொலி வீணை பண்ணி மாண்டகோ றடவ மாத ரணிமுலைத் தடத்தி னொற்றி வெப்பராற் றட்ப மாற்றிப் பிணைமலர்க் கோதை கீதம் பாடயான் பெரிதும் பேதுற் றிணைமலர்க் கண்ணிக் கொவ்வா விளிவரு கிளவி சொன்னேன். இ-ள். கோதையையுடையவம்மாதர் அழகிய ஓசையை யுடைய யாழைப்பண்ணி அதனரம்பைத்தடவுதற்கு முலைத் தடத்தேசேர்த்தி அதன் வெப்பத்தாலே அதன்குளிர்ச்சியை மாற்றிப் பாட, யான் பித்தேறி அவளுக்குப் பொருந்தாத கிளவி யைக்கூறினேனென்க. இளிவருகிளவி - “பொறிகுலாய்” (சீவக 1706) என்னுங்கவி. (190) 1747. சொல்லிய வென்னை நோக்கித் துளங்கனும் மடிகள் பாதம் புல்லயான் புணர்ப்ப லென்று பொழுதுபோய்ப் பட்ட பின்றை யெல்லிருள் விஞ்சை யோதி யிவ்வழி யிடுவித் திட்டாள் சொல்லுமி னடிக ணீரும் போந்தவா றெனக்கு மென்றான். இ-ள். அங்ஙனங்கூறிய வென்னைநோக்கி வருந்தாதே கொள்; நும்மடிகள் பாதத்தை நீ சேரும்படி யான்கூட்டுவேனென்று கூறி ஞாயிறுபட்டபின்பு விஞ்சையையோதி விடியற்காலத் திருளீலே இவ்விடத்தே இடுவித்தாளென்று உரைத்தான்; அங்ஙனமுரைத்த பின்பு, அடிகளே! நீரும் போந்தவாறு எனக்குக் கூறுமினென்றா னென்க. காளையீதுரைக்கின்றவன் (சீவக 1732) இடுவித்திட்டா ளென்றுரைத்தா னெனக்கூட்டுக. (191) 1748. தாதையா ருவப்பச் செய்வான் றாழ்கச்சிற் பிணிப்புண் டைய போதரா நின்ற போழ்திற் போர்ப்புலிக் குழாத்திற் சீறிக் காதனஞ் சுற்ற மெல்லாங் கையிலங் கெஃக மேந்திச் சாதலே புரிந்து தோன்றுந் தன்மையந் நகரிற் கண்டேன். இ-ள். ஐயனே! தாதையர் மனமகிழ அவரேவல்செய்தற்காக விடாமற் றங்குவதோர் கச்சிட்டுப் பிணித்தாற்போல அவர் சொல்லாற் பிணிப்புண்டு போதுகின்ற காலத்தே, நஞ்சுற்ற மெல்லாம் எஃகமேந்திப் புலிக்குழாம்போலே சீறிச் சாதற்கொருப் பட்டுத் தோன்றுமியல்பை அந்நகரிற் கண்டேனென்க. கச்சின், இன் - உவமப்பொரு 1749. கண்டபி னின்னைக் காண்பேன் கருவரை யுலம்பிப் பல்கால் விண்டுவு முடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கி யண்டிசை யோரு மெள்கக் குஞ்சர மிரியப் பாயு மொன்டிறற் சிங்க மன்ன கதழொளி யுடற்சி கண்டேன். கருவரையிற் சிகரமுமஞ்சியுடையும்படி வாலினாலே பல்காலும் வீசி வெகுண்டு பரந்து நோக்கி எண்டிசையோரு மச்சங்கூரும்படி குஞ்சரத்தைக் கெடப்பாயுஞ் சிங்கமென்க; “பழிவந்து மூடுமென் றெள்குதும்” (திருச்சிற்-92) என்றாற்போல அஃகவும் பாடம். கதமொழி - மிக்கவொளி. இ-ள். அவரைக்கண்டபின்பு நின்னைக்காண்கின்ற யான் சிங்கமன்ன நின்னுடற்சியைக் கண்டேனென்க. முன்பு அவன் சிங்கத்தையின்றி யெழுந்தேமென்றதற்கு நீ யப்புலித்திரளுக்குச் சிங்கமென்றானென்க. விண்டு - விகாரம். 1750. சினந்தலைப் பெருக்கித் தீக்கோ ளுறுப்பினைச் சுருக்கித் தீப்போ லனன்றுநில் லாத கண்ணா னிறுத்தின செவியிற் றாகி முனம்புக வடக்கிப் பின்போந் திருந்துபாய் வான மைந்த இனந்தலைப் புலியோ டொக்குந் தோழர் நின் னிடத்திற் கண்டேன். இ-ள். அதன்பின் சினத்தை யிடத்தேபெருக்கித் தீக்கோட் பாட்டை யுடைய உறுப்புக்களைச் சுருக்கி யழன்று சுழல்கின்ற கண்ணோடே நேரநிறுத்தினசெவியிற்றாய் உடம்பினைக் குறைத்துப் பின்போந்திருந்து முன்னேசெல்லப்பாய்தற்கிருந்த திரட்சியை யிடத்தேயுடைய புலியோடொக்குந் தோழரை நின்னிடத்தே கண்டேனென்க. 1751. கூடநீர் நின்ற பெற்றி கண்டிப்பா னோக்கு வேற்கோர் கேடகம் வாளொ டேந்திக் கெடுகவிந் நகர மென்னா மாடத்தி னுச்சி நின்ற மலைமக டன்மை கண்டே யாடவர்க் குழுவை யொப்பா யஞ்சினே னதன்க ணென்றான். இ-ள். நீர் அங்ஙனஞ்சேரநின்ற தன்மைகண்டு தாதையார் கருத்தன்மையின், நும்மையேவாதே யிப்பக்கத்தைப் பார்ப்பேன் பொருட்டுக் கெடுகவிந்நகரென்று ஏந்தி நின்ற தத்தைதன்மை கண்டு, புலியொப்பாய்! அந்நிலையிலே யஞ்சினேனென்றா னென்க. “தாதை” முதல் இதனளவு மொருதொடர். 1752. பெண்ணிடர் விடுப்ப வாழ்விற் சாதலே பெரிது நன்றென் றெண்ணினே னமர்கள் வீயு மியல்பினா னெருங்கப் பட்டுக் கண்ணிநா னியக்கன் றன்னைச் சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி யண்ணல்வந் தழுங்கத் தோன்றி யாங்கென்னைக் கொண்டு போந்தான். இ-ள். தன்மனையாள் தன்னிடரைநீக்க உயிர்வாழ்தலின், இறத்தல் மிகநன்றென்றெண்ணினேன்; எண்ணி நமக்கு ஒரு செயலின்றாக்கி நஞ்சுற்றமும் வீயும்வகையோடே முன்செய்த தீவினை நெருங்கப் படுதலாலே, இந்நிலைக்கு இறைவனல்லது வேறொருவரின்றென்று கருதி யிறைவனைவாழ்த்தி இயக்கனுக்கு யான்கூறிய நிலையைக்கை விட்டுப் பின்னும் இயக்கன்றன்னையே நினைத்தேன்; அவன் வந்து தோன்றி அவ்விடத்தினின்றும் என்னைக்கொண்டுபோந்தானென்க. “வாரணத்தொழுவின்முற்றி-மீளிமைசெய்யின்” (சீவக 958) என்ற நிலையைவிட்டு. வாழ்த்துதல் - ஓம்ணமோ அரஹந்தாண மென்றல். அழுங்க - சூழ்ந்தவர்வருந்த. (196) 1753. மந்திர மூன்றுந் தந்து வானவன் விடுப்பச் செல்வேற் கிந்திர திருவிற் சூழ்ந்த வினமழைக் குழாத்தின் வேழங் கொந்தழற் காட்டுத் தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கிச் சிந்தித்துக் கவன்று நிற்பத் திருமழை மொழிந்த தன்றே. மந்திரமும் பிறவுமுண்மையின், உம்மை “இனைத்தென வறிந்த சினைமுதற்கிளவிக்கு- வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்” (தொல் கிளவி.33) என்னுமும்மையன்றி, மூன்று மந்திரமும், வழி முதலியனவுமென எச்சவும்மை. செல்வேற்குக் கவன்றென்க. எண்ணிறந்த இனக்களிற்றின்றுயரை நீக்குதற்குரிய யான் நீக்கா தொழியின், மூவகைப் பாவத்திலும் உடன்பாடாகிய பாவமெய்தி நெருநற் சுற்றமும் யானுமுற்றதுன்பம் போல் இதுவும் பின்புவரு மென்று எனக்குக்கவன்றென்றான். முன்பு “வேழப்பேரி னந் - தங்கியகாடு” (சீவக 1179) என்றார். சிந்தித்து நிற்ப - தெய்வத்தைப் பார்த்து நிற்ப. அன்றே அப்பொழுதே. இந்திரவில்லும், மேகமுந் தீச்சூழ்ந்த யானைக்குவமம். இ-ள். தேவன்விடுப்பக் குழாத்தைநோக்கிச் செல்வேற்குக் கவன்று சிந்தித்து நிற்ப, மழை யன்றே பெய்ததென்க. சீவகன் மற்றும் வழியினிகழ்ந்தனவெல்லாங்கூறாது இதனையேகூறியதென்னை யெனின், “யாண்டுநேரெல்லை” (சீவக 393) என்றமொழி நந்தட்டனறியானாதலின், இன்னும் இராசமா புரத்துச் சென்றாலும் இத்துன்பமுளதாமோவென்று கருதினும் அது கருதாதபடி மற்றைநாளே அத்தீவினையுள்ளது நீங்க வேண்டும் பேரறஞ் செய்தேனென்றான். இனிச் செல்வேற்கு மழை பொழிந்ததெனக்கூட்டித் தேவன் “பாம்புமல்லவும் கடுந்திற னோய்களுங்-கெடுக்கும்” (சீவக 1218) என்ற மந்திரத்தைக்கூறலின், அவன் கூறிய மந்திரமே இம்மழையைப் பெய்வித்ததென்றுமாம். இதற்கு நெருநற் சுற்ற முற்றதுயரை இவையுமுற்றனவென்று கவன்றென்க. இம்மந்தி ரங்களின் பெருமையால் இனி நமக்கு எவ்விடத்தும் ஓரேதமின் றென்பதறிவித்தல் பயனாகவிது கூறிற்றாம். (197) 1754. வெல்களிற் றச்ச நீக்கி விரைவொடு வனத்தி னேகிப் பல்லவ தேய நண்ணித் தனபதி யென்னு மன்ன னல்வனப் புடைய தேவி திலோத்தமை பெற்ற நம்பி செல்வன்மற் றுலோக பாலன் றிருமகள் பதுமை யென்பாள் 1755. அரிகுரற் கோழி நாமத் தரவவட் கடித்த தாகத் திருவிழை யவளைத் தீர்த்தேன் றீர்விலா நண்பு வேண்டிப் பொருகளி யானை மன்னன் புனையிழை யவளைத் தந்தா னிருமதி கழிந்த பின்றை யிடையிராப் பொழுதிற் போந்தேன். இவையிரண்டு மொருதொடர். இ-ள். அங்ஙனம் அகற்றினச்சத்தை நீக்கி யேகிப் பல்லவ தேவ நண்ணி அதற்குரிய செல்வனாகிய தனபதியென்னு மன்னனு டைய தேவி திலோத்தமை பெற்ற பிள்ளை உலோகபாலன்; மகள் பதுமை; அவளைக் குக்குடசர்ப்பங் கடித்ததாக, அவளைத் தீர்த்தேன்; அதனாலே என்னோடுறவுவேண்டி அவ்வரசன் அவளைத்தந்தான்; தந்து இரண்டுதிங்கள் சென்ற பின்பு போந்தே னென்க. களிற்றினச்ச நீக்கவே தன்சுற்றத்திற்கும் அச்சமின்றாம் (198-9) 1756. வாவிப்புண் ணடையி னாளை வஞ்சித்துத் தக்க நாட்டை மேவியான் காண லுற்றுச் சார்தலுமிப்ப ருள்ளான் றூவிப்பொன் மாடமூதூர்ச் சுபத்திர னென்னைக் கண்டே யாவிக்க ணறிவு போல வளவளா யன்பு பட்டான். வாணிகர்:- இப்பர், கவிப்பர், கொருங்குடியரென்று மூன்றுபாலார். தூவிப்பொன்கிளிச்சிறை; தூவியுமாம். இ-ள். யான் அங்ஙனம் அவளையொளித்துப்போந்து தக்கநாட்டை மேவிமூதூரைக்காணலுற்றுச் சார்ந்தவளவிலே, இப்பருள்ளானாகிய சுபத்திரன்கண்டு ஆவியிடத்து அறிவு கலந்தாற் போலக் கலந்து அன்புற்றானென்க. (200) 1757. பண்மை தேரி னேறி யவனொடியா னிருந்து போகி விண்ணுயர் செம்பொன் மாடத் திழிந்தவண் விளங்கப் புக்கேன் வெண்ணிலா முத்தஞ் சூழ்ந்த வெம்முலைத் தடங்க ணாளை மண்ணெலாஞ் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான். அவண்விளங்க-அவள்நாணுதலின், மனைவிளங்கிற்று. உலகந் தன்னிடத்திலே செல்லநின்ற மகிழ்ச்சியாவது அரசவுரிமை. இன்-பொரு. இ-ள். அவன் அங்ஙனம் அன்புற்றுக் கொண்டுபோதுதலின், யான் அவனுடனே தேரிலேயேறியிருந்து போய் இழிந்து மாடத்தே புக்கேன்; புக்கபின் தன்மகளை மகிழ்ந்து தந்தானென்க. (201) 1758. அவ்வழி யிரண்டு திங்கள் கழிந்தபி னவளி னீங்கி யிவ்வழி நாடு காண்பான் வருதலு மிறைவன் கண்டே செல்வழி பாட ராகிச் சிலைத்தொழில் சிறுவர் கற்ப மைவழி நெடுங்க ணாளைத்தந்தனன் மதலை யென்றான். இ-ள். மதலாய்! அவ்விடந்தே யிரண்டுதிங்கள் போன வளவிலே அவளில்லினின்று நீங்கி இப்விடத்து இந்நாடு காண்டற்கு வந்தேன்; வந்தவளவிலே, இறைவன் சிறுவர் செவ்விய வழிபாடராகி விற்றொழிலைக் கற்ப, அதனை அவன் கண்டு கருமைமிக்க கண்ணாளைத் தந்தானென்றானென்க. ஏனைப்படைக்கலங்களின் றொழிலும், யானை முதலிய வேற்றுத்தொழிலுங் கற்றாரேனும் அவை கூறாது விற்றொழிலே கூறினார்; அதன் சிறப்பு நோக்கி. “பெண்ணிடர்” (சீவக 1752) என்னுங்கவிமுதல் இவ்வளவு மொரு தொடராக்கி என்றானென முடிக்க. (202) 1759. தானுழந் துற்ற வெல்லாந் தம்பியை யுணரக் கூறித் தேனுழந் தரற்றுந் தாரான் குரவரைச் சிந்தித் தாற்கு வானிழிந் தாங்குக் கண்ணீர் மார்பக நனைப்பக் கையா லூனுமிழ்ந் திலங்கும் வேலா னொற்றிமற் றிதனைச் சொன்னான். இ-ள். சீவகன் தானுற்றனவெல்லாவற்றையும் தம்பியை யறியக்கூறிக் குரவரைக்காணப்பெற்றிலமேயென்று நினைத்தவன் பொருட்டு நந்தட்டனழுதானாக, சீவகன் அதனைத்துடைத்து இதனைச் சொன்னானென்க. இனி, கூறி-கூற; சீவகன்கூற இதனைக் குரவருங் கேட்கப் பெற்றிலமேயென்று சிந்தித்த நந்தட்டனுக்குக் கண்ணீர் மார்பிடத்தே நனைப்பவென்றுமாம். (203) 1760. திண்பொரு ளெய்த லாகுந் தெவ்வரைச் செகுக்க லாகு நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையு நண்ண லாகு மொண்பொரு ளாவ தையா வுடன்பிறப் பாக்க லாகா வெம்பியை யீங்குப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான். எம்பி-முன்னிலைப்டர்க்கை. இ-ள். ஐயனே! எய்தலாம்; செகுக்கலாம்; நண்ணலாம்; ஆக்கலாகாவொண் கொருளாவது உடன்பிறப்பு. இத்தன்மைத் தாகிய நின்னை இவ்விடத்தே பெற்றேன்; எனக்கு இனியரிய தில்லை யென்றானென்க. (204) வேறு 1761. தேனிற் பாலெனச் செல்வன் றம்பியோ டானி யம்பல கழிய வாயிடை வேனிற் குன்றெனத் தோழர் வெந்துமெய் யூனி னைகின்றார் செய்வ துன்னினார். இ-ள். சீவகனுக்கு நந்தட்டனுடனே தேனிடத்துப்பால் போல இனிதாகப் பலபொழுதுகழியாநிற்க, அவ்விராசமா புரத்தே, தோழர் குன்றென மனங்கொதித்து உடம்பில் ஊன்மெலிகின்றவர், செய்யுங்காரியத்தை நினைத்தாரென்க. (205) ஊனின், இன்-அசை. 1762. நாடு மின்னினி நாங்கள் செய்வதென் றீடி னாலிருந் தெண்ணி நால்வரும் ஆடு மஞ்ஞையஞ்சாயற் றத்தைமெய் வாட லொன்றிலள் வஞ்ச மாங்கொலோ. 1763. கள்ள முண்டெனிற் காண்டு நாமென மெள்ள வெய்தினார் வினவக் கூறினாள் வள்ளற் குற்றதும் மறைந்த வண்ணமும் வெள்ளி வெண்மலை வேந்தன் பாவையே. இவையிரண்டு மொருதொடர். இ-ள். தோழன்மார்நால்வரும் வருத்தத்தோடேயிருந்து அங்ஙன மெண்ணி இனி நாஞ்செய்யுங்காரியத்தைத் துணிமி னென்றுகூறி, தத்தை வருத்தமில்லாளாதலின் அவன்கரந்துறை கின்றானோ அங்ஙனங் கரந்துறைதலுண்டாயின் நாங் காண்பே மென்றுதுணிந்து மெல்லச்சென்று அவர்கேட்ப, அவள் அவன் கரந்திருக்கிறபடியையும், அவனுக்கு அவ்விடத்துற்ற நன்மை களையுங் கூறினாளென்க. நாங்கள், கள் - பகுதிப்பொருள் விகுதி. (206-7) 1764. மற்ற வள்சொலக் கேட்ட மைந்தர்க ளிற்ற தம்முயி ரியல்பிற் பேர்த்தவட் பெற்ற மாந்தரிற்பெரிது மெய்குளிர்ந் தற்றமன்மையி னவல நீங்கினார். இள். அவள்கூறக்கேட்ட மைந்தர்கள், பின்னைப் போன வுயிரை முறையான் மீட்டு அவ்விடத்தே பெற்ற மாந்தரைப்போலே மெய் குளிந்ந்து அக்கூற்றுப் பொய்யன்மையின், வருத்த நீங்கினா ரென்க. (208) 1765. திருவின் சாயறன் சீற டிச்சிலம் புருவக் குஞ்சிவா யுறுத்தி யொய்யென வுருகு முள்ளத்தி னுடம்பு வீங்கினார் பருகு காதலிற் காடி யாடினார். இன்-பொரு. சிலம்பு-ஆகுபெயர்; அடியை நோக்கி வணங்கி. இ-ள். அங்ஙனம் அவர்வருத்த நீங்குதலின், வணங்கி அவனி டத்தன்பால் உருகுமுள்ளத்தால் உடம்புபூரித்தார்; அவனைக் காண்பே மென்னுங் காதலாற் பாடியாடினாரென்க. (209) வேறு 1766. பைத்தர வத்திரை சிந்திய பல்கதிர் மொய்த்தெரி நித்திலம் வைத்தன பல்லின ளித்திரு வின்னுரு வந்தொழு தார்தம தெத்துய ருங்கெடு மென்றின சொன்னார். இ-ள். அரவத்திரை பொங்கிச் சிந்திய விளங்குகின்ற நித்திலத்தை வைத்தாற்போலும் பல்லினளாகிய இத்திருவி வடிவைத் தொழு தாருடைய எல்லாத்துயருங் கெடுமென்று இத்தன்மையன கூறினா ரென்க. (210) 1767. ஐயனை யாமவ ணெய்துவ மாயிழை நொய்தினு ரைபொரு ளுண்டெனி னொய்தென மையெழுத் தூசியின் மாண்டதொர் தோட்டிடைக் கைவளர் கோதை கரந்தெழுத் திட்டாள். இ-ள். ஆயிழாய்! யாம் அவ்விடத்தேசென்று ஐயனைச் சேர்வேம்; சேர்ந்தாற் கூறுங்காரிய முளதேற் கடிதிற்கூறென, அவள் மையைத் தோய்த்தெழுதும் எழுத்தையுடைய எழுத்தாணி யாலே தோட்டிடையிலே எழுத்தைக்கரந்து கடிதாக வெழுதி னாளென்க. மை-மஷி. அவ்வெழுத்தறிந்தாலும் பிறர்வாசியாதபடி யெழுதினாள். கை - கற்பொழுக்கம். (211) 1768. ஆங்குருக் காரரக் கிட்டதன் மீமிசைப் பூங்குழை யாற்பொறி யொற்றுபு நீட்டத் தேங்குழ லாடொழு தாடிசை செல்கெனப் பாங்கரங் குப்படர் குற்றன ரன்றே. இ-ள். தேங்குழலாள் அங்ஙனமெழுதி அரக்கிட்டு அதன்மேலே காதிற்குழையாலே யிலச்சினையிட்டு இஃது அவனிருக்கின்ற திசையே செல்கவெனத் தெய்வத்தைத் தொழு தாள்; தொழுது அதனைநீட்ட, தோழன்மார் அவ்விடத்தே போகலுற்றாரென்க. நபுலனும் விபுலனும், குரவரைநோக்கிச் சிலபிள்ளைகள் நிற்கவேண்டுமென்றலின், நின்றார். (212) 1769. வேந்திரி யக்கணை வித்திய வெஞ்சிலை காய்ந்திரிக் கும்புரு வக்கருங் கண்ணிய ராய்ந்தரிக் குந்நற வம்மலர் மாலையை வேய்ந்தரிக் கும்மிஞி றார்ப்ப விடுத்தாள். இ-ள். வேந்திரிய வித்துதற்குக் காய்ந்து சிலையிற்றங்குங் கணையைக் கெடுக்கும் புருவத்துட்டங்குங் கண்ணியராலே ஆராய்ந்து தீமணங்களைந்து தொடுக்குமாலையைச் சூழ்ந்து மேயுமிஞிறார்ப்ப விடுத்தாளென்க. தன்றலையைச் சாய்த்துப் போமென்றலின், மிஞிறார்த்தது. (213) வேறு. 1770. அலங்கு வெண்மதி யைப்பசி யடையவப் பகலே நிலங்கொண் டோங்கின நிரம்பிய புகர்சுழி யுடைய வுலம்பி முன்னிரு தாள்களு முமிழ்வன போல்வ விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா. 1771. அள்ளற் சேறரு மணல்புன லருவரைப் படினு முள்ளம் போற்செல்வ வுரனசை வில்லன வமருட் கொள்ளி மண்டலம் போற்கொடி படத்திரிந் திடுவ வெள்ளி மால்வரைத் தாழ்வரை மேம்படப் பிறந்த. 1772. ஈரைஞ் ஞூற்றினை யிருபதின் முரணிய தொகைய வீர ரேறின விளங்கொளிப் பக்கரை யமைந்த தாரும் புட்டிலு மரற்றுவ சாமரை யணிந்த ஓருங் கூடின மள்ளரு மொலித்தெழுந் தனரே. இவைமூன்று மொருதொடர். இ-ள். மதி அசுவதி நட்சத்திரத்தைச் சேர அற்றைநாளிலே பிறந்துவளர்ந்தன; புகரையுஞ் சுரியையுமுடையன; காலைக் கால்வன போல்வன; குறுக்குப்பாய்வன; தம்மேலிருந் தெய்த அம்பைப் பின்னிடுவன; சேறுமுதலியவற்றைச் செல்வன; உரன் கெடாதன; கொள்ளிவட்டம்போல் இடையறாமற்றிரிவன; பிறந்தன; அமையப் பட்டன; அரற்றப்பட்டன; அணியப்பட்டன வாய் இருபதினாயிர மென்னுந் தொகையையுடைய கலிமா வீரரேறப்பட்டன வந்துகூடின. மற்றுள்ள வீரருமெழுந்திருந் தாரென்க. (214-6) புட்டில்-கெச்சை. வேறு. 1773. வடித்த போத்தொடு வண்செல லத்திரி கடுத்த வொட்டகங் காற்செல்வ யாiவையு நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ வெடுத்த பண்ட மியைந்துட னென்பவே. வடித்தபோத்து-பண்ணினவெருது. அத்திரி-கோவேறு கழுதை. கடுத்த - கால்கடிய. இன்-அசை. இ-ள். ஒருநொடியளவிலே நூறென்னுமெண்ணையுடைய விற்கிடைபோலனவாகிய போத்துமுதலியனவும் பிறவும் மனம்கொருந்திச் சேரப் பண்டத்தைச்சுமந்தனவென்க. (217) 1774. ஞாலம் விற்பன பைங்கிளி நன்னிறத் தாலு மாபவ ளக்குளம் பார்ந்தன காலி னொய்யன கண்வெளவு காட்சி நால்கு பண்ணினர் நால்வருமேறினார். இ-ள். விற்பன; ஆர்ந்தன; நொய்யன; காட்சியனவாகிய கிளிநிறத்தாலுமா நான்குபண்ணினார்; அவற்றிலே நால்வரு மேறினாரென்க. “நால்கு-இதுபெயர்த்திரிசொல்;” “பால்புரை புரவி நால் குடன் பூட்டி” (பொருந. 165) என்றார் பிறரும். (218) 1775. நாளும் புள்ளு நயத்தகு நன்னிலைக் கோளு மோரையுங் கொண்டநி மித்தமு மாளு மாந்தரினாய்ந்துகொண் டாயிடைத் தாளி னூக்குபு சாத்தொடெனெ ழந்தவே. கொண்டனிமித்தம்-பறவையொழிந்தன கொண்ட நிமித்தம். கொண்டு-கொள்ள. இ-ள். அவர் அங்ஙனமேறி நயக்கத்தக்க நாண்முதலிய வற்றை எப்பொழுது மாளுமாந்தரைப்போலே ஆய்ந்துகொள்ளா நிற்க, எருதுமுதலியன காலாலே முயன்று அவ்விடத்துப்போகின்ற சாத்துடனேபோயினவென்க. புறப்பட்டு நின்றுநாட்கேட்டது போக்கின் விரைவால். (219) 1776. பறையுஞ் சங்கும் பரந்தொலித் தார்த்தெழ வுறைகொள் வாளினோ டொண்சுடர் வேன்மினச் சிறைய ழிந்ததொர் செம்புனல் போன்றவ ணறைக டற்படை யார்ப்போடெ ழுந்ததே. இ-ள். பறையொலிக்க, சங்கார்த்தெழ, வாளும்வேலுமின்னக் கடற்படை கரையுடைந்தநீர்போல விரைந்து ஆர்ப்போடெழுந்த தென்க. உறைதல் கொண்ட வாள். (220) 1777. காய்த்த செந்நெலின் றாழ்கதிர் நெற்றிமேற் பூத்த முல்லையின் போதுபொ ழிந்துக நீத்த நீர்வய லன்னமு நாரையு மேத்தல் சான்முரு டார்ப்பவி ரிந்தவே. இ-ள். முருடுமுழங்குதலாலே வயலின் அன்னமும் நாரையு மிரிந்தனவென்க. தங்கால்பட்டு நெற்கதிரின்றலையிலே முல்லைப்பூத் தேனைச்சொரிந்து சிந்தும்படியென்க. இது நிலமயக்கம். (221) 1778. அளகு சேவலொ டாடியங் காய்க்குலை மிளகு வார்கொடி யூசல்வி ருப்புறூஉஞ் சுளகு வார்செவித் தூங்குகைக் குஞ்சர மிளகு காடிள கப்பரி கொண்டதே. இளகுகாடு-தழைத்த காடு. இ-ள். கூகைப்பெடை சேவலோடே புணர்ந்து மிளகு கொடியாகிய வூசலைவிரும் புங்காடு அசையும்படி யானை அவ்வோசை களைக்கேட்டுச் செலவுகொண்டனவென்க. அளகு-காட்டுக்கோழியுமாம். “கோழி கூகை யாயிரண் டல்லவை-சூழுங் காலையளகென லமையா.” (தொல். மரபு.55) இனிக் குஞ்சரமிளகுங் காடு இளகும்படி படை பரிகொண்ட தென்றுமாம். (222) 1779. அருவிக்குன்றமுமைவனச்சாரலு. குருவியார்த்தெழுகெபடயபுனககானமுந் திருவிற்றீர்ந்தவர்தேயமுந்தேர்ந்துபோய்ப் பரிவின்மாதர்வள்ளியுள்விட்டதே. திருவிற்றீர்ந்தவர்-செல்வமில்லாதவர். இ-ள். படை குன்றமுதலியவற்றை எதிரவருகின்றானோ வென்று தேர்ந்து போய்த் தாபதப்பள்ளியிலே மருவிவிட்டதென்க. வேறு. 1780. வண்டுதுயில் கொண்டுகுயி லாலிமயி லகவி விண்டுமது விட்டுவிரி போதுபல பொதுளிக் கொண்டுதளிர் வேய்ந்துசினை தாழ்ந்துநனை யார்ந்தொன் றுண்டுபொழி லிமையவர்க ளுலகமுறு வதுவே. இ-ள். துயில்கொண்டு ஆலிப் போது பலபொதுளி மதுச் சொரிதலாலே மழையென்று மயிலகவித் தளிரைக் கொண்டு வேய்ந்து தாழ்ந்து ஆர்ந்து தேவருலகை யொப்பதோர்பொழில் ஆண்டுண்டென்க. எச்சங்களைச் செயல்படுபொருளாக்குக. (224) 1781. காவிகழு நீர்குவளை யாம்பல்கடி கமலந் தூவிமட நாரைதுணை யன்னம்பயின் முதுமீன் மேவியுறை வண்டினொடு மல்கிவிழை தகைய வாவியொடு காவினிடை மாந்தர்பதி கொண்டார். இ-ள். மாந்தர் காவிமுதலியபூக்களும், நாரையும், அன்னமும், மீனும் வண்டோடேநிறைந்து விரும்புந் தகைமையையுடைய வாவி யோடுகூடிய காவினிடத்தே பதிதல் கொண்டாரென்க. (225) 1782. ஐயருறை பள்ளியிட மாண்டழகர் காணச் செய்கழலர் தாரரவ ரெங்குந்திரி கின்றார் கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிருமரப் பலகை செய்யவளிற் சிறிதுமிகைசேயவளைக் கண்டார். இ-ள். அழகராகிய அவ்விடத்து இருடிகளுறையும் பள்ளியிடத் தைக்காண்டற்குக் கழலராய்த் தாரராய்த் திரிகின்றவர் பூம் பொதும் பரின் மரப்பலகையிலேயிருக்கும் விசயையைக் கண்டா ரென்க. செய்யவளிற்காட்டின்மிகுதி இப்பொழுது சிறிது தூரியவள். குளிரும்-திசைச் சொல். ‘மலர்ப்பலகையும் பாடம்.’ (226) 1783. அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்தச் செந்துண்டுகி லுத்தரியம் புதைந்துசுவல் வருத்த மைந்நுண்குழற் சிறுவன்மனம் வருத்தாவடி வேற்கண் கைந்நொண்டன கவற்சிநனி வருத்தக்கலுழ்ந் தாற்றாள். 1784. மாசொடுமி டைந்துமணி நூற்றனைய வைம்பாற் பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறந் தாழ வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித் தோசமறத் துதிகண்மனத் தோதித்தொழு திருந்தாள். இவையிரண்டு மொருதொடர். இ-ள். துகிலிற்றோய்த்த அரத்தம்போலுங்கல் தன்வெம்மை யால் அல்குலாகியவதனைவருத்துதலானும், துகிலாகிய மேற் போர்வையழுந்திச் சுவலைவருத்துதலானும், சீவகன்மனத்தை வருத்து தலானும், அரசனையிழக்கும்படி நிகழ்த்தின ஒழுக்கத் தாலே முகந்துகொண்டனவாகிய கவற்சிவருத்துதலானுங் கண்கலுழ்ந்து ஆற்றாளாய் மாசோடுமிடைந்து நீலமணியைக் கம்பியாக்கினொலொத்த மயிர் கழுவுதலுமின்றிச் சடையாய்த் தாழ மலரை வாமனடியிலே யேற்றிக் குற்றமறத் தோத்திரங் களையும் மனத்திலோதி வணங்கி மறைந்தவழியிலே யிருந்தா ளென்க. கருத்து சீவகன்வாழ்வே கருதுதலின், மறைதலாயிற்று. (227-8) 1785. சிந்திப்பலென் சிறுவன்றிற மினியென்றெழி னெடுங்கண் வந்துபனி வார்ந்துலைக் கலிங்கமது நனைப்ப அந்திலிருந் தாளவளுக் கடைந்துமன நடுங்கி வந்தித்திருந் தார்மகிழ்ந்து காதன்மிக மாதோ. இ-ள். அங்ஙனமிருந்தவள் இப்பொழுது என்பிள்ளை திறத்தைச் சிந்திப்பேனென்று சிந்தித்துக்கண்ணிற் பனிவந்து வீழ்ந்து முலையிற்கலிங்கமாகிய வதனைநனைப்ப அவ்விடத்தே யிருந்தாள்; இருந்தவட்கு நம்பிள்ளைகளென்று ஒருகாதன்மிகும் படி யவர்கள் மனநடுங்கி வணங்கிச் சேர்ந்து மகிழ்ந்திருந்தா ரென்க. இவரால் அழுகை மாற்றினாள். (229) 1786. வரையுடுத்தபள்ளியிடமாகவதின்மேயோள் விரையுடுத்போதுறையும்வேனெடுங்கணாள்கொ லுரையுடுத்தநாவுறையுமொண்ணுதல்கொலன்றித் திரையுடுத்ததெமொழிகொலென்றுதெரிகல்லார். 1787. மங்கலம டிந்ததிரு மாமகளை யொப்பீ ரிங்குவர வென்னைகுலம் யாதடிகட் கென்ன வெங்குலமு மெம்வரவும் வேண்டிலெளி தன்றே நுங்குலமு நம்வரவும் நீருரைமி னென்றாள். இவையிரண்டுமொருதொடர். உடுத்த-சூழ்ந்த. இ-ள். பள்ளி இருப்பி.டமாக அதனுள்ளே மேவினவள் திருமகளோ! நாமகளோ! மண்மகளோவென்றுதெரியாராய், மங்கலங்கெட்டதிருவை யொப்பீர்! இங்குவந்தவரவெங்ஙனே? அடிகளுக்குக் குலம்யாதென்று கேட்ப, எங்குலமுமெம்வரவுங் கேட்கவேண்டிற் கூறுதலெளிதாயினும் இவ்வேடத்தாற் கூறலாகாது. இனி நுங்குலத்தையும், நும்வரைவையு நீர் கூறுமி னென்றாளென்க. (230-31) 1788. மோட்டுமுது நீர்மலங்கு மொய்த்தவிள வாளை பூட்டுசிலை யிறவினொடு பொருதுதுயின் மடியு மீட்டமுடை யவர்களுறை யிராசபுர மென்னு நாட்டமுடை நகரமெம தாகுமுறை பதியே. மோட்டுநீரின் மலங்கும், வாளையும், பூட்டினவிற்போலு மிறவோடே பொருதுதுயிலும் இராசமாபுரம். இ-ள். பொருட்டிரளுடையாருறையும் இராசமாபுர மென்னும் அழகுடைய நகர் எமதுறைபதியாமென்க. (232) 1789. பொன்னுடைய மார்பிற்புகழ் மந்திரிபொ லந்தார்த் தன்னுடைய நுண்ணுணர்விற் சாகரற்குத் தக்காள் கொன்னெடிய வாட்கட்குரு தத்தைசீ தத்தன் மன்னடுங்க வீங்குதிர டோண்மடங்க லன்னான். பொன்-திரு. தன்னுணர்வு-தன்மந்திரநூலிற்கூறியவுணர்வு. இ-ள். இம்மடங்கலன்னான், அந்நகரில் மந்திரியாகிய சாகரற்குத் தக்க மனைவியாகிய குருதத்தை மகன் ஸ்ரீதத்த என்றானென்க. 1790. அளப்பரிய நான்மறையி னானசல னெண்பான் திளைக்குந்திரு வொப்புடைய திலோத் மைதன் சிறுவன் விளைத்திரும்பு மேய்ந்தொழிந்த மிச்சில்வரை மார்ப னினைப்பலிவன் றேசுரைப்பிற் புத்திசேனிவ் விருந்தான். விளைத்து-தனக்கு ஒருபோரையுண்டாக்கிக் கொள்ளு தலாலே. இருப்புகளெல்லாம்மேய்ந்து குறைகிடந்த எச்சிலாகிய மார்பனாவான்-சச்சந்தன். ‘வளைத்து’ப் பாடமாயிற் சூழ்ந்தென்க. இ-ள். இவ்விடத்திருந்தவன் சச்சந்தனுடைய அந்தணனாகிய அசலன் மனைவிதிலேத்தமைதன் சிறுவனாகிய புத்திசேனன்; இவன் புகழைக்கூறில் இளைப்பேனென்றானென்க. இவன் - சேனாபதி. 1791. செட்டிதன பாலன்மனை யாட்சினவு வாட்கட் பட்டநுதன் மின்னினகு பவித்திரைக்குத் தோன்றி மட்டுமலர் மார்பின்மத யானையெயி றுழுதாங் கிட்டகுறி தார்திவளப் பதுமுகனிவ் விருந்தோன். இ-ள். அரசற்குரிய செட்டியாகிய தனபாலன் மனையா ளாகிய பவித்திரைக்குப்பிறந்து தன்மார்பிலே தழும்புந்தாரும் விளங்க இவ்விடத்திருந்தான் பதுமுகனென்க. நான்கனுருபு-அதற்குப்படுபொருளின்பாற்படும். பட்டம் நுதலிலே மின்போல நகுமென்னும் பெயரெச்சம் பவித்திரை யென்னு நிலப் பெயர்கொண்டது; “அரவம்புன்சடைமிடைந்த மின்னனையான்” (திருச்சிற்.125) போல. 1792. பொன்னகருள் வேந்தன்பெய ராற்பொறியும் பெற்றான் வின்மரிய தோள்விசய தத்னுயிர்க் கவசம் பின்னரிய கற்பினவள் பிரீதிமதி காதற் றன்மகனென் யானடிக டேவதத்த னென்பேன். ஒருபெயரையெழுதப்படுதலிற் பட்டத்திற்குப் பொறி யென்று பெயர் கூறினார்; ஆகுபெயர். இ-ள். அடிகளே! அந்நகரிலே அரசன்பெயராற் பெயரும் பெற்றவன்; அரசனுயிர்க்கு ஒருகவசம்; விசயதத்தனென்று மியற் பெயரையு முடையவன்; அவன் மனைவி மகளிரான் மலைத்தற்கரிய கற்பினையுடைய பிரீதிமதி; அவடன் காதன் மகனோகிய யான் தேவதத்தனென்னும் பெயரையுடையே னென்க. நால்வர்க்குந்தாயரைக்கூறி அவர்புதல்வரென்றது, மகடூ உவாற் குலந் தூய்மை பெறுதலானும் மகடுஉவிற்குக் கூறுதலானு மென்றுணர்க. (236) 1793. எங்கள்வினை யாவிறைவன் வீடியவஞ் ஞான்றே யெங்களுயிர் நம்பியொடு யாங்கள்பிறந் தேமா வெங்கடமர் நம்பிக்கிவர் தோழரென வீழ்ந்தா ரெங்கெழிலென் ஞாயிறென வின்னணம் வளர்ந்தேம். இ-ள். அரசன்பட்ட அற்றைநாளிலே யாங்கள் முற்பவத்திற் செய்த நல்வினையாலே எங்களுயிர்போலு நம்பியோடே கூடவந்து பிறந்தேமாக, எங்கடமர் இவர் நம்பிக்குத்தோழரென்று எம்மையீந் தார்; யாமும் எங்கெழிலென்ஞாயிறென வளர்ந்தேமென்க. அரசன் சுற்றத்தையெல்லாங் கட்டியங்காரனழிக்கின்றமை நோக்கியுங் கந்துக்கடன் றமக்குஇன்றியமையாமைநோக்கியும் இவர்கள் தமர் தோழரெனவீந்தார். இங்ஙனஞ்செய்வித்தது தோழர்பிற் பிறப்பிற்செய்தநல்வினையென்றுணர்க. இனி “அழுகுரல்” (சீவக.330) எனுங்கவியில் “உழிதரு பெருநிதி” என்றதனைத் தோழராக்கி இவரைக் கட்டியங்காரன் கந்துக் கடற்குக் கொடுத்தா னென்பார்க்கு இக்கவியில் எங்கடமர் தோழரென வீந்தாரென்றல் பொருந்தாமையுணர்க. (237) 1794. யாண்டுநிறைந் தேகியபி னந்தனவற் கிளையார் மாண்டகுணத் தார்நபுல விபுலரொடு மன்னு மீண்டுவளந் தேந்தவிசி னுச்சிமிசை யெய்தித் தீண்டரிய வெம்மையொடு திக்கயங்க ளெனவே. யாண்டு நிறைந்தேகியபின் என்பதனையும், மாண்ட குணத்தா ரென்ப தனையும், மூவர்க்குங்கூட்டுக. இ-ள். யாங்கள்பிறந்து ஓராண்டுகழிந்தபின்பு பிறந்த அவனுக்கிளையாராகிய நந்தன் நபுலவிபுலரோடே யாங்களுந் திக்கயங்களென்னும்படி எண்மராய்த் தவிசினேறிப் பகைவர் தீண்டற்கரிய வெம்மையோடே மிகவுங் கடுகவளர்ந்தேமென்க. ‘இளையா’னென்பதுபாடமாயின், அவனுக்கினையான் நந்தன்; அங்ஙன மாண்ட குணத்தார் நபுலவிலரென்க. அங்ஙன மாண்ட குணத்தாரெனவே தம்பியரென்னும் பொருடோன்றிற்று. 1795. விற்றொழிலும் வாட்டொழிலும் வீணைபொரு தொழிலு மற்றொழிலுந் தேர்த்தொழிலும் வாரணத்தின் றொழிலு நல்றொழில வாசியொடு நன்கலைக ணீந்திக் கற்றனங்கள் யாமுமுடன் கற்பனக ளெல்லாம். பொருதல்-தடவுதல். நன்கலைகள்-நூல்கள். இ-ள். யாமும் அவருடனேகூடக் கற்கப்படும்விஞ்சை களெல்லாம் முதல்நன்கலைகள்நீந்திப் படைத்தொழில் களையுங் கற்று அவற்றிற்குப்பின்பு வீணைத்தொழிலையுங் கற்றேமென்க. விற்றொழின் முதலியவற்றைக் குதிரையின்றொழிலோடே கற்றேமென்க. அ-அசை. (239) 1796. வெஞ்சிலையின் வேடர்தொறு மீட்டுவிசும் பேகும் விஞ்சையரை யன்மகளை வீணைபொரு தெய்திக் குஞ்சரமும் வென்றுகுண மாலைநல லுண்ட நம்பியவ னாமமெது வென்னினிது வாமே. 1797. கந்துக்கட னென்றநகர்க் காதிமுது நாய்கன் முந்திப்பெறப் ட்டமகன் மூரிச்சிலைத் தடக்கைச் சிந்திப்பவ ரவலமறு சீவகனென் றோழ னந்திலொரு நாளவனை யரசனொரு தவற்றால். 1798. தொடிகடவழ் வீங்குதிர டோளிறுக யாத்துக் கடிகடவழ் குழன்மகளிர் கசிந்துமனங் கரியக் கொடிகடவழ் மாடநகர்க் கொல்லவென மாழ்கி யிடிழகடவழ்ந் திட்டபட நாகமென வீழ்ந்தாள்.. இவைமூன்றுமொருதொடர். இ-ள். அங்ஙனங்கற்றுப் பின் நிரைமீட்டுக் கலுழவேகன் மகளை யாழாலேவென்றெய்தி யானையும்வென்று குணமாலை நலனுண்டநம்பி என்றோழனாம்; அவனாமம்யாதெனிற் சிந்திப் பவர் அவலமறுதற்குக்காரணமான சீவகனென்னுமிதுவாம். அந்நகரிடத்தே ஒருநாளிலே அரசனுடையதோர் தவற்றலே கந்துக்கடனென்றநாய்கன், தான் முற்படப்பெற்ற மகனுடைய மூரிச்சிலைத் தடக்கையையுடைய தோளைச் சிலைத்தொழில் செய்யாமலிறுகும்படி மனத்தைப்பிணிக்க, பின்பு அவ்வரசன் அவனை மகளிர் மனங்கரிய நகரிலே கொல்ல வென்று தேவதத்தன் கூற, விசயைவீழ்ந்தாளென்க. கொல்லக் கொலைக்களங் குறுகலுமென்னப் புகுகின்றான் கொல்லவென்றவளவிலே வீழ்ந்தாள். அரசன்கொல்லுபடி அவன்சென்று கொலைக்களங்குறுகலுமெனப் பொருளுரைக்க. நாய்கன்பிணிக்க வென்க. இடிகள் உடம்பெங்குந்தவழ்ந்த நாகமென்றது இல் பொருளுவமை. “மோட்டுமுதுநீர்” (சீவக 1788) என்னுங் கவிதொடங்கிக் கொல்லவென்ற சொல்லோடே முடிக்க. ஒருபெண்ணுயிரைக் காத்தவனைக்கோறல் அறனன்மை யின், அரசன் றவறென்றார். யாத்து-யாக்க. (240-42) வேறு 1799. மாதவப் பெருமை வண்ண மாநகர் நம்பிக் குற்ற ஏதத்தைக் கேட்ட லோடு மிருகணும் பிறழ்ந்து மாழ்கிக் காதற்றம் மகனுக் குற்ற நவையெனக் கலங்கி வீழ்ந்தா ராதலா னங்கை யாரே யருள்பெரிது டைய ரென்றார். இ-ள். நகரிலே நம்பிக்குப்பிறந்த ஏதத்தைக்கேட்ட வளவிலே தம்மகனுக்குற்ற நவையென்றுகூறும்படி இருகண்ணும் மேலே சொருகி அறிவழிந்து கலங்கி வீழ்ந்தார்; ஆதலாற் றாமேபெரிதும் அருளுடையராயிருந்தார்; இங்ஙனமருளைப் பிறப்பித்த தவப் பெருமையின்வண்ணம் இருந்தபடி யென் னென்றாரென்க. (243) 1800. மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெருந் தேவி தன்னை யாழ்துய ரவித்தற் கொத்த வரும்பெறல் யோக நாடிக் காழ்பரிந் தரைத்த சாந்திற் களிதரு நீரிற் றேற்ற யாழ்புரை கிளவி யாற்றாண் மயங்கிவீழ்ந் தரற்று கின்றாள். இ-ள். அங்ஙனம் வீழ்ந்ததேவியை வருந்தந்தீர்த்தற்கொத்த மருந்திதுவென்றுநாடி முத்துவடத்தை யறுத்துக் கூடவரைத்த சந்தனக்குழம்போடே தந்தபனிநீராலேதேற்றத் தெளிந்து யாழ் போலுங்கிளவி யாற்றாளாய் அழாநின்றாளென்க. (244) வேறு 1801. மைம்மாண் கடற்படையுட் காவல னையாண்டொழியப் பொய்ம்மா மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள் விம்மாந் தியான்வீழ வீழ்ந்தேன்று ணையாகி யெம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ. கை-படைவகுப்பு. ஐ-அசை. விம்மாந்து-பொருமி. இ-ள். என்பிள்ளாய்! அரசன்படுதலாலே யான் பொறி மயிலை யூர்ந்துபோய்ப் புறங்காட்டிலே வீழ அங்ஙனம் வீழ்ந் தேற்குத் துணையாய்த்தோன்றினநீ இப்பொழுது என்னை யொளிக் கின்றாயோவென்க. (245) 1802. கையா ரிலங்கெஃகிற் கந்துக் கடன்கொடுபோய் மொய்யா ருவகையனாய் முற்றிழைக்குத் தான்கொடுப்ப நையாள் வளர்த்த சுநந்தை நவையுறவென் னையாவென் னையாவென் னையா வகன்றனையே. கந்துக்டன் சுநந்தையென்றது, வருவார்கூறக்கேட்டு. இ-ள். கந்துக்கடன் செறிவுநிறைந்தவுவகையானய் எடுத்துக் கொண்டுபோய்ச்சுநந்தைக்குக்கொடுப்ப வருந்தாதே வளர்த்த அவள் வருந்தும்படி என்னையா! அகன்றாயேயென்க. விரைசொல்லடுக்காதலின், மூன்றாயிற்று. என்னையா-விளியன்று; இரக்கக்குறிப்பு. நின்னை வளர்த்தற்குரிய நல் வினையு iடையவளும் வருந்த அகன்றாயே யென்றாள். (246) 1803. மின்னிரைத் பைம்பூண் விளங்கிலைவேல் வேந்தன் முன்னுரைத்த மூன்று கனவும் புணையாக வென்னுயிரைத் தாங்கி யிருந்தேன் வலியாகா தென்னரசே யென்பூசல் கேளா திறந்தனையே. இ-ள். என்னரசே! வேந்தன் மேல்விளையும்படியைக்கூறிய மூன்று கனவும் புணையாக இறந்துபடாதிருந்தேனுக்கு வலியா காதே என்பூசலையுங்கோளாதே யிறந்தாயேயென்க. ஒன்றுபயத்தலின், ஒழிந்தவிரண்டும் பயக்குமென்றிருந்தாள். அரசன் யுயிர்கொண்டிருந்து நின்பதல்வனாற் பகையை வெல்கென்று போகவிடுத்தலின், என் பூசலென்றாள். கேளாதே-முடியாதே. (247) 1804. கோவமா வாகிக் குடியோம்பி நின்குடைக்கீழ்ப் பாவமே செய்தேன் பரிவெலா நீங்கினாற் போவம்மா வென்றுரைப்பப் போவேன்முன் போயினாய் ஆவம்மா வம்மாவென் னம்மா வகன்றனையே. அம்மா-அழகியதிரு. ஓம்பி-ஒம்ப. அரசனுடனிறந்திலேன்; இருந்து பகையையும்வென்றிலேனென்று பாவமேசெய்தே னென்றாள். பரிவு-தானினைத்தவைமுடியாதபரிவு. போவம்மா, அம்மை-அம்மாவென விளியேற்றது; “முறைப்பெயர் மருனைங்கி யெ னிறுதி யாவொடு வருதற் குரியவு முளவே” (தொல். விளிமரபு.9) என்றதனால். அம்மாவென அடுக்கிய திசைக் சொல்லாகிய விலாவணை, “கடிசொல் லில்லை” (தொல்.எச்ச 56) என்பதனாற்கொள்க. அன்றி அம்மவென்ற அகரவீற்றுரிச் சொற் கேட்பித்து உரையசை யாயவிடத்து “ உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்.” (தொல்.உயிற்.10) என்பதனானீண்டு அதுபின்பு” “அம்ம வென்னு மசைக் சொனீட்டம் விளியொடு கொள்ப தெளியு மோரே.” (தொல்.விளி.36) என்பதனால், அம்மாகொற்றாவென்ற வழிக் கொற்றாவென்பது எதிர் முகமாக்கத் தான் கேளாயென்னும்பொருடந்து அதனொடு கூடி எதிர்முகமாக்கி நின்றதாதலிற் பிரிந்துநின்று விளியேலா தென்றுணர்க. இதனாற் பிள்ளாயெனவிளித்தல் பொருந்தாது. இ-ள். உலகைக்காத்துச்செல்வத்தையுங்கொடுத்தலிற் கோவும் அழதிய திருவுமாய்நின்று நின்குடைக்கீழ்க்குடியை நீயோம்ப, அதனைக்கண்டு யான் பரிவுநீங்கினாற் பின்பு, அம்மா! நீ துறந்துபோவென்னப் போவேன்முன்னே போனாய்; அங்ஙனம் போன நீ ஆ! ஐயோ! ஐயோ! ஐயோ! இனியகன்றே விட்டாயோ? இதற்குக் காரணமென்னென்க. (248) ஆ-இரக்கக்குறிப்பு. ஏகாரம்-வினா. 1805. கோமான் மகனே குருகுலத்தார் போரேறே யேமாங் கதத்தா ரிறைவாவென் னின்னுயிரே காமா கடலுட் கலங்கவிழ்த்தேன் கண்ணுணீர் பூமாண் புனைதாராய் நோக்காது போதியோ. குருகுலத்தார் பலருளராதலின், ‘ஏமாங்கதத்தாரிறைவ’ னென்றாள். உவப்பின் கட்புதல்வனைக்கூறுவதனை ஈண்டுக் கூறிக் காமாவெனன்றாள். கலங்கவிழ்த்தது-அரசன்பட்டது. கண்ணுணீர் நோக்காதென்றது-நீபகைவென்றால் யான் நின்றந்தையை நோக்கி யழுகின்றநீரைநோக்காதே யென்றவாறு. ‘கண்ணுணீ’ யென்றும் பாடம். இ-ள். மகனே! ஏறே! இறைவா! உயிரே! காமா! தாராய்! என்கண்ணீரைநோக்காதே போகின்றயோவென்க.. (249) 1806. கந்தார் களியானைக் காவலனார் கான்முளையை வந்தார்வாய்த் தீதின்மை கேட்டு மறைந்திருந்து நொந்தேன் பலகாலு நோயோடே வீகின்றே னந்தோ வறனேமற் றாற்றேனா லாற்றேனால். இ-ள். சச்சந்தன்பிள்ளையைத் தீதின்மையை வந்தார்கூறக் கேட்டுநோன்பிலே மறைந்திருந்து பலகாலுநொந்தேன்; நொந்த யான் அந்தோ! இனி ஆற்றேன்; ஆற்றேன்; ஆதலின், அறனே! இந்நோயுடனே இறவாநின்றேனென்க . (250) 1807. முன்னொருகா லென்மகனைக் கண்டேனென் கண்குளிரப் பின்னொருகாற் காணப்பிழைத் ததென் றேவிர்கா ளென்னொப்பார் பெண்மகளி ரிவ்வுலகிற் றோன்றற்கென் றன்னப் பெடைநடையா ளாய்மயில்போல் வீழ்ந்தனளே. இ-ள். நடையாள், தேவிர்காள்! என்மகனை என்கண்குளிர முன்னொருகாற்கண்டயான் பின்னொருகாற்காண்டற்குத் தப்பின தீவினையாது? அதனைக் கூறுவீர்; இனி என்னைப்போற் பாவிகளான மகளிர் தோன்றற்கவென்று அரற்றிவருந்தின மயில்போலே வீழ்ந்தா ளென்க. அரற்றுகின்றவள் இங்ஙனமரற்றினாளென்று “மாழ்குபு” (சீவக 1800) என்னுங்கவிமுதல், ஒரு தெடராகமுடிக்க. தாபதர்க்குக் குலமுதலியன கூறலாகாதென்றவள் தன்னுணர்வழிந்து அரற்றினமையிற் குலனேயன்றி மறைபொருளெல்லாங் கூறினாள். தோழர் நல்வினை அங்ஙனநிகழ்த்திற்று. (251) 1808. புண்மல்கு மத்தகத்த போர்வேழம் பொற்பழித்த மண்மல்கு தாரான் பெருமாட்டி வாய்மொழிகேட் டுண்மல்கு நெஞ்சினரா யொய்யெனா வெய்துயிராக் கண்மல்கு நீரார் முகமுகங்க ணோக்கினரே. தோட்டி நீவாதுகிடத்தலிற் புண்மிக்க மத்தகம். இ-ள். கட்டியங்காரனேறின யானையைக்கொன்ற பண்ணுதல் மிக்க தாரினையுடைய சச்சந்தன்றேவியது வார்த்தையைக் கேட்டு அரசன்பட்டதற்கு வெய்துயிர்த்துத் தேவியிருந்ததற்கு மகிழ்ச்சி நிறைந்தநெஞ்சினராய்க் கண்மல்குநீரையுடையராய் அவர் தம்மின்முகம் பார்த்தாரென்க. “ஆவுதிமண்ணி” (மதுரைக் 494) என்றார்பிறரும். கூற்றின்றிக் குறிப் நிகழ்ந்தது, வழிபாடுதோன்ற. (252) 1809. கண்டீர் கருமம் விளைந்தவா றென்றாராய் வண்டாரார் வண்கடக மின்னத்தங் கைம்மறித்துக் கொண்டாங் கடல்வேலி கீழ்மகனைக் கூற்றமா யுண்டா முயிரென் றுவப்பெழுந் தாடினரே. இ-ள். தாரார் காரியமுடிந்தபடி கண்டீரேயென்று வெளி யாகக்கூறினாராய் இவனொருபொருளோவென்று கைம் மறித்து இனிக் கூற்றமாய்க் கீழ்மகனுயிரையுமுண்டோம்; உலகையுங்கொண்டோ மென்று கூறி யுடம்பு உவகைமிக்கு ஆடினாரென்க. (253) 1810. வீழ்ந்து மயில்போல் விசயை கிடந்தாளைத் தாழ்ந்து பலதட்பந் தாஞ்செய்ய வேல்பெற்றுப் போழ்ந்த கன்றகண்ணாள் புலம்பா வெழுந்திருப்பச் சூழ்ந்து தொழுதிறைஞ்சிச் சொன்னார வன்றிறமே. இ-ள். விசயை மயில்போலே வீழ்ந்துகிடந்தவளைத் தாழ்ந்து பலகுளிர்ச்சிகளைச்செய்ய உணர்ச்சிபெற்று அரசனுயிரைப் பாழ்ந்தகன்றகேண்ணா ளெழுந்திருப்பகைகுவித்து வணங்கிக் சூழ்ந்து அவன் பிழைத்தபடிகூறினாரென்க. வேறு 1811. கொலைகளங் குறுகலுங் கொண்டொர் தெய்வத நிலைக்கள மிதுவென நீக்க நீங்கினா னிலக்கண மடப்பிடி யியைந் தொர் போதக மலைக்கணத் திடைமகிழ்ந் தனைய மைந்தனே. கொல்லக் கொலைக்களங் குறுகுதலுந் தேவன் நீக்கினா னென்று தேவதத்தன் கூறப்புகுந்ததனைத் தாங் கொண்டு கூறுகின்றார். இ-ள். போதகம் மடப்பிடியோடு இயைந்து மகிழ்ந்தாற் போலக் குணமாலையோடு மகிழ்ந்திருந்த மைந்தன் தன்னை அரசன் கொல்லுபடி தான்கொலைக்களத்தைக் குறுகின வளவிலே, ஒரு தெய்வந் தன்னுணர்வாலே பார்த்து இஃது இடமென்றுநீக்க, அத்துன்பத்தை நீங்கினானென்று கூறினா ரென்க. (255) மலைக்கணம்-தோழர்க்குவமை. 1812. பூவுடைத் தெரியலான் போர்வை நீத்தினிக் கோவுடைப் பெருமக னாதல் கொண்டனஞ் சேவடி சேர்ந்தனந் தொழுது சென்றென மாவடு நோக்கியுண் மகிழ்ந்து கூறினாள். சென்று-செல்ல. இ-ள். யாங்கள் நின்னைத்தொழுது போதற்குச் சேவடியைச் சேர்ந்தேம்; அங்ஙனஞ்சேர்ந்த யாங்கள் தெரியலான் றன்னை வணிக னென்று மறைத்த போர்சையைக் கைவிட்டுத் தான் அரசனா தலைக்கண்டேமென்றுகூற, அதுகேட்டு விசயையும் மகிழ்ந்து ஒரு மொழி கூறினாளென்க. வேறு 1813. தரணி காவலன் சச்சந்த னென்பவன் பரணி நாட்பிறந் தான்பகை யாவையு மரணி லானென்கட் டங்கிய வன்பினா லிரணி யன்பட்ட தெம்மிறை யெய்தினான். இ-ள். பரணிநாட்பிறந்தானாகிய சச்சந்தன் அந்நாளின்வி சேடத்தாற் பகை யெல்லாவற்றிற்கும் ஒரு காவலில்லாதவன்; என்னிடத்தே தங்கிய அன்பாலே தரணியைக் காவானாய்ப் பின்பு இரணியன்பட்டதனைத் தானும்பட்டானென்க. இன்ன நாட்பிறந்த இன்னனென்றல் அரசர்க்கு மரபு. யானைபிறந்த நாளாதலின், அதுபோலப் பகையை மதியா னென்றாள். இரணியன் பட்டது - தன்னை யிடிக்குந்துணையார் சொற் கொள்ளாதே(குறள்.447) வேறொரு தத்துவமின்றென் றதனாற் கேடு விளைந்து உதவியின்றி நின்ற நிலை. இறைவனுற்றது - அமைச்சர் நிலமுத்திருவு நீங்குமென்றது கொள்ளாதே கட்டியங்காரனே யெனக்குள்ளானென்று பின் உதவியின்றிநின்ற நிலை. காவலன் - உண்ணலன்போல் ஈண்டு மறையையுணர்த்திற்கு. (257) 1814. விசயை யென்றுல கோடிய வீறிலேன் பசையி னாற்றுஞ்சி யான்பட்ட தீதெலா மிசைய நம்பிக்கெ டுத்துரைத் தென்னுழை யசைவின் றையனைத் தம்மினெ னச்சொன்னாள். இ-ள். அங்ஙனமெய்தியவன். விசயையென்று எங்கும்பரந்த நல்வினையில்லாதேன் மேல் வைத்த பற்றாற் றுஞ்சுதலாலே, யானுற்ற தீங்கெல்லாவற்றையும் நம்பிக்கு முறைமைப்படக்கூறி இதனால் அவன் வருந்தாதபடி ஐயனை என்னுழைத்தாருமி னென்று கூறினாளென்க. (258) 1815. கோதை வேனம்பிக் கல்லதை யிப்பொருள் யாதுங் கூறன்மின் யாரையுந் தேறன்மி னேத மின்னன வின்னண மெய்தலாற் பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின். இ-ள். இக்காரியத்திற் சிறிதுஞ் சீவகனுக்கல்லது பிறர்க்குக் கூறன்மின்; யாவரையுந்தேறன்மின்; இத்தன்மையாவாகிய குற்றங்கள் நினைவின்றியும் வருதலின் அறியாதாருடன் மகளி ருடனும் பேசன்மினென்றாளென்க. இன்னனவென்றது - தான்பிறப்புணர்த்தியவதனை. இன்னண மென்றது - தன்னினைவின்றி விலாவணையிற் கூறியவதனை. (259) 1816. பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும் வகைகொண் மேகலை மங்கையர் நெஞ்சமு மிகைசென் மேகத்து மின்னுஞ்செந் நில்லலா புகைசெய் வேலினீர் போற்றுபு சென்மினே. மிகை - மேல். இ-ள். வேலினீர்! பகைவர்நெஞ்சும், பாம்பின் போக்கும், மகளிர் நெஞ்சும், மின்னுஞ் செவ்விதாக நில்லாவாதலின், உள்ளத்தையும் நெஞ்சையும் பேணி ஒழுகுமினென்றாளென்க. (260) வேறு 1817. வணக்கருஞ் சிலையி னானை யொருமதி யெல்லை நாளுட் குணத்தொடு மலிந்த பாதங் குறுகயாங் கொணர்ந்த பின்றைப் பணித்ததே செய்து பற்றார் பகைமுத லடர்த்து மென்றார் மணிக்கொடி மாசுண் டன்னாண் மற்றதே துணிமி னென்றாள். இ-ள். யாங்கள் குணத்தொடு மலிந்தசீவகனை ஒருதிங்களளவாகிய நாளுக்குள்ளே நின்றிருவடியைச் சேரும்படி கொணர்ந்த பின்றை அருளிச்செய்த காரியமே செய்து தழும்பேறிக் கிடந்த நிறைந்த பகையை முற்பட வடர்ப்பேமென்றார்; அவளும் அதுவே துணிமினென்றாளென்க. பிறரால் வணக்கருஞ்சிலை. அடிப்பட்டபகை - கட்டியங் காரன். (261) 1818. பொறிதவ நெருங்க நோற்றுப் புகரற நிறைந்த கொள்கைச் செறிதவ விசயை பாதஞ் சென்னியின் வணங்கி மீண்டு வெறிகமழ் சோலை நண்ணி வேண்டிய வடிசில் கைதொட் டெறிபடை யெழுக வென்றார் வளையெழுந் தார்த்த வன்றே. இ-ள். ஐம்பொறியும் புலன்களிற்செல்லுகின்ற வேட்கை மிகவுநெருங்கும்படி நோற்றுக் குற்றமறநிறைந்த விரதங்களையு டையவிசயை பாதத்தைவணங்கி நண்ணி உண்டு படையெழுக வென்றார்; வளையெழுந்தார்த்தவென்க. தவவிசயை - முற்பவத்திற் றவத்தையுடைய விசயையென் றொருபெயர். (262) 1819. பைந்துகின் மகளிர் தேன்சோர் பவளவாய் திகழநாணிச் சிந்தித்துக் கூந்தல் வாங்கிச் செவ்வணந் துடைப்ப தேபோ லிந்திர கோபங் கவ்வி யிறகுளர் கின்ற மஞ்ஞை யந்தரத் திவர்ந்த பாய்மா வரும்பொற்றா ரரவத் தாலே. திகழ - இடக்கர். இ-ள். மகளிர் தமது வாய் திகழ்தலாலே, அதற்குநாணி அது தீருமுபாய நினைந்து கூந்தலைக் குலைத்து அச்சிவந்த வண்ணத்தைத் துடைக்கின்ற தொழிலைப்nபாலே கோபத்தைக் கவ்வி இறகையுளர்கிற மயில்கள் மாவின்றார்மணியோசையாலே பறந்தனவென்க. (263) 1820. சாந்தின்மேற் றொடுத்த தீந்தேன் றண்மதிக் கோடு போழப் போந்துமட் டருவி வீழும் பொன்னெடுங் குன்று மந்த ணேந்துபூங் காவு சூழ்ந்த விரும்புனல் யாறு நீந்தி மாந்தரே மலிந்த நாடு மடுத்துடன் சென்ற தன்றே. தேன் - ஆகுபெயர். இ-ள். அப்படை, சந்தனத்திலே வைத்த இறாலை மதிக்கோடு கிழித்தலாலே அதின்மட்டு அவ்விறாலினின்றும்போந்து அருவி போலேவீழும் மாந்தரியங்காத குன்றையும், யாற்றையுங் கடந்து மாந்தரேமலிந்த நாட்டிலே சென்றதென்க. (264) 1821. மதுக்குலா மலங்கன் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத் தெழுந்த தீம்பாற் பொங்கலி னுரையிற் பொங்கிக் கதிர்த்துவெண் மாடந் தோன்றுஞ் செவ்வெயிற் காத நான்கி னதிக்கரை வந்து விட்டார் நச்செயிற் றரவோ டொப்பார். இ-ள். தேனறாத அசைகிறமாலையையுடைய மங்கையர் வளர்த்த தீயாலே பொங்கிப் புதுக்கலத்தினின்றுமெழுந்த பாற்பொங்கலினடைய நுரைபோலே இட்டிகையாற்செய்த எயிலைக் கடந்து வெண்மாடத் தோன்றும் ஏமமாபுரத்திற்கு நாற்காதத்தளவில் நதிக்கரையிலே, அரவோடொப்பார் சென்றுவிட்டாரென்க. எயில் - ஆகுபெயர். வரவு - செலவினையுணர்த்தும். வேறு 1822. மானயா நோக்கியர் மருங்குல் போல்வதோர் கானயாற் றடைகரைக் கதிர்கண் போழ்கலாத் தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணற் றானையா நால்வருந் தணப்பின் றெய்தினார். கான, அ - அசை. கண் - இடம். தேனினநீங்கமாட்டாது வருந்தும். தானையா நால்வரும் - தானையுண்டாதற்குக் காரண மான நால்வரும். இ-ள். மான்வருந்து நோக்கியரிடைபோலும் நுடக்கமும், அழகு முடைய கான்யாற்று நீரடைகரையிற் பொழிலில் உயர்ந்த மணலிலே நால்வருஞ் சென்றாரென்க. (266) 1823. வார்ந்துதேன் றுளித்துமட் டுயிர்த்து வார்மண லார்ந்துபோ தருந்தவி சடுத்த தொத்துமேற் றூர்ந்துதேன் வண்டொடு துதைந்துள் புக்கவர் போந்துபோக் கரியதப் பொழிலின் பெற்றியே. இ-ள். அப்பொழிலின்றன்மை, வைத்ததேன்வார்ந்து துளித் துப் பூவின் மதுவொழுகி மணலிலே போதார்ந்து தவிசடுத்த தொத்து மேல்வெளியடங்கித் தேனும் வண்டும் நெருங்கி உள்ளே புக்கவர்க்குப் புறப்பட்டு போதலரிதாயிருந்ததென்க. செய்தெனெச்சங்களைக் காரணமாக்குக. (267) 1824. தாதணி கொழுநிழ லிருந்து தண்மதுப் போதணி யலங்கறாழ் பொருவின் மார்பனை யாதுநா மடைதிற முரைமினீ ரெனக் காதலாற் பதுமுகன் கண்டு கூறினான். இ-ள். அப்பொழிலினிழலிலேயிருந்து சீவகனை யாமடையுந் திறம் யாது? அதனை நீருரைமினென்ற வளவிலே, பதுமுகன் விசாரித்துக் காதலோடே கூறினானென்க. (268) 1825. திருக்கிளர் மன்னவன் சேனை மாநகர் பொருக்கொளி யினநிரை கோடுங் கொண்டபின் முருக்கொளி மலரடி மூரி மொய்ம்பனைச் செருக்களத் தெதிர்ப்படச் சிதைவ தில்லையே. 1826. சேட்குலாஞ் சிலையொடு திளைத்த பின்னவர் வாட்கலாம் வலித்தமர் தொடங்கின் வல்லையே மீட்கலாம் விருப்புடைத் தெழுக வென்றுதன் னாட்கெலாஞ் செப்பின னலர்ந்த தாரினான். இவையிரண்டுமொரு தொடர். பொருக்கு - பொருவுக்கு; நிலக்குப்போல. என்றது - துரியோ தனன் விராட புரத்தே நிரையடித்துத் தருமன் முதலாயினாருண் மையுணர்ந்ததற்கு யாமும் இவனுண்மையை யுணர்கின்ற தன்மை யொக்கும்படியென்றவாறு. (269) இ-ள். பொருவுக்கு மன்னன் ஒளிநிரையை யாமுங் கொள் வோம்; கொண்ட பின்பு, சீவகன் மீட்க வந்தால் அவனைப் போர்க் களத்தே காண்டற்குச் சிதைவதில்லை; அதற்குக் காரணம் வளைந்த வில்லுடனே தூரத்தேபொருதபின் அவரணுகி வாட் போரைத் தொடங்கில் நாம் படையைக் கடுகமீட்கலாம்; ஆதலான், இது விருப்ப முடைத்து; இனி யெழுகவென்று தன்னையொழிந்த மூவர்க்குங்கூறிப் பின்பு அவன் படைக்குங் கூறினானென்க. (269-70) வேறு 1827. இருங்கடன் மணிநிரை யெய்திநாங் கொண்டபின் னருங்கடி யணிநக ரையனங் கில்லையேற் பெரும்படை தான்வரிற் பின்றிநீங் கிற்பழி தரும்படித் தன்றியுஞ் சாற்றுவல் கேண்மினோ. 1828. மஞ்சுசூழ் விசும்பிடை மணந்துமின் மிளிர்வபோல் வஞ்சமின் மறவர்வாண் மிளிர்ந்துபாய் குருதியுட் குஞ்சரங் குளிப்பதோர் நீத்தமா மாதலா லெஞ்சலில் கொள்கையீ ரெண்ணிச்சூழ் மின்களே. 1829. என்றனன் புத்திசே னென்னுநான் மறையினான் நன்றதே பொருளென நால்வரு மிருந்துழி ஒன்றன்முன் விடுத்தவர் மூவரொற் றாட்கள்வந் தின்றிதாற் பட்டதென் றியம்புகின் றார்களே. இவை மூன்றும் ஒரு தொடர். (இ-ள்) புத்திசேனன் என்னும் அந்தணன், யாமெய்தி நிரையைக் கொண்டபின் அருங்கடி அணிநகரில் ஐயனில்லை யாயிற் பெரும்படை வரும். அது வந்தால் அஞ்சினாரைப்போலே யாம் மீண்டுபோந்தாற் கெட்டார்களென்று பழிதரும்படியா யிருக்கும்; அதுவன்றியும் மின்னு மொன்று கூறுவேன்; அதனைக் கேண்மின்; யாம் மீளாமல் நின்றால் மின்போல் மறவர் வாள் மிளித்தலாற் பிறந்த ஒளியையுடைய குருதியிலே யானை குளிப்பதொரு குருதிப்பெருக்குண்டாம்; ஆதலால் ஒழியாத கொள்கையீர்; இனி இதனையும் எண்ணிச் சூழுமின் என்றான்: என்ற பின்னும் பெரிதும் பதுமுகன் கூறிய அதுவே காரிய மென்று நால்வரும் இருந்த அளவிலே, தாம் பொருந்தி முன்பே விடுத்தவராகிய ஒற்றாட்கள் மூவர் வந்து இன்று பிறந்த செய்தி இதுவென்று கூறா நின்றாரென்க. (271-3) 1830. வளையசுந் தரமெனும் வாரண மால்வரை முளையிளந் திங்கள்போன் முத்துடைக் கோட்டது கிளையிளம் பிடிகளை ஞூற்றிடைக் கேழரக் களையவஞ் சனவரை யனையதக் களிறரோ. 1831. கடுமதக் களிப்பினாற் காரென முழங்கலின் விடுகலார் பாகரும் எவருவரக் கொன்றிடப் பிடியொடுங் கந்தனை வின்றிநீ ருருள்பிளந் தடுகளி றந்தப்போ திகைபரிந் தழன்றதே. இவையிரண்டும் ஒரு தொடர். (இ-ள்) வளையசுந்தர மென்னும் வாரணம் கோட்டதா யிருக்கும்; பிடிகளுக்கிடையில் நின்று நிறத்தையுடைய அரக்களா வின அஞ்சன வரையனைய தாயிருக்கும்; அக்களிறுதான் மதத்தாலே முழங்கலிற் பாகரும் விடுகலாயிருந்தார்; அவ்வடு களிறு வெருவரும் படி கொன்றிடுடுவதற்கு அணைவின்றிப் பிளந்து பரிந்து அழன்றதென்க. நீருருள் - சகடமாகப் பண்ணித் தண்ணீரேற்றியுருட்டுவ தொன்று. இனி ‘ஈருள்பிளந்து’ என்றோதின், உள்ளீரலைப் பிளந்து கொன்றிட வெனக் கூட்டுக. அந்தப் போதிகை - பின்னங்காலிற் சங்கிலி. (274-5) 1832. கண்ணுமிழ் தீகினாற் சுடநிறங் கரிந்தபோற் பண்ணுமிழ் வண்டுலாய்ப் பரத்தரா நின்றசீர் அண்ணலங் களிற்றினை அடக்கினான் சீவகன் வண்ணமே கலையினார் மனமெனப் படிந்ததே. (இ-ள்) கண்ணில் தீயாற்சுடுதலின் நிறங்கருகினாற்போலும் வண்டு உலாவப்பட்டுப் பரத்தலைத்தராநின்ற சீரையுடைய அக்களிற்றைச் சீவகன் அடக்கினான்; அப்பொழுது அவனிடத்தே மகளிர் மனந்தாழ்ந் தாற்போல வந்து தாழ்ந்ததென்க. ‘வண்டுலாம் பார்த்தர’ என்ற பாடத்திற்கு வண்டுலாங் களிற்றைப் பார்க்கின்ற சீரை நமக்குத்தருதற்கு அடக்கினானென்க. (276) 1833. இறுவரை யிவர்வதோ ரிலங்கெயிற் றரியென வுறுவரை மார்பினான் றூசங்கொண் டொய்யெனப் பெறலருங் குஞ்சர மேறலிற் பெருஞ்சன மறைகடற் றிரையொலித் தாங்கென வார்த்ததே. இ-ள். மிக்கவரைபோலுமார்பினான் பெரியவரையிற் பாய்வ தோர் அரியென்னும்படி படிவித்தற்குரிய குஞ்சரத்தைப் புரோ சைக்கயிற்றைப் பிடித்துக்கொண்டுவிரையவேறு லாலே சனம் சமுத்திரம் ஆங்கே யொலித்ததென வார்த்ததென்க. (277) 1834. அங்கையந் தலத்தினா லப்புதா தையெனக் கொங்கலர் கண்ணியான் கொம்மைதான் கொட்டலும் பொங்கிய வுவகையிற் பொலிந்துமாக் களிறவன் றங்கிய பயிர்த்தொழி றடக்கையாற் செய்ததே. இ-ள். கண்ணியான், அப்புதுஅப்புது, அதுஆது, ஐஐஎன்று கூறி, அங்கையாகிய அழகியதலத்தாற் பொய்க்கத்தட்டினவள விலே, அக்களிறு உவகையாற் பொலிந்து அவன்கட்டங்கிய பயிராற் றொழில் களைத் தன்கையாலேசெய்ததென்க. பயிராவன: பரிபரியென்பனமுதலியன. தொழில்-தோட்டி முதலியனவெடுத்துக்கொடுத்தல். (278) 1835. கொட்டையம் புரோசைதா னிருவடங் கொண்டுடன் கட்டினான் கருவலித் தடக்கையாற் றோட்டியு மிட்டன னிரண்டுட னிமிழ்க்கொளீஇ யிலங்குபொற் பட்டமும் பனிவரை மின்னெனக் கட்டினான். இ-ள். கொடிய வலியையுடைய கையாலே தலையின் மணி முடியையுடைய புரோசைக்கயிற்றை இரண்டுவடங்கொண்டு சேரக் கட்டினான்; கட்டிநெடுந்தோட்டியையுங் குறுந்தோட்டியை யுந்தம்மிற் பிணைத்து அதின்கழுத்திலேயிட்டான்; இட்டுக் கயிற்றைக்கோத்துப் பட்டத்தையுங் கட்டினானென்க. (279) 1836. கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணியணிந் தச்சுறு கொழுந்தொடர் யாப்பழித் தடியிணை யுச்சியும் புரோசையுட் குளிப்பவுய்த் துறுவலி மெச்சிமேல் வேந்தனும் விழைதகத் தோன்றினான். அச்சுறுகொழுந்தொடர்-விசையாதபடி மரங்களிலே இரும்பைத்தைத்துக் கழுத்திலே மாலைபோலே யிடுவதொன்று. இ-ள். உறுவலி கீழ்வயிற்றிற் கட்டுங் கச்சையுங் கட்டினான்; கட்டி இரண்டுபக்கத்திலே மணியையுமணிந்து தொடரையுங் கட்ட விழ்த்து அடியிரண்டினுச்சியையும் புரோசைச்குள்ளேயழுந்தச்செலுத்திப் புலிமுகப்பிலிருக்கின்ற நரதேவனும்புகழ்ந்து விரும்பும்படிவந்து தோன்றினானென்க. (280) 1837. கோற்றொடிப் புரிசையுட் கொற்றவ னின்றைய னேற்றியல் காண்டுநா மிவட்டரு கென்னவே காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக் கூற்றெனக் குஞ்சரங் கொண்டுபுக் கானரோ. இ-ள். தொடிபோலே வளைந்த புரிசையிலே கொற்றவன் பொருந்தவந்துநின்று நாம் ஏற்றினதியல்பைக் காண்பேம்; இவ்விடத்தே கொண்டுவருகவென்ன, அவனும் விசையாற் காற்றென, ஒலியாற் கடலென, வடிவால் வரையென, அச்சத் தாலுருமென, கொலையாற் கூற்றென அதனை யுள்ளேகொண்டு புக்கானென்க. (281) 1838. குழவியஞ் செல்வனோர் குன்றுகொண் டொய்யென வழகிதாப் பறப்பதே போலவு மார்புயன் மழையையூர்ந் தோடுமோர் வானவன் போலவு மெழுதலா காவண மிருந்தன னென்பவே. இ-ள். இளஞாயிறு ஓர்குன்றைக் கவானிடைக்கொண்டு கடுகப் பறக்கின்ற தொழிலைப்போற் றன்னிடத்தே தொழிலை யுடையனாயும், மழையையேறியோடுந் தேவனைப்போலத் தன்னிடத்தேதொழில் கிடக்கவும் எழுதலாகாதபடியிருந்தா னென்க. (282) 1839. வனைகலத் திகிரியும் வாழுயிர் மேற்செலுங் கனைகடுங் கதழ்பரிக் காலசக் கரமும்போல் வினைதகு வட்டமும் வீதியும் பத்தியு மினையவை யேமுற விமைப்பினி னியற்றினான். கனைகடுங்கதழ்பரி-மிகவுங்கடிதாகிய மிக்க செலவினை யுடைய. இ-ள். திகிரியுஞ் சக்கரமும்போலே தொழிற்றக்க வட்டமும் வீதியும் பத்தியுமாகிய இத்தன்மையவற்றைத் தப்பாதபடியே ஒரு கணத்திலே நடத்தினானென்க. (283) 1840. ஒருவனே களிறுமொன் றொருநூ றாயிரந் திரிவவே போன்றன திசையெலாங் குஞ்சரக் குரியவன் னிவனலா லுலகினில் லிலனென வரிதுணர் வேத்தவை யமைகமற் றென்றதே. ஓரும்-அசை. இ-ள். அதுகண்டு அரிதென்றுணர்ந்த அரசவைதானும், ஒருவனே களிறுமொன்றேயாயிருக்கவும் ஏறினபடி திசை யெல்லாம் எண்ணிறந்தயானை திரிவனபோலேயிருந்தன; ஆதலால் இவனல்லது இவ்வுலகிற் குஞ்சரமேறுதற்கு மற்றொரு வனிலனென்றுகூறி யமைகவென விலக்கிற்றென்க. (284) 1841. வள்ளுகிர் நுதியினால் வரிநுத லுறுத்தலு முள்ளுணர் குஞ்சரம் மொய்யென நிற்றலு மெள்ளரும் மிருமணி கிணினென விசைத்தன வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்துகை விதிர்த்ததே. இ-ள். தோட்டிநுதியென்னும் உகிர்நுதியால் நுதலியலே ழுத்தின வளவிலே இவன்மனத்தையுணரும்யானை கடுகநின்ற தாக, மணியிசைத்தன; அப்பொழுது சனம் அதிசயித்துக் கைவிதிர்த்த தென்க. ஓடுகின்ற விசையாலே ஒலியடங்கின மணி நின்றபொழுது இசைத்தவென்க. (285) 1842. என்மன நின்மன மென்றிரண் டில்லையாற் றன்மனத் துளபொரு டான்றனக் குரைப்பதொத் துன்மன மென்மன மென்பதொத் திழைந்ததால் நன்மனக் குஞ்சர நம்பியோ டென்மரும். 1843. தேவனே மகனலன் வெல்வன்மற் றென்மரும் பாவையே நோற்றனள் பாரின்மே லென்மருங் கோவனும் மக்களுங் குளிர்ந்துதோ ணோக்கினா ரோவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். தன்மனத்திற்பொருளைத் தான்றனக்குரைக்குந் தன்மையையொத்து ஏவல்செய்தலாலே என்மனமுன்மன மென்று கூறுவதாகிய நன்மனக்குஞ்சரம் நம்பியோடொத்துத் தொழிலைச் செய்தது; ஆலால், அக்குஞ்சரத்திற்கும் நம்பிக்கும் என்மன நின்மன மென்று இரண்டில்லை யாயிருந்ததென்பாரும், செல்வன் தேவனே யென்பாரும், பாவைநோற்றனளென்பாருமாய் ஓவென் றலின், ஓசையு யர்ந்தது; அப்பொழுது அரசனும் மக்களுந் தோளை நோக்கினாரென்க. என்பார்என்மரெனத் திரிந்தது; “உண்மருந்தின்மரும்” (பதிற்.24) என்றாற்போல. இனி ஆயினாரெனவினைகோடலின், மாரீறு விகாரமாய் நின்றதெனிற் றனக்குரிய எதிர்கால முணர்த்தாமை யுணர்க. (286-7) 1844. பிண்டமுண் ணும்பெருங் களிறுபூட் டிய்யவண் வண்டரும் மோவரும் பாடமா நகர்தொழக் கொண்டதன் றம்பியுந் தானுங்கோ யில்புகக் கண்டனங் கண்ணினே யென்றுகண் டவர்சொனார். இ-ள். பட்டத்திற்குரிய யானையைக் கம்பத்தோடே சேர்த்துக் கட்டிக் கடிகையாரும் ஏத்தாளிகளும்புகழ நகர்தொழத் தம்பியுந் தானுந் தமக்கென்று கைக்கொண்டகோயிலிலே புக, கண்ணாலே கண்டே மென்று ஒற்றர்கூறினாரென்க. ஏகாரம்-அசை. கண்டவரென்றது முன்னரியம்புகின்றா ரென்ற ஒற்றரைச் சுட்டிநின்றதோர் பெயராகக்கொண்டு, அவர் இங்ஙனங் கூறினாரென்க. நந்தட்டன் கூடநிற்றலாற் சீவகனென்று ணர்ந்தார். (288) 1845. பாத்தில்சீர்ப் பதுமுகன் படிவவொற் றாளர்சொற் கோத்தெனக் கொடுத்தனன் கொழுநிதி யுவகையிற் றூத்திரட் சுறாவினந் தொக்கபோன் மறவரு மேத்தருஞ் சிலைகைவா ளிலங்குவே லேந்தினார். இ-ள். நீக்கமில்லாத சீரையுடைய பதுமுகன் மறைந்த வேடங் கொண்ட ஒற்றரொருவர்கூறியசொற்கு இருவர் சொல்லுஞ் சேர்ந்த தென்றுகருதி யுவகையால் நிதியைக் கொடுத் தான்; கொடுத்தபின் சுறாவினம்பலவுந் தொக்கபோலுமறவரும் சிலையையும் வாளையும் வேலையுங் கையிலே யேந்தினாரென்க. ஒத்தது-ஒத்தெனவிகாரம் ஓத்து: விதியுமாம். (289) 1846. வேனிரை வாண்மதில் பிளந்துவெஞ் சமத்திடைத் தேனிரை களிற்றின்மேற் றிண்குளம் பழுத்துவ வானிரை வளைப்பதோர் பொருளெனச் சிரித்துடன் மாநிரை பண்ணினார் வடித்தநூற் கேள்வியார். இ-ள். கேள்வியார்வேலாகிய காவற்காட்டையுடைய வாண் மதிலைச் சமத்திடையிலே பிளந்து களிற்றின் மேலழுத்துவன வாகிய மாநிரை இப்பொழுது நிரை கொள்வது காரியமாயிருந்த தென்று சேர நக்கு அம்மாநிரையைப் பண்ணினாரென்க. (290) வேறு 1847. விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார் துடியொடு சிறுபறை துவைத்த வால்வளை முடியுல குறநிமிர்ந் தார்த்த மொய்கழ லடுபடை யிளையரு மரணம் வீசினார். இ-ள். அங்ஙனம் நிரைகோடலை மேவினராக, துடியும் பறை மிசைத்தன; வளை தேவலோகத்தளவுஞ் செல்ல வார்த்தன; இளையருங் கவசத்தை யணிந்தாரென்க. (291) 1848. காந்தளங் கடிமலர்க் கண்ணி நெற்றிய ராய்ந்தளந் தியற்றிய வந்து ணாடையர் வேய்ந்துணி யலமரும் புறத்தர் வெஞ்சுட ரேந்தெழி னவியமு மேந்து தோளினார். 1849. கோனுடை யினநிரை கரக்குங் கோவலர் தேனொடு கடிச்சுரும் பரற்றுந் தேமலர்க் கானிடை யினநிரைக் காவல் போற்றுமி னானிடை யழித்தபுள் ளென்று கூறினார் இவையிரண்டும்மொருதொடர். அளந்தியற்றுதல்-இப்புடைவைக்கு இஃது அளவென்று அளந்து பண்ணுதல். ஆய்ந்த-வடித்து. அத்து-செம்மண். வேய்ந் துணி, வேய்ந் துணி-உறழ்ச்சி; அஃது ஊதுங்குழல். ஒளியைத் தன்னி டத்தே யேந்திய நவியம்-கோடாலி. இ-ள். அவர் அங்ஙனமெழுகின்றவளவிலே, நெற்றியராய் ஆடைய ராய்ப் புறத்தராய்த் தோளினராய் அரசனது இனங்களை யுடைய நிரையைக் காக்குமாயர், ஆனிடையிலே காரி யெழுந்தன வாதலாற் காட்டில் நிரையைக் காவல்போற்றுமினென்று கூறினா ரென்க. (292-3) 1850. விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை யடுகணை சிதறினா ரார்த்த வால்வளை கடுகின காலிய லிவுளி காண்டலு முடுகுபு கோவலர் முந்து காற்பெய்தார். விடுபொறி-வீசுகின்றபொறி. இ-ள். அவர் சிலையாலே கணையைச்சிதறினார்; வளையார்த்தன; இவுளிகடுகின. இவற்றைக்காண்டலுங் கோவலர் நிரையைக்காத்தற்கு முற்படவோடினாரென்க. (294) 1851. அளைச்செறி யிரும்புலி யனைய வாடவர் வளைத்தனர் மணிநிரை வன்க ணாயரும் விளைத்தனர் வெருவரத் தக்க வெஞ்சொலா லுணைத்தனர் பூசல்விட் டுணர்த்த வோடினார். இ-ள். அவ்வளவிலே யாடவர் நிரையைவளைத்தார்; ஆயரும் உளைத்தனராய்ப் போரைவிளைத்தார்; விளைத்தவர் அப்பூசலைக் கைவிட்டு வெஞ்சொல்லால் உணர்த்த வோடினா ரென்க. (295) வேறு 1852. தேர்த்தொகைத் தானை மன்னன் சீவகற் கிளையநம்பி வார்த்தொகை முழுவம்விம்மமல்லுறை தோளி னானை நீர்த்தொகைக் கழனி நாடு நெடுநகர்ப் பெயரு நுங்கள் சீர்த்தொகைக் குலனு மெல்லாந் தெரிந்தெமக் குரைமோ வென்றான். இதமுதலாக ஆயர்செல்கின்றகாலத்து அரசனிருக்கின்ற படி கூறுகின்றார். தெரிந்து-தெரிய. இ-ள். நரபதிசீவகற்கு இளைய நம்பியாகிய நந்தட்டனை நும்முடைய நாட்டின்பெயரையும், நகரின்பெயரையும், குலத் தையும் எமக்குத் தெரியவுரைப்பாயாக வென்றானென்க. (296) 1853. திருக்குறிப் பன்ன தாயிற் செப்புவ லடிகள் செம்பொ னரித்தசும் பொழுகு குன்றத் தருவியின் வெரீஇய மஞ்ஞை பரித்தவை பழனநாரைப் பார்ப்பொடு மருதிற் சேக்கும் உரைத்தகு நாடு மூருங் குலத்துட னுணர வென்றான். இ-ள். அடிகளே! திருவுள்ளக்கருத்து அத்தன்மைத்தாயின், நீயுணரும்படி குன்றத்தருவியான்வெருவிய மயில்களோடினவை நாரைப்பார்ப்போடே மருதிலே தங்கும் புகழ்தற்குத்தக்க நாட்டையு மூரையுங் குலத்தோடே செப்புவேனென்றானென்க. (297) 1854. பொருகய லுகளிப் பாயப் பூஞ்சிறைக் குமரி யன்னங் குருகினோ டிரியச் செந்நெற் கொழுங்கதிர் குவளை யெற்ற முருகுவிண் டிரியத் தீந்தேன் முழங்குநீர்க் கழனி நன்னா டெரியுமிழ்ந் திலங்கும் வேலோ யேமமாங் கதம தென்றான். கயல் பிறழ்ந்துபாய்தலினாலே யஞ்சி யன்னமுங் குருகு மிரிதலின், அவற்றின் மெய்தீண்டிச் செந்நெற்கதிர் குவளை மேலெற்றுதலின் நறுநாற்றம்விட்டுலாவ, அதற்குத் தேனின முழங்கு நாடென்க. ‘கதிர்குவளை’யென்றே பாடம். இ-ள். வேலோய்! அந்நாடு ஏமாங்கதமென்றானென்க. (298) ஏமமாங்கதம்-பகுதிப்பொருள்விகுதி. 1855. பூந்துகிற் கொடுத்த தீந்தே னகிற்புகை பொன்ன னார்தங் கூந்தலிற் குளித்த வண்டு கொப்புளித் திட்ட வாச மாந்தர்மேற் றவழ்ந்து மாட மிருள்படப் புதையுஞ் செல்வத் தேந்துபொன் னிஞ்சி மூதூரி ராசமா புரம தென்றான். இ-ள். துகிற்குக்கொடுத்தவகிற்புகையும் வண்டு கொப்பு ளித்த தேனும் மாந்தர்மேற்றவழ்ந்து இருள் படுதலாலே மாடம் புதையுஞ் செல்வத்தினையும், இஞ்சியையுமுடைய அம்மூதூர் இராசமாபுர மென்றானென்க. (299) 1856. எங்குல மடிகள் கேட்க வென்றலு மெழுந்தோர் பூசல் பொங்குளைப் புரவி வெள்ளம் போக்கற வளைத்து முற்றி யிங்குள நிரையை யெல்லாங் கவர்ந்ததென் றிட்ட போழ்தே திங்கள்வெண் குடையி னான்றன் றிருச்செவிக் கிசைத்த தன்றே. இ-ள். அடிகள்! எங்குலத்தைக்கேட்கவென்று நந்தட்டன் கூறின வளவிலே, நிரையையெல்லாம் புரவிவெள்ளமெழுந்து கோலி வளைத்துக் கவர்ந்ததென்று ஆயர் ஒருபூசலிட்டபொழுதே, அப்பூசல் அரசன்செவியிடத்தே யிசைத்ததென்க. (300) 1857. எரித்திறல் வென்றி வேந்தற் கிற்றென விசைப்ப ச்சீறி மருப்புறக் கந்து பாய்ந்து முழங்குமால் களிறு போலத் திருக்கிளர் மணிசெய் பொற்றூண் டீப்படப் புடைத்துச் செங்க ணுருந்தெரி தவழ நோக்கி யுடல்சினங் கடவச் சொன்னான். எரிபோலும்வலியையுடையவென்றி-கொன்று வெல் கின்ற வெற்றி. இ-ள். வேந்தற்கு அப்பூசலிசைத்த வளவிலே, சீறி, மருப்பழுந் தக்குத்திமுழங்குங்களிறுபோலே அக்கோபத்தாலே தூணிலே தீப் பிறப்பவடித்து, நோக்கிச் சினம் உடலைச்செலுத்த ஒருமொழி கூறினானென்க . (301) 1858. நாற்கடற் பரப்பும் வந்து நன்னகர் கண்ணுற் றென்ன வேற்கடற் றானை பாய்மா விளங்கொளி யிவுளித் திண்டேர் கூற்றென முழங்கு மோடைக் குஞ்சரக் குழாத்தோ டேகிப் பாற்கடற் பரப்பின் வல்லே படுநிரை பெயர்க்க வென்றான். இ-ள். நாற்கடலும்வந்து நகரிலேகூடினவென்னும்படி குஞ்சரக் குழாத்தோடே தானையும் மாவுந் தேரும் நகரிலேகூடிச் சென்று பாற்கடற்பரப்புப்போலப் பாலுண்டான நிரையை வல்லே பெயர்க்க வென்று கூறினானென்க. (302) 1859. கண்ணகன் கடலங் கோடும் பறைகளு முழங்கி விம்ம விண்ணகத் தியங்கு மேகக் குழாமென நிரைத்த வேழந் திண்ணுகப் புரவித் திண்டேர் விரைந்தன நிரந்த பாய்மா மண்ணக மலரக் காலாட் கடல்கிளர்ந் தெழுந்த தன்றே. இ-ள். சங்கும் பறையுமுழங்கி யொலியாநிற்ப வேழமுந் தேரும் விரைந்தன; மாப் பரந்தன; காலாட்கடல் மிக்கெழுந்த தென்க. (303) 1860. பானிறக் கவரி நெற்றிப் பைங்கிளி நிறத்த பாய்மாத் தானுறப் பண்ணித் திண்டேர் தம்பிகோல் கொள்ள வேறிக் கூனிறக் குழவித் திங்கட் குளிர்கதி ரார மார்பிற் றேனிறங் கொண்ட கண்ணிச் சீவக குமரன் சொன்னான். பானிறக்கவரி-பால்போலுங்கவரி. கூன்-வளைவு. தேனை யுடைய ஒளிகொண்டமாலை. இ-ள். சீவகன்றான், மாவைத்தேரிலேயுறும்படிபண்ணித் தம்பி செலுத்த அத்தேரையேறி ஒருமொழி கூறினானென்க. (304) 1861. மன்னவ னிரைகொண் டாரை வளநகர்த் தந்து மன்னன் பொன்னவிர் கழலிற் றங்கள் புனைமுடி யிடுவி யேனே லின்னிசை யுலகந் தன்னு ளென்பெயர் சேற லின்றாய்க் கன்னிய மகளிர் நெஞ்சிற் காமம்போற் கரக்க வென்றான். கன்னிய, அ-அசை. இ-ள். அரசனிரையைக்கவர்ந்தவரை இந்நகரிலே கொண்டு வந்து அவ்வரசனடியிலே அவர்முடியை யிடுவியேனாயின், கன்னியராகிய மகளிர்நெஞ்சிற் காமம் போலே என்பெயர் உலகில் நடவாது மறைகவென்றானென்க. அரசனைக் காணாமற்போந்து வஞ்சினங் கூறினான. (305) 1862. பார்மலி பரவைத் தானைப் பரப்பிடைப் பறப்ப தேபோ னீர்மலி கடாத்த கொண்மூ நெற்றிமேன் மின்னி னொய்தாத் தார்மலி மார்பன் றிண்டேர் தோன்றலுந் தறுகண் மைந்தன் சீர்மலி பகழி யேந்திப் பதுமுகன் சிலைதொட் டானே. கடல்போல் நிறைந்த மதத்தையுடைய மேகத்தின் றலையிற் றோன்றுவதோர் மின்னினுங் கடிதாகத் தேர்தோன்றிற்று. மேகம்-யானை. இ-ள். தானையிடையிலே பறப்பதுபோலே தேர் தோன்றின வளவிலே, மைந்தனாகிய பதுமுகன் பகழியையேந்திச் சிலையை யெடுத்தானென்க. (306) 1863. குடைநிழற் கொத்த வேந்த னொருமகன் காணக் குன்றா வடிநிழ லுறைய வந்தே மடியம்யா மென்ன வெய்த விடுகணை சென்று தேர்மேற் பின்முனா வீழ்த லோடுந் தொடுகழற் குரிசி னோக்கித் தூத்துகில் வீசினானே. விடுகணை-ஒருபெயர். இ-ள். அடியேமாகியயாம் தன்குன்றாவடிநிழலிலே உறைய வேண்டிச் சச்சந்தன்மகனாகிய தன்னைக்காணவந்தேமென்று அறிவிக்கும் படி எழுதியெய்த அம்பு சென்று தேர்மேலே மாறி வீழ்ந்த வளவிலே, குருசில் நோக்கிப் பதுமுகனேயென்றறிந்து மேற்பொராதபடி துகிலைவீசித் தன்படையை விலக்கினானென்க. (307) 1864. ஏந்தலைத் தோழ ரெல்லா மிணையடி தொழுது வீழச் சேர்ந்ததன் கண்ணி னாலுந் திண்ணெழிற் றோளி னாலும் வாய்ந்தவின் சொல்லி னாலு மாலைதாழ் முடியி னாலு மாய்ந்தவன் சிறப்புச் செய்தா னவலநோ யவருந் தீர்ந்தார் இ-ள். அரசனாதலறிந்தமையிற் சீவகனைத் தோழரெல் லோருந் தொழுது அடியிலேவீழ்ந்தவளசிலே, அவன் இவர்க்குச் செய்யுஞ் சிறப்பிவையென்றாராய்ந்து அத்தரங்களிலே தோளாலுஞ் சொல்லாலும் முடியாலுங் கண்ணாலுஞ் சிறப்புச் செய்தான்; அவரும் நோய் தீர்ந்தாரென்க. (308) 1865. கழலவாய்க் கிடந்த நோன்றாட் காளைதன் காதலாரை நிழலவா யிரைஞ்சி நீங்கா நெடுங்களிற் றெருத்த மேற்றி யழலவாய்க் கிடந்த வைவே லரசிளங் குமரர் சூழக் குழலவாய்க் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான். தன்னிழலைப் பகையென்றவாவித்தாழ்ந்து. கொல்லனுலையை விரும்பினவேல்; “கொற்றுறைக் குற்றில” (புறநா.95) போல. அரசு நடாத்துதற்கு இளையகுமாரர். மொழியை வங்கியம் விரும்பிக் கிடத்தற்குக்காரணமான கனகமாலை. இ-ள். காளை தன்றோழரை யானையிலேயேற்றிக் குமாரர் சூழ நரதேவனூரிலேகொண்டுபுக்கானென்க. சீவகனுமரசிளங்குமரரும் தோழர் நால்வருடனே யானை யேறினாரென்பது, வேறு ஏற்றி என்பதனாற்பெற்றாம். (309) 1806. வானக்கி நின்று நுடங்குங்கொடி மாட மூதூர்ப் பானக்க தீஞ்சொற் பவளம்புரை பாவை யன்ன மானக்க நோக்கின் மடவார்தொழ மைந்த ரேத்த யானைக்கு ழாத்தி னிழிந்தாரரி மானொ டொப்பார். நக்கி-தீண்டி. நக்க-கெடுத்த. இ-ள். அரிமானோடொப்பார் மூதூரிலே சொல்லையும் நோக்கினயுமுடைய பாவையன்ன மடவார்தொழ மைந்தரேத்த யானைத்திரளினின்றும் இழிந்தாரென்க. நிறத்தாற் பவளம் புரையுமடவார். சீவகனுமரசிளங் குமரருந் தோழர்நால்வரும் யானையினின்றுமிழிகின்ற காலத்துச் சீவக னையுமரசிளங்குமரரையு மகளிர்தொழுதாரென்றுணர்க. (310) 1867. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில் வம்பிற் றுளும்பு முலைவாணெடுங் கண்ம டவார் நம்பப் புகுந்து நரதேவ னருளி னெய்திப் பைம்பொற் புளகக் களிற்றானடி தாம்ப ணிந்தார். இ-ள். கச்சோடேமாறுபட்டசையுமுலையினையும், கண்ணி னையு முடைய மடவார்விரும்பப் பொன்னாற்செய்த கண்ணாடி யால் இளஞாயிற்றைக்கெடுத்த கோயிலிலேபுகுந்து நரதேவ னழைக்கச் சென்றணுகி யவனடியைத் தாம் வணங்கினாரென்க. (311) 1868. வல்லான் புனைந்த வயிரச்குழை வார்ந்து வான்பொற் பல்பூ ணெருத்திற் பரந்தஞ்சுடர் கால மன்னன் மல்லார் திரடோண் மருமான்முக நோக்க மைந்த ரெல்லா மடிக ளெனக்கின்னுயிர்த் தோழ ரென்றான். வாரப்பட்டு வாலிதாகிய பொன்னாற்செய்த பூண். இ-ள். மன்னன்பூனையுடையவெருத்திலே குழைபரந்து ஒளி காலும்படி மருமான்முகத்தை இவர் யாரென்னுங்குறிப்பப் படப் பார்க்க, அடிகளே! மைந்தரெல்லாரும் எனக்கு உயிர்போலுந் தோழரென்றா னென்க. (312) 1869. வார்பொன் முடிமேல் வயிரம்முழச் சேந்த செல்வத் தார்பொன் னடிசூழ் மணியங்கழ லானை வேந்தன் கார்மின் னுடங்கு மிடைமங்கையைக் காண்க சென்றென் றேர்மின்னு தாரா னருளத்தொழு தேகி னாரே. இ-ள். அரசர்முடியில் வைரம் உழுதலாலே சிவந்த செல்வத் தையுடைய அடியைப் பொன்னிடத்திலேநிறைந்த மணியை யுடைய கழல்சூழ்ந்த தாரானாகிய யானையையுடையவேந்தன் கனக மாலை யைச் சென்று காண்கவென்றருளிச்செய்ய, அவரும் ஏகினாரென்க. வார்தல்-பெருகுதல். ஆர்பொன்-திருவுமாம். (313) 1870. தழுமுற்றும் வாராத் திரடாமங்க டாழ்ந்த கோயின் முழுமுற்றுந் தானே விளக்காய்மணிக் கொம்பி னின்றா னெழுமுற்றுந் தோளார் தொழுதாரின்ன ரென்று நோக்கக் கழுமிற்றுக் காதல் கதிர்வெள்வளைத் தோளி னாட்கே. முழுதும்-முழுமெனவிகாரம். இ-ள். முற்றுந் தழுவவொண்ணாத தாமந்தாழ்ந்த கோயிலின் முழுதுந் தானே விளக்காய்ச்சென்றுமுற்றுமணிக் கொம்பு போணின்ற வளை எழுப்போலுந்தோளார் தொழுதார்; அவள் இன்னரென்று குறிப்புப்படநோக்க, அவ்வளவிலே சீவகன் இவர் எனக்கு இத்தன்மைய ரென்று அவளைநோக்க, அவட்குக் காதல் நிறைந்ததென்க. இனி முழுமுற்றும், ஒருசொல்லாக்கியுமுரைப்ப. (314) 1871. துறக்கம் மிதுவே யெனுந்தொன்னகர் மன்னன் மங்கை தொறுக்கொண்ட கள்வ ரிவரோவெனச் சொல்லி நக்காங் கொறுக்கப் படுவா ரிவரென்றங் கசதி யாடி வெறுக்கைக் கிழவன் மகளென்ன விருந்து செய்தான். இ-ள். மன்னன்மகள், இவரோ ஆங்கு நிரையடித்த கள்வரென்று கூறி நக்கு இவர் இனித் தண்டஞ்செய்யத்தகுவரென்று நகையாடி, அப்பொழுதே அளகைக் கோன்மகள் விருந்து செய்தாலென்ன விருந்து செய்தாளென்க. (315) 1872. அருந்தீத் தொழிலே புரிந்தான்மறை யாய வெல்லாம் விருந்தா விரிப்பா னவன்சீவக சாமி வேறா விருந்தாற்கொ ரோலை கொடுத்தானெரி குண்ட லத்தாற் பொருந்தார் பொறியைப் புறநீக்குபு நோக்கு கின்றான். இ-ள். புத்திசேனன் மறைந்தகாரியங்களெல்லாம் புதிதாகப் பின்பு கூறவேண்டி யிப்பொழுது சீவகன்றனியே யிருந்தவனுக்கு ஓரோலையைக் கொடுத்தான்; அதனை அவன்வாங்கிக் குண்டலத் தோடே பொருந்துதனிறைந்த குழையைப் புறத்து நின்றுநீக்கி வாசியா நின்றானென்க. பொறி-தத்தம்பொருள்வயிற்றம்மொடுசிவணிய ஆகு பெயரிலே யாய்க் குழையையுணர்த்திற்று. (316) வேறு 1873. மற்றடிகள் கண்டருளிச் செய்க மல ரடிக்கீழ்ச் சிற்றடிச்சி தத்தையடி வீழ்ச்சிதிரு வடிகட் குற்றடிசின் மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும் பொற்புடைய வாகவெனப் போற்றியடி வீழ்ந்தேன். மற்றுக் காப்பென்க. அரசன் நுகருவனவற்றைக் காப்பென்றல் மரபு. அடியிலே யுற்றுப்போற்றியென்க. என்றது-சமைக்கின்ற பொழுதே யுற்றுக்காக்கப்பட்டென்றவாறு. இ-ள். திருவடிகட்கு அடிசிலையும் மஞ்சனத்தையுமுள்ளிட் டனவும் மற்றுக்காப்புக்களும் அடியிலேயுற்றுப் போற்றப் பட்டுப் பொற்புடையவாகவேண்டுமென்று சிற்றடியாளாகிய தத்தை மலரடிக் கீழ்வீழ்ந்தேன்; அவ்வடிவீழ்ச்சியை அடிகள் நெஞ்சாலே கண்டருளுக வென்க. இவைகாத்தல் தனக்குக் கடனாதலின், முற்கூறினாள். 1874. வயிரமணிக் கலன்கமழுங் கற்பகநன் மாலை யுயிரைமதஞ் செய்யும்மதுத் தண்டொடுடை யாடை செயிரினறுஞ் சாந்துசிலை யம்புமணிய யில்வாண் மயிரெலியின் போர்வையொடெம் மன்னன் விடுத்தானே. மதுத்தண்டு-வீரபானமிருக்குங்குழாய். இ-ள். கலுழவேகன் எலிமயிர்ப்போர்வையோடே கல முதலிய வற்றை வரவிட்டானென்க. உம்மையும்முருபும்விரிக்க. (318) 1875. வந்தவனை யாருமறி யாமைமறை யாகத் தந்துதரன் கேட்பவிது சாமிவலித் தானா ஐந்துமதி யெல்லையினை யாண்டுடைய னாகி யந்திலகன் றான்றமரொ டாங்கணெனச் சொன்னேன். இ-ள். தரன்வந்தவனை யாரு மறியாதபடி மறையாகக் கொண்டு வந்து வைத்து அவன்கேட்கும்படி ஓராண்டிற்கு ஐந்து திங்களளவு குறையாகவுடையனாய்த் தமரோடே ஏமமா புரத்தே யகன்றானென்று இக்காரியஞ் சாமிதானேயருளிச் செய்தானாகக் கூறினேனென்க. தோழர் ஏமமாபுரத்து ஏறப்போவதற்குமுன்பே எழுதிங்கள் சென்றமை “இங்கிவர்க ளிவ்வாறு” (சீவக.462) என்னுங்கவியிற் கூறினாம். பின்பு தோழர் தாபதப்பள்ளியிற்செல்லவொன்றும், “ஒருமதி யெல்லை நாளுட் கொணர்ந்த பின்றை” (சீவக.1817) எனவே சீவகன் வந்து விசயையைக்காணவொன்றும், இவளைக் கண்டு ஊரேறப்போக வொன்றும், மாமனாரிடத்து ஏறப்போகவொன்றும், மீண்டு ஊரேற வரவொன்றும், ஆகஐந்து திங்களுஞ் சென்றவாறுணர்க. (319) 1876. பட்டபழி வெள்ளிமலை மேற்பரத்த லஞ்சித் தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லிப் பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால் விட்டலர்ந்த கோதையவ ரால்விளைவ துண்டோ. இ-ள். கட்டியங்காரன் சிறைசெய்தானென்றுபிறந்த பழி மலைமேற் பரத்தலை யஞ்சி வேறேசிலகாரியங்களைக்கூறி அவனையென்னைத் தொட்டுச் சூளுறவு கொண்டு போக விட்டேன்; இனி இப்பழியை மறைத்து அரசவுரிமையை யெய்துவ தொழிய மகளிரை மணஞ் செய் கின்றவதனால் விளைவதொரு புகழில்லையென்க. பழி வெள்ளிமலை மேற் பரத்தலஞ்சியெனவே இவன் சிறைப் பட்டமை கலுழவேகனுமறிந்திலனென்பதுபெற்றாம். ஈண்டு இங்ஙனங் கூறவே “பொன்னணி” (சீவக.1147) என்னுங்கவியில் “தெய்வமாதரைச் சூழ்ந்த” என்றும், “சந்தமாலை” (சீவக.1160) என்னுங்கவியில் “வந்த விண்ணோர்களை” என்றும், அவள்வழிபட்ட தெய்வங்கள் வந்து நினைத்தவை முடித்துக்கொடுக்குமென்றதன்றித் தன்படையாகிய விஞ்சையர் ஈண்டு வந்தாரென்னாமை யுணர்க; அவ்விஞ்சையரை யழைக்குங்கால் “தன்னுடை விஞ்சை யெல்லாந் தளிரிய லோத லோடும்” (சீவக.1147) என்னவேண்டாவாகலின். (320) 1877. அல்லதுவு மெங்கைகுண மாலையவ ளாற்றாள் செல்லுமதி நோக்கிப்பக லேசிறியை யென்னும் பல்கதிரை நோக்கிமதி யேபெரியை யென்னு மெல்லியிது காலையிது வென்பதறி கல்லாள். இ-ள். அப்பழியன்றிப் பின்னும் ஓர்பழி விளைப்பாள் போன்று எங்கையாகியகுணமாலை ஆற்றாளாய் இரவிது பகலிது வென்பதறி யாளாய் அவள் மதியை வெம்மையாற் பகலே! சிறியையென்னும்; கதிரைத் தண்மையான் மதியே! பெரியை யென்னுமென்க. (321) 1878. அரவுவெகுண் டன்னவக லல்குனிலம் புல்லித் திருவில்வளைந் தனையதிரு மேகலையி னீங்கிப் புருவமதி முகமும்புகழ் தோளும்புணர் முலையு முருவமழிந் தடிச்சியுள ளாங்கொலுண்ர் கலனே! இ-ள். பாம்புகோபித்துப் படம்விரித்தாற்போலு மல்குலையுடை யாள் நிலத்தேவீழ்ந்து வில்வளைந்தனைய மேகலையை யுடைய திருவினின்றுநீங்கிப் புருவத்தையுடையதோர் மதிபோலு முகமுங் தோளும் முலையும் வடிவழிதலாலே அடிச்சி பிழைப்ப ளோ, இறப்பளோ, அறியேனென்க. திருவின்றன்மை கெட்டளென்க. (322) 1879. நாளைவரு நையலென நன்றெனவி ரும்பி நாளையெனு நாளணிமைத் தோபெரிதுஞ் சேய்த்தோ நாளையுரை யென்றுகிளி யோடுநகச் சொல்லு நாளினுமிந் நங்கைதுயர் நாளினுமற் றிதுவே. இ-ள். சீவகன் நாளைவரும்; நீநையாதேகொள்ளென்று கிளிகூற, அரு நன்றென்று விரும்பி நீ கூறிய நாளையென்னு நாள் அணித்தோ? சேய்த்தோ? அந்நாளைக் கூறென்று அது நக அதனோடேசொல்லும்; இந்தநங்கையது துயர் நாளினு நாளினும் இத்தன்மைத்தென்க. மற்று-அசை. (323) 1880. நோக்கவே தறிர்த்து நோக்கா திமைப்பினு நுணுகு நல்லார் பூக்கம ழமளி சேக்கும் புதுமண வாள னார்தா நீப்பிலார் நெஞ்சி னுள்ளா ராதலா னினைதல் செல்லேன் போக்குவல் பொழுதுந் தாந்தம் பொன்னடி போற்றி யென்றாள். இ-ள். பார்க்கவே தளிர்த்துப் பாராதிமைப்பினும் மெலியு நல்லார் அமளியிலே தங்கும் நித்தகல்யாணர்தாம் நீங்குதலில்லா ராய் என்னெஞ்சிடத்தாராதலால் யான் வருந்தேனாய்ப் பொழுது போக்குவேன்; இனித் தாந் தம்மைப் பாதுகாப்பாராக வென்றெழுதினா ளென்க. (324) 1881. இவலம்பூ வரக்குண் டன்ன பஞ்சிமெல் லடியி னாடன் புலவிச்சொற் பொறித்த வோலை திருமுடி துளக்கி நோக்கித் தலைவைத்த காப்புவிஞ்சை கொண்டபின் றாமஞ் சூழ்ந்து கொலைவைத்த குருதி வேலான் றோழரைக் குறுகி னானே. இ-ள். அங்ஙனம் அவள் புலவிச்சொற் பொறித்த வோலையை வாசித்துத் தலைசாய்த்து ஓலையின் முடிவிலெ ழுதின தனக்குக் காவலாகிய விஞ்சையை யுட்கொண்டபின்பு, வெற்றிமாலை சூழப்பட்டுக் கொலைத்தொழிலைத் தன்னிடத்தே கொண்ட வேலான் தோழரைச் சேர்ந்தானென்க. ஒழிந்த காரியங்களுமுளவேனும், புதுமணவாளனா ரென்றதனாற் புலவி பொறித்தாயிற்று. (325) வேறு 1882. எங்கோமற் றென்றிறநீர் கேட்ட தென்றாற் கெரிமணிப்பூட் செங்கோன் மணிநெடுந்தேர்ச் செல்வன் காதற் பெருந்தேவி தங்காத் தவவுருவந் தாங்கித் தண்டா ரணியத்து ளங்காத் திருந்தாளைத் தலைப்பட் டைய வறிந்தோமே. இ-ள். நீர் என்றிறம் எங்கேயோ கேட்டதென்று வினாயி னாற்கு, ஐயனே! சச்சந்தன்றேவி விசயை தண்டகாரணிய மென்கின்ற வனத்திலே தனக்கேலாத தவவுருவைத்தாங்கி மனத்தை நீவாழ வேண்டு மென்கின்ற ஆசைபிணிக்கப்பட்டுத் துறவோருறைகின்ற அவ்விடத்தே யிருந்தவளை யெதிர்ப்பட்டு நின்திறம் அறிந்தோ மென்றாரென்க. “ஆத்தபொறிய” (நாலடி.290) “ஆத்தவிறிவினர்” (நாலடி.351) என்றார்போல ஆத்தென்றார். இனி ‘உளங்காத்’தென்றும் பாடமோதுப. (326) 1883. என்னேமற் றென்னேநீர் மொழிந்த தென்னே யெனவிரும்பி முன்னே மொழிந்தாற்போன் முறைநின் றெல்லா முடன்மொழிய மன்னாரஞ் சிந்துவபோன் மலர்ந்த செந்தா மரைக்கண்ணீர் பொன்னார மார்பின்மேற் பொழியப் புன்க ணுற்றானே. விரைவாதலின், மூன்றடுக்கினார். விசயை யிருக்கின்றமை ஆசிரியன் கூறக் கேட்டதன்றிச் செய்தி விளங்காமையின், ஈண்டு இங்ஙனங்கேட்கின்றான். இ-ள். தான்விரும்பி நீர்கூறியமொழி எங்ஙனேயென்று வினாவ, அவருந்தேவிதான் இவன்முன்னே நின்று கூறினாற் போலச் செய்தியெல்லாம் அடைவே சேரச்சொல்ல, அதுகேட்டு முத்தஞ் சிந்துவது போல கண்ணீர் மார்பிலே சொரிய வருந்தினா னென்க. (327) 1884. அஃதே யடிகளும் முளரோ வென்றாற் கருளுமா றிஃதா விருந்தவா றென்றார்க் கென்னைப் பெறவல்லார்க் கெய்தா விடருளவே யெங்கெங் கென்றத் திசைநோக்கி வெய்தா வடிதொழுது வேந்தன் கோயிற் கெழுந்தானே. இ-ள். பிறந்தசெய்தி அஃதேயென்று அவையெல்லாங் கேட்டபின், என்னைப்பெறவல்ல தீவினையையுடையவர்க்கு எய்தாதிருப்பன சிலதீவினை இனி இல்லை; அத்தீவினையை யுற்றவடிகளும் இருக்கின்றாரோவென்று வினாயினாற்கு, அவரும் இப்பொழுது நல்வினையாகியதெய்வம் நமக்கு அருளு நெறியிருந்தபடி யித்தன்மைத்தாயிருந்த தென்றார்; என்றவர்க்கு அவனும் அவரிருக் கின்ற திசை எங்கேயெங்கேயென்றுகூறி அத்திசையைநோக்கி விரைய வணங்கிப் பின்பு அரசன் கோயிலுக் குப் போனானென்க. (328) 1885. இலைவிரவு பூம்பைந்தார் வேந்த னேந்தல் குலங்கேட்பான் மலைவிரவு நீண்மார்பின் மைந்தன் றோழர் முகநோக்கிக் கொலைவிரவு கூர்நுதிவேற் குமர னென்னக் குருகுலத்தான் கலைவிரவு தீஞ்சொல்லார் காம னென்றார் கமழ்தாரார். இ-ள். இவன்சென்றவளவிலே, வேந்தன் சீவகன்குலத்தைக் கேட்க வேண்டி, அவன்றோழர்முகத்தைநோக்கிக் குமரன் எக்குலத் தானென்று வினாதலுற்றுக் குமரனென்றவளவிலே, தாரார் அவன்குறிப்பறிந்து, குருகுலத்தானென்றாரென்க. (329) விரவு-உவமவுருபு. 1886. அண்ணல் குருகுலத்தா னென்றால் யான்முன் கருதியதென் றெண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்த னெரி செம்பொன் வண்ண வரைமார்ப முயங்கி நுண்ணூன் மதியாரோ டெண்ணி வியநெறியால் விடுத்தான் கோயில் புக்கானே. என்றாலென்பது-ஓர்சொல்விழுக்காடு. நந்தட்டன் நாடும் ஊருமுதலியன கூறலின் உணர்ந்தான். வியம்-ஏவலாதலிற் போக்கின் மேற்று. இ-ள். தலைவன் குருகுலத்தானென்றால் இது யான் முன்கருதிய குலமே; என்னெண்ணத்திலே வெளியானா னென்று கூறி யெழுந் திருந்து கரந்த மைந்தன் மார்பிலே முயங்கி யமைச்சரு டனே காரியத்தையெண்ணி அவனைப்போக விடுநெறியாலே போகவிட்டான்; அவனும் போக்கறிவித்தற்குக் கனகமாலை கோயிலிலே சென்றா னென்க. (330) அரசனாகவே போகவிட்டான். 1887. விள்ளா வியனெடுந்தேர் வேந்தன் காதன் மடமகளே கள்ளாவி கொப்புளிக்குங் கமழ்பூங் கோதா யென்மனத்தி னுள்ளாவி யுள்ளாய்நீ யொழிந்தா யல்லை யெனக்கையிற் புள்ளாவிச் செங்கழுநீர்க் குவளை செய்தாள் புனைபூணாள். இ-ள். வியனெடுந்தேர்வேந்தன்காதல் நீங்காதமடமகளே! கள்ளின் நாற்றத்தைக் கொப்புளிக்குங்கோதாய்! நீ என்மனத் தினுள்ளே யுறை கின்றவு யிராயுள்ளாய்; ஆதலின், நீயென்யனை கன்றாயல்லையென்று பிரிவுணர்த்த, அதனையுணர்ந்து பூணாள் தன்கையிலிருந்த வண்டிற்குயி ராகிய செங்கழுநீரை நெட்டுயிர்ப் பாலே கருங்குவளை யாக்கினாளென்க. இனிக் கள்ளை நீராவியாகக் கொப்புளிக்குமென்றும், உயிரிலே யிருத்தலினென்றும், அன்னங்களை யுடையவாவியிற் கழுநீரென்று முரைப்ப. (331) 1888. வார்முயங்கு மென்முலைய வளைவேய்த் தோளாண் மனமகிழ நீர்முயங்கு கண்குளிர்ப்ப புல்லி நீடோ ளவனீங்கித் தேர்முயங்கு தானையான் சிறுவர் சேடா ரகன்மார்பந் தார்முயங்கிக் கூந்தன்மா விவர்ந்தான் சங்க முரன்றவே. இ-ள். அதுகண்டு அவளை மனமகிழவுங் கண்குளிரவும் புல்லி, அவன் அங்கு நின்றும்போய் நரதேவன்புதல்வராகிய மைத்துனன் மாரைத்தழுவிக்கொண்டு மாவையேறினான்; அப்பொழுது நன்னி மித்தமாகச் சங்கமுழங்கினதென்க. (332) கனகமாலையாரிலம்பக முற்றிற்று. எட்டாவது விமலையாரிலம்பகம் 1889. முருகுகொப் புளிக்குங் கண்ணி முறிமிடை படலை மாலைக் குருதிகொப் புளிக்கும் வேலான் கூந்தன்மா விவர்ந்து செல்ல வுருவவெஞ் சிலையி னாற்குத் தம்பியிஃ துரைக்கு மொண்பொற் பருகுபைங் கழலி னாருட் பதுமுகன் கேட்க வென்றே. இ-ள். தலையின்மாலையினையும், வகைமாலையினையும், வேலினையுமுடைய சீவகன் மாவையேறிப்போகாநிற்க, அவனு டையதம்பியாகிய நந்தட்டன் பொன்னாற் செய்த கழலினை யுடைய தோழரிற் பதுமுகன் கேட்பாயாகவென்று இக்காரியத்தை யுரைக்குமென்க. அதுமேற்கூறுகின்றார். சிலையினாற்கு-உருபுமயக்கம். காலை யகத்திட்ட கழல். (1) 1890. விழுமணி மாசு மூழ்கிக் கிடந்ததிவ் வுலகம் விற்பக் கழுவினீர் பொதிந்து சிக்கக் கதிரொளி மறையக் காப்பிற் றழுவினீ ருலக மெல்லாந் தாமரை யுறையுஞ் செய்யாள் வழுவினார் தம்மைப் புல்லாள் வாழ்கநுங் கண்ணி மாதோ. இ-ள். பெரியமணி மாசேறி உலகைவிலையாகப் பெறும்படி கிடந்ததனைக் கடுகவெளியாக்கினீர்; இதனான் ஒருதீங்கின்றி நுங்கண்ணி வாழ்வதாக; இனி முன்பு போலே அகப்படப் பொதிந்து மறைக்காப்பீராயின், உலகெல்லாங்கைக்கொண்டீர்; காவாது வழுவினீ ராயின், இங்ஙனம் வழுவினாரைத் திருச்சேரா ளென்றானென்க. சிக்க-அகப்பட. (2) 1891. தொழுததங் கையி னுள்ளுந் துறுமுடி யகத்துஞ் சோர வழுதகண் ணீரி னுள்ளு மணிகலத் தகத்து மாய்ந்து பழுதுகண் ணரிந்து கொல்லும் படையுட னொடுங்கும் பற்றா தொழிகயார் கண்ணுந் தேற்றந் தெளிகுற்றார் விளிகுற் றாரே. சோர-வார. இ-ள். கையிலும், முடியிலும், கண்ணீரிலும், பூணிலும், கொல்லும்படையொடுங்குமாதலால்., அப்பழுதையாராய்ந்து அக்கூடா நட்புடையோரைத் தம்மிடத்துநின்று நீக்கிப் பின்னும் யாவர்சிலரிடத்துந் தெளிதலைப் பற்றாதொழிக; அன்றித் தெளிதலுற்றார் விளிதலுற்றா ரென்றானென்க. அரசர்க்கு ஒரு துன்பம்வந்தவிடத்து அவர் நட்புடையோர் போல அழுத கண்ணீருங் கொலைசூழ்தலின், கண்ணிலும் படை யொடுங் கிற்றாம். “ஒன்னார்-அழுதகண்ணீரு மனைத்து” (குறள்.828) என்றார் தேவரும். (3) 1892. தோய்தகை மகளிர் தோயின் மெய்யணி நீக்கித் தூய்நீ ராய்முது மகளிர் தம்மா லரிறபத் திமிரி யாட்டி வேய்நிறத் தோளி னார்க்கு வெண்டுகின் மாலை சாந்தந் தானல கலங்கள் சேர்த்தித் தடமுலை தோய்க வென்றான். இ-ள். கூடுதற்குரிய மகளிரைக் கூடவேண்டின், அவர் பூணைநீக்கி ஆராய்ந்து தெளிந்த மூப்பிமாராலே குற்றமறத் திமிர்ந்து தூயநீராட்டி அவர்க்குத் துகின்முதலியவற்றைச் சேர்த்திப் பின்பு தான் அவர்முலையைத் தோய்வானாக வென்றா னென்க. (4) 1893. வண்ணப்பூ மாலை சாந்தம் வாலணி கலன்க ளாடை கண்முகத் துறுத்தித் தூய்மை கண்டலாற் கொள்ள வேண்டா வண்ணலம் புள்ளோ டல்லா வாயிரம் பேடைச் சேவ லுண்ணுநீ ரமுதங் காக்க யூகமோ டாய்க வென்றான். அண்ணலம்புள்-அரசவன்னம். சேவல்-சக்கரவாகப்புள். இ-ள். பூமாலைமுதலியவற்றைப் புள்ளின்கண்ணிலுஞ் சேவலின் முகத்திலு முறுத்தித் தூய்மைகண்டல்லது கைக் கொள்ளவேண்டா; தண்ணீரிலுஞ் சோற்றிலுந் தீங்குவாரா மற்காத்தற்குக் கருங்குரங்கிற்கு இட்டு ஆராய்கவென்றானென்க. அன்னம் கண்குருதிகாலும்; சக்கரவாகம் முகங்கடுக்கும்; குரங்கு உண்ணாது. (5) 1894. அஞ்சனக் கோலி னாற்றா நாகமோ ரருவிக் குன்றிற் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி யெயிற்றிற் கொல்லும் பஞ்சியின் மெல்லி தேனும் பகைசிறி தென்ன வேண்டா அஞ்சித்தற் காத்தல்வேண்டு மரும்பொரு ளாக வென்றான். இ-ள். அஞ்சனக்கோலால் அடித்தற்குப் பற்றாததோர் நாகந் தன்னெயிற்றாலே அருவிக்குன்றுவீழ்வபோற் குஞ்சரம் புலம்பி வீழக் கொல்லும்; ஆதலிற் பஞ்சியிற்காட்டின் மெல்லிதாயினும் பகையைச் சிறிதென்றுகருதவேண்டா; அதனை யரும் பொருளாக நினைத்து அஞ்சித் தன்னைக் காக்கவேண்டுமென்றானென்க. (6) 1895. பொருந்தலாற் பல்லி போன்றும் போற்றலாற் றாய ரொத்து மருந்தவர் போன்று காத்து மடங்கலா லாமை போன்றுந் திருந்துவேற் றெவ்வர் போலத் தீதற வெறிந்து மின்ப மருந்தினான் மனைவி யொத்து மதலையைக் காமி னென்றான். இது இவனைக் காக்கும் வண்ணங்கூறுகின்றது. இ-ள். விடாமலிவனிடத்திருத்தலிற் பல்லியைப்போன்றும், இவற்குவேண்டுவனசெய்துபோற்றலிற் றாயரையொத்தும், அருந்தவர் சீலமுதலியவற்றைத் தப்பாமற் காக்குமாறுபோல இவற்கும் அவை தப்பாமற்காத்தும், ஐம்பொறியுந் தனக்கடங் கலின் ஆமையை யொத்தும், இவற்குத் தீதுண்டானால் அதுதீரும் படி பகைவரைப் போலே யிடித்தும், அடிசிலில் இவன் விரும்புவனவே தேடி நுகர் வித்தலின் மனைவியையொத்தும் நமக்குப்பற்றான வனைக் காப்பீராகவென்றானென்க. “வான மூன்றிய மதலை போல” (பெரும்பாண்.346) என்றார் பிறரும். தாம் அடங்கியே யிவனையடக்கல் வேண்டுமெனக் கூறு கின்றவன் இங்ஙனங்கூறினானென்க. பலருங்கேட்டலிற் காமி னென்றான். (7) 1896. பூந்துகின் மாலை சாந்தம் புனைகலம் பஞ்ச வாச மாய்ந்தளந் தியற்றப் பட்ட வடிசினீ ரின்ன வெல்லா மாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன் காக்க வென்றாங் கேந்துபூண் மார்ப னேவ வின்னண மியற்றி னானே. இ-ள். அதுகேட்டசீவகன் இவர்களை நெஞ்சாலே யாராய்ந்து பார்த்து இவர்களிற் றுகின்முதலியஇத்தன்மைய வெல்லாவற்றையும் நெஞ்சாலேயளந்து பதுமுகன் காப்பானாக வென்றேவ, அவனும் இப்படிக் காத்தலை நடத்தினானென்க. (8) வேறு 1897. சிறுகண்யா னையினினஞ் சேந்துசே வகங்கொளத் துறுகலென் றுணர்கலாத் துள்ளிமந் திம்மக நறியசந் தின்றுணி நாறவெந் தனகள் கொண் டெறியவெள் கிம்மயிர்க் கவரிமா விரியுமே. இ-ள். யானைத்திரள் துயில்கோடலிற் குரங்கின்குட்டிகள் அதனைக் கல்லென்றுகருதி யானையென்றுணராவாய் மேலே துள்ளிச் சந்தனக்குறடுவெந்தனவற்றைக்கொண்டு ஒன்றையொன் றெறிய, அது கண்டு கவரிமா துணுக்கென்றிரியுமென்க. ‘துள்ளும்’பாடமாயின், துள்ளுமகவென்க. (9) 1898. புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி யகழுமிங் குலிகமஞ் சனவரைச் சொரிவன கவழயா னையினுதற் றவழுங்கச் சொத்தவே. இ-ள். பவளமே யனையவாகிய மயிரையுடைய வெருகிற் பெரியனவாகிய பேரெலி அஞ்சனவரையிலேயிருந்து அகழுஞ் சாதிலிங்கத் தாழ்வரையின் றலையிலே வீழ்கின்றவை யானை யினுதலிலே தவழும் பட்டுக்கச்சையொத்தனவென்க. “வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும்” (தொல். மர.68) என்றார். 1899. அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலி னெண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய் விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக் கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே. இ-ள். குன்றின்மேற்றிரியும் வருடைமான் பாய்ந்து மிதித்தலின், மணிகள் பலவுமுடைந்து செந்தூளியாய் அத்தூளி தேவருலகை உளுவுண்டதென்னும்படி நிலத்தேவீழாநிற்கும்; அங்ஙனம் விழுதலின் நிலத்தின்மரமெல்லாம் அதுபோர்த்துக் கற்பகத்தையொத்தனவென்க. (11) 1900. மானிடம் பழுத்தன கிலுத்தமற் றவற்றயற் பான்முரட் பயம்பிடைப் பனைமடிந் தனையன கானிடைப் பாந்தள்கண் படுப்பன துயிலெழ வூனுடைப் பொன்முழை யாளிநின் றுலம்புமே. இ-ள். மக்கள்வடிவாகப் பழுத்தனவாயிருந்தன கிலுத்த மென்னுமரம். பின்னை அவற்றயலிற் கானிடையிலே பால்போல வெள்ளிய ஏற்றிழிவுடைய நிலத்திற் குழியிடையிலே பனைகிடந்த னையனவாகிய பாந்தள்துயில்வன துயிலெழும்படி யாளிநின்று இடிக்குமென்க. முரண்-மாறுபாடு. ‘முரட்பரம்பும்’ பாடம். (12) 1901. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின் னீரதீம் பூமரந் நிரந்ததக் கோலமும் மேரில வங்கமும் மின்கருப் பூரமும் மோருநா விகலந் தோசனை கமழுமே. திமிசு-ஒருமரம். இ-ள். திமிசு சூழ்ந்த சந்தனமரத்திற் றழைக்கு நடுவே நின்ற நீர்மையையுடைய தீம்பூமரமும், தக்கோலமரமும், இலவங்க மரமும், கருப்பூரமரமும், புழுகோடேகூடி நாற்காதவெல்லை நாறுமென்க. (13) 1902. மைந்தரைப் பார்ப்பன மாமகண் மாகுழாஞ் சந்தன மேய்வன தவழ்மதக் களிற்றினம் அந்தழைக் காடெலாந் திளைப்பவா மானினஞ் சிந்தவால் வெடிப்பன சிங்கமெங் கும்முள. இ-ள். பார்ப்பனவாகிய பெரியமகண்மாக்குழாமும், மேய்வன வாகிய களிற்றினமும், திளைப்பனவாகிய ஆமானினமுஞ் சிந்தும்படி வால்வெடிப்பனவாகிய சிங்கம் எவ்விடத்தும் உளவா யிருக்குமென்க. இனி யிவைநான்கும் எங்குமுளவென்றுமாம். (14) 1903. வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்துராய்ப் பொருப்பெலாம் பொன்கிடந் தொழுகிமேற் றிருவில்வீழ்ந் தொருக்குலாய் நிலமிசை மிளிர்வவொத் தொளிர்மணி திருக்கிள ரொளிகுலாய் வானகஞ் செகுக்குமே. இ-ள். பொருப்பெலாம் கனிதோறும் வானரம்பாய்கையி னாலே அதிற்றேன் பாந்தொழுகிப் பொன்கிடந்து மணியொளி குலாவி மேலுண்டாகியதிருவில் நிலமிசை வீழ்ந்து ஒருங்கு வளைந்து மிளிர்வனவற்றையொத்து விசும்பைவெல்லுமென்க. செய்தெ னெச்சங்களைக் காரணமாக்குக. பொருப்புச் செகுக்கும். ஒருங்குவிகாரம். (15) 1904. வீழ்பனிப் பாறைக ணெறியெலாம் வெவ்வெயிற் போழ்தலின் வெண்ணெய்போற் பொழிந்துமட் டொழுகுவ தாழ்முகில் சூழ்பொழிற் சந்தனக் காற்றசைந் தாழ்துயர் செய்யுமவ் வருவரைச் சாரலே. இ-ள். வீழ்ந்தபனிக்கட்டிகள் வெயிலுருக்குதலாலே, வெண்ணெய் போலே பொழிவதுஞ்செய்து மட்டொழுகுவனவாகிய முகில்சூழ் பொழிலிற் சந்தனக்காற்றுமசைந்து இப்படி அவ்வரு வரைச்சாரலின் நெறி யெல்லாம் ஆழ்துயரைச் செய்யுமென்க. (16) 1905. கூகையுங் கோட்டமுங் குங்கும மும்பரந் தேகலா காநிலத் தல்கிவிட் டெழுந்துபோய்த் தோகையு மன்னமுந் தொக்குட னார்ப்பதோர் நாகநன் காவினு ணயந்துவிட் டார்களே. கூகை-ஒருகொடி. “கூகை நூறொடு குழீஇயின்” (மலைபடு.137) வென்றார் பிறரும். இ-ள். கூகைமுதலியனபரத்தலின், அழகாற் போதற்கரிய நிலத்தே தங்கி அவ்விடத்தை விட்டெழுந்தபோய் மயிலுமன்னமு மார்ப்பதோர் காவிலே விட்டாரென்க. (17) வேறு 1906. பூத்தகி றவழும் போர்வை பூசுசாந் தாற்றி பொன்னூற் கோத்துநீர் பிலிற்றுங் காந்தங் குங்கும வைரப் பொற்கோய் சாத்துறி பவழக் கன்னல் சந்தன வால வட்ட நீத்தவ ரிடத்த நாற்றி நிழன்மணி யுலகஞ் செய்தார். இ-ள். அகிற்புகை பொலிவுபெற்றுப்பரக்கும் படாமுதலிய வற்றையும், சிற்றாலவட்டத்தையும், காந்தத்தையும், குங்குமம் வைக்கும் வைரமழுத்தின் குகையையும், பரணிக்கூட்டையும் பவளக் கரகத்தையும், சந்தனமரத்தாற்செய்த பேராலவட்டத்தையுந் தாபதரிடத்தே தூக்கி, அவ்விடத்தைத் தேவருலகாக்கினாரென்க. (18) 1907. நித்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றுங் கைத்தலந் தீண்டப் பெற்றுங் கனிந்தன மலர்ந்த காண்க வைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரமுயி ரில்லை யென்பார் பித்தல ராயிற் பேய்க ளென்றலாற் பேச லாமோ. இ-ள். மகளிர் கண்ணால் நோக்கப்பெற்றும், கையால் தீண்டப் பெற்றும், கனியாதன கனிந்தன; மலராதன மலர்ந்தன; அவர் கையை வைத்து அவர்கொய்யத் தாழ்ந்துகொடுப்பதுஞ் செய்தன; காண்க; ஆதலின் மரம் உயிரில்லையென்பார்பித்தார்; அல்லரா யிற் பேய் களென்று பேசுதல்லது வேறே பேசலாமோ வெனத் தம்முட் கூறினா ரென்க. (19) 1908. பொறிமயி லிழியும் பொற்றார் முருகனிற் பொலிந்து மாவி னெறிமையி னிழிந்து மைந்தன் மணிக்கைமத் திகையைனீக்கி வெறுமையி னவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரா லறிமயி லகவுங் கோயி லடிகளைச் செவ்வி யென்றான். வெறுமையினவர் - அறிவின்மையை யுடையார். வெள்ளி டை - வெள்ளியவிடம். இ-ள். மைந்தன் மயிலினின்றிழியுமுருகனைப்போல மாவி னின்று இழியுநெறியானிழிந்து கையினின்றும் மத்திகையைநீக்கி யறிவிலாதாரைச் செவ்வியறியப்போக விடுத்தாற் றேவியை யறிந்து வெளியாமிடமுண்டாம்; அஃதாகாததோர் தன்மை யாலே நீதானே சென்று அடிகளைச் செவ்வியறியென்றானென்க. அன்பு செலுத்தலின் அவனோடே கூடச்செல்கின்றவன் செவ்வி யறிந்தே சேறல் நீதியாகலானும், பதுமுகன் தன்னையறி விக்கத் தேவியரிய வேண்டுதலானும் செவ்வியரியென்றானென்க. (20) 1909. எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடு மின்னே பல்லியும் பட்ட பாங்கர் வருங்கொலோ நம்பி யென்று சொல்லின டேவி நிற்பப் பதுமுகன் றொழுது சேர்ந்து நல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான். எல்-பகல். இ-ள். விடியற்காலத்திருளிலே கனவிலே நம்பிவரக் கண்டேன்; இடக்கண் ஆடும்; நல்லவிடத்தே பல்லியும்பட்டன; ஆதலால் நம்பி இன்னேவருமோவென்று கூறினாளாய்த் தேவிநின்றவளவிலே, பதுமுகன்சேர்ந்து தொழுது வணங்கி, அடிகளே! நம்பிவந்தானென்றானென்க. எல்-பகல் நம்பி-நம் முதனிலையாக நமக்கு இன்னொன் னும் பொருள் படவருவதோர் உயர்ச்சிச்சொல். (21) 1910. எங்கணா னைய னென்றாட் கடியன்யா னடிக ளென்னாப் பொங்கிவில் லுமிழ்ந்து மின்னும் புகழ்மணிக் கடக மார்ந்த தங்கொணித் தடக்கை கூப்பித் தொழுதடி தழுவி வீழ்ந்தா னங்கிரண் டற்பு முன்னீ ரலைகடல் கலந்த தொத்தார். முன்னீர்-முற்பட்டநீர்மை; அஃதாவது ‘உதிரறவறியு’ மென்னும் பழமொழி. இ-ள். ஐயன் எவ்விடத்தானென்று வினாவினாட்குச் சீவகன் றானும் அன்பு மிகுதியாற்கூடச்சேறலின், இவனென்று பதுமுகன் கூறாமல் அடிகளே! அடியேன் யானென்னாத் தொழுது அடியைப் பிடித்துவீழ்ந்தான்; அவ்விடத்த அவ்விருவரும் முன்னீ ராலே யிரண்டுஅற்புக்கடல் கலந்ததன்மையை யொத்தாரென்க. இதுகருதி முன் ‘வெள்ளிடைப் படாத’ (சீவக.1908) வென்றார். (22) 1911. திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனைக் கண்ட போழ்தே வருபனி சுமந்த வாட்கண் வனமுலை பொழிந்த தீம்பான் முருகுடை மார்பிற் பாய்ந்து முழுமெயு நனைப்ப மாதர் வருகவென் களிறென் றேத்தி வாங்குபு தழுவிக் கொண்டாள். இ-ள். அங்ஙனம்வீழ்ந்த சிறுவனைக்கண்டபொழுதே வாட் கண் சுமந்த பெருகுகிறநீரும், முலைபொழிந்தபாலும் அவனெழுந்திருக்கின்ற காலத்தே மெய்யைநனைத்தலாலே, ஐய! நீயிங்கேவருக வென்றேத்தி அவனுடைய மார்பிற்காட்டிற் றன்மார்பு பாய்ந்து அவனை யொடுங்கும் படி தழுவிக்கொண்டாளென்க. இன்-உறழ்பொரு. பாய்து பாயவெனத்திரித்து, ஏத்தி வாங்கி அவை முருகுடைமார்பிற்பாயத் தழுவிக்கொண்டாளென்றுமாம். (23) 1912. காளையாம் பருவ மோராள் காதன்மீக் கூர்த லாலே வாளையா நெடிய கண்ணாண் மகனைமார் பொடுங்கப் புல்லித் தாளையா முன்பு செய்த தவத்தது விளைவி லாதேன் றோளையாத் தீர்ந்த தென்றா டொழுதகு தெய்வ மன்னாள். இ-ள். அருந்ததிபோல்வாளாகியவிசயை, ஈதிளமைப்பருவம் இனித் தழுவலாகாதென்றோராளய்க் காதல்பெருகிப்பரத் தலாலே மகனைக் குழவிப்பருவம்போலே தன்மார்பிலே யொடுக்கும்படி தழுவி, ஐயனே! முற்பிறப்பின் முயற்சியாற் செய்த தவப்பயனில்லாதேன் றோளில் வருந்தத் தீர்ந்ததென்றாளென்க. அரசனைக்கோறலின், வாளையொக்கு நெடியகண்ணா ளென்று அவட்குப் பெயராயிற்று. ஐ-அசையுமாம். (24) 1913. வாட்டிறற் குருசி றன்னை வாளமர கத்து ணீத்துக் காட்டகத் தும்மை நீத்த கருயத்தியேற் காண வந்தீர் சேட்டிளம் பரிதி மார்பிற் சீவக சாமி யீரே யூட்டரக் குண்ட செந்தா மரையடி நோவ வென்றாள். இ-ள். பெருமயையுடைய இளைய பருதிபோலு மார்பினை யுடை சீவகசாமியீரே! தாமரைபோலும் அடிநோம்படி அரசனைய மரிலே கைவிட்டு நம்மைச் சுடுகாட்டிலே கைவிட்ட கொடியேனைக் காண வந்தீர்; இஃதோரன்பின் மிகுதி யிருந்தவாறு என்னென்றாளென்க. சீவகசாமியென்னு மிருபெயரொட்டுப் பண்புத்தொகை “பண்பு கொள் பெயரு மதனோ ரற்றே” (தொல். விளிமரபு.23) என்ற சூத்திரத்திற் றன்னினமுடித்தலென்பதனாற் சீவகசாமியாரென ஆரீறாய்ச் சீவகசாமியீரே யென ஈரொடு ஏகாரம்பெற்றதெனக் கூறினாம்.(25) 1914. கெடலருங் குரைய கொற்றங் கெடப்பிறந் ததுவு மன்றி நடலையு ளடிகள் வைக நட்புடை யவர்க ணைய விடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன் றந்த துன்பக் கடலகத் தழுந்த வேண்டா களைகவிக் கவலை யென்றான் குரைய-அசை. கொற்றங்கெட-அரசன்பட. நட்புடைய வர்-சச்சந்தனோடு நட்புக்கொண்டவர்; என்றது தோழருடைய தந்தையரை. இ-ள். கொற்றங்கெட நட்புடையவர் நைய அடிகள் வருத்தத்தே தங்கப் பிறந்ததுவுமன்றி யிப்பொழுதும் இடையன் கொன்ற மரத்தின் றன்மை யுடையேனாகிய யான்றந்த துன்பக்கடலிலே அழுந்த வேண்டா; இத்துன்பத்தைக் களைகவென்றானென்க. (26) 1915. யானல னெள்வை யாவாள் சுநந்தையே யையற் கென்றுங் கோனலன் றந்தை கந்துக் கடனெனக் குணத்தின் மிக்க பானிலத் துறையுந் தீந்தே னனையவா யமிர்த மூற மானலங் கொண்ட நோக்கி மகன்மன மகிழச் சொன்னாள். 1916. எனக்குயிர்ச் சிறுவ னாவா னந்தனே யைய னல்லன் வனப்புடைக் குமரனிங்கே வருகென மருங்கு சேர்த்திப் புனக்கொடி மாலை யோடு பூங்குழ றிருத்திப் போற்றா ரினத்திடை யேற னானுக் கின்னளி விருந்து செய்தாள். இவை யிரண்டு மொருதொடர். இருமுது குரவர்க்குந் துன்பஞ்செய்தேனென்றலின், உனக்கு இவரன்றோ இருமுது குரவரென்கின்றாள். (அய்யன்-முன்னிலைப்படர்க்கை.) இ-ள். குணத்தின்மிக்க விசயை, நினக்குத்தாயாவாள் சுநந்தையே; யானல்லேன்; தந்தையாவான் கந்துக்கடனே; கோனல்லனென்று பாலிடத்தே தங்குந்தேனையொப்பனவாய் இனிமையூறும்படி வார்த்தை கூறினாள்; கூறிப் பின்பு புனக்கொடி போல்வாள் சீவகன் மகிழும்படி எனக்கு உயிர்போலுஞ் சிறுவனா வான் நந்தட்டனே; நீயல்லை; ஆதலாற் குமரன்! இவ்விடத்தே வருக வென்றுகூறி அருகே யணைத்துத் திருத்தி அவனுக்கு இனிய தண்ணளியாகிய விருந்தைச்செய்தானென்க. (27-28) 1917. சிறகராற் பார்ப்புப் புல்லித் திருமயி லிருந்த தேபோ லிறைவிதன் சிறுவர் தம்மை யிருகையி னாலும் புல்லி முறைமுறை குமரர்க் கெல்லா மொழியமை முகமன் கூறி யறுசுவை யமிர்த மூட்டி யறுபகல் கழிந்த பின்னாள். வேறு 1918. மரவ நாக மணங்கமழ் சண்பகங் குரவங் கோங்கங் குடம்புரை காய்வழை விரவு பூம்பொழில் வேறிருந் தாய்பொரு ளுருவ மாத ருரைக்குமி தென்பவே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். மயில் தன்பார்ப்புக்களை இரண்டுசிறகாலும் புல்லி யிருந்த தன்மைபோலத் தன்சிறுவரை இரண்டுகையினாலும் புல்லி அமைந்த முகமனாகிய மொழிகளை முறைமுறையே தோழர்க் கெல்லாங்கூறி யடிசிலையூட்டி ஆறுநாள்கழிந்தபின்பு, அம்மாதர் மரவமுதலிய விரவியபொழிலிலே, காரியத்திற்குரியவரை வேறே கொண்டிருந்து நூற்கண் ஆராய்ந்த இப்பொருளை உரையா நிற்குமென்க. (29-30) 1919. நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட் புலிய னார்மகட் கோடலும் பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகட் கோடலு நிலைகொண் மன்னர் வழக்கென நேர்பவே. இ-ள். அழித்தற்கரிய மலையிலுங் காட்டிலுமுறைகின்ற பெரும் பொருளையுடைய குறுநிலமன்னர் மகளைக் கொள்ளு தலும், வலியவரசர் மகளைக்கொள்ளுதலுந் தம்முன்னுள்ளோர் நிலையைக் கொள்ளவேண்டிய மன்னர்முறைமையென்று மதி வல்லோர் நேர்வரென்க. எனவே வலியின்மிக்கவர்மகளை நீகொண்டது நன்றென் றாள். (31) 1920. நீதி யாலறுத் தந்நிதி யீட்டுத லாதி யாயவ ரும்பகை நாட்டுதன் மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் பேது செய்துபி ளந்திடல் பெட்டதே. இ-ள். அரசநீதியாலே ஆறிலொன்றாக வறுத்திட்டு அப் பொருளை யீட்டுதல், தொன்றுபட்டபகையைத் தந்நெஞ்சிலே நிலைபெறுத்துதல், முள்ளைக்கொண்டு முள்ளைக் களையுமாறு போலே தமக்கு ஒன்னாராய் உறவா யிருப்பவரிருவரைத் தம்மிற்பேது செய்து ஒருவரைக்கொண்டு ஒருவரை மோதியிடுதல், தம்மிற்கூடிவந்து வினைசெய்வாரைப் பிரித்துத் தம்மோடே கூட்டிக்கோடல், இவை அரசர்விரும்பப்பட்டகாரியமென்க. (32) 1921. ஒற்றர் தங்களை யொற்றரி னாய்தலுங் கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ் சுற்றஞ் சூழ்ந்துபெ ருக்கலுஞ் சூதரோ கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே. இ-ள். ஒற்றரை யொற்றரைக்கொண்டாராய்தலும், நீதிநூல் கற்ற அமைச்சரைக் கண்ணென்றுகோடலும், மந்திரிச்சுற்றத்தையுந் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியனென்று விசாரித்துப் பெருக்கலும் வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்கு உபாயமென்க. (33) 1922. வென்றி யாக்கலு மேதக வாக்கலுங் மன்றி யுங்கல்வி யோடழ காக்கலும் குன்றி னார்களைக் குன்றென வாக்கலு பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே. 1923. பொன்னி னாகும் பொருபடை யப்படை தன்னி னாகுந் தரணி தரணியிற் பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள் துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே. இவையிரண்டு மொருதொடர். செய்தல்-தேடுதல். இ-ள். ஆகத்தினாய்! அங்ஙனந்தேடும் பொருள் பல வெற்றியை யுண்டாக்கலும், மதிப்பையுண்டாக்கலும், கல்வியையும் அழகையு முண்டாக்கலும், குறைந்தவரைப் பெருகவாக்கலு மன்றியும், இப்பொருளாலே படையாம்; அதனாலே தரணியாம்; அதனாலே பின்னைப் பெரியபொருளாம்; அது கைகூடுமளவில் வீடுங் கிடைக்கு மென்க. என்றவள் இங்ஙனமுரைக்குமென வருவிக்க. (34-35) 1924. நிலத்தி னீங்கி நிதியினுந் தேய்ந்துநங் குலத்திற் குன்றிய கொள்கைய மல்லதூஉங் கலைக்க ணாளரு மிங்கில்லை காளைநீ வலித்த தென்னென வள்ளலுங் கூறுவான். இ-ள். இங்ஙனமுரைத்துப் பின்னுங் காளாய்! நிலத்தினின்று நீங்கிப் பொருளினுங்குறைந்து நங்குலத்திற்றாழ்ந்த கொள்கை யேம்; இந்நிலையேயன்றி இதனை நீக்கற்குரிய அமைச்சருமில்லை; இந்நிலைக்கு நீதுணிந்தகாரியமென்னென்று தேவிகேட்ப, அவனும் ஒருமொழிகூறினானென்க. (36) வேறு 1925. எரியொடு நிகர்க்கு மாற்ற லிடிக்குரற் சிங்க மாங்கோர் நரியொடு பொருவ தென்றாற் சூழ்ச்சிநற் றுணையோ டென்னாம் பரிவொடு கவல வேண்டா பாம்பவன் கலுழ னாகுஞ் சொரிமலர்ச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ னந்த னென்றான். இ-ள். சிங்கந் தனக்குநிகராகிய சிங்கத்தோடேயன்றி நரியோடே பொரக்கடவதென்றால் அவ்விடத்த அருளிச்செய்த சூழ்ச்சியுந் துணை களுமென்னாய்முடியும்; அதுபோல யான் அவனுடனே பொருவதனால், அவைவேண்டா; யானேயுமன்றிப் பொருமளவில் அவன்பாம்பும் நந்தட்டன் கருடனுமாயிருக்கும்; ஆதலால் எம்மேல் வைத்தவன்பாலே இதற்குவருந்தவேண்டா வென்றானென்க. இவனைக்காணக் கெடுமென்றான். (37) 1926. கெலுழனோ நந்த னென்னாக் கிளரொளி வனப்பி னானைக் கலுழத்தன் கையிற் றீண்டிக் காதலாற் களித்து நோக்கி வலிகெழு வயிரத் தூண்போற் றிரண்டுநீண் டமைந்த திண்டோட் கலிகெழு நிலத்தைக் காவா தொழியுமோ காளைக் கென்றாள். இ-ள். அதுகேட்டதேவி நந்தன்கருடனோவென்று காதலிற் களித்து நோக்கி அவனைமனமுருகும்படி தன்கையினாலே தீண்டி இத்தோள்கள் உனக்கு நிலத்தைக் கொண்டுதந்து அதனைக் காவாதே யிருக்குமோவென்றாளென்க. தந்தென வருவிக்க. கலி-கட்டியங்காரன். காளை-சீவகன். 1927. இடத்தொடு பொழுது நாடி யெவ்வினைக் கண்ணு மஞ்சார் மடப்பட லின்றிச் சூழு மதிவல்லார்க் கரியது ண்டோ கடத்திடைக் காக்கை யொன்றே யாயிரங் கோடி கூகை யிடத்திடை யழுங்கச் சென்றாங் கின்னுயிர் செகுத்த தன்றே. 1928. இழைபொறை யாற்ற கில்லா திட்டிடை தளர நின்ற குழைநிற முகத்தினார்போற் குறித்ததே துணிந்து செய்யார் முழையுறை சிங்கம் பொங்கி முழங்கிமேற் பாய்ந்து மைதோய் வழையுறை வனத்து வன்க ணரிவலைப் பட்ட தன்றே. இவையிரண்டு மொருதொடர். மடம்படல்-விகாரம். இ-ள். காட்டிலே ஒருகாக்கை எண்ணிறந்த கூகையிருக்கின்ற விடத்தே அவை வருந்தும்படி பகற்காலத்தேசென்று கொன்ற தல்லவோ; சிங்கம் இடமறியாதே செறிந்த வனத்தின் நரிமேலே பாய்ந்து அந்நரியாகியவலையிலே அகப்பட்டதல்லவோ; ஆதலால், யாம் வீரமுடையேமென்று மகளிரைப் போலே தாம் நினைத்ததே துணிந்துசெய்யாராய்க் காலத்தையு மிடத்தையுநாடி ஆண்டுச் செய்யும் வினையிடத்து மஞ்சாராய்ச் சூழுமறிவினையும் வல்லார்க்குப் பின்னை அரியவினை யுண்டோவென்றாளென்க. வீரத்தையேகருதாமற் காலமுமிடமுமறிந்து செய்க வென்றாள். “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை”(குறள்.481) என்றும், “காலாழ் களரி னரியடும்” (குறள்.500)என்றுந் தேவருங் கூறினார். (39-40) 1929. ஊழிவாய்த் தீயொ டொப்பான் பதுமுக னுரைக்கு மொன்னா ராழிவாய்த் துஞ்ச மற்றெம் மாற்றலா னெருங்கி வென்று மாழைநீ ணிதியந் துஞ்சு மாநிலக் கிழமை யெய்தும் பாழியாற் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி யென்றான். இ-ள். அதுகேட்டுத் தீயோடொப்பானாகிய பதுமுகன் எம்மாற்றலால் நெருங்கிப் பகைவரை யாழிவாயிலே படும்படி வென்று நிலக்கிழமையை யெய்துவே மாதலின், வலியாற்பிறரை விரும்பேம்; அருளிச்செய்யுமதே தாமதமென்றானென்க. எய்தும்-பன்மைத்தன்மை. ‘பாழியே’மென்றும் பாடம். (41) 1930. பொருவருங் குரைய மைந்தர் பொம்மென வுரறி மற்றித் திருவிருந் தகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்க ளெரியிருந் தயரு நீர்மை யிருங்கதி ரேற்ற தெவ்வர் வருபனி யிருளு மாக மதிக்கவெம் மடிக ளென்றார். பொருவுதல்-விகாரம். இ-ள். ஒழிந்த தோழர் கடுகமுழங்கி இச்சீவகனடியைச் சேர்ந்தயாங்கள் வெம்மைக்கு நாமொவ்வோமென்று நெருப் பிருந்து வருந்துந்தன்மையையுடைய ஞாயிறும், எம்முடனெதிர்த்த தெவ்வர் பனியும் இருளுமாக, எம்மடிகள் மதித்தருளுக வென்றாரென்க. (42) வேறு 1931. கார்தோன்ற வேம லருமுல்லை கமலம் வெய்யோன் றேர்தோன்ற வேம லருஞ்செம்மனின் மாமன் மற்றுன் சீர்தோன்ற வேம லருஞ்சென்றவன் சொல்லி னோடே பார்தோன்ற நின்ற பகையைச் செறற் பாலை யென்றாள். இ-ள். அதுகேட்டதேவி, செம்மால்! காருந்தேருந் தோன்றின வளவிலே, முல்லையுங் கமலமும் மலருமாறுபோல, உன் சீர் தோன்றின பொழுதே, நின்மாமன் அகமலர் மலரும்; ஆதலான் அவனிடத்தே சென்று அவனேவலோடே பகையைக் கொல்வா யாக வென்றாளென்க. பார் நின்னாலே விளங்க. நின்ற-நிலைபெற்றுநின்ற. (43) 1932. நன்றப் பொருளே வலித்தேன்மற் றடிக ணாளைச் சென்றப் பதியு ளெமர்க்கேயென துண்மை காட்டி யன்றைப் பகலே யடியேன்வந் தடைவ னீமே வென்றிக் களிற்றா னுழைச் செல்வது வேண்டு மென்றான். இ-ன். அடிகளே! கூறியது நன்று; தோழரறிவித்த அன்றைப் பகற்பொழுதே அந்தக் காரியமே யானுந்துணிந்தேன்; இனி நாளை யிராசமாபுரத்தே சென்று என்சுற்றத்திற்கு யானிருந்தபடியை யறிவித்து ஒருநாளிருந்து மற்றைநாளே போந்து அடியேன டைவேன்; நீர் என்மாமனிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்புமென்றானென்க. “ இளையவண் மகிழ்கூறி” (சீவக.2101) என்னுங்கவியானும், “ வீட்டகந் தோறும் எதிர்கொள்க” (சீவக.2110)என்றதனானும், “ஊர்தோறு” (சீவக.2111) என்றத னானும் அன்றைப்பகலே வருவே னென்றல் பொருந்தாமையுணர்க. “கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும்” (தொல்குற்றியலுகரம்.78) என்றதனால் நும்மென் னுஞ்சொல் நீயிரென முழுவதுந் திரியாது மகரநிற்பத்திரிந்து நீமெனநின்றது. ஏகாரம்-பிரிநிலை. இனி நீமென்று ஓர் திசைச் சொல்லுமாம். (44) 1933. வேற்றைவந் தன்ன நுதிவெம்பரற் கான முன்னி நூற்றைவ ரோடு நடந்தாணுதி வல்லின் மைந்தன் காற்றிற் பரிக்குங் கலிமான்மிசைக் காவ லோம்பி யாற்றற் கமைந்த படையோடதர் முன்னினானே. நுதி-முன்பு; “மதியேர் நுதலார் நுதிக்கோலஞ் செய்து” (திருச்சிற்.360) என்றாற்போல. ஓம்பி-ஓம்ப. இ-ள். வல்வின்மைந்தன் படையாலே தேவிக்குக்காவலிட, அவளும் அவன் போவதற்குமுன்பே நூற்றைவரோடே கான முன்னி நடந்தாள்; நடந்தபின்பு அவன் மான்மிசையேறி யதரைப் போகத் தொடங்கினானென்க. பகைவர்க்கஞ்சி அவன் படையைக் காவலிட்ட பின்பு, தேவிதான் தனக்குக் காவலாகத் தன்னைப்போல் நோன்பு கொண்ட மகளிராய்ப் பள்ளியிலுறைவார் நூற்றைவரோடே போனாள்; தவஞ்செய்வார் தனியேபோதன் மரபன்றென்று. இனி வல்வின் மைந்தன் முன்பு படையோடே மான்மிசையி லேயேறி அதரைமுன்னினவன் தேவிக்குக் காவலோம்ப, அவள் நோன்பு கொண்டமகளிர் நூற்றைவரோடே நடந்தா ளென்றுமாம். இனி ‘நடந்தா’னென்று பாடமோதி, முன்பு படையோடே அதர் முன்னினவன் மாமிசையினுள்ளாரைத் தேவிக்குக்காவலாக வோம்பித் தான் நூற்றைவரோடும் போனானென்பாருமுளர். (45) 1934. மன்றற் கிடனா மணிமால்வரை மார்பன் வான்க ணின்றெத் திசையு மருவிப்புன னீத்த மோவாக் குன்றுங் குளிர்நீர்த் தடஞ்சூழ்ந்தன கோல யாறுஞ் சென்றப் பழனப் படப்பைப்புன னாடு சேர்ந்தான். மன்றற்கு-கல்யாணத்திற்கு. வான் தன்னிடத்தே மாறாது பெய்தலின், அருவி நீர்ப்பெருக்கொழியாதகுன்று. படப்பை-தோட்டம். இ-ள். மார்பன் குன்றையும், ஆற்றையுங்கடந்து அவ்வேமாங் கதத்தைச் சேர்ந்தானென்க. (46) வேறு 1935. காவின்மேற் கடிமலர் நெகிழ்ந்த நாற்றமும் வாவியு ளினமல ருயிர்த்த வாசமும் பூவிரி கோதையர் புனைந்த சாந்தமு மேவலாற் கெதிரெதிர் விருந்துசெய்தவே. இ-ள். நெகிழ்ந்த காவின் நாற்றமுதலியன வில்வல்லாற்கு விருந்து செய்தனவென்க. (47) 1936. கரும்பின்மேற் றொடுத்ததேன் கலிகொடா மரைச் சுரும்பின்வாய்த் துளித்தலிற் றுவைத்த வண்டொடு திருந்தியாழ் முரல்வதோர் தெய்வப் பூம்பொழிற் பொருந்தினான் புனைமணிப் பொன்செய் பூணினான். இ-ள். பூணினான் கரும்பில்வைத்ததேன் சுரும்பின்வாய்த் துளித்தலின், அச்சுரும்பொலித்தவை பின்பு வண்டோடு யாழ் போல முரலும்பொழிலைப் பொருந்தினானென்க. (48) 1937. பொறைவிலங் குயிர்த்தன பொன்செய் மாமணிச் செறிகழ லிளைஞருஞ் செல்ல னீங்கினார் நறைவிரி கோதையர் நாம வேலினாற் கறுசுவை நால்வகை யமுத மாக்கினார். இ-ள். குதிரைமுதலியன சுமத்தலைவிட்டு இளைப்பாறின; இளையரும் வருத்த நீங்கினார்; அவ்வளவிலே கோதையர் வேலினாற்கு அடிசில் சமைத்தாரென்க. (49) 1938. கட்டியி னரிசியும் புழுக்குங் காணமும் புட்டில்வாய்ச் செறித்தனர் புரவிக் கல்லவு நெட்டிருங் கரும்பொடு செந்நென் மேய்ந்துநீர் பட்டன வளநிழற் பரிவு தீர்ந்தவே. இ-ள். கருப்புக்கட்டியுடனே கலந்த வரிசியுங் காணமு மிட்ட புட்டிலை நீரிலே யலைந்தனவாகியபுரவிக்கு வாயிலே செறித்தார்; அவையொழிந்த எருதுமுதலியனவும்மேய்ந்து நிழலிலே கிடந்து வருத்தந்தீர்ந்தனவென்க. (50) 1939. குழிமதுக் குவளையங் கண்ணி வார்குழற் பிழிமதுக் கோதையர் பேண வின்னமு தழிமதக் களிறனா னயின்ற பின்னரே. கழிமலர் விழித்தகண் கமலம் பட்டவே. குழிமதுக்குவளை-குழியிற்குவளை. இ-ள். களிறனான் கோதையர்பேண இன்னமுதையுண்ட பின்பு, கழியின் மலர்கள் கண்விழித்தன; கமலந் துயின்றனவென்க. (51) 1940. எரிமணி யிமைததன வெழுந்த தீம்புகை புரிநரம் பிரங்கின புகன்ற தீங்குழ றிருமணி முழவமுஞ் செம்பொற் பாண்டிலு மருமணி யின்குர லரவஞ் செய்தவே. இ-ள். அவ்வந்திக்காலத்தின் மணிவிளங்கின; அகிற்புகை யெழுந்தன; நரம்பு இரங்கின; குழல் பாடலைக்கூறின; அழகிய முழவமுங் கஞ்சதாளமுங் குதிரைமணியின் குரலோடே யொலித்தன வென்க. (52) 1941. தெளித்தவின் முறுவலம் பவளஞ் செற்றவாய்க் களிக்கயன் மழைக்கணார் காமங் காழ்கொளீஇ விளித்தவின் னமிர்துறழ் கீதம் வேனலா னளித்தபின் னமளியஞ் சேக்கை யெய்தினான். தெளித்தவின்முறுவல்-விளக்கிய இனியமுறுவல். இ-ள். மகளிர்பாடிய கீதத்தைச் சீவகன் கொண்டாடிய பின்பு காமத்தே வயிரங்கொண்டு படுக்கையாகிய தங்குமிடத்தை யெய்தினா னென்க. (53) 1942. தீங்கரும் பனுக்கிய திருந்து தோள்களும் வீங்கெழிற் றோள்களு மிடைந்து வெம்முலை பூங்குளிர் தாரொடு பொருது பொன்னுக வீங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான் இ-ள். கரும்பைக்கெடுத்த தோள்களும், எழிற்றோள்களும் மிடைதலாலே முலை அவன்றாரோடேபொருது பூண்கள் சிந்தும்படி இரவெல்லையை யிங்ஙனநீந்தினானென்க. “வியநெறியால்விடுத்தான்” (சீவக.1886) என்றலின், இவன் நுகர்தற்குரிய மகளிர்பலரும் வந்தாரென்க. (54) 1943. கனைகதிர்க் கடவுள்கண் விழித்த காலையே நனைமலர்த் தாமரை நக்க வண்கையாற் புனைகதிர்த் திருமுகங் கழுவிப் பூமழை முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான். இ-ள். முருகவேளனான் ஞாயிற்றால் உலகங் கண்விழித்த காலையிலே, தாமரைப்பூவைக்கெடுத்த கையாலே முகங்கழுவிப் பூமழையைப்பெய்து முனைவனுக்கு வணங்கினானென்க. கடவுள்தோன்றினகாலமுமாம். நனைமலர், முதற்கேற்ற அடை ‘மழைபெய்து’என வருவிக்க. இரண்டனுருபு மயக்கமுமாம்; முனைவனையென்று. (55) 1944. நாட்கடன் கழித்தபி னாம வேலினான் வாட்கடி யெழினகர் வண்மை காணிய தோட்பொலி மணிவளைத் தொய்யின் மாதரார் வேட்பதோர் வடிவொடு விரைவி னெய்தினான். இ-ள். வேலினான் நாட்காலத்துச்செய்யுங் கடன்களை முடித்த பின்பு மகளிர் விரும்புவதோர் வடிவைக்கொண்டு ஒளியின் மிகுதியை யுடைய ஊரின்வண்மையைக் காண்டற்கு விரைவோடெய்தினானென்க. (56) 1945. அலத்தகக் கொழுங்களி யிழுக்கி யஞ்சொலார் புலத்தலிற் களைந்தபூ ணிடறிப் பொன்னிதழ் நிலத்துகு மாலைகா றொடர்ந்த நீணகர் செலக்குறை படாததோர் செல்வ மிக்கதே. இ-ள். அவன்கால் இங்குலிகச்சேற்றிலேயிழுக்கிப் பூணிலேயிடறி மாலையுஞ்சேரத்தொடரப்படுதலாலே போகத் தொலையாதிருப்பதோர் செல்வம் நீணகர்க்கு மிக்கதென்க. (57) வேறு 1946. கத்தி கைக்கழு நீர்கமழ் கோதையர் பத்தி யற்படு சாந்தணி மென்முலை சித்தி யிற்படர் சிந்தையி னாரையு மித்தி சைப்படர் வித்திடு நீரவே. கத்திகை-தொடைவிசேடம். இ-ள். கோதையருடையமுலை பத்தியிலேயுண்டாஞ் சித்தியிலே செல்கின்ற துறவோரையும் இல்லறத்திலே செலுத்து வித்திடும் தன்மையை யுடையவாயிருக்குமென்க. (58) 1947. வஞ்சி வாட்டிய வாண்மினு சுப்பினார். பஞ்சி யூட்டிய பாடகச் சீறடி குஞ்சி சூட்டிய மைந்தர் குழாமலா லிஞ்சி வட்டமி டம்பிறி தில்லையே. இ-ள். வட்டமாகிய மதிலினிடமெல்லாம் மகளிரடியைக் குஞ்சியிலே சூட்டிய மைந்தர்திரளல்லது வேறுதிரளில்லையென்க. வாட்டிய-கெடுத்த. (59) 1948. மின்னி னீள்கடம் பின்னெடு வேள்கொலோ மன்னு மைங்கணை வார்சிலை மைந்தனோ வென்ன னோவறி யோமுறை யீரெனாப் பொன்னங் கொம்பனை யார்புலம் பெய்தினார். இ-ள். பொற்கொம்பனையார் இவன் மேனியினொளி யாலே முருகனோ! காமனோ! யார்தானறிகிலம்; உரையீரென்று வருந்தினா ரென்க. (60) 1949. விண்ண கத்திளை யானன்ன மெய்ப்பொறி யண்ண லைக்கழி மீன்கவர் புள்ளென வண்ண வார்குழ லேழையர் வாணெடுங் கண்ணெ லாங்கவர்ந் துண்டிடு கின்றவே. இ-ள். அங்ஙனம்புலம்பினவேழையர் கண்ணெல்லாம் முருகனுடைய உத்தமவிலக்கணத்தையொத்த இலக்கணத்தை யுடைய அண்ணலை நீர்வடிந்த கழியின் மீனைக்கவரும் பறவையென்னும்படி கைக்கொண்டு நுகராநின்றன வென்க. (61) இது தொழிலுவமம். வேறு 1950. புலாத்தலைத் திகழும் வைவேற் பூங்கழற் காலி னானை நிலாத்தலைத் திகழும் பைம்பூ ணிழன்மணி வடத்தோ டேந்திக் குலாய்த்தலைக் கிடந்து மின்னுங் குவிமுலை பாய வெய்தாய்க் கலாய்த்தொலைப் பருகு வார்போற் கன்னியர் துவன்றி னாரே. புலால்நாற்றந் தலையிலே திகழும்வேல். இ-ள். சீவகனைக் கலவியிலே வெய்தாய்க்கலாய்த்து அக்கலாந் தீர்ந்த தம் முலைபாய நுகர்வரைப்போலே கன்னியர் நெருங்கினா ரென்க. நிலாத்தன்னிடத்தே திகழும் மணிவடத்தோடே பூண்தலை யிலே கிடந்தி மின்னும் ஏந்திக் குவிந்தமுலையென்க.(62) 1951. வேனெடுங் கண்க ளம்பா விற்படை சாற்றி யெங்குந் தேநெடுங் கோதை நல்லார் மைந்தனைத் தெருவி லெய்ய மானெடு மழைக்க ணோக்கி வானவர் மகளு மொப்பாள். பானெடுந் தீஞ்சொ லாளோர் பாவைபந் தாடு கின்றாள். இ-ள். நல்லார் கண்களம்பாக விற்படையை யமைத்து மைந்தனைத் தெருவிலேயெங்குமெய்யாநிற்க, நோக்கினையு டையாள், நெடுவானவர் மகளுமொப்பாள், பால் போலுஞ் சொல்லாள், ஒருபாவை, அவள் பந்தாடாநின்றாளென்க. நெடுமை-பெருமை. (63) வேறு 1952. குழன்ம லிந்த கோதை மாலை பொங்க வெங்க திர்ம்முலை நிழன்ம லிந்தநேர்வ டந்நி ழற்ப டப்பு டைத்தர வெழின்ம ணிக்கு ழைவில் வீச வின்பொ னோலை மின்செய வழன்ம ணிக்க லாப மஞ்சி லம்பொ டார்ப்ப வாடுமே. இ-ள். அவள், குழலிற் கோதையும் மாலையும்பொங்க, முத்துவடம் முலையிலே புடைத்தலைச்செய்ய, குழை வில்லை வீச, ஓலை ஒளியையுண்டாக்க, கலாபமுஞ் சிலம்பு மொலிப்ப ஆடு மென்க. (64) 1953. அங்கை யந்த லத்த கத்த வைந்து பந்த மர்ந்தவை மங்கை யாட மாலை சூழும் வண்டு போல வந்துடன் பொங்கி மீதெ ழுந்து போய்ப் பிறழ்ந்த பாய்த லின்றியே செங்க யற்கண் புருவந் தம்மு ளுருவஞ் செய்யத் திரியுமே. இ-ள். ஐந்துபந்து, அங்கையாகிய அழகியநிலத்திடத்தவாக மங்கை முதலாடுதலாலே, அதிலேயமர்ந்தவை பின்முறைமை குலைந்துபோய் வீழ்தலின்றி மாலையைச் சூழும் வண்டுபோலே பொங்கி மீதெழுந்து போய் உடனேவந்து கண்ணும்புருவமுங் கூடத்திரிந்து அழகு செய்யத் திரியுமென்க. (65) 1954. மாலை யுட்க ரந்த பந்து வந்த கைத்த லத்தவாம் ஏல நாறி ருங்கு ழற்பு றத்த வாண்மு கத்தவா நூலி னேர்நு சுப்பு நோவ வுச்சி மாலை யுள்ளவா மேலே ழுந்த மீநி லத்த விரல கைய வாகுமே. இ-ள். மாலையின்மறைந்தபந்து கையிடத்தவாம்; குழற்புறத்த வாகியபந்து முகத்திடத்தவாம்; நுசுப்புநோம்படி உச்சியிற் போனபந்து மீண்டும் மாலைக்குள்ளேயாம்; மாலைமேலேபோய் உயர்ந்தபந்து மீண்டும் விரலிடத்தன, கையிடத்தனவா மென்க. (66) 1955. கொண்டு நீங்கல் கோதை வேய்தல் குங்கு மம்ம ணிந்துரா யெண்டி சையு மேணி யேற்றி லங்க நிற்றல் பத்தியின் மண்டி லம்வ ரப்பு டைத்தன் மயிலிற் பொங்கி யின்னணம் வண்டுந் தேனும் பாட மாதர் பந்து மைந்துற் றாடுமே. இ-ள். மாதர், வண்டுந்தேனுந் தேனைநுகராதே நின்றுபாட மயில்போற் பொங்கி யுராய் எண்டிசையும் பந்தைக்கொண்டு லாவுதல், இடையேகுங்குமமணிந்து கோதைவேய்தல், படி முறையாக அடித்தல், அப்பத்தியோடே தன்னைச்சூழ்ந்துவர அடித்தலென்கின்ற நிலைமை களிலே வலியுற்று இங்ஙனம் பந்தாடுமென்க. (67) 1956. பந்து மைந்துற் றாடு வாள்ப ணைம்மு லையிற் குங்குமஞ் சுந்த ரப்பொ டிதெ ளித்த செம்பொற் சுண்ணம் வாணுதற் றந்து சுட்டி யிட்ட சாந்தம் வேரின் வார்ந்தி டைம்முலை யிந்தி ரதிரு வினெக் குருகி யென்ன வீழ்ந்தவே. இ-ள். அங்ஙனமாடுகின்றவளுடைய நுதலிலே கொண்டு வந்து சுட்டியாக விட்டசாந்தமும், முலையிலிட்டகுங்குமமும், சிந்துரப் பொடியும், ஓடவைத்த பொற்சுண்ணமும், வியர்வை யினாற்கரைந் தொழுகி முலையிடையிலே யிந்திரவில் நெகிழ்ந் துருகி யொழு னாற்போலே வீழ்ந்தவென்க. (68) 1957. நன்ம ணிச்சி லம்பி னோடு கிண்கி ணிந்ந கந்நகும் மின்ம லர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கி றந்தெழுந்து பொன்ம லர்ந்த கோதை பந்து பொங்கி யொன்று போந்துபாய்ந்து மின்ம லர்ந்த வேலி னான்முன் வீதி புக்கு வீழ்ந்ததே. இ-ள். சிலம்புங்கிண்கிணியுநகாநிற்பப் பொன்னை மலர்ந்த தொரு மின்போல நகுங் கோதைய தொருபந்து, மலர்ந்த முல்லை மாலையை மிக்குத்தீண்டுதலாலே தன்வரையை யிறந்து எழுந்துபாய்ந்து பொங்கிப் போந்த வீதிபுக்கு வேலினான் முன்னே வீழ்ந்ததென்க. (69) 1958. வீழ்ந்த பந்தின் மேல்வி ரைந்து மின்னி னுண்ணு சுப்பினாள் சூழ்ந்த காசு தோன்ற வந்த கின்னெ கிழ்ந்து பூங்குழ றாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து வெம்மு லைக டைவரப் போழ்ந்த கன்ற கண்ணி வந்து பூங்கொ டியி னோக்கினாள். இ-ள். நுசுப்பினாளாகிய ஆவியைப்போழ்ந்தகன்ற கண்ணி, துகில் நெகிழ்தலிற் காசுதோன்றக் குழல் தாழ்ந்து வீழ்தலின் அதிற்கோதை முலையைத் தைவர வீழ்ந்த பந்தின் மேலே வேட்கை செலுத்தி விரைந்துவந்து கொடிபோலே நோக்கினாளென்க. (70) வேறு 1959. மந்தார மாலை மலர்வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன் கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப் பந்தார்வஞ் செய்து குவளைக்கண் பரப்பி நின்றாள். செந்தா மரைமேற் றிருவின்னுரு வெய்தி நின்றாள். இ-ள். களிவண்டு மந்தாரமாலையின்மலரைமொய்த்து அதிற்றேனையுண்டு மகிழ்ந்து காந்தாரமென்னும்பண்ணையாக்கி ஆளாபஞ்செய்து பாடும்படி பந்திலே யார்வஞ்செய்து நின்று அவனைக் காண்டலின், அவன்மேலே கண்ணைப்பரப்பி யிமையாதுநின்றவள், முன்பு கண்ணிமைத்த குறைபாடுதீர்தலிற் றிருவின்வடிவை நேரே பெற்றுநின்றாளென்க. (71) 1960. நீர்தங்கு திங்கண் மணிநீணிலந் தன்னு ளோங்கிச் சீர்தங்கு கங்கைத் திருநீர்த்தண் டுவலை மாந்திக் கார்தங்கி நின்ற கொடிகாளையைக் காண்ட லோடும் பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி னாளே. ஓடு-உடனிகழ்ச்சி. இ-ள். கங்கையினீரையுண்டு சந்திரகாந்தக்கல்லாகிய நிலத்திலே வளர்ந்து பசுமைதங்கிநின்றதோர்கொடி அவனைக் காண்டலோடே பழம்பூப்போலே வெளுத்து வேறாயினா ளென்க. (72) 1961. பெண்பா லவர்கட் கணியாய்ப்பிரி யாத நாணுந் திண்பா னிறையுந் திருமாமையுஞ் சேர்ந்த சாயல் கண்பாற் கவினும் வளையுங்கவர்ந் திட்ட கள்வன் மண்பா லிழிந்த மலரைங்கணை மைந்த னென்றாள். இ-ள். மகளிர்க்குப்பூணாய் நீங்காதநாணும், நிறையும், மாமையுஞ் சேர்ந்த சாயல், தன்கண்ணாலேயென்னழகையும் வளையையுங்கவர்ந்த கள்வன் வடிவுகொண்டு உலகிலேவந்த காமனென்றுகருதினாளென்க. சாயல்-ஆகுபெயர். (73) 1962. என்றா ணினைந்தா ளிதுபோலுமிவ் வேட்கை வண்ணஞ் சென்றே படினுஞ் சிறந்தார்க்கு முரைக்க லாவ தன்றா யரிதா யகத்தேசுட் டுருக்கும் வெந்தீ யொன்றே யுலகத் துறுநோய்மருந் தில்ல தென்றாள். இ-ள். என்றுகருதினவள் தன்னிலேநினைந்தாள்; நினைந்த படி: இந்தவேட்கையென்று உலகங்கூறுகின்றதன் வண்ணம் இதுபோலே யிருந்தது; இதுதான், இறந்துபடினும் குரவர்க்குங் கூறலாவ தொன்றன் றாய்ப் பொறுத்தற்கு மரிதாய் உள்ளேநின்று சுட்டுருக்கும் வெந்தீயாயிருந்தது; இதுதான் நோய்களிலே வைத்துக் கொண்டு வேறுபரிகாரமற்றதுமாயிருந்தது; இதுவு மொரு நோயென்று நினைந்தாளென்க. (74) 1963. நிறையாதுமில்லை நெருப்பிற்சுடுங் காம முண்டேற் குறையா நிறையி னொருகுன் றியுங் காம மில்லை பறையா யறையும் பசுப்பென்று பரிந்து வாடி யறைவாய்க் கடல்போ லகன்காம மலைப்ப நின்றாள். இ-ள். மகளிர்க்கு நிறைநிற்குமிடத்து ஓர்குன்றியளவுங் காமம் இல்லையாயிருந்தது; காமமுண்டாகில் நிறை ஒன்றுமில்லை யாயிருந்தது; அதுவுமன்றி அதனைமறைத்தாலும் பசப்புச் சாற்றுமா யிருந்த தென்றுகூறி வாடிக் கடல்போலே காமம் மேன்மேல் அலைப்ப நின்றாளென்க. (75) 1964. நெஞ்சங் கலங்கி நிறையாற்றுப் படுத்து நின்றா ளஞ்செங் கழுநீ ரலர்ந்தம்மதி வாண்மு கத்தே வஞ்சம் வழங்கா தவன்கண்களி னோக்க மாதோ தஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது காம வெந்தீ. இ-ள். பொய்கூறாதவன் தன்கண்ணாலே இங்ஙன நெஞ்சுலங்கி நிறையைப் போக்கிநின்றவளது கழுநீர்மலர்ந்ததொரு மதிபோலு முகத்தே நோக்கினானாக, அவளெதிர் நோக்கினானி கழ்ந்த காமத்தீ அவற்கு எளிமையை முதற்கொடுத்துப் பின்பு பாம்புபோற்றலைக் கொண்டதென்க .