வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 22 பெடரல் இந்தியா சமஸ்தான இந்தியா இந்தியாவின் தேவை நமது தேசீயக் கொடி பார்லிமெண்ட் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 22 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 232= 248 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 155/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித் தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி டோரதி கிருஷ்ணமூர்த்தி 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002. சர்மாவின் பொன்னுரைகள்.......  மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.  பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.  உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.  பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.  மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல்மொழியைப் போற்றுவதைத் தவிர்.  தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.  உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.  ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.  கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.  ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு.  எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.  நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.  விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். முன்னுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ள சாமிநாத சர்மா நூல்களைப் பற்றிய செய்திகளைக் காண்போம். பெடரல் இந்தியா; சமதான இந்தியா 2. இவ்விரண்டு நூல்களும் இந்திய அரசாங்கச் சட்டம் 1935 செயல் படத் தொடங்கிய காலக் கட்டத்தில் எழுதப்பட்டுள்ளன. 3. இந்தியாவை இங்கிலாந்து அரசே நேரடியாக 1859 முதல் ஆண்டு வந்தது. 1900க்குப் பின்னர் படிப்படியாக இந்திய ஆட்சியில் இந்தியரும் பங்கேற்க இங்கிலாந்து பாராளுமன்றம் நிறைவேற்றிய பின்வரும் இந்திய அரசாங்கச் சட்டங்கள் வகை செய்தன:- (i) 1909: மிண்டோ (கவர்னர் ஜெனரல்) - மார்லி (இங்கிலாந்து பாராளுமன்றத்தில இந்திய அமைச்சர்) சட்டம். கவர்னர் ஜெனரலுடைய மத்திய சட்டமன்றம் 60 உறுப்பினர் களைக் கொண்டதாக விரிவாக்கப்பட்டது. இவர்களுள் 33 பேர் நியமன உறுப்பினர்; 27 பேர் மாகாண சட்டசபைகளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். இச்சட்டசபை வெறும் விவாத மேடையே;சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. மாகாணங்களிலும் சட்டமன்றங்கள் விரிவாக்கப்பட்டன; சென்னை 60 உறுப்பினர்; பம்பாய் 60; வங்காளம் 60; சிறுமாகாணங்கள் ஒவ்வொன்றிலும் 30. இந்த சட்டத்தில்தான் முதன்முதலாக முகமதியர்களுக்கு அவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தனித் தொகுதி முறை உருவாக்கப் பட்டது. (II) 1919 மாண்டேகு (இந்திய அமைச்சர்) - செம்போர்டு (கவர்னர் ஜெனரல்) சட்டம். மைய அரசு இரண்டு சபைகள்; மேல்சபை (60 பேர்) கீழ் சபை (145 பேர்) இரண்டு சபைகளுமே விவாதங்கள் மட்டும் செய்யலாம். கவர்னர் ஜெனரலையும் ஆலோசர்களையும் சட்ட பூர்வமாகக் கட்டுப்படுத்த முடியாது. மாகாண அரசுகளில் இரட்டை ஆட்சி: நிதி, காவல், வருவாய், நீதிமன்றங்கள், ngh‹wit} கவர்னர், ஆலோசகர்கள் கட்டுப்பாட்டில் கல்வி, மருத்துவம், மராமத்துப் பணி, cŸsh£á} மாகாண சட்ட மன்றங்கள்தெரிந் தெடுக்கும் அமைச்சர்கள் கட்டுப்பாட்டில். (III) 1935 இந்திய அரசாங்கச் சட்டம்( ( பெடரல் அதாவது கூட்டாட்சி முறைக்கு வழி வகுத்தது) ; அதிகாரங்கள் மைய, மாநில, கூட்டுப் பட்டியல் என பிரித்துத் தரப்பட்டன. மைய அரசு - இரண்டு அவைகள் ( மேலவை & கீழவை) போர்ப்படையும் வெளி உறவும் } கவர்னர் ஜெனரல் பிறபொருண்மைகள்: மைய சட்ட மன்றங்கள் தெரிந் தெடுக்கும் அமைச்சர்கள் கட்டுப்பாட்டில். [ika அரசைப் பொறுத்த மேற்கண்ட செயல்பாடுகள் 1945இல் தான் brašgL¤j¥g£ld] மாகாண அரசுகள்: அனைத்துஅதிகாரங்களுமே மாகாண சட்ட மன்றங்கள் தெரிந்தெடுத்த அமைச்சரவைக்கு. சென்னை மாகாணத்தில் 1937-39ல் சி.இராஜகோபாலாச்சாரி அமைச்சரவை (மாகாண அரசுகளைப் பொறுத்தவரை 1935ம் ஆண்டு ச்சட்டம் 1.4.1937 முதல் நடைமுறைக்கு வந்தது) 4. சனவரி 1950 , 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின் முக்கியமான பல பகுதிகள் ஏறத்தாழ 1935ம் ஆண்டுச் சட்டத்தைப் பின்பற்றுவனவேயாம். “It cannot be claimed that the Indian Constitution and its main parts had much of originality. To a large extent it was an adaptation of the Govt of India Act 1935. - K.Santhanam (2001) “Looking Back”106 இதில் ஒன்றும் கவுரவக் குறைவு இல்லை. காரணம் மக்கள் ஆட்சி; சட்டத்தின் ஆட்சி நேர்மையான நிருவாக நெறிமுறைகள்; போன்ற வற்றின் அடிப்படைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான மேல்நாட்டு அரசியலறிஞர், சட்ட அறிஞர் மெய்யியலாளர்கள் எண்ணக் குவியல்களின் அடிப்படையில் மேலைநாடுகளில் உருவாகி வந்ததன் அடிப்படையிலேயே வாழையடி வாழையாக 19ஆம் நூற்றாண்டில் இந்திய ஆட்சிக்கு ஆங்கிலேயர் கொணர்ந்த பல்வேறு சட்டங்களிலும் 20ஆம் நூற்றாண்டில் படிப்படியாக வந்த 1909, 1919, 1935 ஆண்டுச் சட்டங்களிலும் திறம்பட உருவாகியிருந்த ஆட்சிக் கருத்துக்களின் அடிப்படையில் புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமைப்பதே விவேகம் என்று இந்திய அறிஞர்கள் கருதியது வியப்பன்று. 25.1.1950 வரைச் செயல்பட்ட அரசியல் நிர்ணய சபை அத்தேதிக்குப் பின்னர் தற்காலிக பாராளுமன்றம், (Provisional Parliament) ஆனது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மாகாண சட்ட சபை உறுப்பினர்களால் மறைமுகமாக ( indirect) தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். 1952 தேர்தலுக்கு முன்னர் இந்தியாவில் 21 வயது முடிந்தோர்க்கு எல்லாம் வாக்குரிமை இல்லை; மாகாணசட்டசபை உறுப்பினர்கள் எல்லாம் (1952க்கு முன்னர்) 1935ஆம் ஆண்டுச் சட்டத்தின் படி வாக்குரிமை பெற்றிருந்த சிலரே ( மொத்த மக்கள் தொகையில் 28.5%) தெரிந்தெடுத்தனர் என்பது தெரிந்து கொள்ள வேண்டியது. 1935ஆம் ஆண்டுச்சட்டத்தில் இல்லாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாக இந்தியாவுக்கு ஏற்ற வகையில் தக்க மாற்றங்கைளச் செய்து சேர்த்த பின்வரும் பகுதிகள் மேலைநாடுகள் சிலவற்றின் அரசியலமைப்புகளைப் பின்பற்றிச் செய்தனவாம்:- அடிப்படை உரிமைகள்: அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முதற்கண் செய்யப்பட்ட சிலதிருத்தச் சட்டங்கள். வழிகாட்டு நெறிமுறைகள்: அயர்லாந்து அரசியலமைப்பு உச்ச நீதிமன்றம்: அமெரிக்க அரசியலமைப்பு 5. ஐநூறுக்கு மேற்பட்ட இந்திய சமதானங்களை இந்தியாவுடன் இணையும்படி செய்த சர்தா வல்லப்பாய் படேல் தொண்டு மறக்க முடியாதது ஆகும். இந்தியாவின் தேவை 6. இக்குறுநூலில் காந்தியடிகள், நேரு, தாகூர் ஆகியோருடைய சிறந்த கருத்துக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவற்றுள்ள பல இன்றும் வலிவுடையனவேயாம். நமது தேசீயக் கொடி 7. நமது தேசீயக் கொடி உருவான வரலாற்றை சர்மா சுவைபடத் தந்துள்ளார். பார்லிமெண்ட் 8. இன்று இந்திய மைய அரசின் நாடாளுமன்றமும், மாநிலங் களிலுள்ள சட்டமன்றங்களும் செயல்படுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் (1950) வகுத்துள்ள சிறந்த வரன்முறைகள் எல்லாம் ஆங்கிலப் பாராளுமன்ற வரன்முறைகளைப் பின்பற்றியவை. அவ்விழுமிய வரன் முறைகள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நடைமுறையில் நமது அரசியல் கட்சிகளும் தலைவர்களும் 1970 களிலிருந்து அவற்றைக் கேலிக் கூத்தாக்கி விட்டனர் என்பதும் அண்ணல் அம்பேத்கார் இவர்கள் யோக்கியதை பற்றி 1950இல் தெரிவித்த அச்சம் மெய்யாகி விட்ட தென்பதும் அனைவர்க்கும் தெரிந்ததேயாகும். பாராளுமன்றங்களின் தாய் ஆகிய ஆங்கிலேய பார்லிமெண்ட் வரலாற்றை விரிவாக சர்மா தந்துள்ளவற்றைப் படிப்பது பயனுள்ளதாகும். பி. இராமநாதன் நுழையுமுன்... பெடரல் இந்தியா ஒத்த அதிகாரமும், ஒத்த உரிமையும் உள்ள பல மாநிலங்கள் தம் நன்மைகளின் எதிரிகளின் படையெடுப்புகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காகச் சில திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல் படுவதற்கு உருவாக்கப்பட்டதே பெடரல் இந்தியா, என்னும் இந்நூலாகும். இதன் செயல்பாட்டுத்திட்டங்களை இந்நூலினுள் காண்க. சமதான இந்தியா இந்தியப் பெருநிலம் இரு பிரிவுகளாக இருந்தது. ஒன்று பிரிட்டிஷ் இந்தியா, மற்றொன்று சமதான இந்தியா. பிரிட்டிஷாரின் நேரடி நிர்வாகம் முன்னையது. சுதேச மன்னர்கள் ஆளுமையின் கீழ் உள்ள நிர்வாகம் பின்னையது. இவர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பில் பல மதத்தினர்; பல மொழியினர்; பல இடங்களில் பரவியிருந்தனர். சமதானங்கள் எதேச் சதிகாரத்தின் சின்னங்கள். ஆங்கில மேலாளுமையைத் தாங்கிய தூண்கள். இவற்றைப் பற்றிய செய்திகள் அடங்கிய நூல். சமஉரிமையும் ஆளுமையும் உள்ள சமதானங்கள் ஒருபிரிவு, பிரிட்டிஷாரின் அரவணைப்பில் இருந்த சமதானங்கள் மற்றொரு பிரிவு. முன்னது பெரிய சமதானங்கள். இவை ரெசிடெண்டுகள் என்றும், பின்னது சிறிய சமதானங்கள், இவை ஏஜெண்ட்கள் என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டு பிரிவு நடைமுறைச் செயல்பாடுகளை இந்நூலில் காணலாம். இந்தியாவின் தேவை. கடல் நடுவே கலம் செலுத்தி உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று உண்டியும் -உடையும் , கொண்டும் - கொடுத்தும் வாழ்ந்தவர் நம் முன்னோர்; காட்டை நாடாக்கி நாகரிக விளக்கேற்றிப் பண்பாட்டு மாளிகையைக் கட்டியவர்கள் அவர்கள். அரசியல், பொருளியல், சமூக வாழ்வு இவற்றில் நிறை வாழ்வு வாழ்ந்தவர் நம் முந்தையர். இந்நிலம் பொன்னும் பொருளும் அன்பும் அறிவும் அருளும் வளர்ந்த பெருநிலம். இந்த நிலப்பரப்பில் தான் கிறித்தவமும் இசுலாமியமும் அரசோச்சின. வணிகம் செய்ய வந்த வெள்ளை இனம் எப்படி இந்த மண்ணில் காலூன்றி நிலைத்தது. இந்த மக்களை எப்படி அடிமை கொண்டது? நெஞ்சைப் புண்ணாக்கும் அவலம் நிறைந்த செய்திகள் அடங்கிய நூல். பழைமையின் சுவடுகளை மறந்தோம். வருங்கால வாழ்வுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? புகழின் நினைப்பில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தோம். இவற்றை நாம் உணரவேண்டும், தெளிய வேண்டும் என்பதற்காகவும் நம் வருங்கால வாழ்விற்கு வழி அமைக்கவும் ஊன்றுகோலாக நமக்குத் தந்துள்ளார். அறிஞர் சாமி நாதனார் நமது தேசியக் கொடி விடுதலையைக் குறிப்பது கொடி. இலட்சியத்தைக் காட்டுவது தேசியப் பாட்டு. நாகரிகத்தைப் புலப்படுத்துவது மொழி. கொடி, பாடல், மொழி இம்மூன்றினையும் போற்றுவது சுதந்திரம், இலட்சியம், நாகரிகமாகும். இம்மூன்றின் சின்னம் கொடியாகும். இதனை இந்நூலில் அறியலாம். இந்தக் கொடியின் பெருமைகள் குறித்து இந்தியத் தேசியக் பாவலர்கள் என்று நம்மால் போற்றப்படும் பெரும்பாவலர்கள் தாகூரும் , பாரதியும், முன்னாள் தலைமை அமைச்சர் பண்டித நேருவும் , இந்திய விடுதலைக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்ட சரோஜினி அம்மையும் கூறியவற்றை இந்நூலில் காணலாம். பார்லிமெண்ட் இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலும், அமைச்சரவையும், நாடாளுமன்ற நடத்தப்படும் முறை அரசுப் பணியாளர்கள், பழைய நடைமுறைகள், என்பவற்றைப் பற்றிய செய்திகளை இந்நூலில் காணலாம். கோ. இளவழகன் பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்து களின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்கு வதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடுகிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் அரசியல் வரலாற்று நூல்கள் 14. இந்நூல்களை 6 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக் கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத் தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் பொருளடக்கம் சர்மாவின் சாதனைகள் iii சர்மாவின் பொன்னுரைகள் vi முன்னுரை vii பதிப்புரை xi நுழையுமுன் xiii பெடரல் இந்தியா 1. ஆனந்தக்கண்ணீர் 3 2. பெடரல் அரசியல் 9 3. மாகாணங்கள் 20 சமதான இந்தியா சமதான இந்தியா 39 இந்தியாவின் தேவை இந்தியாவின் தேவை 69 நமது தேசீயக் கொடி 1. வரலாறு 95 2. உட்கருத்து 101 3. வணக்கம் 111 4. அனுபந்தம் 118 பார்லிமெண்ட் வாசகர்களுக்கு ( முதற்பதிப்பு) 127 வாசகர்களுக்கு ( மூன்றாம் பதிப்பு) 129 3. பொருளும் இடமும் 131 4. தேர்தலும் மந்திரிச் சபையும் 146 5. முதற்கூட்டம் 160 6. அன்றாட நடைமுறை 172 7. உத்தியோகதர்கள் 188 8. சில சம்பிரதாயங்கள் 199 9. லார்ட் சபை 215 பொருட்குறிப்பு 225 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி, புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு வ.மலர் மேலட்டை வடிவமைப்பு வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா,இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers) இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . பெடரல் இந்தியா I ஆனந்தக் கண்ணீர் கி.பி. பதினேழாவது நூற்றாண்டின் பிற்பாகத்தில் சாதாரண வியாபாரிகளாக இந்தியாவுக்குள் புகுந்த பிரிட்டிஷார், நாளா வட்டத்தில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டதோடு, அதனைக் காப்பாற்றுவதாகிற காரணத்தைக் கொண்டு, அரசியல் நிருவாகத்தையும் கைப்பற்றி அதனை உறுதியாக ஒரு கட்டிடமாக அமைத்துக் கொண்ட வரலாறு மகா ஆச்சரியமானது. 1639ம் வருஷம் சாதாரண வலைஞர்கள் நிறைந்த ஒரு கிராமமாயிருந்த சென்னையை, சென்னப்ப நாயகன் என்ற ஒருவனிடமிருந்து பிரிட்டிஷார் தர்மசாஸனமாகப் பெற்றது முதல், ஐரோப்பிய மகாயுத்தத்திற்கு லட்சக்கணக்கான பணத்தையும் மக்களையும் இந்தியா கொடுத்து உதவிய வரையில் நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்து வைத்துப் பார்ப்போமானால் அதில் பிரிட்டிஷாருடைய ஆனந்தக் கண்ணீர் பிரதிபலிப்பதைக் காணலாம். ஓர் ஏகாதிபத்தியத்தைச் சிருஷ்டி செய்து, அதனைத் தங்களுக்குச் சாதகமான முறையில் பலப்படுத்தி வைத்திருக்கிற அரிய செயலைக்கண்டு, இருபதாம் நூற்றாண்டிலே பிறந்த பிரிட்டிஷ் இளைஞர்கள், தங்களுடைய மூதாதையர்களை எப்படிக் கைகூப்பித் தொழாமலிருக்க முடியும்? தங்களுடைய ஆனந்த பாஷ்பத்தை எப்படி அடக்கிக் கொண்டிருக்க முடியும்? இந்த ஏகாதிபத்தியம் எதன்மீது நிர்மாணம் செய்யப்பட்டது என்ற கேள்வியை மனப்பூர்வமாக இவர்கள் கேட்டுக் கொள்ளாத வரையில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டியது தானே. ஆனால் இது கூட ஆச்சரியமில்லை. இந்தியர்களுக்கு அரசியல் ஞானப்பாலை மெதுமெதுவாகப்புகட்டி அவர்களை வளர்த்து சுய ஆட்சி என்ற பாதையிலே கொண்டுவிட பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் செய்துவரும் சலிப்பில்லாத முயற்சிகளைக்கண்டு யார்தான் ஆச்சரியப்படாமலிருக்க முடியும்? இந்தியர்களுடைய புராதன பெருமை, பண்டைய நாகரிகம் முதலியனயாவும் இந்த பிரிட்டிஷ் அரசியல் ஞானப்பாலினாலும், மேனாட்டு நாகரிகத்தினாலும் கழுவப்பெற்று இப்பொழுது எந்நிலையி லிருக்கின்றன வென்பதை, நமது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் சரித்திர புதகங்களிலிருந்து தெரிந்து கொள்ளுகிறோமல்லவா? இத்தகைய அரசியல் வளர்ச்சியின் ஒரு படியில் இந்தியர் களைக் கொண்டு விட்டிருக்கும் பெருமையுடைத்து 1935ம் வருஷத்து இந்தியா அரசாங்கச் சட்டம். 1937-ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதியி லிருந்து நடைமுறையில் வந்திருக்கிற இந்தச்சட்டம் இந்தியாவில் பெடரல் அரசாங்க முறையை ஏற்படுத்துவதாயிருக்கிறது. இந்த பெடரல் அரசாங்க அமைப்பைப்பற்றிக் கவனிக்கு முன்னர், ஆதியிலிருந்து - அதாவது பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து - இந்தியாவின் அரசாங்க அமைப்பு எப்படி படிப்படியாக மாறி வந்திருக்கிற தென்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். கம்பெனி ஆட்சி கிழக்கிந்தியா கம்பெனியார், இந்தியாவிற்கு வியாபார நிமித்தம் வந்த காலத்தில், இங்கிலாந்து மன்னர்களிடமிருந்து பெற்ற உரிமைப் பத்திரம் ஒன்றே இவர்களுக்குத் துணையாயிருந்தது. இவர்களுடைய வியாபார விஷயத்திலோ அல்லது நிருவாக விஷயத்திலோ பிரிட்டிஷ் பார்லிமெண்டார் தலையிடவில்லை. கம்பெனியாருடைய வியாபார உரிமைப் பத்திரமானது இருபது வருஷங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப் பட்டு வந்தது. இந்தக் காலத்தில் கம்பெனியாருடைய அலுவல்களைக் கவனிக்க இங்கிலாந்தில் ஒரு நிர்வாக சபை இருந்து வந்தது. இந்தச் சபையின் முக்கிய உத்தியோகதர்களாக ஒரு கவர்னரும் ஒரு டெபுடி கவர்னரும் இருந்தார்கள். இவர்கள் இந்தியாவின் பல பாகங்களிலும் தங்களுடைய வியாபார தாபனங்களை ஏற்படுத்தினார்கள். இந்த தாபனங்களை நிருவகிக்கச் சிப்பந்திகளும் காவல்புரியச் சிப்பாய்களும் வேண்டியிருந்தது. இதற்காக ஆங்காங்கு கோட்டை, கொத்தளங்கள் முதலியன அமைத்துக் கொண்டார்கள். இங்ஙனம் ஏற்பட்ட வியாபார தாபனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பெற்று, இவைகளின் தனித்தனி மேற்பார்வையில் மற்றச் சிறிய தாபனங்கள் வைக்கப்பட்டன. நாளாவட்டத்தில் கம்பெனியாருடைய வியாபாரம் விருத்தியடைந்து வந்தது. அஃது எவ்வழியால் என்ற கேள்வியை இங்கு நாம் ஏன் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? விருத்தியடைந்து வந்த இந்த வியாபார தாபனங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்தார்கள். இவையே சென்னை மாகாணமென்றும், பம்பாய் மாகாணமென்றும், வங்காள மாகாண மென்றும் அழைக்கப்பெற்றன. இந்த மாகாணங்களை ஒரு கவர்னரும் அவருக்கு உதவியாக ஒரு கவுன்சிலும் சேர்ந்து முறையே தனித்தனியாக நிருவாகம் செய்து வந்தார்கள். இவர்கள் இங்கிலாந்திலிருந்த கம்பெனியின் நிருவாக சபைக்கே பொறுப்புள்ளவர்களாயிருந்தார்கள். இவர்கள் தங்கள் மாகாண எல்லைக்குள், வேண்டிய சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டிருந்தார்கள். எனவே, இந்த மூன்று மாகாணங்களும் சமத்துவ உரிமை பெற்ற தனித்தனி நாடுகள் போல் வாழ்ந்து வந்தன. 1772-ம் வருஷம் ஒரு புதிய சட்டம் ஏற்படுத்தப் பெற்றது. இதற்கு ரெகுலேடிங் ஆக்ட் என்று பெயர். இதன்படி பம்பாய் மாகாணமும், சென்னை மாகாணமும் வங்காள மாகாண அதிகாரியின் மேற்பார்வைக் குட்படுத்தப்பெற்றன. வங்காள கவர்னர், கவர்னர் ஜெனரல் என்று அழைக்கப் பெற்றார். வங்காள மாகாண அதிகாரியாக இவர் இருந்த தோடு கூட, மற்ற இரண்டு மாகாணங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பெற்றது. இந்த கவர்னர் ஜெனரலுக்கு ஆலோசனை சொல்ல நான்கு பேரடங்கிய நிருவாக சபை ஒன்று தோன்றியது. இங்ஙனம் ஆலோசனை சபையோடு கூடிய கவர்னர் ஜெனரலாக முதன் முதல் நியமனம் பெற்றது வாரன் ஹேடிங்க். இதன் பிறகு நிருவாக சம்பந்தமான மாறுதல்கள் அதிகம் ஏற்படவில்லை. 1786-ம் வருஷம், வங்காளத்தைப்போலவே, சென்னையிலும், பம்பாயிலும் கவர்னருக்கு நிருவாக விஷயத்தில் உதவிசெய்ய நிருவாகசபை ஏற்படுத்தப்பெற்றது. வங்காள மாகாணத்தைச்சேர்ந்த சில பிரதேசங் களைப் பிரித்து 1836-ம் வருஷம் ஐக்கிய மாகாணம் என்று பெயரிட்டனர். கவர்னர் ஜெனரலுக்கும் அவருடைய நிருவாக சபையினருக்கும் சட்டதிட்டங்கள் இயற்றுவதன் சம்பந்தமாக ஆலோசனை சொல்ல வங்காளம், பம்பாய், சென்னை, ஐக்கிய மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களிலிருந்து அந்தந்த மாகாண அரசாங்கத்தினரால் நியமனம் செய்யப்பட்ட நான்கு பிரதிநிதிகளும் வங்காளத்துப் பிரதம நீதிபதியும், ஓர் உதவி நீதிபதியும் ஆக ஆறுபேர் சேர்ந்த சட்டசபையொன்று 1853ம் வருஷச் சட்டப்படி நிறுவப்பட்டது. இதில் கவர்னர் ஜெனரல், பிரதம சேனாதிபதி, கவர்னர் ஜெனரலின் நிருவாக சபை அங்கத்தினர் நால்வர் உள்பட மொத்தம் 12 பேர் அங்கத்தினர்களாயிருந்தார்கள். 1854-ம் வருஷம், வங்காள மாகாணத்தின் நிருவாகப்பொறுப்பு கவர்னர் ஜெனரலிடமிருந்து எடுக்கப்பட்டு ஒரு லெப்டினெண்டு கவர்னர் வசம் ஒப்புவிக்கப்பட்டது. அது முதல் கவர்னர் ஜெனரல், எல்லா மாகாண கவர்னர்களுக்கும் மேலதிகாரியாக இருந்து, இந்தியாவின் மொத்த நிருவாகத்தைக் கவனித்து வருகிறவரானார். இதே காலத்திலும் இதற்குப் பின்னரும், பிரிட்டிஷாரின் சுவாதீனத்திற்குப் பல பிரதேசங்கள் வந்து சேர்ந்தன. இவை லெப்டி னெண்டு கவர்னர்களின் நிருவாகத்திலும் பிரதம கமிஷனர்கள் நிருவாகத்திலும் தனித்தனி மாகாணங்களாக உருவு கொண்டன. பார்லிமெண்டின் கீழ் 1857-ம் வருஷம் சிப்பாய்க் கலகம் நடந்தது. 1858ம் வருஷம், இந்தியாவின் அரசியல் ஆதிக்கமானது, கம்பெனியாரிடமிருந்து பிரிட்டிஷ் மன்னரிடம், அதாவது அப்பொழுது ஆண்டு வந்த விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமெண்டே இந்தியாவின் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. விக்டோரியா மகாராணி விடுத்த சாஸனத்தில், அரசாங்க உத்தியோகங்களில் இந்தியர்கள் பாரபட்சமின்றி நடத்தப்படுவார்களென்பன போன்ற கருத்துக்கள் அடங்கியிருந்தன. ஆனால் அரசாங்க நிருவாகப் பொறுப்பில் இந்தியர்களுக்கு எவ்வித பங்கும் இல்லாமலே இருந்தது. தேசத்திற்குத் தேவையான சட்ட திட்டங்களை, கவர்னர் ஜெனரலும் அவருடைய நிருவாகசபையினரும் மேலே கூறப்பட்ட சட்டசபையினரும் சேர்ந்து செய்து வந்தார்கள். சட்டசபை என்பதும் நிருவாக சபை என்பதும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தது. 1861-ம் வருஷம் அரசாங்கச் சட்டம் ஒன்று அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது இதன்படி, கவர்ஜெனரலின் நிருவாக சபைக்கு ஐந்து அங்கத்தினர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிருவாக சபைக்குச் சட்டங்கள் நிறைவேற்றுவதன் சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்ல பன்னிரண்டு பேரடங்கிய ஒரு சட்டசபையும் ஏற்படுத்தப்பெற்றது. இந்தச் சட்டசபையானது, அரசாங்கத்தாரின் நிருவாகத்தைக் கண்டிக்கவோ, அல்லது அது சம்பந்தமாகப் பொது ஜனங்களின் குறைகளை எடுத்துச் சொல்லவோ அதிகாரம் பெறவில்லை. இவைவெறும் அலங்கார சபை களாக இருந்தன வென்று ஒருவாறு கூறலாம். இந்தச் சட்டசபையில் அங்கத்தினராகக் கவர்னர் ஜெனரலால் நியமனம் செய்யப்பெற்ற பன்னிரண்டு பேரில் சிலர் உத்தியோகதரல்லாதாராகவும் அவரில் சிலர் இந்தியர்களாகவும் இருந்தார்கள். உத்தியோகதரல்லாதார், அதிலும் இந்தியர்கள் சட்ட சபையில் முதன்முதலாக அங்கம் பெற்றது இந்தக் காலத்தில் தான். இதே 1861-ம் வருஷத்துச் சட்டப்படி, மாகாணங்களிலும் சட்டசபைகள் நிறுவப்பெற்றன. 1874-ம் வருஷம், கவர்னர் ஜெனரல் நிருவாக சபைக்கு ஏற்கெனவே இருந்த ஐந்து அங்கத்தினர்களுடன் ஆறாவது அங்கத்தினர் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1892-ம் வருஷம் புதியதொரு சீர்திருத்தச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இதன்படி கவர்னர் ஜெனரலின் சட்ட சபைக்கு ஐந்து புதிய அங்கத்தினர்கள் சேர்த்துக் கொள்ளப் பெற்றார்கள். இவர்கள் கவர்னர் ஜெனரலாலேயே நியமிக்கப்பட்டவர்கள். நான்கு மாகாண சட்டசபைகளிலிருந்து சிபார்சு செய்யப் பெற்ற நான்குபேரும், கல்கத்தா வர்த்தக சபையால் சிபார்சு செய்யப்பெற்ற ஒருவரும் ஆகமொத்தம் ஐந்துபேர், கவர்னர் ஜெனரல் சட்டசபையில் சேர்த்துக் கொள்ளப் பெற்றார்கள். இதேமாதிரி, மாகாண சட்டசபைகளின் அங்கத்தினர் தொகையும் சிறிது அதிகப்படுத்தப்பெற்றது. சென்னைச் சட்ட சபையில் 20 பேர் அங்கத்தினர்களானார்கள், இந்த மாகாண சட்டசபை அங்கத்தினர்கள், ஜில்லா போர்டுகளாலும், சில முக்கிய நகர சபை களாலும் சிபார்சு செய்யப்பெற்று கவர்னர்களால் நியமனம் பெற்றவர்கள். கவர்னர்ஜெனரல் சட்டசபையிலும் மாகாணசட்டசபைகளிலும் அங்கத் தினர்கள், நிருவாக சம்பந்தமாகக் கேள்விகள் கேட்கவும், வரவு செலவுத் திட்டங்களைப் பற்றித் தங்கள் கருத்துக்களை வெளியிடவும் அனுமதி கொடுக்கப்பட்டார்கள். ஆனால் இவர்கள் தீர்மானங்கள் கொண்டு வரவோ, வரவு செலவு திட்டங்களிலுள்ள இனங்களை நிராகரிக்கவோ அனுமதி பெற்றார்களில்லை. பொதுவாக, அங்கத்தினர்கள் தங்கள் குறைகளை, அதிலும் ஒரு வரம்புக்குட்பட்டுத் தெரிவித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததோடு திருப்தியடைய வேண்டியிருந்தது. வகுப்புப் பிரதிநிதித்துவம் இதன் பிறகு, மிண்டோ-மார்லி சீர்திருத்தம் என்று சொல்லப் பெற்ற 1909ம் வருஷத்து இந்தியா அரசாங்கச் சட்டம் அமுலுக்கு வந்தது. இதன்படி, கவர்னர் ஜெனரல் சட்டசபையின் அங்கத்தினர் தொகை 60 ஆக உயர்த்தப்பட்டது. இவைகளில் 27 பேரே, மாகாண சட்டசபைகளினால் தெரிந்தெடுக்கப் பெற்றவர்கள், மற்றவர்கள் கவர்னர் ஜெனரலினால் நியமனம் செய்யப்பெற்ற உத்தியோகதரும் உத்தியோகதரல்லாதாரு மாயிருந்தார்கள். இங்ஙனமே மாகாண சட்டசபைகளும் விதரிக்கப்பட்டன. சென்னை, வங்காளம், பம்பாய் முதலிய பெரிய மாகாண சட்ட சபைகளின் அங்கத்தினர் தொகை 50 ஆகவும், மத்திய மாகாணம், பஞ்சாப் போன்ற சிறிய மாகாண சட்டசபைகளின் அங்கத்தினர் தொகை 30 ஆகவும் உயர்த்தப்பட்டன. இந்த மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தில்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நுழைக்கப்பட்டது. கவர்னர் ஜெனரல் சட்ட சபையிலும் மாகாண சட்டசபைகளிலும் முலீம்களுக்கென்று தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இதனால் மற்றச் சமூகத்தினரும் தத்தமக்கென்று தனித்தனியாகப் பிரதிநிதித்துவ உரிமைகள் வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் மற்றொரு புதிய அம்சம் என்ன வென்றால், அரசாங்க நிருவாக சபைகளில் இந்தியர்கள் முதன்முதலாக தானம் பெற்றதே யாகும். இந்தியா அரசாங்க நிருவாக சபையிலும் மாகாண அரசாங்க நிருவாக சபைகளிலும் ஒவ்வோர் இந்தியர் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்தியா சட்டசபையிலும் மாகாண சட்ட சபைகளிலும், அங்கத்தினர்கள் சிபார்சு ரூபமாகத் தீர்மானங்கள் கொண்டு வரவும், வரவு செலவு திட்டங்களைப் பற்றித்தங்கள், அபிப்பிராயங்களை வெளியிடவும் ஒட் கொடுக்கவும் உரிமை பெற்றார்கள். இரட்டை ஆட்சி 1914-ம் வருஷம் தொடங்கப்பெற்ற ஐரோப்பிய யுத்தமானது உலகத்தில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது சிறப்பாக இந்தியாவில் சுதந்திர ஆவலை எழுப்பியது. இந்தியர்களை ஓரளவு திருப்தி செய்விக்க வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் பார்லி மெண்டும் உணர்ந்தது. எனவே, மாண்டேகு-செம்போர்ட் திட்டம் என்று அழைக்கப்பெற்ற 1919-ம் வருஷத்து இந்தியா அரசாங்கச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தில், நவீனமான ஓர் அரசியல் முறை புகுத்தப்பட்டது. அதுவே இரட்டை ஆட்சி என்பது. மத்திய அரசாங்கம் என்று அழைக்கப்பெறுகிற இந்தியா அரசாங்கம், சட்ட சபைக்குப் பொறுப்புள்ளதாகச் செய்யப்படாமற் போனபோதிலும், மாகாண அரசாங்கங்களில் சட்டசபைக்குப் பொறுப்பான மந்திரிமார்கள் வசத்தில் சில இலாகாக்களும் சட்டசபைக்குப் பொறுப்பில்லாத நிருவாக சபை அங்கத்தினர்கள் வசம் சில இலாகாக்களும் ஒப்படைக்கப்பெற்றன. மந்திரிகள் வசம் உள்ள இலாகாக்களுக்கு மாற்றப்பட்ட இலாகாக்கள் என்றும், நிருவாக சபை அங்கத்தினர் வசமுள்ள இலாகாகளுக்கு ஒதுக்கப் பட்ட இலாகாக்களென்றும் பெயர் கொடுக்கப்பட்டன. வரவு செலவு, நிலவரி, நீர்ப்பாசனம், தேசப்பாதுகாப்பு முதலிய முக்கியமான இலாகாக்கள் சட்டசபைக்குப் பொறுப்பில்லாத நிருவாகசபை அங்கத்தினர் வசம் ஒப்புவிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தைப் பொறுத்த மட்டில் நான்கு நிருவாகசபை அங்கத்தினர்களும், மூன்று மந்திரிகளும் நியமிக்கப்பட்டார்கள். II பெடரல் அரசியல் பெடரல் அரசியலின் தத்துவம் என்னவென்றால் சம அதிகாரமும் சம உரிமையுமுள்ள பல பிரதேசங்கள் ஒன்றுக்கொன்று நெருங் கினாற்போலிருக்கின்றனவென்று வைத்துக் கொள்வோம். இவை, தங்களுடைய பரபர நன்மையை முன்னிட்டும் சத்துருக்களின் படை யெடுப்பு முதலியவைகளினின்று தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும் ஒன்று சேர்ந்து பொதுவாகச் சில திட்டங்களை வகுத்துக்கொள்ளும். இந்தத் திட்டங்களை நடத்திவைக்க ஒரு தாபனம் வேண்டுமல்லவா? எனவே மத்திய தாபனம் ஒன்றும், அதனை நிருவகிக்க உத்தியோகதர்களும், எல்லாப் பிரதேசங்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்களை அவ்வப்பொழுது நிறைவேற்றிக் கொள்ளச் சட்ட சபைகளும் நிறுவப்படும். இவையனைத்திற்குமே பெடரல் அரசியல் திட்டம் என்று பெயர். இந்த பெடரல் அரசியல் திட்டத்தில் சேர்ந்து கொள்ளும் பிரதேசங்கள் சுதந்திரம் பெற்றவைகளாகவே இருக்கும். தத்தம் நாட்டெல்லைக்குள் தங்களுக்குச் சௌகரியமான முறையில் இவை சட்டதிட்டங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த எல்லாப் பிரதேசங்களுக்கும் பொதுவில் நன்மை தரக்கூடிய விதமாகவே இந்த பெடரல் அரசியல் நடைபெற வேண்டும். இந்த பெடரல் அரசாங்கம் செலுத்தும் எல்லா அதிகாரங்களும், இதில் சேர்ந்துள்ள சுயேச்சைப் பிரதேசங்களினின்றுமே பெறப்படுகின்றன என்பது இங்கு நினைவில் வைக்கத்தகுந்தது. எனவே சமசுயேச்சையுள்ள பிரதேசங்கள் ஒன்று சேர்ந்து செய்து கொள்ளும் ஒரு பரபர ஒப்பந்தத்தின் பேரில் இந்த பெடரல் அரசியல் தாபனம் ஏற்படுகிறது. இந்தத் தத்துவத்தைக் கொண்டு நாம் பார்த்தோமானால் இந்தியாவில், பெடரல் அரசாங்கம் ஏற்படுவதற்குரிய சாதனங்கள் இல்லை. ஏனென்றால் தற்போது இந்தியாவிலுள்ள மாகாணங்கள் சுயேச்சை யுடையவைகளல்ல; யாவும் இந்தியா அரசாங்கத்திற்குக் கீழ்ப் பட்டனவே. மற்றச் சுதேச சமதானங்களோ, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அரசியல் அந்ததிலுள்ளவை. ஆதலின் பெடரல் அரசியலை இந்தியாவில் எப்படி தாபிக்கமுடியும்? இதற்காகவே, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள மாகாணங்களுக்கு முதலில் பொறுப்பாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாகாணப் பொறுப்பாட்சித் திட்டமே 1937-ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல்தேதி அமுலுக்கு வந்தது. பொறுப்பாட்சி பெற்ற இந்த மாகாணங்களும், பொறுப்பு வாய்ந்த சுதேச சமதானங்களும் சேர்ந்தே பெடரல் அரசாங்கமாக அமையும். மாகாணங்களுக்குப் பொறுப்பாட்சி கொடுத்து அவைகளை பெடரல் அரசியலில் சேர்த்து விடுவதைப்போல், எல்லாச் சுதேச சமதானங்களையும் சேர்த்துவிட முடியாது. எந்தெந்த சுதேச சமதானங்கள் பெடரல் அரசியலில் சேர்ந்துக் கொள்ள விருப்பமோ அவைகளைத்தான் சேர்த்துகொள்ளமுடியும். இங்ஙனம் சம்மதிக்கும் ஒவ்வொரு சமதானமும் தன் விருப்பத்தை ஒரு சாஸனத்தின் மூலமாக உறுதிப்படுத்தவேண்டும். இந்தச் சாஸனத்தில் எந்தெந்த நிபந்தனைகளுக் குட்பட்டு, தான் பெடரல் அரசியலில் சேர்கிறதென்பதை அந்தச் சமதானம் குறிப்பிட வேண்டும். மற்றும் எந்தெந்த விஷயங்களில், பெடரல் அரசாங்கத்தாரும் பெடரல் சட்ட சபை களும் செய்யும் சட்ட திட்டங்களுக்குத்தான் இணங்கமுடியும் என்பதையும் விவரமாகத் தெரிவித்து விடவேண்டும். இதனால், பெடரல் அரசியலில் சேரும் ஒவ்வொரு சமதானமும், பிரிட்டிஷ் பார்லிமெண்டின் மூலம் சக்ரவர்த்திக்கு எழுதிக் கொடுக்கும் சாஸனத்தின் வாசகம் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவைகளில் காணப்படும் நிபந்தனைகளும், பெடரல் அரசாங்கத்தின் எந்தெந்த சட்டதிட்டங்களுக்குத்தான் இணங்க முடியுமென்பதைப் பற்றிய விவரங்களும் வெவ்வேறு விதமாக இருக்கும். 1937-ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதி அமுலுக்கு வந்திருக்கிற மாகாணப் பொறுப்பாட்சித் திட்டத்தைத் தொடர்ந்தாற்போல் பெடரல் அரசியல் திட்டமும் அமுலுக்கு வரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் எப்பொழுது அமுலுக்கு வரும்? இந்தியாவிலுள்ள சுதேச சமதானங்களின் ஜனத்தொகையில் பாதிபேரை பிரஜைகளாகவுடைய சுதேச மன்னர்கள், பெடரல் திட்டத்தில் சேருவதாகக் கூறவேண்டும். அல்லது, பெடரல் திட்டத்தின்படி புதிதாக ஏற்படுத்தப்பெறும் ராஜாங்க சபையில் சுதேச சமதானங்களுக் கென்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 104 தானங்களில் 52 தானங்களைப் பூர்த்தி செய்யக்கூடிய சமதானங்களாவது பெடரேஷனில் சேருவதாகக் கூறவேண்டும். பொறுப்பாட்சி பெற்ற மாகாணங்களுடன், மேலே ஏற்பட்ட விகிதப்படி சுதேச சமதானங்களும் சேர்ந்த பிறகே பெடரல் திட்டம் சக்ரவர்த்தி சாஸனத்தின் மூலமாக அமுலுக்கு வரும். புதிய அரசாங்க அமைப்பு பெடரல் அரசாங்கத்தின் நிருவாகத் தலைவராக கவர்னர் ஜெனரல் இருப்பார். இவருடைய உத்தியோக காலம் ஐந்து வருஷம்; மாதச் சம்பளம் 20,900 ரூபாய். இது தவிர, வீட்டுச் செலவென்றும், மோட்டார் செல வென்றும் பலவகை படிச்செலவுகள் இவருக்குக் கொடுக்கப்பெறும். பெடரல் அரசாங்கத்தின் தலைவராக இருப்பதோடு கூட இவர், சக்ரவர்த்தியின் பிரதிநிதியாகவும் இருந்து காரியங்களை நடத்துவார். சக்ரவர்த்தியின் பிரதிநிதி என்பதனாலேயே இவர் வைராய் என்று அழைக்கப்பட்டார்; இனியும் அப்படியே அழைக்கப்படுவார். நிருவாக விஷயத்தில் கவர்னர் ஜெனரலுக்கு உதவிசெய்யவும், மற்ற நிருவாக காரியங்களைக் கவனிக்கவும் பத்து பேர் மந்திரிகள் இருப்பார்கள். மந்திரிகளை நியமிக்கவும் அவர்களை விலக்கவும் கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரமுண்டு. பெடரல் சட்டசபைகளில் ஏதேனு மொன்றில் அங்கத்தினர்களாயிருப்பவர்களையே மந்திரிகளாகக் கவர்னர் ஜெனரல் நியமிக்கவேண்டும். சட்டசபையில் எந்தக்கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கின்றனரோ அந்தக் கட்சியின் தலைவரை அழைத்து மந்திரிச் சபையை அமைக்குமாறு கவர்னர் ஜெனரல் கூறுவார். ஆனால் மந்திரிச் சபையில் சிறுபான்மைச் சமூகத்தாரின் பிரதி நிதித் துவமும் சமதானங்களின் பிரதிநிதித்துவமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மந்திரிகளின் சம்பளம் அவ்வப்பொழுது சட்ட சபைகளினால் நிர்ணயிக்கப்படும். பெடரல் அரசாங்க நிருவாக மனைத்தும் இந்த மந்திரிமார்கள் வசத்தில் இராது. கவர்னர் ஜெனரலுக்கென்று சில விசேஷ அதிகாரங் களும் பொறுப்புக்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது தேசத்தின் பாதுகாப்பு, கிறிதவ மதப்பாதிரிகள் இலாகா, அந்நிய நாட்டு விவகாரங்கள் இவையாவும் கவர்னர் ஜெனரலுடைய நேரான நிருவாகத் திற்குட் பட்டிருக்கும். இந்த இலாகாக்கள் சம்பந்தமான நிருவாகத்தை நடத்த அவர், மூன்று ஆலோசனை கர்த்தர்களை (Counsellors) நியமித்துக் கொள்ளலாம். இவர்களுடைய உத்தியோககாலம், சம்பளவிகிதம் முதலியன ஆலோசனை சபையோடு கூடிய சக்ரவர்த்தியினால் நிர்ணயிக்கப்பெறும். இந்த ஆலோசனை கர்த்தர்கள் சட்ட சபைகளில் எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளலாம். ஆனால் ஓட் கொடுக்கக் கூடாது. இந்த மூன்று ஆலோசனை கர்த்தர்களைத் தவிர பெடரல் அரசாங்கத்தின் பொக்கிஷ சம்பந்தமாகத் தமக்கு ஆலோசனை சொல்ல, கவர்னர் ஜெனரல், பொக்கிஷ ஆலோசனை கர்த்தர் ஒருவரை (Financial Adviser) நியமித்துக் கொள்ளலாம். இந்த உத்தியோகதரின் உத்தியோக காலம், சம்பளவிகிதம் முதலியன கவர்னர் ஜெனரலால் நிர்ணயிக்கப் பெறும். இந்த உத்தியோகதருடைய நியமன விஷயத்தில் கவர்னர் ஜெனரல் மந்திரிகளின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளலாம். சட்ட சம்பந்தமான ஆலோசனைகள் சொல்லவும் அலுவல்களைக் கவனிக்கவும், பெடரல் அரசாங்கத்திற்கு அட்வோகேட் ஜெனரல் என்ற ஓர் உத்தியோகதர் நியமிக்கப்படுவார். இவருடைய உத்தியோக காலம், சம்பளவிகிதம் முதலியன கவர்னர் ஜெனரலால் நிர்ணயிக்கப்பெறும். விசேஷப் பொறுப்பு கவர்னர் ஜெனரலுக்குச் சில விசேஷப் பொறுப்புக்கள் உண்டு. அவை முறையே :- (1) தேசத்தின் அமைதிக்குப் பங்கம் ஏற்படாமல் தடுத்தல். (2) பெடரல் அரசாங்கத்தின் பொக்கிஷ நிலைமை சீர் குலையாமல் இருக்குமாறு பாதுகாத்துக் கொள்ளுதல். (3) சிறு பான்மைச் சமூகத்தினருடைய நியாயமான உரிமை களைப் பாதுகாத்தல். (4) அரசாங்க உத்தியோகதர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்பெற்றிருக்கும் உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாத்தல்; இந்த உரிமைகள் மறுக்கப்பட்டால் அவைகளை வாங்கிக் கொடுத்தல். (5) பிரிட்டிஷ் ஐக்கிய ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியேறும் விஷயமாகவோ, வியாபாரம் செய்யும் விஷயமாகவோ, பட்சபாதமான சட்டங்களை பெடரல் சட்டசபைகள் நிறைவேற்றாமல் நிருவாக தோரணையில் தடுத்தல். (6) ஐக்கிய ராஜ்யத்திலிருந்தும் பர்மாவிலிருந்தும் இறக்குமதி யாகும் பொருள்களின் மீது பட்சபாதமான நடவடிக்கைகள் எடுத்துகொள்ளப் பெறாமல் தடுத்தல். (7) சமதானங்களின் உரிமைகளையும் சமதானாதிபதிகளின் கௌரவங்களையும் பாதுகாத்தல் முதலியனவாகும். இந்த விசேஷப்பொறுப்புக்களை நிறைவேற்றும் விஷயத்தில் கவர்னர் ஜெனரல் தமது சொந்தத் தீர்ப்புப்படியே நடந்துகொள்ளலாம். ராஜாங்க சபை பெடரல் அரசாங்கத்திற்கு இரண்டு சட்ட சபைகள் உண்டு. ஒன்று கவுன்சில் அப் டேட் (அப்பர் ஹவு) என்றும், மற்றொன்று ஹவுஅப் அஸெம்ப்ளி (லோயர் ஹவு) என்றும் அழைக்கப்பெறும். கவுன்சில் அப் டேட் சபையை ராஜாங்க சபையென்றும், ஹவு அப் அஸெம்ப்ளியை இந்தியா சட்ட சபை என்றும் இனிக் கூறுவோம். ராஜாங்க சபை என்கிற மேற்சபையில் மொத்தம் 260 அங்கத்தினர்கள் இருப்பார்கள். இவர்களில் பிரிட்டிஷ் இந்தியாவின் பிரதிநிதிகள் 156 பேர். சுதேச சமதானங்களின் பிரதிநிதிகள் 104 பேர். பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த 156 பேரில், 150 பேர் வாக்காளர்களால் நேர்முகமாகத் தெரிந் தெடுக்கப்பட்ட ஜனப் பிரதிநிதிகள். மற்ற 6 பேரும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்டவர்கள். மேற்கூறப்பட்ட 150 பேரில் சென்னை மாகாணத்துப் பிரதிநிதிகளாக 20 பேர் இருப்பார்கள். இவர்களில் 14 பேர் பொதுத் தொகுதிகளிலிந்தும், 4 பேர் முகம்மதியர் தொகுதிகளிலிருந்தும், ஒருவர் ஹரிஜனங்களின் பிரதிநிதியாகவும், மற்றொருவர் திரீகள் பிரதிநிதியாகவும் தெரிந்தெடுக்கப்படுவார்கள். சமதானப் பிரதிநிதிகளாகவுள்ள 104 பேரின் பெரிய சமதானங் களுக்கு அவைகளின் அந்ததையும் ஜனத் தொகையையும் உத்தேசித்து தனிப் பிரதிநிதித்துவமும், சிறிய சமதானங்கள் பல ஒன்று சேர்ந்த தொகுதிக்கு மொத்தப் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்பட்டிருக் கின்றன. உதாரணமாக 14, 436, 148 ஜனத்தொகையுடைய ஹைதராபாத் சமதானம், ராஜாங்க சபைக்கு 5 பிரதிநிதிகளைத் தெரிந்தனுப்ப உரிமை உண்டு. ஆனால், சுமார் 4½ லட்சம் ஜனத்தொகையுடைய புதுக்கேட்டை, பங்கனபள்ளி, சாண்டூர் ஆகிய மூன்று சமதானங்களும் சேர்ந்து ராஜாங்க சபைக்கு ஒரே ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுத்தனுப்பலாம். இப்படியே தான் மற்ற சமதானங்களுக்கும். இந்த ராஜாங்க சபை, கலைக்கப்படாத ஒரு நிரந்தர தாபனமாக இருக்கும். ஆனால் மூன்று வருஷத்திற் கொருமுறை, மொத்த அங்கத்தினர் களில் மூன்றில் ஒரு பங்கினர், தங்களுடைய தானத்தைக் காலி செய்துவிட்டு மறு தேர்தலுக்கு நிற்பார்கள். எனவே ஒவ்வொரு மூன்று வருஷமும், அங்கத்தினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புதியவர்களாகவே இருப்பார்கள். சென்னை மாகாணத்தைச் சேர்ந்த இருபது பிரதிநிதிகளுக்கு மட்டும் ஒருவித அதிர்ஷ்டம். ஏனென்றால் இவர்களில் எவரும் முதல் மூன்று வருஷமானதும் தங்கள் தானங்களைக் காலி செய்துவிட்டு மறு தேர்தலுக்கு நிற்க வேண்டியதில்லை. ஆனால், ஆறு வருஷமானதும், பத்து அங்கத்தினர்கள் தங்கள் தானங்களைக் காலி செய்து மறு தேர்தலுக்கு நிற்பார்கள். ஒன்பது வருஷங்கழித்து மற்றப் பத்து அங்கத்தினர்களும் காலி செய்துவிட்டு மீண்டும் வாக்காளர்களை நாடிச் செல்வார்கள். ராஜாங்க சபைக்கு அபேட்சகர்களாக நிற்பவர்கள் மேற்படி சபைக்கு ஒட் செய்ய உரிமையுடைய ஓட்டரா யிருக்கவேண்டும். தவிர முப்பது வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். வாக்காளர்கள் ராஜாங்க சபையின் ஓட்டர்களாயிருக்கத் தகுதிகள் என்ன? 1. 21 வயது நிறைந்தவராகவும், 2. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரஜையாயிருப்பவராகவும், 3. எந்தத் தொகுதியில் தன்னை ஓட்டராகப் பதிவு செய்து கொள்கிறாரோ அந்தத் தொகுதியில் தொடர்ந்தாற்போல் 120 நாட்கள் வாசஞ் செய்திருப்பவராகவும் இருக்க வேண்டும். தவிர கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனுமொன்றுடையவரா யிருக்கவேண்டும்:- (அ) தேர்தல் நடைபெறுவதற்கு முந்திய வருஷத்தில் ரூ. 300 க்குக் குறையாமல் கிதியோ அல்லது மற்ற நிலவரியோ செலுத்தினவர். (ஆ) வருஷத்திற்கு 1500 ரூபாய்க்குக் குறையாத வருமான முடைய பூதிதியுடையவர். (இ) வருஷத்திற்கு 7500 ரூபாய் வருமானத்தின் மீது வருமான வரி செலுத்துகின்றவர். (ஈ) கீழ்க்கண்ட ஒருவராக இருக்கவோ அல்லது இருந் திருக்கவோ வேண்டும்:- பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள எந்தச் சட்ட சபையிலேனும் உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தினர்; அரசாங்க நிருவாக சபை அங்கத்தினர் அல்லது மந்திரி; சர்வகலாசாலைகளில் ஏதேனும் ஒருவித அங்கத்தினர்; ஹைகோர்ட் நீதிபதி, அல்லது மேயர், அல்லது ஷெரீப்; நகரசபைகள், ஜில்லா போர்டுகள், கோவாபரேடிவ் பாங்கிகள் இவற்றின் ஏதேனுமொன்றின் தலைவர்; ராவ் பகதூருக் குறையாத பட்டதாரி; மாதம் ரூ. 250க்குக் குறையாத பென்ஷன் வாங்குகிறவர். இவை தவிர, திரீகளுக் கென்றும் ஹரிஜனங்களுக்கென்றும் ஓட் உரிமை விஷயத்தில் இன்னும் சில சலுகைகள் காட்டப் பட்டிருக்கின்றன. இந்தியா சட்ட சபை ஹவுஅப்அஸெம்ப்ளி என்றும் பெடரல் அஸெம்ப்ளி என்றும் அழைக்கப்படுகிற இந்தியா சட்டசபையில் (லோயர் ஹவு) மொத்தம் 375 பேர் அங்கத்தினராயிருப்பார்கள். இவர்களில் பிரிட்டிஷ் இந்தியாவின் பிரதிநிதிகள் 250 பேர்; சுதேச சமதானங்களின் பிரதிநிதிகள் 125 பேர். பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த 250 தானங்களில் சென்னை மாகாணத்திற்கு 37 தானங்கள் உண்டு. இந்த 37 தானங்களும் பின்வருமாறு வகுக்கப் பட்டிருக்கின்றன:- பொதுத்தொகுதி 19 (இந்த 19 தானங்களில் ஹரிஜனங்களுக்கென்று 4 தானங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன) முகம்மதியர்கள் 8 ஆங்கிலோ இந்தியர் 1 ஐரோப்பியர் 1 இந்திய கிறிதவர் 2 கைத்தொழில் வியாபாரம் இவற்றின் பிரதிநிதிகள் 2 நிலச்சுவான்தார்கள் 1 தொழிலாளர் 1 திரீகள் 2 37 சமதானப் பிரதிநிதிகள், முன்னர் ராஜாங்க சபைக்குச் சொன்னமாதிரி அந்தந்த சமதானத்தின் விதீரணம், ஜனத்தொகை முதலியவைகளை உத்தேசித்துத் தெரிந்தெடுக்கப்படுவார்கள். ராஜாங்க சபைக்காகட்டும், இந்தியா சட்டசபைக்காகட்டும், சமதானப் பிரதிநிதிகள் அந்தந்த சமதான மன்னர்களாலேயே நியமிக்கப்படுவார்கள். ஆனால் எந்தெந்த சமதானங் களில் சட்டசபை என்கிற ஜனப்பிரதிநிதி சபை இருக்கிறதோ அவற்றைக் கலந்துகொண்டு, மேற்படி பிரதிநிதிகளை சமதானாதிபதிகள் நியமிக்கலாம். சமதானாதிபதிகள் விரும்பினால், அவர்களே தங்கள் சமதானத்துப் பிரதிநிதிகளில் ஒருவராக மேற்படி சபைகளில் ஏதேனுமொன்றில் அபேட்சகராக நிற்கலாம். இந்தியா சட்ட சபையின் ஆயுட்காலம் ஐந்து வருஷம். பிரதிநிதிகள் இந்தியா சட்ட சபைக்குப் பிரதிநிதிகளை வாக்காளர்கள் நேர் முகமாகத் தெரிந்தெடுத்தனுப்ப முடியாது. 1919-ம் வருஷத்துச் சட்டப்படி - அதாவது இரட்டையாட்சித் திட்டப்படி - ராஜாங்க சபைக்கும், இந்தியா சட்ட சபைக்கும், வாக்காளர்கள் நேர்முகமாகப் பிரதிநிதிகளைத் தெரிந் தெடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தப் புதிய திட்டத்தில், ராஜாங்க சபைக்கு மட்டுந்தான் இந்த உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா சட்ட சபைக்கு இது மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா சட்ட சபைக்குத் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், அந்தந்த மாகாணங்களிலுள்ள லெஜிலேடில் அஸெம்ப்ளி என்கிற கீழ்ச்சபை அங்கத்தினர்களால் தெரிந்தெடுக்கப்படுவார்கள். சில மாகாணங்களில் ஒரே ஒரு சட்டசபை மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மாகாணங்களில் அந்த ஒரு சட்ட சபை அங்கத்தினர் களாலேயே, இந்தியா சட்ட சபைக்குப் பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப் படுவார்கள். மாகாண சட்ட சபைகளிலிருந்து இந்தியா சட்ட சபைக்குத் தெரிந்தெடுத்தனுப்பப்பெறும் பிரதிநிதிகள் வகுப்பு வாரியுள்ள அங்கத்தினர்களாலேயே தெரிந்தெடுக்கப் பெறுவார்கள். உதாரணமாக சென்னை மாகாண அஸெம்ப்ளியிலுள்ள முகம்மதிய அங்கத்தினர்கள் மட்டும், முகம்மதியப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்தனுப்புவார்கள். இப்படியே ஷெட்யூல்ட் வகுப்பினர் என்கிற ஹரிஜனங்களும் அனுப்புவார்கள். ஆனால் ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், இந்திய கிறிதவர், திரீகள் ஆகியோருடைய தானங்களுக்கு வேறு விதமான தேர்தல் முறை சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது எல்லா மாகாண அஸெம்ப்ளிகளிலுள்ள ஐரோப்பியர். ஆங்கிலோ இந்தியர், இந்திய கிறிதவர் ஆகிய அங்கத்தினர்கள் முறையே தனித்தனியாகச் சேர்ந்து இந்தியா சட்டசபைக்கு அந்தந்த சமூகத்துப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத் தனுப்பவேண்டும். உதாரணமாக இந்தியாவிலுள்ள எல்லா மாகாண அஸெம்ப்ளிகளிலுமுள்ள ஐரோப்பிய அங்கத்தினர்கள் ஒன்று சேர்ந்து, இந்தியா சட்ட சபையிலுள்ள ஐரோப்பிய தானங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படியே மற்ற சமூகத்தினருக்கும். அதிகாரங்கள் முதலியன இந்தியா அனைத்திற்கும் பெடரேஷன் ஏற்பட்டு விட்டதாகச் சக்ரவர்த்தி சாஸன மூலமாக அறிக்கையிட்ட பிறகு, கவர்னர் ஜெனரல் இந்த இரண்டு சபைகளையும் கூட்டலாம். ராஜாங்க சபையும் இந்தியா சட்ட சபையும் முதன் முதலாகக் கூடியதும், அந்தந்த சபை அங்கத்தினர்களிலிருந்தே ஒரு தலை வரையும், ஓர் உப தலைவரையும் தெரிந்தெடுத்துக் கொள்ளும் இவர் களுடைய சம்பளம் முதலியவற்றை, அந்தந்த சபையினரே சட்டத்தின் மூலமாக நிர்ணயிப்பார்கள். ராஜாங்க சபையின் தலைவர் பிரசிடெண்ட் (President) என்றும், உபதலைவர் டெபுடி பிரசிடெண்ட் (Deputy President) என்றும், இந்தியா சட்டசபைத் தலைவர் பீகர் (Speaker) என்றும், உபதலைவர் டெபுடி பீகர் (Deputy Speaker) என்றும் முறையே அழைக்கப் படுவார்கள். இந்த இரண்டு சபைகளின் அங்கத்தினர்களும் அந்தந்த சபை களினால் சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப்படும் சம்பளங்களையோ, அல்லது அலவன்ஸுகளையோ பெறுவார்கள். இரண்டு சபைகளிலும் அங்கத்தினர்கள் மசோதாக்களைக் கொண்டு வரலாம். ஆனால், இவை சட்டமாவதற்கு முன் இரண்டு சபைகளிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒரு மசோதாவைப் பற்றி இரண்டு சபை களுக்குள்ளும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால், அதைப் பற்றி ஆலோசிப் பதற்காக கவர்னர் ஜெனரல், இரண்டு சபைகளையும் ஒன்று கூட்டி ஓட் செய்யுமாறு கூறலாம். அபிப்பிராய பேதம் ஏற்பட்டுள்ள எந்த மசோதாவும், கவர்னர் ஜெனரலின் விசேஷப்பொறுப்பையோ அல்லது பொக்கிஷ நிலைமையையோ பாதிப்பதாயிருந்தால் அந்த மசோதாவை, இந்த இரண்டு சபைகளைக் கூட்டுவிக்காமலே, அங்கீகரிக்கவோ மறுக்கவோ செய்யலாம். ஆனால் இரண்டு சபைகளினாலும் நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாவையும் நிராகரிக்கக் கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் உண்டு. புதிய வரி விகித்தல், கடன் வாங்குதல், செலவு வகைகளை அதிகப் படுத்தல் முதலியவை சம்பந்தமாகக் கொண்டு வரப்படும் எந்த மசோதாவும் முதலில் இந்தியா சட்டசபையிலேயே கொண்டு வரப்பட வேண்டும். மேற் சபையாகிற ராஜாங்க சபையில் கொண்டு வரக்கூடாது. இரண்டு சட்டசபைகளின் நடவடிக்கைகளும் ஆங்கிலத்திலே நடைபெறும். ஆனால் ஆங்கிலம் தெரியாதவர்கள், சட்டசபை விதிகளால் நிர்ணயிக்கப்படுகிற ஏதேனும் ஒரு சுதேச பாஷையில் பேசலாம். இந்தச் சட்டத்துக்குட்பட்டு அரசாங்கத்தை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டதென்று கவர்னர் ஜெனரலுக்குத் தோன்றி னால் அரசாங்க நிருவாகம் பூராவையுமோ, அல்லது சில அமிசங் களையோ தாமே ஏற்றுக்கொண்டு நடத்தலாம். ஆனால் இது மூன்று வருஷகாலந்தான் செல்லுபடியாக இருக்கும். ரெயில்வே போர்ட் புதிய அரசியல் திட்டப்படி, ரெயில்வே போர்ட் என்பது ரெயில்வே அதாரிடி (Railway Authority) என்ற பெயராக மாறும். இந்தப் புதிய ரெயில்வே போர்டில் ஏழுபேர் அங்கத்தினர்களாயிருப்பார்கள். கவர்னர் ஜெனரலே இவர்களை நியமனம் செய்வார். இவர்களுடைய உத்தியோக காலம் ஐந்து வருஷமாயிருக்கும். இந்த ரெயில்வே போர்டின் கீழ், பிரதம கமிஷனர், வரவு செலவு கமிஷனர், உதவி கமிஷனர்கள் முதலிய பல உத்தியோகதர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த ரெயில்வே போர்டின் கூட்டம் அடிக்கடி நடைபெறும். இந்நக் கூட்டங்களுக்கு அநேகமாகப் போக்கு வரவு இலாகா மந்திரியே தலைமை வகிப்பர். இந்த மந்திரியே, ரெயில்வே நிருவாக சம்பந்தமாகச் சட்ட சபைகளில் பேசுவதோடு, ரெயில்வே வரவு செலவு திட்டத்தையும் ஆஜர் படுத்துவார். ஆனால் ரெயில்வே நிருவாகமனைத்தும் இந்த மந்திரியின் வசத்திலிருக்கும் என்று சொல்ல முடியாது கவர்னர் - ஜெனரலுக்கு நிருவாக விஷயத்தில் தலையிட அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெடரல் கோர்ட் எப்பொழுதும் போலவே ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஹைகோர்ட் இருக்கும். இவைகளுக்கு மேலாக பெடரல் கோர்ட் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பிரதம நீதிபதியும் ஆறு நீதிபதி களும் இருப்பார்கள். இவர்கள் 65 வயது ஆகும் வரை உத்தியோகம் பார்க்கலாம். சட்ட சம்பந்தமாகவும் அதிகாரப்பிரயோக சம்பந்தமாகவும் பெடரல் அரசாங்கத்திற்கும், ஏதேனும் ஒரு மாகாண அரசாங்கத்திற்கும், அல்லது ஒரு மாகாணத்துக்கும் மற்றொரு மாகாணத்திற்கும், அல்லது இந்தியா அரசாங்கத்திற்கும் பெடரல் திட்டத்தில் சேர்ந்துள்ள ஏதேனுமொரு சுதேச சமதானத்திற்கும் தகராறு ஏற்பட்டால், அவற்றைப் பற்றி விசாரித்துத் தீர்ப்புக் கூற இந்த பெடரல் கோர்ட்டுக்கு அதிகாரமுண்டு. மற்றும் மாகாண ஹைகோர்ட்டுகளிலிருந்தும், சமதான ஹைகோர்ட்டுகளிலிருந்தும் வரும் அப்பீல் வழக்குகளையும் இந்த பெடரல் கோர்ட் விசாரணை செய்து தீர்ப்புக் கூறும். ஆனால் இந்த பெடரல் கோர்ட்டே எல்லாவற்றிற்கும் முடிவான ஒரு கோர்ட்டாக இராது. இதற்கு மேலும் சில விஷயங்களில் இப்பொழுதுள்ளது போலவே பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்து கொள்ளலாம். இந்தியா மந்திரி தற்போதுள்ளது போலவே, இந்தியா விஷயங்களுக்குப் பார்லிமெண்டில் பொறுப்பாளராக இந்தியா மந்திரி ஒருவர் இருப்பார். இவருக்கு ஆலோசனை கூற மூன்று பேருக்குக் குறையாமல் ஆறு பேருக்கு அதிகப்படாமல் ஒரு சபை இருக்கும். இப்பொழுதுள்ள மாதிரி ஹை கமிஷனர் முதலிய உத்தியோகதர்கள் பலரும் இருப்பார்கள். III மாகாணங்கள் 1935ம் வருஷத்துச் சட்டப்படி மாகாணங்களுக்குப் பொறுப் பாட்சிக் கொடுக்கப்பட்டிருக்கிறதாகச் சொன்னோமல்லவா? இந்தப் புதிய சட்டப்படி இந்தியா, பதினோரு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இரட்டையாட்சித் திட்டத்தின் கீழ் பத்து மாகாணங்களே இருந்தன. புதிதாக இரண்டு மாகாணங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவையே சிந்து மாகாணமும் ஒரிஸா மாகாணமும். இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாயிருந்த பர்மா மாகாணம், 1937ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதினோரு மாகாணங்களின் விவரம் அடுத்த பக்கத்தில் பார்க்க. நிருவாக அதிகாரிகள் மாகாண அரசாங்கத்தின் தலைவர் கவர்னர். கவர்னர்களின் சம்பள விகிதம் முன்பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது தவிர, பலவகைப்பட்ட படிச்செலவுகளும் இவர்களுக்கு அளிக்கப்படும். அரசாங்க நிருவாகத்தில் கவர்னருக்குத் துணை செய்யச்சில மந்திரிமார்கள் இருப்பார்கள். ஆனால் அந்தந்த மாகாணத்தின் தேவைக்கும், நிருவாகப்பொறுப்புக்கும் தகுந்தாற்போல், மந்திரிகள் நியமிக்கப்படுவார்கள். உதாரணமாகச் சென்னை மாகாணத்திற்கு எட்டு மந்திரிமார்கள் வரை இருக்கலாம். சட்ட சபையில் (கீழ்ச்சபை என்கிற மாகாண லெஜி லேடில் அஸெம்ப்ளியில்) எந்தக் கட்சி பெரும்பான்மைக்கட்சியாக இருக்கிறதோ அந்தக்கட்சியின் தலைவரை கவர்னர் அழைத்து மந்திரிச்சபை அமைக்கு மாறு கூறுவர். அவரைக்கொண்டு மற்ற மந்திரிகளும் நியமிக்கப் படுவார்கள். இந்த மந்திரிகளின் நியமன விஷயத்தில், சட்டசபையிலுள்ள சிறுபான்மைக் கட்சியினருடைய பிரதிநிதித்துவமும் கவனிக்கப்படும். மந்திரிகள், கூட்டுப்பொறுப்பின் பேரிலேயே காரியங்களை நடத்துவார்கள். எனவே, பிரதம மந்திரி ராஜீநாமா செய்தால் மற்ற மந்திரிகளும் ராஜீநாமா செய்ததாகவே கருதப்படுவார்கள். மந்திரிகளின் சம்பள விகிதம் முதலியன சட்டசபையினால் சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப்படும். மந்திரிகள், சட்ட சபைக்குப் பொறுப்புள்ளவர்களாயிருப்பார்கள். எனவே இவர்களுடைய நிருவாகத்தின் கீழுள்ள இலாகாக்களின் நிருவாக முறை, வரவு செலவு முதலியன யாவும் சட்ட சபையின் ஓட்டுக்கு உட்பட்டேயிருக்கும். விசேஷப் பொறுப்பு அரசாங்க நிருவாகம் அனைத்தும் மந்திரிகளின் நிருவாகத் திற்குட் படுத்தப் பெற்றிருந்த போதிலும் கவர்னருக் கென்று சில விசேஷப் பொறுப்புக்கள் உண்டு. அவை முறையே:- (1) மாகாணத்தில் சமாதான பங்கம் ஏற்படாமல் கவனித்து வருதல்; (2) சிறுபான்மைச் சமூகத்தினருடைய நியாயமான உரிமை களைப் பாதுகாத்தல்; (3) அரசாங்க உத்தியோகதர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் முதலியோருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளை வாங்கிக் கொடுத்தல்; அவைகளைப் பாதுகாத்தல்; (4) பிரிட்டிஷாருடைய வியாபாரம், குடியிருப்பு, உத்தியோகம், அவர்களுக்கு வரி விதித்தல் முதலியவை சம்பந்தமான எவ்வித பட்சபாதமான சட்ட திட்டங்களும் நிறைவேற்றவிடாமல் தடுத்தல். (5) ஒதுக்கப்பட்ட பிரதேசங்கள் என்று சொல்லப் பட்டிருக்கிற பிரதேசங்களில் ஒழுங்கான நிர்வாகம் நடைபெறுகிறதா வென்று பார்த்தல்;1 (6) சுதேச சமதானங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்; சுதேச சமதானாதிபதிகளுடைய கௌரவத்தையும் உரிமை களையும் பாதுகாத்தல்; (7) கவர்னர் - ஜெனரலுடைய விசேஷ அதிகாரத்தின் மூலம் நிறை வேற்றப்பட்ட உத்திரவுகளை அமுலுக்குக் கொண்டு வருதல். இந்த விசேஷப் பொறுப்புக்களை நிறைவேற்றும் விஷயத்தில் கவர்னர் சுயேச்சையாகவே நடந்து கொள்ளலாம். ஆனால் கவர்னர், இந்த விஷயங்களில் மந்திரிகளைக் கலந்துகொள்வார். மந்திரிகளின் அபிப்பிராயத்திற்கும் கவர்னரின் அபிப்பிராயத்திற்கும் வேற்றுமை ஏற்பட்ட காலத்தில்தான், கவர்னர் சுயேச்சையாக நடந்து கொள்வார். விசேஷ அதிகாரங்கள் இவை தவிர, கவர்னருக்குச் சில விசேஷ அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சாதாரணமாகப் போலீ இலாகா ஒரு மந்திரியினுடைய நிருவாகத்தின் கீழ் இருக்குமேயாயினும், அவ்விலாகாவின் நிருவாக விஷயத்தில் தலையிட கவர்னருக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக் கின்றன. இந்த இலாகா சம்பந்தப்பட்ட சட்டங்கள், விதிகள் முதலியன யாவும் அமுலில் கொணரப்படுவதற்கு முன் கவர்னரின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். ரகசிய போலீ இலாகா சம்பந்தப்பட்ட ததாவேஜூகளை, அந்த இலாகா அதிகாரிகள் கவர்னர் உத்திரவின்றி மந்திரிகளுள்பட எவருக்கும் காட்டக்கூடாது. மாகாணத்தின் எந்தப் பாகத்திலேனும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட வேண்டுமென்று சதியாலோசனை செய்யப்படுவதாக தெரிந்தாலும், அது சம்பந்தமாகப் பலாத்காரச் செயல்கள் நிகழும் என்று தோன்றினாலும், இவற்றை அடக்க என்னென்ன அதிகாரங்கள் வேண்டுமோ அவற்றை கவர்னர் தாமே, தமது சொந்த அபிப்பிராயத்தைக் கொண்டு உபயோகிக்கலாம். இவை சம்பந்தமாகச் சட்ட சபைகளில் தமது பிரதிநிதியாயிருந்து பேச, கவர்னர் ஓர் உத்தியோகதரை (தற்காலிகமாக) நியமிக்கலாம். அரசாங்க இலாகாக்கள் ஒழுங்குபட நடைபெறுவதற்கு வேண்டிய எல்லா விதிகளையும் கவர்னர் செய்வார். சட்ட நிபுணர் மாகாண அரசாசங்கத்திற்குச் சட்ட சம்பந்தமாக ஆலோசனை சொல்ல, கவர்னரால் அட்வோகேட்-ஜெனரல் என்ற ஓர் உத்தியோகதர் நியமிக்கப்படுவார். இவருடைய உத்தியோக காலம், சம்பள விகிதம் முதலியன, கவர்னருடைய விருப்பத்தைப் பொறுத்தாயிருக்கும், தற்போது சில மாகாணங்களிலுள்ள அட்வோகேட் - ஜெனரலின் காரியாலயம், இந்தப் புதிய காரியாலயத்தோடு ஐக்கியமாகிவிடும். சட்ட சபைகள் சில மாகாணங்களுக்கு இரண்டு சட்ட சபைகளும் சில மாகாணங்களுக்கு ஒரே ஒரு சட்ட சபையுந் தான் உண்டு. இரண்டு சபைகளுள்ள மாகாணங்கள்:- 1. சென்னை 2. பம்பாய் 3. வங்காளம் 4. ஐக்கிய மாகாணம் 5. பீஹார். 6. அஸாம். ஒரே சபையுள்ள மாகாணங்கள்:- 7. மத்திய மாகாணம் 8. ஒரிஸா 9. சிந்து 10. வடமேற்கெல்லை மாகாணம் 11. பஞ்சாப் இரண்டு சபைகள் உள்ள மாகாணங்களில், அதாவது, முதலில் கூறப்பட்ட ஆறு மாகாணங்களில், ஒரு சபைக்கு லெஜி லேடிவ் அஸெம்ப்ளி ‘(Legislative Assembly) (லோயர் ஹவு) என்றும், மற்றெரு சபைக்கு லெஜி லேடிவ் கவுன்சில் (Legislative Council) (அப்பர் ஹவு) என்றும் பெயர். மற்ற ஐந்து மாகாணங்களிலுமுள்ள ஒற்றைச் சபை லெஜிலேடிவ் அஸெம்ப்ளி (Legislative Assembly) என்று பெயர் பெறும். இங்கு நாம் சௌகரியத்திற்காக கீழ்ச்சபையை மாகாண அஸெம்ப்ளி என்றும் மேல் சபையை மாகாண கவுன்சில் என்றும் அழைப்போம். மாகாண அஸெம்ப்ளி மாகாண அஸெம்ப்ளியின் ஆயுட்காலம் ஐந்து வருஷமாக இருக்கும். மாகாண அஸெம்ப்ளிகளில் அங்கத்தினர்கள் கீழ்க்கண்ட விதமாக இருப்பார்கள்:- மாகாண அஸெம்ப்ளிக்கு அபேட்சகர்களாக நிற்பவர்கள் 25 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும், மற்றும் ஓட்டருக்குள்ள எல்லாத் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். பொதுத் தொகுதிகளில் யாரார் ஓட்டர்களாக இருக்கலா மென்றால் :- 1. அந்தத் தொகுதியில், முந்தின வருஷத்தில் குறைந்தது 120 நாட் களாவது ஒரு வீட்டில் வாசஞ் செய்தவராயிருக்க வேண்டும். தவிர 2. 