வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 11 பாணபுரத்து வீரன் அபிமன்யு மனோ தருமம் உத்தியோகம் உலகம் பலவிதம் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 11 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+296=312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 195/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி பதிப்புரை ‘br‹¿Lå® v£L¤ â¡F«; fiy¢ bršt§fŸ ahî« bfhz®ªâ§F¢ nr®¥Õ®! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மை களை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் v பதிப்புரை ix நுழையுமுன் xi பாணபுரத்து வீரன் 1 நாந்தி 2 நாடக பாத்திரங்கள் 4 முதல் அங்கம் 5 முதற் களம் 5 இரண்டாம் அங்கம் 10 முதற்களம் 10 இரண்டாங் களம் 15 மூன்றாங் களம் 17 மூன்றாம் அங்கம் 20 முதற்களம் 20 இரண்டாங் களம் 27 மூன்றாங் களம் 29 நான்காம் அங்கம் 38 முதற் களம் 38 இரண்டாங் களம் 45 ஐந்தாம் அங்கம் 52 முதற் களம் 52 இரண்டாங் களம் 55 அபிமன்யு 61 முகவுரை 62 நாடக பாத்திரங்கள் 63 முதல் அங்கம் 65 முதற் களம் 65 இரண்டாவது களம். 68 மூன்றாவது களம் 72 நான்காவது களம் 77 இரண்டாம் அங்கம் 83 முதற் களம் 83 இரண்டாவது களம் 87 மூன்றாவது களம் 90 நான்காவது களம் 91 மூன்றாம் அங்கம் 98 முதற் களம் 98 இரண்டாவது களம் 98 மூன்றாவது களம் 101 நான்காவது களம் 103 மனோதருமம் 105 முகவுரை 106 நாடக பாத்திரங்கள் 107 முதலங்கம் 109 உத்தியோகம் 125 முன்னுரை 126 நாடக பாத்திரங்கள் 127 முதல் அங்கம் 129 முதற் களம் 129 இரண்டாங் களம் 135 மூன்றாங் களம் 140 நான்காங் களம் 144 ஐந்தாங் களம் 149 ஆறாங்களம் 154 ஏழாங்களம் 160 உலகம் பலவிதம் 163 பிரசுராலயத்தின் வார்த்தை 164 உலகம் பலவிதம் 165 முதற் களம் 165 இரண்டாவது களம் 173 மூன்றாவது களம் 176 நான்காவது களம் 177 நடுவிலே வந்த வாழ்வு 182 முதற் களம் 182 இரண்டாவது களம் 188 வேலை கிடைக்குமா? 192 முதற் களம் 192 இரண்டாவது களம் 194 மூன்றாவது களம் 198 நான்காவது களம் 201 ஆபத்திலே வேற்றுமை 202 முதற் களம் 202 இரண்டாவது களம் 206 பசிக்கொடுமை 209 முதற் களம் 209 இரண்டாவது களம் 212 மூன்றாவது களம் 216 கூப்பன் 218 சுகம் எங்கே? 221 முதற் களம் 221 இரண்டாவது களம் 223 மூன்றாவது களம் 224 போனகுடி வந்தது. 226 முதற் களம் 226 இரண்டாவது களம் 228 மூன்றாவது களம் 230 வாடகைக்கு இடம் 232 முதற் களம் 232 இரண்டாவது களம் 236 கடவுளும் வாழ்க்கையும் 241 முதற் களம் 241 இரண்டாவது களம் 243 மூன்றாவது களம் 245 சொல்லும் செயலும் 248 முதற் களம் 248 இரண்டாவது களம் 252 காந்தி தரிசனம்! 256 முதற் களம் 256 இரண்டாவது களம் 261 மூன்றாவது களம் 262 நான்காவது களம் 265 ஐந்தாவது களம் 267 தேர்தலுக்கு முந்தி 269 முதற் களம் 269 இரண்டாவது களம். 277 மூன்றாவது களம் 279 நான்காவது களம் 283 காலேஜ் படிப்பு 286 முதற் களம் 286 இரண்டாவது களம் 290 மூன்றாவது களம் 293 நுழையுமுன்...  படைப்பு இலக்கியமே நாடக இலக்கியம் ஆகும். மாந்த இனம் தோன்றியபொழுதே உணர்ச்சிகளும் தோன்றின. மொழி அறியாத மாந்தன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இன்பம் - துன்பம் கண்ட காலத்தும் தம்முடைய உணர்வு களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் விருப்பமாகவே ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுவே பின்னர் நாடகமாக செழுமையுற்றது.  அரசியல், வரலாறு, மொழிபெயர்ப்பு, அறிவியல் சார்ந்த நூல்களைத் தமிழுலகுக்குத் தம் பங்களிப்பாகச் செய்த சாமிநாத சர்மா இந்திய நாட்டின் விடுதலையையும், தமிழகத்தின் குமுகாயப் போக்கையும் நெஞ்சில் நிறுத்தி பாண புரத்து வீரன், அபிமன்யு, மனோதருமம், உத்தியோகம், உலகம் பலவிதம் போன்ற நாடகங்களைப் படைத் தளித்தார்.  மனோதத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடகம் மனோ தருமம் ஆகும். இதன் பின்னணியும், படைப் பாற்றாலும் நாடகத் திற்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஒரு பெண்ணின் மரணச் செய்தி அந்தக் குடும்பத்தாரிடம் பக்குவ மாக எடுத்துரைக்கப்படும் நிலையும், நுண்ணிய மனவுணர்வு களின் உரையாடல்களும் வாழ்க்கை நிலையற்றது என்பதும் இந்நாடகத்தின் மூலம் அறியும் செய்திகள்.  பழந்தமிழ் பண்பாட்டின் பண்டைச் சிறப்பும், மேலை நாகரிகத்தால் புண்ணாகிப் போன தமிழர் நிலையும், நாட்டின் நலனை மறந்து வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை பார்ப்பதும். நரம்பெழுந்து உலரிய . . (புறம்.278) என்னும் புறநானூற்று வரி உத்தியோகம் எனும் இந்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வரியாகும்.  பாரதக் கதையை தழுவி எழுதப்பட்ட நாடகமே அபிமன்யு. பழமைக்குப் புதுப்பொலிவூட்டும் நாடகம். பழய நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய செய்திகளுக்குப் புதிய ஆடை அணிவித்து, புத்துணர்ச்சியூட்டி தமிழர்களுக்குக் காட்சியாக அமைத்து தந்த நாடகமே அபிமன்யு.  செந்தமிழ் நாடெனும் போதினிலே. . .”, காவிரி தென் பெண்ணை பாலாறு . . ”., செல்வம் எத்தனையுண்டு. .”., என்னும் பாரதியின் இந்த வரிகள் இந்நாடகத்தைப் படிப்பார்க்கு தமிழ்மொழி, நாட்டுப்பற்றும், விடுதலை உணர்வும், வீர முழக்கமும் ஏற்படுத்தும்.  காட்லாந்து விடுதலைப் போராட்டக் கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு வழி நூலே பாணபுரத்து வீரன் என்னும் இந்நாடகப் படைப்பு. குறியீடுகளும், காட்சியமைப்பு களும், உரையாடல்களும் இந்தியத் தேசிய விடுதலையைக் களமாக வைத்து எழுதப்பட்டது.  ஆங்கில வல்லாண்மையின் சூழ்ச்சிகளையும், மக்கள் எழுச்சியையும் நடுவமாகக் கொண்டு விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்னும் வீர முழக்கங்களை மக்களுக்குக் கண்ணாடிப் போல் காட்டுவது. கணவரின் பிரிவும், தன்னை மறப்பினும் தாய் நாட்டை மறவாதீர் என்று கணவனை வேண்டும் வீரமகளின் குறிப்பு.  தமிழ் நாடக உலகில் முதன் முதலில் ஓரங்க நாடகத்திற்குப் பொன்னேர் பூட்டியவர் சாமிநாத சர்மா. உலகம் பலவிதம் என்னும் ஓரங்க நாடகம் குமுக வாழ்வில் மாறுபட்ட உணர்ச்சி களையும், வேற்றுமைகளையும், சுவையான நிகழ்ச்சிகளையும் படைத்துக் காட்டுவது.  அரசியல் - இலக்கியம் எனும் கருத்தோட்டத்தின் அழுத்தத்தை மீறி ஒரு நாடக ஆசிரியனாக இருந்துகொண்டு இந்திய விடுதலை யுணர்விற்கு ஊக்கம் ஊட்டியவர். நாட்டுப்பற்றும், குமுகாய ஒழுக்கமும் அமைந்த நாடகம். இரண்டாம் உலகப் போரின் காலச் சூழலில் வெளிவந்த நாடகம். இதில் பதின்மூன்று நாடகங்கள் அடங்கியுள்ளன. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் v பதிப்புரை ix நுழையுமுன் xi பாணபுரத்து வீரன் 1 நாந்தி 2 நாடக பாத்திரங்கள் 4 முதல் அங்கம் 5 முதற் களம் 5 இரண்டாம் அங்கம் 10 முதற்களம் 10 இரண்டாங் களம் 15 மூன்றாங் களம் 17 மூன்றாம் அங்கம் 20 முதற்களம் 20 இரண்டாங் களம் 27 மூன்றாங் களம் 29 நான்காம் அங்கம் 38 முதற் களம் 38 இரண்டாங் களம் 45 ஐந்தாம் அங்கம் 52 முதற் களம் 52 இரண்டாங் களம் 55 அபிமன்யு 61 முகவுரை 62 நாடக பாத்திரங்கள் 63 முதல் அங்கம் 65 முதற் களம் 65 இரண்டாவது களம். 68 மூன்றாவது களம் 72 நான்காவது களம் 77 இரண்டாம் அங்கம் 83 முதற் களம் 83 இரண்டாவது களம் 87 மூன்றாவது களம் 90 நான்காவது களம் 91 மூன்றாம் அங்கம் 98 முதற் களம் 98 இரண்டாவது களம் 98 மூன்றாவது களம் 101 நான்காவது களம் 103 மனோதருமம் 105 முகவுரை 106 நாடக பாத்திரங்கள் 107 முதலங்கம் 109 உத்தியோகம் 125 முன்னுரை 126 நாடக பாத்திரங்கள் 127 முதல் அங்கம் 129 முதற் களம் 129 இரண்டாங் களம் 135 மூன்றாங் களம் 140 நான்காங் களம் 144 ஐந்தாங் களம் 149 ஆறாங்களம் 154 ஏழாங்களம் 160 உலகம் பலவிதம் 163 பிரசுராலயத்தின் வார்த்தை 164 உலகம் பலவிதம் 165 முதற் களம் 165 இரண்டாவது களம் 173 மூன்றாவது களம் 176 நான்காவது களம் 177 நடுவிலே வந்த வாழ்வு 182 முதற் களம் 182 இரண்டாவது களம் 188 வேலை கிடைக்குமா? 192 முதற் களம் 192 இரண்டாவது களம் 194 மூன்றாவது களம் 198 நான்காவது களம் 201 ஆபத்திலே வேற்றுமை 202 முதற் களம் 202 இரண்டாவது களம் 206 பசிக்கொடுமை 209 முதற் களம் 209 இரண்டாவது களம் 212 மூன்றாவது களம் 216 கூப்பன் 218 சுகம் எங்கே? 221 முதற் களம் 221 இரண்டாவது களம் 223 மூன்றாவது களம் 224 போனகுடி வந்தது. 226 முதற் களம் 226 இரண்டாவது களம் 228 மூன்றாவது களம் 230 வாடகைக்கு இடம் 232 முதற் களம் 232 இரண்டாவது களம் 236 கடவுளும் வாழ்க்கையும் 241 முதற் களம் 241 இரண்டாவது களம் 243 மூன்றாவது களம் 245 சொல்லும் செயலும் 248 முதற் களம் 248 இரண்டாவது களம் 252 காந்தி தரிசனம்! 256 முதற் களம் 256 இரண்டாவது களம் 261 மூன்றாவது களம் 262 நான்காவது களம் 265 ஐந்தாவது களம் 267 தேர்தலுக்கு முந்தி 269 முதற் களம் 269 இரண்டாவது களம். 277 மூன்றாவது களம் 279 நான்காவது களம் 283 காலேஜ் படிப்பு 286 முதற் களம் 286 இரண்டாவது களம் 290 மூன்றாவது களம் 293 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி, புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய் மெய்ப்பு முனைவர் செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers) ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . பாணபுரத்து வீரன் நாந்தி சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மாதப் பத்திரிகை யொன்றை நான் படித்துக் கொண்டிருந்த காலத்து, காத்லாந்து தேசத்திற்கு நல்வாழ்வளித்த ராபர்ட் ப்ரூ என்பானைப் பற்றி ஒரு அழகியக் கட்டுரையைக் கண்டேன். இளமையில் இவனைப் பற்றிப் படித்திருந் தேனாயினும், இப்பத்திரிகையின் கண் பொலிந்த கட்டுரை என் மனத்தைக் கவர்ந்ததுமன்றி, தமிழில் அக்கதைப் போக்கைத் தழுவி மனத்தில் ஒரு நூல் எழுத வேண்டுமென்ற அவாவையும் எழுப்பியது. அதன் முடிவே இச்சிறிய நாடகம். நாடகாசிரியன், தோற்றத்துக்கும் நடிப்புக்கும் இயைந்த வாறு கதையை மாற்றிக் கொள்ளலாம் என்ற உரிமையை இந்நாடக விஷயத்தில் நன்கு அநுபவித்திருக்கிறேன். ஆதலின் இதனை வழி நூலாகக் கொள்க. இந்நாடகத்தை எழுத ஆரம்பித்த காலத்து இதனை ஒரே தொடக்கத்தில் எழுதி முடிக்க வேண்டுமென்று எண்ணங் கொண் டேன். ஆனால் அவ்வெண்ணத்தை அநுபவத்தில் நிறைவேற்ற முடியவில்லை. 1921ஆம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாந்தேதி தொடங்கி இந்நாடகத்தில் நான்கு களங்கள் வரை, தமிழ் நாட்டுக்குத் திலகமாயிலங்கி வரும் நவசக்தி என்னும் வாரப் பத்திரிகையில் நாடகாசிரியன் என்ற புனைபெயருடன் வெளி யிட்டு வந்தேன். பிறகு சில காரணங்களால் முற்றும் வெளிவராமல் நின்றுவிட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து, - 1924ஆம் வருஷத்தில்- மீண்டும் நவசக்தியில் இது முழுவதும் வெளியாயிற்று. அதனையே ஒருவாறு சீர்திருத்தி புத்தக வடிவாக இதுகாலை வெளியிட்டிருக் கிறேன். இதற்கு மகிழ்ச்சியுடன் அங்கீகாரம் தந்த நவசக்தி ஆசிரியருக்கு எனது வந்தனங்கள் உரியன. இதனை வெளியிட இசைந்த எனது நண்பர், எ. ராதா அண்ட் கம்பெனியின் சொந்தக்காரரான ஸ்ரீமான் அ.கோ. சீநிவாசா சாரியாருக்கு வந்தனம். இந்நூலின் இரண்டு பதிப்புகளை மாத்திரம் அச்சிட்டுக் கொள்ள அவருக்கு உரிமை அளித்திருக்கிறேன். இந்நூலைச் சார்ந்த பிற உரிமைகள் யாவும் என்னுடையனவே. முதற் பதிப்புப் பிரதிகள் முடிந்ததும் இரண்டாம் பதிப்பை வெளியிடும் போது என் அங்கீகாரத்தைப் பெற்றுப் பின்னர் வெளியிடுவதற்கு அவர் இசைந்திருக்கிறார். அடியேனது வேண்டுகோளுக்கிணங்கி, புன்மொழிகளாலாய இந்நூலுக்குச் சிறந்த ஒரு முன்னுரை உதவிய தமிழ்நாட்டுக் கவியரசியாக இலங்கும் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் அவர்கட்கு எனது வணக்கங்களைச் செலுத்துகிறேன். அம்மை யாருடைய காந்தி புராணத்தைப் படித்து ஈண்டு வரையமுடியாத ஓர் உணர்ச்சியைப் பல்கால் அடைந்திருக்கிறேன். கவியரசி என்பதைத் தவிர வேறெவ்வித அடை மொழியையும் அம்மை யார்க்கு இங்கு அடியேன் அளிக்க வில்லை. அவரை அதிகமாகப் புகழ நான் அருகனல்லேன் என்பதே அதற்குக் காரணம். கவிஞரைச் சிறப்பிக்கக் கவிஞரே உரியர். அங்ஙனமிருக்கும் போது, புல்லனேன், பண்டிதையார்க்கு எங்ஙனம் நன்றி செலுத்த வல்லேன்? உள்ளம் நிறைந்த அன்பினனேனும், அதை வாயால் எடுத்துரைக்கவும் கரத்தால் வரையவும் கூர்த்த மதி கொண்டிலேன். எனது உள்ளத்தில் பொங்கியெழும் அன்புவாரத்தை என் அன்னை போன்ற இவ் வம்மையாருடைய திருவடிகளுக்கு அபிஷேகம் செய்கிறேன். சக்தி வடிவாயிலங்கும் பெண் மக்களுக்கு எல்லா நலன்களும், எல்லா உரிமைகளும் அளிக்க வேண்டுமென்றே கொள்கையுடைய அடியனேன் வரைந்த இச்சிறு நூல் ஒரு சக்தி சொரூபியின் ஆசிபெற்று வெளிவருவது எனக்குக் கழிபேருவகை கொடுக்கிறது. இஃதெனது பாக்கியமேயாகும். தண்டமிழ்த் தேவிக்கும் பாரத மாதாவுக்கும், ஸ்ரீமதி பண்டிதையார், இன்னும் பல பாமாலைகள் சூட்டுவதற்குப் போதிய திடனையும் நீடிய ஆயுளையும் ஆண்டவன் அவர்க்கு அருள வேண்டுமென்றே பிராத்தனை யுடன் இதனை நிறுத்திக் கொள்கிறேன். இந்நூல் எழுதப்பட்ட காலத்தும், அச்சான காலத்தும் என்னைப் பலவாறு ஊக்கியும் வேறு பல உதவிகளைப் புரிந்தும் வந்த ஸ்ரீமதி மங்களதேவிக்குப் பெரிதும் நன்றி பாராட்டுகிறேன். ஓய்ந்த வேளைகளில் அவ்வப்பொழுது சிறு சிறு பகுதியாக எழுதி முடிந்த இந்நாடகத்தில் பல குற்றங்கள் செறிந்திருக்கக் கூடும். அவைகளுக்காக என்னை மன்னிக்குமாறு எங்ஙனம் கேட்பேன்? கல்லாப் பிழையும். . . எல்லாப் பிழையும் பொறுத்தருளுமாறு தமிழ் நாட்டாரைக் கேட்டுக் கொள்கிறேன் மயிலாப்பூர், இரக்தாட்சி வருடம் புரட்டாசி மாதம் 15. 30 - 9 - 1924. நாடக பாத்திரங்கள் வாலீசன் - பாணபுரத்தின் தலைவனாயிருந்து தண்டிக்கப்பட்டவன். புரேசன் - அவன் பின் வந்தோன்; பாணபுரத்து வீரன். (நாடகத் தலைவன்) நாகநாதன் - புரேசன் நண்பன். அதிரதன் - ஈசானபுரத்தரசன். துருபதன் - அதிரதனின் மந்திரி. சேம வீரன் - அதிரதனால் ஆதரிக்கப்பட்டவன். விதிப்பிரபு - வாலீசனைத் தண்டித்த நீதிபதி. சுதர்மை - புரேசன் மனைவி. (நாடகத் தலைவி) அனலை - சுதர்மையின் சிறுபெண். மற்றும் ஆதானிகர், சிறைக்காவலாளர், சேவகர், வீரர், தூதர் முதலியோர். நாடக நிகழ்விடம் : ஈசானபுரத்திலும் பாணபுரத்திலும் கடம்ப வனத்திலுமாம். முதல் அங்கம் முதற் களம் இடம் : ஈசானபுரத்தில் நியாயதலம் காலம் : நண்பகல். (விதிப்பிரபு என்னும் நியாயாதிபதி ஓருயர்ந்த ஆசனத்தில் அமர்ந் திருக்கிறார். வாலீசன், தலையில் பச்சிலைகளா லாக்கப்பட்ட ஒரு கிரீடம் தரிக்கப்பட்டு ஒரு தனி இடத்தில் நிற்க வைக்கப்பட்டிருக் கிறான். நியாயதலத்தின் இரு புறத்திலும் வீரர்கள் வாளேந்திய கையர்களாய் ஒழுங்காக நிற்கின்றார்கள். நியாயவாதிகள் அமர்ந் திருக்கிறார்கள்.) விதிப்பிரபு : (வாலீசனை நோக்கி) நீ கூற வேண்டியது ஏதேனு முண்டோ? வாலீசன்: இவ்வுலகம் மனிதரால் ஆக்கப்பட்டதன்று; கடவுளால் படைக்கப்பட்டது. ஆதலின், இப்புவியை இருப்பிடமாகக் கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை யுண்டு. ஏழைகளை யும், தேசாபிமானிகளையும், பர நலத்துக்கு உழைப்பதே பிறவிப் பயனென எண்ணி ஒழுகுபவர்களையும் இவ்வுலகத்தினின்றும் ஓட்டிவிட கடவுள் உத்தரவு செய்யவில்லை. ஈசனின் அருள் வழி நின்று மக்களுக்கு உபகாரமாய் நீதி நூற்களை வகுத்த எவரும் அங்ஙனம் கூறினாரில்லை. யான் செய்த குற்றந்தான் யாது? எவரை யேனும் அநியாயமாகக் கொலை செய்தேனோ? பெண்டிரை யேனும், பாலரையேனும், முதியரை யேனும் ஆற்றொணா அல்லற்குட்படுத்தினேனோ? அரசர் பெருமானுக்கு விரோதமாக ஏதேனும் சூழ்ச்சிகள் செய்தேனோ? வேந்தர்க்கு விரோதமாக ஜனங்களைத் தூண்டி விட்டேனோ? வேறென்ன குற்றஞ் செய்தேன்? இங்ஙனம் பலர் பார்த்து நகைக்கும் வண்ணம் நீதி தலத்திற்குக் கொண்டுவரும் பெருங் குற்றம் என்ன செய்தேன்? என் நாவறிய, உள்ளமறிய, கரணங்களறிய எவ்விதமான குற்றத்தையும் நான் செய்ததில்லையென்று தங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஆனால், - ஆனால் என்ற மொழியைக் கண்டு நீங்கள் ஆறுதலடைய வேண்டாம் - ஆனால், யான் என் தாய் நாட்டின் மீது அதிக பற்றுள்ளங் கொண் டிருந்தேன் என்பதுண்மை. அப்பற்றுள்ளம் ஒரு குற்றமாயின், அக் குற்றத்தின் பயனாக ஏற்படும் தண்டனைகளுக்கு நான் உட்படு கிறேன். தேசாபிமானி என்று கூறி எனக்குத் தாங்கள் தண்டனை விதிப்பின், அதனைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளச் சித்தமா யிருக்கிறேன். என் நாட்டின் பொருட்டு என் உயிரைக் கொடுக்க ஒரு சிறிதும் பின் வாங்க மாட்டேன். தான் பிறந்த நாட்டின் மீது அபிமானங் கொள்ளாதிருப்பவன் ஒரு மானவனோ? தன் ஜன்ம பூமி சீர்கெட்டுப் போயிருப்பின், அதனைத் திருத்தியமைக்க முயற்சிகள் செய்யாதவன் ஒரு மானியோ? உடலெனும் வீட்டில் தேசபக்தியெனும் சுடர்விட்டெரியா விட்டால் அவ்வுடல் இருள்மயமான இல்லத்திற்கு ஒப்பாகும். இருளிடங்களில் பாம்பும் தேளும் வசிப்பது போல தேசபக்தி யில்லாதவனிடத்தில் வஞ்சம், பொய், சூது, பொறாமை முதலிய தீக்குணங்கள் குடிகொண்டிருக்கும் என்பது நிச்சயம், தேசாபி மானம் எனும் ஒரு சோதி இருப்பின் அரியேனும் அரவேனும் அவனிடத்தில் வந்தணுகா. யான் செய்த குற்றமெல்லாம் யான் கொண்டிருந்த தேசபக்தியேயாயின், அக்குற்றத்திற்காக நான் தண்டிக்கப்படுவேனாயின், அத்தண்டனையினின்றும் விடுதலை யான பின் மறுபடியும் அக்குற்றத்தையே யான் செய்வேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும். என் தாய் நாட்டின் நிலையை நினைக்கின், அந்தோ! என் மெய் விதிர்ப்புறுகின்றது; உள்ளம் குழம்புகின்றது; இரத்தம் கொதிக்கின்றது. நீதியை நெறியாக நடத்தும் விதிப்பிரபு! என் நாட்டின் கதியை நீவிர் சிறிதளவேனும் அறிந்திருப்பீராயின் என்னை இங்ஙனம் உங்கள் முன்னிலையில் நிறுத்திக்கொள்ளச் சம்மதிக்க மாட்டீர். எனது பாணபுரம் சிறிய தேசம்; சிறிய நாடேயாயினும், பல்லாயிரம் ஆண்டுகள் பிறர் வயப்படாமல் சுதந்திரமாகவே இருந்தது. ஆனால் சில்லாண்டுகளுக்கு முன்னர் அதிரத அரசர் பாண புரத்தைத் தம் வசமாக்கிக் கொண்டார். அது நல் வினைக்கோ தீவினைக்கோ என்பதை யான் ஈண்டுக் கூறப் போவ தில்லை. அவருடைய ஆட்சியின் கீழ் என் நாட்டினர் படுந்துன்பம் அளவிடற் பாலதன்று. அத்துன்பங்களை ஒழிக்கவே யான் பிரயத்தனப் பட்டேன். அதுவே அடியேன் செய்த குற்றம் போலும்! எதிர்க் கட்சி நியாய வாதி நான் இராஜத்துரோகி யென்று கூறினார். இராஜத் துரோகி என்ற மொழிக்கு எப் பொருள் கொண்டு அவர் அங்ஙனம் கூறினாரோ தெரிய வில்லை. யான் என் நாட்டை நேசித்ததுண்மை; என் நாட்டின ருடைய துன்பங்களை நீக்க முயன்றதுண்மை; என் சகோதரர் களை உயர் நிலைக்குக் கொண்டு வரப் பல்வகையாலும் பிரயத்தனப்பட்ட துண்மை. ஆனால், அதிரத அரசருக்கு விரோதமாக யான் எவ்விதமான சூழ்ச்சி களையும் செய்ய வில்லை. அதிரத அரசருக்கு எவ்வாறானும் யான் துரோகம் செய்யவில்லை. அங்ஙனமிருக்க என்னை எங்ஙனம் இராஜத் துரோகி என்றழைத்தல் கூடும்? ஆனால் தேசத்துரோகி யென்று என்னைக் குற்றஞ் சாட்டாமல் இராஜத்துரோகி என்று என்னைக் குற்றஞ் சாட்டிய தற்கு ஒருவாறு சந்தோஷ மடை கிறேன். இராஜத்துரோகம் என்னும் மொழி இப்பொழுது பொருளின்றி உபயோகிக்கப்படுகிறதென நான் நினைக்கிறேன். என் தேசத்தார் எவரும் என்னைத் தேசத்துரோகி யென்று அழைக்கவில்லை. அதற்கு நான் பெரிதும் சந்தோஷப்படு கிறேன். ஒருவனைத் தேசத்துரோகியென் றழைக்கத் தேசத் தாருக்கும் இராஜத் துரோகியென் றழைக்க அரசரின் பிரதி நிதிகளுக்குமே உரிமையுண்டு. யான் அதிரத அரசரை ஒரே ஒருமுறைதான் யுத்த களத்தில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பினால் யான் அவருக்கு எங்ஙனம் துரோகம் செய்துவிட்டேன் என்பது எனக்கே விளங்க வில்லை. யுத்த களத்தில் என்னுடைய சேனை தோற்றுப் போக, அதனை ஆதாரமாகக் கொண்டு என்னைச் சிறை பிடித்து, இராஜத் துரோகக் குற்றஞ் சாட்டி இங்ஙனம் அவமானப்படுத்துதல், இதற்குமுன் எந்த நாட்டிலும் எவருக்கும் நடந்திரா தென்று நினைக்கிறேன். யுத்த களத்தில் தோற்ற வீரரை மரியாதையுடன் நடத்தல் உத்தம அரசரின் இலக்கணம். போற்றார்ப் பொறுத் தலே நெறியுடை மன்னர் கடன். போற்றாரை ஒறுத்தல் வீரத்தை ஒறுத்தற் போலாம். ஆனால், நான் அரசரைப் பகைவராகக் கொள்ளவில்லை. அவர் மாத்திரம் என்னைப் பகைவராகக் கொண்டிருக்கிறார்! அஃதென் குற்ற மல்ல. (பொறுத்து) நியாயாதிபதியவர்களே! யான் அதிகமாக இனி ஒன்றும் கூறப் போவதில்லை. எனக்கு நீங்கள் விதிக்கும் தண்டனையைத் தைரியத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். என் தாய் நாட்டின் பொருட்டு இறக்க நேரிடுவது எனக்குப் பெருமகிழ்ச்சியை யூட்டுகிறது. ஆனால், என்னுடைய தாய் நாட்டைப் பற்றி நினைக்கச் சிறிது காலங் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். (நியாயாதிபதி தலையசைக்கிறார்) தாயே! (பாணபுரத்தின் படம் நீதிதலத்தின் சுவரில் மாட்டப் பட்டிருப்பதைக் கண்டு) இதோ, என் அன்னை ஈண்டு வீற்றிருக் கிறாள். அம்மணி! உமது பாதார விந்தங்களுக்கு ஒரு கோடி நமகாரம். உமது முன்னேற்றத்தின் பொருட்டு என் உயிரைப் பலிகொடுக்கிறேன், அதனை அன்புடன் ஏற்றுக் கொள்வீராக. யான், உம்முடைய உதரத்தில் தோன்றி, உம்மை நன்னிலைக்குக் கொண்டு வர முயன்று, உம் பொருட்டே உயிர் விடுகின்றேன். யான் அந்நியரை யறியேன்; உம் மொருவரையே அறிவேன். நீவிர் அதிரத அரசரால் படாத பாடுபடுகின்றீர். இதனை அவருடைய நியாய தலத்திலேயே கூறுகின்றேன். உம்மைத் துன்பங்களி னின்றும் விடுதலை செய்ய எவ்வளவோ முயன்றேன். ஆனால் என் முயற்சிகள் விரைவில் பயனளிக்க வில்லை. யான் வானுலகு செல்லினும் உம் நலத்தையே கோரிக் கொண்டிருப்பேன். இந்தப் பூத உடல் வீழ்ந்த போதிலும், இந்த ஊனக்கண்ணும் பீளை மூக்கும் உலக்கைக் கைகளும் பிறவும் வெந்தணலில் வெந்துபோன போதிலும் என் ஆத்மா உமது திருவடிகளை என்றும் பூசித்து வரும். நீங்கள் உயர்ந்த நிலையையடையா வரை, உமது மேனி மெருகிடப்படாதவரை, உமது வயிற்றில் உத்தம புத்திரர்கள் தோன்றாதவரை, கடலெனும் ஆடை யுடுத்து நறுமலர் கொண்ட குன்றமெனும் கூந்தல்வாரி நதியெனும் ஆரம் அணிந்து தாளாண்மை வேளாண்மை யெனும் இருகண்கள் கொண்டு உலகத்தை உயிரெனக் கொண்ட மன்னனெனும் திலகமணிந்து தாங்கள் தங்கள் மக்களுக்குத் தரிசனம் தராதவரை இந்த ஜீவன் உமது சரணங்களில் துடித்துக் கொண்டே யிருக்கும். ஆண்டவன் சந்நிதியில் யான் இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற போதிலும், அதனைவிடத் தங்கள் முன்னிலையில் தங்கள் பொருட்டுத் துன்புற்றிருப்பதே பெரிதெனக் கருதுவேன், இச் சுவைதவிர அச்சுவை வேண்டேன். யான் இப்பொழுது இறப்பதைக் குறித்து ஒரு சிறிதும் வருத்த மடையவில்லை. என் பெண்டிரும் மக்களும் உறவின் முறை யாரும் என் பிரிவாற்றாமையால் கூவிக் கூவி அழுவார்களே என்று மனங் கலங்கவில்லை. என்னை, உமக்குத் தொண்டு புரிந்து கொண்டிருந்த இச்சிறியனைக் கொலை செய்த பிறகு, என் கொலைக்குக் காரணர் பாவத்திற்குட்படுவரே என்று துக்கிக்கவில்லை. ஆனால், அன்னாய்! உம் பொருட்டே யான் விசனிக்கின்றேன். யானிறந்த பிறகு என் போன்ற புத்திரர் பலர் தோன்றாமற் போயின் அப்பொழுது நீங்கள் எவ்வளவு கஷ்டப் படுவீர்கள்? அதை நினைத்தே இப்பொழுது நான் அழுகின் றேன். உம் நிலையை நினைக்க நினைக்க என் உள்ளமெனும் பாறை உருகி உருகி உம்மடியின் கீழ்ச் சரணடைகின்றது. ஈசானபுரத்து மக்கள் உம்மை எவ்வாறு ஆதரித்த போதிலும் நீவீர் திருப்தியடைவீரோ? திருப்தியடைய மாட்டீரே! உங்களை நினைத்த மாத்திரத்தில், இந்த உயிரை எங்ஙனமாவது காப் பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் போகின்றது. ஆனால், நீதியும் நெறியும் சத்தியமும் தருமமும் அஞ்சாமையும் என்னைத் தடுக்கின்றன. அஞ்சா நெஞ்சு கொண்ட அடியேன், குற்றமறி யாத உளத்தனான அடியேன், உம் பொருட்டு இந்த நியாயாதி பதியின் கட்டளையை ஏற்றுக்கொள் கிறேன். உம்மை, என்னைப் பெற்றெடுத்த உம்மை, இப்பிறவியிலேனும் மறு பிறவியிலேனும் இன்னும் ஏழேழு பிறவிகளிலேனும் மறவேன். சத்தியம். சத்தியம். விதிப்பிரபு! இனித் தாங்கள் எனக்குத் தண்டனை விதிக்கலாம். விதிப்பிரபு : என்னுடைய கடமையை நான் செய்து விடுகிறேன். வாலீசன், இராஜத்துரோகக் குற்றஞ் செய்ததாகப் பல்வகைச் சாட்சிகளால் புலப்படுதலானும், தற்போது நமது நாடுள்ள தன்மையை நோக்கியும், அவனுக்கு மரண தண்டனை விதிக் கிறேன். (நியாயாதிபதி உடனே செல்கிறார்) காவலாளர்: (வாலீசனை நோக்கி) வம்மின் ஐய! (கைபிடித்திழுத்துச் செல்கின்றனர்.) வாலீசன் : (செல்லும் போது) தேசாபிமானம்! - மரண தண்டனை ! எவ்வளவு நெருங்கிய சம்பந்தம்! இரண்டாம் அங்கம் முதற்களம் இடம் : பாணபுரம் காலம் : காலை (புரேசனும் நாகநாதனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.) புரேசன் : நண்பனே! உண்மையில் கூறுகிறேன். என் நாட்டின் நிலையை நினைக்கின் - இதோ என் உள்ளத்தைத் தொட்டுப் பார். என் உணர்ச்சியை வாயால் அளந்து கூற முடியவில்லை. நாகநாதன் : உண்மை. எத்தகைய இழிஞனுக்கும் நாட்டுணர்ச்சி இருக்கும். வாலீசனிடத்தில் பழகி அவனால் பெரிதும் பாராட்டப் பட்டு வந்த உனக்குத் தேச உணர்ச்சி இராமலிருக்குமோ? ஆயினும் சிறிது அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டு மென்றே நான் கேட்டுக் கொள்கிறேன். புரே : ஆனால், கலகம் விளைவித்து நாட்டில் குழப்பம் உண்டாக்க வேண்டுமென்று கூறுகின்றேனோ? ஒருகாலுமில்லை. கலகச் சூழ்ச்சியி னாலும், குழப்பப் பெருக்கத்தாலும் நம் நாடு முன்னேற்ற மடையாது; எந்த நாடும் முன்னேற்ற மடைந்ததாகச் சரித்திரங் கூறவில்லை. நியாய வரம்புக்குட்பட்ட காரியங்களை நாம் செய்து கொண்டு போனால், ஈசன் நமக்குத் துணையாய் இருப்பான் என்பது நிச்சயம். நான் கூறுவதெல்லாம் யாதெனில், நியாயத்திற்குக் கட்டுப் பட்டுள்ள சுதந்திரங்களை நாம் ஏன் அநுபவித்தல் கூடாதென்பதே யாம். அதிரத அரசரின் சிறு கருணையால் அளிக்கப் பட்டிருக்கும் இச்சிறிய சுதந்திரத்தை அநுபவிக்கவும் நம்மவரிற் சிலர் பின்னடை கின்றனர். அஃதேன் என்பதே என் கேள்வி. நாக : அஃது அவரவருடைய மனத்தின் தன்மையைப் பொறுத் திருக்கலாம். புரே : மனமாவது? தன்மையாவது? அவர்களுக்கு மனமேயில்லை யென்று நான் கூறுவேன். அவர்களை நான் மனமிலிகள், அறிவிலிகள் என்று அழைப்பேன். நாக : உன்னுடைய கோரிக்கைகளுக்கு அவர்கள் இணங்காமலிருத் தலினாலேயே அவர்கள் அறிவிலிகளோ? அங்ஙனம் கூறுவதைச் சிலர் சம்மதிக்க மாட்டார். புரே : ஏன்? யான் தவறாகக் கூறவில்லை. அவர்கள் - அவ் வறிவிலி கள் - நாட்டின் நலத்தை நாடவில்லை. நாட்டின் நன்மையை விரும்பாமற் போனபோதிலும், நாட்டைச் சத்துருக்களுக்குக் காட்டிக் கொடா மலிருந்தால் போதும். அதுவும் இல்லை. ஒன்றும் செய்யாமல் பேசாம லேனும் இருக்கிறார்களா? அதுவும் இல்லை. மேலும் செல்கிறார்கள்; கீழும் இறங்குகிறார்கள். அவர்களை நாம் என் செய்வது? நாக : அவர்களை நாம் ஏன் கவனிக்க வேண்டும்? புரே : கவனியாமல் விட்டுவிட்டால் நம் நாடு அதோகதிதான். அவர்கள் அதிரத அரசருக்கும் இச்சகமாகப் பேசுவார்கள்; ஜனங்களிடத்தும் வந்து, உங்களுக்கு நன்மை செய்யவே நாங்கள் பிறந்திருக்கிறோம் என்று கூறுவார்கள். கடைசியில் அவர்க ளுடைய செய்கையை ஆராய்ந்து பார்ப்போமாயின் சுயநல மாகவே வந்து முடியும். நாம் இச்சிறு கூட்டத்தாரைக் கவனி யாது விடுவோமாயின், ஜனங்கள் இவருடைய கூற்றை நம்பி மோசம் போவார்கள். ஆகையால்தான் இக்கூட்டத்தாரின் செல் வாக்கைக் குறைக்க வேண்டுமென்று நான் கூறுகிறேன். நாக : உன்னுடைய கோரிக்கைகளில் எனக்கு மிக்க அநுதாபமுண்டு. ஆனால் நீ இப்பொழுது எக்கூட்டத்தாரைப் பற்றிக் குறை கூறு கின்றனையோ அக்கூட்டத்தார் நம் நாட்டவரே என்பதையும் அதனால் அவர்கள் நம் சகோதரர்களே என்பதையும் நீ நன்குணர்தல் வேண்டும். புரே : அவர்கள் நம்மவர்களானது பற்றித்தான் நான் அவர்கள் பொருட்டு இரங்குகின்றேன். அவர்கள் நம் நாட்டிலேயே பிறந்து, நம் நாட்டிலேயே வளர்ந்து நம் நாட்டிலேயே தம் வாழ்க்கைக்குரிய சாதனங் களைப் பெற்றுக்கொண்டு, கடைசி யில், நம் நாட்டின் நன்மையை விரும்பாமலிருக்கின்றார்கள். அதைக் குறித்தே நான் பெரிதும் விசனிக்கின்றேன். (பொறுத்து) நாகநாதா! நம் நாட்டின் தற்போழ்துள்ள நிலையை இப் பொழுது நீ அறிந்திருக்கின்றனையோ? அந்தோ! அதை யெடுத்துக் கூறவும் என் வாய் கூசுகின்றது. நண்பனே! நம் நாட்டுப் பூர்வ சரித்திரத்தை நீ படித்திருக் கின்றனையா? அப் பொழுது நம் நாட்டில் கல்விமகளும் செல்வமகளும் நெருங்கிய உறவு கொண்டு நாட்டியம் புரிந்து வந்தார்கள். அரசன் ஆணைக் கஞ்சி வருணன் தன் கருணை மாரியைப் பொழிந்து கொண்டிருந்தான். ஊர்வனவும், பறப்பனவும், நடப்பனவும் இன்புற்று வாழ்ந்து வந்தன. நம் பெரியோர் அறநெறிப்பட்டு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் தத்தமக் குரிய கடன்களைச் செவ்வனே நிறைவேற்றி வந்தனர், வியாபாரம் செழித்திருந்தது. கைத் தொழில் நித்தியம் போற்றப் பட்டு வந்தது. காமனை வென்ற காளையர் கடல் மீது கலஞ் செலுத்திப் பிறநாடுகளில் பண்ட மாற்றல் செய்துவந்தார். பிற நாட்டரசர் நம் நாட்டு வேந்தரைப் போற்றி வந்தனர். அக்காலத் தில் பிச்சைக் காரரைக் காண்டல் அருமையா யிருந்தது. ஒரு புலவர், நம் நாட்டு வளப்பத்தைக் குறிக்குங் காலத்தில், இந்நாட்டில் வலிமையென்பதே மாந்தருக்கில்லை, இப்பெரும் பதி வாழ்வார் உலோபிகளாகவே இருக்கின்றார் என்பன போன்ற பிரயோகங் களை வேடிக்கையாக உபயோகிக்கின்றார். இப்பிரயோகங் களின் பொருளென்னை? இந்நாட்டிலுள்ளார்க்கு வலிமையே இல்லை யென்றால் சத்துருவே கிடையாதென்றும், உலோகபிக ளல்லாதாரைக் காண்டல் அருமையெனின் தரித் திரரே இல்லையென்றும் பொருள் கூறுவர் புலவர். இங்ஙனமே நம் நாட்டுப் பண்டைப் பெருமையை எத்தனை இரவுகள் வேண்டு மானாலும் கூறிக் கொண்டு செல்வேன். இப் பொழுது நம் நாட்டின் நிலையைச் சிறிது யோசித்துப்பார். அதிரத ருடைய ஆட்சியில் நம் நாடு மெலிவடைந்து கொண்டே வரு கிறது. நம் நாடு மிகச் சிறிய நாடு. இதில் எண்ணிறந்த நோய்கள் தலைவிரித் தாடுகின்றன. ஏழை மக்களின் தொகை பெருகிக் கொண்டு வருகிறது. நம் நாட்டை அண்டை நாட்டுப் படைகள் காத்துக் கொண்டி ருக்கின்றன. பாணபுரத்துச் சேனை புதைந்து புல்லும் முளைத்துப் போயிற்று. நம் நாட்டு மக்களின் வீரம் குன்றப் பட்டுப் போய்விட்டது. நோயும், வறுமையும், கொடுமையும் அதிகரித்துப் போகவே, கலைமகளும் அவள் மாமியும் வேற்றுமைப் பட்டு வேற்று நாடுகளுக்கு ஓடி விட்டனர். நமது வியாபாரத் துறை தூர்ந்து போயிற்று. கைத் தொழில் செத்தது. அண்டை நாட்டரசரின் ஆட்சியால் நாம் சொல்லொணாத் துன்பங்களை அநுபவித்து வருகின்றோம். இவைகளைக் கண்ட எந்தச் சண்டாளனுக்கும் பாணபுரத்தின் மீது இரக்கம் பிறக்கும், ஆனால் நம் நாட்டுச் சகோதரிற் சிலர் இவைகளைப் பொருட் படுத்தாது தம் சுயநலத்தைக் கருதி வாளா காலங்கழிப்பது மன்றி நம் தாய் நாட்டிற்குத் தீங்கு செய்யவும் துணிகிறார். (புரேசனின் எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒரு கனவான் பிரவேசிக் கிறார்.) கனவான் : யார் மீது அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது? நாக : எல்லாம் உங்கள் மீதுதான். கன : நாங்கள்தான் புரேசருடைய கையில் அகப்பட்டு விழிக் கின்றோம். புரே : என்னிடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிப்பானேன்? அதிரத மஹாராஜருடைய தயவு இருக்கும் போது நீங்கள் யாரிடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்க வேண்டும்? கன : புரேசரே! உங்களுடைய தேசபக்தியை நான் மெச்சுகிறேன், நீங்கள் தேச முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதை நான் பாராட்டு கிறேன். ஆனால் நீங்கள் வழங்கும் உரைகள் மாத்திரம் மிக்க கடுமையாயிருக் கின்றன. அதனையே நானும் என் சார்பாரும் வெறுக்கின்றோம். புரே : நீங்கள் எதைத்தான் வெறுக்கவில்லை? என்னை வெறுக் கிறீர்கள்; என் கூட்டத்தாரை வெறுக்கிறீர்கள்; என் பேச்சுக் களையும் வெறுக்கிறீர்கள். என் தாய் நாட்டை வெறுக்கிறீர்கள். அதிரத அரசரைத் தவிர உங்களால் வெறுக்கப்படாத வதும் இவ்வுலகில் உண்டோ? உங்களால் வேண்டப்படுவது அரச ருடையவும் அவரைச் சார்ந்தோரு டையவும் தயவு. அஃது உங்களுக்குப் பூரணமாகக் கிடைத்துவிட்டால் மற்றவைகளின் மீது உங்கள் கவனம் ஏன் செல்ல வேண்டும்? ஐயா! நீங்கள் - நீங்கள் எனின் உங்களைக் குறித்து நான் கூறவில்லை; உங்கள் கூட்டத்தாரைப் பொதுவாகக் கூறுகிறேன். - உத்தம தேசாபி மானிகளாக இருக்கலாம்; சீமான்களாக இருக்கலாம்; அறிஞர் களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யுந் தேசத் தொண்டு என் போலியரால் வெறுக்கப் படுகின்றன. நீங்கள் இத்தகைய தேசத் தொண்டு செய்யாமல் வாளா கிடப்பின், உங்கள் பாதங்களுக்கு மாத்திரமல்ல உங்கள் சந்ததியார் அனைவருக்கும் என் கூட்டத்தாரின் பொருட்டு நான் வந்தனஞ் செய்வேன். கன : புரேசரே! நீர் இளைஞர். இன்னும் அதிக அநுபவம் வேண்டும், தேசத்தின் நிலையையும், ஜனங்களின் தன்மையையும், அர சாட்சியின் அமைப்பையும் நீங்கள் இன்னும் நன்கு அறிய வில்லை. நாங்கள் சென்ற ஐம்பது வருஷ காலமாகத் தேசத் தொண்டு செய்து வருகிறோம். நாங்கள் அறியாததை நீங்கள் ஒன்றும் புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை. எங்கள் வார்த்தை யைப் பின்பற்றி நடந்தால், உங்களுக்கும் நமது நாட்டிற்கும் க்ஷேமம் உண்டு என்பதை மாத்திரம் தெரிவிக்கிறேன். இச் சமயத்தில் உங்களுடன் பேசுவது தகாது. நீங்கள் அதிகக் கோபத் துடன் இருக்கிறீர்கள். ஆதலால் மற்றொரு முறை உங்களுடன் இதைப் பற்றிப் பேசுகிறேன். (செல்கிறார்.) புரே : கிழப் பிணங்கள்! பாப ஜன்மங்கள்! புதிய உயிர் இல்லை. புதிய உணர்ச்சி இல்லை. இவர்களாலேயே நம் தேசம் கெட்டு விடு கின்றது. நாக : பெரியவர்களின் மனம் புண்படாதிருக்குமாறு நாம் வேலை செய்ய வேண்டும். அஃதொன்றையே நான் கூறக் கூடும். (ஈசனாபுரத்துச் சேவகனொருவன் பிரவேசிக்கிறான்.) சேவகன் : (ஒரு கடிதத்தைப் புரேசனிடம் கொடுத்து) அரசரின் ஆக்ஞை. புரே : அதிரத அரசரா? எந்த மூலையில் எந்த நட்சத்திரம் மாறி விட்டது! (அக்கடிதத்தை வாங்கிப்படித்து ஆச்சரியத்துடன்) நாகநாதா! இஃதென்ன நற்காலம்! இந்தக் கடிதத்தைப் பார். நாக : அதிரத அரசர் நம்மை அழைத்திருக்கிறார். (சேவகனைப் பார்த்து) நீ செல். கடிதத்தைச் சேர்ப்பித்து விட்டதாக அரசரிடத்தில் சொல்லிவிடு. (சேவகன் செல்கிறான்.) புரே : கடிதத்திற்கு நீ என்ன பதில் கூறப்போகின்றாய்? நாக : இணங்க வேண்டிய தவசியமே. புரே : இங்ஙனம் இணங்க என் மனம் ஒருப்படவில்லை. வாலீசர் இங்கு இல்லை. யுத்தம் முடிந்த பிறகு சாத்தியப்பட்டால் ஈசான புரத்திற்குச் சென்று இரகசியமாக அந்நாட்டின் நிலையை அறிந்துகொண்டு வருவதாகக் கூறினார். இந்தச் சமயத்தில் நாம் பாணபுரத்தை விட்டு அகல்வது சரியானது என்று நினைக்கி றாயா? மேலும் நம் நாட்டை நலிவு படுத்திக் கொண்டிருக்கும் அரசனிடத்தில் நாம் எங்ஙனம் செல்வது? நாக : நாம் சென்று அவர் தவறைத் திருத்த வேண்டும். அதுவே ஆண் தன்மைக்கு அழகு. துஷ்டன் என்று தூர விலகி விட்டால் அத்துஷ்டன் திருந்துவ தெங்ஙனம்? நாமன்றோ அவனைத் திருத்த வேண்டும். புரே : ஆனால் அதிரத அரசருடைய அழைப்புப் பத்திரத்திற் கிணங்கி ஈசானபுரம் செல்ல வேண்டுமென்கிறாய். நாக : ஆம்; வேறு பேச்சு வேண்டுவதில்லை. இதைப் பற்றி எவ்வித தருக்கமும் வேண்டாம், புரே : எப்போது வரச் சொல்லியிருக்கிறார்? நாக : தை மாதம் இருபதாந் தேதி வெள்ளிக் கிழமை காலை எட்டு நாழிகைக்கு மேல் பத்து நாழிகைக்குள் தம்மை வந்து காணு மாறு எழுதியிருக்கிறார். புரே : எந்த இடத்தில்? நாக : திருவோலக்க மண்டபத்தில் புரே : (தனக்குள்) இதில் ஏதோ விசேஷமிருக்க வேண்டும். (யோசித்த வண்ணம் செல்கிறான். நாகநாதனும் பின் தொடர்கிறான்.) இரண்டாங் களம் இடம் : அதிரதன் அரண்மனையில் ஒரு தாழ்வாரம். காலம் : பிற்பகல். (அதிரதனும் சேமவீரனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.) அதிரதன் : வாலீசன் நிலை எங்ஙனமாயிற்று என்பது உனக்குத் தெரியுமோ? சேமவீரன் : தெரியும். இன்று காலையில்தான் அவனுடைய சிரம், வெற்றி மண்டபத்தின் மேல் ஒரு தம்பம் நாட்டப்பட்டு அதில் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அதி : வாலீசன் என்னிடத்தில் தன் வீரத்தைக் காண்பிக்க முயன்றான். அஃதெங்ஙனம் பலிக்கும்? சேம : அரியினிடத்தில் நரி என்ன செய்ய முடியும்? தங்களுடைய வீரத்தையும் பிரதாபத்தையும் மேன்மையையும் அறியாது தங்களை வாலீசன் விரோதித்துக் கொண்டான். அதற்குத் தக்க பலனைப் பெற்று விட்டான்! அதி : அப்படிச் சொல்! வாலீசன், தன் பக்கம் ஜனங்கள் இருப்பதாக எண்ணி அகமகிழ்ந்து என்னை விரோதித்துக் கொண்டான். என் துருப்புகள் முன்னர் - என் ஆயுத பலத்துக்கு எதிரே - அவன் ஜனங்களின் உதவி என்ன செய்ய முடியும்? நெருப்புக்கு முன்னர் தூசிப்படாம் என் செய்யும்? அவன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டபோது நீ இருந்தனையோ? சேம : இருந்தேன். எல்லாவற்றையும் நேரில் பார்த்துச் சந்தோஷ மடைந்தேன். தேசாபிமானமாவது? மண்ணாவது? பணமில்லா விட்டால் தேசாபிமானந்தான். செல்வமிருந்தால் தேசாபிமானம் காற்றாடியாகப் பறந்து போகும். அதி : நம் நாட்டில் சிலர் தேசாபிமானம் என்று கூவி நாட்டையும் நாட்டின் ஜனங்களையும் கெடுத்து வருகின்றனர். அவர்களை அடக்கிப் போட வேண்டும். சேம : வாலீசனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையே அவர்களுக்கு ஒரு பாடமாயிராதா? அதி : உயிருக்குத் துணிந்தவரும் சிலர் இருக்கின்றனர். அவரை அடக்குவதுதான் சிறிது கடினம். புரேசனும் இந்த வகுப்பில் சேர்ந்தவனே. சேம: ஆம். புரேசனை நீங்கள் இங்குவரும்படி உத்தரவு செய் திருப்பதாகக் கேள்விப்பட்டேள். அஃதுண்மையா? அதி : ஆம். சேம : ஏன் அவனை வரவழைக்கின்றீர்கள்? அதி : அவனைப் பற்றி நீ ஒன்றும் அறிய மாட்டாயோ? புரேசனுக்குப் பாணபுரத்திலும் அதனைச் சுற்றிலுமுள்ள பிரதேசங்களிலும் வாலீசனைவிட அதிகமான செல்வாக்கு உண்டு. வாலீசன் உயிருட னிருக்குங் காலத்தில், அவனுக்கு வலது கண்ணாகப் புரேசன் இருந்தான். வாலீசன் என்னால் தண்டிக்கப்பட்ட விஷயம் புரேசனுக்குத் தெரியுமாயின் அவனுக்கு என் மீது இயற்கையாக வுள்ள கோபம் அதிகமாகும். என்னை எங்ஙனமாவது தொலைக்க புரேசன் முயற்சி செய்வான். ஆகவே, அவனிடத்தில் சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு வித உபாயங்களை வரிசைக் கிரமமாக உபயோகப்படுத்தி அவனை வதைக்க வேண்டும் என்று நிச்சயித்திருக்கிறேன். சேம : புரேசனை வரவழைத்து என்ன செய்யப் போவதாகத் தீர்மானித்திருக்கிறீர்கள்? அதி : அவனை அன்புடன் வரவேற்று என் விருந்தினனாகச் சில நாள் இருக்கும்படி அவனை வற்புறுத்தப் போகிறேன். அதற்கு அவன் கட்டாயம் இணங்குவான். பிறகு அவனுக்கு ஒரு நியாயாதிபதி உத்தியோகம் அளிக்கப் போவதாகக் கூறுவேன். அதற்கு அவன் இசைந்து இங்கேயே வசித்து வருவதாக ஒப்புக் கொள்வான். பிறகு ஒரு நாள் சமயம் பார்த்துத் தர்மராஜனுக்கு அவன் உயிரை அர்ப்பணம் செய்துவிட வேண்டும். சேம : ஒருகால், அவன் தப்பித்துக் கொண்டு சென்றால்? அதி : நீ எதற்காக இருக்கிறாய்? சேம : அங்ஙனமாயின் சரி. அவன் உயிரை நானே நேரில் சென்று இயமனிடத்தில் ஒப்புவித்துவிட்டு வருகிறேன். அதி : உன்னைப் போன்ற நண்பர்கள் இருக்கும் வரை எனக்கென்ன குறை? சேம : தங்களைப் போன்ற மஹாராஜர்களின் அபிமானம் எனக்கு இருக்கும்போது தரித்திரம் என்பது ஏன் என்னிடத்தில் நெருங்கு கின்றது? அதி : அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டுவதேயில்லை. புரேச னுடைய உயிர் உன்னிடத்தில் இருக்கிறது என்பதை நன்குணர் தல் வேண்டும். (பொறுத்து) ஒருகால் என்னுடைய சூழ்ச்சிக்கும், உன்கைக்கும் அகப்படா விட்டால் என்ன செய்வது? சேம : எவ்வளவு பெரிய சந்தேகம்? நம்முடைய யானைப் படை, குதிரைப்படை, ஒட்டகப்படை, காலாட்படை முதலிய யாவும் எங்குப் போயின? புரேசன் தன் சேனை அனைத்தையும் திரட்டிக் கொண்டுவந்த போதிலும் ஒரு நிமிஷத்தில் நம் சேனை அவனையும் அவன் சேனையையும் பறக்கடிக்காதா? அதி : அப்பொழுதும் நீதான் உதவி புரிய வேண்டும். சேம : அரசே! இஃதென்ன அடிக்கடி இப்படி கூறுகின்றீர்கள்? என் உயிரே உங்கள் வசத்தில் இருக்கிறது. ஒருகால் நான் இறந்து போனால் அஃது உங்கள் பொருட்டாக இருக்கு மேயன்றிப் பிறர் பொருட்டாயிரா தென்பது நிச்சயம். நான் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டேன். புரேசன் உயிரேனும் போகும்; அல்லது நானாவது இறப்பேன். அதி : முன்னது நிறைவேற வேண்டுமென்பதே என்னுடைய பிரார்த் தனை. சேம : என் கோரிக்கையும் அதுவே. என்னைப் பற்றித் தனியாக ஒரு விஷயம் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அதி : என்ன? (செல்கிறார்கள்.) மூன்றாங் களம் இடம் : புரேசன் விடுதியில் ஒரு பாகம் காலம் : மாலை (புரேசனும் சுதர்மையும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.) புரேசன் : ஆனால் நான் ஈசனாபுரம் செல்வதில் உனக்கு விருப்பமா? சுதர்மை : தேசத்தின் பொருட்டுத் தாங்கள் எங்குச் சென்றாலும் அஃதெனக்குச் சம்மதமே. தாய்நாட்டின் விடுதலைக்காகத் தாங்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் எனக்கு அநுதாப மிருக்கிறது. புரே : கண்ணே! நீ கூறிய இம்மொழிகள் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. தங்கள் குடும்பத்தினருடைய - முக்கியமாகத் தம் மனைவியருடைய - அநுதாபத்தைப் பெற்றுத் தேச ஊழியம் புரிவோர்க்கே கவலைகள் குறையும்; ஊக்கம் அதிக மாக உண்டாகும். தீரிகள் தேச விஷயங்களில் எப்பொழுது அதிக கவலை எடுத்துக் கொள்கிறார்களோ அப்பொழுதே அந் நாட்டின் முன்னேற்றம் உறுதிப்படும். ஆண் மக்களுடைய தேச பக்தி வளர்வதற்கும் குன்றுவதற்கும் பெண்மக்கள் ஒரு விதத்தில் காரணர்களாயிருக்கிறார்கள். இஃதுண்மையல்லவா? சுத : உண்மை. பெண் மக்களின் தேசபக்தி வளர்வதற்கும் குன்று வதற்கும் ஆண்கள் ஒருவிதத்தில் காரணர்கள் என்று ஏன் திருப்பிக் கூறக்கூடாது? புரே : ஆம். பொதுவான காரியங்களில் ஆண் மக்களும் பெண் மக்களும் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றே கூறுகிறேன். தேச முன்னேற்றத்திற்கு இரு பாலருடைய உதவியும் வேண்டாற் பாலதேயாம். பொதுக் காரியங்களில் தலை யிட்டுழைக்க ஆண் மக்களுக்கு மாத்திரம் உரிமையுண்டென்றும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே பரிபாலனம் செய்ய வேண்டியவர்க ளென்றும் சிலர் கருதுகின்றனர். வீட்டுக்கரசிகளாகப் பெண் மணிகள் விளங்க வேண்டுமென்பது உண்மை யானாலும் பொது விஷயங்களில் அவர்கள் தங்களுக்குரிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்தக் காரியத்தையும் சக்தி யின்றிச் செய்ய முடியாது. சக்தியின் வடிவாகப் பெண்மணிகள் விளங்குகிறார்கள். ஆதலின் தேவரீருடைய உதவி அடியேனுக் கும் அவசியம் வேண்டும். சுத : பேசிக் கொண்டே போகும்போது திடீரென்று ஏன் பரிகாசம் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள்? புரே : நான் சொல்வதில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னித்தருள வேண்டும். சுத : (சிறிது கம்பீரமாக) நான் மன்னிக்க மாட்டேள். புரே : பிறகு நான் எந்நிலையடைவது? சுத : சுதர்மா தேவியார், அவருடைய காதல் என்னும் சாகரத்தில் தங்களை அமிழ்த்தி விடுவதாகத் தீர்மானித்திருக்கிறார். (ஒரு சேவகன் பிரவேசிக்கிறான்) சேவகன்: வெண்புரவி வேகமாகச் செல்ல வெளியில் காத்துக் கொண்டிருக்கிறது. புரே : ஆனால் இதோ வந்து விட்டேன். (சேவகன் செல்கிறான்) கண்மணி! எனக்கு உத்தரவு கொடுக்கிறாயா? சுத : தாங்கள் எப்பொழுது திரும்பி வருவீர்கள் ? புரே : அதை நான் இப்பொழுது நிச்சயமாகக் கூற முடியாது. அதிரதருடைய அழைப்பில் எனக்குச் சந்தேகம் இருந்து கொண்டே யிருக்கிறது. சென்ற வாலீசர், இன்னும் திரும்பி வரக் காணோம். ஆதலின் நான் வரச் சிறிது காலம் ஆயினும் ஆகும். நீ அதுவரை மிக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேச ஜனங்களின் ஊக்கம் சிறிதளவும் குறையாதிருக்குமாறு பார்த்துக் கொள். ஒருகால், நான் தேசத்தின் பொருட்டு உயிர் துறக்க நேரிட்டால் - சுத : நாதா! அந்த மொழிகளை தங்கள் வாயால் கூற வேண்டாம். புரே : வேண்டாம். கண்ணே! என் மனைவியாக இருந்து, இங்ஙனம் நீ மனங் கலங்கலாமா? நான் திரும்பி வந்தாலும் வராவிட்டா லும் தேசத்தின் பொருட்டு உழைப்பதில் நீ சிறிதும் பின்வாங்க மாட்டாய் என்று கருதுகிறேன். சுத : தாங்கள் அது விஷயத்தில் சிறிதும் கவலை கொள்ள வேண் டாம். கூடிய விரைவில் திரும்பி வாருங்கள். பாணபுரத்தினர் தங்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருப்பர். புரே : விரைவில் வர முயல்கிறேன். இனி நீ உன் முயற்சியை அதிக மாகப் பெண்மக்களிடையே செலுத்த வேண்டும். பாணபுரம் அதிரதருடைய கொடுமையினின்று விடுதலையடைய வேண்டிய அவசியத்தைப் பற்றி நீ அவர்களுக்குப் பலவாறாக எடுத்துச் சொல்ல வேண்டும். நாகநாதனும் நானும் இல்லாக் காலத்து உன் பொறுப்பு அதிகமாகிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். (பொறுத்து) நேரமாகிறது. நான் போய் வரட்டுமா? சுத : தங்கள் கட்டளைப்படி நடந்து கொள்கிறேன். எவ்வித இடை யூறுகள் நேரினும், யாரை மறந்தாலும் பாணபுரத்தை மறவாதீர் கள், அஃதொன்றே என் வேண்டுகோள் (புரேசன் கையை முத்தமிடுகிறாள்). புரே : (சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் பாணபுரத்தின் படத்தைப் பார்த்து) அம்மணி! உம்மையே நம்பிச் செல்கிறேன். விடை கொடும். (வணங்கிச் செல்கிறான்.) மூன்றாம் அங்கம் முதற்களம் இடம் : ஈசானபுரத்தில் ஒரு வீதி காலம் : காலை (வாலீசனுடைய தலை, வெற்றிமண்டபத்தின் மேலுள்ள ஒரு தம்பத்தில் மாட்டப்பட்டிருக்கிறது. புரேசனும் நாகநாதனும் பிரவேசிக் கிறார்கள்.) புரேசன் : (வாலீசன் சிரம் தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்து) ஆ நண்பனே! இஃதென்ன கோலம்? நாகநாதன்: (பொறுத்து) வாலீசப் பிரபுவின் முகமன்றோ இது? புரே: அந்தோ! என் வாலீசன் உயிருடனிக்கிறான் என்ற ஆவலுட னன்றோ நான் இங்கு வந்தேன். அவனுக்கு இந்தக் கதி எப்படி யாரால் நேர்ந்தது? (ஈசனாபுரத்து வீரன் ஒருவன் பிரவேசிக்கிறான்) ஐயா! தாங்கள் இருப்பது இந்த ஊரேயோ? ஈ-வீரன்: ஆம். புரே: இந்த முண்டம் ஈண்டு மாட்டப்பட்டிருப்பதன் வரலாற்றை எனக்கு விவரமாகத் தெரிவிக்க முடியுமோ? ஈ-வீரன்: அந்த துக்ககரமான செய்தியைச் சொல்லும்படியான துர்ப் பாக்கியத்தை எனக்கோ கொடுக்கிறீர்கள்? தாங்கள் யார் என்பதை அறிய நான் விரும்புகிறேன். புரே: நான் ஒரு வீரன் என்பதை மாத்திரம் இப்பொழுது உங்க ளுக்குத் தெரிவிக்கிறேன். நான் கேட்டதைப் பற்றி விரைவில் தெரிவியுங்கள். ஈ-வீரன் : உங்கள் முகம் உங்கள் வீரத் தன்மையை நன்கு காட்டு கிறது. இந்த நாட்டார், அசத்தியம், அதருமம், அநீதி என்ற மூன்று மகளிரையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொண் டிருக்கிறார். அரசருக்குத் துணைசெய்யச் சில உத்தமர்கள் இந்நாட்டில் உலாவு கிறார்கள். அவர்கள் யார் மீது கொலைக் குற்றஞ் சாட்டலாம், எவர் மீது பழிகளைச் சுமத்தி அவை மூலமாக அரசனிடத்தில் சன்மானம் பெறலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். வாய் தவறி யாரேனும் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அதனுடன் அவன் வாழ்க்கை யழிந்தது. ஆயுள் பரியந்தம் அவன் சிறைவாசமோ பிறவாசமோ செய்ய வேண்டியவனே. இதனாலேயே நான் யாருடனும் அதிகமாகப் பேசும் வழக்கத்தைச் சிறுது காலமாக ஒழித்து விட்டிருக்கி றேன். புரே: என்னிடத்தில் இந்தச் செய்தியைப் பற்றிக் கூறுவதனால் உங்களுக்கு எவ்விதமான தீங்கும் உண்டாகாது. அதிரத அரசரை நான் அதிகமா யறியமாட்டேன். என்னைப் பற்றி நீங்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டாம். தயை செய்து இனியும் தாமதியாமல் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள். ஈ-வீரன்: பாணபுரம் என்ற ஒரு சிறிய நாடு சமீபத்தில் இருக்கிறது. அச்சிறிய தேசம் பல்லாயிர வருடங்களாகச் சுயேச்சையுடன் இருந்து வந்தது. சென்ற சில ஆண்டுகளாக அதிரத அரசர் வசத்தில் அந்த நாடு அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறது. அதிரத அரசருடைய ஆட்சியை அந்நாட்டு ஜனங்கள் வெறுத்து வருகி றார்கள். அவர்கள் தாங்கள் அநுபவித்து வந்த சுயேச்சையை மீண்டும் விரும்புகிறார்கள். அதிரத அரசரின் ஆட்சி முறையைக் கண்டித்து, ஜனங்களின் குறைகளை அவ்வப்பொழுது தைரியமாகத் தெரிவித்து, தேசத்தின் முன்னேற்றத்திற் காகப் பாடுபட்டு வந்த வாலீசருடைய சிரமே இது. (இதைக் கேட்டதும் புரேசனும் நாகநாதனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். புரேசன் தனது ஆத்திரத்தையும் துக்கத்தையும் அடக்கிக் கொள்கிறான்.) அதிரதருடைய கொடுமைச் செயல்களை வாலீசர் அஞ்சாமல் எடுத்துரைத்து வந்ததால் முன்னவர் பின்னவரை வெறுத்து வந்தார். வாலீசரைப் பிடித்துத் தண்டிப்பதற்குத் தக்க சமயம் பார்த்து வந்த அதிரதர் கடைசியில் ஒரு யுத்தத்தில் அவரைப் பிடித்து இந்தக் கோலத்துக் குள்ளாக்கினார். வாலீசர் எங்ஙனம் பிடித்து வரப்பட்டாரென்பதையும் அவர் தண்டிக்கப்பட்ட வரலாற்றையும் நீங்கள் கேட்பின் உங்கள் உள்ளம் உருகும் என்பதில் ஐயமே யில்லை. வாலீசருடைய ஒரு பக்கத்து மீசையும், ஒரு புறத்துத் தலைமயிரும் சிரைக்கப்பட்டன. பிறகு அவர் தலையில் பல இலைகளைக் கொண்ட ஒரு தலைப்பாகை கட்டி அதன் மேல் ஒரு நாகதாளிப்படை வைக்கப்பட்டது. அவர் நெற்றியில் தாரும், கண்ணைச் சுற்றி வச்சிரமும், செவி களைச் சுற்றிச் சுண்ணாம்பும், முகத்தின் மற்றப் பாகங்களில் செம்மண்ணும் பூசப்பட்டன. அவருக்கு ஒரு பெரிய கோணி ஆடையாகக் கொடுக்கப்பட்டது. பெரியதொரு காகிதத்தில் பாணபுரத்து இராஜத் துரோகிகளுக்குத் தலைவனான வாலீசன் என்று எழுதி, அஃது அவர் முதுகிலும் மார்பிலும் ஒட்டப் பட்டது. இந்தக் கோலத்துடள் அவர் கழுதை மேலேற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அவரை நியாய தலத்தில் விசாரணை செய்தார்கள். இவ்வளவு தூரம் அவமானப் படுத்திய அவ்வீரரை நியாய தலத்தில் விசாரணை செய்வா னேன்? பேசாமல் அதிரதர் மனம் களிப்படையும்படி கொன்று விட்டிருக்கலாம். ஆயினும் வாலீசர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு படாத பாடு படுத்தப்பட்டார். கடைசியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தண்டனை எங்ஙனம் நிறைவேற்றப் பட்டது என்பதைக் கூற என் நா பின் செல்கின்றது. வாலீசரை நான் இங்குப் பார்த்ததற்கு முன்னர்ப் பார்த்ததே யில்லை. ஆனால் அவரைப் பார்த்த பிறகு அவரைப் போன்ற உத்தம வீரர் இப்பூவுலகில் வேறொருவரு மில்லை யென்ற எண்ணம் எனக்கு உண்டாகிவிட்டது. அவர் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை எவ்வளவு தைரியமாகவும் சந்தோஷ மாகவும் ஏற்றுக்கொண்டார் என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். ஆறரை அடி அளவு நெருப்பு ஜுவாலை உயரும் படியாகப் பெரிய தீ மூட்டி அதன் அருகில் அவர் நிற்க வைக்கப் பட்டார். உடனே அவருடைய இரண்டு கைகளும் எரிக்கப் பட்டன. அப்பொழுது அவர் ஒருவருடைய கட்டுக்கும் உட்படாமல் தமியராய்த் தைரியமாக நின்று எவ்வித மான சப்தமும் போடாமல் தம்மிரண்டு கைகளையும் எரித்துக் கொண்டார். பிறகு அவரைப் படுக்க வைத்து அவருடைய உடலம் முழுதும் இருப்பாணிகள் அடிக்கப்பட்டன. அப்புறம் அவர் ஓருயர்ந்த தானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுக் கடவுளைத் துதித்துக் கொள்ளும்படி காவலரால் கூறப்பட்டார். ஆனால் அவர் என் தாய் நாடு; புரேசன் என்ற இரு சொற்களையே கூறினார். இச்சொற்கள் வெளிவந்தன. அவர் சிரம் உடலத்தினின்று வேறாக்கப் பட்டது. (இதுகாறும் தம்பமாக நின்றிருந்த புரேசன் மூர்ச்சையாகிறான். நாகநாதன் அவனைத் தாங்கிக் கொண்டு உபசாரம் செய்கிறான்.) ஐயா! வாலீசருடைய வரலாற்றைக் கேட்டு மூர்ச்சையாகிப் போன இவர் யார்? நாக : (அழுத வண்ணம்) இவர்தான் புரேசர். ஈ-வீரன்: இவரை நினைந்தோ வாலீசர் உள்ளம் உருகி உயிர் விட்டார்? பாணபுரத்து வீரமணி எனக் கூறப்படும் புரேசர் என்பார் இவரேயோ? (புரேசன் பாதத்தில் கையைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறான்) ஐயா! எழுந்திரும். துக்கப் படுவதால் பயன் என்ன? நடந்தது நடந்துவிட்டது. இனி என் செய்வது? புரே : (கோபமும் துக்கமும் கலந்தவனாய்) என் செய்வது? உலகம் அநியாயத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது. ஈ-வீரன்: தயை செய்து மெதுவாகப் பேசும்படி கேட்டுக் கொள் கிறேன். புரே : ஏன்? உமது உயிருக்கு அஞ்சுகின்றீரோ? உம்மைப் பார்த்தால் வீரர்போல் தோன்றுகின்றது. உம் உள்ளம் வீரமுள்ளதாகக் காணப்படவில்லையே! நாக : புரேசா! என் தோள் மீது சாய்ந்துகொள். சிறிது நேரங் கழித்துப் பேசலாம். (புரேசன் அங்ஙனமே செய்கிறான்) ஐயா! இவ்விஷயங்கள் யாவும் கூறினமைக்கு நான் தங்களுக்கு வந்தன மளிக்கிறேன். நீங்கள் சொன்ன விஷயங்கள் யாவும் இரகசியமாக நடைபெற்றனவோ? ஈ-வீரன்: ஆம். நியாயதலத்தில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. அது எங்ஙனம் நிறைவேற்றப்பட்ட தென்பதைப் பற்றிய விஷயங்கள் யாவும் மிக்க இரகசியமாகவே நடைபெற்றன. அரசாங்க அந்தரங்கங்களை அறிந்து கொண்டிருக்கும் சிலருக்கே இவை தெரியவரும். வெளியார் யாவருக்கும் வாலீசர் சிறையிலிருப்பதாகவே சொல்லப்பட்டு வருகிறது. வாலீசருடை டைய முகத்தை அறிந்த பலர் இது வாலீசருடைய முகமாக இருக்கிறதேயென்று கேட்டால் அவரைப் போன்ற முகத்தினர் இவர் என்று சமாதானம் கூறப்படுகின்றது. பலர்க்கு இந்த முகம் வாலீசருடையது என்று தெரியாமலே இருக்கிறது. முகத்தில் பலவித வர்ணங்கள் பூசியிருக்கின்றமையால் ஒன்றும் அறியக் கூடாமலிருக்கின்றது. (பொறுத்து) நீங்கள் ஏன் இங்கு வந்தீர் கள்? நாக : அதிரதர் புரேசரை இங்கு வரும்படி கட்டளையிட்டனுப் பினார். அவருடன் அவர் நண்பனான நானும் வந்தேன். ஈ-வீரன்: உங்களை அதிரதர் எதற்காக அழைத்தார்? நாக : காரணங் குறிப்பிடவில்லை. ஈ-வீரன்: ஐயோ! புரேசரைக் கொல்லவன்றோ அவர் வழி தேடிக் கொண்டிருக்கிறார். புரே : என்னைக் கொல்லவோ அதிரதர் இங்கு அழைத்தார்? ஈ-வீரன்: ஆம்; அதற்கு வேண்டிய ஏற்பாடுகளனைத்தையும் அவர் செய்து கொண்டிருக்கின்றனரே. புரே : என்னென்ன ஏற்பாடுகள்? தயைசெய்து தெரிவிக்க முடியுமா? ஈ-வீரன்: ஏற்பாடுகள் என்ன? உங்களை அன்புடன் வரவேற்பதாகப் பாசாங்கு செய்து பிறகு வஞ்சகத்ததால் கொலை செய்வது தான். புரே : அவ்வளவுதானே. அதிரதர் வஞ்சகம் யாரிடத்தில் செல்லும்? நாகநாதா! நாம் இப்படியே திரும்பலாமா? நாக : செல்ல வேண்டியதுதான். வேறு என்ன வழி? ஐயா! நீங்கள் கூறுவன யாவும் உண்மைதானே என்று மற்றொரு முறை நான் கேட்பதற்காக மன்னிப்பீர்கள் என்று நம்புகின்றேன். ஈ-வீரன்: உங்கள் நன்மையை நாடியே நான் இவ்வளவு தூரம் கூறினேன். புரேசர் என்று நீங்கள் கூறியவுடன் என் மனம் மிக்க பரிதாபமடைந்தது. இன்னும் சில காலம் உயிருடனிருந்து பாணபுரத்துக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டுமென்ற விருப்ப மிருந்தால் தயைசெய்து இப்படியே திரும்ப வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன். நாக : மிக்க வந்தனம் தங்களுக்கு. புரேசா! புறப்படலாம். ஈ-வீரன்: அந்தோ! அதிரதரின் குதிரைப் படைகளுடைய காலோசை கேட்கின்றது. தாங்கள் விரைந்து செல்லுங்கள். ஒருகால் தங்களை நோக்கியே அவர்கள் வரக்கூடும். (மெதுவாகச் செல்கிறான்.) புரே: நாகநாதா! நம் குதிரைகள் சரியாக இருக்கின்றனவா? விரைவில் வீட்டை நோக்கிச் செல்லுமன்றோ? நாக : அதற்கெல்லாம் நான் பொறுப்பாளி. புரே : சரி. ஜாக்கிரதை. நாம் இப்பொழுது ஓடுதல் ஆண்மைக் கழகன்று. நம்மைப் பார்த்த பிறகே ஓடுகிறார்கள் என்று அவர் கள் நினைத்துக்கொள்வார்கள். ஆதலின் அவர்கள் வந்த பிறகு எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்யலாம். (சேமவீரனை முன்னிட்டுச் சில குதிரை வீரர்கள் பிரவேசிக் கிறார்கள்.) சேமவீரன் : ஐயா! நீங்கள்தானே புரேசர். புரே : ஆம். சேம : இவர்? உங்கள் நண்பர் நாகநாதரோ? புரே : ஆம். சேம : இதுகாறும் நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள் ? புரே : உங்களையறிய நான் பெரிதும் ஆவலுள்ளவனாயிருக்கிறேன். சேம : என்னைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அநாவசியம். புரே : அங்ஙனமானால் நான் யாருடன் பேசிக் கொண்டிருந்தேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதும் அநாவசியம். சேம : நான் யாரென்பதையும், என்னைச் சுற்றிலு முள்ளவர்களை யும் அறிந்து மரியாதையாகப் பேச வேண்டும். புரே : அதையே நானும் தங்களுக்குத் திருப்பிக் கூறுகின்றேன். சேம : நான் அரசருடைய ஆக்ஞையால் உன்னை அழைத்துச் செல்ல வந்தேனென்பதையும், என் பெயர் சேமவீர னென்பதை யும், நீ யாருடன் பேசிக் கொண்டிருந்தாய் என்பதைத் தெரிவியா மற் போனால், உன்னைச் சிறையிலடைக்க எனக்கு அதிகாரமுண் டென்பதையும் நீ நன்கறிய வேண்டும். புரே : சிறையிலடைக்கத்தான் அதிகாரமுண்டோ? அதற்கு மேலு முண்டோ? சேம : உன்னைக் கொலை செய்யவும் எனக்கு உரிமையுண்டு. புரே : என்னைப் பெற்ற அப்பனோ, வளர்த்த மாமனோ நீ, என்னைக் கொல்ல உனக்கு உரிமை இருப்பதற்கு? யாரைக் கொல்ல யார் உரிமை பெற்றிருக்கிறார்? சேம : வீண் பேச்சில் பயனில்லை. உண்மையை உரைக்கின்றாயா? அல்லது வாலீசனுடன் வசிக்க விரும்புகிறாயா? புரே : நான் யாரிடத்தில் பேசிக் கொண்டிருந்தே னென்பதைக் கூற முடியாது. சேம : அப்படியானால் மரண தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் வாலீசனுடன் உன்னைச் சிறையிலடைத்து வைக்கப் போகிறேன். புரே : என்னைச் சிறையில் அடைக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? சேம : உன்னைக் கொல்ல எனக்கு உரிமை இருக்கும்போது உன்னைச் சிறையிலடைக்க எனக்கு அதிகாரமில்லையா? புரே : என் உயிர்மீது உனக்கு எவ்வளவு உரிமையுண்டோ அவ்வளவு உரிமை உன் உயிர் மீது எனக்கும் உண்டு. (பொறுத்து) உம். - நமக்குள்ள உரிமையைப் பற்றிப் பிறகு வாதம் செய்து கொள்ள லாம். வாலீசர் சிறையிலிருப்பதாகக் கூறினாயே, எந்தச் சிறையில்? சேம : சிறையிலிருக்கின்றான். அவ்வளவே நான் கூற முடியும். புரே : அதிரத அரசருடைய சிறையிலா? இயமதர்ம இராஜனுடைய சிறையிலா? சேம : சிறையிற் சென்ற பிறகு தெரிந்து கொள்ளலாம். மரியாதை யாக என் பின் வா. இல்லாவிட்டால் இந்த வீரர்களால் கட்டப் பட்டுச் சிறைக்குக் கொண்டு போகப்படுவாய். புரே : சிறைக்கு நான் வரமாட்டேன். யாரோ ஒரு வழிப்போக்கன் எனக்குக் கட்டளையிடுவது; நான் சிறைக்குச் செல்வது; நியாயம் நன்றாக இருக்கிறது! சேம : அதிகமாகப் பேசினால் இதோ தொங்கிக் கொண்டிருப்பவ னுடைய கதியே உனக்கும் நேரிடும். புரே : நீ குறிப்பிடும் இந்த முண்டம் யாருடையது? சேம : அவன் ஒருவன். உன்னைப் போல் ஆடி அடங்கினான். நீ அடங்கப் போகின்றாய். புரே : ஓ! ஓ! இந்த ஒருவனைக் கொன்ற மாபாதகன் எவன்? சேம : ஏது? எம் அரசரையே வசைகூற ஆரம்பித்து விட்டாய் வீரர்காள்! இவனை உடனே பிடித்துக் கட்டுங்கள். புரே : (வீரர்களைப் பார்த்து) நீங்கள் உண்மை வீரர்களாயிருப்பின், உங்கள் உயிர்களை இமயனிடத்தில் ஒப்புவித்து விட்டாவது, மேலுலகத்தில் தக்க வசதிகள் ஏற்படுத்திவிட்டாவது பிறகு என் னிடத்தில் வாருங்கள். என்னைக் கட்டும் ஒரு வீரனும் இவ் வுலகிலிருக்கின்றானோ? சேமவீரா! நீ வீரனாயிருந்தால் என் னிடத்தில் யுத்தத்திற்கு வா. ஏன் இத்தனை உயிர்களை முதலில் பலி கொடுக்கின்றாய்? சேம : வாள் வீச்சோ? தோள் வலியோ? எதைக் கொண்டு இங்ஙனம் செருக்காகப் பேசுகின்றாய்? எடு உன் வாளை; ஏறு உன் அசுவத் தின் மீது. வீரர்காள்! விலகி நில்லுங்கள். (இருவரும் குதிரைமீது ஆரோகணித்துக் கொள்கின்றனர்.) புரே : இந்த வாள் என் தாய் நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு உபயோகப்படும் வாள். என் ஜன்ம பூமியின் நன்மைக்காவே உன்னைக் கொல்கிறேன். இந்த வாலீசனுக்கு எவன் காலனாக நேர்ந்தானோ அவனுக்கு இவ்வாள் காலனாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை. சரி? நம் யுத்தத்தை ஆரம்பிக்கலாமா? நாகநாதா! ஜாக்கிரதை. சேமவீரா! கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்வதா யிருந்தால் செய்து கொள். கடைசி காலத்திலாவது ஆண்டவ னின் நாமத்தைச் சொல்லி நன்மை பெறுவாய். சேம : சீ! மடையா! யாருக்கு இந்த உபதேசம்? புரே : (ஆத்திரத்துடன்) யார் மடையன் ? (தன் வாளால் சேமவீரனைக் குத்துகிறான். அதைச் சேமவீரன் தடுத்துக் கொள்கிறான். இருவரும் சிறிது நேரம் யுத்தம் புரிந்து, கடைசியில், சேம வீரன் புரேசன் வாளால் அடிபட்டுக் கீழ் வீழ்ந்து உயிர் துறக்கிறான்.) நாகநாதா! வா. நம் வேலை முடிந்துவிட்டது. இனி நாம் இங்கிருத்தல் தகாது. (இருவரும் செல்கின்றனர்.) சேமவீரன் வீரர்களில் ஒருவன் : சேமவீரர் சேமமாய்ப் போய்ச் சேர்ந்தார். மற்றொருவன் : சேமவீரரின் வாய்க் கொழுப்பு உயிருக்கு வழி காட்டிவிட்டது. பிறிதொருவன் : சரி. இந்தப் பிணத்தை எடுத்துச் செல்லலாம். இங்குப் பேசுவதில் என்ன பயன்? வந்தவர் தம் காரியத்தை முடித்துக் கொண்டு போய்விட்டார். வேறொருவன் : உம். தூக்குடாப்பா தூக்கு. ஏலேலோ. (சேமவீரன் பிணத்தைத் தூக்கிக் கொண்டு வீரர்கள் போகிறார்கள்.) இரண்டாங் களம் இடம் : பாணபுரத்திற்கும் ஈசனாபுரத்திற்கும் இடையேயுள்ள ஒரு யுத்த களம். காலம் : காலை. (அதிரதன், தன் சேனாதிபதியுடனும் சில யுத்த வீரர்களுடனும் பிரவேசிக்கிறான்.) அதிரதன் : சேனாதிபதி! நம் படைகள் யாவும் சரியாக அணி வகுக்கப்பட்டு இருக்கின்றனவா? சேனாதிபதி : அரசருடைய ஆசியைப் பெற வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதி : இதோ வந்துவிட்டேன். (பொறுத்து) இன்று சேனைத் தலைமைப் பதவியை நான் வகிக்க வேண்டுமென்று நீ கூறினை யாமே. சேனா : ஆம்; தாங்கள் சேனைகளை நடத்தினால், வீரர்களுக்கு ஒருவித உற்சாகமும் துணிவும் உண்டாகுமென்றே அங்ஙனம் கூறினேன். நானும் தங்களுடனிருந்து வேண்டும் உதவிகளைச் செய்கிறேன். அதி : நீ கூறுவதிலும் உண்மை இருக்கிறது. சேனைகளை நடத்திச் செல்லும் தொழிலை நான் மேற்கொண்டு விட்டால், சேனை களுக்கு வேண்டும் உணவுப் பொருள்களை வினியோகம் செய் வதையும் சத்துருக்களுடன் வேண்டும் போது கடிதப் போக்குவரவு செய்வதையும் பிற விஷயங்களையும் யார் கவனிப்பது? சேனா : வேறு ஓர் உத்தியோகதர் அவைகளைக் கவனித்துக் கொண்டு செல்கிறார். அதி : அது முடியாத காரியம். நான் பாடி வீட்டில் இருந்து விஷயங் களைக் கவனித்துக் கொண்டு வருகிறேன். நீ சேனையை நடத்தி, யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும். சேனா : நம் சத்துருக்களின் தலைவரான புரேசர், தாமே சேனை களை நடத்துவதாகக் கேள்விப்படுகிறேன். அதி : அதைப் பற்றி இங்கு என்ன? அவனை நாம் பின்பற்ற வேண்டு மென்ற விதி ஏதேனும் இருக்கிறதா? (பொறுத்து) படைகளை எப்பக்கத்தில் நிறுத்தி வைத்திருக்கிறாய்? சேனா : யுத்தகளத்தின் கிழக்கு பாகத்தில். (சேனாதிபதி முன் செல்ல மற்றவர் பின் செல்கின்றனர். புரேசன், நாகநாதனுடனும் சில வீரர்களுடனும் பிரவேசிக்கிறான்.) புரேசன் : இம்முறை நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்குத் தோன்றவில்லை. நாகநாதன் : இதற்குள் எப்படி அறிந்துவிட்டாய்? புரே : இருக்கப்பட்ட நிலைமையைப் பார்த்தால் எனக்கு அங்ஙனம் தோன்றுகிறது. என் உள்ளத்தில் ஊக்கமும் உண்டாக வில்லை; உற்சாகமும் தோன்றவில்லை. ஆயினும் பார்ப்போம். இதனை நீ எங்கும் வெளியிடாதே. நாக : நாம் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி வேண்டுவன செய்வோம். வா; இனி இங்குத் தாமதிக்கலாகாது. (யுத்த களத்தில் யுத்த வாத்தியங்கள் முழங்குகின்றன. யுத்தம் நடை பெறுகிறது. சிறிது நேரங் கழித்து அதிரதனும் அவன் சேனாதிபதியும் பிரவேசிக்கின்றனர்.) அதி : ஈசானபுரத்துப் படை வெற்றி பெற்றதற்குக் காரணமாயிருந்த உனக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். உனக்கு என் நாட்டில் எல்லாவித நன்மைகளும் கிடைக்கும். இப் பொழுது இந்த வெற்றியைவிடக் கஷ்டமானதொரு வேலையைச் செய்ய வேண்டும். சேனா : உத்தரவுப்படி செய்யச் சித்தமாயிருக்கிறேன். அதி : யுத்தகளத்தில் நாம் புரேசனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகலின் அவனை எங்ஙனமாவது கண்டுபிடித்துக் கொண்டு வர வேண்டும். ஒருகால் அவன் அகப்படாவிட்டால் அவன் மனைவியையும் மகளையும் சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும். உனக்கு வேண்டிய படைகளை அழைத்துக் கொண்டு செல்லலாம். சேனா: புரேசன் அகப்பட்டால், அவன் மனைவியையும் மகளையும் சிறைபிடிக்க வேண்டிய அவசியமில்லையே. அதி : இல்லை. சேனா : புரேசனை ஒரு நொடியில் பிடித்துக் கொண்டு வருகிறேன். அவன் எங்குச் சென்றிருக்கப் போகிறான்? இப்பொழுதே சென்றால்தான் நல்லது. ஆதி : ஆம். நீ செல். யான் பாடி வீட்டிற்குச் சென்று பிற காரியங் களைப் பார்க்கின்றேன். (இருவரும் செல்கின்றனர்.) மூன்றாங் களம் இடம் : ஈசனாபுரத்துச் சிறைச்சாலையில் ஓர் அறை. காலம் : மாலை (சுதர்மை துக்காக்கிராந்தையாய் உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய சிறுபெண் அனலை அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள்.) அனலை : ஏன் அம்மா நீ எப்பொழுதும் கண்ணில் ஜலம் விட்டுக் கொண்டே யிருக்கிறாய்? நான் ஒரு நாளாவது உன்னைச் சிரித்த முகத்துடன் பார்த்ததில்லையே. சுதர்மை: (தனக்குள்) அந்தோ! தாதிமார் தோளிலும் தகப்பனார் மடியிலும் விளையாடிக் கொண்டிருக்க வேண்டிய இக் குழந்தை, இப்பொழுது சிறையாளரின் சில்லரைச் சேஷ்டைக ளுக்கு இணங்கி நிற்கின்றது. தேசபக்தர்களின் வீர கோஷத் துக்குத் தலையசைப் பதினால் ஏற்படும் இக்குழவியின் கழுத்தில் உள்ள முத்து மாலையின் பிரகாச மானது, இப்பொழுது, அதிரதருடைய அநீதிக்கு அஞ்சி அடங்கிக் கிடக் கின்றது. அன்பர் உள்ளமும் குழைந்துருகும்படியான இச்சிறு ரத்தினத் தின் மழலைச் சங்கீதத்திற்குப் பதில், இதுகாலை வயிற்றுக்குப் போதிய உணவின்றியும் தன் தாகத்தைச் சாந்தி செய்துகொள்ளத் திறமை யின்றியும் அழுங்குரலையே கேட்கிறேன். ஐயோ! என் பிராணநாதர் எங்குத் தவித்துக் கொண்டிருக்கின்றனரோ? எந்தக் காட்டில் எந்த மிருகத்துடைய கடுமையான ஒலியைக் கேட்டுத் திடுக்கிடுகின்றனரோ? தன் உயிருக்கும் இனிதாய் மதித்திருந்த இச்சிறு பெண்ணை நினைத்து நினைத்து எங்கே தம் மெய்மறந்து துக்க சாகரத்தில் அமிழ்ந்து கிடக்கின்றனரோ? ஐயோ! அவருடைய ஆற்றலும் அஞ்சாமையும் சத்தியமும் அதிரத அரசருடைய அநீதியின் முன் நில்லாமல் ஓடிப் போயினவே. இதுவும் கால வித்தியாசமோ? தம் தேசத்தில் அதிக அபிமானம் கொண்ட காரணத்தினாலேயே என் நாதரின் தலைவர் தலை வாங்கப் பட்டாராம். நியாய வரம்புக்குட்படு வோருக்கு இது காலமல்லவோ? அந்தோ! நாட்டில் அநியாயமும் நாத்திகமும் பழுத்து நிற்கின்றனவே! அன : அம்மா? ஏன் அழுகின்றாய்? என் அப்பா எங்கே? நாம் ஏன் இங்கே இப்படி பட்சிகள் கூட்டில் அடைக்கப் பட்டிருப் பதைப் போல் அடைக்கப்பட்டிருக்கிறோம். சுத : அம்மா ! குழந்தாய்! உனக்கு நான் என்னவென்று எடுத்துச் சொல்வேன்? நம்முடைய நாட்டிற்குப் பாணபுரம் என்று பெயர். இது சிறிய தேசமா யிருந்தபோதிலும் பல வருஷ காலமாகச் சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்தது. ஆனால் சில வருஷ காலமாக ஈசானபுரத்தரசர் நம் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு தம் மனம் போனபடி யெல்லாம் ஆண்டு வருகிறார். இதனால் நாட்டிலுள்ள ஜனங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு அளவே கிடையாது. குடிகளுடைய துன்பத்தைப் போக்கித் தம் ஜன்ம பூமிக்குச் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டி வாலீசர் என்ற ஒரு பெரியவரும் உன்னுடைய தகப்பனாரும் உழைத்து வந்தனர். ஆனால் அதிரத அரசர் வாலீசரை அநியாயமாகக் கொலை செய்துவிட்டார்; உன் தகப்பனாரையும் காட்டிற்குத் துரத்திவிட்டார். அது போதாமல் உன்னையும் என்னையும் சிறையில் வைத்திருக்கிறார். அன : நம்மை ஏன் சிறையில் வைக்க வேண்டும்? சுத : நாம் பாணபுரத்திலேயே இருந்தால் பாணபுரத்து ஜனங்கள் உன் தகப்பனார் மீது கொண்டுள்ள ஒரு பக்தியினால் என்னை யரசி யாக்கு வார்களோ என்ற பயமும், என்னையே உன் தகப்பனாரின் பிரதிநிதியாகக் கொண்டு அவர்கள் ஒருங்கே திரண்டு மறுபடி யும் தம்மீது எங்குப் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சமும் அதிரதருடைய உள்ளத்தைப் பிடித்துத் துன்புறுத் தினமையால் நம்மைச் சிறையில் வைத்தனர். அன : பெண்களைச் சிறையில் வைக்கும் வழக்கம் எந்த இராஜாங் கத்திலேனும் அனுஷ்டானத்தில் இருந்ததாக நான் படித்த கதை களில் காணோமே. சுத : அதிரதருடைய ஆட்சியில் எல்லாம் நடக்கும். கேளாத புதுமை களைக் கேட்கலாம். காணாத விநோதங்களைக் காணலாம். இவைகளை யெல்லாம் கண்டித்ததினாலேயே உன் தகப்பனார் இப்பொழுது வனவாசம் செய்து வருகிறார்; வாலீசர் உயிர் துறந்தார். உன் தகப்பனாரின் நண்பர் களாயிருந்த பலர் இங்ஙனமே கடுமையான தண்டனைகளுக்குப் படுத்தப் பட்டனர். உன் தகப்பனாருக்காகப் பாணபுரத்தில் எவ்வித கிளர்ச்சியும் இருக்கக் கூடாதென்ற நோக்கத்துடனோ வேறறெந்த நோக்கத்துடனோ உன்னையும் என்னையும் அதிரதர் சிறையில் வைத்திருக்கிறார். (ஒரு சிறைக் காவலன் பிரவேசிக்கிறான்.) சிறைக் காவலன் : அம்மா! தங்களைப் பார்த்தால் பரதேவதை போலிருக்கிறது. வீரத்தில் வல்ல புரேசருடைய பாரியையான தங்களைப் பெண்டாளவே அதிரத அரசர் இப்பொழுது உங்களைச் சிறையில் வைத்திருக்கிறார் சுதர் : ஐயோ! ஐயோ! (பக்கத்திலுள்ள சுவரில் சாய்ந்து கண்ணீர் வடிக்கிறாள்.) சி.கா :அம்மணி! விசனப்படாதீர். நான் அதிரத அரசருடைய ஊழியனாயிருந்த போதிலும் அவர் செய்யும் அக்கிரமச் செயல் களை வெறுப்பவனாய் அவருடைய எண்ணத்தைத் தங்களிடத் தில் கூறு கின்றேன். அவருடைய உப்பைத் தின்று நான் ஜீவிக்கின்றேனெனினும் அவர் செய்யும் அநீதியான காரியங் களில் நான் கொண்டுள்ள வெறுப்பினால் உண்மையை உரைக்கத் துணிந்தேன். நான் இழி தொழில் செய்கிற வனாயிருந் தும் என் வார்த்தைகளுக்குச் சிறிது செவி சாய்க்க வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன். தாயே! அறம் வெல்லும்; மறம் தோற்கும். சத்தியம் கீர்த்தியைக் கொடுக்கும்; அசத்தியம் இகழைத் தரும். நீதி தூநெறியில் விடும்; அநீதி தீநெறியில் தள்ளும். சுதந்தரம் வாழ்வைக் கொடுக்கும்; அடிமைத்தனம் தாழ்வைக் கொடுக்கும். சுதந்தரத்துடன் வானத்தில் பறக்கும் ஒரு பட்சிக்கும் அச்சுதந்தர உணர்ச்சியை நுகராத சக்ரவர்த்திக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. இப்பொழுது நீங்கள் சுதந்தரமின்றிக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றீர்கள். சுதந்தரத்துடன் இருக்க வேண்டியவர்களை ஓரிடத்தில் கட்டுப்படுத்தி வைப்பது தருமமாகாது. ஒருவருடைய சுதந்திரத்தை மற்றொருவர் கட்டுப் படுத்தல் மனிதச் செய லாகுமோ? ஆதலின் அம்மணி! தாங்கள் அநியாயமாகச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நான் நன்குணர்கிறேன். என் தேகத்திலுள்ள நரம்புகள் யாவும் தங்களுக்குச் செய்யப்பட்டுள்ள அநீதியைக் கண்டு கோபங் கொண்டு எழுந்து நிற்கின்றன. அதிரதரின் கீழ் நான் சுமார் இருபது ஆண்டுகளாகச் சேவகம் செய்திராமல் இருந்தேனா யாகில் தங்களை நான் எப்படியாவது காப்பாற்றியிருப்பேன். சுத : அதிரத அரசர் என்னை நியாய முறை தவறிச் சிறையிலடைத்த போதிலும் நாமும் நியாய முறையின்றி அச் சிறையினின்றும் வெளியேறுதல் கூடாது. அறிஞர் செய்கை அதுவன்று. சி.