(76) 1965. பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய ஏவுண்ட நெஞ்சிற் கிடுபுண்மருந் தென்கொ லென்னா மாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக் கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயி னானே. உண்ட-உவமவாசகம். இ-ள். வேலான், பூப்போலுங்கண்ணாள் புருவமாகிய வில்லை வளைத்துக் கண்ணாகிய அம்பாலேயெய்தலின், ஏவுண்ட என்னெஞ்சிற் புண்ணுக்கு இடுமருந்து யாதென்றாராய்ந்து குழைந்து வேறுமருந் தின்மையின், இவளே மருந்தென்று அவளை மீண்டும்பார்த்து ஆண்டுப் பெறற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரை யாகிய நோக்காலே யுயிரைப் பெற்று ஆற்றாமையிலே நின்றானென்க. இதனால் முன்புபோலப் பொதுநோக்குப்பெறின் இறந்து படுதலுக்கு மருந்தென்றுகருதினானாம். (77) 1966. காமக் கடுநோய்க் கனல்சூழ்ந்துடம் பென்னு மற்றிவ் வீமத்தி னோடு முடனேசுட வேக லாற்றான் றூமத்தி னார்ந்த துகிலேந்திய வல்கு றாதை பூமொய்த் திருந்த கடைமேற்புலம் புற்றி ருந்தான். இ-ள். காமநோயாகிய கனல்சூழ்ந்து உடம்பென்னும் விறகுடனே யுயிரை முழுக்கச்சுடுதலிற் போகலாற்றானாய் விமலை யுடையதாதை யாகிய சாகரதத்தனுடைய கடையிலே வருந்தி யிருந்தானென்க. (78) 1967. நாவிநோய் செய்த நறுங்குழலா ணாணீலக் காவிநோய் செய்த கருங்கயற்கட் பூங்கொடியென் னாவிநோய் செய்த வணங்கென் றறியாதேன் மேவிநோய் தீர வினாத்தருவா ரில்லையே. கயற்கண்-ஒருபெயர். குழலாள்-மானிடமாது. இ-ள். அங்ஙனமிருந்தவன் காவிக்குநோய்செய்த கண்ணினை யுடைய பொடியை என்னுயிரையுமுட்படவருந்தியதோர் தெய்வ மென்றே கருதி நறுங்குழலாளாகவுணராதே பின்னு மயங்கினேனை மேவி மிக்கவருந்தந்தீரும்படி என்னுற்றனை யென்று வினாவு வாரின்றாயிருந்ததென்றானென்க. இனிக் குழலாள் கொடி அணங்கென்றுகூறி, அறிவுகலங்கி னேனையென்றுமாம். (79) 1968. தெண்ணீர்ப் பனிக்கயத்து மட்டவிழ்ந்த தேங்குவளைக் கண்ணீர்மை காட்டிக் கடல்போ லகன்ற வென் னுண்ணீர்மை யெல்லா மொருநோக்கி னிற்கவர்ந்த பெண்ணீர்மை மேனாட் பிறந்து மறியுமோ. இ-ள். சிறியதொரு குளத்தே யலர்ந்த குவளைபோலுங் கண்ணின்றன்மையைக் கொண்டு அதனொருநோக்கினாலே கடல் போலகன்ற என்னுள்ளிலறிவையெல்லாங் கவர்ந்ததொரு பெண்டன்மை முன்னாளிலும் பிறந்தறியுமோ? இன்று என்னை வருந்துதற்குத் தோன்றியதன்றோவென்றானென்க. (80) 1969. கருங்குழலுஞ் செவ்வாயுங் கண்மலருங் காதும் அரும்பொழுகு பூண்முலையு மாருயிர்க்கே கூற்றம் விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும் பெருந்திருவி யார்மகள்கொல் பேரியாதாங் கொல்லோ. இ - ள். அங்ஙனம் ஒரு நோக்கினாலே விருந்தினரைப் பிணமாக நோக்கும் பெருந்திருவியுடைய குழன்முதலிய இக்கூற்றமெல்லாம், எளிய உயிரொன்றனையும் அழித்தற்கேதான்; இத்தன்மையையுடைய இவள் எந்நல்வினையுடையோர்மகள்? இவட்குப் பெயர் கூற்ற மென்றாமோ, பெண்ணென்றாமோ என்றான் என்க. (81) 1970. வாருடுத்த வெம்முலைய வண்டார்பூங் கோதையைப் பேர்கொடுத்தார் பெண்ணென்றார் கூற்றமே யென்றிட்டாற் றாருடுத்த நீண்மார்பர் தம்முயிர்தாம் வேண்டுபவேல் நீரடுத்த விந்நகரை நீத்திட் டொழியாரோ. வாருடுத்த-வார்சூழ்ந்த. இ-ள். இவளைப் பெயரிட்டவர்தாந் தம்முயிர் தீங்குறா திருத்தல் வேண்டுவாராயிற் கூற்றமென்னார் பெண்ணென்றார்; தாருடுத்த நீண்மார்பர் கூற்றமென்றிடுளவாராயின், இந் நகரைக் கைவிட்டுத் தாமிருத்தற் குரியதோரிடத்தே யிராரோ, அங்ஙனமிராமையிற் பெண் ணென்றே பெயரிட்டாரென்று பெயரைத் தெளிந்துகூறினா னென்க. தந்தையைப் பேர்பொடுத்தாரென்று ஒருவரைக்கூறும் பன்மையாற்கூறினார். நீண்மார்பரென்றது-அப்பொரைச் சுட்டிக்கூறிற்று. (82) 1971. பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடுந் திங்கண் முகத்திலங்கச் செவ்வா யெயிறிலங்கக் கொங்குண் குழறாழக் கோட்டெருத்தஞ் செய்தநோக் கெங்கெங்கே நோக்கினு மங்கங்கே தோன்றுமே. இ-ள். மகரவடிவாகச்செய்தகுண்டலமுந் தோடும் முகத்தே யிலங்க, எயிறு சிறிதிலங்க, குழல் எருத்திலேவீழச் சாய்ந்தகழுத்துத் தந்த பார்வை பார்த்தவிடமெங்குந் தோன்றா நின்றதென்றா னென்க. இஃது எதிர்பெய்து பரிதல். முன்பெற்ற அருணோக்கினை வியந்தான். (83) 1972. வாளார் மதிமுகத்த வராளோ வடுப்பிளவோ தாளார் கழுநீரோ நீலமோ தாமரையோ நீள்வேலோ வம்போ கயலோ நெடுங்கண்ணோ கோளார்ந்த கூற்றமோ கொல்வான் றொடங்கினவே. இ-ள். இந்த மதிபோலுமுகத்திற்கிடக்கின்றவை, ஒருகால் அங்ஙனம் அருணோக்கமுஞ்செய்தலிற் கண்ணோ, கயலோ, வடுப்பிளவோ, கழுநீரோ, நீலமோ, தாமரையோ வென்றற்குந்தக்கு, ஒருகாற் பொதுநோக்கமுஞ் செய்து கொல்வான்றொடங்கின வாதலிற் கூற்றமோ, வாளோ, வேலோ, அம்போவென்றற்குந்தக்கு இருபகுதியு முடையவாயிருந்தன வென்றானென்க. (84) வேறு 1973. என்றாங்கொன் மாதர் நலமெய்துவ தென்று சிந்தித் தொன்றார்க் கடந்தான் புலம்புட்கொண் டிருத்த லோடு மன்றே யமைந்த பசும்பொன்னட ராறு கோடி குன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்த னென்பான். இ-ள். ஒன்றார்க்கடந்தான் இங்ஙனங்கூறி மாதர்நலத்தை யெய்துந் தன்மை என்றுகூடுமென்றுநினைத்து வருந்தியிருந் தானாக, அற்றை நாளே ஆண்டுறையுஞ் சாகரதத்தன் மாற்றமைந்த தகட்டுப்பொன் ஆறுகோடியென்னு மெண்ணிற் குறையாத படி சரக்கைவிற்றானென்க. குளிர்-திசைச்சொல். (85) 1974. திருமல்க வந்த திருவேயெனச் சேர்ந்து நாய்கன் செருமல்கு வேலாய்க் கிடமாலிது வென்று செப்ப வரிமல்கி வண்டுண் டறைமாமலர்க் கண்ணி மைந்த னெரிமல்கு செம்பொ னிலமாமனொ டேறி னானே. திருவேயென்று உவப்பின்கட் பான்மயங்கஉவமித்தார். வண்டுகள் மதுவையுண்டு வரியென்னும்பண்ணை யறைகின்ற கண்ணி. இ-ள். நாய்கன் எனக்குச்செல்வமிகவந்ததிருவேயென்று சோர்ந்து இனி யிவ்வில்லம் நினக்கு இருப்பிடமாயிருந்த தென்றுசெப்ப, அதுகேட்ட அம்மைந்தன் அம்மாமனோடே பொன்னிலத்தேயேறினா னென்க. (86) 1975. நம்பன் சிறிதே யிடைதந்திது கேட்கநாளு மம்பொன் னகரு ளமைந்தேன்மற் றெனக்க மைந்தாள் கம்பம் மிலாதாள் கமலைக்கு விமலை யென்பாள் செம்பொன் வியக்கு நிறத்தாள்திரு வன்ன நீராள். 1976. பூம்பாவை வந்து பிறந்தாளப் பிறந்த போழ்தே யாம்பால வெல்லா மறிவாரன் றெழுதி யிட்டார் தூம்பியாது மில்லாக் குளம்போன்றதென் றோமில் பண்டங் கூம்பாத செல்வக் கொடியேயிது கேண்மோ வென்றான். 1977. மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும் வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழா தெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்ப நங்கைக் கியன்ற நறும்பூவணைப் பள்ளி யென்றான். 1978. ஏழாண்டின் மேலு மிரண்டாண்டிரண் டெய்தி நின்றாள் வீழா நிதியு முடன்வீழ்ந்தது வில்வ லாய்க்கே யூழாயிற் றெல்கு நுசுப்பஃக வுருத்து வீங்கிச் சூழாரம் வைத்த முலையாணலஞ் சூழ்க வென்றான். இவை நான்கு மொருதொடர். 1. கம்பமிலாதாள்-கற்பிலசைவிலாதாள். 2. தூம்பில்லாக்குளம் போன்றதென்றான், சரக்கு விலை போகாமையின். கொடி-ஒழுங்கு. “கொடிக்கூரை” (புறநா.22) என்றார் பிறரும். 3. வீழும்-நின்னிடத்தே தாழும். மற்று-அசை. இ-ள். நம்பன், சிறிதேயிடந்தந்து இதனைக்கேட்க; இந்நகரிலே நாளுமிருந்தேன்; இங்ஙனமிருந்தேற்கு அமைந்தா ளாய்க் கம்பமில்லாதளாகிய கமலைக்கு விமலையென்பாள் நிறத்தாள், நீராள், பாவை, இவள்வந்துபிறந்தாள்; பிறந்தவப் பொழுதே மேலாங்காரியங் களையெல்லா மறியுங் கணிகள் சாதகஞ்செய்தார்; செய்தவன்றே எனது குற்றமற்றபண்டந் தூம்பில்லாத குளத்தை யொத்தது; இதற்குக் காரணம் வினாவினே னாக; அவர்களிலொருவன் இந்நிலையும் நினக்குச் செல்வம் வருமொழுங்கே; அதுவரும்வழியுங்கேளென்றான்; என்றவன் இவளுக்குரியகணவன் கடையிலே வந்தேறும்; ஏறின வளவிலே நிதியஞ்சேர விழும்; அல்லதுவீழாது; அங்ஙனம் வீழும்படி வந்தவன் மார்பமே இவட்குப்பள்ளியாவது மென்றான்; அதற் கேற்ப வீழாநிதியும் இப்பொழுது வீழ்ந்தது; யாண்டும் பதினொன் றற்றுப் பன்னிரண்டாயிற்று. ஆதலின், நினக்கே யூழாயிற்ளு; இனி இவள்நலத்தைத் தழுவுவாயாகவென்றா னென்க. கமலைக்குப்பிறந்தாளென்க. கணி சாகரதத்தனை யுவந்து ‘செல்வக்கொடியே’ யென்றானென்றுமாம். (87-90) வேறு 1979. ஏற்ற கைத்தொடி வழ்ந்தென வேந்தலைத் தேற்றி னான்றிரு மாநலஞ் செவ்வனே தோற்ற மாதருந் தோன்றலைக் காண்டலு மாற்றி னாடன தாவியுந் தாங்கினாள். வீழ்ந்தது-விகாரம். இ-ள். எடுத்த கையிலே ஒருதொடி தானேவந்து வீழ்ந்த தன்மைபோல நமக்கும் இதுவந்ததென்று கருதும்படி அவன் ஏந்தலை யிங்ஙனங்கூறித் தேற்றினான்; தேற்றினபின் மாதருந் தோன்றலை யுள்ளேவரக்கண்டவளவிலே தனதாவியையும் போகாமற்றடுத்தாள்; தடுத்து ‘நலஞ்சூழ்க’வென்று தந்தை யவற்குக்கூறியது தானும் பின்பு கேட்டலின், ஆற்றுவதுஞ் செய்தாளென்க. (91) 1980. அம்பொற் கொம்பனை யாளையும் வார்கழற் செம்பொற் குன்றனை யானையுஞ் சீர்பெறப் பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழ விம்ப ரில்லதொ ரின்பமி யற்றினார். இன்பமென்றது-மணத்தை; ஆகுபெயர். இ-ள். நகரிலே பல்லியங்களாராநிற்பக் கொம்பனை யாளையுங் குன்றனையானையும் இன்பத்தை யியற்றினாரென்க. (92) 1981. கட்டி லேறிய காமரு காளையும் மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும் விட்டு நீங்குத லின்மையின் வீவிலா ரொட்டி யீருடம் போருயி ராயினார். இ-ள். பிணிப்பினையுடைய இல்வாழ்க்கையிலே சென்ற காளையுங் கோதையும் தம்மிரண்டுடம்புமொன்றாய் விட்டு நீங்குதலின்மையின், விட்டு நீங்கி நுகருமக்களது மெய்வருத்த மாகிய கேடில்லாதவர் அங்ஙனம் ஓருடம்பாதலே யன்றி மனமுமொன்றா யினாரென்க. உயிரொன்றெனவே மனமுமொன்றென்பதுபோதரும். (93) 1982. நிலவு வெண்கதிர் நீர்மைய பூந்துகில் கலவங் கண்புதை யாதுக னற்றலி னுலக மூன்றுமு றுவிலைத் தென்பவே. புலவு வேற்கண்ணி னாண்முலைப் போகமே. இ-ள். அவர்அங்ஙனமாதலின், அதற்குமுன் நீங்காமல் நிலை பெறும் பூந்துகில் மேகலையை மறையாதே தானே நெகிழ்ந்து அவனைக்கனற்றுதலின், ஆண்டுப்பெற்ற நுகர்ச்சியின்பம் உலக மூன்றுமுறுகின்ற விலையையுடைத்தென்க. அவன்கொளுத்த அவள்கோடலிற் கனற்றுதல் அவன் மேலாயிற்று. முலைப்போகமென்றார், உடம்பைப்பற்றி இன்ப நுகரா நிற்க நிகழ்வதோர் கரணமென்பது தோன்ற. (94) 1983. தேன வாங்கமழ் கண்ணியுந் தெவ்வர்த மூன வாங்கதிர் வேலுறு காளையுங் கான வாங்கடி நாறுமென் பள்ளிமேல் வான வாம்வகை யால்வைகி னார்களே. இ-ள். கண்ணியுங் காளையுங் கானம்விரும்பும் மணமெல்லா நாறும்பள்ளிமேலே வைகினாரென்க. மக்களது மெய்வருத்தமின்றி நுகர்ந்தமை தோன்றத் தேவரவாவும் வகையென்றார். இத்துணையும் மணஞ்செய்த அன்றை நுகர்ச்சிகூறிற்று. (95) வேறு 1984. வெண்மதி நெற்றி தேய்த்து விழுத்தழும் பிருப்ப நீண்ட அண்ணனன் மாடத் தங்க ணகிற்புகை யமளி யேறிப் பண்ணமை மகர வீணை நரம்புரீஇப் பாவை பாட மண்ணமை முழவுத் தோளான் மகிழ்ச்சியுண் மயங்கி னானே. இ-ள். மதியின்றலைதேய்த்தலிற் றழும்பிருப்பநீண்ட மாடத்தில் அமளியிலே சென்றேறிப் பாவை யாழ்வாசித்துப் பாட, அதுகேட்டுத் தோளான் இன்பமகிழ்ச்சியிலே மயங்கினா னென்க. இதுமுதல் மற்றைநாளைப்புணர்ச்சிகூறுகின்றார். அதுவும் அமளியேறியென்றதனால் நீங்கியிருந்து நாட்கடன்கழித்தெய்தி னாரென்றுணர்க. இங்ஙனம் இரண்டு நாள் ஈண்டுச் சென்றமை தோன்ற மேலே “நாரிரண்டுசென்ற” (சீவக.1995)என்றார். (96) 1985. இன்னரிச் சிலம்போ டேங்கிக் கிண்கிணி யிகலி யார்ப்பப் பொன்னரி மாலை தாழப் பூஞ்சிகை யவிழ்ந்து சோர மின்னிருங் கலாபம் வீங்கி மிளிர்ந்துகண் ணிரங்க வெம்பித் துன்னருங் களிகொள் காமக் கொழுங்கனி சுவைத்து விள்ளான். இ-ள். ஊற்றின்பத்தைச் சிறிதுநீங்கின புணர்ச்சியை விரும்பிச் சிலம்புங் கிண்கிணியுமார்ப்ப, மாலைதாழ, சிகைசோர, கலாபம் விம்மிப் பிறழ்ந்தொலிப்பக் காமமாகிய கனியைச் சுவைத்துப் பகலெல்லா நீங்கிற்றிலனென்க. கனி-சாரம். தாழ்தலானுஞ் சோர்தலானும் ஊற்றினைச் சிறிது நீங்கின கரணமாம். (97) 1986. தொழித்துவண் டிமிருங் கோதை துணைமுலை மூழ்கப் பூம்பட் டழித்துமட் டொழுகுந் தாராம ணிவள்ளத் தாய்ந்த தேறல் எழிற்பொலி மாதற்க் கேந்த வினிதினி நுகர்ந்து காமக், கொழித்திரை கடலுண் மூழ்கிக் கோதைகண் டுயின்ற வன்றே. தொழித்து - சிதறி. இ - ள். அக்கரணம் நிகழ்ந்தபின், கோதை துணைமுலைகள் பூம்பட்டை யழித்து நீங்காமல் முயங்கலின், மட்டொழுந்தாரான் மாதர்க்கத் தேறலை வள்ளத்தே ஏந்த, அவள் அதனை இனிதாக நுகர்ந்து காமமாகிய கொழிந்து இரைக்குங் கடலிலே மீண்டு மழந்துலின், அவன் துயில்வதற்கு முன்னே அவள் கண்கள் சிறிது துயின்றனவென்க. (98) 1987. பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும் தூசுலா மல்குல் தீண்டத் துயிற்கண்கள் விழித்த தோற்றம் வாசவான் குவளை மெல்ல வாய்விடா நின்ற தொக்கும் ஏசுவ தொன்று மில்லா விணைவட முலையினாட்கே. வெற்றிலை மடித்துக் கொடுத்தற் கென்றது இடக்கர். புணர்ச்சிக் கண் நாண் தோன்றலின், தூசு நெகிழ்ந்து மேற்கிடந்தமை தோன்ற உலாவும் என்றார். இ - ள். மைந்தன் புணர்ச்சி வேண்டி விமலையது அல்குலைத் தீண்ட அவட்குக் கண்விழித்த தோற்றம் குவளை முன்பு அலருந் தன்மையன்றி மெல்லென அலருந்தன்மையை ஒக்குமென்க. (99) 1988. கங்குற்பா;ற புகுந்த கள்வ னிவனெனக் கதுப்பிற் றாழ்ந்த தொங்கலான் முன்கை யாத்துச் சொல்லுநீ வந்த தென்ன நங்கையான் பசித்து வந்தே எனப்பொரு ணயப்ப தென்றாட் கங்கலுழ் மேனி யாய்நின் னணிநல வமிழ்த் மென்றான். அனந்தராதலின் தானறியாமற் புகுந்த கள்வனென்று அசதியாடினாள். இ - ள். இவன் கள்வனென்று கூறித் தப்பாதபடி மாலையாற் கையை யாத்து இனி நீ வந்த காரியங் கூறென்று கேட்க, யான் பசியால் வந்தேன் என்று கூற, நீ விரும்புவனவற்றில் இப்பொழுது விரும்புவது எப்பொருளை என்று வினானாயினாட்கு, அழகொழுகு கின்ற மேனியாய் நின் அழகாகிய அமிழ்தம் முழுதும் என்றான் என்க. பசித்துண்பார்க்கு உணவுகள் பலவென்பது தோன்ற எப்பொருள் என்றாள். (100) 1989. செயிர்த்தவள் சிவந்து நோக்கிச் சீறடி சென்னி சேர்த்தி அயிர்ப்பதென் பணிசெய் வேனுக் கருளிற்றுப் பொருள தென்ன உயிர்ப்பது மோம்பி யொன்று முரையலை யாகி மற்றிப் பயிர்ப்பில்பூம் பள்ளி வைகு பகட்டெழின் மார்ப வென்றாள். முன்பு நின்னலமென்றதனால், பிறர் நலமன்றி நின்னல மென்பது போதருதலின், அது செயிராம். நோக்கி - நோக்க. பயிர்ப்பு - அருவருப்பு. இ - ள். தான் குற்றங்க கூறலின், அவள் கோபித்துப் பார்க்கச் சென்னியை அடியிலே சேர்த்தி, என்னை அயிர்க்கின்ற தன்மை என்னென்று வினவ, அதற்கு மறுமொழி, கொடாமையிற் றான் நெட்டுயிர்ப்புக்கொண்டு நினதேவலே செய்வேனுக்கு அருளினதுயா தொன்று அது காரியமென்றானாக, அதற்கு வருந்திப் பயிர்ப்பில்லாத மார்பனே! நீயித்தன்மையன சிறிதுங்கூறாயாகி இதனால்வரும் இறந்து பாட்டையுமோம்பி இப்பள்ளியிலே யினித் தங்கென்றாளென்க. அதுபொருளென்றான், இறந்துபடுவாயென்னினும் அதுவே தனக்குப்பொருளென்பதுதோன்ற. எனவே ஊடலுங் கூடலுங் கூறினாரென்க. (101) 1990. உள்ளிழு துடைய வெம்பி யுற்பல வுருவு கொண்ட வெள்ளியிற் புனைந்த கோல விளக்கொளி வெறுவி தாக வள்ளிதழ்க் கோதை வல்லான் வட்டிகை நுதியின் வாங்கிப் பள்ளிமே லெழுதப் பட்ட பாவைபோ லாயி னாளே. இ-ள். வெள்ளியாற்செய்தவிளக்கு இழுதுடையும்படி மிக்கெரிதலின் அரக்காம்பலின்வடிவைக்கொண்ட ஒளி பின்பு விடியற் கால மாதலின், அவ்வொளிகெடாநிற்கக் கோதை புணர்ச்சிய வசத்தாலே பாவைபோலாயினாளென்க. எழுதவல்லவன்துகிலிகை நுதியாலே வட்டிகைப் பலகையை யொழித்துப் பள்ளிமேலெழுதினதொரு பாவை. வாங்குதல் ஈண்டு ஒழித்தன்மேற்று. இனிக் “கட்டிலேறிய” (சுவக.1981)என்னுங் கவி முதலியவற்றை ஒருநாளைக் கூட்டமாக்கியுமுரைப்ப. 102) வேறு 1991. மங்கையர் பண்ணிய மருதயாழ்குழல் நங்கையைப் பிரியுமிந் நம்பி யின்றென வங்கதற் கிரங்கின வாரும் பேதுறக் கங்குல்போய் நாட்கடன் கழிந்த தென்பவே. இ-ள். புணர்ந்தோரெல்லாம் விடிந்தமையுணர்ந்து பிரிகின் றோமே யென்று பேதுறும்படி மங்கையரெல்லாரும் பண்ணிப் போந்த யாழுங் குழலும் இன்று தாமேயருளி, யாம்பிரிவித்தலின், இந்நம்பி இந்நங்கையைப் பிரியாநிற்குமேயென்று அப்பிரிவிற்கு இரங்வன போலே யிருந்தன. அவை யங்ஙனமிரங்க, கங்குல் அவ்விடத் தினின்றும் போக, நாட்கடன் கழிந்த தென்க. மருதம்-காலைப்பண். போய்-போக. (103) 1992. ஏந்துபூங் கோதைக டிருத்தி யேர்படச் சாந்துகொண் டிளமுலை யெழுதித் தையறன் காந்தள முகிழ்விரல் கையி னாற்பிடித் தாய்ந்தவட் கிதுசொலு மலங்கல் வேலினான். இ-ள். வேலினான் ஏர்படத்திருத்தி யெழுதி அவள் விரலைக் கையாலேபிடித்து ஆற்றுவிக்குநெறியையாய்ந்து அவட்கு இப்பிரிவையுணர்த்தாநிற்குமென்க. 104) 1993. பூவினுட் டாழ்குழற் பொன்செ யேந்தல்குன் மாவினுட் டாழ்தளிர் மருட்டு மேனியாய் காவினுட் டோழரைக் கண்டு போதர்வே னேவினுட் டாழ்சிலை யெறிந்த கோலினே. செய்பொன்-மேகலை. இ-ள். குழன்முதலியவற்றையுடைய மேனியாய்! ஏத்தொழி லிடத்து வலியின்றிக்குறைந்த வில்லெய்த அம்புபோலே போய்த் தோழரைக் கண்டு மீள்வேனென்று சொன்னானென்க. ‘தாழ்சிலை யெறிந்த கொலின்’என்றதனால் தூரிதன்றி அணியவிடத்தே போய் வருவே னென்றா னென்று அவள் கருதினாள்; அவன்கருதியது வலியில்லாதவம்பு இலக்கிற் பட்டுவைத்து மீண்டுவந்ததேனும், எய்தவனிடத்து வாராத மாறிப்போமாறு போலே யானும் நின்னிடத்து வாராது இந்நகரிலே மீண்டுவருவேனென்பது; அதுதமர்க்குண்மை காட்ட மேல்வருகின்றமையை நோக்கிக் கூறினான். (105) 1994. என்றவ னுரைத்தலு மெழுது கண்மலர் நின்றநீ ரிடைமணிப் பாவை நீந்தலின் மன்றனா றரிவையை தெருட்டி மாமணிக் குன்றனான் கொடியவள் குழைய வேகினான். இ-ள். என்று அவன்கூறினானாக, கொடியினுடைய மையெழுதிய கண்மலரில் ததும்பிவீழாதே நின்றநீரிடத்தே மணிப் பாவைநீந்துதலின், அவ்வரிவையைத் தேற்றியவன் அவள்குழையப் போயினானென்க. (106) விமலையாரிலம்பக முற்றிற்று. ஒன்பதாவது சுரமஞ்சரியாரிலம்பகம் 1995. வாளி ரண்டு மாறு வைத்த போன்ம ழைக்கண் மாதரார் நாளி ரண்டு சென்ற வென்று நைய மொய்கொள் காவினுட் டோளி ரண்டு மன்ன தோழர் தோன்ற லைப்பு ணர்ந்தபின் றாளி ரண்டு மேத்தி நின்று தைய னாமம் வேண்டினார். மாறு-எதிர். மாதரார்-கூடவந்தவர். இ-ள். காவிடத்து மாதரார் இரண்டுநாள் கழிந்தவென்று வருந்தா நிற்க, அவ்விடத்தே தோழர் தோன்றலைச்சேர்ந்தபின்பு, அவன்மணக் கோலங்கண்டு ஏத்திநின்று நீர் மணஞ்செய்த தையல் நாமத்தை எமக்குக் கூறுக வென்றாரென்க. இனி விமலையிடத்து ஒருநாளைக் கூட்டமே யுள தென்பார்க்கு மாதரார்நையும்படி தோழர் நாமம் வேண்டினா ரென்க. என்றது இவர் கேட்டதுகொண்டு சுரமஞ்சரியைச் சீவகன் கூட வேண்டுமொழி புத்தி சேனன்கூறு, அவன் மற்றை நாளும் அவரைப் பிரிதலின், அவர் நாளிரண்டு சென்றவென்று நைதற்குக் காரணமாயிற்று, தோழர் நாமம் வேண்டியதென்றவாறு. (1) 1996. பாடு வண்டி ருந்த வன்ன பல்க லையக லல்குல் வீடு பெற்ற வரும் வீழும் வெம்மு லைவி மலையென் றாடு வான ணிந்த சீர ரம்பை யன்ன வாணுத லூடி னும்பு ணர்ந்த தொத்தி னிய வளு ளாளரோ. “வண்டிருப் பன்ன பல்கா ழல்குல்” (பொருந.39) என்றார்பிறரும் . வீடு பெற்றவரும் விரும்பும் முலையினையும், அல்குலினையும், சீரினையுமுடைய அரம்பையென்க. இ-ள். ஊடல் கடிதிற்றீர்தலிற் புணர்ந்த தன்மையை யொத்து இனியவளாய் அரம்பையை யொத்த வாணுதல் விமலையென்று கூறப்பட்டு உளளாயினாளென்றா னென்க. (2) 1997. அம்பொ ரைந்து டைய்ய காம னைய்ய னென்ன வந்தணன் நம்புநீர ரல்லர் நன்கு ரங்கு நீர ராயினுந் தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பி னெஞ்சு நொந்து தாழ்வர்தாம் பொங்க ரவ்வ வல்கு லாரெ னப்பு கன்று சொல்லினான். நம்பு-நசை. பொல்லாங்குக்கு நன்றான குரங்கு. இ-ள். அதுகேட்டவர் ஐயன் காமனென்றே வியந்தாராக, புத்திசேனன்கூறுவான் குடிப்பிறந்தமகளிர்தாந் தங்குரவர் தம்மைக் கொடுப்பாராயின், அக்கொடுக்கப்பட்டார் மகளிர் விரும்பு நீரரல்லராய்ப் பொல்லாராயினுந் தாம் அதற்கு நெஞ்சாலே நொந்து அவரை வழி படுவர்; இங்ஙனம் வியக்க வேண்டாவென்று நகையாடலை விரும்பிக் கூறினானென்க. (3) 1998. அற்று மன்று கன்னி யம்ம டந்தை மார ணிநலம் முற்றி னாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமுங் குற்ற மற்று மாகு மென்று கோதை சூழ்ந்து கூறினார்க் குற்ற டுத்த யாவுயிர்த்தொ ழிதல் யார்க்கு மொக்குமே. அற்றுமன்று-அத்தன்மையுமன்று. இ-ள். கன்னியராகிய அம்மகளிர் நலமுதிர்ந்தவர்களைக் கொடாதே நெடுநாள் வைப்போமாயின், அதற்குப் பாவம்வந்து புகுதும்; மற்றுங் குடிப்பழியுமுளதாமென்று கருதிப் பேசினார்க் குத் தாமே கோதையைச்சூழ்ந்துகொண்டு சென்றுகொடுத்துத் தம்பாரங்கழித்து இளைப்புத்தீர்ந்துவிடுதல் குடிப்பிறந்து பழிநாணுவார்க்கெல்லாம் ஒக்குமாதலான், இதுவும் அங்ஙனம் வந்ததாதலின், நீர்வியத்தல் வேண்டாவென்றானென்க. (4) வேறு 1999. மதுக்குடம் விரிந்தன மாலை யாரொடும் புதுக்கடி பொருந்துதி புக்க வூரெலாம் விதிக்கிடை காணலாம் வீதி மாநகர் மதிக்கிடை முகத்தியோர் மடந்தை யீண்டையாள். 2000. ஆடவர் தனதிடத் தருகு போகினு நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும் வீடுவ லுயிரென வெகுளு மற்றவள் சேடியர் வழிபடச் செல்லுஞ் செல்வியே. 2001. காமனே செல்லினுங் கனன்று காண்கிலாள் வேமெனக் குடம்பெனும் வேய்கொ டோளியை யேமுறுத் தவணல நுகரி னெந்தையை யாமெலா மநங்கமா திலக னென்றுமே. இவை மூன்றுமொருதொடர். விதிக்கிடைகாணலா-சிற்பநூற்கு ஒப்புக்காணலாம். நகர்-வீடு. மதிக்கிடை-மதிக்கொப்பு. வீதியையும், நகரையுமுடைய வூரென்க. இ-ள். அவன்பின்னும் நீ புக்க வூரெல்லாம் மகளிரோடே புது மணஞ்செய்வை; ஆயினும் ஓர்மடந்தை நீமணஞ்செய்த விவ்வூரிடத்தே யிருக்கின்றாள்; மற்றவடான் ஆடவர் தன்மனைக்கு அருகே செல்லினும், தன்னருகிருந்தோர் அவர்பெயரை நாடிக் கேட்பினும் உயிரைவிடுவேனென வெகுளாநிற்கும்; அச்செல்வி தான் சேடியர் வழிபடச் செல்லாநிற்கும்; காமனே செல்லினுங் காணாளாய் எனக்கு உடம்பு வேமென்னா நிற்கும். அவளை மயக்கமுறுத்தி யவள்நலத்தை நீநுகரின் நின்னை யாங்கள் காமனுக்குத் திலகனென்று பெயர்கூறுவே மென்றானென்க.(5-7) மா-”தட்குமாகாலே” (புறநா.193)என்றார்போலநின்றது. வேறு 2002. தாசியர் முலை கடாக்கத் தளையவிழ்ந் துடைந்த தண்டார் வாசங்கொண் டிலங்கு முந்நூல் வலம்படக் கிடந்த மார்ப பேசிய பெயரி னாளைப் பேதுறா தொழிவே னாகி னாசுமன் பிலாத புன்பெண் கூந்தல்யா னணைவ லென்றான். அதற்குத் தானும் அசதியாடி வஞ்சினங்கூறுகின்றான். இ-ள். சேடியர்முயக்கத்தாற் பிணிப்புநெகிழ்ந்து விரிந்த வாசங் கொண்டிலங்குந்தாரும் நூலுங்கிடந்த மார்பனே, நீகூறிய பெயரை யுடையாளை மயக்கமுறுத்தாதே விடுவேனாயின், சிறிதும் அன்பில்லா தாளை யான் கூறுவேனாகக் கடவேனென்றா னென்க. (8) 2003. வண்டுதேன் சிலைகொ ணாணா மாந்தளிர் மலர்க ளம்பாக் கொண்டவன் கோட்டந் தன்னுட் கொடியினைக் கொணர்ந்து நீல முண்டது காற்றி யாண்பே ரூட்டுவ லுருவக் காமன் கண்டபொற் படிவஞ் சார்ந்து கரந்திரு நாளை யென்றான். வண்டுந்தேனுஞ் சிலைகொண்ட நாணாக, மலர்கள் அம்பா கக் கொண்டவனென்க. தளிர்போலு மேனியையுடைய கொடி. இனிச் ‘சிலைகள்’ பாடமாயிற் சேமவில்லைக்கூட்டுக. வெண்ணூல்நீலமுண்ட தனைக் காற்றினாற்போல, அவள் புதிதாகக்கொண்ட கோட்பாட்டைப் போக்கி அவட்கு இயல்பாகக் கோடற்குரிய ஆண்பெயரை யூட்டு வேனென்றானென்க. காற்றியென்றதற்கேற்ப ஊட்டுவேனென்றான். வடிவையுடைய காமனாகப் பொன்னாற் செய்தவடிவமென்க. இ-ள். காமன்கோட்டத்தே நீகூறியகொடியினைக் கொணர்ந்து நாளைக்கூடுவேன்; நீ யப்படிவத்தைச்சேர்ந்து கரந்திரு வென்றானென்க. (9) வேறு 2004. இழைக்கண் வெம்முலை யிட்டிடை யேந்தல்குன் மழைக்கண் மாதரை மாலுறு நோய்செய்வான் முழைக்கண் வாளரி யேறன மொய்ம்பினா ணுழைக்க ணாளர்க்கு ரைத்தெழுந் தானரோ. இ-ள் மொய்ம்பினான் முலைமுதலியவற்றையுடைய மாதரை நோய்செய்ய வேண்டித் தன்முகத்திடத்துக் கண்போல் ஏவல் கொள்ளுந் தன்மையார்க்கு அங்ஙனங்கூறி எழுந்திருந்தானென்க. (10) 2005. சோருங் காரிகை யாள்சுர மஞ்சரி யாரஞ் சூடிய வம்முலைப் பூந்தடந் தாரு மார்பமுந் தண்ணெனத் தோய்வதற் கோரு முள்ள முடன்றெழு கின்றதே. சோரும்-ஒழுகும். இ-ள். அங்ஙனம் எழுந்தவனதுள்ளங் காரிகையாளாகிய சுரமஞ்சரி முலைத் தடத்தைத் தாருமார்பமுங் குளிரும்படி கூடுதற்கு வருந்தியெழுகின்றது, பலருங்கூறக் கேட்டிருத்தலின், அவள்வடிவை இத்தன்மைத்தென்று ஓராநிற்குமென்க. ஆண்டுக் கனகபதாகை கூறலானும், தானுணர்ந்தமை தோன்றப் “பணைத்தோட்சுரமஞ்சரி” (சீவக.1069) என்றமையானும், ஈண்டுப் புத்திசேனன் கூறினமையானும், ஊழானும் வருந்தி அவள் வடிவை யோருமென்றார். ‘தண்ணென’வெனவே வருந்தினான். (11) வேறு 2006. கடைந்தபொற் செப்பெனக் கதிர்த்து வீங்கின வடஞ்சுமந் தெழுந்தன மாக்கண் வெம்முலை மடந்தைதன் முகத்தவென் மனத்தி னுள்ளன குடங்கையி னெடியன குவளை யுண்கணே. 2007. ஏத்தரு மல்லிகை மாலை யேந்திய பூத்தலைக் கருங்குழற் புரியி னாற்புறம் யாத்துவை தலைக்குமிவ் வருளி லாணலங் காய்த்தியென் மனத்தினைக் கலக்கு கின்றதே. 2008. சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச் செல்விதன் றிருநலஞ் சேரும் வாயிறா ணல்லலங் கிழவனோ ரந்த ணாளனாய்ச் செல்லல்யான் றெளிதக வுடைத்தென் றெண்ணினான். இவை மூன்று மொருதொடர். இவை ஓர்கின்றடியுங் கூடுமுபாயமுங் கூறுகின்றன. மனத்தினுள்ளன வென்றது, “நங்கைகண்-போலும் வேலவனே” (சீவக.896) என்றுசொன்னது உட்கொண்டு. அல்லல்-பசிப்பிணி. ஏத்துதல் தரும்-விகாரம். இ-ள். வடஞ்சுமந்தெழுந்தனவாகிய முலை செப்பென வீங்கின போலேயிருந்தன; மடந்தை முகத்தனவாகி என்மனத் தவனவாகிய கண்கள் குடங்கையினெடியன போலேயிருந்தன; இவற்றையுடைய இவ்வருளிலாள் தன்குழலாகிய கயிற்றாலே யென்னையாத்துஅலையா நின்றாள்; இவள்நலம் இங்ஙனம் என்மனத்தினைக் கலக்காநின்றது. இத்தன்மையையுடைய செல்விநலத்தை இனிச் சேரும்வழிதான் ஒருகிழ வனாகிய அந்தணனாய் யான்செல்வேன்; அச்செலவு அவளயிராமற் றெளிதகவுடைத்தென்று கருதினானென்க. (12-14) 2009. அணங்கர வுரித்ததோ லனைய மேனியன் வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன் பிணங்குநூன் மார்பினன் பெரிதொர் புத்தக முணர்ந்துமூப் பெழுதின தொப்பத் தோன்றினான். இ-ள். அங்ஙனங்கருதினவன் பாம்பின்தோலையொத்த மேனியனாய், வில்லென வளைந்த யாக்கையனாய், உத்தரீயத் தோடு பிணங்கிய நூன்மார்பினனாய், மூப்பிலக்கணமெழுதும் படிகூறிய நூலினை யுடையதோர் புத்தகத்தையுணர்ந்து, அம்மூப்பை யெழுதிய தன்iமாயொப்பத் தோன்றினானென்க.(15) 2010. வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளியன் நுண்ணவி ரறுவைய னொசிந்த நோக்கினன் கண்ணவிர் குடையினன் கைத்தண் டூன்றினன் பெண்ணலங் காதலிற் பேயு மாயினான். இ-ள். அவன் நரையுடம்பினனாய்த் தெறித்தபுள்ளியனாய் நுண்ணிதாய்ப்பீறினபுடைவையனாய்த் தலைவ ளைதலின் வளைந்த நோக்கினனாய்ப் பீறின குடையினனாய் வலியாகவுடைய தோர் தண்டையூன்றிப் பெண்ணலத்தைக்காதலித்து அதனைப் பெற்றே போதலிற் பேயின் றன்மையனாயினானென்க. “பலிகொண்டு பெயரும் பாசம் போலத்-திறைகொண்டு பெயர்தி” (பதிற்.71)என்றாற்போல. (16) 2011. யாப்புடை யாழ்மிட றென்னுந் தோட்டியாற் றூப்புடை யவணலந் தொடக்கும் பாகனாய் மூப்பெனு முகபடாம் புதைந்து முற்றிழை காப்புடை வளநகர் காளை யெய்தினான். இ-ள். காளை பிணிப்பையுடைய யாழையொத்த மிடறென்னுந் தோட்டியாலே ஆடவரை நீக்கினதூய நெஞ்சிடத் தையுடையவள் நலத்தைப்பிணிக்கும் பாகனாய் மறைந்துசுர மஞ்சரிமனையை யெய்தினானென்க. இவனையறியாதபடி மறைத்தலின், முகபடாமென்றார். (17) வேறு 2012. தண்டுவலி யாகநனி தாழ்ந்துதளர்ந் தேங்கிக் கண்டுகடை காவலர்கள் கழறமுக நோக்கிப் பண்டையிளங் காலுவப்பல் பாலடிசி லிந்நாள் கண்டுநயந் தார்தருவ காதலிப்ப லென்றான். இ-ள். அங்ஙனமெய்தினவனைக் கடைகாப்பார்கண்டுகழற, அவர்முகத்தை நோக்கித் தண்டேபற்றுக்கோடாகத் தாழ்ந்து நிலை தளர்ந்து இளைத்துநின்று பண்டையிளம் பருவத்திற் பாலடிசிலொன்று மேயுவப்பேன்; இப்பருவத்தில் யான் கண்டு விரும்பப்பட்ட மகளிர் தருவனவெல்லாங் காதலிப்பேனென்றா னென்க. இஃது இடக்கர். எனவே செவிகேளாமையிற் றம்பசியையே கூறினாரென்று அவருணர்ந்தார். இதற்கு இப்பொழுது என்னைக் கண்டு நயந்தார்தரும் உணவுகளென்னு மொருபொருடோன் றிற்று. (18) 2013. கையிற்றெழு தார்கழிய மூப்பிற்செவி கேளார் மையலவர் போலமனம் பிறந்தவகை சொன்னார் பையநடக் கென்றுபசிக் கிங்கியவர் விடுத்தார் தொய்யின்முலை யவர்கள்கடை தோன்றனனி புக்கான். இ-ள். இதுகேட்டவவர்கள், மூப்பாலே மிகச்செவிகேளா ராய்ப் பித்தரைப் போலே மனத்திற்றேற்றியவகையே சொன்னா ராதலிற் பசியுடையரென்றுபசிக்கிரங்கி, இனிப் பையநடக்க வென்று கையாற் றொழுதாராய் விடுத்தார்; விடுத்தபின்பு, தோன்றல் மகளிர்காக்கின்ற வாயிலிலே சென்றானென்க. (19) 2014. கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிஞிமி றார்ப்ப வோதமணி மாலையொடு பூண்பிறழ வோடி யேதமிது போமினென வென்னுமுரை யீயான் னூதவுகு தன்மையினொ டொல்கிய இ-ள். அம்மகளிர் கோதையுங் குழலுந்தாழ, கடலிற் பிறந்த முத்தமாலையும் பூணும் பிறழ ஓடிவந்து இவ்வரத்து நுமக்கு ஏதமா யிருக்கும்; மீண்டுபோமினென்றுகூற, அதற்குச் சிறிதும் மறுமொழி கூறினாய் ஊதப்பறக்குந் தன்மையோடே வந்து கிட்டநின்றானென்க. தாழ்ந்து-தாழ. (20) 2015. கச்சுவிசித் தியாத்தகதிர் முலையர்மணி யயில்வாள் நச்சுநுனை யம்புசிலை நடுங்கவுட னேந்தி யச்ச முறுத் தமுதுபுளித் தாங்குத்தம தீஞ்சொல் வெச்சென்றிடச் சொல்லிவிரி கோதையவர் சூழ்ந்தார். இ-ள். அங்ஙணமுறநிற்றலின், அவ்விரிகோதையவர் கச்சு விசித்த முலையராய், வாளையும், சிலையுடனே நஞ்சுதோய்த்த நுனையினை யுடைய அம்பையுமேந்தி, இவனடுங்கும்படி அச்ச முறுத்து அமிர்தம் தன்றன்மைதிரிந்தாற்போலத் தஞ்சொல் வெவ்விதாகக்கூறிச் சூழ்ந்தாரென்க. (21) 2016. பாவமிது நோவவுரை யன்மின்முது பார்ப்பார் சாவர்தொடி னேகடிது கண்டவகை வண்ண மோவியர்தம் பாவையினொ டோப்பரிய நங்கை யேவல்வகை கண்டறிது மென்றுசிலர் சொன்னார். இ-ள். அவர்களிலே சிலர் முதுபார்ப்பாரை நோவவுரைக்கின்றவித பாவமாதலின், நோவவுரையன்மின்; தீண்டுவேமாயிற் கடிதுசாவரா தலிற் றீண்டன்மின்; ஓவியர்தம்பாவையால் வண்ண மொப்பரிய நங்கைக்கு நாங்கண்டவகையைக் கூறி அவளது ஏவல் வகையைக் கண்டு பின்பு இவரைநீங்குந்தன்மையை யறிவேமென்று கூறினாரென்க. (22) 2017. கையவளை மையகுழ லையரிய வாட்க ணையுமிடை வெய்யமுலை நங்கையொரு பார்ப்பா னுய்வதில னூழின்முது மூப்பினொடும் வந்தான் செய்வதுரை நொய்தினெனச் சேறுமெழு கென்றாள். இ-ள். கையிடத்தனவாகியவளையினையும், கருமையை யுடைய குழலினையும், வியக்கத்தக்க செவ்வரியையுடைய கண்ணி னையும், இடையினையும், முலையினையுமுடைய நங்காய்! ஒரு பார்ப்பான் ஊழான் முதிய மூப்போடே வந்தான்; அவன்றான் உய்யுந்தன்மை யிலன்; அவனிடத்துச்செய்யுங் காரியத்தை அவனி றப்பதற்கு முன்னே கடிதிற் கூறென்ன, அவளும் அவன் இத்தன்மை யனாயின், யாஞ் செல்லக்கடவேம்; நீர் முன்னே செல்கவென்றா ளென்க. ஊழிமுது மூப்பாயிற் காலமாக்குக. (23) 2018. மாலைபல தாழ்ந்துமதுப் பிலிற்றிமணங் கமழுங் கோலவகிற் றேய்வைகொழுஞ் சாந்தமுலை மெழுகிப் பாலைமணி யாழ்மழலை பசும்பொனிலத் திழிவாள் சோலைவரை மேலிழியுந் தோகைமயி லொத்தாள். சாந்தமணிந்தமுலையையுடைய மழலையென்க. காவிடத் திற்கன்னி மாடமாதலிற் சோலைவரையென்றார். இ-ள். பாலையாழ்போலும் அழகிய அழலைச்சொல்லை யுடை யாள் அகிற்றேய்வையான் மெழுகப்பட்டு மாலைதாழ்தலின் மதுத் துளித்து மணங்கமழும் பொன்னிலத்தினின்றுமிழி கின்றவள் வரையிடத்தினின்றிழியும் மயிலையொத்தாளென்க. (24) 2019. சீறடிய கிண்கிணி சிலம்பொடு புலம்ப வேறுபடும் மேகலைகண் மெல்லென மிழற்றச் சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட நாறுமலர்க் கொம்புநடை கற்பதென வந்தாள். இ-ள். அடியவாகியகிண்கிணி சிலம்போடேயொலிப்ப, மேகலைகள் மிழற்ற, தேன்விளைகின்ற கோதையிடத்துத் தேன் புட்ப தூளியிலே கலந்து சேறாகையில் அத்தேனை நுகரப் பெறாமையில் வண்டுகள் திசைதோறுமெழுந்துபாடி, கொம்பு நடைகற்கின்றதன்மையென்ன வந்தாளென்க. துகிலுள்ளும்புறம்புங்கிடத்தலின், வேறுபடுமேகலை யென்றார். (25) 2020. வந்தவர வென்னையென வாட்கண்மட வாய்கேள். சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட வந்திலதி னாயபய னென்னைமொழி கென்றாண் முந்திநலி கின்றமுது மூப்பொழியு மென்றான். இ-ள். நீ வந்தவரத்து என்னகாரியத்தைக் கருதியென்று அவள்வினவ, மடவாய்! கேள்; சிந்தையிலேநின்று வருத்துகின்ற அழகிய நீர்மையையுடைய நின்னைப் புணரவந்தேனென்றானாக. அச்சொல்லை ஆடவேண்டுமென்றுநினைத்தலிற் சித்தத்தே நலிகின்ற தீர்த்தநீராகிய குமரியாற்றை ஆடவந்தேனென்றானாக இவள்கருதி, அவ்வியாற்றிலாடுதலாலுண்டாய பயன் எத்தன் மைத்து? அதனைக்கூறென்றாள்; அவனுந் தான்வருங்காலத்து வாராது முன்னேவந்து நலிகின்ற மூப்புப்போமென்றானென்க. அது இவளைக்கூடின் இம்மூப்புநீக்குதலைக் கருதிக் கூறினான். மேற் காமன் கோட்டத்திற் கூடுவதன்முன்னே மூப்பு நீக்கிற்று, இனிக் கூட்டத்திற்கையமில்லையென்றுகருதி. இக்கூற்று இவட்கு முற்பட இம்மூப்புப்போமென்றார்போலிருந்தது. (26) 2021. நறவிரிய நாறுகுழ லாள்பெரிது நக்குப் பிறருமுள ரோபெறுநர் பேணிமொழி கென்னத் துறையறிந்து சேர்ந்துதொழு தாடுநரி லென்றாற் கறிதிர்பிற நீவிரென வையமிலை யென்றான். நறவரிய-பூமணங்களெல்லாந்தோற்க. இ-ள். அதுகேட்டு அவள் மிகநக்குக் குமரியாடி நின்னை யொழிய இளமை பெறுவார் பிறருமுளரோ? அறிவீராயிற் றெரிந்துகூறுவீ ரென்றாளாக; நீகொண்டவிரதத்தைக் கெடுத்துக் கூடுந்துறை இம்மூப் பாலென்றறிந்து நின்னையணுகிக் கூடுவார் என்னையொழிய இல்லை யென்றவனுக்குச் சேர்துறை யறிந்தாடி னார் இல்லையென்றானாக அவள்கருதி, நீர் உலகத்தாரறியுந் துறையன்றியே வேறோர்துறை யறிவீரேயென்று இகழ்ந்து கூறினாளாக, அதற்கு ஐயமில்லை யென்றானென்க. (27) 2022. செத்தமர மொய்த்தமழை யாற்பெயரு மென்பார் பித்தரிவ ருற்றபிணி தீர்த்துமென வெண்ணி யத்தமென மிக்கசுட ரங்கதிர்சு ருக்கும். மொய்த்தமணி மாடமிசை யத்தகவ டைந்தாள். இ-ள். செத்ததோர்மரம் பெருமழையால் உயிரைப் பெறு மென்கின்றவிவர்பித்தர்; இனியிவருற்ற பசியைத்தீர்ப்போ மென்றுகருதி அப்பசிதீர்க்கும்படி மாடமிசையே சேர்ந்தா ளென்க. எனவே இவனைக் கொண்டுபோந்தாளாம். அத்தகிரி யென்று ஞாயிறு கதிரைக் குவிக்குமாடமென்க. (28) 2023. வடிவமிது மூப்பளிது வார்பவள வல்லிக் கடிகைதுவர் வாய்கமலங் கண்ணொடடி வண்ணங் கொடிதுபசி கூர்ந்துளது கோல்வளையி னீரே. யடிசில்கடி தாக்கியிவ ணேகொணர்மி னென்றாள். இ-ள். வளையினீர்! வாய் பவளக்கொடிதுணித்தாய்க் கண் ணும் அடியுங் கமலமலராயிருக்கின்ற இம்மூப்புவடிவு நமக்கு அளிக்கத் தக்கது; இதனை அளியாதிருப்பிற் கொடிது; அதுவே யுமன்றிப் பசியு மிக்குள தாயிருந்தது; ஆதலின், அடிசிலைக் கடிதாகச்சமைத்து இவ்விடத்தே கொணர்மினென்றாளென்க. (29) 2024. நானமுரைத் தாங்குநறு நீரவனை யாட்டி மேனிகிளர் வெண்டுகிலும் விழுப்பொனிய னூலும் பானலங்கொ டீங்கிளவி பவித்திரமு நல்கத் தானமர்ந்து தாங்கியமை தவிசின்மிசை யிருந்தான். இ-ள். தீங்கிளவி அப்பொழுதே அவனை வாசவெண் ணெயை யூட்டுவித்துநீராலாட்டுவித்து, புனைந்த புடைவையை யும் பொற்பூணூலினையும் பவித்திரத்தையும்நல்க, அவன் அமர்ந்து மெய்ப்படுத்தி இட்டதவிசின்மேலே யிருந்தானென்க. (30) 2025. திங்கணலஞ் சூழ்ந்ததிரு மீன்களெனச் செம்பொற் பொங்குகதிர் மின்னுபுகழ்க் கலங்கள்பல பரப்பி யிங்குசுவை யின்னமுத மேந்தமிகு சான்றோ னெங்குமிலை யின்னசுவை யென்றுடன யின்றாள். இ-ள். மதியை நலத்தோடேசூழ்ந்தமீன்கள் பொங்கு கதிரைச்சூழ்ந்த தென்னும்படி செம்பொற்கலத்தையும் பக்கத் தட்டங்களையும்பரப்பித் தங்கின அறுசுவையடிசிலையேந்த, சான் றோன் எவ்விடத்துமில்லை இத்தன்மைத்தாய சுவையென்று வியந்து, அவ்வியப்புடனே யயின்றா னென்க. (31) 2026. தமிழ்தழிய சாயலவர் தங்குமலர் தூநீ ருமிழ்கரக மேந்தவுர வோனமர்ந்து பூசி யமிழ்தனைய பஞ்சமுக வாசமைத் தாய்ந்த கமழ்திரையுங் காட்டவவை கொண்டுகவு ளடுத்தான். இ-ள். இனிமைதழுவிய சாயலையுடையவர் மலர்தங்குந் தூநீரை உமிழுங்கரகத்தையேந்த உரவோன் பூசி ஐந்துவகைப்பட்ட முகவாசத்தைக் கூட்டி ஆய்ந்த வெற்றிலையையுங் காட்ட, அவற்றை வாங்கிக்கொண்டு கவுளடுத்தானென்க. (32) 2027. வல்லதெனை யென்னமறை வல்லன்மட வாயா னெல்லையெவ னென்னப்பொரு ளெய்திமுடி காறுஞ் சொல்லுமினு நீவிர்கற்ற காலமெனத் தேன்சோர் சில்லென்கிளிக் கிளவியது சிந்தையில னென்றான். இ-ள். அங்ஙனமிருந்தபின்பு, நீர்வல்லதென்னென்று அவள்வினாவ, மடவாய்! யான் மறைந்தவேடங் கோடலை வல்லே னென்றானாக, அவள் அதனை வேதத்தை வல்லே னென்றானாகக், கருதி, அவ்வே தம் அநந்தசாகை யாதலின் நீர்கற்றவெல்லை எவ்வளவென்றுவினாவ, அவன் அதற்கு யான் நினைத்த காரியத்தைப் பெற்று முடியுமளவ மென்றானாக, அவள் அதனை வேதந் தான்கருதிய தத்துவத்தை முற்றவுணர்த்தி முடியுமளவுமென்றானாகக்கருதி, இக்கலையெல்லாம் நீர்கற்ற காலத்தையின்னுங் கூறுமென்று வினாவ, அவன் அதற்குக் கிளிச்சொல்லென்கின்ற சிலகிளவியை யுடையாய்! அக்காலங் கூற நினைவிலேனென்றானென்க. என்றது; மேலும்வினாவுமுத்தரமும் பெருகுதல் கருதி, அஃது எனக்குக் கருத்தன்றென்றான்; அவள் அதனை நினைந் திருந்திலே னென்றானாகக்கருதினாள். (33) 2028. இன்னவர்க ளில்லைநிலத் தென்றுளி வியந் தேத்தி யன்னமன மென்னடையி னாளமர்ந்து நோக்கப் பின்னையிவள் போகுதிறம் பேசுமென வெண்ணித் தன்னஞ்சிறி தேதுயின்று தாழவவ ணக்காள். இ-ள். சுரமஞ்சரி இந்நிலத்தில் இத்தன்மையையுடைய வர்கள் இல்லையென்று ஏத்தி அவள் நோக்கினாளாக, அவன் இனி இவள் நம்மைப்போமாறுகூறுவளென்று கருதி மிகவுஞ் சிறிதே துயின்று தலைதாழ, அவள் அதுகண்டு நக்காளென்க. (34) 2029. கோலமணி வாய்குவளை வாட்கண்மட வாளைச் சாலமுது மூப்புடைய சாமிமுக நோக்கிக் காலுமிக நோஞ்சிறிது கண்ணுந்துயில் குற்றே னேலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை யென்றான். கோலமணி-அழகியமுத்து; என்றது முறுவலை. இத்திங்கள் காத்திகையாம். இ-ள். சாமி மடவாளைப்பார்த்து வாடைக்காற்று மிகுதலாலே நெஞ்சுநோம்; இதனாலே சிறிதுபொழுதில் இறந்து படுந்தமையை யெய்தினேன்; கோதாய், இதற்கு என்செய்வேன்; உரையாயென்றா னென்க. கண்ணிமைப்பளவுமென்றது உயிருடனிருத்தலையுணர்த் தினாற்போலக் கண்டுயிலுதலும் இறந்துபாடுணர்த்திற்று. அதனைக் காலுநோங் கண்ணுந்தூங்குமென்றானாகக் கருதினாள். (35) 2030. மட்டுவிரி கோதைதமது வார்குழலி னாடன் பட்டுநிணர் கட்டில்பரி வின்றியுறை கென்றா ளிட்டவணை மேலினிது மெல்லென வசைந்தான் கட்டழல்செய் காமக்கட லைக்கடைய லுற்றான். இ-ள். அங்ஙனங்கருதினவள் பட்டுக்கச்சுநிணர்ந்த தன் கட்டிலி லிட்ட அணைமேலே வருத்தமின்றித் தங்குகவென்றாள்; அதுகேட்டு அழலின்றன்மையைச் செய்கின்ற காமக்கடல் அலையின்றிநின்றதனை யலைக்கலுற்றவன் அதன்மேலே தன் வருத்தந்தோன்ற அசைந் தானென்க. (36) 2031. காலையொடு தாழ்ந்துகதிர் பட்டதுக லங்கி மாலயொடு வந்துமதி தோன்றமகிழ் தோன்றி வேலனைய கண்ணியர்தம் வீழ்துணைவர் திண்டோள் கோலமுலை யாலெழுதக் கூடியதை யன்றே. இ-ள். கதிர் பகற்பொழுதோடே மேற்றிசையிலேவீழ்ந்து கலங்கிப் பட்டது; பட்டபின்பு மாலைக்காலத்தோடே மதிவந்து தோன்றலின், மகளிர் மகிழ்ச்சிதோன்றித் தங்கணவர்தோளை முலையாலே யெழுதும் படி இராக்காலங் கூடிற்றென்க. (37) 2032. ஏந்துமலர்ச் சேக்கையகில் வளர்த்தவிடு புகையும் வாய்ந்தமலர்க் கோதையமிர் துயிர்க்குநறும் புகையுங் கூந்தலகிற் புகையந்துகிற் கொழுமெனறும் புகையும் வாய்ந்தவரை மழையினுயர் மாடத்தெழுந் தனவே. இ-ள். சேக்கையிடத்து அகில்வளர்ந்தபுகையுங் கோதைக்குப் புகைத்த அகிற்புகையுங் கூந்தற்குப்புகைத்தவகிற்புகையுந் துகிற்குப் புகைத்தவகிற்புகையும் பயன்றருமலையின் மழையென்ன, மாடத்தே யெழுந்தனவென்க. (38) 2033. ஆசிலடு பாலமிர்தஞ் சிறியவயின் றம்பூங் காசில்கடி மாலைகல நொய்யமதி கவற்குந் தூசுநறுஞ் சாந்தினிய தோடிவைக டாங்கி மாசின்மட வார்கண்மணி வீணைநரம் புளர்ந்தார். ஆசில்-குற்றமற்ற கூதிராதலிற் பாலடிசில் கூறினார். சிறிய வயின்றென்றது-மடவார் அற்பாகாரிகளென்பதுபற்றி. நொய்ய கலம். மதிகவற்கும்-அறிவைவருந்தும். இ-ள். மடவார், அடிசிலை யயின்று மாலைமுதலிய வற்றைத் தாங்கி யாழைவாசித்தாரென்க. (39) 2034. பூஞ்சதங்கை மாலைப்புகழ்க் குஞ்சிப்பொரு வில்லார் வீங்குதிர டோளுந்தட மார்பும்விரை மெழுகித் தீங்கரும்பு மென்றனைய வின்பவளச் செவ்வாய்த் தேங்கொளமிர் தார்ந்துசெழுந் தார்குழையச் சேர்ந்தார். இ-ள். ஒருபுறமாலையினையுங் குஞ்சியினியுமுடைய ஆடவர் தோளிலும் மார்பிலும்விரையைமெழுகி இனிய பவள வாயி லுண்டாகிய கரும்பைமென்றனைய அமிர்தத்தையுண்டு மாலைவாடும் படி முயங்கினாரென்க. (40) 2035. பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான் முன்னியதன் மன்றலது முந்துறமு டிப்பான் மன்னுமொரு கீதமது ரம்படமு ரன்றார் கின்னமிர்த மாகவிளை யாருமது கேட்டார். இ-ள். அணையிடத்தான் அக்காலத்திலே தானினைந்திருந்த காந்தருவமாகிய வதனை முற்படமுடிக்கவேண்டி நிலைபெற்ற தொரு கீதத்தை இனிமையுண்டாகப் பாடினாற்கு இளையாரும் அதனை யினிதாகக்கேட்டாரென்க. நான்காமுருபிற்கு இவர்கேட்டது கொடைப்பொருட்டாம். (41) வேறு 2036. மன்ம தன்ம ணிக்கு ரன்ம ருட்டுமென்று மால்கொள்வா ரின்ன தன்றியக்க ரின்னி யக்கவந்த தென்றுதம் பின்னு முன்னு நோக்கு வார்பே துசால வெய்துவார் கன்னி தன்மனத்தி ழைத்த காளைநாமம் வாழ்த்துவார். இ-ள். காமனது அழகிய குரலேயென்றும், மருட்டுமென்றும் மால்கொள்வார்; இத்தன்மைத்தன்று இயக்கரால் நடத்தப் படுதலின் வந்ததென்று நோக்குவார்; எய்துவார்; இப்பாட்டு டையான் சீவகனேயென்று அவனை வாழ்த்துவாராயினாரென்க. (42) 2037. கொம்பி னெத்தொ துங்கி யுங்கு ழங்கன்மாலை தாங்கியு மம்பி னொத்த கண்ணி னார டிக்க லம்ம ரற்றவுந் நம்பி தந்தகீத மேந யந்து காண வோடினார் வெம்பு வேட்கை வேனி லானின் வேற லானு மாயினான். இ-ள். அங்ஙனமானவர் இடைவருந்துமென்று கலங்கள ரற்றாநிற்கவும் ஒதுங்கியுந் தாங்கியுங் கீதத்தைவிரும்பிச் செவிப் புலனாற்கேட்டற்கு ஓடினார்; அப்பொழுது அவனுங் கட்புலனா காமையாலும் பாட்டினாலுங் காமனேயாயினானென்க. கேள்வியுமுணரப்படுதலிற் காட்சியேயாம். ‘நாடினாரும்’ பாடம். (43) 2038. தாம மாலை வார்கு ழற்ற டங்க ணார்கி டங்கழி காம னன்ன காளைதன்கருத்தொ டொத்த தாகலான் மாம லர்த்தெ ரிய லான்ம ணிமி டற்றி டைக்கிடந்த சாம கீத மற்று மொன்று சாமி நன்கு பாடினான். இ-ள். மகளிர்க்கு நம்வயத்தனாகானென்று தம்மிடத்தின்று நீக்கப்படுவானாகிய காலை தன்னினைவோடு அவர் கருத்த மொத்த தாதலிற் கொன்றைமாலையையுடைய இறைவனது நீலமணிபோலு மிடற்றிடத்தே கிடந்ததொரு சாமகீதத்தைச் சாமி பின்னுநன்றாகப் பாடினானென்க. தெரியலானைச் சீவகனெனிற் பின்னர்ச் சாமியென்னும் பெயர்வேண்டாவாம். (44) 2039. கள்ள மூப்பி னந்த ணன்க னிந்த கீத வீதியே வள்ளி வென்ற நுண்ணி டைம ழைம லர்த்த டங்கணார் புள்ளு வம்ம திம கன்பு ணர்த்த வோசை மேறபுகன் றுள்ளம் வைத்த மாம யிற்கு ழாத்தி னோடி யெய்தினார். இ-ள். வேடனாகியமகன் மதியாற்புணர்க்கப்பட்ட தம்மோ சையாக வழைக்கின்றவோசைமேலே விரும்பி மனம்வைத்த மயிற்றி ரள் ஓடுமாறுபோலே, தடங்கண்ணாரெல்லாம் அந்தணனது முற்றுப்பெற்ற கீதத்தின்வழியே யோடிச்சேர்ந்தாரென்க. வள்ளி-வல்லி. புள்ளுவமகன்-புள்ளினோசையைத் தன்னி டத்தே யுடையமகன். (45) வேறு 2040. இனிச்சிறி தெழுந்து வீங்கி யிட்டிடை கோறு நரங்க ளெனக்கொறு கொறுப்ப போலு மிளமுலைப் பரவை யல்குற் கனிப்பொறை மலிந்த காமர் கற்பக மணிக்கொம் பொப்பாள் பனிப்பிறைப் பூணி னான்றன் பாண்வலைச் சென்று பட்டாள். கொறுகொறுத்தல்-குறிப்புச்சொல்லாகிய இரட்டைக் கிளவி. இ-ள். நாங்கள்மேல் இந்நிலையிற்சிறிதெழுந்து வீங்கி யிடையைக் கொல்வோமென்று கோபிப்பனபோலு முலை யினையுமல்குலை முடைய தொருபழமாகிய பாரமிக்க கற்பகக் கொம்பொப்பாள் பூணினானது பாட்டாகிய வலையிலே சென்று அகப்பட்டாளென்க. (46) 2041. அடிக்கல மாற்ற வல்குற கலைகலந் தொலிப்ப வந்து முடிப்பதென் பெரிது மூத்தேன் முற்றிழை யரிவை யென்ன வடிக்கணா ணக்கு நாணித் தோழியை மறைந்து மின்னுக் கொடிக்குழாத் திடையோர் கோலக் குளிர்மணிக் கொம்பி னின்றாள். முடிப்பது-இடக்கர். இ-ள். அரிகை அரற்ற ஒலிப்ப வந்து, முடிப்பதென்? யான் பெரிதுமூத்தேனெயென்ன, அவள் நாணி நக்குத் தோழியைமுன்னிட்டுக் கொண்டு மின்னுக்குழாத்திடையிற் கொம்புபோலே நின்றாளென்க. (47) 2042. இளையவர்க் காணின் மன்னோ வென்செய்வீர் நீவி ரென்ன விளைமதுக் கண்ணி மைந்தர் விளிகெனத் தோழி கூற முளையெயிற் றிவளை யாரு மொழிந்தன ரில்லை யென்றோ வுளைவது பிறிது முண்டோ வொண்டொடி மாதர்க் கென்றான். இ-ள். நீர் என்னையொழிய இளையவரைக்கண்டீராயின், மிகவும் என்செய்வீரென்றானாக, நீகூறிய அவர்பெயரும் இவ்விடத்துக்கெடுக வென்று தோழிகூற, இங்ஙனங்கூறியது இவளைப் பேசினாரில்லை யென்றோ? இவட்கு வருந்துங் காரியமாக அவர்செய்தது பிறிது முண்டோ? கூறென்றானென்க. (48) 2043. வாய்ந்தவிம் மாதர் சுண்ணஞ் சீவகன் பழித்த பின்றைக் காய்ந்தன ளென்று கூறக் காளைமற் றிவட்குத் தீயான் மாய்ந்தனன் போலு மென்ன மாதரா ரொருங்கு வாழ்த்தி யாய்ந்தன மையனுய்ந்தா னறிந்தன மதனை யென்றார். வாய்ந்த-விகாரம். இ-ள். இம்மாதர்வாய்த்த சுண்ணத்தைச் சீவகன்பழித்த பின்பு ஆடவரைக் காய்ந்தனளென்றுகூற, அதுகேட்டு இவட்குத் தீயானாகிய காளை மாய்ந்தான்போலுமே யென்றானாக, மகளிரெல்லாம் நூறும் புகுவானென்று வாழ்த்தி, ஐயனுய்ந்தான்; அதனை யாராய்ந்தேம்; பின்பு விளங்குவதுஞ் செய்தேமென்றா ரென்க. அது மேற்கூறுகின்றார். (49) 2044. காலுற்ற காம வல்லிக் கொடியெனக் கலங்கி நங்கை மாலுற்று மயங்க யாங்கண் மடக்கிளி தூது விட்டோம் சேலுற்ற நெடுங்கட் செவ்வாய்த் தத்தைதன் செல்வங்கண்டே பாலுற்ற பவழச் செவ்வாய்த் தத்தையாற் பரிவு தீர்ந்தோம். இ-ள். நந்கை அவற்குற்றது கேட்டுக் கலங்கிப் பித்தேறி மயங்குதலின், யாங்கள் தத்தையைக் கண்டறிந்து வாவென்று கிளியைத் தூதுவிட்டோம்; அங்ஙனம் போய்ச் சேலையொத்த கண்ணினையுடைய தத்தைதன் பொலிவைக் கண்டு வந்து கூறிய அத்தத்தை சொல்லாலே வருத்தந் தீர்ந்தேமென்றா ரென்க. சொல்லென்பதை வருவிக்க; பாலுற்ற - பாலுண்ட. (50) 2045. அன்பொட்டி யெமக்கோர் கீதம் பாடுமி னடித்தி யாரும் முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார். பொன்றொட்டேம் யாமு நும்மைப் போகொட்டோம் பாடல் கேளா தென்பட்டு விடினு மென்றா ரிலங்குபூங் கொம்பொ டொப்பார். மூத்த அந்தணனாதலின், அடித்தியாரென்றார். இ-ள். கொம்பொடொப்பார். அடித்தியாரும் ஆடவரைக் காணே னென்று நெஞ்சிற் கொண்டதனைத் தவிர்ந்து நும்மிடத்து முகவியராய் முனிவு தீர்ந்தாராதலின், நீரும் எம்மிடத்து அன்பு செய்தலைப் பொருந்த எமக்கு ஒரு கீதத்தைப் பாடுமின்; நீர் என்பட்டுவிடினும் பாடல் கேளாமல் நும்மைப் போகவொட்டோம்; அதற்கு யாமும் இவனை யாணையிட்டே மென்றாரென்க. (51) 2046. பாடுதும் பாவை பொற்பே மற்றிமற் றெமக்கு நல்கின் ஆடமைத் தோளி னீர்ஃதொட்டுமேற் கேண்மி னென்ன நாடியார் பேயைக் காண்பார் நங்கைகா ளிழவு மாமே ஆடுவ தொன்று மன்றிவ் வான்மக னுரைப்ப தென்றார். இ-ள். தோளினீர்! பாவை தனது தோற்றப் பொலிவு தொடங்கி ஒழிந்தவற்றையும் எமக்கு நல்குவாளாயின், பாடக்கடவேன்; அதனை ஒட்டுவாளாயின் கேண்மின் என்றானாக, அவர்கள் அதனைப் பொன்னாயிருப்பதொரு பேயைப் பிடித்து எமக்குத்தரிற் பாடுவே மென்றானாகக் கருதி, பொன்னல்லாத பேய் தன்னை நாடிக்காண்பார் யார்? அதுவுமன்றி இவ் வாண்மகன் பொற்பேயென்று கூறுகின்றது இவ்வுலகில் நிகழ்வதென்றாதலால் இதுவும் நாம் ஒட்டுதற்காமே யென்றாரென்க. உலகில் இல்லாததற்கு உடம்படலாம். அது ஒருவனாற் காட்ட முடியாதாதலின், “ஒருபொடு ளிருதொற் பிரிவில வரையார்” (தொல். எச்ச.64) என்னுஞ் சூத்திரத்து, ‘வரையார்’ என்றதனால், ‘பொற்பே’ என்னும் ஏகார வீற்றும் பெயர் வேறு மொரு பொருள்தந்து நிற்றலில் பேயென்று யகரவீறுமாய் நின்றது. இதற்கு யகரவொற்று விகாரத்தாற் றொக்கதாம், “அருங்கழி காத மகலுமென்றுழென்றலந்து கண்ணீர் வருங்கழி காதல் வசைங்கள்” (திருச்சிற்.190) என்ற விடத்து, ‘அலர்ந்து என்பது, அலந்து என்று விகாரப்பட்டு நின்றாற்போல. (52) 2047. பட்டுலாய்க் கிடந்த செம்பொன் பவழமோ ழமைக்கு மல்குல் ஒட்டினா ளதனை யோரா துலம்பொரு தோளி னானும் பட்டவா னுதலி னாய்க்குப் பாடுவல் காமன் றந்த தொட்டிமை யுடைய வீணைச் செவிச்சுவை யமிர்த மென்றான். இ-ள். பட்டுச் சூழ்ந்து கிடந்த அல்குலையுடையாள், அவள் கருதிய பொருளையோராதே இல்லாததற்கு ஒட்டலாமென்று கருதி ஒட்டினாள். ஒட்டினபின் தோளினானும் காமன் பாடின ஒற்றுமையை யுடைய சாரீர வீணையாலாகிய, செவிக்கு இனிமை தரும் அமிர்தத்தை வாணுதலையுடைய நினைக்கு பாடுவேன் என்றான் என்க. இனி, பொன்னாலே பேயைப் பண்ணிக் கொடுப்பே மென்று ஒட்டினாள் என்பாருமுளர். காமனைக் கூறினான். இவள் வரம் வேண்டப் போதலைக் கருதி. (53) 2048. வயிரவில் லுமிழும் பைம்பூண் வனமுலை மகளிர் தம்முள் உயிர்பெற வெழுதப் பட்ட வோவியப் பாவை யொப்பாள் செயிரிவ்வாண் முகத்தை நோக்கித் தேன்பொதிந் தமுத மூறப் பயிரிலா நரம்பிற் கீதம் பாடிய தொடங்கி னானே. இ-ள். நின்ற மகளிரிற் சுரமஞ்சரி முகத்தைப் பாhத்துக் கீதத்தைப் பாடுதற்குத் தொடங்கினானென்க. நரம்பிற் பயிரில்லாத கீதம் - நரம்பொடு கூடி மறைகின்ற அருவருப்பில்லாத கீதம்; தனித்துப் பாடுதல் அரிதென்றாம். அமுதம் இனிமை. நரம்போடே பாடினான் என்பாருமுளர். (54) வேறு 2049. தொடித்தோள் வளைநெகிழத் தொய்யின் முலைமேல் வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங் காலும் வார்புயலுங் காலும் வளைநெகிழு நந்திறத்த தார்வமுறு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை. இ-ள். வட்டமான வளை நெகிழா நிற்க. வடுவகிர் போலும் நிறக்தை யுடைய கண்ணும் முலைமேலே நீரைக் காலும்; அங்ஙனங் காலுதற்கும் நெகிழ்தற்குங் காரணமாகிய நம்மிடத் துளதாகிய ஆர்வமுற்ற நெஞ்சினை மாலை வந்து வருந்துவிக்கு மென்க. 2050. ஐதேந் தகலக்கு லாவித் தழலுயிராக் கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுளலைப்பக் கண்ணீர் கவுளலைப்பக் கையற் றியாமினையப் புண்ணீரும் வேலிற் புகுந்ததான் மாலை. இ-ள் மெல்லிய காஞ்சியையேந்திய வல்குலையுடையாய், கொட்டாவி கொண்டு உயிர்த்துச் சோர்ந்து கையை யணலிலே யூன்று தலாலே, கண்ணீர் கவுளையலைப்ப வீழும்; அங்ஙன மலைத்தலின், யாம் கையற்று அதன்மேலே யினையும்படி மாலை வந்ததென்க. ‘வீழு’மெனவருவிக்க. (56) 2051. அவிழ்ந்தேந்து பூங்கோதை யாகத் தலர்ந்த முகிழ்ந்தேந் துபூண்முலைமேற் பொன்பசலை பூப்பப் பொன்பசலை பூப்பப் பொருகயற்கண் முத்தரும்ப வன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை. இ-ள். கோதாய்! எனதாகத்தில் வீங்கின முலைமேலே பொன் போலும் பசலை பொலிவு பெறும்படிதோன்றும்; அங்ஙனம்பூவாநிற்க, அரும்பாநிற்க, நெஞ்சை மாலை வந்து அழுங்குவிக்குமென்க. தோன்றுமெனவருவிக்க. இத்தாழிசைமூன்றும், தனக்கு வேட்கை நிகழ்ந்ததாகக் கூறலாகாமையின், மாலைப் பொழுது கண்டு ஆற்றாததலைவி தோழிக்குக்கூறிற்றாகக்கூறினான். இனித் தலைவன் ஆற்றானாய்க் கூறிற்றென்பாருமுளர். (57) வேறு 2052. பாடினான் றேவ கீதம் பண்ணினுக் கரசன் பாடச் சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை யொத்தா ராடகச் செம்பொற் பாவை யந்தணற் புகழ்ந்து செம்பொன் மாடம்புக் கநங்கற் பேணி வரங்கொள்வ னாளை யெனறாள். இ-ள். பண்ணினுக்கரசன் தேவனாற்பெற்ற பாட்டைப் பாடினானாக, மகளிர் சோர்ந்து மயங்கிய மயிலையொத்தார்; அப்பொழுது சுரமஞ்சரி அந்தணனைப்புகழ்ந்து நாளைக் கோயிலிலேபுக்கு நமக்குத் தெய்வ மாகிய காமனைவழிபட்டு இப்பாட்டையுடைய சீவகனைத் தரவேண்டு மென்று வேண்டிக் கொள்வேனென்று கூறினாளென்க. (58) 2053. மடலணி பெண்ணை யீன்ற மணிமருள் குரும்பை மான உடலணி யாவி நைய வுருத்தெழு முலையி னாளு மடலணி தோழி மாருமார்வத்திற் கழும விப்பாற் கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே. வடிவாற் பனையீன்ற குரும்பையை மானத் தோன்றிமுலை; நிறத்தான் மணிமருள் முலை. இ-ள். சுரமஞ்சரியும், பிறரை வருத்துதலுடையராய், அவளைச் சூழ்ந்த தோழிமாரும் வரம்வேண்டவெண்ணும் வேட்கையிற்றிரள, இப்பாற் கடலிடத்தே கதிரவன் றோன்றினா னென்க. (59) 2054. பொன்னியன் மணியுந் தாருங் கண்ணியும் புனைந்து செம்பொன் மின்னியற் பட்டஞ் சேர்த்தி யானெய்பால் வெறுப்ப வூட்டி மன்னியற் பாண்டில் பண்ணி மடந்தைகோல் கொள்ள வைய மின்னியற் பாவை யேற்பத் தோழியோ டேறி னாளே. இ-ள். நிலைபெற்ற செலவினையுடைய எருத்தை மணி முதலிய வற்றாற்புனைந்து சேர்த்தி ஊட்டிப் பண்ணி ஒருமகள் செலுத்துங் கோலைக் கொள்ள, பாவை தோழியுடனே யாடவரைக்காணாமற் போம்போக்கிற் கியைய வண்டியை யேறினாளென்க. (60) 2055. ஆடவ ரிரிய வேகி யஞ்சொலார் சூழக் காமன் மாடத்து ளிழிந்து மற்றவ் வள்ளலை மறைய வைத்துச் சூடமை மாலைசாந்தம் விளக்கொடு தூப மேந்திச் சேடியர் தொழுது நிற்பத் திருமகள் பரவு மன்றே. இ-ள். அரசனாணையால் ஆடவர்போக மகளிர்சூழவேகி யிழிந்து கூடவந்த அந்தணனைத் தான்பரவுகின்றது கேளாதபடி கடியறையிலே மறையவைத்துச் சேடியர்சூடுதலமைந்த மாலை முதலியவற்றை யேந்தித் தன்னைத்தொழுதுநிற்பத் திருமகள் பரவாநிற்குமென்க. (61) 2056. பொன்னிலஞ் சென்னி புல்ல விடமுழந் தாளை யூன்றி மின்னவிர் மாலை மென்பூங் குழல்வலத் தோளின் வீழக் கன்னியங் கமுகின் கண்போற் கலனணி யெருத்தங் கோட்டித் தன்னிரு கையுங் கூப்பித் தையலீ துரைக்கு மன்றே. இ-ள். தையல் இடமுழந்தாளையூன்றி மாலையுங்குழலும் வலத் தோளிலே வீழும்படி கமுகின்கண்போலுங்கழுத்தை வலத்தேசாய்த்து நிலத்தைச் சென்னிபுல்லும்படி வணங்கி யெழுந் திருந்து இரண்டு கையினையுங் குவித்துநின்று இதனைக் கூறு மென்க. (62) 2057. தாமரைச் செங்கட் செவ்வாய்த் தமனியக் குழையி னாயோர் காமமிங் குடையேன் காளை சீவக னகலஞ் சேர்த்தின் மாமணி மகர மம்பு வண்சிலைக் கரும்பு மான்றேர் பூமலி மார்ப வீவ லூரொடும் பொலிய வென்றாள். இ-ள். கண்ணையும் வாயையுமுடைய குழையினாய், இவ் விடத்தே யொருவரம் வேண்டுதலையுடையேன்; அதுயாதெனிற் பூமலி மார்பனே, எனக்குச் சீவகனைத்தருதல்; அங்ஙனந்தரில் நினக்கு மகரக்கொடியும், அம்பும், சிலையாகியகரும்பும், தேரும், ஊரோடே பொலியத் தருவேனென்றாளென்க. ‘காமமிக்கும்’ பாடம். (63) 2058. மட்டவிழ் கோதை பெற்றாய் மனமகிழ் காத லானை யிட்டிடை நோவ நில்லா தெழுகென வேந்த றோழன் பட்டிமை யுரைத்த தோராள் பரவிய தெய்வந் தான்வாய் விட்டுரைத் திட்ட தென்றே வேற்கணாள் பரவி மீண்டாள் இ-ள். கோதாய்! நின்காதலானைப்பெற்றாய்; இனி யிடை நோவ நில்லாதே போவென்று புத்திசேனன் வஞ்சனைகூறினமை யறியாதே தான் பரவியதெய்வந்தன் வாய்விட்டுக் கூறிற்றென்றே பின்னும்பரவி வேற்கண்ணாள்மீண்டாளென்க. (64) 2059. அடியிறை கொண்ட செம்பொ னாடகச் சிலம்பி னாளக் கடியரை மருங்கி னின்ற மைந்தனைக் கண்டு நாணி வடியுறு கடைக்க ணோக்க நெஞ்சுதுட் கென்ன வார்பூங் கொடியுற வொசிந்து நின்றாள் குழைமுகத் திருவோ டொப்பாள். அடியிறைகொண்ட-அடியிலே தங்குதல் கொண்ட. ஆடகச்செம்பொனாற் செய்தசிலம்பு. கடியறை-மணவறை. இ-ள். சிலம்பினாளாகிய திருவோடொப்பாள் அறை யிடத்தே பழைய வடிவைக்கொண்டு நின்ற சீவகனை நெஞ்சு துணுக் கெனக் கண்டு வடுவகிர்போலுங் கடைக்கண் நோக்கா நிற்க நாணிக் கொடி போல வளைந்து நின்றாளென்க. (65) 2060. இலங்குபொன் னோலை மின்ன வின்முகஞ் சிறிது கோட்டி யலங்கலுங் குழலுந் தாழ வருமணிக் குழையோர் காதிற் கலந்தொளி கான்று நின்று கதிர்விடு திருவில் வீச நலங்கனிந் துருகி நின்றா ணாமவேற் காமர் கண்ணாள். இ-ள். வேல்போலுங் கண்ணாள் அலங்கலும்குழலுந்தாழ, குழை திருவில் வீச, ஓலைமின்ன முகத்தைச்சிறியவாகச்சாய்த்து, அன்பு முற்றி, நெஞ்சுருகிநின்றாளென்க. கதிர்கலந்துநின்று ஒளியைக்கான்றுவிடுமணிக்குழை, அதற்கியல்பு. (66) 2061. எரிமணிக் கலாபத் திட்ட விந்திர நீல மென்னு மொருமணி யுந்தி நேரேயொருகதி ருமிழ்வ தேபோ லருமணிப் பூணி னாட னவ்வயி றணிந்த கோலத் திருமயி ரொழுக்கம் வந்தென் றிண்ணிறை கவர்ந்த தன்றே. இ-ள். அங்ஙனம் நின்றநிலையை அவன்கண்டு மேகலை யிலழுத்தின இந்திர நீலமென்னும் ஒப்பில்லாதமணி பல கதிரை யுமிழாதே உந்திநேரே யொருகதிரை உமிழுந்தன்மை போலப் பூணினாளது வயிற்றை யழகுசெய்த அழகுடைய மயிரொழுக்கம் வந்து என்னிறையைக் கவர்ந்ததல்லவோ, இனி ஒழிந்தன என் செய்யு மென்று தன்னிலேகூறினானென்க. (67) 2062. தேறினேன் றெய்வ மென்றே தீண்டிலே னாயி னுய்யேன் சீறடி பரவ வந்தே னருளெனத் தொழுது சேர்ந்து நாறிருங் குழலி னாளை நாகணை விடையிற் புல்லிக் கோறொடுத் தநங்க னெய்யக் குழைந்து தார் திவண்ட தன்றே. இ-ள். நின்னடியைப் பரவவந்தேன்; வந்தயான் நின்னைத் தெய்வ மென்றே கருதி பின்பு மானிடமென்றே தேறினேன்; இனித் தீண்டேனா யினுய்யேன்; அருளாயென்று சேர்ந்து அநங்க னெய்தலாற் கொடுப் பாரும் அடுப்பாருமின்றி நாகை யணைகின்ற விடைபோலேபுல்ல, தார்குழைந்து வாடிற்றென்க. (68) புல்லி-புல்ல. 2063. கலைபுறஞ் சூழ்ந்த வல்குற் கார்மயிற் சாய லாளு மலைபுறங் கண்ட மார்பின் வாங்குவிற் றடக்கை யானு மிலைபுறங் கொண்ட கண்ணி யின்றமி ழியற்கை யின்ப நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார். இ-ள். மயிற்சாயலாளும், பச்சிலையை இடத்தே யுடைத்தாகிய கண்ணியையுடைய மாலைதோற்ற மார்பினை யுடைய தடக்கையானு மாகிய தமக்கொப்பிலாதநீரார் இனிய தமிழ்கூறிய இயற்கைப் புணர்ச்சியாகிய இன்பம் நிலைபெறும்படி முறைமையின் நுகர்ந்தாரென்க. இது சுட்டி யொருவர் பெயர்கொள்ளப்படுதலின், உலகியல் வழக்கான காந்தருவமாம். (69) 2064. குங்குமங் குயின்ற கொம்மைக் குவிமுலை குளிர்ப்பத் தைவந் தங்கலுழ் மேனி யல்குற் காசுடன் றிருத்தி யம்பொற் பொங்குபூஞ் சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து மாதர் கொங்கலர் கோதை சூட்டிக் குழனலந் திருத்தி னானே. இ-ள். அங்ஙனநுகர்ந்துவேட்கைதீரநுகராமையிற் பிறந்த வெப்ப நீங்கும் படி மாதருடைய முலையையும், அழபொழுகுகிற மேனியை யுங் குளிரத்தடவிப்புணர்ச்சியாற்குலைதலின் அல்குலில் மணிகளை யுஞ் சேரத்திருத்திச் சிலம்பிற்போர்த்த பொங்கு பூந்தாதையுந் துடைத்துக் கோதையை முன்புபோலே சூட்டிக் குழனலத்தையுந் திருத்தினானென்க. அவ்விடம் பூப்பரப்பிக்கிடத்தலிற் பூந்துகள்கூறினார். (70) வேறு 2065. வானார் கமழ்மதுவுஞ் சாந்து மேந்தி மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசுந், தேனார் பூங்கோதாய் நினக்குக் காமன் சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித் தந்தாண், தானாரப் பண்ணித் தடறு நீக்கித் தண்குருதி தோய்த்துத் தகைமை சான்ற, வூனார்ந்த வோரிணை யம்புந் தந்தா னென்னை யுளனாக வேண்டி னானே. இ-ள். வானின்கண்ணே நிறைந்து கமழுகின்ற மதுவையுஞ் சாந்தையும் ஏந்தி அம்மதுவைத்துளித்தலின், மூசும்வண்டுஞ் சுரும்புந் தேனினமுநுகருங் கோதாய், நின்னைக் கண்டுவைத்து நினக்குக் காமன் றன்கையில்வில்லையுஞ் சேமவில்லையு நேரே வளைத்துத்தந்தான்; அதுவுமின்றி அவன்றான் தாழ்வறப் பண்ணிக் குருதியைத்தோய்த்து உறையை நீக்கி யழகுநிறைந்த ஓரிணையம்பையுந் தந்தானாதலால் என்னை உயிருடனிருக்க வேண்டியிருந்தானென்று இகழ்ந்துகூறினா னென்க. ஏகாரம்-தேற்றம். நோக்கிய மேனி வாடுதலின், ஊனார்ந்த வென்றார். (71) 2066. கண்ணக்க கண்ணிக் கமழ்பூங் குழற் கரும்பேர் தீஞ்சொலாள் கதிர்மு லைகளின், வண்ணக்குவானு நிலனு மெல்லாம்விலையே மழைமின்னு நுசுப்பி னாளைப், பெண்ணுக் கணியாக வேண்டி மேலைப் பெரியோர் பெருமான் படைத்தா னென்று, புண்ணக்க வேலான் புகழ நாணிப் பூநோக்கிப் பூக்கொசிந்த கொம்பொத் தாளே. இ-ள். புள்மகிழ்ந்தவேலான் நுசுப்பினாளை அயன் படைக்கின்ற பொழுதே பெண்களுக்கு ஒருதிலகமாக வேண்டிப் படைத்தானாதலின், இவளுடைய முலைகளின் வண்ணத்துக்கு வானும்நிலனுமெல்லாம் விலைபோதா வென்றுபுகழ, நாணிப் பூவுக்கொசிந்த கொம்பை யொத்தாளென்க. இதுமுன்னிலைப்படர்கை. மதுவைப் புறப்பட விட்ட கண்ணியையும், குழலையுமுடைய சொல்லான்-சுட்டுப்பெயர். (72) வேறு 2067. இறங்கிய மாதர் தன்னை யெரிமணிக் கடகக் கையாற் குறங்கின்மேற் றழுவி வைத்துக் கோதையங் குருதி வேலா னறந்தலை நீங்கக் காக்கு மரசன்யா னாக நாளைச் சிறந்தநின் னலத்தைச் சேரே னாய்விடிற் செல்க வென்றான் இ-ள். வேலான் அங்ஙன நாணியமாதரைக் கையாற்றழுவிக் குறங்கிண்மேலேவைத்துக்கொண்டு நாளை நின்னலத்தைச் சேரேனாயின், யான் கட்டியங்காரனாகக் கடவேன்; நீயினிச் செல்வாயாகவென்றானென்க. (73) 2068. வில்லிடு மணிசெ யாழி மெல்விரல் விதியிற் கூப்பி நல்லடி பணிந்து நிற்ப நங்கை நீநடுங்க வேண்டா செல்கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிழற்ற வொல்கி யல்குற்கா சொலிப்ப வாயம் பாவைசென் றெய்தி னாளே. ஆழி-மோதிரம். இ-ள். அவள்போதற்கொருப்பட்டுக் கணவனைத் தொழு தல்விதி யாதலின் கை கூப்பித்தொழுது வணங்கிநிற்ப, நங்காய்! நீநடுங்க வேண்டா; செல்கென்று அவன்கூற, அவள்சிலம்புங் கிண்கிணி யுமிழற்றக் காசொலிப்ப ஒல்கிச்சென்று ஆயத்தைச் சேர்ந்தாளென்க. (74) 2069. பருமணிப் படங்கொ ணாகப் பையெனப் பரந்த வல்கு லெரிமணிப் பூணி னானுக் கின்னல மொழிய வேகித் திருமணிச் சிவிகையேறிச் செம்பொனீண் மாடம் புக்காள் விரிமணி விளங்கு மாலை வெம்முலை வேற்க ணாளே. இ-ள். பரிய மணியைப் படத்தேகொண்ட பாம்பினது படமென்னப் பரந்த வல்குலையும், மாலையினையும் முலை யினையுமுடைய வேற்கணாள் சீவகனிடத்தே யன்பு நிற்கத் தான் போய்ச் சிவிகையிலே யேறி மாடத்தேபுக்காளென்க. (75) 2070. திருவிற்றான் மாரி கற்பான் றிவலை நாட்செய்வ தேபோ லுருவிற்றாய்த் துளிக்குந் தேற லோங்குதார் மார்பன் றோழர் பொருவிற்றா நம்பி காம திலகனென்றிருந்த போழ்திற் செருவிற்றாழ் நுதலி னாள்கண் மணத்திறஞ் செப்பு கின்றார். 2071. கனைகட லமுதுந் தேனுங் கலந்தகொண் டெழுதப் பட்ட புனைகொடி பூத்த தேபோற் பொறுக்கலா நுசுப்பிற் பாவை நனைகுடைந் துண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும் புனைகடி மாலை மாதர் திறத்திது மொழிந்து விட்டார். இவையிரண்டுமொருதொடர். எழுதப்பட்ட நனையையுடையதொரு கொடி, அமுதையுந் தேனையுந் தன்னுள்ளே கலந்துகொண்டு, இரண்டு முகையைப் பூத்த தன்மைபோலிருக்கின்ற முலைகளைப்பொறாத நுசுப்பினை யுடைய பாவைபோலுமாதர். வண்டு குடைந்து உண்டு தண்வயிற்றை நிறைத்துப்பாடும் மாலையையுடைய மாதரென்க. திறம்-சுற்றம். இ-ள். இந்திரவில் தான் மழைபெய்யக் கற்பதற்குத் துவலை யை நாட்கொள்வத போலே வடிவிற்றாய்த் தேறலைத் துளிக்குந் தாரை யுடைய மார்பினையுடைய சீவகன்றோழர் யாம் உவமிக் கின்ற நம்பிதான் காமதிலகனென்றுகூறி யிருந்தவளவிலே, ஏறிடப்பட்ட விற் றோற் கின்ற நுதலினாளிடத்து இவன் மணஞ்செய்யுந் திறம் இஃதுதென்று செப்புகின்றவர்கள் அம்மா தருடைய சுற்றத்தாரிடத்தே இம்மணத்தைக் கூறிவிட்டாரென்க. (76-77) 2072. ஐயற்கென் றுரைத்த மாற்றங் கேட்டலு மலங்க னாய்கன் வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல் விழுங்கலோ டுமிழ்த றேற்றான் செய்வதெ னோற்றி லாதே னோற்றிலா டிறத்தி னென்று மையல்கொண் டிருப்ப விப்பாற் குமரிதன் மதியிற் சூழ்ந்தாள். இ-ள். சீவகற்கு இவளைத் தரவேண்டுமென்று கூறிய மாற்றத்தை நாய்கன் கேட்டவளவிலே, உடம்படுதலையும் மறுத் தலையுந் தேற்றானாய் நல்வினையிலாதேன் நல்வினையிலாதா டிறத்திற் செய்வதென்னென்று கலங்கியிருப்ப, குமரி யவ் விடத்தே தன்மதி யாலே யறத்தொடுநிற்பதாகச்சூழ்ந்தாளென்க. வெய்யதேனை வாயிடத்திற்கொண்டால் வெம்மையால் நஞ்சென்றுவிழுங்காதேயும் இனிமையால் உமிழாதேயுமிருக் குமாறு போல, இவள் விரதத்தால் உடன்படாதேயுஞ் சீவகனா தலின், மறாதேயுமிருந்தான். (78) 2073. பொற்பமை தாமக் கந்து பொருந்திய மின்னுப்n பால வெற்பக வெரியு மாலைப் பவளத்தூண் பொருந்தி யின்னீர்க் கற்பெனு மாலை வீசி நாணெனுங் களிவண் டோப்பிச் சொற்புக ரின்றித் தோழிக் கறத்தினோ டரிவை நின்றாள். இ-ள். சுரமஞ்சரி தாமத்தையுடைய கந்தைப்பொருந்திய மின் போலே ஞாயிறுதோற்கவெரியும் மாலையையுடைய தூணைச் சேர்ந்து நின்று கற்பாகிய மாலையை வீசி நாணென்னும் வண்டையோட்டிச் சொற்குற்றமின்றாகத் தோழிக்கு அறத்தொடு நின்றாளென்க. மாலையாலோட்டவே வண்டு மிகவுநீங்காதாம். “உயிரினுஞ் சிறந்ததன்று நாணே நாணினுஞ் . செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று” (தொல்.களவு.22)என்றதனாற் சிறிது நாணை விட்டாள். இன்-அசை. (79) 2074. வழிவளர் மயிலஞ் சாயல் பவழப்பூம் பாவையன்ன கழிவளர் கயற்க ணங்கை கற்பினை யறிந்து தோழி யழிமது மாலை சேர்த்தி யடிபணிந் தார வாழ்த்திப் பொழிமதுப் புயலைங் கூந்தற் செவிலியைப் பொருந்திச் சொன்னாள். இ-ள். ஆசாரத்திலே வளர்ந்ததோர் மயில்போலுஞ் சாயலை யுடைய பாவையன்ன நங்கையது கற்பினை, மதுவைப் பொழிவதோர் புயல்போன்ற ஐங்கூந்தலையுடைய தோழியறிந்து மாலையைச்சேர்த்தி வாழ்த்திப்பணிந்துபோய்ச் செவிலியைப் பொருந்தி யறத்தொடு நின்றாளென்க. கழியில்வளர்ந்த கயல். (80) 2075. நனைவளர் கோதை நற்றாய் நங்கைக்கீ துள்ள மென்று சுனைவளர் குவளை யுண்கட் சுமதிக்குச் செவிலி செப்பக் கனையிருட் கனவிற் கண்டேன் காமர்பூம் பொய்கை வற்ற அனையதாங் கன்னி நீரின் றற்றதா நங்கைக் கென்றாள். இ-ள். அச்செவிலி கோதையுடைய நற்றாயாகிய சுமதிக்கு இது நங்கைக்கு நினைவென்று அறத்தொடுநிற்ப, அவள் இரவு கனவிலே ஒருபொய்கைவற்றக்கண்டேனாதலால், அப்பொய்கை யினீர்போன்ற தன்மையதாங் கன்னிநீரும் நங்கைக்கு இன்று அற்றதாயிருந்த தென்றாளென்க. (81) 2076. கெண்டையுஞ் சிலையுந் திங்க ளிளமையுங் கிடந்து தேங்கொ டொண்டையங் கனியு முத்துந் தொழுதக வணிந்து தூங்குங் குண்டல முடைய திங்க ளிதுவெனு முகத்தி தாதை வண்புகழ்க் குபேர தத்தன் கேட்டனன் மனைவி சொன்னாள். 2077. செருவிளைத் தனலும் வேலோய் சிறுமுதுக் குறைவி தானே கரிவிளைத் தாய்ந்த சுண்ணம் வாட்டின னென்று கண்டாய் திருவிளை தேம்பெய் மாரி பாற்கடற் பெய்த தென்றாள். இவையிரண்டுமொருதொடர். இளமையையுடையதிங்கள். கெண்டை முதலியன கிடக்கப்பட்டுத் தொண்டைக்கனியையும் முத்தையுமணிந்து குண்டலத்தையுடைய தோர்திங்கள்-இல்பொருளுவமை. தொழுதக-நன்குமதிப்ப. இ-ள். அச்செய்தியை மனை வேலோய், சிறியளாகிய பேரறிவாட்டி தானே பெரியகாவலிட்டுக்காத்த இந்தக்கற்புத் தனதாய்ந்த சுண்ணத்தைச் சீவகன் கரிபோக்கித் தீதென்றானென்று கருதிப்போலே யிருந்ததென்றுசொன்னாள்; சொல்லி இது நமக்குத் தேன்மாரி பாற்கடலிலேபெய்ததுகண்டாயென்றாள். இதனை மதிபோலுமுகத்தி தாதையாகிய குபேரதத்தன் கேட்டன னென்க. இனிப் பிரித்துமுடிப்பாருமுளர். (82-83) 2078. கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கெலா முணர்த்தி யார்க்கும் வேட்பன வடிசி லாடை விழுக்கலன் மாலை சாந்தங் கோட்குறை வின்றி யாக்கிக் குழுமியங் கறங்கி யார்ப்ப நாட்கடி மாலை யாற்கு நங்கையை நல்கி னானே. இ-ள். நாய்கன் கேட்கப்படுவதாகியவதனை விரும்பிக் கேட்டுச் சுற்றத்திற்கெல்லாமறிவித்து விரும்பப்படுவனவாகிய அடிசின் முதலியவற்றை யார்க்குங்கொள்ளக் குறைவின்றாக வுண்டாக்கி இயமார்ப்ப நல்லநாளிலே சீவகற்குச் சுரமஞ்சரியைக் கொடுத் தானென்க. ‘கேட்டலு’மென்றும் பாடம். (84) 2079 பரியகஞ் சிலம்பு செம்பொற் கிண்கிணி யார்ந்த பாதத் தாரிவைய ராடன் மிக்கா ரருமணி வீணை வல்லா ருரியநூற் றெண்மர் செம்பொ னொன்றரைக் கோடி மூன்றூ ரெரியழன் முன்னர் நேர்ந்தே னென்மகட் கென்று சொன்னான். இ-ள். நல்கினவன் பரியகமுதலியனஆர்ந்த பாதத்தை யுடைய ஆடன்மிக்கார் வீணைவல்லாராகிய உரிய அரிவையர் நூற்றெண்மர், பொன் ஒன்றரைக்கோடி, ஊர் மூன்று, இவற்றை என் மகட்குக் கொடுத்தேனென்று அழலின்முன்னேநின்று கூறினா னென்க. (85) 2080. மாசறு மணியு முத்தும் வயிரமு மொளிரு மேனி யாசறு செம்பொ னார்ந்த வலங்கலங் குன்ற னானுந் தூசுறு பரவை யல்குற் றூமணிக் கொம்ப னாளுங் காசறக் கலந்த வின்பக் கடலகத் தழுந்தி னாரே. இ-ள். மணிமுதலியனவும், அலங்கலுமொளிரும் மேனியை யுடைய மேருவையொப்பானும், அல்குலையுடைய கொம்பனாளும் இன்பக்கடலிலே யழுந்தினாரென்க. அது மேற்கூறுகின்றார். (86) 2081. பொன்வரை பொருத யானைப் புணர்மருப் பனைய வாகித் தென்வரைச் சாந்து மூழ்கித் திரள்வடஞ் சுமந்து வீங்கி மின்வளர் மருங்குல் செற்ற வெம்முலை மணிக்கண் சேப்பத் தொன்னலம் பருகித் தோன்ற றுறக்கம்புக் கவர்க ளொத்தான். பொன்வரையென்றது-இவன்மார்பை. மூழ்கிச் சுமந்து வீங்கி மருங்குலைச் செற்றமுலை. இ-ள். தோன்றல் மருப்பனையவாகி மார்பைப்பொருத முலைக் கண் சிவக்கும்படி யவடொன்னலத்தைப்பருகித் துறக்கம் புக்கவர்களை யொத்தானென்க. (87) 2082. வரிக்கழற் குருசின் மார்புமடைந்தைவெம் முலையுந் தம்முட் செருச்செய்து திளைத்துப் போரிற் சிலம்பொலி கலந்த பாணி யரிப்பறை யனுங்க வார்க்கு மேகலைக் குரலோ டீண்டிப் புரிக்குழல் புலம்ப வைகிப் பூவணை விடுக்க லானே. திளைத்து-திளைக்க. ஈண்டி-ஈண்ட. இ-ள். குருசில்மார்பும் முலையுந் தம்மிலே முற்படப் போர்செய்து பின்புசெய்யும் போரிலே திளைத்தலிற் பாணிகலந்த பறைகெட வார்க்கும் மேகலைக்குரலோடே சிலம்பொலியீண்டக் குழல்குலைந்து தனிப்பத் தங்கி விடுக்கலானாயினா னென்க. ‘திளைத்த போரும்’ பாடம். 2083. மணியியல் வள்ளத் தேந்த மதுமகிழ்ந் தனந்தர்கூர வணிமலர்க் குவளைப் பைம்போ தொருகையி னருளி யம்பொற் பிணையனா ளருகு சேரிற் பேதுறு நுசுப்பென் றெண்ணித் துணையமை தோள்க டம்மாற் றேன்றறான் புல்லி னானே. இ-ள். தோன்றறான் பின்னும்புணரக்கருதி அதற்குக்களி கூரும்படி மதுவை வள்ளத்தே யொருகையாலேந்த, அதனை யுண்டு மயக்க மிகுதலின், இப்பிணையனாளைப்புணரின் இடை முரியுமென்ற றெண்ணிக் கூந்தற்குப் போதை யொருகையாலே கொடுத்து மார்புற முயங்கிற் புணர்ச்சிவேட்கைமிகுமென்று சிறிது நீங்கித் தோளால் நெகிழப்புல்லினானென்க. ‘அஞ்சொற் பிணையலு நறிய சேர்த்தி’ யென்பது பாடமாயிற் புகழ்மாலை சூட்டியென்க. (89) 2084. மல்லலங் கங்கை போலும் பலர்முயங் கார மார்பிற் புல்லன்மின் போமின் வேண்டா வென்றவள் புலந்து நீங்க முல்லையங் கோதை யொன்றும் பிழைப்பிலேன் முனிய னீயென் றல்லலுற் றரத்த மார்ந்த சீறடி தொழுதிட் டானே. 2085. வட்டிகைப் பாவை நோக்கி மகிழ்ந்திருந் திலிரோ வென்னாத் தொட்டிமை யுருவந் தோன்றச் சுவரையே பொருந்தி நின்றாய் கட்டழ குடைய நங்கை நீயெனக் கருதிக் கண்ணா னொட்டியா னோக்கிற் றென்றா னொருபிடி நுசுப்பி னாட்கே. 2086. நுண்டுகி னெகிழ்ந்த வல்குன் மணிபரந் திமைப்ப நொந்து கண்களை யிடுகக் கோட்டிக் ககாமத்திற் செயிர்த்து நோக்கிக் குண்டல மிலங்கக் கோதை கூந்தலோ டவிழ்ந்து சோர வொண்டொடி யூடி நின்றாளொளிர்மணிப் பூங்கொம் பொப்பாள். இவை மூன்றுமொரு தொடர். இ-ள். கொம்பொப்பாளாகிய ஒண்டொடி, அவன் மார்புற முயங்காமையிற் பிறர்முயங்க வைத்தானென்று கருதி, பலருங் கங்கைபோல் ஆயிரமுகமாக முயங்கு மார்பினால் இனிப் புல்லன் மின்; தீண்டவேண்டா; போமினென்று அவள் புலந்து நீங்கிநிற்ப, அவளுருவம் பளிக்குச்சுவரிலே யெறித்ததனை அவளேயென்று கருதிக் கோதாய், யான்பிழைப்பிலேன்; நீமுனியலென்று அடியைத்தொழுதான்; அதனான் எம்மையேதொழுதானென்று புலவிதீராது பின்னும் வட்டிகைப்பாவை போல்வாள் என்னுரு வம் பளிங்கிலே தோன்றலிற் சிறிதுபாடமிக்குத் தோன்ற, அதனிடத்து நன்மையேநோக்கி மகிழ்ந் திருந்திலிரோ வென்னாக் காமத்தாலேமன நொந்து செயிர்த்துச் கண்களை இடுகக்கோட்டி நோக்கி யிமைப்ப இலங்கச் சோரஊடி நின்றாள்; நின்ற அந்துண்ணுசுப்பினாட்கு நங்காய், யான் கண்ணால் ஒட்டி நோக்கிற்று; நீபளிக்குச்சுவரிலே பொருந்திநின்றாயாதலின், நின்னி ழலைக் கட்டழகுடைய நீயென்றுகருதிக்காணென்றா னென்க. ‘நம்மின் மிக்க வடிவு கண்டு விரும்பினானென்று ஊடினாள்.’ என்னவென்றுபாடமாயின், என்று கூறியூடினாளென்க. (90-92) 2087. கிழவனாய்ப் பாடி வந்தென் கீழ்ச்சிறை யிருப்பக் கண்டே னெழுதிய பாவை நோக்கி யிமையவித் திருப்பக் கண்டே னொழிகவிக் காம மோரூ ரிரண்டஃக மாயிற் றென்றாங் கழுதகண் ணீர்கண் மைந்த னாவிபோழ்ந் திட்ட வன்றே. இ-ள். அங்ஙனந்தேற்றவுங் கொண்டது விடாத குணமுடை மையிற் கேளாளாய், கிழவனாய் என்காவலிடத்தே வந்து பாடியி ருப்ப அதுகண்டேன்; பளிங்கிற்றோன்றிய பாவையை விரும்பி ஒரு படத்திலேயெழுதவேண்டி இமையாதுநோக்கியிருப்பவுங் கண் டேன்; ஓரிடத்தே இரண்டுமுறைமை நிகழ்ந்ததாலால் ஈண்டு நிகழ்த்துகின்ற காமத்தையொழிகவென்று அழுதகண்ணீர்கள் மைந்தனுயிரைக்கெடுத்த வென்க. நீர்களென்றதனை. “என்பாராட்டைப் பாலோ சில” (கலித்.85) என்றார் போலக்கொள்க. (93) 2088. அலங்கறா தவிழ வஞ்செஞ் சீறடி யணிந்த வம்பூஞ் சிலம்பின்மேற் சென்னி சேர்த்திச் சிறியவர் செய்த தீமை புலம்பலர் பொறுப்பரன்றே பெரியவ ரென்று கூறி யிலங்குவேற் கண்ணி யூட லிளையவ னீக்கி னானே. இ-ள். இளையவன் இதுதீருமுபாயநாடி வேற்கண்ணி யூடலை, சிறியவர்செய்த தீமையைப் பெரியவர் வெறாராய்ப் பொறுப்பரல்ல வோவென்றுகூறிச் சிலம்பின் மேலே தாத விழும்படி தன்சென்னியைச்சேர்த்தி நீக்கினானென்க. (94) 2089. யாழ்கொன்ற கிழ்வி யாட னமிழ்துற புலவி நீக்கிக் காழின்றிக் கனிந்த காமக் கொழுங்கனி நுகர்ந்து காதற் றாழ்கின்ற தாம மார்பன் றையலோ டாடி விள்ளா னூழ்சென்ற மதியம் வெய்யோ னொட்டியொன் றாய தொத்தான். இ-ள். காதலாற் றங்குகின்ற சீவகன் கிளவியாளது புலவியை நீக்கி அவளோடேகூடி நீங்கானாய் விதையின்றிப் பழுத்த காம மாகிய கனியை நுகர்ந்து, முறையானிறைந்த உவவுமதியை வெய் யோன்பொருந்தி யொன்றான தன்மையை யொத்தானென்க. (95) 2090. பச்சிலைப் பட்டு முத்தும் பவளமு மிமைக்கு மல்கு னச்சிலை வேற்கண் மாதர் நகைமுக முறுவன் மாந்தி யிச்சையுங் குறிப்பு நோக்கி யெய்வதே கரும மாகக் கைச்சிலை கணையோ டேந்திக் காமனிக் கடையைக் காப்பான். பச்சிலைப்பட்டு-பசியவலைத்தொழிலையுடைய பட்டு. மாந்தி-மாந்த. இ-ள். அல்குலையுங் கண்ணையுமுடைய மாதரது முறுவலை அவன்மாந்தும்படி அவனினைவையும், அவண்முகத்திற் குறிப் பையுநோக்கி, எய்வதே தனக்குத்தொழிலாகக் கையிலே வில்லை யம்புடனேயேந்தி யிவ்வாயிலை யிப்பொழுதுகாப்பான் காமனே, வேறொருவனல்லனென்று தேவர்கூறினாரென்க. (96) 2091. கடிப்பிணை காது சேர்த்திச் சிகழிகைக் காத நாறத் தொடுத்தலர் மாலை சூட்டிக் கிம்புரி முத்த மென்றோ ளடுத்தணிந் தாகஞ் சாந்தி னணிபெற வெழுதி யல்கு லுடுத்தபொற் கலாபந் தைவந் தொளிவளை திருத்தி னானே. இ-ள். பிரியக்கருதிக் காதிலே கடிப்பிணையையிட்டு, முடியிலே மாலையைச் சூட்டி, தோளிலே கிம்புரிவடிவான முத்தத் தைச்சேர்த்தி யணிந்து, ஆகத்தைச் சாந்தாலேயெழுதி, அல்குலைச் சூழ்ந்த கலாபத்தைத் தைவந்து வளையைத் திருத்தினானென்க.(97) 2092. இலங்குவெள் ளருவிக் குன்றத் தெழுந்ததண்ட கரச் செந்தீ நலங்கிள ரகிலுந் தேனுங் கட்டியு நன்கு கூட்டிப் புலம்பற வளர்த்த வம்மென் பூம்புகை யமளி யங்கண் விலங்கர சனைய காளை வெள்வளைக் கிதனைச் சொன்னான். இ-ள். குன்றிலெழுந்த தகரவிறகிற்றீயிலே அகின் முதலிய வற்றைக் கூட்டியிட்டுக் குற்றமறவளர்த்த புகையினையுடைய அமளிக்கண்ணேயிருந்து சிங்கவேற்றை யொத்தகாளை சுரமஞ் சரிக்கு இதனைக்கூறினானென்க. (98) 2093. கருமநீ கவலவேண்டா கயற்கணாய் பிரிவல் சின்னா ளருமைநின் கவினைத் தாங்க லதுபொரு ளென்று கூறப் பெருமநீ வேண்டிற் றல்லால் வேண்டுவ பிறிதொன் றுண்டோ வொருமைநின் மனத்திற் சென்றே னுவப்பதே யுவப்ப தென்றாள். இ-ள். கயற்கண்ணாய், நீ கவலவேண்டா; யான்கூறுகின்ற காரியம் யாதெனிற் சிலநாள் நின்னைப்பிரிவேன்; பிரிந்தால் நின் கவினைத்தாங்குவாயாக; அஃது அருமையையுடைய பொருள்கா ணென்றுகூற, பெரும, நீவிரும்புவதன்றி யான் விரும்புவது வேறொன்றுண்டோ, யானொருபடிப்பட்ட நின்னுடைய மனம் போலே யொழுகினேனாதலின், நின்மனமுவப்பதேகாண் என்மன முவப்பதென்றாளென்க. தாங்கல்-அல்லீற்றுவியங்கோள். பொருள்-காரியம். வேண்டுவ-ஒருமைப்பன்மைமயக்கம். (99) 2094. நாணொடு மிடைத்த தேங்கொ ணடுக்குறு கிளவி கேட்டே பூண்வடுப் பொறிப்பப் புல்லிப் புனைநலம் புலம்ப வைகேன் றேன்மிடை கோதை யென்று திருமக னெழுந்து போகி வாண்மிடை தோழர் சூழத் தன்மனை மகிழ்ந்து புக்கான். இ-ள். அவள் அங்ஙனங்கூறிய நாணொடுமிடைந்த கிளவி யைக் கேட்டுக்கோதாய், நின்னலம்புலம்ப வைகேனென்று புல்லிச் சீவகன்போய்த் தோழர்சூழச் சென்று தன்மனையிலே புக்கா னென்க. பிரிவாற் சிறிது நடுக்குற்றகிளவி. (100) 2095. புரவியுங் களிறு நோக்கிப் பொன்னெடுந் தேரு நோக்கி யிரவினும் பகலு மோவா தென்மகன் யாண்டை யானென் றழுதகண் ணீரி னாலே கைகழீஇ யவலிக் கின்ற மெழுகெரி முகந்த தொக்குந் தாய்மெலி வகற்றி னானே. இ-ள். புரவிமுதலியவற்றைநோக்கியிவற்றைவிட்டு என்மகன் எவ்விடத்திருக்கின்றானென்று இரவும்பகலும் ஓவாது அழுத கண்ணீராலே கைகழுவி வருந்துகின்ற தாயது, மெழுகு நெருப்பை முகந்தாற்போல நெஞ்சுருகுகின்ற வருத்தத்தை நீக்கினானென்க. இருடிகூற்றைச் சிந்தித்திருத்தலிற் கந்துகன் மெலிவை யகற்றினான் எனல் வேண்டாவாயிற்று. (101) 2096. ஒற்றரு முணர்த லின்றி யுரையவித் துறுப்பி னாலே சுற்றத்தார்க் குரைப்ப வீண்டித் தொக்குடன் றழுவிக் கொள்வா ரெற்றுவா ரினைந்து சோர்வார் நம்பியோ நம்பி யென்னா வுற்றுடன் றழுத கண்ணீர் காலலைத் தொழுகிற் றன்றே. இ-ள். ஒற்றரும் உணர்தலின்றாக வுரையைத்தவிர்த்து உறுப் பாலே சுற்றத்தார்க்கு வரவையுணர்ந்த, அவரீண்டிச் சேரத்தழுவிக் கொள்வாராய், எற்றுவாராய்ச் சோர்வாராய்த் தொக்கு நம்பி யோ! நம்பியோ! என்னா அழுதகண்ணீர் காலையிழுத் தோடின் றென்க. இஃது உவகைக்கலுழ்ச்சி. (102) 2097. கந்துகன் கழறக் கல்லென் கடற்றிரை யவிந்த வண்ணம் வந்தவர் புலம்பு நீங்க மறைபுறப் படுமென் றெண்ணி யெந்தைதா னிறந்த நாளின் றெனநக ரியம்பி யாரு மந்தமி லுவகை தன்னா லகங்குளிர்ப் பெய்தி னாரே. இ-ள். இவ்வழுகையால் இம்மறை புறப்படுமென்றெண்ணிக் கந்துகன்கழறினானாக, கடற்றிரை கல்லென்கின்ற ஒலியவிந்தா போல வந்தசுற்றம் அழுகையைத் தவிர, பின்னரும் அந்தமிலு வகையாலே யஞ்சி நாயனார் போனநாள் இன்றென்று அகத்தி லுள்ளோரெல்லாருங் கூறி அழுதபின்பு அகமகிழ்ச்சி யெய்தினா ரென்க. (103) 2098. செங்கயன் மழைக்கட் செவ்வாய்த் தத்தையு மகிழ்ந்து தீஞ்சொ லெங்கையைச் சென்று காண்மி னடிகளென் றிரந்து கூற மங்கல வகையிற் சேர்ந்து மதுத்துளி யறாத மாலை கொங்கலர்க் கண்ணி சேர்ந்திக் குங்கும மெழுதி னானே. இ-ள். இவனைக்கண்டு தத்தையுமகிழ்ந்து அடிகளே, சென்று குணமாலையைக்காண்மினென்று புலவியில்லாத தீஞ்சொல்லாலே இரந்துகூற, அவனுஞ்சேர்ந்து மாலையையுங் கண்ணியையும் மங்கலக் கூற்றாலே முதற்சேர்த்திக் குங்குமத்தை யணிந்தானென்க. தேவன் “பன்னிருமதியின்” (சீவக.1220)என்றதனைக் தானுணர் தலிற் றனக்குக்கூட்டமின்மை யுணர்தலானும், அவள்வருத்த மிகுதி யானும் இங்ஙனமிரந்துகூறினாள். குணமாலை கணவனிருத் தலின் மங்கலவணிக்கு உடன்பட்டுப்பின்பு கூட்டத்திற்கு உடம் படாது கூறுகின்றாள்.(104) 2099. தீவினை யுடைய வென்னைத் தீண்டன்மி னடிகள் வேண்டா பாவியே னென்று நொந்து பரிந்தழு துருகி நையக் காவியங் கண்ணி யொன்றுங் கவலல்யா னுய்ந்த தெல்லா நாவியே நாறு மேனி நங்கைநின் றவத்தி னென்றான். இவளைத்தீண்டிச் சீவகன்கொலையுண்டானென்று உலகங் கூறலிற் றீவினையுடைய வென்னையென்றாள். தான் விலக்கவும் இவன்றீண்டலிற் பின்னும் வேண்டாவென்றாள். இவனைப் பெற்றுவைத்தும் இங்ஙனநீக்கிக் கூறவேண்டலிற் பாவியே னென்றாள். இ-ள். அடிகளே, தீண்டன்மின்; வேண்டா; பாவியே னென்று அன்புற்றழுது நையாநிற்க, கண்ணி, கவலல்; யான் எல்லா வற்றையும் பிழைத்தது நீசெய்துவைத்த நல்வினையா லேகா ணென்றானென்க. “நந்ததிண்டேர் பண்” (சீவக.1088) என ஆசிரியனைத் தப்பப் புகுந்த தனையும், “பெண்ணிடர்விடுப்ப”(சீவக.1752) வந்ததன்மையையும், தான் கட்டியங்காரன் பரிகரத்தைக் கொல்வேமோ வென்று நினைத்த தனையுங்கருதி, எல்லாமென்றான். (105) 2100. அன்னமென் னடையு நோக்குஞ் சாயலு மணியு மேரு மின்னினுண் ணுசுப்பும் வெய்ய முலைகளு முகமுந் தோன்ற வென்மனத் தெழுதப் பட்டா யாயினு மரிவை கேளா யுன்னையான் பிரிந்த நாளோ ரூழியே போன்ற தென்றான். அணி-அழகு. ஏர்-எழுச்சி. இ-ள். என்று பின்னும் அரிவாய், கேளாய்; நடை முதலியன வெல்லாம் என்மனத்தெழுதப்பட்டு நீங்காதிருந்தாயாயினும் நின்னை மெய்யுறு புணர்ச்சியின்றிப் பிரிந்தவொருநாள் ஒரூழி காலம் போலே யிருந்ததுகாண்; இன்னும் என்னை வருத்தாதே கொள்ளென்றானென்க. (106) 2101. இளையவண் மகிழ்வ கூறி யின்றுயி லமர்ந்து பின்னாள் விளைபொரு ளாய வெல்லாந் தாதைக்கே பேறு கூறிக் கிளையவர் சூழ வாமான் வாணிக னாகிக் கேடி றளையவிழ் தாம மார்பன் றன்னகர் நீங்கி னானே. இ-ள். தாமமார்பன் இங்ஙனம் அவள்மனமகிழ்வனவற்றைக் கூறி யவளைக்கூடி மற்றைநாட்டாதைக்கு மேன்முடியுங்காரியங் களைத் துணிந்துகூறிச் சுற்றஞ்சூழத் தாவுங் குதிரையைக் கொள்ளும் வாணிகனாய் அதற்கோர்வேடங் கொண்டு தன் மனை யினின்றும் போனானென்க. பின்னாளென்று ஈண்டுச் கூறலின், “அன்றைப்பகலே வந்தடைவேன்” என்றல் ஆகாதென்றுணர்க. (107) சுரமஞ்சரியாரிலம்பக முற்றிற்று. பத்தாவது மண்மகளிலம்பகம். 2102. கும்புரை செருத்தற் குவளைமேய் கயவாய்க் குவிமுலைப் படர்மருப் பெருமை நடந்தவா யெல்லா நறுமலர் மரையி னாகிலைச் சொரிந்தவந் தீம்பா றடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப் பார்ப்பின மோம்புதண் மருத மடங்கல்போற் றிறலார் மாமணி கறங்க வளவயற் புள்ளெழக் கழிந்தார். செருத்தல்-மடி. கயவாய்-பெரியவாய். பால்-எழுவாய். இ-ள். திறலார் செருத்தன்முதலியவற்றையுடைய எருமை தான் போனவிடமெல்லாந் தாமரையின் இணையவிலையிலே சொரிந்தபால், அன்னமுங் குருகும்நாரையுமாகிய பார்ப்பினத்தை வளர்க்கும் மருதநிலத்தே மணிகறங்குதலிற் புள்ளெழப் போயினா ரென்க. இவை பாலுண்டல் நிலப்பண்பு. (1) 2103. புரிவளை யலறிப் பூசலிட் டீன்ற பொழிகதிர் நித்தில முழக்கி வரிவளை சூழும் வலம்புரி யினத்துட் சலஞ்சல மேய்வன நோக்கி யரிதுண ரன்னம் பெடையெனத் தழுவி யன்மையி னலமர லெய்தித் திரிதரு நோக்கந் தீதிலார் நோக்கி நெய்தலுங் கைவலத் தொழிந்தார். தீது-ஈண்டுவேட்கை. இ-ள். தீதிலார், புரிந்தவளை சூன்முதிர்ச்சியினாலே மெய்ந்நொந்து கூப்பிட்டீன்ற முகத்தையுழக்கி ஆயிரஞ்சங்குசூழத் திரியும் வலம்புரி யாயிரத்துக்குள்ளே சலஞ்சலமேய்வன வற்றைநோக்கிப் பாலையு நீரையும்பிரிக்கவல்ல அன்னம் பெடையென்று சென்று தழுவி யவை யன்மையின் வருந்தி மறித்துப்போகின்ற நோக்கத்தைத் தாம் பார்த்துத் தனக்குரிய ஒழுக்கத்திடத்தின் நெய்தனிலத்தையும் போனாரென்க. (2) 2104. கோட்டிளங் கலையுங் கூடுமென் பிணையுங் கொழுங்கதிர் மணிவிளக் கெறிப்பச் சேட்டிளங் கொன்றைத் திருநிழற் றுஞ்சச் செம்பொறி வண்டவற் றயலே நாட்டிளம் படியார் நகைமுகம் பருகு நல்லவர் போன்மலர் பருகு மோட்டிள முல்லை மொய்ம்மலர்க் கான முருகுவந் தெதிர்கொள நடந்தார். இ-ள். உயர்ந்த கொன்றைநிழலிலே மணிவிளக்கெறிப்பக்கலையும் பிணையும் துஞ்ச வண்டுகள் அக்கொன்றைக்கயலே நின்ற முல்லை மலர்களை மகளிர்முகத்தின் நகையைப் பருகும் ஆடவரைப்போலப் பருகுதற்குக் காரணமான முருகு எதிர் கொள்ள முல்லை மலரையுடைய கானத்தைப் போனாரென்க. (3) 2105. குழவிவெண் டிங்கட் கோட்டின்மேற் பாயக் குளிர்புனல் சடைவிரித் தேற்கு. மழலவிர் சூலத் தண்ணலே போல வருவிநீர் மருப்பினி னெறியக் கழைவளர் குன்றிற் களிறுநின் றாடுங் கடிநறுஞ் சந்தனச் சார லிழைவளர் முலையார் சாயல்போற் றோகை யிறைகொள்பூங் குறிஞ்சியுமிறந்தார் இ-ள். கங்கையினீர் இளையதாகிய பிறைக்கோட்டிலே வீழ ஒற்றைச்சடையைவிரித்துநின்று ஏற்குமிறைவனைப்போலே அருவிநீர் மருப்பிலேவீழக் களிறு குன்றிலேநின்றாடுஞ் சாரலிலே தோகைகள் தங்குதல்கொண்ட குறிஞ்சிநிலத்தையும் போனா ரென்க. இஃது இல்பொருளுவமை. கங்கைக்குத்தலைப்பாகிய இமவானிற் பதுமையென்னும் பொய்கையில் நீர்விழுகின்ற தாழ்வரையில் உருத்திரப்படிம மிருத்தலிற் சூலத்தண்ணலென்றார். (4) 2106. ஊன்றலைப் பொடித்தாங் கனையசெஞ் சூட்டி னொளிமயிர் வாரண மொருங்கே கான்றபூங் கடம்பின் கவட்டிடை வளைவாய்ப் பருந்தொடு கவர்குரல் பயிற்று மான்றவெம் பாலை யழன்மிதித் தன்ன வருஞ்சுரஞ் சுடர்மறை பொழுதி னூன்றினார் பாய்மா வொளிமதிக் கதிர்போற் சந்தன மொருங்குமெய் புதைத்தே. ஆங்கென்றது முற்கூறிய முல்லையுங் குறிஞ்சியுஞ் சேர்ந்த விடத்தை. கவர்குரல்-இரைகளைக் கவர்ந்து கொள்ளு கைக்கு விரும்பு கின்றகுரல். வாரணமும்பருந்தும் பாலை நிலத் தினது வெப்ப மிகுதியின் நாள்வழியிளைப்பால் ஓரிடத்திருந்தும் ஒன்றையொன்று நலியமாட்டாமையின், ஓரிடத்திருந்து கவர்குரல் பயிற்றுமென்றார். வெம்மை:விகாரம். இ-ள். ஊன் றலையிலேதோற்றினாலொத்த சூட்டி னையுடைய வாரணம், வெம்மையாற் பூவையுதிர்த்த கடம்பிலிருக்கின்ற பருந்துடனே யிருந்து சேரக் குரலைப்பயிற்றும் அவ்விடத்து அழன் மிதித்தன்ன வெம்மையமைந்த பாலையாகிய சுரத்தை அந்திக்காலத்தே மதிபோலுஞ் சந்தனத்தே யுடம்பு சேரமறையப் பட்டு மாவை விசையிலே செலுத்தினா ரென்க. வெம்மைமிகுதியால் அந்திக்காலத்தேபோனார். “நடுவ ணைந்திணை நடுவணதொழியப்-படுதிரை வையம் பார்த்திய பண்பே.” (தொல்.அகத்.2) என்று பாலைக்கு நிலமின்றென்றமையானும், “நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு-முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.” (தொல்.அகத்.9) என்றமையானும், அக்காலமன்றி இவர் செல்கின்றகாலம் முன்பனிதொடங்குகின்றகாலமாகவும் பாலை கூறியவாறு என்னையெனின்; காலம் பொதுவாய்த் தேயந் தோறும் வேறுபட்டிருக்கும்; சித்திரையும் வைகாசியுங் குடக மலைக்குக் கார்காலத்தையாக்கினாற்போல மார்கழித்திங்களும் இவர் போகின்ற தேயத்திற்கு முதுவேனிலாய் வெம்மையை விளைத்துப் பாலையையாக்கிற்று. இனி இமயத்தைச் சூழ்ந்த விடந் தெய்வத் தினாணையால் எக்காலமும் மாறாமல் ஓரிடம் ஒரு காலமாயே யிருக்குமாதலின், அவ்விடத்தே யிவர் போகின்ற ரென்றுமாம். (5) 2107. நிலையிலா வுலகி னின்றவன் புகழை வேட்டவ னிதியமே போன்று மிலைகுலாம் பைம்பூ ணிளமுலைத் தூதி னின்கனித் தொண்டையந் துவர்வாய்க் கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றுங் கடவுளர் வெகுளியே போன்றும் உலைவிலார் நில்லா தொருபகலுள்ளே யுருப்பிவிர் வெஞ்சுரங் கடந்தார். இதுவும் அவ்விடத்தே அவர்போன கடுமை கூறிற்று. இ-ள். கேடிலார் தாழாதே யொருமுகூர்த்தத்தே, புகழை விரும்பினவன் கையிற்பொருள்போமாறுபோலேயும், பூணை யுடைய முலையாகிய தூதினையுந் தொண்டை போலும் வாயினையு முடைய பரத்தையர்காமம் போமாறுபோலேயும், இருடிகள் கோபம் போமாறுபோலேயும் சுரத்தைக் கடுகப் போனாரென்க. கனி-முதற்கேற்ற அடை. கலைகளாவன: “வேத்தியல் பொது விய லென்றிருதிறத்துக்-கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும்-பண்ணியாழ்த் தானமும் பாடைப் பாடலுந்-தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலும்-கந்துகக் கருத்து மடைநூற் செய்தியுஞ்-சுந்தரச் சுண்ணமுந் துநீ ராடலும்-பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமுங்-காயக் கரணமும் கண்ணிய துணர்தலுங்-கட்டுரை வகையுங் கரந்துரை கணக்கும்-வட்டிகைச் செய்தியு மலராய்ந்து தொடுத்தலுங்-கோலங் கோடலுங் கோவையின் கோப்புங்-காலக் கணிதமுங் கலைகளின் றுணிவு-நாடக மகளிர்க்கு நன்கென வகுத்த-வோவியச் செந்நூலுரைநூற் கிடக்கையுங்-கற்றுத்துறை போகிய பொற்றொடி நங்கை”(2.18-31) என மணிமேகலையிற் கூறப் பட்டனவாம். (6) 2108. புதுக்கலம் போலும் பூங்கனி யாலும் பொன்னிணர்ப் பிண்டியும் பொருந்தி மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன் மலர்சொரி வகுளமு மயங்கிக் கதிர்த்ததண் பூணி கம்புடாழ் பீலிக் கனைகுர னாரைவண் டான மெதிர்த்தண் புனல்சூ ழின்னதிக் கரைமே லிளையவ ரயாவுயிர்த் தெழுந்தார். இ-ள். வேட்கோவரிடத்துப்புதுக்கலத்தையொக்கும் பொலிவுபெற்ற கனியையுடைய ஆலும் பிண்டியும் பொருந்தி, முன்னர்ச் செவ்வி கலந்து பின்பு காம்புகழலுதலிற் சிலம்பி வீழ்வனபோல மலரைச் சொரிகின்ற மகிழுமயங்கி, பூணியுங் கம்புளுஞ் சிறுசின்னம்போலுஞ் செறிந்த குரலையுடைய நாரையும் வண்டானமு மெதிர்த்த நதிக்கரைமேலே யிளையவர் இளைப் பாறிப் போனாரென்க. பூணி, கம்புள் இறந்தவழக்கு. (7) 2109. அள்ளிலைப் பலவி னளிந்துவீழ் சுளையுங் கனிந்துவீழ்வா ழையின் பழனும், புள்ளிவா ழலவன் பொறிவரிக் கமஞ்சூன் ஞெண்டினுக் குய்த்துநோய் தணிப்பான், பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப் பன் மலர் வழிபடக் குறைக்கும், வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்தே வேந்தனுக் குணர்த்த முன் விடுத்தார். இ-ள். செறிந்தஇலையையுடைய பலவின்சுளையையும், வாழைப் பழத்தையும் புள்ளியையுடைத்தாய் ஆண்டுவாழும் அலவன் நிறைந்த சூலையுடைய பெடைக்குக்கொடுத்து அதன் வேட்கையைத்தணித்தற்கு நத்தையையுமாமையையு மிதித்து மலரை வழியாம்படிகுறைக்கும் விதையத்தைச்சேர்ந்து வேந்த னுக்கு அறிவிக்கும்படி முன்னே யாள்விட்டாரென்க. (8) 2110. வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற் பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென், றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங் கிறைவனுந் தமர்களைப் பணிப்ப, நாட்டகத் தமிர்து நளிகடலமிர்து நல்வரையமிர்தமு மல்லாக், காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக் கண்ணகன் புறவெதிர் கொண்டார். வீட்டிடம்-விகாரம். “வில்லக விரலிற் பொருந்தி” (குறுந்.370) என்றார் பிறரும். இ-ள். இறைவனுந் தன்னாட்டவர்க்கு விடுதலையுடைய இடங்கடோறும் விற்பிடித்த விரல்போற் கிட்டிநின்று சேர வெதிர்கொள்கவென்று நினைப்பிட்டுத்திருவெழுத்துச் சாத்தித் திருமுகங்கொடுத்துக் காரியப்பெயரையுமேவ, அவரும் அமிர்து களைக்குவித்து முல்லைநிலத்தேசென்று எதிர்கொண்டா ரென்க. நாட்டிலமிர்து: “செந்நெற் சிறுபயறு சேதா நறுநெய்தீங்-கன்னற் கதலியோடைந்து.” கடலமிர்து: “ஓர்க்கோலை சங்க மொளிர்பவள மொண்முத்த-நீர்ப்படு முப்பினோ டைந்து.” வரைய மிர்து: “தக்கோலந் தீம்பூத் தகைசா விலவங்கங்-கற்பூரஞ் சாதியோ டைந்து.” காட்டில மிர்து: “அரக்கிறால் செந்தே னணிமயிற் பீலி திருத்தகு நாவியோ டைந்து.” அமிர்தென்றது பொருள்களை. (9) 2111. பொருமத யானைப் புணர்மருப் பேய்ப்பப் பொன்சுமந் தேந்திய முலையா ரெரிமலர்ச் செவ்வாய் திறந்துதே னூற வேத்துவார் பூக்கடூய்த் தொழுவார் வருகுலைக் கமுகும் வாழையு நடுவார் வரையுமி ழாவிபோன் மாடத் தருநறும் புகையு மேந்துவா ரூர்தோ றமரர்த முலகமொத் ததுவே. ஆவி-நெட்டுயிர்ப்பு. இ-ள். ஊர்தோறும் பூணைச்சுமந்து மருப்பேய்ப்ப ஏந்திய முலையார் ஏத்துவார் தொழுவார் ஏந்துவாராக, ஆடவர் கன்னிக் கமுகும் வாழையும் நடுவாராக, நாடு தேவருலகத்தை யொத்த தென்க. இனி நகரின்செய்தி கூறுகின்றார். (10) வேறு 2112. பாடி னருவிப் பயங்கெழு மாமலை மாட நகரத் துவாயிலுங் கோயிலு மாடம் பலமு மரங்கமுஞ் சாலையுஞ் சேடனைக் காணிய சென்றுதொக் கதுவே. பாடினருவி-ஒலியினியவருவி. உலகைத் தாங்குமவனாதலின், சேடனென்றார். இ-ள். சேடனைக்காண்டற்கு மலைபோலுமாடத்தை யுடைய நகரிடத்து வாயின் முதலியவற்றிலே ஊர்தொக்கதென்க. அம்பலம்-பலருங்கூத்துக்காணுமிடம். அரங்கம்-நாடகமாடுமிடம். (11) 2113. பல்கதி ராரமும் பூணும் பருமித்துக் கொல்சின வெந்தொழிற் கோடேந் திளமுலை நல்லெழின் மங்கையர் நன்னுதற் சூட்டிய வெல்கதிர்ப் பட்டம் விளங்கிற் றொருபால். இ-ள். ஆரத்தையும் பூணையும் பலபிரகாரமாக வணிந்து இளமுலையாகிய கோட்டையேந்திய மங்கையராகிய யானைகளின் நுதலிற்சூட்டிய பட்டம் ஒருபக்கம் விளங்கிற்றென்க. (12) 2114. சுண்ணமுஞ் சூட்டுஞ் சொரிந்து வார்குழற் கண்ணி மகாரொடு காற்சிலம் பார்த்தெழ வண்ணலைக் காணிய வார்வத்திற் போதரும் வண்ண மகளிர் வனப்பிற் றொருபால். இ-ள். ஒருபக்கம், அண்ணலைக் காணவேண்டிச் சுண்ணத்தையுஞ் சூட்டையுங் கண்ணியையுஞ் சொரிந்து குலைகின்ற குழலையுடைய மகாரையெடுத்துக்கொண்டு சிலம்பொலிப்ப ஆர்வத்தோடே போதும் மகளிர் வனப்பினை யுடைத்தென்க. தலையிற் சுண்ண மணிந்தார், மகாராதலின். (13) 2115. எதிர்நலப் பூங்கொடி யெள்ளிய சாயற் கதிர்நல மங்கையர் காறொடர்ந் தோட முதிரா விளமுலை முத்தொடு பொங்க வதிரரிக் கிண்கிணி யார்க்கு மொருபால். இ-ள். ஒருபக்கம், தோற்றின நலத்தையுடைய கொடியையிகழ்ந்த சாயலினையுங் கதிர்த்த நலத்தையுமுடைய மங்கையர் தம்முலைகள் முத்தோடு கோபிக்க ஓடலின், இடைமுரியுமென்று நடுங்கின கிண்கிணி யிங்ஙனம் போகன்மினென்று காலைக்கட்டிக் கொண்டு கூப்பிடுமென்க. முத்தொடுபொங்குதல்-முத்துவடம்புடைத்தற்குக் கோபித்தல். (14) 2116. கருங்க ணிளமுலை கச்சற வீக்கி மருங்கு றளர மழைமருள் மாட நெருங்க விறைகொண்ட நேரிழை யார்தம் பெருங்க ணலமரும் பெற்றித் தொருபால். இ-ள். ஒருபக்கம், முலையைக் கச்சாலிறுக வீக்கியிடைதளரவந்து மாடத்தே தங்குதல்கொண்ட மகளிர்கண்கள் இவனைக்காண்டற்கு இடம்பெறாது அலம்வருந்தன்மையை யுடைத்தென்க. (15) 2117. மின்னு குழையினர் கோதையர் மின்னுயர் பொன்வரை மாடம் புதையப் பொறிமயி றுன்னிய தோகைக் குழாமெனத் தொக்கவர் மன்னிய கோல மலிந்த தொருபால். இ-ள். ஒருபக்கம், ஒளிமிக்க மேருப்போலுமாடம் புதையும் படி குழையினராய்க் கோதையராய்த் துன்னியதோகையை யுடைய பொறிமயிற் குழாமெனத் தொக்கவர் கோலம் மிக்க தென்க. (16) 2118. பாடன் மகளிரும் பல்கலை யேந்தல்குல் ஆடன் மகளிரு மாவண வீதிதொ றோட வுதிர்ந்த வணிகல முக்கவை நீடிருள் போழு நிலைமைத் தொருபால். இ-ள். ஒரு பக்கம், பாடன் மகளிரும், ஆடன் மகளிரும், ஓடுதலிற் கழன்ற கலம் சிந்தினவை நிலைபெற்ற இரவினிருளைக் கெடுக்கும் நிலைமைத்தா யிருந்ததென்க. குடைமுதலியவற்றின் இருளுமாம். ஆடு-வெற்றி. (17) 2119. கோதையுந் தாரும் பிணங்கக் கொடுங்குழைக் காதன் மகளிரு மைந்தருங் காணிய வீதியு மேலும் மிடைந்து மிடைமலர்த் தாதடுத் தெங்குந் தவிசொத் ததுவே. இ-ள். மைந்தருமகளிருங் காதலால் இவனைக்காண்டற்குத் தம்மாலைகள் பிணங்கும்படி வீதியிலும் மேலுமிடைதலின், அம்மலரிற் றாதுநெருங்கி யெங்குந் தவிசை யொத்ததென்க. (18) 2120. மானக் கவரி மணிவண் டகற்றவங் கானை யெருத்தத் தமர குமரனிற் சேனைக் கடலிடைச் செல்வனைக் கண்டுவந் தேனை யவரு மெடுத்துரைக் கின்றார். மானக்கவரி- “மயிர்நீப்பின் வாழாக் கவரி;” (குறள்.969) ஆகுபெயர். இ-ள். அவ்வீதியிடத்திற் சேனைக்கடலிடையிலே யானை யெருத்தத்தே தேவகுமரனைப்போலே சாமரைவீசவிருந்த செல்வனைக் கண்டு உவந்து எல்லாரும் எடுத்துச்சொல்லா நின்றாரென்க. (19) 2121. தேமல ரங்கட் டிருவே புகுதக மாமலர்க் கோதை மணாளன் புகுதக காமன் புகுதக காளை புகுதக நாம வெழில்விஞ்சை நம்பி புகுதக. 2122. மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதக வின்றேன் கமழ்தா ரியக்கன் புகுதக வென்றோன் புகுதக வீரன் புகுதக வென்றே நகர மெதிர்கொண் டதுவே. இவையிரண்டுமொருதொடர். மலரிடத்துத் திரு. மலரங்கண்-மலர்போலுங்கண்ணு மாம். உவப்பின்கட்பான்மயங்கிற்று. இ-ள். திருப் புகுதுக, திருமால் புகுதுக, காமன் புகுதுக, காளை புகுதுக, விச்சாதரகுமரன் புகுதுக, மேகத்தைத்தீண்டின வரையைப் பிளந்தமுருகன் புகுதுக, இயக்கன்புகுதுக, அருகன் புகுதுக, வீரன் புகுதுக வென அந்நகரி எதிர்கொண்டதென்க. கோதை-திரு. இலக்கணையுமாம். புகுதக-ஒருசொல் விழுக்காடு. (20-21) 2123. இடிநறுஞ் சுண்ணஞ் சிதறியெச் சாருங் கடிகமழ் மாலையுங் கண்ணியுஞ் சிந்தித் துடியடு நுண்ணிடைத் தொண்டையஞ் செவ்வாய் வடியடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார். இக்கவிமுதல் “என்னோர்” என்னுங்க வியளவுமொரு தொடர். இடையினையும், வாயினையுமுடைய கண்ணியர் எவ்விடமும் இடித்த சுண்ணத்தைச்சிதறி, மாலையையுங் கண்ணியையுஞ்சிந்தி வாழ்த்தி நிற்பார். 2124. சுரும்பிமிர் மாலை தொழுவனர் நீட்டி யிரும்பிடி நின்னடை கற்ற வெமக்கு விரும்பினை யாய்விடின் மெல்ல நடமோ கருங்கணிற் காமனைக் காணமற் றென்பார். பிடியைத்தொழுவாராய் மாலையைநீட்டி, யிரும்பிடி, நின்னடையை வேண்டிக் கற்றவெமக்கு அன்புற்றாயாயிற் காமனை இக்கண்ணாலே காணும்படி மெல்ல நடப்பாயாக வென்பார். இது பிடிக்கு முன்னின்றமகளிர் கூற்று. 2125. மடநடை பெண்மை வனப்பென்ப தோராய் கடுநடை கற்றாய் கணவ னிழப்பாய் பிடியலை பாவியெனப்பூண் பிறழ்ந்து புடைமுலை விம்மப் புலந்தனர் நிற்பார். இது பிடிக்குப்பின்னின்றமகளிர்கூற்று. பெண்மைக்கழகு மென்டையென்பதோராயாய்க் கடிய நடையைக் கற்றநீ கணவனையிழக்கக்கடவை; பாவி, நீதான் பிடியல்லை யென்றுகூறி, அதுபோன வழியை மெய்யைச் சாய்த்துப் பார்த்தலிற் பூணும் பிறழ்ந்து முலையுமொரு பக்கத்தே விம்மவெறுத்துநிற்பார். 2126. மயிர்வாய்ச் சிறுகட் பெருஞ்செவி மாத்தாட் செயிர்தீர் திரள்கைக் சிறுபிடி கேள்வ னயிரா வணத்தொடு சூளுறு மைய உயிர்கா வலற்கொண் டுதவநில் லென்பார். மயிரையுடைய வாய் முதலியவற்றையுடைய சிறுபிடி, நின்கேள் வனாகிய ஐராவணத்தோடே சூளுறுவோம்; இனிச் சூளுறாதபடி ஐயனாகிய உயிர்காவலெனைக் கொண்டு அவன் எமக்கு அதவும்படி நில்லென்பார். ‘சூளுறும்’ என்பது, ‘சேலும்’ என்றாற்போலப் பன்மை யுரைக்கும் தன்மைச் சொல். 2127. கருனைக் கவளந் தருதுங் கமழ்தார் அருமை யழகிற் கரசனை நாளைத் திருமலி வீதியெஞ் சேரிக் கொணர்மோ எரிமணி மாலை யிளம்பிடி யென்பார். இளம்பிடியே, பெறுதற்கரிய, அழகிற்கு அரசனானவனை எம்சேரியில் வீதியிலே நாளைக் கொணர்வாயாக; கொணர்ந் தாள், கருணையையுடைய கவளத்தைத் தருவேமென்பார். 2128. என்னோர் மருங்கினு மேத்தி யெரிமணிப் பொன்னார் கலையினர் பொற்பூஞ் சிலம்பினர் மின்னார் குழையினர் கோதையர் விதியுள் மன்ன குமரனை வாழ்த்தி மகிழ்ந்தார். ஏத்துதல் - புகழ்தல், வாழ்த்துதல் - பல்லாண்டு முதலியன கூறல். இ-ள். அந்நகரில் வீதியிலே சிலமகளிர் வாழ்த்துபு - நிற்பார், நடமோ வென்பார், புலத்தனர் நிற்பார், நில்லென்பார், தருது மென்பாராய்க் கலையினராய்ச் சிலம்பினராய்க் குழையினராய்க் கோதையராய் மருங்கில் நின்ற எல்லோரும் அரசகுமரனை ஏத்தி வாழ்த்தி மகிழ்ந்தாரென்க. (22-27) வேறு 2129. விளங்குபாற் கடலிற் பொங்கி வேண்டிரை எழுவவேபோற் றுணங்கொளி மாடத் துச்சித் துகிற்கொடி நுடங்கும் வீதி உளங்கழி; துருவப் பைந்தார் மன்னவன் கோவில் சேர்த்தான் இளங்கதிர் பருதி பௌவத் திறுவரை யிருந்த தொத்தான். இ-ள். இளங்கதிர் ஞாயிறு கடலிடத்து உதயகிரியிலே யிருந்த தன்மையை யொத்தவன், பாற்கடலிற் வெண்டிதை பொங்கி யெழுவன போல மாடத்துச்சியிற் கொடி நுடங்கும் வீதியினடுவே போய் மன்னவன் கோயிலைச் சேர்ந்தானென்க. (28) 2130. இழையொளி பரந்த கோயி லினமலர்க் குவளைப் பொற்பூ விழைதகு கமல வட்டத் திடைவிராய்ப் பூத்த வேபோற் குழையொளி முகமுங் கோலக் கொழுங்கயற் கண்ணுந் தோன்ற மழைமின்னு குழாத்தின் மாலை மங்கையர் மயங்கி நின்றார். இ-ள். கோயின் மங்கையற், கமலப் பூவின் வட்டத்திடையே குவளை விராய்ப் பூத்ததுபோல முகமும் கண்ணுந்தோன்ற மெய்ம் மறந்து மின்றிரள்போல கலந்து நின்றாரென்க. (29) 2131. எரிக்குழாஞ் சுடரும் வைவே லந்தலைக் கண்டு கோயிற் திருக்குழா மனைய பட்டத் தேவியர் மகிழ்ந்த செய்ய வரிக்குழ நெடுங்க ணாரக் கொப்புளித் துமிழ வம்பூ விரைக்குழாத் தேனும் வண்டுமுன் டொழுக நின்றார். இ-ள். பட்டத் தேவியர், ஏந்தலை நெடுங்கண்ணாலே கண்டு இங்ஙனம் ஒருமகனைப் பெற்றேமேயென்று மகிழ்ந்து மாலையிடத்தே மறைந்து நின்றாரென்க. பூவி;ல விரையொழுகுதலாலே தேனும் வண்டும் முதற் கொப்புளித்துப் பின் ஆரவுண்டு உமிழும்படி திரளுதலையுடைத்தாகிய மாலையென்க. (30) 2132. அலங்கறா தவிழ்ந்து சோர வல்குற்பொற் றோரை மின்னச் சிலம்பின்மேற் பஞ்சி யார்ந்த சீறடி வலத்த தூன்றி நலத்துறை போய நங்கை தோழியைப் புல்லி நின்றாள் இலங்கொளி மணித்தொத்தீன்ற வேந்துபொற் கொடிபொடொப்பாள். அவிழ்த்து - அவிழ. இ-ள். மாணிக்கக் கொத்தையீன்ற பொற்கொடியோடு ஒப்பாலாகிய அழகின் கூறெல்லாம் நிரம்பிய நங்கை தாதுசோர, அலங்கலவிழ, அல்குற் பொன் வடமின்ன இடைக்காலிற் சிலம்பின் மேலே வலத்தாகிய சீறடியை ஊன்றித் தோழியை சார்ந்துநின்றா என்க. (31) 2133. தாமரைப் போதிர் பூத்த தன்னுறுங் குவளைப் பூப்போற் காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண் டம்மாற் றேமலர் மார்பி னான நோக்கினாள் செல்வன் மற்றப் பூமலர்க் கோதை நெஞ்ச மூழ்கிப்புக் கொளித்திட் டானே. இ-ள். அவள், தாமரைப் பூவிலே பூத்த குவளைப் பூப்போலே முகத்திலே பொலிவுபெற்ற கண்ணாலே மார்பினானை நோக்கினாள்; அவனும் அவள் நெஞ்சிலே மறைந்து புக்கு அவ்விடத்தினின்றும் போந்து கட்புலனாகாமை யாயினா னென்க. மூழ்கவெனத்திரிந்து, நெஞ்சிலே புக்கு மூழ்க ஒளித்தா என்றுமாம் (32) வேறு 2134. விண்ணாறு செல்வார் மனம்பேதுறப் போந்து வீங்கிப் பண்ணாறு சொல்லாண் மூலைபாரித்த வென்று நோக்கக் கண்ணாறு சென்ற களியைங்கணைக் காமனன்ன புண்ணாறு வேலான் மனமூழ்கினள் பொன்ன னாளே. தேவருலகிலே சாசாரனென்னுந் தேவர்கோவாயிருந்து போது கின்ற பொழுது அத்தேவர் இவன்போகின்றானென்று மனம்வருந்தும்படி போந்து இவ்வுலகிலே கண்ணுக்குப் புலனா தலைப் பொருந் தினானொரு காமனை யொத்த சீவகனென்று தேவர் இவனை வியந்து கூறினார். புண்டோற்றுதற்குக் காரண மானவேலான். இ-ள். வேலான் பண்டோற்றுஞ்சொல்லாள்முலை வீங்கிப் பாரித்த வென்று நோக்கினானாக, அவன்மனத்தே யவள் மறைந்தாளென்க. இனி அமிர்த கலசம்போந்தென்றால் முலையைக்கண்டு தேவர் வருந்தினாரென்றே பொருடருதலிற் குற்றமாம். (33) 2135. மைதோய் வரையி னிழியும்புலி போல மைந்தன் பெய்தாம மாலைப் பிடியின்னிழிந் தேகி மன்னர் கொய்தாம மாலைக் கொழும்பொன்முடி தேய்த்தி லங்குஞ் செய்பூங் கழலைத் தொழுதான்சென்னி சோர்த்தி னானே. இ-ள். மைந்தன் வரையினின்றிழியும் புலிபோலே பிடியினின் றிழிந்து போய் மாமனை முதற் கையாற்றொழுதான்; தொழுது மன்னர்முடிதேய்த்தலாலே இலங்கும் அவனடியைத் தன்சென் னியிலே சேர்த்தினானென்க. கொய்த ஒழுங்குபட்ட மாலையினையுடையமன்னர். கழல்-ஆகுபெயர். (34) 2136. பொன்னங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோண் மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித் தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்த மின்னும் மணிப்பூண் விரைமார்ப நனைப்ப நின்றான். குவட்டின்-குவடுபோல இ-ள். மன்னன் மருமானை விடாமற்றோளாற்புல்லி யன்பு மிகுதலிற் றான் அழுதகண்ணீர் அவன்மார்பை நனைக் கும்படி நின்றா னென்க. (35) 2137. ஆனாது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாந் தானாது மின்றி மயங்கித்தடங் கண்பெய் மாரி தேனார் மலரீர்த் தொழுகச்சிலம் பிற்சி லம்புங் கானார் மயிலின் கணம்போற்கலுழ்வுற்ற தன்றே. இ-ள். வேந்தன் றானென்கின்றதன்மை யாதுமின்றி மயங்கி ஆனாதழுதானென்றுகருதிக் கோயிலெல்லாம் மலையிலழுகின்ற மயிற்றிரள்போலே கண்பெய்த மாரி மலரீர்த்தொழுகும்படி யழுதலுற்றவென்க. (36) 2138. பகைநரம் பிசையும் கேளாப் பைங்கதிர்ப் பசும்பொற் கோயில் வகைநலம் வாடியெங்கு மழுகுரன் மயங்கி முந்நீர் அகைமடை திறந்த தேபோ லலறக்கோக்கிளைய நங்கை மிகைநலத் தேவி தானே விலாவணை நீக்கினாளே. இ-ள். நரம்பிசையிற் பகையும் கேட்டறியாத கோயிலுள்ளார் சச்சந்தன் தன்மையைக் கேட்டலின், அழகுவாடி அழுகுர லெங்கும் கலந்து கடலிடத்துக் கரையைத் திறந்தாற்போல அலறுதலிற் கோவுக்கு இளைய நங்கையாகிய விசயை தானே வந்து அழுகையை நீக்கினானென்க. மிகையாகிய குணத்தையுடையதேவி. 2139. பல்கதிர் மணியும் பொன்னும் பவளமுங் குயிற்றிச் செய்த செல்வப்பொற் கிடுகு சூழ்ந்த சித்திர கூட மெங்கு மல்குபூந் தாமந் தாழ்ந்து மணிப்புகை கமழ வேந்தன் வெல்புகழ் பரவ மாதோ விதியுளி யெய்தி னானே. இ-ள். மணிமுதலியவற்றையழுத்திச்செய்த கிடுகுகள் சூழத் தூக்கின சித்திர கூடமெங்குந் தாமந்தாழப்பட்டுப் புகைகமழா நிற்க, ஏத்தாளிகள் புகழைப்பரவ, வேந்தன் முறையாலே அதனைச் சேர்ந் தானென்க. (38) 2140. எரிமணி யடைப்பை செம்பொற் படியக மிலங்கு பொன்வாள் கருமணி முகடு வேய்ந்த கஞ்சனை கவரி கொண்ட வருமுலை மகளிர் வைத்து வான்றவி சடுத்து நீங்கப் பெருமக னெண்ணங் கொள்வா னமைச்சரோ டேறி னானே. படியகம்-படிக்கம். கஞ்சனை-கலசப்பானை. காஞ்சனக் கவரி பாடமாயின் பொற்காம்பிட்ட கவரியென்க. இ-ள். அவனெய்தினபின்பு அடைப்பைமுதலியவற்றைக் கொண்ட மகளிர் அவற்றை ஆசனத்தருகே வைத்து நீங்க. சீவகன் மாமனுடனே காரியம் விசாரித்தற்கு அவனமைச்சருடனே சென்றேறினானென்க. (39) 2141. உலந்தநா ளவர்க்குத் தோன்றா தொளிக்குமீன் குளிக்குங் கற்பிற் புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப் புதவிநாட் பயந்த நம்பி சிலம்புநீர்க் கடலந் தானைச் சீதத்தற் கரசு நாட்டிக் குலந்தரு கொற்ற வேலான் கொடிநகர் காக்க வென்றான். இ-ள். அவ்வளவிலே கோவிந்தன், நாளற்றவர்க்குத் தோன்றாதே மறையும் அருந்ததிதோற்குங் கற்பினையும், வேலைப் புலந்த கண்ணினையும், வாயினையுமுடைய புதவியென்னுந் தேவிபயந்த நம்பியாகிய சீதத்தனுக்கு நல்லநாளிலே அரசைநாட்டி நீயிந்நகரைக் காப்பாயாகவென்றானென்க. குலந்தருதல்-புதல்வற்பயந்து மேலுங்குலத்தைவளர்த்தல். தான் அக்கடன் கழித்துப் பொருதுபடக்கருதுதலின், அதற்கு அமைச்சருடன் படாரொன்று அவரை வினவாது தானே யரசளித்தான்; “வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க்-கருங் கடனிறுத்த செருப்புகன் முன்ப” (பதிற்.74) என்றார்போல. (40) 2142. மாற்றவ னொற்ற ரொற்றா வகையினின் மறைய நம்பிக் காற்றின தோழர்க் கெல்லா மணிகல மடிசி லாடை வேற்றுமை யின்றி வேண்டூட் டமைத்தன னருளி யிப்பா லேற்றுரி முரச நாண வெறிதிரை முழக்கிற் சொன்னான். இ-ள். பகைவனொற்றர் ஆராயாத கூற்றாலே மறையும்படி சீவகற்குதவிய தோழர்க்கெல்லாம்அணிகல முதலியவற்றைச் சீவகற் கமைத்தாற்போல அமைத்தனனாய்த் தலையளி செய்து விட்டு இப்பால் வென்ற ஏற்றினுரிபோர்த்த முரசநாணத் திரை முழக்குப்போல் ஒரு மொழி கூறினானென்க. வேண்டூட்டடிசில்-தாந்தாம் விரும்பப்படுகின்ற பொருள்களை யுடையவடிசில். இன்றி-இன்றாக. “வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண்பிணி முரசம்”(புறநா.288) என்றார்பிறரும். நீகொன்ற சீவகன்றோழர்க்குக் கோவிந்தன் சிறப்புச் செய்தா னென்று ஒற்றர் கட்டியங்காரற்குக்கூறினால் மேலுறவாகி யாங்கொலை சூழ்கின்றது தவறுமென்றுகருதி மறையக்கொடுத்தான். சீவகன் வேறோர் வேட மாதலின், அவனை ஒற்றாலாகாதாம். (41) 2143. கட்டியங் கார னம்மைக் காண்பதே கரும மாக வொட்டித்தான் விடுத்த வோலை யுளபொரு ளுரைமி னென்னத் தொட்டுமேற் பொறியை நீக்கி மன்னனைத் தொழுது தோன்ற விட்டலர் நாகப் பைந்தார் விரிசிகன் கூறு மன்றே. இ-ள். தன் மைத்துனன் அரசவுரிமையைக் கோவிந்தனே யெய்தக் கருத்து டையனென்று தான்கருதிக் கட்டியங்காரன்றான் கருத்தறிதலே காரியமாகத்துணிந்து வரவிட்ட வோலையிலுள்ள காரியத்தை நீருரைமினென்ன, விரிசிகன் அவ்வோலையை யெடுத்து மேலிட்ட இலச்சினையைவாங்கி யரசனைத் தொழுதுதோன்றக் கூறாநின்றானென்க. (42) 2144. விதையத்தார் வேந்ததன் காண்க கட்டியங் கார னோலை புதையவிப் பொழிலைப் போர்த்தோர் பொய்ப்பழி பரந்த தென்மேற் கதையெனக் கருதல் செய்யான் மெய்யெனத் தானுங் கொண்டான் சிதையவென் னெஞ்சம் போழ்ந்து தெளிப்பினுந் தெளிநர் யாரே. இ-ள். கட்டியங்காரனோலையை விதையத்தார்வேந்தன் காண் பானாக, ஓர் பொய்ப்பழி, உலகிலுள்ளோரறிவைக் கெடுத்து என்மேலே கிடந்ததனைத் தானுமுட்படப் பொய் வார்த்தையென்று கருதுதலைச் செய்யானாய் மெய்யென்று கொண்டான்; இனி என்னுயிர்கெடும்படி யென்மனத்தைப் பிளந்துகாட்டித் தெளிவித்தாலும் வேறு தெளி வாரில்லை; ஆயினுந் தானாதலிற் றெளிவிக்கின்றேனென்க. (43) 2145. படுமணிப் பைம்பொற் சூழிப் பகட்டின மிரியப் பாய்ந்து கொடிநெடுந் தேர்க ணூறிக் கொய்யுளை மாக்கள் குத்தி யிடுகொடி யணிந்த மார்ப ரிருவிசும் பேறச் சீறி யடுகளிற் றசனி வேக மலமர வதனை நோனான். 2146. நூற்றுவர் பாகர் தம்மைப் பிளந்துயி ருண்ட தென்னு மாற்றத்தைக் கேட்டுச் சென்று மதக்களி றடக்கி மேற்கொண் டாற்றலங் கந்து சேர்த்தி யாப்புற வீக்கும் போழ்திற். கூற்றென முழங்கி வீழ்த்துக் கொல்லக்கோ லிளகிற் றன்றே. இவையிரண்டுமொருதொடர். எழுதுகொடி யணிதற்குக் காரணமான மார்பர்; வீரத்திற்குக் கொடியெடுத்தன் மரபு. இ-ள். அசனிவேகம் பாய்ந்து நூறிக் குத்திச் சீறிச் சுழல, அதனைப்பொறானாய்ப் பாகரை யேவினானாக, அது பாகர் நூற்றுவரைக் கொன்றதென்கின்ற வார்த்தையைக்கேட்டுச் சென்றுதான் அதனையேறிக் கந்திலே சேர்த்திக் கட்டுகின்ற வளவிலே, வீழ்த்துக் கூற்றெனக்கோறலின், அரசன்பட்டா னென்க. கோலிளகிற்று-மங்கலமரபு. (44-45) 2147. தனக்கியா னுயிரு மீவேன் றான்வரப் பழியு நீங்கு மெனக்கினி யிறைவன் றானே யிருநிலக் கிழமை வேண்டி நினைத்ததுத்தா னெடிதல் செல்லா தென் சொலே தெளிந்து நொய்தாச் சினக்களி யானை மன்னன் வருகெனச் செப்பி னானே. இ-ள். மன்னன் உலகங்கூறும்பொய்யைநினைத்துத் தான்றா ழாதே யான் தெளித்த சொல்லையே தெளிந்து தான்வந்து தெளியப் பழியு நீங்கும்; தனக்கு யானுயிரையுமுட்படத் தருவேன்; இனி எனக்கிறைவன் றானேயாதலின், இந்நிலக்கிழமையை விரும்பிக் கடுக வருகவென்று விரிசிகன்வாசித்தானென்க. வருகவென்னுமளவும் ஓலைப்பாசுரம். நெடித்தல்-விகாரம். உயிரு மீவேனென்றது ஊழ்கூறுவித்தது. (46) 2148. ஒலையுட் பொருளைக் கேட்டே யொள்ளெயி றிலங்க நக்குக் காலனை யளியன் றானே கையினால் விளிக்கு மென்னா நூல்வலீ ரிவனைக் கொல்லு நுண்மதிச் சூழ்ச்சி யீதே போல்வதொன் றில்லை யென்றான் புனைமணிப் பொன்செய் பூணான். இ-ள். அவ்வோலையிற்காரியத்தைச் சீவகன்கேட்டு நக்குத் தானே காலனைக் கையால்விளிக்குமென்று தன்னிலேகருதி, நூல்வலீர், இவனைக்கொல்லுதற்குக் காரணமானசூழ்ச்சி யிது போல்வது வேறில்லையென்றானென்க. மதியாற்சூழுஞ்சூழ்ச்சியீதென்றது-நட்பாய்ப் போகின்ற தனை. (47) 2149. கள்ளத்தா னம்மைக் கொல்லக் கருதினா னாமுந் தன்னைக் கள்ளத்தா லுயிரை யுண்ணக் கருதினே மிதனை யாரு முள்ளத்தா லுமிழ வேண்டா வுறுபடை வந்து கூட வள்ளுவார் முரச மூதூ ரறைகென வருளி னானே. இஃது அதுகேட்ட கோவிந்தன்கூற்று. வள்ளுவார்-பெயர்த் திரிசொல். இ-ள். யாவர்சிலரும் உள்ளத்தினின்றுந் தோற்றுவிக்க வேண்டா; கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினான்; நாமும் அவனை யங்ஙனங்கருதினோமாதலின், இந்நட்பை முதற்சாற்றிப் பின்பு படைகூடும்படி சாற்றி யூரிலே முரசறைவிக்க வென்று கோவிந் தனருளிச்செய்தானென்க. (48) 2150. கட்டியங் காரனோடு காவல னொருவ னானான் விட்டுநீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் விளைவ கூறி னொட்டல னிறைவன் சொன்னீர் நாநும வல்ல வென்னக் கொட்டினான் மணிக்கண் வள்வார்க் குளிறிடி முரச மன்றே. மேல்விளையுங்காரியங்களைச் சொல்லுநீர்மையை யுடைய நாக்கள் அவற்றைக் கூறின், அந்நா நும்முடையனல்லவென்று அறிவுடையோர் அறிவில்லார்க்குக் கூறும்படியாகச் சாற்றினா னென்க. இது முரசறைவான் கூற்றெனிற் பகைமை கூறிற்றேயா மாதலின், அவன்கூற்றன்று. இ-ள். காவலன் பகையைவிட்டுக் கட்டியங்காரனோடு உறவானான்; இனி அவ்விறைவன் நெல்லும்பொன்னும் வழங்கா திருத்தற்கு உடம் படானாதலின், நீர் அவற்றை யிரண்டு நாட்டிலும் ஒக்கவழங்கு மினென்று உறவுதோன்ற முதற் சாற்றினானென்க. (49) 2151. விண்டவ ருடலங் கீறிச் சுளித்துநின் றழலும் வேழ மொண்கொடி யுருவத் திண்டே ரொளிமயிர்ப் புரவி பண்ணி வண்கழ லணிந்து மள்ளர் வாள்வலம் பிடித்து நாளைத் தெண்டிரைப் பரப்பு நாணத் திருநகர்த் தொகுக வென்றான். இ-ள். மள்ளர் வேழமுதலியவற்றைப்பண்ணி யணிந்து பிடித்து நாண நாளை நகரிலே தொகுவாராகவென்று பின்பு சாற்றினானென்க. (50) 2152. ஏற்றுரி போர்த்த வள்வா ரிடிமுர சறைந்த பின்னாட் காற்றெறி கடலிற் சங்கு முழவமு முரசு மார்ப்பக் கூற்றுடன் றன்ன தானை கொழுநில நெளிய வீண்டிப் பாற்கடற் பரப்பின் வெள்வாட் சுடரொளி பரந்த தன்றே. இ-ள். அங்ஙனஞ்சாற்றின மற்றைநாட் கடல்போன் முரசு முதலியனவார்ப்பத் தானையீண்டுதலிற் பாற்கடல்போலே வாளொளி நகரிலேபரந்ததென்க. (51) 2153. புதையிரு ளிரியப் பொங்கிக் குங்குமக் கதிர்க ளோக்கி யுதையத்தி னெற்றி சேர்ந்த வொண்சுடர்ப் பரிதி போலத் துதையொளி மாடத் துச்சி வெண்குடை நீழற் றோன்றி விதையத்தார் வென்றி வேந்தன் விழுப்படை காணு மன்றே. இ-ள். வேந்தன், செறிந்தவிருள்கெடும்படிகதிரினைப் புறப்பட விட்டுப் பொங்கி யுதயகிரியைச்சேர்ந்த பருதிபோல மாடத்துச்சியிலே குடைநிழலிலே தோன்றிப் படையைக்காணா நிற்குமென்க. (52) வேறு 2154. அரும்பனைத் தடக்கை யபகாத் திரம்வாய் வாலெயி றைந்தினுங் கொல்வ கருங்கடற் சங்குங் கறந்தவான் பாலுங் கனற்றிய காலுகி ருடைய பெரும்புலி முழக்கின் மாறெதிர் முழங்கிப் பெருவரை கீண்டிடுந் திறல திருந்தியே ழுறுப்புந் திண்ணிலந் தோய்வ தீயுமிழ் தறுகணிற் சிறந்த. “இது” முதல் “செம்பொனீண்முடி” அளவுமொரு தொடர். 2155. கவிழ்மணிப் புடைய கண்ணிழ னாறிற் கனன்றுதந் நிழலொடு மலைவ வவிழ்புயன் மேக மனையமும் மதத்த வறுபதிற் றறுபதா நாகம் புகழ்பருந் தார்ப்பப் பூமதம் பொழிவா னின்றன வீராயிரங் கவுள்வண் டிகழ்மதஞ் செறித்த விராயிரத் தைஞ்ஞூ றிளையவு மத்துணைக் களிறே. இவையிரண்டுமொருதொடர். அபரகாத்திரத்திற்குக் “கடாந்திறந்து” (சீவக.806) என்னுங் கவியிற் கூறினாம். இ-ள். கை, பின்கால் முன் கால், தாலவட்டம், கொம்பென் கின்ற ஐந்தாலுங் கொல்வன, சங்கையும் பாலையும் வெண்மையாற்கெடுத்த உகிரை யுடையன, புலி முழக்கினால் எதிரேமுழங்கி யதனைக் காணா மையின், அதுதங்குமலையைக் கிழிக்குந்திறல, ஏழு முழமுந் திருந்தி நிலந்தோயு முறுப்பு மூன்றுநிலந்தோய்வன, சிறந்தன, புடையன, மலைவனவாய்ச் சொரிகின்றநீரையுடையமேகமனைய மதத்த வாகியநாகம் மூவாயிரத்தறுநூறு; புகழும் பருந்துமார்ப்ப, மதம் பொழிதற்கு நின்றன இரண்டாயிரம்; கவுளை வண்டிகழும்படி மதமடைத்தன இரண்டாயிரத்தைஞ்ஞூறு; களிற்றுக் கன்றுகள் இரண் டாயிரத்தைஞ்ஞூறென்க. ஆக யானை பதினாயிரத்தறுநூறு. ஏழும்திருந்தியென முடிக்க. உறுப்புமூன்றாவன: கையும், கோசமும், தாலவட்டமும். இவற்றோடு கால்நான்குங்கூட்டி ஏழுறுப்பு நிலந்தோயுமென் பாருமுளர். (53-54) 2156. குந்தமே யயில்வாள் குனிசிலை மூன்றுங் குறைவிலார் கூற்றொடும் பொருவா ரந்தர மாறா யானைகொண் டேறப் பறக்கெனிற் பறந்திடுந் திறலார் முந்தமர் தம்முண் முழுமெயு மிரும்பு மேய்ந்திட வெஞ்சமம் விளைத்தார் கொந்தழ லஞ்சாக் குஞ்சர மிவர்ந்தார் கோடியே விருத்தியா வுடையார். இ-ள். தீக்கு அஞ்சாத குஞ்சரங்களை யேறினவர்கள் ஏறிகோல், வாள், வில்லென்கின்ற மூன்றிலுந் தாழ்வற்றவராய்க்கூற்றோடும் பொருவாராய் அந்தரவழியாக ஏறும்படி யானையைக் கொண்டு பறக்க வென்னிற் பறக்குந்திறலாராய் முற்பட்டபோலே மெய்ம்முழுதும் இரும்புமேயும்படி சமரத்தை விளைத்தவராய்க் கோடிபொன்னைச் சீவிதமாகவுடையாரா யிருப்பாரென்க. (55) 2157. குங்கும நறுநீர் பந்திநின் றாடுங் குதிரையா றாயிரத் திரட்டி பொங்குவெண் மயிர்சூழ் பொற்படை பொலிந்த வறுபதி னாயிரம் புரவி வெங்கணை தவிர்ப்ப வெள்ளிவெண் படைய வாய்விடி னிலவரை நில்லாப் பைங்கதிர்க் கொட்டைக் கவரிசூழ்ந் தணிந்த பகரினத் தொகையன பாய்மா. இ-ள். புறப்படாமற் பந்தியிலேநின்று குங்குமங்கலந்த பனி நீரையாடும் நம்பிரான் பன்னீராயிரம்; பொற்கலனையாற் பொலிந்த மயிர்சூழ்புரவி யறுபதினாயிரம்; தம்மேலிருந் தெய்தவம்பைப் பின்னிடுவன, வெள்ளிக்கலணையுடையன, குசையை நெகிழவிடிற் பறப்பனவாய்ச் சூழ்ந்த கவரியணிந்த பாய் மாக் கூறின், அறுபதினாயிர மென்கின்ற எண்ணையுடைய வாயிருக்குமென்க. ஆகக்குதிரை நூறாயிரத்து முப்பத்தீராயிரம். (56) 2158. வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப் பூப்போன் மிடைந் தொளிர் குந்தமும் வாளுந், தோநிலை யரவின் றோற்றமே போலுஞ் சிலைகளும் பிறகளுந் துறைபோ, யூனமொன் றில்லா ருயர்குடிப் பிறந்தாராயிர மடுகளங்கண்டார், பானிலாப் பூணார் படைத் தொழிற் கலிமாப் பண்ணுறுத் தேறினா ரவரே. இ-ள். மூங்கில்போலுங் கரும்பினது பூப்போலுங் குந்த முதலியவற்றையும் ஒழிந்தவற்றையும் முற்றக்கற்றுப் பிறகுறை வற்றார், குடிப்பிறந்தார், களங்கண்டார், பூணாராகியவவர் அம்மாவைப் பண்ணி யேறினாரென்க. தோம்-குற்றம். இனி யேறினாராகிய அவர் இத்தன்மைய ரென்றுமாம். (57) வேறு 2159. தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசான் மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற் குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய. 2160. பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த பாரிற் றேர்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச் சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம். இவையிரண்டுமொருதொடர். இ-ள். மாளவதேசத்திடத்தனவாகிய துரகம் ஆண்மைய, நிறத்தன, வெண்குளம்புடையவாயிருக்கும்; சிந்துவின் கரையன வாகியதுரகம் பறையொலிபோல முழங்குவ, நாவலின்கனி போலுங் கோலத்த வாயிருக்கும்; பாரசூரவம் பல்லவமென்னும் பதியிற்பிறந்ததுரகம் ஆற்றல, நிறத்த, விண்புகுவனவாயிருக்கு மென்க. வீரத்தை நடத்துதலை யுடையன. (58-59) 2161. பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை. மாலை-ஒழுங்கு. மாரட்டமென முதலெழுத்தை நெடிலாக வோதுக; மரட்டம். இ-ள். மாரட்டதேசத்திடத்தனவாகிய குதிரைகள் மயிற் கழுத்துப் போலும் நிறத்தனவாயிருக்கும்; கலத்தின் வந்திழிந்தன குதிரைகள் கிளிபோலுநிறத்தனவாய்ப் பவளக் குளம்புடையன வாயிருக்குமென்க. (60) 2162. இன்ன பொங்குளைப் புரவிபண் ணுறுத்தன வியற்றேர் பொன்னும் வெள்ளியு மணியினும் பொலிந்து வெண் மதியந் தன்னை யூர்கொண்ட தகையன தொகைசொலி னறுநூ றென்னு மீறுடை யிருபதி னாயிர மிறையே. மதி-குறட்டிற்குவமம். பரிவேடிப்பு-சூட்டிற்குவமம். இ-ள். தகையனவாய்ப் பொன்முதலியவற்றாற் புனையப் பட்டு இத்தன்மைய வாகியபுரவி பண்ணுறுத்தனவாகிய தேர்த் தொகை சொலின், அறுநூறென்னுமெண்ணினை யீற்றிலே யுடைய இருபதினாயிரமென்க. இறையே-விளி. (61) 2163. நொச்சி மாமலர் நிறத்தன நொடிவரு முந்நீ ருச்சி மாக்கதிர் போற்சுடு மொளிதிக ழயில்வா ளெச்சத் தல்லவு மெறிபடை பயின்றுத மொன்னார் நிச்சங் கூற்றினுக் கிடுபவர் தேர்மிசை யவரே. புகரால்நொச்சிமலர்போலு நிறத்தனவாய் முந்நீரை மாக்கதிர் உச்சியிற்சுடுமாறு போலச் சுடும் ஒளிதிகழ்வாளென்க. எச்சத்து நொடிவருமென்க. இ-ள். தேராட்கள் தமக்குரிய வில்லொழிந்தவிடத்துக் கற்றற் குரியரென்று கூறுதல்வரும் வாளையும் அல்லாத படைகளையும் உட்படப்பயின்று தம்பகைவரை நிச்சங் கூற்றினுக்கு விருந்தாக விடுபவராயிருப்பாரென்க. (62) வேறு 2164. எயிற்றுப்படை யாண்மையினி னிடிக்கும்புலி யொப்பார் பயிற்றியவில் லாள்பணிக்கும் வேலொடுடன் வல்லார் துயிற்றியபல் கேள்வியினர் தூற்றிக்கொளப் பட்டா ரயிற்றுப்படை யார்கண்மத யானைகத னறுப்பார். 