1931 ம் வருஷத்து மோடார் வரிச்சட்டத்தின் கீழ் வரி செலுத்தியவர்; அல்லது 3. தொழில் வரி செலுத்தினவர்; அல்லது 4. சொத்து வரி கொடுத்தவர்; அல்லது 5. வீட்டு வரி செலுத்தினவர்; அல்லது 6. வரி செலுத்தின ஒரு பூரா வீட்டிற்கும் வாடகை செலுத்திக் குடியிருக்கிறவர்; அல்லது 7. வருமான வரி செலுத்துகிறவர்; அல்லது 8. ரிஜிதர் செய்யப்பட்ட பட்டாதாராக இருக்கிறவர்; அல்லது 9. நிலவரி செலுத்துகிறவர்; அல்லது 10. மலையாளக் குடியிருப்புச் சட்டப்படி, காணம்தார் குழிக்காணம் தார் முதலிய ஏதேனும் ஒரு வகை பாத்தியதாராகவுடையவர்; அல்லது 11. நகரத் தொகுதிகளில், வருஷத்தில் 100 ரூபாய்க்குக் குறையா மலும், கிராமத் தொகுதிகளில் 50 ரூபாய்க்குக் குறையாமலும் வரும் படி தரக்கூடிய (வீடு தவிர) தாவர சொத்துக்களை அடமான மாகவோ, குத்தகையாகவோ பெற்றிருப்பவர்; அல்லது 12. எழுதவோ, படிக்கவோ தெரிந்தவர்; அல்லது 13. ராணுவத்தில் உத்தியோகம் வகித்து விலகிக் கொண்டவர் முதலியோர். இங்ஙனமே திரீ ஓட்டர்களுக்கும் சில விசேஷமான உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு :- 1. ராணுவத்தில் சேவை செய்தவர்களுடைய தாயாராகவோ, மனைவி யாகவோ இருந்து உபகாரச் சம்பளம் பெறுகிறவர்; அல்லது 2. வருமான வரி செலுத்துகிறவருடைய மனைவி; அல்லது 3. ராணுவத்திலிருந்து விலகிக் கொண்டு உபகாரச் சம்பளம் பெறுகிற வருடைய மனைவி;அல்லது 4. வருஷம் 60 ரூபாய் வருமானமுள்ள வீட்டில் குடியிருப்பவர் களுடைய மனைவி; அல்லது 5. கம்பெனி வரி செலுத்தியவருடைய மனைவி; அல்லது 6. மூன்று ரூபாய்க்கு குறையாமல் சொத்து வரி அல்லது தொழில் வரி செலுத்தியவருடைய மனைவி; அல்லது 7. வருஷம் 10 ரூபாய் வரி செலுத்தும் பட்டாதார் அல்லது இனாம்தார் இவர்களுடைய மனைவி; அல்லது 8. மேற் கூறப்பட்ட பட்டாதார் அல்லது இனாம்தார் இவர்களிடமிருந்து வருஷம் 10 ரூபாய் வரி கொடுக்கும் பூதிதியைக் குத்தகையாகப் பெற்றுள்ளவர்களின் மனைவி முதலியோர். ஒருவருக்கு மேற்பட்ட மனைவிமார் இருந்தால் அவரில் ஒரு மனைவிக்குத்தான் ஓட்டுரிமை உண்டு. மாகாண கவுன்சில் மாகாண கவுன்சிலைப் பற்றிக் கவனிப்போம். ஆறு மாகாணங் களில் இந்தக் கவுன்சில்கள் இருக்கு மென்று சொன்னோமல்லவா? அவைகளின் அங்கத்தினர் விவரம் வருமாறு :- 1. சென்னை 54 பேருக்கு மேல் 56 பேர் 2. பம்பாய் 29 பேருக்கு மேல் 30 பேர் 3. வங்காளம் 63 பேருக்கு மேல் 65 பேர் 4. ஐக்கிய மாகாணம் 58 பேருக்கு மேல் 60 பேர் 5. பீஹார் 29 பேருக்கு மேல் 30 பேர் 6. அஸாம் 21 பேருக்கு மேல் 22 பேர் இவற்றில் சென்னைக் கவுன்சிலில் பின்வருமாறு தானங்கள் வகுக்கப் பட்டிருக்கும்:- பொதுத்தொகுதிக்கென்று 35 முகம்மதியர்களுக்கென்று 7 ஐரோப்பியர்களுக்கென்று 1 இந்திய கிறிதவர்களுக்கென்று 3 கவர்னரால்பூர்த்தி செய்யப்பட 8- பேருக்கு மேல் வேண்டிய தானங்கள் 10- பேருக்குள்ளாக ------ மொத்தம் 54 பேருக்குமேல் 56 பேருக்குள்ளாக இந்த மாகாண கவுன்சிலின் ஆயுட் காலம் 9 வருஷம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ராஜாங்க சபை போலவே இது கலைக்கப்படாத ஒரு நிரந்தர தாபனமாகவே இருக்கும். மொத்த அங்கத்தினர்களில் மூன்றில் ஒரு பங்கினர், மூன்று வருஷத்திற்கொரு முறை தங்கள் தானங்களைக் காலி செய்வார்கள். இந்த தானங் களுக்குமட்டும் தேர்தல் நடை பெறும். இப்படியே ஒவ்வொரு மூன்று வருஷத்திற்கும், தேர்தல் நடை பெற்றுக் கொண்டிருக்கும். மூன்று பங்கு அங்கத்தினர்கள் மாறி மாறி வந்து கொண்டிருப்பார்கள். இந்த மாகாண கவுன்சிலுக்கு அபேட்சகர்களாக நிற்பவர்கள் பிரிட்டிஷ் பிரஜையாகவும் 30 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். ராஜங்க சபையின் ஓட்டர்களே, இந்த மாகாணக் கவுன்சிலின் பொதுத் தொகுதி ஓட்டர்களாக இருப்பார்கள். தவிர முகம்மதியர் இந்திய கிறிதவர் முதலிய பிரதிநிதிகளுக்கு அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த ஓட்டர்கள் ஓட் கொடுப்பார்கள். சட்ட சபை உத்தியோகதர்கள் மேற்படி இரண்டு மாகாண சபைகளின் முதற் கூட்டத்தில் அந்தந்த சபையின் தலைவரும் உபதலைவரும் அங்கத்தினர்களால் தேர்ந் தெடுக்கப் படுவார்கள். இவர்களுடைய சம்பள விகிதம் முதலியன அந்தந்த சபைகளினால் சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப்படும். மாகாண அஸெம்ப்ளியின் தலைவர் பீகர் (Speaker) என்றும், உப தலைவர் டெபுடி பீக்கர் (Deputy Speaker)என்றும் மாகாண கவுன்சிலின் தலைவர் பிரசிடெண்ட் (President) என்றும், உப தலைவர் டெபுடி பிரசிடெண்ட் (Deputy President) என்றும் முறையே அழைக்கப்படுவார்கள் மாகாண சபைகளின் அங்கத்தினர்கள் அந்தத்த சபைகளினால் சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப்படுகிற சம்பளமோ அல்லது அலவன்ஸோ பெறுவார்கள். அதிகாரங்கள் முதலியன புதிய வரி போடுதல், அல்லது இருக்கப்பட்ட வரியை அதிகப் படுத்துதல் முதலியவை சம்பந்தமான மசோதாக்கள், கடன் வாங்குதல், மற்றப் பண விஷயங்கள் முதலியவை சம்பந்த மான மசோதாக்கள், செலவுத் தொகையை அதிகப் படுத்த வேண்டுமென்பதன் சம்பந்தமான மசோதாக்கள். ஆகிய இவை தவிர, மற்ற விஷயங்கள் சம்பந்தமான எந்த மசோதாவும் இரண்டு சபைகளிலும் அங்கத்தினர்களால் கொண்டு வரப் படலாம். ஆனால் மேலே கூறப்பட்ட பண விஷய மசோதாக்களை முதலில் மாகாண அஸெம்ப்ளியில்தான் கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டு வரப்படும் மசோதாவும் கவர்னரால் முதலில் சிபார்சு செய்யப் பட வேண்டும். மாகாண கவுன்சிலில் நிறைவேற்றப் பட்ட ஒரு மசோதா, மாகாண அஸெம்ப்ளியினால் நிராகரிக்கப்பட்டால், அது அமுலுக்கு வராது. ஆனால் மாகாண அஸெம்ப்ளியில் ஒரு மசோதா நிறைவேற்றப் பட்டு, மாகாண கவுன்சிலினால் ஒரு வருஷ காலத்திற்குள் நிறைவேற்றப் படாமற் போனால், கவர்னர் இரண்டு சபைகளையும் ஒன்று கூட்டி மேற்படி மசோதாவை ஆலோசிக்குமாறு கூறலாம். பெரும்பான்மையான வாக்கு களால் மேற்படி மசோதா நிறைவேறினால், அஃது இரண்டு சபைகளி னாலும் அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்படும். ஆனால் எந்த ஒரு மசோதாவும் இரண்டு சபைகளினாலும் பெரும் பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் சட்டமாக முடியும். இரண்டு சபைகளினாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, பிறகு கவர்னரின் அங்கிகாரத்திற்கு அனுப்புவார்கள். கவர்னர், இதனை அங்கீகரிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம்; அல்லது கவர்னர் ஜெனரலுடைய சம்மதத்தைப் பெறவேண்டுமென்று, காரணங்காட்டி நிறுத் திவைக்கலாம்; அல்லது சில திருத்தப் பிரேரணைகளைச் சேர்த்து, மீண்டும் சபையின் ஆலோசனைக்கு அனுப்பலாம். இந்த விஷயத்தில் கவர்னருக்கும், அவருக்கு மேலே கவர்னர் - ஜெனரலுக்கும் பூர்ண அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் அரசாங்க வரவு செலவு திட்டத்தை (Budget) இரண்டு சபைகளிலும், பொக்கிஷ மந்திரியோ, இந்தத் திட்டத்தில் காணப்பெறும் செலவுத் தொகைளில் ஒரு பாகம், சட்ட சபைகளின் ஓட்டுக்கு விடாமலே அரசாங்கம் செலவழிக்கலாம். மற்றப் பாகத்தில் காணப்பெறும் செலவுத் தொகைகள் மாகாண அஸெம்பிளியின் ஓட்டுக்குத் தனித்தனி இனமாக விடப்பெறும். இவற்றை அங்கீகரிக்கவோ மறுக்கவோ அல்லது குறைக்கவோ அஸெம்ப்ளிக்கு அதிகாரமுண்டு. சட்ட சபைகளின் நடவடிக்கைகள் யாவும் ஆங்கில பாஷையிலேயே நடைபெறவேண்டும். ஆங்கிலம் தெரியாத அங்கத்தினர்கள், சபை விதி களால் நிர்ணயிக்கப்படுகிற மற்றொரு பாஷையில் பேசலாம். இந்த அரசியல் திட்டப்படி அரசாங்கத்தைச் சௌகரியமாக நடத்த முடியாது என்று கவர்னருக்குத் தோன்றினால், நிருவாகம் முழுவதையும் தாமே ஏற்றுக் கொண்டு நடத்த கவர்னருக்கு அதிகாரமுண்டு. இந்தப் புதிய அரசியல் திட்டம் ஜனங்களுக்கு உண்மையிலேயே நன்மையை உண்டுபண்ணுமா என்பது கேள்வி. இந்தக் கேள்வியையே இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல் வாதிகள் கேட்கிறார்கள். இந்த புதிய அரசியல் திட்டப்படி இந்தியா முழுவதும் 1937 - ம் வருஷம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் தேர்தல்கள் நடை பெற்றன. முன்னைய சீர்திருத்தங்களின் கீழ் நடைபெற்ற தேர்தல்களைக் காட்டிலும், இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக உற்சாகமும் ஒழுங்கும் காட்டினார்கள். இதற்கு வாக்காளர்களின் உரிமைகள் விசாலப் படுத்தப் பெற்றது ஒரு காரணம். மற்றொன்று, தேர்தலில் போட்டி யிட்ட கட்சி களின் திறமையான பிரசாரம் வியக்கத்தக்க முறையில் இருந்தது. இந்திய தேசீய அபிலாஷைகளின் பிரதிநிதி தாபனமாக இருக்கிற காங்கிரஸானது, இந்த தேர்தலில், இந்தியா அனைத்திற்கும் சுமார் 1000 அபேட்சகர்களை நிறுத்தியது. இவர்களில் 721 பேர் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்றனர். காங்கிர அபேட்சகர்களுக்குப் போட்டியாக நின்ற பலர் ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தோடு தோல்வியடைந்தது மன்றி ஜாமீன் தொகைகளையும் இழக்கலாயினர். மாகாண சட்டசபைகளிலுள்ள காங்கிர கட்சியின் பலமும் மற்றக் கட்சிகளின் பலமும் அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் புள்ளி விவரத் தினால் தெரியலாகும். மொத்தம் பதினொரு மாகாணங்களல்லவா? இவற்றில் ஆறுமாகாணங்களில், காங்கிர கட்சியினர் பெரும்பான்மைக் கட்சியினராகத் தெரிந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆறு மாகாணங்கள் வருமாறு:- 1. சென்னை 2. பம்பாய் 3. ஐக்கிய மாகாணம் 4. மத்திய மாகாணம் 5. பீஹார் 6. ஓரிஸா புதிய சட்டப்படி, சட்டசபையில் பெரும்பான்மையோராகவுள்ள கட்சியினரே மந்திரிப் பதவிகளை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தை நடத்த வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறதல்லவா? இந்த முறைப்படி, மேற்படி ஆறு மாகாண கவர்னர்கள், காங்கிரகாரரை, மந்திரிச் சபை அமைக்குமாறு கேட்டனர். ஆனால் காங்கிரகாரர், சில நிபந்தனைகளோடு மேற்படி பதவி களை ஒப்புக் கொள்ள விரும்பினர். கவர்னர்களுடைய விசேஷ அதிகாரங் களை, மந்திரிகளின் நிருவாக விஷயத்தில் உபயோகிக்கக் கூடா தென்றும், அப்படி உபயோகிப்பதில்லையென்று மாகாண கவர்னர் களை உறுதி மொழி தரவேண்டுமென்றும் காங்கிரகாரர் கேட்டனர். அத்தகைய விஷயத்தில் தாங்கள் எல்லாவித ஒத்துழைப்பையும் காட்டுவதாகவும் மாகாண கவர்னர்கள் கூறினார்கள் காங்கிரகாரர் ஒரே உறுதியாக நின்றனர்; மந்திரிப்பதவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, கவர்னர்கள் சட்ட சபைகளைக் கூட்டாமலே சிறுபான்மைக் கட்சிகளைக் சேர்ந்தவர்களையும், மேற் சபையிலோ கீழ்ச்சபையிலோ அங்கத்தினாராயில்லாதவர்களையும் கூட ஒன்று கூட்டி மேற்படி ஆறு மாகாணங்களில் மந்திரிச் சபைகளை அமைத்தார்கள். இந்த மந்திரிச் சபைகள், உண்மையிலேயே பிரதிநிதித்துவம் வாய்ந்தனவா வென்ற கேள்வி நாடெங்கணும் எழாமலில்லை. பெரும்பான்மைக் கட்சிகளி லிருந்து மந்திரிச் சபை அமைக்க முடியாத நிலையில், நிருவாக யந்திரம் முறிந்து விட்டதென்று சொல்லி, சட்டத்தின் 93 வது விதிப்படி நிருவாகத்தைக் கவர்னர்களே நேரில் ஏற்றுக் கொள்ளத்துணியவில்லை என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. காங்கிரகாரர்கள் கேட்ட உறுதி மொழியைக் கொடுக்கக் கவர்னர் களுக்குச் சட்டத்தின் கீழ் அதிகாரமுண்டா வென்ற கேள்வி, பல சட்ட நிபுணர்களுடைய அறிவுக்கு நல்ல வேலையளித்தது. உறுதி மொழி கொடுக்க அதிகார முண்டு என்பர் ஒருசாரார்; இல்லையென்பர் மற்றொரு சாரார். எப்படியாயினும், பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் எதிர்பார்க்கப்பட்ட படி, மாகாணப் பொறுப்பாட்சியானது, கொட்டு முழக்கோடே, கோலாகலத்தோடே பவனி வரவில்லை யென்பது தெளிவாகி விட்டது. சில புள்ளி விவரங்கள் பிரிட்டிஷ் இந்தியா:- பர்மாவைத் தவிர்த்து விதீரணம்: 1,570,000 சதுர மைல். பர்மாவைத் தவிர்த்து ஜனத்தொகை : 34 கோடி இவர்களில் ஏறக்குறைய 24 கோடி பேர் ஹிந்துக்கள். சுமார் 77.000,000 பேர் முஸல்மான்கள், சுமார் 6,000,000 பேர் கிறிதவர்கள். ஐரோப்பியர் 1,35,000 பேர், இவர்களில் சுமார் 60,000 பேர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். உயர்தர உத்தியோகங்களிலுள்ள ஐரோப்பியர் சுமார் 3.150 பேர். இவர்களில் 800 பேர் ஐ.சி.எ உத்தியோகதர்கள். 500 பேர் போலீ உத்தியோகதர்கள். சுதேச சமதானங்கள் : சுமார் 600. இவைகளில் 109 சமதானங்கள் பெரியவை. 126 சமதானங்கள் மத்தியதரமானவை. மிகுதியுள்ள சுமார் 365 சாதராண ஜமீன்கள் முதலியன. சுதேச சமதானங்களின் மொத்த விதீரணம் சுமார் 7 லட்சம் சதுர மைல். உத்தேச ஜனத்தொகை 8 கோடி. இந்தியாவில் பேசப்படும் பாஷைகள் : சுமார் 225 முக்கிய நகரங்கள் : கல்கத்தா ஜனத்தொகை 1,485,582 பம்பாய் ஜனத்தொகை 1,161, 383 சென்னை ஜனத்தொகை 647,230 டெல்லி ஜனத்தொகை 477,442 ஹைதராபாத்` ஜனத்தொகை 476,894 இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் : சுமார் 235 லட்சம் பேர். அதாவது மொத்த ஜனத்தொகையில் 100 க்கு 7 பேர். இவர்களில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் சுமார் 35 லட்சம் பேர். ஓட்டுரிமை யுடையவர்கள் : புதிய சட்டபடி இந்தியா முழுவதிலும் சுமார் 350 லட்சம் பேர். சென்னை மாகாணத்தின் சுமார் 70 லட்சம் பேர். இந்தியர்களின் சராசரி வருமானம் : வருஷத்திற்கு 72 ரூபாய். இந்தியர்களின் சராசரி ஆயுள் : 26 1\2 வயது. புதிய அரசியல் திட்டத்தினால் ஏற்படும் அதிகச் செலவு : மாகாணம் பொறுப்பாட்சிக்காக வருஷவாரி சுமார் முக்கால் கோடி ரூபாயும், பெடரேஷனுக்காக வருஷவாரி சுமார் முக்கால் கோடி ரூபாயும் அதிக செலவாகும். அரசியல் மாற்றத்தின் காரணமாக, இவையே இந்திய வரி செலுத்துவோரின் தலையில் புதிய சுமையாக இருக்கும் என்று கூட்டுக் கமிட்டியார் தங்கள் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். (பக்கம் 170) கடன் விஷயம்: 1937ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து இந்தியாவினின்று பர்மா பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவி லுள்ள மொத்தச்சொத்து மதிப்பிலும், இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும், பர்மாவுக்குரிய பங்கு என்ன உண்டோ அதனைப் பிரித்துக் கொடுத்துவிட புதிய திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான புள்ளி விவரங்கள் வருமாறு :- பர்மா உள்பட இந்தியாவின் மொத்தக் கடன் மதிப்பு சுமார் 1361 கோடி ரூபாய் பர்மாவிலுள்ள சொத்து மதிப்பு 1126 ,, எனவே அதிக கடன் 235 இதில் பர்மாவின் பங்கு 27½ ,, பர்மாவிலுள்ள சொத்து மதிப்பு 35½ ,, எனவே, இந்தியாவுக்கு பர்மா செலுத்த வேண்டிய மொத்த தொகை 53 ,, இந்த 53 கோடி ரூபாயையும் வருஷத்தில் சுமார் 235 லட்சம் ரூபாய் வீதம் 45 வருஷத்தில் 3½% வட்டியுடன் செலுத்த வேண்டு மென்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. இந்தியா சட்டசபை வளர்ச்சி 1853ம் வருஷத்தில் 6 அங்கத்தினர்கள் 1861 ,, 12 ,, 1892 ,, 16 ,, 1909 ,, 60 ,, 1919 ,, 145 இந்தியா சட்ட சபையில் 1919 ,, 60 ராஜாங்க சபையில் 1935 ,, 375 இந்தியா சட்ட சபையில் 1935 ,, 260 ராஜங்க சபையில் கவர்னர் ஜெனரலின் தலைமை தானம் : 1854 ம் வருஷம் வரை வங்காள மாகாண நிர்வாகம் கவர்னர் - ஜெனரல் வசமே இருந்தது. அதற்குப் பிறகு ஒரு லெப்டினெண்டு கவர்னர் வசம் ஒப்புவிக்கப்பட்டது. கவர்னர் - ஜெனரலின் தலைமைதானம் 1912ம் வருஷம் வரை கல்கத்தாவிலேயே இருந்தது. அதன் பிறகு டெல்லிக்கு மாற்றப்பட்டது. சில பெயர்கள்: ஆலோசனை சபையோடு கூடிய சக்ரவர்த்தி :- His Majesty in Council இந்தியா மந்திரி :- Secretary of State for Inida நிருவாக அரசாங்கம் :- Executive Council ராஜாங்க சபை :- Council of State இந்தியா சட்ட சபை :- House of State மாகாண கவுன்சில் :- Provincial Legislative Council மாகாண அஸெம்ப்ளி :- Provincial Legislative Assembly உள் நாட்டு விஷயங்களில் பூர்ண உரிமை பெற்று சம அந்த திலுள்ள பல பிரேதசங்கள் பரபர ஒப்பந்தங்கள் மூலம் செய்து கொள்ளும் கட்டுப்பாட்டுக்கு அல்லது ஐக்கிய திட்டத்திற்கு பெடரேஷன் (Federation) என்று பெயர்.  சமதான இந்தியா சமதான இந்தியா I இந்தியாவை இரண்டு கூறாகப் பிரிக்கலாம். ஒன்று பிரிட்டிஷ் இந்தியா; மற்றொன்று சமஸ்தான இந்தியா. பிரிட்டிஷ் அரசாங்கத் தாருடைய நேரான நிருவாகத்தில் முன்னையது இருக்கிறது. சுதேச மன்னர்கள் மூலமாகப் பின்னவை ஆளப்படுகின்றன. இந்தச் சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக் கின்றன. இவற்றை ஆளும் மன்னர் பல தரத்தினர்; பல மதத்தினர்; பல பாஷை பேசுவோர். ஆனால் யதேச்சாதிகாரத்தின் சின்னங்கள் என்ற முறையில் எல்லாரும் ஒன்று பட்டவர்களே. பிரிட்டிஷ் இந்தியாவில் பிரவேசித்து, தங்கள் வியாபாரத்தை வலுப்படுத்திக் கொண்டு அதே சமத்தில், தேசத்து அரசியலில் தலையிடத் தொடங்கிய போது டெல்லியில் மொகலாய சாம்ராஜ்யத்தின் பிரகாசம் குன்றிக் கொண்டிருந்தது. பெயரளவில் இந்தச் சாம்ராஜ்யத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்த பல குறுநில மன்னர்கள், இதுவே சமயமென்று தனித்தனியாக ராஜ்யங் களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்களுக்கிடையே பரஸ்பர போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங் களுக்காக இவர்கள் அந்நியருடைய உதவியை நாடினார்கள். ஆனால் கடைசியில் அந்த அந்நியருடைய ஆதிக்கத்தையே இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்து விட்டது. இந்தச் சமஸ்தானங்கள் தோன்றின கதை பழங்கதை. ஆச்சரிய மானதுங்கூட. பொதுவாக, ஒரு சில சமஸ்தானங்கள் தான் பரம்பரைப் பெருமைக்குரியவை. மற்றவை யாவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் அதனைத் தாங்கிக் கொண்டிருக்க, தூண்களாக அமைந்தவை அல்லது இதனைப் பற்றி விரித்துக் கொண்டு செல்வது இந்தப் பிரசுரத்தின் நோக்கமல்ல. சுதேச மன்னர் பலர் அந்நிய நாடுகளில் ஆடம்பரமாகச் சுற்றுப் பிரயாணம் செய்கிறார்கள். அநேகர் இந்திய ராஜாக்கள் என்று சொல்லிக் கொண்டு, வெளி நாடுகளில் சொத்து சுதந்திரங் களையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குதிரைப் பந்தயம், மிருக வேட்டை முதலியவை களில் தீவிரமாக ஈடுபட்டுத் தங்கள் பிரஜைகளின் நன்மையைக் கோரிக் கொண்டிருக்கும் மன்னர்களும் இல்லாமல் இல்லை. ஒரு சிலர், தங்கள் முழுப் பொறுப்பையும் செவ்வனே உணர்ந்து, சமதானங்களை ஒழுங்காக நிருவகித்து வருகிறார்கள். இத்தகைய பல திறத்தினரால் நிருவகிக்கப் படும் சமஸ்தானங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்பதே இந்நூலின் நோக்கம். தவிர, இனி வரப்போகிற பெடரல் அரசியலில் சுதேச மன்னர்களின் தொடர்பும் இருக்கு மல்லவா? சுதேச சமஸ்தானங்கள் என்ற சொற்றொடரை நாம் உச்சரிக்கும் போதே, லார்ட் டல்ஹவுஸியின் ஞாபகம் வருகிறது. இவன் கி.பி.1848 வது வருஷம் முதல் 1856ம் வருஷம் வரை இந்தியாவின் கவர்னர்-ஜெனரலாக இருந்தான். இவன் காலத்திலே தான், பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லை விஸ்தரிக்கப்பட்டது. பஞ்சாப், சிக்கிம், சதாரா, அயோத்தி, இப்பொழுது மத்திய மாகாணம் என்று அழைக்கப்படுகிற நாகபுரி, பீகார், உதயபுரி, மஹாராஷ்ட்ரத்தில் ஒரு பகுதி முதலிய பிரதேசங்கள் பலவும், சரியான வார்சுதார்கள் இல்லையென்றும், ஒழுங்கான நிருவாகம் நடைபெற வில்லையென்றும் காரணங்கள் காட்டி, பிரிட்டிஷ் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ளப் பெற்றன. பொது நன்மையை முன்னிட்டுத்தான் லார்ட் டல்ஹவுஸி இங்ஙனம் செய்தான்! 1857ம் வருஷம் சிப்பாய்க் கலகம் உண்டாயிற்று. இஃது ஒரு விதமாக அடக்கப் பட்டுவிட்டது. இதற்குப் பிறகு 1858ம் வருஷம், இந்தியாவின் அரசியல் நிருவாகம், கிழக்கிந்தியக் கம்பெனியாரிட மிருந்து பிரிட்டிஷ் மன்னர் பரம்பரையினருக்கு மாற்றப்பட்டது. அப்பொழுது விக்டோரியா மகாராணியார் விடுத்த சாஸனத்தில் பின்வரும் வாக்கியங்கள் காணப்படுகின்றன. நமது தற்போதைய ராஜ்ய எல்லையை விஸ்தரிக்க விரும்ப வில்லை. நமது நாடுகளையோ அல்லது நமது உரிமை களையோ பிறர் தாக்குவதானால் அதனையும் அலட்சிய மாக அனுமதிக்க மாட்டோம். மற்றவர்களின் உரிமைகள், மரியாதை, தன்மதிப்பு முதலியவற்றையும் காப்பாற்றுவோம். நமது பிரஜை களும் சுதேச மன்னர்களும் சௌக்கியத்தையும் சமூக முன்னேற்றத்தையும் அடையவேண்டு மென்று நாம் விரும்பு கிறோம். உள்நாட்டு அமைதி யாலும் நல்ல அரசாங்கத்தினாலுமே இவைகளை அடைய முடியும். இந்தச் சாஸனத்திற்குப் பிறகு,சுதேச சமஸ்தானங்களைப் பிரிட்டி ஷ் இந்தியாவுடன் சமயம் வந்தபோது சேர்த்து விடுவதென்ற முறை ஒருவாறு கைவிடப் பெற்றது. அந்தந்த சமஸ்தானங்களின் உரிமைகள் இன்னவையென்று நிர்ணயிக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேற்பார்வையில் இவை, ஓரளவு சுயேச்சை பெற்று தனித்தனி நாடுகள் போல் நிம்மதியான ஆனால் அடக்கமான வாழ்க்கை நடத்தத் தொடங்கின. ஆனால் ஆடம்பரத்திற்கு மட்டும் குறைவில்லை. இந்தச் சமஸ்தானங்களுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் எத்தகைய சம்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளக் பெற்றன வென்பதைச் சிறிது கவனிப்போம். வெளிநாட்டுச் சத்துருக்களினின்றும் உள் நாட்டுச் சத்துருக்களினின்றும் சுதேச சமஸ்தானங் களைக் காப்பாற்றுவது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொறுப்பு. சுதேச சமஸ்தானப் பிரஜைகளை, ஏதோ ஒரு சில விஷயங்களைத் தவிர எவ்விதத்திலும் பாதிக்காது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் வெளிநாடுகளோடு அவ்வப்பொழுது வைத்துக் கொள்ளும் தொடர்புகளினால் உண்டாகும் சாதகங்களில் சுதேச சமஸ்தானங் களுக்கும் பங்கு உண்டு. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இவ்வளவு நன்மைகளை அடையும் சுதேச சமஸ்தானங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வெளிநாடுகளுடனோ அல்லது மற்றச் சுதேச சமஸ்தானங்களுடனோ அல்லது மற்றச் சுதேச சமஸ்தானங் களுடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலமாகவே வைத்துக் கொள்ளவேண்டும். சுதேச சமஸ்தானங்களின் ராணுவ பலமானது பிரிட்டிஷ் அரசாங்கத்தார் குறிப்பிடும் திட்டத்திற்கும் வரையறைக்கும் உட்பட்டதாகவே இருக்கும். ராணுவத்தின் உதவியே சமஸ்தானங்களுக்குத் தேவையில்லையல்லவா? ஏனென் றால், இவற்றை வெளி நாட்டுச் சத்துரு, உள் நாட்டுச் சத்துரு இவர்களினின்று காப்பாற்றுவதற்குத்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கிறதே. சில சமஸ்தானங்களில் வைக்கப்பட்டிருக்கும் ராணுவ மானது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தேவைக்கும் உதவிக்குமேயாகும். ஆடம்பரத்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் எல்லாச் சமஸ் தானங்களிலும் துருப்புகள் உண்டு. இவர்களுக்கு இருக்க வேண்டிய உடை,ஆயுதங்கள் முதலியன பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்ணயிக்கிற படியே இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் சுதேச சமஸ்தானங் களுக்கும் ஏற்பட்டுள்ள உடன் படிக்கைகளில், சுதேச மன்னர் களுக்குத் தங்கள் சமஸ்தான நிருவாக விஷயத்தில் பூரண உரிமையுண்டு என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், சமஸ் தானப் பிரஜைகளின் நன்மையை முன்னிட்டும், பொது ஜன அபிப்பிராயத்தைக் கருதியும், சமஸ்தான நிருவாகத்தில் அவசிய மான போது பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தலையிடுவார்கள். அப்படி தலை யிட வேண்டுமா, கூடாதா என்பதை நிர்ணயிக்கிற அதிகாரம் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் -ஜெனரலுக்கு உண்டு. 1909ம் வருஷம் லார்ட் மிண்டோ, உதயபுரி சமஸ்தானத்திற்கும் விஜயஞ் செய்திருந்தபோது, நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின் வரும் வாக்கியங்கள் கவனிக்கத் தக்கன:- ஏதோ சில விசேஷ சந்தர்ப்பங்களைத் தவிர பொதுவாக நமது கொள்கை, சுதேச சமஸ்தானங்களின் உள் நாட்டு விஷயங் களில் தலையிடக் கூடாதென்பதேயாகும். ஆனால் அவர்க ளுடைய உள் நாட்டுச் சுதந்திரத்திற்கு உறுதி கொடுத்திருக் கிறோம். வெளி நாட்டுச் சத்துருக்களினின்று காப்பாற்றுகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக் கிறோம். எனவே, சமஸ்தான நிருவாகம் ஒழுங்காக நடைபெறு கிறதா வென்று கவனிக்க வேண்டியது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொறுப்பாயிருக்கிறது இத்தகைய பொறுப்புக்களையெல்லாம் நிறைவேற்று வதற்காக, அநேக சமஸ்தானங்களிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் கப்பம் வாங்கிக் கொள்கிறது. இந்தக் கப்பத்தொகையும், இவை செலுத்தப்படும் முறை களும் அந்தந்த சமஸ்தானங்கள் தோன்றிய காரணம், சந்தர்ப்பம் முதலிய வைகளைப் பொறுத்து வித்தியாசப் படுகின்றன. சில சிறிய சமஸ்தானங்கள் கப்பஞ் செலுத்தாமலு மிருக்கின்றன. இவைகளுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கும் இடையேயுள்ள பொறுப்புகளுக்கும் அதிகம் இல்லையென்று சொல்லலாம். இந்தியாவின் மொத்த விஸ்தீரணம் 1,805,000 சதுர மைல்; மொத்த ஜனத் தொகை 318,942,000. இதில் சுதேச சமஸ்தானங்களின் மொத்த விஸ்தீரணம் 701,000 சதுர மைல்; மொத்த ஜனத் தொகை 70,192,000. அதாவது இந்தியாவின் மொத்த ஜனத் தொகையில் நான்கில் ஒரு பங்கு பேர் சுதேச சமஸ்தானங்களில் வசிக்கிறார்கள். இந்தச் சுதேச சமஸ்தானங்கள் இந்தியா முழுவதும் பரவியிருக் கின்றன. எல்லாம் ஒரே விஸ்தீரணமுடையனவுமல்ல. உதாரணமாக ஹைதராபாத் சமஸ்தானம். இருக்கிறது. இஃது ஏறக்குறைய கிரேட் பிரிட்டனுடைய விஸ்தீரணமுடையது. ஆஸ்திரியா தேசத்தின் ஜனத் தொகையைவிட இரட்டிப்பான ஜனத்தொகையுடையது. இத்தகைய ஹைதராபாத் ஒரு சமஸ்தானம். வட இந்தியாவில் சிம்லா மலைப் பிரதேசங்களிலுள்ள சில சமஸ்தானங்கள் ஒரு சில ஏக்கராக்கள் விஸ்தீரணமுடையவை. சில நூறு பிரஜைகளைக் கொண்டவை. இவையும் சமஸ்தானங்கள் தான். ஆகமொத்தம் இந்தியாவில் 562 சமஸ்தானங்கள் இருக்கின்றன. இவை, விஸ்தீரணம், அந்தஸ்து முதலியவற்றை உத்தேசித்து மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. முதல் வகுப்பைச் சேர்ந்த சமஸ்தானங்கள் - 108 இரண்டாவது வகுப்பைச் சேர்ந்த சமஸ்தானங்கள் - 127 மூன்றாவது வகுப்பைச் சேர்ந்த சமஸ்தானங்கள் - 327 முதலாவது வகுப்பைச் சேர்ந்த 108 சமஸ்தானங்களில் 59,847,186 ஜனங்கள் வசிக்கிறார்கள். மூன்றாவது வகுப்பைச் சேர்ந்த 327 சம ஸ்தானங்களில் 801,674 ஜனங்கள்தான் வசிக்கிறார்கள். இதனைக் கொண்டு, இந்தச் சமஸ்தானங்களின் வித்தியாசங்களைக் கண்டு கொள்ளலாம். 1920-21ம் வருஷங்களிலிருந்து இந்தச் சமஸ்தானங்கள் விஷய மாகச் சில மாறுதல்கள் செய்யப்பட்டனர். அதாவது அதற்கு முன்னர் ஹைதராபாத், மைசூர், பரோடா போன்ற சில பெரிய சமஸ்தானங் களும் சம அந்தஸ்திலிருந்து உடன்படிக்கை செய்து கொண்ட வேறு சில சமஸ்தானங்களும்தான் இந்தியா அரசாங்கத் துடன் நேரான தொடர்பு வைத்துக் கொண்டிருந்தன. மற்றப் பெரும்பாலான சமஸ்தானங்கள் அந்தந்த மாகாண அரசாங்கங் களின் மேற்பார்வையின் கீழ் இருந்தன. பின்னர், நிருவாக சௌகரியத்தை உத்தேசித்தும், வேறு சில காரணங் களை முன்னிட்டும் இந்தச் சிறிய சமஸ்தானங்கள் யாவும், இந்தியா அரசாங்கத்தின் நேரான நிருவாகத்தின் கீழ் வந்தன. ஒரு சில சமஸ்தானங்கள் மட்டுந்தான் மாகாண அரசாங்கங்களின் மேற்பார்வையில் விடப்பட்டிருக்கின்றன. இந்தியா அரசாங்கத்தின் பிரதிநிதியாக பெரிய சமஸ்தானம் ஒவ்வொன்றிலும் ரெசிடெண்ட் என்றும் சிறிய சமஸ்தானங்கள் பல வற்றிற்கும் சேர்ந்து ஏஜெண்ட் என்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இருப்பார்கள். அந்தந்த சமஸ்தானங் களுக்கும் இந்தியா அரசாங்கத்திற்கும் நடக்க வேண்டிய கடிதப் போக்குவரத்துக்கள் முதலியன இந்த அதிகாரிகள் மூலமாகவே நடை பெறும். சிறிய சமதானங்களைப் பின்வரும் ஏஜென்ஸி தொகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள்:- மேற்கிந்திய சமஸ்தானங்களின் ஏஜென்ஸி, குஜராத் சமஸ்தானங் களின் ஏஜென்ஸி, கிழக்கிந்திய சமஸ்தானங்களின் ஏஜென்ஸி, மத்திய இந்தியா சமஸ்தானங்களின் ஏஜென்ஸி, ராஜபுதன சமஸ்தானங் களின் ஏஜென்ஸி, பஞ்சாப் சமஸ்தானங் களின் ஏஜென்ஸி, சென்னை மாகாண சமஸ்தானங்களின் ஏஜென்ஸி, பலுசிஸ்தான் ஏஜென்ஸி முதலியன. இந்த முறையின் பயனாக பல சிறிய சமஸ்தானங்களின் மேற்பார்வை ஓர் ஏஜெண்டிடம் விடப்பட்டிருக்கிறது. இந்த ஏஜெண்ட், கவர்னர்- ஜெனரலின் பிரதிநிதியாக இருந்து காரியங்களை நடத்துகிறார். மாகாணங்களின் மேற்பார்வையிலுள்ள சமஸ்தானங் களுக்கு, அந்தந்த மாகாண, கவர்னர்களின் பிரதிநிதிகளாக உள்ள ஓர் உத்தியோகஸ்தர் பொறுப்பாயிருக்கிறார். பெரிய சமஸ்தானாதிபதிகளுக்கு மரியாதைக்குண்டுகள் உண்டு. இவை 21 குண்டு முதல் 9 குண்டு வரை, அந்தந்த சமஸ்தானாதிபதியின் அந்தஸ்துக்குத்தகுந்த மாதிரி வரையறுக்கப் பட்டிருக்கின்றன. இந்த மரியாதைக் குண்டுகள் தங்கள் சமஸ்தானத்திலிருந்து மற்றொரு சமஸ்தானத்திற்கோ அல்லது பிரிட்டிஷ் இந்தியாவுக்கோ போகும் போதும் வரும் போதும் முறையே போடப்பெறும். இவற்றின் விவரங் களைக் கடைசியில் காண்க. பெரிய சமஸ்தானங்கள் பல, ஏற்றுமதி இறக்குமதி வரிகளை விதிக்கும் உரிமை பெற்றிருக்கின்றன. பெரும்பாலான சமஸ்தானங் களில் பிரிட்டிஷ் இந்தியாவின் நாணயச் செலாவணியும் தபால் இலாகா நடைமுறையும் அமுலில் இருக்கின்றன. ஆனால் 15 சமஸ்தானங்கள் சொந்தத் தபால் இலாகாக்கள் வைத்து நடத்து கின்றன. 8 சமஸ்தானங் களில் தனித்தனியான நாணய வகைகள் புழக்கத்திலிருக்கின்றன. 30 சமஸ்தானங்கள், அரசாங்க நிருவாகத்தில் துணை செய்யச் சட்ட சபைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சட்ட சபைகளில் சில, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள மாகாண சட்ட சபைகளுக்குள்ள அதிகாரங்களைவிட அதிகமான அதிகாரங் களைப் பெற்றிருக்கின்றன. 40 சமஸ்தானங்களில் ஹைகோர்ட்டுகள் உண்டு இவை, மாகாணங்களிலுள்ள ஹைகோர்ட்டுகள் மாதிரியே நடைபெறு கின்றன. 34 சமஸ்தானங்கள் நீதி இலாகாவையும் நிருவாக இலாகா வையும் வெவ்வேறாகப் பிரித்திருக்கின்றன. 1885ம் வருஷம் காங் கிரஸ் மகாசபை ஏற்பட்டது. முதல் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்த இரண்டு இலாகாக் களையும் தனித்தனியாகப் பிரித்து விடவேண்டு மென்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருக் கின்றன. Mdhš-?ஆம்; 1937ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதியி லிருந்து மாகாணப் பொறுப்பாட்சிதான் கொடுத்து விட்டார்களே. எனவே, இந்த ஆனால் கேள்விக்கு நாமே பதில் சொல்லிக் கொண்டு திருப்தி யடைந்து விட வேண்டாமா? 40 சமஸ்தானங்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு நேரான உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றன. மற்றச் சமஸ்தானங் களில் பல பரம்பரை பாத்தியத்தை அநுசரித்து அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. இன்னும் சில ஏதோ ஒரு காலத்தில் பிரிட்டி ஷாருக்கு உதவி செய்ததற்குச் சன்மானமாகக் கொடுக்கப் பட்டவையாயுள்ளன. இவை காரணமாக இரண்டு வகையாகச் சமஸ்தானங்களைப் பிரிப்பர் அரசியல் சரித்திரக் காரர். அதாவது, பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சம அந்தஸ்தில் இருந்து உடன் படிக்கை செய்து கொண்டவையென்றும், பிரிட்டிஷ் அரசாங் கத்தின் தயவினாலே பெற்று அதன் பயனாகத் தாழ்ந்த அந்தஸ்தி லிருந்து உடன்படிக்கை செய்து கொண்ட சமஸ்தானங்களென்றும் இரு வகையாகப் பிரிப்பர். எல்லாச் சமஸ்தானங்களிலும் திவான் என்ற உத்தியோகஸ்தர் உண்டு. இவர்தான் பிரதம மந்திரி இவருக்குத் துணை செய்யச் சில சமஸ்தானங்களில் நிருவாகச் சபைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சமஸ்தானங்களில் திவானுக்கு எல்லா நிருவாக பொறுப்பும் உண்டு. இவருக்குக் கீழ் பல இலாகாக்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ளது மாதிரியே, ஜில்லாக்க ளென்றும் தாலுகாக்களென்றும் பிரித்து ஸ்தல நிருவாகம் நடைபெறுகிறது. சமஸ்தானங்களைப் பற்றிய முன்பின் பழக்கமில்லாத பிரிட்டிஷ் இந்தியா வாசி ஒருவன், ஒரு சுதேச சமஸ்தானத்திற்குச் சென்றால், அவன் எவ்வித விசேஷ மாறுதல்களையும் காண மாட்டான். அலங்காரத் துருப்புகளின் அணிவகுப்பு, வறுமையின் மீது கட்டப் பெற்ற சில அரண்மனைகள், பழைய சம்பிரதாயங்களின் சின்னங்கள் ஆகிய இவற்றைத் தவிர வேறு மாறுதலை காண்பதெங்ஙன்? சமஸ்தான மன்னர்கள் பலர் ஆடம்பரப் பிரியர்களாய் இருப்பது ஆச்சரியமு மில்லை; ரகசிய முமில்லை. எனவே இதைப்பற்றி நாம் விரித்துக் கூற வேண்டுவதுமில்லை. II பெரிய சமஸ்தானங்களில் ரெசிடெண்டுகள் என்றும் சிறிய சமஸ்தானங்கள் பலவற்றிற்கும் ஒன்று சேர்ந்து ஏஜெண்ட் என்றும் உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னோமல்லவா? இந்த ரெசிடென்ஸி சமஸ்தானங்களைப் பற்றியும், ஏஜென்ஸி சமஸ்தானங் களில் முக்கியமான சிலவற்றைப் பற்றியும் சுருக்கமாக நாம் இங்குத் தெரிந்துகொள்ள முயலுவோம். ரெசிடென்ஸி சமஸ்தானங்கள் ஹைதராபாத் விஸ்தீரணம் - 82,698 சதுர மைல் ஜனத் தொகை - 14,512,161 வருமானம் சுமார் - 855 லட்சம் ரூ. இந்தியாவிலுள்ள சமஸ்தானங்களில் இதுவே பெரியது. இங்கே ஒரு ரெசிடெண்ட் உண்டு. இந்தச் சமஸ்தானத்தின் தலைநகரம் ஹைதராபாத். இதற்கருகாமையிலுள்ள செகந்திரா பாத்தில் பிரிட்டிஷ் கண்டோன்மெண்ட் என்கிற ராணுவ ஸ்தலம் இருக்கிறது. இந்தச் சமஸ்தானம் 15 ஜில்லாக்களாகவும் 153 தாலுகாக்க ளாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றது. சமஸ்தானத்திற் கென்று தனியான ரெயில்வே, நாணயச் செலாவணி, தபால் இலாகா முதலியன உண்டு. அரசாங்க நிருவாகம், ஆறுபேரடங்கிய நிருவாக சபையொன்றைக் கொண்டு நடைபெறுகிறது. இதற்குத் துணை செய்ய 20 பேரடங்கிய சட்ட சபையொன்று இருக்கிறது. தவிர, ஹைகோர்ட் தனி சர்வ கலாசாலை ஒன்றும் உண்டு. இதற்கு உஸ்மானியா சர்வ கலாசாலை என்று பெயர். இங்கு உருது பாஷை மூலமாகவே கல்வி போதிக்கப்படுகிறது. ஹைதராபாத் அரசருக்கு நைஜாம் என்று பெயர். மொகலாயர்கள் டில்லியில் சக்ரவர்த்திகளாக ஆண்டு கொண் டிருந்தபோது, அவர்களின் தட்சண தேசத்து ராஜப் பிரதிநிதியாக நைஜாம் மன்னர் பரம்பரையினர் நியமிக்கப்பட்டனர். மொகலாய சாம்ராஜ்யம் சிதறிவிடவே, இவர்கள் பின்னர் தனியரசாக நிலைத்துக் கொண்டனர். 1857ம் வருஷத்துச் சிப்பாய் கலகத்தின்போது இந்தச் சமஸ்தானாதிபதி பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பெரிதும் துணை புரிந்தது குறிப்பிடத்தக்கது. நைஜாம் மன்னர்களுக்காகக் கப்பஞ் செலுத்தக்கூடிய பல ஜாகீர்தார்களுடையதாகவே இருக்கிறது. இவர்கள் பரம்பரை பாத்தியமுடையவர்கள். இவர்களில் பலர், தங்கள் ஜாகீர்களைப் பரிபாலிப்பதோடு நைஜாம் மன்னரின் சேவையிலும் இருக்கின்றனர். தற்போது பிரதம மந்திரியாயுள்ள மகாராஜா ஸர் கிருஷ்ணபிரசாத் பகதூர் அவர்கள் இத்தகைய பரம்பரை ஜாகீர்தார்களுள் ஒருவரே. தற்போது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குட்பட்டுள்ள பீரார் மாகாணம், முன்னர் நைஜாமின் நிருவாகத்தின் கீழ் இருந்தது. பின்னர் பிரிட்டிஷார் இதனைக் குத்தகையாகப் பெற்றனர். இது சம்பந்தமாகச் சமீபத்தில் ஒருவித சமரஸம் ஏற்படுத்தப்பெற்றது. இந்த மாகாணத்திலிருந்து, நைஜாம், வருஷத்தில் சுமார் 29 லட்சம் ரூபாய் குத்தகைத் தொகையாகப் பெறுகிறார். தவிர, நைஜாம், பீராருக்கும் அதிபதி என்று சொல்லிக் கொள்ள அநுமதிக்கப் பட்டார். எப்படி இங்கிலாந்தில்,பட்டத்துக்குரிய மூத்த குமாரன் வேல்ஸ் இளவரசர் என்று அழைக்கப்படுகிறாரோ அதைப் போலவே, நைஜாம் இளவரசரும் பீரார் இளவரசர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஹைதராபாத் சமஸ்தானம், ஒரு முஸ்லீம் அரசரால் ஆளப்பட்டு வந்தபோதிலும், அங்குள்ள ஜனங்களில் பெரும் பான்மையோர் ஹிந்துக்களே. இப்படியே காஷ்மீரத்தில் அரசர் ஹிந்து. ஆனால் பிரஜைகளில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். ஹைதராபாத் அரச குடும்பத்திற்கும் துருக்கி சுல்தானுடைய குடும்பத்திற்கும் விவாக சம்பந்தம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. நைஜாமின் மூத்த குமாரர், துருக்கி சுல்தானின் மூத்த மகளையும், இளையகுமாரர், மற்றொரு துருக்கி அரச குடும்பத்துப் பெண்ணையும் விவாகம் செய்து கொண்டுள்ளார்கள். தற்போதைய அரசர் நைஜாமத் டௌலா நைஜாமுல் முல்க் அஸப் ஜா பகதூர் அவர்கள். பிறந்தது - 1886. சிம்மாசனம் ஏறியது-1911. இவர் ஆட்சியின் 25வது வருஷ வெள்ளி விழாக் கொண் டாட்டம் 1937ம் வருஷம் பிப்ரவரி மாதம் கொண்டாடப் பெற்றது. உலகத்திலுள்ள கோடீஸ்வரர் களில் நைஜாம் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. அஜண்டா, எல்லோரோ முதலிய இடங்களிலுள்ள குகைச் சித்திரங்கள் இந்தச் சமஸ்தானத்தில் பார்க்கத் தக்கவை. மைசூர் விஸ்தீரணம் - 29,475 சதுர மைல் ஜனத்தொகை - 6,557,302 வருமானம் - 364 லட்சம் ரூ. இந்தச் சமஸ்தானம் சரித்திரப் பெருமையுடையது. ராமாயண பாரத காலங்களிலிருந்தே இந்தச் சமஸ்தானம், ஒரு தனி ராஜ்யமாக இருந்து வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2200 வருஷங்களுக்கு முன்னர், பாட்னா வென்கிற பாடலிபுரத்தை ஆண்டு வந்த அசோக சக்ரவர்த்தியின் ஆதிக்கத்துக்கு இந்தச் சமஸ்தானம் உட்பட் டிருந்ததாகத் தெரிகிறது. பல்லவர், கங்கர்,ஹொய்சளர் முதலிய பல அரச வமிசத்தினரும் இந்த ராஜ்யத்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். 18,19 வது நூற்றாண்டுகளில், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியோர் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து பிரிட்டிஷாரை அடிக்கடி அச்சுறுத்திக் கொண்டிருந்தது இந்த சமஸ்தானத்திலிருந்துதான். 1799ம் வருஷம் திப்பு சுல்தான் வீழ்ந்துபட, பழைய ஹிந்து அரச பரம்பரைக்கு இந்த ராஜ்யம் மீண்டும் பிரிட்டிஷாரால் அளிக்கப் பட்டது. அதுமுதல் இது, ஹிந்து அரச பரம்பரையினராலேயே ஆளப்பட்டு வருகிறது. இங்கு ஒரு ரெசிடெண்ட் உண்டு. அரசர் வசிக்கும் இடம் மைசூர். அரசாங்க நிருவாக காரியாலயம் பெங்களூர். பெங்களூருக்கு அருகாமையில் கண்டோன்மெண்ட் இருக்கிறது. அஸெம்ப்ளி யென்றும் கவுன்சில் என்றும் இரண்டு விதமான சட்ட சபைகளும் ஒரு நிருவாக சபையும் அரசாங்க நிருவாகத்திற்குத் துணை செய்கின்றன. சுதேச சமஸ்தானங்களுக்கு வழிகாட்டி என்று பலராலும் பாராட்டப்படக்கூடிய தன்மையில் இந்தச் சமஸ்தான நிருவாகம் நடைபெறுகிறது. தவிர, கைத்தொழிலில் இந்தச் சமஸ்தானம் மிகவும் முன்னேறி யிருக்கிறது. தென்னிந்தியாவில் ஓடும் முக்கிய நதிகளான பாலாறு, காவேரி, தென்பெண்ணை முதலிய நதிகள் யாவும் இந்தச் சமஸ்தானத்திலிருந்தே உற்பத்தியா கின்றன. பொன், வெள்ளி, இரும்பு முதலிய உலோகங்கள் இங்கு அதிகம் கிடைக்கின்றன. மைசூருக்கென்று தனியான ஒரு சர்வகலாசாலை உண்டு. மைசூரில் வருஷந்தோறும் நடைபெறும் தசரா உற்சவத்திற்கும் பொருட் காட்சிக்கும் ஏராளமான ஜனங்கள் செல்கிறார்கள். திப்பு சுல்தான் ஆட்சி புரிந்த காலத்தில் தலைநகராயிருந்த ஸ்ரீரங்கப்பட்டணம், மின்சார உற்பத்தி ஸ்தலமாகிய சிவ சமுத்திரம், கோலார் தங்கச் சுரங்கம் முதலியன பார்க்கத் தகுந்தன. தற்போதைய அரசர் ஸ்ரீகிருஷ்ண ராஜ உடையார் பகதூர் அவர்கள். பிறந்தது - 1884. சிம்மாசனம் ஏறியது - 1902. பரோடா விஸ்தீரணம் - 8,164 சதுர மைல் ஜனத்தொகை - 2,443,007 வருமானம் - 270 லட்சம் ரூ 18 வது நூற்றாண்டின் இடைப்பாகத்தில் இந்தச் சமஸ்தானம் ஏற்பட்டது. மொகலாய சாம்ராஜ்யத்துக்குட் பட்டிருந்த குஜராத் பிரதேசத்தை அந்தச் சாம்ராஜ்யம் பலஹீனமாகப் போன பிறகு, மஹாராஷ்ட்ரர்கள் அடிக்கடி தாக்கிக் கொண்டு வந்தார்கள். இவர்களில் ஒருவன் பிலாஜி கெய்க்வார் என்பவன். இவனே பரோடா சமஸ்தானத்தின் ஸ்தாபகன். இவனுக்குப் பின் வந்த சந்ததியாரும் கெய்க்வார் என்று அழைக்கப்பட்டனர். இந்தச் சமஸ்தானாதிபதிகளுக்கும் மஹாராஷ்ட்ரா பீஷ்வாக்களுக்கும் சச்சரவு உண்டாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தலையிட்டு, கெய்க்வாரின் அந்நிய நாட்டு விவகாரங்களைத் தாங்கள் கவனித்துக் கொள்வதாகக் கூறினர். பின்னர் இடையிடையே, இந்தச் சமஸ் தானம் பிரிட்டிஷாருடைய மேற்பார்வையில் இருந்தது. 1875ம் வருஷம், அப்பொழுது ஆண்டுக் கொண்டிருந்த அரசர் சரியானபடி ஆளவில்லை யென்று சொல்லி, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அவனைச் சிம்மாசனத் தினின்று இறக்கிவிட்டனர். அவருக்கு நேர் வாரிசு இல்லை. எனவே, தூர பந்துவாகிய, சயாஜி ராவ் என்ற 13 வயதுச் சிறுவனைப் பொறுக்கி யெடுத்தனர். அந்தச் சிறு பையனே தற்போதைய மகாராஜா. இவர் பிறக்கும் போது அரசுரிமையோடு பிறக்கவில்லை. ஏழைக் குடும்பத்திலே பிறந்தார். இதனால் முயற்சியும் உழைப்பும் இவரிடம் அதிகம். சுதேச சமஸ்தானங் களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது என்ற பெயர் இந்த பரோடா சமஸ்தானத்துக்கு ஒரு காலத்தில் ஏற்பட்டது இவருடைய உழைப்பினால் தான். சமீபகாலமாக இவர், பெரிதும் வெளிநாடுகளிலேயே காலங்கழித்து வருகிறார். இந்தச் சமஸ்தானத்திற்கு ரெசிடெண்ட் உண்டு. இலவசக் கட்டாயக் கல்விமுறை அநுஷ்டானத்தில் இருந்து கொண்டு வருகிறது. 100க்கு 18பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். தற்போதைய அரசர் மூன்றாவது சயாஜி ராவ் பகதூர் அவர்கள் பிறந்தது - 1863. சிம்மாசனம் ஏறியது - 1881. காஷ்மீர் விஸ்தீரணம் - 84,258 சதுரமைல் ஜனத்தொகை - 32,59,527 வருமானம் - 270 லட்சம் ரூ. இந்தச் சமஸ்தானம் இந்தியாவின் வடகோயில், மலைகள், கணவாய்கள் முதலியன நிறைந்ததாய், இயற்கை வளத்திற்காக உலகத் தினால் வியந்து பாராட்டப் படக்கூடியதாய் இருக்கிறது. ஜம்மு பிரதேசமும் இந்தச் சமஸ்தானத்தைச் சேர்ந்ததே. ஜனத் தொகையில் பெரும்பாகம் முஸ்லீம்கள். ஆனால் ஹிந்து அரசர். பிரிட்டிஷாருக்கும் சீக்கியர்களுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் (1846ம் வருஷத்து சோப்ராயோன் யுத்தம்) பிரிட்டிஷாருக்குச் சாதகமாக இருந்ததற்காக, இந்தச் சமஸ்தானம், தற்போதுள்ள அரச பரம்பரையினருக்குக் கிடைத்தது. கோடைகால சௌகரியத்திற்காக, உலகத்தின் பல பாகங்களி லிருந்தும் யாத்திரிகர் பலர் இந்தச் சமஸ்தானத்திற்கு வருவதுண்டு. ஸ்ரீநகர் முதலிய சில ஊர்களில், குறுக்கும் நெடுக்குமாகக் கால்வாய்கள் பல ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இரு கரை யிலும் வீடுகள் அமைந்திருக்கும். படகுகள் மூலமாக போக்கு வரவு நடைபெறும் படகுகளையே வீடுகளாக அமைத்துக் கொண்டு பலர் வாழ்கின்றனர். அரசாங்க நிருவாகத்தில் அரசருக்குத் துணை செய்ய, நிருவாக சபையொன்று 1992ம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்டது. சமஸ்தானத்தின் தலைநகரமாகிய ஸ்ரீநகரில் பிரிட்டிஷ் ரெக் டெண்ட் ஒருவர் இருக்கிறார். தவிர, கில்கிட் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவப் படையொன்று இருக்கிறது ஹைகோர்ட் ஒன்று உண்டு. இந்தச் சமஸ்தானத்தில் பட்டு உற்பத்தி பிரசித்த மானது. ஜனங்களிற் பெரும்பாலோர் விவசாயிகள். இயற்கை வளம் நிரம்பிய காடுகள் அதிகமான படியால் மர உற்பத்தி அதிகம். சமஸ்தானத்தில் போக்கு வரவு சாதனம் மிகக் குறைவு. மலைப் பிரதேசங்கள் அதிகமாயிருப்பதே இதற்குக் காரணம். ஒரு ரெயில்வே தொடர் மட்டும் இந்தச் சமஸ்தானத்தில் ஓடுகிறது. தற்போதைய அரசர் ஸர் ஹரிசிங் பகதூர் அவர்கள் பிறந்தது - 1894. பட்டத்திற்கு வந்தது - 1925. சென்னை மாகாண ஏஜென்சி சமஸ்தானங்கள் திருவாங்கூர் விஸ்தீரணம் - 7,625 சதுர மைல் ஜனத்தொகை - 5,095,973 வருமானம் - 239 லட்சம் ரூ. தமிழ்நாட்டு மூவேந்தர்களில் ஒருவராகிய சேர மன்னரது பரம்பரையே தற்போதைய திருவாங்கூர் ராஜ வம்சம் என்று சொல் கிறார்கள். 18வது நூற்றாண்டில், திப்பு சுல்தானுக்கும் பிரிட்டிஷாருக்கும் நடந்த போராட்டத்தில், திருவாங்கூர் சமஸ்தானம் பிரிட்டிஷாருக்குத் துணை செய்தது. பின்னர், திப்பு முதலியவர்களுடைய படை யெடுப்பினின்று இந்த சமஸ்தானத்தைக் காப்பாற்றுவதாகக் கிழக்கிந்திய கம்பெனியார் ஒப்புக்கொண்டனர். 1795ம் வருஷம் கம்பெனியாருக்கும் இந்த சமஸ்தானத்திற்கும் ஓர் உடன்படிக்கை நிறைவேறியது. தற்போதைய அரசர் ஸ்ரீ மஹாராஜா ராம வர்மா அவர்கள், பிறந்தது - 1912. இவர் 12 வயது அடையுங்காலத்தில், இவருக்கு முன்னிருந்த அரசராகிய ஸ்ரீமூலம் திருநாள் அவர்கள் காலமாகி விட்டார். எனவே அரசர் மைனராயிருந்தபடியால், அவருடைய பெரிய தாயார் ஸ்ரீசேது லட்சுமிபாய் அவர்கள் ரீஜெண்டாக இருந்து 1931ம் வருஷம் வரை நிருவாகத்தை நடத்தி வந்தார். இவர் ரீஜெண்டாக இருந்த காலத்தில் பல சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன. தற்போதைய அரசர் 1931ம் வருஷம் பட்டத்துக்கு வந்த பிறகு, ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து உலக அனுபவம் பெற்றார். இதற்கு முன் திருவாங்கூர் மன்னர் எவரும் வெளிநாடுகள் சென்றது கிடையாது. தவிர, தற்போதைய அரசர் மைசூர் சமஸ்தானத்தில் சில காலம் இருந்து, நிருவாகப் பயிற்சி பெற்றார். ஸ்ரீ மூலம் அஸெம்ப்ளி யென்றும் ஸ்ரீ சித்திரை ஸ்டேட் கவுன்சில் என்றும் இரண்டு சட்ட சபைகள் அரசாங்க நிருவாகத்தில் துணை செய்கின்றன. ஆனால் நிருவாக சபை கிடையாது. திவான் என்கிற பிரதம மந்திரியே, நிருவாக மனைத்திற்கும் பூரண பொறுப்பாளி. ஹைகோர்ட் ஒன்று உண்டு. இந்தச் சமஸ்தானம் கல்வியில் மிகவும் முன்னேறியிருக்கிறது. சிறப்பாகப் பெண் கல்வி அபிவிருத்தி அதிகம். பரம்பரை வைதிகம் நிரம்பிய இந்தச் சமஸ்தானம், சமீபத்தில் தீண்டாதாருக்கு ஆலயப் பிரவேச உரிமை அளித்து சரித்திரத்தில் நிரந்தரமான ஒரு ஸ்தானத்தைப் பெற்றுவிட்டது. இந்தச் சமஸ்தானத்து நடைமுறைகள் யாவும் பழைய ஹிந்து சம்பிரதாயப் படியே இருக்கும். ஆலயங்களும், அன்ன சத்திரங்களும் இங்கு அதிகம். இந்தச் சமஸ்தானம் இயற்கை வளம் நிரம்பியது. தென்னை, கமுகு, வாழை முதலியன மிகுதி. காடுகளில் யானைகள் மிக உண்டு. தந்தத்தினால் பல வகைச் சாமான்கள் செய்யப்பட்டு வெளி நாடுகளில் விற்கப்படுகின்றன. கொச்சி விஸ்தீரணம் - 1,480 சதுரமைல் ஜனத்தொகை - 1,205,016 வருமானம் - 92 லட்சம் ரூ. பழைய தமிழ் நூல்களில், சேரமான் பெருமாள் என்று புலவர்களால் போற்றப்பட்டு வந்த அரசனுடைய சந்ததியினரே தற்போதைய கொச்சி அரச வமிசத்தினர் என்று சொல்லப்படுகிறது பின்னர். ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகிய இவர்களுடைய ஆதிக்கத்தில் இந்தச் சமஸ்தானம் இருந்து வந்தது. 1791ம் வருஷம், இந்தச் சமஸ்தானத்திற்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு, அதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கத்துப் பாதுகாப்பு நிழலில் இருந்து கொண்டு வருகிறது. இங்குச் சட்டசபை ஒன்று உண்டு. திவானின் உதவிக் கொண்டு நிருவாகம் நடைபெறுகிறது. கல்வியில் இது மிகவும் முன்னேறி யிருக்கிறது. இந்தச் சமஸ்தான எல்லைக்குள் காட்டுப் பிரதேசங்கள் ஏராளமாக இருப்பதால், அவைகளின் மூலமாக அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கிறது. சமஸ்தானத் திற்குச் சொந்தமாக ரெயில் பாதையும் உண்டு. தற்போதுள்ள அரசர் ஸ்ரீராம வர்மா அவர்கள். பிறந்தது - 1860. சிம்மாசனம் ஏறியது - 1932. திருவாங்கூர், கொச்சி ஆகிய இரு சமஸ்தானங்களிலும், பிரிட்டிஷ் மலையாளப் பிரதேசங்களிலும் சொத்துரிமை, மூத்த சகோதரி பிள்ளைகளுக்கே உண்டு. இதற்கு மருமக்கத்தாயம் என்று பெயர். புதுக்கோட்டை விஸ்தீரணம் - 1,179 சதுரமைல் ஜனத்தொகை - 400,694 வருமானம் - 53 லட்சம் ரூ. தொண்டைமான் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களே இந்தச் சமஸ்தானத்தை ஆண்டு வருகின்றனர். இவர்கள் 1950-52ம் வருஷங்களில் பிரெஞ்சுக்காரருக்கும் பிரிட்டிஷாருக்கும் மும்முரமான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பிரிட்டிஷாருக்குத் துணை செய்தனர். தவிர, ஹைதர் அலி மீது தொடுக்கப்பெற்ற யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு இந்தச் சமஸ்தானம் பெரிதும் துணையாயிருந்தது. தற்போதைய அரசர் ஸ்ரீ ராஜ கோபாலத் தொண்டைமான் பகதூர் அவர்கள் மைனராயிருக்கிற படியால், நிருவாகம் ஒரு நிருவாகஸ்தரின் கீழ் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் ஒரு காலேஜ் உண்டு. பங்கனபள்ளி விஸ்தீரணம் - 275 சதுர மைல் ஜனத்தொகை - 40,000 வருமானம் - 4 லட்சம் ரூ. கர்நூல் ஜில்லாவிலுள்ள ஒரு சிறிய முஸ்லீம் சமஸ்தானம். இது எவ்வித கப்பமும் கட்டுவதில்லை. தற்போதைய நவாப் - மீர் அலிகான் பகதூர் அவர்கள் பிறந்தது - 1901. பட்டம் கட்டிக் கொண்டது - 1922. சாண்டூர் விஸ்தீரணம் - 167 சதுர மைல் ஜனத்தொகை - 13,583 வருமானம் - 1½ லட்சம் ரூ. பெல்லாரி ஜில்லாவிலுள்ள இந்தச் சமஸ்தானத்தின் தற்போதைய அரசர் ஸ்ரீமத் ஹிந்து ராவ் கோர்பாடே. இவர் எவ்வித கப்பமும் செலுத்துவதில்லை. மத்திய இந்தியா ஏஜென்சி சமஸ்தானங்கள் இந்தோர் விஸ்தீரணம் - 9,902 சதுரமைல் ஜனத்தொகை - 1,325,000 வருமானம் - 135 லட்சம் ரூ. மஹாராஷ்ட்ர சாம்ராஜ்யம் சரிந்து போனபோது, அதிலிருந்து பிரிந்த ஒரு பரம்பரையினரே இந்தச் சமஸ்தானத்தின் அதிபதிகள். இந்தச் சமஸ்தானத்தின் ஸ்தாபகன் மல்ஹார்ராவ் ஹோல்கார். இதனால் இந்தச் சமஸ்தான அரசர்கள் ஹோல்கார் என்று அழைக்கப்படுகிறார்கள். 19வது நூற்றாண்டுத் தொடக் கத்தில் இந்தச் சமஸ்தானத்தை நிருவகித்து வந்த ஸ்ரீ அகல்யாபாய் அம்மையாரின் நிருவாகம், இன்னும் கவிகளாலும் அரசியல் தந்திரிகளாலும் பாராட்டப் பெற்று வருகிறது. தற்போதைய அரசர் ஸ்ரீ யஸவந்தராவ் ஹோல்கார். பிறந்தது 1908. சிம்மாசனம் ஏறியது - 1930. இவர் இங்கிலாந்தில் படிப்பிக்கப் பெற்றார். இவருடைய நிருவாகத்தின் கீழ் சமஸ்தானம் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. சமஸ்தானத்தின் தலை நகரமாகிய இந்தோரில் நெசவுச் சாலைகள் மிக அதிகம். பம்பாயிலிருந்து வட இந்தியாவுக்குச் செல்லும் ரயில் தொடர் இந்தோர் வழியாகவே செல்கிறது. குவாலியர் விஸ்தீரணம் - 26,367 சதுர மைல் ஜனத்தொகை - 3,523,070 வருமானம் - 242 லட்சம் ரூ. இதுவும் மஹாராஷ்ட்ர சாம்ராஜ்யத்திலிருந்து சிதறிய பிரதேசம். பீஷ்வாக்களினால், 1726ம் வருஷம் ரணோஜி சிந்தியா என்பவனுக்கு இந்தச் சமஸ்தானம் மானியமாக அளிக்கப்பட்டது. இதனால் இந்த அரச பரம்பரையினருக்கு சிந்தியா என்று பெயர். இவர்கள் சுத்த வீரர்கள். பிரிட்டிஷாரோடு பலமுறை போர் புரிந்திருக்கிறார்கள். கடைசியில் 1782ம் வருஷம், இவர்களை தனி அரசினராகப் பிரிட்டிஷார் அங்கீகரித்தனர். பின்னர், 1857ம் வருஷத்துச் சிப்பாய் கலகத்தின் போது இந்தச் சமஸ்தானத்தினர் பிரிட்டிஷாருக்குப் பெரிதும் துணை செய்தனர். இந்தச் சமஸ்தானத்தின் தற்போதைய அரசர் ஸ்ரீ ஜீவாஜி ராவ் சிந்தியா அவர்கள் சமதானத்திற்கென்று சொந்த ரெயில்வே, தபால் முதலியன உண்டு. ஜி.ஐ.பி.ரெயில்வேயின் பெரும்பாகம் இந்தச் சமஸ்தானத்தின் வழியாகவே செல்கிறது. போபால் விஸ்தீரணம் - 6,902 சதுர மைல் ஜனத்தொகை - 729,955 வருமானம் - 70 லட்சம் ரூ. இஃது ஒரு முஸ்லீம் சமஸ்தானம், மத்திய இந்தியாவி லுள்ளது. 19வது நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிண்டாரிகள் என்னும் கொள்ளைக் கூட்டத்தை அடக்குவதில் பிரிட்டி ஷாருக்குத் துணை செய்தது இந்தச் சமஸ்தானம். இந்தச் சமஸ்தானத்திற்கு நிருவாக சபை, சட்டசபை, ஹைகோர்ட் முதலியன உண்டு. புத்தமதச் சின்னங்கள் பல இங்கு உள்ளன. தற்போதைய நவாப் முகம்மது ஹமீதுல்லா கான் பகதூர் அவர்கள். பட்டத்திற்கு வந்தது - 1926. ரீவா விஸ்தீரணம் - 13,000 சதுர மைல் ஜனத்தொகை - 1,587,445 வருமானம் - 60 லட்சம் ரூ. தற்போதைய அரசர் ஸ்ரீ குலாப்சிங்ஜி பகதூர். பிறந்தது - 1903. சிம்மாசனம் ஏறியது - 1922. இவர் மிருக வேட்டையாடுவதில் வீரரெனப் பெயர் பெற்றிருக்கிறார். இதுவரை சுமார் ஐந்நூறு புலிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். மற்ற சமஸ்தானங்கள் பெயர் சதுரமைல் ஜனத்தொகை வருமானம் விஸ்தீரணம் லட்சம் ரூ. ஊர்ச்சா 2,080 314,661 10 டாடியா 912 158,834 133/4 தார் 1,800 243,430 17½ தேவாஸ் சீனியர் 449 083,321 9½ தேவாஸ் ஜூனியர் 419 070,513 6 சம்தார் 178 033,307 3½ ஜவ்ரா 602 100,166 13 ராஜபுதன ஏஜென்சி சமஸ்தானங்கள் உதயபுரி விஸ்தீரணம் - 12,694 சதுர மைல் ஜனத்தொகை - 1,566,910 வருமானம் - 80 லட்சம் ரூ. ராஜபுதனத்திலுள்ள இந்தச் சமஸ்தானம், இந்திய சரித்திரத்தில் மீவார் என்று அழைக்கப் பெற்றது. இந்தச் சமஸ்தான மன்னர் களுக்கு மகாராணா என்று பெயர். அக்பர் சக்கர வர்த்திக்குத் தலை வணங்க முடியாதென்று சொல்லி சுமார் 25 வருஷ காலம் அரவல்லி மலைப் பிரதேசங்களிலே அலைந்து சொல் லொணாத் துன்பம் அநுபவித்த மகாராணா பிரதாப் சிங்கின் வழித்தோன்றல்களே தற்போதைய அரச பரம்பரையினர். இதனால் இந்தச் சமஸ்தானாதிபதிக்கு அதிக கௌரவமும் மதிப்பும் உண்டு. ராஜ புதனத்தில் மொத்தம் 21 சமஸ்தானங்கள் இருக்கின்றன. அவற்றில் 19 சமஸ்தான மன்னர்கள் ராஜ புத்திரர்கள். இவர்களில் உதயபுரி சமஸ்தானத்திற்குத்தான் அதிக கௌரவமும் பரம்பரைப் பெருமையும் உண்டு. தற்போதைய மகாராணா ஸர் பூபால் சிங்ஜி பகதூர். பட்டமேற்றது - 1930. ஜோதிபுரி விஸ்தீரணம் - 35,016 சதுர மைல் ஜனத்தொகை - 2,125,982 வருமானம் - 140 லட்சம் ரூ. இந்தச் சமஸ்தானத்து அரச பரம்பரையினர். ராஜ புத்திரர்களில் ராதோர் கிளையைச் சேர்ந்தவர்கள், இவர்கள், ராமாயணத்துக் கதா நாயகனாகிய ஸ்ரீ ராமனுடைய வழித்தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 1459ம் வருஷத்தில் ஜோதா என்பவன் இந்தச் சமஸ்தானத்தை ஸ்தாபித்தவன். அவுரங்கசீப் சக்ரவர்த்தி காலத்தில் இந்தச் சமஸ்தானம் அதிக கஷ்டங்களுக்குட் பட்டது. ராஜபுத்திர சரித்திரத்தில் கூறப்பட்டுள்ள மார்வார் தேசந்தான் தற்போதைய ஜோதிபுரி சமஸ்தானம். 1818ம் வருஷத்தில் இதற்கும் பிரிட்டிஷ் அதிகாரத்திற்கும் உடன்படிக்கை ஏற்பட்டது. தற்போதைய அரசர் ஸ்ரீ உமேத சிங் பகதூர். பிறந்தது - 1903. சிம்மாசனம் ஏறியது - 1923. இவர் கல்வியபிவிருத்தியில் மிகவும் ஊக்கங் கொண்டவர். காசி ஹிந்து சர்வ கலாசாலைக்கு 3 லட்சம் ரூபாய் நன்கொடை யளித்திருக்கிறார். அரசாங்க நிருவாகத்தை ஒரு நிருவாக சபையின் உதவி கொண்டு நடத்துகிறார். சமஸ்தான விஸ்தீரணத்தில் ஆறில் ஐந்து பாகம் சர்தார்கள் என்கிற ஜமீன்தார் கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. பிகானீர் விஸ்தீரணம் - 23,317 சதுர மைல் ஜனத்தொகை - 936,218 வருமானம் - 150 லட்சம் ரூ. இந்தச் சமஸ்தானத்தின் பெரும்பாகம் மணற்பிரதேசம், தண்ணீர் கிடைப்பது அருமை, சில இடங்களில் 300 அடி ஆழங் கூட கிணறு தோண்ட வேண்டியிருக்கிறது. இந்தச் சமஸ்தானம் 1465ம் வருஷம் ராவ் பிகாஜி என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டது. இதனாலேயே இதற்கு பிகானீர் என்று பெயர் வந்தது. இந்தச் சமஸ்தான அரசர்கள், மொகலாய சாம்ராஜ்யத்திற்கு முக்கிய தூண்களாயிருந்தனர். அதைப் போலவே, பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும், சிப்பாய் கலகத்தின் போது, இந்தச் சமஸ்தானாதிபதி யான சர்தார் சிங், தாமே நேராகப் படைகளைத் திரட்டிக் கொண்டு சென்று பிரிட்டிஷாருக்குத் துணை செய்தார். தற்போதைய அரசர் ஸ்ரீ கங்கா சிங் அவர்கள். பிறந்தது - 1880. பட்ட மேற்றது - 1898. 1914ம் வருஷத்து ஐரோப்பிய யுத்தத்தின் போது இவர் பல அரிய சேவைகளைப் பிரிட்டிஷாருக்காகச் செய்திருக் கிறார். சமஸ்தான நிருவாகம், பிரதம மந்திரிக் குட்பட்ட ஒரு நிருவாக சபையின் துணை கொண்டு நடைபெறுகிறது. 45 அங்கத் தினர்கள் கொண்ட ஒரு சட்ட சபையும் உண்டு. இது வருஷத்திற்கு இரண்டு முறை கூடுகிறது. சமஸ்தானத்தில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது. ஆள்வார் விஸ்தீரணம் - 3,158 சதுர மைல் ஜனத்தொகை - 749,751 வருமானம் - 35 லட்சம் ரூ. ஸ்ரீ ராமனின் மூத்த புதல்வனாகிய குசனுடைய நேரான வமிசத்தினர் என்று இந்தச் சமஸ்தானாதிபதிகள் சொல்லிக் கொள் கிறார் கள். 1803ம் வருஷத்தில் இந்தச் சமஸ்தானாதிபதிக்கும் பிரிட்டிஷாருக்கும் ஒரு சிநேக உடன்படிக்கை ஏற்பட்டது. ஐரோப்பிய யுத்த காலத்தில் இந்தச் சமஸ்தானம் முன்னணியில் நின்று உதவி புரிந்திருக்கிறது. தற்போதைய அரசர் ஸ்ரீ ஜெயசிங்ஜி பகதூர் அவர்கள். பிறந்தது - 1882. பட்டமேற்றது - 1903. ஐந்து பேரடங்கிய ஒரு மந்திரிச் சபையின் துணை கொண்டு இவர் அரசாங்கத்தை நடத்துகிறார். மற்றச் சமஸ்தானங்கள் பெயர் சதுர மைல் ஜனத்தொகை உத்தேசவரு. விஸ்தீரணம் லட்ச ரூ. சிரோஹி 1,958 216,528 10½ பன்ஸ்வாரா 1,606 225,106 7 துங்கார்பூர் 1,447 227,544 8 பிரதாப்கார் 886 66,539 5½ ஜயபுரி 15,579 2,631,775 120 கிஷன்கார் 858 85,774 9 டோங்க் 2,553 317,360 22½ லாவா 19 2,790 ½ ஜயஸல்மீர் 16,062 76,255 4 பளன்பூர் 1,769 264,179 11 டண்டா 347 26,172 13/4 புண்டி 2,220 216,722 16½ பாத்பூர் 1,978 486,954 29 தோல்பூர் 1,221 254,986 16½ கோடா 5,684 685,805 51 மேற்கிந்தியா ஏஜென்சி சமஸ்தானங்கள் இந்தச் சமஸ்தானங்களில் பல பம்பாய் மாகாணத்தி லிருக்கின்றன. இவற்றில் கத்தியவார் சமஸ்தானத் தொகுதியென்று ஒன்று உண்டு. இந்தத் தொகுதியில் சுமார் 200 சில்லரை சமஸ் தானங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சமஸ்தானமும் சில மைல் விஸ்தீரணமும் ஒரு சில நூறு பேரை பிரஜைகளாகவும் உடையது. இவைகளுக்கு பிராந்த் என்று பெயர். கத்தியவாரிலும், பஞ்சாபி லும்தான் குட்டி சமஸ்தானங்கள் பல இருக்கின்றன. இவை தவிர, இந்த ஏஜென்ஸியில், மஹிகாந்தா பகுதிக்குட்பட்ட வேறு பல சிறு சமஸ்தானங்களும் இருக்கின்றன. மற்ற முக்கிய சமஸ்தானங்கள் வருமாறு:- பவநகர், தரங்கதரா, கோண்டால், ஜூனகாட், நவநகர்,கட்ச்,போர்பந்தர்,ரதன்பூர்,இடார், விஜயநகரம் முதலியன. குஜராத் மாகாண ஏஜென்ஸி சமஸ்தானங்கள்: .