கா. : அம்மணி! தாங்களே பெண்கள் நாயகம்; மாதர் சிகாமணி. துன்பம் நேர்ந்த காலத்து அறிவிற் சிறந்த பெரியோரும் சிறிது மனக் கலக்கம் அடைவர். தாங்களோ நாடிழந்து, உயர் பதவியை யிழந்து, நாதனிழந்து சிறையில் வாசம் செய்து கொண் டிருந்த போதிலும் வாய்மையும் அகத் தூய்மையும் கொண்டு விளங்குகின்றீர். இந்த அருங்குணம் உத்தம தேசபக்தரிடத்தும் புலவர் பெருமான்களிடத்தும் காண்டல் அருமையாயிருக்கிறது. பாணபுரத்திலிருந்து சிறைபிடித்து வரப்பட்ட எத்தனையோ தேசபக்தர்கள் அதிரதருடைய ஏவலாட்களின் கொடுமைகளுக் கஞ்சி, தம் மனச் சான்றுக்கு மாறாகத் தங்கள் நாட்டையும் தங்கள் சகோதரர்களையும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவர் களுடைய செயலை நினைக்குந்தோறும் என் உள்ளத்தில் உண்டாகும் மனக் கொதிப்பை அளவிட்டுரைக்க முடியாது. புரேசருடைய தர்ம பத்தினியான தாங்கள் அவரைப் போல் கலங்கா நெஞ்சமும் உறுதியும் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை, தங்களைக் காணாதிருக்கு முன்னரே எனக்குண்டு. யான் அப்பொழுது கொண்ட நம்பிக்கை இப்பொழுது உறுதி யாகி விட்டது. ஆண்டவன் உங்களைக் காப்பாற்றுவார். இந்தச் சிறைச்சாலையில் தாங்கள் இருக்கும் வரை சிறிது ஜாக்கிரதை யாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என்னைப் போன்ற சிறையாளரிற் பலர் தங்களை மாய உரைகளால் மயக்கி அதிரதர் வசப்படுத்த முயல்வர். அதிரத அரசர் நேரிலேயே இவ் விடம் வரினும் வரக்கூடும். ஆதலின் தாங்கள் எதற்கும் அஞ்சாது எவ்வித மாய மொழிகளுக்கும் வசப்படாது உறுதியுடனிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். யான் சொல்லக் கூடியது அவ்வளவே யாகும். சுத : எட்டி மரங்களிடையே ஒரு மாமரம் இருந்தவாறு போல் அதிரதனுடைய காவலாளர்களில் நல்லவன் ஒருவனைக் காண்பது எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. (வேறொரு காவலாளன் பிரவேசிக்கிறான்.) வேறொரு.சி.கா : (முதற் சிறைக் காவலனைப் பார்த்து) இன்னாண்ணே! இந்தம்மாவோட நீ நெடுநேரமா பேசிக்ணு இருக்ரையே. சி.கா. : இதுவும் ஒரு குற்றமோ? அம்மணி! அடியேற்கு உத்தரவு கொடுக்க வேண்டும். அரக்கர்கள் மத்தியில் சீதாதேவி தம் கற்பைக் காத்துக் கொண்ட விதத்தை மட்டும் இச்சமயத்தில் நினைவூட்டுகிறேன். வே.சி.கா : மகாராஜா இங்கு வரார் என்று சொல்லத்தான் நான் இங்கே வந்தேன். சி.கா. : அடியார்களைக் காவாது ஏன் அண்டவன் இருக்கிறான்? (சிறைக்காவலர் இருவரும் சுதர்மையும் அனலையும் பின்னடைகின் றனர். அதிரதன் சில ஆதானிகர்களுடன் பிரவேசிக்கிறான்.) அதிரதன் : அம்மையார் எப்படியிருக்கிறார்? (அனைவரும் மௌனமாயிருப்பதைக் கண்டு சிறிது நேரங் கழித்து) இங்கிருந்த காவலர்கள் எங்கே? (வேறொரு சிறைக்காவலாளன் கையைக் கட்டி வாய்பொத்தி நிற்கிறான்) இங்கே ஒருவரும் காவல் புரிவதில்லையா? வே.சி.கா. : (மிக்க பயத்துடன்) இ-ல்-லெங்-கோ. அதி : இல்லையா? பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? nt.á.fh.: இங்கேதான் இருந்தேனுங்கோ. அதி : உம் - அந்த ஆஷாடபூதி எங்கே? (சிறைக்காவலன் எதிர்வந்து நின்று வணங்குகிறான்.) நீ சரியாகக் காவல் புரிவதில்லையாமே. சி.கா : என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து வருகிறேன். அதி : பாணபுரத்தின் தேவதை எந்நிலையிலிருக்கிறாள்? சி.கா : தேவதை தேவனை நொந்துகொண்டிருக்கிறாள். அதி : அவள் பெயரென்ன? சி.கா : (தனக்குள்) ஈசனே! என்ன கஷ்டம்! (வெளிப் படையாய்) சுதர்மா தேவியார். அதி : சுதர்மா! என் எதிரே வந்து நில். (அங்குள்ளார் அனைவரும் இதனைக் கேட்டு ஒருவிதமான வெறுப்பையடை கின்றனர்.) எங்கே? இன்னும் வரக் காணோம். நான் அதிரத மஹாராஜா என்பதையும் என் மொழிப்படி நடவாதவர் பெரிய தண்டனை களுக்குட் படுவர் என்பதையும் சுதர்மை நன்குணர வேண்டும். என் வீரம் எவரையும் அடக்கி வைத்திருக்கிறது. என் செல்வம் எவருடைய கரத்தையும் என்னிடத்தில் நீட்டச் சொல்கிறது. என் வனப்பைக் கண்டு ஆடவரும் பெண்மையை அவாவு கின்றனர். நாடில்லாதவன், நகரமில்லாதவன், செல்வமில்லா தவன், ஜனங்களின் ஆரவாரத்தையே பெருந்துணையாகக் கொண்டு என்னுடன் போருக்கு வந்து தோற்று ஓடிப் போன வன், புரேசன் என்னும் சிறு பெயரான் - அவன் மனைவி என்ற முறையில் நீ இன்னும் சிறையிலிருந்து கொண்டு துன்புற லாமோ? மனக் கவலையை ஒழித்துவிட்டு ஈசான புரத்தரசியாய் வீற்றிரு. (சிறிது நேரம் மௌனம்) பதில் ஒன்றையும் காணோம். சுதர்மை அங்கிருக்கின்றளா? இல்லையா? (சிறைக் காவலனைப் பார்த்து) சுதர்மையை இங்கே பிடித் திழுத்துக் கொண்டு வா. (பொறுத்து) என்ன பேசாமலிருக் கிறாய்? பிடித்திழுத்துக் கொண்டு வருகிறாயா? மாட்டாயா? சி.கா. : (எதிரே வந்து முழந்தாளிட்டு) ஐயனே! அக் காரியத்திற்கு நான் ஒருபோதும் உடன்படேன். என்னை வாள் கொண்டு வீசினும் தாள் கொண்டு மிதிப்பினும் அத்தீத்தொழிலுக்கு ஒருபோதும் உடன்படேன். யான் துச்சாதனன் அல்லேன். மஹா ராஜா! தயைசெய்து இப்பொழுது தாங்கள் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடுங்கள். தனி மனிதன் என்ற முறையில் இம்மொழிகளைக் கூறுகிறேன். பிற மாதர் களைக் கண்ணெடுத்தும் பார்த்தல் கூடாதென்று நீதி நூல்கள் முழக்க மிடுகின்றன. முக்கியமாக க்ஷத்திரியர்கள் இதனை மிக்க ஜாக்கிரதை யுடன் அநுசரிக்க வேண்டும். ஒழுக்கத்தை விட்ட மன்னர்கள் குடிகளின் அன்பை நாளாவட்டத்தில் இழந்து அதன் பலனாக நாட்டையும் தோற்று விடுகிறார்கள். தன் பொறிகளை அடக்கி யாள முடியாதவன் ஒரு நாட்டை எங்ஙனம் அடக்கியாள முடியும்? ஒரு சிறந்த வீரரை யுத்தகளத்தில் தோற்கடித்துக் காட்டில் ஓட்டிவிட்டு அவருடைய மனைவியைச் சிறையி லடைத்து பெண்டாள நினைப்பது ஆண்டகைமையா? வீரர் களுக்கு அழகா? உயர்ந்த வேந்தர்களுக்குப் பொருந்துமா? தங்களுடைய ஆதானிகர்கள் இந்தச் செயலை உண்மையில் அங்கீகரிக்கிறார்களா? இத் தொழிலுக்குத் தாங்கள் உடன் பட்டால் பிறகு என்ன நேரும் என்பதைத் தங்கள் அமைச்சர்கள் தங்களுக்கு எடுத்துக்காட்ட வில்லையா? இப்பொழுது தங்கள் அண்டையில் அலங்காரமாய் நிற்கும் ஆதானிகர்கள் எந்த நீதி நூல்களையும் வாசிக்கவில்லையா? தெய்வம் ஒன்றிருக்கிற தென்று இவர்கள் உணரவில்லையா? இவர்கள் அதரும வீட்டில் பிறந்தவர்களா? அசத்திய இல்லத்தில் வளர்ந்தார்களா? ஒழுக்கமின்மை யென்னும் இடத்தில் வாழ்க்கையை நடத்துகிறார் களா? அரசே இக்காரியத்திற்குத் தாங்கள் உடன் பட்டீர்க ளானால் தங்களுடைய குடிகள் இன்னும் எவ்வளவு இழிவான நிலையில் இறங்கிவிட மாட்டார்கள் என்பதைத் தாங்கள் சிறிதும் கருதவில்லையா? குடிகளுக்கு மன்னரன்றோ வழி காட்டியாயிருக்க வேண்டும்? தாங்கள் இத்தகைய எண்ணங் கொண்டு பாணபுரத்தின் தெய்வத்தைச் சிறையிலடைத்தீர்கள் என்பதைப் பாணபுரத்து ஜனங்கள் தெரிந்து கொண்டார்க ளானால் தங்கள் நாடு, தங்கள் செல்வம், தங்கள் ஆண்மை எல்லாம் என்னவாகும்! உலகம் இதைப் பொறுக்குமா? புரேசர் இதைக் கேட்டால் என்ன பாடுபடுவார் என்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். தாங்களும் ஒரு குடும்பத்திலேயே பிறந்தீர்கள்; குடும்பத் திலேயே வளர்ந்தீர்கள்; குடும்பத்துடனேயே இருக்கிறீர்கள். தங்களுடைய குடும்பத்தைப் பற்றி மாற்றான் ஒருவன் தீய எண்ணம் எண்ணினால் தாங்கள் சும்மாயிருப்பீர்களா? தங்க ளுடைய மீசை துடியாதா? கண்களில் தீப்பொறி பறவாதா? இரத்தம் கொதியாதா? தங்களுடைய வீர வாள் உறையுளே வீழ்ந்துகிடக்குமா? இவைகளை யெல்லாம் நினைத்துப் பாருங்கள். தங்களிடத்தில் இருபதி யாண்டுகள் ஊழியம் செய்து வந்தேனாதலினாலும், தங்களுடைய எதிர்கால நன்மையை நாட வேண்டியிருப்பவனாதலினாலும் இம்மொழிகளைக் கூறினேன். தங்களுடைய பாதங்களைப் பிடித்துக் கொள்கிறேன். இக்கொடுந் தொழிலுக்கு மாத்திரம் உட்பட வேண்டாம், வேண்டாம், வேண்டா மென்று மும்முறை கூறுகிறேன். ஆதானிகர்களில் ஒருவன் : (தனக்குள்) மரத்தினின்றும் தோன்றிய கோடாரி மரத்தையே வெட்டத் துணிகிறது. ஆதானிகர்களில் வேறொருவன் : அரசர்களுக்கு இழிஞர்கள் உபதேசம் செய்கிறார்கள்! என்ன காலம்! ஆதானிகர்களில் ஒருவன் : அங்ஙனம் உபதேசம் செய்யும் இழிஞர்கள் இன்னும் உயிருடனிருக்கிறார்கள்! சி.கா. : தங்களுடைய விருப்பம் அதுவானால் அங்ஙனமே அரசருக்கு ஆலோசனை கூறலாம். தங்களைப் போன்ற ஆதானிகர்கள் இருக்கும் நாட்டில் வாழ்வதை விட வைவசுவத பட்டினத்தில் இயமதர்ம ராஜனுடைய கிங்கரனா யிருந்து வேலை செய்யலாம். அதி : சை ! - (காலால் உதைத்துத் தள்ளிவிட்டு வேறொரு சிறைக் காவலாளனைப் பார்த்து) அடே! அந்தக் குழந்தையை இங்கு அழைத்துக் கொண்டுவா. (அவன் அங்ஙனமே அனலையை அழைத்து வந்து எதிரில் நிற்க வைக்கிறான்.) அன : என் அப்பாவை வெளியே துரத்திவிட்டு அம்மாவை ஜெயிலில் வைத்திருக்கும் ராஜா நீங்கள்தானோ? அதி : (தனக்குள்) என்ன தைரியம்! (வெளிப்படையாய்) எதற்காகக் கேட்கிறாய்? அன : பெண்களை ஜெயிலில் வைக்கலாமென்று எந்தப் புதகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? அதி : அநியாயம் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று பெரியவர்கள் கூறவில்லையா? அன : எங்கள் அப்பாவும் அம்மாவும் என்ன அநியாயம் செய்தார்கள்? அதி : அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்? எனக்கன்றோ தெரியும். அன : அப்படியானால் ஏன் இங்கே இப்பொழுது வந்தீர்கள்? அதி : நீயும் உன் தாயாரும் ஏன் இங்கே கஷ்டப்பட வேண்டும்? அரண்மனையில் வந்து சௌக்கியமாக இருக்கலாமென்று சொல்லவே வந்தேன். அன: அப்பா இல்லாதபோது அம்மா அரண்மனைக்கு வரமாட் டாள். நாங்கள் ஜெயிலில் இருக்கிறோம் என்று எங்கள் அப்பாவுக்குத் தெரியுமானால் உங்களையெல்லாம் கொன்று விடுவார். அதி : (இழிநகை புரிந்து) என்னைக் கொன்றுவிடுவாரா! (பொறுத்து வேறொரு காவலாளனைப் பார்த்து) அடே! நான் இன்னும் சில நாட்கள் கழித்து வருகிறேன். அப்பொழுதேனும் வழிக்கு வருகிறாளா பார்ப்போம். அதுவரை ஜாக்கிரதையாகப் பாதுகாவல் செய்து வா. (சிறைக் காவலனைப் பார்த்து) இவனை விலங்கிட்டு அழைத்து வரும்படியாகச் சொல். நாளை இவனைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும். (ஆதானிகர்களுடன் செல்கிறான்.) சி.கா. : விசாரணை! எதனை? நியாயத்தையா? அநியாயத்தையா? (சுதர்மை வெளிவருகிறாள்) சுத : அப்பா! எனக்காக நீ விலங்கிடப்பட்டுக் கஷ்டப் படுகிறாயே. சி.கா : அம்மணி! தங்களுக்காக நான் துன்புறவில்லை. தருமத்திற் காகத் துயர்வுறுகிறேன்; சத்தியத்திற்காகச் சாகுந் தறுவாயிலிருக் கிறேன். இதனால் எனக்குத் திருப்தியே யன்றி ஒருகுறையும் கிடையாது. தாங்கள் எதற்கும் விசனப்பட வேண்டாம். ஆண்டவன் அருள் உள்ளளவும் நமக்கு ஒரு குறையுமில்லை. (திரும்பிப் பார்த்து) அதோ! என்னை அழைத்துச் செல்ல ஆட்களும் வந்து விட்டார்கள். நான் இனித் தங்களைக் காண் பேனோ காண மாட்டேனோ அறியேன், தங்கள் பொருட்டு நான் கஷ்டப் படுகிறேன் என்று மாத்திரம் எண்ணித் தாங்கள் கவற்சியடைய வேண்டாம். அரசர் எதிரியாயிருந்தாலும் தருமமும் சத்தியமும் நமக்குத் தோன்றாத் துணையாய் நிற் கின்றன. ஆதலின் ஒன்றுக்கும் பயப்பட வேண்டிய தில்லை. அம்மணி! எனக்கு உத்தரவு கொடுங்கள். ஈசன் உங்களைக் காப்பாற்றுவான். (ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறான்.) சுத : ஆ! நல்லவர்களுக்கு இது காலமில்லை. பொய்யருக்கும் துரோகிகளுக்கும் அதிர்ஷ்ட தேவதை வசமாகிறாள். இவ் வஞ்சகரைக் கண்டு தருமதேவதை நடுங்குகிறாள் போலும். (பொறுத்து) என்ன அரசர்! என்ன நீதிமுறை! அன : (உள்ளிருந்து) அம்மா! சுத : என் கண்ணே! (செல்கிறாள்.) நான்காம் அங்கம் முதற் களம் இடம் : கடம்பவனம். காலம் : மாலை. (புரேசன் தான் இருப்பிடமாகக் கொண்டுள்ள குகையின் வெளிப் புறத்தில் மேற்றிசையை நோக்கிய வண்ணம் உலாவிக் கொண்டிருக் கிறான்.) புரேசன் : (தனக்குள்) செக்கர் வானம்! தெய்வீகக் காட்சி! அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை! ஆகாயம் ஒன்றினைக் கொண்டே ஆண்டவன் பெருமையை அளந் தறியலாம். கற்றார் முன் கல்லார் பதுங்குவதுபோல் ஆதித்தன் உதயமானதும் உடுக்கள் ஒளிந்து கொள்கின்றன. பகலவன் மறைந்ததும் விண் மீன்கள் மையுண்டார் கண்கள் போல் மிளிர்ந்து நிற்கின்றன. இவைகள் எங்ஙனம் தோன்று கின்றன என்பதும் எங்ஙனம் மறைகின்றன என்பதும் ஆராய்ச்சிக்குட் பட்டனவேயாம். (சிவந்த வானத்தைப் பார்த்து) முப்புரமெரித்த முக்கண்ணன் இந்நிறத்தவனே என ஆன்றோர் அறைகின்றார். இதுகாறும் அதனைப் பற்றிச் சந்தேகித்துக் கொண்டிருந்த நான் இப் பொழுதே உண்மை தெளிந்தேன். ஆனால் சூரியனைப் போன்ற ஒரு வெப்பமான வது ஆண்டவன் பக்கலில் அமர்ந்திருக்கிறதோ? (சிறிது யோசித்து) ஆம்; இருக்கிறது. அடியார்க்கு அளிதந்து, மடிகளைக் கடிந்து நிற்கும் நந்தியம் பெருமான் கோல்கொண்டு ஆட்சிபுரிகிறான். அங்ஙனமே பானுவும் சில காலம் கடுமையோடும் சில காலம் கருணையோடும் ஆட்சி செலுத்தி வருகிறான். அதோ! அவன் பூமிக்குள் இறங்கு கிறான். இப்பொழுது அவனைப் பார்த்தால் எவனுக்கும் ஒருவித அச்சம் உண்டாகும். உலகத்தில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு கோபிக்கிறான் போலும். மார்த்தாண்டனே! வீணாக இந்தப் பேயுலகத்தை ஏன் கடிந்து கொள்கிறாய்? பெரியோர் களின் அமுத மொழிகளுக்குச் செவிகொடுத்துக் கேட்டு நல்வழித் திரும்பாத இந்த உலகம் உன் கொடிய கோபத்துக்கு அஞ்சி நடக்கப் போகிறதோ? இல்லை; முக்காலுமில்லை. உன்னையும் இப்பாழும் உலகத்தையும் படைத்த கடவுளிடத்தில் சென்று முட்டிக்கொள். ஒரு கணத்தில் இவ்வுலகனைத்தையும் அழித்துவிடச் சொல். அப்பொழுதும் இவ்வநியாய உலகம் நன் மதிபெறாது. வலியார் மெலியாரை ஒறுத்தலும் பொருள் நெறி பற்றியவரைப் போற்றலும் அருள் நெறிப் பற்றியவரைத் தூற்றலும் இவ்வுலகத்தில் பெருகி வருகின்றன. அன்பு என்பது அணு அணுவாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெற்ற தாயிடத்தில் அன்பில்லை; வளர்த்த தந்தை யிடத்தில் அன்பில்லை; தவழ்ந்து ஓடி ஆடி விளையாடிய நாட்டிடத்தில் அன்பில்லை; பேசும் மொழி யிடத்து அன்பில்லை; உய்விக்கக் கூடிய மதத்திடத்தில் அன் பில்லை. (பொறுத்து) பொருள், பொருள் என்று அலறும் மாந்தர் தம் நிலையை நினைக்கின் - சை! அதைப் பற்றி எண்ணி ஏன் என் உள்ளத்தை ஆபாசப்படுத்திக் கொள்ள வேண்டும்? இயற்கையில் ஈடுபட்டிருக்கும் போது இப்பாழும் எண்ணங்கள் எங்கு வந்து சேர்ந்தன? (பொறுத்து) பாண புரத்தின் நிலைமை - (பெருமூச் செறிந்து) அதை நினைக்க என் மனம் துடிக்கிறது; உரைக்க முடியாத ஓர் உணர்ச்சி அப்பெயரைச் சொன்ன மாத்திரத்தில் உண்டாகிறது. (பொறுத்து) பாணபுரத்து மக்களின் வீரம் அதிரதனுடைய கொடுமைக்கு அஞ்சிக் கிடக்கின்றதோ? அல்லது தலை நிமிர்ந்து என் வரவை எதிர்பார்க்கிறதோ? ஒன்றுந் தெரியவில்லை. நாகநாதன் தனியனாய் என்ன செய்து கொண் டிருக்கிறனோ? என்னை, பெற்ற அப்பன்போலவும் உற்ற சகோதரன் போலவும் எண்ணி நடத்திவந்த நாகம் இப்பொழுது புற்றில் அடங்கிக் கிடக்கிறதோ? அல்லது படமெடுத்து ஆடிப் பகைவரை அலறச் செய்து கொண்டிருக்கிறதோ? ஒன்றுந் தெரியவில்லை. (ஆகாயத்தில் செல்லும் ஒரு பறவைக் கூட்டத் தைப் பார்த்து) புள்ளினங்காள்! யாண்டிருந்து வருகின்றீர்? எங்குச் செல்கின்றீர்? பாணபுரத்திலிருந்து வருகின்றீரானால் அதன் நிலைமை என்ன என்பதைத் தெரிவிப்பீரா? ஏன் அங்கிருந்து ஓடிவந்து விட்டீர்கள்? அதிரதருடைய ஆட்சிக்கு அஞ்சியா? (ஒரு குயில் கூவுவதைக் கேட்டு) ஆம் என்று இக்குயில் பதிலிறுக்கின்றது. அங்ஙன மானால் என் பாணபுரத்து மக்கள் கொடுமைக்குட் பட்டிருக்கிறார்களா? என் நாகநாதன் அவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லையா? நான் வந்தால்தான் பாணபுரத்து ஜனங்கள் சுதந்தரம் பெறுவார்கள் போலும்! (பொறுத்து) நான் வருவது - ! பாணபுரத்து ஜனங்கள் சுதந்தரம் பெறுவது - ! எங்ஙனம் முடியும்? ஒருமுறை - இருமுறை - ஆறுமுறை முயன்றும் பயனடையவில்லை யென்றால் ஏழாவது முறையிலா நான் பாணபுரத்துக்குச் சுதந்தரம் பெற்றுக் கொடுக்கப் போகிறேன்? முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முது மொழி உண்மைதான். ஆனால் அம்முயற்சிக்கும் ஓர் அளவுண்டல்லவோ? அநியாயமும் அசத்தியமுமன்றோ வெற்றியடைகின்றன! (பெருமூச்சு விட்டு) இன்றேல் எந்த அரசன் சத்துருவின் மனைவியைப் பெண்டாள நினைத்துச் சிறையில் வைத்திருப்பான்? இதை உலகம் பொறுத்துக் கொண்டிருக்கிறது! வேற்றரசர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால் என் மனைவியும் குழந்தையும் அதிரதர் வசப்பட்டிருப்பதற்காக யான் சிறிதும் கவற்சி யடையவில்லை. என் நாட்டை அவனுடைய கட்டினின்றும் நீக்கிவிட்டால் போதும். என் நாட்டை அடிமைத்தனத்தினின்று மீட்டுக் கொடுத்தால் என் மனையியையல்ல, என் மக்களையல்ல, என் உற்றாரையல்ல அனைவரையும் கொடுத்து விடுகிறேன், என் உயிரையும் அவனடியில் ஒப்புவிக்கச் சித்தமாயிருக்கிறேன். என் நாட்டை, எனது பாணபுரத்தை, என் வளங்குன்றாச் செல்வத்தை, எனது அரும்பெறல் மாணிக்கத்தை, என் தாயை விடுதலை செய்து விட்டால் போதும், என் தாயே! வானத்தில் உன்னையே பார்க்கிறேன்; காற்றில் உன்னையே நுகர்கிறேன்; காட்டுத் தீயில் உன் உருவத்தையே காண்கிறேன். (பெருமூச்செறிந்து) ஆயினும் உன்னை மீட்க வகையறியாது தவிக்கிறேன். (பொறுத்து) இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமா? முன்னொரு முறை வந்திருந்தபோது சேனைகளை ஆயத்தப்படுத்தி வைப்ப தாக நாகநாதன் கூறினான். ஆறுமுறை போர் தொடுத்ததன் பயனாக அதிரதனும் சிறிது சலித்தே இருப்பான். அவன் படை களிற் பெரும்பாலான சீர்குலைந்து போனதாகக் கோள்வி. ஆதலின் இந்தத் தடவை எங்ஙனமாவது முயன்று பார்க்க லாமா? (யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிலந்தியின் வலையைப் பார்த்து அதனைக் கவனிக்கிறான்.) ஆ! ஆண்ட வனின் பெருமையை என்னென்றுரைப்பது? அந்தச் சிலந்திப் பூச்சி தன் வீட்டைச் சரியாக அமைத்துக்கொள்ள எவ்வளவு பாடுபடுகிறது! எத்தனை தரம் ஏறுகிறது! - ஐயோ பாவம்! அறுந்து விட்டது - மற்றொரு முறை முயற்சிய்து வலையைக் கட்டப் பார்க்கிறது - (பொறுத்து) அதுவும் வீணாயிற்றா? எத்தனை தரம் இது முயற்சி செய்கிறது பார்ப்போம். (சிறிது நேரங்கழித்து) அப்பா! கடைசியில் ஏழாவது முறை இதன் முயற்சி பயன்பெற்றது. நாமும் ஏழாவது முறை வெற்றி பெறுவோமா? என் உள்ளத்தில் ஒருவித சந்தோஷம் உண்டாகிறதே! என் வெற்றிக்கு இச்சிலந்திப் பூச்சியின் முயற்சி ஓர் அறிகுறிபோலும். மறுபடியும் நான் படை யெடுக்கலாமா? (நாகநாதன் பின்புறமாய் பிரவேசிக்கிறான்.) நாகநாதன் : கட்டாயம் படையெடுக்கலாம். புரே : ஆ! நாகநாதா! எப்பொழுது எங்கிருந்து எப்படி வந்தனை? உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டே யிருந்தேன். உம் - பாண புரம் எந்நிலையிலிருக்கிறது? நாக : உன் தலைமையின் கீழ் அதிரதர் மீது படை யெடுக்கச் சித்தமாயிருக்கிறது. புரே : எனது பாணபுரம் படையெடுக்கச் சித்தமாயி ருக்கிறதா? தனது முயற்சியில் அஃது இன்னும் தளரவில்லையா? ஐயனே! இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும்? இஃதொன்றே யான் இதுகாறும் அடைந்த துன்பங்களையெல்லாம் மறக்கடிக்கச் செய்துவிட்டது. உம் - நீ எப்பொழுது புறப்பட்டனையோ? அதோ இருக்கும் ஊற்றிற்குச் சென்று தேக சுத்தி செய்து கொண்டு வா. சிறிது சிரம பரிகாரம் செய்து கொள்ளலாம். நாக : உன்னைப் பார்த்தபோதே என் மெய்வருத்தம் பறந்து போய் விட்டது. ஆயினும் உன் கட்டளைக்கு இணங்குகிறேன். (ஊற்றிற்குச் செல்கிறான்.) புரே : (நாகநாதன் ஏறிவந்த குதிரையைத் தட்டிக் கொடுத்து) நாற்கால் பாய்ச்சலாக ஓடி வந்தனையோ? என்னைக் கண்டால் உனக்கேன் அவ்வளவு சந்தோசம்? (குதிரை கனைக்கிறது) இந்தக் குதிரைக்கிருக்கும் நன்றி அந்த அதிரத அரசருக்குக் கூட இல்லையே. இந்த அசுவம் என்னால் பலவித துன்பங்களை அநுபவித்திருந்தபோதிலும் தன் நன்றியைச் செலுத்துவதில் சிறிதும் பின்வாங்குவதில்லை. (இதற்குள் புரேசனுடைய குதிரை யைப் பார்த்த நாகநாதனுடைய குதிரை சந்தோஷ ஆரவாரம் செய்து அதனிடத்தில் போக முயல்கிறது. புரேசன், நாகநாத னுடைய குதிரையை அவிழ்த்து விடுகிறான்) என்ன அன்பு! இருவரும் நீண்ட காலத்து நண்பர்கள். இவ்வளவு அன்பு மனிதருக்கு ஏற்பட்டிருக்குமானால், இந்த உலகம் - பயனற்ற உலகம் - எவ்வளவோ முன்னேற்ற மடைந் திருக்கும். அரசர் களும் அன்பு ஆட்சியில் நம்பிக்கை யிழந்தவர்களாய் ஆயுத ஆட்சியிலன்றோ உறுதி கொண்டிருக்கிறார்கள்? அதிரதரை விட வேறோர் உதாரணம் வேண்டுமா? (நாகநாதன் திரும்பவும் பிரவேசிக்கிறான்) நாகநாதா! வந்துவிட்டனையா! இதோ இந்தக் குடிசையில் கனிகள் வைத்திருக்கிறேன். அவைகளை எடுத்துக்கொள். உனக்கு நான் மரியாதை செய்ய வேண்டுமோ? நாக : நான் மரியாதை மனிதன் அல்லவே. (நாகநாதன் பழங்களைத் தின்றுவிட்டு வருவதற்குள் புரேசன் ஆங்குக் கிடக்கும் ஒரு பெரிய மரக் கிளையைப் புரட்டிக் குடிசையின் அருகாமையில் சேர்த்து அதன் மீது அமர்கிறான். நாகநாதனும் வருகிறான்.) புரே : நாகநாதா! இந்த இடத்தில் உனக்கு நான் அளிக்கக்கூடிய ஆசனம் இதுவே. நாக : இதுதான் நிரந்தரமான ஆசனம். எவராலும் என்றும் அளிக்கக் கூடிய ஆசனம். அரியாசனங்களும் மயிலாசனங்களும் அற்பமான ஆயுளைக் கொண்டவை. இது நீடித்து நிற்கக் கூடியது (பொறுத்து) இந்த உபசாரங்களைப் பிறகு ஒருவர்க் கொருவர் செய்து கொள்வோம். நீ இப்பொழுது எந்நிலையி லிருக்கிறாய்? புரே : என் உடல் புரேசனுடையதாயும் உள்ளம் பாணபுரத்தாயும் இருக்கின்றன. அவ்வளவே கூறமுடியும். பாணபுரத்து ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய ஊற்றமாவது உணர்ச்சி யாவது தளர்ந்திருக்கின்றதோ? நாக : இதைப் பற்றி எள்ளளவும் நீ சந்தேகப்பட வேண்டுவ தில்லை. தங்களுடைய தலைவர் புரேசர் என்னவாயினாரோ என்ற ஒரு கவலையே அவர்களை வருத்திக் கொண்டிருக்கிறது. அவர் களுடைய வேண்டுகோளின் படியே நான் இங்கு வந்தேன். ஆறு முறை தோற்றுப் போயினும் ஏழாவது முறை எங்ஙனமாவது வெற்றி யடையலாம் என்று அவர்கள் ஓர் உறுதி கொண்டு நிற்கிறார்கள். புரே : நாகநாதா! என் தாய் நாட்டினர் சுதந்தரம் பெறுவதை முன் னிட்டு ஒரே உறுதியுடனிருக்கின்றனர் என்று நீ கூறியது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது தெரியுமா? எனது பாண புரம் இனியும் சுதந்தரம் பெறமாற் போகுமா? (பொறுத்து) நாட்டில் இன்னும் என்னென்ன விசேஷம்? எல்லாவற்றையும விவரமாகக் கூறு. நாக : நீ காட்டிற்கு வந்த பிறகு பாணபுரத்தில் நடந்த சம்பவங்களை ஒரு பெரிய சரித்திர நூலாகவன்றோ எழுத வேண்டும்? வாலீ சனைக் கொலை செய்த பிறகே அதிரத அரசருக்கு ஒரு தைரியம் பிறந்தது. நீயும் வனத்திற்குச் செல்லவே அவருடைய ஆடம் பரங்களை வருணிக்கவும் வேண்டுமோ? அவர் இட்டதே சட்டம். பாணபுரத்தைத் தமது பாதத்தின்கீழ் அடக்கி வைத் திருக்க அவர் செய்யும் முயற்சிகள் அளவிறந்தன. அவர் பேச்சு கரும்பினும் சுவையுடைத்தாயிருக்கிறது; செயலோ வேங்கை யினும் கொடிய தாயிருக்கிறது. வாலீசன், அல்லது புரேசன் என்ற பெயர்களைக் கூறுகிறவர்களும் தண்டிக்கப்படுகிறார் கள் என்றால் நான் வேறென்ன கூற வேண்டும்? உன்னடி பற்றி நடந்த தேசபக்தர் எத்தனையோ பேர் இதுகாலை சிறையில் தவங்கிடக்கிறார். பலர் வீர சுவர்க்கத்தை அடைந்துவிட்டனர். மனிதனுடைய பிறப்புரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று பொதுவாகக் கூறலாம். பாணபுரத்து ஜனங்கள் அதிரதருடைய கொடுமைகளுக்குச் சிறிதும் அஞ்ச வில்லை. அவர்கள் சுதந்தரம் என்ற ஒரே குறிக்கொண்டு நிற்கிறார்கள். இடையிலே நேரும் இடையூறுகளை ஒரு பொருட்படுத்தவில்லை. பாணபுரத்திலே இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தீரிக்கும் ஒவ் வொரு குழந்தைக்கும் - ஏன்? ஓரறிவு முதல் ஆறறிவுயிர் ஈறாக உள்ள அனைத்திற்கும் - தேச உணர்ச்சி பிறந்திருக்கிறது. பாண புரத்திலே கிடக்கும் ஒவ்வொரு புல்லும் தலை நிமர்ந்து நிற்கிறது. அதிரதருடைய அதிகார அடியைக் கண்டு அவைகள் வணங்குவதில்லை. நாடெங்கணும் ஒரு விதமான பரபரப்பு குடிகொண்டிருக்கிறது. அதிரதருடைய அதிகாரங்கள், சட்டங் கள், ஆயுதங்கள் யாவும் பாண புரத்தாருடைய வீரம், உறுதி, ஊக்கம் இவைகளுக்குச் சிறிது பணிந்தே நிற்கின்றன என்று கூற வேண்டும். அதிரதர் மீது யுத்தம் செய்ய அனைவரும் சித்தமா யிருப்பதாகப் பாணபுரத்துப் பிரதிநிதிக் குழுவினர் உனக்குத் தெரிவிக்கும்படி வேண்டினர். உடனே புறப்படு. புரே : இப்பொழுதே புறப்படுவதா? நாக : ஆம். அதற்காகவே இந்த மாலைப் பொழுதில் வந்தேன். நேரே நாம் யுத்தகளத்திற்குச் செல்ல வேண்டியவர்களே. புரே : இதென்ன ஆச்சரியம்! அவ்வளவு ஏற்பாடுகள் முடிந்து விட் டனவா? நாக : யாவும் சித்தமாயிருக்கின்றன. அதிரத அரசருக்கும், அவர் ஆச்சரியப்படும் வண்ணம் உன்னுடைய தலைமையின் கீழ் பாணபுரத்து வீரர்கள் யுத்தம் செய்ய வருவதாகப் பிரதிநிதிச் சபையார் தெரிவித்துவிட்டனர். முன்னொரு முறை நான் இங்கு வந்திருந்த போது இதைப் பற்றிக் குறிப்பாகக் கூறவில்லையா? புரே : அங்ஙனமானால் இதுகாறும் எனக்கு நிழல் கொடுத்து ஆதரித்து வந்த குடிசையையும், கனிகள் உதவிய மரங்களையும், செவிக்கின்பந் தந்துவந்த பட்சிகளையும், என்னைத் தூய்மைப் படுத்திய இந்த நீரோடையையும் பிரிந்துவிட்டு வரவேண்டு மென்று கூறுகின்றனையா? நீ இங்கு வந்து என்னுடன் சில காலம் தங்கியிருக்க வேண்டு மென்றன்றோ எண்ணினேன்? நாக : சுதந்தர வீரர் என்ற முறையில் திரும்பவும் வந்து இவ் விடத்தில் சில காலம் வசிக்கலாம். புரே : இந்த இருளிலேயே புறப்பட வேண்டுமா? நாக : ஆம். இப்பொழுது புறப்பட்டால் விடியற்காலை நாம் யுத்த களத்திற் கருகாமையில் சென்று பாணபுரத்துப் பிரதிநிதி களைச் சந்திக்கக்கூடும். புரே : ஆனால் இந்தக் குடிசைக்குள்ளிருக்கும் என் உடை முதலியவை களை எடுத்துக் கொண்டுவா. (நாகநாதன் குடிசைக்குள் செல்கிறான்.) புரே : (தனக்குள்) இயற்கையின் வடிவமாய் இலங்கும் மரங்களே! மலைகளே! சிறு குழவியின் உள்ளத்தைப் போன்ற தூய நீரோ டையே! இடும்பைகூர் எற்கு அவ்வப்பொழுது ஆறுதல் அளித்து வந்த காற்றே! என் அனலையை - ஐயோ! சுதர்மை, அனலை எங்ஙனம் இருக்கிறார்கள் என்பதைக் கேட்க மறந்து விட்டேனே - (பொறுத்து) என் அனலையை, அடிக்கடி ஞாபகப் படுத்தும் மான்காள்! என் சுதர்மையை நினைவூட்டும் மயில் காள்! குயில்காள்! உங்கள் அனைவரி டத்திலும் விடை பெற்றுக் கொள்கிறேன். சுதந்தர இன்பத்தை நுகர்ந்துவரும் நீங்களே புண்ணியர்கள்; முற்பிறவியில் நற்றவம் செய்தவர்கள். பிறவியில் உங்களை விட மேன்மை யானவர் என்று மனிதர் - அதிலும் என்னைப் போன்றவர் - பெருமை பாராட்டிக் கொள்ளலாமே யன்றி உங்களுடைய வாழ்க்கை அவர்களுடைய வாழ்க்கையை விட எவ்வளவோ மேலானது. உங்களிடையில் இவ்வளவு காலம் நான் வாழ்ந்து வந்தது என் பாக்கிய மென்றே கூற வேண்டும். உங்களாலேயே படைப்பின் விளக்கமும் ஈசனின் பெருமையும் நன்கு விளங்குகின்றன. ஆதலின் ஆண்டவனை அறிய விரும் புவோர் முதலில் உங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய உதவியின்றி மனிதன் ஒரு கணமும் வாழ முடியாது. மனிதனுடைய தினசரி வாழ்க்கைக்கு நீங்கள் எங்ஙனம் இன்றியமையாதவர்களோ அங்ஙனமே அவன் சுதந்தரம் பெறுவதற்கும் நீங்கள் துணைக் கருவிகளா யிருக்கிறீர்கள். இதற்காக மனித சமூகம். உங்களுக்கு என்னை கைம்மாறு செய்யப் போகிறது? உங்களுடைய ஆதரவில் இது காறும் வாழ்ந்துவந்த அடியேனுக்கு விடை கொடுத்தனுப்பு வீர்களா? உங்களை மற்றொரு முறை வந்து தரிசித்துச் செல்கிறேன். (நாகாகாதன் உடைகளை எடுத்துகொண்டு குடிசையிலிருந்து வருகிறான்.) நாக : போகலாமா? புரே : செல்லலாம். (பொறுத்து) சுதர்மை முதலாயினோர் எங்ஙன மிருக்கின்றனர் என்பதைப் பற்றி ஏதேனும் தெரியுமா? நாக : அவர்கள் இன்னும் அதிரதருடை காராக்கிருகத்திலேயே இருக்கிறார்கள். நாம் சென்றுதான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். சுதர்மாதேவியாருடைய கற்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் குழந்தை அனலை, பால் மணம் மாறாப் பேதை, சிறையிலடைபட்டிருப்பதைக் குறித்தே பாணபுரத்து ஜனங்கள் வருந்திக் கொண்டிருக் கிறார்கள். பெண்களைச் சிறையிலடைத்து வைக்கும் பாவம் அதிரதரை விரைவில் விடாது. புரே : நான் கொண்டிருந்த தேசபக்திக்கு இந்தத் தண்டனையா! (பெருமூச்செறிந்து) உம் - ஆண்டவனே! ஆண்டவனே! (இருவரும் செல்கின்றனர்.) இரண்டாங் களம் இடம் : ஈசானபுரத்தரண்மனையில் ஒரு தனிமண்டபம். காலம் : இரவு (அதிரதனும் துருபதனும் சில ஆதானிகர்களும் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.) முதல் ஆதானிகர் : எதற்கும் ஒரு வரம்பு உண்டு. அளவு கடந்த தயை காட்டியதன் பயனாக இந்தக் கடிதம் கிடைத்திருக்கிறது. இரண்டாவது ஆதானிகர் : ஆறுமுறை தோல்வியுற்றும் அவர்கள் சலிப்புறாது எழாவது முறை படையெடுக்க முன் வந்திருக்கிறார் களானால் அவர்களுடைய செருக்கை என் னென்று கூறுவது? துருபதன் : அவர்களுடைய வீரத்தைப் புகழ வேண்டும். மூன்றாவது ஆதானிகர் : துருபதருடைய பேச்சைக் கேட்டே நாம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். முதன்முதலாக அதிரத அரசருக்கு விரோதமான இயக்கம் கிளம்பிய போதே அதனை அடக்கிவிட்டிருந்தால் இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டிரா. துருபதர், கருணை கருணை என்று சொல்லி அப்பொழுது நம்மை அடக்கிவிட்டார். இப்பொழுது அக் கருணை நம்மீதே திரும்பிக் கொண்டது. அதிநாதன் : நடந்ததைப் பற்றி வாதம் செய்து கொண்டிருப்பதில் பயனில்லை. இப்பொழுது பாணபுரத்துப் பிரதிநிதிச் சபையார் அனுப்பி யிருக்கும் கடிதத்திற்கு என்ன பதில் அனுப்புவதென் பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். மு.ஆ. : மஹாராஜா! இதைப் பற்றி நாம் இன்னும் யோசனை செய்து கொண்டிருப்பதில் பயனில்லை. இதுகாறும் காட்டிய கருணை போதும். சத்துருக்களிடத்தில் அன்பு காட்டுவது அரச தருமத்துக்கு விரோதமாகும். நாமும் அந்தத் தருமத்தை மறந்து கருணை மேலீட்டினால் ஆறு முறை பாணபுரத்தாரையும் அவர் தலைவன் புரேசனையும் மன்னித்தோம். துரு : (தனக்குள்) மன்னிப்பு! கருணை! பாழும் பதங்கள்! என்ன பொருள்! மு.ஆ. : இனியும் பாணபுரத்தாரிடம் அடங்கிப்போக மஹாராஜர் பிரியப்படுகின்றாரா? அநேக நூற்றாண்டுகளாக ஈசனா புரத்தரசர் வசப்பட்டுக் கிடந்த பாணபுரம் சென்ற ஒரு தலை முறையாகத் தலைவிரித் தாடுகிறது. அந்தப் பேயாட்டத்தை அடக்குவது நமது கடமையல்லவா? பாணபுரத்தாரை அடக்கி யாளாவிட்டால் பிற நாட்டார் நம்மை என் சொல்ல மாட் டார்? வாலீசனுடைய தலைமையின் கீழ் எழுந்த இந்த இயக்கத்தை ஆதியிலேயே அறுத்து விட்டிருந்தால் இவ்வளவு கவலையும் பொருள் நஷ்டமும் உயிர்ச்சேதமும் நமக்கு ஏற் பட்டிரா. அரசாங்கத்துக்கு விரோதமாகக் கிளம்பிய இத்தகைய இயக்கத்தை யாரேனும் இவ்வளவு காலம் உயிர்கொடுத்து வைத்திருந்தனரா? எந்த அரசாங்க சரித்திரத்தி லிருந்தேனும் இதற்கு ஓர் உதாரணம் காட்டமுடியுமா? இராஜவிரோத இயக்கமென்னும் கொடிய பாம்பைப் பால் வார்த்து வளர்த்து விட்டுப் பிறகு அது நம்மையே கடிக்கிறதென்றால் அது யாருடைய குற்றம்? வாலீசன் முதன் முதலாகக் கிளம்பின காலத்திலேயே அவனைக் கடுமையாகத் தண்டித்து அவனுடன் சேர்ந்திருந் தவர்களைத் தேசத்திற்கு வெளியே துரத்தி விட்டிருந்தால் இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு உண்டாயிருக்க மாட்டா. புரேசனும் தோன்றி இங்ஙனம் நம்மைச் சண்டைக் கிழுத்திருக்க மாட் டான். நம்முடைய கௌரவமும் இங்ஙனம் குலைந்து போயிரா. ஆறு முறை பாணபுரத்தாரோடு போர் தொடுத்து அவரைத் தோற்கடித்த நாம், இந்த ஏழாவது முறை அவருடன் சமாதானம் செய்து கொள்வோமானால் அதைப் போன்ற அவமானம் வேறொன்றுமில்லை. இதனால் அவர் அதிக கர்வங் கொண்டு ஈசானபுரத்தையே தம் வசமாக்கிக் கொள்ள முயல்வர். அதற்கு மஹாராஜா சம்மதிக்கிறாரா? ஈசான புரத்து அரச வம்சம் அடியோடு அழிந்துவிட அவர் விருப்பங் கொள்கிறாரா? அங்ஙன மில்லை யானால் எவ்வித ஆலோசனையுமின்றி பாணபுரத்தின் மீது படையெடுக்க வேண்டுமென்று சேனாதிபதிக்கு உத்தரவு அருள்வாராக. நம்மிடத்தி லிருக்கும் சேனா சமூக மனைத்தையும் ஒருங்கே திரட்டிக் கொண்டு சென்று பாணபுரத்தை என்றும் தலையெடுக்க வொட்டாது அடக்கிவிட வேண்டும். இ.ஆ. : ஈசானபுரத்தின் கீழ்ப் பல்லாண்டுகளாக அடங்கிக் கிடந்த பாணபுரம் சில்லாண்டுகளாக நம்மீது பகைமை பாராட்டிப் படையெடுத்து வருவதனால், ஈசனாபுரத்து ஜனங்களுக்கு எவ்வளவு அவமானம் நேர்ந்திருக்கிறது என்பதை அரசர் பெருமான் கவனித்தல் வேண்டும். ஆறுமுறை பொறுத்து விட்டோம். இனியும் நாம் நம்முடைய அதிகாரத்தை, நம் முடைய கௌரவத்தை நிலை நிறுத்தாமற் போனால் ஈசான புரத்துக்கு முடிவு காலம் நேர்ந்து விட்டதென்றே நினைத்துக் கொள்ளலாம். இனி நாம் கடுமையான முறைகளை அநுசரிக்க வேண்டும். சிறையில் கிடக்கும் புரேசனின் மனைவியையும குழந்தையையும் கொலை செய்துவிட வேண்டும். யுத்த களத்தில் புரேசனையும் அவனுக்குத் தோன்றாத் துணையாக இருந்து வரும் நாகநாதன் என்பவனையும் பாணபுரத்துச் சேனைகளின் கண் முன்னரே துண்டு துண்டாக வெட்டி பறவைகளுக்கு இரையாகச் செய்துவிட வேண்டும். பிறகு, பாணபுரத்தவரில் எவரேனும் பேச்சினாலாவது செய்கை யினாலாவது வேறு எவ்விதத்தினாலாவது ஈசானபுரத்துக்கு விரோதமாகக் கிளம்பி னால் அவர் எவ்வித விசாரணையுமின்றி எவ்வித தாமதமு மின்றிச் சுடப்படுவர் என்று பகிரங்கமாக விளம்பரம் செய்ய வேண்டும். இங்ஙனம் சிறிது கடுமையான முறைகளை அனுஷ்டித் தாலன்றி, பாணபுரத்தில் கலகமும் குழப்பமும் இராஜத் துரோக இயக்கங் களும் ஒழியா. ஈசான புரத்து அரச வம்சத்தின் புகழ் மங்கா திருக்க வேண்டு மென்ற விருப்பமிருக்கு மானால், பாணபுரம் ஈசனாபுரத்திற்குக் கட்டுப் பட்டிருக்கிறது என்பதை உலகத்திற்கு நிரூபித்துக் காட்ட வேண்டுமானால், நாம் இதுகாறும் செலுத்தி வந்த அதிகாரம் சீர்குலையாதிருக்க வேண்டுமென்ற எண்ண மிருக்குமானால் உடனே மேற்கூறப் பட்டமுறைகளை அநுசரிக்க வேண்டுமென்று மஹா ராஜாவைக் கேட்டுக் கொள் கிறேன். எனக்கு முன் பேசிய பிரபுவின் அபிப்ராயம் அனைத்தை யும் நான் ஆதரிக்கிறேன். துரு : பாணபுரம் நம் கீழ் அடங்கியிருப்பதற்குச் சில முறைகளை இரண்டாவது பிரபு கூறினார். பாணபுரத்தை நம்முடைய நீண்ட நாள் விரோதியாகச் செய்துகொள்ள வேண்டு மென்பது அவரது விருப்பமானால் அந்த முறைகளை அநுஷ்டிப்பதில் எனக்குச் சிறிதும் ஆட்சேபம் இல்லை. இதுகாறும் நாம் பாணபுரத்தில் நடத்தி வந்த ஆட்சி முறையினாலேயே, அதனை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பாணபுரம் இப்பொழுது நமக்கு விரோதமாயிருக்கிறதென்றால் அதற்குக் காரணர் யார்? எந்தத் தேசமும், அதன் உரிமையை இழந்து பிறர் வசப்பட்டிராது. அப்படியிருந்தாலும் அதிருப்தியும் சமாதான மின்மையும் அவ்வடிமை நாட்டில் குடிகொண்டே யிருக்கும். அது சிறிது காலம் சமாதானத்தோடு இருப்பதாக வெளித் தோற்றத்திற்குக் காணப் படினும் உள்ளே அதிருப்தியானது புகைந்து கொண்டுதானிருக்கும். எரிமலை வெளிப் பார்வைக்குச் சாதாரண மலைபோல் தோன்றினும் திடீரென்று ஒருநாள் அஃது அக்கினியையும் பிற மரணக் கருவிகளையும் வெளிக் கிளப்ப வில்லையா? பாணபுரத்தை ஈசானபுரம் அநியாய மாகவே கைப்பற்றியது. சுதந்தரத்துடனிருந்த அந்தச் சிறிய தேசத்தை நம் வசப்படுத்தி பல வருஷ காலம் அதனை அந்தகாரத்தில் ஆழ்த்தி வைத்திருந்தோம். எத்தனை வருஷ காலம் அஃது அடிமைக் கடலில் ஆழ்ந்து கிடக்கும்? இதுகாறும் நாம் அந்நாட்டிலிருந்து பெற்ற ஊதியம் போதும். அச்சிறிய நாட்டை வறுமைப்படுத்தி நம் நாட்டைச் செல்வ நாடாக்கிக் கொண்டோம். மூ.ஆ : அந்நாட்டிற்கு நாம் செய்திருக்கும் அளவிறந்த நன்மைகளை மந்திரியார் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். துரு : அந்நன்மைகளினால் பாணபுரத்தார் ஏன் திருப்தியடைய வில்லை என்ற கேள்வியை பிரபு தமக்குத் தாமே கேட்டுக்கொள் வாரா? நாம் பாணபுரத்துக்கு அளவிறந்த நன்மைகள் செய்திருக்கிறோமென்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் அந்நன்மைகள் பாணபுரத்தாரைத் திருப்தி செய்துவிட்டன என்று நினைப்பது அறியாமை. ஒருவனை வயிற்றுக் கில்லாது பட்டினிபோட்டு உனக்கு நல்ல காற்று வரும்படியான ஒரு சிறந்த மாளிகை தருகிறேன். அதில் சிலகாலம் தங்கியிருப்பாய் என்று கூறினால் அவன் எதை விரும்புவான்? ஒரு கவள அன்னத்தை விரும்புவானா? மாளிகையில் உலாவ விரும்பு வானா? தனக்கு மாளிகை யளித்தவர்களை அவன் வந்தனை செய்வானா? நிந்தனை செய்வானா? இதனை அரசர் பெருமான் யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் இதுகாறும் பாணபுரத்தில் சத்தியம், தருமம் என்பவனவற்றை மறந்து, நீதி, நியாயம் என்பனவற்றைக் காற்றில் பறக்கவிட்டு ஆட்சி புரிந்து வந்திருக் கிறோம். இதை ஒவ்வொரு பிரபுவினுடைய மனசாட்சியும் கூறும். இன்னும் அந்தத் தீ நெறியிலே நாம் செல்ல வேண்டு மென்று என் நண்பர் கூறுவது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. பாணபுரத்து ஜனங்கள் ஆறு முறை தோல்வி யுற்றும் சலிப்புறாதவர்களாய் ஏழாவது முறை படையெடுக்க முன் வந்திருக்கிறார்கள். இதனைக் கொண்டு அவர்களுடைய விடா முயற்சியையும் ஊக்கத்தையும் பிடிவாதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஏழாவது முறையும் நாம் அவர்களைத் தோற்கடித்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். பிறகு அவர்கள் நம்மிடத்தில் அடங்கியிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இனி நமக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறீர்களா? யுத்த முயற்சியை அவர்கள் விட்டு விடுவார்கள் என்று எண்ணு கிறீர்களா? மஹாராஜா! இவ்விஷயத்தில் ஆழ்ந்து யோசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நாம் அற்ப சந்தோஷத்தை விரும்பக் கூடாது. பாணபுரத்துக்கும் ஈசான புரத்திற்கும் இருக்க வேண்டிய எதிர்கால சம்பந்தத்தைப் பற்றிக் கவனிக்க வேண்டும். பாணபுரத்தை நம் தொடர்பினின்றும் அடியோடு அறுத்துவிட வேண்டுமானால் இந்த யுத்தத்தில் இறங்கலாம். இன்றேல், புரேசன், நாகநாதன் முதலிய ஜனத் தலைவர்களை வரவழைத்து ஒருவித சமாதானம் செய்து கொள்ளலாம். இங்ஙனம் சமாதானம் செய்து கொள்வதனால் நம் கௌரவம் குலைந்து போய் விடாது. யுத்தத்தை விரும்புவது கௌரவமென்றும் சமாதானத்தை விரும்புவது கௌரவக் குறைவென்றும் நினைப்பது தவறு, பாணபுரத்தாரின் கோரிக்கைகளைத் திருப்தி செய்துவிட்டால் நம் பெருமையாவது அதிகாரமாவது சீர்குலைந்து போகாது. எனது நண்பர், புரேசன் மனைவி முதலாயினோரைக் கொலை செய்துவிட வேண்டு மென்று கூறினார். அந்தக் கொடிய காரியத்தை நிறைவேற்றி விடுவது மிகவும் சுலபம். ஆனால் அதற்குப் பிறகு நம் நிலைமை என்னாகும் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கொடிய செயலை நாம் செய்துவிட்டால் உலகத்தார் நம்மை ஒரு நாகரிக அரசாங்கமாக மதிப்பாரா? உலகத்தில் நாம் பிறகு தலை யெடுத்துப் பார்க்கமுடியுமா? மானிட தருமத்திற்கு நாம் அஞ்ச வேண்டாமா? இதுகாறும் ஆயுத பலத்தைக் கொண்டு பாண புரத்தை அடக்கியாண்டது போதாதா? இதைப் பற்றி நான் இனி அதிகமாக ஒன்றுங் கூறப் போவதில்லை. க்ஷத்திரிய தருமப்படி நடக்க வேண்டு மென்று மஹாராஜாவைக் கேட்டுக் கொள் கிறேன். வாலீசனைக் கொலை செய்த பாவம் நம்மை விரைவில் விட்டு விலகாது. அந்த ஒரு செய்கையினாலேயே பாணபுரம் அனைத்தையும் நம் சத்துருவாக்கிக் கொண்டோம். பாணபுரம் ஜனங்கள் விடாமுயற்சியுடன் அடிக்கடி படையெடுத்து வருவதன் காரணமென்னவென்று நினைக் கிறீர்கள்? இந்த ஏழவாது முறை அவர்கள் எளிதில் விடமாட்டார்கள் என்று எனக்குப் புலப்படுகிறது. மு.ஆ. : சத்துருவினுடைய விஷயங்கள் எவையேனும் மந்திரி யாருக்குத் தெரியுமா? துரு : பாணபுரத்தாருக்கும் எனக்கும் இரகசியமாகச் சம்பந்தம் உண்டென்று எனது நண்பர் கருதுகிறாரா? அந்த எண்ணம் அவருக்கு உண்டானால் அது தவறு என்று நான் அறிவிக் கிறேன். சத்தியத்தையும் நியாயத்தையும் மனத்தில் கொண்டு பேசினால் அதற்காகச் சந்தேகிப்பதா? பாண புரத்தாரைச் சந்தேகித்துச் சந்தேகித்தே அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டோம். அவர்களிடத்தில் நம்பிக்கை வைத்து நாம் ஆட்சி புரிந்திருந்தால் அவர்களைப் பகைவர்களாக்கிக் கொண் டிருக்க மாட்டோம். ஆதலின் இனியேனும் அவர்களுடைய திறமையில், அவர்களுடைய நட்பில் நம்பிக்கை வைத்து ஆட்சிபுரிய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இ.ஆ. : இதுகாறும் கூறியதனால் மந்திரியாரின் அபிப்ராயம் என்ன என்பது சரியாக விளங்கவில்லை. பாணபுரத்துப் பிரதிநிதிச் சபையாரிடமிருந்து வந்திருக்கும் கடிதத்திற்கு என்ன பதில் கூறுவதென்பதைப் பற்றி நண்பர் ஒன்றுந் தெரிவிக்கவில்லை. துரு : அதைப் பற்றி என் பேச்சின் முற்பாகத்திலேயே தெரிவித்திருக் கிறேன். இந்த ஏழாவது முறை பாணபுரத்தாரோடு யுத்தம் செய்யக்கூடா தென்பதே எனது அபிப்ராயம். யுத்தம் வேண்டா மென்றும், பாணபுரத்து ஜனங்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து வைப்பதாகவும், அவர் களுடைய பிரதிநிதிகளிற் சிலரை இங்கு உடனே அனுப்பவேண்டு மென்றும் இந்தக் கடிதத்திற்குப் பதில் தெரிவிக்க வேண்டும். மூ.ஆ. : ஒருகால், இந்த யுத்தத்தில் பாணபுரத்து ஜனங்கள் வெற்றி பெற்றார்களானால் அவர்கள் நமது நண்பர் துருபதரையே தங்கள் அரசராக நியமித்துக் கொள்வார்களென்று நம்புகிறேன்! பாணபுரத்து ஜனங்களுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டு மென்று அவர் எங்ஙனம் மணந் துணிந்து கூறினாரோ தெரியவில்லை. இதுகாறும் நாம் செலுத்திக் கொண்டுவந்த அதிகாரத்தைத் திடீரென்று விட்டுக் கொடுக்க அவர் விரும்புகிறாரா? பாணபுரத்தை இப்பொழுதே கைநழுவ விட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். ஈசானபுரத்தின் எதிர்கால நிலைமையென்ன? இவைகளை யெல்லாம் ஆலோசி யாமல் மானிட தருமத்தைப் பற்றியும் ஆட்சி முறையைப் பற்றியும் பேசுவதில் பயனில்லை. ஆதலின் எங்ஙன மாவது இந்த முறை பாணபுரத்தாரை அடக்கி இனியும் தலையெடுக்க வொட்டாத படி செய்துவிட வேண்டும். இந்த முறை நாம் வணங்கினோ மானால் ஆறு முறை போர் தொடுத்ததனால் ஈசானபுரத் தரசாங்கம் சலித்துப் போய்விட்டதென்று வேற்று நாட்டார் கருதுவர். இதற்கு மஹாராஜர் சம்மதிக்கமாட்டாரென்று நம்புகிறேன். ஆதலின் உடனே யுத்தத்திற்குச் சன்னாகம் செய்யுமாறு கட்டளையிட வேண்டுமென்று கேட்டுக் கொள் கிறேன். அதி : ஆதானிகரில் பெரும்பாலோருடைய அபிப்ராயப்படி யுத்தத்திற்கு நாம் புறப்பட வேண்டியதே. இறந்து போன அந்த வாலீசனை விட இந்தப் புரேசன் அதிக செருக்குள்ளவனாகக் காணப் படுகிறான். முன்னொரு முறை நம் நாட்டெல்லைக் குள்ளேயே வந்து நமது சேமவீரனைக் கொன்றுவிட்டுச் சென் றான். ஆறு முறை தோற்கடிக்கப் பட்டும் அவனுக்கு இன்னும் யுத்த வெறி விடவில்லை போலும். இந்த முறை எங்ஙனமாவது அவனைத் தொலைத்துவிட வேண்டும். இரக்கம் காட்டினால் நமது நாட்டிற்கே தீங்கு நேரிடும் என்று ஆதானிகர் கூறியதை நான் முற்றிலும் அங்கீகரிக்கிறேன். மந்திரி துருபதர் மாத்திரம் இங்கிருந்து இராஜ்ஜிய நிருவாகம் செய்யட்டும். ஆதானிகர் மூவரும் என்னுடன் யுத்த களத்திற்கு வந்து வேண்டிய உதவி களைச் செய்வாரரென்று எதிர்பார்க் கிறேன். (துருபதனைப் பார்த்து) சேனாதிபதியை உடனே வரவழைப்பீர் களா? துரு : வரவழைக்கிறேன். (செல்கிறான்) அதி : யுத்த சன்னாகம் செய்து கொள்வதன் பொருட்டு நாம் பிரிய லாமா? (ஆதானிகர் எழுந்திருக்கின்றனர்.) அதி : (இரண்டாவது ஆதானிகரைப் பார்த்து) நீங்கள் எந்தப் படைக்குத் தலைமை வகிக்கப் போகிறீர்கள்? (பேசிக் கொண்டே இருவரும் செல்கின்றனர்.) மு.ஆ. : எந்தப் படைக்கு அவர் தலைமை வகிக்கப் போகின்றார்? எம பட்டணத்திற்குச் செல்லும் படைக்கு அவர் தலைமை வகிப்பார்! மூ.ஆ. : நுணலுந்தன் வாயால் கெடும். யுத்தம் செய்ய வேண்டு மென்று நாம் கூறியதன் பயன்! அரசர் நமக்கே தாம்பூலம் பிடிக்கிறார்! என் செய்வது? மு.ஆ. : என் செய்வது? புரேசனுடைய பாதத்தில் முட்டிக் கொள்வது. (இருவரும் செல்கின்றனர்.) ஐந்தாம் அங்கம் முதற் களம் இடம் : பாணபுரத்துக்கும் ஈசானபுரத்துக்கும் இடையேயுள்ள ஒரு மைதானம். காலம் : அதிகாலை. (பாணபுரத்து வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். எங்கும் யுத்த கோஷம் நிறைந்திருக்கிறது. இச்சமயத்தில் நாகநாதனாலும் பாண புரத்துப் பிரதிநிதிச் சபையின் தலைவர் சிலராலும் புடைசூழப் பட்டு புரேசன் பிரவேசிக்கிறான். யாங்கணும் ஓர் ஆரவாரம் உண்டா கிறது. புரேசன் மட்டும் தன் குதிரை மீது ஆரோகணித்துக் கொள்கிறான். உடனே புரேசருக்கு ஜெய என்று வீரர்கள் சந்தோஷக் கூச்சலிடு கிறார்கள்.) புரேசன் : வீரர்களே! தாய் நாட்டின் பொருட்டு உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருக்கும் தீரர்களே! என் அன்பர்களே! உங்களுக்கு இச்சமயத்தில் நான் அதிகமாக ஒன்றுங் கூறப் போவதில்லை. இன்னும் சிறிது நேரத்திற்குள் உங்களுடைய வாட்கள் சத்துருக் களுக்கு மின்னலாய் விளங்கப் போகின்றன; உங்களுடைய தோட்கள் பகைஞரின் தோட் களோடு மலையப் போகின்றன; உங்களுடைய வீரக் கழலொலி - அதோ - பாடி வீட்டில் கிடக்கும் அதிர தருடைய ஆண்மையைக் கலங்கச் செய்யப் போகின்றது. உங்களுடைய வாளிலும் தாளிலும் தோய்ந் திருக்கும் இரத்தத்தைக் கண்டு கூற்றுவன் கதறப் போகிறான். உங்களுடைய ஜெய பேரிகையைக் கேட்டு சுதந்தரதேவி தாண்டவம் செய்யப் போகிறாள். அவளுடைய வரவில் நீங்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்களுக்கு ஆண்டவன் அருள் செய்வானாக. (பொறுத்து) நீங்கள் இதற்கு முன்னர் ஆறுமுறை தோற்றுப் போயிருக் கிறீர்கள் என்பதையும் இப்பொழுது ஏழாவது முறை யுத்த களத்தில் வந்து நிற்கிறீர்கள் என்பதையும் ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள் இம்முறையும் நீங்கள் தோல்வி யுற்றுப் போவீர் களாயின் உங்களைப் பேடிகளென்று உலகம் அழைக்கும். உங்களைக் கண்டு அறம் ஓலமிடும்; சத்தியம் அஞ்சும்; ஆண்மை என்னும் அரிய செல்வம் நகைக்கும். பிறகு நீங்கள் இந்த உலகத்தில் இருந்தும் ஒன்றே; இறந்தும் ஒன்றே. நடை பிணங்களாகவே உங்களைச் சுதந்தர உலகம் கருதும். இவை களுக்கெல்லாம் நீங்கள் சம்மதிக்கிறீர்களா? பாணபுரத்திலே பிறந்து, வாலீசரால் பழக்கப்படுத்தப்பட்ட நீங்கள் இந்த யுத்தத் தையும் அதிரதருக்கு விடுத்து அதனால் உங்கள் தாய் நாட்டிற்கும், உங்களை உயிராகப் போற்றிவந்த வாலீசருக்கும் அழியாத அவமானத்தைத் தேடித் தருவதாயின் இப் பொழுதே இந்த யுத்தகளத்தினின்றும் ஓடி விடுங்கள். ஆயுத பாணிகளாய் வீரர்களைப் போல் இங்கு நிற்க வேண்டாம். ஆண்மையைவிட, பொருளைவிட, உயிரை விட மானமே பெரிது. மானமின்றி வாழ்வோர் மானிகளல்லர். அம்மானத்தை நீங்கள் ஆறுமுறை விட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இந்த ஏழாவது முறையேனும் அதனை நீங்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டாமா? வாலீசரால் வணங்கப் பட்டு வந்த சுதந்தர தேவதை அதிரத அரசரால் கொல்லப் பட்டு வருகிறாள். வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்புவீர்களா? அத்தேவியை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டாமா? (பொறுத்து) யுத்தத்தில் வெற்றி பெறுவது, அல்லது இங்கேயே மாள்வது என்ற எண்ணமே இங்குள்ள வீரர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக் கிறதென்று நம்புகிறேன். அவ்வுறுதியில்லா தவர்கள் விலகிச் செல்லலாம். மற்றவர்கள், சத்துருக்களின் காப்பு நிலையம் அதிரும்படி ஜெயகோஷம் செய்யட்டும். (வீரர் அனைவரும் ஜெயகோஷம் செய்கின்றனர்). இதுவே ஆண்மை. இதுவே வீரம். இப்பொழுதே நான் உண்மை யான புரேசனாயினேன். சுதந்தர அரசியின் சிலம்பொலி என் செவிகளில் கேட்கிறது. அவள் அடியில் உயிரை விடுவோரே வீரர்; அவள் பொருட்டு உலக இன்பங்களைத் தவிர்ப்போரே துறவியர்; அவள் நிலையை அறிவோரே ஞானியர்; அவள் புகழைப் பாடுவோரே கவிஞர். பொன்னைப் போக்கலாம்; பெண்ணை நீக்கலாம்; மண்ணை மறக்கலாம். சுதந்தரத்தை இழக்க முடியுமோ? சுதந்தரமின்றி அடிமைகளாக நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? அல்லது சுதந்தரத்திற்காகப் போர் புரிந்து உயிரை விட விரும்புகிறீர்களா? முன்னது வேண்டுமாயின் பின்னால் பாருங்கள்; பின்னது வேண்டுமாயின் முன்னால் நோக்குங்கள். (பொறுத்து) வீரர்களே! ஒருவன் தேசத்தின் பொருட்டு எல்லாத் தியாகங் களையும் செய்ய வேண்டும். என் உடலிலுள்ள ஒவ்வொரு மயிர்க்காலுக்கும் ஒவ்வோர் உயிர் இருப்பின் அத்தனை உயிர்களையும் என் தாய் நாட்டிற்காக, சுதந்தரத்திற்காகப் பலியிடுவேன். ஆனால், ஆண்டவன் - பாழும் ஆண்டவன் - எனக்கு ஓர் உயிரையே அளித்திருக் கிறான். இந்த அற்ப உயிரையும் என் தாய் நாட்டிற்கு அர்ப்பணம் செய்யாம லிருப்பேனோ? நீங்கள் என்னைத் தலைவனாகக் கொண் டிருப்பது உண்மையானால் இந்த யுத்தத்தில் எங்ஙனமாவது வெற்றிபெற வேண்டும். பாண புரத்தின் பண்டைய நிலையை யும் அஃது அடைந் திருக்கும் தாழ்ந்த நிலையையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் பாணபுரத்திலேயே பிறந்தவர்களா யிருந்தால் பாணபுரத்தின் எல்லைக்குள் இருக்கும் ஐம்பெரும் பூதங் களையும் நீங்கள் கட்டியாண்ட துண்மையானால், அதோ - அநியாயம், அத ருமம், அசத்தியம் என்ற மூன்றனையும் குறிப்பதுபோல் முச்சக் கரங்களைக் கொண்டு அலையும் அதிரதருடைய கொடியை அறுத்து வீழ்த்தி இதோ பாண புரத்துச் சுதந்தரக் கொடியை நிலைத்து நிற்கச் செய்யுங்கள். (சில வீரர்கள் ஜெய ஜெய கோஷத்திடையே பாணபுரத்துக் கொடியை, அசுவத்தின் மீது ஆரோகணித்துக் கொண்டிருக்கும் புரேச னுடைய பக்கத்தில் நிறுத்துகிறார்கள்.) அதோ, அடிமைக் கொடி அலமருகிறது; இதோ சுதந்தரக் கொடி சுழல்கிறது. அதோ, அதிரத அரசர் நால்வகைச் சேனை யுடனும் கணக்கிலடங்காச் சில்லரைச் செல்வங்களுடனும் நம்மெதிர் நிற்கிறார். நமக்குப் பாடி வீடில்லை; நால்வகைப் பரிவாரங்கள் இல்லை; அரச போகங்கள் இல்லை. நாம் உண்மையை ஆயுதமாகக் கொண்டிருக்கிறோம்; அஞ்சா மையை அரணாகக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கையிலே கொண்டிருக்கும் சில்லரை ஆயுதங்களும் உங்களுடைய துரகங் களும் உண்மைக்கும் அஞ்சாமைக்கும் துணைக்கருவிகளே யாகும். அதிரதர் அடிமைக்காகப் போர் புரிகிறார். நாம் சுதந்திரத்திற்காக யுத்தம் செய்கிறோம். ஆதலின் நீங்கள் உங்கள் உறுதியைக் கொண்டே வெற்றி பெற வேண்டும். சத்துருக்களின் படைத் தொகையைக் கண்டு நீங்கள் எவ்விதத்திலும் தளர்ச்சி யுறவேண்டாம். சத்தியத்தின்முன் அசத்தியம் நில்லாது; நியாயத்தின் முன் அநியாயம் தோன்றாது. இவைகளை உள்ளத் தில் கொண்டு நீங்கள் உங்கள் காலை முன் வைக்க வேண்டும். அதோ சத்துருக்கள், நம் கொடி தூக்கப்பட்டு விட்டதைக் கண்டு யுத்த சித்தம் செய்து கொள்கிறார்கள். நீங்கள் இனிச் சிறிதும் தாமதிக்கக் கூடாது. கடைசி முறையாகக் கூறுகிறேன். நாம் வணங்கும் தெய்வத்தின் மீது ஆணை; நாம் பிறந்த நாட்டின் மீது ஆணை; அந்நாட்டின் மீது நாம் கொண் டிருக்கும் பற்றின் மீது ஆணை; சத்தியத்தின் மீது ஆணை; தருமத்தின் மீது ஆணை; நாம் வாழ்ந்த வாழ்க்கையின் மீது ஆணை; நமது வீரத்தின் மீது ஆணை; நமது பெண்டிர் கற்பின் மீது ஆணை; நாம் போற்றும் வாலீசர் மீது ஆணை. இம் முறை நாம் யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும். அடிமை அகல வேண்டும்; சுதந்தரம் உதயமாக வேண்டும்; வீரபேரிகை அதிர்க! வெற்றி முரசம் ஆர்க்க! இன்னியங்கள் ஒலிக்க! (சேனைகள் அணிவகுத்துச் செல்கின்றன.) இரண்டாங் களம் இடம் : பாணபுரத்தில் ஒரு பொதுஜன மேடை. காலம் : மாலை. (யுத்தத்தில் புரேசன் வெற்றி பெற்றான் என்பதைக் கேள்வியுற்று பாணபுரத்து ஜனங்கள் ஒன்று கூடி ஆர்ப்பரித்துக் கொண்டிருக் கிறார்கள். இச்சமயத்தில் புரேசன் நாகநாதனைத் தவிர்த்து அதிரத ருடைய மந்திரியாயிருந்த துருபதர் உள்பட சில நண்பர்களுடன் மேடைக்கு வருகிறான். உடனே ஜனங்கள் கடல்போல் புரேச மஹாராஜாவுக்கு ஜெய என்று ஆரவாரம் செய்கிறார்கள். புரேசன் கையமர்த்த ஜனங்கள் மௌனமா யிருக்கிறார்கள்.) புரேசன் : ஈண்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வந்தனத் தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். பிறகு அடிமைத்தனத்தை நிலைநாட்டுவதற்காகப் போர்புரிந்து யுத்தகளத்தில் மாண்டு போன அதிரத அரசருடைய குடும்பத் தாருக்கு என் அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழாவது முறை ஈசானபுரத்து யுத்தத்தில் வெற்றிபெற்றதற்கு நான் காரணம் என்று நீங்கள் கருதுவதாக அறிகிறேன். யுத்த வெற்றிக்குப் பாணபுரத்து வீரர்களே காரணர்கள். ஆனால் நாம் ஆறு முறை தோல்வியுற்றிருக்கிறோ மென்பதையும் ஏழாவது முறையே வெற்றி பெற்றோமென்பதையும் நீங்கள் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். நடைபெற்றவைகளைப் பற்றி இன்புறுதலும் துன்புறுதலும் கூடாவாம். இனி நடைபெற வேண்டி யவைகளைப் பற்றியே நாம் கவனிக்க வேண்டும். ஈசானபுரத் தரசருடைய கட்டினின்றும் நாம் விடுதலை யடைந்து விட்டோம். இனி நமக்குரிய ஓர் ஆட்சி முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதவசியம். (ஜனங்கள், நீங்களே அரசர் நீங்களே அரசர் என்று கூச்சலிடு கிறார்கள்.) நிருவாக மனைத்தையும் நானே இருந்து நடத்த வேண்டு மென்பது உங்கள் விருப்பமானால் அதற்கு நான் இணங்க வேண்டியவனே யாகிறேன். (ஜனங்கள் மறுபடியும் புரேச மஹாராஜாவுக்கு ஜெய என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.) மற்றொரு விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஈசானபுரத்து நிருவாகத்தையும் இனிப் பாணபுரத்தாரே ஏற்று நடத்தி வரவேண்டு மென்று ஆங்குள்ள பெரும்பாலோர் அபிப்பிராயப்படுவதாக இதோ ஈண்டு விஜயஞ் செய்திருக்கும் துருபதர் தெரிவிக்கிறார். அவர்க ளுடைய வேண்டுகோளுக்கு இணங்கியே தாம் இங்கு வந் திருப்பதாக அவர் கூறுகிறார். உங்கள் முன்னிலையில் அவருக்கு நான் ஒரு வார்த்தையே உரைப்பேன். பாணபுரத்தார், எந்த நாட்டையும் தம் வசப்படுத்தி ஆள வேண்டுமென்று ஏழு முறை யுத்தம் செய்யவில்லை. தங்களை அடிமைக் கட்டினின்றும் விடுதலை செய்து கொள்ளவே அவர்கள் போர்புரிந் தார்கள். ஆதலின் அவர்கள் ஈசானபுரத்தின் நிருவாகத்தை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. மற்றும், அதிரதருடைய அரசாங் கத்திற்கு அவருடைய புதல்வர் உரிமையாளராய் இருக்கும் போது வேற்று நாட்டார் அவரை நீக்கிவிட்டு ஆட்சி முறையை ஏற்றுக் கொள்வது நியாயமாகாது. ஈசானபுரத்தாரும், தங்கள் அரசரை விடுத்து வேற்று நாட்டாருக்குட்பட விரும்பு வது அறிவுடைமையாகாது. விருப்பமானால், அதிரதருடைய புதல்வருக்கு இராஜ்ய நிருவாக விஷயத்தில் வேண்டப் படும் உதவிகளைச் செய்ய பாணபுரத்தார் சித்தமாயிருக்கின்றனர். இந்தப் பதிலையே துருபதருக்குச் சொல்லி யனுப்பலாமென்று நினைக்கிறேன். நான் கூறியது உங்களுக்குச் சம்மதந்தானா? ஜனங்கள் : சம்மதம்; சர்வ சம்மதம். புரே : துருபதரை மந்திரியாகப் பெற்றுள்ள ஈசானபுரத்தாருக்கு எவ்விதக் குறைவுமில்லை யென்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். (நாகநாதனை முன்னிட்டு சுதர்மாதேவியும் அனலையும் பிரவேசிக் கிறார்கள்.) ஜனங்கள் : சுதர்மா தேவிக்கு ஜெய! அனலா தேவிக்கு ஜெய! நாக நாதருக்கு ஜெய! புரே : யான் இன்பம் நுகர்ந்த போதும் துன்பம் உற்ற போதும் எனக்குத் தோன்றாத் துணையாக இருந்து உதவிபுரிந்த நாக நாதருக்கு என் வந்தனத்தைச் செலுத்துகிறேன். ஜனங்கள் : நாகநாதருக்கு ஜெய! துருபதர்: சுதர்மாதேவியார் இக்கூட்டம் கலைவதற்குள் இங்கு வந்து விட்டதால் யான் இரண்டொரு மொழிகள் கூற வேண்டியதா யிருக்கிறது. தேவியாரையும் அவருடைய திருக்குமாரியையும் அதிரத அரசர் சிறையிலடைத்து வைத்திருந்தார் என்பது நீங்கள் அறிந்த விஷயமே. அதிரதருடைய இந்த அடாத செயலை ஈசாபுரத்தார் ஆதரித்தனர் என்று நீங்கள் எண்ண வேண்டாம். அதிரதருடைய ஆட்சியில் நீங்கள் மாத்திரம் கஷ்டப்பட்டதாகக் கருத வேண்டாம். உங்களை விடப் பன் மடங்கு அதிகமாக ஈசானபுரத்தாரும் துன்புற்றிருக்கின்றனர். அதிரதர் இறந்ததும் அவர் பதவியில் பாணபுரத்தாரே அமர வேண்டுமென்று கொண்டிருக்கிற எண்ணமொன்றே அவர் பட்ட வருத்தத்தை நன்கு புலப்படுத்தும். சுதர்மாதேவியாரைச் சிறையில் வைத்தது கற்பைச் சிறை வைத்தது போலாகுமென்று நாங்கள் அதிரதருக்குப் பன்முறை எடுத்துக் கூறினோம். அவர் இறந்துபோன பொழுது அவருக்குத் துணை சென்ற ஆதானி கரில் சிலர், அவர் உயிருடனிருந்து செய்த தீச்செயல் களுக்கும் துணையா யிருந்தனர். அநியாயத்தையே அடிப் படையாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதிரதரிடம் நான் பல வருஷ காலம் ஊழியம் செய்தேனாதலின், அவர் சுதர்மாதேவியாரைச் சிறை செய்த குற்றத்திற்காக இந்தச் சபையின் முன்னிலையில் பாணபுரத் தாருடைய மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். ஈசானபுரத்து ஆட்சி முறையைப் பாணபுரத்தார் ஏற்றுக் கொள்ள முடியா தென்று புரேசர் - கூட்டத்தில் ஒருவர் : புரேச மஹாராஜர் - ! துரு: ஆம்; மன்னிக்க வேண்டும். புரேச மஹாராஜர் கூறி விட்ட தற்காக எனது நாட்டார் பெரிதும் வருந்துவர். ஆயினும் இரு நாட்டாருக்கும் இதுகாறும் இருந்த பகைமை பனிபோல் பறந்து, நட்பு அதிகமாகும் என்று கருதுகிறேன். ஈசானபுரத்தில், அதிரதருக்கும் அவரைச் சேர்ந்த சிலருக்குமே பிற நாட்டாரைத் துன்புறுத்தித் தாம் இன்புற வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. மற்றெவருக்கும் அந்த எண்ணம் இருந்ததில்லை. ஆதலின் ஈசானபுரத்தால் பாணபுரம் இதுகாறும் அடைந்த அல்லல்களை அது மறந்துவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். புரேச மஹாராஜருடைய நல்லுதவிகளை ஈசானபுரத்தார் என்றும் எதிர் பார்க்கலாம் என்று கருதுகிறேன். நாகநாதன் : இங்கு நான் சில வார்த்தைகள் கூறுவது அநாவசிய மாகக் கருதப்படாது என்று கருதுகிறேன். புரேச மஹாராஜரும் சுதர்மா தேவியாரும் ஒருங்கே காணப் பெற்றதனால் யான் அடையும் மகிழ்ச்சியை இங்குள்ள ஜனங்களும் பங்கெடுத்துக் கொண்டு விட்ட தற்காக வருந்துகிறேன். இங்கு இருவரும் ஜனங்களின் அன்பு நிறைந்த ஆரவாரத்துக்கிடையே நிற்பதி னின்று அனைவரும் ஒரு பாடங் கற்றுக் கொள்ள வேண்டும். தாய் நாட்டின் பொருட்டு இவ்விருவரும் துன்புற்றதை ஒவ் வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். புரேசர், தேச நலத்திற்காகக் காட்டில் கொடுமைகள் அநுபவித்ததையும் அவருடைய தர்ம பத்தினியார் சிறைவாசம் செய்ததையும் எண்ணினால் எவருடைய தேகமும் நடுக்குறாம லிராது. புரேசர் ஏன் பொன்னை இழந்தார்? பொருளை இழந்தார்? மனைவி மக்களை மறந்தார்? அதிரதரால் தோல்வியுண்டும் வனத்தில் வேடர்போல் வாழ்க்கையை நடத்தினார்? யாவும் தேசத்தின் பொருட்டேயாகும். சகோதரர்களே! இவர்களுடைய தேசாபி மானத்தைப் பாருங் கள். இவர்களைப் பின்பற்ற முயலுங்கள். இவர்கள் நமக்கு நல்வழி நல்கும் பொருட்டு நீடூழி வாழ வேண்டுமென்று ஆண்டவனை வேண்டுங்கள். முடிவாக ஒரு மொழி கூறுகிறேன். பாணபுரத்தின் பிற்கால ஆட்சிமுறை எங்ஙனம் அமைக்கப்பட வேண்டுமென்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தே இருக் கிறது. ஆனால் ஆட்சிமுறை எங்ஙனம் ஏற்பட்ட போதிலும், புதிய ஆட்சி முறையின் தொடக்கத்தில் சுதந்தரதேவிக்கு மகுடாபிஷேகம் செய்துவிட்டுப் பிறகே நாட்டின் தலைவருக்கோ, அரசருக்கோ ஆளும் உரிமை அளிக்கப்பட வேண்டும். இஃதென் னுடைய விருப்பம். நாம் சுதந்திரத்திற்காகவே போராடினோம்; அதன் பொருட்டே பல்வகைத் தியாகங்களைச் செய்தோம். ஆதலின் சுதந்திரதேவிக்கே முதலில் நாம் மகுடாபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கு மஹா ஜனங்கள் இணங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். புரே : என் உள்ளத்தில் தோன்றியதை நாகநாதர் எடுத்துக் கூறியதற் காக அவரை நான் பாராட்டுகிறேன். சுதந்தர தேவியையே நாம் வணங்க வேண்டும்; அவளையே அரசியாகக் கொள்ள வேண்டும். அவளுடைய பிரதிநிதியாக ஒருவர் இருந்து இராஜ்ய நிருவாகம் செய்ய வேண்டும். இதில் எவருக்கும் தடையிரா தென்றே கருதுகிறேன். (இல்லையென்ற சப்தத்துடன் கர கோஷம்) சகோதரர்களே! நாம் எதன் பொருட்டு நெடுநாளாகப் போராடி வந்தோமோ, எதை விரும்பி உலக சுகங்களை மறந்து நின் றோமோ, எதை நோக்கிப் பல்லுயிர்களைப் பலியிட்டோமோ, எதற்காக வாலீசர் இறந்தாரோ அதை - அந்த பெறற்கரிய பேற்றை - சுதந்தரத்தைப் பெற்று விட்டோம். இனிதான் நம் கடமை அதிக மாகிறது. சுதந்தரம் பெற்று விட்டதால் நமக்குக் கர்வம் எற்பட்டிருப்பதாக உலகத்தார் நினைக்கும்படி நாம் நடந்து கொண்டால் நமக்கு அதைவிட வேறு கேடு வேண்டுவ தில்லை. நம்முடைய பொறுமையும் அன்பும் உலகத்தாரால் பரிசோதிக்கப் படலாம். அவைகளுக்கு நாம் ஈடு கொடுத்து நிற்க வேண்டும். ஆண்டவனால் அனைவரும் படைக்கப்பட்டார் என்ற உணர்ச்சி யாண்டும் நிலவ வேண்டும். யாவர்க்கும் ஒரே சட்டம், ஒரே நீதி, ஒரே மதிப்பு வழங்கப்பட வேண்டும். நாட்டில் அறியாமை அடியோடு அகலும்படி செய்யவேண்டும். ஆண்களுக்குரிய உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்குரிய உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். வறுமை நோய் ஓட வேண்டும். பசிநோய் பறக்க வேண்டும். இத்தகைய ஆட்சி முறையையே நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக எல்லாருடைய உதவியும் வேண்டும். இவ் விஷயத்தில் எவரும் பின்வாங்க மாட்டார் என்று கருதுகிறேன். சுதந்தரம் வாழி! வீரம் வாழி! வாலீசர் வாழி! பாணபுரம் வாழி! ஜனங்களில் ஒருவர் : பாணபுரத்து வீரர் வாழி! ஜனங்கள் : புரேச மஹாராஜாவுக்கு ஜெய! பாணபுரத்துக்கு ஜெய! (கலைகிறார்கள்.)  