2165. காலனொடு சூழ்ந்தகடு நோய்களையு மொப்பார் ஆலுங்கட றூர்த்தன்மலை யகழ்தலிவை வல்லார் ஞாலமறி யாண்டொழிலர் நான்கிலக்க முள்ளார் மேலுறும ராலுரிமை யுட்சிறப்புப் பெற்றார் இவை யிரண்டும் ஒரு தொடர். எயிலது துப்பை அடைகின்ற வலியினா லென்றுமாம். இ-ள். தமதாண்மையால் எயிறாகிய படையையுடைய புலியை யொப்பார், வில்லையும் வாளையும் பிறர் தம் பக்கலலே கற்கும்படி வேலோடே கூடவல்லார், தம்மிடத்தே தங்கப் பண்ணிய பலநூற் கேள்வியனையுடையார், தெரிந்து கொள்ளப்பட்டார், வேலினது வலியாலே பகைவரது யானையைக் கதனறுப்பார், வருந்திக் கோறலிற் காலனையும் பற்றிய நோயையுமொப்பார், செருக்கினாற் கடல்தூர்த்தல், மலையகழ்த்தலென்கிற இத்தொழிலை வல்லார், ஆண்டொழிலர், நுமராற் சிறப்புப் பெற்றாராகியவர் நான்கு நூறாயிரமென்னும் எண்ணிடத்தாரென்க. (63-64) 2166. சிங்கத்துரி போர்த்தசெழுங் கேடகமும் வாளும் பொங்குமயில் வேலும்பொரு வில்லுமுடன் பரப்பி மங்குலிடை மின்னுமதி யுஞ்சுடரும் nப்hல வெங்கட்டொழிற் கூற்றுமரண் சேரவிரித் தன்றே. கேடகத்திற்கு ஞாயிறும் வாளிற்கும் வேலிற்கு மின்னும், வில்லிற்குப் பிறையும் உவமை. இ-ள். இக்காலாட்படையும் கேடக முதலியவற்றைப் பரப்பிக் கூற்றும் தனக்கு ஓராணைச் சேரும்படி விரிந்ததென்க. (65) வேறு 2167. செம்பொ னீண்முடித் தேர்மன்னர் மன்னற்குர் பைப்பொ னாழிதொட் டான்படை காட்டினான் அம்பொனொன்கடி லானயி ராவணம் வெம்ப வேறினன் வெல்கென வாழ்த்தினார் ஆழிதொட்டான் - ஏனாதி மோதிரஞ் செறித்த சேனாபதி. இ-ள். அங்ஙனம் படையைக் காண்கின்ற மன்னர் மன்னற்கு ஆழிதொட்டான், இறையே, மகத்துவாகிய நாகம் அறுபதிற்றறுபது, மதம் பொழிவானின்றன ஈராயிரம், மதஞ்செறிந்தன இராயிரத்தைஞ் நூறு, இளைய களிறும் ஈராயிரத்தைஞ்நூறு; இக்குஞ்சரங்களை யேறினவர்கள் கோடியே விருத்தியாவுடையரா யிருப்பர்; குதிரை ஆறாயிரத் திரட்டி, புரவி அறுபதினாயிரம், பாய்மாவும் அறுபதினாயிர மாயிருக்கும்; பூணாராகிய அவர் அம்மாவைப் பண்ணியேறினார்; மாளவத் தகத்தனவாகிய துரகம் ஆண்மைய, நிறத்தன. விண்புகுவன வாயிருக்கும்; மாரட்ட தேசத் தகத்தனவாகிய குதிரை மயிற்கழுத்து போலும் நிறத்தனவாயிருக்கும்; மரக்கலத்தின் வந்திழிந்த குதிரைகள் கிளிபோலும் நிறத்தவாய்ப் பவளக் குளம்புடையனவாயிருக்கும். இப்புரவி பண்ணுறுத்த தேர் இருபதினாயிரத் தறுநூறு. இத் தேராட்கள் கூற்றினுக்கு இடுபவராயிருப்பவர்; சிறப்புப் பெற்றாராகிய அவர் நான்கு நூறாயிரமென்னு மெண்ணிடத்தார். இக்காலாட் படையும் கூற்றும் அரண் சேரும்படி பரந்ததென்று சொல்லிப் படை காட்டினான்; அது கண்டு அவனும் ஐராவணத்தைக் கடுக ஏறினான்; அப்பொழுது வெல்கவென்று வாழ்த்தினா ரென்க. இவ்வியானைக்கு அது பெயர். (66) 2168. சிறுவெண் சங்குமு ரன்றன திண்முர சறையு மாக்கடல் காரென வார்த்தன நெறியி னல்கின புள்ளுநி மித்தமும் இறைவன் கண்வல னாடிற்றி யைந்தரோ. இ-ள். அப்பொழுது சங்கு முழங்கின; முரசு கடலும் காருமென ஆர்த்தன; நெறியிலே பறவைகளும், நிறைகுட முதலியனவும் நன்மையே அறிவித்தன; இறைவன் வலக்கண் பலகாலும் துடித்ததென்க. (67) 2169. மல்லல் யானைக் கறங்கு மணியொலி அல்ல தைங்கதி மான்கொழுந் தாரொலி கல்லெ னார்ப்பொலி மிக்கொளிர் வாண்மினிற் செல்லு மாக்கடல் போன்றது சேனையே. இ-ள். சேனை, இவ்வொலிகளு மிக்கு வானொளியோடே நடப்பதொரு கடலையொத்த தென்க. “விக்கிதம் வற்கிதம் வெல்லு முபகண்ட, மத்திமஞ் சாரியோ டைந்து.” (68) 2170. மாலை மாமதி வெண்குடை மல்கிய கோலக் குஞ்சி நிழற்குளிர் பிச்சமும் சோலை யாய்ச்சொரி மும்மதத் தானிலம் பாலை போய்மரு தம்பயந் திட்டதே. இ-ள். பாலை நிலம் குடையாலும் குஞ்சியாலும் பிச்சத் தாலும் குளிர் நிழற் சோலையாய், மதத்தாலே பாலைத் தன்மைபோய் மருதத் தன்மையை உண்டாக்கிற் றென்க. (69) 2171. மன்றன் மாமயி லார்த்தெடி மானினம் கன்றி னோடுக லங்கின காற்பெய வென்றி வேற்படை யஞ்சிவ னத்தொடு குன்றே லாங்குடி போவன போன்றவே. இ-ள். பொடையோடுகூடுகின்ற மயில்களெல்லாம் ஆர்த் தெழுதலாலும், மானினங்களெல்லாங் கன்றோடே கலங்கியோடு தலாலும், படைக்கஞ்சிக் காடுமலையுங் குடிபோவன போலேடியிருந் தனவென்க. (70) வேறு 2172. படுகண் முழவி னிமிழருவி வரையுங் காடும் பலபோகி யிடுமண் முழவி னிசையோவா வேமாங் கதநாட் டெய்தியபி ணெடுவெண் ணிலவி னெற்றிதோய் நிழலாற் செம்பொற் புரிசையே கடிமண் காவல் கருதினான் கோயி லாகக் கருதினான். இ-ள். சீவகன்காத்தற்றொழிலையுடைய மண்ணை அவன் காக்குமாறுகருதிய கோவிந்தன் அருவியையுடைய பலவரை யையுங் காட்டையும்போய் ஏமாங்கதத்தைச்சேர்ந்தபின்பு புரிசை யின் புறத்தையே தனக்குக்கோயிலாகக்கருதினானென்க. மதிற்புறத்தே விட்டான். (71) 2173. போக மகளிர் வலக்கண்க டுடித்த பொல்லாக் கனாக்கண்டா ராக மன்னற் கொளிமழுங்கிற் றஞ்சத் தக்க குரலினாற் கூகை கோயிற் பகற்குழறக் கொற்ற முரசம் பாடவிந்து மாக நெய்த்தோர் சொரிந்தெங்கு மண்ணும் விண்ணு மதிர்ந்தவே. இ-ள். அவன்விட்டபொழுது கட்டியங்காரன்தேவிமார் வலக் கண்டுடித்த; அவர் கனாக்கண்டார்; அவற்குமேனி யொளி கெட்டது; அவையேயன்றிக் கூகை கோயிலிலே பகலேயிருந்து அஞ்சத்தக்க குரலாலே குழற, முரசு ஒலியவிய, மாகத்தினின்றுங் குருதி சொரிய, மண்ணும் விண்ணுமதிர்ந்தவென்க. பூகம்பமும், வெள்ளிடியும். (72) 2174. கூற்றம் வந்து புறத்திறுத்த தறியான் கொழும்பொ னுலகாள்வான் வீற்றிங் கிருந்தே னெனமகிழ்ந்து வென்றி வேழமிருநூறுங் காற்றிற் பரிக்குந் தேர்நூறுங் கடுங்கா லிவுளி யாயிரமும் போற்றி விடுத்தான் புனைசெம்பொற் படையே யணிந்து புனைபூணான். இ-ள். பட்டுப்போய்ப் பொன்னுலகை யாளுதற்குரியா னாகிய பூணான் சீவகன் வந்து தன்னைக்கோறற்குப் புறத்திருந்த தறியானாய் இனிக் கோவிந்தனையுங்கொன்று வீற்றிருந்தேனன் றோ வென்று கருதித் தன்னினைவு முடிந்ததென்று தன்னைப் போற்றி மகிழ்ந்து வேழமுதலியவற்றைப் பொற்படைகளாலே யணிந்து கோவிந்தனுக்குப் போகவிட்டானென்க. பொன்னுலகாளுதற்கென்றுமாம். (73) 2175. மன்ன னாங்கோர் மதவேழம் வாரி மணாள னென்பதூஉ மின்னுங் கொடித்தேர் விசயமும் புரவி பவன வேகமும் பொன்னிற் புiந்து தான்போக்க நிகழ்வ தோரான் மகிழ்வெய்தி முன்யான் விட்ட வினக்களிற்றி னிரட்டி விடுத்தா னெனப்புகழ்ந்தான். இ-ள். அவற்றிற்குநிகராகக் கோவிந்தன்றான் வேழங்களில் வாரிமணாளனென்னும் வேழத்தையும், தேர்களிலே விசய மென்னுந்தேரையும், புரவிகளிற் பவனவேகமென்னும் புரவியை யும் அவனிடத்தே போகவிட, மகிழ்ந்து யான்முன் களிற்றோடே போக விட்டனவற்றின் இரட்டித்த சிறப்புடையனவற்றை வரவிட்டா னென்று கட்டியங்காரன் மகிழ்ந்தானென்க. நின்பெரும்படை யென்சிறுபடைக்கு நிகர்க்குமென்பது தோன்ற வரவிட்டானென்றுணராமையின், நிகழ்வதோரா னென்றார். (74) வேறு 2176. வீங்குநீர் விதையத் தார்கோன் கட்டியங் காரன் றன்னோ டாங்கவ னொருவ னாகி யன்பெனு மயில்கொள் வாளால் வாங்கிக்கொண் டுயிரை யுண்பான் வஞ்சத்தாற் சூழ்ந்த வண்ண மோங்குநீ ரோத வேலிக் குணரயா முரைத்து மன்றே. இ-ள். கோவிந்தன் கட்டியங்காரன்றன்னோடு கூடியிருந்து அன்பென்னும் கூர்மைகொண்ட வாளாலே யவனுயிரை யவ்விடத் தே வாங்கிக்கோடற்கு வஞ்சனையாலே சூழ்ந்த செய்தியை யாம் உலகிற்கு அறிய வுரைப்பேமென்றாரென்க. அன்பென்றது சீவகனை; ஆகுபெயர். (75) 2177. பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையன் மாலை யொருமக ணோக்கி னாரை யுயிரொடும் போகொ டாத திருமக ளவட்குப் பாலா னருந்திரி பன்றி யெய்த வருமக னாகு மென்றாங் கணிமுர சறைவித் தானே. இ-ள். கோவிந்தன் அன்புவைத்தபாவையாகிய ஒப்பில்லாத மகள், தன்னை நோக்கினாரை யுயிரைவாங்குந்திரு, அவட்குக் கணவனாவான் எய்தற் கரிய திரிபன்றி யெய்த அரியமகனாமென்று முரசைச்சாற்று வித்தானென்க . (76) 2178. ஆய்மதக் களிறு திண்டே ரணிமயிர்ப் புரவி யம்பொற் காய்கதிர்ச் சிவிகை செற்றிக் கலந்தவை நுரைக ளாகத் தோய்மழை யுலக வெள்ளந் தொன்னகர்த் தொக்க தேபோ லாய்முடி யரச வெள்ள மணிநக ரீண்டிற் றன்றே. உலகவெள்ளம்-உலகத்தைக்கொள்ளும்வெள்ளம். இ-ள். செறிந்த நீரையுடைய யுகாந்தவெள்ளம் வரைகளோடு நகரிலே தொக்கதுபோலே அரசவெள்ளங் களிறு முதலியன செற்றிக் கலந்தவை நுரைகளாகக்கொண்டு அணி நகரிலே யீண்டிற்றென்க. (77) 2179. நல்லவள் வனப்பு வாங்க நகைமணி மாலை மார்பர் வில்லன்றே யுவனிப் பாரும் வெங்கணை திருத்து வாரும் சொல்லுமி னெமக்கு மாங்கோர் சிலைதொட நாளென் பாரும் பல்சரம் வழங்கு வாரும் பரிவுகொள் பவரு மானார். இ-ள். தம்மை இலக்கணையதழகு மனத்தை வளைவித்தலின். அவ்வரசர் அன்றே வில்லையெய்யத் தொடங்குவாரும், திருத்து வாரும், எமக்கும் அவ்விடத்தே சிலைதொட நாட்சொல்லுமி னென் பாரும், வழங்குவாரும், இவையுமறியாதே பரிவு கொள்வாரு மாயினாரென்க. வாங்க-இழுக்கவென்றுமாம். (78) 2180. பிறையெயிற் றெரிகட் பேழ்வாய்ப் பெருமயிர்ப் பைம்பொற் பன்றி யறையெனத் திரியு மாய்பொற் பூமியி னிறைந்து மன்ன ருறுகணை யொன்றும் வில்லு முடன்பிடித் துருவ நேமிப் பொறிதிரி வதனை நோக்கிப் பூமுடி துளக்கி நின்றார். அறை-பத்திராலாபனம். இ-ள். எயிறு முதலியவற்றையுடைய பொற்பன்றி யென்னை யாவராலும் எய்யவரிதென்று சாற்றுகின்றதென்னத்திரியு மந்நிலத்தே மன்னரெல்லாம் நிறைந்து கணையொன்றயும் வில்லையுஞ் சேரப்பிடித்துச் சக்கரத்தினுள்ளே பன்றிதிரிவதனை நோக்கித் தலை யசைத்துநின்றாரென்க. (79) 2181. ஏந்தெழி லாகஞ் சாந்தி னிடுகொடி யெழுதிக் காதிற் காய்ந்தெரி செம்பொற் றோடுங் கனமணிக் குழையு மின்ன வேந்தருள் வினிதை வேந்தன் வெஞ்சிலை தளர வாங்கி யாய்ந்தபொற் பன்றி நெற்றி யருந்துக ளார்ப்ப வெய்தான். இ-ள். அவ்வரசரில், வினிதையிலரசன் றனதாகத்தே யெழுது கொடியைச் சாந்தாலே யெழுதிக் காதிலே தோடுங்குழையுமின்ன வில்லை வளையவாங்கிப் பன்றியினெற்றியிலே யம்புபட்டுத் துகளெழ வெய்தானென்க. (80) 2182. குடர்தொடர் குருதிக் கோட்டுக் குஞ்சர நகரத் தார்கோன் சுடர்நுதற் பட்ட மின்னச் சுரும்பிமிர் கண்ணி சிந்த வடர்கதிர்ப் பைம்பொற் பூணு மாரமு மகலத் தொல்கப் படர்சிலை குழைய வாங்கிப் பன்றியைப் பதைப்ப வெய்தான். குடர்தொடர்ந்த குருதிக்கோடு, குஞ்சரமென்றபெயர்க்கு அடை. குஞ்சரநகரம்-அஸ்தினபுரம். இ-ள். கோன், மின்னச் சிந்த ஒல்க வில்லை வளைய வாங்கிப் பன்றியைத் துளங்கவெய்தானென்க. அடர்-நெருக்கம். (81) 2183. வார்மதுத் துளிக்கு மாலை வாண்முடித் தொடுத்து நாலக் கார்மதங் கடந்த வண்கைக் காம்பிலிக் காவன் மன்ன னேர்மதக் கேழ லெய்வா னேறலும் பொறியி னேறுண் டார்மதக் களிற்று வேந்தர்க் கருநகை யாக வீழ்ந்தான். இ-ள். காரினது செருக்கை வென்ற கையினையுடைய காம்பி லியின் மன்னன் கேழலை யெய்யவேண்டி முடியிற்கட்டி மதுத் துளிக்கு மாலை நாலும்படி விசையுடனே சக்கரத்தே யேறின வளவிலே யதன்விசையினாலே யேறுபட்டு வேந்தர்க்கு ஒருநகை யாக வீழ்ந்தானென்க. (82) 2184. முலைவட்டப் பூணு முத்து முள்கலிற் கிழிந்து பொல்லா இலைவட்டத் தாம மார்பிற் கோசலத் திறைவ னெய்த குலைவட்டக் குருதி யம்பு வானின்மேற் பூச லுய்ப்பான் சிலைவட்ட நீங்கி விண்மேற் செவ்வனே யெழுந்த தன்றே. முலையிடத்துவளைந்தபூணும் முத்தும்படுதலிற் பூக் கிழிந்து பொல்லாதாகிய தாமம். இனிப் பொல்லாமுத்தென்று கூட்டித் துளையிடாத நாயகமுத்தென்றுமாம். குலைவட்டம்-அம்பிற் குதை. இ-ள். கோசலநாட்டி னிறையவனெய்த வம்பு, வானிடத்தே பூசலைச் செலுத்துதற்கு வில்லின் வட்டத்தினின்று நீங்கி நேரே யெழுந்ததென்க. (83) 2185. ஊடிய மடந்தை போல வுறுசிலை வாங்க வாரா தாடெழு வனைய திண்டோ ளவந்திய னதனை நோனா னாடெழுந் தார்ப்ப மற்றந் நன்சிலை முரித்திட் டம்பை வாடினன் பிடித்து நின்றான் மணமகன் போல நின்றான். ஆடு-வெற்றி. இ-ள். அவந்தியில்வேந்தன் றன்சிலை ஊடிய மடந்தையைப் போலே வளைக்க வளையாதாக அதனைப் பொறானாய் அச்சிலையை வலியுடனே வாங்கி நாடார்ப்ப முரித்து அம்பையே பிடித்து வாடினனாய்நின்றான்; நின்றவன் மணமகன் போல நின்றானென்க. (84) 2186. பில்கித்தே னொழுகுங் கோதைப் பிறர்மனை யாள்கட் சென்ற வுள்ளத்தை யுணர்வின் மிக்கா னொழித்திடப் பெயர்ந்த தேபோன் மல்லனீர் மகத ராச றுரந்த கோன் மருள வோடிப் புல்லியப் பொறியை மோந்து புறங்கொடுத் திட்ட தன்றே. இ-ள். பிறர்மனையாளிடத்துச் சென்ற நெஞ்சை யறிவான் மிக்கான் மீட்க, அது மீண்டாற்போலே மகததேயத் திலரசன் எய்த கோல் கண்டார். இதுபடுமென்றுமருளும்படி யோடி அப்பொறியைப் பொருத்தித் தீண்டி மீண்டு போயிற்றென்க. (85) 2187. தென்வரைப் பொதியி லார மகிலொடு தேய்த்த தேய்வை மன்வரை யகலத் தப்பி மணிவடந் திருவில் வீச மின்னென விட்ட கோலை விழுங்கக்கண் டழுங்கி வேர்த்துக் கண்மலிந் திலங்கு திண்டோட் கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான். இ-ள். கலிங்கத்தினரசன் ஆரம் அகிலொடு தேய்த்த குழம்பையப்பி வடம் மின்னென வில்லை வீசாநிற்க எய்த கோலைப் பொறி விழுங்கக் கண்டு இரங்கி வேர்த்து மேனிமெலிந்து மீண்டா னென்க. (86) 2188. கன்மழைவாசி பொற்குன் றேந்திக் கணநிரை யன்று காத்துமன்னுயி ன்று காக்கும் வாரணவாசி மன்னன் மின்னிழை சுடர வாங்கி விட்டகோ லுற்று றாதாய் மன்னுயிர் நடுங்க நணி மண்புக்கு மறைந்த தன்றே. இ-ள். அன்று கன்மழைக்குக் குன்றையேந்தி நிரையைக் காத்து இன்று உயிரைக்காக்கும் வாரணவாசியின் மன்ன னெய்தவம்பு, அதனிடத்தே யழுந்த நாணிச் சிறிதுற்று மிகவுறாதாய் மக்கள் தம்மேலே வருமென்று நடுங்கும்படி போய் மண்புக்கு மறைந்ததென்க. (87) 2189. எரிகதிர்ப் பைம்பொற் சுண்ண மிலங்கமெய்ம் முழுது மப்பிப் புரிகழ லணிந்த நோன்றாட் போதன புரத்து வேந்த னரிதினிற் றிகிரி யேறித் திரிந்துகண் சுழன்று சோர்ந்து விரிகதிர்க் கடவுள் போல வெறுநிலத் தொலிப்ப வீழ்ந்தான். இ-ள். சுண்ணத்தையப்பிக் கழலையணிந்த காலையுடைய போதனபுரத்தின் வேந்தன் சக்கரத்திலே யரிதாகவேறிஅது கொள்ளி வட்டம்போற்றிரிதலின், அதில் நிற்றலாற்றாதே கண் சுழன்று சோர்ந்து பலரும் ஆரவாரிக்கும்படி ஞாயிறு தன் வட்டத்தினின்றும் நிலத்தேவீழ்ந்தாற்போல வீழ்ந்தானென்க. (88) 2190. மலையச்செஞ் சாந்து முந்நீர் வலம்புரி யீன்ற முத்து மிலைவைத்த கோதை நல்லா ரிளமுலைப் பொறியு மார்ந்து சிலைவைத்த மார்பிற் றென்னன் றிருமணிப் பன்றி நோக்கித் தலைவைத்த தம்பு தானுந் தரணிமேற் பாதம் வைத்தான். இ-ள். சாந்தும் முத்தும் முலைத்தழும்பும் நிறையப்பட்டு மலையை யொப்பாக வைத்த மார்பிற்றென்னனெய்த அம்பு பன்றியை நோக்கிச் சென்று தலைவைத்தது; தானும் நிற்றலாற்றாது நிலத்திலே காலைவைத்தானென்க. (89) 2191. விற்றிறல் விசய னென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி யொற்றுபு திருத்திக் கைம்மே லுருட்டுபு நேமி சார்ந்தாங் குற்றதன் சிலையின் வாய்ப்பெய் துடுவமை பகழி வாங்க விற்றுவின் முறிந்து போயிற் றிமைப்பினி னிலங்கித் திட்டான். இ-ள். விசயன் றன்கணையை யொருக்கடித்துநோக்கி யிடக்கை மேலே யமுக்கித் திருத்தி யுருட்டாநின்று நேமியிலே குதித்துத் தனக்குற்ற வில்லிலே தொடுத்துச் சிறகமைந்த அப்பகழி யை வாங்கினானாக, வில் இரண்டாய் முறிந்துபோயிற்று; ஒருகணத்திற் குதித்தானென்க. (90) 2191. குண்டல மிலங்க வாங்கிக் குனிசிலை யுறையி னீக்கிக் கொண்டவன் றொழும்பொற் றாரு மாரமு மிளிர வேறிக் கண்டுகோ னிறைய வாங்கிக் காதுற மறித லோடும் விண்டுநா ணற்ற தாங்கே விசயனும் வீக்க மற்றான் இ-ள். அவன் குண்டலமிலங்கும்படி சேமவில்லை வாங்கிக் கொண்டு உறையினின்றுநீக்கித் தாருமாரமும் பிறழ வேறிப் பன்றி மூன்றுங் கூடுங்காலத்தைக்கண்டு கோலைநிறைய வாங்குதலாலே, அது காதிலேசெல்ல மறிகின்ற வளவிலே நாணற்றது; அப்பொழுதே யெய்கின்றகருத்தைக் கைவிட்டு விசயனுந் தன்பெருமை குறைந்தானென்க. விண்டு-விகாரம். சீவகனிடத்தே கற்றலின், எய்தற்குரிய வனாகிய விவற்கு ஊழ் இங்ஙனஞ் செய்தது. (91) 2193. உளைவனப் பிருந்த மான்றே ரொளிமுடி மன்ன ரெல்லாம் வளைவனப் பிருந்த தோளாள் வருமுலைப் போகம் வேண்டி விளைதவப் பெருமை யோரார் விற்றிறன் மயங்கி யாருங் களைகலார் பொறியை யாங்கோ ராறுநாள் கழிந்த வன்றே. இ-ள். மன்னர்யாவரும் விற்றிறல் விளைத்தற்குக் காரணமான தவத்தின்பெருமை. நமக்கில்லையென்றோராராய்த் தோளா ளுடைய முலைப்போகத்தை விரும்பி யறிவுமுதலியன கலங்குதலிற் பொறியைக்களையாராக, இப்படி ஆறுநாள் சென்றவென்க. மயங்கி-மயங்க. (92) வேறு 2194. பனைக்கை யானை மன்னர் பணியப் பைம்பொன் முடிமேற் கனைக்குஞ் சுரும்பார் மாலை தவழ்ந்து மதுவுந் தேனு நனைக்குங் கழலோன் சிறுவ னாம வெள்வேல் வலவ னினைக்க லாகா வகையா னேரா ருயிர்மே லேழுந்தான். இ-ள். மன்னர்வணங்குதலின், அவர்முடியிற் கனைக்குஞ் சுரும்புந் தேனு மார்ந்த மாலையின்மதுத் தவழ்ந்துநனைக்கும் அடியையுடைய சச்சந்தன்புதல்வனாகிய வேல்வெற்றியை யுடையவன் அவர்நினைக்க வொண்ணாத வஞ்சனையாலே பகை வருயிரைக் கொள்ள எழுந்தானென்க. உம்மை மாறுக. (93) 2195. காரின் முழங்குங் களிறுங் கடலின் முழங்குந் தேரும் போரின் முழங்கும் புரவிக் கடலும் புகைவாட் கடலுஞ் சீரின் முழங்கு முரசு மலறுஞ் சிறுவெண் சங்கு நீரின் முழங்க முழங்கு நீல யானை யிவர்ந்தான். முன்னின்றஇரண்டின்னும், உவமப்பொரு. போரின், இன்-ஏது. சீரின்-சீரோடு. இ-ள். களிறுமுதலியன நீர்மையோடேமுழங்காநிற்கத் தான் கரியயானையை மேற்கொண்டானென்க. (94) 2196. கல்லார் மணிப்பூண் மார்பிற் காம னிவனே யென்ன வில்லார் கடலந் தானை வேந்தர் குழாத்துட் டோன்றப் புல்லான் கண்ணி னோக்கிப் புலிகாண் கலையிற் புலம்பி யொல்லா னெல்லா னாகி யுயிர்போ யிருந்தான் மாதோ. இ-ள். அவ்வியானையின்மேல்வந்த வேலான் வேந்தர் இவனே காமனென்னும்படி அவர்குழாத்திலே தோற்றினானாக, தானிற்கு முறைமை யினிற்கமாட்டாத கட்டியங்காரன் பொருந் தானாய்த் தான் கண்ணானோக்கிப் புலிகாண்கலைபோல் அறிவு முதலியன போயிருந்தானென்க. (95) 2197. புலியாப் புறுத்திக் கொண்டேன் போக்கி விட்ட பிழைப்பும் வலியார் திரடோண் மதனன் னிவனைப் பிழைத்த பிழைப்பு நலியு மென்னை நலியு மென்னாக் களிற்றி னுச்சி யிலையார் கடகத் தடக்கை புடைத்து மெய்சோர்ந் திருந்தான். இ-ள். புலியை யகப்படுத்திக்கொண்டயான் அதனை வாலுருவி விட்ட தப்பும் என்னைநலியாநிற்கும்; மதனனாகிய வவனை யிவன் றப்பின தப்பும் என்னை நலியாநிற்கு மென்றுகூறிக் களிற்றினுச்சியிலே கையைப்புடைத்து அவசமாயிருந்தா bன்னக. யாப்புறுத்திக்கொண்டேனென்றது-அநங்கமாலைகூத்திற் சீவகன் றனியே வந்தமை கருதி. (96) 2198. மைபூத் தலர்ந்த மழைக்கண் மாழை மானேர் நோக்கிற் கொய்பூங் கோதை மடவார் கொற்றங் கொள்கென் றேத்தப் பெய்பூங் கழலான் வேழத் திழிந்து பிறைபோற் குலாய செய்பூண் சிலைநா ணெறிந்தான் சேரார் நாளுக் கனவே. மாழை-இளமை. குலாயசிலை; செய்யப்பட்டசிலை; நாண் பூண்ட சிலை. இ-ள். மையழகுபெற்றலர்ந்த கண்முதலியவற்றையுடைய மடவாரேத்தக் கழலான் இழிந்துநின்று சிலையின் நாணை யெறிந்தான்; அப்பொழுதே பகைவர்நாள் உலந்தனனவென்க. பிள்ளைகளையும், அவனையுஞ் சேரக்கோறலிற் ‘சேரா ரெ’ன்றார். வேறு 2199. கனிபடு மொழியி னாடன் காரிகை கவற்ற வந்து குனிசிலை தோற்ற மன்னர் கொங்குகொப் புளிக்கு நீலப் பனிமலர்க் காடுபோன்றார் படர்சிலை தொடாத வேந்த ரினிதினின் மலர்ந்த வேரார் தாமரைக் காடு போன்றார். இ-ள். கனிபோலுமொழியினாளது அழகு கேள்வியான் வருத்துதலின், வந்து சிலைதோற்றமன்னர் ஞாயிறுபோன்ற சீவகனைக் கண்டு நீலத்தினெருக்கத்தை யொத்தரர்; சிலைதொடாத வேந்தர் அவனைக்கண்டு கொங்குகொப்புளிக்குந் தாமரையினெருக்கத்தை யொத்தாரென்க. (98) 2200. போர்த்தகல் விசும்பின் வந்து பொறித்திரி பன்றி மூன்று நீர்த்தகப் புணர்ந்த போதி னெடுந்தகை மூன்று மற்றுச் சூர்த்துடன் வீழ நோக்கிச் சுடுசரஞ் சிதற வல்லா னோர்த்தொன்றே புணர்ப்ப நாடி யொருபகல் காறு நின்றான். போருக்குத் தகுதலையுடைய பன்றி; என்றது ஒன்று இடந் திரிய ஒன்று வலந்திரிகின்ற மாறுபாட்டினை. இ-ள். நெடுந்தகை பொறியாலே விசும்பிற்றிரிகின்ற பன்றி மூன்றும்வந்து நீர்மைதகப் புணர்ந்தகாலத்து அவை சேரவற்றுச் சுழன்றுவிழும்படி யோர்த்துப் பல சரத்தைச்சிதறவல்லவன் அப்பொழுது அவைமூன்றும் ஒன்றாந்தன்மையே கூட்டுதற்கு நாடி ஒரு முகூர்த்தத்தளவும் நோக்கி நின்றானென்க. இவன் குப்புற்று நேமியில் நிற்குங்காலத்து அவையும் ஒன்றாமாதலின், ‘ஒன்றே புணர்ப்ப’வென்றார் (99) 2201. பொறியின்மே லேற றேற்றா னாணினாற் போதல் செய்யா னெறியின்வில் லூன்றி நிற்ப நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ வென்று முன்னே மணிமுடி சிதறி வீழ்ந்த செறிகழன் மன்னர் நக்குத் தீயத்தீ விளைத்துக் கொண்டார். இ-ள். திகிரி மேலேறுதலு மறியானாய்ப் போகின் நகுவ ரென்னு நாணினாற் போதலைச்செய்யானுமாய் வில்லையூன்றி நிற்ப, பன்றி யற்றுவிழுமோவென்றுகூறி, முன்பு வீழ்ந்த மன்னர் நக்குத் தீயும்படி கோபத்தை விளைத்துக்கொண்டாரென்க. நெறியின்யென்றார், தொழிற்கேற்ப நின்றநிலைதோன்ற. சிதறி-சிதற. (100) 2202. சிரற்றலை மணிகள் வேய்ந்த திருந்துபொற் றிகிரி செம்பொ னுரற்றலை யுருவப் பன்றி யிடம்வலந் திரிய நம்பன் விரற்றலைப் புட்டில் வீக்கி வெஞ்சிலை கணையோ டேந்திக் குரற்றலை வண்டு பொங்கக் குப்புற்று நேமி சேர்ந்தான். சிச்சிலியின் றலைபோன்ற நிறத்தையுடைய மணிகள் வேய்ந்த உருவப்பன்றி. புட்டில் விரற்சரடு. குரல்-மயிர். இ-ள். திகிரியின்மேலுண்டாகிய உரவிடத்துப் பன்றிகள் இடத்திலும் வலத்திலுந் திரியாநிற்க, நம்பன் வீக்கி யேந்தி வண்டு பொங்கும்படி குதித்து அத்திகிரியைச் சேர்ந்தானென்க. (101) 2203. ஒள்ளழல் வைரப் பூணு மொளிர்மணிக் குழையு மின்ன வொள்ளழற் கொள்ளிவட்டம் போற்குலாய்ச் சுழலப் பொன்ஞா ணொள்ளழ னேமி நக்க மண்டல மாக நின்றா னொள்ளழற் பரிதி மேலோர் பரிதிநின் றதனை யொத்தான். வைரப்பூணும், அழல்போலுமணிக்குழையும், பொன்னா ணும் மின்ன நின்றானென்க. இ-ள். அழலை நக்க நேமி அவ்வழலையுடைய கொள்ளி வட்டம்போலே சுழலா நிற்க, அதன்மேலே மண்டல விருப்பாக நின்றவன் தானிருத்தற்குரிய மண்டலத்தினுள்ளிராதே அதன் மேலே யொருஞாயிறு நின்ற தன்மையையொத்தானென்க. பரிதி-வட்டம்; “பரிதி போகிய புடைகிளை கட்டி”(பதிற்.74) என்றார்போலக்கொள்க. (102) 2204. அருந்தவக் கிழமை போல விறாதவில் லறாத நாண்வாய்த் திருந்தினார் சிந்தை போலுந் திண்சரஞ் சுருக்கி மாறா யிருந்தவன் பொறியும் பன்றி யியற்றரும் பொறியு மற்றாங் கொருங்குட னுதிர வெய்தா னூழித்தீ யுருமோ டொப்பான். தவக்கிழமை இரண்டிற்குமுவமை. இவ்வுவமைகூறிற்று, விசயனுக்கு அவை இற்றும், அற்றும் போனமைகருதி. திருந்தி னார்-இருடிகள். இ-ள். உருமேற்றையுந் தீயையுமொப்பான் தவக்கிழமை போல இறாதவில்லில் அறாதநாண்வாய்த் தொடுத்தசரத்தை வில்லினுள்ளே யாம் படி நிரம்பவளைத்துக் கட்டியங்காரன் நல்வினையும் பன்றியாகிய பொறியுஞ் சேரவற்று அவ்விடத்தே விழும்படி யெய்தானென்க. அதனை யெய்தவன்றே யவனும் படுதலின், ‘உட’ னென்றார். (103) 2205. இலங்கெயிற் றேன மேவுண் டிருநிலத் திடித்து வீழக் கலங்குதெண் டிரையுங் காருங் கடுகளி முழக்கு மொப்ப வுலம்புபு முரசங் கொட்டி யொய்யெனச் சேனை யார்ப்பக் குலம்பகர்ந் தறைந்து கோமான் கோவிந்தன் கூறி னானே. இ-ள். அப்பன்றி யங்ஙனம்ஏவுண்டு இடித்த நிலத்தே விழுதலிற் சேனைகடன்முதலியவற்றையொப்ப முழங்காநின்று முரசைக்கொட்டி யாராநிற்ப, கோமானாகியகோவிந்தன் சீவகன் குலத்தைக் கட்டியங் காரனுக்கு முற்படக்கூறிப் பின்பு எல்லாரு மறியச் சாற்றினானென்க. இனிக் குலத்தைப்பகர்ந்து நின்னைக் கொல்வேனென்று வஞ்சினங்கூறினானென்றுமாம். (104) 2206. வானிடை யொருவன் றோன்றி மழையென முழங்கிச் சொல்லுந் தேனுடை யலங்கல் வெள்வேற் சீவக னென்னுஞ் சிங்கங் கானுடை யலங்கன் மாலைக் கட்டியங் கார னென்னும் வேன்மிடை சோலை வேழத் தின்னுயிர் விழுங்கு மென்றான். இ-ள். வானிடத்தேதோன்றிச் சொல்லுமொருவன் சீவக னென்னுஞ்சிங்கம் வேலாகிய சோலையில் நிற்கின்ற கட்டியங்கார னென்னும் வேழத்தினுயிரை விழுங்குமென்று கூறினானென்க. ஒருவன்-இயக்கன். (105) வேறு 2207. விஞ்சையர் வெம்படை கொண்டுவந் தாயென வஞ்சுவ லோவறி யாயென தாற்றலை வெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னொடு வஞ்சனை வஞ்சம றுத்திடு கென்றான். இ-ள். விஞ்சையர்படையைக் கொண்டுவந்தாயென்று யான் அஞ்சுவேனோ? எனதாற்றலை நின்றந்தையறிவன்; நீயறியாய்; இனி யாம் போர்செய்திட்டால் நின்னையும், என்னைக் களவாற் கொலை சூழ்ந்த கோவிந்தனையும், அக்களவைத்தீர்த்து வீக்கமறுத் திடுவேனென்றானென்க. வீக்கம்-பெருமை. (106) 2208. சூரியற் கண்டலுஞ் சூரிய காந்தமஃ தாரழ லெங்ஙனங் கான்றிடு மங்ஙனம் பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற் காரிடி போன்மத னன்கனன் றிட்டான். இ-ள். சூரியகாந்தமாகியவது சூரியனைக்கண்ட வளவிலே யழலை எங்ஙனம் காலும்? அதுபோல மதனன் சீவகன் வெற்றி யைக் கேட்ட வளவிலே கார்காலத்தின் முகிலிடி போலக் கோபித்தா னென்க. (107) 2209. காற்படை யுங்களி றுங்கலி மாவொடு நூற்படு தேரு நொடிப்பினிற் பண்ணி நாற்படை யுந்தொகுத் தான்மக்க ணச்சிலை வேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார். இ-ள். கட்டியங்காரன் காலாளாகியபடையுங் களிறும் மாவும் நூல்வழிப்பட்டதேருமாகிய நால்வகைப்படையையும் ஒருகணத்திற் சமைத்துத் தொகுத்தான்; தொகுத்தவளவிலே வேற்படைவீரராகிய அவன்மக்கள் நூற்றுவருந் தொக்காரென்க. நஞ்சுதோய்த்த அலகையுடைய வேல். (108) 2210. விற்றிற லான்வெய்ய தானையும் வீங்குபு செற்றெழுந் தான்படை யுஞ்சின மொய்ம்பொடு மற்றவர் மண்டிய வாளமர் ஞாட்பினு ளுற்றவர்க் குற்றதெ லாமுரைக் குற்றேன். இ-ள். சீவகன்றானையும், கட்டியங்காரன்படையும், அவர் தாங்களுமுற்று, மொய்ம்பொடு மிக்குச் சென்ற வாட்போராகிய போரிலே, அவர்கட்குற்ற செய்திகளெல்லாம் உரைக்க லுற்றேனென்றா ரென்க. உற்றதெல்லாம்-ஒருமைப்பன்மைமயக்கம். (109) வேறு 2211. அத்தமா மணிவரை யனைய தோன்றல மத்தகத் தருவியின் மணந்த வோடைய முத்துடை மருப்பின முனைக்கண் போழ்வள பத்தியிற் பண்ணின பரும யானையே. இ-ள். அத்தகிரியை யொத்த தோன்றல; அதனருவிபோன் மத்தகத்தே மணந்த ஓடைய; மருப்பின; பகைப்புலத்தை யவரெதிர்ந்த விடத்தே கொல்வனவாகிய பருமயானைகள் அணிகளிலே சமைந் தனவென்க. (110) 2212. கோல்பொரு கொடுஞ்சிலை குருதி வெம்படை மேலவ ரடக்குபு வேழ மேறலின் மாலிரு விசும்பிடை மணந்த வொண்கொடி கால்பொரு கதலிகைக் கான மொத்தவே. இ-ள். மேலாட்கள் வில்லையும், ஒழிந்தபடைகளையும் வேழங் களின் மேலே யடக்கி அவற்றையேறலின், எடுத்தகொடி காற்றடித்து இலைகிழிந்த கதலிகைக் காட்டையொத்தனவென்க. (111) 2213. குடையுடை நிழலின கோல மார்ந்தன கிடுகுடைக் காப்பின கிளர்பொற் பீடிகை யடிதொடைக் கமைந்தன வரவத் தோர்த்தொகை வடிவுடைத் துகின்முடி வலவர் பண்ணினார். 2214. கொய்யுளைப் புரவிகள் கொளீஇய திண்ணுகம் பெய்கயி றமைவரப் பிணித்த முள்ளுறீஇச் செய்கயி றாய்ந்தன சிலையு மல்லவுங் கையமைத் திளைஞருங் கருவி வீசினார். இவையிரண்டுமொருதொடர். இ-ள். மேலேநாட்டின் குடையினுடைய நிழலின; அம்பு படாதபடி நாற்றின கிடுகுடைத்தாகிய காப்பின; பொற்றட்டுக் கோலமார்ந்தன; எய்யுங்காலத்து அடி வைத்துநிற்றற்கும், எய்தற் றொழிற்குமமைந் தனவாகிய தேர்த்திரளிலே தலைக் கட்டினை யுடையபாகர் புரவி களைப்பூட்டின நுகத்திற்பெய்தகயிற்றைத் தேருடனேபிணித்துப் பண்ணினார்; பண்ணினபின்னர் அவை முள்ளுறுத்திய வாய்க்கயிறும் ஆய்ந்த பிடிக்கப்பட்டன அப்பொழுது தேர்வீரரும் வில்லையும், ஒழிந்தபடைகளையுங் கையிலேயமைத்துக் கவசத்தையணிந்தாரென்க. (112-3) 2215. பறந்திய றருக்கின பரவை ஞாட்பினுட் கறங்கெனத் திரிவன கவரி நெற்றிய பிறந்துழி யறிகெனப் பெரிய நூலவர் குறங்கெழுத் துடையன குதிரை யென்பவே. 216. கொன்னுனைக் குந்தமுஞ் சிலையுங் கூர்நுதி மின்னிலை வாளொடு மிலேச்ச ரேறலிற் பொன்னரிப்புட்டிலுந்தாரும்பொங்குபு முன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே. இ-ள். பறந்துசெல்லுஞ்செலவிலே தருக்கின; பரத்தலை யுடைய போரிலே திரிவன; நெற்றிய; நூலவர் பிறந்தவிடமறிக வென்று குறங்கிலேயெழுதின எழுத்தையுடையனவாகிய குதிரை களை மேலாளாகிய மிலேச்சர் குந்தத்தோடும் வாளோடும் வில்லோடு மேறலின்; அப்புரவிகள் கெச்சையுந் தாருமார்ப்ப மொய்த்தன வென்க. என்ப-அசை. (114-5) 2217. மாலையுங் கண்ணியு மணந்த சென்னிய ராலுபு செறிகழ லார்க்குங் காலினர் பாலிகை யிடையறப் பிடித்த பாணியர் சாலிகை யுடம்பினர் தறுக ணாளரே. இ-ள். தறுகணாளர் ஆலுபு சென்னியர், காலினர், வாண் முட்டி யிடையறும்படிபிடித்த கையினர், கவசமணிந்த வுடம் பினராயிருந்தாரென்க. இவர் காலாட்கள். (116) 2218. போர்மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம் வார் மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையு நேர்மரப் பலகையு நிரைத்த தானையோர் போர்முகப் புலிக்கடல் புகுந்த தொத்ததே. இ-ள். மயிர்போர்த்த பரிசையையும், கண்ணாடிதைத்த கடகினையும், மயிர்க்கிடுகினையும், பிரப்பங்கொடியாற்பண்ணின பரிசையினையும், வலியபலகையினையும் நிரைத்த அக்காலா ளாகியபடை புலிக்கடல்புகுந்ததன்மையை யொத்த தென்க. ‘பரந்தது’எனவும் பாடம். (117) வேறு 2219. பார்நனை மதத்த பல்பேய் பருந்தொடு பரவச் செல்லும் போர்மதக் களிறு பொற்றேர் நான்கரைக் கச்சமாகு மேர்மணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி கார்மலி கடலங் காலாள் கற்பகத் தாரி னாற்கே. இ-ள். சீவகற்குப் பேயும்பருந்தும் பரவச்செல்லும் மதத்த வாகிய களிறுந்தேரும் ஓரோவென்று நான்கரைக்கச்சமாகும்; புரவி எழுநூறாயிரமாம்; காலாள் ஏழுதேவகோடியாமென்க. (118) கச்சம்,தேவகோடி யென்பன சிலஎண்ணுப்பெயர்கள். கார்,கறுப்பு. 2220. நிழன்மணிப் புரவித் திண்டேர் நிழறுழாய்க் குனிந்து குத்து மழறிகழ் கதத்த யானை யைந்தரைக் கச்ச மாகு மெழின்மணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி கழன்மலிந் திலங்குங் காலாள் கட்டியங் காரற் கன்றே. இ-ள். கட்டியங்காரற்குத் தேரும்யானையும் ஓரோவென்று ஐந்தரைக்கச்சமாம்; புரவி யெழுநூறாயிரமாம்; காலாள் ஏழுதேவ கோடியாமென்க. (119) வேறு 2221. குலங்கெழு மகளிர்தங் கோல நீப்பவு மலங்குளைப் புரவியுங் களிறு மாளவு நிலமக ணெஞ்சுகை யெறிந்து நையவும் புலமகன் சீறினன் புகைந்த தெஃகமே. இ-ள். மகளிர்கோலத்தைக்கைவிடவும், புரவியுங் களிறும் படவும், தன் கணவராகிய மன்னர்படுதலின், நிலமகள் நெஞ்சிலே கையாலே யடித்துக்கொண்டு வருந்தவும், சீவகன் சீறினான்; அவனெஃகமும் புகைந்ததென்க. “நிலமக ளழுத காஞ்சியும்”(புறநா.365) என்றார் புறத்திலும். புலமகனென்றார், ஓர்யாண்டுஞ்சென்றுசீறலின். (120) 2222. குணில்பொரக் குளிறின முரசம் வெள்வளை பணைபரந் தார்த்தன பம்பை வெம்பின விணையில வெழுந்ததாழ் பீலி யெங்கணு முணையினாற் கடலக முழக்க மொத்தவே. இ-ள். பெருங்கடிப்பெறிதலின் முரசம் முழங்கின; வளையும் பணையும் பரந்தார்த்தன; பம்பை யொலித்தன; சிறுசின்னந் தமக் கொப்பின்றியேயெழுந்தன. இவ்வோசைகளின்மிகுதியாலே எவ்விடத்தொலியுங் கடலிடத்து முழக்கையொத்தனவென்க. பணை-முரசின்விசேடம். பம்பை-ஒருவாச்சியவிசேடம். (121) 2223. முடிமன ரெழுதரு பருதி மொய்களி றுடைதிரை மாக்கல மொளிறு வாட்படை யடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன கடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே. இ-ள். மன்னர்பருதியாகக் களிறு திரையாகக் குதிரை மரக் கலமாக வாட்படை சுறாவாகத் தம்மிற்காய்ந்தனவாகிய விரண்டு கடல் போர்செய்தற்கெதிர்ந்த தொரு காலமுண்டாகில் அதனை யொத்தது இக்காலமென்க. (122) 2224. அருங்கணை யடக்கிய வாவ நாழிகை பெரும்புறத் தலமரப் பிணித் தகச்சினர் கருங்கழ லாடவர் கருவில் வாய்க்கொளீஇச் சொரிந்தனர் கணைமழை விசும்பு தூர்ந்ததே. இ-ள். கொடிய கழலையுடையவீரர் கட்டினகச்சினராய் அம்பறாத் தூணி தம் முதுகிலேயசையும்படி வில்லிடத்தே யம்பைத்தொடுத்து அதனைச்சொரிந்தார்; அப்பொழுது விசும்பு தூர்ந்ததென்க. தூணியைப்பிணித்த கச்சுமாம். (123) 2225. நிணம்பிறங் ககலமுந் தோளு நெற்றியு மணங்கருஞ் சரங்களி னழுத்தி யையென மணங்கமழ் வருபுனன் மறலு மாந்தரிற் பிணங்கமர் மலைந்தனர் பெற்றி யின்னதே. இ-ள். சரங்களான் வருத்துதற்கரிய மார்புமுதலியவற்றிலே யச்சரங்களையழுத்துதலிற் பெருகினகுருதியிலே நின்று புதுப் புனலிற் போர்செய்யுமாந்தரைப்போலே பிணங்குகின்ற அமரை மேற்கொண்டவர் தன்மை யின்னதென்க. அது மேற்கூறுகின்றார். (124) 2226. கழித்தனர் கனலவாள் புகைந்து கண்கடீ விழித்தன தீந்தன விமைகள் கூற்றெனத் தெழித்தனர் திறந்தன ரகல மின்னுயி ரழித்தன ரயிலவ யரவ மிக்கதே. இ-ள். அவர் கூற்றுப்போலே கோபித்தார்; கோபித்தலிற் கண்கள் தீப்போல விழித்தன; அதனால் இமைகடீந்தன;அக்கோபத்தை முடித்தற்கு வாள்புகைந்து கனலும்படி யுறை கழித்தார்; கழித்து அகலத்தைத்திறந்தார்; திறந்து உயிரைப் போக்கினார்; அதன்பின்பு வேலாற்பொருகின்றவர் போரரவ மிக்கதென்க. (125) 2227. பொருங்களத் தாடவர் பொருவில் பைந்தலை யரும்பெறற் கண்ணியோ டற்று வீழ்வன கருங்கனிப் பெண்ணையங் கானங் கால்பொர விருங்கனி சொரிவன போன்ற வென்பவே. இ-ள். தும்பைமாலையோடும் பொருமாடவர் செவ்வித் தலை களற்றுக் களத்தே வீழ்கின்றவை கனியையுடைய பனங்காடு காற்றடித்தலின், அப்பழத்தைச் சொரிவன போன்றனவென்க. இதுமுதற்கூறிய அம்பாலும், வாளாலுந் தலைகளற்றதற் குவமை. (126) 2228. பணைமுனிந் தாலுவ பைம்பொற் றாரின கணைவிசை தவிர்ப்பன கவரி நெற்றிய துணையமை யிளமைய தோற்ற மிக்கன விணைமயிர்ப் புரவியோ டிவுளி யேற்றவே. இ-ள். பந்தியினிற்றலை வெறுத்து ஆலுவன; தாரின; தவிர்ப்ப; நெற்றியன; போரிற்குதவியாயமைந்த இளமையான; வடிவுமிக்கன வாகிய புரவியும் புரவியுந் தம்மிற் போரைத் தொடங்கினவென்க. (127) 2229. கூருளி முகம்பொரக் குழிசி மாண்டன வாரொளி யமைந்தன வாய்பொற் சூட்டின காரொளி மின்னுமிழ் தகைய காலியற் றேரொடு தேர்தமுட் சிறந்து சேர்ந்தவே. இ-ள். உளிவாயால்தொழிற்படுதலின், நடுவுநிற்குங் குறடு மாண்டன; அதனிற்றைந்த ஆரமைந்தன; சூட்டின; காரின் மின்னொளியைக் காலுந் தகைமையனவாகிய உருளையாற் செல்லுதலை யுடைய தேருந்தேருந் தம்மின்மிக்குப் போரைத் தொடங்கினவென்க. (128) 2230. அஞ்சன மெழுதின கவள மார்ந்தன குஞ்சரங் கூற்றொடு கொம்மை கொட்டுவ வஞசன வரைசிற குடைய போல்வன மஞ்சிவர் குன்றென மலைந்த வேழமே. இ-ள். எழுதப்பட்டன; ஆர்ந்தன; கூற்றை நன்குமதித்துக் கொம்மை கொட்டுவன; ஓடுகின்றவிசையாற் பறக்கின்ற மலையை யொப்பன வாகிய குஞ்சரமும்வேழமுங் குன்றுகள் மலைந்த வென்ன மலைந்த வென்க. மஞ்சு-கொடிக்குவமை. (129) 2231. மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட் டாக்கிய கயிறரிந் தோடி யெங்கணும் போக்கறப் பொருவன போன்று தீப்படத் தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே. இ-ள். பெருங்கலங்கள் நங்குரத்திற்கட்டிய கயிறு காற்றா லற்று எவ்விடத்தினும் போக்கறவோடி மாறுபட்டுப் பொருவன போலே, அரசரேறிய யானைகள் கோடுங்கோடுஞ் சந்தித்துத் தீப்பிறக்கும்படி தம்மிற்பொருதனவென்க. (130) 2232. விடுசரம் விசும்பிடை மிடைந்து வெய்யவன் படகதிர் மறைந்திருள் பரந்த தாயிடை யடுகதி ரயிலொளி யரசர் மாமுடி விடுகதிர் மணியொளி வெயிலிற் காய்ந்தவே. இ-ள். சரம் விசும்பிடத்தே நெருங்குதலின், வெய்யவன் கதிர்கள் மறைந்து இருள்பரந்தது; அப்பொழுது அவ்விருளைப் படைக்கலங் களினொளியும் மணியொளியும் வெயில் கெடுக்கு மாறுபோலக் கெடுத்தனவென்க. (131) 2233. பூண்குலாம் வனமுலைப் பூமி தேவிதான் காண்கலேன் கடியன கண்ணி னாலெனாச் சேண்குலாங் கம்பலஞ் செய்ய தொன்றினான் மாண்குலாங் குணத்தினான் மறைத்திட் டாளரோ. இ-ள். மண்மகடான் றனது நற்குணத்தாலே யிங்ஙனங் கடியமறங்களை யென்கண்ணாற் காணமாட்டேனென்று கருதிப் பெரிய நிலமெல்லாம் பரந்த உதிரமென்கின்ற செய்யதொரு படத்தாலே மறைத்தாளென்க. ‘குணத்தினாளும்’ பாடம். (132) வேறு 2234. கலைக்கோட்ட வகலல்குற் கணங்குழையார் கதிர்மணிப்பூண் முலைக்கோட்டா லுழப்பட்ட மொய்ம்மலர்த்தா ரகன்மார்பர் மலைக்கோட்ட வெழில்வேழந் தவநூறி மதயானைக் கொலைக்கோட்டா லுழப்பட்டுக் குருதியுட் குளித்தனரே. கலையையுடைய வல்குல். கோடு-பக்கம். இ-ள். கோட்டவாகிய வல்குலையுடைய மகளிர் முலைக் கோட்டாலுழப்பட்ட. மார்பர் இப்பொழுது மலைக்குவட்டின் றன்மையை யுடையவாகிய வேழத்தைநூறி அதன்கோட்டா லுழப் பட்டுக் குருதி யுள்ளே குளித்தாரென்க. (133) 2235. மணமாலை மடந்தையர்த மெல்விரலாற் றொடுத்தணிந்த விணர்மாலை யிருங்குஞ்சி யீர்ங்குருதிப் புனலலைப்ப நிணமாலைக் குடர்சூடி நெருப்பிமையா நெய்த்தோரிற் பிணமாலைப் பேய்மகட்குப் பெருவிருந் தயர்ந்தனரே. ஈர்க்குங் குருதி-விகாரம். இ-ள். மணஞ்செய்த வியல்பையுடைய மகளிரணிந்த மாலையை யுடைய குஞ்சியை இழுத்தோடுங் குருதிநீர் அலைப்ப, அந்நெய்த் தோரிலே நெருப்புப்போல விழித்துக்கிடந்து நிணவொ ழுங்கையுடைய குடரைச்சூடிப் பிணத்தைத் தின்னுமியல்பை யுடைய பேய்க்குத் தம்மை விருந்துசெய்தாரென்க. (134) 2236. தோலாப்போர் மறமன்னர் தொடித்தோள்க ளெடுத்தோச்சி மேலாண்மே னெருப்புமிழந்து மின்னிலங்கு மயில்வாளாற் காலாசோ டறவெறிந்த கனைகழற்கா லலைகடலு ணீலநீர்ச் சுறாவினம்போ னெய்த்தோருட் பிறழ்ந்தனவே. இ-ள். மன்னர்தோளையுயர்ந்து வாளாலேயோச்சி மேலாண் மேல் வெட்டுகின்றகாலத்துச் சந்நாகத்தோடேயறும் படி வெட்டப்பட்ட கழற்கால், கடலினீரிலே நீலச்சுறாவினம் பிறழ்ந் தாற்போலே குருதியிலே பிறழ்ந்தனவென்க. (135) 2237. கருவியூ டுளங்கழிந்து கணைமொய்ப்பக் கதஞ்சிற;நது குருவிசேர் வரைபோன்ற குஞ்சரங் கொடியணிந்த வுருவத்தே ரிறமுருக்கி யுருணேமி சுமந்தெழுந்து பரிதிசேர் வரைபோலப் பகட்டினம் பரந்தனவே. இ-ள். பலகாரத்தினூடேபோய்க் கணைகள்மொய்த்தலிற் சில குஞ்சரங்கள் நினைவுபோய்க் குருவிசேர்ந்த வரைபோன்றன; சில பகட்டினம் பரிதியெழுந்துசேர்ந்த வரைபோலே கதஞ்சிறந்து முருக்கித் தேருருளையைச்சுமந்து பரந்தனவென்க. இறமுருக்கி-பொடியாகமுறித்து. (136) 2238. மாலைவாய் நெடுங்குடைமேன் மதயானைக் கைதுணிந்து கோலநீள் கொழுங்குருதி கொளவீழ்ந்து கிடந்தன மேலைநீள் விசும்புறையும் வெண்மதியம் விசும்பிழுக்கி நீலமா சுணத்தோடு நிலத்திழிந்த தொத்தனவே. இ-ள். யானையின்கோலங் குருதியைக்கொள்ளும்படி கைகளற்றுக் குடை மேலே வீழ்ந்துகிடந்தவை, முன்பு விசும்பிலே யுறையுமதியம் அதனைத் தப்பிக் கரும்பாம்போடே நிலத்தே வீழ்ந்ததன்மையை யொத்தனவென்க. மேலை, ஐ-அசை. (137) 2239. அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கி யிங்குலிக விறுவரைபோன் றினக்களி றிடைமிடைந்த குஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழிவிட் டுமிழ்குருதி யிங்குலிக வருவிபோன் றெவ்வாயுந் தோன்றினவே. இ-ள். முற்படவே யஞ்சனநிறத்தைப்போக்கி அரத்தத்தைப் பூசுதலிற் சாதிலிங்கத்தையுடைய பெரியவரையையொத்து மிடைந்து கிடந்த இனக்களிறுகள், அமரையுழக்கிச்சென்று பகைவர்யானைகளைப் பாய்தலின், உமிழ்குருதி சாதிலிங்கவருவி போலே யெங்குந் தோன்றினவென்க. (138) 2240. குஞ்சரந் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச் செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்த பஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரை யஞ்சிப்போந் தினநரியோ டோரிநின் றலறுமே. நீங்கி-நீங்க. பஞ்சி-ஆகுபெயர். இ-ள். குஞ்சரத்தைத் தலையணையாக வடுத்து மாவைக் காலணையாக வடுத்து வாலைப்பிடித்து உடுத்ததுகிலின்மேலேயல்லிக் கயிறு கிடந்து துளங்கியிலங்கச் செஞ்சோறாகியகடன் நீங்கும்படி பட்டுக் கிடந்தவரை யஞ்சிக் குதித்துப்போய்நின்று இனநரியும் ஓரியும் அலறுமென்க. (139) 2241. காதலார்க் கமிர்தீந்த கடற்பவழக் கடிகைவா யேதிலாப் புள்ளுணணக் கொடேமென்று வாய்மடித்துக் காதணிந்த பொற்றோடுங் குண்டலமு நகநகா வீததைந்த வரைமார்பர் விஞ்சையர்போற் கிடந்தனரே. ஏது-காரணம். இ-ள். வரைமார்பர் தம்மனைவியர்க்கு அமிர்தீந்தவாயை யவ் வமிர்தையுண்டற்குக் காரணமில்லாத பறவைகளுண்ணக் கொடே மென்றாற் போல வாயைமடித்து, தோடுங்குண்டலமும் நகத் தாமுநக்குக் கிடந்தாரென்க. உயிர் போகாதாரைப்போற் கிடத்தலின், விஞ்சையர் போலென்றார். (140) 2242. குடர்வாங்கு குறுநரிகள் கொழுநிணப் புலாற்சேற்றுட் டொடர்வாங்கு கதநாய்போற் றோன்றின தொடித்திண்டோள் படர்தீரக் கொண்டெழுந்த பறவைகள் படநாக முடனேகொண் டெழுகின்ற வுவணப்பு ளொத்தனவே. இ-ள். புலால்நாற்றத்தையுடைய நிணச்சேற்றிலேநின்று குடரை வாங்குநரிகள் சங்கிலியை வலிக்கும் நாய்போற்றோன்றின; இரைதேரு நினைவு தீரத் தோளைக் கொண்டெழுந்த பறவைகள் படநாகத்தைக் கொண்டெழுகின்ற கருடனையொத்தனவென்க. (141) 2243. வரையோடு முருமிடிப்ப வளையெயிற்றுக் கொழுங்குருதி நிரையுளை யரிநன்மா நிலமிசைப் புரள்வனபோற் புரையறுபொன் மணியோடைப் பொடிப்பொங்கப் பொருதழிந் தரைசோடு மரசுவா வடுகளத்து ளாழ்ந்தனவே. இ-ள். எயிற்றினையும் உளையினையுமுடைய அரியாகியமா உருமேறிடித்தலின், வரைகளோடேவீழ்ந்து குருதியையுடைய நிலத்தே புரள்வனபோல அரசுகள் அரசுவாக்களோடே களத்தே வீழ்ந்து புரண்டன வென்க. புரையறுமணி-குற்றங்கெட்டமணி. பொன்னோடை யின்மணி பொடியாய்ப் பொங்கும்படி பொருதலின், அழிந்தாழ்ந் தனவென்க. (142) 2244. தடம்பெருங் குவளைக்கட் டாழ்குழலார் சாந்தணிந்து வடந்திளைப்பப் புல்லிய வரைமார்பம் வாள்புல்ல நடந்தொழுகு குருதியு ணகாக்கிடந்த வெரிமணிப்பூ ணிடம்படு செவ்வானத் திளம்பிறைபோற் றோன்றினவே. இ-ள். மகளிர் தாமேசாந்தணிந்து எரிகிறமணி வடந்தி ளைப்பப் புல்லியமார்பை வாள்புல்லுதலின், நடந்துபோகின்ற குருதியிலே விளங்கிக்கிடந்த முத்துவடம் செக்கர்வானிற் பிறைபோற்றோன்றின வென்க. இத்துணையும் இரண்டுபடைக்கும்பொது. (143) வேறு 2245. காளமா கிருளைப் போழ்ந்து கதிர்சொரி கடவுட் டிங்கள் கோளரா விழுங்க முந்நீர்க் கொழுந்திரைக் குளித்த தேபோ னீளம ருழக்கி யானை நெற்றிமேற் றத்தி வெய்ய வாளின்வாய் மதனன் பட்டான் விசயன்போர் விசயம் பெற்றான். இதுமுதலாகப் பிரித்துக்கூறுகின்றார். இ-ள். கருமை மேன்மேலும் பெருகாநின்ற இருளைக் கெடுத்துக் கதிரையீன்ற திங்கள் பாம்புவிழுங்குதலின், உயரப் போய்ப் பின்பு கடலிலே யழுந்தியதோர்தன்மை போலே, மதனன் அமரையுழக்கி விசயனதுயானைநெற்றியிலேபாய்ந்து அவன் வாளின்வாயிலே பட்டுப் படைக்குள்ளே வீழ்ந்தான்; விசயனும் போரிலே வெற்றியைப் பெற்றானென்க. (144) 2246. மன்மத னென்னுங் காளை மணியொளிப் புரவித் தேர்மேல் வின்மழை சொரிந்து கூற்றிற் றெழித்தனன் றலைப்பெய் தார்ப்பக் கொன்மலி மார்பன் பொற்றேர் கொடுஞ்சிலை யறுப்பச் சீறிப் பொன்வரைப் புலியிற் பாய்ந்து பூமிமேற் றோன்றி னானே. இ-ள். அவன்றம்பி மன்மதனென்னுங்காளை விசயனைத் தலைப்பெய்து தேர்மேலேநின்று வில்லாலே மழையைச் சொரிந்து தெழித்தனனாயார்ப்ப, அவ்விசயன் தேரிற்கயிற்றை யும், வில்லை யுமறுப்ப, அவன்சீறி வரையினின்றும் பாயும் புலிபோலே நிலத்திலே பாய்ந்து தோன்றினானென்க. (145) வேறு 2247. நெற்றிமேற் கோல்கண் மூன்று நெருப்புமிழ்ந் தழுந்த வெய்யச் சுற்றுபு மாலை போலத் தோன்றறன் னுதலிற் சூடிப் பொற்றதோர் பவழந் தன்மேற் புனைமணி யழுத்தி யாங்குச் செற்றெயி றழுந்தச் செவ்வாய் கெவ்விவா ளுரீஇ னானே. இ-ள். அங்ஙனந்தோன்றின மன்மதன் நெற்றியை மாலை போலே சூழ்ந்து சென்று அந்நெற்றியிலே யழுந்தும்படி விசயன் மூன்றம்பை யெய்தானான். அவன்அவற்றை மாலைபோலே தன்னு தலிலேசூடிக் கோபித்துப் பவளத்தின்மேலே முத்தை யழுத்தினாற் போலச் செவ்வாயிலே யெயிறழுந்தும்படி வாயைமடித்து வாளை யுருவினானென்க. பொற்றது-பொலிவுபெற்றது. (146) 2248. தோளினா லெஃக மேந்தித் தும்பிமே லிவரக் கையா னீளமாப் புடைப்பப் பொங்கி நிலத்தவன் கவிழ்ந்து வீழக் கீளிரண் டாகக் குத்தி யெடுத்திடக் கிளர்பொன் மார்பன் வாளினாற் றிருகி வீசி மருப்பின்மேற் றுஞ்சி னானே. தும்பி-யானை. இ-ள். அந்தவாளை யவன் கையாலேயேந்தி விசயனேறி யிருந்த யானையின் மேலேபொங்கிச் சென்றானாக, அவ்வியானை யவன்றூரி யனாம்படி தன்கையிற் றண்டாலடிக்கையில் அவன் கவிழ்ந்த நிலத்தேவீழ, அவ்வியானைசென்று அவனையிரண்டு கூறாகக் குத்திக் கொம்பிலேயெடுப்ப, அப்போது உணர்ச்சி யுண்மையின், உடம்புசிறிது திருகி வாளாலே வெட்டி யக்கொம் பிலேபட்டானென்க. இத்துணையும் மதனனும், மன்மதனும் விசயனோடு பொருது பட்டபடி கூறிற்று. (147) 2249. நனைகலந் திழியும் நைதார் நான்மறை யாளன் பைம்பொற் புனைகலக் குப்பை யொப்பான் புத்திமா சேனன் பொங்கி வனைகலத் திகிரித் தேர்மேன் மன்னரைக் குடுமி கொண்டான் கனையெரி யழலம் பெய்த கண்ணுதன் மூர்த்தி யொத்தான். நனை கலந்திழியும் பைந்தார்-அரும்புகள் இடையிலே கலக்கப் பட்டு அலர்ந்தவற்றிற் றேனிழியுந்தார். நனை-தேனுமாம். மா-அசை. எரிகிற அழலாகியவம்பு. இ-ள். அந்தணன், பொன்னிறத்தையொப்பான், புத்தி சேனன், அவன் பொங்கித் திகிரிபோலே வட்டமாகவருந்தேரில் அரசரை வெற்றி கொண்டான்; அப்பொழுது அவன் றிரிபுர மெரித்த இறைவனை யொத்தானென்க. (148) 2250. சண்பகப் பூங்குன் றொப்பான் றேவமா தத்தன் வெய்தா விண்புக வுயிரைப் பெய்வான் வீழ்தரு கடாத்த வேழ மண்பக விடிக்குஞ் சிங்க மெனக்கடாய் மகதர் கோமான் றெண்கடற் றானை யோட நாணிவேல் செறித்திட் டானே. இ-ள். பொன்னணிதலிற் சண்பகம்பூத்த மலையை யொப்பானாகிய தேவதத்தன் பல்லுயிரையும் வருந்தாமல் விண்ணிலே புகும்படி செலுத்தவேண்டிவேழத்தின்மேலே சிங்கமெனவிருந்து அதனை மகதர் கோன்மேலே வெய்தாகச் செலுத்தி அவன்றானை யோட, நாணி மீண்டானென்க. (149) 2251. சின்னப்பூ வணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன்வாண் மன்னருட் கலிங்கர் கோமான் மத்தகத் திறுப்ப மன்னன் பொன்னவிர் குழையும் பூணு மாரமுஞ் சுடர வீழ்வான் மின்னவிர் பரிதி முந்நீர்க் கோளொடும் வீழ்வ தொத்தான். சின்னப்பூ-விடுபூ. இ-ள். சினவுமன்னரிற் கலிங்கர்கோமான் றலையிலே ஸ்ரீதத்தன் வாள் தங்கிற்றாக, அவன் குழைமுதலியன சுடரப் படைநடுவே வீழ் கின்றவன், பருதி கோளுடனே கடலில் வீழ்வதனை யொத்தானென்க. கோளிற்குக் குழைமுதலியன வுவமம். (150) 2252. கொடுஞ்சிலை யுழவன் மான்றேர்க் கோவிந்த னென்னுஞ் சிங்க மடங்கருஞ் சீற்றத் துப்பின் மாரட்ட னென்னும் பொற்குன் றிடந்துபொற் றூளி பொங்கக் களிற்றொடு மிறங்கி வீழ வடர்ந்தெறி பொன்செ யம்பி னழன்றிடித் திட்ட தன்றே. மடக்கரும்-விகாரம். இ-ள். மாரட்டனென்னும் பொன்மலை பொற்றூளி பொங்கும்படி மார்பிடந்து களிற்றோடுந்தாழ்ந்துவீழும்படி வில்லுழவனாகிய கோவிந்த னென்னுஞ் சிங்கம் அழன்று அடர்ந்து சென்று அம்பாலேயிடித்ததென்க. சிங்கமுமலையுமாதலின், இடித்ததென்றார். கோவிந்த மகாராசன் மாரட்டனோடு பொருதபடிகூறினார் (151) 2253. கோங்குபூத் துதிர்ந்த குன்றிற் பொன்னணி புளகம் வேய்ந்த பாங்கமை பரும யானைப் பல்லவ தேச மன்னன் றேங்கமழ் தெரியற் றீம்பூந் தாரவ னூர்ந்த வேழங் காம்பிலிக் கிறைவ னூர்ந்த களிற்றொடு மலைந்த தன்றே. பாங்கு-உறவு. தெரிதலையுடைய தீவிய பூந்தாரவன்-உலோக பாலன். இ-ள். கோங்குபூத்து உதிர்ந்துகிடந்த குன்றுபோலே பொன்னாற் செய்த கண்ணாடிதைத்த யானையையுடைய பல்லவ தேசத்தின் மன்னனாகிய தாரவனேறின வேழங் காம்பிலிக்கிறைவ னேறின களிற்றோடேமலைந்ததென்க . (152) 2254. கொந்தழல் பிறப்பத் தாக்கிக் கோடுகண் மிடைந்த தீயால் வெந்தன விலையி லாத சாமரை வீர மன்ன னந்தரம் புதைய வில்வா யருஞ்சரம் பெய்த மாரி குந்தத்தால் விலக்கி வெய்ய கூற்றென முழங்கி னானே. இ-ள். அப்பொழுது அவற்றின்கோடுகள் அழல்பிறப்பத் தாக்க மிடைந்ததீயாலே சாமரைவெந்தன; அப்பொழுது உலோகபாலன் விசும்பு மறையும்படி தன்வில்வாயினின்றும் பெய்த சரமாரியைக் காம்பிலிமன்னன்றன்னெறிகோலாலே விலக்கி முழங்கினானென்க. தாக்கி-தாக்க. (153) 2255. மற்றவ னுலோக பாலன் வயங்குபொற் பட்ட மார்ந்த நெற்றிமே லேய்த கோலைப் பறித்திட வுமிழ்ந்த நெய்த்தோ ருற்றவன் களிற்றிற் பாயத் தோன்றுவா னுதயத் துக்சி யொற்றைமாக் கதிரை நீட்டி யொண்சுட ரிருந்த தொத்தான். இ-ள். அங்ஙனமுழங்கினகாம்பிலிமன்னன் றன்வில்லை யேந்தி யுலோகபாலனது நெற்றியிலேயழுந்த எய்தகோலைத் தான்பறித் திடுதலின், உமிழ்ந்தகுருதி தானேறின வலிய களிற்றிலே வீழத் தோன்று கின்றவுலோகபாலன், ஞாயிறு ஒற்றைக் கதிரைப் புறப்பட விட்டு உதயத்துச்சியிலே யிருந்த தன்மையை யொத்தா னென்க. இதனைக் காம்பிலிமன்னன்மேல் ஏற்றுவாருமுளர். (154) 2256. கொடுமரங் குழைய வாங்கிக் கொற்றவ னெய்த கோல்க ணெடுமொழி மகளிர் கோல நிழன்மணி முலைக ணேர்பட் டுடனுழ வுவந்த மார்ப மூழ்கலிற் சிங்கம் போலக் கடன்மருள் சேனை சிந்தக் காம்பிலி மன்னன் வீழ்ந்தான் இ-ள். அங்ஙனமிருந்த உலோகபாலன் வில்லைவலித்து எய்த கோல்கள்சென்று அவன்மார்பிலே மூழ்கலிற்றன் சேனை கெடும்படி சிங்கம்பட்டு வீழ்ந்தாற்போலக் காம்பிலிமன்னன் பட்டு வீழ்ந்தானென்க. தங்கற்புமிகுதியால் வஞ்சினங்கூறுதற்குரிய மகளிர். இத் துணையுங் காம்பிலிமன்னனும், உலோகபாலனும் பொருத படிகூறினார். (155) 2257. பொன்னிறக் கோங்கம் பொற்பூங் குன்றெனப் பொலிந்த மேனி நன்னிற மாவின் மேலா னலங்கொடார் நபுல னென்பான் மின்னிற வெஃக மேந்தி வீங்குநீர் மகதை யார்கோன் கொன்னிறக் களிற்றி னெற்றிக் கூந்தன்மாப் பாய்வித் தானே. இ-ள். பொலிவினையுடைய பூங்கோங்கமும் பொன் னிறக்குன்ற முமென்னப் பொலிந்தமேனியையுடைய புரவி மேலா னாகிய நபுலனென் கின்றவன் வாளையெடுத்து மகதையார் கோன் களிற்றி னுச்சியிலே அம்மாவைப் பாய்வித்தானென்க. கொன்-அச்சம். (156) 2258. ஏந்தறன் கண்கள் வெய்ய விமைத்திட வெறித லோம்பி நாந்தக வுழவ னாணி நக்குநீ யஞ்சல் கண்டாய் காய்ந்திலே னென்று வல்லே கலினமாக் குன்றிற் பொங்கிப் பாய்ந்ததோர் புலியின் மற்றோர் பகட்டின்மேற் பாய்வித் தானே. நாந்தகம்-வாள். இ-ள். அம்மகதையார்கோன் கண்களிமைத்தலின், நபுலன் அவனைவெட்டாதே யிவன்மேலேவந்தேனேயென்று நாணி நக்கு நின்னைக் காய்கின்றிலேன்; நீயஞ்சலென்று தேற்றித் தன்மாவை, ஒரு குன்றினின்றும்ஒருகுன்றிலே பொங்கிப்பாய்ந்த புலிபோலே அக் களிற்றினின்றும் nவறோர் வெய்யகளிற்றின்மேலே பாய்வித் தானென்க. (157) 2259. கைப்படை யொன்று மின்றிக் கைகொட்டிக் குமர னார்ப்ப மெய்ப்படை வீழ்த்த னாணி வேழமு மெறிதல் செல்லான் மைப்படை நெடுங்கண் மாலை மகளிர்தம் வனப்பிற் சூழ்ந்து கைப்படு பொருளி லாதான் காமம்போற் காளை மீண்டான். இ-ள். அவன் அங்ஙனம் பாய்வித்த களிற்றிலிருந்தகுமரன் றன்கையிற் படைகளொன்றுமின்றாய் மற்போர்செய்தற்குக் கையைத் தட்டி யார்த்தானாக, அவனை வெட்டுதலை நாணி யவன் வேழத்தையுமெறியானாய் மீண்டானென்க. மகளிர்தம்மழகாலே யிவர்புணர்தற்குரிய மகளிரென்று நினைத்துச் சென்று, அவர்க்குப்பொருள்வேட்கையென்கின்ற குறை பாடுண்மை கண்டு, அக்காலத்து அவர்க்குக் கொடுத்துப் புணர வேண்டும் பொருளில்லாதவன் காமம்போலே மீண்டா னென்க. அவற்குக் கொடுத்தற்குத் தன்கைப்படையொழிய வேறின்மையிற் படை வழங்காதுமீண்டான். இனி மகளிர் தம்மழ காலே யொருவனை யிவன் புணர்ச்சிக்குத் தக்கானென்று கருதிச் சென்று தங்கையிடத்தே யுண்டாம் பொருளையுடையனல்லா தானிடத்து அவர்வேட்கை மீளுமாறுபோல மீண்டானென்று மாம். இது பான்மயக்குவமம். மற்போர்-எருமைமறமாம். இத்துணையும் நபுலன்போர்கூறினார். (158) வேறு 2260. மண்காவலை மகிழாதிவ ணுடனேபுக ழொழிய விண்காவலை மகிழ்வீர்நனி யுளிரோவென விபுலன் வண்காரிருண் மின்னேயுமிழ் நெய்வாயதொ ரயில்வாள் கண்காவல கழுகோம்புவ துயராநனி வினவும். இருளையுடைய காரின் மின்னையேயுமிழுந் தேய்ந்த வாயையுடையவாள். கண் காவல-கண்ணைக்குத்தும். இ-ள். விபுலன் கழுகையோம்புவதாகிய வாளையுயர்த்து மண் காவலை மகிழாதே யிவ்வுலகுடனே புகழ்நிற்க என்னோடே பொருது விண்காவலை மிகவும் விரும்பும் வீரருள்ளீரோ? உண்டாகில் மேல் என்னோடு பொருதற்கு வாருமென்று வினவு மென்க. நபுலன்சென்றுமீளுதலின், இவன் வினாவிச்சென்றான். (159) 2261. வீறின்மையின் விலங்காமென மதவேழமு மெறியா னேறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான் மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையு மெறியா னாறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன். இ-ள். தனக்கெதிர்ப்பாரின்மையின், வேலுழவன் மதவேழத்தை யெறிந்தாலும் விலங்கை யெறிந்தானென்பரென்று நினைத்து அதனாலேவெற்றியின்மையின் வேழத்தையும் வெட்டா னாய், முன்புவெட்டுண்டவர் தனக்கு ஒப்பாராயினும் பிறர்படை தீண்டின எச்சிலென்று அவரைiயும்வெட்டானாய், தனக்கிளை யாரையும் நிகரன்மையின் மறம்வாடுமென்று வெட்டானாய், அறமன்மையிற் றன்னின்மூத்தோரையும் வெட்டானாய் நின்றா னென்க. (160) 2262. ஒன்றாயினும் பலவாயினு மோரோச்சினு ளெறிய வென்றாயின மதவேழமு முளவோவென வினவிப் பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப் புனைதார்மிஞி றார்ப்பச் சென்றானிகல் களிறாயிர மிரியச்சின வேலோன். இ-ள். அங்ஙனநின்றவேலோன் இத்திரளிலேசென்றால் ஒன்றே யாயினும் பலவேயாயினும் ஒருவெட்டிலே வெட்டுதற்குப் பல போரிலும் வென்று எனக்குப் பற்றுவனவாகிய வேழ மாயினுமுண்டோ வென்றுவினவி மேருவிலிருக்கிற புலியே றென்னும்படி ஆயிரங் களிறிரிய மிஞிறார்ப்ப யானையின்மேலே சென்றானென்க. ‘அயிலுழவன்,’(சீவக.2261) ‘வேலோன்’ என்றது யானையி லிருந்துபொருமிடத்து வேல் வேண்டுமென்றுகருதி. (161) 2263. புடைதாழ்குழை பொருவில்லுயர் பொன்னோலையொ டெரிய வுடைநாணொடு கடிவட்டினொ டொளிர்வாளினொ டொருவ னடயாநிக ரெறிநீயென வவோவென நக்கான் கிடையாயின னிவனேயெனக் கிளராணழ குடையான். இ-ள். ஒப்பில்லாத வுயர்ந்த வோலையோடே குழைவிளங்க அல்லிக்கயிற்றோடும் மிக்க வட்டுடையோடும் வாளோடுமொரு வீரன்வந்து அவனைச்சேர்ந்து நீயெனக்கு நிகர்; என்னை வெட்டென்றானாக, இவனே யுலகிற்கெல்லாம் ஒப்பாயினா னென்று கூறும்படிவிளங்கும் ஆணழகையுடைய விபுலன் நக்கா னென்க. அதுவோவென நக்கானென்றது-முற்பட மார்பு கொடுத்தா னென்னும் புகழை நீயெய்தக்கருதியோ அப்புகழைத் தாரே னென்று நக்கானென்றவாறு. (162) 2264. இன்னீரின திரைமேலிரண் டிளவெஞ்சுட ரிகலி மின்னோடவை சுழன்றாயிடை விளையாடுகின் றனபோற் பொன்னாணினர் பொருவில்லுயர் புனைகேடகந் திரியாக் கொன்வாளினர் கொழுந்தாரினர் கொடிமார்பினர் திரிந்தார். இ-ள். கடலிடத்தனவாகிய திரைமேலே யிரண்டிள ஞாயிறு இருந்து அவை தாம் இகலிக் கையிற்பிடித்த மின்னோடே சுழன்று விளையாடுகின்றவைபோலே நாணினர் வாளினர் தாரினர் மார்பினராய்க் கேடகத்தைத்திரித்து யானையைக்கொண்டு சாரிகையிலே திரிந்தாரென்க. மின்-வாளிற்குவமை. (163) 2265. விருந்தாயினை யெறிநீயென விரைமார்பகங் கொடுத்தாற் கரும்பூணற வெறிந்தாங்கவ னின்தூழினி யெனவே யெரிந்தாரயி லிடைபோழ்ந்தமை யுணராதவ னின்றான் சொரிந்தார்மல ரரமங்கையர் தொழுதார்விசும் படைந்தான். இ-ள். அங்ஙனங் களிற்றோடுதிரிதலிற் சேர்ந்து வெட்டுதல் கூடாமையின் வேற்போரைக்கருதி, யான்வந்தபின்வந்தமையின் நீயெனக்குவிருந்தாயினாயாதலின் நீமுற்பட வேலாலெறி யென்று விபுலன் றன்மார்பைக் கொடுத்தவற்கு, அவனும் கவசத்த ளவறும்படி யெறிந்து, இனி யெறியுமுறை நினக் கென்றானாக, விபுலனெறிந்த நொய்ம்மையாலே வேல்பட்டுருவினபடியை யவன்றானறியாதே விசும்பைச்சேர்ந்தான்; அப்பொழுது அரமங்கையர் மலரைச்சொரிந்தார்; சொரிந்து தொழுதாரென்க. விண்ணுலகை விரும்பிய விபுலன் ஈண்டுநிற்க, நல்வினை யால் அவன் விண்ணுலகிலேநின்றானென்று தேவர்கூறினார். அவன் ஆங்கு நின்றானென்க. நிலைபெற்றிருந்தநிலையை அவனங்கே நின்றானென்றல் உலகவழக்கு. இனி யடைந்தா ரென்ற பாடத்திற்கு இருவருமடைந்தாரென்பார்க்கு அவனின்றானென்பதனை யானைமேல் நின்றானென்றன் மரபன்மையிற் காலாளாய் இருவருநின்றாரெனல் வேண்டும்; அது முற்கூறியவுவமங்கட்குப் பொருந்தாதாம். அயிலை வாளாக்குதல் பொருத்தமின்று. இத்துணையும் விபுலன் பொருதபடி கூறினார். (164) வேறு 2266. நித்திலக் குப்பை போல நிழலுமிழ்ந் திலங்கு மேனிப் பத்திப்பூ ணணிந்த மார்பிற் பதுமுகன் பைம்பொற் சூழி மொய்த்தெறி யோடை நெற்றி மும்மதக் களிற்றின் மேலான் கைத்தலத் தெஃக மேந்திக் காமுதற் கண்டு காய்ந்தான். இ-ள். மார்பிலணிந்த பத்திகளையுடைய முத்துப் பூணாலே நித்திலத்திரள் போல நிழலுமிழ்ந்திலங்கு மேனியை யுடையபதுமுகன், முகபடாத்தையும் ஓடை நெற்றியையுமுடைய களிற்றின் மேலிருந்தவன், எஃகத்தையேந்தித் காமுகனைக்கண்டு காய்ந்தானென்க. (165) 2267. மாற்றவன் சேனை தாக்கித் தளர்ந்தபின் வன்கண் மள்ள ராற்றலோ டாண்மை தோன்ற வாருயிர் வழங்கி வீழ்ந்தார் காற்றினாற் புடைக்கப் பட்டுக் கடலுடைந் தோடக் காம ரேற்றிளஞ் சுறாக்க ளெங்குங் கிடந்தவை போல வொத்தார். மாற்றவன்-காமுகன். இ-ள். அவன்காய்ந்தவனைக்கண்டு காமுகன்சேனைவந்து தாக்கு தலிற் பதுமுகன் படை கெட்டது; அதன்பின்பு அதனோடு கெடாதே மீண்டுநின்ற வன்கண்மள்ளர் ஏறாகிய சுறாக்கள் போலே வலியு மாண்மையுந் தோன்றநின்று பொருது பட்டுக் கிடந்தவர்கள், பெருங்காற்றால் அடிக்கப்பட்டுக் கடலுடைந்து போக அச்சுறாக்கள் நிலமெங்குங் கிடந்தவற்றை யொத்தாரென்க. காற்றுக் காமுகன் படைக்கும், கடல் பதுமுகன் படைக்கு முவமை. போல ஒத்தாரென்றவிரண்டும் உவமவுரு பாதலின், போல வென்பதனை முன்னே கூட்டுக. (166) 2268. தூசுலாம் பரவை யல்குற் றுணைமுலை மகளி ராடு மூசல்போற் சேனை யோடப் பதுமுகன் களிற்றை யுந்தி மாசில்சீர் மழையி னெற்றி மாமதி நுழைவ தேபோற் காய்சினக் களிற்றி னெற்றி யாழிகொண் டழுத்தி னானே. கெட்டபடை மீண்டும் பொருதுகெடுதலின், ஊசலோடு வமித்தார். இ-ள். தன்முன்னின்ற சேனைகெடுதலிற் பதுமுகன் பொறானாய்க் களிற்றைச் செலுத்தி ஆழியைக் கையிலேவாங்கிக் கொண்டு சென்று மழையினெற்றியிலே மதி நுழையுமாறு போலக் காமுகன் களிற்றினெற்றியிலே யழுத்தினானென்க. (167) 2269. பெருவலி யதனை நோனான் பிண்டிபா லத்தை யேந்தி யருவரை நெற்றி பாய்ந்த வாய்மயிற் றோகை போலச் சொரிமதக் களிற்றின் கும்பத் தழுத்தலிற் றோன்றல் சீறிக் கருவலித் தடக்கை வாளிற் காளையை வெளவி னானே. பிண்டிபாலம்-தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதோர் படை. யானைசேர்ந்தமையின், வாளாலே வெட்டினான். இ-ள் காமுகன் அதனைப்பொறானாய்ப் பிண்டிபாலத்தை யெடுத்து மலைத்தலையிலே பாய்ந்த தோகைமயில்போலே பதுமுகன்களிற்றின் மத்தகத்தே யழுத்துதலின் அவன்சீறித் தன்கையில் வாளாலே காமுகனைவெட்டினானென்க. பீலியையுடைய யாதலின், மயிலோடுவமித்தார். கருவலி-பெரியவலி. (168) 2270. தீமுகத் துமிழும் வேற்கட் சில்லரிச் சிலம்பி னார்தங் காமுகன் களத்து வீழக் கைவிர னுதியிற் சுட்டிப் பூமுக மாலை மார்பன் பொன்னணி கவச மின்னக் கோமுகன் கொலைவல் யானை கூற்றெனக் கடாயி னானே. மகளிர்தம்மிடத்துக் காமுகன். பூமுகம்-பூப்போலுமுக மெனச் செவ்வி கூறினார். இ-ள். காமுகன் பட்டவளவிலே, அவன்றம்பி மாலைமார் பனாகியகோமுகன், என்றமையனைக் கொன்றவனிவனென்று சுட்டிக்காட்டிக் கவசமின்னக் களிற்றைக் கடாவினானென்க. (169) 2271. சாரிகை திரியும் யானை யுழக்கலிற் றரணி தன்மே லார்கலிக் குருதி வெள்ள மருந்துகள் கழுமி யெங்கும் வீரியக் காற்றிற் பொங்கி விசும்புபோர்த் தெழுதப் பட்ட போர்நிலைக் களத்தை யொப்பக் குருதிவான் போர்த்த தன்றே. களம்-இடம். குருதிவான்போர்த்தது-செக்கர்வானிட்டது. இ-ள். அவன் அங்ஙனஞ்சேறலிற் போர்செய்யு நிலைமை யெழுதப்பட்ட இடத்தையொப்பத் தப்பாமற் சாரிகையிலே திரிகின்ற யானைகள் கடல்போலுங் குருதி வெள்ளத்தை யுழக்க லின், அது துகளாய்த் திரண்டு, புரவியுங்களிறுமெடுத்த பெருங் காற்றாலே பொங்கி விசும்பெங்கும் போர்த்துச் செக்கவானிட்ட தென்க. (170) 2272. சென்றது தடக்கை தூணி சேந்தகண் புருவங் கோலி நின்றவிற் குனிந்த தம்பு நிமிர்ந்த னநீங்கிற் றாவி வென்றிகொள் சரங்கண் மூழ்கி மெய்ம்மறைத் திட்டு மின்றோய் குன்றின்மேற் பவழம் போலக் கோமுகன் றோன்றி னானே. இ-ள். பதுமுகன்கை தூணியிலே சென்றது; அப்பொழுது கண்கள் சிவந்தன; புருவங்கள் வளைந்தேநின்றன; வில்வளைந்தது; அம்புகள் நேரே சென்றன; அவன்முன்னின்ற படைகளினுயி ரெல்லாம் போயின; பின்பு அவன்மேலே யம்பு களழுந்தி மெய்யை மறைத்து அதிலே சிலவுருவிப்போதலிற் குருதிபோர்த்துக் கோமுகன் மின்செறிந்த மலையிற் பவழம்போலத் தோன்றினா னென்க. (171) 2273. பனிவரை முளைத்த கோலப் பருப்புடைப் பவழம் போலக் குனிமருப் புதிரந் தோய்ந்த குஞ்சரங் கொள்ள வுந்திக் கனிபடு கிளவி யார்தங் கதிர்முலை பொருது சேந்த துனிவரை மார்பன் சீறிச் சுடுசரஞ் சிதறி னானே. இ-ள். முலைபொருது சிவந்தமார்பன் பனிவரையிலே முளைத்த பருமையையுடைய பவழம்போலே குருதிசெறிந்த குனிமருப்பை யுடைய குஞ்சரத்தைப் போர் கொள்ளும்படி செலுத்திச் சீறிச் சரத்தைச்சிதறினானென்க. வரைவெறுக்கு மார்பன்-கோமுகன். (172) 2274. பன்னலம் பஞ்சிக் குன்றம் படரெரி முகந்த தொப்பத் தன்னிரு கையி னாலுந் தடக்கைமால் யானை யாலு மின்னுயிர் பருகிச் சேனை யெடுத்துக் கொண் டிரிய வோட்டிக் கொன்முரண் டோன்ற வெம்பிக் கொலைக்களிற் றுழவ னார்த்தான். இ-ள். அங்ஙனஞ்சிதறி எஃகுதலையுடைய பஞ்சியாகிய மலையை எரிமுகந்த தன்மையையொப்பத் தன்கையாலும் யானை யாலும் பதுமுகன்சேனை விசையெடுத்தோடும்படி பொருது ஆண்டுப் போகாதுநின்றவருயிரைப்பருகிப் பெரியவலி தோன்ற வெம்பிக் கோமுகனார்த்தானென்க. இதனைப் பதுமுகன் பொருதானென்பாருமுளர். (173) 2275. தருக்கொடு குமர னார்ப்பத் தன்சிலை வளைய வாங்கி யொருக்கவன் கையும் வாயுமுளங்கிழித் துடுவந் தோன்றச் சுருக்குக்கொண் டிட்ட வண்ணந் தோன்றலெய் திடுத லோடு மருப்பிறக் களிறு குத்தி வயிரந்தான் கழிந்த தன்றே. இ-ள். அங்ஙனம்பொருத செருக்கோடே கோமுகன் கையை வாயிலே வைத்து ஆர்த்தானாக, பதுமுகன் அதுபொறாதே தன்வில்லை வலித்துச் சேரச்சுருக்குக்கோத்தாற் போலே கையையும் வாயையும் கிழித்துப் பின்பு அவனுள்ளத்தையுங் கிழித்துப் பின்பு அவனுள்ளத்தை யுங்கிழித்து ஈர்க்குத் தோன்றும்படி பலவம் பையும் எய்கிறவளவிலே, கோமுகன் களிறு தன்மருப்புறும்படி பதுமுகன் களிற்றைக் குத்தலின், அதன்கோளகை போயிற்றென்க. (174) 2276. நித்தில மணிவண் டென்னு நெடுமதக் களிறு பாய முத்துடை மருப்பு வல்லே யுடைந்துமுத் தொழுகு குன்றின் மத்தக யானை வீழ்ந்துவ யிரங்கொண் டொழிந்த தாங்குப் பத்திரக் கடிப்பு மின்னப் பதுமுகன் பகடு பேர்த்தான். இ-ள். கோடு புய்க்காலது நின்ற அக்களிற்றைப் பதுமுக னேறின நித்தில மணிவண்டென்னுங் களிறு திருகிக் குத்துதலின், முன்பு தைத்துநின்ற மருப்பு முரிந்து முத்தொழுகுமலைபோலே அவ்வியானை வீழ்ந்து செற்றங்கொண்டு பட்டது; அப்பொழுது பதுமுகன் களிற்றை மீட்டானென்க. பத்திரக்கடிப்பு-நன்றாகிய குதம்பை. இத்துணையும் பதுமகன் பொருதபடி கூறினார். (175) 2277. பத்திரக் கடிப்பு மின்னப் பங்கியை வம்பிற் கட்டிக் கொத்தலர்த் தும்பை சூடிக் கோவிந்தன் வாழ்க வென்னாக் கைத்தலத் தெஃக மேந்திக் காளைபோய் வேறு நின்றான் மத்தக யானை மன்னர் வயிறெரி தவழ்ந்த தன்றே. 2278. மேகலைப் பரவை யல்குல் வெள்வளை மகளிர் செஞ்சாந் தாகத்தைக் கவர்ந்து கொண்ட வணிமுலைத் தடத்துள் வைகிப் பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேயமன்னன் சேவகன் சிங்கநாதன் செருக்களங் குறுகி னானே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். மகளிரது ஆகத்தை யிடங்கொண்டுபெருந்த சாந்த ணிந்த முலைத்தடத்தே தங்காநிற்கவும் அவர்கள் கூற்றிலே செல்லாத நெஞ்சினையுடைய உலோகபாலன் சேவகனாகிய சிங்கநாதன் மயிரைக் கச்சாலே கட்டிச்சூடி வேலையேந்தி வாழ்க வென்னா மின்ன வேறே நின்றான்; ஆண்டுத் தன்னெதிர் சென்றோரின்மையின், அக்காளை செருக்களத்தைக் குறுகினான்; அப்பொழுது மன்னர் வயிற்றில் எரிதவழ்ந்ததென்க. வைகி-வைக. பாகம்-பங்கமுமாம். குருகுலத்தை விளக்குதலானும், சீவகற்கும் உலோகபாலற்கும் இறைவனாதலானுங் கோவிந்தனை வாழ்த்தினான். (176-77) 2279. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்துப் பொன்செய் கனைகதிர் வாளை யேந்திக் கால்கழ லணிந்து நம்மை யினையன பட்ட ஞான்றா லிறைவர்க ணினைப்ப தென்றே முனையழன் முளிபுற் கான மேய்ந்தென நீந்தி னானே. இ-ள். அங்ஙனங் குறுகினவன் யானைக்கொம்பாற்செய்த வாசின் கண்ணே புனைகதிரையுடைய மோதிரத்தைச்செறித்து அவ்வாசிலே பொன்னிட்ட வாளையேந்திக் காலைக் கழலாலணிந்து நம்மை யிறைவர்கணினைத்துக் கொண்டாடுவது இத்தன்மை யவான வெற்றிகளுண்டான நாள்களாலேயென்று கருதி யுலர்ந்த புற்கானத்தை யழன்மேய்ந்தாற்போலப் போரை வெட்டிக் கடந்தானென்க. பாடுகுறித்தலின், வாளைவாங்கினான். இத்துணையுஞ் சிங்கநாதன்செயல் கூறினார். (178) 2280. தாரணி பரவை மார்பிற் குங்கும மெழுதித் தாழ்ந்த வாரமும் பூணு மின்ன வருவிலைப் பட்டி னங்கண் ஏர்படக் கிடந்த பொன்ஞா ணிருள்கெட விழிப்ப வெய்ய பூரண சேனன் வண்கைப் பொருசிலை யேந்தி னானே. இ-ள். தாரணிந்தமார்பிலே ஆரமும் பூணுமின்னாநிற்கக் குங்குமத்தையெழுதிப் பட்டின்கண்ணே யழகுபடக்கிடந்த அல்லிக்க யிறுவிளங்கப் பூரணசேனன் வில்லையேந்தினா னென்க. இருள் கெடுகையினாலே விழிப்ப-ஓடவைக்கையினாலே விளங்க. (179) 2281. ஊனமர் குறடு போல விரும்புண்டு மிகுத்த மார்பிற் றேனமர் மாலை தாழச் சிலைகுலாய்க் குனிந்த தாங்கண் மானமர் நோக்கி னாரு மைந்தருங் குழீஇய போருட் கானமர் காம னெய்த கணையெனச் சிதறி னானே. இ-ள். இறைச்சிகொத்தும் பட்டடைமரம்போல இரும்பு மேய்ந்து பசிதீர்ந்து மிகுந்துவைத்த மார்பின் மாலைதாழ மெய் வளைதலாலே சிலைகுனிந்தே நின்றது; அப்பொழுது மகளிருமைந் தருந் திரண்ட போரிலே காமனெய்த கானமர் கணையென்னும்படி கணையைச் சிதறினானென்க. காமன் ஒருவனாய் நின்று பலரையுமெய்தலின், உவமம். (180) 2282. வண்டலை மாலை தாழ மதுவுண்டு களித்து வண்கைப் புண்டலை வேலை யேந்திப் போர்க்களங் குறுகி வாழ்த்திக் கண்படு காறு மெந்தை கட்டியங் கார னென்றே யுண்டொலை யார்க வேலென் றுறுவலி தாக்கி னானே. வண்டலைமாலை-மதுவுண்டு களித்து வண்டலைக்கிற மாலை; நிகழ்காலமுணர நின்றது. களித்த பாடமாயின், அகரத் தைச் சுட்டாக்கி அவ்வுறுவலியென்க. இ-ள். அப்பூரணசேனன் வில்லைநீக்கி மாலைதாழக் கையாலே வேலையேந்திக் களத்தைக்குறுகிக் கட்டியங்காரன் உலகெல்லாந் துஞ்சும் ஊழியளவும் வாழ்வானாகவென்று வாழ்த்தி இவ்வேல் உயிர்களைக் கடுக வுண்டு வயிறுநிறைவதாக வென்று கூறிப் பொருதானென்க. (181) 2283. கூற்றென வேழம் வீழாக் கொடிநெடுந் தேர்க ணூறா வேற்றவர் தம்மைச் சீறாவேந்திர நூழில் செய்யா வாற்றலங் குமரன் செல்வா னலைகடற் றிரையி னெற்றி யேற்றுமீ னிரியப் பாய்ந்த வெறிசுறா வேறு போன்றான். இ-ள். பூரணசேனன் வீழ்த்து நூறிச் சீறி ஒருகணமாயம் போலக் கொன்று குவித்தலைச்செய்து செல்கின்றவன் ஏறாகிய மீன்களிரியப் பாய்ந்த சுறாவேறுபோன்றானென்க. (182) 2284. மாலைக்க ணாம்பல் போல மகளிர்தங் குழாத்திற் பட்டார் கோலவாட் போருட் பட்டாற் குறுமுயற் கூடு கண்டு சாலத்தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை நீர ராயின் ஞாலத்தா ராண்மை யென்னா மெனநகா வருகின் றானே. இ-ள். மகளிர்குழாத்தின் மாலைக்காலத்து ஆம்பல்போ மகிழ்ச்சி யுற்றவர்கள் வாட்போரிற்சென்றால் மதியைக்கண்டு மயங்குந் தாமரை யின்றன்மையராயினாராயின். ஞாலத்தார் வீரத்தையாளுந்தன்மை என்னாய்முடியுமென்று நக்கு வாரா நின்றானென்க. இத்துணையுங் கட்டியங்காரன்படைத்தலைவன் பூரண சேனன்செயல் கூறினார். (183) 2285. முடிச்சடை முனிவ னன்று வேள்வியிற் கொண்ட வேற்கண் மடத்தகை மகளிர் கோல வருமுலை யுழக்கச் சேந்து கொடிப்பல வணிந்த மார்பிற் கோவிந்தன் வாழ்க வென்று நடத்துவா னவனை நோக்கி நகாச்சிலை பாரித் தானே. முனிவன்-வீரபத்திரதேவன்; இறைவன்றன்னைப் போலே படைத்தலின், அவனை முனிவனென்றார். அன்று தக்கன் வேள்வியைத் தவிர்ப்பான்வேண்டியிறைவன் றானாகப்படைத்துக் கொண்ட முனிவனைப்போலுங் கோவிந்தன்; வேற்கண்மகளிர் முலையுழக்குதலிற் சிவக்கப்பட்டுக் கொடி யணிதற்குக் காரணமான மார்பினையுடைய கோவிந்தன். இ-ள். கோவிந்தன் வாழ்கவென்று நடத்துகின்றசிங்க நாதன் பூரணசேனனை நோக்கி நக்கு வில்லைவளைத்தானென்க. (184) 2286. போர்த்தநெய்த் தோர னாகிப் புலாற்பருந் தார்ப்பச் செல்வான் சீர்த்தகை யவனைக் கண்டென் சினவுவே லின்னு மார்ந்தின் றூர்த்துயி ருன்னை யுண்ணக் குறைவயி றாரு மென்றாங் கார்த்தவாய் நிறைய வெய்தா னம்புபெய் தூணி யொத்தான். இ-ள். போர்த்தகுருதியனாய்ச் செல்கின்ற பூரணசேனன் சிலை பாரித்த சிங்க நாதனைக்கண்டு என்கையில்வேல் இன்னும் வயிறு நிறைந்ததில்லை; உன்னுயிரை யூற்றி யுண்ணக் குறைவயிறு நிறையுமென்று ஆர்த்தவாய் அப்பொழுதே நிறையும்படி சிங்கநாத னெய்தான்; அப்பொழுதுபூரணசேனன் அம்புபெய்தூணியை யொத்தானென்க. (185) 2287. மொய்ப்படு சரங்கண் மூழ்க முனையெயிற் றாளி போல வப்பணைக் கிடந்த மைந்த னருமணித் திருவில் வீசுஞ் செப்பிள முலையி னார்கண் சென்றுலாய்ப் பிறழச் சிந்திக் கைப்பட வெடுத்திட் டாடும் பொலங்கழற் காயு மொத்தான். இ-ள். பின்னுஞ் சிங்கநாதனெய்தசரங்கள் சென்று மூழ்குதலின், ஆளிபோல அப்பணையிலேகிடந்த பூரணசேனன் கழலினுடைய காயையுமொத்தானென்க. பொலஞ்செப்பையொத்த முலையினாராடுமென்க “பொற்பே பொலிவு” (தொல்.உரி.37) என்றும், “பொன்னென் கிளவி யீறுகெட” (தொல்.புள்ளி.மயங்கு.69) என்றஞ் சூத்திரஞ்செய்தமையிற் பொலம், பொலிவாகாமை யுணர்க. கண்பிறழப் பரப்பியாடுங்கழலென்க. இத்துணையுஞ் சிங்க நாதனோடபொருது பூரணசேனன் பட்டபடி கூறினார். (186) 2288. புனைகதிர்ப் பொன்செய் நாணிற் குஞ்சியைக் கட்டி நெய்த்தோர் நனைகதி ரெஃக மேந்தி நந்தன்வாழ் கென்ன நின்ற வினையொளிர் காளை வேலைக் கடக்கலார் வேந்தர் நின்றார் கனைகடல் வேலை யெல்லை கடக்கலா வண்ண நின்றார். இ-ள். பொன்னாற்செய்நாணாற் றன்மயிரைக்கட்டிக் குருதி யானனைந்த வேலையேந்தி நந்தட்டன்ன வாழ்வானாக வென்று நின்ற போரில் விளங்கினகாளை கையில் வேலைக் கடக்க மாட்டாராய் வேந்தர்நின்றவர்கள், கடல் கரையினெல்லையைக் கடக்கமாட்டாத தன்மைபோல நின்றாரென்க. இவன் நந்தட்டன் சேவகன். (187) 2289. நின்றவப் படையு ளானே யொருமக னீலக் குஞ்சி மன்றல மாலை நெற்றி மழகளி றன்றி வீழான் வென்றியங் கொளிறும் வெள்வேன் மின்னென வெகுண்டு விட்டா சென்றவேல் விருந்து செங்கண் மறவனக் கெதிர்கொண் டானே. இ-ள். களிறன்றிவீழானாய்க் கட்டியங்காரன் படையினுள்ளானாய் நின்ற நீலக்குஞ்சியையுடைய வொருமகன் வெகுண்டு வேலை மின்னெனவிட்டான்; அங்ஙனஞ்சென்ற வேலாகிய விருந்தை நந்தட்டன் சேவகன் மகிழ்ந்த எதிர்கொண்டா னென்க. மன்றல, அ-அசை. வென்று புகழ்பரந்த வொளிறு வேல்.(188) 2290. மான்வயி றார்ந்து நோக்கம் வெருவுறு மருளி னோக்கிற் றேன்வயி றார்ந்த கோதைத் தீஞ்சொலார் கண்கள் போலு மூன்வயி றார்ந்த வெள்வே லொய்யெனப் பறித்து நக்கான் கான்வயி றார்ந்து தேக்கிக் களிவண்டு கனைக்குந் தாரான். மணத்தைத்தேக்கி வயிறுநிறைந்து வண்டொக்குந்தாரான்-நந்தட்டன் சேவகன். இ-ள். தாரான், மான் வயிறுநிறைந்தபொழுது நோக்கும் அச்ச முற்ற மருணோக்கினையுடைய மகளிர் கண்கள் போலும் வேலை விரையப்பறித்து இதுவுமொருவேல் பெற்றேமேயென்று நக்கானென்க. இன்-அசை. (189) 2291. விட்டழல் சிந்தி வெள்வேல் விசும்பின்வீழ் மின்னி னொய்தாக் கட்டழ னெடுங்கண் யாது மிமைத்திலன் மகளி ரோச்சு மட்டவிழ் மாலை போல மகிழ்ந்துபூண் மார்பத் தேற்றுக் கட்டழ லெஃகஞ் செல்லக் கானெறி யாயி னானே. இ-ள். நந்தன்சேவகன் கையில்வேல்அழலைவிட்டுச்சிந்தி மின்னின்நொய்தாகச்செல்ல அவன்கண்கள்சிறிதுமிமைத் திலன்; அங்ஙனமிமையாதேநின்று பின்னும் அவன்விட்டவேல் களையும் மகளிரோச்சுமாலைபோலே மகிழ்ந்து மார்பிலே யேற்றுச் சாளரமாய் நின்றானென்க. கட்டியங்காரன்சேவகன் நந்தட்டன் சேவகனோடு பொருது பட்டான். காற்றுப்போம்வழி சாளரமாம், “மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்” (சிலப்.5:8)என்றார்பிறரும். (190) 2292. கவிமதங் கடந்து காமர் வனப்புவீற் றிருந்த கண்ணார் குவிமுலை நெற்றித் தீந்தேன் கொப்புளித் திட்ட பைந்தார் செவிமதக் கடலங் கேள்விச் சீவகன் கழல்கள் வாழ்த்திச் சவிமதுத் தாம மார்பிற் சலநிதி தாக்கி னானே. இ-ள். செவ்வித்தேனையுடைய தாமமார்பிற் சலநிதி யென்னும் வீரன் புகழுங் கவிஞர்மதத்தைக்கடந்து அழகுவீற்றிருந்த கண்ணாருடைய முலைத்தலையிலே தேனைக் கொப்புளித்த தாரினையுங் கேட்டோர்செவிக்குப் பொருந்துவ தாகிய கடல் கோலுங் கேள்வியினையுமுடைய சீவகன்கழலை வாழ்த்திப் போரைத் தொடங்கினானென்க. இவன் சீவகன்றோழன். (191) 2293. குஞ்சரங் குனிய நூறித் தடாயின குருதி வாடன் னெஞ்சக நுழைந்த வேலைப் பறித்துவான் புண்ணு ணீட்டி வெஞ்சம நோக்கி நின்று மிறைக்கொளி திருத்து வாற்கண் டஞ்சிமற் றரசர் யானைக் குழாத்தொடு மிரிந்திட் டாரே. 2294. தோட்டுவண் டொலியன் மாலைத் துடியிடை மகளி ராய்ந்த மோட்டுவெண் முத்த மின்னு முகிழ்முலை யுழுது சாந்தங் கோட்டுமண் கொண்ட மார்பங் கோதைவாள் குளித்து மூழ்கிக் கோட்டுமண் கொள்ள நின்றான் குருசின்மண் கொள்ள நின்றான். இவையிரண்டுமொருதொடர். நுழைந்தவேல்-பட்டுருவாதவேல். வெஞ்சமநோக்கிநின்று-யாஞ் சுவர்க்க மெய்தும்படி வரும் வெஞ்சமம் நமக்கு இனி யில்லை யென்று கருதிநின்று. நோக்கி-இது நோக்கனோக்கம். தோடு-தொகுதி. ஒலியல்-ஒலித்தல். ஆய்ந்த-தெரிந்து கோத்த. மகளிர்முலையுழுது சாந்தைத் தலையிலே கொண்ட மார்பு-சலநிதிமார்பு. இ-ள். அவன் குஞ்சரங்களை வீழவெட்டி வளைந்த வாளைத் தன்னெஞ்சினின்ற வேலைப்பறித்து அப்புண்ணிலே சொருகியவ் வாளின்வளைவுக்கு இளக்கத்தைப் போக்குகின் றவனைக் கண்டு அரசர் கெட்டார்; கெடுதலின், நமக்கு இனி வெஞ்சமமில்லையென்று கருதிநின்று அக்கருத்தேயாய்த் தன்னுடம்பென்னுநினைவின்றிக் கை அம்மார்பிற் புண்ணிலே யவ்வாளைப் பலகாலுஞ்செலுத்துதலின், அவ்வாள் முழுகித் தசையைக் குத்தியெடுப்பநின்றவன் சீவகன் மண்பெறநின்றா னென்க. வாள் உருவாதிருத்தலிற் றசையைக்குத்தியெடுத்தது. குருதியிலே தான் குளித்துநின்றதென்க. கெட்டவரசர் மீண்டு வந்து வெட்டினா ரென்பார்க்கு வாள்குத்திற்றென்றன் மரபன்மை யுணர்க. இத்துணையுஞ் சலநிதி பொருதுநின்றபடிகூறினார். (192-93) 2295. எரிமணிக் குப்பை போல விருளற விளங்கு மேனித் திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தி யருமணி யரச ராவி யழலம்பிற் கொள்ளை சாற்றி விரிமணி விளங்கு மான்றேர் விண்டொழ வேறி னானே. இ-ள். மேனியையும், மார்பினையுமுடையசீவகன் சிலையை யேந்தி அரசருயிரைத் தன்னம்பினாலே கொள்ளைகொள்ளுந் தன்மையைத் தன்னெஞ்சிலே யமையப் பண்ணித் தேரை யேறினா னென்க. செம்பொன்-ஆகுபெயர். பார்த்துநின்ற விஞ்சையர்தொழ. (194) 2296. கருவளி முழக்குங் காருங் கனைகட லொலியுங் கூடி அருவலிச் சிங்க வார்ப்பு மாங்கடன் கூடிற் றென்னச் செருவிளை கழனி மள்ள ரார்ப்பொடு சிவணிச் செம்பொற் புரிவளை முரச மார்ப்பப் போர்த்தொழி றொடங்கி னானே. இ-ள். பெருங்காற்றின் முழக்குங் காரின்முழக்குங் கடலி னொலியுந் தம்மிற் கூடப்பட்டு அவ்விடத்தேசிங்கவார்ப்புஞ் சேரக் கூடிற்றென்னும்படி செருவிளைகிற கழனியில் வளைமுரச மார்க்கிற ஆர்ப்போடேபொருந்தி வீரருமாராநிற்கப் போர்த்தொழிலைத் தொடங்கினானென்க. (195) 2297. அரசர் தமுடியும் பூணு மாரமும் வரன்றி யார்க்கு முரசமுங் குடையுந் தாரும் பிச்சமுஞ் சுமந்து மாவும் விரைபரித் தேரு மீர்த்து வேழங்கொண் டொழுகி வெள்ளக் குரைபுனற் குருதி செல்லக் குமரன்விற் குனிந்த தன்றே. ‘அரசதம்’என்பதனை எங்குங் கூட்டுக. இ-ள். வெள்ளமாகிய நீர்போலுங்குருதி, முடிமுதலியவற்றை யரித்து முரச முதலியவற்றைச்சுமந்து மாவையுந்தேரையு மீர்த்து வேழத்தையும் மெள்ளக்கொண்டொழுகி நடக்கும் படிகுமரன்வில் வளைந்ததென்க. இது பொருகின்றமுறைமை கூறிற்று. (196) 2298. கேழ்கிள ரெரிகட் பேழ்வாய்க் கிளர்பெரும் பாம்பி னோடுஞ் சூழ்கதிர்க் குழவித் திங்க டுறுவரை வீழ்வ தேபோற் றாழிருந் தடக்கை யோடுந் தடமருப் பிரண்டு மற்று வீழ்தரப் பரந்த வப்பு நிழலிற்போர் மயங்கி னாரே. இ-ள். அதுகுனிந்தபொழுது பெரும்பாம்போடே இரண்டி ளம்பிறை மலையினின்றும் வீழுந்தன்மைபோலே கையோடே மருப்பிரண்டுமற்று யானையினின்றும் வீழும்படி பரந்த அம்பின் நிழலாலே யரசர் மனங்கலங்கிப் போரையறிந்தில ரென்க. (197) 2299. ஆடவ ராண்மை தோற்று மணிகிளர் பவளத் திண்கை நீடெரி நிலைக்கண் ணாடிப் போர்க்களத் துடைந்த மைந்தர் காடெரி கவரக் கல்லென் கவரிமா விரிந்த வண்ண மோடக்கண் டுருவப் பைந்தா ரரிச்சந்த னுரைக்கின் றானே. இ-ள். ஆடவராண்மை தோற்றும் நிலைக்கண்ணாடியாகிய போர்க்களத்தே நெஞ்சுடைந்த மைந்தர் காட்டை யெரிகவரக் கவரிமா வோடினாற்போல ஓடக்கண்டு கட்டியங்காரனமைச்ச னாகிய அரிச்சந்தன் ஒரு மொழிகூறாநின்றானென்க. கண்ணாடியில் அழகும் அழகின்மையுந் தோன்றுமாறு போலக் களத்திலும் ஆண்மையும், ஆண்மையின்மையுந் தோன்ற லின், இதனையுவமித்தார். மிக்க வீரரன்மையிற் கவரிமா உவமமா யிற்று. (198) 2300. மஞ்சிவர் மின்ன னார்தம் வாலரிச் சிலம்பு சூழ்ந்து பஞ்சிகொண் டெழுதப் பட்ட சீறடிப் பாய்த லுண்ட குஞ்சியங் குமரர் தங்கண் மறம்பிறர் கவர்ந்து கொள்ள வஞ்சியிட் டோடிப் போகி னாண்மையார் கண்ண தம்மா. இ-ள். அவன், இதனைக் கேட்பீராக; மைந்தீர், மகளிருடைய சீறடியாலே பாய்தலுண்ட குஞ்சியையுடையகுமரர் தம்வீரத்தைப் பிறர்கொள்ள ஓடுவராயின், இனி யாண்மை யாரிடத்த தென்றா னென்க. சிலம்புசூழப்பட்டு எழுதின வடி. நீர் மகளிரிடத்தன்றிப் போரிலும் ஆடவராக வேண்டுமென்றான். குமரர்- முன்னிலைப் படர்க்கை. கேட்பிக்குமிடத்தே வருகின்ற அம்ம வென்னுமசைச் சொல் “உரைப்பொருட்கிளவி நீட்டமும் வரையார்.” (தொல். உயிர் மயங்கு.10) என்றதனான், அம்மாவெனநீண்டு அது “விளியொடு கொள்ப” (தொல் விளி மரபு.36) என்றதனான், அம்மாமைந்தீரெனநின்றது. முற்கூறிய மைந்தரை விளித்தானாம். “அம்ம வாழி கேளிர்” (அகநா.130) என்றார்போல ஈண்டும் பன்மையுணர்த்திற்று. (199) 2301. உழையின முச்சிக் கோடு கலங்குத லுற்ற போதே விழைவற விதிர்த்து வீசி விட் டெறிந் திடுவ தொப்பக் கழலவ ருள்ள மஞ்சிக் கலங்குமே லதனை வல்லே மழைமினி னீக்கி யிட்டு வன்கண்ண ராப வன்றே. உழையினம், கழலவர்-எழுவாய். இட்டு-போகட்டு. இ-ள். வீரர் தம்முள்ளம் உடம்பின்மேல் வேட்கையாலே அதனைக் கை விடுதலஞ்சிக் கலங்குமேல் உழைமான் றலையிற் கோடு கழலுங்காலத்து அதன்மேல் வேட்கையால் மனங் கலங்கு தலுற்ற பொழுதே யதனிடத்திலே வேட்கையறும்படி விட்டு அதனை யசைத்துவீசிப் போகடுந்தன்மையை யொப்ப, அவர் அவ்வுடம்பின் மேலே வேட்கையை வல்லே நீக்கி மின்போற் றோன்றினவாய் தெரியாமன் மறைத்திட்டு வன் கண்ணராவர்; அது நுமக்கும் வேண்டுமென்றானென்க. (200) 2304. தற்புறந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தாற் கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர்த் தோய்வர் பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மே னிற்பர்தம் வீரந் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென்றான். இ-ள். வீரர்தாந் தம்மைப்பாதுகாத்து இவர் இடுக்கண் வந்தால் உதவுவரென்றுவைத்த தந்தலைவற்கு அங்ஙனமுதவி வீரந் தோன்றப் புகழ்பரப்பி வீந்தால் அவர்தாஞ் சுவர்க்கத்தே சென்று அரமகளிரைக் கூடுவர்; அதுவன்றி இவ்விடத்தே புலவர் சொன்மாiலையைச் சூட்டிப்புகழக் கன்மேனிற்பர்; ஆதலான், நமக்கும் இவை எய்தலா மென்றானென்க. (201) 2305. பச்சிரும் பெஃகிட் டாங்குப் படையைக்கூர்ப் பிடுத லோடுங் கச்சையுங் கழலும் வீக்கிக் காஞ்சனத் தளிவம் வாய்க்கிட் டச்சுற முழங்கி யாரா வண்ணலங் குமரன் கையு ணச்செயிற் றம்பு தின்ன நாளிரை யாக லுற்றார். இ-ள். உருகினவிரும்பிலே யெஃகுவைத்தாற்போலப் படையை அவன் அங்ஙனங் கூர்மையிட்டவளவிலேயவர்வீக்கி யிட்டு முழங்கி யார்த்துச் சீவகன் கையிலம்புண்ணத் தமதுநாள் அதற்கிரையாதலை யுற்றாரென்க. பொற்றளிவம்-பொற்சின்னம் அம்-அசை. (202) 2304. வடதிசை யெழுந்த மேகம் வலனுராய் மின்னுச் சூடிக் குடதிசை சேர்ந்து மாரி குளிறு சொரிவ தேபோற் படர்கதிர் பைம்பொற் றிண்டேர் பாங்குற விமைப்பி னூர்ந்தா னடர்சிலை யப்பு மாரி தாரைநின் றிட்ட தன்றே. இ-ள். அவர் அங்ஙனம்வருதலிற் சீவகன் தேரை அழகுபெற வேறினான்; அப்பொழுது அப்புமாரி, தாரைமாரி சொரியுந் தன்மை போன் மாறாதுநின்றதென்க. வடதிசையெழுந்தமேகம் வலமாகச்சென்று குடதிசையிற் சேர்ந்து மின்னைச்சூடி முழங்கி மாரியைச்சொரிவதுபோலென்க. (203) 2305. அற்றுவீழ் தலைகள் யானை யுடலின்மே லிலழுந்தி நின்ற பொற்றதிண் சரத்திற் கோத்த பொருசரந் தாள்க ளாகத் தெற்றிமேற் பூத்த செந்தா மரைமலர் போன்ற செங்கண் மற்றத்தா துரிஞ்சி யுண்ணும் வண்டின மொத்த வன்றே. இ-ள். அவ்வம்பால் அற்றுவீழ்கின்றதலைகள் பட்ட யானை களின் மேல் நின்ற பொலிவையுடைய சரங்களிற் கோத்தவை, அவ்வம்பு தாள்களாகத் திண்ணைகளிலே பூத்த செந்தாமரை மலரையொத்தன; அவற்றின்கண்கள் அப்பூவின் வண்டினத்தை யொத்தனவென்க. ஏவன்மையிற் சரத்திற் கோக்க வெய்தான். (204) வேறு 2306. திங்க ளோடுடன் குன்றெலாந் துளங்கி மாநிலஞ் சேர்வபோற் சங்க மத்தகத் தலமரத் தரணி மேற்களி றழியவும் பொங்கு மாநிரை புரளவும் பொலங்கொ டேர்பல முறியவுஞ் சிங்கம் போற்றெழித் தார்த்தவன் சிறுவர் தேர்மிசைத் தோன்றினார். இ-ள். அதனைக்கண்டு கட்டியங்காரன்புதல்வர் சிங்கம் போலே கோபித்து ஆர்த்து அழியவும் புரளவும் முறியவுந் தோன்றினாரென்க. சீவகன்படை இங்ஙனம்பட அவர்தோன்றினார். திங்க ளோடே குன்றுகளெல்லாஞ்சேரவீழ்ந்தாற்போலே சங்குகள் மத்தகத்தே யசையக் களிறுகள் வீழ்ந்தன. (205) 2307. சந்த னஞ்சொரி தண்கதிர்த் திங்க ளந்தொகை தாம்பல குங்கு மக்கதிர்க் குழவியஞ் செல்வ னோடுடன் பொருவபோன் மங்குன் மின்னென வள்ளறேர் மைந்தர் தேரொடு மயங்கலின் வெங்கண் வில்லுமிழ் வெஞ்சர மிடைந்து வெங்கதிர் மறைந்ததே. இ-ள். குங்குமம்போலுங் கதிரையுடைய இளஞாயிற் றோடே சந்தனம்போலுந் தண்கதிரைச்சொரிகிற பலதிங்களந் தொகைதாஞ் சேரப்பொருவனபோலே வள்ளல் தேரோடே மைந்தர்தேருமயங்குதலிற் சரமிடைதலாலே கதிர்மறைந்த தென்க. (206) 2308. குருதி வளொளி யரவினாற் கொள்ளப் பட்டவெண் டிங்கள்போற் றிருவ நீர்த்திகழ் வலம்புரி வாய்வைத் தாங்கவன் றெழித்தலும் பொருவில் கீழ்வளி முழக்கினாற் பூமிமேற்சன நடுங்கிற்றே யரவ வெஞ்சிலை வளைந்ததே யண்ணல் கண்ணழ லுமிழ்ந்ததே. இ-ள். அவன் குருதிபோலு மிக்க வொளியையுடைய செம் பாம்பாலே கொள்ளப்பட்ட திங்கள்போலக் கையாலே வலம் புரியைப் பிடித்து வாயிடத்தேவைத்து முழ்க்கினவளவிலே, கீழ் நோக்கியெழுந்த ஒப்பில்லாத காற்றின்முழக்காலே சனம் நடுங் கிற்று; அப்பொழுது வில்லும்வளைந்தது; கண் அழலையு மிழ்ந்ததென்க. திருவ, அ-அசை. திருத் திகழ்ந்த அக்கடலுமாம். (207) 2309. கங்கை மாக்கடற் பாய்வதே போன்று காளைதன் கார்முக மைந்த ரார்த்தவர் வாயெலா நிறைய வெஞ்சரங் கான்றபி னெஞ்சம் போழ்ந்தழ லம்புண நீங்கி னாருயிர் நீண்முழைச் சிங்க வேறுகள் கிடந்தபோற் சிறுவர் தேர்மிசைத் துஞ்சினார். இ-ள். சீவகன்வில், கங்கை கடலிலே ஆயிரமுகமாகப்பாயுந் தன்மையையொத்து மைந்தர் ஆர்த்தவர் வாயெல்லாநிறையும் படி அம்பைக்கான்றபின்பு சில அம்புகள் அவர் நெஞ்சைப் பிளந்து உயிரையுண்டலின், உயிர்நீங்கப்பட்டாராய் முழைகளிலே சிங்கவேறு கிடந்தாற்போலே சிறுவர் தேர்மிசையிலே பட்டுக் கிடந்தாரென்க. நீங்கினார்-வினையெச்சமுற்று. இத்துணையுங் கட்டியங் காரற்கு உதவியான அரசருடனும், அவன்படைத்தலைவருடனும், அவன் புதல்வர் அணிவகுத்து வந்தவருடனும் சீவகன் பொருதபடி கூறினார். (208) 2310. நிவந்த bண்குடை வீழவும் வேந்தர்நீள்விசும் பேறவு முவந்து பேய்க்கண மாடவு மோரி கொள்ளைகொண் டுண்ணவுங் கவந்த மெங்கணு மாடவுங் களிறு மாவொடு கவிழவுஞ் சிவந்த சீவக சாமிகண் புருவ மும்முரி முரிந்தவே. இதுமுதலாகத் தனியே பதுமவியூகம்வகுத்துநின்ற கட்டியங் காரனுடன் சீவகன்பொருகின்றமை கூறுகின்றார். இ-ள். குடைவீழவும், அவனைச்சூழ்ந்த வேந்தர் விசும்பை யேறவும், ஆடவும், உண்ணவும், குறைத்தலை யெங்குமாடவும், களிறும் மாவுங்கவிழவுஞ் சீவகசாமி கண்கள் சிவந்தன; அவற்றிற் குதவியாகப் புருவமும் முரிதலைச்செய்தவென்க. எச்சங்கள் எதிர்காலம்நோக்கின. குறையாகிய தலையை யுடைய தனைக் குறைத் தலையென்றது ஆகுபெயர். அவன்படை வகுப்பைக் கண்டு சீவகற்குக் கோபம் நிகழ்ந்தமைகூறினார். ‘முரிமுரிந்த’ என்பதனை, “அணியலுமணிந்தன்று”(புறநா.1) என்றாற்போலக் கொள்க. (209) 2311. பொய்கை போர்க்களம் புறவிதழ் புலவு வாட்கடை புல்லித ழைய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற் பைய வுண்டபின் கொட்டைமேற்பவித்தி ரத்தும்பி பறந்ததே. இ-ள். அங்ஙனங் கோபித்து பொய்கை போர்க்களமாக, புறவிதழ் வாட்படையாக, அதற்குள்ளிற் புல்லிய இதழ் களிறாக, உள்ளிற் சிறிய விதழ் அரசராக, அல்லி தன் பிள்ளைகளாக, கொட்டை தானாகமலர்ந்த தொரு, பதும வியூகத்தை முறையாலே மெல்லக் கொன்றபின்பு அக்கொட்டை மேலே தும்பி பறந்ததென்க. குலனுங்குணனுமுதலியன தூயனென்பது தோன்றப் பவித்திரத்தும்பியென்றார். (210) வேறு 2312. கலைமுத்தங் கொள்ளு மல்குற் கார்மழை மின்ன னார்த முலைமுத்தங் கொள்ளச் சாந்தது மழிந்துதார் முருகு விம்மு மலைமுத்தங் கொள்ளு மார்பின் மன்னனுங் கண்டு காய்ந்தான் சிலைமுத்தங் கொள்ளுந் திண்டோட் செம்மலுந் தீயிற் சேந்தான். இ-ள். மேகலைபொருந்துதலைக்கொள்ளும் அல்குலை யுடைய மகளிர்தம் முலைகள்புல்லுதலிற் சாந்தமழிந்து தாரிற் றேன்விம் முமார்பினையுடைய மன்னனுஞ் சீவகனைக் கண்டு காய்ந்தான்; விற்பொருந்துந் தோளினையுடைய சீவகனும் அவனைக்கண்டு தீப்போலக் கோபித்தானென்க. மலையை யுவமிக்கப் பொருந்துமார்பு. (211) 2313. தன்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழ மின்மதஞ் செறித்திட் டஞ்சிப் பிடிமறந் திரிந்து போகும் வென்மதக் களிறு வெய்ய வசனிவே கத்தின் மேலான் மின்னுமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பி னானே. இ-ள். தன்மதத்திலேதிளைத்த தேனினம்போய்த் தங்கிய காட்டிலே வேழங்கள் அவற்றினாற்றத்தாலேயஞ்சி மதஞ் செறித்துப் பிடியைமறந்து கெட்டுப்போதற்குக் காரணமான களிறா கிய அசனிவேகத்தின் மேலானாகிய வேந்தன் சீவகனுக்கு ஒரு மொழி கூறினானென்க. இதனால் யானையின் வலி கூறினார். (212) 2314. நல்வினை யுடைய நீரார் நஞ்சுணி னமுத மாகு மில்லையே லமுது நஞ்சா மின்னதால் வினையி னாக்கங் கொல்வல்யா னிவனை யென்று மிவன்கொல்லு மென்னை யென்று மல்லன நினைத்தல் செல்லா ரறிவினாற் பெரிய நீரார். இ-ள். நல்வினையுடையார் பகைவரிட்ட நஞ்சையுண்டால் அதுவுங்கொல்லாது; அந்நல்வினையின் றேற்றானழியாதிருத்தற் குண்ட அமிர்துங் கொல்லும்; இருவினையினாக்கம் இத்தன்மைத் தாயிருந்தது; ஆதலின், அறிவுடையார், யான் இவனைக் கொல்வே னென்றும் இவன்என்னைக்கொல்வனென்றும் பொருளல்லன நினையா ராதலின், இது நின்செயலென்று கருதவேண்டா வென்றானென்க. என்றது: தன்சிறையை அவன் தெய்வத்தால் நீங்கின தன்மையையும், தனக்கு அரணாக விட்டவியூகம் பட்ட தன்மையையுங் காட்டியபடி. (213) 2315. அகப்படு பொறியி னாரை யாக்குவ ரியாவா ரம்மா மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோ நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட் டிடுத லுண்டே பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே. இ-ள். நீகேளாய், நின்கையிலே யகப்படுதற்கக் காரணமான தீவினையுடையாரை யாக்குவார்யாரென்ற தன்புதல்வர் பட்டமை கருதிக் கூறினான். ஆதற்கு வேண்டுநல்வினையு டையாரை வெறுவி யராக்கலாமோவென்று அவர்கள் நூற்றுவ ராலும் நின்னைக் கொல்லக்கூடாதாயிற்றேயென்று கூறினான். இங்ஙனம் என்புதல்வர் நின்கையாலே படுதலின், இனி ஞாயிறுந் தன்றன்மை திரிந்து தட்பமுடைத்தாதலும் உலகிலேயுண்டாம். நீயவரைக் கோறலின், மதியுந் தன்மைதிரிந்து வெவ்விதாகலும் உலகிலுண் டாமென்று அவரை வியந்துகூறினானென்க. ஏகாரங்கள் தேற்றம். பகை-மதிக்குப்பகை. (214) 2316. புரிமுத்த மாலைப் பொற்கோல் விளக்கினுட் பெய்த நெய்யுந் திரியுஞ் சென் றற்ற போழ்தே திருச்சுடர் தேம்பி னல்லா லெரிமொய்த்துப் பெருக லுண்டோ விருவினை சென்று தேய்ந்தாற் பரிவுற்றுக் கெடாமற் செல்வம் பற்றியா ரதனை வைப்பார். புரி-வடம். கோல்-தண்டு. இ-ள். நெய்யுந் திரியுமாண்டபொழுதே அழகியவிளக்கு அவிதலன்றி நெருப்புச்செறிந்து மிகுதலுண்டோ? அதுபோலப் பெரிய நல்வினைமாண்டாற் செல்வங்கெடாதபடி அதனைப் பிடித்துவைப்பார் யாவருமில்லை; ஆதலின், இது நின்செயலன்று காணென்றானென்க. “முன்னே-மொய்யமர் பலவும் வென்றான்” (சீவக.205) ஆயினுந் தன்புதல்வர் சூழக்கிடக்கின்றமைகண்டுஞ் செற்றமிக்கு மேற் சொல்லாது இங்ஙனங்கூறினான்; அரசகுலமன்மையின். (215) 2317. நல்லொளிப் பவளச் செவ்வாய் நன்மணி யெயிறு கோலி வில்லிட நக்கு வீர னஞ்சினா யென்ன வேந்தன் வெல்லது விதியி னாகும் வேல்வரி னிமைப்பே னாயிற் சொல்லிநீ நகவும் பெற்றாய் தோன்றன்மற் றென்னை யென்றான். இ-ள். சீவகன் அதுகேட்டு, இவன்இங்ஙனங் குறைந்தே நிற்பனாயிற் கோறலரிதென்றுகருதி அவற்குச் செற்றமிகும்படி பெருகச் சிரித்து நீயஞ்சினாய் காணென்ன, வேந்தன் கூறுவான்; வெல்லுந் தன்மை விதியாலுண்டாம்; அதுயான்கூறேன்; தோன் றால்! நின்கையில் வேல்வந்தால் இமைப்பேனாயின், ஈண்டு என்னைக்கூறும் அஞ்சினாயென்ற சொல்லை யாண்டுக்கூறி நீ சிரிக்கவுங் கடவை யென்றானென்க. பெற்றாய்-காலமயக்கம். (216) 2318(1). பஞ்சிமெல் லடியினார் தம்பாடகந் திருத்திச் சேந்து நெஞ்சுநொந் தழுத கண்ணீர் துடைத்தலி னிறைந்த கோல வஞ்சனக் கலுழி யஞ்சே றாடிய கடக வண்கை வெஞ்சிலை கொண்டு வெய்ய வுருமென முழங்கிச் சொன்னான். வேறு 2319(2). இல்லாளை யஞ்சி விருந்தின் முகங் கொன்ற நெஞ்சிற் புல்லாள னாக மறந்தோற்பி னெனப்பு கைந்து வில்வா ளழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கிக் கொல்யானை யுந்திக் குடைமேலுமோர் கோறொ டுத்தான். இவையிரண்டுமொருதொடர். 1. திருத்திச்சிவந்து கண்ணீர் துடைத்தலின், அஞ்சனமாகிய கலக்கத்தையுடைய சேற்றையாடிய நிறைந்த கோலத்தை யுடையகை. 2. அழுவம்-பரப்பு. இ-ள். அங்ஙனங்கூறிக் கையிலே வில்லையெடுத்து உருமென முழங்கி மறந்தோற்றேனாயின், மனையாளையஞ்சி விருந்தின் முகத்தை மகிழ்ச்சிசெய்யாதுவிட்ட புல்லாளனாகக் கடவேbன்று வஞ்சினஞ் சொன்னான்; சொல்லிப் புகைந்து பிளந்து நோக்கி யுந்திச் சச்சந்தனைக்கொன்ற தவற்றின் மேலே சீவகனையுங் கொல்லக் கருதி ஓரம்பைத்தொடுத்தானென்க. சச்சந்தனைக்கொன்று குடைகவித்தலிற் குடையிட்டு நிற்பதன் மேலுமெனவே அவனைக்கொன்றமை கூறிற்றாம். இனி, வழங்கினானே என்றுபாடமோதிச் சீவகனெய்தமை மேலும் பொறாது கட்டியங்காரன்அம்புதொடுத்தானென்பாருமுளர். (217-8) 2320. தொடுத்தாங்க வம்பு தொடைவாங்கி விடாத முன்ன மடுத்தாங்க வம்புஞ் சிலையும்மத னாணு மற்றுக் கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை யம்பி னெய்தான் வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப் பூணி னானெ. இ-ள். சீவகன், கட்டியங்காரன் ஆங்குத்தொடுத்த அவ்வம் பைத் தொடையை நிரம்பவாங்கி விடுதற்குமுன்னே, அவ்வம்பு முதலியன சேர அவ்விடத்தே யற்றுக் கோபித்துப் போனாற் போல வீழும்படி எய்தானென்க. தொடுத்த, வடித்தவென்பன விகாரம். கடுத்துக் கடுகி யென்றுமாம். (219) 2321. அம்புஞ் சிலையு மறுத்தானென் றழன்று பொன்வாள் வெம்பப் பிடித்து வெகுண்டாங்கவன் றேரின் மேலே பைம்பொன் முடியான் படப்பாய்ந்திடு கென்று பாய்வான் செம்பொன் னுலகி னிழிகின்றவொர் தேவ னொத்தான். இ-ள். பொன்முடியான் அம்பையும்வில்லையும் அவனறுத் தானென்று வெகுண்டு வாளை யழன்று வெம்பும்படி பிடித்துச் சீவகன் றேரிலே பட்டுக்கிடக்கும்படி அத்தேரிடத்தே பாயக்கடவே னென்று பாய்கின்றவன் யானையினின்றும் போந்த பொழுது, நல்வினை யுலந்து பொன்னுலகினின்றும் போது கின்ற ஒரு தேவனை யொத்தானென்க. (220) 2322. மொய்வார் குழலார் முலைப்போர்க்கள மாய மார்பிற் செய்யோன் செழும்பொற் சரஞ்சென்றன சென்ற தாவி வெய்தா விழியா வெருவத்துவர் வாய்ம டியா மையார் விசும்பின் மதிவீழ்வது போல வீழ்ந்தான். இ-ள். மகளிர்முலைக்குப் போர்க்களமாகிய மார்பிலே சீவகனம்புகள் சென்றனவாக, அவனதுஆவிசென்றது; அப்பொழுது விழித்துக் கண்டார்வெருவ வாயைமடித்து விசும்பினின்றும் மதிவீழுந்தன்மை போல வீழ்ந்தானென்க. சச்சந்தனை”வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான்” (சீவக.289) என்று ஞாயிற்றினோடுவமை கூறிப்போந்து, அவன் புதல்வன் அவனேயா மாதலின் ஈண்டுஞ் சீவகனைச்செய்யோ னென்று ஞாயிறாக்கி அஞ்ஞாயிற்றின்முன்னர் மதி நில்லாதே கெடுமென்பது தோன்ற மதிவீழ்வதுபோல வீழ்ந்தானென்றார். மேகம் யானைக்குவமை கூறினார். இதனாற் சச்சந்தன்பட்ட அன்றுதொட்டு இன்றளவுங் கட்டியங் காரன் கொடுங்கோலிருள் பரப் அரசாண்டதன்மையும், அதுதான் இராக்காலத்தே இருள்பரந்து நிற்ப மதியாண்ட தன்மைத்தென்றுங்கூறினார். (221) வேறு 2323. கட்டியங் கார னென்னுங் கலியர சழிந்த தீங்குப் பட்டவிப் பகைமை நீங்கிப் படைத்தொழி லொழிக வென்னாக் கொட்டினர் முரச மள்ள ரார்த்தனர் குருதிக் கண்ணீர் விட்டழு தவன்க ணார்வ மண்மக ணீங்கி னாளே. இ-ள். கட்டியங்காரனென்னுங் கலியாகிய வரசு பட்டது; இனி மாறுபாடு நீங்கிப் போர்த்தொழிலொழிகவென்று அவ்விடத்தே முரசைக்கொட்டினார்; அது கேட்டு வீரரார்த் தனர்; அப்பொழுது மண்மகள் குருதியாகிய கண்ணீரைச் சொரிந்து அழுது அவன்கண் ஆர்வத்தைக் கைவிட்டாளென்க. (222) 2324. ஒல்லைநீ ருலக மஞ்ச வொளியுமிழ் பருதி தன்னைக் கல்லெனக் கடலி னெற்றிக் கவுட்படுத் திட்டு நாகம் பல்பகல் கழிந்த பின்றைப் பன்மணி நாகந் தன்னை வல்லைவாய் போழ்ந்து போந்தோர் மழகதிர் நின்ற தொத்தான். இ-ள். நாகம் ஒளியுமிர்பருதியை உலகமஞ்சும்படி கடலிலே கடுக விழுங்குகையினாலே அப்பன்மணி நாகத்தைப் பலநாட் சென்றபின்பு வாயைப்பிளந்துபோந்து அக்கதிர்நின்ற தன்மையையொத்தான் சீவகனென்க. அது- “மந்திரிமா நாகமுடன் விழுங்கிற்று” (சீவக.290) என்றதனை. இது தந்தை புதல்வனாய்ப் பிறப்பனென்னும் விதிபற்றிக்கூறினார். (223) 2225. கோட்டுமீன் குழாத்தின் மள்ள ரீண்டினர் மன்னர் சூழ்ந்தார் மோட்டுமீன் குழாத்தி னெங்குந் தீவிகை மொய்த்த முத்த மாட்டுநீர்க் கடலி னார்த்த தணிநகர் வென்றி மாலை கேட்டுநீர் நிறைந்து கேடில் விசயைகண் குளிர்ந்த வன்றே. கோட்டுமீன்-சுறா. மேட்டுமீன்-உடு. முத்தை யலைக்கின்ற நீர். இன்கள்-பொரு. கனவுபுனையாக இறந்துபடாதிருத்தலிற் கேடில் விசயையென்றார். இ-ள். மள்ளரீண்டினார், அரசர் சூழ்ந்தார், விளக்கு மொய்த்தன, நகர் ஆர்த்தது, விசயை வெற்றியொழுங்கைக் கேட்டு அரசனை நினைத்தலிற் கண் நீர்நிறைந்து பின்பு குளிர்ந்தனவென்க. அவன்புதல்வரைக்கொன்று பின் அவனைக்கொன்றதனை ‘யொழுங்’கென்றார். (224) 2226. அணிமுடி யரசர் மாலை யழனுதி வாள்க ளென்னு மணிபுனை குடத்தி னெய்த்தோர் மண்ணுநீர் மருள வாட்டிப் பணைமுலைப் பைம்பொன் மாலைப் பாசிழைப் பூமி தேவி யிணைமுலை யேக மாக நுகரிய வெய்தி னானே. இ-ள். முடியினையும் மாலையினையுங் குருதிதோய்ந்த வாள்களையுமுடைய நெருப்பினது கொழுந்தென்னுமரசர், சீவகனை மணிபுனை குடத்தின் மண்ணுநீராலே யாட்ட, அவன் நிலமகள் முலையைப் பொதுவறநுகர்தற்கு அவளைப்பொருந் தினானென்க. ஆட்டி-ஆட்ட. இது வீராபிடேகம். முலையினையும், மாலை யினையும், இழை யினையுமுடைய நிலமகள். இனி அரசரைக் கொண்டு வாள்களென்னுங்குடத்தின் நெய்த்தோராகிய மண்ணு நீராலே மண்மகளையாட்டுவித்து அவளையெய்தினா னென்பாரு முளர். (225) மண்மகளிலம்பக முற்றிற்று. பதினொராவது பூமகளிலம்பகம். 2227. கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக் கணணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க் கண்ணாடி யானை யவர்கை தொழச் சென்று புக்கான் கண்ணாடி தன்னைச்சேர்ந்தவர் செயலாயேயிருக்கு மாறு போல, இம்மார்புந் தன்னைச்சேர்ந்த மகளிர்செயலாயே யிருந்ததலிற் கண்ணாடியன்ன மார்பனென்று இன்பச் சிறப்புக் கூறினார்; கடி-வரைவு; “கையுங் காலுந் தூக்கத் தூங்கு-மாடிப் பாவை போல-மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.” (குறுந்.8) என்றார் போல. கண்ணாடி போல முதுகுகாட்டாத மார்பனென்பாரு முளர். பகைவர் வீரத்தினழகை விளக்குமார்புமாம். கண்ணாடி வென்று-கண்ணெல்லாரிடத்து முலாவி வென்று; “காலாடு போழ்தின்”(நாலடி.113) என்றார்போல. நியமமுற்றி-களவேள்வி முதலியன முடித்து. முன்னே மஞ்சனமாடுதலிற் பின் களவேள்வேள்வி முடித்தான். கண்ணாடி-கள்ளைத்தேடி. மாலை களணிந்த மூதூர்க்கண்ணே. ஆடியானையவர்-வெற்றியானை யுடையவர். இ-ள் மார்பன் நியமமுற்றி மூதூரிலே சென்றுபுக்கானென்க. (1) 2228. கூடார் புலியு முழைக்கோளரி யேறு மன்ன கூடார் மெலியக் கொலைவேனினைந் தானை யேத்திக் கூடார மாலைக் குவிமென்முலைக் கோதைநல்லார் கூடார மாட மயில்போலக் குழீஇயி னாரே. கூட்டிலேயிருந்த புலியையும் முழையிலரியையுமொத்த பகைவரென்றது-சூரபன்மனையும், ஒழிந்த அவுணரையும்; அவர்வருந்தும் படி வேல்நினைந்தானென்றது முருகனை; “அவுணர் நல்வல மடங்கக் கவிழிணர்-மாமுத றடிந்த” (திருமுருக.56-61)என்றார்; தேவர் இவனை முருகனென்று ஒருபெயர் கூறினார்; மேலும் “திருமால்போந்தான்” (சீவக2369) என்பர். இ-ள். கூடின ஆரமுதலியவற்றையுடைய நல்லார் சீவகனை யேத்திக் கூடாரங்களிலும் மாடங்களிலும் மயில்போற்றிரண்டா ரென்க. கூடாரம்-நெற்கூடுகள். (2) வேறு 2329. மாலைச் செற்றான் மக்களொ டெல்லா முடனேயிம் மாலைச் செற்றான் வைந்நுனை யம்பின் னிவனென்பார் மாலைக் கின்றே மாய்ந்தது மாயாப் பழியென்பார் மாலைக் கேற்ற வார்குழல் வேய்த்தோண் மடநல்லார். மால்-சச்சந்தன். இ-ள். நல்லார், கட்டியங்காரனை மக்களோடு எல்லாருஞ் சேர இம்மாலைக் காலத்தே யம்பாலேயிவன் கொன்றானென்பார்; குணமாலைக்கு மாயாப்பழி யின்றே மாய்ந்த தென்பாராயினா ரென்க. இவளைத்தீண்டித் துன்பமுற்றானென்னும்பழி. பூமாலைக் கேற்றகுழல். (3) 2330. நாகந் நெற்றி நன்மணி சிந்தும் மருவிபோ னாகந் நெற்றிந் நன்மணி யோடை நறவிம்மு நாகந் நெற்றிந் நன்மலர் சிந்தி நளிர்செம்பொ னாகந் நெற்றி மங்கைய ரொத்தார் மடநல்லார். இ-ள். மணியையுடைய மலைத்தலையிலே வந்துவிழும் அருவிபோலே மணியோடையையுடைய யானையினெற்றியிலே சுரபுன்னைத்தலையிலுண்டான பூக்களைச் சொரிதலாலே, மாடங் களின் மேல்நின்ற மடநல்லார், சுவர்க்கத்திடத்திற் பூச்சொரிகின்ற மங்கையரை யொத்தாரென்க. (4) 2331. கோடிக் கோடுங்கூம்புயர் நாவாய் நெடுமாடங் கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாருங் கோடித் தானைக் கொற்றவற் காண்பா னிழைமின்னக் கோடிச் செம்பொற் கொம்பரின் முன்முன் றொழுவாரும். இ-ள். கோளாலே திக்குகளிலே யோடுகின்ற நாவாய்தந்த புதியபட்டினாற் றைத்த கொடிகளை மாடங்களிலே சேரக் கட்டுவாரும், அவன்றன்னைக் காணவேண்டிக் கொம்பு போலே வளைந்து கொற்றவனைத் தொழுவாருமாயினாரென்க. இருபதுபட்டிற்குக் கோடியென்று பெயராக்கியுமுரைப்ப. கோடியென்னும் எண்ணையுடைய படை. (5) 2332. அம்புகை வல்வில் லார்கழன் மள்ளர் திறலேத்த வம்புகைக் கொண்டா லாரிவற் கீண்டு நிகராவா ரம்புகை யார்ந்த வந்தகி லல்குல் லவிர்கோதா யம்புகைக் காணா மையனைக் கையிற் றொழுதென்பார். இ-ள். அம்பையுகைக்கின்ற வில்லையுடைய வீரரேத்த உலகை யிங்ஙனங் கொண்டால் இனி யிவற்க ஈண்டு நிகராவார் யாரென் பாரும், கோதாய்! ஐயனைக் கையாற்றொழுது கையில் வளையைக் காண்கிலேமென்பாருமாயினாரென்க. அம்புசூழ்தலின், அம்பென்று உலகிற்குப் பெயராயிற்று; ஆகுபெயர். அழகிய புகையார்ந்த துகில். (6) 2333. மைத்துன நீண்ட மாமணி மாடம் மிசையேறி மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் மலர்தூவ மைத்துன மன்னர் மால்களி றேறிப் புடைசூழ மைத்துன நீண்ட மாமணி வண்ண னவனொத்தான். மைத்துன்ன-மேகநெருங்க. வாள்மைத்து உன்னநீண்ட கண்-வாள் ஒளிமழுங்கி நினைக்கும்படி நீண்டகண்; மைத்தல்-ஒளிகெடுதல்; “மைம்மைப்பி னன்று குருடு” (படி.188) என்றார் போல. மைத் துன்ன-கருமைபொருந்த. இ-ள். மாடத்தையேறி மகளிர்மலர்தூவமைத்துனவரசர் சூழச் செல்கின்ற அவன் மணிவண்ணனை யொத்தானென்க. (7) வேறு 2334. ஊது வண்டரற் றும்முயர் தாமரைப் போது பூங்கழு நீரொடு பூத்துடன் வீதி மல்கின போன்மிளிர் வேற்கணு மாத ரார்முகப் பூவும லர்ந்தவே. இ-ள். தாமரைப்பூக் கழுநீரோடேபூத்து மல்கினபோலே மகளிர் முகப்பொலிவுங் கண்ணும் பரந்தனவென்க. (8) 2335. வீணை வித்தகன் வேந்தடு வீங்குதோள் காணுங் காரிகை யார்கதிர் வெம்முலைப் பூணு மாரமு மீன்றுபொன் பூத்தலர்ந் தியாண ரூரம ராபதி போன்றதே. இ-ள். ஊர் காரிகையாரையும், அவரணிந்த கலங்களையுந் தானீன்று, வேய்ந்தபொன்னாற்பொலிவுபெற்றுப் பரத்தலிற் சீவகனை வந்துகாண்பதோர் அமராபதியை ஒத்ததென்க. (9) 2336. தேம்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும் பூம்பெய் கோதைப் புரிசைக் குழாநல மோம்பு திங்க ளுலந்து சுடர்கண்ட வாம்ப லாய்மலர்க் காடொத் தழிந்ததே. இ-ள். சீவகன் கோயிலைச்சேர்ந்தவளவிலே, பெய்யப் பட்ட பூங்கோதையையுடைய புரிசையிடத்திருந்த மகளிரழகு, மதிபடுதலின் இளஞாயிற்றைக்கண்ட ஆம்பலினுடைய குவிந்த மலர்த்திரளை யொத்துக் கெட்டதென்க. (10) வேறு 2337. மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்ப வேபோலாகம் மறவ கன்கோயில்புக் கம்பொன் மாலைத் தோகைம் மடவார் துவர்வாய்துடித் தஞ்ச வெம்பா வேகம் முடைத்தாய் விழியாத்தொழித் தேகு கென்றார். இ-ள். மடவார் விசும்பில்இடி யோசையாலே பாம்புகள் பதைப்பன போலே யாம்படி, மறவர் கோயிலிலேபுக்கு, இவ்விடத் தினின்றும் ஏகுகவென்றாரென்க. அப்பொழுது அவர்துடித்துவெம்பி யஞ்ச, விழித்துக் கோபித்துக் கூறினாரென்க. அழாமற்பொருமுதலிற் றுடித்தது . (11) 2338. செய்பாவை யன்னார் சிலம்பார்க்குமென் சீற டியார் செய்பூந் தவிசின் மிசையல்லது சேற லில்லார் மையார்ந்த கண்ணீர் மணிப்பூண்முலை பாய விம்மா வெய்தா மடவார் வெறுவெந்நிலத் தேகி னாரே. இ-ள். அதுகேட்டதிருவையொப்பார் சீறடியார் சேறவில் லாராகிய மடவார், கண்ணீர் முலையிலேபாயும்படி பொருமி வெய்தாக வழுது வெவ்விய வெறுநிலத்தே போயினாரென்க. (12) 2339. நெருப்புற்ற போல நிலமோந்துழிச் செய்ய வாகிப் பருக்கென்ற கோல மரற்பல்பழம் போன்று கொப்புள் வருத்தம் மிழற்றி பசும்பொற்சிலம் போசை செய்யச் செருக்கற்ற பஞ்சி மலர்ச்சீறடி நோவச் சென்றார். இ-ள். அங்ஙனமேகுதலின், நிலமோந்துழி நெருப்புற்ற போலச் செய்ய வாகுதலாலே வாடின இலவமலரையொத்த சிற்ற டியில் மரற்பழம்போன்று கொப்புளித்த கொப்புள் வருத்துதலின் வருந்திச் சிலசொல்லிச் சிலம்பொலிப்ப அவ்வடிநோம்படி சென்றாரென்க. பருத்துக்காட்டினவெனவே ‘கொப்புளித்தன’ என்பதாயிற்று. (13) 2340. பொற்பூண் சுமந்து பொருகோட்டை யழித்து வெம்போர் கற்பா னெழுந்த முலையார்களங் கண்டு நீங்கி நற்பூ ணணிந்த முலையரர்நிலை கால்ச ரிந்து நெற்றிந் நிறுத்து வடம்வைத்த முலையி னாரும். 2341. செங்காற் குழவி தழீஇயினார்திங்கள் புக்கநீரார் அங்கான் முலையி னரும்பால்வரப் பாயினாரும் பைங்காசு முத்தும் பவழத்தொடு பைம்பொ னார்ந்த பொங்கார் முலையார் திருமுற்ற நிறைந்து புக்கார். இவையிரண்டுமொருதொடர். அழித்தென்பது எதிர்காலநோக்கிய இறந்தகாலச்சொல். இ-ள். பூணைச்சுமந்து யானைக்கோட்டைக்கெடுத்துப் போரைக் கற்பதாக எழுந்த முலையாரும், நுகர்ந்துவிட்டுப் பேரணி கலமணிந்த முலையாரும், நிலைதளர்ந்து ஏந்தி வடங்கிடந்த முலையாரும், இளஞ்சூழலுடையாரும், திங்கட்சென்றவரும், முலையிலே பால் வரும்படி சூன்முதிர்ந்தாருமாகியமகளிர் முற்றத்தே நிறையச் சென்றாரென்க. நிறைந்து-நிறைய. சீவகன் இவர்பெறும்புதல்வர் அரசகுல மன்மையிற் றன் குலத்திற்குப் பகைவரன்மையுணர்ந்து அருளாற் றீங்குசெய்யாது அவரைப் போகவிடுகின்றானென்று மேற் கூறுகின்றார். கட்டியங்காரன் அருளின்மையானும், பகை யென்றும், பெண்கொலை புரிந்தும் குலத்தொடுங்கோற லெண்ணி னானென்று ஆண்டுக் கூறினார். எதிர்வந்துபொருதலின், முன்பு அவன் புதல்வரைக் கொன்றா னென்றார். (14-15) 2342. பெய்யார் முகிலிற் பிறழ்பூங்கொடி மின்னின் மின்னா நெய்யார்ந்த கூந்த னிழற்பொன்னரி மாலை சோரக் கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோரா நையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளொத்தார். இ-ள். அவர் சீவகனைக்கண்டு பெய்கின்ற முகிலிற் பிறழுமின் போலே மின்னிக் குலைந்த கூந்தலினது மாலை சோரும்படி நைந்து வருந்திச் சோர்ந்து புலியைக் கண்டு நடுங்கும் பிணைமான்களை யொத்தாரென்க. (16) 2343. வட்டம் மலர்த்தா ரவனாலருள் பெற்று வான்பொற் பட்டம் மணிந்தா ளிவர்தங்களுள் யாவ ளென்ன மட்டா ரலங்க லவன்மக்களந் தானு மாதோ பட்டா ரமருட் பசும்பொன்முடி சூழ வென்றார். 2344. மாலே றனையா னொடுமக்களுக் கஃதோ வென்னா வேலேறு பெற்ற பிணையின்னணி மாழ்கி வீழ்ந்து சேலேறு சின்னீ ரிடைச்செல்வன போன்று செங்கண் மேலேறி மூழ்கிப் பிறழ்ந்தாழ்ந்த விறந்து பட்டாள். இவையிரண்டுமொருதொடர். இ-ள். உழையரைநோக்கிக் கட்டியங்காரனால் அருள் பெற்றுப் பட்டமணிந்தவள் இவர்களுள் யாவளென்று சீவகன் கேட்க, நீகேட்ட வட்குக் களத்திற்செய்தி கூறுகின்றவர் அவள் பொறுக்கும்படிகூறாதே முடிகள் சூழ்ந்துகிடக்கக் கட்டியங் காரன்றானும் மக்களும் பட்டா ரென்று கூறினார்; அதுகேட்டு அவள்ஏறனையானொடு மக்களுக்கு முற்றது அஃதோவென்னா இறந்துபட்டாள் காணென்றாரென்க. யாவளென்று வினாவ இறந்துபட்டாளென்று உத்தரங் கூறினார். என்றாரென வருவிக்க. வட்டத் தார். மால்-பெருமை. அஃதோ வென்றது- “மன்னர்தீ-யீண்டுதங்கிளையோடு மெரித் திடும்”(சீவக.250) என்று அமைச்சர்கூற, அவன் கேளாதிருந்தமை தான் கேட்டிருத்தலின், அது பின்பு பயந்தபடியோவென்றாள். சேல் வற்றின சின்னீரிற் கடிதிற் சேறலின்றி மெல்லச் செல்லுமவைபோற் கண்ணும் மெல்லவேறி மறிந்து கீழ்மேலாய் வீழ்ந்தன வென்றறிந்து பட்ட செய்திகூறினார். (17-18) 2345. ஐவா யரவி னவிராரழல் போன்று சீறி வெய்யோ னுயிர்ப்பின் விடுத்தேனென் வெகுளி வெந்தீ மையா ரணல மணிநாகங் கலுழன் வாய்ப்பட் டுய்யா வெனநீ ருடன்றுள்ள முருகல் வேண்டா. இ-ள். பாம்பினது நஞ்சு ஒன்றற்கு உயிருள்ளளவும் வெகுண்டு, அவ்வுயிர் போயபின்பு அவ்வெகுட்சி போமாறு போலே யானுங் கட்டியங்காரன் உயிர்போய பின்னரே என் வெகுளியாகிய தீயையும் போகவிட்டேன்; இனி நீர், கருமை நிறைந்த கழுத்தையுடைய நாகங் கருடன் வாய்ப்பட்டு உய்யா; அதுபோல் எமக்கும் இனி யுய்தலின் றென்று கருதி யுள்ளம் வருந்தி யுருகவேண்டாவென்றானென்க. (19) 2346. மண்கேழ் மணியி னுழையுந்துகி னூலின் வாய்த்த நுண்கேழ் நுசுப்பின் டவீர்நும்மை நோவ செய்யே னெண்கேழ்க் கழுநீ ரொளிமுத்த முமிழ்வ தேபோற் பண்கேழ் மொழியீர் நெடுங்கண்பனி வீழ்த்தல் வேண்டா. இ-ள். துகிலினுள்ளே மறையும் மண்ணுதல் பொருந்தின மணிபோல்வாய்த்த மடவீர்! யான் நும்மை நோவனவற்றைச்செய்யேன்; ஆதலால், மொழியீர்! இனிக் கழுநீர் முத்தைக் கால்வதுபோல அழல்வேண்டாவென்றானென்க. போர்த்து நின்றதற்கு உவமை. நூலிற்காட்டில் நுண்ணிய நுசுப்பினையுடைய மடவீர். கேழ்-நிறம். (20) 2347. என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளைக் கையி னீரே மன்னிங்கு வாழ்வு தருதும்மவற் றானும் வாழ்மின் பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மி னென்றான் வின்னுங்க வீங்கி விழுக்கந்தென நீண்ட தோளான். இ-ள். வில்லை வலிக்க வீங்கி நீண்டதோளான், ஈரப்பட்ட வளைக்கையிரே! நும்மன்னன் நுமக்குத்தந்த சீவிதங்களை யாமும் இவ்விடத்தே தருவேம்; அவற்றைக் கொண்டு ஈண்டி ருந்தும் உயிர் வாழ்மின்; அன்றி ஈங்குநின்றும் பொன்னைக் கொண்டு நுஞ்சீவிதங் களிலே போயும் உயிர்வாழ்மின்; இரண்டில் நுங்கருத்தியாது? கூறுமினென்றா னென்க. (21) 2348. தீத்தும்மு வேலான் றிருவாய்மொழி வான்மு ழக்கம் வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக் காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார் சேய்ச்செந் தவிசு நெருப்பென்றெழுஞ் சீற டியார். .இ-ள். மிகச்சிவந்த தவிசையும் நெருப்பென்றுநீங்குஞ் சீறடியார், தீயைப் புறப்படவிடும் வேலானுடைய வார்த்தையாகிய வான் முழக்கத்தை அவ்விடத்தே வாய்ப்பக்கேட்டு, போவே மென்றுகூறி, மயிற்குழாம்போலே மகிழ்ந்துபோய்த் தம் பதிக ளிலே புக்காரென்க. மயில் மழைக்கு மகிழ்தலின், மயில்போலென்றார். (22) 2349. காதார் குழையுங் கடற்சங்கமுங் குங்கு மமும் போதா ரலங்கற் பொறையும்பொறை யென்று நீக்கித் தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மா மாதார் மயிலன் னவர்சண்பகச் சாம்ப லொத்தார். மாலையாகிய பாரம். இ-ள். காதன்மிகுந்த மயிலன்னவர், தங்கணவனையிழத்தலிற் குழைமுதலியவற்றைப் பாரமென்றேநீக்கி அழுது சண்பகப் பூவாடலை யொத்து நோன்பைமேற் கொண்டிருந்தா ரென்க.(23) 2350. ஆய்பொற் புரிசை யணியாரகன் கோயி லெல்லாங் காய்பொற் கடிகைக் கதிர்க்கவிளக் கேந்தி மள்ளர் வேய்பொன் னறையும் பிறவும்விரைந் தாய்ந்த பின்றைச் சேய்பொற் கமல மகள்கைதொழச் சென்று புக்கான். கடிகை-துணித்தது; என்றது பொன்போர்த்த மூங்கிற் குழாயை. இ-ள். மள்ளர், கடிகையோடு கூடிய விளக்கையேந்திப் புரிசை சூழ்ந்த கோயிலையும் பொன்னறையையும் பிறவிடங்களையு மெல்லாங் கடுகிச் சோதித்துக் காவலிட்டபின்பு, திருமகள் வணங்க அவ்விடத்தே முருகனெனச் சென்றுபுக்கானென்க. (24) 2351. முலையீன்ற பெண்ணைத் திரடாமங்க டாழ்ந்து முற்று மலையீன்ற மஞ்சின் மணிப்பூம்புகை மல்கி விம்மக் கலையீன்ற சொல்லார் கமழ்பூவணைக் காவல் கொண்டார் கொலையீன்ற வேற்கண் ணவர்கூடிய மார்பற் கன்றே. தாழ்ந்து-தாழ. முலைபோலுங் காயையீன்ற பனைபோலுந் தாமம். மலையீன்ற மஞ்சுபோலே மாடமுற்றும் புகைநிறைந்து புறம்போத. இ-ள். கலைகளைத் தோற்றுவித்த சொல்லார் சீவகற்குப் பள்ளி யிடத்தைத் தாழ விம்மக் காத்தலை மேற்கொண்டாரென்க. (25) 2352. போர்க்கோல நீக்கிப் புகழ்பொன்னி னெழுதப் பட்ட வார்க்கோல மாலை முலையார்மண் ணுறுப்ப வாடி நீர்க்கோலஞ் செய்து நிழல்விட்டுமிழ் மாலை மார்பன் றார்க்கோல மான்றேர்த் தொகைமாமற் றொழுது சொன்னான். இ-ள். முத்தமாலை நிழல்வீசுமார்பன் போர்க்கோலத் தைப் போக்கிப் பொன்னாலேயெழுதப்பட்ட கச்சையுங் கோலத் தையும் மாலையையுமுடைய முலையார் நீராட்டஆடி அதற்குத் தக்க கோலத்தைச்செய்து தூசியினழகினையுந் தேர்த்திரளையு முடைய மாமனை வணங்கி ஒருமொழி கூறினானென்க. களவேள்வி முடித்துக் களத்தினின்றும் வருதலிற் பின்னும் மஞ்சனமாடினான். (26) 2353. எண்கொண்ட ஞாட்பி னிரும்பெச்சிற் படுத்த மார்பர் புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப் பொற்ப நோக்கிப் பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை யண்ணல் போல மண்கொண்ட வேலா னடிதைவர வைகி னானே. ஞாட்பின், இன்-பொரு. இ-ள். தேவாசுரம், இராமாயணம், மகாபாரதமென்கின்ற போரில் வீரர்புண்படுமாறுபோலப் புண்பட்டவீரர் புண்ணைப் போற்றிக்கொண்டு காத்தருளுவீராக வென்றுகூறினான்; கூறித் தானுங் கூடப்போய்ப் பொற்பநோக்கிப் பின்பு பள்ளிகொண்டா னென்க. பலர்புண்களையுமறிந்து பரிகரித்தமையால் அவனைக் கூறினான். செய்-வேண்டுகோடற்பொருட்டுவந்த வியங்கோள். இனி அப்போரோடு எண்™தல்கொண்ட போரென்று தேவர் கூற்றுமாம். “மண்கருதும் வேலான்” (சீவக.1225) என்றதற்கு மண்கொண்ட வேலானென்றார். (27) வேறு 2354. வாள்க ளாலே துகைப்புண்டு வரைபுண் கூர்ந்த போல்வேழ நீள்கால் விசைய நேமித்தே ரிiத்தார் நிலத்திற் காண்கலாத் தாள்வல் புரவி பண்ணவிழ்த்த யானை யாவித் தாங்கன்ன கோள்வா யெஃக மிடம்படுத்த கொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார். கூர்ப்பு-மிகுதி. ஆங்கு-அப்பொழுது. இ-ள். வேழமும், காற்றுப்போலும் விசையவாகிய தேரும், இமைத்தவர் பின்பு நிலத்திற்காணாத புரவியும், பண்ணவிழ்த்த யானை கொட்டவிகொண்டாலனைய பின்பு நிலத்திற்காணாத புரவியும், பண்ணவிழ்த்தயானை கொட்டாவி கொண்டாலனைய வாம்படி வாளிடம்படுத்தின புண்ணையுடைய மார்பரும் இளைப்பாறினாரென்க. (28) 2355. கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங் கூந்தன் மகளிர் குழைசிதறி யழுவா ரழுகைக் குரலொலியும் மதிர்கண் முரசின் முழக்கொலியுங் குழுவாய்ச் சங்கின் குரலொலியுங் கொலைவல் யானைச் செவிப்புடையு மெழுவார் யாழு மேத்தொலியு மிறைவன் கேளாத் துயிலேற்றான். இ-ள். அழகிய இடும்பைதரும் புண்வாய்காற்றைப் புறப்பட விடுகின்ற ஒலியையும், பட்டவர்க்கு மகளிரழுகின்ற அழுகைக் குரலிற்பிறந்த ஒலியையும், முரசினது நடுங்கினகண் முழங்குதலிற் பிறந்த ஒலியையும், திரண்டவாயையுடைய சங்கினது முழக்கத்தா லெழுந்த ஓசையையும், நொந்த யானையது செவிப்புடையையும், எழுவுவார்யாழையும், ஏத்துகிற ஒலியையும் இறைவன்கேட்டுத் துயிலுணர்ந்தானென்க. (29) 2356. தொடித்தோண் மகளி ரொருசாரார் துயரக் கடலுளவர்நீந்த வடிக்கண் மகளி ரொருசாரார் வரம்பி லின்பக் கடனீந்தப் பொடித்தான் கதிரோன் றிரைநெற்றிப் புகழ்முப் பழநீர்ப் பளிங்களைஇக் கடிப்பூ மாலை யவரேந்தக் கமழ்தா மரைக்கண் கரீஇயினான். இ-ள். பட்டவருடையமகளிரொருகூற்றார் துன்பக்கடலிலே நீந்தாநிற்க, வென்றவர்மகளிரொருகூற்றார் இன்பக்கடலிலே நீந்தா நிற்கக் கதிரோன் கடலிலே தோன்றினான்; அப்பொழுது அவன் கடு, நெல்லி, தான்றி யூறின நீரிலே கருப்பூரத்தைக் கரைத்து மகளிரேந்தக் கண்ணைக் கழீயினா னென்க. (30) 2357. முனைவற் றொழுது முடிதுளக்கி முகந்து செம்பொன் கொளவீசி நினைய லாகா நெடுவாழ்க்கை வென்றிக் கோல விளக்காகப் புனையப் பட்ட வஞ்சனதைப் புகழ வெழுதிப் புனைபூணான் கனைவண் டார்க்கு மலங்கலுங் கலனு மேற்பத் தாங்கினான். இ-ள். பூணான் பிறராற் பெறலாமென்று கருதலாகாத செல்வத் திற்கும், வெற்றிக்கோலத்திற்கும் விளக்கமாம்படி முனை வனை யஞ்சலிசெய்து வணங்கித் தானம் பண்ணிக் கைசெய்யப் பட்ட அஞ்சனத்தையெழுதி யலங்கலையும் கலத்தையும் பொருந்தத் தாங்கினானென்க. (31) 2358. முறிந்த கோல முகிழ்முலையார் பரவ மொய்யார் மணிச்செப்பி னுறைந்த வெண்பட் டுடுத்தொளிசேர் பஞ்ச வாசங் கவுட்கொண்டு செறிந்த கழுநீர்ப் பூப்பிடித்துச் சேக்கை மரீஇய சிங்கம்போ லறிந்தார் தமக்கு மநங்கனா யண்ணல் செம்மாந் திருந்தானே. இ-ள். அண்ணல், தளிர்த்தகோலத்தையுடைய முகிழ்த்த முலையார்பரவஉடுத்துக் கவுட்கொண்டு பூவைப்பிடித்து இக் கோலத்தாலே அறிந்தார்க்கும் அநங்கனேயாய், ஆண்மை யினாற் சேக்கையை மரீஇயதொரு சிங்கம்போலே அச்சேக்கை யிலே வீற்றிருந்தானென்க. ‘முலையார் மெலியவும்’ பாடம். இது மற்றைநாளிற் சமயம். (32) 2359. வார்மீ தாடி வடஞ்சூடிப் பொற்பார்ந் திருந்த வனமுலையா ரேர்மீ தாடிச் சாந்தெழுதி யிலங்கு முந்நீர் வலம்புரிபோற் கார்மீ தாடிக் கலம்பொழியுங் கடகத் தடக்கைக் கழலோனைப் போர்மீ தாடிப் புறங்கண்ட புலால்வேன் மன்னர் புடைசூழ்ந்தார். ஆடி-ஆட. இ-ள். கச்சையறுத்துச் சூடி யார்ந்து அடிபரந்த முலையாரது அழகு மேலாம்படி சாந்தையுமெழுதிக் காரைவென்று சங்கநிதி போற் கலத்தையும்பொழியுங் கையினையுடைய கழலோனைப் போரை வென்று பகைவரைப் புறங்கண்ட அரசர் சூழ்ந்தாரென்க. (33) வேறு 2360. தொல்லை நால்வகைத் தோழருந் தூமணி நெடுந்தேர் மல்லற் றம்பியு மாமனு மதுவிரி கமழ்தார்ச் செல்வன் றாதையுஞ் செழுநக ரொடுவள நாடும் வல்லைத் தொக்கது வளங்கெழு கோயிலு ளொருங்கே. இ-ள். தோழருந் தம்பியும் மாமனுந் தாதையும் பழையவூரும் நாடுங் கோயிலிலே விரையத் திரண்டனவென்க. நந்தட்டன் சிறந்தமையிற் கூறினார். திணைவிராய் எண்ணி அஃறிணையான்முடிந்தன. பன்மையொருமைமயக்கம். (34) 2361. துளங்கு வெண்மதி யுகுத்தவெண் கதிர்தொகுத் ததுபோல் விளங்கு வெள்ளியம் பெருமலை யொழியவந் தெழிலார் வளங்கொண் மாநகர் மழகதிர் குழீஇயின போலக் களங்கொண் டீண்டினர் கதிர்முடி விஞ்சையர் பொலிந்தே. இ-ள். மதிசொரிந்தகதிரைக் குவித்த தன்மைபோல் விளங்கும் வெள்ளி மலையிலே கலுழவேகனிருப்ப, ஒழிந்த விஞ்சை யரெல்லாரும் வந்து மாநகரை யிடங் கொண்டு இளங்கதிர் திரண்டாற் போலே மாநகரிலேபொலிந்து ஈண்டினாரென்க. (35) ஒழிய-தங்க. 2362. எண்ண மென்னினி யெழின்முடி யணிவது துணிமின் கண்ண னாரொடு கடிகையும் வருகென வரலும் பண்ணி னார்முடி பழிச்சிய மணிபொனிற் குயிற்றி யண்ண லாய்கதி ரலம்வரப் புலமக ணகவே. 2363. விரியு மாலையன் விளங்கொளி முடியினன் றுளங்கித் திருவின் மால்வரைக் குலவிய தனையதோர் தேந்தா ரருவி போல்வதோ ராரமு மார்பிடைத் துயில வெரியும் வார்குழை யிமையவ னெருவன்வந் திழிந்தான். இவையிரண்டுமொருதொடர். இனியென்றது-காலங்கழிக்குமதன்றென்றவாறு. என்ற தனானே புரோகிதன் முதலாகத் துறைதோறும் வரிக்க வேண்டு வாரை வரித்ததுவும், அங்குரார்ப்பணம் அதிவாசமுதலிய சடங்கு களெல்லாம் நிகழ்த்தி முகூர்த்தம் பார்த்திருந்ததுவுந் தோன்றக் கூறிற்றாம். கண்ணனார்-உபதிருஷ்டா; என்றது புரோகிதனை; இஃது ஒருவரைக்கூறும் பன்மை. கடிகை-முகூர்த்தவிதானி. பழிச்சிய-புகழ்ந்த. மணிகளைப் பொன்னிலே யழுத்தி யவற்றின் கதிர்களசையும்படி முடியைப் பண்ணினாருமென்க. அண்ணல்-தலைமை. இ-ள். முன்றொக்கவரெல்லாரும் முடியணியுந்தன்மையைத் துணிமினென்று அமைச்சரைநோக்கிக் கூற, அவரும் முடியைப் பண்ணினாரும், கடிகையும், கண்ணனாரும் வருகவென்றழைப்ப, அவர்கள் வந்தவளவிலே, திருவிற் றுளங்கி மால்வரையிலே குலவிய தன்மையை யொப்பதொருதாரும், அருவிபோல்வதோர் முத்தாரமும் மார்பிலே துயலாநிற்ப, விளங்கொளி விரியுமியல்பி னனாய் முடியினனாய் இமையவனொருவன் வந்திழிந்தானென்க. முடியமைத்தற்குக்கூறிய நூலெல்லாம் முற்ற முடித்தலின், நாமகள் மகிழ என்றார். புலமகள் நகப் பண்ணினாருமென்க. (36-37) 2364. கொம்மை யார்ந்தன கொடிபட வெழுதின குவிந்த வம்மை யார்ந்தன வழகிய மணிவட முடைய வெம்மை செய்வன விழுத்தகு முலைத்தட முடைய பொம்மெ லோதியர் பொழிமின்னுக் கொடியென விழிந்தார். இ-ள். அவன்றேவியர் பெருமையார்ந்தன, எழுதப்பட்டன, குவிந்தன, அழகிய கருமைநிறைந்தன, வடமுடையன, கொடியன வாகிய முலையையுடைய ஒழுகுகின்ற மின்னொழுங்கென இழிந் தாரென்க. பொங்கி மெத்தென்ற வோதி. (38) 2365. மையல் யானையின் படுமதங் கெடப்பகட் டரசன் செய்த மும்மதம் போற்றிசை திசைதொறுங் கமழுந் தெய்வ வாசத்துத் திருநகர் வாசங்கொண் டொழிய வெய்யர் தோன்றினர் விசும்பிடைச் சிறப்பொடும் பொலிந்தே. இ-ள். இழிந்தவர்கள் யானையின்மதங்கெடும்படி களிற்றரச னுண்டாக்கின மதம்போலே திசைதோறுங்கமழுந் தெய்வ மணத்தாலே நகரிலுள்ளமணங் கைக்கொள்ளப்பட்டு அடங்கும் படி பொலிந்து கடுக நகரிடத்தே தோன்றினாரென்க. சிறப்பென்றது உபகரிக்கக் கொண்டுவந்தனவற்றை. (39) 2366. வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப் பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற் பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டி யெரிபொ னீண்முடி கவித்தனன் பவித்திரற் றொழுதே. சொரிந்து-சொரிய. இ-ள். பூமழை பொன்மழையோடே சொரியாநிற்க, அவன் பருதி போலும் நூற்றெட்டுக்குடத்தாலே பாற்கடலிலேமுகந்து ஆட்டி, மாந்தர் அஞ்சி வியந்து கைவிதிர்க்கும்படி தொழுது முடி யைக் கவித்தானென்க. பவித்திரனென்றார், நெஞ்சிற்றூய்மை தோன்ற. ஆசிரியனா தலிற் றொழுதான். (40) 2367. தேவ துந்துபி தேவர்கட் கோகையுத் துரைப்பா னாவி யம்புகை யணிகிளர் சுண்ணமோ டெழுந்த நாவி னேத்தின ரம்பையர் நரம்பொலி யுளர்ந்த காவன் மன்னருங் கடிகையுங் கடவது நிறைத்தார். தேவதுந்துபி-தெய்வவாச்சியம். அவி-ஆவியெனவிகாரம்; என்றது-உறாமத்தால் விளைந்த உறவிஸ்ஸை நரம்பு பாட்டொலி யோடே வாசிக்கப்பட்டன; மன்னர் கைக்காணியிட்டு வணங் கினார்; கடிகையர் மங்கலம் பாடினார். இ-ள். துந்துபி,யுரைத்தற்கு அவியோடும் புகையோடுஞ் சுண்ணத்தோடுமெழுந்தன; அரம்பையரேத்தினார்; உளர்ந்தன; மன்னருங் கடிகையரும் நிறைந்தாரென்க. ஏத்துநர்பாடமாயின், ஏத்துநராகிய அரம்பையரென்க. `(41) 2368. திருவ மாமணிக் காம்பொடு திரள்வடந் திளைக்கு முருவ வெண்மதி யிதுவென வெண்குடை யோங்கிப் பரவை மாநில மளித்தது களிக்கயன் மழைக்கட் பொருவில் பூமகட் புணர்ந்தன னிமையவ னெழுந்தான். திருவமாமணி-அழகியமணி; அ-அசை. காம்பும் வடமுந் திளைக்கு மதி-இல்பொருளுவமை. குடை-அபிடேகாங்கமாகிய கொற்றக்குடை. இ-ள். குடை யோங்கி நிலத்தையளித்தது; அங்ஙன மளித்தலிற் கயல்போலுங் கண்ணையுடைய பூமகளை அவன்புணர்ந்தான்; புணர்ந்தபின் சுதஞ்சணன் போயினானென்க. (42) வேறு 2369. மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை வெண்கவரி விரிந்து வீசப பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமா முழைக்கலங்கள் பொலிந்துதோ மன்னர் முடியிறைஞ்சி மாமணியங் கழலேந்தி யடியீ டேத்தச் சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார் போற்றிசைப்பத் திருமால் போந்தான். இ-ள். திரைபோற் கவரிவீசத் திருவின்வடிவாகிய குடை யுலகைநிழற்றக் கலங்கள்தோன்ற ஏத்த இசைப்பத் திருமால் நன்னில மிதித்தற்குப் போந்தானென்க. பொன்-திரு; “நன்பொன் போகிய பொன் னாரம்” போல. இது பவனிக்குடையாதலிற் பொற்குடையாயிற்று என்றுமாம். கழலை யேந்தி அடியிடுதலை மன்னர் முடியாலேயிறைஞ்சி யேத்த. சின்ன மலர்-விடுபூ. காத்தாற்றொழிலாலும். வடிவாலுந் திருமாலென்றே கூறினார். அடுத்து இரண்டுபவனி அரசர்க்கருகாமையிற் கல்யாணத் திற்குப்பின்பு பவனிகூறுவார் ஈண்டு நன்னிலமிதித்து மண்டபத்தே புகுந்தமைதோன்ற ‘அடியீடேத்த’ வென்றார் . (43) 2370. மந்தார மாமாலை மேற்றொடர்ந்து தழுவவராத் தாம மல்கி யந்தோவென் றஞ்சிறைவண் டேக்கற வின்புகைபோய்க் கழுமி யாய்பொற் செந்தா மரைமகளே யல்லதுபெண் சாராத திருவின் மிக்க சிந்தா மணியேய்ந்த சித்திரமா மண்டபத்துச் செல்வன் புக்கான். தழுவவாராத்தா மங்களிற் றேனை யுண்ணப்பெறாதே வண்டுகள் ஏக்கறுக்கும்படி புகைபரந்து. திருவல்லது பெண்சாராத தெனவே சமயமிருக்குமண்டபமாம். இ-ள். தொடரப்பட்டு மல்கப்பட்டுக் கழுமப்பட்டுத் திருவல்லது பெண்சாராத மண்டபத்தே திருவான்மிக்க சிந்தா மணியின் றன்மைபொருந்திய செல்வன் புக்கானென்க. மேல் நினைத்தன கொடுக்கின்றானாதலிற் சிந்தாமணி யென்றார். (44) 2371. பைங்க ணுளையெருத்திற் பன்மணி வாளெயிற்றுப் பவள நாவிற் சிங்கா சனத்தின்மேற் சிங்கம்போற் றேர்மன்னர் முடிகள் சூழ மங்குன் மணிநிற வண்ணன்போல் வார்குழைக டிருவில் வீசச் செங்கட் கமழ்பைந்தார்ச் செஞ்சுடர்போற் றேர்மன்ன னிருந்தா னன்றே. இ-ள். பைந்தாரையுடைய மணிநிறவண்ணன்போலுஞ் சீவகன், முடிகளையுடைய தேர்மன்னர் சிங்கம்போற்சூழக் குழை திசையெங்கும் வில்லைவீசக் கண்முதலியவற்றையுடைய சிங்கா சனத்தே ஞாயிறுபோல் வீற்றிருந்தானென்க. மங்குல்-திசை. எனவே தந்தையைப்போல் இருந்தா னென்றார். (45) வேறு 2372. வார்பிணி முரச நாண வானதிர் முழக்க மேய்ப்பத் தார்பிணி தாம மார்பன் றம்பியை முகத்து ணோக்கி யூர்பிணி கோட்டஞ் சீப்பித் துறாதவ னாண்ட நாட்டைப் பார்பிணி கறையி னீங்கப் படாமுர சறைவி யென்றான். உள்-உருபுமயக்கம். பாரிற்குக் கட்டின கடமையினின்று நீங்க. என்றது-ஆறிலொன்றையுந் தவிரவென்றவாறு. இ-ள். சீவகன் றம்பியை முகத்தைநோக்கி யூர்களிலுள்ளா ரைப் பிணித்த சிறைக்கோட்டத்தையும் இடிப்பித்து முன் அரசாட்சியுறாதவன் ஆண்டநாட்டைப் பதினாறியாண்டளவுங் கடமைகொள்ளாமை தோன்ற முரசறைவியென்று முரசநாண வான்முழக்கமேய்ப்பக் கூறினானென்க. கறையினீங்கவென்பது கடமைகொள்ளாமையென்னும் பொருட்டாய் நாட்டையென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று; ஐ-அசையுமாம். (46) 2373. கடவுள ரிடனுங் காசில் கணிபெறு நிலனுங் காமர் தடவளர் முழங்குஞ் செந்தீ நான்மறை யாளர் தங்க ளிடவிய நிலத்தோ டெல்லா மிழந்தவர்க் கிரட்டி யாக வுடனவை விடுமி னென்றா னொளிநிலா வுமிழும் பூணான். இ-ள். அங்ஙனஞ் சாற்றக்கூறிய பூணான் பின்பு அமைச்சரை நோக்கி, அந்தணர்தம்முடைய பெரிய இறையிலிநிலத்தோடே தேவர் களிறையிலிநிலத்தையுஞ் சோதிடநூலோர் இறையிலி நிலத்தையும் ஒழிந்த இறையிலிநிலங்களையும் முன்புபோலே இறையிலியாக விடுமினென்று, பின்னும் அவனாண்டகாலத்து அவற்றையுட னிழந்தவர்க்கு இரட்டியாக விடுமினென்றானென்க. விடுமினென்ற முன்னிலைப்பன்மையான் அமைச்சரை நோக்கிக் கூறினமை உணர்க. விடுமினென்றதனை இரண்டிடத் திற்கும் ஏற்றுக. உடனிழத்தல்-அவன் சேரமாற்றுதலின், இழத்தல். (47) 2374(1). என்றலுந் தொழுது சென்னி நிலனுறீஇ யெழுந்து போகி வென்றதிர் முரசம் யானை வீங்கெருத் தேற்றிப் பைம்பொற் குன்றுகண் டனைய கோலக் கொடியணி மாட மூதூர்ச் சென்றிசை முழங்கச் செல்வன் றிருமுர சறைவிக் கின்றான். 