இவை பம்பாய் மாகாணத்தின் வட பாகத்திலும் குஜராத் பிரதேசத்திலும் இருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை வருமாறு:- பெயர் சதுர மைல் ஜனத்தொகை உத்தேசவரு. விஸ்தீரணம் லட்ச ரூ. பலாஸினோர் 189 52,525 2½ பன்ஸ்டா 215 48,807 7½ பாரியா 813 159,429 12 காம்பே 350 87,761 10½ சோடா உடேபூர் 890 144,640 14½ தரம்பூர் 704 112,051 12 ஜவ்ஹர் 310 57,288 5½ லுனவாடா 388 95,162 5½ ராஜ்பிப்லா 1,517 206,114 24½ சசின் 49 22,125 4 சாந்த் 394 83,538 5½ தட்சண ஏஜென்ஸி சமஸ்தானங்கள்: இவற்றில் முக்கியமானவை சில:- பெயர் சதுர மைல் ஜனத்தொகை உத்தேசவரு. விஸ்தீரணம் லட்ச ரூ. கோல்ஹாபூர் 3,217 957,137 145 ஜஞ்ஜீரா 379 110,366 8 சவந்தவாடி 930 230,589 6¼ முத்ஹோல் 368 62,860 53/4 சாங்க்ளி 1,136 258,442 15½ போர் 925 141,546 63/4 கிழக்கிந்திய ஏஜென்ஸி சமஸ்தானங்கள் பீஹார், ஒரிஸா, மத்திய மாகாணம் இந்த மாகாணங்களிலுள்ள சிறிய சுதேச சமஸ்தானங்கள் யாவும் ஒரு தனி ஏஜென்ஸியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை வருமாறு:- கார்ஸவான், சரைகாலா, பஸ்தார், சுர்ருஜா முதலியன. பஞ்சாப் மாகாண ஏஜென்ஸி சமஸ்தானங்கள்: பெயர் சதுர மைல் ஜனத்தொகை உத்தேசவரு. விஸ்தீரணம் லட்ச ரூ. பாடியாலா 5,942 1,625,520 145 பவல்பூர் 16,434 984,612 45 கேர்பூர் 6,050 227,143 15 ஜிண்ட் 1,299 324,676 24 நாபா 947 287,574 255 கபுர்தாலா 599 316,757 36 மண்டி 1,139 207,465 126 சீர்மூர் 1,046 148,568 59 பிலாஸ்பூர் 453 100,994 3 பரீத்கோட் 638 164,364 173 சம்பா 3,127 146,870 88 சுகேத் 392 58,408 22 லோஹாரு 226 23,338 13 மாலர்கோட்லா 165 83,072 85 பலுசிஸ்தான் ஏஜென்ஸி சமஸ்தானங்கள்: இந்தச் சமஸ்தானங்கள் இந்தியாவின் வட மேற்குப் பாகத்தில் இருக்கின்றன. இவை கலத், லாஸ்பேலா என்பன. இவற்றில் கலத் சமஸ்தானத்தில் பல ஜாகீர்கள் உண்டு. இவற்றிற்கெல்லாம் தலைவ ராகவே கலத் நவாப் இருக்கிறார். இவரை கான் என்றே அழைப்பர். கலத் சமஸ்தானத்தின் மொத்த விஸ்தீரணம் 73,278 சதுர மைல்; ஜனத் தொகை 34,210 உத்தேச வருமானம் 14 1/2 லட்சம் ரூ. வடமேற் கெல்லைப்புற மாகாண சமஸ்தானங்கள்: இந்த மாகாணத்தில் அம்ப், தீர், ஸ்வாட், சித்ரால் முதலிய சிறிய சமஸ்தானங்கள் இருக்கின்றன. இவற்றில் அம்ப் என்பது ஒரு சிறிய கிராமம், இந்த எல்லைப்புற சமஸ்தானங்களின் மொத்த விஸ்தீரணம் சுமார் 8,800 சதுர மைல்; ஜனத்தொகை சுமார் 6 லட்சம். அந்தந்த மாகாணங்களின் மேற் பார்வையில் சில சமஸ் தானங்கள் இருக்கின்றனவென்று சொன்னோமல்லவா? அவற்றில் முக்கிய மானவை:- வங்காள மாகாணத்தில் பெயர் சதுர மைல் ஜனத்தொகை உத்தேசவரு. விஸ்தீரணம் லட்ச ரூ. கூச்பீஹார் 1,318 590,866 40 திரிபுரா 4,116 382,450 20 அஸ்ஸாம் மாகாணத்தில் பெயர் சதுர மைல் ஜனத்தொகை உத்தேசவரு. விஸ்தீரணம் லட்ச ரூ. மணிபூர் 8,620 445,606 9 காசி 3,600 180,000 - - இந்தக் காசியைப் பல சிறிய சமஸ்தானங்களின் தொகுதி யென்றும் சொல்லலாம். இதில் சுமார் 25 சில்லரைச் சமஸ்தானங்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் நோங்க்ளிவை என்றொரு சமஸ்தானம் உண்டு. இதன் பிரஜைகள் 213 பேர்தான். ஐக்கிய மாகாணத்தில் பெயர் சதுர மைல் ஜனத்தொகை உத்தேசவரு. விஸ்தீரணம் லட்ச ரூ. ராம்பூர் 892 464,919 62 டெஹ்ரி 4,502 470,109 19 காசி 875 391,165 29 இந்த சமஸ்தானங்களைத் தவிர, சிக்கிம், பூடான் என்ற இரண்டு சமஸ்தானங்கள் உண்டு. சிக்கிம் என்பது டார்ஜிலிங் ஜில்லாவுக்கு வடக்கேயும் திபேத்துக்குத் தெற்கேயும் உள்ள ஒரு பிரதேசம். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் நேபாள ராஜ்யத்திற்கும் யுத்தம் ஏற்பட்டபோது, பிரிட்டிஷாருக்குத் துணை செய்தனர். இந்தச் சமஸ்தானாதிபதிகள். இதற்காக இவர்களுக்கு அதிகமான பூப்பிரதேசங்கள் மானியமாக விடப்பட்டன. இந்தச் சமஸ்தானத்தைச் சேர்ந்திருந்த டார்ஜீலிங்கை 1835ம் வருஷம், பிரிட்டிஷார் வாங்கிக் கொண்டனர். இதற்காக இந்தச் சமஸ்தானாதிபதிக்கு வருஷம் 12 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. பூடான் பூடான் என்பது இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு தனி சமஸ்தானம். ஒரு வகையில் சுதந்திரமுள்ளது என்றும் கூறலாம். இதன் விஸ்தீரணம் 18,000 சதுர மைல்; ஜனத்தொகை 3 லட்சம். இந்த ராஜ்யத்தி லிருந்து சில பிரதேசங்களைப் பிரிட்டிஷார் 1865ம் வருஷம் எடுத்துக் கொண்டு வருஷத்தில் ½ லட்சம் ரூபாய், மேற்படி ராஜ்யத்திற்குச் செலுத்திக் கொண்டு வந்தனர். 1910ம் வருஷம் ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக இந்தத் தொகை ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்தச் சமஸ்தானத்தில் பிரிட்டிஷ் ஸ்தானீகர் ஒருவர் இருக்கிறார். நேபாளம் இஃது ஒரு சுதந்திர ஹிந்து ராஜ்யம். இமயமலைச் சாரலில் உள்ள இந்த ராஜ்யம் 56,000 சதுர மைல் விஸ்தீரணமுடையது. 5,580,000 ஜனத்தொகையுடையது. இங்கே ஒரு சக்ரவர்த்தி ஆட்சி புரிகிறார். ஆனால் இவருக்கு அதிகமான அதிகாரம் கிடையாது. எல்லாம் பிரதம மந்திரியின் நிருவாகத்தில் தான் நடைபெறுகின்றன. ஐரோப்பிய யுத்த காலத்தில், இந்த ராஜ்யம் பிரிட்டிஷாருக்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக் கிறது. இந்த உதவிக்கு அறிகுறியாக, பிரிட்டிஷ் அரசாங்கம், வருஷந் தோறும் பத்து லட்சம் ரூபாய் சன்மானமாகச் செலுத்துகிறது. இந்த ராஜ்யத்தில் ரெயில், தந்தி, டெலிபோன், மின்சாரம் முதலிய தற்கால நாகரிக வசதிகள் யாவும் உண்டு. ராஜ்யத்தின் மொத்த வருமானம் சுமார் இரண்டு கோடி ரூபாய். தலை நகரம் - காட்மண்டு. இங்கு பிரிட்டிஷ் ஸ்தானீகர் ஒருவர் இருக்கிறார். III நரேந்திர மண்டலம் மாண்டேகு - செம்ஸ்போர்ட் சீர்த்திருத்த அறிக்கையின் பயனாக, சுதேச சமஸ்தானாதிபதிகள் பலரும் ஒன்று சேர்ந்து, தங்களுக்குள் அடிக்கடி கலந்தாலோசிக்க ஒரு சபையை ஸ்தாபித்துக் கொண்டார்கள். இதற்கு நரேந்திர மண்டலம் அல்லது சுதேச மன்னர் சபை என்று பெயர். 1921ம் வருஷம் இந்தச் சபை ஸ்தாபிக்கப் பட்டது. இதற்கு கவர்னர் ஜெனரல் தலைவர். மரியாதைக் குண்டுகள் பெறும் அந்தஸ்துள்ள 108 சுதேச மன்னர்கள் இதில் அங்கத்தினர். தவிர, சில்லரை சமஸ்தானங்கள் ஒன்று சேர்ந்து, தங்களுக்குள் ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுத்து இதில் அங்கத்தினராயிருக்கும்படி சொல்லலாம். அப்படிப்பட்ட பிரதிநிதிகள் மொத்தம் 12 பேர். சிபார்சு ரூபமான தீர்மானங்களை நிறைவேற்றத் திருப்தியடைகிற இந்தச் சபையின் சட்டதிட்டங்கள் இந்தியா மந்திரியின் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன. 1929ம் வருஷம் வரையில் இந்தச் சபையின் நடவடிக்கைகள் ரகசியமாகவே நடைபெற்றுக் கொண்டு வந்தன. பின்னர், இது பகிரங்கமாகவே கூடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்தச் சபையில், முக்கிய சமஸ்தானங்களாகிய ஹைதராபாத், மைசூர் முதலியவை அங்கத்தினராயில்லாமலிருப்பது குறிப்பிடத் தக்கது. பெடரல் அரசாங்கமும் சமஸ்தானாதிபதிகளின் தொடர்பும் இந்தியாவில் புதிதாக ஏற்பட இருக்கிற பெடரல் அரசியல் திட்டம் அமுலுக்கு வர வேண்டுமானால் அதற்குச் சுதேச சமஸ்தானங்களுடைய சம்மதம் வேண்டுமல்லவா? அப்படி சம்மதப்பட்டு பெடரல் திட்டத்தில் இவை சேர்ந்து கொள்ளுமானால், அந்தத் திட்டத்தின் படி ஏற்படப்போகிற இந்தியா சட்டசபையிலும் ராஜாங்க சபையிலும், சமஸ்தானங் களுக்குப் பிரதிநிதித்துவம் உண்டு. இந்தியா சட்டசபையில் 125 பிரதிநிதிகளும் ராஜாங்க சபையில் 104 பிரதிநிதிகளும் இருப்பார்கள். அந்தந்த சமஸ் தானாதிபதிகளோ, அவர்களால் நியமனம் செய்யப் பட்டவர் களோ, மேற்படி சபைகளின் அங்கத்தினர்களாயிருக்க லாம். பெரிய சமஸ்தானங் களுக்கு அவைகளின் விஸ்தீரணம், பொறுப்பு முதலியவைகளைப் பொறுத்து அதிக ஸ்தானங்களும், சிறிய சமஸ்தானங்கள் பலவற்றிற்குச் சேர்ந்து ஒரு ஸ்தானமும் தரவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஹைதரா பாத் சமஸ்தானத்திற்கு ராஜாங்க சபையில் 5 ஸ்தானங்களும் இந்தியா சட்டசபையில் 16 ஸ்தானங்களும், மைசூர் சமஸ்தானத் திற்கு ராஜாங்க சபையில் 3 ஸ்தானங்களும், இந்தியா சட்ட சபையில் 7 ஸ்தானங்களும் உண்டு. ஆனால் புதுக்கோட்டை, பங்கன பள்ளி, சாண்டூர் ஆகிய மூன்று சமஸ்தானங்களுக்கும் சேர்ந்து ராஜாங்க சபையில் ஒரு ஸ்தானமும், இந்தியா சட்ட சபையில் ஒரு ஸ்தான முமே உண்டு. இப்படியே மற்றச் சில்லரை சமஸ்தானங்களுக்கும். மரியாதைக் குண்டுகள் பெறும் சமஸ்தானாதிபதிகள் சிலர் 21 குண்டு ஹைதராபாத் நைஜாம் பரோடா குவாலியர் காஷ்மீர் மைசூர் 19 குண்டு போபால் இண்டோர் கலத் கோல்ஹாபூர் உதயபுரி திருவாங்கூர் 17 குண்டு பவல்பூர் பரத்பூர் பிகானீர் புண்டி கொச்சி கட்ச் ஜயபூர் கரௌலி கோடா ஜோதிபுரி பாடியாலா ரீவா டோங் 15 குண்டு ஆள்வார் பன்ஸ்வாரா டாடியா தேவாஸ் தார் டோல்பூர் துங்கர்பூர் இடார் ஜயஸல்மீர் கெய்ர்பூர் கிஷ்ன்கார் மயர்ச்சா பிரதாப்தார் ராம்பூர் சிக்கிம் சிரோஹி 13 குண்டு காசி பவநகர் கூச்பீஹார் தரங்கதாரா ஜவ்ரா ஜலவர் ஜிண்ட் ஜூனகாட் கபுர்தாலா நாபா நவநகர் பளன்பூர் போர்பந்தர் ராஜ்பீப்லா ரட்லம் திரிபுரா 11 குண்டு அஜயகார் அலி ராஜ்பூர் பவனி பர்வானி பிலாஸ்பூர் காம்பே சம்பா சர்க்காரி சத்ரபூர் சித்ரால் பரீத்கோட் கோண்டால் ஜன்ஜீரா மாலெர் கோட்லா மண்டி மணிபூர் மோர்லி நரசிங்கார் புன்னா புதுக்கோட்டை ரதன்பூர் ராஜ்கார் சைலானா சம்தார் சிர்முர் டெஹ்ரி வங்கானீர் சிதமாவ் சுகேத் குறிப்பு:- தடித்த எழுத்திலுள்ள சமஸ்தானாதிபதிகளுக்கு அவரவர் களுடைய சமஸ்தான எல்லைகளில் இரண்டு மரியாதைக் குண்டுகள் அதிகம் உண்டு. இந்தியா அரசாங்கத்திற்கு வருஷவாரி கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானங்கள் பெயர் பவுன் கணக்கில்தொகை ஜயபூர் - 26,667 கோடா - 15,648 கோடா ராணுவத்திற்காக - 13,333 உதயபுரி - 13,333 ஜோதிபுரி - 6,533 ஜோதிபுரி ராணுவத்திற்காக - 7,667 புண்டி - 8,000 மற்ற ராஜபுதன சமஸ்தானங்கள் - 15,170 போபால் - ராணுவத்திற்காக - 10,753 ஜவ்ரா - ராணுவத்திற்காக - 9, 142 மத்திய மாகாண சமஸ்தானங்களிலிருந்து - 15,696 அஸாம் மாகாண சமதானங்களிலிருந்து - 340 கூச்பீஹார் - 4,514 காசி - 14,600 பஞ்சாப் சமஸ்தானங்களிலிருந்து - 9, 753 திருவாங்கூர் - 54,221 மைசூர் - 233, 333 கொச்சி - 13,333 பம்பாய் சமதானங்களிலிருந்து பரோடா முதலியவை உள்பட - 70,203  இந்தியாவின் தேவை இந்தியாவின் தேவை வழி தெரிய வில்லை. வழி காட்டுவாருமில்லை. வாழ்வே தெரியாது. வாழ்விப்பது எங்ஙனம்? மனித வடிவம்; ஆனால் விலங்கு நிலை. இயற்கையன்னையின் பெயரைக் கேளாத காலம். அவள் வழிபாட்டை எப்படி எதிர்பார்க்க முடியும்? உலகம் ஒரு காலத்தில்- சுமார் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னர் - இந்த நிலையிலேயே இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில், இந்தியாவின் இதிகாச ரங்கத்தில் எத்தனை ஞான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன? எத்தனை அரசர்கள் மனிதத் தன்மையோடு கொலு வீற்றிருந்தார்கள்? ரங்க பூமியில் கூட மானவ தர்மம் எவ்வளவு அழகாகப் பிரகாசித்தது? நீலத்திரை கடலில் கலஞ் செலுத்தி உலகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் சென்று உண்டியும் உடையும் கொண்டு கொடுத்து அறிவுச் சுடரையும் கொளுத்திவிட்டு வந்தார்கள் நமது மூதாதையர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாது வேறு சிந்தனையற்ற நமது பெரியோர்கள், காடானவற்றை யெல்லாம் நாடாக்கி அதிலே நாகரிகத்தைப் புகுத்தினார்கள். அந்தக் காலத்திலே இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்வு முதலிய எல்லாத் துறைகளிலும் ஒரு வித மாசும் காணப்பெறாத நிறைவு இருந்தது. மற்றொரு காட்சி. புத்தர் பிரான் தோன்றினான். அவன் செல்வத்திலே பிறந்தவன். ஆனால் ஏழைகளுக்காக எல்லாவற்றையும் துறந்தவன். அவன் கண்களில் அருள் வழிந்தது. அந்த அருட் பெருக்கிலே பிம்பசாரன், அஜாதசத்துரு முதலிய அரசர்களும், சுஜாதை போன்ற ஏழை மக்களும் நீராடிப் புனிதமடைந்தார்கள். சந்திரகுப்தன், இந்தியாவை ஒரு சாம் ராஜ்யமாக்கிச் சக்ரவர்த்தியாக ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரியாக இருந்து ராஜ்ய விவகாரங் களில் பெரிதும் துணை புரிந்த சாணக்யன் எழுதிய அர்த்த சாதிரம், இன்றும், அரசியல் அறிஞர்களுக்குப் குருபீடமா யமைந்திருக்கிறது. சந்திரகுப்தனுடைய பேரனாகிய அசோகன், ராஜ்யமெங்கும் அஹிம்சா தர்மத்தைப் பரப்பினான். வாயில்லாப் பிராணிகளுக்குக் கூட சிகிச்சை சாலைகள் ஏற்படுத்தினான். பாதைகள் போட்டு நிழலுக்கு மரங்கள் வைத்தான். ஜனங்களுக்கு கடமைகளை உணர்த்திக் கற்பாறைகளில் சரஸனங்கள் பொறித்தான். உலகத்தின் நானா பக்கங்களுக்கும் தர்மப் பிரசாரகர்களை அனுப்பினான். இவனுக்குப் பிறகு ஆண்ட அரச வமிசத்தினர் பலர். குப்தர், ஆந்திரர், சோழர், பாண்டியர் முதலிய பலவகை அரச பரம்பரையினர் ஆங்காங்கு அரசு நடாத்தி வந்தனர். இவர்களில் பலர் அந்நிய நாடுகள் மீதும் படையெடுத்துச் சென்று தங்கள் கலைஞானத்தைப் பரப்பியிருக்கிறார்கள். இந்தக் காலத்திலே இந்தியாவின் புகழ் உலகெங்கும் பரவி யிருந்தது. பொன்னும் பொருளும் குவிந்திருந்தன. அறிவும் அருளும் இலக்கியங்கள் வாயிலாகப் பரிமளித்தன. நாளந்தை, தட்சசீலம், விக்ரமபுரி, ஓதண்டபுரி, காஞ்சிபுரம், மதுரை முதலிய இடங்களிலே தாபிக்கப்பட்டிருந்த சர்வ கலாசாலைகள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பயிற்சியளித்தன. அயல் நாடுகளிலிருந்து பலர் இக் கலாசாலைகளில் வந்து படித்துப் பட்டம் பெற்றார்கள். இந்தக் கலாசாலைகள்அறிவு வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஆன்ம வளர்ச்சிக்கும் பாடுபட்டன. ஜனங்கள் நிம்மதியான வாழ்க்கையை நடத்தினார்கள். சமூகத்தின் ஜீவ நாடி ஒழுங்காக அடித்துக் கொண்டிருந்தது. கிருது சகத்தின் ஆரம்ப தசை. வேறொரு காட்சி தோன்று கிறது. அந்நியர்களின் படையெடுப்பு. சபக்திஜின், முகம்மது காசிம் ஆகியோர் இந்தியாவின் வடபாகத்தில் ஒரு சில பிரதேசங்களை வந்து கொள்ளை யடித்துப் போயினர். கஜினி முகம்மது பதினேழு முறை படையெடுத்து வந்து ஏராளமான பொருள்களை எடுத்துக் கொண்டு போனான். முகம்மது கோரி ஒன்பது முறை படை யெடுத்து வந்தான். பின்னர் ஆப்கானிய அரசு சிறிது காலம் டில்லி சிங்காதனத்தில் அமர்ந்திருந்தது. இந்த மாற்றங் களினால் ஜனங்களுக்கு எவ்வித இடையூறும் விளையவில்லை. தேசீய தர்மத்திற்கு எவ்வித ஹானியும் உண்டாகவில்லை. கிறிது பிறந்து ஆயிரத்தைந்நூறு வருஷங்கள் ஆயின. அடுத்த காட்சி தோன்றுகிறது. மொகலாய சாம்ராஜ்யம் தாபிதமாயிற்று. இந்தச் சாம்ராஜ்யத்தின் பிரகாசம் வெளி நாட்டார் பலருடைய பொறாமையையும் ஆசையையும் தூண்டி விட்டது. மொகலாயமன்னர்கள் காலத்தில், தேசத்தின் கைத் தொழில்கள் வளர்ச்சியடைந்தன. வியாபாரப் பெருக்கம் அதிகம். மொகலாயர்கள், அந்நியர்களாக இருந்து அரசாளவில்லை. பொன்னும் பொருளும் அந்நிய நாடுகளுக்குச் சுரண்டப்பட்டுச் செல்ல வில்லை. சில சில இடங்களில் குழப்பங்களும் சேதங்களும் உண்டா யிருக்கலாம். ஆனால் தேசத்திற்கு இருதயநோய் ஒன்றும் ஏற்பட வில்லை. ஆன்மாவுக்கு ஊறு ஒன்றும் நிகழ வில்லை. இந்தக் காட்சியின்போது தான் சிவாஜி மகாராஜன் கம்பீரமாகக் காட்சியளித்தான். இவன் ஒரு மகா புருஷன். ராமதாஸ சுவாமிகள் இவனுக்குத் தேச பக்தியை ஊட்டினார். துகாராம் சுவாமிகள் கடமையை உணர்த்தினார். ஹிந்துதானத்தில் ஹிந்து தர்மம் நிலைத்திருக்க வேண்டுமென்று இவன் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல. கி.. பி. பதினேழாவது நூற்றாண்டு ஆரம்பமாயிற்று. இதிகாச ரங்கத்தில் மற்றொரு திரை விரிக்கப்படுகிறது. இதில் தோன்றும் நடிகர்களிடத்தில் எவ்வளவு பணிவு! ஆனால் எவ்வளவு தன்னலம்! பிரிட்டிஷார் வியாபாரிகளாக வந்தார்கள். அவர்களோடு கிறிதவ மதப் பாதிரிமார்களும் வந்தார்கள். தேசத்தின் பாஷைகளைக் கற்றுக்கொண்டு ஜனங்களோடு பழகினார்கள். கிறிதவமதத்தோடு பிரிட்டிஷ் வியாபாரமும் பரவியது. இவையிரண்டுடனும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் வளர்ந்தது. 1854ம் வருஷத்தில் மெக்காலே என்பவன், ஆங்கிலக் கல்வி முறையைப் புகுத்தினான். இது பாரத நாட்டின் தேசீய ரத்தத்திலே கலந்து விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கட்டிடம் இந்தியாவில் பலமாயமைவதற்கு இந்தக் கல்வி முறை கெட்டிச் சுண்ணாம்பாயமைந்தது. ஆனால் தேசத்தின் இருதய ஓட்டத்தில் தளர்ச்சி; அறிவிலும் ஆன்மாவிலுங் கூட அந்நியருடைய ஆதிக்க முத்திரை. பொருளாதாரத் துறையைப் பற்றி ஏன் விரிக்க வேண்டும்? அது நெஞ்சு புழுங்கும் கதையல்லவா? எனவே இந்தத் திரையை விரைவிலே சுருட்டி விடுவோம். இப்பொழுது நமது நிலை யென்ன? எவை எவை நம் மிடத்தில் நிரம்பியிருந்தனவோ அவை யெல்லாம் தற்போது நமக்குத் தேவையா யிருக்கின்றன. பழமையை மறந்தோம். ஆனால் அதன் புகழை மட்டும் பாடிக் கொண்டிருக்கிறோம். நமது வருங்கால வாழ்வுக்கு, புராதனப் பெருமை ஒருபடியாக இருக்க வேண்டாமா? ஒரு காலத்தில், நாம் உலகத்தாருடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது நமது தேவைகள் எண்ணிலவாகி விட்டன. கடமை களும் அதிகமாகி விட்டன. அவை யாவை? தலைவர்களே! உங்களுடைய கம்பீர வாக்கினாலேயே சிறிது தெரிவியுங்கள். சுதந்திர வெற்றியை ஒரே நாளில் அடைய முடியாது. சுதந்திர தேவதை, குன்றாத உறுதியை, சலியாத உழைப்பைக் கோரி நிற்கிறாள். . . . . . . . . .. . இந்திய சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தன்னலத் தியாகம் என்பது பிரகாசிப்பதை நீங்கள் காணலாம். நிகழ்காலப் பொறுப்பு, எதிர்கால நம்பிக்கை, இறந்த காலப் பெருமை ஆகிய அனைத்தம் சேர்ந்து, தாய் நாட்டுத் தொண்டு புரிய நமக்கு ஊக்கமளிக்க வேண்டும். தொண்டு புரிவதற்கும், தியாகம் செய்வதற்கும் தகுதி வாய்ந்த நாடு, வேறேதேனும் உலகத்தில் உண்டோ? சுவை மிகுந்த நாடு, பழமைக்காகப் பலரும் பக்தி செலுத்தும் நாடு, சரித்திரவளம் நிரம்பிய நாடு, எத்தனையோ மதங்கள் தோன்றிய நாடு, மனித சமூகத்தின் நாகரிகத்திலே அழியாத சின்னத்தைப் பொறித்துவிட்ட நாடு, வேறெந்த நாடு உலகத்தில் உண்டு? இந்தியா, இரண்டு மதங்களின் தொட்டில்; கீழ் நாட்டின் புண்ணிய பூமி. அறிவுச் சுடர் முதன் முதல் இங்கேதான் கொளுத்தப்பட்டது. உலகத்தின் உதய காலத்திலே, தெய்வீக லட்சியங்களை அடையவேண்டு மென்ற மனித சமூகத்தின் ஆரம்ப ஆவலை, ரிஷிகள் வெளிப்படுத்தியது இந்த நாட்டிலேதான். இந்தக் காலத்திலும் உலகத்தினரால் வியந்த பாராட்டப் பெறும் இலக்கியங்களும் தத்துவ ஞானமும் உற்பத்தியானது இந்த நாட்டிலேதான். உலகத்தின் பல பாகங்களுக்கும் இந்த நாட்டிலிருந்து தான் மதப் பிரசாரகர்கள் சென்றார்கள். ஜப்பான் நமது ஆத்ம சிஷ்யன். சைனா, சைபீரியா, கீழ் நாடுகள் முதலியன, இந்தியாவைக் குரு பக்தியோடு பார்க்கின்றன. ஏன்? அவைகளின் மதாசாரியர் நமது நாட்டிலேதான் பிறந்தார், நமது சிஷ்யர்கள், முன்னோக்கிச் சென்று விட்டார்கள். ஆனால் நாமோ, ஊசலாடிக் கொண்டிருக்கிறோம்; சந்தேகப் பட்டுக் கொண்டிருக்கிறோம்; கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; நாம் செய்துள்ள தியாகத்திற்குக் கிடைத்துள்ள பலன்கள் போதுமானவை என்று ஆத்ம திருப்தியும் அடைந்து விடுகிறோம். அரசியல் விடுதலைக்கு, இது நேரிய பாதையாகுமா? அரசியல் சுதந்திரத்தை இந்த முறையில் எவரும் பெற்றதாகத் தெரியவில்லையே. ஜப்பானைப் பாருங்கள். அதன் சரித்திரத்தைப் படியுங்கள். அதன் அரிய தியாகங்களையும் காலத்திற் கேற்றவாறு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் அதன் ஆற்றலையும் பாருங்கள். அதன்பொறுமை, உறுதி, தளாரா முயற்சி, பிடிவாதம் முதலியனவற்றைக் கடைப்பிடியுங்கள். கீழைப் பிரதேசங் களெல்லாம் இந்தச் சிறிய, பாலிய தேசத்தைப் பின்பற்றட்டும். --- சுரேந்திரநாத் பானர்ஜி ஃ ஃ ஃ நமது முன்னிற்கும் பிரச்னை என்ன? நமது உணர்ச்சிகளை, நமது குறைகளை எல்லாவற்றையும் அடக்கி இருதயத்தின் அந்தரங்க தானத்திலே வைத்து மூடி விடுவதா? அல்லது அவைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி அவைகளுக்கு ஒரு வழி காண முயல்வதா? தன்னம்பிக்கை இழந்தவர்கள் தான், முன்னைய வழியைப் பின்பற்றுவார்கள். ஆனால் நாமோ பின்னைய வழியையே பின்பற்று வோம். ஏனென்றால் இங்கிலீஷ் பொது ஜனங்களுடைய அறிவிலும் நியாயபுத்தியிலும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. --- ஸர் பிரோஷா மேத்தா சத்தியாக்கிரகப் போராட்டம் என்பது என்ன? ஒருவன் தன்னைத் தாங்கிக் கொள்ளும் நிலையிலே நடத்தும் போராட்டம். ஆன்ம சக்தி, ஒழுக்கம் ஆகியவையே இந்தப் போராட்டத்தில் உபயோகப் படுத்தப் பெறும் ஆயுதங்கள். ஒரு சத்தியாக்கிரகி, தான் துன்பம் அனுபவிப் பதனாலேயே, கொடுமையை எதிர்த்து நிற்கிறான். அவன், மிருக பலத்துக்கு முன்னே ஆன்ம பலத்தையும், அடக்கு முறைக்கு எதிரே தியாகத்தையும், வலிமைக்கு நேரே மனச் சாட்சியையும், அநீதிக்குப் போட்டியாக குன்றாத நம்பிக்கையையும், தீமைக்கு விரோதமாக நன்மையையும் எதிர் நிற்க வைக்கிறான். --- கோபால கிருஷ்ண கோகலே ஃ ஃ ஃ அந்த நெசவுக்காரர்கள் எங்கே? பலவகைத் தொழில் களினால் ஜீவனம் செய்து கொண்டு வந்த அந்தத் தொழிலாளர்கள் எங்கே? இங்கிலாந்துக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் வருஷந்தோறும் அனுப்பிக் கொண்டு வந்த அந்தப் பொருள்களெல்லாம் எங்கே? அந்தோ! எல்லாம் பழங்கதையாகி விட்டன. இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொரு வரும் பிரிட்டிஷ் துணிகளால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்குச் சென்று பார்த்தாலும் பிரிட்டிஷ் சாமான்கள் தான் உங்கள் கண்களை உறுத்துகின்றன. இந்த நிலையில் நமது கிராம ஜனங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? விவசாயத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகத்திலாகட்டும், வியாபாரத்திலாகட்டும், நமது ஜனங்கள் ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் அனுபவித்த லாபத்தில் நூற்றில் ஒரு பங்கு லாபத்தைக்கூட இப்பொழுது அநுபவிப்பதில்லை. அப்படி யிருக்க நமது நாடு எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? --- பண்டித மாளவியா ஃ ஃ ஃ கிளர்ச்சி, கிளர்ச்சி என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஜனங்களுக்குத் தெரியப்படுத்து என்பது தான். இந்திய ஜனங் களுக்கு அவர்களுடைய உரிமைகள் என்ன, அவைகளை ஏன் பெற வேண்டும், எப்படிப் பெறவேண்டும் என்பன வற்றைத் தெரியப் படுத்த வேண்டும். அப்படியே, பிரிட்டிஷ் ஜனங்களுக்கும், இந்திய ஜனங் களுடைய உரிமைகள் என்ன, அவைகளை ஏன் அளிக்கவேண்டும் என்பனவற்றைத் தெரியப்படுத்தவேண்டும். நாம் பேசாமலிருந்தால், நாம் திருப்தியடைந்து விட்டோம் என்று அவர்கள் (பிரிட்டிஷ் ஜனங்கள்) கருதுகிறார்கள்! பேசினால் கிளர்ச்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ---- தாதாபாய் நெளரோஜி ஃ ஃ ஃ பொறு, பொறு என்று சொல்கிறார்கள். ஆம்; நாம் வேறென்ன செய்ய முடியும்? சென்ற மூன்று நூற்றாண்டுகளாக, ஆள்வோரின் இஷ்டத்திற்குக் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறோம். நாம் காத்துக் கொண்டிருப்போம்; நிச்சயமாகக் காத்துக் கொண்டிருப்போம். ஆனால் காத்துக் கொண்டிருப்பதுதான் நமது தலை விதி என்று சொல்லித் தலை குனிந்து கொண்டிருக்க மாட்டோம். அந்த விதியைக் கடந்து நமது லட்சியத்தை அடைய உறுதியோடு காத்துக் கொண்டிருப்போம். ----- சுரேந்திரநாத் பானர்ஜி ஃ ஃ ஃ நிறைந்த பொக்கிஷம்; திருப்தியுள்ள ஜனங்கள். இவை தான் ஓர் அரசாங்கத்தின் உண்மையான பாதுகாப்புகள். ------ பி. கென்னெடி ஃ ஃ ஃ எனது பாட்டனாருடைய வாழ்க்கை அந்ததை விட எனது வாழ்க்கை அந்தது உயர்ந்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த அந்ததுடன் எனது ஜனங்களிடத்தில் - குடியானவர்களிடத்தில் - நான் சென்று அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தையும், முன்னிருந்ததைவிட கேவலமான குடிசைகளிலே குறைந்த ஆகாரத்திலே வாழ்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறபோது என்னையே நான் கண்டித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனது நலத்திற்காக அதிகமாகச் செலவழிக்கிற என் குற்றத்தை நன்கு உணர்ந்து கொள்கிறேன். -முஷிர் ஹாஸன் கித்வாய் ஃ ஃ ஃ திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? நடந்து போன வற்றிற்காக வருந்துவதில் என்ன பிரயோஜனம்? வருங்காலத்திற்காக நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வோம்------- சகோதரர்களே! தமது முன்னோர்கள் வாழ்ந்தபடியே வாழ்வோம். மனிதனால் சிருஷ்டிக்கப்பட்ட குறுக்குத் தடைகளைக் கடந்து செல்வோம். அகங்காரத்தை யொழித்துப் பணிந்து நிற்போம். துவேஷத்தைத் தாண்டிக் காலடி வைப்போம். எதிர்கால அறுவடைக்காக நிகழ்கால மண்ணை உழுது செல்ல நமது கரங்கள் கலப்பையிலேயே இருக்கட்டும். நமது இருதய வீணை, கடவுளையும் தேசத்தையும் இணைத்துப் பாடட்டும். ---- பூபேந்திர நாத் வசு. ஃ ஃ ஃ ஒருவன், தன் தாய்நாட்டிற்குச் சேவை செய்வது, அவனுடன் பிறந்த உரிமையாகும். --- ஜதீந்திரநாத் சௌதரி. ஃ ஃ ஃ கிராம வேலை என்றால் நாம் அஞ்சுகிறோம். நகர வாழ்க்கையைச் சுவைத்த நமக்குக் கிராம வாசம் கடினமாகவே இருக்கிறது. கடின வாழ்க்கைக்கு நமது தேகம் இடங்கொடுப்ப தில்லை. ஆனால் இந்தக் கஷ்டத்தை நாம் தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும். சுயராஜ்யத்தை தாபிக்க வேண்டுமென்பது நமது விருப்பமாயிருந்தால், ஒரு வகுப்புக்குப் பதில் மற்றொரு வகுப்பை அதிகாரத்தில் வைக்கக்கூடாது. இதுவரையில், நகரவாசிகளாகிய நாம் வாழவேண்டு மென்பதற்காக ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் இறந்து போனார்கள். இப்பொழுது, அவர்கள் வாழ்வதற்காக நாம் இறக்கவேண்டும். இப்படி மாறிச்சாவதில் அடிப்படையான வேற்றுமை இருக்கிறது. இதற்கு முன்னர், கிராம வாசிகள், காரணந் தெரியாமல் இறந்து போனார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே தியாகம் செய்து கொண்டது நம்மை இழிவு படுத்திவிட்டது. இப்பொழுது நகரவாசிகளாகிய நாம், காரணந் தெரிந்து தியாகம் செய்வோமானால், அது நம்மையும் நமது சமூகத்தையும் உயர்த்தும். சுயேச்சையான, தன்மதிப்புள்ள தேசமாக நாம் வாழ வேண்டுமானால், நாம் இந்தத் தியாகத்தைச் செய்யச் சிறிதும் பின் வாங்கக்கூடாது. -மகாத்மா காந்தி. ஃ ஃ ஃ இயற்கை நியதிக்கு விரோதமாக, அதாவது கடவுள் ஆணைக்கு விரோதமாக இந்தியாவின் தற்போதைய நிலைமை இருக்கிறது. இதனாலேயே தேசமெங்கணும் அமைதியின்மையும் குழப்பமும் நிலவுகின்றன. இந்தியாவின் சகல பகுதிகளும் ஒன்று சேர்ந்து சுயராஜ்யம் பெறுமானால் எல்லாம் செம்மையாகி விடும் என்பது எனது திடமான நம்பிக்கை. -மகாத்மா காந்தி. ஃ ஃ ஃ தலைவர்களும் தனி மனிதர்களும் வரலாம்; போகலாம்; அவர்கள் சோர்ந்தும் போகலாம்; பின்னடையலாம்; அவர்கள் சமரஸம் செய்து கொள்ளலாம்; அல்லது துரோகமும் செய்யலாம். ஆனால் சுரண்டப் படுகிற, துன்பம் அநுபவிக்கிற பாமர ஜனங்கள் தங்களுடைய (சுயராஜ்யப்) போராட்டத்தை நடத்திக் கொண்டுதான் செல்லவேண்டும். ஏனெனில் அவர்களைப் போராட்டத்திற்குப் பிடர் பிடித்துத் தள்ளுவது பசிப் பிணியல்லவா? -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ ஹிந்து மதமும் மற்ற எல்லா மதங்களும் இப்பொழுது தராசில் வைத்து நிறுக்கப்படுகின்றன. சத்தியம் ஒன்றுதான். அது நித்தியமானது. கடவுளும் ஒருவர்தான். முரண்பட்ட கொள்கைகள், ஆசாரங்கள் முதலிய வற்றை நாம் விலக்கித் தள்ளிக்கொண்டு சத்திய மார்க்கத்தைக் கடைப் பிடிப்போமாக. அப்பொழுது தான் நாம் உண்மையான ஹிந்துக்களாவோம். -மகாத்மா காந்தி ஃ ஃ ஃ தேசத்தொண்டு என்று சொல்கிறபோதே, நமது தேகத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது; நம்மைச் சிறிது உயர்த்தியும் விடுகிறது. இப்பொழுது இந்தியாவுக்குத் தேவை, இந்தத் தேச பக்தி உணர்ச்சியை, மேலோருக்கும் கீழோருக்கும், மன்னர்களுக்கும் மன்பதைகளுக்கும், நகரங்களிலும் கிராமங்களிலும் ஊட்டவேண்டுவதே யாகும். நாமே, தாய்நாட்டுச் சேவையாக உருக் கொண்டு விடுகிறவரையில், இந்த வேலையைச் செய்யவேண்டும். -கோபால கிருஷ்ண கோகலே ஃ ஃ ஃ இந்தத் தேசத்தை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க நீங்கள் தீர்மானிப்பீர்களானால், எனது குடும்பம், எனது சமூகம் என்ற எண்ணங்களை யெல்லாம் விட்டுவிட வேண்டும். அப்படியிருப்பீர் களாயின் தேசீய சுதந்திரப் போராட்டத்தில் கலந்த கொள்ளக் கூடிய ஒரு வீரனாவீர்கள். அப்படி நீங்கள் செய்யாமற் போவீர்களாயின் அதன் அடிமைத்தனத்தை நிலைக்கச் செய்தவர் களாவீர்கள். -ஸர் ராதாகிருஷ்ணன் ஃ ஃ ஃ தேசத்தில் பாதிப்பேராகிய திரீகள் பிற்போக்கினராகவும் படிப்பில்லாத அறியாமையில் அழுந்திக் கிடக்கிறவர்களாகவும் இருந்தால் நமது தேசம் எப்படி தலை நிமிர்ந்து பார்க்க முடியும்? இந்தியாவின் எதிர்கால சந்ததியார் தன்னம்பிக்கையுடையவர் களாகவும் சிறந்த பிரஜைகளாகவும் வாழ வேண்டுமானால் அவர் களுடைய தாய்மார்கள் தன்னம்பிக்கை யுள்ளவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருக்க வேண்டாமா? -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்யக்கூடிய உயர்ந்த சேவை என்ன? கடவுள் நம்பிக்கையை ஊட்டுவது. அற்கடுத்த படியாக? ஞானக்கோயிலை அவனுக்குத் திறந்துவிட வேண்டும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீங்கு செய்ய வேண்டுமானால் அவனைக் கல்வியற்ற கசடனாகச் செய்து விடுதலேயாம். கல்வியானது ஒருவனுடைய துக்கத்திலே ஆறுதலைக் கொடுக்கிறது. சந்தோஷ காலத்திலே அவனுக்குத் துணையாக நிற்கிறது. எப்பொழுதும் தோழனாய்த் தோள் கட்டி வாழ்கிறது. -ஹேரம்ப சந்திர மைத்ரா ஃ ஃ ஃ இல்லறத்தார் ஒவ்வொருவரும், தினந்தோறும், தேவர்களுக் காகவும், ரிஷிகளுக்காகவும், மூதாதையர்களுக்காகவும், மனித சமூகத்திற்காகவும், எல்லாப் பிராணிகளுக்காகவும் ஐந்து விதமான யக்ஞங்கள் செய்ய வேண்டுமென்று சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் சீரிய தொடர்பை, நாம் ஏன் நமது தேசத்துடனும் வைத்துக் கொள்ளக் கூடாது? நாம் தினந்தோறும், நமது தேச நலனுக்கென்று ஒரு சிறு காசு அல்லது ஒரு கைப்பிடி அரிசி ஒதுக்கி வைக்கக் கூடாதா? தேவர்களின் இருப்பிடம், ரிஷிகள் ஆறுதல் பெறும் தலம், நமது தாய் தந்தையர் குலவியிருந்த திருநாடு - நமது தாய் நாடு - இதற்கும் நமக்கும் இந்தச் சம்பந்தம் கூட இருக்கக்கூடாதா? -ரவீந்திரநாத் டாகூர் ஃ ஃ ஃ காங்கிர ஒரு தேசீய தாபனம். தேசீய சுதந்திரமே அதன் லட்சியம். அதில் பல பிரிவினரும் வகுப்பினரும் சமூக அந்ததில் வெவ்வேறான நிலையிலுள்ளவர்களும் இருக் கிறார்கள். ஆனால், காங்கிர என்ற மேடையானது இவர்களனை வரையும் ஒன்று கூட்டி வைத்திருக்கிறது. -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ நாம் கடவுளின் கையிலே அகப்பட்ட துரும்புகள். அவன் விரும்பினால் நம்மைக் காற்றிலே சிதற அடிக்கலாம். அவனது ஆணையை நாம் எதிர்த்து நிற்க முடியாது. நாம் எப்பொழுதும் பிரிந்து வாழ அவன் நம்மைச் சிருஷ்டிக்கவில்லை; சேர்ந்து வாழவே நம்மைப் படைப்பித்தான். -மகாத்மா காந்தி ஃ ஃ ஃ நாம் செல்வத்தைப் பழித்தோம். வறுமையை அழகு படுத்தினோம். பெருமைப் படுத்தினோம். இப்பொழுது, பழிக்கப்பட்ட அந்தச் செல்வத்தின் காலடியிலே விழுந்து கிடப்பதா? நமது தாய்க்குத் தொண்டு புரிய நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? வீழ்ந்துபோன அவள் வீட்டைப் புதுப்பிக்க வேண்டாமா? தூய்மையான, ஒழுங்கான இயற்கை வாழ்வு நடாத்த மறுத்து விட்டோமானால் இவை யெல்லாம் எப்படி முடியும்? உதிர் சருகுகளைப் புசிப்பது நமது நாட்டிலே எப்பொழுதும் அவமான மாகக் கருதப்பட்டதில்லை. ஆனால் அதைப் பிறர்க்கு வழங்காமல் தானே புசிப்பதுதான் அவமானமாகக் கருதப்பட்டது. நமது சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதற்காக, நாம் நமது சுகத்தில் சிறிதளவு தியாகம் செய்யக்கூடாதா? ஒரு காலத்தில் இந்தத் தியாகம் நமக்கு மிக எளிதா யிருந்தது, அஃது இப்பொழுது முடியாமற் போகுமா? -ரவீந்திரநாத் டாகூர். ஃ ஃ ஃ நவீன இந்தியா என்னும் தொட்டிலிலே சுதேசியக் குழந்தை வளர்கிறது. அதனைப்பற்றிப் பேசுவது ராஜத் துரோகமாகுமா? இங்கிலாந்தினிடத்தில் எத்தனையோ குறைகள் இருந்தாலும் அதனை நாம் நேசிக்கிறோம். ஆனால் அதை விட இந்தியாவை, நமது தாய்நாட்டை அதிகமாக நேசிக்கிறோம். இது ராஜத் துவேஷமாகுமா? -ராஷ் விஹாரி கோஷ் ஃ ஃ ஃ நமக்கு வேண்டுவது போலியன்று; உண்மை. நிழலன்று; உருவம். நியமனம் அல்ல; தேர்தல் உரிமை. -பண்டித விஷ்ணு நாராயணதார் ஃ ஃ ஃ எந்த நாடு அரசியலிலும் பொருளாதாரத்திலும் மற்றொரு நாட்டாருக்குக் கீழ்ப்பட்டுச் சுரண்டப்படுகிறதோ அந்த நாட்டிலே உள் வளர்ச்சி ஏற்படாது. இந்த அகவளர்ச்சிக்கு, புறச் சுதந்திரமும் வேண்டி யிருக்கிறது. எனவே இந்தச் சுதந்திரத்திற்காக நாம் சில சாதனங்களைக் கையாளும்போது, அவை மேற்கூறப் பட்ட லட்சியத்திற்கு முரணானவையாயிருக்கக் கூடாது. -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ இந்தியாவின் தற்போதைய நிலையைக் கவனித்தால் துரோபதையின் அழுகைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஐயோ, நான் பெரிய குடும்பத்திலே பிறந்தேன். கடவுளர்களினாலேயே சிருஷ்டிக்கப் பட்டேன். ஆனால் எனது மயிரை எத்தனை பேய்கள் பிடித்திழுக்கின்றன என்று அவள் கதறினாள். இந்தியா, பரம்பரைப் புகழிலே பிறந்த இந்தியா, பண்டைக் காலந்தொட்டு பல அரிய குணங்களைப் பொக்கிஷமாகக் கொண்ட இந்தியா இப்பொழுது கீழே படிந்து கிடக்கும் மண்ணை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. இளைஞர்களே! உங்களுடைய வாழ்க்கையைப் பயனுடையதாகச் செய்யவும் உலகத்திலே தன்மதிப்போடும் கௌரவத்தோடும் வாழவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? வாழ்வதிலே ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நீங்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதைவிடக் கொடியது லட்சியமற்ற வாழ்க்கையை நடத்துவது. தேசீய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் அடிமைத்தனம் நிரம்பி யிருக்கிறது. இதனின்று தேசத்தைக் கரையேற்றுவது உங்கள் கடமையாகும். -ஸர் ராதாகிருஷ்ணன் ஃ ஃ ஃ இந்தியாவின் இப்பொழுதைய நிலையை நோக்குமிடத்து என்ன காண்கிறோம்? தேசாபிமானத்தைப் பற்றியும் உயர்ந்த லட்சியங்களைப் பற்றியும் நாம் அதிகமாகப் பேசுகிறோம்! ஆனால் செயலிலே என்ன நடக்கிறது? வெறும் அரசியலை மட்டும் பேசிக் காலங்கழிக்கிறவர் களினாலே உங்கள் பார்வை மங்கலாகச் செய்யப்படுகிறது. அவர்களிடமிருந்து ஜன நாயகத்தை உங்களால் காப்பாற்ற முடிகிறதா? -ஸர் ராதாகிருஷ்ணன் ஃ ஃ ஃ சுதேச சமதானங்கள் சரியாக நிருவகிக்கப் படுவதில்லை யென்று அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். சுதேச மன்னர்களைப் பற்றி ஒரு குறைகூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்குப் போய்வரவேண்டுமென்ற அவர்களுடைய ஆசை நாளுக்குநாள் அதிகப்பட்டுக் கொண்டு வருகிறது. காரியார்த்தமாகவோ அல்லது அறிவு வளர்ச்சிக்காகவோ, சுதேச மன்னர்கள் ஐரோப்பாவுக்குச் செல்வதில் எவ்வித ஆட்சேபமுமில்லை. ஆனால் வெறுஞ் சுகத்துக்காக மட்டும் செல்வதென்பது சகிக்க முடியாத தாகும். ஜனநாயகக் கொள்கையும் அறிவும் பரவியுள்ள இந்தக் காலத்தில், எந்த தாபனமும் அல்லது எந்த நாடும், ஜனங்களுக்கு நன்மை தராதவரையில் நீடித்து நிலைத்திருக்க முடியாது. -மகாத்மா காந்தி ஃ ஃ ஃ லாகிரிவதுக்களும் மதுபானமும் பிசாசின் இரு கைகள். அவை களைக் கொண்டு அது நிர்க்கதியாயுள்ள அடிமைகளை நன்றாகத் தாக்குகிறது. - மகாத்மா காந்தி இந்தக்காங்கிரஸில் இந்தியாவின் குரலொலி கேட்கிறது. அந்த ஒலியினால் இங்கிலாந்தைப் பார்த்துக் கேட்கிறோம்: - இங்கிலாந்தே! உன்னுடைய பரம்பரை தர்மம், உன்னுடைய உணர்ச்சி, உன்னுடைய தன்மதிப்பு இவற்றை முன்னிட்டு உனது சகோதரப் பிரஜைகளாகிய எங்களுக்கு எங்கள் உரிமையைக் கொடு. -பண்டித மாளவியா ஃ ஃ ஃ நான் கைராட்டினத்திலிருந்து இழுக்கும் ஒவ்வொரு நூலிலும் இந்தியாவின் ஏழை மக்களைக் காண்கிறேன். தற்போது இந்தியாவின் ஏழைகள், கடவுளிடத்தில் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அது மட்டுமல்ல; மத்திய வகுப்பாரிடத்திலும் பணக்காரரிடத்திலுங்கூட நம்பிக்கையை இழந்து விட்டார்கள். பசித் துன்பத்தை அனுபவிக்கிற ஒருவனுக்கு, அவனுடைய வயிற்றை நிரப்புவதைத் தவிர வேறோர் இச்சையுங் கிடையாது. அவனுடைய வயிறுதான் அவனுக்குக் கடவுள். எவனொருவன் அவனுக்கு ஆகாரம் அளிக்கிறானோ அவன் தான் அவனுக்கு எஜமானன். அவன் மூலமாக ஆண்டவனையும் அந்த ஏழை காண முடியும். . . . . . .எங்கெங்கு ஏழைகள் விஷயத்தில், களங்கமற்ற தூய்மையான அன்பு நிலவுகிறதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார் -மகாத்மா காந்தி ஃ ஃ ஃ பிரிட்டிஷ் ஜனங்களிடத்திலே நமக்கு விரோதமில்லை. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்திய சுதந்திரமும் ஒன்று சந்திக்கக்கூடிய இடமும் இல்லை. அதனால் அமைதியும் இல்லை. பிரிட்டனிலிருந்து ஏகாதிபத்தியம் மறைந்து விடுமானால், நாம் அதனுடன் சர்வதேச விஷயங்களில் தாராளமாகக் கலந்து கொள்வோம். -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ காகிதத்திலே வரையப்படும் திட்டங்களைக் கொண்டு நாம் சுதந்திரத்தைக் கணிக்கிறோம். இந்த வக்கீல் மனப் பான்மையை விட கேவலமானது வேறொன்றுமில்லை. வாழ்க்கையையும், ஜீவாதாரமான பொருளாதாரப் பிரச்னைகளையும் புறக்கணித்து விட்டு இப்பொழுதுள்ளது எப்படி, இதற்கு முன் இருந்த தெப்படி என்பவைகளையே ஆதாரமாகக் கொண்டு விஷயங்களைக் கவனிக்கும் சுபாவமுடையது இந்த வக்கீல் மனப்பான்மை. பழைய சம்பிரதாயங்களில் அதிகமான நம்பிக்கை வைப்பதினாலேயே, ஒரு வக்கீலின் அறிவு பிற்போக்குடையதாக இருக்கிறது; முன்னோக்கிப் பார்ப்பதில்லை. பலஹீனனும் நொண்டியும் கூட மெது மெதுவாக முன்னேறிச் செல்கின்றனர். ஆனால் வக்கீல் அப்படியில்லை. பழமையிலேயே உண்மையெல்லாம் இருக்கிறதாக எப்படி மதப்பித்தன் கருதுகிறானோ அப்படியேதான் வக்கீலும். -மகாத்மா காந்தி ஃ ஃ ஃ என்னுடைய லட்சியம் கடவுள் தொண்டு! கடவுளுக்குத் தொண்டு செய்வதாவது ஜன சமூகத்திற்குத் தொண்டு செய்வதுதான். இந்தியாவிலே பிறந்து இந்தியாவிற்குத் தொண்டு செய்யாமற் போனால், அவனால் கடவுளுக்கோ மனித சமூகத்திற்கோ தொண்டு செய்ய முடியாது. ஃ ஃ ஃ இந்தியாவின் கலைகள், கைத் தொழில்கள் முதலின அபிவிருத்தியடையுமானால், ஒரு வேலை உணவுக்குக் கூட வழியில்லாது தவிக்கும் நாலரை கோடி மக்களுக்கு ஒரு கவளச் சோறு போட முடியும். -தஞ்சை ஸ்ரீ மூக்கணாசாரி ஃ ஃ ஃ நமக்குச் சத்துருக்களில்லை. உலகத்திலேயுள்ள ஓர் ஆத்மாமீது கூட நமக்குத் துவேஷமில்லை. நமது தியாகத்தினால் பிறரை, நமது பக்கம் இழுக்கப்பார்க்கிறோம். கடின சித்தமுடைய, சுயநலமுள்ள ஓர் இங்கிலீஷ்காரனையும் தியாகத்தினால் என் வசப்படுத்தமுடியும். -மகாத்மா காந்தி இந்தியா சுதந்திரம் பெறவேண்டுவது அவசியம். ஏன்? இந்தியப் பாமர ஜனங்களும் மத்திய வகுப்பினரும் சுமக்க முடியாத சுமையைத் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனைக் குறைப் பதற்கோ அல்லது அடியோடு எடுத்துவிடுவதற்கோ சுதந்திரம் தேவை. எவ்வளவுக் கெவ்வளவு இந்தச் சுமை குறைகிறதோ அவ்வளவுக் கவ்வளவு நாம் சுதந்திரம் பெற்றவர்களாவோம். -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ இந்தியாவிலுள்ள ஏழு லட்சம் கிராமங்களுக்கு ஏழாயிரம் ரெயில்வே டேஷன்கள் உள்ளன. இந்த ஏழாயிரம் கிராமங் களைக்கூட நாம் பார்த்திருக்க மாட்டோம். ரெயில்வே டேஷன் களுக்குத் தொலை வாயுள்ள கிராமங்களைப் பற்றியோ நாம் சரித்திர புத்தகங்களின் மூலமாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். கிராம வாசிகளோடு நம்மை ஒன்று சேர்ப்பது கைராட்டினந்தான். -மகாத்மா காந்தி ஃ ஃ ஃ உயர்ந்த லட்சியத்திற்காகப் பாடுபடுவதிலேயே ஒருவித இன்பம் இருக்கிற தல்லவா? - பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ இளைஞர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிராமத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். கிராமவாசி களுக்குக் கல்வி புகட்டுங்கள். அவர்கள் ஒற்றுமையா யிருந்து, தங்கள் கேவல நிலைமை யிலிருந்து மேலெழ உதவி புரியுங்கள். இந்த முயற்சியில் புகழை எதிர் பாராதீர்கள். எவர் பொருட்டு நீங்கள் உயிரைக் கொடுக்கிறீர்களோ அவர் களுடைய நன்றியைக் கூட எதிர் பாராதீர்கள். அதற்கு மாறாக அவர் களுடைய எதிர்ப்புக்குச் சித்தமா யிருங்கள். உங்களைச் சூழ்ந்திருக்கும் துன்பத்திலே ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக உறுதி செய்து கொள்ளுங்கள். அந்தத் துன்பத்திற்குப் பரிகாரம் ஏற்படும். -ரவீந்த்ரநாத் டாகூர் ஃ ஃ ஃ தற்கால நகர சபைகளின் கடமை என்ன? அதனுடைய அதிகார எல்லைக்குள் யாரும் பட்டினி கிடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்படி வேலை கொடுக்க முடியா விட்டால் அவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டும். இவையே நகர சபைகளின் நோக்கங்களாயிருக்க வேண்டும். இந்தியாவிலுள்ள நகர சபைகள் இந்த நோக்கத்திற்கு வெகு தொலைவில் இருக்கின்றன. -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ நமது முன்னிலையிலே, உலகத்தின் முன்னிலையிலே நிற்கிற முக்கிய பிரச்சனை என்ன? அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்வு அனைத்திலும் அடிப்படையான மாறுதல்கள் ஏற்பட வேண்டு மென்பது தான். -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ உலகத்தின் எந்தத் திக்கை நோக்கி வேண்டுமானாலும் பாருங்கள். படைகளும் படைக் கலங்களும் திரட்டப்பட்டு வருவதைக் காண்பீர்கள். நாகரிக உலகம் அனைத்திற்குமே துன்பம் நேரிடப் போகிறது. வெகு சீக்கிரத்தில் மும்முரமான யுத்தம் ஆரம்பிக்கப் போகிறது. அது முடிவதற்குள், அதில் கிரேட் பிரிட்டன் கலந்து கொள்ளவே நேரிடும். அப்பொழுது லட்சக் கணக்கான இந்தியர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்காமற் போனோமே என்று அது வருந்தும். -ராஜா ராம்பால் சிங் ஃ ஃ ஃ இந்தியா எங்கே செல்கிறது? சமூகப் பொருளாதார சமத்துவ லட்சியத்தை நாடிச் செல்கிறது. ஒரு தேசம் மற்றொரு தேசத்தையும், ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பையும் சுரண்டுகிற முறைகளின் முடிவை நோக்கிப் போகிறது. சர்வதேசக் கூட்டுறவு என்னும் சட்டத்திற்குள்ளே அமையும் தேசீய சுதந்திரத்தில் கண் வைத்து நடக்கிறது. -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ இந்தியா முழுவதிலும் பெரிய பெரிய கைத்தொழிற் சாலைகள் ஏற்பட வேண்டுமென்று நான் விழைகிறேன். இந்தியாவின் செல்வம் விருத்தியடைய, இந்திய மக்களின் வாழ்க்கை அந்தது உயர, கைத்தொழிலோடு விஞ்ஞானப் பயிற்சியையும் கலந்து உபயோகித்து ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனாலும் இந்தியாவின் தற்போதைய நிலையில் கதரையும் கையால் நூல் நூற்றலையும் நான் ஆதரிக்கிறேன். -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ நாதிர்ஷா இந்தியாவின் மீது படை யெடுத்து வந்ததை நீங்கள் சரித்திரத்திலே படித்திருக்கலாம். அவன் டெல்லியில் தங்கியிருந்த போது, பருகபாத் நவாபைத் தன்னைக் காணுமாறு அழைப்பித்தான். கவசங்களும் ஆயுதங்களும் இல்லாமல் வர முடியாதென்று நவாப் பதில் விடுத்தான். அதற்கு நாதிர்ஷா பீரங்கிப் படையோடு வரச்சொல் என்று திருப்பிச் சொல்லி அனுப்பினான். என்ன மாற்றம்! பழைய காலத்துச் சக்ரவர்த்திகள், தங்கள் சத்துருக்களின் ஆயுதங்களுக்குக் கூட அஞ்சவில்லை. ஆனால், இப்பொழுது நாம் நமது அரசாங்கத்தாராலேயே அவநம்பிக்கைக் கொள்ளப்படுகிறோம். - முன்ஷி சதருத்தீன் அஹமத் ஃ ஃ ஃ அரசியல் சுதந்திரம் ஓட்டுரிமையைக் கொடுத்தது. ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருக்கும்போது, இந்த ஓட்டுரிமையை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? பட்டினி கிடக்கும் ஒருவனிடமுள்ள ஓட்டுரிமையானது எவ்வித பயனையு கொடாது. அவனுடைய உரிமை எளிதிலே பிடுங்கப் படலாமல்லவா? -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ பொதுஜன வேலையிலீடு பட்டதற்காக எனக்கு வந்தன மளிக்கிறார்கள். அதற்காக நான் விசனிக்கிறேன். ஜனங் களுக்காக அல்லாது நான் வேறு யாருக்காக வேலை செய்வது? ஜனங்களிலே ஒருவனாகப் பிறந்தேன்; ஜனங்களுடைய நம்பிக்கையைப் பெற்றேன்; ஜனங்களுக்காக இறப்பேன். தேச வரம்புக்கோ, சமூக வரம்புக்கோ நான் கட்டுப் பட்டவனில்லை. -சார்ல ப்ராட்லர் ஃ ஃ ஃ சுயராஜ்யத்தில் வாழ்வது இயற்கையின் நியதி; கடவுளின் இச்சை. ஒவ்வொரு தேசமும் அதனதன் முடிவைத் தானே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இயற்கையன்னை தன் கைபட, தனது நித்தியப் புத்தகத்தில் இங்ஙனமே எழுதி விட்டுப் போயிருக்கிறாள். நம்மை நாம் ஆள்கிறோமோ? இல்லை. அப்படியானால் இயற்கைக்கு முரண்பட்ட நிலையில் நாம் வாழ்கிறோமா? ஆம். வைத்தியனுடைய சிகிச்சை பெற்று அவன் மேற் பார்வையிலுள்ள ஒரு நோயாளியைப் போல் இருக்கிறோம். உலகத்திலே சுதந்திரப் பிரியர்கள் என்று பெயர் படைத்த ஒரு சமூகத்தாரின் கீழ் வேலை பழகும் தன்மையிலிருக்கிறோம். இதனின்றும் நம்மை விடுவித்து நம்மிடத்தில் பொறுப்பை ஒப்புவிக்க வேண்டுமென்றே நாம் கோருகிறோம். -சுரேந்திரநாத் பானர்ஜி ஃ ஃ ஃ தங்கள் நாட்டிலே சேவை செய்வதற்காக, பதினாயிரம் மைல்களுக் கப்பால் சென்று (ஐ.சி.எ) பரீட்சையில் தேறி வர வேண்டு மென்று (இந்தியர்களுக்கு) சொல்வது நியாயமற்றது. இந்தத் தர்ம சங்கடமான நிலையில் எந்தச் சமூகத்தாரும் இல்லை. -தாதாபாய் நெளரோஜி ஃ ஃ ஃ கடவுள் காபாவிலேயோ காசியிலேயோ இல்லை. நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறார். சுயராஜ்யம் கூட நம்மை நாம் பரிசீலனை பார்ப்பதிலேயே இருக்கிறது. மற்றவர்களை எதிர் பார்ப்பதினாலோ, நமக்காகப் பிறர் அதனை வாங்கிக் கொடுப்பார் களென்று நம்பியிருப்பதாலோ அது கிடைக்காது. -மகாத்மா காந்தி. ஃ ஃ ஃ மறு பிறவியிலே என்ன நடக்கிற தென்பதைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. இந்தப் பிறவியில் எழுந்துள்ள பிரச்னைகளே என் கவன மனைத்தையும் இழுத்திருக்கின்றன. -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ ஐரோப்பாவின் வழி இந்தியாவின் வழியாகாது. கல்கத்தாவிலோ பம்பாயிலோ இந்தியா இல்லை. ஏழு லட்சம் கிராமங்களிலேதான் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. -மகாத்மா காந்தி ஃ ஃ ஃ ஆன்ம விளக்கு அணைந்து விட்டால், உள்ளத்தில் ஒரு வித இருள் சூழ்ந்து கொள்கிறது. அதிலிருந்து மிருக உணர்ச்சி களும் சூது வாதனைகளும் புறப்படுகின்றன. மனிதர்களின் முகத்திலே தெய்வ களை போய், புலியும், கழுதையும் குடி கொள்கின்றன. மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மிகக் குறைவா யிருக்கலாம். ஆனால் அஃது அணைந்து விட்டால், எவ்வளவு இருள்!. -ஸர் ராதா கிருஷ்ணன் ஃ ஃ ஃ கடவுளே இப்பொழுது நேரில் வந்து நம்மைப் பார்த்து மக்களே! ï¤jid ü‰wh©Lfshf ehfÇf¤âny thœªjt®fshÆUªJ« V‹ ï¥go y£r¡ fz¡fhd k¡fis tij¡»Ö®fŸ? என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? ஆண்டவனே! கண்களைக் கொடுத்தாய்; ஆனால் பார்வையைக் கொடுக்கவில்லை. அறிவை அளித்தாய்; ஆனால் ஆன்மாவை அளிக்கவில்லை. விஞ்ஞானத்தை ஈந்தாய்; ஆனால் தத்துவ ஞானத்தை ஈயவில்லை என்று தான் முறையிடுவோம். -ஸர் ராதா கிருஷ்ணன். ஃ ஃ ஃ இந்தியா அழிந்து விடுமா? அப்படி அழிந்து விட்டால், உலகத்திலேயுள்ள அன்பு, அருள், உறுதி, தியாகம் முதலியன யாவும் அழிந்து விட வேண்டியதுதான். அவைகளுக்குப் பதிலாக ஆசை, செல்வம், மோசம் முதலியனவே உலகத்தில் குடி கொள்ளும். இவை யனைத்திற்கும் மனிதன் பலியாக வேண்டியது தான். ஆனால் அத்தகைய சம்பவம் நேரிடாது. எனவே இந்தியாவும் நாசமடையாது. இந்தியா - நமது தாய்நாடு - எத்தனையோ துன்பங்களை அநுபவித்திருக்கிறது. அவை யெல்லாம் வீண் போய்விடுமா? சகிப்புத் தன்மை யுடையவர்கள் கடைசியில் வெற்றி பெறுவார்கள் என்பது பொய்யாகி விடுமா? -சுவாமி விவேகானந்தர் ஃ ஃ ஃ நம்மை நாடி வந்தவர்களுக் கெல்லாம் இந்தியர்களாகிய நாம் ஒரு காலத்தில் வரையாது வழங்கி வந்தோம். இப்பொழுது? வெட்கம்; வெட்கம். நமது புராதனப் பெருமையைப் படித்த அந்நியன் ஒருவன், இப்பொழுது நமது நாட்டில் ஏதேனும் கற்றுக் கொண்டு போகலாமென்று வந்தால் அவன் வெறுங் கையனாகவே போக நேரிடும். ஒரு காலத்தில் கட்டுப் பாடாயிருந்த சமூக வாழ்வு இப்பொழுது மேனாட்டுக் கட்டிடங் களின் போலிக் களஞ்சியமாக இருக்கிறது. அயல் நாட்டுச் சங்கீதப் புலவர்கள், நமது நாட்டு கிராமபோன்களின் இரைச்சலையும், ஹார்மோனியங்களின் சப்தத்தையுந்தான் கேட்கிறார்கள். அயல் நாட்டுச் சுதந்திரவாதி என்ன காண்கிறான்? விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையிலே வைக்கப்படக் கூடிய நிலையிலுள்ள ஜனங்களைப் பார்க்கிறான். -ஆனந்தா குமாரசாமி ஃ ஃ ஃ தேசீய சுதந்திரத்தை நாம் ஏன் லட்சியமாக வைத்துக் கொண்டிருக்கிறோம்? அது நமது உரிமை என்பதற்காக மட்டுமல்ல. உலக நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய கடமையுமாகும். - ஆனந்தா குமாரசாமி ஃ ஃ ஃ தேசாபிமானம் என்றால் என்ன? பணம், சுகம், அதிகாரம் இவையல்ல. எந்தத் திக்கு நோக்கினும் கொடுமையை எதிர்த்து நிற்க வேண்டிய நிலையிலுள்ள நமது நாட்டில் தேசாபிமானம் என்றால் வறுமை; வேலையில்லாத் திண்டாட்டம்; தேசப்பிரஷ்டம்; சிறை வாசம்; மரணங்கூட. எனது மக்களுக்கும் எனது சமூகத்தாருக்கும் உத்தியோகம் கிடைத்து விட்டால் போதும்; தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் என்று சிலர் கருதலாம். அவர்கள் தேசீய சுதந்திரத்தின் நண்பர்களல்ல; சுய நலங்கொண்ட விரோதிகள். -ஸர் ராதா கிருஷ்ணன் ஃ ஃ ஃ இந்தியாவைத் தெரிந்து கொள்வது அதனை வணங்குவ தாகும். எனது தாய் நாட்டின் பழைய பெருமையை எவ்வளவுக்கெவ்வளவு நான் அதிகமாகப் படிக்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு உலகத்திற்கு அதன் தேவையை அதிகமாக உணர்கிறேன். ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்தியா ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறது? ஆன்மா, அஹிம்சை என்ற இரண்டு உண்மைகளையும் அஃது உபதேசித்து வந்ததனாலேயே அது வாழ்ந்து கொண்டிருக்கிறது. நமது இளைஞர்கள் இந்த இரண்டு உண்மைகளையும் உணர்ந்து கொண்டு விட்டார்களானால், இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களாவார்கள். -சாது வாவானி ஃ ஃ ஃ இந்தியாவிலுள்ள எல்லோரையும் ஒன்றுபடுத்தி வைப்பது வறுமை. வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் சத்துரு எல்லார் முன்னிலையிலும் நிற்கிறது. இந்தப் பொதுப் பிரச்னைகள் தீருகிறவரை யிலாவது நாம் ஒன்று பட்டிருக்க வேண்டாமா? அந்த ஒற்றுமைக்குரிய மேடை காங்கிர ஒன்று தான். -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ நமது அரசியல் பிரச்னைகளும் பொருளாதாரப் பிரச்னைகளும் மிகவும் முக்கியமானவை. அவைகளுக்குப் பரிகாரம் தேடாமல் நாம் ஒன்றுஞ் செய்ய முடியாது. ஆனால் அரசியல் சுதந்திரமே நமது லட்சிய மல்ல. அஃதொரு சாதனந்தான். நல்வாழ்வு நடாத்தவும், மனித சமூகத் தினருக்குள் எத்தகைய தொடர்பு இருக்க வேண்டுமென்பதைக் குறிப்ப தாகவும் உள்ளது இந்த அரசியல் சுதந்திரம். அரசியல் தடைகளையும் பொருளாதாரத் தடைகளையும் நீக்கினாலொழிய நாம் முன்னோக்கிச் செல்ல முடியாது. -பண்டித ஜவஹர் ஃ ஃ ஃ மனிதன் காலையிலெழுந்து வேலைக்குச் செல்கிறான். அவன் வேலை முடிவதற்குள் அதமனமாகிவிடுகிறது. அதற்காக அவன் வேலையை ஆரம்பியாமல் இருக்கிறானா? அவன் விட்ட வேலையை மற்றவர்கள் தொட்டு நடத்துகிறார்களல்லவா? -ரா விஹாரி கோ ஃ ஃ ஃ தோள்வலி பாராட்டத் தக்கதுதான். விஞ்ஞான அறிவு பெருமை யுடையதுதான். ஆனால் இவற்றுள் ஒன்றிலாவது ஆன்ம வெளிச்சம் இல்லா விட்டால் இவை எதற்குப் பிரயோஜனம்? -சுவாமி விவேகானந்தர் ஃ ஃ ஃ நாம் எந்த நிலையிலே இருக்கிறோம்? நம்மிடத்தில் அறிவோடு மூட நம்பிக்கைகள் கலந்திருக்கின்றன. மனித உணர்ச்சிகளும் விலங்குகளின் பழக்க வழக்கங்களும் சேர்ந்திருக்கின்றன. அறிவின் பெருக்கம்; ஆனால் ஆன்மாவின் வறுமை. நாம் எதனையும் நம்புகின்ற தில்லை; ஆனால் அவநம்பிக்கை கொள்கிறதுமில்லை. வாழ்க்கையில் ஒரு லட்சியமே நம்மிடத்தில் கிடையாது. தூல வடிவமாயமைந்த ஆதாரங்களும், மனச் சாந்தியும் சில சமயங்களிலாவது நமக்கு ஏற்படாமற் போனால், சூனியப் பிரபஞ்சத்திலே காணாமற்போன ஆன்மாக் களாக நாம் ஆகிவிடுகிறோம். -ஸர் ராதா கிருஷ்ணன் ஃ ஃ ஃ நமது தேசத்தின் தற்பொழுதைய நிலைமையைச் சிறிது பாருங்கள். இதில் ஏற்பட்டுள்ள தீமைகளுக்கெல்லாம் மூல காரணங்களா யமைந் திருப்பன இரண்டு. அவற்றில் ஒன்று பொறுப்பற்ற செல்வம்; மற்றொன்று மதக் கொடுமை. யாராவது ஒருவன் தற்கொலை செய்து கொள்ளப் போனால், நாம் அவனைப் பார்த்து அப்பா, அப்படி யெல்லாம் ஒன்றும் செய்து விடாதே என்று சொல்கிறோம். ஆனால் நம்மிலே லட்சக் கணக்கான மக்கள் வாழ வேண்டுமென்று விருப்பங் கொண்டிருக் கிறார்கள். எப்படி வாழ்வது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த விஷயத்தில் நமது சமூகம் தனது பொறுப்பை உணரவில்லை. இளமையும், அறிவும், உணர்ச்சியும் நிரம்பப் பெற்ற ஆயிரக் கணக்கான வாலிபர்களுக்கு நிரந்தரமான தன்மதிப்போடு கூடிய வேலை கிடைக்க வில்லை யென்றால் அப்படிப்பட்ட பொருளாதார நிலை இருப்பதற்கே யோக்கியதை இல்லை. எனவே நமது தற்காலப் பொருளாதார வாழ்வில் ஒரு பெரிய மாறுதலைச் செய்யவேண்டும். -ஸர் ராதாகிருஷ்ணன் ஃ ஃ ஃ மேனாட்டு வெளி மயக்கிலிருந்து வெளியே வாருங்கள். இந்தியாவின் உண்மைக் குழந்தைகளாயிருங்கள். போலித்தனம் வேண்டாம். பிளேக் நோயைக் கண்டு எப்படி விரைந்து ஓடுவீர்களோ அப்படியே, தேசீயத்திற்கு விரோதமானவற்றினின்று விரைந்து செல்லுங்கள். உங்களை ஆங்கில மயமாக்கிக் கொள்வதினாலே, ஜன சமூகத்திற்குத் தொண்டு செய்யும் சுகத்தை இழந்தவர்களாவீர்கள். மற்றும், உலக அறிவை வளர்க்கும் சக்தியையும் இழந்தவர்களா வீர்கள். உலகத்திற்கு நீங்கள் அளிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. அப்படியிருக்க, அந்நியர்களுடைய மேஜைகளிலிருந்து விழும் துண்டு களுக்கு ஏன் கை கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்நியர் களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டாமென்று நான் சொல்லவில்லை. தாராளமாகக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களிடமுள்ள நல்லனவற்றை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள். அங்ஙனம் கற்றன வற்றை, நீங்கள் உண்மையான இந்தியர்களா யில்லாமற் போனால் ஜீரணிக்க முடியாது. முதலில், உங்கள் தாயின் திருவடியில் உள்ளத்தை அர்ப்பணம் செய்துவிட வேண்டும். -ஆனந்தா குமாரசாமி ஃ ஃ ஃ இந்திய மக்களே! ஏன் சும்மா உட்கார்ந்து கொண்டிருக் கிறீர்களா? கச்சையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். செயலிலே முனைந்து நில்லுங்கள். உலகத்திலே பெருமையடைந்த எந்த நாடும் தன்னுடைய சுய முயற்சியினாலேயே முன்னுக்கு வந்திருக்கிறது என்பது நினைலிருக்கட்டும். -ஹ்யூம் ஃ ஃ ஃ நம்மை நாம் தாழ்வு படுத்திக் கொள்கிற சுபாவத்தை விட்டு விடுவோம். நாம் பிச்சைக்காரர்களில்லை யென்று நிரூபிப்போம். இறவாத புகழுடைய பொருள்களை நமது குடும்பப் பொக்கிஷங்களி லிருந்து பொறுக்கி யெடுப்போம். அப்பொழுதே நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். உலகத்தையும் காப்பாற்ற முடியும். -ரவீந்தரநாத் டாகூர் ஃ ஃ ஃ சகோதரர்களே! பண்டைய பெருமையின் சின்னமாக மட்டும் இருக்கப் போகிறீர்களா? அல்லது புராதனப் புகழின் நிழலிலே இருந்து கொண்டு எதிர் காலத்தின் நிர்மாணகர்களாக இருக்கப் போகிறீர்களா? -எ. வி. ராமமூர்த்தி ஃ ஃ ஃ நாமெல்லாரும் குரங்கு மனப்பான்மை கொண்டவர்களா யிருக்கிறோம். மேற் சட்டை அணிந்து கொண்டாலென்ன? சிகரெட் பிடித்தாலென்ன? நமது வாழ்விலே ஒழுங்கு இல்லை. நாம் பாதி மிருக மாகவும் பாதி மனிதனாகவும் இருக்கிறோம். தெய்விக நிலைக்குச் செல்ல வேண்டுமென்பதே நமது லட்சியமா யிருக்க வேண்டும். -ஸர் ராதா கிருஷ்ணன் ஃ ஃ ஃ நாம் இன்று ஏழைகளாயிருந்தால் நாளை பணக்காரர் களாகலாம். ஆனால் நமது ஆன்மா அழிந்து விட்டால் அதற்கு எவராலும் மீண்டும் உயிர் கொடுக்க முடியாது. நமது ஆன்மாவை மட்டும் நாம் காப்பாற்றிக் கொண்டோமானால் புறத்திலே ஏற்படும் நிகழ்ச்சிகள் நம்மை ஒன்றும் செய்யா. -ஸர். ராதா கிருஷ்ணன் ஃ ஃ ஃ நாம் நடத்துகிற போராட்டத்திலே பல முறை தோல்விகள் அடையலாம். அதில் அவமானமொன்றுமில்லை. ஆனால் சோர்வு கொண்டு விட்டோமானால் அங்கேதான் ஆபத்து இருக்கிறது. ஒரு பெரிய தேசீயப் போராட்டத்தில், சகிப்புத் தன்மையோடிருப்பதும், தேசீய உணர்ச்சிகள் மங்கிப் போகாமல் காப்பாற்றிக் கொண்டிருப்பதுமே பெரிய காரியமாகும். நமது வெற்றி வெகு தொலைவிலே இருக்கலாம். ஆனால் நிரந்தரமான தோல்வியை அடைய முடியாது. -ராஷ் விஹாரி கோஷ் ஃ ஃ ஃ இந்தியா, நம்மெல்லோருக்கும் தாயான இந்தியா, உலகத்தி லுள்ள நாடுகளுக்கெல்லாம் பால் கொடுத்த இந்தியா - ஆம்; எந்த நாட்டைத்தான் அது பாலூட்டி வளர்க்க வில்லை? - அந்த இந்தியாவுக்குக் கூட சுதந்திர மில்லையா? -பால் ரிச்சர்ட் ஃ ஃ ஃ நம்மிடத்திலே உணர்ச்சி இருக்கிறது. சில சமயங்களில் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் உறுதி இல்லை. நமது முன்னோர்களின் இதயத்திலே கொழுந்து விட்டெரிந்து கொண் டிருந்த இந்த உறுதியை மீண்டும் நாம் கடைப்பிடிக்க வேண்டாமா? -அசுவினி குமார தத்தர் ஃ ஃ ஃ இந்தியா முன்னோக்கிச் செல்லும். ஆனால் அது தேக பலத்தினாலன்று; ஆன்ம பலத்தினாலேயே. செல்வத்தைத் துணை யாகக் கொண்டு நாம் முன்னேற முடியாது. துறவிகளுடைய பிட்சா பாத்திரங்களின் மூலமாகவே நாம் முன்னேற முடியும். -சுவாமி விவேகானந்தர் ஃ ஃ ஃ சுதந்திரம் என்ற வார்த்தையைச் சொல்வதற்கே சிலர் அஞ்சு கிறார்கள். ஆனால் நான், அதனை என் வாழ் நாள் மந்திரமாகக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தேசம் சுதந்திரம் அடைய வேண்டு மென்பது தான் எனது நித்தியப் பிரார்த்தனை. அப்படிச் செய்வது குற்ற மானால், என்னைச் சிறையிலே பிடித்துத் தள்ளுங்கள்; இரும்புச் சங்கிலி களாலே பிணைத்துக் கட்டுங்கள். சுதந்திர மந்திரத்தை உபதேசிப்பது குற்றமானால் நான் ஒரு குற்றவாளிதான். அதற்காக நான் எல்லாத் தண்டனைகளையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். சுதந்திரம் என்றால் பலாத்காரத்தை உபயோகிப்பது என்று அர்த்தமல்ல. எனது தாய் நாடு தனித்த வாழ்வு வாழ வேண்டு மென்ற என் இச்சைதான் அது. -அரவிந்த கோஷ் ஃ ஃ ஃ உலகத்திலே ஞானதாகம் அதிகமாகிவிட்டது. இந்தச் சமயத்தில் உலகத்தார் அனைவரும் இந்தியாவையே ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மானிட சமூகத்திற்கு அவசியமாக வேண்டிய பொக்கிஷம் இங்கேதான் இருக்கிறது. -சுவாமி விவேகானந்தர் ஃ ஃ ஃ தேசீயம் என்பதற்கு நாம் கொண்டுள்ள பொருள் மற்றவர் களுடைய உரிமைகளைப் புறக்கணிக்கிற ஜாதித் திமிர் என்பது அல்ல. பரபர நன்மையை முன்னிட்டு, நமது அயலார்களுடன் நாம் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனுமே வாழ விரும்புகிறோம். -பண்டித ஜவஹர் நமது தேசீயக் கொடி 1. வரலாறு உலகத்தில் சுதந்திரமாயுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும், தங்கள் தேசீயக்கொடி உயரப் பறப்பதைக் கண்டு ஆனந்தமடை கிறார்கள்; அதற்கு வந்தனை செய்கிறார்கள். அப்படியே தங்கள் தேசீய கீதம் பாடப்படு கிறபோது மரியாதையாக எழுந்து நிற்கிறார்கள்; அவர்களின் கண்ணி மைகள் ஒன்று சேருகின்றன; புறக்கண் மூடுவதனால், அகக்கண் திறந்து, தங்களைப் படைத்த தாய்நாட்டை மொத்தமாகப் பார்க்கிறது. இன்னும், தங்களுடைய தேசீயமொழி பேசப்படுகிறபோது, அவர்களையறியாமலே ஒருவித சகோதர உணர்ச்சி உண்டாகிறது. இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன? சுதந்திரமாயுள்ளது எதுவோ, உயர்ந்ததொரு லட்சியத்தைக் கைக்கொண்டுள்ளது எதுவோ, நாகரிகச் செழுமையுடன் கூடியிருப்பது எதுவோ, அதுதான் உண்மையான நாடு. அதன் எல்லையும், ஜனத் தொகையும் மிகவும் குறைவாயிருக்கலாம். இருந்தாலும் மேற்சொன்ன மூன்று லட்சணங்களும் அதற்கு இருக்கும் பட்சத்தில் சர்வதேச மேடையில் அதனுடைய மதிப்பு உயர்ந்து நிற்கிறது; அதனுடைய அபிப்பிராயங்கள் கவனத்துடன் கேட்கப்படுகின்றன. இந்த மூன்று லட்சணங்களையும் சூட்சுமமாகத்தான் உணர முடியும்; ஸ்தூலமாகப் பார்க்க முடியாது. இதனாலேயே, இவற்றின் பிரதிநிதிகள் போல் மூன்று சின்னங்களை ஏற்படுத்தி வைத்திருக் கிறார்கள் அறிஞர்கள். சுதந்திரத்தைக் குறிப்பது கொடி; லட்சியத்தைக் காட்டுவது கீதம்; நாகரிகத்தைப் புலப்படுத்துவது மொழி. கொடி, கீதம், மொழி இம்மூன்றையும் போற்றுவது, சுதந்திரம், லட்சியம், நாகரிகம் இம்மூன்றையும் போற்றுவதேயாகும். இம்மூன்றனுள்ளும் அந்தஸ்து வித்தியாசம் இல்லை யென்றாலும், முதலாவதாகச் சொல்லப்பட வேண்டியது கொடியேயாகும். இதுவே, மற்றைய இரண்டுக்கும் மூலமாயுள்ளது என்று கூடச் சொல்லி விடலாம். எப்படி? கொடி எதைக் குறிக்கிறது? சுதந்திரத்தை. சுதந்திர மில்லாவிட்டால் லட்சியம் ஏது? நாகரிகம் ஏது? சுதந்திரமாயிருந்தால் தான் ஒரு லட்சியத்தைக் கைக்கொள்ள முடியும்; நாகரிகத்தைப் போற்றிக் காப்பாற்ற முடியும். எனவே, பின்னைய இரண்டுக்கும் வழிகாட்டியா யிருப்பது முன்னைய சுதந்திரமே. அப்படியானால் சுதந்திரத்தின் சின்னமாயுள்ள கொடியைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசிய மில்லையா? கொடியானது சுதந்திரத்தின் அடையாளமாகமட்டும் இல்லை, அந்தச் சுதந்திரத்தை அடைவதற்கான வழிகாட்டியாகவும் இருக்கிறது. இது தான் கொடிக்குள்ள தனிச்சிறப்பு. புதிதாகச் சுதந்திரம் பெற விழைந்தவர்களும், இருக்கிற சுதந்திரத்தை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள முனைந்தவர்களும், தங்களை அடக்க வந்த சக்திகளோடும் ஒடுக்க வந்த சக்திகளோடும் முறையே போராடிய காலத்தில், கொடியையே முன்னிலைப்படுத்திப் போராடி வந்திருக்கிறார்கள். சுதந்திரத்திற்காக நடைபெறும் யுத்தங்களில் மட்டுமல்ல, வேறு காரணங்களுக்காக நடைபெறும் யுத்தகங்களில் கூட கொடியே முன்வந்து நிற்கிறது. யுத்தம் துவங்குகிற போதும் கொடி தூக்கப்படுகிறது; அப்படியே சமாதானம் கோருகிறபோதும் கொடி தூக்கப்படுகிறது. யுத்தத்திற்கும் கொடி; சமாதானத்திற்கும் கொடி. அப்படியே சுதந்திரத்தைப் பெறச் செய்வதும் கொடி; அதனைக் காப்பாற்றச் செய்வதும் கொடி. பெற்றுக் கொடுப்பதனாலும் காப்பாற்றிக் கொடுப்பதனாலும், கொடி இருமடங்கு பெருமையுடைய தாகின்றதல்லவோ? சுதந்திரமில்லாத மக்களுக்கு, தனியான கொடி இல்லையா என்று வாசகர்கள் கேட்கலாம். இல்லை; நிச்சயமாக இல்லை. சுதந்திரமில்லாத மக்களுக்குத் தனித்துவமே இல்லாத போழ்து, தனிக்கொடி எங்கிருந்து ஏற்படப் போகிறது? அவர்கள், தங்களை ஆளுகின்றவர்களுடைய ஆதரவு நிழலிலே வசிக்கின்றவர்கள் தானே? அவர்களுடைய வாழ்க்கை இரவல் வாழ்க்கைதானே? கொடியே அவர்களுக்கில்லாதிருக்க, அவர்களுக் கென்று சொந்தமான கீதம் ஏது? மொழி ஏது? நாமே, இந்தியர்களாகிய நாமே, 1947-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பதினைந்தாந்தேதி வரை இந்த நிலையில்தானே இருந்தோம்? நமது என்று உரிமையோடு சொல்லிக் கொள்ளக்கூடிய கொடியோ, கீதமோ, மொழியோ நமக்கு இல்லாமல் தானே இருந்தது? ஆனால் இந்தப் பழங்கதையைப் பற்றிப் பிரஸ்தாபித்து இப்பொழுது நமது மனதைப் புண்படுத்திக் கொள்ள வேண்டுவ தில்லை. கொடியினுடைய சரித்திரம் மிகவும் பழமையானது. ஆதி காலத்தில் நாகரிகத்துடன் வாழ்ந்திருந்த எகிப்து என்ன, பாபிலோனியா என்ன, கிரீஸ் என்ன, ரோமாபுரி என்ன, இவைகளுக்குத் தனித்தனி தேசீயக் கொடிகள் இருந்தனவென்று சரித்திரத்தில் படிக்கிறோம். நமது தமிழ்நாட்டிலும், சேரவேந்தருக்கு விற்கொடியும், பாண்டிய மன்னருக்கு மீன் கொடியும், சோழ அரசருக்குப் புலிக்கொடியும் இருந்தன அல்லவா? இந்தக் கொடிக்காக வாழ்ந்தவர் எத்தனை பேர்? வீழ்ந்தவர் எத்தனை பேர்? அவர்களுடைய ஆன்மா சாந்தியடைக! இந்தியாவுக்கென்று சொந்தமாக ஒரு தேசீயக்கொடி இருக்க வேண்டுமென்ற எண்ணம், 1908-ஆம் வருஷம் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருந்த சில தேச பக்தர்களிடையே முதன்முதலாக ஏற்பட்டது. இவர்களில் பலர், தாங்கள் கொண்டிருந்த தேச பக்தியின் விளைவாகவே வெளிநாடுகளில் வசித்துக் கொண் டிருந்தார்கள். இவர்களுடைய இந்த எண்ணத்தை உருவாக்கிச் செயல்படுத்தியவர் - முதன்முதலாக தேசீயக்கொடியைப் பறக்க விட்டவர் - காமா என்னும் அம்மையார். இவர் வரலாற்று முதலாவது அனுபந்தத்தில் காண்க. 1906-ஆம் வருஷத்திலிருந்தே இந்தியாவின் சுய ஆட்சிக் கிளர்ச்சி அரும்புவிட்டுக்கொண்டு வந்ததென்பதையும், வங்காளப் பிரிவினை காலத்தில் இது வலுப்பெற்ற தென்பதையும் நேயர்கள் அறிவார்கள். இந்தக் கிளர்ச்சியுடன் கூடவே, தேசீயக்கொடி ஒன்று இன்றியமையாதது என்ற எண்ணமும் வளர்ந்தது. பின்னர் இந்தச் சுயஆட்சிக் கிளர்ச்சியை உரமிட்டு வளர்த்தனர் பலர். இவர்களில், லோகமான்ய திலகரையும், அன்னிபெசண்டம்மையாரையும் முக்கியமானவர்களாகக் குறிப்பிட வேண்டும். 