அபிமன்யு முகவுரை இச்சிறு நாடகம், பாரதம் பதின்மூன்றாநாட் போர்க்கதையை ஒருவாறு தழுவி எழுதப்பெற்றது. பழமையில் புதுமை பொலிய வேண்டு மென்பது எனது அவா. அதனை இச்சிறு நாடகத்தில் எவ்வளவு தூரம் புகுத்தியிருக்கிறேனென்பதைத் தமிழுலகத்தின் நன்மதிப்புக்கு விட்டு விடுகிறேன். இதிலுள்ள மாறுபாடுகளும் குறைபாடுகளும் என்னுடை யன என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந் நூலை யான் விரைவினில் எழுதிமுடிக்க வேண்டு மென்று பல்காலும் ஊக்கிப் பல்லாற்றானும் உதவி செய்த அன்பர் பலர்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கட்கு எல்லா நலன் களையும் அருள வேண்டுமென்று ஆண்டவனை வழுத்து கிறேன். நமது பண்டைய நூல்களில் பொதிந்து கிடக்கும் பல அரிய கதைகளுக்குப் புதிய ஆடை அணிவித்து, புத்துணர்ச்சி ஊட்டித் தமிழ் மக்களுக்குக் காட்சி தரவேண்டுமென்ற எளியேனது ஆசை நிறைவெய்து நாள் எந்நாளோ? நந்தாய்நாடு நற்றவவானினும் நனி சிறக்கவே! பவ, ஆடி, 18. நாடக பாத்திரங்கள் யுதிஷ்டிரர் பீமன் அர்ஜுனன் - பஞ்ச பாண்டவர்கள் நகுலன் சகதேவன் துரியோதனன் துச்சாதனன் - கௌரவர்களில் முதலிருவர். துரோணாசாரியார் - கௌரவர்களின் சேனாதிபதி சகுனி சல்யன் கர்ணன் - கௌரவர்களைச் சேர்ந்தவர்கள். ஜயத்ரதன் அபிமன்யு - அர்ஜுனன் புதல்வன் வியாசர் - ஒரு தவச் சிரேஷ்டர். ஸ்ரீகிருஷ்ணர் - பாண்டவர் சகாயன். வாஜபேயர் சோமயாஜுலு - இரண்டு அந்தணர்கள் சுபத்திரை - அபிமன்யுவின் தாயார் உத்தரை - அபிமன்யுவின் மனைவி. மற்றும் போர்வீரர்கள், சோமயாஜுலுவின் மனைவி, தோழி முதலியோர். கதை நிகழுமிடம் : குருக்ஷேத்திரம். முதல் அங்கம் முதற் களம் இடம் : குருக்ஷேத்திரத்தில் கௌரவர்கள் பாசறை. காலம் : இரவு. (துரியோதனன், துச்சாதனன், ஜயத்ரதன், சகுனி முதலிய பலர் வீற்றிருக் கின்றனர். துரோணாசாரியார் தனியாக ஓர் உயர்ந்த தானத்தில் அமர்ந் திருக்கிறார்.) ஜயத்ரதன் : (சிறிது ஏளனமாக) அந்தணர் தம் பொலிவும், அரசர் தம் வீரமும் நிறைந்த துரோணாசாரியார், கௌரவ சேனாதி பதியாகமட்டும் இல்லை; பாண்டவர்களின் குருவாகவும் இருக்கிறார். துரோணாசாரியார் : அதில் என்ன தவறு? துரியோதனன் : அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. படிப்பது வேதம்; பிடிப்பது வில்லாயுதம்! பூசையெல்லாம் இங்கே; பக்தி யெல்லாம் அங்கே! உண்பதெல்லாம் இங்கே; உழைப்ப தெல்லாம் அங்கே! துரோ : நிறுத்து, நிறுத்து சுயோதனா! உண்ட வீட்டுக்கு இரண் டகம் செய்யும் ஜாதி இன்னும் ஆரியா வர்த்தத்தில் உதிக்க வில்லை. துரி : உண்மை, ஆனால் காண்பது என்ன? தினந்தோறும் பாண்டவர் களின் வெற்றி! கௌரவர்களின் தோல்வி! துரோ : யுத்த களத்தில் வெற்றியும் தோல்வியும், ஆரவாரமும் அழுகையும் சகஜந்தானே. துச்சாதனன் : ஒரு நாள் வெற்றியும் ஒரு நாள் தோல்வியுமாக இருந் தால், இந்தச் சமாதானம் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் - துரி : தன் சேனையின் தோல்வியில் சேனாதிபதிக்குக் கவலை யில்லாமலிருக்கும் பொழுது - ஜய : ஆனால் சத்துருக்களின் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சி பொங்கு கிறது. துரி : இதன் காரணந்தான் விளங்கவில்லை. ஜய : காரணமா? குரு துரோணாசாரியாருடைய அதிரங்கள், சிஷ்யன் அர்ஜுனன் சந்நிதானத்தில் தலைவணங்கி, வாய் பொத்தி நிற்கின்றன! துச் : அவைகளுக்கு ஆசி கூறி அனுப்புகிறார் ஆசாரியார்! ஜய : அர்ஜுனன் பாணம் விடுக்கும் திறமையைக் கண்டு, ஆசாரி யாருடைய வாயிலிருந்து ஹா! ஹா! என்ற சப்தம் அவரை யறியாமலே வருகிறது! துச் : அர்ஜுனன் செலுத்தும் குருபக்திக்கு இதைக்கூட சன்மான மாகச் செய்யக் கூடாதென்று ஆசாரியாரை நீ தடுக்கிறாயா? ஜய : அர்ஜுனனுக்குத் தோன்றாத் துணையாக ஸ்ரீ கிருஷ்ண பகவான் எப்பொழுதும் இருந்து கொண்டிருகிறார். அவ ருடைய சுதர்சனம் பாண்டவர்களுக்கு ரட்சையாக விளங்கு கிறது. துரி : ஆசாரியார் அந்தக் கிருஷ்ணனுக்குப் பக்தி சிரத்தையோடு வந்தனை செய்கிறார்! துரோ : ஏன் இப்படி நிந்தனை செய்கிறாய் துரியோதனா? ஏச்சுப் பேச்சுகளும், வியங்க வார்த்தைகளும் கோழைகளின் உரிமைப் பொருள் களன்றோ? இராஜ சபையிலே வீரம் பேசுவது சுலபந் தான்! ஆனால் - ஜய : ஆனால் என்று இழுத்துப்பேசவேண்டாம். யுத்த களத்தி லேயும் கௌரவர்கள் தங்கள் சேனாதிபதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டாலன்றி, புற முதுகு காட்டமாட்டார்கள். துரோ : (கோபத்துடன் எழுந்து) என்ன சொன்னாய்! சேனாதிபதி களால் காட்டிக் கொடுக்கப்பட்டால் - (தலையசைத்துக் கொண்டே) உம் - நாவை உள்ளடக்கிப் பேசு. உன்னைப் போன்ற அற்பப் பூச்சிகளின் கலப்பினாலேயே, குரு வமிசத்தின் தூய்மையான இரத்தம் இப்பொழுது களங்கமடைந்திருக் கிறது. துரியோதனா! என்னுடைய சேனாதிபத்தியத்தில் உனக்கு நம்பிக்கையில்லையானால், இந்தா, இந்த உடைவாள் - (உடை வாளைக் கழற்றுகிறார்) துரி : ஆசாரியார் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஜயத்ரதா! நீங்கள் எல்லாரும் சும்மாயிருங்கள். தினந்தோறும் ஏற்பட்டு வரும் தோல்வி யினால் மனமுடைந்து நாங்கள் இப்படிக் கூறினோமே யன்றி, தங்களை அவமானப்படுத்த வேண்ட மென்ற நோக்கமில்லை. (பொறுத்து) இன்றைய யுத்தத்தி லேனும் நமக்கு வெற்றி ஏற்படுமா? துரோ : வெற்றியும் தோல்வியும் சேனாதிபதி வசத்தில் இருக்கிறதா? ஆயினும் ஒன்று கூறுகிறேன்; அதுவும் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்தற் பொருட்டு. நாளைய யுத்தத்தில் பாண்டவ வீரர்களில் ஒருவனைக் கொல்விக்கிறேன். துரி : இதை நாங்கள் ஒரு பிரதிக்ஞையாக ஏற்றுக்கொள்ளலாமா? துரோ : (கோபச் சிரிப்புடன்) பிரதிக்ஞையா? இதோ, என்னுடைய பிராமண தருமம்; என்னுடைய க்ஷத்திரியவீரம். இவைகளைப் பணயமாக வைத்துக் கொள். நாளைய போரில் நான் வகுக்கும் சக்ரவியூகத்தை உடைத்தெறிய முயலும் போது, பாண்டவ வீரர் களில் யாராவது ஒருவன் இறக்காவிட்டால், இவைகளை நீ எடுத்துக்கொள்ளலாம். துரி : அப்படியானால் அந்தச் சக்ரவியூகத்தை உடைக்க எவராலும் முடியாதோ! துரோ : அர்ஜுனன் ஒருவனால்தான் முடியும். ஆனால் அதைப் பற்றிக் கவலை வேண்டுவதில்லை. சம்சப்தகர்களோடு யுத்தம் செய்வதற்காக அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ண பகவானுடன் சென் றிருக்கிறான். ஆதலின் நமக்கு வெற்றி நிச்சயம். துச் : நாளை மாலைக்குள் பார்ப்போம்! துரோ : பார்ப்போமா? ஆண்டவன் சாட்சியாக, ககன மார்க்கத் திலே சஞ்சரித்திடும் தேவ கணங்கள் சாட்சியாக, ப்ரஹ்மா வர்த்தமென்கிற இந்தப்புண்ணிய பூமியின் சாட்சியாக, நாளைய ரணரங்கத்திலே பாண்டவ வீரர்களிலொருவனுடைய தலை உருளும்படி செய்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால் வீர வர்க்கம் எனக்கு இல்லாமற் போவதாக! பாரததேசத்து வீராங் கனைகள் என்னைச் சபிப்பார்களாக! அந்தச் சாபத்திலே, என்னுடல் மட்டுமல்ல, என்னுயிர் மட்டுமல்ல, என்னுடைய கீர்த்தியும், என்னுடைய வீர வாழ்க்கையும் சாம்பராகப் போகு மாக. துரி : ஆசாரியாருக்கு எங்கள் வணக்கம். (அனைவரும் வணங்குகி றார்கள்) சேனாதிபதியின் வாக்குறுதியிலே குரு வமிசத்தின் வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது. துரோ : பகவானுடைய திருவருள் எப்படி யிருக்கிறதென்று யாருக்குத் தெரியும்? (இச்சமயத்தில் யுத்த முழக்கம் கேட்கிறது) அதோ! யுத்த கோஷம்! அனைவரும் என்னோடு சிறிது வாருங் கள். சக்ரவியூகத்தை வகுக்கச் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். (துரோணாசாரியாரை முன்னிட்டு அனைவரும் செல்கின்றனர்) துச் : (சென்று கொண்டே) யுதிஷ்டிரனுடைய தருமம், துரோண ருடைய பிரதிக்ஞை முன்னர் என்ன செய்யப் போகிறதென்று பார்ப்போம். (அனைவரும் செல்கின்றனர்.) இரண்டாவது களம். இடம் : பாண்டவர்களின் பாசறை. காலம் : காலை. (அர்ஜுனனைத் தவிர்த்த பாண்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். யுதிஷ்டிரர் மட்டும் கவலையோடு உட்கார்ந்திருக்கிறார். அபிமன்யு ஒரு புறமாக நிற்கிறான். மற்ற வீரர்கள் சிறிது தூரத்தில் நிற்கிறார்கள்) அபிமன்யு : ஐயனே! வீண் கவலை எதற்கு? சத்துருக்கள் சக்ரவியூகம் வகுத்தா லென்ன? வச்சிரக்கோட்டை கட்டினாலென்ன? நமது தேகத்தில் பிராணன் இருக்கும் வரை நாம் ஏன் கவலைப் பட வேண்டும்? யுதிஷ்டிரர் : குமாரா! நீ ஒன்றும் அறிய மாட்டாய். சக்ரவியூகத்தை வகுத் துள்ளது யார் தெரியுமா? நமது குரு துரோணாசாரியார். அபி : இருக்கட்டுமே. குருவாயிருந்தாலென்ன? உருவமே இல்லாத அந்தக் கடவுளா யிருந்தாலென்ன? பீமனுடைய கையிலே கதா யுதம் இருக்கிறது; அர்ஜுனனுடைய அதத்திலே காண் டீவம் இருக்கிறது; இவைகளுக்கு மேலாக மாமா கிருஷ்ணருடைய சுதர்சன சக்கரம் நமக்குப் பாதுகாப்பா யிருக்கிறது. இன்னும் ஏன் வியாகுலப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? யுதி : அபிமன்யு! சக்ரவியூகத்தை உடைத்தெறிய உனது தகப்பனார் அர்ஜுனன் ஒருவனால் தான் முடியும். அவன் இல்லாத சமயம் பார்த்தே கௌரவர்கள் இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக் கிறார்கள். அபி : அர்ஜுனன் இல்லாவிட்டால் என்ன? அர்ஜுனன் அமிசமாக நான் இல்லையா? என்னுடைய முகத்திலே வீரக்களை இல் லையா? பாண்டு வமிசத்தின் பவித்திர ரத்தம் என் தேகத்திலே கொந்தளித்துக் குமுறி எழவில்லையா? பீமன் : (தனக்குள்) அர்ஜுனனுடைய பூரண தேஜசும் இங்கே ஒளி விட்டு வீசுகிறது! யுதி : மகனே! நீ தெரியாமல் பேசுகிறாய். அநுபவமில்லாத உற்சாக மானது கடிவாளமில்லாத குதிரையைப் போன்றது. எம் போன்றவராலேயே பிளக்க முடியாத சக்ரவியூகத்தை, உன்னால் எப்படி உடைத்தெறிய முடியும்? தவிர, எங்களுடைய வருங் கால வாழ்வானது, உன்னுடைய வளர்ச்சியிலேயே இருக்கிறது. அப்படியிருக்க உன்னை யுத்தகளத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் இங்கிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப் போமா? அபி : அப்படியானால் இப்படியே கவலைப்பட்டுக் கொண் டிருக்கப் போகிறீர்களா? இதனால் சத்துருக்களின் சூழ்ச்சியைத் தகர்த்தெறிந்து விட முடியுமா? யுதி : குமாரா! இந்தச் சத்துருக்களெல்லாம் நமது மித்துருக்களே. ஒரு மரத்தினின்று பிரிந்த இரண்டு கிளைகள். ஒரு நிலத்தில் விளைந்த பயிர். அபி : ஐயனே! என்னை மன்னிக்கவேண்டும்; இது தவச்சாலையல்ல; யுத்த பூமி. தருமோபதேசம் செய்யவோ அல்லது கேட்கவோ இங்கு நாம் கூடியிருக்கவில்லை. இது பாசறை. நாம் க்ஷத்திரி யர்கள். கௌரவர் களோடு போர் நடைபெற்று வருகிறது. யுதி : அப்பா! பொறுமையாகப் பேசு. அபி : (வெறுப்புடன் தனக்குள்) பொறுமை! பொறுமை! (பிரகாச மாய்) பிதா! இந்தப் பொறுமை என்னும் படுகுழியிலே பாண்டு வமிசத்தின் நற்பெயரைப் புதைத்து விடப் போகிறீர்களா? மாதா துரோபதையின் சபதம் அபத்தமாகிவிடப் போகிறதா? அன்று அவையிலே அடைந்த அவமானம் கருணையிலே கலந்து கரைந்து விடப் போகிறதா? பீமன் : (தனக்குள்) பேஷ்! மகனே! பேஷ்! யுதி : அபிமன்யு! சக்ரவியூகத்தை உடைத்தெறிவது என்பது எல்லா ராலும் முடியாது. பார்த்தன் ஒருவனால்தான் முடியும். அந்த மகா மந்திரத்தை அவன் ஒருவனே அறிவான். அபி : நானும் அறிவேன் ஐயனே! அஃதென்ன அவ்வளவு பெரிய காரியம்? யுதி : அதை நீ எப்பொழுது கற்றாய்? யாரிடம் கற்றாய்? அபி : மாதா சுபத்திரை கர்ப்பவதியாயிருந்த பொழுது, ஒரு நாளிரவு எனது தகப்பனார் சக்ரவியூகத்தை உடைத்தெறிவது எப்படி என்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அதை நான் வயிற்றிலிருந்த வண்ணம் கேட்டுக்கொண்டிருந்தேன். அஃது இப்பொழுது நன்றாக ஞாபகம் இருக்கிறது. இனியேனும் எனக்கு உத்திரவு கொடுப்பீர்களா? யுதி : சக்ரவியூகத்திற்குள் பிரவேசிக்கத்தெரிந்த உனக்கு, அதனின்றும் மீண்டு வரத் தெரியுமா? அபி : தெரியாது. ஆனால் அதைப்பற்றிக் கவலையுமில்லை. எப் பொழுது பிரவேசிக்கத் தெரிந்துவிட்டதோ, பிறகு அதனின்றும் திரும்பி வருவது அவ்வளவு கஷ்டமான செயலன்று. எனக்கு விரைவிலே விடை தாருங்கள். யுதி : பாலா! உன் தகப்பனாருக்கு அது கஷ்டமான செயலன்று. ஆனால் மற்றவருக்கு முடியாது. தெரியாமலா துரோணர் அர்ஜுனன் இல்லாத சமயம் பார்த்து இந்தத் தந்திரத்தைக் கையாண்டிருக்கிறார்? அபி : எனது பிதா ஒருவர் இல்லாவிட்டால், பாரத யுத்தமே நின்று விடும் என்பது தங்கள் கருத்தா? பாண்டவர்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க அர்ஜுனன் ஒருவனால் தான் முடியும் என்பது தங்கள் எண்ணமா? அப்படியானால் நான் அர்ஜுனன் புத்திரனில்லை. அவருடைய புகழிலே பிரகாசித்துக் கொண் டிருக்க நான் விரும்ப வில்லை. என்னுடைய வீரத்திலே, என் தேகத்தினின்று வழிந்தோடும் இரத்தப் பெருக்கில் ஜ்வலிக்கும் கீர்த்தியிலே, பாரத தேசத்து நாரீமணிகள் வாசிக்கும் யாழிலே நான் வாழ விரும்புகிறேன். (பொறுத்து) பிதா! குருவம் சத்தைக் கருவறுக்க எனக்கும் உரிமை யுண்டு. அந்த அரவக்கொடியை அறுத்து நிலத்தில் வீழ்த்தி, அதன் மீது எனது இரதத்தைச் செலுத்த வேண்டும். பிதா பீமசேனருடைய விருதமும் முடிய வேண்டும். மாதா துரோபதையின் உள்ளம் குளிரவேண்டும். அந்த உள்ளக் குளிர்ச்சியிலே, தங்கள் ஆசீர்வாதத்தின் திரு நீழலிலே யான் சாந்தியடையவேண்டும். பிதா! சீக்கிரம் உத்திரவு கொடுங்கள். யுதி : ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவினுடைய அருளினாலும், எங்க ளுடைய ஆசீர்வாத பலத்தாலும் நீ நீடுழி வாழக் கடவாய். ஆனால், மகனே! பதினாறு வயதும் நிரம்பப் பெறாத உன்னை சக்ரவியூகமெனும் காலாக்கினியிலே எப்படி மனமொப்பித் தள்ளுவேன்? அபி : அந்த அக்கினியிலிருந்து தங்கத்தைப் போல் அதிகப்பிரகாச மாய் தங்களிடம் மீண்டு வருவேன். அந்தப் பிரகாசத்திலே தங்க ளுடைய ஆனந்தமும் கலந்து, பாண்டு வமிசத்திற்கு அழியாத புகழைத் தேடித்தரும். யுதி : இல்லையப்பனே! ஒருகாலும் முடியாது. உன்னை யுத்த களத்திற்கு விடைகொடுத்து அனுப்ப முடியாது. சுபத்திரா தேவியினால் அன்புடன் வளர்க்கப்பட்டு வந்த இந்தக் கோமள சரீரத்திலே சத்ர வர்ஷமா! இந்தப் பொன் மேனியிலே யுத்த களத்தின் புழுதியா! வேண்டாம்; நீ யுத்த களத்திற்குப் போக வேண்டாம். நேராக உத்தரையிடம் சென்று அவளுடைய தனிமையை நீக்கு. அபி : (சிறிது கோபச் சிரிப்புடன் தனக்குள்) அம்மட்டும் ஆடை யாபரணங்களை அணிந்துகொண்டு அம்சதூளிகா மஞ்சத்தில் அயர்ந்து நித்திரைசெய் என்று சொல்லாமற் போனாரே. (பிரகாசமாய்) பிதா! என்னுடைய வீரத்திலே தங்களுக்கு ஏன் இவ்வளவு அவநம்பிக்கை? என்னைவிடக் குறைந்த வயதிலே, சூரிய வமிச திலகனாகிய இராம பிரான் கொடிய அரக்கர்களை அழித்து, விசுவாமித்திரருடைய யாகத்தைக் காப்பாற்றவில் லையா? மண்ணினைக்காத்த அந்த மன்னன் மைந்தர்கள் - வால்மீகியின் வயோதிகத்திலே வளர்ச்சி பெற்ற லவகுசர்கள் - யாகக் குதிரையைப்பிடித்துக் கட்டவில்லையா? தங்கள் சிறிய தந்தையைத் தோற்கடித்து பிதாவின் ஆசியைப் பெறவில் லையா? அவர்களால் செய்ய முடிந்த காரியத்தை நான் செய்ய முடியாதா? இளைஞர்களால் செய்ய முடியாத காரியம் உலகத் திலே என்ன இருக்கிறது? யுதி : (அபிமன்யுவின் அருகிற்சென்று) ஒன்றுமில்லை. ஆயினும் நீ போருக்குச் செல்லக்கூடாது. நீ இளங்குழந்தை; எங்கள் வாழ்வின் செல்வம்; எங்கள் குலத்துக்கொரு விளக்கு. துரோண ருடைய யுத்த கோசலத்தை நீ அறிய மாட்டாய். அபி : இல்லை பிதா! நான் சென்று வெற்றியுடன் திரும்பி வருகி றேன். எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள். (தலை வணங்குகிறான்) யுதி : பிடிவாதம் செய்யாதே. நீ தனியனாகச் செல்ல, நாங்கள் உன் வழியைப் பார்த்து ஏங்கி நிற்பதா? அபி : தந்தையே! நான் ஏன் தனியனாகச் செல்கிறேன்? என் தேகத் திலே தோளிருக்க, தோளிலே அம்புறாத் தூணியிருக்க, கையிலே வில்லிருக்க, இடையிலே வாளிருக்க நான் யாருக்கு அஞ்சவேண்டும்? அர்ஜுனன் புத்திரனாகப் பிறந்து, சுபத்திரா தேவியின் மடியிலே வளர்ந்து, தங்கள் அடியிலே பணிந்து நிற்கும் எனக்கு அச்சமேது? தனிமையேது? பிதா! இன்று எப்படியாவது நான் துரோணாசாரியாருடைய சந்நிதானத்தில் எனது தோள் வலியையும் வாள் வீச்சையும் காண்பிக்க வேண்டும்; அர்ஜுனன் இல்லாத காலத்துப் பாண்டவர்களைத் தோற்கடித்துவிட வேண்டுமென்ற கௌரவர்களின் எண்ணம் பொய்யாகப் போகவேண்டும்; என்னுடைய பிரதிக்ஞை நிறை வேற வேண்டும். யுதி : என்ன பிரதிக்ஞை அப்பா? அபி : சக்ரவியூகத்தை இன்று உடைத்தெறிவதாகப் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறேன். இவ்வாரிய நாட்டினில் சூரிய தேவன் வீரியத்துடன் பிரகாசிக்க மறுத்துவிட்டபோதிலும், இந்திர லோகத்தி லிருந்து வந்தியர்கள் வந்து ஆரியாங்கனை களின் அழகைக் கொள்ளை கொண்டு விட்டபோதிலும், சிந்து மாநதியை மந்திரம் போட்டு மடக்கி அந்தர தலத்திற்கு அழைத்துக் கொண்டுவிட்டபோதிலும், நான் கொண்ட பிரதிக்ஞையை மாற்றமாட்டேன். என் தேகத்திலே பிராணன் இருக்கும்வரை, அந்தப் பிராணனோடு பாண்டு வமிசத்தின் பவித்ர ரத்தம் கலந்திருக்கிற வரை, அந்த இரத்தத்திலே எனது தாய்ப்பாலின் வேகம் இருக்கிறவரை நான் யுத்தம் புரிவேன். துரோணர் திகைக்க, துரியோதனன் தொடை நடுங்க, துச்சா தனன் தடுமாற ரணரங்கத்திலே நான் நாட்டியம் செய்வேன். தங்கள் பாத தூளியைத் தாருங்கள். (வணங்குகிறான்) பீமன் : அண்ணா! இனி யோசிக்கவேண்டாம். குமாரனுடைய பிரதிக்ஞை நிறைவேறுவதற்கு உதவி செய்யுங்கள். அர்ஜுனன் இல்லாத குறையை அபிமன்யு நிறைவேற்றி வைப்பான். யுதி : (அபிமன்யுவின் சிரத்தில் கரம் வைத்து) அப்பா! உனது பிரதிக்ஞை பூர்த்தியாவதாக! வெற்றி மாலையுடன் விரைவிலே திரும்பி வந்து எங்களை மகிழ்விப்பாயாக! அர்ஜுனன் ஆண்டகைமையும், பகவான் வாசுதேவனின் நல்லாசியும் உன்னைக் காப்பாற்றட்டும். (அபிமன்யு அனைவரையும் வணங்கிவிட்டுச் செல்கிறான்.) யுதி : (அபிமன்யு சென்ற வழியைப் பார்த்துக்கொண்டே பீமனைப் பார்த்து) தம்பீ! விஜயன் இல்லாத சமயம் நமக்கு இந்த பரிசோதனை ஏற்பட வேண்டுமா? பீமன் : அண்ணா! அபிமன்யுவைத் தனியாகச் செல்லவிடுதல் சரி யன்று. யுதி : ஆம்; பாசறையில் இனி நமக்கென்ன வேலை? (யுத்தகோஷம். அனைவரும் செல்கிறார்கள்) மூன்றாவது களம் இடம் : அதினாபுரத்தில் யமுனையாற்றங்கரை. காலம் : காலை. (வாஜபேயர், சோமயாஜுலு என்ற இரண்டு அந்தணர் காயத்திரி ஜபம் செய்து கொண்டே பேசிக்கொண்டிருக்கின்றனர்) வாஜபேயர் : எல்லாம் இந்தச் சகுனி வேலைதான்! சோமயாஜுலு : இராமாயணத்துக்குக் கூனி! பாரதத்துக்குச் சகுனி! வாஜ : ஆமாம். அங்கே இராமர்; இங்கே பீஷ்மர். சோம : ஓய்! அப்படிச் சொல்லாதேயும். அவர் பெரிய சம்சாரி; இவர் சாதாரண பிர்ம்மசாரி. வாஜ : அவர் பித்ருவாக்ய பரிபாலனார்த்தம் வனவாசம் போனார். இவர் பிதாவின் சந்தோஷார்த்தம் இராஜ்யம், பாலியம் எல்லாவற்றையும் தியாகம் பண்ணிவிட்டார். சோம : இதிலே யார் பெரியவர் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? வாஜ : பீஷ்மர் தான்; சந்தேகமென்ன இதில்? சோம : இல்லை, ராமர்தான். வாஜ :- இல்லை, பீஷ்மர்தான். சோம : ஓய்! உளறாதேயுங்காணும். ஏன்? பீஷ்மராலே ஏதாவது காரியம் ஆகவேண்டியிருக்கோ உமக்கு? வாஜ : ஓய்! ஜாதி பேசினீர்களானால் பல்லை உடைச்சுடுவேன். (ஜபத்தை நிறுத்திக் கொண்டு இடுப்பில் துணியை வரிந்து கட்டுகிறார்) சோம : ஓய்! குருக்ஷேத்திர வாடை யடிக்கிறதோ உமக்கு? நீர் படித்த தர்க்க சாதிரத்தை இந்த நதியிலேதான் மிதக்க விடணும். வாஜ : ஓய்! நாக்கை உள்ளடக்கிப் பேசும். உம்ம வியாகரணத்தை விட, என்னுடைய தர்க்கம் ஒன்றுங் கெட்டுப்போகவில்லைங் காணும். உம்ம வியாகரணத்தை முதலில் நெருப்பிலே போட்டு பொசுக்குங்கோ; பிறகு என்னுடைய தர்க்கத்தை ஆற்றிலே மிதக்கவிடலாம். சோம : உம்ம தர்க்கம் மிதக்கிறதோ இல்லையோ, நீர் மிதக்கப் போகிறீர் இப்பொழுது; அது நிச்சயம். வாஜ : உட்கார்ந்தபடியேஅகாராந்தப்புல்லிங்கம் இகாராந்தப்புல் லிங்கம் என்று சொல்லி சுவடிகளைப் புரட்டிப்பார்த்துக் கொண்டிருக்கத் தான் தெரியும் உமக்கு. எதோ, என்னை மிதக்க விடுமே பார்ப்போம். சோம : நீர் ஜபத்தை விட்டுவிட்டு எழுந்து நின்று கச்சை கட்டிக் கொண்டு என்ன செய்துவிட்டீர்! ஜபத்துக்கு ஜபமும் போச்சு. வாஜ : எல்லாம் உம்மாலேதான். ஆனால் உம்ம ஜபத்தைவிட என் னுடையது ஒன்றுங் கெட்டுப் போகல்லே. கை ருத்ராட்சத்தை உருட்டறது; வாய் என்னோடு சண்டை செய்யறது; மனசோ எண்ணாயிரம் எண்ணங் களை எண்றது. வேஷமென்னமோ பலமாத்தானிருக்கிறது. சோம : குலம் கெட்டுப் போகல்லே பாருங்கோ. வாஜ : உம்ம குலத்தைபோய் குப்பையிலே போடுங்காணும். பகவான் இப்பொழுதுதானே அர்ஜுனனுக்கு உபதேசம். பண் ணார் : குணம் பெரிசு கர்மம் பெரிசுன்னு. சோம : அப்படியானா துரோணர் பிராமணரா, க்ஷத்திரியரா? வாஜ : வீட்டிலே பிராமணர்; யுத்தகளத்தில் க்ஷத்திரியர். சோம : தர்க்கம் வாசித்ததன் பயன் என்னாடான்னா, இந்த மாதிரி விபரீத வியாக்கியானம் பண்றதுக்குத் தெரிஞ்சுது. இப்படித் தான் குலம், கோத்திரம், ஜாதி, ஆசாரம் எல்லாம் கெட்டுப் போச்சு. இல்லாதெ போனா, இந்த மாதிரி அண்ணன் தம்பி களுக்குள்ளே பிரமாதமா சண்டை ஏற்படுமா? பாட்டனுக்கு பேரனோடு சண்டை! அப்பனுக்கும் பிள்ளைக்கும் சண்டை! வாஜ : ஓய்! சும்மா பேசாதேயும். தர்மத்திற்காக சண்டை போட வேண்டியதுதானே. யாராயிருந்தா என்ன? சோம : ஆமாங்காணும். துரோணர், கிருபர், அசுவத்தாமா இவா ளெல்லாம் வில்லை பிடிச்சுண்டு சண்டை போடறது ரொம்ப தர்மந்தான். பேசாதே தலைமேலே துணியைப் போட்டுக் கொண்டு தட்சணத்திற்குப் போய் விடலாம். வாஜ : அங்கேயிருந்து வந்திருக்கப்பட்ட ஆட்களைப் பார்த்து இந்த எண்ணம் உதிச்சாபோலே இருக்குது. சோம : பாண்டவ சேனைக்கும் கௌரவ சேனைக்கும் சாப்பாடு போட்றதுக்காக, திராவிட தேசத்திலுள்ள ராஜாக்கள்ளாம் சேர்ந்து ஒரு சேனையை அனுப்பிச்சு இருக்கா பாருங்கோ; இந்த ஒரு சின்ன விஷயத்தைக் கொண்டே அவாளுடைய தாராள மனசு நன்னா தெரியறது பாருங்கோ. வாஜ : ஆமாம்; இங்கே தர்மம் கெட்டு போச்சுன்னு போறேளா, இல்லை, அங்கே தர்மதாபனார்த்தம் போறேளா? சோம : இரண்டத்துக்கும்தான். வாஜ : இதோபாருங்கோ, இப்பவே சொல்றேன்; கேளுங்கோ. சுதேசம் சுபிட்சம் சுகம் என்றதுபோல, இங்கேயிருக்கிற சௌக்யம் அங்கே வராது. பாஷை, ஆசாரம் எல்லாம் வேறு. சோம : அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமில்லேன்னா. ஏற்கெனவே உத்தர தேசத்திலிருந்து அநேகம் பேர் அங்கே போயிருக் காளாம். அங்கே யிருக்கப்பட்ட ராஜாக்கள்ளாம், நம்மைப் போலொத்தவாளை ரொம்ப நன்னா ஆதரிச்சு சன்மானம் பண்றாளாம். அங்கே யிருந்து வந்திருக்கப் பட்டவாளுடைய முகத்தை பார்த்தாலே அவா பெரிய மனசு பளிங்குபோலே விளங்கறது. என்ன கம்பீரம்! என்ன நிதானம்! அவாளே பார்த் தால், அவா தேசத்தையும் பார்க்கணும்னு ஒரு எண்ணம் உதிக் கிறது. சாதாரண யுத்த வீரர்களே இப்படியிருந்தால் ராஜாக்கள் ளாம் எப்படியிருப்பா பாருங்கோ! நாமே ஊகிச்சுக் கொள்ள வேண்டியதுதான். வாஜ : உமக்கென்னமோ தட்சண பதத்து பிரமை பிடிச்சிருக்கு. அந்த சுகத்தையும் ஒரு தடவை பார்த்துடும். சரி, நான் வரேன்; தட்சணம், தட்சணை என்று சொல்லி ஆற்றங்கரையிலேயே ஜபம் செய்து கொண்டிரும். (போக முயல்கிறார்.) சோம : ஓய்! ஓய்! இப்படி பாருங்காணும்; தட்சண தேசத்து வீரர்கள் இரண்டு பேரு இதோ வரா பாருங்கோ. (இரண்டு தமிழ்நாட்டுப் போர் வீரர்கள் பிரவேசிக்கிறார்கள்) இரு. போ. வீ : ஐயன்மீர்! வணக்கம். (வணக்கஞ் செலுத்து கிறார்கள்) சோம : (எழுந்து) அடடா! என்ன பவ்யம்! என்ன மரியாதை! தீர்க்காயுஷ்மான் பவ! வாஜ : நீங்கள் தென் தேசத்திலிருந்து வந்திருக்கப்பட்டவாளோ? மு. போ. வீ : ஆம் ஐய, பாரதப் போரினில் அரும்பணியாற்றுவான் வேண்டி எமது கொற்றவனால் ஈண்டு அனுப்பப் பெற்றோம். காலைக்காற்றும் இவ்வாற்று நீரும் எம்மை இங்கு ஈர்த்தன. வாஜ : ஹரிஹி! இவா பேசர பாஷையைப் பார்த்தேளா? அங்கே போனா திண்டாடவேண்டியதுதான் நீர்! சோம : உங்க தேசம் ரொம்ப சுபிட்சமான தேசந்தானோ? மு. போ. வீ : அந்தணர் பெரும! (பாடுகிறான்) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதியென மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ் நாடு. முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக்காக்குந் தமிழ் நாடு - செல்வம் எத்தனையுண்டு புவி மீதே - அவை யாவும் படைத்த தமிழ் நாடு. சோம : பேஷ்! வாஜ : இங்கேயுள்ளதைப் போலவே அங்கேயும் பெரிய வித்து வான்கள், எங்களைப்போன்ற பிராமணர்கள், இவாளுக் கெல்லாம் ராஜாவின் ஆதரவு இவைகளெல்லாம் இருக்கோ? சோம : (தனக்குள்) சுவாமிகளுக்கு இப்பொழுதுதான் சுவாராயம் தட்றது. நாக்கிலே ஜலம் சொட்றது. கேளுங்கோ! கேளுங்கோ! மு. போ. வீ : அறவோர்க்கு வரையாது வழங்கும் வள்ளற்றன்மை பெற்றது எங்கள் நாடு. மன்பதையின் இன்பத்திலே மன்னர் தம் மணிமுடிகள் அணிபெறுவது எங்கள் நாடு. வாணிபத்தால் நானிலத்தை வாழ்விப்பது எங்கள் நாடு. இ. போ. வீ : அதுமட்டுமல்ல, நாங்கள் - (பாடுகிறான்) ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம். சோம : என்ன வாஜபேயர்வாள்! என்ன சொல்றேள் இப்பொழுது? வாஜ : நல்ல தேசந்தான் போலத் தோன்றது. (படை வீரர்களைப் பார்த்து) எங்க தேசத்து வாளை, இதுக்கு முன்னே எங்கே யாவது பார்த்திருக்கேளா? இ.போ.வீ : வெஞ்சிலை வீரர் விறல்விசய னென்பார் தமது மாபெருந்தானையுடன் எமது நாட்டின் வழியாகவே சமீபத்தில் சென்றார். அதுமுதல் இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் காணவேண்டுமென்ற ஆவல் எமக்கு ஏற்பட்டது. அந்த ஆவல் எமது மன்னரின் ஏவலால் இது காலை நிறைவுற்றது. உங்களது மொழியிடத்து அழிவுறாக்காதல் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. சேய்மையிலுள்ள இமயமலையும் அண்மையிலுள்ள இவ்வா றும் எங்களைப் பெரிதும் கவர்ந்து விட்டன. வடநாடும் தென் னாடும் ஏன் இனித் தனித்தனியாக இருத்தல் வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி எங்கள் உள்ளத்திலே பிறக்கிறது. சோம : அப்படியானா எங்களைப் போலொத்தவா அங்கே வரத் துலே எவ்வித ஆட்சேபமும் இராதுன்னு சொல்றேள்? மு.போ.வீ : இஃதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பன்றோ? தவிர, விருந்தினரின் உள்ளத்தைத் தண்ணெனச் செய்வதில் தமிழர்கள் தலை சிறந் தவர்கள். வாஜ : பார்த்தீர்களா சுவாமிகளே! அங்கே போனா ஜலரூபந் தான் நீங்கள். அவ்வளவு வெயில் போலே இருக்கு அங்கே. தண்ணியா பூடுவேள் என்று சொல்றா பாருங்கோ. மு.போ.வீ : (நகைத்து) அப்படியில்லை; விருந்தினரின் மனம் திருப்தி யடையுமாறு நடந்து கொள்வோம் என்று சொன்னேன். வாஜ : அப்படியா! சோம : உம்ம தர்க்க ஞானம், குதர்க்கத்திலே தான் போறது. சரி, போலாம் வாரும். ஆத்திலே போய் விஷயங்களைச் சொல் வோம். பொம்மனாட்டிகள் என்ன சொல்றான்னு பார்ப்போம். வாஜ : எங்காத்திலே அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. அன் னெக்கி, துரியோதன சபையிலே துரோபதைக்கு அவமானம் நடந்தது பாருங்கோ, அது முதல், புருஷாளைக் கண்டாலே - அதெல்லாம் வெளியே சொன்னா வெட்கக்கேடு. வாருங்கோ போகலாம்; நாழியாச்சு. (தமிழ் வீரர்களைப் பார்த்து) ஐயா, நாங்கள் போய்ட்டு வரோம். மறுபடியும் உங்களைப் பார்க்கி றோம். எங்கே பார்க்கலாம் உங்களை? சோம : அவா தங்கி யிருக்கப்பட்ட இடத்திலே போய் பார்த்தா தெரியாது; அவாளை இப்போ தொந்தரவு பண்ணுவானேன்? வாஜ : அதுவுஞ் சரி. நாங்கள் போய்ட்டு வரோம். (செல்கிறார்கள்) மு. போ. வீ : இவ்வாற்றங் கரையில் சிறிது அமர்ந்து செல்வோமா? இ. போ. வீ : ஆம். (காட்சி முடிகிறது) நான்காவது களம் இடம் : பாண்டவர் பாசறையைச் சேர்ந்த அந்தப்புர உத்தியான வனம். காலம் : காலை. (உத்தரை ஊஞ்சற் பலகையில் ஆடிக் கொண்டிக்கிறாள்; அபிமன்யு வந்தவுடன் நிறுத்தி விடுகிறாள்) அபிமன்யு : உத்தரே! ஏன் நிறுத்தி விட்டாய்? நீ ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பது கரிய மேகத்திலே மின்னற் கொடி தோன்றி மறைவதுபோல் இருக்கிறது. உத்தரை : எனக்கு வேண்டாம் இந்த வர்ணனை! (முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்) அபி : என்ன கோபம் என் மீது? உத் : ஆமாம். புருஷர்கள் எப்பொழுதும் சுயநலப் பிரியர்கள். தங்க ளுக்கு ஏதேனும் காரியம் ஆக வேண்டுமானால் திரீகளை தோத்திரம் செய்வது; இல்லாவிட்டால் அடியோடு அவர் களை மறந்து விடுவது. அபி : (நகைத்து) கோபத்திலே கூட நீ சோபிக்கிறாய். உன் நெற்றி யிலே புருவம் ஏறுவது இந்திரன் வில்லிலே நாண் ஏறுவது போலிருக்கிறது. உத் : (எழுந்து சிறிது ஒதுங்கிப்போய் திரும்பி நிற்கிறாள்) அபி : (உத்தரையின் சமீபம் சென்று தோளின் மீது கைவைத்து) உத்தரே! உத் : என்னைத் தொடவேண்டாம். இரண்டு நாட்களாக மறந் திருந்த உத்தரை இன்று மட்டும் வேண்டியிருக்கிறது. அபி : இல்லை கண்ணே! வேலை மிகுதியால் வர முடியவில்லை. உன்னை நான் எப்படி மறக்க முடியும்? மறந்து எப்படி இருக்க முடியும்? என் உள்ளக் கோயிலிலே வைத்துப் பூசிக்கப்படும் தேவி யல்லவோ நீ! உத் : ஆமாம்! நீங்கள் நல்ல பூசாரி தான். (இருவரும் ஊஞ்சலில் அமர்கிறார்கள்.) இரண்டு நாட்களாக உங்களைப் பாராமல் நான்படும் வேதனை எனக்கன்றோ தெரியும்! நீங்கள் அலட்சிய மாக வில்லென்றும் அம்பென்றும் சிந்தித்துக் கொண்டு ரணரங்கத்திலேயே ஐக்கியமாகி விடுகிறீர்கள். நான் இங்கே தனிமையில் பெருமூச்சு விட்ட வண்ணம் கண்ணீரால் தங்கள் உருவத்திற்கு அபிஷேகம் செய்துகொண்டே விஜய லட்சுமி யைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். இது தான் நீங்கள் என்மீது வைத்திருக்கும் பிரேமை! (அழத்தொடங்குகிறாள்.) அபி : அழாதே! யுத்தகளத்தில் க்ஷத்திரியர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டாமா? க்ஷத்ராணிகள், தங்கள் ஆடவர்களுடைய வெற்றியையன்றோ பிரார்த்தித்துக் கொண்டிருக்க வேண்டும்? உத் : போங்கள் பிராணநாதா! தாங்கள் எப்பொழுதும் என்னிடத் திலேயே இருக்கவேண்டும். அபி : உன்னிடத்திலே யென்ன, உன்னுள்ளத்திலேயே நான் இருக் கிறேனே! உத் : ஆமாம்; இந்த இடத்தைவிட்டு நீங்கள் இனி எங்கேயும் போகக் கூடாது. அபி : யுத்தம் முடிந்த பிறகு உன் உத்திரவுபடியே நடந்து கொள் கிறேன். உத் : அதுவரையில் - - - -? அபி : (பொறுத்து) உத்தரே! இன்று நான் அதிக நேரம் இங்கே தங்கியிருக்க முடியாது. உத் : ஏன்? அபி : இன்று நான் பாண்டவ சேனாதிபதியாக நியமிக்கப் பட்டிருக்கிறேன். தகப்பனார் இல்லாதகாலத்துத் துரோணா சாரியாரால் வகுக்கப்பட்டுள்ள சக்ர வியூகத்தை உடைத்தெறிய, யுதிஷ்டிரருடைய ஆக்ஞையையும் ஆசீர்வாதத்தையும் பெற் றிருக்கிறேன். உத் : பிராணநாதா! (கண்ணீர் விடுகிறாள்) அபி : உத்தரே! இஃதென்ன? உன் கமல நேத்திரத்திலே பனித்துளி போல் கண்ணீர்? நீ வீரபத்தினியல்லவோ? உத் : பிரியதம! நீங்கள் இன்று யுத்தத்திற்குப் போக வேண்டாம். வேண்டாம் - .இதோ! என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும்போதே என் இருதயத்தில் அந்தகாரம் சூழ்ந்துகொண்டுவிட்டது; அடி வயிற்றிலே துக்க அலை மோத ஆரம்பித்து விட்டது. இருங்கள் - (பொறுத்து) ஐயோ! எனது வலது கண் துடிக்கிறதே! - என்ன இருட்படலம் - ! வேண்டாம் பிராண நாதா! இந்த அபசகுனத்துடன் நீங்கள் யுத்தத்திற்குப் போக வேண்டாம். அபி : பிரியே! ஏன் இப்படி அஞ்சுகிறாய்? யுத்த களத்தில் கோழைக ளன்றோ சகுனம் பார்ப்பார்கள்? வெற்றியோ தோல்வியோ வென்று கவலைப்படுவார்கள்? உத் : ஆயினும் என் மனம் கேட்கமாட்டேனென்கிறதே. அபி : உத்தம க்ஷத்திரிய வமிசத்திலே பிறந்த நீ இப்படி ஏக்கங் கொள்ளலாமா? க்ஷத்திரியர்கள் நிம்மதியாக நித்திரை புரிய வேண்டிய இடம் சமர்க்களம் அல்லவோ? உத் : ஐயோ! பிராண நாதா! பிராண நாதா! அபி : பிரியே! உள்ள நிலையை அறியாமல் நீ இப்படிக் கலங்கு கிறாய்? சம்சப்தகர்களோடு போர் புரிய வேண்டி, மாமா கிருஷ் ணருடன் பிதா சென்றிருக்கிறார். சக்ரவியூகத்தை நான் தவிர வேறெவரும் உடைத்தெறிய முடியாது. இந்த நிலைமை யில் என் கடமை என்ன? காதல் மேடையில் களி நடனம் புரிந்து கொண்டிருப்பதா? உத் : இல்லை பிராண நாதா! அபி : அப்படியானால் சந்தோஷமாக விடை கொடு. என்னாலே பாண்டவ சேனை தோல்வியடையவேண்டுமென்று நீ விரும்பு கிறாயா? உத் : நான் அப்படி விரும்புவேனா? அபி : பிறகு ஏன் நீ கலங்குகிறாய்? உத் : என்னையும் கூட அழைத்துச் செல்லுங்கள். அபி : (நகைத்து) நன்றாயிருக்கிறது நீ கூறுவது! ஆடவர்களோடு பெண்கள் யுத்த களத்திற்கு வருவதா? பிணக் குவியல்களும், இரத்தப் பெருக்கமும், கழுகுகளின்இரைச்சலும் எவரையும் கதி கலங்கிடச் செய்யுமே. உத் : ஆரியாவர்த்தத்திலே திரீகள் தங்கள் கணவன்மார்களுக்கு யுத்த களத்தில் பலவித உதவிகளைச் செய்திருப்பதாகச் சரித் திரங்கள் கூறுகின்றனவே. சம்பராசுர யுத்தத்திலே தசரதருக்குக் கைகேயி உதவிபுரியவில்லையா? அபி : அந்த வீர பத்தினிகளின் தியாகம் ஆரியாவர்த்தத்தின் இதிகாசத்திலே எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஆனால் அவர்கள் நிலைமை வேறு. இப்பொழுது நீ யுத்தகளத் தின் கோரக் காட்சியைக் காணக்கூடாத நிலைமையிலிருக் கிறாய். அதனைப் பார்த்து உன் மனம் கலக்கமடையுமானால் உனக்கு தேக நலிவு உண்டாகி நமது பிற்கால வாழ்விற்குப் பங்கம் ஏற்படக் கூடும். ஆதலின் அந்த எண்ணத்தை நீ மறந்துவிடு. உத் : ஆனால், தாங்களும் யுத்தத்தை மறந்து விடுங்கள். அபி : என்ன இது? உத்தரே! வீரர் குலத்திலே உதித்து, வீரபுத் திரனை மணந்து, வீர மாதாவாக விளங்க வேண்டிய நீ, வீரர் கடமையினின்று என்னைத் தடுக்கலாமா? அமர்க்களத் திலே அமரரும் ஆரியரும் அறிய, எனது பிதா தர்ம புத்திரருடைய சந்நிதானத்தில் நான் செய்து கொண்ட பிரதிக்ஞையை உன் பிரேமையினால் பங்கப் படுத்த விரும்புகிறாயா? எனது க்ஷத்திரிய தர்மத்தை உனது கண்ணீரினால் கரைத்து விடுவதில் உனக்குத் திருப்தியா? அர்ஜுனன் இல்லாத காலத்து அவனுடைய மகன் பாண்டு வமிசத்திற்கு இழிவு தேடி வைத்தா னென்று பிற்கால சந்ததியார் பழி கூறுவாராகில் அஃது உன் னைச் சாராதா? உத் : (பொறுத்து) பிரதிக்ஞை செய்திருக்கிறீர்களா? அப்படியா னால் அதனின்றும் மாறவேண்டாம். பெண்களின் பவித்ரமான பிரேமையிலே தெய்விக சக்தியில்லையென்று உலகம் எல்லாம் சேர்ந்து உத்கோஷித்த போதிலும் தாங்கள் க்ஷத்திரிய தர்மத்தை, செய்து கொண்ட பிரதிக்ஞையைக் கைசோர விட வேண்டாம். அபி : அப்படியானால் சிரித்த முகத்துடன் எனக்கு விடை கொடு. உத் : என் மனம் கலங்குகிறதே. அபி : பிரியே! யுத்த களத்திலிருந்த வெற்றி மாலையுடன் விரை வினில் உன்னிடம் வந்து சேருகிறேன். நீ கவலைப் படாதே. உன்னுடைய பவித்ரமான பிரேமையானது ரணகளத்தில் எனக்கு ரக்ஷையாக இருக்கும். பகவான் கிருஷ்ணர் நமது பக்கம் இருக்கும்போது நம்முடைய சத்துருக்கள் எப்படி உயிரோடு வாழ்ந்திருக்க முடியும்? கவலைப்படாமல் தைரியமாய் இரு. என்னுடைய பிரிவாற்றாமையில் மாதா சுபத்திரையின் வாத்ஸல் யம் உன்னைக்காத்து நிற்கும். (யுத்த கோஷம் கேட்கிறது) அதோ! வீர பேரிகை. மாதாவிடம் விடை பெற்றுக் கொண்டு விரைவிலே செல்ல வேண்டும். உத்தரே! உன்னுடைய பதி பிரேமையிலே என்னுடைய வெற்றியிருக்கிறது. நான் வரட்டுமா? (பொறுத்துத் திரும்பிப் பார்த்து) அதோ மாதாவே வந்து விட்டனரே! (சுபத்திரை பிரவேசிக்கிறாள்) அபி : அம்மா! நமகாரம். (வணங்குகிறான்) சுபத்திரை : (சிரசிலே கரம் வைத்து) அப்பா! சிரஞ்சீவியாய், வீரர் களின் ஜோதியாய் விளங்குவாயாக. அபி : தங்கள் பாத தூளி என் சிரசிலே இருக்கும் வரை எனக்கு என்ன குறையம்மா! சுப : மகனே! பாண்டவர்கள் முன்னிலையில் நீ ஏதோ பிரதிக்ஞை செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அஃதென்ன? அபி : ஆம் அம்மா! பிதாவின் நற்பெயரைப் புத்திரன் காப்பாற்ற வேண்டாமா? சுப : உன்னுடைய பெரிய தகப்பனார் உனக்கு அநுமதி அளித்து விட்டாரா? அபி : மிகுந்த மகிழ்ச்சியுடன். இதோ, உத்தரையின் உத்திரவும் பெற்றுவிட்டேன். சுப : (உத்தரையைப் பார்த்து) உத்தரே! சாதாரண அபலைகள் மாதிரி இந்தச் சமயத்தில் கண்ணீர் விடாதே. என்னுடைய புத்திரனுக்கு மாலையிட்ட பிறகு உனக்கென்ன குறை? (பொறுத்து அபிமன்யுவைப் பார்த்து) குமாரா! மகாவீரரும், நிறைந்த அநுபவமுடையவருமான துரோணாசாரியார் வகுத்துள்ள சக்ரவியூகத்தை உன்னால் உடைத்தெறிய முடியுமா? உன் பிதாவும் இங்கு இல்லையே. அவரன்றி வேறு யாரால் சக்ரவியூகத்தை உடைத்தெறிய முடியும்? அபி : என்னால் முடியும் அம்மணி! நான் அர்ஜுன மகாராஜ ருடைய புத்திரனல்லவா? சுப : ஆயினும் மிகக் கடினமாயிற்றே. அபி : மிகச் சுலபமம்மணி. பாரத தேசத்திலே பிறந்து, சிந்து நதியின் நீரைப்பருகி, இமயவெற்பின் காற்றை நுகர்ந்த நான் இந்தச் சாதாரண யுத்தத்தில் பின் வாங்கினால் உலகம் என்னை என்ன சொல்லும்? ப்ரஹ்மா வர்த்தத்தின் பிற்கால சந்ததியார் என்னை ஏசிப்பாட மாட்டார்களா? இந்தப் பரிகாசத்திற்கு இடமளிக்க நீங்கள் விரும்பு கின்றீர் களா? வீர மாதாவான தங்களுடைய உதரத்திலே உதித்து, பாண்டவர் களின் ஆனந்த பாஷ்பத்திலே வளர்ச்சியடைந்த நான் கோழையாகிப் புழுத்த புழுவைப்போல் தங்கள் பக்கத்தில் எப்பொழுதும் நெளிந்து கொண்டிருப் பதைக் காண விரும்புகின்றீர்களா? அல்லது க்ஷத்திரியர் களின் பரம்பரையான தர்மப்படி ரணகளத்தில் சத்துருக்களை யெல் லாம் ஒரு கணத்தில் பிணமலையாக்கி அதன்அடியிலே நான் மடிந்து கிடப்பதைக்காண விரும்புகின்றீர்களா? (பொறுத்து) அம்மணி! ஏன் தயங்கு கிறீர்கள்? தங்களுடைய தூய்மையான தாய்மைக்கு எங்கே என்னுடைய தோல்வி யினால் களங்கம் உண்டாகப் போகிறதோ என்று சிந்திக்கிறீர் களா? இந்தச் சிந்தனையின் பயனாக, என்னைப் போருக்கு அனுப்ப மறுத்து விடுவீர்களாயின், இந்த வாள் கொண்டு என்னை இங்கேயே வெட்டி வீழ்த்திவிடுங்கள். இதற்கு மனமிசையா விட்டால், தங்க ளுடைய சந்நிதானத்தில் தலைவணங்கி நிற்கும் இந்தச் சிரத்தை, இந்தத் தாள் கொண்டு மிதித்துத் தரையோடு தரையாகத் தேய்த்துவிடுங்கள். சுப : அந்தத் துர்ப்பாக்கியம் நேரிடாதபடி என்னையும் உன்னையும் தேவர்கள் காப்பார்களாக! (பொறுத்து) அபிமன்யு! இனியும் தாமதியாதே. இதோ, வீரதிலகம் இடுகிறேன். (நெற்றியில் திலக மிடுகிறாள்) என்னுடைய கண்ணீரினால் குழைத்து இந்தத் திலகத்தை இடுகிறே னென்று நினையாதே. இதில் உன் மாதா வின் பெருமை நிரம்பியிருக் கிறது; அவளுடைய பிற்காலக் கீர்த்தி அடங்கியிருக்கிறது. மகனே! யுத்தகளத்தில் இந்தத் திலகம் உனக்கு ரக்ஷையாக இருந்து காப்பாற்றும். தாயன் பானது உனக்கு வழி காட்டிச்செல்லும். ஆனால் நீ க்ஷத்திரியர் களின் கடமையினின்று விலகிச் செல்லாதே. சத்துருக்களின் அதிரங்களுக்கு உன் மார்பகத்தைத் தஞ்சமாகக்கொடு. ஆனால் காயமடைந்த சிங்கம்போல், முதுகிலே காயங்களுடன் இந்தப் பாசறையை நோக்கி வருவாயாகில், அந்தப்புரச் சேடி யரும் உன்னைக் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டார்கள். நமது மூதாதையர்கள் ஒருங்கு சேர்ந்து, சாபமும் கோபமும் நிறைந்த கோஷத்துடன் உன்னை நரகவாயிலுக்கு அழைத்துச் செல்வார் கள். (பொறுத்து) மகனே! பாண்டவர் குலப்பெருமையாக, காண்டீவதாரியின் பிரதிநிதியாக, யுத்தகளத்திற்குக் செல்கிறாய் என்பதை ஞாபகப்படுத்திக்கொள். வெற்றி மாலை யணிந்து விஜய கோஷத்துடன் விரைவினில் திரும்பி வா. (அபிமன்யு வணங்குகிறான். சுபத்திரை ஆசீர்வதிக்கிறாள்.) (காட்சி முடிகிறது) இரண்டாம் அங்கம் முதற் களம் இடம் : அதினாபுரத்தில் சோமயாஜுலுவின் வீடு. காலம் : காலை. (சோமயாஜுலு கறிகாய்கள் நறுக்கிக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி சமைத்துக் கொண்டிருக்கிறாள்.) சோம : கடைசிலே என்ன சொல்றே நீ தட்சணதேச யாத்திரையைப் பத்தி? எனக்கென்னமோ போகணுமின்னு இருக்கு. சோ. மனைவி : (முகத்தைச் சுளித்துக் கொண்டு) ஆமாம்; உள்ளூரிலே உழாத கடா வெளியூரிலே நாட்டியம் ஆடப்போச் சாம்! சோம : (திடுக்கிட்டு) த்ஸ! அப்படியானா நான் என்னா கடாவா? (பொறுத்துப் பல்லிளித்து) அதுக்கில்லேன்னா, அங்கே போனா கொஞ்சம் சௌகரியமா யிருக்குமோன்னுதான் சொல்றேன். சோ. ம : ஆமாம், சௌகரியந்தான்! மூட்டை சுமக்கிற கழுதை சங்கீதங் கேட்கப் போச்சாம்! சோம : பேஷ்! கடாவிலிருந்து கழுதையாகி நாட்டியத்திலிருந்து சங்கீதமாச்சா! நன்னாயிருக்கு! புருஷாளுக்கு நல்ல கௌரவம்! சோ. ம : பொம்மனாட்டிகளுக்கு புருஷாள் ரொம்ப கௌரவம் வைச்சிருக்கா. ஐய்யய்யோ, பொம்மனாட்டிகள் முகத்திலே முழிக்கிறதுக்குக் கூட உங்களுக்கு மனசு வரதே. சோம : இரு, இரு; ஏன் இப்படி அபாண்டமா பழி சொல்றே? புருஷாள் என்ன பண்ணிப்புட்டா அப்படி? சோ. ம : என்ன பண்ணிப்புட்டாளா! ஒண்ணும் பண்ணல்லே; சும்மா பார்த்திண்டிருந்தா; ஆந்தை மாதிரி முழிச்சுண்டிருந்தா. சோம : என்னதான் சமாசாரம் சொல்லேன்? சோ. ம : அன்னிக்கு துரியோதனன் சபையிலே துரோபதைக்கு அவ மானம் நடந்ததே, அப்போ புருஷாள்ளாம் என்ன பண்ணா? வாயை மூடிண்டு உட்கார்ந்திருந்தா. எல்லாருக்கும் வாயே அடைச்சு போச்சு. அப்போ, ஒத்தராவது எழுந்து, ஒரு பொம்ம னாட்டியே இப்படி மானபங்கம் படுத்தலாமான்னு விரலை தூக்கணுமே. எல்லாரும் அம்மா வயத்திலே பிறக்கலே, கூடப் பிறந்தவா சேரப் பிறந்தவாளோடு வாழல்லே. ஒரு பொம்ம னாட்டி தனியே இத்தனை பேர் மத்தியிலே ஆப்டுண்டு என்ன பாடு பட்டாடி யம்மா! போரும் இந்த பொம்மனாட்டி ஜன் மம்! சோம : இதோ பாரு, வெறுமனே பேசாதே. எங்கேயோ ஏகதேசமா ஒரு விஷயம் நடந்துட்டுதான் - அதைப்பத்தி என்னமோ பிர மாதப் படுத்தரே. சோ. ம : ஏகதேச மின்னா? இந்த மாதிரி அக்கிரமங்கள் நடந்துண்டு வரதுனாலேதான் பங்காளிகளுக்குள்ளே பிரமாதமா சண்டே நடக்கிறது. சோம : இதோ பார்; ஊர் வம்பெல்லாம் வாண்டாம். நீ வரயா இல்லையா? (கதவைத் தட்டுகிற சப்தம் கேட்கிறது) இதோ பார், யாரோ கதவை தட்ரா. (சோமயாஜுலு மனைவி சென்று கதவைத் திறந்து விட்டு மீண்டும் வருகிறாள்) சோ. ம : யாரோ ராஜ தூதர்கள் போலிருக்குது. சோம : (பயந்து எழுந்த வண்ணம்) யாரு, யாரு? (இரண்டு இராஜ தூதர்கள் பிரவேசிக்கிறார்கள்) முதல் தூதன்: ஐய, துரியோதன மகாராஜர் இன்று கூட்டும் சபை யில் தாங்கள் பிரசன்னமாயிருக்க வேண்டுமென்பது ராஜாக்ஞை. சோம : என்னையா? என்னையா? (பயத்தினால் மிரள மிரள விழிக் கிறார்) சோ. ம : இவாளே இராது. வேறு யாரையாவது கூப்பிடச் சொல்லி யிருப்பா. சோம : ஆமாம் ஆமாம். நன்னா யோசனை பண்ணி பாருங்கோ. ஞாபக மறதியா இந்த கிருகத்திலே வந்து நுழைஞ்சுட்ருப்பேள். மு. தூ : வியாகரண வித்துவான் சோமயாஜுலு பண்டிதர் தாங்கள் தானே? சோம : ஆமாம். மு. தூ : எங்கள் கடமையை நாங்கள் சரியாகவே செய்தோம். சோம : (மெதுவாக) என்ன சமாசாரம்? மு. தூ : தெரியாது. சோம : அடே! ரொம்ப முடுக்கா பதில் சொல்றேளே. சொல்லாப் பட்டா போங்களேன். போங்கய்யா போங்க! மிஞ்சினா சிரசாக் கினை தானே! அதுக்கு மேலே ஒண்ணும் பண்ணிவிட முடி யாதே. சோ. ம : ஐயையோ - என்ன ஆத்திரம் - என்ன ஆத்திரண்டி யம்மா! மெதுவா பேசித் தொலைக்கக்கூடாதா? சோம : என்னா முழிச்சு பார்க்கேள் முள்ளம் பன்றி மாதிரி? சோ. ம : (இராஜ தூதர்களைப் பார்த்து) ஐயா! அவர் ஏதோ தெரியாமல் சொல்கிறார். நீங்கள் போங்கள். சோம : பின்னே என்னா? பொம்மனாட்டிகள் ஏதோ ஆத்திலே பேசிண்டிருந்தா அதைப் போய் பிரமாதமா சொல்லிக் கொடுத்து - மு. தூ : ஐயா! வீட்டிலே பெண்கள் என்ன பேசிக்கொண்டிருந் தார்கள்? சோம :- துரோபதையை, அந்த மாதிரி சபையிலே மகாராஜா தம்பி அவமானப் படுத்தினது தப்பு என்று ஏதோ என்னோடு சௌ ஜன்யமா பேசிண்டிருந்தா அதைப் போய் ராஜாக்கிட்டே சொல்லிக் கொடுத்திருக்காளே யாரோ இதுக்குள்ளே. அது சம்பந்தமா என்னை விசாரிக்கிறதுக்குத் தானே கூப்பிட் டிருக்காள். சோ. ம : (கையை நொடித்துக்கொண்டு தனக்குள்) எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு இப்படிகூட பேத்துவாளோ? மு. தூ : எங்களுக்குத் தெரியாது. வேண்டுமானால் இந்தச் செய்தியை ராஜ சந்நிதானத்தில் சமர்ப்பிக்கிறோம். சோம : அப்படி யெல்லாம் ஒண்ணும் வாணாம். நீங்கள்ளாம் பிள்ளை குட்டிகளோடு என்றும் சிரஞ்சீவியா மார்க்கண்டே யாயசா வாழணும். (அருகில் சென்று மெதுவாக) என்ன விஷயம்? இராஜாக்கினைனா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. என்னிடம் இரகசியமாகச் சொல்லுங்கோ. மு. தூ : தெரியாத விஷயத்தை எப்படி இரகசியமாகச் சொல்லு வோம்? சோம : யுத்தம் எப்படி நடக்கிறது? ராஜா பக்கம் ஐயந்தானே? மு. தூ : பிரஜைகளின் விருப்பம் அப்படித்தானிருக்க வேண்டும். சோம : இல்லே - சேனைகள் போர்லேன்னு, எங்களைப்போ லொத்த பிராமணாளை யெல்லாம் சேர்த்து ஒரு படை திரட்டலாம்னுட்டு மகாராஜா உத்தேசமோன்னு கேட்டேன். மு. தூ : அந்த உத்தேச மிருந்தால் அது பாராட்டத் தக்கதுதானே. சோம : (பயந்து) அப்படியானா நான் யுத்தத்திற்குப் போகணுமா? ஏன் ஐயா, போகணுமா? (மனைவி யருகிற் சென்று) ஏண்டி, நான் சண்டைக்குப் போகணுமா? ஐயோ நான் சண்டைக்கி போகணுமாடி? சோ. ம : (முகத்தைக் கடுத்துக்கொண்டு தனக்குள்) சண்டேக்காவது போங்கோ, யமலோகத்துக்காவது போங்கோ. சோம : ஐயோ, மாரடைக்கிறதே. யமதூதர் மாதிரி வந்து நிக்க ராளே. (மிக்க பயந்து அங்கு மிங்குமாகச் சென்று) எங்கேயாவது ஓடிப் பூடட்டுமா? எங்கே போறது? - (இச்சமயத்தில் ஓர் எலி குறுக்காக வந்து சோமயாஜுலுவின் காலில் ஏறிச் செல்கிறது.) ஐயய்யோ! பூட்டேன் செத்து பூட்டேன்!! ஐயோ! கொன் னூட்டிங்கிளே! கொன்னூட்டிங்கிளே!! (மூர்ச்சை யாகிக் கீழே வீழ்கிறார்.) மு. தூ : அம்மணி! நாங்கள் சென்று வருகிறோம். ஐயா அவர்களை அவசியம் வரச் சொல்லுங்கள். (இராஜ தூதர்கள் செல்கிறார்கள். வாஜபேயர் பிரவேசிக்கிறார்.) வாஜ : என்ன சமாசாரம்? ஏன் இப்படி பேச்சு மூச்சில்லாமல் கிடக் கிறார்? சோ. ம : (வருத்தத்துடன்) என்ன அவதையோ? அநாவசியமாகப் பயந்து கொண்டுவிட்டார். வாஜ : அடாடா! என்ன அவதை! ஹரிஹி! சுவாமி சோமயா ஜுலுவாள்! ஐயோ! போயிட்டாப்போல இருக்கே. போயிட் டேளா? போயிட்டேளா? (உரக்க அழுவது போல் பாசாங்கு செய்கிறார்) சோம : (எழுந்து வாஜபேயரைக் கட்டிக்கொண்டு) ஐயா! நான் போயிட்டேனா? ஐயோ! நான் போயிட்டேனே! அடி! நான் போயிட்டேண்டி! சோ. ம : (வெறுப்புக் காட்டிக்கொண்டு) நன்னாயிருக்கு! பித்தந் தெளிய மருந்தொன்று சாப்பிடுங்கோ. சோம : அப்படியானா, தட்சணத்திற்குப் போகலாம் வா. வாஜ : அதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்! (காட்சி முடிகிறது) இரண்டாவது களம் இடம் : குருக்ஷேத்திர யுத்தகளம். காலம் : காலை (அபிமன்யு இரதத்திலிருந்த வண்ணம் சக்ர வியூகத்திற்குள் பிரவேசிக்கிறான். யுத்த கோஷம்) அபிமன்யு : (இரதத்திலிருந்து இறங்கி தனக்குள்) அரனுடைய வரம் பெற்ற ஜயத்ரதனே மூர்ச்சையாகிவிட்டான்! மற்றவர் எம்மாத்திரம்? நூற்றுவரிலே ஒருவர்கூட அகப்படவில்லையா? .இந்த வாயில் காக்கும் வேலைக்கு? சிந்து நாட்டு வேந்தன் வீழ்ந்து விட்டதைக் கண்டு சேனை களெல்லாம் கலங்கியோடு கின்றன. (எதிரில் யுத்தகோஷம். திரும்பிப்பார்த்து) இது யார்? ஆசாரியாரா? பிதாவுக்குப் படைக்கலப் பயிற்சி யளித்த பெரு மான் என் மீது போர் தொடுக்கவந்திருக்கிறாரா? (பொறுத்து) அடிகாள்! அபிமன்யு வணக்கம். (அம்பெய்கிறான்.) (துரோணாசாரியார் இரதத்தோடு பிரவேசிக்கிறார்) துரோணர் : அன்பைப்புகுத்தி அம்பைச் செலுத்தும் ஆற்றல் படைத்த அர்ஜுனன் மகன் அபிமன்யு அமரனாய் வாழட்டும். குமாரா! நீயே தந்தைக்குத் தக்க மைந்தன். அபி : ஆசாரியார் ஆசீர்வதிக்க வந்திருக்கிறாரா? அல்லது அபி மன்யுவின் ஆண்மையைப் பரிசோதனை செய்ய வந்திருக் கிறாரா? துரோ : குமாரா! சக்ரவியூகமென்னும் இந்தப் பயங்கரப் படுகுழி யிலே தெரியாமல் வந்திறங்கி விட்டாய். விரைவிலே இதனி னின்றும் வெளியேறிச்செல். அபி : என்னுடைய பணிவுக்கு இந்தக் கனிவை நான் எதிர் பார்க்க வில்லையே. அமர்க்களத்திலே அமரர் கோன் வந்தெதிர்த்தபோதிலும் அடர்ந்து பொருவதே ஆண்மைக் கழகு என்ற தங்களுடைய உபதேசத்தையே என் பிதா எனக்கு இளமையில் ஊட்டி வளர்த்தார். என்னுடைய வளர்ச்சியில் தங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி யிருக்குமானால், தயை செய்து தாங்கள் விலகிச் செல்லுங்கள். துரோ : அபிமன்யு! பாண்டவர் குலத்தில் சுபத்திரையினால் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு நீ. உத்தரையின் அன்பிலே - அர்ஜுனன் ஆண்மையிலே நீ பிரகாசித்து வருகிறாய். என் அம்பு கொண்டு இந்த விளக்கை அணைக்க நான் விரும்பவில்லை. குருக்ஷேத் திரக் குருதியிலே அர்ஜுன புத்திரனின் குருதியும் கலப்பதை என் கண் கொண்டு பார்க்க வேண்டுமா? வேண்டாம் மகனே! என் வார்த்தையைக் கேள். சீக்கிரம் வெளியேறிவிடு. அபி :- ஆசாரிய! உங்கள் கருணைக்கு இரங்குகிறேன். சத்துருக் களின் இரக்கத்திலே உயிர்வாழ்ந்திருக்க க்ஷத்திரியர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள் என்ற உண்மையைத் தங்கள் மூப்பு மறைத்து விட்டதா? அல்லது இளைஞனை அச்சுறுத்தி வெளியேற்றிவிட்டு வெற்றிச்சங்கை ஊதிவிடலாம் என்று எண்ணி விட்டீர்களா? துரோ : அந்த வெற்றிச் சங்கு, உன் இறுதிச் சடங்கின் சங்காகவும் இருக்க வேண்டுமா என்றுதான் நான் கவலைப்படுகிறேன். அபி : கவலையா? யாரைப்பற்றி? தயைசெய்து என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். என் மீது இரக்கமும் காட்ட வேண் டாம். துரோ : அபிமன்யு! கௌரவர்களின் கோபாக்கினியானது துரோ ணரின் பிரதிக்ஞையினால் ஆகுதி செய்யப்பட்டு சக்ர வியூக மென்னும் இந்த ஓம குண்டத்திலே கொழுந்து விட் டெரிந்து கொண்டிருக்கிறது. அதில் உன்னை ஒரு சமித்தாகப் போட நான் விரும்பவில்லை. அபி : (உரக்கச் சிரித்து) அந்த ஓம குண்டத்தில் நீங்கள் விழுந்து விடாதபடி முதலில் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; பிறகு என்னைச் சமித்தாகப் போடலாம். விசுவாமித்திரருடைய யாகத்தை இராம லட்சுமணர்கள் என்னும் சிறுவர்கள் தான் காப்பாற்றினார்கள் என்பதை இச்சமயத்தில் நினைவூட்டு கிறேன். துரோ : வீணாக ஏன் வார்த்தைகளைக் கொட்டுகிறாய்? அபி : ஆம்; யுத்தகளத்தில் வீரர்கள் சந்தித்தால் பேச்சுக்கு இடமேது? அப்படியானால் ஆயுதமெடுங்கள். (பொறுத்து) என்ன யோசனை? கடைசி முறையாகக் கௌரவர்களிடத்தில் விடை பெற்றுக் கொண்டு வரவில்லையா? அல்லது தங்களுடைய தேகத்திலிருந்து வழிந்தோடும் இரத்தப் பெருக்கிலேயே தங்களுக்குத் திலதர்ப் பணம் செய்ய வேண்டு மென்று மகாத்மா அசுவத்தாமாவுக்குக் கட்டளையிட வேண்டுமா? துரோ : அபிமன்யு! மீண்டுங் கூறுகிறேன். திரும்பிச் சென்று விடு. உன் உயிரைப் போக்கி அதனால் அர்ஜுனன் வாழ்வைக் குலைக்க நான் விரும்பவில்லை. அபி : ஆசாரியார் சத்துருவினிடத்தில் ஏன் இவ்வளவு கருணை காட்டுகிறார் என்பது எனக்கு விளங்கவேயில்லை. துரோ : அபிமன்யு! யுத்த களத்திலேதான் நான் பாண்டவர்களுக்குச் சத்துரு; மற்றச் சமயங்களில் நான் அவர்களுடைய மித்திரன். அபி : அதனால்தான் எனது பிதா இல்லாத சமயம் பார்த்து இந்தச் சக்ர வியூகத்தை வகுத்தீர்களோ? பாண்டவர் சேனையை நிர்மூலமாக்க இந்தப் போர்க்கோலத்துடன் வந்திருக்கிறீர் களோ? துரோ : கேவலம் கடமையைக் கருதி - சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டு - இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறேன். அபி : அப்படியானால் நான் என் கடமையைச் செய்யவேண்டாமா? யுத்தகளத்திற்கு வெளியே உங்களை என் பிதாவின் குருவாகப் போற்றுவேன். ஆனால் போர்க்களத்தில் உங்களை ஒரு வைரியாகவே கருதுவேன். துரோ : குமாரா! கடைசியில் உன் சிரத்தை இந்த வில்லாயுதத்திற்குப் பலியாகக் கொடுக்கத் தீர்மானித்து விட்டாயா? அபி : குருவைக் கொன்ற ஒரு பெரும் பாவத்தை என் ஆயுதத்திற்கு ஏற்றிவைக்க நீங்கள் தீர்மானித்திருக்கும் பொழுது நான் என்ன செய்யட்டும்? குருஹத்தி மட்டுமல்ல, ப்ரஹ்மஹத்தி, விருத்த ஹத்தி முதலிய எல்லாக் களங்கங்களும் என் ஆயுதத்திற்கு வந்து சேருகின்றன. ஆசாரிய! வேண்டாம், வேண்டாம், வேண்டா மென்று மும்முறை கூறுகிறேன். விரைவிலே திரும்பி செல்லுங் கள். கௌரவ சேனாதிபதி புறமுதுகு காட்டிவிட்டார் என்ற பழிச் சொல் வாராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.. துரோ : (இழி நகையுடன்) எறும்பின் வார்த்தையைக் கேட்டு யானை திரும்பிப் போக வேண்டுமென்று கூறுவது போலிருக் கிறது! அபி : ஆனால் அந்த எறும்பு யானையின் செவிக்குள் சென்று படுத்தும் பாட்டை ஆசாரியாருக்கு நான் எடுத்துக் கூற வேண் டுமா? துரோ : ஆனால் எடு ஆயுதத்தை! அபி : ஏறுங்கள் இரதத்தின் மீது! (இருவரும் தத்தம் இரதத்தின் மீது ஆரோகணித்துக் கொள்கிறார்கள். யுத்த வாத்தியங்கள் முழங்குகின்றன.) அபி : ஆசாரியார் முடியுமானால் சமாளித்துக் கொள்ளட்டும். (நாணேற்றி அம்பெய்கிறான்) துரோ : (வில்லெடுத்து) என்ன இது? ஏன் இப்படி கையினின்று வில் நழுவுகிறது? வஞ்சகர் நெஞ்சம் போல் மனம் குழம்புகிறது? (மௌனமாய் இருக்கிறார்) அபி : ஆசாரியார் ஏன் இப்படி கற்சிலைபோல் காணப்படுகிறார்? துரோ : அபிமன்யு! அபி : தோல்வியை ஒப்புக்கொண்டதாக ஆசாரியார் எனக்கு அறிவிக் கிறாரா? துரோ : அர்ஜுனனுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துவிட்டு, அவன் மகனுடன் போர்புரிந்து வெற்றிக்கொடி நாட்ட நான் ஒருபோ தும் விரும்பவில்லை. (ஒருபுறமாக இரதத்துடன் செல்கிறார். அபிமன்யுவின் பக்கத்தில் வாத்தியங்கள் சப்திக்கின்றன) (காட்சி முடிகிறது) மூன்றாவது களம் இடம் : யுத்தகளத்தின் மற்றொரு பாகம். காலம் : காலை (துச்சாதனன் கீழே விழுந்து கிடக்கிறான். அவன் மீது அபிமன்யு ஆக்ரோஷத்துடன் உட்கார்ந்திருக்கிறான்.) அபிமன்யு : என்ன சொன்னாய்? பால்குடிக்கும் குழந்தை! ஹும்! அந்தக்குழந்தை இப்பொழுது உன் உதிரத்தைக் குடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. கண்விழித்துப் பார். துச்சாதனன் : (புரண்டு) என்னை விட்டுவிடு. அபி : விட்டுவிடுவதா? உன்னையா? இந்த நர பிசாசத்தையா? (பொறுத்து) என்ன, விழித்துப் பார்க்கிறாய்? உன்சிவந்த கண்களால் என்னைச் சிதற அடித்துவிடலாமென்று பார்க்கி றாயா? இந்தக்கண்களைப் பிடுங்கிக் கழுகுகளுக்கு இரை யாக்கப் போகிறேன்! மாதா துரோபதையை தாசி திருஷ்டி யுடன் நோக்கின கண்களல்லவா? (பொறுத்து) மகா பதிவிரதை யான அந்தப் புண்ணியவதியை நடுச்சபையிலே இழுத்து வந்து அவ மானப்படுத்திய இராட்சதப் பிண்டமல்லவா இது? ஆறாகி யிருதடங்கண் அஞ்சன வெம்புனல் சோர அளகஞ் சோர வேறான துகில் தகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லுங் கூறாமல் கோவிந்தா கோவிந்தா வென்று என் தாய் அரற்றி நின்ற காலத்து, அவளைப் பார்த்துச் சிரித்த வாயல்லவா இது? (பொறுத்து) இந்தக் கரங்களைத் துண்டு துண்டாக நறுக்கி உலர்த்தி உலக்கையால் பொடி செய்து இச்செம் மண்ணிலே சேர்த்து அதினாபுரி முழுவதும் கோலமிட வேண்டும். தேவேந்திரனின் மருகி, சவ்விய சாசியின் மனைவி, கருமேக நெடுங்கடல் கார் அனையான் கழலிணையில் குழல் வைத்து வணங்கும் என் தாய், மனங் குலைய, மானங் குலைய அவளைக் கரகர வென்று பிடித்திழுத்து வந்த கரங்களல்லவா இவை? தேவர்களுந் தீண்டுதற்கரிய என் அன்னையின் திரு மேனியைத் தீண்டி அவள் அடிவயிற்றில் என்று நெருப்பு வைத்தனையோ அன்றே குருகுலத்திற்கும் தீ மூட்டி விட்டாய். வேகின்ற அந்த வெந்தணலிலே நீ ஒரு பொறி. பொறியிலே அகப்பட்ட எலிபோல் என்னிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டாய். பாரதப் போரெனும் இந்தச் சூறாவளியிலே உன்னைப் பறக்கவிடுகிறேன் பார். (பொறுத்து) சை! பொல்லா வசையே பூண்ட இந்தப் புல்லனைக் கொன்று நான் ஏன் வசைதேடிக் கொள்ள வேண்டும்? பீமனுடைய வேட்டை யன்றோ இது? (எழுந்து) ஓடிப்போ! புனிதமான யுத்த க்ஷேத்திரத்தில், பிறன் மனையாளைத் தீண்டிய பேடிக்கு இடமில்லை; திரும்பிப் பாராமல் ஓடிப்போ. (காட்சி முடிகிறது) நான்காவது களம் இடம் : குருக்ஷேத்திரத்தில் பிறிதொரு புறம். காலம் : காலை. (துச்சாதனன், துரோணர், கர்ணன், சல்யன், சகுனி முதலியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர்) துரியோதனன் : (வேகமாக பிரவேசித்து) ஆசாரிய! ஆசாரிய! என்ன அநியாயம் இது? யானைக் கூட்டத்திலே சிங்கக் குட்டி யொன்று வந்து இப்படிக் கலக்குகிறதே! துரோணர் : துரியோதனா! கவலைப் படாதே. சகுனி : கவலைப்படாதே; ஆசாரியார் இருக்கிறார் ஆறுதல் கூற கடைசிகாலம் வரை. துரோ : (கோபத்துடன்) சகுனி - துரி : குருதேவ! குரு வமிசம் கருவழிக்கப்பட்டு வருவதைக் கண்டு நான் அழுவேனோ? கர்ணன் துணையிருக்க, சல்யன் சாகசம் இருக்க, சகுனியின் ஆலோசனையிருக்க, என் படை யழிபடு வதைக் கண்டு நான் அழுவேனோ? கர்ணன் : அரசே! அமர்க்களத்திலே அதைரியப்படுவது அழகல்ல. வீரர்கள் விளை நிலமல்லவா இது? சல்யன் : பழிக்குப் பழி வாங்கவேண்டுமே தவிர சோர்வுடன் பின்ன டையக் கூடாது. துச்சாதனன் : அஃது ஒரு போதும் நடவாது. என்னை எப்படி அவ மானப் படுத்தினான் அச் சிறுவன்? துரி : அந்தச் சிறுவன் ஒருவன், நம்மனைவரையும் சிந்தனையில் ஆழ்த்தி வைத்திருக்கிறான். அவனை மடக்கி வீழ்த்துவது எப்படி? துச் : அப்படி வீழ்த்தாவிட்டால், குரு வமிசம் குரு க்ஷேத்திரத்தில் ஐக்கியப்பட்டு விட வேண்டியதுதான். சகு : எனக்கு ஒன்று தோன்றுகிறது. அபிமன்யு சக்ரவியூகத்தை உடைத்தெறிந்து அதனினின்றும் மீண்டுவரும் போது நாமனை வரும் அவனைச் சூழ்ந்துகொண்டு அடித்துக் கொன்றுவிடு வோம். துச் : மிகச் சரியான யோசனை! எப்படியும் வாள் தவிர மற்றெல்லா யுத்தக் கருவிகளையும் அவன் இழந்துவிட்டான். அவ்வாளை மட்டும் தந்திரமாக வசப்படுத்திக் கொண்டு விட்டோமானால் பல்லைப் பிடுங்கின பாம்புபோல் அடங்கி விடுவான். அப் பொழுது அவனைக் கொல்வது எளிது. துரோ : அதருமம்! அநியாயம்!! துரி : ஆசாரிய! சத்துருக்களைச் சம்ஹாரம் செய்யவேண்டுமென்ற இலட்சியத்தைப் பிரதானமாகக் கொண்டவர்கள் , எந்தவித மான தந்திரங்களை வேண்டுமானாலும் கையாளலாமல்லவா? சமாதான காலத்தில் அதருமமாயிருப்பது சண்டைக் காலத்தில் தருமமாகிவிடுகிற தல்லவா? துரோ : பதினாறு வயது பாலகனைக் கொல்ல இத்தனை பேர் சேர்ந்து சதி செய்வதா? கோழைத்தனம்! அவமானம்!! சகு : சேனாதிபதிக்குத் தருமோபதேசம் செய்ய அதிகாரமில்லை! துரோ : (தமக்குள்) சை! புழுக்களின் சகவாசம் நம்மையும் குப்பை மேட்டில் இழுத்துச் செல்கிறது. கோழைகளின் நட்பு, மனி தனை மிருகமாக்குகிறது. (பிரகாசமாய்) சுயோதனா! நீ எதைச் செய்தாலும் செய். ஆனால் உன் பெயருக்கு, குரு வமிசத்தின் நற்புகழுக்கு, ஆரியா வர்த்தத்தின் பெருமைக்குக் களங்கம் விளைவியாதே. அபிமன்யுவோடு நேராகப் போராடி வெற்றி காண முடியவில்லை யென்றால் அவனைக் கோழைத்தனமாகக் கொலை செய்ய முயலாதே. மார்பிலே அடிப்பதற்கும் அடிபடு வதற்குந்தான் பாரத தேச வீரர்களுக்குத் தெரியும். உன்னுடைய இந்த இழி செயலினால், உலகத்தாரெல்லாரும் நம் நாட்டைப் பார்த்துப் பரிகசிக்க இடங்கொடுத்து விடாதே. சகு : ஆசாரியாருடைய தருமோபதேசம் இராஜ சபையிலே அமைதி யாகக் கேட்கப்பெறும். (எதிர்ப்புறத்தில் யுத்த கோஷம் கேட் கிறது) துரி : அதோ, வெற்றி முழக்கத்துடன் வீறிட்டு வருகிறான் அபி மன்யு! (ஆரவாரத்துடன் அபிமன்யு பிரவேசிக்கிறான்) அபி : விடுதலை! விடுதலை! விடுதலை! துச் : நில்; இனிமேல் இல்லை. அபி : யார் அது? அட! துச்சாதனனா? எந்த முகத்துடன் என் னெதிரில் வந்து நிற்கிறாய்? உனக்கு வெட்கமில்லை? மான மில்லை? மானிட உருவத்திற்குள்ள உணர்ச்சிகூட உனக்கு இல்லையா? சகு : வலையிலே அகப்பட்ட பறவை கீச்சு கீச்சென்று கத்துகிறது. அபி : இவர்தான் சகுனி மாமாவோ? வாழையடி வாழையென வந்த குரு வமிசத்தை வீரமற்ற கோழையாக்கி, பாரத தேசத்துப் பெண் மக்களின் சாபமென்னும் பாழ்வெளியிலே பறக்கவிட்ட பெருமை இவருடையது தானோ? (தலையசைத்து) உம் - இந்தக் கண்ணைப்பார். முதுகாட்டை உகக்கும் காகங்கூட இதனைத் தொடாது. துச் : உன் வாய் வீச்செல்லாம் இங்கே ஓங்காது. அபி : ஆம்; இந்தப் பேடிகள் கூட்டத்தில், இந்தப் பேய்கள் மத்தியில் மனிதனுக்கு வேலையில்லையென்று நீங்கள் கருதினால் உடனே எனக்கு வழி விட்டுவிடுங்கள். இல்லையேல், இச்செம்மண்ணை வாயிலே கவ்விக் கொள்ளவரும். பாண்டவர்களால் பன்முறை தோற்கடிக்கப் பட்டும், அவர்களால் உயிர்ப் பிச்சையளிக்கப் பட்டும் இன்னும் எந்த வாயால் என்னோடு பேச வருகிறீர்கள்? துரி : அபிமன்யு! அர்ஜுனன் புத்திரனாகப் பிறந்தும், கிருஷ்ண னுடைய உபதேசங்களைப் பெற்றும் ஏன் இப்படி பெரியோர் களை நிந்திக்கிறாய்? அபி : பெரியோர்கள், பெரியோர்களாக நடந்து கொண்டால் அவர்களை வணங்க அபிமன்யு எப்பொழுதும் சித்தமாயிருக் கிறான். துரி : உன்னுடைய வீரத்தை நாங்கள் எப்பொழுதும் குறைவு படுத்தியதில்லையே. அபி : மூத்தவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைமை யிலும் நான் பிசகியது கிடையாது. துரி : இந்த வார்த்தை உண்மைதானா? அபி : எல்லாம் வல்ல பரம்பொருளைப் போல் சத்தியமானது. துரி : அப்படியானால் அந்த வாளை அப்படி எறிந்துவிட்டு என்னருகில்வா. உன் மூலமாகப் பாண்டவர்களுக்கும் கௌர வர்களுக்கும் இன்று யுத்த களத்திலேயே நட்பு ஏற்பட்டு விட்டது. அபி : அஃதென் பாக்கியம். (வாளை உயரத்தூக்கி) வீரர் குழுவிலே என்னை வளர்த்துவந்த வாளாயுதமே! சிறிது விச்ராந்தி செய்து கொள். (வாளை ஒருபுறமாக எறிகிறான்.) துரோ : (தமக்குள்) அநியாயம்! என்ன மோசம்! நீசர்களுடைய உறவு இந்தக் காட்சியைத் தான் அளிக்கும். அபி : (துரியோதனன் அருகிற் சென்று கைகூப்பி) தந்தையே! மைந்தன் வணங்கி நிற்கிறேன். (இச்சமயம் திடீரென்று ஆரவாரத்துடன் எல்லாரும் சேர்ந்து அபிமன்யுவைச் சூழ்ந்து பிடித்துக் கொள்கிறார்கள்) துரி : கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். விட்டு விடாதீர்கள். துரோ : (தமக்குள்) ஆகாசமே! இன்னும் ஏன் கீழே விழாமல் இருக் கிறாய்? பூமாதேவியே! இன்னும் ஏன் நடுக்கங் கொள்ளாம லிருக்கிறாய்? அபி : (ஆச்சரியத்துடன்) என்ன இது? விடுங்கள் என்னை! சகு : யமலோகம் சென்ற பிறகு. அபி : அட பேடிகளே! உங்களுக்கு லஜ்ஜை கூட இல்லையா? தலை வணங்கி நின்றவன் தலையிலே இப்படி அடிப்பதா? நீங்கள் க்ஷத்திரியர்களா? இதைவிட அதோ மலைமலையாகக் குவிந்து கிடக்கும் பிணங்களைத் தின்னலாமே! என்னை வெல்ல உங்க ளால் முடியவில்லை யென்றால், என்னிடம் வந்து அடைக்கலம் புகுந்திருந்தால் உலகத்திலுள்ள எல்லாச் சத்துருக்களிடமிருந் தும் உங்களைக் காப்பாற்றி யிருப்பேனே! சகு : அதிகமாகக் கூத்தாடாதே. அபி : என்னை விட்டு விடுங்கள்; உங்கள் தலைகள் உருளும்படி கூத்தாடுகிறேன். உங்கள் இருப்பிடத்தை மசானமாக்கி அதில் சிவபிரானைப் போல் தாண்டவம் செய்கிறேன். விடுங்கள் என்னை. (விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறான்) அட பாபி களே! பச்சிலைச் சாறென உங்களைப் பிழிந்து விடுவேனென்னு பயப்படுகிறீர்களா? (துரோணரைப் பார்த்து) ஆசாரிய! உங்கள் எதிரிலே இந்த அநியாயமா? நீங்கள் இதை அங்கீகரிக்கிறீர் களா? (பொறுத்து) ஏன் முகத்தைத் தாழ்த்திக் கொள்கிறீர்கள்? நீங்கள் வீரரல்லவா? சத்திய சீலரல்லவா? தர்மக்ஞரல்லவா? உங்கள் சந்நிதியிலேயே இந்தத் துராசாரமா? யுத்த தர்மத்தை எல்லாருக்கும் உபதேசித்தருளும் நீங்களே இந்த அநியாயத்திற்கு இடங் கொடுத்தால், உலகத்திலே வீரம் என்பது எங்கே? தருமம் என்பது எங்கே? குருதேவ! வாய்விட்டுச் சொல்லுங்கள் இந்தச் செயல் நியாயமென்று! துரோ : மகனே! அநியாயம் என்பதை நான் அறியாமலில்லை; அதருமம் என்பதை நான் உணராமலில்லை. ஆனால் என்னுடைய பிரதிக்ஞையே என்னை எச்செயலும் செய்ய வொட்டாமல் சிறைப்படுத்தியிருக்கிறது. பரதந்திரத்தினால் நான் சுதந்திர மிழந்து நிற்கிறேன். அபி : ஆசாரிய! ஆசாரிய! நியாயமின்ன தென்று சொல்லக் கூட உங்களுக்குச் சுதந்திரமில்லையா? அடே! தரும தேவதை, இந்தக் கோழைகளைக் கண்டு பாரத வர்ஷத்திலிருந்து ஓடிப் போய் விட்டாளா? துரி : அபிமன்யு! அதிகமாக ஆடாதே. எங்களுடைய தயவிலே இப்பொழுது நீ இருக்கிறாய். நீ மரணமடைவதும், உயிரோ டிருப்பதும் எங்கள் வசத்தில் இருக்கிறது. அபி : அப்படியானால் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யுங் கள். துரி : விரும்பினால் பிராணபிட்சை அளிக்கிறோம்; கேள். அபி : பிராண பிட்சை! அதுவும் உன்னைப்போன்ற வஞ்சகத் துச்சர் களிடமிருந்து? பிட்சை வேண்டுவது பிட்சாண்டிகளின் செயல்; க்ஷத்திரியர் களின் செயலன்று. அர்ஜுன குமாரன் இத்தகைய அற்பத்தனமான பிட்சையை எப்பொழுதுமே வேண்ட மாட் டான். துரி : வேறு எது வேண்டுமானாலும் கேள். அபி : உண்மையாகவா? துரி : உண்மையாக. அபி : அப்படியானால் அதோ விழுந்து கிடக்கும் என் வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள். பிறகு யார், யாரிடம் பிட்சை வேண்டுகிறார் என்பதைப் பாருங்கள். மாதா சுபத்திரை என்னைப் பெற்றெடுத்தது உண்மையானால், அந்த வாளாயுதம் ஒன்றைக் கொண்டு, உங்களெல்லாரையும், அதோ - அந்தக் குவியலோடு குவித்துவிட்டு சக்ர வியூகத்தைச் சிதற அடித்துக் கொண்டு எங்கள் பாசறைக்குச் செல்கிறேன். சகு : பாசறையின் ஆசையை ஒழித்து விடு. துச் : அந்த வாள் உன் கரத்தில் இனிச் சோபிக்காது. அபி : கௌரவர் கோமானே! ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? துரி : வீழ்த்திய வாளைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அபி : எப்படிக் கொடுப்பீர்கள்? (பொறுத்து கர்ணனைப் பார்த்து) கொடையாளி என்று நானிலம் போற்றும் கர்ணனே! கொடுப்ப தாகக் கூறிப் பிறகு அதை மறுத்து விட்டதை இதுகாறும் பார்த் திருக்கிறீர்களா? ஏன் மௌனஞ் சாதிக்கிறீர்கள்? (பொறுத்து) சாரமற்ற எலும்புத் துண்டைக் கண்டு குரைக்கும் நாய்களே! நாய்க்குள்ள நன்றி கூட உங்களுக்கில்லை. துச் : அதிகமாகப் பேசாதே. (எல்லாரும் சேர்ந்து அபிமன்யுவை அடிக்கிறார்கள்) அபி : ஹா ! மாமா! எல்லாம் உன்னடிமையே. எல்லாம் உன் னுடைமையே. நீயே சாட்சி! கோழைகளால் கொல்லப்பட்ட தாகக் குறை கூறி நின் குரை கழலில் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டாயா? ஐயோ! நான் மரணத்திற்காக அஞ்சவில்லை. அஃது ஆரிய ஜாதியின் தருமமன்று. இந்தக் கோழைகளின் கையிலே, இந்த அற்பப் பூச்சிகளின் வசத்திலே சிக்கிக் கொண்ட தால் எனக்குச் சொர்க்க வாசலையும் அடைத்து விடுவாயோ என்று தான் அஞ்சுகிறேன். அண்டர் நாயக! ஆரியருக்கு வாழ் வளித்த பெரும! வேழமுதலே யெனஅழைப்ப என் னென்று ஓடிவந்த அண்ணால்! தர்மக்ஷேத்திரத்தில் தர்ம யுத்தம் புரிந் தேன்; தர்மத்திற்காக என்னைப் பலி கொடுக்கிறேன். ஆனால் அதருமிகளிடத்தில் சிக்கிக் கொண்டேன். ஆரியா வர்த்தத்தின் கௌரவத்திற்காக ஆரிய மாதாவின் அடியிலே என் உயிரை அர்ப்பணம் செய்கிறேன். எந்தாய்! நின்னருளிலே வளர்ந்து வாழ்ந்த நான் நின்னுருவைக் காணாது போகிறேன். ஆனால் நின்னிடம் வேண்டுவதொன்றுண்டு. என்னை வீரனாக வளர்த்த என் தாய்க்கு - உன் சகோதரிக்கு - ஆறுதல் கூறு. (பொறுத்து) அம்மா! சுபத்திரே! உன் வாழ்க்கையின் விளக்கு அணைந்து விட்டது. உன் பெருமைக்குரிய பிரதி பிம்பம் மறைந்து விட்டது. எனக்கு வீரதிலகமிட்டு வழியனுப்பினாய். வீரனாகத் திரும்பி வந்து உன் பொன்னடி பணியாத பாபியாகி விட்டேன். ஆனால் நான் கோழையாக இறக்கவில்லை. வீரனாகவே மடி கிறேன். என் பிதாவுக்கு இதை எடுத்துச் சொல். (பொறுத்து) அப்பா! உங்கள் வில்லாண்மை யெல்லாம் இந்தப் புல்லனுக்குப் பயன்படவில்லை. உங்களுடைய புத்திரன், உங்களுடைய தேஜ, உங்களுடைய வாழ்க்கையின் எதிரொலி - இதோ - மண் ணிலே மறைந்து போகிறான். மகாத்மா யுதிஷ்டிரருக்கும், பீமனாதியோர்க்கும் என் வணக்கத்தைத் தெரிவியுங்கள். (பொறுத்து) உத்தரே! பிரியதமே! நீ எங்கே இருக்கிறாய்! பாசறையில் உன்னைப் பரிதவிக்கவிட்டு வந்தேன். கண்ணீரும் கம்பலையுமாக நின்றாய். இனி என் செய்வாய்? உன் காதற் களஞ்சியம், பிரேம பாத்திரம், இப்பொழுதுமாசு படிந்து கிடக்கிறது. உன் வாழ்க்கையின் உதய சந்திரனை ராகு கேதுக்கள் சூழ்ந்து கொண்டு விட்டன. (பொறுத்து) அட பதர்களே! அநியாயமாக என்னை வஞ்சித்து - ஹா! மோசம்! - இதோ சன் மானம்! (காலால் அனைவரையும் உதைக்கிறான்) துச்சாதனன் முதலியோர் : பேசாதே; பேசாதே. (அனைவரும் சேர்ந்து அபிமன்யுவைத் தாக்குகிறார்கள்) அபி : ஹா! மாமா! வாசுதேவா! துச் : வாயை மூடு; அந்த இடையனுடைய பெயரைச் சொல்லாதே. (மீண்டும் அடிக்கிறார்கள்) அபி : கிருஷ்ணா! கிருஷ்ணா! (கீழே விழுந்து விடுகிறான்) துச்சாதனன் முதலியோர் : ஜெய! துரியோதன மகாராஜருக்கு ஜெய!! (காட்சி முடிகிறது.) மூன்றாம் அங்கம் முதற் களம் இடம் : உத்தரையின் படுக்கையறை. காலம் : பகல் (உத்தரை படுக்கையில் படுத்திருக்கிறாள். உத்தரையின் தோழி பிரவேசிக்கிறாள்) தோழி :- என்ன இது? ஒரு நாளுமில்லாமல் இன்று பகல்வேளை யில் இளைய ராணி தூங்குகின்றாள்! (அருகில் சென்று) உடம் பெல்லாம் முத்துமுத்தாக வியர்வை! முகம் சிவந்து விட்டது! அவளைப்போய் அழைத்துக் கொண்டுவருகிறேன். (செல்கி றாள்) உத்தரை: (கனவு கண்ட வண்ணம்) நாதா! நாதா! எங்கே போகி றீர்கள்? ஆயுதமெல்லாம் எங்கே? விமானத்தின் மீது ஏறிக் கொண்டு விட்டீர்களா? என்ன? என்னை அழைத்துப்போக முடியாதா? நிச்சய மாகவா - ? இப்படித் திரும்புங்கள் - ? என்னைப் பார்த்துச் சொல்லுங்கள்! அதோ! தேவேந்திரன்! - புஷ்பவர்ஷம்! - ஐயோ! தேகத்தில் எத்தனை காயங்கள்! -இரத்தம் ஓடுகிறதே! ஐயா! ஏன் அடிக்கிறீர்கள்! நாதா! நாதா! (பொறுத்து விழித்துக் கொள்கிறாள்) என்ன இது? பகலிலே கனவு! ஐயோ! ஒருவருமில்லையா இங்கே? தோழி : (உள்ளிருந்த வண்ணம்) இதோ வந்துவிட்டேனம்மா! (காட்சி முடிகிறது) இரண்டாவது களம் இடம் : குருக்ஷேத்திரத்தில் ஒரு பாகம். காலம் : பகல் (யுதிஷ்டிரர், பீமன், சகதேவன் முதலியோர் இரதத்துடன் பிரவேசிக்கின்றனர்) பீமன் : முன்னே முடுகிச் செல்லுங்கள். யுதிஷ்டிரர் : தம்பீ! இரு. அதோ, ஏன் சேனைகள் கலங்கியோடு கின்றன? சகதேவன் : இதுகாறும் கேளாத பேரொலி இன்று கேட்கிறது. பீம : ஆம்; நகுலன் எங்கே? சக : அதோ! ஏதோ துர்ச்சம்பவம் நடந்திருக்கிறது! (நகுலன் பிரவேசிக்கிறான்) நகுலன் : அண்ணா! அண்ணா! யுதி : தம்பீ! என்ன செய்தி? யாருக்கு ஆபத்து? நகு : நம் மீது பேரிரடி விழுந்துவிட்டது; நாம் பாவிகளாகி விட் டோம். பீம : நகுல! என்ன விஷயம்? குழந்தை அபிமன்யு எங்கே? நகு : (அழுத வண்ணம் ) சொர்க்க லோகத்திலே - யுதி : என்ன? என்ன? அபிமன்யு இறந்துவிட்டானா? நகு : ஆம்; கௌரவர்கள் கொன்றுவிட்டார்கள். யுதி : ஹா! (அப்படியே மூர்ச்சித்து விழுகிறார்) பீம : (பொறுத்துக் கோபத்துடன்) கௌரவர்கள் கொன்று விட்டார்கள்! - உம். இந்த தர்மமூர்த்திக்காக அடங்கிக் கிடந்த என்கோபத்தைக் கிளப்பி விட்டார்கள். கௌரவ சேனையாவும், குருக்ஷேத்திர இரத்த வெள்ளத்திலே முழுகாதவரை இந்தக் கோபம் தணியாது. (பொறுத்து ஆக்ரோஷத்துடன்) அபிமன்யு! அபிமன்யு! இந்த இரத்த வெள்ளத்திலே உன்னை நீராட்டி வைக்கிறேன். (பொறுத்து) அண்ணா! அண்ணா! யுதி : (மூர்ச்சை தெளிந்தெழுந்து துக்கத்துடன்) தம்பீ! மின்னாமல் இடி இடித்து விட்டது. அர்ஜுனனுக்கு நான் என்ன கூறுவேன்? என் மகனெங்கே என்று கேட்டால் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன்? சக்ரவியூகமென்னும் வடவைத் தீயிலே தள்ளிவிட்டேன் என்று கூறுவேனா? (பொறுத்து) பதியிழந் தோம்! படைத்த நிதியிழந்தோம்! வனத்திலே வசித்தோம்! ஒளிந்து உயிர் வாழ்ந்தோம்! படாத பாடெல்லாம் பட்டோம்! கடைசியில், மகனே! உன்னையும் பறிகொடுத்து விட்டோம். இனி உலகத்திலே எங்களுக்குச் சுகம் என்பதேது! மகிழ்ச்சி யென்பதேது? (பொறுத்து) எந்த இராஜ்யத்துக்காக இந்தப் போர் நடைபெறுகிறதோ, அந்த இராஜ்யத்தை இனி யார் அனுபவிக்கப் போகிறார்? நாங்கள் அடைந்த அவமானத்தை யெல்லாம், சகித்த துன்பத்தை யெல்லாம், உனக்கு மணி மகுடஞ் சூட்டி மறந்து விடலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் எல்லாம் கானல்நீரிலே தாகசாந்தி செய்து கொண்டது போலாயிற்று. (பொறுத்து) அபிமன்யு! உன்னை அடிக்கடி அழைத்து மகிழ வேண்டு மென்ற ஆதுரத்தால் அபிமா அபிமா என்று அழைத்த வாயிலே மண்ணைப்போட்டுப் போய் விட்டாய்! குழந்தாய்! நீ எங்கே சென்றிருக்கிறாய்? வில்லாளி விஜயனிருக்க, மல்லாளும் வீமனிருக்க, மாநகுல சகதேவர்தா மிருக்க, பாவியான நானிருக்க, எல்லோருக்கும் மேலாய் மரகதமாமலை போல் மாமா கிருஷ்ண மூர்த்தி இருக்க, வினையறியா இளஞ் சிங்கம் நீ இறப்பதா? பாரத தேசத்தில் இத்தகைய அநியாயம் எப்பொழுதேனும் நடந்திருக்கிறதா? (பொறுத்து) அப்பா! உன்னை மனமுவந்து இந்தக் கோர யுத்தத்திற்கு அனுப்பிய பாவியல்லவா நான்? அதன் பலனை மறுகணத்திலேயே அநுபவிக்கிறேன். மகனே! நெடுந்தேரூர்ந்து சென்றனை! இமைப் பொழுதிற் திகிரியு முடைத்தனை! தெவ்வ ரோட வென்றனை! சுயோதனன் மகவுடனே மகவ னைத்தும் கொன்றனை! ஆனால் மீண்டுவந்து நின்னாண்மை கூறக்கூசி னையோ? (விசனிக்கிறார்) பீம : அண்ணா! துக்கப்படாதீர்கள்! இந்தப் புத்திர சோகம் என்னும் நெருப்பைக் கண்ணீரினால் அணைக்க முடியாது; கௌரவர்கள் இரத்தத்தினாலேயே அணைக்க முடியும். சக : ஆம் அண்ணா ! சென்றினிப்பகை முடித்து விஜயனுக்கு ஆறு தல் கூறுவோம். நகு : அதோ வியாச மகரிஷி வருகிறார். (வியாசர் பிரவேசிக்கிறார்) வியாசர் : தர்மபுத்திரா! யுதி : மகரிஷி! என்னைத் தருமபுத்திரன் என்று அழைக்க வேண்டாம். நான் பாபி - நராதமன் - நரபிசாசம்; தாயிருக்கக் கன்றைக்கொன்ற கொடும் பாதகன். பாண்டவர் குலத்திற்குப் பெரும் பழி தேடி வைத்துவிட்டேன். ஐயா! எங்கள் குலக் கொழுந்து கருகிவிட்டது. அர்ஜுன குமாரன் இறந்து விட் டான். ஆரிய மாதாவின் வாழ்வு சீர்குலைந்து விட்டது. இனி நாங்கள் ஏன் இருக்கவேண்டும்.? தவச்சிரேஷ்ட! இதற்கு மூல காரணம் யார் தெரியுமா? இந்தப் பேய் தான்; இந்தக் கற்பாறை தான். (வியாசரின் அடியில் விழுகிறார்) வியா : பாண்டு புத்திரா! அதைரியப்படாதே. இப்படி நீ துக்கப் படுவது அழகல்ல. விதி நியமத்தை யார் மாற்றமுடியும்? எல்லாம் அந்தப் பரந்தாமனின் திருவிளையாடலல்லவா? யுதி : அதைரியப் படாதே என்று சொல்வது எளிது. ஆனால் என் இருதயத்திலே எரிமலை அக்கினிஜ்வாலையைக் கக்க ஆரம் பித்து விட்டது. அதிலும், உத்தரை நாதனற்ற ஹீனையான தற்குக் காரணம் நானென்று நினைக்கையில் என் தேகமெல் லாம் கூசிக் குலைகிறது. பிரபு! அவளை விதவா வேஷத்துடன் நான் எப்படிப் பார்ப்பேன்? முனிவரே! அபிமன்யுவைப் போன்ற புத்திரன், உலகத்திலே இனியாருக்குக் கிடைக்கப் போகிறான்? அத்தகைய கர்மவீரர்கள் இனி இந்தப் பாரத நாட்டிலே தோன்றப் போகிறார்களா? வியா : பீமா! தமையனைப் பாசறைக்கு அழைத்துச் செல். பீம : அண்ணா! வாருங்கள் பாசறைக்கு. வியா : எழுந்திரு யுதிஷ்டிரா! க்ஷத்திரிய குமாரனுக்கு இத்தகைய கலக்கமும் உண்டாகலாமா? யுதி : (சென்று கொண்டே) அபிமன்யு! அபிமன்யு! (அனைவரும் செல்கிறார்கள்) (காட்சி முடிகிறது) மூன்றாவது களம் இடம் : தட்சணபதம். காலம் : பிற்பகல் (சோமயாஜுலு முன்னும் அவர் மனைவி பின்னுமாக தட்சணதேசம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்) சோமயாஜுலு : வாயேண்டி பர பரன்னு. இப்போதான் என்னமோ அன்ன நடை நடக்கிறே. சோ. மனைவி : போரும் உங்க நாட்டியம் ; நடுவழியிலே ஆடாதெங்கோ. சோம : இந்த மாதிரி நடந்துபோனா, நம்ம பேரன் தலைமுறையிலே தான் தட்சணம் போய்ச்சேரலாம். சோ. ம : போரும்; பேரன் பேத்தி இருக்கவாள்ளாம் ரொம்ப சுகப் பட்டுட்டாளே! சோம : ஆத்மாநாம் புத்ர நாமாஸி யல்லவோ? சோ. ம : இன்னும் கூடவா இதெல்லாம் கட்டிண்டு அழரேள்? சிந்து நதியிலே கரைச்சுட்டு வந்துட்டேள்னுன்னா நெனெச் சேன்? சோம : ஆமாம் - அக்னிஹோத்ர குண்டம் எடுத்துண்டையாடி? சோ. ம : அறுவாமணை எடுத்துண்டேன் கறி காய் நறுக்கிறதுக்கு. சோம : சிவ! சிவ! பிராமணீகம் போச்சு - அது கிடக்கிறது. பூஜை பெட்டி எடுத்துண்டையா? சோ. ம : இந்தச் சனியனெல்லாம் ஆத்திலேயே சொல்லித் தொலைக் கறது தானே. இங்கே வந்து மல்லுக்கிழுத்தா? புடலம் விரையை எடுத்துக்கோன்னு சொன்னேள்; அதை மறக்காமல் எடுத் துண்டேன். சோம : அது பேய்ப் புடலன்னாடி அது! விசுவாமித்திர சிருஷ்டி! அது என்னத்துக்கு பிரயோஜனம்? சோ. ம : நீங்களும் நானும் என்னத்துக்கு பிரயோஜனம்? சோம : (உரக்க) என்னது? ஓ! ஓ! ஏது? வாய் மிஞ்சி பூட்டாப் போலே இருக்குது. சோ. ம : ஏன் அரசமரத்துக் காற்று மாதிரி அடிச்சுக்கிரேள்? சோம : காலம் கெட்டுப் போச்சு; கலியுகம் பிறக்கறதுக்கு ஆச்சோ இல்லையோ? சோ. ம : அதனாலே தான் சுபத்திரை, அநியாயமா இப்படி தன் ஒரு பிள்ளையை பறி கொடுத்துட்டு நிக்கறாள்! சோம : இன்னான்னாலும் அபிமன்யுவைக் கொன்னது அநியாயம் அநியாயந்தான். நாமெல்லாம் கௌரவர்கள் பிரஜைகள் தான்; இருந்தாலும் நியாயத்தே சொல்லணும் பாரு. சோ. ம : அதனாலே தான் தட்சண தேசம் போறேளோ? சோம : ஆமாம், யதா ராஜா ததாப்பிரஜா. சோ. ம : போதும் நிறுத்துங்கோ; உங்க வியாகாணம் தர்க்கத்திலே கொண்டு முட்றது. வாங்கோ போகலாம். சோம : ஆமாம்; தேவ தேவ மஹா தேவ --- (இருவரும் செல்கிறார்கள். கிருஷ்ணரும் அர்ஜுனனும் வேறொரு புறமாகப் பேசிக்கொண்டே வருகிறார்கள்) அர்ஜூனன் : பகவன்! தங்கள் அநுக்ரஹத்தால் இன்று சம் சப்தகர்கள் வெற்றி கொள்ளப்பட்டார்கள். கிரு : எல்லாம் உனது காண்டீவத்தின் மகிமைதான் --! அர் : ஆயினும் சத்ருக்களை வென்றதனாலுண்டாகும் மகிழ்ச்சி இன்று ஏன் எனக்கு உண்டாகவில்லை? கிருஷ்ணர் : அர்ஜுனா! அண்ட சராசரங்கள் யாவும் ஒருநியமத்திற் குட்பட்டே நடைபெற்று வருகின்றன. இதனின்றும் மாந்தர் மாற முடியாது. அர் : இந்தத் தத்துவங்கள் என்செவியில் புகவேயில்லை.. ஆனால் என்னையறியாமலே கண்களில் நீர் பெருகுகிறது; ஹிருதய நாடி வேகமாக அடிக்கிறது; உலகமெல்லாம் சூனியமாக என் கண் களுக்குப் புலப்படு கிறது. இந்த விபரீதத்தின் காரணமென்ன? கிரு : காரணம் என்னவென்று கூறுவேன்? காரியமொன்றையே கண்ணால் பார்க்கிறேன் அர் : அண்ணால்! தாங்கள் மாயையை யார் அறியவல்லார்? ஆயி னும் நாம் விரைவில் நமது பாசறைக்குச் செல்வோம். தர் மாத்மா யுதிஷ்டிரரை விரைவிலே சென்று காண வேண்டு மென்ற ஆவல் கணத்திற்குக் கணம் அதிகமாகிறது. கிரு : அவசியம் செல்வோம். (செல்கிறார்கள்) (காட்சி முடிகிறது) நான்காவது களம் இடம் : பாண்டவர் பாசறை. காலம் : பிற்பகல். (அபிமன்யுவின் சவம் கிடத்தப்பட்டிருக்கிறது. தலைப்பக்கம் உத்தரை அழுது கொண்டிருக்கிறாள். ஒரு புறம் அர்ஜுனன் மூர்ச்சை யாகிக் கிடக்கிறான். மற்றொரு புறம் சுபத்திரை தலை விரிகோலமாய் பிரலாபித்துக் கொண்டிருக்கிறாள்) சுபத்திரை :- (அபிமன்யுவின் தேகத்தைத் தடவிக் கொடுத்து ) கண்ணே! அபிமன்யு! உன் மிருதுவான தேகத்திலே எத்தனை காயங்கள்? ஐயோ! நானிட்ட வீரதிலகம் இன்னும் அழியாம லிருக்கிறதே! ஹா! கன்றிழந்த பசுவாய்க் கதறி நிற்கிறேன். அபிமன்யு! வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லு. (பொறுத்து) கண்ணே! என் வாழ்வைக் சூனிய மாக்கிவிட்டு என் அடிவயிற் றிலே நெருப்பிட்டு விட்டு எங்கடா சென்றுவிட்டாய்? வெற்றி மாலையுடன் திரும்பி வந்து வணங்குகிறேன் என்று எவ்வளவு மிடுக்காகச் சொன்னாயடா? இப்பொழுது நான் உன் பக்கத் திலே விழுந்து அழுது கொண்டிருக்கிறேன். கண்ணெடுத்துப் பார்க்கமாட்டாயா? ஐயோ! காலையிலே இங்கிருந்தாய்; பகலிலே உன்னைப் படுக்க வைத்துப் பிரலாபித்துக் கொண் டிருக்கிறேன். அப்பா! அபிமன்யு! (கிருஷ்ணர் பிரவேசிக்கிறார்) கிருஷ்ணர் : சுபத்திரே! சுப : அண்ணா! அண்ணா!! என் அபிமன்யு எங்கே? உன் மருமகன் எங்கே? கண்ணா! என் வாழ்வெல்லாம் வீழ்ந்து விட்டது! என் முதுமையின் ஊன்றுகோல் ஒடிந்துவிட்டது! நின் திருக்கோலம் இங்கிருக்க, என்னருமைக் குமாரன் பிணக்கோலமாகக் கிடக்கி றான்! (அபிமன்யுவின் சவத்தைப் பார்த்து) அப்பா! மகனே! பாரததேசத்துப் பெரும்புகழைச் சுதன்மையில் எடுத்துச் சொல்லச் சென்றனையோ? கொஞ்சி நின்றார் கதற, கூடி நின்றார் பதற, எஞ்சியுள்ளார் இரங்கி ஏங்க, வஞ்சமாகக் கௌரவர்கள் கொன்ற கதையைக் காலனிடத்தில் தெரிவிக்கப் போயினையோ? சூரபத்மனை வெல்ல சுப்பிரமணியக் கடவுள் சென்றதுபோல் யுத்த களத்திற்குச் சென்றாய்! ஆனால் - ஆனால்-மகனே! மகனே! (மூர்ச்சையாகிறாள்) கிரு :- சுபத்திரே! அபிமன்யு இறக்கவில்லை; அமரனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான். வீரர்களின் இலட்சிய புருஷனாய், பாரத வர்ஷத்தின் கௌரவமாய், இளைஞர்களின் உள்ளத்திலே, பத் தினிப் பெண்டிரின் இசையிலே பிரகாசித்துக் கொண்டிருக் கிறான்! ஓம். சாந்தி! சாந்தி! சாந்தி!  