2375(2) ஒன்றுடைப் பதினை யாண்டைக் குறுகட னிறைவன் விட்டா னின்றுளீ ருலகத் தென்றுமுடனுளீ ராகி வாழ்மின் பொன்றுக பசியு நோயும் பொருந்தலில் பகையு மென்ன மன்றல மறுகு தோறு மணிமுர சார்த்த தன்றே. 2376(3) நோக்கொழிந் தொடுங்கி னீர்க்கு நோய்கொளச் சாம்பி னீர்க்கும் பூங்குழன் மகளிர்க் கொண்டான் புறக்கணித் திடப்பட் டீர்க்குங் கோத்தரு நிதியம் வாழக் கொற்றவ னகரோ டென்ன வீக்குவார் முரசங் கொட்டி விழுநக ரறைவித் தானே. இவைமூன்றுமொருதொடர். 1. அறைவிக்கின்றான்-பெயர். 2. உறு-மிகுதி. என்ன-என்று பறையன் கூறாநிற்க. என்ன முரச மார்த்ததென்க. அன்றே-அப்பொழுதே. 3. நோக்கொழிந்தார்-கண்கெட்டவர். சாம்புதல்-பொருளின் றிக்குவிதல். மகளிர்-பரத்தையர். பரத்தையரிடத்து வேட்கையாலேகொண்டவன் பாதுகாவாத அறிவுடைய மகளிர்க் கும். கோ-பசு. கோத்தலை விகாரமாக்கி கோத்தலைத், தரு நிதியம்-இடையறாத பொருளென்றுமாம். இ-ள். என்று சீவகன்கூறின வளவிலே, நந்தட்டன் எழுந்தி ருந்து தொழுது வணங்கிப் போய் மூதூரிலே விரையச்சென்று முழங்கும்படி முரசறைவிக்கின்றவன் முரசறைகின்றவனுக்கு இறைவனருளிய மொழியைச் சாற்றென்றுகூற, அவனும் வென்றதிர்முரசத்தை யானை யெருத்தத்திலேற்றப் பசியும் நோயும்பகையும் பொன்றுக; இன்றுளீர்! உலகத்துடனே என்று முள்ளீராய் வாழ்வீரென வாழ்த்தி, இறைவன் இந்நாட்டைப் பதினாறாண்டிற்குக் கடமையிழந்தானென்று கூறாநிற்க முரசமார்த்தது; அப்பொழுதே நோக்கொழிந்தீர்க்குஞ் சாம்பி னீர்க்கும் புறக்கணிக்கப்பட்டீர்க்கும் கொற்றவன் மனைகளுடனே கோவையும் நிதியத்தையும் நீர்வாழும்படி தருமென்று முரசறைவான் கூறும்படி யவனுக்கறிவித்து அவனைக்கொண்டு நகரிலே முரசைக் கொட்டி அறைவித்தானென்க. அரசன்கூறாதன தான்கூறிச் சாற்றுவித்தானல்லன்; அவன் அரசாட்சி பெற்றார் செய்யுறங்கள் தனக்கு முற்கூறியவற்றைப் பின் தான் சாற்றுவித்தானென்று கொள்க. (48-50) 2377. திருமக னருளப் பெற்றுத் திருநிலத் துறையு மாந்த ரொருவனுக் கொருத்தி போல வுளமகிழ்ந் தொளியின் வைகிப் பருவரு பகையு நோயும் பசியுங்கெட் டொழிய விப்பாற் பெருவிறல் வேந்தர் வேந்தற் குற்றது பேச லுற்றேன். இ-ள். இங்ஙனம் அரசன்றான் அருளப்பெறுதலின், அவனி லத்தின் மக்களெல்லாம், பகையும் நோயும் பசியுங் கெட்டேபோக, ஒருவனுக்கொருத்திபோல மனமகிழ்ந்து ஒளியோடே தங்காநிற்கச் செல்கின்ற நாளிலே, வேந்தற்குற்றதொன்று கூறுதலுற்றேனென் றாரென்க. வைகி-வைக. (51) பூமகளிலம்பக முற்றிற்று. பன்னிரண்டாவது இலக்கணையாரிலம்பகம். 2378. அலங்க லேந்திய குங்கும வருவரை மார்பன் கலந்த காரிகை யவர்களைத் தருகென வருள இலங்கு மாலைவெள் ளருவிய வெழில்வரை மணந்த புலம்பு நீள்சுரம் போய்க்கொணர்ந் தருளொடுங் கொடுத்தார். இ-ள். மாலையையேந்திய வரைபோலுமார்பன் தான் மணஞ் செய்த மகளிரைத் தருவீராகவென்று அருளிச்செய்ய, அவரும் அவனருளிச்செயலோடே வருத்தமிக்க சுரத்தைப் போய்க் கொணர்ந்து கொடுத்தாரென்க . (1) அருவியவாகிய வரைகள். 2379. மோடு கொண்ணிலா முளைத் தெழு பரு திகண் டறியாப் பாடு வண்டொடு பறவையு நடுக்குறுங் காப்பின் மாட மாமணிச் சிவிகையின் மயிலென விழிந்தார் வீடு கண்டவர் போன்றுமின் னிடுகொடி யனையார். இ-ள். மின்னையும் எழுதுகொடியையுமனையார், மதியை யும் பரிதியையுங் கண்டறியாத மாடத்தின்கண்ணே வண்டும் பறவையு மஞ்சுங் காவலையுடைய சிவிகையினின்றும் மயிலிழிந் தாற்போல இழிந்தாரென்க. துன்பமுறுதற்கு ஓர்சாபம்பெற்று அச்சாபம்வீடு கண்ட வரைப்போலே மகிழ்ந்து இழிந்தாரென்க. வீடுகண்டவர் பின் வருத்தநீங்கினாற்போல இவரும் இனி வருத்த நீங்கினாரென்று மாம். (2) 2380. அன்று சூடிய மாலைய ராடிய சாந்தர் பொன்றி வாடிய மேனியர் பொன்னிறை சுருங்கார் சென்று காதலன் றிருவிரி மரைமல ரடிமே லொன்றி வீந்தனர் குவளைக்க ணுவகைமுத் துகவே. இ-ள். இவன்பிரிகின்ற அன்றுசூடிய மாலையராய் ஆடின சாந்தினராய், கெட்டமேனியராய், பெறுதற்கரிய நிறை கெடாத வர்கள் கண் உவகைமுத்துகும்படி சென்று காதலனடிமேலே வீழ்ந்தாரென்க. (3) 2381. இலங்கு பூண்வரை மார்புற வெடுத்தவன் முயங்க மலங்கி வாட்கண்கள் வருபனி சுமந்துடன் வெருவிக் கலங்கு நீரிடைக் கலக்குறு கருங்கய லிணைபோற் புலம்பி யோடின செவியுற நெடியன பொலிந்தே. இ-ள். சின்னீரிடத்தே வெருவக் கலங்கலுற்ற கயலிணை போலே இவன்பிரிவிற்கு மலங்கிப் புலம்பி ஓடினவாட்கண்கள் ஈண்டு அவன்அவரைச் சேரவெடுத்து முயங்குதலிற் பொலிந்து உவகைக் கண்ணீரைச்சுமந்து செவியுற நெடியனவாயின வென்க. வெருவி:வெருவவென்க. ஓடுதல்-கெடுதல்; “ஒடிய துணர்தலும்”(சிறுபாண்.214) என்றாற்போல. (4) 2382. வேனல் வாய்ப்பட்டு விரிமுகை தளிரொடு கரிந்த கானக் கார்முல்லை கார்மழைக் கெதிர்ந்தன போல மான மங்கையர் வாட்டமும் பரிவுந்தங் கணவன் றேனெய் மார்பகந் தீண்டலுந் தீர்ந்தொளி சிறந்தார். இ-ள். முதுவேனிலிடத்தே அகப்பட்டுக் கரிந்தமுல்லை மழையை யேற்றுக் கொண்டனபோலமங்கையர் தங்கணவன் மார் பைத் தீண்டின வளவிலே மேனியில் வாட்டமும், மனத்தில் வருத்த முந் தீர்ந்துபோய் ஒளிமிக்காரென்க. மழைக்கு, கு-உருபுமயக்கம். மானம்-புலவி. தேனைப்போன்ற மார்பென்றார், தேனுக்கு இன்சுவைநிகழ்ந்தகாலத்தே புளிச்சுவை நிகழுமாறுபோலே, இம்மார்பும் இம்மளிர்க்கு இன்பம் நிகழ்த்தின காலத்தே பிறர்க்கும் இவ்வாறு இன்ப நிகழ்த்துமேயென்னுங் கருத்தை அவர்க்குப் பிறப்பித்தலன். இனித் தூதாய் வந்த தேனினம் இளைக்கிற மார்புமாம். (5) 2383. சேலுண் கண்ணியர் சிலம்பொடு திலகமுந் திருத்தி மாலை நல்லன மதுக்கமழ் தகையன மிலைச்சிக் கோல மென்முலைக் குங்கும மிடுகொடி யெழுதிச் சோலை வேய்மரு டோண்முத்துந் தொழுதக வணிந்தார். இ-ள். சேடியர் தேவியர்க்குச் சிலம்பிலேநின்றுந் திலகத் தளவுந் திருத்தி முடியிலே மதுக்கமழ் தகையனவாகிய மாலைகள் நல்லன வற்றைச்சூட்டி முலையிலுந் தோளிலுங் குங்குமத்தாலே எழுதுகொடி யெழுதிக் கணவன் தொழுதல் தகும்படி முத்து வடத்தையும் அணிந் தாரென்க. (6) 2384. நஞ்சி மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போல அஞ்சி வாட்கண்கண் மதர்த்தன வலர்ந்துடன் பிறழப் பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரிய வஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ. அவசத்தாற் பிறந்த அனந்தர்நோக்கினை நஞ்சென்றார். உடன்-எல்லாம். பஞ்சு-ஆகுபெயர். தனதுநுண்மையான் ஊற்றின்பநிரம்பப் பெறாதவிடை மெய்புகுவன்ன முயக்கத்தாலே ஊற்றின்பம் பெறும்படி வைகுதலின், இடைகவின்பெற என்றார். இ-ள். கயல் நஞ்சைமேய்தலிற் செருக்குவனபோலக் கண்கள் மலர்ந்து இறுமாந்துஅஞ்சிப் பிறழ, மேகலையற்றவை மணியைச் சொரிய, இடை கவின்பெற வைகினானென்க. (7) 2385. அரிபொற் கிண்கிணி யணிகிளர் சிலம்பொடு சிலம்புந் திருவச் சீறடிச் செழுமலர்க் கொழுங்யன் மழைக்க ணுருவ நுண்ணிடை யொளிமணி வருமுலை யுருவா ரெரிபொன் மேகலை யிலக்கணை கடிவினை நொடிவாம். ஐதாகிய பொன்னாவது தகடு. திருவ, அ-அசை. இ-ள். கிண்கிணி சிலம்போடுசிலம்புந் திருவையுடைய சீறடித் தாமரை முதலியவற்றையுடைய இலக்கணையது மண வினையைக் கூறுவாமென்றாரென்க. (8) 2386. ஆழி மால்கட லகன்பெருங் கேள்விக டுறைபோயூழி னன்றியு றுவினை யோரையின் முடிப்பான் சூழி யானையுந் துளங்குபொற் சிவிகையு முடையான் வேழ வேந்தற்கு விழுப்பெருங் கணிவிரித் துரைத்தான். இ-ள். கரையையுடைய பெரிய கடல்போன்றநூலை முற்றுக்கற்று யானையுஞ்சிவிகையும் பெற்றானாகியகணி விதியாற் றானேமுடிதலே யன்றி யிந்நல்வினையை ஒரையானு முடித்தற்குப் பொருந்திய நாள்களை யரசனுக்கு விரித்துரைத்தா னென்க. (9) 2387(1) ஓங்கு கொற்றவற் கோதிய வுயர்பெரு நாளால் வீங்கு வெள்ளியங் குன்றென விளங்கொளி யுடைய தேங்கொண் மாலையுந் திலகமு மணிந்ததிண் குணத்த பாங்கிற் பண்ணின நூற்றெட்டுப் படுமதக் களிறே. இதுமுதல் “மாலைவாண்முடி” அளவுமொருதொடர். கொற்றவற்கோதியநாளென்றதனால் “நவநக்ஷத்ரோந்ருபதி” என்றது சன்மநக்ஷத்திரமுதலாக ஒன்பதுநாளினாதலின், இக்கல் யாணத்துக்கு அந்நாளொன்பதிலும் பொருந்துவதொருநாளிலே முரசுசாற்றுகின்றாரென்க. மாலையுந் திலகமுமணியப் பட்ட களிறு. திண்குணம்-மாறுபடாத சீலம். குணத்தலாய் மதத்தை யுடைய களிறு விளங்கொளியையுடைய வெள்ளிக்குன்றெனப் பண்ணப்பட்டனவென்க. வெள்ளணியணிந்தன வென்க. 2388(2) விளங்கு வெண்டுகி லுடுத்து வெண் சாந்துமெய் பூசித் துளங்கு மஞ்சிகை துளைச்சிறு காதினுட் டுளங்க வளங்கொண் மாலைகள் சூடிமுத் தணிந்துவண் முரசங் களங்கொள் கேவழத்தி னேற்றினர் கடிமுர சறைவான். மஞ்சிகை-காதணி. சிறுதுளைக்காது. முரசறையவேண்டி. துளங்கா நிற்க உடுத்துப் பூசிச் சூடி யணிந்து முரசை அவற்றிற்றலை வனாகிய வேழத்திலே யேற்றினாரென்க. 2389(3).கேண்மின் கேண்மின்கள் யாவரு மினியன கேண்மின் பூண்மி னித்தில மணிவடம் பூசுமின் சாந்தம் வாண்மி னுண்ணிடை வருந்தினுஞ் சூட்டணிந் தழகா ராண மாகிய வருவிலை வண்ணப்பட் டுடுமின். கேண்மின்-விரைசொல்லடுக்காதலின், மூன்றாயிற்று. ஆணம்-நேயம். 2390(4) பிள்ளை வெண்பிறைச் சிறுநுதற் பெரும்பட்ட மணிமி னுள்ள மேனியு மொளிர்மணிக் கலங்களிற் புனைமின் வள்ளல் வாய்மொழி யான்படு பாலமிர் தல்லா லுள்ள மேவினம் பிறவுணப் பெறீரெழு நாளும். பிள்ளைப்பிறையென்பது “பிள்ளை குழவி” (தொல். மரபு.24) என்னுஞ் சூத்திரத்தும்மையை யெச்சப்படுத்தி அதனாற்கொள்க. உள்ள மேனி-முன்பு அணியணிந்த இடமொழிய உள்ளமேனி. வள்ளல் வாய்மொழி-அரசனருளிச்செயல். நெஞ்சம்பிறவற்றிலே மேவினும். 2391(5) வாழை மல்கிய மணிக்குலைக் கமுகொடு நடுமின் றாழ நாற்றுமின் றாமங்க ளகிற்குடம் பரப்பி யாழின் பாடலு மாடலு மரங்குதோ றியற்றிப் போழு மால்விசும் பெனப்பல பொலங்கொடி யெடுமின். கமுகோடே வாழையை. அகிற்குடம்-தூபக்குடம். விசும் பைப் போழுமெனக. 2392(6) மாலை வாண்முடி மன்னவன் மணவினை யெழுநாட் சீல மில்லன சினக்களி றகற்றுகென் றணிந்த கோல மார்முர சிடியுமிழ் தழங்கென முழங்க நீல மாக்கட னெடுநகர் வாழ்கென வறைந்தார். மணவினை நிகழுமெழுநாளும். சீலமில்லனவாகிய கொலைக் களிற்றை யகற்றுக. இ-ள். கொற்றவற்கோதிய நாளிலே முரசறைதற்குக் களிறுகள் பண்ணின; அக்களிற்றிற் றலைவனாகிய வேழத்திலே முரசை யேற்றினார்; ஏற்றி நெடுநகர்வாழ்கவெனக்கூறி அரசன் றிருவாய்மொழி யாகிய இனியவற்றையாவருங்கேண்மின்; இவ் வேழுநாளும் இடைவருந்தினும் பூண்மின்; பூசுமின்; அணிந்து உடுமின்; அணிமின்; புனைமின்; பாலடிசிலேயுண்மின்; நடுமின்; நாற்றுமின்; பரப்பி யியற்றி யெடுமின்; இன்னும் இவ்வெழு நாளுங்களிற்றை யகற்றுகவென்று கூறி யிடியொலிபோலே முரசை முழங்க வறைந்தாரென்க. (10-15) வேறு 2393. முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய் விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மின புரையில் பொன்மணி யாழகுழ றண்ணுமை யரவ வானி னதிர்ந்த வணிமுழா. ஆர்த்த-விகாரம். போய்-போக. போகாநிற்க இவையு நிகழ்ந் தனவென மேல்வருவனவற்றையும் உடனிகழ்ச்சி யாக்குக. புரை-குற்றம். இ-ள். முரசமார்த்தபின் ஆறுநாள் செல்லாநிற்க, எங்கணும் விரைவுடனே வளைவிம்மின; யாழ், குழல், தண்ணுமை, முழவு இவை வான்போலே யதிர்ந்தனவென்க. (16) 2394. விண்வி ளக்குவ போல்விரி பூந்துகள் கண்வி ளக்கிக் கலந்தவெண் சாந்தினால் மண்வி ளக்கி மலர்ப்பலி சிந்தினார் பண்வி ளக்கிய பைங்கிளி யின்சொலார். இ-ள். பண்ணைத்தோற்றுவித்த சொல்லார் தேவருலகத்துத் துராலைத் துடைக்குமாறுபோலே சிந்தின மணிகள் முதலியவற் றோடே அக்கண் கலந்த விரிந்தபூந்துகளைத்துடைத்துச் சாந்தினானிலத்தை மெழுகியில்லுறை தெய்வத்துக்குப் பூப்பலியை யுஞ்சிந்தினாரென்க. விளக்குதல்-தகுதிபற்றியவழக்கு. (17) 2395. ஆய்ந்த மோட்டின வான்படு பாலுலை போந்து தபொங்கிய வாவியி னாற்பொலிந் தேந்து மாடங்க டாமிழி னென்பன பூந்து கில்புறம் போர்த்தன போன்றவே. இ-ள். இழினென்னுமோசையை யுடையவாகிய மாடங்கள் தாம் அழகிய வயிற்றையுடையவாகிய ஆனிலேதோற்றிய பாலுலை பானையின்புறம்பே போந்து பொங்கிய ஆவியினாலே பொலிந்து பூந்துகிலைப் புறம்போர்த்தன போன்றனவென்க. (18) 2396. திருவி னல்லவர் செம்மலர்ச் சீறடிப் பரவி யூட்டிய பஞ்சரத் தக்களி விரவி மீநிலஞ் சேர்ந்தொளி பூத்துராய்க் குருதி வானிலங் கொண்டது போன்றதே. இ-ள். திருவினு நல்லவர் தம்மடியைச் சேடியர் பரவியூட்டிய செம்பஞ்சின் சேறு நிலத்தின்மீதே விரவிச்சேர்தலின், அவ்வொளி பூத்துப் பரந்து செக்கர்வான் நிலத்தைக்கொண்ட தன்மைபோன்ற தென்க. (19) 2397. பால்வெண் டிங்கண் மணிக்கை படுத்தவை போலு மாடியி ணோக்கிப் பொலங்கலக் கோலஞ் செய்பவர் கோல வெறிப்பினால் மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே. இ-ள். திங்கள் மணிக்காம்புசேர்த்தினவற்றையொக்குங் கண்ணாடியில் நோக்கிப் பொற்கலத்தையுடைய கோலத்தைச் செய்பவர் கோலத்தால்வருங் கண்வெறிப் பாலேயொழுங் கையுடைய வண்டினங்கள் கண் டோன்றாவாயினவென்க. (20) 2398. போக மாமழை போழ்ந்து புதத்தொறு மாக மேந்துவ போன்மணித் தோரண மாக நாற்றின தாம மணிக்குடம் ஏக மாநகர் வீதி நிரைத்தவே. இ-ள். தனக்கு நிகரில்லா நகர்வீதியிலே வாயிறோறும் மழையை போழ்ந்து மாகத்தையேந்துவபோலுந் தோரணங் களிலே தாமங்கள் பொருந்த நாற்றப்பட்டன; மணிக்குடங்கள் வைக்கப்பட்டனவென்க. (21) 2399. ஆடன் மங்கையர் கிண்கிணி யார்ப்பொலி பாட லின்னொலி பண்ணமை யாழொலி மோடு கொண்முழ வின்முழக் கீண்டிய மாட மாநகர் மாக்கட லொத்ததே. மங்கையர் கிண்கிணி யசைதலிற் பிறந்தவொலி. இ-ள். இவ்வொலிகளாலே நகர் கடலையொத்ததென்க. முழக்கத்தாலீண்டின வொலி. (22) 2400. சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுக ளந்த ரத்தெழு மின்புகை யாலரோ விந்தி ரன்னகர் சாறயர்ந் திவ்வழி வந்தி ருந்தது போன்மலி வுற்றதே. இ-ள். இந்நகர் சிந்தூரத்துகளாலும் பூந்துகளாலும் பொற்று களாலும் புகையாலும் அமராபதி சாறயர்ந்து ஈண்டு வந்திருந்தாற் போலே மிகுதியுற்றதென்க. (23) வேறு 2401. நிரந்து கன்னலு நெய்யு நீந்தப்பெய் திரந்து பாலமிர் தெங்கு மூட்டுவார் பரந்து பூந்துகில் பன்ம ணிக்கலஞ் சுரந்து கொள்கெனச் சுமக்க நல்குவார். இ-ள். எவ்விடமும் பரந்துசென்று இரந்துகொண்டு கன்னலையும் நெய்யையுந் தொலைக்க வொண்ணாதபடிபெய்து பாலடி சிலை யூட்டுவார்; துகிலையுங் கலத்தையுங் கொண்டுவந்து கொள்கவென்று சுமக்கும்படி நல்குவாரென்க. (24) 2402. வருக்கை யின்பழம் வாழை யின்கனி திருக்கொண் மாங்கனி தெளித்த தேறலை கருப்புச் சாற்றொடு கலந்து கைசெய்து புரித்த தெங்கிள நீரும் பூரிப்பார். இ-ள். பலாப்பழமுதலியவற்றை நீராக்கின தேறலை யினிய கருப்புச்சாற்றோடே கலந்து சமைத்து அதனையும் விருப்பமிக்க இளநீரையும் பூரிப்பாரென்க. (25) 2403. கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை யாய்ந்த மெல்லிலை பளித மாதியா மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார். கூந்தல்-தலை. இ-ள். கருப்பூரமுதலாகப் பாக்கையும் வெற்றிலையையும் மாந்தர் கொள்ளை கொண்டு சுமக்கலாம்படித்தன்றாக மாநில முண்ணும்படி யீட்டுவாரென்க. வெற்றிலையுண்ணவென்றன் மரபன்மையின், ஈண்டு மாநில முண்ணவெனவே மண்ணுண்ணும்படி யென்னும் பொருட்டாம். ஏந்தல்-சுமத்தல். “அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணான்” என்பது பன்மை பற்றிக் கூறிற்றெனவே வேண்டும; பாகு பசிப்பிணி தீர நுகரும் பொருளன்மையின். இனி மாந்தர் முற்கூறிய பாலடிசில் முதலிய வற்றையுண்டலின், அவர்தின்றற்குப் பளிதமுதலிய வற்றைக் கொள்ளைகொண்டு சுமக்கலாம்படித்தன்றாக ஈட்டுவார் என்றுமாம். (26) 2404. தூம மார்ந்தன துப்பு ரவ்வுக ளேம மாயின வேந்தி நிற்றலா னாம நன்னகர் நன்பொற் கற்பகங் காம வல்லியுங் களங்கொண் டிட்டதே. இ-ள். மெய்குறுதியாகிய தூமத்தையும், அதனை யொழிந்து ஆர்ந்தனவாகிய நுகர்பொருள்களையும் ஆடவருமகளிரும் ஏந்திநிற்றலின், இந்தநன்னகரைக் கற்பகமுங் காமவல்லியுமிடங் கொண்டு தம்மிடத்தைக் கைவிட்டனவென்க. இட்டது-ஒருமைப்பன்மைமயக்கம். (27) 2405. வழுவின் மாந்தரு மாவு மல்கிய தொழுதி தன்னையான் சுமக்க லேனெனா முழுது மண்மகண் முற்றும் வாய்திறந் தழுதிட் டாணெயும் பாலு மாகவே. இ-ள். மண்மகள் மாந்த மாவுநிறைந்த தொழுதிதன்னை யான் முழுதுஞ் சுமத்தலாற்றேனென்று வாய்முற்றுந்திறந்து நெய்யும் பாலுமாக அழுதிட்டாள் போலே இருந்ததென்க. எனவே அரவம் கூறினார். (28) வேறு 2406. கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கண் மடலெழுந் தலமருங் கமுகும் வாழையு மடியிருந் துகிலுடை மாக்க ணாடியும் புடைதிரள் பூரண குடமும் பூத்தவே. இ-ள். கோயில்வாயில்களெல்லாங் கமுகும், வாழையும், மடித்து கிலையுடைய கண்ணாடியும், நிறைகுடமும் பொலிவு பெற்றனவென்க. (29) 2407. கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணி யுடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுட் குடைநிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்ந் தடிநிலம் பெறாததோர் செல்வ மார்ந்ததே. இ-ள். மங்கையர் கிண்கிணியும், மேகலையும், சிலம்பும் ஒலிக்குங் கோயிலிடமெல்லாம், மன்னர்தங்கோதையிற் றாது வேய்தலின், அம்மகளிரடி தாதொழிந்து நிலத்தைத் தீண்டப் பெறாததோர் செல்வம் மிக்கதென்க. (30) 2408. துளங்குபொற் குழைகளுந் தோடுஞ் சுண்ணமுங் கிளர்ந்தகில் சாந்துபூக் கமழ்ந்து கேழ்கிளர் இளங்கதி ரெறிமணிப் பூணு மாரமும் விளங்கிமே லுலகினை வெறுப்பித் திட்டதே. இ-ள். இக்கோயில்,குழையுந்தோடும் ஒளிகிளரப்பட்டுச் சுண்ணமும் அகிலுஞ்சாந்தும் பூவுங் கமழப்பட்டுப் பூணும் முத்தாரமும் விளக்கப்பட்டு மேலுலகையிகழப் பண்ணிற்றென்க. (31) 2409. விரிந்துவான் பூத்தென விதானித் தாய்கதி ரருங்கலப் பொடியினா லாய்பொற் பூமகண் மருங்குல்போற் குயிற்றிய நகரின் மங்கலப் பெருந்தவி சடுத்தனர் பிணையன் மாலையார். இ-ள். வான் மீனைவிரித்துபூத்ததென விதானித்து அருங்கலங் களையிடித்த பொடியாலே மண்மகளிடைபோலே நுடங்கும்படி கோல மிட்ட விடத்தே யரசர்க்கு உரியமகளிர் மங்கலமாகிய வாசனத்தை யிட்டாரென்க. (32) 2410. நலங்கிளர் காணமு மணியு நன்பொனும் வலம்புரி முத்தமுங் குவித்த மங்கல மிலங்கின மணிவிளக் கெழுந்த தீம்புகை கலந்தவா யிரத்தெண்மர் கவரி யேந்தினார். காணம்-பழங்காசு. இ-ள். காணமுதலியனகுவித்தன; அவற்றின்மேலே அட்ட மங்கலமிலங்கின; விளக்கெழுந்தன; புகை கலந்தன; ஆயிரத் தெண்மர் கவரிவீசினாரென்க. (33) 2411. மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான் மங்கல மன்னவன் வாழ்த்த வேறலு மங்கல வச்சுதந் தெளித்து வாய்மொழி மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினhர். இ-ள். மங்கலங்கூறாநிற்க, மன்னவன் மங்கலநாளைக்கூறுங் கணிவகுத்த முகூர்த்தத்துடனே யாசனத்திலே யேறினவளவிலே மங்கலமாகிய அறுகுமரிசியுமிட்டு அபிமந்திரித்த பொற் கருவியை மஞ்சிகன் சேர்த்தினானாக வாழ்த்தினாரென்க. (34) உறுத்தி-உறுத்த. 2412. முழங்கின வின்னிய மொய்த்த தேத்தொலி கொழுங்கயற் கண்ணினார் கொண்டு பொன்னக லிழிந்தனர் திருமயி ரேற்ப நீரதி னிழன்றன சாமரை நிரைசங் கார்த்தவே. இ-ள். இன்னியமுழங்கின; ஏத்தொலியுஞ்சிறந்தது; சாமரை நீர்மையோடே நிழன்றன; சங்கு ஆர்த்தன; அப்பொழுது மகளிருந் திருமயிரைப் பொன்னகலிலே பொருந்தக்கொண்டு மண்டபத் தினின்றிழிந்தாரென்க. (35) 2413. பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடி போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதையை நாடகடி மயிர்வினை நன்பொற் றாமரைப் பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினார். பாற்கடல் கூறினார், குலத்தின் றூய்மைக்கு. இ-ள். பவளக்கொடிபோல் விட்டுவிளங்குகின்ற ஒளியினை யுடைய இலக்கணையைப் பூவாகிய சிறப்பையுடைய கோயிலிற் றிரு ஒவ்வேமென்று வருந்தும்படி நல்லநாளிலே மயிர்வினைக் கல்யாணத்தை யாக்கினாரென்க. ‘கடிக்கோயில்’ பாடம். (36) வேறு 2414. விரைத்தலை மாலை சூட்டி மின்னனா ரங்கை சேப்ப வரைத்தசாந் தணிந்த கோட்ட வாயிரத் தெட்டு வேழ நிரைத்தன மண்ணு நீர்க்கு முரசொடு முழவம் விம்ம வரைத்தலைத் துவலை போன்று மதநில நனைப்ப வன்றே. இ-ள். வரைத்தலைத் துவலைபோலே மதம் நிலத்தை நனையா நிற்க மின்னனார் மாலையைச்சூட்டித் தாமரைத்த சந்தனத்தை யணிந்த வேழங்கள், இயங்கள்விம்மாநிற்க மஞ்சனநீர் கொண்டுவருதற்கு நிரைக்கப்பட்டனவென்க. கோட்டவாகிய வேழம். (37) 2415. கான்முகம் புதைத்த தெண்ணீர் கவர்ந்துபொற் குடங்க ளார்த்தி யூன்முகம் புதைத்த வேற்கண் ணவர்களிற் றுச்சி யேற்றி வான்முகம் புதைத்த பன்மீன் மதியென மருண்டு நோக்கத் தேன்முகம் புதைத்த மாலைக் குடைநிழற் றிருவிற் றந்தார். கான்-ஆகுபெயர். இ-ள். நிணத்தையழுத்திய வேல்போலுங்கண்ணினார், பூ முக மறைத்த நீரை முகந்து பொலிவினையுடைய குடங்களை நிறைத்து அவற்றைமீனுமதியுமென்று நோக்கும்படி அக்களிற்றிலே யேற்றி அவர் குடைநிழலிலேசெல்வத்தோடே தந்தாரென்க. குடங்கட்குப் பன்னிறமுடைமையானும், சிறுமை பெருமை யானும் மீனுமதியமுமுவமமாயின. தேனின முகத்தைமறைத்த மாலை. (38) 2416(1). இழைத்தபொன் னகரின் வெள்ளி யிடுமிணை மன்ன ரேத்தக் குழைப்பொலிந் திலங்கு காதிற் கொற்றவ னிருந்த பின்றை மழைக்கவின் றெழுந்த வார்கொண் மணிநிற வறுகை நெய்தோய்த் தெழிற்குழை திருவில் வீச மகளிர்நெய் யேற்று கின்றார். 2417(2) மின்னுமிழ்வைரக்கோட்டுவிளங்கொளியிமயமென்னும் பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமே னிலவி வையம் நின்னடி நிழலின் வைக நேமியஞ் செல்வ னாகி மன்னுவாய் திருவோ டென்று வாழ்த்திநெய் யேற்றி னாரே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். பொன்னாலிழைத்த நகரிலே வெள்ளியாற் செய்யப் பட்ட மணையிலே யரசரேத்தக் கொற்றவனிருந்தபின்பு, மகளிர் மழைக்குக் கிளைத்தெழுந்த வறுகை நெய்யைத் தோய்த்துக் குழை வில்லை வீச நெய்யேற்றுகின்றவர்கள், இமவானைப்போலே நிலத்திலே நிலைபெற்று நின்னடிநிழலிலே யுலகம் வைகச் சக்கர வாளசக்கரவர்த்தியாய் இலக்கணையோடே மன்னுவாயாக வென்று வாழ்த்தி நெய்யை யேற்றினாரென்க. (39-40) வேறு 2418. நீடு நீர்மணி நீரு மல்லவு மாடு நீரன வத்து மண்களு மூடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார் கூடி யின்னியங் குழுமி யார்த்தவே. நீடுநீர்-கங்கைமுதலியதீர்த்தநீர். மணிநீர்-சந்திரகாந்தக் கல்லினீர். அல்லவென்றது-அத்தையுமண்ணையுமொழிந்த ஐந்துவிரையையும், முப்பத்திருவகை ஓமாலிகையையுமாம். அத்து-துவர். ‘பத்துமண்’ ணென்றும் பாடம். மண்ணாவன; “ஆனையே றேனக் கோடாற்றங் கரைபுற்று-வானவர்தங் கோயிலெழில் வான் கழனி-பானிலவு-முத்தெறியும் வெண்டிரைநீர் மூதூர் வடதருவேர்-பத்துமிதன் மண்ணாகப் பார். ஒழிந்தனவற்றிற்குக் “கங்கையின்கயீளற்றினுச்சி” (சீவக.623)என்றகவியிற் கூறினாம். ஊடு-இடை. இ-ள். இடை மின்னையொப்பார், பூசுநீரனவாகிய அத்தா லும், மண்ணாலும்,அல்லனவற்றாலுமுரிஞ்சி நீர்களாலேயாட்டி னார்; அப்பொழுது இயங்கள் தம்மில் அளவொத்துத் திரண்டு ஆர்த்தன வென்க. (41) 2419. திருவ மன்னவன் சென்னித் தேர்மன்னர் பொருவெண் பொற்குட முமிழும் பொங்குநீர் பருதிதன்னொளி மறையப் பான்மதி சொரியுந் தீங்கதிர்த் தோற்ற மொத்தவே. திருவ, அ-அசை. இ-ள். சீவகன்சென்னியிலே யுமிழும் மன்னரெடுத்த வெள்ளிக் குடத்துநீர் பருதியினொளி மறைய மதிசொரியுங் கதிரையொத் தனவென்க. வெண்பொன் என்ப வெள்ளியை (42) 2420. துளங்கு மாமணித் தூண்க ணான்கினால் விளங்கு வெள்ளிவேய்ந் தாய்ந்த மாலைசூழ் வளங்கொண் மாமணிக் கூடஞ் சேர்த்தினா ரிளங்க திர்கொலோ விருந்த தென்னவே. மணித்தூணான்கினால்விளங்குகூடம்; வெள்ளியால் வேய்ந்து மாலைசூழ்கூடம். இ-ள். கதிரிருந்ததோவென்னக் கூடத்தே சென்றிருக்கும் படி பண்ணினாரென்க. (43) 2421. ஆய்ந்த பானிற மாய்பொற் கம்பலம் வேய்ந்த பொங்கணை வெண்பொற் கட்டின்மே னீந்து நித்தில விதான நீழலாற் கேந்தி னாரணி யேந்து நீர்மையார். இ-ள். தெரிந்த பானிறமொளிகெட்ட பொலிவினை யுடைய கம்பலம் வேய்ந்த அணையையுடைய வெள்ளிக்கட்டிலின் மேலே நித்திலவிதானத்தின் நிழலிலே யிருந்தவர்க்கு ஒப்பனைக்குரியார் அணியை யேந்தினாரென்க. ஆய்தல்-உள்ளதனுணுக்கம். ‘மானிறவாய்பொனும்’ பாடம். (44) 2422. ஈரங் கொன்றபி னிருண்ம ணிச்சுடர் நீர வாய்நிழ லுமிழுங் குஞ்சியை யார கிற்புகை வெறியி னாலமைத் தேர்ப டச்செய்தா ரெழுதிற் றென்னவே. இ-ள். நீலமணியினது ஒளியினீரவாய் நிழலுமிழுங் குஞ்சியை யாற்றின பின்பு அகிற்புகையினது மணத்தாலே யமைத்து எழுதிற்றென்ன அழகுபட முடித்தாரென்க. (45) 2423. ஈடில் சந்தன மேந்து தாமரைத் தோடின் பயில்வினாற் பூசித் தூமலர் வீடு பெற்றன வின்றொ டென்னவே சூடி னானரோ சுரும்புண் கண்ணியே. ஈடில்சந்தம்-விகாரம்; இடுதல்-உவமித்தல். இது வழக்கு, வீடு பெற்றன வென்றது-இவன்சூடிய மலர்பெற்றவழகு தாஞ்சூடுங் காலத்திற் பிறவாமைகண்டு எல்லாருந் தம்மைச் சூடுந்தன்மையைக் கைவிடுதல் மலர்பெற்றனவென்றவாறு. இ-ள். சந்தனத்தைத் தாமரையிதழின் கனத்தோடே பூசி மலர் வீடுபெற்றன இன்றோடென்னும்படி யம்மலரையுடைய கண்ணி யைச் சூடினானென்க. (46) 2424. மற்ப கம்மலர்ந் தகன்ற மார்பின்மேல் விற்ப கக்குலா யாரம் வில்லிடக் கற்ப கம்மலர்ந் தகன்ற தோவெனப் பொற்ப கப்பொலங் கலங்க டாங்கினான். இ-ள். மற்றொழிறான் பிறரிடத்துநின்றும் போம்படி தன்னிடத்தே பரக்கப்பட்டு அகன்ற மார்பின்மேலே யிந்திரவிற் றோற்கும்படி குலாவி யாரம்வில்லிடா நிற்கக் கற்பகம் பூத்துப் பரந்ததோவென்னும்படி பொற்பை யகத்தேயுடைய பொலிந்த கலங்களை யணிந்தானென்க. (47) 2425. உருவ மார்ந்தனவுரோமப் பட்டுடுத் தெரியும் வார்குழை சுடர விந்திர திருவி லன்னதார் திளைப்பத் தேங்குழ லரிபெய் கண்ணியர்க் கநங்க னாயினான். இ-ள். எலிமயிர்முதலியவற்றாற்செய்த பட்டை யுடையாக வுடுத்துக் குழைசுடரத் தார்திளைப்பக் கண்ணியர்க்கு அநங்கனா யினானென்க. செயவெனெச்சம் “ஆன்வந் தியையும் வினைநிலையான்” (தொல்.வினை.35) முடிந்தன. இவளையொழிந்தோர்க்கு அரியனாய் வருந்துதலின், அநங்கனென்றார். (48) 2426. தாவி றாழ்வடந் தயங்க நீருறீஇ மேவி யச்சுதந் தெளித்த பின்விரைந் தாவி யும்புகை சுழற்றி பாடியும் வீவில் வெஞ்சுடர் விளக்குங் காட்டினார். இ-ள். மகளிர், வடந்தயங்க விரைந்துமேவி யச்சுதத்தை நீரிலேயுறுத்தித் தெளிந்தபின்பு தூபத்திரவியம் ஆவித்த புகையைச் சுழற்றி விளக்கையும், ஆடியையுங் காட்டினாரென்க. ஆவியம் புகை-வினைத்தொகை. இவை காட்டுதலியல்பு. (49) 2427. உவரி மாக்கட லொல்லென் வெண்டிரை யிவரி யெழுவபோன் றிலங்கு மாமயிர்க் கவரித் தொகைபல வீசுங் காவல ரிவரித் தொகையென்ப தின்றி யாறினார். உவரிநீரையுடைய கடற்றிரை பரந்தெழுவனபோன்றி லங்குங் கவரி. மயிர்க் கவரி-முதற்கேற்ற அடையடுத்தவாகு பெயர். இத் தொகையர்-விகாரம். இ-ள். இவர் இத்தொகையைரென்பதின்றாகக் கவரிவீசுங் காவலர் திரண்டாரென்க. (50) 2428. அறுகு வெண்மல ரளாய வாசநீ ரிறைவன் சேவடி கழுவி யேந்திய மறுவின் மங்கலங் காட்டி னார்மணக் குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே. இ-ள். அறுகையுமலரையுங் கலந்த நீராலே யிறை வனடியைக் கழுவி, எடுத்த அட்டமங்கலங்களையுங் காட்டினார்; அப் பொழுது குறைவில்லா கைவினையையுடைய மணக்கோல மார்ந்ததென்க. (51) வேறு 2429. ஊனிமிர் கதிர்வெள்வே லுறைகழித் தனபோலுந் தேனிமிர் குவளைக்கட் டிருமக ளனையாளைப் பானிமிர் கதிர்வெள்ளி மணைமிசைப் பலர்வாழ்த்தி வானிமிர் கொடியன்னார் மணியணை சேர்த்தினரே. இ-ள். ஊனிலேவளர்ந்த வேல் உறைகழித்தவற்றை யொக்குங் கண்ணையுடைய இலக்கணையை மேகத்திலேபரந்த மின்னுக் கொடியையொப்பார் பலரும் வாழ்த்தி வெள்ளிமணையி லிட்ட அழகியவணையிலே யிருத்தினாரென்க. பால்போலப்பரந்த கதிர். (52) 2430. வரைவிளை வளர்பொன்னே வலம்புரி யொருமணியே. திரைவிளை யமிர்தம்மே திருவிழை யெனவேத்தி வரிவளை முழவிம்ம மணிகிள ரொலியைம்பா லரைவிளை கலைநல்லா ரறுகைநெய் யணிந்தனரே. இ-ள். நல்லார், திருவிழையானவள் பொன்னே மணியே யமுதேயென்றேத்தி வளையும்முழவும் விம்மாநிற்க அவளைம் பாலிலே யறுகாலே நெய்யையணிந்தாரென்க. ஏகாரம் தேற்றம். திருவிழைகென்று பாடமாயின், விளியாக்கி நின்னைத் திருவிரும்புகவென்க. அரசென்னும் பண்புப் பெயர் அரை யெனப் பண்புமாத்திரை விளக்கிற்று. அரசியல் முற்றுப்பெற்ற நூற்கலையை வல்ல நல்லாரென்க. (53) 2431. கள்ளவிழ் கமழ்கோதைக் காவலன் றிருமகளை வெள்ளிரு மதயானை விழுமணிக் குடமேற்றித் தெள்ளறன் மண்ணுந்நீ ராட்டினர் தேமலர்மே லொள்ளிழை யவளொத்தா ளுருவநுண் ணுசுப்பின்னான். இ-ள். வெள்ளணியணிந்த யானையிரண்டின்மேலே குடத்தை யேற்றிக் காவலன்மகளை நீராட்டினார்; அங்ஙனம் இரண்டினாலு மாட்டுதலிற் றிருவையொத்தாளவளென்க. (54) 2432. வான்மலர் நுரைசூடி மணியணி கலன்சிந்தாத் தானிள மணலெக்கர் தவழ்கதிர் மணியார மேனைய நறுஞ்சுண்ணங் குங்கும மிடுங்களியாத் தேனின மிசைபாடத் தீம்புன னடந்தஃதே. இ-ள். அவராட்டினதீம்புனல்தான் மணியுமாரமும் இளம ணலாலிடுமெக்கராக ஏனையவாகிய சுண்ணமும் குங்குமமும் வண்டலாகக்கொண்டு மலராகிய நுரையைச்சூடி யணிகலங்களின் மணியை மணியாகச் சிந்தித் தேனினம்பாட நடந்ததென்க. (55) 2433. நான்றபொன் மணிமாலை நகுகதிர்ப் பவளத்தூ ணூன்றின வொளிமுத்த மண்டபத் தொளிர்திங்கள் கான்றன கதிர்காய்த்தும் வட்டணைக் கதிர்முத்த மீன்றபொன் விதானத்தின் னீழலுய்த் திரீஇயினரே. இ-ள். பொன்மாலையுமணிமாலையுநான்ற பவளத் தூணாட்டப் பட்ட முத்தமண்டபத்தே யவளையுய்த்துத் திங்களினுடைய கான்றன வாகிய கதிரைத் தானெறிக்கும் வட்டவணையிலே யிருத்தினாரென்க. விதானத்தினீழலிலணை. (56) 2434. மையணி மதயானை மத்தக லகலல்கு னெய்யணி குழன்மாலை நிழலுமிழ் குழைமங்கை மெய்யணி கலன்மாலை மின்னிருந் துகிலேந்திக் கையணி குழன்மாலைக் கதிர்முலை யவர்சூழ்ந்தார். இ-ள். கையாலணிந்தகுழலையும், மாலையும், முலையையுமுடைய மகளிர் அணிகலமுதலியவற்றையேந்தி யஞ்சன மணிந்த யானையின்மத்தகம்போலு மல்குல் முதலியவற்றையுடைய மங்கையைச் சூழ்ந்தாரென்க. கையணி-கைசெய்யப்பட்டவென்றுமாம். (57) 2435. அவ்வளை யவிராழிக் கால்பொலிந் தழகார்ந்த மைவிளை கழுநீர்க்கண் விலாசியு மணியல்குற் கைவளை யலங்கார மாலையுங் கமழ்கோதை நைவள மிகுசாய னங்கையைப் புனைகின்றார். இ-ள். கோதையினையும், நட்டபாடையினுமிக்க மெல்லிய மொழியினையுமுடையநங்கையை யழகிய வளைந்த வீரன் மோதிரத்தையுடைய கால்பொலிவுபெற்று அழகார்ந்த விலாசியும், கையில் வளையையும் மணியல்குலையுமுடைய அலங்காரமா லையும் ஒப்பியாநின்றாரென்க. மைவினைகழுநீர்-நீலோற்பலம். (58) 2436. யானையு ளரசன்றன் னணிகிளிர் வலமருப்பீர்ந் தூனமி லொளிர்செம்பொன் பதித்தொளி மணியழுத்தி வான்மண முறச்செய்த மங்கல மணிச்சீப்புத் தான்முகில் கழிமதிபோற் றன்னுறை நீக்கினளே. இ-ள். களிற்றரசனது வலக்கொம்பை யறுத்துப் பொன்னைப்பதித்து மணியழுத்தி மணந்தங்கச்செய்த சீப்பை விலாசிதான் முகிலினின்றுங் கழியுமதிபோலே அதனுறையினின்று நீங்கினா ளென்க. (59) வேறு 2437. மைந்நூற் றனைய மாவீ ழோதி வகுத்துந் தொகுத்தும் விரித்துங் கைந்நூற் றித்திற் கலப்ப வாரிக் கமழு நானக் கலவை யைந்நூற் றிறத்தின் னகிலின் னாவி யளைந்து கமழ்வூட்டி யெந்நூற் றிறமு முணர்வா ளெழிலேற் றிமிலின் னேற்ப முடித்தாள். இ-ள். எந்நூற்றிறமுணர்வாள் தன்கையாலே யிருளை நூற்றனைய வண்டு வீழோதியைக் கலவையையும் புகையையும் வியக்கத்தக்க நூல்வழியோடே யளைந்தூட்டிக் கலக்கவாரி முகத்துக்கேற்ப இமில்போலே முடித்தாளென்க. கையான்முடித்தாள். குழலையும் அளகத்தையும் வகுத்தும், கொண்டையைத் தொகுத்தும், பனிச்சையையும் துஞ்சையையும் விரித்தும் நூற்றிறத்தின்.... முடித்தாளென்க. (60) 2438. கரும்புந் தேனும் மமிழ்தும் பாலுங் கலந்த தீஞ்சொன் மடவாட் கரும்பும் மிலையு மயக்கி யாய்ந்த முல்லைச் சூட்டு மிலைச்சித் திருந்து திங்கள் சூழ்ந்த மின்னிற் செம்பொற் பட்டஞ் சேர்த்தி விரும்பும் முத்தம் மாலை நான்ற விழுப்பொன் மகரஞ் செறித்தாள். இ-ள். தீஞ்சொன்மடவாட்குத் திங்களைச்சூழ்ந்தமின் போலே பட்டத்தைச் சேர்த்தி யரும்புமிலையும் இடையிட்டுக் கட்டினமுல்லைச் சூட்டைக் கற்புக்குமிலைச்சி முத்தமாலை நான்ற மகரவாயான பணியை யணிந்தாளென்க. (61) 2439. கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக் கமழ்பூ நெரித்து வாங்கிக் கிள்ளை வளைவா யுகிரிற் கிள்ளித் திலகந் திகழப் பொறித்துத் தெள்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத் திருநீர் நுதலின் னப்பி யுள்ளம் பருகி மதர்த்த வாட்கண் ணுருவம் மையிற் புனைந்தாள். கள்ளும் - களவு காணும்; “கள்ளத்தாற் கள்வே மெனல்” (குறள் - 282) என்றார். கமழ்தேனும் பொசியுமளவன்றி யொழுகும் குவளைப்பூ வென்க. இ-ள். கிள்ளையின் வளைவாய்தான் தன்றன்மையைக் கள்ளும் உசிராலே மயிரைக் கோத்து வாங்கி அதனுள்ளே குவளைப்பூவைப் புறவிதழைக் கிள்ளி நெரித்துத் திகழப் பொறித்துத் திருநீர் நுதலிலே திலகத்தை மணிச் சுண்ணத்தாலே இலங்க அப்பிக் கண்ணை நிறத்தையுடைய மையாலே புனைந்தா ளென்க. பொறித்து - எழுதினாற்போல வைத்து. கணவனுள்ளத்தைப் பருகி. (62) 2440. நாகம் மருப்பி னியன்ற தோடும் நலங்கொள் சுறவுக்குழையும் போக நீக்கிப் பொருவி; றிருவில் லுமிழ்ந்து மின்னுப் பொழியும் ஏக மாகி யெரியும் மணியின் னியன்ற கடிப்பு வாங்கி மேக விசுப்பிற் றேவர் விழைய விளங்கச் சேர்த்தி னாளே. இ-ள். நாக மருப்பினியன்ற தோட்டையும் நலங்கொண்ட மகரக் குழையையும் காதின்றும், போக நீக்கி, மின்னானது சொரியும் பொருவில்லாத திருவில்லைத் தான் உமிழ்ந்து ஏகமாகி எரிமணியின் இயன்ற குதம்பையை ஏந்தி நின்றவள் கையினின்றும் வாங்கிக் கொண்டு அவள் விளங்கச் சேர்த்தினாளென்க. (63) வேறு 2441. விலங்கரம் பொருத சங்கின் வெள்வளை தெளிர்க்கு முன்கை நலங்கினர் பவள நன்பொன் விரன்மணி யாழி மின்னக் கலந்தின்று பணைத்த தோளுங் கவின்வளர் கழுத்து மார்ந்த வலம்புரி யீன்ற முத்த மணிநிலா நக்க வன்றே. இ-ள். வளைந்த வாளரம் அறுத்த சங்க வளை யொலிக்கும் முன்கையில் நலங்கிளர் பவளம்போலும் விரலிலணிந்த நன் பொன்மணியாழி மின்னாநிற்க தோளிலும் கழுத்திலும் அணிந்த முத்தம் நிலாவைக் கெடுத்தன வென்க (64) இன் - அசை. 2442. மாமணி முகம் வேய்ந்த மரகத மணிச்செய் பன்ன தூமணி முலைக டம்மைத் தொழுதகக் கமழுஞ் சாந்திற் காமரு காம வல்லிக் கொழகவின் கொண்டு பூத்துற் காமரு காம வல்லிக் கொழகவின் கொண்டு பூத்துத் தூமணிக் கொழுந்து மென்றோட் டுயல்வர வெழுதி னாளே. மரகதமணியைத் தலையிலே அழுத்திய பெரிய பவழச் செப்பு. இவள் நிறம் பவழத்தின் நிறமென்றார், பலவிடத்தும். இ-ள். காமவல்லியாகியகொடி முலைகடம்மை யிடங் கொண்டு கவின்பூத்துத் தோளிலே கொழுந்தசையும்படி தொழு தகச் சாந்தினா லெழுதினாளென்க. (65) 2443. நாண்சுமக் கலாத நங்கை நகைமின்னு நுசுப்பு நோவப் பூண்சுமக் கலாத பொன்ஞாண் வடத்தொடு புரள நோக்கிப் பாண்குலாய் வண்டு பாடும் படுகணை மறந்து காமன் காண்கிலேன் கடிய வென்னா வுருகிமெய் கரந்திட் டானே. இ-ள். பிறராற் சுமக்கலாகாத நாணினையுடைய நங்கையது நுசுப்புநோம்படி சுமக்கலாகாத பூணும் நாணும் முத்த வட மும்புரளவணிய, அதனைக் காமனோக்கி மலர்க்கணையை யெய்ய மறந்து இங்ஙனங் கடியனகாண்கிலேனென்றுகருதி யிவடன் மெய்யிலேகரந்து வேட்கையை விளைவித்தானென்க. அநங்கனானான். (66) 2444. அவாக்கிடந் தகன்ற வல்கு லணிகிளர் திருவிற் பூப்பத் தவாக்கதிர்க் காசு கண்டா ராவியைத் தளரச் சூட்டிக் கவாய்க்கிடந் தணங்கு நாறுங் கண்கொளாப் பட்டு டுத்தா ளுவாக்கதிர்த் திங்க ளம்மென் கதிர்விரித் துடுத்த தொத்தாள். இ-ள். கண்டாவி தளரும்படி காசுகள் அவாத்தன்மை கிடந்த கன்ற வல்குலிலே சூட்டப்பட்டுத் தெய்வத் தன்மை நறும் பட்டைத் தானுடுத்தவள் நிறைமதியின் கதிரை விரித் துடுத்த தன்மையை யொத்தாளென்க. திருவிற்போலப் பூப்பச்சூட்டி. ஆவியை, ஐ-அசை. கவாய்-கவ்வி. கண்கொளா-இழைதெரியாத. அணிந்தாள்பாடமாயின், விலாசியாக்குக. (67) 2445. இடைச்செறி குறங்கு கௌவிக் கிம்புரி யிளக மின்னும் புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்போ டார்ப்ப நடைச்சிறு பாதங் கோல மணிவிர லணிந்து நாகத் துடைச்சிறு நாவிற் றோகை யிரீஇயினண் மாலை சேர்ந்தாள். இ-ள். ஒருகூறு கிம்புரிவடிவான குறங்குசெறி குறங்கைக் கௌவிநெகிழப்பரட்டைப்புல்லிக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப வணிந்து பாதத்திலும்விரலிலும் அணி வனவற்றையு மணிந்து பாம்பினுடைய சிறிய நாப்போலுந் தோகையை விலாசி தாழ இருத்திவிட்டாள்; பின்பு அலங்காரமாலை சேர்ந்தா ளென்க. (68) 2446. அம்மல ரடியுங் கையு மணிகிளர் பவழ வாயுஞ் செம்மலர் நுதலு நாவுந் திருந்தொளி யுகிரோ டங்கேழ் விம்மிதப் பட்டு வீழ வலத்தக மெழுதி யிட்டா ளம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே. இ-ள். அம்மாலைதான் அரிவையை மாலையணிந்த கழுத்தை யுள்ளிட்டு உகிரோடே யடிமுதலியவற்றையெல்லாம் அதிசயித்து விரும்பும்படி யலத்தகத்தை எழுதினாளென்க. செம்மலர்-நெற்றிமாலை. (69) 2447. வாண்மதர் மழைக்க ணோக்கி வருமுலைத் தடமு நோக்கிக் காண்வர வகன்ற வல்குற் கண்விருப் புற்று நோக்கிப் பாணுவண் டரற்றுங் கோலச் சிகழிகைப் படியு நோக்கி யாண்விருப் புற்று நின்றா ரவ்வளைத் தோளி னாரே. இ-ள். தோளினார் விருப்பமுற்று, தங்கண்ணாலேயவள் கண்ணையு நோக்கி, முலையுநோக்கி, அல்குலையுநோக்கி, பாட்டை யுடைய வண்டொலிக்கும் முடியின் வடிவையுநோக்கி நுகர்தற்குரிய ஆண்மையை விரும்பிநின்றாரென்க. (70) வேறு 2448. தெருள்கலான் படைத்தவன் காணிற் செவ்வனே மருள்கலா தவர்களு மருள்வர் மம்மர்நோ யிருளிலா ரெங்ஙன முய்வ ரின்னதா லருளிலா ரவணல மணிந்த வண்ணமே. இ-ள். அருளிலாதார் அவளழகையணிந்தவண்ணம் இப்படி யாண்மையை விரும்புந் தன்மையாயிருந்தது; இனி யயனும் காணில் நாம்படைத்த வடிவன்றென்று மயங்குவன்; இருடிகளும் நேரே மயங்குவர்; இத்தன்மையாயதனைக் கண்டால் மயக்க நோயை யுடைய இல்வாழ்வார் எங்ஙனம் பிழைப்பா ரென்றாரென்க. (71) 2449. அலர்ந்தவந் தாமரை யல்லிப் பாவையைப் புலந்துகண் சிவந்தன போன்று நீர்பிரிந் திலங்கிமின் னுமிழ்ந்துலா மேனி யேந்தபொன் மலர்ந்ததோர் கற்பக மணிக்கொம் பாயினாள். இ-ள். பூண்கள் இலங்கி மின்னுமிழ்ந்துலாம் மேனியை யுடையாள் திருவை நிகராகக்கூறற்குப் புலந்து கோபித்தன போலக் கண்கள் கோபிக்கப்பட்டுக் கற்பகக் கொம்பா யினாளென்க. நீர்பிரிந்து-கோபித்து. மையெழுதுதலிற் சிவந்து கோபித்ததனை நல்வினை யுடையாரிடத்தே சென்று மீளுந் திருவையொப்பாகக் கூறியதற்குப் பொறாது கோபித்தவெனத் தற்குறிப்பேற்றமாகக் கூறிற்றாம். (72) 2450. மருடகு மல்லிகை மாலை வல்லவன் பொருடகத் தொடுத்தன புனைந்த பூஞ்சிகை யிருடுணித் திடையிடை யியற்றி வெண்ணிலாச் சுருடுணித் தொருவழித் தொகுத்த தொத்ததே. இ-ள். வல்லவன் எழுத்துவடிவுபடக் கட்டினவாகிய மல்லிகை மாலையைப் புனைந்தமுடி, இருளையுந்துணித்து நிலாச் சுருளையுந் துணித்து ஒன்றைவிட்டொன்றாக இயற்றி யோரிடத்தே குவித்த தன்மையையொத்ததென்க. (73) 2451. கோமக ளுருவமாய்க் கூற்றம் போந்தது போமினும் முயிருயக் கொண்டு போய்மனம் காமின மெனக்கலை சிலம்பு கிண்கிணி தாமனும் வாயினாற் சாற்று கின்றவே. இ-ள். கூற்றங் கோமகள்வடிவாய்க் கோறற்குவந்ததாதலின், நும்முயிரையுய்யங்கொண்டுபோமின்; போனாலும் ஆண்டு மனம் வருந்து தலைக்காமினென்று கலைமுதலியனதாந் தம் வாயினாலே மிகவுஞ்சாற்றாநின்றனவென்க. அம்-அசை. (74) 2452. அருளிலா ரிவடம ரன்ன ராயினு முருடிரை யுலகெலா முருளு மின்றெனக் கருதின கவரிசாந் தாற்றி வெண்குடை யரிவையை மறைத்தன வால வட்டடே. இ-ள். அரிவையை யாண்டுக் கவரிசாந்தாற்றிமுதலியன மறைத்தன; அவவைஇன்று முரளுகிற திரையையுடைய உலக மெல்லாங் கெடுமெனக்கருதி, அணிந்த இவள்தமர் அருளிலாரா யிருந்தார்; அவர் அத்தன்மையராயினும் யாம் அவைகெடாமல் அருளுது மென்று கருதினபோலே யிருந்தனவென்க. (75) வேறு 2453(1) கரும்பே தேனே யமிர்தே காமர் மணியாழே யரும்பார் மலர்மே லணங்கே மழலை யன்னம்மே சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும் பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே. 2454(2) அம்மெல் லனிச்சம் மலரு மன்னத் தூவியும் வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத பொம்மென் னிலவப் பூம்போ தனநின் னடிபோற்றி யிம்மென் கலையா ரிடுவென் றேத்த வொதுங்கினாள். இவையிரண்டுமொருதொடர். கணவற்கு மெய்ம்முழுதும் இனிதாயிருத்தலிற், கரும்பு. நல்லாருறுப்பெல்லாங் கொண்டு இயற்றலிற் றேன். இவ்வுலகி லில்லாத மிக்கசுவையும், உறுதியுங்கொடுத்தலின்அமிர்து. காம வேட்கையை விளைவித்து இனிய பண்டோற்றலின், மழலையை யுடையதோர்யாழ். கணவற்குச் செல்வத்தைக்கொடுத்தலிற்றிரு. நடையால் அன்னம். சாயலான் மயில். காலமன்றியுங் கேட் டோர்க்கு இன்பஞ்செய்தலின், குயில். மன்னன்மகளேயென்றல் புகழன் மையின், மன்னன்பாவாயென்றது அவன் கண்மணிப்பாவை யென்ப துணர்த்திற்று. இனி யிவள் கொல்லிப்பாவையன்று; மன்னன்பாவை யென்றுமாம். சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலிற் பூவை. நோக்கத்தான் மான். இ-ள். இம்மென்கின்ற ஓசையையுடைய கலையார்பலருங் கரும்புமுதலிய பெயர்களாலேவிளித்து, அனிச்சத்தையுந் தூவியையும் மெல்லமிதித்தாலும் வெம்மை பிறக்கு மென்றஞ்சி யவற்றை மிதியாத நின்னடியைப்பேணி யிடுவாயாகவென்றேத்த அவளும் அங்ஙனம் நடந்தாளென்க. (76-77) 2455. தூமாண் டூமக் குடமா யிரமாய்ச் சுடர்பொற்றூண் டாமா யிரமாய்த் தகையார் மணித்தூ ணொருநூறாய்ப் பூமாண் டாமத் தொகையாற் பொலிந்த குளிர்பந்தர் வேமா னியர்தம் மகளின் விரும்ப நனிசேர்ந்தாள். இ-ள். தூய்மை மாண்ட தூமக்குடமாயிரமாய் விளங்குகின்ற பொற்றூண்டாம் ஆயிரமாய்க்குளிர்ந்தபந்தரிலே சமைத்த மணித் தூணெருநூறாய்த் தாமத்தாற் பொலிந்த வேள்விச் சாலையைத் தெய்வமகளைப்போல விரும்பும்படி சேர்ந்தா ளென்க. (78) 2456. தேனார் காமன்சிலையுங் கணையுந் திரைகொண்ட வானார் மதிவாண் முகமும் மடமான் மதர்நோக்குங் கோனார் மகடன் வடிவு நோக்கிக் குடைமன்ன ரானார் கண்ணூ டழல்போ யமையா ரானாரே. காமன்சிலையையுந் தேனார் கணையையும் வென்ற புருவமுங் கண்ணும்: முகத்திற்குஅடை. இ-ள். அரசன் மகளுடைய முகத்தையும், பார்வையையும், வடிவையு நோக்கி, மன்னராயினாரெல்லாங் கண்பொறிபோய் அமையா ராயினாரென்க . (79) வேறு 2457. வண்டலர் கோதை வாட்கண் வனமுலை வளர்த்த தாயர் கண்டுயி ருண்ணுங் கூற்றங் கயிறுரீஇக் காட்டி யிட்டா ருண்டுயிர் சிலர்கண் வாழ்கென் றுத்தரா சங்கம் வைத்தார் தெண்டிரை வேலி யெறுந் தீதின தாக மாதோ. இ-ள். கோதையை வளர்த்த தாயர் அவள்கண்ணையு முலையையுங் கூற்றமென்றே யறிந்து உலகெங்குந் தீதிடத்த தாம்படி கோறற்குக் கயிறுரீஇக் காட்டினார்; பின்பு அருள் பிறந்து இவற்றுள் வாட்கண் சிலருயிர்களையுண்டுவாழ்க, முலைகள் அதனையொழிகவென்று உத்தரீயத்தை வைத்தா ரென்க. (80) 2458. கண்ணினா லின்று கண்டாங் கூற்றினைக் காமர் செவ்வா யொண்ணுத லுருவக் கோலத் தொருபிடி நுசுப்பிற் றீஞ்சொல் வண்ணித்த லாவ தில்லா வருமுலை மதர்வை நோக்கிற் பெண்ணுடைப் பேதை நீர்மைப் பெருந்தடங் கண்ணிற் றம்மா. வண்ணித்தல்-வர்ணித்தல். பெண்டன்மையையுடைய பேதைநீர்மை. இ-ள். இன்று கூற்றினைக் கண்ணோலேகண்டனம்; அதன்றன்மை கூறிற் செவ்வாய்முதலியவற்றை யுடைத்தாயிருந்த தென்று கண்டார்கூறினாரென்க. (81) 2459. அரத்தக மருளி செய்த சீறடி யளிய தம்மாற் குரற்சிலம் பொலிப்பச் சென்னிக் குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான் றிருக்குலாய்க் கிடந்த மார்பிற் சீவக னாங்க ளெல்லாந் தரித்திலந் தவத்தை யென்று தார்மன்ன ரேமுற் றாரே. மருளி-மருள-திரிந்தது. இ-ள். பிறர்மருளச் செம்பஞ்சியணிந்த அளிய சீறடிகளாலே சென்னியிற் குஞ்சியிலே சிலம்பொலிக்கும்படி மிதிக்கநோற்றான் சீவகனே; யாங்களெல்லாம் அதற்குத் தவஞ்செய்திலேமென்று அரசர் மயக்குற்றாரென்க. (82) 2460. கோவிந்த னென்னுஞ் செம்பொற் குன்றின் மேற்பிறந்து கூர்வேற் சீவக னென்னுஞ் செந்நீர் பவளமா கடலுட் பாய்வான் பூவுந்தி யமுத யாறு பூங்கொடி நுடங்கப் போந்து தாவிரி வேள்விச் சாலை மடுவினுட் டாழ்ந்த தன்றே. செந்நீர்-புதுநீர். பூவுந்தி-உவமமும், வேற்றுமையுந்தொக்கன. உந்தி கொப்பூழையும் ஆற்றிடைக்குறையையும், கொடி மருங்குலையும் படர்கொடியையுமுணர்த்தும். (83) 2461. சாணிடை நெடிய வாட்கண் டளையவிழ் குவளை பூப்பப் பூணுடை முலையின் பாரம் பொறுக்கலாச் சுளிவின் மேலு நாணட நடுங்கிக் கையா னகைமுகம் புதைத்த தோற்றஞ் சேணிடை யரவு சேர்ந்த திங்களை யொத்த தன்றே. இ-ள். முலைப்பாரத்தைப் பொறுக்கமாட்டாத வருத்தத்தின் மேலும் நாண்அதலாலே நடுங்கி நடுவு சாணளவாக நெடியகண் அலரு கின்ற குவளைபோலப் பொலிவு பெறும்படி முகத்தைக் கையாலே மறைத்ததோற்றம், விசும்பிடையில் அரவுசேர்ந்த மதியையொத்த தென்க. கையிடையிலே கண்டோன்றுதலின், அலர்கின்றாற் போன்ற தென்றார். (84) 2462(1) முத்துமிழ் திரைக ளங்க மொய்கொள்பா தால முத்தீ யொத்தன வேலை வேள்வி யொலிகட னான்கு நாண வைத்தநான் மறையு நீத்தி வான்குண மென்னுஞ் சாலி வித்திமே லுலகத் தின்பம் விளைத்துமெய் கண்ட நீரார். 2463(2) தருமணற் றருப்பை யார்ந்த சமிதையின் மூன்றி னானும் விரிமல ரணிந்த கோல வேதிகை யியற்றி யானெ யொருமணி யகலுட் பெய்தோர் பொன்னக லார்ந்த தூப மிருமணி யகலு ணீர்பெய் திடவயி னிரீஇயி னாரே. இவையிரண்டுமொருதொடர். 1. மொய்கொள்பாதாலம்-வலிகொண்டபாதாலம்; என்றது வடபாமுகாக்கினியை. கடலிடையிலே பாதாலத்தே செல்ல நீரை வாங்குதலின், அதற்குப் பாதாலமென்று பெயர்கூறினார். குணம்-ஆகுபெயர். 2. தருமணல்-தண்டிலார்த்தமாகக் கொண்டுளவந்த மணல். தண்டிலமாவது-அக்கினியைப்பிரதிஷ்டிக்கிறவிடத்தே சதுரமாகப் பரப்புகின்றமணல். தருப்பை-தர்ப்பை. ஆர்ந்தசமிதை-சமிதைக்குக் கூறுமிலக்கணங் குறைளவற்றசமிதை; என்றது-பரிதிகளையும், வேண்டுஞ் சமிதைகளையும். வேதிகை-விவாகார்த் தமாகவிட்ட சதுஸ்தம்ப வேதிகை. இயற்றுதலாவது-வேதிகையில் அக்கினியைப் பிரதிஷ்டிக்குமிடத்தே தண்டிலத்தைக் கற்பித்து அதிலே அக்கினியைப் பிரதிஷ்டித்துத் தருப்பையை நான்கு விளிம்பிலுஞ் சூழவைத்துப் பருதிகளைக் கீழ்த்திசையொழித்த திசைகளிலே வைத்தல் முதலியன. இருமணியகலென்றது பிரணீத பாத்திரமும், புரோக்ஷணீ பாத்திரமும். ஒருமணியகல்-ஆச்சிய ஸ்தாலி. பொன்னகலார்ந்த தூபம் பெய்தென்றதுவும், மேலிற்கவியி “ஆன்பாலவி” என்றதவும் மதுபார்க்கார்த்தமாக வைத்தவை. என்று விவாகவேதிகையிலே அக்கினியைப்பிரதிஷ்டித்து மது பார்க்கங்கூறினார். இ-ள். திரைகள் அங்கமாகவும், பாதாலம் முத்தீயாகவும், ஒத்தனவாகிய கரைகள் வேள்வியாகவும் இங்ஙனமொலி செய்யுங் கடனான்கு நாணும்படி வைத்த நான் மறைகளை நீந்தி நற்றொழி லாகிய சாலிநெல்லை வித்திச் சுவர்க்கத்தின்பத்தை விளைத்த வீடுணர்ந்த நீராராகிய வந்தணர் வேதிகையிலே மணல் முதலிய மூன்றினாலும் மியற்றி யிருமணியகலிலே நீர்பெய்து ஒரு மணிய கலிலே நெய்பெய்து பொன்னகலிலே தூபம் பெய்து வைக்குமிட மாகிய விடங்களிலே வைத்தாரென்க. (85-86) 2464. நெற்பொரி நிறையப் பெய்து நிழலுமிழ் செம்பொன் மூழிக் கற்புரி கடவு ளான்பா லவியொடு கலப்ப வைத்து முற்பெரி யானை யாகத் தருப்பையான் முடிந்து மூன்று பொற்புரி வரையும் பொய்தீர் சமிதைக ளிரண்டும் வைத்தார். பொற்கலத்தே நெற்பொரியை நிறையப்பெய்து; பொரி-இலாசஹோமார்த்தமான-பொரி. கற்புரிகடவுள்-அச்மாரோ பணார்த்த மான வம்மி. ஆண்பாலவி-பாலு நெய்யுங்கலந்தது. முற்பொரியான்-பிர்மா. தருப்பையான்முடிந்த-பிர்மமுடியாகத் தருப்பையான்முடிந்து. மூன்றுபொற்புரி வரையென்றயது தண்டி லத்தை மேற்கே தொடங்கிக் கிழக்கேமுடியத் தெற்கில் விளிம்பிலும் நடுவிலும் வடக்கில் விளிம்பிலும்,தெற்கே தொடங்கி வடக்கேமுடிய மேற்கில்விளிம்பிலும் நடுவிலும், கிழக்கில் விளிம்பிலுங் கீறுகின்றகீற்றுக்களை. அக்கினியைப் பிரதிஷ்டிப் பதற்குமுன்பே கீறுகின்றவற்றையீண்டுக் கூறினா ரென்றுணர்க. முதன்மூன்றுகீறிக் குறுக்குமூன்றுகீறுதல் தோன்ற மூன்றென் றொழியாது பின்னரும் பொலிவுபெறப் புரிந்தவரை யென்றார். மூன்றுவரையைக் குண்டமென்றல் பொருந்தாது. பொய்தீர் சமிதைகளிரண்டாவன: தென்கீழைக்கோடியிலும், வடகீழைக் கோடியிலும் வைக்கும் ஆகார சமிதைகளிரண்டும். இ-ள். நிறையப்பெய்து அவியோடு கலப்பக் கடவுளையும் வைத்த முடிந்து வரையையும் சமிதையிரண்டையும் வைத்தா ரென்க. (87) 2465. மந்திர விதியின் மாண்ட சிறுவிரற் றருப்பை சூழ்ந்து முந்துநா மொழிந்த நெய்யை முனைமுதிர் தருப்பை தன்னான் மந்திரித் தமைய முக்கான் மண்ணிமற் றதனை நீக்கிச் சிந்தித்து மறையிற் செந்தீத் தண்டிலத் தங்கண் வைத்தார். மந்திரவிதியின்-வேதோக்தமானபடியே. முனையென்றது-நறுக்கிநெய்க்குள்ளேபோகடுகிற தருப்பாக்கிரத்தை. அமைய மந்திரித்து முனைமுதிர்ந்த நெய்யென்க. இ-ள். தருப்பைநுனியை நறுக்கியிட்ட நெய்யை, சிறு விரலாலே தருப்பையைச்சூழ்ந்த அத்தருப்பை தன்னாலே யிருகையாலுமிடை யறாதபடி முக்கான்மண்ணி, அதனைச் செந் தீயிலே போகட்டுத் தண்டிலத்திற் செந்தீக்கருகே வைத்தாரென்க. மறையிற்சிந்தித்து-வேதோக்தமானபடியே தியானித்து. தியானித்து வைத்தாரென்க. (88) 2466. தண்டிலத் தகத்திற் சாண்மே லெண்விரற் சமிதை நானான் கெண்டிசை யவர மேத்தத் துடுப்புநெய் சொரித லோடுங் கொண்டழற் கடவுள் பொங்கி வலஞ்சுழன் றெழுந்த தென்ப தெண்டிரை வேலி யெங்குந் திருவிளை யாட மாதோ. இ-ள். சமிதை பதினாறையும் நெய்யையுஞ் சொரிந்த வளவிலே சாண்மேல் எண்விரலகலமாகப்பரப்பிய தண்டிலத் திடையில் அழற் கடவுள் அவற்றைக்கைக் கொண்டு பொங்கி யெண்டிசையவருமேத்தும் படி திரு விளையாட வலத்தே சுழன்றெழுந்ததென்க. என்ப-அசை. துடுப்பு-தருவி. (89) 2467. கரையுடைத் துகிலிற் றேன்றுங் காஞ்சன வட்டின் முந்நீர்த் திரையிடை வியாழந் தோன்றத் திண்பிணி முழவுஞ் சங்கு முரசொடு முழங்கி யார்ப்ப மொய்கொள்வேன் மன்ன ரார்ப்ப வரசரு ளரச னாய்பொற் கலசநீரங்கையேற்றான். இ-ள். வெண்கிலிற்றோன்றும் பொன்வட்டுப்போலே, கரையை யுடைய முந்நீர்த்திரையிலே பிருகஸ்பதியுதயமாக முழவு முதலியன வுமரசருமார்ப்ப அரசரிற்றலைவன் அகங்கையில் நீரையேற்றானென்க. அக்கினியைப்பிரதிஷ்டித்து உதகம் பண்ணுதலுமுள தாகலின், இங்ஙனங் கூறினார். (90) 2468. குளிர்மதி கொண்ட நாகங் கோள்விடுக் கின்ற தேபோற் றளிர்புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த வொளிர்வளைக் கையைச் செல்வன் விடுத்தவ ளிடக்கை பற்றி வளரெரி வலங்கொண் டாய்பொற் கட்டிறா னேறி னானே. இ-ள். நாகம் மதியைக்கொண்டகோளை விடுக்கின்றாற் போலே கோதைமுகத்தைச்சேர்ந்தகையை மாதர்விடுக்க. அவளி டக்கையைப் பற்றி யெரியைவலங்கொணடு கட்டிலிலே யேறினா னென்க. தளிர்புரை கை. விடுத்து-விடுக்க. அநந்தரமுள்ள ஓமங் களையும் பண்ணிப் பாணிக்கிரகணமும்பண்ணி அக்கினியை வலங்கொண்டான்; எனவே பொரியாலுள்ளவோமமும் அம்மியிற்கால்வைப் பித்ததுவும் பெற்றாம். கட்டில்-விவாகம் பண்ணியெழுந்திருந்து சாந்தியானகூத்தும், ஆலத்தியுங் கண்டு அருந்ததி காணப் போமளவுமிருக்குங்கட்டில். இஃது அரசியல். (91) 2469(1) விளங்கொளி விசும்பிற் பூத்த வருந்ததி காட்டி யான்பால் வளங்கொளப் பூத்த கோல மரலடி கழீஇய பின்றை யிளங்கதிர்க் கலத்தி னேந்த வயினிகண் டமர்ந்தி ருந்தான் றுளங்கெயிற் றுழுவை தொல்சீர்த் தோகையோ டிருந்த தொத்தான். வேறு 2470(2) பான்னங் காழிற் பொலிந்த முத்து விதானம் புணர்ந்துதேன் மன்னு மாலை பலதாழ்ந்து மணப்புகை விம்மி மல்கிய வன்னத் தூவி யடர்பஞ்சி யவிர்மயி ராதி யாகப் பன்னிச் சொன்ன பதினைந்தும் படுத்தார் பாவை மார்களே. இவையிரண்டுமொருதொடர். 1. உண்ணாதிருத்தல் மரபு. உவமை-இல்பொருளுவமை. 2. பொற்காம்பிலே விதானம்புணரப்பட்டு மாலைதாழப்பட்டுப் புகை மல்கிய மணவறையிலே தூவிமுதலியவற்றாற்படுக்கும் பதினைந்தும் படுத்தாரென்க. வேண்டினவிடத்தே நடுதற்குச் சமைத்த முத்துப்பந்தர். இ-ள். அருந்ததியை மனைவிக்குக்காட்டிக்கூறி அறை வாசலிலே பாலாலே மலரடியைக்கழுவிய பின்பு பாலடி சிலையேந்தக் கண்ணாற்கண்டு பாவைமார் படுத்த படுக்கையிலே யமர்ந்திருந்தவன் புலி மயிலோடிருந்த தன்மையை யொத்தா னென்க. (92-93) வேறு 2471. பனிமயிர் களிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர் குளிர்ப்பன கண்கொ ளாதன எலிமயிர்ப் போர்வைவைத் தெழினி வாங்கினா ரொலிமயிர்ச் சிகழிகை யுருவக் கொம்பனார். இ-ள். தழைத்த மயிரான்முடித்த முடியையுடைய கொம் பனார், பனித்தான் மயிர் பிறர்க்குக்குளிர்ப்பன; மெல்லியன; நெருப்பின்கண் வேதற்குரியமயிரைவேவாமற் குளிரப்பண்ணுவன; நுண்மையாற் கண்கொளாதனவாகிய எலி மயிர்ப் போர்வை யைவைத்து உருவுதிரையை வளைத்தாரென்க. (94) 2472. விழுத்தகு மணிச்செவி வெண்பொற் கைவினை யெழிற்பொலி படியக மிரண்டு பக்கமுந் தொழிற்பட வைத்தனர் துளும்பு மேகலைக் கழித்தவே லிரண்டுகண் டனைய கண்ணினார். இ-ள். கண்ணினார் மணியாற் செய்த வனையினையும், வெள்ளியாற்செய்த தொழிலினையுமுடைய படிக்கத்தை இருவர்க்குந் தொழிற்படும்படி யிரண்டுபக்கத்திலும் வைத்தா ரென்க. (95) வேறு 2473(1) அங்கருங் காலி சீவி யூறவைத் தமைக்கப் பட்ட செங்களி விராய காயுஞ் செம்பழுக் காயுந் தீந்தே னெங்கணுங் குளிர்த்த வின்னீ ரிளம்பசுங் காயு மூன்றுந் தங்களி செய்யக் கூட்டித் தையலார் கைசெய் தாரே. 2474(2) கைசெய்து கமழு நூறுங் காழ்க்கும் வெள் ளிலையுங் காம மெய்தநன் குணர்ந்த நீரா ரின்முக வாச மூட்டிப் பெய்தபொற் செப்பு மாலைப் பெருமணிச் செப்புஞ் சுண்ணந் தொய்யறப் பெய்த தூநீர்த் தொடுகடற் பவளச் செப்பும். 2475(3) தாமணி நானச் செப்புஞ் சலஞ்சலக் கலன்பெய் செப்புந் தூமணித் துகில்க ளார்ந்த வலம்புரித் துலங்கு செப்புங் காமநீர்க் காமவல்லி கவின்கொண்டு வளர்ந்த தேபோ னாமவே னெடுங்கட் பாவை நயப்பன வேந்தி னாரே. இவை மூன்றுமொருதொடர். 1. கருங்காலிமரத்தைச்சீவி யூறவைத்துக் காய்த்தின செங்களியைக் கலந்த காயும், பழுக்காயும், தேன்போலே மெய்ம் முழுதையுங் குளிர்ப்பித்த இனியநீரையுடைய பசுங்காயுமாகிய இம்மூன்றையுங்கூட்டிக் கருப்பூரமுதலியவற்றைக் கலந்தா ரென்க. தங்களி-தமக்கியல்பாகியகளி. 2. கைசெய்யப்பட்டுக் கமழுஞ் சுண்ணாம்பும். ஊட்டி-கூட்டி. தொய்யற-குற்றமற. 3. தாமமணிந்த செப்பு. கலஞ்சலவடிவாகிய செப்பு. வலம்புரி வடிவாகிய விளங்குசெப்பு. இ-ள். நன்குணர்ந்த நீராராகிய தையலார் இவர்களுக்குக் காமவேட்கைபொருந்தும்படி கைசெய்த பாக்கினையும், வெற்றிலை யினையும், நூற்றையும் இனிய முகவாசத்தோடே கூட்டிப் பெய்த செப்பையும், ஒழிந்தசெப்புக்களையும், காமவல்லி வளர்ந்ததேபோலும் பாவை மற்றும் விரும்புவனவற்றையும் ஏந்தினாரென்க. (96-98) 2476. விரிகதி ரார மின்னித் தாரெனுந் திருவில் வீசிக் குரிசின்மா மேகம்பெய்த கொழும்புயற் காம மாரி யரிவைதன் னெஞ்ச மென்னு மகன்குள நிறைந்து வாட்கட் கரியமை சேறு சிந்திக் கலிங்குக டிறந்த வன்றே. இ-ள். சீவகனாகிய கொழுவிய நீரையுடைய கரியமேகம், ஆரமாகிய மின்னை மின்னித் தாரென்னுந் திருவில்லை வீசிப் பெய்த காமமாகிய மாரியாலே இலக்கணையது நெஞ்சென்னுங் குளநிறைந்து கண்ணாகிய கலிங்குகள் மையாகிய அமைந்த சேற்றினைச் சிந்தித் திறந்தனவென்க. என்றது-அவன்விளைவித்த காமவின்பநிறைதலின், உவகைக் கண்ணீர் வீழ்ந்தன என்றவாறு புயல்-நீர் “புயலன் றலர்சடை யேற்றவன்” (திருச்சிற்.240)என்றார். (99) 2477. தோக்கையந் துகிலி னாடன் றுணைமுலை பொருது சேந்த ஏக்கொசி விலாத வில்லா னிடுகொடி யகல மின்றேன் தேக்கிவன் டிமிருங் கோதை செல்வன்றா ருடிக்க நைந்து பூக்கொய்து துவண்ட கொம்பின் பொற்பின ளாயினாளே. தோக்கை-கொய்சகம். ஏத்தொழிலுக்குக் கெடுதலில்லாத. சிவப்பு, கோபமும், தார் தூசியுமாக வேறும் பொருள் பயந்து நிற்கும். இ-ள். சீவகனது மார்பாகிய மலையுடனே யிலக்கணை யுடைய முலைகளாகிய யானைகள் முதற்பொருது சிவந்தன; அதுபொறாதே அச்செல்வன் றார் பின்புஉழக்க, அக்கோதை நைந்து, பூக்கொய்த துவண்ட கொம்பின்றன்மையளாயினா ளென்க. இதனால் இருவர்புணர்ச்சியுங்கூறினார். இடுகொடி முலையென்க. (100) 2478. அணித்தகு பவள மேற்பக் கடைந்துமுத் தழுத்தி யம்பொன் றுணித்தடி விளிம்பு சேர்த்தித் தொழுதகச் செய்த வண்கை மணிச்சிரற் சிறகு நாண வகுத்தசாந் தால வட்டம் பணித்தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித் தாரே. பவளத்தைக்கடைந்து அடியிலே யேற்ப முத்தையழுத்தித் தொழுதல் தகச்செய்த காம்பினையுடைய ஆலவட்டம். இ-ள். பொற்றகட்டைநறுக்கி விளிம்பிலே சேர்த்திப்பீலி யிட்டுச் சிச்சிலியின் சிறகுநாணவகுத்த சந்தனவாலவட்டத்தாலே வீசுதற்றொழிற்குத்தக்க மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித்தாரென்க. (101) வேறு 2479. சேந்து நீண்டசெழுந் தாமரைக் கண்களி னேந்தி மாண்டமுலைக் கண்களி னெழுதிச் சாந்த மாகமெழு தித்தகை மாமல ராய்ந்து சூட்டியவ னஞ்சலி செய்தான். இ-ள். அவள் அவசம் நீங்கும்படி மகளிர்குளிர்ப்பித்த நிலையைக் கண்டுதானும் அதற்கேற்பச் சாந்தத்தாலே யாகத்தை யெழுதி மலரைச்சூட்டிக் குளிர்ப்பித்த நிலையைக் கூட்டத்திற் கிடையீடு செய்தானெனக்கருதி யவளூடிய நிலையைக்கண்டு தன்னுடைய தாமரையைப்போலுங் கண்களாலே யவள்முலைக் கண்களிலே யெழுதி அடியைத் தொழுதானென்க. இஃது ஊடல் தீர்த்தமை கூறிற்று. (102) 2480. மணிசெய் வீணைமழ லைக்குழல் பாண்டிலொ டணிசெய் கோதையவர் பாடிய கீதம் பணிவில் சாயல்பரு கிப்பவ ளக்கொடி மணியு முத்துமலர்ந் திட்டதொத் தாளே. பாண்டில்-தாளம். இ-ள். கோதையவர் வீணை குழல் பாண்டிலென்கின்ற வற்றோடே பாடிய கீதத்தைச் சாயல்கேட்டு ஒருபவளக்கொடி மணியையு முத்தத்தையும் பூத்த தன்மையையொத்தாளென்க. மணி-பவளம்; வாய்க்குவமை. இவர் பண்டுசெய்த நிலைமை தோன்றப் பாடிய பாட்டினாற் சிறிதுமுறுவல் கொண்டாளென்றார்; அதுபாடுதன்மரபு. பாட்டுக்குப் பரிசில் கொடுத்தா ளென்றாற்போலவு நின்றது. (103) 2481. எய்த்து நீர்ச்சிலம் பின்குரன் மேகலை வித்தி மாதர்வருத் தம்விளைத் தாளெனத் தத்து நீர்த்தவ ளைக்குரற் கிண்கிணி யுய்த்தொர் பூசலுட னிட்டன வன்றே. இ-ள். அவன்புணர்தலாற் றவளைக்குரல்போன்ற குரலை யுடைய கிண்கிணியும், நீர்மையையுடையசிலம்பும் உடனே பூசலிட் டன; அப்பொழுதே அந்நிலையையுணர்ந்து அவள் புணர்தலான் இன்குரல் மேகலையுங் காதலைவித்தித் தமக்கு வருத்தத்தை விளைத் தாளென்பனபோல அவற்றுடனே பூசலையிட்டன வென்க. அன்றே-அப்பொழுதே. உய்த்து-அவன்புணர்ச்சியைநீக்கி. (104) 2482. ஏந்தி நாங்களுட னேயிடு பூசலை வேந்தர் வேந்தன்கொடுங் கோலின னாகி யாய்ந்து சேட்டுமரு ளானென் றவிந்த சாந்த மேந்துமுலை யாள்கலந் தாமே. ஏந்தி-எடுத்து. இ-ள். இருவரும் வேறுவேறாக நிகழ்த்துகின்ற தொழிலைத் தவிர்தலின், அவளணிந்த கலங்கடாம், இவள் வருந்துமென்று யாங்கள் சேரவிடுகின்ற பூசலை வேந்தன் கேட்டுங் கொடுங்கோன் மன்னனாய் ஆய்ந்தருளான்; இனி யாம் ஒழிவோமென்று கருதினாற்போலே யொலியவிந்தனவென்க. கலங்கள் இரண்டுகாலத்தும் அவட்கேயொலித்தலின், அவள்கலமென்றே கூறினார். (105) வேறு 2483. வீடுமலி யுலகினவர் போலவிளை யாடுந் தோடுமலி கோதையொடு துதைந்தவரை மின்போ லாடுகொடி யணிந்தவுய ரலங்கல்வரை மார்பன் கூடுமயிர் களையும்வகை கூறலுறு கின்றேன். வீடுமலியுலகினவர்-சிவலோகம், பரமபதமென்கின்ற உலகிலுள்ள அரனும் அரியும். இவர்களுக்கு நித்தசம் போகமுள்ளது. இனி அதிகாரதேவர்கள் அதிகாரத்தின்முடிவிற் கற்பமறுதியாகவிருந்து முத்தியெய்துவரென்பதனால், உலக மென்றது வீடுபெறு தற்குக் காரணமான சுவர்க்கமென்றுமாம். இனிப்போகமொழிந்தவற்றைக் கைவிடுதன் மிக்க வுலகமென்றுஞ் சுவர்க்கமாம். கொடியணிதற்குக் காரணமான மார்பு. வரையிற்று தைந்தமின்போலே மாலையைத் தனக் கென்றே வரைந்தமார்பு. இ-ள். கோதையுடனே யுலகினவர்போலே விளையாடு மார்பன் இலக்கணையுடனே கூடுவதொரு மயிர்களையுஞ் சடங்கினைக் கூறுதலுறுகின்றேனென்றாரென்க. நாலாநாள் அரசர்க்கு மயிர்களைதன் முறைமையென்று கூறுதலின், இது கூறுகின்றார். (106) 2484. உச்சிவரை வளர்ந்திளமை யொழிந்தவுயர் திண்கா ழிச்சவிய வில்லைவென வெழுதியவை யூன்றிக் கச்சுவிளிம் பணிந்ததொழிற் கம்பல விதான நச்சுமணி நாகருறை நாகமென விரித்தார். இ-ள். வரையுச்சியிலேவளர்ந்து முற்றின காம்புகள் இப்படி அழகுடையன இல்லையென்னும்படி யெழுதினவற்றை நட்டுக் கம்பல மாகிய விதானத்தை நாகலோகமென விரித்தாரென்க . (107) 2485. முத்தக நிறைந்தமுளை யெயிற்றுமத யானை மத்தகமுந் திருமகடன் வடிவுபட மாதோ வொத்தகல மெண்முழமென் றோதிநக ரிழைத்தார் மொய்த்தெரிசெம் பொற்றுகளி னூன்முடிவு கண்டார். மத்தகமும், எயிறுமுடைய யானை. இ-ள். நூன்முடிவுகண்டார், நகரைத் தன்னிலொத்த அகலம் எண்முழமென்றோதி அதனுள்ளே யிரண்டருகும் யானையும் பொற்றுகளால் நடுவே திருவுமாகக் கோலஞ்செய் தாரென்க. (108) 2486. உழுந்துபய றுப்பரிசி யப்பமருங் கலங்கள் கொழுந்துபடக் கூப்பிநனி யாயிர மரக்கால் செழுந்துபடச் செந்நெனிறைத் தந்நுண்கொடி யறுகின் கொழுந்துகுறைத் தணிந்துகொலை வேற்கணவ ரமைத்தார். இ-ள். வேற்கண்ணவர் உழுந்துமுதலியவுற்றைக் கொழுந்து படக்கூப்பி யாயிரமரக்காலிலே செந்நெல்லை வளமைப்பட நிறைத்து அவற்றிலே யறுகையணிந்து இங்ஙனம் வைத்தாரென்க. செழுந்து, உரிச்சொல் ஈறுதிரிந்தது. (109) 2487. செங்கய லிரட்டைதிரு வார்சுடர்க ணாடி பொங்குகொடி வார்முரசந் தோட்டிபுணர் கும்ப மங்கலங்க ளெட்டுமிவை மணியிற்புனைந் தேந்தி யங்கயற்க ணரிவையர்க டென்கிழக்கி னின்றார். இ-ள். அரிவையர், தம்மை மணியாலே புனைந்து புணர்கயல் முதலிய மங்கலங்களெட்டையுமேந்தித் தென்கிழக்கே நின்றா ரென்க. திருவாரென்றது-சாமரையடியை; விகாரம். இனிக் கும்பத் தோடே புணர்ந்தமங்கலங்களெட்டுமெனவே சாமரைகூறிற் றென்றுமாம். (110) 2488. வெள்ளுருவ மாலைவட கீழிருவர் மின்போ லொள்ளுருவ வாளுருவி நின்றனர்தென் மேல்பா லுள்ளுருக நோக்கியுய ருழுத்தகலு மேந்திக் கள்ளுருவ மாலையவர் கைதொழுது நின்றார். இ-ள். வெள்ளியவடிவையுடைய மாலையணிந்த மகளிரி ருவர் வாளையுருவி வடகிழக்கேநின்றார்; கள்ளையுடைத்தாகிய அழகிய மாலையுடைய மகளிர் உழுத்த கலையுமேந்தி யன்பினா னெஞ்சுருகத் தெய்வத்தைநோக்கித் தொழுது தென்மேற்கே நின்றா ரென்க. (111) 2489. தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தாலம் ஆரவட மேற்றிசைக்க ணிருந்தவவிர் பஞ்சிச் சீர்நிறைய வரையகலந் திருத்தத்திரு நோக்கும் வாரமுறைக் கருவிவடக் கிருந்தனகண் மாதோ. இ-ள். மூங்கிலரிசிமுதலியனதுளும்பும் மணித்தாலம் வடமேற்றி சையிலே யாரவிருந்தன; வரையகலத்தைச் சீர்நிறையத் திருத்துதற்குப் பட்சபாதமுறைமையாகத் திருமகணோக்கும் பொற்கருவி பஞ்சின் மேலே வடதிசைக்கண்ணே யிருந்தனவென்க. பஞ்சி-வெண்டுகில். ‘உறைகருவி’ பாடமாயின், வாரம் உறைகிறகருவியென்க. (112) 2490. பானுரையி னொய்யவணைப் பைங்கதிர்கள் சிந்தித் தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல் வேனிரை செய் கண்ணியொடு மெல்லென விருந்தான் வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே. இ-ள். இரவிதான் பைங்கதிர்களைச்சிந்தித் திங்களோடே சேர்ந்து அணையிலே இருந்த தன்மைபோலேமன்னர் பெரு மானும் இலக்கணையோடே பொருந்தி யிருத்தலின் மென்மை தோன்ற விருந்தானென்க. செய்-உவமச்சொல். (113) வேறு 2491. குளநென் முன்றிற்கனி தேன்சொரி சோலைக் குளிர்மணி வளமை மல்கியெரி யம்மட மந்திகை காய்த்துவா னிளமை யாடியிருக் கும்வனத் தீர்ஞ்சடை மாமுனி கிளையை நீங்கிக்கிளர் சாபத்தி னாவித னாயினான். இ-ள். குளநெல்லுணங்கு முன்றிலின்கண்ணே கனி தேனைச் சொரிகின்ற சோலையிடத்தே மணியெரிய, அதனைத் தீயென்று மந்திகருதிக் கைகாய்த்துதற்கு இளமையாடியிருக்கும் வனத்தின்முனி தன்னை யொருவன்சபித்தலின், வந்துதோன்றின சாபத்தாலே சுற்றத்தை நீங்கி நாவிதனாயினானென்க. (114) 2492(1) ஆய்ந்த கேள்வியவன் கான்முளை யாய்வழித் தோன்றினான் றோய்ந்த கேள்வித்துறை போயலங் காரமுந் தோற்றினான் வேந்தன் றன்னாற்களிற் றூர்தி சிறப்பொடு மேயினான் வாய்ந்த கோலமுடை யான்பெரு மஞ்சிகர்க் கேறனான். வேறு 2493(2) நித்தில வடமும் பூணு மாரமு நிழன்று தாழ ஒத்தொளிர் குழைகள் காதி னான்றுபொன் னூச லாடப் பைத்தர வல்குற் பாவை கரகநீர் சொரியப் பாங்கின் வித்தகன் பூசிவெள்வேல் வேந்தனுக் கிறைஞ்சி னானே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். கேள்வியையுடைய அம்முனிவழியிலே பிள்ளை யாய்த் தோன்றினான்; தொக்கநூற்கேள்விமுற்றக்கற்று அலங்கார மென்பதோர் நூலுங்கண்டான்; அரசனாலே வரிசையுடனே யானையும்பெற்றான்; அழகுடையான்; தன்றொழின் மிகுதியால் நாவிதர்க்கேறனான்; வித்தகன்; அவன் ஒருபாவைபோல்வாள் நித்திலவடமுதலியன தாழக் குழையூசலாடக் கரகத்தினீரை வார்க்கப் பாங்கோடே வாய்பூசி வேந்தனை வணங்கினானென்க. வேந்தனுக்கு, கு-உருபுமயக்கம். (115-6) 2494. நச்செயிற் றரவி னோக்கின் மன்னரை நடுங்க நோக்கி வச்சிர வண்ணன் காப்ப வாழிய ரூழி யென்னா வச்சுதங் கொண்டு மன்ன னடிமுடித் தெளித்து நங்கை யுச்சிவண் டிமிரு மாi லயொளிமுடிச் சிதறி னானே. இ-ள். அரவினோக்குப்போலே யுன்பகைவரை நடுங்கும் படிநோக்கி வச்சிர வண்ணன்காப்ப ஊழிகாலம் வாழ்வாயாக வென்று அறுகையும் அரிசியையுங் கைக்கொண்டு மன்னனடி யிலும் முடியிலுந்தெளித்த அவற்றை யிலக்கணையுடைய முடியினுச்சியிலே தெளித்தானென்க. செல்வமுண்டாதற்கு வைச்சிரவணனைக் கூறினான். (117) 2495. வாக்கினிற் செய்த பொன்வாண் மங்கல விதியி னேந்தி யாக்கிய மூர்த்தத் தண்ணல் ளவலக்கவு ளுறுத்தி யார்ந்த தேக்கணின் னகிலி னாவி தேக்கிடுங் குழலி னாளை நோக்கல னுனித்து நொய்தா விடக்கவு ளுறுத்தி னானே. இ-ள். நூல்விதியோடே வாக்குண்டாகப் பொன்னாற் சமைத்த மங்கலமானகத்தியையெடுத்து அண்ணலது வலக் கவுளிலேயுறுத்தி யிலக்கணையைக் குறித்து நோக்காதே சிறிதே நோக்கி அவளிடக் கவுளிலே யுறுத்தினானென்க. ஆக்கியமூர்த்தத்து-பொருந்தவிட்டமுகூர்த்தத்தே. நெய்யையிடத்தேயுடைய அகிற்புகையையுண்டு தேக்கிடுங் குழல். (118) 2496. ஆய்ந்தபொன் வாளை நீக்கி யவிர்மதிப் பாகக் கன்மேற் காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப் பூநிறீஇக் காமர் பொன்ஞாண் தோய்ந்ததன் குறங்கில் வைத்துத் துகிலினிற் றுடைத்துத் தூய்தா வாய்ந்தகைப் புரட்டி மாதோ மருடகப் பற்றி னானே. இ-ள். உறுத்தின பொற்கத்தியைப் போக்கிப் பின்பு இரும்பும் எஃகும் ஒரு நீர்மையாகக் காய்ந்த மயிர்க்கத்தியை மதிப்பாகம்போலுங் கல்லிலேதீட்டிப் பூவை அக்கல்லிலே நிறுத்தித் தன்றுடையிலே வைத்துப் பின்பு சிலையிலே துடைத்துக் கையிலே தூய்தாகப் புரட்டிஉற்றதுதெரியாதபடி முகத்தைத் தீண்டினா னென்க. “பூவைநிறுத்தியிட்டு” என்ப. குனிதலிற் பொன்னாண் டோய்ந்த குறங்கென்றார். (119) வேறு 2497. ஏற்றி யும்மிழித் தம்மிடை யொற்றியும் போற்றிச் சந்தனம் பூசுகின் றானெனக் கூற்ற னான்முகங் கோலஞ்செய் தான்கடற் றோற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே. இ-ள். ஏறவொதுக்கியும், இழியவொதுக்கியும், நடுவு திறந்தும் கூற்றனான்முகத்தை யழகுசெய்தான்; அது ஞாயிறு போலே விளங்கிற்றென்க. சந்தனத்தைப் போற்றிப் பூசுகின்றானென ஏற்றியும் இழித்து மென்க. (120) 2498. கோதைப் பாரத்தி னானுந்தன் னாணினு மேதி லான்முக நோக்கு மிளிவினும் பாத நோக்கிய பான்மதி வாண்முக மேத மின்றியெ டுத்தனண் மெல்லவே. இ-ள். மாலையின்பாரத்தாலும், இயல்பாகவுள்ள நாணத் தாலும், நாவிதன் முகத்தைநோக்குகின்ற இளிவரவாலுங் கவிழ்ந்த முகத்தை யேதமின்றாம்படிஅவன் மெல்ல வெடுத்தா னென்க .(121) 2499. உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ யிரிய லுற்றன போன்றிணைக் கண்மலர் வெருவி யோட விசும்பிற் குலாவிய திருவிற் போற்புரு வங்கடி ருத்தினான். இ-ள். சிச்சிலிக்குவெருவிக் கயல் கெடுதலுற்றனபோலே கண்கள் வெருவியோடும்படி புருவங்களைத் திருத்தினானென்க. கண்கள் அஞ்சிப்பார்க்க விசும்பில்வளைத்த திருவில். (122) 2500. ஆர மின்ன வருங்குயந் தான்களைந் தோரு மொண்டிறற் கத்தரி கைத்தொழி னீரிற் செய்தடி யேத்தபு நீங்கினான் றாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான். தாரன்-சுட்டு. இ-ள். தாரன் கண்ணியானாகிய அந்நாவிதன் மயிர்க்கத்தியை நீக்கிக் கத்தரிகையாற்செய்யுந்தொழிலை நீர்மையாற்செய்து வாழ்த்தி நீங்கினானென்க. (123) வேறு 2501. அன்னப் பெடைநடுக்கி யசைந்து தேற்றா நடையாளு மன்னர் குடைநடுக்கும் மாலை வெள்வேன் மறவோனு மின்னு மணிக்குடத்தின் வேந்த ரேந்தப் புனலாடிப் பொன்னங் கடிமலருந் துகிலுஞ் சாந்தும் புனைந்தாரே. இ-ள். அன்னப்பெடையை யஞ்சுவித்து இளைத்து நடக் கின்றா ளென்று பிறரைத்தெளிவியாத நடையையுடையாளும், மறவோனும் வேந்தர்மணிக்குடத்தே நீரையேந்த மஞ்சனமாடி மலர்முதலியவற்றை யணிந்தாரென்க. (124) 2502. எஞ்சுற்ற மென்றிரங்கா தாக மெல்லாங் கவர்ந்திருந்து தஞ்சுற்றம் வேண்டாத முலைக்கீழ் வாழ்வு தளர்கின்ற நஞ்சுற்ற வேனெடுங்கட் பாவை நல்கூர் சிறுநுசுப்பிற் கஞ்சுற் றுழிப்புலர்ந்தாங் கணிந்தா ரம்மம ணிவடமே. இ-ள். இடந்தந்து நம்மைத்தோற்றுவித்த ஆகமென்ற ருளாதே அவ்வாகத்தையெல்லாங் கைக்கொண்டுஅடிபரந்து தாம் பிறந்த விடத்தையுட் பட வேண்டாமற் கொடியவாகிய முலையின் கீழே யிருந்து குடிவாழ்க்கை தளருகின்ற நுசுப்பிற்கு, இவ்விடத்தை விடிவதற்குமுன்னே தப்பிப்போகவேண்டுமென்று அஞ்சின விடத்தே விடிந்தாற்போலே வடத்தையணிந்தார்; இத்தீங்கினைக் கேட்பீராக வென்க. நஞ்சுதோய்ந்த வேல். பாவையதுநுசுப்பு. நல்கூர்-அடை. (125) 2503. சுடுமண் மிசைமாரி சொரியச் சூழ்ந்து சுமந்தெழுந்து நெடுநன் னிமிராவி நாறு நெய்தோய் தளிர்மேனி துடிநுண் ணிடைப்பெருந்தோட் டுவர்வா யேழை மலர்மார்பன் கடிநன் மலர்ப்பள்ளி களிப்பக் காமக் கடலாழ்ந்தான். இ-ள். மாரி நீரைச்சுமந்து உலகை வலமாக வந்துஉயர்ந்து வெங்கார்மண்ணிலே சொரிய நிமிர்ந்த ஆவிபோல நாறும் மேனிமுதலியவற்றையுடைய இலக்கணை கடிமணப்பள்ளியிலே களிக்கும்கடி மலர்மார்பன் காமக்கடலிலே யழுந்தினா னென்க.(126) ‘எழுந்தவும்’ பாடம். (126) வேறு 2504. வழங்கு தாரவன் மார்பிடை மட்டுகப் புழுங்கு கோதைபொற் பின்றிறம் பேசலாம் விழுங்கு மேகம் விடாது தழீஇக்கிடந் தொழிந்த மின்னுக் கொடியொத் தொழிந்திட்டாள். உலகங்கொண்டாடப்படுதலின், ‘வழங்குதாரவ’ னென்றார். மட்டு உகா நிற்கவும் பின்னரும் மட்டையுகுத்தற்குப் புழுங்குவதோர் கோதை யென்று இக்கோதைக்கு விசேடங்கூறினார். புழுக்கம்-வேட்கையாற் றோற்றுமென்க. இ-ள். தாரவன் மார்பிடைத்தங்கிய கோதைபோல் வாளுடைய அழகின் கூற்றைச் சிறிதுஉவமைகூறலாம்: தன்னை உள்ளடக்கு தற்குரிய மேகம் உள்ளடக்கமாட்டாதே புறத்தே தழீஇக்கிடத்தலாலே பழையதன்மையை யொழிந்ததொரு மின்னையொத்துத் தங்கினா ளென்க. (127) 2505. தாம மார்பனுந் தையலு மெய்யுணர் வாமி தென்றறி யாதுக ளித்தவர் தூமங் கொப்புளிக் குந்துகிற் சேக்கைமேற் காம னப்பணைக் கள்ளுக வைகினார். இ-ள். சீவகனும், இலக்கணையும் இது தம்முடம் பென்றுணரு முணர்வறியாது ஒருவர்மெய்யின் ஒருவர்மெய்யின் ஒருவர்மெய் மயங்கிக் களித்தவர்கள் பின்னுஞ் சேக்கைமேலே காமன்அப்பு அணையிலே வைகினாரென்க. (128) வேறு 2506. மாதர்தன் வனப்பு நோக்கி மகிழ்ந்துகண் ணிமைத்தல் செல்லான் காதலித் திருப்பக் கண்கள் கரிந்துநீர் வரக்கண் டம்ம பேதைமை பிறரை யுள்ளி யழுபவர்ச் சேர்த லென்றாள் வேதனை பெருகி வேற்கண் டீயுமிழ்ந் திட்ட வன்றே. இ-ள். அவளழகைநோக்கி மகிழ்ந்த கண்ணிமையானாய்க் காதலித்திருத்தலால் அவன்கண்கள்கரிந்து நீர்வர, அதனைக் கண்ட கேட்பாயாக; பிறைநினைந்தழுபவரைச் சேர்தல் அறியாமை காணென்றாள். அவ்வளவிலே வருத்தமிகுதலிற் கண்கள் தீயைச் சொரிந்தனவென்க. வனப்புநோக்கிக் கண்கரிந்தது-ஆக்கம்பற்றிப்பிறந்த மருட்கை யென்னும் மெய்ப்பாடு; மருட்கையாவது வியப்பு. (126) 2507. நாறுசாந் தழித்து மாலை பரிந்துநன் கலன்கள் சிந்திச் சீறுபு செம்பொனாழி மணிவிர னெரித்து விம்மா வேறியு மிழிந்து மூழூழ் புருவங்கண் முரிய நொந்து தேறுநீர் பூத்த செந்தா மரைமுகம் வியர்த்து நின்றாள். இ-ள். சீறாநின்று அழித்துப் பரிந்து சிந்தி நெரித்து விம்மிப் புருவங்கள் ஏறியுமிழிந்தும் முரியும்படி நொந்து முகம்வியர்த்து நின்றாளென்க. (130) 2508. இற்றதென் னாவி யென்னா வெரிமணி யிமைக்கும் பஞ்சிச் சிற்றடிப் போது புல்லித் திருமகன் கிடப்பச் சேந்து பொற்றதா மரையிற் போந்து கருமுத்தம் பொழிப வேபோ லுற்றுமை கலந்து கண்கள் வெம்பனி யுகுத்த வன்றே. இ-ள். திருமகன் வேறொருபாயத்திற்கு இவளாற்றா ளென்றுணர்ந்து இற்றதென்னாவியென்னாச் சீறடியைப்புல்லிக் கிடப்ப, அவளுமதுகண்டு ஊடல் தீரக்கருதலிற் கண்கள் நீரையு குத்தன வென்க. சேந்த பொலிவுடையவென்க. பொற்பென்னுமுரிச்சொல் திரிந்தது. தாமரையினின்றும் புறப்பட்டுச் சிறிது கரியநீர்மையை யுடையமுத்தஞ் சிந்துவனபோலே கண் மைகலந்து வெய்யவாகிய பனியையுகுத்தன; ஊடல் முழுதுந்தீராமையின் வெம்பனி யாயிற்று. பொரிதல் ஈண்டுத் தன்வினை. உற்று-ஊடறீர்தலுற வெனத் திரிக்க. “பொய்ப்ப விடேஎ மெனநெருங்கிற் றப்பினே-னென்றடி சேர்தலுமுண்டு.” (கலித்.89) என்றாராகலின், அடியில் வணங்கியபின்னும் ஊடல்தீராதழு தாளென்றல் கற்பிற்குப் பொருந்தாது. “இளிவே யிழலே” (தொல்.மெய்ப்.5) என்னுஞ்சூத்திரத்தில் அழுகை யாவது அவலமும் கருணையுமாதலின், “கயமலருண் கண்ணாய்” (37) என்னுங்கலியில், “தானுற்ற-நோயுரைக் கல்லான் பெயருமன் சேயேன்மன் யானுந் துயருழப்பேன்” என்றவழிப் பிறன்கட்டோன் றிய இளிவரல் பொருளாக அவலந்தோன்றினாற்போல, இதனை யும் பிறன்கட்டோன்றிய இளிவரல்பொருளாகப்பிறந்த கருணை யென்று கொள்க. வணங்குதல்-அவற்கிளிவரவு. அதனாற் கருணைபிறந்தது. அழுகை ஈண்டுக் கருணை. இதனான் ஊடறீரக் கருதினாளாம். (131) 2509. கொண்டபூ ணின்னைச் சார்ந்து குலாய்க்கொழுந் தீன்ற கொம்பே கண்டுகண் கரிந்து நீரா யுகுவது கரக்க லாமே பண்டியான் செய்த பாவப் பயத்தையார்க் குரைப்பன் றேன்காள் வண்டுகாள் வருடி நங்கை வரந்தர மொழிமி னென்றான். இ-ள். அக்கருணை பிறந்தமையின், இனி மொழிகூறுதற்கு இடமென்றறிந்து, நீயணிந்தபூண் நின்னைச்சாருதலாலே குலாவிக் கொழுந்தீனுதற்குக் காரணமான கொம்பே! நின்னை விடாமற் பார்த்தலாலே கண்கரிந்து நீராயுகுவதனை நீயறியாது கரக்கலாமே யெனவினாவினான்; ஆண்டு அவட்குச் சிதைவு பிறர்க்கின்மை யென்னுமெய்ப்பாடு பிறத்தலின், அவள் உத்தரங்கூறாமை யாற்றான் அதனையுணர்ந்து நிறையதுந்து, தேன்காள்! வண்டுகாள்! யான் முற்பிறப்பிற்செய்த தீவினை யின்விளைவை நுமக்கன்றி வேறு யார்க்குரைப்பேன்; இனி நீங்கள் நங்கையைக் காலைவருடி வரந்தரும்படி கூறுமினென்றா னென்னக. சிதைவுபிறர்க்கின்மையாவது-புணரக்கருதி யுள்ளஞ் சிதைந்து நிறையழிந்துழிப் புறந்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல். பிறர்கின்மையெனவே தலைவனுணரும். இது கற்பிற்கு முரித்தென்றார். இம்மெய்ப்பாடு இவட்குநிகழ்ந்தமை தானு ணர்ந்து இடையில்வந்த புள்ளைநோக்கி, இனி நுமக்க எளிது; நீர் ஊடறீர்ப்பீராகவென்றான்; ஊடற்குக் காரணமின்றியும் இத் துணையெல்லாம் நிகழ்ந்ததற்கு வருந்தினானாகலின். (132) 2510. பூவையுங் கிளியுங் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக் காவலன் மடந்தை யுள்ளங் கற்கொலோ விரும்பு கொல்லோ சாலம்யா முருகி யென்றுந் தவறி னருளு நங்கை பாவையென் றிரத்து மென்ற பறவைக டம்முட் டாமே. இ-ள். பூவையுங்கிளியும் அவன்வருத்தக்கூற்றைக்கேட்டுக் கூட்டின்வாயிலிலே முகத்தைவைத்துப் பார்த்திருந்து தம் மிற்றாம் யாமும் நஞ்சேவல் இங்ஙனம் வணங்கி யூடறீர்க்கு மிடத்துத் தகாதென்று மனமுருகி யிறந்துபடுவேம்; இதுகண்டும் அருளாதவி வண்மனங் கல்லோ? இரும்போ? அறிகின்றிலமென்றன; என்று பின்னும் அப்பறவைகடாம், நங்காய்! பாவாய்! இவன் சிறிதுந் தவறிலன்; இனி நீயருளாயென்று இரக்கக்கடவே மென்றுங் கூறின வென்க. அவை அவளூடறீரக்கருதிய தன்மை தாமுணர்தறேற்றா மையின், இவனிறந்து படுமெனக்கருதி யிங்ஙனங்கூறின. (133) 2511. பெற்றகூ ழுண்டு நாளும் பிணியுழந் திருத்தும் பேதா முற்றிமை சொல்லி னங்கை மூன்றுநா ளடிசில் காட்டாள் பொற்றொடி தத்தை யீரே பொத்துநும் வாயை யென்றே கற்பித்தார் பூவை யார்தங் காரணக் கிளவி தம்மால். இ-ள். அங்ஙனம்உசாவின வளவிலே, பூவையார் தமக்கு மேல்வருங்காரியத்திற்குக் காரணமாகிய சொற்களாலே, பேதாய்! யாம் பெற்ற சோற்றை யுண்டு நாடோறுங் கூட்டிலே பிணிப்புண்டு வருந்தி யிருப்பேம்; இத்தன்மையேமாகிய யாம் முதுக்குறைமை கூறின், பொற்றொடியாகிய நங்கை நமக்கு மூன்றுநாள் அடிசிலைக் காட்டாளாதலாற்றத்தையீரே! நும்வாயைப் பொத்துமினென்று கற்பித்தாரென்க. தத்தையீரேயென்றது இழிவுசிறப்பு. (134) 2512(1) பழியொடு மிடைந்த தேனுஞ் சீறடி பரவி னாற்கு வழிபடு தெய்வ மாகி வரங்கொடுத் தருளல் வேண்டு மொழிபடைக் களிறுபோல வுயங்கவு முருகி நோக்காப் பிழிபடு கோதை போலாம் பெண்டிரைக் கெடப்பி றந்தாள். 2513(2) ஈன்றதா யானு மாக விதனைக்கண் டுயிரை வாழே னான்றியான் சாவ லென்றே நலக்கிளி நூலின் யாப்ப மான்றவண் மருண்டு நக்காள் வாழிய வரம்பெற் றேனென் றான்றவ னாரப் புல்லிய ணிநலம் பரவி னானே. இவையிரண்டுமொருதொடர். 1. பிழிபடுகோதைபோலம்பெண்டிர்-உபாயத்தாற்றேனை வாங்கிக் கொள்ளப்படும் கோதைபோலேயாம் பரத்தையர். தம்மியல்புகெட்டுப் பொருள்வேட்கையால் அதன்றன்மையரா வராதலின், ஆமென்றார். அக்கோதையை யுபாயத்தால் நெகிழ்த்துவாங்கினாற்போல இவர்க்கும் பொருளால் மனம் நெகிழ்த்து இன்பங்கோடல்வேண்டும். கெடவென்பது பொல்லா ராகவென்னும்பொருட்டு. ஐ-அசை. இதனை-இவனிறந்துபட்டால் இவட்கு உளதாம்பழியை. யானும்-இவட்குப் பிள்ளையாகிய யானும். இ-ள். நற்குணத்தையுடையகிளி, பூவையின் மொழியைக் கேளாதே வேல் தைத்துநின்ற களிறுபோற் கணவன்வருந்தவும் நெஞ் சுருகாத பரத்தையர் தன்குடிப்பிற்பாற் பொல்லாராகப் பிறந்தவள், தன்கணவன்செயல் பழியோடே மிடைந்ததாயினும் அதுதீர அடிபரவினவனுக்கு வரங்கொடுக்கவேவேண்டும்; இங்ஙனஞ் செய்யாமையின், நிகழ்கின்றவிதனை யான்கண்டு உயிரைக் கொண்டிரேன்; யானும் இங்ஙனம் மான்றவளைப் பெற்ற தாயாந் தன்மையேனாம்படி நான்றுகொண்டு சாவக் கடவே னென்றுகூறி நூலாலே கழுத்தை யாப்ப, அவளிதனைக் கண்டு இதனன் புடைமையாலே மருண்டு நக்காள்; அது கண்டு அவனமைந்து வரம்பெற்றேனென்று புல்லி நலத்தைப் பரவினா னென்க. 2. வாழியவென்றது கிளியை. தாயாந்தன்மையேனென்றது, இங்ஙனங் கொடியவளைப்பெற்ற கொடியவளாகக் கடவே னெக்கருதி. கொடுமை-வலியச்சாதல். (135-6) வேறு 2514. நிறையோத நீர்நின்று நீடவமே செய்யினும் வாழி நீல மறையோ வரிவை வரிநெடுங்க ணொக்கிலையால் வாழி நீலங் கண்ணெவ்வா யேனுங் களித்து நகுதிநின் வண்ண மிதுவோ மதுவுண்பார் சேரியையோ வாழி நீலம். வாழி-இகழ்ச்சிக்குறிப்பு. களித்து நகுதி-தேனையுட் கொண்டு அலாதி; செருக்கிச் சிரியாநின்றாயென்பதும் பயந்தது. வண்ணம்-நிறமுஞ் சாதியுந் தோன்றநின்றது. இ-ள். நீலமே! நீஇவள்கண்ணை யொக்கவேண்டுமென்று கடலிலே யொருகாலாலேநின்று உயர்ந்ததவத்தைச்செய்யினும் இவள் கண்ணையொவ்வாயாய்நின்றாய்; இதற்கு யான் வஞ்சினங்கூறவே! அதுவேண்டா; நீலமே! நீகண்ணையொவ்வா திருக்கவுங் களித்து நகரநின்றாய்; அதற்குத் தாழ்வில்லை; நின் வண்ணம்யாது? கரும்புற மல்லவோ? அதுவும் நினக்குத்தகும்; அஃதொழிந்து கள்ளுண்பார் சேரியிலே நிற்றலின், இக்குணமும் பட்டதோவென்றானென்க. இஃது “அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு-நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே” (தொல்.செய்.64) எனச் செய்யுளியலிற் கலிக்கு அறுசீரடி விதித்தலின், வாழிநீலமென ஆசிரியத்தளைபெற்ற அறுசீரடிகள் “கண்ணொவ்வா யேனுங் களித்து நகுதி” என்னும் நேரடியின் முன்னும்பின்னுவந்த அகநிலைக்கொச்சகம். உம்மையான் வெண்டளையும் விரவும். “பாநிலை வகையே கொச்சகக் கலியென-நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே.” (தொல்.செய்.155) என அக நிலைக் கொச்சத்திற்கு விதிகூறலின், ஓசை துள்ளியவாறு முணர்க. இனி ஆசிரியத்துறையென்பார்க்கு ஆகாமை கடவுள்வாழ்த்தாகிய முதற்கவியிற்கூறினாம். (137) வேறு 2515. பாண்குலாய்ப் படுக்க வேண்டா பைங்கிளி பூவை யென்னு மாண்பிலா தாரை வைத்தா ரென்னுறா ரென்று நக்கு நாண்குலாய்க் கிடந்த நங்கை நகைமுக வமுத மீந்தாள் பூண்குலாய்க் கிடந்த மார்பிற் பொன்னெடுங் குன்ற னாற்கே. இ-ள். நங்கை, நீ பாண்மைச்சொல்லாலே வளைத்து எம்மை யகப்படுத்த வேண்டா; கிளி பூவையென்னும் மாட்சிமையில்லா தாரை வளர்த்துவைத்தார் என்ன இனிவரவுறாரென்று நக்குக் குன்றனாற்கு அமுதையீந்தாளென்க. பூவைக்குங் கருத்து அதுவாதலிற் சேரக்கூறினாள். (138) 2516. நலங்குவித் தனைய மாதர் நன்னல மாய வெல்லாம் புலம்புவித் தருளி னீங்கிப் பகைப்புலம் புக்க வேந்திற் கலங்குவித் தனைய நம்பி கவர்ந்திடக் கலாப மேங்கச் சிலம்புநொந் திரங்கத் தேன்றார் பரிந்துதே னெழுந்த வன்றே. நலம்- மகளிர்நலம். புலம்புவித்து-அவசமாக்கி. பகைப்புலம்புக்க வேந்துபோலே யருளின் நீங்கிக் கவர்ந்திட. கலம் பலநிலங்களிற்பிறந்த பலமணிகளையுந் தன்னிடத்திற்சேர்த்தாற் போலே பல்லோரிடத்துள்ள நற்குணங்க ளெல்லாந் தான்சேர்த்தானென்றார். பரிந்து-பரிய. இ-ள். நம்பி மாதர்நலமெல்லாவற்றையுஞ் சிலம்பிரங்கத் தார்பரியப் புலம்புவித்துக் கவர்ந்திட, அம்மாதருங் கலாபமேங்க நம்பிநலத்தைக் கவர்ந்திடத் தேனினமெழுந்தனவென்க. (139) 2517. திருநிறக் காமவல்லி திருக்கவின் கொண்டு பூத்துப் பெருநிறங் கவினி யார்ந்த கற்பகம் பிணைந்த தேபோ லருநிறக் குருசின் மார்பத் தசைந்தன ளலங்கல் வேலு நெரிபுறத் தடற்று வாளு நீலமு நிகர்த்த கண்ணாள். நெரிபுறத்தடறு-சருச்சரைபட்ட புறத்தையுடையவுறை. ‘நெறிவுற்ற தடத்துவாழுமெ’ன்ற பாடத்திற்கு நெரிவுற்றநீல மென்க; வலியவலர்த் தின நீலம். இ-ள். கண்ணாள், காமவல்லி திருவினழகைக்கொண்டு பூத்துக் கற்பகத்தைப் பிணைந்தாற்போலே குருசின்மார்பிலே யவசத்தாலே துயின்றாளென்க. (140) வேறு 2518(1) மணிக்கண் மாமயிற் சாயன் மாதரு மணிக்கந் தன்னதோ ளரச சீயமும் பிணித்த காதலாற் பின்னிச் செல்வுழிக் கணித்த நாள்களேழ் கழிந்த காலையே. 2519(2) சூட்டுஞ் சுண்ணமு மணிந்து சுந்தர மோட்டி யொண்பொனூ லோங்கு தாரொடு பூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்தபின் மோட்டு முத்தொளிர் வடம்வ ளாயினார். 2520(3) பானு ரைய்யன பைந்து கிலணிந் தானி ரைய்யினத் தலங்க லேறனான் மானி ரைய்யினம் மருளு நோக்கினா ரூனு யிருணு மொருவ னாயினான். இவைமூன்றுமொருதொடர். 2. சூட்டு-பூ; சுந்தமோட்டி-சிந்தூரப் பொடியைப் பூசி. 3. அலங்கல்-மாலை. இ-ள். மாதரும் அரசசீயமம் முற்பிறப்பிற் பிணித்த காதலாலே பிணைந்து செல்கின்றவளவிலே யறுதியிட்ட நாள் களேழுங் கழிந்த எட்டாநாளிலே ஒப்பத்தற்குரியார் தாரோடே சூட்டுஞ்சுண்ணமுமணிந்து ஒட்டிப்பூட்டிப்பெய்தபின் வளா யினார்; அவர் வளைத்ததன்பின், ஏறனான் அணிந்து மகளிருயிரை யுண்ணும் ஒருவனாயினானென்க. (141-3) 2521. சுநந்தை தன்மகன் சுடர்பொற் சூழித்தே னினங்க வர்ந்துண விலிற்று மும்மதத் தநந்த னன்னகை யானை யேறினான் குனிந்த சாமரை குளிர்சங் கார்த்தவே. இ-ள். முன்பு சுநந்தைமகனென்று உலகங்கருதப்பட்டவன் இப்பொழுது சூழியினையுஞ் சொரியுமதத்தினையும் அநந்தனை யொத்த நெடியகையினையுமுடையயானையை யேறினான்; அப்பொழுது கவரிகள் வீசின; சங்குகள் ஆர்த்தனவென்க. (144) வேறு 2522. இரும்பிடி நூறு சூழ விறுவரை நின்ற தேபோற் கரும்பொடு காய்நெற் றுற்றிக் கருப்புரக் கந்தினின்ற சுரும்புசூழ் மதத்த சூளா மணியெனுஞ் சூழி யானைப் பெருந்தகைப் பிணையன் மன்னர் முடிமிதித் தேறி னானே. 2523. சட்டகம் பொன்னிற் செய்து தண்கதிர் வெள்ளி வேய்ந்து வட்டநல் வைரம் வாய்ப்ப நிரைத்துமேன் மணிகள் சேர்த்திச் சுட்டுதற் கரிய முத்தின் றொத்துவாய் நாற்ற முந்நீர்ப் பட்டவான் பவளக் காம்பின் குடைநிழற் பரிதி யொத்தான். இவையிரண்டுமொருதொடர். 1. ஏறினான்-தொழிற்பெயர்; சுட்டு. இ-ள். கரும்போடே நெல்லைத்துய்த்து நூறுபிடிசூழ ஒரு பெரியவரைநின்றாற்போலக் கருப்பூரமணிந்த கம்பத்தே சேர்ந்து நின்ற சூளாமணியென்னும் யானையை மன்னர்முடியை மிதித் தேறினவன், பொன்னாலே சட்டத்தைச்செய்து வெள்ளியாலே வேய்ந்து வைரத் தாலே வட்டத்தைநிரைத்து அதன்மேலே மணிகளையழுத்தி விலை யிடுதற்கரிய முத்துத்தாமத்தை விளிம் பிலே நாற்றவும்பட்டுப் பவளக் காம்பையுடையதோர் குடை நிழலிலிருந்த பருதியை யொத்தானென்க. யானையின்பெயரும், ஏறினமுறைமையும் முற்கூறாமையிற் பிற்கூறினார். (145-6) 2524. மடற்பனைக் குழாத்திற் பிச்ச நிரைத்தன மன்னர் சூழ்ந்து புடைக்களி றேறித் திங்கட் பொழிகதிர்க் குப்பை யன்ன வெடுத்தெறி கவரி வீச வியம்பல முழங்கி யார்ப்பக் கடற்படை வெள்ளஞ் சூழக் காவலன் வீதி சேர்ந்தான் இ-ள். பிச்சங்கள் பனைக்குழாம்போலே நிரைத்தன; அவ்வளவிலே காவலன், மன்னர் பக்கத்திற் களிறுகளிலேயேறிச் சூழ்ந்து கவரியைவீச, இயமார்ப்ப, படைவெள்ளஞ் சூழ வீதியைச் சேர்ந்தானென்க. (147) 2525. அடிநில முறுத னாணி யருவருத் தமரி னாலித் திடுமயிர் சிறக ராக வெழுந்துமேற் பறப்ப வேபோற் படுமழைத் துளியிற் பாய்மாப் பரந்தன நிரந்த பொற்றே ரிடைநில மின்றி வேழ மீண்டின மள்ளர் தொக்கார். அப்படைசூழ்ந்தபடி கூறுகின்றார். இ-ள். அமரில் வந்து ஆலித்த அடிநிலமுறுதலை யருவருத்து நாணி இட்டமயிர் சிறகுபோலேதோன்ற எழுந்து பறப்பனபோலே பாய்ந்து செல்கின்ற மாப் பரந்தன; தேர்நிரந்தன; இடைவெளி யின்றாம்படி வேழம் ஈண்டின; வீரருந் தொக்காரென்க. துளி: எண்ணிறத்தற்குவமை. (148) 2526. கொழுமடற் பெண்ணை யீன்ற குரும்பையுஞ் செப்புங் கொன்ற விழைமுலைத் தடத்தி னாடன் கணவனைக் காண வேகிக் கழுமொலி யரவ வானங் கனைபெயல் கடற்பெய் தன்ன குழுமெலி யரவ மீண்டிக் கொடிநகர் பொலிந்த தன்றே. இ-ள். மக்களெல்லாம் இலக்கணையுடைய கணவனைக் காண வேகி ஈண்டுதலின், நகர் பொலிந்ததென்க. வானங் கடலிலேபெய்த ஒலியன்ன திரண்ட வரவத்தோடே யீண்டி. கடல் பழையவொலிக்கும், பெயல் புதியவொலிக்கு முவமை. (149) 2527. ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ ருலாமுகில் கிழிக்கு மாடக் கொள்கொடிக் குழாத்தி னாலுங் கொழுநறும் புகையி னாலுந் தெள்ளுறு சுண்ணத் தாலுந் தேமலர்த் துகளி னாலும் புள்ளினம் பொழுது காணா புலம்பிக்கூ டடைந்த வன்றே. இ-ள். சூலம்தெளிந்த நீர்பரந்த முகிலைக்கிழக்கு மாடத்திற் கட்டின கொடித்திரண் முதலியவற்றாலே கதிர்மறைந்து பறவைத் திரள் பகற்பொழுதைக் காணாவாய் வருந்திக் கூட்டைச் சேர்ந்தன வென்க. கடலிலே யுலாவும் முகிலுமாம். (150) 2528. பைந்தொடி மகளிர் பாங்கர் பரிந்துநூல் சொரிந்த காசு சிந்தின தழலென் றஞ்சிச் சிறையன்ன நிலத்தைச் சேரா விந்திர கோப மாமென் றிளமயில் குனிந்து குத்திச் சிந்தையிற் றேம்பத் தாமே திருமணி நக்க வன்றே. இ-ள். கணவர் ஊடின மகளிர் மேகலையைப் பற்ற அது பரிதலின் நூல்சொரிந்த மணிகள் சிந்தினவற்றை நெருப்பென்றஞ்சி யன்னம் நிலத்தைச் சேராவாயின; அவற்றையிந்திரகோப மென்று மயில்கள் குத்தி அவையன்மையின் நெஞ்சாலே வருந்த, ஒளிவிட்டமணிகள் அதற்கு நக்காற்போன்றிருந்தனவென்க. இப்பறவைகள் ஆண்டு வளர்த்தன. (151) 2529. வெள்ளைமை கலந்தn நாக்கிற் கிண்கிணி மிழற்றி யார்ப்பப் பிள்ளைமை காதல் கூரப் பிறழ்ந்துபொற் றோடு விழத் துள்ளுபு செலீஇய தோற்றந் தொடுகழற் காமன் காமத் துள்ளுயி ரறியப் பெண்ணாய்ப் பிறந்ததோர் தோற்ற மொத்தார். இக்கவிமுதலாக வேட்கைபிறவாப்பருவத்தாரும், பிறக் கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாருமென மூன்று கூறாக்கிக் கூறு கின்றார். “பேதை யல்லை பேதையங்குறுமகள்-பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென” (அகநா.7)என்றலிற் பேதை வேட்கை பிறவாப் பருவத்தாதலும், பெதும்பை வேட்கை பிறக்கின்ற பருவத் தாதலும் பெற்றாம். இவையொழிந்த மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை யென்னும் பெயர்கள் வேட்கை பிறந்த பருவத்துப் பெயர்களாம். அன்றி யாவையும் பலபருவத்தை யுணர்த்தும் பெயர்களெனின், அதுமுன்னூல் களிற் கூறாமையானும், சான் றோர் வேறுபாடு கூறாமன் மகளிர்க்குப் பொதுப்பெயராகச் செய்யுள்செய்தலானுந் தேவர்க்கும் அது கருத்தென்றாம். இனி உலாவிற்கங்கமாகப் புதியநூல்களிற் கூறியவிதி இதற்காகாமை யுணர்க. உள்ளொன்றுகொள்ளநோக்காது வெள்ளைமை கலந்த நோக்கோடென்க. இ-ள். வேட்கைபிறவாதமகளிர் தம் பிள்ளைத்தன்மையாலே காண்டற்குக் காதன்மிகக் கிண்கிணியார்ப்பத் தோடு வீழத் துள்ளா நின்று நோக்கோடு சென்ற தோற்றங் காமன் காமத்தினின் பத்தை மேனுகர்ந்தறிதற்குப் பெண்ணாய்ப்பிறந்த தோற்றத்தை யொத்தாரென்க. இது வேட்கை பிறவாப் பருவத்தாரைக் கூறிற்று (152) 2530. தன்னெறி வளரக் காமன் றான்முலை யிரண்டு மாகி முன்னரே வளர்கின் றாற்போன் முகிழ்முலை முத்த மேந்திப் பொன்னெறி மணியிற் பொங்கிக் குழல்புறம் புடைப்ப வோடிப் பின்னிறீஇ வைத்த போலப் பெதும்பையர் விதும்பி நின்றார். இ-ள். பெதும்பையர், காமன் தன்னீதி யுலகிலேவளரும் படிமகளிர் முலையிரண்டுந் தானாகி வளர்கின்றாற் போலே முகிழ்த்த முலையிலே முத்தத்தையேந்திப் பொன்னிலே வந்து தாக்குகின்ற நீலமணிபோலே குழல்பொங்கி முதுகிலே புடைக்கும்படியோடி மனமசைந்து முன்னரே நின்றாரென்க. போலே முகிழ்த்தவென்க. எறிதல்- “திரையெறிதல்” போனின்றது. பின்னுந் தலைநிறுத்திவைத்தாற்போலே நின்றா ரென்றது-சேரநிறுத் தினாற்போல நின்றமை கூறிற்று. இனிக் காமன்றான் றன்னெறிவளர முலையிரண்டுந் தனக்குண்டாய் வளர்கின்றார்போலே நின்றாரென்று முரைப்ப. இது வேட்கை பிறக்கின்றாரைக் கூறிற்று. (153) 2531. அணிநிலா வீசு மாலை யரங்குபுல் லென்னப் போகித் துணிநிலா வீசு மாலைப் பிறைநுதற் றோழி சேர்ந்து மணிநிலா வீசு மாலை மங்கையர் மயங்கி நின்றார் பணிநிலா வீசும் பைம்பொற் கொடிமணி மலர்ந்த தொத்தார். இ-ள். ஒளியைவீசும் மணிமாலையையுடைய மங்கையர் தாம் ஆடுகின்ற ஒளியைவீசும் மாலையையுடையவரங்கு புல்லெனப் போய் நிலாவை வீசும் மாலைக்காலத்துப் பிறைபோலு நுதலையுடைய தோழியைச்சேர்ந்து மயங்கிநின்றவர்கள் ஒளியை வீசும்பொற்கொடி மணியைப்பூத்த தன்மையை யொத்தா ரென்க. பணிகொடி-ஒழிந்தகொடிகள் தாழ்கின்றகொடி. பணி பரத்தலுமாம். இது சிறிது வேட்கைபிறந்து மயங்கினாரைக் கூறிற்று. (154) 2532. வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை நோக்கி னாரை யுள்ளுயி ருண்ணுங் கூற்றி னுடன்றுகண் சரிந்து பொங்கக் கள்ளுயி ருண்ணு மாலைக் கதுப்பொரு கையி னேந்தி நள்ளிருள் விளக்கிட் டன்ன நங்கைமார் மல்கி னாரே. உகிராலேயெழுதினமுலை-எழுவாய். ‘கரிந்தெ’ன்றார், கோபத்தாற் கருகியென்றாற்போலவுந் தோன்ற. மாலையிற்றே னினது மணத்தை யுண்ணுமயிர். இ-ள். செறிந்தவிருளுக்கு விளக்கிட்டாற்போலுந் தோற்றப் பொலிவை யுடைய நங்கைமார், தம்முலை தம்மைநோக்கினாரைக் கூற்றுப்போலே கோபித்துப் பொங்கக் குலைந்தகதுப்பை யொரு கையாலேயேந்தி நிறைந்தாரென்க. இனிக் கதுப்பையேந்துதலின், இருளிலே விளக்கிட்டன்ன வென்றுமாம். இது முதலாக வேட்கை மிக்காரைக் கூறுகின்றார். (155) 2533. மட்டொளித் துண்ணு மாந்தர் மாண்புபோன் மறைந்து வண்ணப் பட்டொளித் தொழிய வல்குற் பசுங்கதிர்க் கலாபந் தோன்றக் குட்டநீர்க் குவளைக் கண்கள் விருந்துண விரும்பி நின்றா ரட்டுந்தே னணிந்த மாலைப் பவளக்கொம் பணிந்த தொத்தார். மாலையையுடையதொரு பவளக்கொம்பை யொப்பித்த தன்மையை யொத்தாலென்றது-முற்கூறியவரைச் சுட்டிற்று. கள்ளைக் கரந்துண்ணுமாக்கள் கரக்கவுந்தோன்று மாறுபோல, மேகலை வண்ணப்பட்டிலே யொளித்துக் கிடவா நிற்கவுஞ் சிறிதுதோன்றவென்க. இ-ள். அவர்கள் மேகலைதோன்றக் கண்கள் இவனிடத்துப் புதுமையை மறைந்து நுகர விரும்பியேநின்றாரென்க. (156) 2534. பெரும்பொரு ணீதிச் செங்கோற் பெருமக னாக்கம் போலப் பரந்திட மின்றி மேலாற் படாமுலைக் குவிந்த கீழா லரும்பொரு ணீதி கேளா வரசனிற் சுருங்கி நந்து மருங்கு நொந் தொழிய வீதி மடந்தைய ரிடங்கொண் டாரே. பெரியபொருளாகிய நீதிபொருந்தின செங்கோலையுடைய பெருமகன். ஆல்கள்-அசை. இ-ள். தன்மேலேயிருந்து பெருமகனாக்கம் போலே மார்பு இடமின்றாம்படி பரந்து குவிந்த படாமுலைலக்கீழேயிருந்து, பொரு ளாகிய நீதியைக்கேளா அரசனைப் போலே நந்தின இடை நோம்படி மடந்தையர்வந்த வீதியையிடமாகக் கொண்டாரென்க. இது முதலிய மூன்று கவி பின்பு வந்தோரைக் கூறுகின்றன. (157) 2535. செல்வர்க்கே சிறப்புச் செய்யுந் திருந்துநீர் மாந்தர் போல வல்குற்கு முலைக்கு மீந்தா ரணிகல மாய வெல்லா நல்கூர்ந்தார்க் கில்லை சுற்றமென்றுநுண் ணுசுப்பு நைய வொல்கிப்போய் மாடஞ் சேர்ந்தா ரொருதடங் குடங்கைக் கண்ணார். இ-ள். கண்ணார், தமதுநுசுப்பு மிடித்தார்க்குச் சுற்றமின் றாயிருந்த தென்று வருந்தாநிற்கவுஞ் செல்வார்க்குப் பின்னும் வேண்டுஞ் சிறப்பு களைச் செய்யும் பொல்லாதநீர்மையையுடைய மாந்தரைப்போலே அல்குற்கும் முலைக்கும் அணிகலமாயயெல் லாம் ஈந்தார்; ஈந்தபின்பு போய் மேனிலத்தைச் சேர்ந்தா ரென்க.(158) 2536. கார்வளர் மின்னு வீசுங் குண்டலங் காய்பொ னோலை யேர்வளர் பட்ட மேற்ப வணிந்திருள் சுமந்து திங்க ணீர்வளர் நீலம் பூத்து நிரைத்தபோ னிரைத்த மேலால் வார்வளர் முலையி னார்த மாழைவாண் முகங்கண் மாலோ. இ-ள். திங்கள்பலவுங் காரிலேதோன்றிய மின்னைவீசுங் குண்டல முதலியவற்றை பொருந்தவணிந்து இருளைச்சுமந்து நீலத்தைப்பூத்து நிரைத்தனபோலே முலையினார்தம் இளைய முகங்கள் மேனிலத்தே நிரைத்தனவென்க. (159) 2537. குறையணி கொண்ட வாறே கோதைகா றொடர வேரடிச் சிறையழி செம்பொ னுந்தித் தேன்பொழிந் தொழுக வேந்திப் பறையிசை வண்டு பாடப் பாகமே மறைய நின்றார் பிறையணி கொண்ட வண்ணல் பெண்ணொர்பால் கொண்ட தொத்தார். இ-ள். செம்பாதி குறையாகப் பூணணிந்த வளவிலே பிள்ளை யார் வந்தாராக, முன்பே யவர்க்குக்கொடுத்தற்குச் சமைத்தெடுத்த கோதைகள் தம்மிற் பிணங்க வோடிச்சென்று சிறையழிந்த தேன் செம்பொனுந்தியிலே பொழிந்தொழுக அக்கோதையை யேந்திச் செம்பாதியணியாத நாணத்தாலே யொருபாகமறையநின்றவர்கள், அண்ணல் ஒருபாலிலே கொள்ளப்பட்ட பெண்ணையொத்தா ரென்க. பறை-பறத்தல். (160) 2538. பொன்னரி மாலை பூண்டு பூஞ்சிகை குலாவி முன்கை மின்னரிச் சிலம்பு தொட்டு விருப்பொடு விரைந்து போவான் கன்னிய ராடி நோக்கித் தம்மைத்தாங் கண்டு நாணிப் பின்னவை யணிந்த செல்வா ரிடம்பெறா தொழிந்து போனார். இ-ள். கன்னியர் அவனைக்காணவேண்டுமென்கிற விருப்பத்தாலே போதற்குவிரைந்து பொன்னரிமாலையைக் கழுத்திலே பூண்ட பூஞ்சிகையிலே யதனை வைத்தாராகக்கருதி அதனையொழியப் பூஞ்சிகையை முடித்துத் தொட்டுக் கண்ணாடியைப்பார்த்துத் தம்மை யதிலே கண்டு நாணிப் பின்பு அவையணிந்து செல்கின் றவர்கள் காண்டற்கிடம்பெறாதே தவிர்ந்து போனாரென்க. (161) 2539. முத்தலாய் நடந்த கோல முலைமுதன் முற்ற மெல்லாம் வித்திய வேங்கைவீயும் விழுப்பொனும் விளங்கக் காமத் தொத்துநின் றெரிந்து கண்டார் கண்சுடச் சுடர்ந்து நின்றா ரொத்தொளிர் காமவல்லி யொருங்குபூத் தலர்ந்த தொத்தார். இ-ள். கண்ணாற் கண்டவர்களுக்குக் காமத்தீயின் தொத்து நின்றெரிந்து சுடுதலாலே, அவர்கள் வேங்கை வீயையும் பொன் னையும் வித்தியபோலும் பசலை யுலாவி நடந்த முத்தணிந்த முலை தோன்றுதற்குக் காரணமாகிய மார்பெல்லாம் பசலை சுடர்ந்து விளங்கநின்றாரென்க. அலர்ந்த காமவல்லியையொத்தாரென்பது சுட்டுப் பெயராயிற்று. இனிப் பசந்த தம்மைநோக்கினார் கண் சுடும்படி நின்றார், வல்லிபூத்துப் பொலிவழிந்த தன்மையை யொத்தா ரென்றுமுரைப்ப. இத்துணையும் மணநிலைவகையிற்பிறந்த பெண்பாலாரையும்பரத்தையரையுங் கூறினார். இது மக்கள் வகையாற் காமப்பொருட்பகுதி பற்றி முன்னோர் கூறிய குறிப்பு வகையான் வந்த செந்துறைப் பாடாண்பகுதியாம். (162) 2540. உகிர்வினை செய்து பஞ்சி யொள்ளொளி யரத்த மூட்டி யகில்கம ழங்கை சேப்ப வரிவைய ரலங்க றாங்கி வகிர்படு மழைக்கண் சின்னீர் மாக்கய லெதிர்ந்த வேபோன் முகில்கிழி மின்னி னோக்கி முரிந்திடை குழைந்து நின்றார். இதுமுதலாகக் கற்புடைமகளிரைக் கூறுகின்றார். இ-ள். மகளிர் தம்மழகிய கைசிவக்கும்படி உகிரைச்சீவிப் பஞ்சாலே யூட்டி யகில்கமழலங்கலை யணிந்து கயல் சின்னீரை யெதிர்ந்தாற்போல வடுவகிர்போலுங்கண் உவகைக்கண்ணீரரும்ப நோக்கிப் பாதுகாத்தற்கு இவ்வரசனைப்பெற்றேமேயென்று முரிந்து முகில்கிழி மின்னினின்றாரென்க. இடைகுழைந்த நின்றாரெனவே மனக்குழைவின்றென்று கற்புக்கூறினார். (163) 2541. முனித்தலைக் கண்ணி நெற்றிச் சிறார்முலை முழாவிற் புல்லிப் புனிற்றுப்பால் பிலிற்றித் தேமா வடவிறுத் தாங்குப் பாய நுனித்துக்கண் ணரக்கி நோக்கா தொசிந்துநின் றார்க ளன்றே கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம் பொத்தார். இ-ள். இருடிகள் தலைபோலும் புன்றலையையும், கண்ணி நெற்றியையுமுடைய சிறார் முலையிலே சேர்தலாலே யீன்றணிப் பாற் பாலூறி வடுவிறுத்தாற்போலே பிலிற்றிப்பாயக் கண்ணை யமுக்கி யரசனை நுனித்து நோக்காதே நாணிநின்றவர்கள் கற்பகத்தை யொத் தாரென்க. கனியாகிய பாரமிக்குநின்றதொரு கற்பகமெனவே புதல்வ னாகிய பயனைக் கொடுத்தாரென்பது கூறினார். கற்பகங்கூறிற்று, கற்பு மிகுதியாற் றங்கணவர்க்குச் செல்வமெல்லாங் கொடுப்பா ரென்றுகருதி. (164) 2542. அவிரிழை சுடர முல்லை யலங்கலங் கூந்தல் சோரத் தவிர்வெய்ய காமந் தாக்கித் தடமுலைக் கால்கள் சாய விவர்தரு பிறவி யெல்லா மின்னமா கென்று நின்றார் சுவர்செய்தாங் கெழுதப் பட்ட துகிலிகைப் பாவை யொத்தார். முல்லை கற்பிற்குச்சூடினார். தவிர்வெய்ய காமந்தாங்கி-போகப் பட்ட கொடிய காமத்தையுடையராய். வெய்யகாமம்-அடை. இது “வீதராகர்” என்றாற்போல நின்றது. இன்னமாக-பிறக்கும் பிறவி யெல்லாம் நீகராக்கின்ற வுலகிலே யிங்ஙனம் இனிதுறைவேமாக. பாவை, கொண்டநிலை தான்கெடுமளவுங் குலையாத்தன்மை போல, அவர் தாங்கொண்ட கற்புங் குலையா திருத்தலிற் பாவையென்றார். இ-ள். சுடரச் சோரத் தாங்கிச் சாய இன்னமாகென்று கூறிநின்றார் பாவையை யொத்தாரென்க. (165) 2543. வேரிநா றலங்கன் மாலை மின்னிழை மயங்கி யெங்கும் பூரித்துப் புதவந் தோறுங் குவளையு மரையும் பூத்துப் பாரித்துப் பைம்பொ னாக ருலகிவண் வீழ்ந்த தேபோன் மாரிமா மயில னாரு மைந்தரு மயங்கி னாரே. இ-ள். நாகரும், பொன்னுலகிற்றேவரும் பரக்கவந்து இவ்விடத்தை விரும்பின தன்மைபோலே, நகரெங்கும் அலங்கலும், மாலையும். இழையும்பூரித்த மயங்கப்பட்டு வாயிறோறுங் கண்ணும் முகமும் பொலிவுபெறப்பட்டு மயிலனாரும் மைந்தரும் மயங்கினா ரென்க. தம்மைக்காக்கின்ற வரசனாதலின், அன்புமிகுதியால் இருபாலாரு முடன்வந்தார். (166) 2544. கோதைதாழ் குடையி னீழற் கொற்றவன் பருதி யாக மாதரார் முகங்க ளென்னுந் தாமரை மலர்ந்த தெண்ணீர்க் காதநான் ககன்ற பொய்கைக் கடிநகர் குவளை பூத்துப் பேதுறு கின்ற போன்ற பெருமழைக் கண்கண் மாதோ. இ-ள். கட்டியங்காரனென்னும் மதியாற்குவிந்த மாதரார் முகமென்னுந்தாமரை இக்கொற்றவன்பருதியாக நாற்காதத்தளவும் அகன்ற நகராகியபொய்கையெங்கும் மலர்ந்தன; மலர்ந்தபின் அவற்றிற் கண்களுங் குவளைபூத்துப் பேதுறு கின்றன போன்றன வென்க. பேதுறுதல்-இன்மையுற்றுமயங்குதல். (167) 2545. மாந்தரு மாவுஞ் செல்ல மயங்கிமே லெழுந்த நீறு தேந்தரு கோதை யார்தந் தெண்மட்டுத் துவலை மாற்ற வாய்ந்த பொன் னகர மெங்கு மணிகல வொளியி னாலே காய்ந்துகண் கலக்கப் பூத்த கற்பக மொத்த தன்றே. முற்கூறிய மயிலனாரும், மைந்தரும் மயங்கினவர்களுடைய செய்தி கூறுகின்றார். இ-ள். மாந்தருமாவுஞ் செல்லுதலாலே மயங்கி யெழுந்த நீற்றை மகளிர் வீசுகின்ற பூவிற்றேன் மாற்றாநிற்க, ஆய்ந்தகலங் களை அவன்வேண்டாதிருக்கவும் அவன் முன்னே வீழ மைந்தர் எங்கும் வீசுகின்ற விளக்கத்தாலே, இப்பொன்னகர், வேண்டக் கொடுக்கின்ற கற்பகத்தைக்காய்ந்து எதிர்ப்பட்ட வளவிலே கொடுத்ததோர் கற்பகத்தை யொத்ததென்க. கண்கலத்தல்-எதிர்ப்படுதல். பூத்ததனாற்பயன் கொடையே யாம். (168) 2546. பெண்பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார் பெரிய யாமுங் கண்பெற்ற பொலிசை பெற்றா மின்றெனக் கரைந்து முந்நீர் மண்பெற்ற வாயுள் பெற்று மன்னுவாய் மன்ன வென்னாப் புண்பெற்ற வேலி னான்மேற் பூமழை தூவினாரே. முற்கூறியமகளிர் இங்ஙனங்கூறிப் பூவை வீசுகின்றார். இ-ள். வீரமகளுந் திருமகளும் நின்னை விடாதே யுறைதலிற் றாம் பெண்டன்மையைப் பெற்றதனாலுள்ள லாபத்தைப் பெற்றார். அதனால் அவர்கள் நின்னைவிடாதுறைவாராக வென்று யாங்கூற வேண்டா; கற்புமிகுதியால் அவர்களிற் பெரிய யாமுஞ் சச்சந்தன் மகனாகிய நின்னை எமக்கரசனாகக் காணப்பெறுதலின், இன்று கண் பெற்றதனாலுள்ள இலாபம் பெற்றேமென்றுகூறி யவனது ஆயுளுக்குக் கரைந்து, மன்னனே! முந்நீரும் மண்ணும் பெற்றவாயுளை நீபெற்று மன்னுவாயாக வென்று வாழ்த்தி யவன்மேலே பூவைத் தூவினா ரென்க. இஃது உப்புமுலகுமுள்ளவளவும் வாழ்வீரென்னும் உலக வழக்கு. உம்மை-சிறப்பு. இங்ஙனம் நீடுவாழ்கென வாழ்த்துதற்குரியோர் கற்புடைமகளிர். ஏனையோர் வாழ்த்து வரேற் பயனின்றாம். இத்துணையும் உயர்குடிப்பிறந்தோ ருறைகின்ற வீதிகூறினார். (169) வேறு 2547. சுண்ணமேற் சொரிவார் தொழுதுதொங்கல் வீழ்ப்பார் தண்ணென் சந்தனநீ ரார்ந்துதேன் றுளும்பும் வண்ணப்பந் தெறிவார் வளையொலிப்ப வோச்சிக் கண்ணியிட் டெறிவார் கலவைநீர் தெளிப்பார். இ-ள். ஒழிந்தமகளிர் ஓச்சிச் சொரிவார்; வீழ்ப்பார்; சந்தனமும் பனிநீரும் நிறையப்பட்டத் தேன்றுளும்பும் பூப்பந்தையெறிவார்; கண்ணியையெறிவார்; பசுங்கூட்டையும் பனி நீரையுங் கூட்டித் துருத்திமுதலியவற்றாற் றெளிப்பாராயி னாரென்க. (170) 2548. முந்துசூர் தடிந்த முருகனம்பி யென்பா ரைந்துரு வலம்பி னநங்கனென் றயர்வார் கந்துகன் வளர்த்த சிங்கங்காண்மி னென்பார் சிந்தையிற் களிப்பார் சேய்நெடிய கண்ணார். இ-ள். சிந்தையாற் களிப்hர்ந்த மிக்கநெடியகண்ணார், இந்நம்பி முருகனென்பார்; காமனென்றுவருந்துவார்; சிங்கங் காணுங்களென் பாராயினாரென்க. (171) 2549. தேசிக முடியுந் திருந்துபட் டுடையும் பாசமா கநின்று பன்மலர்க் கழுநீர் மூசிவண் டிமிரும் மொய்யலங் கறாழக் காசில் காமஞ்செப்பிக் கண்ணினா லிரப்பார். இ-ள். வண்டிமிருங் கழுநீர்மாலைதாழும்படி சிலமகளிர் சீவகனுடைய முடியும் உடையுந் தம்மைப் போகாமற்பிணிக்குங் கயிறாகக் கருதிநின்று தங்கண்ணாலே காமத்தைச்சொல்லி யிரப் பாராயினாரென்க. (172) 2550. வண்டறைந்த தாரான் வண்ணங்கண்ட பின்றைக் கண்டிலேனென் மாமை கைவளையொ டென்பா ரொண்டொடி யிவன்றன் னுருவுகண்டு வாழ்வார் பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர்போத வென்பார். ஒண்டொடி! இவன்படிவைக்கண்டு ஈண்டுவாழ்கின்ற யாமேகாண் பெண்டிராய்ப் பிறந்தேமென்பார். அவர்க்கெதிரே அவனை நுகரு மகளிரோவென்று வினாயினார்க்கு அவர் தவத்தாற் பெரியர்காண், அதனை விடலாகாதோவென்பார். தம்மைப் பிறர்போற்கூறினார். இ-ள். என்பார்; என்பராயினாரென்க. (173) வேறு 2551. கொழித்திரை யோத வேலிக் குமரனைப் பயந்த நங்கை விழுத்தவ முலக மெல்லாம் விளக்கிநின் றிட்ட தென்பார் பிழிப்பொலி கோதை போலாம் பெண்டிரிற் பெரிய நோற்றாள் சுழித்துநின் றறாத கற்பிற் சுநந்தையே யாக வென்பார். இ-ள். கொழித்திரைக்கின்றகடலை வேலியாகவுடைய வுலகிற் பெண்டிருள் இவனைப்பெற்ற விசயை தவமேகாண் உலகெல்லாம் விளக்கி நிலைபெற்றதென்பார்; அதுவன்று; பெண்டிருட்பெரியளாக நோற்றாள் சுநந்தையே காணெண்பாரா யினாரென்க. பிழியையுடைய பொலிகோதை. ஆகவென்பதனை மாறுக. சுழித்தல்-வேறொரிடத்தின்றி நிற்றல். அறாதகற்பு-அருட் கற்பு.(174) 2552(1) சாந்தகங் கிழிய மாலைத் தடமுலை ஞெமுங்கப் புல்லிச் சேர்ந்தெழு நங்கை மாரே திருநங்கை மார்க ளல்லார் கூந்தலு முலையு முத்துங் கோதையுஞ் சுமந்து நைவான் போந்தவந் நங்கை மார்கள் பொய்ந்நங்கை மார்க ளென்பார். இதுமுதல் “நஞ்சுகுடித்தாலும்”(சீவக.2557) என்னுங்கவியளவு மொரு தொடராக்குக. இ-ள். ஆகங்கிழியும்படி ஞெமுங்கப்புல்லிப் புணர்ந்தெழு முலையினையுடைய நங்கைமாரே நல்வினைசெய்தநங்கைமார்; அந்நங்கைமாரல்லாதார் கூந்தன்முதலியவற்றைச்சுமந்து வருந்துதற் கென்றே பிறந்த பொய்ந்நங்கைமார்களென்பாரென்க. வடிவுமாத்திரையேயாய்ப் பயன்பெறாமையிற் பொய் யென் றார். 2553(2). இடம்பட வகன்று நீண்ட விருமலர்த் தடங்க ணென்னுங் குடங்கையி னொண்டு கொண்டு பெருகுவார் குவளைக் கொம்பி னுடம்பெலாங் கண்க ளாயி னொருவர்க்கு மின்றி யொப்ப வடங்கவாய் வைத்திட் டாரப் பருகியிட் டீமி னென்பார். இ-ள். கண்ணென்னுந்கைகளாலே முகந்துகொண்டு பருகுவார்; குவளையை முழுதும்பூத்ததோர் கொம்புபோலே யுடம்பெல்லாம் பொருந்தக் கண்ணாயிற்றாயின், இவர்களொரு வர்க்கும் இன்றாம்படி யிவன்மேனியடங்க அக்கண்களிடத்n த வந்து நிறைய வதனையிட்டுவைத்து நுகருமின்; அல்லது இவ்விரண்டுகண்களாலும் நுகர முடியாதென்பாரென்க. இட்டீமின்-வினைத்திரிசொல். 2554(3) முலைமுத றுறந்த வன்றே மூரித்தா ளாளிய hனைத் தலைநிலம் புரள வெண்கோ டுண்டதே போன்று தன்கைச் சிலையிடம் பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த நம்பி நிலவுமிழ் கடையி னீழற் றுஞ்சுக வைய மென்பார். இ-ள். யாளி முலையைத்துறந்தவன்றே யானைத்தலை நிலத்தே கிடந்து பதைக்கும்படி யதன்கோட்டை வாங்கி யுண்ட தன்மைபோல, உலகறியத் தன்கையிலே வில்லையெடுத்த நிரை மீட்டவன்றே தெவ்வரைக்கொன்ற நம்பியது குடைநிழலிலே இவ்வுலகு தங்குக வென்பாரென்க. தெவ்வரென்ற பன்மை-பிள்ளைகள் நூற்றுவரையுங்கருதி. வேடர் பகைவரன்மை முன்னர்கூறினாம். யானைக்குக் கோட் டைப்பறித்த பின்னருஞ் சிறிதுபொழுது பதைத் துயிர்போமாறு போல நிரைமீட்ட வன்றுதொட்டும் இவன் நமக்குப்பகை யாவனென்னுங்கருத்துடனே பதைத்துப் பட்டானென்று தாங்கருதியிருந்தமைகூறினார். அவன் பதைத்தமை, “வாளுற்ற புண்ணுள் வடிலேலெறிந் திற்ற தேபோல்”(சீவக.455) என்றதனானுணர்க. வேறு 2555(4) இந்நகரப் புறங்காட்டி வன்பிறந்த வாறுந் தன்னிகரில் வாணிகனிற் றான்வளர்ந்த வாறுங் கைந்நிகரில் வேந்தர்தொழப் போந்ததுவுங் கண்டா ரென்னைதவஞ் செய்யா திகழ்ந்திருப்ப தென்பார். இ-ள். இவன் இந்நகரப் புறங்காட்டிலே பிறந்தபடியும், தன்குலத்திற்கொத்தலில்லாத வாணிகனில்லிலே தான்வளர்ந்த படியும், தம்மொழுக்கத்திற்கொப்பில்லாத வரசர்தொழப் போந்ததன்மையுங் கண்டால், நல்லறிவுடையோர் தவஞ்செய்யா திருப்பது என்னை யென்பரென்க. ‘பொன்னகரும்’ பாடம். கண்டார்கூற்றாதலிற் பிள்ளையார் குலத்திற்கு ஒவ்வாத வாணிகனென்றார். 2556(5) பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினுந் திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்ட மொருமுழமுஞ் சேறலில ரேனும்பொரு ளூர்க்கே வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ. பெருந்திரை-கடல். கடத்தற்கருமையின், வரையையும் நீந்தியென்றார். இ-ள். திரையையும் வரையையுநீந்தி வருந்தினும் ஒருவற்கு நல்வினையின்றேற் பொருளீட்டமில்லை; ஒருமுழநீளமுஞ் செல்லுதலிலராயினும்அவர்நல்வினையுடையராயிற் பொருடானே வழிகேட்டு உழந்து அவரிருந்தஊரிலேவரும்; ஆதலால் அதற்கேது வாகிய தம் வாழ்வதாகவென்பாரென்க. தந்தைமுறையாற் றேடியபொருள் தானேவந்து இவனுக்கு எய்திற்றென்றார். 2557(6) நஞ்சுகுடித் தாலுநவை யின்றுதவ நின்றா லஞ்சியொளித் தாலுமர ணில்லைதவ முலந்தாற் குஞ்சரத்தின் கோட்டிடையு முய்வர்தவ மிக்கா ரஞ்சலில ரென்றுமற னேகளைக ணென்பார். தன்னையாக்கிய சச்சந்தனைக் கொன்றபின்னுங் கட்டியங் காரன் அரசாண்டிருந்தமைகருதி; நஞ்சைக்குடித்தாலுந் தவநின் றால் நவையின்றமாயிருந்ததென்றார். தாமரைவியூகம் வகுத்து அதனுள்ளே நின்றும் அவன்பட்டமை கருதி, அஞ்சியொளித் தாலுந் தவமாண்டால் அரணில்லையாயிருந்ததென்றார். இவையிரண்டானுங் கட்டியங் காரனிருவினையையும் வியந்தார். கட்டியங்காரன் இவனைச் சிறைசெய்த யானைக்கிடக் குறித்தமை கருதித் தவமிக்கார் கோட்டிடை யினுமுட்பட உய்வாராயிருந்தா ரென்றார். இதனாற் பிள்ளையார் நல்வினையை வியந்தார். ஆதலாற் றவஞ்செய்தார்க்குஞ் சிறிது தீவினையான் இடர்வந்த விடமெங்குங் களைகணாவது அறக்கடவுளே யாயிருத்தலின், அதனையுடையார் அஞ்சதலிலராயிருந்தா ரென்பா ரென்க. கணைகண்-முதுகணென்றாற்போலும்வழக்கு. முன்னிற்றீவினை தவஞ்செய்தார்க்கும் இடையே நுகரவேண்டும். இ-ள். என்பார்; என்பாராயினாரென்க. (175-80) வேறு 2558. முரல்வாய சூற்சங்க முடமுட் டாழை முகைவிம்முங் கரைவாய முத்தீன்று கானன் மேயுங் கடற்சேர்ப்ப னுரைவாய நகர்பரவப் போகி யொண்பொ னெயில்சூழ்ந்த விரைவாய பூம்பிண்டி வேந்தன் கோயிற் கெழுந்தானே. வளைந்து நிலத்தே வீழ்ந்த தாழையின்முகை அலருங் கரையை யிடத்தேயுடைய கானலிலே சங்கு முத்தையீன்று வருத்த மின்றித் தானேபோய் மேயுமெனவே, தன் பிள்ளைக்குச் செவிலியாய் அம்முகைவளர்க்குமென்று கருதிற்றென்பதும் ஒன்று தோன்றியவாறு காண்க; சங்கு தாழையின்முகைக்கு உவமையாதலின். உரையிடத்தன வாகிய நகர்; “நிலநாவிற்றிரி தரூஉம்”(கலித்.35) என்றாற்போல. தெய்வத்தன்மையால் விரையை மாறாமல் இடத்தேயுடையவாகிய பிண்டி. இ-ள். சேர்ப்பன், நகரை வலமாகப்போய்ப் பின்பு வேந்தன் கோயிலுக்குப் போயினானென்க. (181) 2559. அருகு மயிலகவ வன்ன மேங்கக் குயில்கூவக் குருகு பொறையுயிர்க்குங் கொடுமுட் டாழை வெண்டோட்டு முருகு பொறையுயிர்க்கு மொய்பூங் காவிற் படைநீக்கித் திருகு கனைகழலான் செம்பொற் கோயில் சேர்ந்தானே. அருகேநின்று அகவ ஏங்கக் கூவக் குருகினமீனுங் காவெனவே, அக்குருகின் வருத்தத்திற்கு அவையும் வருந்தி வென்பது தோன்றிற்று. தாழை தோட்டிற்சுமந்திருந்த தேனாகிய பாரத்தைச் சொரியுங்கா. இ-ள். கழலான் காவிலே படையைநிறுத்திக் கோயிலைச் சேர்ந்தானென்க. (182) 2560. திறந்த மணிக்கதவந் திசைக ளெல்லா மணந்தேக்கி மறைந்த வகிற்புகையான் மன்னர் மன்னன் வலஞ்செய்து பிறந்தே னினிப்பிறவேன் பிறவா தாயைப் பெற்றேனென் றிறைஞ்சி முடிதுளக்கி யேத்திக் கையாற் றொழுதானே. அரசன்வருங்காலத்துப் பிறர்புகுதாமற்கதவடைத்து அவனுக்குத் திறத்தலியல்பு. அகிற்புகையான் மணந்தேக்குதலாலே திசைகளெல்லா மறைந்தன. இ-ள். அங்ஙனஞ்சேர்ந்தபொழுது கதவுகள் திறந்தன; திசைகள் மறைந்தன; அவ்வளவிலே மன்னன் வலஞ்செய்து பிறவாதநின்னைப் பெற்றேனாதலின்; இதற்கு முன்பிறந்தயான் இனிப் பிறவேனெயென்று முடிதுளக்கியிறைஞ்சி யேத்தாநின்று தொழுதானென்க. ஏத்தியென்பது நிகழ்காலமுணர்த்திற்று. (183) வேறு 2561. திருமறு மார்பினை திலகமுக் குடையினை யருமறை தாங்கிய வந்தணர் தாதையை யருமறை தாங்கிய வந்தணர் தாதைநின் னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும். இ-ள். மார்பினையுடையை; குடையினையுடையை; ஆதி வேதத்தை முற்றக்கற்ற அந்தணர்க்குத் தாதையாந் தன்மையை யுடையை; நீ யங்ஙனமாதலின், நின்னடியைத் தொழுது மென்றா னென்க. யாமென்ற உளப்பாடு ஒழிந்த மக்களையுங் கருதிற்று. “உம்மொடு வரூஉங் கடதற” (தொல்.வினை.5)ஈண்டு நிகழ்காலமுணர்த்துதல் காலமயக்கு. எரிபுரையுமடியென்றார்; பிறவியைச்சுடுதலின். மலர்மேலேற்றுதலுமாம். (184) 2562. உலகுணர் கடவுளை யுருகெழு திறலினை நிலவிரி கதிரணி நிகரறு நெறியினை நிலவிரி கதிரணி நிகரறு நெறியைநின் னலர்கெழு மரைமல ரடியிணை தொழுதும். இ-ள். கடவுட்டன்மையையுடையை; அநந்தவீரியத்தை யுடையை; சுக்கிலத்தியானத்தையுடையை; நீ யங்ஙனமாதலின், நின்னடியைத் தொழுதுமென்றானென்க. நிலவின் கதிரையொத்தநெறி. அணி-உவமவுருபு. (185) 2563. மறுவற வுணர்ந்தனை மலமறு திகிரியை பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனை பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வநின் னறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும். திகிரி-அறவாழி. இந்திரியங்கட்கு வரம்பாகியமுதல்வ னென்றது-அவற்றிற்கு அவ்வருகுபட்டிருக்கின்ற முதல்வனென் றவாறு. இ-ள். உணர்ந்தாய்; திகிரியை; புண்ணியத்திற்குக் காரண மான தன்மையையுடையை; அத்தன்மையையுடையவனே! நின்னடியைத் தொழுதுமென்றானென்க. இவைமூன்றுந் தாழம்பட்டவோசையும் முடுகியலுமாய் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிக் கந்தருவமார்க்கத்தான் இடைமடக்கிய தேவபாணித் தாழிசைக் கொச்சகவொருபோகு. (186) வேறு 2564. நந்தா விளக்குப் புறமாகென நான்கு கோடி நொந்தார்க் கடந்தான் கொடுத்தான்பின்னை நூறு மூதூர் கந்தார் கடாத்த களிறுங்கொடித் தேர்க ணூறுஞ் செந்தா மரைமே னடந்தானடி சேர்த்தி னானே. இ-ள். நொந்தார்க்கடந்தோன் இறைவற்கு விளக்குப்புறமாக வென்று நூறூரையும், பூசனைக்கு நான்குகோடிபொன்னையுங் கொடுத்தான்; கொடுத்தபின்னருஞ்சேவித்தற்கு, நூறுகளிற் றையும், நூறுதேரையும், அவனுக்குச் சேர்த்தினானென்க. (187) 2565. வாடாத மாலை மணிமாலைபொன் மாலை முத்த நீடார மாலை நிழன்மாண்ட பவழ மாலை மாடார்ந் திழியு மருவிம்மலர் பொற்ப வேற்றிக் கூடார்க் கடந்தான் வலங்கொண்டிடஞ் சென்று புக்கான். நீடாரம்-சந்தனம். தாமம் பாடமாயின், ஒழுங்காம். மாடு-பக்கம். இ-ள். கூடார்க்கடந்தான், வாடாதமாலைகளிற்றாழும் மணிமாலை முதலியவற்றையும், மலரையுந் திருவடிமேலேற்றி வலஞ்செய்து போய்த் தன்கோயிலிடத்தேபுக்கானென்க. (188) வேறு 2566. உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானை வலமருப் பீர்ந்து செய்தமணிகிளர் கட்டி லேறி நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்தி ருந்தான் புலமகள் புகழப் பொய்தீர் பூமகட் புணர்ந்து மாதோ. இ-ள். நிலமகள்கணவன், நாமகள்புகழத் திருமகளைப் புணர்ந்து வேந்தர்திரளிலே சிங்காசனத்திலேறியிருந்தானென்க. (189) 2567. எத்துணைத் தவஞ்செய் தான்கொ லென்றெழுந் துலக மேத்த வித்திய புகழி னாற்கு னிவருந்தர சியற்றி நாடு மொத்தன னல்கித் தன்னை யுழந்தனள் வளர்த்த தாய்க்குச் சித்திரத் தேவி பட்டந் திருமக னல்கி னானே. இ-ள். திருமகள், இவன் எவ்வளவுதவஞ்செய்தானென்று உலகமேத்தும்படி கந்துக்கடனுக்கு இதற்குமுன்பில்லாத அரசுரி மையை வலியக்கொடுத்து நாட்டையு நல்கித் தன்னைவருந்தி வளர்த்த சுநந்தைக்கு நன்றாகிய தேவியென்னும் பட்டத்தையும் நல்கினானென்க. “அந்தணாளர்க் கரசுவரை வின்றே”(தொல்.மரபு.82) என்பதனான் அந்தணரொழிந்தவிருவர்க்கும் முடியுடைவேந்தராதற்றன் மையின்மை யின், ஈண்டு அரசளித்தது குறுநிலமன்னர்க்குரிய அரசாயிற்று. (190) 2568. இனக்களி யானை மன்ன ரிளவுடை யானென் றேத்தத் தனக்கிளை யானை நாட்டித் தான்றனக் கென்று கூறிச் சினக்களி யானை மன்னர் மகளிரைச் சேர்த்தி நம்பன் மனக்கினி துறைக வென்று வளங்கெழு நாடு மீந்தான். இ-ள். நம்பன், நந்தட்டனை மன்னரெல்லாம் இளவுடையா னென்றேத்தும் படியிளரசாக்கி, யவன்றான், இரத்தலறியாதவன், எனக்கு நீங்கள் இக்காரியத்தைச் செய்தல்வேண்டுமென்றிரந்து கொண்டுகூறிக் குறுநிலமன்னர் மகளிரை நபுலற்கும் விபுலற்கு மணஞ்சேர்த்தி யினி நீங்கள்மனத்திற்கினிதாக வுறைவீரென்று கூறி யவர்க்கு நாடுகளையும் கொடுத்தானென்க. நபுலனைக் “காமம்போற்காளைமீண்டான்” (சீவக. 2259)எனவும், விபுலனை “உணராதவனின்றான்” (சீவக.2265) என்றும், அவர் பாடாமை கூறுதலின், அவர்க்கு இந்தவரிசைகொடுத்தானென்று கூறுதல் தேவர்க்குக்கருத்தாம். அது மன்னர்மகளிரை யென்றபன்மையானு முணர்க. அன்றி விபுலன் பட்டானென்றுகூறுவார் நம்பனென்றது நபுலனையாக்கி யவனுக்கு மகளிரைச்சேர்த்தியென்க. (191) 2569. ஆழ்கடல் வையத் தில்லா வருநிதி யரசு நல்ல சூழ்மணி யாழி செம்பொற் சூட்டொடு கண்ணி காதற் றோழர்கட் கருளித் தொல்லை யுழந்தவர் தம்மைத் தோன்ற வாழ்கென நிதியு நாடு மன்னவன் கொடுப்பித் தானே. இ-ள். மன்னவன், காதற்றோழர்கட்கு உலகில் வேறு சிலர்க் கில்லாத பழையவரசையும், ஏனாதிமோதிரத்தையும், செம் பொனாற் செய்த பட்டத்தையும்,கண்ணியையும், நிதியையுமருளி, அவர்களை யொழியத் தனக்கு உழந்தவர்களைத் தோன்ற வாழ்க வென்றுகூறி யமைச்சரைக்கொண்டு நிதியையும் நாட்டையுங் கொடுப்பித்தானென்க. (192) 2570. வளர்த்தகைத் தாயர் தம்மை வருகென வருளித் தங்கள் கிளைக்கெலாஞ் சிறப்பு செய்து கேட்டவர் மருள வைத்தூர் விளைத்துள கெடாத வைக லாயிர மிறுப்புத் தண்டக் கொளக்கொடுத் தயாவு யிர்த்தான் கொற்றவ னென்ப வன்றே. இ-ள். கொற்றவன், தன்னைவளர்த்த செவிலித்தாயரை வருக வென்றழைத்து அவர்கள் சுற்றத்திற்குச் சிறப்புச்செய்து அவர்கள் தாங்கள்கொள்ளும்படி யுலகில் விளைதற்குள்ளன வற்றையெல்லாம் விளைவித்து நாடோறும் ஆயிரம் பொன்னி றுப்புத்தண்டக் கெடாதவூர் களைந்தைக் கேட்டவர்மருளக் கொடுத்து இளைப்பாறினானென்க . (193) 2571. கைத்தல மந்தி கொண்ட கைம்மகப் போன்று தன்கட் பத்திமை விடாது மேனாட் படைக்கல நவின்ற பொற்றேர் மைத்துன மன்னர்க் கெல்லாம் வளநிதி மணிசெய் மான்றேர் தத்துநீர் மிசைச்சென் மாவுந் தவழ்மதக் களிறு மீந்தான். இ-ள். மந்தியைக் கையாலேதழுவிக்கொண்ட ஒழுக்கத்தை யுடையமகப்போலே தன்கட் பத்தியை விடாதே நவின்ற மன்னர்க்கு நிதிமுதலியவற்றை யீந்தானென்க. உம்மைவிரிக்க. “மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு-மவையு மன்ன வப்பா லான” (தொல்.