வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 5 மாஜினி, மாஜினியின் மனிதன் கடமை, மாஜினியின் மணிமொழிகள் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 5 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16 + 244 = 260 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப் படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்க வேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘ãsh£nlhÉ‹ muáaš’, ‘uh#jªâu í¤jfs¥ ãur§f§fŸ’, %Þn[hÉ‹ ‘rKjha x¥gªj«’, khÍÅÆ‹ ‘kÅj‹ flik’, ï§f®rhÈ‹ ‘khÅl rhâÆ‹ Rjªâu«’, r‹ah£br‹Å‹ ‘Rjªâu¤â‹ njitfŸ ahit? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘br‹¿Lå® v£L¤ â¡F«; fiy¢ bršt§fŸ ahî« bfhz®ªâ§F¢ nr®¥Õ®! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலை முறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண் கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் நுழையுமுன்... மாஜினி விடுதலைப் பயிருக்கு விதை போட்டவன்  இத்தாலிய விடுதலைக்கு விதைபோட்ட மூவருள் முதன்மை யானவன் மாஜினி.  சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் எனும் முப்பெரும் முழக்கங்களைக் கோட்பாடுகளாகக் கொண்டவன்.  இவன் சிதைக்கப் பட்டும், அடக்கப்பட்டும், குறுகிய வட்டத்திற்குள் பிணைக்கப்பட்டும், அடிமை இருளில் அடைப் பட்டுக் கிடந்த இத்தாலிய மண்ணையும், மக்களையும் மீட்டெடுத்தவன்.  தன்னந்தனியனாய் உணவும், நீரும் இன்றி காட்டு வழிகளில், மலைப்பாதைகளில், பாலைவனப் பகுதிகளில் நெடுந் தொலைவு நடந்து சென்றானே! எதற்காக? தாய்நாட்டு விடுதலைக்காக இத்தாலியர்கள் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நடப்பதற்கு அடித்தள மிட்டவன். பண்பின் விளைநிலம்  பொறுப்பான பொறுமை, தன்னடக்கம், உழைப்பு, ஒழுக்கம், பொதுநலம், விடுதலையுணர்வு, குமுகாய உணர்வு, கடமைகள், உரிமைகள், முயற்சி, தன்மதிப்பு, அன்பு, ஈகை, நம்பிக்கை, உழைப்பு, பணத்திற்கோ பதவிக்கோ புகழுக்கோ தன்னை அடிமைப்படுத்திக் கொள்ளாமை ஆகிய பண்புகள் வாய்க்கப் பெற்றவன் மாஜினி.  ‘பெண்ணின் பெருமையும் - தாய் அன்பும்’; ‘தான் வருந்திப் பிறருக்கு உதவுவதும்’; ‘தனக்கு யாரேனும் கடுகளவு உதவி செய்தாலும் அதற்கு மலையளவு செய்வதும்’; ‘பிறருக்கு மலையளவு உதவி செய்திருந்தாலும் கடுகளவு நன்றியும் எதிர்பாராததும்’; ‘மற்றவர் துன்பம் கண்டு கண்ணீர் வடித்ததும்’; ‘தன்னலம் மறந்து பிறர்நலம் பேணியதும்’; ‘பயனைப் பாராது நல்லதைச் செய்வதும்! என்பன இவனின் உயர்ந்த பண்பு நலன்கள். பண்பின் விளைநிலத்தைப் படியுங்கள். வீரத்தால் வேலி போட்டவன்  ஒருநாட்டின் விடுதலை வெளிச்சம் எப்பொழுது பயன் கொடுக்கிறது தெரியுமா? அந்த நாட்டு மக்கள் தங்கள் கையாலேயே விடுதலை விதையைத் தமது மண்ணில் ஊன்றி, தங்களுடைய வீரத்தால் அதற்கு வேலி போடும் போதுதான் அந்தப் பயனை அடையமுடியும் என்று சொல்லியவனின் வரலாறு.  எந்த இனம் தனது சொந்த முயற்சியைக் கொண்டு விடுதலையை வென்றெடுக்க வில்லையோ, அந்த இனத் திற்கு விடுதலைப் பெறத் தகுதி இல்லை என்று கூறியவனின் வரலாறு.  கட்டாயக் கல்வி முறை, சாதிப் பூசலற்ற, ஏற்றத் தாழ்வற்ற, பொருளியல் புரட்சியைச் செயல் திட்டமாகக் கொண்ட வனின் வரலாறு. இளம் இத்தாலிய இயக்கம்  இத்தாலிய மக்களைச் சிந்திக்க வைத்து, செயலுக்குத் தூண்டிய இயக்கம். உலகில் தோன்றிய இளையோர் இயக்கங்களுக்கு ஊற்றுக்கண்ணாய் இருந்த இயக்கம்.  தாய் நாட்டு விடுதலையைப் பெற்றெடுப்பதும், பேணிக் காப்பதும், ஒற்றுமையை நிலை நாட்டுவதும், இத்தாலியின் எதிர்கால வாழ்விற்கு வலுவான அடித்தளத்தையும், இத்தாலிய மக்களுக்கு மொழி, இன, நாட்டு உணர்வு களையும் ஊட்டிய இயக்கம். குறைபாடும் - முரண்பாடும் - நிறைவும்  மத உணர்வை வளர்த்தெடுக்கும் நோக்கம் இவன் வரலாற் றில் குறைகள். மத உணர்வைக் கடைப்பிடித்தது முரண்பட்ட செய்திகள். மதம் தமிழ் இனத்தைச் சீரழித்ததை நாம் உணர்ந்திருக்கிறோம்; இன்றும் உணர்கிறோம். பெரியாரின் கொள்கைகள் பேசப்படும் மண் தமிழ்மண். மத உணர்வு தொடர்பான செய்திகளைத் தள்ளுவோம்; பெரியாரின் கொள்கைகளைப் பேணுவோம்.  நீ செல்ல வேண்டிய பாதை தெளிவாய் உள்ளது; துயரங் களையும், துன்பங்களையும், ஏமாற்றங்களையும் பொருட் படுத்தாதே; மக்களே மக்களுக்கான புரட்சியை முன் னெடுக்க வேண்டும்; இலக்கை அடைவதற்கு எல்லாத் துன்பங் களையும் தானாகவே வலிந்து ஏற்றுக் கொண்டதும்; அதிகாரத்தையும், வெற்றியையும் தூக்கி எறிந்து துறவைப் போற்றியதும் இவன் வரலாற்றில் நிறைவான செய்திகள். விடுதலை முன்னோடி  இந்தியாவிற்குக் காந்தியடிகள், உருசியாவுக்கு இலெனின், அயர்லாந்துக்கு டிவேலரா, சீனாவிற்கு மாசேதுங், வியட்நாமுக்கு கோசிமின், கியூபாவுக்குப் பெடரல் காட்ரோ, பாலத்தீனத்திற்கு யாசர் அராபத் போன்ற தலைவர்களுக்கு விடுதலை உணர்வு வருவதற்கு முன்னோடியாக இருந்தவன் மாஜினி.  இவனைப் பற்றி தெரிந்துகொள்வது நமக்குள்ள அறியா மையை அகற்றிக் கொள்வதாகும் - ஆங்கிலேயப் புலவன் தாம கார்லைல் கூற்று. இவன் பட்ட விடுதலைத் தழும்பு களை, வரலாற்றுச் சுவடுகளை தமிழர்களே! படிப்போம்! தாய் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்வோம்! நமக்குள்ள அறியா மையை அகற்றுவோமா?  மாஜினி வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் ஒரு மனிதனாகவும் வாழ்ந்து வந்தமையால்தான் அவனுடைய வாழ்க்கை ஒரு சோக நாடகமாகவுள்ளது. இவனுடைய உருக்கமான வாழ்க்கையை இந்நூலின் மூலம் அறியுங்கள்.  எத்தனை முறை புரட்சிகள், எத்தனை முறை தோல்விகள் ஆயினும் மனிதத் தன்மையெனும் குன்றில் ஏறி நின்றவன். இவன் வாழ்க்கையை அறிந்து கொள்வது நமது வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுக் கொள்வதாகும்.  இத்தாலிய மண்ணின் விடுதலைக்கு அரும்பாடுபட்டவன். தாய் நாட்டு விடுதலைக்காக தாங்க முடியாத துன்பங்களைத் தோளில் தூக்கிச் சுமந்தவன். தோல்வியிலும் துவளாத மனத்தினன். இவனைப் படிப்பது விடுதலையின் பெருமையைப் படிப்பதாகும்.  இவன் ஒரு மாமனிதன். பெருமனம் படைத்த பேராளன். இவனைப் படிப்பது நம் அறியாமையைப் போக்கிக் கொள்வதற்கு உதவும். உரிமைகளைக் காட்டிலும் கடமைகளை அதிகம் வலியுறுத்தியவன்.  இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்திய சிறந்த அரசியல் சிந்தனையாளன். ஆத்திரிய பேரரசின் கொடுங்கோன்மைக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இத்தாலி திருநாட்டை ஒன்றுபடுத்தி ஒன்றுபட்ட இத்தாலிக்காக போராடியவன். இறுதிவரையில் குடியரசுக் கோட்பாட்டில் உறுதியாயிருந்தவன்.  மாஜினி மனிதத்தன்மையின் மேன்மையை உயர்த்திக் காட்டியவன். கடமையை தம் வாழ்வின் உயிர்நிலையாகக் கொண்டவன். மாந்த நேயத்தின் மகுடத்தில் வைத்துப் போற்றத்தக்கவனை நீங்களும் படியுங்கள்.  கடவுள் கொள்கை, கடவுள் மறுப்புக் கொள்கைப் பற்றி மிக எளிய சொற்களில் தெளிவான நடையில் சாமிநாத சர்மாவின் உரைநடைப் போக்கு அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கது. * * * நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . மாஜினி முன்னுரை கி.பி.பத்தொன்பதாவது நூற்றாண்டில், இத்தலி சுதந்திர வாழ்வு பெற்றது. இதற்காகப் பாடுபட்டவர் மூவர். ஒருவன் மாஜினி; இன்னொருவன் காரிபால்டி; மற்றொரு வன் காவர். இத்தலியின் ஆத்மா, மாஜினி; ஆயுதம், காரிபால்டி; அறிவு, காவர், இப்படி வருணிக்கிறான் ஜார்ஜ் மெரிடித்1 என்ற ஆங்கிலக் கவிஞன். இந்த மூவரும், ஒரே லட்சியத்திற்காக அதாவது இத்தலியின் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்; அதற்காக ஒன்று சேர்ந்தார்கள். ஆனால் மூவரும் வேறு வேறான சுபாவமுடையவர்கள்; பரபரம் பகைமையும் பொறாமையும் கொண்டவர்கள். இது வேடிக்கை. இந்த மூவரில், உலக விவகாரங்களைப் பொறுத்த மட்டில், யார் அதிகமான வெற்றியடைந்திருக்கிறார் களென்று பார்த் தால், முதலாவது காவர்; இரண்டாவது காரிபால்டி; மூன்றாவது மாஜினி. ஆனால் மனிதத்தன்மை என்னும் தராசில் இந்த மூவரையும் வைத்து நிறுத்துப் பார்க்கிற போது, மாஜினியே அதிக எடையுடையவனாகக் காணப் படுகிறான்; அவனுக்கு அடுத்தது காரிபால்டி; மூன்றாவது காவர். மாஜினியின் மனிதத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக, அவனது இளமையில் ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. ஆறுவயது நடக்கிறது அவனுக்கு. நிரம்ப மெலிந்த தேகம். ஒரு நாள் தாயார் அவனை வெளியிலே நடத்தி அழைத்துக் கொண்டு போனாள். வழியில் ஒரு கிழப் பிச்சைக்காரன் தென்பட்டான். அவனை உற்றுப் பார்த்தான் மாஜினி. தாயாரின் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அந்தப் பிச்சைக்காரனிடம் ஓடினான்; அவன் கழுத்தைத் தன் கைகளால் கட்டிக்கொண்டான்; முத்தம் கொடுத்தான்; அம்மா, இவனுக்கு ஏதேனும் கொடுங்கள் என்று தழுதழுத்த குரலில் கூறினான். அந்தப் பிச்சைக் காரன் மகிழ்ச்சி பொங்க, அம்மா, இவனை நன்றாகப் போஷித்து வாருங்கள்; பிற்காலத்தில் இவன் எல்லா ஜனங்களிடத்திலும் அன்பு செலுத்துகிற ஒருவனாக இருப்பான் என்று ஆசீர்வதித்துவிட்டுச் சென்றான். ஆங்கில மொழிப் புலவனாகிய தாம கார்லைலும் மாஜினியும் கருத்து வேற்றுமை மிகவுடையவர்கள்; ஆனால் நெருங்கிய நண்பர்கள். முன்னவன், பின்னவனைப் பற்றி, லண்டன் டைம் பத்திரிகையின் 15-6-1844 இதழில் எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:- மாஜினியைப் பல வருஷ காலமாகத் தெரிந்து கொண் டிருக்கும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. உலக விவகாரங்களைப் பற்றி அவனுக்குள்ள அனுபவ ஞானம், திறமை முதலியவைகளைப் பற்றி நான் எந்த விதமான அபிப்பிராயப்பட்டபோதிலும் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் நான் தாராளமாக அபிப்பிராயம் கூறமுடியும். அஃதென்னவென்றால், நான் சந்தித்த பல மனிதர்களைக் காட்டிலும் மாஜினி அதிவிவேகி; சீல சுபாவ முடையவன்; உத்தமமான நாணயதன்; ஜீவகாருண்யமுடையவன்; பெருமனம் படைத்தவன். மகான்கள் என்று அழைக்கப் படுவதற்குத் தகுதியுடையவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலரில் மாஜினி ஒருவன். இந்த