மனோதருமம் முகவுரை கவுண்ட் மாரி மெட்டர்லிங்க் (Count Maurice Maeterlinck) என்ற பெல்ஜிய நாட்டுப் புலவன் ஒரு சிறந்த நாடகாசிரியன்; உரை நடையில் கைதேர்ந்தவன்; மனிதனுடைய உணர்ச்சி பாவங்களை வர்ணித்துக் காட்டுவதில் திறமை சாலி; 1862ம் வருஷம், பெல்ஜியத்திலுள்ள கெண்ட் (Ghent) என்னும் ஊரில் பிறந்தவன். இவனுடைய ஓரங்க நாடக மொன்றைத் தாங்கள் நடிப்பதற் காக மொழி பெயர்த்துத் தருமாறு 1926ம் வருஷம் சென்னை அடை யாற்றிலுள்ள சில நண்பர்கள் எனக்கு ஆஞ்ஞாபித்தார்கள். நாடகங் களிலே, நடிப்பு நாடக மென்றும், படிப்பு நாடகமென்றும் இரு வகையுண்டு. மெட்டர்லிங்கினுடைய நாடகங்கள் யாவும் படிப்பு நாடகங்களே. எனவே, இந்த நாடகத்தை மொழி பெயர்த் தாலும், நடிக்க முடியா தென்று நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சொன்னபடி செய் என்று உத்திரவு போட்டார்கள். நானும் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். ஆனால் அவர்கள், மொழி பெயர்ப்பைப் படித்து விட்டு, மெட்டர்லிங்கி னுடைய நாடகங்களை நடிக்க முடியாதுதான்; நீ சொன்னது சரி என்று கையெழுத்துப் பிரதியை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அந்த மட்டும் நல்ல காலம் என்று எண்ணிக் கொண்டு, பிரதியை, என்னுடைய செலாவணி யாகாத பொக்கிஷப் பெட்டியில் - அதாவது கையெழுத்துப் பிரதிகள் கட்டோடு - வைத்து விட்டேன். பதின் மூன்று வருஷங்க ளுக்குப் பிறகுதான், இதற்கு நல்ல காலம் பிறந்தது. 1939-ம் வருஷம் இந்த மனோ தர்மம் ஜோதியில் பிரசுரமாயிற்று. அதுவே, இப்பொழுது புத்தக வடிவத்தில் வெளியாகி யிருக்கிறது. இப்படி வெளி யிட்டதனால், என்னுடைய அறியாமையை பகிரங்கப் படுத்திக் கொண்டு விட்டேனோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இதற்கெல் லாம் காரணர் என்னுடைய தள்ளு கட்டையாக அமைந்துவிட்ட அத்திக்கேணிக் கிழார் தான். அவர் ஒருநாள் மாலை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்ன ஐயா, இப்படி படுமோசமாகப் போய் விட்டீர்களே; 1940-ம் வருஷம் பிறந்து ஒரு புதகங்கூட வெளியிட வில்லையே என்று கோபித்துக் கொண்டார். வறுமைக் கும் அஞ்சாத நான், அன்று, அவருடைய கோபத்துக்கு அஞ்சி விட்டேன். எதையாவ தொன்றை வெளியிடுவதென்று துணிந்தும் விட்டேன். அந்தத் துணிச்சலின் விளைவுதான் இந்த மனோ தர்மம். 25.5.1940 நாடக பாத்திரங்கள் உதியமான் - ஒரு வயோதிகன் சேரலாதன் - வயோதிகனின் நண்பன் பெருந்தேவி மாரியம்மை - வயோதிகனின் பேர்த்திகள் பிச்சன் - ஒரு குடியானவன் கூட்டத்தைச் சார்ந்த சிலரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தகப்பனார், தாயார், இரண்டு சிறுமிகள், ஒரு கைக் குழந்தை முதலி யோரும். நாடக நிகழ்விடம் - ஒரு தோட்டம். முதலங்கம் இடம் : தோட்டத்தில் சிறு குடிசை. காலம் : பின் மாலை. (மூன்று பலகணிகள் உடைய ஒரு குடிசையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தகப்பனார், தாயார், இரண்டு சிறு பெண்கள் முதலியோர், கணப்புச் சட்டியைச் சுற்றி உட்கார்ந்து குளிர் காய்ந்து கொண் டிருக்கின்றனர். இரண்டு சிறு பெண்களும், காலையில் தங்கள் தாயார் கற்றுக் கொடுத்த தையல் வேலையில் கை பழகிக் கொண்டிருக் கிறார்கள். தாயார், தனது கைக் குழந்தையை மடியில் வைத்துச் சீராட்டிப் பாடிக் கொண்டிருக்கிறாள். மூலையில் ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. எங்கும் அமைதி நிறைந்திருக்கிறது. உதியமானும் சேரலாதனும் மெதுவாகப் பிரவேசிக் கிறார்கள்) உதியமான்: (பெருமூச்சு விட்டு) அப்பா மெதுவாக வீட்டுக்குப் பின்புறம் வந்து சேர்ந்தோம். (குடிசையிலுள்ளவர்களைச் சுட்டிக் காட்டி) அதோ பார்! அவர்கள் இப்பக்கம் வருவதே யில்லை. வீட்டுக்கு முன்புற மாகவே கதவுகள் முதலியன எல்லாம்! இந்தப் பக்கம் ஒன்றுமில்லை. (குடிசையைக் கூர்ந்து கவனித்து) இப்படி வா! இந்த ஜன்னலின் வழியாகப் பார்! எல்லோரும் நெருப்புக் குமட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருக் கின்றனர். நல்ல காலம்! நாம் வந்ததும், இங்குப் பேசிக் கொண்டிருப்பதும் அவர் களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், தாயாராவது, அந்தப் பெண்களாவது ஓடிவந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த் திருப்பார்கள். அப்பொழுது நாம் என்ன செய்வது? சேரலாதன்: (சிறிது திகைப்புடன்) என்ன செய்வது? உதிய : (கையை அமர்த்தி) இரு; குடும்பத்தினர் அனைவரும் அந்த அறையிலேயே இருக்கிறார்களா வென்று பார்க்கிறேன். (தலை யைத் தூக்கிப் பார்த்துச் சிறிது பொறுத்து) ஆம்; தகப்பனார் குமட்டியின் கிட்டே ஒரு மூலையாக உட்கார்ந்து கொண் டிருக்கிறார். குளிருக்காக முழங்காலைக் கட்டிக் கொண்டு, ஏதோ யோசனை செய்து கொண்டிருக் கிறார். அந்த அம்மாள்- குழந்தைகளின் தாயார் - சுவரின் மீது சாய்ந்து கொண்டு - சேர : நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். உதிய : இல்லை; இல்லை. அவள் எதையும் பார்க்கவில்லை. இப் பொழுது அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிற மாதிரியில் நம்மைப் பார்க்க முடியாது. மரத்தின் நிழல் நம்மை மறைத்துக் கொண் டிருக்கிறது. - உ! இன்னும் அருகில் போகாதே. இறந்துபோன பெண்ணின் இரண்டு சகோதரி களும் - பாவம்! தையல் வேலையில் கைபழகிக் கொண்டிக்கிறார்கள். கைக் குழந்தை அயர்ந்து தூங்கி விட்டது. (ஆகாயத்தைப் பார்த்து) நாழிகை ஒன்பதுக்கு மேலிருக் கும். (குடிசையை நோக்கி) மௌனத்தின் ஆட்சிக்கு இந்தக் குடிசை உட்பட்டிருக்கிறது. சேர : அந்தக் குழந்தைகளின் தகப்பனாருடைய கவனத்தைக் கவரும்படியாக நாம் ஏதேனும் சந்தடியோ சைகையோ செய்தா லென்ன? இந்தப் பக்கம் அவர் தலையைத் திருப்பிக் கொண் டிருக்கிறார். ஏதேனும் ஒரு பலகணியின் கீழ்ப் போய் நான் தட்டிச் சப்தஞ் செய்யட்டுமா? யாராவது ஒருவர் முதலில் இந்தத் துக்க சமாசாரத்தைக் கேட்டுத்தானே தீரவேண்டும். உதிய : எதைச் செய்வது என்று எனக்குத் தோன்றவில்லை. நாம் மிகுந்த ஜாக்கிரதையுடனிருக்க வேண்டும். தகப்பனார் வயதா னவர்; தவிர, நோயாளி. தாயாரும் வியாதியால் அவதைப் பட்டுக் கொண்டிருக் கிறாள். அந்தப் பெண் குழந்தைகளுக்கோ மிகுந்த பாலிய வயது. இவர்கள் எல்லாரும் அவளை - இறந்து போன அந்தப் பெண்ணை - எவ்வளவு அன்புடன் நேசித்து வந்தார்கள் தெரியுமா? வேறெவரிடத்திலும் இவர்கள் அம்மாதிரி அன்பு செலுத்தவில்லை. இத்தகைய சந்தோஷம் நிறைந்த குடும்பத்தை நான் எங்கும் பார்த்தது கிடையாது. (பொறுத்து) வேண்டாம்! வேண்டாம்! சேரலாதா! ஜன்ன லண்டை போகாதே! இதுவே அவர்களுக்கு நாமிழைக்கும் பெரிய தீங்காகும். சாதாரண ஒரு சம்பவத்தைப் போலவே, இந்த மரணச் செய்தியை அவர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். மற்றும், நாம் அதிக துக்கமடைந்தவர்களாகவும் காட்டிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், நமது துக்கத்தை விட தங்களுக்கு அதிக துக்கம் இருக்கிறதென்று காட்டக் கருதி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பார்கள். (பொறுத்து) நாம் மெதுவாகத் தோட்டத்திற்கு முன்புறம் போவோம். போய்க் கதவை தட்டுவோம். கதவைத் திறப்பார்கள். பிறகு, ஒன்றுமறியாதவர்கள்போல் உள்ளே செல்லலாம். முதலில் நான் போகிறேன். என்னைக் கண்ட அவர்களில் ஒருவரும் ஆச்சரியப் படமாட்டார்கள். நான் சாதாரணமாக மாலை வேளைகளில், பழம், புஷ்பம் முதலியவைகளைக் கொண்டுவந்து இவர்களுக் குக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வேன். சேர : அப்படியானால் நானும் உன்னுடன் வரவேண்டுமென்று ஏன் விரும்புகிறாய்? நீ மாத்திரம் போ. நீ என்னைஅழைக்கும் வரை, நான் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை எப்பொழுதும் பார்த்ததேயில்லை. நான் ஒரு வழிப் போக்கன்தானே! அந்நிய மனிதன் தானே! உதிய : நான் ஒருவனாகப் போவது நல்லதல்ல. ஒருவனே சென்று அறிவிக்கும் துக்கச் செய்தி, அதிக துன்பத்தைத் தரக்கூடியதா யிருக்கிறது. நான் வரும்போதே இதைப்பற்றி யோசித்தேன். நான் தனியாகவே சென்றால், போனதும் முதலில் இந்தத் துக்கச் செய்தியையே தெரிவிக்க வேண்டியிருக்கும். என்னுடைய இரண்டொரு வார்த்தைகளிலேயே அவர்கள் எல்லா விஷயங் களையும் தெரிந்து கொள்வார்கள். பிறகு எதையும் சொல்ல எனக்கு வழி யிராது. துர்ச் சம்பவத்தைத் தெரிவிக்கும் வார்த்தை கள் முற்றுப் பெற்ற பிறகு ஏற்படும் அமைதி இருக்கிறதே, ஓ! எவ்வளவு பயங்கரமானது தெரியுமா? அந்த அமைதியில்தான் இதயம் வெடித்துப் போகிறது. நாமிருவரும் ஒன்றாகப் போனால், வளைத்து வளைத்து நான் பேசத் தொடங்குவேன். நாங்கள் அந்தப் பெண்ணை அப்படிப் பார்த்தோம்; அவள் ஆற்றின் மீது மிதந்து கொணடிருந்தாள்; அவள் இரு கைகளும் ஒன்றாகச் சேர்ந்திருந்தன என்று இப்படி யெல்லாம் பேச ஆரம்பிப்பேன். சேர : அவள் கைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்க வில்லையே. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களில் மிதந்து கொண்டிருந்தனவே. உதிய : பார்த்தாயா? நம்மையும் மீறி நாம் பேச ஆரம்பிக்கிறோம். அந்தப் பெண் இறந்து போன விவரங்களில் தான் துக்க மெல்லாம் அடங்கி யிருக்கின்றன. நான் தனியாகச் சென்று இந்தச் செய்தியைத் தெரிவித்தால் - அவர்களுடைய சுபாவம் எனக்கு நன்றாகத் தெரியும் - என்னுடைய முதல் வார்த்தைகளே அவர்களுக்கு எவ்வளவு துயரத்தை உண்டாக்கும் தெரியுமா? ஆண்டவனே அதை அறிவான். நாமிருவரும் சென்று, மாறி மாறிப் பேசினால், அவர்கள் நமது பேச்சிலே கவனத்தைச் செலுத்திவிட்டு, நமது முகத்திலே தங்கியிருக்கும் துக்கக் குறியைக் காண மறந்து விடுவார்கள். இறந்து போன பெண்ணின் தாயார் அங்கு இருக்கிறாள் என்பதை நீ மறந்து விடக்கூடாது. அவளுடைய பிராணன் ஒரு நூலிழையில் தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. துக்கத்தின் முதல் அலையானது, அநாவசியமான வார்த்தைகளில் சென்று அடங்கி விடுவதே நல்லது. ஒரு துக்கச் செய்தியைப் பலர் சென்று தெரிவித்தால், அந்த துக்கத்தைப் பலரும் பங்கிட்டுக் கொண்டு விடுகிறார்கள். துக்கத்தில் சம்பந்தப்படாதவர்கள்கூட, அதில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால், அத்துக்கமானது முயற்சி யின்றி, சந்தடியின்றி, காற்றைப்போல் கலைந்தும், வெளிச்சத்தை போல் பரந்தும் போய் விடுகிறது. சேர : உன் துணிகள் நனைந்திருக்கின்றன. உதிய : என்னுடைய மேற் சட்டையின் ஒரு பாகந்தான் நனைந்தது; வேறொன்று மில்லை. நீ யென்ன இவ்வளவு ஈரத்துடனிருக் கிறாயே? உன்னுடைய மேற்சட்டையிலெல்லாம் சேறு வடிந் திருக்கிறது. இருட்டா யிருந்ததால், வழியில் இதை நான் கவனிக் கவே யில்லை. சேர : இடுப்பு வரை நான் தண்ணீருக்குள் சென்றேன். உதிய : நான் வருவதற்கு நெடு நேரத்திற்கு முந்தியே நீ அவளைக் கண்டு பிடித்துவிட்டாயா? சேர : இல்லை; சில விநாடிகளுக்கு முன்புதான் நான் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்பொழுது தான் இருள் மூடிக் கொண்டுவரத் தொடங்கியது. நான் ஆற்றோரமாகவே, ஆற்றைப் பார்த்துக் கொண்டே சென்றேன். அப்பொழுது ஒரு நாணற் புதருக்கு அருகாமையில் ஏதோ ஒன்று ஆச்சரியமாகப் புலப்பட்டது. நெருங்கிச் சென்றேன். அந்தப் பெண்ணின் தலை மயிரானது தலையைச் சுற்றிப் பின்னலிட்டுக் கொண்டு, அலையின் வேகத்தால் இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது. (இச்சமயத்தில் குடிசையிலுள்ள இரண்டு பெண்களும் ஜன்னல் பக்கமாகத் திரும்பிப் பார்க்கின்றனர்.) உதிய : அந்தப் பெண்ணின் இரண்டு சகோதரிகளின் தலை மயிரும் அவர்களுடைய தோட்களின் மீது அசைந்தாடிக் கொண்டிருப் பதை நீ பார்த்திருக்கிறாயா? சேர : அந்த இரண்டு பெண்களும் நம் பக்கமாகத் தலையைத் திருப்பிப் பார்க்கிறார்கள். ஒருகால் உரக்கப் பேசிவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. (மீண்டும் இரண்டு பெண்களும் பழையபடி தலையைத் திருப்பிக் கொள்கின்றனர்) அவர்கள் மறுபடியும் பழையபடி தலையைத் திருப்பிக்கொண்டு விட் டார்கள். (பொறுத்து) நான் உடனே தண்ணீருக்குள் இறங்கி, இடுப்பளவு ஆழம் வரை சென்றேன். மெதுவாக அவள் கையைப் பிடித்துக் கரைக்கு இழுத்துக் கொண்டு வந்தேன். ஆ! தனது சகோதரி களைப் போலவே அவளும் அழகாயிருந்தாள். உதிய : இவர்களைவிட அழகா யிருந்தாளென்று நினைக்கிறேன். நான் ஏன், என் தைரியத்தையெல்லாம் இழந்துவிட்டேனென்று தெரிய வில்லை. சேர : என்ன தைரிய மிழந்து விட்டோ மென்று சொல்கிறாயே. மனிதப் பிரயத்தின மனைத்தையும் நாம் செய்து பார்த்தோம். நான் பார்ப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முந்தியே அவள் இறந்திருக்க வேண்டும். உதிய : இன்று காலை அவள் உயிரோடிருந்தாள்! கோயிலிலிருந்து வெளி வரும்போது அவளைப் பார்த்தேன். எந்த ஆற்றில் அவளை நீ மிதக்கக் கண்டாயோ, அந்த ஆற்றுக்கு அக்கரையி லிருக்கும் தனது பாட்டியைக் காணச் செல்லப் போவதாக அவள் கூறினாள். நான் எப்பொழுது அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்று கேட்டதற்குச் சரியான பதில் சொல்லக் கூட அவளுக்கு தெரியவில்லை. ஏதோ என்னைக் கேட்க வேண்டுமென்று விரும்பினாள். ஆனால் அதை வாய் திறந்து கேட்கத் துணியவில்லை. உடனே என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள். இப்பொழுதுதான் அதன் உண்மை எனக்குப் புலப்படு கிறது. அப்பொழுது எனக்கு ஒன்றுந் தெரிய வில்லை. மௌனமாக இருக்கவேண்டுமென்ற தங்கள் விருப் பத்தைச் சிலர் புன்சிரிப்பின் மூலமாகத் தெரிவித்து விடுவது வழக்கம். அல்லது தங்கள் அபிப்பிராயங்களைப் பிறர் சரியாகத் தெரிந்துகொள்ள மாட்டார்களென்ற சந்தர்ப்பங்களிலும் புன்சிரிப்பு சிரித்து விடுவதுண்டு. அது போலவே அவளும் அப்பொழுது சிரித்தாள். வாழ்க்கையிலுள்ள நம்பிக்கை கூட அவளுக்கு ஒரு துயரமாக இருந்ததுபோலும். அவள் என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும் அவள் கண்கள் என்னைப் பார்க்கவே இல்லை. சேர : பகல் முழுவதும் அவள் ஆற்றங் கரையிலேயே உலவிக் கொண் டிருந்ததாகச் சில குடியானவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏதோ புஷ்பம் பறித்துக்கொண்டு செல்வதற்காக அவள் அங் கிருக்கிறாள் என்று அவர்கள் கருதினார்களாம். அவளு டைய மரணம், ஒருகால் - உதிய : அதைப்பற்றி ஒருவரும் சொல்ல முடியாது. யாருக்கு என்ன தெரியும்? அதிகமாகப் பேச விரும்பாதவர் சிலர் இருக் கின்றனர். அவரில் அவள் ஒருத்தியா யிருக்கலாம். இந்த உலகத் திலே வாழ வேண்டா மென்பதற்கு, ஒவ்வொருவருடைய மனத் திலும் எத்தனையோ காரணங்கள் குடி கொண்டிருக்கலாம். இதோ, இந்த அறைக்குள் நீ பார்ப்பதுபோல், ஒவ்வொரு வருடைய ஆத்மாவுக்குள்ளும் சென்று நீ பார்க்க முடியா தல்லவா? இவர்கள் - அதாவது அதிகமாகப் பேசாதவர்கள் - சிறு விஷயங்களைத் தவிர வேறொன்றும் பேசமாட்டார்கள். இவர்களைக் கனவில் கூட எவரும் தவறாக நினைப்பதில்லை. இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் ஈடுபடாதவர்கள் அருகில் நீ மாதக் கணக்காய் வசிக்கலாம்; அவர்கள் கேட்ட கேள்விக்கு நீ முன்பின் யோசியாமல் பதில் சொல்லி விடலாம். ஆனால் அவர்களோ உயிரற்ற பொம்மைகள் போல் பார்வைக்குத் தோன்றிய போதிலும், அவர்களுடைய இதயத்தில் எத்த னையோ விதமான எண்ணங்கள் உதயமாகிக் கொண்டும் மறைந்து கொண்டுமிருக்கின்றன. தாங்கள் இன்னாரென்று அவர்களுக்கே தெரிவதில்லை. இப்படியே, அந்தப் பெண்ணும், மற்றவர்களைப் போலவே வாழ்ந்திருக்கலாம். தான் மரிக்குந் தினத்தன்று கூட, இன்று மழை பெய்யப் போகிறது; நாங்கள் இத்தனை பேர் உட்கார்ந்து விருந்து சாப்பிடப் போகிறோம்; அல்லது அந்தப் பழம் பழுத்திருக்கிறது என்று இப்படி யெல்லாம் சகஜமாகப் பேசி யிருக்கலாம். இத்தகையவர்கள், ஒரு புஷ்பம் வாடிக் கீழே விழுந்து போனால், அதைப் பார்த்து வெளிப்படையாகச் சிரிக்கிறார்கள்; ஆனால் இருட்டில் சென்று அதற்காக அழுகிறார்கள். தேவதைகள் கூட, எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்ப்பதில்லை. மனிதர்களோ, ஒரு காரியம் நடந்து, பூரணமாக முடிந்த பிறகுதான் அதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். (பொறுத்து) நேற்று மாலை, அவள் தன்னுடைய சகோதரிகளுடன், (குடிசைக்குள் காட்டி) இந்த விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இன்று அப்படி யில்லை. முதன் முதலாக இப்பொழுதுதான் அவளை நான் பார்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது, இந்த உலக வாழ்ககையின் தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டு மானால், நமது தினசரி சாதாரண வாழ்க்கையில் ஏதேனும் புதிய சம்பவம் ஒன்று ஏற்படவேண்டும் போலும். நாம் யாரோடு இரவு பகலாகக் கூடவே இருந்து உறவாடு கிறோமோ, அவர்கள் இவ்வுலக வாழ்க்கை யினின்று பிரிந்த பிறகுதான் அவர்கள் இத்தன்மை யுடையவர்கள் என்று தெரிந்து கொள்கிறோம். ஓ! அந்தப் பெண் எவ்வளவு அற்புத மான பிறவி! சேர : (குடிசையைக் காட்டி) அதோ பார், அந்த அறையின் அமைதியிலே அவர்கள் புன் சிரிப்பு தவழ்கிறது. உதிய : அவர்கள், அந்தப் பெண்ணின் வரவில் ஆவலாயில்லை. இன்று மாலை அவள் வருவாள் என்று அவர்கள் எதிர்பார்க்க வில்லை. சேர : அவர்கள் சிரித்துக் கொண்டே, அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் பார். தகப்பனார், தமது உதட்டின் மீது விரல் வைத்து - உதிய : தாயாருடைய மடியிலே கைக் குழந்தை தூங்குகிறதென்று சொல்கிறார். சேர : குழந்தைக்கு எங்குத் தொந்திரவு உண்டாகுமோ என்று கருதி, தாயார் தலை கூட நிமிரவில்லை. உதிய : சிறு பெண்கள், தையல் வேலையை நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது பார்; ஒரே அமைதி. சேர : அவர்கள் மேல் துணி கூட விழுந்து விட்டது. உதிய : அவர்கள் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சேர : தங்களைப் பிறர் பார்க்கின்றனர் என்று பாவம்! - அவர் களுக்குத் தெரியாது. உதிய : நாம் கூட கவனிக்கப் படுகிறோம். சேர : இப்பொழுதே அவர்கள் பார்வை மேல் நோக்குகிறது. உதிய : ஆயினும் அவர்களால் ஒன்றும் பார்க்க முடியாது. சேர : அவர்கள் சந்தோஷ முள்ளவர்களாகத் தான் தென்படுகி றார்கள். ஆயினும் - ஏதோ ஒன்று - அஃதின்ன தென்று என்னால் சொல்ல முடியவில்லை. உதிய : அவர்கள் எல்லா ஆபத்துக்களையும் கடந்து விட்டதாகக் கருதுகிறார்கள். கதவுகளையும் ஜன்னல்களையும் சாற்றி விட் டார்கள். பழைய வீட்டின் சுவர்களைப் பலப்படுத்தி யிருக்கி றார்கள். கதவுகளுக்குப் புதிய தாழ்ப்பாள்கள் போட்டிருக் கிறார்கள். எதை எதிர் பார்க்கக்கூடுமோ அதை எதிர் பார்த்தே காரியங்கள் செய்திருக்கிறார்கள். சேர : இப்பொழுதோ பின்னையோ, அவர்களுக்கு நாம் இந்தச் செய்தியைத் தெரிவித்தே ஆக வேண்டும். அல்லது வேறு யாராவது திடீரென்று வந்து கண்டபடி உளறிவிடுவர். அந்தப் பெண்ணின் சவத்தை நாம் விட்டுவந்த மைதானத்தில் ஏராளமான குடியானவர்கள் கூடி யிருந்தார்கள். அவர்களில் யாராவது ஒருவர் ஓடிவந்து - உதிய : மாரியம்மையும் பெருந்தேவியும் பிரேதத்தைக் காவல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். குடியானவர்கள், மரக்கிளை களைக் கொண்டு, ஒரு தொட்டில் கட்ட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் பிரேதத்தை வைத்துக் கொண்டு அவர்கள் புறப்படுவதற்கு முன்னால் என்னிடம் வந்து தெரிவிக் கும்படி என் பெரிய பேர்த்தியினிடத்தில் தெரிவித்திருக்கிறேன். அவள் வரும்வரை சிறிது காத்திருப்போம். அவளும் வந்து விடுவாள். நாம் இம்மாதிரி காத்தக் கொண்டிராமலிருந்தால் நன்றா யிருக்கும். ஆனாலும் - நான் நினைத்ததென்னவென்றால், நேரே வந்து கதவைத் தட்டவேண்டியது, பெண்ணின் பெற்றோர்களுக்குச் சில வார்த்தைகளில் சமாசாரத்தைச் சொல்லிவிட வேண்டியதென்று கருதினேன் - ஆனால் இங்கு வந்த பிறகு, இக்குடும்பத்தினரை அதிக நேரம் கவனிக்க வேண்டிய தாகிவிட்டது. (மாரியம்மை பிரவேசிக்கிறாள்.) மாரியம்மை : தாதா ! அவர்கள் வருகிறார்கள். உதிய : (ஆச்சரியத்துடன்) நீயா? அவர்கள் எங்கே? மாரி : மலையடிவாரத்தின் கீழ் வந்து கொண்டிருக்கிறார்கள். உதிய : சந்தடி செய்யாமல் வருகிறார்கள் போலும். மாரி : தாழ்ந்த குரலில் பிரார்த்தனை செய்து கொண்டு வருமாறு கூறிவிட்டு வந்தேன். பெருந்தேவி அவர்களுடன் வருகிறாள். உதிய : அதிக ஜனங்கள் வருகிறார்களோ? மாரி : கிராம முழுவதும் புரண்டு வருகிறது. அவர்கள் விளக்குகளை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். நான் அணைத்துவிடும்படி கூறி னேன். உதிய : அவர்கள் எந்த வழியாக வருகிறார்கள்? மாரி : ஒற்றையடிப் பாதையாகவே அவர்கள் வருகிறார்கள்; அதுவும் மெது மெதுவாக. உதிய : அதிக நேரமாய்விட்டது. மாரி : தாதா! அவர்களுக்கு இந்தச் சமாசாரத்தைத் தெரிவித்துவிட் டாயா? உதிய : அவர்களுக்கு இன்னும் நான் ஒன்றுங் கூறவில்லை. அதோ பார்! அவர்கள் கணப்புச் சட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். குழந்தாய்! அவர்களைப் பார். வாழ்க்கை என்பது இன்னதென்று உனக்குத் தெரியும். மாரி : ஓ! அவர்கள் எவ்வளவு சாந்த சீலர்களாய் விளங்குகிறார்கள்! நான் காண்பது ஒரு கனவு போல் இருக்கிறது! சேர : உ - அதோ பார், அந்த இரண்டு பெண் குழந்தைகளும் அசைத்துக் கொடுக்கிறார்கள். உதிய : அவர்கள் எழுந்திருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. சேர : பல கணியண்டை வருகிறார்களெனறு கருதுகிறேன். (ஒரு பெண் ஒரு பலகணியண்டையும், மற்றொரு பெண் மற்றொரு பலகணியண்டையும் வந்து இருட்டை உற்று நோக்குகிறார்கள்.) உதிய : நடுவேயுள்ள இந்த ஜன்னலண்டை எவரும் வரவில்லை. மாரி : அவர்கள் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், உ - சும்மா இரு. அவர்கள் உற்றுக் கேட்கிறார்கள். உதிய : தன்னால் பார்க்க முடியாததைக் குறித்துப் பெரியவள் சிரிக்கிறாள் பார். சேர : சின்னவளுடைய கண்களில் பயம் நிரம்பி யிருக்கிறது. உதிய : ஜாக்கிரதை! தேகத்தைச் சுற்றி ஆத்மா எவ்வளவு தூரம் பரவியிருக்கிற தென்று யாருக்குத் தெரியும்? (சிறிது நேரம் மௌனம் குடி கொண்டிருக்கிறது, மாரியம்மை, தனது பாட்டனாரைச் சேர்த்துக் கட்டிக் கொள்கிறாள்) மாரி : தாதா! (பயத்தினால் அழுகிறாள்.) உதிய : குழந்தாய்! அழாதே! நமக்கும் அந்த நிலைமை ஏற்படக் கூடும். (சிறிது நேரம் மௌனம்) சேர : நெடு நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே. உதிய : பாவம்! ஆயிரக்கணக்கான வருஷங்கள் அவர்கள் பார்க் கட்டுமே. இந்த இருட்டில் என்ன தெரியப் போகிறது? அவர் கள் இந்த வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறு வழியாக துரதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்கிறது. சேர : அவர்கள் இந்த வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லது தான். (தூரத்தில் உற்று நோக்கி) தூரத்தில் ஏதோ வொன்று - அஃதின்ன தென்று எனக்குத் தெரியவில்லை - வந்து கொண்டிருக்கிறது. மாரி : அது ஜனக் கூட்ட மென்று நினைக்கிறேன். அஃது அதிக தூரத்தில் வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அதனால் தான் நமக்குச் சரியாகப் புலப்படவில்லை. சேர : ஒற்றையடிப் பாதை எப்படி வளைந்து வருகிறதோ அப்படி யெல்லாம் அவர்களும் வந்துதானே யாகவேண்டும். அதோ பார்! அந்தச் சரிவில் இறங்கி வருவது தெரிகிறது. மாரி : ஓ! எத்தனை பேர் வருகின்றனர்! நான் புறப்பட்டபோதே, வெளியூர்களிலிருந்து ஏராளமான ஜனங்கள் வந்து கொண் டிருந்தார்கள். அவர்கள் கோணல் வழியாக வந்து கொண்டிருக் கிறார்களென்று தோன்றுகிறது. உதிய : எப்படியானாலும் அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். அவர்கள் மைதானத்தைக் கடந்து வருவது என் கண்ணுக்குக் கூட புலனாகிறது. தூரத்திலிருந்து பார்த்தால் அவர்கள் எவ் வளவு சிறியவர் களாகத் தென்படுகிறார்கள்! இந்த ஜனக் கூட்டத்தைப் பார்த்தால், இக் குடிசையிலுள்ள இரண்டு சிறுமிகளுக்கும் என்ன வென்று புலப்படாது. துரதிர்ஷ்டம், சென்ற இரண்டு மணி நேரமாக எவ்வளவு மெது மெதுவாக வந்து கொண்டிருக்கிறது! அதை இப்பெண்கள் தடுக்க முடி யாது. அதைக் கொண்டு வருவோரும், அதைத் தடுக்கச் சக்தி யற்றவராயிருக்கின்றனர். துரதிர்ஷ்டம், இவர்களைத் தன்னா திக்கத்திற் குட்படுத்திக் கொண்டு விட்டது. ஆதலின் அதற்குக் கீழ்ப் படிந்தேயாக வேண்டும். அதற்குத் தனது இலட்சியம் இன்ன தென்று தெரியும். அதனை நாடி அது செல்கிறது. அதற்குச் சலிப்பே கிடையாது. அதற்கு ஒரே நோக்கந்தான் உண்டு. ஆயினும், மனிதர்கள் அதற்குக் கீழ்ப்படிந்தேயாக வேண்டும். இந்தத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறவர்கள் மிகுந்த விசன முள்ளவர்களாகவும் பச்சாதாப முடையவர் களாகவுமிருக் கிறார்கள். ஆயினும் அதனுடன் அவர்கள் முன் னோக்கியே வரவேண்டி யிருக்கிறது. மாரி : தாதா! பெரிய பெண் சிரிப்பதை நிறுத்தியிருக்கிறாள். சேர : ஜன்னல்களிலினின்று விலகிப் போகிறார்கள். மாரி : தங்கள் தாயாருக்கு முத்தங் கொடுக்கிறார்கள். சேர : பெரிய பெண், கைக் குழந்தையின் தலை மயிரை, அஃ தெழுந் திராதபடி தடவிக் கொடுக்கிறாள். மாரி : தமக்குக் கூட அந்தக் குழந்தைகள் முத்தங் கொடுக்க வேண்டு மென்று தகப்பனார் விரும்புகிறார். சேர : இப்பொழுது மறுபடியும் அமைதி ஏற்பட்டிருக்கிறது. மாரி : அந்த இரண்டு பெண்களும் தங்கள் தாயாரை மீண்டும் அடைந்துவிட்டார்கள். சேர : நாழிகை எவ்வளவு இருக்கு மென்று தகப்பனார் யோசித்துக் கொண்டிருக்கிறார். மாரி : தாங்கள் செய்வ தின்ன தென்று தெரியாமலே அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் போல் தோன்று கிறது. சேர : தங்களுடைய ஆன்ம நாதத்தையே அவர்கள் கேட்டுக் கொண் டிருக்கிறார்கள் போல் இருக்கிறது. மாரி : தாதா! இன்று, இந்தத் துக்கச் செய்தியை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டாமே! உதய : பார்த்தாயா, நீ கூட தைரியத்தை இழந்து விட்டாய்! நீ அவர்களைக் கவனிக்கக் கூடாது. எனக்கு இப்பொழுது வய தென்ன தெரியுமா? எண்பத்து மூன்று. ஆனாலும், வாழ்க்கை யின் உண்மை இப்பொழுது தான் எனக்கு முதன் முதலாகப் புலனாகிக் கொண்டு வருகிறது. அவர்களுடைய செய்கைகளும் பிறவும் ஏன் எனக்கு நூதன மாகவும் கம்பீரமாகவும் புலப் படுகின்றனவோ தெரியவில்லை. நம்மைப் போலவே அவர் களும் கணப்புச் சட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். ஆயினும் அவர்கள் வேறு உலகத்திலிருப்பதாகவும் நான் வேறு உலகத்திலிருப்பதாகவுமே எனக்குப் புலப்படுகிறது. அவர்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் எனக்குத் தெரிந் திருப்பதான உணர்ச்சியுமிருக் கிறது. குழந்தாய்! இஃதுண்மை தானா? (பொறுத்து) ஏன் உன் முகம் திடீரென்று வெளுத்து விட்டது? நம்முடைய வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடி அந்நியமான தொன்று ஏதேனும் இருக்கிறதோ? அதுதான் நம்மை அழச் செய்கிறது போலும். இவ்வளவு துக்கம் வாழ்க்கையி லிருக்கிற தென்று எனக்குத் தெரியாது. மற்றும் அதைப் பார்த்தவுடன் இவ்வளவு பயம் உண்டாகுமென்றும் இதுவரை அறியாமலிருந்தேன். வேறொன்றும் நடவா விட்டா லும், அவர்கள் இவ்வளவு சாந்தமாக உடகார்ந்திருப் பதைப் பார்த்தே எனக்குப் பயம் உண்டாகிறது. அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கிறது. துரதிருர்ஷ் டம் என்ற சத்துருவுக்குச் சில அடி தூரத்திலேயே அவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டுக் கதவுகளை மூடி விட்டதனால், தங்களுக்கு இனி ஒன்றும் நடவாதென்றும் அவர்கள் கருதுகிறார்கள் போலும். ஆன் மாவுக்குள்ளேயே பலவித சம்பவங்கள் நிகழ்கின்றன வென்றும், தங்களுடைய வீட்டு வாயிற்படியுடன் உலகம் முடிவடையை வில்லை யென்றும் அவர்களுக்குத் தெரியாது பாவம்! தங்க ளுடைய அற்ப வாழ்க்கை மிகுந்த பத்திரமாக இருக்கிறதென்று அவர்கள் கருதியிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையைப்பற்றித் தங்களுக்குத் தெரிந்திருப்பதைவிட வெளியாருக்கு அதிகம் தெரியும் என்பதை அவர்கள் அறியார்கள். அவர்களுடைய வீட்டுக்கு இரண்டடி தூரத்தில் இருக்கும் நான், ஓர் அற்பக் கிழவன், அவர்களுடைய சுகத்தை யெல்லாம் என் கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறேன். மாரி : அவர்களிடத்தில் கருணை காட்டுங்கள் தாதா! உதிய : அவர்களிடத்தில் நமக்குக் கருணை இருக்கிறது. ஆனால் நம் மீது கருணை வைப்பார் எவருமில்லையே. மாரி : இந்தத் துக்கச் செய்தியை அவர்களுக்கு நாளை தெரி வியுங்கள் தாதா! பகற் காலத்தில் தெரிவித்தால் அவர்களுடைய துக்கம் சிறிது குறைந்திருக்கும். உதிய : நீ கூறுவது சரிதான் குழந்தாய்! இந்தத் துக்கச் செய்தி, இரவில் கழிந்து போகும்படி விட்டு விடுவது நல்லதே. பகற் காலம், துக்கத்திற்கு மிக இனிமையானது. ஆனால் நாளை, அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள்? துரதிர்ஷ்ட மானது, ஜனங்களுக்குள் பொறாமையை உண்டு பண்ணி விடுகிறது. யாருக்கு அந்தத் துரதிர்ஷ்டம் வந்து சேர்கிறதோ, அவர், அதன் வரவை மற்றவரனைவருக்கும் முந்தியே அறிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களுக்குத் தெரியாதவர் கையில் அத்துரதிர்ஷ்டத்தை விட்டு வைக்க அவர்கள் விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து ஏதோ கவர்ந்து கொண்டு போய் விட்ட தாக நாம் கருதப்படுவோம். சேர : இப்பொழுது அதிக நேரமாய் விட்டதல்லவா? பிராத்தனை தொனி என் செவிகளில் விழுகிறது. மாரி : அவர்கள் சமீபமாக வந்து விட்டார்கள். (பெருந்தேவி பிரவேசிக்கிறாள்.) பெருந்தேவி : நான் வந்து விட்டேன் தாதா! ஜனக் கூட்டத்தை மெதுவாக இதுவரை அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். அது பாதையில் காத்துக் கொண்டிருக்கிறது. (கூட்டத்திலுள்ள குழந்தைகளின் கூக்குரல் கேட்கிறது) ஆ! குழந்தைகள் இன்னும் அழுது கொண்டிருக் கின்றன. அவை, என்னுடன் வரக்கூடாதென்று தடுத்துவிட்டு வந்தேன். ஆயினும் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை. தாய்மார்களும் என் வார்த் தைக்கு இணங்க மறுக்கிறார்கள். (பொறுத்து) வேண் டாம். அவர்களே அழுகையை நிறுத்திக் கொண்டார்கள். (உதிய மானைப் பார்த்து) எல்லாம் சித்தமாயிருக்கின்றனவா? அவ ளுடைய விரலிலிருந்து மோதிரத்தையும் கொண்டு வந்திருக் கிறேன். கைக் குழந்தைக்குச் சிறிது பழமும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். நானே, அவளைத் தொட்டிலில் (பாடையில்) படுக்க வைத்தேன். அவளைப் பார்த்தால் தூங்கிக் கொண் டிருப்பது போலவே தெரிகிறது. அவளுடைய தலை மயிர்தான் அதிக தொந்திரவைக் கொடுத்தது. அதைச் சரியாக ஒழுங்கு படுத்த என்னால் முடியவில்லை. கூடிய வரை ஒழுங்கு செய்து சில புஷ்பங்களையும் அதில் முடித்து வைத்தேன் தாதா! நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? அவர்களோடு நீங்கள் ஏன் இல்லை? (பலகணியைப் பார்த்து) அவர்கள் அதிகமாக அழ வில்லையே! ஓ! அவர்களுக்கு நீங்கள் இந்தச் செய்தியைச் சொல்லக்கூட இல்லையா! உதிய : பெருந்தேவி! பெருந்தேவி! வாழ்க்கையின் இரகசியம் இன்னும் உனக்கு நன்றாகத் தெரியவில்லை. பெருந் : அதை நான் ஏன் தெரிந்து கொள்ளக் கூடாது? (பொறுத்து) நீங்கள் இம்மாதிரி அவர்களிடம் சொல்லாம லிருக்கக்கூடாது. உதிய : பெருந்தேவி! உனக்கொன்றுந் தெரியாது. பெருந் : நான் சென்று அவர்களிடம் தெரிவிக்கட்டுமா? உதிய : இரு, குழந்தாய்! .இங்கேயே சிறிது நேரம் பொறு. பெருந் : இந்தத் துக்கத்தை அவர்களுக்குத் தெரிவியாமலிருப்பதால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்? அவர்களுக்கு இன்னுமா தெரிவியாமலிருப்பது? உதிய : தெரிவியாம லிருந்தால் என்ன? பெருந் : எனக்குத் தெரியாது. ஆனால் தெரிவியாமல் முடியாது என்று நான் கருதுகிறேன். உதிய : குழந்தாய்! இங்கே வா! பெருந் : அவர்கள் எவ்வளவு பொறுமை யுடையவர்கள்! உதிய : இங்கே வா, குழந்தாய்! பெருந் : (திரும்பி) தாதா! நீங்கள் எங்கே யிருக்கிறீர்கள்? எனக்கு மிகுந்த துக்கமா யிருக்கிறது. நீங்கள் எங்கே யிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லையே. நான் என்ன செய்வதென்றும் எனக்குப் புலனாகவில்லை. உதிய : அவர்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் வரை என்னைப் பாராதே. பெருந் : உங்களோடு நான் வரவேண்டும். உதிய : கூடாது. நீ இங்கேயே இரு. உன் சகோதரியுடன் இந்தக் கல்லின் மீது உட்கார்ந்து கொண்டிரு. நீ மிகச் சிறியவள். ஆதலின் இந்தக் காட்சியை நீ எப்பொழுதும் மறக்க மாட்டாய். மரண தேவதை ஒருவனுடைய கண்களில் தாண்டவம் செய்து கொண்டிருக்கையில், அந்தக் கண்களைக் கொண்ட முகம் எப்படி யிருக்கும் என்பதை நீ இன்னும் பார்த்திருக்க மாட்டாய். நான் சொல்லும் துக்கச் செய்தியைக் கேட்டு அப்பெற்றோர்கள் உரத்த குரலில் அழுதாலும் அழக்கூடும். அல்லது அழுகைக்குப் பதிலாகப் பூரண மௌனமே நிரம்பினும் நிரம்பும். அது எப்படி யிருந்த போதிலும் அந்தப் பக்கம் சிறிது கூடத் திரும்பிப் பாராதே. துக்கம், எந்த வழியைக் கடைப் பிடித்துச் செல்லும் என்பதை முன்னாடியே எவரும் நிர்ணயித்துக் கூறமுடியாது. அடி வயிற்றிலிருந்து எழும் சிறிது அழுகையுடனும் நின்று விடுதல் கூடும். அவர்களுடைய நிலையைக் கண்டு நான் என்ன செய்வேன் என்பதே எனக்கு இப்பொழுது தெரிய வில்லை. குழந்தாய்! அவர்களிடம் போகு முன்பு எனக்கு ஒரு முத்தங் கொடு. (ஜனக்கூட்டம் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு அருகாமையில் வருகிறது. பிச்சன் என்னும் குடியானவனும் வருகிறான்.) சேர : (ஜனக்கூட்டத்தைப் பார்த்து) இங்கேயே நில்லுங்கள். பலகணிக்கு அருகாமையில் போகாதீர்கள். அவர்கள் எங்கே? பிச்சன் : யார்? சேர : இறந்து போன பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள். பிச் : அவர்கள் நேர் வழியாக வந்து கொண்டிருக்கிறார்கள். (உதியமான் குடிசைக்குள் செல்கிறான். மாரியம்மையும் பெருந் தேவியும் கல்லின் மீது உட்கார்ந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் முணு முணுப்புச் சப்தம் கேட்கிறது.) சேர : உ! எவரும் பேசவேண்டாம். (குடிசைக்குள், கதவின் உட்புற முள்ள தாழ்ப்பாளை ஒரு பெண் போடுகிறாள்.) பெருந் : அவள் கதவைத் திறக்கிறாளா? சேர : அதற்கு மாறாகத் தாழ்ப்பாளை நன்றாகப் போட்டு விட் டாள். (அனைவரும் மௌனம்) பெருந் : தாதா இன்னும் உள்ளே செல்லவில்லையா? சேர : அந்தப் பெண் மறுபடியும் தாயாரிடம் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டாள். மற்றவர்கள் அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். கைக்குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. (சிறிது நேரம் மௌனம்.) பெருந் : மாரி! கிட்டே வா! மாரி : ஏன் அக்கா? (இருவரும் தழுவி முத்தமிட்டுக் கொள்கின்ற னர்) சேர : உதியமான் கதவைத் தட்டி யிருக்க வேண்டும். - அதோ! அவர்கள் தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். பெருந் : மாரி! மாரி! என் துக்கத்தை அடக்க முடியவில்லையே (மாரியம்மை மீது தலை சாய்க்கிறாள்.) சேர : அவர் மறுபடியும் கதவைத் தட்டுகிறார் போலிருக்கிறது. வீட்டுக்காரர் எவ்வளவு நாழிகையாயிருக்குமென்று பார்க் கிறார்- ஆ! எழுந்திருக்கிறார்-! பெருந் : மாரி! உள்ளே போக வேண்டுமென்று எனக்கு இருக்கிறது. துக்கத்தில் அவர்களைத் தனியாக விடுவதா? மாரி : அக்கா! இரு. (போகாதபடி தடுக்கிறாள்.) பெருந் : உனக்கு - சேர : என்ன? பெருந் : பிரேதத்தைத் தூக்கிக்கொண்டு வருவோர் - சேர : சிறிதளவு தான் கதவைத் திறந்தார். ஒரு மூலைதான் தென் படுகிறது. கதவின் மீது கைவைத்து ஓர் அடி பின் எடுத்து வைக்கிறார். ஹா! நீங்களா என்று கேட்கிறார் போலிருக்கிறது. மெதுவாகக் கதவைத் திரும்பவும் சாற்றுகிறார். உங்கள் தாதா உள்ளே சென்று விட்டார். (கூட்டத்தினர், ஜன்னலண்டை வந்து விட்டனர். மாரியம்மையும் பெருந்தேவியும், தங்கள் இடத்திலிருந்து எழுந்து கூட்டத்தினருடன் கலந்து கொள்கின்றனர். உதியமான் உள்ளே நுழைந்ததும், அனைவரும் எழுந்து நிற்கின்றனர். தாயாரும், இரண்டு பெண் குழந்தைகளும் உதியமானை உபசரிக்க முயல்கின்றனர். ஆனால் உதியமான் உபசரணைகளை மறுப்பது போல் பாவனை செய்கிறான். உதியமான் ஜன்னல் பக்கம் பார்க்கிறான்.) சேர : இந்தச் செய்தியைத் தெரிவிக்கக் கிழவருக்கு மனம் வரவில்லை. ஜன்னல் பக்கம் பார்க்கிறார். (கூட்டத்தில் முணு முணுப்பு.) சேர : உ! (உதியமான் மெதுவாக ஒரு நாற்காலியில் உட்காருகிறான். என்ன சொல்வதென்று தெரியாதது போல் முன் தலையைத் தடவிக் கொண்டிருக்கிறான்.) சேர : உட்கார்ந்து கொண்டு விட்டார். (உள்ளிருக்கும் அனைவரும் உட்கார்ந்து கொண்டு விட்டனர். உதியமான் ஏதோ மெதுவாகச் சொல்கிறான். எல்லாரும் உற்றுக் கேட்கின்றனர். திடீரென்று தாயார் மட்டும் இடத்தை விட்டு எழுந் திருக்கிறாள்.) பெருந் : ஓ! தாயாருக்கு விஷயம் தெரிந்து விட்டது. (தாயார் துக்க மிகுதியால் முகத்தை மறைத்துக் கொள்கிறாள். வெளி யிலுள்ள கூட்டத்தில் சிறிது பரபரப்பு உண்டாகிறது.) சேர : உ! இன்னும் அவர் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை போலிருக்கிறது. (தாயார், உதியமானை ஏதோ கேட்கிறாள். உதியமான் பதில் சொல்ல, எல்லாரும் எழுந்துவிட்டனர்.) சேர : அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்!- சொல்லி விட்டார்!- கூட்டத்தில் சப்தம் : சொல்லி விட்டார்! சொல்லி விட்டார்!-சேர : எனக்கொன்றும் கேட்கவில்லை. (உள்ளே, உதியமான் எழுந்து கதவுப் பக்கமாகத் திரும்புகிறான். தாயார் வெளியே செல்ல முயல்கிறாள். அதை உதியமான் தடுக்கிறான்.) கூட்டத்தில் சப்தம் : அவர்கள் வெளிச் செல்கிறார்கள்! btË¢ brš»wh®fŸ!- (கூட்டத்தில் கலவரம், கூட்டத்தினர் வெளிக் கதவு பக்கமாகச் சென்று மறைந்து விடுகின்றனர். குடிசையிலிருக்கப்பட்டவரும் வெளியே சென்று விடுகின்றனர். அறையில் கைக் குழந்தை மாத்திரம் தூங்கு கிறது.) சேர : அம்மட்டும் கைக் குழந்தை விழித்துக் கொள்ளவில்லை. (செல்கிறான்.)  உத்தியோகம் முன்னுரை தென்னாட்டிற்குப் புதிய உணர்ச்சியை உண்டாக்கிய தேச பக்தன் என்னும் சீரிய பத்திரிகையின் முதல் ஆண்டு அநுபந் தத்தில் இச்சிறிய நாடகம் முதன் முதலாக வெளியாயிற்று. அதனை இப் பொழுது எவ்வித மாற்றமும் செய்யாமல் அங்ஙனமே வெளியிட் டிருக்கிறேன். இதிலுள்ள குறைகளை மன்னித்து எளியேனை ஆட் கொள்ளு மாறு தமிழுலகத்தை வேண்டுகிறேன். நாடக பாத்திரங்கள் அப்பு சாதிரி - ஒரு மிராசுதார் நீலகண்ட ஐயர் - அவர் நண்பர் மணி சாதிரி - அப்பு சாதிரியின் குமாரர் (நாடகத் தலைவர்) ஆராவமுத ஐயங்கார் - மணிசாதிரியின் தோழர் ப்ரம்மைய்ய பிச்சப்ப செட்டியார் - மணிசாதிரியின் கதிரேசன் கட்சிக்காரர் செட்டியார் குருமூர்த்தி - வக்கீல் குமாதா பாலாம்பாள் - அப்புசாதிரியின் மனைவி யோகாம்பாள் - மணிசாதிரியின் மனைவி (நாடகத்தலைவி) செல்லம்மாள் - ஆராவமுத ஐயங்காரின் மனைவி மற்றும், ஒரு கிழவி, பாலிய விதவை, நியாயாதிபதி முதலியோர். முதல் அங்கம் முதல் களம் இடம் : ஒரு தாழ்வாரம். காலம் : முன் மாலை. (அப்பு சாதிரி தாழ்வாரத்திலுள்ள ஒரு பெஞ்சியின் மீது சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் பாலாம்பாள் நின்று கொண்டு அவருக்கு வெற்றிலைச் சுருள் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அப்பு சாதிரி : இஃதென்ன பைத்தியமாயிருக்கிறாயே ! நாம் செய்த தர்மங்களெல்லாம் வீணாய்ப் போகுமா என்ன? பாலாம்பாள் : சரிதான் போதும். உங்களுடைய பெருமையை நீங் களே பேசிக்கொள்ள வேண்டாம். ஈச்வரனுடைய அநுக் கிரகம் இருந்தது; பையன் பரீட்சையில் தேறினான். அவ்வளவு தான். கோயிலுக்கு அர்ச்சனை செய்து வைக்கச் சொல்லுங்கள். அ : எங்களுடைய பெரியவர்களெல்லாரும் மகா மேதாவிகள் ; பரம்பரையாக அந்த வித்வாம்சம் வந்து கொண்டே யிருக்கிறது. கடவுள் அநுக்ரஹமாவது - மண்ணாவது? எங்கள் பாட்ட னார் - நாகுகனபாடிகள் - பெயரைச் சொன்னாலே இந்த ஊர் நடுங்கும். இப்பொழுது இராமாயணம் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே, இந்தப் பயல்கள், என் பாட்டனார் செருப்பு தூக்குவதற்குக் கூட யோக்கியதையில்லாமல் தவித்துக்கொண் டிருந்தார்கள். ஏன்? என் தகப்பனாரைக் கண்டால் இந்தப் பயல் களுக் கெல்லாம் நடுக்கந்தானே. அவ்வளவு என்ன? என்முன்னே இவர்களை நிற்கச் சொல்; ஒரு கை பார்த்துவிட மாட்டேனா? பா : ஐயோ ! அப்புறம்? சொல்லும்போதே பயமாயிருக்கிறதே. எதிரில் நின்றால் என்ன செய்து விடுவீர்கள்? உள்ளே ஓடிவந்து ஒளிந்து கொள்வீர்களோ? அ : சீ ! கழுதை ! (பொறுத்து) பாக்கு கரைந்துபோகின்றதே. சீக்கிரம் வெற்றிலை கொடு. எத்தனை நாழிகை? பா : அப்பா! என்ன அவசரம் இப்பொழுது உங்களை வெட்டிண்டு போகிறது? வெயிலில் காய்கிறீர்களா? மழையில் நனைகிறீர்களா? தாழ்வாரத்தில் தானே உட்கார்ந்து கொண் டிருக்கிறீர்கள். அ : இஃதேது? அடுக்குப் பட்டரை விழுவதுபோல் பேசுகிறாய் ! பா : அது கிடக்கிறது; கோயிலுக்கு அர்ச்சனை செய்து வைக்கச் சொல்லுங்கள். அ : அதற்கென்ன? பா-ர்ப்போ-ம். பா : பார்போம் கீர்ப்போம் என்று இழுத்துப் பேச வேண்டாம். உடனே செய்ய வேண்டும். அ : என்ன அவ்வளவு அவசரம்? பா : இல்லையோ? ஆட்டம் - பாட்டம் இவைகளுக்கெல்லாம் பணம் செலவழிப்பதற்கு அவசரம். சுவாமிக்குச் செய்ய வேண்டுமென்றால் மாத்திரம் கை பின் வாங்குகிறது. இது யார் பாவமோ தெரியவில்லை. அ : செ ! பைத்தியம் ! பாவம் என்ற பதத்தையே இங்கு உபயோகி யாதே. என்னமோ நம் பெரியவர்கள் செய்த புண்ணிய வசத்தால் நாம் சௌக்கியமாய் இருக்கிறோம். அசம்பாவிதமான வார்த்தைகளை யெல்லாம் உபயோகிக்கின்றாயே. பா : என்ன அச்சான்யண்டி அம்மா ! அ : சரி ! அதிகமாய்ப் பேசாதே. அந்தக் குருக்கள் பையனுக்கு இரண்டணா விசிறி யெறிந்தால் அர்ச்சனை செய்துவிட்டு வரு கிறான். பா : நிரம்ப நன்றாயிருக்கின்றது, உங்களுடைய வார்த்தையும் பேச்சும். (ஒருவாறு முகத்தைச் சுளித்துக் கொள்கிறாள்) அ : ஐயோ ! கோபம் வந்துவிட்டதா ? என்ன கஷ்ட காலம்? பா : போதும். அர்ச்சனைக்கு இரண்டணா கொடுத்து விடுகிறா ராம். என்ன தாராளம்? ஈச்வரன் கொடுத்தது பத்து பன் னிரண்டு லக்ஷத்துக்கு இருக்கிறது. அருமையான ஒரு பிள்ளை வக்கீல் பரீட்சையில் பா செய்தான் என்று பத்து ரூபாய் சுவாமிக் கென்று கொடுக்க மனம் வருகிறதா? அதைக் காணோம். அ : அநாவசியமாகக் கோயிலுக்கும் குளத்துக்கும் செலவழிப்பா னேன் என்று தான் யோசிக்கிறேன். பா : ஆமாம். கோயிலுக்கும் குளத்துக்கும் செலவழிக்கலாமா? கூத்துக்கும் பாட்டுக்கும் செலவழிக்கலாம். ஏனோ இந்த நாதிக புத்தி உங்களுக்கு? வேண்டாம்; விட்டுவிடுங்கள் இதனை. வரும் போது கொண்டு வந்த தொன்றுமில்லை; போகும்போது கொண்டுபோவது மில்லை என்று பெரியவர்கள் சொல்லுவார் கள். காதற்ற ஊசியும் கடை வழிக்கு வாராது காண் என்ற வாக்கியந்தானே பட்டினத்துப் பிள்ளையைத் துறவியாக்கியது? அ : இஃதேது? பாலு ! பெரிய வேதாந்தம் பேச ஆரம்பித்து விட்டாய்? உன்னுடைய வேதாந்தத்தை எனக்கும் போதிக்க வந்து விட்டாயே ! உம் - அப்புறம். பா : அப்புறம் விழுப்புரம். (நீலகண்டய்யர் பிரவேசிக்கிறார். உடனே பாலாம்பாள் உள்ளே சென்று விடுகிறாள்.) அ : யார்? நீலகண்ட ஐயர்வாளா! வாருங்கள். உட்காரவேண்டும். நீலகண்ட ஐயர் : நிரம்ப சந்தோஷம். இப்பொழுதுதான் பையன் மணி அப் ரெண்டி பரீட்சையில் தேறினான் என்று கேள்விப்பட்டேன். கேட்டவுடன் சந்தோஷம் பொறுக்க முடிய வில்லை. தங் களைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். அ : பேஷ்! அவ்வளவு தயவு நம்மீது யார் வைத்திருக்கின்றனர்? நீ : உம் - நம் பெரியவர்கள் நாள் முதற்கொண்டு பரம்பரையான சிநேகம். அது விடாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது. உம் (பொறுத்து) பயல், மணி எங்கே? அவனைப் பற்றி எல்லாரும் பிரமாதமாகச் சொல்லிக்கொள்கிறார்களே! அ : யாரார் என்னென்ன சொல்லுகின்றனர்? நீ : மணி இங்கிலீஷிலே நிரம்ப கெட்டிக்காரனாமே. வெள்ளைக் காரர்கள் கூட அவனோடு சரியாக நின்று கொண்டு இங்கிலீஷ் பேச மாட்டார்களாமே. அ : அவ்வளவு தானா நீர் பார்த்தீர்? பயல் ட்ரெ பண்ணிக் கொண்டானானால் வெள்ளைக்காரன் கெட்டானே. நீ : உம் - ! நான் அந்த மாதிரி ஒரு நாளும் பார்க்கவில்லை பயலை. இந்தக் காலத்தில் வெளி வேஷந்தான் அதிகமாய் வேண்டி யிருக்கிறது. அதிகமான படிப்பாவது பணமாவது இல்லா விட்டால் கூட, வேஷத்தைப் பார்த்தே ஜனங்கள் மயங்கி விடு கிறார்கள். ஆனால் நம் மணிக்குப் பணத்தில் ஒன்றும் குறை வில்லை. அ: புத்தியில் தானென்ன? நல்ல மேதாவி. எங்கள் பெரியவர்கள் எல்லாரும் மகாபுத்திசாலிகள். எங்கள் பாட்டனார் - நாகு கனபாடிகள் - தெரியுமோ இல்லையோ உங்களுக்கு? நீ : அடடா ! இஃதென்ன அப்படி கேட்கிறீர்கள்? உங்கள் பாட்ட னார் எனக்கு நன்றாகத் தெரியுமே. எங்கள் பாட்டனாரும் உங்கள் பாட்டனாரும் நெருங்கிய சிநேகமாச்சே. உங்கள் பாட்டனாரைப்பற்றி எங்கள் தகப்பனார் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாரே. உங்கள் பெரியவர்களெல்லாரும் நல்ல புத்திமான்கள். அ : அந்த அமிசம் பையனிடத்தில் பூர்த்தியாயிருக்கிறது. நீ : (இழுத்தாற்போல்) சரி - தா - ன். அ : என்ன ஒரு மாதிரியாக இழுக்கிறீர்? நீ : உம் - உம் - அஃதெல்லாம் ஒன்றுமில்லை. நம்ம பயலுக்கு என்ன? மணி என்றால் மணிதானே அவன். தட்டினால் ஒசைப்படுமே. மணி என்ற பெயர் அவனுக்கே பொருந்தும். அ : பன்றி பத்து குட்டி போடுவதைவிட யானை ஒரு குட்டி போடுவது விசேஷம் என்று ஒரு பழமொழி யுண்டு. அந்த மாதிரி, எனக்குப் பிறந்தன வெல்லாம் இந்த ஒரு பிள்ளையா னாலும் நிரம்ப புத்தி சாலியாகவும், நல்ல அழகுள்ளவனாகவும் இருப்பதைப் பற்றி எனக்குண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே யில்லை. நீ : இருக்குமோ இல்லையோ? எல்லாருக்கும் சகஜந்தானே. அ : நம் பையனை இலேசாக நினைக்க வேண்டாம் நீங்கள். சமயத் திற் கேற்ற புத்தி அவனுக்கிருக்கிறதுபோல் வேறொருவருக்கும் இராது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீ : உம்! மணிக்கு என்ன வயசு இப்பொழுது? அ: ஏன்? ஜாதகம் பார்க்கிறீர்களா? பார்க்கத் தெரியுமோ உங்க ளுக்கு? நீ : எனக்கு ஒன்றுந் தெரியாது. வயசு என்ன ஆயிற்று என்று தான் கேட்டேன். அ : தாது வருஷத்துப் பஞ்சத்தின்போது அவன் பிறந்ததாக எனக்கு ஞாபகம். ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும். நீ : அப்பொழுது பையனுக்கு நிரம்ப வயசாகிவிட்டாற் போலிருக் கிறதே. இவ்வளவு நாள் கழித்த பிறகா அவன் அப்ரெண்டி பரீட்சையில் தேறினான்? அ : அவன்மேல் ஒன்றுங் குற்றமில்லை. நான் அவனைப் படிக்கவைத்ததே பதினாறாவது வயதில்தான். அது வரைக்கும் அவன் செல்லப் பிள்ளையாக வளர்ந்து விட்டான். நீ : அப்படியிருந்தால்கூட, இத்தனை நாட்களில் அவன் வக்கீலாக வந்து நிரம்ப பணம் சம்பாதித்திருக்கலாமே. அ : ஆமாம். அடியிலிருந்து பி. ஏ. வரைக்கும் நேராக வந்திருந்தால் நீங்கள் சொல்லுகிற மாதிரிதான் நடந்திருக்கும். ஒவ்வொரு கிளாசிலும் இரண்டு வருஷம் - மூன்று வருஷம் - இப்படி - இருந்து கொண்டே வந்தான். அதனால்தான் கொஞ்சம் தாமத மாயிற்று ஆனாலும் பையன் புத்திசாலிதான் - அதைப்பற்றிச் சந்தேகமேயில்லை. நீ : ஒவ்வொரு கிளாசிலும் தவறாமல் பரீட்சையில் தேறிக் கொண்ட வந்த பிள்ளைகள் மாத்திரம் என்ன ஆயிரம் ஆயிர மாகச் சம்பாதித்து விடுகிறார்கள்? ஒன்றுமில்லை. எத்தனை கிளாசுகளில் தப்பினால்தான் என்ன? பையன் புத்திசாலியாக இருக்கவேண்டியது நமக்கு முக்கியம். அ : அதுதான். சூட்சுமத்தை அறிந்து நீங்கள் வார்த்தை சொல்லுகி றீர்கள்! நீ : அது சரி. பிள்ளையாண்டான் இனிமேல் யாராவது ஒரு வக்கீலின் கீழிருந்து வேலை கற்றுக்கொள்ள வேண்டாமா? அ : (தூங்கி எழுந்தவர்போல்) ஆமாம். மறந்தே போய் விட்டேன் பார்த்தீர்களா! உங்களிடத்தில் இதைப் பற்றி யோசிக்க வேண்டு மென்றே யிருந்தேன். அதற்குள் மறந்துவிட்டேன். நல்ல வேளை யாக ஞாபகப்படுத் தினீர்கள். உம் - பையனை எந்த வக்கீ லிடத்தில் கொண்டுவிடலாம்? சொல்லுங்கள். நீ : (சிறிதுநேரம் யோசித்து) உம் - நம்ம கீழக்குடி கிருஷ்ணசாமி ஐயர்வாள் கிட்டே கொண்டுவிடலாமா? எனக்கு அவர்கள் நிரம்ப பரிச்சயம். அ : மனுஷ்யன் எப்படி? நீ : நல்ல யோக்கியர்; பூதிதி சமர்த்தியாக இருக்கிறது. ரொக்கமும் கையில் ஏராளமாய் உண்டு. அவைகளைக் கொண்டுதான் இங்கு ஜீவனம் செய்கிறார். அ : ஆனால் வக்கீல் வேலையில் அவருக்கு ஒன்றும் வருவ தில்லையோ? நீ : அதை அவர் கவனிப்பதேயில்லை. ஆனால் லாபாய்ண்டுகளை (Law Points) யெல்லாம் நன்றாக அறிந்தவர். நமக்கு முக்கியமாகப் பையன் வேலை கற்றுக்கொள்ள வேண்டியது தானே. அவருக்கு வரும்படி வந்தாலென்ன? வராவிட்டால் என்ன? அ :- நீர் சொல்வதும் வாதவந்தான். மனுஷ்யன் தன்மை எப்படி? அதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் பிள்ளை யாண்டான் ஒருவருக்குக் கீழ் அடங்கி உத்தரவு சொல்லமாட் டான். அதற்காகவே அவன் வக்கீல் பரீட்சைக்குப் படித்துப் பா பண்ணினான். நீ : அது வாதவந்தான். அந்த மாதிரியான எண்ணம் அவனுக்கு உதித்தது உங்களுடைய பாக்கியந்தான். (பொறுத்து) உம்- கிருஷ்ணசாமி ஐயர் நிரம்ப நல்லவர்; அன்ன தாதா; இல்லை யென்று அவர் வாயால் வராது; வீட்டில் என்னமோ? உம் - இன்னும், பொது விஷயங்களில் தலையிட்டுழைப்பவர். ஆனால் எரி மூஞ்சி. அ : ஐயையோ! அப்படியானால் வேண்டவே வேண்டாம். நம் பையன் அவர் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கமாட்டான். வேறெ யாரையாவது சொல்லும்? நீ : (சிறிது நேரம் யோசித்துப் பிறகு மறந்தது ஞாபகம் வந்ததுபோல்) உ - மறந்தேவிட்டேன். நம் மேல்பாதி மஹாதேவ ஐயர் இருக்கும்போது நமக்கு ஏன் யோசனை? அ : அவர் எப்படி? நீ : என்ன ஒன்றுந் தெரியாதவர் போலக் கேட்கின்றீரே? மஹாதேவ ஐயர் தெரியாதோ உங்களுக்கு? அ : எந்த மஹாதேவ ஐயர்? நீ : மேல்பாதி மஹாதேவ ஐயர் தெரியாதோ? அசட்டு சுப்பைய்யர் பிள்ளை; இந்த ஊரிலே பெரிய வக்கீலாக இருக்கின்றாரே. m : X!ஓ! நம்ம அசட்டு சுப்பன் பிள்ளை மஹாதேவனா? யாரோ என்று பார்த்தேன், இந்த ஊரிலேயா இருக்கிறான் அவன்? நீ : நெடுநாளாக இந்த ஊரிலே தான் அவர் இருக்கிறார். அ : அவர் என்ன அவனுக்குப் பட்டம்? நம் அகத்திலே சோற்றுக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தான் அந்தப் பயல். நீ : இருக்கலாம். உங்கள் வீட்டிலே வந்து தாளம் போடாதவர் யார்? மஹாதேவ ஐயர், இந்த ஊருக்குள்ளே பெரிய வக்கீல். ஜட்ஜுக்கு அவரிடத்தில் நிரம்ப அபிமானம் உண்டு. சிக்கலான கேசுகளெல்லாம் அவரிடத்தில் தான் வரும். பேசாமல் அவரிடத்தில் மணியைக் கொண்டு விடலாம். அ : நம் வீட்டில் சோற்றுக்குத் தடமாடின ஒருவன் கீழா நம் பையன் இருப்பது என்று தான் யோசிக்கிறேன். நீ : அப்படி யெல்லாம் பார்த்தால் நம் பையன் விருத்தியடைவ தெப்படி? அதைத் தானே நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டும். அ : எனக்கொன்றுந் தடையில்லை. பையன் அதற்குச் சம்மதிப்பானா என்பதே கேள்வி. நீ : பையன் புத்திசாலி என்பதற்கு என்ன அடையாளம்? பெரியோர் சொன்ன வார்த்தையைக் கேட்பது தானே அழகு. அ : சரி! அப்படியானால் மணியை மஹாதேவனிடத்திலேயே கொண்டுவிட்டு வருவோம். நமக்குக் காரியம் பிரதானமா? வீரியம் பிரதானமா? நீ : அப்படியே செய்யுங்கள். எனக்கு உத்தரவா? ஞாபக மிருக்கட்டும். அ : ஏன் போகிறீர்கள்? காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாமே. நீ : எனக்கு அந்த வழக்கமில்லை. அ : பாதகமில்லை. கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கள். (உள்பக்கமாகத் திரும்பி எழுந்து) வாருங்கள். உள்ளே போக லாம். யார் அங்கே உள்ளே? காபி கொண்டுவை ஐயர்வாளுக்கு. ஐயர்வாளுக்கு நிரம்ப சிரமம். வாருங்கள்; போகலாம். (இருவரும் செல்கின்றனர்.) இரண்டாங் களம் இடம் : ஒரு விளையாட்டு மைதானம். காலம் : மாலை. (மணி சாதிரி ஒரு மாதிரியான ஐரோப்பிய உடைதரித்துக்கொண்டு யோசித்த வண்ணம் தனியாக உலவிக் கொண்டிருக்கிறார்.) மணி சாதிரி :- (தமக்குள்) என்ன பெரிய தொல்லையாக இருக்கிறது? வீட்டில் பெரியவர்கள் இருத்தல் என்றைக்குங் கஷ்டந்தான். சாதிரி என்ற பட்டம் நமக்கு வந்தாலும் வந்தது; தற்கால நாகரிகத்திற் கொத்தவாறு நடந்த கொள்ள முடிவதில்லை. இந்த க்ராப் பண்ணிக் கொள்ள நான் பட்ட பிரயத்தனம் எண்ணத்தரமன்று. பென்சர் ஸிகாரை வாயில் வைத்துக் கொண்டு மோடாரில் போனால் அஃதொரு கௌரவமாகவே இருக்கிறது. நாம் அந்த மாதிரி செய்யலா மென்றால் வீட்டில் தாயார் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. தற்கால நாகரிகப்படி நடந்து கொண்டு சொஸைடியில் நான்கு பேருடன் பழகினால் தான் நல்லபேரும் கிடைக்கும்; நம்மிடத்தில் எல்லாருக்கும் ஒரு வித மதிப்பும் உண்டாகும். அதற்கென்னடாவென்றால் தாயார் ஒரு பெரிய முட்டுக் கட்டையாக வந்து சேர்ந்து கொண்டாள். உம் - (யோசிக்கிறார்). (ஆராவமுத ஐயங்கார் பிரவேசிக்கிறார்.) ஆராவமுத ஐயங்கார் : நமகாரம். மணி சாதிரி : ஓ! குடீவினிங் (Oh! Good Evening.) ஆ : பேஷ்! எந்தக் கப்பலில் வந்திறங்கினீர்கள் துரையவர்களே! ம :- என்ன ஆராவமுது! பரிகாசம் செய்கிறாய்? ஆ : பின் என்ன? நமகாரம் என்று சொன்னால் குடீவினிங் என்று சொல்கிறாயே. உனக்குத்தான் இங்கிலீஷ் தெரியுமோ? ம : அப்படி யெல்லாம் ஒன்று மில்லை. அதே வழக்கமாய்ப் போய் விட்டது. உம் - சரி; என்ன விசேஷம்? ஆ : இந்த க்ராப் எப்பொழுது பண்ணிக் கொண்டாய்? ம : இப்பொழுதுதான் பண்ணிக்கொண்டேன். சுமார் பத்து நாட்க ளாயின. ஆ : என்ன இப்படி திடீரென்று மாறுதலடைந்ததற்குக் காரணம்? ம : என்ன புதிதாகக் கேட்கிறாய்? உனக்கு ஒன்றுந் தெரியாதோ? ஆ : என்ன விசேஷம்? எனக்கு ஒன்றுந் தெரியாதே. ம : ஐ ஆம் எ லாயர் நௌ. (I am a lawyer now.) ஆ : (ஆச்சரியப் பட்டவன் போல்) என்ன? ம : நான் இப்பொழுது ஒரு வக்கீல் என்பது உனக்குத் தெரியாதோ? ஆ : அப்ரெண்டி பரீட்சையில் பா பண்ணிவிட்டாயோ நீ? ம : (ஓ! ஓ! என்று தலையை யசைக்கின்றார்.) ஆ : அப்படியா! நிரம்ப சந்தோஷம். எனக்குத் தெரிவிக்கவே யில்லையே நீ? ம : மறந்து விட்டேன். ஆ : ஆமாம்; சிறிது அந்தது உயர்ந்தால், பழைய சிநேகிதர்களை மறந்து விடுவது சகஜந்தான். உம் - இப்பொழுது யாரிடத்தில் ஜுனியராய் இருக்கிறாய்? ம : மஹாதேவ ஐயரிடத்தில். ஆ : பேஷ்; நல்ல வக்கீலிடத்தில்தான் சேர்ந்து கொண்டாய். ம : அவர் இன்னாரென்று உனக்குத் தெரியுமோ? ஆ : இஃதென்ன அப்படி கேட்கின்றாய்? மஹாதேவ ஐயரை அறியா தவர்கூட இவ்வூரில் உண்டோ? மஹாதேவ ஐயர் என்றால் அழுத பிள்ளையும் வாயை மூடிக்கொள்ளுமே. ம : அந்த மஹாதேவ ஐயர் தான் எங்கள் வீட்டில் சோற்றுக்குத் தாளம் போட்டவர். ஆ : அஃதென்ன விசேஷம்? ம : அவருக்கு நேற்று வந்த வாழ்வுதானே இஃதெல்லாம். இதற்குமுன் வயிற்றுக்கில்லாமல் அலைந்தவர்தானே அவர். எங்கள் வீட்டில் பரிசாரகம் செய்து கொண்டு வக்கில் பரீட்சை யில் தேறினார். அதை நினைத்துக் கொண்டால் மாத்திரம் அவரி டத்தில் நான் ஜுனியராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொள் வது கூட மானக்கேடாக இருக்கிறது. ஆ : பேஷ்! மணி! புத்திசாலி நீ. (தட்டிக்கொடுக்கிறார்.) என்ன கௌரவம்! என்ன கௌரவம்!! (பெருமூச்சு விட்டுக் கொண்டே தமக் குள் நகைத்துக் கொள்கிறார்.) ம :- என்ன? ஆ : ஒன்றுமில்லை. இந்தக் காலத்து கௌரவம், நாணயம், அந்தது, நாகரிகம் இவைகளை யெல்லாம் நினைத்துப் பெரு மூச்சு விடுகிறேன். ம : ஏன்? ஆ : மஹாதேவ ஐயர் உங்கள் வீட்டில் பரிசாரகம் செய்து கொண்டே வக்கில் பரீட்சைக்கு வாசித்துத் தேறினார். அவர் இப்பொழுது இந்த ஊரில் பிரபல வக்கீலாயிருக்கிறார். அவ ரிடத்தில் வேலை கற்றுக் கொள்வது உனக்கு அவமானமா யிருக்கிறது, அல்ல? ம : பின் இல்லையோ? ஆ : ஆமாமாம் (பொறுத்து) போடா போ முட்டாள். கௌரவ மாம் கௌரவம்? என்ன பெரிய மனுஷத்தனம் அப்பா! ம : என்ன ஆராவமுது! கோபித்துக் கொள்கிறாய்? ஆ : பின் என்னடா? மஹாதேவ ஐயரிடத்தில் இருந்தால் உனக்கு என்ன கௌரவம் குறைந்துவிட்டது? அவரிடத்தில் ஜுனிய ராக இருக்க நீ பாக்கியம் பெற்றாய் என்று சொல்லவேண்டும். ம : அடடா! நேற்றுச் சோற்றுக்கு வீங்கின மஹாதேவ ஐயர், இன்று வக்கீல் மஹாதேவ ஐயராகப் போய்விட்டார். அவ்வளவுதானே. ஆ : இன்னும் என்ன வேண்டும்? நேற்றுத் தெருவில் விளையாடிக் கொண்டு ஊர்ச்சண்டைகளை யெல்லாம் விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த மணி, இன்று மணி சாதிரியாகி, வக்கீலாகி, க்ராப் பண்ணிக்கொண்டு, செல்ப் ரெபெக்ட், சிவிலிசேஷன் (Self Respect, Civilization) என்று இங்கிலாந்தில் பிறந்தவனைப் போலவே பேசிக்கொண்டிருக்கிறான். அவ்வளவுதானே. ம : சரி; உனக்கென்ன வேலை? வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பாய். நான் போய் இரண்டு ஆட்டம் ஆடினாலும் பிரயோஜனமுண்டு. ஆ : மணி! நான் சொல்வதைக் கேள். என்மீது வீணாகக் கோபிக்க வேண்டாம். இந்த வேஷமெல்லாம் எதற்கு? நீ என்ன வெள்ளைக் காரனா? இங்கிலாந்து எந்தத் திக்கில் இருக்கிறது என்றாவது உனக்குத் தெரியுமா? வெள்ளைக்காரரில் யாராவது நம்மைப் போல் உடை யணிந்து கொண்டிருக்கின்றாரா? இந்த க்ராப் இல்லாமல் உனக்கு எந்த மூலையில் குறைவாக இருந்தது? ம : (ஒருவாறு முகத்தை வைத்துக்கொண்டு) என்ன அதிகமாகப் பேசுகிறாயே? ஆ : நான் சொல்வதைத் தப்பாக அர்த்தம் செய்து கொண்டால் உன் னிடத்தில் ஒன்றும் பேசவேயில்லை. என்னுடைய உண்மை யான சிநேகிதனாக உன்னை நான் நினைத்துக்கொண்டிருப்ப தால் உனக்குச் சில வார்த்தைகள் கூற விரும்பினேன். இல்லா விட்டால் எனக்கு என்ன அக்கரை? ம : நீ என்ன சுத்த கர்நாடகமாக இருக்கிறாயே? ஐம்பத்தேழாவது தேசத்திலிருந்து உதித்தனையோ நீ! காலத்திற் கேற்றவாறு நாம் நடந்து கொள்வதை விட்டு, ஆசாரம் - ஆசாரம் என்று அழுது கொண்டிருப்பதே உன்னைப் போன்றவருடைய வேலை. இதனால் நீங்களும் கெடுகின்றீர்கள்; பிறரையும் கெடுத்து விடுகின்றீர்கள். ஆ : தோளுக்கு மிஞ்சிய தோழன் நீ. என் செய்வது? (ப்ரம்மய்யன் விளையாட்டு உடையுடன் பிரவேசிக்கிறான்.) ப்ரம்மய்யன் : கமான்! மணி! ம : கம் ஹியர். ஹியர் இ எ கண்ட்ரி ப்ரூட் (Come here. Here is a country brute) ப் : ஏமி சமாசாரம்? ம : நமக்குப் பெரிய தத்துவங்களை யெல்லாம் போதிக்க ஆரம் பித்து விட்டார் நம் ஆராவமுத ஐயங்கார். தெரியுமோ இல்லையோ இவர் உனக்கு? ப் : (தலையை யசைத்துக் கொண்டே) என்னய்யா சொல்றிங்கோ நீங்கோ? ஆ : நான் சொல்வது உங்களுக்கு ஏளனமாக இருக்கிறது போல் தெரிகிறது. ப் : அதியந்த லேது. மீரு பாக செப்பண்டி. ஆ :- உங்களுடைய வேஷங்களும் எண்ணங்களும் எனக்குப் பிடிக்க வில்லை. ப் : காரணம்? ஆ : நம் பெரியவர்கள் அனுஷ்டித்து வந்த பழக்க வழக்கங்களை யெல்லாம் விட்டு விட்டு, மேனாட்டு உடைகளை அணிந்து கொண்டு, மேனாட்டு நாகரிகத்தில் மயங்கிக் கிடக்கின்றீர்களே; எனக்குப் பிடிக்கவேயில்லை. இப்பொழுது க்ராப் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. அதனால் உங்களுக்குண்டான இலாபம் என்ன? ம : பெரியவர்கள் வைத்துக்கொண்ட மாதிரி நீ உன் தலைமயிரை வைத்துக்கொண்டிருக்கிறாயே, அதனால் உனக்கென்ன இலாபம்? ஆ : சரி. நீ குதர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டாய். பிறகு உன்னு டன் சாத்தியப்பட்டால் பேசுகிறேன். நான் இப்பொழுது போய் வருகிறேன். ப் : கோபிஞ்சகண்டி. ஆ : எனக்குக் கோபமே கிடையாது! ப் : ஐதே வெள்ளி வதாரா? ஆ : மணி! போய் வருகிறேன். பெரிய மனிதன் நீ! ஞாபகமிருக் கட்டும். (செல்கிறார்.) ம : அவன் பேசுகிறதைப் பார்த்தாயா? ப் : அதிபோதுந்தி. மீ வக்கீலு எட்ல உன்னாரு? ம : எங்கள் வக்கீலா? என்னிடத்தில் நிரம்ப ஆசையாயிருக்கிறார். எந்தக் கேசுக்கும் என்னிடத்தில் யோசியாமல் கோர்ட்டுக்குச் செல்வ தில்லை. அவருக்கு ஏதேனும் சந்தேகங்கள் தோன்றிவிட் டால் அவை களை என்னிடத்தில் வந்து கேட்பார். அவைகளுக் கெல்லாம் நான் தகுந்த சமாதானம் சொல்லுவேன். எல்லாம் நம் சாமர்த்தியத்திலிருக்கிறது. ப் : அதி சரே. (குருமூர்த்தி பிரவேசிக்கிறான்.) குருமூர்த்தி : (மணிசாதிரியைப் பார்த்து) நமகாரம். அண்ணா. ம : என்ன குருமூர்த்தி! என்ன விசேஷம்? கு : ஒன்றுமில்லை. தங்களுடைய தயவுக்குத்தான் காத்துக்கொண் டிருக்கிறேன். ம : என் தயவு எதற்கு அப்பா? உன்னுடைய தயவே எங்களுக்கு வேண்டும். கு : அஃதென்ன அண்ணா அப்படிச் சொல்லுகின்றீர்களே? ம : பின் இல்லையோ? நீ ஏதாவது கேசு - கீசு கொண்டு விட்டால் தானே எங்களுக்கெல்லாம் பிழைப்பு உண்டு. கு : அதற்கென்ன அண்ணா! வேண்டிய கேசுகள். நீங்கள் நம்மைக் கொஞ்சம் பார்த்துக்கொண்டீர்களானால் கேசுகள் உங்களி டத்தில் வந்து விழாதா? ம : என்ன பார்த்துக்கொள்ளவேண்டும்? ஒன்றையும் ஒளியாமற் சொல்? கு : நான் கேட்கிறேனென்று நீங்கள் ஒன்றும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. நான் ஏழை; குடும்பி; இதைக்கொண்டே நான் ஜீவனம் செய்யவேண்டியதாயிருக்கிறது. ம : அஃதெல்லாம் ஒன்றுமில்லையப்பா. நீ தாராளமாய்ச் சொல். கேசுகள் பிடித்துக்கொடுத்தால் உனக்கென்ன கொடுப்பது வழக்கம்? வழக்கம்போல் வாங்கிக்கொண்டு போ. கு : நான் மாமூலாக நூற்றுக்கு இருபத்தைந்து வாங்குகிறேன். ம : அதற்கென்ன? அப்படியே வாங்கிக்கொண்டு போ. கு : நிரம்ப சந்தோஷம். வேண்டிய கேசுகள் உங்களிடத்தில் கொண்டு வருகிறேன். தாங்கள் இப்பொழுது மேல்பாதி மஹாதேவ ஐயர் கீழே தானே இருக்கின்றீர்கள்? ம : அவர் கீழே என்ன? கு : அவருடைய ஜுனியராகத் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். ம : (வெறுப்புள்ளவர் போல்) ஆமாம். கு : அவர் கூட உங்களைப் பற்றி நிரம்ப சொன்னார். ம : என்ன சொன்னார்? கு : நிரம்ப புத்திசாலி யென்றும், சிக்கலான கேசுகளை யெல்லாம் விளக்கப்படுத்திச் சொல்லும்படியான சாமர்த்தியம் உங்களிடத் தில் இருக்கிறதென்றும் சொன்னார். ம : வேறு ஒன்றும் சொல்ல வில்லையே. கு : ஒன்றும் இல்லை. நான் போய் வரட்டுமா? ம : சரி. ஞாபக மிருக்கட்டும். கு : அடடா! அஃதென்ன அப்படிச் சொல்லுகின்றீர்கள். (செல்கின்றான்.) ப் : ராவய்ய மனமு போதாம்; ரெண்டு ஆட்டமைன ஆடவச்சுனு. ம : ஆல்ரைட் (Alright) (செல்கிறார்கள்.) மூன்றாங் களம் இடம் : ரெயிலடி. காலம் : காலை. (பிச்சப்ப செட்டியாரும் கதிரேசன் செட்டியாரும் பிரவேசிக்கின்றனர்.) பிச்சப்ப செட்டியார் : அடி ஆத்தே; பொட்டி எங்கே? கதிரேசன் செட்டியார் :- எங்கணுவைச்சா? என்ன டாப்பா யளவு? டேசன்லயாவது போய்ப்பாரு. பி : அடேயளவே (டேஷன் பக்கமாகச் செல்கிறார். அப்பொழுது குருமூர்த்தி பிச்சப்ப செட்டியினுடைய பையை எடுத்துக் கொண்டு வருகின்றான்.) க : இதோ ஐயா எடுத்து வாராகளே. பி : எங்கேரிந்து சாமி எடுத்து வாரேக? கு : யார்தையா பெட்டி இது? க : எங்களுத்தாஞ் சாமி. கு : இப்படித் தான் போட்டு விட்டு வந்து விடுகின்றதோ? பி : எங்களுக்கு ஒண்ணும் தெரியாது சாமி. கு : பையை எடுத்துக் கொண்டு வருவதற்குக் கூடவா தெரியாது? க : கோவிச்சுக்காதங்கையா. அந்தப் பொட்டியே இந்தாலே கொடுங்க. அதலே கோட்டு கட்டு, நோட்டு இதுங்கள்ளாம் வைச்சிருக்கு. கு : ஏதாவது கேசு விஷயமாக இங்கே வந்தீர்களோ? பி : ஆமாஞ்சாமி. (குருமூர்த்தியிடத்திலிருந்து பெட்டியை வாங்கிக் கொள்கிறார்.) கு : (தனக்குள்) நல்ல ஆசாமிகள் தான்; நன்றாக ஏமாற்றலாம். (பிரகாசமாய்) நீங்கள் எந்த ஊர்? தேவ கோட்டையா? கானாடுக்காத்தானா? க : ஏன்? கு : உங்கள் இரண்டு பேரையும் முன்னே நான் பார்த்திருக்கிறேன். பி : எங்கே சாமி? கு : உங்களுடைய ஊர் எது? சொல்லுங்கள்? க : கானாடுக் காத்தான். கு : உங்களுடைய விலாசம் என்ன? பி : வயி. சே. பிச்சப்ப செட்டி என் விலாசம். ராம. சொ. ராம. கதிரேசன் செட்டி அவன் விலாசம். கு : (எல்லாம் தெரிந்தவன்போல்) ஆ! அப்படிச் சொல்லுங்கள். வயி. சே. பிச்சப்ப செட்டியாரா நீங்கள்? அவர் ராம- -சொ-ராம கதிரேசன் செட்டியார். சரிதான்; இப்பொழுது தெரிந்தது. உங்கள் ஊர் கானாடுக் காத்தான்தானே. தேவ கோட்டையிலே உங்களுக்கு லேவாதேவி உண்டு; இல்லை? பி : ஆமாம்; ஐயா ரொம்ப பழகினவபோல இருக்காங்களே. கு : என்ன? நன்றாகத் தெரியுமே; உங்கள் ஊரில் எல்லாரும் எனக்கு தெரியுமே. வீரப்பசெட்டியார் இருக்கிறாரோ? க : எந்த வீரப்ப செட்டியார்? வ. சோ. வீரப்ப செட்டியாரா? கு : அவர் தான், அவர் தான். எனக்கு, மாயாண்டி செட்டியார், சிதம்பர செட்டியார், இராமசாமி செட்டியார் எல்லாரும் தெரி யுமே. பி : ஐயாவுக்கு அவங்கள்ளாம் எப்படித் தெரியும்? கு : கோர்ட்டு மூலமாகத் தெரியும். அவர்கள் எந்தக் கேசு வந்தாலும் என்னிடத்தில் தான் கொடுப்பார்கள். அவர்கள் என்னிடத்தில் கொடுக்கிற கே ஒன்றாவது தோற்றுப்போனதேயில்லை. என் னாலே அவர்களுக்கு எத்தனையோ லக்ஷம் ரூபாய் இலாபம் வந்திருக்கிறது. க : ஐயா இங்கே வைக்கலோ? கு :- வக்கீல்களெல்லாம் கிடக்கிறார்களய்யா. என்னிடத்தில் எத்தனை வக்கில்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தெரி யுமா? (குருமூர்த்தியின் நண்பன் ஒருவன் பிரவேசிக்கிறான்.) கு - நண்பன் : எங்கே இப்படி? அவசரமா? கு : எங்குமில்லை. நம்ம செட்டிமார் இரண்டு பேரும் கானாடுக் காத்தானிலிருந்து கே விஷயமாக வந்திருக்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு போகிறேன். கு - ந : என் கேசைக் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா? அவ்வளவு தயவு இல்லையா? கு : அட பைத்தியமே! உனக்கென்னடா? (அவன் அருகிற்சென்று இரகசியமாய்ப் பேசுகிறான்.) பி : ( கதிரேசன் செட்டியாரைப் பார்த்து) ஐயா ரொம்ப பெரியவக. எல்லாந் தெரிஞ்சவங்கபோலிருக்கு. க : அப்படித்தான் தோணுது. நம்ம கேசை இவங்க கையிலேயே கொடுத்திடலாமே? பி : எனக்கும் அதான் தோணுது. நமக்கு முன்னே பின்னே தெரிஞ்ச வரா இருக்கிறாரு. நம்ம வீரப்பனெ தெரியுமாமலே இவருக்கு? க : அதான்; பேசாதே இவர் கையிலேயே கேசை கொடுத்துடலாம். ரொம்ப நாணயதர் போலிருக்குது. நம்ம பையைக்கூட எடுத்துக்கொடுத்தாரே. (தன் நண்பனை விட்டு குருமூர்த்தி திரும்பி வருகிறான்.) கு : என்னையா? என்ன விசேஷம் இந்த ஊருக்கு வந்தீர்கள்? பி : எல்லாம் உங்களிடத்திலே தாஞ்சாமி. கு : என்னிடத்திலேயா? என்ன விசேஷம்? க : எங்களது ஒரு கேசு. அது அப்பீலுக்கு இங்கு வந்திருக்கு. கு : கேசினுடைய சாராம்சம் என்ன? சொல்லுங்கள் பார்ப்போம். பி : இதோ இருக்காறாரே கதிரேசன் செட்டியார். - கு : இருக்கிறார் இதோ. பி : இவருக்கு தமையன் மெய்யப்ப செட்டியார்னு ஒத்தர் இருந்தாரு. அவர் - உம் - என்னாடாப்பா யளவு - மறந்து போச்சு - கதிரேசா! உங்கண்ணாத்தே எப்போ இறந்து போனாரு? க : போன வருசம் சித்திரையிலே. பி : ஆமாம், ஆமாம். போன வருசம் சித்திரையிலே இந்தக் கதிரே சன் செட்டியாருடைய தமையனார் மெய்யப்ப செட்டியார் இறந்துவிட்டார். கு : சரி! அப்புறம். - பி : அவருக்கு ஒரு பத்து லச்சத்துக்கு இருக்குது. ஆனா அவருக்கு புள்ளே குட்டி ஒண்ணுமில்லை. ஒரே ஒரு சம்சாரந்தான். கு : ஒரே ஒரு சம்சாரந்தானா? பி : ஆமாமய்யா, அத்தெப்பத்தி சந்தேகப்பட வேண்டாம். இங்கே கொஞ்சம் கவனமா கேளுங்க சாமி. கு : உம் - சொல்லுங்கள். பி : அவர் இறந்து பூட்டாரா - யாரு? மெய்யப்ப செட்டியார். க : சுருக்கச் சொல்லியளுவே. பி : அட இர்ராப்பா யளவு; அவசரப்பட்ரே; பையத்தானே சொல்லியளணும். (பொறுத்து) பத்து லச்சத்தை அநுபவிக்க மெய்யப்ப செட்டியாருக்குப் புள்ளைகுட்டி ஒண்ணுமில்லே. அதனாலே அந்த சொத்துக்கு யார் வார்சு? கு : நீங்கள் யாரென்று சொல்கிறீர்கள்? பி : அந்தப் பத்து லச்சத்தை யார்யா அநுபவிக்கிறது? கு : அதைத்தான் சொல்லுங்கள் என்கிறேன். பி : கீழ்க் கோர்ட்டிலே மெய்யப்ப செட்டியாருடைய பெண்சாதிக் குத் தான் அந்தப் பத்து லச்சமும் என்று தீர்ப்புச் சொல்லிப் போட்டான். கு : அது சரி என்கிறீர்களா? தப்பு என்கிறீர்களா? பி : தப்பய்யா தப்பு. அவன் முட்டாப்பய; கண் மூடித்தனமாய்த் தீர்ப்புச் சொல்லிப்போட்டான். அதுக்குத் தான் அப்பீலுக்கு இந்தூருக்கு வந்திருக்கோம். கு : கீழ்க்கோர்ட்டில் ஏன் அந்த மாதிரி தீர்ப்புச் சொல்லப்பட்டது? பி : (சிறிது கோபத்துடன்) அந்த மெய்யப்ப செட்டியார் சொந்தமா சம்பாதிச்சதான் அந்தப் பத்து லச்சமும். அதனாலே அது பங்காளிக்குப் பாத்தியமில்லையாம். கு : அவ்வளவு தானே உங்க கே. பி : ஆமாஞ் சாமி. கு : பேஷா ஜெயிக்கும் உங்க கே. நமக்குப் போட்டுவிட வேண்டிய சில்லரையை மாத்திரம் சரியாகப்போட்டு விடுங்கள். உங்க கே உடனே ஜெயிக்கிறதா இல்லையா பாருங்கள். பி : அதாஞ் சாமி எங்களுக்கு வேண்டியது. உங்களை நாங்க கைவிட்டுவிடமாட்டோஞ் சாமி. கு : (கதிரேசன் செட்டியாரைச் சுட்டிக்காட்டி) இவர் உங்களுக்கு என்ன பாத்தியம்? பி : இவன் என் மருமகப்பிள்ளை. கு : ஓ! அப்படிச் சொல்லுங்கள். அதற்காகத் தான் நீங்கள் இவ் வளவு கஷ்டப்படுகிறீர்கள். உம் - சரி, நீங்கள் இன்னும் சாப்பிட வில்லையே? பி : இல்லேசாமி; எங்கே போவலாம்? கு : என்னோடு வாருங்கள். நகரத்தார் விடுதிக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். உம் - இதோ நான் காபி கிளப்புக்குப் போய்விட்டு வருகிறேன். சில்லரை ஏதாவது இருக்கிறதா? பி : சில்லரை இல்லையே; நோட்டாகத் தான் இருக்குது. கு : அதைத்தான் கொடுமே; எங்கே ஓடிப்போகிறது? (நோட்டைப் பெற்றுக்கொண்டு) இந்த ரோட்டு வழியாக மெதுவாய்ப் போய்க்கொண்டே யிருங்கள். நான் இதோ வந்து விட்டேன். பி : சரி. சாமி. கடிய வந்துடுங்க சாமி. (யாவரும் செல்கின்றனர்.) நான்காங் களம் இடம் : அப்பு சாதிரி வீட்டில் ஒர் அறை. காலம் : பகல். (பாலாம்பாளும் ஒரு கிழவியும் (விதவை) பேசிக் கொண்டிருக் கின்றனர்.) கிழவி : உனக்கென்ன குறைச்சல் பாலு? பணத்தாலே குறைச்சலா? பாக்கியத்தாலே குறைச்சலா? சம்பத்தாலே குறைச்சலா? ஒண் ணாலே ஒண்ணு குறைச்சலா? பூர்வஜன்மத்திலே நல்ல நோம்பை நூத்தே, இந்த ஜன்மத்திலே நல்ல ஆம்பிடையானைத் தாலி கட்டி மத்த கஜத்தைப்போல ஒரு பிள்ளையைப் பெத் துண்டே. பாலாம்பாள் : எல்லாம் உன்னைப் போலொத்த பெரியவா ளுடைய ஆசீர்வாதந்தான். நீயும் எல்லாரையும் போல நன்றாக இருந்தால் எவ்வளவோ பாக்கியசாலியாக இருக்கலாம். கி : (சிறிது விசனத்துடன்) ஐயோ! அத்தெ யெல்லாம் இப்போ கிளப்பிவிடாதே நீ. அத்தெயெல்லாம் இப்பொ நினைச்சுண்டா எனக்கு துக்கம் மண்டிண்டு போறது. (கண்ணில் ஜலம் விடுகிறாள்.) பா : அவ்வளவுதான் நாம் கொடுத்து வைத்தது. அவாளவாள் கொடுத்த வைத்தபடி தானே கிடைக்கும். கி : அதெல்லாம் கடக்கறது. உன் புள்ளெ என்ன பண்றான் இப்போ? பா : உனக்கொன்றும் தெரியாதா என்ன? கி : எனக்கொண்ணும் தெரியாதுடி அம்மா. யார் ஜோலிக்குப் போ ரேன்; யார்ஜோலிக்கு