1916-17-ஆம் வருஷங்களில் இவர்கள் தலைமையில் நடை பெற்ற ஹோம் ரூல் இயக்கத்தின் போது, ஒருவித தேசீயக்கொடி உபயோகிக்கப்பட்டது. ஆனால் இது ஜனங்களுக்கு உற்சாகந் தருவதா யில்லை. மேற்படி இயக்கத்தை நடத்தி வந்த தலைவர்களுக்கிருந்த செல்வாக்கின் அளவுக்குத்தான். இந்தக் கொடியின் செல்வாக்கும் இருந்தது. காந்தியடிகள், 1921-ஆம் வருஷம் இந்திய அரசியலில் முக்கிய பங்கெடுத்துக் கொள்ளத் துவங்கினார். அது முதற்கொண்டு இந்தியாவின் அரசியல் போக்கு வேறு வழியில் திரும்பியது. இந்தத் திருப்பம், இந்தியக் கலாச்சாரத்தைப் பின்னணியாகக் கொண் டிருந்தது. உடை, பேச்சு முதலிய எல்லாவற்றிலும் இந்தியர்கள், இந்தியர்களாகவே நினைக்கவும் வாழவும் முற்பட்டனர். சுமார் இருபத்தைந்து வருஷத்திற்கு மேலாக, காந்தியடிகள் தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே காந்தியடிகள், தேசீயக்கொடியின் அவசியத்தை நன்கு உணர்ந்தார். எழுதுகிறார்:- கொடியானது, எல்லா நாடுகளுக்கும் இன்றியமையாதது. லட்சக் கணக்கான பேர் அதற்காக உயிர் துறந்திருக்கிறார்கள். ஒரு விக்கிரகத்தை வழிபடுவது போலத்தான் அது என்பதில் சந்தேக மில்லை. அதனை அழிப்பது மிகவும் பாவமாகும். ஏனென்றால் ஒரு கொடியானது, ஒரு லட்சியத்தைப் பிரதிபலித்துக் காட்டுகிறது. 1 காந்தியடிகளுடைய முயற்சியின் பேரில் ஒரு தேசீயக்கொடி தயாரிக்கப்பட்டது. ஒன்றன்கீழொன்றாக வரிசைக் கிரமத்தில், மேலே வெண்மை, நடுவே பச்சை, கீழே சிவப்பு, நடுவிலுள்ள பச்சையின் மீது நீல வர்ணத்தில் கைராட்டினம், இந்த அமைப்போடு கூடியிருந்தது மேற்படி கொடி. வெண்மை நிறம் சிறு பான்மையோராயுள்ள பல சமூகத் தினரையும், பச்சை நிறம் முஸல்மான்களையும், சிவப்பு நிறம் ஹிந்துக் களையும் முறையே குறிக்கின்றதென்றும், கைராட்டினம், எல்லா ஜனங் களுடைய ஜீவனோபாயத்தையும் குறிக்கிறதென்றும், இப்படிச் சமூகப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வியாக்கியானம். இந்தக் கொடிக்கு கற்பிக்கப்பட்டது. அதாவது இந்தியாவிலுள்ள பல்வகைச் சமூகத்தினரும் இந்தக் கொடியின்கீழ் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்பது காந்தியடிகளின் நோக்கம். ஆனால் இந்தக் கொடி அமைப்புக்குப் பலமான ஆட்சேபங்கள் எழுந்தன. சிறப்பாக, சீக்கியர்கள், தாங்கள் ஒரு முக்கியமான சமூகத் தினராயிருந்தும், தங்களுக்குக் கொடியில் பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லையென்று குறை கூறினர். இதனால், தேச மகாஜனங்களின் பிரதிநிதிச்சபையாக இருந்து சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வந்த காங்கிரஸானது, உத்தியோக தோரணையில் இந்தக் கொடியை ஏற்றுக் கொள்ள முடியாம லிருந்தது. இருந்தாலும், காந்தியடிகளே இந்தக் கொடியை பிரேரித் திருந்தமையால், எல்லா காங்கிர கூட்டங்களிலும் இதுவே உபயோகிக்கப்பட்டு வந்தது. தெரிந்தோ, தெரியாமலோ 1923-ஆம் வருஷம், பிரிட்டிஷ் அரசாங்காத்தார், இந்தக் கொடிக்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தனர். மேற்படி வருஷம் மே மாதம், நாகபுரியில், காங்கிர தொண்டர் படையொன்று, தேசீயக்கொடி தாங்கிக் கொண்டு, ஐரோப்பியர் பெரும்பாலோராக வசிக்கும் பகுதிக்கு ஊர்வலமாகச் சென்றது. இதைப் போலீஸார் தடுத்தனர். ஊர்வலத்தினரோ, தங்களுக்கிஷ்டமான இடத் திற்குக் கொடி எடுத்துச் செல்ல உரிமையுண்டு என்று சாதித்தனர்; சத்தியாக் கிரகம் செய்தனர். இதன் விளைவாகத் தொண்டரிற்பலர் கைது செய்யப்பட்டனர். முதன் முதலாகக் கைதியானவர் சுபத்ராதேவியென்ற அம்மையார். இவரைத் தொடர்ந்து பலர் சிறை புகுந்தனர்; அநேக இன்னல்களை அனுபவித்தனர். நாகபுரியில் துவங்கிய கொடி சத்தியாக்கிரகம் வெகுவிரையில் அகில இந்திய இயக்கமாக வளர்ந்தது. அகில இந்திய காங்கிர கமிட்டியும் 1923-ஆம் வருஷம் ஜூலை மாதம் 8, 9, 10 தேதிகளில் நாகபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்குத் தனது பூரண ஆதரவை அளித்தது. கடைசியில் கொடி தாங்கிச் செல்லும் உரிமையை அரசாங்கம் ஒப்புக் கொண்டதன் பேரில், இயக்கம் நின்றது, தேசீயக்கொடிக்கு வெற்றி! நாகபுரி கொடி சத்தியாக்கிரகத்தின் விளைவாக, தேசீயக் கொடிக்கு அபரிமிதமான செல்வாக்கு உண்டாயிற்று. அதன் அவசியத்தையும் புனிதத் தன்மையையும் எல்லாரும் உணர்ந்தனர். காங்கிரஸுக்கு விரோத மாயிருந்தவர்கள் கூட, சர்க்கா (கைராட்டின) கொடியையே தேசீயக் கொடியாக அங்கீகரித்துக் கொண்டனர். 1931-ஆம் வருஷம் வரை இந்தக் கொடி அமைப்பே இருந்து வந்தது. இந்த வருஷம் - 1931-ஆம் வருஷம் - காங்கிர அங்கீகாரத்தின் பேரில் கொடியின் அமைப்பு மாற்றப்பட்டது; வர்ணங்களுக்கும் வேறு வியாக்கி யானம் செய்யப்பட்டது. எப்படியென்று பார்ப்போம். ஒன்றுக்குக் கீழ் மற்றொன்றாக வரிசைக் கிரமத்தில் முதலில் ஆரஞ்சு நிறம்; இரண்டாவது வெளுப்பு நிறம்; மூன்றாவது பச்சை நிறம்; வெளுப்பு நிறத்தின் மீது நீலநிறத்தில் சர்க்கா. மூன்று நிறங் களும் முந்திப்போல் சமூகங்களைக் குறிப்பனவல்ல என்றும் குணச் சிறப்புக்களையே குறிப்பன என்றும் கூறப்பட்டன. ஆரஞ்சு நிறம் தைரியத்தையும் தியாகத்தையும், வெண்மை நிறம் சமாதானத் தையும் சத்தியத்தையும், பசுமை நிறம் தன்னம்பிக்கையையும் ஆண்டகை மையையும் முறையே குறிக்கின்றதென்று கொள்ளப் பட்டது. இதற்குப் பிறகு கொடியைப் பற்றின சமூகப் பிரச்னை அறவே ஒழிந்தது. எல்லாச் சமூகத்தினருக்கும் பொதுவானதே இந்தத் தேசீயக்கொடி என்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நடுவில் பொறிக்கப்பட்ட சர்க்காவோ, பாமர ஜனங்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறதென்று வியாக்கியானம் செய்யப்பட்டது. உண்மையில், இந்திய தேசீயக் கொடி பிறந்தது இந்த 1931-ஆம் வருஷத்தில்தான் என்று சொல்ல வேண்டும். 1931-ஆம் வருஷம் முதல் 1947-ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினைந்தாந்தேதி வரை, மேற்சொன்ன அமைப்புடன் கூடிய கொடியே தேசீயக்கொடியாக இருந்து எல்லாருடைய வணக்கத்தையும் பெற்று வந்தது. இந்தப் பதினைந்தாந் தேதி, நமது இந்தியா சுதந்திரம் பெற்றது; நமக்குத் தனி அந்தது ஏற்பட்டது. இந்த அந்ததுக்கேற்றாற் போல் நமக்கென்று தனியான கொடியும், கீதமும், மொழியும் இருக்க வேண்டிய அவசியத்தை நமது தலைவர்கள் உணர்ந்தார்கள். இதற்காக அவர்கள் புதிதாக எதையும் சிருஷ்டிக்கவில்லை. பழையனவற்றையே புதியனவாக மாற்றிக் கொண்டார்கள். கவி சிரேஷ்டராகிய ரவீந்திரநாத் டாகூர் இயற்றிய `ஜன கண மன என்ற கீதம் நீண்ட காலமாக எல்லோராலும் பாடப்பட்டு வந்தது. இதனையே இசைப் பொருத்தத்துடன் தேசீயகீதமாக ஏற்றுக் கொண்டார்கள். இதே பிரகாரம், காந்தியடிகள், இந்தியாவின் அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்து ஹிந்தி மொழியே அகில இந்திய மொழியாக இருக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்து வந்தார். அதனையே - ஹிந்தி மொழியையே - தேசீயமொழியாக ஒப்புக் கொண்டார்கள். ஆரஞ்சு, வெண்மை, பச்சை ஆகிய மூன்று நிறங்களோடு கூடிய சர்க்கா கொடியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்து, அதனையே தேசீயக்கொடியாக அங்கீகரித்துக் கொண்டார்கள். எப்பொழுதுமே நம்முடைய இந்திய நாகரீகம், புதிய புதிய அமிசங்களை அவ்வப்பொழுது ஏற்றுக்கொண்டு வந்த போதிலும், பழமையின் தொடர்பைக் கூடிய மட்டில் பற்றிக்கொண்டிருக்கும் தன்மையது என்பதை வாசகர்கள் இங்கு கவனிக்க வேண்டும். நமது தேசீயக்கொடி எந்த விதமான சிறிய மாற்றத்தை யடைந்தது? சர்க்காவுக்குப் பதில் சர்க்கரம் பொறிக்கப்பட்டது. அவ்வளவு தான். மூன்று நிறங்களும் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனவே இப்பொழுது நமது தேசீயக்கொடியாக, சுதந்திரக்கொடியாக, தாயின் மணிக்கொடியாக விளங்குவது, ஒன்றன்கீழ் ஒன்றாக வரிசைக் கிரமத்தில் மேலே ஆரஞ்சு, நடுவில் வெளுப்பு, கீழே பச்சை, வெளுப்பான பாகத்தில் நீலநிறத்தில் சக்கரம், இந்த அமைப்புடன் கூடிய கொடியேயாகும். 1947-ஆம் வருடம் ஜூலை மாதம் இருபத்திரண்டாந்தேதி கூடிய அரசியல் நிர்ணய சபை, நமது தேசீயக்கொடியின் அமைப்பு மேற்கண்ட விதமாக இருக்க வேண்டு மென்று தீர்மானித்தது. 2. உட்கருத்து சர்க்காவுக்குப் பதில் சக்கரம் என்பது ஒரு சில மாற்றமாகத் தோன்றினாலும், இந்த மாற்றத்தில் எவ்வளவோ ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. இந்தக் கருத்துக்களும், மேலே சென்னபடி, பழமையான நமது நாகரிகத்தைப் பின்னணியாகக் கொண்டவையே. சர்க்கா, சக்கரமாக மாறியதுபோல், மூன்று நிறங்களுக்குச் செய்யப் பட்ட வியாக்கியானங்களும் மாறின. அதாவது, ஆரஞ்சு, வெண்மை, பசுமை ஆகிய மூன்று நிறங்களையும் இப்பொழுது வேறு கண்கொண்டு பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இதற்காக, நிறங்களைக் கீழ் வரிசையிலிருந்து கவனிப்போம். அப்படிக் கவனிக்கிறபோது முதலில் பசுமையல்லவோ தென்படு கிறது? பசுமை எதைக் குறிக்கிறது? செழுமையை. அதாவது, விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும், உணவுப் பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்து, அந்நிய நாடுகளின் உதவியை எதிர்பாராமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும், என்பன போன்ற கருத்துக்களை எல்லாம் ஒருங்கு திரட்டி நமக்கு உணர்த்துவதாயிருக்கிறது பசுமை நிறம். அடுத்தது வெண்மை. உற்பத்தியாகும் பொருள்களை ஒழுங் காகச் சேகரித்துக் காப்பாற்றி வரவேண்டுமென்பதை இந்த நிறம் உணர்த்துகிறது. வெண்மை நிறத்தில் மற்ற எல்லா நிறங்களும் அடங்கியிருப்பது போல், அரசாங்கமோ, ஜனங்களோ, தேவையான பொருள்களை தேவையான அளவுக்கு எப்பொழுதும் சேகரிப்பில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமல்லவோ? அப்பொழுது தானே உணவுப் பஞ்சம் ஏற்படா மலிருக்கும்? எனவே, வெண்மை நிறம், தேசத்தின் சேமிப்பு உணர்ச்சியை நினைவூட்டிக் கொண்டிருக் கிறது. அடுத்தது ஆரஞ்சு. இந்த நிறம் துறவைக் குறிக்கிறது. துறவு என்றால் என்ன? கொடுப்பது; நம்மிடத்திலேயுள்ள மேலான தன்மைகளை யெல்லாம் பிறருக்குப் பயன்படுத்துவது. உற்பத்தி செய்து காப்பாற்றி வரும் பொருள்களை, எல்லோருக்கும் ஒழுங்காகக் கிடைக்கும்படி செய்வது. பொருளைச் சம்பாதிப்பதைக் காட்டிலும், அந்தப் பொருளை நேரிய முறையில் செலவிடுவதில் தான் ஒரு பொருளாளியினுடைய திறமை இருக்கிறதென்று அறிஞர்கள் கூறுவார்கள். செலவிடுவது என்பது, கடைசிபட்சமாக நிகழ்கின்ற செயலேயானாலும், அதுவே முக்கியமானதாகவும் முதலாவதாகவும் கொள்ளப்படுவதனாலேயே, ஒழுங்கான விநியோகத்தைக் குறிக்கும் ஆரஞ்சு நிறத்திற்கு முதல் தானம் கொடுக்கப்பட்டதுபோலும். திருவள்ளுவர், இறைமாட்சி என்ற அதிகாரத்தில், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்று கூறுகிறார் இந்த அரிய குறளின் கருத்தை உணர்த்துவதே நமது தேசீயக்கொடி என்று சுருக்கமாகக் கூறலாம். கொடியின் வெண்மையான பாகத்தில் சக்கரம் பொறிக்கப் பட்டிருக்கிறதல்லவா, இதற்கு அசோக சக்கரம் என்று பெயர். நமது நாட்டில் ».K.மூன்whtJ நூற்றாண்டில் அசோகன்1 என்ற சக்கரவர்த்தி பாடலிபுத்திரத்தை2த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவன் அறநெறி தவறாத மன்னன். அறவழியிலேயே நின்று தனது ராஜ்யத்தை விரிவு படுத்தினான். இவன் பனார என்று அழைக்கப்படுகிற காசிமா நகருக்கு வடக்கே நான்கு மைல் தொலைவிலுள்ள சாரநாத் என்ற இடத்தில் ஒரு தம்பம் நிறுவி, அதில் புத்த மதத்தைப் பிரசாரம் செய்விக் கின்ற முறையில் ஒரு சாசனம் எழுதுவித்தான், ஏனென்றால், இவன் புத்த மதத்தை அனுஷ்டித்தவன். அந்த மதத்தை இந்தியாவில் வேரூன்றச் செய்தவனும் வெளிநாடுகளில் பரவச் செய்தவனும் இவனே. புத்தர் பிரான் முதன்முதலாக உபதேசம் செய்யத் தொடங்கியது சாரநாத்தில் தான். இதனாலேயே இங்கு ஒரு தம்பம் நிறுவச் செய்தான் அசோகன்3 சிற்பக் கலையின் சிறப்புக்குச் சிறந்த உதாரணமாக இருக்கும் இந்த தம்பத்தின் உச்சி பாகத்தை, மேல், இடை, அடி என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் மேல் பகுதியில் நான்கு சிங்கங்கள் நான்கு திக்குகளை முறையே நோக்கியவண்ணம், ஒன்றின் முதுகை மற்றொன்றோடு இணைத்து வைத்துக் கொண்டு வாய்திறந்து கர்ஜித்துக் கொண்டிருக்கிற பாவனையில் வட்ட வடிவமாயுள்ள ஓர் அடித்தளத்தின் மீது நின்று கொண்டிருக்கின்றன. வட்ட வடிவமான அடித்தளந்தான் இடைப்பகுதி. இதில் நான்கு சிங்கங்களும் கால்களை நன்றாக ஊன்றிக் கொண்டிருப் பதற்கு நேர் கீழே நான்கு சக்கரங்கள் இருக்கின்றன; அதாவது, சிங்கங்கள், சக்கரங்கள் மீது கால்களைப் பதிய வைத்துக் கொண்டிருக்கிற மாதிரி. ஒரு சக்கரத்துக்கும் மற்றொரு சக்கரத்துக்கும் நடுவே, வேகமாக ஓடிக் கொண்டிருக்கிற ஒரு குதிரை, ஓர் எருது, ஒரு யானை, ஒரு சிங்கம் ஆகிய நான்கும் ஒன்றைப் பின் தொடர்ந்து மற்றொன்று இருக்கிற மாதிரி காட்சியளிக்கின்றன. இந்த நான்கு மிருகங்களும் மேலே நிற்கும். நான்கு சிங்கங்களும் எவ்வளவு கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றன! மணிக் கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கலாம். இருக்கட்டும். அடித்தளத்திற்கு கீழே பதினாறு இதழ்களுடன் கூடிய தாமரை ஒன்று மலர்ந்திருக்கிறது. ஆனால் இந்தத் தாமரை மலர் தலைகீழாக, அதாவது இதழ்களெல்லாம் கீழ்ப்பக்கம் விரிந்திருக்கிறமாதிரி அமைந் திருக்கிறது. இது தான் உச்சிப்பாகத்தின் அடிப்பகுதி. இப்படி மூன்று பகுதிகளோடும் கூடிய உச்சிப்பாகம், அசோகன் காலத்தில் எந்தக் கருத்துடன் அமைக்கப்பட்டதென்பதைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு நமக்குத் தேவையில்லை. தற்காலக் கண்கொண்டுதான், பொதுநோக்கத் தோடுதான் இதனைப் பார்க்க வேண்டும்; இதற்கு வியாக்கியானமும் செய்து கொள்ள வேண்டும். இந்த மூன்று பகுதிகளையும் கொண்ட உச்சிப் பாகத்தைப் படத்தில் வரைந்து காட்டுகிறபோது, ஒரு பக்கம் அடியோடு மறைந்து போகு மல்லவா? நான்கு சிங்கங்களுக்குப் பதில் மூன்று சிங்கங்களே தெரியும். இவற்றில் ஒன்று நேர்முகமாகவும் இரண்டு பக்கவாட்டிலும் இருக்கும். அப்படியே சக்கரங்களில், முன் பக்கத்திலுள்ள ஒரு சக்கரமும், இதற்கு இடது பக்கத்தில் குதிரையும், வலது பக்கத்தில் எருதும், இவை மட்டுமே தெரியும். தாமரை இதழ்களில் சுமார் ஆறுமட்டுமே தெரியும். மூன்று பகுதிகளில் மேல் பகுதியும் இடைப்பகுதியும் மட்டும் சேர்ந்து, அதாவது மூன்று சிங்கங்களும், ஒரு சக்கரம், குதிரை, எருது இவைகளோடு காணப்பெறும் அடித்தளமும் சேர்ந்து, ஓர் உருவமாகச் சமைந்து, நமது அரசாங்கச் சின்னமாகத் திகழ்கின்றது. தபால் முத்திரை முதலியவை, செலாவணி நோட்டுகள் , அரசாங்க ததவேஜூகள், கட்டடங்கள், ராணுவத்தினரின் உடுப்புக்கள் ஆகிய பலவற்றிலும் இந்தச் சின்னமே அமைந்திருக்கின்றது. தாமரை மலர், இந்தச் சின்னத்தில் இடம் பெறவில்லை; ஆனால் நமது குடியரசினுடைய ஜனாதிபதியின் கொடியில் தலைகீழாக இல்லாமல் நேராக இடம் பெற்றிருக்கிறது. தாமரை மலர் குன்றாத செழுமையைக் குறிக்கிறது. இந்தியாவின் தேசீய மலர் எதுவென்று கேட்டால் தாமரையைத் தான் சொல்ல வேண்டும். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் தேசீயமலர் என்பதொன்று உண்டு. சரி; அரசாங்கச் சின்னத்தின் தாத்பரியம் என்ன? சிறிது விளக்கு வோம். மிருகங்களில் ஒன்றுதான் சிங்கம்; ஆனாலும் மிருகங்களுக்கு அரசனாயிருக்கிறது. அதாவது ஒரே சமயத்தில் சாதாரண ஒரு மிருக மாகவும் அந்த மிருகங்களுக்கு அரசனாகவும் இருக்கிறது. அதுபோல் நாமெல்லோரும் ஒரே சமயத்தில் இந்நாட்டுப் பிரஜைகளாகவும் இந்நாட்டு மன்னர்களாகவும் இருக்கிறோம். குடியரசின் அடிப்படைத் தத்துவமே ஆள்வோரும் ஆளப்படுவோரும் ஒருவராயிருப்பது தானே? தவிர சிங்கத்தினிடத்தில் சில சிறப்பியல்புகள் இருக்கின்றன. இந்தச் சிறப்பியல்புகள் காரணமாகவே அது, மிருகங்களுக்கு அரசன், மிருகேந்திரன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அப்படியே இந்திய மக்களாகிய நாம், மற்றெல்லோரைக் காட்டிலும் மேலான தன்மைகளை யுடையவராய், மனிதர்களிலே அரசராய் விளங்கவேண்டும். அதுமட்டும் போதாது. அரசரிலே மனிதராகவும் திகழ வேண்டும். அப்பொழுதுதான் உலகம் நம்மை மதிக்கும்; நம்மை பின்பற்றவும் செய்யும். நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டு முலகு என்பது திருக்குறள். சிங்கங்கள் நான்கும் ஒன்றோடொன்று இணைந்து கொண்டிருக் கின்றன; ஆனால் வெவ்வேறு திசைகளை நோக்கிக் கொண்டிருக் கின்றன. அது போல் இந்திய மக்களாகிய நாம் ஏற்றத்தாழ்வுகள் பாராட்டாமல் சமத்துவத்துடனும் ஒற்றுமை யுடனும் இருக்க வேண்டும். உலகத்துக்கான பிரச்சினைகளையும் நேர்மையுடன் நோக்க வேண்டும். எந்த ஒரு நாட்டின் சார்புபற்றியும் நாம் நிற்றல்கூடாது. உலக மக்களிடத்தில் நாம் அன்பு செலுத்த வேண்டும்; அப்படியே உலக மக்களின் அன்பையும் நாம் பெறுதல் வேண்டும். நான்கு சிங்கங்களில் ஒவ்வொன்றும் எதன்மீது தனது கால் களை ஊன்றிக் கொண்டிருக்கிறது? சக்கரத்தின் மீதல்லவா? சக்கரம் எதைக் குறிக்கிறது? தருமத்தை, தரும சக்கரம் என்றே சொல்வார்கள். அதுபோலவே, நமது சொந்த வாழ்க்கையும், சமுதாய வாழ்க்கையும் தருமத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அப் பொழுதுதான் அந்த வாழ்க்கை இன்பமுடையதா யிருக்கும். அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம் புறத்த, புகழும் இல என்கிறார் வள்ளுவர். நான்கு சிங்கங்களுக்குக் கீழே நான்கு மிருகங்கள் உண்டல்லவா, இவை எதைக் குறிக்கின்றன? சாதாரணமாக நாம் பேச்சு வழக்கில், சிங்கப்பார்வை, எருது நடை, யானை பலம், குதிரை வேகம் என்று சொல் கிறோம். நேரிய பார்வையையும், நிமிர்ந்த நடையையும், உடல் வலிமையையும், வேகமாகச் செயலாற்றுந் திறனையும் முறையே குறிப்பதற்காகவே இப்படிச் சொல்கிறோம். யாருக்கு இந்தப் பண்புகள் இருக்கும்? மனத்துக்கண் மாசிலரா யிருப்பவருக்கு. இப்படியிருப்பவர்கள் தான் சான்றோர்; மகாத்மாக்கள். மேற்சொன்ன நான்கு மிருகங்களில் ஒவ்வொன்றுக்கு முன்னாலும் சக்கரம்; பின்னாலும் சக்கரம். மகாத்மாக்களாயிருக்கப்பட்டவர்கள், தருமத்தையே பின்பற்றுகிறார்கள்; இதனால் தருமம் இவர்களைப் பின் பற்றுகிறது. அதாவது, அறவழியிலே செல்ல விழைவோர் இவர்களையே பின்பற்றுகிறார்கள். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பதல்லவோ பழைய வாசகம்? தவிர இந்த மகாத்மாக்கள், முந்தியும் தர்மத்தைச் செய்து வந்தார்கள். இனியும் தருமத்தையே செய்து வருவார்கள். அறவழியே நிற்கும் மகாத்மா பரம்பரையொன்று நமது நாட்டில் எப்பொழுதும் உண்டு. மற்றும் இந்த மகாத்மாக்கள் தருமத்திலேயே பிறக்கிறார்கள்; தருமத் திலேயே வாழ்கிறார்கள்; தருமத்திற்காகவே வாழ்கிறார்கள். இன்னும் இந்த மகாத்மாக்கள், சத்தியத்தையே கடைப்பிடிக் கிறார்கள். இதனால் தான் இவர்கள் நிச்சயமான வெற்றியை அடைகிறார்கள். சத்தியமானது ஆரம்பத்தில் எத்தனை விதமான இடையூறுகளைச் சந்தித்த போதிலும் இறுதியில் அதுவே வெற்றி யடைகிறது. சத்திய வாழ்க்கையே வெற்றி கரமான வாழ்க்கை யென்பது நமது முன்னோர்களின் கோட்பாடாயிருந்து வந்தது. நாமும் இத்தகைய வாழ்க்கையையே நடத்த வேண்டும். அடித்தளத் திற்குக் கீழே ஸத்தியமேவ ஜயதே என்ற வாசகம் பொறிக்கப் பட்டிருப்பதன் உட்கருத்து இதுதான். ஆக மேலே நான்கு சிங்கங்களையும் அவைகளுக்கு அடியிலே யானை, எருது, குதிரை, சிங்கம் ஆகிய நான்கு மிருகங்களையும், இந்த மிருகங்களுக்கு நடுநடுவே நான்கு தரும சக்கரங்களையும், இவை யனைத்திற்கும் கீழே ஸத்திய மேவ ஜயதே என்ற வாசகத்தையும் கொண்ட அரசாங்கச் சின்னத்தின் சுருங்கிய தாத்பரியம் என்னவென்றால், இந்தியாவின் லட்சியம், சத்தியத்தை யும் தருமத்தையும் கடைப் பிடிப்பதன் மூலமாகவே வெற்றி காண்பது, இந்தச் சத்தியத்தையும் தருமத்தையும் உலகத்திடையே பரப்புவது என்பதுதான் மேற்பகுதியி லுள்ள நான்கு சிங்கங்களும், இந்தச் சத்தியத்தையும் தருமத்தையும் உலகத்தின் நான்கு திக்கு களுக்கும் வாய்திறந்து முழங்கிக் கொண்டிருக்கின்றன. இங்ஙனம் சத்தியத்தின் மூலமாகவும் தருமத்தின் மூலமாகவும் வெற்றியடைய வேண்டுமென்பது இந்தியாவின் லட்சியமானால், இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மகாத்மாக்களாக வேண்டும்; மகாத்மா வாழ்க்கையை நடத்த வேண்டும். இதுவரை நம்மால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வந்திருக்கிற மகாத்மாக்கள் அத்தனை பேரும் நம்மினின்று வேறுபட்டவர் களல்லர்; நம்மைப் போன்றவர்களே; முயன்று முன்னுக்கு வந்தவர்கள். நாமும் முயன்றால் நிச்சயம் முன்னுக்கு வருவோம்; மகாத்மாக்களாவோம்; வெற்றியும் அடைவோம். படத்தில் பார்க்கிறபோது, மூன்று சிங்கங்கள் மட்டுந்தானே வாய்திறந்து கொண்டிருக்கின்றன. இதனுடைய உட்கருத்து என்ன என்று வாசகர்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. மூன்று சிங்கங்களும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் முறையே முழக்கம் செய்துகொண்டிருக்கின்றன. உலகத்தில் இந்த மூன்றும் நிலைபெற்றுவிட்டால் சண்டைகள் ஏது? சமாதான மகாநாடுகள் எதற்கு? உலகத்தில் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைபெறச் செய்வதே இந்தியாவின் குறிக்கோள். ஆனால் இதற்காக அது நேர்மையற்ற வழியிலே செல்லாது. சத்திய மார்க்கத்திலே தான் செல்லும்; தரும நெறியிலே தான் செல்லும். காந்தியடிகள் போதனையின் சாரம், லட்சியமும் சாதனமும் ஒன்றாயிருக்க வேண்டுமென்பதல்லவா? இனி கொடிக்கு வருவோம். மேலே சொன்ன நான்கு சக்கரங் களுள் ஒரு சக்கரந்தான் நமது கொடியின் மத்தியில் திகழ்கின்றது. தம்பத்திலுள்ள மற்ற எல்லா உருவங்களையும் விட்டு விட்டு இந்தச் சக்கரத்தை மட்டும் ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வாசகர்கள் கேட்கலாம். மனிதன், படிப்படியாக முன்னேறி நாகரிக நிலையடைந்த தற்கு, சக்கரம் ஒரு முக்கிய காரணமாயிருந்தது என்று சொன்னால் நேயர்கள் ஆச்சரியப்படக் கூடும். ஆதியில் மனிதன், ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கால்நடை யாகவே சென்று வந்தான். பின்னர், வண்டியைக் கண்டுபிடித்து அதில் ஏறிச் சென்றான். இதன் மூலம், நாள் கணக்கில் கடக்க வேண்டிய தூரத்தை மணிக்கணக்கில் கடந்தான். இவன் காலம் மிச்சப்பட்டது. மிச்சப்பட்ட இந்தக் காலத்தை உபயோகமான வழியில் செலவழிக்க முனைந்தான். இப்படிப் பிரயாண காலத்தை மிச்சப்படுத்துவதற்கு மூல காரணமா யிருந்தது எது? சக்கரம். சக்கரங்கள் மீது அமைந்த வண்டியிலன்றோ இவன் சென்றான்? அடுத்தபடி, பிறந்த வடிவத்தோடு உலவி வந்த ஆதி மனிதன், காலக்கிரமத்தில் இலைகளாலும் மரப்பட்டைகளாலும் தன் உடலை மறைத்துக் கொண்டான். பின்னர், பருத்தி வளர்த்து, பஞ்செடுத்து, நூல் நூற்று, துணியாக நெய்து உடுத்திக் கொண்டான்; நாகரிக புருஷனானான். இதற்கு முதற்காரணமாயமைந்தது எது? கைராட்டினம். கைராட்டினத்தில் நூற்ற நூலைக் கொண்டுதானே இவன், தனது துணியை நெய்துகொள்ள முடிந்தது? கைராட்டினத் தின் முக்கிய பகுதியாயிருப்பது எது? சக்கரம். சக்கரமில்லாவிட்டால் ராட்டினம் இல்லை. எனவே, மனிதனுடைய உடைக்கு உதவி செய்தது இந்தச் சக்கரந்தான். உலகத்தின் எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாலும் சரி அந்த நாட்டு ஆதிமக்கள், கைராட்டினத்தை வெகு தாராளமாக உபயோகித்து வந்திருப்பதைக் காணலாம். மூன்றாவதாக, முற்கால மனிதன், அன்றாடம் தனக்கு வேண்டிய உணவைப் பச்சையாகவே தின்று வந்தான். பிறகு சமைத்துத் தின்ன முனைந்தான். நாளை மறு நாட்களுக்குத் தேவையான ஆகாரத்தைப் போதிய அளவு சேகரித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தான். இவைகளுக்காக, மட்பாண்டங்களைத் தயாரிக்கத் தொடங் கினான். மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கு, சக்கரம் இன்றியமையாத கருவி யன்றோ? குயவருடைய சக்கரம் சுழலாவிட்டால் சட்டியேது? பானை யேது? எனவே, மனிதன் ஒழுங்கான வாழ்க்கையை நடத்துவதற்கு இன்றியமையாத சாதனங்களாயமைந்த நடை, உடை, உணவு ஆகிய மூன்றுக்கும் மூலமாயுள்ளது சக்கரம். இந்த மூலப் பொருளை மறக்கலாகுமோ? இன்னும் இந்தச் சக்கரம், எத்தனையோ நல்ல விஷயங்களைப் போதித்துக்கொண்டிருக்கும் ஆசானாயமைந்திருக்கிறது. ஓரிரண்டை மட்டும் கவனிப்போம். சக்கரத்திற்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று சொல்ல முடியாது. அது போலவே, நமது முயற்சிக்கும் உழைப்புக்கும் எல்லையே இருக்கக் கூடாது. எப்பொழுதும், முயன்று கொண்டிருக்க வேண்டும். அப்படியே நாம் பொருள்களை உற்பத்தி செய்வது, அவற்றை ஒழுங்காக உபயோகிப்பது, இவை ஒன்றன்பின் மற்றொன்று தொடர்ந்து எல்லையில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இன்னும், சக்கரம் சுழல்கிறபோது, இந்தக் கணம் மேலே யிருக்கிற பாகம் மறுகணம் கீழே வந்துவிடுகிறது. இப்படி மாறி மாறிக்கொண்டே யிருக்கிறது. இருந்தாலும் அது சுழன்று கொண்டுதான் இருக்கிறது. அதுபோலவே, தனிமனிதனுடைய வாழ்க்கையிலாகட்டும், சமுதாயத் தினுடைய வாழ்க்கையிலாகட்டும் இன்ப துன்பம், வெற்றி தோல்வி, எல்லாம் மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கும். இவைகளினால் மனிதனோ சமுதாயமோ நிதானத்தை இழந்து, செய்யவேண்டிய கடமைகளை மறந்துவிடக் கூடாது; நிலை திரியாமல் பணி செய்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு சக்கரத்துக்கும், மையத்தில் குடம், இதிலிருந்து பிரிந்து செல்லும் கால்கள் கால்களை இணைக்கும் வட்டை என்ற மூன்று பகுதிகளுண்டு. இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பகுதி இல்லா விட்டால் கூட சக்கரம் இல்லை; உபயோகிக்கத் தகுந்தது மன்று. கால் களில் ஒரு கால் இல்லாவிட்டால்கூட அந்த அளவுக்குச் சக்கரம் பலவீன முடையதாகிவிடுகிறது. அது போலவே, நமது சமுதாயத்தைச் சேர்ந்த பலபிரிவினரும், பலதரத்தினரும் ஒன்று பட்டிருக்க வேண்டும். ஒன்று பட்டிருந்தால் தான் செயலாற்ற முடியும். சமுதாயமென்பது கட்டுக் குலையாத அமைப்பு, கட்டுக் குலைந்துவிட்டால் சமுதாயமாகாது. சக்கரத்தை முன் மாதிரியாகக் கொண்டு ஒன்றுபட்ட சமுதாயத்தினராக நாம் வாழவேண்டும். தவிர, சக்கரத்தின் உருவமும் பூஜ்யத்தின் உருவமும் ஒன்றே. பூஜ்யம், தனிப்பட்ட முறையில் மதிப்பற்றதாயிருக்கலாம். ஆனால் வேறொன்றோடு சேர்கிற போது, அந்த ஒன்றின் மதிப்பை மிகவும் உயர்த்திவிடுகிறது. அதாவது அந்த ஒன்றின் உயர்வுக்கு இந்தப் பூஜ்யம் பெரிதும் உதவியாயிருக்கிறது. அதுபோல தனி மனிதனுடைய உயர்வுக்கும் சமுதாயத்தினுடைய உயர்வுக்கும் இந்தச் சக்கரம் பல துறைகளிலும் உதவி செய்கிறது. இன்னமும் அரசினுடைய ஆணையைக் குறிப்பது சக்கரம். சக்கரமானது எப்படி எங்கும் உருண்டு செல்லுந் தன்மையதோ அதைப் போல் அரசின் ஆணையும் நாட்டெல்லைக்குள் எங்கும் செல்லக்கூடியது. சுருக்கமாக அரசின் ஆளுஞ் சக்தியைக் குறிப்பது சக்கரம். இனி (அசோக) சக்கரத்தின் கால்களை எண்ணினால் இருபத்து நான்கு இருப்பது தெரியும். இந்த எண் எதைக் குறிப்பிடுகிறது? இரவு பகலுமாகச் சேர்ந்த ஒரு நாள், இருபத்து நான்கு மணி நேரங் கொண்டதல்லவா? இந்த இருபத்து நான்கு மணிநேரமும் நாம் சக்கரத்தைப் போல் சுழன்று சுழன்று அதாவது ஓயாமல் தேசத் திற்காக உழைத்துக் கொண்டிருக்க வேண்டும், மூன்று நிறங் களும் என்னென்ன தன்மைகளைப் பிரதிபலித்துக் கொண்டிருக் கின்றனவோ அந்தத் தன்மைகளை மேன்மேலும் வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பவைகளைக் குறிப்பிடுகின்றது. தவிர இருபத்து நான்கு என்ற எண், இருபத்து நான்கு பட்சங்களை அதாவது வளர்பிறை தேய்பிறைகளைக் குறிக்கிறதென்றும் கொள்ளலாம். இருபத்து நான்கு வளர்பிறை தேய்பிறைகளைக் கொண்டது ஒரு வருஷம். வருஷம் பூராவும், பிரதி வருஷமும், வளர்பிறை தேய்பிறைகள் அதாவது சந்திரன் இருந்து கொண்டிருக்கிற வரையில், வாழ்விலே உயர்வு தாழ்வுகள் ஏற்பட்டாலும், குளிர்ந்த தன்மையுடன் தேச நலனில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதை நினைவூட்டுகிறது. இன்னோரன்ன உட்கருத்துக்களைக் கொண்ட சக்கரம் நீல நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஏன்? ஆகாயமும், சமுத்திரமும் நீல நிறமுடையன. முன்னது உயர்வையும், பின்னது ஆழத்தையும் முறையே குறிப்பிடுகின்றது. மற்றும், எல்லையில்லாதது, பரந்தது என்று சொல்லுகிற போது ஆகாயத்தையும் சமுத்திரத்தையுமே உதாரணமாக எடுத்துக் காட்டுகிறோம். இவையிரண்டினையும் போல், சக்கரத்தின் மேலே சொன்ன கருத்துக்கள் பலவற்றையும் நாம் நீண்ட காலத்திற்கு உலகெங்கணும் பரப்பிக் கொண்டிருக்க வேண்டுமென்று இந்த நீலம் நமக்கு அறிவுறுத்துகிறது. மற்றும் இந்த நீலநிற சக்கரத்தை நாம் ஏற்றுக் கொண்டதன் மூலமாக நமது அரசியல், சமுதாய நடவடிக்கைகள் யாவும் ஆகாயத்தைப் போல் தூய்மையுடையதாகவும் சமுத்திரத்தைப்போல் என்றும் நிறைவுடை யதாகவும் இருக்குமென்று உறுதி செய்வதார் களாகிறோம். இதுகாறும் கூறியவற்றிலிருந்து நமது தேசீயக்கொடியின் அமைப்பைப் பற்றியும் அதனுள் பொதிந்து கிடக்கும் கருத்துக் களைப் பற்றியும் வாசகர்கள் ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார்கள். இதுதான் இந்திய மக்கள் அனைவருடைய வணக்கத்திற்குமுரிய கொடி. இது தவிர, நமது இந்தியா அல்லது பாரத நாட்டின் ராஷ்டிரபதிக் கென்று தனியான ஒரு கொடியுண்டு. இது நான்கு நீண்ட சதுரப் பிரிவினையுடையது. இடது பக்க மேற்பிரிவில் அரசாங்கச் சின்னமாகிய முச்சிங்க உருவம்; வலது பக்க மேற்பிரிவில் யானை; இடது பக்க கீழ்ப்பிரிவில் தராசு; வலதுபக்கம் கீழ்ப்பிரிவில் தாமரையையுடைய மட்பாண்டம் இடதுபக்கம் மேற்பிரிவும் வலதுபக்கம் கீழ்ப்பிரிவும் நீலநிறமுடையன; வலது பக்க மேற்பிரிவும், இடது பக்கக் கீழ்ப்பிரிவும் சிவப்பு நிறமுடையன. இவற்றின் மீது மேற்சொன்ன நான்கு உருவங் களும் தங்கத்தினால் இழைக்கப்பட்டிருக்கின்றன. இந்த உருவங்களில், தராசு ஒன்றைத் தவிர, மற்ற மூன்றின் உட்கருத்துக்களையும் ஏற்கனவே கூறியிருக்கிறோம். தராசு, எல்லோருக்கும் ஒழுங்கான நீதிகிடைக்குமென்பதையும், எல்லோருடைய வாழ்க்கையிலும் நேர்மையும் நிதானமும் இருக்க வேண்டுமென்பதையும் சுட்டிக் காட்டுவதாயிருக்கிறது. இந்தக் கொடி ராஷ்டிரபதி வசிக்கும் மாளிகையில் பறந்து கொண்டிருக்கும். இது தவிர, கவர்னர்கள், ராஜப் பிரமுகர்கள் இவர்களுக்குத் தனித்தனி கொடிகள் உண்டு. இங்ஙனமே தரைப்படை, கப்பற்படை, விமானப்படை முதலியவற்றிற்கு வெவ்வேறான கொடிகள் உண்டு. இவையாவும் அவரவருக்கே உரியது; அவரவருடைய தனித் துவத்தைக் குறிப்பது. ஆனால் இந்தப் பலதிறக்கொடி அமைப்புகளிலும், தேசீயக்கொடியோ, முச்சிங்க வடிவினையுடைய அரசாங்கச் சின்னமோ இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதிலிருந்து, தேசீயக் கொடி யினுடையவும் அரசாங்கச் சின்னத்தி னுடையவும் மகத்துவம் நன்கு விளங்கும். இந்தக் காரணத்திற்காகவே நாமும் இவ்விரண்டினைப் பற்றி மட்டுமே இந்தச் சிறிய நூலில் பேசத்துணிந்தோம். 3. வணக்கம் எல்லோருக்கும் பொதுவானது தேசீயக்கொடி. மதம், இனம், வகுப்பு, பால் ஆகிய எவ்வித வேற்றுமையுமின்றி எல்லோரும் ஆம், இளைஞர், முதியோர் ஆகிய எல்லோரும் இதனை வணங்குதல் வேண்டும்; சிறந்த பொக்கிஷம் போல் இதனைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும். இதனைப் போற்றுவது, நம்முடைய தன்மதிப்பை உயர்த்திக் கொள்வதாகும். இதனைக் காப்பாற்றுவது நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதாகும். தன் மதிப்பு உணர்ச்சியுடையவர்களும், தற்காத்துக் கொள்ளும் திறனுடை யவர்களுமே உலகத்தினரால் மதிக்கப்படுகிறார்கள். சுதந்திரதேவி, இவர் களுடைய வந்தனையையும் வழிபாட்டையுமே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறாள்; இவர்களுடைய பக்திக்குக் கட்டுப்பட்டு மிருக்கிறாள். உண்மையில் இவர்களால்தான், சுதந்திரத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாவண்ணம் அதனைக் காப்பாற்றிக் கொண்டு வர முடியும். தேசீயக் கொடியானது, ஒரு தேசத்தின் சுயமரியாதை, கௌரவம், லட்சியங்கள், ஆவல்கள் ஆகிய அனைத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறிப்போந்தார் காந்தியடிகள் ஓரிடத்தில். தேசீயக்கொடியைக் காப்பாற்றும் பொருட்டு நாம் எல்லாவித தியாகங்களையும் செய்யச் சித்தமாயிருக்க வேண்டும். தியாகஞ் செய்யும் சக்தி நம்மிடத்தில் இருக்கிற வரையில் தான் இந்தக் கொடி நம் வசத்தில் இருந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு தேசத்தின் கொடியும், அந்தந்த தேசத்தினரின் தியாக சக்தியை உலகத்தினருக்கு அறிவிப்பதுபோல் உயரப் பறந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டு மக்களின் வீரமும் உரிய காலங்களில் திரண்டு வெளிப் படுவதற்கு, அந்தந்த நாட்டு தேசீயக் கொடி சிறந்த தூண்டு கருவியாயிருந்து வந்திருக்கிறதென்பதை உலக சரித்திரத்தில் பலபடக் காண்கிறோம். இங்ஙனம் தியாகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் சாதனமாயமைந் திருப்பதனாலேயே தேசீயக் கொடியானது புனிதத் தன்மையுடையதாகிறது. புனிதமான இந்தக் தேசீயக் கொடியை நாம் எப்படி எப்படி யெல்லாம் போற்றி வணங்கவேண்டுமென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், இதனை எப்படி எப்படி கருதக்கூடாது, எந்தெந்த விதமாக உபயோகிக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். தருமத்தைச் செய்யாமலிருப்பதைக் காட்டிலும் அதருமத்தைச் செய்வது பெருங்குற்ற மென்று பெரியோர்கள் கூறுவார்கள். ஒருவரை மரியாதை செய்யாமலிருக்கலாம்; ஆனால் அவரை அவமரியாதை செய்யக் கூடாதல்லவா? எனவே, கொடியை எப்படி எப்படி கருதக்கூடாது. எந்தெந்த விதத்தில் உபயோகிக்கக்கூடாது என்பதை வரிசைக் கிரமமாக கூற விரும்புகிறோம். 1. கொடியை, சாதாரண ஒரு துணியென்று கருதக்கூடாது; கண்ட விடத்திலும் போட்டு வைக்கக்கூடாது; வெயிலில் காய்வதனாலோ, மழையில் நனைவதனாலோ அதில் வேறு கறைகள் படுமாறு விடக்கூடாது. 2. செல்லரித்துப்போன அல்லது கிழிந்துபோன அல்லது கறை பட்டுப்போன கொடியை உபயோகிக்கக்கூடாது. 3. வேறு சின்னங்களையோ வாசகங்களையோ கொடியில் பொறிக்கக்கூடாது. 4. தலையணை உறையாகவோ, மேஜை, படுக்கை விரிப்பு களாகவோ போர்வையாகவோ, படுதாவாகவோ, துணிமணிகளின் மீது அலங்காரங்களாகவோ இப்படி எந்த விதமாகவும் கொடியையும் கொடியின் சின்னத்தையும் உபயோகிக்கக் கூடாது. 5. தரையின்மீதோ தண்ணீரின்மீதோ நுனி பட்டுக் கொண்டிருக்கும் படியாகக் கொடியை பறக்கவிடக்கூடாது. 6. தேசீயக் கொடிக்கு மேலே, அதாவது அதைவிட உயரத்தில் வேறெந்தக் கொடியையோ, சின்னத்தையோ வைக்கக்கூடாது. 7. அப்படியே தேசீயக்கொடிக்கு வலது பக்கத்திலும் வேறெந்தக் கொடியையோ சின்னத்தையோ வைக்கக்கூடாது. 8. மந்திரிகள், சட்ட சபைகளின் தலைவர்கள், சீப் கமிஷனர்கள், வெளிநாடுகளிலுள்ள இந்தியாவின் ஸ்தானீகர்கள், ராஜப் பிரமுகர்கள் இப்படிப்பட்டவர்களைத் தவிர மற்ற யாரும், தங்கள் மோட்டார் கார்களின்மீது தேசீயக்கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு செல்லக் கூடாது. (ராஷ்டிரபதி, கவர்னர்கள், இவர் களுடைய மோட்டார்களின் மீது அவர்களுடைய சொந்தக் கொடிகள் பறக்கும்.) 9. கொடி மரத்தின் மீது எந்த விதமான விளம்பரங்களையும் ஒட்டக்கூடாது. 10. ஊர்வலம், அணிவகுப்பு முதலியவற்றில் கொடியைப் பிடித்துச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிற பொழுது, சாய்வாக எடுத்துச் செல்லக்கூடாது. 11. கொடி பிடித்துச் செல்லும் பேறு பெற்றவர், வலது புஜத்தின் மீது, நேராக நிமிர்த்தி வைத்துக் கொண்டு செல்ல வேண்டுமே தவிர, வேறு பக்கத்தில் வேறு விதமாக எடுத்துச் செல்லக்கூடாது. 12. இரவு நேரத்தில் கொடியைப் பறக்கவிடக்கூடாது. 13. கொடியை இஷ்டமான அளவில், அதாவது சச் சதுரமாகவோ, வட்ட வடிவமாகவோ இஷ்டப்படிக்குத் தைத்து உபயோகிக்கக்கூடாது. 14. கொடியின் மூன்று நிறங்களையும் தலைகீழாக மாற்றி உபயோகிக்கக்கூடாது. இனி, கொடி எப்படி இருக்கவேண்டும், அதனை எப்படி உபயோகிக்க வேண்டும், எப்படி வணங்கவேண்டும் என்பவை களைப்பற்றி வரிசைக்கிரமமாகக் கூறுவோம். 1. கொடியானது, உறுதியான, நீண்டகாலம் உழைக்கக்கூடிய துணியில் தயாரிக்கப்பட வேண்டும்; வெயிலுக்கும் மழைக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய துணியாயிருக்க வேண்டுமென்று சொன் னாலும் பொருந்தும். 2. கொடியிலே உபயோகிக்கப்படுகிற ஆரஞ்சு, பச்சை, நீலம் ஆகிய மூன்றும் கெட்டிச்சாயமுள்ளதாயிருக்க வேண்டும். வெயிலிலோ, மழையிலோ இந்த நிறங்கள் மங்கிப்போகவோ கலைந்து போகவோ கூடாது. 3. கொடியானது நீண்ட சதுரமுடையதாயிருக்க வேண்டும். நீளத்தைக் காட்டிலும் அகலம் மூன்றில் இரண்டு பங்காகவே இருக்க வேண்டும். உதாரணமாக ஆறடி நீளமிருந்தால் நாலடி அகலம் இருக்க வேண்டும். 4. நடுவிலே வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற சக்கரம், அந்த வெள்ளைப்பகுதிக்குள் அடங்கியிருக்க வேண்டும்; மேலே ஆரஞ்சு நிறத்திலும் கீழே பச்சை நிறத்திலும் படக்கூடாது. 5. சக்கரத்திலுள்ள கால்கள் இருபத்து நான்காகவே இருக்க வேண்டும்; கூடவோ குறையவோ கூடாது. 6. தேசீயத் திருநாட்களிலும் அரசாங்கத்தினரால் குறிப்பிடப் பெறும் விசேஷ தினங்களிலுமே கொடியைப் பறக்கவிட வேண்டும். அந்த நாட்களிலும் சூரியோதயத்திலிருந்து சூரியாஸ்தமனம் வரையில் தான் பறக்கவிட வேண்டும். 7. கொடிக்கென்று ஒரு கம்பம் நட்டு அதில்தான் கொடியை ஏற்றவேண்டும். 8. கொடியை ஏற்றுகிறபோது வேகமாக ஏற்ற வேண்டும்; இறக்குகிறபோது மெதுவாக இறக்க வேண்டும். 9. ஏற்றுகிறபோதும், இறக்குகிறபோதும் கொடியைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டு அதற்கு வணக்கம் செலுத்தல் வேண்டும். 10. கொடியைப் பறக்க விடுகிறபோது, ஆரஞ்சு நிறம் மேலாக இருக்க வேண்டும். அப்படிக்கின்றி பச்சை நிறம் மேலாக இருக்கும்படியும் ஆரஞ்சுநிறம் கீழாக இருக்கும் படியும் செய்தால், கொடியைத் தலைகீழாகத் தொங்கவிட்டதாகும். இது மிகவும் தவறு. 11. கொடிக்கம்பத்தின் உச்சியில் தான் கொடி பறக்க வேண்டும். 12. தேசீயத் திருநாட்களிலும் மகிழ்ச்சிக் கொண்டாட்ட நாட்களிலும் சூரியோதயத்திலிருந்து சூரியாஸ்தமனம் வரையில் கொடியைக் கம்பத்தின் உச்சியிலேயே பறக்கவிட வேண்டும். ஆனால் துக்கத்திற்கறிகுறியாகவும் கொடியைப் பறக்கவிடுவதுண்டு. அப்பொழுது கம்பத்தின் பாதியில்தான் பறக்கவிடவேண்டும். அப்படிப்பறக்க விடுகிறபோதுகூட, முதலில் உச்சியில் ஏற்றி ஒரு கணம் அங்கே பறக்கவிட்டு, பிறகு பாதியில் இறக்கிப் பறக்கவிட வேண்டும். ஒரு நாள் பூராவும் இப்படிப் பாதியில் பறக்கவிடக் கூடாது. சூரியோதயத்திலிருந்து நண்பகல் வரையில் தான் பாதிக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும். பகலிலிருந்து அஸ்தமனம் வரையில் வழக்கம் போல் உச்சிக் கம்பத்திலேயே பறக்கவிட வேண்டும். தேசம் அமர வாழ்வுடையது. இந்த அமர வாழ்வில் ஏகதேசமாகச் சிறிது நேரம் துக்கத்தை அனுபவிக்கும்படி நேரிடு கிறது. அவ்வளவுதான். இந்தச் சிறிது நேர துக்கத்திற் கறிகுறியாகவே, தேசத்தின் சின்னமாகிய கொடியை, பாதிநாள் பாதிக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும். ஒரு தேசம் எப்பொழுதும் துக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கக் கூடாதல்லவா? துக்கத்தில் தன்னை இழந்துவிட்டால் அது மேற்கொண்டு தன் கடமைகளைச் செய்துகொண்டு போவதெப்படி? இதற்காகவே கொடியை, பகலுக்கு மேல், உச்சியில் பறக்கவிட வேண்டியது அவசியமென்று கொள்ளப் பட்டிருக்கிறது. 13. மற்றக் கொடிகளுக்கு மத்தியில் தேசீயக்கொடியைப் பறக்கவிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறபொழுது, தேசீயக்கொடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 14. மற்றக் கொடிகளை ஏற்றுவதற்கு முதலில் தேசீயக் கொடியையே ஏற்ற வேண்டும்; இறக்குகிறபோது, மற்றக் கொடிகளை இறக்கிவிட்டு, கடைசியிலேயே தேசீயக்கொடியை இறக்க வேண்டும். 15. மற்றக் கொடிகளைக் காட்டிலும் உயரத்தில் தேசீயக்கொடி பறக்க வேண்டும். 16. ஊர்வலங்களில் மற்றக் கொடிகளுக்கு முன்னால் தேசீயக் கொடி செல்லவேண்டும். 17. தேசீயக்கொடியோடு மற்றக் கொடிகளைத் தொங்கவிடுகிற பொழுது, தேசீயக்கொடிக்கு இடது பக்கத்தில் மற்றக்கொடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 18. மற்றக் கொடிகள் உயரப்பறந்து கொண்டிருக்கிறபொழுது, அவை களுக்கு முன்னால் தேசீயக்கொடியை மட்டும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இறக்கக் கூடாது. 19. கூட்டம் நடைபெறுகிற மண்டபங்களில், சுவர்கள் மீது தேசீயக்கொடியை அலங்கரிக்க விரும்பினால் நீளவாட்டில் அதாவது கிழக்கு மேற்கில் வைக்கிறபோது ஆரஞ்சு நிறம் மேலாகவும் பச்சை நிறம் கீழாகவும் இருக்க வேண்டு மென்பதை நாம் மீண்டும் சொல்லத் தேவையில்லை. குறுக்கு வாட்டில் அதாவது வடக்குத் தெற்காக தொங்கவிட்ட மாதிரி வைக்கிறபோது, ஆரஞ்சு நிறம் வலது பக்கத்தில் இருக்க வேண்டும். 20. கூட்டத் தலைவருக்குப் பின்னால் சுவரில் சிறிது உயரத்தில் தேசீயக்கொடி இருக்கவேண்டும். 21. பிரசங்க மேடையிலேயோ அதற்குச் சமீபத்திலேயோ கொடியை நாட்ட வேண்டுமென்று கருதினால் பிரசங்கிகளுக்கு வலது பக்கத்தில் இருக்க வேண்டும். 22. கொடி, உபயோகத்திற்குத் தகுதியற்ற நிலையை அடைந்து விடும் பட்சத்தில் அதனை அலட்சியமாக தூர எறிந்துவிடக் கூடாது; அல்லது அதனை அகௌரவப் படுத்துகிறமாதிரி வேறு விதமாக உபயோகிக்கக்கூடாது. அதனை மரியாதையுடன் எரித்துவிட வேண்டும்; அல்லது ஜாக்கிரதையாக பெட்டியில் அடக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். தேசீயக் கொடியை, எங்கெங்கே, யாராரால் எவ்வெப்பொழுது பறக்கவிட வேண்டுமென்பதைப்பற்றி அரசாங்கத்தார் சில விதி களைத் தயாரித்து வெளியிட்டிருக்கின்றனர். இவற்றை ஒவ்வொரு வரும் கவனத்தில் வைத்துக்கொள்ளுதல் அவசியமாகும். 1. பொதுவாக, முக்கியமான அரசாங்கக் கட்டடங்கள் மீது பறக்கவிடவேண்டும். உதாரணமாக, உயர்தர நீதிமன்றங்கள், அரசாங்கக் காரியாலயம்,(செகெரெடேரியட்) கமிஷனர்களின் காரியாலயங்கள், கலெக்டர் காரியாலயங்கள், சிறைச் சாலைகள், ஜில்லா போர்ட், முனிசிபல் காரியாலயங்கள், இப்படிப் பட்ட கட்டடங்கள்மீது பறக்க விடவேண்டும். 2. கவர்னர்களோ, ராஜப்பிரமுகர்களோ, தங்கள் ராஜ்யத்திற்கு வெளியே சென்று, தங்களுடைய சொந்த வாசஸ்தலத்திலோ, பிறருடைய வாசஸ்தலத்திலோ தங்கினால் அந்த வாசஸ் தலத்தின் மீதும், வெளிநாடுகளிலுள்ள இந்திய ஸ்தானீகர்களின் காரியா லயங்கள் மீதும், இந்தியா அரசாங்கத்தைச் சேர்ந்த மந்திரிகளினுடையவும், ராஜ்ய (மாகாண) அரசாங்கத்தைச் சேர்ந்த மந்திரிகளினுடையவும், இந்தியா அரசாங்கத்தின் உபமந்திரிகளின் வாசஸ்தலங்கள் மீதும், எந்தெந்த ராஜ்யங்களில் மேல்சபை இருக்கிறதோ, அந்தந்த சபையின் தலைவருடைய வாசஸ்தலத்தின் மீதும், ராஜ்ய சபை, லோக் சபை, ராஜ்ய அஸெம்ப்ளிகள், இவை களின் தலைவர்களுடைய வாசஸ்தலங்கள்மீதும், பிரதம கமிஷனர், பிரதேச கமிஷனர்,டிவிஷன் கமிஷனர், டெபுடி கமிஷனர், ஜில்லா கலெக்டர் இவர்களுடைய வாசஸ்தலங்களின் மீதும், (கொடியை பறக்கவிடலாம்). எல்லைப்புறப் பிரதேசங்களில், விசேஷமான இடங்களென்று கருதப்படுகின்றவைமீதும் கொடியைப் பறக்கவிடலாம். 3. ராஷ்டிரபதிக்கென்று தனியான கொடியுண்டல்லவா, அதனை ராஷ்டிரபதி பவனத்தின்மீதும் இதே பிரகாரம், கவர்னர் களுக்கும், ராஜப்பிரமுகர்களுக்கும் ஏற்பட்டுள்ள தனியான கொடியை அவர்களுடைய ராஜபவனத்திலும் பறக்கவிடலாம். 4. ராஷ்டிரபதியோ, பிரதம மந்திரியோ, உபபிரதம மந்திரியோ, ஒரு ராஜ்யத்திற்கு விஜயம் செய்து, அந்த ராஜ்யத்தின் கவர்னருடைய அல்லது ராஜப் பிரமுகருடைய மாளிகையில் தங்கினால், அந்த மாளிகையின் மீதோ, அல்லது அந்த மாளிகையின் எந்தப் பகுதி கட்டடத்தில் தங்குகிறார்களோ அந்தப் பகுதிக் கட்டடத்தின் மீதோ, அல்லது அந்த மாளிகையின் முகப்பு வாசலிலோ, ராஷ்டிரபதி மட்டும் தங்கினால் அவருடைய தனியான கொடியும் பிரதம மந்திரியோ, உபபிரதம மந்திரியோ தங்கினால் தேசீயக் கொடியும், கவர்னர்களுடைய அல்லது ராஜப் பிரமுகர் களுடைய கொடியுடன் சேர்த்துப் பறக்க விடவேண்டும். 5. கவர்னரோ, ராஜப்பிரமுகரோ, தங்கள் ராஜ்ய எல்லைக்குள் எங்கேனும் ஒரு பிரயாண விடுதியில் தங்க, அதே விடுதியில் அவருடைய விருந்தினராக ராஷ்டிரபதியோ, பிரதம மந்திரி யோ, உப பிரதம மந்திரியோ தங்கும்படி நேரிட்டால், முந்தின பாராவில் சொன்னபடி கொடி பறக்கவிடவேண்டும். 6. கவர்னரோ, ராஜப் பிரமுகரோ இல்லாத ஓர் ஊருக்கு ராஷ்டிரபதியோ, பிரதம மந்திரியோ, உபபிரதமமந்திரியோ செல்லும்படி நேரிட்டால், இவர்கள் தங்கும் விடுதிக்கு மேலோ, தனியாக நாட்டப்பட்ட ஒரு கொடிக் கம்பத்தின் மீதோ, ராஷ்டிரபதி மட்டும் தங்கினால் அவருடைய கொடியும், பிரதம மந்திரியோ உபபிரதம மந்திரியோ தங்கினால் தேசீயக் கொடியும் முறையே பறக்கவிடப்பட வேண்டும். 7. இரண்டாவது பாராவில் குறிப்பிடப் பெற்றவர்கள் தங்களுடைய மோட்டார் வண்டிகள்மீது குறிப்பிடப்பெற்ற முறையில் தேசீயக் கொடியைப் பறக்கவிட உரிமையுடையவர்கள். 8. சுதந்திர தினமாகிய ஆகஸ்ட் பதினைந்தாந்தேதி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளாகிய அக்டோபர் இரண்டாந் தேதி, குடியரசு நன்னாளாகிய ஜனவரி இருபத்தாராந்தேதி, தேசீய வாரம் (ஏப்ரல் 6-13) ஆகிய விசேஷ நாட்களிலும், தேசீய முக்கியத்துவம் வாய்ந்த மற்றக் கொண்டாட்ட நாட்களிலும் யாரும் எவ்விதத் தடையுமின்றி கொடியைப் பறக்கவிடலாம். கொடியை வணங்குவதன் மூலம் தேசத்தை வணங்குகின்றோம். ஏனென்றால் தேசத்தின் பிரதிநிதியாயிருப்பது கொடி. கொடியின் நிறங்கள், சக்கரம் எல்லாம் நமக்கு என்ன போதிக்கின்றன? இந்திய மக்களாகிய நாம் அனைவரும் எவ்விதப் பாகுபாடும் பாராட்டாமல் தேச நலனை நாட வேண்டுமென்ற ஒரே பாடத்தைத்தான் போதிக் கின்றன. இந்தப் பாடத்தைக் கற்று, நமது அன்றாட வாழ்க்கையில் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவோமாக! அனுபந்தம் -1 காமா அம்மையாரின் வாழ்க்கைக் குறிப்பு இப்பொழுது நமது வணக்கத்திற்குரியதாயிருக்கின்ற தேசீயக் கொடி பிறந்த கதை வெகு ஆச்சரியமானது. இது பிறந்தது ஒரு தாயின் உள்ளத்திலே; முதன்முதல் பறந்தது அந்நிய நாட்டிலே-ஜெர்மனியிலே! ஆச்சரியமாக இல்லையா? இந்தியாவுக்குச் சொந்தமாக ஒரு தேசீயக் கொடி இருக்க வேண்டு மென்ற அவசியத்தை உணர்ந்து, அதைச் செயலில் கொணர்ந் தவர் திருமதி.காமா என்னும் அம்மையார். இவரது வரலாற்றைச் சுருக்கமாக இங்குக் கூறுதல் பொருத்தமாயிருக்கும். பொதுவாக, பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் செல்வச் செழுமையும் வியாபாரத் திறமையும் படைத்தவர்கள். இவர்களுடைய செல்வாக்கு பம்பாய் நகரத்தில் அதிகம்.செல்வச் செழுமையும் வியாபாரத் திறமையும் இவர்களிடம் குடிகொண்டிரு ந்ததன் காரணமாக இவர்கள் தேசீய இயக்கத்தில் பெரும்பங்கு எடுத்துக் கொள்வதில்லையென்று சிலர் குறை யாகச் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் இந்திய தேசீய இயக்கத் திற்கு நல்ல முறையில் விதையூன்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பார்சிகளே. தாதாபாய் நெளரோஜியை யாரேனும் மறக்க முடியுமா? திருமதி காமாவின் நினைவுச் சின்னத்தின் முன்னர் யாரேனும் தலை வணங்காமலிருக்க முடியுமா? இந்த நினைவுச் சின்னமும் எங்கேயிருக் கிறது தெரியுமா? பாரிஸ் மாநகரில்! பொதுவாக இந்தியா, சிறப்பாக பம்பாய், நமது தேசீயக் கொடியைப் படைத்துக் கொடுத்த தாயை மாது காமாவை மறந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். பம்பாயில் நல்ல வியாபாரஞ் செய்துவந்த ஸோராப்ஜி ப்ரேம்ஜி. பட்டேல் என்பவருடைய செல்வ மகளாய்ப் பிறந்தார் நமது காமா. பிறந்தது 1861-ஆம் வருஷம். பணக்கார குடும்பத்துக்குரிய எல்லாச் சலுகைகளுடனேயே இவர் வளர்ந்து வந்தார். ஆனால் இவர் உள்ளம் நாட்டுப் பணியில் தோய்ந்திருந்தது. சிறு பிராயத்திலேயே ஏழை மக்களுடன் உறவு கொண்டார்; அவர்களுடைய நலனுக்குப் பாடுபட்டார். இவருக்கு இருபத்து நான்கு வயது. ரஸ்ட்டம் காமா என்ற பெயருடைய ஒரு பாரிஸ்ட்டரை மணஞ் செய்து கொண்டார். இவருடைய மண வாழ்க்கையில் இனிமை அரும்பவில்லை; மகிழ்ச்சி மலரவில்லை. எனவே இருவரும் சிறிது காலத்திற்குப் பிறகு பிரிய வேண்டியவர் களானார்கள். மாது காமாவின் உள்ளத்தில் ஏக்கம் புகுந்தது. இது காரணமாக உடல் நிலையும் சீர்கெட்டது. தக்க சிகிச்சை செய்துகொள்ள இங்கிலாந்து செல்வது உசிதமென்று தீர்மானித்து அப்படியே 1902-ஆம் வருஷம் பம்பாயிலிருந்து புறப்பட்டார். புறப்படுகையில், தமது தாய்நாட்டை இன்னும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குத் திரும்பிப் பார்க்க முடியாத நிலை ஏற்படுமென்று இவர் சிறிதும் எண்ணினாரில்லை. இங்கிலாந்து சேர்ந்தார். சிகிச்சையும் நடைபெற்றது. குண மடைந்து வந்தார். இந்த நிலையில், அப்பொழுது அங்கு, இந்தியாவின் சுதந்திரத்திற்காக ரகசியமாகவும் பகிரங்கமாகவும் உழைத்துவந்த சியாம்ஜி கிருஷ்ணவர்மா (1857-1930) விநாயக தாமோதர சவர்க்கார் முதலியவர்களின் தொடர்பு ஏற்பட்டது. இதன் பயனாக, ஏற்கனவே இவர் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த தேசீய உணர்ச்சியானது கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. விடுதலை இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இவருடைய நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இவரை நாடு கடத்திவிடத் தீர்மானித்தனர். இதை அறிந்து இவரே பாரிஸ் மாநகரம் தப்பி வந்துவிட்டார். பாரிஸிலுள்ள ஒரு விடுதியில் ஓர் அறை எடுத்துக் கொண்டு அதிலேயே சுமார் முப்பது வருஷத்திற்கு மேலாகத் தங்கி இந்தியாவின் விடுதலைக்காக அரும்பணியாற்றி வந்தார். இதே பணியை, ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்துகொண்டு செய்துவந்த தேசபக்தர் பலருக்கு காமாவின் இந்தச் சிறிய அறை, தாய்வீடுபோல் இருந்தது. இங்கு வந்தவர்களுக்கு, உணவு, உடை முதலிய சௌகரியங்களைச் செய்து கொடுத்ததோடு உணர்ச்சியை யும் ஊட்டி வந்தார். வீரேந்திரநாத சட்டோபாத்தியாயர் என்ன, வ.வே.சு.ஐயர் என்ன, இப்படிப் பலரும் இந்த அம்மையாருடைய அன்பையும் ஆதரவையும் பெற்றனர். 1914-ஆம் வருஷம் முதல் உலக மகாயுத்தம் மூண்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார், காமாவை சும்மா விட்டு வைக்க விரும்பவில்லை. இவரைக் கைது செய்து காப்பில் வைக்கும்படி பிரெஞ்சு அரசாங்கத்தாரை வற்புறுத்தினர். இதற்கிணங்கி, பிரெஞ்சு அரசாங்கத்தாரும் இவரைக் கைது செய்து பாரிஸூக்கருகிலுள்ள ஒரு கோட்டையில் சிறை வைத்தனர். 1918-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே இவருக்கு விடுதலை கிடைத்தது. விடுதலை யான பிறகு சும்மா இருந்தனரோ? சும்மாயிருக்க முடியுமோ? இந்தியாவின் விடுதலைக்காக ஓயாமல் உழைத்து வந்தனர் என்று சுருங்கச் சொல்லி முடிப்போம். இந்த ஓயாத உழைப்பினால் காமாவின் உடல் தளர்ச்சியுற்றது. தாய் நாட்டின் மண்ணை தமது உயிர் போவதற்கு முன் மிதித்து விட வேண்டுமென்ற ஆவலும் மிகுந்தது. ஆனால் அடிமை இந்தியாவில் அடி வைப்பதா என்ற கேள்வியும் உள்ளத்தே எழுந்தது. இந்த மனப் போராட்டம் சிறிது காலம் நடைபெற்ற பிறகு, தாய்நாட்டைக் காண வேண்டுமென்ற ஆவலே வெற்றியடைந்தது. இவர் இந்தியா திரும்ப அனுமதி விரும்பினால், எந்த விதமான பொது இயக்கங்களிலும் கலந்து கொள்வதில்லையென்று உறுதிமொழி கேட்டனர் அரசாங்கத்தினர். இதற்கு காமாவின் மனம் ஒருப்படவில்லை. ஆனால் நண்பர்களின் தூண்டுதலுக்கும் வேண்டுதலுக்கும் இணங்கி உறுதி மொழி கொடுத்தார். அப்பொழுது இவர் மனம் எவ்வளவு வேதனைப்பட்டதென்பதை இவர் இருகண்களிலிருந்தும் வழிந்த நீரே சாட்சி கூறியது. கடைசியில்,நடக்கக்கூட சக்தியில்லாத நிலையில் 1935-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பம்பாய் வந்து சேர்ந்தார். கப்பலிலிருந்து இறங்கியதும் நேரே ஆஸ்பத்திரிக்கே அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைகள் பல செய்யப்பட்டும் குணமடையவில்லை. வந்திறங்கிய ஒன்பதாவது மாதத்தில் 1936-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் எழுபத் தைந்தாவது வயதில் காலமானார். இவர் காலமான செய்திதெரிந்ததும் பாரிஸ் மாநகருக்கருகில், காமா அம்மையாராலேயே தெரிந்தெடுக்கப்பட்ட ஓரிடத்தில் இவருக்கு ஞாபகச் சின்னமொன்று எழுப்பப்பட்டது. அதன்மீது பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டன:- எவனொருவன் சுதந்திரத்தை இழந்து விடுகிறானோ அவன் சீலத்தையும் இழந்து விடுகிறான். கொடுங்கோன்மையை எதிர்த்து நிற்பது கடவுளுக்குப் பணிவதாகும். காமா அம்மையார் பாரிஸ் மாநகரில் வசித்துக் கொண் டிருக்கையில் 1908-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பதினெட்டாந் தேதி ஜெர்மனியிலுள்ள ஸ்ட்டுட்கார்ட்1 என்னும் ஊரில் சர்வதேச சோஷலிஸ்ட் மகாநாடு நடைபெற்றது. அதற்குக் காமா அம்மையார், இந்தியாவின் பிரதிநிதியாக வரவழைக்கப்பட்டிருந்தார்.சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். காமா அம்மையார், இந்தியாவுக்குப் பரிபூரண சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பிற்காலத்தில் பிரிட்டனில் தொழிற்கட்சி அரசாங்கம் அமைந்தபோது அதன் பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீராம்ஸே மாக்டோனால்ட்1 இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார். ஆயினும் பெரும்பான்மை ஓட்டுக்களால் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்தைப் பிரேரித்துப் பேசுகையில்தான் காமா அம்மையார், தம்மால் தயாரிக்கப்பட்ட இந்திய தேசீயக் கொடியைப் பறக்கவிட்டார். அப்பொழுது மகாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்:வாழ்க இந்தியா என்று வாயார வாழ்த்தினர். அம்மையார் முதன் முதலாக பறக்கவிட்ட தேசீயக் கொடியின் மாதிரிதான் அட்டையின் உட்புறத் தலைப்பில் முதலில் அணி செய்கிறது. அனுபந்தம் -2 கொடி வணக்கம் (சுப்பிரமணிய பாரதியார் பாடியது) 1. தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்  2. பட்டுத் துகிலென லாமோ-அதிற் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும்- அதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்.  3. கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற் குரியரவ் வீரர்-தங்கள் நல்லுயி ரீந்தும் கொடியினைக் காப்பார் அனுபந்தம் -3 நமது தேசீய கீதம் (ரவீந்திரநாத் டாகூர் இயற்றியது) ஜன கண மன அதிநாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா திராவிட உத்கல வங்கா விந்திய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்க தவ சுப ஆஸிஷ மாகே காஹே தவ யஸ காத்தா ஜன கண மங்கள தாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா ஜயஹே, ஜயஹே, ஜயஹே ஜய ஜய ஜய ஜயஹே! நமது தேசீயக் கொடி இது ஒரு சாம்ராஜ்யத்தின் கொடியல்ல; ஏகாதிபத்தியக் கொடியல்ல; ஆதிக்கக் கொடியல்ல; சுதந்திரக் கொடி. இது நம்முடைய சுதந்திரத்துக்கு மாத்திரமின்றி எல்லோரின் சுதந்திரத்துக்கும் சின்னமாக விளங்குகிறது. இந்தியர் வாழும் இடங்கள் என்ன, இந்திய ஸ்தானீகர்கள் தங்கும் ஸ்தலங்கள் என்ன, இந்தியக் கப்பல்கள் செல்லும் கடல்கள் என்ன, இப்படி உலகின் நாலா பாகங்களுக்கும் இந்தக் கொடி செல்லும். இது போகும் இடங்களுக்கெல்லாம் சுதந்திரம் என்ற செய்தியை, தோழமை என்ற செய்தியைக் கொண்டு செல்லும். உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்துடனும் நேசமாயிருக்க இந்தியா விரும்புகிறது என்ற செய்தியை நமது கொடி பரப்பும். சுதந்திரத்தை நாடும் தேசங்களுக்கெல்லாம் இந்தியா உதவியளிக்கும் என்ற செய்தியை நமது கொடி பறை சாற்றும். -ஜவஹர்லால் நேரு. ஞாபகமிருக்கட்டும்! ,இந்தக் கொடியின் கீழ் ஆண்டான் - அடிமை என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ பேதம் கிடையாது என்பது ஞாபகமிருக்கட்டும்! யாருக்கும் தனி உரிமை கிடையாது. கடமை, பொறுப்பு, தியாகம் என்பவை தான் யாவருக்கும் உண்டு. ஹிந்துக்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், ஜொராஸ்டியர்கள் ஆகிய எந்த மதத்தினராக இருந்தாலும் நம் அனைவருக்கும் தாய் இந்தியாதான். பிரிக்க முடியாத ஒரே இதயத்தையும் பிரிக்க முடியாத ஒரே ஆன்மாவையும் பாரத மாதா பெற்றிருக்கிறாள். புத்துயிர் பெற்ற இந்தியாவின் புதல்வர்களே! புதல்விகளே! எழுங்கள்! எழுந்து நம் கொடியை வணங்குங்கள்! - சரோஜினி தேவி. பார்லிமெண்ட் வாசகர்களுக்கு (முதற் பதிப்பு) பார்லிமெண்டைப் பற்றி முப்பது முப்பத்திரண்டு பக்கங் களுக்குள் எழுதவேண்டுமெண்பது முதல் திட்டம். ஆனால் எழுதிக் கொண்டு போகையில், சிறுகத் தொடங்கிப் பெருக வளர்ந்த பார்லிமெண்ட்டைப் போல் அதைப் பற்றின இந்த நூலும் நூறு பக்கங் களுக்கு மேல் விரிந்து விட்டது. இருந்தாலும், பார்லிமெண்ட்டைப் பற்றிப் பூரணமாகச் சொன்ன நூலாகாது இது. அந்தத் திருப்தி எனக்கு ஏற்படவில்லை. ஏற்படவும் முடியாது தானே? இதிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஒவ்வொரு தனி நூலாக விதரித்து எழுதலாம். எழுதுவதற்கான விஷயங்கள் அவ்வளவு இருக்கின்றன. அவ்வளவு விஷயங்களையும் லேசு லேசாக அப்படியும் இப்படியும் தொட்டு விட்டு, நானும் பார்லிமெண்ட்டைப் பற்றி ஒரு நூல் எழுதி விட்டேனென்று என்னால் எப்படித் திருப்தி கொள்ள முடியும்? ஆனால் இந்த நூலைப் பார்த்துவிட்டு பார்லிமெண்ட்டைப் பற்றி இவ்வளவு சுருக்கமாக எழுதலாமா, விரிவாகவல்லவோ எழுத வேண்டும் என்று கருதி, இன்னும் விரிவாகவும் நன்றாகவும் எழுத அறிஞர்கள் முற்படுவார் களானால், அப்படி எழுத வேண்டுமென்று அவர்களை இந்தச் சிறிய நூல் தூண்டுமானால், அஃதெனக்குத் திருப்தியாயிருக்கும். நண்பர்கள் சிலர் கேட்கலாம். பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டைப் பற்றி விரிவான நூல்கள் தமிழில் வெளிவரவேண்டியது அவசியமா வென்று. நமது குடியரசுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அகில இந்தியாவுக்குமான சட்ட சபைகளென்ன, அந்தந்த ராஜ்யத்துக் கான சட்ட சபைகளென்ன, - முந்தி மாகாணம் என்று அழைக்கப்பட்டது இப்பொழுது புதிய திட்டத்தின்படி ராஜ்யம் என்று அழைக்கப் படுகிறதென்பது வாசகர்களுக்குத் தெரியுமல்லவா? - இவற்றின் நடை முறைகள், சம்பிரதாயங்கள் முதலிய பலவும், அநேகமாக பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டின் நடைமுறைகள், சம்பிரதாயங்கள் முதலியவற்றைத் தழுவியனவாகவே இருக்கின்றன. எனவே, பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது பார்லிமெண்ட்டைப் பற்றித் தெரிந்து கொள்வது சுலபமாயிருக்கும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்துதான் நாம் விலகிக் கொண்டோமே தவிர அதன் உறவினின்று நாம் விலகிக் கொண்டு விடவில்லை. அதன் அரசியல் தாபனங்கள், முறைகள் முதலியவற்றைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அகில இந்தியா சட்டசபைகள் இந்தியாவின் பார்லிமெண்ட் என்றுதான் அழைக்கப்படுகிறதென்பது வாசகர்களுக்குத் தெரியும். மற்றும், அந்தந்த ராஜ்யத்துச் சட்டசபைகளின் நடவடிக்கைகள், அந்தந்தப் பிரதேச பாஷையிலேயே இனி நடைபெறப்போகின்றன. இதனால் பிரதேச பாஷைகளில் பார்லிமெண்ட்டைப் பற்றின நூல்கள் வெளிவருதல் அவசியமாகும். இந்த அவசியத்தை உணர்த்தும் ஒரு கருவியாக இந்த நூல் இருக்குமானால் அஃதெனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருவதாகும். பார்லிமெண்ட் சம்பந்தப்பட்ட அநேக சில்லரையான விஷயங்கள் அவ்வப்பொழுது மாற்றத்தையடைந்துகொண்டு வருகின்றன. சிறப் பாக 1945-ஆம் வருஷம் தொழிற்கட்சியினர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு அநேக மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். இனியும் அநேக மாற்றங்கள் நிகழ்தல் கூடும்.இதனாலேயே, பார்லிமெண்ட்டைப் பற்றி எழுதுகிறபோது, இதுதான் முடிவு என்று சொல்லக்கூடிய மாதிரி எழுதுவதென்பது கடினம் என்று அறிஞர் கருதுகின்றனர். அடிக்கடி மாறுதலடைந்துகொண்டு வருகின்ற ஒன்றுக்கு எப்படி ஓர் எல்லைக்கோடு இருக்க முடியும்? இருந்தாலும், சமீப காலம் வரையில் ஏற்பட்ட மாற்றங்கள், திருத்தங்கள் முதலியவற்றை உரிய இடங்களில் தேவையான அளவுக்குச் சேர்த்து இந்த நூலை எழுத முயன்றிருக்கிறேன். ஏதேனும் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்னுடைய கவனக்குறைவுதான் காரணமாயிருக்கும். எப்பொழுதும் போல் பொறுத்தருளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நூலுக்கு, பிரிட்டிஷ் பார்லிமெண்ட் என்று பெயர் கொடாமல், வெறும் பார்லிமெண்டு என்றே கொடுக்கப்பட்டிருக்கிறது. பார்லிமெண்ட் என்றால், சாதாரணமாக பிரிட்டிஷ் பார்லிமெண்ட் என்றுதான் நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோமில்லையா? இதனாலேயே பார்லிமெண்ட் என்று மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி முதல் அத்தியாயத்தின் முதலில் பிரதாபித்திருக்கிறேன். தவிர இந்த நூலில் பார்லிமெண்ட்டின் சரித்திரம், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் யாவும் சுருக்கித் தரப்பட்டிருக்கின்றன. இவையனைத்தையும் கொண்ட ஒரு நூலுக்கு என்ன பெயர் கொடுப்பது? பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டின் சரித்திரமென்றோ, பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டின் சம்பிரதாயங்களென்றோ கொடுக்க முடியாதென்பதை வாசகர்களே ஒப்புக்கொள்வார்கள். இதனாலேயே, எல்லாவற்றிற்கும் பொதுவாக பார்லிமெண்ட் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் யாவும் அடங்கி விடுகிறதல்லவா? வாசகர்களுக்கு (மூன்றாம் பதிப்பு) பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டைப் பற்றி இந்த நூல் மூன்றாம் பதிப்பு வெளிவரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். அரசியல் தாபனங்களைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் தமிழ்ச் சகோதரர்களிடையே வளர்ந்து வருகின்றதென்பதையல்லவோ இது காட்டுகிறது? இது நியாயமே. சுதந்திர நாட்டினர், ஆட்சியின் பல்வேறு அமிசங்களைப் பற்றியும் பல்வேறு பிரிவுகளைப் பற்றியும் அறிய விழைவது இயற்கை தானே? இந்த விழைவு மேலும் மேலும் அதிகரிக்க வேண்டுமென்பதே எனது பிரார்த்தனை. அப்பொழுதுதானே, அரிதில் பெற்ற சுதந்திரத்தை துருப்பிடித்துப் போகவிடாமல் பாதுகாத்து வரமுடியும். பார்லிமெண்ட் தேர்தல்கள் அவ்வப்பொழுது நடைபெறு கின்றன; அவற்றின் விளைவாக அமையும் மந்திரிச் சபைகளும் மாற்றமடைகின்றன. ஆனால் பார்லிமெண்ட் எப்பொழுதும் போல் இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிரந்தரமாயுள்ளதைப் பற்றிய விளக்கங்கள் மட்டும் கொண்டதாக இந்த மூன்றாம் பதிப்பை அமைத்திருக்கிறேன். ஒரு நூலாசிரியன், தனது எந்த ஒரு நூலிலும், வாசகர்களுக்குச் சலிப்பும் குழப்பமும் உண்டாகும் வண்ணம் விஷயங்களைக் குவித்துக் காட்டக்கூடாதென்பது என் கருத்து. இந்த எனது கருத்தை அன்பர் பலரும் அங்கீகரிப்பர் என நம்புகிறேன். தியாகராயநகர் சென்னை 1.1.1961 1. பொருளும் இடமும் பார்லிமெண்ட்1 என்பது, ஒரு பொதுப் பெயர்; பேசுவது என்ற அர்த்தத்தையுடைய வார்த்தையிலிருந்து பிறந்தது. மதம், அரசியல், இப்படி ஏதேனும் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசுவதற் கென்று, அதாவது சர்ச்சை செய்வதற்கென்று கூட்டப்பெறும் எந்தஒரு மகாசபையையும் பார்லிமெண்ட் என்று அழைக்கலாம்.2 ஆனால் தற்போது இந்தப் பார்லிமெண்ட் என்பது, பிரிட்டனின்3 பிரதான அரசியல் சபையைக் குறிக்கும் ஒரு சிறப்புப் பெயரா யிருக்கிறது. அரசியல் சபையென்றால், அரசாங்கத்தை நடத்துதல், ராஜ்யத்தின் நன்மைக்குகந்த சட்டதிட்டங்களை இயற்றுதல், இந்த இரண்டு கடமைகளையும் செய்து வருகின்ற சபை என்றே இங்கு அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். பார்லிமெண்ட் என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், மேற்படி பிரிட்டனின் அரசியல் சபை மீதுதான் நமது கவனம் செல்கிறதாயினும், மற்ற நாடுகளில் நடைபெறும் அரசியல் சபைகளையும், பொதுவாக பார்லிமெண்ட் என்று அழைப்பது ஆங்கிலமறிந்தாரிடையே வழக்கமா யிருக்கிறது. ஏன் இப்படி யென்றால், விஷயத்தை உடனே புரிந்துகொண்டு விட வேண்டு மென்பதற்குத்தான். ஆங்கிலமறிந்தாரிடையேதான் இந்த வழக்கமே தவிர, அந்தந்த நாட்டு மக்களும், தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே தங்கள் தங்கள் அரசியல் சபைகளை அழைத்துக் கொள்கின்றனர். விட்ஜர்லாந்து பார்லிமெண்ட்டுக்கு புண்டே-வெர்ஸாம்லங்1 என்று பெயர்; ஜெர்மனி பார்லிமெண்ட்டுக்கு ரீச்டாக்2 என்று பெயர்; நார்வே பார்லிமெண்ட்டுக்கு ட்டோர்ட்டிங்3 என்று பெயர்; அமெரிக்கா (ஐக்கிய நாடுகள்) பார்லிமெண்ட்டுக்கு காங்கிர4 என்று பெயர்; ஈரான் (பாரசீகம்) பார்லிமெண்ட்டுக்கு மஜ்லி5 என்று பெயர்; இப்படி, இப்படி. இன்னும் பிறநாட்டுப் பார்லிமெண்ட்டுகளை டையட்6 என்றும் ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு. டையட் என்ற இந்தச் சொல்லுக்கு மகாசபை என்று அர்த்தம். அவ்வளவுதான். ஜெர்மனி, ஜப்பான் முதலிய நாடுகளின் பார்லிமெண்டுகள் டையட் என்ற பெயராலேயே அழைக்கப் பட்டன. பிரிட்டனின் அரசியல் சபையை, பிரிட்டிஷ் பார்லிமெண்ட் என்று அழைப்பதுபோல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நாடுகளின் அரசியல் சபைகளையும் அந்தந்த நாட்டின் பார்லிமெண்ட் என்றே அழைக்கிறோம். உதாரணமாக, கானடா பார்லிமெண்ட்; ஆதிரேலியா பார்லிமெண்ட்; நியூஜீலந்து பார்லிமெண்ட்; தென்னாப்பிரிக்கா யூனியன் பார்லிமெண்ட்; இப்படி, இப்படி. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த இந்த நாடுகளின் பார்லி மெண்ட்டுகள், பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டுக்கு வெகு காலத்திற்குப் பிந்தித் தோன்றியவை. பிரிட்டிஷ் பார்லிமெண்ட், ஒழுங்காக உருக்கொண்டது கி.பி. பதின்மூன்றாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில். கானடாவில் 1840 ஆம் வருஷமும், ஆதிரேலி யாவில் பார்லிமெண்ட்டுகள் ஏற்பட்டன. இந்தப் பார்லிமெண்ட்டுகளின் அமைப்பு, நடைமுறை முதலிய பலவும், பிரிட்டிஷ் பார்லிமெண்ட் டையே முன்மாதிரியாகக் கொண்டிருக்கின்றன. இந்தக் காரணங்க ளினால், பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டை, பார்லிமெண்ட்டுகளின் தாய்7 அல்லது தாய் பார்லிமெண்ட்8 என்று அழைக்கின்றனர் அரசியல் அறிஞர். ஜன ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளில், அநேகமாக மேல் சபை கீழ்ச்சபையென்று, அல்லது மூத்தோர் சபை ஜன சபையென்று இரண்டு சபைகள் இருக்கின்றன. இவ்விரண்டு சபைகளும் சேர்ந்தது தான் பார்லிமெண்ட். ஆனால் பார்லிமெண்ட் என்று சொன்னதும், கீழ்ச்சபையாகிற ஜனசபையின் மீதுதான் நமது நாட்டம் செல்கிறது. உதாரணமாக, பிரிட்டிஷ் பார்லிமெண்ட் என்று கேட்டதும், ஜன சபையாகிற காமன் சபை1 என்றுதான் நாம் எண்ணிக் கொள் கிறோம். ஏன் இப்படியென்றால், இந்த ஜன சபைகளுக்கே அதிகமான அதிகாரங்கள் இருக்கின்றன; அரசாங்கத்தை நடத்துவதும், சட்ட திட்டங்களை இயற்றுவதும் பெரும்பாலும் இந்த ஜன சபைகளின் பொறுப்பிலேயே இருக்கின்றன. இதனாலேயே இவை முக்கியத்துவம் பெற்று நமது எண்ணத்தின் முன்னணியில் வந்து நிற்கின்றன. இப்படி ஜனசபையே நமது கவனத்தின் முன்னிலையில் வந்து நிற்கிறதாயினும், இந்த ஜன சபை ஒன்று மட்டுமே பார்லிமெண்ட் டாகாது. மேலே சொன்ன பிரகாரம், மேல் சபையும் கீழ்ச் சபையும் சேர்ந்ததுதான் பார்லிமெண்ட். ஆனால் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் டைப் பொறுத்தமட்டில், இந்த இரண்டு சபைகள் மட்டுமல்ல, அரசரும் சேர்ந்தே பார்லிமெண்ட்டாகிறது. அதாவது, அரசர், பிரபுக்கள், ஜனப் பிரதிநிதிகள் இம்மூவரையும் கொண்ட சேர்க்கையே பிரிட்டிஷ் பார்லிமெண்ட். இதைச் சிறிது விளக்கமாகத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். ஏனெனின் இந்த நூலில் பேசப்படுகிற விஷயம் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டைப்பற்றி மட்டுமேயாதலினால். ஆட்சி முறைகளில், மன்னராட்சி, பிரபுத்துவ ஆட்சி, ஜன ஆட்சி என முப்பெரும் வகை உண்டல்லவா, இவற்றுள் ஏதேனும் ஒருவகையான ஆட்சி முறைதான், எந்த ஒரு நாட்டிலும் நடைபெறுதல் கூடும்; அப்படித்தான் நடைபெற்று வருகிறது. உலகத்துப் பெரும்பாலான நாடுகளில் ஜன ஆட்சியும், ஒரு சில நாடுகளில் மன்னராட்சியும் முறையே நடைபெற்று வருகின்றன. பிரபுத்துவ ஆட்சியென்பது அடியோடு மறைந்துவிட்டதென்று சொல்லவேண்டும். ஆனால் பிரிட்டனிலோ, மேற்சொன்ன மூவகை ஆட்சி முறைகளும் கலந்து நடைபெற்று வருகின்றது. இதனைக் கலப்பு ஆட்சியென்பர் அறிஞர். அங்கு, பரம்பரை பாத்தியதை யுடைய அரசர்2 இருக்கிறார்; பிரபுக்கள் சபையாகிற லார்ட் சபை3 இருக்கிறது; ஜன சபையாகிற காமன் சபையும் இருக்கிறது. இம்மூன்றனுள், முதலிரண்டுக்கும் வரம்பிட்ட சில அதிகாரங்களே இருக்கின்றனவென்றாலும், இவை, ராஜ்ய நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றன. உண்மையில், ஜன சபை யாகிற காமன் சபைக்குத்தான் அதிகமான அதிகாரங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தை நடத்துவதும், சட்ட நிர்மாணம் செய்வதும் இந்தச் சபைதான். இதனால் ஜனநாயக ஆட்சியே, அதாவது ஜனப் பிரதிநிதித்துவ ஆட்சியே பிரிட்டனில் நடை பெறுகிறதென்பது நிச்சயம். ஆயினும் இந்த ஆட்சியில், மன்ன ராட்சியின் அமிசங்களும், பிரபுத்துவ ஆட்சியின் சின்னங்களும் சேர்ந்திருக்கின்றன. ஓர் அறிஞன் கூறுகிறமாதிரி பிரிட்டிஷ் ஜனநாயக ஆட்சி ஒரு விநோதமான பிராணி. நீண்ட காலமாகவே இப்படி நடைபெற்று வருகிறது. உலகத்துப் பல நாடுகளிலும் அரசியல் சம்பந்தப்பட்ட மட்டில் எத்தனையோ விதமான மாறுதல்கள் காலக்கிரமத்தில் ஏற்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் பிரிட்டனிலோ நூற்றாண்டுகள் கணக்காக, இந்தக் கலப்பு ஆட்சிமுறையே, எவ்வித மாற்றத்தையும் அடையாமல் ஒழுங்காக நடைபெற்று வருகிறது. இதன் ரகசிய மென்ன? இதற்கு ஆங்கில அறிஞனொருவன் பின்வரும் காரணத்தைக் கூறுகிறான்:- இந்த(க் கலப்பு) அரசியல் திட்டத்தை நாம்-அதாவது பிரிட்டிஷார்-ஏன் நீண்ட காலமாகச் சகித்துக்கொண்டு வந்திருக்கிறோமென்றால், மகத்தான மாறுதல்கள் ஏற்பட்ட காலத்தில்கூட ஒழுங்காக வேலை செய்து வந்த தாபனங்கள், எந்தச் சந்தர்ப்பத்திற்கும் இசைந்து போதல் கூடும், அதனால் இந்த தாபனங்களை அப்படியே வைத்துக் காப்பாற்றி வருதலே சிறந்தது என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருப்பதனால்தான் புதிதாகக் கண்டு பிடிப்பதையல்ல, சமய சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் வளைந்து கொடுத்துக் கொண்டு போவதையே நாம் ஒரு பொது விதியாகக் கொண்டிருக்கிறோம். நமது (அரசியல்) தாபனங்கள், அயலார் கண்களுக்கு எப்படிப் படுகின்றன என்பதை நாம் முக்கியமாகக் கொள்ளவில்லை. அவை எப்படி நடைபெற்று வருகின்றன என்பதைப்பற்றி நாம் என்ன தெரிந்து கொண்டிருக்கிறோமோ அதையே முக்கியமாகக் கொண் டிருக்கிறோம். பொதுவாகவே, பிரிட்டிஷ் அரசியல் அமைப்பை, வளைந்து கொடுக்குந் தன்மையது, எந்த நிலைமைக்கும் ஈடு கொடுக்குஞ் சக்திவாய்ந்தது என்று அரசியல் பண்டிதர்கள் வருணிப்பார்கள். இதனால், இந்த வளைந்து கொடுக்குந் தன்மையினால், நன்மைகளு முண்டு; தீமை களுமுண்டு. அதுபோலவே, கலப்பு ஆட்சி முறையினால் சாதகங்களும் இருக்கலாம்; பாதகங்களும் இருக்கலாம். இவைபற்றிய ஆராய்ச்சி இங்குத் தேவையில்லை. பார்லிமெண்ட், எப்படித் தோன்றி, எப்படி வளர்ந்து இப்பொழுது எந்த நிலையை அடைந்திருக்கிறது? முக்கியமான அமிசங்களை மட்டும் கவனித்துக் கொண்டு செல்வோம். ஆதியில் இங்கிலாந்தில் ஆண்ட அரசர்கள், மடாதிபதிக ளென்ன, பிரபுக்களென்ன, அரண்மனை உத்தியோகதர்களென்ன, இப்படிப்பட்டவர் களில் தங்களுக்கிஷ்டமானவர்களை, தங்களுக் கிஷ்டமானபோது ஒரு சபையாகக் கூட்டி, ராஜ்ய விவகாரங்களைப் பற்றி அந்தச் சபையுடன் கலந்து பேசி ஆட்சி நடத்தி வந்தார்கள். இங்ஙனம் கூட்டப் பெற்ற சபை அறிஞர் சபை1 என்ற பெயரால் அழைக்கப்பெற்றது. ஏறக்குறைய கி.பி. பதினோராவது நூற்றாண்டின் பிற்பகுதிவரை இந்தச் சபை நடைபெற்று வந்தது. இதற்குப் பிறகு இந்தச் சபை ஒரு மகா சபை2 யாக மாறியது. பெயரில்தான் மாற்றமேயொழிய அமைப்பில் எவ்வித மாற்றமுமில்லை. அதாவது மேற்சொன்ன மடாதிபதிகள், பிரபுக்கள், அரண்மனை உத்தியோகதர்கள் இப்படிப்பட்டவர்களே இந்த மகா சபையினராக இருந்தார்கள். இவர்கள்தான், சமுதாயத்தின் மேல் வரிசையினரான இவர்கள்தான், ராஜ்யத்தின் நன்மைக்குகந்த யோசனைகளைச் சொல்லத் தகுதியுடையவர்களென்று அப்பொழுது கருதப்பட்டு வந்தது. அரசர்களிற் சிலர், இந்த மகா சபையினரை ஆலோசனை கேட்டு வந்தனரேயாயினும், தங்களிஷ்டத்திற்கே காரியங்களை நடத்தி வந்தனர்; தங்களிஷ்டப்படி பிரபுக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்தனர். இவற்றைப் பிரபுக்கள் விரும்பவில்லை; கிளர்ச்சி செய்தனர். இதன் விளைவாக 1215 ஆம் வருஷம் ஒரு சாஸனம் வெளியிடப்பெற்றது. இதற்கு மகா சாஸனம்3 என்று பெயர். இதில், அரசர்களின் உரிமைகளும் பிரபுக்களின் உரிமைகளும் முறையே வரையறுக்கப்பட்டன; பிரபுக்களின் ஆலோசனையை அனுசரித்தே அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பது முதலான நடவடிக்கைகளை அரசர்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டது. சாதாரன ஜனங்கள் பிற்காலத்தில் அனுபவித்து வரக்கூடிய சில உரிமைகளின் அமிசங்கள் இந்தச் சாஸனத்தில் காணப்பட்ட போதிலும், பொதுவாக இதனை அரசர்களுக்கும் பிரபுக்களுக்கும் ஏற்பட்ட ஒரு சமரச ஒப்பந்தம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இதிலிருந்து இரண்டு நியதிகள் ஏற்பட்டன. ஒன்று, அரசர்கள், தங்களிஷ்டத்திற்கு ஆண்டு வந்தது போய், ஓர் ஏற்பாட்டிற்குட் பட்டு அல்லது ஒரு வரம்பிற்குட்பட்டு ஆள வேண்டுமென்பது; மற்றொன்று, அரசர்கள் தங்களிஷ்டத்திற்குப் பிரபுக்களைக் கலந்தாலோசிக்கலாம் என்பது போய், கட்டாயம் கலந்தாலோசிக்கவேண்டுமென்பது. அதாவது அரசர்கள் சட்டத்திற் குட்படுத்தப் பெற்றார்கள்; பிரபுக்கள் ஆலோசிக்கப்படும் உரிமை பெற்றார்கள். இந்தச் சாஸனம் பிரகடனம் செய்யப்பட்ட போதிலும், அரச பீடமும், மத பீடமும் சேர்ந்துகொண்டு, இதனை அமுலுக்கு வரவிடாமல் செய்தன. இது பிரபுக்களுக்கு மனக்கசப்பாயிருந்தது. மேற்படி சாஸனத்தை நடை முறையில் கொணர முயற்சி செய்தனர். இதற்காக, மத்திய வகுப்பினரிற் சிலருடைய ஆதரவையும் பெற்றுக் கொண்டனர். இதுகாறும் தாங்கள் செலுத்திவந்த ஆதிக்கத்தையும் அனுபவித்து வந்த சலுகைகளையும் ஊர்ஜிதம் செய்துகொள்ளும் வகையில், அரசருடைய ஆலோசனை சபையை, அதாவது மகாசபையைத் திருத்தி அமைக்கச் செய்தனர். இதன்மூலம் அரச பீடமும் பிரபு வர்க்கமும் ஒன்றுசேர்ந்துகொண்டன. இப்படி ஒன்று சேர்த்துகொண்டது, பிரபுக்களிலேயே முற்போக்கான எண்ணமுடைய சிலருக்குப் பிடிக்கவில்லை. பாதிரிமார்களிற் சிலரும், நாட்டாண்மைக்காரரும், முக்கிய நகரங்களின் பிரமுகர்களிற் சிலரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். சேர்ந்துகொண்டு மேற்படி ஒற்றுமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். இதன் விளைவாக, மகா சபையில் நாட்டாண்மைக்காரரும் நகரப் பிரமுகர்களும் இடம் பெற்றார்கள். இங்ஙனம் அமைப்பில் சிறிது விரிவடைந்த இந்த மகாசபையே பார்லிமெண்ட் என்ற பெயரால் அழைக்கப்பெற்றது. இப்படி அழைக்கப் பெற்றது உத்தேசமாக 1240 ஆம் வருஷமாக இருக்கலாமென்று ஊகிக்கப்படுகிறது.1 எனவே, பார்லிமெண்ட் தோன்றியது பதின்மூன்றாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் என்று நாம் கொள்ளலாம். இப்படித் தோன்றியபோதிலும், இஃது ஒழுங்கான ஒரு தாபனமாக, அரச பீடத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிரதி நிதித்துவ சபையாக அமைந்தது மேற்படி நூற்றாண்டின் கடைசியில் தான். சரியாகச் சொல்ல வேண்டுமானால், 1295 ஆம் வருஷம் நவம்பர் மாதம் இருபத்தேழாந் தேதி, அப்பொழுது ஆட்சி புரிந்துவந்த முதலாவது எட்வர்ட்1 மன்னனால், அவன் வசித்துவந்த வெட் மினிட்டர் அரண்மனையில்2 கூட்டப்பெற்ற சபையே ஒழுங்கான பார்லிமெண்ட். இதனை பெரிய பார்லிமெண்ட் அல்லது மாதிரி பார்லிமெண்ட்3 என்று அழைப்பார்கள். இதனைத்தான், முதன்முதலாக ஏற்பட்ட தேசீய மகாசபையென்று சொல்ல வேண்டும். பார்லிமெண்ட்டின் சரியான சரித்திரம் இந்த மாதிரி பார்லிமெண்ட்டிலிருந்தே துவங்குகிறது. இந்த மாதிரி பார்லிமெண்டில் மொத்தம் ஆஜராயிருந்தவர்கள் நூற்றுநாற்பது பேர்தான். இவர்களும் யார்? பிரபுக்கள், நாட்டாண்மைக் காரர், நகரப் பிரமுகர்கள் முதலியோரே. அதாவது, சமுதாயத்தின் மேல் வரிசையிலுள்ளவர்களுடையவும், அவர்களைச் சார்ந்திருந்த ஒரு சிலருடையவும் பிரதிநிதிச் சபையாகவே இந்த மாதிரி பார்லிமெண்ட் இருந்தது. ஆனாலும், பார்லிமெண்ட்டின் சரித்திரப் போக்கில், இந்த மாதிரி பார்லிமெண்ட் முதல் துறை; முக்கியமான துறை. ஏனென்றால், பார்லிமெண்ட், பிரதிநிதித்துவமுடைய தாபனமாக இருக்க வேண்டு மென்ற கொள்கையை, அதாவது அரசருக்கு இஷ்டப் பட்டவர்களைக் கொண்ட தாபனமாக மட்டும் இருக்கக் கூடாது, தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தாபனமாகவும் இருக்கவேண்டுமென்ற கொள்கையை, தூலமாக, ஒரு வரம்புக்குட்பட்டு, அரசபீடம் ஏற்றுக் கொண்டு அதனை நடைமுறையில் கொண்டுவரத் துணிந்தது இந்த மாதிரி பார்லிமெண்ட்டிலிருந்துதான். பதின்மூன்றாவது நூற்றாண்டுக்குப் பின் வந்த அரசர்களிற் சிலர், பார்லிமெண்ட்டின் பிரதிநிதித்துவத் தன்மையை ஒப்புக் கொண்டார்களே யாயினும், அதன் விருப்பத்தை அனுசரித்து ஆட்சி நடத்த ஒருப்பட வில்லை; தங்களிஷ்டத்திற்கே அநேக காரியங்களை நடத்தி வந்தனர். ஆனால் பார்லிமெண்ட்டோ அரசரைப் பற்றியும், ராஜ்யத்தைப் பற்றியும், ராஜ்யத்தின் பாதுகாப்பைப் பற்றியுமான சகல விஷயங்களும் பார்லிமெண்ட்டின் ஆலோசனைக்குரியவை, பார்லிமெண்ட்டினால் முடிவு செய்யப்படவேண்டியவை என்று தன்னுடைய உரிமைகளை இடைவிடாமல் வலியுறுத்திக் கொண்டு வந்தது. இதனால் அரசபீடத் திற்கும் பார்லிமெண்ட்டுக்கும் அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்டு வந்தன. பதினேழாவது நூற்றாண்டில், பார்லிமெண்ட்டின் சம்மதத்தைப் பெறாமல், அரசர்கள், தங்களிஷ்டத்திற்கு வரி விதிக்கலாமா என்ற பிரச்னை எழுந்தது. இந்தப் பிரச்னையை, ஒரு பெரிய சச்சரவாக முற்றச் செய்தவன் முதலாவது சார்ல1 மன்னன். இவன், பிரிட்டனின், கடலோரப் பாதுகாப்பை முன்னிட்டு, கப்பல்களை பந்தோபதுடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக கப்பற் பணம்2 என்ற பெயரால் ஒரு வரி விதித்தான். இதனால் ஜனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டான்; பார்லிமெண்ட்டையும் விரோதித்துக்கொண்டான். கடைசியில், பார்லிமெண்ட்டே இவனைச் சிரச்சேதம் செய்துவிடும் படி உத்தரவிட்டது. வரி விதிக்கும் அதிகாரத்தைப் பற்றி இந்தப் பிரச்னையானது, பின்னர், அரசாங்கத்தை நடத்துவது யார். அரசரா, பார்லிமெண்டா என்ற பிரச்னையாக விரிந்து, கடைசியில் பார்லிமெண்ட்டுக்கே அந்த அதிகாரம் உண்டு, அரசர் பார்லிமெண்ட்டுக்குட்பட்டவரே என்று முடிந்தது. இது பார்லிமெண்ட்டின் சரித்திரப் போக்கில் இரண்டாவது துறை. பதினேழாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தத் துறையை யடைந்தது பார்லிமெண்ட். இந்தப் பதினேழாவது நூற்றாண்டில், பார்லிமெண்ட்டைப் பொறுத்த மட்டில் வேறு பல முக்கியமான சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. இந்த நூற்றாண்டில், பார்லிமெண்ட்டுக் குள்ளேயே, காமன் சபை முக்கியத்துவம் பெற்றது: இதன் உரிமைகளும் அதிகாரங்களும் அதிகரித்தன.3 ஆனால் இவைகளுக் காக அரச பீடத்துடன் இது பல பூசல்களை நடத்த வேண்டி யிருந்தது. மற்றும் இந்த நூற்றாண்டில், பார்லிமெண்ட்டுக்கு-கட்டடத் திற்கும் அங்கத்தினர்களுக்கும்-ஒரு பெரிய ஆபத்து ஏற்பட இருந்தது. நல்ல வேளையாக இந்த ஆபத்து நிகழவில்லை. எப்படியென்றால், 1605 ஆம் வருஷம் நவம்பர் மாதம் ஐந்தாந் தேதி, பார்லிமெண்ட் கூடுவதாக இருந்தது. அன்று பார்லிமெண்ட் கட்டடத்தை வெடி மருந்து வைத்துத் தகர்த்துவிடவேண்டுமென்று ஒரு சிலர் சேர்ந்து சதி செய்தனர். பாதிரிமார்களில் ஒரு பகுதியினர்மீது அப்பொழுது பார்லிமெண்ட் எடுத்து வந்த சில நடவடிக்கைகளுக்கு விரோதமாயிருந்தவர்களே இந்தச் சதி செய்தனர் என்று சொல்லப்படுகிறது. மேற்படி தேதிக்கு முந்தின நாள்-நவம்பர் மாதம் நான்காந்தேதி - சதியினரில் ஒருவனான கை பாக்4 என்பவன், முப்பத்தாறு பீப்பாய் வெடி மருந்துடன், பார்லிமெண்ட் கட்டடத்தின் அடியிலுள்ள ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். இவன்-இந்த கை பாக்-நல்ல செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவன். ஒரு வக்கீலாகவும் தொழில் நடத்தியவன். பெயின் தேசத்து ராணுவத்தில் சிறிது காலம் சேவை செய்து, அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன் என்ற பெயரையும் வாங்கியவன். இவனை, தாம விண்ட்டர்1 என்பவன், இந்தச் சதியில் இழுத்துவிட்டு மூல புருஷனாக்கினான். கடைசியில், இந்தச் சதியை அரசாங்க ஒற்றர்கள் முன்கூட்டியே கண்டுபிடித்துவிட்டனர். கை பாக்ஸும், இவனோடு சம்பந்தப்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டனர். மரண தண்டனை யடைந்தனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இந்தச் சதி வெடிமருந்துச் சதி2 என்று அழைக்கப்படுகிறது. 1832 ஆம் வருஷம், புதிய சீர்திருத்தச் சட்டமொன்று அமுலுக்கு வந்தது. இதன்படி ஓட்டர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. தொழில் நடத்துவோர், வியாபாரிகள் முதலியோர் பார்லிமெண்டில் பிரதி நிதித்துவம் பெற்றார்கள்: பொதுவாக, மத்திய வகுப்பினர், அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமையையடைந்தார்கள். இந்தச் சீர்திருத்தச் சட்டம், பார்லிமெண்ட்டின் சரித்திரப் போக்கில் மூன்றாவது துறை. இந்தப் பத்தொன்பதாவது நூற்றாண்டில் - 1834 ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் பதினாறாந் தேதி-துரதிருஷ்டவசமாக பார்லிமெண்ட் கட்டடத்தின் பெரும்பகுதி நெருப்புக்கு இரையாகி விட்டது. பின்னர் இது புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.3 1918 ஆம் வருஷம், இருபத்தோரு வயதடைந்த எல்லாரும், அதாவது ஆண்கள் எல்லாரும் ஓட்டுரிமை பெற்றார்கள். இதன்மூலம் சமுதாயத்தின் கீழ் வரிசையிலுள்ளவர்களும் அரசாங்க நிருவாகத்தில் பங்குகொள்ளச் சந்தர்ப்பம் பெற்றார்கள். பார்லிமெண்ட்டின் சரித்திரப் போக்கில் இது நான்காவது துறை. ஒரு வேடிக்கை பார்த்தீர்களா, வாசகர்களே! பல துறைகளிலும் முற்போக்கடைந்திருப்பதாகக் கருதப்படுகிற பிரிட்டிஷார், வெகு காலம் வரை, பெண் மக்களுக்கு ஓட்டுரிமை வழங்க மறுத்து வந்தனர். இதற்காக, ஓட்டுரிமை பெறுவதற்காக, பெண்கள் செய்து வந்த கிளர்ச்சியானது, பலாத்காரத்தின் எல்லையைக்கூடத் தொட்டுவிட்டது, இந்தக் கிளர்ச்சியின் பயனாக 1918 ஆம் வருஷம், முப்பது வயதுக்கு மேற்பட்ட திரீகளுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பின்னர் 1928 ஆம் வருஷம், இருபத்தோரு வயதடைந்த பெண்களுக்கும், ஆண்களைப் போல ஓட்டுரிமை யுண்டுயென்று தீர்மானிக்கப்பட்டது. ஆக, ஒரு சிலருடைய ஆலோசனை சபையாக முளைத்த பார்லிமெண்ட், இப்பொழுது சர்வ ஜனப்பிரதிநிதிச்சபை என்னும் மரமாக வளர்ந்திருக்கிறது. இப்படி வளர்வதற்கு ஏறக்குறைய ஏழுநூறு வருஷ காலம் பிடித்தது. இதற்காக எத்தனையோ போராட்டங்களை இது நடத்தவேண்டியிருந்தது. உண்மையில், பார்லிமெண்ட் வளர்ந்த கதை, பிரிட்டிஷ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தின் சரித்திரமேயாகும். இந்தப் போராட்டத்தின் அடையாளங்கள், பார்லிமெண்ட்டின் நடை முறையில் சில சம்பிரதாயங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன; எப்பொழுதும் அனுஷ்டிக்கப்பட்டு வருமென்று கூறலாம். இந்தச் சம்பிரதாயங்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வெகு விநோதமாயிருக்கும். ஆனால் பிரிட்டிஷ் மகா ஜனங்கள் சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்கள். உரிய இடங்களில் இந்தச் சம்பிரதாயங்களை விளக்குவோம். பார்லிமெண்ட்டின் உரிமைகளும் அதிகாரங்களும் அதிகப்பட அதிகப்பட, அதே விகிதாசாரத்திற்கு அரசர்களுடைய உரிமைகளும் அதிகாரங்களும் குறைந்துகொண்டு வந்தன. இதே பிரகாரம், லார்ட் சபையின் உரிமைகளும் அதிகாரங்களும் சுருங்கச் சுருங்க, காமன் சபையின் உரிமைகளும் அதிகாரங்களும் விரிந்து கொண்டு வந்தன. இப்பொழுது காமன் சபைதான், பூரண உரிமையுடையதாகவும், சர்வ அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. முதலிற் சொன்னபடி, அரசருக்கிருக்கும் அதிகாரங்களும், லார்ட் சபையின் அதிகாரங்களும் பெயரளவுக்கே இருக்கின்றன வென்று சொல்ல வேண்டும். பதின்மூன்றாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய பார்லிமெண்ட்டானது, அடுத்த நூற்றாண்டின் இடைக்காலம் வரையில், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் ஒரே சபையாகக் கூடிவந்தது. பின்னர் லார்ட் சபையென்றும் காமன் சபையென்றும் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. பரம்பரைப் பிரபுக்களும் முக்கிய பாதிரிமார்களும் லார்ட் சபை அங்கத்தினராயினர்; நாட்டாண்மைக்காரரும் நகரப் பிரமுகர் களும் காமன் சபை அங்கத்தினராயினர். இந்த இரண்டுகிளைகளுடனேயே பார்லிமெண்ட் நாளது வரை நடைபெற்று வருகிறது. பார்லிமெண்ட், ஆரம்பத்தில் எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு வேறொரு வகையாக வரிசைப்படுத்திக் காட்டினால், அப்பொழுது வாசகர்கள், இந்த பார்லிமெண்ட், தனது உரிமைகளுக்காகவும், அதிகாரங்களைப் பெறவும், சென்ற ஏழு நூறு வருஷ காலமாக எத்தகைய மகத்தான போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டுமென்பதைச் சுலபமாகத் தெரிந்துகொண்டு விடுவார்கள். 1. பார்லிமெண்ட், ஆரம்பத்தில், சமுதாயத்தின் மேல் படியிலுள்ள ஒரு சிலருடைய சபையாக மட்டும் இருந்தது. தற்போது, சமுதாயத்தைச் சேர்ந்த எல்லாருடைய சபையாகவும் இருக்கிறது. 2. முந்தி, அரசர் இஷ்டப்பட்டால் பார்லிமெண்ட்டைக் கூட்டலாம். இப்பொழுது, அவர் கட்டாயம் கூட்டியே ஆக வேண்டும். 3. முன்னர், இஷ்டப்பட்ட காலங்களில் கூட்டலாம். இப்பொழுது குறிப்பிட்ட காலங்களில் ஒழுங்காகக் கூட்ட வேண்டும். 4. முந்தி, அரசரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே பார்லிமெண்ட்டின் அங்கத்தினராயிருந்தார்கள். இப்பொழுது ஜனங்களால் தெரிந் தெடுக்கப்படுகிறவர்கள் அங்கத்தினரா யிருக்கிறார்கள். 5. முன்னர், ராஜ்ய நிருவாக சம்பந்தமான சகல அதிகாரங்களும் அரசரிடத்திலேயே இருந்தன. இப்பொழுது, அந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு அரசரிடத்தில் இருக்கின்றனவே தவிர, உண்மையில் பார்லிமெண்ட்டின் கையிலேயே இருக்கின்றன. அரசர், பார்லி மெண்ட்டின் சார்பாக அரசாங்கத்தை நடத்தும் மந்திரிமார்கள் கூறும் யோசனைப்படியே எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டியவ ராயிருக்கிறார். அந்த மந்திரிமார்களோ, பார்லிமெண்ட்டுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களா யிருக்கிறார்கள். 6. முந்தி, லார்ட் சபைக்கே அதிகமான அதிகாரங்கள் இருந்தன. இப்பொழுது, காமன் சபைக்கே அதிகமான அதிகாரங்கள் இருக்கின்றன. 7. முன்னர், அரசாங்கத்தின் உயர் பதவிகள், உயர்குடிப் பிறந்தவர் களுக்கே அதிகமாக வழங்கப்பட்டன. ஏனென்றால், அரசரிடத் திலேயே இந்தப் பதவி வழங்கும் அதிகாரம் இருந்தது. இப்பொழுது இந்த அதிகாரம் பார்லிமெண்ட்டுக்கு வந்துவிட்ட படியால், தகுதி யுடையவர்களுக்கே பதவிகள் வழங்கப்படுகின்றன. ஒரு தேர்தலுக்குப் பிறகு, புதிதாக அரசாங்கம் அமைக்குமாறு அரசரால் அழைக்கப்படுகின்றவர், அதாவது பிரதம மந்திரிப் பதவியை ஏற்றுக் கொள்கிறவர், அநேகமாக காமன் சபை அங்கத்தினராயிருப்பதைத் தற்போது காணலாம். பார்லிமெண்ட்டின் கூட்டங்கள் வழக்கமாக எங்கே நடை பெற்று வருகின்றன? லண்டன் மாநகரத்தைச் சேர்ந்தாற்போல் தேம்1 நதிக்கரை மீதுள்ள வெட்மினிட்டர் அரண்மனையில் இந்த அரண்மனையையும் இதனைச் சேர்ந்த கட்டடங்களையும் ஒரு தொகுப்பாக பார்லிமெண்ட் மாளிகைகள்1 என்று அழைப்பார்கள். இந்த அழகான அரண்மனையில்தான் லார்ட் சபையும் காமன் சபையும் வெவ்வேறான மண்டபங்களில் கூடுகின்றன. இந்த மண்டபங்களைத் தவிர பார்லிமெண்ட்டின் கமிட்டி கூட்டங்கள் நடைபெறுவதற்கான விசாலமான அறைகளென்ன, மந்திரிமார்கள், அங்கத்தினர்கள் இவர் களின் உபயோகத்திற்கான அறைகளென்ன, புத்தகசாலை, வாசகசாலை முதலியனவற்றைக் கொண்டிருக்கும் அறைகளென்ன, சாப்பாட்டு அறைகளென்ன, ஓய்வுகொள்வதற்கான அறைகளென்ன, இப்படிப் பல அறைகள் இருக்கின்றன. இந்த அரண்மனை அமைந்திருக்கும் இடத்தின் மொத்த விதீரணம் சுமார் எட்டு ஏகரா, இந்த அரண்மனையில் உள்ள அறைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஆயிரம்; விசாலமான மண்டபங்கள் (ஹால்கள்) பதினான்கு. இந்த அறைகளுக்கும் மண்டபங்களுக்கும் காற்றும் வெளிச்சமும் தரும் வெளி முற்றங்கள் பதினொன்று. இவை தவிர, பார்லிமெண்ட்டின் உத்தியோகதர்கள் வசிப்பதற்கென்று தனித்தனிக் கட்டடங்கள் இருக்கின்றன. பார்லிமெண்ட் கட்டடத்தைப் பற்றிய இந்த வருணனை யெல்லாம் 1941 ஆம் வருஷம் வரைதான் முற்றிலும் பொருந்தும். இதற்குப் பிறகு முற்றிலும் பொருந்தாவிட்டாலும் பெரும்பாலும் பொருந்தும் என்று சொல்லலாம். ஏனென்றால், மேற்படி வருஷம் மே மாதம் பத்தாந்தேதி ஜெர்மன் ஆகாய விமானங்களின் குண்டு வீச்சினால், காமன் சபை நடைபெற்று வந்த மண்டபம் நாசமாகி விட்டது. இதற்குப் பதில் பழைய மாதிரியே புதிய கட்டடம் ஒன்று நிர்மாணம் செய்யப்பட்டு அதில்தான் இப்பொழுது காமன் சபை நடைபெற்று வருகிறது.2 புதிய கட்டடம் கட்டி முடியும் வரையில், காமன் சபை, முந்தி லார்ட் சபை கூடி வந்த இடத்திலே கூடி, தன் அலுவல்களை நடத்தி வந்தது, லார்ட் சபையோ, அரண்மனையில் வேறொரு சிறிய மண்டபத்தில் கூடி வந்தது.3 இந்த இட மாற்றத்தினால், இரண்டு சபைகளின் நடை முறைகள், சம்பிரதாயங்கள் முதலியவை சிறிதும் மாறவில்லை. அங்கத்தினர் களுக்குச் சில அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தன. அவ்வளவுதான். ஆனால் இவர்கள் இவற்றைப் பொருட்படுத்த வில்லை. கருமமே கண்ணாயினார் பிரிட்டிஷார். அரசாங்கத்தை நடத்துவதும், சட்டதிட்டங்களியற்றும் அதிகாரத்தை யுடையதுமான ஒரு மகாசபைக்குத் தனியான ஒரு கட்டடம் இல்லையா? அரண்மனையில் ஏன் கூடவேண்டும்? அரசர் வசிக்குமிடமல்லவோ அரண்மனை? நியாயமான கேள்விகள் இவை. முதலாவது, அரசர் இப்பொழுது இந்த அரண்மனையில் வசிக்க வில்லை. இரண்டாவது, இங்கே கூடுவது ஒரு வழக்கமாகிவிட்டது. எப்படியென்று கேட்கிறீர்களா? கூறுவோம். ஆரம்பத்திலிருந்து அரசர்கள், தாங்கள் வசித்து வந்த அரண் மனையிலேயே தங்கள் ஆலோசனை சபையைக் கூட்டி வந்தார்கள். பின்னர் இந்த ஆலோசனை சபை பார்லிமெண்ட்டாக உருக்கொண்டு, எண்ணிக்கை, செல்வாக்கு, அதிகாரம் இவைகளில் படிப்படியாக பலம் பெற்று வந்த காலத்திலும் இங்கேயே-அரசர்கள் வசித்து வந்த அரண்மனையிலேயே-கூடிவரலாயிற்று. முதலாவது எட்வர்ட் மன்னன், மாதிரி பார்லிமெண்ட்டைக் கூட்டியது, தான் வசித்து வந்த வெட் மினிட்டர் அரண்மனை யிலேயே என்பது நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். தலைமுறை தலைமுறையாக வெட் மினிட்டர் அரண்மனையில் வசித்து வந்த அரச குடும்பமானது, 1837 ஆம் வருஷம், அதாவது 1834 ஆம் வருஷம் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு இந்த அரண்மனைக்குச் சுமார் ஒருமைல் தொலைவிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு1 மாறிவிட்டது. அது முதற்கொண்டு இந்த பக்கிங்ஹாம் அரண்மனையே, அரச குடும்பத்தின் லண்டன் வாசதலமாயிருந்து வருகிறது. அரச குடும்பம் வேறு இடத்திற்கு மாறிவிட்டபோதிலும், பார்லிமெண்ட் என்னவோ, வழக்கமாகக் கூடிவருகிற இடத்திலேயே, அதாவது புனர் நிர்மாணஞ் செய்யப்பட்ட2 வெட் மினிட்டர் அரண்மனையிலேயே கூடி வருகிறது. சாதாரண பாஷையில் ஆகிவந்த இடம் என்று சொல்வார்களே அந்தக் காரணத்திற் காகவே இங்குக் கூடிவருகிறதென்று கூறலாம். இடத்தை, ஏன், பெயரைக்கூட மாற்ற விரும்பாத அவ்வளவு பற்றுடையவர்கள் பிரிட்டிஷார் பழமையை அனுசரிக்கிற விஷயத்தில், வெட் மினிட்டர் அரண்மனை முழுவதும் பார்லிமெண்ட்டின் உபயோகத்திற்காகவே இருந்துவந்த போதிலும், இது காரணமாக, பார்லிமெண்ட் கட்டடம் என்ற ஒரு பெயராலேயே இதனை அழைக்க வேண்டுமென்றாலும், இது வெட் மினிட்டர் அரண்மனை என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. காரணம், வழக்கந்தான்; சம்பிரதாயந்தான். இந்த பார்லிமெண்ட் கட்டடத்தின் நிருவாகம் யார் வசத்தில் இருக்கிறது? வேறு வேறான மூன்று அதிகாரிகள் அல்லது இலாகாக்கள் வசத்தில் இருக்கிறது. அரண்மனையல்லவா இது? இதனால் (அரசர் வசிக்கும் அரண்மனையைச் சேர்ந்த) உத்தியோகதர் ஒருவருடைய நிருவாகத்தில் சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, பார்லிமெண்ட் கூட்டம் நடை பெறாத காலங்களில், கட்டடத்திற்குள் சென்று பார்க்க விரும்புகிறவர்கள், இவருடைய அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். அடுத்தாற்போல், கட்டடத்தை அவ்வப்பொழுது பழுது பார்த்தல், இதனுள்ளிருக்கும் தளவாட சாமான்களைச் சீர் குலையாமல் பாதுகாத்தல் முதலிய யாவும், அரசாங்கத்தின் பொது மராமத்திலாகாவின் பொறுப்புக்குட் பட்டிருக்கின்றன. மூன்றாவதாக, பார்லிமெண்ட்டின் கூட்டம் நடைபெறுகிறபோது, நடவடிக்கை களைக் கவனிக்க விரும்பும் தனிப்பட்ட நபர்கள், பத்திரிகை நிருபர்கள் முதலியோருக்கு அனுமதியளிப்பது முதலிய காரியங்களை சார்ஜண்ட்-அட்-ஆர்ம்1 என்னும் உத்தியோகதர் கவனிக்கிறார். இவர், காமன் சபைத் தலைவரின் - ப்பீக்கரின்2 - அதிகாரத்திற்குட்பட்டே தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டியவர். இதுகாறும், பார்லிமெண்ட்டின் பொருளைப் பற்றியும் அது கூடும் இடத்தைப் பற்றியும் ஒருவாறு தெரிந்துகொண்டோம். இனி, பார்லி மெண்ட் எப்படிக் கூடுகிறதென்பதைப்பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். 2. தேர்தலும் மந்திரிச் சபையும் பார்லிமெண்ட் என்று சொன்னால், அது பெரும்பாலும் காமன் சபையையே குறிக்கும் என்று முந்திச் சொல்லி யிருக்கிறோம். இந்த அத்தியாயத்திலும், இதைத் தொடர்ந்து ஆறாவது அத்தியாயம் வரையிலும், பார்லிமெண்ட் என்ற வார்த்தையை, காமன் சபை என்ற அர்த்தத்திலேயே உபயோகித்திருக்கிறோம். இதை வாசகர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக, ஐந்து வருஷத்திற்கொருமுறை பார்லிமெண்டுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் விளைவாக புதிய பார்லி மெண்ட் கூடுகிறது. ஆக, ஒரு பார்லிமெண்ட்டின் ஆயுட் காலம் ஐந்து வருஷம்.1 ஐந்து வருஷத்திற்கொரு தடவை ஒரு பார்லிமெண்ட் கலைந்து மற்றொரு பார்லிமெண்ட் கூடுகிறதென்பது பொது நியதியாயிருந்தாலும், அப்படியே அநேகமாக நடைபெற்று வருகிறதாயினும், சில சமயங்களில் இந்த ஐந்து வருஷத்திற் குள்ளாகவே ஒரு பார்லிமெண்ட் கலைந்து மற்றொரு பார்லிமெண்ட் கூடுவதுமுண்டு. இப்படி ஒரு தடவை மட்டு மல்ல, இரண்டு மூன்று தடவை நிகழ்வதுமுண்டு. உதாரணமாக 1922 ஆம் வருஷம் நவம்பர் மாதம் ஒரு தேர்தலும், 1923 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் ஒரு தேர்தலும், 1924 ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் ஒரு தேர்தலும், ஆக வருஷத்திற்கு ஒரு தேர்தல் விகிதம் மூன்று வருஷங்களில் மூன்று தேர்தல்கள் நடைபெற்றுவிட்டன. இங்ஙனமே 1929 ஆம் வருஷம் மே மாதம் ஒரு தேர்தலும் 1931 ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் ஒரு தேர்தலும், 1935 ஆம் வருஷம் மே மாதம் ஒரு தேர்தலும், ஆக ஆறு வருஷத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெற்றன. மேற்படி தேர்தல்கள் என்னென்ன காரணங்களுக்காக நடை பெற்றன வென்பதைப்பற்றி இங்கே விசாரித்துக் கொண் டிராமல், ஐந்து வருஷத்திற்கிடையே தேர்தல்கள் நடைபெறு மானால் அவை என்னென்ன பொதுவான காரணங்களுக்காக நடைபெறக்கூடும் என்பதை மட்டும் சுருக்கமாக விசாரிப்போம். தேர்தலில் எந்தக் கட்சி அதிகப்படியான தானங்களைக் கைப்பற்றி யிருக்கிறதோ அந்தக் கட்சியே மந்திரிச் சபையை அமைக்கிறது. எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடைமுறையில் இருந்துவருகிற பொது நியதி இது. இப்படி ஒரு பெரும்பான்மையான கட்சி, மந்திரிச் சபையை அமைத்து அரசாங்கத்தை நடத்தி வருகிறபோது, இடையில் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ கழித்து, அதனுடைய நிருவாகப் போக்கில் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு அதிருப்தி யுண்டாகலாம்; இதனால் பார்லி மெண்ட்டில் அது கொண்டுவரும் திட்டங்களுக்கு அங்கீகாரம் கொடுக்க மறுக்கலாம். இன்னும், இந்த இடைக் காலத்தில், பெரும்பான்மைக் கட்சியில் சில தானங்கள் காலியாதல் கூடும். காலியான தானங்களுக்கு உப தேர்தல்கள் நடைபெற்று இவற்றில் எதிர்க்கட்சியினர் வெற்றி யடைதல் கூடும். இதனால் பெரும்பான்மைக் கட்சியின் எண்ணிக்கை பலம் குறையும். மற்றும் இந்த இடைக் காலத்தில், பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த சிலர், ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்க் கட்சியில் போய்ச் சேர்ந்து கொண்டு விடலாம்; பார்லிமெண்ட் முன்னர்வரும் முக்கியமான பிரச்னைகளில், அந்த எதிர்க் கட்சியினருடன் சேர்ந்து ஓட்டுச் செய்யலாம். இப்படிச் சில காரணங்களினால், பெரும்பான்மைக் கட்சியானது பலவீன மடைந்து போதல் கூடும். அப்பொழுது மந்திரிச் சபையானது, தான் இனியும் நிருவாகத்தைத் திறம்பட நடத்த முடியாதென்று உணர்ந்து, பார்லிமெண்ட்டைக் கலைத்துவிடுமாறும், புதிய தேர்தல் நடைபெறுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மன்னருக்கு யோசனை கூறும்; புதிய தேர்தலில் இழந்துவிட்ட தன் கட்சி பலத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாமென்ற நம்பிக்கையின் பேரில்தான், பார்லிமெண்ட்டைக் கலைத்துவிட வேண்டுமென்ற இந்த யோசனையை அரசரிடம் சமர்ப்பிக்கும். ஐந்து வருஷத்திற் கிடையே பார்லிமெண்ட் கலைந்து போகலா மென்பதற்கு இஃதொரு காரணம். இன்னும் இந்த இடைக்காலத்தில், மந்திரிச் சபையினிடம் நம்பிக்கையில்லையென்று எதிர்க் கட்சியினரால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேறினாலுஞ் சரி, மந்திரிச் சபை ஆஜர் படுத்தும் வரவு செலவுத் திட்டம் அப்படியே நிறைவேறா விட்டாலுஞ் சரி, அந்த மந்திரிச் சபையானது, தான் இனியும் நிருவாக பதவியிலிருப்பது தகுதியன்று என உணர்ந்து, பார்லிமெண்ட்டைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு மன்னருக்கு ஆலோசனை சொல்லலாம். இடைக் காலத்தில் பார்லிமெண்ட் கலைந்துபோவதற்கு இஃது இரண்டாவது காரணம். தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியினரும், நாங்கள் அதிகாரத் திற்கு வந்தால் இன்னின்ன மாதிரியான சட்ட திட்டங்களை நிறைவேற்றப் போகிறோமென்று கூறுகிறார்கள். ஓட்டர்களும், அந்தக் காரணத்திற் காகவே, மேற்படி சட்ட திட்டங்களை நிறைவேற்றி வைப்பார்களென்ற காரணத்திற்காகவே அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். இப்படிப் பெரும்பாலான ஓட்டர்களால் தெரிந்தெடுக்கப்படுகிற பெரும்பாலான கட்சியின ரிடத்திலேயே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது. இவர்களிலேயே மந்திரிச் சபை அமைகிறது. இந்த மந்திரிச் சபையானது, தேர்தல் காலத்தில் சொல்லப்பெறாத சட்ட திட்டங் களை, பார்லிமெண்ட்டில் தனக்குப் பெரும்பான்மையான ஓட்டு பலம் இருக்கிறதென்பதை ஆதாரமாக வைத்துக்கொண்டு நிறை வேற்ற முன்வந்தால், அப்பொழுது, அதனையும் அதன் கட்சியினரையும் தெரிந்தெடுத்தனுப்பிய ஓட்டர்கள் ஆட்சேபங் கிளப்பக்கூடும். இந்த ஆட்சேபங்களைப் புறக்கணித்துவிட்டு ஒரு மந்திரிச் சபை, தனக்கிஷ்டமான சட்டதிட்டங்களை நிறைவேற்றத் துணியாது. அப்படித் துணிந்து நிறைவேற்றுமானால் அது மறு தேர்தலில் தலை காட்ட முடியாது. முந்திய தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளினின்று மீறின குற்றத்தை அது செய்து விட்டதாக ஓட்டர்கள் கருதி, அதற்கு, அதாவது அந்தக் கட்சிக்கு அடுத்த தேர்தலில் ஓட்டுக் கொடுக்க மறுத்து விடுவார்கள். எந்த ஒரு ஜனநாயகவாதியும், தம்மை இந்த நிலைக்குட் படுத்திக் கொள்ள மாட்டார். ஆகவே, தேர்தல் காலத்தில் சொல்லப்பெறாத சட்ட திட்டங்களை அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஆசைப் படுகிற ஒரு மந்திரிச் சபை, மற்றொரு தேர்தல் நடை பெறுவதற்கான நிலைமையை உண்டுபண்ணி, அந்தத் தேர்தலில், தான் கொண்டுவர விருக்கும் புதிய சட்ட திட்டங்களை ஓட்டர்கள் முன்னிலையில் கிளத்தி, அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறவே முயற்சி செய்யும். மற்றொரு தேர்தல் நடைபெறுவதற்கான நிலைமையை எப்படி உண்டுபண்ணுவது? பார்லிமெண்ட்டைக் கலைத்து விடுமாறு அரசருக்கு ஆலோசனை செய்வதன் மூலந்தான். இது மூன்றாவது காரணம். இப்படி முக்கியமான மூன்று காரணங்களுக்காக பார்லிமெண்ட் ஐந்து வருஷ காலத்திற்குள் கலைதல் கூடும். இங்ஙனம் இடை யிடையே பார்லிமெண்ட் கலைந்தாலும், கலைந்த பிறகு புதிதாகக் கூடும் பார்லிமெண்ட்டுக்கு, கூடுகிற தேதியிலிருந்து ஐந்து வருஷ ஆயுளுண்டு. ஒரு பார்லிமெண்ட் கலைந்தால், அதனோடு மந்திரிச் சபையும் கலைந்துவிடும். ஆனால், பார்லிமெண்ட் கலையாம லிருக்க, மந்திரிச் சபை மட்டும் கலைந்துபோதல் கூடும். உண்மையில், கலைதல் என்ற வாசகம், பார்லிமெண்ட்டுக்குத்தான் பொருந்துமே தவிர, மந்திரிச் சபைக்கு, அதன் தனிப்பட்ட முறையில் பொருந்தாது. மந்திரிச் சபையின் ராஜீநாமா அல்லது மந்திரிச் சபையின் மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐந்து வருஷ காலத்திற்குள் ஒரு மந்திரிச் சபை என்னென்ன காரணங்களுக்காக ராஜீநாமா செய்தல் கூடும்? அல்லது மாற்ற மடைதல் கூடும்? பார்லிமெண்ட்டில் ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து அது தோல்வியடைந்து போனாலுஞ் சரி, எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அது நிறைவேறி விட்டாலுஞ் சரி, மந்திரிச் சபையானது ராஜீநாமா செய்துவிடும். அதாவது ஐந்து வருஷ காலத்திற்குள் பார்லிமெண்ட் கலைவதற்கான மூன்று காரணங்களை மேலே சொன்னோமே, அவற்றுள் முதல் இரண்டு காரணங்களுக்காக, பார்லிமெண்ட் கலைந்து போகாமல் மந்திரிச் சபை மட்டும் மாறலாம்; பார்லிமெண்ட் கலையவேண்டுமென்பது கட்டாய மில்லை. கலைந்தாலும் கலையலாம்; கலையாமலும் இருக்கலாம், இதனாலேயே கலைந்து போகலாம் என்று முதற் காரணத்தின் முடிவிலும், ஆலோசனை சொல்லலாம் என்று இரண்டாவது காரணத்தின் இறுதியிலும் கூறினோம்; கலைந்துபோகவேண்டும், ஆலோசனை சொல்லவேண்டும் என்று முறையே கூறவில்லை. ஒரு மந்திரிச் சபை ராஜீநாமா செய்துவிட்டால் மற்றொரு மந்திரிச் சபை அமையும். இப்படி அமைகிற மந்திரிச் சபை அதுகாறும் எதிர்க் கட்சியினராக இருந்தவர்களைக் கொண்டதாகவே இருக்குமென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதாவது, அதுகாறும் எதிர்க்கட்சியாக இருந்தது அரசாங்கக் கட்சியாக மாறிவிடும்; அப்படியே அரசாங்கக் கட்சியாக இருந்தது எதிர்க் கட்சியாக மாறிவிடும். மேலே சொன்னவற்றிலிருந்து, வாசகர்கள் சுருக்கமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியவை என்னென்ன வென்பதை வரிசைப் படுத்திக் கூறவிரும்புகிறோம். 1. சாதாரணமாக, ஒரு பார்லிமெண்ட்டின் ஆயுட் காலம் ஐந்து வருஷம். 2. சாதாரணமாக, ஐந்து வருஷத்திற்கொரு முறை தேர்தல் நடைபெறும். 3. ஆனால் ஐந்து வருஷத்திற்கு நடுவில் பார்லிமெண்ட் கலைவ துண்டு; தேர்தலும் நடைபெறுவதுண்டு. 4. பார்லிமெண்ட் கலைந்துபோனால் மந்திரிச் சபையும் கூடவே கலைந்து போகும். 5. ஆனால் மந்திரிச் சபை மாறினால் கூடவே பார்லிமெண்ட் கலைந்து போக வேண்டுமென்பது கட்டாயமல்ல. கலைந்து போனாலும் போகலாம்; கலைந்து போகாமலும் இருக்கலாம். 6. ஒரு பார்லி மெண்ட்டின் ஆயுட்காலத்திற்குள் மந்திரிச் சபை எத்தனை தடவை வேண்டுமானாலும் மாறலாம். இன்னொரு விஷயத்தையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்லிமெண்ட்டுக்குக் கட்டுப்பட்டது மந்திரிச் சபை. இருந்தாலும், மந்திரிச் சபைதான் பார்லிமெண்ட்டைக் கொண்டு செலுத்துகிறது; அதன் மீது தன் செல்வாக்கை உபயோகிக்கிறது. அதன் நடைமுறைகளைப் பொறுத்த மட்டில் மந்திரிச் சபைக்குச் சில விசேஷ உரிமைகளும் சலுகைகளும் உண்டு. பார்லிமெண்ட், ஐந்து வருஷ காலத்திற்குள் கலைந்து போகலாமென்பது போல், ஐந்து வருஷத்திற்கு மேல் நீடிக்கவும் செய்யலாம். இப்படித் தன்னுடைய ஆயுளைத் தானே நீடித்துக் கொள்கிற அதிகாரம் பார்லிமெண்ட்டுக்கு உண்டு. ஆனால் இந்த அதிகாரத்தை அது மிகவும் அவசியமாயிருக்கிற பொழுதுதான் உபயோகிக்கிறது, உதாரணமாக, முதல் உலக மகாயுத்தத்தின் போதும், இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும் இந்த அதிகாரத்தை உபயோகித்துக்கொண்டது. 1910 ஆம் வருஷம் கூடிய பார்லிமெண்ட், 1915 ஆம் வருஷம் கலைந்து போக வேண்டியிருக்க, 1918 ஆம் வருஷம் வரை எட்டு வருஷ காலம் நீடித்திருந்தது. அப்படியே 1935 ஆம் வருஷம் கூடிய பார்லிமெண்ட் 1940 ஆம் வருஷம் கலைந்துபோக வேண்டியிருக்க, 1945 ஆம் வருஷம் வரை பத்து வருஷ காலம் நீடித்திருந்தது, யுத்த நெருக்கடியில் தேசத்தின் கவனத்தை, தேர்தல் முதலிய விஷயங்களில் சிதறவிடக்கூடா தென்பதற்காகவே இப்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் நீடிக்கப்பட்டது. ஆனால் இந்த மாதிரியான நெருக்கடிகள் ஏற்படுவது அபூர்வம். பார்லிமெண்ட் கலைவதும், திரும்பக் கூடுவதும் எப்படி? அரசருடைய ஆணையின் பேரில். பார்லிமெண்ட், கலைபட வேண்டிய அவசியம் ஏற்பட்டதும், அரசர் ஒரு பிரகடனம் வெளியிடுவார். அரசர் வெளியிடுவார் என்று சொல்வதைக் காட்டிலும், அரசர் பெயரால் ஒரு பிரகடனம் வெளியிடப்பெறும் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்தப் பிரகடனத்தில் மூன்று விஷயங்கள் அடங்கியிருக்கும். ஒன்று, பழைய பார்லிமெண்ட் கலைக்கப்படுகிறதென்பது; இரண்டு, புதிய பார்லிமெண்ட் கூட்டப்படுகிறதென்பது; மூன்று, கூட்டப்படுகிற புதிய பார்லிமெண்ட் இன்ன தேதியில் கூடவேண்டுமென்பது. பழைய பார்லிமெண்ட் கலைக்கப்படுகிறதென்று சொல்கிற போதே, புதிய பார்லிமெண்ட் கூடவேண்டிய தேதியும் நிர்ணயிக்கப் பட்டுவிடுவது கவனிக்கத்தக்கது. இதனுடைய கருத்து என்ன? பார்லிமெண்ட் எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறதாகவே ஐதிகம். அது கலைக்கப் பட்டுவிட்டதென்று சொன்னால், அது கூடுவது நிறுத்தப்பட்டிருக்கிற தென்றுதான் அர்த்தம். உண்மையில் பிரகடனம் வெளியாவதற்கு முந்தி நடைபெறுகிற கூட்டத்தின் முடிவில் பார்லிமெண்ட் கூடுவது நிறுத்திப் போடப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லப்படுமே யொழிய இனி பார்லிமெண்ட் கூடாது என்று சொல்லப்படாது. வீடு காலியாகிவிட்டது என்று சொல்கிறோம். அப்படி யென்றால் என்ன? வீடு இல்லாமலா போய்விட்டது? வீடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதில் சிறிது காலமாக வாசஞ் செய்துகொண்டிருந்த வர்கள், வேறொருவர் வருகைக்காக அல்லது அவர்களே திரும்பி வருவ தற்காக வீட்டிலிருந்து வெளியே போய்விடுகிறார்கள். அது போலவே, பார்லிமெண்ட் கலைந்துபோய் விட்டதென்றால், அதன் பழைய அங்கத்தினர்கள் போய், புதிய அங்கத்தினர்கள் வருகிறவரை அது கூடாது என்றுதான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். பார்லிமெண்ட், தொடர்ந் தாற்போல் இருந்து கொண்டிருக்கிற தென்பதற்கறிகுறியாகவே, ஒரே பிரகடனத்தில், அது கலைக்கப்பட்டுவிட்ட தென்றும், திரும்பக் கூட்டப் படுகிறதென்றும், கூட வேண்டிய தேதியும் ஒன்றாகச் சேர்த்துச் சொல்லப்படுகின்றன. இங்கே ஒரு விஷயம். பார்லிமெண்ட் கலைந்து போனால் அதனோடு மந்திரிச் சபையும் கலைந்து போகுமென்று மேலே சொன்னோமல்லவா, இப்படிச் சொன்னதனால், மந்திரிச் சபை, பார்லிமெண்ட் கூடுவது நின்று போனதும், தனது அலுவல்களைக் கவனிக்காமல் இருந்து விடுமென்று, அதாவது மந்திரிகள் அது காறும் செய்துவந்த வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு வெளியே வந்து விடுவார்களென்று கருதக்கூடாது. புதிய மந்திரிச் சபை அமைத்து, அது பதவியை ஏற்றுக்கொள்கிற வரை, பழைய மந்திரிகள், புதிய கொள்கைகளைக் கொண்டு புகுத்த மாட்டார்களாயினும் சம்பிரதாயமான அலுவல்களைக் கவனித்துக் கொண்டுதான் வருவார்கள். எல்லா மந்திரிச் சபைகளும் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு முறை இது. பழைய பார்லிமெண்ட் கலைந்து விட்டது, புதிய பார்லிமெண்ட் கூட வேண்டும். இதற்கிடையில் தேர்தல் நடை பெறுகிறது. பார்லிமெண்ட்டில், அதாவது காமன் சபையில் மொத்தம் அறுநூற்றுச் சொச்சம் தானங்கள், இந்த அறுநூற்றுச் சொச்சம் தானங்களையும் நிரப்ப தேர்தல் நடைபெறும். அபேட்சகர்களாக நிற்கிறவர்கள் நூற்றைம்பது பவுன் ஜாமீன் கட்டவேண்டும். மொத்தம் ஓட்டுகளில் நூற்றுக்குப் பன்னிரண் டரை சதவிகிதம்ஓட்டுகள்பெறாதஅபேட்சகர்களின்ஜாமீன்தொகைபறிமுதல்செய்யப்பட்டுவிடும்...g‹Åu©liu¢ சதத்திற்கு அதிகமான ஓட்டுகள் பெற்று, ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அந்த அபேட்சகர் கட்டிய தொகை அவருக்குத் திருப்பித் தந்துவிடப்படும். தேர்தலில் ஓட்டுக் கொடுக்கக் கூடியவர்கள் யாரார்? இருபத் தோரு வயதடைந்து அது காரணமாக ஓட்டர் ஜாபிதாவில் பதிவு பெற்றிருக்கும் யாரும் ஓட்டுக் கொடுக்கும் உரிமையுடையவரே. அபேட்சகர்களாக நிற்கக் கூடியவர்கள் யாரார்? மேலே சொன்னபடி ஓட்டுரிமை பெற்றிருக்கிற யாரும் அபேட்சகராக நிற்கலாம். ஆனால் லார்ட் சபையில் அங்கத்தினராயிருக்கக் கூடிய தகுதியுள்ள பிரபுக்கள், பாதிரிமார்கள் சிலர், இப்படிப்பட்டவர்கள் அபேட்சகர்களாக நிற்கக்கூடாது. அபேட்சகர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பிரிட்டனில் இப்பொழுதுள்ள முக்கியமான அரசியல் கட்சிகள் மூன்று. ஒன்று, கன்ஸர்வேட்டிவ் கட்சி.1 இது 1830 ஆம் ஆண்டிலிருந்து தனிக்கட்சியாக இயங்கி வருகிறதென்று சொல்லலாம். இதற்கு முந்தி இது டோரி2 கட்சி என்று அழைக்கப்பட்டது. சமீப காலத்தில் இந்தக் கட்சிக்குத் தலைமை வகித்து அரசாங்கத்தைத் திறம்பட நடத்தியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பால்பர், போனர்லா, சர்ச்சில்.3 மற்றொன்று, லிபரல் கட்சி.4 இதன் தோற்றமும் ஏறக்குறைய 1830 ஆம் ஆண்டு என்று சொல்லலாம். இதன் முக்கிய தலைவர்களா யிருந்தவர்கள் மெல்போர்ன், பாமர்ட்டன், கிளாட்டன், ஆக்வித், லாயிட்ஜார்ஜ்.5 இன்னொன்று, தொழிற்கட்சி. 1900 ஆம் ஆண்டில் இது தோன்றியது. கட்சிகளுக்குள் இதுவே இளையது. இருந்தாலும் இது மும்முறை அரசாங்கத்தை ஏற்றுத் திறம்பட நடத்தி வந்திருக்கிறது. இதன் முக்கிய தலைவர்கள், ராம்ஸே மாக்டோனால்ட், கிளிமெண்ட் அட்லி.6 இந்த மூன்று முக்கியமான கட்சிகளைத் தவிர, பொது வுடைமைக் கட்சி7 யொன்று உண்டு; இது, பார்லிமெண்ட்டில் அதிகமான தானங்களைப் பெற முடியவில்லை. இந்தக்கட்சிகளின் சார்பாக நிற்கிற அபேட்சகர்களைத் தவிர, தனிப்பட்ட முறையில், அதாவது எந்தக் கட்சியிலும் சேராதவர் என்ற முறையில் சிலர் அபேட்சகர்களாக நிற்பர். இவர்கள் சுயேச்சை வாதிகள்1 என்று அழைக்கப்படுவர். இவர்கள் எண்ணிக்கையில் மிகச் சொற்பமான பேராகவே இருப்பர். தேர்தலின்போது தீவிரமான பிரசாரம் நடைபெறு மென்பதைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. எந்த நாட்டிலும் இஃது இயற்கை, பணம், செல்வாக்கு எல்லாம் உபயோகிக்கப்படும். ஆனால் ஒவ்வோர் அபேட்சகரும் குறிப்பிட்ட ஒரு தொகைக்குமேல் செலவழிக்கக் கூடாதென்று சட்டமுண்டு.2 இதற்குமேல் செலவழித்தால், அது லஞ்சக் குற்றமாகக் கருதப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப் பட்டுவிட்டால், அபேட்சகர் வெற்றியடைந்தும் பிரயோஜனமில்லை; தானத்தை இழந்து விடும்படியாகிவிடும்; தேர்தலுக்காக மேற்சொன்ன வரம்புக் குட்பட்டு எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்ட தென்பதற்கு, ஒவ்வோர் அபேட்சகரும் கணக்குக் காட்ட வேண்டும். எல்லாத் தொகுதிகளிலும் தேர்தல் ஒரே தேதியில்தான் நடைபெறும். தேர்தல் முடிந்த பிறகு, அந்தந்தத் தொகுதியிலும் தேர்தலை நடத்திய உத்தியோகதர், வெற்றி பெற்ற அபேட்சகருக்கு, இன்னார் இன்ன தொகுதிக்கு முறையாகத் தெரிந்தெடுக்கப்பட்டார் என்று ஓர் அத்தாட்சிப் பத்திரம் கொடுப்பார். இதனை, பார்லிமெண்ட்டில் சென்று அமர்வதற்கான அனுமதிச் சீட்டு என்று கூறலாம். இதற்குப் பிறகே, அபேட்சகருடைய பெயருக்கு முன்னால் கனம்3 என்ற வார்த்தையும், பின்னால் எம்.