மகான்கள், மகான் தன்மையென்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் அனுஷ்டித்துக் காட்டி வருகிறார்கள். ... மாஜினியைப் பற்றித் தெரிந்து கொள்வது, நமக்கு அறியாமையை அகற்றிக் கொள்வ தாகும். மாஜினி, புரட்சிகள் பல நடத்தினான்; ஆனால் தோல்வியே கண்டான். ஒரு சாண் ஏற்றமானால் இரண்டு சாண் இறக்கமென்கிற மாதிரி அவனுடைய அரசியல் வாழ்வு இருந்தது. இத்தாலியக் குடியரசுக் கனவையே அவன் கண்டு வந்தான்; ஆனால் முடியரசாகவே அது பலித்தது. இப்படியெல்லாம் ஏற்பட்டாலும் அவன் சோர்வடையவில்லை; தன் குடியரசுக் கொள்கையைக் கடைசி மூச்சு இருக்கிறவரை கைவிட வில்லை; எந்த ஒரு விவகாரத்திலும் மனிதத் தன்மையிலிருந்து சிறிது கூட நழுவவில்லை; பணத்திற்கோ, பதவிக்கோ, புகழுக்கோ தன் ஆத்மாவை விற்று விடவில்லை. உண்மைக் கொடியை உயர்த்தியே பிடித்து வந்தான். அவன் உள்ளம் அழுக்கில்லாதது; விசாலமானது; குறுகிய தன்மை களுக்கு அதில் இடமிருக்கவில்லை. இதனால் தான் அவன் இத்தலியின் விடுதலையை நாடியது போல், உலக சகோதரத்துவத்தையும், மானிட சமுதாயத்தின் ஒற்றுமையையும் நாடினான். அவனுடைய பேச்சிலும் எழுத்திலும் தேசீயம் தலைதூக்கி நின்றாலும், அது சர்வ தேசீயத்திற்கு முரண்பட்டதாயிருக்கவில்லை; சர்வ தேசீயத்தைத் தழுவிக் கொண்டிருந்தது. அப்படியே உரிமை களைக் காட்டிலும் கடமைகளையே அவன் அதிகமாக வலியுறுத்தி வந்தான். பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்து தாம பெயின்1 என்பவன் மனிதன் உரிமை என்ற நூலை வெளியிட்டான். அதற்கு மறுப்புப் போல் மாஜினி, மனிதன் கடமை என்ற நூலை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது. மாஜினியின் வாழ்க்கை ஒரு சோக நாடகம். மனிதன் கடமை மூலமாகவும் மாஜினியின் மணிமொழிகள் மூலமாக வும் அவனுடைய குரலைக் கேட்பதோடு, அவனுடைய உருக்கமான வாழ்க்கை நாடகத்தையும் சிறிது - ஆம்; சொற்ப நேரந்தான் - பார்க்க வேண்டாமா? தமிழன்பர் களே! பாருங்கள். வணக்கம். தியாகராயநகர் சென்னைமா முதற்பதிப்பின் பதிப்புரை இந்தியாவுக்கு காந்தி எப்படியோ, ருஷ்யாவுக்கு லெனின் எப்படியோ, ஐர்லாந்துக்கு டிவேலரா எப்படியோ, அப்படியே இத்தலிக்கு மாஜினி. இவர்களை ஒரே தராசில் வைத்து நிறுவை செய்ய முடியாது; செய்யவும் கூடாது. ஆனால் இவர்களிடத்தில் சில அபூர்வமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவர்கள் கொண்ட குறிக்கோள், சுய ஜாதியினரின் சுதந்திரம் என்று பெயரைத் தாங்கிக் கொண்டிருந்த போதிலும், அஃது உலகத்திலுள்ள சகல ஜாதியினரின் சுதந்திரம் பெறவேண்டுமென்ற கோஷத்தைச் செய்து கொண்டிருந்தது, இவர்களுடைய தேசீயம், சர்வ தேசீயத்திற்கு முரண்பட்டதாயிருக்க வில்லை. இவர்கள் அரசியல் வாதிகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அற்காக இவர்கள் போற்றப்படவில்லை; மனிதத் தன்மையில் நிறைவுற்றவர்கள் என்பதற்காக, அந்த மனிதத் தன்மை, தங்கள் நாட்டினரிடத்தில் மட்டு மல்ல, உலகத்திலுள்ள எல்லா நாட்டின ரிடத்திலும் நிறைந்திருக்க வேண்டு மென்று அல்லும் பகலும் உழைத்து வந்ததற்காகப் போற்றப் படுகிறார்கள்; ஆம், எந்த நாளும் போற்றப்பட்டு வருவார்கள். மாஜினி, வெறும் அரசியல் வாதியாக மட்டுமில்லாமல், ஒரு மனிதனாகவும் வாழ்ந்து வந்தமையால் தான், அவனுடைய வாழ்க்கை, இந்நூலாசிரியர் கூறுவதுபோல், ஒரு சோக நாடகமா யிருந்திருக்கிறது. இதிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடிய பாட மென்ன? அரசியல்வாதியா யிருப்பது சுலபம்; மனிதனாக வாழ்வது கடினம் என்பதுதான். இதனாலேயே, உலகத்தில் பெரும்பாலோர், ஆழமில்லாத அரசியல் குளத்தில் நீந்த முன் வருகிறார்கள் போலும்! மனிதத் தன்மை யென்னும் மலையேறி நின்றார் தம் மாண்பினை எடுத்துரைக்கும் நூல்களை ஒழுங்காக வெளியிட்டு வரவேண்டு மென்பதே எங்கள் நோக்கம். இதற்காக நாங்களும் சிறுசிறு குன்றுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டாருடைய பூரண ஆதரவு இருக்கிறதென்ற தைரியமும், அந்த தைரியத்தினால் கடக்க வேண்டிய குன்றுகள் எத்தனை எதிர்ப் பட்டாலும் அத்தனையையும் சுலபமாகக் கடந்து விடுவோமென்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. விருந்திலும் மருந்திலும் இனிக்கும் தமிழே! நீ வாழ்க! பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் 1. உதயம் பிரிட்டன், ஆதிரியா, ப்ருஷ்யா, ருஷ்யா ஆகிய நான்கு வல்லரசுகளும் சேர்ந்து, 1814ஆம் வருஷம் ஏப்ரல் மாதம், நெப்போலியனின்1 கொட்டத்தை அடக்கி விட்டன. அவனும் முடிதுறந்து எல்பா2 தீவுக்குச் சென்றுவிட்டான். ஆனால் அடுத்த வருஷம் மார்ச்சு மாதம் அவன் அங்கிருந்து தப்பி பிரான்சுக்கு வந்து அரசைக் கைப் பற்றிக்கொண்டு நூறு நாட்கள் வரை ஆண்டான். நூறே நாட்கள் தான். அதற்கு மேல் அவனைத் தலைதூக்க விடவில்லை மேற்படி வல்லரசுகள். 1815ஆம் வருஷம் ஜூன் மாதம் வாட்டர்லூ யுத்தத்தில்3 அவனை அடியோடு வீழ்த்தி விட்டன; செயிண்ட் ஹெலீனா4 தீவுக்கு மிகுந்த பந்தோபதுடன் அனுப்பி யும் விட்டன. அவன் வாழ்க்கையும் அங்கேயே முடிந்து விட்டது. அவன் வாழ்வு வீரமான வாழ்வு; ஆனால் சோகமான முடிவு. இருக்கட்டும். அது தனிக் கதை. நெப்போலியன் முடிதுறந்து எல்பா தீவுக்குச் சென்றதும், மேலே சொல்லப்பட்ட வல்லரசுகள், நெப்போலியன் ஒழிந்தான்; இனியேனும் ஐரோப்பாவில் நிரந்தரமானதொரு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு 1814 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம், ஆதிரியாவின் தலைநகரான வியன்னாவில் ஒரு மகாநாட்டைக் கூட்டின. 1815ஆம் வருஷம் ஜூன் மாதம் வரை, சுமார் ஒன்பது மாத காலம் இடைவிட்டு இடைவிட்டு இந்த மகாநாடு நடைபெற்றது. இதற்குத்தான் வியன்னா காங்கிர5 என்று பெயர் சரித்திரப் பிரசித்தி பெற்றது. இதில் கூடிய வல்லரசுப் பிரதிநிதிகள், ஐரோப்பாவிலுள்ள எந்த நாட்டிலேனும், அரசாங்கத் திற்கு விரோதமான புரட்சி இயக்கங்கள் தோன்றுமானால் அவற்றை எப்படி அடக்குவதென்பதைப் பற்றிக் கலந்தாலோசிக்கத் தாங்கள் அடிக்கடி ஒன்றாக சந்திக்க வேண்டுமென்று ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். இந்த மகாநாட்டுக்குச் சூத்திரதாரியாக இருந்தவன், பெயரளவில் ஆதிரியாவின் பிரதம மந்திரியாகவும் ஆனால் உண்மையில் ஐரோப்பிய சுயேச்சாதிகாரிகளெல்லாரையும் ஆட்டி வைக்கிற சர்வாதிகாரியாகவும் இருந்த மெட்டர்னிக்1 என்பவன், இவன் இந்த மகாநாட்டின் மூலமாக ஐரோப்பா வெங்கணும் அடக்குமுறை விதை களைத் தெளித்தான். ஆனால் அவற்றினின்று புரட்சி முளைகள் தான் கிளம்பின! உலகத்திலே சமாதானத்தை நிலைநிறுத்த 1918ஆம் வருஷம் வார்சேலில்2 ஒரு மகாநாடு கூடியது; நானூற்று நாற்பது ஷரத்துக் களைக் கொண்ட ஓர் உடன்படிக்கையை 1919ஆம் வருஷம் ஜூன் மாதம் இருபத்தெட்டாந்தேதி நிறைவேற்றியது. ஆனால் இதற்குப் பிறகுதான் உலகத்தின் பல பாகங்களிலும் 1939ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் தொடங்கப் பெற்ற இரண்டாவது உலக மகா யுத்தத்தைத் தவிர்த்து - சுமார் பதினேழு யுத்தங்கள் நடை பெற்றிருக் கின்றன. புரட்சியை அடக்கி ஒடுக்கி ஐரோப்பாவில் புதியதோர் ஒழுங்கை - அதாவது சுயேச்சாதிகார ஒழுங்கை - தாபிக்க வேண்டு மென்று, மேற்படி வார்சேல் மகாநாட்டுக்கு நூற்று நான்கு வருஷங் களுக்கு முன்னர் வியன்னாவில் கூடிய மகாநாடு, நூற்றிருபத்தோரு ஷரத்துக்களைக் கொண்ட ஓர் உடன்படிக்கையை 1815ஆம் வருஷம் ஜூன் மாதம் ஒன்பதாந்தேதி நிறைவேற்றியது. ஆனால் இதற்குப் பிறகுதான், சுமார் ஐம்பது வருஷங்களுக்குள் எழுபதுக்கு மேற்பட்ட புரட்சிகள் ஐரோப்பாவில் நடைபெற்றன. வார்சேல் உடன் படிக்கையில் எழுபது பிரதிநிதிகள் கையெழுத்திட்டுப் பதினேழு யுத்தங்களைக் கிளப்பினார்கள்! வியன்னா உடன்படிக்கையில் பதினேழு பிரதிநிதிகள் கையெழுத்திட்டு எழுபது புரட்சிகளை உண்டு பண்ணினார்கள்! நெப்போலியன், சுயேச்சாதிகாரிகளின் பார்வையில் ஒரு தூமகேதுவாக இருந்திருக்கலாம். ஆனால், அவனையறியாமலே அவனால் அநேக நன்மைகள் உண்டாயின. ஒவ்வொரு நாட்டிலும் உறங்கிக் கிடந்த தேசீய உணர்ச்சியானது தலைதூக்கி நின்றது. ஜனங் களிடத்தில் ஒருவித ஒற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று. நெப்போலிய னுடைய சேனைகள் எங்கெங்குச் சென்றனவோ அங்கெல்லாம் அவை புரட்சி விதைகளை ஊன்றிக் கொண்டு சென்றன என்று ஒரு சரித்திரக் காரன் கூறுகிறான், நெப்போலியன், தனது ஆதிக்கத்திற்குட் பட்ட எல்லா நாடுகளிலும் திரமானதொரு மத்திய அரசாங் கத்தை நிறுவினான். ஜனங்களுக்குப் பட்சபாதமில்லாத நீதி கிடைக்கு மாறு செய்தான். போக்கு வரவுச் சாதனங்களை அதிகப்படுத்தினான். பள்ளிக்கூடங்களை தாபித் தான். ஜனங்கள், இவைகளையெல் லாம் நுகர்ந்து திருப்தி கொண்டார் களோ என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால் ஒழுங்கான ஓர் அரசாங்கம், கண்டிப்பான ஓர் அரசாங்கம் தங்களை நிருவாகம் செய்கிற தென்பதை அவசியம் உணர்ந்தார்கள். இத்தலியைப் பொறுத்தமட்டில் நெப்போலியன் ஒரு விசேஷ சிரத்தை காட்டினான். அவன் ஓர் இத்தலியனல்லவா?1 அவனுடைய ஆதிக்கத்திற்குட்படுவதற்கு முன்னர், இத்தலி சுமார் பன்னிரண்டு தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருந்தது. நெப்போலியன் இந்தப் பிரிவினைகளையெல்லாம் தகர்த்து விட்டான்; மூன்று மாகாணங் களாக வகுத்தான். இன்னும் பல நன்மைகளைச் செய்தான். சுயேச்சாதிகாரி களைப் பரிபூரணமாக வெறுக்கிற மாஜினி கூட, நெப்போலியனுடைய நிருவாகத்தைக் குறித்துப் பின்வருமாறு சிலாகிக்கிறான்:- 1805ஆம் வருஷத்திலிருந்து 1813ஆம் வருஷம் வரை சுமார் எட்டு வருஷ காலம், இத்தாலிய இதிகாசத்திலேயே மிகவும் குறிப் பிடத்தக்க காலமாகும். இந்தக் காலத்தில் இத்தலியில், ஜனங்களின் கல்வி ஞானம் அபிவிருத்தி யடைந்தது. தேசத்தின் ஐசுவரியம் வெகு வேகமாகப் பெருகியது. இத்தலியர்கள், பிரெஞ்சு ஆதிபத்தியத்தின் ஆதரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்களென்பதும், யுத்தங் களிலே அடிக்கடி ஈடுபடுத்தப்பட்டார்களென்பதும் உண்மை. ஆனால் அவர்களிடத்திலே புகுத்தப்பட்ட தேசீய உணர்ச்சியானது, அவர்களுடைய ஆத்மாவை உயர்த்தி விட்டது. எந்த லட்சியத்திற் காக அவர்கள் அரும்பாடுபடு கிறார்களோ அந்த