வரேன். நாட்டுத் தவளைக்கு கிணத்து வளப்பமேன்னு பேசாமலிருக்கேன். பா : கிணற்றுத் தவளைக்கு நாட்டுவளப்பமேன் என்று சொல்லு. கி : பாத்யா அதெகூடச் சொல்லத் தெரியலெ. என்ன பண்றான் உன் புள்ளே இப்போ? பா : வக்கீலாக இருக்கிறான். கி : யாரு? உன் புள்ளெயா? மணியா? உம் - பரவாயில்லையே. மாசம் என்னா வரும்? பா : மாசமா? இதற்குள்ளே என்ன வரும்? கி : ஏண்டி? எத்தனை வருஷமாச்சு? பா : இப்போதான் அவன் ஒரு பெரிய வக்கீலிடத்தில் வேலை கற்றுக் கொள்கிறான். இவனிடத்திலும் தனியாகச் சில கேசுகள் வரு கின்றன. கி : இன்னாதான் வரும் சொல்லேன்? பா : இன்னாவருமோ? இன்னா போகுமோ? வீட்டில் ஒரு பைசா கூட கொண்டுவந்து கொடுப்பதில்லை. கி : அவன் செலவையாவது அவன் பாத்துண்டு போரானா? பா : என்ன செலவு இருக்கிறது அவனுக்கு? கி : என்னமோ சொல்லாப்பட்டா போயேன். உன் நாட்டுப்பெண் இங்கேதான் இருக்காளோ? பா : ஆமாம்; இங்கேதான் இருக்கிறாள். கி : பருப்புஞ் சாதம் சீக்கிரத்தில் ஏதாவது கிடைக்குமோ? பா : ஒன்றையும் காணோம். கி : ஏண்டி, நாக ப்ரதிஷ்டையாவது பண்ணி வைக்கிறதுதானே. பா : ஏதாவது ஒரு குறை தேவையில்லையா? சுவாமி எல்லாவற் றையும் ஒருவனுக்குக் கொடுத்துவிடுவாரா? கி : எல்லாம் கொடுப்பார்; நீயேன் இதுக்குள்ளே கவலைப்பட்றே? உனக்கென்னா கொறச்சல்? தினம் இரண்டு சுமங்கலிக்கும் இரண்டு பிராமணனுக்கும் சாதம் போட்டுண்டு வா; தினம் கார்த்தாலையும் சாயங் காலமும் உன் நாட்டுப்பெண்ணை போய் அரச மரத்தை ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு வரச்சொல்லு. ஆனா இந்தமாதிரி யெல்லாம் நீ பண்ணயானா உன் ப்ராமணன் கண்லே ரத்தம் சொட்டும். பா : அவர் என்ன செய்வார் பாவம்? பணத்து மேலே பிராணன். ஆனால் நான் செலவுசெய்தால் ஒன்றும் சொல்லமாட்டார். கி : ஆனா நான் சொன்னபிரகாரம் செய்; ஈச்வரன் உனக்கு நல்லதைத் தான் செய்வார். (ஒரு பாலிய விதவை பிரவேசிக்கிறாள்.) பா-விதவை : எயவு வீட்டிலே என்னெக்கும் எயவுதான். கி : (பாலாம்பாளுடன்) இந்த அசட்டுப் பொணம் இங்கே எங்கே வந்தது? பா : என்னடி அம்மா வரும்போதே எழவு கிழவு என்று சொல்லிக் கொண்டு வருகிறாய்? இந்த வீட்டிலே வந்துதானா சொல்ல வேண்டும்? பா-வி. : பின்னே பாயுமாமி; எந்தாத்லே என்னெக்கும் பேரெயவுதான். கி : அம்மா! நீவந்தவேளை நல்லவேளை; ஒங்காத்து எழவு ஒங்காத் தோடேயே இருக்கட்டும். இந்தாத்துக்கும் வரவேண்டாம். பா-வி : பின்னே பாருபாத்தி; அப்ளாம் இதச் சொன்னா. இத்துந்தே யிந்தேன்; ஒரு 1தாதா வந்து ஒரு உருந்தையே தூத்திந்திபூத்து. அதுத்து என் தாலியே பிதிச்சு அறுத்தா? கி : யார் உன்னே என்னான்னு சொன்னா? பா-வி : யாரு இருத்தா எந்தாத்லே? என் தந்தெ ஒண்ணு இருத்துதோ இல்லியோ? அதான் பாதெயிலே தத்தோ - தத்தையிலே போதோன்னு என்னை வெய்யறது. அது எவ்வளவு; நான் எவ்வளவு? கி : அப்பா! என்னமோன்னு பார்த்தேன். அந்தக் கொழந்தே சொல்லிப் புட்டா உனக்கு எந்த மூலையிலே கொறஞ்சு போச்சு. நீ சமுத்து. உன்னே ஒர்த்தரும் வெய்யவும் மாட்டா; திட்டவு மாட்டா. பா . வி : ஐயோ! அம்மா! உனத்து தூட பரிதாசமா போச்சா? சனி - நான் ஏன் இந்தாத்து வந்தேன்? ஆத்துத்தாரி இதிச்ச புளி மாதிரி உத்தாந்திருத்தா; இந்த தழம் என் வாயை அதத்தறதே. (சிறிது கோபத்துடன் செல்கிறாள்) கி : உன் நாட்டுப் பெண்ணே கூப்பிடேன் பார்ப்போம். பா : அதோ வருகிறாளே பாரேன். (யோகாம்பாள் பிரவேசிக்கிறாள்.) இந்தப் பாட்டியை நமகாரம் பண்ணடியம்மா. (யோகாம்பாள் அப்படியே செய்கிறாள்.) பா : எங்க அகத்திலே வந்து விட்டாற்போலிருக்கிறது. நான் போகிறேன்; யோகாம்பாவுடன் பேசிக்கொண்டிரு பாட்டி. (செல்கிறாள்) கி : நான்கூட போறேண்டி அம்மா.. யோகாம்பாள் : ஏன் பாட்டி? மாமியார் போய்விட்டாரே என்று நீங்களும் போகிறீர்களா என்ன? கி : ஐயோ, அதெல்லாம் ஒன்றுமில்லையடி யம்மா. (செல்லம்மாள் பிரவேசிக்கிறாள்.) இதோ செல்லம்மா வந்துட்டாளே, நான் போறேன். செல்லம்மாள் : ஏன் பாட்டி! நான் வந்தேனென்றா நீங்கள் போகிறீர்கள்? கி : இல்லையடியம்மா, இல்லை. எனக்குப் போய் காரியம் ரொம்ப இருக்குது. (செல்கிறாள்.) யோ : என்ன செல்லம்! என்ன சமாசாரம்? இப்படி நாற்காலி மேலேயே உட்கார். செ : என்ன? யோகாம்பாவுக்கு யோகம் அதிகமாயிருக்கிறது போலிருக்கிறதே. யோ : அஃதெல்லாம் ஒன்று மில்லையடியம்மா. நான் என்றைக்கும் ஒரே சீர்தான். செ : நேற்றோ என்னவோ - எங்கள் பிராமணர் உன் அகத்துக் காரரைப் பார்த்தாராம்; - உம்- என்ன? உங்கள் வீட்டுக்காரர் இப்படிப் போய்விட்டாராமே? யோ : என்ன விசேஷம்? செ : க்ராப் பண்ணிக் கொண்டிருக்கிறாராமே. நல்ல பிராமண ராய்ப் பிறந்து, சாதிரி என்ற பட்டம் வைத்துக்கொண்டு, ஊர் பெயர், குலப் பெயர், குடிப் பெயர் எல்லாவற்றையும் கெடுத்துக் கொள்வானேன்? யோ : அவைகளை யெல்லாம் ஏன் கேட்கிறாய்? நான் எவ்வளவோ தடவை முட்டிக்கொண்டு பார்த்தேன். ஒன்றும் பலிக்கவில்லை. நான் சொல்லச் சொல்ல க்ராப் அதிக கோணலாகிறதே தவிர ஒன்றும் குறைந்த பாடில்லை. என்ன செய்வது? செ : உன் மாமனார் - மாமியார் ஏதாவது சொல்லக் கூடாதோ? யோ : மாமனாருடைய பலத்தின் மேல் தான் இவ்வளவு ஆட்டம் ஆடுகின்றார்; மாமியார் வார்த்தையை யார் கேட்கிறார்? அவரும் தினந்தோறும் முட்டிக்கொண்டு தானிருக்கிறார். செ : எங்கள் அகத்துக்காரர் பழைய சிநேகிதர் என்பதைக் கூட உங்கள் அகத்துக்காரர் மறந்து விட்டாராமே. யோ : ஒருவர்க்கொருவர் ஏதாவது மனதாபப்பட்டுக் கொண்ட னரோ? செ : இந்த வேஷங்களெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா; பெரிய வர்கள் அநுஷ்டித்து வந்த ஆசார முறைகளை நாம் அடியோடு தள்ளி விடக்கூடாது. இந்த க்ராப் எல்லாம் எதற்கு என்று எங்கள் பிராமணர் கேட்டாராம். அதற்கு உங்கள் வீட்டுக் காரர், சுத்த நாட்டுப்புறமா யிருக்கிறாயே நீ என்று முகத்தில் அறைந்ததுபோல் பதில் சொன்னாராம். யோ : ஐயோ! நான் என்ன பண்ணுவேனடி செல்லம்? எங்கள் மாமி யாரிடத்தில் வேண்டுமானால் சொல். செ : அது முதற்கொண்டு எங்களகத்திலே ஒரு மாதிரியாக இருக் கிறார். யோ : அப்பாவைப்போலவே படபடப்பு அதிகம். என்ன செய்வது? நீ மனதிலே ஒன்றும் வைத்துக்கொள்ளாதே செல்லம். உன் னகத்திலேயும் சொல். செ : எனக்கென்னடி பைத்தியம். எங்ககத்திலேகூட என்ன இந்த மாதிரியாகப் போய்விட்டாரே என்று தான் இரங்குகிறார். யோ : நானும் தினந்தோறும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த வடக்கித்யான் ஒருவன் வந்தாலும் வந்தான்; அவனாலே எல்லாம் கெட்டுப் போகிறது. செ : ஆமாண்டி. எங்ககத்திலே கூட சொன்னார். அவன் நேற்று வந்தவன். அவனைக் கட்டிக்கொண்டு உங்கள் அகத்துக்காரர் அழுகின்றாரே? அவனாலேயே உங்ககத்திலே கெட்டுப்போய் விட்டாராம். யோ : அஃதென்னமோ வாதவந்தான். அவனோடு சிநேகம் பண்ணிக் கொண்ட மறுநாளே தலையை மொட்டை யடித்துக் கொண்டார். செ : எனக்கும் ஆறவில்லை. உன்னிடத்தில் சொல்லிக்கொள்ளலா மென்று தான் வந்தேன். யோ : நானும் சொல்லிப் பார்க்கிறேன். உங்கள் அகத்துக்காரரை ஒன்றும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாமென்று சொல். செ : அஃதெல்லாம் ஒன்று மில்லையடி. நான் போய் வரட்டுமா? மாமியார் எங்கே? பார்த்துவிட்டுப் போகிறேன். போகும்போது சொல்லி விட்டுப் போகவில்லை என்று சொல்வார். (இருவரும் செல்கின்றனர்) ஐந்தாங் களம் இடம் : நியாயதலம். காலம் : நண்பகல். (நியாயாதிபதி ஓருயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்கிறார். நியாய வாதிகள் பல இடங்களில் இருக்கிறார்கள். பிச்சப்ப செட்டியாரும் கதிரேசன் செட்டியாரும் ஒருபுறம் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். குருமூர்த்தி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறான்.) மணி சாதிரி : (எழுந்து) கதிரேசன் செட்டியாருக்காக நான் ஆஜரா கின்றேன். நியாயாதிபதி : நீர் யார்? ம : நான் ஒரு வக்கீல். நி : உம்மைப் பார்த்தாலே வக்கீல் என்று தெரிகின்றதே. அதை இப்பொழுது நான் கேட்கவில்லை. நீர் இந்தக் கோர்ட்டில் எப்பொழுது வக்கீலாகப் பதிவு செய்து கொள்ளப்பட்டீர்? ம : நியாயாதிபதிக்கு இதைப்பற்றிக் கேட்க அதிகாரம் இல்லை யென்று வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நி : எந்தச் சட்டம் அந்த மாதிரி கூறுகின்றது? ம : அம்மாதிரி சட்டம் இல்லாவிட்டால் நாம் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். (நியாயாதிபதியும் எல்லா வக்கீல்களும் நகைக் கிறார்கள்) நி : நீர் யாருடைய ஜுனியர்? ம : அதைப்பற்றித் தாங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. நி : அப்படியானால் உம்முடைய வாதத்தை நான் கேட்க வேண்டிய அவசியமில்லை. ம : ஜட்ஜவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது; லாபாயிண்டு களை ப்பற்றி மாத்திரம் நியாயாதிபதி பேசலாமே தவிர, மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் சரியோ என்று நான் கேட்கிறேன். நி : ஆமாம்; லா பாயிண்டுகளை எடுத்துச் சொல்ல உமக்கு யோக்கியதை இருக்கிறதென்று எனக்கு எப்படித் தெரியும்? ம : அதற்காகக் கேட்கின்றீர்களா? அப்படி முன்னமேயே கேட்டிருந்தால் நான் பதில் சொல்லியிருப்பேனே. உம் - நான் லக்ஷப் பிரபுவான அப்பு சாதிரியினுடைய பிள்ளை. நி : (ஆச்சரியத்துடன்) என்ன? உமது பேரென்ன? ம : மணி சாதிரி, நி : பிராமணரா நீர்? - உம் - பிறகு - ? ம : நான் பி. ஏ. பரீட்சையில் தேறி, எப். எல்லுக்குப் போய், பி. எல்லில் பாபண்ணி, அப்ரெண்டி பரீட்சையிலும் தவறா மல் தேறிவிட்டு வக்கீலாகப் பதிவு செய்து கொண்டேன். நி : எப்பொழுது? ம : எனக்குச் சரியாக ஞாபகமில்லை. நி : சுமாராகச் சொல்லுமே? ம : சந்தேகமாகச் சொல்லும் வழக்கம் என்னிடத்தில் இல்லை. உத்தரவு கொடுத்தால் என் தகப்பனாரைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். நி : பேஷ்! நல்ல மேதாவி நீர்? சரி; நீர் இப்பொழுது ஜுனியர் வக்கீலாக யாரிடத்தில் இருக்கிறீர்? ம : மேல்பாதி மஹாதேவ ஐயரிடத்தில் இருக்கிறேன். அவர் தம் ஆதிகாலத்தில் எங்கள் வீட்டில் பரிசாரகம் செய்து கொண்டிருந்தார். நி : சரி; அவைகளைப்பற்றி யெல்லாம் இங்குப் பேசாதேயும். உம் முடைய கேஸை ஆரம்பியும். ம : (தன் குரலைச் சரிப்படுத்திக் கொண்டும், உடைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டும் பேசத் தொடங்குகிறார்.) பிரபுவே! அப் பீல் வாதியும் என் கட்சிக்காரருமான கதிரேசன் செட்டி யார் என்பவர் கானாடுக் காத்தான் என்ற ஊரில் இருப்பவர். அது புதுக்கோட்டையைச் சேர்ந்தது. அந்த ஊரில் அநேகமாகச் செட்டிமார்களே இருக்கிறார்கள். அவர்கள் பணக்காரர்கள். அவர்களுக்கு அதிகாரம் அதிகமாக அந்த ஊரில் உண்டு. பிரபுவே! தயை செய்து கவனமாய்க் கேட்க வேண்டும். என் னுடைய கட்சிக்காரருக்குக் கதிரேசன்செட்டியார் என்று பெயர். கதிரேசன் என்றால் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பெயர். நி : அதற்கும் இந்தக் கேசுக்கும் என்ன சம்பந்தம்? ம : சம்பந்தம் இருக்கிறது. சுப்பிரமணியக் கடவுளுடைய பெயரை என்னுடைய கட்சிக்காரர் வைத்துக் கொண்டிருப்பதனால் அவர் கொண்டுவந்த கேசானது உண்மையாகவும் பொய்கலந்த தில்லாததாகவும் இருக்கும் என்று நான் கூறுகிறேன். நி : ஓ! ஓ! அப்படியா? (எல்லாரும் நகைக்கின்றனர்.) ம : இந்தக் கானாடுக்காத்தானைப்போல் மற்றோர் ஊரும் இருக் கிறது. அதற்குத் தேவகோட்டை என்று பெயர். அங்கும் நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் அதிகமாய் வசிக்கிறார் கள். அவர்கள் பெரும் பணக்காரர்கள். அவர்க ளுடைய வரலாற்றைப் பற்றிச் சில கதைகளும் சொல்லப் படுகின்றன. பிச்சப்ப செட்டியார் : (கதிரேசன் செட்டியாருடன்) நம்ம வக்கீல் ஐயாவுக்கு எல்லாம் தெரியும் போலேயிருக்குதே. நி : (மணி சாதிரியைப் பார்த்து) நீர் உம் கேசைப் பற்றிப் பேச வந்தீரா? அல்லது நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களுடைய சரித்திரத்தைச் சொல்ல வந்தீரா? ம : உயர்ந்த வமிசத்திலிருந்த நாட்டுக்கோட்டைச் செட்டி யொருவ ரால் கொண்டு வரப்பட்ட இந்தக் கேசானது பொய்யல்ல என்று நிரூபித்துக் காட்டவே இந்த நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களுடைய சரித்திரத்தை ஆதிமுதல் விடாமல் கூறுகின்றேன். நி : பேஷ்! உம்முடைய கேசு பொய் யென்பதாக உமக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கின்றதா? ம : என்னுடைய கேசு அல்லவே இது. என்னுடைய கட்சிக்கார ருடைய கேசைப் பற்றித் தான் நான் இப்பொழுது வாதஞ் செய்கிறேன் என்பதை நியாயாதிபதி அறிந்து கொள்ள வேண்டும். நி : அடாடா, நல்ல தப்புகள் கண்டு பிடிக்கின்றாரையா நம் வக்கீல்? சரி; கட்சிக்காரருடைய கேசு பொய் யென்பதாக உமக்கு ஏதேனும் சந்தேக முண்டோ? ம : அது பொய்யோ மெய்யோ எனக்குத் தெரியாது. என் கட்சிக் காரர் உண்மை யென்று சொல்கிறார். அதை நான் நம்புகின் றேன். நான் நம்புவது போல் நியாயாதிபதியும் நம்பவேண்டும் என்றுதான் கூறுகின்றேன். நி : பேஷ்; நல்ல தருக்கம். உம்; சரி; உம்முடைய கட்சிக்காரரின் கேசு உண்மை யென்று நான் நம்புகின்றேன். பிறகு உம் கேசைப் பற்றி வாதம் செய்யும். ம : அப்படியானால் சந்தோஷம். (குரலைக் கனைத்துக் கொண்டு) பிரபுவே! என் கட்சிக்காரர், தம் மாமனாருடைய தூண்டுதலின் பேரில் இக்கேசைக்கொண்டு வந்திருக்கிறார்; அந்த மாம னாரும் இங்கே வந்திருக்கிறார். என்னுடைய கட்சிக்காரரும் இங்கே வந்திருக்கிறார். இதை நியாயாதிபதியவர்கள் குறித்துக் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். (பொறுத்து) பிரவுவே! குறித்துக் கொண்டீர்களா? நி : உம் - சரி. (எல்லாரும் நகைக்கின்றனர்) ம : பிரபுவே! என் கட்சிக்காரரான கதிரேசன் செட்டியாருடைய தமையனார் மெய்யப்ப செட்டியார் என்று ஒருவர் இருந்தார். அவர் பெயர் மெய்யப்ப செட்டியாரே தவிர அவர் மெய்யைப் பேசியே அறியார். அவருக்குச் சுமார் பத்து லக்ஷம் ரூபாய் பெறு மான சொத்துக்கள் இருக்கின்றன. அவர் சென்ற வருஷம் கால கதியானார். அவருக்கு ஒரே ஒரு மனைவிதான் உண்டு. (பிச்சப்ப செட்டியாரைப் பார்த்து) செட்டியார் வாள்! மெய்யப்ப செட்டியாருக்கு ஒரே ஒரு பெண்சாதி தானே. பி : ஆமாமாம். அதுக்குச் சந்தேகமில்லை. அதை நன்னா அழுத்திச் சொல்லுங்க சாமி. ம : பிரபுவே! அந்த மெய்யப்ப செட்டியாருக்கு ஒரே ஒரு மனைவி தான் என்பதைத் தங்கள் குறிப்பில் குறித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இறந்துபோன அந்த மெய்யப்ப செட்டியாருக்குச் சந்ததி ஒன்றுமில்லை. அதனால், அவர் இறக்குந் தறுவாயில் பெரியதொரு தந்திரம் செய்தார். தமது பிற்காலத்தில், தம் சொத்துக்களெல்லாம் தம் மனைவியைச் சேரவேண்டியது என்று அவர் ஓர் உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்றார். சந்ததி இல்லாமலிருந்த அவர், தம் சொத்துக்களைத் தம் மனைவிக்குச் சேரும்படி உயில் எழுதிவைக்கப் பாத்தியப்பட்டவரேயாகார். அவர் அங்ஙனம் செய்தது தவறென்று நான் கூறுகிறேன். இதைக் கீழ்க்கோர்ட்டார் அறியவேயில்லை. நி : அந்தப் பத்துலக்ஷம் ரூபாயும் இறந்துபோன மெய்யப்ப செட்டியாருடைய சுயார்ஜிதமா? பிதுரார்ஜிதமா? ம : என்னய்யா செட்டியார்! பத்து லக்ஷம் ரூபாய் அந்த மெய்யப்ப செட்டியாரால் சொந்தமாகச் சம்பாதிக்கப் பட்டதா அல்லது அவர் தகப்பனாரால் கொடுக்கப்பட்டதா? பி : அவர் சொந்தமாகச் சம்பாதிச்சதுதாங்கோ. ஆனால் எல்லாம் மோச அடி. ம : பார்த்தீர்களா? நியாயாதிபதியவர்கள் இந்தப் பாய்ண்டைக் குறித்துக் கொள்ளவேண்டும். என்னுடைய கட்சிக்காரரான கதிரேசன் செட்டியார், இறந்துபோன மெய்யப்ப செட்டியா ருடைய தம்பி. ஆதலால் மெய்யப்ப செட்டியாருடைய சொத்துக்க ளெல்லாம் இவருக்குத் தான் சேரவேண்டும். மெய்யப்ப செட்டி யாருக்கு வேறே வார்சுகளில்லை. மெய்யப்ப செட்டியாருடைய சொத்துக்கள் யாவும் என் கட்சிக்காரரான கதிரேசன் செட்டி யாருக்குச் சேரவேண்டியதுமன்றி, மெய்யப்ப செட்டியா ருடைய மனைவியும் என் கட்சிக்காரரைத்தான் அடைய வேண்டும். சொத்துக்கள் என்பதற்கு தாவர ஜங்கம சொத் துக்கள் என்று மாத்திரம் பொருள் கொள்ளக்கூடாது. மனைவி யையும் ஜங்கம சொத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும். நியாயாதிபதியவர்கள் மனைவியை தாவர சொத்தில் சேர்த்துக் கொண்டாலும் எனக்கு ஆக்ஷேபமில்லை. வார்சில்லாத ஒருவனுடைய சொத்துக்கள், எவனிடத்தில் வந்து சேருகின்ற னவோ அவனிடத்திலேயே வார்சில்லாதவனுடைய பெண்சாதி யும் வந்து சேரவேண்டும். இதுதான் என்னுடைய வாதத்தில் முக்கியமாய் நியாயாதிபதியவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இதைக்கீழ்க் கோர்ட்டார் கவனிக்கவே இல்லை. கிழ்க் கோர்ட்டில் என் கட்சிக்காரருக்கு ஆஜரான வக்கீலும் இதைக் கவனிக்கவில்லை. இந்தச் சூட்சுமத்தை நானே கண்டு பிடித் தேன். மிடர் மஹாதேவ ஐயரும் இதைப்பாராமலே விட்டு விட்டார். (எல்லோரும் நகைக்கின்றனர்) சொத்துக்களை மாற்றும் சட்டம் (Transfer of Property Act) என்ற சட்டத்தின் கீழ் என் கட்சிக்காரருடைய கேசு வரும். அந்தச் சட்டத்தில் சொத்துக்கள் என்பதில் மனைவியையும் சேர்க்கா விட்டால், அதைச் சேர்த்துப் புதிய சட்டம் ஒன்று உண்டாக்க வேண்டு மென்று அரசாங்கத்தாருக்கு எழுத வேண்டுமென நியாயாதி பதியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அரசாங்கத்தாருடைய உத்தரவு வந்த பிறகே என் கட்சிக்காரருடைய கேசில் தீர்ப்புச் சொல்ல வேண்டும். சொத்துக்கள் என்பதில் மனைவியைச் சேர்த்துக்கொள்ளலா மென்பதற்குப் பல ஆதாரங்கள் இருக் கின்றன. பாண்டவர்களும் துரியோதனாதியர் களும் சூதாடிய பொழுது, பாண்டவர்களுடைய மனைவியாகிய துரோபதையைப் பந்தயமாக வைத்து ஆடும்படி, துரியோதனாதியர்கள் பாண்டவர்களைக் கேட்டது நியாயாதிபதிக்கு ஞாபகமிருக்க லாம். இதனால் தெரிவது என்ன? சொத்துக்களில் மனைவியும் அடங்கினவள் என்பது நன்கு விளங்கவில்லையா? பாரதப் போரை நடத்தின பெரியவரெல்லாரும் அந்த மாதிரியாகச் செய்திருக்கும்போது நாம் ஏன் அந்தமாதிரி செய்துகொள்ளக் கூடாது? சட்டத்தில் அங்ஙனம் இல்லாவிட்டால் நாம் அச் சட்டத்தைத் திருத்திக்கொள்ள வேண்டும். என் கேசுக்கு அநுகூலமாக வேண்டிய விஷயங்களை எல்லாம் நான் விரிவாய் எடுத்துக் கூறிவிட்டேன். நியாயாதிபதியவர்கள் நன்றாக ஆலோ சித்து என் கட்சிக்காரருக்கு நியாயம் செய்து கொடுக்க வேண்டு மாய்க் கேட்டுக் கொள்கிறேன். (தம் ஆசனத்தில் உட்காரு கிறார்.) நி : (பிரதிவாதி வக்கீலைப் பார்த்து) உம்முடைய வாதத்தை ஆரம்பிக்கலாம். பிரதிவாதி வக்கீல் : நான் ஒன்றும் வாதஞ் செய்யப் போவதில்லை. எனக்காக என் நண்பர் மணி சாதிரி எல்லாவற்றையும் விரி வாக எடுத்துக் கூறிவிட்டாராதலால் நான் ஒன்றுங் கூறச் சித்தமாயில்லை. நியாயம் எங்கு இருக்கின்றதோ அங்கு வெற்றி உண்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதாதலின் நான் ஒன்றும் பேசவில்லை. நியாயப்படி தீர்ப்புச் சொல்ல வேண்டுமாய் நியாயாதிபதியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நி : நாளை தீர்ப்புச் சொல்கிறேன். இன்று கோர்ட் கலையலாம். (கோர்ட் கலைகிறது.) ம : என்ன செட்டியார்வாள்? எப்படியிருந்தது நம் வாதம்? பி : பேஷ் சாமி. கு : என்ன செட்டியார்! வக்கீலய்யாவைப் பார்த்தீர்களா? வெளுத்து விட்டார்களே. எதிரி வக்கில் ஏதாவது வாயைத் திறந்தானா பார்த்தீர்களா? ஐயாவை நன்றாகத் திருப்தி செய்ய வேண்டும். பி : அதுக்கென்ன சாமி. கு : உம்; சரி, சில்லரை ஏதாவது இருக்கிறதா? ஐயா வண்டியிலே போக வேண்டும். பி : வேண்டியது சாமி; இந்தாலே வாங்க. (யாவரும் செல்கின்றார்.) ஆறாங்களம் இடம் : மேல்மாடி காலம் : நிலவு. (மணிசாதிரி ஒரு சோபாவின் மீது சாய்ந்துகொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் யோகாம்பாள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு புறம் வீணை வைக்கப்பட்டிருக்கிறது.) மணிசாதிரி : அப்புறம் என்ன சமாசாரம்? யோகாம்பாள் : அன்றைய தினமென்ன, செல்லத்தின் அகத்துக் காரரை அப்படிக் கோபித்துக் கொண்டீர்களாமே? ம : பின் என்ன? அவன் சுத்த நாட்டுப்புறமாக நடந்து கொண்டான். யோ : அவர் நாட்டுப் புறம். நீங்கள் என்ன? ம : நான் பெரிய வக்கீல். யோ : உங்களுடைய வக்கீல்தனம் உங்களோடேயே இருக்கக் கூடாதோ? அவரிடத்தில் சென்றுதான் காட்ட வேண்டுமோ? ம : சீ! கழுதை! அன்றைய தினம் கோர்ட்டில் ஒரு கேசு சம்பந்தமாக வாதஞ் செய்தேன். எல்லாரும் சிரித்துச் சிரித்து வயிறு புண் பட்டார்கள். எதிரி வக்கீல் ஒன்றும் பேசாமல் இரண்டொரு வார்த்தைகள் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டான். யோ : எதற்காக எல்லாரும் சிரித்தனர்? ம : அவ்வளவு வேடிக்கையாகவும் நன்றாகவும் பேசினேன். யோ : அதற்காகவா சிரித்தார்கள்? ம : சந்தேகமில்லாமல் அதற்குத்தான்; என்னைப்போல் இந்த ஊரில் யாராவது பேசும் திறமை பெற்றிருக்கின்றனரா? யோ : அது கிடக்கின்றது. இந்தப் பாழும் க்ராபை எடுத்து விடுங்கள். இந்த இரவில்கூட பூட்ஸும் நிஜாரும் வேண்டுமா? வீட்டில்கூடவா பிராமணராக இருக்கக் கூடாது? ம : அவைகளெல்லாம் ஈரோப்பியன் பாஷன் (Europieon Fashion.) உனக்கென்ன தெரியும்? நீ சுத்த நாட்டுப்புறம்! எனக்குத் தகுந்த பெண்டாட்டி நீ அல்ல. யோ : நான் உங்களுக்குத் தகுந்த பெண்டாட்டியாக இல்லாமல் இருக்கலாம். தாங்கள் எனக்குக் கணவராக வாய்த்தது என் பூர்வ ஜன்மபுண்ணியபலனே என்று நான் நினைத்துக் கொண் டிருக்கிறேன். நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். (திடீரென்று) இன்று வெள்ளிக் கிழமையல்லவா? உங்களை நமகாரஞ் செய்ய மறந்தே விட்டேன். (தன் கணவனை நமகாரஞ் செய்கிறாள்.) ம : இவைகளெல்லாம் என்ன, நான்சென்! கணவனை மனைவி நமகாரம் செய்கிறதாவது போகிறதாவது? மேலும் (Male) பீமேலும் (Female) ஈக்வல்; ஹபண்டும் ஒய்ப்பும் சமம்; நீயும் நானும் ஒன்று. யோ : அப்படி யெல்லாம் சொல்லாதீர்கள். கடைசியில் சொன்ன வார்த்தையை நான் ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன். மற்றவைக ளெல்லாம் சரியல்ல. மனைவியாவாள், என்றைக்கும் கணவன் கீழடங்கி இருக்கவேண்டியவளே. ம : இப்பொழுது உங்களுக்கெல்லாம் சுதந்தரம் வேண்டாமா? யோ : இப்பொழுது எங்களுக்குச் சுதந்தரமில்லையா? வீட்டில் நாங்கள் சுதந்தரமாகத் தானே இருக்கிறோம். நாங்கள் சிறையிலா வைக்கப்பட்டிருக்கிறோம்? இல்லையே. சுதந்தரம் என்றால் நீங்கள் என்ன அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள்? ம : என்னைப் பரீட்சிப்பதில் பிரயோஜனமில்லை. புருஷர்களுக் குள்ள சுதந்தரம் திரீகளுக்கும் இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். யோ : அது கூடாதென்பது தான் என்னுடைய அபிப்பிராயம். புருஷர்களுக்குள்ள சுதந்தரங்கள் திரீகளுக்கும் கொடுக்கப் பட்டால் அப்பொழுதே உலகம் அழிந்து விடுவது நிச்சயம். சிலரைப்போல் திரீகளை மிருகங்களென நடத்துவதும் தவறு; சிலரைப் போல் திரீகளைக் காளைகளென வெளியில் திரியும்படி விடுவதும் தவறு. இரண்டும் கூடாவென்றே நான் கூறுகிறேன். திரீகளுக்குச் சுதந்தரம் வேண்டும் என்பவர்கள், தங்கள் வீட்டு திரீகளுக்குச் சுதந்தரம் எப்படிக் கொடுத்திருக் கிறார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். ம : அஃதென்னமோ? பொதுவாக நான் கூறுகிறேன். ஹிந்து சமூகத் தினர், பெண்கள் என்றால் அடிமைகள் என்று பொருள் கொண்டு அவர் களை மிருகங்களினும் இழிவாய் நடத்துகின் றனர். மேனாட்டாரைப்பார். ஒரு நாள் என்னுடன் மாலை வேளையில் கடற்கரையோரமாகவா. அங்கு ஐரோப்பியர் தத்தம் மனைவிமாருடன் வருவதும், அவர்கள் யாதொரு வித்தியாசமுமின்றி ஒருவருக் கொருவர் உரையாடுவதும் பார்க்கப் பார்க்க இன்பத்தைத் தருகின்றது. இன்னும் மேனாட்டு திரீகள் அரசியல் விஷயங்களில் எவ்வளவு முன்னடைந்திருக்கிறார்கள் என்பதை நீ அறிவையோ? பார்லி மெண்டு சபையில் அங்கத்தவராக இருக்கும் படியான நிலைமை யில் மேனாட்டு திரீகள் இப்பொழுது இருக் கிறார்கள். நம் மாதர்களின் நிலைமை யென்ன? அடுப்பங்கரை யுண்டு; அவர்கள் உண்டு, நம் பெண்களிற் சிலர், தம் கணவரைக் காணின், பூனையைக் கண்டு எலி அஞ்சி யோடுவது போல் மூலையில் பதுங்கிக் கொள்கின்றனர். மற்றும், நம் பெண்க ளிடத்தில் பல வெறுக்கத் தக்க செயல்கள் இருக்கின்றன. நம்மவர் இந்தப் பாழும் மஞ்சளை ஏன் பூசிக் கொள் கின்றனரோ தெரியவில்லை. சோப் யூ பண்ணால் எவ்வளவு நைஸாக இருக்கும்? இவைகளையெல்லாம் மேனாட்டாரிடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய திரீகள் அணிந்து கொள்வது போல் ஆடை களை நம் பெண்கள் ஏன் தரித்துக் கொள்ளக் கூடாது? பொதுவாக, புருஷன் - திரீ என்ற வித்தி யாசமே கூடாது. ஏறக்குறைய இந்தக் கொள்கையையே ஐரோப்பியர் அநுசரிக்கின்றனர். நம்மவரைப்பார்; ஆசாரம், சநாதன தர்மம் என்று சொல்லிக்கொண்டு பழைய குருட்டு வழக்கங்களை உடும்பு போல் பிடித்துக்கொண் டிருக்கின்றனர். இந்தியா முன்னடைய வில்லை யென்றால் எப்படி முன்ன டையும்? (யோகாம்பாள் பெருமூச்சு விடுகிறாள்) என்ன பெரு மூச்சு விடுகிறாய்? உன் அபிப்பிராயமென்ன? யோ : நீங்கள் சொல்கிற மாதிரி நம் நாட்டு திரீகள் அநுசரித்துக் கொண்டு வந்தால்தான் இந்தியா முன்னடையுமோ? ஐரோப் பியர்களைப் போல் நமது பெண்மணிகளும் இங்கிலீஷ் பேச ஆரம்பித்துவிட்டால் இந்தியா உயரப் பறக்கும்போலும். பேஷ்; நீங்கள் சொல்வது நிரம்ப நன்றாயிருக்கிறது. (பொறுத்து) நான் சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். என்னு டைய வார்த்தைகளைத் தயை செய்து காதுகொடுத்துக் கேட்க வேண்டும். உம் - மேனாட்டு நாகரிகத்தில் நீங்கள் நன்றாக மயங்கிக் கிடக்கின்றீர்கள். உங்களைப்போல் பலர் இருக்கின்ற னர். நீங்கள் யாவரும் நமது சநாதன தர்மங்களையும், நம் பெரியோரால் ஏற்படுத்தப்பட்ட ஒழுக்க நிலைகளையும் குறை கூறுவது, அவைகளைச் சரியாக அறிந்து கொள்ளாமையி னாலேயே என்று நான் தைரியமாய்க் கூறுகிறேன். மேனாட்டு திரீகளைப் போல், நம் இந்தியப் பெண்மணிகளும் உண்டு, உடுத்து, உறங்க வேண்டுமென்பதே உங்கள் கருத்தெனத் தெரி கிறது. திரீகள் சுதந்தரம் இவைகளேபோலும், மிருகங்களும், பக்ஷிகளும் உண்டு உறங்குகின்றன. ஆகையால் மனிதருக்கும் விலங்குகளுக்கும் என்ன வேற்றுமை என்று கூட உங்கள் தருக்க நூல் கூறுமோ? (பொறுத்து) பிராணநாதா! என்மீது கோபிக்க வேண்டாம். மேனாட்டு நாகரிகம், மிருக சுபாவத்தை யுடைய தென்று நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். நமது இந்திய நாகரிகம் ஆன்மஞானத்தைப் பற்றியது; மேனாட் டாருடைய நாகரிகம் உலகாயதக் கொள்கை கொண்டது; ஏறக்குறைய நாதிக மதத்தைப் பின்பற்றியது என்றுங் கூற லாம். நாம் இவ்வுலகிற் பிறந்தது உண்டு, உடுத்து, உறங்கு வதற்கல்ல; குறித்த ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொருவனும் பிறக்கும்போதே கடவுளால் கட்டளையிடப் படுகிறான்; ஈசனுடைய ஆக்ஞையை நிறைவேற்றவே அவன் இப்புவியில் தோன்றுகிறான். (பொறுத்து) நமது இந்திய ஜன சமூகவாழ்க்கையானது இரண்டு வாக்கியங்களை அதிவார மாகக் கொண்டு நின்றது; நிற்கின்றது. இனி எங்ஙனமோ யானறியேன். அவை உண்மை கடைப்பிடி அறஞ்செய விரும்பு என்பவையாம். இந்த இரண்டு வாக்கியங்களையே ஸத்யம்வத தர்மஞ்சர என்று அநாதியான வேதம் வெளிப் படுத்துகின்றது. சத்தியத்தையும் தர்மத்தையும் முன்னணியாகக் கொண்டு நம் பாரததேசம் உலகிலுள்ள எல்லாத் தேசங்களை யும் விட முன்னேறி நின்றது. ஆனால், மேனாட்டு நாகரிக வாசனை இந்தியாவில் வீசத்தொடங்கியது முதல் நம் சத்தியமும் தர்மமும் சிதைவுறத் தொடங்கின. ஆன் ஊன் உண்ணும் அறனிலோர் நம் பரதகண்டத்தில் கால்வைத்த வன்றே பாரத தேவியினுடைய இரண்டு கால்களாகிய சத்தியமும் தர்மமும் ஆடத் தொடங்கின. உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதன சத்தியமும் தர்மமுமே என்று முதலில் உலகிற்கு வெளிப் படுத்தியவர் நாமே; அவைகளை அநுபவத்திற்குக் கொண்டு வந்ததும் நாமே; அவைகளால் ஒப்புயர்வற்ற பேறு பெற்றதும் நாமே; இப்பொழுது அவைகள் அழியப் பார்த்துக் கொண் டிருப்பதும் நாமே. நம் இந்திய நாகரிகம் தவிர உலகத்தில் உண்டான எந்த நாகரிகமும் ஆன்ம ஞானத்தை அடிப்படை யாகக் கொண்டு கிளம்பவில்லை; சத்தியத்தையும் தர்மத்தையும் விதையும் நீருமெனக் கொண்டு உலகிற் செழித்து வளர வில்லை. இந்திய நாகரிகம் என்று தோன்றியது என எவனும் துணிந்து கூறமாட்டான்; என்று அழியும் எனத் தைரியமாகச் சொல்ல மாட்டான். உலகத்தில் இருந்த நாகரிகங்களெல்லாம் என்று தோன்றின என்றும் என்று அழிந்தன என்றும் கூறிவிடலாம். இந்திய நாகரிகம் அத்தகைமைத் தன்று; இதன்அடிமுடி இன்னதென எந்தச் சரித்திரக்காரனாலும் கூற முடியாது. இத்த கைய நாகரிகத்தை இழித்துக் கூறுகின்றீர்களே: உங்களுக்கு நியாயமா யிருக்கின்றதா? இந்திய மாதர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறுகின்றேன். சோப் பூசிக் கொள்வதாலும், கண்ட புருஷருடன் நாணமற்றுப் பேசுவதாலும், கடற்கரைக்குச் சென்று கணவனுடன் சம்பாஷித்தலினாலும் திரீகள் சுதந்தரம் பெற்றவர்களா வார்களா? சுதந்தரங்கள் இவைகள் தாமோ? இச்சுதந்தரங்களை நம் மாதர்கள் அடைந்துவிட்டால் இந்தியா முன்னடையும் என்பது உங்கள் கோரிக்கைபோலும். இப்பொழுது நம் இந்தியப் பெண்மணிகள் அநுபவிக்கும் சுதந்தரத்தைப்போல் உலகத்திலுள்ள எந்த இனத்து திரீகளும் அநுபவிப்பதில்லை யென்று நான் திண்ணமாய்க் கூறுவேன். மேனாட்டுப் பெண்களுடைய சுதந்தரம் மிருக சுதந்தரம்; நம் திரீகள் அநுபவித்துக் கொண்டிருப்பது மானிட சுதந்தரம். இதை திரீ சுதந்தரத்திற்குக் கிளர்ச்சிசெய்து கொண்டிருக்கும் ஒவ்வோர் இந்தியப் பெண்மணிக்கும் அறிவுறுத்த வேண்டு மெனத் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அடிமைகளன்றோ சுதந்தரத்தை விரும்புவார்கள்? நம் திரீகள் இப்பொழுது அடிமைகளாயிருக்கிறார்களோ? கற்பரசிகள், இல்லொளிகள் என்று இந்திய திரீகளை உலகம் புகழ்ந்து கூறுகின்றது. மேனாட்டு திரீகளிடத்தில் மேற் சொன்ன குணங்கள் மருந்துக்கும் காண்டல் அரிது. கணவனுடைய உயிரைக் கொடுக்க வேண்டுமென்று கூற்றுவன் பின் இரந்து சென்ற காரிகையை ஈன்றது இவ்விந்திய நாடு; அமர்க்களத்தில் சென்ற மகன் இறந்துபட்டானென்று கேள்வி யுண்டு புறத் திலோ உரத்திலோ என் மகன் காயங் கொண்டான் என்றேங் கினளாய்க் களத்திடை சென்று மகன் உரத்தே புண்ணுண்டு விண்ணுலகடைந்தான் என்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்ட அன்னையைப் பெற்றது இப்பாரததேசம்; மனமுறிந்து, சினங் கொண்டு, தன் மார்பினைக் கரத்தால் பிரித்தெறிந்து, ஒரு பெரும் புரத்தை எரித்த பத்தினிக்கடவுளைக் கொண்டதிந்நாடு; இத்தகைய நறுங் குணங்களையே அணியெனக் கொண்ட மின்னார் பலர் முற்காலத்து வாழ்ந்திருந்தனர். அப்பொழுது இந்திய தேசம் எவ்வளவு உன்னத நிலையி லிருந்தது? அவர்கள் எத்தகைய சுதந்தரத்தைப் பெற்றிருந்தார்கள்? கணவனே கண் கொண்ட தெய்வ மென்பதன்றி அவருக்கு வேறென்ன தெரியும்? அவர் சோப் பூசிக்கொண்டனரோ? கடற்கரையை மாலை வேளைகளில் நாடினரோ? கொண்டவனைவிட்டுக் கண்டவ னுடன் வேசாறினரோ? இவைகளுக் கெல்லாம் நீங்கள் என்னபதில் கூறுவீர்கள்? முற்காலத்திலிருந்த மாதர் அநாகரிகர் என்று எவரும் வாய்திறந்து கூறமாட்டார். இது சத்தியம். அவர் அநு சரித்துவந்த வழக்க ஒழுக்கங்களையே நாம் அநுசரித்தல் நியாய மன்றி, மிருக சுபாவமுடைய நாகரிகத்தை நாடுதல் நீதியாமோ? திரீகள் என்றும் கணவனுக்கு அடங்கினவர்களாகவே இருத்தல் வேண்டும். அதுவே அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் புகழைத் தருவது. கணவனைக் காண்டல் பேரின்பமென்றும், அவனுடனிருந்து பணிவிடை செய்தல் தன் பிறவிப் பயனென்றும், அவனுக்கு இன்பமூட்டுதலே தன் னுடைய முக்திநிலை என்றும் ஒவ்வொரு குல திரீயும் கருதல் வேண்டும் என்று பெரியோர் கூறுவர். கடைசியில் ஒன்றுகூறி முடிக்கிறேன். இதுகாறும் நான் கூறியவற்றால், திரீகள் கடற் கரைக்குப் போகக் கூடாதென்றும், அடுப்பங் கரையிலேயே அழுது இறக்கவேண்டுமென்றும், இன்னும் பிறமாதிரியாகவும் எண்ணக்கூடாது. திரீகள் தாங்கள் செய்யும் காரியங்களில் நாயகனுடைய உத்தரவையும் உதவியையும் பெற்றிருக்க வேண்டும் என்றே நான் கூறுகின்றேன். பெண்களைப் பற்றி ஒரு பெண் கூறலாமோ என்று நீங்கள் கேட்கலாம். இங்கொருவரு மில்லாமை யினாலும், தங்களிடத்தில் என் உள்ளத்தில் உள்ளதை ஒளியாமற் சொல்லலாம் என்ற ஒரு தைரியத்தாலும் என் மனதிற்குத் தோன்றியதைக் கூறினேன். குற்றமிருந்தால் மன்னிக்கவேண்டும். ம : இஃதேது பிரமாதமாய்ப் பேச ஆரம்பித்துவிட்டாயே! என்னால் மூச்சுவிட முடியவில்லையே! (பொறுத்து) நம்முடைய அபிப்பி ராய பேதங்களைப் பற்றிப் பின்னர்ப் பேசிக் கொள்ளலாம். நாழிகையாகின்றது. உன் வீணையை எடுத்துக்கொண்டு ஒரு பாட்டு பாடு; நல்ல பாட்டாக இருக்கவேண்டும். யோ : அதற்கென்ன? அப்படியே செய்கிறேன். (பாடுகிறாள்.) ம : பேஷ்; நிரம்ப நன்றாயிருக்கிறது. (அப்பு சாதிரி பிரவேசிக்கிறார்.) அ : இன்னுமா விழித்துக்கொண்டிருக்கிறீர்கள்? (மணிசாதிரியும் யோகாம்பாவும் ஒவ்வொரு புறமாய்ச் செல்கின்றனர்.) அடடா? நாம் ஏன் வந்தோம் இங்கே? என்னமோ அறியாதவர்கள்! - உம் - (செல்கிறார்.) ஏழாங்களம் இடம் : ஓர் அறை. காலம் : முன்மாலை. (மணிசாதிரி தாம் தவறாக வாதம் செய்த காரணமாகக் கோர்ட்டாரால் தம் வக்கீல் சன்னத்து பிடுங்கப்பட்டமை குறித்து விசனித்துக்கொண் டிருக்கிறார்.) மணிசாதிரி : (தமக்குள்) அந்தோ! என் எண்ணங்களெல்லாம் பாழாய்ப் போயினவே! உலகத்தில் உயர்வாய் வாழலாம் என்ற என் நோக்கம் இன்றே அழிந்து போயது. என்னைப்பற்றி நான் அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தமையாலேயே எனக்கு இக்கதி வாய்த்ததோ? இப்பொழுதே, கடவுள் ஒருவர் இருக்கி றார் என்ற ஞாபகம் எனக்கு வருகிறது. என் நண்பன் ஆராவமுத ஐயங்காரின் பேச்சையும் முன்னர்க் கேளாமற் போயினேன். (ஆராவமுத ஐயங்கார் பிரவேசிக்கிறார்.) ஆராவமுத ஐயங்கார் : மணி! இப்பொழுதே உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ம : (விசனத்துடன்) ஆ! நண்பனே! நண்பனே!! உன் புத்திமதியை முன்னர்க் கேளாமற் போயினேன். வக்கீல் பரீட்சைக்குப் படிக்கு முன்னர், என்னைத் தடுத்து நம் நாட்டுக் கைத் தொழிலையேனும் விவசாயத்தையேனும் விருத்தி செய்ய முயற்சி செய் என்று நீ கூறியது இப்பொழுதே என் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆ : சென்றது சென்று விட்டது. இனியேனும் நீ நன்மதிபெற்று வாழ்வாய் என்று நம்புகின்றேன். வக்கீல் உத்தியோகம் செய் வதற்கேனும், அரசாங்க சேவை செய்வதற்கேனும் நம்மவர் நம் பிள்ளைகளுக்கு இப்பொழுது கல்வி கற்பித்து வருகின்றனர். இதைப் போன்ற தவறு வேறொன்றுமில்லை. வக்கீல் உத்தி யோகம் செய்வதினாலும் அரசாங்கத் தொண்டு பூண்டொழுகு வதினாலும் நம் நாட்டிற்கு என்ன நன்மை உண்டாகப் போகிறது? நாம் படிப்பது உலகத்திற்குப் பயன்பட வேண்டும். அஃதன்றி, பணம் சம்பாதித்துச் சுகமாய் வாழவேண்டுமென்ற நோக்கத்துடன் படிப்பதைப் போன்ற பேதைமை வேறொன்று மில்லை. நம் நாட்டுக் கைத்தொழில்கள் இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றன என்பது உனக்குத் தெரியுமோ? நம் விவசாயிகளின் நிலைமையை நீ அறிவையோ? நமக்கு வேண்டிய எல்லாப் பொருள்களுக்கும் இப்பொழுது நாம் அந்நிய நாடுகளையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இதனால் நம் நாட்டுப் பணம் அந்நிய நாடுகளுக்குச் செல்வது எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தால், சிறிய குழந்தையும் கண்ணீர் விடும் என்பதிற் சந்தேகமில்லை. இப்பொழுது நம் நாட்டில் சுமார் 420 லக்ஷம் ஜனங்கள் பசிப்பிணியால் வருந்திக்கொண் டிருக்கிறார்கள். இவர்களுடைய துன்பத்தைப் போக்குவது நம் பெருங்கடமை யன்றோ? இன்னும், கல்வியில்லாமல் நம் சகோதரர்கள் கண் மூடிகளாய் இருப்பதை நீ அறிவையோ? அவர்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்த வேண்டாவோ? இவைகளை யெல்லாம் மனதில் கொண்டே நான் உன்னை வக்கீல் பரீட்சைக்குப் படிக்கவேண்டாமென்று தடுத்தேன். என் தடையை மீறி நீ வக்கீல் பரீட்சைக்குப் படித்தாய். இப்பொழுது அதனால் நீ அடைந்த பயனென்னை? பணச் செலவும் துக்கமுமே. இனியேனும் நீ தேச நன்மையை நாடுவையோ? ம : நண்பனே! உணர்ந்தேன் என் பிழையை. இனி, என் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேசத்திற்கே அர்ப்பணஞ் செய்வல். என் தாய் நாடு முன்னேற்ற மடைவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவைகளையெல்லாம் செய்வேன்; உத்தியோகத்தை ஒரு பொழுதும் நாடேன். இதனை நீ உறுதியாய் நம்புக. எனக்கு நல்லறிவூட்டிய உனக்கு நான் என்றுங் கடமைப்பட் டுள்ளேன். ஆ : இப்பொழுதேனும் உன்பிழையை உணர்ந்து கொண்டதற்கு நான் பெரிதும் மகிழ்கின்றேன். வா, வெளியிற் செல்லலாம். ம : (தமக்குள்) நான் வக்கீலா யிருந்ததை நினைத்துக் கொண்டால் எனக்கே நகைப்பு உண்டாகின்றது. அதையும் பெருங் கௌரவ மாக நினைத்துப் பெருமிதங் கொண்டேன். ஆ! நல்ல உத்தியோகம்! (செல்கின்றனர்.)  உலகம் பலவிதம் பிரசுராலயத்தின் வார்த்தை தமிழில் ஓரங்க நாடகங்கள் மிகக்குறைவு என்பதை நாம் சொல்லத் தேவை இல்லை. சமீப காலத்தில்தான் சில நாடகங்கள் பத்திரிகைகளில் வெளியாவதைக் கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டி யிருக்கிறது. ஆனால் எங்கள் ஆசிரியர், இந்த குறையைப் பல ஆண்டு களுக்கு முன்னரே உணர்ந்து சில சில சஞ்சிகைகளில் அவ்வப் பொழுது சில நாடகங்கள் எழுதிவந்தார். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து, இங்குப் புத்தக வடிவாகத் தந்திருக்கிறோம். இவற்றுள் இரண்டு நாடகங்களைத் தவிர மற்றவை, இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் (1939-1945) நடந்து முடிந்த காலத்திலும் எழுதப்பட்டவை என்பது இந்நாடகங்களைப் படிக்கும்போது வாசகர்களுக்கு நன்கு புலனாகும். உலகம் பலவிதம் என்ற நாடகமும் தேர்தலுக்கு முந்தி என்ற நாடகமும் சமீபத்தில் எழுதப்பட்டவை. இதில் வந்துள்ள நாடகங்கள் பெரும்பாலன வருணன் என்ற புனை பெயரில் வெளியானவை. பள்ளிக்கூடங்களிலும் சங்கங்களிலும் ஆண்டு விழா முதலியன நடைபெறும் பொழுது சுருங்கிய காலத்தில் நடிப்பதற்கு இந்நாடகங் கள் பயன்பெறுமென நம்புகிறோம். பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் உலகம் பலவிதம் முதற் களம் இடம் : ட்வெண்ட்டியத் செஞ்சரி கிளப் (Twentieth Century Club- 20வது நூற்றாண்டு சங்கம்) கட்டடத்தின் முன் ஹால். காலம் : மாலை சுமார் 6 மணி (ஒரு பக்கம் கஜேந்திரன், துரைசிங்கம், ராஜேந்திரன், கதிர்வேலு ஆகிய நால்வரும் ஒரு வட்டமேஜையைச் சுற்றி உட்கார்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் இரண்டு பேர் மேஜைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம், உயரமான ஒரு சாய்வு மேஜையின் மீது சில பத்திரிகைகள் பரப்பப் பட்டிருக்கின்றன. கிளப்பின் சேவகனான ராஜாபாதர் என்னும் சிறுவன் அங்குமிங்குமாகப் போய்க்கொண்டிருக்கிறான்) கஜேந்திரன் : யாருது பிரதர் கைவரிசை? (ராஜேந்திரனைப் பார்த்து) என்ன சோழரே? உங்களுடையது தானே? சொல்லுங்களேன் துருப்பை? ராஜேந்திரன் : இருங்க ஐயா யானையாரே! அவசரப்பட்றீங்களே. கஜே : நான் யானைதான். ஆனால் நான் கூப்பிட்ட உடனே கடவுள் ஓடிவந்தாரே! ராஜே : ஆமாம்; ஆபத்திலே மாட்டிக்கிண்டு கத்தினாரு; கத்தலைப் பொறுக்கமுடியாமே கடவுள் ஓடி வந்தாரு! கஜே : அப்படியாவது ஓடிவந்தாரா இல்லையா? நீங்க கூப்பிட்டா வருவாரா? ராஜே : நான் கூப்பிடவும் இல்லை ; அவர் வரவும் வேண்டாம். (துரைசிங்கத்தைப் பார்த்து) என்ன பிரதர்! கடவுளை, நம்ப கிளப் பாய் (Club boy) ராஜாபாதர்னு நினைச்சு பேசறாரு இவர். கதிர்வேலு : ஏன் ஐயா! கிளப்புக்கு எதுக்காக வந்தீங்க ? சீட்டா டவா? வம்பு பேசவா? கஜே : கிளப்புன்னா என்ன ஐயா! வம்பு பேசற இடந்தானே? கதிர் : அப்படியானா நான் எழுந்து போறேன். கஜே : இருங்க பிரதர். சும்மா பொழுது கழிக்கத்தானே இங்கே நிதம் வரோம்? வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க ? துரைசிங்கம் : வீட்டுக்குப் போய் கடவுளே கும்பிடு வாரு! உங்களுக் கென்ன அதைப்பற்றி? கஜே : கடவுளை கும்பிட் ராரு! நல்லா சொன் னீங்க! ராஜே : (துரைசிங்கத்தைப் பார்த்து) நம்ப பிரதர் பேரு தான் கதிர் வேலு; ஆனால் இவருக்கும் முருகக் கடவுளுக்கும் தொலை தூரம்! துரை : வீட்டுக்குப் போய் கடவுளைக் கும்பிட லேன்னா அம் மாளை கும்பிட்ராரு! கதிர் : சட் நான்சென் ! ஐ வில் கெட் அப் (I will get up - நான் எழுந்து விடுகிறேன்) ( நாற்காலியைப் பின்பக்கமாகத் தள்ளி விட்டு எழுந்து நிற்கிறார்) கஜே : அண்ட் கோ (and go) பண்ணிவிடாதீங்கோ. (போய்விடா தீர்கள்) (அவர் கையைப் பிடித்திழுத்து) உட்காருங்கோ பிரதர், உட்காருங்கோ. இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா? துரை : தமாஷூக்குத்தானே சொன்னேன் பிரதர் நானு. இதுக்குப் போய் இப்படி கோபம் பண்ணிக்கிறீங்களே? கஜே : சூடா ஒரு கப் காபி சாப்பிட்டாரானால் பிரதர் (Brother- rnfhju®) கோபமெல்லாம் பறந்தோடிப் பூடும். ராஜே : அதுதான் ரைட். (Right - சரி) ஆனால் வெறுங்காபி மட்டும் கொடுக்ககூடாது பிரதருக்கு. அடே பாய் (Boy - பையன்) (ராஜா பாதர் ஓடிவருகிறான்.) காண்ட்டீன்லே இன்னிக்கின்னாடா பெஷல்? ராஜா : தெரியாதுங்கோ. மேஜைப்பந்து ஆடிக்கொண்டிருக்கிற ஒருவர் : (ராஜா பாதர் பக்கம் பார்த்து) பாய் ! ஒரு காலணாவுக்குப் பொடி வாங்கிக் கிண்டு வாடா. ராஜா : (மேஜைப் பக்கம் வேகமாகச் சென்று) - என்னா பொடீங்க? ஒருவர் : செங்கல் பொடி! போடா இடியட்! (Idiot - முட்டாள்.) மற்றொருவர் : அடே! எனக்கு ஒரு சோடா வாங்கிக்கிண்டு வாடா ராஜா : என்னா சோடாங்க? மற்றொருவர் : போடா பூல்! (Fool - முட்டாள்) ராஜே : (கையில் வைத்திருந்த சீட்டுக்களை ஆத்திரத்துடன் போட்டுவிட்டு) அடே! நான் என்னா கேட்டேன்? ராஜா : (சீட்டாட்ட மேஜைப் பக்கம் ஓடிவந்து) பெஷல் கேட் டீங்கோ ஸார்! ராஜே : கேட்டுக்கிண்டு வந்தாயா? ராஜா : இல்லை ஸார்? ராஜே : ஏண்டா? ராஜா : அதுக்குள்ளே அந்த ஐயா பொடி வாங்கி வரச் சொல்றாரே. மேஜைப்பந்து ஒருவர் : அடே ! பொடி வாங்கிக்கிண்டு வந்தாயா? மற்றொருவர் : அடே! சோடா வாங்கி வந்தாச்சா? நாக்கு உலர்ந்து போவுதேடா! ஒருவர் : எனக்கு மூக்கு அடைக்குதேடா! ஜல்தி போ. துரை : எங்களுக்கு வயிறு பசிக்குதேடா! ராஜே : (கதிர்வேலுவைச் சுட்டிக் காட்டி) இந்த ஐயாவுக்கு கோபம் பற்றி எரியுதேடா! ராஜா : (உட்கார்ந்து அழ ஆரம்பித்து விடுகிறான்.) கதிர் : ஏன் அழறான் இவன்? ராஜே : ஏண்டா தலையை குனிய வைச்சுக்கிண்டு அழறே? ராஜா : (தேம்பியவண்ணம்) ஒவ்வொத்தரும் ஒவ்வொரு வேலையைச் சொன்னா, நான் எந்த வேலையைத்தான் செய்யறது? கதிர் : முருகா! முருகா! (எல்லோரும் சிரிக்கிறார்கள்) பிரதர்! என் கோபமெல்லாம் தணிஞ்சு போச்சு. எனக்கு காபியும் வேண் டாம். பெஷலும் வேண்டாம். மேஜைப்பந்து ஒருவர் : அப்பா! எனக்குப் பொடியும் வேண்டாம்; கிடியும் வேண்டாம். நீ அழாதே. மற்றொருவர் : தம்பீ! எனக்கு சோடாவும் வேண்டாம், கீடாவும் வேண்டாம். நீ அழாதே. (எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கையில் கிளப்பின் காரியதரிசி கருணாகரன் பிரவேசிக்கிறார். இவர் கதர் உடையுடனும் காந்தி குல்லாயுடனும் இருக்கிறார்) துரை : வாங்க, கருணாகரக் கடவுளே! கருணாகரன் : எல்லோருக்கும் நமதே. துரை-கதிர் : வணக்கம் ; வணக்கம். கஜே : (ராஜாபாதரைச் சுட்டிகாட்டி) இந்த அழுகுணிச் சித்தரை எப்படி பிரதர், கிளப் பாயாக நியமனம் பண்ணீங்க? கரு : ஏன்? என்ன சமாசாரம்? (ராஜாபாதரைப் பார்த்து) ஏண்டா அழரே? ராஜா : என்னை அழப்படுத்தறாங்க ஸார், இவங்கள்ளாம் சேர்ந்து. கஜே : (கோபத்துடன்) டாம் இடியட் (Damn Idiot) ராஜா : வாய்க்கு வந்தபடி பேசறாங்க ஸார், இவங்கள்ளாம். கரு : (எல்லோரையும் பார்த்து) சின்னப் பையனோடு என்னத்துக்கு வம்பு பிரதர்? வேலையைச் சொன்னா செய்துவிட்டுப் போறான். கஜே : சொன்ன வேலையைச் செய்தானா, கேளுங்க? ராஜா : ஒவ்வொத்தரும் ஒவ்வொரு வேலையைச் சொன்னா நான் எந்த வேலையைச் செய்யறதுங்கோ? (மறுபடியும் அழத்தொடங்குகிறான்) கரு : அழாதே. போய் குழாயண்டை முகத்தைக் கழுவிக்கொண்டு உன் வேலையைப் பார். (அப்படியே ராஜாபாதர் போய் விடு கிறான்) ராஜே : (கருணாகரனைப் பார்த்து) ஏன் பிரதர், உங்களுக்கு யாரு கருணாகரன் என்று பேர் வைச்சது? கரு : எதற்காக இந்த கேள்வி? ராஜே : கேவலம் ஒரு பியூன் (Peon) கிட்ட இவ்வளவு கருணை காட் றீங்களே, அதுக்காகத்தான் கேட்டேன். கரு : மனிதராய்ப் பிறந்தவர்கள், எல்லா ஜீவராசிகளிடத்திலுந்தான் கருணை காட்ட வேண்டும். கஜே : (ராஜேந்திரனைப் பார்த்து) ஏன் பிரதர் அவரோடு வீண் பேச்சு? அவர் காரியதரிசி கருணாகரனாகப் பேசல்லே, காந்தி கருணாகரனாகப் பேசறாரு. கரு : (லேசாகச் சிரித்துக்கொண்டு) நான் வெறுங் கருணாகரனாகத் தான் பேசுகிறேன். ஆன்றோர்கள் அருளியிருப்பதை எடுத்துக் கூறினேனே தவிர வேறொன்றுமில்லை. (உள்பக்கம் போய்விடுகிறார்) கஜே : எவ்வளவு செந்தமிழில் பேசுகிறார், பார்த்தீங்களா? (துரை சிங்கத்தையும் கதிர்வேலுவையும் பார்த்து) வணக்கம் வணக்கம் என்று சொன்னால் மட்டும் தமிழ்ப் பண்பு வந்துவிடுமா என்ன? கதிர் : அடே ! பண்பு கிண்பு என்றெல்லாம் தெரியுதே பிரதருக்கு! (கஜேந்திரனையும் ராஜேந்திரனையும் பார்த்து) நீங்க ரெண்டு பேரும் முதல்லே உங்க பேரை மாற்றி வைச்சுக்கொள்ளுங்கள். கஜே -ராஜே : அதெப்படி பிரதர்? கதிர் : தமிழ்ப் பேரா வைச்சுக் கொள்ளுங்கள் பிரதர். கஜே : அதனாலே என்ன நன்மை? கதிர் : நன்மையா? நாம் எந்த மொழியைப் பேசுகிறோமோ அந்த மொழியிலேதானே நம்மள் பெயரும் இருக்க வேண்டும்? கஜே : மொழியோ, முழியோ, பெரியவங்க என்ன பேரை வைச்சு கூப்பிட்டாங்களோ அந்தப் பேரோடு இருக்கிறதுதான் நியாயம் என்று எனக்குத் தோணுது. ராஜே : எனக்கும் அப்படித்தான் தோணுது. கதிர் : பெரியவங்க குடுமி வைச்சுண்டிருந்தாங்க. அப்படியே நீங்களும் குடுமியை வைச்சுக்கிறதுதானே? ஏன் கிராப் பண்ணிண்டிங்க? துரை : ஏன் பிரதர் வீண் பேச்சு? ஆட்டமாவது ஆடணும்; வீட்டுக் காவது போகணும். கதிர் : அதுதான் சரி; நான் முந்தியே சொன்னேனில்லையா? ராஜே : இருங்க பிரதர். எனக்குக்கூட வயித்தே கிள்ளுது. கஜே : ஆமாம்; (கதிர்வேலுவைப்பார்த்து) பிரதருக்கு காபி கொடுக் கிறோமின்னு சொன்னோம். அதுவும் கொடுக்கல்லே. அடே பாய்! (ராஜாபாதர் ஓடிவருகிறான்) காண்ட்டீன்லே போய் இன்னிக்கி என்ன பெஷல்னு கேட்டுக்கிண்டு வா. ஜல்தி வரணும். (ராஜாபாதர் போகிறான்) துரை : அங்கே என்ன இருக்கும் பிரதர்? ரவா தோசைதான் இருக்கும் கஜே : பார்ப்போமே, அதையுந்தான். ராஜா: (வேகமாக வந்து) ரவா தோசைங்க. துரை : நான் அப்பவே சொல்லல்லே! கஜே : நான்சென். இந்த ஐயருக்கு வேறெ ஒன்றும் தெரியாதா? அடே பாய்! இந்தக்காண்டீன் ஐயரை இப்படி இட்டுக்கொண்டு வா. (ராஜாபாதர் வேகமாகப் போகிறான். சிறிது நேரங்கழித்து ஐயர், நீளமான ஒரு கணக்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ராஜாபாதருடன் வருகிறார்) என்ன ஐயர்! என்ன பெஷல் இன்னிக்கு? ஐயர் : ரவா தோசை. கஜே : வேறே ஒண்ணும் தெரியாதா உங்களுக்கு? ஐயர் : (பல்லை இளித்துக்கொண்டு) எல்லாம் தெரியும். ராஜே : பின்னே ஏன் நிதம் இதையே போட்றீங்க? ஐயர் : இல்லையே. ரெண்டு நாளா தோசையே வேண்டாமின்னு செக்ரெட்டரி (Secretary - காரியதரிசி) சொன்னாரு. அதனாலே நேத்தும் முந்தாநாளும் பெஷல் எதுவுமே இல்லீங்களே. கஜே : நல்ல செக்ரெட்டரி! நல்ல காண்டீன் ஐயர்! துரை : இல்லை பிரதர்; இந்த விஷயத்தைப் பற்றி எக்ஸிகியூட்டிவ் கமிட்டியிலே (Executive Committee - நிருவாக சபை) பேசணும். ராஜே : ஆமாம் பிரதர்! இந்த செக்ரெட்டரி, காந்தி குல்லாயே போட்டுக்கிண்டு ரொம்ப அட்டகாசம் பண்றான். எதுக் கெடுத்தாலும் பணம் இல்லே, பணம் இல்லேன்றான். துரை : மிஞ்சிக் கேட்டால் மெம்பருங்க சரியா ஸப்கிரிப்ஷன் (Subscription - சந்தா) கொடுக்கல்லேன்னு சொல்லி புட்ரான். கஜே : நான் பேசறேன் இதைப் பற்றி அடுத்த எக்ஸிகியூட்டிவ் கமிட்டி மீட்டிங்கிலே. (அப்பொழுது ஐயர், தான் கொண்டு வந்திருக்கும் நீளமான கணக்குப் புத்தகத்தை நீட்டுகிறார்.) என்ன ஐயர் இது? ஐயர் : பெஷல் கணக்குப் புத்தகங்க. கஜே : அப்படின்னா? ஐயர் : ஆறு மாதத்திற்கு மேலே காண்டீன் பில் கொடுக்காத வங்களே யெல்லாம், தனியாக ஒரு கணக்குப் புத்தகத்திலே எழுதிவைச்சிருக் கேனுங்க. கஜே : நீங்களா எழுதிவைச்சிருக்கிங்களா, அல்லது செக்ரெட்டரி உத்தரவா? ஐயர் : அவர் கேட்டாரானால் நான் பதில் சொல்லணுங்களே. கஜே : என் பில் (Bill) எவ்வளவு? ஐயர் : அதிகமில்லீங்க. 63 ரூபா, 9 அனா, 6 பைசா. அவ்வளவுதான். கஜே : இவ்வளவு எங்கே ஐயர் நான் சாப்பிட்டேன்? ஐயர் : (பல்லை இளிக்கிறார்) கஜே : வேறே யாருக்காவது கொடுத்துவிட்டு என் கணக்கிலே எழுதிவைச்சிருக்கிங்களா? ஐயர் : உங்க பேர் கொண்டவங்க கிளப்பிலே வேறொருத்தரும் இல்லையே! கஜே : (மேஜையைச் சுற்றியுள்ள மூவரையும் சுட்டிக்காட்டி) இந்த மூணுபேருடையதும் பில் பாக்கி எவ்வளவு? ராஜே-துரை : பிரதர்! உங்க பாக்கியைப் பற்றி நீங்க பேசுங்க. மற்ற வங்க விஷயத்திலே ஏன் தலையிடறீங்க? ஐயர் : (பல்லிளித்துக்கொண்டே) ஆமாம்; ஆமாம். கஜே : (ஆத்திரத்துடன்) டாமிட் (Damn it) ராஜே- துரை : ரைட் ஐயர். (Right) (இந்தச் சமயத்தில், காரியதரிசி அறையிலிருந்து கூப்பிடும் மணிச் சப்தம் கேட்கிறது. ராஜாபாதர் வேகமாகப்போகிறான்) கதிர் : ஏன் ஐயர் நிக்கிறிங்க? ஐயர் : ஐயா கணக்குப் புத்தகத்தையும் கொடுக்கலே, பாக்கிக்கு பதிலும் சொல்லல்லையே. கஜே : சட் நான்சென்! உனக்கென்ன பதில் சொல்றது நானு? ஐயர் : அப்படியானா கணக்குப் புத்தகத்தைக் கொடு. கஜே : ஏய் கொடு, எடு என்று பேசாதே; மரியாதையாகப் பேசு. இல்லாபுட்டா பல்லெல்லாம் உதிர்ந்து பூடும். ஐயர் : பேச்சுக்குப் பேச்சு; அப்படியே பல்லுக்குப் பல்லு. அவ்வளவு தானே. (இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜாபாதர், சிவப்பு அட்டைபோட்ட ஒரு கணக்குப் புத்தகத்தையும், பச்சை அட்டைபோட்ட ஒரு கணக்குப் புத்தகத்தையும் கொண்டுவந்து, முன்னதை கஜேந்திரன் கையிலும் பின்னதை துரைசிங்கம் கையிலும் கொடுக்கிறான்) கஜே : அதென்ன புதகம்? இதென்ன புதகம்? ராஜா : (கஜேந்திரன் கையிலிருப்பதைக்காட்டி) இது ஒரு வருஷத் துக்கு மேலே சந்தா பாக்கி இருக்கிறவங்க புதகம். (துரை சிங்கம் கையிலிருப்பதைக் காட்டி) அது போன மாசத்து சந்தா பாக்கி இருக்கிறவங்க புதகம். துரை : ஓ! என்ன பிரதர்! கிளப்புக்கு சந்தா கூட சரியா கொடுக்கிற தில்லையா? ராஜா : ஆமாம்: பதினாலு மாசம் சந்தா பாக்கின்னு சொன்னாரு சக்ரவர்த்தி ஐயா. கதிர் : அது யாரு சக்ரவர்த்தி ஐயா? ஐயர் : செக்ரெட்டரி என்ற வார்த்தை, சக்ரவர்த்தின்னு இவன் வாயிலே வரது. (எல்லோரும் சிரிக்கிறார்கள். இந்தச் சமயத்தில் கஜேந்திரன் வீட்டி லிருந்து அவனுடைய எட்டு வயதுப் பையன் சுசீந்திரன் வேகமாக வருகிறான்) சுசீந்திரன் : நாயனா! அம்மா உன்னை ஜல்தி இட்டுக் கொண்டு வரச் சொன்னாங்க. கஜே : ஏன்? என்ன அவசரம்? வீடு பற்றி எரியுதா? சுசீ : இல்லை நாயனா! பால்காரன் வந்து ஒரே கூச்சல் போட்றான். வாசற்படியிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறான். கஜே : பைத்தியம் பிடிச்சுப் போச்சா அவனுக்கு? சுசீ : இல்லை நாயனா! எட்டுமாசத்துக்கு பால் பாக்கி கொடுக் கணுமாம். ஐயர் : (லேசாகச் சிரித்துக் கொண்டு) நமக்கு ஆறு மாசத்துக்குத்தான் பாக்கி! கஜே : ஐயர்! ஜாக்கிரதை. ஐயர் : ஆமாம். இனி ஜாக்கிரதையாகத்தான் இருக்கணுங்க. கேட்ட போதெல்லாம் பலகாரம், காபி கொடுத்து வரமாட்டேனுங்க. (எல்லோரும் சிரிக்கிறார்கள். கஜேந்திரன் கோபங்கொண்டு, தன் கையிலிருக்கும் கணக்குப் புத்தகத்தை சுசீந்திரன் மீது வீசி எறிய, அவன் அழுகிறான்.) துரை : அவனை என்னத்துக்கு பிரதர் அடிக்கிறீங்க? கதிர் : நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க பிரதர்! நீங்க ரேசு (Race)¡F¥ போகிறதே குறைச்சுக்கிணங்க. ஐயர் : நிறுத்திக்கிணங்க. கஜே : (ஆத்திரத்துடன்) நீங்கள்ளாம் யாரு எனக்கு புத்திசொல்ற துக்கு? ஐயர் : நான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலேதான் படிச்சேனுங்க. பாடம்பண்ண செய்யுளெல்லாம் மறந்து போச்சுங்க. ஒரே ஒரு செய்யுள் மட்டுந்தான் நினைவிலே இருக்குது. ராஜா : அதென்ன செய்யுள்? ஒப்பி பார்க்கலாம். ஐயர் : ஆன முதலில் அதிகஞ் செலவானால் மானமழிந்து மதி கெட்டு ................ கஜே : ஐயர்! நீ ரொம்ப மிஞ்சிப் பேசறே. (எழுந்து போகிறான்) ஐயர் : மிச்சம் செய்யுளையும் கேட்டுவிட்டுப் போங்க. ................ போன திசை கஜே : சட் நான்சென். (காண்டீன் கணக்குப் புத்தகத்தோடு போகிறான்) ஐயர் : (பின்னாலே போய்) கணக்குப் புத்தகத்தைக் கொடுங்க. கஜே : முடியாது, போ. ஐயர் : அப்படியானால் நானும் கூடவே வீட்டுக்கு வந்து பால்கார னுடன் உட்கார்ந்துகொள்கிறேன். துரை - ராஜே-கதிர் : (மூவரும் சிரிக்கிறார்கள்) (கஜேந்திரன், கணக்குப் புத்தகத்தை ஐயரை நோக்கி எறிந்து விட்டு வேகமாகப் போகிறான். கூடவே அவன் மகன் சுசீந்திரனும் அழுது கொண்டே போகிறான்.) ராஜே : வாங்க பிரதர். நாமும் போகலாம். ஐயர் : இருங்க. பூரா செய்யுளையும் கேட்டு விட்டுப் போங்களேன். போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய், ஏழ்பிறப்பும் தீயனாய், நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. ராஜே : பேஷ் ஐயர். (போகிறான். கூடவே துரைசிங்கமும் கதிர் வேலுவும் போகிறார்கள்.) ராஜா : ஐயர்! ரவா தோசை! ஐயர் : வாடா! உனக்கு இல்லாமலா? (இருவரும் காண்ட்டீன்பக்கம் போகிறார்கள்) இரண்டாவது களம் இடம் : மாதர் முன்னேற்ற சங்கக் கட்டடத்தின் முன் ஹால். காலம் : மாலை சுமார் ஐந்து மணி (தனகோடி அம்மாளும் அங்கயற்கண்ணி அம்மாளும் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அருகில் நின்றவண்ணம் கோகிலாவும் விமலாவும் அவர்கள் சம்பாஷணையை ரசித்துக் கொண்டும்,இடையிடையே சம்பாஷ ணையில் கலந்துக் கொண்டும் குதூகலமாகக் காணப்படு கிறார்கள். ஆங்காங்கே சில திரீகள் சிரித்துப் பேசிக் கொண்டும் விளை யாடிக் கொண்டுமிருக்கிறார்கள். சங்கத்தின் வேலைகளைப் பார்ப் பதற்கென்றுள்ள சிவபாக்கியம், எட்டினாற் போலிருந்து, எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.) தனகோடி : என்ன அங்கு! நம்ம பெண்கள் சமூகம் இன்னும் ரொம்ப தூரம் முன்னேறணும். அங்கயற்கண்ணி : ஆமாம். நாம் இன்னும் கி.மு. விலேயே இருக்கி றோமே தவிர ».ã.க்F வரவேயில்லையே? விமலா : கி.மு. என்றால் என்ன? கி.பி. என்றால் என்ன? கோகிலா : எனக்குக்கூட தெரியல்லே அக்கா! தன : சங்கத்திலே இப்போழுதுதானே சேர்ந்திருக்கிறீர்கள். கொஞ்சம் பழகினால் தெரிஞ்சு போகும். அங் : கி.மு. என்றால் கிறிது பிறப்பதற்கு முந்தி; கி.பி. என்றால் கிறிது பிறந்த தற்குப் பிந்தி. தன : அதாவது கி.மு. என்றால் பழைசு; கி.பி என்றால் புதுசு. விம : ஓ ஓ! எங்கள் வீட்டிலே அவர், அவருடைய தாயா ரைப் பார்த்து ரொம்பக் கர்நாடகம் என்று கேலி பண்ணுவாரு. அதனாலே, பழைய மோதரெல் லாம் கர்நாடகம் என்று நினைச்சிருக்கேன். அங்:அதெல்லாம் ஆம்பளை கள் பேசற பாஷை. கோகி : எங்க வீட்டிலே கூட எங்க மாமியாருக்கு, நான் இப்படி சங்கத்துக்கு வரு வது கொஞ்சங்கூட பிடிக் கிறதில்லை. ஆனால் அதையெல்லாம்............ தன : பொருட்படுத்தறதேயில்லை ........................ அதுதான் ரைட். அங் : மாமியார் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் அடிமைப் புத்திதான் வரும். தன : அடிமைப் புத்தி மட்டுமா? அடிமைகளாகவேதான் ஆயுசு பூரா இருக்கணும். விம : மாமியார் பேச்சைக் கேட்காது போனாலும், கட்டின புருஷன் பேச்சையாவது கேட்கணமில்லையா அக்கா? அங் : எதுக்கு கேட்கணமோ அதுக்குத்தான் கேட்கணும். எல்லாத் துக்குமே கேட்டுக்கொண்டிருந்தால் ஆடு மாதிரி அவங்க பின்னாலேயே போய்க்கொண்டிருக்க வேண்டியது தான். தன : ஆமாம்; இந்த ஆம்பளைகளெல்லாம் சுயநலக்காரப் பேர் வழிகள். கெஞ்சினால் மிஞ்சுவாங்க; மிஞ்சினால் கெஞ்சுவாங்க. விம : ஆமாம் அக்கா! நீங்க சொல்றது ரொம்ப சரி. இப்போ இப்போதான் தெரியுது எனக்கு. தன: அதனாலே எப்பொழுதுமே நாம் மிஞ்சறாப்போலவே நடந்து கொள்ளணும். அங் : நடந்துகொள்ளணுமின்னு ஏன் சொல்றே? நடக்கணுமின்னு சொல்லு. தன : (அங்கயற்கண்ணியைச் சுட்டிக்காட்டி) இந்த அம்மாள், திரீ சுதந்திரத்திற்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணம் செய்திருக் காங்க. இவங்க தான் இந்தச் சங்கத்தை ஆரம்பிச்ச வங்க. அங் : ஆரம்பத்திலே இதுக்கு எவ்வளவு எதிர்ப்பு? எத்தனை பேர் சாபங் கொடுத்தாங்க? ஆம்பளைகள் மட்டுமா? பொம்பளைகள் கூட! தன : ஆமாம்; பெண் சமூகத்திற்குப் பெண்கள்தான் விரோதிகள். அங் : இதோ பார், தனம்! இந்த தாலி கட்டிக்கிற பிசினஸே (Business) எனக்குப் பிடிக்கிறதில்லே. விம : (சிறிது துணுக்குற்று) அதென்ன அப்படிச் சொல்லிப் புட்டீங்க? அங் : ஆமாம்; உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? ஆம்பளைகள் செய்து வைத்த யுக்தி இது? விம : அப்படியானால் காலந் தொட்டு இதை திரீகள் ஏன் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்? அங் : அறியாமைதான் காரணம். இந்த அறியாமை, அடிமை புத்தி, மூடப் பழக்க வழக்கங்கள், இவைகளையெல்லாம் ஒழிக்கத் தான் இந்தச் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். தன : தாலி வேண்டாமென்று சொல்கிற அளவுக்கு நான் போகத் தயாராயில்லை. அங் : பார்; உனக்கே அடிமைப் புத்தி இவ்வளவு தடித்துப் போயிருக்கிறதே? (விமலாவையும் கோகிலாவையும் சுட்டிக் காட்டி) இவர்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்? விம : (தனகோடியிடம்) நான் வீட்டிக்குப் போறேன் அக்கா! அங் : என்னம்மா இவ்வளவு அவசரம்? மணி இன்னும் ஆறு கூட அடிக்கல்லே? கோகி : ஆமாம்; நான் கூடப் போகணும். ஆபீசிலிருந்து வந்திருப் பாங்க. குழந்தை வேறே அழும். அங் : ஆபீசிலிருந்து வந்தால் என்ன? குழந்தை அழுதால், பெத்த தகப்பன் ஏதாவது ஆகாரம் கொடுத்து தூங்க வைக்கிறான். விம : சரி; வா கோகிலா! நாளைக்கு சாயங்காலம் வரலாம். (இருவரும் போகிறார்கள்) அங் : இவர்களையெல்லாம் மெம்பர்களாகச் சேர்த்தால் சங்கம் உருப்படியானாப் போலத்தான். தன : பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்றது லேசா? அங் : இதோ பார், தனம்? ஆம்பளைகளுக்கு மட்டும் எத்தனை சங்கங்கள், எத்தனை ஆட்டபாட்டங்கள்? பெண்களுக்கு அத்தி பூத்தாற் போல இந்த ஒரு சங்கம் தானே இருக்கிறது? தன : ஆமாம்; பேட்டைக்கு ஒரு மாதர் முன்னேற்ற சங்கமாவது இருக்கணும். அங் : எனக்கொரு யோசனை? ஆண்களுக்கு வேறே சங்கம், பெண் களுக்கு வேறே சங்கம் என்று ஏன் தனித்தனியா இருக்கணும்? ஒரே சங்கமா இருந்தால் என்ன? தன : அதனால் என்ன அனுகூலம்? அங் : ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாய்ப் பழக வழி ஏற்படுமல்லவா? தன : ஆமாம்; இந்த சரிநிகர் சமானமாய் என்பதை ரொம்ப இடங்க ளிலே நான் கேட்டிருக்கிறேன். (பொறுத்து) ஆமாம்; இந்த மாதிரி ஒரே சங்கம் அமைப்பதற்கு ஆண் பிள்ளைகள் ஒப்புக் கொள்வார்களா? அங் : ஏன் ஓப்புக்கொள்ளாமல்? நன்றாக ஒப்புக் கொள்வார்கள். தன : ஆண்பிள்ளைகள் ஒப்புக்கொண்டாலும் பெண்பிள்ளை கள் நிச்சயமாக ஒப்பு கொள்ளமாட்டார்கள். அங் : பார்க்கலாம். இதைப்பற்றியும், தாலி விஷயத்தைப் பற்றியும் நம்மள் அடுத்த மகாநாட்டில் தீர்மானங்கள் கொண்டு வரலா மின்னு நினைக்கிறேன். தன : செய். வா, அந்தப் பக்கம் போய் அவர்களெல்லாம் என்ன பேசுகிறார்கள், கேட்போம். (இருவரும் செல்கிறார்கள்) மூன்றாவது களம் இடம் : கஜேந்திரன் வீடு. காலம் : முன்னிரவு. (கஜேந்திரனின் மனைவி ஒருபுறம் உட்கார்ந்து அழுதுகொண்டிருக் கிறாள். தெரு வாசற்படியில் உட்கார்ந்திருந்த பால்காரன், கஜேந்திரன் வரவைக் கண்டதும் எழுந்து நிற்கிறான். கஜேந்திரன் உள்ளே நுழைந்ததைக் கண்ட அவனது மூன்று வயதுக் குழந்தை நாயனா என்று சொல்லி அவன் காலைக் கட்டிக்கொள்கிறது. கஜேந்திரன், அந்தக் கட்டினின்றும் விடுவித்துக்கொண்டு, தலைப்பாகை மாட்டி யில் தன் தொப்பியை மாட்டிக் கொண்டே பேசுகிறான்.) கஜேந்திரன் : என்ன பால்காரர்! எங்கே இந்த வேளை கெட்ட வேளையிலே? பால்காரன் : பாக்கி ரொம்ப நாளா தங்கிப் போச்சுங்களே? கஜே : நான் என்ன ஓடியா பூடுவேன்? பால் : அதுக்கில்லேங்க. நான் மாடு கன்னு வைச்சு பிழைக்கறவன் பாருங்க. கஜே : நீ ஊத்தறது அவ்வளவும் தண்ணி பாலு. பணத்துக்கு வேறே விரட்டறயே? பால் : ஆமாங்க; பணம் கேக்கிறபோதுதான் பால் தண்ணியா போவுது. கஜே : மிஞ்சி பேசாதே. நாளை வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போ. பால் : இப்படி தவணை சொல்லி, நானும் வந்து வந்து கால் தேஞ்சு போவுதுங்களே. கஜே : செருப்பு வாங்கி போட்டுக்கொள். பால் : அதுக்கும் சேர்த்து நீங்கதானே பணம் கொடுக்கணும்? கஜே : வீண் பேச்சுப் பேசாதே. நாளைக்கு வா. பால் : வீட்டுக்கு வரவா? கிளப்புக்கு வரவா? கஜே : ஏய், மரியாதை கெட்டுப் பேசாதே. கிளப்புக்கு ஏன் வரே? பால் : வீட்டிலேதான் இருக்கிறதேயில்லையே? கஜே : சட், வெளியே போ. பால் : (போகும் போது தனக்குள்) காலம்பரே வந்து உன்னை ஒரு கை பார்த்துக்கறேன். (போகிறான்) கஜே-மனைவி : (தேம்பி அழுதவண்ணம்) அவன் ஏதோ கறுவிக் கொண்டே போகிறானே? கஜே : அதுக்காக நீ ஏன் அழரே? அழுது அழுதுதான் இந்த வீடு குட்டிச் சுவராப் போச்சு. கஜே -மனைவி : நீங்க கிளப்புக்கும் ரேஸூக்கும் போய்த்தான் வீடு இப்படிக் குட்டிச் சுவராப் போச்சு. கஜே : என்ன சொன்னே? (மனைவியை அடிக்கப் போகிறான். அவள் அலறிக்கொண்டு உள்ளே போய் விடுகிறாள். இந்தச் சமயத்தில் கஜேந்திரன் மகன் சுசீந்திரன் அழுது கொண்டே வருகிறான்.) ஏண்டா அழுது கொண்டே வரே? கிளப்புக்கு ஏண்டா வந்தே? (முதுகில் பளீர் பளீர் என்று அறைகிறான்.) சுசீ : ஐயோ ! ஐயோ! (அழுதுக்கொண்டே உள்ளே போய்விடுகிறான். இதைப் பார்த்து மூன்று வயதுக் குழந்தையும் வீறிட்டு அழுகிறது.) கஜே : நீ எதுக்கு இப்போ கத்தரே? (அதையும் இரண்டு அடி கொடுக்கிறான். அதுவும் அழுதுக்கொண்டு உள்ளே போய் விடு கிறது) வீடு, வாசல் இல்லாதே இருக்கிறவர்கள் பாடுதான் நிம்மதி. (தெருப்பக்கம் போகிறான்) கஜே-மனவி : (உள்ளிருந்த வண்ணம்) நாயனாவை சாப்பிடக் கூப்பிடடா. கோவிச்சுகிண்டு போனா வயிறு கிள்ளாதா? சுசீ : நாயனா! அம்மா உன்னை சாப்பிட கூப்பிட்றாங்க. (கஜேந்திரன் திரும்பி உள்ளே வருகிறான்.) நான்காவது களம் இடம் : கோகிலாவின் வீடு. காலம் : மாலை சுமார் ஐந்தரை மணி. (கோகிலாவின் கணவன் ஞானசேகரன் ஆபீசிலிருந்து களைத்துப் போய் வீட்டுக்குள் நுழைகிறான். வீட்டில் வேலைக்காரப் பெண் மட்டும் இருக்கிறாள்) ஞானசேகரன் : (வேலைக்காரப் பெண்ணைப் பார்த்து) எங்கே உங்க அம்மா? வேலைக்காரப் பெண் : எங்கே? அதான் சங்கத்துக்கு. ஞான : பாழாய்ப் போக இந்தச் சங்கம். காபி, கீபி ஏதானும் வைச்சி ருக்காளா? வே.பெண் : ஹோட்டலுக்குப் போய் சூடா குடிச்சுட்டு வரச் சொன் னாங்க. ஞான : ஏன்? ஜில்லுனு குடிச்சா அம்மாளுக்கு வியர்க்குமாமோ? வே.பெண் : அதென்னமோ, எனக்கென்ன தெரியும்? ஞான : ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன சொல்லிப்புட்டு போனா? வே. பெண் : வந்து பண்றேன்னாங்க. ரொம்ப நேரமாப் போச் சானா ஹோட்டல்லேயிருந்து ஒரு சாப்பாடு எடுத்துவரச் சொன்னாங்க. ஞான : பேஷ்; பேஷ். காசு கொடுத்திருக்காளா? வே. பெண் : உங்களை கேட்டுதான் வாங்கிக்க சொன்னாங்க. ஞான : நல்லாப் பொச்சு! ஹோட்டலிலேயே ரூம் எடுத்துக் கொண்டு இருந்து விடலாமே? (பொறுத்து) சரி; குழந்தை எங்கே? வே.பெண் : பக்கத்து வீட்டு ஆயா கையிலே கொடுத்துட்டு போயிருக்காங்க. ஞான : அட கடவுளே! இப்படியுமா காலம் கெட்டுப் போகும்? (பெருமூச்சு விட்டு) நல்ல சங்கம் ஏற்பட்டுது? (இந்தச் சந்தர்ப்பத்தில் தனகோடி அம்மாளின் கணவர் தனபாலர் வருகிறார்) தனபாலர் : என்ன தம்பி ஞானம்! நீயே என்னமோ பேசிக்கறயே? ஞான : வாங்க மாமா! தன : இப்போதான் ஆபீசிலிருந்து வந்தாயா? ரொம்ப களைப்பா இருக்குதே முகம்? ஞான : ஆமாம்; முகம் பார்த்து செய்யறதுக்கு வீட்டிலே பொம் பளை இருந்தாதானே? தன : அதென்ன அப்படிச் சொல்லிபுட்டே? கோகிலா எங்கே? எங்கேயாவது அனுப்பிச்சிருக்கியா? ஞான : என்ன மாமா சொல்றீங்க? இந்தக் காலத்துப் பொம் பளைகள், ஒருத்தர் அனுப்பியா போறாங்க? அவங்க இஷ்டத் துக்குப் போறாங்க; இஷ்டத்திற்கு வறாங்க. இதுதான் மாதர் முன்னேற்ற காலமாச்சே? தன : ஓ ! சங்கத்துக்குப் போயிருக்குதா? வே. பெண் : (தனபாலைப் பார்த்து) நம்ப வூட்டு அம்மாதான் வந்து இட்டுக்கிணு போச்சு. தன : ஹூம்; நம்ப வீட்டுக்காரிதான் இருக்காளே? என்ன தம்பீ! நாலு வருஷத்துக்கு முன்னே கல்யாணம் பண்ணிண்டே நீ; நாற்பது வருஷத்துக்கு முன்னே கல்யாணம் பண்ணிண்டேன் நான். இரண்டு பேர் கதியும் ஒரே மாதிரிதான் இருக்குது. ஞான : இப்படி இருக்கும் என்று தெரிஞ்சிருந்தால் கல்யாணமே செய்துகொள்ளாமலிருக்கலாம். தன : கல்யாணம் செய்துகொண்ட சில வருஷங்களுக்குப் பிறகு தானே, செய்தது தப்பு என்று புத்திக்குத் தட்டுப்படுது? ஞான : இந்தமாதிரி வீடு தங்காத பொம்பளைகளா இருப்பாங் கன்னு யாருக்குத் தெரியும்? தன : நீ சொல்றது ரொம்ப கரெக்ட். (Correct - சரி.) தம்பீ! எங்க வீட்டுக்காரி கூட நல்லவளாகத்தான் இருந்தாள். வீடு உண்டு, வாசலுண்டு என்று அடைச்சு கிடந்தாள். இந்த நாசகாரி மீனாட்சி வந்து சேர்ந்தாள், கெட்டது குடி. ஞான : மீனாட்சியா? அது யார் மாமா? தன : அதுதான் அப்பா, அங்கயற்கண்ணி என்று பேரை மாற்றி வைச்சுகிண்டு இருக்காளே? ஞான : ஓ! அவளா? ஏன் பேரை மாற்றி வைச்சிகிண்டு இருக்கா? தன : அது பெரிய கதை. சொன்னால் வெட்கக்கேடு. அவளும் நாலு பேருக்கு முன்னாலே பேச வந்துட்ரா? ஹூம்................. ஞான : அவளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, மாமா. தன : தெரிஞ்சிக்கவே வேண்டாம் தம்பீ! அவள் புருஷன் ஒரு கேசிலே அகப்பட்டுக்கொண்டு தலைதெரியாமல் ஓடிப்போய் விட்டான். அக்கரைக்கு, சமுத்திரம் தாண்டி போயிட்டான்னு சொல்றாங்க. அது முதற் கொண்டு இந்த அம்மா பேரை மாற்றி வைச்சுகிண்டு அட்டகாசம் பண்றா. ஞான : அப்படியா? அவள் பேரே அங்கயற்கண்ணி என்றுதான் நினைச்சுக்கொண்டிருக்கேன். தன : இல்லை; இல்லை. இப்போதான் பெரியவங்க வைச்ச பேரை விரட்டிவிட்டு, தாங்களா ஒரு பேரு வைச்சுக்கிறாங்களே. கேட்டா, தமிழ்ப் பேரு என்று சொல்லி நம்ம வாயை அடக்கிப் புட்றாங்க. ஞான : என்னமோ மாமா, இந்த மாதர் சங்கம், ஏற்பட்டாலும் ஏற்பட்டுது; ராத்திரி சாப்பாடு எனக்கு தகராறா போயிட்டுது. தன : ஹூம்; பகல் சாப்பாடாவது கிடைக்குது உனக்கு. எனக்கு அதுவும் சரியா கிடைக்கிறதில்லே தம்பீ! தெரியுமா உனக்கு? ஞான : ஏன் மாமா அப்படி? உலகம் தெரிஞ்சவங்களாச்சே வீட்டிலே? தன : அதனாலேதான் இந்த அலங்கோலம். உலகம் தெரியாதவங் களாயிருந்தா சொன்னால் கேட்பாங்க. நாமும் சொல்லலாம். உலகம் தெரிஞ்சவங்க கிட்ட என்ன பேச முடியும்? பெண் டாட்டி யாயிருந் தாலென்ன? பிள்ளையாயிருந்தாலென்ன? ஞான : ஏன் உங்கள் வீட்டிலே? தன : தம்பீ! என் வயிற்றெரிச்சலே ஏன் கிளப்பறே? பென்ஷன் என்னிக்கு வாங்க ஆரம்பிச்சேனோ அன்றைய தினத்திலிருந்து என் சம்சாரமும் வீட்டிலிருந்து பென்ஷன் வாங்கத் தொடங்கி விட்டாள். அந்த மீனாட்சி பின்னாலே...................... ஞான : அங்கயற்கண்ணி பின்னாலே...................... தன : ஆமாம்; அங்கயற்கண்ணி; அங்கயற்கண்ணி துடைப்பக் கட்டைக்கு பட்டு குஞ்சலமாம்! ஞான : (சிரிக்கிறான்.) தன : நீ சிரிப்பாய் தம்பீ! பாலிய முடுக்கு: சிரிக்கிறே. என் நிலைமை எனக்குத் தானே தெரியும்? நல்ல சோறு உண்டா? நல்ல துணி உண்டா? பென்ஷன் வாங்கி அவள் கையில் அழுதுவிடுகிறேன். அவ இஷ்டப்பட்டு சோறு போட்டா உண்டு; இல்லேன்னா பட்டினி கிடக்கிறேன். ஞான : ஏன் மாமா பென்ஷனை வாங்கி அவள் கையிலே கொடுக் கணும்? தன : ஐயோ! கொடுக்காது போனால், என் வீட்டு ஓடு, என் மண்டை ஓடு எல்லாம் காற்றிலே பறக்க வேண்டியதுதான். தாடகை, சூர்ப்பனகை இவங்கள்ளாம் இவள் கிட்ட பிச்சை வாங்கணும். ஞான : (சிரிக்கிறான்) தன : உனக்கு இப்பொழுது சிரிப்பாகத்தான் இருக்கும். நீயும் பென்ஷன் வாங்கினபிறகுதானே தெரியப் போவுது. ஞான : கொஞ்சம் உருட்டி மிரட்டிப் பார்க்கிறது தானே மாமா? தன : ஆ ஆ! உருட்டினால் நாம் உருள வேண்டியதுதான். எல்லாம் வயசானால் தான் தெரியும் தம்பீ! நாம் அவர்களை உருட்டு கிறமா, அவர்கள் நம்மை உருட்டுகிறார்களா என்று? ஞான : அப்படியானால் ஆண்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஏன் ஒரு சங்கம் ஆரம்பிக்கக் கூடாது? தன : ஏன் இருக்கிற சங்கங்கள் போதாதுன்னு இன்னொரு சங்கமா? ஞான : ஆமாம்; ஆண்கள் விடுதலை சங்கமென்று ஒரு சங்கம் ஆரம்பிச்சு, மாதர் சங்கத்திலே சேர்ந்திருக்கிறவர்கள் கொட் டத்தை அடக்கணும் மாமா! தன : சும்மா விடு தம்பீ! இப்படித்தான் இருக்கும் உலகம். உலகம் பலவிதம் என்று சொல்லுவாங்க இல்லையா? ஆனால் ஒன்று சொல்றேன். கேளு. ஆண்பிள்ளையாகட்டும், பெண்பிள்ளை யாகட்டும், வீட்டை மறந்து விட்டு வெளியிலே சுற்ற ஆரம்பிச் சங்களானால் அந்த வீடு உருப்படவே படாது. ஞான : நீங்கள் சொல்றது ரொம்ப சரி மாமா! இதுக்காக நாம் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாமா? தன : நடவடிக்கையாவது கிடவடிக்கையாவது? நீயும் நானும் என்ன செய்ய முடியும்? உலகம் பலவிதம் என்று வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்து விட்டு ஒரு நாள் கண்ணை மூடிக் கொள்ள வேண்டியது தான். ஞான : இது என்ன உலகம் பலவிதம் வேதாந்தம் மாமா? தன : ஆமாம், தம்பீ! பென்ஷன் வாங்கின பிறகுதான் உனக்கும் உலகம் பலவிதம் என்ற உண்மை தெரியும். ஞான : அப்பொழுது? தன : சும்மாயிருப்பதே சுகம் என்ற ஞானமும் உண்டாகும். (பொறுத்து) சரி; சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறே? ஹோட்டலுக்கு வரயா? ஞான : ஏன் மாமா? நீங்க கூடவா? தன : புதிசா கேக்கறயே? அந்த ரஞ்சித விலா ஹோட்டல்காரனுக்கு நாம் எவ்வளவு பாக்கி கொடுக்கணுமோ அதை இந்த ஜன்மத்தி லேயே கொடுத்துத் தீர்த்துடுவோம். வா. (வேலைக்காரப் பெண்ணை பார்த்து) ஏ குட்டி! வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நாங்கள் போய் வருகிறோம். வா தம்பீ! (இருவரும் போகிறார்கள்) நடுவிலே வந்த வாழ்வு முதற் களம் இடம் : வீட்டின் முன் பக்கம் காலம் : மாலை. (பாக்கியநாதன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உள்ளே பிரவேசிக்கிறார். அவருடைய இரண்டாவது பெண் எட்டு வயதுள்ள ரேணுகா, தகப்பனார் வருகையைப் பார்த்து ஆனந்தங்கொண்டு ஓடோடியும் வந்து அவரைக் கட்டிக் கொள்கிறாள்.) ரேணுகா : அப்பா! ரிப்பன் வாங்கிக் கொண்டு வந்தீர்களா? பாக்கியநாதன் : போ, மூதேவி! உன் பவிஷூக்கு ரிப்பன் வேறே! (பாக்கியநாதனின் சம்சாரம் பாக்கியத்தம்மாள் சமையலறையி லிருந்து வெளியே வருகிறாள்) பாக்கியத்தம்மாள் : வந்ததும் வராததுமாய் ஏன் இப்படி குழந்தை யின் மீது வள்ளென்று விழவேண்டும்? பா.