பி.4 என்ற இரண்டு எழுத்துக்களும் வந்து சேருகின்றன. தேர்தல் முடிந்துவிட்டது. அறுநூற்றுச் சொச்சம் அங்கத் தினர்கள் பார்லிமெண்ட்டுக்குத் தெரிந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.5 இனி என்ன? மந்திரிச் சபை அமையவேண்டியதுதான்; பார்லிமெண்ட் கூட வேண்டியதுதான். முதலில் மந்திரிச் சபையே அமைகிறதென்பதையும், பின்னரே பார்லிமெண்ட் கூடுகிறதென் பதையும் வாசகர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். மந்திரிச் சபை எப்படி அமைகிறது? தேர்தலில் எந்தக் கட்சி அதிகப்படியான தானங்களைக் கைப்பற்றியிருக்கிறதோ, அதாவது எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பார்லிமெண்ட்டில் பெரும் பான்மையோரா யிருக்கிறார்களோ, அந்தக் கட்சியின் தலைவரை அரசர் அழைத்து மந்தரிச் சபையை அமைக்குமாறு ஆணையிடுவார். அந்தத் தலைவரும், கட்சியின் முக்கியதர்களைக் கலந்தாலோசித்து மந்திரிகளின் ஜாபிதா ஒன்றைத் தயாரிப்பார்; தயாரித்து அரசரிடம் சமர்ப்பிப்பார். அரசரும் இந்த ஜாபிதாவை அங்கீகரிப்பார், பிறகு தலைவர், அரசருடைய சந்நிதானத்தில் பிரதம மந்திரியாக விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்வார். இவரைத் தொடர்ந்து மற்ற மந்திரிகளும் அரசர் முன்னிலையில் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். மந்திரிச் சபை அமைந்து விடுகிறது. இந்த மந்திரிச் சபையின் அமைப்பைப் பற்றின சில விஷயங் களைச் சொன்னால் புதுமையாகவும் புதிர்போலவும் இருக்கும். முதலாவது, இதற்குச் சட்டத்தில் இடமில்லை. அதாவது, மந்திரிச் சபை ஒன்று ஏற்படவேண்டும், அதன் அமைப்பு இப்படி இருக்கவேண்டும், அதன் அதிகாரங்கள் இன்னின்னவை என்பவைகளைத் திட்டப்படுத்திச் சொல்லும் சட்டம் எதுவுமில்லை. பஷ்டமாகச் சொல்லப் போனால், இது சட்ட ரீதியான தாபனமல்ல. ஆயினும் இது பதவியேற்று அரசாங்கத்தை நடத்தி வருகிறது. எல்லாம் வழக்கத்தை யொட்டித்தான். பொதுவாகவே, பிரிட்டிஷ் அரசியலமைப்பு, எழுத்து மூலமான ஆதாரமில்லாதது. அதாவது, பிரிட்டிஷ் அரசியல் திட்டமென்பது இதுதான் என்று எழுத்திலே எடுத்துக் காட்டக்கூடியதொன்றுமில்லை. பிரிட்டிஷ் அரசியலின் பல அமிசங்கள், நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிற சில நியதிகளை அடிப்படையாகக் கொண்டவை யென்று சுருக்க மாகக் கூறலாம். மற்றொன்று, பெரும்பான்மைக் கட்சித் தலைவர் பிரதம மந்திரி யாவதும், அவர், தம்மோடு ஒத்துழைக்கக்கூடிய தமது கட்சியினரிற் சிலரை மந்திரிகளாகத் தெரிந்தெடுத்துக் கொள்வதும், இந்த மந்திரி கோஷ்டிக்கு மன்னர்பிரான் அங்கீகாரம் கொடுப்பதும் வரன்முறையாக நடைபெற்று வந்தபோதிலும், மந்திரிகளை, அரசரே நியமனம் செய்கிறா ரென்று சொல்லப்படும். ஏனென்றால், அரசர், ராஜ்யத்தின் மேலான நிருவாகத் தலைவராகவும், அப்படியே அரசாங்கத்தின் அதிகாரங்கள் பலவற்றையும் அமுலுக்குக் கொண்டு வருகிறவராகவும் கருதப்படுகிறார். உண்மையில், பார்லிமெண்ட் வகுக்கும் சட்டதிட்டங்களுக்குட்பட்டே அவருடைய தலைமைப் பதவியும் அதிகாரங்களும் இருக்கின்றன. என்றாலும் அரசர் பெயராலேயே எல்லா அதிகாரங்களும் பிரயோகத் திற்குக் கொண்டுவரப்படுகின்றன; எல்லா நியமனங்களும் அவர் பெயராலேயே செய்யப்படுகின்றன. இன்னொன்று: மந்திரிச் சபையில் இத்தனை பெயர்தான் இருக்கவேண்டுமென்ற கணக்குக் கிடையாது. தேவைக்குத் தகுந்த படி அல்லது நிலைமைக்குத் தகுந்தபடி, மந்திரிகளின் எண்ணிக்கை கூடலாம்; அல்லது குறையலாம். மந்திரிச் சபையிலுள்ள மந்திரிகளைத் தவிர மந்திரிச் சபையில் இல்லாத மந்திரிகளும் உண்டு. இந்த மந்திரிப் பதவிகளில்சில, நீண்ட கால வழக்கத்தையொட்டி ஏற்பட்டவை; இன்னுஞ் சில, அரசாங்கத் திற்கு முக்கியமான விஷயங்களைப்பற்றி ஆலோசனை கூறுவதற்காக உண்டானவை. மற்றுஞ் சில, பொறுப்பான சில காரியங்களைக் கவனிப் பதற்கென்று இருக்கின்றன. பொதுவாக, திறமைசாலிகளையும் அனுபவ சாலிகளையும் அரசாங்கம் உபயோகித்துக்கொள்ள வேண்டுமென்பதற் காகவே, இப்படிச் சிலர் மந்திரிகளாக நியமிக்கப்படுகின்றனர். மந்திரிகளில் இன்னார்தான் மந்திரிச் சபையில் இருக்க வேண்டுமென்ற நிர்ணயம் கிடையாது. யாரார் மந்திரிச் சபையில் இருக்கவேண்டும், யாரார் இருக்கத் தேவையில்லை என்பதை, ஒரு புதிய அரசாங்கம் அமைகிறபோது, பிரதம மந்திரி தனது சகாக்களிற் சிலரைக் கலந்தாலோசித்துத் தீர்மானித்துக் கொள்கிறார். மந்திரிச் சபையிலுள்ள மந்திரிகள், இல்லாத மந்திரிகள் இவர் களைத் தவிர்த்து, உப மந்திரிகள்1 என்று சிலர் உண்டு. எந்த ஒரு மந்திரிச் சபையிலும் முப்பது அல்லது முப்பத்தைந்து பேர் உப மந்திரிகளாக இருப்பர். ஆக, எந்தக் கட்சி, அரசாங்கத்தை அமைக்கிறதோ அந்தக் கட்சியைச் சேர்ந்த சுமார் அறுபது எழுபது பேர் வரை, மந்திரி களாகவும் உப மந்திரிகளாகவும் ஆவதற்குச் சந்தர்ப்பம் இருக்கிறது. பிரதம மந்திரியானவர், மந்திரிச் சபையை அமைக்கிறபோதே, பிரபுக்களில் ஒரு சிலரைத் தமது சகாக்களாகத் தெரிந்தெடுத்துக் கொள் கின்றார். Vbd‹whš, murh§f¤â‹ ãuâÃâfshf yh®£Þ rigÆY« áy® ïU¡fnt©Lkšyth?2ஆயினும் மந்திரிகளில், மந்திரிச் சபையிலுள்ளவர்களில் பெரும்பாலோர் காமன் சபை அங்கத்தினராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், காமன் சபையில்தான் அரசாங்கத்தைப் பற்றின பலவித சர்ச்சைகளும் வாதங்களும் நடைபெறுகின்றன; முக்கியமான பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன; எதிர்க் கட்சி, தனது சக்தியை இங்குதான் பிரயோகித்துப் பார்க்கிறது; அரசாங்கம், தனது கடமைகளை ஒழுங்காகச் செய்துகொண்டு வரவேண்டுமானால், அது, காமன் சபையில் பெறும் ஆதரவைப் பொறுத்தே இருக்கிறது. சுருக்கமாக, அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதே காமன் சபைதான். இந்தக் காரணங்களினாலேயே, மந்திரிகளிற் பெரும்பாலோர் காமன் சபை அங்கத்தினரா யிருக்கிறார்கள். மந்திரிகளுள், பிரதம மந்திரிக்குள்ள பொறுப்புக்கள் மகத் தானவை. இவர், ஒரு பக்கம், கட்சித் தலைவராயிருந்து அதன் கட்டுக் கோப்பு குலையாமலிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்; அதன் விருப்பு வெறுப்புக்களை கூடிய மட்டில் அனுசரித்துக் கொண்டு போகவேண்டும். மற்றொரு பக்கம், பிரதம மந்திரி என்ற ஹோதாவில், மந்திரிச் சபையின் தலைவராயிருந்து அதனை ஒழுங்காகக் கொண்டு செலுத்தவேண்டும். அதன் கூட்டங்கள் இவர் தலைமையிலேயே நடைபெறும், அரசாங்கத்தின் எல்லா இலாகா வேலைகளையும் பொதுவாக மேற்பார்வை செய்யவேண்டியவர் இவர். அதாவது, அரசாங்கத்தின் தலைவர் இவர். மந்திரிகளுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அவற்றைச் சமரஸப்படுத்திவிடுவது, அப்படியே இலாகாக் களுக்குள் உண்டாகிற அபிப்பிராய பேதங்களைச் சரிப்படுத்திவைப்பது முதலியவை இவருடைய அலுவல்களிற் சில. பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்குத் தகுதி வாய்ந்தவர்களை நியமித்தல், கௌரவப் பட்டங்கள் வழங்குதல் முதலியவற்றை இவர் கவனிக்கவேண்டும். காமன் சபைக்குச் சரியானபடி வழி காட்டிக்கொண்டு போகவேண்டியவரும் இவரே. அதாவது, எந்தச் சமயத்தில் எந்தத் தீர்மானத்தை அல்லது மசோதாவைக் கொண்டு வரலாமென்பதை நிர்ணயிப்பது, ஏதேனும் ஒரு பிரச்னையைப் பற்றி வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, வாதத்தின் போக்கு, அரசாங்கத்தின் கொள்கைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாத வழியில் சென்று கொண்டிருக்கிற தென்று தோன்றினால், அல்லது அரசாங்கத் திற்கு விரோதமான ஒரு சூழ்நிலையை உண்டுபண்ணக் கூடுமென்று தெரிந்தால், உடனே வாதத்தில் தலையிட்டு அதன் போக்கை ஒழுங்கு படுத்தி விடுவது, இப்படிப்பட்டவைகளை யெல்லாம் செய்யவேண்டியவர் இவரே. தேசீய முக்கியத்துவம் பெற்ற பிரச்னையைப்பற்றி, சிறப்பாக அரச குடும்பத்தைப் பொறுத்த ஒரு பிரச்னையைப் பற்றிச் சபையின் சார்பாகப் பேசுகிறவரும், பிரபலதர் யாரேனும் ஒருவர் காலமாகிவிட்டால், அவருடைய குடும்பத்தினருக்கு பார்லிமெண்ட்டின் சார்பாக அநுதாபந் தெரிவித்துப் பேசுகிறவரும் இவரே. இன்னோரன்ன காரணங்களி னாலேயே, இவர், சபையின் தலைவர்1 என்று அழைக்கப்படுகிறார். தலைவர் என்றால், சபையின் நடவடிக்கைகளைச் சில ஒழுங்குகளுக்குட் பட்டு நடத்தி வைக்கிற தலைவரல்ல; சபையை, அரசாங்கத்திற்கனு கூலமான வழியில் நடத்திக் கொண்டுபோகிற தலைவர் என்றே அர்த்தம். எனவே, ஒரு பிரதம மந்திரி, கட்சியின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர், காமன் சபையின் தலைவர் ஆகிய மூன்றுவித பொறுப்புக் களையும் வகிக்க வேண்டியவராயிருக்கிறார். மந்திரிச் சபை, கூட்டுப்பொறுப்புடையது என்பதைப் பற்றி நாம் விதரித்துச் சொல்லத் தேவையில்லை. கூட்டுப் பொறுப்பு என்று சொன்னால், ஒரு மந்திரி செய்கிற எல்லாக் காரியங்களுக்கும், மற்ற மந்திரிகள் பொறுப்பாளிகள் என்பது அர்த்தமல்ல. பொதுவாக, அரசாங்கத்தின் கொள்கைகள், அந்தக் கொள்கைகளை நிறைவேற்று வதற்கான திட்டங்கள், அந்தத் திட்டங்களை அமுலுக்குக் கொண்டுவர எடுத்துக் கொள்ளப்படும் நடவடிக்கைகள், இந்த மாதிரியான விஷயங் களை, எல்லா மந்திரிகளும் கூடியே நிர்ணயிக்கிறார்கள். இப்படி நிர்ணயிக் கிற விஷயங்களுக்குத்தான் எல்லா மந்திரிகளும் பொறுப்பாளிகள். கூட்டுப் பொறுப்பைப்பற்றிச் சொன்ன இந்த இடத்தில், கூட்டு அரசாங்கத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்வது அவசியமென்று கருதுகிறோம். பெரும்பாலும் ஒரு கட்சியின ருடைய மந்திரிச் சபையே, அதாவது, ஒரு கட்சி அரசாங்கமே அமைகிறது. ஆனால் சில விசேஷ சந்தர்ப்பங்களில், எல்லாக் கட்சிகளும் சேர்ந்த மந்திரிச் சபை அமைவதுண்டு. இதற்கு கூட்டு மந்திரிச் சபை அல்லது கூட்டு அரசாங்கம் என்று பெயர்.2 யுத்தம் ஏற்பட்டு விடுகிறது. அதைச் சமாளிக்க, தேசத்தின் எல்லாச் சக்திகளையும் ஒருமுகப்படுத்திப் போரில் வெற்றி காண வேண்டியது அவசியமாகிறது. அந்தமாதிரியான சந்தர்ப்பத்தில், கட்சி வேற்றுமைகள் மறக்கப்பட்டு விடுகின்றன. எல்லாக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து அரசாங்க யந்திரத்தை இயக்குவிக்க முன் வருகின்றனர்; கூட்டு மந்திரிச் சபை அமைகிறது. உதாரணமாக 1919 ஆம் வருஷத்திலிருந்து 1922 ஆம் வருஷம் வரை ஸ்ரீ லாயிட் ஜார்ஜ்3 தலைமையில் ஒரு கூட்டு அரசாங்கமும், 1940 ஆம் வருஷத்திலிருந்து 1945 ஆம் வருஷம் வரை ஸ்ரீ சர்ச்சில்4 தலைமையில் ஒரு கூட்டு அரசாங்கமும் முறையே நடைபெற்று வந்தன. எனவே கட்சி அரசாங்கமில்லாமல் கூட்டு அரசாங்கம் நடைபெறுதலும் சில சமயங்களில் உண்டு. மந்திரிகளின் சம்பளம், மாதவாரியாக அல்லாமல், வருஷ வாரியாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எல்லா மந்திரிகளுக்கும் ஒரே மாதிரியான சம்பளமில்லை. மந்திரிகளின் எண்ணிக்கை, சம்பள விகிதம் முதலியவற்றை நிர்ணயித்து 1937 ஆம் வருஷம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, கடைசி தடவையாக 1946 ஆம் வருஷம், மந்திரிகளிற் சிலர், உப மந்திரிகள், இவர்களுடைய சம்பள விகிதத்தைக் கூட்டுகின்ற முறையில் சில திட்டங்கள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன. இவை பிரகாரம், பிரதம மந்திரியும் லார்ட் ஹை சான்ஸலர்1 என்ற மற்றொரு முக்கியமான மந்திரியும் பதினாயிரம் பவுன் விகிதமும் , மற்ற மந்திரிகளில் பெரும்பாலோர் ஐயாயிரம் பவுன் விகிதமும், ஒரு சிலர் மட்டும் அதற்குக் குறைந்த தொகையையும் பெற உரியவராகின்றனர். 1949 ஆம் வருஷம் ஸ்ரீ அட்லி அரசாங்கத்தில், மந்திரிச் சபையிலுள்ள மந்திரிகளென்றும், மந்திரிச் சபையில் இல்லாத மந்திரிகளென்றும் இருந்த முப்பது பேரில் பிரதம மந்திரியும், லார்ட் ஹை சான்ஸலரும் பதினாயிரம் பவுன் விகிதமும், இருபத்தைந்து மந்திரிகள் ஐயாயிரம் பவுன் விகிதமும், மூன்று மந்திரிகள் மூவாயிரம் பவுன் விகிதமும் பெற்றனர். வெட்மினிட்டர் பகுதியிலுள்ள ஒயிட் ஹால்2 என்ற இடத்தில்தான் அரசாங்கக் காரியாலயங்களில் பெரும்பாலன இருக்கின்றன. இங்குள்ளதுதான் டௌனிங் தெரு3 இதில், பத்தாவது பதினோராவது எண்களுள்ள மாளிகைகள் மிகவும் பிரசித்தமானவை. எப்படியென்றால், பத்தாவது எண்ணுள்ள மாளிகைதான், பிரதம மந்திரியின் உத்தியோக வாசதலம். பதினோராவது எண்ணுள்ள மாளிகை பொக்கிஷ மந்திரியின் உத்தியோக வாசதலம். அதாவது இவ்விருவரும், தங்கள் பதவி களை ஏற்றுக் கொண்டதும், இந்த மாளிகைகளில் வந்து குடியமர்வார்கள். இவர்களுடைய உத்தியோக காலம் முடிகிறவரை, இவையே இவர் களுடைய வாசதலங்களாக இருக்கும். பத்தாவது எண் மாளிகையில் மந்திரிகளின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டங்கள் பலவும் நடைபெறும். இங்கிருந்தே அரசாங்க சம்பந்தமான அறிக்கைகள் பலவும் பிறக்கும். அரசாங்கத்தின் தலைமைப் பீடம் என்று இதனைச் சொல்வதுண்டு. மற்றும், இந்த டௌனிங் தெருவில் அந்நிய நாட்டிலாகா, குடியேற்ற நாட்டிலாகா, உள்நாட்டிலாகா, இவை சம்பந்தமான காரியாலயங்களும் இருக்கின்றன. 3. முதற்கூட்டம் மந்திரிச் சபை அமைந்துவிட்டது. இதனை இனி பார்லிமெண்ட் அங்கீகரிக்க வேண்டும். இதற்காகவும், இதைத் தொடர்ந்து மற்ற அலுவல்களைக் கவனிப்பதற்காகவும், ஏற்கனவே அரசர் பிரகடனத் தில் குறிக்கப்பட்டுள்ள நாளில் பார்லிமெண்ட் கூடும். இந்தநாள், அநேகமாக செவ்வாய்க்கிழமையாகவே இருக்கும்.1 அன்று பிற்பகல், சரியாக இரண்டேமுக்கால் மணிக்கு, காமன் சபை மண்டபத்தில், தெரிந்தெடுக்கப்பட்ட எல்லா அங்கத்தினர்களும் ஒன்று கூடுவார்கள்.2 கூடினதும், லார்ட் சபையிலிருந்து ஒரு தூதர் வருவார். அவருக்கு கருங்கோலேந்திய அறிமுக உத்தியோகதர்3 என்று பெயர். அவர் வருகிறார் என்று தெரிந்ததும் (காமன் சபை) மண்டபத்தின் முன் வாயிற் கதவுகள் மூடப்பட்டுவிடும். அவர் மூன்று தடவை தட்டுவார். ‘ah® m§nf? என்று கேட்பார்கள். நான்தான் கருங்கோலேந்திய உத்தியோகதர் என்று அவர் பதில் கூறுவார். பிறகுதான் கதவுகள் திறக்கப்படும். அவர் உள்ளே பிரவேசித்து, காமன் சபையினர், லார்ட் சபைக்கு வரவேண்டு மென்று அரசர் ஆணையிட்டிருப்பதாக அறிவிப்பார். உடனே எல்லா அங்கத்தினர்களும் லார்ட் சபை மண்டபத்திற்குச் செல்வார்கள். அங்கு, காமன் சபையினர், தங்களுக்குத் தலைவராக ஒருவரை, அதாவது ப்பீக்கரை அன்று தெரிந்தெடுத்து, மறுநாள் அவரை, அரசருடைய அங்கீகாரத்திற்கு ஆஜர்படுத்துமாறு, அரசரால் நியமிக்கப்பட்ட விசேஷ உத்தியோகதர்களால் கூறப்படுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டு, அங்கத்தினர்கள், திரும்ப காமன் சபை மண்டபத்திற்கு வருவார்கள். வந்ததும் ப்பீக்கரின்1 தேர்தல் நடைபெறும். ப்பீக்கர் தெரிந்தெடுக்கப்படுகிறபோது, சபைத் தலைவராக யாரும் இருக்கமாட்டார். காமன் சபையின் பிரதம குமாதா2 என்ற ஓர் உத்தியோகதர் உண்டு. இவர்தான் ப்பீக்கரின் தேர்தலை நடத்தி வைப்பார். அரசாங்கக் கட்சி, எதிர்க் கட்சி என்று இரண்டு கட்சிகள் உண்டல்லவா, இவற்றுள், முதலில் அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த ஓர் அங்கத்தினர், ப்பீக்கர் பதவிக்கு ஒருவருடைய பெயரைப் பிரேரிப்பார். இதை எதிர்க்கட்சி அங்கத்தினர் ஒருவர் ஆமோதிப்பார். மற்ற அங்கத்தினர்கள் கரகோஷத்தினால் அங்கீகாரம் தெரிவிப்பார்கள், ப்பீக்கரின் தேர்தல் முடிந்து விட்டது. ப்பீக்கராகத் தெரிந்தெடுக்கப்படும் வரை, பிரதாப நபர், மற்றச் சாதாரண அங்கத்தினர்களைப் போல, பின் வரிசை பெஞ்க்களொன்றில் அடக்கமாக உட்கார்ந்திருப்பார். தெரிந் தெடுக்கப்பட்டதும், அவரை பிரேரித்தவரும் ஆமோதித்தவரும், பக்கத்துக் கொருவராகப் பிடித்து, கொஞ்சம் வலுக்கட்டாயப் படுத்தி அழைத்துக் கொண்டுபோகிற மாதிரி அழைத்துப் போய் தலைவர் ஆசனத்தில் அமர்விப்பார்கள். இப்படிக் கட்டாயப்படுத்தி அமர்விப்பது ஒரு சம்பிரதாயம். இதைப்பற்றிப் பிந்திய அத்தியாயத்தில் கூறுவோம். ப்பீக்கர் தன்னைத் தெரிந்தெடுத்ததற்காக வந்தனங் கூறுவார். ஒரு பீக்கரைத் தெரிந்தெடுப்பதற்கு முந்தி, கட்சித் தலைவர்கள் ஒன்று கூடிக் கலந்தாலோசித்து, அனுபவம், திறமை, நேர்மை முதலியவற்றோடு கூடிய ஒருவரை ஏகமனதாகத் தெரிந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள், பெரும்பாலும் பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த, அதாவது அரசாங்கக்கட்சியைச் சேர்ந்த ஒருவரையே ப்பீக்கராகத் தெரிந் தெடுப்பார்கள். இதனால் மற்றக்கட்சியினருடைய உணர்ச்சிகளையோ அபிப்பிராயங்களையோ இந்தப் பெரும்பான்மைக் கட்சியினர் அலட்சியஞ் செய்துவிட்டு, தங்கள் கட்சியினரில் ஒருவரையே, ஓட்டு பலம் இருக்கிறதென்ற தைரியத்தில் தெரிந்தெடுப் பார்கள் என்பது அர்த்தமில்லை. கூடியமட்டில் கட்சி வேற்றுமையின்றி, எல்லாருடைய மதிப்புக்கு முரிய ஒருவரே தெரிந்தெடுக்கப்படுவார். அநேகமாக, ப்பீக்கர் பதவிக்குப் போட்டியில்லாமலே பார்த்துக் கொள்வார்கள். ஒருவரையே, ஒவ்வொரு பார்லிமெண்ட்டுக்கும், அதாவது ஒவ்வோர் ஐந்து வருஷத்திற்கும் தொடர்ந்தாற்போல் ப்பீக்கராகத் தெரிந் தெடுப்பதுதான் வழக்கமாயிருந்து வருகிறது. இதனால், பொதுத் தேர்தலின்போது, ப்பீக்கர் எந்தத் தொகுதியில் அபேட்சகராக நிற்கிறாரோ அந்தத் தொகுதியில் வேறுயாரும் அபேட்சகராக நிற்கமாட்டார். போட்டி யின்றியே அவர் - ப்பீக்கர் - தெரிந்தெடுக்கப்படுவார். ப்பீக்கர், கட்சிகளுக்கு மேற்பட்டவர் என்பதற்காகவே இப்படிச் செய்யப்படுகிறது. ப்பீக்கரைப் பற்றின மற்ற விவரங்களைப் பிந்திய ஓர் அத்தியாயத்தில் கூறுவோம். செவ்வாய்க்கிழமையன்று, ப்பீக்கர் தெரிந்தெடுக்கப் பட்டதோடு கூட்டம் முடிந்துவிடும். மறுநாள் புதன்கிழமை, குறித்த நேரத்தில், ப்பீக்கராகத் தெரிந்தெடுக்கப்பட்டவருடைய தலைமையில் கூடும். முந்திச் சொன்ன கருங்கோலேந்திய அறிமுக உத்தியோகதர், முந்திய நாள் போலவே, அரசருடைய ஆணை கொண்டு வருவார். அவர் வந்து போனதும், சபையினர், தெரிந்தெடுக்கப்பட்ட ப்பீக்கரின் தலைமையில் லார்ட் சபை மண்டபத்திற்குச் செல்வார்கள். அங்கு ப்பீக்கராகத் தெரிந் தெடுக்கப்பட்டவர், தம்மை ப்பீக்கராகத் தெரிந்தெடுத் திருப்பதாகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வார். அரசரின் சார்பாக இஃது அங்கீகரிக்கப் படும். பின்னர், ப்பீக்கர், காமன் சபையினருக்குப் பூர்வீகமாக இருந்துவரும் உரிமைகளையும் சலுகைகளையும், எல்லா அங்கத்தினர் சார்பாகவும் கோருவார். இவை எப்பொழுதும்போல் உண்டு என்று ஊர்ஜிதம் செய்யப்படும்.1 இதற்குப் பிறகு முன்போல் ப்பீக்கர் தலைமையில், அங்கத்தினர்கள், காமன் சபை மண்டபத்திற்குத் திரும்பி வருவார்கள். வந்ததும், முதலில் ப்பீக்கர், தாம் அமரும் ஆசனத்திற்குக் கீழேயுள்ள படிகளின் மேல் படியில் நின்றுகொண்டு, ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வார். இவரைத்தொடர்ந்து மற்ற அங்கத்தினர்கள் எடுத்துக் கொள்வார்கள். எப்படி? எதிருக்கெதிராகவும், ஒன்றன் பின்னால் மற்றொன்றாகவும் படிப்படியாகப் போடப்பட்டிருக்கும் நீண்ட பெஞ்சுகளின் வலது பக்கத்து முதல் வரிசையிலும், இடது பக்கத்து முதல் வரிசையிலும் அமர்ந் திருக்கும் அங்கத்தினர்கள் முதலிலும், பிறகு பக்கத்துக் கொருவராக மற்றவர்களும் முறையே சென்று, ப்பீக்கர் முன்னிலையில் நின்று கொண்டு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வோர் அங்கத்தினராகப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறபோது, ப்பீக்கர், ஆசனத்தில் அமர்ந்திருப்பார். மற்ற அங்கத்தினர்களும் தங்கள் தங்கள் இடத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பிரமாணம் எடுத்துக்கொண்ட அங்கத்தினர், அங்கு வைக்கப்பட்டிருக்கும் ரிஜித்தரில் கையொப்பமிடு வார். பிறகு காமன் சபையின் பிரதம குமாதா, அவரை ப்பீக்கருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். அவரும் ப்பீக்கருடன் கைகுலுக்கி விட்டுத் திரும்பி வந்து தமது இடத்தில் அமர்ந்துகொள்வார். பிரமாணம் எடுத்துக் கொள்ளாமல், ஒருவர் சபையில் அங்கத்தின ராக அமர முடியாது, அவருக்கு ஓட்டுப்போடவும் அதிகாரம் கிடையாது. காமன் சபையின் மொத்த அங்கத்தினர்கள் அறுநூற்றுச் சொச்சம் பேராயிருந்தபோதிலும், குறைந்த பட்சம் நாற்பது பேராவது சபை நடைபெறுகிறபோது ஆஜராயிருக்க வேண்டு மென்பது விதி. நாற்பதுபேர் ஆஜராயிருந்தால்தான், நடவடிக்கைகளை நடத்தலாம். அப்பொழுதுதான் அந்த நடவடிக்கைகள் செல்லுபடி யாகும். அங்கத்தினர்கள் பிரமாணம் எடுத்துக்கொள்கிறபோது கூட, குறைந்த பட்சம் நாற்பதுபேர் ஆஜரா யிருக்க வேண்டுமென்ற இந்த விதி கண்டிப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. புதன்கிழமையன்று தொடங்கப்பெற்ற இந்தப் பிரமாணம் எடுத்துக்கொள்கிற சடங்கு வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும். இதனோடு அந்த வாரக்கூட்டம் முடிகிறது. அடுத்தது, பார்லிமெண்ட் திறப்புவிழா. பார்லிமெண்ட் ஏன் கூட்டப் படுகிறது என்பதை அங்கத்தினர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா, இதற்காகவே இந்த விழா, லார்ட் சபையில்தான் இது நடைபெறும். அநேகமாக அரசரே நேரில் வந்து இந்த விழாவை நடத்தி வைப்பார். அவருக்குச் சாத்தியமில்லாவிட்டால், அவருடைய உத்தரவு பெற்றவர்கள் நடத்தி வைப்பார்கள். செவ்வாய்க்கிழமை பார்லிமெண்ட் முதன் முதலாகக் கூடிய தல்லவா, இதற்கு எட்டாவது நாள் செவ்வாய்க்கிழமையன்று இந்தத் திறப்பு விழா நடைபெறும். பெரும்பாலும் இந்த முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அன்று-செவ்வாய்க்கிழமை - பகல் பன்னிரண்டு மணிக்குச் சிறிது முன்பாக, காமன் சபை, தமது மண்டபத்தில் கூடும். அப்பொழுது ப்பீக்கர், தமது ஆசனத்தில் வீற்றிருக்கமாட்டார்; காமன் சபையின் பிரதம குமாதா அமர்ந்திருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். ஏனென்றால், அரசர், திறப்புவிழாப் பிரசங்கத்தைச் செய்து முடிக்கிற வரையில், காமன் சபை, ப்பீக்கரின் தலைமையில் இருந்துகொண்டு, எவ்விதமான நடவடிக்கைகளையும் நடத்தக் கூடாதென்பது ஐதிகம். சிறிது நேரத்திற்கெல்லாம், முந்தி மாதிரி, அரசருடைய ஆணைபெற்ற கருங்கோலேந்திய அறிமுக உத்தியோகதர் வருவார். அவர் வருகையை முன்னிட்டு, வழக்கம்போல், மண்டபத்தின் முன்வாயிற் கதவுகள் அடைக்கப்படும், அவரும் வழக்கம்போல் மூன்று தடவை தட்டுவார். அவரும் வருவார். அவர் வந்ததும், பிரதம குமாதா ஆசனத்தில் அதுகாறும் அமர்ந்திருந்த ப்பீக்கர் தமது ஆசனத்தில் போய் அமர்ந்து கொள்வார். அந்த உத்தியோகதரும், லார்ட் சபைக்கு, காமன் சபையினர் உடனே வரவேண்டுமென்ற அரசருடைய ஆணையைத் தெரிவித்து விட்டுத் திரும்பப் போய்விடுவார். அவர் போனதும், ப்பீக்கர், பிரதம குமாதாவும் மற்ற அங்கத்தினர்களும் பின் தொடர, ஊர்வலமாக லார்ட் சபைக்குச் செல்வார். அங்கு, லார்ட் சபை அங்கத்தினரல்லாதார் ஏதேனும் அலுவலாக வந்தால், அவர்களுக்கென்று பிரத்தியேகப் படுத்தப் பட்டுள்ள இடத்தில் வந்து எல்லோரும் நிற்பார்கள். காமன் சபையின் உத்தியோகதர்களோ, அங்கத்தினர்களோ, லார்ட் சபையில் அலுவலாக வந்து உட்காரக்கூடாதென்பது நியதி. அரசரே நேரில் வந்து திறப்புவிழாவை நடத்தி வைக்கிறா ரென்றால், சபை மண்டபம் வெகு சோபிதமாக விளங்கும். பிரபுக்களும் அவர்கள் மனைவிமார்களும் ஆடம்பரமான ஆடை ஆபரணங்களுடன் உட்கார்ந் திருப்பார்கள். அரசரும் அரசியும்.1 உயரமாகப் போடப்பட்டிருக்கும் இரண்டு சிங்காதனங்களில் வீற்றிருப்பார்கள். அவர்களுக்குக் கீழே வுல்ஸாக்2 என்ற பெயருள்ள ஆசனத்தில், லார்ட் சபையின் தலைவர்-இவருக்கு லார்ட் சான்ஸலர் என்று பெயர்-அமர்ந்திருப்பார். எதிர்ப்பக்கம் கோடியில், மேலே சொன்னபடி காமன் சபையினர் நின்று கொண்டிருப்பார்கள். அரசரோ அவர் சார்பாக லார்ட் சான்ஸலாரோ ஒரு பிரசங்கம் செய்வார். இஃது எழுதிப் படிக்கிற பிரசங்கமாகத்தான் இருக்கும். பிரசங்கம் முடிந்ததும், காமன் சபையினர், ப்பீக்கர் தலைமை யில் தங்கள் மண்டபத்திற்குத் திரும்பி வருவார்கள். வந்ததும் (காமன் சபையின்) கூட்டம் நடைபெறாது, பிற்பகல் மூன்று மணிக்குத்தான் தொடங்கும். மன்னர்பிரான் பேச்சிலிருந்துதான் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டு மென்பது நியதியாயினும், அதற்கு முந்தி ஏதேனும் ஒரு மசோதா, அமுலுக்குக் கொண்டுவர உத்தேசமில்லாத ஒரு மசோதா, சம்பிரதாயத்திற்காகச் சிறிது வாசிக்கப் படும். ஏன் இந்தச் சம்பிரதாய நடவடிக்கை என்றால், காமன் சபைக்கு, தன் இஷ்டப்படி தன் அலுவல்களைக் கவனித்துக் கொள்ள உரிமையுண்டு என்பதை ஊர்ஜிதப்படுத்திக் காட்டுவதற்குத்தான். இந்தச் சம்பிரதாய நடவடிக்கை சில நிமிஷங்களுக்குள் முடிந்துவிடும். பிறகு, ப்பீக்கர், அரசர் பேச்சைத் தாம் கேட்டதாகவும், அதைத் திரும்பவும் தாம் படிப்பதாகவும் சொல்லி அந்தப் பேச்சைப் படிப்பார். பேச்சின் அச்சடிக்கப்பட்ட பிரதிகள் ஏற்கனவே எல்லா அங்கத்தினர் களுக்கும் வழங்கப்பட்டிருக்கும். ஆயினும் இதனைத் திரும்ப காமன் சபையில் படிக்க வேண்டுமென்பது நியதி. இது படிக்கப்படுகிறபோது, அங்கத்தினர்கள் மிகவும் மரியாதையுடன் கேட்கவேண்டுமென்பது முறை. அரசருடைய பேச்சைப்பற்றிச் சில வார்த்தைகள். உண்மையில் இஃது அரசருடைய பேச்சல்ல. புதிதாகப் பதவியேற்றுக் கொள்கிற பிரதம மந்திரி, தமது சகாக்களுடன் கலந்தாலோசித்து, தயாரித்த பிரசங்கத்தை அரசர் படிக்கிறார்; அல்லது, பிரதம மந்திரி, அரசர் வாய்மூலமாகப் பேசுகிறாரென்று கூறலாம். புதிதாக, அமைந்துள்ள அரசாங்கம், என்னென்ன காரியங்களைச் செய்ய உத்தேசித் திருக்கிறது அதன் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் எவ்வாறிருக்கும் என்பவை களைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிவிப்பதே இந்தப் பேச்சு. இந்தப் பேச்சைக் கொண்டு புதிய அரசாங்கத்தின் போக்கு எப்படியிருக்குமென்பதை ஒருவாறு நிதானித்துக் கொண்டுவிடலாம். ப்பீக்கர், அரசர் பேச்சைப் படித்து முடித்ததும், அந்தப் பேச்சின் மீது வாதம் தொடங்கும். அரசருடைய பேச்சென்பது, உண்மையில் எப்படிப் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை வகுத்துக்காட்டும் பேச்சாயிருக் கிறதோ, அதுபோல, இந்த வாதமும், அரசருடைய பேச்சின்மீது வாதமா யில்லாமல் புதிய அரசாங்கத்தைப் பற்றியும் அதன் கொள்கைகளைப் பற்றியுமான வாதமாகவே இருக்கும். இதற்காக, புதிய அரசாங்கத்தையும், அதன் கொள்கைகளையும், இந்தச் சபை அங்கீகரிக்கிறது அல்லது நிராகரிக்கிறது என்று குறிப்பாக ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டு அதன்மீது எழுகிற வாதமாயிராது. அதற்குப் பதில் மன்னர்பிரான் திருவாய் மலர்ந்தருளிய உரைகளுக்காக வந்தனம் தெரிவித்து அவருக்கு ஒரு விண்ணப்பப் பத்திரம் சமர்ப்பிக்கப் படுகிறது என்று பொதுவான ஒரு பிரேரணை கொண்டுவரப்படும். இதனை ஒருவர் பிரேரிப்பார்; மற்றொருவர் ஆமோதிப்பார். இவ்விருவரும் பிரதம மந்திரியினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்க ளாகவும் அரசாங்கக் கட்சியினராகவும் இருப்பார்கள். இந்தப் பிரேரணையின் மீதும், இதற்கு எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பல திருத்தப் பிரேரணைகளின் மீதுமே வாதம் நடைபெறும். இந்தத் திருத்தப் பிரேரணைகள், மேற்சொன்ன அசல் பிரேரணையை நிராகரிப்பதாயிருக்கமாட்டா. அப்படி நிராகரிப்பது, அரசருக்கு அவமரியாதை செய்ததாகுமல்லவா? அரசருக்கு வந்தனம் தெரிவிக்க வேண்டாமென்று யார்தான் கூறுவார்? எனவே, இந்தத் திருத்தப் பிரேரணைகள், அசல் பிரேரணையுடன் ஒட்டியனவாகவே இருக்கும். இதற்கு உதாரணம் காட்டினால்தான் விளக்கும். அசல் பிரேரணை, மன்னர் பிரான் திருவாய் மலர்ந்தருளிய உரைகளுக்காக வந்தனம் தெரிவித்து அவருக்கு ஒரு விண்ணப்பப் பத்திரம் சமர்ப்பிக்கப் படுகிறது என்பதல்லவா? இதனோடு, ஆனால் அந்தப் பேச்சில் இந்த விஷயம் விளக்கப்படாததற்கு வருந்துகிறது, அந்த விஷயம் விடப்பட்டிருப்பதற்காக வருந்துகிறது, இன்ன விஷயத்தைப் பற்றிப் பிரதாபிக்கப்படவில்லை யென்பதற்காக வருந்துகிறது என்று சேர்க்கவேண்டும் என்று சொல்லி, எதிர்க் கட்சியினருக்கு என்னென்ன தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் இந்த மாதிரி பல திருத்தப் பிரேரணைகளாகக் கொண்டு வருவர். அசல் பிரேரணை மீதும் திருத்தப் பிரேரணைகள் மீதும் சுமார் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை வாதம் நடைபெறும். எல்லாக் கட்சி அங்கத்தினர்களும் இதில் கலந்துகொள்வார்கள். அந்தந்த இலாகா சம்பந்தப்பட்ட திருத்தப் பிரேரணைகளுக்கு அந்தந்த இலாகா மந்திரி பதில் கூறுவார். கடைசியில் அரசாங்கத்தின் சார்பாகப் பிரதம மந்திரி பதில் கூறுவார். இந்தப் பதில்கள் யாவும், வாதத்தின் போது அங்கத்தினர்கள் எழுப்பிய சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாகவும், ஆட்சேபங்களுக்குச் சமாதானம் கூறுவதாகவும், அரசாங்கத்தின் நோக்கங்களையும் திட்டங் களையும் விளக்கிச் சொல்வதாகவும் இருக்கும். இந்தப் பதில்களுக்குப் பிறகு, திருத்தப் பிரேரணைகள் யாவும் அநேகமாக வாப பெற்றுக்கொள்ளப்பட்டுவிடும். ஓட்டுக்கு விடப்படக் கூடிய நிலைமைவரை வாதத்தை முற்றவிடாது அரசாங்கம். அதனையும் மிஞ்சி ஓட்டெடுக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டால், அவை - திருத்தப் பிரேரணைகள் - தோல்வியே யடையும். ஏனென்றால் அரசாங்கக் கட்சிக்குப் பெரும்பான்மையான ஓட்டு பலம் இருக்கிறதல்லவா? அப்படி ஏதேனும் ஒரு திருத்தப் பிரேரணை, அரசாங்கத்தின் எதிர்ப்பை மீறி வெற்றி யடைந்துவிடுமானால், அரசாங்கத்திற்குப் போதிய ஆதர வில்லையென்பதுதான் அர்த்தம். உடனே மந்திரிச் சபை ராஜீநாமா செய்துவிடும்; வேறொரு மந்திரிச் சபை அமையும். ஆனால் இப்படி நிகழ்வது மிகவும் அரிது; நிகழ்வதே இல்லை யென்றும் கூறலாம். தேர்தலுக்குப் பிறகு அமைந்த மந்திரிச் சபையை, எந்த காமன் சபையும் உடனே நிராகரித்து விடத் துணியாதல்லவா? மந்திரிச் சபையும் அவ்வளவு பலவீனமான திதியில் இராதல்லவா? கடைசியில் வாதம் முடிந்து, அசல் பிரேரணை, அதாவது மன்னர்பிரானுக்கு விண்ணப்பப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப் படும். பிறகு, இந்தப் பத்திரம், காமன் சபை அங்கத்தினர்களா யுள்ள பிரிவு கவுன்சிலர்கள்1 மூலமாகவோ, அரண்மனையைச் சேர்ந்த உத்தியோகதர்கள் மூலமாகவோ அரசருக்குச் சமர்ப்பிக்கப் படும். அரசர் பேச்சைப் பற்றின வாதம் முடிந்ததும், சபையின் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இந்த நடவடிக்கைகள் என்னென்ன, பார்லிமெண்ட் எவ்வெப் பொழுது கூடுகிறது, எந்தெந்த நேரத்தில் கூடுகிறது, இவைகளைப் பற்றிச் சுருக்கமாக இனிக் கூறுவோம். 4. அன்றாட நடைமுறை பார்லிமெண்ட், வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாட்களும் கூடிக் கொண்டிருப்பதில்லை; இடைவிட்டு இடைவிட்டுத்தான் கூடும். ஆனால் ஒரு வருஷத்திற்குள் கட்டாயம் கூடியாகவேண்டும். ஏனென்றால், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம், அதாவது பட்ஜெட்1 ஒரு வருஷத்திற்குத்தான் தயாரிக்கப்படுகிறது. வரிவிதித்தல், வரி வசூலித்தல் இவைகளெல்லாம் வருஷவாரி செய்யப்படுகிற காரியங்கள், இவை யனைத்திற்கும் பார்லிமெண்ட்டின் அங்கீகாரம் வேண்டியிருக்கிற தல்லவா? எனவே ஒரு வருஷத்திற்குள் பார்லிமெண்ட் நிச்சயமாகக் கூடும். அதாவது, இந்த வருஷம் எதற்கு, அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட முடியாது. ஒரு வருஷத்துக் கூட்டத்தை ஒரு செஷன்2 என்று சொல்வார்கள். சாதாரணமாக ஒரு செஷன் என்பது, அக்ட்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த வருஷம் அக்ட்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரை மூன்று தடவையாக விட்டுவிட்டு நடைபெறும். இதுவே தற்போதைய வழக்கமாயிருந்து வருகிறது.3 ஒரு செஷனின் முதல் தடவைக் கூட்டம், அக்ட்டோபர் அல்லது நவம்பர் மாதம், அவ்வப்பொழுது நிர்ணயிக்கப்படுகிற ஒரு தேதியி லிருந்து, டிசம்பர் மாதம் கிறிம பண்டிகை விடுமுறை வரை நடைபெறும். இந்த முதல் தடவைக்கூட்டம், எத்தனை நாட்கள் நடைபெறும் என்று சராசரியாகக் கூடச் சொல்லமுடிவ தில்லை. ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு விதமாகக் கூடவும் குறையவும் செய்யும். ஐம்பது அறுபது நாட்கள் கூடும் என்று உத்தேசமாகச் சொல்லலாம். இரண்டாவது தடவைக்கூட்டம், அநேகமாக பிப்ரவரி மாதம், முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஆரம்பித்து, மார்ச்சு மாதம் மூன்றாவது வாரம் வரை, அதாவது, ஈட்டர்1 பண்டிகை விடுமுறைக்கு முன்பு வரை சுமார் நாற்பது நாட்கள் நடைபெறும். மூன்றாவது தடவைக் கூட்டம், ஈட்டர் விடுமுறைக்குப் பிறகு தொடங்கி, ஆகட் மாதம் முதல் வாரம் வரை, இடையில் விட்ஸன்டைட்2 என்ற பண்டிகைக்காகச் சில நாட்கள் விடுமுறை விடப்பட்டு, சுமார் எழுபது அல்லது எண்பது நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு தடவைக் கூட்டத்தையும் அந்தந்த பருவத்தின் பெயரால் அழைப்பர். உதாரணமாக, பனிகாலக் கூட்டம், மாரிகாலக் கூட்டம், இப்படி, இப்படி. ஒரு தடவைக் கூட்டத்திற்கும் மறுதடவைக் கூட்டத்திற்கும் மத்தியிலுள்ள நாட்களில் பார்லிமெண்ட் கூடாது; விடுமுறை யென்று சொல்லலாம். மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், வருஷத்தில் சுமார் நூற்றைம்பதிலிருந்து நூற்றறுபது நாட்கள் பார்லிமெண்ட் கூடுவதா யிருக்கும். இப்படிக் கூடும் நாட்களில், தினசரி எப்பொழுது கூடுகிறது? எப்பொழுது கலைகிறது? சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் அநேகமாகக் கூடுவதில்லை. அவசியமும் அவசரமும் இருந்தாலொழிய, சிறப்பாக, தேசம் ஆபத்தான நிலையிலிருந்தாலொழிய, -அதாவது யுத்த காலத்தில் என்று வைத்துக்கொள்ளலாம். -இந்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்களே. அப்படி இந்த இரண்டு நாட்களில் ஒரு நாள், சனிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ அல்லது இரண்டு நாட் களிலுமோ கூடவேண்டிய அவசியம் ஏற்பட்டால், சபையே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அந்தத் தீர்மானத்தை அனுசரித்துக் கூடலாம். அதாவது, மேற்படி இரண்டு நாட்களில் கூடுவதும் கூடாமலிருப்பதும் சபையின் விருப்பத்தைப் பொறுத்திருக்கிறது. தன்னுடைய கூட்டங்களை எவ்வெப்பொழுது நடத்தவேண்டு மென்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் சபைக்கே உண்டு; வேறொருவருக்கும் அதாவது ப்பீக்கர் முதலிய எவருக்கும் கிடையாது. சாதாரணமாக, திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள்தான் தினசரி கூட்டம் நடைபெறும். இந்த ஐந்து நாட்களிலும், திங்கட் கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை, தினசரி பிற்பகல் 2-45 மணியிலிருந்து இரவு 11-30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை மட்டும் முற்பகல் 11-30 மணியிலிருந்து பிற்பகல் 4-30 மணி வரையிலும் கூட்டம் நடைபெற வேண்டுமென்பது பொதுவான ஏற்பாடு. ஆனால் இந்த ஏற்பாட்டை, தன் சௌகரியத்திற்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள சபைக்குப் பூரண உரிமையுண்டு. அப்படியே மாற்றிக்கொண்டுமிருக்கிறது. உதாரணமாக 1945-46 ஆம் வருஷ செஷனுக்கு, முதல் நான்கு நாட்களிலும் பிற்பகல் 2-15 மணியிலிருந்து இரவு 9-45 மணிவரை கூடவேண்டுமென்று மாற்றிக்கொண்டது. 1947 ஆம் வருஷம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு விதிப்படி, முதல் நான்கு நாட்களிலும் பிற்பகல் 2.30 மணியி லிருந்தும், வெள்ளிக்கிழமை 11 மணியிலிருந்தும் கூட்டம் தொடங்கப் படுகிறது. 1945 ஆம் வருஷம் தொழிற்கட்சியினர், அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, பொதுவாக பார்லிமெண்ட்டின் நடைமுறைகள், விதிகள், மந்திரிகளின் எண்ணிக்கை, சம்பள விகிதம் முதலியவற்றில் அநேக மாற்றங்களைச் செய்தனர். அரசாங்க அலுவல்கள் துரிதமாக நடைபெற வேண்டுமென்பதற்காகவும் காலத்தை வீணாக்கக் கூடா தென்பதற்காகவும், சபை கூடும் நேரம் இப்படி மாற்றப்பட்ட தென்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த மாதிரியான மாற்றங்கள் அவ்வப்பொழுது நிகழ்வனவே. பொதுவான ஏற்பாடென்னவோ நீண்ட காலமாக அனுசரிக்கப்பட்டு வருகிற நியதி என்னவோ, மேலே சொன்னபடி, திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை தினசரி 2-45 மணிக்குக்கூடி இரவு 11-30 மணிக்குக் கலைவதும், வெள்ளிக்கிழமை மட்டும் 11-30 மணிக்குக் கூடி 4-30 மணிக்குக் கலைவதும்தான். இந்தப் பொது நியதியை அனுசரித்தே, தினசரி நடவடிக்கைகள் இங்கு விவரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். நடவடிக்கைகள் ஆரம்பமாவதும் முடிவதும் கால்மணி முன்னது பின்னதாக இருந்தபோதிலும், நடவடிக்கைகளென்னவோ ஒரே மாதிரிதா னல்லவா? எந்த நாளிலும், இடைவேளைச் சிற்றுண்டிக்கென்று அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ சபையின் கூட்டம் தள்ளி வைக்கப்படுகிறது கிடையாது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கையிலேயே, அங்கத்தினர்கள் சிற்றுண்டிக்கென்று போவதும், சிற்றுண்டிக்குப் பிறகு திரும்பி வருவதுமாயிருப்பார்கள். சபையின் அலுவல்கள், அன்றாட நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ள படி சாங்கோபாங்கமாக, -ஏன் சிறிது மந்தமாகக்கூட என்று சொல்லலாம். -நடைபெறும், ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் சபையின் நடவடிக்கைகளில் சிறிது விறுவிறுப்பு காணப்படும். ஒன்று, கேள்வி நேரம். மற்றொன்று, அவசியமும் அவசரமுமான பிரச்னையைப்பற்றி விவாதிக்க வேண்டு மென்பதற்காக, சபையின் நடவடிக்கைகளைத் தள்ளிவைக்க வேண்டுமென்ற ஒரு பிரேரணை ஏற்கனவே நிறைவேறியிருந்து, பிறகு அதன் மீது வாதம் நடைபெறுகிறபோது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், அங்கத்தினர்களின் சாமர்த்தியம், மந்திரிகளின் திறமை இரண்டும் நன்கு வெளியாகும். இரண்டேமுக்கால் மணிக்குச் சபை கூடுகிறதல்லவா, முதலில் பிரார்த்தனை. பிறகு, சம்பிரதாயமாகக் கவனிக்கப்படவேண்டிய அலுவல்கள் ஏதேனும் இருந்தால் அவை கவனிக்கப்பட்டதும், கேள்வி நேரம் தொடங்கும். மூன்றே முக்கால், மணிவரை, ஏறக்குறைய ஒரு மணி நேரம் அங்கத்தினர்கள், கேள்விகள் கேட்பதும் மந்திரிகள் பதில் சொல்வதும் நடைபெறும். இந்தக் கேள்வி பதில்களின் மூலம், அங்கத்தினர்கள், அரசாங்க இலாகா ஒவ்வொன்றிலும் என்ன நடை பெறுகிறதென்பதை ஒருவாறு தெரிந்துகொள்கிறார்கள்; பொது ஜனங் களின் குறைநிறைகள் அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்படுகின்றன; அப்படியே அரசாங்கம் செய்து வருகிற காரியங்கள், செய்ய உத்தேசித் திருக்கும் காரியங்கள் யாவும் பொதுஜனங்களுக்குத் தெரிவிக்கப்படு கின்றன. சுருக்கமாக, இந்தக் கேள்வி நேரத்தில் அங்கத்தினர்கள், அரசாங்கத்தை இலாகாவாரியாகப் பரிசீலனை செய்து பார்க்கிறார்கள். ஓர் அறிஞன் கூறிய மாதிரி, கேள்விகள், ஒவ்வோர் இலாகாவின் மீதும் சர்ச்லைட் போட்டுப் பார்க்கின்றன. கேள்விகள் கேட்பதற்குச் சில நியதிகள் உண்டு. கேள்விகள் கேட்க விரும்பும் அங்கத்தினர்கள், குறைந்தபட்சம் இரண்டுநாள் முந்தியே, கேள்விகளை எழுதியனுப்பிவிட வேண்டும். ஏனென்றால், மந்திரிகள் பதில் சொல்வதற்கு வேண்டிய விஷயங்களைச் சேகரித்துக்கொள்ள அவகாசம் வேண்டுமல்லவா? மந்திரிகள், வாய்மொழி மூலமாகப் பதில் சொல்லவேண்டுமென்று எந்த ஓர் அங்கத்தினரேனும் விரும்பினால், அவர் தமது கேள்விகளுக்கு நட்சத்திரக் குறியிட்டு அனுப்பவேண்டும். ஆனால் ஓர் அங்கத்தினர், ஒரு நாளைக்கு மூன்று நட்சத்திரக் குறிக் கேள்விகளுக்குமேல் கேட்கக்கூடாது. நட்சத்திரக் குறியிடப்பெறாத கேள்விகளுக்கு எழுத்து மூலமாகவே பதில் கிடைக்கும். ஒரு விஷயத்தைப்பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு மந்திரி, தாம் தயாரித்து வைத்திருக்கிற பதிலைச் சொல்லி முடித்ததும், அதே விஷயத்தைப் பற்றி அங்கத்தினர்கள் மேலும் மேலும் உபகேள்விகள் கேட்பார்கள். மந்திரிகளும், எந்த விஷயத்தை எந்த அளவுக்குத் தெரிவிக் கலாமோ அந்த அளவுக்குத் தெரிவித்து சாமர்த்தியமாகப் பதில் சொல்வார்கள். இந்தச் சமயத்தில் அங்கத்தினர்களின் உணர்ச்சி தலை தூக்கி நிற்கும். மந்திரிகள், அங்கத்தினர்களின் மனத்தைப் புண்படுத் தாமலும், அவர்கள் கண்ணியத்திற்குப் பழுது ஏற்படாமலும், கூடிய மட்டில் அவர்கள் திருப்தியடைகிற முறையிலும் பதில் சொல்லும் ஆற்றல் முதலிய பலவும் இந்த நேரத்தில் பரிசோதனைக் குள்ளாகு மென்று கூறலாம். ஓர் அங்கத்தினர், தாம் கேட்ட கேள்விகளுக்கு மந்திரியானவர் திருப்திகரமாகப் பதிலளிக்கவில்லையென்று கருதினால், அதே காரணத்தைக் காட்டி, அதாவது மந்திரியின் பதில் திருப்திகரமா யில்லையென்ற காரணத்தைக்காட்டி, சபையின் நடவடிக்கைகளைத் தள்ளி வைக்க வேண்டுமென்று ஒரு பிரேரணை கொண்டுவந்து அதன்மீது வாதத்தை எழுப்பலாம். அங்கத்தினர்கள், கேள்வி கேட்கும் உரிமையுடையவர்க ளென்றாலும், எந்த விஷயத்தைப்பற்றியும் எந்த விதமாகவும் கேள்வி கேட்க உரிமையுடையவர்களல்லர். முதலாவது, ஒரு கேள்வியானது, சுருக்கமாகவும், குறிப்பிட்ட ஒரு விஷயத்தையொட்டியும் இருக்க வேண்டும்; நீண்ட ஒரு பிரசங்கமாயிருக்கக்கூடாது. எந்தத் தகவலை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஓர் அங்கத்தினர் கேள்வி கேட் கிறாரோ, அந்தத் தகவலின் உண்மைக்கு அந்த அங்கத்தினர் பொறுப் பேற்றுக் கொள்ளவேண்டும். அதாவது, காதால் கேட்டது, வதந்தி இவை களையெல்லாம் ஆதாரமாக வைத்துக் கொண்டு அங்கத்தினர்கள் கேள்வி கேட்கக் கூடாது. மந்திரிகளின் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள் வதற்காகவும் கேள்விகள் கேட்கக் கூடாது. ஏற்கனவே கேட்டு, பதில் சொல்லியான ஒரு விஷயத்தைப்பற்றி மறுபடியும் வேறு வாசகத்தில் கேட்கக்கூடாது. அரசாங்கத்தார் அவ்வப்பொழுது வெளியிடும் அறிக்கைகள் முதலியவற்றிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடிய விவரங் களைப் பற்றிக் கேட்கக்கூடாது. இன்னும் அரசரைப் பற்றியோ, அரச குடும்பத்தைப் பற்றியோ, அவர்களுடைய நடவடிக்கைகளைப் பற்றியோ கேட்கக் கூடாது. மந்திரிகள், அரசருக்கு, குறிப்பிட்ட ஒரு பிரச்னையை பற்றி என்ன ஆலோசனை சொன்னார்களென்பதைப் பற்றியோ சொல்லப் போகிறாகளென்பதைப் பற்றியோ கேட்கக்கூடாது. இந்த மாதிரி, கேள்வி கேட்பதில் சில வரன்முறைகள், சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. சாதாரணமாக ஒரு நாளில் ஐம்பதுக்குமேல் அறுபதுவரை கேள்விகளும் உபகேள்விகளுமாகக் கேட்கப்பட்டு பதில் சொல்லப் படுகின்றன. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய இந்த நான்கு நாட்களுந்தான் கேள்வி-பதில் நாட்கள். வெள்ளிக்கிழமை இல்லை. கேள்வி-பதில் நேரம் முடிந்தவுடனே, ஏற்கனவே சொன்னபடி, அரசாங்கம் கூறிய பதில் திருப்திகரமாயில்லையென்ற காரணத்தைக் காட்டியோ, அல்லது குறிப்பிட்ட ஒரு முக்கியமான பிரச்னையைப் பற்றி அவசரமாக வாதஞ் செய்யவேண்டுமென்று சொல்லியோ, சபையின் நடவடிக்கைகளைத் தள்ளிவைக்க வேண்டுமென்று எந்த ஓர் அங்கத்தினரும் ஒரு பிரேரணை கொண்டு வரலாம். சாதாரணமாக, எதிர்க் கட்சி அங்கத்தினர்கள்தான் இந்தமாதிரியான பிரேரணைகளைக் கொண்டு வருவார்கள். இந்தப் பிரேரணை, குறிப்பிட்ட ஒரு பிரச்னையைப் பற்றியதா, முக்கியமானதா, அவசரமானதா என்று ப்பீக்கர் பார்ப்பார். இந்த மூன்று தகுதிகளும் அந்தப் பிரேரணைக்கு இல்லையென்றால் அதனை உடனே நிராகரித்துவிடுவார். பிரேரணை, சரியான காரணங்களோடு கூடியிருக்கிறதென்று அபிப்பிராயப்பட்டால் சபையின் சம்மதத்தைக் கேட்பார். எதிர்க்கட்சி அங்கத்தினர் அனைவரும் சம்மதம் தெரிவிப்பர் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இந்த அவசரப் பிரேரணைக்குக் குறைந்தபட்சம் நாற்பது பேராவது சம்மதத்தைத் தெரிவிக்கவேண்டு மென்பது விதி. சபையின் சம்மதம் பெற்றதும், மேற்படி பிரேரணையின் மீது வாதம் தொடங்கிவிடாது; மாலை ஏழரை மணிக்குத்தான் தொடங்கும். ஏனென்றால், மந்திரிகள், வாதத்திற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள அவகாசம் வேண்டுமல்லவா? மேற்படி தள்ளி வைக்கும் பிரேரணைக்கு அனுமதி கொடுக்கப் பட்ட பிறகு, சபையின் மற்ற நடவடிக்கைகள் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ள படி நடைபெறத் தொடங்கும். ஏழரை மணியடித்ததும், உடனே சபையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மேற்படி பிரேரணையின் மீது வாதம் தொடங்கிவிடும். இந்த வாதத்தின் போதும், அங்கத்தினர்களின் உணர்ச்சி சிறிது தலைதூக்கி நிற்கும். அரசாங்கமானது, அவ்வப்பொழுது, தான் கொண்டுள்ள கொள்கை களைப் பற்றியும், அந்தக் கொள்கைகளை நிறைவேற்ற எடுத்துக் கொண்டுள்ள, எடுத்துக்கொள்ள உத்தேசித்திருக்கிற நடவடிக்கைகளைப் பற்றியும் ஓர் அறிக்கை வெளியிடும். இதற்கு வெள்ளை அறிக்கை1 யென்று பெயர். இந்த அறிக்கையின் மீதும் அவ்வப்பொழுது வாதம் நடைபெறுவதுண்டு. இந்த வாதங்களும் அநேகமாக காரசாரமாக இருக்கும். தள்ளி வைக்கும் பிரேரணையைப்பற்றி மேலே சொன்னோமே, இந்தப் பிரேரணை, தினந்தோறும் கொண்டுவரப்படும் என்பதில்லை. அவசரமும் முக்கியமுமான பிரச்னைகள் மீது வாதம் நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டால்தான் கொண்டுவரப்படும். ஆனால் தினந்தோறும், அதாவது, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் இந்த நான்கு நாட்களிலும் இரவு பதினோரு மணிக்கும், வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கும், சபையின் நடவடிக்கை களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று எந்த ஓர் அங்கத்தினரும் ஒரு பிரேரணை கொண்டுவரலாம். அப்படியே கொண்டு வரப்படுவ துண்டு. இந்தப் பிரேரணைக்குப் பிறகு, எந்த ஓர் அங்கத்தினரும், தாம் முக்கியமென்று கருதும் எந்த ஒரு பிரச்னையைப் பற்றியும் வாதம் கிளத்தலாம். கேள்வி நேரத்தில் அரசாங்கம் கூறிய பதிலின்மீதோ, அல்லது தள்ளிவைக்கும் பிரேரணையின்மீது நடைபெற்ற வாதத்தைத் தொடர்ந்தோ, வாதம் நடத்துவதற்கு, அரசாங்கக் கட்சியினரல்லாத அங்கத்தினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொள்வர். ஆனால் இந்தப் பதினோரு மணிக்கு மேற்பட்ட வாதமும் தினந்தோறும் நடைபெறு மென்பதில்லை. ஏனென்றால், அரசாங்கத்தார், தாங்கள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அலுவல்கள் அதிகமாக இருக்கின்ற காலங்களில் பதினோரு மணிக்குக் கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டுமென்ற இந்த விதியை விலக்கி வைக்க வேண்டுமென்று சொல்லி தங்கள் அலுவல்களைக் கவனிக்குமாறு செய்யலாம். ஒன்றுமட்டும் நிச்சயம். எந்தவிதமான வாதம், எந்த விதமான நிலையிலிருந்த போதிலும், சரியாகப் பதினொன்றரை மணிக்குச் சபையின் அன்றைய கூட்டம் நிறுத்தப்பட்டுவிடும். இதற்கு எந்த விதமான பிரேரணையும் அவசியமில்லை. வெள்ளிக்கிழமைக் கூட்டத்தைப் பற்றிச் சில வார்த்தைகள். இந்த வெள்ளிக்கிழமைக் கூட்டத்தை அரைநாள் கூட்டமென்றே சொல்ல வேண்டும். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வு நாட் களல்லவா, அந்த நாட்களில், சில அங்கத்தினர்கள், தங்கள் தொகுதிகளுக்குச் சென்று ஓட்டர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பு வார்கள். இன்னும் சில அங்கத்தினர்களுக்குச் சொந்த அலுவல்கள் இருக்கும். இவையனைத்தையும் உத்தேசித்து, வெள்ளிக்கிழமைக் கூட்டம் சீக்கிரம் கலைந்துவிடுகிறது. அன்று பகல் பதினொன்றரை மணிக்குச் சபை கூடினவுடனே, நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிடும். கேள்வி-பதில்கள் கிடையாதென்பதை ஏற்கனவே தெரிவித் திருக்கி றோம். சபையிலும் அதிகமான அங்கத்தினர்கள் ஆஜராயிருக்க மாட்டார்கள். முக்கியமான விஷயங்கள் எதுவும் நடைபெற மாட்டா தென்றே சொல்லவேண்டும், அங்கத்தினர்கள், தங்கள் சொந்த ஹோதாவில், ஏதேனும் மசோதாக்கள் அல்லது தீர்மானங்கள் கொண்டு வருவதா யிருந்தால் அன்று கொண்டு வரலாம். ஆனால் அரசாங்கத்தார், இதற்குப் பெரும்பாலும் இடங்கொடுப்பதில்லை; எந்த ஒரு மசோதாவையும் அல்லது தீர்மானத்தையும், தாங்களே கொண்டுவரக் கூடிய மாதிரி பார்த்துக்கொள்வார்கள். வெள்ளிக்கிழமைக் கூட்டம் அதிக சுறுசுறுப்பில்லாமலிருக்குமாகையால், அன்று மந்திரிகள், சென்ற நான்கு நாட்களாப்பாக்கி வைத்திருந்த தங்கள் தங்கள் இலாகா வேலைகளைக் கவனிப்பார்கள். அரசாங்கமானது, பெரும்பான்மைக் கட்சி பலத்தைப் பெற்றிருப் பதால், அது, தன்னிஷ்டப்படி காரியங்களை நடத்திக் கொண்டு போக முடியாதபடியும், கூடியமட்டில் மற்றக் கட்சி அங்கத்தினர்களுக்கு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் உரிமை இருக்கக்கூடிய மாதிரி யாகவும், பார்லிமெண்ட்டின் விதிகள், நியதிகள், சம்பிரதாயங்கள் இருந்து வருகின்றன. இதுதான் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டில் காணப்படும் விசேஷமான அமிசம். எந்த ஓர் அரசாங்கமும் கட்சி பலத்தைக் கொண்டு சுயேச்சையாக நடந்துகொண்டு விடலாமென்பது முடியாது: மற்றக் கட்சியினரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கூடியமட்டில் பெற்றுத் தானாக வேண்டும். எல்லாக் கட்சியினரும் தங்கள் கருத்துக்களைத் தாராளமாக எடுத்துச் சொல்லக்கூடிய விதமாகவே சபையின் நடை முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. சபையில், வாதத்தை ஒழுங்கு படுத்திவிடும் ப்பீக்கர், எல்லாக் கட்சியினரும் வாதத்தில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடிய மாதிரி பார்த்துக் கொள்வார். சுருக்கமாக, பெரும் பான்மைக் கட்சியினர், சிறுபான்மைக் கட்சியினரை ஒடுக்கிவிட்டு, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிட முடியாதபடி பார்லிமெண்ட்டின் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவெல்லாம் இருந் தாலும், பெரும்பான்மையோரின் விருப்பப்படியேதான், அதாவது அரசாங்கத்தின் விருப்பப்படியேதான் சபையின் காரியங்கள் நடைபெறு கின்றன. எந்த ஒரு சபையிலும், எந்த ஒரு தாபனத்திலும் இப்படித்தான் நடைபெறும். இதைப்பற்றி நாம் அதிகம் விதரித்துச் சொல்லத் தேவையில்லை. பார்லிமெண்ட்டின் அன்றாட நடவடிக்கைகளை இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்லலாம், ஒன்று, புதிய சட்டங்களை இயற்றிக் கொடுத்தல்; மற்றொன்று, அரசாங்க யந்திரம் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல். கேள்வி-பதில்கள், வாதப் பிரதிவாதங்கள் ஆகிய யாவும், இந்த இரண்டு பிரிவுகளையொட்டினவாகவே இருக்கும். முதலில், ஒரு புதிய சட்டம் எப்படி இயற்றப்படுகிறதென்பதைச் சிறிது கவனிப்போம். சாதாரணமாக எந்த ஒரு சட்டமும், காமன் சபையைப் பொறுத்த மட்டில் ஐந்து படிகளையும், லார்ட் சபையில் மேற்கொண்டு சில படி களையும் கடக்கவேண்டியிருக்கிறதென்று சொல்லலாம். இந்தப் படி களைக் கடந்ததுதான் சட்டம்1. அதுவரையில் சட்டம் என்ற பெயரால் அழைக்கப்படுவதில்லை; மசோதா2 வென்ற பெயராலேயே அழைக்கப் படுகிறது. அதாவது, மசோதாதான் திருந்தி கடைசியில் சட்டமாகிறது. ஒரு மசோதா எப்படிச் சட்டமாகிறதென்பதை உதாரணத்தின் மூலமாகச் சொன்னால்தான் ஒருவாறு விளங்கும். அரசாங்கத்தின் கல்வி இலாகாவை எடுத்துக்கொள்வோம். கல்வி மந்திரியானவர் கல்வி முறை இன்னின்ன வகையில் இருக்கவேண்டுமென்பதைப் பற்றி, தமது இலாகா உத்தியோகதர்களுடனும், அவசியமானால் கல்வி நிபுணர்களுடனும் கலந்தாலோசித்து ஒரு திட்டம் வகுத்து வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதற்குச் சில விதிகள், நிபந்தனைகள் முதலியன இருக்கவேண்டு மல்லவா? இவைகளைக் கொண்ட ஒரு பத்திரம் அல்லது ததவேஜு தயாரிக்கப்படும். இதுவே மசோதா. இதில் மசோதாவின் நோக்கங்கள் முதலியனவும் அடங்கி யிருக்கும். இந்த மசோதா தயாரானதும், பார்லிமெண்ட்டில் முதல் தடவையாக ஆஜர்படுத்தப்படும். இதற்கு முதல் வாசிப்பு1 என்று பெயர். இதுதான், நாம் மேலே ஐந்து படிகள் என்று சொன்னோ மல்லவா அவற்றுள் முதல்படி. முதல் வாசிப்பின்போது, மசோதா வாசிக்கப்படமாட்டாது. வாசிப்பு என்று சொல்லி வாசிக்கப்பட மாட்டாதென்றால் வேடிக்கையாக இல்லையா? ஆனால் இப்படித்தான் நடை பெறுகிறது. வாசிக்கப்படுவதே இல்லையென்றால், வாதம் எங்கே நடைபெறப்போகிறது? நிகழ்ச்சிநிரலில், கல்வி சம்பந்தப்பட்ட இந்த மசோதா முதல் தடவையாக வாசிக்கப்படுமென்றிருக்கும். இந்த விஷயம் வந்ததும், சபையின் பிரதம குமாதா, மசோதாவின் பெயரை உரக்க வாசிப்பார். இதனோடு மசோதாவின் முதல் வாசிப்பு முடிந்து விட்டது! உண்மையில், முதல் வாசிப்பு என்பது ஒரு சம்பிரதாயந்தான். முதல் வாசிப்பு முடிந்ததும், அங்கத்தினர்கள், மசோதாவின் அச்சடித்த பிரதியொன்றை, சபையின் காரியாலயத்திலிருந்து பெற்றுக் கொள்வர். பெற்றுக் கொண்டதும் மசோதா பூராவையும் படித்துப்பார்த்து, அதுபற்றித் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்குத் தயார்ப் படுத்திக்கொள்வர். சில நாட்கள் கழித்து, மசோதா, இரண்டாவது முறையாக சபையில் ஆஜர்படுத்தப்பெறும். இதற்கு இரண்டாவது வாசிப்பு2 என்று பெயர். மேலே சொன்ன படிகளில் இரண்டாவது படி. இரண்டாவது வாசிப்பின் போது, கல்வி மந்திரியானவர், மசோதாவின் நோக்கங்கள் முதலியவற்றை விளக்கிச் சொல்லி, வாதத்தைத் தொடங்கி வைப்பார். இதற்குப் பிறகு, மற்ற அங்கத்தினர்கள், தங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள், இப்படித் தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் களாகவே இருப்பார்கள் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இரண்டாவது வாசிப்பின்போது, மசோதாவின் பொதுவான அமிசங்கள்தான் வாதிக்கப்படும். அதன் விதிகள், ஷரத்துக்கள், ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்யப்படமாட்டாது. ஆனால் அப்படி ஆராய வேண்டியது அவசியமல்லவா? எனவே, சபையின் அங்கத்தினர் சிலரைக் கொண்ட ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதன் வசம், மசோதாவை விரிவாகப் பரிசீலனை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படும். இந்தக் கமிட்டியை பரிசீலனைக் கமிட்டி1 என்று அழைக்கலாம். மசோதா, மூன்றாவது படியை அடைகிறது. இந்தப் பரிசீலனைக் கமிட்டி, இரண்டு வகையாக அமைவதுண்டு. ஒன்று, சபை பூராவுமே கமிட்டியாக மாறும். மற்றொன்று, சபையின் ஒரு சில அங்கத்தினர்களை மட்டும் கொண்டதாயிருக்கும். இந்த இரண்டாவது வகைக் கமிட்டியில், கூடிய மட்டும் எல்லாக் கட்சி அங்கத்தினர்களும் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பர். முக்கியமான மசோதாக்களாயிருந்தால், முதல் வகைக் கமிட்டி, அதாவது சபை பூராவுமே கொண்ட கமிட்டியும், சில்லரை மசோதாக்களாயிருந்தால், இரண்டாவது வகைக் கமிட்டி, அதாவது ஒரு சிலரை மட்டும் கொண்ட கமிட்டியும் முறையே அமையும். இந்த இருவகைக் கமிட்டி கூட்டங்களுக்கு ப்பீக்கர் தலைமை வகிக்க மாட்டார்; கமிட்டி கூட்டங்களுக்கென்று தெரிந்தெடுக்கப் பட்ட ஒருவர்-இருவருக்கு சேர்மன்2 என்று பெயர்-தலைமை வகிப்பார். இந்தப் பரிசீலனைக் கமிட்டி செய்த மாற்றங்களுடனும் திருத்தங் களுடனும் மசோதா, சபையில் மறுபடியும் ஆஜர்படுத்தப் பெறும். இது மசோதாவின் நான்காவது படி. சபை பூராவுமே கமிட்டியாக மாறி மசோதாவைப் பரிசீலனை செய்திருந்தால், இந்த நான்காவது படியில் அதிகமான வாதங்கள் இரா. கமிட்டியிலிருந்து வந்த மசோதாவை ஆஜர்படுத்துவதென்பது ஒரு சம்பிரதாயமான காரியமாகவே இருக்கும். அப்படிக்கின்றி, ஒரு சிலரை மட்டும் கொண்ட கமிட்டி, மசோதாவைப் பரிசீலனை செய்து, அது சபையில் ஆஜர்படுத்தப்படுமானால், அப்பொழுது வாதங்கள் நிகழும். அங்கத்தினர்கள் திருத்தப் பிரேரணைகள் கொண்டு வருதல் கூடும். இவையெல்லாம் முடிந்த பிறகு, மசோதா, மூன்றாவது தடவை சபையில் ஆஜர்படுத்தப்படும். இதுதான் மசோதாவின் மூன்றாவது வாசிப்பு3. படிகளில் ஐந்தாவது படி. மூன்றாவது வாசிப்பின்போது, அதிக மான திருத்தப் பிரேரணைகள் கொண்டுவரப்படமாட்டா. சில்லரையாக, வாசகங்களில் சில சில மாற்றங்களை உண்டுபண்ணக் கூடியமாதிரி சில திருத்தப் பிரேரணைகள் கொண்டு வரப்படுவ துண்டு. மசோதாவைப் பற்றிப் பொது வாதமும் நடைபெறும். கடைசியில் ஓட்டுக்கு விடப்பட்டு மசோதா நிறைவேறும். இப்படி மூன்று வாசிப்புகள் முடிந்தபிறகுதான், அல்லது ஐந்து படிகளைக் கடந்த பிறகுதான் ஒரு மசோதா, காமன் சபையைப் பொறுத்த மட்டில் நிறைவேறியதாகிறது. காமன் சபையில் நிறைவேறிய மசோதா லார்ட் சபைக்கு அனுப்பப்பெறும். அங்கும் மேற்சொன்ன மாதிரியான படிகளைக் கடந்து, கடைசியில் மன்னர் பிரானுடைய அங்கீகாரத்திற்குச் செல்லும். இதற்குப் பிறகுதான் மசோதா சட்டமாகிறது. மசோதா, லார்ட் சபையில் சில மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் அடைதல் கூடும். இந்த மாற்றங்களோ திருத்தங்களோ பெரும்பாலும் அரசாங்கத்தினராலேயே கொண்டுவரப்படுவதாக இருக்கும். லார்ட் சபையில் இப்படி மாற்றமோ திருத்தமோ அடைந்த மசோதா மறுபடியும் காமன் சபைக்கு வந்து அநேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். லார்ட் சபை, ஒரு மசோதாவுக்குத் திருத்தங்கள், மாற்றங்கள் முதலியன செய்வதோடு நில்லாமல் அதனை நிராகரித்தும் விடலாம். ஆனால் இப்படி நிராகரிப்பதன் மூலம் அந்த மசோதாவைச் சட்டமாக்க விடாமல் செய்ய முடியாது. எப்படியென்று சிறிது பார்ப்போம். மசோதாக்களில், பண சம்பந்தமான மசோதாக்களென்றும், பண சம்பந்தமல்லாத மசோதாக்களென்றும் இரு வகையுண்டு. இவற்றுள், பண சம்பந்தமான ஒரு மசோதாவை காமன் சபை நிறைவேற்றி லார்ட் சபைக்கு அனுப்பினால், லார்ட் சபையானது ஒரு மாதத்திற்குள் அதனை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரிக்காவிட்டால், மசோதா, நேரே மன்னர் பிரானுடைய அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டு அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றுவிடும். பண சம்பந்தமல்லாத ஒரு மசோதாவை, காமன் சபை யானது நிறைவேற்றி வழக்கம்போல் லார்ட் சபைக்கு அனுப்பும். அதனை லார்ட் சபை நிராகரிக்கலாம். மறுபடியும் காமன் சபை மசோதாவை நிறை வேற்றி லார்ட் சபைக்கு அனுப்பும். அப்பொழுதும் லார்ட் சபை நிராகரிக்கலாம். மீண்டும், காமன் சபை, மசோதாவை நிறைவேற்றி லார்ட் சபைக்கு அனுப்பும். இந்தத் தடவையும் லார்ட் சபை நிராகரித்துவிட்டால், இந்த நிராகரிப்பைப் பொருட்படுத்தாமல், மசோதா, அரசருடைய அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றுவிடும். லார்ட் சபை, இப்படி மூன்று தடவை பண சம்பந்தமல்லாத ஒரு மசோதாவை நிராகரிப்பதன் மூலம் அதனை ஒரு வருஷ காலம் வரை சட்டமாக்க விடாமல் தடைப்படுத்தி வைக்கலாம். அவ்வளவு தான், இங்கே இன்னொரு விஷயம். மசோதாவை, காமன் சபை மூன்று தடவை நிறைவேற்றுகிறது, அப்படியே லார்ட் சபை மூன்று தடவை நிராகரிக்கிறது என்றால், ஒரே கூட்டத்தில் மூன்று தடவையல்ல, அதாவது, ஒரே கூட்டத்தில் மூன்று தடவை நிறைவேற்றுவதோ நிராகரிப்பதோ கூடாது. அடுத்தடுத்து நடைபெறும் மூன்று கூட்டங்களில், ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு தடவையாக, முறையே