லட்சியமாகிய ஐக்கிய இத்தலியை, ஒன்றுபட்ட இத்தலியை, அவர்கள் தூரத்தி லிருந்து தரிசிக்க முடிந்தது. இந்த மாதிரியான தேசீய உணர்ச்சியும், ஒற்றுமை உணர்ச்சியும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பரவியிருப்பதை, ஆங்காங்கு அடங்கிக் கிடந்த சுயேச்சாதிகாரிகள் மௌனத்தோடு சகித்துக் கொண்டு வந்தார்கள். ஒரு சிலர், அடிக்கிற காற்றோடு தலை சாய்த்துக் கொடுத்தார்கள். ஆனால், நெப்போலியன் ஐரோப்பிய அரசியல் அரங்கத்தினின்று மறைந்தானோ இல்லையோ, அவரவரும் கச்சை கட்டிக்கொண்டு வந்து வியன்னாவில் கூடினார்கள். அந்தந்த நாட்டு ஜனங்களுடைய உணர்ச்சிகள், பரம்பரைச் சம்பிரதாயங்கள் முதலியன ஒன்றையும் கவனியாமல் அவரவரும் தங்களுக்கிஷ்டமானபடி நாடுகளைப் பங்கு போட்டுக் கொண்டார்கள். பங்கு போட்டுக் கொண்டார்களா? இல்லை; இல்லை பங்கு போட்டுக் கொடுக்கப் பட்டார்கள். யாரால்? மெட்டர்னிக் இருந்தானல்லவா? அவன், எந்த நாட்டிலும் ஆதிரியாவின் கை ஓங்கி இருக்கிற மாதிரியாக நாடுகளைப் பிரித்துக் கொடுத்தான். அவனுடைய ஏற்பாட்டின்படி, இத்தலியில் வடபாகத்திலுள்ள லம்பார்டி, வெனிஷியா (Lombardy, Venetia) முதலிய மாகாணங்கள் ஆதிரியாவுக்குப் போய்ச் சேர்ந்தன. Õ£kh©£ (Piedmont) என்ற பிரதேசத்தின் அரசன், வடமேற்குப் பிரதேசங்களையும், [h®OÅah(Sardinia) என்ற தீவையும் எடுத்துக் கொண்டான். பெயின் தேசத்து போர்பன் (Bourbons) அரச வமிசத் தினர், áÌÈ(Sicily) தீவு உட்பட்ட தெற்கு மாகாணங்களைத் தங்க ளுடையதாக்கிக் கொண்டுவிட்டனர். போப்பரசரும் இன்னும் சில சில்லறைப் பிரபுக்களும், மத்தியப் பிரதேசத்தைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்துக் கொண்டனர். இப்படி இவர்களனைவரும், தங்களுக்குப் பங்கு கிடைத்ததோடு சும்மா யிருக்கவில்லை. ஒருவர்க்கொருவர் பரபர அவநம்பிக்கை யினால் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் ஜனங்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு மாகாணத் திற்கும் சரியான போக்குவரத்து இல்லை. சுங்க வரிகள் ஒவ்வொரு மாகாண எல்லையிலும் விதிக்கப்பட்டன. இதனால் வியாபாரம், கைத் தொழில் முதலியன செழித்து வளர முடியாமல் போயின. இலக்கிய ஓட்டமானது தட்டுத் தடுமாறிச் சென்றது. ஒரு மாகாணத்தில் வெளி யாகிற நூல்கள், பத்திரிகைகள் முதலியனவற்றை, அடுத்த மாகாணத்தில் வசிக்கிறவர்கள் சுலபமாக வாங்கிப் படிக்க முடியவில்லை. நீதி நிருவாக முறை, அரசாங்க நிருவாகமுறை, சட்டப் பிரயோக முறை முதலியன மாகாணத்திற்கு மாகாணம் வித்தியாசப்பட்டிருந்தபடியால், வக்கீல்கள், இஞ்சினீர்கள் முதலிய தொழில் நிபுணர்களும், உத்தியோகதர்களும், தங்கள் தங்களுடைய அறிவையும் திறமைகளையும் விரிவுபடுத்திக் காட்ட முடியாதவர்களாய், வளர்ச்சி குன்றியும் அநேக நிர்ப்பந்தங் களுக்குட் பட்டும் கிடந்தார்கள். எல்லா மாகாணங்களிலும் நிருவாக ஊழல் சகிக்க முடியவில்லை. ஜனங்களுக்கு அதிகமான கல்வியறிவு உண்டாகாதபடி என்னென்ன நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தலாமோ அவையெல்லாம் ஏற்படுத்தப்பெற்றன. எங்குப் பார்த்தாலும் அரசாங்க ஒற்றர்களின் உபத்திரவம் அதிகமாயிருந்தது. ஜனங்கள் எப்பொழுதும் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தார்கள். போதாக் குறைக்குத் தரித்திரம். கேட்பானேன் வாழ்க்கையிலே சோர்வு ஏற்படுவதற்கு? ஒரு தலைமுறையில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டு விட்டது? இத்தலியில், இத்தாலியர்கள் அந்நியர்களாயிருந்தார்கள். ஆதிரியாவின் ஆதிக்கமானது இவர்களை அப்படிச் செய்து விட்டது. சுருங்கச் சொன்னால், ஜனங்கள் அடிமைகளாக உயிரை வைத்துக் கொண்டிருந்தார்கள்; மனிதர்களாக வாழ்க்கையை நடத்தவில்லை. அந்நிய ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கும் தனது நாட்டு மக்களைப் பார்த்து மாஜினி பின்வருமாறு கதறுகிறான்:- தேசம், சுதந்திரம், சகோதரத்துவம் முதலிய யாவும் அவர்க ளிடமிருந்து (இத்தாலியர்களிடமிருந்து) பறிக்கப் பட்டுவிட்டன. அவர் களுடைய மனப் போக்குகள் சிதைக்கப்பட்டும், அடக்கப் பட்டும், ஒரு குறுகிய வட்டத்திற்குள் பிணைக்கப்பட்டும் இருக்கின் றன. இங்ஙனம் செய்தவர்கள் யார்? இத்தாலியர்களுடைய மனப் போக்குகள், தேவைகள், நோக்கங்கள் முதலியனவற்றை அறியாத அந்நியர்கள். ஆதிரிய தேசத்து ஒரு ராணுவச் சேவகனுடைய பிரம்பினால், இத்தாலியர்களுடைய தேசீய பரம்பரை உடைக்கப் படுகிறது. அவர்களுடைய அழியாத ஆத்மாவானது, வியன்னா நகரத்திலுள்ள சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதனுடைய மூடத்தனமான சபலபுத்திக்குப் பந்தப்பட்டுக் கிடக்கிறது. இவ்வளவு தொந்தரவுகளிருந்த போதிலும், நெப்போலியன் ஊன்றிய புரட்சி விதைகள் ஆங்காங்கு முளை கிளம்பாமலில்லை. ரகசியச் சங்கங்கள் பல இடங்களில் தோன்றி அந்நிய ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு வேலை செய்துகொண்டிருந்தன. இங்ஙனம் வேலை செய்துகொண்டிருந்த சங்கங்களில் முக்கியமானது கார்போனாரி (Carbonari) என்னும் தாபனம். இதற்கு கரி எரிக்கிறவர்கள் என்று அர்த்தம். சட்ட ரீதியான அரசாங்கத்தை அமைப்பது, தேசீய சுதந் திரத்தைப் பெறுவது, எல்லா ஜனங்களும் சுதந்திரத்தோடிருக்கும் படியாகச் செய்வது முதலியன இதன் நோக்கம். இதற்கு ஐரோப்பா வின் பல பாகங்களிலும் கிளைச் சங்கங்கள் இருந்தன. அறிவிற்சிறந்த இத்தாலியர்களிற் பலரும் ஒழுக்கம், ஒழுங்கு என்பவைகளை அணு வளவும் அறியாத துணிச்சல்காரர் பலரும் இதில் அங்கத்தினர்களா யிருந்தார்கள். இதனால் இவர்களால் ஒன்றுபட்டும் தொடர்ந்தும் ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை. இவர்களுடைய புரட்சி முயற்சிகள் வெற்றி பெறாமற்போனதும், ஜனங்களுக்குச் சாதகத்தை உண்டாக்காமற் போனதும் ஆச்சரியமில்லையல்லவா? இந்த கார்போனாரி சங்கமானது, நாளா வட்டத்தில் தேய்ந்து மறைந்து போய் விட்டது. 1815ஆம் வருஷத்து வியன்னா காங்கிரஸுக்குப் பிறகு, இத்தலியைப் பல சுயேச்சாதிகாரிகள் பங்குபோட்டுக் கொண்ட பிறகு, அந்தச் சுயேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்காகப் பல ரகசியச் சங்கங்கள் தோன்றத் தொடங்கிய பிறகு, ஹா! ஹா! இத்தலியிலே என்னென்ன அடக்குமுறைகள் உபயோகிக்கப் பட்டன! எழுத்துரிமை, பேச்சுரிமை, சங்கமாகச் சேர்கிற உரிமை என்று யாரேனும் வாயெடுத்தால் போதும் இருட்டறைதான்! இரும்புச் சங்கிலிகள்தான்! இப்படிப்பட்ட நிலைமையில், ஜனங்களுக்கு உயர்ந்த லட்சி யத்தைப் புகட்ட, அடங்கிக் கிடக்கிற தேசீய உணர்ச்சியை எழுந் திருக்கச் செய்து அதனை ஒழுங்குபடுத்திவிட, இத்தலியை ஒன்று பட்ட ஒரு நாடாக்க, தீர்க்க திருஷ்டியுள்ள ஒரு தலைவன் தேவையா யிருந்தது. அப்படிப்பட்ட தலைவன் எங்கே, எங்கே யென்று இத்தாலிய ஜன சமுதாயத்தின் ஆத்மா தேடிக்கொண்டிருந்தது. இதோ என்று மாஜினியை எதிரில் கொண்டு நிறுத்தினாள் இத்தாலிய மாதா நவ இத்தலியின் உதயம்! 2. அழைப்பு புதிய உலகத்தைக் கண்டுபிடித்த கொலம்ப1 எந்த ஜினோவா நகரத்தில்2 பிறந்தானோ அதே ஜினோவா நகரத்தில், புதிய ஐரோப்பாவை நிர்மணித்தவர்களில் ஒருவனென்று கருதப்படுகிற ஜோஸப் மாஜினி3 1805ஆம் வருஷம் ஜூன் மாதம் 22ஆம் தேதி பிறந்தான். இவன் தந்தை ஒரு வைத்திய நிபுணன். உள்ளூர்ச் சர்வ கலாசாலையில் உடற்கூறு சாதிர ஆசிரியனாக இருந்தான். நல்ல கைராசியுடைய வன். இதைக்கொண்டு இவன் அதிகமான பொருளையும் புகழையும் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இவன் அப்படிச் செய்யவில்லை. தன்னுடைய வைத்தியத் திறமையையும், ஒழிந்த நேரத்தையும் ஏழை மக்களின் நலனுக்காகச் செலவிட்டான். மாஜினியின் தாயார், குடும்ப நிருவாகத்தில் மகா திறமைசாலி. வாழ்க்கையில் கரடு முரடான பாகங்கள் நிறைய உண்டு என்பதைத் தன் மகனுக்கு உணர்த்தி வந்தாள். இந்தப் பயிற்சி, மாஜினியின் பிற்கால வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்பட்டது. குழந்தைப் பருவத்திலிருந்தே மாஜினி மிகவும் சூடிகை யுடைய வனாயிருந்தான்.எந்த விஷயத்தையும் சுலபமாகக் கிரகித்துக் கொண்டு விடுவான். அதே பிரகாரம், தன் மனத்தில் பட்ட எந்த விஷயத்தையும் தாராளமாக எடுத்துச் சொல்வான். யாருக்கும் பயப்படமாட்டான். ஆனால் இவனுடைய அறிவுக்கூர்மைக்குத் தகுந்தாற்போல் இவனுடைய தேகபலம் இல்லை. இது பெற்றோர் களுக்கு எப்பொழுதுமே ஒரு கவலை யாயிருந்தது. தொட்டால் சிணுங்கியென்று சொல்லுவார்களே அப்படிப் பட்ட சுபாவமுடைய வன் இவன். பிடிவாத குணம் அதிகமாக உண்டு. இதனால் பெற்றோர்கள் இவன் விஷயத்தில் வெகு ஜாக்கிரதையுடன் நடந்து வந்தார்கள். எல்லாப் பிள்ளைகளையும்போல் மாஜினி சிறுவயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்படவில்லை. வீட்டிலேயே ஓர் ஆசிரியனை நியமித்து லத்தீன் பாஷையைக் கற்பித்தார்கள். இந்த லத்தீன் ஆசிரியனிடம் மாஜினிக்கு ஒருவித பக்தி விசுவாசம் ஏற் பட்டது. மிகுந்த சிரத்தையோடு பாடங்களை அவன் சொல்லிக் கொடுத்தான். மாஜினியும், தன்னுடைய பாடங்களைப் படித்து ஒப்புவிப்பதில் ஒருவித உற்சாகத்தைக் காட்டினான். கிரேக்க, ரோம இதிகாசங்களையும், முக்கியமான காவியங் களையும், ஏறக்குறையப் பத்து வயதுக்குள்ளேயே இவன் படித்து முடித்துவிட்டான். மேற்சொன்ன இதிகாசங்களிலே வரும் வீரர்களுடைய வாழ்க்கை, அவர்கள் காலத்திலிருந்த அரசியல் நிலைமை முதலியனவும் இவன் பசு மனத்தில் நன்றாகப் பதிந்தன. இங்ஙனம் தன் ஆசிரியனிடம் படித்து வந்ததோடு இவன் திருப்தியடையவில்லை. வீட்டின் எந்த மூலையில் என்ன புத்தகங்கள் இருந்தாலும், என்ன பழைய பத்திரிகைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொறுக்கி யெடுத்துப் படிப்பான். இவனுடைய தகப்பன், அரசியல் விஷயத்தில் குடியரசு முறையை ஆதரிக்கிறவன். இதனால், பிரான்சில் வெளியான ஒரு குடியரசுக் கட்சிப் பத்திரிகைக்குச் சந்தா செலுத்தி வரவழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இது ரகசியமாகவே வந்து கொண்டிருந் தது. ஏனென்றால் அரசாங்க ஒற்றர்களின் கண்களுக்குப் பட்டு விட்டால் குடும்பத்திற்கே ஆபத்தல்லா? மாஜினியின் தந்தை - இவன் பெயர் ஜியாக்கோமோ khÍÅ(Giocomo Mazzini) - இந்தப் பத்திரிகை யின் இதழ்களை, தனது வைத்தியப் புத்தகங்களுக்குள் ரகசியமாக வைத்துப் படிப்பான். படித்து முடித்த பிறகு, இவற்றைச் சுருட்டி எங்கேனும் மூலையில் குப்பை கூளங்களோடு சேர்த்துப் போட்டு விடுவான். யாரும் கண்டுபிடிக்க மாட்டார்களென்பது இவன் எண்ணம். ஆனால் பாலிய மாஜினியோ, வீட்டில் தந்தையில்லாத சமயம் பார்த்து இந்தப் பத்திரிகையின் பழைய இதழ்களையெல்லாம் பொறுக்கி யெடுத்துவந்து, ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்காகப் படித்துக் கொண்டிருப்பான். அநேக சந்தர்ப்பங் களில் பொழுது போவதே இவனுக்குத் தெரியாது. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற வரலாறு, அதற்குக் காரணமாயிருந்தவர்கள் யாரால், அஃது ஏன் தோல்வியடைந்தது, மீண்டும் பிரான்சில் எப்படி சுயேச்சாதிகார ஆட்சி ஏற்பட்டது. முதலிய விவரங்களையெல்லாம் இந்தப் பத்திரிகை இதழ்களில் படித்துத் தெரிந்து கொண்டான். இங்ஙனமே, இலக்கிய சம்பந்தமான புத்தகங்கள் ஏதேனும் தகப்பனார் மூலமாகக் கிடைத்தால் அவற்றை உற்சாகத்துடன் படித்து முடித்துத் திருப்பிக் கொடுத்து விடுவான். பொதுவாக இவனுக்குச் சிறு வயதிலிருந்தே இலக்கியத்திலும் சரித்திரத்திலும் ஒரு விசேஷ சிரத்தை இருந்து வந்தது. ஆனால், இந்தப் புதகப் படிப்பிலே மட்டும் இவன் திருப்தி கொள்ளவில்லை. பிறர் வாயிலிருந்து ஏதேனும் புதிய விஷயங்கள் வெளி வருமானால், அவற்றை இவன் சிரத்தையோடு கேட்பான். இதற்கான வசதிகள் இவனுக்கு வீட்டில் நிறையக் கிடைத்தன. இவனுடைய தகப்பன், எல்லாரிடத்திலும் தாராளமாகப் பழகும் சுபாவமுடையவன். ஆதலால் அவனுக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் அடிக்கடி இவன் வீட்டுக்கு வந்து அரசியல் பிரச்னைகளைப் பற்றிச் சிறப்பாகக் குடியரசு முறையின் தாரதம்மியங்களைப் பற்றிச் சம்பாஷணை செய்வார்கள். இவற்றை யெல்லாம் மாஜினி கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பான். மாஜினிக்கு வயது பத்து. அந்த வருஷம் நெப்போலியனுடைய ஏகாதிபத்தியம் விழுந்துபட்டது. இந்த வீழ்ச்சியின் விளைவு ஜினோவாவில் பிரத்தியட்ச ரூபமாகக் கொண்டுவரப்பட்டது. எப்படியென்றால், இந்த வருஷத்தில்தான் ஐரோப்பிய வல்லரசு களின் அங்கீகாரத்தின் பேரில், லிகூரியா1 மாகாணத்திலுள்ள ஜினோவா நகரத்தை, பீட்மாண்ட் அரசன் தன் சுவாதீனப்படுத்திக் கொண்டு விட்டான். ஜினோவா வாசிகளின் சம்மதா சம்மதத்தைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இது ஜினோவா வாசிகளுக்கு மிகவும் வெறுப்பை உண்டுபண்ணியது. இவைகளைப்பற்றி யெல்லாம் மாஜினி வீட்டில் அடிக்கடி பேச்சுக்கள் நடைபெற்றன. மாஜினியின் உணர்ச்சி நிரம்பிய உள்ளத்தில் இவை மெதுவான ஒரு புரட்சியை உண்டு பண்ணாமலிருக்குமா? பத்துவயதுக்குமேல் மாஜினி உயர்தரப் படிப்புக்காக ஜினோவா சர்வகலாசாலைக்கு அனுப்பப்பட்டான். பதினான்காவது வயதில் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினான். இவனுடைய சகோதர மாணாக்கர்கள் இவனிடத்தில் ஒரு விசேஷ பிரீதியுடன் நடந்து வந்தார்கள். ஆனால், ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில், இவன் ஒரு தொந்தரவு கொடுக்கும் மாணாக்கனாக இருந்தான். சர்வ கலா சாலையில் படிக்கிற மாணாக்கர்கள் என்று சொன்னால் அவர்கள் சில சம்பிரதாயங் களை அனுஷ்டிக்க வேண்டும். உதாரணமாக, அவர்கள் தினந்தோறும் தேவாலயத்திற்குச் சென்று வரவேண்டும்; மீசை வைத்துக்கொள்ளக் கூடாது. மாஜினி இவைகளுக்கெல்லாம் விரோதி தேவாலயத்திற்குச் செல்லக் கூடாதென்பது மாஜினியின் எண்ணமல்ல; ஆனால் அப்படிச் செல்லவேண்டுமென்று கட்டாயப் படுத்தினால் அந்தக் கட்டாயத்திற்குட் படக் கூடாதென்பதுதான் இவன் கட்சி. ஆசிரியர்களும், இவனை முதலில் கண்டித்துப் பார்த்தார்கள். பயனில்லை. எனவே, இவனுடைய கீழ்ப் படியாத் தன்மையைக் கண்டுகொள்ளாதவர்கள் போலிருந்து விட்டார்கள். ஆசிரியர்களின் விருப்பு வெறுப்புகளிலிருந்து இவன் எவ்வளவுக் கெவ்வளவு விலகி யிருந்தானோ அவ்வளவுக் கவ்வளவு தன் சகோதர மாணாக்கர்களின் நெருக்கமான நட்புக்காளாயினான். வெகு சீக்கிரத்தில் பரிசுத்த வாழ்க்கை நடத்திய, அன்பு நிறைந்த, தீவிர மனப்போக்குள்ள மாணாக்கர்களனைவருக்கும் தலைவனா யினான். மாஜினி வயதில் சிறியவனாயிருந்த போதிலும், இருதய விசாலத்தில் மிகப் பெரியவனாயிருந்தான். மற்றவர்கள் கஷ்டப் படுவதைப் பார்த்து இவனால் சகிக்கவே முடியாது. இவனுடைய இந்தக் காலத்து வாழ்க்கையைப் பற்றி இவனுடைய சகோதர மாணாக்க னொருவன் பின் வருமாறு எழுதுகிறான்: மாஜினி, எளிய பழக்கவழக்கங்களையுடையவன்; அனாவசிய மாகச் செலவழிக்க மாட்டான்; எதிலும் சிக்கனமாக இருப்பான். ஆனால், தன்னைச் சுற்றியுள்ளவர்களுடைய தேவைகளை அறிந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வான். சில சமயங்களில், இந்த உதவி செய்யும் வழக்கத்தை அதீதமாகவும் கொண்டு போய் விடுவான். தன்னுடைய புதகங்களைக் கொடுப்பான்; தான் மிகுத்து வைத்திருக்கும் பணத்தைக் கொடுப்பான்; இவையெல்லாம் போதாதென்று தனது உடைகளையும் கொடுத்துவிடுவான். இவனுடைய இந்த மாதிரியான தாராள மனப்பான்மையும், பரிசுத்த வாழ்க்கையும் மட்டுமே இவனுக்கு, மாணாக்கருலகத்தில் முதல் தானத்தைக் கொடுக்கவில்லை. இவனுடைய சீல சுபாவந்தான் இவனுக்கு முக்கிய தானத்தை அளித்தது. ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த வெறுப்புக்களை வைத்துக்கொண்டு, எந்த மாணாக்கனுக்கேனும் கெடுதல் செய்தால் அதற்காக இவன் போராடுவான்; பரிந்து பேசுவான். நீதி கிடைக்கும் பொருட்டு எந்த விதமான துன்பங்களையும் ஏற்றுக்கொள்வான். அவமானங்களைச் சகிப்பான். நட்பைக் காப்பாற்றிக் கொள்வதிலே அதிக சிரத்தை யுடையவன். பரிசுத்த ஆத்மா. தான் என்பதை அறியாதவன். அச்சம் என்பது அணுவளவும் இவனுக்குத் தெரியாது. இத்தகைய குண மேம்பாடுகள் இவனிடம் இருந்ததனால்தான் மாணாக்கர்கள் தங்களையறியாமலே இவனை ஒரு தலைவனாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இவனுடைய எதிரில், கேவலமான வார்த்தைகளைக் கூட பேச மாட்டார்கள். அவ்வளவு மரியாதை இவனிடத்தில். இப்படி யிருக்கையில் ஒருநாள், இவனுடைய பிற்கால வாழ்க்கை இன்னபடி இருக்கவேண்டுமென்பதை நிர்ணயித்துக் கொடுக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடைபெற்றது. இத்தாலிய மாதாவின் மறைமுகமான அழைப்புதான் அது. மாஜினியினுடைய பதினாறாவது வயது நடக்கிறது. 1821ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழக்கமாகச் சந்தை கூடுகிற நாள். காலை நேரம். மாஜினி, இவனுடைய தாயார், வேறொரு நண்பர் ஆகிய மூவரும் ஒரு தெரு வழியாகப் போய்க்கொண் டிருந்தார்கள். இவர்களைப் பின்தொடர்ந்து ஒருவன் வந்தான். மிகுந்த உயரம்; கருமையான மயிரடர்ந்த தாடி; ஜீவகளையோடு கூடிய முகம்; தீட்சண்யமான பார்வை. இந்த லட்சணங்களோடு கூடிய அவன், இவர்களருகில் வந்து ஒரு வெள்ளைக் கைக்குட்டையை விரித்து சட்ட விரோதிகளான இத்தலியர்களுக்கு என்றான். இவனுடைய தாயாரும், நண்பரும், சில காசுகளை மேற்படி கைக்குட்டையில் போட்டார்கள். அவன் வந்தனஞ் செலுத்திவிட்டு, உடனே வேறு சிலரிடம் மேற்சொன்ன மாதிரியாகச் சொல்லிக் கொண்டு கைக்குட்டையை விரித்தான். மாஜினி: அம்மா! இவன் யார்? இவனுடைய முகத்தோற்றம், கம்பீரப்பார்வை முதலியன என்னை வசியப்படுத்தி விட்டனவே. ஏன் இவன் பிச்சையெடுக்க வேண்டும்? தாயார்: குழந்தாய்! சில நாட்களுக்கு முன்னர் பீட்மாண்ட் பிரதேசத்தில், அரசாங்கத்தின் சுயேச்சாதிகாரத்தை எதிர்த்து, கார்போனாரிகள் ஒரு புரட்சி செய்தார்கள். ஆனால் அரசாங்கத்தார் இதனை மிகக் கடுமையாக அடக்கி விட்டார்கள். அந்த அடக்கு முறைக்குத் தப்பி ஓடி வந்து விட்டனர் சிலர். அவர்களில் ஒருவன் இவன். மாஜினி: ஏன் இவர்களுடைய புரட்சி தோல்வியுற்றது? தாயார்: சரியான முன்னேற்பாடும் ஒழுங்கான தலைமையும் இல்லாததுதான் காரணம். மாஜினி: இவர்கள் ஏன் இந்த ஜினோவாவுக்கு வரவேண்டும்? தாயார்: கையிலே காசில்லாமல் ஓடிவந்து விட்ட இவர்கள், அதிகாரிகள் வசத்தில் சிக்கிக் கொள்வதற்கு முன்னர், பெயின் முதலிய அந்நிய நாடுகளுக்கு ஓடிவிடலாமே யென்பதற்காக, துறைமுகப்பட்டின மாகிய இந்த ஜினோவாவுக்கு வந்திருக்கிறார்கள். கப்பல் செலவுக்காகப் பணம் வசூலிக்கிறார்கள். இந்தச் சம்பவம் மாஜினியின் மனத்தில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணி விட்டது. தனது தாய்நாட்டை அந்நிய ஆதிக்கத்தி னின்று விடுவிக்கும் பொருட்டுத் தன் வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்து விடுவதென்று தீர்மானித்தான். துணி விரித்துப் பிச்சை யெடுத்த அந்த உயர்ந்த மனிதனைப்போல் இன்னும் எத்தனைபேர் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் வாழ்க்கையைத் துறந்து விட்டு ஓடி வந்திருக்கிறார்களோ, இன்னும் எத்தனை பேர் சிறையிலே அவதைப் பட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்றெல்லாம் அடிக்கடி சிந்தனை செய்தான் மாஜினி. இராக் காலங்களில் இவனுக்குச் சரியான தூக்கம் வரவில்லை. அந்தச் சுதந்திர வீரர்களைப் பற்றி அடிக்கடி கனவு கண்டான். இவனுடைய சகோதர மாணாக்கர்கள் இவனிடத்தில் திடீரென்று ஒருவித மாறுதலைக் கண்டனர். தாய் நாட்டின் நிலையைக் குறித்துத் துக்கப்படு வதற்கு அறிகுறியாக, இந்த நாட்களிலிருந்து கறுப்பு உடைகளைத் தரிக்க ஆரம்பித்தான். ஆயுள் பரியந்தம் அந்தப் பழக்கத்தை இவன் விடவில்லை. சிறிது காலம் வரை ஏக்கம் பிடித்தவன் போலிருந்த இவன், பின்னர் பழைய நிலைமைக்கு வந்தான். முன்போல் புத்தகங்களை ஊக்கத்துடன் படிக்க ஆரம்பித்தான். தந்தையின் விருப்பப்படி வைத்தியப் பரீட்சைக்குப் படிக்கத் தொடங்கினான். ஆனால், சத்திர சிகிச்சை பாடத்தை, அதாவது ஆபரேஷன் செய்யும் பாடத்தை பயிலுவதற்கு ஆபரேஷன் அறைக்குச் சென்ற முதல்நாளே மூர்ச்சை யாகி விட்டான். இவன் தந்தைக்கு இது மிகவும் வருத்தந்தான். தனது தொழிலை, மகன் பின்பற்ற முடியவில்லை யல்லவா? ஆயினும் என்ன செய்வது? சட்டப்பரீட்சைக்குப் படிக்குமாறு ஏற்பாடு செய்தான். ஆனால், மாஜினிக்கு இந்தப் படிப்பிலும் உற்சாக மில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணமென்ன வென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலுடைய ஒருவனுக்குச் சாரமற்ற சட்ட வியாக்கியானத்தின் மீது