நா: வந்ததும் வராததுமாய் அது ஏன் இப்படி என்னைப் பிடுங்க வேண்டும்? பா: வயதான பெரியவர்களுக்கும் அறியாத குழந்தைகளுக்கும் வித்தியாசமில்லை போலிருக்கிறது? ஏதோ வந்தவுடன் ஆசை யாக ஓடிவந்து கேட்டால் இப்படியா எரிந்து பேசுவது? பா. நா: நீ ஒன்றும் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு வரவேண்டாம். எனக்குக்கூட அவள் பெண்தான். கடிந்து கொள்ள எனக்கும் பாத்திய முண்டு. (இந்த சமயத்தில் பாக்கியநாதனின் மூன்றாவது குமாரனான ஆறு வயதுடைய சுகுமார் வெளியிலிருந்து உள்ளே ஓடி வருகிறான்) சுகுமார் : அப்பா! எனக்கு மோட்டார் வாங்கிக் கொண்டு வருகிறே னென்று சொன்னீர்களே; எங்கே யப்பா? பா.நா : மோட்டார், வழியிலே உடைஞ்சுபோச்சு. சும்மா விடுங்கள் என்னை; தொந்தரவு பண்ணாதீர்கள். இந்தா ரேணுகா! (சட்டை முதலியவைகளை யெல்லாம் கழற்றிக் கொடுக்கிறார்) ஏய்! அந்த ஈஸிசேரைக் கொண்டு போடு. சுடச்சுட ஒரு டம்ளர் காபி கொண்டு வா. மண்டையை உடைக்கிறது. (பாக்கியத்தம்மாள் ஈஸிசேர் கொண்டு போடுகிறாள். அதில் பாக்கியநாதன் சாய்ந்து கொள் கிறார்.) பா : இதோ, காபி கொண்டு வந்துவிட்டேன். பா.நா : அடே குமார்! ரேணுகா! சந்தடிசெய்யாமல் சும்மாயிருக்க வேணும். தெருவிலே போய் கொஞ்ச நேரம் விளையாடுங்கள். (குழந்தைகள் வெளியே போய் விடுகிறார்கள். பாக்கியத் தம்மாள் காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்) பா : ஏன்? என்ன உடம்பு? முக மெல்லாம் வாடிப் போயிருக் கிறதே? பா.நா : உடம்புக்கு ஒன்றுமில்லை. பா : அப்படியானால் மனதுக்கு ................ ஏதாவது...............? பா.நா : மனதில் ஏதோ கிலி புகுந்து கொண்ட மாதிரி இருக்கிறது. பா : என்ன காரணம் திடீரென்று இப்படி ஏற்படுவதற்கு? சென்ற மூன்று வருஷமாக எவ்வித குறைவுமில்லாமல் நடந்துவந்த வியாபாரத்தில் ஏதாவது சங்கடமா? பா.நா : சங்கடமென்ன? வியாபாரத்திலே மண் விழுந்துவிட்டது. பா : மண் விழுந்துவிட்டதா? ஏன்? மறுபடியும் குண்டு பயம் ஏற்பட் டிருக்கிறதா என்ன? பா. நா : அசடே! சண்டையே நின்று விட்டது. மத்தியானம் ரேடி யோவிலே சொன்னார்கள். பா : சண்டை நின்றுவிட்டதா? அம்மாடி, தலைச்சுமை இறங்கின மாதிரி இருக்கிறது எனக்கு. (கொஞ்சம் பரபரப்புடன்) இனி இந்த ரேஷன் தொந்தரவு இராதில்லையா? பா. நா: உன் ரேஷன் தலையிலே இடிவிழ. மார்க்கெட்டிலே ஓரே கலவரமாயிருக்கிறது. வியாபாரிகளெல்லாம் பேந்தப்பேந்த முழிக்கிறான்கள். லட்சம் லட்சமாய் வைத்துக் கொண்டிருக்கிற சரக்கை என்ன செய்வதென்று தெரியாமல். நீ என்னடா வென்றால் ரேஷனுக்கு அழுகிறாய். பா : அவரவர்கள் விசாரம் அவரவர்களுக்கு. நமது வியாபாரத்திற்கு ஒன்றும்............. பா.நா : அதுதான் சொன்னேனே முதலிலேயே, மண் விழுந்து விட்டதென்று. பா : ஐயோ! பா.நா : அலறாதே. ஆயிரக்கணக்காய் முதல்வைச்சு வியாபாரம் பண்ணது என்ன முழுகிப்போச்சு? புரோக்கர் வியாபாரம் இப் பொழுது பிரேக் (Break) ஆகி (உடைந்து) விட்டது. அவ்வளவு தான். இதற்காக கவலைப்படமுடியுமா என்ன? பா : நான் ஒன்றும் கவலைப்படவில்லை. நீங்கள்தான் வருகிற போது, தேய்க்காத பாத்திரம் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வந்தீர்கள். பா. நா : சரி, சரி ; நீ வர்ணிக்க ஆரம்பித்துவிடாதே. இனி நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். செலவுகளை யெல்லாம் குறைக்கவேண்டும். பால் இப்பொழுது தினம் எவ்வளவு வாங்குகிறாய்? பா : காலை அரைப் படி; சாயந்திரம் அரை படி. பா. நா : இனி காலை மூன்று ஆழாக்கும் சாயந்திரம் மூன்று ஆழாக் கும் வாங்கு; போதும். இந்தத் தண்ணிப் பாலைப் குடிப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் இளைச்சு போகாது. வந்தவர், போனவர் எல்லோருக்கும் காபி கொடுக்கிற வழக்கத்தை நிறுத்தி விடு. இது என்ன முட்டாள் பழக்கம்? நம்மைப் பெரிய மனுஷாள் இல்லையென்று நினைச்சுக்கொள்கிறவர்கள் நினைச்சுக் கொள் ளட்டும். பா : இன்னும் என்னென்ன கட்டு திட்டங்கள்? பா. நா : உனக்கென்ன சொல்லாமல்? இனிமேல் நான் எங்கே போய் என்ன வேலை செய்யமுடியும்? இந்தச் சண்டையிலே சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டுதான் மிகுதி காலத்தையும் கழிக்க வேண்டும். பா : அப்படியானால் என்ன செய்யவேண்டு மென்கிறீர்கள்? வயிற்றிலே ஈரத்துணியை மடித்துப் போட்டுக் கொள்ளச் சொல்கிறீர்களா என்ன? வளர்கிற குழந்தைகளுக்கு வயிறு நிறையச் சொறு போட வேண்டாமா? எப்படியும் பெரியவன் துரைராஜ் சம்பாதிக்கிறான். என்ன குறைவு வந்து விட்டதென்று இப்போழுது விசாரப்படுகிறீர்கள்? பா. நா : பெரியவன் உத்தியோகம் என்ன சாசுவதமா? ஏ.ஆர்.பி. யிலிருக்கிறவர்களையெல்லாம் மடமடவென்று எடுத்துவிட மாட்டார்களா? அவனும் ராத்திரி வருகிறபோது என்ன சேதி கொண்டு வருகிறானோ? பா : நல்ல சேதிதான் கொண்டு வருவான். அது கிடக்கட்டும். நான் இரண்டு புடவை எடுத்து வைத்திருக்கிறேன். இதோ பாருங்கள். (உள்ளே சென்று இரண்டு புடவைகளடங்கிய ஒரு கட்டைக் கொண்டு வந்து பிரிக்கிறாள்) இது நூற்று நாற்பத்தெட்டு ரூபாயாம்; இது நூற்று அறுபது ரூபாயாம். இரண்டையும் எடுத்துக் கொள்ளச் சொன்னாள் எதிர்வீட்டு லோகநாயகி. கட்டிக்கொண்டால் என் உடம்புக்கு நன்றாகப் பொருந்தி யிருக்குமாம். பா. நா: அப்படியானால் அவளையே ரூபாய் கொடுத்து விடச் சொல். பா : அசல் வீட்டுப் பொம்பளைகளைப் பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது. அவள் காதில் பட்டால் என்ன நினைத்துக் கொள்வாள்? பா. நா : ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள். புடவைகளைத் திருப்பிக் கொடுத்து விடு என்று உனக்குச் சிபார்சு செய்வாள். பா : ஹூஹூம், ஹூஹூம். இந்த புடவை இரண்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இதையே கட்டிக்கொள்ள வேண்டு மென்று ஆசையாக இருக்கிறது. பா.நா : எவ்வளவு வயதானாலும் என்ன பிரயோஜனம்? ஆசை யென்னமோ போகவில்லை. பட்டுப்புடவையிலே என்ன அவ்வளவு மோகம்? நூறும் இருநூறும் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு விட்டதனாலேயே பெரிய மனுஷ்யர்களாகி விடுகிறார்களா என்ன? சீலையிலேயா இருக்கிறது ஒருவ னுடைய பெருமையும் சிறுமையும்? குஞ்சியழகும் கொடுந் தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? வெளி வேஷத்திலே ஒன்றுமில்லை, பாக்கியம்! உள்ளே யிருக்கிற ஆத்மா இருக்கிறது பார் ஆத்மா, அது சுத்தமாயிருக்க வேண்டும் ; அது அழகா யிருக்க வேண்டும். பா : வருமானம் குறைகிறபோது வேதாந்தம் வந்து புகுந்து கொள்கிறதே இந்த ஆம்பளைகளுக்கு, அதுதான் ஆச்சரியம். போன வருஷமெல்லாம் சொன்னீங்க வெளியிலே போகிற போது காலிலே லிப்பர் போட்டுக்கணும், முகத்திலே பவுடர் பூசிக்கணும், பார்த்தால் நாலு பேருக்கு மதிப்பா இருக்கணும், அப்போதான் நம்ம துரைராஜூக்கு பெண் கேட்கப் போகிற இடத்திலே கௌரவமா நினைப்பாங்க, இப்படியெல்லாம் சொன்னீங்க. இப்போ என்னான்னா, வெளிவேஷம் வேண்டா மென்கிறீங்க? பா.நா : ஆமாம் பாக்கியம்! (கையைச் சுண்டிக்காட்டி) எல்லாம் பணத்திலேதானே இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை யென்று சொல்லவில்லையா வள்ளுவர்? உலகத்திலே பணத்திற்கு மதிப்பா? மனிதனுக்கு மதிப்பா? யோசித்துப் பார் பா : எனக்கு ஒரு மதிப்பும் வேண்டாம்; என்றைக்கும் ஒரே சீராகயிருந்தால் போதும். வேதாந்தம் அப்புறம் பேசுவோம். இந்த இரண்டு புடவைக்கும் அடுத்த மாதம் பணங்கொடுக்கிற னென்று சொல்லிவிட்டு வரச்சொல்கிறேன். பா. நா : பைத்தியம்! பட்டுவிலையெல்லாம் குறையப் போகிறது. இவ்வளவு நிறைய விலைகொடுத்து இப்பொழுது வாங்குவா னேன்? புருஷர்களுக்கு சரிப்படவில்லையென்று சொல்லித் திருப்பி விடு. பா : கடைக்காரன் நம்மை என்னவென்று நினைப்பான்? எப்பவோ நான் கிழவியாப் போனபிறகு பட்டுவிலை குறையப்போகிறது. அதுவரையில் வேறு புடவை வாங்காமலே இருக்கப்போகிறீர் களா? பா. நா : இதோ பார், கொஞ்சம் பொறு. பட்டு விலை, வெள்ளி விலை, சவரன் விலை எல்லாம் குறையப் போகிறது. உனக்கு திருப்தியா எல்லாம் வாங்கிக்கொள்ளலாம். பா : அப்பொழுது பணமிராதே? பா நா : பணத்திற்குத் தகுந்த பணியாரம். பா : என்ன, இப்படி முன்னுக்குப்பின் சம்பந்தமில்லாமல் பேசுகிறீர் கள்? இந்த யுத்தம் எத்தனையோ பேருடைய மூளையையும் மனத்தையும் மாற்றிவிட்டது போல உங்களையும் மாற்றி விட்டாற் போலிருக்கிறது. பா.நா : அதனால் கொஞ்சம் பணமாவது சம்பாதிக்க முடிந்தது. இந்த யுத்தத்திலே சம்பாதித்தவர்களெல்லோரும் சாமர்த்தியத் தினாலே சம்பாதித்தார்களென்று நினைக்கிறாயா? அல்லது கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்தார்களென்று நினைக்கி றாயா? இரண்டும் இல்லை. அவர்கள் ஜாதகத்தில் எங்கேயோ ஒரு கிரகம் கொஞ்சகாலம் நேராகப் பார்த்துக்கொண்டிருந் தது. அடிச்சான்கள் ஒரு அடி. பா : நமக்கும் இது பொருந்துந்தானே? பா. நா : பேஷாய். சண்டைக்கு முன்னே நான் என்ன பண்ணிக் கொண்டிருந்தேன்? மானம் பார்த்த செட்டிபாத்திரக் கடை யிலே பாத்திரங்களை எடைபோட்டுக் கொடுத்துக் கொண் டிருந்தேன். சண்டை வந்தது; பித்தளைத்தகடு விலை ஏறியது. வியாபார நளுவு சுளுவெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுக் கொண்டிருந்ததினாலே கொஞ்சம் அப்படியும் இப்படியுமா பித்தளை தகடுகளை வாங்கி விற்றேன். பணம் கிடைத்தது. அவ்வளவுதானே? பா : சரி; இத்தனை நேரம் பேசி தலைவலியெல்லாம் போச்சோ, இல்லையோ? பா. நா: கொஞ்சம் குறைச்சல்தான். (பொறுத்து) இதோ பாரு, பாக்கியம்! பணத்தை எப்படியாவது சம்பாதிக்கணும். பணம் சம்பாதிக்கிற நேரத்திலே நியாயம், தருமம், என்று பார்த்தாயா னால் ஒரு சல்லிக்காசு கூட கையிலே சேராது. பணம் சம்பாதிச்சு கொஞ்சம் சேர்த்துக்கொண்ட பிறகு, காணி பூமி, வீடு வாசல் எல்லாம் கொஞ்சம் ஏற்பாடு செய்துகொண்ட பிறகு, கூடிய வரையில் கடவுளுக்குப் பயந்து நடக்கப்பார்க்கணும். நாமும் ஆண்டவன் கீழே குடியிருக்கிறோமென்ற நினைப்புடனே வாழணும், தெரியுதா? பா : தெரியுது; நல்லா தெரியுது. ஆம்பளைகள் நியாயமே அலாதி நியாயந்தானே? பா.நா : இதோ பார்.தோட்டத்திலே மண் வெட்டுகிறோம். வெட்டுகிறபோது, பூச்சிகள், புழுக்கள் அகப்பட்டுச் செத்து போகின்றனவேயென்று மண்ணைக் கொத்தாமல், கிளறாமல் இருக்கிறோமா? அப்படிக் கொத்தாமல் கிளறாமல் இருந்தால் அந்த மண்ணில் நல்ல செடிகளைப் பயிரிட முடியுமா? நல்ல பலனைக் காண முடியுமா? ஆகையால் நாம் வாழவேண்டு மானால் மற்றொருவரைக் கஷ்டப்படுத்தித்தானாக வேண்டி யிருக்கிறது. உலகத்திலே இது சகஜமான தர்மமாகப் போய் விட்டது. பா : சரி, சரி; இந்தக் காரியத்திற்கு தர்மம் என்று மட்டும் பெயர் சொல்லாதீர்கள். பா.நா : எந்த நாசமாய்ப்போன பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளேன், எனக்கென்ன அதைப்பற்றி? ஆக, ஒருவர் துக்கத்தின் மீதுதான் மற்றொருவர் சுகப்படவேண்டி யிருக்கிறது. பா : அப்படியானால் இதுவரையில் நீங்கள் சம்பாதித்தது எத்தனைபேருடைய வயிற்றெரிச்சலின் மீது? பா.நா : ஆம், அப்படித்தானிருக்கும் உலகத்தில். இதையெல்லாம் யார் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்? எனக்கு இன்றைய தினம் இரண்டு ரூபாய் லாபம் வந்ததென்று சொன்னால் இன்னொருவருக்கு இரண்டு ரூபாய் நஷ்டமேற் பட்டுத்தான் இருக்கும். பா : அப்புறம் - பா.நா : சுகம் வருகிறபோது சந்தோஷப்படவேண்டியதுதான்; துக்கம் வருகிறபோது அழவேண்டியதுதான். பணம் வருகிற போது செலவு செய்யவேண்டும். வரும்படி வழி அடைத்துப் போய்விட்டதேயானால் கோயில் குளங்களுக்குச் சென்று நிம்மதியாகக் காலத்தைக் கழிக்க வேண்டும். காலத்திற்கேற்றப் படி நடந்துகொள்வதுதானே புத்திசாலித் தனம்? பா : நல்ல புத்திசாலித்தனம்! இந்த புத்திசாலித்தனமுள்ள புருஷர்க ளுடைய சகவாசமே கூடாதென்று தோன்றுகிறது. எவ்வளவு சுயநலம்! மற்றவர்கள் கெட தாங்கள் வாழவேண்டுமென்ப திலே எவ்வளவு ஆசை! அம்மம்மா! உங்கள் பக்கத்திலே நிற்பது கூட பாவம்! (போகப் பார்க்கிறாள்) பா.நா : அடடா, பெண்களெல்லாம் தியாக மூர்த்திகள்! வெய்யி லிலே காயாமல் மழையிலே நனையாமல் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு பெண்டுகள் என்ன தியாகம் செய்கிறார்கள்! என்ன தியாகம் செய்கிறார்கள்! பா : வேண்டாம்; பெண்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம். பா.நா : பாக்கியம்! கோபித்துக் கொள்ளதே போய் அடுப்பைப் பார். இரண்டாவது களம் இடம் : வீட்டின் தெருப்பக்கம். காலம் : மேற்படி சம்பவம் நடந்த அரை மணி நேரங் கழித்து. (பாக்கியநாதனும் பாக்கியத்தம்மாளும், இன்னும் துரைராஜ் ஆபீசிலிருந்து வரவில்லையேயென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்) பா. நா : ஏன் இன்னும் தம்பி வரவில்லை? பா : தெரியவில்லையே. என் வயிற்றில் புளியைக் கரைக்கிறதே. எதிர் வீட்டு லோகநாயகியை வேண்டுமானால் கேட்டு வரட் டுமா? பா.நா : எதற்கு? பா : அவள் எஜமானர் ஆபீசிலிருந்து வந்து விட்டாரா, எங்காவது தம்பியைப் பார்த்தாரா என்று கேட்டு வருகிறேன். பா.நா : அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வீண் கலாட்டா செய்யாதே. (தமக்குள்) இந்தப் பெண்பிள்ளைகளே இப்படித் தான். (சிறிது தூரத்தில் கூச்சல் கேட்கிறது. எல்லோரும் கவனித்துக் கேட்கிறார்கள். உள்ளே விளக்கண்டை படித்துக் கொண்டிருந்த ரேணுகாவும் சுகுமாரும் வீதிப்பக்கம் ஓடிவருகிறார்கள்) ரே : என்ன அப்பா கூச்சல்! பா. நா: என்ன இருக்கும்? இந்த காந்திக்காரன்கள் எதாவது கூச்சல் போடுவான்கள். இவங்களுக்கு என்ன வேலை? பா : அந்த மாதிரி நீங்கள் கொஞ்சம் கூச்சல் போட்டுப் பாருங்க ளேன்? அதற்கு தைரியம் ஏது? பா.நா : இதற்கு தைரியம் வேண்டுமா என்ன? கனத்த தொண்டை வேண்டும். பா : இப்படியெல்லாம் பெரியவர்களை அவமானப் படுத்தாதீர்கள். நமக்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? எத்தனை பேருக்கு என்னென்ன உதவிகளெல்லாம் செய்திருக்கிறார்கள்? (மகாத்மா காந்திக்கு ஜே! டெம்பரவரி தொழிலாளர்களை எடுத்து விடாதீர்கள்! ஏழைகளின் வயிற்றிலே அடிக்காதீர்கள்! வந்தே மாதரம்! என்ற கோஷங்கள் செய்துகொண்டு தொழிலாளர் ஊர்வலம் ஒன்று வந்து போகிறது.) பா : அப்படியானால் நம்ப தம்பிக்குக்கூட வேலை நின்று போய்விடுமா? பா.நா : நான்தான் அப்பொழுதே சொன்னேனே? பா : ஏன் இன்னும் அவன் வரவில்லை? பா.நா : ஆபீசிலே சம்பளத்தைத் தீர்த்துக் கொடுத்திருப்பான்கள். அதை வாங்கிக் கொண்டு மெதுவாக வருவான். பா : வேலை போய்விட்டதேயென்று வருத்தப்பட்டுக் கொண்டு வராமலே எங்காவது போய்விடுவானோ? பா.நா : போய் விடுவான் சீமைக்கு? போயேன். கழுதை கெட்டா குட்டிச் சுவரு என்கிற மாதிரி ஆடிப்பாடி விட்டு வீட்டுக்கு வந்து சேருகிறான். பா : இதுவரையில் அவனை இந்திரன் சந்திரன் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது வேலை போய்விடுமோ என்று சந்தேகம் இருக்கையிலே அவன் கழுதையாகிவிட்டான். (துக்கப்படுகிறாள்) பா.நா : வீதியிலே அழாதே ; உள்ளே போய் அழு. (எல்லோரும் உள்ளே போகிறார்கள். பாக்கியநாதன் பழைய படி ஈஸிசேரில் போய் சாய்ந்து கொள்கிறார்) ரே : (தகப்பனார் அருகில் சென்று) ஏன் இன்னும் அண்ணண் வரவில்லை? பா. நா : வருவான்; போய் படி. சுகுமார் : பெரியண்ணன் எனக்கு மோட்டார் வாங்கிக்கொண்டு வருமா? பா.நா : வரும்; தலையிலே தூக்கிக்கொண்டு வரும். நீ போய் படி. உயிரெழுத்து பன்னிரண்டும் இன்னும் சரியாக வரவில்லை? (துரைராஜ் முகத்தில் கவலைதட்ட மெதுவாக உள்ளே வருகிறான்.) பா. நா: என்ன தம்பீ! ஏன் இத்தனை நேரம்! (சமையலறையிலிருந்து பாக்கியத்தம்மாள் வருகிறாள்.) பா : ஏன் துரை, ஒரு மாதிரியாயிருக்கிறாய்? ஏன் இவ்வளவு நேரம்? பலகாரம் ஒன்றும் சாப்பிடவில்லையா? துரைராஜ் : எல்லாம் சாப்பிட்டாச்சு. (சட்டை முதலியவைகளைக் கழற்றிவிட்டு தகப்பனார் எதிரில் உள்ள ஒரு நாற்காலியில் உட்காருகிறான்) பா.நா : என்ன சமாசாரம்? து : ஒன்றுமில்லை. நடுவிலே வந்த வாழ்வு நடுவிலேயே போய் விட்டது. பா : ஏன் தம்பி அப்படிச் சொல்றே? து : இந்த மாதம் கடைசி வரையில் சம்பளத்தைக் கையிலே கொடுத்து அனுப்பிவிட்டார்கள். பா : அப்படியானால் அடுத்த மாதம் முதலிலே இருந்து உனக்கு வேலை இல்லையா? பா.நா : புட்டுபுட்டு உனக்குச் சொல்லவேணுமாக்கும். எதிர் வீட்டு லோகநாயகியிடம் போய்ச் சொல்லி விட்டு வா, என் பிள்ளைக்கு வேலை போய்விட்டதென்று. து : சரி சரி; நீங்கள் இரண்டு பேரும் சண்டை போடாதீர்கள். பா. நா : கையிலே எவ்வளவு பணம் கொடுத்தார்கள்? து : இருபத்தோரு ரூபா, ஓன்பது அ, ஆறு பைசா. பா. நா : நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? சில்க் ஷர்ட் வேண்டும், கோட் வேண்டும், சூட் வேண்டும் என்று சண்டை போட்டுத் தைத்துக் கொண்டு, வந்த பணத்தையெல்லாம் செல வழித்து விட்டாயே, இப்பொழுது என்ன செய்யப்போகி றாய்? கோட்டையும் சூட்டையும் மாட்டிக்கொண்டு எங்கே போகப் போகிறாய்? து : திருடப் போகிறேன். உங்களுக்கென்ன அதைப் பற்றி? பா.நா : (பாக்கியத்தம்மாளிடம்) பார்த்தாயா, உன் பிள்ளையின் பவிஷை? பா : ஆமாம்; வயசு வந்த பிள்ளையைக் கண்டபடி சொன்னால் இப்படித்தான் பதில் பேசும். பா.நா : இந்தமாதிரி பரிந்து பரிந்து பேசித்தான் பிள்ளையைக் குட்டிச்சுவராக்கி விட்டாய். து : அப்பா! மரியாதையில்லாமல் பேசாதீர்கள். நான் குட்டிச்சுவராயிருந்தால் நீங்கள் என்ன? பா.நா : இரண்டு காசு சம்பாதிக்க யோக்கியதை இல்லை யானாலும் வாயென்னமோ அகலமாகத்தான் வைத்திருக்கிறார் கடவுள். பா : இத்தனை நாளாய் சம்பாதனை பண்ணலையா அவன்? இந்த மாதம் பூராவுக்குங்கூட சம்பாதிச்சுண்டு வந்திருக்கிறானே? பா.நா : சரி; இனி ஹோட்டலுக்குப் போய் காசைச் செலவழிக் காதே. வீட்டிலேயே பலகாரம் சாப்பிடு. எனக்குக் கூட வியா பாரம் நின்றுபோச்சு. எல்லோரும் வீட்டிலே உட்கார்ந்த படியே சாப்பிடணும். து : ஏன்? நீங்கள் பழைய வேலைக்கு போகிறது தானே? பா.நா : எதற்கு? பாத்திரங்களை எடைபோடுகிற வேலைக்கா? து : போனால் என்ன? எப்படியும் என் செலவுக்கு தினத்துக்கு அரை ரூபாய் கொடுத்தாகணும் நீங்க. பா.நா : நல்லாப் போச்சு. உன்னை இந்த ஏ.ஆர்.பி யிலே சேர்த்ததை விட ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொள்ளும்படி விட்டிருந் தால், ஒரு நாளைக்கு எட்ட சம்பாதிக்கிறதுக் காவது யோக்கியதை வந்திருக்கும். இப்போழுது என்னடாவென்றால், சம்பாதிப்பதற்குச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் நன்றாகச் செலவழிப்பதற்குக் கற்றுக் கொண்டிருக்கிறாய். கொடுக் கிற மகாராஜாவைத்தான் காணோம். து : ஏன், நீங்கள் இருக்கிறபோது எனக்கென்ன குறைவு? பா.நா : போடா போ அதிகப் பிரசங்கி! இப்பொழுதிருந்தே எங்கே யாவது வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிரு. இரண்டு தொழில் கற்றுக் கொண்டிருந்தால்தான் இந்தக் காலத் திலே பிழைக்கலாம். வெறும் கூல் படிப்பு மட்டும் பிரயோஜன மில்லை. பா : எல்லோரும் சாப்பிட வாருங்கள். வேலை கிடைக்குமா? முதற் களம் இடம் : பிரபாகர் அண்ட் கம்பெனி. காலம் : பகல் (பிரபாகர் அண்ட் கம்பெனியின் அதிபர் மிடர் தாமோதர பிரபாகர், தமது ஆபி அறையில் உட்கார்ந்து, அன்று காலையில் வந்த தபால்களைப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது அறைக்கு அடுத்தாற் போலுள்ள ஹாலில் பேச்சுக் குரல் கொஞ்சம் பலமாகக் கேட்கிறது. உடனே பிரபாகர், தமது மேஜையின் மீதுள்ள மணியை அடிக்கிறார். ப்யூன் கேசவலு வருகிறான்.) பிரபாகர் : ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து கூச்சல் போடுகி றீங்கோ? கேசவலு : இல்லே ஸார்.............. பிர : இது ஆபீஸூன்னு நினைப்பே இல்லையா உங்களுக்கு? கேச : இல்லே ஸார்...................... பிர : என்னா இல்லே ஸார்? எதுக்கெடுத்தாலும் இல்லேன்னு சொல்ல நல்லா கத்துக்கிண்டு இருக்கே நீ ! இனிமேல் இல் லேன்னு சொல்லு, உன்னை வீட்டுக்கு அனுப்பிச்சுப்புடு வேன். இது மீன் கடையின்னு நினைச்செங்களா? கேச : ஆமாம் ஸார்........................... பிர : என்னா ஆமாம்? மீன் கடையா இது? கேச : இல்லே ஸார் .............................. பிர : சட், நான்சென்! நீ போ வெளியே. ஐயர் மிடர் ஐயர்! (மணியடிக்கிறார். கேசவலு வெளியே போகிறான். குமாதா ஐயர் ஓடோடியும் வருகிறார்.) ஏன் ஆபிஸிலே இப்படி எல்லாரும் கத்தராங்க? ஐயர் : யாரோ ஒரு ஆள் வந்து உங்களைப் பார்க்கணுமின்னு சொன்னான். இப்போ தபால் பார்க்கிற சமயம், சாயந்திரத்திற்கு மேலே வா என்று சொன்னாலும் போகாமல் சண்டித்தனம் பண்ணுகிறான். பிர : நல்ல வார்த்தைகளைச் சொல்லி அனுப்பிவிடுவதை விட்டு எல்லோரும் சேர்ந்து என் கூச்சல் போடுறீங்க? ஐயர் : நான் போடல்லே, அவன் தான் இப்பவே எஜமானனை பார்க்கணும்னு கத்தறான். அவனுக்கெதிராக கேசவலு கத்துகி றான். (இதை வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கேசவலு உள்ளே ஆத்திரத்தோடு வருகிறான்.) கேச : என்னா ஸார், என் மேலே பழி போடறீங்க! நீங்கதான் அவன் மேலே வாள் வாள்னு விழுந்தீங்க. இங்கே எஜமான்கிட்டே வந்து பொய் பேசறீங்களே? பிர : ஏய், அதிகப் பிரசங்கி! தாறுமாறாகப் பேசாதே. வெளியே போ. சரி; ஐயர். நீங்க போய் அந்த ஆளை அனுப்புங்க. என்ன கேக்கறான் அவன்? ஐயர் : அவனைப் பார்த்தால் மிலிடேரி ஆள் மாதிரி இருக்குது. பிர : இருந்தால் என்ன? உள்ளே அனுப்புங்கள். ( ஐயர் வெளியே போகிறார். அடுத்த நிமிஷத்தில் முருகேசு உள்ளே பிரவேசித்து ராணுவ தோரணையில் வணக்கம் (ஸல்யூட்) செய்கிறான்.) பிர : யார் நீ? முருகேசு : மை நேம் முருகேசு ஸார். (My name Murugesu Sir.) பிர : என்ன வேணும்? முரு : (ஜேபியிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டுகிறான்.) பிர : (அதை பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு) வேலை வேணுமா? முரு : ஆமாம் ஸார். பிர : மிலிட்டேரியிலே இருந்தாயா? முரு : ஆமாம் ஸார். ரொம்ப தொலைவு சுத்தியிருக்கிறேன் ஸார். பிர : மிலிட்டேரியிலே என்ன வேலை பார்த்திக்கிண்டு இருந்தே? முரு: ஸெண்ட்ரி ட்யூட்டி (Sentry duty.) பிர : ஏன் வேலையை விட்டுவிட்டே? முரு: அதான் டீமாப் (Demob) பண்ணிப்புட்டாங்களே. நான் ஒருத்தன் தானா? என்னைப் போல ஆயிரக்கணக்கான பேரை கலைச்சுப் புட்டாங்களே? சண்டை நிந்துச்சு; எங்க வேலையும் போச்சு. பிர : என்ன வேலை செய்வே நீ? முரு : என்ன வேலை கொடுத்தாலும் செய்யத் தயார். எனக்கு ஹிந்துதானி தெரியும்; இங்கிலீசு தெரியும்; தமிழ், தெலுங்கு, மலையாளம், எல்லாம் வரும். இவன் எகிப்துகாரன், இவன் ஈரான்காரன் என்று வித்தியாசம் கண்டு பிடிச்சு சொல்லுவேன். சீனாக்காரன், பர்மாக்காரன், அன்னாம்காரன், மலேயாக்காரன், இவங்க ஒவ்வொருத்தரையும் அடையாளம் கண்டுபிடிச்சு சொல்லுவேனுங்க. கடந்த நாலு வருஷமா சுத்தாத ஊரில் லேங்க; பார்க்காத இடமில்லேங்க. பிர : அப்படியா? முரு : ஜப்பல்பூர், பவால்பூர், ஹோஷியார்பூர், பிரோபூர், டினாஜ்பூர், டிமாபூர்............ பிர : பூர், பூர்; போதும், போதும். முரு : இவ்வளவு தானுங்களா? கெய்ரோ, பக்தாத், டெஹ்ரன், ஏடன், இந்தப் பக்கம் ஹாங்காங், ஷாங்காய், காண்ட்டன் எல்லா ஊரும் தெரியுங்க. பிர : சரி; இப்போ இங்கே வேலை ஒண்ணும் இல்லையே? முரு : அப்படிச் சொல்லிப்புட்டா எப்படீங்க? பிர : உன் அப்ளிகேஷனை இங்கு வைச்சுட்டுப் போ வேலை காலி ஏதாவது இருந்தா உனக்கு ஆள் விட்டு அனுப்பறோம். முரு : வாச்மேன் வேலை ஒண்ணும் இல்லேங்களா? பிர : இப்ப ஒண்ணும் இல்லை. முரு : எஜமான் வூட்டுக்கு வாச்மேன் தேவையில்லேங்களா? பிர : நம்ப வூட்டுக்கு வாச்மேன் தேவையில்லை; வாச் டாக் (Watch dog - காவல் நாய்) இருக்குது. முரு : எஜமான் என்னை நினைவு வைச்சு கூப்பிடணுங்க. பிர : சரி; எனக்கு ரொம்ப வேலையிருக்குது. பியூன்! முரு : நானே போறேனுங்க. (ராணுவ தோரணையில் ஸல்யூட் செய்துவிட்டுப் போகிறான்) இரண்டாவது களம் இடம் : முருகேசுவின் குடிசை. காலம் : காலை. (முருகேசுவின் தகப்பன் முனியனும், தாயார் முனியம்மாளும் குடிசையின் முன் பக்கத்திலுள்ள திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே முருகேசுவின் மனைவி பாப்பாத்தி யம்மாள் முணுமுணுத்துக் கொண்டே ஏதோ வேலை செய்து கொண் டிருக்கிறாள். தெருப்பக்கத்தில், முருகேசுவின் மகன் பத்து வயதுள்ள சின்னப்பனும், மகள் எட்டு வயதுள்ள சின்னம் மாவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.) முனியன் : என்னமோ நாலு வருசமா வவுறு ரொம்ப கஞ்சி குடிச்சு கிணு இருந்தோம். இப்போ இன்னடான்னா பழைய குருடி கதவைத் திறடியா வந்திடுச்சு. முனியம்மா : அப்போ சொன்னா கேட்டாத்தானே? சண்டையி லேந்து மவன் மாதா மாதம் பணம் அனுப்பிகிணு இருந்தான். கூத்தடிச்சே. அழு, நல்லா அழு. முனியன் : நான் அழுதா உனக்கு திருப்தி தானே? அது உனக்கு இல்லையாங்காட்டியும்? முனியம்மா : பின்னே என்னா, வவுறு எரியுது; சொல்றேன். நம்ம ரெண்டு பேரும் வயசானவங்க. என்னமோ, இன்னிக்கோ, நாளைக்கோ கண்ணை மூடிக்கப்போறோம். இதோ (தெரு விலே விளையாடுகிற குழந்தைகளைக் காட்டி) இந்த இரண்டு குழந்தைங்க கதி என்ன ஆவுறது. முனியன் : என்ன ஆவுறது? கடவுள் தான் காப்பாத்தணும். முனியம்மா : அதுங்க என்னா, நம்பளேபோல காலம்பர பழஞ் சோறு தின்றேன்னு சொல்லுதுங்களா? காபி, பலகாரம் ஓணும்னு சொல்லுதுங்க. காப்பி தூளுக்கு எங்கே போவறது? சர்க்கரைக்கு எங்கே போவறது? பாப்பாத்தி : (உள்ளே யிருந்தவண்ணம் குழந்தைகள் இரண்டு பேரையும் கூப்பிட்டு) சின்னப்பா! சின்னம்மா! விளையாடினது போதும். உள்ளே வந்து கலயத்தை எடுத்து வைச்சுகுங்கோ; சோறு போடறேன். சின்னப்பன் : பழஞ்சோறுதானே? எனக்கு வாணாம் போ. சுடச்சுட காபிதான் ஓணும். சின்னம்மா : ஆமாம்; எனக்குக்கூடதான். பாப்பாத்தி : காபி தூள், சர்க்கரை வாங்கிக்கிணு வர நாயனா வெளியே போயிருக்காரு. இப்போ பழஞ்சோறு தின்னுப் புடுங்கோ; நாளைக்கு காபி தரேன். சின்னப்பன் : எனக்கு இப்பவே காபி ஓணும். நாயனா சண்டை யிலே இருக்கச் சொல்ல, நிதம் காபி பலகாரம் குடுத்தீங்களே? சின்னம்மா : அடிக்கடி சினிமாவுக்கு இட்டுக்கினு போனீங்களே? முனியம்மா : ஆமாம்; உங்க அப்பன் அப்போ பணம் அனுப்பிச் சிட்டிருந்தான். உங்க தாத்தா செலவழிச்சாரு. இப்போ பாரு. தெருத்திண்ணையிலே குந்திக்கிணு அழுவறாரு. போங்கோ, உள்ளே போயி சோறு தின்னுங்க. பாப்பாத்தி : வாங்க, எனக்கு நேரமாவுது. சாணிதட்டிப்புட்டு, தலை முழுகணும். அப்புறம் சோறு ஆக்கணும். சின்னப்பன் : ஹூஹூம். பழஞ்சோறு வேணாம். எனக்கு ஒரு அணா கொடு; ரொட்டி வாங்கித் தின்றேன். முனியன்: உனக்குக் கொடுத்தா, தங்கச்சிக்கும் கொடுக்கணு மில்லே? சின்னம்மா : ஆமாம்; எனக்குந்தான் கொடுக்கணும். நான் மாத்திரம் பழஞ்சோறு தின்னுவேனா? பாப்பாத்தி : எக்கேடாவது கெட்டுப் போங்கோ. எனக்கென்னா? உங்க வவுறு தான் காயப்போகுது. (உள் பக்கம் சென்று விடுகிறாள்) முனியம்மா : அப்பவே சொன்னா கேட்டாத்தானே? புள்ளாண் டான் சண்டையிலேந்து கொஞ்சமா அனுப்பிச்சுது? அம்பதும் நூறுமா அனுப்பிச்சுது. அதிலே அஞ்சு, பத்து மீத்தி வைச் சிருந்தா, இப்போ எவ்வளவு நல்லாயிருக்கும்? பத்து ரூபா சீட்டு பிடிக்கச் சொன்னேன். இரண்டடி நிலம் வாங்கிப் போட் டிருந்தா, அதிலே குடிசை போட்டுக்கிணு இருக்கலாமில்லே? இப்போ இந்த பொத்தல் குடிசைக்கு மாதம் இரண்டு ரூபா அழுவாதே இருக்காலமில்லே? (பொறுத்து) மருமவள்தான் கேட்டாளா? மாமனோடு சேர்ந்து ஆட்டம் போட்டா, பட்டுச் சீலையென்ன, பவுன் வித்த விலையிலே கழுத்துக்கு சங்கிலி என்ன, எல்லாம் சேஞ்சு போட்டுக்கிணா. போட்டுகிணா என்னமோ நல்லாதான் இருக்குது. ஆனால் அதுக்கு அந்தது வேண்டாமா? பாப்பாத்தி : (உள்ளிருந்து வெளியே வந்து) ஏன் என்னை பிடிச்சு இழுக்கிறீங்க? என் புருஷன், ராத்தூக்கமில்லாதே, பகலெல் லாம் உடம்பு ஒடிய வேலை சேஞ்சு, உசிருக்குப் பயந்து பயந்து சம்பாரிச்சு அனுப்பிச்ச பணத்தை செலவழிக்க எனக்கு அதிகாரமில்லையா? முனியம்மா : அதிகாரம் - அதிகாரத்தைப் பாரு. பெத்தவளுக்கு இல்லாத அதிகாரம் வந்தவளுக்கு வந்துடுச்சாங்காட்டியம்? முனியன் : ஏன் சண்டை போடுறீங்க? நாளைக்கே புள்ளாண்டான் நிறைய சம்பாதிக்கப் போறான். பாப்பாத்தி : ஆமாம்; அப்போ குந்திக்கினு தின்னலாம் எல்லாரும். முனியம்மா : வாயைப் பாரு. ஆத்தா வூட்லேந்து கொண்டு வந்தவ மாதிரி பேசறா. பாப்பாத்தி : இல்லாகிட்டி இங்கே வாழ்ந்துதான் காட்டியம்? என்னமோ சண்டைக்குப் போனாங்க; ரெண்டு காசு சம்பாரிச் சாங்க. அதுக்கு முன்னே இருந்தது தெரியாதா? விறட்டி வித்து வவுறு வளர்த்த வங்கதானே? அந்த கால்வழி போகாமே எனக்கும் சாணி தட்ற வேலை அமந்தது இப்போ. முனியன் : ஏய் சாதி பேசாதே. எங்க புராதனமெல்லாம் தெரிஞ் சாப்பலே பேசறா. வந்தவளுக்கு வாயைப் பாரு. போ உள்ளே. சின்னப்பன் : அம்மா! அப்பா வராரு. பாப்பாத்தி : போ. வரச்சேயே அதிகாரத்தோடதான் வருவாங்க. (உள்ளே போகிறாள்) (முருகேசு சோர்ந்தவனாய் வருகிறான்) முனியன் : எங்கே தம்பீ, காலம்பரே சொல்லாமே கில்லாமே வெளியே போயிட்டே? முருகேசு : (த்ஹூ கொட்டிக்கொண்டு) அந்த பட்டரை பரசு ராம நாய்க்கர் வரச்சொன்னாரு. யாரோ ஒரு பணக்கார முதலியார் இருக்காராம், அவர்கிட்டே ஏதாவது வேலைக்கு சிபார்சு பண்றேன்னு சொன்னாரு. முனியன் : பாத்தியா அவரை? முரு : பாத்தேன். அவங்களுக்கென்னா, வவுத்திலே பசியாயெடுக் குது? இன்னும் பத்து நாள் போவட்டும். முதலியார் கிட்டே நானே உன்னை அழைச்சுக்கிணு போறேன்,அப்படின்னாரு. முனியம்மா : நீயே அந்த முதலியாரை நேரே பாக்கறதுதானே? முனியன் : நாய்க்கர் ஏதாவது நெனச்சுக்கிணா? பொம்பளேங்க ளுக்கு என்னா தெரியும்? முனியம்மா : என்னா தெரியும்? அரிசி கொணாந்தா ஆக்கிப் போடத் தெரியும். (எழுந்து விர்ரென்று உள்ளே போகிறாள்.) முரு : (முனியம்மா உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து உள் பக்கம் பார்த்து) வவுத்துக்கு ஏதாவது இருக்குதா? பாப்பாத்தி : (உள்ளிருந்தபடியே) பழஞ்சோறுதான் இருக்குது. முரு : அது யாருக்கு ஓணும்? சின்னப்பன் : பாத்தியா, அப்பா சாப்பிடமாட்டேன்றாரு; நாங்க மாத்திரம் சாப்பிடுவோமா? மூன்றாவது களம் இடம் : புதிதாகக் கட்டப்பெற்று வரும் ஒரு வீடு. காலம் : முற்பகல். (ராணுவ கண்ட்ராக்டர் அதபூஷண முதலியாரின் வீடு புதுப்பிக்கப் படுகிறது. கொத்தர்களும் சிற்றாள்களும் வேலை செய்து கொண் டிருக் கிறார்கள். அதபூஷண முதலியாரின் மனைவி குணபூஷணி அம்மாள் மேற்பார்வை செய்கிறாள். பக்கத்தில் ஒரு வேலைக்காரன், அம்மாள்மீது வெயில் படாமலிருக்க ஒரு குடை பிடித்து நிற்கிறான்.) குணபூஷணி : ஏ பொம்பளே! என்ன அங்கே சதிர் ஆட்றே? ஜல்தி ஜல்தி செங்கல்லைக் கொண்டு மேலே கொடு. ஏ சித்தாள்! வெத் திலை பாக்கு போட்டுகிறதுக்கா உனக்குக் கூலி கொடுக்கிறது? ஒரு கொத்தன் : இந்த பொம்பள இன்னா இப்படி அதிகாரம் பண்றா? ஐயா, பாவம், பசு போல இருக்கிறாரு; இவ என்ன டான்னா ஆர்ப்பாட்டம் பண்றா. இன்னொரு கொத்தன் : புதுப்பணம் படைச்சா இப்படித்தான். (மோட்டார் டிரைவர் வேகமாக வருகிறான்.) மோட்டார் டிரைவர் : ஐயா வெளியிலே பொறேன்னு சொல்லச் சொன்னாரு. குண : சரி; சாயந்திரம் ஜல்தி வந்துடச் சொல்லு. சினிமாவுக்கு போகணும். மோ-டிரைவர் : சரீங்க (போகிறான்) குண : டிரைவர், டிரைவர்! வருகிறபோது அந்த ரேடியோ ரிப் பேராச்சா என்னு கேட்டு வரச் சொல்லு. (சரீங்க என்று சொல்லிவிட்டு டிரைவர் வேகமாகப் போய்விடு கிறான். பிறகு தனக்குள்) ஒரு வாரமாக ரேடியோ இல்லாமல் என்ன கஷ்டமா யிருக்குது? இந்த வீட்டு வேலை ஏற்பட்டாலும் ஏற்பட்டது, சாயந்திரம் சாயந்திரம் பீச்சுக்கும் போக முடியல்லே; சினிமா வுக்கும் போக முடியல்லே. (பக்கத்திலே குடை பிடித்துக் கொண்டிருக்கிற ஆளிடம்) தவசுப்பிள்ளையை, ஸெகண்ட டோ (இரண்டாவது முறை) காபி கொண்டுவரச் சொல். வெயில் கொளுத்தறது. உ............ வேலைக்காரர்களிலே ஒருவன் : (தனக்குள் முணு முணுத்துக் கொண்டே) நிழலிலே இருக்கவங்களுக்கு வெயில் காயுது. வெயிலிலேயே காயறவங்களுக்கு, வெயில் உறைக்கவே மாட்டேன்குது. (தவசுப்பிள்ளை காபி கொண்டு வந்து கொடுக்கிறான். குணபூஷணி அம்மாள் குடிக்கிறாள்.) ஒரு பெண் சிற்றாள் : அம்மா, குழந்தை அழுவுது, பால் கொடுத்துட்டு வரேன். குண : இது என்ன, அடிக்கடி இப்படி வேலையை விட்டுவிட்டு போனா கூலியை பிடிச்சுடுவேன். வேலை மேலே வறபோது குழந்தையை ஏன் தூக்கிகொண்டு வறே? பெண் சிற்றாள் : ஆறு மாதம் கூட ஆகல்லே அம்மா. வூட்லே எப்படி வுட்டுட்டு வறது? குண : அப்படீன்னா வீட்டிலேயே இருக்கிறது. வேலைக்கு வரக் கூடாது. பெண் சிற்றாள் : வவுத்துக் கொடுமைதான்அம்மா. குண : சரி; போய் ஜல்தி வா. (முருகேசு பிரவேசித்து மிலிட்டேரி ஸல்யூட் செய்கிறான்.) குண : யார் நீ? முருகேசு : மிலிட்டேரியிலிருந்து வந்தவனுங்க. குண : என்ன வேணும்? முரு : ஏதாவது வேலை. குண : வேலையென்ன கையிலேயா வைச்சுக்கொண்டிருக்கிறேன்? இப்போ வந்து கேட்கறயே? முரு : எப்போ உத்தரவிட்றீங்களோ அப்போ வரேன். குண : இப்போ வேலை ஒன்றும் இல்லை. வேறே எங்கேயாவது போய் பாரு. (தனக்குள்) பெரிய தொல்லையா போச்சு இது. மிலிட்டேரியைக் கலைச்சாலும் கலைச்சாங்க, பொழுது போனா பொழுது விடிஞ்சா, வேலையிருக்குதான்னு வந்து கேட்கிற கூட்டம் அதிகமாகப் போச்சு. பிச்சைக்காரர் தொந் தரவைவிட இவங்க தொந்தரவு அதிகமாகப் போச்சு. முரு : வேலையில்லேன்னா போயிட்றேன் அம்மா; பிச்சைக்காரன், கிச்சைக்காரன்னு சொல்லவாணாம். குண : அதிகம் பேசாதே. காம்பவுண்டை விட்டு வெளியே அனுப்பிச்சுப்புடுவேன். முரு : அதுக்கில்லேம்மா, வேலை கேக்க வந்தேனே தவிர பிச்சை கேக்க வல்லேன்னு சொன்னேன். குண : அப்படி மரியாதையா பேசு. மிலிட்டேரியிலே இருந்தேன்னு சொன்னா, எல்லாரும் பயப்படுவாங்கன்னு பாத்தியா? 1942-ம் வருஷம் மார்ச்சு-ஏப்ரல் மாதத்திலே இவாகியுவேஷன் சமயத் திலே கூட, நாங்க மத்தவங்களை போல பயந்துண்டு ஓடல்லே. மதராசிலேதான் இருந்தோம். தெரியுமா? முரு : வீடு வாசலே வுட்டுட்டுப் போக மனசு வருங்களா? குண : அந்தத் தத்துவமெல்லாம் உன்னைக் கேக்கலே. போ, வெளியே. முரு : வேலை ஏதாவது............. குண : அதுதான் இப்போது ஒன்றுமில்லையென்று சொன்னேனே. முரு : நீங்க மனசு வைச்சா ஏதாவது ஒரு வேலையிலே என்னை வைக்கக்கூடாதா? புள்ளைகுட்டிக்காரன். தள்ளாதவங்க தாயாரும் தகப்பனாரும் இருக்காங்க. எந்த வேலை வேண்டுமா னாலும் செய்யறேன். குண : நிறுத்து உன் பாரதக் கதையை. (சைக்கிளில் ஒருவன் ஒரு பொட்டலத்தை எடுத்து வந்து குணபூஷணி அம்மாளிடம் கொடுக்கிறான்.) குண : என்ன அது? சைக்கிளில் வந்தவன் : வில்காக் கம்பெனியிலே டாக் பிகட் (நாய் தின்கிற பிகோத்து) ஆர்டர் பண்ணி இருந்திங்களாமே, அது டெலிவரி கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. குண : யெ, யெ. (Yes,Yes) பில் கொடுத்தாங்களா? சைக்-வந் : இதோ. (ஒரு கவரை நீட்டுகிறான்.) குண : (பிரித்துப் பார்த்துக்கொண்டே) சிக் எய்ட் (Rs.6-8-0) சார்ஜ் பண்ணியிருக்காங்களா; ரைட். (Right) (பக்கத்தில் குடை பிடித்துக் கொண்டிருக்கிற ஆளிடம், இடுப்பிலிருக்கும் கொத்துச் சாவியை எடுத்துக் கொடுத்து) பீரோவை திறந்து சின்ன இரும்புப் பெட்டி யிலேயிருந்து ஆறரை ரூபாய் எடுத்துக் கொண்டு வா. ஜாக்கிரதை யாய் பெட்டியையும் பீரோவையும் பூட்டிக்கொண்டு வா. (அவன் அப்படியே சாவியை வாங்கிக்கொண்டு போகிறான்.) குண : (முருகேசுவைப் பார்த்து) நீ ஏன் இன்னும் நிக்கறே? வேலை இல்லேன்னுதான் அப்பவே சொன்னேனே. ஒருதரம் சொன்னா உனக்கு அறிவில்லே? முரு : அறிவு இருக்குது அம்மா; அதை உபயோகிச்சுக் கொள்ற வங்கதான் இல்லே. (பொறுத்து) பசியாற்றதுக்கு ஒரு இரண் டணா இருந்தா கொடுங்களேன். குண : சற்று நேரத்திற்குமுன்னே நான் பிச்சைக்காரன் இல்லேன்னு சொன்னாயே? முரு : எல்லாம் வவுத்துக் கொடுமைதான்அம்மா! குண : சரி; இது கஜானா இல்லை. பணம் கொடுக்கிறதுக்கு. வந்த வழியே பார்த்துண்டு போ. முரு : ஹூம். (பெருமூச்சு விட்டுக்கொண்டே போகிறான்.) நான்காவது களம் இடம் : பாதையோரத்தில் ஒரு மரத்தடி. காலம் : நண்பகல். (முருகேசு களைப்புற்றவனாய் வந்து உட்கார்ந்து கொண்டு, மரத்தின் மீது சாய்ந்தவண்ணம் தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான்.) முருகேசு : நாலு வருஷமா சண்டைக்குப்போயி சங்கடப்பட்டேன். உசிருக்குப் பயந்தேனே தவிர, பசிக்குப் பயப்படவில்லை. இப்போ என்னடான்னா, பசிக்குப் பயந்து உசிரை விட்டுடணும் போலே இருக்குது. (பொறுத்து) அடே, துப்பாக்கிப் பிடிச்சு நிந்த கோலமென்ன? இப்போ கண்ட வங்ககிட்டேயும் கை யேந்தி நிற்கிற காலம் என்ன? கடவுளே! கடவுளே! (பொறுத்து) வேலைக்காக எந்த இடத்துக்குப் போனாலும் இல்லேன்னு கையை விரிக்கிறாங்களே தவிர ஒருத்தராவது உண்டுன்னு சொல்லி ஒரு வேலை கொடுக்கமாட்டேங்கிறாங்க. காலெல் லாம் கடுக்குது. (மேல் துணியை எடுத்துப் பிரித்துக் கீழே போட்டுக் கொண்டு படுக்கிறான். மேலே பார்த்த வண்ணம்) வூட்லே புள்ளே குட்டிங்கள்ளாம் என்னா கத்துதுங் களோ? பாப்பாத்தி, ஏன் இன்னும் வல்லேன்னு தெருவிலே பார்த்துகிணு இருப்பா. (வெறுப்புடன்) இருக்கட்டும் அவங் களை யெல்லாம் காப்பாத்தவா நான் பொறந்தேன்? இருந்தா இருக்காங்க, செத்தா சாவுறாங்க. (அப்படியே கண்மூடிக் கொள்கிறான்.) ஆபத்திலே வேற்றுமை முதற்களம் இடம் : அருளய்யாவின் பங்களா. காலம் : மாலை. (அருளய்யா ஒரு மிராசுதார். ஊரில் சொத்து பற்று நிறைய இருக்கிறது. இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு நகரவாசம் செய்கிறார். நாகரிகமாக வாழ்க்கை நடக்கிறது.) அருளய்யா : (பங்களாவின் உட்புறம் தாழ்வாரத்தில் உலவிக் கொண்டே) அடே துரை! பேபி! வெளியில் எங்கேயும் திரிந்து கொண்டிராதீர்கள். ஸைரன் கிய்ரன் ஊதித் தொலைக்கப் போகிறான்கள். துரை : ஏனப்பா உங்களுக்கு இப்பொழுது திடீரென்று அந்த நினைவு வந்துவிட்டது? அ : இல்லையடா, நிலவுகாலமல்லவா இப்பொழுது? நீங்கள் பாட்டுக்கு, நல்ல நிலாவாயிற்றேயென்று ஊர் சுற்றிக்கொண் டிருந்தீர்களானால், வேதனைப்படுவது யார்? பேபி : ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? நாங்கள் என்ன சின்ன குழந்தைகளா? அ : இல்லை, இல்லை; பெரிய மனுஷ்யர்கள்! து : அதற்கில்லையப்பா, பீ.ஏ.வும் இண்டர்மீடியட்டும் படிக்கிற பிள்ளைகளுக்கு ஸைரன் (Siren -அபாய அறிவிப்புச் சங்கு) ஊதினால் ஷெல்ட்டர் (Shelter-ஒதுக்கிடம்) எடுத்துக் கொள்ளத் தெரியாதா? அ : ஷெல்ட்டர் இல்லாத இடத்தில்? பே : அதுதான் அங்கேயே டிரெஞ்ச் (Trench - ஆள் பதுங்கிக் குழி) வெட்டி விட்டிருக்கிறார்களே? அ : அட, டிரெஞ்சு ம் இல்லாமற் போச்சு? து : எங்காவது வீட்டுக்குள் புகுந்துவிடுகிறோம். இதற்கெல்லாம் கூட விசாரமா? பே : ஆபத்து வந்த பிறகு அதைச் சமாளிக்க எல்லாரும் பிரயத்தனப் படுவார்கள். ஆனால், அப்பா, ஆபத்து வராமலிருக்கையிலேயே அதனை எப்படிச் சமாளிக்க போகிறோமென்று கவலைப்படு கிறார். அ : உங்களுக்கென்னடா தெரியும் காலம் இருக்கிற கோலம்? கிரோசின் அகப்படமாட்டேன் என்கிறது. விறகு அகப்பட மாட்டே னென்கிறது; உளுத்தம்பருப்பு கெட்ட கேடு படி ஒரு ரூபாயாம்! து : நமக்கேன் இந்த விசாரமெல்லாம்? நம் வீட்டில்தான் எலக்ட்ரிக் விளக்கு எரிகிறது; தோட்டத்திலே நிறைய மரம் இருக்கிறது விறகுக்கு; உளுத்தம் பருப்பு இல்லையென்றால் பயத்தம்பருப்பு இருக்கிறது இதற்காக என்ன கவலை? பே : ஆமாம்; ஸைரன் ஊதினால் ஷெல்ட்டர் எடுத்துக் கொள்வதற்கும், மண்ணெண்ணெய், விறகு பருப்பு முதலியவை கள் அகப்படவில்லை யென்பதற்கும் என்ன சம்பந்தம்? அ : அதற்கில்லையடா! இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உங்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது; நீங்களென்னவென் றால் வேளை, சமயம் ஒன்றுமில்லாமல் ஊர் சுற்றுகிறோமென்கி றீர்கள். து : அப்படி எங்கே ஊர் சுற்றி எந்த ஆபத்திலே அகப்பட்டுக் கொண்டோம்.? அ : அகப்பட்டுக்கொள்ளப் போகிறீர்களே யென்றுதான் எச்ச ரிக்கை செய்கிறேன். பே : நடவாத விஷயத்தைப் பற்றிக் கவலை; நடக்கவேண்டியதைப் பற்றி அலட்சியம். பெரியவர்களுடைய சுபாவமே இப்படித் தான். அ : சரி, சரி. சாப்பிட்டுவிட்டீர்களா? இந்தக் காலத்தில் பொழு தோடு சாப்பிட்டுத் தொலைத்துவிட வேண்டியிருக்கிறது. (சிறிது உரத்த குரலில்) அடே முனியா! (தோட்டக்கார முனியன் வருகிறான்.) அ : அடே, தெருப்பக்கம் வராந்தா கதவைப் பூட்டினையா? மு : பூட்டிவிட்டேனுங்க. அ : உள்பக்கந்தானே? மு : ஆமாங்க. அ : நான் மறு உத்தரவு சொல்கிறவரையில் சாயந்திரம் பொழு தானதும், வராந்தா கதவை உள்பக்கம் பூட்டி விட வேண்டும். அதற்குப் பிறகு நடமாட்டமெல்லாம் புழக்கடை பக்கந்தான். மு : உத்தரவுங்க. அப்படித்தான் இப்போ நடந்து வருதுங்க. அ : அடே துரை! பேபி! எப்போழுதும் கையில் பஞ்சும் பென்சிலும் தயாராக வைத்திருங்கள்; தெரிகிறதா? ஸைரன் ஊதினா னென்று சொன்னால், காதிலே பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும்; வாயிலே பென்சிலை இடுக்கிக்கொள்ள வேண்டும். தெரிகிறதா? து : பே : (இருவரும் சிரிக்கி றார்கள்) அ : என்னடா சிரிக்கிறீர்கள் முட்டாள் பசங்களா? ஜன்னல் கதவுகளையெல்லாம் இழுத்துச் சாத்திக் கொண்டு, கீழே குப்புறப் படுத்துக் கொண்டு விட வேண்டும். து : அடேயப்பா, எவ்வளவு உஷார்? அ : உஷாரில்லாமல் என்ன? ஏழைபாழைகளுடைய உயிர்களைப் போலவா நம் முடைய உயிர்கள்? (தோட்டக் காரனிடம்) அடே முனியா! சங்கு ஊதினது கேட்டு, யாராவது பிச்சைக்காரர்கள், கூன், குருடு,செவிடுகள் உள்ளே வந்து ஒட்டிக்கொள்ளப் பார்ப் பார்கள். அவர்களுக்கெல்லாம் இடங்கொடுக்கக் கூடாது. மு : ஆமாங்க, அவங்களுக்கெல்லாம் இடங்கொடுக்கலாங்களா? (இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறபோதே ஸைரன் ஊதுகிறது. அவரவரும் முகத்தில் கவலை தட்ட பரபரப்புடன் உள் பக்கம் ஓடுகிறார்கள்.) அ : நான் அப்பொழுதே சொன்னேனே பார்த்தீர்களா? பரிகாசம் பண்ணினீர்களே? அடே, வாயைத் திறக்கக்கூடாது. அவர வரும் கப்சிப்பென்று அந்த நடு உள்ளில் சென்று கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். அம்மா, பாட்டி எல்லாரையும் கூப்பிடுங்கள்; காரியம் அப்புறம் செய்து கொள்ளலாம். பாட்டி : (உள்ளிருந்து) அடே அருளு! நீ உள்ளே வா. அ : இதோ வருகிறேன். அடே துரை! நம்ப நாய் ரோ எங்கேடா? அதையும் உள்ளே அழைத்துக் கொண்டு போ. அது எங்கேயா வது செத்துகிடக்கப் போகிறது. அடே முனியா! தெருக்கத வண்டை உள்பக்கமாக உட்கார்ந்திரு. நீயும் எங்களைப் போல குப்புறப் படுத்துக்கொண்டுவிடாதே. ஒன்றும் பயமில்லை. யாரும் வராமல் பார்த்துக்கொள். மு : உத்தரவுங்க. (அருளய்யா உட்பக்கம் போய்விடுகிறார். சங்கு ஊதிக்கொண்டே யிருக்கிறது. முனியன், எஜமானன் சொற்படி உட்கார்ந்து கொள்கிறான். அந்தச் சமயத்தில் ஓர் ஏழை தீரி,இடுப்பிலே குழந்தையுடன், கண்ணில்லாத தன் கணவனை, கோல்பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறாள்.) திரீ : ஐயா, கொஞ்சம் இடங்கொடுங்கய்யா! (குழந்தை அழுகிறது) அழுவாதே! அழுவாதே! ஐயா! கண்ணில்லாத கபோதியை இட்டுக்கிணு வந்திருக்கேன் ஐயா! கொஞ்சம் கதவை திறவுங்க ஐயா! மு : தா, கத்தாதே. ஐயா கோவிச்சுக்குவாங்க. வெளியே போயிடு. : எங்கே ஐயா போறது? ரோட்டிலே போனா உள்ளே போ போன்னு நெட்டி பிடிச்சு தள்றாங்க. கண்ணில்லாத புருஷன் : ரவை பெரிய மனசு பண்ணுங்க ஐயா! பசுமாடு கத்தறதே பார்த்தாலே உங்க மனசு இரங்கலையா? குயந்தே வீல் வீல்னு கத்துதுங்களே. மு : அடே என்னாய்யா என்னை பிடிச்சு எஜமான் திட்ட போறாங்கோ. அ : (உள்ளிருந்தபடியே) யார் அது? எனக்குத் தெரியுமே முன்ன மேயே? பிச்சைக்கார நாய்களை ஏன் உள்ளே விட்டே? : சாமி! கொஞ்சம் கதவைத் திறவுங்க! ஐயா! ரொம்ப பயமா இருக்குது. க.பு : எல்லா உசிரும் ஒண்ணுதானே ஐயா! கொஞ்சம் தயவு பண் ணுங்க ஐயா! அ : நாய்க்கு வாயைப் பார். எல்லா உயிரும் ஒன்றுதானாம்! அடே முனியா! உனக்கு மூளை இல்லை? கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளக்கூடாது? மு : கதவு உள்புறமா பூட்டியிருக்குதுங்களே; நான் எப்படி அவுங்களை கழுத்தைப் பிடிச்சு தள்றது? : ஐயா! ஈவு இரக்கமில்லையா? புள்ளே குட்டி பெத்தவங்க இல்லையா நீங்க? க.பு : ஐயோ, நாய் அழுவற மாதிரி இருக்குதுங்களே இந்த சங்கு ஊதறது; அடிவயத்தையே கலக்குதே. ஐயா! ரவை உள்ளே இடம்விடுங்கய்யா. எல்லாரும் கடவுளின் கீழே குடியிருக்கப் பட்டவங்க தான் ஐயா! து : (உள்ளே யிருந்து) அப்பா! கதவைத்திறந்து அவர்களை உள்ளே வரச் சொல்லுங்களேன். அவரவர் உயிர் அவரவருக்கு வெல்லந்தானே? அ : சரி, சரி, உன்னுடைய தருமோபதேசம் இங்குத் தேவையில்லை. ஏ பொம்பளை! அண்டை வீடு, எதிர் வீடு எங்கேயாவது போய் ஒண்டிக்கொள். : நான் வெளியே நிந்துக்கறேன். உசிரு போனா போவுது. இந்தக் குழந்தையையும் கண்ணில்லாத இவரையும் மட்டும் உள்ளே இட்டுக்கொள்ளுங்க ஐயா! அ : (உள்ளிருந்து) இதென்னடா நச்சு! இந்த பொம்பளைகள் சமாசாரமே இப்படித்தான். ஏய்! உன் உசிரு போகலாமின்னா அவங்க உசிருந்தான் போகட்டுமே. ரொம்ப துணிஞ்சவள் மாதிரி பேசறயே! (ரோட்டிலிருந்து ஏ.ஆர்.பி. தொண்டர் விசில் அடிக்கிறார்.) ஏ.ஆர்.பி. தொண்டர் : ஏய், யாரது வெளியே நிக்கறது? உள்ளே போ. அ : (உள்ளிருந்து) வெளியே போ. : வெளியே இருக்கப்பட்டவங்க உள்ளே போன்றாங்க; உள்ளே இருக்கப்பட்டவங்க வெளியே போன்றாங்க. எங்கேதான் போவறது? அ : (உள்ளிருந்து) செத்துப்போறது. து : (உள்ளிருந்தபடியே) ஏழையாய்ப் பிறந்தவர்களுக்கு அது ஒன்றுதான் சுலபமான வழி! க.பு : சரி. வா, ஐயாதான் வழி சொல்லிக் கொடுத்துப் புட்டாரே; வா. எங்கேயாவது மரம் இருக்குதா பாரு! அதன் கீழே போய் குந்திக்கலாம். : வீட்டைத்தான் கல்லாலே கட்டிக்கிணாங்க! மனசு கூடவா கல்லாகிவிடணும்! கடவுளே! கடவுளே! க.பு : கடவுளு! கடவுளு! அவரு எங்கே இருக்காரு? அப்படி இருந்தாரானா, அவரும் என்னைப்போல கபோதியாகத்தான் இருக்கணும். இரண்டாவது களம் இடம் : ஒரு சாலை. காலம் : மேற்படி சம்பவம் நடந்த மறுநாள் மாலை. (அருளய்யாவும் அவர் மனைவியும் காற்று வாங்கிக் கொண்டே நடந்து செல்கிறார்கள்.) அருளய்யா : நான் சொல்கிறேன் கேள்; வீண் பிடிவாதம் பிடிக் காதே. தங்கம் விற்கிற விலையிலே என்ன நகைகள் பண்ண முடியும்? வெள்ளி விற்கிற விலையிலே என்ன பாத்திரங்கள் செய்ய முடியும்? சண்டை நிற்கட்டும். எல்லாம் விலை குறையப் போகிறது. வேணது செய்துகொள்ளலாம். மனைவி : அதுவரையில் யார் இருக்கிறார்களோ? யார் காயம் என்ன நிலை? அ : அட பைத்தியமே! நமக்கெல்லாம் இப்பொழுது சாவே கிடையாது. இன்னும் எத்தனையோ வருஷங்கள் இருக்க வேண்டும்; எவ்வளவோ அனுபவங்கள் அனுபவிக்கவேண்டும். ம : அந்த வேதாந்தமெல்லாம் வேண்டாம். இப்பொழுது நான்கு பேருக்கு மத்தியில் கௌரவமாய் இருப்பதை விட்டு விட்டு...................... அ : இப்பொழுது கௌரவத்திற்கு என்ன குறைச்சல்? வைர அட்டிகை தவிர உனக்கு எல்லாந்தான் இருக்கிறதே. ம : அதுதான் வேண்டுமென்கிறேன். அ : அப்புறம் ஆகட்டுமே என்கிறேன். ம : முடியாது. நாளைக்கு துரைக்கு யாராவது பெண்ணைக் கொடுப்பதாக வந்தால் அவர்கள் எதிரில் நான் வெறுங் கழுத் தோடவா போய் நிற்பது? அ : அதுவும் நியாயந்தான், நாளைக்கே கம்பெனியில் ஆர்டர் கொடுத்து விடுகிறேன். (ரோட் ஓரத்தில் ஒரு குடிசை, குடிசைக்கு முன்புறத்தில் ஓர் ஏழைக்குடியானவன் தன் மனைவியுடன் களைப்புத்தீர பேசிக் கொண்டிருக்கிறான். அவர்களுடைய குழந்தை எதிரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அபாயச் சங்கு ஊதுகிறது.) குடியானவன் மனைவி : ஐயய்யோ, வவுத்தே கலக்குது. வாடா கண்ணு! (குழந்தையை வேகமாக ஓடிவந்து எடுத்துக்கொண்டு கணவனிடம்) நீயும்உள்ளே வந்துடு. (அருளய்யாவும் அவர் மனைவியும் சங்கு ஊதலைக்கேட்டு, என்ன செய்வது, எங்கே சென்று பதுங்குவது என்று திகைக்கிறார்கள்.) குடியானவன் : ஐயா! உள்ளே வந்துடுங்க. வெளியிலே நிந்தா ஆபத்து. ம : இந்தக் குடிசைக்குள்ளேயா போய் நுழைவது? அ : வா, வா! அதெல்லாம் இப்பொழுது பார்த்தால் முடியாது. கு : ஏம்மா தயங்குறிங்க? ஆபத்திலே ஏழை பணக்காரருன்னு வித்தியாசம் பார்த்தா முடியுங்களா? ம : நம்மள் அந்ததென்ன, கௌவரமென்ன. ஆபத்து என்று சொல்லிக்கொண்டு இந்தக் குடிசைக்குள்ளேயா போய் உட்காரு வது? போகிற பிராணன் எங்கிருந்தாலுந்தான் போகப்போகிறது. வெளியில் தானே நிற்போமே? கு : அந்ததை பாக்கிறிங்களே தவிர ஆபத்தே பாக்கல்லியே? வாங் கம்மா வாங்க, உள்ளே வாங்க. உங்களுக்கும் ஐயாவுக்கும் ஒரு பக்கமா ஒழிச்சு விடறோம். கொஞ்ச நேரத்துக்கு குந்திக்கினு இருந்தீங்கன்னா. திரும்பவும் சங்கு பிடிச்சா நீங்க வெளியே வந்துடலாம் பாருங்க. அ : வா, வா; சங்கு அழுவது நிற்கப்போகிறது. ம : (முகஞ் சிணுங்க) உள்ளே ஒரே அழுக்கா யிருக்கும். கு : இருக்கலாங்கோ, ஆனா அன்போடு கூப்பிட்ரேனுங்களே? அழுக்கு பெரிசா? அன்பு பெரிசா? கு-ம : வாங்கம்மா உள்ளே. ஆபத்து நெருங்கிக்ணு வருது. இடம் அகப்பட்டா போதுமிண்ணு அவங்கவங்க ஓடி ஒளியறாங்கோ. கு : உ; பெரிய மனுசருங்கோ; அவங்களையெல்லாம் அதிகமாக ஒண்ணும் பேசாதே. கு-ம : நான் என்ன பேசிப்புட்டேன்? உள்ளே வரச் சொல்றேன்; அவ்வளவுதானே? (ரோட்டில் ஏ.ஆர்.பி.தொண்டர் ஒருவர் சைக்கிளில் விசில் ஊதிக்கொண்டே போகிறார்.) தொண்டர் : யார் ஸார் அது? உள்ளே போங்க. (பொறுத்து) என்னா ஸார் முறைச்சு பார்க்கிறீங்களே? அந்தக் குடிசைக் குள்ளேதான் போய் கொஞ்சநேரம் இருங்களேன். ம : வந்துடுங்கோ ; வந்துடுங்கோ. அ : தேளுக்கு அதிகாரங்கொடுத்தாற்போலேதான். கு : அவங்க சொல்றது நெசந்தானுங்களே. குண்டு விழுந்தா, பணக்காரர், ஏழைன்னு வித்தியாசம் பார்த்தா விழப்போவுது? எல்லாருக்கும் ஆபத்து ஒண்ணுதானுங்களே. வாங்க, உள்ளே வாங்க, அம்மா! பயப்படாமே வாங்க. நாங்கள்ளாம் குடியானவங்க; கஷ்டப்பட்டு கஞ்சி குடிக்கிறவங்க; அண்ணன், தங்கைகளோடு வாழறவங்க; ஈவு, இரக்கம் உடையவங்க. உள்ளே வாங்க. (எல்லோரும் குடிசைக்குள் செல்கிறார்கள். அழுகைச் சங்கு நிற்கிறது. மேலே ஆகாய விமானங்கள் பறக்கின்றன.) பசிக்கொடுமை முதற் களம் இடம் : பாதையோரத்தில் ஒரு மரத்தடி. காலம் : பிற்பகல். (இரண்டு கந்தல் பாய்கள் கீழே விரிக்கப்பட்டிருக்கின்றன. சில கந்தல் துணிகள்,இரண்டொரு கிழிந்த புதகங்கள், தகரக்குவளை, மூன்று நான்கு கரிய சட்டி பானைகள் முதலியன மூலைக்கொன்றாய் அலங்கோலமாகக் கிடக்கின்றன. மாணிக்கம் சோர்ந்துபோய் ஒரு பாயின்மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்) மாணிக்கம் : (தனக்குள்) அறங்கையும் புறங்கையுமாய் நக்குகிற வாழ்க்கை யென்று சொல்லுவார்கள். அதற்குக்கூட மோசம் வந்து விட்டது இப்பொழுது. ஹூம், வெள்ளம் வடிந்து எத்த னையோ நாட்களாகின்றன; ஆனால், நமது கஷ்டம் விடியவே இல்லை. பாவம், தனபாலன் தினந் தோறும் எத்தனை இடங் களுக்குத்தான் போய்வருவான்? யாராவது முகங் கொடுத்துப் பேச வேண்டுமே? எத்தனை பேரிடத்தில் உழைத்திருப்பேன். எத்தனை பேருடைய தோட்டங்களில் என் வியர்வையைக் குடம் குடமாகக் கொட்டியிருப்பேன்? எஜமான்மார்களுடைய மனம் குளிர்ந் திருக்க வேண்டுமென்பதற்காக இரவெல்லாம் கண் விழித்து எத்தனை பேருடைய கால்களை அமுக்கியிருப் பேன்? ஒருவருக்காவது கொஞ்சம் இரக்கம் இருக்கவேண் டுமே? உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். வாதவம், ஆனால், உடல் நோக உழைத்தவர் களை ஒரு கணத்திலே மறந்துவிட்டு உயிரோடு கொன்று விடலாமா? இதென்ன நியாயம்? ஏழைகளுக்கு மட்டுந்தான் நன்றி விசுவாசம் இருக்கவேண்டுமாம்! அட உலகமே! நன்றிகெட்ட உலகமே! (தனபாலன் தள்ளாடிக்கொண்டு வருகிறான்) மாணி : வா! தனம்! என்ன சமாசாரம்? கண், மூஞ்சியெல்லாம் உள்ளே போயிருக்கிறதே? வயிற்றுக்கு ஒன்றுமே அகப்பட வில்லையா? இந்தா, குவளையில் கொஞ்சம் கஞ்சி வைத்திருக் கிறேன். அதையாவது குடி. (கை நீட்டி அதை எடுக்கப் போகிறான்) தனபாலன் : வேண்டாம் அப்பா! நீங்கள் உடம்பை அலட்டிக் கொள்ள வேண்டாம். மாணி : அலட்டிக்கொள் ளாமல் இன்னும் எத்தனை வருஷத்திற்கு இந்த உயிரைக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? போகிற பிராணன் சீக்கிரமாகத் தான் போகட்டுமே. தன : அப்படியெல்லாம் சொல்ல வேண்டா மப்பா! உங்களுக்கு ஒரு வேளையாவது சோறும் கறியுமாக ஆகாரம் கொடுக்கவேண்டு மென்று பார்க்கிறேன். அதற்குப் பணம் அகப்படமாட்டே னென்கிறது. நானும் மூன்று நாளாக அலைகிறேன். மாணி : நீ ஏன் வீணில் அலையவேண்டும்? அகதியாகப் போனவர் களுக்கு ஆகாரம் எங்கிருந்து கிடைக்கும்? அஜீரணக்காரனுக்கு மருந்து கொடுத்தாவது ஆகாரத்தைத் திணிக்கிற காலமல்லவா இது? இருக்கட்டும். அந்தக் கஞ்சியைக் குடி. உன் முகத்தைப் பார்த்தால் என் வயிறு பகீரென்கிறது. அந்த மட்டும் அவள்-உன் தாயார்- இந்தக் கண்ராவிகளை யெல்லாம் பாராமல் போய் விட்டாளே, அவள் மகராஜிதான். தன : அவர்களையெல்லாம் இப்பொழுது நினைத்துக் கொள்வா னேன்? செத்தவர்கள் சுகப்பட்டவர்கள். மாணி : சரி; அதுவும் உண்மைதான். ஏதோ அந்தக் கஞ்சியில் கொஞ்சம் குடி. சிறிதாவது களைப்பு தீரும். தன : காலையில் நான் வைத்துவிட்டுப் போன கஞ்சிதானே அது? மாணி : ஆமாம்; நான் கொஞ்சம் குடித்தேன். உனக்குக் கொஞ்சம் வைத்திருக்கிறேன். தன: அதை எப்படி மனமொப்பிக் குடித்தீர்கள் அப்பா? மாணி : ஏன் அதற்கென்ன? ஏன் மூஞ்சியைச் சிடுத்துக் கொள் கிறாய்? (பொறுத்து) ஓ! அதற்கு உப்பில்லையென்று சொல்கி றாயா? நாம்தான் உப்பில்லாமல் கஞ்சி குடிக்கப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டோமே? தன : (உடம்பு சிலிர்க்கிறது; கண்ணீர் விடுகிறான். தனக்குள்) எத்தனை நாளைக்கு இந்தப் பஞ்சை வாழ்க்கை? தம் உயிரைக் கொடுத்து என் உடலை வளர்த்த தந்தைக்கு உப்புப்போட்ட கஞ்சி வார்க்க என்னால் முடியவில்லை. சை! என்ன வாழ்க்கை! (எழுந்திருக்கிறான்.) மாணி : (ஏறிட்டுப் பார்த்து) ஏன் கண்ணீர் விடுகிறாய்? அழாதே; நானல்லவோ உனக்காக அழவேண்டும்? எத்தனையோ பாடுகள் பட்டு உன் வயிற்றை நிரப்பி வந்தேன். நான் பிண்ணாக்காகப் போய்விட்டாலும் சரி, நீ எண்ணெயாக வந்தால் போதுமென்று எத்தனையோ பேரிடம் பல்லைக் காட்டி உனக்குப் படிப்புச் சொல்லிக்கொடுத்தேன். இப்போது உப்பில்லாதக் கஞ்சியைக் காட்டி, குடியென்று கூசாமல் சொல்கிறேனே, அதற்காக நானல்லவோ அழவேண்டும்? (பொறுத்து) இருக்கட்டும்; இன்று யாராரிடம் போயிருந்தாய்? தன : ஓரிடமா? இரண்டிடமா? எத்தனையோ பேரைப் பார்த்தேன். ஒருவராவது முகங்கொடுத்துப் பேசவில்லை. மாணி : அந்த ரகுநாத விஜயர் என்ன சொன்னார்? தன : பிச்சைக்காரருடைய தொந்தரவு பொறுக்க முடியவில்லை யென்று சொல்லி நாயை என்மீது ஏவி விட்டார். மாணி : அட பாவி! இவர் பிச்சைக்காரராயிருந்தது எனக்கு நன்றாகத் தெரியுமே. ஒரு பகலிலே பணக்காரரான பெயர்வழி யல்லவா இவர்? தன : இருக்கலாம். இப்பொழுது அவர் பணக்காரர்தானே? அகதி கள் நிதிக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். அடுத்த வருஷத்தில் ஏதாவது பட்டம் வருமென்றுகூடச் சொல்லிக் கொள்கிறார்கள். மாணி : அதென்ன பட்டமப்பா? ஆகாசத்திலே பறக்கிற பட்டமா? அதுவாவது, சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டாக உபயோகப் படுகிறது! சரி! பழனியாண்டவரிடம் போயிருந்தாயா? தன : பரதேசிகளுக்கு, தாம் அன்னசத்திரம் கட்டி வைக்க வில்லையென்று சொல்லிவிட்டார். மாணி : பரதேசியா? உன்னைப் பார்த்துச் சொன்னாரா? தன : ஆம்; அவர் இப்பொழுது, பழைய பேப்பர் விற்றுப் பிழைத்த பழனியல்லவே; பக்த சிரோமணியான பழனியாண்டவ ரல்லவோ? மாணி : அவரிடம் தர்மம் கேட்கச் சொல்லி உன்னை நான் அனுப்ப வில்லையே? அவர் ஒரு நாள் வியாபாரமே இல்லையென்று, வீட்டுச் செலவுக்காக ஏழணா என்னிடம் வாங்கிக்கொண்டு போனார். அதை ஞாபகப்படுத்தவல்லவோ சொன்னேன்? தன : அவர் தன்னையே இப்பொழுது மறந்துவிட்டிருக்கிறாரே? இந்த ஏழணா எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது? மாணி : வாதவம். புதிய மோகத்திலே பழைய நிலைமையை மறந்து விடுகிற காலமல்லவா இது? சரி; நமது முதலாளி சுந்தர நாதர் என்ன சொன்னார்? தன : ஏதோ அவசர ஜோலியாய் இருக்கிறாராம். சிறிது நேரம் பொறுத்து வரச் சொன்னார். இப்பொழுது மறுபடியும் அவ ரிடத்தில் போக வேண்டும். மாணி : அவரிடம் நான் ரொம்ப சொன்னதாகச் சொல்லி, கழிந்து போன மாதங்களுக்கு, அவர் விட்டிருந்த மனைக்கு வாடகை கேட்க வேண்டாமென்று சொல். தன : அவர் சும்மா மனையைக் கொடுத்துவிடவில்லையே. அவர் பிள்ளைக்குப் பாடமல்லவோ சொல்லிக் கொடுத்துக் கொண் டிருந்தேன்? மாணி : இருக்கலாம். ஆனால் பணக்காரர்களுக்கு இந்த நியாய மெல்லாம் புரியாது. லாபம் குறைந்து விட்டால் அதை நஷ்டம் வந்துவிட்டதென்று சொல்வார்கள். தம்மைப் போன்ற பணக் காரர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்களுடைய காப்பிக்குச் சர்க்கரை குறைந்து விட்டதேயென்று அங்கலாய்ப்பார்கள். ஏழைகளைப் பார்த்தால் அவர் களுக்கு ஏளனம்; பூமிக்குச் சுமையாக இவர்கள் ஏன் பிறந்திருக்கிறார்கள் என்கிற மாதிரி நம்மைப் பார்த்து ஒருவித அலட்சிய சிரிப்பு. தன : எப்படியும் உலகம் அவர்களைச் சுற்றியல்லவோ சுழல்கிறது? இருக்கட்டும். சுந்தரநாதரிடம் போய் வருகிறேன். மாணி : போய் வா. நேற்றுக் காலையிலிருந்து வயிற்றுக்கு ஒன்றும் இல்லையே? பட்டினியோடு எவ்வளவு தூரம் அலைவாய்? தன : பட்டினி கிடக்கத்தானே நாம் பிறந்திருக்கிறோம். ஜாக்கிர தையப்பா! நான் சீக்கரமாக வந்து விடுகிறேன். (தனபாலன் செல்கிறான். மாணிக்கம், பெருமூச்சு விட்டுக் கொண்டு படுத்துக்கொள்கிறான்.) இரண்டாவது களம் இடம் : சுந்தரநாதர் பங்களாவில் முன் தாழ்வாரம். காலம் : மாலை. (இச்சகம் பாடி வயிறு வளர்க்கும் ஞானபண்டிதர் என்ற ஒரு நபரிடம் சுந்தரநாதர் பேசிக்கொண்டிருக்கிறார்.) சுந்தரநாதர் : என்ன பண்டிதர்வாள்! இந்த ஏழைப் பயல்களுக்கு இரக்கமே காட்டக்கூடாது. நம்மைச் சுரண்டப்பார்க்கிறான் கள். ஞானபண்டிதர் : தொழிலாளர் கூட்டங்களில் இந்தச் சுரண்டுதல் என்ற வார்த்தையை நான் அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறேன். சுந் : ஆமாம், பிழைப்புக்கு வழியில்லாத சிலர், சில தொழிலாளர் களைக் கூட்டிக்கொண்டு காச்சு மூச்சென்று கத்துகிறார்கள். கடைசியில் நம்மிடத்தில்தான் காசு பிடுங்க வருகிறார்கள். ஞான : வெல்லம் இருக்கிற இடத்தில்தானே ஈக்கள் மொய்க்கும்? சுந் : பாருங்கள்; நம்ம நெரிஞ்சல் பள்ளத்தாக்கிலே குடிசைகள் போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தேனல்லவா? வெள்ளம் வந்து குடிசை களையெல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதற்கு நானா பொறுப்பாளி. ஞான : நீங்கள் எப்படிப் பொறுப்பாளி? வெள்ளம் போன்ற கருணை யுடையவர்களல்லவோ தாங்கள்? சுந் : பதினெட்டாந் தேதி காலையில் வெள்ளம் வந்தது. பதினேழாந் தேதிவரை, காலி மனைக்கு வாடகை கொடுக்க வேண்டு மல்லவா? மாட்டேனென்கிறார்கள் இந்தப் பசங்கள். கேட் டால், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். ஞான : விவரம் தெரியாதவர்கள். சுந் : நானென்ன மற்றவர்களைப் போல் ஈவு இரக்கமில்லாதவனா? தயை தாட்சண்யம் காட்டாதவனா? ஞான : அப்படிச் சொல்கிற வாயை அலம்ப வேண்டும். சுந் : ஏதோ ஏழைகள், வீடு வாசலில்லாமல் கஷ்டப்படுகிறார்களே, போனால் போகிறதென்று சொல்லி, நான் இரண்டு நாள் வாடகையைத் தள்ளிவிட்டு, பதினைந்து நாள் வாடகையை மட்டும் கொடுங்கள் என்று சொல்லுகிறேன். அதற்குக் கூட மாட்டேனென்கிறார்கள் இந்தப்பயல்கள். ஞான : அப்படியென்ன பிரமாதமான வாடகை? சுந் : அதைத் தான் கேளுங்களென்கிறேன். நானே ரொம்பக் குறைச்சலாக வாடகைக்கு விட்டிருக்கிறேனென்று கம்ப்ளெ யிண்ட் பண்ணுகிறார் தாண்டவராயர். என்ன வாடகை வாங்குகிறேன் தெரியுமா? இருபதடிக்கு இருபதடி சதுரத்திற்கு மாதம் இரண்டு ரூபாய்தான். ஞான : இரண்டு ரூபாய் ஒரு பெரிய தொகையா? சுந் : பதினைந்து நாளைக்கு என்ன ஆகிறது? ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாய் கொடுக்க முடியாதென்று வழக்காடுகிறார்கள். ஞான : அப்படி எவ்வளவு வரவேண்டும்? சுந் : மொத்தம் இருபத்து மூன்று குடிசைகள் இருந்தன. இருபத்து மூன்று ரூபாய் வரவேண்டும். இந்தக் காலத்தில் இருபத்துமூன்று ரூபாய் ஒரு பெரிய தொகை அல்லவா? நான் ஏன் அதை நஷ்டப்படவேண்டும்? உங்களைப் போலொத்தவர்களுக்குக் கொடுத்தாலும் பிரயோஜனமுண்டு. ஞான : (பல்லிளித்துக்கொண்டே) ஆமாமாம். (தனபாலன் பிரவேசிக்கிறான்.) சுந் : என்னய்யா? பணம் கொண்டு வந்தாயா? தன : பணம் கேட்க வல்லவோ வந்தேன்? சுந் : உனக்கென்ன புத்தி இருக்கிறதா, இல்லையா? தனபாலன் : இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைக்கு பாடஞ் சொல்லிக் கொடுக்கச் சொல்லி எனக்கு உத்தரவிட்டிருக்க மாட்டீர்களே? சுந் : நானெங்கே ஐயா, உத்தரவிட்டேன்? படித்த படிப்பு மறந்து விடக்கூடாதே என்பதற்காகப் பிள்ளைக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறே னென்று சொன்னாய். சும்மா சொல்லக்கூடாதே யென்பதற்காக, மனைக்கு, வாடகை வேண்டாமென்று சொன் னேன். இப்பொழுது வெள்ளத்தினால் எனக்கு எவ்வளவு நஷ்டம் பார்! அதனால்தான் பாதி வாடகையாவது கொடுக்க வேண்டுமென்று சொல்கிறேன். தன : எட்டு மாதமாகக் குழந்தைக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்து வந்தேனே? சுந் : அதற்காக ஒரு ரூபாய் விழுக்காடு தள்ளிக் கொண்டு விட் டேனே? தன : மாதம் இரண்டு ரூபாய் இல்லையா? மனை வாடகைக்கு ஈடாகப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதல்லவோ பேச்சு? சுந் : பேச்சு! பேச்சு!! பேச்சை ரொம்ப கண்டு விட்டான் இவன். நீ படிப்பித்த படிப்புக்கு ஒரு ரூபாய் போதாதோ? ஞான : அப்படி இவர் எவ்வளவு பாக்கி? தன : பாக்கி ஒன்றுமேயில்லை, பண்டிதரே! என்னை பாக்கி தாரனாக வைத்துப் பேசாதீர். சுந் : பார்த்தீரா அதிகப் பிரசங்கியை? பாக்கிதாரன் இல்லாமல் நீ என்ன முதலாளியோ? தன : நான் முதலாளியாக இல்லாமலிருக்கலாம்; ஆனால் கடன் காரன் இல்லை. சுந் : பிச்சைக்கார பையலுக்கு வாயைப்பார். தன : நான் பிச்சைக்காரன்தான். ஆனால், நான் யாரையும் மோசடி செய்யவில்லை. ஞான : ஏனய்யா சும்மா வார்த்தைகளைக் கொட்டுகிறீர்? ஏதோ எஜமானைக் கெஞ்சிக் கேட்டால் மனமிரங்கிக் கொடுப்பாரே? அதை விட்டுவிட்டு.................! சுந் : எனக்கு இரக்கமே கிடையாது பண்டிதரே! அதுவும் இந்தப் பயலிடத்தில். என்ன தனபாலப்பிரபு! நாளை காலை பத்து மணிக்குள் என்னுடைய எட்டு ரூபாயைக் கொண்டு வந்து கட்ட வேண்டும். இல்லாவிட்டால் போலீஸில் எழுதி வைப் பேன். ஞான : எட்டு ரூபாய்தானே? எங்கேயாவது பிரயத்தனப்பட்டு, கொண்டு வந்து கட்டிவிடும். தன : இருக்க நிழலில்லை. ஐந்து நாட்களாக மரத்தடியில் வாசம். தகப்பனாருக்கு உப்பில்லாத கஞ்சியைக் கொடுத்துவிட்டு நேற்றுக்காலையிலிருந்து பட்டினி கிடக்கிறேன். நான் எட்டு ரூபாய்க்கு எங்கே போவேன்? சுந் : நரக லோகத்திற்குப் போ! ஞான : (சுந்தரநாதருடைய சாமர்த்தியமான பேச்சை மெச்சுவது போல் சிரிக்கிறார்.) தன : பண்டிதருக்கு வழி தெரியும் போலிருக்கிறது; அதனால்தான் சிரிக்கிறார். சுந் : அடே யாரங்கே, தோட்டக்காரன்! இவனை கேட்டுக்கு வெளியே கல்தா கொடு. தன : நானே போகிறேன். என்னை கல்தா கொடுத்து அனுப்ப வேண்டாம். சுந் : நாளை காலை பத்து மணிக்கு - ஞாபகமிருக்கட்டும். இல்லை யானால் பதினொரு மணிக்கு போலீ டேஷன். தன : இருக்க இடமும், வயிற்றுக்குச் சோறுமாவது அங்கே கிடைக்கும். சுந் : சோறு போடச் சொல்கிறேன்! இரு, இரு நல்ல பூசை கொடுக்கச் சொல்கிறேன். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருகிறது. தன : அம்மியே உடைந்துபோய் விட்டாலோ? (வேகமாய்ப் போய்விடுகிறான்) சுந் : வயிற்றிலே சோறில்லாதவர்களுக்கு வாய் எவ்வளவு நீளம் பார்த்தீர்களா? ஞான : காலம் கெட்டுப் போய்விட்டது. நல்லவர்களுக்கு இது காலமில்லை. சுந் : காலமா? அதனால்தான் இப்படி ஆயிரக்கணக்காகச் செத்துப் போகிறார்கள் இந்த வாயாடி ஏழைகள். ஞான : (எழுந்து நின்று) உத்தரவு கொடுக்கிறீர்களா? சுந் : எங்கே இதற்குள் கிளம்பிவிட்டீர்கள்? ஞான : போகவேண்டும். வீட்டிலே அரிசி இல்லையென்று சொன் னார்கள். அதனால்தான் இப்படி வந்து பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். சுந் : எவ்வளவு வேண்டும் இப்பொழுது? ஞான : (பல்லிளித்துக் கொண்டே) ஐந்து ரூபாய் இருந்தால் போதும். சுந் : (சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து) இந்தாரும்; இதை இப்பொழுது வைத்துக் கொள் ளும். இந்தப் பசங்களிடமிருந்து வாடகைப்பணம் வரட்டும். அதில் ஏதாவது கொடுக்கிறேன். ஞான : அதற்கென்ன! (இளிக்கிறார்) தர்மப் பிரபுக்கள் நீங்கள். உங்களைப் போலொத்தவர்கள் இருக்கிறதினால்தான், இந்த இரண்டு துளி மழையாவது பெய்கிறது. நானும் அந்தப் பயல் களிடத்தில் நல்லதனமாகச் சொல்கிறேன். ஏழைகள்தானே? இல்லாத கொடுமையினால் என்னென்னவோ உளறுகிறார்கள். (பொறுத்து) வரட்டுமா? ....................... மறுபடியும் எப்பொழுது உத்தரவு? சுந் : சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை இந்தப் பக்கமாக வாருங்களேன். ஞான : அவசியம் வருகிறேன். (செல்கிறார்) மூன்றாவது களம் இடம் : ஆபத்திரி. காலம் : இரவு பன்னிரண்டு மணி. (தனபாலன் ஒரு கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருக்கிறான். அடிக்கடி பினத்தல் உண்டாகிறது) டாக்டர் : கே பிழைக்குமா? நர் : எனக்குத் தோன்றவில்லை டாக்டர். டார்வேஷன் (Starvation - பட்டினி) கே இது. டாக் : வருகிறபோதே மூன்று நாள் பட்டினியென்று சொன்னான். நர் : இல்லை; அதற்கு முன்னாடியிருந்தே பட்டினியாயிருந் திருக்க வேண்டும்; ந்யுட்ரிஷ வால்யூ (Nutiritious Value) இல்லாத புட் (Food) களை (சத்தில்லாத உணவு வகைகளை) ச் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். தன : (பினத்துகிறான்) அப்பா! அப்பா! கஞ்சி குடிச்சீர்களா? ரொம்ப குளிர் நடுக்குகிறதா? ஐயோ! ஐயோ! டாக் : இந்தப் பேஷண்ட் (Patient - நோயாளி) க்கு ரிலேஷன் (Relation - உறவினர்) யாராவது இங்கே கே எண்டர் (Enter -பதிவு) ஆயிருக்கிறதா? நர் : கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே முனிஸிபல்வான் (Municipal Van)ny போட்டுக்கொண்டு வரவில்லையா சில கேசுகளை. அதிலே அந்த ஓல்ட்மான் (Oldman கிழவன்) னுடைய ஸன் (Son - மகன்) போலேயிருக்கிறது இந்த பேஷண்ட். டாக் : ஆமாம்; அப்படித்தானிருக்கிறது. தன : (மறுபடியும் பினத்தல்) வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது என்பதெல்லாம் பொய். நர் : (குனிந்து) இதோ பார்! என்னா வேணும் உனக்கு? தன : (இரு கைகளையும் கூப்பிக்கொண்டு) யாரம்மா நீ? பரதேவதை மாதிரி இருக்கிறது. எங்கப்பா பிழைச்சு விடுவாரா? கூல் பைனல் பா பண்ணினேனம்மா! ஒரு வேலையும் கிடைக்க வில்லையம்மா! இந்த ஆபத்திரியிலே ஏதாவது வேலை கிடைக்குமா? ஒரு வேளையாவது எங்கப்பாவுக்குக் கறியும், சோறுமா சாப்பாடு போடணும்னு ஆசை. என் ஆசை நிறை வேறுமா அம்மா! சொல்லு; உன் வாயாலே சொல்லு. நர் : உ; ரொம்பப் பேசாதே. மருந்து கொடுக்கிறேன். குடி. தன : உப்பில்லாத கஞ்சியைக் கொடுத்து கொன்னுப்புட்டேன் அம்மா. டாக் : (தனபாலனுடைய நாடியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டே) நோ ஹோப் ஆப் ஸர்வைவல். (No hope of survival) பிழைக்குமென்ற நம்பிக்கையில்லை) நர் : தூங்கு : தூங்கு. தன : நான் எங்கேயிருக்கிறேனம்மா? போலீ டேஷனிலா? ஆபத்திரியிலா? (பாடுகிறான்) அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்............... அப்ப நீ அம்மை நீ............... கருணாகரக் கடவுளே....................... (பிராணன் போகிறது.) கூப்பன் இடம் : குடிசையின் முன்பக்கம். காலம் : பகல். (வயதான தந்தை, தன் மகன் வரவை எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறான்.) தந்தை : எந்நேரமாவுது? சூரியன் உச்சிக்கு வரப்போவுது? இன்னும் வரலியே இந்த புள்ளே? அந்த பாழாப் போன கூப்பன் கிடைக்காமே போனாத்தான் என்ன? அதான் நல்லாத் தெரியுதே, பணக்காரர் போய் ட பு என்று ரெண்டு வார்த்தைகளைச் சொன்னா, நெனெச்ச காரியம் கைகூடிப் போவுது. ஏழைங்க போனா, நாள் கணக்கா தபசு பண்ண வேண்டியதுதான். ஹூம் ......... அடுப்பெரிக்கிற சுள்ளிக்குக் கூப்பனாம். அது போயி வாங்கிகினு வரணுமாம். கூப்பன் வாங் கிகினு வர போயிக்கணே இருந்தா, வவுத்துக்கு கஞ்சி யார் ஊத்துவாங்க? நேரத்திலே வேலை மேலே போகாத போனா, அன்னிக்கு பூரா கூலி இல்லன்னு புட்ராங்க. இன்னிக்கு வேலையில்ல; கூலியுமில்லே. (வியர்த்து விறு விறுத்து மகன் வருகிறான்.) மகன் : (சந்தோஷத்துடன்) நாயனா! கூப்பன் கிடைச்சுப் போச்சு! கூப்பன் கிடைச்சுப் போச்சு! த : ஏன் இத்தினி நேரம்? ம : லேசிலே கொடுக்கறாங்களா? இன்னிக்கு எப்படியாவது இருந்து வாங்கிக்ணு வறதுன்னு ஒரே பிடியா இருந்தேன். நம்பளே போலே ஏழைங்க பாழைங்க போனா யாராவது முகங் கொடுத்து பேசறாங்களா? த : ஆமாம்; பணக்காரருக்குத்தானே இப்போ ராஜாங்கம் நடக்குது. ம : இன்னிக்கு எனக்கு கூப்பன் கிடைச்சுது அதிர்ஷ்டந்தான். குப்பத்திலே யிருந்து வந்தவங்க இன்னும் எத்தனை பேரு காத்துக்கிட்டு இருக்காங்க தெரியுமா? த : ஆமாண்டா, இன்னிக்குக் கூலி போச்சே? ம : கூப்பன் கிடைச்சுச்சே! த : ஏண்டா, உனக்கு மூளை கீளை இருக்குதா இல்லையா? கூப்பன் கஞ்சி வார்க்குமா என்னா? ம : அதுக்கு வழி காட்டுமா இல்லையா? த : காட்டும்; நல்லா காட்டும். எதோ கொஞ்சம் எனக்குக் கஞ்சி ஊத்தச் சொல்லு உன் கூப்பனை? ம : (தனக்குள்) அப்பாருக்கு வவுத்துலே பசிபோலே இருக்குது. அதான் இப்படிக் கோவிச்சுக்கிறாரு. த : கோவத்துக்காக சொல் லல்லே அப்பா! ஏழைங்க கோவுச்சிக்கினா என்னா பண்ண முடியும்? இல்லே, பேச்சுக்குக் கேக்கறேன், கூப்பன் கொடுத்தாங்களே, காசு கொடுத்தாங்களா? ம : காசு ஏன் கொடுக்கி றாங்கோ? த : அப்படியானா கூப்பனை வைச்சுக்கினு என்னா பண்றது? நாக்கிலே வழிச்சுக்கிறதா? ம : அது நம்ம இஷ்டம். த : அதுக்கில்லேடா, மண்ணெண்ணெய்க்கு கூப்பன்,விறகுக்கு கூப்பன், அரிசிக்கு கூப்பன், எல்லாத்துக்கும் கூப்பன். ம : பாலுக்குக்கூட கூப்பன் கொடுக்கப் போறாங்களாம் இனிமேல். த : ஆமாம்; குடல் கூழுக்கு அழுவுதாம்; கொண்டை பூவுக்கு அழுவு தாம். பாலில்லேன்னுதான் வவுறு ஒட்டிப் போயிருக்குதாங் காட்டியம்? ம : இல்லே,சேதிக்குச் சொன்னேன். த : இதோ பாரு, ஆளுக்கு தினத்துக்கு இரண்டரை ஆழாக்கு அரிசி வாங்கிக்கலாமுன்னு சொல்றாங்கோ இப்போ. இல்லையா? சரி, அதுக்கு துட்டு ஓணும்; அதை கஞ்சியா காச்சறதுக்கு விறகு ஓணும்; அதுக்கு துட்டு ஓணும். வூட்லே இருட்டிலேயா குந்திக்கிணு கஞ்சி குடிப்பே? விளக்கெரிக்க எண்ணெய் ஒணும்; அதுக்கு துட்டு ஓணும். ம : ஆமாம், காசில்லாமல் காரியம் நடக்குமா என்ன? த : கொடுக்கிற காசுக்கு கிடைக்கிற சாமானோ நாலிலே ஒண்ணு தான். அதுக்குத் தகுந்தாப்போலே சம்பாதனை கூடியிருக்குதா? இல்லையே! ம : ஆமாம்; முன்னே கூலி வேலை செஞ்சா ஆணாளுக்கு ஏழணா. த : இப்போ? ம பன்னிரண்டணா. த : பார்த்தியா? சம்பாதனை ஒட்டிக்கு இரட்டியாத்தான் கூடியிருக் கிறது; ஆனால் சாமான் விலை ஒண்ணுக்கு நாலா ஏறியிருக்குது; எப்படி பிழைப்பு நடத்தறது? ம : அதைப்பத்தி யாருக்கு என்ன கவலை? த : கடவுளே நம்பளைபத்தி கவலைப்படல்லே; மனுஷ்யரு எங்கே கவலைப்பட போறாங்கோ? சுருக்கமாகச் சொல்றேன் கேளு. பணமுள்ள வங்களுக்குத்தான் இந்த உலகம். ம : ஆனால் ஏழைங்கதானே இந்த உலகத்திலே அதிகமா இருக்காங்க. த : அதுதானே வேடிக்கை. அதிகமான பேருக்குக் குறைவான சாப் பாடு கிடைக்குது: குறைவான பேருக்கு அதிகமான சாப்பாடு கிடைக்குது. ம : அப்படின்னா? த : ரெண்டுபேர் இருந்து ரெண்டாயிரம் ரூபா வரும்படி வந்தா அவங்களுக்குப் பதினைஞ்சு குண்டு கட்டை ; ஏழு பேர் இருந்து பதினஞ்சு ரூபா வருமானம் கிடைச்சா அவங்களுக்கு ரெண்டு குண்டு கட்டை. அப்படித்தானே இப்போ பங்கிட்டு கொடுக்க றாங்கோ? ம : ஆமாம்; பணமுள்ளவங்கோன்னா, சுடு தண்ணியிலே உடம் புக்கு ஊத்திக்குவாங்கோ; சுடு தண்ணியே குடிப்பாங்கோ. அதுக்காக அவங் களுக்கு விறகு அதிகமாக தேவைதானே? த : ஏன், ஏழைங்களுக்கு தலை நோவு, குலை நோவு ஒண்ணும் வராதா? அவங்களுக்கு. சுடுதண்ணி வேண்டாமா? ம : சரி நாயனா! உன்னோடு பேசிக்கிட்டிருந்தா, வவுத்தே பசிக்குதே. காசு இருந்தா கொண்டா, கட்டை வாங்கிக்கினு வறேன். வூட்லே இருக்கிற நொய்யைப் போட்டுக் கஞ்சியாவது காய்ச்சிக் குடிக்கலாம். த : வா, ரெண்டு பேரும் யமலோகத்துக்கு போகலாம் துட்டு சம்பாதிச்சிகினு வர. (இருந்த இடத்திலேயே சுருண்டு படுத்துக்கொள்கிறான்; மகன் தம்பித்து நிற்கிறான்.) சுகம் எங்கே? முதற் களம் இடம் : ஒரு குடிசை. காலம் : விடியற்காலை. (அப்பொழுதுதான் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. பொத்தல் குடிசையிலிருந்து இன்னமும் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. ஈரத்தரையில் வேலனும் அவன் மனைவி வள்ளியும் சுவர் ஒரமாக ஒண்டியபடி உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் நடுவில் விரிக்கப் பட்டிருக்கும் ஒரு கந்தல் பாயின் மீது நான்கு வயதுள்ள ஓர் ஆண் குழந்தை உட்கார்ந்த வண்ணம் கேவிக் கேவி அழுதுகொண்டிருக் கிறது. வள்ளி அதைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.) வள்ளி : அழுவாதே, அழுவாதே. காலம்பர நயனாவே நல்ல சட்டெ ஒண்ணு வாங்கியாறச் சொல்றேன். இப்பத் தூங்கு. (அதன் உடம்பைத் தடவிக் கொடுத்து) பாவம், அதுதான் என்னா செய்யும்? குளுர்லே கைகாலெல்லாம் வெறச்சுகினு போயிருக் குது. சும்மா அதெப்போயி திட்டினா அது என்ன செய்யும்? வேலன் : ரொம்பத்தான் நீ அங்காலய்க்கிறே! உந்துணியெத்தான் அதுமேலே போத்திவிடேன். வ : அப்பிடிண்ணா போத்திட்றேன். அப்பறம் உனக்கு அவுமானமாச் சேண்ணுதான் பாக்கறேன். வே : எனக்கென்ன அவமானம்? அது ஓனக்குந்தான். வ : சேலைங்க அடுக்கடுக்கா வைச்சிருக்காப்பலெதான் பேசறது. இந்த ஒத்தெ கந்தெய நானுந்தான் ஒரு வருசமாக் கட்டிக்கினு காலங் கடத்தறேன். நீ தான் இத்தெக் கவனிச்சியா? நானுந்தான் நம்ம புருஷன் தானேன்னு வாய்விட்டு கேட்டிருப்பேனா? வே : சரி, புள்ளெக்கி சட்டெ இல்லெ; பொஞ்சாதிக்கு சீலை இல்லெ. அப்புறம்? வ : ஒனக்குந்தான் கட்டிக்கத் துணியில்லை. வெளியிலே போற புருஷன், கந்தலெ, அதுவும் வெறுங் கந்தலெ, கட்டிக்கினு போறேயேண்ணுதான் மனசு அடிச்சுகுது. வே : இப்பத் துணி விக்கிற வெலெயிலே நம்ப மூணு பேருக்கும் துணி வாங்க ஆரம்பிச்சோமானால், முப்பதுநாளும் பட்டினி தான் கடக்கணும். அடேப்பா! என்னா வெலெ, என்னா வெலெ? ஒண்ணுக்கு நாலா? வ : நம்ம ரெண்டுபேரும் எப்படிண்ணா காலத்தெ கடத்திடறோம். இந்தக் கொழந்தைக்கிண்ணா ஏதாச்சியும் ஒரு பழசு, கிழசு வாங்கிப் போத்திவிடாமப் போனா அது நிச்சிமா குளி ராலே செத்தேதாம் போய்டும். வே : நான் சொல்றேன் கேளு. பணக்காரங்களுக்குத்தான்கொழந்தை. நமக்கெல்லாம் ஏன்? வ : அந்த ஞானமெல்லாம் இப்பொ ஏன் பேசறே? காலம்பர எசமாங்கிட்ட போயி நெசத்தே சொல்லி ஏதாச்சியுங் கேளு. கந்தெ, கிந்தெ, ஏதானுமிருந்தா வாங்கிக்கிணுவா. வே : போயும், போயும் நல்ல ஆளாப் பாத்துத்தான் கேக்கச் சொன்னே. சோறு தின்ன கையாலேகூட காக்கா ஓட்ட மாட் டாரு. அவங்க வீட்டிலே, பழைய துணியெல்லாம் சேத்துப் பாத்திரக்காரன் கிட்டப் போட்டுப் பாத்திரமா வாங்கி அடுக்கி வைக்கிறாங்கோ. வ : நமக்கெல்லாம் சட்டி பானை வாங்கறதுக்கு துட்டு இல்லெ. அவங்கள்ளாம் கந்தை துணியைப் போட்டு பாத்திரம் வாங்க றாங்க. எப்படியிருக்குது காலம்? வே : காலந்தான் தலைகீழா இருக்குதே? பணமுள்ளவன், பத்தலை யேண்ணு உரக்கக் கத்தறான். பணமில்லாதவன், இல்லை யேண்ணு ஏங்கி நிக்கறான். வ : கடவுளே! கடவுளே! வே : கடவுளே ஏன் கூப்பிட்றே? அவர் எங்கே இருக்காரு? அவர் இல்லவே இல்லேன்னுதான் தோணுது. அப்படி இருந்தாலும், அவருக்குக் கண்ணும் தெரியல்லே, காதும் கேக்கல்லே, அது நிச்சயம். வ : சும்மா சாமியை ஏன் திட்றே? வே : உனக்கென்னா தெரியும் உலகத்திலே நடக்கிற அக்கிரமம்? குடிசையிலே குந்திக்ணு இக்கறே நீ? வ : என்னா அப்படி அக்கிரமத்தைக் கண்டுட்டே நீ? வே : பணக்காரன், பத்து ரூபா கொடுத்தாவது பெட்ரோல் எண்ணெ போட்டுக்கிணு ஊர் ஊரா சுத்தறான்; நம்பளைப் போல ஏழெங்கே வூட்லே விளக்கெரிக்க மண்ணெண்ணெ வாங்க ரெண்டு காசு இல்லேன்னு அழறோம். இதுக்கு மேலே என்னா டான்னா, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமே, எல்லாருக்கும் கூப்பன் கொடுத்துட்டோமின்னு பேசிக்கி றாங்கோ. கூப்பன் சோறுபோடுமா? அடுப்பு எரிக்குமா? என்னமோ அர்த்தமில்லாத பேசறாங்கோ? வ : உன் நியாயத்தை யாரோ கேக்கப் போறாப்போலேதான் பேசறது. வே : கேக்கமாட்டாங்கோ. இப்ப கேக்கமாட்டாங்கோ; ஆனா, நிச்சயமா அடுத்த தலைமுறையிலே எங்க நியாயந்தான் எடு படப் போவுது. வ : அப்போ பாத்துக்கலாம். நாம்ப இருக்கோமோ, போறோமோ? இரண்டாவது களம் இடம் : எஜமானன் வீடு. காலம் : காலை. (பங்களாவின் முன் வராந்தாவில் தலையில் குரங்குக் குல்லாயும், உடம்பில் பிளானல் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு எஜமானன் நிற்கிறான். படிக்கட்டுகளின் கீழே வேலன், இரண்டு கைகளினாலும் தன் உடம்பை மூடிக்கொண்டு நிற்கிறான்.) வே : எசமான்களுக்கு உடம்பு சரியில்லையா? எஜமானன் : ஆமாம். ராத்திரியெல்லாம் மழை அடித்ததோ இல் லையோ, அதனால் குளிர் தாங்கவில்லை. என்ன விசேஷம், காலையில் வந்துவிட்டாய்? வேலன் : சும்மா, எசமானைக் கண்டிட்டுப் போவலாமின்னுதான் வந்தேன். எஜ : கண்டாச்சோ இல்லையோ, போய்விட்டு வா. வே : இல்லிங்க; ராவெல்லாம் குழந்தை, குளிரிலே வெறெச்சிகிணு அழுவுதுங்கோ. கிழிசல் சட்டே ஏதானும் கொடுத்தீங்கண்ணா புண்ணியம் உண்டு. எஜ : சட்டை வேணுமா, துணி விற்கிற விலையிலே? இந்த பிளானல் ஷர்ட்டை மூன்று வருஷமாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறேன். இது முந்தி ஐந்து ரூபாய்; இப்பொழுது இது பதினெட்டு ரூபாயாம். வே : அது தெரிஞ்சுதான் பழைய சட்டை ஏதானும் இருந்தா கொடுங்கோன்னு கேக்கறேன். எஜ : அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இஷ்டமிருந்தால் வேலை யிலே இரு. இப்பொழுது வாங்குகிற சம்பளத்துக்கு மேலே ஒரு சல்லிக்காசு கூடக் கூட்டிக் கொடுக்க முடியாது. சம்மதமில்லை யானால் நல்ல உத்தியோகம் எங்கேயாவது பார்த்துக்கொள். (உள் பக்கம் பார்த்து) வேலனைப் பார்த்தாயா? நல்ல சமயம் பார்த்துச் சம்பளத்திற்கு அடி போடுகிறான். வே : நான் சம்பளம் கேக்கலிங்க; சட்டைதான் கேக்கறேன். எஜ : இன்றைக்குச் சட்டை; நாளைக்குச் சம்பளம். அதற்குத்தானே இந்த அஸ்திவாரம்? வே : (தனக்குள்) ஹும், பணம் போற போக்கே போக்கு (வெளியே) போய் வாரேன் எசமான். எஜ : சரி, போ. (பொறுத்து) நீ சரியா வேலை செய்யறது இல்லேன்னு தோட்டக்காரன் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஜாக்கிரதை, இனியாவது சரியாக வேலை செய். வே : (போய்க்கொண்டே) சட்டே கேட்டதுக்குப் பதில், வேலே மேலே குத்தம். நல்ல நாயம்! தெய்வம் தேவாதிங்கள்ளாம், பணமுள்ளவங் களுக்குத் தான் உதவுது. (போகிறான்.) மூன்றாவது களம் இடம் : வேலன் குடிசைக்கு முன். காலம் : காலை ஏழு மணி. (வேலன் தன் குடிசைக்கு முன் நின்று கொண்டு தானே பேசிக் கொள் கிறான்.) வே : எசமான், பழைய சட்டையை போட்டுகிணு இருக்கிற னேயென்னு அழுவுறாரு. நான் சட்டேயேயில்லேன்னு அழுவு றேன். எசமான் குயந்தே பாலுக்குச் சர்க்கரே இல்லை யேன்னு அழுவுது; என் குயந்தே கஞ்சிக்கு உப்பு இல்லையென்னு அழு வுது. எசமான் வூட்லே நாயைக் குளிப்பாட்ட சுடு தண்ணி போட சவுக்குக் கட்டை அகப்படலி யேன்னு அழுவுறாங்க; கஞ்சி காய்ச்சிக் குடிக்கச் சுள்ளி அகப்பட்டா போதுமின்னு நான் அழறேன். வெள்ளி விலை, தங்கம் விலை எல்லாம் ஏறிப் போச்சேன்னு மாடி வீட்டிலே இருக்கிறவங்க வேதனைப் படறாங்க. அரிசி வாங்கப்போனா, மண்ணெண்ணெய் வாங்கப் போனா, விறகு வாங்கப்போனா அடிப்பட்டுச் சாவறமேன்னு என்னைப்போலொத்தவங்க கண்ணீர் வடிக்கிறாங்க. (பொறுத்து) செய்யற வேலைக்குக் கூலி சரியா கிடைக்கிற தில்லே. கூலி கிடைச்சா, சாமான் அகப்பட்றதில்லே. சாமான் அகப்பட்டா ஒண்ணுக்கு மூணுவிலை. எங்கே பார்த்தாலும் பணமில்லே, சாமான் இல்லேண்ணு கூப்பாடுமட்டும் அதிகமாயிருக்குது. ஆனா, சினிமாக்கொட்டாயிலே, காபி ஓட்டல்லே கும்ப லுக்கோ குறைவேயில்லை. எதுக்கெடுத்தாலும் சண்டே, சண்டேன்றாங்கோ. சண்டெக்கும், ஏழைங்களுக்கும் என்ன சம்பந்தமின்னு தெரியல்லே. (குடிசைக்குள்ளிருந்து வள்ளி வெளியே வருகிறாள்) வ : சட்டை கொடுத்தாங்களா? (பொறுத்து) நான் கேக்கறது காதிலே விழல்லே? பையன் அப்போ பிடிச்சு அழுதுகிணு கிடக் கிறான். வே : அழட்டும்; அழுது, அழுது சாவட்டும். செத்தாதான் அவனுக் குஞ் சுகம்; நமக்கும் நிம்மதி. ஏழைங்களா பிறந்தவங்களுக்குச் சாவிலேதான் சுகம். (வள்ளியுடன் குடிசைக்குள் செல்கிறான்.) போனகுடி வந்தது முதற் களம் இடம் : குடிசையின் முன்னால். காலம் : மாலை. (கறுப்பாயி ஏதோ எண்ணமிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய பத்து வயதுப் பெண் மீனாட்சி, தெருப் பக்கத்திலிருந்து ஓடிவருகிறாள்) மீனாட்சி : அம்மா! அம்மா! இந்த வருசம் கார்த்திகையின் போது, போன வருசத்தைவிட நல்லா, நிறைய விளக்கேத்தணும். அவ லுருண்டை எல்லாம் வாங்கி, சாமிக்குப் படைச்சு கும்பிடணும். கறுப்பாயி : என்னமோ உங்க அப்பாரு மனசு எப்படியிருக்கோ? மீனா : ஏன் எப்படி யிருக்கும்? போன வருசம், அதுக்கு முந்தின வருசம் எல்லாம் கூட, அப்பாவே அகல் எல்லாமே வாங்கிவந்து விளக்கேத் தினாரு. எனக்குக் கூட, சுருசுரு வாணம், மத்தாப்பு, பட்டாசு எல்லாம் வாங்கிக் கொடுத்தாரு. ஏன் அம்மா, உன் முகம் என்னமோ மாதிரி இருக்குது! என் மேலே என்னமானா கோவமா? கறு : உன் மேலே என்னா கோவம்? நம்பளே யெல்லாம் படைச்சாரே அந்தக் கடவுள் மேலே தான் கோவம்! மீனா : கடவுள் என்னா பண்ணாரு? அவர்தான் நம்ப கண்ணுக்குக் கூட அகப்படாமே எட்டினாப் போலெ எங்கேயோ இருக் காரே. இன்னிக்குக் கூட, பள்ளிக்கூடத்திலே வாத்தியாரம்மா கடவுளெப் பத்தி, தோத்திரப் பாடல் ஒண்ணு சொல்லிக் கொடுத்தாங்களே. கறு : ஆமாம்; இப்படித் தோத்திரம் சேஞ்சு சேஞ்சுதான் கடவு ளுக்குக்காது செவிடாப் போச்சே; சூடம் ஏத்திக் காட்டித் தான் அவர் கண்ணு கூட குருடாப் போச்சு. மீனா : கடவுளை இப்படியெல்லாம் திட்டாதே, அம்மா! பாவ மில்லே! கறு : ஆமாம், கடவுளுக்குக் கண்ணிருந்தா, கள்ளுக் கடையெல் லாம் மறுபடியும் திறக்கவிடுவாரா? பெரியவரு காந்தி வந்தாரு, கள்ளுக் கடைங்கள்ளாம் மூடிடுங்கோன்னு உத்தரவு போட் டாரு. வவுத்திலே பாலை வாத்தாருன்னு நெனைச்சோம். இப்போ மறுபடியும் கள்ளுக் கடைங்கள்ளாம் திறந்து விடப் போறாங்களாமே? மீனா : அப்படியானா முன்னே போலே, அப்பா, கள்ளெக் குடிச்சுப் புட்டு வந்து என்னையும் உன்னையும் அடிப்பாங்களா? கறு : என்ன பண்ணுவாங்களோ? விட்ட பழக்கத்தை மறுபடியும் பிடிச்சுக்காதே இருக்கணும். கடவுள் அதுவரைக்கும் நல்ல புத்தியே கொடுத்தாரானா போதும். மீனா : அதுக்காகவா கவலைப்படறே அம்மா நீ? நாயனா அப்படி யெல்லாம் செய்ய மாட்டாங்க அம்மா! கள்ளுக்கடை போவறத்தை நிறுத்திட்ட பிறகு, இப்போ எல்லாம், வேலெ மேலேயிருந்து வந்தவுடனே குளிக்கிறாரு. துண்ணூறு பூசிக்கி றாரு. பஜனை மடத்துக்குப் போறாரு. புஸ்தகம் எடுத்துப் படிக்கக் கத்திக்கிணு இருக்காரு. காலம்பரவும் இப்படியே தான் செய்யறாரு. ரெண்டு மூணு வருசமா இப்படியா சேஞ்சு கினு வராரு. இனி மேலே மாறுவாரா என்ன அம்மா! இதுக் காக வெல்லாம் நீ விசனப்படாதே யம்மா.! அப்பா வந்தாரானா, நான் சொல்லிக்கிறேன். கறு : ஐயோ, பைத்தியமே! உனக்கொண்ணும் தெரியாது. கள்ளுக் கிருக்கிற சக்தி எதுக்கு இருக்குது? குதிரை,கொள்ளு தின்றத்தை மறுந்துட்டாலும் விடும்; மனுசன், கள்ளுப் பழக்கத்தை விடவே மாட்டான். இன்னிக்கு நேத்திக்கு ஏற்பட்ட பழக்கமா? அந்தப் படுபாவி மாயாண்டி பழக்கப் படுத்திப்புட்டுப் பூட்டான் இருபது வருசத்துக்கு முன்னாலே; என் குடிக்குத் தீம்பா வந்து சேந்துது. சப்பாதிக்கிற பணமெல்லாம் குடிக்குத்தான். கட்டிக்க நல்ல சீலையுண்டா? ஒரு நாளைக்காவது நல்லாமுகங் கொடுத் துப் பேசுவாங்களா? ஒருநாள் போறது ஒரு யுகமா யில்லா இருந்துது? என்னமோ புண்ணியவான் காந்தி வந்தாரு; குடியும் குடித்தனமுமா ஆனோம். இருக்கிற வரைக்கும் செம்மையாய் புழைச்சுட்டுப் போவோ மின்னு நினைச்சேன். நடுவிலே கடவுள் கல்லை தூக்கிப் போட்டுட்டாரு. மீனா : கடவுள் என்னாம்மா பண்ணுவாரு? கெவர்ன மெண்டார் உத்தரவு போடறாங்கோ. அதன் பிரகாரம் நடக்குது. கறு : அந்த காந்தி சொல்றபடி சேஞ்சா, எல்லாருக்கும் நல்ல தில்லையா? மீனா : அவர்தான் இப்போ செத்துப் போய் தெய்வமா இருக்காரே. அவர் சொல்லிக் கொடுத்ததை யெல்லாம் காத்திலே பறக்க வுட்டுபுட்டு கெவர்மெண்டாரு இஷ்டப்படி செய்யறாங்க. கறு : ரொம்ப கெவர்னமெண்டைக் கண்டவ நீ? போயி உள்ளே விளக்கேத்து. உங்கப்பாரு வரத்துக்கு நேரமாச்சு. மீனா : நீ விசனப் படாதே யம்மா! நான் அப்பாவைச் சரிப்படுத்தி விடறேன். (மீனாட்சி உள்ளே போகிறாள்.) இரண்டாவது களம் இடம் : தெரு மூலை. காலம் : மறுநாள் மாலை. (முருகன், கண்ணன், மாயாண்டி ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்) மாயாண்டி : என்ன முருகா! இனி மேலே பஜனை மடத்துக்குப் போவயா? இல்லாட்டி கள்ளுக் கடைக்குப் போவயா? முருகன் : கள்ளுக் கடை யெல்லாம் திறந்துட்டாங்களாம். அதுக்காக இவன் இவ்வளவு கும்மாளம் போடறாண்டா. கண்ணன் : பின்னே இன்னாடான்னா; உண்றது, துண்றது இதுங் களை யெல்லாங் கூடவா கெவர்னமெண்டாரு கட்டுப்படுத்து வாங்கோ? அவன் அவன் பிரியமானத்தைக் குடிக்கிறான். அப்படியெல்லாம் கூடாதுன்னு சட்டம் போட்டா, அது எத்தினி நாளைக்கு நடக்கும்? மாயா : அதான் நானும் கேக்கறேன், எத்தினி நாளைக்கு நடக் கும்ணே? இந்தக் காங்கிரஸ்காரனுங்க கொட்டங்கள்ளாம் அடங்கிப் போச்சு பாத்தியா? முரு : நல்லத்தைத் தானே சொன்னாங்க அவங்க? கண் : ரொம்ப நல்லத்தை கண்டுட்டவருடா இவரு? மாயா : என்னா நல்லத்தைச் சொன்னாங்கப்பா, காங்கிரஸ்காரரு? நம்பளை யெல்லாம் கூட்டி வெச்சிக்கிணு, கள்ளுக் குடிக்கா தேன்னாங்கோ................ கண் : அதுக்கு முழ நீளம் பேருகூடச் சொல்லுவாங்களே, இன்னா அது? முரு : மது விலக்கு........... கண் : ஆம், அதுதான். நீ பஜனை மடத்துக் கெல்லாம் போறே, உனக்கெல்லாம் தெரியுது. மாயா : சரி, நம்பளை கள்ளுக் குடிக்கக் கூடாதுண்றாங்களே; இவங்கள்ளாம் மட்டும் காபி குடிக்கலாமா? கண் : அப்படிக் கேளு நாயத்தை? பெரிய மனுசன்னா மொடா மொடாவா காபி குடிக்கலாம்; நாமெல்லாம் மொந்தை மொந் தையா கள்ளு குடிக்க கூடாதாங் காட்டியம்? மாயா : இவங்களுக்கு என்னடா தெரியும். நம்ம கஸ்டம்? காலை யிலே பதினொரு மணிக்கு ஒயுங்கு பண்ணிக்கினு ஆபிசுக்குப் போறாங்கோ; அங்கே ரவை நேரம் மேஜை கிட்ட குந்திக்கிணு அப்படியும் இப்படியுமா கிறுக்கிப் புட்டு, சாயங்காலம் அஞ்சு மணிக்கு வூட்டுக்கு வந்துப் புடராங்க. நம்பளைப் போலே காலம்பர புடிச்சு ராவு வரையில் ஏரு புடிச்சு உழுதா, தெரியும்? ஏத்தம் இறைச்சா, தெரியும்? கண் : இல்லாட்டி எங்கேயாவது நெசவு மில்லு கில்லுலே வேலெ சேஞ்சா, தெரியும். எலும்பு முறிஞ்சு போறாப்போல வேலெ சேஞ்சுட்டு, களைப்பாறதுக்கு ஏதாச்சிம் தண்ணி கொஞ்சம் போட்டுக்கிணாத்தான் சரிப்படுது. மாயா : இதோ பாரு, முருகா! இந்த வேசம் கீசமெல்லாம் உட்டுப்புடு. கடவுளே கும்பிட்டுக்கிணு இருக்கிற காலம் வேறே. இப்போ புடிச்சு ஏன் கட்டிக்கிணு அழறே? நாளையிலேந்து நம்ப பழைய மாதிரி ஆரம்பிச்சுக்கலாம். கண் : இதோ பாரு, முருகா! இப்போ ரெண்டு மூணு வருசமா கள்ளுக் குடிக்காதே நம்ப உடம்பு எப்படி கயிறாப் போச்சு. பாத்தியா? இப்படியே விட்டு விட்டோமானா எத்தனே நாளைக்கு இந்த தேகம் தாக்குப் பிடிக்கும்ணு நெனெச்சுக்கிணு இருக்கே? நாம்ப செத்துப் பூட்டா. பொஞ்சாதி புள்ளெங் களை யெல்லாம் யார் காப்பத்தறது? இந்தக் காங்கிரஸ் கார னுங்களா காப்பாத்தப் போறாங்கோ? மாயா : காப்பாத்துவாங்களே! நல்லா காப்பாத்துவாங்க! காந்திக்கு ஜேன்னு கூச்சப் போடுவாங்கோ. அவ்வளவுதான். அது கிடக் குது. கள்ளுக் கடைக்கு நாளெக்குத் தான் போவணுமின்னு என்னா எழுதி வெச்சிருக்கு? இன்னிக்கு போயி ரவை போதும் ருசி பார்த்தா என்னா கெட்டுப் போச்சு? கண் : கடை திறந்துட்டாங்களா? மாயா : ஓ ஓ! இன்னிக்குக் காலம்பரவே பிள்ளையார் பூசையெல் லாம் பண்ணி, தேங்காய் உடைச்சு, ஒரு பீப்பாய் கள்ளு வண்டியிலே கொண்டாந்தாங்களே. நம்ப குப்பன் மகன்தானே வண்டியெ ஓட்டிக்கிணு வந்தான். முரு : பார்த்துக்கலாம் நாளைக்கு; இன்னிக்கி என்னா அவசரம்? வூட்லே பொம்பளைங்கோ, கள்ளுக் கடைக்குப் போறேன்னா, கண்ணை கசக்குவாங்கோ. கொயந்தே வேறே பரிகாசம் பண் ணும். மாயா : அடேய், நீ என்னா இப்படிப் பொம்புளெங்களுக்கும் கொயந்தெங்களுக்கும் பயப்படறேயே? ரெண்டு உதே குடுத்தா, சும்மா கிடக்கறாங்கோ. கண் : என்னா முருகா! இப்படி யோசிக்கிறியே! நீ ஆம்பளே இல்லே? நீ சம்பாதிக்கிற பணத்தை இஸ்டம் போலே செலவழிக் கிறதுக்கு உனக்கு அதிகாரமில்லே? முரு : இப்போ என்னா சொல்றீங்க? வூட்லே போயி, பணம் எடுத்து வரச் சொல்றீங்களா? மாயா : இல்லாட்டி வூட்லே போய்ச் சாமி கும்பிடச் சொல்றோமா? போடா. போயி, பொம்பளெங்களே ரெண்டு அதட்டுப் போட்டு குந்த வெச்சுப்புட்டு பணத்தே எடுத்தாடா. டே கண்ணா! நானும் போய் வூட்லே இருக்கிற காசைப் பீராஞ்சி கிணு வரேன். (எல்லோரும் போகிறார்கள்) மூன்றாவது களம் இடம் : முருகனின் குடிசை. காலம் : மாலை. (குடிசையில் ஒரே கூச்சல். கறுப்பாயியும் மீனாட்சியும் அழுது கொண்டிருக்கிறார்கள்.) முரு : கார்த்திகைக்கு விளக்கேத்தப் போறாங்களாம் விளக்கு. விளக்கேத்தினா விடிஞ்சுப் பூடுமா வூட்டுத் தரித்திரமெல்லாம்? காசு கேட்டா, கொடுக்கமாட்டேன்றீங்களா ஒளிச்சு வெச்சுக் கினு? யார் சம்பாரிச்ச காசு? ஏய் மீனாட்சி! சும்மா அழுவாதே. போன வாரம் எட்டணா கொடுத்தேனே, அதைக் கொண்டா. மீனா : வாணாம்ப்பா! கள்ளு கடைக்குப் போக வாணாம். அவங்க பேச்சைக் கேட்டு ஏன் இப்படி கெட்டுப் போவணும்? முரு : யார் கெட்டுப் போறது? எனக்கு இன்னா நீ புத்தி சொல்றது? அந்த எட்டணாவை கொண்டு வரயா? இல்லாட்டி இப்போ உங்க ஆத்தாளுக்கு விழுந்த உதை உனக்கும் கிடைக்கும். மீனா : அந்த எட்டணாவுக்கு அரிசி வாங்கினா எத்தனை நாளைக்கு நம்ம வூட்டுக்கு வரும்! ஒரு வேளை கள்ளு குடிச்சுப்புட்டா, எங்க எல்லாரையும் பட்டினி போட்டாப் போலேதானே ஆகுது? முரு : உன்னெ பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சத்துக்கு என்னா டான்னா, இந்த மாதிரி வாயாட கத்துக்கிணை யாக்கும். சீ,சீ! உள்ளே போய்ப் பணத்தெ எடுத்துக்கிணு வா. (கண்ணனும் மாயாண்டியும் தெருவிலிருந்து கொண்டு கூப்பிடு கிறார்கள்.) கண் - மாயா : டே முருகா! முரு : இந்தா வந்திட்டேன். தா, மீனாச்சி! ஜல்தி எடுத்தா அந்த எட்டணாவை. மீனா : படுபாவிங்க நல்லா வந்து சேந்தாங்க. வூடு இனிமேலே நாசந்தான். கண் : (வெளியிலிருந்தபடியே) இந்த முருகன் இருக்கானே ரொம்ப கோழை மனசுக்காரன். எத்தினி நேரம் ஆக்கறான், பாரு. மாயா : கோழை மனசுமில்லே, மண்ணுமில்லே. பொம்பளெங் களுக்குப் பயந்தவன். தான் சம்பாரிச்ச காசை எடுத்துக்கினு வரத்துக்கு எத்தினி நேரம் பாரேன். மீனா : அப்பா! நான் சொல்றேன், கேளு. முரு : கிளிப்புள்ளெக்கி சொல்ற மாதிரி அப்போ புடிச்சு சொல் றேன் பணத்தைக் கொண்டு வான்னு. என்னமோ கதை பேசிக் கிணு இருக்காளே. (அருகில் சென்று ஓங்கி இரண்டு அறை கன்னத்தில் கொடுக்கிறான். மீனாட்சி “கோ” வென்று அழுகிறாள்.) கறு : (உள்புறமாக இருந்துகொண்டு) ஐயையோ! கொயந்தையெ கொன்னுப்புடராங்களே. முரு : உன்னை, உன் கொயந்தையெ ரெண்டு பேரையும் கொன்னுப் புடுவேன் இப்போ. வெச்சிருக்கற பணத்தே கொண்டுவரீங்களா இல்லையா? கறு : (எட்டணாவை வீசி எறிந்து) எடுத்துக்கிணு போ. நாசமாப் போவானுங்க எல்லாம். இப்படிக் குட்டிச் சுவராக்கறாங்களே. இவங் கள்ளாம் அழிஞ்சுதான் பூடுவாங்க. ஐயோ! நல்லா ஒயுங்கா இருந்தவரை எப்படி கெடுத்துப்புடுது இந்தக்குடி? (முருகன் வெளியே போய்விடுகிறான். கண்ணனும், மாயாண்டியும் கூடவே சிரித்துக் கொண்டு போகிறார்கள். கறுப்பாயி, குடிசைக்கு முன்புறமாக வந்து உரக்கக் கத்துகிறாள்.) கறு : ஊரிலே கேள்வி முறையே இல்லியா? தெய்வம், தேவாதிங்கள் ளாம் இல்லியா? நல்லா இருந்த குடும்பம் கெட்டுப் போவுதே. கடவுளே! உன்னைக் கும்பிட்டதெல்லாம் வீணாப்போச்சே. போனகுடி மறுபடியும் வந்துட்டுதே. (மீனாட்சி, மானம் பொறுக்கமுடியாமல், தாயாரைக் கைபிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போகிறாள்.) வாடகைக்கு இடம் முதற் களம் இடம் : சென்னையில் ரோட் ஓரமாகவுள்ள ஒரு நடை பாதை. காலம் : காலை நேரம். (தலை குனிந்துகொண்டும், இரண்டு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டும், சோமு, தனக்குத்தானே ஏதோ பேசிக் கொண்டு மெது வாக நடந்து கொண்டிருக்கிறான்.) சோமு : எத்தனை நாள் இப்படி அலைவது? சென்னையிலுள்ள தெருக்களின் பெயர்களெல்லாம் இப்பொழுது நன்றாக நெட்டுருவாகி விட்டது. ஒரு பேட்டையா, ஒரு புறமா, ஒரு நகரா? சுற்றாத வீதியில்லை; நுழைந்து பாராத வீடு இல்லை. எந்த வீட்டிலே எந்த மாதிரி மனுஷ்யர்கள் இருக்கிறார்களென்பது இப்பொழுது எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி அலைந்து திரிந்ததற்கு எனக்கு ஒரு பிரயோஜனம் ஏற்பட்டது. ஓர் உத்தி யோகத்திற்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு விட்டேன். அதுதான் ஸென்ஸஸ் ஆபீஸர் (ஜன கணித உத்தியோகஸ்தர்) வேலை. ஆனால் உத்தியோகம் என்ன திறமையைப் பார்த்தா கொடுக்கிறார்கள்? உம்... இந்த சென்னை மகாஜனங்களுடைய சுபாவமே ஒரு தினுசாயிருக்கிறது. நானுந் தான் இருபத்துமூன்று வருஷங்களாக வெளியூர்களில் இருந்திருக்கிறேன். தெற்கே தூத்துக்குடி முதல் வடக்கே விசாகப்பட்டணம் வரை முக்கியமான ஊர்களிளெல்லாம் உத்தியோகம் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி வீட்டுக்குக் கஷ்டப்பட்டதுமில்லை; இந்த மாதிரி மனுஷ்யாளை பார்த்தது மில்லை ஐயா! அதுவும் வீட்டுக்குச் சொந்தக்காரரா யிருந்துவிட்டால் அவர்கள் பேசுகிற பேச்சு, தனி தோரணையாகவே இருக்கிறது. “ஏன் ஸார், இங்கே இடம் காலியாயிருக்கிறதென்று சொன்னார்களே, இருக்கிறதா?” என்று போய்க்கேட்டால் “யார் உமக்குச் சொன்னது?” என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள். “இல்லை, இப்படி காற்றுவாக்கில் கேள்விப்பட் டேன்” என்று ஈனஸ்வரமாக, பல்லை இளித்துக் கொண்டு, தலையைச் சொறிந்துகொண்டு, எப்படியாவது இடம் இருக்கிறதென்று சொன்னால் போதும் என்று எதிர்பார்த்துப் பதில் சொன்னால் “காற்றுவாக்கில்தானே கேள்விப்பட்டீர்கள்; அந்தக் காற்றையே போய்க் கேளும்” என்று அலட்சியமாகப் பதில் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். தாங்கள் ஏதோ சாமர்த்தியமாகப் பேசி விட்டதாகவும், நம்மை முட்டாளாக்கி விட்டதாகவும் அவர்கள் நினைப்பு. இன்னும் சில வீடுகளில் நுழைந்து கேட்டால் “எத்தனை குழந்தைகள்?” என்று கேட்கி றார்கள். புருஷன், பெண்சாதியாக மட்டும் இருந்தால் இடம் கொடுப்பார்களாம். இந்த இடத்திற்காக, எனது தள்ளாத தாயா ரையும், மூன்று குழந்தைகளையும் எங்கே கொண்டுபோய் தள்ளிவிடுவது? வேறு சில இடங்களில் “உங்களுக்கென்ன எழுதுகிற உத்தியோகமா? படிக்கிற உத்தியோகமா?” என்று கேட்கிறார்கள். படிக்கிறவர்கள் வந்தால் இரவெல்லாம் படித் துத் தொலைப்பார்கள்; ‘எலக்ட்ரிக் சார்ஜ்‘ அதிகமாகும் என்பது இவர்கள் கவலை. மற்றுஞ் சிலர் “உங்களுக்கு கவர் மெண்ட் உத்தியோகந்தானே?” என்று கேட்கிறார்கள். கவர்ன் மெண்ட் உத்தியோகமாயிருந்தால் வாடகை ஒழுங்காக வரும் என்பது இவர்கள் நம்பிக்கை. சரி, இப்படியெல்லாந்தான் கேட்கிறார்களே, அதிலே ஒரு மரியாதை உண்டா? பேச்சிலே இனிமை உண்டா? ஹுஹூம் - லவலேசமும் கிடையாது. இவர்கள் வீடேறி வந்து பிச்சை கேட்கிறவர்கள் மாதிரி நினைத்துப் பேசுகிறார்கள். வீடேறிப் போவானேன்? தெரு விலே போய்க் கொண்டிருக்கிறபோது, யாராவது ஒருவரைப் பார்த்து “ஐயா! இதென்ன வீதி?” என்று கேளுங்கள். உங்கள் முகத்தைக்கூட பாராமல் “எனக்குத் தெரியாது” என்று சொல்லி விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஓர் ஆபீஸிலே சென்று அல்லது வியாபாரஞ் செய்கிற கடையிலே சென்று, “ஏன் சார், இந்த விலாசதார் எங்கே யிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேளுங்கள். “ஏன் ஐயா! இதென்ன போஸ்டாபீஸ் என்று நினைத்துக் கொண்டீர்களா?” என்று வள்ளென்று விழுவார்கள். இவையெல்லாம் சென்னைப் பட்டணத்து மரியாதைகள்! (சோமுவின் நண்பன் ராமு எதிர்ப்படுகிறான்.) ராமு : என்ன சோமு? நீயே ஏதோ பேசிக் கொண்டு போகிறாய்? வீடு எங்கேயாவது அகப்பட்டதா? சோ : வா, ராமு, உன்னைப் பார்க்கவேண்டுமென்றுதான் இருந் தேன். உம்... வீடா? சுடுகாட்டிலேகூட இடம் இல்லை. ரா : ஏன் அவ்வளவு வெறுப்பு? சோ : என்ன அப்பா, ஒரு நாளா, இரண்டு நாளா? மூன்று மாதமாக நானும் இந்த வீட்டுக்கு அலைகிறேன். ஒரு இடம்கூட அகப் படமாட்டேனென்கிறதே. ஏன் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி வந்தோ மென்று இருக்கிறது. ரா : ஆமாம் கஷ்டந்தான். தாயப்ப முதலி தெரு விலே ஓர் இடம் சொன் னேனே, அதைப் பார்த் தாயா? சோ : நீ திருவல்லிக்கேணியி லல்லவோ அந்த இடம் இருக்கிற தென்று சொன்னாய்? அங்கே அந்த மாதிரி பெயருள்ள தெருவே இல்லையே. வேறு எங்கேயோ தையப்ப முதலி தெரு என்று ஒன்று இருக்கிறதாம். ரா : சென்னையிலே இது ஒரு சங்கடம். நமது நாட்டிலேயுள்ள ஜாதிப் பெயர்களையெல்லாம் தெருக்களுக்கு வைத்திருக்கி றார்கள். நமது நாட்டிலே எத்தனையோ கவிஞர்கள், எத்த னையோ நல்ல அரசர்கள் இருந்திருக்கிறார்களே, அவர்களுடைய பெயர்களை வைக்கக்கூடாதா? சோ : பெயர் வைக்கிற தொல்லையே வேண்டாம். ரங்கூன், கொளும்பு முதலிய நகரங்களில் இருக்கிற மாதிரி தெருக்க ளுக்கு வரிசையாக ஒன்று, இரண்டு என்று நம்பர் கொடுத்து விடலாமே. ரா : வாஸ்தவம். அப்படியே செய்திருக்கலாம். புதிதாகத் தோன்றிய தியாகராயநகரிலாவது இப்படித் தெருக்களுக்கு நம்பர் தொடுத் திருக்கலாம். ஆனால் தற்பெருமையென்று ஒன்றிருக் கிறதல்லவா? அது, எந்தச் சீர்திருத்தத்தையும் செய்யவிடாமல் குறுக்கே நிற்கிறது. சோ : சரி, சரி, ராமு! நீ யென்ன நகரச் சீர்திருத்தம் செய்யப் போகிறாயா? அல்லது எனக்கு வீடு பார்த்துக் கொடுக்கப் போகிறாயா? ரா : இல்லையப்பா! பேச்சுவாக்கில் வந்த விஷயம் இது. இருக் கட்டும். நாளை காலை காபி சாப்பிட்டுவிட்டு என் வீட்டுக்கு வா. இரண்டு பேரும் ஒரு சுற்று சுற்றிக் கொண்டு வரலாம். உனக்கு திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, இராயப் பேட்டை, புதுப்பேட்டை இதற்குள் இருந்தால் பரவாயில்லை தானே? சோ : எந்தப் பேட்டையானாலும் சரி. வண்ணாரப் பேட்டை யானால் கூட போகத் தயார். அதற்கப்பால்கூட ஏதாவது பேட்டை இருக்கிறதோ? ரா : (சிரித்துக் கொண்டே) இருக்கிறது; காலாடிப் பேட்டை, கொருக்குப்பேட்டை........... சோ : வேண்டாம், வேண்டாம். எனக்குக் கால் ஆடிப்போக வேண்டுமென்றும், கிறுக்குப்பிடிக்க வேண்டுமென்றும் ஆசீர் வதிக்கிறாய் போலிருக்கிறது. ரா : (உரக்கச்சிரித்து) பட்டணத்திற்கு வந்து நல்ல அனுபவம் ஏற்பட்டுவிட்டது உனக்கு, இல்லையா? சரி; நாளை காலை உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்; சோ : வருகிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கால் நடையோ? (ராமு செல்கிறான்.) சோ : (தனக்குள்) பட்டணத்திற்கு வந்தாலே மரியாதைகூட மாறிவிடுகிறது. காபி சாப்பிட்டுவிட்டு வா என்று சொல்கி றானே தவிர, காபி சாப்பிட வா என்று சொன்னானா பார் இந்த ராமு? தஞ்சாவூரில் எவ்வளவு அன்னியோன்னியமாக இருவரும் பழகினோம். (உதட்டைப் பிதுக்கிக் கொள்கிறான்.) (எதிர்ப்புறமாக சீனு வருகிறான்.) சீனு : என்ன சோமு! எதை நினைத்துக் கொண்டு உதட்டைப் பிதுக்குகிறாய்? வீடு எங்கேயாவது அகப்பட்டதா? எங்கே அகப்பட்டாலும் சரி, எனக்கும் அதில் ஒரு ‘போர்ஷன்’ (பாகம்) கிடைக்கும்படி ஏற்பாடு செய். இந்த ஹோட்டல் சோறு ஒத்துக் கொள்ளவேயில்லை யப்பா! வயிற்றுவலி விடமாட்டேனென் கிறது. சோ : (கொஞ்சம் ஆத்திரத்துடன்) எனக்கு மட்டுமென்ன, மாமியார் வீட்டில் வடித்துக் கொட்டுகிறார்களென்று நினைத்துக் கொண்டாயோ? போடா போ. கடுகு வெடிப்பது போல் என்னமோ வார்த்தைகளைக் கொட்டுகிறான். நான்தான் மூன்று மாதமாக அலைகிறேன் வீட்டுக்கு. இவனுக்குப் ‘போர் ஷன்’ வேண்டுமாம். சீ : கோபித்துக் கொள்ளாதே சோமு. படுகிற கஷ்டத்தினால் சொன் னேன். சோ : நானென்ன இந்திர போகத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயோ? ஹோட்டல் சோறு எனக்குந்தான் பிடிக்கவில்லை. அதுவும் இந்த ‘ரேஷன்’ காலத்திலே சொல்ல வேண்டியதேயில்லை. ஹோட்டலுக்குள் நுழைந்தாலே பசி மந்தித்துப் போய்விடுகிறது. சீ : இதனால்தான் டாக்டர்களுக்கு நல்ல வருமானம் இப்பொழுது. சோ : அந்த ஆராய்ச்சி நமக்கு எதற்கு? உனக்கு எங்கேயாவது இடம் அகப்பட்டதா? சீ : எங்கும் அகப்படவில்லையே. உன்னைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன். சோ : என்னையா? அதைவிட இந்த ராந்தல் கம்பத்தை நம்பு. இருட்டு வேளையிலே வெளிச்சம் கொடுக்கும்; உன்னைத் தன்மீது சார்த்திக் கொள்ளும்; காலில் அழுக்குப்பட்டால் அதில் துடைத்துக் கொள்ளலாம்; முதுகில் தினவு எடுத்தால் அதில் தேய்த்துக் கொள்ளலாம்; வா, ஆபீசுக்கு நேரமாயிற்று. போய் பிண்டம் கொட்டிக் கொண்டு போகவேண்டுமில் லையா? (இருவரும் ஹோட்டலுக்குப் போகிறார்கள்.) இரண்டாவது களம் இடம் : ஒரு மாடி வீட்டின் முன்பக்கம் காலம் : காலை நேரம். (கீழேயுள்ள தாழ்வாரத்தில் ஒரு சார்மணையில் இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அந்த வீட்டுச் சொந்தக்காரர். வயது சுமார் ஐம்பத்தெட்டு இருக்கும். பென்ஷன்தார். மற்றொருவர், அடுத்த தெருவிலுள்ள ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரர். அவரும் இதேமாதிரி பென்ஷன்தார்; ஏறக்குறைய இதே வயதுதான்.) முதல் வீட்டுக்காரர் : என்ன ஸார் போங்கள்! பொழுது போனால், பொழுது விடிஞ்சால், இந்த குடித்தனக்காரர் தொல்லை, பெருந் தொல்லையாகப் போய்விட்டது. அங்கே ஓட்டை, இங்கே ஒழுகல், அதைச் செய்யணும், இதைச் செய்யணும், இதே பாரா யணமா? இரண்டாவது வீட்டுக்காரர் : அதை ஏன் கேட்கிறீர்கள்? எனக் கும் இதே அவஸ்தைதான். இப்பொழுது சுண்ணாம்பு விற்கிற விலையிலே, சிமெண்ட் விற்கிற விலையிலே வெள்ளையடிக்க முடியுமா? ‘ரிப்பேர்’ பண்ண முடியுமா? மு-வீ : ‘கஷ்டமா யிருக்கிறதென்றால் காலி பண்ணி விடுங்கள்’ என்று சொன்னால் அதுவும் மாட்டேன் என்கிறார்கள். ‘எங்களுக்கு வேறு சௌகரியமான இடம் அகப்பட்டால்தான் போவோம்’ என்கிறார்கள். மிஞ்சிப் போனால் ‘ரெண்ட் கண்ட் ரோல் ஆக்ட்’ (வாடகை நிர்ணயச் சட்டம்)படி எங்களை நீங்கள் போகச் சொல்ல முடியாது என்று முரண்டு பிடிக்கிறார் கள். என்ன செய்வது? பெரிய அவஸ்தையாகப் போய்விட்டது. இ-வீ : கல்லிலும் சுண்ணாம்பிலும் ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டினோம், எங்காவது கிராமத்திலே போய் நிம்மதியாக இருந்திருக்கக் கூடாதா என்று இப்பொழுது தோன்றுகிறது. என் வீட்டிலும் இதே கதிதான். மூன்று குடித்தனக்காரர்கள் இருக்கிறார்களென்று பேர். இந்த மூன்று பேரும் சேர்ந்து என்னைப் படுத்துகிற பாடு உண்டே அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். இத்தனைக்கும் நானென்ன மற்றவர்களைப் போல் வாடகையை உயர்த்தி இருக்கிறேனா? மு-வீ : இப்பொழுது என்ன வாடகை வருகிறது? இ-வீ : மொத்தம் அறுபத்தேழு ரூபாய் வருகிறது. மு-வீ : முன்னே? இ-வீ : நாற்பது ரூபாய் வந்து கொண்டிருந்தது. ஆனால் முன்னைவிட இப்பொழுது செலவு எவ்வளவு ஆகிறதென்று நினைக்கிறீர்கள். ஒட்டிக்கு இரட்டியல்லவோ ஆகிறது? மு-வீ : இருந்தாலும் உம்ம பாடு அதிர்ஷ்டந்தான். வாடகை ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறதோ இல்லையோ? இ-வீ : அதெல்லாம் மூன்றாந்தேதி காலையில் கறந்து வாங்கி விடுவேன். எல்லாரும் கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர்கள் பாருங்கள். மு-வீ : இந்த வீட்டிலே நான்கு குடியிருக்கிறார்கள். இடத்திற்குத் தகுந்தாற்போல் மூன்று, நான்கு என்று வாடகையை உயர்த்தி யிருக்கிறேன். இதற்கு இவர்கள் போடுகிற கூப்பாடு இருக் கிறதே, சொல்ல முடியாது. நான் ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் இருந்து விடுவது. இ-வீ : பின் என்ன செய்கிறது? என் வீட்டில் பின்புறம் தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டிருக்கிறேன். அந்த இடத்தைக் காலி பண்ணி விட்டால் கூட பத்து ரூபாய் கிடைக்கும். இப்பொழுது ஜனங்கள் வீட்டுக்கு அலைகிறது இருக்கிறதே, அதைச் சொல்லி முடியாது. மு-வீ : ஏதோ இந்த வீட்டைக் கட்டினோமோ, பிழைத்தோமோ? இல்லாவிட்டால் இந்த மாதிரி சார்மணையில் நிம்மதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? இ-வீ : என்ன அலைகிறார்கள், என்ன அலைகிறார்கள்? கட்டை முட்டை போட்டிருக்கிற பரண் இருக்கிறதே அதைக் காலி பண்ணி விட்டால் கூட வாடகை வரும் போலிருக்கிறது. மு-வீ : இருந்தாலும் ஸார், இதற்குமேலே நாம் குடித்தனம் வைத்துக் கொள்ளக் கூடாது. இதுவே நம்மால் சமாளிக்க முடியவில்லை. குடித்தனக்காரர்களுக்கு என்ன, ராத்திரி பன்னிரண்டு மணியா னாலும் ‘லைட்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; கண்ட இடத்திலும் காரித்துப்பு கிறார்கள்; குப்பையைப் போடுகிறார் கள். போதும், போதும். இப்பொழுது என் வீட்டிலே கூட ஒரு சின்ன இடம் காலியிருக்கிறது. அதை வாடகைக்கு விடலாம். ஆனால் தொந்தரவு அதிகமாகுமே யென்றுதான் பார்க்கிறேன். இ-வீ : அதற்கில்லை ஸார் நான் சொல்வது. இப்பொழுது கார்ப் பொரேஷனிலே வரியை வேறே அதிகப்படுத்தப் போகிறார் களாமே? ‘அஸ்ஸெஸர்’ வந்துவிட்டுப் போக வில்லையா போன வாரம்? அதை எப்படியாவது சரிக்கட்ட வேண்டாமா? மு-வீ : ஆமாம் ஸார், ஞாபகமே இல்லை பார்த்தீர்களா? இங்கே கூட வந்துவிட்டுப் போனாராம். நான் அப்பொழுது வீட்டில் இல்லை. இந்தக் குடித்தனக்காரர்கள் என்ன சொல்லித் தொலைத் தார்களோ? நான் இருந்திருந்தால் ஒரு தினுசாகச் சொல்லியிருப் பேன். ஆமாம், வரியை அதிகப்படுத்தினால் அதை எப்படியாவது சமாளிக்க வேண்டும் ஸார்! (இருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள், அப்பொழுது ராமு வும் சோமுவும் வருகிறார்கள்.) ரா : குட் மார்னிங்! மு-வீ : யாரு? என்ன வேணும்? ரா : இங்கே ஏதாவது ‘போர்ஷன்’ காலியிருக்கிறதா? மு-வீ : யாருக்கு? உமக்கா, இவருக்கா? ரா : இவருக்குததான். என் ‘பிரெண்ட்’ (நண்பர்) இவர். தஞ்சாவூரி லிருந்து மாற்றலாகி இங்கு வந்திருக்கிறார். மூன்று மாதமா கிறது. எங்கும் வீடு அகப்படவில்லை. இ-வீ : எங்கே உத்தியோகமோ? சோ : ஒரு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிலே இருக்கிறேன். இ-வீ : ஆமாம், இந்தக் கம்பெனிகளிலெல்லாம் கவர்ன் மெண்டைப் போல மாதம் ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கி றார்களா? சோ : இதுவரையில் எனக்கு ஒழுங்காகத்தான் கிடைத்துக் கொண்டு வருகிறது. ரா : வாடகை சரியாகக் கிடைக்குமா என்று யோசிக்கிறீர்களோ? அதற்கு நான் ‘காரண்டி’. மாதம் பிறந்து ஐந்தாந்தேதி காலை யில் வாடகைப் பணம், உங்களுடைய ரசீதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். இ-வீ : பொடிவைத்துப் பேசுகிறார் பார்த்தீர்களா ஸார்! வாடகைப் பணத்தை வீட்டுக்காரர் வந்து வாங்கிக் கொண்டு போக வேண்டுமாம். அவர் வந்து கொடுக்கமாட்டாராம். ரா : (லேசாகச் சிரித்துக் கொண்டு) என் வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. மு-வீ : இருக்கட்டும். (சோமுவைப் பார்த்து) எத்தனை பேர் நீங்கள்? சோ : நான், என் சம்சாரம், தாயார், மூன்று குழந்தைகள். அவ்வளவு தான். மு-வீ : எவ்வளவு சம்பளம் உமக்கு? சோ : அறுபத்தைந்து ரூபாய். மு-வீ : இந்த ரூபாயில் இத்தனை பேரையும் வைத்துக் கொண்டு உம்மால் எப்படி சமாளிக்க முடியும்? ரா : அது அவர் பொறுப்பல்லவா? இ-வீ : மதராசிலேயே இருந்து பழக்கம் போலிருக்கு. அதுதான் பேச்சு தோரணையே ஒரு மாதிரியாயிருக்கு. மு-வீ : பசங்களெல்லாம் ரொம்பச் சிறிசுகளோ? சோ : எல்லாம் பத்து வயதுக்குட்பட்டதுகள்தான். மு-வீ : தாயார் ரொம்பத் தள்ளாதவளோ? ரா : ரொம்ப பாலியமாகவும் இருக்க முடியாதில்லையா? மு-வீ : அதற்கில்லை ஐயா, ரொம்ப வயதானவளாயிருந்தால் எல்லாருக்கும் தொந்தரவுதானே என்று கேட்கிறேன். ரா : எப்படி யிருந்தாலென்ன, அவாளவாள் இடத்திலே அவாளவாள் இருக்கப் போகிறார்கள். மு-வீ : ராத்திரி யெல்லாம் இருமிக் கொண்டிருந்தால், மற்றக் குடித் தனக்காரர்களுக்கும் சங்கடந்தானே? ரா : இருமல், தும்மல் ஒன்றும் வராது என்று ‘காரண்டி’ எழுதிக் கொடுக்கிற டாக்டர் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அவரிடத்தில் சீட்டு வாங்கிக் கொண்டுவரச் செய்கிறேன். இ-வீ : (தமக்குள்) கொஞ்சம் அதிமாத்திரைதான் இவர். மு-வீ : என்ன வாடகை கொடுக்க முடியும்? ரா : இடத்தைப் பார்த்தல்லவோ சொல்ல வேண்டும். இ-வீ : இடம் இருக்கிறது. இந்த வீடு முழுவதும் ஒழித்துக் கொடுக் கிறேன். இவருடைய சக்தி எவ்வளவு என்றுதான் கேட்கிறேன். ரா : இவருக்கு எவ்வளவு இடம் தேவையோ அவ்வளவு இடமிருந்து, தமது சக்திக்கும் அனுசரித்ததாயிருந்தால் அந்தப்படி வாடகை கொடுக்கத் தயார். இ-வீ : (பொடிமட்டையைத் தட்டிப் போட்டுக் கொண்டு) பலே பேர்வழி! பலே பேர்வழி! சோ : ராமு, போகலாம் வா! இடமும் வேண்டாம், கிடமும் வேண்டாம். இ-வீ : (தமக்குள்) வாடகைக்கு வருகிற பெயர்வழிகளுக்குக் கோபம் வேறே, கௌரவம் வேறேயா? ரா : ஸார் என்னமோ தானே சொல்லிக் கொள்கிறாரே? மு-வீ : ஸார்! என்னத்துக்கு வீண் பேச்சு? சின்ன இடம் ஒன்று இருக்கிறது. பின் பக்கத்திலே இரண்டு அறை. வெந்நீர் உள் தனியாகக் கிடையாது. வீட்டுக்குள்ளே வரவேண்டுமானால் கொல்லைப்பக்கமாகத் தான் வரவேண்டும். பசங்கள் அதிகமாக சேஷ்டை செய்யக் கூடாது. வெளியார் யாரும் அதிகமாக வந்து போய்க் கொண்டிருக்கக் கூடாது. ராத்திரியிலே அதிகநேரம் வளவளவென்று பேசக்கூடாது. எல்லாக் குடித்தனக்காரர்க ளுடனும் ஒத்துப் போகவேண்டும். உள் இரண்டும் பழைய ரூம்கள்தான். இப்பொழுது சுண்ணாம்பு அடிக்க முடியாது. அதிக மழை பெய்தால் கொஞ்சம் ஒழுகத்தான் செய்யும். வாடகை பன்னிரண்டு ரூபாய். லைட் செலவு முதலியவைக ளெல்லாம் வேறே. மொத்தம் பதினைந்து ரூபாயாகும். ரா : ரொம்ப சந்தோஷம், இவ்வளவு விஸ்தரித்துச் சொல்லி விட்டீர்களே. மு-வீ : ஆமாம்; பின்னாடி மனஸ்தாபம் வரக்கூடாது பாருங்கள். சோ : (கோபத்துடன்) வா, ராமு! நாம் போகலாம். இந்த நிர்ப்பந்தங் களுக்குட்பட்டு குடியிருப்பதைவிட நரகத்திலே போய் வாசஞ்செய்யலாம். இ-வீ : தாராளமாகப் போய் வாசஞ்செய்யலாமே! ரா : அங்கேயும் உங்களுடைய தொந்தரவு இருக்குமே யென்றுதான் யோசனையாயிருக்கிறது. சோ : வா ராமு! வீண் பேச்சு எதற்கு? குடித்தனமும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். பழையபடி மாற்றல் செய்து கொண்டு போய்விடுகிறேன். சென்னையிலே ஒண்டுக்குடி யிருந்து சங்கடப்படுவதைவிட தஞ்சையிலே பஞ்சையாகப் பறப்பதுவே மேல். (இருவரும் வேகமாகச் செல்கிறார்கள்.) இ-வீ : பார்த்தீர்களா அகம்பாவத்தை? மு-வீ : போகிறார்கள் தறிதலைகள். யாருக்கு நஷ்டம்? கடவுளும் வாழ்க்கையும் முதற் களம் இடம் : பூஜை அறை. காலம் : காலை. (செல்வச்சீமானான வேதமூர்த்தி, ஆடம்பரமான தமது பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருக்கிறார். எட்டினாற்போல், அவருடைய மகன் தாமோதரன் நிற்கிறான்.) வேதமூர்த்தி : (பாடுகிறார்) மூவா போற்றி! முதல்வா போற்றி! முத்தே போற்றி! முனியே போற்றி! (எதிரிலிருக்கும் ஒரு வெள்ளி சம்புடத்தைத் திறந்து பார்த்து) அடே, கர்ப்பூரமே இல்லையே. தாமோதரம்! முந்தாநாளே சொன்னேனே வாங்கிவாவென்று. மறந்துவிட்டாயா? தாமோதரன் : மறக்கவில்லை; வாங்கி வர மனமில்லை. வே : (திடுக்கிட்டு) என்ன? என்ன? தா : இரண்டணா விற்ற கற்பூரத்திற்கு இரண்டு ரூபாய் கொடுக்க மனமில்லை. வே : அடே, அடே, உனக்கு இப்படிச் சொல்ல என்ன துணிச்சல்? தா : நியாயத்தைச் சொல்ல பயப்படுவானேன்? வே : என்ன நியாயம்? கடவுளுக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவது அநியாயமா? தா : அதைப்பற்றி நான் சொல்லவில்லை; இரண்டணா சாமானை இரண்டு ரூபாய் கொடுத்து வாங்குவது அநியாயம் என்றுதான் சொல்கிறேன். வே : (ஆத்திரம் கலந்த சிரிப்போடு) ஓ! நீ எகனாமிக்ஸ் (பொருளாதார சாஸ்திரம்) பாஸ் பண்ணியிருக்கிறாயோ? தா : வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ள அந்த சாஸ்திரம் உபயோகப்படுமே தவிர கடவுளை அறிய உபயோகப்படாது. வே : (கோபத்துடன்) போடா அதிகப் பிரசங்கி! படிக்க வைத்ததன் பலன், பெற்ற அப்பனோடு நன்றாக வாயாடத் தெரிந்து கொண் டிருக்கிறான்! தா : கோபியாதீர்கள் அப்பா! கர்ப்பூரத்திற்குப் பதில் விளக்கை ஏற்றிக் காட்டினால் என்ன? வே : பண்ணின பாவம் போக கர்ப்பூரம் ஏற்ற வேண்டு மென்றே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கர்ப்பூரத்தைப் போல் நமது பாவங்களும் கரைந்து எரிந்துவிடுமாம். தா : பாவத்தைச் செய்து விட்டு, பிறகு அதை எரிக்க முயல்வதைவிட, பாவத்தைச் செய்யாமலே இருந்துவிட்டாலோ? வே : அடே, நீ ரொம்ப பெரிய மனிதனாகி விட்டாய்! பெரியவாள், பெருந்தலை யென்ற மரியாதை கொஞ்சங்கூட இல்லாமல் குதர்க்கம் செய்ய எங்கே கற்றுக் கொண்டாய்? தா : பாவம் செய்யாம லிருக்கவேண்டுமென்று சொல்வது குதர்க் கமா? வே : பாவம் செய்யாமல் ஒரு நிமிஷமாவது இருக்க முடியுமா? தா : இது வேறேயா? பாவஞ் செய்வது சகஜம் என்ற நிலைமையிலா உங்கள் பூஜை உங்களைக் கொண்டு விட்டிருக்கிறது? வே : பின் கடவுள் எதற்காக இருக்கிறார்? அவரை நாம் ஏன் பூஜிக்கிறோம்? நமது பாவங்களைப் போக்குவார் என்பதற்குத் தானே? தா : அப்படியானால் கடவுள் என்ன வண்ணானா? வே : அபசாரம்! அபசாரம்! இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நாஸ்திகத்தழும்பு நன்றாக ஏறியிருக்கிறது. அடே தாமோதரம்! கண்டிப்பாகச் சொல்கிறேன். இனி இந்த மாதிரி யெல்லாம் என் எதிரே பேசிக் கொண்டு நில்லாதே. பெற்ற தோஷத்திற்காக உனக்குப் பிண்டம் கொட்டிவிடுகிறேன். நீ எங்காவது போ; என்னமாவது செய். தா : நான் ஏன் எங்காவது போகவேண்டும்? நான் உங்களுடைய பிள்ளை; பிச்சைக்காரனல்ல. வே : கர்ப்பூரம் வாங்கி வரவில்லையா என்று கேட்டதற்கு இவ்வளவு வாதப் பிரதிவாதமா? காலம் கெட்டுவிட்டது. தா : காலம் கெடவில்லை; நாம்தான் கெட்டுவிட்டோம். கடவுளை நன்றாக ஏமாற்றத் தெரிந்துகொண்டிக்கிறோமில்லையா? வே : அது எப்படி? தா : பூஜை அறைக்கு வந்தபிறகுதானே நமக்குக் கடவுள் ஞாபகம் வருகிறது. அவர் முன்னே பலகாரத்தைத் திறந்து காட்டிவிட்டு நாம் சாப்பிடுகிறோம். நாம் பொய் சொல்கிறபோது அல்லது மற்றவர்களைத் திட்டுகிறபோது, அவர் காதை மூடிக் கொள்ள வேண்டும். தோத்திரப் பாடல்கள் பாடுகிறபோது மட்டும், அவர், காது திறந்து கேட்க வேண்டுமென்று எதிர்பார்க் கிறோம். பொதுவாக, நம்மைப்போல அவரை ஆக்கிவிடுகி றோமே யொழிய, அவரைப்போல் நாம் ஆகவேண்டுமென்று முயற்சி செய்வதுகூட இல்லையே. வீடு கட்டி முடிந்தால் ‘என் வீடு; நான் கட்டினேன்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள் கிறோம். மழையினாலோ காற்றினாலோ சுவர் விழுந்து விட்டால் ‘கடவுளின் கோயில் குட்டிச் சுவராய்ப் போக’ என்று, பாவம், எங்கேயோ நமக்கெல்லாம் எட்டாம லிருக்கும் அந்தக் கடவுளைச் சபிக்கிறோம் வே : போதும்; படித்ததற்குப் பயன் நன்றாகப் பிரசங்கம் செய்யத் தெரிந்துகொண்டுவிட்டாய். இந்தப் படிப்புக்காகச் செல வழித்த பணத்திற்குப் பால் வாங்கி அபிஷேகம் செய்திருந் தாலும் புண்ணிய முண்டு. தா : ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்தாலும் பிரயோஜனமுண்டு என்று சொல்லுங்கள். வே : சரி, சரி; இலை போட்டாயிற்றா பார். (தாமோதரன் செல்கிறான்.) வே : (தனக்குள்) தவமிருந்து ஒரு பிள்ளையைப் பெற்றேன். அது இப்படியாகிவிட்டதே! (யோசித்துக்கொண்டே செல்கிறார்.) இரண்டாவது களம் இடம் : முன்பக்கத்து ஹால். காலம் : நடுப்பகல். (வேதமூர்த்தி சாப்பிட்டுவிட்டு வருகிறார். அங்கே இவருக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பூஷணம் என்னும் வியாபாரியைச் சந்திக்கிறார்.) வேதமூர்த்தி : வாருங்கள், வாருங்கள். ஏது இவ்வளவு தூரம்? நல்ல வெயில் வேளை. பூஷணம் : தங்களிடத்தில்தான் ஒரு காரியமாக வந்தேன். வே : என்ன காரியமோ? செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன். பூ : சரக்கு வந்து காத்துக்கொண்டிருக்கிறது. பாங்கியில் பணத்தைக் கட்டிவிட்டு அதை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் உங்க ளிடம் வந்தேன். வே : என்னிடத்திலே பணமேது? (பொறுத்து) அப்படி எவ்வளவு பணம் தேவையிருக்கும். பூ : எல்லாம் ஒரு எண்ணாயிரம் ரூபாய் இருந்தால் போதும். வே : அவ்வளவுக்கு திடீரென்று எப்படிக் கிடைக்கும்? (பொறுத்து) எவ்வளவு வட்டி கொடுப்பீர்கள்? பூ : நியாயமான வட்டியைக் கொடுக்கத் தயார். சரக்கை ‘டிலவரி’ எடுத்தவுடன் கிராக்கியிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரொக்கமாகப் பணம் வந்துவிடும். அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விடுவேன். இரண்டு மூன்று நாட்களுக்குப் போட்டுத் திருப்புவதற்குத்தான் பணம் வேண்டியிருக்கிறது. வே : ஈடு என்ன காட்டுகிறீர்கள்? பூ : என்ன, எட்டு ரூபாய்க்கு நான் பெறுமானமில்லையா? இன்று நேற்று வியாபாரியா நான்? ஏதோ அவசரத்திற்குத்தானே கேட் கிறேன்? வே : இருந்தாலும் பாருங்கள். இன்றைக்கிருந்தாரை நாளைக் கிருப்பரென்றெண்ணவோ திடமில்லை. இந்தக் காலத்திலே யார், யாரை நம்புகிறார்கள்? ஏதேனும் பெறுமானமுள்ள சொத்தை ஈடு காட்டுங்கள்; யோசிக்கிறேன். பூ : உயிருள்ள மனிதனைக் காட்டிலும் உயிரில்லாத பொருளி னிடத்தில்தான் உங்களுக்கு அதிகமான நம்பிக்கைபோலிருக் கிறது. வே : பூஷணம்! நாம் இங்கே பேசுவது வேதாந்தமல்ல; வியாபாரம். பூ : சரி, என்ன ஈடுமானம் வேண்டுமென்கிறீர்கள்? என் சம்சாரத்தி னுடைய வைர அட்டிகை இருக்கிறது. அது போதுமா? வே : வைரமா? பூ! அதை யார் இந்தக் காலத்தில் சட்டை பண்ணு கிறார்கள்? அது ஒரு பெறுமானமுள்ள பொருளா என்ன? பூ : சரி, வேறு எதை ஈடு காட்டுவது? தங்க நகைகள் அவ்வளவுக் கில்லையே. என்னுடைய பங்களாவின் கிரய பத்திரத்தை வேண்டு மானால் கொடுத்து வைக்கிறேன். வே : இன்ஷ்யூர் செய்திருக்கிறீர்களோ இல்லையோ? பூ : செய்திருக்கிறேன். வே : எவ்வளவுக்கு? பூ : ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு. வே : சரி, அந்த இன்ஷ்யூரன்ஸ் பாலிஸியையும், பங்களாவின் கிரய பத்திரத்தையும் சேர்த்துக் கொடுங்கள். பூ : (யோசித்து) சரி, கொடுக்கிறேன், அவசரம்; என்ன செய்வது? வே : ஒரு மாதத்திற்குள் எப்பொழுது திருப்பிக் கொடுப்பதாயிருந்த போதிலும், ஒரு மாதம் பூராவுக்கும் வட்டி கொடுத்துவிட வேண்டும்; அதுவும் முன்னாடியே கொடுத்துவிட வேண்டும்; அதாவது உங்களுக்குக் கொடுக்கிற பணத்தில், வட்டியைக் கழித்துக் கொண்டே கொடுப்பேன். சம்மதமா? பூ : என்னுடைய அவசரத்தை நன்றாகத் தெரிந்து கொண்டுவிட் டீர்கள். வே : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வேறே எங்கேயாவது சௌகரியமாகப் பார்த்துக் கொள்ளலாமே? பூ : வட்டி எவ்வளவோ? வே : ஒரு வட்டி. அதுதான் தெரிந்தேயிருக்கிறதே. பூ : இவ்வளவு பெரிய தொகைக்குக்கூடவா? ஈடு வேறே கொடுக்கி றேன். வே : ஐயா, சம்மதமானால், பத்திரம், பாலிஸி எல்லாம் எடுத்துக் கொண்டு சாயங்காலம் குளிர்ந்த வேளையில் வாருங்கள். எல்லாவற்றையும் ஒரு நிமிஷத்தில் முடித்துக் கொண்டு போகலாம். நான் கொஞ்சம் அலுப்பாற வேண்டும்? பூ : சாயந்திரம் வருகிறேன். ஏதோ யோசித்துச் செய்யுங்கள். நீங்கள் பெரிய தெய்வ பக்தர் - எத்தனையோ தரும காரியங்கள் செய் திருக்கிறீர்கள். இந்த வட்டித் தொகை தங்களுக்கு ஒரு பிரமாத மல்ல. வே : இந்த மாதிரி உபதேசங்களைக் கேட்டுச் சலித்துப் போனவன் நான். கடவுள் வேறே, தொழில் வேறே. இரண்டும் ஒன்று என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பதனால்தான் உங்களுக்கு பண முடை ஏற்படுகிறது. சரி, போய் வாருங்கள். (வீட்டுக்குள்ளே போகிறார். பூஷணம் வெளியே போகிறார்.) மூன்றாவது களம் இடம் : முன்தாழ்வாரம். காலம் : மாலை. (வேதமூர்த்தி உட்கார்ந்திருக்கிறார். எதிரில் இரண்டு மரமேறிகள் நிற்கிறார்கள்.) முதல் மரமேறி : என்ன எஜமான், அம்பது மரம் இருக்குது; அம்பது ரூபா வாங்கிக்க கூடாதுங்களா? வே : எண்பது ரூபாய்க்கு ஒரு சல்லிகூட குறைக்க முடியாது. இப்பொழுதுதான் மதுவிலக்குச் சட்டத்தைக்கூட எடுத்து விட்டார்கள். கள்ளுக் கடைகளெல்லாம் நல்ல ஏலத்திற்குப் போகின்றன. இரண்டாவது மரமேறி : எங்கிங்கோ, பணத்தைக் கொட்டி ஏலம் எடுத்துப்புட்டாங்களே தவிர, கள்ளு முன்னே போலே செல வாகுங்களா? வே : அந்த விஷயமெல்லாம் எனக்குத் தேவையில்லை. எண்பது ரூபாய்க்குச் சம்மதமா? மு-ம : கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க. திருவிழா, கிருவிழா எல்லாம் செய்யறீங்க. எவ்வளவோ பணம் செலவழியுது உங்க தங்கக் கையாலே. இந்தத் தொகை வந்து உங்களுக்கு என்ன ஜீவனம் நடக்கப் போவுதுங்களா? வே : அடே, அதிகமாகப் பேசாதே. குத்தகைச் சீட்டு எழுதிக் கொடுத்து, ரூபாயைக் கட்டிவிட்டு மரமேறுவதானால் ஏறு; இல்லாவிட்டால் இரண்டு பேரும் தோட்டத்தைவிட்டு வெளியே போங்கள். இ-ம : சரி எஜமான், காலம்பரே வரோம். ஏதோ பெரிய மனசு பண்ணி பாருங்கோ. வே : பெரிய மனசும் கிடையாது; சின்ன மனசும் கிடையாது. ஒரே மனசுதான். எண்பது ரூபாயை எடுத்துக் கொண்டு காலையில் வாருங்கள். (மரமேறிகள் போகிறார்கள். இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த தாமோதரன், வேதமூர்த்திக்குச் சமீபத்தில் வந்து நிற்கிறான்.) தா : ஏன் அப்பா, தென்னை மரங்களை, கள்ளுக் குத்தகைக்கு விட லாமா? அது பாவமில்லையா? வே : பாவமென்ன இருக்கிறது? கள்ளை நாமா குடிக்கிறோம்? தா : குடிக்கச் செய்கிறோம். வே : அதற்கு நாமா ஜவாப்தாரி? தா : இல்லையா? திருடியவனைக் காட்டிலும், திருட்டுக்கு உடந் தையா யிருக்கிறவன் பெரிய குற்றவாளி இல்லையா? வே : உலகத்தில் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றன. அவை களுக்கெல்லாம் நாமா பொறுப்பாளி? தா : நம் மூலமாக அக்கிரமங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளலா மல்லவா? வே : அடே, இந்தத் தர்க்க நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது. மரத்தைத் தண்ணீர் ஊற்றி வளர்த்தோம். இதற்காக நாம் பணத்தைச் செலவழித்திருக்கிறோம். அதிலிருந்து பலனைப் பெறுவதில் என்ன தவறு? தா : நன்றாகப் பலனை அனுபவியுங்கள். தேங்காய், தென்னங் கீற்று எல்லாவற்றையும் எடுத்து உபயோகியுங்கள். யார் வேண்டா மென்றார்கள்? ஆனால் கள் மட்டும் எடுக்கவேண்டா மென்று தான் சொல்கிறேன். வே : வேண்டாமென்றால் அது ஏன் அதில் உற்பத்தியாகிறது? தா : தண்ணீரில் தூசி இருந்தால் அதை அப்புறப்படுத்தி விட்டுத்தானே உபயோகிக்கிறோம். அதைப் போல் கள்ளை நீக்கிவிட்டு மற்றவற்றை உபயோகிக்கலாமே? வே : நீ இப்படியெல்லாம் பேசிப் பேசித்தான், சேர்த்து வைத் திருக்கிற பணத்தைத் தொலைத்துவிடப் போகிறாய்; கடைசி யில் திண்டாடப் போகிறாய். தா : ஆனால் மனிதனாக வாழ்வேனல்லவா? வே : இந்த நாஸ்திக வாதமும் குதர்க்க புத்தியும் உனக்கு எப்பொழுது ஏற்பட்டதோ தெரியவில்லையே. தா : மனச் சாட்சி யென்பதொன்று இருக்கிறதென்று நான் தெரிந்துகொண்ட பிறகு. (இருவரும் மௌனம்.) சொல்லும் செயலும் முதற் களம் இடம் : பஞ்சநதம் வீட்டில் முன் முற்றம். காலம் : காலை. (எதிரெதிராகப் போடப்பட்டுள்ள இரண்டு நாற்காலிகளில் பஞ்சநத மும் குருநாதமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் பென்ஷன்தாரர். இரண்டு நாற்காலிகளுக்கும் நடுவே ஒரு சிறு வட்ட மேஜை. அதன்மீது பஞ்சாங்கம், டைரி, ஜாதகக் குறிப்புக்களடங்கிய ஒரு நோட்டுப் புத்தகம், சில துண்டுக் காகிதங்கள், ஒரு பென்சில், மூக்குக் கண்ணாடிக் கூடு இவ்வளவும் பரப்பிக் கிடக்கின்றன. எட்டினாற்போல் தாழ்வாரத்தில் பஞ்சநாதத்தின் இரண்டாவது மகனான சிவபாதம் ஒரு சிறு மேஜைக்கு முன்னர் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் பஞ்சநதமும் குருபாதமும் பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்துகொண்டிருக்கிறது.) பஞ்சநதம் : என்ன குரு! வைகாசி பிறந்துவிட்டது. இன்னும் ஒன்றும் நிச்சயமாகவில்லையா உன் பிள்ளைக்கு? குருநாதம் : என்ன அவசரம்? பிள்ளைக்குத்தானே? ப : இருந்தாலும் நமது மூச்சு இருக்கிறபோதே யாராவது ஒரு பெண்ணுக்கு முடிச்சுப்போட வைத்தால் தானே நல்லது? மனித காயம் அநித்தியம் பார். (மறந்தவர்போல் மேலே தலையைத் தூக்கிக் கொண்டு) உன் மகன் பெயரென்ன அப்பா, மறந்தே விட்டேன்! அவனைத் தினந்தோறும் பார்க்கிறேன், ஆனால் அவன் பெயர் மட்டும் நினைவில் இருப்பதில்லை. கு : வயதாயிற்றோ இல்லையோ? எனக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடியிருந்தே நீ பென்ஷன் வாங்குகிறாயல்லவா? நீ சர்வீஸில் ‘ஜாயின்’ ஆனது எப்போது? ப : 1908. நீ? கு : 1910. ப : இரண்டு தடவை எனக்கு ‘எக்ஸ்டென்ஷன்’ கிடைத்தது. அந்த மாதிரியெல்லாம் இப்போது கிடைக்குமா என்ன? கு : உம்........ காலந்தான் இப்போது அநியாயமாய்க் கெட்டுவிட்டதே! நாம் பிள்ளையாய்ப் பிறந்து எப்போதாவது துவரம்பருப்பு ரூபாய்க்கு ஒரு படி விற்றிருக்கிறதா? விறகுக்கு இப்படி அலைந்த துண்டா? ப : ஆமாம்! பாரேன், இருநூற்றுப்பத்து ரூபாய் பென்ஷன் வருகிற தென்று பெயர். எட்டு தேதியானால் எல்லாம் ‘குளோஸ்’. முதலி லிருந்து மாதம் ஐம்பது, அறுபது வீதம் கரைந்துகொண்டு வருகிறது. கு : என் வீட்டிலேயே மாதம் மூன்று, மூன்றரை வீசை காபிக் கொட்டை செலவழிகிறது, என்ன செய்வது? ப : (உள்ளே பார்த்தபடி) அடே சிவபாதம்! இரண்டு பேருக்கும் காப்பி வாங்கிக் கொண்டு வாடா. கு : இப்பொழுது என்னத்திற்கு அப்பா! மணி ஒன்பதாகிறது. ப : இல்லை; இரண்டாவது ‘டோஸ்’ சாப்பிட்டால் தான் உடம்பு கொஞ்சம் தெம்பு கொடுக்கிறது. அது இருக்கட்டும். உன் பிள்ளை பெயரென்ன? கு : குமாரசுவாமி. குமாரு என்று எல்லோரும் சொல்லுவார்கள். ப : எத்தனையோ இடங்கள் வந்ததென்று சொன்னாயே, ஒன்றும் குதிரவில்லையா? கு : எங்கேயப்பா, ஒன்றைப் பார்த்தால் மற்றொன்று சரிப்பட்டு வரவில்லை. பெண் சிவப்பாய் லட்சணமாய் இருக்க வேண்டு மென்று சொல்கிறான் பையன். ப : அது இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சகஜந் தானே? கு : பெண்ணைப் பார்த்தால் பணம் இருக்கமாட்டேனென்கிறது; கொஞ்சம் அந்தஸ்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது, பார். ப : ஆமாம். நமக்கெல்லாம் ‘சோஷல் லைப்’பிலே ஒரு பொஸி ஷன்’ இருக்கிறதோ இல்லையோ? கு : நம்ப லோகநாதத்தின் பெண் வந்தது. ப : எந்த லோகநாதம்? கு : அதானப்பா, நம்ப ‘டிவிஷ’னிலே ‘ஹெட் கிளார்க்’கா இருந்து, இப்போது ‘ஆபீச’ராக வந்திருக்கிறானே!......... ப : ஓ! அவனா? ஆமாம், நல்ல மனிதனாயிற்றே! நாம் சொன்னபடி கேட்பானே? கு : வாஸ்தவம், நம்ம வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்ளவேண்டு மென்று தவங்கிடக்கிறான். நன்றாய்ச் செலவழித்துக் கல்யாணத்தை நடத்துவதாகவும் சொல்கிறான். பெண்ணும் சுமாராய் இருக்கிறது. எல்லோருக்கும் சம்மதந்தான். ப : பின் என்ன? முடித்து விடுவதுதானே? கு : ஜாதகம் பொருந்தவில்லை; அதுதானே குறுக்கே வந்து நிற்கிறது. ப : (ஆச்சரியப்பட்டவராக) என்ன குரு! நீ என்ன இன்னும் ஐந்தாம் பசலியாகவே இருக்கிறாயே? ஜாதகமாவது கீதக மாவது! இந்தக் காலத்திலே இதையெல்லாம் யார் பார்க்கி றார்கள்? கு : அப்படியில்லை. பெரியவர்கள் ஏதோ சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்களே; அவைகளின்படி நாம் நடந்துவிட்டுப் போவோமே! ப : (த்ஸு கொட்டிக்கொண்டு) என்ன அப்பா நீ, சுத்த மடிசஞ்சியாக இருக்கிறாய்? கு : அப்படியில்லையே. கண்ணுக்கு விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு பார்த்தால்கூட, பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது; பிள்ளையின் ஜாதகத்தில் ஒன்றும் இல்லை, பரிஷ்காரமாய்த் தெரிந்திருந்தும் எப்படிச் செய்வது? (சிவபாதம் இரண்டு டம்ளரில் காப்பி கொண்டு வந்து மேஜை மீது வைக்கிறான்.) ப : சிவபாதம்! இந்த வருஷத்து ‘சோஷல் ரிபார்ம் அசோஷியேஷன் ஆன்யுவல் ரிபோர்ட்’ வந்திருக்கிறது, இல்லையா? சிவபாதம் : ஆமாம், முந்தாநாள் தான் வந்தது. (குரு நாதத்தின் பக்க மாய்ப் பார்த்து) நம்ப மாமாதான் அதில் ‘வைஸ் பிரசி டெண்டு’களிலே ஒருத்தராக இருக்கிறாரே! ப : (உரக்கச் சிரித்து) ஓ! அதனால்தான் ஜாதகத்தை இவ்வளவு உன்னிப்பாய்ப் பார்க்கிறாரோ? கு : ஆசார சீர்திருத்த சங்கத்திற்கும் ஜாதகம் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்? தவிர ‘பப்ளிக் லைப்’ வேறே; ‘பிரைவேட் லைப்’ வேறே. ப : ஓ! (உரக்கச் சிரிக்கிறார்.) கு : இல்லையா? வெளியிலே எங்காவது போகிற போது நன்றாக ‘ட்ரெஸ்’ பண்ணிக் கொள்கிறோம். வீட்டிலும் அப்படியே இருக்கிறோமா? இல்லையே? வீட்டு வாழ்க்கை வேறே; நாட்டு வாழ்க்கை வேறே! (இதுகாறும் நின்று கேட்டுக் கொண்டிருந்த சிவபாதம் சிரித்துக் கொண்டே தன்னிருப்பிடத்திற்குப் போய் உட்கார்ந்து விடுகிறான்.) ப : நீ சொல்வதிலே கொஞ்சம் உண்மை யிருக்கிறது. கு : கொஞ்சமென்ன? நிறைய இருக்கிறது. மேடை மீதேறி விதவா விவாகத்தை ஆதரித்து வாசாம கோசரமாய்ப் பேசுகிறார்கள். அவர் களெல்லோரும் அதைச் செயலில் கொண்டு வந்து காட்டு கிறார்களா என்ன? காட்டத்தான் முடியுமா? ப : பெண் குழந்தை இல்லாதவர்கள்தானே விதவா விவாகத்தைப் பலமாக ஆதரித்துப் பேசுகிறார்கள்! கு : அப்படித்தான் இருக்குமப்பா உலகம். ‘சத்தியம் வத. தர்மஞ் சர’வென்று சொன்னார்கள் சத்தியத்தையே பேசிக் கொண் டிருந்தால் சோறு கிடைக்குமா? தர்மத்தையே செய்து கொண் டிருந்தால் நமது பெண்டு பிள்ளைகள் பிழைப்பதெப்படி? இவையெல்லாம் ஒரு லட்சியமாகத்தான் சொல்லிவிட்டுப் போனார்களே தவிர, அப்படியே நமது அன்றாட வாழ்க்கையில் நடந்துகாட்ட வேண்டுமென்று கண்டிப்புச் செய்துவிட்டுப் போகவில்லை நமது முன்னோர்கள். இல்லாவிட்டால், “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்று சொல்லியிருப்பாரா வள்ளுவர்? சி : (தனக்குள் மெதுவாக) பென்ஷன்தாரர்களுடைய பேச்சு! ப : என்ன அப்பா நீ, வள்ளுவரைக் கூடச் சாட்சியாய்க் கொண்டு வந்து விட்டாய். அதிருக்கட்டும். செவ்வாய்தோஷம் இருக்கிற தென்று சொன்னாயே, யாருக்கு? கு : லோகநாதத்தின் பெண்ணுக்கு. ப : இருந்தால் என்ன? கு : இருந்தால் என்னவா? பேஷ். பிள்ளை பெண் ஆகிய இரண்டு பேருக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும். அல்லது இரண்டு பேருக்கும் இல்லாமலாவது இருக்க வேண்டும். ஒருவருக்கிருந்து மற்றொருவருக்கில்லாவிட்டால் சம்பந்தம் கூடாது என்று சொல்வார்கள். ப : என்னமோ அப்பா, இதிலெல்லாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அன்று எழுதி வைத்துவிட்டுப் போனவன், மறுபடியும் மாற்றி எழுதப்போவதில்லை. கு : அப்படி விதியை நம்பியே நம் வாழ்க்கையை நடத்த முடியுமா? ப : ஏன் முடியாது என்று கேட்கிறேன்? ஜோசியன், ஜாதகத்தைப் பார்த்து, நல்ல காலம் வரப்போகிறது என்கிறான். அதற்காக இப்பொழுது துள்ளிக் குதிக்க முடியுமா? அல்லது கெட்ட காலம் வருமென்று சொல்கிறான். அதற்காக இப்போதிருந்து அழுது கொண்டிருக்க முடியுமா? கு : இரண்டும் செய்யவேண்டாம். ஆனால் இரண்டுக்கும் எச்சரிக் கையா யிருக்கலாமல்லவா? ப : எச்சரிக்கையாவது, மண்ணாவது? வருவது வந்தே தீரும். கு : வாஸ்தவம். அதை முன்கூட்டித் தெரிவிப்பது தான் ஜோசியம்; அதற்குக் கருவியாயிருப்பது தான் ஜாதகம். ப : எங்கே அப்பா அதெல்லாம்? ஜோசியன் நல்லதைச் சொன்னால் அவனுக்கு நாலணா கொடுத்தனுப்புகிறோம். கெட்டதைப் பற்றி ஏதாவது ஹேஷ்யமாகச் சொன்னால்கூட அவனுக்குச் சரியாகப் பார்க்கத் தெரியவில்லை யென்கிறோம்; அல்லது ஜாதகம் கணித்திருப்பதே தப்பாயிருக்குமென்று எண்ணித் திருப்தியடைகிறோம். கு : ஆமாம்; மனிதன் நல்லதைத்தான் விரும்புவான்; கெட்டதைக் கை கொட்டி அழைப்பானா என்ன? ப : அப்படியானால் நல்லதுக்காகத்தான் ஜாதகத்தைப் பார்க்கி றோம் என்று சொல். என்னமோ அப்பா, எனக்கு இதிலெல் லாம் அவ்வளவு பிடித்தமில்லை. நமது விதி சரியாயிருக்கும் பட்சத்தில், “நாளென் செயும், வினைதான் என் செயும், மற்றக் கோளென் செயும்” என்று யாரோ ஒரு பெரியவர் பாடியிருக்கி றாரே, அதில்தான் எனக்கு நம்பிக்கை, (பொறுத்து) அடே சிவபாதம்! வெந்நீரை அண்டாவில் எடுத்து வைக்கச் சொல்; குளித்து விட்டுச் சாப்பிடலாம். கு : ஆமாம், நாழிகை ஆகிறது. நான் வரட்டுமா, பஞ்சம்? ப : அப்பா! எல்லோரும் என்னைப் பஞ்சு என்று கூப்பிடுவார்கள்; நீ பஞ்சம் என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டாயே! கு : காலம் அப்படியிருக்கிறது! ப : நீ என்னவேண்டுமானாலும் கூப்பிட்டுத் தொலை. கல்யாணம் நிச்சயமானால், சாப்பாட்டிற்கு மட்டும் கூப்பிட மறந்து விடாதே. (இருவரும் பிரிகிறார்கள்.) இரண்டாவது களம் இடம் : பஞ்சநதம் வீட்டில் சமையலறை காலம் : பகல். (பஞ்சநதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி சிவகாமி அம்மாள் பரிமாறிக்கொண்டிருக்கிறாள். கூடவே சிவபாதமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.) பஞ்சநதம் : என்ன, உன் பெரிய பிள்ளையாண்டான் டில்லியி லிருந்து கடிதம் போட்டிருக்கிறானே; ஏண்டா, அம்மாகிட்ட சொல்லவில்லை இன்னும்? சிவபாதம் : உங்களுக்கு வந்த கடிதமல்லவா அது? அதை நான் பிரித்துக் கூடப் பார்க்கவில்லை. ப : அடடா, இந்தக் காலத்துப் பிள்ளைகள், என்னுடையது, உன் னுடையது என்று பிரித்துக் காட்டுவதில் மகா கெட்டிக்காரர் களாயிருக்கிறார்கள். சி : அப்படியில்லையே; ஒருவருக்கு வந்த கடிதத்தை மற்றொருவர் பிரிக்கலாமா? ப : ஆமாம்; நான் வேறே, நீ வேறேயல்லவா? சிவகாமி : போதுமே! இப்படிக் குற்றங் கண்டு பிடித்தால் என்ன செய்வது? விஷயத்தைச் சொல்லாமல் என்னவோ............. ப : இல்லை; ஒன்றும் உளறவில்லை. நீ கோபித்துக் கொள்ளாதே. (பொறுத்து) டில்லியில் ராவ் பகதூர் குப்பு ராம் இருக்கிறாரே, அவருடைய இரண்டாவது பெண்ணை நம்ம சிவபாதத்துக்குக் கொடுக்க வேண்டு மென்று ஆவல் படுகிறாராம்; ஜாதகத்தையும் அனுப்பியிருக்கிறார். சிவகாமி : அவருக்கு என்ன சம்பளம்? ப : 1,800 ரூபாய். மனிதர் என்னமோ நல்லவர்தான். இரண்டு பெண் தவிர வேறே பிள்ளை கிடையாது. ஊரிலே நிலம், வீடு எல்லாம் இருக்கின்றன. சிவகாமி : அப்படியானால் முடித்துவிடலாமே! நன்றாகச் சீர் செய்வார்களோ இல்லையோ? ப : அப்பா! இந்தப் பெண்களுக்கு எப்பொழுதும் சீர்களிலேயே குறி! சிவகாமி : ஆண்களுக்குப் பணத்தின் மேலேயே குறி! ப : (மெள்ளச் சிரித்துவிட்டு) முன்னமேயே ஒருமுறை இந்த ஜாத கத்தை வேறொருவர் மூலமாக அனுப்பியிருந்தார் குப்புராம். சிவகாமி : அது என்னவாயிற்று? என்னிடத்தில் சொல்லக்கூட இல்லையே. ப : பையனுடைய ஜாதகத்தையும் அந்தப் பெண்ணின் ஜாதகத் தையும் நம்ப ராகவ ஜோஸியரிடம் காட்டினேன். இரண்டுக்கும் பொருந்த வில்லையென்று அவர் செல்லிவிட்டார். அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை. சிவகாமி : என்ன தோஷம் இருக்கிறதாம்? ப : அதென்னவோ, அதையெல்லாம் அவ்வளவு விவரமாக நான் விசாரிக்கவில்லை. பொருந்தவில்லை என்றார்; போதுமென் றேன். சிவகாமி : இடம் நல்ல இடமாயிருந்து, நன்றாகவும் செய்வார்க ளானால், ஜாதகம் சரிப்படாவிட்டால் என்ன? ராமாயண சகுனம் போட்டுப் பார்த்துவிட்டால் போகிறது. ப : சகுனமாவது, கிகுனமாவது? ஜாதகம் சரிப்பட வில்லையென் றால், எவ்வளவு பெரிய இடம் வந்தாலும் சரி, நான் தலை நிமிர்ந்துகூடப் பார்க்கப் போவதில்லை. சி : (களுக்கென்று தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறான்.) ப : என்னடா சிரிக்கிறாய்? சிவகாமி : ஆனந்தம் பொங்குகிறது அவனுக்கு, உங்கள் வார்த்தை யைக் கேட்டு. சி : அதில்லையப்பா, இப்பொழுதுதானே அந்த குருநாத மாமா விடம் ஜாதகமாவது, கீதகமாவது என்று சொன்னீர்கள்? இன்னும் அரைமணி நேரங்கூட ஆகவில்லையே! ப : அட பைத்தியக்காரா! அவருக்கல்லவோ சொன்னது அது? எனக்குச் சொல்லிக்கொண்டதில்லையே? சி : ஓ! உனக்கு வேறே, எனக்கு வேறே என்ற நியாயமா? ப : ஆமாம், உலகமே அப்படித்தானிருக்கிறது. கவர்ன்மெண்டிலே கூட, வெள்ளைக்காரர்களுக்கு ஒருவிதமாகவும், இந்தியர்க ளுக்கு ஒருவிதமாகவும் பென்ஷன் கொடுக்கிறார்களே! சி : எதற்கு எது சம்பந்தம்? (தனக்குள்) பென்ஷன்தாரர் பேச்சு என்பது சரியாக இருக்கிறது. ப : என்ன, நீயே முணு முணுத்துக் கொள்கிறாய்? உரக்கத்தான் சொல்லேன். சி : ஒன்றுமில்லை; இத்தனை நேரம் அவரிடத்தில் விதியைப் பற்றிப் பிரசங்கம் செய்தீர்கள்; நாளென் செயும், கோளென் செயும் என்று பாடிக்கூடக் காட்டினீர்கள். இப்பொழுது என்னடா வென்றால், ஜாதகம் பொருந்தவில்லையானால் அந்த இடத் தைத் தலைநிமிர்ந்துகூடப் பார்க்கப்போவதில்லை என்று சொல்கிறீர்கள். ப : அடே! இதிலெல்லாம் நீ தலையிடாதே. வெளியாரிடத்திலே பேசுகிறபடியெல்லாம் வீட்டிலே நடக்க முடியுமா என்ன? உங்கள் காலேஜ் படிப்பிலேகூட ‘தியரி’ (கூhநடிசல) வேறே, பிராக்டிகல்’ (ஞசயஉவiஉயட) வேறே இல்லையா? சி : பள்ளிக்கூடப் படிப்புக்கும், அன்றாட விவகாரங்களுக்கும் என்ன சம்பந்தம்? ப : சம்பந்தமில்லையல்லவா? அதைப் போலத்தான் நான் சொல்கிற அபிப்பிராயத்திற்கும் செய்கிற காரியத்திற்கும். “நான் சொல்லு கிறபடி செய்; செய்கிறபடி செய்யாதே” என்றுதானே பெரியவர் கள் சொல்லி விட்டுப் போனார்கள்? சிவகாமி : என்னென்னவோ தர்க்கம் செய்கிறீர்களே இரண்டு பேரும்? டெல்லிப் பெண்ணை, ஜாதகம் பொருந்தவில்லை என்பதற்காக வேண்டாமென்று சொல்லிவிடப்போகிறீர்களா? ப : கட்டாயமாக; நிச்சயமாக. ஜாதகப் பொருத்தத்திலே எனக்கு உடும்பு நம்பிக்கை இருக்கிறது. நாள் பார்ப்பது, சகுனம் பார்ப்பது முதலியவற்றை அலட்சியமாக நினைக்க என்னால் முடியவில்லை. எப்பொழுதாவது நவமியில் நான் பிரயாணம் புறப்பட்டிருக்கிறேனா பார்த்தாயா? “நாள் செய்வது நல்லவர் செய்யமாட்டார்” என்பது பழமொழி அல்லவா? சி : இப்படிச் சொல்வது பெருமையா என்ன? தனக்கு ஒரு நியாயம், ஊராருக்கு ஒரு நியாயமா! ப : ஆமாம்; இகலோகம் வேறே, பரலோகம் வேறே இல்லையோ? சி : சிவ சிவா! (இருவரும் சாப்பிட்டு எழுந்திருக்கிறார்கள்.) காந்தி தரிசனம்! முதற் களம் இடம் : ‘ஹிமோத்கிரி’ பங்களாவின் முன் ஹால். காலம் : மாலை. (மேற்படி பங்களாவின் முன் வாயிலில் ஒரு மோட்டார் வண்டி, வெளியிலே புறப்படு வதற்குத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் டிரைவர், வண்டியின் முன் பக்கமுள்ள ‘பான்னெட்’ (க்ஷடிnநேவ) மீது சாய்ந்து நின்று கொண்டு, பங்களாவின் உள் பக்கம் ஹாலில் நடக்கிற தட புடல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ னுக்கு அடிக்கடி சிரிப்பு வரு கிறது. அதை அடக்கிக் கொள் கிறான். உள்ளே ஹாலில், பங்களாவின் முக்கியஸ்தரர் களான ராவ்பகதூர் கைலாசம், அவர் சம்சாரம் சிவக்கொழுந்து அம்மாள், அவருடைய ஒரே புத்திரியான காலேஜில் படிக்கும் மிஸ் சுகதா ஆகிய மூவரும், காந்தியடிகளின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் போகத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹாலின் பின் பாகத்தில், சமையல்கார ராமனும், வேலைக்கார செல்லக் கண்ணுவும், ஐயாவினுடையவும் அம்மாமார்களுடையவும் உத்தரவு களுக்காகக் காத்து நிற்கின்றனர்.) கைலாசம் : (சாய்வு நாற்காலியில் இருந்துகொண்டே) என்ன, இன்னும் ‘ரெடி’யாகவில்லையா? மணி ஐந்தடித்து ஐந்து நிமிஷமாகிறது. சிவக்கொழுந்து : ஐந்து நிமிஷத்தில் கார் போகாது? கை : டிரைவர்! (டிரைவர் ஹாலுக்குள்ளே வந்ததும்) இங்கிருந்து அந்த மைதானம் எவ்வளவு தூரம் இருக்கும்? டிரைவர் : நாலு பர்லாங்காவது இருக்கும், ஸார். கை : ஐந்து நிமிஷத்திலே போய்விடலாமில்லே? டி : போகலாம். கை : பெட்ரோல் போட்டாச்சு இல்லை? டி : இரண்டு காலன் போட்டிருக்குது. கை : இன்று காலையிலே காரை ‘க்ளீன்’ (ஊடநயn-சுத்தம்) பண்ண வில்லையே? டி : இல்லை ஸார். காலையிலே ரொம்ப தலைவலி. மீட்டிங்கிலே யிருந்து திரும்பி வந்த பிறகு ‘க்ளீன்’ பண்ணி வைச்சுப்புட்டு வீட்டுக்குப் போறேன். கை : பார், அந்தப் பிரார்த்தனை மைதானத்திலே வரிசையாக நூற்றுக்கணக்கிலே, கார்கள் வந்து ‘பார்க்’ (ஞயசம) பண்ணி யிருக்கும். அத்தனை கார்களிலேயும் நம்பள் கார் ஒன்றுதான், தனிச்சு, அழுக்குப்படிஞ்சு இருக்கும். த்ஸு! சுகதா : துணியாலேயாவது துடைக்கச் சொல்லுங்க அப்பா! எங்க ‘காலேஜ் மேட்ஸ்’ (சகாக்கள்) வருவார்கள். இந்த அழுக்குப் படிந்த காரிலே என்னைப் பார்த்தால், என்ன நினைப்பார்கள்? கை : ஆமாம்; குழந்தை சொல்வதுபோல, துணியாலேயாவது துடைச்சு விடு; ஜல்தி ஆகட்டும். (டிரைவர் த்ஸு கொட்டிக் கொண்டே துடைக்கப் போய்விடுகிறான்.) சு : (டிரெஸ்ஸிங் டேபில் முன்னர் நின்று கண்ணாடியில் பார்த்த வண்ணம் முகத்தைத் துடைத்துக் கொண்டே) ஏன் அப்பா, க்யூட்டி குரா பவுடர் டின் நேற்று புதிசா வாங்கி வந்தீங்களே, அது எங்கே? கை : அது என்னத்துக்கு குழந்தை இப்போ? எங்கேயோ மாடி மேலே வைச்சிருக்கேன். இப்பொழுதிருக்கிற பவுடரைத்தான் பூசிக் கொள்ளேன், அம்மா. சு : ஹுஹும், முடியாது. புதிசுதான் வேண்டும். நாலு பேர் மத்தியிலே போகிறபோது கொஞ்சம் ‘டீஸெண்டா’க (ஒழுங் காக)ப் போகவேண்டாமா? கை : நாலு பேரா? நாற்பதாயிரம் பேருக்கு மேலே கூட்டம் இருக்குமே தவிர குறைவாக இராது. அடே செல்லக்கண்ணு! மாடி மேலே போய், அலமாரி மேல் தட்டிலே புது பவுடர் டப்பா வைச்சிருக்கேன். அதைக் கொண்டு வந்து குழந்தை