நிறைவேற்றவோ நிராகரிக்கவோ வேண்டும். இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று, எந்த ஒரு மசோதாவும் பல தடவை பரிசீலனை செய்யப் பட்ட பிறகுதான் சட்டமாகிறதென்பது. மற்றொன்று, சட்ட நிர்மாணஞ் செய்யும் விஷயத்தில் காமன் சபைக்குத்தான் மேலான அதிகாரம் இருக்கிறதென்பது. ஒரு மசோதாவைத் தயாரித்து சபையில் ஆஜர்படுத்த அரசாங்கத் திற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, ஏறக்குறைய அவ்வளவு உரிமை மற்ற தனிப்பட்ட அங்கத்தினர்களுக்கும் இருக்கிறது. ஆனால் அரசாங்கப் பணத்திலிருந்து செலவு செய்வதன் சம்பந்தமான மசோதாவாயிருந்தால், அதனை அரசாங்கத்தினர்தான் கொண்டுவர வேண்டும்; தனிப்பட்ட அங்கத்தினர்கள், செலவு சம்பந்தமான மசோதாவைக் கொண்டுவருமாறு அரசாங்கத்தினரைத் தூண்டலாம். பொதுவாக, எந்த மசோதாவா யிருந்தாலும் அதைக் கூடியமட்டில் தாங்களே கொண்டுவரக்கூடிய மாதிரி அரசாங்கத்தார் பார்த்துக்கொள்வர். இனி, பார்லிமெண்ட், அரசாங்க யந்திரத்தை எங்ஙனம் கண்காணித்து வருகிறதென்று பார்ப்போம். அரசாங்கமென்றால், அது பலவித வேலைகளைக் கவனிக்க வேண்டி யிருக்கிறது. இந்த வேலைகள் பல இலாகாக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பல இலாகாக்களிலும் ஆயிரக் கணக்கான சிப்பந்திகள் வேலை செய்கிறார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் சுமார் நூறு இலாகாக்கள் வரை இருக்கின்றன. இவற்றில் சுமார் மூன்றரை லட்சம் பேர் அலுவல் பார்க் கிறார்கள். இவையெல்லாம் சிவில் இலாகாக்கள். இவை தவிர, ராணுவ சம்பந்தப்பட்ட இலாகாக்கள் வேறு இருக்கின்றன தரைப்படையென்றும், கடற்படையென்றும், ஆகாயப்படையென்றும் பல பகுதிகள் இருக்கின்றன. இவற்றைச் சேர்ந்த போர் வீரர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். சாதாரண காலத்தைக் காட்டிலும் யுத்த காலத்தில், இந்த சிவில் ராணுவ இலாகாக்களின் எண்ணிக்கையும் இவற்றைச் சேர்ந்தவர் களுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இத்தனை இலாகாக்களும், தாங்கள் தங்கள் கடமையைச் செய்துவர வேண்டுமானால், பணம் தேவையாயிருக்கிறதல்லவா? இந்தப் பணத்தை, அரசாங்கம், தானே சுயமாக, வரி மூலமாகவோ, வேறு கடன் வாங்குதல் முதலியவை மூலமாகவோ வசூலித்துக் கொள்ளாது; வசூலிக்கவும் கூடாது; வரி விதிப்பதற்கோ, கடன் வாங்குவதற்கோ பார்லிமெண்ட்டின் சம்மதத்தைப் பெறவேண்டும். சம்மதத்தைக் கொடுத்து விட்டதோடு பார்லிமெண்ட் சும்மாயிராது. வசூலிக்கப்பட்ட பணம் சரியானபடி செலவழிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து வரும். ஆக, பணத்தை வசூலிப்பதும், செலவழிப்பதும் பார்லிமெண்ட்டின் பொறுப்பில் நடைபெற்று வருகின்றனவென்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் பார்லிமெண்ட்டே நேர்முகமாக இந்த இரண்டு கடமை களைச் செய்யாது. அரசாங்கந்தான் முதன் முதல், பணத்தை வசூலிப்பது எப்படி என்பதைப் பற்றியும், அப்படியே எப்படிச் செலவு செய்யவேண்டு மென்பதைப் பற்றியும் பார்லிமெண்ட்டுக்குக் கூறும். அவற்றைப் பார்லிமெண்ட் திருத்தலாம்; மாற்றலாம்; வேறு யோசனைகள் கூறலாம். அவ்வளவே தவிர, பார்லிமெண்ட்டே, அதாவது அரசாங்கத்தினரல்லாத மற்ற அங்கத்தினர்கள், பண வரவு செலவு சம்பந்தமாக எந்த ஒரு பிரேரணையையும் அல்லது மசோதாவையும் கொண்டுவரக்கூடாது. இதைப்பற்றி ஏற்கனவே சிறிது கூறியிருக்கிறோம். பார்லிமெண்ட் நடை முறைகள் எப்படிச் சிக்கலானவையோ அப்படியே பண வரவு செலவு சம்பந்தமான காரியக்கிரமங்களும் சிறிது சிக்கலானவை. பார்லி மெண்ட்டின் பெரும்பொழுது, இந்த வரவு செலவு பிரச்னைகளைக் கவனிப் பதிலேயே செலவழிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்கள் நான்கு விஷயங்களை, இந்த விஷயங்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறுபடியும் இங்கே ஞாபகப்படுத்திக்கொள்ளுதல் நல்லது. முதலாவது பார்லி மெண்ட்டின் சம்மதமில்லாமல் வரி வசூலிப்பதற்கோ கடன் வாங்கு வதற்கோ அரசருக்குச் சுயமாக அதிகாரம் கிடையாது; அப்படியே அரசாங்கத்திற்கும் கிடையாது. இரண்டாவது, பணத்தை வசூலிக்கிற அதிகாரமும் செலவழிக்கிற அதிகாரமும் காமன் சபைக்குத்தான் உண்டே தவிர லார்ட் சபைக்குக் கிடையாது. வரவு செலவினங்களைப்பற்றி காமன் சபை கிளத்தியதை லார்ட் சபை அங்கீகரிக்கிறது. அவ்வளவுதான். ஆனால் அதுவே-லார்ட் சபையே-சுயமாக, புதிதாக வரி விதிக்கவோ, காமன் சபை அனுமதித்த செலவை நிராகரிக்கவோ முடியாது. மூன்றாவது, காமன் சபையிலும், புதிதாக ஒரு வரி விதிக்க வேண்டுமானால். அதை முதலில் அரசாங்கந்தான் பிரேரிக்கவேண்டும்; தனிப்பட்ட அங்கத்தினர்கள் பிரேரிக்கக் கூடாது. இந்த வரி விதிக்கலாம் அந்த வரி விதிக்கலாம் என்று அரசாங்கத்திற்குப் பலவிதமாக யோசனைகள் கூறலாம்; அரசாங்கத்தைத் தூண்டலாம்; நெருக்கலாம். அவ்வளவுதான். நான்காவது, செலவினங் களுக்கும், அப்படியே அரசாங்கந்தான் முதல்முதல் பிரேரணைகளை அல்லது மசோதாக்களைக் கொண்டுவர வேண்டும்; தனிப்பட்ட அங்கத்தினர்கள் கொண்டுவரக்கூடாது. வரவினங்களுக்கு மாதிரி அரசாங்கத்தைத் தூண்டலாம்; நெருக்கலாம். ஆக, வரவு செலவினங் களைப் பற்றிய பிரேரணைகளையோ மசோதாக்களையோ அரசாங்கந் தான் முதன் முதல் கொண்டுவரவேண்டும். அவற்றின்மீதுதான் பார்லிமெண்ட் ஓட்டுச் செய்யும். வரிகளாகவோ, வேறு விதமாகவோ வசூலிக்கப்படுகிற பணம் யாவும் தொகுப்பு நிதி1 என்ற ஒரு நிதியின் கணக்கில், பாங்கி ஆப் இங்கிலாந்து2 என்ற பாங்கியில் ஜமால் செய்யப்படுகிறது. அரசாங்கத்தின் பணத்தைக் காப்பாற்றிக் கொடுக்கும் பாங்கி என்று இந்த பாங்கியைக் கூறலாம். வரிகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று, நிரந்தர வரி. அதாவது வருஷந்தோறும் செலுத்திக்கொண்டு வரவேண்டிய வரி, இன்னொன்று, ஒரு வருஷத்திற்கு மட்டும் விதிக்கப்படுகிற வரி. இப்படியே செலவினங் களிலும் இரண்டு வகையுண்டு. ஒன்று, நிரந்தரச் செலவினங்கள். இவற்றுள், அரச குடும்பத்தினருக்குக் கொடுக்கப்படுகிற தொகை, ப்பீக்கர் சம்பளம் முதலியன அடங்கும். மற்றொன்று, ஒரு வருஷத்திற்கு மட்டு மான செலவினங்கள். குறிப்பிட்ட ஒரு காரியத்திற்காகச் செலவழிக்கப் படுகிற தொகையும் இந்தப் பிந்திய செலவினத்தில் அடங்கும். இந்த வருஷவாரி வரவினங்களும் செலவினங்களும் ஒரு வருஷத்திற்குப்போல் மற்றொரு வருஷத்தில் இராது; கூடுதல் குறைச்சல் இருந்து கொண்டிருக்கும். பிரதி வருஷமும் அரசாங்கமானது முந்தின வருஷத்தில் நிகர வரவு எவ்வளவு, அடுத்த வருஷத்தில் வரவாக எதிர்பார்க்கக்கூடியது எவ்வளவு, அப்படியே முந்தின வருஷத்து நிகர செலவு எவ்வளவு, அடுத்த வருஷத்தில் செலவாகக்கூடியது எவ்வளவு என்ற விவரங்களைக் குறிப்பிட்டு ஒரு திட்டம் தயாரித்து பார்லிமெண்ட்டில் ஆஜர் படுத்தும். வரவு செலவுகளைக் குறிக்கும் இந்தத் திட்டத்திற்கே பட்ஜெட் என்று பெயர் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அரசாங்கம் ஆஜர் படுத்தும் இந்த வரவு செலவு திட்டத்தை பார்லிமெண்ட்டானது, இரண்டு கமிட்டிகளாகப் பிரிந்து பரிசீலனை செய்கிறது. ஒன்று, வரவினங்களுக்கு வழிதேடும் கமிட்டி.1 இதனைச் சுருக்கமாக, வரவுக் கமிட்டியென்று கூறலாம். மற்றொன்று, செலவினங்ளைத் தணிக்கை செய்யும் கமிட்டி,2 இதனைச் சுருக்கமாக, செலவுக் கமிட்டியென்று அழைக்கலாம். இந்த இரண்டு கமிட்டிகளும் சபையினின்று வேறுபட்டவை யல்ல; சபையின் சில அங்கத்தினர்களை மட்டும் கொண்டவையல்ல. சபையே, வரவினங்களைப் பரிசீலனை செய்கிறபோது வரவுக் கமிட்டி யாகவும், செலவினங்களைத் தணிக்கை செய்கிறபோது செலவுக் கமிட்டி யாகவும் தன்னை மாற்றிக் கொள்கிறது. அதாவது, சபையின் அங்கத்தினர்கள் எல்லாருமே கமிட்டிகளின் அங்கத்தினர்களாயிருக் கிறார்கள். என்ன வித்தியாசமென்றால், சபையாகக் கூடுகிறபோது, ப்பீக்கர் தலைமை வகிப்பார். கமிட்டியாகக் கூடுகிறபோது, சேர்மன் தலைமை வகிப்பார். இந்த சேர்மன், கமிட்டி கூட்டத்தில் தலைமை வகிக்கிறபோது ப்பீக்கர் அமர்கிற பீடத்தில் அமரமாட்டார்; வேறோர் ஆசனத்தில் அமர்வார். இந்த சேர்மனுக்கு உதவியாக டெபுட்டி சேர்மன்3 ஒருவர் உண்டு. சேர்மன் தலைமை வகிக்க முடியாத சந்தர்ப்பங்களில் இவர் தலைமை வகிப்பார்; டெபுட்டி ப்பீக்கராக4வும் அலுவல் பார்ப்பார். இந்த சேர்மனும் டெபுட்டி சேர்மனும் பிரதியொரு பார்லிமெண்ட்டின் துவக்கத்திலும், ப்பீக்கர் தெரிந்தெடுக்கப்படுவதைப் போல தெரிந்தெடுக்கப்படுவார்கள். இரண்டு கமிட்டிகளிலும் வாதப் பிரதிவாதங்கள் பலமாக நிகழும். சிறப்பாக, செலவினங்களைப் பற்றிப் பிரதாபம் ஏற்படுகிறபோது, அங்கத்தினர்கள் ஒவ்வோர் இலாகாவின் குறைநிறைகளை எடுத்துக் காட்டு வார்கள். மந்திரிகள், தங்கள் தங்கள் இலாகாக்களைப் பொறுத்த மட்டில் சமாதானம் கூறியோ, குறைகளுக்குப் பரிகாரந் தேடுவதாகச் சொல்லியோ, செலவினங்களுக்கு அங்கீகாரம் பெறுவர். மேலே, தொகுப்பு நிதியைப்பற்றிக் குறிப்பிட்டோமல்லவா, இந்த நிதிக்கு மேலதிகாரியொருவர் உண்டு. இருவருக்கு கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்1 என்று பெயர்; தணிக்கை அதிகாரியென்று அர்த்தம். பார்லிமெண்ட், எந்தெந்த இனங்களுக்குச் செலவழிக்க வேண்டுமென்று ஓட்டுச் செய்திருக்கிறதோ, அதன்படி இந்த நிதிப் பணம் செலவழிக்கப் பட்டிருக்கிறதா என்று கவனிப்பது இவர் கடமை. பிரதி வருஷமும், இவர், ஒவ்வோர் இலாகாவின் கணக்குகளைத் தணிக்கை செய்து, இவற்றைத் தமது அபிப்பிராயத்துடன் பார்லிமெண்ட் முன்னர் சமர்ப்பிப்பார். இவற்றைப் பார்லிமெண்ட்டானது, ஒரு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பும். இதற்கு பப்ளிக் அக்கவுண்ட் கமிட்டி2 என்று பெயர்; இலாகாக் களின் கணக்குகளைப் பரிசீலனை செய்யும் கமிட்டியென்று சொல்லலாம். இந்தக் கமிட்டி, பிரதியொரு வருஷ செஷன் ஆரம்பத்திலும் தெரிந் தெடுக்கப் படுகிறது. இதற்கு விசேஷமான அதிகாரங்கள் உண்டு. எந்த இலாகா கணக்குப் புதகங்களையும் அல்லது உத்தியோகதர்களையும் இது வரவழைத்துத் தணிக்கை செய்யலாம்; விசாரணை செய்யலாம். இந்தத் தணிக்கை, விசாரணை முதலியவற்றின்மீது ஓர் அறிக்கை தயாரித்து, பிரதி வருஷமும் பார்லிமெண்ட் முன்னர் சமர்ப்பிக்கும். இதன் மீதும் ருசிகரமான வாதம் நடைபெறும். ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்படுகிற பணம் துர்விநியோகப்படுத்தப்படாமல் சரியானபடி செலவழிக்கப் பட்டிருக்கிறதா, எந்த வகையிலேனும் சிக்கனம் செய்யலாமா என்பவை களை யெல்லாம் கவனிப்பதற்காகவே இந்தத் தணிக்கைக் கமிட்டி நியமிக்கப் படுகிறது. பொதுவாகவே பார்லிமெண்ட்டானது. வரவு செலவுகளைக் கண்குத்திப் பாம்புபோல் கவனித்து வருகிறதென்று சொல்லலாம். இனி, பார்லிமெண்ட்டின் முக்கியமான சில உத்தியோகதரைச் சந்திப்போம். 5. உத்தியோகதர்கள் ப்பீக்கர் காமன் சபைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கிறவரே ப்பீக்கர் என்றும், இவர் போட்டியின்றித் தெரிந்தெடுக்கப்படுவார் என்றும், பின்வரிசை ஆசனங்களொன்றில் அடக்கமாக உட்கார்ந்திருக்கிற ஒருவரே ப்பீக்கராகத் தெரிந்தெடுக்கப்படுகிறாரென்றும், இந்த மாதிரியான சில விஷயங்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோமல்லவா? ப்பீக்கர் என்றால் பேசுகிறவர் என்று அர்த்தம். ஆனால் இவர்தான், சபையின் நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில் பேசாதவர்; அதாவது அதன் வாதங்களில் கலந்து கொள்ளாதவர். ஆயினும் இவர் ப்பீக்கர் என்று அழைக்கப்படுகிறார். இப்படி அழைப்பது ஒரு சம்பிரதாயந்தான். அரச பீடத்திற்கும் பார்லிமெண்ட்டுக்கும் பல போராட்டங் கள் நடைபெற்று வந்தனவென்று முந்திச் சொன்னோமல்லவா, இவற்றின் ஒரு பகுதி, அரச பீடத்திற்கும் காமன் சபைக்கும் நடைபெற்ற பேராட்டம். இந்தப் போராட்டத்தின் ஒரு நிலையில் காமன் சபையானது, பகிரங்க மாகக் கூடுவதற்கு அஞ்சி, ரகசியமாகவே கூடி, தன் விவகாரங்களை நடத்தி வந்தது. ஆயினும், தன் கருத்துக்களை அல்லது தான் செய்த தீர்மானங்களை, அவ்வப்பொழுது அரசருக்குத் தெரியப்படுத்த வேண்டுமல்லவா? இதற்காக, கூட்டத்திற்குத் தலைமை வகித்தவரையே அரசரிடம் பேச அனுப்பி வந்தது. இவரே காமன் சபையின் பிரதிநிதியாக அரசரிடம் பேசுகிறவராயிருந்தார். அது முதற்கொண்டு, சபையின் தலைவரை, பேசுகிறவர், அதாவது ப்பீக்கர் என்று அழைப்பது வழக்கமா யிருந்து வருகிறது. ஆனால் இந்த ப்பீக்கர் பதவி மிகவும் ஆபத்தானதாயிருந்தது. காமன் சபையின் தீர்மானங்கள், சில சமயங்களில் அரசருக்குப் பிடித்தமில்லா மலிருக்கும். அப்பொழுது அதன் சார்பாகப் பேச வந்திருக்கிறவரை அவமரியாதையாக நடத்துவார்; அல்லது அவர் மீது தம் கோபத்தைத் திருப்புவார். இதனால் இந்தப் பதவியை யாரும் விரும்பி அடைவதில்லை. அரசருக்குப் பிடித்தமில்லாத தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் காமன் சபைக்கு ஏற்பட்டால், அப்பொழுது யாரும் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஒருப்படமாட்டார். எனவே, ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தலைமைப் பீடத்தில் உட்கார வைத்து மேற்படி தீர்மானங்களை நிறைவேற்றும். ஏனென்றால், தீர்மானங்கள் ஒழுங்கான முறையில் நிறைவேற்றப்படவில்லை யென்று காரணம் சொல்லி அரசர் அவற்றை அலட்சியஞ் செய்துவிடக் கூடாதல்லவா? இப்படியெல்லாம் முந்தி நடைபெற்று வந்தது. இதன் அடையாளம், அதாவது ப்பீக்கரைப் பலவந்தப்படுத்தி அவருடைய பீடத்தில் அமர்விப்ப தென்பது. இப்பொழுதும் ஒரு சம்பிரதாயமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அடுத்த அத்தியாயத்தில், இதனையும், இதனைப் போன்ற வேறு சில சம்பிரதாயங்களையும் காண்போம். ப்பீக்கர் பதவி, இப்பொழுது ஆபத்தானதில்லை; ஆனால் மிகவும் பொறுப்புடையது. இந்தப் பதவியில் அமர்ந்திருப்போர் மிகவும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடத்தப்படுகிறார். இந்தப் பதவிக்கு ஒரு மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதென்று சுருக்கமாகச் சொல்லலாம். ப்பீக்கரிடத்தில் ஒருவித மரியாதை தோன்றக் கூடிய மாதிரி யாகவே, இவருடைய உடை, தலையணி, ஆசனம் முதலியன இருக் கின்றன. கறுப்பு கவுன்1; விக்2 என்று அழைக்கப்படுகிற பொய் மயிரினாலாய தலையணி; இப்படியான சில அலங்காரங்கள். இவர் அமர்ந்திருக்கும் ஆசனமோ சிறிது உயரமானது; சிங்காதனம் போன்றது; மேலே விதானமுள்ளது. இவர், சபைக்கு வருகிறபோதும், சபையினின்று போகிறபோதும், சார்ஜண்ட்-அட்-ஆர்ம்3 என்ற உத்தியோகதர் மே4 என்ற அதிகாரக் கோலைப் பிடித்துக்கொண்டு முன்னே செல்வார். ஹைகோர்ட்டுகளில் நீதிபதிகளுக்கு முன்னே வெள்ளித்தடி பிடித்துக் கொண்டு ஒருவர் செல்லவில்லையா அந்த மாதிரி. இன்னும் பலவித மரியாதைகள் இவருக்குக் காட்டப் பெறுகின்றன. ஏற்கனவே தெரிவித்திருக்கிறபடி, இவர், போட்டியின்றியே இந்தப் பதவிக்குத் தெரிந்தெடுக்கப்படுவது வழக்கம். இங்ஙனமே இவர் பார்லிமெண்ட் அபேட்சகராக நிற்கும் தொகுதியிலும் இவருக்குப் போட்டியிராது. இவர், ஏதேனும் ஒரு கட்சியைச் சேர்ந்தவராயிருந்த போதிலும், அந்தக் கட்சியின் விவகாரங்களில் அதிகமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கமாட்டார்; அந்தக் கட்சியின் முக்கியதருள் ஒருவராகவும் இருக்கமாட்டார். இப்படிப்பட்டவரைத்தான் ப்பீக்கர் பதவிக்குத் தெரிந்தெடுப்பர். இதனால்தான் பின் வரிசை பெஞ்சுகளொன்றில் அடக்கமாக உட்கார்ந்திருப்பார் என்று மூன்றாவது அத்தியாயத்தில், ப்பீக்கரின் தேர்தலைப்பற்றிப் பிரதாபிக்கிறபோது குறிப்பிட்டோம். தவிர, இவர் ப்பீக்கராகத் தெரிந்தெடுக்கப்பட்டதும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவரா யிருந்தாரோ அந்தக் கட்சியிலிருந்து விலகிக்கொண்டு விடுவார்: அந்தக் கட்சியோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார். ப்பீக்கர், கட்சிகளுக்கு மேற்பட்டவராயிருக்க வேண்டுமென்பதற்காகவே இந்த நியதி. ப்பீக்கர், பதவியிலிருக்கிற காலம்வரை, வசிப்பதற்கென்று, வெட்மினிட்டர் அரண்மனையைச் சேர்ந்த கட்டடங்களில் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. இவருடைய நிகர சம்பளம் வருஷத்திற்கு ஐயாயிரம் பவுன். இவருக்கென்று தனியாக ஒரு காரியாலயம் உண்டு. இவருடைய காரியதரிசிதான், இந்தக் காரியாலயத்தின் முக்கிய உத்தியோகதர். இவரது வருஷ சம்பளம் 1,100 பவுனிலிருந்து 1,320 பவுன் வரை. இவர், ப்பீக்கரின் கடிதப் போக்குவரத்துக்களைக் கவனிப்பதோடு பார்லிமெண்ட் சம்பந்தப்பட்ட வேறு பல அலுவல்களையும் கவனித்துக் கொள்கிறார். இன்னொருவர், புரோகிதர். பார்லிமெண்ட்டின் ஒவ்வொரு நாள் கூட்டத்தின் தொடக்கத்திலும் பிரார்த்தனை நடத்துகிறவர் இவர் தான். இவரது வருஷ சம்பளம் 900 பவுன். அடுத்தது, சட்ட நிபுணர்; சட்ட சம்பந்தமாக ப்பீக்கருக்கு ஆலோசனை கூறுகிறவர். இவர்கள் தவிர, புத்தகசாலை அதிகாரியென்ன, கணக்கு அதிகாரிகளென்ன, குமாதாக்களென்ன, இப்படிப் பலர், ப்பீக்கரின் காரியாலயத்தில் அலுவல் பார்க்கின்றனர். இன்னும், ப்பீக்கரின் வருகையை அறிவிக்கும் தூதரென்ன, ப்பீக்கரின் உடையைத் தாங்கி வரும் உத்தியோகதரென்ன, இப்படிச் சிலர் உண்டு. சபை, முழுச்சபையாகக் கூடுகிறபொழுது, அதாவது காமன் சபையின் பகிரங்கக் கூட்டங்களுக்கு ப்பீக்கர் தலைமை வகிப்பார். சபை முழுவதும் கமிட்டியாக மாறிக் கொள்கிறபோதோ, மற்றக் கமிட்டிகளின் கூட்டங்களுக்கோ இவர் தலைமை வகிக்க மாட்டார். சபையானது நேரே அரச பீடத்திற்கு ஏதேனும் தெரிவிக்க வேண்டுமானால், ப்பீக்கர் மூலமாகத்தான் தெரிவிக்கவேண்டும். சபை முழுவதும் சேர்ந்து அரசரைக் காணவேண்டுமானால், ப்பீக்கரைத் தலைவராகக் கொண்டுதான் காணவேண்டும். இந்த உரிமை, அதாவது அரசரைக் காணும் உரிமை சபைக்கு எப்பொழுதும் உண்டு என்பதை ப்பீக்கரின் நியமனத்தை மன்னர்பிரான் அங்கீகரித்து விட்டதாக லார்ட் சபையில் அறிவிக்கப்படுகிறபொழுது, ப்பீக்கர், காமன் சபையின் சார்பாக வலியுறுத்துகிறார் என்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். மற்றும் ப்பீக்கர், அந்நிய நாட்டு அரசாங்கங்களிடமிருந்து அல்லது பார்லிமெண்ட்டுகளிடமிருந்து சபைக்கு வரும் செய்திகள், ததவேஜுகள் முதலியவற்றைப் பெற்று அவற்றை உரிய சமயங்களில் சபைக்கு அறிவிக்கிறார். அப்படியே அவைகளுக்கு-அந்நிய அரசாங்கங்களுக்கும் பார்லிமெண்ட்டுகளுக்கும்-சபை அனுப்புகிற செய்திகள், ததவேஜுகள் முதலியவற்றை அனுப்புகிறார். இவைபோல் இன்னும் சில பொறுப்புக்களும் இவருக்கு இருக்கின்றன. சுருக்கமாக, சபையின் வெளி சம்பந்தங்களைப் பொறுத்தமட்டில் சபையின் குரலாக இருக்கிறார் ப்பீக்கர். சபையின் உள் விவகாரங்களைப் பொறுத்த மட்டில் ப்பீக்கரின் கடமைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, சபையில் ஒழுங்கும் அமைதியும் நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது, அங்கத்தினர்கள், சபையின் விதிகள், சம்பிரதாயங்கள் முதலியவற்றிற்குட்பட்டு, அதாவது ஒழுங்காகப் பேசுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மூன்றாவது, கூடிய மட்டில் எல்லாக்கட்சி அங்கத்தினர்களும் வாதத்தில் பங்குகொள்ளக்கூடிய மாதிரி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த மூன்று விதக் கடமைகளையும் சரிவர நிறைவேற்ற இருவருக்குச் சகல அதிகாரங்களும் அளிக்கப்பட்டிருக் கின்றன. இந்த அதிகாரங்களில் சில, விதிகளின் மூலமாக ஏற்பட்டவை; சில, சம்பிரதாயங்களாக வந்தவை. சபையில் எந்த நிமிஷத்திலும் உணர்ச்சி தலைதூக்கி நிற்கக் கூடும்; அப்பொழுது அங்கத்தினர்கள் தங்களையும் மீறிக் கடுமையாகப் பேசுதல் கூடும்; அல்லது ஒழுங்கீனமாக நடந்துகொள்ளுதல் கூடும். கூச்சலும் குழப்பமும் கூட உண்டாகும். இந்த மாதிரியான சந்தர்ப்பங் களில் ப்பீக்கர் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக ப்பீக்கர் எழுந்து நின்றால், பேசுவதற்காக எழுந்து நிற்கிற அங்கத்தினர்கள் உடனே உட்கார்ந்துகொண்டுவிட வேண்டு மென்பது விதி. எனவே, சபையில் ஒழுங்கீனம் அதிகரிக்கிற நிலையில் ப்பீக்கர் எழுந்து நிற்பார். உடனே எழுந்து நிற்கும் அங்கத்தினர்கள் உட்கார்ந்துவிடுவார்கள். சபையின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் பழுது ஏற்படாமல் அங்கத்தினர்கள் நடந்துகொள்ளவேண்டிய அவசியத்தைச் சில வார்த்தைகளால் நிதானமாகவும் ஆனால் கண்டிப்பாகவும் எடுத்துச் சொல்வார். அநேகமாக அமைதி ஏற்பட்டுவிடும். அப்படியும் மீறியாரேனும் ஓர் அங்கத்தினர் எழுந்து நின்று முறைதவறிப் பேசவோ நடக்கவோ தொடங்குவாரானால், அவரை ப்பீக்கர் உங்கள் இடத்தில் உட்காருங்கள் என்று கூறுவார். இதற்கும் அங்கத்தினர் கேட்க வில்லையானால், அவரை, சபையை விட்டு வெளியே செல்லுமாறு கூறுவார். அவர் வெளியேறாமல் பிடிவாதமாகச் சபையிலேயே இருப்பாரானால், அவர் பெயரைக் குறிப்பிடுவார். பெயரைக் குறிப்பிடுதல் என்ற வாசகம் பார்லிமெண்ட் பரிபாஷைகளில் ஒன்று. இங்ஙனம் பெயர் குறிப்பிடப்பட்டதும் அந்தச் சந்தர்ப்பத்தில் நடைபெறும் வாதத்திற்கு எந்த மந்திரி சம்பந்தப்பட்டவராயிருக்கிறாரோ அவர் எழுந்து நின்று, பிரதாப அங்கத்தினர் வெளியேற்றப்பட வேண்டு மென்று ஒரு தீர்மானம் கொண்டு வருவார். ஏகமனதாக இது நிறைவேறிவிடும். உடனே சம்பந்தப்பட்ட அங்கத்தினர் வெளியேற வேண்டியதுதான். வெளியேற மறுத்தால், பலவந்தமாக வெளியேற்றப் பட்டுவிடுவார். ஓர் அங்கத்தினர், முதல் தடவையாகப் பெயர் குறிப்பிடப் பெற்று வெளியேற்றப்பட்டால், வெளியேற்றப்பட்ட தினத்திலிருந்து ஐந்து நாள் வரையிலும், இரண்டாவது தடவையாக வெளியேற்றப்பட்டால் இருபது நாள் வரையிலும், மூன்றாவது தடவையாக வெளியேற்றப் பட்டால் செஷனில் பாக்கியிருக்கிற நாட்கள் பூராவும் ஆஜராகக்கூடாது. நிரம்ப ஒழுங்கீனமாக நடந்துகொள்கிற அங்கத்தினரைச் சிறைப் படுத்தச் செய்யவும் ப்பீக்கருக்கு அதிகாரம் முண்டு. அங்கத்தினர்கள் பேசுகிறபொழுது விஷயத்தை விட்டுப் பேசாமலும், கண்ணியமற்ற வார்த்தைகளை உபயோகியாமலும் ப்பீக்கர் பார்த்துக் கொள்ள வேண்டும். வாதத்தின்பொழுது, இன்னின்ன வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது என்று ஒரு நியதி உண்டு; இன்னின்ன மாதிரியாகப் பேசவேண்டுமென்றும் சில நியதிகள் உண்டு. உதாரணமாக, லார்ட் சபையைப்பற்றிக் குறிப்பிட நேரிடுகிறபொழுது, லார்ட் சபையென்று சொல்லக்கூடாது. அப்படியே அங்கத்தினர்கள் பெயரையும் சொல்லக் கூடாது, இப்படிச் சில நியதிகள் உண்டு. இந்த நியதிகளுக்குக் கட்டுப்பட்டு அங்கத்தினர்கள் பேசுகிறார்களாவென்று ப்பீக்கர் மிகவும் ஜாக்கிரதையுடன் கவனித்து வரவேண்டும். இந்த நியதியைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் கூறுவோம். எந்த அங்கத்தினர் பேச விரும்புகிறார் என்பதைக் கூர்ந்து கவனித்து அவரைப் பேச அனுமதிப்பது ப்பீக்கரின் முக்கியமான கடமையாகும். இப்படி அனுமதிக்கிற விஷயத்தில் எந்த அங்கத்தினருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது; அப்படியே யாரையும் அலட்சியம் செய்யக்கூடாது, எல்லாக்கட்சி அங்கத்தினர்களுக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். ஒவ்வோர் அங்கத்தினரும், தமது பேசும் உரிமை, ப்பீக்கர் வசத்தில் பத்திரமாக இருக்கிறதென்று உணரவேண்டும். சபையில் எழுந்து நிற்கிற எந்த அங்கத்தினரும் பேசிவிட முடியாது. அவர் ப்பீக்கர் கண்ணில்பட வேண்டும்; ப்பீக்கரினால் பேச அனுமதிக்கப்பட வேண்டும், அப்பொழுதுதான் அவர் பேசலாம். ப்பீக்கர் கண்ணில் படுவது என்ற இந்த வாசகமும் பார்லிமெண்ட்டின் பரிபாஷைகளில் ஒன்று. பேச வேண்டுமென்ற உத்தேசத்துடன் ஒரே சமயத்தில் நாலைந்து பேர் நிற்கிறார்களென்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது ப்பீக்கர், யாரைப்பார்த்துப் பேசச் சொல்கிறாரோ அவர்தான் ப்பீக்கரின் கண்ணில் பட்டவ ராவார். இப்படி ப்பீக்கரின் கண்ணில் ஓர் அங்கத்தினர் படவேண்டுமானால், அவர் தமது பெயரை முன்கூட்டியே தமது கட்சிக் கொறடா1 மூலமாக ப்பீக்கரின் காதில் போட்டு வைக்க வேண்டும், அதாவது ஓர் அங்கத்தினர் பேசவிரும்பினால், அவர், முதலில் தாம் பேச விரும்புவதாகத் தமது கட்சிக் கொறடாவினிடத்தில் தெரிவிக்க வேண்டும். அந்தக் கொறடா, தமது கட்சியைச் சேர்ந்த இன்னின்னார் பேசப் போகின்றனர் என்று ஒரு ஜாபிதா தயாரித்து ப்பீக்கரிடம் கொடுப்பார். இப்படி ஒவ்வொரு கட்சிக் கொறடாவும் செய்வர். இந்த ஜாபிதாக்களை அனுசரித்து, ப்பீக்கர், அங்கத்தினர்களைப் பேச அனுமதிப்பார். ஆனால் ஜாபிதாக்களில் கண்டுள்ள எல்லா அங்கத்தினர்களையும் பேச அனுமதிப்பதென்பது சில சமயங்களில் முடியாத காரியம். காலம், விஷயம் இவைகளை அனுசரித்து, கூடிய மட்டில் எல்லாக் கட்சி அங்கத்தினர்களும் வாதத்தில் பிரதிநிதித்துவம் பெறக்கூடிய மாதிரியாகப் பார்த்துக் கொள்வார் ப்பீக்கர். பொதுவாக ப்பீக்கர், மிகவும், நேர்மையுடையவராகவும், நிதானந் தவறாதவராகவும், நல்ல ஞாபகசக்தி வாய்ந்தவராகவும், சபையில் நடக்கிற விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பவராகவும், பார்லிமெண்ட்டின் விதிகள், நியதிகள் முதலியவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராகவும், அந்தத் தேர்ச்சியை, தேவையானபோது அனுஷ்டானத்தில் கொண்டு வரக்கூடிய தைரியமுடையவராகவும் இருக்கவேண்டும். டெபுட்டி ப்பீக்கர் ப்பீக்கர், எப்பொழுதும் எந்தக் காலத்திலும் கூட்டங்களுக்குத் தலைமை வகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்; அல்லது அவருக்கு வேறு அசௌகரியங்கள் ஏற்படலாம். இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில், அவருக்கும் பதில், கூட்டத்திற்குத் தலைமை வகிக்கவேண்டியவரே டெபுட்டி ப்பீக்கர். வரவுசெலவுக் கமிட்டிகளின் தலைவரும் இவரே. இதைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறோம். ப்பீக்கருக்குள்ள அதிகாரங்கள் யாவும் இவருக்கு உண்டு. ப்பீக்கரைப் போலவே, இவர் சபையின் வாதப்பிரதிவாதங்களில் கலந்துகொள்ள மாட்டார். இவருடைய வருஷ சம்பளம் இரண்டாயிரத்தைந்நூறு பவுன். கொறடா ப்பீக்கருக்கு, பேசக்கூடியவர்களின் ஜாபிதாவை கொறடா அளிப்பார் என்று மேலே சொன்னோமே, இந்தக் கொறடாவைப்பற்றிச் சில வார்த்தைகள். ஒவ்வொரு கட்சிக்கும், பிரதம கொறடா என்றும், உதவிக் கொறடாக்களென்றும் உண்டு. இவர்கள், சபைகூடும் சமயங்களில் மிகவும் சுறுசுறுப்பாயிருப்பர். சபையின் முக்கியமான பிரச்னைகள் மீது ஓட்டெடுக்கப்படுகிற சமயங்களில் இவர்கள், தங்கள் கட்சி அங்கத்தினர்களைத் திரட்டிக் கொண்டுவந்து ஓட்டுப் போடச் செய்வர், மற்றக் கட்சிக் கொறடாக்களைக் காட்டிலும், அரசாங்கக் கட்சிக் கொறடாக்களுக்கு பொறுப்பு மிக அதிகம். இவர்களுள் பிரதம கொறடா, பெரும்பாலும் ஓர் உபமந்திரியா யிருப்பார். இவர் சபை கூடும் நாட்களில், தினந்தோறும் காலையில் பிரதம மந்திரியைக் கண்டு. அன்றைய நிகழ்ச்சி நிரலைப்பற்றியும், அன்று என்னென்ன முக்கியமான பிரச்னைகள் ஓட்டுக்கு வரக்கூடுமென்பதைப் பற்றியும், வாதத்திலிருக்கும் அல்லது வாதத்திற்கு வரப்போகும் பிரச்னைகளைப் பற்றி அங்கத்தினர்களுக்குள் எந்தெந்த மாதிரியான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன என்பதைப் பற்றியும் தெரிவிப்பார்; மற்ற மந்திரிகளுக்கும் தெரிவிக்கச் செய்வார். தவிர, இந்தப் பிரதம கொறடாவுக்கு அதிக செல்வாக்கு உண்டு. எப்படி யென்றால், கட்சியின் பலத்தையும், செல்வாக்கையும் பெருக்க வேண்டி, கட்சியைச் சேர்ந்தவர்களில் யாராருக்கு என்னென்ன கௌரவப் பட்டங்கள் வழங்கலாம், என்னென்ன சலுகைகள் காட்டலாம் என்பவை களைப் பற்றிப் பிரதம மந்திரிக்குச் சிபார்சு செய்கிறவர் இவரே. இதனால் அங்கத்தினர்கள், தங்கள் சார்பாகவும் தங்கள் தொகுதியிலுள்ள முக்கியதர்களின் சார்பாகவும் இவரை நாடுவார்கள். இவரது வருஷ சம்பளம் மூவாயிரம் பவுன். கொறடா என்ற வார்த்தை எவ்வாறு பிரயோகத்திற்கு வந்ததென்பதைப்பற்றிச் சிறிது கூறுவோம். கொறடா என்றால், குதிரை சவுக்கு என்று அர்த்தம். 1769ஆம் வருஷம், காமன் சபையில் முக்கியமான ஒரு பிரச்னையைப்பற்றித் தீவிரமாக வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாதத்தின் முடிவில், அரசாங்கத்திற்குத் தோல்வி ஏற்படும் போலிருந்தது. அப்பொழுது எட்மண்ட் பர்க்1 என்பவர், கூட்டத்திற்கு வராத அங்கத்தினர்களைச் சவுக்கடி கொடுத்து அழைத்துவர அரசாங்கமானது, தனது நண்பர்கள, இங்கிலாந்தின் வடபகுதிக்கும் பாரிஸுக்கும் அனுப்பி இருக்கிறது என்று வேடிக்கையாகக் கூறினார். அது முதற்கொண்டு, கட்சியின் சார்பாக அங்கத்தினர்களுக்கு விதிக்கப்படும் தாக்கீதுகளுக்கும், அந்தத் தாக்கீதுகளை விடுக்கும் உத்தியோகதர் களுக்கும் கொறடா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. சார்ஜன்ட்-அட்-ஆர்ம் சபையின் பாதுகாவலர் என்று இவரைக் கூறலாம். ஏற்கனவே சொன்னபடி, ப்பீக்கர் சபைக்கு வருகிற போதும், சபையினின்று போகிற போதும், இவர், முன்னே மே என்ற அதிகாரக் கோலை ஏந்திச் செல்ல வேண்டியவர்; தவிர ப்பீக்கரின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டியவர். மற்றும் சபைகூடும் மண்டபத்தில் பார்வையாளர்களாலோ இதரர் களாலோ கூச்சலும் குழப்பமும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியவர். இவருக்கு உதவியாக, டெபுட்டி சார்ஜண்ட், அசிட்டெண்ட் சார்ஜண்ட்.2 போலீகாரர், வாயிற் காப்பாளர் முதலியோர் உண்டு. வருஷவாரி சம்பளம், சார்ஜண்ட்-அட்-ஆர்ம்ஸுக்கு 1,700 பவுன்; டெபுட்டி சார்ஜண்ட்டுக்கு 1,200 பவுன்; அசிட்டெண்ட் சார்ஜண்ட்டுக்கு 950 பவுனிலிருந்து 1,100 பவுன் வரை. காமன் சபையின் பிரதம குமாதா பெயரைப் பார்த்தால் ஒரு சாதாரண உத்தியோகதர் மாதிரி தெரிகிறதல்லவா? ஆனால் அப்படியில்லை. மிகவும் முக்கியமான, பொறுப்புள்ள உத்தியோகதர் இவர். சபையின் அநேக ததவேஜு களில் இவர் கையெழுத்திட வேண்டும். சபையில் அறிவிக்கவேண்டிய விஷயங்களை இவரே அறிவிக்க வேண்டும். ப்பீக்கருக்குக் கீழே யுள்ள ஆசனத்தில் அமர்ந்து, சபையின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ப்பீக்கரோ, மந்திரிமார்களோ, அங்கத்தினர்களோ, இவருடைய ஆலோசனையை அவ்வப்பொழுது நாடுவார்கள். அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கூறவேண்டும். சபையானது கமிட்டியாக மாறுகிறபோது, இவர், தமது ஆசனத்தைக் காலிசெய்துவிடுவார். இந்த ஆசனத்தில்தான் கமிட்டியின் சேர்மன் அமர்வார். இவருக்கு உதவியாக இரண்டு குமாதாக்கள் இருக்கின்றனர்.1 தவிர, இவர் கீழ் மூன்றுவிதமான இலாகாக்களும், இந்த இலாகாக்களில் அநேக உத்தியோகதர்களும் உண்டு. வருஷ வாரி சம்பளம், பிரதம குமாதாவுக்கு 3,500 பவுன்; இரண்டாவது குமாதாவுக்கு 2,200 பவுன்; மூன்றாவது குமாதா வுக்கு 1,700 பவுன். எதிர்க்கட்சித் தலைவர்2 அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் முக்கியமான கட்சி எதுவோ அந்தக் கட்சியின் தலைவரே இவர். இவர், அரசாங்கத்திற்கு அல்லது பார்லிமெண்ட்டுக்குக் கட்டுப்பட்ட ஓர் உத்தியோகதரல்லர். ஆயினும் இவருக்கு அரசாங்க பொக்கிஷத்திலிருந்து வருஷவாரி இரண்டாயிரம் பவுன் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அரசாங்கம், தன்னைக் கண்டித்துப் பேசுவதற்கென்று, சம்பளம் கொடுத்து ஒருவரை அமர்த்திக் கொண்டிருப்பது போலல்லவோ இருக்கிறது இது? ஆனால் இதுதான் ஜனநாயகம். எதிர்தரப்பு அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியது, ஜன ஆட்சியின் கீழ் அமைந்துள்ள ஓர் அரசாங்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எதிர்க் கட்சித் தலைவர், அரசாங்கத்தை எப்பொழுதும் கண்டித்துக் கொண்டிருப்பார் அல்லது கண்டித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அப்படி அவர் செய்யவும் மாட்டார். அவருடைய கண்டனங்கள், அபிப்பிராயங்கள் முதலியன அரசாங்கத்தின் குறைகளை எடுத்துக்காட்டி, அதனை நல்வழிப்படுத்துவதாயிருக்க வேண்டும், இதனால் எதிர்க்கட்சித் தலைவர், வெறுமனே குறைகூறிக்கொண்டிருக் கிறவராக இருக்கக்கூடாது; அரசாங்க யந்திரத்தின் நுணுக்கங்கள் பலவற்றையும் நன்கு அறிந்தவராயிருக்கவேண்டும்; சந்தர்ப்பம் வந்தால் அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் பெற்றவராயிருக்க வேண்டும். உண்மையில் இப்படிப் பட்டவர்தான் எதிர்க் கட்சித் தலைவராயிருப்பார். அடுத்த தேர்தலில், இவருடைய கட்சிக்கு அதிகமான தானங்கள் கிடைத்துவிடுமானால் அப்பொழுது இவர்தானே பிரதம மந்திரிப் பதவியை ஏற்க வேண்டியவர்? அங்கத்தினர்கள் காமன் சபையின் உத்தியோகதர்களைப்பற்றி இதுகாறும் கூறி வந்தோம். இந்த அத்தியாயத்திலேயே, காமன் சபையின் அங்கத்தினர் களைப் பற்றியும் சில வார்த்தைகள் கூற விரும்புகிறோம். ஏனென்றால், இவர்களும் சம்பளம் பெறுகிற காரணத்தினால் ஒரு விதத்தில் உத்தியோகதர்களாகிறார்கள். காமன் சபையின் அங்கத்தினர்களுக்குச் சம்பளம் உண்டு. ஒவ்வொருவருக்கும் வருஷத்திற்கு ஆயிரம் பவுன். அங்கத்தினர்கள் கூடியவரை பொருள் முட்டுப்பாடின்றி தங்கள் அரசியல் அலுவல் களைக் கவனித்து வரவேண்டுமென்பதற்காகவே இந்தச் சம்பள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாட்டை முதன் முதல் செய்தது ஸ்ரீ லாயிட் ஜார்ஜ். இவருடைய முயற்சியின் பேரில் 1911 ஆம் வருஷம், காமன் சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் வருஷத்திற்கு நானூறு பவுன் விகிதம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டுமென்று ஒரு சட்டம் நிறைவேறியது.1 பிறகு 1937 ஆம் வருஷம் இந்தத் தொகை அறுநூறு பவுனாக அதிகப்படுத்தப்பட்டது.2 பின்னர் 1946 ஆம் வருஷம் ஆயிரம் பவுனாக உயர்த்தப்பட்டது.3 இந்தச் சம்பளம் தவிர பிரதியோர் அங்கத்தினரும், பார்லிமெண்ட் கூடியிருக்கும் காலங்களில், லண்டனுக்கும் தமது தொகுதிக்கும் அவ்வப்பொழுது ரெயிலில் போய் வருவதற்கு அனுகூலமாக, முதல் வகுப்பு இலவசப் பிரயாண அனுமதி சீட்டு பெறுகின்றார். இங்கே ஒரு விஷயம். பார்லிமெண்ட்டுக்கு ஒருவர் தெரிந் தெடுக்கப்படலாம். ஆனால் தெரிந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர், தமது அங்கத்தினர் பதவியை ராஜீநாமா செய்யக்கூடாது; செய்ய முடியாது, ஐந்து வருஷகாலமும் அவர் அங்கத்தினராயிருந்து தீரவேண்டியதுதான். அப்படியிருக்க இஷ்டமில்லையானால், அவர், தமக்கு ஓர் உத்தியோகம் வேண்டுமென்று சொல்லி, அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். அரசாங்க உத்தியோகதர்கள், சபையின் அங்கத்தினர்களா யிருக்க முடியாதென்பது சட்டம்.4 எனவே, சில்ட்ரன் ஹண்ட் ரட் பெயிலிப்5 என்பது போன்ற பெயரளவில் ஏதேனும் ஓர் உத்தியோகம் அவருக்குத் தரப்படும், இந்த உத்தியோகத்திற்கு அவர் நியமிக்கப்பட்டதும் அவர் எம்.பி. யல்ல. ஆனால் இங்ஙனம் ஐந்து வருஷத்திற்கிடையே அங்கத்தினர்கள் ராஜீநாமா செய்வதென்பது மிகவும் அபூர்வம். 6. சில சம்பிரதாயங்கள் பார்லிமெண்ட்டுக்குப் புதிதாகத் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் அங்கத்தினர், முதல் முதல் சபைக்கு வருகிறபோது, அங்குள்ள இடவசதி, உத்தியோகதர்களிற் சிலர் அணிந்துகொண்டிருக்கும் உடை, அனுசரிக்கப் படும் சம்பிரதாயங்கள், எல்லாம் அவருக்கு ஒரு புதிர்போல இருக்கும். தொப்பியை எங்கே வைப்பது என்பது முதல் சபையில் எப்படிப் பேசுவது என்பது வரை அநேக விஷயங்களை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சில நாட்கள் பிடிக்கும், ஆனால் ஆரம்பத்தில் எப்படிப்பட்டவரும் திகைப்பேயடைவர். ஓர் அங்கத்தினர் தமது தொகுதியில் மிகவும் பிரபலதரா யிருக்கலாம். அங்கு அவருக்கு எந்தக் கூட்டத்திலும் முதல் வரிசை யில் இடம் கிடைக்கலாம். ஆனால் சபையில் பிரவேசித்த பிறகு, அவர், அறுநூற்றுச்சொச்சம் பேரில் ஒருவர்தான்; முன்னாடி வந்து இடம் பிடித்துக்கொள்ள வேண்டியவர்தான், அப்படியானால் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் தனித்தனி இடம் கிடையாதா? இல்லை; நிச்சயமாக இல்லை. தெளிவாகச் சொல்லவேண்டு மானால் அறுநூற்றுச் சொச்சம் அங்கத்தினர்களுக்கு அறுநூற்றுச் சொச்சம் ஆசனங்கள் கிடையா. கணக்காகச் சொல்லவேண்டுமானால், முந்நூற்றறுபது அங்கத்தினர்கள் உட்காருவதற்கான இடவசதிதான் இருக்கிறது. எல்லா அங்கத்தினர்களும் ஆஜரானால் என்ன செய்வது? பக்கங்களிலுள்ள காலரி1களில் இருக்கவேண்டியதுதான். ஆனால் இந்த இட நெருக்கடி அநேகமாக ஏற்படுவதில்லை. அங்கத்தினர்கள் இடத்திற் குத் தேடுகிற சந்தர்ப்பங்களைக் காட்டிலும், இடத்திற்கு அங்கத் தினர்களைத் தேடிப்பிடிக்கிற சந்தர்ப்பங்கள்தான் அதிகமாக ஏற்படுகின்றனவென்று சொல்லலாம். புதிதாகக் கட்டப்பெற்ற மண்டபத்தில்கூட மேற்சொன்ன அளவுக்குத் தான், அதாவது சுமார் நானூறுபேர் உட்காரக்கூடிய அளவுக்குத்தான் இட வசதி செய்யப்பட்டுள்ளது. ஏன் இங்ஙனம் என்று வாசகர்கள் கேட்கலாம். நீண்டகாலமாக இருந்து வருகிற ஓர் அமைப்பு முறையை மாற்ற விருப்பமில்லாமைதான். பழமைக்குப் பெருமை கொடுத்து அதைப் பின்பற்றுவதில் பிரிட்டிஷாருக்குள்ள பற்று வியக்கத்தக்கது. சாதாரணமாக எல்லா அங்கத்தினர்களும் ஒரே சமயத்தில் சபையில் ஆஜராயிருப்பதில்லை. ஏகதேசமாக வரவு செலவுத் திட்டம் போன்ற ஏதேனும் முக்கியமான திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகிறபோது அதிகமான அங்கத்தினர்கள் ஆஜராயிருப்பார்கள். அப்படி ஆஜராயிருப்பவர்களும் நீண்ட நேரம் சபையில் இருக்கமாட்டார்கள். இதனால் சபையில் இட நெருக்கடி உணரப்படுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் தோன்றுவதில்லை. அங்கத்தினர்களிற் பெரும்பாலோர் கூட்டத்திற்கு வந்திருத்தல் கூடும். ஆனால் வந்திருக்கும் எல்லாரும் சபையில் ஆஜராயிருக்க மாட்டார்கள். சிலர், கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பர். சிலர், புதகசாலையில் இருந்துகொண்டு, அடுத்த நாள், பேசுவதற் கென்று குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருப்பர். சிலர், நண்பர்களுடன் சம்பாஷித்துக் கொண்டிருப்பர். இப்படிப் பலதுறை அலுவல்களில் அவரவர் ஈடுபட்டிருப்பராதலினால் சபையில் ஆஜராயிருந்து அதன் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொள்கிறவர் ஒரு சிலராகவே இருப்பர். இதனாலேயே, சபையில் ஆஜராயிருக்கவேண்டிய அங்கத்தினர்களின் குறைந்த பட்ச எண்ணிக்கை நாற்பது என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சபையின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு, ஏறக்குறைய பதினாறில் ஒருபங்கு அங்கத்தினர்கள் ஆஜராயிருந்தாலே போதும் என்பது விதி. இந்த நாற்பது பேர்சபையில் இல்லையென்றால், ப்பீக்கர், மணியடித்து அங்கத்தினர்களை வரவழைக்கச் செய்வார். ஒரு நாள் கூட்டத்தில் சராசரி ஐம்பதுக்குமேல் நூறு அங்கத்தினர்கள் வரை சபையில் ஆஜராயிருப்பார்களென்று பொதுவாகச் சொல்லலாம். உலகத்துப் பெரும்பாலான நாடுகளின் பார்லிமெண்ட்டுகளில் அங்கத்தினர்களின் ஆசனங்கள் பிறை வடிவமாகப் போடப் பட்டிருக்கும். அங்கத்தினர்கள், தலைவரை நேர்முகமாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டில் அப்படியில்லை. ப்பீக்கருக்குப் பக்கவாட்டில்தான் அமர்ந்திருப்பார்கள். அதாவது, நடுவிலே சிறிது இடைவழி விட்டு, வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் ஒன்றுக்குப் பின்னொன்றாக வரிசைக் கிரமத்தில் போடப்பட்டிருக்கும் மெத்தென்றுள்ள நீண்ட சாய்வு பெஞ்சுகளில் அமர்வார்கள். இதனால், அங்கத்தினர்கள், எதிரெதிர் வரிசையில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளலாமேயொழிய, ப்பீக்கரை நேர்முகமாகப் பார்க்கமுடியாது; பக்கவாட்டாகத்தான் பார்க்கமுடியும். இப்படி எதிரெதிர் வரிசையிலுள்ள பெஞ்சுகள், படிப்படியாக, அதாவது முந்தின வரிசையைக் காட்டிலும் பிந்தின வரிசை சிறிது உயரமாக இருக்கக்கூடிய மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். இந்த பெஞ்சுகளில் அமரும் அங்கத்தினர்கள், எந்த இடத்தை யும் தங்களுக்கென்று நிரந்தரமாக ஒதுக்கி வைத்துக்கொள்ளக் கூடாது. இது பொதுவான விதி. இருந்தாலும், உட்காரும் விஷயத்தில் ஓர் ஒழுங்குமுறை அனுஷ்டிக்கப்படுகிறது. ப்பீக்கருக்கு வலது பக்கத்திலுள்ள பெஞ்சுகளில், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருப்பார்கள்; இடது பக்கத்திலுள்ள பெஞ்சுகளில் எதிர்க்கட்சி அங்கத்தினர்கள் அமர்ந்திருப்பார்கள். இப்படி அமர்வதிலும் ஒரு நியதி உண்டு. வலது பக்கத்தில் மேஜைக்கருகிலுள்ள முதல் வரிசை பெஞ்சியில் மந்திரிமார்கள் இருப்பார்கள். பொக்கிஷ பெஞ்சு அல்லது முன் புறத்து பெஞ்சு1 என்றே இதனை அழைப்பது வழக்கம்: இடது பக்கத்தில் மேஜைக்கருகிலுள்ள முதல் வரிசை பெஞ்சியில் எதிர்க் கட்சித் தலைவர் முதலாயினோர் இருப்பார்கள். எதிர்தரப்பு பெஞ்சு2 இது, தவிர, நீண்ட கலமாக அங்கத்தினராயிருக்கிறவர்கள், நாட்டுக்கு நல்ல சேவை செய்து அது காரணமாகச் சபையினருடைய மதிப்பிலேயே உயர்ந்திருக் கிறவர்கள் இப்படிப்பட்டவர்கள், கூடிய மட்டில் ப்பீக்கருக்குச் சமீபமாக இடம் பெறுவார்கள். அவர்களுக்குக் காட்டும் ஒரு மரியாதைதான் இது; அவர்கள் கொண்டாடக்கூடிய உரிமையல்ல. அரசாங்கக் கட்சி அங்கத்தினர்கள் சாதாரணமாக வலது பக்கத்திலேயே உட்காருவார் களாயினும், சில சமயங்களில், அதாவது இடநெருக்கடி ஏற்படுகிற சமயங்களில், இடது பக்கத்தில் பெஞ்சுகள் காலியாயிருக்குமானால் அங்கும் சென்று உட்காருவார்கள். இதனால் இவர்கள் கட்சி மாறிவிட்ட வர்களாகமாட்டார்கள் ஆனால் இந்த இட நெருக்கடி ஏற்படுவது, முந்திச் சொன்னபடி மிகவும் அபூர்வம். இடைவழிக்கு நேர் தலைப்பில், அதாவது மண்டபத்தின் வடகோடியில், ப்பீக்கரின் ஆசனம், ஏற்கனவே சொன்னபடி சிறிது உயரமாக இருக்கும். இதற்குக் கீழே, முந்திச் சொன்ன மூன்று குமாதாக் களும் விக் என்ற தலையணியுடன் வீற்றிருப்பார்கள். இவர்களுக்கும் சிறிது கீழே நீண்ட மேஜையொன்று போடப்பட்டிருக்கும். இதில்தான் சபையில் ஆஜர்படுத்தப்பெறும் சகல ததவேஜுகளும் வைக்கப்படும். மற்றும் இந்த மேஜையின் ஒரு கோடியில் மே என்ற அதிகாரக் கோலும் காட்சியளிக்கும். இந்த அதிகாரக் கோல் வெள்ளியினாலாயது; அதிகாரச் சின்னங்களினால் அழகுபடுத்தப்பெற்றது. ப்பீக்கரின் தலைமையில் சபை கூடியிருக்கிறபொழுதுதான் இந்த மே மேஜையின் மீதுள்ள மேல் தட்டில் இருக்கும். சபை, கமிட்டியாக மாறி சேர்மன் தலைமையில் கூடுகிற போது, கீழ் தட்டில் வைக்கப்பட்டுவிடும். சபையின் தினசரிக் கூட்டங்களில், சராசரி ஐம்பதுக்குமேல் நூறு அங்கத்தினர்கள் வரைதான் ஆஜராயிருப்பார்களென்று மேலே சொன்னீர்களே, அப்படியானால் சபையில் பேசுவது மிகவும் சுலபம் போலிருக்கிறது என்று வாசகர்கள் கருதலாம். அப்படியில்லை. சபையில் பேசுவது மிகவும் கடினமான காரியம். ஒருவர், வருஷக் கணக்கில் அங்கத்தினராயிருக்கலாம்; தடவைக் கணக்கில் பேசி யிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவை பேசுகிறபோதும், முதலில் சிறிது தயக்கமே கொள்ள நேரிடும். சாதாரணமாக, பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கும் பார்லி மெண்ட்டில் பேசுவதற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு. ஒன்றில் பேசுகிறமாதிரி மற்றொன்றில் பேச முடியாது. பேசவும் கூடாது. ஒன்றின் சூழ்நிலை வேறு; மற்றொன்றின் சூழ்நிலை வேறு. பொதுக்கூட்டத்தில், கேட்பவர்களெல்லாரும், பேசுகிறவருக்குப் பரிச்சயமா யிருக்கமுடியாது. அவர்களைப்பற்றி இவருக்கு அதிக மாகத் தெரியாது. அப்படியே அவர்களுக்கும் இவரைப்பற்றி அதிகமாகத் தெரியாது. பேச்சுமுடிந்த பிறகு, பேசினவரும் கேட்டவர்களும் சந்திப்பதும் அரிது. அவர்கள், பேச்சைப்பற்றிக் கொள்கிற அபிப்பிராயம் அந்தக் கூட்டத்தோடு மறைந்து போதல் கூடும். அந்த அபிப்பிராயம், பேசினவரை எந்த விதத்திலும் பாதிக்காது. எனவே, அங்கு நிர்ப்பயமாகப் பேசலாம். ஆனால் பார்லிமெண்ட்டில், கேட்பவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையாகப் பேசுகிறவருக்குப் பரிச்சயமானவர்கள். ஒருவரைப்பற்றி மற்றொருவர் கூடியமட்டில் தெரிந்துகொண்டிருக்கிறவர்கள்; அடிக்கடி சந்திக்கக் கூடியவர்கள். பேச்சைப் பற்றி, கேட்கிறவர்கள் கொள்கிற அபிப்பிராயத்தைப் பொறுத்திருக்கிறது பேச்சினால் உண்டாகிற விளைவு. எனவே, அந்த விளைவு நல்லதாயிருக்க வேண்டுமேயென்ற பயத்துடனும் பிரார்த்தனையுடனுமே ஒருவர் பார்லிமெண்ட்டில் பேசுதல் வேண்டும். பொதுக்கூட்டத்தில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பேசலாம். கேட்பவர்களுக்குக் கூடியமட்டில் விரசமாயில்லாமலும், அவர்கள் மனத்தைப் புண்படுத்தாமலும், பேசினால் போதும். ஆனால் பார்லி மெண்ட்டில் பேசுகிறபோது, சில நியதிகளைக் கண்டிப்பாகக் கடைப் பிடித்தாக வேண்டும். சிறிது தவறிவிட்டால் கூட ஒழுங்கு ஒழுங்கு என்ற ப்பீக்கரின் எச்சரிக்கை அம்புகளும், அங்கத்தினர்களின் பரிகாச அம்புகளும் வந்து விழும். அப்படி விழாமல் பாதுகாத்துக் கொண்டு பேசவேண்டுமே யென்ற அச்சம் யாரையும் ஆட்கொள்ளக்கூடும். பொதுக் கூட்டத்தில், கேட்பவர்களெல்லாரும் பேசுகிறவர் முன்னிலையில் வீற்றிருப்பார்கள். அவர்களுடைய முகத்தில் அவ்வப் பொழுது நிகழக்கூடிய மாற்றங்களைப் பேசுகிறவர் சுலபமாகப் பார்க்க முடியும். அப்படியே, தம்முடைய பேச்சை அவர்கள் எந்த அளவுக்கு விரும்பிக் கேட்கிறார்கள் என்பதைச் சுலபமாகக் கண்டுகொள்ள முடியும். ஆனால் பார்லிமெண்ட்டில் அப்படியில்லை. கேட்கிறவர்களில் ஒரு பகுதியினர்தான் பேசுகிறவர் முன்னிலையில் இருப்பார்கள். மற்றொரு பகுதியினர், பக்கங்களிலோ பின் புறத்திலோ இருப்பார்கள். இவர்கள் தம்முடைய பேச்சை எப்படி ஏற்கிறார்களென்பதை இவர் அறிய முடியாது. அவர்கள் செய்கிற சமிக்ஞைகளையும் காணமுடியாது. இந்த நிலையிலிருந்துகொண்டு பேசுவது சங்கடமான காரியம். பொதுக்கூட்டத்தில், கேட்கிறவர்கள் கூடியமட்டில் சாவதானமாக இருந்து கேட்பார்கள். பேசுகிறவருடைய எண்ணம் சிதறிப் போகாது. பார்லிமெண்ட்டிலோ ஓர் அங்கத்தினர் பேசிக்கொண்டிருக்கிற போது, சிலர் எழுந்து போவர்: சிலர் திரும்பி வருவர். பேசிக் கொண்டிருக்கிறவரின் எண்ணம் சுலபமாகக் கலைந்து போகும். மற்றும் பேச்சின் தன்மையைப் பொறுத்து, கேட்கிறவர் கரகோஷம் செய்வார்கள்; பேஷ் பேஷ் என்று சொல்வார்கள்; ஓவென்று இரைச்சல் போடுவார்கள்; உ என்பார்கள்; உரக்கச் சிரிப்பார்கள்; ஆட்சேபங்கள் கிளப்புவார்கள்; குறுக்குக் கேள்விகள் போடுவார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு, தொடர்ச்சிவிடாமல் பேசுவதென்பது சிரமசாத்தியமான காரியம். பொதுக்கூட்டத்தில், கேட்கிறவர்களெல்லாரும் பேச்சாளர்களாக இருக்கமுடியாது. இதனால் அவர்கள் மத்தியில் பேசுவது அவ்வளவு கடினமன்று. பார்லிமெண்ட்டிலோ, கேட்கிறவர்களெல்லாருமே பேச்சாளர்கள்: தங்கள் தொகுதிகளில் பேசிப் பேசி பழக்கம் பெற்றவர்கள். இதனால், மற்றொருவருடைய பேச்சின் தரத்தைச் சுலபமாகக் கணித்து விடக்கூடியவர்கள். நமது பேச்சை மதிப்பிட பலர் உட்கார்ந்திருக் கிறார்களே யென்ற மனோநிலையுடன் பேசுவதென்பது லேசான காரியமல்ல. பொதுக்கூட்டத்தில், பேசுகிறவர் ஓரளவு சாமர்த்தியசாலியா யிருந்தால், கேட்கிறவர்களைச் சுலபமாகத் தம் வசப்படுத்திக் கொண்டு விட முடியும்: அவர்களுடைய எண்ணத்தின்மீது சுலபமாக ஆதிக்கங் கொண்டு விடமுடியும். பார்லிமெண்ட்டிலோ அந்தச் சூழ்நிலையே பேசுகிறவரை ஆட்படுத்திக்கொண்டுவிடும். பேசுகிறவருடைய எண்ணத்தின் மீது கேட்கிறவர்கள் எளிதாக ஆதிக்கங்கொண்டு விட முடியும். இந்த ஆதிக்கத்திற்குட்படாமல் பாதுகாத்துக் கொண்டு பேசுவது மிகவும் கஷ்டம். பார்லிமெண்ட்டில், இரு பக்கத்து முதல் வரிசை பெஞ்சுகளைத் தவிர, மற்ற பெஞ்சுகளுக்கு முன்னால் மேஜை முதலிய எவ்விதமான சௌகரியமும் கிடையாது. இதனால் அங்கத்தினர்கள், தங்கள் குறிப்புக்கள் முதலியவற்றை வைத்துக்கொள்ளவோ, கைகளை முன்னால் ஊன்றிக்கொண்டு பேசவோ முடியாது. இந்த நிலையில் நின்று பேசுவது சிறிது சிரமமாகவே இருக்கும். ஆதலின் பொதுக்கூட்டத்தில் பேசிப் புகழ்பெற்றிருக்கிறவர் பார்லிமெண்ட்டில் பேசிப் புகழ் பெறுவர் என்று சொல்ல முடியாது. அப்படியே பார்லிமெண்ட்டில் பேசி வெற்றி சம்பாதித்திருக்கிறவர்கள், பொதுக் கூட்டங்களில் தோல்வியடைதல் கூடும். இரண்டு இடங்களிலும் அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு பேசி, கீர்த்தியடைந்திருக்கிறவர்கள் மிக மிகச் சிலரே. இருபதாவது நூற்றாண்டின் முற்பகுதியைப் பொறுத்த மட்டில், இரண்டு இடங்களிலும் பேசி, கேட்கிறவர்களுடைய பாராட்டு தலைப் பெற்றவர் இருவர். ஒருவர் ஸ்ரீ லாயிட் ஜார்ஜ்: மற்றொருவர் ஸ்ரீ வின்ட்டன் சர்ச்சில். இவ்வளவு நிர்ப்பந்தங்களெல்லாம் இருந்த போதிலும் பார்லி மெண்ட்டில், முதன்முதலாகப் பேச முன்வருகிறவர்களுக்கு, ப்பீக்கர் முதல் எல்லாருமே சலுகைகாட்டுவதுண்டு. அவருடைய கன்னிப் பேச்சை, அஃது எப்படி இருந்தபோதிலும், கவனமாகக் கேட் பார்கள்: குறுக்குக் கேள்விகள், உ சப்தங்கள் முதலியன இரா. ஆனால் கன்னிப் பேச்சுக்கு மட்டுந்தான் இந்த மரியாதை: இந்தச் சலுகை. இதற்குப் பிறகு, மற்ற அங்கத்தினர்களுடைய அனுபவத்தில் இவர் பங்குகொள்ள வேண்டியதுதான். பார்லிமெண்ட்டில் பேசுகிறபோது, கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நியதிகள் யாவை? ஒவ்வொன்றாகக் கூறுவோம். இரண்டு பக்கத்து பெஞ்சுகளுக்கு நடுவில் இடைவழி உண் டல்லவா, இந்த இடைவழியில், இரண்டு பக்கங்களிலும் முதல் வரிசை பெஞ்சுகளுக்கு முன்னால் சுமார், இரண்டடி அகலமுள்ள ஒரு விரிப்பு போடப்பட்டிருக்கும். முதல் வரிசை பெஞ்சுகளில் அமர்ந்திருக்கும் அங்கத்தினர்கள் எழுந்துநின்று பேசுகிறபோது, இந்த விரிப்புக்குள்ளிருந்து கொண்டுதான் பேசவேண்டும். பேசிக்கொண்டிருக்கிறபோது, உற்சாகத் தினாலோ வேறு காரணத்தினாலோ, விரிப்பின் ஓரத்திற்கு வந்துவிடுவார் களானால் உடனே சபையின் நாலாபக்கங்களிலிருந்தும் ஒழுங்கு ஒழுங்கு என்ற கூச்சல் கிளம்பிவிடும். அங்கத்தினர் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிற பாவனையில் பின் வாங்கிக்கொண்டு விடவேண்டியதுதான். எதற்காக இந்த நியதி! ஆதியில் பார்லிமெண்ட்டின் கூட்டங்கள் அமைதியாக நடைபெறுவ தில்லை; அடிக்கடி கூச்சலும் குழப்பமும் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கும். அங்கத்தினர் சிலர் தங்கள் வாளாயுதத்துடனும் வருவர். இதனால் சில சமயங்களில் அங்கத்தினர்கள் வாளையும் நீட்டிவிடுவர். இப்படிப் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய சம்பவங் களைத் தடுக்க வேண்டுமென்பதற்காக, எதிரெதிர்க்கட்சி அங்கத்தினர்கள் ஓர் அளவு இடைவெளி விட்டே, அதாவது ஒருவர் வாளை நீட்டினால் அஃது எதிர்தரப்பிலுள்ள மற்றொருவர்மீது படாத அளவு இடைவெளி விட்டே அமர்தல் வேண்டுமென்று விதி செய்யப்பட்டது. இந்த இடைவெளி அளவின் இருபக்க எல்லைகள்தான் மேற்சொன்ன நீண்ட விரிப்புகள். இந்த விரிப்பின் ஓரத்திற்கு இரு தரப்பினரும் வந்து நின்றுவிட்டால், எங்கே கைகலந்துகொண்டு விடுவார்களோ என்ற சந்தேகம்; அச்சம். இப்பொழுது இந்தச் சந்தேகத்திற்கோ அச்சத்திற்கோ இடமில்லையாயினும், நீண்ட கால வழக்கத்தையொட்டி, மேற்படி விதி, அதாவது விரிப்புக்குள்ளிருந்து கொண்டுதான் பேசவேண்டுமென்ற விதி கண்டிப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஓர் அங்கத்தினர் பேசிக்கொண்டிருக்கிறபோது வேறோர் அங்கத்தினரைப்பற்றிக் குறிப்பிடவேண்டியிருந்தால் அவர் பெயரைச் சொல்லக்கூடாது. உதாரணமாக கனம் ஸ்ரீ மாக்மில்லன் அல்லது கனம் ஸ்ரீ சர்ச்சில் என்று சொல்லக்கூடாது. அவர், எந்தத் தொகுதியின் பிரதிநிதியாக வந்திருக்கிறாரோ அந்தத் தொகுதியின் பெயரை அல்லது அவர் எந்தப் பதவியை வகிக்கிறாரோ அந்தப் பதவியின் பெயரைச் சொல்லி, இன்ன தொகுதியின் அங்கத்தினர் அல்லது இன்ன பதவியிலிருப்பவர் என்றே சொல்லவேண்டும். அந்த அங்கத்தினர் வக்கீலாயிருந்தால் கனம் அறிவாளியான அங்கத்தினர் என்று அழைக்க வேண்டும். அவர் ராணுவத்தில் சேவைசெய்தவ தாயிருந்தால் கனம் வீரமுள்ள அங்கத்தினர் என்று கூறவேண்டும். இவையொன்றுமே வேண்டாமென்று தோன்றினால், இப்பொழுது பேசிவிட்டு உட்கார்ந்தாரே கனம் அங்கத்தினர் என்றோ, எதிர் தரப்பிலுள்ள கனம் அங்கத்தினர் என்றோ இப்படி ஏதோ ஒரு வகையாகச் சொல்லலாம். ஆக எந்த அங்கத்தினரைப் பற்றியும் பெயர் சொல்லிப் பிரதாபிக்கக்கூடாது. இது போலவே லார்ட் சபையைப்பற்றி குறிப்பிட வேண்டியிருந்தால் அந்தச் சபை அல்லது அந்த இடம் என்று இப்படித்தான் குறிப்பிட வேண்டுமே தவிர, லார்ட் சபையென்று வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. ஏன் இந்த வழக்கம்? காமன் சபை, முந்தி, அரச பீடத்துடன் பிணக்குக்கொண்டு பெரும் பாலும் ரகசியமாகக் கூட்டங்கள் நடத்தி வந்ததல்லவா, அப்பொழுது அந்தக் கூட்டங்களில் ஆஜராயிருந்தவர்கள். ஒருவருக்கொருவர் பெயரைப் பிரதா பிக்காமலே பேசிவந்தார்கள். அரச ஒற்றர்கள் எங்கேனும் ஒளிந்திருந்து கேட்டு, இன்னார் இன்னபடி பேசினார் என்று அரசருக்குத் தெரிவித்துவிட்டால் என்ன செய்வது? அவருடைய கோபத்திற்கல்லவோ ஆளாகவேண்டிவரும்? இதற்காகவே இப்படிப் பெயர்களைக் குறிப்பிடாமல் பேசிவந்தார்கள். இந்த வழக்கம் இப்பொழுதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது, இங்ஙனமே, லார்ட் சபைக்கும் காமன் சபைக்கும் போராட்டம் நடைபெற்று வந்த காலத்தில், ஒன்றையொன்று அலட்சியம் செய்துவந்தது. ஒன்றின் தனித்துவத்தை மற்றொன்று அங்கீகரிக்கவும் மறுத்துவந்தது. இதனால் ஒரு சபையைப்பற்றி மற்றொரு சபையில் பிரதாபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்தச் சபை இந்த இடம் என்று இப்படி மறைமுகமாகவே பேசப்பட்டு வந்தது, இப்பொழுதும் அந்த வழக்கமே பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கத்தினர்கள் பேசுகிறபோது, ப்பீக்கரை முன்னிலைப் படுத்தியே பேசவேண்டும். ஓர் அங்கத்தினர், மற்றோர் அங்கத்தினரை முன்னிலைப் படுத்திப் பேசக்கூடாது. அதாவது, ப்பீக்கர் அவர்களே, கனம்....... . அங்கத்தினர் கூறுவது சரியல்ல’என்று சொல்லலாமே தவிர, கனம்..அங்கத்தினர் அவர்களே, நீங்கள் கூறுவது சரியல்ல என்று சொல்லக்கூடாது. இந்த முறையை அங்கத்தினர்கள் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும்; அனுசரிக்குமாறு ப்பீக்கர் பார்த்துக் கொள்வார். சபையில் பேசுகிற எந்த ஓர்அங்கத்தினரும், சபையின் கௌரவத் திற்குக் குறைவு வராமலும், மற்ற அங்கத்தினர்களின் நேர்மையையோ நோக்கத்தையோ தாக்காமலும்பேசவேண்டும்.