மனஞ் செல்லுமா? ஆயினும் மாஜினி, தன் தகப்பனுக்கு மறுபடியும் வருத்தமுண்டாகாதபடி சட்டப் பரீட்சைகளில் நன்றாகத் தேறி வந்தான். வக்கீல் தொழிலை நடத்த அதிகாரப் பத்திரமும் பெற்றுவிட்டான். என்றாலும், இவனுடைய ருசியெல்லாம் கவிதையிலும் சரித்திரத்திலுமே சென்றது. இலக்கியத்திலும் அரசியலிலும் சிரத்தை கொண்ட சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்தான். அரசாங்கத்தினரால் தடுக்கப்பட்டிருந்த பல நூல்களை இவன் ரகசியமாக வரவழைத்து, நண்பர்களைப் படிக்கச் செய்தான். இவனும், இத்தாலிய, பிரெஞ்சு, ஆங்கில பாஷைகளில் வெளியான பல காவியங்களையும் சரித்திரங்களையும் உற்சாகத்தோடு படித்து வந்தான். இத்தாலிய மகான் கவிஞனாகிய தாந்தேயினிடத்திலும்1 ஆங்கில மகான் கவிஞனாகிய பைரனிடத்திலும்2 இவனுக்கு விசேஷ பக்தி சிரத்தை ஏற்பட்டு விட்டது. இந்தப் பக்தி சிரத்தை அதிகமாக அதிகமாக, தாய் நாட்டின் மீது இவன் கொண்டிருந்த பக்தி சிரத்தை யும் அதிகமாகியது. இந்தக் காலத்தில் இவன் இருதயத்திலிருந்து முகிழ்த்த தேசீய எண்ணங்கள், இலக்கியப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, ஜினோவாவில் வெளியான சில பத்திரிகை களில் கட்டுரைகளாக வெளிவந்தன. அரசியலோடும் சமுதாயத் தோடும் இணைந்து செல்லாத எந்த இலக்கியத்திற்கும் முக்கிய தானம் கொடுக்கக்கூடாதென்பது இவன் கட்சி. இப்படி இவன், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்ததோடு, வக்கீல் தொழிலையும் நடத்தி வந்தான். ஆனால் காவிய ரசனையில் ஈடுபட் டுள்ள மனமும், வக்கீல் மனமும் ஒன்று சேருமா? எனவே, வக்கீல் தொழிலில் மனப்பூர்வமாக ஈடுபட இவனால் முடியவில்லை. ஏழைகளின் சார்பாக நியாய தலங்களில் ஆஜராவான். எவ்வித கட்டணமும் வாங்கிக் கொள்ள மாட்டான். ஆனால் நீதிக்கு மன்றாடுவான். கட்சிக்காரர்கள் இவனிடத்தில் அதிகமாக வந்தார்கள்; வருமானந்தான் கிடையாது. இப்படி மனமில்லாத தொழிலில் நீண்ட காலம் ஈடுபட் டிருப்பதை இவன் மனச்சாட்சி அங்கீகரிக்குமா? எனவே, அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதென்று நிச்சயித்தான். எப்படி ஈடுபடுவது? கார்போனாரி ரகசியச் சங்கமொன்றுதான் உருப்படியான ஓர் அரசியல் தாபனமாயிருந்தது. ஆனால், சுதந்திரத்தைப் பற்றி நிர்ணயமான ஓர் அபிப்பிராயமில்லாத சில உற்சாகிகளின் கூட்ட மாக இஃது இருந்தது. இவர்கள், பிரான்சின் உதவி பெற்று இத்தலிக்கு விமோசனம் அளிக்கப் பார்த்தார்கள். இவர்கள், அர்த்தமில்லாத சில சடங்குகளை அனுஷ்டித்து சுதந்திரத்தை யடைந்து விடலாமென்று நம்பினார்கள். இவர்கள், தங்கள் சங்கத்தில் இளைஞர்கள் வந்துசேர்வதை அவ்வளவாக விரும்பவில்லை. ஆயினும் மாஜினி மிகுந்த சிரமத்தின் பேரில், ஜினோவா கிளைச் சங்கத்தில் அங்கத்தினனாகச் சேர்ந்து கொண்டான். இவனுக்குக் கீழான ஒரு தானம் கொடுத்தார்கள். மேலோர்களின் உத்தரவுகளை இவன் எவ்விதக் கேள்வியுமின்றி நிறைவேற்றி வந்தான். சில இடங்களுக்கு பிரசார வேலைக்கு அனுப்பப்பட்டான். இந்தப் பிரசார வேலையை இவன் வெற்றிகரமாகச் செய்து முடித்தான். சிலபேரைக் கார்போனாரி சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்த்தான். இப்படி இவன், புதிய அங்கத்தினர்களைச் சேர்த்ததன் நோக்கம், தனக்கென்று ஒரு கட்சியை வகுத்துக் கொண்டு நாளாவட்டத்தில் பழைய அங்கத் தினர்களையும் அவர்களுடைய அழுகிப் போன சித்தாந்தங்களையும் அப்புறப்படுத்திவிட வேண்டுமென்பதுதான். அங்கத்தினர்கள் சேர்ப்பதில் இவன் ஓரளவு வெற்றி பெற்றான். தான் சேர்த்த புதிய அங்கத்தினர்கள் விஷயத்தில், வழக்கமாக அனுஷ்டிக்க வேண்டிய சடங்குகளை இவன் அனுஷ்டிக்கவில்லை. புரட்சி தொடங்கப் பட்டால் அப்பொழுது எவ்விதத் தயக்கமுமின்றி அவரவருக்கிடப் பெற்ற கடமையைச் செய்யவேண்டுமென்ற பிரதிக்ஞையை மட்டும் வாங்கிக் கொண்டான். இங்ஙனம் தான் சேர்த்த அங்கத்தினர்களின் உதவிகொண்டு, ஒரு புரட்சியை நடத்துவதற்கான சில முன்னேற் பாடுகளையும் செய்தான். இந்தச் சமயத்தில் - அதாவது 1830ஆம் வருஷம் ஜூலை மாதம் - பிரான்சில், அப்பொழுது ஆண்டுகொண் டிருந்த பத்தாவது சார்ல1 மன்னனுடைய கொடுங்கோலாட்சிக்கு விரோதமாக ஒரு ஜனப்புரட்சி நடைபெற்றது. இது, மற்ற நாடு களிலுள்ள தீவிரவாதிகளுக்கு ஓர் உற்சாகத்தையும், தங்கள் நாட்டில் புரட்சியை உண்டுபண்ணுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் அளித்தது. ஆனால் இத்தலியில் ஒரு பெரிய புரட்சியை நடத்துவ தானால், அஃது இந்த கார்போனாரி சங்கத்தினால் முடியாதென்பது மாஜினிக்கு நன்றாகத் தெரியும். வெற்றிகரமான ஒரு புரட்சியை நடத்துவதற்கு, உயர்ந்த லட்சியத்தோடு கூடிய ஒரு புதிய தாபனம் தேவையென்பதை இவன் நன்கு அறிந்து கொண்டும், அந்தப் புதிய தாபனத்தை அமைக்கும் பொறுப்பு தன்னுடையதேயென்பதை உணர்ந்துகொண்டு மிருந்தான். இதுவே பின்னர் யௌவன இத்தலி1 சங்கமாகப் பரிணமித்தது. இங்ஙனம் இவன் பழைய தாபனத்திலிருந்து கொண்டே புதிய தாபனம் ஒன்றுக்கு அடிகோலிக் கொண்டிருக்கையில், போலீ அதிகாரி களின் திருஷ்டி இவன்மீது பட்டுவிட்டது. இவனுடைய நடவடிக்கைகள் அவர்களுக்கு ஒருவித சந்தேகத்தை உண்டுபண்ணி வந்தன. எனவே. இவனைத் தொடர்ந்து கண் காணித்து வந்தார்கள். கடைசியில் 1830ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் ஒரு நாள், தன்கட்சிக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கையில் இவனைக் கைது செய்து, ஜினோவாவுக்கு மேற்கே கடற்கரை யோரமாகவுள்ள ஸாவோனா2 என்ற நகரத்திலிருக்கும் சிறைச் சாலைக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். அப்பொழுது இவனுக்கு வயது இருபத்தைந்து. 3. சிறை ஸாவோனா சிறை அதிகாரிகள் மாஜினிக்கு, படிப்பதற்கு பைபிள், பைரன் இயற்றிய கவிதைகள், டாஸிட்ட1 என்ற ரோம சரித்திராசிரியன் எழுதிய நூல்கள் ஆகிய இவற்றை மட்டும் கொடுத் திருந்தார்கள். மாஜினி, இவற்றைப் படிப்பான்; எதிரிலிருக்கும் சமுத்திரத்தை நோக்குவான்; மேலே யிருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பான்; தனது தாய்நாட்டின் நிலைமையைக் குறித்துப் பெரு மூச்சு விடுவான்; அதற்கு விமோசனம் எப்படி என்பதைக் குறித்து எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவான். இந்த எண்ணத்தின் ஆழத்திலிருந்துதான் யௌவன இத்தலி என்ற புதிய அரசியல் சங்கத்தை தாபிக்க வேண்டுமென்ற தீர்மானம் உதித்தது. இந்தச் சங்கத்திற்கு வேண்டிய திட்டங்களையும் சிறைச்சாலையிலேயே வகுத்துக் கொண்டான். இதைப் பற்றி மாஜினி பின்வருமாறு கூறுகிறான்:- ஸாவோனா சிறைச்சாலையில் நானிருந்த சில மாதங்களில் தான், யௌவன இத்தலி என்ற சங்கத்துக்கான திட்டங்கள் என் மனத்திற்குள் உருக்கொண்டன. எந்தெந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சி தாபனத்தை அமைப்பது, என்னென்ன நோக்கத்தைக் கொண்டு அஃது உழைப்பது, - அந்த நோக்கத்தை மட்டும் பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்பது என் உத்தேசம், - என்னென்ன முறைகளைக் கொண்டு சங்கத்தை தாபிப்பது, இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்ய யாராரைப் பொறுக்கி எடுப்பது, ஐரோப்பாவிலுள்ள மற்றப் புரட்சி சங்கங் களொடு இதனை எப்படி இணைப்பது என்பவைகளைப் பற்றி யெல்லாம் நான் தீர்க்காலோசனை செய்தேன். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாயிருந்தோம். எல்லோரும் வாலிபர்கள். எங்களுக்கிருந்த பொருளாதாரமும் செல் வாக்கும் மிகச் சொற்பம். எந்த இத்தாலிய உள்ளமானது இப்பொழுது மௌனத்திலே ஆழ்ந்து கிடக்கிறதோ, எந்த இத்தாலிய உள்ளமானது முற்காலத்துச் சரித்திரத்திலும், எங்களுடைய எதிர்கால திருஷ்டியி லும் புலனாகிக் கொண்டிருக்கிறதோ, அந்த இத்தாலிய உள்ளத்தின் உணர்ச்சிகளுக்கும், மனப்போக்குகளுக்கும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டியது எங்களுடைய முக்கிய கடமை என்பதை நான் நன்கு நம்பினேன். அந்தச் சுய உணர்ச்சிகள் யாவை, மனப்போக்குகள் யாவை என்பதைச் சரியாகத் தெரிந்து பாராட்டுவதிலேதான் எங்களுடைய பலம் இருக்க வேண்டும். எல்லாத் தேசீய இயக்கங்களும், சாதாரண மனிதர்களிடத்தி லிருந்தான் ஆரம்பித்திருக்கின்றன. அவர்களுக்கு அவர்களுடைய நம்பிக்கை, மனோ உறுதி ஆகிய இரண்டுதான் பக்க பலமாயிருந் திருக்கின்றன. இந்த நம்பிக்கையும் மனோ உறுதியுமுடையவர்கள், வழியிலே தோன்றும் இடையூறுகளையோ, காலத்தையோ எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் முன்னேறிச் செல்கிறபோது, வாழ்க்கைச் சௌகரியங்களும் சமுதாயச் செல்வாக்குமுடையவர்கள் இவர்களைப் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒன்று, அந்த இயக்கத்தை ஆதரித்து அதனைத் தொடர்ந்து நடத்தவாவது வந்து சேர்கிறார்கள்; அல்லது அந்த இயக்கத்தை, அதன் ஆதி நோக்கத்திலிருந்து திருப்பிவிடவாவது செய்கிறார்கள். இந்த யௌவன இத்தலி சங்கத்தை தாபிக்கிற விஷயத்தில், எனக்கு எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை. தனித் தனியாகப் பிரிக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், ஒடுக்கப்பட்டும் போயிருக்கிற ஒரு ஜாதியாரை மட்டும், அதாவது இத்தாலிய ஜாதியாரை மட்டும், கைதூக்கிவிட வேண்டு மென்பது என் எண்ணமில்லை ஐரோப்பாவி லுள்ள எல்லா ஜாதியினரிடத் திலும், ஒரு புதிய வாழ்வை உண்டு பண்ணுவதற்கும், தாபிப்ப தற்கும் இத்தலி ஒரு கருவியாக இருக்க வேண்டுமென்பதுவே என் ஆசை. * * * இந்தக் காலத்தில், ரோமாபுரியைத் தொழுது போற்றுவ தென்பது, என் சுபாவத்திலேயே ஒன்றாகி விட்டது. உலகமெல்லாம் ஒன்றுபட்ட ஒரு குடும்பம், உலகனைத்திலும் ஒரே ஜீவன்தான் ஊடுருவிச் செல்கிறது என்ற தத்துவங்களை, இந்த ரோமாபுரிதான் இரண்டு முறை விவரித்துக் காட்டியது. மற்ற ஜாதியினர், தங்க ளுடைய அற்ப நோக்கத்தை முடித்துக்கொண்டு, பூலோகத்தி லிருந்து சீக்கிரத்தில் மறைந்து விட்டார்கள். உலகத்திற்கு வழிகாட்டி அதனை நடத்திச் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள், ரோமாபுரி ஒன்றுக்குத்தான் இரண்டு முறை வாய்த்திருக்கின்றன. அங்கே, அந்த ரோமாபுரியிலே, வாழ்வென்பது சாசுவதமானது. மரணமென்பது அங்குத் தெரியாது. அதனுடைய நாகரிகம், கிரேக்க நாகரிகத்திற்கு முற்பட்டது. ஒரு சமயம், சீஸர்களுடைய