மரபு.14)என்றார். (194) 2572. கோமகன் கோல மான்றேர்க் கோவிந்த னென்னுங் கொய்தார் மாமற்கு மடங்க லாற்றற் கட்டியங் கார னென்ற தீமக னுடைய வெல்லாந் தேர்ந்தனன் கொடுத்துச் செல்வ னோவலில் கறவை யொத்தா னுலோகபா லற்கு மாதோ. இ-ள். சீவகன்கோவிந்தனென்னுமாமற்குக் கட்டியங் காரனுடைய பொருள்களெல்லாவற்றையும் ஆராய்ந்து கொடுத்துச் செல்வனாகிய உலோகபாலனுக்குச் சுரபியை யொத்தானென்க. (195) 2573. பேரிடர் தன்க ணீக்கிப் பெரும்புணை யாய தோழற் கோரிடஞ் செய்து பொன்னா லவனுரு வியற்றி யூரும் பாரிடம் பரவ நாட்டி யவனது சரிதை யெல்லாந் தாருடை மார்பன் கூத்துத் தான்செய்து நடாயி னானே. இ-ள். தாருடையமார்பன் றன்கணிடரைநீக்கித் தெப்ப மாகிய சுதஞ்சணனுக்கு ஒருகோயிலைச்செய்து அவன்வடிவைப் பொன்னாலி யற்றி யோரூரையும் நிலைபெறுத்தி யவன் சரிதத்தைத் தான் ஒருநாடகமாகச்செய்து நடத்தினானென்க. (196) 2574. ஊண்விளை யாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத் தான்விளை யாடி மேனா ளிருந்ததோர் தகைநல் லாலைத் தேன்விளை யாடு மாலை யணிந்துபொற் பீடஞ் சேர்த்தி யான்விளை யாடு மைந்தூ ரதன்புற மாக்கி னானே. இ-ள். உறுவலி, இனிப்பெறாதார் யாரென்றுசிந்தித்து மேனாட் டான்விளையாடியிருந்த ஆலத்திற்கு இதற்குச் செய்யு முபகாரம் இதுவென்று அதற்கேற்ப மாலையை யணிந்து பீடத் தைச்சேர்த்தி யைந்தூரை யதற்கு இறையிலியாக்கினா னென்க. அதனிழலிலே பசுக்கள்கிடத்தல் அதற்கறமாகுமென்றும்,அவற்றின் பால் அதற்குச்சொரிதற்குமாகஆன்விளையாடு மைந்தூ ரென்றார். (197) வேறு 2575. கொட்ட மேகம ழுங்குளிர் தாமரை மொட்டின் வீங்கிய வெம்முலை மொய்குழ லட்டுந் தேனழி யும்மது மாலையார் பட்ட மெண்மரும் பார்தொழ வெய்தினார். இன்-பொரு. தேனினமொய்க்குங்குழல். அழியும் மதுவைச் சொரிமாலை. இ-ள். முலையினையுங் கொட்டமேகமழுங் குழலினையுமுடைய மாலையாரெண்மரும் பார்தொழும்படிபட்டமெய் தினா ரென்க. (198) 2576. பஞ்சிசூ ழல்குற் பல்வளை வீங்குதோள் வஞ்சி நுண்ணிடை வம்பணி வெம்முலை விஞ்சை யன்மகள் சீறடி வீழ்ந்தன ரஞ்சி லோதிய ரும்பவிழ் கோதையார். இ-ள். அங்ஙனம் பட்டமணிந்தபின்பு குணமாலைமுதலிய வெழுவரும் அல்குன்முதலியவற்றையுடைய தத்தையை வணங்கினா ரென்க. (199) 2577. வீடி லைந்தரைக் கோடி விருத்திமே னாடி யாயிர நாடொறு நங்கைமார்க் காடு சாந்தடி சிற்புற மாக்கினான் கோடு வாலொளிக் குங்குமக் குன்றனான். கோடு வாலொளி-நுடங்குகிற அழகியவொளி. இ-ள். குன்றனான்,நங்கைமார்க்கு ஐந்தரைக்கோடிபொன் விடுதலில்லாத நாடுகளைச் சீவிதமாகவிட்டு, அதன்மேலே இவர்க்கு அண்ணிதாகவேண்டுமென்று நாடிச்சாந்துக்கும் அடிசி லுக்கும் நாடொறும் ஆயிரம்பொன்னுக்கு இறையிலியாக் கினானென்க. (200) 2578. ஆனை மும்மத மாடிய காடெலா மானை நோக்கியர் வாய்மது வாடின வேனன் மல்கிவெண் டேர்சென்ற வெந்நிலம் பானன் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே. மான் நைகின்ற நோக்கியர். இ-ள். இவன் றிருந்துதலின், யானைதிரிந்த காடுகளெல்லாங் கணவரோடு கூடியமகளிர் கொப்புளித்த மதுவை யாடின; பேய்த்தேர் பரந்த நிலமெல்லாம் பானல் பூத்துப் பால்போலும் அன்னம் பரந்தனவென்க. “புறவே, யொள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன” (பதிற்.13) என்றார் பிறரும். (201) 2579. மாரி மல்கிவ ளங்கெழு மண்மகள் வாரி மல்கிவ ரம்பில ளாயினா ளாரி யாவடி சிற்றளியா னெய்வார்ந் தேரி யாயின வெங்கணு மென்பவே. இ-ள். இவன்செய்கின்ற அற்றத்தின்மிகுதியாலே திங்கண் மும்மாரிபெய்து உலகம் விளைவுமிக்குத் தன்னெல்லையைக் கடந்தது; அதன்மேலாக மடைப்பள்ளியினின்றும் நெய்யொழுகுதலாலே யெவ்விடமும் எரியாயினவென்க. எனவே பசுக்கள் மிகப் பால்பொழிந்தனவென்றார். (202) 2580. ஏக வெண்குடை யின்னிழற் றண்ணளி மாக மாக்கட லெல்லை நிழற்றலாற் போக பூமியும் பொன்கிளர் பூமுடி நாகர் நாகமு நாணி யொழித்தவே. இ-ள். இன்னிழற்குடை மாகத்திலேதீண்டித் தண்ணளி யாலே யுலகைநிழற்றலால், இதற்கு உத்தரகுருவும், பொன்னுலகும், நாகருடையநாகலோகமும் நாணித் தம்பெருமையைக் கைவிட்டன வென்க. (203) 2581. வண்டு மேய்ந்து வரிமுரல் பூஞ்சிகைக் கொண்டை வென்றகண் ணார்களுங் கேள்வரு முண்டு மூத்திடை யூறிலர் சேறலாற் பண்டை யூழியிற் பார்மலி வுற்றதே. இ-ள். மகளிரும் மைந்தருநுகர்ந்து முறையேமுதிர்ந்து மக்கட்கு விதித்த வாயுளில் இடையூறின்றிச் சேறலாலே பார் பண்டை யூழிபோலே மலிவுற்றதென்க. வரி-பாட்டு. பண்டையூழி கிருததாயுகம். (204) 2582. செருநாடு செஞ்சுடர்வேற் றிருகு செம்பொற் கனைகழற்காற் றிருநாடு தேம்பைந்தார்ச் செல்வன் செவ்வி பெறாதொழிந்து பெருநாட் டருங்கலங்கள் சுமந்து பேரு மிடம்பெறாஅ தொருநாட் டரசுணங்க வுரவோன் கொற்ற முயர்ந்ததே. இ-ள். செருவைநாடும்வேலினையும், காலினையும், திருமகணாடுந் தாரினையுமுடைய செல்வனது சமயத்தைப் பெறாமை யினாலே காட்சியொழிந்து வேற்றுநாட்டிற்கலங் களைச் சுமந்து அசையுமிடம்பெறாதே யொருநிலையிலேநின்று அரசுணக்கும்படி யவன்வெற்றி யுயர்ந்ததென்க. நாட்டு-நிலை. இனி ஒருநாட்டுக்குவேண்டும் அரசென்று மாம். (205) வேறு 2583. வலையவர் முன்றிற் பொங்கி வாளென வாளை பாயச் சிலையவர் குரம்பை யங்கண் மானினஞ் சென்று சேப்ப நிலைதிரிந் தூழி நீங்கி யுத்தர குருவு மாகிக் கொலைகடிந் திவற லின்றிக் கோத்தொழி னடாத்து மன்றே. இ-ள். அவன்,முன்றிலிலே வாளைபாயக் குரம்பையிலே மானினந் தங்கக் கொலைகடிந்து மக்கட்குப்பேராசையுமின்றாக நடாத்துமென்க. இவ்வூழியிலே யுலகந் தன்னிலைதிரிந்து நீங்கி யுத்தர குருவுமாகவெனத் திரித்து நடாத்துமென்பதனோடு முடிக்க.(206) வேறு 2584. கதங்கனல் யானை நெற்றிக் கட்டிய பட்ட மேபோன் மதங்கமழ் கோதை யல்குன் மனாக்கிடந் திமைத்துக் காமப் பதம்பல பார்க்குஞ் சாயற் பாவைமற் றநங்க மாலை விதம்படக் கருதி மாதர் விளைத்தது விளம்ப லுற்றேன. யானையினெற்றியிற் பட்டம்போலே யல்குலிலே மணி கிடந்திமைக்கப்பட்டுக் காமத்தையுண்டாக்குஞ் செவ்வி பலவற்றையும் நோக்கும் பாவை. மதம்-தேன். கோதையையுஞ் சாயலையுமுடைய பாவை. ‘இமைப்பவும்’ பாடம். பாவை யென்றது தேசிகப்பாவையை. மற்று-வினைமாற்று. இ-ள். அவள் அநந்கமாலை கூற்றிலே தான்படவே யிவற்குக் காதல்வினையுமாகக்கருதிக் காதலைவிளைத்தமை கூறலுற்றே னென்றாரென்க. என்றது-பதுமையாருடன் கூட அழைத்துக் கோடன் முறை மையன்மையிற் பின்பு அமைக்கக்கருதியிருந்த தேசிகப்பாவை, சீவகன் றன்னிடத்தன்பின்மையிற் றன்னை மறந்தானாகக்கருதித் தானே வந்தவள், சீவகன்கருத்தறியாதே யவன் அநங்கமாலையை யுட்கொண்டிருப்பானாகக்கருதி யவடோழி யோலைகொண்டு வந்தாளாக நடித்ததோர் செய்தியைக் கூறுகின்றாரென்றவாறு. “தானுடைமுல்லையெல்லாந் தாதுகப் பறித்திட்டான்” (சீவக.686) எனவே கட்டியங்காரன் புணர்ந்தமை பெற்றாம். அதனாற் பிள்ளையார் அவளைப் புணர்ந்தாராக மேற்கூறுதல் தேவர்க்குக் கருத்தன்றென் பதுணர்க. (207) வேறு 2585. ஈர்ந்தண் கோதை யிளையார்குழாத் திடையா ளெங்கோ னடிசேர்வலென் றார்ந்த செந்தா மரைமுகத்தினா ளடிகள் வந்தீங் ககன்கடையுளாள் சார்ந்த சாயற் றடமாமுலைத் தையல் வல்லே வருகென்றான் சேர்ந்து மன்னர் முடிவைரவிற் றிளைக்குஞ் செம்பொற் செறிகழலினான். மன்னர்முடிசேர்தலாலே வைரத்தினொளி திளைக்கு மடியினான். இ-ள். அடிகளே! தாமரை முகத்தினாளாகிய கோதை சேடியர் திரளிடத்தாளாய் வந்த எம்மரசனைக்காண்பேனென்று தலைவாயிலிலே நின்றாளென்று வாயிலோனிசைப்ப, அவனும் அவள்விரைய வருவாளாக வென்றானென்க. நாமழைப்பதற்கு முன்னேதேசிகப்பாவை வந்தாளென்றுணர்தலின், வருக வென்றான். அன்றி யநங்கமாலையை வல்லேவருக வென்றா னாயின், இனி அவள் எக்காலத்து வருவாளென்று அவள்வரவை விரும்பியிருந்தானாம்; ஆகவே யவளைத் தீண்டி யொப்பித்தலிற் றனக்கு நிகழ்ந்தவேட்கையைக் கட்டியங்காரற்கஞ்சிக் கரந்திருந்து அவன்அவளை வலிதிற்கொண்டு போதற்கும் பொறுத்திருந் தானாம்; ஆகலின், அவன் வீரத்திற்குக் குற்றந்தங்குமென்றுணர்க. (208) 2586. அருவிலை நன்கலஞ் செய்போர்வை யன்ன நாண வடியொதுங்கிச்சென் றுருவ மொவ்வா தொசியுநுசுப் பொல்கிக் கோமா னடிதொழுதபின் மருவின் சாயன் மணிமெல்விரல் கூப்பி யோலை மரபினீட்ட விரவி யென்ன விளங்குமொளி யிறைவன் கொண்டாங் கதுநோக்குமே. நல்லகலத்தைப் புறத்தேகாட்டும் போர்வை. ஓசியும்-முறியும். இ-ள். சாயல், போர்வையுடனே தன்பழையவுருவமொவ்வா படியன்னம் நாண நடந்துசென்று நுசுப்புவளையும்படி வளைந்து கோமானடியை வணங்கின பின்பு விரலைக்கூப்பி முறைமையாலே யோலையை நீட்ட, அதனை வாங்கிக்கொண்டு வாசிக்குமிறைவ னென்க. இது பெயரெச்சம். (209) 2587(1) அடிகள் கண்டாங் குவந்தருளுக வநங்க மாலை யடிவீழ்ச்சிமுன் கொடிய வேலான் கொதித்தரங்கி னீக்கிக் கோயிற் சிறைவைத்தபின் கடிசெய் பைந்தார்க் கமழ்மாலைவேற் கந்து கற்குச் சிறுவயானிப் படிய னல்காய் பசுமணிகள்வேய்ந் தோங்கும் பைம்பொற் செறிகழலினாய் இது முதல் “அறனிழலாய்” (சீவக.2590) என்னுங் கவி யளவும் ஓலைப் பாசுரம். மாலை-வேலிற்கடை. அனலைக் காயுமணியும், பசு மணியும் வேய்ந்து. 2588(2). என்ன நாளு மரற்ப்பொறான் விடுப்பப் போகி யினமழைகள் மொய்த் தன்னந் துஞ்சு மடிக்குடிலினுள் ளன்றியான் கொண்ட நாடகத்தினைத் துன்னி நம்பி யுருவுதீட்டித் தொங்கல் வேய்ந்து தொழுதாற்றநீ மன்னர் மன்ன மதிதோய்குடையாய் மகளிர் காம மறைத்தொழிதியோ. துன்னி-துன்ன. தொழுதாற்ற-தொழுதுசெல்ல. மகளிரிடத் திற் காமத்திற் புலப்படாதே யொளித்த அதனைத் தவிர்கின் றாயோ. 2589(3) கண்க டுஞ்சா கதிர்முத்தமே காலுங் கையார் வளை கழலுமாற், பண்கொள் சொல்லார் மாமைநீங்கிப் பைம்பொன் போர்த்த படா முலைகளு, மண்கொள் வேன்மன்னர் நண்பின்மையை வையக் கெல்லா முடனறையவோ, பெண்க ளாவி விடுத்தொழிபவோ பெரியோர் நண்படைந் தார்பெயர்பவோ. மன்னர்க்கு நட்பின்மை யுலகுக்கெல்லாஞ் சாற்றவோ. மகளிராவி யவரைக் கைவிட்டுப்போகவமையுமோ. நட்பை யடைந்தார் காண்கின்ற பெரியார் பெருமை நின்னைவிட்டுநீங்க வமையுமோ. 2590(4) அறனிழலா யுலகளிக்கு நின்னார மாலையணி வெண்குடைப் புறனிழலி னயலேனோயான்புல்லா மன்னர்நிணம் பொழியும்வேன் மறனிழன் மதயானையாய் வந்தவென் றோழி வாமலேகை திறனழி யாமையின்னே விடுத்தருளுக தேர்வேந்தர் வேந்தனே. அறநிழலாய்-அறத்தினிழலையுடையாய். புறன்-இடம். மறனிழல்-மறத்தினதொளி. இ-ள். ஓலையை வாங்கிக்கொண்டு வாசிக்குமிறைவன், அடிகள் அநங்கமாலை வணக்கத்தை யாங்குக் கண்டு உவந்தருளுக வென்று அவள்வணக்கத்தை நோக்கி, பின்பு கட்டியங்காரன் கோபித்து அரங்கினின்று நீக்கிச் சிறை வைத்தபின்பு, சிறுவனே! கழலினாய்! என்று யான் இப்படி நாளுமரற்றப் பொறானாய் அவன் போகவிடப் போய் அடிச்சேரியிலே யிருந்த தன்றி யான்ஆடின நாடகத்தினைத் தான் பார்த்திருக்கின்றானாகத் தன்னுருவென்ன வெழுதி வேய்ந்து, மன்னனே! குடையாய்! நீயொழிதியோ? பெயர்பவோ? அறையவோ? ஒழிபவோவென்று கூறி யவ்வுருவைத் தொழுது யான் செல்லா நிற்கவும், என்கண்கள் துஞ்சாவாய் நீரையேகாலும்; வளை கழலாநிற்கும்; முலைகளும் பசந்தன. இங்ஙனம்வருந்துதற்கு யான் நின்குடையிடத்து நிழலின் நீங்கியஅயலிடத்தேனோ? அல்லேனாதலின், யானை யாய்! வேந்தனே! வந்த வென்றோழி யாகிய வாமலேகை வருந்தா மற் கூறி யின்னே விடுத்தருளுவாயாக வென்று வாசித்தானென்க. இவன் அநங்கமாலையை யுட்கொண்டிருப்பானாகக் கருதியி வற்கு அவளெழுதின ஓலைகொண்டு வந்தாளொரு தோழியாகத் தேசிகப்பாவை நடித்தாள். இதனாற் றன் வேட்கை யறிவித் தாளாயிற்று. (210-13) 2591. புள்ளும் யாழுங் குழலுமேங்கப் புனைந்து வல்லா னினைந்தியற்றிய பள்ளிச் செம்பொற் படையமளிமேன் மழலை மணியாழ் தான்வெளவிக் கொள்ளுந் தீஞ்சொ லலங்காரப்பூங் கொடியைப் புல்லி மணிக்குவட்டினை யெள்ளி வீங்கித் திரண்டதோண்மேற் குழைவில் வீச விருந்தானே. புள்-வளை; “புட்கை போகியபுன்றலை மகார்” (மலை படு.253) என்றார். பள்ளி-இடம். யாழ் கருதும் மழலைத்தீஞ் சொல்லையுடைய கொடி. இ-ள். அங்ஙனம் வாசித்தவன், தேசிகப்பாவைநடித்த நிலைக்கு மகிழ்ந்து அவள்கையில் வளையும் யாழுங் குழலுமேங்கப் பாட்டைக் கேட்டு அலங்காரத்தையுடைய வல்லியையொப் பாளைத் தன்றோள்மேற்புல்லி, வல்லான் நினைத்து கைசெய்தியற்றிய விடத்தில் அமளிமேலே வீச இருந்தானென்க. தாளத்தையொற்றுதலின், வளையொலிப்பவென்றார். (214) 2592. அங்கை சேப்பக் குருகிரங்கவலங்கலம்பூங்குழறுயல்வர மங்கை நல்லார் பவளவம்மி யரைத்த சாந்த மலர்பெய்மாலை பொங்கு தூமக் கொழுமென்புகை புரிந்த பஞ்ச முகவாசமுந் தங்கு தாம மார்பினாற்குந் தைய லாட்குங் கொண்டேந்தினாரே. இ-ள். மங்கை யங்கைசேப்ப வளையிரங்கத் துயல்வர அரைத்த சாந்தமுதலியவற்றைச் சீவகற்குந் தேசிகப்பாவைக்கும் நல்லாரேந்தினா ரென்க. கொண்டு-இவர்கள்கூட்டத்தையுட்கொண்டு. தூமம்-தூமமுட்டி; ஆகுபெயர். (215) 2593. அருளு மாறென்னை யநங்கமாலை யடித்தி தோழி யன்றோவெனத் தெருளலான் செல்வக் களிமயக்கினாற் றிசைக்கு மென்னறி வளக்கியகருதி மருளிற் சொன்னாய் மறப்பேனோயா னின்னை யென்ன மகிழைங்கணை யுருளு முத்தார் முகிழ்முலையினா ளுள்ளத் துவகை தோற்றினாளே. இ-ள். நீயென்னை யருளுதற்குக் காரணமென்னை? யான் அநங்கமாலையாகிய அடித்திடையுடைய தோழியன்றோ வென்று அசதியாடிக் கூறினாளாக, அவனும்அதற்கு மறுமொழி கூறுகின் றவன் நாற்றிசைச்கும் என்னறிவை யளந்து காட்டவேண்டியிவன் செல்வத்தாற்பிறந்த களிமயக்காலே யென்னைத்தெளியானென்று கருதி நின்பேதைமையானே யிங்ஙனங்கூறினாய்; இந்நடிப்பு வேண்டா; யான் நின்னை மறப்பேனோ வென்ன, அவள் உள்ளத் தே யுவகை தோற்றினா ளென்க. மயக்கின், இன்-ஏதுப்பொருட்டு. அறிவை யளந்து காட்ட வெனவே குறிப்பான் அறிவின்மையை யீண்டுக் காட்டிற்று. இனி ‘ஆற்றிசைக்கு’மென்றுபாடமோதி மயக்கினாற்றெருளா னென்று கருதி நன்னெறியிலே யிசைக்குமென்னறிவை யளக்கியவென்றுமாம். திகைக்குமென்றுபாடமாயின், மயக்கி னாற் கைக்குந் தெருளானென்க. யான்நின்னை மறப்பேனோ வெனவே தேசிகப்பாவையே யாயிற்று. காமனைங்கணையைத் தன்னிடத்தே யுடைய தேசிகப்பாவையெனவே வேட்கையைத் தானிகழ்த்துவாளாயிற்று. தோற்றினாளெனச் சினைவினை முதலோடுமுடிந்தது. (216) 2594. முறுவற் றிங்கண் முகவரங்கினமேன் முரிந்து நீண்ட புருவக்கைக, ணெறியின் வட்டித் துநீண்டவுண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்துமாடப், பொறிகொள் பூஞ்சிலம்பு மேகலைகளும் புணர்ந்த வின்னியங் களார்ப்பவேந்த, னறியு நாடகங் கண்டான் பைந்தா ரலர்ந்து மாதர் நலங்குழைந்ததே. இ-ள். வேந்தன், சிலம்பும் மேகலையுங் கூடிய வின்னிய மார்ப்ப முறுவலையுடையதோர் திங்கள்போலு முகமாகிய வரங்கிலே புருவமாகிய கைகளைச்சுற்றிக் கண்களாடத் தான் முன்பு அவளிடத்துக் கண்டநாடகத்தினை மீட்டுங்கண்டான்; அப்பொ ழுது அவணலம் அவசமாய் நெகிழ்ந்ததென்க. நெறியின்-அப்புணர்ச்சிக்காலத்து நிகழுமுறையானே. சென்று-செவியுறச் சென்று. அவன்றொழிலாற் சிலம்பும், அவடொழிலான் மேகலையுமார்ப்ப. அறியு நாடகவெனவே முன்பு புணர்ந்த தேசிகப் பாவை யென்பது பெற்றாம். (217) 2595. நான்மருப்பின் மதயானை நறியபைந்தா மரைமடந்தையைத் தேன்மதர்ப்பத் திளைத்தாங்கவன் றிருவின்சாய னலங்கவர்ந்தபி னூன்மதர்த்த வொளிவேற்கண் ணார்பரவவிவ் வாறொழுகுமன்றே வானகத்து நிலத்துமில்லா வண்ணமிக்க மணிப்பூணினான். நான்மருப்பின் மதயானை யென்பது யானை யிரண்டினை யுணர்த்திற்று. திரு-அழகு. தம்மை நோக்கினாருடம்பு மதர்த்தற்குக் காரணமான கண். வானிலுநிலத்திலு மில்லாதவனென்றார், பிறன்றார நச்சாத குணமுண்மையின். இ-ள். பூணினான், இரண்டானை பக்கத்தேநின்று நிரைச்சொரிய நடுவே தாமரைப்பூவிலேயிருந்த திருமகளைத் திளைத்தாற்போலே யத்தேசிகப்பாவை நலத்தைநுகர்ந்தபின்பு, மகளிர் பரவப் பின்பும் அவன் இங்ஙனமொழுகாநிற்குமென்க. “வரிநுத லெழில்வேழம் பூநீர்மேற் சொரிதரப்-புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித்-திருநயந் திருந்தன்ன” (கலித்.44) என்றார் பிறரும். இனி ஐராவதத்தின்மேலே பொய்கையாயதிற் றாமரை யிலே யிருக்குந் திருவென்பாருமுளர். (218) வேறு 2596. நரம்புமீ திறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழு மிரங்குதீங் குழலு மேங்கக் கிண்கிணி சிலம்பொ டார்ப்பப் பரந்தவா ணெடுங்கட் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல வரங்கின்மே லாடல் காட்டி யரசனை மகிழ்வித் தாளே. இ-ள். அத்தேசிகப்பாவை, புணர்ச்சியாகிய நாடகமொழிய நரம்பினோசையைத் தப்பாத முழவுமுதலியன வேங்கக் கிண் கிணி யுஞ் சிலம்புமார்ப்ப அரங்கின்மேலே கூத்தைக்காட்டி யரசனை மகிழ்வித்தாளென்க. “இடக்க ணிளியா வலக்கண் குரலா-நடப்பது தோலியற் கருவி யாகும்.” என்றார். (219) 2597. கடற்படை மன்னர் தம்மைக் காதலின் விடுத்துக் காமன் றொடுத்தகோன் மார்பிற் றங்கத் தூமலர்க் கொம்ப னாளை வடித்தலின் னமிர்தி னாரப் பருகலின் மழைக்கட் செவ்வாய் துடித்துவண் டுண்ணத் தூங்குஞ் செந்தளி ரொத்த தன்றே. விடுத்து-விடுக்க. இ-ள். கூடலிருந்து நாடகங்கண்டவரசரைக் காதலோடே போக விடக் காமனம்பு அவனெஞ்சிலே தங்குதலின், அத்தேசிகப் பாவையை யமிர்துபோலே பருக, அவள் செவ்வாய் துடித்து மழைக்கண் வண்டுண்ணத் தூங்குஞ் செந்தளிரை யொத்த தென்க. வண்டு-அதரத்தில் வடுவிற்குவமை; இல்பொருளுவமை. இசையுங் கூத்துங் காமத்திற்குத் தீபனமாகலிற் பின் புணர்ச்சி கூறினார். (220) 2598. இளைமையங் கழனிச் சாய லேருழு தெரிபொன் வேலி வளைமுயங் குருவ மென்றோள் வரம்புபோய் வனப்பு வித்திக் கிளைநரம் பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந் தீன்ற காம விளைப யனினிதிற் றுய்த்து வீணைவேந் துறையு மாதோ. பொன்-ஆகுபெயர். போய்-போக. இ-ள். பூணாகிய வேலிசூழ்ந்த இளமையாகிய கழனியிலே வீணைவேந்து தன்சாயலாகிய ஏராலே யுழுது தன்வனப்பை வித்துகையினாலே அஃது இசையுங் கூத்துமாக நிறத்தெழுந்து பின்பு ஈன்ற காமமாகிய விளைவின் பயத்தை யவன்றான் இனிதின் நுகர்ந்து உறையாநிற்குமென்க. தோளாகிய வரம்பு சூழ்போகாநிற்க வுழுதென்க. தனது சாயலான் விளைந்த அழகைக்கண்ட வளவில் காமவேட்கை விளைவித்தற்குக் கூத்தையும் பாட்டையும் நடத்துதலிற் பிறந்தது காமமென்க. (221) இலக்கணையாரிலம்பக முற்றிற்று. பதின்மூன்றாவது முத்தியிலம்பகம். 1.விசயமாதேவியார் துறவு. 2599. நீரேந்தி நெய்ம்மிதந்து நிணம்வாய்ப் பில்கி யழல்விம்மிப் போரேந்திப் பூவணிந்து புலவு நாறும் புகழ்வேலோன் காரேந் திடிமுரச மார்ப்பக் காய்பொற் கலன்சிந்திப் பாரேந்திச் செல்லுநாட் பட்ட தாநாம் பகர்வதே. இ-ள். நெய் மிதந்தே கிடக்கப்பட்டுக் கோபத்தீ நிறைந்து போர்த் தொழிலை மேற்கொண்டு நிணத்தை வாயினின்றுஞ் சிறு துவலையாக விட்டு மண்ணுநீராடிப்பூவைக்கொண்டு வழிபடப்பட்டுப் பின்னும் புலவுநாறுதற்குக் காரணமான வேலையுடையோன், காரேந்தின விடிபோலுந் தியாகமுருசு முழங்கப் பூண்களை வரையாமற்கொடுத்துப் பாரைக்காத்துச் செல்லு நாளிலே; பிறந்ததோர் செய்தி நாம்மேற் கூறுகின்ற தென்றா ரென்க. “வென்ற வாளின் மண்ணோடொன்ற”(தொல்.புறத்.13) என்று உழிஞை யிலும், “மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும்”(தொல்.புறத்.36) என்றுபாடாண்டி ணையிலுங் கூறிய வாளினை வாகைத்திணையிற் கூறாது, “பெரும்பகை தாங்கும் வேலினானும்”(தொல்.புறத்.21) என்று வேலிற்கே வாகைகூறியது, காவற்றொழில்பூண்ட மாயோனைம் படையும் போலாது அழித்தற்றொழிலோர்க்கேயுத்தாய் முக்கட் கடவுளும் முருகனுங் கூற்றுமேந்தி வெற்றிபெறுதற்குச் சிறந்த தென்பது பற்றியெனப் புறத்திணையியலுட் கூறினமையால், ஈண்டும் வேலினை வியந்து மண்ணுநீராட்டின வெற்றியைக்கண்டோர் புகழ்தலிற் ‘புகழ் வேலெ’ன்றார். இது கட்டியங்காரன் பட்டபின் பகையரசரை வென்றமை கூறிற்று. (1) 2600. விண்பாற் சுடர்விலக்கி மேகம் போழ்ந்து விசும்பேந்தி மண்பாற் றிலகமாய் வான்பூத் தாங்கு மணிமல்கிப் பண்பால் வரிவண்டுந் தேனும் பாடும் பொழிற்பிண்டி யெண்பா லிகந்துயர்ந்தாற் கிசைந்த கோயி லியன்றதே. இ-ள். எட்டுக்கன்மங்களினீங்கி யெட்டுக் குணங்களாலுயர்ந் தாற்குப் பொருந்தினகோயில், அரசனேவலாலே மேகத்தைப் பிளந்து இருசுடரையும்விலக்கி வான்மீனைப் பூத்தாற் போல மணிகள் மல்குதலாலே விசும்பின்மேலாய் மண்ணிற் கோயில் கட்குத் திலகமாய்ப் பொழிலாகிய பிண்டிக்குள்ளே சமைந்த தென்க. விசும்பு-தேவருலகு. வரி-பாட்டு. (2) 2601. அடிசிற் கலங்கழீஇக் கருனை யார்ந்த விளவாளைமடுவின் தர்த்துணரா வாழைத் தண்டிற் பலதுஞ்சு நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி விழவயர்ந்து வடிநீர் நெடுங்கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே. நியமம்-ஆகுபெயரால் ஊராயிற்று. இ-ள். மடுவின்கண்ணே யடிசிலாக்குங் கலங்களைக் கழுவுதலாலே பொரிக்கறியை நுகர்ந்த வாளைகள் செருக்கிக் கரை யேற அறியாவாய் வாழைத்தண்டின்மேலே பலவுந்துயிலுங் கழனி சூழ்ந்த ஊரை யிறையிலியாகவிட்டுத் திருநாளையுமியற்றிப் பரத்தை யருடைய கூத்தையும் பாட்டையுமுண்டாக்கினா ரென்க. அரசனேவலின் அமைச்சர் இயற்றுவித்தார். (3) 2602. அல்லி யரும்பதமு மடகுங் காயுங் குளநெல்லு நல்ல கொழும்பழனுங் கிழங்குந் தந்து நவைதீர்த் தார்க் கில்லையே கைம்மாறென் றின்பமெல்லா மவர்க்கீந்தாள் வில்லோன் பெருமாட்டி விளங்கு வேற்கண் விசயையே. விசயை தானையுடன் தனித்துவாராமற் கூடப்போந்தமை பற்றி நவைதீர்த்தாரென்றார். கைம்மாறில்லையென்றது-அவர்கள்பொருள்கண் மேற் பற்றற்றவராதலின், அவர் செய்தவுதவிக்குத் தன்னாற் செய்யலாமுதவி யின்றென்றுகருதி. தான் கோயில் சமைப்பித்துப் பூசனைசெய்த பயனெல்லாம் அவர்க்கு நீர்பெய்து கொடுத்தாள். இ-ள். சச்சந்தன் றேவியாகிய விசயை, அல்லிமுதலியஉணவைத் தந்து நவை தீர்த்தார்க்குக் கைம்மாறில்லையென்று ஈந்தாளென்க. (4) 2603. தனியே துயருழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டு ளினியா ளிடர்நீக்கி யேமஞ் சேர்த்தி யுயக்கொண்ட கனியார் மொழியாட்கு மயிற்குங் காமர் பதிநல்கி முனியாது தான்காண மொய்கொண் மாடத் தெழுதுவித்தாள். இ-ள். அருளுடைமையின் எல்லார்க்குமினியாளாகிய விசயை, தன்னிடரைத்தீர்த்துத் தாபதப்பள்ளியிலேசேர்த்துப் பிழைப்பித்துக் கொண்ட தெய்வத்திற்கும் அஃதுறையுஞ் சுடுகாட் டிலே கோயிலியற்றி மயிற்கும் எழுதுவித்தலைச் செய்தாளென்க. விசயை தனித்து வருத்தமுறுகையினாலே, பையப்பைய வீழ்ந்த மயிற்குந் தானிருக்கின்ற மாடத்தே தானெப்பொழுதுங் காணும்படி யெழுதுவித்தலைச் செய்தாளென்க. மயிற்கு மென்னு நான்காவது அச்சிறப்பைக் கொடுத்தாளென்பதனோடு முடியும். உம்மையிரண்டுஞ் சிறப்பு. (5) 2604. அண்ணல் பிறந்தாங் கைஞ்ஞூற் றைவர்க் களந்தான்பால் வண்ணச் சுவையமுதம் வைக நாளுங் கோவிந்தன் வெண்ணெ யுருக்கிநெய் வெள்ள மாகச் சொரிந்தூட்டப் பண்ணிப் பரிவகன்றாள் பைந்தார் வேந்தற் பயந்தாளே. தோழர் ஐஞ்ஞூற்றுநால்வர்க்குஞ் சீவகனுக்குமாக ஐஞ்ஞூற் றைந்துபிள்ளைகளுக்குப் பாலளந்து. வண்ணவமுதம்-பருப்புச் சோறு. கோவிந்தன்-நந்தகோன். இ-ள். விசயை, சீவகன்பிறந்தவிடஞ் சுடுகாடாகக் கிடவாத படி சாலையாக்கிக் கோவிந்தன் அதற்குரியனாய் நின்று நாடோ றும் பிள்ளைப்பாலுமளந்து நெய்யைச்சொரிந்து அமுதத்தையு மூட்டப் பண்ணி அவ்வறம் வைகுகையினாலே பரிவையகன்றா ளென்க. பரிவு-இவ்விடத்துக்கூறியனவெல்லாஞ் செய்து முடிக்க வேண்டுமென்று நினைத்திருந்த வருத்தம். (6) 2605. தோடார் புனைகோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளைப் பீடார் பெருஞ்சிறுவற் பயந்தீர் வம்மி னெனப்புல்லி நாடார் புகழாளை நாண மொழிகள் பலகூறிக் கோடாக் குருகுலத்தை விளக்கிட் டாளை விளக்கினாள். புகழாள்-விசயை; ஐ-அசை. விளக்கிட்டாள்-சுநந்தை. இது சுட்டுப்பெயராம். இ-ள். விசயையைச்சேர்ந்துசுநந்தை கோதை கையாற்றொழு தாளை யவ்விசயை புல்லிக்கொண்டு பின்னும் அவளைச் சிறுவற்பயந்தீர்! அணித்தாகவம்மினென நாணமுடைய மொழி கள் பலகூறி விளக்கினாளென்க. உலகம் பெருமைநிறைந்தற்குக் காரணமான சிறுவனை மீட்டும் நீர் பயந்தீராதலின் என்னிலு நல்வினையுடை யீரென்றலின் இதுநாணமொழியாயிற்று. இவளே யிவ்வுலகைப் பிழைப்பித்தா ளென்றலின், விளக்கினாளுமாயிற்று. (7) 2606. மறையொன் றுரைப்பனபோன் மலர்ந்து நீண்டு செவிவாய்வைத் துறைகின்ற வோடரிக்க ணுருவக் கொம்பி னெண்மரு மிறைவி யடிபணிய வெடுத்துப் புல்லி யுலகாளுஞ் சிறுவர்ப் பயந்திறைவற் றெளிவீ ரென்றா டிருவன்னாள். இ-ள். மலர்ந்து நீண்டு ஒருமறைமொழி கூறுவனபோலச் செவியிடத்தே வாய்வைத்து உறைகின்ற கண்ணினையுடைய வெண்மரும் விசயையடியைக் கொம்பு பணிந்தாற்போலப் பணிய, அவள் அவரையெடுத்துக்கொண்டு புல்லிச் சிறுவரைப் பயந்து தெளிமினென்றாளென்க. எனவே யிருமைக்கும் பயன்கூறினாளென்க. இறைவன்-சருவக்கியன். முன்பு திருவையொப்பாள். சிறுவரில் நால்வர் உலகாளுதற்குஉரியரன்றேனுந் தங்குலத்தொழிற்கேற்ப உலகாளு தற்குரியரென்பதுபற்றி யுலகாளஞ் சிறுவரென்றாள். “மெய்தெரி வகையி னெண்வகை யுணவின்” (தொல்.மரபு.78) எனவும், “கண்ணியுந் தாரு மெண்ணின ராண்டே” (தொல்.மரபு.79) எனவும் ஆசிரியர்கூறினமையிற் றங்குலத் துக்குரிய உழுது பயன்கோடலும், அரசன்கொடுத்த சிறப்புக்களு மன்றித் தன் புதல்வராதலின் அரசாட்சிமுதலியன கொடுப்ப அவர்தாமுந் தம்வழித் தோன்றினோரும் ஆள்வரென்றுணர்க. உலகென்னுஞ் சொல் மண்™லகமுழுதுமேயன்றித் தன்கட்கூறு பட்ட நிலங்களையுமுணர்த்து மென்பது “மாயோன் மேயகாடுறை யுலகமும்” (தொல்.அகத்.5) என்னுஞ் சூத்திரத்தானுணர்க. (8) 2607. பொங்கு மணிமுடிமேற் பொலிந்தெண் கோதைத் தொகையாகிக் கங்குற் கனவகத்தே கண்ணுட் டோன்றி வந்தீர்நீ ரெங்கும் பிரியற்பீ ரென்று கண்கண் மலர்ந்திருந்து கொங்கு ணறும்பைந்தார்க் கோமா னிங்கே வருகென்றாள். இ-ள். என்றுகூறியவள், நீர் கங்குற்கனருவிடத்தே முடிமேலே யெட்டுப்பூமாலைத்திரளாய்ப் பொலிந்து தோன்றி வந்தீர்; இவ்வாறு வந்தநீர் மேலும் எவ்விடத்தும் என்னைப் பிரியற் பீராகவென்று கூறி யுடம்புமுழுதுங் கண்ணாயிருந்து பின்னர்ச் சீவகனை யிவ்விடத்தே வருவாயாகவென்றாளென்க. முன்னர்”இறைவற்றெளிவீர்” (சீவக.2606) என்றும், ஈண்டுப் ‘பிரியற் பீ’ரென்றுங்கூறினமையாற் பின்னர் என்னிடத்தே வந்து துறப்பீ ராக வென்றாளாயிற்று. (9) 2608. சிங்க நடப்பதுபோற் சேர்ந்து பூத்தூய்ப் பலர்வாழ்த்தத் தங்கா விருப்பிற்றம் பெருமான் பாத முடிதீட்டி யெங்கோ பணியென்னா வஞ்சா நடுங்கா விருவிற்கட் பொங்க விடுதவிசி லிருந்தான் போரே றனையானே. இ-ள். ஏறனையான் அதுகேட்டுப் பலரேத்தச் சிங்க நடப்பது போல நடந்து சென்று முதற் பூவைத்தூவிப் பின்னர் விசயை யடியிலே தன்முடியைத்தீண்டுவித்து இருத்தற்கஞ்சி மெய்ந்நடுங்கி யெனக்கு ஒல்லும்பணிவிடை யினி யெவ்விடத்தே யென்று வினாய் இரண்டு விற்கிடைநீளம் அகலவிட்ட தவிசின்மேலே யிருந்தா னென்க. பெருமான், னஃகானெற்று மகடூஉவுணர்த்திற்று. இவள் கூறிய வறமெல்லாந் தான்செய்து முடித்தலின், இன்னும் அவையுளவோ வென்பதுதோன்ற ‘எங்கோபணி’யென்றான். (10) வேறு 2609. கொற்றவி மகனை நோக்கிக் கூறின ளென்ப நுங்கோக் குற்றதை பிறர்கள் கூறவுணர்ந்தனை யாயி னானு மிற்றென வுரைப்பக் கேண்மோ விலங்குபூ ணலங்கன் மார்பிற் செற்றவர்ச் செகுத்த வைவேற் சீவக சாமி யென்றாள். உணர்ந்தனை என்பவென மாறுக. ஆயினானுமென்புழி, ஆன்-சாரியை. இ-ள். அங்ஙனமிருந்த மகனைநோக்கித் தேவியொரு மொழி கூறினாள்; அஃதியாதெனின், சீவகசாமி! துந்தந்தைக் குற்ற தீங்கு பிறர்கூற வறிந்தாயென்று சொல்லுவார்களாயினும் யான் இத்தன்மைத் தென்று கூறக்கேட்பாயாகவென்று கூறினா ளென்க. சாமியென்னுமொருமை நும்மென்னும் பன்மையோடு மயங்கிற்று. பூணினையும், மார்பினையும், கட்டியங்காரனையும் ஒழிந்தோரையும் வென்ற வேலினையுமுடைய சீவகசாமியென்க (11) 2610(1) நாகத்தால் விழுங்கப் பட்ட நகைமதிக் கடவுள் போலப் போகத்தால் விழுங்கப் பட்டுப் புறப்படான் புன்சொ னாணா னாகத்தா னமைச்சர் நுண்ணூற் றோட்டியா லழுத்தி வெல்லும் பாகர்க்குந் தொடக்க நில்லாப் பகடுபோற் பொங்கி யிட்டான். 2611(2) நுண்மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பி னார்தங் கண்வலைப் பட்ட போழ்தே கடுநவை யரவோ டொக்கும் பெண்iமையைப் பெண்மை யென்னார் பேருணர் வுடைய நீரா ரண்ணலைத் தெருட்ட றேற்றா தமைச்சரு மகன்று விட்டார். 2612(3) கற்சிறை யழித்து வெள்ளங் கடற்கவா யாங்குக் கற்றோர் சொற்சிறை யழித்து வேந்தன் றுணைமுலை துறத்தல் செய்யான் விற்சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேற்க ணற்சிறைப் பட்டு நாடு நகரமுங் காவல் விட்டான். 2613(4) பிளிறுமுரசத் தவார்னைப் பெருமகன் பிழைப்பு நாடிக் களிறுமென்றுமிழப் பட்ட கவழம்போற் றகர்ந்து நில்லா தொளிறுவேற் சுற்ற மெல்லா முடைந்தபி னொருவ னானான் வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ. 2614(5) வனைகலக் குயவ னாணின் மன்னரை யறுத்து முற்றிக் கனைகுர லுருமி னார்ப்பக் காவல னின்னை வேண்டி வினைமயிற் பொறியி னென்னைப் போக்கிவிண் விரும்பப் புக்கான் புனைமுடி வேந்த போவல் போற்றென மயங்கி வீழ்ந்தான். இவையைந்துமொருதொடர். இ-ள். அங்ஙனங்கூறுகின்றாள், பாம்பாலே தனதொளி மறைக்கப் பட்ட மதியைப்போலப் போகத்தாலே தன்தொளி மறைக்கப்பட்டுப் புறப்படானாய்க் காமத்தாற் கெட்டானென்று பிறர்கூறும் புன்சொற்கு நாணானாக. அதுகண்டு இத்தீங்கைத் தம்மறிவாலே வெல்லும் அமைச்சர், இங்ஙனநுண்ணிய நுசுப் பினார்தம் கண்வலைப்பட்ட பொழுதே அது பாம்புபோற் கொல்லுமென்றுகருதி, அண்ணலைப் பேருணர்வுடையநீரார் பெண்மையைப் பெண்மையென்னார் காணென்று கூறிப் பின்னும் நுண்ணூற் றோட்டியாலழுத்தித் தெருட்டிடுதலைத் தானுட் கொண்டு தன்னெஞ்சைத் தெளிவியாதே வேந்தன் துணை முலையைத் துறத்தல்செய்யானாய் வில்லைச் சிறைசெய்து வைத்தாற் போலும் புருவத்திடத்தே விளங்குங் கண்ணாகிய தப்பாத சிறையிலே யகப்பட்டுத் தீவினையாலே கூரியவறிவு போன்றுதோன்றி நாட்டையுநகரத்தையுந் தான்காத்தலைக் கைவிட்டுக் கட்டியங்காரன் கையிலே கொடுத்துப் பாகர் தொடக்கவும் அவர்க்கு நில்லாத பகடு போலே பொங்கி யிட் டானாக, அதுகண்ட வமைச்சரும் நீங்கிப் போயினார்; அவர்போக, அப்பெருமகன் வெள்ளங் கற்சியைழித்துக் கடற்செல்ல அவாவி யாங்குக் கற்றோர் சொற்சிறையழித்துப் பிழைத்த பிழைப்பைச் சுற்றமெல்லாநோக்கி அரசனுழை நில்லாதே கவழம்போற் சிதறி யுடைந்துபோனபின் தானொருவனுமேயாயினான்; அதனைக் கட்டியங்காரனுணர்ந்து குயவன் நாண்போலே மன்னரைக் கீழறுத்து அவர் தன்சுற்றத்தாரான பின் வந்து சூழ்ந்தார்ப்ப, அரசன் நின்னை யான்பெறவேண்டியென்னை மயிற்பொறியிற்போக்கித் தான் றுறக்கம்புக்கான். அந்நிலை யவற்குவந்தது, தீவினையை வித்தி வைத்து அதற்குப் பின்னை நல்வினையாக விளைவிக்க லாமையிற் காண். வேந்தனே! நீயும் இத்தன்மைத்தாகிய காமத் தினைப் போற்றுவாயாக; இனி யான்றுறத்தற்குப் போவலென்று கூற, அவனும் அதுகேட்டு மயங்கி வீழ்ந்தானென்க. வெளிறுவித்தி வச்சிரம்விளைத்தல்- ‘ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கலாகா’தென்னும் பழமொழி. (12-16) 2615(1). சீதநீர் தெளித்துச் செம்பொற் றிருந்துசாந் தாற்றி தம்மான் மாதரார் பலரும் வீச வளர்ந்தெழு சிங்கம் போலப் போதொடு கலங்கள் சோர வெழுந்தபொன் னார மார்பன் யாதெனக் கடிகண் முன்னே யருளிய தென்னச் சொன்னாள். 2616(2) பிறந்துநாம் பெற்ற வாணா ளித்துணை யென்ப தொன்று மறிந்திலம் வாழ்து மென்னு மவாவினு ளழுந்து கின்றாங் கறந்துகூற் றுண்ணு ஞான்று கண்புதைத் திரங்கி னல்லா லிறந்தநாள் யாவர் மீட்பா ரிற்றெனப் பெயர்க்க லாமோ. 2617(3) சுமைத்தயிர் வேய்ந்த சோற்றிற் றுய்த்தினி தாக நம்மை யமைத்தநா ளென்னு நாகம் விழுங்கப்பட் டன்ன தங்க ணிமைத்தகண் விழித்த லின்றி யிறந்துபா டெய்து கின்றா முமைத்துழிச் சொறியப் பெற்றா மூதியம் பெரிதும் பெற்றோம். 2618(4) கடுவளி புடைக்கப் பட்ட கணமழைக் குழாத்தி னாமும் விடுவினை புடைக்கப் பாறி வீற்றுவீற் றாயி னல்லா லுடனுறை பழக்க மில்லை யொழிமதி யத்தை காதல் வடுவுடைத் தென்று பின்னு மாபெருந் தேவி சொன்னாள். இவை நான்குமொருதொடர். 3. ஈண்டு, ‘உமைத்துழிச் சொறியப்பெற்றா’மென்பது-விழுங்கு தற்கு வாய்க்கொண்ட காலஞ் சிறிதுபொழுது விழுங்கா திருக்கவும் பெற்றோமாதலின், ஈண்டுத் தவஞ்செய்து கோடுமென வெழுந்த மனவெழுச்சிக்கண்ணே யதனை முற்றமுடித்துக் கொள்ளப் பெற்றேமென்றவாறாம். 4. என்றுசொன்னாளெனச் ‘சிதநீர்’(சீவக.2615)ரென்ற கவியோடு கூட்டுக. மதி, அத்தை, இரண்டுமசை. இ-ள். அங்ஙனம்வீழ்ந்த ஆரமார்பன் மாதரார் பலரும் பனிநீரைத்தெளித்துச் சாந்தாற்றியால் வீசுதலாலே துயில் கொண் டெழுகின்ற சிங்கம்போலப் போதுங் கலமுஞ் சோர வெழுந்த எனக்கு அடிகள் முன்பு அருளிச்செய்ததியாது? அதனை இப்பொழுது அருளிச் செய்யுமென்று கேட்க, அவளும், வாழ்து மென்னும் அவாவினுள் அழுந்தாநின்றாம்; அங்ஙன மழுந்து கின்றநாம் பிறந்து அறுதியாகப் பெற்றவாணாள் இவ்வள வென்பது சிறிதுமறிந்திலம்; அதனை நும்வாழ்வு இத்தன்மைத் தென அறியக்கூறிக் கூற்றுக் கறந்து உயிரை யுண்ணும் அன்று இப்பிறப்பினைத் தப்புதற்குத் தவஞ்செய்யப் பெற்றிலேமே யென்று வருந்திவிடுத்தலல்லது அதனைச் செய்தற்குக் கழிந்த நாளை மீட்கவல்லாரொருவருமில்லை; அது நம்மால் மீட்கலா காது; அக்கூற்று ஏவிய காலமென்னும்பாம்பு குறைவறச்சமைத்த கட்டித்தயிரால் வேய்ந்த சோறுபோலே நம்மையினிதாக வைத்து நுகர்ந்து பின்னர் ஒன்றாக விழுங்கப் பட்டு இறந்துபாடெய்து கின்றநாம் இப்பொழுது அவ்விறந்து பாட்டினுடைய வழகிய விடத்தே யிருந்துமுன்புசெய்த நல்வினை யாலே தினவுதின்ற விடத்தே சொறியப் பெற்றாமாதலிற் பெரிதும் ஊதியம்பெற்றாம்; இங்ஙனமிடம் பெற்றகாலத்துத் தவஞ்செய்யாதே நாமுஞ் சுற்றத்தின்மேல் நிகழ்கின்ற காதலை விரும்புவேமாயின், அக்காதல் வடுவுடைத்து; அஃதென்னை யெனிற் காற்றடிக்கப்பட்ட மழைக்குழாஞ் சிதறுமாறுபோலச் சிதறி விடுதற்குக்காரணமான தீவினை சிதறவடிக்கப்பட்டுச் சுற்றமெல்லாம் வெவ்வேறாய்ப் போவதல்லது கூடவுறையும் பழக்கம் அதற்கில்லை; ஆதலால் எம்மிடத்துக் காதலை நீயுமொழிவாயாகவென்று சொன்னாள்; இங்ஙனஞ் சொல்லிப் பின்னுந் தேவி சில அறவுரை சொன்னாளென்க. (17-20) வேறு 2619(1). முருந்தனைய தூமுறுவன் முற்றிழையார் சேரி யிருந்திளமைக் கள்ளுண் டிடைதெரித லின்றிக் கருந்தலைகள் வெண்டலைக ளாய்க்கழியா முன்னே யருந்தவமுந் தானமு மாற்றுமினே கண்டீர். 2620(2) உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட் டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக் குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர். 2621(3) உழந்தாலும் புத்தச்சொன் றிட்டூர்த றேற்றா திழந்தார் பலரா லிடும்பைநீர் யாற்று ளழுந்தமா லப்பண்டி யச்சிறா முன்னே கொழுஞ்சீலங் கூலியாகக் கொண்டூர்மின் பாகீர். 2622(4) பிறந்தவர்க ளெல்லா மவாப்பெரிய ராகித் துறந்துபுகழ் வேண்டாரோர் துற்றவிழு மீயா ரறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறி யாரேல் வெறும்பொருள தம்மா விடுத்திடுமி னென்றாள். வேறு 2623(5) முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய பாலடிசின் மகளி ரேந்த நல்ல கருனையா னாள்வாயும் பொற்கலத்து நயந்துண் டார்க ளல்ல லடைய வடகிடுமி னோட்டகத்தென் றயில்வார்க் கண்டுஞ் செல்வ நமரங்கா ணினையன்மின் செய்தவமே நினைமின் கண்டீர். 2624(6) அம்பொற் கலத்து ளடுபா லமர்ந்துண்ணா வரிவை யந்தோ வெம்பிப் பசிநலிய வெவ்வினையின் வேறாயோ ரகல்கை யேந்திக் கொம்பிற் கொளவொசிந்து பிச்சை யெனக்கூறி நிற்பாட் கண்டு நம்பன்மின் செல்வ நமரங்கா ணல்லறமே நினைமின் கண்டீர். 2625(7) வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட் டழுவதுபோல் வருந்து மல்கு னண்ணாச் சிறுகூறை பாகமோர் கைபாக முடுத்து நாளு மண்ணாந் தடகுரீஇ யந்தோ வினையேயென் றழுவாட் கண்டு நண்ணன்மின் செல்வ நமரங்கா ணல்லறமே நினைமின் கண்டீர். 2626(8) மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப மல்லிகைமென் மாலை சூடிக் கைதிரண்ட வேலேந்திக் காமன்போற் காரிகையார் மருளச் சென்றா ரைதிரண்டு கண்டங் குரைப்பா வோர் தண்டூன்றி யறிவிற் றள்ளி நெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்கு மிளமையோ நிலையா தேகாண். இவையெட்டுமொருதொடர். (1) இ-ள். மகளிர்சேர்ந்த விடத்தே யிருந்து இளமையாகிய கள்ளையுண்டு அற முதலியவற்றையறிதலின்றிப் பயன்படாமன் மூப்பதற்கு முன்பே யிளமைப்பருவத்தே தவமுந் தானமுநிகழ்த்து மினென்றுசொன்னாளென்க. கண்டீரென்றது வினாவொடு சிவணாதுநின்றதோரசை. (2) இ-ள். வருந்துகின்ற நோயாகிய தீயையுடைய வுடம்பினு யிரைச் சோறாக முன்னேபெய்துகொண்டு உணர்வை நெய்யாகக் கூட்டி ஆற்றலைத் துவையாகக் குடித்து அதனை யுண்ணுங் கூற்றம் உடம்பை நிலைகுலைப்பதற்கு முன்னே கொடுத்துண் மின்; நற்குணத்தை விரும்புமினென்று சொன்னாளென்க. உயிர்போவதற்கு முன்னே உணர்வும், ஆற்றலுந் தேய்த லியல்பு. (3) இ-ள். உடம்பாகிய சகடத்தை நடத்தும் பாகீர், அச்சகடந் தொழில் செய்துவருந்திப் பழகினாலும் புதியதோருயிராகிய அச்சைக்கொண்டுவந்திட்டு ஊர்தலொண்ணாதாகலான், அச்சகடத்தைத் தனக்கடைத்த காலமுள்ளவளவுஞ் செலுத்திப் பின்னரிழந்தார்பலர்; இனியங்ஙனமன்றித் தனக்கடைத்த காலத்திற்கு நடுவேயுந் தீவினை மிகுதியால் உள்ளதாகிய விடும்பையாகிய நீரையுடைய ஆற்றிலே அச்சகடமழுந்தாநிற்கும்; அங்ஙனமழுந்தி யஃது உயிராகிய அச்சு முறிவதற்கு முன்னேய தனாற் கோடற்குரிய சீலத்தை நுமக்குப் பெறுபயனாகக்கொண்டு அதனைச் செலுத்துமினென்று சொன்னா ளென்க. (4) இ-ள். பிறந்தமக்களெல்லாம் அவாப்பெரியராய்ப் புகழை வேண்டாராய் அதனைத் துற்றது துறற்ப்படுவதோர் அவிழையு மீயாராய்அறம் இத்தன்மைத்தென்பது சிறிதுமறியாராயின், அந்தஅவாப் பயனில்பொருளாம்; அதனைக் கைவிட்டுப் போகடுமினென்று சொன்னாளென்க. அம்மா-ஐயோவென்னும் இரக்கக்குறிப்பு. (5) இ-ள். முல்லை முகையைச் சொரிந்தாற்போன்று மெல்லிய தாய் இனிய வடிசிலை மகளிரெடுக்க, அதனை விரும்பிப் பொரிக் கறி கருவியாகப் பொற்கலத்தே நாடோறு முண்டவர் தீவினைசேர இவ்வோட்டகத்தே யடகையிடுமினென்றுகூறி யிரந்துண்பாரைக் கண்டுவைத்துஞ் செல்வத்தை நினையன்மின்; நமரங்காள்! செய்கின்ற தவத்தையே நன்றாக நினைமினென்று சொன்னா ளென்க. அம்-அசை. (6) இ-ள். அடுபாலை மணம்பொருந்திப் பொற்கலத்தி லுண்ணாத வரசன்றேவி ஐயோ! தீவினையான்முன்னின்ற தன்மை வேறுபட்டுப் பசிவெம்பி நலிகையாலே ஓரகலைக்கையி லேந்திக் கொம்புபோல நுடங்கிப் பிச்சையிடுமினென்றுகூறி நிற்பாளைக் கண்டு வைத்துஞ் செல்வத்தை நச்சன்மின்; நமரங்காள்! அறத்தையே நச்சுமினென்றா ளென்க. (7) இ-ள். துகிலையுடுப்பின் அழுவதுபோல் வருந்துமல்குலிலே பிறரணுகாது அருவருக்குஞ் சிறுகூறை யொருபாகமும் ஒருகை யொருபாகமுமாக வுடுத்துமேனோக்கி யடகையுருவி யதனை யிடுவதொன்றின்மையான், ஐயோ! வினையே! நீ என்செய்தா யென்றுகூறி நாடோறும் அழுவாளைக் கண்டுவைத்தும், நமரங் காள்! செல்வத்தை நணுகன்மின்; தவத்தை நணுகுமி னென்று சொன்னா ளென்க. இதுகாறும் பொதுவாகக் கூறினாள். (8) இ-ள். தம்மை யறிவிடத்தினின்றுந் தாமேநீக்கிக் குழலிலே மாலையையார்ப்பச்சூடி யேந்திக் காரிகையார்மருளக் காமன் போற் சென்றார், பின்பு ஐ திரண்டு இருமுதலாலே யுமிழ்ந்த தண்டையூன்றி நிற்றற்குக் காரணமான இளமை நிலையாது காணென்று சொன்னா ளென்க. கை-காம்பு. இது சீவகனைநோக்கிக்கூறினாள். அறவுரைகூறினாள், எங்ஙனங்கூறினாளெனின், இங்ஙன மிங்ஙனங் கூறினாளென எல்லாவற்றோடுங் கூட்டுக. (21-28) வேறு 2627. என்றலுஞ் சுநந்தை சொல்லு மிறைவிதான் கண்ட தையா நன்றுமஃ தாக வன்றே யாயினு மாக யானு மொன்றினன் றுறப்ப லென்ன வொள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க் குன்றுபோல் யாது மின்றிக் குழைந்துமெய்ம் மறந்து நின்றான். இ-ள். இறைவி யிங்ஙனங்கூறினவளவிலே, அதனைத் தனக்கு உறுதியாகக் கருதி யொருமொழிகூறுஞ்சுநந்தை, ஐயனே! இவள் கருதிய காரியம் நன்றாயினுமாக; தீதாயினமாக; அதனையானும் பொருந்தினேன்; இனித்துறப்பேனென்றுகூற அது கேட்டுச் சீவகன் எரிதவழ்ந்த வெண்ணெய்க்குன்று போலவுருகி மறுத்துச் சொல் லுஞ் சொல் சிறிதுமின்றி நின்றானென்க. கந்துக்கடன் முன்னேயிறத்தலிற் சுநந்தையைத் துறவு விலக்கிக் கூறுதல் அறனன்றென்று கருதுதலின், மறுக்குஞ்சொல். யாதுமின்றி நின்றானென்க, கந்துக்கடனிறந்தமை இத்தொடர் நிலைச்செய்யுளுட் டேவர் கூறிற்றிலர், தகுதியன்றென்று கருதி; துறவால் உய்த்துணர வைத்தார். (29) வேறு 2628. ஓருயி ரொழித்திரண் டுடம்பு போவபோ லாரிய னொழியவங் கௌவை மார்கடாஞ் சீரிய துறவொடு சிவிகை யேறினார் மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே. இ-ள். உடம்பையொழித்து உயிர்போமாறன்றி யோருயி ரைக்கை விட்ட இரண்டுடம்புபோந்தன்மைபோலே சீவகனிருப்பத் தாய்மாரிரு வரும் முன்பு தாநின்ற நோன்பிற் சீரிதாகிய துறவையுட்கொண்டு சிவிகையிலே யேறிப்போயினார்; அங்கிருந்த தேவிமார்கள் கண்கள் மாரிபோல நீர்வடிந்தனவென்க. (30) 2629. நன்மயிற் பொறியின்மேற் போய நாளினும் புன்மையுற் றழுகுரன் மயங்கிப் பூப்பரிந் திந்நகர் கால்பொரு கடலி னெங்கணு மன்னனி லாகுல மயங்கிற் றென்பவே. இ-ள். இந்நகரெவ்விடமுஞ் சச்சந்தன்பட்ட நாளினுங் காட்டிற் புன்மையுற்றுப் பூப்பரிந்து கால்பொருகடல்போலே யழுகிற குரல் மயங்கிப் பின்னர்ச் சீவகனைப் போலே கையறவிலே மயங்கிற்றென்க. என்ப-அசை. (31) 2630. அழுதுபின் னணிநகர் செல்ல வாயிரந் தொழுதகு சிவிகைகள் சூழப் போயபி னிழுதமை யெரிசுடர் விளக்கிட் டன்னவள் பழுதில்சீர்ப் பம்மைதன் பள்ளி நண்ணினாள். சுடர்-ஒளி. விளக்கிட்டன்னவளாகிய பம்மை; என்றது-பிறப் பாகிய இருளைப்போக்கி வீடாகியவொளியைப் பரப்புதற்கு உரியளென்றவாறு. இ-ள். நகர் பின்னே யழுதுசெல்லத் தன்னைத் தொழத்தக்க சிவிகைகள் ஆயிரஞ்சூழத் தான்சென்று பம்மையிருக்கின்ற பள்ளி யைச் சேர்ந்தாளென்க. ஆயிரஞ் சிவிகையிற்போகிய மகளிருந் துறப்பதற்கு ஒருப் பட்டுப் போயினாரென்றுணர்க. (32) 2631. அருந்தவக் கொடிக்குழாஞ் சூழ வல்லிபோ லிருந்தறம் பகர்வுழி யிழிந்து கைதொழு தொருங்கெமை யுயக்கொண்மி னடிக ளென்றனள் கருங்கய னெடுந்தடங் கண்ணி யென்பவே. இ-ள். அவள் தவத்தினொழுங்கையுடைய மகளிர்திரளாகிய புறவிதழ் சூழ்ந்திருப்பத் தான் நடுவே யல்லிபோலவிருந்த அறங்கூறு கின்றவிடத்தே தேவியிழிந்து சென்று கைதொழுது, அடிகளே! எம்மையெல்லாஞ் சேரப் பிறவிக்கடலினின்றுங் கரையேற்றுவீராக வென்றாளென்க. முன்பு கயல் போலுங் கண். (33) வேறு 2632. ஆரழன் முளரி யன்ன வருந்தவ மரிது தானஞ் சீர்கெழு நிலத்து வித்திச் சீலநீர் கொடுப்பிற் றீந்தேன் பார்கெழு நிலத்து ணாறிப் பல்புக ழீன்று பின்னாற் றார்கெழு தேவ ரின்பந் தையலாய் விளைக்கு மென்றாள். முளரி-விறகு. தீந்தேனையுடைய தார். இ-ள். தையலாய்! அருந்தவம் முளரியிலழல்போலக் கொடிய வாதலால், நினக்கு மேற்கோடலரிது; அதனைக் கை விட்டுத் தானத்தினை யைம்பொறியும்வென்று அவாவற்றவிடத்தே வித்தி யதுமுளைக்கும்படி சீலமாகிய நீரை யெப்பொழுதுங் கொடுப்பின், அஃது உத்தரகுருவிலே முளைத்துப் புகழையீன்று பின்புதேவரின்பத்தை விளைத்துவிடு மென்று கூறினாளென்க. தானப்பயனாற் போகபூமியிலேபிறந்து ஆண்டுள்ள நுகர்ச் சியையெய்திப் பின் துறக்கம்பெறுவரென்றாள். (34) 2633. அறவுரை பின்னைக் கேட்டு மடிகண்மற் றெமக்கு வல்லே துறவுதந் தருளு கென்னத் தூநக ரிழைத்து மேலா னறவிரி தாம நாற்றி வானகம் விதானித் தாய்ந்து திறவிதிற் றவிசு தூபந் திருச்சுடர் விளக்கிட் டாலே. இ-ள். தேவி யதனைக்கேட்டு, அடிகளே! அறவுரை பின்னைக் கேட்டும்; இப்பொழுது துறத்தலைத் தந்தருளு வீராகவென்ன, ஆங்குள்ள தவமகளிரும் துறவுக்குச் செய்வன வற்றை யாராய்ந்து நகரைக் கோலத்தைச்செய்து தாமத்தை நாற்றி வானகத்தை மேலே விதானித்து நன்றாகத் தவிசையுந் தூபத் தையும் விளக்கையு மிட்டாரென்க. (35) 2634. பாலினாற் சீறடி கழுவிப் பைந்துகி னூலினா லியன்றன நுனித்த வெண்மைய காலனைக் கண்புதைத் தாங்கு வெம்முலை மேல்வளாய் வீக்கினார் விதியி னென்பவே. மெல்லிதாகநூற்ற வெண்மையுடையநூல்; எனவே பட்டாகாதா யிற்று. முன்பு காலனைக் கண்புதைத்தாற்போல வெவ்வி முலை. கண்புதைத்தல்-அவன்கொலைத் தொழிலை மாற்று வித்தல். இ-ள். அவற்றையிட்டபின் ஆகமவிதியாலே சீறடியைப் பாலாற் கழுவி நூலாலியன்ற கோடித்துகிலை முலைமேலே சூழ்ந்து வீக்கினாரென்க. இஃது இருவர் தீக்கையுங் கூறிற்று. (36) 2635. தேனுலா மாலையுங் கலனுஞ் சிந்துபு பானிலாக் கதிரன வம்மென் பைந்துகி றானுலாய்த் தடமுலை முற்றஞ் சூழ்ந்தரோ வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார். இ-ள். மாலையுங் கலத்தையும் வாங்கிப்போகட்டு நிலாப் போன்ற ஒளியினவாகிய துகிலுலாவ முலைமுற்றத்தைச்சூழ்ந்து காமன்வரும் வழியை முள்ளாலடைத்தாரென்க. வெண்டுகிலாதலின், வெண்முளென்றார். இஃது ஒழிந்த மகளிருடைய தீக்கை கூறிற்று. (37) 2636. முன்னுபு கீழ்த்திசை நோக்கி மொய்ம்மலர் நன்னிறத் தவிசின்மே லிருந்த நங்கைமா ரின்மயி ருகுக்கிய விருந்த தோகைய பன்மயிற் குழாமொத்தார் பாவை மார்களே. இ-ள். தவிசினைப்பொருந்தி யதன்மேலே கிழக்கு நோக்கி யிருந்த தாயரிருவரும், அல்லாதமகளிரும் மயிருகுத்தற்கிருந்த மயிற்றி ரளை யொத்தாரென்க. தோகையவாகிய மயில். (38) 2637. மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுத லணியிருங் கூந்தலை யௌவை மார்கடாம் பணிவிலர் பறித்தனர் பரமன் சொன்னநூற் றுணிபொருள் சிந்தியாத் துறத்தன் மேயினார். மணியாலியன்ற சீப்பிட அதுபொறாமற் சிவக்குநுதலைச் சேர்ந்த கூந்தல். இ-ள். இறைவன்கூறியஆகமத்திற் றுணியும்பொருளைச் சிந்தித்துத் துறத்தலைச்செய்ய மேவினவர்கூந்தலை ஆரியாங் கனைகடாம் ஒன்றிற்றாழ்வில்லாராய்ப் பறித்தாரென்க. (39) 2638. கன்னிய ராயிரர் காய்பொற் கொம்பனார் பொன்னியற் படலிகை யேந்திப் பொன்மயிர் நன்னிலம் படாமையே யடக்கி நங்கைமார் தொன்மயி ருகுத்தநன் மயிலிற் றோன்றினார். இ-ள். அங்ஙனம்பறித்தஅழகியமயிரினைக் கொம்பனா ராகிய கன்னியராயிரவர் பள்ளியில்வீழாமற் படலிகையிலே யேந்திக்கொண்டு போய் அடக்கி, அந்நங்கைமார் பழைய மயிரையுகுத்த மயிலிற் றோன்றினாரென்க. அடக்கி, இது பிறவினைகொண்டது. (40) 2639. பொற்குடந் திருமணி பொழியப் பெய்தபோ லெற்புடம் பெண்ணிலாக் குணங்க ளானிறைத் துற்றட னுயிர்க்கருள் பரப்பி யோம்பினார் முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார். தவம்புரிந்து அடங்கத்தக்க நல்வினையுடைமையிற் பொற் குடத்தோடு உவமித்தார். பல்லுயிர்க்கும்வந்த துன்பங்களைத் தாமும் உடனேயுற்று அவ்வுயிர்களுக்கு அருளைப்பரப்பி. இ-ள். அங்ஙனம் இறைவனாகமத்தைப் பொருந்தினவர்கள், பொற்குடத்தைப் பெறுதற்கரிய மணியை மிகுத்துவழிய நிரப்பி னாற்போலே எற்புடம்பை யெண்ணிறந்த குணங்களாலே நிறைத்துப் பரப்பித் தவத்தைப்பேணினாரென்க. (41) 2640. புகழ்ந்துரை மகிழ்ச்சியும் பொற்பில் பல்சன மிகழ்ந்துரைக் கிரக்கமு மின்றி யங்கநூ லகழ்ந்துகொண் டரும்பொருள் பொதிந்த நெஞ்சினார் திகழ்ந்தெரி விளக்கெனத் திலக மாயினார். இ-ள். அங்கத்தையுடையஆகமத்தின்பொருளைக் கல்லியெடுத்துக் கொண்டு கட்டிவைத்த நெஞ்சினையுடையவர்கள், தமக்கு மயக்க மின்மையின், எரிகின்றவிளக்கெனத்திகழ்ந்த பல்சனமும் புகழு முரைக்கும் இகழுமுரைக்கும், மகிழ்ச்சியுமிரக்க முமின்றித் திலகமாயினா ரென்க. (42) வேறு 2641. அலைமணிக் கவரி மான்றே ரடுகளி யானை பாய்மா நிலநெளி கடலந் தானை நிரந்துபூச் சுமப்ப மன்னன் சிலமலர் தானு மேந்திச் சென்று சீர் பெருக வாழ்த்தி யிலமலர்ப் பஞ்சிப் பாதத் தெழின்முடி தீட்டி னானே. இ-ள். நால்வகைப்படையும்பரந்து பூவைச்சுமப்ப மன்னன் றானுஞ் சிலமலரையேந்திச்சென்று வாழ்த்தி மலர்போலும் பாதத்தே தன்முடியைச்சேர்த்தினானென்க. (43) 2642(1) கடியவை முன்பு செய்தேன் கண்ணினாற் காணச் சின்னா ளடிகளிந் நகரினுள்ளே யுறைகென வண்ணல் கூற முடிகெழு மன்னற் கொன்று மறுமொழி கொடாது தேவி படிமம்போன் றிருப்ப நோக்கிப் பம்மைதான் சொல்லி னாளே. 2643(2) காதல னல்லை நீயுங் காவல நினக்கி யாமு மேதில மென்று கண்டா யிருந்தது நங்கை யென்னத் தாதலர் தாம மார்ப னுரிமையுந் தானு மாதோ போதவிழ் கண்ணி யீர்த்துப் புனல்வரப் புலம்பி னானே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். அண்ணல், முன்பு நும்மைக்காண்டற்குவேண்டும் நல்வினைசெய்யாதேன் கண்ணாலே யெப்பொழுதுங்காணும் படி, அடிகள் இந்நகரினுள்ளே யுறைவீராகவெனக்கூற, அவற்கு விசயை யுத்தரஞ்சொல்லாது பாவைபோன்றிருந்தாளாக, அத்தன்மையை நோக்கிச் சொல்லிடத்தாளாகிய பம்மைதான், நீயும் எம்மாற் காதலிக்கப்படுமவனல்லை; காவல! நினக்கு யாங்களுஞ் சுற்றமல்ல மென்று காண் நங்கையிருந்ததென்று சொல்ல, அதுகேட்டு அரசன், றேவிமாருந் தானுமாக அழுதானென்க. (44-45) 2644. ஏதில னாயி னாலு மிறைவர்தம் மறத்தை நோக்கக் காதல னடிகளென்னக் கண்கனிந் துருகிக் காசின் மாதவ மகளி ரெல்லா மாபெருந் தேவி யாரை யேதமொன் றில்லை நம்பிக் கின்னுரை கொடுமி னென்றார். இ-ள். அங்ஙனமழுதவரசன், அடிகளே! யான்றேவிக்குச் சுற்றமன் றேனும் இறைவரறத்தைத் துணிந்துநிற்கின்ற நிலை மையைப்பார்க்க அதனாற் காதலிக்குந்தன்மையை யுடையே னென்றுகூற, தவமகளிரெல்லாம் மனமுருகிக் கண்ணோட்டஞ் செய்து தேவியாரை இனி மறுமொழி கொடுத்தலால் வருங்குற்றமின்று; நம்பிக்கு மறுமொழி கொடுமினென்றாரென்க. (46) 2645. திரைவளை யிப்பி யீன்ற திருமணி யார மார்பின் வரைவளர் சாந்த மார்ந்த வைரக் குன் றனைய திண்டோள் விரைவளர் போதை வேலோய் வேண்டிய வேண்டி னேமென் றுரைவிளைத் துரைப்பக் காளை யுள்ளகங் குளிர்ந்து சொன்னான். இப்பியீன்றவாரம்; மாணிக்கங்கலந்து கோத்த வாரம். கோதையையுடையவேல். இ-ள். அதுகேட்டதேவி, மார்பினையுந் தோளினையு முடைய வேலோய்! நீ விரும்பின காரியங்களை யாமும் விரும்பி னேமென்று உரையை வலிய வெழுப்பிக்கூற, அரசன் மனமகிழ்ந்து ஒருமொழி கூறினானென்க. வேண்டியவென்ற பன்மை-உறைகவென்றதும், காதல னென் றதும். (47) 2646. அடிகளோ துறக்க வொன்று முற்றவர் யாது மல்லர் சுடுதுய ரென்கட் செய்தாய் சுநந்தைநீ யௌவை யல்லை கொடியைநீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை யென்னா விடருற்றோர் சிங்கந் தாய்மு னிருந்தழு கின்ற தொத்தான். இ-ள். அவன் எங்ஙனங்கூறினானெனின், அடிகள் என்னி டத்து ஒன்றும் வருத்தமுற்றவரல்லர்; ஆதலான், அவரோ துறக்க; சுநந்தாய்! வருந்தி வளர்த்தலின், நீயே யெனக்குத்தாய்; இதற்கு முன்னர் யாதுங் கொடியையல்லையாயினும் துறந்தாயாதலின், என்கட் சுடுதுயர் செய்தாய்; அங்ஙனஞ் செய்த நீ மிகவுங் கொடி யை கொடியையென்று கூறுதலைச்செய்து சிங்கந் துன்பமுற்றுத் தாய்முன் இருந்தழுகின்ற தன்மையை யொத்தானென்க. (48) 2647. சென்றதோ செல்க விப்பாற் றிருமக ளனைய நங்கை யின்றிவ டுறப்ப யானின் னரசுவந் திருப்பே னாயி னென்றெனக் கொழியு மம்மா பழியென விலங்கு செம்பொற் குன்றனான் குளிர்ப்பக் கூறிக் கோயில்புக் கருளு கென்றாள். இ-ள். அதுகேட்டசுநந்தை, தன்கணவனையிழந்து புதல் வனரசை யுவந்திருந்தாளென்று இதற்குமுன்னர் உலகத்து நிகழ்ந்தபழி நிகழ்ந்தேபோக; இனி நங்கையாகிய இவள் இன்று துறப்ப யான் இன்னும் நின்னரசை யுவந்திருப்பேனாயின், கேளாய்; இப்பாற்பிறக்கும் பழி யென்றுதான் எனக்குப்போவது; போகாமை நீயே யறிதியென்று அரசன்மனங் குளிர்ப்பக்கூறி, இனிக் கோயிலிலே புக்கு உலகத்தைக் காப்பாயாகவென்றாளென்க. (49) 2648. பந்தட்ட விரலி னார்தம் படாமுலை கிழித்த பைந்தார் நந்தட்டன் றன்னை நோக்கி நங்கையா ரடிகள் சொன்னார் நொத்திட்டு முனிய வேண்டா துறந்தில நும்மை யென்னக் கந்தட்ட திணிதிண் டோளான் கற்பக மலர்ந்த தொத்தான். பந்தட்ட-பந்தைவருந்தின. இ-ள். சுநந்தை யங்ஙனங்கூறினபின்பு, நங்கையாராகிய வடிகளும் நந்தட்டனைநோக்கி, நும்மை யாந்துறந்திலம்; அதனாலே நீநொந்து வெறுக்க வேண்டாவென்று சொன்னார்; அவனுங்கேட்டு மகிழ்ந் தானென்க. (50) 2649. துறந்தவிந் நங்கை மார்தந் தூமல ரனைய பாத முறைந்தவென் சென்னிப் போதின் மிசையவென் றொப்ப வேத்திக் கறந்தபா லனைய கந்திக் கொம்படுத் துருவப் பைப்பூண் பிறங்குதார் மார்பன் போந்து பெருமணக் கோயில் புக்கான். இ-ள். அவன்மகிழ்ந்தபின், அரசன் இந்நங்கைமாருடைய பாதம் என்சென்னியிலுறைந்த போதின்மிசையனவென்று அவருறைகின்ற தன்மைக்குப் பொருந்த வாழ்த்திப் பால்போன் மிகவுந்தூய கந்தியாகிய கொம்பு இவர்களைப்புரக்கும்படி சேர்த்திப் பள்ளியினின்றும் போந்து கோயில்புக்கானென்க. (51) 2650. வடிநிரை நெடிய கண்ணார் மாமிமார் விடுப்ப வேகிக் கடிநிரை சிவிகை யேறிக் கதிர்மணிக் குடைபின் செல்ல வுடைதிரைப் பரவை யன்ன வொளிறுவேன் மறவர் காப்பக் கொடிநிரைக் கோயில் புக்கார் குங்குமக் கொடிய னாரே. கடிச்சிவிகை-வரைவினையுடைய சிவிகை; என்றது-அரசனாற் றேவியர்குலங்கட்கேற்ப இவ்வாறு செல்லற்குரியரென்று முன் போதற்கும் பின்போதற்கும் வரையப்பட்ட சிவிகையென்றவாறு; “ஏற்றற் கண்™ நிறுத்தற் கண்™-முரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற்-பெருமையிற் றிரியா வன்பின் கண்ணும்”(தொல்.கற்பு.6) என்றார் கற்பியலின்கண். இ-ள். கொடியனாராகிய வடுவகிர் நிரையன்ன கண்ணார்மாமிமார் விடுப்பப் பள்ளியினின்றும் போய் நிரைத்த சிவிகை யிலே யேறிக் குடை பின்னேசெல்ல மறவர்காப்பக்கோயிலிலே புக்காரென்க. (52) வேறு 2651. முழுதுல கெழிலேத்து மூரிவேற் றானை மன்னன் றொழுதகு பெருமாட்டி தூமணிப் பாவை யன்னாள் பொழிதரு மழைமொக்குட் போகம்விட் டாசை நீக்கி வழிவரு தவமெய்தி வைகின டெய்வ மன்னாள் ‘பாவையன்னா’ளென்றார், ஐம்பொறியால் நுகர்தற்குரியன வற்றை நுகராதிருந்தமைநோக்கி முன்பு அருந்ததியென்றுதொழதக்க. இ-ள். எழிலை யுலகமுழுதுமேத்துஞ் சச்சந்தன் பெரு மாட்டி; பாவையன் னாள்,தெய்வமன்னாள், அவள் மழை மொக்குள் போலும் போகத்தைத் தீதென்றுநீக்கி ஆசையையு நீக்கி வீட்டையெய்தும் வழியிலே வருகின்ற பரமாக மத்திற்கூறிய தவத்தை யெய்தித் தங்கினாளென்க. எனவே ஒழிந்தோர் கூறிய தவங்கள் வீடுபேற்றிற்கு வழி யல்ல வாயின. (53) விசயமாதேவியார்துறவு முற்றிற்று 2. நீர்விளையாட்டணி 2652. உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம் படர்கதிர்த் திங்க ளாகப் பரந்துவான் பூத்த தென்னா வடர்பிணி யவிழு மாம்ப லலைகடற் கானற் சேர்ப்பன் குடைகெழு வேந்தற் கிப்பா லுற்றது கூற லுற்றேன். இ-ள். முரிகின்றதிரை முத்தைச் சிந்துகையாலே யதற்குவெருவிச் சிறையடிக்கொள்கின்ற வன்னந் திங்களாகக் கடல் வானாக அதுசிந்தின முத்தம் அவ்வான் மீனைப் பூத்ததாகவுட் கொண்டு பகலே இதழ் பிணித்த பிணியவிழும் ஆம்பலலைகின்ற கடற்கானலையுடையசேர்ப்ப னாகிய வேந்தற்கு இப்பாற்பிறந்த செய்தியைக் கூறலுற்றேனென்றா ரென்க. (54) 2653(1) துறவின்பாற் படர்த லஞ்சித் தொத்தொளி முத்துத் தாம முறைகின்ற வுருவக் கோலச் சிகழிகை மகளி ரின்பத் திறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவா னமைச்ச ரெண்ணி நிறையநீர் வாவி சாந்தங் கலந்துடன் பூரித் தாரே. 2654(2) நீரணி மாடவாவி நேர்ம்புணை நிறைத்து நீணீர்ப் போரணி மாலை சாந்தம் புனைமணிச் சிவிறி சுண்ணம் வாரணி முலையி னார்க்கு மன்னற்கும் வகுத்து வாவி யேரணி கொண்ட விந்நீ ரிறைவகண் டருளு கென்றார். இவையிரண்டுமொருதொடர். 1. முத்துத் தாமத்தையுடைய சிகழிகை. இ-ள். அமைச்சர், இறைவன்துறவின்பாற்சேறற்கஞ்சி அக்கருத்தைப் போக்குதற்குரிய மகளிர் நீரிடத்துப் போர்செய்தற்குத் தம்மிடத்தே கொண்ட அளியின்பத்தாலே முன்னர் அவனை மனமகிழ்ச்சிசெய்து பின்னர் இன்பத்தே மயக்குதற் கெண்ணி, நீரைச் சாந்துடனே கலந்து வாவிநிறையப் பூரித்தார்; அங்ஙனம் பூரித்த மாடத்தையுடைய நீரணிவாவியிலே நொய்யதெப்பங் களையுநிறைத்து அழகிய மாலை முதலிய வற்றையும் மகளிர்க்கும் மன்னற்கும் கடைக் கலமாக வகுத்து இந்நீர்வாவியை, இறைவனே! கண்டருளுக வென்றாரென்க. (55-6) 2655. கணமலை யரசன் மங்கை கட்டியங் கார னாகப் பணைமுலை மகளி ரெல்லாம் பவித்திரன் படைய தாக விணைமலர் மாலை சுண்ண மெரிமணிச் சிவிறி யேந்திப் புணைபுறந் தழுவித் தூநீர்ப் போர்த்தொழி றொடங்கி னாரே. வேறொருபகையரசைத் தாங் கேட்டறியாமையானும், கட்டியங் காரன்கொடுமை யிக்காலத்துந் தன்மனத்து நிகழ்த லானுங் ‘கட்டியங் காரனாக’வென்றார். இ-ள். அவ்வமைச்சர் வாவியைக் காட்டினபின்பு, தேவியரிற் காந்தருவதத்தை கட்டியங்காரனாக,ஒழிந்த மகளிரெல்லாம் அரசன் படையாகப் படைவகுத்து, மாலைமுதலிய கருவி களையேந்தி, புணையின் புறத்தைத்தழுவி, நீர்க்கண்ணே போர்த் தொழிலைத் தொடங்கினா ரென்க. (57) 2656. தூமலர் மாலை வாளாச் சுரும்பெழப் புடைத்துந் தேன்சோர் தாமரைச் சதங்கை மாலை சக்கர மென்ன வீழ்த்துங் காமரு கணைய மாகக் கண்ணிக ளொழுக விட்டுந் தோமர மாகத் தொங்கல் சிதறுபு மயங்கி னாரே. தேன்சோர் தாமரை-கைகள். இ-ள். அங்ஙனம் போர்தொடங்கின மகளிர், கையாலே மாலையை வாளாகவோச்சியும், ஒருதலைச் சதங்கை மாலையைப் பாராவளைய மாகவெறிந்தும், கண்ணிகளைக் கணையமாக முன்னே மிதக்கவிட்டும், பரியமாலைகளைத் தண்டாகச் சிதறா நின்றுந் தம்மிற் கலந்தாரென்க. (58) 2657(1) அரக்குநீர்ச் சிவிறி யேந்தி யாயிரந் தாரை செல்லப் பரப்பினாள் பாவை தத்தை பைந்தொடி மகளி ரெல்லாந் தரிக்கில ராகித் தாழ்ந்து தடமுகிற் குளிக்கு மின்போற் செருக்கிய நெடுங்கண் சேப்பச் சீதநீர் மூழ்கி னாரே. 2658(2) தானக மாட மேறித் தையலார் ததும்பப் பாய்வார் வானகத் திழியுந் தோகை மடமயிற் குழாங்க ளொத்தார் தேனின மிரியத் தெண்ணீர் குளித்தெழுந் திருவி னன்னார் பாமிசைச் சொரியுந் திங்கள் பனிக்கடன் முளைத்த தொத்தார். 2659(3) கண்ணிகொண் டெறிய வஞ்சிக் காறளர்ந் தசைந்து சோர்வார் சுண்ணமுஞ் சாந்தும் வீழத் தொழுதன ரிரந்து நிற்பா ரொண்மலர் மாலை யோச்ச வொசிந்துகண் பிறழ வொல்கி வெண்ணெயிற் குழைந்து நிற்பார் வேற்கணா ராயி னாரே. இவைமூன்றுமொருதொடர். 1. அரக்குநீர்-இங்குலிகங் கரைத்தநீர். வெண்முகிலின் மறையுமின் போல். 2. தானகமாடம்-விகாரம்; நீரகத்துச்செய்த பலநிலங்களை யுடைய மாடம். பால்-பால்போலுமொளி. 3. காறளர்ந்து அசைந்து-நின்றநிலைகுலைந்து இளைத்து. கண்பிறழவொல்கி-கண் பிறழ்ந்து பார்க்கும்படி யொதுங்கி. இ-ள். அங்ஙனம் இரண்டுபடையுங் கலந்தபின்னர்த் தத்தை சிவிறியையேந்தி யாயிரந்தாரையைமுன்னர்நின்ற மகளிர் மேலே செல்லவிட்டாள்; அதனைத் தையலாரெல்லாருந் தரிக்கமாட்டா ராய்க் குறைந்து கண்சிவப்ப நீரிலே மூழ்கினார்; அங்ஙனமூழ்கி யதனுட் சிறிதுபொழுது உறைதலாற்றாராய் மாடத்தேறிப்பாய் வார், மயிற்றிரளையொத்தார்; அதனுட் சிறிதுபொழுது உறைந்தெழுந் திருவினன்னார், தமது முகந்தோன்றியபொழுது திங்கள் கடலின் முளைத்த தன்மையொத்தார்; இங்ஙனமிவர்கள் குறைந்தபின், பின்னேவந்து பொருத வேற்கண்ணார், அவள் அதனை நீக்கிக் கண்ணிகொண்டெறிய அஞ்சிச்சோர்வார்; சுண்ணமுஞ் சாந்தும் வீழவெறிய இரந்துநிற்பார்; மாலையை யோச்சக் குழைந்து நிற்பாரா யினாரென்க. (59-61) 2660. கூந்தலை யொருகை யேந்திக் குங்குமத் தாரை பாயப் பூந்துகி லொருகை தாங்கிப் புகுமிடங் காண்டல் செல்லார் வேந்தனைச் சரணென் றெய்த விம்முறு துயர நோக்கிக் காய்ந்துபொற் சிவிறி யேந்திக் கார்மழை பொழிவ தொத்தான். இ-ள். அவர்கள் அங்ஙனமாயபின்பு, தந்தை மீண்டுஞ் சிவிறியை யேந்தி வேந்தனருகே யணியாக நின்றமகளிர்மேலே விட்ட குங்குமத் தாரை யவர்கண்மேலே பரக்க, அவர்கள் அதற்காற்றாதே கூந்தலை யொருகையாலே யேந்தித் துகிலை யொருகையாலே யேந்திப் புகுமிடங்காணாராய் வேந்தனைச் சரணென்றுசேர, அவனும் அவர்கள்வருத்தத்தைப் பார்த்துக் காய்ந்து சிவிறியையேந்திக் கார்தான் மழைபொழியுந் தன்மையை யொத்தானென்க. (62) 2661. வீக்கினான் றாரை வெய்தாச் சந்தனத் தளிர்நன் மாலை யோக்கினார் கண்ணி சுண்ண முடற்றினா ருருவச் சாந்திற் பூக்கமழ் துகிலுந் தோடு மாலையுஞ் சொரியப் போர்தோற் றாக்கிய வநங்கன் சேனை யாறலா றாயிற் றன்றே. இ-ள். அங்ஙனம் பொழிந்தபின்பு, தத்தையைச் சூழ்ந்த மகளிர் சந்தனத்தளிர்விரவிய மாலையை யோச்சினார்; ஒச்சிப் பின்னுங் கண்ணியாலுஞ் சுண்ணத்தாலுஞ் சாந்தாலுமெறிந்து அவனை யுடற்றினார்; அவனும் பின்னர்ச் விசிறியிற்றாரையை வெய்தாம்படி முறுக்கினான்; அதற்காற்றாதே முன் போரை யாக்கிய அச்சேனை, துகிலுந் தோடும் மாலையுஞ் சிந்தக்கெட்டு வழியல்லா வழிகளிலே போயிற்றென்க. மகளிரெல்லாங் காமன்படையாதலின், தத்தைசேனையை யும் ‘அநங்கன்சேனை’யென்றார். (63) 2662. அன்னங் களாகி யம்பூந் தாமரை யல்லி மேய்வார் பொன்மயி லாகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பா ரின்மலர்க் கமல மாகிப் பூமுகம் பொருந்த வைப்பார் மின்னுமே கலையுந் தோடுங் கொடுத்தடி தொழுது நிற்பார். இ-ள். அங்ஙனங் கெட்டவர்கள், அன்னங்களாய் அல்லியை மேய்வார்; மயிலாய் மயிரான் மறைத்துக்கொண்டுநிற்பார்; உடம்பை மறைத்துத் தாமரைப்பூவாய்ப் பூவுடன் முகத்தைப் பொருந்தவைத்து நிற்பார்; திறைகொடுத்துத் தொழுதுநிற்பாரா யினாரென்க. (64) 2663. பண்ணுரை மகளிர் மாலை பைந்துகில் கவர்ந்து கொள்ளக் கண்ணுரை மகளிர் சோர்ந்து காரிருட் டிவளு மின்போற் பொண்ணுரைப் பிடிக்கைக் கூந்தற் பொன்னரி மாலை தாழ வெண்ணுரை யுடுத்து நின்றார் வேந்தனோக் குண்ண நின்றார். பண்போலும் உரையினையுடைய மகளிரென்றது-அரசன்படையை. தங்கண்ணினாலே யரசனுக்கு வருத்தத்தையுரைக்கு மகளிரென்றது-அரசனைச் சேவித்தற்குரிய மகளிராய் ஈண்டுத் தத்தையோடு கூடின படையை. பிடிக்கைபோலப் பின்னின கூந்தல். இ-ள். அவர்கள் அங்ஙனமாய பின்னர்ப் பண்ணுரை மகளிர் கண்ணுரை மகளிருடைய மாலையையுந் துகிலையுங் கவர்ந்து கொள்ளுதலிற் பொன்னரி மாலை இருளினுடங்குமின் போற் றாழச் சேர்ந்து தமதுபெண்தன்மையைப் பலருங்கூற வேண்டி வெண்ணுரை யையுடுத்து நின்றவர், அரசன் தமதழகை நுகரநின்றா ரென்க. தமக்குத் தோற்றமை தோன்றத் துகிலைக் கவர்ந்தாரென்க. பெண்களுக்கு உவமையாக உரைக்கப்படும் பிடியென்றுமாம். (65) 2664(1) தன்படை யுடையத் தத்தை சந்தனத் தாரை வீக்கி யொன்பது முகத்தி னோடி யுறுவலி யகலம் பாயப் பொன்படு சுணங்கு போர்த்த பொங்கிள முலையிற் றூவான் முன்படு குலிகத் தாரை முழுவலி முறுக்க லுற்றான். 2665(2) மெய்ப்படு தாரை வீழி னோமிவட் கென்ன வஞ்சிக் கைப்படை மன்ன னிற்பக் கதுப்பயன் மாலை வாங்கிச் செப்பட முன்கை யாப்பத் திருமகன் றொலைந்து நின்றான் பைப்புடை யல்கு லாளைப் பாழியாற் படுக்க லுற்றான். 2666(3) அடுத்தசாந் தலங்கல் சுண்ண மரும்புனல் கவர வஞ்சி யுடுத்தபட் டொளிப்ப வொன்பொன் மேகலை யொன்றும் பேசா கிடப்பமற் றரச னோக்கிக் கெட்டதுன் றுகின்மற் றென்ன மடத்தகை நாணிப் புல்லி மின்னுச்சேர் பரிதி யொத்தான். இவைமூன்றுமொருதொடர். 1. வீக்கி-வீக்க. முன்படு-தத்தையது வலியை யடுகின்ற. 2. கைப்படை-சிவிறி. செப்பட-செவ்விதாக. பைப்புடை-படத்தின் பக்கம். பாழி-வலி. 3. பட்டு ஒளிப்ப-நனைத்தபடியாலே மெய்ம்முழுதுந் தோன்றும்படி பட்டு ஒட்டிக்கொள்ள. துகில்-வெண்பட்டு. புல்லி-புல்ல. இ-ள். அவரழகை யங்ஙனநுகர்ந்தமன்னன், அல்குலாளைச் சாந்து அலங்கல் சுண்ணமென்கின்றவற்றால் அகப்படுக்க லுற்றான்; உற்றவன் அப்பொருள்கட்கடுத்த வலியாலே யவற்றைக் கொண்டு எறிதற்கஞ்சிநிற்ப, தத்தை தன்படை முன்னர்க்கெட, அவள்பொறாதே யொன்பது தாரையாக வோடியுறு வலி யகலத்தே பாயும்படி சந்தனத் தாரையை வீக்க, அதுகண்டு திருமகன் முன்படு குலிகத்தாரையை முழுவலியோடே முறுக் கலுற்றான்; உற்றவன் கைப்படையின் மெய்ப் படுதாரை யிளமுலை மேல் வீழின், இவட்குநோமென்றஞ்சிச் செவ்விதாகத் தூவா னாய்த் தொலைந்துநின்றான்; அதுகண்டு அவள் மாலையை வாங்கி முன்கையை யாப்ப, ஆண்டுப் புனல் இவளுடுத்த வெண் பட்டினைக் கவருகையினாலே, அப்பட்டு மேகலை சிறிதும் பேசாதே கிடக்கும்படி யொளிப்ப, பின்னை யரசன் அதனை நோக்கி நினதல்குலிற் றுகில்கெட்டுப் போயிற்றுக் காணென, அது கேட்டு அவள் நாணித் தன்னைத் தழுவ, அவன் ஆண்டு மின்னுச் சேர்ந்த பருதியையொத்து நின்றானென்க. (66-68) 2667. விம்மகிற் புகையின் மேவி யுடம்பினை வேது செய்து கொம்மென நாவி நாறுங் கூந்தலை யுலர்த்தி நொய்ய வம்மல ருரோமப் பூம்பட் டுடுத்தபி னனிச்ச மாலை செம்மலர்த் திருவி னன்னார் சிகழிகைச் சேர்த்தி னாரே. கொம்மென-விரைய. மலர்த்தொழிலையுடைய பொலிவு பெற்ற பட்டு. இ-ள். அங்ஙனம் போர்செய்த பின்னர்த் திருவன்னார் விரையத் தமதுகூந்தலையுலர்த்தி யகிற்புகையிலே மேவி யுடம்பை வேதுகொண்டு பட்டையுடுத்தபின் அனிச்சமாலையை முடியிலே சேர்த்தினாரென்க. (69) நீர்விளையாட்டணி முற்றிற்று. 3. இருதுநுகர்வு வேறு 2668. கார்கொண் குன்றன கண்கவர் தோளினா னீர்கொ ணீரணி நின்றுக னற்றலின் வார்கொண் மென்முலை வம்பணி கோதையா ரேர்கொள் சாயலுண் டாடுமற் றென்பவே. இ-ள். அத்திருவன்னார் அங்ஙன மிருந்தபின்னர், அவருடைய நீர்மைகொண்டநீர்க்கோலம் அரசனுடை உள்ளத்தே நின்று வருத்துதலின், அவரழகு கொண்ட மென்மையை யவன் முன்னர்க் கண்ணாலே நுகர்ந்து, பின்னர் அவரோடு மேல் விளையாடுமென்க. ஆடுவென்றது ஈண்டு எதிர்காலமுணர்த்திற்று. என்றது-மேற் கூறுகின்ற முதுவேனின்முதலிய ஆறுகாலத்திலும் விளையாடு மென்றவாறு (70) (முதுவேனில்) 2669. வேனில் வாய்க்கதிர் வெம்பலின் மேனிலைத் தேனு லாங்குளிர் சந்தனச் சேற்றிடைத் தானு லாய்த்தட மென்முலைத் தங்கினான் பானி லாக்கதிர் பாய்தரு பள்ளியே. இ-ள். முதுவேனிற்காலத்து ஞாயிறுகொதித்தலின், அதற் காற்றாதே மேனிலத்திற் றேக்கின சந்தனச்சேற்றிடையிலே தானுலாவிப் பின்னர் நிலாமுற்றத்திற் பள்ளியிலே அம்மகளிர் முலைத்தடத்தே சேர்ந்தானென்க . (71) 2670. முழுது மெய்ந்நல மூழ்கலி னீர்சுமந் தெழுது கண்ணிரங் கப்புரு வக்கொடி தொழுவ போன்முரி யச்சொரி பூஞ்சிகை யழுவ போன்றணி நித்தில முக்கவே. இ-ள். அங்ஙனஞ்சேர்ந்தவன், அவர்கள் மெய்ந்நலமாகிய தடத்தே முழுது மூழ்குதலின், அதற்கஞ்சிக் கண் நீர்சுமந்திரங் காநிற்க, புருவம் நீ வருத்தினையென்று அதற்குத் தொழுவன போலே வளையாநிற்க. பூஞ்சிகையணிந்த நித்திலம் அப் பூஞ்சிகை யழுவனபோலே சிந்தினவென்க. (72) 2671. எழுத்தின் பாடலு மாடலு மென்றிவை பழுத்த கற்பகப் பன்மணிக் கொம்பனா ரழுத்தி யன்னவ ணிவளைத் தோண்மிசைக் கழிக்கு மைங்கணைக் காமற்குங் காமனே. இ-ள். காமனுக்கும் வருத்தத்தைச் செய்கின்றவன், பாட்டை யுங் கூத்தையுங் கேட்டுங் கண்டும் அடிப்பட்ட மகளிர் தோண்மிசைக் கூட்டத்தாலே அம்முதுவேனிற்காலத்தைக் கழியா நிற்குமென்க. (73) (கார்) 2672. நீர்து ளும்பு வயிற்றின் னிழன்முகில் பார்து ளும்ப பமுழங்கலிற் பல்கலை யேர்து ளும்ப வெரீஇயிறை வற்றரீஇக் கார்து ளும்பு கொம்பிற்கவி னெய்தினார். நிழல்-ஒளி. துளும்புதல்நான்கும் அசைதலாம். இ-ள். அங்ஙனம் அக்காலங்கழிந்தவளவிலே, முகின் முழங்கலின், அது கேட்டு மகளிரஞ்சி யிறைவனைத்தழுவிக் காராற் கவின் பெற்றசையுங் கொம்புபோலக் கவின்பெற்றாரென்க. (74) 2673. இழிந்து கீழ்நிலை யின்னகிற் சேக்கைமேற் கிழிந்து சாந்தழி யக்கிளர் மென்முலை தொழிந்து மட்டொழு கத்துதை தார்பொர அழிந்த மேகலை யஞ்சிலம் பார்த்தவே. தொழிந்து-தொழித்து; விகாரம்; என்றது சிதறியென்றதாம். பூக்கிழிந்து மட்டுச்சிதறி யொழுகும்படி தார்பொர. இ-ள். அங்ஙனங் கவின்பெற்றவர்கள், அம்முகில் மழை பெய்தலிற்குளிர்ந்து கீழ்நிலத்தே யிழிந்து அகிற்சேக்கை மேலே யிருந்தபின்பு அரசனது தூசிப்படை முலைச் சாந்தழியப் பொருதலின், அதற்கெதிரே யவர்மேகலைகள் பொருதழிந்தன; அது கண்டு மகிழ்ந்து பின்னர்ச் சிலம்புகளார்த்தனவென்க. மகளிர்தொழிலான்மேகலையும், தலைவன்றொழிலாற் சிலம்பும் ஆர்த்தன. (75) 2674. தேனி றாலன தீஞ்சுவை யின்னடை யான றாமுலைப் பாலமு தல்லதொன் றானு மேவல ரச்சுற வெய்திய மான றாமட நோக்கிய ரென்பவே. வடிவினாலும், மென்மையாலும், இனிமையாலும் இறாலை யொத்தஅடை. எந்நாளும் பாலறாத ஆனினது முலையிற் பால முதம்; என்றது-சினைமேலுங் கறக்கும்பசுவெனப் பசுவினது விசேடங்கூறிற்று. அமுதென்றதனால் “பசுவி னமுது கொற்றிப் பாலே-காம நுகர்வார்க் குரித்து” எனநூலிற்கூறியவாறே கூறினார். அச்சமுற்ற மானினது நோக்கம் விடாதநோக்கியர். இ-ள். அங்ஙனங் காமநுகர்கின்ற நோக்கியர், அக்கார் காலத்திற்கு உரித்தாகக் கூறிய அடையையும், பாலமுதையு நுகர்வதல்லது, அவிழ்பதஞ் சிறிதும் நுகராராயினாரென்க. (76) (கூதிர்) வேறு 2675(1) கூதிர்வந் துலாவலிற் குவவு மென்முலை வேதுசெய் சாந்தமும் வெய்ய தேறலும் போதவிழ் மாலையும் புகையுஞ் சுண்ணமு காதலித் தார்கருங் குவளைக் கண்ணினார். 2676(2) சுரும்புநின் றறார்மலர்த் தொங்க லார்கவி னரும்புகின் றார்கட லமிர்த மேயெனா விரும்பிகின் றானிள வேனில் வேந்தனைஞ் சரங்கள்சென் றழுத்ததலிற் றரணி வேந்தனே. இவையிரண்டுமொருதொடர். 1. முலையை வெம்மைசெய்யுஞ் சாந்தம்-அகிற்சாந்தம். வெய்யதேறல்-அக்காலத்திற்கு ஆமென்று விரும்பியதேறல். இ-ள். கார்கழிந்து கூதிர்வந்து பரத்தலிற் கண்ணினார் சாந்தமுதலியவற்றைக் காதலித்தார்; அதனை யுட்கொண்டு காமன்அரசன்மேலே சரங்களையழுத்தலின், அவ்வேந்தன் அவர்களிருக்கின்றவிடத்தே யப்பொருள்களைக் கொண்டு சென்று கொடுத்து அத்தொங்கலார் அழகரும்புகின்றவர்களை யமுதமென்றே கருதி அக்கூதிர்காலமெல்லாம் நுகராநின்றா னென்க. (77-8) 2677. குழைமுக மிடவயிற் கோட்டி யேந்திய வழனிறத் தேறலுண் மதிகண் டையென நிழன்முகப் பகைகெடப் பருகி நீள்விசும் புழலெனா நோக்குவாண் மதிகண் டூடினாள். இ-ள். அங்ஙனம்நுகருகின்றான் அக்காலத்தே தனக்குக் கொடுப்ப தாக வேந்திய தேறலைக் குழைமுகத்தை யிடத்தே கோட்டி நோக்குங் குணமாலை, அதனுள்ளே தன்முகமாகிய மதிதோன்றக்கண்டு அதனை மதியாகக்கருதித் தன்முகத்திற்குப் பகையாகுந் தன்மைகெடும்படி விரையப்பருகி யினி நீள்விசும்பிலே யுழல்வாயெனக்கூறி யவ்விசும்பிலே யம்மதியைக்கண்டு ஊடினாளென்க. (79) 2678(1) பருகினேற் கொளித்துநீ பசலை நோயொடு முருகிப்போ யின்னுமற் றுளையென் றுள்சுடக் குருதிகண் கொளக்குண மாலை யூடினா ளுருவத்தா ருறத்தழீஇ யுடற்றி நீக்குவான். 2679(2) நங்கைநின் முகவொளி யெறிப்ப நன்மதி யங்கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது மங்கைநின் மனத்தினால் வருந்த லென்றவள் பொங்கிள வன்முலை பொருந்தி னானரோ. இவையிரண்டுமொருதொடர். பருகினேற்கென்னும் நான்கனுருபு இன்னுமுளையென்னும் பகைப்பொருள்கொண்டது. தேறலுண்டதனாற் சிவந்ததனை மதியோடூடிச் சிவந்ததாக்கினார். இ-ள். அக்குணமாலை யெங்ஙனமூடினாளெனின், பருகி னேற்கு அக்காலத்துருகிப் பின்னரொளித்துப்போய் என்னையுள் சுடவுடற்றிப் பசலைநோயோடே இன்னுமுளையாயினா யென்று கூறிக் கண் சிவப்பவூடினாள்; அவ்வூடலைத் தழீஇ நீக்குகின்றவன், நங்காய்! அங்கேசென்று நின்முகவொளிபரத்தலாலே அஃது உள்கறுத்து அழகினின்று நீங்கித் தேய்ந்துவிட்டது; நினக்கேற்ப நன்மதியோ? அன்றே இனிமங்காய்! நின்மனத்தினால் வருந்தாதே கொள்ளென்று ஊடலை நீக்கினான்; நீக்கிப் பின்னர் அவள் முலையைப் பொருந்தினா னென்க. (80-81) (முன்பனி) வேறு 2680(1) கொங்கு விம்முபூங் கோதை மாதரார் பங்க யப்பகைப் பருவம் வந்தென வெங்கு மில்லன வெலிம யிர்த் தொழிற் பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார். 2681(2) கூந்த லின்புகைக் குவவு மென்முலைச் சாந்த மேந்திய தமால மாலையு மாய்ந்து தாங்கினா ரரவ மேகலை காய்ந்து நித்திலங் கடிய சிந்தினார். இவையிரண்டமொருதொடர். இ-ள். மாதரார், முன்னர்க் கூதிர்காலத்தே குளிரைஅஞ்சி மேகலையையு நீக்கி முத்தையுஞ்சிந்தினவர்கள், பின்னர்ப் பனிப் பருவம் வந்ததாகத் தொழிலினையும், புகையினையுமுடைய எங்கு மில்லனவாகிய எலிமயிர்ப்போர்வையை மேவினார்; மேவி அக்காலத்திற்கேற்கும்படி கடியனவற்றை யாராய்ந்து கூந்தலிலே புகையையும், முன்னர்ச் சாந்தமேந்திய முலையிலே பச்சிலையாற் றாடுத்த மாலையையுந் தாங்கினாரென்க. (82-83) 2682. அளிந்த தீம்பழ மிஞ்சி யார்ந்தநீர் விளைந்த வல்விளை வரிசி வேரியும் வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பக முளைந்து மல்லிகை யொலியல் சூடினார். எலுமிச்சம்பழத்தின்நீரிலே ஆர்ந்தவிஞ்சி; செவ்விஞ்சி. அரிசி வலிய விளைவாக விளைந்தன; அவை பொரி, அவல்முதலியன; கருப்புக்கட்டிமுதலிய பலவுங்கூட்டி முறுகப்பொரித்தலின், வலிய விளைவாயிற்று. வேரி-மது. இ-ள். நுடங்கினமின்னையொப்பார், இஞ்சியையும், வேரியையும், பொரி அவல்முதலியவற்றையுநுகர்ந்து, சிறுசண்பகத்தை வெறுத்து மல்லிகைமாலையைச் சூடினாரென்க. இனிப் பழமும் இஞ்சியும், நீரிலேநின்றுவிளைந்த வலிய விளைதலையுடைய அல்லியரிசியுமென்றுமுரைப்ப. (84) 2683(1). தொத்து டைம்மலர்த் தொங்கல் கண்பொர முத்து டைம்முலைக் கண்க ணொந்தவென் றெய்த்த டிச்சிலம் பிரங்கு மின்குரல் கைத்தெ டுத்தலிற் காமந் தாழ்ந்ததே. 2684(2) பொன்ப னிப்புறும் பொறிபி னார்நல மன்ப னித்தலை யணங்க வத்தலை முன்ப னித்தலை முழுது நீங்கிப்போய்ப் பின்ப னித்தலை பேண வந்ததே. இவையிரண்டுமொருதொடர். எய்த்தென்றது-எய்யாதென்னும் எதிர்மறைவினைக்கு விதிவினை; அஃது அறிந்தென்னும்பொருட்டாம். கைத்து-செலுத்தி. எடுத்தல்-எழுப்புதல். இ-ள். திருமகள்வருந்தும்பொற்பினார், அங்ஙனம் கோலஞ் செய்த நலம்அன்பனை யிக்காலத்தே வருத்துதலாலே, அவனுந் தனது தொங்கல் அவர்கள்முலைக்கண்ணைப்பொர முயங்கி, இம்முலைக் கண்கள் நொந்தனவென்று முன்னர்க்கூறிப் பின்னர்ப் புணர்ச்சிக் காலத்தையறிந்து சிம்பினது இரங்குங் குரலைச் செலுத்தி யெழுப்பு தலாலே, காமவின்பம் அக்காலத்திலே தங்கிற்று; அதனோடே முன்பனிக்காமும் முழுக்க நீங்கிப் போய்ப் பின்பனிக்காலம் அவர்களெதிர்கொள்ளும்படி வந்ததென்க.(85-6) (பின்பனி) 2685(1). வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர்க் கள்செய் மாலையார் கண்கொ ளாத்துகி லள்ளி யேந்திய வரத்த வல்குலா ரொள்ளெ ரிம்மணி யுருவப் பூணினார். 2686(2)செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பல மன்ன ருய்ப்பன மகிழ்ந்து தாங்கினா ரென்ன ரொப்புமில் லவர்க ளென்பவே. இவையிரண்டுமொருதொடர். வெள்ளிலோத்திரத்தினது வெண்மலராற்செய்த மாலை. அரத்தத்தினது நிறத்தை யள்ளிக்கொண்டு கண்ணாற் பார்க்க வொண்ணாத துகிலையேந்திய வல்குல். அள்ளிக் கொள்ளுதல்-வாரிக்கொள்ளுதல். என்றது-அரத்தந்தோயாமல் அரத்த நிறத்தை யியல்பாகக்கொண்ட துகிலாயிற்று. “கோபத் தன்ன தோயாப் பூந்துகில்”(முருகு.15) போல இத்துகிலும் இவர்க் குள்ள தென்றார். நெருப்பைத்தின்னும் எலிமயிர்க்கம்பலம்; அந்தநெருப்பி னளவுவெம்மைய வென்று ஆராய்ந்த பொலிவினையுடை கம்பலம்; உய்ப்பனவாகிய கம்பலம். உய்த்தல்-திறைதருதல். என்னரும்-எத்தன்மையரும். இ-ள். என்னருந் தமக்கு ஒத்தலையில்லாதமகளிர்; குளிர் நீங்கு தற்கு மாலையார், அல்குலார், பூணினாராய்க் கம்ப லத்தைத் தாங்கினாரென்க. இனி அரத்தத்தை யள்ளியேந்தினவல்குலென்றுமுரைப்ப. என்னருப்புமில்லவர்என்று பாடமோதி, எக்குற்றமுமில்லாதா ரென்று முரைப்ப. (87-8) 2687. ஆட லின்சுவை யமர்ந்து நாடொறும் பாடன் மெய்ந்நிறீஇப் பருகிப் பண்சுவைத் தோடு மாமதி யுரிஞ்சு மொண்பொனின் மாடக் கீழ்நிலை மகிழ்ந்து வைகினார். இ-ள். அவர்கள், நாடோறுங் கூத்தைக்கண்டும், மிடற்றுப்பாட்டைத் தங்கள் மெய்யிலே நிறுத்திப் பருகி யாழ் முதலிய வற்றிற்பண்ணை நுகர்ந்தும் மாடத்தின்கீழ் நிலத்தே தங்கினா ரென்க. (89) வேறு 2688. புரிக்குழன் மடந்தையர் பொம்மல் வெம்முலை திருக்கழற் குருசிறார் திளைக்கும் போரினுட் செருக்குரற் சிறுபறை சிலம்பு கிண்கிணி யரிப்பறை மேகலை யாகி யார்த்தவே. புரிக்குழல்-நெறிப்பினையுடைய குழல். செருக்குரல்-போரை யுண்டாக்குங் குரல். இ-ள். அங்ஙனம் வைகின மகளிரிளமுலையும், தலைவன் றாரும் பொருகின்ற போரிலே, சிலம்புங் கிண்கிணியுஞ் சிறுபறை யாகி, மேகலை யரிப்பறையாகி யார்த்தனவென்க. (90) 2689. ஏச்செயாச் சிலைநுத லேழை யார்முலைத் தூச்செயாக் குங்குமந் துதைந்த வண்டினம் வாய்ச்சியா லிட்டிகை செத்து மாந்தர்தம் பூச்செயா மேனிபோற் பொலிந்து தோன்றுமே. ஏச்செயாச்சிலைநுதல்-ஏத்தொழில்செய்தற்கு ஏறட்டும்அத்தொழில் செய்யாத விற்போலுநுதல்; இந்திரவில்லுமாம். வண்டினந் துதைந்த குங்குமம்-வண்டினம்படிதற்குக் காரணமான குங்குமம்; அவர்கள் கழுவாத குங்குமம். இ-ள். அங்ஙனம் புணர்ந்த மகளிர்முலையிற் பூசின பாட ழிந்து கிடந்த குங்குமம், இட்டிசை வாய்ச்சியால் இட்டிகை செத்து மாந்தருடைய கழுவாத மேனிபோற்றொன்றுமென்க. இனி அவர்முலையிற்குங்குமத்தே செறிந்த வண்டினந்தான் இட்டிகைசெத்தினார் மேனிபோற்றோன்றுமென்றுமுரைப்ப. (91) (இளவேனில்) வேறு 2690. குரவம் பாவை கொப்புளித்துக் களிர்சங் கீர்ந்த துகளேபோன் மரவம் பாவை வயிறாரப் பருகி வாடை யதுநடப்ப விரவித் தென்றல் விடுதூதா வேனி லாற்கு விருந்தேந்தி வரவு நோக்கி வயாமரங்க ளிலையூழ்த் திணரீன் றலர்ந்தனவே. வாடைதொடங்கினகாலத்தே குரவம் பூத்தலின், அத்தேனைப் பலகாலுமுண்டு தெவிட்டினமைதோன்றக் கொப்புளித் தென்றார். கொப்புளித்தல்-காற்றுச்சிதறவடித்தல். பாவையிரண்டும் ஆகுபெயர். வாடைகழிகின்றகாலத்தே மரவம் பூத்த புதுமைபற்றி வயிறுநிறைய வுண்டென்றார். இதனான் மிகக் காற்றுச்சிதறவடியாமை கூறிற்து. வாடைநடப்ப-வாடை போகா நிற்கவெனநிகழ்வு. தென்றல்விரவி வரவுநோக்கி-தென்றல் வாடை போகாநிற்க விரவிவருகின்ற வரவைக் குறித்து. இலையூழ்த்து வயாமரங்கள்-அதனாலே யிலை யுதிர்த்து வயாநோய் கொண்டமரங்கள். அதுவிடுதூதா-அத்தென்றல் காமன் விடுத்த தூதாகக்கொண்டு. வேனிலாற்கு விருந்தேந்தி யிணரீன்று அலர்ந் தன-அக்காமனுக்கு விருந்திடுதலை யேறட்டுக்கொண்டு ஈன்று அலர்ந்து விருந்திட்டன. இ-ள். வாடை, கொப்புளித்துப் பருகி நடப்ப, தென்றல் விரவிவரவுநோக்கி அதனாலிலையூழ்த்து வயாநோய் கொண்ட மரங்கள் பின்னர் அது தூதாக விருந்தேந்தி இணரீன்று அலர்ந்தன வென்க. இதனால் வாடையுந்தென்றலும் முன்னர்விரவித் தென்றல் பின்புமுதிர்ந்ததென்றார். கொப்புளித்துப் பருகியென்பனவும், வயாமர மென்பதூஉம், மாற்றருஞ் சிறப்பின் மரபன்றி, வழக்கின் கண் அடிப்பட்டுச் செய்யுளின்பம்பட வந்த மரபென்று மரபியலிற் பாதுகாத்தாம். (92) 2691. இளிவாய்ப் பிரசம் யாழாக விருங்கட் டும்பி குழலாகக் களிவாய்க் குயில்கண் முழவாகக் கடிபூம் பொழில்க ளரங்காகத் தளிர்போன் மடவார் தணந்தார்தந் தடந்தோள் வளையு மாமையும் விளியாகக் கொண்டிங் கிளவேனில் விருந்தா வாட றொடங்கினான். இளி-இளியென்னும்நரம்பு. கணவரைப்பிரிந்தார் தம்மு டைய வளைகழன்ற படியையும், மாமைநிறங் கெட்டபடியையும், தத்தங் கணவருணர்தற்குத் தூது சென்றபாணன் யாழ்மேல் வைத்துப் பாடும்பாட்டைப் பாட்hகக்கொண்டென்க. அது “நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலையுரைத்தல்-கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய” (தொல்.கற்பு.28) என்பதனானுணர்க; “விளியா தான் கூத்தாட்டுக் காண்டலும்” (திரி.11) என்றார்பிறரும். இ-ள். இளவேனிலேன்னுங்கூத்தன், இன்னது இன்னதாகக் கொண்டு புதிதாக ஆடலைத் தொடங்கினானென்க. (93) 2692. வேனி லாடும் விருப்பினால் வியன்காய் நெல்லிச் சாந்தரைத்து நான வெண்ணெய் கதுப்புரைத்து நறுநீராடி யமிர்துயிர்க்குந் தேனா ரகிலின் புகைசேர்த்தி வகுத்து நாவிக் குழம்புறீஇ யானாப் பளித நறுஞ்சுண்ண முகிரி னுழுதாங் கணிந்தாரே. இ-ள். அங்ஙனம் வந்த வேனிற்காலத்தே விளையாடும் விருப்பினாலே, கதுப்பில் எண்ணெயைத்தேய்த்து நெல்லியை யரைத்து அச்சாந்தைக்கொண்டு நீராடிப் பின்னர்ப் புகைத்து வகிர்ந்து புழுகை வார்த்து உகிராலே நீக்கி அவ்விடத்தே கருப்பூரப் பொடியை யணிந் தாரென்க. (94) 2693. முத்தார் மருப்பி னிடைவளைத்த முரண்கொள் யானைத் தடக்கையி னொத்தே ருடைய மல்லிகையி னொலியன் மாலை யுறுப்படக்கி வைத்தார் மணிநூற் றனவைம்பால் வளைய முடித்து வான்கழுநீ ருய்த்தாங் கதனுட் கொளவழுத்திக் குவளைச் செவித்தா துறுத்தாரே. இ-ள். முன்னர் முன்பனிக்காலத்திற்கு ஐம்பாலிலே மருப்பி னிடத் தேசுற்றிய யானைக்கையினையொத்து ஏருடையனவாகிய மல்லிகை மாலையையடக்கி யதனருகே வகைமாலையையும் வைத்தவர்கள், இவ்விளவேனிற்காலத்து அம்மயிரினைத் திரள முடித்து அதனுள்ளே கழுநீர்மாலையைச்செலுத்தி யது கொள்ள வழுத்தி யாங்கே குவளையினது செவ்வித்தாதையு முறுத்தினா ரென்க. மல்லிகையினொலியல்-மல்லிகையாற்கட்டின மாலை. உறுப்பு மாலை யென்க. (95) 2694. புகையார் வண்ணப் பட்டுடுத்துப் பொன்னங் கலைகள் புறஞ்சூழ்ந்து நகையார் கவுள கிண்கிணியுஞ் சிலம்பு நாய்நாச் சீறடிமேற் பகைகொண் டார்போற் சுமாஅய்க் கண்பின் பரூஉக்காம் பனைய கணைக்கால்சூழ்ந் தகையார்ந் திலங்கும் பரியாகந் தாமே கவினச் சேர்த்தினார். கண்பின்பரூஉக்காம்பு-இரண்டுகண்ணுக்கும் பின்னகியபரியதண்டு; என்றது இரண்டுகண்ணுக்கு நடுவாகிய பச்சை மூங்கிலை. “தேனெய் பெய்-வாடாத காம்பேபோல்” (சீவக.176) என்றார் முன்னும். இ-ள். அவர்கள், இடையோடு பகைகொண்டாரைப் போலே தாம் பட்டையுடுத்து அதன்மேலே மேகலையை வளைத்து அடிமேலே கிண்கிணியையுஞ் சிலம்பையுஞ் சுமத்திக் காம்பனைய கணைக் காலிலே பரியகஞ்சூழ்ந்து கவினச்சேர்த்தினாரென்க. அகை-கூறுபாடு. சூழ்ந்துதகைbன்பது விகாரமுமாம். (96) 2695. பிடிக்கை வென்று கடைந்தனபோற் பஞ்சி யார்ந்த திரள்குறங்கு கடித்துக் கிடந்து கவின்வளருங் காய்பொன் மகரங் கதிர்முலைமே லுடுத்த சாந்தின் மிசைக்செக்க ரொளிகொண் முந்நாட் பிறையேய்ப்பத் துடிக்குங் கதிர்சேர் துணைமுத்தந் திருவில் லுமிழ்ந்து சுடர்ந்தனவே. ஒழுகநோக்குதலிற் பிடிக்கையைவென்று, திரட்சியாலுஞ் சருச்சரையின்மையாலும் பஞ்சியாலுங் கடைந்த போற்றிரண்ட குறங்கு. இ-ள். அவர்கள் பின்னருமணிதலிற் குறங்கைக்கௌவிக் கிடந்து அழகுவளருங் குறங்குசெறியும், செக்கர்வானிற் பிறையை யொப்ப முலைமேற்பூசின சாந்தின் மேலே கிடந்தசையுங் கதிரை யுடைய முத்தமும் வில்லைக்கான்று ஒளிவிளக்கினவென்க. (97) 2696. குழியப் பெரிய கோன்முன்கை மணியார் காந்தட் குவிவிரன்மேற் கழியப் பெரிய வருவிலைய சிறிய மணிமோ திரங்கனலத் தழியப் பெரிய தடமென்றோட் சலாகை மின்னத் தாழ்ந்திலங்கும் விழிகண் மகர குண்டலமுந் தோடுங் காதின் மிளிர்ந்தனவே. குழியப்பெரியவென்றது ஆகுபெயராற் கேவணங்களை. அருவிலையவென்றத ஆகுபெயராற் பூணினை. குழிய, தழிய வென்பன செயவெனெச்சம். இ-ள். அவர்கள் பின்னருமணிதலிற் றிரண்ட முன்கை யிடத்துக் காந்தளையொத்த விரன்மேலே சிறியமணி மோதிரங் கனலப் பெரியதோளிலே கேவணங்குழிந்திருத்தலிற் கழியப் பெரிய மணிகளார்ந்த அருவிலையையுடைய அணிகலந் தழுவக் காதிலே மகரகுண்டலமுந் தோடும் மிளிர்ந்தனவென்க. மகரத்திற்குங் குண்டலத்திற்குமிடையில் ஒட்டின சலாகை மின்னாநிற்கத் தோளிலே தாழ்ந்திலங்குங் குண்டலம். விழித்த கண்ணையுடைய மகரம். இனிச் சலாகை, வாகுவலய வென்பாரு முளர். (98) 2697. நாணுள் ளிட்டுச் சுடர்வீச நன்மா ணிக்க நகுதாலி பேணி நல்லார் கழுத்தணிந்து பெருங்கண் கருமை விருந்தூட்டி நீணீர் முத்த நிரைமுறுவல் கடுச்சுட் டுரிஞ்சக் கதிருமிழ்ந்து தோணீர்க் கடலுட் பவளவாய்த் தொண்டைக் கனிக டொழுதனவே. நாணைத்தன்னுள்ளே யடக்கி நகுகின்ற தாலியைப் பழைய நிலையிலே கிடக்கும்படிபேணி. சுடர்வீசுமாணிக்கத்தைக் கழுத்திலே யணிந்து. கண்ணுக்குக்கரிய மையை விருந்திட்டு. தோணீர்க்கடல்-தோண்டினகடல்; வினைத்தொகை; தோள்-முதனிலை; நீர் இடைக் கிடப்பு. இ-ள். நல்லார், பேணி யணிந்து ஊட்டிக் கடுவைச்சுட்டு முறுவலையுரிஞ்ச, அதுபட்டுப் பவளவாய் மிக்க கதிரையுமிழ் தலாலே, தொண்டைக்கனிகடோற்றுத் தொழுதன வென்க. (99) 2698. மாலை மகளி ரணிந்ததற்பின் பஞ்ச வாசங் கவுட்கொண்டு சோலை மஞ்ஞைத் தொழுதிபோற் றோகை செம்பொ னிலந்துவளக் காலிற் விலம்புங் கிண்கிணியுங் கலையு மேங்கக் கதிர்வேலு நீலக் குவளை நிரையும்போற் கண்ணார் காவி லிருந்தாரே. இ-ள். வேலுங் குவளைநிரையும்போலுங் கண்ணாராகிய அம்மகளிர், ஒப்பனைக்குறைதீர மாலையையணிந்தபின் வெற்றிலை யைத் தின்று காலிற்சிலம்பு முதலியனவேங்கக் கொய்சகம் நிலத் தேபட்டுத் துவளச் சென்று சோலையிலே மயிற்றிரளிருந் தாற்போலக் காவிலே யிருந்தாரென்க. (100) 2699. மணிளவண் டொன்றே நலம்பருக மலர்ந்த செந்தா மரைத்தடம்போ லணிவேன் மன்ன னலம்பருக வலர்ந்த வம்பார் மழைக்கண்ணார் பணியார் பண்ணுப் பிடியூர்ந்து பரூஉக்காற் செந்நெற் கதிர்சூடித் தணியார் கழனி விளையாடித் தகைபா ராட்டத் தங்கினார். இ-ள். ஒருவண்டு பூக்களினலத்தையெல்லாம்பருகப் பூத்த தாமரைத்தடம்போலே, அரசனேபருக வம்பார்நலத்தைக் காவிலே கொடுத்தமகளிர், அணிகலநிறைந்த சமைத்தலையுடைய பிடியை யேறிப்போய்க் கழனியிலே விளையாடிப் பருத்த தாளினையுடைய செந் நெற்கதிரைச்சூடி யதனாலுந்தணியாராய் அரசன் தமதழகைப் பாராட்ட அக்கழனியிலே தங்கினாரென்க. இது நகரியினின்றும்போய் நாட்டிலுள்ளனவற்றை நுகர்ந்து இன்பமுற்றமை கூறிற்று. சூடியென்றார், தொழத் தகுதலின்; “தொழுதுகொண் டுண்க வுகாமை நன்கு” (ஆசார. 20)என்றார்.(101) 2700. எண்ணற் கரிய குங்குமச்சேற் றெழுந்து நான நீர்வளர்ந்த வண்ணக் குவளை மலரளைஇ மணிக்கோல் வள்ளத் தவனேந்த வுண்ணற் கினிய மதுமகிழ்ந்தா ரொலியன் மாலை புறந்தாழக் கண்ணக் கழுநீர் மெல்விரலாற் கிழித்து மோந்தார் கனிவாயார். இ-ள். அங்ஙனம் விளையாடிய கனிவாயார், அரசன் எழுந்து வளர்ந்த நிறத்தையுடையவாகிய குவளைமலரை விரவி யுண்ணற் கினியமதுவை மணியழுத்தி விளிம்புபிரம்புகட்டின வட்டிலி லேந்த அதனைப் பூமாலை முத்தமாலையென்கின்றவை புறத்தே தாழவுண்டு மகிழ்ந்தார்; மகிழ்ந்தபின், இவர்கள் குறிப்பு இன்னவென்று அவன் கருதும்படி கழுநீரை யுகிராற் கிழித்து மோந்தாரென்க. இப்பூ வடுப்படுத்திமோந்தும் இனிய நாற்றத்தவே யாயினாற் போல எம்மையும் உகிர்முதலியவற்றாற் சிறிது வடுப் படுத்திநுகர்தல் எமக்கு வருத்தமென்று. அஞ்சினையாயினும் அஃத எமக்கு மிக்கவின்பமேயாதலின், உனக்குமின்பஞ் செய்யு மென்பதுணர்த்துற்குக் கிழித்துமோந்தாரென்க. இளமைச் செவ்வி மிக்க மகளிர்க்கு இங்ஙனம் வடுப்படுத்திநுகர்தல் இன்பஞ் செய்யுமென்று காமநூலிற்கூறலின், அதனை யீண்டுக் கூறினார். அது “காமத்தூழுறு கனியை யொத்தாள்..... வேந்தன ஞ்சிறைப் பறவை யொத்தான்” (சீவக.192)என முன்னர் கூறிய வாற்றானுமுணர்க. (102) இருதுநுகர்வு முற்றிற்று. 4.புதல்வர்ப்பேறு 2701. இவ்வா றெங்கும் விளையாடி யிளையான் மார்பி னலம்பருகிச் செவ்வாய் விளர்த்துத் தோண்மெலிந்து செய்ய முலையின் முகங்கருகி யவ்வாய் வயிறு கால்வீங்கி யனிச்ச மலரும் பொறையாகி யொவ்வாப் பஞ்சி மெல்லணைமே லசைந்தா ரொண்பொற் கொடியன்னார். இ-ள். அக்கொடியன்னார், தாங்கருதிய இத்தன்மையை எந்நிலத்தினு மிருந்து புணர்ந்து, அக்கருத்து முற்றியபின்னர் மகப் பேற்றை விரும்பி இவனைப்போலும் புதல்வரைப் பெறவேண்டு மென்று அவன்வடிவழகையெல்லாம் உட்கொண்டு புணர்ந்து கருப்பந் தங்குதலாலே, விளர்ந்து; மெலிந்து, வயா நோய்செய்து விடுகை யினாலே பின்பு முலையின்முகங்கருகி வீங்கிப் பாரமாய்த் தமது மென்மைக்கொவ்வாத பஞ்சணைமேலே தங்கினாரென்க. மார்பென்றது மெய்யை. பருகியென்னுஞ் செய்தெனெச்சங் காரணகாரியப் பொருட்டாய்க் கருப்பந்தங்கினமை தோன்ற நின்றது; பருகவென்றுமாம். பூப்பின் புறப்பாடீராறு நாளும் நீவாதுறைந்து, நாளுமோரையும் நன்றாயவாறு முணர்ந்து, தலைவியைநோக்கி, நீயும் இன்பங்கருதாது இவனே போலும் புதல்வனை யானுடையே னாகவேண்டுமென்று கருதுவா யெனத் தலைவன்கூறிப் பின்னர்ப் புணர்தல் வேண்டு மென நூலிற் கூறியவாறே இவருங்கூறினார். கால்-இடம். (103) 2702. தீம்பால் சுமந்து முலைவீங்கித் திருமுத் தீன்ற வலம்புரிபோற் காம்பேர் தோளார் களிறீன்றார் கடைக டோறுங் கடிமுரசந் தாம்பாற் பட்ட தனிச்செங்கோற் றரணி மன்னன்மகிழ்தூங்கி யோம்பா தொண்பொன் சொரிமாரி யுலல முண்ணச் சிதறினான். இ-ள். காம்பேர்தோளார், முலைகள் பாலைச்சுமந்து அடி வீங்கி, வலம்புரி நலந்தொலைந்தீனுமாறுபோலே நலந் தொலைந்து புதல்வரைப் பெற்றர்; அப்பொழுது முரசந்தாம் வாயில்கடோறும் கூறுபடநின்றொலித்தன; அக்காலத்தே மன்னன் மகிழ்ச்சிசெறிந்து ஓம்பாதுசொரியும் பொன்மழையை உயர்ந் தோரேற்பப் பெய்தானென்க. (104) 2703. காடி யாட்டித் தராய்ச்சாறுங் கன்னன் மணியு நறுநெய்யுங் கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப் பாடற் கினிய பகுவாயுங் கண்ணும் பெருக வுகிருறுத்தித் தேடித் தீந்தேன் றிப்பிலிதேய்த் தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார். இ-ள். காடியை வார்த்துப் பிரமிச்சாறுங் கண்டசருக்கரைத் தேனும் நறுநெய்யும் தம்மிற்கூடப் பொன்னாற் றேய்த்துப் பிள்ளைகள் கொள்ளும்படி மருந்தாகச் சிலநாட்கொண்டு வாயுறுத்திப் பின்னர்த் தேனிலே அதிவிடயத்தையுந் திப்பிலி யையுந்தேய்த்து நாளும் வாயுறுத்தி வாயுங்கண்ணும் பெருகும்படி யுகிரானகற்றி அண்ணாக்கை யுரிஞ்சி மூக்கை யுயர்த்தினாரென்க. தராய்-திராயுமாம். தேடி-ஆராய்ந்தென்றுமாம். (105) 2704. யாழுங் குழலு மணிமுழவு மரங்க மெல்லாம் பரந்திசைப்பத் தோழன் விண்ணோ னவட்டோன்றி வயங்காக் கூத்து வயங்கியபின் காழார் வெள்ளி மலைமேலுங் காவன் மன்னர் கடிநகர்க்கும் வீழா வோகை யவன்விட்டான் விண்பெற் றாரின் விரும்பினார். இ-ள். அக்காலத்தே தோழனாகிய சுதஞ்சணன் றோன்றி யாழ் முதலியன அரங்கெல்லாமிசைப்ப இவ்வுலகத்தில் ஆடாத கூத்து இவ்வுலகிலேயாடிய பின்னர், கலுழ வேகனிடத்திலுந் தன்சுற்றமாகிய ஒழிந்தாரிடத்திலுங் கெடாதவுவகையை யரசன் சொல்லிப் போக விட்டான்; அவர்களும் அதுகேட்டு விண்பெற் றாரைப்போலே விரும்பினாரென்க. வயங்காக்கூத்து-சீவகசரிதை. காழார்மணிமுழவென்க. (106) 2705. தத்த நிலனுமுயர்விழிவும் பகையு நட்புந் தந்தசையும் வைத்து வழுவில் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்தநாட் சச்சந் தணனே சுதஞ்சணனே தரணி கந்துக் கடன்விசயன் றத்தன் பரதன் கோவிந்த னென்று நாமந் தரித்தாரே. இ-ள். அங்ஙனம் ஓகைபோக்கியபின்னர், கணிகள் திரண்டு, கோள்கள் தம்முடைய தம்முடைய நிலங்களிலே நிற்கின்ற நிலை களும், அவற்றுட் சில உச்சமானநிலையும் தாழ்ந்தநிலையும், தம்முட்பகைத்தநிலையும், தம்முட் பொருந் தினநிலையும், தாம்நிற் கின்றதசைகளையும் முன்னேகிடத்திச் சாதகமுமெழுதிய பின்னர்ப் பன்னிரண்டென்னுமெண்ணாகத் தொகுத்த நாளிலே, அப்புதல்வர்கள் பெயர்களைச் சுமந்தா ரென்க. தேவிமாரை முற்கூறியமுறையே அவர்கள் புதல்வர் பெயர்களையும் வைத்தாரென்க. தரணி-உலோகபாலனியற்பெயர். நட்பு மிகுதியால் உலோகபாலன்பெயரும், விசயன் பெயரு மிட்டான். தத்தன்-விசயமாதேவியார் தந்தைபெயர். அது கோவிந்தமகாராசன் தனதுமகனை ஸ்ரீதத்தனென்று பெயரிட்டா தனானுணர்க. அப்பெயரைத் தத்தனென்றுகுறைத்துவைத்தார்; சாகரதத்தன்பெயரென்பாருமுளர். பரதன்-அச்சணந்தியா சாரியன்பெயர். (107) 2706. ஐயாண் டெய்தி மையாடி யறிந்தார் கலைகள் படைநவின்றார் கொய்பூ மாலை குhன்மின்னுங் கொழும்பொற் றோடுங் குண்டலமு மையன் மார்கள் துளக்கின்றி யாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார் மொய்யா ரலங்கன் மார்பற்கு முப்பதாகி நிறைந்ததே. இ-ன். அவ்வையன்மார்கள், ஐயாட்டைநாளை யெண் ணாகப்பெற்று மையோலைபிடித்துக் கலைகள்கற்றார்; படைக் கலம் பயின்றார்; மாவைவெகுண்டூர்ந்தார்; அங்ஙனஞ் சமைந்த காலம் அரசனுக்கு முப்பதாண்டாய் நிறைந்ததென்க. மாலையுங் குழலுந் தோடுங் குண்டலமுமசையாமலூர்தல் ஒழிந்தோர்க்கு அரிதாகலின், அவைகள் துளங்கா மலூர்ந்தா ரென்றார். வெகுண்டூர்ந்தார்-அடித்தேறினார். நிறைந்ததென்றது-அரசவுரிமை நிகழ்த்தின யாண்டு முப்பதும், முன்னர்க்கழிந்த யாண்டு பதினைந்தும் ஆக நாற்பத்தையாண்டு சென்றமையின், இல்லறத்திற்குரிய காலம் முற்றுப்பெற்றதென்றவாறு. இனித் துறவறத்தின்மேல் உள்ள நிகழ்தற்குக் காரணம் மேற்கூறு கின்றார். (108) புதல்வர்ப்பேறு முற்றிற்று. 5. சோலைநுகர்வு. 2707. பூநிறை செய்த செம்பொற் கோடிகம் புரையு மல்குல் வீநிறை கொடிய னாரும் வேந்தனு மிருந்த போழ்திற் றூநிறத் துகிலின் மூடிப் படலிகை கொண்டு வாழ்த்தி மாநிறத் தளிர்நன் மேனி மல்லிகை மாலை சொன்னாள். இ-ள். பூநிறைதல்செய்த பூந்தட்டையொக்குமல்குலை யுடைய பூத்த கொடியனாரும், அரசனுஞ் சேர்ந்திருந்தகாலத்தே பூவிடு பெட்டியைத் துகிலான்மூடிக் கையிலேகொண்டு அரசனை வாழ்த்தி மல்லிகைமாலை ஒருமொழிகூறினாளென்க. வீநிறைகொடியென்றார், புதல்வர்ப்பயந்தமை தோன்ற. (109) 2708. தடமுலை முகங்கள் சாடிச் சாந்தகங் கிழிந்த மார்பிற் குடவரை யனைய கோலக் குங்குமக் குவவுத் தோளாய் தொடைமலர் வெறுக்கை யேந்தித் துன்னினன் வேனில் வேந்த னிடமது காண்க வென்றா ளிறைவனு மெழுக வென்றான். குடவரை-அத்தகிரி. தொடைமலர்-தொத்தாகியபூ. இ-ள். அவள் எங்ஙனங்கூறினாளெனின், முலைமுகங்கள் சாடிக் கிழிந்த மார்பினையுடைய வரசனே! காமன் பூவாகிய பாகுடத்தை யேந்திச் சோலையிலே யணுகினான்; அஃது அவனைக்காண்டற்குஇடம்; நீசென்று காண்பாயாக வென்று கூறினாள்; அரசனம் எழுந்திருப்பீராக வென்றானென்க. (110) 2709. முடித்தலை முத்த மின்னு முகிழ்முலை முற்ற மெல்லாம் பொடித்துப்பொன் பிதிர்ந்த வாகத் திளையவர் புகழ்ந்து சூழக் கடுத்தவாள் கனல வேந்திக் கன்னியர் காவ லோம்ப வடிக்குரற் சீய மொப்பா னிழையொளி விளங்கப் புக்கான். இ-ள். அங்ஙனங் கூறிய வரசன், முடியைத் தலையிலே யுடைய முலைப்பரப்பெல்லாஞ் சுணங்குதோன்றிச் சிதறின ஆகத்தை யுடையதேவியர் தன்னைச்சுழ, கன்னியர் புகழ்ந்து போற்றல்செய்ய, வாளையேந்தி, இழைவிளங்க அச்சோலையிலே புக்கானென்க. (111) 2710. இலங்குபொன் னார மார்பி னிந்திர னுரிமை சூழக் கலந்தபொற் காவு காண்பான் காமுறப் புக்க தேபோ லலங்குபொற் கொம்ப னாரு மன்னனு மாட மாதோ நலங்கவின் கொண்ட காவு நல்லொளி நந்திற் றன்றே. இ-ள். அங்ஙனம்புகுந்த கொம்பனாருமரசனும், தாம் முன்புபழகின கற்பகச் சோலையைக் கண்டற்கு இந்திரன் உரிமைசூழப் புக்கு ஆடின தன்மைபோல ஆடி, அக்கா ஒளிசிறந்ததென்க. (112) 2711. புலவியுண் மகளிர் கூந்தற் போதுகுக் கின்ற தேபோற் குலவிய சிறகர்ச் செங்கட் கருங்குயில் குடையக் கொம்பர் நிலவிய தாது பொங்க நீண்மலர் மணலிற் போர்த்துக் கலவியிற் படுத்த காய்பொற் கம்பல மொத்த தன்றே. இ-ள். அந்தக் காவிடமெல்லாம், மகளிர் புலவிக்கண்ணே தமதுகூந்தலிற்போதை யுகுக்கின்றதன்மைபோலே, குயில் கொம் பிலேயிருந்த தாதுபொங்கக் குடைய அப்பூக்கள் மணலிலே வீழ்ந்த அதனை மறைக்கையினாலே, கலவிகாரணத்தாற்படுத்த கம்பலத் தை யொத்ததென்க. (113) 2712. காசுநூல் பரிந்து சிந்திக் கம்பலத் துக்கதே போன் மூசுதேன் வண்டு மொய்த்து முருகுண்டு துயில மஞ்ஞை மால்பூம் பள்ளி வைகி வளர்ந்தெழு மகளி ரொப்பத் தூசுபோற் சிறக ரன்னந் தொழுதியோ டிரியச் சேர்ந்தார். நூல்பரிந்து-நூலற்று. இ-ள். மணிகள்சிந்திக் கம்பலத்தே வீழ்ந்துகிடந்த தன்மை போலே அக்கம்பலத்தை யொத்தவிடத்தே தேனும் வண்டும் மொய்த்துத் துயிலாநிற்க, அப்பூம்பள்ளியிலே மயில் கிடந்தெழு கின்றது துயில் கொண்டெழுகின்ற மகளிரையொவ்வாநிற்க, அன்னங்கள் கெடாநிற்க, அவர்கள் சேர்ந்தாரென்க. (114) 2713. காதிக்கண் ணரிந்து வென்ற வுலகுணர் கடவுள் காலத் தாதிக்கண் மரங்கள் போன்ற வஞ்சொலீ ரிதனி னுங்கள் காதலிற் காண லுற்ற விடமெலாங் காண்மி னென்றா னீதிக்க ணின்ற செங்கோ னிலவுவீற் றிருந்த பூணான். காதி கண் அறிந்து வென்ற-காதி வினைகளைத் தன்னிடத்தே இல்லாதபடி வேரறுத்து அவற்றைவென்ற; அவை ஞானாவரணீய முதலாயின. இ-ள். அங்ஙனஞ் சேர்ந்தபின்னர் அரசன், அஞ்சொலீர்! இம்மரங்கள் இறைவன் றோன்றின ஆதிகாலத்திடத்தது மரங்கள் போற் பயன்பட்டுநின்றன; இதனாலே நீர்நுங்காதலாற் காண வேண்டிய விடங்களெல்லாவற்றையுஞ் சென்று காண்பீராக வென்றானென்க. (115) 2714. வானவர் மகளிர் ரென்ன வார்கயிற் றூச லூர்ந்துங் கானவர் மகளிர் போலக் கடிமலர் நல்ல கொய்துந் தேனிமிர் குன்ற மேறிச் சிலம்பெதிர் சென்று கூயுங் கோனமர் மகளிர் கானிற் குழாமயில் பிரிவ தொத்தார். இ-ள். அவன் அங்ஙனங்கூறிய பின்னர், அவன்றேவிமார் ஊர்ந்துங் கொய்துங் கூவியும் மயிற்குழாம் வெவ்வேறாகப் பிரியுந் தன்மையை யொத்தாரென்க. (116) 2715. நெடுவரை யருவி யாடிச் சந்தன நிவந்த சோலைப் படுமதங் கவரும் வண்டு பைந்தளிர்க் கவரி யேந்திப் பிடிமகிழ்ந் தோப்ப நின்ற பெருங்களிற் றரசு நோக்கி வடிமதர் மழைக்க ணல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார். இ-ள். அங்ஙனம் பிரிந்தநல்லார் அத்தொழில்களால் இளைத்தலின், அருவியிலேயாடி மிக்கமதத்தை நுகரா நின்ற வண்டைத் தளிராகிய கவரியையெடுத்துப் பிடியோட்டச் சோலையிலே நின்ற களிற்றைநோக்கித் தாமும் அங்ஙனங் கூடுதற்கு அரசனை விரும்பிநின்றாரென்க. (117) 2716. கொழுமடற் குமரி வாழைத் துகிற்சுருள் கொண்டு தோன்றச் செழுமலர்க் காம வல்லி செருக்கயல் சிற்ப மாகக் கழுமணிச் செம்பொ னாழிக் கைவிர லுகிரிற் கிள்ளி விழுமுலைச் சூட்டி நின்றார் விண்ணவர் மகளி ரொத்தார். இ-ள். அங்ஙனம்விரும்பினவர், வாழையினது துகில் போலும் வெள்ளியகுருத்தை வாங்கிக்கொண்டு அதிலே சிற்பத் தொழில்தோன்ற உள்ளே கயற்பிணக்கும் அதனைசூழக் காம வல்லியுமாக உகிராற் கிள்ளி அதனை முலையிலே சூட்டி யிங்ஙனம் வினோதந் தோன்றநின்றார்; அப்பொழுது அவர் தெய்வமகளிரை யொத்தாரென்க. (118) 2717(1) கடைதயிர்க் குரல வேங்கை கண்ணுறச் சென்று நண்ணி மிடைமயிர்க் கவரி நல்லான் கன்றுணக் கண்டு நிற்பார் புடைதிரண் டெழுந்த பொம்மல் வனமுலை பொறுக்க லாற்றார் நடைமெலிந் திகலி யன்ன நன்னடை நயந்து நிற்பார். 2718(2) எம்வயின் வருக வேந்த னிங்கென விரங்கு நல்லியாழ் வெம்மையின்விரையப் பண்ணி யெஃகுநுண் செவிகள் வீழச் செம்மையிற் கனிந்த காமத் தூதுவிட் டோத முத்தம் வெம்முலை மகளிர் வீழ்பூம் பொதும்பருள் விதும்பி னாலே. இவையிரண்டுமொருதொடர். கடைகின்ற தயிரிலெழுந்த குரலவாகிய வேங்கை யெதிர்ப் படுதலாலே சென்றணுகிக் கவரியைப் பசுவின்கன்றுமுண்ண. முன்னர் அன்னத்தோடிகலி நடந்து பின்னர் முலைப்பாரம் பொறக் கலாற்றாராய்த் தமது நன்னடைதோற்று அவற்றின் நடையை நயந்து. எஃகுநுண்செவி-அரசனுடைய கூரியநுண்செவி. அது மூவகைச்செவியினுந் தலையானசெவி. தலைமையோடே கனிதல் கொண்டகாமம். கேட்டாற்காமத்தையே விரும்புலித் தலிற் பாட் டைக் காமத்தூதென்றார். முத்தம்விரும்பினமுலை. சுற்றுக்கவிந்த பூக்களையுடைய இளமரச்செறிவு. விதும்பினார்-நடுங்கினார். இ-ள். அங்ஙனநின்றமகளிர், கண்டுநிற்பார்; நயந்து நிற்பாராய்ப் பின்னர்ப் புணர்ச்சிவிருப்பினாலே யிங்குநின்ற எம் வயின் அரசன் வரவேண்டுமென்றுகருதி யாழைப்பண்ணி யவன் செவிகள் தாழும்படிபாடி யவனையழைத்துப் பொதும்பிலே கூடுதற்கு விதும்பினாரென்க. (119-20) 2719. பிடிமரு ணடையி னார்தம் பெருங்கவின் குழையப் புல்லித் தொடைமலர்க் கண்ணி சேர்த்திச் சுரும்புண மலர்ந்த மாலை யுடைமது வொழுகச் சூட்டி யுருவத்தார் குழைய வைகிக் கடிமலர் மகளி ரொத்தார் காவலன் களிவண் டொத்தான். இ-ள். அவன், அதுகேட்டு வந்து அவர் கவின் கெடுகை யினாலே கண்ணியைச் சேர்த்தி மாலையைச்சூட்டித் தாரிற்பூ அலரப் புல்லி வைக, ஆண்டு அம்மகளிர் கடிமலரையொத்தார்; அவன்றான் களிவண்டையொத்தானென்க. வைகி-வைக. கடி-ஈண்டு வரைவு. கடியென்னு முரிச்சொல் முதனிலையாய்நின்ற பெயரெச்சம் வினைத்தொகையாய் நின்றது. கடிந்த மலரெனவே, மேற் கூட்டமின்றாயிற்று. களிவண்டெனலே, மேற் றேனுகரும்விருப்பமின்றி நுகர்ச்சி யமைந்த வண்டாயிற்று. என்றது, மேற் றுறவுக்குக் காரணங் கூறுகின்றாராதலின், ஈண்டுத் தேனையுமிழ்ந்து அமிர்தத்தை நுகரு மென்பதுதோன்றக்கூறினார் “தேன்வா யுமிழ்ந்த வமிர் துண்டவன் போன்று செல்வன்” (சீவக.29)என்று பதிகத்துள் அவ்வாறே கூறலின். (121) 2720. இழைந்தவர் நலத்தை யெய்தி யினந்திரி யேறு போலக் குழைந்ததார் நெகிழ்ந்த தானைக் கொற்றவன் பெயர்ந்து போகி வழிந்ததேன் வார்ந்து சோரும் வருக்கையி னீழல் சேர்ந்தான் விழைந்தவக் கடுவனாங்கோர் மந்தியை விளித்த தன்றே. இ-ள். தாரினையும், நெகிழ்ந்த துகிலினையுமுடைய கொற்ற வன்றான், கூடினவர்கள் நலத்தையெல்லாம் விழைவற நுகர்ந்து, இனத்தை மனத்தாற் கைவிட்ட ஏறுபோல மீண்டுபோய் ஓர் வருக்கை யினீழலைச் சேர்ந்தான்; ஆங்கே களவொழுக்கத்தை விழைந்த கடுவன் அதுபெறுதற்கு ஒருமந்தியை யழைத்ததென்க. தேன்பழத்தின் நின்றும் வடிந்துவீழும் வருக்கை. (122) 2721. அளித்திள மந்தி தன்னை யார்வத்தால் விடாது புல்லி யொளித்தொரு பொதும்பிற் சேர்ந்தாங் கொருசிறை மகிழ்ச்சி யார்ந்து தளிர்த்தலைப் பொதம்பர் நீங்கித் தம்மின மிரண்டுஞ் சேர்ந்த களித்தலைக் கூட்டங் காதன் மந்திகண் டிருந்த தன்றே. இ-ள். அம்மந்தி வந்த பின்னர்க் கடுவன் சேய்த்தாக வொளித்துப் போய் ஒருபொதும்பரின் ஒருசிறையிலே யம் மந்தியை யளித் துப் புல்லுகையினாலே யவையிரண்டும் மகிழ்ச்சியையார்ந்து அப்பொதும் பரினின்று நீங்கித் தம்மினங்களைச் சேர்ந்தன; அக்கூட்டத்தினை யக்கடுவனது காதன்மந்தி கண்டிருந்ததென்க. (123) 2722. பரத்தையர்த் தோய்ந்த மார்பம் பத்தினி மகளிர் தீண்டார் திருத்தகைத் தன்று தெண்ணீ ராடிநீர் வம்மி னென்ன வுரைத்ததென் மனத்தி னில்லை யுயர்வரைத் தேனை யுண்பார் வருத்துங்காஞ் சிரமும் வேம்பும் வாய்க்கொள்வார் யாவர் சொல்லாய். இ-ள். அங்ஙனங் கண்டிருந்த மந்தி, பரத்தையரைத் தோய்ந்த மார்பந் திருத்தகைத்தன்றாகலின், அதனைப் பத்தினி மகளிர் தீண்டார்; இனித் தெண்ணீரிலே குளித்து வம்மினெனக் கூற, அதுகேட்டுக் கடுவன் நீகூறியது யான் மனத்துநினைத்த தில்லை; அன்றியுந் தேனையுண்பார் காஞ்சிரத்தையும் வேம்பை யுந் தின் னார்; யான் அத்தன்மையேனாதலை நீயேகூறா யென்றதென்க.(124) 2723. ஈங்கினி யென்னை நோக்கி யென்செய்தி யெனக்கு வாணா ணீங்கிற்றுச் சிறிது நிற்பிற் காண்டியா னீயு மென்னத் தூங்கித்தான் றுளங்க மந்தி தொழுத்தையேன் செய்த தென்று தாங்குபு தழுவிக் கொண்டு தன்னைத்தான் பழித்த தன்றே. இ-ள். அம்மந்தி மறுமொழிகொடாது துனித்து நோக்கலின். அக்கடுவன்றான் தூங்கி, இனி யிவ்விடத்து என்னை யிங்ஙன நோக்கி யென்செய்வாய்; எனக்குஉயிர்போற்று; அதனையிங் ஙனஞ் சிறிது பொழுது நிற்பின், நீயுங் காண்பா யென்று மந்தியது மனந் துளங்கச் சொல்ல, அம்மந்தி, இத்தொழுத்தையேன் செய்த தோர் வருத்தமிதனை யொழிக வென்று எடுத்துத் தழுவிக் கொண்டு தன்னைத்தானே பழித்த தென்க. தொழுத்தையேன்-நினது ஏவற்றொழில் செய்தற்குரியேன்; “இல்லுட்,டொழுத்தையாற் கூறப் படும்.” (நாலடி326) என்றார்பிறரும். (125) 2724. கண்ணினாற் குற்றங் கண்டுங் காதலன் றெளிப்பத் தேறிப் பெண்மையாற் பழித்த மந்தி பெருமகி ழுவகை செய்வான் றிண்ணிலைப் பலவின் றேங்கொள் பெரும்பழங் கொண்டு கீறிப் பண்ணுறு சுளைகள் கையாற் பகுத்துணக் கொடுத்த தன்றே. தேறி-தேற. மனமகிழுமகிழ்ச்சி. பகுத்து-கோதுகளைநீக்கி. இ-ள். அங்ஙனம் பழித்தமந்தி, குற்றத்தைக் கண்ணாற் கண்டு வைத்துந் தன் கணவனூடறீர்ப்பத் தன்பெண்மையாற்றேறு தலின், அதற்குக் கடுவன் மகிழ்ந்து அதனை மகிழ்ச்சி செய்ய வேண்டிப் பலாப்பழத்தையெடுத்துக்கொண்டு கீறிப் பகுத்து ஆராய்தலுற்ற சுளைகளை யதுதின்னக் கொடுத்ததென்க. (126) 2725. இன்கனி கவரு மந்தி கடுவனோ டிரிய வாட்டி நன்கனி சிலத னுண்ண நச்சுவேன் மன்ன னோக்கி யென்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்ற னன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே. சிலதன்-அரசனேவல்செய்து அக்காவினைக் காக்கின்றவன். பிறரும்”பூவிலை மடந்தைய ரேவற் சிலதியர்” (சிலப்.5.51)என்றார். என்பு-ஈண்டு உடம்பு. ஈண்டுக் காமமென்றது-அரசவுரிமையை யெய்திநுகரும் போகத்தின்மேலே நிகழுமார்வத்தை. அது “செல்வம் புலனே புணர்வு விளை யாட்டென்-றல்ல னீத்த வுவகை நான்கே.” (தொல்.மெய்ப்பாடு.11) என்பதனானுணர்க. ஈண்டு இழிபென்றது இளிவர லாகிய சுவையை யாதலின், அச்சுவையையுணர்த்தும் நால்வகை மெய்ப்பாட்டினும் முன்னர்நின்ற மூப்பினையே கொள்க. அது, “மூப்பே பிணியே வருத்த மென்மையோ-டியாப்புற வந்த விளிவர னான்கே” (தொல்.மெய்ப்பாடு.6) என்பதனானுணர்க. இனி நான்கினையும் வெறுத்தானென்றுமாம். இ-ள். அங்ஙனங் கனியைக் கவருமந்தியைக் கடுவனோடே கெட்டுப்போம்படியலைத்து அவை தின்கின்ற கனியைச் சிலத னுண்ணாநிற்க, அதனை மன்னன் நோக்கித் தனக்கு அன்புடைய மனைவி தன்னைக்கூடுகின்றகூட்டத்தைப் பிறனிடத்தே கூடக் கண்டதன்மையையொத்து, உடம்புதோன்றுகின்றகாலத்து உடன் றோன்றிச் செறிந்த ஆர்வத்தையும் மேல்வருகின்ற மூப்பையும் வெறுத்துநின்றானென்க. (127) 2726. கைப்பழ மிழந்த மந்தி கட்டியங் கார னொத்த திப்பழந் துரந்து கொண்ட சிலதனு மென்னை யொத்தா னிப்பழ மின்று போகத் தின்பமே போலு மென்று மெய்ப்பட வுணர்வு தோன்றி மீட்டிது கூறி னானே. இ-ள். அங்ஙனம் வெறுத்துநின்றவன். கைப்பழமிழந்த மந்தி அரசையிழந்த கட்டியங்காரனொத்தது; அவற்றைத் துரத்து இப்பழத்தைக்கொண்ட சிலதனும் அவனைத்துரத்து அரசை யெய்திய என்னையொத்தான்; இன்னும் வலியான்வாங்கி நுகர்தற் குரிய விப்பழத்தை நுகர்ந்து இவனெய்துகின்றவின்பம் இன்று யானுகர்கின்ற இப்போகத்தின்பத்தையொக்குமென்று உண்மை யாகவுணர்வு தோன்றியதனானுமமையாதே தன்னெஞ்சுடனே மீண்டும் இத்தன்மை தோன்றக் கூறினானென்க. (128) 2727. மெலியவர் பெற்ற செல்வம் வேரொடுங் கீழ்ந்து வெளவி வலியவர் கொண்டு மேலை வரம்புகந் தரம்பு செய்யுங் கலியது பிறவி கண்டாங் காலத்தா லடங்கி நோற்று நலிவிலா வுலக மெய்த னல்லதே போலு மென்றான். அரம்பு-குறும்பு. கலியாவது-நுகரும்பொருள்களின்மை யான் அவற்றின் மேற்செல்லும் பற்றால் நிகழும் வருத்தம்; செருக்குமாம். இ-ள். அவன் எங்ஙனங்கூறினானெனின், வலியில்லாதவர் பெற்றசெல்வத்தை வலியவர் மேலை வரம்பிகந்து வேரோடும் கீழ்ந்து வெளவிக்கொண்டு குறும்பு செய்யும் பிறவியது கலியைக் கண்ணாற் கண்டாம்; ஆதலின், இச்செல்வத்தைக் கைவிட்டுத் துறத்தற்குரிய காலத்தே துறந்து தவஞ்செய்து ஐம்பொறியுமடங்கி ஒன்றானு நலிவிலாத வீட்டுலகத்தை யெய்துதலே நல்லதுபோலுமெனக்கென்று கூறினானென்க. ‘மேலைவரம்பிகந்’தென்றது-தந்தைதாயத்தைப் புதல்வனே பற்றுதற்குரியனென முன்னர்கூறிய வரம்பைக்கடந் தென்றவாறு. என்றது: சச்சந்தனரசைக் கட்டியங்காரன் வலிதினெய்திய தன்மை கூறியவாறாயிற்று. (129) 2728. நல்வினை யென்னு நன்பொற் கற்பக மகளி ரென்னும் பல்பழ மணிக்கொம் பின்று பரிசில்வண் டுண்ணப் பூத்துச் செல்வப்பொற் சிறுவ ரென்னுந் தாமங்க டாழ்ந்து நின்ற தொல்கிப்போம் பாவக் காற்றி னொழிகவிப் புணர்ச்சி யென்றான். இ-ள். நல்வினையென்கின்ற கற்பகத்தின்மணிக்கொம்பு, பரிசில ராகிய வண்டு நுகரும்படி பரிசிலைப்பூத்து, மகளிரென் கின்ற பழத்தை யீன்று, புதல்வரென்கின்ற மாலைகள் தன்னிடத்தே தங்கிநின்றது; இங்ஙனநின்றது தீவினையாகிய காற்றுவந்தடித் தலின், நிலைபேறின்றிச் சாய்ந்து விழுந்துபோவதாயிருந்தது; இஃது இங்ஙனம் விழுவதற்குமுன்னே யிவ்வில் லறத்திற்பயிற்சி நம்மை விட்டு நீங்குவதாகவென்று நெஞ்சை வலியுறுத்தினானென்க. (130) 2729. வேட்கைமை யென்னு நாவிற் காமவெந் தேறன் மாந்தி மாட்சியொன் றானு மின்றி மயங்கினேற் கிருளை நீங்கக் காட்டினார் தேவ ராவர் கைவிளக் கிதனை யென்று தோட்டியாற் றொடக்கப் பட்ட சொரிமதக் களிற்றின் மீண்டான். இ-ள். அங்ஙனம் வலியுறுத்தினவன், வேட்கைத் தன்மை யென்னு நாவாலே காமமாகிய கள்ளை நிறையவுண்டு வீட்டினைத் தரும் நற்செய்கை சிறிதுமின்றிப் போகத்தே மயங்கி னேற்கு இவ்விருணீங்கும்படி வீட்டுநெறியிலே செலுத்துங் கைவிளக் காகிய துறவுள்ளத்தைக் காட்டியவிவர்கள் தேவராகக் கூடு மென்றுகூறித் தோட்டியைக்கடந்த மதயானைபோலாது தோட்டி யாற் றொடக்கப் பட்டதோர் மதயானைபோலே போகநுகர்ச்சி யினின்று மீண்டானென்க. ஐ-அசை. காட்டினார்-மந்தியும், கடுவனும், சிலதனும். இவர்கள் இங்ஙனங் காட்டிய நல்வினையான், மேலே தேவராவ ரென்றுமாம். களிறு-இல்பொருளுவமை. (131) 2730. கைந்நிறை யெஃக மேந்திக் கனமணிக் குழைவில் வீச மைந்நிற மணிவண் டார்ப்ப வார்தளிர் கவரிவீச மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான் வேனில்வாய்க் காம னொத்தான் மொய்ந்நிற மாலை வேய்ந்து முருகுலா முடியி னானே. இ-ள். அங்ஙனமீண்டமுடியினான், வீச ஆர்ப்ப வீச ஏந்தி வீட்டைவிரும்பி நின்றவன், காமனையொத்தானென்க. ‘தளிர் கவரி வீச’ என்றார், பொதும்பரிடைத் தனியே நிற்றலின். காமனோடு உவமித்தார், மனவேட்கை யடங் கதலின்.(132) 2731. நடுச்சிகை முத்துத் தாமம் வாணுத னான்று நக்கப் படுத்தனர் பைம்பொற் கட்டில் பாடினர் கீதந் தூப மெடுத்தன ரெழுந்து தேனா ரெரிமணி வீணை யார்த்த கொடிப்பல பூத்துச் சூழ்ந்த குங்குமக் குன்ற மொத்தன். இ-ள். தொழில்செய்தற்குரியமகளிர், சிகைநடுவிற் றலைப் பாளை நான்று நக்க நின்று கட்டிலைப்படுத்தார்; அதிலே அவனிருந்தபின்னர்ச் சிலர் தூபமெழுப்பினார்; சிலர் பாடினார்; அதன்பின்னர் யாழுமெழுந் தார்த்தன; அவையங்ஙனம் நிகழ மகளிர்சூழவிருந்தவன், பலகொடி பூத்துச் சூழ்ந்த குங்கும மலையை யொத்தானென்க. (133) 2732. மெள்ளவே புருவங் கோலி விலங்கிக்கண் பிறழ நோக்கி முள்ளேயி றிலங்கச் செவ்வாய் முறுவற்றூ தாதி யாக வள்ளிக்கொண் டுண்ணக் காமங் கனிவித்தார் பனிவிற் றாழ்ந்த வள்ளிதழ் மாலை மார்பன் வச்சிர மனத்த னானான். பனிவில்-முத்துவடம்; ஆகுபெயர். இ-ள். அங்ஙனமிருந்தவனை யம்மகளிர், தம்புருவத்தை வளைத்துக் கண் விலங்கிப்பிறழப் பார்த்துச் செவ்வாயில் எயிறி லங்க முறுவலிக்கு முறுவற்றூதுமுதலாக ஒழிந்த காமக் குறிப்புக்கள் நிகழ்த்துவனவற்றைக் கருவியாகக்கொண்டு அவன் காமவின் பத்தை யள்ளியுண்ணும்படி பழுப்பித்துப் பார்த்தார்; பார்த்தற்கு அவன் மனநெகிழாது துறவின்கண்ணே வைர மனத்தானாயினானென்க. (134) 2733. முலைமுகஞ் சுமந்த முத்தத் தொத்தொளிர் மாலை யாரு மலைமுகந் தனைய மார்பின் மன்னனு மிருந்த போழ்திற் கொலைமுகக் களிறனாற்கு நாழிகை சென்று கூறக் கலைமுக மல்லர் புல்லிக் கமழுநீ ராட்டி னாரே முலைத்தலை சுமந்த முத்தத்தொத்து விளங்குமாலை.மலையின் பெருமையைக் கொள்ளைகொண்டாற்போலு மார்பு. மஞ்சனமாட்டு தற்குக்கூறிய இலக்கணங்கள்போன மல்லர். இ-ள். அங்ஙனம் மகளிருமரசனுமிருந்தபொழுதிற் கழிந்த நாழிகையைக் கணிகள்கூற, மல்லர் உடம்பு தடவி மஞ்சன மாட்டினாரென்க. 135) 2734. வெண்டுகின் மாலை சாந்தம் விழுக்கலம் விதியிற் சேர்த்தி நுண்டுகிற் றிரைகள் சேர்ந்த நூற்றலா மண்ட பத்துக் கண்டிரண் முத்த மென்றோட் காவிக்கண் மகளிர் போற்றி யெண்டிசை மருங்கு மேத்த வினிதினி னேறி னானே. இ-ள். துகின்முதலிய நான்கினையும் அரசியலிற் கூறிய வாற்றாலே சேர்த்தி எண்டிசையினின்று மகளிர் போற்றியேத்தத் திரைகள் சேர்ந்த நூறடியுலாதலையுடைய அமுதுசெய்யு மண்ட பத்தே யேறினானென்க. பொருட்கட்டோன்றும் வரையறைக்குணப்பெயராகிய நூறென்னு மெண்ணுப் பெயர் எண்ணுடைப்பொருண்மேல் ஆகுபெயராய்நின்றது; “ஆறறி யந்தணர்”(கலித்.1) என்றாற்போல. உண்டால் நுறடியுலாவுதல் வேண்டுமென்று மருத்துவ நூல் கூறியதனைக் கூறினார். (136) 2735. நெய்வளங் கனிந்து வாச நிறைந்துவான் வறைக ளார்ந்து குய்வளங் கழுமி வெம்மைத் தீஞ்சுவை குன்ற லின்றி யைவரு ளொருவ னன்ன வடிசினூன் மடைய னேந்த மைவரை மாலை மார்பன் வான்சுவை யமிர்த முண்டான். இ-ள். கனிந்து, நிறைந்து, ஆர்ந்து, கழுமி, அறுசுவையுங் குறைதலின்றி வெம்மையையுடைய வடிசிலை வீமசேனனை யொத்த மடையனேந்த, அரசன் அவ்வடிசிலையுண்டானென்க. குய்-தாளிப்பு. நூன்மடையன்-நூல்போனமடையன். (137) 2736. கைப்பொடி சாந்த மேந்திக் கரகநீர் விதியிற் பூசி மைப்படு மழைக்க ணல்லார் மணிச்செப்பின் வாச நீட்டச் செப்படு பஞ்ச வாசந் திசையெலாங் கமழ வாய்க்கொண் டொப்புடை யுறுவர் கோயில் வணங்குது மெழுக வென்றான். பொடி-உழுத்தம்பொடிமுதலியன. இ-ள். முன்னர்ப் பொடியையும் பின்னர்ச் சந்தனத்தையுந் தன்கையிலே வாங்கி நீராலே நூலில்விதித்த விதி தப்பாமற்பூசி நல்லார் செப்பிலிருந்த முகவாசத்தை நீட்ட அதனைத் தின்று கோயிலில் உறுவரை யாம் வணங்குதும்; அதற்கு எழுவீராக வென்றானென்க. செப்படுமொப்புடைக்கோயில்-செப்பினைத் தன்னோடு வமிக்கு மளவில், அதனைக்கெடுக்கும் ஒப்பினையுடைய கோயில். உறுவர்-எல்லாத்தேவரினுமிக்கவர். (138) சோலைநுகர்வுமுற்றிற்று. 6. அறிவர்சிறப்பு 2737. ஒருபகல் பூசி னோராண் டொழிவின்றி விடாது நாறும் பெரியவர் கேண்மை போலும் பெறற்கரும் வாச வெண்ணெ யரிவைர் பூசி யாடி யகிற்புகை யாவி யூட்டித் திருவிழை துகிலும் பூணுந் திறப்படத் தாங்கி னாரே. இ-ள். அதுகேட்டு அரிவையர் ஒருபொழுதுபூசின் ஒரு கால முமொழிவின்றாய் எக்காலமும் விடாமல்நாறும் பெரிய வர்கேண்மையையொக்கும் வாசவெண்ணெயைப்பூசி மஞ்சன மாடிப் புகைத்துத் துகிலையும் பூணையுந் தாங்கினாரென்க. ‘ஓராண்டு’மென்னுமுமை விகாரத்தாற்றெக்கது; அஃது எக்காலமமென்னும்பொருட்டு. (139) 2738. நற்றவஞ் செய்த வீர ருளவழி நயந்து நாடும் பொற்றதா மரையி னாளிற் பூஞ்சிகை முத்த மின்னக் கொற்றவற் றொழுது சேர்ந்தார் கொம்பனார் வாமன் கோயின் மற்றவன் மகிழ்ந்து புக்கு மணிமுடி துளக்கி னானே. மிகத் தவத்தைச்செய்து அதனால் நால்வகை வீரத்தையு முடையார். அவை “கல்வி தறுகண் ணிசைமை கொடையெனச்-சொல்லப் பட்ட பெருமித நான்கே” என்பதனானுணர்க. இ-ள். அங்ஙனந் தாங்கினகொம்பனார், வீரரைநயந்து அவருள்ள விடத்தை நாடும் பொற்றாமரையினாளைப்போலே கொற்றவனை நாடிச்சென்று முத்தமின்னத்தொழுது சேர்ந்தார்; பின்னர் அவன் அதற்குமகிழ்ந்து வாமன்கோயிலிலே புக்கு வணங்கினானென்க. (140) வேறு 2739. கடிமலர்ப் பிண்டிக் கடவுள் கமலத் தடிமலர் சூடி யவருலகில் யாரே யடிமலர் சூடி யவருலக மேத்த வடிமலர் தூவ வருகின்றா ரன்றே. எக்காலமும் புதிதாகியமலர். கமலத்தேநடந்த அடியாகிய மலர். இ-ள். கடவுளுடைய திருவடியை முற்பிறப்பிற் சூடினவர் இப்பிறப்பில் இவ்வுலகின்கண் யாவராய் நுகர்வரெனக் கேட்பீ ராயின், அவ்வடி மலரைச்சூடினவர்களன்றே யுலகமேத்தும்படி அரசர் வடித்த மலரைத்தூவ ஈண்டுவருகின்றவரென்று தேவியர் கேட்பத் துதித்தானென்க. ஒழித்த இரண்டற்கும் இவ்வாறே பொருளுரைக்க. (141) 2740. முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப் பத்திமையா னாளும் பணிகின்றார் யாரே பத்திமையா னாளும் பணிவார் பகட்டெருத்தி னித்தில வெண்குடைக்கீழ் நீங்காதா ரன்றே. பணிவார்-பணிந்துபோவார். எருத்தத்தின்மேலே குடைக் கீழே யிருக்கின்ற இருப்பு நீங்காமல் வருகின்றார். (142) 2741. கருமக் கடல்கடந்த கைவலச் செல்வ னெரிமலர்ச் சேவடியை யேத்துவார் யாரே யெரிமலர்ச் சேவடியை யேத்துவார் வான்றோய் திருமுத் தவிராழிச் செல்வரே யன்றே. இருவினையாகிய கடலைக்கடந்து அதனாற்பெற்ற கேவல மடந்தையை நுகருஞ்செல்வன். முத்தவிராழி-முத்துவிளங்குகின்ற கொற்றக்குடை. ஆழி-வட்டம்; ஆகுபெயர். அங்ஙன முடிதுளக் கினவன் வணக்கத்தாற் பெறும்பயனைத் தேவியர் கருதும்படி யிம்மூன்றுதாழிசையாலுங்கூறித் துதித்தானென்க. (143) வேறு 2742. வண்ண மாமலர் மாலை வாய்ந்தன சுண்ணங் குங்குமந் தூமத் தாற்புனைந் தண்ணல் சேவடி யருச்சித் தானரோ விண்ணி லின்பமே விழைந்த வேட்கையான். இ-ள். தேவரலகிலில்லாத வீட்டின்பத்தையே விரும்பின வேட்கையையுடையவன், அங்ஙனந்துதித்துப் பின்னர் வாய்ந்தன வாகிய மலர்முதலியவைந்தினானும் புனைந்து அண்ணல்சேவடி யை யருச்சித்தானென்க. (144) 7. அறவுரை 2743. இலங்கு குங்கும மார்ப னேந்துசீர் நலங்கொள் சாரணர் நாதன் கோயிலை வலங்கொண் டாய்மலர்ப் பிண்டி மாநிழற் கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான். இ-ள். அங்ஙனமருச்சித்த குங்குமமார்பன், ஆகாயத்தே வந்து ஸ்ரீநாதன்கோயிலை வலங்கொண்டு பிண்டியின்கீழே பளிக்குக்கன் மிசையிலே நலங்கொண்டுநின்ற பெரிய மணிகளின் நிறத்தைக் கலந்த சாரணரிருவரைக்கண்டு வாழ்த்தினானென்க. மேல்இருசுடரை யுவமித்தலின், மாணிக்கமும் முத்துமே கொள்க. (145) 2744. உரிமை தன்னொடும் வலங்கொண் டோங்குசீர்த் திரும கன்பணிந் திருப்பச் செய்தவ ரிருநி லம்மனற் கின்ப மேயெனப் பெருநி லம்மன்னன் பெரிதும் வாழ்த்தினான். இ-ள். அங்ஙனம் வாழ்த்தின திருமகன் உரிமைச்சுற்றத் தோடே வலம்வந்து வணங்கி யிருந்தவளவிலே, சாரணர் மன்னனுக்கு இருநில மாளுதல் இன்பமன்றாயிற்றேயென்று கேட்ப, அம்மன்னன்றான் இருநிலத்தைத் துறந்ததன்மையை யுணர்ந்ததற்கு வியந்து மிகவுந் துதித்தானென்க. (146) ஏகாரம்-எதிர்மறை. 2745. தெருள லேன்செய்த தீவி னையெனு மிருள்வி லங்கநின் றெரியு நீள்சுட ரருளு மின்னெனக் கடிக ளென்றனன் மருள்வி லங்கிய மன்னர் மன்னனே. இ-ள். அங்ஙனந்துதித்து இல்லறத்தின் மயக்கந்தீர்ந்த மன்னன் அடிகளே! பிறப்பறுமாறியாதேன் எப்பிறப்புக்களிலுஞ் செய்து கொண்ட தீவினையென்னும் இருள்கெடும்படியாகச் சிலநாள் நின்று தவஞ் செய்து பின்னர் எரியுநீள்சுடராகிய ஞானத்தை யெய்தும்படி எனக்கு அருளுமினென்றானென்க. இனி இருள்விலகும்படி நின்று எரியுஞ்சுடர்-இரத்தினத் திரயமுமாம். (147) வேறு 2746. பாற்கடற் பனிமதி பரவைத் தீங்கதிர் மேற்பட மிகநனி சொரிவ தொப்பவே நூற்கடன் மாதவ னுனித்த நல்லறங் கோற்கடன் மன்னனுக் குரைக்கு மென்பவே. இ-ள். அதுகேட்ட நூற்கடலாகிய சாரணன், பரவையிற் றோன்றின பனிமதி தன்கதிரைப் பாற்கடலின்மேலே வீழ நனி சொரிவதொப்ப, மிகவும் நுனித்தவறத்தை மன்னனக்கு உரையா நிற்குமென்க. செங்கோல் நடாத்துதலைக் கடனாகவுடைய. (148) வேறு 2747. தேனெய் தோய்ந்தன தீவிய திருமணி யனைய வானி னுய்ப்பன வரகதி தருவன மதியோ ரேனை யாவரு மமுதெனப் பருகுவ புகல்வ மான மில்லுயர் மணிவண்ண னுவலிய வலித்தான். உயர்மணிவண்ணன்-இருவரிலுமூத்தவன்; இரத்தினப் பிரபை யென்னுமவன். இ-ள். அங்ஙனமுரைக்கின்ற மணிவண்ணன், பலவகைப் பட்ட வறங்களுள், தீவிய தேனெய்யை யொத்தனவாகையாலே, சில நாட்டுறக்கத்திலே செலுத்துவனவாய் அறிவில்லோர் யாவரும் புகல்வனவற்றையும். பெறுதற்கரிய மணியையொத்தனவாய் வீட்டைத் தருவனவாய் அறிவுடையோர் யாவரும் அமுதெனப் பருகுவன வற்றையும் நுவலத்துணிந்தானென்க. தேனுகர்வார்க்கு, அது புளிச்சுவையையுந்தருதலின், நிலை யில்லாத துறக்கந்தருகின்ற அறத்திற்கு உவமையாயிற்று. துறக்கத்தையும், வீட்டையுந் தருகின்ற இருவகையறமுங் கூறு கின்றது, இவற்கு இன்னுந் துறக்கத்திற்செல்லுங் கருத்து உண்டாமோவென்பது உணர்தற்கு. மானம்-ஒப்பு. (149) 2748. அருமை யினெய்தும் யாக்கையும் யாக்கைய தழிவுந் திருமெய் நீங்கிய துன்பமுந் தெளிபொருட் டுணிவுங் குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும் பெருமை வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய். இ-ள். அங்ஙனந்துணிந்தவன், பெரியோய்! தவத்தாற் பெறுகின்ற மக்கள்யாக்கையையும், அந்தயாக்கை தனக்கடைத்த நூறியாண்டும் நிலைபெற்றுநில்லாது கருப்ப முதலாக அழிகின்ற அழிவையும், நல்வினை மெய்யினின்றும் நீங்கப்பட்டனவாகிய நரகர் விலங்கு மக்கள் தேவரென்கின்ற நாற்கதியிற்றுன்பத்தையும், துணியப்படும் பொருளையும், அப்பொருளைத் துணியுந் துணிவையும், நிறத்தைப் பெற்ற சீலத்தினது நிலையையும், தானத் தையும், அத்தானத்தாலும் சீலத்தாலும் காட்சியாலும் பெறும் பயனையும், பெருமையையுடைய வீட்டிலக்கணத்தோடுங் கூறுவேன்; அவற்றுள் இப்பெறுதற் கருமையை முதற்கேளென்றா னென்க. நீங்கிய-தொழிற்பெயர். இதுவென்றது பெறுதற்கருமையை. குருவென்னு முரிச்சொல் ஈறுதிரிந்தது. ‘திருமையும்’ பாடம்.(150) அறவுரைமுற்றிற்று. 8.பெறுதற்கருமை. 2749. பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட் டிரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி யரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே. பரவை-பரத்தல். இ-ள். அரசனே! எண்ணுங்கால் நால்வகைத்தோற்றத்தாற் பெரிய வாகிய யோனிகளைத்தப்பி யிவ்வுலகிலே மக்கள் யாக்கையைப் பெறுதல், தென்கடலிலே போகட்டதோர்கழி வட கடலிலேயுண்டான நுகத்துளையிலே முதற்சென்றெய்தி அவ்வள வேயன்றி யத்துளை யினடுவே சென்றுசெறிந்ததென்னும் படி யரிதாயிருக்குமென்றானென்க. (151) 2750. விண்டு வேய்நர லூன்விளை கானவ ரிடனுங் கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்பு முண்டு நீரென வுரையினு மரியன வொருவி மண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிதே. ஊனே யுணவாக விளையும். இ-ள். இங்ஙனமானிடம்பெற்றாலும், நீருண்டென்று வார்த்தை யினுங் கூறுதற்கரியவாய் வேய்வெடித்தொலிக்குங்கானவரிடத்தையும் மிக்க பனியைக்கொண்டு குலைக்குமிடமாகிய குறும்புகளையு நீங்கி நன்னாட்டிலே பிறத்தல் அரிதென்றானென்க. (152) 2751. வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம் படுத்த பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே. இ-ள். நரபதி! மாக்களை வில்லாலே கொன்று அவற்றின் றசையைத் தின்கின்ற பல்லினராகிய கரும்புறத்தோரும், பரதவரு முதலாக எண்ணிறந்த இழிதொழிலால் இழிந்த குலங்களிற் பிறவாமல் நற்குலத்திலேபிறததலுமரிதென்றானென்க. (153) 2752. கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநா னருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி யழலுட் கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் பிழையா துருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே. இ-ள். குலத்திற் பிறக்குங் காலத்தும், பெருமழை பெய்ததாகப் பின்னர்ச் சிலகல்லிடை அருவி இடையறா தொழுகுமாறு போலே, உயிர்க் கிழவனைத் தொடர்ந்து விடாதனவாய்ப் போக்குதற்கரிய இருவினை வயிற்றுத் தீயினுள்ளே இட்டு வைத்துக் காய்ச்சின கருப்பத்தின் கண்ணே அவ்விருவினையின் கட்டளையாற் பின் தோன்றும் வடிவத்தில் தீவினையின் கட்டளையால் உறுப்புக் குறையும் வழவைத் தப்பி நல்வினையின் கட்டளையாலே உருவான் மிக்கதோருடம்பை அம்மக்கள் யாக்கை பெறுதலும் அரிது என்றான் என்க. பிணித்தலையுடையது பிணியாயிற்று. கட்டளையென்றார், தத்தம் பயனை நுகர்வித்தற்குரிய கோவையை யுடையததாதலைப் பிழையா விதியினை. 