பேச்சில் உபயோகிக் கப்படக் கூடாத வார்த்தைகளும் வாசகங்களும் உண்டு. அந்த வார்த்தை களும் வாசகங்களும் என்னென்ன வென்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, கூடியமட்டில் அவற்றை உபயோகிக்காமல் பேச வேண்டும். அப்படித் தப்பித் தவறிப் பேசிவிட்டால், ப்பீக்கர் ஒழுங்கு ஒழுங்கு என்று எச்சரிக்கை செய்துவிடுவார்; அல்லது அங்கத்தினர்கள் ஆட்சேபங் கிளப்புவார்கள். அங்கத்தினர், தாம் தவறாகக் Tறிய வார்த்தையை அšலது வாசகத்தை உடனே வாபஸ் பெற்றுக் bகாண்டு விட வேண்Lம். சபையில் பேச முற்படுகிற அங்கத்தினர்கள் அனுசரிக்க வேண்டிய நியதிகளில் சில இவை. இனி, சபையின் நடவடிக்கைகளைப் பொறுத்து அனுசரிக்கப்படுகிற சம்பிரதாயங்களிற் சிலவற்றைப்பற்றிக் கூறுவோம். அரசருடைய ஆணை கொண்டுவரும் கருங்கோலேந்திய அறிமுக உத்தியோகதர், காமன் சபையை அணுகியதும், மண்டபத்தின் வாயிற் கதவுகள் மூடப்படுமென்றும், அவர் மூன்று தடவை தட்டின பிறகுதான் திறக்கப்படுமென்றும் முந்திச் சொன்னோமல்லவா, ஏன் இப்படிச் செய்யப்படுகிறது? முதலாவது சார்ல மன்னன், தன் ஆட்சியின் போது ஒரு நாள்-1642 ஆம் வருஷம் ஜனவரி மாதம் நான்காந் தேதி-சில போர் வீரர்களுடன் காமன் சபைக்குள் பிரவேசித்து, சபையின் அங்கத்தினர் சிலரைக் கைது செய்யத் துணிந்தான். ஆனால் சபையில் அந்த அங்கத்தினர்கள் இருக்கவில்லை; அரசன் வருகையை முன்கூட்டியே தெரிந்துகொண்டு வெளியேறிவிட்டிருந்தார்கள். இதனால் அவனும் சும்மா திரும்பிச் சென்றுவிட்டான். இது முதற்கொண்டு, அரசராகட்டும், அரச தூதராகட்டும் சபையின் அனுமதி பெற்றுத்தான் உள்ளே பிரவேசிக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டது. இந்த விதி இப்பொழுது ஒரு சம்பிரதாயமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கருங்கோலேந்திய உத்தியோகதர் மூன்றுதடவை கதவைத் தட்டுகிறார் என்றால், அவர் உள்ளே வர அனுமதி கோருகிறார் என்றே அர்த்தம். அங்கத்தினர்கள், சபைக்குள் வந்து அமர்வதற்கு முன் தங்கள் தொப்பி, மழைச் சட்டை, குடை முதலியவற்றை எங்கேனும் வைக்க வேண்டுமல்லவா, இதற்காகத்தனியறை ஒன்று உண்டு. இந்த அறையின் சுவர்களில் நூற்றுக்கணக்கான முளைகள் அடிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முளையிலும் சிவப்பு நாடா ஒன்று வளைத்துக் கட்டி யிருக்கும். எதற்காக இவையென்று, அறையிலே நுழைந்தவுடனே கேட்கும்படியாகத் தோன்றும். முதலில் சிறிது காலம் வரை அங்கத்தினர்களிற் சிலர், தங்கள் வாளாயுதத்துடனேயே சபைக்குள் வந்து அமர்ந்து நடவடிக்கையில் கலந்துகொண்டிருந்தார்கள். இதனால் சில சமயங்களில் பலாத்கார நிகழ்ச்சிகள் ஏற்படலாயின. கையிலே ஆயுதமிருந்தால், உணர்ச்சி வேகத்தில் அதை எதிரியின் மீது ஏன் பிரயோகிக்கக்கூடாது என்ற தூண்டுதல் இருந்துகொண்டே யிருக்கும். இந்தத் தூண்டுதலே இல்லாமற் செய்துவிட வேண்டுமென்பதற்காக, சபைக்குள் வருகிறபோது ஆயுதந் தாங்கிவரக்கூடாதென்றும், அதை அதற்கென்று பிரத்தியேகப்படுத்தப் பட்டிருக்கிற அறையில் மாட்டிவிட்டு வரவேண்டுமென்றும் ஒரு விதி செய்யப்பட்டது. இந்த விதியை அனுசரித்து வாளாயுதத்துடன் வந்த அங்கத்தினர்கள், முளையிலுள்ள நாடா வளையத்தில் தங்கள் ஆயுதத்தை மாட்டிவிட்டு, பிறகே சபைக்குள் வருவார்கள். இப்படிச் சிறிது காலம் நடை பெற்றது, இப்பொழுதோ அங்கத்தினர் யாரும் எந்தவிதமான ஆயுதத் துடனும் வருவதில்லை. ஆயினும் முளைகளும் நாடாக்களும் அப்படியே இருக்கின்றன. அங்கத்தினர்கள், தங்கள் தொப்பி, குடை, முதலியவற்றை இந்த முளைகளில் மாட்டிவிட்டு சபைக்குள் வருவார்கள். நாடாவுக்கு உபயோகமில்லாவிட்டாலும் அவை அப்படியே இருந்து கொண்டிருக் கின்றன. காரணம், நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றை ஏன் அகற்றவேண்டுமென்பதுதான். மாற்றத்தை விரும்பாதவர் பிரிட்டிஷார் என்பதை மறுபடியும் நாம் சொல்லத் தேவையில்லை யல்லவா? ஒவ்வொரு செஷன் ஆரம்பத்திலும் ஒரு விநோதமான சடங்கு நடைபெறுகிறது. கட்டடத்தின் அடிப்பக்கத்திலுள்ள அறைகளில் யாரும் ஒளிந்துகொண்டிருக்கவில்லையா என்று பரிசோதனை செய்துபார்க்கிற சடங்குதான் இது. இதற்காக ஒரு சிறு போலீ படை, கையில் ராந்தல்கள் எடுத்துக்கொண்டு, ஆம், பகல் நேரத்தில் ராந்தல்கள் எடுத்துக்கொண்டு, அதுவும் எரியாத ராந்தல்கள் எடுத்துக்கொண்டு, மிகுந்த ஜபர்ததுடன் ஊர்வலமாகப் புறப்படும்; ஒவ்வோர் அறையாகப் பரிசோதனை செய்யும். யாரும் ஒளிந்து கொண்டிருக்கமாட்டார்கள், ஒளிந்து கொண்டிருக்கவும் முடியாது என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும் இந்தச் சடங்கு சாங்கோபாங்கமாக நடைபெறுகிறது. ஏன் இது? முந்தி, கை பாக் என்பவன், பார்லிமெண்ட் கட்டடத்தைத் தகர்த்து விட வேண்டுமென்பதற்காக, கட்டடத்தின் அடியிலுள்ள ஓர் அறையில் வெடிமருந்துடன் ஒளிந்துகொண்டிருந்தானல்லவா, அந்தமாதிரி யாராவது ஒளிந்துகொண்டிருக்கப் போகிறார்களோ யென்பதற்காகவே இந்தப் பரிசோதனை நடைபெறுகிறது. மேற்படி வெடிமருந்துச் சம்பவத்துக்குப் பிறகு பார்லிமெண்ட் கட்டடங்கள் முழுவதுமே மிகவும் பந்தோபதாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கு பாராக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எந்தவிதமான ஆபத்துக்கள் நிகழ்வதற்கும் இப்பொழுது ஏதுவில்லை. இருந்தாலும் பரிசோதனை செய்துபார்க்கிற சடங்கென்னவோ அந்தக் காலத்திலிருந்து விடாமல் நடைபெற்று வருகிறது.1 சபையின் கூட்டம் இரவு பதினொன்றரை மணிக்கு முடிகிறதல்லவா, இது முடிந்து, அங்கத்தினர்கள் கலைந்துபோகுந் தறுவாயில், சபையின் சிப்பந்திகளில் ஒருவர் ‘வீட்டுக்குப் போகிறவர் யார்? என்று உரக்கக் கேட்பார். இதைப் பின்பற்றி, கட்டடத்தின் பல பாகங்களிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் போலீ காவலர்கள் ஒருவர் பின் ஒருவராகவும், எல்லாருக்கும் கேட்கும்படியாகவும் இந்த வாசகத்தைத் திருப்பிச் சொல்வார்கள். சபை நடக்கிற ஒவ்வொருநாள் கடைசியிலும் இப்படி வழக்கமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இப்பொழுதெல்லாம் சபை கலைந்ததும் அங்கத்தினர்கள் தங்கள் தங்கள் சௌகரியப்படி மோட்டாரிலோ, பஸிலோ, நடந்தோ தாங்களாக வே போய்விடுகின்றனர். யாரும் யாருடைய துணையையும் நாடுவ தில்லை. துணை தேவையில்லாதபடியே வீதிகளில் விளக்கு வெளிச்சம் முதலிய சௌகரியங்கள் இருக்கின்றன. போலீஸார் பாரா கொடுத்துக் கொண்டே யிருக்கின்றனர். இருந்தாலும், மேற்சொன்ன கூக்குரல், தினந்தோறும் கூட்டம் கலையுந் தறுவாயில், கட்டடத்தின் நாலா பக்கங்களிலும் எதிரொலி கொடுக்கிறது. என்ன விந்தை இது? முந்தியெல்லாம், வெட்மினிட்டரிலிருந்து லண்டன் மாநகருக்கு இராக் காலத்தில் செல்வதென்றால் மிகவும் சிரமம். ஒரே இருட்டு. நேரான வழி இராது. வயற்காடுகளினூடேதான் செல்லவேண்டியிருக்கும். இடையிடையே வழிபறிப்போரும் இருப்பர். இதனால், பார்லிமெண்ட் கூட்டம் கலைந்ததும், அங்கத்தினர்கள், தனித்தனியாகச் செல்லாமல், சிறுசிறு கூட்டத்தினராகச் சேர்ந்துகொண்டு செல்வர். ஒவ்வொரு கூட்டத்தினரும் ஒவ்வோர் இடத்திற்குப் போக வேண்டியவரா யிருப்பர். இந்த ஒவ்வொரு கூட்டத்தினருக்கு முன்னாலும் சிலர் தீவட்டி பிடித்துப் போவர். அவர்களுக்குப் பின்னால் தீவட்டி வெளிச்சத்தில் அங்கத்தினர்கள் செல்வார்கள். இதுதான் நீண்டகால வழக்கமாயிருந்து வந்தது. அங்கத்தினர்கள் ஒன்று சேர்ந்து வீட்டுக்குப் போகத் தயாராயிருக்கு மாறு எச்சரிக்கை செய்யும் வாசகமே ‘வீட்டுக்குப் போகிறவர் யார்? என்ற வாசகம். இப்பொழுது இந்த எச்சரிக்கைக்கு அவசியமே யில்லை. ஆனால் எச்சரிக்கை செய்யும் வழக்கம் விடாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கத்தினர்கள் இப்படிக் கூட்டங் கூட்டமாக வீட்டுக்குப் புறப்படத் தயாராகும் பொழுது, சபையின் சிப்பந்திகளில் ஒருவர், முந்திய மாதிரி உரத்த குரலில் நாளை வழக்கமான நேரத்தில் என்று கூறுவார். ஆங்காங்குள்ள போலீ காவலாளர்கள் இதைப் பின்பற்றிக் கூறுவார்கள். அதாவது நாளை வழக்கம்போல் இரண்டே முக்கால் மணிக்குச் சபை கூடும் என்ற விஷயம் அங்கத்தினர்களுக்கு இதன் மூலம் ஞாபகப்படுத்தப் படுகிறது. பத்திரிகைகள் முதலியன அதிகமாக இல்லாத காலத்தில், அங்கத்தினர்களுக்கு இப்படி ஞாபகப்படுத்தவேண்டியது அவசியமாயிருந் திருக்கலாம். இப்பொழுதோ பத்திரிகைகள் அவ்வப் பொழுது நடைபெறுகிற விஷயங்களையும், அடுத்தடுத்து நடைபெறப் போகிற விஷயங்களையும் உடனுக்குடன் விசேஷ இதழ்களின் மூலம் தெரிவித்துக்கொண்டிருக் கின்றன. மறுநாள், சபை எப்பொழுது கூடும், அன்று என்னென்ன விஷயங்கள் வாதத்திற்குவரும் என்ற விவரங்கள் யாவும் அங்கத்தினர்களுக்கு இப்பொழுது நன்கு தெரிந்திருந்தாலும், பழைய கால வழக்கத்தை யொட்டி, மறுநாள் கூட்டத்தைப்பற்றி அவர் களுக்கு ஞாபகப்படுத்தப்படுகிறது. சபை நடந்துகொண்டிருக்கையில், மந்தாரத்தினாலோ இருட்டு கின்ற சமயம் வந்துவிட்டதனாலோ, சபையில் போதிய வெளிச்சம் இல்லையென்று வைத்துக்கொள்வோம். வெளிச்சம் தேவையா யிருக்கிற தென்று எந்த அங்கத்தினரேனும் உணர்வாரானால் அவர் உடனே எழுந்து நின்று, பீக்கர் அவர்களே, மெழுகுவர்த்திகளை வரவழைக்குமாறு கோருகிறேன் என்பார். உடனே மின்சார விளக்குகள் போடப்பட்டுவிடும். நியாயமாக மின்சார விளக்குகளைப் போடச் செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதில்லை. ஏனென்றால், முந்தியெல்லாம், மின்சார விளக்குகளும் கா விளக்குகளும் ஏற்படுவதற்கு முந்தி, மெழுகு வர்த்திகளே உபயோகிக்கப்பட்டு வந்தன. அப்பொழுது, மெழுகுவர்த்தி களைக் கொண்டுவரச் செய்யுங்கள் என்று சொல்ல வேண்டியது அவசிய மாயிருந்தது; பொருத்தமாகவும் இருந்தது. இப்பொழுது அவசியமு மில்லை; பொருத்தமுமில்லை. ஆயினும் முந்திச் சொல்லப் பட்டு வந்ததைப்போல் இப்பொழுதும் சொல்லப்பட்டு வருகிறது. வழக்கம்! சில சமயங்களில் சபையானது ரகசியமாகக் கூடிச் சில விவகாரங் களைக் கவனிக்கவேண்டியிருக்கும். சிறப்பாக யுத்த காலங்களில் இப்படி ரகசியமாகக் கூடவேண்டிய அவசியம் அதிகமாக ஏற்படும். அப்பொழுது, அதாவது பகிரங்கக் கூட்டம் ரகசியக் கூட்டமாக மாறவேண்டியிருக்கிற பொழுது, அரசாங்கத் தரப்பிலுள்ள ஒரு மந்திரியானவர் எழுந்து, ப்பீக்கர் அவர்களே, வெளியார் இங்கே உளவு பார்ப்பதாக அறிகிறேன் என்று கூறுவார். உடனே, அதுகாறும் பிரசன்னமா யிருந்த பார்வையாளர்கள், பத்திரிகை நிருபர்கள் ஆகிய அனைவரும் வெளியே அனுப்பப்பட்டு விடுவார்கள். அங்கத்தினர்களைத் தவிர வேறு யாரும் மண்டபத்தில் இருக்கமாட்டார்கள். முந்தி அரச பீடத்திற்கும் காமன் சபைக்கும் போராட்டம் நடைபெற்று வந்தபொழுது, சபையானது, அநேக சமயங்களில் அங்கத்தினரல்லாத வேறு யாரையும் வரவிடாமல் தன் கூட்டங்களை நடத்த வேண்டியதா யிருந்தது. அப்படி அயலார் யாரேனும் வந்து, நடைபெறுகிற விஷயங் களைத் தெரிந்துகொண்டு, அரசரிடத்தில் போய்ச் சொல்லிவிட்டால் என்ன செய்வதென்பதற்காகவே இப்படிச் செய்து வந்தது. எனவே, எந்த ஓர் அங்கத் தினருக்கும் வெளியார் இங்கே உளவு பார்ப்பதாக அறிகிறேன் என்ற வாசகத்தின் மூலம் எச்சரிக்கை செய்து அவர்களை அப்புறப்படுத்தச் சொல்ல உரிமை இருந்தது. இப்பொழுது இந்த உரிமைக்கு அவசியமே யில்லை. காமன் சபைக்கும் அரச பீடத்திற்கும் எந்தவித முரண்பாடும் இப்பொழுது கிடையாது. ஆயினும் சபை ரகசியமாகக் கூட வேண்டி யிருக்கிறபொழுது, பழைய வாசகம் அப்படியே உபயோகிக்கப்படுகிறது. பார்லிமெண்ட்டினால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது மன்னர் பிரானுடைய அங்கீகாரத்தைப் பெறுகிறதென்று வைத்துக் கொள்வோம். இந்த அங்கீகாரம், பழைய காலத்துப் பிரெஞ்சு மொழியிலேயே கொடுக்கப்படுகிறது. இதுபோல் இன்னும் சில சந்தர்ப்பங் களிலும் இந்தப் புராதன மொழியே உபயோகிக்கப்படுகிறது. வழக்கந்தான் இதற்குக் காரணம். ப்பீக்கர் தெரிந்தெடுக்கப்பட்டதும், அவரை, பக்கத்துக்கு ஒருவராக இரண்டு பேர்-அவருடைய பெயரைப் பிரேரித்தவரும் ஆமோதித்தவரும்-சிறிது வலுக் கட்டாயமாகப் பிடித்து அவருடைய ஆசனத்திற்கு அழைத்துக்கொண்டுபோய் அமர்த்தச் செய்வார்களென்று முந்திச் சொன்னோமல்லவா, ஏன் இந்த வலுக்கட்டாயம்? அரச பீடத்திற்கும் காமன் சபைக்கும் போராட்டம் நடைபெற்று வந்த காலத்தில் காமன் சபைத் தலைவரே, காமன் சபையின் சார்பாக அரசரிடம் சென்று பேசக்கூடியவரா யிருந்தாரென்பதும், இந்தப் பேசுகிறவர் சில சமயங்களில் அரசருடைய கோபத்திற்கு இலக்கானார் என்பதும், இதனால் சபையின் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கப் பலரும் அஞ்சினர் என்பதும், எனவே ஒருவரைக் கட்டாயமாகத் தலைவருடைய ஆசனத்தில் அமர்வித்து, பிறகு அவருடைய தலைமையில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை, சபையானது நிறைவேற்றி வந்ததென்பதும் வாசகர் களுக்கு ஞாபகமிருக்கும். இப்படித் தலைவரை வலுக்கட்டாயப்படுத்தி அவருடைய ஆசனத்தில் அமர்விப்பதற்கான காரணங்கள் எதுவுமே இப்பொழுது இல்லையானாலும், வலுக்கட்டாயப்படுத்தி அமர் விக்கிற வழக்கம் மட்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வலுக் கட்டாயப்படுத்தி என்றால், லேசாக பலாத்காரத்தை உபயோகித்தல்ல. ப்பீக்கர், அவருடைய ஆசனத்திற்கு அழைத்து வரப்படுகிறபோது, தமக்கு அந்தப் பதவி வேண்டாமென்று சொல்வதுபோலவும், ஆனாலும் தாம் பலவந்தத்தின்பேரில் அங்குச் செல்வதாகவும் பாவனை செய்வார். அதாவது, தமது இரண்டு தோள்களையும் அசைத்து அசைத்துக் கொடுத்துக்கொண்டே போவார், இஃதொரு சம்பிரதாயம். அங்கத்தினர்கள், சபைக்குள் பிரவேசிக்கிற போதும், சபையி லிருந்து வெளியே செல்கிறபோதும், ப்பீக்கர் இருக்கிற பக்கம் தலை வணங்க வேண்டுமென்பதும் நியதி. பார்க்கிறவர்களுக்கு, ப்பீக்கருக்குத் தலைவணங்குவதாகவே தோன்றும். ஒருவிதத்தில் இந்த வணக்கம், ப்பீக்கருக்குக் காட்டப்படுகிற மரியாதையே என்றாலும் சரியானபடி சொல்லப் போனால், இஃது அநேக நூற்றாண்டுகளுக்கு முந்தியிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிற ஒரு வழக்கமேயாகும். வெட்மினிட்டர் அரண்மனையில் ஒரு தேவாலயம் உண்டு. இதற்கு செயிண்ட் ட்டீபன் தேவாலயம்1 என்று பெயர். இந்தத் தேவாலயத் திலேயே, காமன் சபையானது நெடுநாள் வரை- 1547 ஆம் வருஷத்தி லிருந்து 1834 ஆம் வருஷம் வரை-கூடிவந்தது. 1834 ஆம் வருஷம் பார்லிமெண்ட் கட்டடத்திற்குப் பெரிய தீவிபத்து ஏற்பட்டதல்லவா அப்பொழுது இந்தத் தேவாலயம் நாசமாகிவிட்டது. இதற்குப் பிறகு, பார்லிமெண்ட் கூடுவதற்கென்று வேறு கட்டடம் நிர்மாணஞ் செய்யப் பட்டது. இந்த அளவுக்கு வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். மேற்படி செயிண்ட் ட்டீபன் தேவாலயத்தில் காமன் சபை கூடிவந்த காலத்தில், அங்கத்தினர்கள் உள்ளே வருகிறபோதும் வெளியே போகிற போதும், அங்குள்ள தேவ பீடத்திற்குத் தலைவணங்குவது வழக்கம். ஒரு தேவாலயத்திற்குள் சென்று வருகிற எல்லாருமே இப்படிச் செய்வது சகஜந்தானே? சபை, இப்பொழுது தேவாலயத்தில் கூடாவிட்டாலும், தலைவணங்கும் வழக்கம் மட்டும் விடாமல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஓர் அங்கத்தினர், ஞாபக மறதியாகத் தலைவணங்காமல் வந்து தமது ஆசனத்தில் உட்கார்ந்து விட்டாலோ அல்லது வெளியே சென்று விட்டாலோ, அது, ப்பீக்கரை அவமரியாதை செய்ததாகவே இப்பொழுது கருதப்படுகிறது. தவறிவிட்ட அங்கத்தினர், உடனே ப்பீக்கரினால் எச்சரிக்கை செய்யப்படுவார். சபையின் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை மட்டும் கடைசியாகக் கூறிவிட்டு இந்த அத்தியாயத்தை முடிக்கிறோம். பார்லிமெண்ட்டின் அன்றாட நடவடிக்கைகளை வெளிப்படுத்துவன மூன்று, தினசரிப் பத்திரிகைகள்; மற்றொன்று ஹான்ஸார்ட்2; இன்னொன்று, ஜர்னல்3. தினசரிப் பத்திரிகைகள் பூரா நடவடிக்கை களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இடத்திற்குத் தகுந்த படியும், கொள்கைக்கேற்ற விதமாகவுமே வெளியிடும். கன்ஸர்வேட்டிவ் கட்சியை ஆதரிக்கிற பத்திரிகையாயிருந்தால், கன்ஸர்வேட்டிவ் கட்சி அங்கத்தினர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும். அப்படியே தொழிற்கட்சிப் பத்திரிகைகள் முதலியனவும். எல்லா நாடுகளிலும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் இது சகஜந்தான். அன்றாடப் பத்திரிகைகளிடமிருந்து இதைக் காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்க முடியாது எனவே இதைப் பற்றி நாம் அதிகம் கூறத் தேவையில்லை. பார்லிமெண்ட்டின் நடவடிக்கைகள் பூராவையும் ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால் அவர் ஹான்ஸார்டைத்தான் பார்க்க வேண்டும். இந்த ஹான்ஸார்ட் என்பது என்ன? ஓர் அரசாங்கப் பிரசுரம். பார்லிமெண்ட் கூடுகிற ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பிரசுரமாக வெளியிடப்படுகிறது. ஒருநாள் நடவடிக்கை பூராவையும் ஒரு பிரசுரத்தில் காணலாம். இன்று முழுவதும் நடைபெற்ற நடவடிக்கைகள் யாவும், அதாவது வினா விடைகள், வாதப் பிரதிவாதங்கள் முதலிய யாவும் ஒழுங்கான முறையில் புத்தக வடிவமாக மறுநாள் காலை பத்து மணிக் கெல்லாம் அங்கத்தினர்கள் கைக்குக் கிடைத்து விடுகிறது. இப்படி காமன் சபைக்கு ஒன்றும், லார்ட் சபைக்கு ஒன்றுமாக தனித்தனி பிரசுரங்கள் வெளி யாகின்றன. இவ்விரண்டுக்கும் சேர்ந்தே ஹான்ஸார்ட் என்று பெயர். இந்த ஹான்ஸார்ட் பிரதிகள், காமன் சபை லார்ட் சபை அங்கத்தினர் அனைவருக்கும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. மற்றவர்கள், ஒரு பிரதி, அதாவது ஒருநாள் பிரசுரம் ஆறு பென் விகிதம் விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஹான்ஸார்ட் என்பது ஒரு பிரசுரத்தின் பெயராக இப்பொழுது வழங்கப்பட்டு வருகிறதாயினும், முதலில் ஒரு தனி நபருடைய பெயர்தான். வில்லியம்காப்பெட்1 என்ற ஒருவன் பரம ஏழைக் குடும்பத்திலே பிறந்து, சலியா முயற்சியினாலும் இடைவிடாத உழைப்பி னாலும் முன்னுக்கு வந்து, கடைசியில் பார்லிமெண்ட் அங்கத்தினனானான். விவசாயிகள் நலனுக்காகப் பெரிதும் பாடுபட்டான். அநேக நூல்களை எழுதியிருக்கிறான். இவன், ஜான் ரைட்2 என்ற ஒரு புத்தக வியாபாரியின் துணை கொண்டு, பார்லிமெண்ட்டின் சரித்திரத்தைத் தொகுத்து வெளியிட்டான்; பார்லிமெண்ட்டின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரவும் ஏற்பாடு செய்தான். இவையனைத்தையும் லண்டனிலுள்ள ஓர் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வந்தான். இந்த அச்சுக் கூடத்தின் சொந்தக்காரன் பெயர் ஹான்ஸார்ட்.3 காப்பெட்டுக்குப் பிறகு, மேற்படி பார்லிமெண்ட் நடவடிக்கைகளைப் பதிப்பித்து வெளி யிடும் உரிமை ஹான்ஸார்ட் குடும்பத்தினருக்குக் கிடைத்தது. இது முதற்கொண்டு, ஏறக்குறைய பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தி லிருந்து, பார்லிமெண்ட் நடவடிக்கைகளைக் கொண்ட பிரசுரங்கள் ஹான்ஸார்ட் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் ஹான்ஸார்ட்டின் சரித்திரம். பார்லிமெண்ட் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதற்காக ஹான்ஸார்ட் அச்சுக்கூடத் தினருக்கு, அரசாங்கமானது 1909 ஆம் வருஷம் வரை ஒரு தொகையை மானியமாக அளித்து வந்தது. இதற்குப் பிறகு, அரசாங்கமே இவற்றை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஹான்ஸார்ட்டை ஓர் அற்புதமான சிருஷ்டியென்று சொல்ல வேண்டும். அங்கத்தினரில் பலவகையுண்டு. அப்படியே அவர்கள் பேசுவதிலும் பல ரகங்களுண்டு. சிலர் தட்டுத்தடுமாறிப் பேசுவர். சிலர் வேகமாகப் பேசுவர். குரல்களில் மாறுபாடுகள் இருக்கும். சிலர், பேசிக்கொண்டிருக்கிறபொழுது, வாக்கியத்தைப் பூர்த்தி பண்ணாமலே விட்டுவிடுவர். சிலருடைய பேச்சில் இலக்கண வழுக்கள் நிறைந் திருக்கும். அங்கத்தினர் பெயரைச் சொல்லாமலே அவர் பேசியதை ஆதரித்தோ தாக்கியோ சிலர் பேசுவர். நடுநடுவே குறுக்குக் கேள்விகள் என்ன, கரகோஷங்கள் என்ன, இப்படியெல்லாம் நிகழும். இவை யனைத்தையும் சமாளித்துக்கொண்டு, நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுருக்கெழுத்தில் எடுத்துக்கொள்வர் சுருக்கெழுத்துக்காரர்கள். பின்னர் எடுத்துக்கொண்டதைச் செப்பஞ் செய்து அச்சுக்குக் கொடுப்பர். ஒருநாள் முழுவதும் நடைபெறுகிற நடவடிக்கை அன்றிரவே அச்சாகி விடுகிறது. அச்சிலே பார்க்கிறபோது பேசினவர்களுடைய குறைகளில் எதுவும் தென்படாது. இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் பேசியிருக்கிறார்களே என்று தோன்றும். அனைத்திற்கும் காரணமா யிருக்கப்பட்டவர்கள் சுருக்கெழுத்துக்காரர்கள். இவர்களுடைய திறமை வியக்கத்தக்கது. ஆனால் உலகத்து எல்லா நாட்டுச் சபைகளினுடைய சுருக்கெழுத்துக் காரர்களின் திறமையும் வியக்கத்தக்கதுதான். மூன்றாவது, ஜர்னல். தினசரி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னர், அன்றைய நிகழ்ச்சி நிரல், அன்று கேட்கப்படப் போகிற கேள்விகள், இவை அடங்கிய தாள்கள் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் விநியோகிக்கப்படும். இந்தத் தாள்களின் முதல் ஓரிரண்டு பக்கங்கள், முந்தின நாள் நடைபெற்ற நடவடிக்கைகளின் சாரத்தைக் கொண்டதா யிருக்கும். நேற்று நடைபெற்றதென்ன, இன்று நடைபெறப்போவதென்ன வென்பவைகளை அங்கத்தினர்கள் சுலபமாக ஒரு பார்வையில் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு. முந்தின நாள் நடவடிக்கைகளைக் கொண்ட இந்தச் சுருக்கத்திற்கே ஜர்னல் என்று பெயர். 1547 ஆம் வருஷத்திலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது. 7. லார்ட் சபை பழைய பார்லிமெண்ட் கலைந்துவிட்டது, புதிய பார்லிமெண்ட் கூடுகிறது என்பதெல்லாம் லார்ட் சபைக்குக் கிடையாது. இது கலைவது மில்லை; எனவே கூடுவதுமில்லை. இது நிரந்தர சபை. இதன் அங்கத்தினர்களில் மிகப் பெரும்பாலோருக்குத் தேர்தல் தொந்தரவுகள் கிடையாது. லார்ட் சபையென்றால், பிரபுக்கள் சபை என்று அர்த்தம் என்பதை நாம் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டுவதில்லை. ஆனால் இந்தச் சபையில் பிரபுக்களல்லாத பாதிரிமார்களும் அங்கத்தினர்களாயிருக் கிறார்கள். இந்தப் பாதிரிமார்கள் எப்படிப் பிரபுக்களாவார்கள், இவர் களையும் கொண்ட சபையை எப்படிப் பிரபுக்கள் சபையென்று அழைக்கலாம் என்று வாசகர்கள் கேட்கக்கூடும். இந்தப் பாதிரிமார்கள், எந்தெந்த மடங்களுக்குத் தலைவர்களாயிருக் கிறார்களோ, அந்தந்த மடங்களுக்கு ஏராளமான சொத்துபற்றுக்கள் இருக்கின்றன. அவற்றை இவர்கள் நிருவாகம் செய்கிறார்கள். இதனால் இவர்கள் பிரபுக்கள்தானே? பணக்காரர்கள்தானே? தவிர, லௌகிகத் துறையிலே பிரபுக்களாயிருக்கிறவர்களைப்போல் இவர்கள்-இந்தப் பாதிரி மார்கள்-பாரமார்த்திகத் துறையிலே பிரபுக்களா யிருக்கிறார்களென்று கொள்ளலாம். மற்றும், ஆதியிலிருந்தே, அரச பீடத்தோடு ஒத்துழைத்த காலத்திலும் பிணக்குக்கொண்ட காலத்திலும் பிரபுக்களும் பாதிரி மார்களும் ஒரு கட்சியினராகவே இருந்து வந்திருக்கிறார்கள். இத்தகைய காரணங்களினாலேயே, பிரபுக்களும் பாதிரிமார்களும் அடங்கிய சபையை பிரபுக்கள் சபை, அதாவது லார்ட் சபையென்று அழைக்கிறார்கள். இந்தச் சபையில், பாதிரிமார்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவுதான். அதுவும் முக்கியமான பாதிரிமார்கள் மட்டுமே அங்கத்தினராக இடம் பெற்றிருக் கிறார்கள். இந்த லார்ட் சபையில் அங்கம் வகிக்கும் பிரபுக்களில் இங்கிலாந்தின் பிரபுக்களென்றும், காத்லாந்தின் பிரபுக்களென்றும், ஐர்லாந்தின் பிரபுக்களென்றும் மூன்று வகையினர் இருக்கின்றனர். இவருள் முதல் வகையினரான இங்கிலீஷ் பிரபுக்கள் பரம்பரைப் பிரபுக்கள்; பரம்பரை பாத்தியங் காரணமாகச் சபையில் அங்கம் வகிக்கிறவர்கள்.1 எனவே, தேர்தல் சடங்குக்கு இவர்கள் உட்பட வேண்டியதில்லை. சபையின் மொத்த அங்கத்தினர்களில் மிகப் பெரும்பாலோர் இவர்கள்தான். நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதத்திற்கு அதிகமாக இவர்களுடைய எண்ணிக்கை இருக்கிறது. அடுத்தபடி காட்டிஷ் பிரபுக்களும் ஐரிஷ் பிரபுக்களும். இவர்களை பிரபுக்களின் பிரதிநிதிகளான பிரபுக்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், இவர்கள். இங்கிலீஷ் பிரபுக்களைப் போல், நேரடியாக அதாவது பிரபுக்கள் என்ற காரணத்தினால் அங்கத் தினராவதில்லை. தங்கள் சகோதரப் பிரபுக்களினால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். காத்லாந்து பிரபுக்கள் பதினாறு பேரையும், ஐர்லாந்து பிரபுக்கள் இருபத்தெட்டு பேரையும் தெரிந்தெடுக்க உரிமை பெற்றிருக்கிறார்கள். தெரிந்தெடுக்கப்படுகிற காட்டிஷ் பிரபுக்கள் ஒரு பார்லிமெண்ட் வரை, அதாவது ஐந்து வருஷ காலத்திற்கு அங்கம் வகிக்கலாம். ஐரிஷ் பிரபுக்கள் ஆயுள் பூராவும் அங்கம் வசிக்கலாம். இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், காட்டிஷ் பிரபுக்கள், ஐந்து வருஷத்திற்கொரு தடவையும், ஐரிஷ் பிரபுக்கள் ஆயுளுக்கு ஒரு தடவையும் தேர்தல் சடங்குக்கு உட்பட வேண்டியவர்களாயிருக்கிறார்கள். காட்டிஷ் பிரதிநிதிகள் பதினாறு பேர் என்றும் ஐரிஷ் பிரதிநிதிகள் இருபத்தெட்டு பேர் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதல்லவா, இவர்களில் காட்டிஷ் பிரதிநிதிகள் அத்தனை பேரும்-பதினாறு பேரும்-இப்பொழுது அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் ஐரிஷ் பிரபுக்கள் இருபத் தெட்டு பேர் இல்லை. இவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. 1921 ஆம் வருஷம் ஐர்லாந்தின் தென்பகுதி, தனிராஜ்யமான பிறகு, ஐரிஷ் பிரதிநிதிகளின் தேர்தலே நடைபெறவில்லை. மற்றும், ஐர்லாந்தின் பிரபு வமிசங்களும் வரவரக் குறைந்து வருகின்றன. தெரிந்தெடுக்கிறவர்கள் இருந்தால்தானே தெரிந்தெடுக்கப்படுகிறவர்கள் இருப்பார்கள்? 1950 ஆம் வருஷத்தில் ஏழு ஐரிஷ் பிரதிநிதிகளே லார்ட் சபையின் அங்கத்தினராயிருந்தார்கள். 1980 ஆம் வருஷத்திற்குள் ஐரிஷ் பிரபுப் பிரதிநிதிகளே லார்ட் சபையில் இருக்க மாட்டார்களென்று அரசியல் பண்டிதர் சிலர் கருதுகின்றனர். இஃது எப்படி யிருந்தபோதிலும், இங்கு நாம் மனத்தில் கொள்ள வேண்டியது, காட்டிஷ் பிரபுப் பிரதிநிதிகள் பதினாறு பேரும் ஐரிஷ் பிரபுப் பிரதிநிதிகள் இருபத்தெட்டு பேரும் லார்ட் சபையில் அங்கத்தினரா யிருக்கலாமென்பதேயாகும். ஐர்லாந்து பிரபுக்களுக்கு மட்டும் ஒரு விசேஷ உரிமை அல்லது சலுகை உண்டு. அஃதென்னவென்றால், தங்கள் சகோதரப் பிரபுக் களினால் லார்ட் சபைக்குத் தெரிந்தெடுக்கப்படாதவர்கள்,இஷ்டப்பட்டால், ஐர்லாந்துக்குப் புறம்பான ஒரு தொகுதியில் காமன் சபைக்கு அபேட்சகராக நின்று, தேர்தலில் வெற்றி பெற்று அந்தச் சபையில் அங்கம் வகிக்கலா மென்பதேயாம். காமன் சபையில், அந்தப் பிரபு பேசினார், இந்தப் பிரபு பேசினார் என்று சில சமயங்களில் பத்திரிகைகளில் படிக்கிறபோது, வாசகர்களுக்குத் திகைப்பு உண்டாகிறது, ஒரு பிரபு, காமன் சபையில் பேசவாவது என்று. இப்படிப் பேசுகிற பிரபு, லார்ட் சபைக்கு அபேட்சகராக நிற்காத அல்லது அபேட்சகராக நின்று தோல்வியுற்ற, ஆனால் காமன் சபைத் தேர்தலில் அபேட்சகராக நின்று வெற்றி பெற்ற ஓர் ஐர்லாந்து பிரபுவாக இருப்பார். பிரபுக்களைத் தவிர்த்து, காண்ட்டர்பரி ஆர்ச்பிஷப்1 யார்க் ஆர்ச்பிஷப்2 உள்பட இருபத்தாறு தலைமைப் பாதிரிமார்கள், லார்ட் சபையில் அங்கம் வகிக்கிறார்கள். இன்னும், சட்டப் பிரபுக்கள் அல்லது அப்பீல் பிரபுக்கள்3 என்று ஏழு பேர் லார்ட் சபையின் அங்கத்தினர்கள். இவர்கள் மன்னர்பிரானால் ஆயுள்பரியந்தம் நியமிக்கப்படுகிற சம்பள உத்தியோகதர்கள். இவர்களுடைய வருஷ சம்பளம் ஆறாயிரம் பவுன். இவர்கள் தவிர லார்ட்ஹை சான்ஸலர், என்ற ஒருவர் ஒவ்வொரு பார்லிமெண்ட் துவங்குகிறபோதும், அதாவது ஐந்து வருஷத்திற் கொருதடவை, பிரதம மந்திரியினால் நியமிக்கப்பட்டு லார்ட் சபையில் அங்கம் வகிக்கிறார். காமன் சபையின் ப்பீக்கரை போல் இவர் லார்ட் சபையின் ப்பீக்கர். ஆனால் இவரை ப்பீக்கர் என்று அழைப்பதில்லை; லார்ட்சான்ஸலர் என்றே அழைப்பர். இவருடைய வருஷ சம்பளம் பதினாயிரம் பவுன் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். ஆக, லார்ட் சபையின் மொத்த அங்கத்தினர் எண்ணிக்கை ஏழு நூற்றைம்பதுக்கு மேல் எண்ணூற்றைம்பது வரை இருக்கும். காமன் சபையைப் போல் இந்தச் சபையின் அங்கத்தினர் இத்தனை பேர்தான் என்று நிர்ணயித்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், பரம்பரைப் பிரபுக்கள் மறைந்து கொண்டும், புதிய பிரபுக்கள் சிருஷ்டியாகிக் கொண்டும் வருகிறார்களல்லவா? மேலே சொன்ன காட்டிஷ் பிரபுக்கள் சட்டப் பிரபுக்கள், பாதிரிமார்கள் இவர்கள் மட்டும் நிர்ணயிக்கப்பட்டிருக் கிற எண்ணிக்கைப்படி இருக்கிறார்கள். ஐரிஷ் பிரபுக்கள்தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறபடி இல்லை. ஏழு நூற்றைம்பதுக்கு மேற்பட்ட அங்கத்தினர்கள் இருந்தாலும், குறைந்த பட்சம் மூன்று அங்கத்தினர்கள் ஆஜராயிருந்தால் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிடும். ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டியிருந்தால், குறைந்த பட்சம் முப்பது அங்கத்தினர்கள் ஆஜராயிருந்தால் போதும். நடவடிக்கைகளைத் துவங்குவதற்கு ஆஜராயிருக்க வேண்டிய அங்கத்தினர்களின் குறைந்த பட்ச எண்ணிக்கை மூன்று என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பது வாசகர்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். மொத்த அங்கத்தினர்களின் எண்ணிக்கை ஏழு நூற்றைம்பதுக்கு மேற்பட்டு இருந்த போதிலும், கூட்டத்திற்கு ஆஜராகும் அங்கத்தினர்களின் சராசரி எண்ணிக்கை ஐம்பதுக்கு மேல் எண்பதுக்குட்பட்டுத்தான். இப்படி ஆஜராகும் அங்கத்தினர்களிலும் ஒரு சிலர் மட்டுமே வாதங்களில் கலந்து கொள்கிறார்கள். உதாரணமாக ஒரு பழைய கணக்கு கூறுகிறது:- 1932, 1933 ஆகிய இரண்டு வருஷங்களிலும் 287 பிரபுக்கள் சபைக்கு வரவேயில்லை. 1919 ஆம் வருஷத்திலிருந்து 1931 ஆம் வருஷம் வரையிலுள்ள பன்னிரண்டு வருஷ காலத்தில் 111 பிரபுக்கள் எந்த ஒரு தீர்மானத்தின் மீதும் ஓட்டுக் கொடுத்ததே கிடையாது; 98 பிரபுக்கள் மட்டுமே வாதங் களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கலந்து கொண்ட வர்களும் யார்? மந்திரிகளும், மாஜி மந்திரிகளுமே. இந்த நிலைமை யில், குறைந்தபட்ச எண்ணிக்கை மூன்று என்று நிர்ணயிக்கப் பட்டிருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லையல்லவா? லார்ட் சபையின் அலுவல்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சொல்லலாம். ஒன்று, சட்ட நிர்மாணத்திற்குத் துணைபுரிதல்; மற்றொன்று, எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலான நீதிமன்றமாயிருந்து நீதி வழங்குதல். முதலில் சட்ட நிர்மாணத்தை எடுத்துக்கொள்வோம். சட்ட நிர்மாணத்திற்குத் துணைபுரிதல் என்றுதான் கூறினோமே தவிர, சட்ட நிர்மாணஞ் செய்தல் என்று கூறவில்லை. இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். பண சம்பந்தமான மசோதாவைத் தவிர மற்ற எந்த ஒரு மசோதாவையும் லார்ட் சபையிலும் முதன்முதலாகக் கொண்டுவரலாம் என்கிறது சட்டம். ஆனால் நடைமுறையில் தேசீய முக்கியத்துவம் பெற்ற எந்த ஒரு மசோதாவும் காமன் சபையிலேயே முதன்முதலாகக் கொண்டு வரப்படுகிறது. எந்த மசோதா எங்கே கொண்டுவரப்பட்ட போதிலும், அந்த மசோதாவின் கடைசி முடிவு, அதாவது, அது சட்டமாவதோ, சட்ட மாகாமலிருப்பதோ காமன் சபை வசத்திலேயே இருக்கிறது. காமன் சபையினால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை, லார்ட் சபை, திருத்தலாம்; மாற்றலாம்; நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால் அப்படி நிராகரிப்பதன் விளைவாக, அதனைச் சட்டமாகவிடாமல் செய்ய முடியாது. பண சம்பந்தமான மசோதாவை, காமன் சபையில்தான் முதன் முதலாகக் கொண்டுவரவேண்டும். அந்த மசோதா லார்ட் சபையின் அங்கீகாரத்துக்கு ஒரு மாதம் வரை காத்திருந்து பிறகு சட்டமாகிவிடும். அதாவது லார்ட் சபை, பண சம்பந்தமான ஒரு மசோதாவை ஒரு மாதம் வரை தாமதப்படுத்தி வைக்கலாம். இதே பிரகாரம் பண சம்பந்தமல்லாத மற்ற மசோதாக்களை ஒரு வருஷம் வரை தாமதப்படுத்தி வைக்கலாம். இவைகளைப்பற்றி யெல்லாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். பண சம்பந்தமான மசோதாவை முதன்முதலாகக் காமன் சபையில் கொண்டு வரவேண்டுமென்பதைக் கொண்டும் அந்த மசோதாவை லார்ட் சபை ஒரு மாதந்தான் தாமதப்படுத்தி வைக்கலாமென்பதைக் கொண்டும், அரசாங்கத்தின் வரவு செலவு விஷயத்தில் தலையிடுகிற அதிகாரம் லார்ட் சபைக்குக் கிடையாது என்பது தெற்றென விளங்கும். ஆனால் மற்ற மசோதாக்கள் விஷயத்தில் அவைகளுக்குத் திருத்தங்கள், மாற்றங்கள் முதலியன செய்து அவைகளை ஒழுங்குபடுத்திக் கொடுப்பதின் மூலம், லார்ட் சபை, பெரிய சேவையைச் செய்கிறது. இதனால்தான், சட்ட நிர்மாணத்திற்குத் துணைபுரிதல் என்று மேலே கூறினோம். தனிப்பட்ட பிரபுக்களின் உரிமைகளையும், உடைமைகளையும் பாதிக்கிற எந்த ஒரு மசோதாவும் முதன்முதலாக லார்ட் சபையில்தான் கொண்டுவரப்பட வேண்டும். பொதுவாகச் சொல்லப்போனால், அரசாங்க நிருவாக விஷயத்திலோ, சட்ட நிர்மாண விஷயத்திலோ லார்ட் சபைக்கு விசேஷமான அதிகாரங்கள் எதுவும் இல்லை; காமன் சபைக்குத் தான் முக்கியமான எல்லா அதிகாரங்களும். லார்ட் சபையின் மற்றோர் அலுவல், கிரேட் பிரிட்டனிலும் வட ஐர்லாந்திலுமுள்ள எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலான நீதிமன்ற மாயிருந்து நீதி வழங்குதல். கிரேட் பிரிட்டனுக்கும் வடஐர் லாந்துக்கும் இறுதியான அப்பீல் கோர்ட் என்று சொல்லலாம் இந்த லார்ட் சபையை, இந்தக்கடைசி கோர்ட்டுக்கு பெரும்பாலும் சிவில் அப்பீல்களே வருகின்றன; ஏகதேசமாக கிரிமினல் அப்பீல்களும் வருவதுண்டு. கடைசி அப்பீல் கோர்ட் என்று சொன்னால் லார்ட் சபை முழுவதுமே ஒரு நீதி மன்றமாகக் கூடுகிறது என்று அர்த்தமல்ல; சபையின் சார்பாக, நீதி வழங்க ஒரு நீதிபதி கோஷ்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோஷ்டியினர்தான், மேலே சட்டப்பிரபுக்கள் என்று சொன்னோமே ஏழுபேர் இவர்களும், ஏற்கனவே உயர்தர நீதிபதி உத்தியோகம் வகித்து அனுபவம் பெற்றிருக்கிற ஒரு சில பிரபுக்களும், லார்ட் சான்ஸலருமாவர். இவர்களையே இறுதியான அப்பீல் கோர்ட் என்று சொல்லவேண்டும். இந்தக் கோர்ட்டின் தலைவர் லார்ட் சான்ஸலர். பெரிய குற்றமிழைத்தவர்களென்று காமன் சபையினால் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், தேசத் துரோகம் முதலிய குற்றங்களைச் செய்த பிரபுக்கள், இப்படிப்பட்டவரை விசாரிக்கிற அதிகாரம் லார்ட் சபைக்கு உண்டு. இங்ஙனம் நீதி வழங்கும் அலுவல் லார்ட் சபைக்கு உண்டா யினும். அதனுடைய சட்ட நிர்மாண அலுவலே முக்கியமாகக் கருதப்படு கிறது. லார்ட் சபை கூடியது, கலைந்தது என்றால். அதன் சட்ட நிர்மாணப் பகுதியைக் குறிப்பதாகவே எல்லாரும் அர்த்தப்படுத்திக்கொள்வர். நாமும் இந்த அர்த்தத்திலேயே இங்கு லார்ட் சபையின் அன்றாட நடைமுறைகளிற் சிலவற்றைப் பற்றிக் கூறுவோம். லார்ட் சபை, பொதுவாக திங்கள், செவ்வாய், வியாழன் இந்த மூன்று நாட்களில் தினசரி பிற்பகல் 4-15 மணிக்கும், புதன்கிழமை 3-45 மணிக்கும் முறையே கூடும். ஆக, வாரத்தில் நான்கு நாட்கள்தான் கூட்டம். அவசியமும், அவசரமுமான காரியங்களிருந்தால், மற்ற நாட்களிலும் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம். காமன் சபை, தினசரி கூடுகிறபோது, சிற்றுண்டிக்கென்று சிறிது நேரம் கலைந்து பிறகு கூடுவதில்லை; தொடர்ச்சியாகவே கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் லார்ட் சபை, சிற்றுண்டிக்கென்று அரைமணி நேரம் கலைந்து பிறகுதான் கூடும். காமன் சபையைப் போலவே லார்ட் சபையிலும் கேள்வி-பதில்கள் உண்டு. ஆனால் இவை மிகவும் குறைவாயிருக்கும். மற்றும் இந்தக் கேள்வி-பதில் நேரத்தில், காமன் சபையில் காணப்படுவது போல் உணர்ச்சி தலைதூக்கி நிற்காது. பொதுவாகவே, காமன் சபை நடவடிக்கைகளில் காணப்படுகிற விறுவிறுப்போ பரபரப்போ லார்ட் சபையின் நடவடிக்கைகளில் காணப்பட மாட்டாது, வாதத்தின் போக்கும் அத்து மீறிச் செல்லாது. ஆஜராயிருக்கும் அங்கத்தினர்களிற் பெரும்பாலோர் வெறும் அரசியல்வாதிகளாக இல்லாமல், நிருவாக அனுபவமுடையவர்களாகவோ அல்லது குறைந்த பட்சம் ஏதோ ஒரு துறையில் நிபுணர்களாகவோ இருப்பார்கள். எனவே இவர்கள் கூடியமட்டில் நிதானமாகவும் அனுபவ சாத்தியமான முறையிலுமே பேசுவார்கள். இப்படி நிதானமாகப் பேசினாலும் இவர்கள் எதையும் மழுப்பிப் பேசமாட்டார்கள். அப்படிப் பேசவேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. எதைச் சொல்லவேண்டுமோ அதைப் பட்டவர்த்தனமாகச் சொல்ல இவர்கள் தயங்க வேண்டியதில்லை. ஏனென்றால் ஓட்டர்களின் தயவை நாடவேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லையல்லவா? இப்படி அனுபவ சாத்தியமான முறையிலும் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லுகிற முறையிலும் வாதம் நடத்தி, அதன் மூலம் அரசாங்கத்தையும் ஜனங்களையும் நேரிய வழியில் கொண்டு செலுத்துகிற சக்தி லார்ட் சபைக்கு இருக்கிறது. சபையின் தலைவருக்கு-லார்ட் சான்ஸலருக்கு-காமன் சபையின் தலைவரைப்போல்-ப்பீக்கரைப்போல்-அவ்வளவு அதிகாரங்கள் இல்லை. சபையில் ஒழுங்கு தவறிப் பேசுகிற, நடந்து கொள்கிற அங்கத்தினர்கள் மீது இவர் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக்கொள்ள முடியாது. பிரபுக்கள் ஒழுங்கு தவறி நடந்துகொள்ளமாட்டார்களென்பதே ஐதிகம். ஒரே சமயத்தில் இரண்டு அங்கத்தினர்கள் பேச எழுந்து நின்றால்-இப்படி அநேகமாக நிகழ்வதில்லை. ஒருவரைப் பேசவிட்டு மற்றொருவரை உட்காரச் சொல்ல தலைவருக்கு அதிகாரம் கிடையாது. இன்னார் பேசட்டும் என்று சபையினரே கூறுவார்கள். மற்றொருவர் மரியாதையாக உட்கார்ந்துகொண்டுவிடுவார். இதே பிரகாரம், ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறபோது அவர் பேசினது போதும் என்று சபையினருக்குத் தோன்றினால் அல்லது அவர் பேச்சைக் கேட்க விருப்பமில்லாமற் போனால் கனம் அங்கத்தினர் இனி பேசினால் கேட்கப்படமாட்டாது என்ற கருத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டு வரலாம் எந்த ஓர் அங்கத்தினரும். இதையும் மீறி அந்த அங்கத்தினர் பேசத் துணிவாரானால், மேற்படி பிரேரணையை ஓட்டுக்கு விட்டு நிறைவேற்றச் செய்யலாம். இதற்குப் பிறகு அந்த அங்கத்தினர் பேசமுடியாது. ஆனால் இவ்வளவு விரசமாக எந்த அங்கத்தினரும் நடந்துகொள்ளமாட்டார். இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்வதேயில்லையென்று சொல்லலாம். பொதுவாக, லார்ட் சபையை, தான் நடந்து கொள்ளவேண்டிய முறைகளை தானே வகுத்துக்கொண்டு அவை பிரகாரம் நடந்து கொள்கிற சபையென்று கூறவேண்டும். காமன் சபையில், ப்பீக்கரை முன்னிலைப்படுத்தியல்லவோ அங்கத்தினர்கள் பேசவேண்டும்? லார்ட் சபையில் அப்படியில்லை. அங்கத்தினர்களை நோக்கியே பேசலாம், எனது பிரபுக்களே என்றுதான் பேச்சைத் தொடங்குவர் பிரதியோர் அங்கத்தினரும். சபையின் தலைவரான லார்ட் சான்ஸலருக்கு, காமன் சபை ப்பீக்கரைப் போல அவ்வளவு அதிகாரங்கள் இல்லையென்று மேலே கூறினோம். ஆனால் அவருக்கில்லாத ஓர் உரிமை இவருக்கு உண்டு. இவர் விரும்பினால், மற்ற அங்கத்தினர்களைப் போல சபையின் வாதங்களில் கலந்து கொள்ளலாம்; தீர்மானங்கள் முதலியவற்றின்மீது ஓட்டுச்செய்யலாம். காமன் சபையைப் போலவே லார்ட் சபைக்கும் அநேக உத்தியோகதர்கள் உண்டு. இவர்களுள் முதன்மையானவர், முக்கிய மானவர் லார்ட் சான்ஸலர். இவரைப் பலமுக உத்தியோகதர் என்று கூறலாம். இவர் லார்ட் சபையின் சட்ட நிர்மாணப் பகுதிக்கும் அப்படியே அதன் நீதிமன்றப் பகுதிக்கும் தலைவர், இன்னும் ஹைகோர்ட் என்ன, அப்பீல் கோர்ட் என்ன பிரிவிகவுன்சிலின் நியாய விசாரணைக் கமிட்டி என்ன இவைகளுக்கும் தலைவர். பொதுவாக அரசாங்கத்தின் நிருவாகப் பகுதிக்குப் பிரதம மந்திரி எப்படியோ அப்படி அதன் நீதிப் பகுதிக்கு இவர் என்று கூறத் தகும், இவர் மந்திரிச் சபையில் முக்கியமான சட்ட மந்திரி, இவருடைய சிபார்சின் பேரிலேயே நீதிபதிகளிற் பெரும்பாலோர் நியமிக்கப் படுகின்றனர். இங்ஙனம் பல பொறுப்புக்களுடைய இவருக்கு, பிரதம மந்திரியைப்போல் வருஷத்திற்குப் பதினாயிரம் பவுன் சம்பளம். இவர் லார்ட் சபையின் சட்டநிர்மாணப் பகுதிக்குத் தலைவராக அமர்ந்திருக்கும் ஆசனத்திற்கு வுல்ஸாக் என்று பெயர். ஆட்டு ரோமம் திணிக்கப்பெற்று சிவப்புத் துணியினால் மூடப்பெற்ற மெத் தென்றுள்ள ஆசனம் இது. சபை கூடுவதற்கென்று ஏற்பட்டுள்ள இடத்திற்கு வெளியேதான் இந்த ஆசனம் அமைக்கப்பட்டிருக்கிறது. லார்ட் சான்ஸலர், சபையின் வாதங்களில் கலந்துகொள்ள விரும்பினால், இந்த ஆசனத்தை விட்டெழுந்துவந்து சபைக்குள் பிரவேசித்து சபையினரில் ஒருவராக அமர்ந்து கொள்வார். லார்ட் சான்ஸலர், தலைவராக இருக்கமுடியாத பொழுது, உபதலைவர் ஒருவர் தலைமைதாங்கி நடவடிக்கைகளை நடத்து விப்பார், இவருக்கு லார்ட் சேர்மன்1 என்று பெயர். இவருடைய வருஷ சம்பளம் 2,500 பவுன். கருங்கோலேந்திய அறிமுக உத்தியோகதரைப் பற்றி முந்திச் சொல்லியிருக்கிறோமல்லவா, இவர் லார்ட் சபையின் உத்தியோ கதர்களுள் ஒருவர். அரச சமூகத்தின் தூதர். இவருடைய அதிகாரச் சின்னம், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு உச்சியில் சிங்க முகத்தை யுடைய ஒரு கோல். இதனால் தான் இவர், கருங்கோலேந்திய உத்தியோகதர் என்று அழைக்கப்படுகிறார். லார்ட் சபையில் அமைதியை நிலவச் செய்ய வேண்டியது இவர் பொறுப்பு. இவருடைய வருஷ சம்பளம் 1,320 பவுன். காமன் சபையைப்போலவே லார்ட் சபைக்கும் சார் ஜண்ட்- அட்-ஆம் என்ன, குமாதாக்களென்ன, இப்படிப் பலவகைப்பட்ட உத்தியோகதர்கள் உண்டு. வருஷவாரி சம்பளம் சார்ஜண்ட்-அட்-ஆர்ம்ஸுக்கு 1,320 பவுன்; பிரதம குமாதாவுக்கு 3,500 பவுன். கட்சிக் கொறடாக்களும் உண்டு. அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடாவுக்கு வருஷ சம்பளம் 1,200 பவுன். லார்ட் சபை அங்கத்தினர்களுக்கு, காமன் சபை அங்கத்தினர்களைப் போல் சம்பளம் கிடையாது. ஆனால் தங்கள் வாசதலத்திலிருந்து வெட்மினிட்டர் அரண்மனைக்கு வந்துபோகிற பிரயாணச் செலவு கொடுக்கப்படுகிறார்கள். இப்படிக் கொடுக்கப்படுவதும் 1946 ஆம் வருஷத்திலிருந்துதான். பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்து கொள்ளப்பட்டது, பிரிவி கவுன்சில் தீர்ப்புக் கூறியது, இப்படி நாம் கேள்விப்படுகிறோமில்லையா, இந்தப் பிரிவி கவுன்சில் என்பது என்ன என்பதைப்பற்றிச் சில வார்த்தைகள். அரசரின் அந்தரங்க ஆலோசனை சபையாக முதலில் ஏற்பட்ட இது, தற்போது முந்நூறு பேருக்கு மேல் கொண்ட ஒரு சபையாக இருக்கிறது, இதில் அரச குடும்பத்தினர், மந்திரிச் சபையினர். பிரதம பாதிரிமார்கள், முக்கிய நீதிபதிகள், காமன் சபைத் தலைவர், இன்னும் சில முக்கியமான உத்தியோகதர்கள் இவர்களும், அரசரால் அவ்வப்பொழுது நியமிக்கப்படுகிற பிரபலதர்களும் அங்கத்தினர்களா யிருக்கிறார்கள். ஸர் பட்டம், பிரபு பட்டம் வழங்கப்படுவது இல்லையா. அதுபோல பிரிவி கவுன்சில் அங்கத்தினர் பதவியும் வழங்கப்படுகிறது. பிரிவி கவுன்சிலர்கள் மகாகனம்2 என்று கௌரவமாக அழைக்கப்படுவதற்கு உரியர். இது போழ்து, அரசருக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு மந்திரிச் சபைக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தப் பிரிவுகவுன்சிலை, சம்பிரதாயத்திற்காக வைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு சபை யென்றே சொல்ல வேண்டும். முந்நூறு பேருக்கு மேற்பட்ட அங்கத்தினர் இருந்தாலும், இதன் கூட்டங்கள் அநேகமாக நாலைந்து பேருடன்தான் நடைபெறும். அரசாங்க நிருவாகத்தையொட்டி, நீண்ட காலமாக அனுசரிக்கப்பட்டுவரும் சில சம்பிரதாயங்களுக்கு இந்தச் சபை ஒரு கருவியாயிருக்கிறதென்று கூறலாம். இது, பல கமிட்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுள் முக்கிய மானது நியாய விசாரணைக் கமிட்டி1, பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்து கொள்ளப்பட்டது என்றால், இந்தக் கமிட்டிக்குத்தான் என்று அர்த்தம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் அப்பீல்களை விசாரித்து நீதி வழங்கும் பொறுப்பு இதனுடையது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மேலான அப்பீல்கோர்ட் என்று இந்தக் கமிட்டியைச் சொன்னால் அது தெளிவாயிருக்கும். இந்தக் கோர்ட்டில், லார்ட் சான்ஸலர் உள்ளிட்ட சில சட்ட நிபுணர்களும் சாம்ராஜ்யத்தின் பல பகுதி களிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட சில சட்ட நிபுணர்களும் நீதிபதி களாயிருக்கின்றனர். இந்தியா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குட்பட்டிருந்த வரையில், அதாவது 1947 ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினைந்தாந்தேதி வரையில், இந்தியாவின் மேலான அப்பீல் கோர்ட்டாயிருந்தது இந்த பிரிவி கவுன்சில். மேற்படி தேதியில் இந்தியா சுதந்திர நாடாகியது, இப்படிச் சுதந்திர நாடாகிய போதிலும் இதன் அரசியலமைப்பு இன்னபடிதான் இருக்க வேண்டுமென்பதை நிர்ணயிக்க சுமார் இரண்டரை வருஷ காலம் பிடித்தது. கடைசியில் குடியரசு முறையினதாக இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குடியரசுத் திட்டம் 1950 ஆம் வருஷம், ஜனவரி மாதம் இருபத்தாறாந்தேதி அமுலுக்கு வந்தது. இந்தத் திட்டப்படி, இந்தியா விலேயே ஒரு சுப்ரீம் கோர்ட்2-மேலான அப்பீல் கோர்ட்-அமைக்கப் பட்டிருக்கிறது. இதனால் பிரிவிகவுன்சிலுக்கு மேற்படி 1950 ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்தாறாம் தேதியிலிருந்து எந்தவிதமான அப்பீலும் இந்தியாவிலிருந்து செல்வதில்லை.  பொருட்குறிப்பு m§f¤âd® ஆசனம் 200,201 அங்கத்தினர் சம்பளம் 198 அட்லி கிளிமெண்ட் 152 அபேட்சகர் - செலவு 153 அபேட்சகர் - தகுதி 152 அபேட்சகர் - ஜாமீன் 151 அரச மாளிகைகள் 143 அறிஞர் சபை 135 எட்வர்ட் - முதலாவது 137 எதிர்க்கட்சித் தலைவர் 197 ஒயிட் ஹால் 158 கணக்குப் பரிசீலனைக் கமிட்டி 187 கப்பற்பணம் 138 கருங்கோலேந்திய அறிமுக உத்தியோகதர் 160,163,167,207 காமன் சபை - பிரதம குமாதா 161,167,196 காமன் சபை - புணர் நிர்மாணம் 143 கூட்டு அரசாங்கம் 157,158 கேள்வி - பதில் 175,176 கை பாக் 138,208 கொறடா 195 சர்ச்சில் - வின்ட்டன் 152 சர்வ மதங்களின் பார்லிமெண்ட் 131 சார்ல - முதலாவது 138,207 சார்ஜண்ட்- அட் - ஆர்ம 186,196 சுயேச்சைவாதிகள் 152 செலவுக் கமிட்டி 186 சேர்மன் 186,202 டெபுட்டி சேர்மன் 186 டெபுட்டி பீக்கர் 186,194 டௌனிங் தெரு 158,159 தணிக்கை அதிகாரி 187 தேம் நதி 142 தொகுப்பு நிதி 185 தொழிற்கட்சி 152 பக்கிங்ஹாம் அரண்மனை 144 பட்ஜெட் 172, 186 பாங்க் ஆப் இங்கிலாந்து 185 பார்லிமெண்ட் - அர்த்தம் 131 பார்லிமெண்ட் ஆயுட்காலம் 146 பார்லிமெண்ட் உருக்கொண்டது 137 பார்லிமெண்ட்கலைவதற்குக் காரணங்கள் 147,148 பார்லிமெண்ட் செஷன் 172 பார்லிமெண்ட் திறப்பு விழா 167 பார்லிமெண்ட் தோன்றியது 136 பார்லிமெண்ட் நீடிப்பு 150 பார்லிமெண்ட்நெருப்புக்கிரை 139 பார்லிமெண்ட் பல நாடுகளில் 131 பார்லிமெண்ட் பிரிந்தது 141 பார்லிமெண்ட் மாளிகைகள் 143 பார்லிமெண்ட் வளர்ந்த கதை 141 பார்லிமெண்ட் விதீரணம் 143 பிரதம மந்தரியின் பொறுப்பு 156,157 பிரிட்டனில் ஆட்சி முறை 133 பிரிவுகவுன்சில் 223, 224 பிரிவு கவுன்சிலர்கள் 170 பெண்கள் ஒட்டுரிமை 141 பொதுவுடைமைக்கட்சி 152 மகா சபை 136 மகா சாஸனம் 136 மந்திரிகள் சம்பளம் 158 மந்திரிச்சபை - அமைப்பு 154 மந்திரிச்சபை - கூட்டுப் பொறுப்பு 157 மந்திரிச்சபை - ராஜீநாமா 148 மசோதா சட்டமாதல் 179,182 மாக்மில்லன் - ஹாரோல்ட் 205 மாத்யூ பாரி 136 மாதிரி பார்லிமெண்ட் 137 லாயிட் ஜார்ஜ் 157, 204 லார்ட் சபை - அங்கத்தினர் 217 லார்ட் சபை - அலுவல்கள் 218, 220 லிபரல் கட்சி 152 வரவுக் கமிட்டி 186 வெடிமருந்துச் சதி 139 வெள்ளை அறிக்கை 177 வுஸாக் 168, 222 ப்பீக்கர் தேர்தல் 161,163 ப்பீக்கர் பதவி 188, 194 ஹான்ஸார்ட் 212 ஹென்ரி - மூன்றாவது 136 ஜர்னல் 212 வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல்கள் தலைவர்கள் வரிசை திரட்டு 1 1. மகாத்மா காந்தி திரட்டு 2 2. பண்டித மோதிலால் நேரு 3. லோகமான்ய பாலகங்காதர திலகர் 4. காந்தி யார் 5. காந்தியும் ஜவஹரும் 6. காந்தியும் விவேகானந்தரும் திரட்டு 3 7. நான் கண்ட நால்வர் 8. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி திரட்டு 4 9. ஐசக் நியூட்டன் 10. எடிசன் 11.. சர்.சி.வி. இராமன் 12. ஜெகதீ சந்திரபோ 13. பிரபுல்ல சந்திர ரே 14. டார்வின் திரட்டு 5 15. மாஜினி 16. மாஜினியின் மனிதன் கடமை 17. மாஜினியின் மணிமொழிகள் திரட்டு 6 18. உரூசோ 19. உரூசோவின் சமுதாய ஒப்பந்தம் திரட்டு 7 20. இட்லர் 21. முசோலினி திரட்டு 8 22. கார்ல் மார்க் 23. சன்யாட்சன் திரட்டு 9 24. அபிசீனிய சக்ரவர்த்தி 25. கமால் அத்தாத் துர்க் 26. சமுதாய சிற்பிகள் கடித வரிசை திரட்டு 10 27. மகனே உனக்கு 28. அவள் பிரிவு 29. பிளேட்டோவின் கடிதங்கள் 30. வரலாறு கண்ட கடிதங்கள் 31. பாரதமாதாவின் கடிதங்கள் நாடக வரிசை திரட்டு 11 32. பாணபுரத்து வீரன் 33. அபிமன்யு 34. மனோதருமம் 35. உத்தியோகம் 36. உலகம் பலவிதம் சுதந்திரம் வரிசை திரட்டு 12 37. மானிட ஜாதியின் சுதந்திரம் 38. சுதந்திர முழக்கம் 39. சுதந்திரத்தின் தேவைகள் யாவை? நாட்டு வரிசை திரட்டு 13 40. பெயின் குழப்பம் 41. நமது ஆர்யாவர்த்தம் 42. ஆசிய உலக சமாதானம் திரட்டு 14 43. ஜெக்கோலோவாகியா 44. பாலதீனம் திரட்டு 15 45. சோவியத் ருஷ்யா திரட்டு 16 46. பர்மா வழி நடைப்பயணம் 47. பிரிக்கப்பட்ட பர்மா திரட்டு 17 48. புதிய சீனா திரட்டு 18 49. ருஷ்யாவின் வரலாறு திரட்டு 19 50. சீனாவின் வரலாறு திரட்டு 20 51. கிரீ வாழ்ந்த வரலாறு அரசியல் வரலாறு திரட்டு எண். 21 52. 1919 (அ) பஞ்சாப் படுகொலை திரட்டு எண். 22 53. பெடரல் இந்தியா 54. சமதான இந்தியா 55. இந்தியாவின் தேவை 56. பார்லிமெண்ட் 57. நமது தேசிய கொடி திரட்டு எண். 23 58. பிளேட்டோவின் அரசியல் திரட்டு எண். 24 59. அரசியல் வரலாறு 60. ஐக்கிய தேசதாபனம் 61. அரசாங்கத்தின் பிறப்பு 62. பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும் 63. அரசியல் கட்சிகள் திரட்டு எண். 25 64. ராஜதந்திர- யுத்த களப் பிரசங்கங்கள் திரட்டு எண். 26 65. புராதன இந்தியாவில் அரசியல் பொது திரட்டு எண். 27 66. கௌரிமணி 67. தலை தீபாவளி 68. Essentials of Gandhism கட்டுரை இலக்கியம் (வாழ்வியல் நூல்கள்) திரட்டு எண். 28 69. நமது பிற்போக்கு 70. எப்படி வாழ வேண்டும் 71. நாடும் மொழியும் 72. சுதந்திரமும் சீர்திருத்தமும் திரட்டு எண். 29 73. நகைத்தல் நல்லது 74. பெண்மையிலேதான் வாழ்வு 75. மனிதன் யார்? 76. இக்கரையும் அக்கரையும் திரட்டு எண். 30 77. கட்டுரைக் களஞ்சியம் 78. உலகக் கண்ணாடி 79. நாடாண்ட நங்கையர் திரட்டு எண். 31 80. வெ.சாமிநாத சர்மா வாழ்க்கை வரலாறு * * * * * Parliament. நியாயமாக இதனை பார்லமெண்ட் என்றே உச்சரிக்க வேண்டும். ஆனால் பார்லிமெண்ட் என்று சொல்வதே வழக்கமாயிருக்கிறது. உதாரணமாக, 1893 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரத்தில் சர்வ மதப் பிரதிநிதிகளின் மகாசபையொன்று கூடி அதில் சுவாமி விவேகானந்தர் பேசினாரல்லவா, அந்த மகாசபைக்கு, சர்வ மதங்களின் பார்லிமெண்ட் (Parliament of Religions) என்ற பெயரே வழங்கப்பட்டது. சாதாரணமாக, இங்கிலாந்து, வேல், காத்லாந்து இவை மட்டும் அடங்கிய ஒரு தொகுப்பை பிரிட்டன் (Britain) அல்லது பெரிய (Great Britain) என்றும், இந்த பிரிட்டனோடு வட ஐர்லாந்தையும் சேர்த்து ஐக்கிய ராஜ்யம் (United Kingdom) என்றும் முறையே பூகோள சாதிரிகள் அழைப்பர். ஆனால் அரசியல் உலகத்துப் பேச்சு வழக்கில், பிரிட்டன் என்று சொன்னாலே, அது மேற்படி ஐக்கிய ராஜ்யத்தையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையும் கூட சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் குறிக்கும். பிரிட்டன் வெற்றி பெற்றது என்றால் என்ன அர்த்தம்? பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வெற்றி பெற்றது என்றுதானே கொள்ளப்படுகிறது? இப்படித்தான் மற்ற இடங்களிலும். இந்த நூலைப் பொறுத்தமட்டில் பிரிட்டன் என்ற வார்த்தையை, ஐக்கிய ராஜ்யம் என்ற அர்த்தத்திலேயே, சுருக்கத்திற்காகவும் வாசகர்களின் விளக்கத்திற்காகவும் கையாண்டிருக்கிறோம். Bundes Versammlung. Reichstag. Storting. Congress. Majlis. Diet. Mother of Parliaments. Mother Parliament. House of Commons. அரசர் (மதுனர்) என்று வரும் இடங்களில், அரச பீடத்தில் அமர்ந்திருப்பவர் யாரோ அவரையே கொள்க. அரச பீடத்தில் அமர்ந்திருப்பவர் அரசராகவும் இருக்கலாம். அரசியாகவும் இருக்கலாமல்லவா? House of Lords. Witenagemot (Witan) Great Council. Magna Carts. பார்லிமெண்ட் என்ற பெயரை முதன் முதலாக உபயோகத்திற்குக் கொண்டுவந்தவன் மாத்யூ பாரி (Mathew Paris) என்பவன். இவன், அப்பொழுது அரச பீடத்தில் அமர்ந்திருந்த மூன்றாவது ஹெட்ரி (Henry III 1207-1272)ÆDila நெருங்கிய நண்பன்; பாதிரி; உலக சரித்திரத்தை எழுதியவன்; இந்தச் சரித்திரத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தைப் பெரிதும் புகழ்ந்து பேசியிருக்கிறான். Edward I 1239-1307. Westminister Palace. Great Parliament or Model Parliament. Charles I 1600-1649. Ship-money. பதினான்காவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே லார்ட் சபை வேறாகவும், காமன் சபை வேறாகவும் பிரிந்து நடைபெற்று வந்தன என்பதைப் பிந்திக் கூறுவோம். Guy Fawkes 1570-1606. Thomas Winter. Gunpowder Plot. இதன் ஒரு பகுதி 1941 ஆம் வருஷம் ஜெர்மன் ஆகாய விமானக் குண்டுகளால் நாசமாக்கப்பட்டது என்பது பின்னர் சொல்லப்படுகிறது. Thames. Houses of Parliament. இந்தப் புதிய கட்டடத்திற்குக் கால்கோல் விழா 27-5-1948 இல் நடைபெற்றது. கட்டடம் கட்டி முடிந்து 26-10-50 இல் திறப்பு விழா நடைபெற்றது. பார்லிமெண்ட்டைத் திறந்து வைப்பது என்ற ஒரு சடங்கு நடைபெறும். பெரும்பாலும் மன்னர் பிரானே நேரில் வந்து இந்தச் சடங்கை நடத்தி வைப்பார். அப்பொழுது அவர் ராஜாங்க உடையுடன் இருக்கவேண்டுமென்பது நியதி. இந்த உடையை அவர் தரித்துக் கொள்வதற்கென்று, பார்லிமெண்ட் கட்டடத்திற்குள்ளேயே விசாலமான அறை யொன்று உண்டு. இதற்கு அரசர் உடையணியும் அறை (King’s Robing Room) என்றே பெயர். இதில்தான் லார்ட் சபை கூடி வருகிறது. இந்தப் பெரிய அறையையே சிறிய மண்டபம் என்று மேலே அழைத்திருக்கிறோம். Buckingham Palace. இது தவிர, கென்ஸிங்க்ட்டன் அரண்மனையும் (Kensington Palace) மால்பரோமாளிகையும் (Marlborough House) லண்டனுக்கு மேற்கே சுமார் இருபத்தோரு மைல் தொலைவிலுள்ள விண்ட்ஸர் மாளிகையும் (Wilndsor Castle) அரச குடும்பத்தின் வாசதலங்களாயிருக்கின்றன. இளவரசராக யார் இருக்கிறாரோ அவருடைய வாசதலம் செயிண்ட் ஜேம் அரண்மனை (St. James Palace.) இந்தப் புனர் நிர்மாண வேலை 1840 ஆம் வருஷம் துவக்கப்பட்டது. இதற்குத் திட்டம் தயாரித்துக் கொடுத்தவர் ஸர் சார்ல பார்ரி (Sir Charless Barry) அகட்ட ப்யூகின் (Augustus Pugin) என்ற இருவர். 1847 ஆம் வருஷம் லார்ட் சபையும், 1852 ஆம் வருஷம் காமன் சபையும் முறையே கட்டி முடிக்கப்பெற்றன. இவைகளுக்காக ஏற்பட்ட மொத்தச் செலவு 21,98,000 பவுன். 1852 ஆம் வருஷம் கட்டி முடிந்த காமன் சபை மண்டபம்தான் 1941 ஆம் வருஷம் ஜெர்மன் ஆகாயவிமானக் குண்டுகளுக்கு இரையாகியது. Sergeant-at-Arms. Speaker. பார்லிமெண்ட் சம்பந்தப்பட்ட இந்த உத்தியோகதர்களைப் பற்றி ஐந்தாவது அத்தியாயத்தில் கூறுவோம். 1911 ஆம் வருஷம் வரை ஏழு வருஷமாயிருந்தது பின்னரே ஐந்து வருஷமாக்கப்பட்டது. Conservative Party. Tory. Balfour, Bonar Law Churchill. Liberal Party. Melbourne, Palmerston, Gladstone, Asquith, Lloyd George. Ramsay Macdonald, Clement Atlee. Communist Party. Independents. ஒவ்வோர் ஓட்டருக்கும், நகரத் தொகுதியாயிருந்தால் இரண்டு பென் வீதமும், கிராமத் தொகுதியாயிருந்தால் ஒன்றரை பென் வீதமும், ஓர் அபேட்சகர் செலவழிக்கலாம். இது தவிர, ஒவ்வோர் அபேட்சகரும் நானூற்று ஐம்பது பவுன் வரை செலவழிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வீதம் செலவழித்தேயாகவேண்டுமென்பதில்லை. இந்த வீதத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாதென்பதுதான் சட்டம். Honourable. M.P. (Member of Parliament) ஒவ்வொரு பார்லிமெண்ட்டின் போதும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 600க்கு மேல் சிறிது கூடுவதும் குறைவதும் உண்டு. Junior Ministers. குறைந்த பட்சம் மந்திரிகளில் மூவரும் உப மந்திரிகளில் மூவரும் இருக்கவேண்டு மென்பது தற்போதைய நியதி. இங்கே வாசகர்கள் கேட்கக்கூடும், லார்ட் சபையில் அரசாங்கத்தின் கட்சியை எடுத்துச் சொல்ல பிரபுக்களல்லாத மந்திரிகளுக்கு, மந்திரிகள் என்ற ஹோதாவில் உரிமையுண்டா என்று. இல்லையென்பதுதான் இதற்குப் பதில். மந்திரிகளோ, மந்திரிகளில்லையோ, லார்ட் சபையில் யாரார் அங்கத்தினரோ அவர்கள் மட்டுமே அந்தச் சபையின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் உரிமையுடையவர்கள். Leader of the House. Coalition Ministry or Coalition government. இவர் காலம் 1863-1945. இவர் பிறந்தது 1874. Lord High Chancellor. இந்தப் பதவியைப் பற்றின விவரங்களைப் பிந்திய அத்தியாயங்களில் காண்க. White Hall. Downing Street. செவ்வாய்க்கிழமையாகத்தான் இருக்கவேண்டுமென்பது கட்டாயமல்ல. வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் ஒரு நாள், பார்லிமெண்ட்டின் முதற்கூட்டம் துவங்கவேண்டுமென்பதே நியதி. முதற்கூட்டத்திற்கு எட்டாவது நாள் அரசர் பார்லிமெண்ட்டைத் திறந்து வைப்பார் என்பதும் ஒரு நியதி. ஆனால் அதுவும் கட்டாயமல்ல. பார்லிமெண்ட் முதன் முதலாகக் கூடும் நாளும், அரசரால் திறப்பு விழா நடைபெறும் நாளும், தேர்தல் எப்பொழுது முடிகிறதென்பதைப் பொறுத்தும், புதிதாக அமையும் மந்திரிச் சபையின் சௌகரியத்தை யொட்டியும் நிர்ணயிக்கப்படுகின்றன என்று கூறலாம். மேலே நாம் செவ்வாய்க்கிழமை யென்று குறிப்பிட்டது. பொதுவான நியதியை அனுசரித்துத்தான். அதனாலேயே, அநேகமாக செவ்வாய்க்கிழமையாகவே இருக்கும் என்று குறிப்பிட்டிருக் கிறோம். இனி வருவனவற்றையும் அப்படி அநேகமாக என்ற அர்த்தத்திலேயே கொள்க. தெரிந்தெடுக்கப்பட்ட அறுநூற்றுச் சொச்சம் அங்கத்தினர்களும் ஆஜராயிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அது சாத்தியமுமல்ல. பெரும்பாலோர் ஆஜராயிருப்பர் என்பது நிச்சயம். முதல்நாள் ஆஜராகாதவர், மறுநாள் ஆஜராவர். Gentelmau Usher of the Black Rod. இனி ப்பீக்கர் என்றே அழைத்துக்கொண்டு போவோம். Clerk of the House of Commons. இந்த உரிமைகளிலும் சலுகைகளிலும் முக்கியமானவை நான்கு. பேச்சுரிமை, கைது செய்யப்படாமலிருக்க உரிமை, அரசரை நேரில் சந்திக்கும் உரிமை, காமன் சபையின் நடவடிக்கைகளை நல்ல விதத்தில் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டு மென்பது ஆகிய இவையே நான்கும். பேச்சுரிமையென்பது, சபைக்குள்ளே பேசுகிற உரிமையையும், கைது செய்யப்படாமலிருக்க உரிமை யென்பது, சபை கூடியிருக்கிற காலத்திலும் கூட்டம் துவங்குவதற்கு நாற்பதுநாள் முந்தியிருந்தும், கூட்டம் முடிந்து நாற்பதுநாள் வரையிலும், சிவில் வழக்குகளில் கைது செய்யப்படாமலிருக்க வேண்டுமென்ற உரிமையையும், அரசரை நேரில் சந்திக்கும் உரிமை யென்பது, ப்பீக்கரின் தலைமையில் அங்கத்தினர்கள் மொத்தமாக அரசரைக் கண்டு மகஜர் ஒன்றைமட்டும் சமர்ப்பிக்கிற உரிமையையும், காமன் சபை நடவடிக்கைகளை நல்லவிதத்தில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது, அரசரிடத்தில் காட்டப்பெறும் மரியாதையையும் குறிக்கின்றன என்று மிகச்சுருக்கமாகக் கூறலாம். அல்லது அரசியும் அவரது கணவரும். Woolsack. Privy Councillor. Budget. Session. சிலர், வருஷ ஆரம்பத்திலிருந்து செஷனைக் கணக்குப்பண்ணுவது முண்டு. அப்படியானால், மேலே இரண்டாவது கூட்டமாகக் கூறப்பட்டிருப்பது முதல் கூட்டமாகவும், மூன்றாவது கூட்டம் இரண்டாவது கூட்டமாகவும், முதல் கூட்டம் மூன்றாவது கூட்டமாகவும் மாறும். எப்படிக் கணக்குச் செய்தபோதிலும், வருஷத்தில் மூன்று கூட்டங்கள்தான். இந்த ஒவ்வொரு தடவைக் கூட்டத்தையும் ஒவ்வொரு செஷன் என்று சொல்வதுமுண்டு. ஒரு தேர்தல் நடைபெற்று புதிய பார்லிமெண்ட் எப்பொழுது கூடுகிறதென்பதைப் பொறுத் திருக்கிறது. இந்தக் கூட்டங்களின் வரிசைக் கிரமம் என்றும் சொல்லலாம். Easter. பிரதி வருஷமும் மார்ச்சு மாதம் கடைசி வாரத்தில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கிறிதுவர்கள் கொண்டாடும் பண்டிகை. Whitsuntide. ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வரும் ஒரு கிறிதுவப் பண்டிகை. White Paper. Act. Bill. First Reading. Second Reading. Select Committee. Chairman Third Reading. Consolidated Fund. Bank of England. Committee of Ways and Means. Committee of Supply. Deputy Chairman. இவருடைய வருஷ சம்பள 1,500 பவுன். Deputy Speaker. Comptroller and Auditor General. Public Accounts Committee. Gown. Wig. Serjeant-at-arms. Mace. Whip. Edmund Burke-1729-1797. Duputy Sergeant, Assistant Sergeant. பிரதம குமாதாவை, சபையின் காரியதரிசி என்றும், மற்ற இரண்டு குமாதாக்களை உதவிக் காரியதரிசிகளென்றும் அழைப்பது பொருத்தமாயிருக்கும். Leader of the Opposition. ஸ்ரீ லாயிட் ஜார்ஜ் அப்பொழுது (1908 முதல் 1915 வரை) பொக்கிஷ மந்திரியா யிருந்தார். இந்தச் சட்டம் நிறைவேறியது 10-8-1911 இல். 30-7-1937 இல் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி. 29-5-1946 இல் காமன் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானப்படி. மந்திரிகள், அரசாங்க உத்தியோகதர்களாக்க கருதப்படுவதில்லை யென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. Chiltern Hundreds Bailiff. Gallery. Treasury Bench or Front Bench. Opposition Bench. இதுமட்டுமல்ல: பிரதி வருஷமும் நவம்பர் மாதம் ஐந்தாந்தேதி, லண்டனில் இந்த கை பாக்ஸின் ஞாபக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வான வேடிக்கைகள் முதலியன நடைபெறும். பொதுநல உபயோகத்திற்காகப் பணமும் திரட்டப்படும். St. Stephens Church. Hansard. Journal. 1. William Cobbett 1763-1835. 2. John Wright 1770-1844. Luke Hansard 1752-1828. பரம்பரை பாத்தியம், அங்கம் வகிக்கிற உரிமை எல்லாம் மூத்த மகனுக்கு மட்டுமே என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. பரம்பரைப் பிரபுக்கள் அங்கம் வகிக்கிறார்களென்றால், மன்னர் பிரானால் அவ்வப்பொழுது சிலர் பிரபுக்களாக்கப்படுகின்றனரே. அவர்களைப்பற்றி யென்ன என்று வாசகர்கள் கேட்கலாம். அவர்களும் லார்ட் சபையின் அங்கத்தினர்கள்தான். பிரபுவானதன் விளைவாக அங்கத்தினர்களாகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் அவர்களுடைய சந்ததியார் அங்கத்தினராகும் உரிமை பெறுகின்றனர். அதாவது, பரம்பரை பாத்தியங் கொண்டாடிக்கொண்டு அங்கத்தினராகின்றனர். Archbisop of Canterbury. Archbishop of York. Law Lords of Appeal in Ordinary. Lord Chairman of Committee. Right Hon’ble. Judicial Committee. Supreme Court.