தலைமையின்கீழ், அஃது, உலகத்தின் பல பாகங்களுக்கும் தன் கழுகுக் கொடியைத் தூக்கிச் சென்றது. அந்தக் கொடியோடு, சுதந்திர எண்ணத்தையும் எடுத்துச் சென்றது. இன்னொரு சமயம், அதாவது ரோமாபுரியானது உயிருள்ளவர்களுடைய சமாதிக் குழியாகிவிட்டது என்று மற்றவர்கள் துக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அது மீண்டும் தலைதூக்கி எழுந்தது. இதற்குக் காரணமாயிருந்தவர்கள் போப்பரசர்கள். இவர்கள் காலத்திலே, ரோமாபுரியை, இப்பொழுது எவ்வளவு கேவலமாக எல்லோரும் மதித்து வருகிறார்களோ அவ்வளவு உயர்வாக எல்லோரும் போற்றி வந்தார்கள். உலக ஒற்றுமையின் மையமாக அப்பொழுதைய ரோமாபுரி இருந்தது. அப்பொழுதைய தலைவர்கள் உரிமைகளுக்குப் பதில் கடமைகளையே அதிகமாக வற்புறுத்தினார்கள். இந்தக் கடமைகளை வற்புறுத்தியதன் மூல மாக, மனிதர்களுக்கிடையே சமத்துவ எண்ணத்தை வளர்த்தார்கள். புதிதான ஒரு ரோமாபுரி, இத்தாலிய மகாஜனங்களுடைய ரோமாபுரி, மூன்றாவது முறையாக ஏன் மீண்டும் தோன்றக்கூடாது? மீண்டும் ஏன் உலகத்திலே மகத்தானதோர் ஒற்றுமையை தாபிக்கக் கூடாது? ஆம்; அப்படிப்பட்ட ஒரு ரோமாபுரியினுடைய வருகை யின் சூசகங்களை இப்பொழுது நான் காண்கிறேன். அந்த ரோமா புரியானது இகலோகத்தையும் பரலோகத்தையும், உரிமையையும் கடமையையும், தனிப்பட்ட மனிதர்களையும் ஜனசமுதாயத்தையும் ஐக்கியப்படுத்துவதாயிருக்கவேண்டும் இப்படிப்பட்ட லட்சியம் வாய்ந்த ஒரு தாபனத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்துக்கொண்டு, மாஜினி சிறையிலிருந்து வெளிவந்தான். அந்தக் காலத்து இத்தலியை நாம் பார்ப்போமானால் மாஜினியின் இந்தத் திட்டம் எவ்வளவு மகத்தானது, எவ்வளவு துணிச்சலானது என்பது தெரிய வரும். அப்பொழுதைய இத்தலி, ஆம், சாம்ராஜ்ய இத்தலி, துண்டு துண்டு நாடுகளாகச் சிதறிக் கிடந்தது. பாஷை, சுபாவம் முதலியவற்றில் வித்தியாசப் பட்ட பல ஜாதியினர் போல் இத்தாலியர்கள் ஒற்றுமை யின்றி வாழ்ந்து வந்தார்கள். நாடெங்கணும் ரகசியச் சங்கங்கள்; ஆனால் அவைகளுக்குச் சமதையான அரசாங்க ஒற்றர்கள். ஆதிரியாவைத் தங்கள் ரொட்டியிலே கலந்து சாப்பிட்டு வந்த ஏழை ஜனங்கள். இவர்களை, அந்நிய ஆதிக்கமானது, நமது வாழ்வை, நமது நாட்டை, நமது பெயரை, நமது புகழை, நமது கலைஞானத்தை, நமது சுகசௌக்கியத்தைப் பறித்துக் கொண்டு விட்ட ஆதிரிய ஏகாதிபத்தியமானது, கேலிக் கூத்துக்கள், தமாஷாக்கள், தருமங்கள் முதலியவற்றிலே ஈடுபடுத்தி மயங்க வைத்திருந்தது. கிறிதவ மதாசாரியர்களை ஜனங்கள் எப்படிப் போற்றி வந்தார்களென்றால், அந்த ஆசாரியர்களின் சந்நிதானத்தி லிருந்து எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக எட்டிப் போகிறார் களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அந்த ஆசாரியர்களைக் கௌரவித்து வந்தார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைமையி லிருந்த தன் தாய்நாட்டை, சிறையிலிருந்து வெளிவந்த மாஜினி தன் அகக் கண்முன் நிறுத்திப் பார்த்தான். புறக் கண்ணில் துக்கநீர் வடித்தான். கதறினான்:- எனது நாட்டு மக்கள், என் கண் முன்னே ஐயோ! எப்படி வரிசை வரிசையாகச் செல்கிறார்கள்! இழி தகைமையையும் அரசியல் அடிமைத் தனத்தையும் அடையாளமாகத் தரித்துக் கொண்டு செல்கிறார்கள்; கந்தையுடுத்திச் செல்கிறார்கள்; பசியோடு செல்கி றார்கள்; பணக்காரர்கள், தங்கள் மேஜையிலிருந்து சில துண்டு துணுக்குகளைத் துச்சமாக வீசி எறிகிறார்கள். அவற்றையும், அவர்கள் புண்பட்ட மனத்தோடு பொறுக்கி யெடுத்துத் தின்கிறார்கள்; அல்லது மிருகத்தனமான ஒரு வெறியாட்டிலே, அல்லது அதிக கோபத்தினால் விளைகிற கோரச் சிரிப்பிலே அவர்கள் தங்களை மறந்து கிடக்கிறார்கள். அவர்களனுபவிக்கிற சந்தோஷம் காட்டு மிராண்டித்தனமான சந்தோஷம். ஆனால் அவர்களுடைய முகத்திலே, அதிக துக்கத்தினால் மிருகத்தனமாகிவிட்ட அவர் களுடைய முகத்திலே நமக்கு என்ன லட்சியம் உண்டோ அதே லட்சியமாகிற கடவுளின் விரல் அடையாளத்தை நான் காண்கிறேன். அப்படிக் காண்பதிலே, எதிர் காலத்தையும் பார்க்கிறேன். அப்பொழுது எனது நாட்டு ஜனங்கள் எவ்வளவு கம்பீரமாகக் காட்சியளிக் கிறார்கள்! சகோதரத்துவத்திலும், சமத்துவத்திலும், அன்பிலும் அவர்கள் ஒன்றுபட்டவர்களாகப் பிரகாசிக்கிறார்கள். அவர்களை, அந்த வருங்காலச் சந்ததியாரை, இழிதகைமையானது, தாற்றுக் கோல் போட்டுத் தள்ளிக்கொண்டு போகாது. அவர்கள் உரிமைக்கும் கடமைக்கும் வசப்பட்டுச் செல்வார்கள். அந்தக் காட்சியை நான் தரிசிக்கிறபோது, எனது இருதயமானது, இன்றைய நிலைமைக்கு இரங்குகிறது; வருங்காலத்தின் புகழைப் பாடுகிறது ஸாவோனா சிறையிலிருந்து மாஜினி வெளிவருவதற்குச் சில தினங்கள் முந்தித்தான், மத்திய இத்தலியிலுள்ள சில பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு விரோதமான புரட்சிகள் நடைபெற்றன. ஆனால் அதிகாரிகள், ஆதிரியாவின் துணைகொண்டு சுமார் மூன்று வாரத்திற்குள் புரட்சியை அடக்கிவிட்டார்கள். புரட்சியை நடத்திய வர்களுக்கும், ஆதிரியாவின் தாக்குதலைத் தங்களால் தாங்க முடியாதென்பது தெரியும். ஆனால், ஆதிரியா, இத்தலியின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடா தென்று நம்பினார்கள். தவிர, பிரான்சில் ஜனநாயகத்தின் பெயரால் தாபிக்கப்பட் டிருக்கும் அரசாங்கமானது, தங்களுடைய புரட்சி முயற்சி களுக்கு உதவி செய்யும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இவை யனைத்திலும் ஏமாற்றமடைந்தார்கள்; தோல்வியுமுற்றார்கள். மாஜினிக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. அந்நியர்களின் உதவியை எதிர்பார்த்து நடத்தப்படுகிற எந்தப் புரட்சியும் வெற்றி பெறா தென்பது இவனுடைய திடமான நம்பிக்கை. ஒரு நாட்டில் சுதந்திர விருட்சம் எப்பொழுது பலன் கொடுக்கிறது தெரியுமா? அந்த நாட்டு மக்கள் தங்கள் கையாலேயே சுதந்திர விதையைப் பூமியில் ஊன்றவேண்டும்; தங்கள் ரத்தத்தினாலேயே அதற்கு நீர் பாய்ச்ச வேண்டும்; தங்கள் வீரத்தினாலேயே அதற்கு வேலி போட்டுப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுது தான் அஃது - அந்தச் சுதந்திர விருட்சம் - பலன் கொடுக்கும் என்று இவன் முழக்கஞ் செய்தான். எந்த ஜாதி, தனது சொந்த முயற்சி களைக் கொண்டு சுதந்திரத்தைப் பெறவில்லையோ, அந்த ஜாதிக்குச் சுதந்திரம் பெற யோக்கியதை யில்லை. அப்படிப் பெற்றாலும் அதனை அது நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஜனங்களே, ஜனங்களுக்காகப் புரட்சிகள் செய்ய வேண்டும் என்று தனது நாட்டாருக்கு அறிவுறுத்தினான். புரட்சிகள் தோல்வியுற்றுப் போகின்றன வென்று சொன்னால் அதற்குக் காரணம் சரியான தலைமையில்லாமை என்பது இவன் கருத்து. இந்தத் தலைமையை, இளைஞர்களிடத்திலே ஒப்புவிக்க வேண்டுமென்றும், அவர்களிடத்தில்தான், வருங்காலத்தைப் பார்க்கிற சக்தி இருக்கிற தென்றும் இவன் கூறினான். இளைஞர்களைப் பாமர ஜனங்களின் தலைவர்களாக நியமியுங்கள். இவர்களிடத்திலே எவ்வளவு மகத்தான சக்தி அடங்கி யிருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியாது. இவர்களுடைய பேச்சில், பாமர ஜனங்களை வசீகரிக்கும் சக்தி எவ்வளவு அடங்கியிருக்கிற தென்பது உங்களுக்குத் தெரியாது. இவர்கள் புதிய மதத்தை, தேசீய மதத்தைப் பரப்பும் தூதர்கள். ஆனால் ஒன்று ஞாபக மிருக்கட்டும். இளைஞர்கள், அசைவிலேதான் வாழ்கிறார்கள். உற்சாகத்திலேதான் நம்பிக்கையிலேதான் வளர்கிறார்கள்; உயர்ந்த லட்சியத்தினால் அவர்களைப் புனிதப் படுத்துங்கள். போட்டி போட்டுக்கொண்டு முன்னே செல்லுமாறு அவர்களைச் செய்யுங்கள். அவர்கள் மத்தியிலே உற்சாகக் கனலை மூட்டுங்கள். நாடு, புகழ், சக்தி, பெருமை வாய்ந்த பழைய நினைவுகள் ஆகிய இவைகளைப் பற்றி அவர் களிடம் பேசுங்கள் இளைஞர்களால், இத்தலியின் வருங்காலத்தைச் சிருஷ்டிக்க முடியுமென்பது மாஜினியினுடைய திடமான நம்பிக்கை. இதனால் தான், யௌவன இத்தலி சங்கத்தில் நாற்பது வயதுக்கு மேற்பட்ட வர்கள் அங்கத் தினர்களாகச் சேரக் கூடாதென்ற கண்டிப்பான விதி ஏற்படுத்தினான். யௌவன இத்தலி யின் முக்கிய நோக்கம், ஜனங்களைச் சிந்திக்கச் செய்வது; அவர்களைச் செயலுக்கு உந்துவது. ஜனங் களுக்கு, அவர்கள் ஏன் இந்தக் கேவல நிலைமைக்கு வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்பவைகளை எடுத்துக் காட்டி இவற்றிற்குப் பரிகாரத்தையும் சொல்லுங்கள். ஏழை மக்களின் பக்கந்தான் கடவுள் இருக்கிறார் என்பதை அவர்கள் நம்பும்படி செய்யுங்கள். இவ் விரண்டையும் செய்து விட்டீர் களானால் உங்கள் லட்சியம் எளிதில் கைகூடும் என்று மாஜினி, அடிக்கடி தன் நண்பர்களிடம் கூறுவான். இதனாலேயே, இவன் தேசீயத்தை ஒரு மதமாகப் போதித்து வந்தான். கடவுளும் மகா ஜனங்களும் என்ற இரண்டு வார்த்தைகள்தான், இவனுடைய யௌவன இத்தலி சங்கத்திற்கு இரண்டு அதிவாரச் சுவர்கள் போலிருந்தன. புராதனப் பெருமையை மட்டும் சொல்லிக்கொண்டு, நிகழ் காலத்தில் சும்மா யிருப்பதை இவன் சிறிதுகூட விரும்பவில்லை. இன்றைய இத்தலியை ஒரு சவக்குழியென்று சொல்கிறார்கள். வாதவம். ஆனால் வீணர்களும் வம்பர்களும் நிறைந்துள்ள ஒரு நாட்டைக் காட்டிலும், மகான்களைக் கொண்ட ஒரு சவக்குழிக்கு அதிகமான ஜீவ களை இருக்கிறதல்லவா? என்கிறான் ஓரிடத்தில் மாஜினி. ஜனங்களைச் செயலுக்குத் தூண்ட வேண்டுமானால், தலைவர்கள் கர்ம வீரர்களா யிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கர்ம வீரர்களைச் சிருஷ்டித்துக் கொடுப்பது யௌவன இத்தலியின் வேலைகளில் ஒன்று. தன்னுடைய எதிர்கால வேலைக்கு வேண்டிய இந்த மாதிரி யான திட்டங்களையெல்லாம் தயாரித்துக் கொண்டு மாஜினி, 1831ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் ஸாவோனா சிறையிலிருந்து வெளி வந்தான். ஆனால் அதிகாரிகள் இவனை உடனே தேசப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். எனவே, தன் தாய்நாட்டினிடமும் விடை பெற்றுக்கொண்டு பிரான்சிலுள்ள மார்சேல்1 நகரம் வந்து சேர்ந்தான். 