154) 2753. காம னன்னதோர் கழிவனப் பறிவொடு பெறினும் நாம நாற்கதி நவைதரு நெறிபல வொருவி வாம னூனெறி வழுவறத் தழுவின ரொழுகல் ஏன வெண்குடை யிறைவமற் றிவாவது மரிதே. இ-ள். இறைவனே! அங்ஙனம் மிக்க அழகை அறிவுடனே பெற்றாராயினும் அச்சத்தைத் தரும் நாற்கதியிலே செலுத்தும் குற்றத்தைத் தரும் பரசமயங்களைக் கைவிட்டு வாமனூல் வழியை யாவதும்வழுவறத் தழுவினராய் ஒழுகுதல் அரிது என்றான் என்க. இத்துணையும், மக்கள் யாக்கை பெறுதற்கருமையும், அது பெற்றாலும் நன்னிலமும் நற்குலமும் நல்வடிவும் நல்லறமும் பெறுதற் கருமையும் கூறி, இனி, அவ்வியாக்கை நிலை பெறா தொழியுந் தன்மை கூறுகின்றனர். 2754. இன்ன தன்மையி னருமையி னெய்திய பொழுதே பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருநதி மின்னு மொக்குநெ மெனநனி வீயினும் வீயும் பின்னை வெண்ணெயிற் றிரண்டபின் பிழைக்கவும் பெறுமே. 2755 வெண்ணெ யாயது வூங்குபு கூன்புற யாமை வண்ண மெய்தலும் வழுக்கவும் பெறுமது வழுக்கா தொன்மை வான்மதி யுருவொடு திருவெனத் தோன்றிக் கண்ண னாரடிக் கவிழினுங் கவிழுமற் றறிநீ. 2756(3) அழித லின்றியங் கருநிதி யிரவலர்க் கார்த்தி முழுதும் பேர்பெறு மெல்லையுண் முரியினு முரியும் வழுவில் பொய்கையுண் மலரென வளர்ந்துமை யாடிக் கெழீஇயி னாரொடுங் கிளையழக் கெடுதலுங் கெடுமே. 2757(4) கெடுத லவ்வழி யில்லெனிற் கேள்விக டுறைபோய் வடிகொண் கண்ணியர் மனங்குழைந் தநங்கனென் றிரங்கக் கொடையுங் கோலமுங் குழகுந்தம் மழகுங்கண் டேத்த விடையிற் செல்வுழி விளியினும் விளியுமற் றறிநீ. 2758(5) எரிபொன் மேகலை யிலங்கரிச் சிலம்பொடு சிலம்பு மரிபொற் கிண்கிணி யாயிழை யரிவையர்ப் புணர்ந்து தெரிவில் போகத்துக் கூற்றுவன் செகுத்திடச் சிதைந்து முரியும் பல்சன முகம்புடைத் தகங்குழைந் தழவே. 2759(6) கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குளித்துக் காதன் மக்களைக் கண்டுவந் தினிதினிற் கழிப்பப் பேது செய்பிணிப் பெரும்புலி பாய்ந்திடப் பிணமா மோத மாக்கட லுடைகலத் தவருற்ற துறவே. 2760(7) காமம் பைப்பயக் கழியத்தங் கடைப்பிடி சுருங்கி யூமர் போலத்த முரைவிந் துறுப்பினி லுரையாத் தூய்மை யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தி யீம மேறுத லொருதலை யிகலமர் கடந்தோய். இவை யேழுமொருதொடர். இ-ள். இகலமர்கடந்தோய்! நீ யானினிக்கூறுகின்றதனை யறிவாயாக; அஃதியாதெனின், இக்கூறிய நால்வகைத் தன்மையிற் காட்டின் மக்கட்கு விதித்த ஆயுள் நிலைபெறுதலரிதாகை யினாலே, அது: பொன்னும்வெள்ளியும் புணர்ந்தவெனச் சுக்கிலமுங் குருதியும் வயிற்றகத்தேபொருந்தி மக்கள் யாக்கை யெடுத்தற்கெய்திய பொழுதிலே மின்னுமொக்குளுந் தோன்றிக் கெடுமாறுபோலக் கெடினுங்கெடும்; அங்ஙனங் கெடாது வெண்ணெய் போற்றிரண்ட பின்னர்க் கெடவும் பெறும்; அதிற் கேடின்றேல், அது யாமையி;னறன்மையைப் பெற்றவளவிலே கெடவும்பெறும்; அஃது அந்நிலையிற் கெடாதேல், நிறைமதி போலுங் குறையாவுரு வுடனேபிறந்து இருமுதுகுரவர் முதலாயி னாரழக் கெடினுங்கெடும்; அதிற்கேடின்றி யிர வலர்க்கு நிதி முழுதையுங்கொடுத்துப் பெயரிடு மளவிலே கெடினுங்கெடும்; அதிற்கேடின்றேல் மையோலைபிடித்து நட்டோருங்கிளையுமழக் கெடுதலையுஞ்செய்யும்; அவ்வழிக் கேடின்றேல் நூல்களை முற்றக்கற்று, மகளிர் வடிவையும், இளமையையும், அழகையுங் கண்டு அநங்கனேயென்று மனங் குழைந்திரங்கப் பரிசிலர் கொடை யை யேத்தவிடைபோல் நடக்கின்ற காலத்தே கெடினுங்கெடும்; அதிற்கேடின்றேல் அரிவையரைப்புணர்ந்து வேறொன்றுந் தெரியாத போகநுகர்ச்சிக் காலத்தே கூற்றுவன் உயிரை வெளவு தலாலே பல்சனஞ் சிதைந்து முகத்தே புடைத்துக்கொண்டு அழும் படிகெடும்; அதிற்கேடின்றேல் மகளிரிடத்தே யழுந்தி யவர் பெறும் புதல்வரைக்கண்டு உவந்து காலங்கழிக்குமளவிலே தஞ் சுற்றத்தார் உடைகின்ற மரக்கலத்திலிருந்தவருற்ற வருத் தத்தை யுறும்படி நோயாகிய புலிபாயப் பிணமாய்க்கெடும்; அதிற் கேடின்றேல் தம்போகநுகர்ச்சி மெல்ல மெல்லக் கழிதலாலே தங்கடைப் பிடிகள்குறைந்து ஊமர்போலே யுறுப்பாலே வார்த்தைகூறித் தூய்மையில்லாத உடம்பாகிய குளம் ஒன்பது வாயிலாகிய தூம்பு களுந் தம்வயத்தனவாகாமற் சேரத்திறந்து பாய்ந்து இவ்வியாக்கை முடிவிலாம்பொருளிதுவென்று அறியாதார்க்கறிவித்துச் சுடுகாட் டிலே யேறுதல் உறுதி; ஆதலால், நீ யிதற்குவேறாகி நிலைபெறும் பொருளை யறிவா யாகவென்றானென்க. முன்னிருதிங்களிற் பொன்னும்வெள்ளியும்போன்றும், பின்னிரு திங்களில் வெண்ணெய்போன்றும், ஐந்தாந்திங்களில் ஆமைபோன்றும், ஆறாந்திங்களிலுருத்தெளிந்தும் பிறக்குமென் றார். இரண்டிடத்திற் கூறிய மற்று-வினைமாற்று. ‘பிணமா யெ’ன்றும் பாடம். (156-162) 2761. தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித் திலகவெண் குடையோ யீங்கி தன்றியு மிமையவ ரமையலர்க் கடந்த தாங்கு மாவண்கைச் சக்கர மிக்குயர் பிறரும் யாங்க ணாரவ ரூரொடு பேரெமக் குரையாய். இமையவர்க்குப் பகைவராயுள்ளாரை ஆண்டுச்சென்று வென்றபிறர்; திருவை ஒழித்த வரசர்பாற் செல்லாமற் றம் மிடத்தே தாங்கும்பிறர்; முன்னர்ச் செலுத்துஞ் சக்கரம் மிக்குயர்தற்குக் காரணமாகிய பிறர். உலகில் அரசரெல்லாரும் வணங்கவிருத்தலிற் சக்கவர்த்திகளைப் பிறரென்றார். இ-ள். அரசனே! யாம் இவ்வுலகில் மக்கட்குரியனவாகக் கூறிய இந்நிலையாமையேயன்றியும் அவரிற்சிறந்த சக்கரவர்த்தி களும் நிலைபெற்றிருந்தாரில்லை; அவர்களூரும்பெயரும் நிலை பெறாமையின், யாமுணர்ந்திலேம்; நீ நிலைபேறுணர்ந்தன வுள வேற் கூறென்றானென்க. (163) நிலையாமைமுற்றிற்று 10.நரககதித்துன்பம். 2762. வெவ்வினை செய்யு மாந்த ருயிரெனு நிலத்து வித்தி யவ்வினை விளையு ளுண்ணு மவ்விடத் தவர்க டுன்ப மிவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனிக்கு முள்ளஞ் செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேந்தே. இ-ள். அங்ஙனங்கூறி, வேந்தே! தீவினையைச் செய்யு மாந்தர் தமதுயிரென்னு நிலத்தே யத்தீவினையை விதைத்து அத்தீவினை யின் பயனைநுகரும் அந்நரகத்திடத்தே அந் நரகர்படுந் துன்பம் இத்தன்மைய வென உரைக்கக்கடவேமென்று நினைப்பினும் உள்ளநடுங்கும்; ஆயினுஞ் சிறிது அதன்றன்மை கூறச் செவ்விதிற் கேட்பாயாக வென்றானென்க. (164) 2763. ஊழ்வினை துரப்ப வோடி யென்றுமூழ்த் தத்தி னுள்ளே சூழ்குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்ததீங் கனிக ளூழ்த்து வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன்பத் தாழ்துய ருழப்ப வூணு மருநவை நஞ்சு கண்டாய். இ-ள். தீவினை தம்மனத்தைச் செலுத்துதலாலே யோடிச் சென்று அதன் பயனையெல்லாம் நுகர்தற்குப்பொருந்தின முகூர்த் தத்திலே பெண்ணைமேற்றொடுத்தகனிகள் ஊழ்த்துப் பெருங் காற்றாற் சேரவிழுவனபோலே தலைகீழாகவீழ்ந்து பின்னரும் நரகத்தே சென்று பிற ஆழ்துயரையுழப்பர்; அவர்க்கு அவ்விடத்து ஊணும் நஞ்சுகா ணென்றானென்க. ஒன்றுமூழ்த்தம்-ஒருமுகூர்த்தமென்றுமாம் வெரு வரத்தக்க துன்ப மென்றது நரகத்தை. நஞ்சு உணவாயுஞ் சாகார், இத்தீவினையை நுகர்தற்காக. எதிர்நின்று போர்செய்யாது எளியராயிருப்பரைச் சேரக்கொன்றார், பின்னர் இங்ஙனநுகர்வ ரென்றார். (165) 2764. இட்டிவேல் குந்தங் கூர்வா ளெரிநுனைச் சுரிகை கூட நட்டவை நிரைத்த பூமி நவையுடை நரகர் பொங்கி யுட்பட வெழுந்து வீழ்ந்தாங் கூன்றகர்த் திட்ட வண்ண மெட்டெலாத் திசையுஞ் சிந்திக் கிடப்பவா லடக்க மில்லார். இ-ள். முன்னர் ஐம்பொறிகளிலடக்கமில்லாராய்த் தீவினை யையுடையராகிய நரகர் பொங்கி யெழுந்து ஈட்டி முதலியன கூட நட்டவை நிரைத்து நிற்கின்றபூமியிலே யவை தம்முள்ளே யழுந்தும்படிவீழ்ந்து அவ்விடத்தே யூனைச் சிதறத் தட்டினாற்போல் எல்லாத் திசைகளிலுஞ் சிந்திக் கிடவா நிற்பர்காணென்றானென்க. (166) 2765. வெந்தடி தின்ற வெந்நோய் வேகத்தான் மீட்டு மாலைப் பைந்தொடி மகளி ராடும் பந்தென வெழுந்து பொங்கி வந்துடைந் துருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய் கந்தடு வெகுளி வேகக் கடாமுகக் களிற்று வேந்தே. இ-ள். வேந்தே! முற்பிறப்பிலே விரும்பிய தசைகளைத் தின்ற தனாற் பிறந்த தீவினையின்கொடுமையினாலே மகளிராடும் பந்தெனத் தீயினின்றும்பொங்கி யெழுந்து வீழ்ந்து மீட்டும் அதனுள்ளே வந்து உருகி யுடைந்து மயங்கிக் கிடப்பர்காணென்ற னென்க. (167) 2766. வயிரமுண் ணிரைத்து நீண்ட வார்சினை யிலவ மேற்றிச் செயிரிற்றீ மடுப்பர் கீழாற் சென்னுனைக் கழுவி லேற்றி மயிருக்கொன் றாக வாங்கி யகைத்தகைத் திடுவர் மன்னா. வுயிரைப்பே துறுத்து மாந்த ருயிரைப்பே துறுக்கு மாறே. இ-ள். அரசனே! ஒன்றனுயிரை வருத்தமுறுத்து மாந்தரு டைய உயிரை வருத்தமுறுத்துமாற்றைக் கேளாய்; தாஞ்செய்ததீவினையாலே யுடம்பிற்றைத்தால் முனைமுறியாதபடி வைர மாகியமுள்ளை முழுக்கநிரைத்து நீண்ட இலவிலேயேற்றிக் கீழே நெருப்பை எரிப்பர்; அதுவேயன்றிக் கழுவிலேயேற்றித் தாங் கொன்ற விலங்குமுதலிய வற்றினது ஒருமயிருக்கு ஒருதசையாக அறுத்தறுத்து வாங்கிப் போகடுவரென்றானென்க. (168) 2767. துடிக்குரற் குரல பேழ்வாய்த் தொடர்ப்பிணி யுறுத்த செந்நாய் மடுத்திட வைர வூசி வாளெயி றழுந்தக் கௌவிப் புடைத்திட வலறி யாற்றார் பொன்றினும் பொன்றல் செல்லா ருடுப்பினம் வேட்டஞ் செய்தா ருழப்பவாற் றுன்ப மாதோ. இ-ள். உடுப்பினத்தை வேட்டையாடினவர், துடியின் குரல்போலுங் குரலவாகிய சங்கிலியாற்பிணித்த பெரியவாயை யுடைய செந்நாயைக் கொண்டு கடிக்கவிட, அவை வைர வூசிகள் போலுமெயிறுகளழுந்தக் கௌவி யுதறிப் போகடுதலாலே யாற்றாராய் அலறி இவ்வாறே யுடம்பு பொன்றினும் உயிர் பொன்றுதல் செல்லாராய்த் துன்பமுழப்ப ரென்றானென்க. இவர்கள் துன்பமுறுதற்காக அழிந்தவுடம்பு மேலும் வடிவு கூடுமென்றுணர்க. (169) 2768. வாளைமீன் றடிக டின்றார் வருகென வுருக வெந்த வாளத்தைக் கொடிற்றி னேந்திப் பகுத்துவாய் புகுத்த லாற்றா ரூளைக்கொண் டோடு கின்றா ருள்ளடி யூசி பாயத் தாளொற்றித் தப்பி வீழ்ந்தார் தறிவலை மானிற் பட்டார். இ-ள். நம்முடைய நல்லறத்தைத்தப்பிப் புலாலுண்ண விரும்பி னாரைப் பின்னர் வாளைமீன்தடிகள்தின்றார், இங்ஙனே வாருங் களென்று அழைத்து அவர்கள் வாயைப்பகுத்து உருக வெந்த செப்புப் பாளத்தைக் கொடிற்றாலேயெடுத்துப் புகுத்தலைப் பொறாராய்க் கூப்பிட் டோடுகின்றவர்கள், அங்ஙனமோடா மைக்கு நட்டுவைத்த அடியொட்டி யுள்ளடி யிலே பாய்கை யினாலே, கால் நிலத்தோடே ஒட்டிக்கொண்டு தறிவலையில கப்பட்ட மான்போலே பின்னரும் அகப்பட்டா ரென்றானென்க. ‘தப்பிவீழ்வா’ரென்றபாடத்திற்குத் தப்பிவீழ்வாராய்த் தின்றாரென்க. தறிவலை தறியைப்புதைத்து அதனோடே கட்டி நிலத்தில் இட்டு வைத்த வலை. (170) 2769. காதலாள் கரிந்து நையக் கடியவே கனைந்து கன்றி யேதிலான் றார நம்பி யெளிதென விறந்த பாவத் தூதுலை யுருக வெந்த வொள்ளழற் செப்புப் பாவை யாதகா தென்னப் புல்லி யலறுமால் யானை வேந்தே. இ-ள். வேந்தே! தன்மனைவி வருந்தாநிற்கத் தான் ஏதிலான்றாரம் எனக்கெளிதென்று உலகியலை யிறந்து நச்சிப் பலருங் கடிந்து கூறாநிற்கவே அதிலேசெறிந்து தழும்பிச் செய்த பாவத்தாலே, அவ்வுயிர்கள் பின்னர் உலையிலொள்ளழலிலே. உருகவெந்த செப்புப் பாவையைக் கண்டோர், ஆ! தகாதென் னும்படி தழுவி யாற்றாது அலறுங்காணென்றானென்க. (171) 2770. சிலையினான் மாக்கள் கொன்று செழுங்கடல் வேட்டமாடி வலையினான் மீன்கள் வாரி வாழுயிர்க் கூற்ற மான கொலைநரைக் கும்பி தன்னுட் கொந்தழ லழுத்தி யிட்டு நலிகுவர் நாளு நாளு நரகரை நாம வேலோய். இ-ள். நாமவேலோய்! கொன்றும் வாரியும் வேட்டை யாடி உடல்வாழுமுயிர்கட்குக் கூற்றமான பாவிகளை நரகத் துள்ள நெருப்பின்கண்ணே யழுத்தி நாடோறுநாடோறும் அந்நரகரைக் சுடாநிற்பரென்றானென்க. (172) 2771. பாரகங் கழுநர் போலப் பரூஉத்தடி பலரு மேந்தி வீரநோய் வெகுளி தோற்றி விழுப்பற வதுக்கி பாட்டுக் காரகற் பொதிப்பர் கண்ணுட் சுரிகையை நடுவர் நெஞ்சிற் பாரக்கூர்ந் தறிக ணட்டுப் பனையெனப் பிளப்பர் மாதோ. இ-ள். அதுவேயன்றிப் பாரிலுள்ளார் செய்த தீவினைகளைத் தாங்கழுவுவார் போலே நிரயபாலர்பலரும் பரிய தடிகளை யெடுத்து வலியநோயைக்கொடுக்குங் கோபமெழுந்து அவர்களு டம்பிற் கழிவதொன்றுமில்லையாம்படி கூட நருக்கி யிட்டுச் சிலரைக் காரகலிலே பொரிப்பர்; சிலரைக் கண்ணிலே சுரிகையை நடுவர்; சிலரை நெஞ்சிலே தறிகளைப்புடைத்துப் பின்னர் பனைபோலப் பிளப்பரென்றானென்க. பல்லுயிர்களுந் தாஞ்செய்த வினையைத்தாமேநுகரினும் அதனை முயன்று நுகர்வித்துக்கழிப்பராதலிற், ‘கழுநர்போல’ வென்றார். இஃது ஒப்பில்போலி. (173) 2772. நாப்புடைப் பெயர்த்த லாற்றார் நயந்துநீர் வேட்டு நோக்கிப் பூப்புடை யணிந்த பொய்கை புக்குநீ ருண்ண லுற்றாற் சீப்படு குழம்ப தாகிச் செல்லலுற் றந்தோ வென்னக் கூப்பிடு குரலாய் நிற்பர் குறைப்பனைக் குழாங்க ளொத்தே. இ-ள். அங்ஙனந் தீவினைப்பயனைநுகருங்காற் றண்ணீர் வேட்டு நாவை வறட்சியால் அசைத்தலாற்றாராய்ப் பூவணிந்த பொய்கைகளை நயந்துநோக்கிப் புக்கு அதிற்றண்ணீரையுண்ணத் தொடங்கினால் அதுசீயாலுண்டான குழம்பாகையினாலே தாம் வருத்தமுற்றாராய் அப்பொழுது அழத்தொடங்கி, அந்தோ வென்று கூப்பிட்டிடுங் குரலாராய்த் தலைபோன பனைத்திரளை யொத்து நிற்பரென்றானென்க. அணிந்தென்று பாடமாயிற் றோன்றுமென ஒருவினை வருவிக்க. 2773. நறுமலர்த் தாம நான்ற நானநீர் பிலிற்றும் பந்தர் குறுகலுங் குடநெய் பெய்த கொந்தழல் போன்று பொங்கிப் பறையல கனைய வெண்பற் பசுங்கழற் குண்டு பைங்க ணுறுதுயர் நரகர் தம்மை யுருகச் சுட்டிடுங் களன்றே. பறையலகு-இக்காலத்துப் பலகறையெனமருவிற்று. இ-ள். பலகறையையொத்த பெரிய பல்லினையும், பசுங்கழல் போலுங் கண்ணினையுமுடைய நரகர் நீர்வேட்டுப் பந்தரைக் குறுகின னவளவிலே அப்பந்தர் குடநெய் சொரிந்த நெருப்புப் போலப் பொங்கி அவரை யுருகச் சுட்டிடுமென்றா னென்க. (175) கள்-அசை. 2774. வெந்துருக் குற்ற செம்பின் விதவையு ளழுத்தி யிட்டு மெந்திர வூச லேற்றி யெரியுண மடுத்துஞ் செக்கிற் சுந்தெழுந் தரைத்தும் போகச் சுண்ணமா நுணுக்கி யிட்டு மந்தரத் தனைய துன்பம் வைகலு முழப்ப மாதோ. இ-ள். வெந்து உருகுதலுற்ற செம்பாலான குழம்பிலே நிரைய பாலரால் அழுத்தியிடப்பட்டும், எந்திரமான ஊசலிலேற்றிக் கீழே நெருப்பையெரிக்கப்பட்டும், செக்கிலேயிட்டு நீரெபந்துபோக அரைக்கப்பட்டும், சுண்ணமாக நுணுக்கியிடப்பட்டும் மந்தர மாலை போற் பெரிய துன்பத்திலே நாடோறும் வருந்துவரென்றா னென்க. (176) விதவை-குழம்பு. 2775. உழும்பகட் டெருது போல வுரனறு தாளராகிக் கொழுங்களி யளற்றுள் வீழ்ந்துங் கொழும்புகை மடுக்கப் பட்டு மழுந்துமிந் நரகந் தன்னுட் செல்பவர் யார்கொ லென்னி னெழுந்துவண் டிமிரும் பைந்தாரிறைவநீ கேண்மோ வென்றான். பகடு-பெருமை. இ-ள். இறைவனே! யான் கூறியவாறேயன்றிப் பலருந் தாஞ் செய்த தீவினையாலே சென்று அழுந்தும் இந்நரகத்துள்ளே எருது போல வலியற்ற காலராய் அழகிய செறிந்த சேற்றுள்ளே விழுந்தும், ஆண்டுநின்றும் எழுதற்குப் புகைமடுக்கப்பட்டும் செல்வர்; அங்ஙனஞ் சேறற்குரியார் யாரென்று கேட்டியாயின், அவர்களை மேலே யான் கூறக் கேட்பாயாகவென்றானென்க. “துன்னினர ழுந்துநரகம்” என்ப. (177) 2776. கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடியநீரா ரில்லையே யிம்மை யல்லாலும்மையுமுயிரு மென்பா ரல்லதுந் தவமுமில்லை தானமு மிழவென் பாருஞ் செல்பவந் நரகந் தன்னுட் டீவினைத் தேர்க ளூர்ந்தே. இ-ள். கொலைத்தொழிலிலே யடிப்பட்டு நின்றாரும், நெஞ்சு கொடியாரும், கடியதொழில் செய்வாரும், இப்பிறப்பே யன்றி மறுமையு மில்லை; உயிர்க்கிழவனென்றுஒருவருமில்லை யென்பாரும், நல் வினை யுந் தீவினையுமில்லையென்பாரும், செய்ததானமும் பயன்றா ராதென்பாருந் தீவினையாகிய தேரையேறி அந்நரகந்தன்னுட் செல்வரென்றானென்க. தவமுந் தவமல்லதுமென்க. 11. விலங்குகதித்துன்பம் 2777. எரிநீர வேநரக மந்நரகத் துன்பத் தொருநீர வேவிலங்கு தாமுடைய துன்பம் பெருநீர வாட்டடங்கட் பெண்ணணங்கு பூந்தா ரருநீர வேந்தடர்த்த வச்சணங்கு வேலோய். இ-ள். பெரிய நீரவாகிய கண்ணையுடைய பெண்களை வருத்துந் தாரினையும், அடர்த்தற்கரிய தன்மையவாகிய வேந்துகளை யடர்த்த வலியினையும், வருத்தத்தினைச் செய்யும் வேலினையுமுடைய வரசனே! நரகம் எக்காலமும் எரியினது தன்மையவே; அந்நரகத்திலே பல்லுயிருமுறுந் துன்பத்தோடு ஒருதன்மையவே விலங்குசாதியுடைய துன்பமுமென்றானென்க. (179) 2778. கழைபொதிர்ப்பத் தேன்சொரிந்து காயத்தினைக ளார்த்து மழைதவழுங் குன்றில் வயமா முழங்க வுழையளிய தாமுறூஉந் துன்பங்க ணின்மேல் விழைவயரா வேந்தறூஉந் துன்பமே கண்டாய் இ-ள். இறாலிலே மூங்கில்பொதிர்ப்ப அது தேனைச் சொரிந்து தினைகளையார்த்துங் குன்றிலே புலிமுழங்க, அது கேட்ட அளிய உழைமானுறுந்துன்பங்கள் நின்னிடத்து விருப்பஞ் செய்யாத வேந்துகளுறுந் துன்பமேகாணென்றா னென்க. (180) 2779. நிணம்பிலிற்றும் வாயர் நெருப்பிமைக்குங் கண்ணர் குணனஞ்சர் கூற்றனைய கோணாய் மடுப்பக் கணமஞ்ஞை யஞ்சிக் கழுத்தொளிப்ப கண்டாய் மணமல்கு பூந்தார் மழைதழீஇய கையாய். இ-ள். தாரினையுடைய மழைபோன்ற கையாய்! வாயராய்க் மைக்கங் கண்ணராய்த் தங்குணத்தால் நஞ்சின்றன்மையையுடையார், கூற்றனைய கொலைத்தொழிலையுடைய நாயைச்செலுத்த, அதற் கஞ்சித் தங்கழுத்தைச் சிறகிலேமறைப்பன மயில்கள்கா ணென்றா னென்க. (181) 2780. மண்ணார மஞ்ச ளுரிஞ்சி மலர்சூட்டிக் கண்ணார் மறியறுத்துக் கையா லுதிரந்தூ யுண்ணீரே தேவீ ருந்தென்ப திவ்வுலக நண்ணார்க் கடந்தோய் நமனுலகி னான்மடங்கே. இ-ள். நண்ணார்க்கடந்தோய்! இவ்வுலகம் மறிக்கு மஞ்ச ளுரிஞ்சி மண்ணுதல் முடிகையினாலே பின்னர் மலரைச்சூட்டி யதனையறுத்துக் கையாலே யுதிரத்தைத்தூவி, தேவீர்! உவந்த உண்ணீரென்று கூறுகின்ற கொடுமை நரகத்திலும் நான் மடங்கு கொடியதென்றானென்க. (182) 2781. மங்கை மனாவனைய மென்சூன் மடவுடும்பு செங்கண் வரிவரால் செந்நீரி ளவாளை. வெங்கருனை புல்லுதற்கு வேறுவே றாக்குறைப்ப வங்காந் தழுகின்ற தார்கண்ணே நோக்குமே. மனா-அக்கு. இனி ‘மன’வென்னுஞ் செய்யுட்சொல் விகார மாயிற்றென்றுமாம். இ-ள். உடும்பு வரால் வாளையென்கின்றவற்றைப் பொரிக் கறியாகச் சமைத்தற்கு வேறுவேறாக வறுப்ப, அவை யுயிர் போவதற்கு வாயங்காந்தழுகின்ற தீவினை யாரிடத்தே செல்லு மென்றானென்க. அழுதல்-பழையதன்மைகெட்டு வருந்துதல்; அஃது அசை வென்னுமெய்ப்பாடாம். யார்கண்ணேநோக்குமென்றது-மேவினவர் கண்ணே யன்றி யேவினார்கண்ணும், உடம்பட்டார் கண்ணுஞ் செல்லு மென்றவாறு. (183) 2782. கடலரண மாகாது காடரண மாகா குடலரண மாகாது குன்றரண மாகா வடுதுயர மூர்ந்தலைப்ப வாங்கரணங் காணாப் படுதுயரத் தாலே பதைத்தளிய வேமே. ஆங்கென்றது தாங்செல்கின்ற விலங்குகதியை. அரண மென்றது-அதற்குக் காவலாகிய நல்வினையை. காணாவளிய வென்க. இ-ள். தாஞ்செல்கின்ற கதிக்குக் காவலாகிய நல்வினை முன் செய்யாத விலங்குகள், தம்மையடுகின்றதீவினை சென்றலைக் கை யினாலே கடல் அரணமாகாமற் காடுகள் அரணமாகாமற் குடல் அரண மாகாமற் குன்றுகள் அரணமாகாமல் மேன்மேலுண் டாந்துயரத்தாலே பதைத்து வேமென்றானென்க. குடரிற்கிடந்தவையும் நோயான்வருந்திவிடுமென்றான். ஆகா வென்ற பன்மையை ஆகாவாயெனவிரித்து ஆகாமலென வுரைக்க. (184) 2783. முழுப்பதகர் தாடுரத்து முட்டாற்றிற் குத்தி யுழப்பெருது பொன்றப் புடைத்துழுது விட்டாற் கழித்துண்ணுங் காக்கை கடிவோரு மின்றிப் புழுச்சொரியத் துன்பம் பொறுக்கலா பொன்றும். அறிவுநுழைதற்குவழியிலராய், தீவினை செய்யாவாகா தென் பார்க்குப் பதகங்கூறுவார் முழுப்பதகர். பதிதர்-விகாரமுமாம். பாதகர-பதகரெனவிகாரமுமாம். இ-ள். பதகர் உழுதற்றொழிலையுடைய எருத்தை முற்படச் சாம்படியடித்து அதற்குப் போகாமையிற் றாற்றுக்கோலாலே குத்தித் தமதுமுயற்சியாலே துரந்து உழுது. கைவிட்டால் என்பைக்கழித்துத் தசையையுண்ணுங் காக்கையை யோட்டு வாரின்றாய்ப் புழுச்சொரியத் துன்பம்பொறுக்கமாட்டாது சாமென்றானென்க. (185) 2784. நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி யுரங்கெட் டுறுப்பழுகிப் புல்லுண்ணா பொன்றும். இ-ள். சிறிதாகிய நீரையுடைய யாற்றில் இடுமணலுள்ளே சகடமழுந்துதலாலே, அதிற்பெய்த பண்டத்தைப் பெரும்பாரத் தைச்சுமந்தவாடவர் அதனைக் கைவிடாது தாங்குமாறுபோலத் தாமுந் தாங்கித் தமக்குப் போகலாநிலத்தைச்சேர்ந்து மூக்கை நிலத்தேயூன்றி யடிமுழந்தாளிட்டு இழுத்துத் தம்வலியெல்லாங் கெட்டுப் பின்பு உறுப்புக்களழுகிப் புல்லுண் ணாவாய்ச் சாமென்றானென்க. (186) 2785. போழ்மதிபோற் கூரிரும்பிற் பூநுதல்கள் போழ்ந்திடவுங் காழ்நுதியிற் குத்துண்டுங் கார்மழைபோ னின்றதிர்ந்தும் வீழ்பிடிகள் சிந்தித்தும் வெந்நோய்தம் முள்சுடவெந் தாழத்த கந்திளக யானை யலம்வருமே. இ-ள். யானைகள், மதியைவகிர்ந்ததுபோலுந் தோட்டி யாலே மத்தகத்தைப் பிளக்கப்பட்டும், பரிக்கோலாற் குத்துண்டும், அவை பொறாமல் அதிர்ந்தும், காமநோய் சுடவெந்து பிடிகளை நினைத்தும் ஆழநாட்டின கந்திளகச் சுழலுமென்றா னென்க. (187) 2786. எரிவளைப்ப வெம்புகையுண் டின்னுயிர்விட் டேகு மரிவளைப்பக் குஞ்சரமு மாலிபோ னீராம் வரிவளைக்கும் வெண்மயிர்க்கு முத்திற்கு மாந்தர் திருவளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார். இ-ள். திருவைத்தடுத்த மார்பனே! சிலவிலங்குகள், நெருப்பு வளைப்பப் புகையையுண்கையினாலே யிர்விட்டுப் போம்; குஞ்சரங் களுஞ் சிங்கம் வளைப்ப வுயிர்விட்டுப்போம்; அவையே யுமன்றி மாந்தர் நீரிலேபிறக்குஞ்சங்கை வரிவளைக்கும், இப்பியை ஆலி போலுமுத்திற்குங் கவரிமாவை மயிர்க்குந் தேங்காராய்க் கொல்வர்காணென்றானென்க. (188) 2787. வேள்விவாய்க் கண்படுத்தும் வெவ்வினைசெ யாடவர்கை வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தி னீருரிபோற் கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் கண்படுத்து மின்னணமே நாளுலப்பித் திட்டார் நமரலா தாரெல்லாம். இ-ள். உணர்வின்மாக்கள் தமக்கு நன்மையைத் தருமென்று போர்த்த யானையின்பசுந்தோல் தம்முயிர்க்குக் கேடாயினாற் போல, கொடியமக்கள் நமக்கு நன்மையைத் தருமென்று விலங்கு களை விருந்திடுதற்கு வாளின்வாயாற் கொன்றும், வேள்வி யிடத்தே கொன்றும், வலையிடத்தே கொன்றும் இப்படியே தமது வாழ்நாளைத் தேய்ப்பித்து விட்டார்; நம்முடைய தமரல்லாதா ரெல்லாரு மென்றானென்க. யானையின்பசுந்தோல் பிறருடம்பிற்பட்டாற் கொல்லு மென்றுணர்க. “கொல்லாமை மேற்கொண்ட டொழுகுவான் வாழ் நாண்மே-செல்லா துயிருண்ணுங் கூற்று.” (குறள்.326) என்றார்பிறரும். இனியவற்றின் வாழ்நாளுமென்ப. இனி வாரணத்துரி போலே தப்பாமற் கொல்லும் வலையென்றுமாம். இமிழ்ப்பு-கட்டு. கோள் வலை. (189) 2788. கொல்வாருங் கூட்டுட் செறிப்பாரு மாடவர்க ளல்லாரு நாய்வேட்ட மாடாத மாத்திரையே யல்லாத பைங்கிளியும் பூவையு மாதியா வெல்லாங் கிளைபிரித்திட் டேமுறுநோய் செய்பவே. ஆடவர்களல்லாராயிருப்பார்-மகளிர். முற்கூறிய ஆடவரே யன்றி மகளிருமென உம்மை எச்சவும்மை. அல்லாத-நஞ் சமய மல்லாத. இ-ள். அல்லாதமகளிரும், கருனைபுல்லுதற்கக் கொல்வாருங் கிளியும் பூவையுமுதலாக ஒழிந்தவுயிர்களையெல்லாந் தத்தங் கிளையைப் பிரித்துக் கூட்டுளடைப்பாருமாய் அவற்றிற்கு வருத்த முறுநோயைச் செய்வார்; ஆதலால், அவரும் புறம்போந்து நாய் வேட்டமாடாத மாத்திரையா யிருப்பார் காணென்றானென்க. என்றதனால், உள்ளிருந்தும் பாவமே செய்வரென்றான். (190) 2789. மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும் பல்லவரே யன்றிப் பகுத்துணாப் பாவிகளு மல்குல் விலைபகரு மாய்தொடிய ராதியா வில்பொருதோண் மன்னா விலங்காய்ப் பிறப்பவே. இ-ள். வில்பொருத தோளையுடைய அரசனே! மலைபோல சையாத மாதவத்தோரைப் பழித்துரைக்கும்பலரும், பகுத்துண்ணா தாரும், பரத்தையர் முதலாயினாரெல்லாரும் விலங்காய்ப் பிறப்பர் காணென்றானென்க. (191) விலங்குகதிதுன்பமுற்றிற்று. 12. மக்கட்கதித்துன்பம் 2790. தம்மை நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கிச் செம்மை மலர்மார்ப மட்டித் திளையார்தோள் கொம்மைக் குழகாடுங் கோல வரைமார்பர் வெம்மை மிகுதுன்பம் வேந்தே சிலகேளாய். வரைமார்பர்-இகழ்ச்சி. இ-ள். வேந்தே! தம்மார்பிலே பூசப்படுவனவற்றைப்பூசித் தம்மைக் கண்ணாடியிலே பார்த்துத் தம்மழகைத் தாங்க மாட்டாராய் மகிழ்ச்சிசெறிந்து பெரிய இளமைச்செவ்வியாலே இளையார் தோளைக்கூடும் வலைமார்பரது துன்பத்திலே சிலவற்றை கேட்பாயாக வென்றானென்க. (192) 2791. ஈருட் டடிமூடி யீண்டு மலபிண்டப் போர்வை புழுமொய்ப்பப் பொல்லாக் குடர்சூடிச் சார்தற் கரிதாகித் தானின் றறாவள்ள னீர்வாய்ச் சுரம்போந்தார் தம்மை நினையாரோ. தமக்கடைத்த காலங்கள்தோறும் உறுப்புக்கள் திரள்கின்ற மலமாகிய தம்முடம்பைப் போர்த்த போர்வையைப் புழு மொய்ப்ப. நீராற்றூய்மைசெய்யாக்காற் சேர்தற்கரிதாகிப் பொல் லாதானசுரம்; நீர்தானின்றறாத சுரம்; அள்ளலை யிடத்தே யுடைய சுரம். இ-ள். தாம் வயிற்றுளிருக்கின்ற காலத்து அவ்விடத்தில் புழுத் தாயினுடைய ஈருளாகிய தடியைமூடித் தமது போர்வையையும் மொய்யாநிற்கத் தாங் குடரைச் சூடியிருந்து புறம்போதுங் காலத்து அருவழியைப் போந்தமக்கள் தந்தூய் மையை நினையார்களோ, நினையாமையினன்றே வியக்கின்றா ரென்றானென்க. ஓகாரம்-எதிர்மறை. இனி மலபிண்டத்திற்பிறந்தபுழுத் தடியையுமூடித் தம்மையும் மொய்ப்பவென்பாமுளர். (193) 2793. அஞ்சொன் மடவார்த மார்வக் களிபொங்க நெஞ்சத் தயிலேற்று நீள்வெங் கழுவூர்ந்துங் குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டுந் துஞ்சிற் றுலகந்தோ துன்பக் கடலுள்ளே. குஞ்சி-மத்தகத்தின்மயிர். இ-ள். உலகத்தின்மக்கள், மகளிரிடத்து அவாவாற் பிறந்த மயக்கமிகுதலின், அவரைப்பெறுதற்கு நெஞ்சிலே வேலை யேற்றும், அவர்க்குப் பொருள்கொடுத்தற்குக் களவுகண்டு கழுவேறியும், அவரைக்களவுகண்டு யானைக்கிடப்பட்டுந் துன்பக்கடலிலே யழுந்தினார்; அந்தோ! இத்துன்பத்தை நீ நோக்காநின்றாயே யென்றா னென்க. (194) 2793. பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய் கண்ணார் கடன்மண்டிக் காற்றிற் கவிழுங்கான் மண்ணார் மணிப்பூணோய் மக்க ளுறுந்துன்ப நண்ணா நரகத்தி னான்கா மடியன்றே. இ-ள். பூணோய்! சமைத்த களிறுபோலப் பாய்விரித்த நாவாய் கடலிலேயோடிக் காற்றாற்கவிழும்போது மக்கள்படுந் துன்பஞ் சென்றுசேர்தற்கரிய நரகத்துன்பத்திலும் நான் மடங்குகா ணென்றானென்க. அந்நரகம்-நிகோதம். (195) 2794(1) செந்தீப் புகையுண்டுஞ் சேற்று ணிலைநின்று மந்தோ வெனமாற்றா லாற்றப் புடையுண்டுந் தந்தீ கெனாமுன்கை வீக்கத் தளர்வுற்று நொந்தார் குடிச்செல்வர் நோன்மை நுகம்பூண்டார். 2795(2) கண்சூன் றிடப்பட்டுங் கால்கை களைந்தாங்கே யண்பல் லிறக்கையா லாற்றத் தகர்பெற்று நுண்சாந் தரைப்பார்போ னோவ முழங்கையாற் புண்செய் திடப்பட்டும் புன்க ணுழப்பவே. இவையிரண்டுமொருதொடர். நொந்தார்-பகைவர். தந்தீகென்பது வினைத்திரிசொல். இ-ள் நின்பகைவர்நாட்டிற் குடியிருக்கும் மக்களாய செல்வர், நீதேடிய பொருளை அரசனக்குத் தருவாயாகவெனச் சொல்லி முன்கையை வீக்க அத்துன்பத்திற்குத்தளர்ந்து அதனைப் பொறுக் கின்றநுகத்தை முன்னர்ப் பூண்டவர், பின்னர் அங்கே சேற்றிலே நிற்றலைச்செய்தும், மாற்றாற் புடையுண்டும், கையால் அண்பல் லிறத் தகர்பெற்றும், சாந்தரைப்பார்போல முழங்கையாற் புண்செய் யப்பட்டும், கால்கைகளைக் களைந்தும், கண்சூன்றிடப்பட்டும், புகையுண்டும், துன்பத்தே யழுந்துவர் காணென்றானென்க. செல்வர்பூண்டாரென்க. தந்தீகென ஒருமையாற்கூறிற்று, அசரைத் தனித்தனியே தண்டித்தலின். (196)-(197) 2796. மாலைக் குடைமன்னர் வைய மகற்றுவான் காலைக் கதிதுன்பங் காவல் பெருந்துன்பஞ் சோலை மயிலன்னார் தோள்சேர் விலராயின் வேலைக் கடலேபோற் றுன்பம் விளையுமே. இ-ள். மன்னர்க்கு வையத்தை யகற்றுதற்குப் போதற்குரிய காலையிலே போகின்றபோக்குத் துன்பம்; அதனையகற்றிப் பிறர் கொள்ளாமற்காத்தல் துன்பம்; அவையேயன்றி அவர்தாம் மகளிர் தோளைச் சேராராயின், அவர்க்குக் கரையையுடைய கடல்போற் றுன்பம்பெருகுமென்றானென்க. (198) 2797. ஊன்சே ருடம்பென்னு மோங்கன் மரச்சோலை தான்சேர் கிணியென்னுஞ் செந்தீக் கொடிதங்கிக் கான்சேர் கவினென்னுங் காமர் மலர்வாடத் தேன்சேர் மலர்மார்ப தீத்திட் டிறக்குமே. இ-ள். மார்பனே! உடம்பென்னுஞ் சோலையிலேசேர்ந்த பிணி யென்னு தீயொழுங்கு அதனை விட்டுப்போகாமற்றங்கிக் கவி னென்னுங் கான்சேர்மலர் வாடும்படி அச்சோலையைச் சுட்டுத் தான் போமென்றானென்க. (199) 2798. கொட்டுப் பிடிபோலுங் கூனுங் குறளாமை விட்டு நடப்பனபோற் சிந்தும் விளைந்துசீ யட்டு முயவுநோ யல்லாப் பிறநோயும் பட்டா ருறுதுன்பம் பன்னிச் சொலலாமோ. இ-ள். கொட்டுப்பிடிபோலுங்கூனரும், குறளரும், யாமை கைவீசிநடக்குமாறுபோலுஞ்சிந்தரும், சீ விளைந்து வடியும் வருந்து நோயையும் பிறநோயையுமுற்றவர்களும் படுந்துன்பம் நம்மாலா ராய்ந்துகூற முடியாதுகாணென்றானென்க. (200) வேறு 2799. வேட்டன பெறாமை துன்பம் விழைநரைப் பிரித றுன்ப மோட்டெழி லிளமை நீங்க மூப்புவந் தடைத றுன்ப மேட்டெழுத் தறித லின்றி யெள்ளற்பா டுள்ளிட் டெல்லாஞ் சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றான். இ-ள். மாலையணிந்து இலங்கும்வேலோய்! மக்கட்கு வேட்ட பொருள் களைப் பெறாமை துன்பம்; விரும்பினாரைப் பிரிதல் துன்பம்; மூப்புவந்துசேர்தல் துன்பம்; இவையேயன்றி ஏட்டிலெழுத்தை யறிதலின்றி யிகழ்தல்முதலாக மற்றுள்ள இகழ்ச்சிகளெல்லாந் துன்பமேயாயிருக்குங் காணென்றா னென்க. (201) 13.தேவகதித்துன்பம். 2800. திருவிற்போற் குலாய தேந்தார்த் தேவர்தந் தன்மை செப்பிற் கருவத்துச் சென்று தோன்றார் கானிலந் தோய்தல் செல்லா ருரவமே லெழுதலாகா வொளியுமிழ்ந் திலங்கு மேனி பருதியி யீனயன்ற தொக்கும் பன்மலர்க் கண்ணி வாடா. இ-ள். இனித்தேவருடைய குணத்தைக்கூறின், அவர் கருவிற் சென்றுபிறவார்; கால் நிலந்தீண்டுதல்செல்லார்; அவரு ருவத்தைக் கூறின், எழுதலாகா; அவர் நிறம் பருதியினியன்ற தொக்கும்; அவர்க்குக் கண்ணி வாடாவென்றானென்க. (202) 2801. அங்கையு மடியு நோக்கிற் றாமரை யலர்ந்த தொக்கும் பங்கய மனைய செங்கண் பகுவொளிப் பவளஞ் செவ்வாய் செங்கதிர் முறுவன் முத்தின் றெளிநகை திகழுஞ் செய்யாள் வெங்கடை மழைக்க ணோக்கி வெய்துறத் திரண்ட வன்றே. இ-ள். அவர்தேவியர்க்குக் கையும், அடியுந் தாமரையலர்ந்த செவ்வியையொக்கும்; கண் கமலத்தையொக்கும்; வாய் செங்கதி ராகிய பேரொளியையுடைய பவளத்தையொக்கும்; திகழு முறுவல் முத்தினொளியையொக்கும்; இவையேயன்றி யவர்க்குத் திருமகள் இவரழகைப் பெற்றிலேனென்று தானோக்கி வருந்தும் படி யொழிந்த அவயவவழகும் வந்ததிரண்டன வென்றானென்க. (203) 2802. தாணெடுங் குவளைக் கண்ணித் தளையவிழ் கோதை மாலை வாண்முடி வைர வில்லும் வார்குழை சுடரு மார்பிற் பூணிடை நிலவு மேனி மின்னொடு பொலிந்த தேவ ரூணுடை யமிர்தம் வேட்டா லுண்பது மனத்தி னாலே. இ-ள். குவளைக்கண்ணியினையும், மார்பிற்கோதையி னையும், நெற்றிமாலையினையும், வாண்முடியிலுண்டாகிய வைர வில்லினையும், சுடருங்குழையினையும், மார்பிற் பூணிடத்தில் நிலவினையும், மின்னொடுபொலிந்த நிறத்தினையுமுடைய அத்தேவர் உண்டற்றொழிலையுடைய அமிர்தத்தை யுண்டற்கு விரும்பினால் மனத்தாலே யுண்பது; கையினாலுமுண்ணார்கா ணென்றானென்க. (204) 2803. சிதரரி யொழுகி யோடிச் செவியுறப் போழ்ந்து நீண்ட மதரரி மழைக்க ணம்பா வாங்குவிற் புருவமாகத் துதைமணிக் கலாப மின்னத் தொன்மலர்க் காம னம்பு புதைமலர் மார்பத் தெய்யப் பூவணை மயங்கி வீழ்வார். சிதரரி-சிதரினசெவ்வரி. மதரரி-கதித்தவழகு. ஓடிப்போழ்ந்து நீண்ட கண். இ-ள். காமன் றொன்மலரம்பு முன்னர்புதைந்த தேவருடைய மலர்ந்த மார்பிலே, தேவியர் புருவம் வாங்குவில்லாகக் கண் அம்பாக வெய்ய மயங்கிக் கலாபமின்ன அணையிலே வீழ்வார்க ணென்றா னென்க. கலாபமின்னவென்றது புணர்ச்சியை. (205) 2804(1) பூத்ததை கொம்பு போன்று பொன்னிழை சுடரு மேனி யேத்தருங் கொடிய னாரை யிருநடு வாகப் புல்லிக் காய்த்தியிட் டுள்ளம் வெம்பிக் கடைந்திடு கின்ற காம நீத்துநீர்க் கடலை நீந்தும் புணையென விடுத்தல் செல்லார். 2805(2) பொங்கல்வெம் முலைக ளென்னும் போதொடு பொருது பூந்தா ரங்கலந் தொடையன் மாலை கிழிந்தழ கழிய வைகிக் கொங்கலர் கோதை நல்லார் குரைகட லமிர்த மாகத் தங்கலர் பருகி யாரார் தாழ்ந்துகண் ணிமைத்தல் செல்லார். இவையிரண்டுமொருதொடர். 1.ஏத் தருங்கொடி-வேள் அம்பைச் செலுத்துதலைத் தருங் கொடி. இரு நடுவாக-இடைமுரிய. நீத்து-பெருக்கு. 2.பொங்கல்-பெருமை. அழகிய கலத்தினையுந் தொடையன் மாலையினையுமுடைய முலை. தங்கலர்-அமையார். இ-ள். கொம்பையொத்து இழைசுடருமேனியையுடைய கொடி யன்னாரைப் புல்லி யவருடைய முலைகளென்னுந் தாமரை முகை களோடே தமது தார்பொருது தோற்று அழகழியவைகி அதனாலு மமையா ராய் அவரை யமிர்த மாகப்பருகி யதனாலு மாராராய் விருப்ப மிகுதியாற் கண்ணிமை யாமற் றாழ்ந்து உளம் வெம்பிக் காய்த்தி யிட்டுக் கடைந்திடுகின்ற காமக்கடலைநீந்துந் தெப்பம் இவர்களே யென்றுகருதியவர் களைக் கைவிடார்காணென்றானென்க. (206-7) 2806(1) கருவியின் னிசைக ளார்ப்பக் கற்பக மரத்தி னீழற் பொருகய லனைய கண்ணும் புருவமு மரவஞ் செய்ய வரவமே கலைக ளம்பொற் கிண்கிணி சிலம்பொ டார்ப்பத் திருவனா ராடல் கண்டுந் திருவொடு திளைத்து மானார். 2807(2) பனிமுகின் முளைத்த நான்கு பசுங்கதிர்த் திங்க ளொப்பக் குனிமருப் புழுது மேகங் குஞ்சரங் குனிந்து குத்த வினிதினி னிலங்கு பொற்றோ டேற்றுமின் குழைகள் பொங்கத் துனிவிலர் களிற்றோ டாடித் தொழுதகக் கழிப்பர் வேந்தே. இவையிரண்டுமொருதொடர். 1. அரவஞ்செய்ய-மனத்தைக்கலக்க. 2. பனிமுகில்-பனிமாசு. வெண்மேகத்தே முளைத்த நான்கு பிறையை யொப்பவென்றார்; வெள்ளையானை நாற் கோட்டாதாதலின். ஏற்று-போரேற்று. தொழுதகவிரும்ப. இ-ள். வேந்தே! அங்ஙனநுகர்ந்தவர், கற்பகமரத்தின் நீழலிலே யிருந்து நால்வகைக்கருவிகளுடனே யினிய இசைகளாரா நிற்கத் திருவனாருடைய மேகலைமுதலியன ஆராநிற்ப அவர் கண்ணும் புருவமும் அரவஞ்செய்யாநிற்கக் கூத்தைக்கண்டுஞ் செல்வத்துடனே யொழிந்த விளையாட்டுக்களை விளையாடியும் அமையாராய்க் குஞ்சரம் மேகத்தோடே போர்தொடங்கிக் குனிந்து திங்களொப்ப வளைந்த மருப்பாலுங் குத்தும்படி தமது தோடுங் குழையும் பொங்க அதனை மேற்கொண்டு துனிவிலராய் அக்களிற்றோடே விளையாடிப் பொழுதுபோக்குவர் காணென்றா னென்க.(208-9) 2808. கடிகைவா ளார மின்னக் கற்பகக் காவு கண்டுந் தொடிகவி னறாத மென்றோட் டேவியர் சூழ வாம னடிகையிற் றொழுது பூத்தூ யஞ்சலி செய்து வீடே முடிகவிப் பிறவி வேண்டே முனைவவென் றிரப்ப வன்றே. கடிகை-தோள்வளை. இ-ள். அவர், போகநுகர்வதற்கு வேண்டுவன தருகின்ற கற்பகக்காவைக் கண்டு வைத்தும் இது நிலையாதென்ற உட் கொண்டு தேவியர்சூழத் தோள்வளையும் ஆரமுமின்னச் சென்று வாமனடியைத் தொழுது பூவைத்தூவி வணங்கி, முனைவனே! இப்பிறவியை விரும்பேம்; வீடே யெமக்கு முடிவதாகவென்று இரப்பர் காணென்றானென்க. (210) 2809. மலங்குவித் தாவி வாட்டி வாய்நிறை யமிர்தம் பெய்த விலங்குபொற் கலச மன்ன வெரிமணி முலைகள் பாயக் கலந்தனர் சென்ற பின்னாட் கதிர்கழன் றிருந்த வெய்யோன் புலம்புபோற் புலம்பித் தேவர் பொற்புகுத் திருப்ப வன்றே. பற்று, ஆர்வம், செற்றமுதலிய மலங்களைத்திரட்டித் தமக்குள்ள ஆயுளை அவமே போக்கி. இ-ள். தேவர், வாயளவுநிறைய அமிர்தம்பெய்த கலச மன்ன முலைகள்பாயக் கலந்தனராய் ஆவியை வாட்டிச் சென்ற பின்னாளி லே கதிர்போன ஞாயிற்றின்புலம்பு போற் புலம்பிப் பொலிவைப் போக்கி யிருப்பரென்றானென்க. முலைகள் தேவரைமயங்கப்பண்ணி யாவியைவாட்டி யென்றுமாம். (211) 2810. எல்லைமூ வைந்து நாள்க ளுளவென விமைக்குங் கண்ணு நல்லெழின் மாலை வாடு நஞ்சுடை யமிர்துண் டாரிற் பல்பகற் றுய்த்த வின்பம் பழுதெனக் கவல்ப கண்டாய் பில்கித்தே னொழுகும் பைந்தார்ப் பெருநில வேந்தர் வேந்தே. இ-ள். வேந்தே! அத்தேவர்கட்கு உயிர்போகப் பதினைந்து நாள் களுள வெனக் கண்ணுமிமைக்கும்; மாலைவாடும்; அவர்தாம் நஞ்சை யுள்ளேயுடைய அமிர்தையுண்டாரைப்போலே யங்ஙனம் பலநாளு நுகர்ந்த வின்பத்தைப் பயனின்றிக் காலம் போக்கினோமே யென்றுபின் வருந்துவர் காணென்றானென்க. (212) 2811. தேவரே தாமு மாகித் தேவராற் றெழிக்கப் பட்டு மேவல்செய் திறைஞ்சிக் கேட்டு மணிகமாப் பணிகள் செய்து நோவது பெரிதுந் துன்ப நோயினுட் பிறத்த றுன்பம் யாவதுந் துன்ப மன்னா யாக்கை கொண்டவர்கட் கென்றான். இ-ள். மன்னா! தாமுந் தேவரேயாயிருந்தும் வேறொரு தேவராற் கோபிக்கப்பட்டும், அவரையிறைஞ்சி அவரேவல் கேட்டும், அவ்வேவலைச்செய்தும், அவர்கள் தம்முடைய அணிகலங்களிற் பெரிய பணிகளைச்செய்தும் நோவது மிக்க துன்பம்; அதனைவிட்டு மண்ணிடைவந்து மக்களாயும் விலங் காயும் பிறந்தாலுந்துன்பம்; ஆதலால், யாதொரு யாக்கையை யெடுத்தவர்கட்கு அவ்வியாக்கை களெல்லாந் துன்பத்தையே செய்யுங்காணென்றானென்க. அணிதிரிந்து அணிகமாயிற்று. பணிகள்செய்வார்-மயன் முதலியோர்; “நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை” என்றார் பிறரும். என்றானென்பதனை முன்னர்க் கூறியவற்றிற்குங் கூட்டுக. இனி அணிகம்-ஊர்திகளாகியவற்றிலே யேறிப் பணிகள் செய்துமென்பாருமுளர்; வாகன தேவதைகளாகி யென்பதாம். அணிகம்-ஊர்தி. (213) 14. நற்காட்சி வேறு 2812. கொங்கு விம்மு குளிர்பிண்டிக் குழவி ஞாயிற் றெழிலேய்ப்பச் சிங்கஞ் சமந்த மணியணைமேற் றேவ ரேத்திச் சிறப்பயர வெங்கு முலக மிருணீங்க விருந்த வெந்தை பெருமானார் தங்கு செந்தா மரையடியென் றலைய வேயென் றலையவே. இ-ள். பிண்டியின்கீழே அணைமேலே தேவர்சிறப்புச்செய்ய ஞாயிற்றெழிலேய்ப்ப உலகமெங்குமிருணீங்க விருந்த எந்தையாகிய பெருமானாருடைய தாமரை மேற்றங்கினவடி என்றலையிடத்த வே, என்றலையிடத்தவே யென்றானென்க. இது விரைவு. இருள்-பிறதெய்வங்களைத் தெய்வமென்று கருதுதல். (214) 2813. இலங்கு செம்பொ னெயின்மூன்று மெரிபொன் முத்தக் குடைமூன்றும் வலங்கொண் டலர்தூஉ யடியேத்தும் வைய மூன்றும் படைமூன்றுங் கலங்கா துயர்ந்த வதிசயங்கண் மூன்றுங் காமர் நூன்மூன்று நலங்கொ டீம்பாற் குணக்கடலு முடையார் நம்மை யுடையாரே. எயின்மூன்றாவன; உதயதரம், பிரீதிதரம்,கல்யாணதரம். குடை மூன்றாவன: சந்திராதித்தியம், நித்தியவினோதம், சகலபாசனம். உலகமூன்றாவன: நாகலோகம், பூலோகம், சுவர்க்க லோகம். படை மூன்றாவன: இரத்தினத்திரயம்; அவை: நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம். அதிசயங்கள் மூன்றாவன: சகசாதிசயம், கர்ம க்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம். நூன்மூன்றாவன: அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம். குணக்கடல்-அநந்தஞானாதி குணங்கள். இ-ள். இவற்றையுடையார்காண் நம்மை அடிமையாகவுடை யாரென்றானென்க. (215) 2814. மன்றா னாறு மணிமுடிமேன் மலிந்த சூளா மணிபோலும் வென்றோர் பெருமா னறவாழி வேந்தன் விரிபூந் தாமரைமேற் சென்ற திருவா ரடியேத்தித் தெளியும் பொருள்க ளோரைந்து மன்றி யாறு மொன்பானு மாகு மென்பா ரறவோரே. வென்றோர்-இருடிகள். ஐந்தாவன: சீவம், புற்கலம், தருமம், அதருமம், ஆகாசம். அன்றி-இவ்வைந்தமேயன்றி. இவற்றோடு காலமுஞ்சேரஆறுமாகும். ஒன்பதாவன: சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோக்ஷம் எனவினவ. இ-ள். அறவோர் சூளாமணிபோலும் பெருமான், வேந்தன், அவனுடைய அடியையேத்தித் தெளியும்பொருள்கள் ஐந்தும், ஆறும், ஒன்பதுமென்பரென்றானென்க. (216) 2815. பெரிய வின்பத் திந்திரனும் பெட்ட செய்கைச் சிறுகுரங்கு முரிய செய்கை வினைப்பயத்தை யுண்ணு மெனவே யுணர்ந்தவனை யரிய ரென்ன மகிழாது மெளிய ரென்ன விகழாது மிருசார் வினையுந் தெளிந்தாரே யிறைவ னூலுந் தெளிந்தாரே. பெட்ட-விரும்பின. இ-ள். தஞ்செயலாற் றமக்குரியவாகிய இருவினையின் பயனை இந்திரனுங்குரங்கும் நுகருமென்றேயுணர்ந்து பிறர் இந்நிலை யெய்துதற்கரியரென்றுவியந்து இந்திரனை மகிழா தேயும், பிறர் இந்நிலை யெய்துதற்கெளியரென்று வெறுத்துக் குரங்கை யிகழாதேயும் நல்வினைதீவினை யின்றன்மையித் தன்மைத்தென்ற தெளிந்தவர்களே காண் இறைவனுடைய நாற்பத்திரண்டு பரமாகமத்தையுந் தெளிந் தாரென்றானென்க. அவை பன்னிரண்டும், பதினான்கும் பதினாறும் ஆக நாற்பத்திரண்டு. (217) 2816. உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை யுலையா வின்பந் தலைநிற்ற லறிவர் சிறப்பிற் கெதிர்விரும்ப லழிந்தோர் நிறுத்த லறம்பகர்தல் சிறியா ரினத்துச் சேர்வின்மை சினங்கை விடுதல் செருக்கவித்த லிறைவ னறத்து ளார்க்கெல்லா மினிய ராத லிதுதெளிவே. இ-ள். மிக்கோரைவிரும்புதல், வெறுப்பில்லாமை, வீடெய்துங் கருத்துத் தம்மிடத்தேநிற்றல், அறிவர்க்குச்செய்யும் பூசைக்கு எதிர் விரும்புதல், அழிந்தோரைப் பழையநிலையிலே நிறுத்துதல், அறத்தைக் கூறுதல், அறிவின்மாக்களைக் கூடா திருத்தல், சினத்தைப்போக்குதல், செருக்கைக்கெடுத்தல், இச்சமயத் தார்க்கெல்லாம் இனியராதல் ஆகிய வித்தன்மைகாண் பரமாகமப் பொருளைத் தெளிந்த தெளிவாவ தென்றானென்க. (218) 2817. செறியச் சொன்ன பொருடெளிந்தார் சேரார் விலங்கிற் பெண்ணாகார் குறுகார் நரக மோரேழுங் கீழ்முத் தேவர் குழாந்தீண்டா ரறியா துரைத்தே னதுநிற்க வாறே நரக மாகாத பொறியார் போக பூமியுள் விலங்கு மாவ ரொருசாரார். இ-ள். யான் சொன்னபொருளைச் செறியத்தெளிந்தார், விலங்கிற் சேரார்; பெண்ணாகப்பிறவார்; எழுநரகத்தையும் மணுகார்; கீழான மூன்று தேவர்திரள்களைத் தீண்டார்; இவற்றுள் நரகமேழென்று அறியாமற்கூறினேன்; அது நின்மனத்தே யேழென்று துணியாமை நிற்பதாக; ஆகாதநரகம் ஆறே; அதற்குக் காரணம்யாதெனின், ஒரு சாரார் நல்வினை நிறைந்த போகபூமியில் விலங்காய்ப் பிறப்பதுஞ்செய்வர் காணென்றானென்க. நரகமேழாவன: இரத்தினப்பிரபை, சருக்கராப்பிரபை, வாலு காப்பிரபை, பங்கப்பிரபை, தூமப்பிரபை, தமப்பிரபை தமத்தமப்பிரபை எனவிவை. கீழ்முத்தேவராவார்: பவணர், வியந்தரர், ஜ்யோதிஷ்கர். ஆகாத நரகமாறே யென்றது-பூர்வாயுஷ் யம் முன்பே நரகா யுஷ்யங் கட்டினபின்பு தரிசனங்கொண்டவர், முதல்நரகத்திலேயும் போகபூமியிலே விலங்காயும் பிறப்பரென்ற தென்க. (219) 15. சீலம் வேறு 2818. ஏத்தருந் திருமணி யிலங்கு நீர்மைய கோத்தன போற்குண நூற்றுக் கோடியுங் காத்தன காவல பதிணெண் ணாயிரம் பாத்தன பண்ணவர் சீல மென்பவே. இ-ள். காவலனே! இலங்குநீர்மைய வாகிய திருமணியைக் கோத்தனபோலும் எண்பத்துநான்கு நூறாயிரமாகப் பகுக்கப் பட்டன வாகிய குணவிரதங்களும், நூற்றுக்கோடி மகா விரதங் களும், பதினெண்ணாயிரஞ் சீலாசாரமும் பண்ணவர் காக்கப் பட்டன காணென்றானென்க. (220) 2819. மொய்யமர் ஞாட்பினுண் முரண்கொண் மன்னவர் மெய்புகு பொன்னணி கவச மொப்பன மையலைம் பொறிமதம் வாட்டி வைகலுஞ் செய்வினை நுணுக்குவ சீல மென்பவே. இ-ள். அவற்றுட் சீலமென்றுகூறப்படுவன, வலிமேவின போரிலே மன்னவர்மெய் சென்றுமறையுங் கவசத்தையொப் பனவாய், நாடோறும் உண்ணின்று மயக்கத்தைச்செய்யும் ஐம்பொறியின் செருக்கையும் வாட்டிப் புறத்துச்செய்யுந் தீவினையையும் குறைப்பனகாணென்றானென்க (221) 2820. மணித்துண ரனையதங் குஞ்சி வண்கையாற் பணித்தனர் பறித்தலிற் பரவை மாநிலந் துணித்தொரு துணிசுமந் தனைய திண்பொறை யணித்தகு முடியினா யாதி யாகவே. மணி யனைய துணர்-நீலமணி யனைய பற்றம். இ-ள். முடியினாய்! குஞ்சியைத் தங்கையாற்பறிக்கை யினாலே இத்திண்ணிய பொறையுடைமை, நிலத்தையிரு கூறாக்கி அதில் ஒருகூற்றைச்சுமந்து பொறுத்த தன்மைய வென்றுகருதி அச்சீலங் களுள் இதனை யாதியாகக் கொண்டு பணித்தாரென்றா னென்க. ஒருதுணியோடுவமித்தலின், ஏனைய வொரு கூறும், இஃது ஒருகூறுமாகக் கூறினான்; அருiமையானென்றுணர்க. இது துறவின்பகுதியென்றுணர்க. வேறு 2821. பெரியவாட் டடங்கட் செவ்வாய்ப் பிறர்மனை பிழைக்கு மாந்தர் மரீஇயவாய்ப் புறஞ்சொற் கூர்முண் மத்திகைப் புடையு மன்றி யொருவர்வா யுமிழப் பட்ட தம்பல மொருவர் வாய்க்கொண் டரியவை செய்ப வையத் தாண்பிறந் தார்க ளன்றே. இ-ள். கண்ணினையுஞ் செய்யவாயினையுமுடைய பிறர் மனை யாளை யவாவி யவளிடத்தே மருவி யொழுக்கத்தைத் தப்பு மாந்தர் இம்மையிற் புறஞ்சொல்லாகிய கூர்முண்மத்திகைப் புடை பெறுதலு மன்றி அவளை முன்னர் நுகர்ந்தாரொருவர் அவள் வாய்க் கண்ணே யுமிழப்பட்ட தம்பலத்தைப் பின்னர் நுகர்வா ரொருவர் தம்வாய்க் கண்ணே வாங்கிக்கொண்டுதின்று இங்ஙனம் அரியனவற்றையும் செய்வார்கள்; இத்தன்மையார் வையத்தில் ஆண்மக்களாய்ப் பிறந்தவர்களன்றுகாணென்றா னென்க. இக்கவி இல்லறஞ்செய்வார்க்குரிய அவ்விரதங்களுள், இது காத்தலரிதென்று கூறிற்று. (223) 2822. ஒழுக்கமே யன்றித் தங்க ளுள்ளுணர் வழிக்கு மட்டும் புழுப்பயி றேனு மன்றிப் பிறவற்றின் புண்ணு மாந்தி விழுப்பய னிழக்கு மாந்தர் வெறுவிலங் கென்று மிக்கார் பழித்தன வொழித்தல் சீலம் பார்மிசை யவர்கட் கென்றான். இ-ள். உலகில் அறங்செய்வார்க்குச் சீலமாவன: ஒழுக்கத் தைக் கெடுத்தலேயன்றி யுணர்வையங்கெடுக்குங் கள்ளையும், புழுப்பயின்ற தேனையும், பிறவற்றின் புண்ணாகிய தசைகளையு மாந்தி வீடு பேற்றினை யிழக்குமாந்தர் உணர்வில்லா விலங்கு போல்வரென்று உயர்ந்தோர்பழித்தவற்றை நுகர்தலைத் தவிர்தல் காணென்றானென்க. (224) 16.தானம். 2823. நன்னிலத் திட்ட வித்தி னயம்வர விளைந்து செல்வம் பின்னலம் பெருக வீனும் பெறலருங் கொடையும் பேசிற் புன்னிலத் திட்ட வித்திற் புற்கென விளைந்து போக மின்னெனத் துறக்குந் தானத் தியற்கையும் விரித்து மன்றே. இ-ள். நன்னிலத்திலேவிதைத்த விதைபோலே விருப்பம்வர விளைந்து செல்வத்தைப் பின்பு உலகிலே பெருகவீனும் பெறுதற் கரிய தலையான தானத்தியற்கையையும், சொல்லுமளவிற் பொல்லா நிலத்திலே விதைத்தவிதைபோலே பொல்லாதாக விளைந்து போக மானது நிலைநில்லாது மின்போலத் தோன்றி மாயும் இடையான தானத்தினதியற்கையையும், இனி விரித்துக் கூறுதுமென்றானென்க. (225) 2824(1) ஐவகைப் பொறியும் வாட்டி யாமையி னடங்கி யைந்தின் மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்குநின் றெரிய விட்டுப் பொய்கொலை களவு காம மவாவிருள் புகாது போற்றிச் செய்தவ நுனித்த சீலக் கனைகதிர்த் திங்க ளொப்பார். 2825(2) வாய்ச்சிவா யுறுத்தி மாந்தர் மயிர்தொறுஞ் செத்தி னாலும் பூச்சுறு சாந்த மேந்திப் புகழ்ந்தடி பணிந்த போதுந் தூக்கியிவ் விரண்டு நோக்கித் தொல்வினை யென்று தேறி நாக்செறு பராவு கொள்ளார் நமர்பிற ரென்று முள்ளார். 2826(3) பாற்கதிர்த் திங்கட் கொட்பிற் பருமித்த களிறு போல நூற்கதி கொண்டு கண்ணா னுகத்தள வெல்லை நோக்கி மேற்கதிக் கேணியாய விழுத்தவர் மனையில் வந்தாற் காற்கொசி கொம்பு போலக் கைதொழு திறைஞ்சி மாதோ. 2827(4) தொடிக்கையாற் றொழுது வாழ்த்தித் தூமணி நிலத்து ளேற்றிப் பொடிப்புனை துகிலி னீக்கிப் புகழ்ந்தடி கழீஇய பின்றை யடுத்தசாந் தகிலி னாவி யாய்மல ரருச்சித் தானார் கொடுப்பர்நா லமிர்த மூன்றிற் குணம்புரிந் தடங்கி னார்க்கே. இவை நான்குமொருதொடர். 1. மனவெழுச்சியடங்கி யாமைபோல் ஐம்பொறியையுங் கெடுத்துப் பொய் கொலை களவு காமம் அவாவாகிய இருள் சென்று புகாமற் சீவபுற்கலமுதலிய ஐந்தின் மெய்வகையினை யாரா யுஞ் சிந்தையாகிய விளக்கை யவியாமல் எரியவிட்டுப் போற்றிச் செய் கின்றதவத்தைக் கூர்க்கநிகழ்த்தின சீலமாகிய கதிரினை யுடைய திங்களையொப்பார். 2. மாந்தர் வாய்ச்சியினது வாயைச்சேர்த்தி யொருமயிர்க்கு ஒருசெத்தாகச் செத்தினாலும், பணிந்தபொழுதும் இவ்விரண்டி னையுஞ் சீர்தூக்கிப்பார்த்துப் பழவினையென்று தெளிந்து, செத்தினகாலத்தும் பணிந்தகாலத்தும் பிறரென்றும் நமரென்றுங் கொள்ளாராய் வைதலையும் வாழ்த்துதல் செய்தலையுமுள்ளார். இதுநிரனிறை. 3. திங்கள் எல்லாமீன்களையும் அளித்தற்குச் சுழலுஞ் சுழற்சி போல எல்லாரையுமளித்தற்குப் பலதாரணிந்த களிறு அடங்கி மெத்தென நடக்குமாறுபோலஆகமத்திற்கூறியவழியை யுட்கொண்டு நுகத்தள வாகிய எல்லையைநோக்கி மனையிடத்து வந்தால். 4. அடுத்த-பொருந்தின. நாலமிர்தம்: உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. மூன்றின்-மனோவாக்குக்காயங்களின் தூய்மையோடே. இ-ள். திங்களொப்பாராய் உள்ளாராய் மேற்கதிக் கெல்லையாகிய விழுத்தவர் மனையில்வந்தால், அவரைக் கையாற்றொழுது எதிர் கொண்டு மணிநிலத்திலேயிருத்திப் பின்னர்க் கொம்புபோலவிறைஞ்சிக் கைதொழுது அவரடியிற் பொடியைத் துகிலாற்றுடைத்து நீராற் கழுவினபின்னர்; அவரைச் சந்தனமுதலியவற்றால் அருச்சித்து அமையாராய் அவர்க்கு நால்வகையமிர்தத்தையும் மூன்றோடே கொடுப்பர் காணென்றா னென்க.(226-9) 2828. ஒன்பது வகையி னோதிற் றுத்தமர்க் காகு மார்ந்த வின்பத மருளி யீத லிடையென மொழிப யார்க்குந் துன்புற விலங்கு கொன்று சொரிந்துசோ றூட்டி னார்க்கு நன்பொருள் வழங்கி னார்க்கும் பயனமக் கறிய லாகா. இ-ள். ஒன்பதுவகையினாற் கொடுக்கவேண்டுமென்று கூறிற்று, யான் முற்கூறிய உத்தமராயினார்க்காகும்; குறைவற்ற இனிய சோற்றை யார்க்குமருளிக்கொடுத்தல் இடையாயதா மென்றுகூறுவர்; இவையன்றி விலங்கைத் துன்புறக்கொன்று சோற்றையூட்டினார்க்கும், அதனையுண்ட பாவிகட்கும், அவர்க்கு நல்லபொருளைக் கொடுத் தார்க்கும் விளையுந் தீவினப்பயன் நமக்கு அறிந்துகூறமுடியா வென்றானென்க. ஒன்பதாவன: “எதிர்கொள லிடநனி காட்டல் கால்கழீஇ, யதிர்படி வருச்சனை யடியின் வீழ்தரன், மதுரநன் மொழியொடு மனமெய் தூயரா, யுதிர்கநம் வினையென வுண்டி யேந்தினார்.” என விவை. (230) 17. தானப்பயன் வேறு 2829. கூற்றுநா வலறுவ தனைய கூரிலை யேற்றநீர்த் துளும்புவா ளிறைவ வீங்கினிப் போற்றினை கேண்மதி பொருவில் புண்ணியர்க் காற்றிய கொடைப்பய னறியக் கூறுவாம். அலறுவதாகிய கூற்றுநாவனைய வாள்-தன்கொடுமை கூறிப் பலருங் கூப்பிடப்படுவதாகிய கூற்றினது நாப் பல்லுயிரையும் உண்ணுமாறுபோலப் பகைவருயிரையுண்ணும்வாள்; வடிவு வமையுங் கொள்க. துளும்பு நீரேற்றவாள்-மணிக்குடங்களிலசையும் மஞ்சனநீரை யரசர்சொரியும் வாள். இ-ள். இறைவனே! இனி யிவ்விடத்து மனைவியுந் தானும் மனம்பொருந்திப் புண்ணியர்க்குக்கொடுத்த கொடையின்பயனை நீயறியக்கூறுவேம்; அதனைப் போற்றிக்கேளென்றா னென்க. (231) 2830(1) கடிப்புவா ரங்குலி கொளீஇய கைதுரந் தடுத்துவார் மயிர்த்துதி யலற வூதலிற் பொடித்தபொற் றாமரை யனைய பொங்கழ லிடைக்கிடந் தெவ்வள விரும்பு காய்ந்ததே. 2831(2) காய்ந்தவவ் வளவினாற் கௌவு நீரதொத் தாய்ந்தறி கொடையின தளவிற் புண்ணியந் தோய்ந்துயி ருடம்பிவ ணொழியத் தொக்கநாள் வீந்துபோய் வயிற்றகம் விதியி னெய்துமே. இவையிரண்டுமொருதொடர். (1-2)விளிம்பிற் பிணித்த கடிப்பிற்சேர்த்த வாரை விரல் கோத்துக் கொண்ட கையாலே நெருக்கிச் செலுத்தித் துருத்தியை யூதலின், அவ்வழலிடைக்கிடந்து இரும்பு எவ்வளவுகாய்ந்தது; அக்காய்ந்த திகுதியினாலே தானுண்ணுநீர்போல இருப்பு யிருந்தோய்ந்தென்க. நெடியவாயமயிரையுடைய துருத்தி. அலற-அதன்வாயொலிப்ப. உயிரென்றது-மேல் “இரும்புபோலவாம்- பிணியுயிர்” (சீவக.3111) என்பத னால், ஈண்டு நரகத்துச் சேறற்குரிய இருப்புயிரைக் கூறிற்றாம். இ-ள். இவ்விருப்புயிர் பலபிறப்பினுந் தீவினையென்னுந் தீயினுட்கிடந்து காய்ந்தே தீவினைப்பயனாகிய நீரையுண்ணு தலைக்கெடுத்து ஈண்டுச்செய்த நற்றானத்தினதளவாலே யுண் டான புண்ணியநீரையுண்டு போய்ப் போகபூமியிலே ஒருவயிற்ற கத்தே யெய்துமென்றானென்க. (2) தப்பும்வழி யிதுவென்று ஆராய்ந்தறிந்த கொடை. தனக்கடைத்த நாளறுதலின், உடம்பிவணொழியப் போயென்க. (232-3) 2832(1) திங்கணா ளொன்பதும் வயிற்றிற் சேர்ந்தபின் வங்கவான் றுகில்பொதி மணிசெய் பாவைபோ லங்கவ ரிரட்டைக ளாகித் தோன்றலுஞ் சிங்கினா ரிருமுது குரவ ரென்பவே. 2833(2) இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடல் பற்றிய விசும்பிடைப் பரவு மாமுகி றெற்றென வீந்தெனச் சிதைந்து போகுமான் மற்றவம் மக்கடம் வண்ணஞ் செப்புவாம். இவையிரண்டுமொருதொடர். 1. வங்கம்-மரக்கலம். சிக்கினார்-சிங்கினாரெனவிகாரம். 2. இற்றவர்-உடம்பை நீத்தவர். இ-ள். அவ்வுயிர் ஒன்பது திங்களாலுண்டான இருநூற்றெழபது நாளும் வயிற்றிலேயிருந்தபின், அவ்வுயிரையுடையவர்கள் துகிலாற் பொதிந்த பாவை அத்துகிலினின்றும் புறப்பட்டாற்போல அவ்விடத்தே வருத்தமின்றி யிரட்டைப்பிள்ளைகளாய்ப் பிறந்தவளவிலே, இருமுதுகுரவர் தம்மை முன்னர்ச்சிக்கிக் கொண்டுநின்றவர்கள் தம்முடம்பைநீத்துப் போய்த் தேவராய்ப் பிறப்ப, ஈண்டியவுடல் மேகவிநாசம் போல மாய்ந்து போம்; அம்மக்கள் வண்ணம் இனிச்செப்புவாமென்றானென்க.(234-5) 2834. பிறந்தவக் குழவிகள் பிறர்கள் யாவரும் புறந்தர லின்றியே வளர்ந்து செல்லுநா ளறைந்தன ரொன்றிலா வைம்ப தாயிடை நிறைந்தனர் கலைகுண முறுப்பு நீரவே. இ-ள். பிறந்தவப்பிள்ளைகள், புறத்துள்ளாரொருவரும் போற்று தலின்றியே வளர்ந்துசெல்லுநாள் நாற்பத்தொன்ப தென்னு நாளுக்குள்ளே நீர்மையையுடையவாகிய உறுப்புங் கலையுங் குணமும் நிறைந்தனரென்றும் ஆகமத்தேயறைந்தா ரென்றானென்க. குழவியென்னும் விரவுப்பெயரின்பின்வந்த கள்ளீறு ஈண்டு உயர்திணை யையுணர்த்துதல், “கடி சொல் லில்லை” (தொல்.எச்ச.56) என்பதனாற் கொள்க. (236) வேறு. 2835. சோலைமீ னரும்பித் திங்கட் சுடரொடு பூத்த தேபோன் மாலையுங் கலனு மீன்று வடகமுந் துகிலு நான்று காலையு மிரவு மில்லாக் கற்பக மரத்தி னீழற் பாலையாழ் மழலை வேறாய்ப் பன்மணிக் கொம்பி னின்றாள். வடகம்-அத்தவாளம். இ-ள். பாலையாழ் போலுமழலைச்சொல்லாள், அவனை நீங்கிப் போய் ஒருசோலைமீனையவரும்பித் திங்களை ஞாயிற் றோடு பூத்த தன்மைபோல ஈன்று நான்று காலையுமிரவுமில்லாத கற்பக மரத்தினிழலிலே மணிக்கொம்புபோலே நின்றாளென்றா னென்க. (237) 2836. இலங்குபொற் குவடு சாந்த மெழுதிய தனைய தோன்மே னலங்கிளர் குழைக ணான்று சாந்தின்வாய் நக்கி மின்னக் கலங்கலந் தகன்ற மார்பிற் கற்பக மாலை தாழ விலங்கர சனைய காளை வேனில்வேந் தென்னச் சேர்ந்தான். இ-ள். சிங்கத்தையொத்த அந்தக்காளை, சாந்தமெழுதி யதாகிய குடவரையனைய தோன்மேற்கிடந்த சாந்தினிடத்துக் குழைகள் நான்று நக்கிமின்ன, மார்பிலே மாலைதாழக் காம னென்ன அக்கற்பகத்தைச் சேர்ந்தானென்றானென்க. (238) 2837. குண்டலங் குலவி மின்னப் பொன்னரி மாலை தாழத் தெண்கட லமிர்திற் செய்த பாவையிற் பாவை நிற்ப விண்டலர் மாலை மார்பன் விதியினாற் சென்று மாதோ கண்டனன் கலந்த வுள்ளங் காதலி னொருவ ரானார். இ-ள். அதனைச் சேர்ந்தவன். அமிர்தாற் செய்த பாவைபோல மின்னத்தாழ அவள் நின்ற வளவிலே, ஊழாலே சென்றுகண்டான்; அப்பொழுது இருவருள்ளமுங் காதலினாற் கலந்தன; பின்பு ஒருமனத் தராயினாரென்றானென்க. (239) 2838. கொதிநுனைக் காமனம்பு கொப்புளித் துமிழ்ந்து காம மதுநிறை பெய்து விம்மு மணிக்குட மிரண்டு போல நுதிமுக முத்தஞ் சூடி நோக்குந ராவி வாட்ட விதிமுலை வெய்ய வாகித் தாரொடு மிடைந்த வன்றே. காமத்தைக் கொப்புளித்துக் கொதிநுனையினையுடைய வம்பைக் காமன்சொரிய. உமிழ்ந்து-உமிழ. மதுப்பெய்நிறைந்த மணிக்குடம். இ-ள். நோக்குநராவி வாட்டுதற்குக் கண்ணினையுடைய முகத்தே முத்தத்தைச்சூடி வெய்யவாகிக் குடமிரண்டுபோல விம்மும்முலை, விதியாலே யம்பைக் காமனுமிழ அவன்றாரோடு மிடைந்த வென்றானென்க. வாட்டுதற்கு முடிசூடின. (240) 2839. இமைத்தநுங் கண்க ளென்னை யிகழ்ந்தனி ரென்று சீற வமைத்துநின் னழகு கோல மாரவுண் டறுக்க லாற்றா திமைத்தன வஞ்சி யென்ன விளையவள் சிலம்பிற் குஞ்சி நமைத்தபூந் தாமந் தோய நகைமுக விருந்து பெற்றான். இ-ள். நுங்கண்கள் இமைத்தன; ஆதலாலே நீர் என்னை இகழ்ந்தீரென்று அவள்சீற, அதற்கஞ்சி, அவை நின்வடிவழகையும், ஒப்பனைக்கோலத்தையும் நிறையவுண்டு அறுக்க மாட்டாதே இமைத்தனகாணெனச் சொல்லாநிற்க, இளையவளது சிலம்பிலே தன்குஞ்சியிற்சூட்டிய தாமந் தோய்தலாலே யமைத்து நகைத்த முகத்தில் விருந்தைப் பெற்றானென்றா னென்க. அமைத்து-பொறுத்து; ‘வழுவமைத்’தென்றாற் போல நின்றது. ‘என்று கூறவும்’ பாடம். (241) 2840. இன்னகி லாவி விம்மு மெழுநிலை மாடஞ் சேர்ந்தும் பொன்மலர்க் காவு புக்கும் புரிமணி விணை யோர்த்து நன்மலர் நான வாவி நீரணி நயந்துஞ் செல்வத் தொன்னலம் பருகிக் காமத் தொங்கலாற் பிணிக்கப் பட்டார். இ-ள். அங்ஙனம் புணர்ந்தவர்கள், மாடத்தைச்சேர்ந்துங் காவிலே புக்கும் யாழைக்கேட்டும் வாவியிலாடுதற்கு நீர்க்கோலத்தை விரும்பியுஞ் செல்வத்தையுடைய தொன்னலம் பருகிக் காம மாகி மாலையாற் கட்டப்பட்டாரென்றானென்க. (242) 2841. பூமுற்றுந் தடங்க ணளும் பொன்னெடுங் குன்ற னானுங் காமுற்று நினைந்த வெல்லாங் கற்பக மரங்க ளேந்தத் தாமுற்றுக் கழிப்பர் தான மிடையது செய்த நீரா ரேமுற்றுக் கரும பூமி யிருநிதிக் கிழமை வேந்தே. இ-ள். வேந்தே! அங்ஙனந் தலையான தானத்தைச்செய்த பூவின்றன்மை நிரம்பிய கண்ணாளுங் குன்றனானுந் தாங்கள் விரும்பி நினைந்தவெல்லாங் கற்பகமரங்கள் கொடுக்க, அவற்றை நுகர்த்து காலங்கழிப்பர்; இடையதாகிய தானத்தைச் செய்தவர் களுங் கரும பூமியிலே யிருநிதிக்கிழமைக்கண்ணே மயக்கமுற்றுக் காலங்கழிப் பரென்றானென்க. ஏமுற்று-”தேரே முற்றன்று” (கலித்.74) என்றாற்போல நின்றது. கடையான தானத்திற்குப் பாவமே யுண்மையின், ஈண்டுக் கூறிற்றிலர். (243) 2842. அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினா லலறு முந்நீர்த் தடங்கட னடுவுட் டீவு பலவுள வவற்றுட் டோன்றி யுடம்பொடு முகங்க ளொவ்வா ரூழ்கனி மாந்தி வாழ்வர் மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மன்ன ரேறே. இது முற்கூறிய புண்ணியரல்லாதார்க்கீந்த தானத்துக்குப் பயன் கூறுகின்றது. இ-ள் மன்னரேறே! ஐம்பொறியையும் வாட்டாதார்க்குக் கொடுத்த தானப் பயனாலே, கடலிடைத் தீவுகள் பலவுள; அவற்றிலே உடம்பு மக்களுடம்பும், முகம் விலங்கின்முகமுமாய்த் தோன்றிக் கனியை மாந்தி வாழ்வரென்றானென்க. (244) 18. சீலப்பயன், காட்சிப்பயன் 2843. செப்பிய சீல மென்னுந் திருமணி மாலை சூழ்ந்தார் கப்பத்து ளமர ராவர் காட்சியி னமிர்த முண்டா ரொப்பநீ ருலக மெல்லா மொருகுடை நிழற்றி யின்பங் கைப்படுத் தலங்க லாழிக் காவல ராவர் கோவே. இ-ள். கோவே! யான் முற்கூறிய சீலமென்னும் மாணிக்க மாலையைச் சூடினார், கற்பத்தில் அமரராமவர்; காட்சிப்பயனை நுகர்ந்தார் பின்னர் உலகெல்லாமொப்ப ஒரு குடை யாலே நிழற்றி யின்பத்தை யகப்படுத்துச் சக்கரவர்த்திக ளாவரென்றானென்க. (245) 19. வீடுபேறு வேறு 2844. வீட்டின தியற்கைநாம் விளம்பிற் றீங்கதிர்ப் பாட்டரும் பனிமதி பழித்த முக்குடை மோட்டிருங் கொழுமலர்ப் பிண்டி மூர்த்திநூ லீட்டிய பொருளகத் தியன்ற தென்பவே. இளைய ஞாயிற்றினது கூறுபாட்டினையும் பனிமதினையும் பழித்த முக்குடை மூர்த்தி. மோடு-புடைபட்டவயிறு. இ-ள். வீட்டினதியற்கையை நாங்கூறின், அது மூர்த்தியீட்டிய நூற்பொருளிடத்தே கூறிற்று; அதனை யான்கூறக் கேட்பாயாக வென்றானென்க. என்ப-அசை. (246) 2845. உள்பொரு ளிதுவென வுணர்தன் ஞானமாந் தெள்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம் விள்ளற விருமையும் விளங்கத் தன்னுளே யொள்ளிதிற் றரித்தலை யொழுக்க மென்பவே. இ-ள். பொருள்களுள் உண்மைப்பொருள் இதுவென வுணர்தல் ஞானமாம் அங்ஙனமுணர்ந்த அப்பொருளின்றன்மை இதுவெனத் தெளிந்துவிடுதல் காட்சியாம்; அங்ஙனந் தெளிந்த விரண்டினையும் நீக்கமற விளங்கும்படி தன்மத்திலே நிலை பெறுத்தல் ஒழுக்க மாமென்றானென்க. ஐ, என்ப-அசைகள். (247) 2846. கூடிய மும்மையுஞ் சடர்ந்த கொந்தழ னீடிய வினைமர நிரைத்துச் சுட்டிட வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங் காடெழிற் றோளினா யநந்த நான்மையே. இ-ள். தோளினாய்! இங்ஙனங்கூடிய மூன்றுதன்மையும் நின்றெரித்தநெருப்பு மிகவளர்ந்த இருவினையாகிய மரத்தினை நிரைத்துச்சுட்டுப்போகட அவ்விருவினை தாம் நெடுங்காலம் பயின்ற உயிர்க்கிழவனைக் கைவிடுதல் வீடெனப்படும்; அங்குப் பெற்றபயன் அநந்தசதுட்டயங்கள் காணென்றானென்க. அவை: அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தசுகம். (248) 2847. கடையிலா வறிவொடு காட்சி வீரியங் கிடையிலா வின்பமுங் கிளந்த வல்லவு முடையதங் குணங்களோ டோங்கி விண்டொழ வடைதலான் மேலுல கறியப் பட்டதே. இதனாலே வினை விடுத்தகாலத்துப்பெற்ற அநநந்த சதுட்டய முங்கூறிப்பின்னர். ஏனைநான்குங் கூறுகின்றார். கடை யிலா-முடிவிலாத. இதனை நான்கினோடுங் கூட்டுக. கிடை-ஒப்பு. அல்லவென்றது, ஏனைநான்கையும். (249) 20. பிறவிகளறவுரை. 2848. மாதவ னெனப்பெயர் வரையி னவ்வரை யேதமி லெயிறணி பவள வாய்த்தொடுத் தாதியி லறவுரை யருவி வீழ்ந்தென மாதுயர் மலங்கெட மன்ன னாடினான். இ-ள். அழகிய வரைகளையுடைய பவளம்போலும் வாயிற் பிறந்த ஏதமில் அறவுரையாகிய அருவி, தொடுத்து மாதவ னெனப் பெயர்பெற்ற வரையினின்றும் வீழ்ந்ததாக, துயரைச் செய்யும் மலங்கெடும்படி மன்னன் ஆடினானென்க. “நுண்ணிய வரியொடு திரண்டு”(சீவக.1702) என்றார் முன்னும். வாய், மேகமாயிற்று. (250) 2849. எல்லையி லறவுரை யினிய கேட்டபின் றொல்லையெம் பிறவியுந் தெகுத்த பாவமும் வல்லையே பணிமின மடிக ளென்றனன் மல்லைவென் றகன்றுபொன் மலர்ந்த மார்பினான். மல்-மற்றொழில். பொன்-திரு. இ-ள். அங்ஙனமாடின மார்பினான், இனியவாகிய எல்லை யில்லாத அறவுரையைக் கேட்டபின்னர், அடிகளே! எம்முடைய முற்பிறப்பையும், அப்பிறப்பில் யாந்தொகுத்த பாவத்தையுங் கடுக அருளிச்செய்யுமென்றானென்க. அம்-அசை. கடுகத்துறத்தற்கு வல்லையென்றான். (251) 2850. கதிர்விடு திருமணி யங்கைக் கொண்டதொத் தெரிர்வது மிறந்து மெய்தி நின்றது அதிர்வறு தவவிளக் கெறிப்பக் கண்டவன் பதரறு திருமொழி பணிக்கு மென்பவே. இ-ள். மணியை யங்கையிற்கொண்டால் ஆண்டுள்ள வற்றையது விளக்குந்தன்மையொத்து நடுக்கமற்ற தவவிளக்கு விளக்குதலாலே முக்காலத்தையுமுணர்ந்தவன் மெய்யான வார்த்தையைச் சொல்லுமென்றாரென்க. (252) வேறு. 2851. முழுநீர் வளைமேய் தலின்முத் தொழுகிப் பொழிநீர் நிலவின் னிருள்போழ்ந் தரிசிக் கழுநீ ரொழுகக் கழுநீர் மலருந் தழுநீ ரதுதா தகியென் றுளதே. முழுநீர்-கடல். இ-ள் கடலிற்சங்கு நாட்டைத்தழுவின நீரிடத்ததாய் வந்து ஊரிலேஅரிசிக்கழுநீரிலே மேய்கையினாலே அவைசொரிந்த முத்து ஒழுங்குபட்டு அணையாய்க் கழுநீரைப் போகவொட்ட மாற்றடுத்தலின், அதனிடத்தே செங்கழுநீர் ஒழுக நின்று மலருந் தாதகியென்று ஒருநாடுளதென்றனென்க. இருளைப்போழ்ந்து பொழியும் நீர்மையையுடைத்தாகிய நிலவினையுடைய முத்தென்க. முத்தொழுகிக் கழுநீர் மலருமெனக் காரணகாரிய மாதலின், அப்பொருட்டாயிற்று. (253) 2852. கயல்பாய்ந் துகளக் கடியன் னம்வெரீஇ வியநீள் சுடர்வெண் மதிசேர் வதுபோ லயலே யலர்தா மரைசேர்ந் துறையும் வயர்சூழ்ந் தனவூர் வளமார்ந் தனவே. கயல் பாய்ந்து உகளுகையினாலே மிக்கவன்னம்வெருவி விண்ணில் ஞாயிற்றை மதிசென்றுசேருந் தன்மைபோல அயலே யலந்த தாமரையைச் சேர்ந்துறையும் வயலென்க. இ-ள். அந்நாட்டில் வயல்சூழ்ந்தனவாகிய வூர்கள் செல்வ நிறைந்தன வென்றானென்க. (254) 2853. அவணத் தவர்கூந் தலகிற் புகையைச் சிவணிச் சிறுகால் கமுகம் பொழில்சேர்ந் துவணுய்த்திடமஞ் செனநின் றுலவும் பவணத் தொருபாங் கினதா லளிதோ. இ-ள். தென்றற் காற்று அந்நாட்டில் ஊர்களிலிருப்பார் கூந்தலிற் புகையை முதற்பொருந்திப் பின்னர்க் கமுகம் பொழிலை சேர்ந்து அதின் மணத்தையும் பொருந்தி அந்நாடெங்கும் அவற்றைச் செலுத்த, அப்புகை வெண்மேகமென நின்றுலாவும்; ஆதலால், அந்நாடு அளிக்கத்தக்கதொரு நாடன்று; நாகலோகத் தின் ஒருகூற்றின் றன்மையை யுடையதாயிருக்குமென்றானென்க. அந்நாடு கேடின்மையின், அளிக்கவேண்டாதாயிற்று. அளித்தல்-காத்தல். (255) 2854. மதியுஞ் சுடரும் வழிகா ணலுறா பொதியும் மகிலின் புகையுங் கொடியு நிதியின் கிழவன் னினிதா வுறையும் பதிபொன் னகரின் படிகொண் டதுவே. இ-ள். அகிற்புகையுங் கொடியுந் திங்களையும் ஞாயிற்றையும் வழிகாணலுறாதனவாம்படி மறைக்கும்பதி, நிதியின் கிழவன் விடாமலுறையும் பொன்னகரின் றன்மையைக் கொண்ட தென்றா னென்க. (256) வேறு 2855. ஏம மாகிய துப்புர வெய்திய பூமி மாதில கம்மெனும் பொன்கிளர் நாம நன்னகர் வீதிக டாமெலாங் காம வல்லி கிடந்தன போன்றவே. காமவல்லியெல்லாங் கிடந்தனவென்றது-காமவல்லியெல் லாங் கிடக்கப்பட்ட அமராவதியிற் றெருக்களை. இ-ள். நுகர்பொருளைத் தன்னிடத்தே கொண்ட பூமிமா திலக மென்னும் நாமத்தையுடைய நன்னகரிற் பொன்கிளர் வீதிகடாம், அமராவதியிற்றெருக்களை யொத்தனவென்றா னென்க. (257) வேறு 2856. பைங்கழன் மன்னர் மன்னன் பவணமா தேவ னென்பான் சங்கினுண் முத்த மொப்பாள் சயமதி பயந்த நம்பி யைங்கணைக் காம னன்னா னசோதர னரச சீயந் தங்கிய கேள்வி யாற்குத் தையலார்ச் சேர்த்தி னாரே. இ-ள். அந்நகரிலுறையும் மன்னர்மன்னன் யாரென்னின், பவணமாதேவனென்று பெயர் கூறப்படுவனொருவன்; அவன்றே வியாரென்னின், முத்தமொப்பாளாகிய சயமதியென்பா ளொருத்தி; அவர்பெற்ற பிள்ளை யாரென்னின், காமனன்னா னாகிய அசோதரன்; அவன்றான் அரச சிங்கம்; அவனுக்குத் தையலாரைச் சேர்த்தினா ரென்றானென்க. (258) 2857. இளைமுலை பொருது தேந்தா ரெழில்குழைந் தழிய வைகிக் கிளைநரம் பிசையுங் கூத்துங் கிளர்ந்தவை கனற்ற நாளும் வளைமயங் குருவ மென்றோள் வாய்நலம் பருகி மைந்தன் விளைமதுத் தேறன் மாந்தி வெற்றிப்போ ரநங்க னானான். இ-ள். அம்மைந்தன் அத்தையலார்முலைகள் பொருதலி னாலே தார் குழைந்தழிய அவர்கள் வாய்த்தநலத்தைப் பருகி இசையுங் கூத்துந்தோற்றியவைகள் நாளுங் காமத்தைக்கனற்ற வைகித் தேறலைமாந்தி மென்றோளினையுடைய அம்மகளிர்க்கு அநங்கனா யினா னென்றானென்க. (259) 2858. இலங்கரி பரந்த வாட்க ணிளையவர் புலவி நீங்கச் சிலம்பெனும் வண்டு பாடச் சீறடிப் போது புல்லி யலங்கல்வாய்ச் சென்னி சேர்த்தி யரிமதர் மழைக்கண் பில்க நலங்கவர்ந் துண்டு நண்ணார் நாமுறக் கழிக்கு மாதோ. இ-ள். அவன், அவ்வியைவர் புலவிநீங்கும்படி தன்சென்னி யிலலங்கலிடத்தே யவர் சீறடிப்போதை வண்டுபாடச்சேர்த்திப் பின்னர் அவரை யுவகைக்கண்ணீர் பில்கப்புல்லி நலத்தை நுகர்ந்து பகை வரஞ்சக் காலம் போக்குமென்றானென்க. இங்ஙனம் காமநுகரினும் வீரத்தின் மிக்கமை தோன்ற, ‘நாமுற’வென்றார். (260) வேறு 2859. மங்கையர் தம்மொடு மடங்கன் மொய்ம்பினான் பங்கயப் பனித்தடஞ் சேரப் பார்பனஞ் செங்கயற் பேரின மிரியச் செவ்வனே பொங்கிமேற் பறந்துவிண் புதைந்த தென்பவே. இ-ள். அம்மொய்ம்பினான், மங்கையருடனே நீர்விளை யாடுதற்குப் பங்கயத்தடத்தைச் சேர்ந்தானாக, ஆண்டுறைந்த பார்ப்பையுடைய வன்னத்திரள், அஞ்சிக் கயவிரியப் பொங்கி மேலே செவ்வனே பறக்கையினாலே விண்மறைந்த தென்றானென்க. (261) வேறு 2860. வேய்ந்த வெண்டாமரைக் கோதை போல விசும்பிற் பறக்கின்ற வெள்ளை யன்ன மாய்ந்த முகிலாடைத் திங்கட் கண்ணி யாகாய மென்னு மரிவை சாயற் றேய்ந்ததன் காதலன் பற்ற வற்றுச் சொரிகின்ற மேகலைபோல் வீழ்ந்த வாளை பாயந்து துகைப்பக் கிழிந்த கூழைப் பனித்தா மரைசூழ் பகற்கோயிலே. வாளை துகைத்தலாலே கிழிந்த கூழையிலையையுடைய குளிர்ந்த தாமரைசூழ்ந்த நீராவிமண்டபம். பகற்கோயிலென்றார், பகற்போதில் இருத்தல்பற்றி. இ-ள், கட்டின வெண்டாமரை மாலைபோல விசும்பிலே பறக்கின்ற வெள்ளையன்னம், ஆடையினையுங் கண்ணியினையு முடைய ஆகாயமென்னுமரிவையது மேகலையை யவடன் சாயலைத் தோய்ந்த கணவன் ஊடறீர்ப்பான்பிடிப்ப அவையற்றுச் சொரிகின்ற போலக் கோயிற்கண்ணே வீழ்ந்தனவென்றானென்க. முத்தமேகலையென்றுணர்க. (262) வேறு 2861. விரும்புபொற் றட்டிடை வெள்ளிக் கிண்ணமார்ந் திருந்தன போன்றிள வன்னப் பார்ப்பினம் பொருந்துபொற் றாமரை யொடுங்கிப் புக்கொளித் திருந்தகண் டானிளங் கோக்க ணம்பியே. இ-ள். இளங்கோக்களுக்கெல்லாந் தலைவனாகியஅவன், பொற்றட்டிலே வெள்ளிக்கிண்ணமிருந்தவைபோன்று பறத்த லாற்றாமற் றாமரையிலே புக்கு ஒடுங்கியொளித்திருந்த அன்னப் பார்ப்பினத்தைக் கண்டானென்றானென்க. பொருந்து - ஒளித்தற்குப் பொருந்தின. நம்பி - ஈண்டு இளைமைப் பெயரன்று. (263) 2863. உரிமையுட் பட்டிருந் தொளிக்கின் றார்களைப் பெருமநீ கொணர்கெனப் பேசு காஞ்சுகி யொருமகற் கீந்தனன் கோயில் புக்கன னெரிமுயங் கிலங்குவேற் காளை யென்பவே. இ-ள். அவன் அங்ஙனங்கண்ட வன்னப்பார்ப்பை அவனுரி மையுங்கண்டிருந்து, பெரும! ஒளிக்கின்ற பார்ப்புக்களைக் கொண்டு வாவென்று சட்டையிட்டு நின்ற இவ்வொருமகனுக்கு நீபேசு வாயாகவென்று அவர்கள் கூற, அதுகேட்ட காளையும் அங்ஙனங் கூறி, அவற்றுள் ஒன்றனைப்பிடிப்பித்து அவர்க் கீந்தனனாய்க் கோயிலிலே புக்கானொன்றனென்க. உட்பட்டென்றது-அக்காட்சிக்குட்பட்டென்றவாறு. எனவென்றதனை யிரண்டிடத்துங்கூட்டுக. ‘பெருமைநீ’ரென்று பாடமோதுவாருமுளர். பலபார்ப்பைப் பிடிப்பித்தானென்றாற் பலகாற்சிறைப்படுதல் வேண்டு மாதலின், அவற்றுள் ஒன்றென்றே பொருள்கூறவேண்டிற்று. (264) 2863. வடமலைப் பொன்னனாற் மகிழ்ந்து தாமரைத் தடமுறை வீர்க்கிவை டங்க ளல்லவே வடமுலை யெனநடாய் வருடிப் பாலமிர் துடனுறீஇ யோம்பினார் தேம்பெய் கோதையார். இ-ள். திருவையொப்பார், அவனீந்ததற்குமகிழ்ந்து பின்னர் அவர்கடாந் தாமரைத்தடந்தே யுறையு நுமக்கு ஈண்டுறைகின்ற முலைத்தடம் அத்தடங்களல்லவே, வடங்களுறைகின்ற முலை யல்லவோவென நன்மொழிகளை நடத்திக் கையாலே தடவி யெல் லாருஞ்சேர்ந்து பாலமிர்தத்தைக்கொடுத்துப் பாதுகாத்தா ரென்றா னென்க. உறைவீர்க்கென்றது ஒன்றைனைக் கூறும்பன்மைக்கிளவி. இப்பார்ப்புக் கட்டுதல் கூட்டிலடைத்தல்செய்யும் பருவத்தன் றென்பது தோன்ற முலையிலணைத் தென்றார்அஃது “இளவன்னப் பார்ப்பினம் ”(சீவக.2861) என்றதனானுமுணர்க. இதனுள் இப்பார்ப்பைக் கட்டி வைத்துவளர்த்தாரென்னாது முலைத்தடத்தே யணைத்துவைத்து வளர்த்தாரென்றமையாற் பிள்ளையாருங் கட்டுண்டாரென்ற றற்குக் காரணமின்மை யறிக. (265) வேறு 2864. கண்டா னொருநாட் கதிர்மாமுடி மன்னர் மன்னன் றண்டா மரைசூழ் தடத்திற் பிரித் தார்கள் யாரே யொண்டா ரிளங்கோ வென் றுழையவர் கூற வல்லே கொண்டீங்கு வம்மின் கொலைவேலன் றன்னை யென்றான். இ-ள். மன்னர்மன்னன் ஒருநாள் இவர்கள் முலை மேலணைத்து வளர்க்கின்ற தன்மையைக் கண்டான்; கண்டு இதனைத் தடத்தினின்றும் பிரித்தார் யார்தானென்றான்; அதுகேட்டவுழையர் அசோதரனென்றுகூற, அதுகேட்டு அவன் அவனை யிங்கே வல்லே கொண்டுவம்மினென்று கூறினானென்றா னென்க. கொலைவேலனென்றது இகழ்ச்சிக்குறிப்பு; அரசரைப் பிடியாமற் பார்ப்பைப் பிடித்தலின். பார்ப்பைக் கட்டுதல், கூட்டிலடைத்தல் செய்யாமையால், அரசற்குக் காட்சியானமை யுணர்க. (266) 2865(1) படுகண் முழவும் பசும்பொன்மணி யாழு மேங்க இடுகுந் நுசுப்பி னவராட விருந்த நம்பி யடிகட் கடிக ளருளிற்றென் றிறைஞ்ச வல்லே கடிவிம்மு தாரான் கழல்கையிற் றொழுது சேர்ந்தான். வேறு 2866(2) அணிசே ரிடக்கை விரலால் வலத்தோண் மணிசேர் வளைவாய் வதின்வைத் துவலத் தணிமோ திரஞ்சூழ் விரல்வாய் புதையாப் பணியா முடியாற் பணிந்தா னிளையோன். இவையிரண்டுமொருதொடர். 1. முழவும் யாழுமேங்க நுசுப்பினவராட அதுகண்டிருந்த நம்பியென்க. இ-ள். அதுகேட்ட உழையர் நம்பியிடத்தேசென்று நுமக்கு நும்மரசனது அருள் இத்தன்மைத்தென்று கூறி யிறைஞ்ச, அது கேட்டவன் வல்லேசென்று அரசன தடியைக் கையாற்றொழுது பின்னர்முடியாற்பணிந்தான்; பணிந்தபின்னர் இடக்கை விர லாலே வலத்தோளில் வளையை நன்றாகத்திருத்தி வலக்கையில் விரலாலே வாயைப்புதையாச் சேர்ந்தானென்றானென்க. (267-8) வேறு 2867. கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல் விளைக்கிய வித்தனா யிருமற் றீங்கெனத் திளைக்குமா மணிக்குழை சுடரச் செப்பினான் வளைக்கையார் கவரிகொண் டெறிய மன்னனே. கிளைப்பிரிவு-தாயையுந் தந்தையையும் பிரித்தல். சிறையாவது-தானினைத்த வாறொழுகுதலின்றிப் பிறர்நினைத்த வாறே யொழுகும் படி காத்தல். இளம்பார்ப்புக் கிளையைப் பிரிந்திருந்து ஆற்றின வருமைநோக்கி யருஞ்சிறையென்றார். இ-ள். மகளிர் கவரி வீசாநிற்ப மன்னன், இவ்விரண்டின் பயனையுங் கேட்டியேல், அவ்விரண்டின் பயனையும் மேல் விளைத்தற்கு ஒருவித்தையொப்பாய்! இங்கே யிருவென்று குழைசுடரச் செப்பினானென்றானென்க. ஈண்டுப் பார்ப்பைப் பிரித்ததற்குத் தானும்பிரிந்தும், அதனைச்சிறைசெய்ததற்குத் தானுஞ்சிறைப்பட்டும் அத்தீவினை நுகர்ந்தானென்று முன்னர்ப் பொருளுரைத்ததே தேவர்க்குக் கருத்தென்றுணர்க; என்னை? நீ இப்பார்ப்பைக் கட்டிவைத்தத னையுங் கேளென்று அவனைநோக்கி ஈண்டு அரசன் கூறாமை யின். (269) வேறு 2868. அறம்பெரிய கூறின் னலங்கலணி வேலோய் மறம்புரிகொ ணெஞ்சம்வழி யாப்புகுதந் தீண்டிச் செறும்பெரிய தீவினைகள் சென்றுகடி தோடி யுறும்பெரிய துன்ப முயிர்க்கொலையும் வேண்டா. இ-ள். வேலோய்! பெரிய தீவினையின்றன்மையைக் கூறின், அவை மறத்தை விரும்பிய நெஞ்சு வழியாகப்புகுந்து திரண்டு தம்மைச்செய்த உயிரோடே கடிதோடிச்சென்று அதனைச் செறும்; செறும்பொழுது அது பெரிய துன்பமுறும்; ஆதலால், அத்தீவினைக்கு அடிதாகிய உயிர்க்கொலையும் நுமக்கு வேண்டா; இஃது அறங்களுட் பெரியவறமென்று கூறினானென்றானென்க. (270) 2869. மெய்யுரைவி ளீங்குமணி மேலுலக கோபுரங்க ளையமிலை நின்றபுகழ் வையகத்து மன்னு மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர் பொய்யுரையும் வேண்டா புறத்திடுமி னென்றான். இ-ள். மெய்யுரையைக்கூறினால் அதற்கு இவ்வையகத்தே நிலை நின்றபுகழ் மன்னும்; மறுமையில் மேலுலகத்து மணிக்கோ புரங்களை யுடைய கோயில்மன்னும்; பொய்யுரையைக்கூறினால், அதற்கு இம்மையிற்பழியும், மறுமையில் நரகத்துக்கோயில்களும் மன்னும்; இவ்விரண்டும் ஐயமில்லைக்கண்டீர்; ஆதலால், அப்பொய்யுரையையுங் கைவிடுமினென்று கூறினானென்றா னென்க. (271) 2870. முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீற அளவிறுயர் செய்வரிவண் மன்னரத னாலும் விளைவரிய மாதுயரம் வீழ்கதியு ளுய்க்குந் களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே. தாமரைப்பூப்போலும் புகரையுடைத்தாகிய முகத்தை யுடைய யானையினது முளைத்த வெயிறு. இ-ள். களவின்விளைவினைக் கேள்; இவ்வுலகிலே மன்னர் யானைக்கொம்பு குத்திப்பிளக்கக் கொல்வர்; பின்னர் நரகத்திலே யரிய துன்பங்களை யது தானேசெலுத்தும்; ஆதலால் அக்களவை மேற் கொண்டு கடிதல் உபாயமெனக் கூறினானென்றானென்க. (272) 2871. மடத்தகைய நல்லார் மனங்கரிய மாற்றார் பிடர்த்தலையொள் வாள்போற் பிறர்மனைகள் சேரி னெடுப்பரிய துன்பத் திடைப்படுவ ரின்னாக் நடுப்புடைய காமம் விடுத்திடுத னன்றே. இ-ள். தம்மனைவியர் வருந்தப் பிறர்மனையாளைச் சேரிற் றாங்கற்கரிய துன்பத்திடையிலேயழுந்துவர்; ஆதலால் நடுங்குத லுடைய காமத்தினைக் கைவிடுதல் நன்றென்றுகூறினா னென்றா னென்க. மாற்றார் கழுத்தில்வைத்த வாள்போல் இன்னாத பிறர் மனையென்றது, கொன்றே விடுமென்றற்கு. (273) 2872. தெருளிற்பொருள் வானலக மேறுதற்குச் செம்பொ னிருளில்படு கால்புகழ்வித் தில்லையெனி னெல்லா வருளுநக வையநக வைம்பொறியு நையப் பொருளுநக வீட்டும்பொருள் யாதும்பொரு ளன்றே. ஒருவன் தெளிவானாகில். அருள்கள் பலவாதலின், எல்லாவருளு மென்றார். வையம்-ஆகுபெயர். ஐம்பொறியும் பொருள்களை நுகரப் பெறாது வருந்த. பொருளுநக-அவ்வைம் பொறியும் நுகர்தற்குரிய பொருள்களும் எம்மை நுகரகின்றிலனென்றுநக. இ-ள். தெருளில், நக, நக, நைய, நக ஈட்டும்பொருள் சிறிதும் நற்பொருளன்று; அங்ஙனந் தீதாகவீட்டுதலில்லையெனிற், அப்பொருள் இம்மையிற் புகழை விளைக்கும் வித்தாம்; மறுமையிற் செம் பொனுலகமேறுதற்கு மயக்கமற்ற ஏணியா மென்று கூறினா னென்றானென்க. (274) 2873. பொய்யொடு மிடைந்தபொரு ளாசையுரு ளாய மைபடும் விளைத்துகள் வழக்குநெறி மாயஞ் செய்தபொருள் பெய்தகலன் செம்மைசுடு செந்தீக் கைதவ நுனித்தகவ றாடலொழி கென்றான். இ-ள். பொய்யோடு நெருங்கின பொருளாசையை யுடைய பரத்தையர், மாயத்தைச்செய்த இன்பநிறையப்பெய்ததோர் கொள்கலம்; ஆதலின் அது பாவமுண்டாந்தீவினையாகிய துகளைப் புகுத்தற்கு வழியா யிருக்கும்; அதனை யாடுதலையும், நடு நிலையைச் சுடுநெருப்பாகிய வஞ்சனை கூர்த்த கவறாடு தலையும் ஒழிகவென்று கூறினானென்றானென்க. உருளாயம்-தம்மைநுகர்வார் மனங்கட்கேற்பப் புரளுமாயம். வழக்கு “வளிவழக் கறுத்த வங்கம்”(புறநா.368) என்றார் போலக்கொள்க. பொருளென்றது-நாற்பொருட்கு முரித்தேனும் ஈண்டுஇன்பத்தின்மேற்று. (275) 2874. காமமுடை யார்கறுவொ டார்வமுடை யாருந் தாமமொடு சாந்துபுனை வார்பசியி னுண்பா ரேமமுடை யார்களிவ ரல்லரிவை யில்லா வாமனடி யல்லபிற வந்தியன்மி னென்றான். இ-ள். காமத்தையுடையாரும், செற்றத்தோடு ஆசையையுடை யாரும், தாமத்தையுஞ் சாந்தையும் புனைவாரும், பசியாலே யில்லிலே சென்று பலிகொள்வாருமாகிய இவர்கள் நம்மை உய்யக் கொள்ளு மவரல்லர்; இத்தீக்குணங்களில்லாத வாமனடியல் லாத பிறவடிகளை வணங்கன்மினென்று கூறினானன்றா னென்க. (276) 2875. பூவைகிளி தோகைபுண ரன்னமொடு பன்மா யாவையவை தங்கிளையி னீங்கியழ வாங்கிக் காவல்செய்து வைத்தவர்க டங்கிளையி னீங்கிப் போவர்புகழ் நம்பியிது பொற்பிலது கண்டாய். இ-ள். நம்பி! தன்கிளையோடே புணர்ந்த அன்னத்தோடே பூவை முதலியனவும் பலவிலங்குகளும் ஒழிந்தனவுமாகிய அவை தங்கிளை யினின்றுநீங்கி வருந்தப்பிரிந்து இம்மையிற் காவலிட்டு வைத்தவர்கள் மறுமையிற் றங்கிளையினின்று நீங்கித் தாமும் பிறராற் காவல்செய்யப்பட்டுப் போவார்; ஆதலின், நீ பிரித்துக் காவல்செய்த விதுவும் பொலிவில்லாததுகாணென்று கூறினா னென்றானென்க. கட்டுதல் கூட்டிலடைத்தல்செய்தற்குரியவல்லா இளமைப் பருவத்தனவற்றையே யீண்டுக்கூறலிற் ‘காவல்செய்த’தென்றார். ஈண்டுக் காவல்செய்து வைத்தவரென்று கூறுதலின், முன்னங் கட்டுண்டானென்றற்குக் காரணமின்மை யுணர்க. (277) வேறு 2876. அல்லித்தா ளற்ற போது மறாதநூ லதனைப் போலத் தொல்லைத்தம் முடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப் புல்லிக்கொண்டு யிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின் றெல்லையி றுன்ப வெந்தீச் சுட்டெரித் திடுங்க ளன்றே. இ-ள். அல்லித்தண்டு அற்றுவீழ்ந்தபோதும் நூலறாது தொடர்ந்து நிற்குந் தன்மைபோலத் தம்முடம்பு உயிரை நீங்கிக் கிடக்க எல்லை யில்லாத துன்பத்தையுடைய தந்தொல்லைத் தீவினையாகிய வெந்தீ அவ்வுயிரை நீங்காது தொடர்ந்து சென்று சூழ்ந்து புல்லிக்கொண்டு அவ்வுயிர்போய்ப் புக்கதோர் மெய்யிலே தானும்புக்குப் பின்னே நின்று அதனை யெரித்துச் சுட்டிடுமென்று கூறினானென்றானென்க. (278) 2877. அறவிய மனத்த ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற் பறவையு நிழலும் போலப் பழவினை யுயிரோ டாடி மறவியொன் றானு மின்றி மனத்ததே சுரக்கும் பால கறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப் பட்ட வெல்லாம். இ-ள். அறத்தையுடைய மனத்தராய்ப் பல்லுயிர்க்கும் அருளைச் செய்வராயின், அந்நல்வினை பறவையுநிழலும் விடாது திரியுமாறு போல அவ்வுயிரை விடாமற்றிரிந்து சிறிதும் மறப்பின்றித் தம்மாற் காதலிக்கப்பட்டன எல்லாவற்றையுஞ் சுரபியைப் போலக் கொடுக்குமென்று கூறினானென்றானென்க. மனத்தில் நினைத்ததே கொடுக்கும் பாலவாகிய கறவை. (279) 2878. நெடுமணி யூபத் திட்ட தவழ்நடை யாமை நீணீர்த் தொடுமணிக் குவளைப் பட்டந் துணையொடு நினைப்ப தேபோற் கடுமணிக் கயற்க ணல்லார் காமமும் பொருளுஞ் சிந்தித் தடுமணி யாவி நீப்பா ரறிவினாற் சிறிய நீரார். மணி-அழகு. மணிக்குவளை-உவமத்தொகை. கடியகண். மணிக்கயல்-அழகியகயல். மணியடுமாவி நீப்பாரென்றது-வீடு பெறுதற்குரிய மணியுயிரைப் பாழே போக்குவரென்றவாறு. இ-ள். அறிவில்லாதார், யாகத்திற்கு நட்டதறியிலே கட்டினயாமை தான் கிடக்கும்பொய்கையையுந் துணையையு நினைக்கு மாறுபோல, நல்வினை செய்யாதிருந்து காமத்தையும் பொருளையு நினைத்து ஆவிநீப்பாரென்று கூறினானென்றா னென்க. “அழலெழு தித்திய மடுத்த யாமை-நிழலுடை நெடுங் காயம் புகல்வேட் டாஅங்கு”(361) என்றார்அகத்திலும். (280) 2879. வீறழி வினைசெய் காலன் வைரவாள் வலையிற் பட்டாற் சரறழி குவளை மாலை யவரையுந் தனமு நிக்கி யாறழி வரையிற் றோன்று மறநனி நினைப்பர் செம்பொ னேறெழி நெறியி னேறி யிருவிசும் பாளு நீரார். வீறழிந்த வினையாவது கொலைத்தொழில். பலகாலும் வெட்டினாற் கேடின்றென்றற்கு வைரவாளென்றார். வாள் போல மாறாமற்கொல்லும் வலையிலகப்பட்டாலென்றது-பிறந்தாலென்றவாறு. சாறழிதனம்-விழாக்கொண்டாடுதன்மிக்கபொருள். ஆறிழிகின்ற வரை யென்றார், பயன்படுதலும் நிலைகுலையா மையும்பற்றி. செம்பொனீராரென்றது-சுவர்க்கத்தே செல்லும் பொன்னாகிய வுயிரை யுடையாரை. நெறிதவம். இ-ள். எழிலேறுபோலே அரிதென விகழாது தவத்தாலே விசும்பிலேயேறி அதனையாளுஞ் செம்பொனீரார், காலன் வலை யிலகப் பட்டால், மகளிரையும் பொருளையு நீக்கி, மலை போற் றோன்றும் அறத்தைச்செய்ய நினைப்பரென்று கூறினா னென்றா னென்க. (281) 2880. துன்னிமற் றறத்தைச் கேட்டே துகினெருப் புற்ற தேபோன் மின்னுத்தார் மார்பன் மெய்வெந் தாலியி னுருகிப் பெண்பா லன்னப்பார்ப் பன்று கொண்ட தடத்திடை விடுவித் திட்டான் பின்னைத்தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்தி னானே. இ-ள். மின்னுப்போலுந் தாரையுடையமார்பன், அங்ஙனம் அறத்தைத் துன்னிக்கேட்டு அஞ்சி ஆலிபோலே நெஞ்சுருகி மெய் வெந்து பின்னர் உடுத்த துகிலிலே நெருப்புற்றதனை விரைந்து நீக்கு மாறுபோல விரைந்து அன்னப்பார்ப்பைப் பெண்பாலிடத் தினின்றும் விடுவித்து அன்று பிடித்த தடத்தின் நீரிடத்தே போக விட்டான்; அங்ஙனஞ் செய்தலாலே, அப்பெருந்தகைமுன்னர்க் கிளைப்பிரிவை வித்தியதே யன்றிப் பின்னர்க் கிளைகளிடத்துக் கூட்டத்தையும் வித்தினானென்றானென்க. இக்காரணத்தாலே விசயையை நீங்கிச் சுநந்தையிடத்தே வளர்ந் தானென்றும், பின்னர் அவளைச்சேர்ந்தானென்றும் முன்னர்கூறினார். (282) 2881. மெய்ப்படு முதுபுண் டீர்ப்பான் மேவிய முயற்சி போல வொப்புடைக் காமந் தவினை யுவர்ப்பினோ டொழித்துப் பாவ மிப்படித் திதுவென் றஞ்சிப் பிறவிநோய் வெருவி னானே மைப்படு மழைக்க ணல்லா ர்வாய்க்கொண்ட வமிர்த மொப்பான். இ-ள். மகளிர் வாய்க்கொண்ட-அமுதம் போல அவர் நினைத்த தன்மையனாயிருந்தவன், அறங்கேட்டபின்னர் உடம்பி லுண்டாகிய வொடுவைத் தீர்த்தற்குப் பொருந்திய முயற்சி போலத் தன் இளமைக்கொப்புடைய காமத்தை வெறுப்பினாலொழித்துப்பாவத்தையும் இஃது இப்படிப் பெரியதோர் தன்மையையுடைத் தென்றஞ்சி யிவற்றை யெல்லாமுடைய பிறவிநோயை வெருவினா னென்றானென்க. (283) 2882. ஆளியாற் பாயப் பட்ட வடுகளி யானை போல வாளிவிற் றடக்கை மைந்தன் வாய்விட்டுப் புலம்பிக் காம நாளினு நஞ்சு துய்த்தே னச்சறை யாக நன்பொற் றோளியர்த் துறந்து தூய்தாத் தவஞ்செய்வ லடிக ளென்றான். இ-ள். அங்ஙனம்வெருவின மைந்தன், நஞ்சிற்கு ஓரிருப்பிடமாகக் காமமாகிய நஞ்சினை நாடோறுநுகர்ந்தேனென்று யானைபோலப் புலம்பி மகளிரைத்துறந்து தவத்தைத் தூய்தாகச் செய்வேன்; அடிகளே யென்று கூறினானென்றானென்க. (284) 2883. சிறுவன்வாய் மொழியைக் கேட்டே தேர்மன்னன் றானுஞ் சொன்னா னுறுகளிற் றுழவ மற்றுன் னொளிமுடித் தாய மெய்தி யரைகடல் வேலிகாத்துன் னலங்கல்வேற் றாய மெல்லாம் பெறுதகு புதல்வற் கீந்து பின்னைநீ துறத்தி யென்றான். இ-ள். அங்ஙனங்கூறி அசோதரன்மொழியைக்கேட்டு அரசனுஞ் சொன்னான்; அஃதியாதெனின், உழவனே! தாயத்தை யெய்திக் காத்துப் புதல்வர்க்கீந்த பின்னை நீதுறத்தியென்று கூறினானென்றானென்க. (285) 2884. கொலைச்சிறை யுய்ந்து போகு மொருவனைக் குறுக வோடி யலைத்தனர் கொண்டு பற்றி யருஞ்சிறை யழுத்து கின்றார் தொலைப்பருஞ் சுற்றத் தாரோ பகைவரோ வடிக ளென்ன விலைப்பெரு மணியை முந்நீர் நடுக்கடல் வீழ்த்த தொத்தான். தொல்லை-விகாரம். இ-ள். அதுகேட்ட அசோதரன், அடிகளே! சிறையினின்றுந் தப்பிப்போமொருவனைத் தொடர்ந்துசென்று பற்றிக்கொண்டு அலைத் தனராய்ச் சிறையிலே யழுத்துகின்றார் சுற்றத்தாரோ? பகைவரோ? என்றுகூற, அதுகேட்டவரசன் பெருவிலைமணியை மூன்று தன்மையை யுடைய நடுக்கடலிலே வீழ்த்த தன்மையை யொத்தா னென்றானென்க. முந்நீர்க்கு “முந்நீர்ப்பிறந்த” (சீவக.5) என்றகவியிற் கூறினாம். (286) 2885. காதல மல்ல மேனாட் கழிந்தநம் பிறவி தம்மு ளேதிலம் யாங்க ளெல்லா மினிக்கொளு முடம்பி னுனா மாதலாற் சுற்ற மில்லை யதுபட்ட வாறென் றம்பூந் தாதலர் மார்ப னற்புத் தளையறப் பரிந்திட் டானே. இ-ள். அத்தன்மையனாகிய வரசன், முன்புபோன நம்பிறவி களில் யாங்களெல்லாம் இவற்கச் சுற்றமல்லேம்; இனிப் பிறக்கும் பிறவிக்கண்ணும் யாங்களெல்லாம் இவற்குச் சுற்றமாகேம்; ஆதலால் ஈண்டுச் சுற்றமென்பதொன்றில்லை; இவற்குப் பட்ட வாறுமது வென்றுகருதி யன்பாகிய தளைபோம்படி யறுத்தா னென்றானென்க. தாய் முதலியோரையுங் கூட்டி யாங்களெல்லாமென்றான். அதுவென்றது, தான் கருதிய கருத்தினை. (287) 2886. நற்பொறி குயிற்றி வல்லான் செய்ததோர் நன்பொற் பாவை பொற்பொறி கழல வெல்லாப் பொறிகளுங் கழல்வ தேபோற் சொற்பொறி சோர வெல்லாப் பொறிகளுஞ் சோர்ந்து நம்ப னிற்பொறி யின்ப நீக்கி யிராயிரர் சூழச் சென்றான். இ-ள். நடத்துதற்குரித்தாகிய நல்ல எந்திரத்தை யுள்ளே வகுத்து வல்லவன் செய்த பாவை அந்நற்பொறி குலைய எல்லாப் பொறியுங் குலையுந்தன்மைபோலே யங்ஙனந் தளை பரிந்த அரசனது சொல்லாகிய எந்திரமொன்று கழலுதலாலே, நம்பன் தன்னுடைய ஐம்பொறிகள் புலன்களிலே செல்லும் வேட்கையும் போக இல்லின்கண் நல்வினையானுகரு மின்பத்தையு நீக்கி இரண்டாயிர வரசர்கள் சூழ்ந்துசெல்லத் துறவிலே சென்றா னென்றானென்க. சோர்ந்து-சோர (288) 2887. தணக்கிறப் பறித்த போதுந் தானளை விடுத்தல் செல்லா நிணப்புடை யுடும்ப னாரை யாதினா னீக்க லாகு மணப்புடை மாலை மார்ப னொருசொலே யேது வாகக் கணைக்கவி னழித்த கண்ணார் துறந்துபோய்க் கடவு ளானான். இ-ள். வாலைஇறப்பிடித்துப் பறித்தகாலத்துந் தான் அளை யைக் கைவிடாத உடும்பை யொப்பாரை யாதொரு காரணத்தாலும் இல்வாழ்க்கையினின்றும் போக்கலாகாது; இங்ஙனம் அரிதாயி ருக்கவும், அசோதரன் முற்பிறப்பிலும் தவஞ்செய்து வருதலிற்றந்தை கூறிய ஒருசொல்லே துறவிற்குச் காரணமாகக் கருதி மகளிரைத் துறத்துபோய்க் கடவுளாயினானென்றானென்க. நிணத்தைப் புடையிலேயுடைய. மணத்தைக்கூடுதலை யுடைய மாலை. ஒருசொலென்றது, “விளைக்கிய வித்தனாய்” (சீவக.2867) என்றதனை. (289) 2888. தூமமார்ந் தணங்கு நாறுஞ் சுரும்புசூழ் தாரி னானுந் தாமமா ரொலிய லைம்பாற் சயமதித் திருவு மார்ந்த காமமா சுண்ட காதற் கதிர்வளைத் தோளி னாரு நாமநாற் கதியு மஞ்சி நற்றவத் துச்சி கொண்டார். அணங்கு-தெய்வம். தாரினான்-பவணமாதேவன். சயமதி யாகியதிரு-அவன்றேவி. காமமாகிய மாசிலே தழும்பிய தோளி னார்-அசோதரன் றேவிமார். இ-ள். அவன் கடவுளான பின்னர் தாரினானுஞ் சயமதியுந் தோளினாரும் நாற்கதியிலுஞ் சேறற்கஞ்சி நற்றவத்தின்முடிவைக் கைக்கொண்டாரென்றானென்க. (290) வேறு 2888. ஆசார நாணத் தவஞ்செய்தலர்க் கற்ப கத்தார்ச் சாசார னென்னுந் தகைசாலொளித் தேவர் கோவாய் மாசார மாய மணிவானுல காண்டு வந்தாய் தூசார்ந்த வல்குற் றுளும்புந்நலத் தாரொ டென்றான். சாசரன் - ஹஹஸ்ராரன். சாரம் - ஸாரம். துளும்பும் - ஒழுகும். இ-ள். அங்ஙனம் கடவுளாகிய நீ தவத்திற்குரிய ஒழுக்கம் நாணத் தவஞ்செய்து அதனாலே கற்பகத்தாரையுடைய சாசாரனென்னும் இந்திரனாகி ஆண்டு நலத்தாரொடு வந்தாய் என்றானென்க. வந்தாயென்றது, அவதரித்தலை. தேவருலகின்கண் நுகரு மின்பமும் யானுகரப்பெற்றிலேனென்னும் அவரவற்றாலன்றி ஈண்டு வீடுபெறுதலின்றென்பது உணர்தற்கு இந்திரனாய் வந்தாயென்றான். எனவே எல்லா அவாவுமற்றது வீடாயிற்று. முற்பிறப்பிற் றேவியரான வரே இப்பிறப்பிலுந் தேவியராய் வந்தாரென்று ஈண்டுச் சாரணர் கூறுதலின், முன்னர்க் கனவில் ‘எண் முத்தணிமாலை’(சீவக.223)தூங்கக் கண்டாளென்றுணர்க. ( 291) 2890. மின்னார் சிலம்பிற் சிலம்புங்குர லன்ன மேனாண் மன்னா பிரித்தாய் பிரிந்தாய்சிறை வைத்த தாற் பொன்னார மார்ப சிறைப்பட்டனை போலு மென்றா னின்னாப் பிறவிப் பிணிக்கின்மருந் தாய சொல்லான். சிலம்பு போல ஒலிக்கும். இ-ள். மருந்தாய சொல்லான், மன்னா! முற்பிறப்பிலே அன்னப்பார்ப்பைக் கிளையினின்றும் பிரித்தாய்; அத்தீவினை யாலே நீயும் இப்பிறப்பிற் கிளையினின்றும் பிரிந்தாய்; பொன்னார மார்பனே! முன் அதனைக் காவல்செய்துவைத்த தீவினையாலே நீயும் ஈண்டுச் சிறைப்பட்டாய்போற் பிறர்க்குத் தோன்றினாயென்றானென்க. பிறரிடத்துவளர்ந்தமை குறிப்பானுணரக்கூறினாராதலிற் சுநந்தையைப் பிறரென்று கூற்றாற்கூறாராயினார். போலு மென்பது “வேறுபட வந்த வுவமத் தோற்றம்” (தோல்.உவம.32) என்னுஞ் சூத்திரத் தடங்கும்; ஒப்பில்போலியன்று. இதனைத் தற்குறிப்பேற்றமென்ப. சீவகற்குச் சிறைப்பட்ட தன்மையின்மை, “விலங்கிவில் லுமிழும் பூணான்”(சீவக.1167) என்னங்கவியிற் கூறினார். ஈண்டுச் சாரணர், “சிறை வைத்ததனாற்.... சிறைப்பட்டனைபோலும்” என்றுகூறிய சிறை யென்னுஞ்சொல்லும், முன்னர்க் கூறிப்போந்த கட்டென்னுஞ் சொல்லும் பரியாயச் சொல்லன்றி வேறுவேறு பொருடருஞ் சொற் களாம்; என்னை? இத்தமிழ்ப்பாடையில் உலகவழக்காகிய இயற்சொற் களில் ஒருவினையை யுணர்த்துதற்கு ஒருசொல் வழங்குதலன்றி யிருசொல் வழங்காமையின். சிறையென்பது-தடுத்துக்காத்தலை யுணர்ந்தும்; முன்னர் “அருஞ்சிறை”(சீவக.2867) என்றதற்குப் பின்னர்க் “காவல்செய்துவைத்தவர்கள்”(சீவக(2875) என்ற மையால். அன்றியும், “சிறைகாக்குங் காப்பெவன் செய்யும்” (குறள்.57) “சிறை பனி யுடைந்த சேயரி மழைக்கன்”(குறுந்.86) “கொலைச்சிறையுய்ந்து போகு மொரு வனை”(சீவக.2884) என்றாற்போல்வன பிறவற்றானும், சிறைக்கால், நீர்ச் சிறையென்னும் வழக்கானுமுணர்க. இஃது ஆகுபெயராய்ச் சிறை வைத்தானென்றாற் சிறைக்கோட்டத்தை யுணர்த்துமாறு முணர்க. இதற்குக்கோலுதல், அகப்படுத்தல், தகைதலென்றாற் போல ஆசிரியன் முழுவதூஉந்திரித்த திரிசொற்கள் பரியாயச் சொற்களாம்; இதற்குச் சிக்கலென்பது திசைச்சொல். இனிக் கட்டினானென்னுஞ் சொல், உண்டான், வந்தான், போனா னென்பன போலப் புடைபெயர்ச்சித் தொழிலுணர்த்துஞ் சொற்கு வேறோர்சொல்லின்றிநிற்கும்; இதற்கு வீக்கினான், பிணித்தான், யாத்தானென்றாற்போல ஆசிரியன் முழு வதூஉந்திரித்த திரிசொற்கள் பரியாயச் சொற்களாம்; இது பசுவின் முலையைக்கட்டினான், பாம்பின் வாயைக்கட்டினா னென்றாற்போலப் புடைபெயர்ச்சித் தொழில் புலப்படாமலும் நிற்கும்; இவ்விரண்டு சொல்லும் வேறு வேறுபொருடருதலின், ஒன்றற்கொன்று பரியாயமா காமையிற் சாரணர்கூறிய சிறையென்னுஞ் சொல்லிடத்துக் கட்டென்னுஞ் சொல்லின்பொருள் பிறத்தலின்மையின், முன்னர்க் கட்டென்று கூறியது ஈண்டைக்குப் பொருந்தாதாயிற்று. ஈண்டு இவர் கூறிய பாவம் காரணமும், ஆண்டுச் சிறைப்பட்டது காரியமுகமாகவே கோடல் வேண்டலிற் சிறைப்பட்டானென்றே யாண்டும் பொருள் கூறுவ தன்றிக் கட்டுண்டானென்று பொருள் கூறலாகாமை யுணர்க. (292) வேறு 2891. மஞ்சிவர் மணிவரை யனைய மாதவன் வஞ்சமி லறவுரை பொதிந்த வாய்மொழி யஞ்சின னிருந்துழி யம்பு வீழ்ந்தென நஞ்சுமிழ் வேலினா னடுங்க வீழ்ந்ததே. பயன்றருதலின், மஞ்சு கூறினார். இ-ள். சலிப்பற்றமாதவன் முற்கூறிய அறவுரையாலே, வேலினான், அரசாட்சியை யஞ்சியிருந்தவளவிலே, உமிழும் நஞ்சைப் பொதிந்த வாய்மொழி யவனடுங்கும்படி வீழ்ந்ததென்க. நஞ்சைப்பொதிந்த வாய்மொழியென்றது - தீவினையாற் சிறைப் பட்டதன்மை கூறியதனை. அதுவும் அம்பு வீழ்ந்தவிடத் தினின்றும் போதற்குப் பிறர் நடுங்குமாறு போலே அரசாட்சியைக் கைவிட்டுப் போதற்கு நடுங்கும்படி வீழ்ந்ததென்க. (293) 2892. வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக் காரணி மயிலனார் சூழக் காவல னேரணி மணிமுடி யிறைஞ்சி யேத்தினான் சீரணி மாதவர் செழும்பொற் பாதமே. காரணி - காராலுண்டானவழகு. இ-ள். அது கேட்டவளவிலே, காவலன் தேவியர் சூழவணங்கி நிற்ப மாதவர் பாதத்தை முடியாலே யிறைஞ்சி யேத்தினானென்க. (294) 2893. நலத்திரு மடமக ணயந்த தாமரை நிலத்திருந் திருசுடர் நிமிர்ந்து செல்வபோ லுலப்பருந் தவத்தினா லோங்கு சாரணர் செலத்திரு விசும்பொளி சிறந்த தென்பவே. திரு - தாமரைக்குஅடை. இ-ள். தாமரைப்பூவையுடைய விடத்தே சாரரிருவருமிருந்து ஞாயிறுந் திங்களுஞ் செல்வனபோல விசும்பிலே செல்ல, அவர் திருவொளி அவ்விசும்பெங்குஞ் சிறந்ததென்க. (295) 21. தாயத்தீர்வு 2894. சாரணர் போயபின் சாந்த மேந்திய வாரணி வனமுலை வஞ்சிக் கொம்பனார் போரணி புலவுவேற் கண்கள் பூத்தன நீரணி குவளைநீர் நிறைந்த போன்றவே. இ-ள். சாரணிருவரும் போயபின் றேவியர் நீரணி கண்கள், பூத்தனவாகிய குவளை நீர்நிறைந்தன போன்றவென்க. இனித் துறப்பனென்றஞ்சி நீர்மல்கின. (296) 2895. பொன்வரை நிலாக்கதிர் பொழிந்து போர்த்தபோற் றென்வரைச் சந்தனந் திளைக்கு மார்பினான் மின்னிவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே யின்னுரை கொடான்கொடிக் கோயி லெய்தினான். இ-ள். மேருவிலே நிலாத் தனது கதிரைச்சொரிந்து அதனை மறைத்தாற் போல மலயத்திற் சந்தனங்கிடந்து பயன்கொண்டமார் பினான், தேவியர்வருந்த இன்னுரை கொடானாய் மெல்லக் கோயிலை சேர்ந்தானென்க. (297) 2896. அஞ்சுரை பொழிந்தபா லன்ன மென்மயிர்ப் பஞ்சிமெல் லணையின்மேற் பரவை யல்குலார் மஞ்சிவர் மதிமுக மழுங்க வைகினார் நஞ்சுயிர்த் தணிநலங் கரிந்து நையவே. மடிசொரிந்த பாலெனவே நுரையுண்மைபெற்றாம். இ-ள். அப்பொழுது தேவியர், நஞ்சுபோல வெய்துயிர்த்து நைய மழுங்க அரசன்றோளணைத் துயிலாது நுரைபோலும் பஞ்சணைமேலே வைகினாரென்க. (298) வேறு 2897. வெள்ளெயிற் றரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேகப் புள்வயிற் பிறந்த புட்போ லொன்றலா துரைத்த றேற்றார் கள்வயிற் றலர்ந்த கோதைக் கலாபவில் லுமிழு மல்கு லொள்ளெயிற் றவர்கள் பொன்பூத் தொளிமணி யுருவ நீத்தார். கள்ளை வயிற்றிலே யலர்ந்த மாலையினையுங் கலாபத்தினது ஒளியைக்காலுமல்கு லினையுமுடைய எயிற்றவர்கள். மேகப்புள் - வானம்பாடி. இ-ள். வானம்பாடி மேகத்துப்பிறந்த துளியையே நச்சிப் பாடுமாறு போல அரசனுள்வயிற்பிறந்த அளியொன்றுமல்லாத னவற்றை யுரைத் தலறியாத தேவியர், பாம்புமேய்ந்த குறைமதி போல் ஒளிகெட்டுப் பசந்து மணிகளினுருவைக் கைவிட்டா ரென்க. (299) 2898. கிளிச்சொலி னினிய சொல்லார் கிண்கிணி சிலம்போ டேங்கக் குளித்துநீ ரிரண்டு கோலக் கொழுங்கயல் பிறழ்ப வேபோற் களித்துநீர் சுமந்து வாட்கண் கலாய்ப்பிறழ்ந் தலமந் தாட வளித்ததா ரலங்க லாழி யவன்றுற வுரைத்து மன்றே. இ-ள். அத்தேவியருடைய கிண்கிணியுஞ் சிலம்பு மேங்க,வாட்கண் ஆட முன்னரளித்த அரசன்றுறவை யினிக் கூறுது மென்றாரென்க. இரண்டுகயல் நீரிலேகுளித்துப் பிறழ்பவைபோலக் கண்கள் களித்து உவகைக் கண்ணீரைச்சுமந்து பிறழ்ந்து கலாய்த்து அலமந் தாடவென்க. அலங்கல் - ஆழிக்கு அடை.(300) 2899. புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த துனைகுரன் முரசத் தானைத் தோன்றலைத் தம்மி னென்றா னனைமல ரலங்கற் கண்ணி நந்தனுந் தொழுது சேர்ந்தான். இ-ள். அத்துறக்கின்றவரசனுஞ் சீவினகொம்பு அழுந்தக் குத்திப் பொருதுவென்ற உருமுப்போலுஞ் சீற்றத்தையுடைய ஏற்றினுரியைப் போர்த்த முரசையுடைத்தாகிய தானையை யுடைய நந்தனைக் கொண்டு வருவீராகவென்றான்; அவனும் வந்து தொழுது சேர்ந் தானென்க. (301) 2900. கொடியணி யலங்கன் மார்பிற் குங்குமக் குன்ற மன்னா னடிபணிந் தருளு வாழி யரசரு ளரச வென்னப் படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க இடியுமிழ் முரச நாண வின்னண மியம்பி னானே. வெற்றிக்கொடியெடுத்தற்குக் காரணமான மார்பு. ஒழுங்கு படவணிந்த அலங்கலுமாம். பாம்பின்றலை நடுங்கி மயங்க இடிக்கும் இடியோசையைப்பிறப்பிக்கும் முரசம். இ-ள். அங்ஙனந் தொழுதுசேர்ந்தவன் பின்னர்க் குன்ற மன்னானடி யைப் பணிந்து, அரசனே! நினைத்த காரியத்தை யருளிச்செய்வாயாக வென்ன, அவனும் முரசநாண இன்னணஞ் செப்பினானென்க. அது மேற் கூறுகின்றார். வாழி - அசை. (302) 2901. ஊனுடைக் கோட்டு நாகான் சுரிமுக வேற்றை யூர்ந்து தேனுடைக் குவளைச் செங்கேழ் நாகிளந் தேரை புல்லிக் கானுடைக் கழனிச் செந்நெற் கதிரணைத் துஞ்சு நாடு வேன்மிடை தானைத் தாயம் வீற்றிருந் தாண்மோ வென்றான். இ-ள். ஊனையுடைத்தாகிய கோட்டினையுஞ் சுரிமுகத்தி னையு முடைய நத்தை வரம்பிற்றுயின்ற ஆவின தேற்றினையுஞ் செங்கேழ் நாகினையுமேறி இளந்தேரையினையும் புல்லிப்போய்க் குவளைக் கழனியிற் காட்டின் றன்மையையுடைய செந்நெற்கதிர ணையிலே துயிலும் நாட்டையும், மற்றுமுள்ள தாயத்தினையும் வருத்தமின்றி யாள்வாயாகவென்றானென்க. (303) 2902. கரும்பலாற் காடொன் றில்லாக் கழனிசூழ் பழன நாடுஞ் சுரும்புலாங் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டே னரும்புலா யலர்ந்த வம்மென் றாமரை யனைய பாதம் விரும்பியான் வழிபட் டன்றோ வாழ்வதென் வாழ்க்கை யென்றான். பழனம் - நீர்நிலம். அரும்புலாயலர்ந்த - அரும்பு நெகிழ்ந்த லர்ந்த. இ-ள். அது கேட்டநந்தன், நாடுந் துறக்கமும் வீடும் எய்தி வாழும் வாழ்க்கை யான் வேண்டேன்; அவையெனக்குஎன்? யான் வேண்டுவது நின்பாதத்தை விரும்பி வழிபட்டு வாழ்வதன்றோ வென்றானென்க. இனி வழிபட்டு வாழ்வதன்றோவென்வாழ்க்கை, வேண்டே னென்றுமாம். (304) 2903. குன்றென மருண்டு கோல மணிவண்டுங் குழாங்கொ டேனுஞ் சென்றுமொய்த் திமிரும் யானைச் சீவகற் கிளைய நம்பி மன்றல்வீற் றிருந்து மின்னு மணிக்குவ டனைய தோளா னொன்றுமற் றரசு வேண்டா னுவப்பதே வேண்டி னானே. மலையென்றுமருண்டு வண்டுந்தேனுஞ் சென்றுமொய்த்து இமிரும் யானையையுடைய நம்பி, தோளான் - அரசன். இ-ள். அங்ஙனங்கூறின நந்தட்டன் அரசாட்சி சிறிதும் வேண்டானாய் அரசனுவக்குந் துறவே விரும்பினானென்க.(305) 2904. பொலிவுடைத் தாகு மேனும் பொள்ளலிவ் வுடம்பென் றெண்ணி வலியுடை மருப்பி னல்லால் வாரணந் தடக்கை வையா தொலியுடை யுருமுப் போன்று நிலப்படா தூன்றின் வைமேற் கலிகடிந் துலகங் காக்குங் காளையைக் கொணர்மி னென்றான். இ-ள். அதுகேட்டவரசன், இவ்வுடம்பின்மேற் றோற்றப் பொலி வுடைத்தாயிருக்குமாயினும் உள்ளும் வயிர்த்திராது; அதனால் இப்பருவத்தே துறத்துமென்றெண்ணி யாந்துறக்குங் காலத்து, உருமுப் போன்று ஒலியுடைய வாரணம் நிலத்து வீழாமல் தன்னைத் தாங்கும் வலிமையுடைய மருப்பினன்றி வேறோரிடத்துக் கையை வையாது; அதுபோல யாமும் அரசினைத் தாங்குதற்குரிய சச்சந்தன் மேலே யிதனை வைத்து மென்று கருதி அவனைக் கொணர்மினென்றானென்க. ஊனைத் தின்னும் வைவேற் காளை. (306) 2905. கழுமணி யார மார்பிற் காவலன் மக்கள் காய்பொ னெழுவளர்ந் தனைய திண்டோ ளிளையவர் தம்முண் மூத்த தழுமலர்க் கொம்பு போலுந் தத்தைநாட் பயந்த நம்பி விழுமணிப் பூணி னானை வீற்றிரீஇ விதியிற் சொன்னான். கழுமணி - வினைத்தொகை. திண்டோன்மக்களென்க. முழுதும் மலரையுடைய கொம்பு. தத்தை முதனாட்பயந்த நம்பி. இ-ள். காவலன் நன்மக்களில் இளையவர் தங்களில் மூத்த நம்பியாகிய சச்சந்தனை வீற்றிருத்தி நூல்விதியாற் கூறினா னென்க. மேல் முடி சூட்டி வீற்றிருத்துவதனை வீற்றிரீஇயென இறந்த காலத்தாற் கூறினார், இயற்கைபற்றி. (307) 2906. பால்வளை பரந்து மேயும் படுகடல் வளாக மெல்லாங் கோல்வளை யாமற் காத்துன் குடைநிழற் றுஞ்ச நோக்கி நூல்விளைந் தனைய நுண்சொற் புலவரோ டறத்தை யோம்பின் மேல்விளை யாத வின்பம் வேந்தமற் றில்லை கண்டாய். நூல் பயன் தந்தாற்போலுஞ் சொல். இ-ள். அவனெங்ஙனங் கூறினானெனின், வேந்தனே! நீ யுலகெல்லாம் நின்குடை நிழலிலே தங்கும்படி பார்த்து அதனைக் கோல்வளையாமற்காத்து அமைச்சரையும் அறத்தையும் பாதுகாப்ப வல்லையாயின், நினக்கு மேலுண்டாகாதவின்பம் வேறில்லை காணென்றானென்க. ‘வேந்த’வென்றான், மேல் முடிசூட்டக் கருதுதலின். (308) 2907. வாய்ப்படுங் கேடு மின்றாம் வரிசையி னரிந்து நாளுங் காய்த்தநெற் கவளந் தீற்றிற் களிறுதான் கழனி மேயின் வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளி னீத்தநீர் ஞால மெல்லா நிதிநின்று சுரக்கு மன்றே. இ-ள். யானைக்கு நெற்கவளத்தை முறைமையால் நாளு மரிந்து தீற்றின், அதற்கு உணவுமாம்; அழிவுமின்றாம்; அங்ஙனந் தீற்றாக்களிறு தானே கழனியிலே மேயின், உணவுமின்றி யழிந்து விடும்; அத்தன்மைபோல மன்னனுங் கொள்ளவல்லனாய் முறைமையாற் கொள்ளின், உலகும் அவன்வழிநின்று பயன்படு மென்றானென்க. (309) 2908. நெல்லுயிர் மாந்தர்க் கெல்லா நீருயி ரிரணடுஞ் செப்பிற் புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழ லிலங்கு வாட்கை மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் நல்லுயிர் ஞாலத் தன்னு ணாமவே னம்பி யென்றான். இ-ள். நம்பி! உலகத்துமக்கட்கெல்லாம் நெல்லுமுயிர்; நீருமுயிர்; இவ்விரண்டும் யான்கூறுமளவிற் சிறந்தவுயிரல்ல; அவர்க்குச் சிறந்தவுயிர் மன்னர்காணென்றானென்க. (310) 2909. ஆர்வலஞ் சூழ்ந்த வாழி யலைமணித் தேரை வல்லா னோர்நிலத் தூரு மாயி னீடுபல் காலஞ் செல்லு மூர்நில மறித றேற்றா தூருமேன் முறிந்து வீழுந் தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்ன தாமே. வலம் - இடம். அலைகின்றமணி. இ-ள். தாருக்கு நிலமாகிய மார்பனே! ஊரவல்லவன் றேரை ஒத்த நிலத்திலே யூருமாயின் மிகப் பலகால நடக்கும்; அதனை யூருநிலமிது வென்று அறியாதூருமாயின், அதுவுமுறிந்து தானும் வீழும்; அத்தன்மைத்தாம் வேந்தர்தன்மையுமென்றானென்க. என்றது - வேந்தர் அரசை யாளுமுறைமையினாளின், அது நீடுநடக்கும்; அவ்வாறு ஆளாராயின், அதுவுங் கெட்டுத் தாமும் வீழ்வரென்றானாம். (311) 2910. காய்ந்தெறி கடுங்கற் றன்னைக் கவுட்கொண்ட களிறு போல வாய்ந்தறி வுடைய ராகி யருளொடு வெகு ளிமாற்றி வேந்தர்தாம் விழைப வெல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்நாந்தக வுழவ ரேறே நன்பொரு ளாவ தென்றான். இ-ள். ஏறே! வேந்தர் அருளோடு அறிவுடையராகி ஒருவனைக் காய்ந்தெறியுங்கல்லைக் காலம்வருமளவுங் கவுளிலே மறைத்து வைத்த களிறுபோலே பகைவர் மேற்சென்ற கோபந் தோன்றாராய்ப் பொறுத்தாரென்று அவருட்கொள்ளும்படி யதனைக் காலம் வருமளவுமாற்றி, அவர்தம் விரும்புவனவற்றை யெல்லாம் ஆராய்ந்து கொடுத்து அவரை யழிக்கின்ற வெண்ணத் தை மறைத்தல்காண் அவர்க்கு நன்பொருளாவதென்றானென்க. “களிறு கவுளடுத்த வெறிகற் போல - வொளித்த துப்பினை” (புறநா.30) என்றார் பிறரும். (312) 2911. குடிபழி யாமை யோம்பிற் கொற்றவேன் மன்னர் மற்று னடிவழிப் படுவர் கண்டா யரும்புகழ் கெடுத லஞ்சி நொடியலோ ரெழுத்தும் பொய்யை நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்கு நல்கு கொழித்துணர் குமர வென்றான். இ-ள். தீங்கை நீக்கி நன்மையையுணர்கின்ற குமரனே! புகழ் கெடுதலை யஞ்சிப் பொய்ம்மொழியோரெழுத்தையுங் கூறாதேகொள்; கலைகளாகிய கடல்களைநீந்தி வெற்றிக் கொடி யை யெடுத்த அமைச்சருக்கு எப்பொழுதுமருள்; இவையே யன்றிக் குடிமக்கள் பழியாமற் பாதுகாப்பாயாயின், பின்னை மன்னர் நின்னடியிடத்தே வீழ்வர் காணென்றானென்க. (313) 2912. சேனடந் தாங்கு மோடிச் சென்றுலாய்ப் பிறழும் வாட்கண் மான்மட நோக்கின் மாதர் மாலைநாட் பயந்த மைந்தன் கானடந் தனைய மான்றோர்க் காளையைக் காவன் மன்னன் றானுட னணிந்து தன்போ லிளவர சாக்கி னானே. உம்மை - இசைநிறை. கானடந்தனைய - காற்று விசை கொண்டுநடந்தாற்போன்ற. இனித் தன்கால் நடந்தாற்போல மனங் கருதியதே செய்யுமென்றுமாம். கானடந்தனையகாளை - சுதஞ் சணன். இ-ள். சேனடந்தாங்குப் பிறழுங் கண்ணினையும், மான் போலுநோக்கினையும், காதலையுமுடைய குணமாலை முதற் பயந்த மைந்தனாகிய காளையைச் சீவகன்றான் சச்சந்தனுடனே கூடியிருந்து பட்டங்கட்டித் தான் கந்துக்கடனாளில் இளவரசா யிருந்தாற்போல இளவரசாக்கினானென்க. என்றது - தன்குலத்திற்கேற்ற நுகர்ச்சியையெய்தும் அரச வுரிமையை. (314) 2913. கூரெயி றணிந்த கொவ்வைக் கொழுங்கனிக் கோலச் செவ்வா யேரணி மயிலஞ் சாய லிலக்கணை யீன்ற சிங்கஞ் சீருடைச் செம்பொற் கண்ணிச் சிறுவனைச் செம்பொன் மாரி பேரறைந் துலக முண்ணப் பெருநம்பி யாக வென்றான். இ-ள். செவ்வாயினையுஞ் சாயலையுமுடைய இலக்கணை யீன்ற சிங்கமாகிய சிறுவனை உலகெல்லாம் நின்புகழைச் சாற்றி நீசொரிகின்ற பொன்மழையைநுகரும்படி பெருநம்பியாயிருப்பா யாக வென்றானென்க. என்றது - சச்சந்தனுக்குப்பின்பு கோவிந்தனரசாளும்படி யுரிமை கொடுத்தானென்றவாறு. (315) 2914. தன்கழ றொழாத மன்னர் தாஞ்சுமந் தேந்தி நின்ற பொன்றிக ழுருவிற் றம்பி புதல்வனைத் தந்து போற்றி மின்றிகழ் முடியுஞ் சூட்டி வீற்றிரீஇ வேந்து செய்தான் குன்றினங் குழீஇய போலுங் குஞ்சரக் குழாத்தி னானே. குஞ்சரக் குழாத்தினான் - சச்சந்தன். இ-ள். சீவகன், தன்னடியை முன்பு பணியாத மன்னர் பின்பு வணங்கித் திறையாக வெடுத்த பொன்னாற் செய்த பூண் விளங்கும் படி வில்லையுடைய நந்தட்டன் புதல்வனை யழைத்துக் குறுநிலமன் னர்க்குரிய அரசாட்சியிலே யவனிற்கும்படி போற்றி வீற்றிருத்தி, தன்மகன் சச்சந்தனை முடியுஞ்சூட்டி வேந்தாக்கினானென்க. “படையும் கொடியும்” (தொல்மரபு.72) என்னுஞ்சூத்திரத் தான் அரசர்க்கே முடிகூறினமையானும், “வில்லும் வேலும்” (தொல்மரபு.83) என்னுஞ்சூத்திரத்தான் மன்பெறுமரபினோர்க்கு முடி கூறாமையானும், “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” (தொல்மரபு.82) என்றுஞ்சூத்திரத்தான் அரசில்வழி அந்தணரே அரசியல்பூண்பரென்றமையானும், நந்தட்டன் புதல்வனை முடிசூட்டினானென்றல் பொருந்தாமையுணர்க. (316) 2915. நிலஞ்செதி ளெடுக்கு மான்றேர் நித்திலம் விளைந்து முற்றி நலஞ்செய்த வைரக் கோட்ட நாறுமும் மதத்த நாகங் குலஞ்செய்த குமரர்க் கெல்லாங் கொடுத்தன னிதியு நாடு முலஞ்செய்த வைரக் குன்ற மோரிரண் டனைய தோளான். செதிள் - தூளி. குலஞ்செய்த - குலத்தையுண்டாக்கின. இனித் ‘திறஞ்செய்’தென்று பாடமாயிற் கூறுபடுத்தியென்க. உலகத்தாற் றொழில் செய்த தோள். இ-ள். தோளான், தேர்களையும், கோட்டினையும் மதத் தினையுமுடையவாகிய யானைகளையும், நிதியையும், நாடு களையும் ஒழிந்த குமரர்க்கெல்லாங் கொடுத்தானென்க. (317) 2916. நூற்கிடங் கொடுத்த கேள்வி நுண்செவி மண்கொண் ஞாட்பில் வேற்கிடங் கொடுத்த மார்பின் வில்வலான் றோழர் மக்கள் நாற்கடல் வளாகங் காக்கு நம்பிதன் கண்க ளாகப் பாற்கடற் கேள்வி யாரைப் பழிப்பற நாட்டினானே. நூற்கேள்விக்கு இடங்கொடுத்த நுண்செவியினையும், மண்ணைக் கொள்ளும் போரிடத்தே வேலுக்கிடங் கொடுத்த மார்பினையு முடைய தோழர். இ-ள். வில்வலான், தோழர்மக்களாகிய தூயநூற் கேள்வியை யுடையாரைச் சச்சந்தனுக்குக் கண்களாக நாட்டினானென்க. என்றது - தன்றோழர் தனக்குச்செய்த தொழில்களை யவர்மக்களு மிவற்குச் செய்கவென்றானென்றவாறு. (318) 2917. காவல ரகல மென்னுங் கழனியு ளுழுது காமர் மாவலம் விளைத்த கோட்டு மழகளிற் றரச னன்னான் பூவலர் கொடிய னாரை விடுக்கிய கோயில் புக்கான் தூவல ரொலிய லார்தம் வலக்கண்க டுடித்த வன்றே. மாவலம்விளைத்த - திருத்தங்கும் வெற்றியை விளைத்த; மா-பெருமையுமாம். இ-ள். களிற்றையொப்பான் றன்றேவியரை யில்லறத்திற் பற்றைவிடுவித்தற்குக் கோயிலிலே புக்கான்; ஆண்டு அவர் வலக் கண்கள் துடித்தனவென்க. செல்வச்செருக்கின்றிச் சாரணர்கூறிய அறத்தின்வழிச் சேறலிற் கடாமின்றிப் பாகன் தோட்டியை நீவாத களிற்றினையும், புதல்வர்ப் பயந்து பயன்கொடுத்தலிற் பூவலர்ந்த கொடியையு முவமித்தார். தூவலரொலியல் - தூய்தாக அலர்ந்தமாலை. இனித் ‘தூவலர் கொடியனா’ரென்று பாடமோதி, அழிகின்ற கொடியனையாரென்றுமாம். தூவுதல் - அழிதல். (319) 22. துறவுணர்த்தல் 2918. செம்பொனாற் செறிய வேய்ந்து திருமணி முகடு கொண்ட வெம்புநீள் சுடருஞ் சென்னி விலங்கிய மாட மெய்தி யம்பொனாற் றெளிந்த பாவை யனையவர்த் தம்மி னென்றான் பைம்பொனால் வளர்க்கப் பட்ட பனைதிரண் டனைய தோளான். பொன்னால் வேய்ந்து மணியால் முகடு கொண்ட மாடம்; ஞாயிறும் விலங்கிப்போகப்பட்ட சென்னியையுடைய மாடம். இ-ள். தோளான், மாடத்தைச்சேர்ந்து தத்தம் பொருண் மிகுதியாற் செல்வ நன்றென்று துணியப்பட்ட பாவையனை யாரைத் தம்மி னென்றானென்க. (320) வேறு 2919(1) தின்பளித மாலைத்திர டாமந்திகழ் தீம்பூ நன்கொளிசெய் தாமநறும் பூநவின்ற தாமம் பொன்றெளித்த தாமம்புரி முத்தமிளிர் தாம மின்றெளித்த மின்னுமணி வீழ்ந்ததிர டாமம். 2920(2) ஈன்றமயில் போனெடிய தாமத்திடை யெங்கு மான்றுமணம் விம்முபுகை மல்கிநுரை யேபோற் றோன்றுமணிக் காலமளித் தூவணையின் மேலார் மூன்றுலகம் விற்குமுலை முற்றிழையி னாரே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். அங்ஙனமழைக்கின்ற அரசனேவலர் செல்கின்ற காலத்து, ஈன்றமயில் போலு முற்றிழையினார், தின்னப்படுகின்ற கருப்பூர வொழுங்காற் றிரண்டதாமம், தீம்பூ மிகவுமொளி செய்ததாமம், பூந்தாமம், பொற்றகட்டை யொப்பஞ்செய்த தாமம், முத்தத்தாமம், மின்னென்று தெளிவித்த மணியினது மின்னுத் தங்கிய தாமம் ஆகிய இத்தாமங்களினிடையே கிடந்த மணிக்கா லமளியில் விம்மு புகை மல்குகையினாலே மணமெங்கு மயங்கி நுரையே போற்றோன்று மணையின் மேலாரா யிருந்தா ரென்க. (321-2) 2921. இன்னதரு ளென்றிளைய ரேத்தஞிமி றார்ப்ப மின்னினிடை நோவமிளிர் மேகலைகண் மின்னப் பொன்னரிய கிண்கிணியும் பூஞ்சிலம்பு மேங்க மன்னனடி சேர்ந்திறைஞ்சி வாழியென நின்றார். இ-ள். அவர் அங்ஙனமிருந்தவளவிலே, சென்றவிளையர், அரசன் றிருவுள்ளம் நீங்கள் தன்னிடத்தேற வருவதாயிருந்த தென்று கூறி யேத்த, அவரும், ஆர்ப்ப நோவ மின்ன ஏங்கச் சேர்ந்து வாழியெனக் கூறி மன்னனடியை வணங்கி நின்றாரென்க. (323) 2922. கலவமயில் கால்குவித்த போலுங்கம ழைம்பா னிலவுமணி மேகலை நிலாவுமிழும் பைம்பூ ணிலவமலர் வாயினணி கூரெயிற்றி னீரே யுலவுமனம் வைத்துறுதி கேண்மினமி தென்றான். இ-ள். மயில் கலாபத்தைக்குவித்தாற்போலும் ஐம்பான் முதலிய வற்றையுடைய எயிற்றினீர்! நும்முடையமனம் பரந்த மனமாயிருக்கும்; அதனை யொருப்படுத்தி வைத்து உறுதி யாகிய காரியத்தைக் கேட்பீராகவென்றானென்க. அம் - அசை. (324) வேறு 2923. வாயழ லுயிர்க்கு மாழி மன்னவன் குறிப்பு நோக்கி வேயழத் திரண்ட மென்றோள் வெம்முலைப் பரவை யல்குற் றோய்பிழி யலங்க லார்தந் தொன்னலந் தொலைந்து வாடிக் காயழற் கொடியைச் சேர்ந்த கற்பக மாலை யொத்தார். வேய் வருந்தத் திரண்ட தோள். தோய்பிழி - செறிந்தமது. இ-ள். அதுகேட்ட தோண்முதலியவற்றையுடைய தேவியர், அழலை வாயுயிர்க்குமொழியையுடைய அரசன்றுறவையுட் கொண்டு, தந்நலந் தொலைந்து, வாடி, நெருப்பொழுங்கைச்சேர்ந்த மாலையை யொத்தாரென்க. (325) 2924. கருங்கடற் பிறப்பி னல்லால் வலம்புரி காணுங் காலைப் பெருங்குளத் தென்றுந் தோன்றா பிறைநுதற் பிணைய னீரே யருங்கொடைத் தான மாய்ந்த வருந்தவந் தெரியின் மண்மேன் மருங்குடை யவர்கட் கல்லான் மற்றையர்க் காவ துண்டே. இ-ள். பிணையனீரே! ஆராயுமிடத்து வலம்புரி கடலிற் பிறப்பினல்லது குளத்தினுள் எந்நாளும்பிறவா; அதுபோலக் கொடையாகியதானமும், அருந்தவமும் ஆராயின், மண்மேற் செல்வமுடையார்க்கல்லது மிடியர்க்குண்டாந் தன்மை யில்லை யென்றானென்க. அருங்கொடைத்தானம் - உத்தமதானம். (326) 2925. அட்டுநீ ரருவிக் குன்றத் தல்லது வைரந் தோன்றா குட்டநீர்க் குளத்தி னல்லாற் குப்பைமேற் குவளை பூவா விட்டுநீர் வினவிக் கேண்மின் விழுத்தகை யவர்க ளல்லாற் பட்டது பகுத்துண் பாரிப் பார்மிசை யில்லை யன்றே. இ-ள். நீர் வெளிப்படுத்தி யான் கூறுகின்றவிதனைக் கேட்பீ ராக; குன்றத்தல்லது வைரந்தோன்றா; குளத்திலல்லது குவளை பூவா; அதுபோலத் தகுதிப்பாட்டையுடையவர்களன்றி இவ்வுல கிற் பகுத்துண்பாரில்லையென்றானென்க. (327) 2926. நரம்பொலி பரந்த கோயி னன்னுதன் மகளிர் தூவும் பெரும்பலிச் சோற்றி னீதல் பெரிதரி தாகு மேனுஞ் சுரும்பொலி கோதை யார்த மீனைவயிற் றூண்டொ றூட்டும்: அரும்பலி யனைத்து மீயி னதுபொருட் குன்று கண்டீர். இ-ள். அரசன் கோயிலிற் றேவியர் பரவித் தெய்வங்கட்குக் கொடுக்கும் பெரும்பலியாகிய சோறுபோல மிகக் கொடுத்தல் மிடியர்க்கு அரிதாயிருக்குமாயினுந் தத்தநிலைக்குத்தகும்படி மகளிர் தம்மனையிற் றூண்களிலுறையும் தெய்வங்கட்குத் தூவும் பலியளவும் ஈவர்களாயின், அத்தானம் பின்பு அவர்க்கு மேருவாயிருக்குங் காணுங்களென்றானென்க. பொருட்குன்று - மகாமேரு. (328) 2927. அற்றவர் வருத்த நீக்கி யாருயிர் கொண்டு நிற்குந் துற்றவி ழீதல் செம்பொற் றுறக்கத்திற் கேணி யாகு முற்றுயி ரோம்பித் தீந்தே னூனொடு துறப்பின் யார்க்கு மற்றுரை யில்லை மண்ணும் விண்ணுநும் மடிய வன்றே. இ-ள். ஆருயிர்கொண்டுநிற்கும் வருத்தத்தைநீக்கி யற்றவர்க்குத் துற்றுஞ் சோற்றைக் கொடுத்தல் துறக்கத்திற்கு வழியாம்; அவையே யன்றிக் கொலைகடிந்து தேனையுமூனையுந் துறப்பார்களாயின், அவர் சிலர்க்கும் மண்ணும்விண்ணும் வந்து வணங்குதற்கு வேறுசில அறங் கூறவேண்டுவதில்லை; நுமக்கு அவ்விரதங்கள் முன்னர் உளவாதலின், மேல் அவ்விரண்டும் நும்மடியிடத்தவன்றேயென்றானென்க. (329) வேறு 2928. மாலைப் பந்தும் மாலையு மேந்தி மதுவார்பூஞ் சோலைம் மஞ்ஞைச் சூழ்வளை யார்தோள் விளையாடி ஞாலங் காக்கும் மன்னவ ராவார் நறவுண்ணாச் சீலங் காக்குஞ் சிற்றுப கார முடையாரே. இ-ள். பந்தையும் மாலையையுங் கையுறையாகக் கொடுத்துச் சோலையில் மகளிர் தோளிலே விளையாடி ஞாலங்காக்கும் வேந்தர் களாய் ஈண்டிருப்பார், முன்னர்க் கள்ளுண்ணாமை யாகிய சீவலத்தைக் காக்குஞ் சிறியவுதவியை யுடையாரென்றா னென்க. (330) 2929. மாசித் திங்கண் மாசின் சின்னத் துணிமுள்ளி னூசித் துன்ன மூசிய வாடை யுடையாகப் பேசிப் பாவாய் பிச்சை யெனக்கை யகலேந்திக் கூசிக் கூசிநிற்பர் கொடுத்துண் டறியாதார். இ-ள். முற்பிறப்பிற் பிறர்க்கிட்டுண்ணாதார், பின்பு அழுக் கினை யுடையனவாகிய சிறியசீலைகளை முள்ளாகிய ஊசியாலே தைத்த தையல்மொய்த்தவாடையைக் குளிர்மிக்க காலத்திற்கு உடையாகக் கொண்டு ஓட்டையேந்தி, பாவாய்! பிச்சையிடு கென்றுபேசிச் செல்வர்மனையினுட் சேறற்குக்கூசிக் கூசி நிற்பரென்றானென்க. (331) வேறு 2930. காட்டகத் தொருமகன் றுரக்கு மாக்கலை யோட்டுடைத் தாமெனி னுய்யு நங்களை யாட்டியிட் டாருயி ரளைந்து கூற்றுவ னீட்டிய நிழன்மதுப் போல வுண்ணுமே. இ-ள். காட்டகத்து ஓட்டவல்லானொருவன் ஓட்டுங்கலை யோட வற்றாயின், அவனைத் தப்பியும்போம்; அங்ஙனந் தப்பாத படி கூற்றுவன் நம்மை யோட்டி யுயிரைவாங்கி மதுப்போல வுண்ணு மென்றானென்க. (332) 2931. புள்ளுவர் கையினு முய்யும் புள்ளுவ கள்ளவிழ் கோதையீர் காண்மி னல்விளை யொள்ளியா னொருமக னுரைத்த தென்னன்மின் றெள்ளியீ ரறத்திறந் தெரிந்து கொண்மினே. இ-ள். கோதையீர்! யான்முற் கூறியவாறேயன்றி நல்வினை யாற் புள்ளுவர் கையிலே யகப்பட்டு பிழைத்துப்போம் புட்களு முள; அதுபோல யாமும் நல்வினை செய்தால் அக்கூற்றத்தைத் தப்பிப் போதலுங்கூடுமென்று காண்மின்; அறிவுடையீர்! யான் இங்ஙனங் கூறிய அறத்தினை யறிவுடையானொருவன் பயனின் றாக வுரைத்த தென்று கொள்ளன்மின்; அதன்றிறத்தை யுலகியல் பாற் றெரிந்து கொண்மினென்றானென்க. (333) 2932. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலுந் தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால் வாய்புகப் பெய்யினும் வழுக்கி நல்லறங் காய்வது கலதிமைப் பால தாகுமே. இ-ள். திங்கள், சாதலும் பிறத்தலுந் தேய்தலும் பெருகலும் யாக்கைக்குடைமையாதலை யறியாதோரையு மறியக்காட்டிச் செப்பாநிற்கும்; அதனைக்கண்டும், நல்லறத்தைச் செவிக்குள்ளே செல்லும் படி சொரியினும் அதனைக் கேட்டும் மனங்கொள் ளாதே யவற்றைக் கைவிடுவது தீவினையின் கூறாமென்றானென்க. (334) 2933. புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலா லுள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரற முள்குமேன் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய் வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே. இ-ள். சுக்கிலம் பைக்குள்ளேவீழ்ந்ததுபெருத்துப் புற்கென்ற தசைபரந்து தான்புக்கவழியாலே புறப்பட்டு அறிவுண்டாய் அறத்தை நன்றென்றுகொள்ளுமாயின், அது பிறவியைத் தப்பிப்போம்படியாகக் கடல்போலப் பெரிய வீட்டின்பத்தை விளைவிக்குமென்றானென்க. போய்: போகவெனத் திரிக்க. (335) 2934. பாற்றுளி பவளநீர் பெருகி யூன்றிரண் டூற்றுநீர்க் குறும்புழை யுய்ந்து போந்தபின் சேற்றுநீர்க் குழியுளே யழுந்திச் செல்கதிக் காற்றுணாப் பெறாதழு தலறி வீழுமே. இ-ள். சுக்கிலமுங் குருதியும் பெருத்துத் தசைதிரண்டு உய்ந்து இடையறாது ஊறுநீரையுடைய சிறுவாயிலாலே போந்தபின் அறிவை யுடைத்தாய் அறத்தை நன்றென்று கொள்ளாதாயின், செல்கதிக்கு நல்வினையாகிய பொதிசோற்றைப் பெறாதே போய் நரகத்தேகிடந்து அழுதுகூப்பிட்டு மீட்டும் அக்குறும் புழைக்குள்ளே யழுந்தி வீழுமென்றானென்க. குறும்புழை - இடக்கர். ‘பருகி’யென்றுபாடமாயின், உள்ள டக்கியென்க. (336) 2935. திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம் பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால் வருந்தினு மறத்திற மறத்த லோம்புமின் கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணீர். இ-ள். வேற்கணீர்! யான்கூறிய நல்லறமாகிய கற்பகம் வீடே யன்றிப் பொருளையும் போகத்தையும் பூத்தலால் வருந்தினீ ராயினும் அறத்தை மறத்தலைப் பாதுகாப்பீராகவென்றானென்க. காலத்தைச்செய்யும் வேல். (337) 2936. மந்திர மருந்திவை யில்லை யாய்விடி னைந்தலை யரவினை யாவர் தீண்டுவார் சுந்தரச் சுரும்புசூழ் மாலை யில்லையேல் மைந்தரு மகளிரை மருங்கு சேர்கிலார். இ-ள். உலகத்தில் மந்திரமும்மருந்தும் இல்லையாயிற் பாம்பைத் தீண்டித் தம் வயத்ததாக்குவாரில்லை; அதுபோல நன்றாகிய நறு நாற்றங் களாற் றம்மைச் சுரும்பு சூழுமியல்பு தமக்கில்லை யாயின், மைந்தரும் மகளிரருகேசென்று அவரைத் தம்வயத் தராக்கு தலிலரென்றானென்க. (338) 2937. பொன்றுலாம் பொன்னனீர் தருதும் பாகுநீர் தின்றலாற் சிறுவரை யானுஞ் சொற்சில வின்றெலா மெம்மருங் கிருந்து பேசினால் வென்றுலாம் வேற்கணீர் விழுத்தக் கீர்களே. இ-ள். பொன்னனீர்! வேற்கணீர்! நீரெல்லாம் முன்னர்ப் பாகுதின்று விழுத்தக்கீர்களாயிருத்தலன்றி யின்று எம்மருங்கிருந்து பாகு தின்னாமல் சிறுவரையானுஞ் சிலசொற் பேசுதலரிது; அங்ஙனம் பேசினால் ஒரு துலாம்பொன் றருவே மென்றானென்க. (339) வேறு 2938. மெய்ப்படு சாந்தும் பூவு மிகநனி கமழு மேனுங் கைப்படு சாந்தும் பூவுங் கொண்டலாற் கலக்க லாகா வைப்படு பித்து நெய்த்தோ ரசும்புசோ ரழுகற் புன்றோற் பொய்ப்பட வுரைத்த துணடோ பொன்னனீர் நம்முணாமால். அழுகலசும்பு - மலர்கள். இ-ள். பொன்னனீர்! நம்முள் நாமன்றோ கூறுகின்றோம்; ஐயோடுகூடிய பித்தையும், குருதியையும், புன்றோலினையு முடைய அழுகலசும்புசோருமெய்யிலே முன்னேயணிந்த சாந்தும் பூவும் கமழுமாயினும் பின்னுங் கைவழியாகிய சாந்தும் பூவுங்கொண்டல் லது கூடலாகா; அத்தன்மையிற் பொய்யாக யான்கூறியதுண் டோ? கூறுமினென்றானென்க. (340) 2939. அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி யினிச்செத்தாம் பிறந்த போழ்தே யென்றுநா மிதனை யெண்ணித் தனிச்சித்தம் வைத்த றேற்றாந் தளர்ந்துகண் பரப்பி நோக்கிப் பனித்துமென் றுற்ற போழ்தே பழுதிலா வறிவி னென்னாம். இ-ள். நாம் பிறந்தபொழுதே யினிச் செத்தேமல்லமோ வென்று இதனையுமெண்ணி நூலாற்றொடுப்பவே மயங்கி வருமனிச்சப் பூப்போலத் தீவினையுற்றபொழுதே தளர்ந்து பரப்பி நோக்கி நடுங்குவே மென்றெண்ணிப் பழுதிலா வறிவினாலுண்டாந் தனித்த சித்தத்தை நிலைபெறவைத்தலைத் தெளியேம்; ஆதலால் யாமுய்யுமாறு என்னையென்றானென்க. (341) 2940. நீனிறங் கொண்ட வைம்பா னிழன்மணி யுருவ நீங்கிப் பானிறங் கொண்டு வெய்ய படாமுலை பையிற் றூங்கி வேனிற மழைக்கண் டாமு மிமைகுறைந் தழுகி மேனி தானிறங் கரக்குங் காலந் தையலீர் மெய்ய தன்னே. இ-ள். தையலீர்! மணியினது நீலநிறத்தைக் கொண்டமயிர் அவ்வுருவ நீங்கி வெளுத்து, முலையும் பைபோல ஞான்று கண்களும் இமையழுகிக்குறைந்து மேனியொளிகெடு மூப்பு மேல் நம்மிடத்தே வருமல்லவோ; அதற்குமுன்னே துறப்பீராகவென்றா னென்க. (342) வேறு 2941. குஞ்சர மயாவுயிர்த் தனைய குய்கம ழஞ்சுவை யடிசிலை யமர்ந்துண் டார்கடா மிஞ்சிமா நகரிடும் பிச்சை யேற்றலா லஞ்சினேன் றுறப்பல்யா னார்வ மில்லையே. இ-ள். யானை யுயிர்த்தாற்போன்ற ஓசையையுடைய தாளிப்புக் கமழும் அடிசிலையுண்டவர்கள்தாம் பின்னர்ப் பிச்சையென்ற லாற் செல்வத்தில் ஆசையெனக் கில்லை; அரசாட்சியை யஞ்சினேன்; இனி யான் றுறப்பேனென்றானென்க. (343) 23. அந்தப்புர விலாவணை 2942(1). ஒருவர்தம் வலிகெடு முடன்று பொங்கிமே லிருவர்மற் றியைந்தெழுந் திருப்பி னென்பபோ லுருவநுண் சுப்பிற விருந்த வொண்மணிப் பரியகட் படாமுலைப் பைம்பொற் கொம்பனீர். 2943(2) காதலங் கழிந்தநா ளிதனி னிப்புற மேதில மென்றசொற் செவிச்சென் றெய்தலு மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்குநீர் போதுலா மார்பின்வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே. இவையிரண்டுமொருதொடர். 