கையிலே கொடு. சிவக்கொழுந்து : ஏன் அம்மா சுக்கு? (சுகதாவின் செல்லப் பெயர்) நான் அந்தப் பச்சைப் புடவையை கட்டிக்கொள்ளட்டுமா? அல்லது சிவப்புக் கொட்டடியை கட்டிக் கொள்ளட்டுமா? சு : எனக்குத் தெரியாது. அப்பாவைக் கேளு. கை : போனவாரம் வாங்கிக் கொண்டு வந்ததே அந்த பெங்களூர் தலைப்புப் புடவை, மாந்துளிர் கலர், அதைக் கட்டிக் கொள்ளச் சொல்லேன். சு : அப்பா, நீங்கள் கூட ஒழுங்காக ‘டிரெஸ்’ பண்ணிக்கொள்ளுங் கள். ஷர்ட்டும் மேல் அங்கவஸ்திரமுமாக வரவேண்டாம். (இதற்குள் செல்லக்கண்ணு, மேலேயிருந்து பவுடர் டப்பாவைக் கொண்டு வந்து மேஜைமீது வைக்கிறான்.) கை : அந்தப் பெரிய கூட்டத்திலே நம்மை யாரம்மா கவனிக்கப் போகிறார்கள்? அது மட்டுமல்ல, இந்த மாதிரியான கூட்டங்க ளுக்குப் போகிறபோது நாம் கொஞ்சம் ‘ஸிம்பில்” ஆக (எளிமையாக) இருப்பதாகக் காட்டிக் கொள்ளணும். எந்தெந்த இடத்திற்கு எப்படி எப்படி ‘டிரெஸ்’ பண்ணிக்கொள்ள வேண்டுமென்பது எனக்குத் தெரியாதா? கலெக்டர் தர்பாருக் குப் போகிற போது வேறு ‘டிரெஸ்’தான்; காந்தியைப் பார்க்கப் போகிறபோது வேறு ‘டிரெஸ்’தான். அடே, மேலே போய் பீரோவிலிருந்து என்னுடைய கதர் ஷர்ட்டையும், விசிறி மடிப்போடு இருக்கிற கதர் அங்கவஸ்திரத்தையும் எடுத்துக் கொண்டுவா. சி : அப்படியானா, அரைக்குக் கட்டிக் கொள்ள கதர் வேஷ்டி வேண்டாமா? கை : கீழே யார் பார்க்கப்போகிறார்கள்? எல்லாம் மேலுக்குத்தானே? சி : அது என்னமோ, பாதி சீமைத்துணி, பாதி கதர்; எனக்குப் பிடிக்கவில்லை. கை : நம்மாலே பூரா காந்தியாக முடியாது பார். அதுமட்டுமில்லை; எட்டுமுழ வேஷ்டி கோணி மாதிரி கனக்கிறது. அதை யார் கட்டிக் கொள்ள முடியும்? அது எப்படி இருக்கிறதென்று பார்ப்பதற்காக வாங்கினதே தவிர கட்டிக் கொள்வதற்காகவா அதை வாங்கியிருக்கிறது? சி : உங்களிஷ்டம். பார்க்கிறவர்கள் கேலி பண்ணக்கூடாதே யென்பதற்காகச் சொன்னேன். சு : அப்பா, எனக்கு போனமாசம் வாங்கின மாதிரி, இன்னும் இரண்டு பெங்கால் சில்க் ஸாரி (புடவை) வாங்கணும். கை : ஆகட்டும்; அடுத்தவாரம் பார்ப்போம். என்னம்மா தாமதம்? கொஞ்சம் சீக்கிரமாகப் போனால் தான், அந்த மகானைக் கண்ணாலேயாவது பார்க்கலாம். சி : காதாலே அவர் பேச்சை கேட்கவேண்டாமா? சு : ஆமாமப்பா, அவர் பேச்சை கேட்கணும். இங்கிலீஷிலே அவரைப்போல அழகாக எழுதுகிறவர்களும் பேசுகிறவர்களும் இல்லையென்று எங்கள் காலேஜ் இங்கிலீஷ் ‘லெக்சரர்’ (டுநஉவரசநச-ஆசிரியர்) கூட சொல்லியிருக்கிறார். கை : அட அசடே, அவர் பிரார்த்தனைக் கூட்டங்களிலே இங்கிலீ ஷிலே எங்கே பேசுகிறார்? நமக்கெல்லாம் புரியாத ஹிந்துஸ் தானியிலல்லவா பேசுகிறார்? சு : அவர் இங்கிலீஷிலே பேசினாலென்ன, ஹிந்துஸ்தானியிலே பேசினால் என்ன, அவர் சொல்கிறபடி நம்மாலே நடக்க முடியுமா என்ன? கை : அது வாஸ்தவம். ரொம்ப சரியான பேச்சு. அவர் சொல்கிறபடி நடக்கிறது இருக்கட்டும். அவர் சாதாரணமாக நடந்து போகி றாரே அந்த மாதிரிகூட நம்மாலே நடக்க முடியாது! சு : கொய்ட் ரைட் பாதர். (ணுரவைந சiபாவ, கயவாநச - ரொம்ப சரி, அப்பா.) அவர் என்ன, எல்லோரையும் போல் நடக்கிறாரா? அவர் நடக் கையே அலாதிதான். கை : பேஷ் குழந்தை! ரொம்ப புத்திசாலித்தனமா பேசறே நீ? (தனக்குள்) பெண்களுக்கு ‘எஜுகேஷன்’ (நுனரஉயவiடிn-கல்வி) கொடுக்க வேண்டுமென்பது இதற்குத்தான்! (பொறுத்து) அடே ராமா! சூடாக ஒரு கப் காபி கொண்டுவா! (இதற்குள் செல்லக்கண்ணு, மாடிமீதிருந்து கதர் ஷர்ட்டும் கதர் அங்கவஸ்திரமும் கொண்டு வந்து கொடுக்கிறான். அதைப் போட்டுக் கொள்கிறார்.) என் ‘வாக்கிங் ஸ்டிக்’ (றுயடமiபே ளுவiஉம-கைத்தடி) எங்கே? சு : அப்பா! ‘பைனாகுலர்’ (க்ஷiயேஉரடயச-தூரத்துப் பொருள்களைப் பார்க்கும் கண்ணாடி) எடுத்துக் கொள்ளுங்கள். சி : இந்தப் பாழாய்ப்போன பூக்காரன் இன்னும் வரவில்லை பார்த்தீர்களா? இன்றைக்குத்தான் பரிசோதனையா அவனுக்கு இல்லாத அவதிகளெல்லாம் வந்துவிடும். கை : அடே ராமா! தோட்டத்திலே போய், கொஞ்சம் கனகாம்பரமும் டிஸம்பர் பூவும் பறிச்சுக் கொண்டுவா! ராமன் : (உள்ளிருந்தபடியே) காபியை சூடுபண்ணிக் கொண் டிருக்கிறேன். கை : அடே செல்லகண்ணு! நீ என்ன செய்யறே? செல்லக் கண்ணு : ‘பைனாகுலர்’ தேடிக்கொண்டிருக்கேன். கை : டிரைவர்! நீயாவது தோட்டத்திலே போய் குழந்தைக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம் கனகாம்பரமும் டிஸம்பர் பூவும் பறிச்சுக் கொண்டுவா. டி : (தனக்குள்) காந்தி ஊருக்குப்போன பிறகுதான் இவங்க காந்தியைப் பார்க்க போவாங்கபோலே இருக்குது! (பூ பறிக்கச் செல்லுகிறான். இதற்குள் உள்ளே ராமன், கைலாசத்திற்கு காபி கொண்டு வந்து கொடுக்கிறான்.) கை : என்ன இவ்வளவு கொதிக்க கொதிக்க காபி கொண்டு வந்திருக்கிறாயே? ரா : வெளியிலே சில்லுன்னு காற்று வீசுது. அதனாலே எஜமான் கொஞ்சம் உஷ்ணமாகப்போனங்களானா உடம்புக்கு நல்ல துன்னு இப்படிக் கொண்டு வந்தேன். கை : இதை எப்படி குடிக்கிறது? ரா : ஆத்திக் கொடுக்கிறேன். சி : ஆமாம், ராமன் சொல்லுகிற மாதிரி வெளியிலே சில்லுன்னு காற்று அடிக்கிறது. அடே செல்ல கண்ணு, மேலே போய் என்னுடைய பனாரஸ் சில்க் சால்வையை எடுத்துக் கொண்டு வந்து காரிலே வை. சு : அப்படியே என்னுடைய ‘புல் ஓவரை’யும் (ஞரடட டிஎநச - மேல் சட்டை) எடுத்துக் கொண்டு வரச் சொல்லு. கை : என்னுடைய ‘மப்ளர்’ கூட. டி : (புஷ்பத்தை கொடுத்துவிட்டு) ஸார்! மகாத்மா மைதானத்திற்கு வருகிறார் போலிருக்கிறது. கூட்டம் மைதானத்தின் பக்கம் திரண்டுகொண்டிருக்கிறது. கை : இதோ, புறப்படுங்கோ. அடே செல்லகண்ணு, ‘டார்ச் லைட்’ டை காரிலே வைச்சிருக்கயா? செ : உத்தரவிடவில்லையே. கை : போடா முட்டாள்; உடனே கொண்டு வா. சுக்கு! ஜல்தி புறப்படம்மா! அம்மாவை முன்னே ஏறிக் கொள்ளச் சொல்லு. சு : அப்பா! நான் நன்றாயிருக்கேனா? கை : ரொம்ப நன்றாக இருக்கேம்மா. (சிவக்கொழுந்து அம்மா ளைப் பார்த்து) குழந்தை எவ்வளவு புத்திசாலி பார்! காலேஜுக் குப் போகிறபோது இரட்டைப் பின்னல், இந்த மாதிரி பொது இடங்களுக்குப் போகிறபோது ஒற்றைப் பின்னல் போட்டுக் கொள்ள வேண்டுமென்று நன்றாகத் தெரிந்து கொண்டிருக் கிறாள். பார். உன்னைப்போல எங்கே போனாலும், எப்போ பார்த்தாலும் ஒரே சீராயிருக்க இந்தக் காலத்துக் குழந்தைக ளுக்குத் தெரியல்லேன்னு உனக்கு வருத்தமாயிருக்கு இல் லையா? சி : எனக்கென்ன வருத்தம் நீங்கள் இருக்கிற போது? என் காலத்தை இப்படியே ஒரே சீராயிருந்து கழிச்சுவிடுகிறேன். ஹும், புறப் படலாம் வாருங்கள். (எல்லோரும் காரில் ஏறிக் கொண்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் போகிறார்கள்.) இரண்டாவது களம் இடம் : ஒரு வீதி காலம் : மாலை ஐந்து மணிக்கு மேல். (குருவப்ப பிள்ளை, ஒரு கம்பெனியில் குமாஸ்தா உத்தியோகம் பார்க்கிறவர், மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். சாயந்திரம், தள்ளாடிக் கொண்டே வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். குருவப்ப பிள்ளை : (தனக்குள்) இந்த காந்தி வந்தாலும் வந்தார், கறி காயெல்லாம் என்ன விலை விற்கிறது? டிராமிலே, பஸ்ஸிலே, டிரெயினிலே நிற்கிறதுக்குத் தான் இடம் உண்டா? என்ன கூட்டம்! என்ன கூட்டம்! காந்தி வந்ததிலிருந்து தினமும் ஆபீசுக்கு நடந்து போகிறதும், நடந்து வருகிறதுமாகவே போச்சு. கறிகாய் சாப்பிட்டு நாலு நாளாச்சு. கத்தரிக்காய் கெட்டகேடு பத்தணா வீசை! எப்படி வாங்கிச் சாப்பிடுவது? (பொறுத்து) ஒரு திருவிழாவுக்குக்கூட இவ்வளவு கும்பல் சேரக்காணோம். அடேயப்பா! இந்த ஜனங்களுடைய மூடத்தனமே மூடத்தனம்! கடவுளைக் கும்பிட்டாலும் கதி மோட்சம் உண்டு என்று சொல்வார்கள். காந்தியைப் பார்த்தால் என்ன உண்டு? போலீசாருடைய அடி உதை உண்டு. வேலையில்லாதவர்களோடு சேர்ந்து கொண்டு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கலாம். அவ்வளவு தான். எத்தனை குடும்பங்கள் அவர் பேச்சைக் கேட்டு கெட்டுப் போச்சு? நம்மள் அக்காள் பிள்ளை ஆறுமுகம் அடியோடு கெட்டுப்போய் விட்டானில்லே? என்னமோ தத்துவம் பேசுவான். அரைக்காசு சம்பாதிக்கத் தெரியாது. (எதிரில் குருவப்ப பிள்ளையின், பத்து வயதுக் குமாரன் குமரகுரு ஓடி வருகிறான்.) கு : எங்கே தம்பி, குதிச்சுண்டு ஓடிவரே? குமரகுரு : அத்தை மகன் ஆறுமுகம், அத்தை எல்லோரும் வீட்டுக்கு வந்திருக்காங்க அப்பா! கு : ரொம்ப சந்தோஷம்! என்ன விசேஷமாம்? கும : இது தெரியாதா உனக்கு? எல்லாம் காந்தியைப் பார்க்கத்தான். கு : (பெருமூச்சு விட்டுக் கொண்டே) இந்த ரேஷன் காலத்திலே, சாமான் விற்கிற விலையிலே, இப்படி கும்பல் கூடினா. குடித்தனம் எப்படி உருப்படியாகிறது? கும : என்னப்பா, நீயே என்னமோ சொல்லிக்கிறே? கு : ஒன்றுமில்லை. வீட்டிலே ஏதாவது கறி காய் இருக்குதா? கும : அதுக்குத்தான் அம்மா என்னை அனுப்பிச்சாங்க. வழியி லேயே உன்னைப் பார்த்து கறிகாய் ஏதாவது வாங்கிவரச் சொல்லும்படி சொன்னாங்க. கு : சரி; நான் மார்க்கெட்டு பக்கமா போறேன். நீ வீட்டுக்குப் போய் அந்த கறிகாய் வாங்குகிற பையை எடுத்துக் கொண்டு வா. (பையன் போகிறான். பிறகு தனக்குள்) இப்பொழுது யாரிடத்தில் போய் கடன் கேட்பது? மாதக் கடைசி. யார் கிட்ட போனாலும் கையை விரிப்பார்கள். தவிர, என்னை நம்பி யார் பத்தும் பதினைஞ்சும் இந்தக் காலத்தில் கொடுப்பார்கள்? ஹும், எதற்கும் கருடாசல முதலியாரிடத்திலே போய் கேட்கி றேன். நல்ல காந்தி வந்தார், காந்தி! (மார்க்கெட் பக்கம் போகிறார்.) மூன்றாவது களம் இடம் : பிரார்த்தனை மைதானத்தில் ஒரு பக்கம். காலம் : மாலை ஐந்தேகால் மணி. (செங்கனும் கங்கனும் தனிமையில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.) செங்கன் : நீ என்ன ஓணுமின்னாலும் சொல்லு, காந்திதான், நம்மைப் போலொத்த ஏழை மக்களுக்கெல்லாம் கதிமோச்சம் கொடுக்கப்போறாரு. கங்கன் : அது வாஸ்தவம். அவரை எங்கே தனியே விட்றாங்க? ஒரு பக்கத்திலே கவர்ன்மெண்டு அவரை புடிச்சு புடிச்சு விட்டு வேடிக்கை பார்க்கிறாங்க; மிஞ்சினா கெஞ்சறாங்க, கெஞ்சினா மிஞ்சறாங்க. இன்னொரு பக்கத்திலே, பணக்காரரெல்லாம் அவரைப் பிடிச்சுகிணு தொங்கிக்கிணே இருக்காங்க. அவர் இஷ்டப்படி விட்டாதானே அவர் ஏதாச்சியம் செய்வாரு? செ : சுயராட்சியமில்லாத தேசத்திலே இப்படித்தான் மெது மெதுவாத்தான் நகர்ந்து போகணும். இதோ பாரு, இந்த மைதா னத்தை. இந்தா பெரிசு ஜனத்தை இதுக்கு முன்னே எங்கே யாவது பார்த்திருக்கயா? க : சரிதான்; சிதம்பரம் ஆருத்திரேன்னுவாங்க. மயிலாப்பூர் அறு வத்து மூவருன்னுவாங்க, அண்ணாமலை தீபமின்னு வாங்க, அதுக்கெல்லாம் இவ்வளவு கூட்டம் ஏது? என் ஆயுசிலே இப்படி பார்த்ததில்லேப்பா. செ : அப்படியானா, காந்தியை ஏன் கண்கண்ட தெய்வமின்னு சொல்லக்கூடாதுன்றேன்? க : ஒரு தெய்வமா? எத்தனையோ தெய்வங்கள்ளாம் சேர்ந்த அவதாரமின்னா அவரு? இல்லாகிட்டி, இப்படியா ஜனம் கூடும்? செ : அப்படிச் சொல்லு. அவரைக் கண்டா, கர்மம் தொலையும்; பார்த்தா, பாவம் போகும். க : அது என்னமோ சரி. ஆனா செங்கா! எனக்கொரு சந்தேகம்? அவரைப் பார்த்தால் பாவம் போகுமிண்ணு சொல்றே. ரொம்ப சரி. ஆனா புண்ணியம் வருமா? செ : அடேயப்பா! பெரிய சந்தேகமாயிருக்குதே? க : இல்லே, பேச்சுக்குத்தான் கேக்கறேன், பாவம் சேஞ்சுதான் இப்போ ஏழைங்களா பொறந்திருக்கோம். அடுத்த பொறப் பிலேயாவது பணக்காரரா பொறக்கணுமின்னா. இப்போ புண்ணியம் செய்யத் தேவலையான்னு கேக்கறேன். செ : ஆமாம், புண்ணியம் செய்யத்தான் ஓணும். க : அப்படியானா, காந்தியை பார்த்துட்டதனாலேயே புண்ணியம் வந்துடுமா? அல்லது புண்ணியம் சேஞ்ச மாதிரி ஆயிடுமா? செ : அதென்னமோ அப்பா, எனக்கு அதெல்லாம் தெரியாது; பெரியவங்கள்ளாம் சேர்ந்து அவரை மகாத்மான்னு சொல்றாங்க............. க : இரு, இரு. இன்னொரு சந்தேகம். பெரியவங்க, பெரியவங்கன்னு அடிக்கடி சொல்றையே, பெரியவங்கன்னா யாரு? பணம் வைச்சுகிணு மோட்டார்லே போறவங்கள்ளாம் பெரியவங் களா? படிச்சவங்கள்ளாம் பெரியவங்களா? இல்லே, வயசான வங்கள்ளாம் பெரியவங்களா? செ : அதென்னமோப்பா, அந்த குயுக்தியெல்லாம் எனக்குத் தெரியாது. யாரை பார்த்தா அவங்களிடத்திலே நம்மை அறியா மலே ஒரு பயம், பக்தி உண்டாவுதோ அவங்கள்ளாம் பெரியவங் கன்னு நான் நெனெச் சுண்டிருக்கிறேன். க : சரி, மேலே சொல்லு. செ : கடவுளை நாம் பார்த்திருக்கோமா? இல்லே. பெரியவங் கள்ளாம் சேர்ந்து ஒரு கல்லை, கடவுளுன்னு சொன்னா, நாமும் அதை கடவுளுன்னு கும்பிட்றோம். அதைப்போலே, எல் லோரும் சேர்ந்து அவரை மகாத்மான்னு சொல்றபோது, அவர் ஏதோ ரொம்ப பெரியவராகத்தான் இருக்கணும், அவர் கிட்டே ஏதோ அபுரூபசக்தி இருக்கணுமின்னு சொல்லி அவரை நம்பறோம், வாழ்த்தறோம், வணங்கறோம். க : அதென்னமோ செங்கா, என் சந்தேகம் தீரல்லே. அவரை நம்பினா, வாழ்த்தினா, வணங்கினா, நமக்குப் புண்ணியம் வருமா? செ : புண்ணியமின்னா என்ன அர்த்தத்திலே சொல்றே நீ? க : அர்த்தமென்ன இருக்குது? ஒரே அர்த்தம் தான். எல்லோ ரையும்போல் பசியாற சாப்பாடும், மானம் போகாதே துணியும் கிடைச்சா, அது நாம் சேஞ்ச புண்ணியமின்னு இப்போ சொல்லவேண்டியிருக்குது. செ : புண்ணியத்தை சுலபமா சொல்லிப்புட்டையே நீ? பெரியவங் கள்ளாம், புண்ணியம்னா அது எங்கேயோ, மேலோகத்திலே கண்காணாத இடத்திலே இருக்குதுன்னு சொல்றாங்க. நீ என்னடான்னா, சுலபமா, சோத்திலேயும் துணியிலேயும் இருக்குதுன்னு சொல்லிபுட்டே. (தலையைத் தூக்கிப் பார்த்து) அடே கங்கா! அதோ காந்தி மகாத்மா வராப்போலே இருக்குது. அங்கே பார். ஒரே கலாட்டா. ஜனங்கள்ளாம் கை தட்ட றாங்கோ பார். க : எங்கேடா? செ : அதோ பார், மேடைமேலே ஏறி நிக்கறாரு பாரு. புண்யாத் மாடா அவரு. (கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு இரு கன்னங்க ளிலும் அறைந்து கொள்கிறான். அவனைப் பார்த்து கங்கனும் அப்படியே செய்கிறான்.) க : ரொம்ப வயசானவர்ரா பாவம். அவர் கண்ணை மூடிக்கிணு இருக்காரு; மத்தவங்கள்ளாம் என்னமோ பாடறாங்க. (ரகுபதி ராகவ ராஜாராம் கீத கோஷம். எல்லோரும் தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது செங்கன் மனைவி, நோய்வாய்ப்பட்டிருக்கிற தன் கைக்குழந்தையுடன் வருகிறாள்.) செ : (தன் மனைவி வருகிற பக்கம் பார்த்து) எங்கே இந்த கும்பல்லே குழந்தையை தூக்கிகிணு வந்தே? செ-மனைவி : என்னா ஜனம், என்னா ஜனண்டியம்மா! நெருக்கித் தள்ளிப்பிடிச்சுங்களே! க : இந்தக் கூட்டத்திலே குழந்தையை தூக்கிக்கிணு வருவாங்களா? செ.ம : குயந்தைக்கு மருந்து மாயமெல்லாம் கொடுத்து பார்த்தோம். ஒண்ணும் பிரயோஜனமில்லே. காந்தி பார்வைபட்டா குயந்தை நேராக ஆகும், நோயெல் லாம் போகுமின்னு சொன் னாங்க, அதுக்காக கொண் டாந்தேன். அவரை பாக்க வுட்டான்னா இந்த ஜனங்க? க : செங்கா, அதோ பார், யாரோ ஒரு பெரியம்மா நடுப்புறே எழுந்து நின்னு கிணு காந்தியிருக்கிற பக்கம் பார்த்து விழுந்து விழுந்து கும்பிட்றாங்கோ. செ : (இன்னொரு பக்கமாகக் காட்டி) அதோ பார் அந்த கிழவனாரை, விக்கி விக்கி அழுவறாரு பாரு. காந்தியைக் கண்டுட்டாராம், அவ்வளவு சந்தோசம் அவருக்கு. செ-ம : (செங்கனிடம்) தா, நீ ரவை இந்த குயந்தையே எடுத்துகிணு போயி, காந்தி, எந்த வழியிலே நடந்து போனாருன்னு பார்த்து, அந்த மண்ணை எடுத்து நெத்தியிலே இட்டுப்புட்டு, ரவை போதும் வாயிலேயும் போட்டு எடுத்துக்கிணு வாயேன். அவர் மிதிச்ச மண், பூசாரி கொடுக்கிற துண்ணூறு மாதிரின்னு சொல்றாங்களே. செ : சரி, கொண்டா குயந்தையே. (செங்கன், குழந்தையை வாங்கிக் கொண்டு போகிறான். அவன் மனைவியும் கூட தொடர்கிறாள். கங்கன், கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.) நான்காவது களம் இடம் : பிரார்த்தனை மைதானத்தில் மற்றொரு பக்கம். காலம் : பிரார்த்தனை நடக்கிறபோது. (ஓரிடத்தில் வடை, சுண்டல், முறுக்கு முதலிய தின்பண்டங்களும், இன்னோரிடத்தில் பழம், புஷ்பம், பெப்பர்மிண்ட், சிகரெட், பீடி முதலியனவும், இப்படிப் பலவகையான சாமான்கள் ஆங்காங்கு விற்கப்படு கின்றன. அவரவரும் அவரவருக்கிஷ்டமானதை வாங்கி உபயோகித்துக் கொண்டும், நடு நடுவே பேசிக் கொண்டும், அவ்வப்பொழுது பிரார்த்தனை மேடைப் பக்கம் தலையைத் தூக்கித் தூக்கிப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.) உட்கார்ந்திருக்கிற ஒருவர் : (முன்னால் எழுந்து நிற்கிற வரைப் பார்த்து) ஏய், உட்காரய்யா. எழுந்து நிற்கிறவர் : (பின்னால் திரும்பி முறைத்துப் பார்க்கிறார்.) உ-ஒ : நீ முன்னாலே மாடு மாதிரி எழுந்து நிந்தா, பின்னாடி குந்திக் கினு இருக்கவங்கள்ளாம் எப்படிய்யா பாக்கறது? எ-நி : எருமை மாதிரி எழுந்து நிந்து பாக்கிறது. மூன்றாமவர் : ஏன்யா, காந்தி எதிருக்கே சண்டை போடுறீங்க? ரெண்டு பேரும் மனுசன் மாதிரி பேசுவீங்களா? ஹும், கடவுளே! ஏ எழுந்து நிக்கற பெரிய மனுசா! அந்த சுண்டலே ரவை கூப்பிடு. எ-நி : நீ வைச்ச ஆளா நானு? மூ : சாஸ்தி பேசினா, அதுக்குண்டானது கிடைக்கும். காந்தி கூட்டமாச்சேன்னு பாக்கரேன். இல்லா கிட்டி இத்திநேரம் எங்கே யிருப்பையோ? நான்காமவர் : அந்த ஆளோடு ஏன்யா சண்டை போட்றே, சும்மா குந்திகிணு கிடக்காதே? தொண்டர் : இரைச்சல் போடாதேங்கோ. (ஒரு பக்கத்திலுள்ள ஜனங்கள் எழுந்து போகத் தொடங்குகிறார்கள்.) தொ : ஏனய்யா இதுக்குள்ளே எழுந்துட்டிங்க? இன்னும் பிரார்த் தனை முடியல்லே; காந்தியே இன்னும் பேச ஆரம்பிக்கவில் லையே ஐயா! போகிறவரில் ஒருவர் : அவர் பேச்சை கேக்கவா நாங்க வந்தோம்? சும்மா பாக்க வந்தோம். பாத்தாச்சு, போக வேண்டியதுதானே! நேரமாச்சுல்லே? அப்புறம் பஸ் கிடைக்காது. ஒரு காந்தி பக்தர் : மூட ஜனங்கள்! மூட ஜனங்கள்! போகிறபோது சும்மாவாவது போகிறார்களா? சத்தம் போட்டுக் கொண்டு போகிறார்கள். இவர்களையெல்லாம் எப்படி முன்னுக்குக் கொண்டுவரப் போகிறார் காந்தி? ஒரு ஸ்திரீ : (உரத்த குரலில்) அடீ கண்ணம்மா! தொ : ஏன் இப்படி கத்தறே? ஒ-ஸ் : ஆங், இதின்னாடியம்மா, என் கொயந்தையே காணாது போனா நான் கூப்பிட்டுக்கிறேன். இந்த காந்திகாரருக்கு ஏன் இப்படி கோவம் வருது? தொ : கோபம் இல்லையம்மா! அதோ பார், காந்தி பேசுகிறார். அந்தப் பேச்சிலே இரண்டு வார்த்தையாவது காதிலே விழவேண் டாமா? ஒ-ஸ் : எங்களுக்கெல்லாம் அவர் பேசறது என்னா புரியப்போவுது? தொ : (தனக்குள்) அப்படியானால் கூட்டத்திற்கு வந்தே இருக்கக் கூடாது. ஒ-ஸ் : நீ யாரு வரக்கூடாதுன்னு சொல்றது? நீ என்னா கலைக்டரா? கவுர்னரா? ஒரு காந்தி-ப : வாலண்டியர் ஸார்! சும்மா யிருங்களேன். பெண் பிள்ளையோடு என்னத்துக்கு வீண் பேச்சு? ஓ-ஸ் : அப்படிச் சொல்லுங்க பெரியவரே! உன்னை பார்த்தா காந்தி மாதிரி இருக்குது. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பொக்கை வாய்தான்! (இதைக் கேட்டு பக்கத்திலிருக்கிறவர்கள் எல்லோரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்.) தொ : உஸ், கூச்சல் போடாதங்கோ. கூட்டத்திலே ஒருவர் : காந்தி பேசறது ஒண்ணுமே காதிலே விழல்லே. மற்றவர்கள் : மகாத்மா காந்திக்கு ஜே! (ஒரே கும்பலாக எழுந்து நிற்கிறார்கள். அவர்களை உட்காரு மாறு சொல்லி, பின்னாடி யிருக்கப்பட்டவர்கள் சத்தம் போடுகிறார்கள். பிரார்த்தனை முடிந்து கூட்டம் கலைகிறது.) ஐந்தாவது களம் இடம் : தொண்டர் முகாம் காலம் : இரவு (இரண்டு தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.) முதல் தொண்டர் : மகாத்மா காந்தியைப் பார்ப்பதற்காக லட்சக் கணக்கில் ஜனங்கள் வந்தார்களே, இவர்களில் எத்தனை பேர் அவர் பேச்சைக் கேட்டிருப்பார்கள்? இரண்டாவது தொண்டர் : ஒரு சில ஆயிரம் பேராவது இருக்க மாட்டார்களா? மு-தொ : அந்த சில ஆயிரம் பேரிலே எத்தனை பேர் அவர் பேச்சைப் புரிந்து கொண்டிருப்பார்கள்? இ-தொ : ஒரு சில நூறு பேராவது இருக்கமாட்டார்களா? மு-தொ : அந்த சில நூறு பேரிலே எத்தனை பேர் அவர் பேச்சின் படி நடக்கிறவார்களா யிருப்பார்கள்? இ-தொ : ஒரு சில பத்து பேர் என்று வைத்துக் கொள்ளேன். மு-தொ : அந்த ஒரு சில பத்து பேரும் அவருடைய சத்தியாக்கிரக தத்துவத்தையும், அஹிம்ஸை தத்துவத்தையும் பரிபூரணமாய் அறிந்து அதன்படி அனுஷ்டிக்கக் கூடியவர்களென்று நீ நினைக் கிறாயா? இ-தொ : அதெப்படி நிச்சயமாகச் சொல்லமுடியும்? ஏதோ ஏகதேச மாக ஒருவர் இருவர்தான் அவரைப் பின் பற்றமுடியும். மு-தொ : அதுவும் அறைகுறையாகத்தான் பின் பற்றமுடியும். இந்த உண்மையை, நம்மைக் காட்டிலும், அந்நியர், சிறப்பாகப் பிரிட்ஷார் நன்றாக தெரிந்து கொண்டிருக்கின்றனர். ஓர் ஐரோப்பிய அறிஞர் கூறுகிறமாதிரி, “காந்தி மகாத்மா மீது உலகத்தின் கவனம் அதிகமாகச் செல்கிறது; ஆனால் அவர் செய்துகொண்டு வரும் காரியங்களைப்பற்றி யாரும் அதிகமான கவனஞ் செலுத்துவதில்லை.” இ-தொ : ஐரோப்பியர் சொல்வதையெல்லாம் நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு விட வேண்டுமென்பதில்லையே. மு-தொ : அது வாஸ்தவம். பொதுவாக, நம்முடைய தலைவர் களை அவதார புருஷர்களென்றும், கடவுள் அமிசமுடையவர் களென்றும் இப்படிப் பலவிதமாகப் போற்ற எப்பொழுது தொடங்கிவிட்டோமோ அப்பொழுதே அவர்களைப் பின் பற்றுவதினின்று நாம் ஒதுங்கிவிட்டோ மென்பது அர்த்தம். அவர்களுடையப் போதனைகளுக்குப் பதில் அவர் களுடைய உருவமே நமது இருதயத்தில் அதிகமாக இடம் பெற்றுவிட்ட தென்பது என் அபிப்பிராயம். இ-தொ : உன்னுடைய அபிப்பிராயம் அப்படியிருக்கலாம். ஆனால் பொதுஜனங்கள் அப்படி நினைக்கவில்லையே. (மணியடிக்கிற ஓசை கேட்கிறது.) இ-தொ : படுக்கைமணி அடித்து விட்டார்கள். படுக்கப் போகலாம் வா. (இருவரும் படுக்கச் செல்கிறார்கள்) தேர்தலுக்கு முந்தி முதற் களம் இடம் : கண்ணுசாமிப்பாவலர் பங்களாவின் முன்பக்கத்து ஹால். காலம் : மாலை. (ஹாலில் மேஜை, நாற்காலி, சோபா முதலியவை உரிய இடங்களில் ஒழுங்காக இருக்கின்றன. கீழே ஒரு பக்கமாக, பாவலரின் தாயார் வள்ளியம்மாள் உட்கார்ந்து கொண்டு, கடையிலிருந்து வாங்கிவந் திருக்கிற கடலையைக் கற்களில்லாமல் சுத்தப்படுத்திக் கொண்டிருக் கிறாள். ஒரு பக்கம் சோபாவின் மீது, பாவலரின் மனைவி பொன்னம் மாள் அமர்ந்து, வெளியே புறப்படப்போகும் தன் கணவருக்குத் தேவையா யிருக்கக் கூடிய உடைகளிற் சிலவற்றை மடிமீது வைத்துக் கொண்டிருக் கிறாள். முகத்தை கழுவிக்கொண்டுவிட்டு பாவலர் அவசரம் அவசரமாகப் பிரவேசிக்கிறார்.) கண்ணுசாமிப் பாவலர் : (இருகைகளையும் நீட்டிக் கொண்டே) டவல்! டவல்! பொன்னம்மாள் : (நமட்டு சிரிப்புடன்) ஐயோ! அவசரம் அள்ளிக் கொண்டு போகிறது ஐயாவை! (டவலை பாவலர் கையில் விழும்படியாக வீசி எறிகிறாள்.) க-பா : (டவலால் முகத்தைத் துடைத்துக்கொண்டே) ஆமாம்; சிட்டுக்குருவியாகப் பறக்கணும் இப்போ நானு. மணி ஆறு அடிச்சுப் போச்சு இல்லே? பொ : இல்லை; இன்னும் அஞ்சு நிமிஷம் பாக்கியிருக்குது. க-பா : அப்போ சரி, கொண்டா ஷர்ட்டு, ஷர்ட்டு. பொ : இருக்கிற நேரமெல்லாம் சும்மா இருக்கிறது, அப்புறம் என்னை விரட்டறது. உம், எது வேணும்? கதர் குடுத்தாவா? சில்க் ஷர்ட்டா? க-பா : (ஆத்திரத்துடன்) எதுவோ ஒன்று கொடுத்துத் தொலையேன். பொ : (பதில் ஆத்திரத்துடன்) எந்த மீட்டிங்குக்கு போகப் போறீங்களோ, எனக்கென்ன தெரியும்? க-பா : ஆமாம்; ஆமாம். கதர் குடுத்தாவும் காந்தி குல்லா யும் கொடு. இன்று ஹிந்தி சங்கத்தின் ஆண்டு விழா. அங்கே கூடியிருக்கிறதெல் லாம் காந்தி பைத்தியங்களா இருக்கும். அதனாலே......... பொ : ஆமாம்; உங்களுக்கு ஹிந்தி தெரியாதே? ஹிந்தி சங்கத்திலே போய் என்ன பேசப்போறீங்க? க-பா : அடே, ஹிந்தி சங்கத் திலே பேசறதுக்கு ஹிந்தி தெரியணுமா என்ன? என்ன பொம்பளே நீ? எந்தக் காலத்திலே இருக்கே நீ? நான் எதுக்காக அங்கே போறேன் தெரியுமா? பொ : ஹூம்; அது கூட தெரியாதா எனக்கு? ஓட்டுப் பிடிக்க. க.பா : சீ ! அப்படிச் சொல்லாதே. மீன் பிடிக்க என்கிற மாதிரி இருக்குது அது. பொ : அப்படியானால் ஓட்டுக் கேட்கப் போறீங்க என்று சொல்லட்டுமா? க-பா : அதுவும் தப்பு. பிச்சை கேட்கிற மாதிரி இருக்குது அது............. சரி, கண்ணாடி கொண்டு வா. ஜல்தி, ஜல்தி. பொ : இப்போ எதுக்கு கண்ணாடி? சாயங்காலத்திலேயா கண்ணாடி போட்டுக்கொள்வாங்க? க-பா : இல்லை, இல்லை. நடு நிசியிலே நல்ல தூக்கத்திலே போட்டுக்கொள்வாங்க. போ, போ. மூடம், மூடம். நான் கூலிங் கிளாஸா (ஊடிடிடiபே ழுடயளள - குளிர்ந்த கண்ணாடி) கேட்டேன் இப்பொழுது? முகம் பார்க்கிற கண்ணாடியைக் கேட்டால் என்னமோ பேசறா? பொ : ஆமாம்; மீட்டிங்குக்குப் போகிறவங்கள்ளாம் கண்ணாடி யில் முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் போவாங்க? க-பா : இந்தக் காலத்திலே ஆம்பளைகள் சட்டைப் பையிலேயே கண்ணாடியும் சீப்பும் வைச்சிருக்காங்க; தெரியுமா உனக்கு? பொ : அதென்னமோ எனக்குத் தெரியாது. நான் தான் மூடமாச்சே. க-பா : நீ கோவிச்சுக்காதே. ஆம்பளை வெளியிலே புறப்படுகிற சமயத்திலே பொம்பளை கோவிச்சுண்டா நல்லதில்லை. கண் ணாடியை கொண்டுவா பார்க்கலாம். (பொன்னாம்மாள் கண்ணாடி எடுத்துவர உள்பக்கம் போகிறாள்.) வள்ளியம்மாள் : (தனக்குள்) வாயை அடைச்சுக் கிடக்கலாமென் றால் வயிறு கேட்கமாட்டேனென்கிறது. (வெளியே) ஏண்டா கண்ணு ! இப்படி ஓடு ஓடுன்னு ஓடறயே? உடம்பு ஓடாப் போச்சேடா? க-பா : எல்லாம் ஓட்டுக்குத்தான் அம்மா. உனக்கொன்றும் தெரி யாது. சும்மாயிரு. வ : சும்மாயிராதே நான் என்ன இந்தக் காலத்து பொம்பளைகள் மாதிரி ஆட்டமா ஆடப்போறேன்? பொ : (உள்ளிருந்து கண்ணாடியைக் கொண்டு வந்து பாவலர் கையில் கொடுத்தவண்ணம்) இந்த மாதிரி இடிச்சு பேச மட்டும் நல்லா தெரியும்? வ : உன்னைச் சொல்லவில்லையடி அம்மா! நீ கிளம்பி விடாதே. பொ : (முகஞ்சுளிக்க) நான் என்ன பருந்தா, குரங்கா கிளம்புவதற்கு? க-பா : சே, சே! பருந்துமில்லை, குரங்குமில்லை, பொம்பளேன்னா நீ? எல்லோரும் அப்படித்தானே உன்னை நினைச்சுண்டிருக் காங்க, ஏ, ஏ!! பொ : சொல்லிவிட்டு இளிக்காதீங்க; இந்த ஆம்பளைகளே இப்படித் தான். வ : போனா போவுது. ஓட்டுன்னா என்னடா கண்ணு? பொ : ஓட்டுன்னா கடலையைச் சுண்டி கடவுளுக்குப் படைக் கிறதுன்னு அர்த்தம். வ : பாத்தியாடா, மருமகளா பேசறாளா, பாத்தியா? க-பா : ஏய், மாமியார் கிட்ட மரியாதையாகப் பேசு. வ : கடவுளுக்குப் படைச்சா கெட்டுப்பூடுவாங்களா? நாளைக்கு வியாழக்கிழமை. கடலை சுண்டல் செய்து கோயிலுக்கு எடுத்துக் கொண்டு போய், சாமி கும்பிட்டுவிட்டு, நாலு ஏழை பாழைங்க ளுக்குக் கொடுக்கத்தான் போறேன். எனக்கும் இந்த வீட்டிலே அதிகாரமுண்டு. க-பா : எல்லாருக்கும் அதிகாரமுண்டு. அம்மா! நீ நாளைக்கே கோயிலுக்குப் போய் சாமி கும்பிடணுமா? வ : ஏன்? எதுக்காக கேக்கறே? க-பா : இல்லையம்மா! நாளைக்கு கோயிலிலே ஒரு மீட்டிங். அதிலே நான் பேசப்போறேன். வ : நல்ல மீட்டிங்! வேளா வேளைக்கு சோறு இல்லை. இராவில்லை; பகலில்லை; எப்பவும் மீட்டிங், மீட்டிங்குன்னு ஓடறயே? க-பா : ஆமாமம்மா; இப்போ எலெக்ஷன் பாரு. நான் ஓட்டுக்கு நிக்கறேன். அதனாலே அங்கங்கே மீட்டிங் போட்டு பேசணு மில்லே? வ : இதுக்கெல்லாம் காசு செலவழிக்கணுமா? க-பா : ஆமாம்; சும்மாதானா? ஆயிரக்கணக்கிலே செலவழிக் கணும். வ : ஐயோ! இதனாலே என்ன லாபம்? க-பா : லாபமா? பேர்தான்: புகழ்தான். வ : எனக்கொண்ணும் புரியல்லேப்பா. (பொறுத்து) ஆமாம்; நாளைக்கு கோயில்லே என்ன பேசப்போறே? க-பா : அப்போ என்ன வாயிலே வரதோ அதைப் பேசுவேன். இதெல் லாம் யோசனைப் பண்ணி பேசற பேச்சில்லை. யோசனை பண்ணி பேசினா, கேக்கறதுக்கு ஆள் இருக்கமாட்டாங்க. பொ : அப்படியானால் யோசனை பண்ணக்கூட உங்களுக்குத் தெரியுமின்னு சொல்லுங்க. க-பா : என்ன அப்படி சொல்றயே! நான் யாரு தெரியுமா? பொ : தெரியுமே; நல்லாத் தெரியும். எனக்குக் கூடவா தெரியாது பாட்டுப் படிக்கத் தெரியாத பாவலருன்னு? க-பா : பாத்தியா, பாத்தியா இவளை? பரிகாசம் பண்றாளே சமயம் பார்த்து. வ : அவனுக்கென்னடி? அவன் தாதா பாவலர் : அவன் நாயனா பாவலர். அதனாலே அவனும் பாவலருன்னு பெயர் வைச்சிண் டிருக்கான். பொ : அதைத்தான் நானும் சொல்றேன். வ : அது கிடக்குது. நீ நாளைக்கு கோயிலிலே வந்து பேசறபோது நான் இருந்து கேக்கலாமில்லே? க-பா : ஐயோ அம்மா! நீ வராதே. உனக்கு அங்கேயெல்லாம் நாகரிகமாக நடந்துகொள்ளத் தெரியாது. என் மகன் பேச றான்னு தமுக்கடிப்பே. வ : நல்லா பொன்னாம்மாளைக் கூட்டிக்கொண்டு போயேன். அவளுக்கு நாகரிகமாக நாட்டியமாடத் தெரியும். பொ : (க-பா வைப்பார்த்து) உங்க ஆத்தா மிஞ்சித்தான் பேசறா. (பொறுத்து) உங்களுக்கு மீட்டிங்குக்கு நேரமாகல்லே? அப்பவே பறந்திங்களே? க-பா : இரு; சங்கத்திலிருந்து ஆள் வரும், கூட்டிக் கொண்டு போக- இந்த மாதிரி கூடடங்களுக்கெல்லாம் கொஞ்சம் நேரம் பொறுத்துத்தான் போகணும். ஏன் என்று கேட்டால், அப்போ தானே ஜனங்கள் நம்மை எதிர்பார்த்து ஆவலாயிருப்பாங்க. வராரு, வராரு என்று சொல்லிக்கிட்டே நம்மைப்பற்றியே பேசு வாங்க, பாரு. (கண்ணன், குமாரன்,கோபு, சோமு என்ற நான்கு தொண்டர்கள் பிரவேசிக்கிறார்கள்) க-பா : எங்கே அப்பேன், இன்னும் நீங்கள் ஹிந்தி சங்கக்கூட் டத்துக்கு போகல்லையா? கண்ணன் : போகறதுக்காகத்தான் வந்திருக்கோம். க-பா : பின்னே ஏன் இங்கே வந்தீங்க? குமாரன் : காபி தண்ணிக்கு சில்லரை வாங்கிக்கினு போகலாமின்னு வந்தோம். கோபு : நானும் சோமுவும் இன்று காலம்பரலேயிருந்து பட்டினிங்க. க-பா : போனவாரந்தானே ஆளுக்கு அஞ்சு அஞ்சு ரூபா கொடுத் தேன். அதுக்கு என்ன வேலை செய்திங்க? க : அதின்னா அப்படி கேட்டுட்டிங்கோ? அந்தச் சேரியிலே போய் ஒரு கலக்கு கலக்கிப்பிட்டு வந்திருக்கோமே. கு : அந்த ஆண்டியப்ப பண்டாரத்துக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்காதபடி வேலை சேஞ்சிருக்கோம். கோ : அந்த பண்டாரத்தின் வண்டவாளம் தண்ணியா ஓடுதுங்க சேரியிலே. சோமு : இனி அவன் ஒரு கூட்டம் போட்டு நடத்த முடியுங்களா? க-பா : இல்லெப்பா, அவன் - அந்தப் பண்டாரம் - காசை, தண் ணியா வாரி இறைப்பான்னு தோணுது. க : அதுக்கின்னாங்க, அவன் அஞ்சு கொடுத்த இடத்திலே நாம்ப பத்து கொடுத்தா போச்சு. கு : எப்போ ஓட்டுக்கு நிந்துட்டமோ காசை அள்ளி வீசணங்க. பொ : கொட்டிக்கிடக்குது இங்கே. வ : காய்ச்சு தொங்குது மரத்திலே. க : ஆம்பளைங்க விவகாரத்திலே பொம்பளைங்க குறுக்கிட்டா எப்படி? க-பா : ஆமாம்; நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க. வ : ஓட்டு ஒட்டுன்னு சொல்லி பானை ஓடு கூட மிஞ்சப்போற தில்லே. பொ : ஏன்? அது மிஞ்சும். இரந்து குடிக்கணுமில்லை? வ : இரந்து குடிக்கிறீங்களோ, பறந்து போறேங்களோ, எனக் கென்ன வந்தது? பொ : எனக்குந்தான் என்ன வந்தது? நான் எங்க ஆத்தா வீட்டுக்குப் போறேன். (இருவரும் உள்பக்கம் சென்றுவிடுகிறார்கள்.) க-பா : (தொண்டர்களைப் பார்த்து) ஆமாம் தம்பீ! அந்த சேரியிலே மொத்தம் எத்தனை ஓட்டு? க : ஓட்டர் ஜாபிதாவே சரியா கிடைக்கலிங்களே? அதுக்கும் சில்லரை தளர்த்த வேண்டியிருக்குதுங்களே? கு : இந்தக் காலத்திலே துட்டுதானே எங்கேயும் பேசுது. கோ : இந்த ஓட்டர் ஜாபிதா ஒரு கண்ராவிங்க. சோ : செத்தவங்க பேரெல்லாம் இருக்குது; இருக்க வேண்டியவங்க பேரெல்லாம் இல்லவே இல்லை. க.பா : ஆமாம்; நீங்கள் சொல்றது சரி. நாளைக்கு இதைப்பற்றி மேலிடத்திலே விசாரிக்கிறேன். (பொறுத்து) உத்தேசமா சேரி யிலே மொத்தம் எத்தனை ஓட்டு இருக்கும்? க : அதைப்பற்றி உங்களுக்கேன் கவலைங்க? இருக்கிற ஓட்டு அத்தனையையும் பீறாஞ்சு கொண்டுவந்து உங்க காலிலே போட்டுரேனுங்க. க.பா : பேஷ்! அந்தப் பண்டாரத்துக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காத படி பண்ணிவிடணும். கோ : அந்தக் கவலையே வேண்டாங்க. அந்தப் பண்டாரம் சேமக் கலம் கொட்டிக்கிணுதான் போகணும். க.பா : அடுத்த வாரம் சேரியிலே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய ணுமே. க : நல்லா செய்யணுங்க. ஞாயிற்றுக்கிழமை சாயரட்சை ஏற்பாடு செய்யட்டுமா? அன்னிக்குதான் எல்லாரும் வேலைக்கு போகா மல் சேரியிலே இருப்பாங்க. பேசறதுக்கு மட்டும் நல்ல ஆளா பாத்து இட்டுக்கிணு வந்துடுங்க. க-பா : அதுக்கின்னாப்பா, பேசற ஆளுக்கா பஞ்சம்? அதுவும் இந்த எலெக்ஷன் சமயத்திலே? சோ : அவங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கணுங்களா? க : (சோமுவைப் பார்த்து) டேய், அதையெல்லாம் நாம கேட்டு தெரிஞ்சுக்கலாமா? கொடுக்கறாங்களோ, வாங்கறாங்களோ, யாரும் வெளியே சொல்லமாட்டாங்க. (க-பா.வைப் பார்த்து) கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்ரேனுங்க. செலவுக்கு -? க-பா : அதுக்கின்னாப்பா கவலை? நாளை காலை வாங்க. அம்பது ரூபாய் போதுமா? க : சரிக்கட்டலாங்க. மேலே அஞ்சு பத்து ஆனால் கேட்டு வாங்கிக் கிறோம். நீங்க மட்டும் நல்லா பேசணும். இப்போ பிடிச்சு தயார் பண்ணிக்கிங்க. க-பா : பேச்சுக்கு என்னப்பா? எல்லாருக்கும் பக்கா வீடு கட்டித் தரச் சொல்றேன், கிணறு தோண்டித் தரச் சொல்றேன். இப்படி எல்லாந்தானே தம்பீ பேசணும்? க : அவ்வளவுதானுங்க. செய்யறமோ இல்லையோ அதைப் பின் னாடி பார்த்துக்கலாம். சோ : இந்த எலெக்ஷன் கலாட்டா வெல்லாம் முடிஞ்ச பிறகுதானே அதைப்பற்றியெல்லாம் யோசிக்கணும். கோ : நீங்க பேசற பேச்சிலே, அந்த பண்டாரம், அவன் கட்சி எல் லாம் பொசுங்கிப் போகணுங்க. க : என்னடா அப்படிச் சொல்றயே? ஐயா வாயைத் திறந்தாங்க ளானால், எதிரிலே ஒரு ஆள் நிக்க முடியுமா என்ன? க-பா : (சந்தோஷப்பட்டுகொண்டு) இப்போ உங்களுக்கென்ன வேணும்? க : இப்போ காபி செலவுக்கு வேணும். அது தவிர, ஆளுக்கு அஞ்சு ரூபா கைச்செலவுக்கு வேணும். சோ : உங்கள் மாதிரி எங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதர் குடுத்தா, ஒரு காந்தி குல்லாய் வேணுங்க. கோ : இடுப்பிலே கட்டிக்க கதர்வேட்டி. க : வேட்டி இல்லேன்னாலும் கதர் பைஜாமா தைச்சு கொடுத் துடுங்க. கு : எங்களைப் பார்த்தாலே, பாவலர் தொண்டர்கள் இவர்கள் என்று எல்லோருக்கும் தெரியணுங்க. க-பா : அப்படியே செய்வோம்! எல்லாத்துக்கும் சேர்த்து நாளை கொடுக்கறேன். காலம்பர வாங்க. இப்போ நேரே ஹிந்தி சங்கத்துக்குத் தானே போகப் போறீங்க? போற வழியிலே ஹைரோட்டிலே காபி ஹோட்டல் இருக்குது பாரு, அங்கே போய், என் பேரைச் சொன்னீங் களானா, காபி, பலகாரம் எல்லாம் கொடுப்பாங்க; வயிறு ரொம்ப சாப்பிட்டுவிட்டு மீட்டிங்குக்கு ஜல்தியா போங்க. க : ரொம்ப நல்லதுங்க. க-பா : நீங்க போய் சேர்ந்த கொஞ்ச நேரங்கழிச்சுதான் நான் வரணும். க : ஆமாங்க. நாங்க முன்னாடிபோய் ‘பாவலருக்கு ஜே’ போடணு மில்லே? க-பா : அது மட்டுமில்லையப்பா. எலெக்ஷனைப்பற்றி நாலுபேரிடத்திலே பேச்சு கொடுத்து பேச்சு வாங்கணுமில்லே? க : இதெல்லாம் தெரியாதா எங்களுக்கு? இதுக்கு முந்தி எத்தனை பேருக்கு எத்தனை எலெக்ஷ்ன்களிலே வேலை செஞ்சிருக் கோம்? கோ : எங்கே போனாலும் உங்களை ஆகாசத்திலே தூக்கி வைச்சு பேசமாட்டோமா? க-பா : சரி; நீங்கள் சீக்கிரம் போங்கள். அதோ, சங்கக் காரியதரிசி யும் வருகிறார். (நால்வரும் போகிறார்கள். ஹிந்தி சங்கக் காரியதரிசி பிரபுதேவ் வருகிறார்.) பிரபுதேவ் : நமஸ்தே ! நமஸ்தே ! க-பா : வாங்க, வாங்க. பி-தே : கூட்டம் சேர்ந்துபோச்சு, உங்களை எல்லோரும் எதிர் பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்காங்க. க-பா : அப்படியா? மன்னிக்கணும். பேச வந்திருந்தாங்க. அவங் களை பேசி இப்போதான் அனுப்பிச்சேன். ஆமாம்; நான் எலெக்ஷனுக்கு நிக்கறேனென்று சங்கத்திலே எல்லாருக்கும் தெரியுமில்லை? பி-தே : தெரியும். க -பா : அதைப்பற்றி நீங்க ரெண்டு வார்த்தை மீட்டிங்கிலே பேசு வீங்க இல்லை? பி-தே : ஹிந்தி சங்கம் எல்லாருக்கும் பொதுவானது. தேர்தல் பிரசாரத்துக்கு அதை ஒரு இடமா நாங்க வைச்சுக்கல்லே. க.பா : என்ன தேவ்! என்னமோ தரும நியாயம் பேசறீங்க? உங்க சங்கத் துக்கு கொஞ்சம் நன்கொடை கொடுக்கலாமின்னு யோசனை பண்ணிக்கொண்டிருக்கிறேன். பி.தே : நன்கொடை கொடுங்க; நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம். சங்கம் எல்லாருக்கும் பொதுவானது, பாருங்கள். க-பா : அப்படியானால், உங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், யாருக்கும் ஓட்டுக் கொடுக்கப் போவதில்லையா? பி-தே : யாரும் யாருக்கும் ஓட்டுக் கொடுக்கலாம். அது அவரவர்க ளுடைய சொந்த விஷயம். சங்கந்தான் பொதுவானது என்று சொன்னேனே தவிர,அங்கத்தினர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லையே. க-பா : புரிஞ்சுது இப்போ. உங்கள் சங்க மெம்பர்களின் லிஸ்ட் ஒன்று கொடுக்கமுடியுமா? பி-தே : சங்க நிருவாகக் கமிட்டிக்கு எழுதிக் கேளுங்கள். அவர்கள் கொடுக்கச் சொன்னால் கொடுக்கிறேன். க-பா : பலே பேர்வழி நீ! வடக்கத்தியான் இல்லை? பி -தே : வடக்கு,தெற்கு என்ற வித்தியாசமே எங்கள் சங்கத்திற்குத் தெரியாது. (சிறிது பொறுத்து) உம்- மீட்டிங்குக்கு நேரமாச்சே? க-பா : சரி; போகலாம். (போகும்பொழுது தமக்குள்) இந்த ஹிந்தி சங்கத்தை ஒரு கை பார்த்துட்ரேன். (பிரபுதேவ் முன்னே செல்ல பின்னே செல்கிறார்.) இரண்டாவது களம். இடம் : சேரி. காலம் : பிற்பகல் சுமார் மூன்று மணி. (நாட்டாண்மைக்காரனாகிய நாயகத்தின் வீட்டுக்கு முன்புறம், நாயகத்தின் இருமருங்கிலும் கோயிலான், கும்பிடுவான், செருகளத் தான், சிங்காரம் ஆகிய நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக் கின்றனர்.) கோயிலான் : (நாயகத்தைப் பார்த்து) வாத்தியாரே! நீ என்ன சொல்றியோ அந்த மாதிரியே கேக்கறோம். நாயகம் : அப்படியில்லை கோயிலு! சேரியிலே மத்தவங்க என்ன சொல்றாங்கோ என்றத்தை நாம் தெரிஞ்சக்கணும் பாரு. கும்பிடுவான் : ஆமாம் போ. சேரியிலுள்ளவங்க என்ன சொல் வாங்க? ஆடு, மாடு மாதிரி முன்னே போனா பின்னே வருவாங்க. செருகளத்தான் : சேரியைப் பொறுத்தவரை பாவலனும் ஓண்ணு தான்; பண்டாரமும் ஒண்ணுதான். சிங்காரம் : அப்படிச் சொல்லிபுட்டா எப்படி? பண்டாரம் கொஞ்சம் யோக்கியனில்லை. செ : எல்லாரும் ஒண்ணுதான்; அதுக்கின்னா, பாவலன் பேச்சை அள்ளிவிட்றான்; பண்டாரம், கொஞ்சம் குறைச்சு பேசறான். கு : ரெண்டு பேரும் சேரிக்கு செய்யப்போறது ஒண்ணுமில்லை. சி : எனக்கென்னமோ பண்டாரம் ஏதாட்டியம் செய்வான்னு தோணுது. செ : மேல் ஜாதி கீழ் ஜாதி கிடையாது. எல்லார் ரத்தமும் ஒண்ணு தான், எல்லாரும் சகோதரர்கள். இப்படியெல்லாம் அந்தப் பண்டாரம் பேசறதை கேட்டு சிங்காரம் மயங்கிப்போனான். கோ : பாவலன் கையிலே கொஞ்சம் துட்டு நடமாடுது. பண்டாரம் கையிலே அவ்வளவு இல்லை. கு : பாவலன், தன் பணத்தையெல்லாம் சேரியிலே வாரி இறைச்சுடப் போறான்னு நீ நினைக்கிறயா? கோ : இல்லை; இல்லை. ஏதானும் செய்யணுமின்னு மனசு வைச்சா, பாவலன் செய்வான். கு : மனசு வைச்சாதானே? பணமிருந்தா மனசு இராது. தெரிஞ் சுக்கோ. மேலும் மேலும் பணத்தை சேக்கணுமின்னுதான் மனசு போகும். சி : பண்டாரம் என்னிக்கும் ஒரே மாதிரி வேஷம் போட்றான். இந்தப் பாவலன், ஒரு நாளு காந்தி வேஷம் போட்றான்; ஒரு நாளு வெள்ளைக்காரன் மாதிரி சராய் தொப்பி எல்லாம் வைச்சுக்கறான். கு : அவன் கோயிலுக்கு போகச்சொல்ல பாக்கணுமே? கழுத்திலே கொட்டை; உடம்பெல்லாம் துண்ணூறு. கண்ணை மூடிக் கொண்டுதான் போவாரு ஐயா. சி : நந்தன் என்னு நெனெச்சுக்கிறானாங்காட்டியம்? நா : அந்தப் பேச்செல்லாம் நமக்கென்னத்துக்கு? பாவலன், நம்ம சேரிக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டித்தரேன்றான். சி : அதுக்கென்ன, பண்டாரங்கூட சேரிக்கு ஒரு கோயில் கட்டித் தரேன்றான். செ : அதிலேதான் மோசடி இருக்குது. ஜாதிக்காரங்கள் கோயிலுக் குள்ளே நாம்ப வராதபடி தடுக்க இது ஒரு சூழ்ச்சி. நா : சே, சே! அப்படிச் சொல்லாதே. கு : நமக்கு பள்ளிக்கூடமும் வேணாம்; கோயிலும் வேணாம். குடிக்க நல்ல தண்ணியும், வவுத்துக்கு நல்ல சோறும் கிடைச்சா போதும். கோ : மானங்காக்க துணி வேணாமா? கு : அதுவும்தான் ஓணும். (தூரத்தில் சுட்டிக்காட்டி) அதோ பாரு, நம்ப வூட்டு பொம்பளை எங்கேயிருந்து தண்ணி கொண்டு வராங்க பாரு. அவங்களே பாத்தா என் வவுறு எரியுது. நா : இந்த மாதிரி பேசி மத்தவங்களை திட்டிகிணு கிடக்கிறமோ தவிர, நமக்கு நாமே ஏதானும் செஞ்சிக்கிறோமா? கு : என்ன செஞ்சுக்கணுமின்றே? கோ : வாத்தியாரே! நான்தான் முதலிலேயே சொன்னேனே, நீ சொல்றபடி செய்யறோமின்னு. நா : சேரியிலே நாமெல்லாம் சேர்ந்து ஒரு கிணறு தோண்டினா என்ன? கோ : நல்லா தோண்டலாம். ஆனால் கட்டடம் கட்றதுக்கு செங்கல்? நா : அதுக்குதான், இந்த ஓட்டுக்கு வராங்களே அவங்கள்ளே யாரு கட்டி தருவாங்கன்னு கேக்கறது. கோ : ஆமாம்; நாளை பாவலனும், நாளை நின்னு பண்டாரமும் கூட்டம் போட்டு பேசப்போறாங்களாம். அப்போ கேட்டு பார்க்கலாம். கு : கூட்டத்திலே கேட்டா என்ன சொல்லப்போறாங்கோ? மழுப்பி, மழுப்பி, வளைச்சு, வளைச்சு பேசுவாங்க. தனியாக கூட்டி யாந்து, எங்க ஓட்டு ஓணுமின்னா எங்களுக்கு என்னென்ன சேஞ்சுதரேன்னு கேட்டு பிரமாணம் வாங்கிக்கணம். சி : அதான் சரி. செ : இந்த பிரமாணத்துக்கெல்லாம் பயந்தவங்களா அவங்க? உனக்கும் எனக்குந்தான் பிரமாணம். படிச்சவங்கள்ளாம் பிரமாணத்தை காத்திலே பறக்க விட்டுப்புட்டு பேசுவாங்க. சி : எனக்கென்னமோ பண்டாரம் அப்படி செய்ய மாட்டான்னு தோணுது. நா : அதையும் பார்த்துடலாமே? இப்போ நமக்கு என்னென்ன ஓணும்? நமக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வந்துக்கலாம். கோ : நம்ம சேரிக்கு பக்காவா ரோட்டு போட்டுத் தரணும். கு : ரோட்டுக்கு இப்போ என்ன அவசரம்? குடிக்க நல்ல தண்ணீர் ஓணும். பெரிய கிணறு ஓண்ணு தோண்டி கட்டித்தரச் சொல் லணும். செ : நம்ப வூட்டு படிக்கிற பிள்ளைங்களுக்கு இனாமா படிப்புச் சொல்லித்தர ஏற்பாடு செய்யணும். சி : வவுத்துக்கு சோறு? ஒரு வேளை சாப்பாடாவது போடச் சொல்லணும். கோ : ஆமாமாம். புஸ்தகம், பலகை இதுங்கள்ளாம் கூட வாங்கித்தரச் சொல்லணும். நா : செய்யறாங்களோ இல்லையோ? கேட்டுத்தான் வைப்போ மின்னு பேசறீங்களாங்காட்டியம்? கு : ஆமாம் வாத்தியாரே! ஆனால் எனக்கென்ன தோணுதுன்னா, யாரும் ஒண்ணுஞ்செய்யப்போறதில்லை. ஓட்டுக்கு அஞ்சு அஞ்சு ரூபா கொடுத்து நம்ம வாயை அடைச்சுடப்போறாங்க. நாமும் ஆடு மாதிரி போயி ஓட்டு போட்டுட்டு வரப்போறோம். சி : எனக்கென்னமோ பண்டாரம் ஏதானும் செய்வான்னு தோணுது. கோ : நம்ம சிங்காரத்துக்கு பண்டாரத்தின் மேலே ரொம்ப பக்தி. சி : என்னமோ அப்பா! என் மனசிலே பட்டதைச் சொன்னேன். நா : சரி; வாங்க. மத்தவங்களையும் கலந்து பேசலாம். (எல்லோரும் எழுந்து போகிறார்கள்) மூன்றாவது களம் இடம் : ஆண்டியப்ப பண்டாரத்தின் வீட்டு முன்வாசல். காலம் : காலை சுமார் எட்டு மணி. (ஆண்டியப்ப பண்டாரமும் கைலாச குருக்களும் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.) ஆண்டியப்ப பண்டாரம் : தெரியாத்தனமா இந்த எலெக்ஷன் விவகாரத்திலே காலை விட்டுக்கொண்டு விட்டேன். அதென்னடா வென்றால் தலையே போய்விடும் போலிருக்கிறதே? கைலாச குருக்கள் : ஆமாம்; அரசியல் என்பதே ஆழங்கால் சேறு மாதிரி. ஆ-ப : சேற்றிலே இறங்கினால் எப்படியாவது சமாளித்துக் கொண்டு மேலே வந்துவிடலாமே? இது நொய் மணலிலே இறங்கிவிட்டவன் கதியாகவல்லவோ இருக்கிறது? ஆளையே இழுத்துவிடும் போலிருக்கிறதே? கை -கு : நம்மைப் போலொத்தவர்களுக்கு இவையெல்லாம் சரிப் படுமா என்ன? ஆ-ப : என்ன குருக்களே! நாளொரு வேஷம்; பொழுதொரு பேச்சா? கை-கு : ஆமாம்; அப்படித்தானிருக்கிறது. ஆ-ப : அறத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் அமைய வேண்டுமென்று பெரியோர்கள் சொல்லிப் போந்தார்கள். கை-கு : இந்தக் காலத்தில் அது ஏற்குமா? ஆ-ப : அறத்தை அரங் கொண்டல்லவோ அறுத்து விடுகிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள்? கை-கு : அதனால்தான் பொம்மலாட்டம் மாதிரி இருக்கிறது இன்றைய அரசியல்? ஆ-ப : எனக்கென்னமோ சிறிதுகூடப் பிடிக்கவில்லை. இந்தத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடலாமென்று நினைக்கிறேன். கை-கு : வீட்டிலே அம்மையார் என்ன சொல்கிறார்கள்? ஆ-ப : கடைசி வரையில் ஒரு கை பார்த்துவிடுங்களென்று சொல்கி றாள். கை-கு : “எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவ மென்பது இழுக்கு” என்ற குறளை நினைவு படுத்துகிறார் போலும். ஆ-ப : குறளைக் கண்டாளா, நாலடியாரைக் கண்டாளா அவள்? என்னமோ சொல்லுகிறாள். நீங்களே வேண்டுமானால் கூப் பிட்டுக் கேளுங்களேன். (உள்பக்கம் திரும்பி) ஏய்! யாரது வீட்டு உள்ளே? (உள்ளிருந்து பண்டராத்தின் மனைவி உமையாள் வருகிறாள்) உமையாள் : ஏன்? கை-கு : நம்மள் பண்டாரம் சொல்லுகிறார். இந்தத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு விடுவதாக, நடக்கிற பொய் பித்தலாட்டங்களை அவரால் சகிக்கமுடியவில்லையாம். உ : எனக்குக் கொஞ்சங்கூட இஷ்டமில்லை. இப்பொழுது விலகிக் கொண்டால் நம்மள் மானம் போகுமில்லை? ஆ-ப : மானம் போகாமலிருப்பதற்குத்தான் இப்பொழுதே விலகிக் கொண்டு விடுகிறேனென்று சொல்கிறேன். கை-கு : “மானம்பட வாழாமை முன்னினிதே” என்றார்கள் பெரி யோர்கள். உ : குருக்களையாவுக்கு என்ன வேலை? எதற்கெடுத்தாலும் செய்யுள் தான்; சாஸ்திரந்தான். கை-கு : அவைகளில்தானே எல்லாச் சூட்சுமங்களையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் பெரியோர்கள். உ : நான் அப்பொழுதே சொன்னேன் இவருக்கு. முனைந்தால் முடிய முனையவேண்டும், இல்லையானால் இதில் இறங்கவே கூடா தென்று. ஆ-ப : ஆமாம்; எல்லோரும் யோக்கியமாக நடந்து கொள்வார்க ளென்று நினைத்தேன். இவ்வளவு பொய், பித்தலாட்டங்கள் நடக்குமென்று என்னால் கனவிலே கூட எண்ணமுடியவில்லை. கை-கு : நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் உலகம். ஆ-ப : அஹிம்ஸை என்று சொல்லிக்கொண்டு முழங்கைக்கு மேல் சட்டையைச் சுருட்டிக் கொள்கிறார்கள். கை-கு : “அஹிம்ஸா பரமோ தர்ம;” என்று சாஸ்திரம் சொல்லு கிறது. ஆ-ப : காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு கண்டபடி திட்டுகி றார்கள். உ : நீங்கள் அடிக்கவும் வேண்டாம்; திட்டவும் வேண்டாம். நியாத்தை எடுத்துச் சொல்லுங்களேன். ஆ-ப : அதுதான் பேச ஆரம்பித்தாலே ‘காந்திக்கு ஜே’ என்று கூச்சல் போட்டு கூட்டத்தைக் கலைத்துவிடுகிறார்களே? உ : நீங்களும் அதேமாதிரி செய்யுங்களேன். ஆ.ப : பெண்பிள்ளை பேசுகிற பேச்சா இது? கை-கு : உமையாம்பிகை திருவாய் மலர்ந்தருளுகிறார்!! உ : இல்லாவிட்டால் உங்களுக்கு ஓட்டு எப்படிக் கிடைக்கும்? ஆ-ப : அடிப்பதற்கும் திட்டுவதற்கும் ஆள் வைத்தல்லவோ வேலை செய்யவேண்டும்? உ : செய்யுங்களேன். ஆ-ப : ஆட்களுக்கு பணமல்லவோ கொடுக்கவேண்டும்? உ : கொடுங்கள். ஆ-ப : நானென்ன கள்ளமார்க்கெட்டில் கொள்ளையடித்துப் பணத்தைக் குவித்து வைத்திருக்கிறேனா? உ : முதலிலேயே ஏன் இது தோன்றவில்லை? ஆ-ப : சட்டசபையில் மெம்பரானால் மக்களுக்கு இயன்றவரை சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைக்குமென்று நினைத்தேன். இது என்னடாவென்றால், பெரிய பேயாட்டமாகவல்லவோ இருக்கி றது? கை-கு : சூதாட்டமுங்கூட. இதைக் காட்டிலும் அம்பர் சர்க்காவை பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தால் சுவேதாம்பரமாவது கிடைக்கும். உ : நீங்கள் இப்பொழுது விலகிக்கொண்டால் உங்களை எல்லாரும் கேலி செய்வார்கள். ஏற்கனவே அந்தப் பொன் னம்மா என்னை பண்டாரச்சி என்று ஏய்த்துக் காட்டிக் கொண் டிருக்கிறாளாம். இனிமேல் கேட்கவே வேண்டியதில்லை. தெரு விலே நடந்துகூட போகமுடியாது. ஆ-ப : பல்லக்கிலே போ. கை-கு : “அறத்தாறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” என்று அருள்கின்றார் வள்ளுவனார். உ : நல்ல குருக்களையா வந்துசேர்ந்தார். எதற்கெடுத்தாலும் செய்யுளா? சாஸ்திரமா? ஆ-பெ : குருக்களையாவை சும்மா விட்டுவிடு. ஒன்று மட்டும் சொல்கிறேன். பொன்னம்மாள் உன்னை ஏய்த்துக்காட்டுகி றாளேயென்று நீ திருப்பி அவளை ஏய்த்துக் காட்டாதே. உ : அவள் பவிஷூ எனக்குத் தெரியாதா? பானை சுட்டு விற்றவர்கள் தானே? பாவலர் என்று பெயர் வைத்துக்கொண்டால் மட்டும் அது மறைந்துவிடுமா? ஆ-ப : அவையெல்லாம் நமக்கு எதற்கு? குலம் பெரிதா? குணம் பெரிதா? கை-கு : “குலத்தளவேயாகுங் குணம்.” ஆ-ப : இதோ பாருங்கள் குருக்களையரே! நாளைக்கு நான் ஒரு துண்டுப் பிரசாரம் அச்சடித்து எல்லோருக்கும் கொடுக்கப் போகிறேன். கை-கு : முதலிலே சிவமயம் என்று அச்சடிக்கச் சொல்லுங்களேன். உ : எதைப்பற்றி துண்டுப்பிரசாரம் என்று கேட்காமல் சிவமயம் என்று போடச் சொல்கிறீர்களே? அதுதானா முக்கியம்? ஆ-ப : தேர்தலில் நான் அபேட்சகனாக நிற்பதன் நோக்கமென்ன, வெற்றிபெற்றால் என்னென்ன காரியங்களைச் செய்ய உத்தேசம் என்பவைகளை வரிசைக்கிரமமாக எடுத்துக் காட்டப்போகி றேன். இப்படி அச்சடித்துக் கொடுத்துவிட்டு சும்மாயிருக்கப் போகிறேன். யாரையும் அணுகி ஓட்டுக் கொடுங்களென்று கேட்கப் போவதில்லை; கூட்டங்கள் போட்டு சுயபுராணம் படிக்கப் போவதுமில்லை. உ : ஒரு ஓட்டுக்கூட உங்களுக்குக் கிடைக்காது. ஆ-ப: நிரம்ப நல்லதாய்ப் போச்சு. இதனோடு இந்தத் தேர்தல் விவகாரத்திற்குத் தலைமுழுக்குத்தான். ஜனங்களாக விரும்பி நமக்கு ஓட்டுக் கொடுக்க வேண்டுமே தவிர, நாம் அவர்களிடம் வலியக் கேட்டு வாங்கக் கூடாது. உ : தருமபுத்திரரோடு தீர்த்த யாத்திரைக்குப் போங்கள். கை-கு : ஐயோ! என்னை விட்டுவிட்டா? ஆ-ப : உங்களை விட்டுவிட்டா? ஒருகாலுமில்லை. இப்பொழுது இரண்டுபேரும் கோயிலுக்குப் போய்வரலாம். காலை பூஜை இன்னும் முடிந்திராதல்லவா? (இருவரும் எழுந்து போகிறார்கள். உமையாள் உள்ளே போகிறாள்) நான்காவது களம் இடம் : தெரு மூலை. காலம் : முற்பகல் சுமார் பத்து மணி. (கல்லூரி மாணாக்கர்களான ராமகிருஷ்ணன், விவேகானந்தன் என்ற இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.) ராமகிருஷ்ணன் : இப்பொழுதெல்லாம் எலெக்ஷனுக்கு வேலை செய்வது அதிக கஷ்டமில்லை. விவேகானந்தன் : நன்றாகச் சொன்னாய். இப்பொழுதுதான் அதிக கஷ்டம். ரா : அதென்ன அப்படிச் சொல்கிறாய்? வி : முந்தி, ஓரளவு படித்தவர்கள், ஆஸ்தியுடையவர்கள். இப்படிப் பட்டவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்தது. அவர்களிடத் தில் அபேட்சகரைப்பற்றியோ அவருடைய கொள்கைகளைப் பற்றியோ அதிகம் சொல்லத் தேவையில்லை. அவர்களே தராதரம் அறிந்து ஓட்டுப்போட்டு வந்தார்கள். இப்பொழுதோ, வயதுவந்த எல்லாருக்கும் ஓட்டுரிமை. இவர்களிடத்திலே சென்று அபேட்சர்களைப்பற்றியோ கட்சிகளைப் பற்றியோ சொன்னால், அவர்களுக்கு ஏதாவது புரிகிறதா என்ன? ‘அதெல் லாம் தெரியாது. யார் எவ்வளவு ரூபாய் கொடுப்பார்களென்று’ தான் கேட்கிறார்கள். ரா : ஆனால் படித்தவர்களென்று அழைக்கப்படுகிறவர்கள் இல்லாத பொல்லாத வாதங்களை எழுப்புவார்கள்; குயுக்தி யாகப் பேசுவார்கள். படிக்காதவர்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக்கொண்டு நம்மிஷ்டத்திற்கு ஓட்டுச் செய்வார்கள். வி : இதுதான் ஜனநாயகம்! சர்வ ஜன ஓட்டுரிமையை அடிப் படையாகக்கொண்ட இந்த ஜனநாயகத்தில், மக்களை வாயில் லாப் பூச்சிகள் மாதிரி கருதி அவர்களை ஏய்க்கவோ, அவர் களை ஒரு சில சுயநலவாதிகள் தங்கள் கைக்கருவிகளாக உப யோகிக்கவோ நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன இல் லையா? ரா : அப்படியானால் சர்வாதிகார ஆட்சி நல்லதென்கிறாயா? வி : இல்லை, இல்லை. விவேகமுள்ள ஜன ஆட்சி வேண்டுமென் கிறேன். ரா : அதென்னமோ எனக்குப் புரியவில்லை. (பொறுத்து) ஆமாம்; இப்பொழுது நாம் அரசியல் பேசவில்லையே; எலெக்ஷன் பேசுகிறோம். நீ யாருக்காக வேலை செய்யப் போகிறாய்? வி : நான் யாருக்காகவும் வேலை செய்யப் போவதில்லை. யாருக்கு யோக்கியதை இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறதோ, அவருக்கு நான் ஓட்டுச் செய்யப் போகிறேன்; எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லப் போகிறேன். ராம : உனக்கென்ன அப்பா! நீ அரிஜன். படிப்பு முடிந்தவுடன் உனக்கு வேலை கிடைத்துவிடும். எனக்கு அப்படியில்லையே. யாருடைய தயவோ, சிபார்சோ தேவையாயிருக்கிறதில்லையா? வி : அப்படியானால் படிப்பு முடிந்ததும் உத்தியோகத்திற்குத் தான் போகப் போகிறாயா? ரா : படிப்பதே எதற்காக? உத்தியோகத்திற்குத் தானே? வி : தற்காலச் சூழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. ஆனால் நானென்னவோ உத்தியோகத்திற்காகப் படிக்கவில்லை. அறிவை அதிகரித்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகப் படிக் கிறேன். படித்ததைச் சமுதாய நலனுக்குப் பயன்படுத்த வேண்டு மென்று விரும்புகிறேன். ரா : எனக்கென்னவோ அந்த உத்தேசமெல்லாம் இல்லை. எங்கா வது ஒரு கவர்ன்மெண்ட் ஆபீசில் நூறு ரூபாய் உத்தியோகம் கிடைத்தால் போதும். அதனுடன் என் காலத்தைக் கடத்தி விடலாமென்று பார்க்கிறேன். அந்த நோக்கத்துடன்தான் இப் பொழுது கண்ணுசாமிப் பாவலரின் எலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்கிறேன். வி : உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் எலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்? ரா : என்ன அப்பா, புரியாதவன்போல் பேசுகிறாய்? எலெக்ஷனில் கண்ணுசாமிப் பாவலர் ஜெயித்தால், அவர் சிபார்சைக் கொண்டு எந்த கவர்ன்மெண்ட் ஆபீசிலாவது உத்தியோகம் பெறலாமல்லவா? வி : எலெக்ஷனில் கண்ணுசாமிப் பாவலர் ஜெயிப்பார் என்பது என்ன நிச்சயம்? ரா : எப்படியாவது ஜெயித்துவிடவேண்டுமென்ற நோக்கம் அவருக்கு இருக்கிறது. அதற்காக எந்த முறையையும் கடை பிடிக்க அவர் தயாராயிருக்கிறார். அதனால் ஜெயிப்பார். வி : என்ன அப்பா இது? காந்தியுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற நீ, நோக்கம் வேறே. அதை நிறைவேற்றிக் கொள்ள கையாளும் முறை வேறே என்று சொல்லுகிறாயே? ரா : காந்தியுகம் காந்தியோடு போய்விட்டதப்பா. இப்பொழு தெல்லாம் நோக்கம்தான் முக்கியம்; வழி முக்கியமல்ல. வி : கடவுளே! கடவுளே! ரா : கடவுள் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார் அப்பா! வி : எப்படியாவது தொலை. உன்னைப் போன்ற ஆசாமிகள் அதிகரிப்பார்களானால், ஜனநாயகம் உருப்பட்டாற்போல் தான். (இருவரும் செல்கின்றனர்.) காலேஜ் படிப்பு முதற் களம் இடம் : வீட்டில் கூடம். காலம் : மாலை. (மூலைக்கரை என்னும் கிராமத்தில் வரமருளும் பிள்ளை பெரிய சொத்துக்காரர். சுமார் பத்து வேலி நிலமுண்டு. ஓரே பிள்ளை. உமை யொருபாகன் என்று பெயர். ஸ்கூல் பைனல் படிப்பு முடிந்துவிட்டது. சென்னைக்குச் சென்று ஏதேனும் ஓரு காலேஜில் சேரவேண்டும். அதற்காக பையனைஅழைத்துக்கொண்டு தகப்பனார் சென்னை செல்ல விருக்கிறார். வீட்டிலே அது சம்பந்தமான ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. ஏக தடபுடல். தகப்பனார் வரமருளும் பிள்ளை, தாயார் மீனாம்பிகை அம்மாள், மகன் உமையொருபாகன் ஆகியோர் பேசிக்கொண்டிருக் கின்றனர். முற்றத்தில் வண்டிக்கார இருளாண் டியும், வேலைக்கார சின்னப்பாவும் நின்று கொண்டிருக்கின்றனர். வரமருளும் பிள்ளை : (மனைவியைப் பார்த்து) உன் மகனுக்கு பிடிச்ச எல்லா பலகாரங்களும் பண்ணியாச்சா? மீனாம்பிகை அம்மாள் : என் மகனுக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணியாச்சு; உங்க மகனுக்குப் பிடிச்சதெல்லாம் சொல்லுங்க; பண்ணிவைக்கிறேன். வ : அதுக்கில்லே: இரவோடிரவாய் கண்விழிச்சு இவ்வளவு பஷணங் களையும் சேஞ்சு கொடுக்கறையே, இந்தக் காலத்துப் பிள் ளைங்க, இதுங்களையெல்லாம் தின்னுமா? மெட்ராஸூக்கு போனா ஹோட்டல் இருக்குது; அங்கே போய் இரண்டு ரூபாயை செலவழிச்சாதான் அதுங்க வயிறு ரொம்பும். உன் பொரி உருண்டையையும் முறுக்கையுமா இவன் தின்னப் போறான்? எனக்கென்னமோ தோணலை................ஏன் தம்பீ? உமையொருபாகன் : சும்மா இருங்களேன் அப்பா! அம்மா சேஞ்சு கொடுக்கிறதை சேஞ்சு கொடுக்கட்டுமே; ஏன் வேணாமின்னு சொல்லணும்? வ : ஏன் வேணாமின்னு சொல்லணும்; சேஞ்சு கொடுக்கிறதை கொடுக்கட்டும்; அங்கே கொண்டுபோய் கடலிலே கொட்டிப் புட்டா போகிறது என்று நினைக்கிறையோ? மீ : நம்ப பிள்ளை அப்படியெல்லாம் ஓண்ணும் செய்யாது. நீங்களுந் தான் கூட போறீங்களே, கொஞ்சம் கவனிச்சுக்க மாட்டீங்களா? வ : (நமட்டுச் சிரிப்புடன்) நீ கொடுக்கிற பலகாரத்தையெல்லாம் அவன் ஒழுங்காக தின்கிறானா என்று கவனிச்சுக்கத்தான் நான் போறேனாக்கும்? நல்லா ஏற்பாடு பண்ணி கொடுத்தே எனக்கு உத்தியோகம்? உ : ஏன் அப்பா, அம்மாவை வம்பு பண்றீங்க? மீ : தம்பீ! நான் சொல்றத்தைக் கேளு. கண்ட இடத்திலேயும் போய் கண்டதையும் தின்னாதே. இன்னும் பதினைஞ்சு நாளைக் காவது வரும் நான் சேஞ்சு வைச்சிருக்கிற பட்சணமெல்லாம். அப்புறம் இங்கிருந்து யாராவது வந்தாங்களானா அவங்ககிட்ட கொஞ்சம் சேஞ்சு கொடுத்தனுப்பறேன். வ : ஆமாம் அப்பனே, மாசத்திற்கு இரண்டுதரம் பட்சண பார்சல் வந்துகொண்டிருக்கும். உனக்குக் கவலையே இல்லை! மீ : நான் எது சொன்னாலும் பரிகாசமாகத்தான் இருக்கும் இப் பொழுது. வ : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பழைய காலத்துப் பட்சணங் களைப் பண்ணிக் கொடுக்கிறாயே. புது மாதிரியாக ஏதேனும் சேஞ்சு கொடுக்கக்கூடாதா என்றுதான் சொல்கிறேன். மீ : பழைசு என்று எதெதை நீங்கள் பரிகாசம் பண்ணுகிறீர்களோ அவைகளெல்லாந்தான் நீடித் திருப்பது : கெடாத சுபாவ முடையது; நல்லதைச் செய் வது. புதிசு என்று சொல்லி எதெதைப் பிரமாதப்படுத்து கிறீர் களோ அவையெல்லாம் சீக்கரத்திலே கெட்டுப்போகக் கூடியவை; அவைகளை உப யோகிக்கிறவர்களையும் கெடுக்கக்கூடியவை. வ : பழமையையும் புதுமை யையும் பற்றி அருமையான உபந்நியாசம்! மீ : அப்படித்தான் இருக் கட்டுமே; மேலே நடக்க வேண் டியதற்கு ஏற்பாடு செய்யுங்க. வ : ஏற்பாடென்ன? அடே இருளாண்டி! வண்டிக்கு மை கிய் எல்லாம் போட்டாச்சா? கூண்டு கீண்டெல்லாம் சரியாயிருக்குதா? இருளாண்டி : எல்லாம் சரியாயிருக்குது எஜமான்! வ : வண்டியிலே கொஞ்சம் கனமா வைக்கலை போட்டு மேலே அந்த சின்ன ஜமக்காளத்தைப் போடு. இரவு இங்கேயே படுத்துக்கோ. விடியற்காலை வெள்ளி முளைச்சதும் வண்டியைக் கட்டணும். இ : சரி, எஜமான்! வ : என்ன சின்னப்பா, நீ வண்டியோட ரெயில்வே ஸ்டேஷனுக்கு வரையா? சின்னப்பா : ஆமாங்க. தலைமுறை தலைமுறையா இந்த வூட் லேயே வேலை சேஞ்சு வந்ததினாலே மனசு கேக்கமாட் டேங்குது. அதனாலே இரண்டொரு வார்த்தை சொல்றேன், கோவிச்சுக்காதெங்கே. சின்ன எஜமானை, இப்போ பட்டணத் துக்கு அனுப்பாகட்டி என்னா குடிமுழுகிப்போவுது? பட்ட ணத்துக்குப் போனா சம்பாரிச்ச சொத் தெல்லாம் கரைஞ்சல்லா பூடும்? இதுவரைக்கும் படிச்ச படிப்பு போதாதா? மீ : சரி; இவன் உபதேசத்திற்கு ஆரம்பிச்சுட்டானா? வ : இரு; அவன் நல்லதுக்குத்தானே சொல்கிறான். சி : பெரிய எஜமான், எஜமானியம்மாளை கண்ணாலம் பண்ணி வூட்டுக்கு வரப்ப முதற்கொண்டு எனக்கு நல்லாத் தெரியுமே. ஏன் அம்மா, நானுந்தான் கேக்கறேன், பண்ணையை நிருவாகம் பண்றதுக்கு இந்தக் கோண படிப்பு ஓணுமா? அதுக்குந் தான்,கோண எழுத்து கொஞ்சம் தெரிஞ்சிருக்குதே நம்ப சின்ன எஜமானுக்கு? அது போதாதா? நம்ப பெரிய எஜமான் இங்கி லீசு படிச்சாங்களா? அவங்க ஐயா இங்கிலீசு படிச்சாங்களா? அவங்கள்ளாம் சொத்தோடு சொத்து சேத்தாங்க. அதே அந்த கீழக்கரை கோபாலையர் குடும்பம் போன கதியே பாத்தீங் களா? மீ : அவங்களுக்கென்ன? இரண்டு பிள்ளைகளும் மெட்ராஸிலே வக்கீலாயிருக்காங்கோ. சி : வைக்கலுதானுங்க! அவங்க வூட்டு சமாசாரம் எனக்கு நல்லா தெரியும். எங்க சித்தாப்பார் மகன் அங்கேதான் வேலை சேஞ்சிக் கினு இருந்தான். அந்த கோபாலையா இருக்கக் கொள்ள பதினஞ்சு வேலி நிலம் இருந்துச்சு. பெரிய தோப்பு ஒண்ணு இருந்துச்சு. நல்லாத்தான் வாழ்ந்தாங்க; ரெண்டு பொண்ணுக்கு கண்ணாலம் பண்ணாங்க; ரெண்டு புள்ளையை படிக்கவைச் சாங்க. கண்ட பலன் என்னான்னு கேட்டீங்கன்னா, அவ்வளவு சொத்தும் போயி, ரெண்டாயிரம் ரூபா கடன் இருக்குதாம். வ : இவன்தான் கணக்கெழுதினவன் மாதிரி சொல்றான் பாரு. சி : பொய்யில்லை. எஜமான்! நீங்க வேணுமின்னா விசாரிச்சு பாருங்க. மீ : ஆமா, விசாரிச்சாங்க! இப்போ நீ என்னா பண்ணனுமின்றே? சி : சின்ன எஜமான் படிச்ச படிப்பு போதும். இனி மேல் ஊரோ டவே இருந்து, நிலபுலன்களை பாத்துகிட்டு இருக்கட்டுமின்னு சொல்றேன். வ : அம்மா என்ன நினைக்கிறாங்கன்னா, நல்ல மருமகள் வரணு மாம். அதுக்காக மகன் நல்லா படிக்கணுமாம். நல்லா படிச் சிருந்தாதானே நாலுபேரு பொண்ணை கொடுக்கிறேன்னு வருவாங்க. சி : ஊரிலே காணி பூமி இருந்து, நல்ல குணமுமிருந்தா, பொண்ணுங்க வராதயா போவுது? வ : சின்னப்பா! நீ பத்தாம் பசலி ஆள்மாதிரி பேசறே. இந்தக் காலத்திலே சொத்தையும் குணத்தையும் யார் கவனிக்கிறாங்க? படிப்புக்குத்தான், அதுவும் பீ.ஏ., எம்.ஏ. படிப்புக்குத்தான் பெருமை. பீ.ஏ. பாஸ் பண்ணிவிட்டு பத்து ரூபா உத்தியோகத் திலே இருந்தா கூட அவனுக்குத்தான் பொண்ணை கொடுக்கி றேன்னு வராங்களே தவிர, சொத்து சுதந்திரத்தையும் நல்ல நடவடிக்கையையும் யார் லட்சியம் பண்றாங்க? சி : அப்படியானா, நல்ல பொண்ணை கட்டணுமின்னு, சின்ன எஜமானைப் படிக்கவைக்கறிங்கோன்னு சொல்லுங்க. உ : சரி அப்பா, அவனோடு என்ன தர்க்கம்? வேலைக்காரனை சரிசமமா வைச்சுப் பேசவே கூடாது. வ : அப்படிச் சொல்லிவிடாதே தம்பீ! நான் சிறுபிள்ளையாயிருந்த காலத்திலிருந்து அவனுக்கு என்னை நல்லாத் தெரியும். அந்த ஒரு சுவாதீனத்திலே சொல்கிறான். நம்ம குடும்பத்திலே அக்கரை யிருப்பதனாலேதான் சொல்கிறான்? உ : இருந்தாலும் வேலைக்காரனை சரிசமமாக வைச்சு பேசக் கூடாது. சி : காலத்தின் போக்கை பாத்தீங்களா எஜமான்? இந்த வூட்லே ஆண்டை அடிமை வித்தியாசமில்லாமே, தாயும் பிள்ளையும் போல இதுவரை நடந்துவந்திச்சு. இப்போ இந்த குயந்தே வந்து, ரெண்டு கோண எழுத்தே தெரிஞ்சுக்கிட்டு, எஜமான் வேறே, ஆள்காரன் வேறென்னு நியாயம் சொல்லுது. வ : நீ அதற்காக வருத்தப்படாதே சின்னப்பா. பிள்ளை மெட்ராஸி லேபோய் படிக்கணுமின்னு தாயார் இஷ்டப்படறாங்க. மகனும் போகணுமின்னு பிடிவாதம் பண்றான். எல்லா ஏற்பாடுகளும் சேஞ்சாச்சு. இனி நிறுத்தமுடியாது. அவங்க இஷ்டப்படி போய் வரட்டும். சி : நல்லா போய் வரட்டும் எஜமான்! மனசிலே பட்டதை கள்ளங் கவடில்லாமே சொன்னேன். அவ்வளவுதான். பொன்னியம்மன் கிருவையாலே சின்ன எஜமானுக்கு ஒரு குறைவும் வராது. வ : சரி, எல்லோரும் போய் படுத்துக்குங்கோ. விடியற்காலம் எழுந் திருக்கணுமில்லே. இ : ஆமாம் எஜமான்! எல்லாரும் நிம்மதியாக தூங்குங்க. நான் எழுப்பறேன். காலா காலத்திலே ரெயிலிலே கொண்டு சேத்துட் றேன். (எல்லாரும் கலைகிறார்கள்.) இரண்டாவது களம் இடம் : சென்னையில் ராவ் பகதூர் கார்மேகம் பிள்ளை வீடு. காலம் : காலை. (ராவ் பகதூர் பிள்ளை, தமது நண்பர் சிலருடன், வீட்டின் முன் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது வரமருளும் பிள்ளை, தமது மகன் உமையொருபாகனுடன் பிரவேசிக்கிறார்.) கார்மேகம் பிள்ளை : வாங்க, வாங்க! பிள்ளைவாள் ஊரிலே யிருந்து எப்பொழுது வந்தாப்போலே? உட்காருங்கோ, தம்பி யாரு? உட்காரு தம்பீ! (தந்தையும் மகனும் அங்கே போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்துகொள்கிறார்கள்.) வரமருளும் பிள்ளை : போனவாரம் ஊரிலேயிருந்து வந்தேன். கா : ஓ ! ஒரு வாரமாச்சா? எங்கே தங்கியிருக்கிறீங்க? வ : ‘அன்னக்களஞ்சியம் லாட்ஜி’ லே தங்கியிருக்கிறேன். கா : ஊரிலே எல்லாரும் சௌக்கியந்தானே? என்ன விசேஷம் இப்படி மெட்ராஸ் பக்கம் கருணை வைத்தது? மெட்ராஸ் என்றால்தான் உங்களுக்கு அவ்வளவு பிடிக்காதே. வ : நம்ம மகனை காலேஜிலே சேர்க்கணும். அதுக்குத்தான் வந்திருக்கேன். கா : அப்படியா, ரொம்ப சந்தோஷம். எந்த காலேஜிலே சேர்க்கணு மின்னு பிரியப்பட்றீங்கோ? வ : எந்த காலேஜிலே இடமிருக்கிறதோ அந்த காலேஜிலே சேர்க்க பிரியந்தான். கா : அப்படியானா எந்த காலேஜிலேயாவது ‘ட்ரை’ (கூசல-பிரயத் தனம்) பண்ணிப் பார்த்தீங்களா? உ : எல்லா காலேஜ்களிலும் ‘ட்ரை’ பண்ணி பார்த்தோம். எங்கேயும் ‘சீட்’ (ளுநயவ-இடம்) இல்லையென்று சொல்லிவிட் டார்கள். வ : (சிறிது சலிப்புடன்) மோட்ச லோகத்திலே இடம் கிடைச்சாலும் கிடைக்கும் போலே இருக்குது. இந்தக் காலேஜ்களிலே இடம் அகப்படுகிறது மிகவும் சிரமமாய் இருக்கிறது. (கூட இருக்கிற நண்பர்களெல்லோரும் சிரிக்கிறார்கள்.) கா : பிள்ளைவாள் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாற் போலிருக்குது இந்த ஒரு வாரமா? வ : ஆமாங்க, ஒவ்வொரு காலேஜிலேயும் எவ்வளவு நேரம் கால் கடுக்க நிற்கிறது? பலன் ஏதாவது உண்டா? கடைசியில் கையைத்தான் விரிக்கிறார்கள் எல்லாரும். அவர்கள் கேட்கிற கேள்விகளோ, செஷன்ஸ் கோர்ட்டிலேகூட அப்படி ‘க்ராஸ்’ (ஊசடிளள-குறுக்கு விசாரணை) பண்ணமாட்டார்கள். கா : ஆமாம்; இப்பொழுது காலேஜிலே ‘சீட்’ அகப்படறது கொஞ்சம் சிரமம்தான். கா-பி-யின் ஒரு நண்பர் : காலேஜில் என்ன? செகண்ட் ஸ்டாண்டர்ட்’ ‘தர்ட் ஸ்டாண்டர்ட்’ (இரண்டாவது, மூன்றா வது வகுப்பு) களிலே கூட ‘சீட்’ இல்லேன்னு சொல்றாங்க. மற்றொரு நண்பர் : அதனாலேதான் நம்ப பேரப்பிள்ளைங்களை வீட்டிலேயே படிக்கவைச்சு, நேரே ‘பஸ்ட் பாரத்திலே’ கொண்டு சேர்த்துவிடலாமின்னு தீர்மானம் பண்ணியிருக்கேன். கா : அதுதான் நல்ல ஏற்பாடு. வ : நாசமாய்ப்போச்சு இந்தப் படிப்புக்குப்படுகிற பிரயத்தனம். இதற்குப்படுகிற சிரமத்திற்குப் பதிலாக இரண்டு ஏக்கரா நிலம் பயிரிட்டாலும் ஒரு வருஷச் சாப்பாட்டுக்கு நெல் கிடைக்கும். ஒரு நண்பர் : படித்தால் உத்தியோகம் கிடைக்குமே? வ : ஆமாம், உத்தியோகம் மட்டுமென்ன, லேசாகக் கிடைக் கிறதாக்கும்? புத்திசாலித்தனத்துக்கும் திறமைக்குமா இப் பொழுது உத்தியோகம்? ஜாதிக்குத்தானே இப்பொழுது உத்தி யோகம்? கா : ஏது, பிள்ளைவாள் ‘பாலிடிக்ஸ்’ (ஞடிடவைiஉள- அரசியல்) பேச ஆரம்பிச்சுட்டீங்க? வ : நியாயத்தைத்தான் பேசறேன். கா : காலம் நியாயமாயில்லையே. நியாயமா போனீங்களே, காலேஜிலே ‘அட்மிஷன்’ (ஹனஅளைளiடிn - சேர்ந்து கொள்ள அனுமதி) கிடைச்சுதா? வ : அதுக்குத்தான் உங்ககிட்டே வந்தேன். நீண்ட கால சிநேகித மல்லவா? கா : அப்படி வாங்க வழிக்கு. மெட்றாஸூக்கு வந்து ஒரு வாரமா இந்த சிநேகிதர் ஞாபகம் வரவில்லை பார்த்தீங்களா? வ : உங்களுக்கு அனாவசியமாகத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னுதான் வரவில்லை. கா : சரி தம்பி! என்ன மார்க்குகள் வாங்கியிருக்கே, சொல்லு? உமையொருபாகன் : இங்கிலீஷில் 53; ‘ஹிஸ்டரி’ (ழளைவடிசல-சரித்திரம்) யில் 49. கா : போதும்; போதும். என்ன பிள்ளைவாள், இவ்வளவு குறைச்சலா மார்க் வாங்கியிருந்தா எப்படி காலேஜிலே ‘அட்மி ஷன்’ கிடைக்கும்? வ : சிபார்சு இருந்தால் நடக்குமின்னு சொல்றாங்களே. கா : நியாயமா நடக்கணுமின்னு சொல்றீங்க, சிபார்சுக்கு வறீங்க! (பொறுத்து) இருக்கட்டும். போன வாரமே வந்திருந்தா நிச்சி யமா எந்த காலேஜிலாவது ‘அட்மிட்’ பண்ணியிருப்பேன். ஒரு நண்பர் : பிள்ளையவர்கள் வாய் திறந்து சொன்னால் போதுமே, எந்தக் காலேஜிலும் சேர்த்துக்கொண்டிருந்திருப் பார்களே....................ஹிஹிஹி............... கா : யாராரோ சுபார்சுக்கு வருகிறார்கள். அவர்களெல்லாருக்கும் செய்து வைக்கிறேனே; நீங்கள் கொஞ்சம் முந்திக்கொண் டிருக்கக்கூடாதா? மற்றொரு நண்பர் : சிநேகிதர்களுக்கு உபகாரம் செய்வதை ஒரு விரதமாகவல்லவா கொண்டிருக்கிறார் நமது பிள்ளையவர்கள். கா : மூலைக்கரைப் பிள்ளைவாள்! நாளை நின்று வாருங்கள். நான் விசாரித்து வைக்கிறேன். எந்த ‘க்ரூப்’ (ழுசடிரயீ-பாடத் தொகுதி) தம்பீ! வ : எந்த ‘க்ரூப்’ பிலே இடம் அகப்பட்டாலும் பரவாயில்லை. கா : சரி, நாளை மறுதினம் வாருங்கள் பிள்ளைவாள்! போயிட்டு வரீங்களா? நமஸ்காரம். (வரமருளும் பிள்ளையும் உமையொருபாகனும் செல்கிறார்கள்.) கா : (நண்பர்களிடம்) பொழுதுபோனா, பொழுது விடிஞ்சா,இந்தத் தொல்லைதானுங்க நமக்கு. அந்தக் காலேஜிலே அட்மிஷன் வேணும், இந்த உத்தியோகத்துக்கு சிபார்சு வேணும். அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கணும். இந்தப் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதணும், இப்படி தினம் மணிக்கு பத்து பேரா வந்து தொந்தரவு பண்றாங்க. என்ன பண்றது? ஒரு-ந : “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே” என்று தாயுமானவர் கூறி யதைப்போல்................. கா : ஆமாம், அவருக்கென்ன சும்மா சொல்லிவிட்டுப் போய் விட்டார். நாம் இன்புற்றிருந்தால்தானே மற்றவர்களை இன்புற்றிருக்கச் செய்யமுடியும்? (பொறுத்து) நேரமாகிறது. நாளைக்கு சந்திப்போம். (எல்லோரும் கலைந்து போகிறார்கள்.) மூன்றாவது களம் இடம் : மூலைக்கரை கிராமத்தில் வரமருளும் பிள்ளை வீடு. காலம் : முற்பகல். (வரமருளும் பிள்ளையும் அவர் மனைவி மீனாம்பிகை அம்மாளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.) வ : (உமையொருபாகனிடமிருந்து வந்த கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு) இரண்டாந்தேதி இருநூறு ரூபா அனுப் பிச்சேன்; தேதி இன்னிக்கு பதினெட்டு; இன்னும் எனக்கு இருநூறு ரூபா அனுப்பு என்று எழுதுகிறானே, என்னஅர்த்தம்? மீ : என்ன செலவோ! வ : செலவு.............. மண்ணாங்கட்டி................ கிராமத்திலே ரொக்கமா எப்பவும் கையிலே இருக்குமா? காலேஜிலே சேர்த்து ஆறு மாசமாகல்லே.................... இரண்டாயிரம் கடன் வாங்கியாச்சு. மீ : நாளைக்கே இதற்கு வட்டிபோட்டு சம்பாதிச்சு கொடுத் துடுவான். வ : கொடுப்பான், சம்பா விரைச்சு கொடுப்பான்! பார்த்துண்டே இரு. மீ : என்னை என்ன பண்ணச் சொல்றீங்க இப்ப? வ : இவனை காலேஜிலே சேர்க்கப்பட்டபாடு பெரும் பாடாப் போச்சு. இவனுக்காக போகாதவங்க கிட்ட எல்லாம் போயி பல்லை இளிச்சுண்டு நிக்கவேண்டியிருந்தது. மீ : ஏன் அப்படி? வ : இல்லாது போனா காலேஜிலே இடம் கிடைக்காதுபோலே இருந்தது. அந்த மூங்கை பிள்ளை மகன் கார்மேகம் சின்ன வயசிலே நம்ப வீட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கு காத்துகிணு நிப்பான். இப்போ என்னாடான்னா, ராவ் பகதூர் கார்மேகம் பிள்ளையாம், மெட்ராஸிலே ஒரு பெரிய மனுஷனாம் அவன். அவனையெல்லாம் சிபார்சு பிடிக்கவேண் டியிருந்தது. மீ : நல்லா படிச்சு முன்னுக்கு வந்தானாக்கும்? வ : படிச்சான்,அவன் படிச்சதும் நான் படிச்சதும் ஒண்ணுதான். ஊரை அடிச்சு உலையிலே போட்டு எப்படியோ பெரிய மனுசனாப்பூட்டான். மீ : அவன் எப்படியானா போறான். இந்த கடுதாசிக்குக் பதில் எழுதி போடுங்க. வ : பதில் என்ன, இல்லைன்னு எழுதிப் போடவேண்டியதுதான். மீ : கேட்டதுக்கு பாதியாவது அனுப்பிச்சு வையுங்க. ண வ : என்னமோ அவன் பீ.ஏ.படிச்சு முடிக்கிறதுக்குள்ளே நம்ம நிலத்தையெல்லாம் கடன்காரன்தான் எடுத்துக்கொண்டு போகப் போகிறான். மீ : ஏன் அப்படிச் சொல்லணும்? நல்ல வாக்குதான் வாயிலே வரட்டுமே. வ : மனசு நல்லா இருந்துதானா வாயிலே நல்ல வார்த்தை வரும். மீ : மனசு என்ன கெட்டு போச்சு இப்போ? ஒரு பிள்ளை படிக்கி றதுக்கு இப்படி கஷ்டப்பட்டா ஆகுமா? வ : படிப்பைப் பார் படிப்பு! வாழ்க்கையிலே லவலேசமும் பிரயோஜனப்படாத படிப்பு என்ன படிப்பு! காலேஜிலே படிச்சவங்களுக்கு உலகத்தைப் படிக்க தெரியமாட்டேங்குது. உலகத்தைவிட்டு தாங்கள் வேறேன்னு நினைக்கிறாங்கோ. இதனாலே அவங்களுக்கும் பிரயோஜனமில்லை; உலகத்துக்கும் பிரயோஜனமில்லை. (இதைக் கேட்டு மீனாம்பிகை அம்மாள் முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே போய்விடுகிறாள். வரமருளும் பிள்ளை தெருத் திண்ணைக்குப் போய் சார்மணையில் சாய்ந்து கொள்கிறார்.).