1. நீலமணிபோலும் பெரியகண். இ-ள். ஒருவர்மேலே யிருவரியைந்து உடன்று பொங்கி யெழுந்திருப்பின் அவ்வொருவர்வலி கெடுமென்று சொல்லிக் காட்டுவனபோலே நுசுப்புவருந்த வீங்கின முலைகளையுடைய கொம்பனீர்! இதற்கு முன்பு கழிந்தநாளெல்லாம் இல்லறத்தின் மேற் காதலையுடையேம்; அறங்கேட்டதற்கிப்பால் அதனைக் கை விட்ட தன்மையையுடையேம் என்றசொல்லைத் தேவியர் கேட்ட வளவிலே யவர்கள்கண்ணீர் இடையறாது சொரிந்து மார்பிலே வீழ்ந்தனவென்க. (344-5) வேறு 2944. செருக்கி நிணந்தின்று சிவந்து மன்ன ருயிர்செற்ற நெருப்புத் தலைநெடுவேற் கண்ணார் கண்ணீர் நிழன்மணிப்பூட் பரப்பி னிடைப்பாய்ந்து குளமாய்ப் பாலார் படாமுலையை வருத்தி மணிநெடுங்கோட் டருவி போல வீழ்ந்தனவே. இ-ள். நிணந்தின்று செருக்கிச் சிவந்து செற்ற வேல்போலுங் கண்ணாருடைய அங்ஙனம்வீழ்ந்த கண்ணீர், பூணாகிய கரை யுள்ளேபாய்ந்து குளமாய்நிறைந்து தம்மைத்தாங்கின முலையை வருத்தி மலையினின்றும் அருவிவீழுமாறுபோல் அம்முலைகளி னின்றும் வீழ்ந்தனவென்க. (346) 2945. அழலேந்து வெங்கடுஞ்சொ லுருமே றுண்டாங் கலர்சிந்தி நிழலேந்து பூங்கொடிக ணிலஞ்சேர்ந் தாங்கு நிலஞ்சேர்ந்து கழலேந்து சேவடிக்கீழ்க் கண்ணீர் வெள்ளங் கலநிரப்பக் குழலேங்கு மாறேங்கி யழுதார் கோதை மடவாரே. இ-ள். அங்ஙனநின்றழுத மடவார், பூங்கொடிகள் உருமேறு வீழ்ந்து அலர் சிந்தி நிலத்தே வீழ்ந்துகிடந்ததென்னும் படியாக ஏதிலமென்ற சொல்லாலே சேவடிக்கீழ்நிலத்தே வீழ்ந்துகிடந்து கண்ணீர்வெள்ளம் ஆங்குள்ள கலநிரப்ப வழுதாரென்க. குழல் ஏங்கியழுமாறுபோல ஏங்கி யழுதாரென்க. (347) வேறு 2946. குலிகவஞ் சேற்று ணாறிக் குங்கும நீரு ளோங்கிப் பொலிகென வண்டு பாடப்பூத்ததா மரைகள் போலு மொலிகழ லடிக ணுங்கீழ்ப் பிழைத்ததென் னுரைமி னென்னாப் புலிநிழற் பட்ட மான்போற் போகுயி ராகி நின்றார். அத்தேவியர் அவனடிமுதலாக முடியளவுநோக்கிக் கூறு கின்றார். இ-ள். குலிகச்சேற்றிலே முளைத்துக் குங்குமங் கலந்த பனிநீரிலே வளர்ந்து வண்டாகிய பரணர் பரிசில் பெறுதற்குப் பொலிகெனப் பாடப் பூத்த தாமரைப்பூக்கள் போலுந் திருவடி களே! யாங்கள் நும்மிடத்துப் பிழைத்ததியாது? அதனை யுரைமி னென்றுகூறிப் புலிக்கட்பட்ட மானுயிர்போலப் போதற்கொருப் பட்ட உயிரராகி நின்றாரென்க. (348) 2947. அருந்தவி சாகி யெம்மைச் சுமந்தயா வுயிர்த்த வாண்மைப் பெருந்தகு குறங்கு காணீர் பெண்ணுயி ரளியதாமே வருந்துமா லென்று நோக்கீர் வாடுமா லாவி யென்னீர் விருந்தினர் போல நின்றீர் வெற்றுடல் காண்மி னென்பார். இ-ள். முன்னர் எமக்குத் தவிசாகி எம்மைச் சுமந்து இளைப் பாற்றிய ஆளுந் தன்மையையுடைய குறங்குகாள்! நீங்கள் அளிக்கத் தக்க பெண்™யிர்தாம் அளியாக்கால் வருந்துமென்று நினை யீராய் இவ்வருத்தமேயன்றி இவ்வுயிர் வாடுமென்று நினையீராய் விருந்தினரைப்போலநின்றீர்; இனி வெற்றுடலைக் காண்பீராக வென்பாரென்க. (349) 2948. கோதையுந் துகிலு மேந்திக் குங்கும மெழுதிக் கொய்பூந் தாதுகொண் டளகத் தப்பித் தடமுலை வருடிச் சேர்ந்து காதல்கொண் டிருந்த காமர் கைவிர லளிய நீரு மேதில ராகிக் கோமா னெண்ணமே யெண்ணி னீரே. அளகம் - பனிச்சை. இ-ள். ஏந்தி யெழுதி யப்பித் தைவந்து சேர்ந்து காதலைக் கொண்டிருந்த விரலே! எம்மை யருளத் தக்க நீரும் எமக்கு அயலாகி யரசனெண்ணியதனை யெண்ணினீர்; இது தகுமோ வென்பா ரென்க. செந்தீக்கடவுளை வலஞ்செய்து அது சான்றாக நும்மைப் பாதுகாப்பேமென்று எங்கைகளைப் பற்றின நீரென்றலின், உம்மை - சிறப்பும்மை. ‘சாந்தங் - காதல்கொண்டணிந்த’என்றும் பாடம். (350) 2949. பஞ்சிகொண் டெழுதி யார்ந்த சீறடி பனித்த லஞ்சிக் குஞ்சிமே லேற்ற கோமான் கொப்புளித் திட்ட வெம்மை வஞ்சித்தீர் மணிசெய் தோள்காள் வாங்குபு தழுவிக் கொள்ளீர் நெஞ்சநீர் வலியீ ராகி நிற்பிரோ நீரு மென்பார். இ-ள். தோள்காள்! எழுதி யழகுநிறைந்த அடி ஊடுகின்ற காலத்து உடம்பிற்பட்டால் நொந்துநடுங்குமென்றஞ்சித் தலை யிலேற்ற வரசன் இனி நுகரேமென்று கைவிட்டஎம்மை நீர் அணைத்துக் தழுவிக் கொள்ளீர்; இனி நீரும் நெஞ்சும் வலியீராகி நிற்பீரோ? அங்ஙன நிற்பீராயின், நும்முடைய கை யெங்களைப் பற்றித் தெளிவிக்கின்ற காலத்து அதற்குதவியாயிருந்தும் உண்மைசெப்பாது வஞ்சித்தீ ரென்பாரென்க. ‘நெஞ்சி’னென்ற பாடத்திற்கு நெஞ்சுபோலென்க. ஈண்டும் உம்மை: சிறப்பு. (351) 2950. முட்டிவட் டனைய கோல முத்துலாய்க் கிடந்து மின்ன மட்டுவிட் டலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளு மொட்டியிட் டுறைய வெங்கட் குயரணை யாய மார்ப நட்புவிட் டொழியு மாயி னன்மை யார்கண் ணதம்மா. இ-ள். ஒன்றோடொன்று சேர்ந்து அரக்கு வட்டனையவாய்த் திரண்டு பெருத்த முத்துக் கிடந்து மின்ன எம்முடைய மார்பிற் கோதை நின்னிடத்துக்கிடந்த மாலையின் மதுவோடே மயங்கி நாடோறும் ஒன்றுபட்டுறையும்படி எங்கட்கு அணையாயமார்பே! கேளாய்; எம்மோடு கொண்ட நட்புக் கைவிட்டு நீங்கின், மற்று நற்குணம் யாரிடத்தே யுள்ளது கூறாயென்பாரென்க. (352) 2951. மாக்கவின் வளரத் தீண்டி மணிநகை நக்கு நாளும் பூக்கவி னார்ந்த பைந்தார் புனைமதுத் தேனொ டேந்தித் தாக்கியெம் முலைக டம்மை நெருக்கினாய் தரணி மன்னி னீக்கினா யெம்மை நோக்காய் நீத்தியோ நீயு மென்பார். இ-ள். எம்முடைய பெரிய அழகு வளரும்படிதீண்டி மாணிக் கத்தினதொளியை நீ தோற்றுவித்து மதுவைத் தேனினத் தோடே யேந்தி மற்றுள்ள பூக்களின் அழகுநிறைந்த கழுநீர்த்தாரே! நீ யெம்முலைகளைத் தாக்கி நெருக்கினாய்; அங்ஙன நெருக்கியநீயுந் தரணி மன்னனைப்போல எம்மை நீக்கிப் பாதுகாவாயாய்க் கைவிட்டு நின்றாயோவென்பாரென்க. (353) 2952. அன்னமே தோகை நல்யா ழமுதமே யாய்ந்த தீந்தே னின்னரே நங்கை மாரென் றேத்திய பவளச் செந்நா வென்னைநீ கண்ட தெம்மை யிரண்டுநா வாயி னாயே மன்னன்போ லீர மின்றி வலித்தனை வாழி யென்பார். இ-ள். நங்கைமார், அன்னம், தோகை, யாழ், அமுதம், தேனென் கின்ற இத்தன்மையரேயென்று ஏத்திய பவளமாகிய செவ்வியநாவே! நீ மன்னனைப்போல் அருளின்றி யெம்மை யழித்துக்கூறத் துணிந்தனை; இங்ஙனங்கூறுதற்கு எம்மிடத்துக் கண்ட குற்றம் எத்தன்மைத்தாகிய குற்றம்? அதனைக் கூறு; கூறாயேல் நீ யிரண்டு நாவாயே விட்டாயென்பாரென்க (354) 2953. பூணினா னெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி யென்று நாணினால் வருத்தந் தீர்ப்பா னன்முலைக் கண்க டம்பைப் பேணிநீ ரெழுதி யோம்பிப் பேரின்பங் கொண்டு தந்தீர் காண்மினோ வின்றெம் வண்ணங் கண்ணிலீர் கண்க ளென்பார். இ-ள். இவை பூணேட முயங்குதலாலே வெம்பி நொந்து புடைக் கொண்டனவென்று அரசன்கருதி அவன் நொய்தாக வணிந்த பொன்னாணினாற் பின்னுமுலைகட்குப்பிறந்த வருத்தத் தை நீக்குதற்குக் கண்களே! நீர் அம்முலைக்கண்களைப் பேணி நும்மணி களாலே யெழுதிப் பாதுகாத்துப் பேரின்பத்தைக் கொண்டு எமக்குக் பேரின்பத்தைத் தந்தீர்; இங்ஙனமின்பத் தைத் தந்தநீர் துன்பமாகக் கருதி இன்று அருளிலீராயினீர்; எம் வண்ணங் கெட்டபடியை இனிக் காண்பீராகவென்பாரென்க. (355) 2954. சென்னிமேன் மிதித்த வஞ்செஞ் சீறடி திருவில் வீச மின்னிவா ளாரஞ் சிந்த வெறுநிலத் துறைந்து நீயெம் மின்னகை முறுவல் பார்த்தா யின்றெம தாவி பார்த்தாய் மன்னிய மாலை வண்டார் மணிமுடி வாழி யென்பார். இ-ள். வண்டார்மலையினையுடைய நீலமணிபோலும் முடியே! வெறுநிலத்திலே ஆரமின்னிச் சிந்த அரசன் வீழ்ந்து வணங்கவும் அவன்சென்னிமேலே திருவில்வீச மிதித்த சீறடியிலே நீயுறைந்து எம்முகிழ்நகை யெய்துமோவென்று முன்பு பார்த்தாய்; இன்று எமதாவி வருந்துதலையும் பார்த்தாய்; நின்வழிபாடு பொய்யாயிருந்த தென்பாரென்க. வாழி - அசை. என்பாரென்றவற்றிக்கு ஆயினாரெனவரு வித்து முடிக்க. இத்துணையும் அவயங்களைநோக்கிக் கூறிற்றாகத் தேவர் கூறினார்; “சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் - செய்யா மரபிற் றொழிற்படுத்தடக்கியும்”(தொல்.பொருளியல்.2) என்னும் பொருளியற்சூத்திரத் தாலென்றுணர்க. (356) 2955. வீங்குபாற் கடலு நஞ்சாய் விளைந்ததால் விரிந்த வெய்யோன் பாங்கிலா விருளை யீன்று பார்மறைத் திட்ட தாலோ தீங்கதிர்த் திங்கள் செந்தீச் சொரிந்ததாற் றிசைக ளெல்லாந் தாங்குமா றென்னை யாவி தரிக்கிலேந் தேவிர் காளோ. இ-ள். அரசன் இங்ஙனச் தன்றன்மை திரிந்தமையால், இனிப் பாற்கடலும் நஞ்சாய்விளைந்தது; வெய்யோன் றன்னிடத் தில்லாத விருளையீன, அவ்விருள் பாரை மறைத்துவிட்டது; திங்கள் திசைகளெல்லாஞ் செந்தீயைச் சொரிந்தது; ஆதலால், தேவிர்காள்! யாம் எம்மாவியைத் தரிக்கமாட்டுகிலேம்; அதனைத் தரிக்குமாறு எங்ஙனங் கூறுவீராக வென்பாராயினாரென்க. ஈன்று - ஈன. (357) வேறு 2956. விண்ணோர் மடமகள்கொல் விஞ்சை மகளேகொல் கண்ணார் கழிவனப்பிற் காந்தருவ தத்தையென் றெண்ணாய வாணெடுங்கண் மெய்கொள்ள வேமுற்றுப் பண்ணாற் பயின்றீ ரினியென் பயில்வீரே. இனித் தேவியர் அரசனை நோக்கி யொருவரையொருவர் காட்டிக் கூறுகின்றார். இ-ள். உலகம் எண்ணுந்தன்மையுண்டாய வனப்பிற் றத்தை யுடைய வாள்போலுங்கண் அறிவைக் கவர்ந்து கொள்ளுகையி னாலே யிவளை விண்ணோர் மகளோ; விஞ்சை மகளோவென்று மயக்கமுற்று விஞ்சைமகளே யென்று துணிந்து யாழ்வென்று உறவுகொண்டநீர் இங்ஙனங் கைவிட்டநிலையில் என்ன உறவு கொண்டீராவீரென்க. (358) 2957. கொல்வே னெடுங்கட் குணமாலை குஞ்சரத்தா லல்லனோ யுற்றாளுக் கன்று களிறடர்த்துப் புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின் மேலுறைந்தா யெல்லேமற் றெம்பெருமாற் கின்றவளு மின்னாளோ. இ-ள். குணமாலை யானையால் வருத்தமுற்ற இவள் பொருட்டு அன்று அவ் யானையை வருத்தி யிவளைப் புல்லியுறைந் தாய்; அங்ஙனமுறைந்தநினக்கு இன்று இவளும் வெளியாக இன்னாளா யினாளோவென்க. (359) 2958. தூம்புடைய வெள்ளெயிற்றுத் துத்தி யழனாகப் பாம்புடைய நோக்கிப் பதுமை பவளவாய் தேம்புடைய வின்னமுதாச் சேர்ந்தாய்க் கினியதுவே யாம்புடைய நஞ்சடங்கிற் றின்றூறிற் றாகாதே. தேம்புதலையுடைய பதுமை. இனி - இங்ஙனநீக்கின நிலையால். மேல் வளருங் கூற்றினையுடைய நஞ்சு ஒரு புறத்தே யடங்கித் தீராமனின்றது; அதுவே யின்று ஊறிற்றாகாதோவென்க. இ-ள். புரையினையுடைய எயிற்றினையும், பொறியினையும் நஞ்சினையுமுடைய நாகப்பாம்பின் நஞ்சுடையும்படி நோக்கிப் பதுமை வாய் அமுதமாகக்கொண்டு கூடின நினக்கு அந்நஞ்சே தீர்ந்ததில்லை யாகாதேவென்க. (360) 2959. தாழ்ந்துலவி மென்முலைமேற் றண்ணாரம் வில்விலங்கப் போழ்ந்தகன்ற கண்ணினா லேப்பெற்றுப் போகலாய் தாழ்ந்தமர ரின்னமிர்தந் தக்கநாட் டாகாதே வீழ்ந்ததென வீழ்ந்தாய்நீ யின்றதுவும் விட்டாயோ. போழ்ந்து - போழ. இ-ள். முலைமேல் ஆரந்தாழ்ந்து உலவி யொளியைக் குறுக்கிடும் படியாகக் கண்ணினாலே நின்னெஞ்சைப் பிளக்க வெய்த ஏவைப் பெற்றுப் போகமாட்டாயாய்ச் சுரர்கொண்டு போகின்ற வமுதந் தாழ்ந்து வீழ்ந்தது தக்க நாட்டிலே யாகாதே யென்று கருதி விரும்பினாய்; இன்று அவ்விருப்பமும் விட்டாயோ வென்க. (361) 2960. கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ பெண்ணோ வமுதோ பிணையோ வெனப்பிதற்றித் துண்ணென் சிலைத்தொழிலுங் காட்டிமுன் னின்புற்றீர் புண்மேற் கிழிபோற் றுறத்தல் பொருளாமோ. இ-ள். இவள்பொருட்டுச் சிலைத்தொழிலையும் அரசனுக்குக் காட்டி யிவளைப் பெற்றபின்னர், இவளைப் பெண்ணோ, அமுதோ வென்றும், முகத்தில் இவை கண்ணோ, கயலோ, கழுநீரோ, காவியோ, பிணையோவென்றும் புனைந்துரைத்து முன்பு இன்புற்றநீர் இக்காலத்துப் புண்ணிற்கிடந்த சீலைபோலத் துறத்தல் அறமாமோ வென்க. (362) 2961. பொன்னகர வீதி புகுந்தீர் பொழிமுகிலின் மின்னி னிடைநுடங்க நின்றாடன் வேனெடுங்கண் மன்ன னகரெலாம் போர்ப்ப வலைப்பட்டீர்க் கின்னே யொளிழந்த வவின்னா விடுகினவோ. பொழிமுகில்கூறிற்று, மிக விளங்குதற்கு. மன்னன் - சச்சந்தன். இனி ‘மன்ன’வென்று பாடாமாயின், ஒருமைப் பன்மை மயக்கமாம். போர்ப்பவென்றது, “எங்கெங்கேநோக்கினு மங்கங்கேதோன்று மால்” (சீவக.1971) என்றதனை. இ-ள். இராசமாபுரத்து வீதியிலே புகுந்த நீர் விமலைகண் சூழ்போத அவ்வலையிலே யகப்பட்டீர்; அவ்வலைப் பட்டவுமக்கு அக்கண் இப்படியே இன்னா வாயொளிகெட்டுக் குறைந்தனவோ வென்க. (363) 2962. செங்கச் சிளமுலையார் திண்கறையூர் பல்லினார் மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீமகிழ்ந்து பங்கயமே போல்வாளைப் பார்ப்பானாய்ப் பண்ணணைத்துத் தங்கினாய் கோவே துறத்த றகவாமோ. முதுமையாற் கறைபோக விளக்கமாட்டாத பல்லினார். பங்கயமேபோல் வாள் - தாமரை ஞாயிற்றையே நோக்குமாறு போல நின்னையே நோக்கிக் கற்புக் கடம் பூண்டவள். இ-ள். கோவே! இளையரு முதியருமாகிய மங்கையர் காப்ப அக்காவலை மகிழ்ந்தாளை நீயு மகிழ்ந்து பார்ப்பானாய்ச் சென்று பாட்டாலே சேர்த்துக்கூடினாய்; இனி யிங்ஙனந் துறத்தல் நினக்குத் தகுதிப்பாடோவென்க. ‘பண்ணலைத்’தென்றபாடத்திற்குப் பண்ணாலே யவள் வன்மையை நெகிழ்த்தென்க. (364) 2963. புல்லா ருயிர்செகுத்த பொன்னந் திணிதோளாய் மல்லா ரகன்மார்ப மட்டேந்தி வாய்மடுத்திட் டெல்லாருங் காண விலக்கணையோ டாடினா யல்லாந் தவணடுங்க வன்பி னகல்வாயோ. இ-ள். தோளாய்! மார்பனே! எந்த மதுவையெடுத்துக் கொடுத்து இலக்கணையோடு புணர்ந்தாய்; அங்ஙனம் புணர்ந்த நீ அவள் அலமந்து நடுங்க அன்பினின்றும் அகல்வாயோவென்க. (365) 24. கோயில்விலாவணை 2964(1) கல்லோ மரனு மிரங்கக் கலுழ்ந்துருகி யெல்லாத் திசைதோறு மீண்டி யினமயில்போற் சொல்லாத் துயர்வார் தொழுவா ரழுவாரா யல்லாந் தகன்கோயி லாழ்கடல்போ லாயிற்றே. 2965(2) பூப்பரிவார் பொன்செய் கலம்பரிவார் பொன்வளையை நீப்பிரெனப் புடைப்பார் நீடாமஞ் சிந்துவா ரேப்பெற்ற மான்பிணைபோ லேங்குவா ரின்னுயிரைக் காப்பரேற் காவலனார் காவாரோ வின்றென்பார். 2966(3) கழுநீருந் தாமரையுங் கண்டனவே போலு முழுநீர்வேற் கண்ணும் முகமு முலறிச் செழுநீர் மணிக்கொடிகள் காழகஞ்சேர் கொம்பா யழுநீர வாயலறி யல்லாப்ப போன்றாரே. இவை மூன்றுமொருதொடர். சொல்லா வென்றதுடன் என்றிங்ஙனஞ் சொல்லியென முற்கூறியவற்றைக் கூட்டியுரைக்க. காவலனார் - காத்தலை வல்லவர். கழுநீரையுங் தாமரையுஞ் சேரக்கண்டாற்போலுங் கண்ணு முகமுமென்க. இ-ள். தேவியர்கலங்கி நெஞ்சுருகிக் கல்லுமரமுமிரங்க இங்ஙனஞ்சொல்லிப் பூப்பரிவார்; கலம்பரிவார்; புடைப்பார்; சிந்துவார்; ஏங்குவார்; என்பாராயுலறி மணிக்கொடிகள் கருமை சேர்ந்த கொம்பாயலறி அழுந்தன்மையவாய் அலம்வருவனவற்றை யொத்தார்; அதுகண்டு எல்லாத்திசைகளிலுநின்ற மகளிரும் இளமயில் போலீண்டித் துயர்வார்; தொழுவார்; அழுவாராய் அலமருமையினாலே கோயில் கடலொலிபோலே யொலியுண்டாயிற்றென்க. வளவிய நீர்மையையுடைய மணியென்றார், பலநிறத்து மணிகளையுங் கருதி. (366-8) வேறு 2967. பண்ணார் பணைமுழவம் பாடவிந்து பன்மணியாழ் மழலை நீங்கிப் புண்ணார் புனைகுழலு மேங்கா புனைபாண்டி லிரங்கா வான்பூங் கண்ணா ரொலிகவுள கிண்கிணியு மஞ்சிலம்புங் கலையுமாரா மண்ணார் வலம்புரியும் வாய்மடங்கிக் கோன்கோயின் மடிந்ததன்றே. மண்ணார்கோன் - உலகெல்லாம் புகழ்நிறைந்தகோன். இனி மண்ணார்வலம் புரி - அரக்கிட்டாடின வலம்புரியென்று முரைப்ப. இ-ள். பூப்போலுங் கண்ணாருடைய மழலைமொழிபோய் அழுங்குரன் மயங்குதலாலே, பெரியமுழவமும் பண்ணார்யாழும் ஒலிகெட்டுத் துளையார்ந்த குழலுமூதாவாய்க் கஞ்ச தாளமு மொலியா வாய் ஒலிக்கின்ற பக்கத்தையுடைய கிண்கிணி முதலியவு மொலியாவாய் வலம்புரியுமூதாதொழிந்து அரசன் கோயில் ஆரவார மற்றதென்க. (369) 2968. அணியார் மணியாக்கு வட்டழுத்தி வைத்தனைய செங்கண் மாத்தாட் பிணியார் பெருந்துருத்தி யன்ன பெருங்கவுள பிறையேர் கோட்ட பணியார் கமழ்கடாத் தண்ண லரசுவாப் பண்ணார் பாய்மா இணையாது மில்லாத கண்ணீர்வீழ்த் துண்ணாநின் றினைந்த தாமே. இ-ள். அண்ணலுடைய மணியினையுங் க்ண்ணினையுந் தாளினையும் வண்டுகள்படிய நிறைந்த கடாத்தினையுமுடைய கவுள கோட்டவாகிய யானைகள், யாது மொப்பில்லாத பண்ணுதனிறைந்த குதிரைகள் தாமுண்ணாவாய் அழுது வருந்தின வென்க. (370) 2969. கழித்த கடிப்பிணையுங் கைவளையு மாலையுங் களைந்து முத்துந் தொழித்த நறுஞ்சாந்துஞ் சுண்ணமும் பன்மணியுங் கலனுஞ் சிந்தி விழித்து வியன்கோயில் பன்மீன் பரந்திமைக்கும் பனியார் வானம் பழித்துப் பசும்பொன் னுலகு குடிபோயிற் றொத்த தன்றே. சாந்துஞ் சுண்ணமுமளைந்த மணியென்க. களைந்து கழிந்த சிந்திவிழித்து - வாங்கிப்போகடப்பட்டன சிந்திவிளங்கியென்க. ‘களைந்த முத்’தென்றும் பாடம். தொழித்தகலன் - ஆரவாரித்த கலன். இ-ள். கோயில் கடிப்பிணை முதலியன விழித்துப் பன்மீனி மைக்கும் வானைப்பழித்து மக்களெல்லாம் போந்து அரசனி டத்தே நிற்றவிற் பொன்னுலகு குடி போன தன்மையை யொத்த தென்க. (371) 2970. அழலார் சுரையெயிற்று வெஞ்சினவைந் தலைசுமந்த வெகுளி நாக நிழலார் திருமணியுந் தேவர் திருமுடிமே னிலவு வீசுஞ் சுழலார் பசும்பொன்னும் வேய்ந்து சொரிகதிர்மென் பஞ்சி யார்ந்த சுழலா னகர மமுது கடைகடல்போற் கலங்கிற் றன்றே. அழல் - நஞ்சு. சுரை - பொய். நாகத்தின் றலைசுமந்த மணியும் பொன்னும் மேலேவேய்ந்து கதிரைச் சொரிகின்ற நகர மென்க. சுழலுதலார்ந்த தேவர்முடிமேனிலவு வீசுங்கழல் – வலஞ் செய் தனிறைந்த தேவர் வணங்கின முடிமேல் நிலைபெற்று ஒளியை வீசுமடியென்க. கழல் - ஆகுபெயர். பஞ்சியார்ந்தகழல் - நிறத்தாலும், மென்மையாலுஞ் செம்பஞ்சின் றன்மைநிறைந்தவடி. இ-ள். மேற் றேவர்வணங்குங் கழலானகரங் கடல்போற் கலங்கிற்றென்க. அது மேல் “திருவடிப்போ தமரர் முடிமே லணிந்தரே”(சீவக.3090) என்பதனானுணர்க. (372) 25. நகரவிலாவணை 2971. நீர்நிறை குளத்து மாரி சொரிந்தென நறுநெய் துள்ளு நேர்நிறை பொரியுங் குய்யும் வறைகளு நிவந்த வாசம் பார்நிறை யடிசிற் பள்ளி தளியொடு சாலை யெல்லா மூர்நிறை யுயிர்த்த லின்றி யுயிர்சென்ற போன்ற வன்றே. குளத்திலே மழைபெய்த தென்னும்படி துள்ளும் நறு நெய்யாற்பொரிந்த பொரிக்கறி; பலகாயங்கள் குறிக்கு நேராக நிறைந்த பொரிக்கறி. குய்-தாளிக்குங்கறி. வறைகள் - துவட்டின கறிகள். பாரிலே நிறைந்த புகழினையுடைய வூர். இ-ள். அடுக்களைகளிலும், கோயில்களிலும், சோறிடுஞ் சாலை களிலுஞ் சமைக்கும்பொரியலுங் குய்யலும் வறையலும் வளர்ந்த வாசம் ஊர் நிறையும்படி தோன்றுதலின்றாய் அவ்விடங் கள் உயிர்சென்றாற்போன்றனவென்க. (373) 2972. கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருணை முல்லை மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ றூட்டுறு கறிகொ டேமாங் கனிசுவைத் தயிரொ டேந்தி வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே. புலிக்கண்போன்ற நிறத்தையுடைய கருணைக்கிழங்கு. முல்லை முகையாற்செய்த பந்துபோலத் திரட்டுதல்கொண்ட சோறு; ஒரோ வோரவிழ் கொக்குகிர்போலு நீட்சியையுடைய சோறு. உண்ணப் பண்ணுங்கறி. தேமாவிற் கொண்ட கனி. இ-ள். முன்பு சோற்றையுங் கருணைமுதலியவற்றையுந் தயிரோடே யேந்தி விரும்பினார்க்குக் கொடுக்கின்ற வீதி, இன்று அரசன் றுறவினால்வருந்தி விரும்புவாரின்மையின், அவர்களைப் பெறாமல் வெறுநிலமாய்க் கிடந்தனவென்க. (374) 2973. மைந்தர்தம் வண்கை யான்முன் மணிவள்ளத் தெடுத்த தேறல் பைந்துகின் மகளிர் மேவார் பாசிழை பசும்பொன் மாலை சிந்தியே கரந்தார் சொற்போன் மெய்யின்கட் சேர்த லின்றாய்ச் சந்தனச் சாந்தொ டாரந் தாங்கவி னிழந்த வன்றே. இ-ள். மைந்தர் தங்கையாலே முன்பு மகளிர்க்கெடுத்த தேறலை யின்று எடுத்தலை மேவார்; மகளிர் இழையையும் மாலை யுஞ் சந்தனக்குழம்பையும் ஆரத்தையுஞ்சிந்தி யவற்றை மேவார்; அவர் அங்ஙனமேவாமையின், அவை யழகிழந்தன வென்க. உண்மைப்பொருளின்கட் செல்லுதல்செய்யாத் துறவோர் சொல்லுஞ்சொல் பற்றுவிடாதிருக்கவும் பற்றற்றன போன்றிருக்கு மாறுபோல, அவர்களும் பற்றுண்டாயிருக்கவும் அரசன்றுறக் கின்ற வருத்தத்தால் இவற்றிற் பற்றில்லாதார் போல மேவாதிருந்தா ரென்றுகொள்க. (375) 2974. தாழிவாய் மறைக்குந் தண்ணென் றடம்பெருங் குவளைக் கண்ணார் மூழிவாய் முல்லை மாலை முலைமுக முரிந்து நக்க யாழின்வாய் முழவம் விம்ம வாட்டொழிந் தயர்ந்து தீந்தே னூழிவாய்க் கொண்ட தொக்கும் பாடலு மொழிந்த தன்றே. இ-ள். தாழியின்வாயை மறைக்குங் குவளைபோலுங் கண்ணார் பெட்டியின் முல்லைமாலை முலைமேலே நக்க முழவொலிப்ப முரிந்தாடு ஆட்டுமொழிந்து யாழின் வாயிசைச்கேற்பப் பாடும் பாட்டு மொழிந்து அவ்வூர் வருந்திற் றென்க. ஊழ் - ஊழியெனத்திரிந்தது. தேனினந்தான் பாடுமா றொழிந்து முறைமைப் படப் பாடினாலொக்கும் பாட்டு. (376) 2975. அருங்கல நிறைந்த வம்பூம் பவழக்கா றிகழும் பைம்பொற் பெருங்கிடு கென்னுங் கோலப் பேரிமை பொருந்தி மெல்ல வொருங்குட னகர மெல்லா முறங்குவ தொத்த தொல்லென் கருங்கடல் கல்லென் சும்மை சுரந்தது மொத்த தன்றே. அருங்கலநிறைந்தவம்பூம்பவளக்கால் “மணிபுனை செம் பொற் கொட்டைவம் பணி” (சீவக.113) பவளக்கால்- பவழக்கால் திகழுங்கிடுகு. கிடுகு - சட்டம். நகரிக்கு அங்காடி கண்ணாகவும், சட்டம் அதற்கிமை யாகவும் உவமஞ்செய்தார். இ-ள். நகர் கிடுகென்னுமிமை பொருந்தி யுறங்குவ தொத்தது; அதுவேயன்றி யொலி யவிந்து கிடத்தலிற் கடல் சும்மையை மறைத்ததுவுமொத்ததென்க. இதனால் அங்காடி யடைத்ததென்றார். (377) 2976. கலையுலாய் நிமிர்ந்த வல்குற் கடல்விளை யமுத மன்னார் முலையுலாய் நிமிர்ந்த மொய்தார் முழவுமுத் துரிஞ்சி மின்னச், சிலையுலாய் நிமிர்ந்த மார்பன் றிருநகர் தெருள்க லாதாய் நிலையிலா வுலகின் றன்மை நீர்மைமீக் கூறிற் றன்றே. அமுதமன்னார் முலையுலாய்ப் பாய்ந்த மார்பன்; தாரும் முழவுபோலுமுத்தும் உரிஞ்சி மின்னும்படி சிலையுலாவிநிமிர்ந்த மார்பன். இ-ள். மார்பன் நகர், பொலிவழிதலால், இராசமாபுர மென்று தெளியலாகாதாய் உலசின்றன்மை நிலையில்லாநீர்மை யாயிருக்குமென்று மேலாகக் கூறிற்றென்க. (378) வேறு 2977. கூந்தல கிற்புகையும் வேள்விக் கொழும்புயையு மேந்து துகிற்புகையு மாலைக் கிடும்புகையு மாய்ந்த பொருளொருவர்க் கீயா வதிலோப மாந்தர் புகழேபோற் றோன்றா மறைந்தனவே. இ-ள். கூந்தலுக்கிட்டபுகையும், யாகத்திற்புகையும், துகிற் கேந்தினபுகையும், மாலைக்கிட்டபுகையும், பொருளையீயாத உலோபர்புகழ்போல மறைந்தனவென்க. (379) 2978. புல்லுண் புரவி புலம்பி விடுகுரல்போ னல்லவளை போழரவ நாரை நரல்குரல்போற் கல்லா விளையர் கலங்காச் சிரிப்பொலியுங் கொல்யானைச் சங்கொலியுங் கூடா தொழிந்தனவே. இ-ள். புரவிவருந்திச் சோம்புபோக்குங்கால் எழும்விளி போலச் சங்கறுக்கின்றவரவமும், நாரைநரலுங் குரல்போல இளையர் விடாது சிரிக்கின்ற சிரிப்பொலியும், யானையுஞ் சங்கும் ஒலிக்கின்றவொலியும் அவ்விடத்துக் கூடாமல் நீங்கின வென்க. (380) 2979. பொற்புடைய பூமாலை சாந்தம் புனைகலன்கள் கற்புடைய மங்கையரிற் காவ லவையிழந்த நற்புடைய தேனார் நறவு நயம்புல்லார் சொற்பொருள்போல் வேட்கப் படாசோர்ந் தொழிந்தனவே. இ-ள். மாலையுஞ் சாந்தமுங் கலன்களும் நறவுங் கற்புடைய மங்கையரைப் போலக் காவலிழந்தவை, அறிவில்லார் சொற் பொருள் சோர்ந்து வேட்கப்படாதவாறுபோல வேட்கப் படாவாய் ஒழிந்தனவென்க. (381) 2980. தீம்பால் கிளிமறந்து தேவ ரவிமடங்கித் தூம்பார் நெடுங்கைம்மாத் தீங்கரும்பு துற்றாவா யாம்பா லுரைமடங்கி யாரும் பிறர்பிறராய்க் காம்பார் நடுவிருட்கட் காடேபோ லாயிற்றே. ஆம்பாலுரை மடங்கி யாரும் பிறர் பிறராய் - அரசன் துறவினைத் தாமுமுட்கொண்டமையின், மனவேட்கையாலே நுகரப் படும் பொருள்கள் மேல் நிகழும் பகுதியையுடைய வார்த்தைகள் மீண்டு, அவற்றிற் பற்றுதலின்மையின், யாருஞ் சுற்றத்தொடர்ச்சி யற்றவர்களாய். இடையாமத்திருளில் நின்ற முள்ளுடைய மூங்கில் நிறைந்த காடேபோலென்றதனாற்பயன்: இவ்வூரிற்பெற்ற செல்வந் தன்னையே நுகர்ந்தாற் பின்னும் மயக்கஞ்செய்யும் பிறவி யாகிய விருளைப் பிறப்பித்தலும், முட்போலப் பற்றினாற் றொடக் கிக் கோடலும், வீட்டுப்பயன் கொடாமையுமாம். துறவுள்ளம் பிறந்தோர்க்கு இத்தன்மைத்தானநகரி காடு போலாயிற்று; கிளிக்கும், தேவர்க்கும், களிற்றிற்கும் பொருள்களினுகர்ச்சி யின்மையிற் காடு போலாயிற்று. இ-ள். மறத்தலானும் மடங்குதலானுந் துற்றாவாய் நிற்ற லானும் பிறர்பிறராய் நிற்றலானும் அவற்றிகும் அவர்க்கும் நகரி காடுபோலாயிற்றென்க. (382) 2981. நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத் தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான் பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கீந் தூர்முழுது நாடு முரவோன்றாள் சேர்ந்தவே. நீரினையுடைய முழங்குமேகம்போலும் யானையுந் தேரும் முழங்குந் தானையையுடைய வரசன். இ-ள். ஊரிலுள்ளாரும், நாட்டிலுள்ளாரும், அரசன் முன்னாகத் துறத்தற்குக் கடல்போலுஞ்செல்வத்தைத் தமதுபுதல் வர்க்களித்து அறிவுடையோன்றாளைச் சேர்ந்தாரென்க. (383) 26. துறவுவலியுறுத்தல் 2982. கொல்லுலைப் பொங்கழற் கிடந்த கூரிலை மல்லல்வே லிரண்டொரு மதியுள் வைத்தபோற் செல்லநீண் டகன்றகஞ் சிவந்த கண்ணினா ரல்லலுற் றழுபவர்க் கரசன் சொல்லினான். சொல்லினான் - முற்றுவினைத்திரிசொல். இ-ள். அங்ஙனஞ் சேர்ந்தவளவிலே, மதியுள்ளே யிரண்டு வேலைச் சேரவைத்தாற்போல முகத்திலே கிடந்து செவியுற நீண்டு அகன்று சிவந்த கண்ணினாரழுபவர்க்கு அரசன் ஒருமொழி கூறினா னென்க. (384) வேறு 2983. நற்றவம் பரவைஞால நாமுட னிறுப்பின் வைய மற்றமி றவத்திற் கென்று மையவி யனைத்து மாற்றா திற்றென வுணர்ந்து நிற்பிற் றிருமக ளென்று நீங்காள் பற்றொடே நிற்பி னென்றுந் திருமகள் பற்றல் செல்லாள். இ-ள். நாம் தவத்தையுஞாலத்தையுஞ் சேர நிறுப்பின், ஞாலந் தவத்திற்கு எந்நாளும் வெண்சிறுகடுகளவும் நிறையாற்றாது; அதனை இற்றெனவுணர்ந்து அத்தவத்தே நிற்பின், திருமகள் என்றும் நம்மை நீங்காள்; நாம் பற்றோடே நிற்பின், திருமகளும் நம்மைப் பற்றுதல் செய்யாள்; ஆதலாற் பற்றுவிட்டுத தவஞ் செய்ம்மிடுனன்றானென்க. (385) 2984. உப்பிலிப் புழுக்கல் காட்டுட் புலைமக னுகுப்பா வேக்க கைப்பலி யுண்டி யானும் வெள்ளின்மேற் கவிழ நீரும் மைப்பொலி கண்ணி னீரான் மனையக மெழுகி வாடி இப்பொருள் வேண்டு கின்றீ ரிதனைநீர் கேண்மி னென்றான். இ-ள். யானும் சுடுகாட்டிலே பாடைமேலே கிடந்து புலைமகன் ஒரு கையாலே புழுக்கலாகிய பலியைவிட்டு நீரையுகுப்ப அவற்றை யுண்டு கவிழ, நீரும் கண்ணீரான் மெழுகி வாழ இப்பயனில் பொருளை விரும்பா நின்றீர்; அதனை விட்டு இபபனுடைய பொருளைக் கேட்பீராக வென்றானென்க. புலைமகனென்றார், புரோகிதனை; அவன் தன்குலத்திற் குரியன செய்யாது அரசன் குலத்துக்குரிய தொழில்களை மேற் கொண்டு நிற்றலின்; “புலைய னேவப் புன்மே லமர்ந்துண்டு” (புறநா. 360) என்றும், இழி பிறப்பினோ னீயப் பெற்று” (புறநா.363) என்றும் பிறருங் கூறினார்; நாவிதனுமாம்; கவிழ்தல் - பொன்றக் கெடுதல் (386) 2985. கொல்சின யானை பார்க்குங் கூருகிர்த் தறுக னாளி இல்லெலி பார்த்து நோக்கி யிறப்பின்கீ ழிருந்தத லுண்டே பல்வினை வெள்ள நீந்திப் பகாவின்பம் பருகி னல்லால் நல்வினை விளையுளென்னு நஞ்சிணுட் குளித்த லுண்டே. 2986. ஆற்றிய மக்க ளென்னு மருந்தவ மிலார்க ளாகிற் போற்றிய மணியும் பொன்னும் பின்செலா பொன்ன னீரே வேற்றுவ ரென்று நில்லா விழுங்பபொருள் பரவை ஞாலம் நொற்பவர்க் குரிய வாகு நோன்மின நீரு மென்றான். 1. பல்வினை - இருவினை. பகாவின்பம் - நீங்காவீட்டின்பம். நல்வினைவிளையுள் - நல்வினையாலுண்டாகியசெல்வம். 2. ஆற்றிய - தேடிய. என்னும் - சிறிதும். இ-ள். பொன்னனீர்! யானையை யுணவாகப் பார்க்கும் யாளி எலியை யுணவாகப் பார்த்திருத்தலில்லை; அது போல அறிவுடை யோர் வீட்டின்பமாகிய வமுதைப் பருகுதலன்றிச் செல்வமாகிய நஞ்சினைப் பருகி யதனள்ளே யழுந்துதலில்லை; அத்தன்மை யையும் நெஞ்சினால் நோக்கி, மக்கள் தேடி வைத்த தவஞ் சிறிது முடையரல்லராயின், அவர்களாற் பேணிவைக்கப்பட்ட வாகிய மணியும் பொன்னும் பின்செலா; அவையல்லா விழுமிய பொருள் களும், ஞாலமும் அவரை வேற்றுவரென்று நினைத்து அவர் பக்கல் நில்லாவாய் நோற்பவர்க்கு உரியவாய் நிற்கும்; அத்தன்மையையு நோக்கி நீரு நோற்பீராகவென்றா னென்க. நோக்கியென்றதனை யிரண்டற்குங்கூட்டுக. (387-8) 2987. காதலஞ் சேற்றுட் பாய்ந்த மதியெனுங் கலங்க னீரை யூதுவண் டுரைத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சித் தேற்ற மாதரார் நெஞ்சந் தேறி மாதவஞ் செய்து மென்றார் காதலான் காதலென்னு நிகளத்தா னெடுங்க ணாரே. உவர்ப்பு-வெறுப்பு; அஃதாவது பொருள்கண்மேற்சென்ற பற்றுள்ளத்தை விடுதல். தாரானாகிய காதலான் தன் மனைவியர் மேல்வைத்த காதலென்னும் பிணிப்பினாலே தேற்ற வென்க. ஈண்டுக் காதலென்றது பலபிறப்பினும் நமக்கு மனைவி யராய் வந்தவர் இப்பிறப்பிற் செய்யுந் தவத்தாற் பிறப்பற்று வீடுபெற வேண்டுமென்று காதலித்த காதலை. அன்றிக் காதலனிடத்து வைத்த காதலாற் றுறந்தாரென்றல் பொருந்தாமையுணர்க. காதலாகிய சேற்றுக்குள்ளே பாய்ந்து நின்ற நீர். இ-ள். காதலான் மாதராருடைய அறிவென்னுநீரைக் காதலாகிய பிணிப்பாலே யுரிஞ்சித் தேற்ற அவர் நெஞ்சு வெறுப்பினாற் றேறித் தவஞ்செய்துமென்றாரென்க. (389) 2988. தூமஞ்சால் கோதை யீரே தொல்வினை நீத்த நீந்தி நாமஞ்சால் கதியி னீங்கி நன்பொன்மே லுலகி னுச்சி யேமஞ்சா லின்பம் வேண்டி னென்னொடும் வம்மி னென்றான் காமஞ்சாய்த் தடர்த்து வென்ற காஞ்சனக் குன்ற மன்னான். காமத்தைத் தள்ளி நெருக்கின ஏமம் - வீடு. இ-ள். மேருவையொப்பான், கோதையீரே! நாற்கதியினின்று நீங்கி யிருவினைக்கடலைநீந்தித் துறக்கத்துக்கு மேலான வீட்டின்பத்தை விரும்புவீராயின், இன்று என்னுடனே துறத்தற்கு வருவீராக வென்றானென்க. (390) 2989. நாடக நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்று மாடகக் கலத்து ளான்பா லமிர்தினை நயந்துண் பாரை நீடகம் வெகுண்டுங் கையாற் பிடித்துநீ றட்டி யிட்டேங் கோடக மணிந்த கோல முடியினாய் துறத்து மென்றார். நாடகமெனவே பாட்டும் கூறிற்று, “விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் (திரி.11) என்றலின், சூன்றும் - தோண்டியும், உண்பாரை நீறட்டியுமென்றது. உண்பாரை உண்ணாமல் தடுத்துமென்ற வாறு, நீடகம் வெகுண்டும் - மிக்க அன்பினாற் புணர்கின்றாரை நெடிங்காலம் நெஞ்சாலே வெகுண்டும், கையாற்பிடித்தும் - நறிய நாற்றங்களை நுகர்கின்றாரை, நுகராமற் கையாற் பிடித்தும் இட்டேமென்றது, யாங்கள் பிறந்ததொரு பிறப்பிலே பிறரை இங்ஙனம் ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாடும் நுகர்ச்சியைக் கைவிட்டே மாதலின், இனி எமக்கு நுகர்ச்சி இன்று என்றவா. கோடகம்: தாமம், முகுடம், பதுமம், கோடகம், சிம்புரியென்னும் ஐவகையிற் சிகரமாய்ச் செய்தமுடி. (இ-ள்) அது கேட்ட தேவியர், முடியனாய்! எமக்கு இனி நுகர்ச்சியின்மையின், யாமும் நின்னோடு துறத்தலைச் செல்வேமென்றாரென்க. (391) வேறு 2990. சாந்தங் கிழிய முயங்கித் தடமலராற் கூந்தல் வழிபட்ட கோவேநீ செல்லுலகில் வாய்ந்தடியேம் வந்துன் வழிபடுநா ளின்றேபோற் காய்ந்தருளல் கண்டா யெனத்தொழுதாற் காரிகையார். முயக்கத்தால் வருத்தம் நிகழ்ந்ததாகக் கருதி மலராற் கூந்தலை வழிபட்டு வருத்தந்தீர்த்த கோவே யென்றது, எமக்கு வருத்தமில்லாத தனை வருத்தமாகக் கொண்ட நீ ஈண்டு வருத்த முள்ளதனைத் தீர்க்கின்றிலை யென்றதாம் வாய்நது - வீடுபெறுதற்குரிய தவங்கள் எமக்கு வாய்த்து. இ-ள். அத்தேவியர், கோவே! நீ செல்லும் வீட்டுலகின் கண்ணே அடியேமும் வாய்த்து வந்து நின்னை வழிபடுநாள், இன்று போலே முனிந்தருளாதொழிகவென்று தொழுதா ரென்க. (392) 27. தேவிமார் துறவு வேறு 2991. தெண்டிரை நீத்த நீந்தித் தீங்கதிர் சுமந்து திங்கள் விண்படர்ந் தனைய மாலை வெண்குடை வேந்தர் வேந்தன் கண்டிரண் முத்த மாலைக் கதிர்முலை நங்கை மாரை வெண்டிரை வியக்குங் கேள்வி விசயைகன் ணபயம் வைத்தான். திங்கள் கடலை நீந்திக் கதிரைச் சுமந்து விண்ணிலே சென்றற் போன்ற குடையயையுடைய வேந்தன், கண் திரண்ட முலை, கடல்போலும் நூற் கேள்வி. இ-ள். வேந்தன், தேவியரை விசயையிடத்தே யச்சமின்றாக வைத்தானென்க. (393) 2992. கடிமலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்புங் காமர் வடிமலர் மலர்ந்த காம வல்லியுந் தம்மைத் தாமே யுடைமலர் கொய்து போக வுகுத்திடு கின்ற தொத்தார் படைமலர் நெடுங்க ணல்லார் பாசிழை நீக்கு கின்றார். சிறந்தமலர் தேனிறைந்தலர்ந்த கொம்பு. விருப்பம்வடிந்த மலர் மலர்ந்த வல்லி. இ-ள். தேவியர் தம்மெய்யணிகளைத் தாமே நீக்குகின்றவர், கொம்பும் வல்லியுந் தம்முடைய மலர் தம்மிடத்து நின்றும் போம்படி கொய்து சிந்துகின்றதன்மையை யொத்தாரென்க. (394) 2993. தழுமலர்த் தாம நான்று சந்தகின் மணந்து விம்முஞ் செழுமணி நிலத்துச் செம்பொற் றிருமுத்த விதான நீழ லெழுமையும் பெறுக வென்னு மெழின்முலை நெற்றி சூழ்ந்தார் கழுமிய துகிலிற் காமன் கண்புடைத் திரங்க மாதோ. இ-ள். பருமையாலே தழுவப்படுந் தாமநான்று சந்தன மணந்து அகிற்புகை விம்முநிலத்திலே மேற்கட்டியினிழலிலே யவரையிருத்திக் காமனிரங்கத் துகிலான் முலைநெற்றியைச் சூழ்ந்தாரென்க. கணவனை எழுமையும் பெறுகவென்னுமுலை. இழை தெரியாமல் மயங்கிய துகில். கழுமல் - மயக்கம். (395) 2994. நறும்புகை நான நாவிக் குழம்பொடு பளிதச் சுண்ண மறிந்தவ ராய்ந்த மாலை யணிந்தபைங் கூந்த லாய்பொ னிறந்தரு கொம்பு நீலக் கதிர்க்கற்றை யுமிழ்வ வேபோற் செறிந்திருந் துகுத்துச் செம்பொற் குணக்கொடி யாயி னாரே. இ-ள். அங்ஙனஞ் சூழப்பட்டவவர்கள், கற்பகக்கொம்பு நீலக்கதிர்த் திரளைக் கழிப்பவை போல நாவியினது நானக்குழம் போடே புகையையுங் கருப்பூரப்பொடியையும் மாலையையு மணிந்த கூந்தலை மனோவாக்குக்காயங்களால் அடங்கியிருந்து உகுத்து நற்குணத்தையுடைய செம்பொற்கொடியாயினாரென்க. (396) 28. பெரியயாத்திரை வேறு 2995. இலம்பெரி தெனவிரந் தவர்கட் கேந்திய கலஞ்சொரி காவலன் கடகக் கையிணை புலம்புரிந்து யர்ந்தன விரண்டு பொன்னிற வலம்புரி மணிசொரி கின்ற போன்றவே. ஏந்தியகலம் - உயர்ந்தகலம். புலம்புரிந்து - அறிவுமிக்கு. நிறப்பொன் - மாற்றற்றபொன். இ-ள். பெரிதாக வறுவியோமென்று இரந்தவர்கட்குக் காவலன் புலம்புரிந்து கலஞ்சொரியுங் கையிணைகள், உயர்ந்தன வாகிய இரண்டு சங்கநிதி பொன்னையும் மணியையுஞ் சேரக் சொரிகின்றன வற்றை யொத்தனவென்க. (397) 2996. என்பரிந் தெரிதலைக் கொள்ள வீண்டிய வன்பரிந் திடுகலா வுலக மார்கென மின்சொரி வெண்கலம் வீசும் வண்கைகள் பொன்சொரி தாமரைப் போது போன்றவே. என்பரிந்து - எலும்புருகி; என்பு - விகாரம். அன்பரிந்து - அன்பற்று. எரியுந் தன்மையைக் கொள்ள ஈண்டிய மின்சொரி கலம்; நெருப்பின்றன்மையைக் கொள்ள வீண்டிய மின்னுமாம். வெண்கலம் - முத்தாற்செய்தகலங்கள். வன்கையும் பாடம். இரப்போர்மேலன்பற்று அவர்க்கிடமாட்டாத வுலகங்கள் - வேற்றரசராண்ட நாடுகளும், இழிகுலத்தோருறையும் வன்பாலா கிய நிலங்களும் முதலியனவாம். இ-ள். அரசன், இடுகலா வுலகங்கள் ஆர்வனவாகவென்று என் பரிந்து கலங்களை வீசுங்கைகள் பதுமநிதியை யொத்தன வென்க. (398) 2997. பூந்துகில் புனைகல மாலை பூசுசாந் தாய்ந்துல குணவுவந் தருளி மாமணி காந்திய கற்பகக் கான மாயினா னேந்திய மணிமுடி யிறைவ னென்பவே. மாலை - முத்தமாலை. கானமென்றார், பத்துவகைக் கற்பகங்கள் கொடுப்பன வெல்லாங் கொடுத்தலின். இ-ள். இறைவன், துகின் முதலியவற்றை யுலக நுகரும்படி ஆய்ந்து உவந்து கொடுத்துக் கற்பகக் கானமாயினானென்க.(399) வேறு 2998. தேய்பிறை யுருவக் கேணித் தேறுநீர் மலர்ந்த தேனா ராய்நிறக் குவளை யஞ்சிக் குறுவிழிக் கொள்ளும் வாட்கண் வேய்நிறை யழித்த மென்றோள் விசயையைத் தொழுது வாழ்த்திச் சேய்நிறச் சிவிதை சேர்ந்தான் றேவர்கொண் டேகி னாரே. தேய்பிறையெனவே நுதலாயிற்று. குறுவிழிக்கொள்ளும் - மீண்டுகுவியும். வேய்போலுமென்றோள். இ-ள். அங்ஙனங் கொடுத்தபின்னர்ச் சேயையொத்தவன், நுதலை யுங் கண்ணையுந் தோளையும் நிறையாலழித்த விசயை யைத் தொழுது வாழ்த்திச் சிவிகையிலே யேறினான்; அப்பொழுது தேவர் கொண்டு போயினாரென்க. சச்சந்தன் பட்டபின், தன்னுறுப்புக்கள் பொலிந்திருக்கலாகா தென்று உட் கொண்டு அவற்றின் பொலிவினைக் கடிந்தமை தோன்ற, நிறையாலழித்தவென்றார். (400) 29. சமவசரண வருணனை வேறு 2999. நம்பெழுந் திரங்கின வீணை நன்குழல் பரந்துபண் ணுயிர்த்தன பைய மெல்லவே விருந்துபட் டியம்பின முழவம் வீங்கொலி சுரந்தன சுடர்மணிப் பாண்டி லென்பவே. இ-ள். அவனை யவர்கொண்டுபோகின்றபொழுது வீணையினரம்பு மிக்கிரங்கின; குழல் உயிர்த்தன; முழவம் புதுமையுண்டாய் இயம்பின; கஞ்சதாளம் மிக்க வோசையைக் கொடுத்தனவென்க. (401) 3000. மங்குலா யகிற்புகை மணந்து கற்பகப் பொங்குபூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணந் தங்கியித் தரணியும் விசும்புந் தாமரோ செங்கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே. இ-ள். அவன்போகின்றபொழுது அகிற்புகைமணந்து இருளாய் மாலைகள் பொலியப்பட்டுச் சுண்ணந் தங்கப்பட்டுத் தரணியும், விசும்பும் மணியிருக்கின்ற செப்பை யொத்தன வென்க. மணி - சமவசரணம். (402) வேறு 3001. திலக முக்குடைச் செல்வன் றிருநகர் பலரு மேத்தினர் பாடின ராடினர் குலவு பல்லியங் கூடிக் குழுமிநின் றுலக வெள்ள மொலிப்பது போன்றவே. இ-ள். அங்ஙனம் போகின்றபொழுது, செல்வன்றிருநகர் தோன்றியதனைக் கண்டு தேவருமக்களுமேத்தினார்; பாடினார்; ஆடினார்; பின்னர் அவருடைய வாச்சியங்கள் கூடிநின்று ஒலித்துக் கடல் குழுமிநின்று ஒலிக்கின்றதன்மையை யொத்தன வென்க. (403) 3002. கானி ரைத்தன காவொடு பூம்பொய்கை தேனி ரைத்தன செம்பொ னெடுமதின் மேனி ரைத்தன வெண்கொடி யக்கொடி வானு ரிப்பன போன்று மணந்தவே. இ-ள். அங்ஙனம் போகின்றபொழுது, மணநிரைத்தனவாகிய சோலைகளுடனே தேனினங்கள் இரைத்தனவாகிய பொய்கை களுஞ் சூழ்ந்த மதிலின் மேலே அப்பொழுது கொடிகணிரைத்தன; அக்கொடிகள் காற்றாற் றேவருவகைத் தீண்டினவை அதனை அதனை யுரிக்குமாறு போன்று நெருங்கின வென்க. (404) 3003. கோல முற்றிய கோடுயர் தூபையுஞ் சூல நெற்றிய கோபுரத் தோற்றமு ஞால முற்றிய பொன்வரை நன்றரோ கால முற்றுடன் கண்ணுற்ற போன்றவே. கோலம் - அழகு. ஞாலந்தான்சூழ்ந்த. இ-ள். தூபையின் றோற்றமுங் கோபுரங்களின் றோற்றமு மிருந்த படி, மேருக்கள் தம்மிற் கூடுவதொருகாலம் மிகவுமுண் டாய்ச் சேரக்கூடியவற்றை யொத்தனவென்க. பலவண்டங்களுள வாதலிற் பலமேரு வுளவாம். (405) 3004. வாயிற்றோரணங் கற்பக மாலைதாழ்ந் தேயிற் றிந்திரன் பொன்னக ரின்புறம் போயிற் றேயகி லின்புகை போர்த்துராய் ஞாயிற் றொள்ளொளி நைய நடந்ததே. இ-ள். வாயிலில்நடட்டதோரணம், கற்பகமாலைதாழ்ந்து அகிலின் புகை பொருந்திற்று; அப்புகை பொருந்திப் பின்னருராய்ப் போர்த்து இந்திரநகரின் புறம்போயிற்று; போயபின்னர் ஞாயிற்றினொளி மழுங்க அது நடந்ததென்க .(406) 3005. செய்ய தாமரைப் பூவினுட் டேங்கமழ் பொய்யில் சீர்த்தி வெண் டாமரை பூத்தபோன் றையஞ் செய்தடு பானிறப் புள்ளின மையி றாமரை மத்தகஞ் சேர்ந்தவே. இ-ள். அரசன்சென்ற ஆரவாரத்தாலே மதிலைச்சூழ்ந்த காக்களி லிருந்த வெள்ளையன்னங்கள் செந்தாமரையினுள்ளே வெண்டாமரை பூத்த தன்மையை யொத்து ஐயநிகழ்த்திப் பொய்கைகளிற் செந்தாமரைத் தலையிலே சேர்ந்தனவென்க. (407) 3006. மல்லன் மாக்கட லன்ன கிடங்கணிந் தொல்லென் சும்மைய புள்ளொலித் தோங்கிய செல்வ நீர்த்திருக் கோயிலிம் மண்மிசை யில்லை யேற்றுறக் கம்மினி தென்பவே. இ-ள். கிடங்குசூழ்ந்து சும்மையவாகிய புள்ளொலிக்கப்பட்டு ஓங்கிய கோயில் இவ்வுலகிலில்லையாயிற் றுறக்கநன்று; இஃது உளதாதலாற் றுறக்கந் தீதாயிற்றென்க. (408) வேறு 3007. விளங்கொளி விசும்பறுத் திழிந்து மின்னுதார்த் துளங்கொளி மணிவணன் றொழுது துன்னினான் வளங்கெழு மணிவரை நெற்றிப் பாற்கட லிளங்கதிர்ப் பரிதியொத் திறைவன் றோன்றினான். இ-ள். அங்ஙனந் தேவர் கொண்டுபோந்தபடியினாலே, சீவகன், விசும்பை யூடறுத்து இழிந்து கோயிலைநோக்கித் தொழுது சேர்ந்தான்; அப்பொழுது மணிவரைத் தலையி னின்றும் பரிதியை யொத்து இறைவன் தோன்றினானென்க. மணி- ஈண்டுமாணிக்கம். பாற்கடலிற் பரிதியென்றார், ஒளிமிக் கிருந்த தற்கு. இறைவன் - ஸ்ரீவர்த்தமான சுவாமிகள்.(409) 3008. வினையுதிர்த் தவர்வடி வின்ன தென்னவே வனைகதிர்த் தடக்கைவைத் திருந்த வாமனார் கனைகதிர்த் திருமுக மருக்க னாகவான் புனைமலர்த் தாமரை பூத்த தொத்தவே. இ-ள். அங்ஙனந் தோன்றி இருவினையைக் கெடுத்தவர் வடிவு இத்தன்மைத்தாயிருக்குமென்று அவ்வடிவுதான் கூறும் படி யாகவே கையை வைத்திருந்த வாமனாருடைய முகம் அருக் கனாகத் தேவர்கள் முகங்கள் அலர்ந்தவைதாம் தாமரை பூத்த தன்மையை யொத்தனவென்க. (410) 3009. இரிந்தன விருவினை யிலிர்த்த மெய்ம்மயிர் சொரிந்தன கண்பனி துதித்துக் காதலா லரிந்தது மணிமிட றலர்பெய்ம் மாரிதூஉய்த் திரிந்தனன் வலமுறை திலக மன்னனே. இ-ள். அப்பொழுது மன்னனுக்கு இறைவன் மேற்சென்ற காதலாலே யிருவினை கெட்டன; மெய்ம்மயிர்கள் சிலிர்த்தன; கண்கள் உவகைநீரைச்சொரிந்தன; துதித்து மிடறு அரிந்தது; அவ்வளவிலே அவன் வலமுறையாகத் திரிந்தானென்க. (411) 3010. முத்தொளிர் தாமமு முருவ மாமணித் தொத்தொளிர் தாமமுஞ் சொரிபொற் றாமமுந் தத்துநீர் த்தண்கடற் பவளத் தாமமும் வைத்தபூந் தாமமு மலிந்து தாழ்ந்தவே. இ-ள். அவன் அங்ஙனம் வலம்வருகின்ற காலத்தே, ஒளிரும் முத்துத் தாமமும், ஒளிரும் மாணிக்கத் தாமமும், ஒளியைச் சொரியும் பொற்றாமமும், பவளத் தாமமும், கொத்து தன்னிடத்தே வைத்த பூவாற்செய்த தாமமும் மிக்கு அவ்விடத்தே தங்கினவென்க. (412) 3011. மணிவரை யெறிதிரை மணந்து சூழ்ந்தபோ லணிமயிர்க் கவரிக ளமர ரேந்தினார் துணிமணி முக்குடை சொரிந்த தீங்கதிர் பணிமணிக் காரிருள் பருகு கின்றதே. இ-ள். அப்பொழுது மாணிக்கமலையைத் திரைகள் சூழ்ந்தாற் போலே அமரர் கவரியை யேந்தி யிறைவகைச் சூழ்ந்து நின்று வீசினார்; ஆண்டு முக்குடைசொரிந்த கதிர் நீலமணிகளி னிருளைப் பருகாநின்றதென்க. பணித்தல் - ஏனையொளிகளைத் தாழ்த்தல். (413) 3012. முழாத்திரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல் வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங் குழாத்தொடு மிறைகொளக் குனிந்து கூய்க்குயில் விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே. கூய்-கூவ. வீரன் - ஸ்ரீவர்த்தமானசுவாமிகள். இ-ள். அப்பொழுது வீரன்பிண்டி, முழாப்போலத் திரண்ட தாமம் நான்று மேலால் வாடாத் திருமலர்பூத்து வண்டினங் குழாத்தோடு தங்குதல் கொள்கையினாலே பாரமிக்கு வளைந்து குயில்கள் கூவும்படியாகப் பரந்ததென்க. (414) 3013. பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய்கெட விண்டலர் கனைகதிர் வீரன் றோன்றினா னுண்டிவ ணறவமிர் துண்மி னோவெனக் கொண்டன கோடணை கொற்ற முற்றமே. இ-ள். அப்பொழுது பிறவியாகிய நோய்கெடும்படி நிழலிலே யிறைவன் றேன்றினான்; இனி, இவ்விடத்தே யறமாகிய அமிர்த முண்டு; அதனை யுண்பீராக வென்று கோயிலிற் றிருமுற்றம் ஆரவாரத்தைக் கொண்டனவென்க. கோடணை - திவ்யத்தொனி. (415) 3014. வானவர் மலர்மழை சொரிய மன்னிய வூனிவர் பிறவியை யொழிக்கு முத்தமன் றேனிமிர் தாமரை திளைக்குஞ் சேவடி கோனமர்ந் தேத்திய குறுகி னானரோ. இ-ள். தேவர் பூமழைசொரியாநிற்க அரசன் பிறவியைக் கெடுக்கும் உத்தமனுடய அடியை யேத்துதற்கு அணுகினா னென்க. ஊனிவர்பிறவி - உடம்புகளிலே பரக்கின்ற பிறப்பு. இமிருந்தேனினந் தாமரையென்று திளைக்குஞ் சேவடி. (416) 3015. குருகலஞ் சீவக குமரன் கோத்திர மருகலில் காசிப மடிகள் வாழியென் றெரிமணி முடிநில முறுத்தி யேத்தினான் புரிமணி வீணைகள் புலம்ப வென்பவே. துறக்கும்பொழுது குடியுங்குலமுங் கேட்டே துறப்பித்த லியல்பு. இ-ள். அவனணுகின வளவிலே, அடிகளே! இவன்குலம் குருகுலம்; இவன் பெயர் சீவகன்; இவன் கோத்திரங் காசிப கோத்திரமென்று சொல்லுவார்களென்று உழையர்கூற, அவ்வரசனும் வணங்கி யாழ்வருந்தத் துதித்தானென்க. வாழி - அசை. என்று - என்ன. (417) 3016. மன்னவன் றுறவெனத் துறத்தன் மாண்பெனப் பொன்வரை வாய்திறந் தாங்குப் புங்கவ னின்னுரை யெயிறுவில் லுமிழ வீழ்ந்தது மின்னியோர் வியன்மழை முழங்கிற் றொத்ததே. இ-ள். அங்ஙனந் துதித்த வரசன் யான்றுறப்பேனென்று கூற, அது கேட்ட புங்கவன், பொன்வரை வாய் திறந்தாற்போல வாய்திறந்து நின்மனந் துறவில் வீழ்ந்தது; இனி நீ துறத்தலே மாட்சிமை யென்று எயிறு வில்லுமிழக் கூறிய இன்னுரை மழை மின்னி முழங்கிய தன்மையை யொத்ததென்க. எயிறுவில்லுமிழ்ந்தது- மின்னுக்குவமை. (418) 30. சீவகன்றுறவு 3017. காய்களிற்றி னிடைமருப்பிற் கவளம்போன் றேமாராக் கதியுட் டோன்றி யாய்களிய வெவ்வினையி னல்லாப்புற் றஞ்சினே னறிந்தார் கோவே வேய்களிய வண்டறைய விரிந்தலர்ந்த தாமரையின் வரைசேர் போதின் வாயொளியே பெறநடந்த மலரடியை வலங்கொண்டார் வருந்தார் போலும். இ-ள். அறிந்தாருடைய கோவே! களிற்றின் மருப்பிடையிலே வைத்த கவளம் அதுநுகர்ந்து கெடுமாறுபோன்று கூற்றுவன்கைப் பட்டு அவனுகர்ந்து கெடுகின்ற கதிகளிலே பிறந்து ஆராய்ந்த களிப்பினை யுடைய தீவினையாலே வருத்த முற்று இப்பிறவியை யஞ்சினேன்; இப்பிறவியால் வருந்தாதவர் தாமரையினது போதிடத்தே அதுதான் ஒளிபெற நடந்த நின்றிருவடிகளை வலம்வந்தார் போலே யிருந்த தென்றானென்க. களிப்பினையுடையவாகிய வண்டறையும்படி விரிந்தலர்ந்த தாமரையென்றது முதற்பொருட்கேற்ற அடையடுத்துநின்றது. போலுமென்றது “ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்” (தொல்.இடை.30) என்றதனாற் பொருடந்தே நின்றது. (419) வேறு 3018. சேடார் செம்பொற் றிருமணி வைரத் தொத்தணிந் துலகோம்பும்வாடா hலை வார்தளிர்ப் பிண்டி வாமநின் குணநாளும் பாடா தாரைப் பாடா துலகம் பண்ணவர் நின்னடிப்பூச் சூடா தார்தாள் சூடார் மாலைச் சுடர்மணி நெடுமுடியே. இ-ள். பெருமைநிறைந்த பொன்னோடே மணியையும் வைரக்கொத்தையுமணிந்து உலகைக் காக்கும் பிண்டியின் கீழிருந்த வாமனே! நின்குணத்தை நாளும் பாடாதாரை யிறைவனென்று உலகம் பாடாது; நின்னடிப்பூச் சூடாதாரடி களைத் தேவர் தம்முடிகளிற் சூடார்; ஆதலான், யான் நின்னைப்பாடி நின்னடியைச் சூடுவேனென்றானென்க. வாடாத மாலையினையுந் தளிரினையுமுடைய பிண்டி. (420) வேறு 3019. வைய மூன்று முடனேத்த வளருந் திங்கள் வாளெயிற் றைய வரிமான் ணையின்மே லமர்ந்தோய் நின்னை யமராதார் வெய்ய வெந்நோய் வினையுதைப்ப வீழ்ந்து துன்பக் கடலழுந்தி நெய்யு நுண்ணூ னாழிகையி னிரம்பா நின்று சுழல்வரே. ஐ - உரிச்சொல்; ஈறுதிரிந்தது. இ-ள். உலகமூன்றும் ஒருகாலத்தே யேத்தப் பிறைபோலு மெயிற்றையுடைய சிங்கஞ்சுமந்த அணைமேலமர்ந்தவனே! நின்னை நெஞ்சாற் பொருந்தாதார், வெய்யவினைதள்ளத் துன்பக் கடலிலே வீழ்ந்து அழுந்தி வெந்நோய் நிரம்பாநின்று நெய்தற் றொழிலையுடைய தார்கிடக்குநாடாப்போல மறுகுவ ரென்றானென்க. (421) 3020. தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழத் துளும்பா திருந்த திங்கள்போன் முழுதும் வைய முடனேத்த முதுவாய் வலவை யாயிருந் தழுது வினைக ளல்லாப்ப வறைந்தோய் நின்சொல றைந்தார்கள் பழுதி னறுநெய்க் கடற்சுடர் போற் பல்லாண் டெல்லாம் பரியாரே. இ-ள். தொகுதலையுடை பன்மீன்றிரள்சூழ அசையாதிருந்த திங்கள்போலே வையமுழுதும் ஒரு காலத்தேயேத்த முதியவுண் மையால் வெற்றியையுடையையாயிருந்து இருவினைகளழுது வருந்த அறத்தைச் சாற்றினவனே! நின்னறத்தைச் சாற்றினவர்கள் நெய்க் கடலிலிட்ட விளக்குப்போலே பலகாலங்களெல்லாங் கெடாரென்றா னென்க. (422) 3021. செழும்பொன் வேய்ந்து மணியழுத்தித் திருவார் வைர நிரைத்ததனுட் கொழுந்து மலருங் கொளக்குயிற்றிக் குலாய சிங்கா தனத்தின்மே லெழுந்த பருதி யிருந்தாற்போ லிருந்த வெந்தை பெருமானே யழுந்தேன் வந்துன் னடியடைந்தே னருவாய்ப் போத லழகிதோ. இ-ள். வேய்ந்து அழுந்தி நிரைத்து அதனுள்ளே கொழுந்தும் மலரும் வடிவு கொள்ளும்படி வல்லியையெழுதிப் பண்ணின சிங்கா சனத்திலே யிளஞாயிறிருந்தாற்போல விருந்த எந்தையாகிய பெருமானே! பிறவிக்கடலில் அழுந்தேனாய் வந்து நின்னடியைச் சேர்ந் தேன்; பிறப்பற்றுப்போதல் நினக்கு நன்றென்றானென்க. ஓகாரம் - சிறப்பு; ஈற்றசையுமாம். (423) வேறு 3022. குண்டலமும் பொற்றோடும் பைந்தாருங் குளிர்முத்தும் வண்டலம்பு மாலையு மணித்தொத்து நிலந்திவள விண்டலர்பூந் தாமரையின் விரைததும்ப மேனடந்த வண்டலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான். தார் - மார்பின்மாலை. வண்டுளருமாலை - முடியின் மாலை. அதின் மணிக்கொத்து. இ-ள். அவன் அங்ஙனங்கூறிக் குண்டலமுதலியன நிலத்திலே கிடந்தசையத் திருவடியை முடியால் வணங்கினா னென்க. விரை ததும்ப விரிந்தலர்ந்த தாமரையின் மேனடந்தவடி; பூக்களையுடையவடி. (424) 3023. நிலவிலகி யுயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகைநோ யுலகமிருள் கெடவிழிக்கு மொண்மணி யறவாழி யலகையிலாக் குணக்கடலை யகன்ஞான வரம்பானை விலையிலா மணிமுடியான் விண்வியப்ப விறைஞ்சினான். இ-ள். மணிமுடியான், ஒளியால் நிலவைவிலக்கிப் பல்லுயி ரையும் பாதுகாத்து மேனோக்கி விளங்கி யுலகம் பசியும் பகையும் நோயும் இருளுநீங்க விழிக்கும் அறவாழியையுடைய எண்ணிறந்த குணக்கடலை, ஞானத்துக்கு வரம்பாந் தன்மையை யுடையவனை யிறைஞ்சினானென்க. ` (425) 3024. தூத்திரண் மணித்தாமஞ் சொரிந்துபொன் னிலநக்கப் பூத்திரண் மணிமாலைப் போர்ச்சிங்கம் போதகம்போ லேத்தரிய குணக்கடலை யிகலின்ப வரம்பானைத் தோத்திரத்தாற் றொழுதிறைஞ்சித் துறப்பேனென் றெழுந்திருந்தான் தூய்தாத் திரண்ட முத்துத்தாமம். பூ - பொலிவு. இகலின்பம் - உலகிலுள்ள இன்பங்களுக்கு மாறாகிய வின்பம். அஃதாவது வீட்டின்பம். இ-ள். மாலையையுடைய சிங்கம், குணக்கடலாயவனை வீட்டின்பத்துக்கு வரம்பாயவனைத் தோத்திரங்களைச் சொல்லி வாழ்த்தித் தாமநிலநக்கப் போதகமிறைஞ்சுமாறு போல விறைஞ்சி இனி யான்றுறப்பேனென்று கூறி அவ்விடத்து நின்றும் போந்தானென்க. சுதன்மரென்னுங் கணதரரிருக்குமிடத்தே போந்தான்.(426) வேறு 3025. முடியணி யமரரு முலைநல் லார்களும் புடைபணிந் திருந்தவப் புலவன் பொன்னகர் கடிமலர்க் கற்பகங் காம வல்லியோ டிடைவிரா யெங்கணும் பூத்த தொத்ததே. சுண்ணமணிந்து முலைநல்லவர்களா யிருக்கின்றவர்களும். இ-ள். அப்பொழுது தேவரும், அவர்தேவிமாரும் வணங்கி யிருந்த அறிவுடையோன்கோயில், கற்பகமுங் காமவல்லியுங் கலந்திருந்த தன்மையையொத்ததென்க. (427) 3026. ஒத்தொளி பெருகிய வுருவப் பொன்னகர் வித்தகன் வலஞ்செய்து விழுப்பொற் பூமிபோய் மத்தக மயிரென வளர்த்த கைவினைச் சித்திரக் காவகஞ் செல்வ னெய்தினான். இ-ள். வித்தகனது ஒளிகளெல்லாம் ஒத்து மிக்க கோயிலைச் செல்வன் வலம் வந்து பொற்பூமியைக்கடந்து போய்க் காவிடத் தைச் சேர்ந்தானென்க. தலைமயிர் போலப் பேணி வளர்த்த கா. (428) 3027. ஏமநீருலகமோரிம்மிப்பாலென நாமவே னரபதி நீக்கி நன்கலம் தூமமார் மாலையுந் துறக்கின் றானரோ காமனார் கலங்கழிக் கின்ற தொத்ததே. இ-ள். நரபதி, உலகத்தையும் தவத்தையும் தூக்கிப்பார்த்து உலகம் ஓர் இம்மியென்னும் நிறையளவென்று அதனை நீக்கித் துறக்கின்றவன் அக்காலத்துக் கலத்தையும் மாலையையும் கழிக்கின்ற தன்மை, காமனார் அணிகலங்களைக் கழிக்கின்ற தன்னனேய ஒத்ததென்க. (429) 3028. மணியுறை கழிப்பது போல மங்கல பணிவரும் பைந்துகி னீக்கிப் பாற்கட லணிபெற வரும்பிய வருக்க னாமெனத் திணிநிலத் தியன்றதோர் திலக மாயினான். பணிவரும் - குறைகூறுதற்கரிய. இ-ள். அரசன் மணியை மறைத்த உறையைக்கழிக்கின்ற தன்மைபோலத் தன்மேனியை மறைத்த துகிலைநீக்கி ஆண்டுப் பிறந்த மிக்கவொளியாலே பாற்கடலிலே யரும்பிய அருக்கன் நிலத்திலே இயன்றதாமென்றுகூறும் யொருதிலகமாயினா னென்க. (429) 3029. மலிந்தநன் மாலைகள் வண்ணப் பூந்துகி னலிந்துமின் னகுமணி நன்பொற் பேரிழை மெலிந்தனென் சுமந்தென நீக்கி மேனிலைப் பொலிந்ததோர் கற்பகம் போலத்n தான்றினான். இ-ள். அரசன் தன்மேற் கிடந்தனவற்றை நீக்கியிருந்தவன், யான் மாலையும், துகிலும், மணியும், இழையுஞ்சுமந்து மெலிந்தே னென்று அவற்றைநீக்கி மேனிற்றலாற் பொலிந்ததொரு கற்பக முண்டேல் அதுபோலத் தோன்றினானென்க. மின்னை நலிந்து நகுமணி யென்க. (430) 3030. திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே யிருந்ததோ ரிடிக்குரற் சிங்கம் பொங்கிமேற் சுரிந்ததன் னுளைமயிர் துறப்ப தொத்தன னெரிந்தெழு மிளஞ்சுட ரிலங்கு மார்பினான். உளை-கழுத்தின்மயிர். இ-ள். ஒளிமிக்குத் தோன்றுதற்குக் காரணமான இளஞ்சுடர் போல் இலங்கு மார்பினான், மயிர்களைதற் கிருந்தபொழுது, திருந்தின கீழ்த்திசையினை நோக்கி நேரேயிருந்தொர் சிங்கம்தன்னுளையின் மயிரினைத் துறக்குந் தன்மையை யொத்தானென்க. மேல்-முன்பு. முன்புபொங்கி யிடிக்குங்குரலையுடைய சிங்கமென்க. (432) 3031. அஞ்சுடர்த் தாமரைக் கையி னான்மணிக் குஞ்சிவெண் படலிகைக் குமர னீப்பது செஞ்சுடர்க் கருங்கதிர்க் கற்றை தேறுநீர் மஞ்சுடை மதியினுட் சொரிவ தொத்ததே. இ-ள். குமரன் தாமரைபோலுங் கையினாலே நீலமணி போலுங் குஞ்சியை வாங்கி வெள்ளித்தகட்டிலே யிடுகின்ற தன்மை, செஞ்ஞாயிற்றறிடத்துண்டாகிய கருங்கதிர்க்கற்றையைஞாயிறு தான் வாங்கித் தெளிந்தநீர்மையையுடைய மதியிடத்தேயிடு கின்ற தன்மை போன்றதென்க. (433) வேலைவாய் மணியிலை யூழ்த்து வீழ்ப்பதோர் 3032. காலைவாய்க் கற்பக மரத்திற் காவலன் மாலைவா யகிறவழ் குஞ்சி மாற்றலிற் சோலைவாய்ச் சுரும்பினந் தொழுது சொன்னவே. வேலைவாய்-துறத்தற்குரிய நல்பொழுதின்கண்ணே. இ-ள். தன்னுடைய நீலமணிபோலு மிலைகளை முறைமைப் பட்டு உதிர்ப்ப தொரு காலத்திடத்துக் கற்பகமரம் போலே யரசன் மாலையில் அகிற்புகை தவழுங் குஞ்சியை வேலைவாய்க் களைத லாலே சுரும்பினந் தொழுது சிலமொழி கூறினவென்க. (434) 3033. தங்கிடை யிலாத்திருக் கேசந் தன்னையுங் கொங்குடைக் கோதையுங் கொய்து நீக்கினாய் நுங்கடை நோக்கிநாம் வாழும் வாழ்க்கைய மெங்கிடை யவரினி யெங்குச் செல்வவே. 3034. என்றன தேனின மிரங்கு வண்டொடு சென்றன விடுக்கிய செல்வன் பொன்மயி ரின்றொடு தொழுதன நும்மை யாமென மன்றலுண் டவைவலங் கொண்டு சென்றவே. இவையிரண்டுமொருதொடர். இ-ள்.அச்சுரும்பினம், யாங்கள் நும்முடையவிடத்தை நோக்கிவாழும் உயிர்வாழ்வினை யுடையேம்; இங்ஙனமாகவும் தமக்கு ஒப்பில்லாத மயிரினையும் மாலையினையும் வாங்கிப் போக்கினாய்; இனி யெம்மையொப்பார் எங்கேபோவரென்றன; அவ்வளவிலே வண்டோடே தேனினங்கள், செல்வனுடைய பெறுதற்கரிய மயிரினை வழி விடுதற்குச்சென்றவை, மன்றலை யுண்டு இன்றோடே யுறவு கைவிட்ட நும்மைத்தொழுதேம்; இது முற்பிறப்பில் யாங்கள்செய்த தீவினையாமென்று கூற, இவனை அவை வலங்கொண்டு சென்றனவென்க. அவையென்றது மிஞிறுகளை. நீக்கினாய், நும்மென்பன ஒருமைப்பன்மைமயக்கம். (435-6) 3035. மேற்படு கற்பக மாலை வேய்ந்துபொ னேற்புடைப் படலிகை யெடுத்துக் கொண்டுபோய் நாற்கடல் கடந்தவ னமோவென் றிட்டிடப் பாற்கடற் பனிமதி போல வீழ்ந்ததே. இ-ள். அப்பொழுது மேலிடத்துண்டாகிய கற்பக மாலை யாலே சூழ்ந்து படலிகையோடே யெடுத்துக்கொண்டு போய்நாலு கடலைக்கடந்து பாற்கடலிலே நமோ வென்று சுதஞ்சணன் போகட, அக்கடலிலே அப்படலிகை மதிகோல வீழ்ந்ததென்க. பொன்-ஈண்டு வெள்ளி. (437) வேறு 3036(1) ஏவா விருந்த வடிக ளிவர்வாய்ச்சொற் கோவா மணிகொழித்துக் கொண்டாலே போலுமாற் சாவா கிடந்தார் செவிச்சார்த்தி னப்பொழுதே மூவா வமரராய் முத்தணிந்து தோன்றுவரே. 3037(2) தோளா மணிகுவித்தாற் போன்றிலங்கு தொல்குலத்துச் சூளா மணியாய்ச் சுடர விருந்தானை வாளார் முடிவைர விற்றிளைத்து வண்டரற்றுந் தாளார வேத்திப்போய்த் தன்கோயில் புக்கானே. இவையிரண்டுமொருதொடர். ஏவா-சொல்லி.சாவாகிடந்தார்-உண்ணாகிடந்தான்போல நிகழ்வுணர்த் திற்று. இ-ள். துறந்தமகிழ்ச்சியால் இறைவனைத் துதித்திருந்த அடி களுடைய பரந்தவாய்ச்சொற்கள் துளையிடாத மாணிக்கத் தைக் குற்ற நீக்கிக் கொண்டாலொக்கும் இவற்றைப் பயனின்றிச் சாவாநின்றவர்கள் மனங்கொண்டுகேட்பராயின், அப்பொழுதே தேவராய்த்தோன்றுவரென்று சுதஞ்சணன் தன்னருகு நின்றார்க்குக் கூறித்துளையிடாத மணியைக் குவித்தாற்போன்று விளங்குந் தன்குலத்திலுள்ளார்க்கு ஒரு நாயகமணியாய் விளங்க விருந்தவனைப் பூவென்று வண்டரற்றுந் தாளை நிறைய வாழ்த்தித் தன்கோயிலிலே புக்கானென்க. வைரத்தின் ஒளி திளைத்தென்னுஞ் செய்தெனெச்சம், அரற்று மென்னும் பிறவினைகொண்டது; “அம்முக் கிளவியும்”(தொல்.வினை.34) என்னுஞ் சூத்திரவிதியால். (438.9) 3038. புக்கான் சுதஞ்சணனும் பொற்றா மரைமகளிர் தொக்காலே போருந்தன் றேவிக் குழாஞ்சூழ மிக்கான் குணம்பாடி யாடி மிகுதீம்பா றொக்க கடல்போற் சுதங்க ணிறைந்தனவே. இ-ள். அச்சுதஞ்சணன் எங்ஙனஞ் சென்று புக்கானென்னின், பொற்றாமரையிற் பலதிருச் சென்று தொக்கிருந்தாற் போலுந் தேவியர் திரள்சூழச் சீவகசாமி குணத்தைப் பாடி ஆடிச் சென்று புக்கான்; அவன் புக்க பின்பு சீவகசாமிக்குச் சுருத ஞானங்கள் நிறைந்தனவென்க. (440) 3039. பற்றார்வஞ் செற்ற முதலாகப் பாம்புரிபோன் முற்றத் துறந்து முனிகளா யெல்லாரு முற்றுயிர்க்குத் தீம்பால் சுரந்தோம்பி யுள்ளத்து மற்றிருள் சேரா மணிவிளக்கு வைத்தாரே. பற்று-பெற்றதன் மேல் நிகழுமாசை.ஆர்வம்-பெறாததன் மேல் நிகழுமாசை. இ-ள். நந்தட்டனும், தோழன்மாரும், ஆர்வமுஞ் செற்ற மு முதலாகிய ஏனைய முழுதையும்பாம்பு தோலுரிக்குந்தன்மை போலே துறந்து இருடிகளாய் உயிர்களுக்குற்றுக் கருணையைச் சொரிந்து பாதுகாத்து நெஞ்சிலே அஞ்ஞானஞ் சேராத சுருத ஞானத்தை வைத்தாரென்க. (441) 3040. கோமா னடிசாரக் குஞ்சரங்கள் செல்வனபோற் பூமாண் டிருக்கோயிற் புங்கவன்றாள் சேர்ந்தேத்தித் தாமார்ந்த சீலக் கடலாடிச் சங்கினத்துள் தூமாண் வலம்புரியின் றோற்றம்போற் புக்காரே. இ-ள். சக்கரவர்த்தியடியைச்சேர யானைத்திரள்செல்வன போலத் தாங் கோயிலிருந்த ஸ்ரீவர்த்த மான சுவாமிகளடியைச் சேர்ந்து ஏத்திச் சீலக்கடலிலேயாடிச் சங்கினத்திலே வலம்புரி தோன்றினாற்போலப் பின் சீவகசாமியும் திரளும் முனிக்குழாத் தினடுவே புக்காரென்க. (442) 31. சேணிகன்வரவு 3041. மட்டலர் வனமலர்ப் பிண்டி வாமனார் விட்டலர் தாமரைப் பாதம் வீங்கிரு ளட்டலர் பருதியி னளிக்கச் செல்லுநாட் பட்டதோர் பொருளினிப் ழிச்சு கின்றதே. இ-ள். இருளைக்கொன்று அலர்ந்த பருதிபோல வாமனு டைய திருவடிகள் இருவினையைக்கெடுத்து அருள்பண்ணும்படி அவர்கள் வழிபட்டுச் செல்லுநாளிலே பிறந்ததொருபொருள் இனியான் கூறுகின்றதென்று கூறினாரென்க. (443) வேறு 3042. கயவின முகளிப் பாய முல்லையம் பொதும்பிற் காமர் புயலின மொக்குள் வன்கட் குறுமுயல் புலம்பிக் குன்றத் தயல்வளர் கின்ற வாமான் குழவியோ டிரிந்து செந்நெல் வயல்வளர் கரும்பிற் பாயு மகதநா டென்ப துண்டே. இ-ள். கயலினம் எழுந்துபாய்கையாலே யதற்கு வெருவிக் குறிய முயல் தன்னினத்நீங்கிக் கரும்பிற்பாயும் மகதநாடென்ப தொரு நாடுண்டென்க. பொதும்பு-குறுங்காடு. புயல்-நீர்;ஆகுபெயர். மொக்குள் போலுங் கண். இரிந்து-இரிய. குன்றத்தயலே வளர்கின்ற ஆமான் குழவி யோடிரியும் படி முயல் பாயுமென்க. எனவே நிலமயக்கங் கூறினார். (444) 3043. இரும்பிடி தழீஇய யானை யிழிமதங் கலந்து சேறாய்ச் சுரும்பொடு மணிவண் டார்க்குந் துகிற்கொடி மாட வீதிப் பெருங்கடி நகரம் பேசி னிராசமா கிருக மென்ப ரருங்கடி யமரர் கோமா னணிநக ராய தொன்றே. இ-ள். யானையின்மதங்கலந்து சேறாய் அதனாலே சுரும்பும் பண்டும்ஆரவாரிக்குங் கொடியையுடைய மாடங்களையு டைத்தாகிய வீதியையுடைய அந்நாட்டினகரம் இராசமாகிருக மென்று பெயர் கூறுவர்; அதன்றன்மைபேசின், இந்திரனகரை யொப்பதொன்றா யிருக்குமென்க. (445) 3044. எரிமிடைந் தனைய மாலை யினமணி திருவில் வீசுந் திருமுடி யார மார்பிற் சேணிக னென்ப நாம மருமுடி மன்னர் சூழ வலரணி பிண்டி வேந்தன் றிருவடி விருந்து செய்வான் றிரண்முர சறைவித் தானே. இ-ள். மாலையினையும். முடியினையும், ஆரமார்பினையு முடைய அந்நகரியிலரசன்பெயர் சேணிகனென்றுகூறுவர்; அவன் அரசர் சூழவிருந்து பிண்டிவேந்தன் றிருவடிக்குப் பூசனை செய்தற்கு முரசறைவித்தானென்க. சேணிகன்-ச்ரேணிகமகாராசன். (446) வேறு 3045(1) பொன்னா வழியாற் புகழ்நாவழித் தாய்ந்த மெல்கோன் மின்னார் மணிப்பூ ணவன்மேவிண் காறு நாறு முன்னேர் வகுத்த முகவாசம் பொதிந்த வெந்நீர் மன்னார வாய்க்கொண் டுமிழ்ந்தான்மணி மாலை வேலோன். 3046(2) தீம்பா னுரைபோற் றிகழ்வெண்பட் டுடுத்து வண்டார் தேம்பாய சாந்த மெழுகிக்கலன் றேறன் மாலை தாம்பால தாங்கிப் புகழ்தாமரைக் குன்ற மன்ன வாம்பான் மயிர்வேய்ந் தயிராவண மேறி னானே. இவையிரண்டுமொருதொடர். 1. ஆய்ந்தமெல்கோல்-நூற்கண்ணே யாய்ந்த மெல்கோல். மேவி-தின்று. பொதிந்த வெந்நீர்-மருந்துகளிட்டுக் காய்ந்ததுவர்நீர். 2. வண்டார்சாந்தம். தேம்பாய மாலை.தேறுதலையுடைய கலம்.பால-பாலின்றன்மைய வாகிய வெள்ளியவற்றை. ஆம்பான் மயிர்-தானணிந்தவற்றின் பகுதியாகிய வெள்ளிமயிர். ஐராவண மெனவே களிறும் வெள்ளிதாயிற்று. இ-ள். அங்ஙன மறைவித்த பூணவனாகிய வேலோன், கோலைத்தின்று நாவழியால் நாவைவழித்து வெந்நீரை யுமிழ்ந் தான்; உமிழ்ந்தபின்னர் முகவாசத்தை பாய்க்கொண்டு வெண் பட்டையுடுத்துச் சந்தனத்தை மெழுகிப் பாலவாகிய கலங்கள் தாம் மாலைகள்தாம் பலதாங்கி வெண்டாமரைபூத்த குன்றை யொத்த ஐராவணத்தை யேறினானென்க. (447-8) வேறு 3047(1) எறிசுரும் பரற்று மாலை யெரிமணிச் செப்பு வெள்ளம் பொறிவரி வண்டு பாடும் பூஞ்சுண்ண நிறைந்த பொற்செப் பறிவரி துணர்வு நாணித் தலைபனித் தஞ்சுஞ் சாந்தஞ் செறியிரும் பவழச் செப்புத் தெண்கடற் றிரையினேரே. 3048(2) வந்துதேன் மயங்கி மூசு மலயச்செஞ் சாந்த மார்ந்த சந்தனச் செப்புங் கங்கை தருமண லலகை யாற்றாச் சுந்தரம் பெய்த யானைத் தூமருப் பியன்ற வெண்செப் பந்தரத் தலர்ந்த பன்மீ னெனைத்துள வளைத்து மாதோ. 3049(3) மைபொதி குவளை வாட்கண் மல்லிகைக் கோதை நல்லார் நெய்பொதி நெஞ்சின் மன்னர் நிலம்பிறக் கிடுவ போலுங் கொய்சுவற் புரவி மான்றேர் குழுமணி யோடை யானை மெய்பொதிந் துயர்ந்த கோமான் விரைப்பலி சுமந்த வன்றே. இவை மூன்றுமொருதொடர். 1. பொருள்களை யுணருமுணர்வு நேரே யறிவரிதாய் நாணித் தலைநடுங்கி யஞ்சுமெய்ப்பொருளை யுள்ளேபொதிந்து உயர்ந்த கோமானென மேலேகூட்டுக; கோமான்-ஸ்ரீவர்த்தமான சுவாமிகள். முன்பிற்சாந்து-அகிற்சாந்து. தெண்கடற்றிரை யினாலே வந்து கரையிலே செறிந்த பவளச்செப்பென்க. 2. சந்தனமரத்தாற் செய்தசெப்பு. கங்கையினுடைய திரை தருமணல். அலகு-எண். சுந்தரம்-சிந்தூரம். 3. நெய்பொதிநெஞ்சு-நேயம்பொதிந்தநெஞ்சு; நேயம், நெய்யென்று விகாரமாயிற்று. ‘நெய்பொதிகுஞ்சி’ யென்ற பாடத்திற்கு நெய்-நானம். இ-ள். அவன் அதனையேறிப் புறம்போந்த காலத்தே கோமானுக்குப் பூசனை நெய்தற்கு நல்லாரும், மன்னரும், ஆகாயத்துப் பன்மீன் எவ்வளவெண்ணுள அவ்வள வெண்ணுண் டாகவெடுத்த மாலையிட்ட மணிச்செப்பு வெள்ளமும், சுண்ண நிறைந்த பொற் செப்பும், காந்திட்ட பவளச்செப்பும், சந்தனமிட்ட சந்தனச்செப்பும், சிந்தூர மிட்ட யானை மருப்பா னியன்ற செப்பும் ஆகிய விரைப்பலிகளைப் புரவியுந் தேரும் யானையுஞ் சுமந்தன வென்க. (449-51) 3050. கொடிக்குழாங் குஞ்சி பிச்சக் குழாநிறை கோல மாலை முடிக்குழா மூரி வானம் பால்சொரி கின்ற தொக்குங் குடைக்குழா மிவற்றின் பாங்கர்க் குளித்தது குளிர்சங் கார்க்கும படைக்குழாம் பாரிற் செல்லும் பாற்கடல் பழித்த வன்றே. இ-ள். அப்பொழுது கொடிக்குழாமுங் குஞ்சிக்குழாமும் பிச்சக் குழாமும் வான் பாலைச்சொரிகின்ற தன்மைபோலுங் கொற்றக் குடைக்குழாமும் இவற்றின் பாங்கர்க் குளித்ததாகிய படைக்குழாமுந் தம்மிற்கூடி, பசியநிறம் விரவிப் பாரிலே நடப்பதோர் பாற்கடலுண்டேல் அதனைப் பழித்தவென்க.(452) 3051. கனைகடல் கவரச் செல்லுங் கணமழைத் தொழுதி போலு நனைமலர்ப் பிண்டி நாத னல்லறங் கொள்ளை சாற்றிப் பினைமுடி மன்ன ரீண்டிப் பொன்னெயிற் புறத்து விட்டார் வினையுடைத் தின்ப வெள்ளம் விரும்பிய வேட்கை யானே. இ-ள்.அம்மன்னரீண்டி யிருவினையைக்கெடுத்து இன்ப மாகிய வெள்ளத்தை விரும்பி வேட்கையாலே நன்றாகிய வறத்தைக் கொள்ளை கொள்ளும்படி யறைவித்து எயிற்புறத்து விட்டார்; அந்நிலைமை கடலை முகச்செல்லும் மழைத்திரளை யொக்கு மென்க. (453) வேறு 3052. வண்டுசூழ் பூப்பலி சுமந்து தான்வலங் கொண்டுசூழ்ந் தெழுமுறை யிறைஞ்சிக் கோனடி யெண்டிசை யவர்களு மருள வேத்தினான் வெண்டிரைப் புணரிசூழ் வேலி வேந்தனே. இ-ள். அவர்கள் விட்டபொழுது, சேணிகன், பூப்பலியைத் தான்சுமந்து வலங்கொண்டு மனத்தாலே சூழ்ந்து இறைவன தடியை யெழுகாலிறைஞ்சி யேத்தினானென்க. புணரியைச்சூழ்ந்த வேலியென்றது சக்கரவாளகிரியை. அதற்கு வேந்தனெனவே சேணிகனைச் சக்கரவர்த்தியென்றார். (454) வேறு 3053. பகல்வளர்பவழச் செந்தீப் பருதிமுற் பட்ட தேபோ லிகல்வினை யெறிந்த கோமா னிணையடி யொளியிற் றோன்றா தகல்விசும் புறையுந் தேவ ரொளியவிந் திருப்ப மன்னன் முகில்கிழி மதிய போலு முனிக்குழா நோக்கி னானே. இ-ள். பவழம்போலுஞ் செந்தீ யுதயகிரியிற் பருதியின் முன்னர் ஒளிமழுங்கினாற்போல இறைவன் இணையடியொளியினாற் றேவரொளி தோன்றாது மழுங்கியிருந்த வளவிலே மதிபோலு முனித் திரளைச் சேணிகன் நோக்கினானென்க. (455) 3054. கண்வெறி போக வாங்கோர் கடுந்தவ னுருவ நோக்கி யொண்ணெறி யொருவிக் கோமா னொளிதிரண் டிருந்த தாங்கொல் விண்ணெறி வழுவி வீழ்ந்த விண்ணவ னொருவன் கொல்லென் றெண்ணெறி யாது மோரா திருந்திது கூறி னானே. இ-ள். அங்ஙனநோக்கின சேணிகன், அவ்விடத்தே யிருந்த கடிய தவத்தையுடையவனுருவைக் கண்வெறிபோக நோக்கி யிறைவனொளி ஒள்ளியநெறியைத் தப்பிப்போயிருந்ததோ? அன்றி யிவன்றான் விண்ணவனொருவனோவென்று எண்ணு நெறியாற் சிறிதும் அறுதியிடமாட்டாதிருந்து இம்மொழியைக் கூறினானென்க. (456) வேறு 3055. விளங்கொளி விசும்பறுத் திழிந்து விண்ணவ னிளங்கதி ரெனத்துறந் திருப்பக் கண்டனம் வளங்கெழு முக்குடை யடிகள் வாய்மொழி துளங்கின னெனத்தொழு திறைஞ்சி னனானரோ. இ-ள்.அஃது யாதெனின், விண்ணவனிழிந்து இளஞாயி றென்னும் படி துறந்திருப்பக்கண்டேம்; இறைவன்றான் கூறியவர் ஆகமந் தப்பினானென்று சுதன்மரென்னுங் கணதரரை நோக்கி யவன்கூறினான்; கூறி யவரைக் கைகூப்பித் தொழுது வணங்கினா னென்க. (457) 3056. மன்னவ கேண்மதி வானில் வாழ்பவர் பொன்னியல் கற்பகப் போக பூமியா ரென்னதுந் துறவல ரிறைவன் வாய்மொழி சொன்னவா றல்லதெப் பொருளுந் தோன்றுமே. இறைவன்-ஸ்ரீவர்த்தமானசுவாமிகள். இ-ள். அதுகேட்ட கணதரர், மன்னவ! கேட்பாயாக; தேவரும் போக பூமியோருஞ் சிறிதுந் துறவார்; இறைவனாகமங் கூறிய வாறன்றி எப்பொருள்களுந் தோன்றா வென்றாரென்க. (458) 3057. அடிகளுக் கிடமருங் கிருந்த வாய்மலர்க் கடிகமழ் தாமரைக் கண்ணி னானிவன் வடிவமே வாய்திறந் துரைக்கும் வானவ னொடிவறு பேரொளி யுட்கத் தக்கதே. இ-ள். அதுகேட்ட சேணிகன், கணதரரைநோக்கி, நினக்கு இடப் பக்கத்திருந்த தாமரைக்கண்ணினானாகிய இவனுடைய உட்கத்தக்க தாகிய கெடாத பேரொளியையுடைய வடிவமே தேவனென்று வாய் விட்டுக் கூறாநிற்கும்; ஆதலால் யான் இங்ஙனம் கூறினே னென்றானென்க. (459) வேறு 3058. திருவினோ டகன்ற மார்பிற் சீவக சாமி யென்பா னுருவினோ டொளியு நோக்கி னொப்புமை யுலகி னில்லை மருவினா ரிமைத்து நோக்கின் மனம்பிறி தாகி நிற்பா ரரிதிவன் முகத்து நோக்க லழகொளி யன்ன வென்றான். இ-ள். அச்சேணிகனைநோக்கி, இவன் றிருமகளோடுகூடி அகன்ற மார்பினையுடைய சீவகசாமியென்கின்றவன்; இவனுக்கு அச்சத்தோடுங் கூடிய புகழைப்பார்த்தால் உலகில் ஒப்பில்லை; அழகும், ஒளியும் நீ கூறிய தெய்வத்தன்மையாயே யிருக்கும்; இவனை மருவினார்களும் இமைத்துப்பார்த்தால் அவனன் றென்று மனம் வேறாய் நிற்பார்;ஆதலால், இவனிடத்துநோக்குதல் அரிதென்று கணதரர் கூறினா ரென்க. (460) 32. சேணிகன் வினா வேறு 3059. மாதவன் சரிதமுந் துறந்த வண்ணமு மேதமின் றியம்புமி னடிக ளோவெனப் போதலர் புனைமுடி யிறைஞ்சி யேத்தினான் காதிலிற் கணந்தொழக் காவன் மன்னனே. இ-ள்.அதுகேட்டசேணிகன், சீவகசாமி முற்பவங்களிற் செய்த தவங்களையும், ஈண்டுப்பற்றற்றுத் துறந்தசெய்திகளையுங் குற்ற மின்றாக அடிகளியம்புமினென்று அந்தக் கணதரரை யிறைஞ்சி யேத்தினான்; அருகிருந்த முனிகணம் இவற்றைக் கேட்கவேண்டுங் காதலினாலே கைதொழாநிற்கவென்க. (461) ஒகாரம்-சிறப்புணர்த்திற்று. 3060. பாட்டருங் கேலவப் பரவை மாக்கடற் கூட்டருங் கொழுந்திரை முகந்து மாமுனி மோட்டிரு மணிமுகின் முழங்கிப் பெய்தலி னூட்டரு மறவமிர் துலக முண்டதே. இ-ள். புகழ்தற்கரிய கேவலஞானமென்னுங்கடலிற் வட்டத்தை யுடைய பெறுதற்கரிய திரையை முனியாகிய முகில் முகந்து கொண்டுநின்று அறமாகிய வமிர்தத்தைப் பெய்கையினாலே அதனை யுலகமுண்டதென்க. எனவே, இந்த ஞானத்தாலே பலபிறப்பிற்செய்த தவங் களையுணர்ந்து கூறினாரென்றார். தவங்களைக்கூறவே யறமா யிற்று. இக்காரணங்கூறவே துறந்தவண்ணமுங் கூறினாராயிற்று. மோடு-பெருமை. ஊட்டரும்-பிறரையறிவித்தற்கரிய. (462) 3061. சீவகன் றிருவின மாக யாமென நாவகந் தழும்பநின் றேத்தி நன்றரோ காவல னாதியாக் கணங்கள் கைதொழப் பாவமில் சுதன்மராற் பாடப் பட்டதே. இ-ள்.அதுகேட்டு யாங்களும் பெரிதுஞ் சீவகன்பெற்ற இத்திருவினை யுடையயேமாகவேண்டுமென்று நாத்தழும் புறவேத்திச் சேணிகன்முதலாக முனிகணங்களுந்தொழும்படி இவன்சரிதம் சுதன்ம ரென்னுங் கணதரராலே யிப்படிப் பாடப் பட்டதென்றாரென்க. (463) 33. கேவலோற்பத்தி வேறு 3062. முல்லைசூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயுங் கொல்லைசூழ் குன்றத் துச்சிக் குரி சினோற் றுயர்ந்த வாறும் வில்லுமிழ்ந் திலங்கு மேனி விழுத்தவ நங்கை மார்கண் மல்லங் குமரர் வான்மேற் சென்றதும் வகுக்க லுற்றேன். முல்லை நிலஞ் சூழ்ந்த குன்று. இ-ள். குருசில், முல்லைபடர்ந்த வேலியையுடைய கொல்லை சூழ்ந்த மாலையுச்சியிலே நின்று தவஞ்செய்து வீடுபெற்றபடியும், தேவிமாரும், நத்தட்டனும், தோழன்மாரும் துறக்கத்துச் சென்ற படியுங் கூறுபடுத்துக் கூறுவேனென்றாரென்க. (464) வேறு 3063. முழுது முந்திரி கைப்பழச் சோலைத்தே னொழுகி நின்றசும் பும்முயர் சந்தனத் தொழுதிக்குன்றந் துளும்பச்சென் றெய்தினான் பழுதில் வாய்மொழிப் பண்ணவ னென்பவே. இ-ள்.வாய்மொழியையுடைய பண்ணவன், முந்திரிகைப் பழத்தையுடைய சோலையிற் றேனொழுகி நிற்கையினாலே முழுக்க வசும்புங் குன்றிலே சென்று சேர்ந்தானென்க. பண்ணவன்-சீவகசாமி. துளும்ப-ஆண்டையார் இவன் இங்ஙனந் துறத்தற்கு வருந்த; தவத்தின் கனத்தால் இளகுதலுமாம். (465) 3064. நணிதி னெண்வினை யின்னவை கண்ணிறீஇத் துணிய வீர்ந்திடுந் துப்பமை சிந்தையான் மணியின் மேன்மணி கட்டிய தொத்ததற் கணியு மாயலர் ஞாயிறு மாயினான். இ-ள்.அதனைச்சேர்ந்து அண்ணிதாக எண்வினை யினுடைய குற்றங்களை முன்னர்நிறுத்திஅவற்றை யற்றுப்போம் படி யறுத்திடுந் தூய்மையமைந்த சிந்தையையுடையனாய் அதன்மேனின்ற பொழுது அதற்கு நீலமணியில்மேலே மாணிக்கத் தையழுத்திய தன்மையொத்து ஒரு பூணுமாய் இளஞாயிறு மாயினானென்க. (466) 3065. குன்றின் வீழரு விக்குரல் கோடணைச் சென்றெ லாத்திசை யுஞ்சிலம் பின்மிசை நின்ற னன்னிறை வம்மின நீரென வொன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம். இ-ள்.அக்குன்றினது சிகரத்திடத்தே யெல்லாத் திசைகளி லும் அணைதலைச்சென்று வீழ்கின்ற அருவிக்குரல், இச்சிலம் பிலே யிறை வந்துநின்றான்; அறங்கேட்கும்படி நீர்வம்மினென்று ஒருபாலெல்லாம் அதிருமென்க. கோடு-மரக்கோடுமாம். (467) 3066. செம்பொன் பின்னிய போற்றினைக் காவலர் வெம்பு மும்மத வேழம் விலக்குவார் தம்பு னத்தெறி மாமணி சந்துபாய்ந் தும்பர் மீனெனத் தோன்றுமொர் பாலெலாம். இ-ள். அக்குன்றின் ஒருபாலெல்லாம், பொற்கம்பி பின்னியது போலும் முற்றிய தினைக்காவலராய்நின்று வேழத்தை யோட்டு கின்றவர்கள், தம்புனத்தேநின்று எறிந்தமணி சந்தன மரத்தைத் தள்ளிப் போய் மீனெனத் தோன்றாநிற்குமென்க. (468) 3067. யானை குங்கும மாடி யருவரைத் தேனெய் வரர்சுனை யுண்டு திளைத்துடன் கான மாப்பிடி கன்றொடு நாடக மூன மின்றிநின் றாடுமொர் பாலெலாம் இ-ள். அக்குன்றினொருபாலெல்லாம், யானை குங்குமக் கொடியிலே கிடந்து பின்னர்த்தேனொழுகிய நீரைச் சேரவுண்டு களித்து அக்களிப்பாலே பிடியோடுங்க ன்றோடுஞ் சுழன்று திரியா நிற்குமென்க. (469) 3068. வரிய நாக மணிச்சுடர் மல்கிய பொருவில் பொன்முழைப் போர்ப்புலி போதக மரிய கின்னரர் பாட வமர்ந்துதம் முருவந் தோன்ற வுறங்குமொர் பாலெலாம். இ-ள். அக்குன்றினொருபாலெல்லாம், மணியினதொளி நிறைந்த வரிகளையுடையவாகிய பாம்பும், புலிகளோடே யானைக்கன்றுகளும் பெறுதற்கரிய கின்னரர்கள் அமர்ந்து பாடு தலாலே யது கேட்டு மணியினதொளியிலே தம்வடிவு தோன்றக் கிடந்து உறங்காநிற்கு மென்க. இவை, இருடிகளிருத்தலிற் றீங்கு செய்யாவாயின. (470) 3069. பழுத்த தீம்பல வின்கனி வாழையின் விழுக்கு லைக்கனி மாங்கனி வீழ்ந்தவை தொழித்து மந்தி துணங்கை யயர்ந்துதே னழிக்கு மஞ்சுனை யாடுமொர் பாலெலாம். இ-ள். அக்குன்றினொருபா லெல்லாம், மந்திகள் முப்பழம் வீழ்ந்த வற்றைத்தின்றுஆரவாரித்துத் துணங்கையாடிப் பின்னர்த் தேனாகிய வெள்ளஞ் சென்றழிக்குஞ் சுனையிலே யாடுமென்க. (471) வேறு 3070. நளிசிலம் பதனி னுச்சி நாட்டிய பொன்செய் கந்தி னொளியொடு சுடர வெம்பி யுருத்தெழ கனலி வட்டந் தெளிகடல் சுடுவ தொத்துத் தீயுமிழ் திங்க ணான்கும் விளிவருங் குரைய ஞான வேழமேற் கொண்டு நின்றான். ஞாயிற்றினது வட்டங் கடலைச் சுவறப்பண்ணுந் தன்மையை யொத்து ஒளியோடே விளங்கும்படி கோபித்துத் தீயைச் சொரியுந் திங்கள். இ-ள்.அவன், முற்கூறியனவெல்லாஞ்செறிந்த சிலம்பினுச்சியிலே ஞானமாகிய வேழத்தையேறி நாட்டின கந்துபோலே திங்கணான்கும் நின்றானென்க. குரைய-அசை. சித்திரைமுதலிய நான்குதிங்களையுங் கூறினார். (472) 3071(1) பார்க்கடல் பருகி மேகம் பாப்பினம் பதைப்ப மின்னி வார்ப்பிணி முரசி னார்த்து மண்பக விடித்து வான நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் மூர்த்தியாய் முனிவ ரேத்து முனிக்களி றனைய கோமான். 3071(2) திங்கணான் கவையு நீங்கத் திசைச்செல்வார் மடிந்து தேங்கொள் பங்கயப் பகைவந் தென்னப் பனிவரை யுருவி வீசு மங்குல்சூழ் வாடைக் கொல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ விங்குநான் காய திங்க ளின்னுயி ரோம்பி னானே. 3073(3) வடிமலர் நெடுங்க ணாரு மைந்தரும் வரவு பார்த்தாங் கடிமலர் பரவ வேறி யாரமிர் திரிதிற் கொள்வான் கடிமலர்க் கமலத் தன்ன கையினை மறித்துக் கொள்ளான் முடிதவக் கடலை நீந்தி யின்னண முற்றி னானே. இவைமூன்றுமொருதொடர். 1. மூர்த்தியாய்-தவவேடமுடையனாய். 2. அவையென்று சுட்டிற்று; முற்கூறிய திங்கணான்காகிய காரையுங் கூதிரையும். மடிந்து-செய்தெனெச்சம் பிறவினை கொண்டது. தேங்கொள் பங்கயப்பகை அத்தேசங்களிலே கொண்டபனி. இங்குதல்-தங்குதல். இ-ள். அங்ஙனநின்றகோமான், வானிடத்து மேகம் பாரிடத்துக் கடலைப்பருகிப் பாப்புத்திரள் பதைக்கும்படி மின்னி யார்த்து இடித்து நீர்த்திரளைப் பளிக்குக்கோல் கிடக்குந்தூணி யதனைச் சொரியும்மாறு போலச் சொரிய அத்திங்கணானகு நின்று அவையும்போனபின்பு, பனிக்காலம் வந்ததாக, பனிமாசைத் தடவிவரும் வாடைக் கொல் கானாய் வெளியிலே நான்காகிய திங்களும் உணவொழிந்து தங்கி யிங்ஙனம் ஆறுகாலங்களையும் வென்றான்; அவ்வளவிலே தேவி மாரும், நந்தட்டனும், தோழன்மாரும் அவன்சரியைகொள்ள வரும் வரவினைநோக்கி யவ்வரையிலேயேறி யவன் சரியைகோடற்கு அடிமலர்களைப் பரவ, அவனும் அதனை யெல்லாங் கொள்ளானாய் வேண்டா வென்று கையினை மறித்து அதிலே சிறிதுகைக்கொண்டு ஓரியாண்டாக உணவொழிந்து தங்கின இன்னுயிரைப் பாதுகாத்தான்; அவன் அங்ஙனம்தவக்கடலை நீந்திப்பின்னர் வீடுபெறுதற்குக் காரணமானஅத்தவத்தை யிங்ஙனமுடித்தானென்க. முடித்தல்-வீடுபெறுதல். அது முடிந்தபடி மேற் கூறுகின்றார். (473-5) 3074. ஒளிறுதேர் ஞானம் பாய்மா வின்னுயி ரோம்ப லோடைக் களிறுநற் சிந்தை காலாள் கருணையாங் கவசஞ் சீலம் வெளிறில்வாள் விளங்கு செம்பொன் வட்டமெய்ப் பொருள்களாப் பிளிறுசெய் கருமத் தெவ்வர் பெருமதின் முற்றி னானே. வெளிறு-குற்றம். இ-ள். மெய்ஞ்ஞானமே விளங்குந் தேராக இனிய வுயிரைப் பாதுகாத்தலே மாவாகச் சன்மார்க்க மதியே களிறாகக் கருணையே காலாளாகச் சீலமே தனக்காம் உடம்புக்கீடாக மெய்ப் பொருள்களே வாளுங் கேடகமுமாகக்கொண்டு ஆரவாரத் தைச் செய்யும் இருவினையாகிய பகைவர் பெரிய மதிலை வளைத்தா தெனன்க. (476) 3075. உறக்கெனு மோடை யானை யூணெனு முருவத் திண்டேர் மறப்பெனும் புரவி வெள்ளம் வந்தடை பினிசெய் காலாட் டிறப்படப் பண்ணிப் பொல்லாச் சிந்தனை வாயில் போந்து சுறக்கட லனைய தானை துளங்கப்போர் செய்த தன்றே. இ-ள். அப்பொழுது, அக்கருமத்தெவ்வருடைய கடலனைய தானை, உறக்கமென்னும் யானையினையும், உணவென்னும் உட்கு தலையுடைய தேரினையும், மறவியென்னும் புரவிவெள்ளத் தினையும்,வளியும் பித்தும் ஐயும் வந்தடைதலைச்செய்யும் பிணி களாகிய காலாளினையுங் கூறுபட வணிந்து அசுப பரிணாம மென்கின்ற வாயிலை விட்டுப் போந்து நடுங்கும்படி போர்செய்த தென்க. (477) 3076. தெளிவறுத் தெழுவர் பட்டா ரீரெண்மர் திளைத்து வீழ்ந்தார் களிறுகா லுதைப்ப வெண்மர் கவிழ்ந்தனர் களத்தி னுள்ளே பிளிறிவீழ் பேடி பெண்ணோ யறுவகைத் துவர்ப்பும் பேசி னளிபடு சிந்தை யென்னு மாழிவாய் வீழ்ந்த வன்றே. இ-ள். அப்போர்க்களத்திலே அக்கருமத்தெவ்வர்படையிலே எழுவர் கலங்கப்பட்டார்; பதினறுவர் பொருதுவீழ்ந்தார்; சன்மார்க்கமதி யென்னுங் களிறு காலாலுதைப்ப எண்மர் கவிழ்ந்தார்; அப்பொழுது கூப்பிட்டு வீழ்கின்ற நபுஞ்சக வேதமும், திரீவேதமும், அறுவகைத் துவர்ப்புஞ் சொல்லிற் றண்ணளியை யுடைய சிந்தனையென்னும் சக்கரத்தின்வாயிலே பட்டனவென்க. எழுவரென்றது மித்தியாத்துவம், சம்மியக்மித்தியாத்துவம், சம்மியத்துவப்பிரகிருதி அநந்தானுபந்திக்குரோதம், அநந்தானு பந்தி மானம், அநந்தானுபந்திமாயை, அநந்தானுபந்திலோபம், என்பனவற்றை. இவைமுறையே கற்பிளப்புப்போல்வதூஉம், கற்றூண்போல்வதூஉம், வெதிர்வேர் முடங்கல் போல்வதூஉம், உலைமூக்கிற் பற்றின கிட்டம் போல்வதூஉம், சேறுபோல்வதூஉம், சேறுநீருங் கலந்தாற் போல் வதூஉம், மண்ணின்மேற்றெளிந்த நீர்போல்வதூ உமென்று கொள்ளப் படும். (“மலைநிலனே மணனீர்க்கீற் றிவைவெகுளிக் குவமமாஞ்-சிலையென்பு திமிசுத்தூண் செங்காழுந்து பெருமிதக்கா-முலைமாயை முதிர்வெதிர்போர்த் தகர்மருப்பு நார்விடைநீர்-உலையுசவு நீர்மஞ்சட் டுகிலினீ ருலோபக்கே.” அநந்தானுபத்திக்குரோதமுதலாகச் சஞ்சுவலன லோபமிறுதி யாகக் கிடந்த இப்பதினாறுகஷாயமும் விரித்துக் கொள்க.) இவை உவமைகாட்டினபடி. ஈரெண்மராவார்: “இருகதி நாற்சாதி யீராநு பூர்வி-வெயில்விளக்கு நிற்ற னுணுகல் பொது வுடம்பு-நித்தாதி மூன்றோ டிவைபதினாறென்றுரைப்ப-ரெப்ப பொருளுங் கண்டுணர்ந்தோ ரீண்டு” அவற்றுள், இருகதியாவன; நரககதி, விலங்குகதி. நாற்சாதியாவன; ஏகேந்திரிய சாதி நாமகர்மம், துவீந்திரிய சாதி நாமகர்மம், திரீந்திரிய சாதிநாமகர்மம், சதுரிந்திரிய சாதி ஈரானுபூர்வியாவன நரககத்தியாநு பூர்வி, திரியக்கத்தியாநு பூர்வி வெயிலென்றது, ஆதபநாமகருமத்தை. விளக்கென்றது, உத்தியோத நாமகருமத்தை. நிற்றலென்றது. தாவர நாமகருமத்தை.நுணுகலென்றது, சூக்குமநாம கருமத்தை. பொதுவுடம்பென்றது, சாதாரணசரீரத்தை, அஃது ஓருயிர்க்குடம் பாய் நின்றே பல்வேறு உயிர்க்கும் உடம்பாதல்; அவை கடுகுமூலம், கற்றாழைமுதலியன; கிளுவை முதலாகக் கொம்பு நட்டாலாவனவுமாம். நித்தாதிமூன்றாவன: நித்திராநித்திரையும், பிரசலாப்பிரசலையும், ஸ்தியானக்கிரந்தியுமாம். அவற்றுள், நித்திராதிநித் திரையாவது-உறக்கத்தின்மேலுறக்கம். பிரசலாப் பிரசலை யாவது-துளக்கத்தின்மேற்றுளக்கம். தியானக்கிரந்தி யாவது-கனவிற்செய்தது நனவிலறியாமை. எண்மரென்றது அப்பித்தியாக்கி யானக்குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான லோபம், பிரத்தியாக்கியானக் குரோதம், பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கி யான லோபம் என்பன வற்றை. இவைமுறையே நிலப்பிளந்தாற் போல்வதூஉம், எலும்பு போல்தூஉம், தகர்க்கோடு போல்வதூஉம், உசவு போல்வதூஉம், மணற்கீற்றுப் போல்வதூஉம், திமிசுத்தூண் போல்வதூஉம், வாளின் வாய்நார் போல்வதூஉம், நீர் மஞ்சள் போல்வதூஉமென்றுகொள்ளப்படும். பேடியாவது-நபுஞ்சக வேதம். பெண்ணோயாவது-ஸ்திரீ வேதம். அறுவகைத் துவர்ப்பாவன; ஆசியம், இரதி, அரதி,சோகம், பயம், சுகுச்சை, எனவிவை. அவற்றுள், ஆசியமென்பது-சிரித்தல். இரதியென்பது-வேண்டுதல். அரதியென்பது-வேண்டாமை. சோகமென்பது-அசைவு. பயமென்பது-அச்சம். சுகுச்சை யென்பது-அருவருப்பு. பிளிறுதல்-அரற்றுதல். (478) 3077. மயக்கப்போர் மன்னன் மக்கண் மந்திரி யவரும் வீழ வியப்புறு வேத வில்வாய் வேட்கையம் பெடுத்திட் டெய்யக் கலக்கமி லசுப மென்னுங் குந்தத்தாற் கணைபெய்ம் மாரி விலக்கித்திண் வெறுப்பு வாளால் விரைந்துயி ரவனை யுண்டான். மயக்கம்-மோகநீயம். முன்பு பட்டவர்களெல்லாம் அவனுடைய மக்களும், மந்திரிகளும், அசுபமாவது-தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சை, சுவேதநீராயிருக்கும் இவ்வுடம் பென்று கருதின கருத்து. இ-ள். மன்னனுடைய மக்களும்,மந்திரி யாகியவரும் பட்டு வீழ்கை யினாலே, பின்பு, அம்மன்னன், புருடவேதமென்கின்ற வில்லின் வாயிலே தாகமோகமென்கின்ற அம்புகளைத்தொடுத் தெய்ய, அந்த அப்புமாரியைக் கலக்கமில்லாத அசுபமென்னுங் குந்தத்தாலே விலக்கி உடம்பு வெறுத்தாலாகிய வாளாலே விரைந்து அவனை யுயிரை யுண்டானென்க. (479) 3078. கரும்பெறி கடிகை போன்றுங் கதலிகைப் போழ்கள் போன்று மரும்பொறிப் பகைவர் தம்மை யுறுப்பறத் துணித்து மீர்ந்து மருந்தெறி பிணியைக் கொல்லு மருத்துவன் போன்று மாதோ விருந்தெறிந் தெறியு மூவர் மேற்படை யியற்றி னானே. இ-ள். அவன் பின்னர் ஐம்பொறியாகிய பகைவரைக் கடிகை கோலே துணித்தும், போழ்கள்போலே யீர்ந்தும், நிலைபெற்றி ருந்துகொன்று, பின்னர் மருந்தினையெறியும் பிணியைக் கொல்லும் மருத்துவனையொத்து ஐயும் பித்தும் வளியுமாகிய மூவர் மேலே படையை நிகழ்த்தினானென்க. மருத்தெறி-மருந்தாலே கொல்லுமென்றுமாம். (480) 3079. செழுமல ராவி நீங்கு மெல்லையிற் செறிந்து காயங் கழுமிய வுதிரம் போல விமைப்பினுட் கரந்து நீங்கக் கொழுமலர்க் குவளைக் கண்ணிக் கூற்றுயி ருண்ப தேபோல் விழுமிய தெவ்வர் வாணாள் வீழ்ந்துக வெம்பி னானே. செழுமலர்-வளமை மிக்க. இ-ள்.அங்ஙனம் படையைநிகழ்த்தி அவரையும்வென்றவன், உடம்பிலே செறிந்து கோத்திருக்குமுதிரம் உயிர்போங்காலத்து ஒருமாத்திரையிற் கரந்துபோமாறுபோல இருவினையுந் தன்னிடத் தினின்றுங் கரந்துபோம்படியாக உயிர்களைக் கூற்றுவனுண்டாற் போல அவ்விருவினைத் தெவ்வருயிர் குறைந்து கெட வுண்டானென்க. (481) 3080. குரோதனே மானன் மாயன் கூர்ப்புடை யுலோப னென்பார் விரோதித்து விரலிற் சுட்டி வெருவரத் தாக்க வீர நிரோதனை யம்பிற் கொன்றா னித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ வெகுண்டன னவரும் வீழ்ந்தார். இ-ள். குரோதன் முதலிய நால்வரும் பின்னர் மாறுபட்டு விரலாலே சுட்டிக்காட்டிப் போர்செய்ய, வீரன், நிலோதனை யென்னு மம்பாலே கொன்றான்; பின்னர் நித்திரையும், பிரசலையு மென்னும் பேருடையோர்தாக்க, அவரை விராகமென்னும் வேலாலே பொருதான்; அவரும் பட்டாரென்க. நால்வரென்றது-சஞ்சுவலனக் குரோதம், சஞ்சவலன மானம், சஞ்சுவலன மாயை, சஞ்சுவலன லோபம் bன்பனவற்றை. அவை முறையே நீர்க்கீற்றுப்போல்வதூஉம் செங்கொழுந்து போல் வதூஉம், விடைநீர்போல்வதூஉம், துகிலினீர் போல் வதூஉம்மென்று கொள்ளப் படும். நிலோதனை-செறிப்பு. விராகமென்பது விகாரமாயிற்று. (482) 3081. புணரிபோற் சிறுபுன் கேள்விப் படையொடு புகைந்து பொங்கி யுணர்வொடு காட்சி பேறென் றிடையுறு கோக்க ளேற்றா ரிணரெரி முழக்க மன்ன சுக்கிலத் தியான மென்னுங் கணையெறிந் துகைப்ப வீழ்ந்து காற்படை சூழப் பட்டார். கடல்போல் பெரிய சிறிய புல்லிய கேள்வியை யுடைய படை யென்றது-நெறியல்லா நெறியொழுகுஞ் சமயங்களை. இ-ள். உணர்வொடு காட்சிபேறென்று சொல்லப்பட்டு மறு படையாக வருமரசர் புகைந்துபொங்கிப் படையோடே வந்து பொருதார் அவர் கிளைத்தலை யுடைய நெருப்பினது முழக்கம் போன்ற சுக்கிலத் தியானமென்னு மம்பு பட்டுத் தள்ளுகையினாலே வீழ்ந்து, அவர் காலாட்படை சூழ்ந்து கிடக்கப்பட்டாரென்க. உணர்வென்றது-மதிஞானாவரணீயம், சுருதஞானா வரணீயம், அவதிஞானாவரணீயம், மனப்பரியயஞானாவரணீயம், கேவலஞானா வரணீயம் என்பனவற்றை. அவற்றுள், மதிஞானா வரணீயம்-சுவபாவ புத்தியை மறைப்பது. சுருதஞான வரணீயம்-சுருத ஞானத்தை மறைப்பது. அவதிஞானாவரணீயம்-அதீதகதமான பரிஞானத்தை மறப்பது; அஃதாவது தன்னுடைய முற்பிறப்பை யறியு மறிவை மறைப்பது. மனப்பரியய ஞானா வரணீயம் -மனப்பரியய ஞானத்தை மறைப்பது;என்பது தன்னுடைய முற்பிறப்பையும், பிறருடைய முற்பிறப்பையுமறியு மறிவை மறைப்பது. கேவல ஞானாவரணீயம்-திரிகால ஞானத்தையு மறைப்பது. காட்சியென்றது-சக்குதரிசனாவர ணீயம்-அசக்குதரிசனாவரணீயம், அவதிதரிசனா வரணீயம், கேவல தரிசனாவரணீயம் என்பனவற்றை.அவற்றுள். சக்கு தரிசனாவரணீய மென்பது-கண்ணலாறியு மறிவுக்குமுன்காணுங் காட்சியை மறைப்பது. அசக்குதரிசனா வரணீயமென்பது-கண்ணொழிந்த நாக்கிந்திரியங் களினாலு மறியுமறிவுக்கு முன்காணுங்காட்சியை மறைப்பது.கேவல தரிசனாவரணீய மென்பது-கேவல ஞானத்துக்கு முன்காணுங் காட்சியை மறைப்பது. பேறென்றது-தானாந்தராயம், இலாபாந் தராயம், போகாந்தராயம், உபபோகாந்தராயம், வீரியாந்தராயம் என்பன வற்றை.அவற்றுள், தானந்தராயமாவது-கொடையினை விலக்குவது. இலாபாந்தராயமாவது-இலாபத்தை இடையிலே விலக்குவது. போகாந்தராயமாவது-துய்த்தற்குரிய போகங்களை விலக்குவது. உபபோகாந்தராயமாவது-அனுபவிக்கும் பொருள் களை விலக்குவது. வீரியாந்தராயமாவது-வீரியத்தைவிலக்குவது. காற்படையாவன; பரிசேந்திரியம், நயநேந்திரியம் முதலாயின. (483) 3081. காதிப்போர் மன்னர் வீழக்கணையெரி சிதறி வெய்யோ னோதிய வகையி னொன்றி யுலகுச்சி முளைத்த தேபோல் வீதிபோ யுலக மூன்றும் விழுங்கியிட் டலோக நுங்கி யாதியந் தகன்ற நான்மைக் கொடியெடுத் திறைமை கொண்டான். இ-ள். அங்ஙனம் போர்செய்யும் உபாதியாகிய மன்னர் பட்டு வீழும்படி கணையாகியநெருப்பைத் தூவிக்கொன்று, பின்னர் ஆகமத்தி லோதிய கூற்றிலே பொருந்தி, வெய்யோன், உலகுச்சியிலே முளைத் தன்மைபோலப் பரக்கப்போய் உலகமூன்றையும் விழுங்கி அலோகத்தையும் விழுங்கிப் பின்னர் ஆதியுமந்தமுகன்ற நான்கு கூறாகிய வெற்றிக்கொடியையெடுத்து இறைவனாந் தன்மைமையக் கொண்டானென்க. அந்நான்காவன; அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்த வீரியம், அநந்தசுகம் எனவிவை. (484) 3083. பசும்பொனி னுலகிற் றேவர் பயிர்வளை முரசமார்ப்ப அசும்புசேர் களிறு திண்டே ரலைமணிப் புரவி வேங்கை விசும்பியங் கரியோ டாளி விடைமயி லன்ன நாக நயந்தவை பிறவு மூர்ந்து நாதன்றாள் கோயில் கொண்டார். பயிர்வளை-அழைக்கின்ற சங்கு. இ-ள். தேவர்கள், களிறுமுதலிய வாகனங்களையும், விரும் பின விவற்றையுமேறி வளையுமுரசுமார்ப்ப வந்து நாதனுடைய தாளைக் கோயிலாகக் கொண்டாரென்க. (485) 3084. நறுமலர் மாலை சாந்தம் பரூஉத் துளித் துவலை நன்னீர்க் கறைமுகில் சொரியக் காய்பொற் கற்பக மாலை யேந்திச் சிறகுறப் பரப்பி யன்னம் பறப்பன போல வீண்டி நிறைகடல் விஞ்சை வேந்தர் நீணில மன்னர் சேர்ந்தார். இ-ள். விஞ்சைவேந்தர், கற்பகமாலையை யேந்திஅன்னம் பறப்பன போலப் பறந்துவந்து ஈண்டித் தாளைச் சேர்ந்தார்; பின்னர் நீணிலத்து மன்னர், மாலையையேந்திக் கரியமுகில் பருந்துளி யோடு கூடியது வலையைச் சொரியுமாறுபோலே சந்தனத்தை யுடைய பனிநீரைச் சொரியும்படி நிறைகடல்போல் வந்து தாளைச் சேர்ந்தரென்க. (486) 3085. விண்ணியங் கருக்கன் வீழ்ந்து மீனிலங் கொள்வதே போன் மண்ணெலாம் பைம்பொன் மாரி மலர்மழை சொரிந்து வாழ்த்தி யெண்ணிலாத் தொழில்க டோற்றி யிந்திரர் மருள வாடிக் கண்முழு துடம்பிற் றோன்றிச் சுதஞ்ணன் களிப்புற் றானே. இ-ள். அருக்கன் விரும்பி மருளாநிற்க, விசும்பிலே யியங்கு மீன்கள் நிலத்தே குவிந்தாற்போல மண்ணிலுள்ளார் குவிந்து மலர் மழை சொரிந்து மருளாநிற்க, இந்திரர் பொன் மாரியைச் சொரிந்து வாழ்த்திக் தொழில்கள் தோற்றி மருளாநிற்கச் சுதஞ்சணன், உடம்பு முழுதினும் கண்டோன்றி யாடிக் களிப்புற்றா னென்க. தொழில்கடோற்றி-மகிழ்ச்சியாற் கூத்துமுதலிய தொழில்க டோற்றி. (487) 3086. குளித்தெழு வயிர முத்தத் தொத்தெரி கொண்டு மின்ன வளித்துல கோம்பு மாலை யகன்குடை கவித்த தாங்கு வளிப்பொர வுளருந் திங்கட் கதிரெனக் கவரி பொங்கத் தெளித்துவில் லுமிழுஞ் செம்பொ னாசனஞ் சேர்ந்த தன்றே. எரியு மாணிக்க மாலையாலே தம்மொளிமறைந்து பின்னரும் எழும் வயிரத்தையும் முத்தத்தொத்தையுங்கொண்டு குடைமின்னக் கவித்து. இ-ள். அப்பொழுது காற்றுஒன்றோடொன்று பொரும் படி யுளருங்கவரி திங்கட்கதிரெனப் பொங்காநிற்க ஆசனஞ் சேர்ந்தது; அவ்வளவிலே யுலகை யளித்தோம்புங் குடை வந்து கவித்ததென்க. (488) 34. மணியரும்பதம் வேறு 3087. மணியுமிழ் திருக்கேசம் வானவ ரகிற்புகையும் பிணியவிழ்ந்த கற்பகமும் பெயந்தோடக் கமழுமாற் றுணியரு வினையெறிந்தாற் கதுநாற்றஞ் சொல்லலா மணிதிக ழலசுவா வதனகடாஞ் சாற்றாதோ. துணியருவினை-நீக்குதற்கரியகென்று துணிந்த வினை. இ-ள்.அரசுவாவைஅதன்கடாமேஅரசுவாவென்று சாற்றாதோ? அது போல வினையைக் கெடுத்தாற்கு இயல்பாக வுளதாம் நாற்றமாகிய வதனைக் கேசந்தானே புகையுங் கற்பகப் பூவுங் கெட்டுப்போம்படி கமழ்ந்து கூறாநிற்கும்;ஆதலால் நமக்கும் அதன்றன்மை சொல்லலா மென்றாரென்க. (489) 3088. முழங்குதிரு மணிமுறுவன் முருக்கிதழ் கொடிப்பவழத் தழங்குரல்வாய் தளைவிழ்ந்த மந்தாரந் தவநாறும் அழுங்கல்சூழ் வினைவெறுத்தாற் கதுநாற்ற மறியலாம். வழங்குபொன் வரைவளரும் பைங்கண்மா வுரையாதோ. முத்துப்போலும் முறுவலையுடைய வாய்; முருக்கி தழையும், பவழத்தையும் போன்றவாய்; தழங்கு குரலையுடைய வாய். இ-ள். மேருவிலே வளரு நாவியை அதனிடத்து வழங்கு நாற்றந் தானே நாவியென்று கூறாதோ? அதுபோல இரக்கத்தை யுடைத்தாய்ச் சூழ்ந்த வினையை வெறுத்துக்கெடுத்தாற்கு இயல்பாக வுளதாநாற்ற மாகிய வதனை வாய்தானே பிணியவிழ்ந்த மந்தாரங் கெட நாறிக் கூறாநிற்கும்; ஆதலால்,நமக்கும் அதன்றன் மை யறிந்து கூறலா மென்றாரென்க. (490) 3089. உறுப்பெலா மொளியுமிழ்ந் துணர்வரிதா யிருசுடருங் குறைத்தடுக்கிக் குவித்ததோர் குன்றேபோன் றிலங்குமால் வெறுத்திரு வினையுதிர்த்தாற் கதுவண்ணம் விளம்பலாங் கறுப்பொழிந்த கனையெரிவாய்க் காரிரும்பே கரியன்றே. .இ-ள். இருவினையைவெறுத்துக் கெடுத்தாற்கு இயல்பாக உளதா நிறமாகி யவதனை உறுப்பெல்லாம், ஒளியைக்கான்று, எரியின் வாய்க் கிடந்து தன்கறுப்புத்தீர்ந்த இரும்பே சான்றன்றோ வென்று குன்று போன்றுவிளங்கிக் கூறாநிற்கும்; ஆதலால், நமக்கும் அதன் றன்மை கூறலாமென்றாரென்க. இருசுடரென்றது ஈண்டு ஞாயிற்றையும், நெருப்பையுமாம். இம்மூன்றுகவியுந் தேவர் மகிழ்ச்சியாலே யெடுத்துக்காட்டு வமையான் உலகிற்குஅறிவித்தார். (491) வேறு 3090. வானோ ரேந்து மலர்மாரி வண்ணச் சாந்தம் பூஞ்சுண்ணங் கானார் கமழ்தாமங் கறையார் முகிலி னிறங்காட்டுந் தேனார் புகைக ளிவையெல்லாந் திகைப்பத் திசைக்கண் மணநாறி யானா கமழுந் திருவடிப்போ தமரர் முடிமே லணிந்தாரே. பூ-பொலிவு. கறை-கறுப்பு. முகிலினிறத்தைத் தாங் காட்டிக் கொள்ளும் புகைகள். இ-ள். வானோரேந்துகின்ற பூமழை,. சாந்தம், சுண்ணம், புகைகள், பிண்டித்தாமமாகியவிவையெல்லாங்கெட இயல்பாகிய மணம் திசை களெங்குந்தோன்றி அமையாவாய் நாறுந்திருவடித் தாமரையைத் தேவர் முடிமேலே அணிந்தாரென்க. (492) வேறு 3091. சுறவுக்கொடிக் கடவுளொடு காலற்றொலைத் தோயெம் பிறவியறு கென்றுபிற சிந்தையில ராகி நறவமலர் வேய்ந்துநறுஞ் சாந்துநில மெழுகித் துறவுநெறிக் கடவுளடி தூமமொடு தொழுதார். இ-ள். வஞ்சையர், வேறொருசிந்தையிலாராய் வேய்ந்து மெழுகி, காமனொடு காலனைக் கெடுத்தோய்! எம்பிறவி யறுவ தாகவென்று கூறி, அவனடியைத் தூமத்தோடே தொழுதாரென்க. (493) 3092(1) பாலனைய சிந்தைசுட ரப்படர்செய் காதி நாபலுமுட னேரிந்து நான்மைவரம் பாகிக் காலமொரு மூன்றுமுட னேயுணர்ந்த கடவுள் கோலமலர்ச் சேவடிகள் கொண்டுதொழு தும்யாம். 3093(2) முழங்குகட னெற்றிமுளைத் தெழுந்தசுட ரேபோ லழுங்கல்வினை யலறநிமிர்த் தாங்குலக மூன்றும் விழுங்கியுமி ழாதுகுணம் வித்தியிருந் தோய்நின் னிழுங்கில்குணச் சேவடிக ளேத்தித்தொழு தும்யாம். 3094(3) ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம் பாகி நீத்தவரு ளிந்திரனை நின்றுதொழு தமரர் நாத்தழும்ப வேத்தித்தவ நங்கையவர் நண்ணித் தோத்திரங்க ளோதித்துகண் மாசுதுணிக் கின்றார். இவை மூன்றுமொருதொடர். 1. காதிநான்காவன: ஞானாவரணீய முதலியன. அவை “புணரி போல்”(சீவக.3081) என்னுங்கவியிற்கூறப்பட்டன. நான்மையாவன: அநந்தஞானம்; அநந்ததரிசனம், அநந்த வீரியம்,அநந்தசுகம். 2. அழுங்கல்-இரக்கம். நிமிர்ந்தோடுகையினாலே அவ்விடத்து உலகமூன்றினையுமுணர்ந்து பின்னர் அந்நிலை நீங்காதே குணத்தை வித்தியிருந்தோய். இழுக்கில் குணம்; இழுங்கு-விகாரம்; இழுங்கு-நீங்குதலுமாம். 3. எல்லைவரம்பாகி-சிறுவரம்பன்றிப் பெருவரம்பாய் .நீத் தவருள்-பெருக்கத்தையுடைய வருள். இந்திரன்-முனீந்திரன். ஏத்தி-ஏத்துகையினாலே. இது பிறவினைகொண்டது. இ-ள். அமரர், சுக்கிலத்தியானத்தையுடைய சிந்தை விளங்கு கையினாலே அரிந்து வரம்பாய் உணர்ந்த கடவுளே! நின்னடி களை யுட்கொண்டு யாமுந் தொழுவேமென்றும், சுடர்போலிருந் தோய்! நின்னடிகளை யாமுந் தொழுவே மென்றுங் கூறி இந்திர னைத்தொழுது ஏத்துகையினாலே, தேவியராய்த் துறந்தவர்களும் நண்ணி ஒதித் துகளாகிய வழுக்கைத் துணியாநின்றாரென்க. (494-6) வேறு 3095(1) செய்தவ னேவினை சேரும தற்கெனு மையமின் றாயலர் தாமரை மேலடி மொய்ம்மலர் தூய்முனி யாதுவ ணங்குது மெய்யுல கிற்குவி ளம்பிய வேந்தே. 3096(2) நல்லன வேயென நாடியோர்புடை யல்லன வேயறை கின்றபுன் னாதர்கள் பல்வினைக் கும்முலைத் தாய்பயந் தாரவர் சொல்லுவ நீசுக தாவுரை யாயே. 3097(2) மதியறி யாக்குணத் தோனடி வாழ்த்தி நிதியறை போனிறைந் தார்நிக ரில்லாத் துதியறை யாத்தொழு தார்மலர் சிந்தா விதியறி யும்படி வீரனை மாதோ. இவை மூன்றுமொருதொடர். 1. என்னும்-சிறிதும். 2. நல்லபொருள்களே யென்றாராய்ந்து ஒருகூற்றிலே தீயன வாகிய பொருள்களையே சாற்றுகின்ற புல்லறிவினையுடைய பலசமயிகள், பல்வினைகளையும் வளர்த்தற்குச் செவிலித்தாயை யுண்டாக்கிவிட்டார். என்றது-அவர்கூறிய ஆகமங்களிலே இருவினை கெடுக்குமாறு கூறிற்றலரென்றதாம். 3. மதியறியாக்குணத்தோன்-மதிஞானத்தான் அறியவொண்ணாக் குணத்தோன். நிதியறைபோலே கேள்வியால் பரமாமங்கள் நிறைந்த தேவியர். ஒப்பிலாத் தோத்திரம். இ-ள்.அங்ஙனம் துணிக்கின்றதேவியர், மெய்ப்பொருளை உலகிற்கு விளம்பிய வேந்தே! சுகதா! வினையைச்செய்தவன் சிறிதும் ஐயமின்றாய் எண்வினையையுமடைவன்; அவற்றிற்குப் புன்னாதர்கள் செவிலியைப் பயந்தார்; அதுகேட்டற்கு யாங்கள் நின்னடியை வணங்குகின்றோம்; அவர் கூறுவனவற்றை நீயுரை யாயென்று குணத்தோனடியை வாழ்த்தி அறைந்து சிந்தி இருவினையைத் தாங்களறியும்படி யவனைத் தொழுதாரென்க. (497-9) வேறு 3098. தீவினைக் குழவி செற்ற மெனும்பெயர்ச் செவிலி கையுள்வீவினை ன்றிக் காம முலையுண்டு வளர்ந்து வீங்கித் தாவினை யின்றி வெந்நோய்க் கதிகளுட் டவழு மென்ற கோவினை யன்றி யெநாக் கோதையர்க் கூற லுண்டே. வீவீனையின்றி-கெடுகின்றதொழிலின்றி; ஒழிதலின்றி யென்பாருமுளர். தாவினையின்றி-குதித்துப்போம் வினையின்றி. கோதையர்-கோதாகிய பொருளையுடையவர். இ-ள்.அவற்றுள், அவன் றீவினையின்றன்மை கூறக்கேட்ட தேவியர், தீவினையாகிய குழவி செற்றமென்னுஞ் செவிலி கையிலே யிருந்து காமமாகிய முலையை யுண்டு வளர்ந்து வீங்கி வீவினை யின்றி நோய்க்கதிகளிலே தவழுமென்று கூறிய இக்கோவையன்றிப் பயனில்பொருளைக் கூறியவர்களை எந்நாக் கொண்டாடுதலின் றென்று புகழ்ந்தாரென்க. (500) 3099. நல்வினைக் குழவி நன்னீர்த் தயாவெனுஞ் செவிலி நாளும் புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென் மணிமுலை கவர்ந்து வீங்கிச் செல்லுமாற் றேவர் கோவா யெனுமிருள் கழிந்த சொல்லா லல்லிமே னடந்த கோவே யச்சத்து ணீங்கி னோமே. இ-ள். பின்னர் அவன் நல்வினையின்றன்மை கூறக்கேட்ட தேவியர், கோவே! நல்வினையாகிய குழவி அருளென்னுஞ் செவிலி தழுவிக் கொண்டெடுப்ப,அவள்முலையையுண்டு வீங்கியஇந்தி ரனாய்ச் செல்லாநிற்குமென்று கூறிய இருணீங்கின சொல்லாலே அச்சம்நீங்கினோமென்றாரென்க. இக்கவியிரண்டுங் கொண்டுகூட்டென்றுணர்க. (501) வேறு 3100. மணியினுக் கொளியக மலர்க்கு மல்கிய வணிமை யங்குளிர் வாச மல்லதூஉந் திணியிமி லேற்றினுக் கொதுக்கஞ் செல்வநின் னிணைமலர் சேவடி கொடுத்த வென்பவே. மணியென்றது-மணியுயிரை;அதுவீடுபெற்றவுயிராம். அழகமைந்த அகமலரென்றது-தங்களுடைய இதயகமலங் களை. இமிலேறென்றது-அறத்தினை;தருமத்திற்கு அது வடிவா கலின். இ-ள். அதேவியர், பின்னருஞ் செல்லவனே! நின்சேவடிகள் மணிக்கு ஒளியைக்கொடுத்தன; எம்முடைய அகப்பூவிற்கு வாசத்தைக் கொடுத்தன; அன்றியுந் தருமத்திற்கு இருப்பிடத்தைக் கொடுத்தனவென்று புகழாநிற்பரென்க. (502) 35. பரிநிர்வாணம் 3101. இகலிருண் முழுமுத துமிய வீண்டுநீர்ப் பகல்சுமந் தெழுதரும் பருதி யன்னநின் னிகலிரு மரைமல ரளித்த சேவடி தொகலருங் கருவினை துணிக்கு மெஃகமே. தன்னொடு மாறுபடுகின்ற இருளாகிய பெரிய வடிவு துணியும்படி ஒளியைச்சுமந்து கடலிலே தோன்றும் ஞாயிற்றை யொத்தனவாய் இருவினையோடுஇகலுமடி. இ-ள். அவர், பின்னரும் பழவினையறுக்கும் வாள் நின்னடி யென்று புகழ்ந்தாரென்க. (503) வேறு 3102. மீன்றயங்கு திங்கண் முகநெடுங்கண் மெல்லியலார் தேன்றயங்கு செந்நாவிற் சின்மென் கிளிக்கிளவி வான்றயங்கு வாமன் குணம்பாட வாழியரோ கான்றயங்கி நில்லா கருவினைகாற் பெய்தனவே. இ-ள். மீன்றிரளுக்குள்ளே கிடந்தசையுங் திங்கள்போலும் முகத்தையும் கண்ணையுமுடைய தேவியர், தந்நாவிற் கிளவி யாலே வாமன்குணத்தைப்பாட, அவர்தீவினைகள் அசைந்து நில்லா வாய்க் காட்டின்கண்ணே ஓடினவென்க. வானிலுள்ளாருமசையும் வாமன்குணம். (504) வேறு 3103. மதியம்பொழி தீங்கதிர்கள் பருகிமல ராம்பல் பொதியவிழ்ந்து தேன்றுளிப்ப போன்றுபொரு வில்லார் விதியிற்களித் தாரளிவன் விழுக்குணங்க ளேத்தித் துதியிற்றொழு தார்துளங்கு முள்ளமது நீத்தார். இ-ள்.அங்ஙனந் தீவினைகெடுதலின், அவ்வொப்பில்லாத தேவியர், அத்தீவினையாற் றுளங்குமுள்ளமாகியவது நீங்கப் பட்டாராய்ப் பின்னர் மதியின்கதிரைப் பருகி யலர்ந்தவாம்பல் மிகவிரிந்து தேனைத்துளிக்கு மாறுபோன்று, அவன்கூற்றினைக் கேட்டுக் களித்தார்; களித்து அறிவன்குணங்களையேத்தித் துதிகளோடே யவனைத் தொழுதாரென்க. (505) 3104. ஆர்ந்தகுணச் செல்வனடித் தாமரைக ளேத்திச் சேர்ந்துதவ வீரர்திசை சிலம்பத்துதி யோதித் தூர்ந்தவிரு டுணிக்குஞ்சுடர் தொழுதருளு கென்றார் கூர்ந்தமிழ்த மாரியெனக் கொற்றவனுஞ் சொன்னான். இ-ள். அங்ஙனம் அவனடிகளையேத்தி எல்லாருங்கூடித் துதிகளை யோதித்தொழுது நெடுங்காலமாய்ச் செறிந்த விருளை யறுக்குஞ்சுடரை யெமக்கு அருளிச்செய்வாயென்றார்; அவனும் அதனை யருளிச்செய்தானென்க. சுடர்-பரமாகமம் அவன்கொன்னபடி மேற்கூறுகின்றார். (506) வேறு 3105. இன்பமற் றென்னும் பேரா னெழுந்தபுற் கற்றை தீற்றித் துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியெனுந் தொழுவிற் றோன்றி நின்றபற் றார்வ நீக்கி நிருமலன் பாதஞ் சேரி னன்புவிற் றுண்டு போகிச் சிவகதி யடைய லாமே. மற்று-அசை. இ-ள்.இன்பமாகிய பெரிய பசு, நான்குகதியாகிய பெரிய தொழுவிலே தோன்றிக் கற்றைதீற்றப்பட்டுத் துன்பமாகிய பாலைச் சுரக்கும்; அதனிடத்துநின்றபற்றையும், ஆர்வத்தையு நீக்கிமலமற்றவன் றிருவடிகளை அறிவுடையோர் சேர்வராயின், அன்பைக்கொடுத்து அத்திருவடிகளைத் தியானித்துப்போய் வீட்டுலகை அடைவார்களென்று கூறினானென்க. எழுந்த புற்கற்றை-மனவெழுச்சியாகிய புற்கற்றை. (507) 3106. வாட்கையம் மைந்த ராயும் வனமுலை மகளி ராயும் வேட்கையை மிகுத்து வித்திப் பிறவிநோய் விளைத்து வீயாத் தேட்கையிற் கொண்ட தொக்கு நிச்சநோய்ச்செற்றப் புன்றோற் பூட்கையை முனியின் வாமன் பொன்னடி தொழுமி னென்றான். தேளைக் கைக்குள்ளே பிடித்திருந்த தன்மையையொக்கும் புன்றோல்; இஃது ஆகுபெயரால் உடம்பாயிற்று; நாடோறுந் தாகமு மோக முமாகிய நோயினையுஞ் செற்றத்தினையும் மேற் கோளினையு முடைய புன்றோல். இ-ள். அங்ஙனங்கூறி, நீர் ஆசையைமிகுத்து விதைத்து வாளைக் கையிலேயுடைய அழகிய மைந்தராயும் மகளிராயும் வரும் பிறவி நோயை விளைத்து வீந்துபோகாதே கொண்ட தொக்கும் புன்றோலை முனிவீராயின், வாமனடியைக் கைதொழு மினென்று கூறினானென்க.Ð வீயாது-விகாரம். (508) வேறு 3107(1) தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோன் மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமே லின்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப் பொன்னுயி ராய்ப்பிறந் துயர்ந்து போகுமே. 3108(2) நெருப்புயிர்க் காக்கிநோய் செய்யி னிச்சமு முருப்புயி ரிருவினை யுதைப்ப வீழ்ந்தபின் புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொதிந்து சுட்டிட விருப்புயி ராகிவெந் தெரியுள் வீழுமே. 3109(3) மழைக்குர லுருமுவா வோத மாக்கடற் பிழைத்ததோ ரருமணி பெற்ற தொக்குமாற் குழைத்தலைப் பிண்டியான் குளிர்கொ ணல்லறந் தழைத்தலைச் சந்தனப் பொதும்பர் சார்ந்ததே. 3110(4) மல்குபூங் கற்பக மரத்தி னீழலா னல்குவா னொருவனை நயந்து நாடுமோ பில்குபூம் பிண்டியா னமிர்துண் டார்பிறர் செல்வங்கண் டதற்வாச் சிந்தை செய்யுமோ. 3111(5) மணியுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியி னணியுயிர் செம்புயி ரிரும்பு போலவாம் பிணியுயி ரிறுதியாப் பேசி னேனினித் துணிமின மெனத்தொழு திறைஞ்சி வாழ்த்தினார். இவை யைந்துமொருதொடர். 1. இறைவன்-சக்கரவர்த்தி.இன்பமூர்த்தி-சுகரூபி. பொன்னு யிராய்-அருகந்தாவத்தையாய். 2. உயிர்களுக்கு வெம்மையுண்டாக்கி நோய்செய்யின், உருப்பை யுயிர்க்கின்ற அப்பெரிய தீவினை நோயிடத்தே தள்ளுகை யினாலே, அந்தநோய் புரிமேற்கட்டி இறுகப் பொதிந்து சுட வீழ்ந்தபின்பு தீவினை தோய்ந்தவுயிராய்ப் போய் நரகத்துக்குள்ளே வெந்துவீழும். 3. உருமுக்குரலையுடைய மழைபெய்கின்ற உவாக்கடல். இச்சந்தனப்பொதும்பரிலே பிண்டியானறஞ் சார்ந்ததனை நீர் பெற்ற தன்மை கடலிலே வீழ்ந்த மணியைப் பெற்றதொக்கும். 4. கற்பகத்தினிழலிடத்தே தங்குவான் வேறோர் உப காரியைத் தேடான்; அது போல இறைவனறங்கேட்டோர் சிந்தை பிறர் செல்வத்தைக்கண்டு அதற்கு அவாச்செய்யாது. 5. மணியுயிர்-வீடுபெற்றவுயிர். பொன்னுயிர்-தேவருயிர். வெள்ளியுயிர்-மக்களுயிர்செம்புயிர்-மக்களிற் கீழாயினாருயிரும், விலங்கினுயிரும். இரும்புபோலவாம் பிணியுயிர்-நரகருயிர். இ-ள்.அவன் அங்ஙனங்கூறிப் பின்னரும்ஒருவன் தன்னுயிரைக் காக்குமாறுபோலப் பலவுயிரையுங் காப்பானாயின், இறைவனாய் மூர்த்தியாய்ப் பொன்னுயிராய் விசும்பின் கணியங்கி வீடுபெறும்; அங்ஙனம் செய்யாது நோய் செய்யின் நரகத்தே வீழும், அங்ஙனம் வீழாத படி நீயிர் ஈண்டு அறம்பெற்ற தன்மை கடலின் கண்ணே வீழ்ந்த மணியைப் பெற்றதொக்கம்; அவ்வறங்கேட்டோர் சிந்தை அவாச் செய்யாது; யானுமக்கு இங்ஙனம் பிணியுயிர் ஈறாகப்பேசினேன்; இனி அவ்வறத் தைத் துணிவீராகவென்றுகூற,அதுகேட்டு அவருமிறைஞ்சித் தொழுது ஏத்தினாரென்க. (509-13) 3112. விண்ணின்மேன் மலர்மழை பொழிய வீங்குபாற் றெண்ணிலாத் திருமதி சொரியத் தேமலர் மண்ணின்மேன் மழகதிர் நடப்ப தொத்ததே யண்ணலா ருலாய்நிமிர்ந் தளித்த வண்ணமே. திசைகள் பரந்த மண். இ-ள்.அத்தலைவன் அருளின்கண் மிக்கு உலாய் உலகிடத் துயிரை அளித்த தன்மை, இளஞாயிறு பூமழைபொழிய மதிநிலாச்சொரியத் திரியுந்தன்மையை யொத்ததென்க. என்றதனாற்பயன்; இளஞாயிறு இருளைக்கெடுத்து உலகையளித்தாற்போல, இவனும் மக்கள் மனத்திருளைக் கெடுத்து அறக்கக் கதிரைப் பரப்புகின்றானென்பதாம். மதி-முக்குடை. பொழியச் சொரியத் திரிவதோர்ஞாயிறு-இல்பொருளுவமை. (514) வேறு 3113. பான்மிடை யமிர்து போன்று பருகலாம் பயத்த வாகி வானிடை முழக்கிற் கூறி வாலற வமிழ்த மூட்டித் தேனுடை மலர்கள் சிந்தித் திசைதொழச் சென்ற பின்னாட் டானுடை யுலகங் கொள்ளச் சாமிநாள் சார்ந்த தன்றே. கூறுபாடுநெருங்கின அமிர்துபோன்றென்றது-கேட்போ ருணர் விற்கும்,அவர்நிற்கின்ற நிலைக்குமேற்பக் கூறுபாடுடைய அறங் களென்றற்கு. வாலிதாய் எல்லாருமறியப் படுகின்ற வறம். தானுடையுலகம்-தான் முன்புசெய்த தவத்தாலே தனக்காகிய வீடு. இ-ள். சாமி, அங்ஙனம் பருகலாம் பயத்தவாய் அறியும் அமிர்த்ததைக் கூறியூட்டி யெல்லாருந்தொழும்படி நடந்த பிற்காலத்தே, வீட்டுலகத்தை அவன் கொள்ளும்படியாக நாள்சேர்ந்ததென்க. என்றது-வீடுபெறக் கற்பித்தகாலம் வந்ததென்றவாறாம். (515) 3114. உழவித்தி யுறுதி கொள்வார் கொண்டுய்யப் போகல் வேண்டித் தொழுவித்தி யறத்தை வைத்துத் துளங்கிமி லேறு சேர்ந்த குழவித்தண் டிங்க ளன்ன விருக்கை யாகிக் கோமான் விழவித்தாய் வீடு பெற்றான் விளங்கிநால் வினையும் வென்றே. இ-ள்.அக்கோமான், உழவுத்தொழிலைப்பரப்பி யதன் பயனைக் கொள்ளவல்லார்கொண்டு பிறவியைத் தப்பப்போக லைத் தான்விரும்பிச் சமவசரணத்தே அறத்தையுண்டாக்கி வைத்து வைகாசிப்பிறைபோன்ற பல்லியங்காசனத்தையுடையனாய் விளங்கி விழவுக்குக்காரணமாய் நால்வினையையும் வென்று வீடுபெற்றா னென்க. உழவு-வழிபாடு.ஏறுசேர்ந்ததிங்கள்-இடபவிராசியைச் சேர்ந்த திங்கள். நால்வினையாவன; பின்புநின்ற வேதநீயம், ஆயுஷ்யம்,நாமம், கோத்திரம் எனவிவை. (516) 3115. துந்துபி கறங்க வார்த்துத் துகிற்கொடி நுடங்க வேந்தி யந்தரம் விளங்க வெங்கு மணிகமூர்ந் தமர ரீணடி வந்துபொன் மாரி சிந்தி மலர்மழை சொரிந்து சாந்தும் கெந்தநா றகிலுங் கூட்டிக் கிளர்முடி யுறுத்தி னாரே. இ-ள். அப்பொழுது, தேவர், ஈண்டி வாச்சிய மொலிக்க வார்த்து நுடங்கக் கொடியையேந்தி ஆகாயமெங்கும விளங்க ஊர்திகளையேறி வந்து சிந்திச் சொரிந்து சாந்தையும் அகிற் புகையையுஞ் சேர்த்தி வணங்கினாரென்க. (517) 3116. முளைத்தெழு பருதி மொய்கொண் முழங்கழற் குளித்த தேபோற் றிளைத்தேழு கொடிகள் செந்தீத் திருமணி யுடம்பு நுங்க விளைத்தபின் விண்ணு மண்ணு மங்கலம் வகையிற் செய்து வளைப்பொலி கடலி னார்த்து வலங்கொண்டு நடந்த வன்றே. இ-ள். எழுகின்றஞாயிறு மிக்கநெருப்பிலே முழுகினாற் போலச் செந்தீக்கொடிகள் திருமேனியை விழுங்கும்படி யதனை விளைத்தC பின்பு, விண்ணிலுள்ளோரும், மண்ணிலுள்ளோரும் பரிநிர்வாண மென்னுங் கல்யாணத்தை விதியினாற்செய்து சங்காற் பொலிந்த கடல் போல வார்த்து வலஞ்செய்து போனா ரென்க. (518) 3117. கேவல மடந்தை யென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட் பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாக மாகக் காவலன் றானோர் கூறாக் கண்ணிமை யாது புல்லி மூவுல குச்சி யின்பக் கடலினுண் மூழ்கி னானே. இ-ள்.கண்ணினையும், கண்ணியையுமுடைய கேவலஞான மென்னும் பொன்ஒருபாகமாகக் காவலன் தானொருபாகமாகப் புல்லி யுச்சியிலேயிருந்து இன்பக்கடலிலே அழுந்தினானென்க. (519) 3118. பிரிதலும் பிணியு மூப்புஞ் சாதலும் பிறப்பு மில்லா வரிவையைப் புல்லி யம்பொ னணிகிளர் மாடத் தின்றேன் சொரிமது மாலை சாந்தங் குங்குமஞ் சுண்ணந் தேம்பாய் விரிபுகை விளக்கு விண்ணோ ரேந்தமற் றுறையு மன்றே. இ-ள்.விண்ணோர் மாலைமுதலியவற்றை மாடங்களிலே யேந்த நீங்குதல் முதலியன வில்லாத அரிவைப்பருகி யுறையு மென்க. (520) 36. தேவிமார் நோற்றுயர்வு 3119. வல்லவன் வடித்த வேல்போன் மலர்ந்துநீண் டகன்ற வாட்கண் மெல்லவே யுறவி யோம்பி யொதுங்கியு மிருந்து நின்று முல்லையஞ் சூட்டு வேயின் முரிந்துபோ நுசுப்பி னல்லார் மல்லற்குன் றேந்தி யன்ன மாதவ முற்றி னாரே. இ-ள்அவன் அங்ஙனமுறைகின்ற காலத்தே, நல்லார், தங்கண்ணாலே எறும்பிற்கும் ஒரேதம்பாராமற் பாதுகாத்து நடந்து ,இருந்தும், நின்றும் மலையெடுத்தாற்போன்ற மாதவத்தை முடித் தாரென்க. 21) வேறு 3120. சூழ்பொற் பாவையைச் சூழ்ந்து புல்லிய காழகப் பச்சை போன்று கண்டெறூஉம் மாழை நோக்கினார் மேனி மாசுகொண் டேழைப் பெண்பிறப் பிடியச் சிந்தித்தார். மாழை-இளமை. இ-ள்.அந்நோக்கினார், நன்றென்றுசூழ்ந்த பொற்பாவையைச் சூழ்ந்துதழுவிய கருஞ்சேற்றையுடைய தோல்போன்று முன்பு தங்கண் டெறுமேனியெல்லாம் மாசுகொண்டு பெண்பிறப்புக் கெடும்படி தியானித்தாரென்க. (522) 3121. ஆசை யார்வமோ டைய மின்றியே யோசை போயுல குண்ண நோற்றபி னேசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த். தூய ஞானமாய்த் துறக்க மெய்தினார். ஆர்வம்-இரதிகன்மம்.ஐயமின்றியென்றது-தரிசன விசுத்தி யைக்கூறிற்று. இ-ள். ஆசையும், பற்றும், ஐயமுமின்றிப் போய்ப் புகழை யுடைய தேவருவகிலுள்ளவற்றை நுகரும்படி நோற்ற பின்பு பொல்லாதென்றுகூறும் பெண்பிறப்பைக் கைவிட்டு இந்திரர் களாய் ஞானம்பெற்றுச் சுவர்க்கத்தை யெய்தினாரென்க. (523) 3122. காம வல்லிகள் கலந்து புல்லிய யூமென் கற்பகப் பொன்ம ரங்கள்போற் றாம வார்குழற் றைய லார்முலை யேம மாகிய வின்ப மெய்தினார். இ-ள்.அங்ஙனமெய்தினவர், வல்லி தழுவிய கற்பகமரம் போலே தெய்வமகளிர்முயக்கத்தைப் பெற்றாரென்க. இங்ஙன முயங்கித் தாமெய்திய செல்வத்தை வியந்துகூறுதலின், அஃது ஊடலையும், புலவியையும் விளைத்ததென்பர் மேல். (524) 3123. கலவி யாகிய காமத் தின்பயன் புலவி யாதலாற் பொன்னங் கொம்பனா ருலவு கண்மல ரூடற் செவ்விநோக் கிலைகொள் பூணினா ரிதயம் போழ்ந்ததே. இ-ள். கலவியாலுண்டாகிய காமத்தின்பயன் புலவியா தலால் அப்புலவியை மேல்விளைத்தற்கு அவர்தேவியர் ஊடிப் பார்த்த நோக்கு அவர்நெஞ்சினை வருத்தியதென்க. (525) 3124. பூவி னுள்ளவள் புகுந்து முள்ளத்தா ணாவிற் பெண்பெயர் நவிற்றி னீரேனக் காவிக் கண்கடை யிடுகக் காற்சிலம் பாவித் தார்த்தன வம்மென் குஞ்சியே. இ-ள். அப்பொழுது, அவர் நும்முள்ளத்தே திருமகளிருந்தாள்; நாமகளையும வாக்காற்கூறினீரென்று புலவி விளைத்துக் கண்ணருகி நோக்குதலாலே குஞ்சியிலே சிலம்பார்த்தனவென்க. ஆவித்து-வாய்விட்டு. (526) 3125. நெஞ்சி னேரிவைருந்து மென்றுபூங் குஞ்சி யேற்றது குறிக்கொ ணீயெனாப் பஞ்சின் மெல்லடி பாவை பூநுதா லஞ்சி னார்க்கதோர் தவற தாகுமே. இ-ள். அங்ஙனம் ஆர்த்தலைப் பெற்றவர்கள், பாவாய்! பூநுதால்! நின்னடி மார்பிலே பட்டாற் பூணாலே அவை வருந்து மென்று குஞ்சியிலேற்றது; அத்தன்மையைக்கருதுவாயென்று கூறி, பின்னரும், தவறு பிறக்குமென்று அஞ்சினார் சிலர்க்குத் தவறாகிய அது பிறந்தே விடுமாயிருந்ததென்று கூறி அவர் புலவியைத் தீர்த்தாரென்க. (527) 3126(1) தவளைக் கிண்கிணித் தாமஞ் சேர்த்தியுங் குவளைக் கண்மலர் கோலம் வாழ்த்தியு மிவளைக் கண்ட கண்ணிமைக்கு மோவெனாத் திவளத் தேமலர்க் கண்ணி சேர்த்தியும், 3127(2) பன்ம ணிக்கதிர்ப் பரவை மேகலை மின்ன ணிந்துகத் திருத்தி வெம்முலைப் பொன்ன ணிந்துபூஞ் சுண்ணந் தைவர நன்ம ணிக்குழை யிரண்டு நக்கவே. 3128(3) செய்த நீர்மையார் செயப்பட் டார்கடா மெய்தி யாவையும் முணர்க வென்பபோன் மைய வாங்குழன் மடந்தை குண்டலம் நைய நின்றெலா நாண நக்கவே. இவை மூன்றுமொருதொடர். 1. தவளைவாயையுடைய சதங்கைமாலை. குவளைக் கண்மலர். 2. நன்மணிக் குழையிரண்டையு நக்கவென்றது-ஊடறீர்ந்து கூட்டந் தருதற்கு மலர்ந்து நோக்கின நோக்கை. திவள-அசைய. பொன்-அணிகலம். 3. செய்தநீர்மையார்தாம் யாவையுமெய்திச் செய்ப் பட்டார் களென்பபோல் நக்கவென்றது-முற்பிறப்பிற் பிறரை மதியாமற் செய்த தன்மையையுடையவர்கடாம் இப்பிறப்பிற் றம்மைவந்து அவை யெய்துகையினாலே இப்பொழுது பிராற் பாராமற் செயப்பட்டார் களென்றுகூறுவன போலக் குண்டல றநக்க வென்றவாறு. இது தற்குறிப்பேற்றம். தம்மையொழிந்தன வெல்லாம் இங்ஙன நகாதேநின்று நாணாநிற்க நையாநிற்கத் தாம் நக்கவென்க; என்றது-தேவிமார் முற்பவத்திற்பிள்ளையார் முடியைமிதித்த வினைப்பயத்தாற் றாங்களும் இப்பவத்து மிதியுண்டாரென்றவாறு. இ-ள். கண்மலர் நக்சு, அதனை யுணர்ந்தவர்கள் தாம் கோலத்தை வாழ்த்தியுஞ் சேர்த்தியுஞ் சேர்த்தியுந் திருத்தியும் முலையிலே பொன்னையுஞ் சுண்ணத்தையுமணிந்தும் இவளைக் கண்ட கண் இமைக்குமோ வெனக்கூறித் தைவர அதனைக்கண்டு மடந்தை குண்டலம் நக்கவென்க. இவளையென்றும், மடந்தையென்றும் ஒருமையாற் கூறினா ரேனும், “ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும்-வருவகை தானே வழக்னெ மொழிப.”(தொல்.பொருளியல்.28) என்னும் பொருளியல் வழுவ மைதியாற் பன்மை கூறிற்றென்றுணர்க. (528.30) 3129(1) செல்வக் கிண்கிணி சிலம்பத் தேன்சொரி முல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந்நலம் புல்லிப் பூண்டதார் புரள மேகலை யல்குல் வாய்திறந் தாவித் தார்த்தவே. 3130(2) இலங்கு கொம்பனார் காம மென்னும்பேர் கலந்த கள்ளினைக் கைசெய் தையென மலர்ந்து வாய்வைத்தார் மணிகொள் வள்ளத்தே நலங்கொள் சாயலார் நடுங்கி நையவே. இவையிரண்டுமொருதொடர். 1. பூண்டமேகலையென்க. 2. மணிகொள் வள்ளத்து நலங்கொள் காமமென்னும் பேர்கலந்த கள்ளினை வாய்வைத்தாரென்றது-முகத்தைத் தன்னிடத்தே கொண்ட தமது வாயாகிய வட்டிலி லேயிருந்து நன்மைகொண்ட வேட்கையென்னும் பெயர்கூடின கள்ளை அவர்கள் வாயிடத்தே வைத்தார்களென்றவாறு. என்றது-இருதிறத்தோரும் அதரபானம்பண்ணினமை கூறிற்று. கள்ளுப் போலே யெயிற்றுநீர் மகிழ்ச்சி கொடுத்தலிற் கள்ளென்றார். மலர்ந்து-மகிழ்ந்து. இ-ள். அவர்கள் தந்தேவியரை அங்ஙனங் கைசெய்து மலர்ந்து ஐயென, கொம்பனாராகிய சாயலார் நடுங்கி நையும்படி யவர்மொய்ந்நலத்தைப்புல்லி வாய்வைத்தார்;அப்பொழுது கண்ணிகள் சிந்தத் தார்புரளக் கிண்கிணி சிலம்ப மேகலை வாய்விட்டார்த்தன வென்க. ஆவித்துத் தேன்சொரி கண்ணி.தேவர்க்கு இமையாமை நோக்கி யிருந்து இன்ப நுகர்தலேயன்றி மக்களைப்போலத் தொழிலோடு கூடி இன்பநுகர்தலு முளதென்பது இதனாற் பெற்றாம். (531-2) 3131. வெம்மை கொண்டதே னமிர்த மெல்லவே யம்மை யஞ்சொலா ரார வுண்டவர் தம்மைத் தாமகிழ்ந் துறைய வித்தலைச் செம்மை மாதவர்க் குற்ற செப்புவாம். வெம்மை-வேண்டுதல்.தேன்-இனிமை. அம்மை-அமைதி. இ-ள். அங்ஙனம் புணர்ந்தபின்பு அத்தேவியர் மெல்ல அமுதத்தை யாராநிற்க, அத்தேவரும் அதனையுண்டு தம்மைத்தா மகிழ்ந்துறையா நிற்க, இவ்விடத்து நந்தட்டற்கும், தோழர்க்கும் பிறந்த செய்கை கூறுவேமென்றாரென்க. (533) 37. நந்தட்டன் தோழன் மார்நோய்றுயர்வு 3132. நாள்கண் கூடிய நகைவெண் டிங்கள்போற் காளை நந்தனுந் தோழன் மார்களு நாளு நாளினு நடுங்க நற்றவந் தாளி னீட்டினார் தம்மைத் தாம்பெற்றார். இ-ள். நந்தட்டனும், தோழன்மாரும் நாடோறுந் தன்னிடத்தே கலைகள் வந்துகூடிய மதிபோலே, நாடோறும் நாடோறும் முயற்சி யாலே நற்றவத்தைக் கண்டார்நடுங்கும்படி யீட்டினார், ஈட்டி ஐம்பொறியையுந் தம் வசமாக்கினாரென்க. (534) 3133. பாவ னைமரீஇப் பட்டினி யொடுந் தீவி னைகழூஉந் தீர்த்தன் வந்தியாப் பூவுண் வண்டன கொட்பிற் புண்ணியர் நாவின்வேட்கை யுநஞ்சி னஞ்சினார். இ-ள்.அப்புண்ணியர் பட்டினிகளோடே சோடச பாவனை களைமருவி எழுந்திருந்து இறைவனை வணங்கிப் பின்னர் உயிரைப் பாதுகாத்துத் தவஞ்செய்தற்குக் கருதிய மனக்கொட்பி னாலே பூவை யுண்கின்ற வண்டையொத்த நாவினாற் கொண்ட வுணவையும் பின்னர் நஞ்சுபோல வஞ்சிக் கைவிட்டாரென்க. வண்டொத்த வேட்கையென்றது-வண்டுபோலச் சிறிதாகக் கொள்ளுமுணவை. வேட்கை-ஆகுபெயர். (535) 3134. கருவிற் கட்டிய காலம் வந்தென வுருவ வெண்பிறைக் கோட்டி னோங்கிய வருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவருந் திருவின் றோற்றம்போற் றேவ ராயினார். உணர்ச்சியாற் றன்னித்தே பிறையையுடைய சிகரத்தாலே யோங்கிய குன்று. இ-ள். அங்ஙனம் உணவைத் துறந்த ஐவருங் குன்றிலே நின்று ஏனைத் தவங்களையு முடித்துவிட்டுக் கருப்பந் தங்குகின்ற காலத்தே யிறத்தற்கு விதித்த காலம்வந்ததாக, இவ்வுடம்பைக் கைவிட்டுத் தேவராயினாரென்க. தீவீனைநீங்கி நல்வினை வந்தாற் றிருமகள் நினைவின்றித் தோன்றுமாறுபோல, இவரும் இவ்வுடம்பினை நீக்கித் தேவர் யாக்கை கடிதிற் பெற்றாரென்றார். 536) வேறு 3135. அநங்கனைத் தவஞ்செய வழன்று கண்டவர் மனங்களைக் கவர்ந்திடு மணிக்கண் வெம்முலைப் பொனங்கொடி மயிலானார்ப் புல்ல மாப்பிடி யினம்பயில் கடாக்களிற் றின்ப மெய்தினார். தாந் தவஞ்செய்தற்கு அநங்கனை யழன்றுநோக்கினவர்-இருடிகள். இனிக் காமனைத் தம்மைப்பெறுதற்குத் தவஞ்செய்யும் படி யழன்று தம்மைக்கண்டார் மனங்களைக் கவர்ந்திடுமென்று மாம். இ-ள். அவர் தேவராயினகாலத்தே, தெய்வமகளிருந் தோன்ற அவரை அத்தேவர் புல்லுதலாலே, பிடியினத்தைப்புல்லிய களிற்றினதின்பத்தை அவரெய்தினாரென்க. என்றது-களிற்றிற்கு ஊற்றின்பமே மிக்க வின்பமாகலின்; ஊற்றின்பத்திற்கு இஃது உவமையாயிற்று. (537) வேறு 3136. காதணிந்த தோடொருபான் மின்னு வீசக் கதிர்மின்னுக் குழையொருபாற் றிருவில் வீசத், தாதணிந்த தாமங்க பொருபாற் சோரத் தாமரைக் கண் டாமிரங்கப் புருவ மாட, மாதணிந்த நோக்கினா ரல்குற் காசு மணிமழலைக் கிண்கிணியுஞ் சிலம்பு மேங்கப், போதணிந்த தாருடையப் பொருது பொங்கிப் புணர்முலைகள் போர்க்களந்தாங் கண்ட வன்றே. இ-ள். அத்தேவர், தேவியருடனே அல்குற்காசும், கிண் கிணியும், சிலம்பு மாரவாரிப்பப் பொருகையினாலே, அத்தேவியர் முலைகள் ஒருபாற்றோடு மின்னுவீச, ஒருபான் மகரக்குழை யொளியைவீச, ஒருபாற்றாமங்கள்சோர, கண்கள் உவகைக் கண்ணீர்வீழ்ப்ப, புருவமேறிமுரிய, கணவர் மார்பிற்றாருடையப் போர்க்களத்தைக் கண்டனவென்க. பொருது-பொர. (538) 3137. முழுதார மின்னுமுலைக் குவட்டி னான்மொய்ம் மார்பிற்குங் குமச்சேறி ழுக்கி வீழ, வுழுதார்வம் வித்தியு லப்பி லாக நுகர்ச்சிவிளைத் தலர்ந்த கற்பகத் தின்கீழ், எழுதார் மணிக்குவளைக் கண்வலை யுட்பட் டிமையார்கள் காமமறு சுழியு ளாழ்ந்து இழுதார்மென் பள்ளிப்பூந் தாது பொங்க இருவர் பலராகி இன்புறு றுபவே. இ-ள். அத்தேவர்கள், பற்பகத்தின்கீழிடத்துப்பள்ளியிலேதந்தேவியர் ஆரமுழுதுமின்னு முலைக்குவட்டாலே மார்பிற் குங்குமச்சேற்றைத் தொளியாகவுழுது ஆர்வத்தை வித்தி யின்ப ததைத் தாதுபொங்க விளைத்தலாலே அவர் கண்வலை யிற்பட்டுச் சுழியிலேவிழுந்து இன்புறுவரென்க. இழுதார்பூ-தேனிறைந்தபூ. இருவர்பலராகி-அத்தேவருந் தேவியரும் பல பல வேடங்களைக் கொண்டு. (539) 3138. மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்ம மணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில், பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங் குண்டலமுந் தாம்பதைப்ப விருந்து பாட, விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக், கண்கனிய நாடங்கண் டமரர் காமக் கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தா ரன்றே. கண்கள் காமமாகிய கொழுந்தை யீன்று கொடுத்து விருந்து செய்ய. இ-ள். விண்ணிலுள்ளோர் மனமுருக. அத்தேவர், முழவம் விம்ம யாழுங் குழலும் பாண்டிலு மிரங்கப் பாவைமார்தாந் தோடுங் குண்டலமும் பதைப்ப விருந்து பண்முற்றுப்பெறப் பாட அவர்கள் கண்கள் விருந்துசெய்யக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப நாடகத் தைக் கண்ணுருகக் கண்டு மகிழ்ந்தாரென்க.(540) வேறு 3139. முருகுடைந்த பூங்கோதை முத்தணிந்த தோளா ரொருகுடங்கைக் கண்ணா லுளங்கழிய வேவுண் டருகடைந்த சாந்தழிய வம்முலைமேல் வீழ்ந்தார் திருவடைந்த நீண்மார்பிற் றேந்துளிக்குந் தாரார். இ-ள். அத்தேவர்,கோதையையும்,முத்தையுமணிந்த தோளா ருடைய கண்ணாலே ஏவுண்டு முலையருகேகிடந்த சாந்தழியம் படிஅம்முலைமேலே வீழ்ந்தாரென்க. (541) 3140. நிலவி யொளியுமிழு நீளிலைவேற் கண்ணார் கலவித்தூ தாகிய காமக்கை காய்த்திப் புலவிப் படைபயிலப் பூச்செய்த கோல முலவித் துறக்க மொளிபூத்த தன்றே. நிலவி-நிலைபெற்று. பூச்செய்தகோலம்-காமனம்புகள அவர்கள்மேற்பட்டுச்செய்த கோலம். இ-ள். அத்தேவியர்புணர்ச்சிக்குத் தூதாகிய காமமென்கின்ற கையாலே புலவியாகிய படையைக் காய்த்தி அவர்மேலெய்கை யினாலே காமன்புசெய்தகோலம் எங்கும்பரந்து துறக்கம் அவ் வொளிப்பொலிவுபெற்றதென்க. என்றது-துறக்கத்துள்ளார் இவர்களின்பநுகர்ச்சியைப் புகழ்ந்தாரென்றவாறாம். (542) 3141. புருவச் சிலைநுதற் பொன்றுஞ்சு மல்கு லுருவத் துடியிடையா ரூடலுப் பாகத் திருவிற் றிகழ்காமத் தேன்பருகித் தேவர் பொருவற் கரிய புலக்டலு ளாழ்ந்தார். சிலைபோன்றநுதல். பொன்-மேகலை. உருவம்-அழகு. உப்பு-இனிமை. திருவினாற்றிகழுங் காமமாகிய தேன். புலக்கடல்-விடயக் கடல். இ-ள். அத்தேவர் புருவமுதலியவற்றையுடைய தேவிய ரூடலை யினிமையாகத் தேன்போற்பருகி ஒப்புக்கூறுதற்கரிய கடலிடத் தாராயினா ரென்க. (543) வேறு 3142. முகடு மணியழுத்தி முள்வைர முள்வேய்ந்து முத்தம் வாய்ச்சூழ்ந் தகடு பசுமணியார்ந் தங்காந் திருள்பருகி யடுபால் விம்மிப் பகடு படவடுக்கிப் பண்ணவனார் தம்மொளிமே னின்றாற் போலுந் தகடு படுசெம்பொன் முக்குடையான் றாளிணையென் றiவைத் தேனே. முகடு மணியாகவிட்டு.இருளைப்பருகி முத்தம் பால்போன்ற ஒளியைச்செரிந்து. அடுபால்-காயும்பால். முள்-கூர்மை. இ-ள். தலையிலே மாணிக்கமழுத்தி உள்ளே வைரமழுத்தி விளிம்பிலே முத்தமாலைசூழ்ந்து நடுவே நீலமணி நிறைந்து பருகி விம்மி மூன்றாக வடுக்கி யிறைவனொளி மேலேநின்றாற் போலும் முக்குடையைஉடையானது திருவடிகளை என்றலை மேலே வைத்தேனென்றாரென்க. இவ்விலக்கியம் இடுக்கணின்றியினிது முடிந்த மகிழ்ச்சி யான் மீட்டும் வணங்கினார். 38. ஓம்படை 3143. முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து வாய்முரன்று முழங்கி யீன்ற மெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ் கோத்துமிழ்ந்து திருவில் வீசுஞ் செந்நீர்த் திரள்வடம்போற் சிந்தா மணியோதி யுணர்ந்தார் கேட்டா ரிந்நீர ராயுயர்வ ரேந்துபூந் தாமரையாள் காப்பா ளாமே. சோர்ந்தசைந்து-தளர்ந்துநடுங்கி. வாய்முரன்றுமுழங்கி-வாயினான் மெல்ல விசைத்துப்பின் மிகவுமுழங்கி.மெய்ந்நீர்க்குத் தன்மெய்யிடத்து நீர்மையென்றும். புராணத்துப் பொருளாதலின், உண்மையான பொருளினீர்மை யென்றுங் கூறுக. செந்நீர்த்திரள்-சிவந்த நீர்மையை யுடைய மாணிக்கம்; ஆகுபெயர். இம்முத்தையும், மணியையுமீன்ற வலம்புரி-இல்பொருளுவமை. இ-ள். சோழர்குலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி,பிறர் குற்றங்கூறுகின்றாரென்று தளர்ந்து அஞ்சி முரன்று முழங்கி யீன்ற இருபத்தேழாகிய முத்தையும், மாணிக்கத்தையும் வடம் போலே கோக்கப்பட்டுத் திருவிலுமிழ்ந்து வீசுஞ் சிந்தாமணி யென்னுமிச் செய்யுளை, ஓதியுணர்ந்தாரும், அவர்கூறக்கேட்டாரும் இந்திர ராய்ப் பின்பு வீடுபெறுவர்;அவரை இப்பவத்துத் திருமகள் காப்பா ளென்க. இரு தேவர்குருக்கள் கூறினாரென்றுணர்க; தேவர் இங்ஙனந் தம்மைப் புனைந்துரைத்தலாகாமையின். முத்துமணியுங் கோத்தாற்போன்றதென்றார்; எளிதிற் பொருடந்தும், அரிதிற் பொருடந்தும் நிற்றலின். இருபத்தேழென்றார், ஒன்றைப் பத்தாற் பெருக்கின இருநூற்றெழுபதைப் பத்தாற் பெருக்கின இரண்டாயிரத் தெழுநூற்றை.எனவே தேவரருளிச் செய்தசெய்யுள் இரண்டாயிரத் தெழுநூறென்றேகொள்க. (1) வேறு 3144. செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொ ளந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச் சித்தா மணியின் சரிதஞ்சிதர் தேன்றெ ருண்டார் நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே. செந்தாமரைக்கு நாற்றங்கொடுத்த அந்தாமரையென்றது-இறைவன்றிரு வடிகளை அந்தாமயையாளுகின்ற விரிந்த ஞானத்தை யுடைய வனென்றது. சீவகனை. சிதர்ந்தேனென்றது- பரக்கக்கூறினே னென்றவாறு. அவியாதவிளக்கு உள்ளே நின்றெரிகின்ற நன்மணி யென்றது-குருக்களை. இ-ள். குருக்கள் அங்ஙன நாட்டிக்கூறக்கேட்ட தேவர், சீவகனது இனிய சரிதமாகிய சிந்தாமணியை யான் நின்பாதமேத்திச் சிதர்ந்தேன்; இந்சிந்தாமணியை, நன்மணியே! நீ இங்ஙன நாட்டப்பெற்று இவ்வுலகத்தோரும் நன்றென்று தெளிந்தாரென்க. (2) வேறு 3145. செய்வினை யென்னு முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேங்கொண் மைவினை மறுவி லாத மதியெனுந் திங்கண் மாதோ மொய்வினை யிருள்கண் போழு முக்குடை மூர்த்தி பாதங் கைவினை செய்த சொற்பூக் கைதொழு தேத்தி னேனே. செய்வினை - முன்செய்த நல்வினை. மைவினைமறு - தீவினையாகியமறு. மொய்வினையிருள் - செறிந்தவினையாகிய விருள். கைவினைசெய்த - ஆராய்ந்த இ-ள். நல்வினை யென்னுங் கடலிலே முளைத்து இனிமை கொண்ட நல்லறிவென்கின்ற திங்களாலே நீ கைவினை செய்த செய்யுளாகிய பூவை யான் கைக்கொண்டு மூர்த்திபாதத்தே தூவித் தொழுது ஏத்தினேனென்று தேவர் குருக்களை நோக்கிக் கூறினாரென்க. (3) “தத்தைகுணமாலை” என்னுங்கவியும், “பகைமாற்று” என்னுங்கவியும் கந்தியார் கூற்று. முத்தியிலம்பக முற்றிற்று சீவகசிந்தாமணி நச்சினார்க்கினியருரை முற்றுப்பெற்றது. செய்யுளகராதி அ அஃதேயடிகளும் அகப்படுபொறி அகழ்கிடங்கந்து அகில்கொண்ட அகிலார்புகையலாற் அகிறருகொழும் அங்கதன்றன அங்கருங்காலி அங்குநின்ற அங்கைசேப்ப அங்கைபோல் அங்கையந்தலத்தக அங்கையந்தலத்தினா அங்கையுமடியு அசும்புபொன்வரை அசைவிலாப்புரவி அசைவுதீர்ந்திரு அஞ்சனக்கோலினா அஞ்சனநிறநீக்கி அஞ்சனமெழுதின அஞ்சிலம்பொலியோ அஞ்சுடர்த்தாமரை அஞ்சுரைபொ அஞ்சொன்மடவா அட்டுநீரருவிக் அடங்கலர்க்கீந்த அடர்பொற்பைம் அடல்வண்ண அடிக்கலமரற்ற அடிக்கலமரற்றவே அடிகள்கண்டாங் அடிகளுக்கிட அடிகளுக்கிறை அடிகளையின்றி அடிகளேதுறக்க அடிசில்வைகலா அடிசிற்கலங் அடிநிலமுறுத அடிநிழற்தருக அடிமனைபவள அடியிறைகொண் அடியுலகமேத்தி அடுத்தசாந்தல அடைதுநாநிரை அண்ணல்குருகுலத் அண்ணல்கூறலு அண்ணல்பிறந் அண்ணலங்குன் அண்ணலஞ்சிலை அண்ணலவ்வழி அண்ணலியாழ் அண்ணறானுரைப்ப அண்ணறேர்பறவை அண்ணன்மே அணங்கரவுரித் அணிகலவரவத் அணிசேரிடக்கை அணித்தகுபவள அணிநிலாவீசு அணிமுயைரசர் அணியார்மணி அணுகிமுன் அத்தம்மனைய அத்தமாமணி அந்தணர்க்காக் அந்தணனாறு அந்தரத்தார்மய அந்தரவகடு அந்தோவிசயை அந்நகர்க்கர அந்நுண்டுகிற் அநங்கனைத் அம்புரகவல்வில் அம்புஞ்சிலையு அம்பொரைந்து அம்பொற்கலத்து அம்பொற்கொம்பனை அம்பொற்கொம்பி அம்பொன்வள்ளத் அம்மலரடியுங் அம்மலரனிச்சத் அம்மலைச்சின அம்மெல்லனிச்சம் அமரிகைக்கோசனை அயிலினிற்புனைந்த அரக்கியல்செங் அரக்குண்டாமரை அரக்குண்பஞ்சிக அரக்குநீர்ச்சிவிறி அரக்குநீரெறியப் அரக்கெறிகுவளை அரசர்தமுடியும் அரசனதருளினொ அரசனைக்கண்டு அரத்தகமருளச் அரந்தினப்பிறந்த அரவுகான்றிட்ட அரவுவெகுண்டன் அரிகுரற்கோழி அரிபொற்கிண் அரிமானோர்மெல் அரியகொள்கை அரியலார்ந்த அருகுமயிலகவ அருங்கணையடக் அருங்கயம்விசும் அருங்கலலக்கொடி அருங்கலச்சேயி அருங்கலநிறைந்த அருடேர்வழிநின் அருந்தவக்கிழமை அருந்தவக்கொடிக் அருந்தவஞ்செய் அருந்தவன்முந்து அருந்தவிசாகி அருந்தீத்தொழிலே அருப்பிளமுலை அரும்பினைத்தடக் அரும்பெறற் அரும்பேர்வன அரும்பொற்பூணு அரும்பொனும் அரும்பொனுமணி அருமணிமரகதத் அருமணிவயிரம் அருமைமாமணி அருமையுனெய்து அருவரைநாகஞ் அருவிக்குன்றமு அருவிலயநன் அருள்வலி அருளிலாரிவ அருளுமாறென்னை அருளுமேலர அல்லதுவுமெங்கை அல்லிசேரணங் அல்லித்தாளற்ற அல்லியம்புல்லு அல்லியரும்பதமு அல்லியுட்பாவை அலங்கலுங்குழ அலங்கலேந்தி அலங்கறாதவிழவஞ் அல;ஙகறான்றொடு அலங்குவெண் அலத்தகக்கொழு அலர்ந்தவந்தாம அலைமணிக்கவரி அவ்வழியிரண்டு அவ்வளையவி அவணத்தவர் அவனுரைதெளிந்து அவாக்கிடந்தகன்ற அவிரிழைசுடர அவிழ்ந்தேந்து அழல்செய்தடத்து அழல்பொதிந்த அழலம்பூநற அழலாந்சுரை அழலுறுவெண் அழலேந்துவெங் அழிதலின்றியங் அழுகுரன்மயங்கிய அழுதுபின்னணி அழுதுநுண்ணிடை அள்ளற்சேற்று அள்ளற்சேறரு அள்ளிலைப்பல அள்ளுடைக்குவளை அளகுசேவலொ அளந்துதாங்கொண் அளப்பரியநான் அளித்திளமந்தி அளிந்ததீம்பழ அளைச்செறியிரும் அளைவதுகாம அற்றவர்வருத் அற்றமன்று அற்றுவீழ்தலைகள் அறநிழலாயுல அறம்பெரியகூறின் அறவியமனத்த அறவுரைபின்னைக் அறிவினாற்பெரிய அறுகைவெண் அன்பினினவலி அன்புநூலாக அன்பொட்டியெ அன்றுசூடிய அன்னங்களாகி அன்னணின்றோழி அன்னதேயென் அன்னந்தானவ அன்னப்பெடை அன்னமுகமகன்றி அன்னமென் அன்னமேதோகை அனிச்சத்தம் அனிச்சப்பூங் ஆ ஆக்கமுங்கேடு ஆக்கையுள்ளுறை ஆகந்தானோர் ஆகமுமிடையு ஆங்கவெல்லை ஆங்குருக்காரர ஆசாரநாணத் ஆசிலடுபா ஆசைமாக்க ஆசையார்வ ஆட்சியைம் ஆடகக்கொழும் ஆடகக்செம்பொ ஆடகச்செம்பொற் ஆடலின்சுவை ஆடலின்னரவமு ஆடவர்தனதிட ஆடவர்மனங்க ஆடவரான்மை ஆடவரிரியவேகி ஆடன்மங்கை ஆடியன்மாமயி ஆடுகொடியுச்சி ஆடுதசைபிறங் ஆடுபாம்பெனப் ஆண்மரவாணிலத் ஆணiயாணை ஆதிவேதம் ஆம்பனாறுமரக் ஆம்பொருள்களா ஆய்களிற்றசனி ஆய்ந்தகேள்வி ஆய்ந்தபானிற ஆய்ந்தபொன் ஆய்ந்தமோட் ஆய்பிழிவிருத் ஆய்பொற்புரி ஆய்மணிப்பவ ஆய்மதக்களிறு ஆயிதழபொன் ஆர்கெழுகுறடு ஆர்ந்தகுணச் ஆர்ப்பெதிர்மாரி ஆர்வலஞ்சூழ்ந் ஆர்வவேரரிந் ஆரகிற்சேக்கை ஆரந்துயல்வர ஆரமருளான் ஆரமின்னவருங் ஆரமின்னும் ஆரழன்முளரி ஆரறிவிகழ்தல் ஆவதாகப் ஆழ்கடல்வைய ஆழமால்கட ஆழியங்கழனி ஆழியானூர்திப் ஆளற்றமின்றி ஆளியமொய்ம்ப ஆளியாற்பாயப் ஆற்றியமக்க ஆற்றுவீர்வம்மி ஆறிருமதி ஆறெலாங் ஆனாதுவேந்த ஆனைமும்மத இ இகலிருண்முழு இங்கிதநிலைமை இங்கிவர்களிவ்வா இங்ஙனமிரண்டு இங்ஙனமிவர் இசைத்திறத் இசையினிலிவட்கு இஞ்சிமாகநெஞ் இட்டநூல்வழா இட்டவுத்தரிய இட்டவெண்ணில இட்டிடையாரி இட்டிவேல் இட்டிவேல்குந் இடத்தொடு இடம்படவகன்று இடிநறுஞ்சுண் இடியுமிழெறி இடியுமின்னும் இடுக்கண்வந்து இடைச்செறி இத்தலையிவர் இதுபள்ளியிடம் இதுவெனவுரு இந்நகரப்புறங்காட் இந்நாட்டிவ்வூர் இந்நால்வர்துணை இம்பரிலாநறும் இம்மலைக்கிரண்டு இம்மியனநுண்பொ இமைத்தநுங்கண் இயக்கிநின்னோ இரங்கு மேகலை இரவிதோய்கொடி இரித்ததேன்குவளை இரிந்தனவிருவினை இருங்கடன்மணி இருநிலமடந்தை இரும்பறக்கழுவி இரும்பிடிதழீஇய இரும்பிடிநூறு இரும்பினீர்மை இருமலர்க்குவளை இருள்கெடவிகலி இல்லாளையஞ்சி இலங்கரிபரந்த இலங்கலாழியினான் இலங்குகுங்கும இலங்குகொம்பனார் இலங்குசெம்பொ இலங்குநீண்முடி இலங்குபூண் இலங்குபொற்குவடு இலங்குபொன் இலங்குபொன்னார இலங்குபொன்னோ இலங்குவெள்ளருவி இலங்கெயிற்றேன இலங்கொளிமர இலவம்பூவரக்கு இலவம்போதே இலைப்பொலி இலைபாரவெழுதி இலையாரெரிமணி இலைவிரவுபூம்பை இவ்வாறெங்கும் இவ்வுருவுநெஞ்செ இவையின்னவும் இழுதன்னவெண்ணி இழுதார்சுடர் இழுதொன்றுவாட் இழிந்துகீழ்நிலை இழைக்கண்வெம் இழைகொள்வெம் இழைத்தபொன் இழைந்தவர்நலத் இழைபொறையாற் இழையொளிபர இழைவளரிளமுலை இளமுலைபொருது இளமையின்மூப் இளவளநாகுபுல்லி இளவெயின் இளிந்தகாய்கமழ் இளிவாய்ப்பிர இளைமையங் இளையவண்மகிழ் இளைவர்க்கா இற்றதனாற்பய இற்றதென்னாலி இற்றவர்தேவ இறங்கியமாதர் இறுதியில்லமிர் இறுநுசுப்பினந்நலா இறுமருங்குல் இறுவரையிவர் இன்கனிகவரு இன்சுவையாழோ இன்பக்காரணமா இன்பமற்றென் இன்புகையார் இன்றுநீர்விளை இன்றையதன்று இன்னகிலாவிவிம்மு அன்னகிற்கொழு இன்னணமேத்தி இன்னணமொழுகு இன்னதருளென் இன்னதன்மை இன்னதோர்காலத் இன்னபொங்குளை இன்னமிர்தனைய இன்னரிச்சிலம் இன்னவாறுறுதி இன்னனென்ன இன்னாப்பிறவி இன்னியமுழங்கி இன்னிழலிவரும் இன்னீரெரிமா இனக்களியானை இனஞ்சேராவாகி இனத்திடையேறு இனமாமென்று இனிச்சிறிதெழு இனிதினிங்ஙன இனையகூறிமற் இனையவேண்டா இனையநீயாய ஈ ஈங்கினியென்னை ஈட்டஞ்சானீணி ஈடில்சந்தன ஈடுசால்போரழித் ஈண்டழற்குட்டம் ஈர்ந்தண்கோதை ஈரங்கொண்ட ஈரலங்கலேந்து ஈருட்டடிமூடி ஈரைஞ்ஞூற்றினை ஈன்றதாய்தந்தை ஈன்றதாயானு ஈன்றமயில்போ ஈனாதவிளங்கமுகின் உ உகிர்வினைசெய் உச்சிவரைவளர் உடம்பினோடுயிரிற் உடற்றும்பிணி உடுப்பனதுகில் உடைதிரைமுத் உண்டெனவுரை உண்டேதனதியல் உண்ணுநீர்வே உப்பிலிப்புழுக் உப்புடையமுந்நீ உய்யுமாறுரை உரிமைதன்னொடும் உரிமைமுன்போக்கி உரிமையுட்பட் உருக்கமைந்தெரியு உருகிவாடியென் உருமுக்கதிர்வேற் உருவச்செங்கய உருவமாமதிவாண் உருவமென்று உருவுஞ்சாயலு உருவுமார்ந்தன உருளிமாமதி உரைத்தவெண் உரையகங் உரைவிளையாமை உலகமூன்று உலகுணர்கடவு உலந்தநாளவர் உலமருநெஞ்சி உவரிமாக்கட் உவாமுதலிரவ உழந்தவருநோக்கி உழந்தாலும் உழவித்தியுறுதி உழுந்துபயறுப் உழும்பகட்டெருது உழையினமுச்சி உள்பொருளிது உள்விரித்திதனை உள்ளங்ககொள்ள உள்ளமுடையான் உள்ளிழுதுடைய உளைவனப்பிருந்த உறக்கெனுமோடை உறங்குமாயினு உறுதிசூழ்ந்தவ உறுதிநீயுணர்ந்து உறுதிமுன்செய்த உறுப்பெலா உறுபடைமன்ன உறுவர்ப்பேண உறைகழித்திலங்கு ஊ ஊட்டியன்ன ஊடியமடந்தை ஊதுவண்டரற்று ஊழிவாய்த்தீ ஊழினீருண்ப ஊற்றுநீர்க்கூவ ஊறுகொள்சிங்கம் ஊன்சுவைத்து ஊள்சேருடம் ஊன்பிறங் ஊன்விளையாடும் ஊன்றகர்த்தனைய ஊன்றலைப்பொடி ஊனமர்குறடு ஊனிமிர்கதிர் ஊனுடைக் ஊனுண்சிங்கக் ஊனொடுதேனுங் எ எஃகெனவிலங்கு எங்கணானைய எங்கள்பெண்மை எங்கள்வினையா எங்குலமடிகள் எங்கோமற்றென்றி எஞ்சுற்றமென் எண்கொண்ட எண்டிசைவளியு எண்ணத்தி எண்ணமென்னி எண்ணற்கரிய எண்ணெயுநானமு எத்துணைத்தவஞ் எதிர்நலப்பூங் எம்மனைமாரினி எம்மைநீர்வெல்ல எம்வயின்வருக எய்த்துநீர்ச்சிலம் எய்தவக்கணையு எயிற்றுப்படை எரிக்குழாஞ்சுடரும் எரிகதிர்ப்பைம் எரிசுடர்ப்பரிதி எரித்திறல்வென்றி எரிதலைக் எரிதவழ்குன்றத் எரிநீரவேநரக எரிநுதியுற்ற எரிபொன்மேகலை எரிபொன்னுலகி எரிமணிக்கலாபத் எரிமணிக்குப்பை எரிமணிச்சுண்ண எரிமணிநெற்றி எரிமணிப்பளிக்கு எரிமணியடைப் எரிமணியிமைத் எரிமாலைவேனுதி எரிமிடைந்தனைய எரிமுயங்கிலங்கு எரியொடுநிகர்க்கு எரிவளைப்ப எல்லிருட்கனவிற் எல்லைமூவைந்து எல்லையில எல்லையெய்திய எவ்வூரீரெப்பதிக்கு எழின்மாலை எழுத்தின்பாடலு எழுதருபரிதிமார்ப எழுதுவாணெடுங் எழுந்துவிண்பட எள்ளுநர்கள்சாய எறிசுரும்பரற்று எறிசுறாவிளைய என்பரிந்தெரிதலை என்பினைநரம்பிற் என்புநெக்குருகி என்பெழுந்துருகுபு என்போடுநரம் என்மனநின்மன என்வரவிசைக்க என்றலுஞ்சுநந் என்றலுந்தன் என்றலுந்தேனு என்றலுந்தொழு என்றவளரசன் என்றவளுரைப்ப என்றவனிருப்ப என்றவனுரைத்தலு என்றவனுரைப்ப என்றனதேனின என்றனன்புத்தி என்றாங்கொன் என்றாணினைந்தாளி என்றுகூறலுமேழை என்றுகூறவென் என்னநாளுமரற் என்னலாற்பிறர் என்னுங்கட்குள் என்னுறுநிலை என்னேமற்றென் என்னைக்கண்ட என்னைக்கொன்றி என்னைகேளீ என்னையுள்ளம் என்னோர்மருங்கி எனக்குயிர்ச்சிறு எனக்குயிரென்ன ஏ ஏகவெண்குடை ஏச்செயாச்சிலை ஏத்தரியபல்குண ஏத்தருந்திருமணி ஏத்தருமல்லிகை ஏதிலனாயினா ஏதிலாரிடர்பன் ஏந்தல்வேறிருத்த ஏந்தலைத்தோழ ஏந்தறன்கண்கள் ஏந்திரநாங்களு ஏந்தியவேற்பத் ஏந்துபூங்கோதை ஏந்துமலர்ச்சே ஏந்தெழிலாகஞ் ஏமநன்னெறி ஏமநீருலக ஏமமாகியதுப் ஏவாவிருந்த ஏழாண்டின்மே ஏற்றகைத்தொடி ஏற்றருமணிவரை ஏற்றியும்மிழித் ஏற்றுரிபோர்த் ஏறங்கோண்முழங் ஏறனாற்கிருளை ஏறுவாரொலியேற்று ஏனைமன்னர் ஐ ஐங்கதிக்கலினப் ஐதேந்தகலல் ஐந்துமூன்றடுத்த ஐந்நூறுநூறுதலை ஐயர்கூறலு ஐயருறைபள்ளி ஐயற்கென்றுரை ஐயனுக்கமைந்த ஐயனேயறியும் ஐயனைக்கண்ணி ஐயனையாமவ ஐயாண்டெய்தி ஐவகைப்பொறியும் ஐவாயரவின் ஐவிலினகல ஒ ஒண்மணிக்குழை ஒத்தொளிபெருகி ஒப்பானொருமகனே ஒப்பிணைதனக் ஒருகையிருமருப் ஒருங்கவன்பிற ஒருபகல்பூசினோ ஒருவர்தம்வலி ஒருவனேகளிறு ஒருவனேசிலையு ஒல்லைநீருலகமஞ்ச ஒழுக்கமேயன்றி ஒழுக்கியலருந்தவத் ஒள்ளழல்வைர ஒள்ளிலைச்சூல ஒளிறுதேர்ஞான ஒற்றர்தங்களை ஒற்றருமுணர்த ஒற்றன்வந்து ஒன்பதுவகை ஒன்றாயவூக்க ஒன்றாயினும்பல ஒன்றுடைப்பதி ஒன்றுநீர்கவ ஒன்றேயுயிரை ஒன்யேயெயிற்ற ஓ ஓங்குகொற்றவர் ஒங்குமால்வரை ஓசனைநறும்புகை ஓடரியொழுகி ஓடுதேர்ச்சாரிகை ஓடுந்திரைகளு ஓடுமூகில்கீறி ஓம்படைச்hற்றற் ஓம்பிப்படைத்த ஓருயிரொழித்திர ஓலையுட்பொரு ஓலையைவட்கு ஓவாதிரண்டு க கங்குற்பாற்புகு கங்கைமாக்கடற் கங்கையின்களிற்றி கங்கையின்சு கச்சறநிமிர்ந்து கச்சுவிசித்தி கச்சையும்வீக்கி கட்டழற்கதிய கட்டியங்காரனம் கட்டியங்காரனெ கட்டியங்காரனோ கட்டியினரிசி கட்டிலேறிய கட்டுயிலனந்தர் கடத்திடைக் கடநாகமதங் கடம்புசூடிய கடல்விளையமிர் கடலம்பவளம் கடலரணமாகாது கடலெனக்காற் கடவுளரிடனுங் கடற்சுறவுயரி கடற்படைமன் கடற்படையனுங் கடனித்திலம்வைத்த கடாந்திறந்திட்டு கமகமழ்குழலினாற் கடிகமழ்பூஞ்சிகை கடிகைவாளார கடிநலக்கரும்பொடு கடிப்பிணைகாது கடிப்புவாரங்குலி கடிமலர்நிறைந்து கடிமலர்ப்பிண்டி கடிமலர்மங்கை கடிமாலைசூடி கடியரங்கணிந்து கடியவைமுன்பு கடியனகச்சி கடுகியவிளையர் கடுந்துடிக்குர கடுந்தொடைக் கடுமதக்களிப் கடுவளிபுடைக் கடைகந்தன்ன கடைதயிர்க்குர கடைந்தபொற்செ கடைந்துபெய்மணி கடையிலாவறி கண்கடுஞ்சாகதிர் கண்கள்கொண் கண்சூன்றிடப்பட்டு கண்டபினின்னை கண்டபேற்நகரி கண்டவர்கள்காமுற கண்டவன்கண் கண்டாணெடிது கண்டாலினியன கண்டானொரு கண்டீர்கருமம் கண்ணக்கண்ணி கண்ணகன்கடலங் கண்ணயற்களிப்ப கண்ணாடியன்ன கண்ணிகொண் கண்ணிவேய்ந்து கண்ணிற்காணி கண்ணின்மாந் கண்ணினாலின்று கண்ணினோடுபிற கண்ணுதற்கட கண்ணும்வாளற்ற கண்™மிழ்தீயினாற் கண்ணுளார்நுங் கண்ணெனக்குவளை கண்ணெனும்வலை கண்ணோகயலோ கண்பயிலிளங்க கண்வலைக்காமுக கண்வாளறுக்குங் கண்வெறிபோகவங் கணமலையரசன் கணிபுனைந்துரை கணைகடிகண் கத்திகைக்கழுநீர் கதங்கனல்யானை கதிர்முடிமன்னர் கதிர்விடுதிருமணி கந்மடுகளிறு கந்தார்களியா கந்துக்கடனென்ற கந்துகப்புடையி கந்துகன்கழறக் கந்துமாமணித் கப்புரப்பசுந்திரை கம்பார்களியானை கம்மப்பல்கலங் கயல்பாய்ந்துகள கயலாலிவையெ கயிலினமுகளிப் கயற்கணாளை கரப்புநீர்க்கங் கரியவன்கன்னற் கரியவன்றிரு கரியவுள்வெறி கருங்கடல்வளந்தர கருங்கடற்பிறப்பி கருங்கடற்போயிற்று கருங்கணிளமுலை கருங்குழலுஞ்செ கருங்கொடிப்புரு கருஞ்சிலைமறவர் கருஞ்சிடிறப்பறவை கருந்தடங்கண்ணி கருநெறிபயின்ற கரும்பணிவளவ கரும்பலாற்கா கரும்பார்தோண் கரும்பின்மேற்றொ கரும்புகண்™டை கரும்புந்தேனு கரும்பெறிகடிகை கரும்பேதேனே கரும்பொனியல் கருமக்கடல்கடந் கருமணியழுத்திய கருமநீகவல கருமுகிற்பொடித் கருமணியழுத்திய கருமநீகவல கருமுகிற்பொடித் கருவளிமுழக்குங் கருவித்தேன்கலை கருவிதேனென கருவிமாமழை கருவியின்னிசை கருவியூடுளங் கருவிவானங் கருவிற்கட்டிய கருணைக்கவளந் கருணைவாசமுங் கரைகொன்றிரங்கு கரைபொருகட கரையுடைத்து கல்சேர்பூண்கொள் கல்லார்மணிப் கல்லார்மணிப்பூணவன் கல்லொடுவன்றடி கல்லோமரனுமிர கல்வியுங்கொடி கலங்கழுமலரவமுங் கலத்தற்காலங்கல் கலந்ததுபெரும் கலந்தெழுதிரை கலம்புரியகலல் கலவமயில்கால் கலவமாமயி கலவியாகியகாமத் கலிவளர்களிறுகை கலைக்கோட்ட கலைத்தொகை கலைபுறஞ்சூழ் கலைமுத்தங் கலையார்துகிலே கலையின்பிணை கலையினதகலமுங் கலையினிற்கன்னி கலையுணர்மக கலையுலாய்நிமிர் கலைவளர்கிளவி கவ்வையங்கருவி கவ்வையுங்கடும்புன கவிமதங்கடந்து கவிழ்மணிப்புடை கழலவாய்க்கிட கழலிற்செந்தா கழலுநெஞ்சொடு கழித்தகடிப்பி கழித்தவேலேறு கழித்தனர்கனல் கழித்துவாண்மா கழுநீருந்தாமரை கழுமணியாரமார் கழைபொதிர்ப்ப கள்வாய்ப்பெயப் கள்வாய்விரிந்தகழு கள்ளத்தானம் கள்ளமுண்டெனிற் கள்ளமூப்பினந் கள்ளலைத்திழிது கள்ளவானரமுங் கள்ளவிழ்கமழ் கள்ளுந்தேனும் களிசெய்கோசி களிசேர்கணை களித்தகண்ணி களித்தலைமயங்கி களிமுகச்சுரும்பு களிறனானமைச்சர் களிறுமாய்கதிர் கற்சிறையழித்து கற்சுண்ணஞ்செய்த கற்பகங்கலங்கி கற்பாலுமிழ்ந்தமணி கற்றவைம்பதங் கற்றார்மற்றுங் கறந்தபாலினுட் கறவைகாண் கறைபன்னீராண் கன்மழைபொற் கன்றியவெகுளி கன்னிநாகங் கன்னிமாநகர் கன்னிமைகனிந்து கன்னியர்கரக கன்னியர்குலத்தின் கன்னியராயிரர் கன்னியருற்றநோ கன்னியைக்கடி கனிகொள்காமங் கனிகொள்வா கனிபடுமொழி கனிவளர்கிளவி கனைகடல்வரச் கனைகடல்முதுந் கனைகதிர்கடவு கா காசறுதுறவின் காசின்மாமணி காசுநூல்பரிந்து காஞ்சனக்கமுகு காட்சிநன்னிலை காட்டகத்தெரு காடியாட்டித் காடியுண்டபூந்துகில் காதணிந்ததோ காதலங்கழிந்த காதலஞ்சேற்று காதலமல்லமே காதலன்காதலினாற் காதலனல்லை காதலாலெண் காதலாள்கரிந்து காதலாளுடலுள் காதலாற்கமிர் காதலான்காதல் காதலாற்காமபூமி காதன்மாமன் காதன்மிக்குழிக் காதன்மைக்கண்ணு காதார்குழையு காதிக்கண்ணரிந்து காதிப்போர்மன்னர் காதிவேல்வல காரிவேன்மன்னர் காதுசேர்ந்த காந்தளங்கடி காந்தியமணி காம்புபொன்செய்த காமக்கடுநோய் காமம்மைப்பயக் காமமுடையார் காமமேகன்றி காமர்களிறும்பிடியுங் காமவல்லிகள்கலந் காமனன்னதோர் காமனேசெல்லினுங் காய்களிற்றினிடை காய்சினவெகுளி காய்த்தசெந்நெ காய்தழல்கவரப் காய்ந்தவவ்வளவி காய்ந்தெறிகடுங் காய்மாண்டதெங்கின் காய்வுறுவேட்கை காயத்தின்குழம்பு காயமீனெனக் கார்கொள்குன்ற கார்தோன்றவே கார்வளர்மின்னு கார்விரிமின்னனார் கார்விளைமேகமன்ன கார்விளையாடிய காரின்முழங்கு காலகம்புடைப்பமுந் காலத்தீநகரை காலற்றவயிரமாலை காலனொடுசூழ்ந்த காலனைச்சூ காலுற்றகாம காலையொடுதாழ் காவலகுறிப்பன் காவலரகலமென் காவலன்மக்க காவிகடந்தகண்ணீ காவிகழுநீர்குவ காவியன்னகண்ணி காவில்வாழ்பவர் காவிற்கண்டத்தி காவின்மேற்கடி காழகச்சேற்றுட் காழகமூட்ட காளமாகிருளை காளைசீவகன் காளையாம்பருவ காற்படையுங் கான்முகம்புதை கானத்தினேகுகின் கானவரிரியவில் கானிரைத்தன கி கிடங்குசூழ்மதிற் கிலுத்தங்கூர்ப்பரங் கிழவனாய்ப்பாடி கிளிச்சொலினினிய கிளிவளர்பூமரு கிளைப்பிரிவருஞ் கு குங்குமக்குவட்டி குங்குமங்குயின் குங்குமஞ்சேர் குங்குமத்தோளி குங்குமநறுநீர் குங்குமமுஞ்சந்தன குங்குமமெழுகி குஞ்சரங்குனிய குஞ்சரந்தலை குஞ்சரமயாவுயிர் குஞ்சிமேலனிச்சம் குட்டநீர்க்குவளை குடம்புரைசெரு குடர்தொடர் குடர்வாங்குகுறு குடவரையனைய குடிபழியாமை குடைகவித்தனை குடைநிழற்கொத் குடையுடைநிழ குடையுடைவேந் குடையொடுகுடை குண்டலங்குமரன் குண்டலங்குலவி குண்டலமிலங்க குண்டலமும்பொற் குண்டலமொரு குணில்பொரக் குந்தமேயயில்வா குமரிமாநகர் குரல்குரலாகப் குரவநீடிய குரவம்பாவைகொப் குரவரைப்பேண குருகுலஞ்சீவக குருதிவாளொளி குரோதனேமானன் குலங்கெழுமகளிர் குலத்தொடுமுடிந்த குலநினையனம்பி குலிகச்செப்பென குலிகமார்ந்த குலிகவஞ்சேற்று குலைவாழைபழு குவளையேய்ந்த குழலுடைச்சிகழி குழலுநவியமு குழலெடுத்தியா குழவிக்கோட்டிளம் குழவிப்பிடிகுஞ் குழவியஞ்செல்வ குழவியாய்ப்பிற குழவிவெண்டிங்காட் குழவிவெண்மதிக் குழற்சிகைக்கோதை குழன்மலிந்த குழிமதுக்குவளை குழியப்பெரியகோன் குழைகொள்வா குழைமுகமிடவயி குழையுடைமுகத்தி குளநென்முன்றி குளித்தெழுவைரமு குளிர்துன்னிய குளிர்மதிகொண்ட குறங்கணிமயி குறிஞ்சிப்பூங் குறிஞ்சியெல்லை குறுத்ததாட்குயிற் குறையணிகொண் குன்றமார்பரிந்து குன்றனானுரைப் குன்றிரண்டனைய குன்றின்வீழருவி குன்றுண்டோங் குன்றெனத்திரண் குன்றெனமருண்டு குனிகொள்பாகவெ கூ கூகையுங்கோட் கூட்டினான்மணி கூட்டுறமுறுக்கி கூடநீர்நின்ற கூடார்புலியு கூடியமும்மை கூடினார்கணம்மலர் கூதிர்வந்துலா கூந்தலகிற்புகை கூந்தலின்புகைக் கூந்தலேந்திய கூந்தலையொரு கூருளிமுகம்பொ கூரெயிறணிந்த கூற்றம்மஞ்சும் கூற்றம்வந்து கூற்றமன்னகூர் கூற்றின்னிடிக்கு கூற்றுநாவலறு கூற்றுவன்கொடி கூற்றெனமுழங்கி கூற்றெனவேழம் கூறப்பட்டவக் கூன்களுங்குற கெ கெடலருங்குரை கெடுலவ்வழியில் கெண்ணையுஞ்சிலை கெலுழனோநந்த கே கேட்டிதுமறக்க கேட்பதுவிரும்பினா கேண்மின்கேண் கேமமாபுரமெனு கேவலமடந்தை கேழ்கிளரெரிகட் கை கைகவிநறுநெய் கைசெய்துகமழு கைத்தலமந்தி கைந்நிறையயெஃக கைப்படையொன் கைப்பழமிழந்த கைப்பொடிசாந் கைப்பொருள் கைபுனைசாந்தமுங் கைம்மலர்க்காந் கைம்மலர்த் கைம்மாண்கடற் கையகப்படுத்தலோ கையடுசிலையினர் கையவளைமை கையார்வளைகள் கையாரிலங்கெஃகி கையாற்பொதித் கையிற்றொழுதார் கையினாற்சொலக் கையுறையெழுதின கையொடுகண்டங் கைவரையன்றி கைவளர்கரும்பு கைவினைமுறுக்கி கொ கொங்குவிம்மு கொற்றவிமகனை கொள்வளர்குவி கொன்னுனைக் கோ கோக்கணங்கொதி கோங்குபூத்துதிர் கோட்சுறாவினத் கோட்டிளங்கலை கோட்டிளங்களிறு கோட்டிளங்குழவி கோட்டிளந்தகர் கோட்டிளந்திங் கோட்டுமீன்குழா கோட்புலிச்சுழல் கோடாதசெங்கோற் கோடிக்கோடுங் கோடிநுண்டுகிலு கோடுதையாக் கோணிலைதிரிந்து கோணைக்களிற்று கோதைகொண்ட கோதைதாழ்குடை கோதைநித்திலஞ் கேதைப்பாரத் கோதைபுறந்தாழ கோதைமங்கையர் கோதையருவிக் கோதையுங்குழ கோதையுந்தா கோதையுந்துகிலு கோதையுந்தோடு கோதையொடு கோழைவீழ்ந்தது கோதைவேனம் கோப்பெருந்தேவி கோமகளுருவமாய் கோமகன்கோல கோமான்மகனே கோமானடிசாரக் கோல்பொருகொடு கோலநெடுங்கண் கோலமணிவாய்க் கோமுற்றிய கோலிழுக்குற்ற கோவம்மாவாகி கோவிந்தனென்னு கோழரைமணிமடற் கோள்வயிரநீள கோளியங்குழுவை கோற்றொடிப்புரி கோன்றமர்நிகள கோனடையின ச சங்குடைந்தனைய சங்குவிம்முநித்தி சட்டகம்பொன் சண்பகந்தமனகந் சண்பகநறுமலர் சண்பகப்பூங்குன் சண்பகமாலைவேய் சந்தமாலைத்தொகை சந்தனக்கிளியும் சந்தனக்காவு சந்தனச்சேற்றி சந்தனஞ்சொரி சந்திரகாந்தமென் சலசலமும்மதஞ் சா சாணிடைநெடிய சாதலும்பிறத்தறா சாதிப்பைம்பொன் சாந்தகநிறைந்த சாந்தங்கிழியமுயங் சாந்திடைக்குளி சாந்தின்மேற்றொடு சாந்தினான்மெழுகி சாந்துங்கோதை சாமெனிற்சாத காரணர்போய சாரலந்திமிசிடை சாரிகைதிரியும் சி சிங்கத்துரிபோர் சிங்கநடப்பது சித்திரமணிக்கு சிதறரியொழுகி சிதைப்பருஞ்சீற்ற சிந்திப்பலென்சிறு சிந்துரப்பொடி சிந்தையிற்பரிதி சிரற்றலைமணி சிரையைந்தும் சில்லம்போதின்மேற் சில்லரிக்கிண்கிணி சில்லரிச்சிலம் சில்லரிசிலம்பு சிலம்பிரங்கிப் சிலம்பெனும் சிலம்பொடுமேகலை சிலைகொணாணிற் சிலைடத்தொழிற் சிலையினான்மாக்கள் சிலையொடுசெல்வ சிலையொடுதிரண்ட சிவிறியின்மாறு சிறகராற்பார்ப்பு சிறுகண்யானை சிறுவன்வாய் சிறுவெண்சங்கு சிறைப்புறங் சிறையனப் சின்மணிமழலை சின்னப்பூவணி சினந்தலைப் சினவுநர்க்கட சினைத்துணர்முழவ சீ சீதநீர்தெளித்துச் சீந்தாநின்ற சீர்கொளச்செய் சீர்தங்குசெம்பொற் சீரரவச்சிலம் சீவகன்றிருவின சீற்றமிக்கமன் சீறடியகிண் சு சுடுமண்மிசை சுண்ணந்தோற் சுண்ணநல்லன சுண்ணம்முடைந்து சுண்ணமுஞ்சூட்டு சுண்ணமென்பதொ சுண்ணமேற்சொ சுந்தரத்துகள் சுநந்தைதன்மகன் சுமைத்தயிர் சுரந்துவானஞ் சுரிமுகவலம்புரி சுரும்பிமிர்மாலை சுரும்புசூழ்குவளை சுரும்புடையலங்க சுரும்புநின்றறா சுரும்பெழுந்திருந்து சுற்றணிகொடுஞ் சுற்றார்வல்விற் சுறவுக்கொடிக் சுறாநிறக்கொடுங் சுனைகள்கண்களா சுனையநீலமுஞ் சூ சூட்டுஞ்சுண்ண சூடுறுகழலினாற்கு சூருயற்காண்டலு சூழ்கதிர்மதியமன் சூழ்கழன்மள்ளர் சூழ்பொற்பாவையை செ செங்கச்சிளமுலை செங்கட்குறுநரி செங்கட்புன்மயிர் செங்கண்மாறெழி செங்கதிர்ச்சிலம்பு செங்கயலிரட்டை செங்கயன்மழை செங்காற்குழவி செட்டிதனபாலன் செத்தமரமொய்த் செந்தாமரைக்குச் செந்தார்ப்பசுங் செந்தீக்கருந்துளை செந்தீப்புகை செந்நெருப்புணுஞ் செப்பியசீலமென்னு செம்புருகுவெங் செம்புறக்கனி செம்பொற்கடம் செம்பொற்கண்ணி செம்பொற்புளகத் செம்பொன்பின்னிய செம்பொன்மழை செம்பொன்மாடங் செம்பொன்வரை செம்பொனாற்செறி செம்பொனீண்முடி செம்பொனோலை செம்மலரடியுநோ செம்மலைப்பயந்த செய்கபொருள் செய்தநீர்மையார் செய்தவப்பாவ செய்தவனேவினை செய்பாவையன் செய்வினையென்னு செய்யதாமரை செய்யதாமரைப் செய்யவாய் செயிர்த்தவள்சிவ செயிர்ப்பொடுசிவந்து செருக்கயனெடுங் செருக்கிநிணந்தின்று செருநாடுசெஞ் செருநிலத்தவ செருவிளைத் செல்கதிமந்திரம் செல்வக்கிண்கிணி செல்வர்க்கேசிற செல்வர்மனத்தி செல்வற்கின்னணம் செல்வனுற்ற செல்வனையின்று செவ்வழியாழினூ செழும்பொன்வே செழுமலராவி செறியச்சொன்ன சென்றதுதடக்கை சென்றதோசெல் சென்றார்வரைய சென்றுகாலங் சென்னிமேன் சே சேட்குலாஞ்சிலை சேட்டிளஞ்செழு சேடார்செம்பொற் சேதாநறுநெய் சேந்துநீண்ட சேந்தொத்தலர்ந்த சேயிழைகணவ சேலணைசில்லரிய சேலுண்கண்ணியர் சேலைவென்றகண் சேவலன்னந் சேறமைசெறுவினுட் சேனடந்தரங்கு சொ சொரிபனிமுருக் சொல்லருஞ்சூற் சொல்லியநன்மை சொல்லியவென் சொற்றிறலன்றி சொற்றிறற்சூழ் சொன்மருந்து சொன்னநன் சோ சோர்புயன் சோருங்காரிகை சோலைசூழ்வரை சோலைமஞ்ஞை சோலைமீனரும்பி சோலையஞ்சுரும் சோலைவேய்மருள் ஞா ஞாயில்சூடிய ஞாலம்விற்பன த தகைமதியெழிலை தகைவாடிய தங்கிடையிலாத் தங்கொளிநித்திலத் தடங்கணாள்பணி தடங்கொடாமரைத் தடம்பெருங்குவளைக் தடமுலைமுகங்கள் தடித்திறைதிர தண்கயக்குற் தண்காஞ்சித் தண்டிலத்தகத் தண்டுவலியாக தண்ணந்தீம்புன தண்ணுமைமுழவ தண்ணுமைமுழவம் தண்மலர்மார்புற தணக்குந்தாமரை தத்தநிலனுமுயர் தத்துநீர்ப்பவளத் தத்தையொடுவீணை தப்பில்வாய்மொழி தம்பியுந்தோழன் தம்பியைச்சீவக தம்முடைப்பண் தம்மைநிழனோக்கி தமிழ்தழியசாய தயங்கிணர்க்கோ தரணிகாவலன் தருக்கொடுகுமரனார் தருமணற்றருப் தருமன்றண்ணளி தவம்புரிந்தடக்கி தவளைக்கிண்கிணி தழங்குரன்முரசிற் தழுமலர்த்தாம தழுமாவலிமைந் தழுமுற்றும்வாராத் தழையுங்கண்ணி தள்ளாதசும்மை தளையவிழ்கோதை தற்புறந்தந்துவை தறுகணாண்மைய தன்கழறொழாத தன்படையுடை தன்பான்மனையா தன்மதந்திவண் தன்றுணைவி தன்னமர்காதலா தன்னுயிர்தான் தன்னெறிவளர தன்னையாக்கிய தன்னையான் தன்னெப்பாரை தனக்கியானுயிரு தனியேதுயருழ தா தாசியர்முலை தாணெடுங்குவளை தாதணிகொழுநிழ தாதையாருவப்ப தாமச்செப்பிணை தாமணிநானச் தாமமார்பனுந் தாமமாலைவார் தாமரைச்செங்கட் தாமரைதடக் தாமரைப்போதிற் தாமரைமலர்தலை தாய்தன்கையின் தாய்முலைதழுவிய தாயிலாக்குழவி தாயுயர்மிக்கதந்தை தார்ப்பொலிதரு தாரணிபரவைமா தாவிறாழ்வடந் தாழ்தருபைம்பொ தாழிருந்தடக்கை தாழிவாய்மறைக்கு தாளுடைத்தடங் தானகமாடமேறி தானமர்காதலிதன் தானுந்தன்னுணர் தானுழநதுற்ற தானையுளன்றி தி திங்கண்மதிமுகத்த திங்கண்முக்குடை திங்கணலஞ்சூழ் திங்கணாளொன்பது திங்கணான்கவை திங்கள்சூழ்ந்த திங்கள்சேர்முடி திங்கள்வாண் திங்களங்கதிர் திங்களங்குழவி திங்களுகிரிற்சொலி திங்களும்மறுவு திங்களைத்தெளித் திங்களோடுடன் திண்டேரரசர் திண்ணிலைக்கதவ திண்பொருளெய் திணைநிலைப்பொரு திருக்கிளர்மன்ன திருக்குழன்மக திருக்குறிப்பன்ன திருத்துயில்பெற்ற திருந்தியகீழ்த்திசை திருந்தியநல்லறச் திருந்துகோதை திருந்துசாமரை திருந்துதகரச் திருந்துபொற்றேரு திருந்துமல்லிகை திருந்துவேற்சீவ திருநிறக்காம திருமகளிவளைச் திருமகற்பெற்றென திருமகனருளப் திருமணிகுயின்ற திருமல்கவந்த திருமலர்க்கமலத் திருமறுமார்பினை திருவடிதழுவி திருவந்நீணகர் திருவமன்னவ திருவமாமணிக் திருவமேகலை திருவிலேசொரிந்து திருவிற்கமைந்தான் திருவிற்குங்கற்பக திருவிற்போற்குலா திருவிற்றான்மாரி திருவின்சாய திருவின்சாயறன் திருவினல்லவர் திருவினோடகன்ற திரைகடருஞ்சங்கு திரைபொருகனை திரையிடைக் திரைவளையிப்பி திலகநீண்முடி திலகமுக்குடைச் திறந்தமணிக் திறைமன்னருய் தின்பளிதமாலைத் தினைவிளையேனற் தீ தீங்கரும்பனுக் தீங்கரும்பெருத்திற்றூ தீங்குயின்மணந்து தீண்டினார்தமைத் தீதும்முவேலான் தீந்தொடைநரம்பி தீந்தொடைமகர தீம்பயறியன்ற தீம்பால்கிளிமறந் தீம்பால்சுமந்து தீம்பாலடிசிலமிர் தீம்பாலமிர்தூட்டி தீம்பாற்கடலைத் தீம்பாற்பசியினிருந் தீம்பானுரைபோற் தீமுகத்துமிழும் தீராவினைதீர்த்து தீவினுளிழிந்து தீவினக்குழவி தீவினையுடைய து துகண்மனத்தின்றி துஞ்சாமணிப்பூட் துடிக்குரற்குரல துடித்தலைக்கரு துணையிறோகைம துந்துபிகறங்க துப்புறழ்தொண்டை துளங்குபொற்கு துளங்குபொன்னக துளங்குமாமணி துளங்குவெண்மதி துறக்கம்மிதுவே துறந்தமன்னவர் துறந்தவிந்நங்கை துறவின்பாற்படத் துறுமலர்ப்பிணை துன்பமுற்றவர்க் துன்னிமற்றத்தைக் துனிப்புறுகிளவி துனிவாயினதுன் தூ தூக்குமின்காளை தூங்குசிறைவா தூங்குறிக்கிடந் தூசுசூழ்பரவை தூசுலாநெடுந் தூசுலாம்பரவை தூசுலாய்க்கிடந் தூத்திரண்மணி தூம்புடைநெடுங் தூம்புடையவெள் தூமங்கமழ்பூந் தூமங்கமழுங் தூமஞ்சால்கோ தூமஞ்சூடிய தூமத்தாற்கெழீஇ தூமமார்ந்தணங்கு தூமமார்ந்தது தூமமார்ந்தன தூமமேகமழுந் தூமலர்மாலை தூமண்டூமக் தூவியஞ்சிறை தெ தெண்டிரைநீத்த தெண்ணீர்ப்பனி தெண்மட்டுத்துவ தெய்வதம்வணங்கு தெய்வமேகமழு தெருள்கலான்படை தெருளலேன்செய் தெருளிற்பொருள் தெள்ளறல்யாறு தெளிகயம்மலர் தெளித்தவின்முறு தெளிவறுத்தெழு தென்வரைப்பொதி தென்வரைப்பொதியி தென்றிசைமுளை தே தேக்கணின்னகி தேங்கயத்தணி தேங்காதமள்ளர் தேங்கொள்பூங் தேசிகமுடியுந் தேதாவெனவண் தேந்தாமஞ்செம் தேம்பெய்கற்பக தேமலரங்கட் தேய்ந்துநுண் தேய்பிறையுருவ தேர்த்தொகைத் தேரிவரூர்ந்தனர் தேவதுந்துபி தேவர்பண்ணிய தேவரேதாமுமாகி தேவனேமகனல தேறினேன்றெய்வ தேன்கறிகற்ற தேன்சென்றநெறி தேன்சொரிமுல்லை தேன்மலிந்தகோதை தேன்முழுங்குதார்க் தேன்வாயுமிழ்ந்த தேன்றருமாரி தேன்றலைத்துவலை தேனடைந்திரு தேனமர்கோதை தேனவாங்கமழ் தேனார்காமன் தேனிரைத்துயர் தேனிற்பாலென தேனிறாலனதீஞ் தேனுகுக்கின்ற தேனுடைந்தொழுகு தேனுயர்மகரவீணை தேனுலாமதுச் தேனுலாமாலை தேனூறுதீஞ்சொற் தேனெய்தோய் தேனெய்போன்றி தொ தொடிக்கையாற் தொடிகடவழ் தொடித்தோண் தொடித்தோள் தொடுத்தாங்கவம் தொண்டைவாயிவ தொத்தணிபிண்டி தொத்துடைம்மலர் தொல்லைநம்பி தொல்லைநால்வகை தொழித்துவண்டி தொழுததங்கை தொழுதிப்பன்மீன் தோ தோக்கையந்துகிலி தோட்டுவண்டொலி தோடணிமகளிர் தோடலர்தெரியலா தோடார்புனை தோடேந்து தோய்தகைமக தோய்ந்தவிசும் தோரைமலர் தோலாப்போர் தோழனுந்தேவி தோளாமணிகுவி தோளார்முத்து தோளாற்றழுவி தோளினால்வலி தோளினாலெஃக தோளினான்மிடை தோற்பொலிமுழவும் தோற்றனண்மடந் தோன்றியபுண் ந நகைமாமணிமா நகைவெண்டிங் நங்கைக்கின்றிறத் நங்கைதன்னலத் நங்கைநின்முக நங்கைநீநடக்கல் நச்சுநாகத்தினார நச்செயிற்றரவி நஞ்சனானுரைப்ப நஞ்சினையமிர்த நஞ்சுகடித்தாலு நஞ்சுபதிகொண்ட நஞ்சுமேய்ந்திளங் நட்டவற்குற்ற நட்பிடைக்குய்யம் நட்புப்பகையுட் நடுச்சிகைமுத்து நணிதினெண்வினை நந்தாவிளக்குப் நம்பன்சிறிதே நம்பனித்தலைநாக நம்பனைநகரி நம்பிநந்தட்டன் நரம்புமீதிறத்தல் நரம்பெழுந்திரங்கின நரம்பொலிபரந்த நல்லசுண்ணமிவை நல்லவணோக்க நல்லவள்வனப்பு நல்லவைபுரியுமாந் நல்லறத்திறைவனாகி நல்லனவேயென நல்லுயிர்நீங்கலு நல்லொளிப்பவளச் நல்வளத்தாமரை நல்வினைக்குழவி நல்வினைசெய்திலா நல்வினையுடைய நல்வினையென்னு நல்வினையொன்று நலங்கிளர்காண நலங்குவித்தனை நலத்தகுநான நலத்தகையவட்கு நலத்திருமடமக நலத்தைமத்தாக நலிவில்குன்றொடு நளிசிலம்பதனினு நற்செய்கை நற்பொறிகுயிற்றி நற்றவஞ்செய்த நற்றவஞ்செய்வார்க் நற்றவம்பரவைஞால நற்றானஞ்சீலநடுங் நற்றோளவள் நறவார்ந்த நறவிரிசோலை நறவிரியநாறு நறவெங்கோதை நறும்புகைநான நறுமலர்த்தாம நறுமலர்மாலை நறையுநானமு நன்மணிச்சிலம்பி நன்மணியிழந்த நன்மயிற்பொறி நன்மனவேந்தர் நன்முடிநின்மக நன்றப்பொருளே நன்னகர்நோக்கிநா நன்னிலத்திட்ட நன்னெறிநூனய நனந்தலையுலகின் நனைகலந்திழியும் நனைவளர்கோதை நா நாகத்தால்விழுங்க நாகத்துப்படங் நாகந்நெற்றி நாகநாண்மலர் நாகம்மருப்பி நாட்கடன்கழித் நாட்டியமணி நாடகநயந்து நாடுமின்னினி நாண்சுமக்கலாத நாண்மெய்க்கொ நாணுள்ளிட்டு நாணொடுமிடை நாப்புடைபெயர்த் நாமகணலத்தை நாமவென்றி நாயுடம்பிட்டி நாவாயிழந்து நாவிநோய்செய் நாவியகலமெழுதி நாவீற்றிருந்த நாழியுளிழுதுநா நாள்கண்கூடிய நாளும்புள்ளுந நாளுற்றுநம்பிபிறந் நாளைவருநைய நாளொடுநடப்பது நாற்கடற்பரப்பு நாறியுஞ்சுவைத் நாறுசாந்தழிந்து நாறுமும்மதத்தி நான்குநூறாயிரங் நான்மருப்பின்மத நான்றபொன்மணி நானக்கிடங்காடை நானநீரிற்கலந்து நானமண்ணிய நானமுரைத்தாங் நி. நிணம்பிலிற்றும் நிணம்பிறங்ககல நித்திலக்குப்பை நித்திலப்பந்துடனீ நித்திலமணிவண் நித்திலமுலையினார் நித்திலவடமும் நிரந்துகன்னலு நிரம்பாதநீர்யாற்றி நிரைகதிர்நித்திலங் நிரைத்ததீவினை நிரைவீழருவிந் நிலஞ்செதிளெடுக்கு நிலத்தலைத்திருவ நிலத்தினீங்கிநிதி நிலந்தினக்கிடந்த நிலம்பொறுக்கலாத நிலமறிந்தணிக நிலவியொளியுமி நிலவிலகியுயிரோ நிலவுவெண்கதி நிலவுறழ்பூணி நிலையிலாவுலகி நிவந்தவெண்குடை நிழன்மணிப்புரவி நிழனிமிர்நெடு நிறத்தெறிந்து நிறைத்திங்களொ நிறையொன்று நிறையோதநீர் நின்மகளிவளை நின்றவப்படை நினைப்பருநீணி நீ நீட்டியசடைய நீடகமிருந்த நீடுநீர்மணிநீரு நீண்டதோணெடி நீணிதிவணிக நீணிலம்வகுத்து நீணிலமன்னபோ நீதியாலறுத் நீந்துநித்திலவூர் நீர்செய்காந்த நீர்தங்குதிங்கண் நீர்துளும்புவயிற் நீர்நிறைகுளத்து நீர்நின்றிளகிற்றி நீர்முழங்குநீல நீரகம்பொதிந்த நீரணிமாடவாவி நீருடைக்குவளை நீரேந்திநெய் நீலத்துகிலிற் நீலநன்குதெளித்து நீனிறக்குழனேர் நீனிறங்கொண் நீனிறப்பௌவ நீனிறவண்ண நு நுங்களைவீணை நுண்டுகில்வேத நுண்டுகிலகலல் நுண்டுகினெகிழ் நுண்ணியவரியொ நுண்மதிபோன்று நுண்முத்தமேற்றி நுணங்குநுண் நுதிகொண்டன நுனசீறடிநோவ நூ நூல்புடைத்தாற் நூல்பொரவரிய நூற்கிடங்கொடு நூற்படுபுலவன் நூற்றுவர்பாகர் நூனெறிவகையினோ நெ நெகிழ்ந்துசோர் நெஞ்சங்கலங்கி நெஞ்சம்புனையா நெஞ்சினேரிழை நெஞ்சினொத் நெட்டிடைநெறி நெடியவாட்கண் நெடுங்கொடிநிழன் நெடுந்தகைநின்று நெடுமணியூபத்திட் நெடுவரையருவி நெய்கிழிவைக்கப் நெய்கனிந்திருண்ட நெய்த்தலைக்கருங் நெய்பருகிநுண்ட நெய்பெய்நீளெரி நெய்ம்முகமணிந்து நெய்வளஙகனிந்து நெய்விலைப்பசும் நெருப்புயிர்க்காக் நெருப்புற்றபோல நெல்லுயிர்மாந்தர்க் நெற்றிமேல்கோல் நெறிமருப்பெருமை நெறியிற்றளர் நே நேரார்நேருநீணி நொ நொச்சிமாமலர் நொந்தெடுக்க நோ நோக்கவேதளிர்த்து நோக்கினாணிறை நோக்கினாணெடு நோக்கொழிந்தொ நோய்முதிர்குரங்கு நோற்றிலர்மக ப பக்கத்தாற் பகல்வரைப்பவளச் பகைநரம்பிசை பகைபுறக்கொடு பகைவருள்ளமும் பச்சிரும்பெஃகிட் பச்சிலைப்பட்டு பசுங்கதிர்க்கடவுள் பசும்பொன்செய் பசும்பொனினுலகிற் பஞ்சிகொண்டெழு பஞ்சிசூழல்குற் பஞ்சிமெல்லடி பஞ்சியடரனிச்ச பஞ்சியடிப்பவள பஞ்சியனையவேய் பஞ்சிறைகொண்ட பஞ்சுசூழ்பரவை ப;டடதெல்லாம் பட்டதெனங்கை பட்டபழிவெள்ளி பட்டவர்தப்பலிற் பட்டியன்றகண்டத் பட்டுலாய்க்கிடந் படநாகந்தோ படம்புரனைந்தெ படம்விரிநாகஞ் படுகண்முழவினி படுகண்முழவும் படுதிரைப்பவளவாய் படுபழிமறைக்கலா படுமணிப்பைம்பொ படுமழைபருவம் படைப்பருங்கற்பி படைமலர்நெடுங் பண்கனிந்தினி பண்கனியப்பருகி பண்கெழுமெல்விர பண்டவழ்விரலிற் பண்டியாற்பண் பண்ணடிவீழு பண்ணமைதேரி பண்ணார்களிறே பண்ணார்கிளவிப் பண்ணார்பனை பண்ணியல்யானை பண்ணுரைமகளிர் பண்ணுலாங்கிளவி பண்ணொன்றுபாட பணித்தகுகோல பணிசெயாயத் பணிவரும்பைம்பொற் பணைமுனிந்தாலு பத்தியிற்குயிற் பத்திரக்கடிப்பு பதுமுககுமரன் பதுமையைப்பாம்பு பந்தட்டவிரலி பந்துமைந்துற் பரத்தையர்த்தோ பரந்தொளியுமிழு பரவைவெண்டிரை பரிதிபட்டது பரிந்தமாலை பரிந்தழுகின்ற பரியகஞ்சிலம்பு பரிவுற்றாய்பய பருகிப்பாயிருணிற் பருகினேற்கொளி பருகுவாரிற்புல்லி பருந்துமதனிழ பருமணிப்படங் பருமித்தகளிறனா பருமித்தகளிறு பருமுத்துறையும் பல்கதிர்மணியு பல்கதிராரமும் பல்கிழியும்பயினும் பல்பூம்பொய்கைத் பல்லினாற்சுகிர்ந்த பல்வினைப்பவளப் பலகைசெம்பொ பலிகொண்டுபேரா பவ்வத்தங்கட் பவ்வத்துப்பிறந் பவளங்கொள் பவளவாய்ச்செறு பவளவாய்பரவை பழங்குழைந்தனை பழங்கொடெங்கிலை பழியொடுமிடை பழுத்ததீம்பலவின் பள்ளிகொள்களிறு பளிக்கறைப்பவள பளிக்கொளிமணி பற்றாமன்னகர்ப் பற்றார்வஞ்செற்ற பறந்தியறருக்கி பறவைமாநாகம் பறையுஞ்சங்கம் பன்மணிக்கடகஞ் பன்மணிக்கதிர் பன்மலர்ப்படலைக் பன்மாண்குணங்கட் பன்னலம்பஞ்சி பனிமதிபொழி பனிமயிர்குளிர் பனிமுகின்முளை பனிவரைமுளைத்த பனைக்கையானை பா பாகவார்வாங்கிப் பாங்கின்மாதவர் பாசவலிடிப்ப பாசிப்பாசத்து பாசிலைசுருட்டி பாசிலைசுருட்டுபு பாசிழைபரவை பாட்டருங்கேவல பாட்டினைக்கேட் பாடகஞ்சுமந்த பாடல்வண்டி பாடலோசை பாடலோடியைந் பாடன்மகளிரும் பாடினருவிப் பாடினான்றேவ பாடுதும்பாவை பாடுவண்டிருந்த பாண்குலாய்ப் பாத்தில்சீர்ப் பாம்பெழப்பாம்பு பாய்ந்ததுகலின பார்க்கடல்பரு பார்கெழுபைம்பொ பார்நனைமதத்த பார்மலிபரவைத் பார்மிசையுலக பாரகங்கழுநர் பாரசூரவம்பல்ல பால்பரந்தனைய பால்வளைபரந்து பால்வெண்டிங் பாலருவித்திங்க பாலவியும்பூவும் பாலனையசிந்தை பாலாராவிப்பை பாலினாற்சீறடி பாலுடையமிர்தம் பாவமிதுநோவ பாவனைமரீஇப் பாவைநீபுலவி பாவையவளிருக்கு பாவையன்னவர் பாழிநம்படை பாளைமென்கமுகின் பாளைவாய்க்கழு பாற்கடற்பனி பாற்கடன்முளை பாற்கதிர்த்திங்கட் பாற்சுவையறிந்த பாற்றுளிபவள பாறுடைப்பரிதி பாறைபடுதயிர் பான்மிடையமிர்தம் பானாட்பிறைமரு பானிறப்பனிவரை பானுரைய்யன பானுரையினொய் பி பிடிக்கைபோலுந் பிடிக்கைவென்று பிடிமருண்டை பிடியொடுநின்ற பிண்டமுண்ணும் பிண்டியின்கொழு பிணிக்குலத்தக பிரிதலும்பிணியு பிரிந்தவற்கிரங்கி பில்கித்தேனொழு பிள்ளையுள்புகுந் பிள்ளைவென்பிறை பிளிறுமும்மதத்த பிறங்கினகொடுங் பிறந்தநீயும்பூம் பிறந்தவக்குழவி பிறந்தவர்களெ பிறந்துநாம்பெற்ற பிறனலமரற்றக்கேட் பிறையதுவளரத் பிறையார்திருநுதலும் பிறையெயிற்றெரி பின்னிவிட்டபிடி பீ பீலிநன்மாமயிலும் பீலிமாமயிலெரு பீழைசெய்துபெற்ற பு புக்கான்சுதஞ்சன் புகழ்ந்துரைமகிழ் புகழ்வரைச்செ புகையவாவிய புகையார்வண்ணப் புடைத்தென் புடைதாழ்குழை புடைநகர்த்தொழி புடையிருகுழையுமி புண்டோய்த்தெடு புண்ணவாம்பு புண்ணிடங்கொ புண்ணுமிழ்குருதி புண்மல்குமத்த புண்முழுதிறை புணர்ந்தவர்பிரித புணர்மருப்பியா புணர்வின்னினிய புணரிபோற்சிறு புதிதினிட்டபூந் புதுக்கலம்போலும் புதையிருளிரியப் புரவியுங்களிறு புரிக்குழன்மடந் புரிமுத்தமாலை புரிவளையலறி புருவச்சிலைநுதற் புல்லாருயிர்செகுத்த புல்லுண்புரவி புல்லும்போழ்தி புல்லுமல்லியும் புலந்தவள்கொடி புலம்பொடுதேவி புலவியுண்மகளிர் புலாற்றலைத்தி புலிப்பொறிப்போ புலியாப்புறுத்திக் புள்ளிநீர்விழுந்தது புள்ளிரைப்பன்ன புள்ளின்வாயுரை புள்ளும்யாழுங் புள்ளுவர்கையினு புள்ளொன்றேசொல் புற்றிடைவெகுளி புறநகர்மண புறவணிபூவிரி புன்காஞ்சித்தாது புனமாமயிலே புனலெரிதவழ்ந் புனைகதிர்த்திருமணி புனைகதிர்ப்பொன் புனைகதிர்மருப்புத் புனைதார்பொர புனைமருப்பழுந்த புனைமலர்த்தாரி பூ பூக்கணீர்விளை பூங்கணவ்வயி பூங்கழலானைப் பூங்கழற்குரிசிறந்த பூஞ்சதங்கைமா பூண்குலாம்வன பூணிறமுலையவள் பூணினானெருங்க பூணொடேந்திய பூத்தகிறவழும் பூத்தகோங்குபோற் பூத்தகோங்கும் பூத்ததைகொம்பு பூத்தலைவாரணப் பூத்தின்றுபுகன்று பூத்தொழியாப் பூந்துகில்புனைகல பூந்துகில்பொருதிரை பூந்துகிற்கொடுத்த பூந்துகின்மாலை பூநிறைசெய்த பூப்பரிவார்பொன் பூப்பெய்செம்பொற் பூம்பாவைவந்து பூமாலைசூடிற் பூமியும்பொறை பூமியையாடற் பூமுற்றுந்தடங்க பூமென்சேக்கை பூவணையமளி பூவரம்பாயகோதை பூவலர்ந்ததாரினான் பூவார்புனலாட்டி பூவியல்கோயில் பூவினுட்டாழ்குழ பூவினுட்பிறந்த பூவினுள்ளவள் பூவுடைத்தெரி பூவுண்டகண்ணாள் பூவைகிளிதோகை பூவையுங்கிளியுங் பூவையுங்கிளியுமன் பெ பெண்ணிடர்விடுப்ப பெண்ணுயிரவல பெண்ணெனப் பெண்பாலவர்கட் பெண்பெற்றபொலி பெண்மைநாண்வன பெய்யார்புயலிற் பெயன்மழைப் பெரியவாட்டடங் பெரியவின்பத் பெருந்தகைக்குரிசி பெரும்பெயர்ப் பெரும்பொருணீதி பெருமகற்காக்கம் பெருமகன்காதற் பெருமனைகுறுக பெருமுழங்கு பெருவலியதனை பெருவெண்டி பெற்றகூழுண்டு பெற்றவந்நிமித் பெறுமன்பினளென் பே பேதைமையென்னு பேரஞரிடும்பை பேரிடர்தன்க பேரினும்பெண்டிரை பை பைங்கண்மணி பைங்கணுளையெ பைங்கதிர்மதிய பைங்கழன்மன்னர் பைத்தரவத்திரை பைந்துகின்மகளிர் பைந்தொடிமகளிர் பைந்நாகப்பள்ளி பைம்பொற்புளகப் பைம்பொனிமிர் பைம்பொனீளு பையரவிழுங்கப் பொ பொங்கல்வெம்முலை பொங்கியாயிரந் பொங்குமணிமுடி பொய்கைபோர் பொய்கையுட் பொய்யொடுமிடை பொரியரைஞாழலும் பொருகயலுகளிப் பொருங்களத்தா பொருசரஞ்சலாகை பொருதிழியருவி பொருந்தலாற்பல்லி பொருந்தியவுலகி பொருந்துபொற் பொருமதயானை பொருவருங்குரை பொருளுடைவாய் பொலிவுடைத்தாகு பொழிந்துகுகாதல் பொழிந்துநஞ்சு பொற்கச்சார்த்த பொற்குடந்திருமணி பொற்சிறுதேர் பொற்பமைதாமக் பொற்புடையபூமாலை பொற்புடையமளி பொற்பூண்சுமந்த பொற்பூண்சுமந்து பொறிகுலாய்க் பொறிதவநெருங்க பொறிமயிலிழியும் பொறியறுபாவை பொறியின்மே பொறைவிலங்கு பொன்செய்குடங் பொன்செய்வேய் பொன்சொரிகதவு பொன்பனிப்புறும் பொன்மகரம்வாய் பொன்வரைநிலாக் பொன்வரைபொரு பொன்விளைத்த பொன்றியவுயி பொன்றுஞ்சாகத் பொன்றுஞ்சுமார்பன் பொன்றுலாம்பொன் பொன்னகரவீதி பொன்னங்காம் பொன்னங்குவட்டிற் பொன்னணிகா பொன்னணிதிகி பொன்னரிமாலைதா பொன்னரிமாலைபூ பொன்னறையு பொன்னனாள்புண பொன்னாவழி பொன்னியல்குரு பொன்னியன்மணி பொன்னிலஞ்சென் பொன்னிலத்தெ பொன்னிறக்கோ பொன்னினாகும் பொன்னுகம்புரவி பொன்னுடைய பொன்னைவிட்ட பொனங்கொடி போ போகமகளிர்வலப் போகுமாமழை போதவிழ்தெரிய போதுலாஞ்சிலை போதுவாய்திறந்த போதெனக்கிடந்த போதொடுநான போர்க்கோலநீக்கி போர்த்தகல் போர்த்தநெய்த் போர்ப்பண்ணமைத் போர்ப்பறைமுழ போர்மயிர்க்கேட போழ்ந்துகதிர்நேமி போழ்மதிபோற் பௌ பௌவநீர்ப் ம மகரவெல்கொடி மங்கலப்பெருங் மங்கலமடிந்த மங்கலவணியினர் மங்கலவெள்ளை மங்குலாயகிற்புகை மங்கைக்குரியான் மங்கைநல்லவர் மங்கைமனாவனைய மங்கையர்தம்மொடு மங்கையர்பண் மஞ்சிவர்மணிவரை மஞ்சிவர்மின்ன மஞ்சுசூழ்வதனை மஞ்சுசூழ்விசும் மட்குடமல்லன மட்டலர்வனமலர்ப் மட்டவிழ்கோதை மட்டவிழ்கோதைவா மட்டவிழ்ந்ததாரி மட்டார்பூம்பிண்டி மட்டுவிரிகோதை மட்டொளித்துண் மடத்தகையநல்லார் மடந்தைதிறத்தினி மடநடைபெண் மடமாமயிலே மடலணிபெண் மடற்பனைக்குழா மடையவிழ்ந்த மண்கணைமுழவம் மண்கனிந்தபொன் மண்காவலைமகிழாதி மண்கேழ்மணி மண்டலநிறைந்த மண்டலிமற்றிதென் மண்ணகங்கா மண்ணகங்காவலின் மண்ணகமடந்தை மண்ணாரமஞ்சளு மண்ணிடமலிய மண்மிசைக்கிட மணமாலைமடந்தைய மணிக்கண்மா மணிசெய்கந்து மணிசெய்வீணை மணித்துணரனைய மணிநிறமாமை மணிபுனைசெம்பொற் மணிபொதிதுகிலிற் மணிமகரம்வாய் மணிமதக்களிறு மணியறைந்தன்ன மணியியல்சீப்பிடச் மணியியல்யவனச் மணியியல்வள்ளத் மணியியற்பாலி மணியிருதலையுஞ் மணியின்மேற் மணியினுக்கொளி மணியும்முத்தும் மணியுமிழ்திருக் மணியுயிர்பொன் மணியுறைகழிப்பது மணியெழுவனைய மணியொலிவீணை மணிவண்டிம்மா மணிவண்டொன் மணிவரையெறி மத்தம்புல்லிய மத்திமதேசமா மத்திரிப்புடைய மதிதரனென்னு மதியகடுரிஞ்சு மதியங்கெடுத்த மதியம்பொழி மதியறியாக்குண மதியினுக்கிவர்ந்த மதியுஞ்சுடரும் மதுக்களிநெடுங் மதுக்குடம்விரி மதுக்குலாமலங்கன் மதுக்கைமாலை மதுமடைதிற மதுமுகத்தலர்ந்த மந்தாரமாமாலை மந்தாரமாலை மந்திரங்கேட்டு மந்திரத்தரசன்கா மந்திரத்தரசன்வல் மந்திரமருந்திவை மந்திரமறந்து மந்திரமன்னன் மந்திரமூன்றுந் மந்திரவிதியின் மயக்கப்போர் மயற்கையிம்மக் மயிர்வாய்ச்சிறு மயிரெறிகத்திரி மயிலினமிரியவாங் மயிலினாடலுமந்தி மரகதமணிப்பசும் மரவநாகமணங் மராமரமேழுமெய்த மருங்குலுமொன்று மருடகமல்லிகை மருப்பினால்வேழம் மருமகன்வலந்தது மல்லல்யானை மல்லலங்கங்கை மல்லலந்தெங்கிள மல்லலைத்தெழுந்து மல்லற்றொல்வளத் மல்லன்மலையனைய மல்லன்மாக்கட மல்லன்மாக்கடலி மல்லனீர்மணி மல்லிகைமணங் மல்லிகைமலிந்த மல்லிகைமாலை மல்லுறையலங்கன் மலங்குவித்தாவி மலரணிமணிக் மலரேந்துசேவடிய மலிந்தநன்மாலை மலைத்தொகை மலைபகவிடிக்குஞ் மலையச்செஞ்சாந்து மழகளிற்றெருத் மழைக்குரலுரு மழைதவழ்சோலை மழைமொக்குளன்ன மழையிடைக்குளி மழையொடுசூழ்ந் மற்பபம்மலர்ந்த மற்றடிகள்கண்ட மற்றவடந்தைநாய்க மற்றவள்வெலக்கே மற்றவனுலோகபா மற்றிம்மாநகர் மற்றுமாதர்தன் மறங்கொள்வெங்கதி மறப்படைபசித் மறுமுயற்கிவர்ந்த மறுவறமனையினீங்கி மறுவறவுணர்ந் மறையார்வேள்வி மறையொன்று மறைவல்லாற்கு மன்பொரியமாமனடி மன்மதன்மணிக் மன்மதனென்னுங் மன்றற்கிடனாமணி மன்றன்மாமயி மன்றனாறிலஞ்சி மன்றனாறுமணி மன்னர்கள்வெகுண் மன்னர்கோயி மன்னர்தம்வெகு மன்னவகேண்மதி மன்னவவருளி மன்னவன்சிறு மன்னவன்பகை மன்னவன்றுறவெ மன்னவன்னிரை மன்னவனிரை மன்னன்செய்த மன்னனாங்போர் மன்னனாற்சீற மன்னாகவிணைப்பட மன்னிரைபெயர் மன்னுநீர்மொக்கு மனத்திடைச்செ மனைப்பெருங் மா மாக்கடற்பெருங் மாக்கவின்வளர மாகநீள்விசும்பிடை மாகம்முழக்கின் மாசறுமணியு மாசித்திங்கண் மாசிலாற்பிறந்த மாசொடுமிடைந்து மாடமோங்கும்வள மாடியந்தானை மாதர்தன்வன மாதர்யாழ்தடவர மாதர்வாழ்வுமண் மாதரார்கள்கற்பி மாதவப்பெருமை மாதவன்சரிதமுந் மாதவனெனப்பெயர் மாதியாழ்மழலை மாதுகுமயிலினல்லா மாந்தருமாவுஞ் மாநகர்சுடுத மாநீர்மணிமுகி மாமணிமுகடு மாமனுமருகனும் மாய்தலும்பிறத்த மாரிமல்கிமணங் மாரியிற்கடுங்கணை மால்வரைதொடுத்து மால்வரைவயிறு மாலேறனையா மாலைக்கணாம்பல் மாலைக்கதிர்வேன் மாலைக்குடைமன்னர் மாலைச்செற்றான் மாலைநுதிகொண்டு மாலைப்பந்தும்மாலை மாலைபலதாழ்ந்து மாலைமகளிரணிந்த மாலைமாமதிவெண் மாலையுங்கண்ணி மாலையுட்கரந்த மாலையும்பசுபொ மாலைவாடின மாலைவாண்முடி மாலைவாய்நெடு மாலைவெள்ளரு மாவடுமருட்டு மாழ்கிவெய்துயிர்த் மாழ்குபுமயங்கி மாற்றமொன்று மாற்றரும்பசும் மாற்றவர்மலைப் மாற்றவர்மறப்படை மாற்றவன்சேனை மாற்றவனொற்ற மான்வயிறார்ந்து மானக்கவரிமணி மானயாநோக்கி மானிடம்பழுத்தன மானுமரனுமிரங்க மி மிக்கநாளினால் மிக்கார்தங்கேட்டின் மிகவாயதொர் மிகுகொடாமுத்தஞ் மிடைந்தமாமணி மின்றவழ்மணிவரை மின்றெளித்தெழுதி மின்றோய்வரை மின்னடுகனையிரு மின்னணங்குறு மின்னார்சிலம்பிற் மின்னிரைத்தபை மின்னிலங்கெஃகி மின்னிலங்கெயி மின்னினான்மலையை மின்னினீள்கடம் மின்னுகுழையினர் மின்னுங்கடற்றிரை மின்னுடைமணி மின்னும்பூணும் மின்னுமிழ்வைர மின்னுமிளிர்பூங் மின்னுவாட்டட மின்னுளேபிறந்த மின்னெனமிளிரும் மின்னேரிடையா மின்னொப்புடைய மின்னொர்பூம்பொ மின்னொழுகுசாய மீ மீண்டவரேகுதலும் மீன்கணினளவும் மீன்சேர்குழாமனை மீன்றயங்குதிங்கண் மீனெறிதூண்டில் மீனேறுயர்த்த மு முகடுதணியழுத்தி முகிற்றலைமதிய முட்டிவட்டனைய முடிகெழுமன்னன் முடிச்சடைமுனிவ முடித்தலைமுத்த முடிமனரெழுதரு முடியணியமரரு முத்தகநிறைந்த முத்தணிந்தமுக்கு முத்தம்வாய் முத்தமாலைமுப்பு முத்தார்மருப்பினி முத்திலங்காகந் முத்துடைவெண் முத்துமிழ்திரை முத்துமிழுமுந்நீர் முத்துலாய்நடந் முத்தொளிர்தாம முதிர்பெயன்மூரி முதுமரப்பொந்து முந்துசூர்தடிந்த முந்துநாங்கூறிய முந்நீர்படுசங் முந்நீர்பவளத் முந்நீர்ப்பிறந்த முந்நீர்வலம்புரி முயங்கினான்சொன் முரசமார்ந்தபின் முரணவியவென்று முரல்வாயசூற் முருக்கிதழ்குலிக முருகுகொப்புளிக் முருகுடைந்தபூங் முருகுலாமுல்லை முருகுவார்குழலா முருகுவிண்டுலா முருகுவிம்மிய முருகுவிம்முகோதை முருந்தனையதூ முல்லைசூழ்முல்லை முல்லைப்பூம்பந்து முல்லைமுகைசொரி முல்லையங்குழ முலைத்தடஞ்சேதகந் முலைமுகஞ்சுமந்த முலைமுதறுறந்த முலையீன்றபெண் முலைவட்டப்பூணு முலைவைத்ததடத் முழங்கினவின் முழங்குகடனெற்றி முழங்குதிருமணி முழங்குதெண்டிரை முழவங்கண்டுயி முழவணிமுதுநகர் முழவின்னிசை முழவுஞ்சங்க முழவெனத்திரண்ட முழாத்திரண்மொ முழுதாரமின்னு முழுதுமுந்திரிகை முழுதுமெய்ந்நல முழுதுலகெழிலே முழுநீர்வளைமேய்த முழுப்பதகர்தாடு முழைமுகத்திடி முளரிமுகநாக முளிமரக்காடு முளைத்தெழுபரிதி முளைத்தெழுமதிய முறிந்தகோல முறவன்முன்சிறிய முன்னுபுகீழ்த் முன்னொருகா முனித்தலைக்கண் முனிமைமுகடாய முனிவருமுயன்று முனைத்திறத்து முன்வைற்றொழுது மூ மூசுதேன்வாரியல் மூசுதேனிறாலின் மூரித்தேந்தாரி மூவாமுhலாவுலக மூழிவாய்முல்லை மெ மெய்ப்படுசாந்தும் மெய்ப்படுதாரை மெய்ப்படுமுதுபுண் மெய்பெறாவெழுத்து மெய்யணிசெம்பொற் மெய்யுரைவிளங்கு மெய்வகைதெரி .மெல்லென்சிலம் மெல்விரன்மெலிய மெலியவர்பெற்ற மெழுகினாற்புனைந்த மெழுகுசெய்படம் மெள்ளவேபுருவங் மென்றினைப்பிறங் மே மேகம்மீன்றமின் மேகமேமிடைந்து மேகலைப்பரவை மேவிநம்பிக்கு மேற்படுகற்பகமாலை மை மைத்துனநீண்ட மைத்துனன்வன மைதிரண்டவார் மைதோய்வரை மைந்தர்தம்வண் மைந்தரொடூடி மைந்தரைப்பார் மைந்நூற்றனைய மைபூத்தலர்ந்த மைபொதிகுவளை மையணிமதயா மையல்யானையின்ப மையல்யானையின்மும் மையலங்களிற் மையன்மதயானை மையார்நெடுங்கண் மையில்வாணெடுங் மொ மொய்ப்படுசரங் மொய்யமர்ஞாட் மொய்யார்குழலார் மோ மோட்டிளங்கு மோட்டும்முதுநீர் மோட்டுமுதுநீர்ம மோடுகொண்ணி மோடுடைநகரி மோமுபடுபண்ட மௌ மௌவலங்கு யா யாண்டுநிறைந்தே யாண்டையாயை யாப்புடையாழ் யாமகளீதுநீர் யாவளேயாயினு யாவனேயானுமாக யாழ்கொன்றகிளடிவ யாழுங்குழலும் யானலனவ்வை யானைகுங்கும யானையுளரசன் யானைவெண்மருப்பி யானைவெண்மருப்பு வ வசையறநிறை வஞ்சமின்மனத்தி வஞ்சவாய்க்காமன் வஞ்சிவாட்டிய வட்டக்சூறையர் வட்டம்மலர்த்தா வட்டிகைப்பா வட்டிகைமணி வட்டுடைப்பொலி வட்டுடைமருங்குல் வடகமுந்துகிலுந் வடதிசைக்குன்ற வடதிசையெழுந்த வடமலைப்பொன்ன வடிக்கண்மகளிர் வடிகயிறாய்ந்து வடித்தபோத்தொடு வடிநிரைநெடிய வடிமலர்க்காவி வடிமலர்நெடுங் வடிவமிதுமூப்ப வடுப்பிளவனைய வண்கையாற்கலி வண்சிலைகொண் வண்சிலையைவனப் வண்சிறைப்பவள வண்டலர்கோதை வண்டலைமாலை வண்டளிர்ச் வண்டறைந்த வண்டார்குவளை வண்டினமுகபடா வண்டுகொப்புளித் வண்டுசூழ்பூப்பலி வண்டுணமலர்ந்த வண்டுதுயில்கொ வண்டுதேன்சிலை வண்டுபடுதேற வண்டுமூசறா வண்டுமொய்த் வண்டுவாழ்கொ வண்டுவாழ்பயில் வண்டுவேய்ந்து வண்டூதவம்மரு வண்ணத்திங் வண்ணத்துகி வண்ணப்பூமாலை வண்ணமாமலர் வண்ணவாச்சிலை வண்ணவார்சிலை வண்ணவொண் வணக்கருஞ்சிலை வணக்கருந்தானை வணங்குநோன் வந்தவரவென்னை வந்தவனையாரு வந்துதரன்கூறிய வந்துதேன்மயங்கி வம்பலர்கோதை வம்பவிழ்கோ வம்புகொண்டிரு வம்புடைமுலை வம்புவீக்கிவரு வயிரம்வேய்ந்த வயிரமணிக்கலன் வயிரமுண்ணிரை வயிரவரை வயிரவில்லுமிழும் வரிக்கழற்குரிசின் வரியநாகமணி வரிவளையரவ வருக்கையின்கனி வருக்கையின்பழ வருந்தியீன்றான் வருந்துநீர்மைய வருவர்நங்கேள் வரைநிரையரு வரையகன்மார் வரையின்மங்கை வரையுடுத்தபள்ளி வரையோடுமுரு வரைவிழித்திமை வரைவிளைவளர் வல்லதெனையென்ன வல்லவன்வடித்த வல்லான்புனைந்த வலம்புரிபொறித்த வலம்புரியீன்ற வலியுடைக்கைக வலைப்படுமானெ வலையவர்முன் வழங்குதாரவன் வழங்குவங்கக் வழிவரல்வருத் வழிவளர்மயிலஞ் வழுவின்மாந்த வழைச்சறுசாடி வள்ளநீரரமங்கை வள்ளலைவாச வள்ளற்கைத்தல வள்ளறான்வல்ல வள்ளியின்னமி வள்ளிசாரிய வள்ளுகிர்நுதியி வள்ளுகிர்வரித்த வளமலரணியப் வளமுடிநடுபவர் வளர்த்தகைத் வளர்த்தசெம்மை வளர்மைபம் வளைக்கையா வளைகடல்வலை வளைறிநவார் வளையசுடந்தர வளையறுத்தனைய வனைகலக்குயவ வனைகலத்திகிரி வா வாக்கணங்கார் வாக்கினிற்செய் வாசநற்பொடியு வாசநீலங்கழு வாசநெய்வண்டு வாசமிக்குடைய வாசவெண்ணெயும் வாட்கையம் வாட்டிறற்குரிசி வாட்படையனுங்க வாடாதமாலை வாண்மதர்மழை வாண்மின்னுவண் வான்முகத்தலர்ந்த வாணிமொன்றுந் வாணுதற்பட்ட வாமான்றிண் வாய்ச்சிவாயுறுத் வாய்ந்தவிம்மாதர் வாய்ப்படுங்கேடு வாயழலுயிர்க்கு வாயிற்றோரணங் வார்குழைவில்லிட வார்சிலைவடிப் வார்செலச்செல்ல வார்தருதடங் வார்தளிர்ததை வார்ந்திலங்கெ வார்ந்துதேன்றுளி வார்பிணிமுரச வார்பொன்முடி வார்மதுத்துளி வார்மீதாடி வார்முயங்கு வாரணிமணித்துடி வாரம்பட்டுழி வாருடுத்தவெம் வாருலாமுலை வாலரக்கெறிந்த வாலரிகழுவிய வாவிப்புண்ணடை வாழ்கநின்கழலடி வாழ்வதோருபா வாழியரிறைவ வாழைமல்கிய வாள்கடைந் வாள்களாலே வாள்வாயுமின்றி வாளரந்துடைத் வாளார்மதிமு வாளியம்பன வாளிரண்டுமாறு வாளிழுக்குற்ற வாளினான்மிடை வாளும்வேலு வாளுழலைபாய் வாளுறைநெடுங் வாளைமீன்றடி வாளொடுவயவரீ வாளையினினந் வான்சுவையமிர்த வான்மலர்நுரை வான்றருவளத்த வானக்கிநின்று வானத்தின்வழுக்கி வானமீனினரும்பி வானமுறநீண்ட வானரமுகள வானவர்மகளிர் வானவர்மலர் வானார்கமழ் வானிடையொரு வானின்வழங்கும் வானுறைவெள்ளி வானோரேந்துமலர் வி விசயனேவிசயன் விசும்பிவர்மேகம் விசையையென்று விஞ்சைகள்வல்லே விஞ்சையர்வீர விஞ்சையர்வெம் விடடழல்சிந்தி விடாக்களிவண்டு விடுகணைவிசை விடுசரம்விசும் விடுபொறியர விடைசூழேற்றின் விடையுடை விண்டவருடலங் விண்டார்த்தே விண்டுவேய்நர விண்ணகத்திளை விண்ணகத்துளர் விண்ணகம்விளங்க விண்ணவர்வியப் விண்ணாறுசெல் விண்ணியங்கரு விண்ணிற்றிங்கள் விண்ணின்மேன் விண்ணினோடமிர் விண்ணுமண்ணு விண்ணோர்மடமகள் விண்பாற்சுடர் விண்புகுவியன்சினை விண்புதைப்பன விண்விளக்குவபோ விதையத்தார் விம்மகிற்புகையின் விம்முறுவிழும விரிகதிர்விளங்கு வரிகதிராரமின்னி விரிந்துவான்பூத் விரிமாமணிமாலை விரியுமாலையன் விருந்தாயினையெறி விரும்புபொற்றட்டி விரைசெய்தாம விரைத்தலைமாலை வில்லிடுமணி வில்லின்மாக்கொன் விலக்கில்சாலை விலங்கரம்பொருத விலங்கலன்ன விலங்கிவில்லுமி விலைபகர்ந்தல்குல் விலைவரம்பறிதலில் விழுக்கலஞ்சொரிய விழுக்கொடுவெ விகுத்தகுமணி விழுத்திணைப்பிற விழுமணிமாசு விள்ளாவியனெடும் விளக்கழலுறுத்த விளங்கினாளுலக விளங்குபாற்கட விளங்குவெண் விளங்கொளிவிசும் விளங்கொளிவி விளங்கொளிவிசு விளைகபொலிக விற்படைவிலக்குவ விற்பழுத்துமிழ்ந்த விற்பொறிகள் விற்றிறல்விசய விற்றிறலான் விற்றிறனம்பி விற்றொழிலும் வினைக்குஞ்செய் வினைப்பெருந் வினையதுவிளைவின் வினையதுவிளைவு வினையமாமாலை வினையுதிர்த்தவர் வீ வீக்கினான்பைங் வீக்கினான்றாரை வீங்குநீர்விதை வீங்குபாற்கடலு வீங்கோதவன் வீட்டகந்தோ வீட்டருஞ்சிறை வீட்டினதியற்கை வீடில்பட்டினம் வீடிலைந்தரை வீடுமலியுலகின வீடுவேண்டி வீணையுங்குழலு வீணைவித்தகன் வீணைவென்றவள் வீரவேலுடம் வீழ்ந்தபந்தின்மேல் வீழ்ந்துமயில் வீழ்ந்துவெண் வீழ்பனிப்பாறை வீழ்மணிவண்டு வீறழிவினைசெய் வீறின்மையின் வெ வெங்கதிர்க்கட வெஞ்சிலையின்வே வெஞ்சிலையின்வேடர் வெஞ்சினங்குறை வெஞ்சினவெகுளி வெஞ்சினவேழ வெண்டுகின்மாலை வெண்ணரை வெண்ணிறத்து வெண்ணிறமழை வெண்ணெய்போன் வெண்ணெயாயது வெண்மதிநெற்றி வெண்மதியிழந்த வெதிர்ங்குதைச் வெந்தடிதின்ற வெந்தனம்மனம் வெந்திறலாளன் வெந்துருக்குற்ற வெந்தெரிசெம்பொ bம்மைகொண்ட வெருகுவேட்பச் செருவிமாநகர் வெல்களிற்றச்ச வெலற்கருங்குஞ்சரம் வெவ்வாயோரி bவ்வினைசெய்யு bவ்வினைவெகுண்டு வெள்ளணியணிந்த வெள்ளப்போழ் வெள்ளியானைமென் வெள்ளிவெண்மலை வெள்ளிவேதண்ட வெள்ளிலைவேற் வெள்ளிலோத்தி வெள்ளுருவமாலை வெள்ளெயிற்றரவு வெள்ளைமைகல வெளிற்றுடற்குருதி வெற்றிவேன்மணி வெறிமாலைகள் வென்றவனகலம் வென்றிநாங்கோடு வென்றியாக்கலு வே வேகயானைமீளி வேட்கைமை வேட்கையூர்தர வேட்டனபெறாமை வேண்டியதெம வேண்டுவனம்பி வேந்தனால்விடுக் வேந்திரியக்ணை வேந்துகாயினம் வேந்தொடுமாறு வேமென்னெஞ்ச வேய்ந்தவெண் வேய்நிறக்கரும் வேயேதிரண்மென் வேரிநாறலங்கன் வேரியின்மெழுக் வேலின்மன்னனை வேலுடைத்தடக் வேலைவாய்மணி வேழமும்மதத் வேதுவெண்கோக வேழவெண்டிர வேள்வியினுண்டி வேள்விவாய்க்கண் வேற்றுவரில்லா வேற்றைவந்த வேன்மிடைந்த வேனில்வாய்க் வேனில்வாய்ப்பட்டு வேனிலாடும்விரு வேனிறைவாண் வேனெடுங்கண் வை வைகிற்றெம்மனை வைத்தபந்தெ வையகமுடைய வையகமூன்றும் வையமூன்றுமுட அருஞ் சொற்பொருள் அகராதி ( எண் - செய்யுளென்) அஃகம் - முiறமை 2087 அக்காரை - உக்காரையென வழங்கும் ஒருவகைச் சிற்றுண்டி 928, 312 அகப்பூ - இதயகமலம் 1662 அகல்வு - அகற்சி 360 அகழி 99, 1250, 1444 அகை - கூறுபாடு 2694 அகைத்தகைத்து - அறுத்தறுத்து 2766 அகையாது - தாழாமல் 1379 அங்காமினி - ஆகாசகாமினி யென்னும் வித்தை 1713 அங்குரார்ப்பணம் - தானியமுளைகளைப் பாலிகைகளில் இடுவதொரு சடங்கு (அங்குரம் - முளை; அர்ப்பணம் - இடுதல்) 2632 அச்சணந்தி - சீவகனுடைய ஆசிரியன் 409 அச்சு - வலி 2777 அச்சுதந்தெளித்தல் - அறுகுமரிசியுமிடல் 2411, 2426, 2494 அச்சுறுகொழுந்தொடர் - யானையின் வேகத்தை அடக்குவதொரு கருவி 1836 அசதியாடல் - பரிகாசம் செய்தல் 1871, 1988 அசலகீர்த்தி - கனகமாலையின் சகோதரருள் ஒருவன் 1681 அசலன் - சச்சந்தனுடைய சேனாபதி, புத்திசேனன் பிதா; இப்பெயருள்ள வீரனொருவன் காதம்பரியிற் புகழப்பட்டுள்ளான் 1681, 1790 அசனிவேகம் - கட்டியங்காரன் பட்டத்து யானை 973, 2145, 2313 அசாரவாசி - வாயில் காப்பவன்; ஆசாரவாசியெனவும் வழங்கும் 430 அசி - அரிசி(வி) 659 அசிப்ப - சிரிப்பன 659 அசுணமா - இசையறிவதொரு விலங்கு 1402 அசும்பு - ஊற்று, சிறு திவலை, நீர்ப்பொசிவு 100, 278, 494, 522, 533 அசைதல் - தங்கல் 2701 அசைந்த - இளைத்த 692 அசைவு - ஓய்வு 201; வருத்தம் 1185 அஞ்சனமாநதி - சித்திரகூட மலையிலிருந்து பெருகுவ தோராறு (ஜை) 1193 அட்டும் - வடியும் 112, 2798 அடங்கலர் - பொறிகளை வாட்டாதார் 2842 அடர் - இதழ், தகடு 179, 341 அடாக்களியவர் - ஒழுக்கக்கேடு பண்ணாத களிப்பையுடையவர் 916 அடிக்குடில் - அடிச்சேரி 2588 அடிசிற்புறம் - உணவின் பொருட்டு விடப்பட்ட இறையிலிநிலம் 2577 அடித்தியார் - தலைவியார் 2045 அடிமனை - சுற்றுச் சுவர் 837 அடியீடேத்தல் - அடியிடுதலை (அடி வைத்தலை)ப் புகழ்தல் 2369, 2454 அடியொட்டி - ஒரு கருவி 2768 அடிவீழ்ச்சி - வணக்கம் 1873, 2587 அடைச்சி - செருகி 1397 அடைச்சி - சேர்த்து 991 அடைச்சி - புதைத்து 1048 அடைப்பை - வெற்றிலைப்பை 1303 அண்ணலம்புள் - அரச அன்னம் 1893 அண்ணாவுரிஞ்சி - உள்நாவை உரிஞ்சி 2703 அண்பல் நீரூறமிர்தம் - புளிங்கறி, அண்மைவிளி 1502 அணங்கு - தெய்வத்தன்மை, தெய்வம் 162,171,353,1473,2444 அணல் - கழுத்து 1314, 2345 அணல் - கீழ்வாய் 296 அணல் - அணலூன்றி 2050 அணிகம் = அணி - ஆபரணம், ஊர்தி (திரிபு) 2811, 3115 அணை - மெத்தை 170 அத்தம் - அத்தகிரி, வழி (வி) 18, 1185, 1733, 2022, 2211 அத்தவாளம் - மேற்போர்வை 462 அதட்டம் - கீழ்வாய்ப் பல் 1286 அதிங்கத்தின் கவளம் - அதிமதுரத்தின் குளகு 750 அதிபதி - இறைவன் 563 அதிவாசம் - ஒரு சடங்கு 2363 அதுக்கல் - அடித்தல் 425, 761 அந்தரகுமரன் - தேவரிலொருசாதி (ஜை) 1264 அநங்கமாலை - ஒரு நாடகப் பரத்தை 693, 2584 அநுகரணம் - ஒன்றைப் போலே அப்பணை - அம்பு அணை 2505 அப்புது அப்புது, ஆது ஆது, ஐ ஐ என்னுமொலி; பாகர் யானையைத் தம் வழி நடத்தக் கூறும் ஒலிக் குறிப்புக்கள் 1834 அம்பலம் - பலருங்கூத்துக் காணுமிடம் 2112 அம்பி - கப்பல் 580 அம்மை - அமைதி 3131 அமர்ந்து - பொருந்தி 1262 அமரிகையாறு - ஏமாங்கத நாட்டிற்கும் தண்டகாரணியத்திற்கும் இடையிலுள்ள நதி (ஜை) 335 அமரிகையாறு - அமளியங்கட்பூவனைப்பள்ளி 1710 அமரிகையாறு - அமளியஞ்சேக்கை 1941 அமிர்தம் - இனிமை 350 அமிர்தம் - உணவு 1178, 1731, 2827 அமிர்தம் - தேவாமிர்தம் 8, 268 அர - அரவு (வி) 1540 அர - அரக்காம்பல் 1990 அர - அரக்கார் செம்பஞ்சியணை 170 அரக்கி - அமுக்கி 2541 அரக்குநீர் - இங்குலிகங்கரைத்தநீர் 2657 அரக்குநீர் - அரக்கு நீரெறியப்பட்ட அஞ்சனக் குன்றம் 700 அரசுவா - இராசயானை 2231, 2968 அரட்டன் - குறும்பன் 1221 அரணபாதம் - ஜினாலயமுள்ள ஒரு மலை (ஜை) 1177, 1237 அரணம் வீசினார் - கவசத்தை யணிந்தார் 777, 1847 அரத்தகம் - அலத்தகம் (திரிபு), அர்த்தம் போலுந்துகில் 1783 அரம்பு - குறும்பு 2727 அரவம் - ஒலி 2405, 2526 அரி - அரிசி (வி) 830 அரி - இரேகை 167 அரி - ஐம்மை 129 அரிn- பரல் 177, 458 அரி - கயிறு 104 அரிச்சந்தன் - கட்டியங்காரனுடைய அமைச்சன் 2299 அரிசிப்புல் - மத்தங்காய்ப்புல் 43 அரிஞ்சயன் - விசயையின் பாட்டன் 201, 1412 அரித்தல் - களைதல், மேய்தல் 1769 அரிபொன் - ஐதாகிய பொன் 2385 அரில் - குற்றம் 1892 அருகுநோக்கம் - சிறு நோக்கம், அருங்கலக்கொடியன்னவன் 1372 அருப்பு - குற்றம் 2686 அருவி - ஒழுங்கு, நீரோட்டம் 291, 478, 732, 1193,1417, 1606, 1671 அல்லாந்து - அலமந்து 2963, 2964 அல்லாப்ப - அலமருவன 2966 அல்லி - அல்லிக்காயிலுள்ள அரிசி; பூவின் உள்ளிதழ் 162,355,606,1422 அல்லிசேரணங்கு - திருமகள் 162 அல்லியரும்பதம் - அல்லியரிசியாலாகிய உணவு 2602 அலகம்பு - இலையம்பு 1828 அலகு - இலைவடிவம், வீட்டினுறுப்பு 593, 837 அவலம் - வருத்தம் 212, 267, 302, 391, 645 அவலித்து - வருந்தி 273, 515, 909, 2612 அவாயாங்கு - அவாவியது போல, அவாவெனுமுடைகடல் 913 அவிழ்ந்த - அவிழ்தற்குக் காரண அவைப்பரிசாரம் - சபையை வணங்கல், விநயப் பிரசாரமென்றும், ஸபாஸ்தவமென்றும் கூறுவர் வடநூலார் 647, 651 அழல் - விடம் 157, 375, 746, 1292, 2345, 2958, 2970 அழலம்பூ நறவு - தீம்பூவாலாக்கின நறவு 939 அழலாற்றுவ - வெம்மையைத் தணிப்பன 126, 532 அழற்குட்டம் - தீத்திரள் 1079 அழிந்தோர் நிறுத்தல் - மெலிந்தோரைப் பழைய நிலையிலே நிறுத்தல் 2816 அழியும்புனல் - பெருகும் நீர் 1193, அழியும்புனல் - அழியும் மது 2575 அழுங்கல் - அழிதல் 242 அழுங்கல் - வருந்துதல் 1338, 1752 அழுவம் - பரப்பு 506, 2319 அழுவமாரி - பெருமழை அழேற்க - அழாதே கொள் 1051 அள் - செறிவு 614, 1191 அள்ளுற அளிந்த காமம் - நுகருந் தன்மையுறும்படி பழுத்த காமம் 1387 அளகம் - ஐம்பாலிலொன்று 2437 அளகு - காட்டுக் கோழி, கூகைப் பெடை 1778 அளித்தது - வருத்தத்தைக் கொடுத்தது 1622 அற்க - நிலைபெற 1060 அற்பாகாரிகள் - பத்மினி மங்கையார் 2033 அற்றதொர் கோதை - தங்கியதொரு மாலை 226 அற்றம் - இடைவிடல் 565 அற்றம் - குற்றம் 455 அற்றம் - பொய் 1764 அறத்தொடு நின்றாள் - உண்மை கூறினாள் 2073 அறப்புறம் - தருமத்தின் பொருட்டு விடப்பட்டுள்ள இறையிலி நிலம் 76 அறவாழியண்ணல் - அருகன் (ஜை) அறவியமனத்தார் - அறத்தையுடைய மனத்தார் 2877 அறாதகற்பு - அருட்கற்பு 2551 அறிவன் அடி - சமவசரணம்; 1633 அறுத்தல் - சீரணித்தல் 2839 அறுதல் - தங்கல் 226 அறுபத்து நாலு கலைகள் - 667 அறைபோய நெஞ்சு - ஓட்டை போன மனம் 642 அன்றி - அன்றாக 435 அனங்கவிலாசினி - கனகமாலையின் தோழி 1668 அனந்தர் - உணர்ச்சி 1097 அனந்தர் - மயக்கம் 1249, 1988, 2083 ஆகம் - நெஞ்சு 1332 ஆகாசகாமினி - ஒருவித்தை (ஜை), ஆகாரசமிதை இரண்டு 2464 ஆசுமன்பிலாத - சிறிதுமன்பிலாத 2002 ஆட்டுவாள் - பாராட்டுவாள் 363 ஆடி - உலாவி 2426 ஆடி - பூசி 37 ஆடி - ஆடியுட்பாவை 957 ஆண்டகையவிந்தான் - ஆண்தகைமை குறைந்தான் 289 ஆணு - நேயம் 1002 ஆணை - மந்திரம் 273 ஆணை - வஞ்சினம் 640 ஆம் = அம்- அழகு 492 ஆம்புடை - ஆகுங்கூறுபாடு 232 ஆமான் - காட்டுப்பசு 189, 484 ஆய் - ஆக 1607 ஆய்ந்த மோட்டின - அழகிய வயிற்றையுடையன 2398 ஆயுளே - அப்பொழுதே 415 ஆர் - ஆரக்கால் 828, 2229 ஆர்த்தி - ஆர்வித்து 331, 2415 ஆரம் - ஆரக்கால் 790 ஆரமிர்து - மக்கள் யாக்கை 377 ஆரி = அரி - ஐம்மை (வி) 129 ஆரியநந்தி - அச்சணந்தியாசிரியன்; சீவகனுடைய ஆசிரியன் 409 ஆரியாக - அழகாக, மேலாக 129 ஆலயம் - இருப்பிடம் 90, 594, 897 ஆலவட்டம் - விசிறி 173, 352, 839, 2452 ஆலி - ஆலங்கட்டி 2786 ஆலி - கூவி 919 ஆவணத்தினீளம் ஒருயோசனை 112 ஆவி - அவி(வி) 2367 ஆவி - கொட்டாவி 1572 ஆவி - நெட்டுயிர்ப்பு 2111 ஆவி - புகை 67 ஆவி - மணம் 20, 971 ஆழ - வீழ 282 ஆழி - கூடற்சுழிவட்டம், மோதிரம், விரற்சரடு 351, 833, 1037,2435 ஆழிக்காவலர் - சக்கரவர்த்திகள் 2843 ஆழிதொட்டான் - சேனாபதி 2167 ஆளாபம் - ஆலாபனம் 723, 1959 ஆளி - சிங்கம் 2554 ஆற்றுணா - கட்டுச்சோறு 1550 ஆனா - அமையாத 649 ஆனிடையழித்தபுள் - பசுக்களினிடையிலே காரியெழுந்தன 1849 ஆனியம் - இரவும் பகலும் 359 இங்குசுவை - தங்குகின்ற சுவை 2025 இங்குதல் - தங்குதல் 763, 1083, 3072 இசையறியும்புள் - அசுணம், கின்னரம் 723 இஞ்சிவட்டம் - மதில்வட்டம் 1947 இட்டி - ஈட்டி (வி) 1136, 2764 இட்டிடை - சிற்றிடை 1107, 1145, 1305, 2004, 2040, 2058 இட்டீமின் - இடுமின்; வினைத்திரி சொல் 2553 இடங்கணி - வந்தோர்மேற் கல்லை வீசும் ஒருவகை மதிற்பொறி 102 இடி - மா 196 இடிக்கும் - கோபிக்கும் 432 இடித்து - வெட்டி 592 இடுக - சிறுக 2086 இடுகின - குறைந்தன 2961 இடைச்செறி - குறங்குசெறி யென் இடைச்சேரி 422 இணைப்படம் - இருதலையும் ஒத்த படம் 173 இதா - இதோ (திசைச்சொல்) 1232 இந்தளம் - தூபமுட்டி 558 இப்பர் - ஒருவகை வணிகர் 1756 இம்மி - குறைந்ததோர் எண்; மத்தங்காய்ப் புல்லரிசி; மிகவும் சிறியது 495, 3027 இமிழ் - கயிறு 1091 இயம்ப - முழங்க 440 இரட்டுற - மாறுபட 387 இரத்தினகரண்டகம் - ஒரு வடநூல், இரத்தினத்திரயம்: நன்ஞான முதலியன (ஜை) 374 381, 394, 1436, 2745, 2847 இரலை - துத்தரிக்கொம்பு 434, 447 இரற்றும் - அரற்றும் 95 இராசமாகிருகம் - மகதநாட்டிலுள்ளதொரு நகரம் 3043 இராசமாநாகம் - ஒரு வகைப்பாம்பு இராசமாபுரம் - சீவகன் நகர்; ஏமாங்கத நாட்டில் நாற்காத அகலமுடையதாயிருந்தது 2544 இராசமாமந்தம் - ஒருவகைப்பாம்பு 1276 இரிக்கும் - கெடுக்கும் 1769 இரீஇயினார் - இருத்தினார் 2433 இருப்புச் சுற்று - பூண் 1136 இருப்பெழு - இருப்புத்தூண் 81 இருவேரி - வெட்டிவேர் 129 இரைப்பு - ஒலி 768 இலக்கணை - சீவகன் மனைவிகளுள் ஒருத்தி 2429 இலஞ்சி :குளம் 69 இலம்பகம் = இலம்பம் - நூலுறுப்பு 408 இலிர்த்த - சிலிர்த்த 3009 இலிற்றும் - சொரியும் 2521 இலேசு - சிறுமை 1,10,770 இலைப்பலி - இலைச்சாம்பல் 1662 இலையூழ்த்து - இலையுதிர்த்து 2690 இவர்தல் - செல்லல், பரத்தல் 522 இவரி - பரந்து 2427 இவறல் - பேராசையுறல் 2583 இவறினார் - மிக்கார் 966 இழிகை - கைச்சுரிகை 558 இழுக்கி - தப்பி 2238 இழுகுபொன் - உறிஞ்சும் பொன் இழுது - தேன் 3137 இழுது - நெய் 145 இழுது - வெண்ணெய் 1576 இழைத்தல் - சூழ்தல் 1689 இழைத்து - அமைத்து 4 இழைந்தவர் - கூடினவர் 2720 இழைய - பொருந்த 1593 இளக - அசைய 1778 இளக - நெகிழ 1398, 2445 இளகிற்று - மெல்கிற்று 718 இளகுகாடு - தழைத்த காடு 1778 இளங்கால் - இளம் பருவம் 2012, 2861 இளமை - அறிவின்மை 1599 இளிவு - இளிவரவு 2498 இளையர் - மங்கையர் 150 இற்பரத்தையர் - ஒருவனுக்கே உரிமை பூண்டவர்; காமக்கிழத்தியர் 372 இறக்கினர் - இழுத்தனர் 781 இறங்கிய - கெடுதல் 248 இறந்தார் - போனார் 2105 இறப்பு - வீட்டினுறுப்பு 2985 இறால் - தேன்கூடு 116 இறுகி - மூர்ச்சித்து 299 இறுங்கு - சோளம் 1561 இறை - இரேகை; அதனையுடைய கை 656, 1283 இறைஞ்சல் - கவிழ்தல், குனிதல் 980,1704 இன்பக்கொடி - காமவல்லி 365 இன்பிடி - கவளம் 81 இன்னும் - பின்னும் 810 இனந்திரியேறு - இனத்தை மனத்தாற் கைவிட்ட ஏறு 2720 இனமாலை - ஒருவகை மாலை 1652 ஈங்கனம் - இங்ஙனம் 1942 ஈடு - பெருமை, இடுதல் 59 ஈண்ட - கடுக 1794 ஈயல் - ஈசல் 925 உகிர் - நகம் 178, 2446 உட்கி - அஞ்சி 403 உட்கு - அச்சம் 591 உட்கோள் - எண்ணம் 214, 899, 976, 1226 உடம்புக்கீடு - கவசம் 3074 உடற்சி - வருத்தி 814 உடற்றுதல் - கெடுத்தல் 52 உடன்று - வருந்தி 2005, 2345 உடுத்த - சூழ்ந்த 1786 உடுவம் - அம்பின் ஈர்க்கு 2275 உடைஞாண் - அரைஞாண் 2240 உடைநாண் - முறுக்குடைந்த கயிறு, வல்லிக்கயிறு 1189, 2263 உடைமணி - மேகலை 2407 உண்ண உருக்கிய - தீய உருக்கிய 480 உத்தரகுரு - போகபூமி 1710, 2580, 2632 உத்தரட்டாதியான் - சீவகன் 387 உதிதர - உதிக்க 1340 உதிதன் - தோற்றியவன் 23 உப்பு - இனிமை 3141 உமிழல் - தோற்றுவித்தல் 2149 உய்த்து - நீக்கி 2481 உயவுநோய் - வருந்துநோய் 2798 உயிர் - அழகு 168 உயிர்க்கும் - சொரியும் 48 உயிர்க்கும் - நாறும் உராய் - பரந்து, பெயர்ந்து 36, 1100, 1169, 1606, 1903, 2304, 2396 உரிமை - மனைவி 272, 548, 2642, 2710, 2862 உரீஇ - உருவி 276, 1984, 2625 உரு - அச்சம், உட்கு 1310 உருணேமி - சக்கரம் 2237 உருத்து - கோபித்து 276 உருவக்கோலி - முடியவளைத்து 458 உருளி - உருள்(இ; பகுதிப் பொருள் விகுதி) 532 உருளுதல் - கெடுதல் 2452 உரோணி - உரோகிணி(வி) 23, 198 உலம் - கல் 204, 667, 1471 உலம்பி - அஞ்சி, முழங்கி 281, 1749, 1770 உலம்பினான் - முழங்கினான் 274 உலம்புபு - முழங்கி 2205 உலமருநெஞ்சு - அலமருகின்ற மனம் 2566 உலாம் - அலமரும் 694 உலாம் - உவமச் சொல் 1581 உலாய் - சூழ்ந்து 550 உலைப்பு - தொலைத்தல் 1184 உவர்த்தது - வெறுத்தது 1382 உவளகம் - ஒரு பக்கம் 243 உவறுநீர் - ஊறுகின்ற நீர் 966 உவனித்தல் - வில்லை எய்யத் தொடங்குதல் 2179 உவாத்தி - உபாத்தியாயர் 1090 உழ - உழவுத் தொழில் 3114 உழக்கல் - மிதித்தல் 1899, 2271 உழந்தவர் - பழகியவர் 597 உழலை - உழலைமரம், தடைமரம் 422, 713, 1226, 1278 உழவு - வழிபாடு 3114 உழுத்தகல் - உழுந்து அகல் 2488 உழுவை - புலி 1388, 2469 உழைக்கலங்கள் - வீட்டிற்குரிய பாத்திரங்கள் 2369 உள் - மனவெழுச்சி 449 உள்ளிட்டு - முதலாக 2799 உள்ளுழி - உள்ள இடம் 1695 உளமிகுதி - மனச்செருக்கு 322 உளர்தல் - அசைதல் 1182 உளு - ஒரு பூச்சி 1899 உறக்கு - உறக்கம் 1289, 1361 உறழ்ச்சி - மாறுபாடு 879 உறீஇ - அழுத்தி 704 உறீஇ - உறுத்தி 2426, 2692 உறுவது - ஒப்பது 1780 உறுவர் - மிக்கவர் 119, 2736 உறுவர்ப் பேணல் - மிக்கோரை விரும்பல் 2816 ஊக்கம் - முயற்சி 962 ஊக்கல் - முயறல் 751 ஊக்குபு - முயன்று 1775 ஊசல் - அசைதல் 68 ஊசலாடல் - அசைதல் 68 ஊசி - எழுத்தாணி 369, 1121 ஊட்டுதல் - உண்பித்தல் 363 ஊடல் - ஊடாதே கொள் 72, 1624 ஊடு - மகளிரிடை 2418 ஊதல் - உண்ணல் 349 ஊதியம் - ஆதாயம் 770 ஊர்கோள் - பரிவேடம் 1136 ஊர்த்து - ஊற்றி 2286 ஊர்தர - பரக்க 939 ஊர்தர - மேலிட 328 ஊர்தல் - போதல் 286 ஊழ்த்து - உதிர்ந்து 2690; ஊழ்த்து - பழகி 1742 ஊழ்த்து - கழன்று 2108, 2763 ஊறுதல் - மாறாமை 491 ஊறுமமுதம் - மாறாத அமுதம் 491 ஊன்கணார் - மானிடர் 54 ஊன் செய்கோட்டம் - உடம்பு 1552 ஊன்றி - கடைப்பிடித்து 1235 ஊனம் - பழி 1530 ஊனமர் குறடு - இறைச்சி கொத்தும் பட்டடைமரம் 2281 எஃகு - படை 497, 1291, 2303 எஃகுதல் - (பஞ்சு) பறித்தல் 2274 எடுத்தல் - எழுப்பல் 608, 2683 எண்ணிடமின்றி - எள்ளுக்கு இடமில்லாமல் 338 எதிர்தல் - தோற்றுதல் 2115 எந்திரம் - ஆலை 1614 எம்மனை - எம் இல்லாளே, தாயே 315, 327 எம்மனைமார் - எம்முடைய தாய்மாரே 425 எயிற்றம்பு - அலகம்பு 780, 2303 எரிமலர் - முருக்கிதழ் 662 எருக்கி - தாக்கி 609 எருத்தம் - பிடர் 1461 எருத்து - பிடர் 298 எருமைப்போத்து - எருமைக்கடா 59 எருமைமறம் - மற்போர் 2259 எல்லா - தோழனே 1893 எல்லி - இரவு 1877 எல்லை - பகல் 1416 எவன் - எப்படி 1234 எழால்வகை - யாழின் கூறுபாடுகள் 651 எழினி - உறை 716 எழீஇ - எழுப்பி 647 எழு - கணையம் 81 எழுதினான் - அணிந்தான் 2098 எமூஉ - எழுந்து 959 எள்க - அஞ்ச 1749 எள்ளற்பாடு - இகழ்தல் 2799 எள்ளுதல் - இகழுதல் 847 எற்றுதல் - உடைத்தல் 258 எறித்தல் - பரத்தல் 380 எறிதல் - அடித்தல் 101 எறுழ்வலி - வீரன் 1723 என்பரிந்து - எலும்புருகி 2996 என்னோரும் - எல்லோரும் 2128 ஏங்கி - இளைத்து நின்று 2012 ஏங்குதல் - பாடுதல் 1197 ஏட்டைப்பசி - இரைக்கு இடைந்த பசி 446 ஏட்டைப்பட்டு - இளைத்து 1552 ஏணிகந்து - திண்மையைக் கை ஏணியேற்று 1955 ஏந்துபொன் - உயர்ந்தபொன் 1604 ஏமுற்று - மயக்கமுற்று 754, 2459, 2841, 2956 ஏர் - எழுச்சி, ஒப்பு 1588, 2100 ஏல் - உணர்ச்சி 1810 ஏலம் - மயிர்ச்சாந்து 194 ஏவ - சொல்ல 907 ஏவா - சொல்லி 1547, 3036 ஏழ்தரு - எழுதரு (வி) 1155 ஏற்றை - ஆண்சிங்கம் 432,665 ஏறங்கொள் - ஏறுகோட்பறை, முல்லைத்திணைக்குரியது 489 ஏறுண்டவர் - வெட்டுண்டவர் 2261 ஏறுண்டு - ஏறுபட்டு 2183 ஏனாதி - அரசனாற் கொடுக்கப்படும் ஏனாதி மோதிரம் - ஏனாதிப் பட்டத்தார்க்குரிய மோதிரம் 2569 ஏனோரும் - எல்லோரும் 29 ஐஞ்ஞூற்று நால்வர்- சீவகன் தோழர்கள் 985 ஐது - அழகு 625 ஐயர் - துறவோர் 1426 ஐயவி - வெண்சிறுகடுகு 113 ஐயவித்துலாம் - கதவை அணுகாதபடி கற்கவி தொடங்கி நாற்றுந்துலாம்; நெருக்குமரம் 102 ஐராவணம் - கோவிந்தராசனுடைய யானை 2126, 2167 ஐராவணம் - சீவகன் யானைகளுள் ஒன்று 3046 ஒக்கடித்து - ஒக்கவடித்து 156 ஒசிந்து - சாய்ந்து, நாணி 166, 595, 2541, 2659 ஒசிய - வருந்த 989 ஒசியும் - முறியும் 2586 ஒட்ட - இசைய 1062 ஒட்டி - அறுதியிட்டு, துணிந்து 591, 2143 ஒட்டுவல் - பொருந்துவேன் 890 ஒடிவு - தவிர்தல் 76 ஒடு - முதுபுண் 2881 ஒண்மை - விளக்கம் 535 ஒத்துளை - ஒத்தாய், ஒது வருந்துகின்ற 898 ஒதுக்கு - நடை 1014 ஒப்பாய்க்கு - ஒக்கும் நினக்கு 1737 ஒப்பித்தல் - அலங்கரித்தல் 118, 1195 ஒய்யென - விரைய 866, 952, 1833, 1838, 2290 ஒருப்படுதல் - துணிதல் 587, 1222 ஒல்கி - எதிர்கொண்டு 472 ஒல்குதல் - ஒதுங்குதல், குழைதல் 319, 595, 654 ஒலி - தழைத்தல் 653 ஒலியல் - மாலை 1670, 2682 ஒற்றரொற்றாவகை - ஒற்றர்கள் ஆராயாத கூறுபாடு 2142 ஒற்றி - ஒற்றிப் பார்த்து 671, 1679 ஒற்றைக்கடிப்பு - ஒரு குதும்பை 2440 ஓக்கினோர் - ஓச்சினார் 2661 ஓசனித்தல் - பறவை சிறையடித்தல் 2652 ஓடை - சந்தனம் வைக்கும் மடல் 1147 ஓடை - நீர்நிலை 868 ஓடை - நெற்றிப்பட்டம் 865 ஓப்பி - ஓட்டி 1498 ஓம்படை - பரிகாரம் 232 ஓரை - முகூர்த்தம் 506, 2411 ஓலுறுத்துவாள் - தாலாட்டுபவள் 363 ஓவர் - ஏத்தாளிகள் 1844 கச்சம் - ஒருவகையளவு 2219 கசிவு - வருத்தம் 1132 கஞ்சனை - கலசப்பானை 2140 கஞலிய - நெருங்கிய 337 கட்டில் - சிங்காதனம் 541 கட்டில் - பிணிப்பினையுடைய இல்வாழ்க்கை 1981 கட்டில் - மஞ்சம் 558, 835, 2468 கட்பவர் - களை பறிப்போர் 1249 கடகம் - ஒரு வகைப்பெட்டி 863, 2197 கடம் - காடு 715, 1556 கடல் விளையமுதம் - உப்பு 805 கடலமிர்து - கடல்படுதிரவியம், கடலில் வீழ்ந்த மணி 2884, 3109 கடவுள் நாள் - நல்ல நாள் 1490 கடி - புதுமை, வரைவு 658, 2739 கடிகை - துண்டம் 1076, 2350, 3078 கடிகை - தோள் வளை 2808 கடிகை - முகூர்த்தம் பார்ப்பவன் 2362 கடிகையர் - யாழ் மகளிர் 2367 கடிப்பிணை - குதம்பை போல்வதொரு பணி 295, 488, 1323, 2091, 2969 கடிமாடம் - கன்னியா மாடம் 13 கடியறை - மணவறை 2059 கடிவட்டு - வட்டுடை 2263 கடுக்க = கடுக, விரைய (வி) 940 கடுமை - விரைவு 312 கடைதல் - அரித்தல் 1202 கடைமுகம் - தலைவாயில் 1214 கண் - கணு 169 கண் இடுக - கண் அருகநோக்க 3124 கண்கலத்தல் - எதிர்ப்படுதல் 2545 கண்டுயிலுறுதல் - இறத்தல் 2029 கண்ணடி - கண்ணாடி (வி) 629, 1082 கண்ணி - சூடும்பூ, தலையின்மாலை, பிணையல், மாலை, முடிக்குமாலை 193, 208, 389, 395, 484, 786, 1115, 1317, 1338, 1355, 1621, 1889, 2063, 2569 கண்ணுட்டீ - கோபத்தீ 807 கண்ணுருகுதல் - நீர் வார்தல் 682 கண்ணுறல் - சேர்தல் 415, 777, 1858 கண் மலர்த்தாள் - விழித்தாள் 228 கணி - சோதிடன், நூல்போனவன், நூலிற்றேர்ச்சி பெற்றவன் 113, 308, 590, 722, 1451, 1686 கணிச்சி - குந்தாலியென்னும் கருவி 592 கணையம் - தண்டாயுதம் 757 கணையம் - யாகணைவிசையிவுளி 701 கத்திகை - குருக்கத்தி 971 கத்திகை - தொடை விசேடம் 989, 1946 கதழொளி - மிக்க ஒளி 1749 கதிய - கதுவிய, பற்றிய 583 கதுப்பு - கூந்தல் 1621 கதை - பொய் வார்த்தை 2144 கந்துக்கடன் - சீவகனை வளர்த்த வணிகன்; சீவகன் புதல்வருள் ஒருவன் 2705 கந்துநாமன் - கந்துக்கடன் 320, 330 கப்பணம் - இரும்பாற் செய்த யானை நெருஞ்சி முள் 285 கப்பூரம் - கருப்பூரம்(பா) 534, 2110 கம்புள் - ஒருவகைப் பறவை 2108 கம்மம் - தொழில் 991 கமலை: விமலையின் தாய் 1975 கயக்கம் - கலக்கம் 394 கயத்தி - கொடியள் 678 கயந்தலை - கயத்தலை (வி) 67 கயில் - ஆபரணம் 298 கரிபோக்கினார் - மை எழுதினார் 626 கரிய - கொடிய 1249 கரியவன் - இந்திரன் 1211 கருங்கலம் - சமைத்தற்குரிய மண் பாத்திரம் 97 கருஞ்சிறைப்பறவை - மயில் 1261 கருநிறவினை - பாவம் 951 கரும்பிள்ளை - காக்கை 1252 கரும்புறத்தோர் - வேடர் 2751 கரும்பெறிகடிகை - கருப்பந் துண் கரும்பொடுகாய்நெல்லைத் துற்றி நின்ற யானை 2522 கருமங்காழ்த்தமை - காரியத்தில் முற்றினமை 242 கருமத்தெவ்வர் - இருவினையாகிய பகைவர் 3074 கருமை - கொடுமை 166, 1732, 1835 கருவலி - பெரிய வலி 2269 கருவி - கவசம் 2214 கருவித்தேன் - கைத்தளம் போலுந் தேனிறால் 1606 கருவிமாமழை - (மின்னு முழக்கு முதலிய) தொகுதியையுடைய மேகம் 2752 கருவினை - பாவம் 3102 கருனை - பொரிக்கறி 2781, 2972 கரைதல் - கொண்டுபோதல் (திசைச்சொல்) 63 கல்லூரி - கற்குமிடம் 995 கலங்கழுமரவம் - கலங்களைக் கழுவுதலாலுண்டாகும் ஒலி 832 கலப்பை - யாழிட்ட பெட்டி 864 கலமிழியுந் துறை - கப்பலிறங்கும் கடற்றுறை 1618 கலவம் - மயிற்றோகை, மேகலை 1558, 1982, 2922 கலாஅய் - கலாய்த்து 2898 கலாம் - மாறுபாடு 620, 1826 கலாய்த்திருத்தல் - கோபித் திருத்தல் 495, 1950 கலாவி - கலந்து 508 கலி - ஆரவாரம் 653 கலிங்கக்கடகம் - புடைவைப் பெட்டி 863 கலிங்கம் -ஆடை, ஒரு தேயம் 697 கலிங்கு - ஒரு வகை மதகு 2476 கலுழ - உருக 1926 கலுழவேகன் - காந்தருவதத்தையின் தந்தை 537, 546 கலுழன் - கலுழவேகன் 843 கலைக்கணாளர் - மந்திரிகள் 1924 கலையினதியல்பு - காந்தருவ மணங் கூறிய நூலின் இயல்பு 1357 கலைவலார் - பரத்தையர் 1625 கவ்வை - முழக்கம் 153 கவடு - பணைத்தகிளை 1389 கவந்தம் - குறைத்தலை 2310 கவர்ந்து - உள்ளடக்கி 38 கவர்ப்பு - பலவாதல் 1212 கவற்கும் - வருத்தும் 2033 கவாய் - கவ்வி 2444 கவான்முதல் - காலடி 913 கவிப்பர் - ஒருவகை வணிகர் 1756 கவிரம் - ஒருமரம் 1710 கழகம் - சூதுபொருமிடம் 1657 கழல் - செருப்பு, வீரக்கழல் 1639, 1640, 1648 கழாய் - ஆடுதற்கு நாட்டும் மூங்கில் 65 கழிமலர் - கழிப்பூ 1939 கழும - திரள 2053 கழுமி - திரண்டு, மயங்கி 206 கழுமிற்று - நிறைந்தது 1870 கழுமுதல் - திரளுதல் 1350 கழை - கோல் 1064 களி - வண்டல் 2432 கற்கடகசிங்கி - ஒரு மருந்து 1277 கறிகற்ற - கடித்தலைக்கற்ற 485 கறித்து - கடித்து 1480 கறை - கடமை 306 கன்றி - அடிப்பட்டு 9, 210, 375, 2769, 2776 கன்றி - வாடி, வெதும்பி 1726 கன்றிய - தழும்பிய 148 கன்னிமார்பம் - அழியாத மார்பம் 483 கன்னியூகம் - கருங்குரங்கு 870 கனகபதாகை - சுரமஞ்சரியின் தோழி 880 கனகமாலை - சீவகன் மனைவிகளுள் ஒருத்தி 1675 கனகமாழை - பொற்கட்டி 913 கனகன் - கனகமாலையின் சகோதரரில் ஒருவன் 1681 கனலி - சூரியன் 1290 கனிந்து - உருகி 657, 727; கனிந்து - குழைந்து 511, 1398 கனிப - வருந்துவார் 1513 காசு - பலவகை மணிகள் 121 காசு - மணி 2053, 2064, 2068, 3136 காஞ்சனத் தளிவம் - பொற்சின்னம் 2303 காஞ்சிரம் - எட்டி 2722 காடி - கஞ்சி 71 காண - கேட்க 2037 காணம் - பழங்காசு 591, 1117, 1938 காதலார் - மனைவிமார் 2241 காந்தட்டுடுப்பு - காந்தட்பூவினிதழ் காந்தம் - காந்தக்கல் 1906 காந்தருவதத்தை - சீவகன் மனைவிகளுள் ஒருத்தி 550 காந்தார நாடு - வெள்ளியம் பெருமலைக்கணுள்ளது(ஜை) 546 காம்பு - மூங்கில் 176 காமன்சேனை - மகளிர் 458, 490 காமுகன் - கட்டியங்காரனைச் சார்ந்த ஒரு வீரன் 2266 காய்தல் - எறித்தல் 473; காய்தல் - கெடுத்தல் 2232 காயம் - பெருங்காயம் 788 காரி - கரிக்குருவி 420 காரிகை - பேரழகு 163, 2199 காரியுண்டக் கடவுள் - சிவபெருமான் 670 காலாசு - காற்கவசம் 2236 காலாழி - கால் விரல் மோதிரம் 178, 353 காலை - பகல் 1877 காழ் - காம்பு 113, 2484 காழகம் - கருமை 1230 காழகம் - கருஞ்சேறு 3120 காளாத்திரி - பாம்பின் பல் 383 காற்படை - காலாட்கள் 3081 கிழி - சீலை 164, 235, 1003 கிழி - படம் 180 கின்னரம் - இசையின் குணகுற்ற மறிவதொரு பறவை 660 கின்னரமிதுனங்கள் - ஆணும் பெண்ணுமாகிய கின்னரப் பறவைகள் 657 கீதம் - இசைப்பாட்டு 1241, 2480 கீழ்ந்து - அகழ்ந்து, பிளந்து 1157, 2727 கீள் - கூறு 2248 குச்சு - பாவாற்றி 615 குஞ்சித்து - குந்தி 341 குட்டம் - திரள் 1079 குடங்கை - உள்ளங்கை 22, 529 குடவர் - இடையர் 492 குடில் - உடம்பு 2620 குணமாலை - சீவகன் மனைவிகளில் ஒருத்தி 874 குணில் - குறுந்தடி 2222 குத்த - அள்ளி ஒழுக்க 960 குந்தம் - எறிகோல் 1078, 2156, 2216, 2254 குப்பாயம் - சட்டை 431 குப்புற்று - குதித்து 980, 2202 குப்பை - பொலி 59, 114, 355 குபேரதத்தன்:சுரமஞ்சரியின் தந்தை 2076 குபேரமித்திரன் - குணமாலையின் தந்தை 1053 குமரி - அழியாதவள் 368 குமரி - குமரியாறு, பெண் 2020 குய் - தாளிக்குங்கறி 2971 குய்யம் - வஞ்சனை 253 குயம் - மயிர்க்கத்தி 2500 குயிறர - நெருங்க 120 குரங்கல் - தாழல், வளைதல் 262, 657, 719 குரல் - ஆண் மயிர் 2202 குரல் - சாரீரம் 1218 குரல் - குரல் குரலாகப் பண்ணல் (இசை) 723 குருகுலம் - சீவகன் பிறந்த குலம் 290,1805, 1885, 2605, 3015 குருதிச்சாந்து - குங்குமச் சாந்து 673 குருதித்துகில் - செம்பட்டு 673, 926 குருதிவாளரவு - செம்பாம்பு 2308 குருதிவான் - செவ்வானம் 2271 குருமை - நிறம்; குருஈறு திரிந்தது(வி) 2748 குலவுதல் - தாழ்தல் 1625 குலாய் - வளைத்து 2515 குழகு - இளமை 2757 குழல் - வேய்ங்குழல் 422, 530, 989 குழவியஞ் செல்வன் - இளஞாயிறு, குழவியமுல்லை (அ:அசை) 1267 குழற்சிகை - ஒருவகை மயிர் முடி 252 குழிசி - உருளையின் குறடு 790 குழும - முழங்க 485 குழை - கொடி நாட்டுக்குப் பண்ணுந் துளை 1369 குழை - மங்கலவணி 2060, 3136 குழைந்தாள் - வருந்தினாள் 1474 குளநெல் - ஒருவகை நெல், நீவாரமென்பர் வடநூலார் குளச்செந்நெல்லெனவும் கூறப்படும் 355, 2491, 2602 குளிக்கும் - தோற்கும் 2141 குளிர்தல் - தங்குதல் (திசைச்சொல்) 494,1579,1782, 1973 குளிறி - சிறிது முழங்கி 508 குறங்குசெறி - ஓராபரணம் 174, 2695 குறளி - குறியவள் 1653 குறும்பர் - வேடர் 1079 குறும்பு - அரண் 1228 குறும்புகள் - பாலைநிலத்தூர்கள் 2750 குறும்பூழ் - ஒருவகைப்பறவை 1651 குறை - காரியம் 907, 1647 கூகை - ஒரு வகைக் கொடி 1905 கூந்தளம்பாவை - பூவிசேடம் 1671 கூம்பு - பாய்மரம் 513 கூழை - கூந்தல் 1487 கூழை - மயிர்ப்பாடு 1661 கூனி - சண்பகமாலை 314 கெடிறு - ஒரு வகைமீன் 1464 கெழுவி - பொருந்தி 1187 கேடகம் - பலகை 2166 கேமசரி - சீவகன் மனைவிகளுள் ஒருத்தி 1450 கேமமாபுரம் - சுபத்திரன் ஊர் 1448 கேழ்த்து - நிறத்து 2598 கேழல் - குள நெல் 1422 கேள் - கணவன் 1052 கை - ஒழுக்கம் 407 கைக்கிழி கொடுக்கப்பட்டார் 818 கைக்கிளை - ஒருதலைக் காமம் 253 கை செய்தல் - கலந்து அமைத்தல் 1710, 2473 கைத்து - செலத்தி 2683 கைம்மறித்து - கரமசைத்து 1809 கையாறு - செயலறுதல் 299, 302, 390 கையெறிந்து - கைதட்டி 582 கொக்கரிப்பு - கர்ச்சித்தல் 447 கொங்கு - தேன் 48 கொட்டி - பூசி 624 கொட்டை - கச்சின் கடைமணி 113 கொட்பு - குதிரைக்கதி விசேடம் 540 கொடி - ஒழுங்கு 196, 1976 கொப்புள் - கொப்புளம் 531 கொய்சகம் - ஆடையுறுப்பு 1320 கொல்லாவண்டி - ஒருவகை வண்டி, கொல்லிப்பாவை 197, 667 கொலைநர் - கொலைஞர் 2270 கொலையிலாழி - அறவாழி (ஜை) 1244 கொழிப்பில்பொன் - ஒட்டற்ற பொன் 643 கொள்கை - விரதம் 396, 409, 1818 கொளீஇ - கொளுத்தி 73, 896 கொளுத்தல் - பொருத்தல் 378, 673 கொற்றம் - அரசவுரிமை 27, 204, 1914, 1921, 2582 கொற்றவி - அரசி 2609 கோடகம் - ஐவகை முடிகளுள் ஒன்று 2989 கோடிகம் - தட்டு 352 கோண் - கோணுதல் 1079 கோண்மா - புலி 1153 கோணம் - குறுந்தெரு 615 கோதம்=குரோதம்-பொல்லாங்கு 1583 கோதாவரி - நந்தகோன் மனைவி 477 கோது - பயனில்லாத கூறு 240 கோப்ப - எதிர்க்க 1290 கோய் - குகை, பரணி 764, 1906 கோயில்விலாவணை - அரண்மனையிலுள்ளோர் அழுதல் 2964-70 கோல் - அம்பு, திரட்சி, பிரம்பு, யாழ் நரம்பு 209, 451, 797, 2186, 2255, 2319, 2700 கோலம் - கழுநீர் 1466 கோலம் - குவளைப் போது 955 கோலிளகிற்று - அரசன் இறந்தான் 2146 கோவன் - அரசன் 1843 கோவன் - இடை கோவிந்தராசன் மாடத்திலிருந்து படை காண்டல் 2153 கோவிந்தன் - சீவகன் புத்திரர்களுள் ஒருவன்; நந்தகோன்; விசயை சகோதரன்; கோவிந்தமகாராசனெனவும் கூறப்படுவான். 2913 கோவிந்தை - நந்தகோன் மகள், பதுமுகன் மனைவி 477 கோள் - குலை, கொலை, கொள்ளுதல், பரிவேடிப்பு 169, 264,405,436, 470, 1098, 2468 கோள் - மேகம் 320 சகடம் - வண்டி 363 சச்சந்தன் = ஸத்யந்தரன், சீவகன் பிதா; சீவகன் புதல்வருள் ஒருவன் 157 சட்டகம் - சட்டம் 2523 சண்பக மாலை - விசயையின் தோழி 314 சத்தி - இடிதாங்கி, சூலம் 144 சந்தம் - நிறம் 1160 சந்தனக்களி - சந்தனக் குழம்பு 1719 சந்திரோதயம் - ஒரு நகர், ஒரு மலை, சுதஞ்சணன் தங்குமிடம் 955, 1168 சமழாது - வருந்தாது 1000 சயந்தம் - ஒரு நூல் 672 சயமதி - பவணமாதேவன் மனைவி 2856 சரவு - சரயுநதி; கோசல தேசத்தி சரியை கோடல் - பிக்ஷைக்குச் செல்லல் (ஜை) 3072-3 சலாகை - இருப்பு நாராசம் 699, 1676 சவட்டி - அழித்து 1734 சவரர் - வேடர் 1655 சளி - குளிர்ச்சி 1673 சாத்து - வாணிகத்திரள் 1775 சாத்துறி - பரணிக்கூடு 1906 சாதுக்கள் - துறந்தோர் 1 சாது சரணம் - நான்கு சரணங்களுள் ஒன்று (ஜை) 3 சாந்துக் கோய் - சந்தனப் பரணி 764 சாம்பல் - பூ வாடல் 2349 சாம்பி - கெட்டு 1098 சாம்புதல் - மேனிவாடுதல் 728, 1259 சாமம் - ஒருபாயம் 747-9 சாரிகை - தேரின் கதிவிசேடம் 84 சாலிகை - கவசம் 2217 சாறயர்ந்து - விழாச்செய்து 1221, 2400 சிகழிகை - மணமுடி 2091 சிகழிகை - மயிர்முடி 1033, 1289, 1444, 2447 சிங்களம் - ஒருவகைக் கூத்து 672 சித்திரமா மாலை - பவதத்தனுடைய மாமி 1591 சிதர்ந்தேன் - பரக்கக் கூறினேன் 3144 சிந்தை - வருத்தம் 913, 1124 சிம்பு - தும்பு 59, 666 சிமிழ்த்தல் - அகப்படுத்தல் 1116 சிலதியர் - சேடியர் 197 சிலம்பு - பக்கமலை 1211 சிலாவட்டம் - வட்டப்பாறை 1213 சிலைவடிப்பு - வில்லைப்பயிற்ற 1450 சிவணி - பொருந்தி 2296, 2749 சிவிறி - நெடுந்துருத்தி, நீர் வீசு கருவி 86, 745, 966, 2654-5 சிற்றாலவட்டம் - சிறுவிசிறி 839 சிறுபுறம் - முதுகு 625 சிறை - காவலிடம் 2087 சிறை - தடுத்தல் 2867, 2890 சின்னப்பூ - விடுபூ 2251 சினகரம் - ஜினக்கிருகம் (பா) 1248 சினதத்தை - பவதத்தன்தாய் 1591 சீதத்தன் - இராசமாபுரத்துள்ள ஒரு வணிகன்; வெள்ளிமலையிலிருந்து காந்தருவதத்தையை அழைத்த வந்தவன்; சீவகன் தோழருள் ஒருவன்; கோவிந்த ராஜன் பிதா; கோவிந்தராஜன் புத்திரன் 1789, 2141,. 2251 சீதமண்டலி - ஒருவகைப்பாம்பு 1276 சீமான் - சீதத்தனுடைய மாமன் 1591 சீவரம் - துவரூட்டின ஆடை 1427 சீவிதம் - விருத்தி 1374, 2156 சீழ்க்கை - நாக்கின் நுனியை மடித்துச் செய்யும் ஒலி 447 சுகதா - சுகத்தைத் தருபவனே 3096 சுகிர்ந்த - கிழித்த 438 சுநந்தை - சீவகனை வளர்த்த தாய் 360, 401, 1802, 2521, 2551, 2627 சுருள் - வெற்றிலைச் சுருள் 197 சுரை - மடி 2896 சுழற்றி - சுற்றி 2426 சுள்ளி - மராமரம் 1565 சுளகு - முறம் 1778 சுளித்தல் - கோபித்தல் 298, 1076 சூட்டு - குடுமி 73 சூட்டு - போர்ப்பூ 783 சூலல் - தோண்டல் 2795 சூளாமணி - ஒரு யானை 2522 சூளாமணி - முடியின் மணி 786, 3037 சூளுறவு - சபதம் 1876 சூன்றிட - களைய 2795 சூன்று - தோண்டி 629, 2989 செகுக்கும் - வெல்லும் 1903 செகுத்தல் - கோறல் 670 செச்சை - சட்டை 1080 செத்தல் - செத்துதல் 1578 செதிள் - தூளி 2915 செதுமக - சாப்பிள்ளை 1124 செந்நீர் - புதுநீர் 12 செப்பட - செவ்விதாக 2665 செம்மல் - அழகு 535 செம்மல் - சீவகன் 1931 செய்தல் - தேடுதல் 1922 செய்பாவை - திரு 2338 செயிர்த்து - கோபித்து 1989 செயிர்ப்பு - குற்றம் 1624 செருக்கு - களிப்பு 341 செருக்குபு - மயங்கி 1283 செருமி - இருமி 130 செல்லல் - துன்பம் 61, 1937 செலவு - செல்லுதல் 657 செலவு - போக்கு, செலவைக் குறிக்கொண்டு 727 செவ்வி - சமயம் 2582 செவிட்டி - நேராக நின்று 2191 செவிப்படியகம் - வளையையுடைய படிக்கம் 2472 செற்றம் - தணியாக் கோபம் 250 செறும்பு - செற்றம் 947 செறுவார் - செறப்படுவார் 497 சேட்பட்டான் - எதிர்ப்பட்டான் 1458 சேடர் - உயர்ந்தவர், ஊடின மகளிரை நாயகரோடு சேர்க்கும் ஆற்றலுடையவர் 852 சேண் - தூரம் 983 சேத்தல் - துயிலல் 1385 சேந்த - கோபித்த, சிவந்த 329, 2477 சேப்புழி - துயில்கின்ற அளவிலே 1385 சேய்த்து - செம்டை நிறமுடையது 2622 சேன் - சேனன் (வி): கனகமாலையின் சகோதரருள் ஒருவன் 1681 சொக்கம் - சுத்த நிருத்தம் 672 சொல் - நெல் 53 சொல் - சுட்டுப் பெயர் மாத்திரையாய் நிற்றல் 6 சொலிப்பது - பெயர்ப்பது 350 சொற் பழுத்தவர் - சொல்லெல்லாம் கை வந்தவர் 435 ஞமன் - நமன் 251 ஞாயில் - மதிலுறுப்பு 105, 949 ஞாழல் - புலி நகக் கொன்றை 515 ஞான்றன - தொங்கின 140 தகர்த்த - தாக்கிய 1701 தகரம் - ஒரு வாசனை மரம் 349 தக வா - தங்கும்படி வா 1382 தகை - அழகு 490, 528, 1379 தகைத்தல் - தடுத்தல் 2890 தகைத்து - நெருங்கி 825 தட்டம் - பாம்பின் மேல்வாய்ப் பல் 1286 தணக்கு - வால் 2887 தணப்பற - தட்டற 373 தத்தன் - சீதத்தன் 2705 தத்தை - காந்தருவதத்தை 606, 844, 2098 தத்தை - தத்துவம் 1813 ததும்ப - ஒலிப்ப, நிறைய 561 ததும்பி - நிறைந்து 1566 ததும்பின - முழங்கின 1560 ததும்பும் - துளும்பும் 1467 தந்திரம் - தொழில் 234 தம்மோ - தா 906 தமாலம் - பச்சிலைக்கொடி, பச்சிலை தமாலமாலை 2681 தயங்குதல் - அசைதல் 3102 தரணி - உலோகபாலன், சீவகன் புதல்வருள் ஒருவன் 2190, 2705 தரன் - கழலுவேகனிடத்துள்ள ஒரு வித்தியாதரன் 519, 557, 1875 தருமன் - அறக்கடவுள் 160, 1825 தலை - தலையணை 2240 தலைக்கொள - அதிகரிக்க 1259 தலைப்படுதல் - எதிர்ப்படுதல் 605, 1230, 1232, 1592, 1882 தலைப்பாளை - ஓரணி 2731 தலைப்பிரியாதன - நீங்காதவை 268 தவழ்தல் - பரத்தல் 524, 1095 தவளைக் கிண்கிணி - சதங்கை 243, 3126 தவிர்தல் - தங்கல் 1620 தழங்குரல் - தழங்கு குரல் (வி) 40, 378, 403,3088 தழை - உடைவிசேடம் 1231 தழை - ஒரு வகை மாலை 1338 தளர்தல் - தப்புதல் 1190 தளி - கோயில் 306 தன்னம் - சிறிது 141 தன்னை - அவனை 2149 தனபதி - பதுமையின் பிதா 1272 தனபாலன் - ஒரு வணிகன்; பதுமுகன் தந்தை 1791 தனிசு - கடன் 306 தாங்கல் - தாங்குக 2093 தாபதப்பள்ளி - முனிவராச்சிரமம் 337, 1421 தாபதர் - தவமுடையோர், முனிவர் 1190 தார் - கிண்கிணி மாலை 84, 389, 1819 தார் - தூசிப்படை, 2477 தார் - மார்பின் மாலை 979, 2119 தாரணி - காந்தருவதத்தையின் தாய் 537 தாலம் - உண்கலம் 398 தாலம் - வட்டில் 2489 தாழ்தல் - தங்குதல் 525, 1314 தாழ்பீலி -சிறுகிண்ணம் 2222 தாமுறுக்க - தாழிடுக 265 தானகம் - தன்னகம் (வி) 2658 திசை - திசை 3090 திமிசு - வேங்கைமரம் 1901, 3076 திமிர்ந்து - பூசி 622, 857 திமிரி - பூசி 1892 திராய் - ஒரு கீரை 2703 திரிதர - நீங்க 1211 திரிதல் - பிறழ்தல் 1677 திருக்கிட்டு - நீளமுறுக்கி 164 திருத்தல் - செவ்வையாக்குதல் 284 திருமுடித்திலகம் - சூடாமணி 787 திருவாழி - மோதிரம் 1032 திரை - வெற்றிலைச் சுருள் 197,1479,2026 திரைந்து - சாய்ந்து 413 திலோத்தமை - பதுமையின் தாய், புத்திசேனன் தாய் 1208, 1271,1754,1790 திவண்ட - திளைத்த 2313 திவண்டது - குழைந்தது 2062 திவள - அசைய 3022, 3126; திவள - விளங்க 1791 திவளும் - துவளும் 1331 திளைக்கும் - அசையும் 1559 திளைத்தல் - அறாதொழுகுதல் 50 திளைத்தல் - புணர்தல் 2806 திளைத்து - பொருது 3076 திறப்பட - கூறுபட 3075 திறவிது - செவ்விது, நன்று 2633 திறனல - நெறியல்லாதன 688 தீ - கோபம் 250, 2201 தீக்கொடி - தீயொழுங்கு 1059 தீட்டி - எழுதி 625 தீது - மரணம் 327 தீந்தொடை - யாழ் 1328 தீபம் - தீவு 503 தீம்பூ - ஒருவகைமரம் 939, 2919 தீவிய - இனிய 197, 2747 தீற்றல் - உண்பித்தல் : 3105 தீற்றல் - பூசுதல் 788, 1277 துகில் - வெண்பட்டு 931, 2663 துகிலிகை - எழுதுகோல் 180, 1107 துகின்முடி - தலைக்கட்டு 1558, 2213 துடுப்பு - பூவிதழ் 324 துடுப்பு - தருவி 2466 துணை - தோழி 465 துணைமுத்தம் - பலவடஞ் சேர்ந்த முத்தம் 351 துப்பு - பவழம் 107 தும்பு - சிம்பு 666 துய் - சிம்பு 559 துயரி - யாழ் நரம்பு 921 துயிறல் - தங்குதல் 1504 துரால் - செத்தை 128 துரால் - மயற்கை 1393 துருவம் - ஒப்பு 811 துவை - புளிங்கறி 122, 2620 துழாய் - துழாவி 2220 துளங்க - பதைப்ப 2182 துளுப்பிடுதல் - கலக்குதல் 1112 துளும்புதல் - அசைதல் 1867, 2672 துளும்புதல் - ததும்புதல் 75, 2489 துற்றி - யானையுணவு 2522 துனித்து - வெறுத்து 745 தூக்க - தொங்கவிட 469 தூக்குபு - துளக்கி 224 தூங்கிருள் - செறிந்த இருள் 310, 321, 507 தூங்கும் - செறியும் 1236 தூசு - ஒலியல் 1302 தூணி - அம்பறாத்தூணி 2272 தூது - காரியம் 1876 தூது - வார்த்தை 1022-3 தூய் - தூவி 745 தெகிழ்ந்த - நெகிழ்ந்த 1935 தெகிழ்த்த - வாய்விட்ட 1440 தெண்மட்டு - தெளிந்ததேன் 1288 தெழித்தல் - முழக்குதல் 2308 தெழித்து - உரப்பி 59 தெள்விளி - இசைப்பாட்டு 661 தெளித்து - கரைத்து 371, 896, 1003, 1486 தெளிர்த்த - ஒலித்த 1330 தெற்றி - பிணங்கி 972 தேங்காத - கெடாத 16 தேசிகப்பாவை - ஒரு பரத்தை;பதுமையின் தோழி 1261, 1356, 2584, 2596 தேசு - புகழ் 771 தேம் - கட்கு இனிமை 1559, 1653 தேம்புதல் - கெடுதல் 232 தேர்ந்து - ஆராய்ந்து 385 தேவபாணி - தேவரை வாழ்த்துவது 1 தேவு - தெய்வம் 1 தேன் - வண்டு 47, 181 தேன் - வைத்த தேன் 222, 872, 1823 தேனெய் - தேன் 176, 1051, 1201, 1233, 1529, 2382, 2747 தைவரல் (இசை) 201 தைவரல் - தொடுதல் 304 தொட்டிமை - ஒற்றுமை 1255, 2047, 2085 தொடர் - சங்கிலி 101, 2242 தொடர்ப்பாடு - காமநுகர்ச்சி 1426 தொடர்பு - நட்பு 1171 தொடி - வளையல்களுக்குக் காவலாக இடுவது 469 தொடை - கட்டு 293 தொடை - தாறு 31 தொடை - நரம்பு 608 தொடையல் - இறால் 1198 தொண்டகப்பறை - ஆகோட்பறை 418 தொண்டிக்கள் - நெல்லாலாக்கின கள் 1234 தொய் - குற்றம் 2474 தொல்மரம் - ஆலமரம் 498 தொழித்தல் - ஆரவாரித்தல் 2969 தொழித்து - கோபித்து 2337 தொழித்து - சிதறி 1986 தொழு - இல்வாழ்க்கை 856, 3105 தொழுதி - கூட்டம் 2405 தொழுனையாறு - யமுனைநதி 209 தொறு - இடைச்சாதி 477 தொறு - பசுநிரை 474 தொறுத்தியர் - ஆய்ச்சியர் 488 தோக்கை (தோகை) - கொய்சகம் (வி) 1320, 2477 தோகை - மயில் 870 தோகை - முன்றானை 762, 2875 தோடு - ஆடவர்காதணி 2241 தோண்மகரம் - ஓரணி 231, 351, 644, 1093, 2383 தோதகம் - வருத்தம் 463 தோய்ந்த - செறிந்த 290, 2492 தோரை - ஒருவகை நெல், மூங்கிலரிசி 1464, 2489 தோரை - வடம் 2132 தோழ் - தொழுவம் 487 தோள்முத்தம்:ஓரணி 231, 351, 1093 தோன்றல் - தலைமை 316 தோன்றல் - தோன்றுதல் 2211 தோன்றல் - விளக்கம் 1261 நக்கி - தீண்டி 799, 1866, 1957 நக்கிடும் - சிரித்திடும் 590 நகர் - இடம் 2484 நகர் - கோயில் 139, 525 நகர் - சடங்கு செய்யுமிடம் 2633 நகர் - மண்டபம் 701, நகர் - மனை 326, 2101 நகை - முத்தம் 132, 603 நகை - முத்துவடம் 276, 412 நஞ்சுற்ற - நைந்துற்ற;மனமுருகிய 1 நடப்பு - செலவு 770 நடலை - வருத்தம் 1914 நண்பன் - கணவன் 1324, 1369 நந்தட்டன் - கந்துக்கடன் பிள்ளை 1737 நந்தன் - நந்தட்டன் 23, 1144, 1856, 1916, 1925, 2288, 2899 நந்தை - சுநந்தை (தலைக்குறை) 365 நபுலமாவிபுலர் (மா: இசைநிறை) - சீவகன் தம்பிமார்; விசயையின் புதல்வர்களல்லர் 787, 1144 நமைத்த - சூட்டிய 2839 நயம் - நீதி, விருப்பம் 237 நரதேவன் - தடமித்தன் 1867 நரபதிதேவன் - கேமமாபுரத்தர நரம்பிசையாற் பிறக்குங்குற்றம் 718 நரம்புளர - நரம்பைத் தடவ 662 நலம் - அன்பு 107, 2067 நவியம் - கோடாலி 422 நளினை: கனகமாலையின் தாய் 1635 நற - நறவு 592 நறை - நறைக் கொடி 131 நனை - தேன் 1417, 2249 நாகமரம் - ஒரு வகை மரம்; சுர புன்னையன்று 524, 1497, 1569, 1608, 1918 நாகமாலை - சச்சந்தனது அகப்பரிவார மகளிருள் ஒருத்தி 667 நாகு (இளமை) புன்னை 74 நாசி - வீட்டின் ஓருறுப்பு 598 நாட்டம் - அழகு 1788 நாட்டிலமிர்து - நாடுபடு திரவியம் 2110 நாடி - நாசி; வீட்டினுறுப்பு 598 நாந்தகம் - வாள் 815 நாயில் - ஞாயில், மதிலுறுப்பு 1444 நாராசம் - கம்பி 1676 நால்கு - நான்கு (பெயர்த்திரிசொல்) 1774 நாவலர் - அமைச்சர் 206 நாவழி - நாவை வழித்தற்குரிய கருவி 803, 3045 நாற்றி - நான்மடங்கு 567 நாறி - மோந்து 885 நாறு - நாற்று 45 நாறுமதம் - புழுகு 1653 நானம் - கஸ்தூரி, புழுகு 42, 131, 164, 616, 1653, 1712 நிணந்து - பிணித்து 1311 நித்திலவூர்தி - முத்துப்பந்தர் 858 நிதி - திரள் 402 நிதி - பொருள் 496 நிப்புதி - கேமசரியின் தாய் 1470, 1533 நிமித்தம் - சகுனம் 415-6, 1129, 2168 நியமம் - ஊர் (ஆகுபெயர்) 2601 நிரைத்த - இடைவிடாத 1603 நிவந்த - வளர்ந்த 2971 நிவந்து - ஏறி 2566 நிழற்றல் - ஒளிவிடல் 1325 நிழன்று - நிழல்செய்து 1101, 1270, 2493 நிறம் - உயிர்நிலை 808 நிறம் - மார்பம் 993 நீடு - நெடுநேரம் 188 நீத்திட - பெருக்கிட 1382 நீரணி - நீர்விளையாட்டுக் கோலம் 2668, 2840 நீரிது - நீர்மை 1720 நீவி - கோதி 618 நீவி - நிக்கி 488 நீவி - நீவுமாறு 200 நீறு - புழுதி 2545 நுகம் - பாரம் 203, 2214 நுங்குதல் - விழுங்குதல் 1094, 3082 நுடக்கி - ஒன்றாக வைத்து 762 நுணுக்கி - கூரிதாக்கி 886 நுதி - முன்பு 1933 நுனித்து - கூர்த்து 621, 2495 நூழிற்கொடி - பிணங்கிய கொடி 196 நூறு - சுண்ணாம்பு 2474 நூறு - பற்பல 2043 நெட்டிடை - நெடுந்தூரமான இடம் 80, 1216 நெடுமை - பெருமை 1951 நெய் - தேன் 1198 நெய் - நேயம்(வி) 3049 நெய்கை - நெய்தல் 3019 நெய்ப்பத்தல் - நெய்க்கிழி 818 நெரிதரல் - நெருங்குதல் 119 நெறி - நெளிவு 164 நெறிநீர் - கடல் 1522 நேமி - நேமி தீர்த்தங்கரர் (ஜை) 912 நைவளம் - நட்ட பாடை 2435 நொடிப்பு - கணம் 2209 நொந்தார் - பகைவர் 2564, 2794 நொந்தார் - நொந்து 2099 நொய்தின் - கடிதின் 589 நொய்து - விரைவு 258, 978, 1767, 2147 நொய்யவர் - விரைபவர் 633 நோக்க - கேட்ப 1730 நோவித்தல் - வருத்துதல் 798 நோன்மை - பொறுமை 2794 நோனான் - பொறான் 282, 2145, 1772 பக்கரை - குதிரைக் கலனை 567, 1772 பகடு - பெருமை 1077, 1989 பகைத்தி - பகையையுடையாள் 1488 பங்கயப்படு - தாமரை மடு 898 பங்கி - ஆண் மயிர் 2277 பச்சிரும்பு - உருகின இரும்பு 2303 பச்சை புகுதல் - கலியாணத்திற்கு வரிசை புகுதல் பசை - பற்று 1814 பஞ்சி - செம்பஞ்சு 358 பஞ்சு - ஆடைய 840 பட்டம் - அதிகார உரிமை, பட்டப் பெயர் , ஓடை, ஆபரணம் 112, 472, 868, 1185, 1254, 1257, 1791, 2113, 2438, 2575 பட்டமணிந்தாள் - பட்டத் தேவி 2343 பட்டிமை - வஞ்சனை 2058 பட - ஒப்ப (உவம உருபு) 56 படப்பை - தோட்டம் 1934 படலிகை - தட்டு, பரந்த தட்டு, பூவிடுபெட்டி 1209, 2633, 2707, 3031 படி - உருவம் 395, 1156, 1166, 2003 படிக்கால் - ஏணி 2872 படியகம் - படிக்கம் 2140, 2472 படிவம் - வடிவம் 395, 1156, 1166, 2003 படு - மடு, தடாகம் 898 படுவி - குறியவள் 1653 படை - கலனை 2157 படை - குதிரைப் பக்கரை 567 பண்டம் - பழம் 62 பண்டி - சாகாடு 2621 பண்டி - வண்டி 62-3 பண்ணமைத்து - சமைத்து 444 பண்ணவர் - முனிவர் 395 பண்ணி - சமைத்து 263, 2209 பண்ணினுக்கரசன் - சீவகன் 2052 பண்ணையாட - விளையாட 1579 பணி - பரத்தல் 2531 பணித்து - மிதித்து 2109 பணை - பண்ணை (வி) 61 பணை - குதிரைப் பந்தி 2228 பணி - பிழைத்தல் 313, 1513 பதுமுகம் - தனபாலனுடைய புத்திரன்; இவன் சீவகன் தோழர் நால்வருள் ஒருவன் 1791, 1929, 2268 பதுமை - ஒரு பொய்கை (ஜை) 183, 1001, 2105 பதுமை - ஸ்ரீதத்தன் மனைவி, சீவகன் மனைவிகளுள் ஒருத்தி 494,1754 பந்து - மட்டத்துருத்தி 86, 968 பயப்புற - பயனுற 331 பயிர் - அருவருப்பு 2048 பயிர் - யானைக்குரிய பரிபாஷை 1834 பயிர்ப்பு - மனங்கொள்ளாதிருக்கின்ற தன்மை 1624 பயிர்வளை - அழைக்கின்ற சங்கு 3083 பயிரும் - அழைக்கும் 922 பயின் - பிசின் 235 பரடு - காலிலுள்ள சிற்றுறுப்பு 2445 பரதன் - அச்சணந்தி யாசிரியன்; சீவகன் புதல்வருள் ஒருவன் 2705 பரவ - போற்ற 184 பரவைமார்பு - பரந்தமார்பு 819, 2250 பரவையாழ் - பேரியாழ் 530 பரி - செலவு 442, 1778 பரியாளம் - பரிவாரம் 949 பரியும் - அழியும் 1429 பரிவாரம் - சூழ்ந்திருப்பது 949, 1489 பரிவு - இன்புறுதல் 269, 1804, 2604 பரீஇ - பரிந்து, வாங்கிக் கொண்டு 68, 1616 பருதி - வட்டம் 537, 2203 பருதி - நீளமான சமிதை 2463 பருப்பு - பருமை 1282, 2273 பல்லவதேயம் - தனபதியின் நாடு 1185, 2253, 2278 பலாசு - புரசமரம் 834 பவதத்தன் - ஒரு வணிகன் 1573, 1594 பவன வேகம் - கோவிந்தராசன் குதிரைகளுள் ஒன்று 2175 பவித்திரகுமரன் - சீவகன் 1169 பவித்திரம் - சுத்தம் 1167 பவித்திரம் - தூய்மை 2311 பவித்திரை - பதுமுகன் தாய்; தனபாலன் மனைவி 1971 பழுக்கக் கேட்டு - முற்றக் கேட்டு 230 பழுத்தல் - உடம்பு போதல் 1389 பழுத்து - அடிப்பட்டு, குழைந்து 435 பழுப்பு - அரிதாரம் 1287 பழுவம் - காடு 1414 பள்ளி - இடைச்சேரி 317, 422, 426 பள்ளி - முனிவராச்சிரமம் 350, 1194, 1779 பளிங்கு - கருப்பூரம் 2356 பளிதம் - கருப்பூரம் 2403 பற்சீவி - பல்விளக்கி 803 பன்றிப்பொறி - இலக்கணையின் விவாகத்தின் பொருட்டுக் கோவிந்த மகராசன் இயற்றுவித்த வராத யந்திரம் 25, 104 பனிச்சை - அளகம்; ஐம்பாலில் ஒருவகை 632, 2437, 2948 பனுவல் - ஆராய்ச்சி 464 பாகுடம் - கையுறை 2708 பாங்கர் - கணவர் 2528 பாங்கர் - நல்ல இடம் 1909 பாங்கு - உறவு 2253 பாங்கு - நல்ல இடம் 1425, 2387 பாசம் - அன்பு 1320 பாசம் - கயிறு 1649 பாசம் - கால பாசம் 653 பாடம் - ஒளி 596, 699 பாண் - தாழ்ச்சி 1624 பாண்டில் - எருது 2054 பாண்டில் - கஞ்சதாளம் 1940, 2480, 2967 பாணி - தாளம் 1241, 2082 பாந்தள் - மலைப்பாம்பு 1900 பாம்புரி - அகழியிற் கீழே புறப்படப் படுத்தது 1250 பாம்புரி - மதிலின் ஓர் உறுப்பு 1444 பாய்த்தி - பரப்பி 585, 1268 பாய - பரப்பிய 26 பார் - தட்டு 30 பார் - பெருமை 224 பாரற - தட்டற 30 பாராவளையம் - வளைதடி 2656 பாரித்தல் - வளைத்தல் 2285 பால் - பகுதி 4 பாலமிர்தம் - பாலடிசில் 2033 பாலான் - கணவன் 2177 பாலிகை - கத்திப்பிடி 2217 பாலுற்ற - பாலுண்ட 2044 பாவாற்றி - நெய்வோர்க்குரிய ஒரு கருவி 615, 1153 பாற - சிதற 451 பாறு - பருந்து 568 பிடி - கவளம் 81 பிணங்க - பின்னிக்கொள்ள 424 பித்தை - ஆணின் மயிர் 1564 பித்தை - தலைமயிர் 428, 1564 பிதற்றல் - கூறல் 1082 பிரசம் - தேனீ 2691 பிரப்பு - பிரப்பரிசி 369 பிரமி - ஒரு பூடு 2703 பிரீதிமதி - விசயதத்தன் மனைவி 1792 பிழி - கள் 55 பிழியல் - தேன் 2237 பிழைத்தல் - தவறுதல் 815 பிள்ளைமை - பிள்ளைத்தன்மை 2529 பிளிற்றல் - பிலிற்றல் 1286 பிறையிரும்பு - அரிவாள் 55 பீடிகை - தேர்த்தட்டு 2213 பீர்தங்கி - வெளுத்து 1960 பீலிநன்மாமயில் - ஆண் மயில் 236 புகல் - மகிழ, விரும்ப 9 புகற்சி - விரும்பப் பண்ணல் 108 புகற்றும் - விரும்பப் பண்ணும் 870 புகன்று - மகிழ்ந்து 388 புட்டில் - கவளம் பெய்த பை, குதிரைக்கு உணவு கட்டுங்கருவி 1938 புட்டில் - கெச்சை 1772, 2216; புட்டில் - விரற்சரடு 2202 புடை - ஒலி 2993 புத்திசேன் (புத்திசேனன்): அசலனுடைய புத்திரன்: இவன் சீவகன் தோழர்களுள் ஒருவன்; சச்சந்தனுடைய ஆசிரியன் மகன் 666, 1734, 1790, 1829 புதவந்தொறும் - வாயில் தோறும் 2543 புதவி - கோவிந்தராசன் மனைவி, பிருதிவிசுந்தரி 24, 2141 புதா - கதவு 1549 புதுக்கடி - புதுமணம் 1999 புதுவது - புதிதாக 1343 புரி - முத்துவடம் 619 புரிவு - முறுக்கு 1484 புலம் - அறிவு 30 புலம் - குறிஞ்சி நிலம் 46 புலம்ப - துளிப்ப 2082 புலம்பி - தனித்து 367 புலம்பு - குற்றம் 2092 புலம்பு - வருத்தம் 560 புலம்பு - வெறுப்பு 820 புலமகள் - நாமகள் 30, 2362, 2566 புலர்ந்தது - தெளிந்தது 1397 புழுக்கல் - புழுக்கியது; உணவு 2984 புழுங்கி - வெந்து 741 புள்ளி - துளி 1387 புள்ளுவர் - வேடர் 2931 புளகம் - கண்ணாடி 809 புளி - புள்ளி 423 புறவம் - புறா 1430 புறாத்தலை - சிறியதலை 450 பூசல் - பெரும்போர் 430 பூசி - வாய்பூசி 2026, 2493, 2736 பூசுதல் - கழுவுதல் 1784 பூசை - காட்டுப்பூனை, பூனை 1898 பூட்சி - பூணுதல் 381 பூட்சி - மேற்கோள் 1292 பூண் - ஆபரணம் 494 பூண் - கவசம் 264, 2265 பூணி - ஒருவகைப் பறவை 2108, 2599 பூணுறின் - முயக்க மிறுகின் 1363 பூரணசேனன் - கட்டியங்காரன் படைத்தலைவன் 2283-4 பூழ் - குறும்பூழ்ப்பறவை, காடை 73 பூனை - ஒரு பூண்டு 1628 பெட்ப - மிக 1662 பெண்மயம் - பெண்தன்மை 228 பெண்மை - அமைதித்தன்மை 356 பெயர் - புகழ் 207 பெருமை - அருமை 1709 பேது - பேதம், மயக்கம் 1062, 1364, 1920, 2002, 2036 பேது - வருத்தம் 2134 பேதுற்று - மயங்கி 1746 பேரணி - ஒருவகைச் சேனை 277 பேழை - பெட்டி 114, 557 பொங்க - மிகுத்துக்காட்ட 645 பொங்கல் - பெருமை 2805 பொடித்தல் - தோன்றுதல் 2106 பொதிர்த்தல் - புடைக்கொள்ளல் 584, 1500, 2778, 2953 பொதிர்ப்ப - துளைப்ப 2778 பொதும்பர் - இளமரச் செறிவு 2718 பொதும்பு - குறுங்காடு 3042 பொய்கை - மானிடராக்காத நீர் நிலை 337, 1175 பொருதல் - தடவுதல் 1795 பொல்லாமை - இசைக்குற்றம் 717 பொலிசை - இலாபம் 2546 பொழுது - சூரியன் 1747 பொற்ற - நல்ல 885 பொற்றளிவம் - பொற்சின்னம் 2303 பொற்றோரை - பொன்வடம் 2132 பொறி - அறிவு 233, 2200-01 பொறி - உத்தம இலக்கணம் 1339 பொறி - எந்திரம் 9, 233, 2886 பொறி - ஒளி 44 பொறி - தழும்பு 634 பொறி - தீவினை 2201 பொறி - நல்வினை 1359, 1726, 2204 பொறி - பட்டம் 1792 பொறி - முத்திரை 1872 பொறி - வரி 266 பொறிப்ப - தெறிப்ப 46 பொறிமுதல் - உயிர் 475 பொன் - ஆபரணம் 1250 பொன் - திரு 2369 பொன் - பசப்பு 1530 பொன் - பெறுதற்கருமை 2180 பொன்கிளர் பூமி - பொன்னுலகு 2580 பொன்றுஞ்சாகம் - திருத்தங்கு மார்பு 14, 908, 1922 பொன்னாட்சி - வியாழக்கிழமை 620 பொன்னாரிஞ்சி - சமய சரணம் 1243 பொன்னிலே பிறத்தல் - இரணிய கர்ப்பம் 1563 பொன்னிறை - பெறுதற்கரியநிறை 2380 பொன்னெயில் வட்டம் - சமவரசணம் (ஜை) 380, 856, 1243 பொன்னோலை (ஆடவரணி) 369, 677, 1689, 1952 பொனங்கொடி - பொற்கொடி 188, 367, 3135 போக்கு - மீட்சி 1285, 2197, 2231 போகடாய் - போகவிடாய் (வி) 1365 போத்து - எருது 1773 போதக - போதுக 463 போதர்வான் - போதருவான்(வி) 1618 போதர்வேன் - மீள்வேன் 1993 போதி -ஞானம் 366 போர் - குவியல் 1585 போர்பு - நெற்போர் 59 போர்வை - உறை 266 போலா - போன்று 443 போழ்தல் - கெடுத்தல் 2118 போழ்ந்து - பிளந்து 239 போற்றல் - விரும்பல் 338 போனிறம் - பொன்னிறம் (வி) 789 மகண்மா - ஒரு விலங்கு 1902 மகள் - மனைவி 26 மகன்றில் - நீர்ப் பறவைகளுளொன்று மகிழ்தூங்க - மகிழ்ச்சி செறிய 597 மகிழ்ந்து - விரும்பி 2715 மகிழ்வானா - மகிழ்வடங்காத 164 மங்கலத்துகில் - வெண்டுகில் 1146 மங்கலவணி - வெள்ளணி 603 மங்குல் - இருள் 1607 மசகாரி - கொசுகுவலை 838 மஞ்சரி - சுரமஞ்சரி 897 மட்டித்தல் - குழைத்தல் 622 மட்டித்தார் - பூசினார் 991 மடநடை - மென்னடை 2125 மடப்படல் - மடம்படல் (வி) 1927 மடல் - வாழை மடல் 2716 மடவார் - மூடர் 498 மடுத்தல் - நெருங்குதல் 864 மண் - மார்ச்சனை 628 மண்கனிப்பான் - மண்ணையுருக்குபவன் 230 மண்டலம் - குதிரைக்கதி, வட்டக்குடை (பர) 672, 795, 860, 1955 மண்டினார் - மிக்குச் சென்றார் 418 மண்ணுதல் - பண்ணுதல் 292 மண்ணுநீர் - மஞ்சனநீர் 1252, 1345, 2414 மணி - உருண்டை 977 மணி - பளிங்கு 1541 மணி - மாணிக்கம் 931 மணிநிறம் - கரிய நிறம் 451 மணிநீர் - சந்திரகாந்த நீர் 2418 மணிமலர் - நீலமலர் 1613 மணியுயிர் - வீடுபெற்ற உயர்(ஜை) 2878, 3100, 3111 மணிவண்ணன் - ஒருசாரணன் மணை - பலகை 922 மத்தகம் - தலை 2251, 3005 மத்தம் - மத்து 1313 மத்திகை - சம்மட்டி 703 மத்திமதேயம் - தடமித்தனுடைய தேயம் 1619 மத்திம நாடு - பவதத்தனுடைய நாடு 1591 மத்திரிப்பு - செற்றம் 753 மதம் - செருக்கு 2183 மதம் - தேன் 2584 மதரரி - கதிர்த்த அழகு 2803 மதலை - தோணி 505 மதனன் - கட்டியங்காரன் மைத்துனன் 256, 1079, 1142, மதி - பிறை 363 மதிதரன் - தளபதியின் மந்திரி 1340 மதுகை - அறிவு 664 மயல் - செத்தை 128 மயிர்க்கட்டு - தலைக்கட்டு 1558 மயிர்க்கிடுகு - மயிர்க்கேடகம் 2218 மயிலை - இருவாட்சி 485 மரபு - வழிபாடு 842 மரவடி - பாதக்குறடு 1300 மரியவர் - மருவியவர் 1211 மருங்கு - செல்வம் 2924 மருங்கு - வடிவு 1195 மருட்டும் - வருத்தும் 1455 மருதம் - ஒருவகை மரம் 1853 மருப்பு - பிறைக் கோடு 322 மருமகன் - சகோதரியின் மகன் 187 மருமகன் - மருமான் 1057 மலங்க - கெட 1613 மலங்க - சுழல 340 மலங்க - பிறழ 1067 மலைந்து - மாறுபட்டு 747 மலைமகள் - காந்தருவதத்தை 1745, 1751 மறவலை - மறவற்க 947 மறுகல் - சுழலாதேகொள் 946 மறுவலும் - மீட்டும் 1052 மறைபொருள் - இரகசியப் பொருள் 1222 மன் - பெருமை 860 மன் - மிகுதி 1147 மன்னாவுலகம் - சுவர்க்கம் 1243 மன்னும் - மிகவும் 708, 1147 மனவு - சங்குமணி 466 மாகம் - திக்கு, மஞ்சு 569 மாதங்கி - யாழ்த்தெய்வம் 411,550 மாதர் - காதல் 338, 1295, 2584 மாது - காதல் 356, 463, 2349 மாதுபடு - பெருமைப்பட்ட 499 மாலை - குணமாலை 876, 893-4 மாலை - பூமாலை 1338, 1742 மாவலி - சச்சந்தன் 222 மாழை - இளமை 2198 மாழை - பசலை 1541 மானம் - ஒப்பு 2747 மிஞ்சி - மிக்கு 255 மிஞிறு- வண்டு 1769 மிலேச்சர் - மெல்லக் கூறல் 1626 மிளிர்ந்த - பிறழ்ந்த 491 மிளிர - பிறழ 1074,1658 மீசை =மிசை - மேலிடம் (வி) 911 மீளிமை - வன்மை 940, 958,1382, 1486 முக்கி - உண்டு, முழுகுவித்து 1574 முகடு - மேல் 1609 முகப்ப - எடுப்ப 323 முகப்பூ - முகப்பொலிவு 2334 முகம்புடைத்து அகங்குழைந்து அழ 2758 முகவாசம் - வெற்றிலை 1055, 2474 முகிழ்ந்து - அரும்பி, முகிழ் செய்து 1004, 2051 முகூர்த்தவிதானி - முகூர்த்தம் பார்ப்பவன் 2362 முகைவிம்மும் - மலரும் 2558 முட்கோல் - தாற்றுக்கோல் 794 முட்டாது - குறையாமல் 553 முட்டுடை முடுக்கர் - போக்கில்லாத அருவழி 1216 முடி கவிழ்த்த - தலையைச் சாய்த்த 1211 முடித்தல் - வீடு பெறுதல் 3073 முடி தீட்டினான் - வணங்கினான் 2641 முடி துளக்கி - தலை சாய்த்து 1881 முடி துளக்கி - வணங்கி 2357, 2560, 2738 முணை - மிகுதி 2222 முத்தவிராழி - கொற்றக்குடை 2741 முத்துதல் - சேர்தல் 504 முதலா - தோன்றாத 1 முதனிலை - நிலைமொழி 2697 முந்தை - முன்பு 545 முயற் கூடு - சந்திரன் 2284 முரணிய - பெருக்கிய 1772 முரன்று பாட - ஆலாபனஞ் செய்து பாட 1959 முரிமுரிந்த - முரிதலைச் செய்தன 2310 முரிய - வளையா நிற்க 2670 முரிவிலர் - நீங்கார் 372 முரிவு - வருத்தம் 1627 முருக்கி - அழீத்து 807 முல்லை - கற்பு 686 முல்லைக் கத்திகை - முல்லை மாலை 989 முழா - முழவு 530 முழாலின் - தழுவுதலால் 2541 முழும் (முழுதும்)-முழுவதும் (வி) 1870 முழுமெய்யும் - மெய்முழுவதும் 340 முள் - தாற்றுக்கோல் 2214 முள்குதல் - முயங்குதல் 420, 687, 1413, 1986, 2184 முள்கும் ஆயர் - புதுமணவாளப் பிள்ளைகள் 420 முளவுமா - எய்ப்பன்றி 1233 முளிபுல் - காய்ந்தபுல் 2279 முளை - அசோகங் கன்று 223 முற்றி - தழும்பியிருந்து 1678 முற்றிமை - முதுக்குறைமை 2511 முற்றில் - சிறுசுளகு 1099 முறிந்த - தளிர்த்த 2358 முறுகி - மிக்கு 1503 முறுகியவிசை - கடுகிய விசை 796 முறுகியூர்தர - மிக்கணுக 1183 முறுவனோக்கம் - மகிழ்ச்சி கொண்ட பார்வை 1022 முன்னம் - குறிப்பு 415 முன்னினான் - அணுகினான் 1249 முன்னீர் - முற்பட்ட நீர்மை 1910 முனிமை - முனித்தன்மை 1609 முனை - தவம் 707 முனைவர் - முனிவர் 707 மூக்க - மூத்திடுக 487 மூசறா - மூசுதல், அறாத (வி) 418 மூப்பிமார் - முதுமகளிர் 1892 மூர்ச்சனை - நெட்டுயிர்ப்பு 1627 மூர்த்தம் - முகூர்த்தம் 2495 மூர்த்தி - தவவேடமுடையவன் 3071 மூலை - திக்கு 1232 மூவா - இறவாத 1 மூழ்த்தம் - முகூர்த்தம் (பா) 2763 மூழி - பாண்டவிசேடம் 2464 மூழிவாய் - பூவிடுபெட்டி 833 மூழை - அகப்பை 487 மூள்கும் - புகுதும் 1998 மெத்தி - அப்பி 1577 மெல்கோல் - பற்கொம்பு 803, 3045 மெலிய - மெல்லிய (வி) 641 மெழுக்கு - மெழுகுதல் 129 மே - பெருமை 179 மேகப்புள் - வானம்பாடி 2839 மேம் (மேவும்) - விரும்பும் 480 மேம்படீஇய - மேம்படுத்துதற்கு 782 மேய்ந்து - பருகி 32 மேவர்சாயல் - மேவருசாயல் (வி) 1006 மேவர்தமிழ -மேவருதமிழ்(வி) 1328 மேழகம் - ஆடு 521, 1230 மைத்தல் - ஒளிகெடுதல் 2333 மைந்துறவு - வலியுறுதல் 1601 மையலவர் - பித்தர் 2013 மையாடல் - மையோலை பிடித்தல் 367, 2706, 2756 மொய் - பகை 1704, 1802 மோடு - புடைப்பட்ட வயிறு 2844 மோடு - பெருமை 2379 மோடு - வயிறு 43 மோழலம்பன்றி - ஆண்பன்றி 1233 யமதூதி - பாம்பின் பல் 1288 யவதத்தன் - ஒரு வணிகன் 494 யாக்கை - பிணித்தல் 1362 யாவதும் - எல்லாம் 1201 யாழ் செய்யும் - பாடும் 1012 யாழ்வாசினை - யாழ்வாசித்தல் 651, 660, 664, 1079 யோகம் - நூல் 621 யோகம் - மருந்து 1800 வகை - குறுந்தெரு 462 வகைநலம் - அவயவ அழகு 695 வச்சிரம் - மரவயிரம் 2613 வஞ்சம் - பொய் 574, 1512 வஞ்சினம் - சபதம் 592, 773, 902, 1042-3, 1861, 2002, 2067, 2514 வட்க - கெட 403 வட்டணை - வட்டவணை (வி) 673 வட்டணை - வர்த்தணை 1257 வட்டிகை - எழுதும் பலகை 1990 வட்டித்து - சுழற்றி 2594 வட்டில் - கிண்ணம் 74 வட்டு - எஃகுருண்டை 103, 811, 983, 2263, 2467 வடகம் - உடை விசேடம் 462 வடிகயிறு - குதிரையின் வாய்க் கயிறு 794 வடித்தபோத்து - பண்ணின எருது 1773 வடித்தல் - பயிற்றல் 1450 வடித்தாரை - வடித்ததாரை(வி) 2320 வண்டர் - கடிகையர் 1844 வண்டனார் - முனிவர் 1632 வண்டானம் - நாரை 2108 வண்ணித்தல் - வர்ணித்தல் 2458 வதம் - விரதம் 378 வம்பு - புதிய வழக்கு 1068 வயமா - புலி 2778 வயா - வேட்கை 231 வயிரம் - கோளகை 645, 2275 வரகாத்திரம் - யானைத்தலை 806 வரந்தருதெய்வம் - அருந்ததி 1507 வரன்றி - அரித்து 2297 வருடை - வரையாடு 1899 வரைய - அளவின 1037 வல்சி - பகற்சோறு 591 வல்லிக்கயிறு - அரைஞாண் 2240, 2263, 2280 வலத்தல் - சூழ்தல் 340 வலத்தல் - சொல்லுதல் 153 வலந்த - கூறிய 153, 187 வலம்புரி - சங்கரேகை 184, 204 வலவை - வெற்றியையுடையை 3020 வலித்தது - துணிந்தது 266, 586, 1285, 1924, 1932 வலிப்புறீஇ - வற்புறுத்தி 1143, 1334 வழி - ஆசாரம் 2074 வழித்து - பூசி 699 வழை - சுரபுன்னை மரம் 1569, 1918 வழைச்சு - இளமை 1614 வள்ளி = வல்லி - கொடி 2030 வள்ளுவன் - நிமித்திகன் 419 வள்ளுவார் - வள்ளுவர் (பெயர்த் திரிசொல்) 2149 வள்ளூரம் - ஊன் 1552 வளம் - அழகு 751 வளராதன - துயிலாதன 1366 வளாய் - சூழ்ந்து 2634 வளைத்தேன் - தடுத்தேன் 889 வளைப்பு - காவல் 2077 வறைகள் - வறுவல்கள் 2735 வனகிரி - சினாலயமுள்ள ஒரு மலை 1210, 1565 வனப்பு - வகுப்பழகு 1721, 2292 வாக்கமைபாவை - திருத்தமைந்த பாவை 667 வாக்கி - வார்த்து 471 வாக்கு - திருத்தம் 667, 1473 வாங்கி - தழுவி 584 வாசவல் - பாசவல் (வி) 1562 வாசினை - வாசித்தல் 603, 1079 வாணாள் - உயிர் 3079 வாமன் - அருகன் 160, 2738 வாமனார் - புத்தர் 210 வாய் - வடு 454; வாய்த்த - தப்பாத 419 வாய்த்தலை - மதகு 40 வாயில் - தூது 997 வார் - கடைகயிறு 711 வாரணவாசி - ஓரூர் 395, 612, 2188 வாராக்கத்தி - முத்தி (ஜை) 1247 வாரி - செண்டுவெளி 275, 277 வாரி - யானைக் கூடம் 81 வாசிகிற்சை: ஒரு நூல் 264 வாள்வாய் - வாள்வடு 454 வாளி - வட்டம் 442 வாளியம்பு - அகலம் 1628 வாளேறு - வாள்வெட்டு 682 வான்புலம் - உண்மையறிவு 793 விசயன் - கனகமாலை சகோதரர்களுள் ஒருவன் 1636, 1681 விசயன் - சீவகன் பிள்ளைகளுள் ஒருவன் 2705 விசயை - சீவகன் நற்றாய் 182 விசித்தல் - கட்டல் 559 விசை - விரைவு 2228 விஞ்சைகள் - வித்தைகள் 520, 1881 விடுத்து - வேறுபடுத்தி 1732 விடித்தேன் - விட்டேன் (வி) 846 விடுதல் - தங்குதல் 1779, 1821, 1905, 2172, 3051 விடைப்பு - வேறுபடுத்தல் 555 விண் - தேவர் (ஆகுபெயர்) 220, 952 வித்தகம் - எழுதும் வன்மை 1044 வித்தல் - பரப்புதல் 1611, 3114 விதிர்விதிர்த்து - நடுநடுங்கி 1540 விதும்பி - மனமசைந்து 2580 விதும்பினார் - நடுங்கினார் 2718 விதையத்தரசன் - அரிமர்த்தனன், விசையையின் தந்தை 162 விதையம் - விதேக தேசம் 162, 2109 விபுலன் - சீவகன் தம்பி 1144, 2260 விம்மாந்து - பொருமி 1801 விம்முயிர்த்து - விம்மி உயிர்த்து 271 விம்முறவு - வருத்தம் 1634 விமலை : சீவகன் மனைவிகளுள் ஒருத்தி 1977 வியநெறி - ஏவல் நெறி 1886 வியவர் - ஏவல் செய்வோர் 601 விரகு - உபாயம் 328, 390 விராகு - விராகம் (வி) 3080 விரிசிகன் = ப்ருச்சிகன் - கணி 621 விருத்தி - சீவிதம் 1374, 2156 விலங்குதலாக - வேறு வேறாக 70 விலாவணை - அழுகை 2138 விலாவம் - அழுகை 1092 விழ - விழவு 3114 விழிப்ப - விளங்க 2280 விழுங்கல் - கொல்லல் 385 விளைக்கிய - விளைத்தற்கு 2867 விற்படை - அம்பு 567 வீக்கம் - பெருமை 2207 வீக்கறுத்து - வீக்கமறுத்து 2207 வீக்கி - நிறைத்து 534 வீக்கி - கட்டி 2116 வீக்குதல் - முறுக்குதல் 2661 வீங்க - இறுக 840 வீங்க - விம்ம 586 வீட்டிடம் - விடுதலையுடைய இடம் (வி) 2110 வீடல் - விடல் (வி) 7,307 வீடு - விடுதல் (வி) 37, 2577 வீணாபதி - காந்தருவதத்தையின் தோழி 555, 651 வீணைச்செல்வம் - இசைப்பாட்டு, காமம் 411 வீணைவித்தகன் - சீவகன் 1002, 2335 வீணை வேந்து - சீவகன் 2598 வீதராகர் - ஆசையை விட்டுவிட்டவர் 2542 வீர மன்னன் - உலோகமா பாலன் 2254 வீரியக்குரிசில் - வெற்றிக்குரிசில் 277 வீழ்ச்சி - வீழ்தல் 2587 வீழ்ந்தென - வீழ்ந்ததென (வி) 77, 1979 வீளை - சீழ்க்கை 447 வீற்றிரீஇ - வீற்றிருத்தி 2905 வீறு - நல்வினை 1814 வீறு - வெற்றி 2261 வெடி - பகைத்தல், முழக்கம் 776 வெண்படலிகை - வெள்ளித்தட்டு 3031 வெதிர் - மூங்கில் 441 வெப்பர் - வெம்மை 1746 வெம்பின - ஒலித்தன 222 வெம்புதல் - விரும்புதல் 2, 410 வெம்பு வேட்கை - எரிகின்ற காமம் 854 வெய்யோன் - விரும்பியவன் 237 வெரீஇ - வெருவி 2499 வெருகு - காட்டுப்பூனை 1898 வெருட்டி - வெருட்டியவைகள்;பெயர் 174 வெருளி - செல்வச்செருக்கு 73 வெள்ளி - சுக்கிரன் 1532 வெள்ளில் - விளாம்பழம் 232 வெள்ளிலோத்திரம் - ஒரு மரம் 622 வெள்ளிவள்ளி - வெள்ளிவளை 420 வெளி - வெள்ளி (வி) 593 வெளில் -யானைத்தறி 973 வெளிற்றுடல் - உதிரம் நீங்கின பிணம் 804 வெளிற்றுரை - பயனில்லாத உரை 1431 வெளிறு - அறிவின்மை 200 வெளிறு - குற்றம் 3074 வெற்றிலைக்கா - வெற்றிலைத் தோட்சுமை 826 வெறாயிரம் - வேறாயிரம் (வி) 76 வெறி - மயக்கு 1484 வெறி - வாசனை 2422 வெறியம் - வெறுவியேம் 1024 வெறுப்ப - மிக 555 வேகம் - நஞ்சு 1274 வேடு - வேட்டுவச்சாதி 426, 446 வேணுக்கோல் - மூங்கிற் பிளிச்சு 634 வேதண்டம் - வெள்ளிமலை 546 வேது - வெம்மை 2675 வேதுசெய்து - காய்ச்சி 2667 வேமானியர் - தெய்வமகளிர் 2455 வேய்ந்து - அணிந்து 870 வேய்ந்து - மறைக்கப்பட்டு 112, 1208, 1417, 2523 வேய்ந்துணி - புல்லாங்குழல் 1848 வேலருவி - வேலொழுங்கு 291 வேற்றுவர் - அயலார் 1550, 2986 வேறுசெய்து - பகைப்பித்து 755 வைக்கிய - வைத்தற்கு 790 வைத்த - கூர்த்த 844 வையம் - வண்டி 2054 ஸ்ரீதத்தன் - ஒரு வணிகன் 483 ஸ்ரீமான்; ஒரு வணிகன் 1591 