4. புரட்சி மாஜினி, மார்சேல் நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அப்பொழுது இவனுக்கு வயது இருபத்தாறு. ஏற்கனவே மார்சேல் நகரத்தில் சில இத்தாலியர்கள் இருந்தார்கள். இவர்கள், மத்திய இத்தலியில் நடைபெற்ற முந்திய புரட்சிகளில் கலந்து கொண்டவர்கள்; பின்னர் தேசபிரஷ்ட மடைந்தார்கள். மாஜினி, இவர்களனைவரையும் ஒன்று திரட்டினான். தன்னுடைய திட்டங்களை எடுத்துச் சொன்னான். இந்தத்திட்டங்களை ஒழுங்குபட நிறைவேற்றினால், இத்தலியை, ஒரு தலைமுறையிலேயே சுதந்திரக் குடியரசு நாடாகச் செய்துவிடலா மென்ற நம்பிக்கையை இவர்களுக்குண்டு பண்ணினான். இவர்களும் இவனை ஒரு தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அனைவரும் சேர்ந்து ஒரு சிறு அறையை வாடகைக்குப் பிடித்தார்கள். அதில் யௌவன இத்தலி சங்கம் தாபிதமாயிற்று. இந்தச் சிறிய அறையிலிருந்துகொண்டு, செல்வமும் செல்வாக்குமில்லாத ஒரு சில இளைஞர்களைத் துணைவர்களாகச் சேர்த்துக்கொண்டு, பண பலமும் ஆயுத பலமும் மிக்க மகத்தான ஆதிரிய ஏகாதிபத்தியத் தின் ஆதரவு நிழலிலே சுய உணர்வு இல்லாமல் படுத்துறங்கும் பல வர்ணப் பட்சிபோன்றிருந்த இத்தலியைத் தட்டியெழுப்ப தீர்மானித்துவிட்டான் மாஜினி. என்ன துணிச்சல்! எவ்வளவு தன்னம்பிக்கை! மாஜினி, ஆரம்பத்திலிருந்தே, யௌவன இத்தலியின் நோக்க மென்னவென்பதைப் பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டான். ஆனால், அந்த நோக்கங்களை யடையும் பொருட்டு, அஃது என்ன முறைகளைக் கடைப் பிடிக்கும் என்பதை இவன் பகிரங்கப்படுத்திச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லக்கூடாதென்றும் தீர்மானித் தான். அவை ரகசியமாக இருக்கவேண்டுமென்பது இவன் கொள்கை. பகிரங்கமாக வேலை செய்வதென்பது, நாமே வலிய தூக்கு மேடையை நோக்கிச் செல்வது போலாகு மென்று இவன் கருதினான். எனவே, யௌவன இத்தலி ஆரம்பத்திலிருந்தே ஒரு ரகசியச் சங்கமாக இருந்தது. இந்தச் சிறிய கோஷ்டியினர், தங்கள் தாய்நாட்டின் விமோசனத் திற்காக எவ்வளவு உற்சாகத்துடன் வேலை செய்தார்கள்! எத்தகைய தன்னலத் தியாகம்! மாஜினியே இதை வருணிக்கட்டும்:- அப்பொழுது என்னோடு சேர்ந்து உழைத்த அந்தச் சிறிய கோஷ்டி யினரைப் போல் வேறொரு கோஷ்டியினரை நான் பார்த்ததில்லை. அவர்கள் பக்தி சிரத்தையோடு வேலை செய்தார்கள். பரபரம் ஒருவருக் கொருவர் ஆழ்ந்த அன்பு செலுத்தினார்கள். அவர்கள் பரிசுத்தமான உற்சாகமுடையவர்களாயிருந்தார்கள். எந்த நாளானாலுஞ் சரி, எவ்வளவு நேரமானாலும் சரி, அவர்கள் எந்த வேலையையுஞ் செய்யத் தயாராயிருந்தார்கள் எங்களுக்கு அப்பொழுது தனியாக ஒரு காரியாலயம் இல்லை. வெளியிலிருந்து வந்து உதவி செய்வோரும் இல்லை. நாள் பூராவும், இராக் காலத்தில் பெரும் பாகமும் நாங்கள் எங்கள் வேலையில் முழுகிக் கிடந்தோம். கட்டுரைகள் எழுதுவது, கடிதப் போக்குவரத்துக்கள் செய்வது, இத்தலியிலிருந்து வருகிறவர்களிடமிருந்தும், வெளிநாடுகளி லிருந்து வரும் இத்தாலியர்களிடமிருந்தும் விஷயங்கள் சேகரிப்பது, கப்பல் மாலுமிகளை எங்கள் கட்சியில் அங்கத்தினர்களாகப் பதிவு செய்து கொள்வது, காகிதங்கள், பத்திரிகைகள் முதலியவைகளை மடிப்பது, கவர்கூடுகளை ஒட்டுவது முதலிய எல்லா வேலைகளையும் நாங்கள் பங்கு போட்டுக்கொண்டு செய்தோம். எல்லோரும் சகோதரர்கள் போல் சமதிருஷ்டியுடன் வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு, ஒரே ஓர் எண்ணந்தான், ஒரே ஒரு நம்பிக்கைதான், ஒரு லட்சியந்தான் இருந்தது. குடியரசு சித்தாந்தத்திலே நம்பிக்கை கொண்டிருந்த அந்நிய நாட்டார் பலர், எங்களுடைய உறுதியையும் சோர்வில்லா உழைப்பையும் கண்டு வியந்தார்கள். எங்கள் மீது அன்பு செலுத்தி னார்கள். எங்களுடைய அன்றாடத் தேவைகள் அதிகமா யிருந்தன. ஆனால் நாங்கள் எதனையும் அலட்சிய பாவத்தோடு, புன் சிரிப்போடு ஏற்றுக் கொண்டோம். ஏனென்றால் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் திடமான நம்பிக்கை கொண்டிருந்தோம். சுமார் இரண்டு வருஷகாலம் இந்தச் சிறிய கோஷ்டியினர் சலியாது உழைத்தனர். இவர்கள், தங்களுக்கென்று சொந்தமாக ஓர் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திக் கொண்டனர். எங்களிலே ஒருவன் அச்சுக் கோர்ப்பான்; இன்னொருவன் சரி பார்ப்பான்; வேறொருவன் எங்கள் பிரசுரங்களை, உரிய இடங்களிலே கொண்டு சேர்ப்பிப்பான். இப்படியாக இந்த அச்சுக் கூடத்திலிருந்து அநேக துண்டுப் பிரசுரங் களை ஆயிரக்கணக்கான பிரதிகளாக வெளியிட்டு இத்தலிக்கு ரகசியமாக அனுப்பி வந்தான் மாஜினி. இவை தவிர, தீவிரப் போக்குடைய பல நாட்டுப் பத்திரிகை களுக்குக் கட்டுரைகள் எழுதினான். இத்தலியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாஜினியின் எழுத்து வேகத்திலும், மாசற்ற தேச பக்தியிலும் ஈடு பட்டு, தங்களுடைய சர்வத்தையும் பலி கொடுக்கத் தயாரானார்கள்; மாஜினியின் சித்தாந்தங்களைத் தேசமெங்கனும் பரப்பினார்கள். இவர்களுக்கு மாஜினி கட்டளையிடுகிறான்:- மலைகளின் மீது ஏறுங்கள்; குடியானவர்களுடைய குடிசை களில் சென்று உட்காருங்கள்; தொழிலாளர்களுடைய பட்டறை களுக்குச் செல்லுங்கள். அவர்களெல்லாரையும் இதுகாறும் நீங்கள் புறக்கணித்து வந்தீர்கள். இனி அப்படி இருக்கக்கூடாது. அவர்க ளுடைய நியாயமான உரிமைகள் என்ன, அவர்களுடைய பரம்பரைச் சம்பிரதாயங்களென்ன, பரம்பரைப் புகழென்ன, பழைய வியாபாரப் பெருமைகளென்ன, இவை களெல்லாவற்றையும்பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் அவர்கள் ஆயிரக்கணக்கான கொடுமை களால் அழுத்தப்பட்டுக் கிடக்கிறோ மென்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. அவற்றை யாரும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வில்லை. அவற்றையெல்லாம் நீங்கள் விவரித்துச் சொல்லுங்கள். இத்தலியிலே, யௌவன இத்தலியின் கிளைச் சங்கங்கள் பல தோன்றலாயின. இரண்டு வருஷ காலத்திற்குள், சுமார் அறுபதி னாயிரம் பேர் இந்தச் சங்கங்களில் அங்கத்தினர்களாகச் சேர்ந் தார்கள். இங்ஙனம் யௌவன இத்தலி, செல்வாக்கிலே பெருகிக் கொண்டு வருவதை ஆதிரிய அரசாங்கத்தார் விரும்பவில்லை. 1833ஆம் வருஷம் இந்தச் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்வது குற்றமாகுமென்றும், அப்படிச் சேர்வோர் மரண தண்டனை விதிக்கப்படுவர் என்றும் உத்தரவிட்டனர். இது நிற்க. பீட்மாண்ட் அரச பரம்பரையினர் சுயேச்சதிகாரிகளாயிருந்த போதிலும் இத்தாலிய ரத்தமுடைய அரசபரம்பரையினரா யிருந்தார்கள். ஆதிரிய ஆதிக்கத்தினின்று இத்தாலியை விடுவிக்க வேண்டுமானால் அஃது இந்த பீட்மாண்ட் அரச பரம்பரையின ரால்தான் முடியுமென்று எல்லா இத்தாலியர்களும் நம்பி வந்தார்கள். இதற்கனுகூலமாக, இந்த பீட்மாண்ட் சிங்காதனத்தில், 1830ஆம் வருஷம் சார்ல ஆல்பர்ட்1 என்ற ஒருவன் கொலு வீற்றிருந்தான். இவன் தேசீயவாதியாக நடித்தான். பாலியத்தில் கார்போனாரியில் ஓர் அங்கத்தினனாகக்கூட இருந்தான். இத்தகைய காரணங்களினால் தேசீய இயக்கத்திற்குத் தலைமை பூண்டு நடத்தக்கூடியவன் இவன் ஒருவனே என்று எல்லாத் தீவிரவாதிகளும் நம்பினார்கள். மாஜினி கூட, ஆம் நன்மைக்கும் தீமைக்கும், சத்தியத் திற்கும், அசத்தியத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பிற்போக்குக்கும் சமரஸமே ஏற்பட முடியாது என்று பின்னொரு காலத்தில் முழக்கஞ் செய்த மாஜினிகூட, நம்பினான். மார்சேலுக்கு வந்த நாலைந்து மாதங் கழித்து மேற்படி சார்ல ஆல்பர்ட் மன்னனுக்கு, தேசீய இயக்கத்திற்குத் தலைமை பூண்டு, ஆதிரிய ஆதிக்கத்திற்கு விரோதமாகக் கிளம்புமாறு ஒரு கடிதம் எழுதினான். இந்தக் கடிதத்திற்கு சார்ல ஆல்பர்ட் மன்னன் அளித்த பதிலென்ன? மாஜினி இத்தாலிய எல்லைக்குள் காலடி எடுத்துவைத்தால், உடனே கைது செய்யப்பட வேண்டுமென்று உத்தர விட்டான்! ஆனால், மார்சேலிலிருந்த தேசப்பிரஷ்டர்கள் இதற்காகச் சலிப்புக் கொள்ளவில்லை. மேலே சொன்ன விதமாகப் பிரசாரஞ் செய்து வந்ததோடு, ஜினோவா, அலெஸாந்திரியா1 முதலிய இடங்களில் புரட்சியைக் கிளப்பத்திட்டம் போட்டுக் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளையும் துரிதமாகச் செய்தார்கள். ஒன்று பீட்மாண்ட் அரசன், இந்தப் புரட்சிகளுக்குத் தலைமை பூண்டு நடத்தவேண்டும்; அல்லது முடி துறக்கவேண்டும். இவர்கள் நோக்கம் இதுதான். ஆனால் கடைசி சமயத்தில், இவர்களுடைய ஏற்பாடுகள் பீட் மாண்ட் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டன. பலமான அடக்கு முறையை ஆரம்பித்தார்கள். சந்தேகிக்கப்பட்ட நபர்களையெல் லாம் சுட்டுக்கொன்றார்கள். கைதியானவர்களைப் பலவித இம்சை களுக்குட் படுத்தினார்கள் நண்பர்களைக் காட்டிக் கொடுக்குமாறு மருந்து மாயங்களெல்லாம் உபயோகிக்கப்பட்டன. மாஜினியின் உயிர்த்தோழனாகிய ஜாக்கோபோ ரூபினி2 என்பவன், நண்பர் களைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவனாய் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டு விட்டான். மாஜினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசாங்கத்தார், இவனைத் தங்கள் நாட்டினின்று பிரஷ்டம் செய்துவிட்டதாக உத்தரவு போட்டு விட்டார்கள். இவனுடைய அச்சுக்கூடம், காரியாலயம் எல்லாம் கலைக்கப்பட்டு விட்டன. மாஜினி, மார்சேலிலேயே ஒரு நண்பனுடைய வீட்டில் சுமார் ஒரு வருஷ காலத்திற்குமேல் ஒளிந் திருந்து வாழ்க்கையை நடத்தினான். இந்த ஒரு வருஷ காலத்தில், இரண்டு தடவைதான் வீட்டை விட்டு வெளியே சென்றான். அதுவும் இராக்காலத்தில்தான். ஒரு சமயம் பெண் வேஷந்தரித்துக் கொண்டு சென்றான்; இன்னொரு சமயம் போர்ச் சேவகனைப்போல் வேஷம் போட்டுக்கொண்டு சென்றான். பீட்மாண்டில் புரட்சிகளை உண்டுபண்ண வேண்டுமென்ற முயற்சி தோல்வியடைந்துவிட்டது. அது காரணமாக உத்தம நண்பர்கள் பலர், சிறப்பாக ஜாக்கோபோ ரூபினி, அரசாங்கத்தாரின் அடக்கு முறைக்கு இரையாகிவிட்டனர். இவையெல்லாம் சேர்ந்து, மாஜினியின் தேகத்தை நோய்க்கும், உள்ளத்தைக் கலக்கத்திற்கும் இரையாக்கிவிட்டன. பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டான். இந்தச் சந்தர்ப்பத்தில் ஜியூட்டிடா சித்தோலி3 என்ற ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட்டான். இந்தப் பெண்ணைத் தன் ஆயுள் பரியந்தம் இவன் மறக்கவில்லை. 5. ஏக்கம் இனி மார்சேலில் இருந்து பிரயோஜனமில்லை என்பதைத் தெரிந்த மாஜினி, 1833ஆம் வருஷம் ஜூலை மாதம் விட்ஜர் லாந்திலுள்ள ஜினீவா (Geneva) நகரத்திற்குச் சென்றான். பீட்மாண்ட் முதலிய பிரதேசங்களில் மீண்டும் ஒரு புரட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. இவற்றை, தான் நேரில் இருந்து கவனிக்க வேண்டுமென்பதற்காக இவன் ஜினீவா சென்றான். இங்கு, பல நாட்டுப் பிரஷ்டர்களும் கூடியிருந்தார்கள். இவர்களனைவரையும் ஒரு தொண்டர் படையாகச் சேர்த்தான். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. ஆனால் புரட்சியிலே மனமில்லாத ஒருவன், மாஜினியின் ஆலோசனைக்கு விரோதமாக, தொண்டர் படையின் தலைவனாகத் தேர்தெடுக்கப்பட்டான். கேட்க வேண்டுமா? புரட்சி நடைபெறவில்லை. தொண்டர் படை கலைக்கப்பட்டு விட்டது. விட்ஜர்லாந்து அரசாங்கத்தார், மாஜினியை தேசப் பிரஷ்டம் செய்துவிட்டார்கள். இவனுடைய தாபனமும் கலைக்கப் பட்டுவிட்டது. இவனுடைய சகாக்கள் பலர் நாடு கடத்தப்பட்டு விட்டார்கள். ஆனால் மாஜினி விட்ஜர்லாந்திலேயே இருக்கத் தீர்மானித்தான். இத்தலிக்குச் சமீபத்திலிருந்தால்தான், தனது புரட்சி ஏற்பாடுகளை ஒருவாறு தொடர்ந்து செய்து கொண்டிருக்கலா மென்பது இவன் எண்ணம். ஆனால் விட்ஜர்லாந்து அதிகாரிகள் இவனைச் சும்மா விடவில்லை. இவனை எப்படியாவது கைது செய்து நாடு கடத்தி விடத் தீர்மானித்தார்கள். மற்ற வல்லரசினர் இவர்களை அவ்வளவு பலமாக நெருக்கினர். எனவே, இவன் - மாஜினி - ஊர் ஊராக, வீடு வீடாக ஓடி ஒளிந்து வாழ வேண்டிருந்தது. சுமார் மூன்று வருஷ காலம், போலீஸார் இவனை வேட்டையாடினார்கள். வேட்டை என்று சொன்னால், அதனுடைய முழு அர்த்தம் என்னவோ அந்த அர்த்தத்தில் வேட்டை யாடினார்கள். இதில் சிறிது கூட மிகை கிடையாது. ஒரு சமயம், தொடர்ந் தாற்போல் ஏழு மாத காலம் போலீஸாருக்கு அகப்படாமல் இவன் ஓடியிருக்கிறான். ஒரு நாள் இரவு ஓரிடத்தில் இருந்தோமென்பதில்லை. ஊர்ப்புறங்களிலே, குட்டிச் சுவர்களுக்கு மத்தியிலே எத்தனையோ இரவு களைக் கழித் திருக்கிறான். தன்னந்தனியனாய், அன்ன ஆகார மில்லாமல், காட்டு வழிகளிலே, மலைப் பாதைகளிலே மைல் கணக்காக நடந்து சென்றிருக்கிறான். இவ்வளவும் எதற்காக? போலீஸாரை ஏமாற்றுவதற்கா? இல்லை, இல்லை. தாய் நாட்டுக்குச் சேவை செய்து கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக! இவ்வளவு அல்லல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலும், மாஜினி இத்தலியிலே என்னென்ன நடைபெறுகிறதென்பதைத் தன் நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டு வந்தான். இந்தச் செய்திகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு யௌவன இத்தலி சங்க வேலை களையும் விடாமல் நடத்தி வந்தான். அவ்வப்பொழுது துண்டுப் பிரசுரங்களை எழுதி வெளியிட்டு இத்தலிக்கு அனுப்பி வந்தான். இவைகளுக்காக, அச்சுக்கூலி, தபாற்செலவு முதலியனவற்றையும் இவனே சமாளிக்க வேண்டி யிருந்தது. தனது அன்றாடத் தேவை களைக் கூட மறுத்துக்கொண்டு இவன் இந்தக் காரியங்களைச் செய்துவந்தான். அநேக சந்தர்ப்பங்களில், இவன் ஆடையில்லாமல், அவதிப் பட்டிருக்கிறான். தனக்கு அவசியமாக என்ன தேவையோ அதைப்பற்றித் தன் தாயாருக்கு, மிக்க சங்கோஜத் துடன் எழுதுவான். அவளும் ஒரு சமயங்கூட மறுக்காமல், தன்னால் முடிந்ததை அவ்வப் பொழுது அனுப்பி வந்தாள். காட்டிலே, மேட்டிலே, பாலை வனத்திலே எங்கிருந்தாலும் தாயன்பு அமுத ஊற்றல்லவா? ஆனால் இந்தத் தேக உபத்திரவங்கள், மனோ வேதனைகள் முதலியனகூட மாஜினியை அதிகமாகப் பாதிக்கவில்லை. தான் தொடங்கிய புரட்சிகள் வெற்றியடையாமற் போனதன் காரணமாக, தன் கட்சி சீர்குலைந்து போய்க் கொண்டிருப்பது இவனை அதிகமாகப் பாதித்து விட்டது. இத்தலியில் முக்கியமான பலர், கட்சியைவிட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள். இவனோடு பிரஷ்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த பலர், தோல்விக்கெல்லாம் காரணம் இவன்தானென்று பழி சுமத்தினர்; நேர்முகமாகவும் மறைமுகமாகவும் இவனைத் தாக்கினர். இவையெல்லாம் சேர்ந்து, இவனை என்றுமில்லாத ஓர் ஏக்கத்திற்குட் படுத்தி விட்டன. என்னைக் கரியதோர் ஏக்கம் பிடித்துக் கொண்டு விட்டது. உலகத்திலே நான் தனியனாக விடப்பட்டு விட்டதான ஓர் உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. என் தாயாரைத் தவிர, இந்த உலகமெல்லாம் எனக்குச் சூனிய மாகப்பட்டது என்று இந்தக் காலத்தை இவனே வருணித்திருக் கிறான். இப்படிப்பட்ட கரிய ஏக்கத்தில் கூட தாய் நாட்டின் எதிர் கால நலவாழ்வு என்னும் ரேகையானது விட்டுவிட்டு இவன் உள்ளத் தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. கதறுகிறான் ஓரிடத்திலே:- என் குற்றத்திற்குப் பழி தீர்த்துக் கொள்வதுபோல் இறந்து போன என் நண்பர்களுடைய உருவங்கள் என்முன் தோன்றித் தோன்றி மறைந்தன. ஐயோ! அவர்களை மீண்டும்நான் உயிர்ப்பிக்க முடியவில்லையே! எத்தனை தாய்மார்களை நான் அழச்செய்திருக் கிறேன்! இத்தாலிய இளைஞர்கள் மகத்தான சேவைகளில் ஈடுபட வேண்டுமென்றும் தாய் நாட்டின் மீது தணியாத காதல்கொள்ள வேண்டுமென்றும் நான் வற்புறுத்திக்கொண்டு சென்றால், இன்னும் எத்தனை தாய்மார்கள் அழக் கற்றுக்கொள்ள வேண்டுமோ? இந்த மாதிரியான ஏக்கத்திலே இவன் பல நாள் அவதைப் பட்டுக் கடைசியில் ஒருவாறு மன நிம்மதியடைந்தான். இந்த நிம்மதி இவனையறியாமலே இவனுக்கு ஏற்பட்டது. இதைப் பற்றி இவனே ஓரிடத்தில் கூறுகிறான்:- ஒருநாள் என் படுக்கையைவிட்டு எழுந்ததும், என் மனம் சாந்தியடைந்திருப்பது தெரிந்தது. ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாக உணர்ந்தேன். * * * இயற்கை யன்னை என்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது. களைத்துப் போயிருந்த எனது சரீரத்திலே புதியதொரு ஜீவ சக்தி புகுந்தது. * * * என்னையே நான் பரிசோதித்துக் கொண்டேன். அப்பொழுது என் மனம் எனக்கு ஆணையிட்டது:- மகனே! உனது லட்சியம் இன்னதுதான் என்று வகுத்துக் கொண்டு அதில் நீ நம்பிக்கை கொண்டுவிட்ட பிறகு, எந்த இடையூறுகளும் உன்னைத் தடை செய்யக்கூடாது. உனது சக்தி யனைத்தையும் உபயோகித்து அந்த லட்சியத்தை நிறைவேற்று. அன்பினால் ஆசீர்வதிக்கப்பட்டாலும், துவேஷத்தினால் வெறுக்கப் பட்டாலும் உன் லட்சியத்தை நிறைவேற்று. மற்றவர்கள் உன்னோடு சேர்ந்துஉனக்குப் பலம் கொடுத்தாலுஞ் சரி, தங்கள் கொள்கைக்காக வீர மரணமெய்துகிற மகான்களை இயற்கையாகச் சூழ்ந்து கொண்டுவிடுகிற தனிமை யானது உனக்குத் துன்பத்தைத் தந்தாலுஞ் சரி, உன் லட்சியத்தை நிறைவேற்று. நீ செல்ல வேண்டிய பாதை தெளிவாயிருக்கிறது. துயரங்களையும் ஏமாற்றங்களையும் பொருட் படுத்திக் கொண்டு, நீ அந்தப் பாதையில் செல்லத் தயங்குவா யானால், உன் லட்சியத்தை யடையப் பின்வாங்குவாயானால்நீ ஒரு கோழை; உன்னுடைய எதிர்காலத்திற்கு நீ ஒரு துரோகி இவனுடைய விட்ஜர்லாந்து வாசத்தின்போது, இவனுடைய நிழல்போலிருந்தவர்கள், மேலே சொல்லப்பட்ட ஜாக்கோபோ ரூபினியின் இரண்டு சகோதரர்களான அகோட்டினோ ரூபினியும், ஜியோவன்னி ரூபினியுமாவார்கள்1. இவர்கள் மாஜினியைத் தங்கள் குருவாக மதித்து அவர் சென்ற வழியெல்லாம் சென்றனர். ஆனால் அவர்களுக்குக்கூட விட்ஜர்லாந்தின் ஒளிந்த வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. வேறெங்கேனும் போகலாமென்று தங்கள் தலைவனைக் கேட்டுக் கொண்டார்கள். இதனை மறுக்க முடியாதவனாய், மாஜினி, அவர்களுடன் 1837ஆம் வருஷம் ஜனவரி மாதம் லண்டன் நகரத்திற்கு வந்தான். அப்பொழுது இவனுக்கு வயது முப்பத்திரண்டு. 6. சேவை முன்பின் பரிச்சயமில்லாத ஊர். இங்கிலீஷ் பாஷையும் சரியாகத் தெரியாது. கையிலே போதிய பணமில்லை. இப்படிப் பட்ட நிலைமையில் மாஜினி, ரூபினி சகோதரர்கள் இருவர், நாடு கடத்தப்பட்டு வந்திருந்த வேறு இரண்டுபேர் ஆகிய ஐவரும், லண்டனில் சாதாரண ஜனங்கள் வசிக்கிற இடத்தில் சுமார் மூன்று வருஷ காலம் வாழ்க்கையை நடத்தினார்கள். மகா பரிதாபகரமான வாழ்க்கை! இந்த ஐவருக்குள்ளும் அடிக்கடி மனதாபங்கள் உண்டாகும். சில்லறை விஷயங்களைப்பற்றி யெல்லாம் சச்சர விட்டுக் கொள்வார்கள். எல்லாம் பணமில்லாக் குறை தான்! மாஜினி, கவி உள்ளம் படைத்தவன். புதகங்களிலே மன நிம்மதி பெறப் பார்ப்பான். புதகங்களைச் சொந்தமாக வாங்கிப் படிக்கக் கையில் காசில்லை. இவனை நம்பி புதகங்களை இரவல் கொடுப்பாருமில்லை. எனவே பிரிட்டிஷ் மியூசியம்’ (British Museum) என்னும் பெரிய நூல் நிலையத்திற்குச் சென்று பகல் வேளைகளைக் கழிப்பான். புதகங்களைப் படித்துக் கொண்டிருந்தால் வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டுமே. இவனுடைய தகப்பன், எண்ணெய் வியாபாரம் செய்யும்படி ஒரு தொகை அனுப்பினான். மாஜினி, வியாபாரியாக இருக்க முடியுமா? தந்தை அனுப்பின பணத்தைத் தோற்றான். இதைக் கேட்ட தந்தை ஆத்திர மடைந்து இவனுக்கு ஒரு கடிதம் எழுதினான். இதனால் இனி குடும்பத்திலிருந்து எவ்வித உதவியும் பெறுவதில்லை என்று தீர்மானித்து விட்டான் மாஜினி. இனி பிழைப்புக்கு வழி? அச்சுக்கூடங்களிலே எங்கேனும் ப்ரூப் திருத்தும் வேலை அகப்படுமாவென்று பிரயத்தனப் பட்டான். கிடைக்கவில்லை. பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதிப் பணஞ் சம்பாதிக்கலாமா வென்று பார்த்தான். இத்தாலிய பாஷையிலே முதலில் கட்டுரைகள் எழுதி, பின்னர் வேறொருவனைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பித்து, பிறகே பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் களுக்கு இவன் முன் கூட்டியே பணத்தைக் கொடுத்துவிடுவான். ஆனால் இவனுக்குப் பத்திரிகாலயங்களிலிருந்து லேசில் பணங் கிடைக்காது. அப்படிக் கிடைத் தாலும் மிகச் சொற்பமாகத் தானிருக்கும். இந்த லட்சணத்தில், இவன், தன்னைஅண்டினவர் களுக்கெல்லாம் இல்லை யென்று சொல்லாமல் ஏதேனும் உதவி செய்வான். இதனால், இவனுடைய சாமான்கள் ஒவ்வொன்றாக அடகுக் கடைக்கு நகர ஆரம்பித்தன. ஒரு சமயம், ஞாயிற்றுக்கிழமை ஆகாரத்திற்காக, சனிக்கிழமை யன்று, ஒரு ஜதை பூட்களையும் பழைய வெயிட் கோட் ஒன்றையும் அடகு வைத்துப் பணம் வாங்கினான். இன்னொரு சமயம், நல்ல குளிர், இவனுடைய நண்பன் ஒருவன் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து இவன், தன்னுடைய ஒரே ஓவர் கோட்டைக் கொடுத்துவிட்டான்! அநேக சமயங்களில் இவன் உடுத்திக் கொள்ளப் போதுமான ஆடையில்லாத காரணத்தினால், பிரிட்டிஷ் மியூசியத்திற்குப் போகாமலே இருந்திருக் கிறான். தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளை அடகு வைத்து ஒரு சமயம் கடன் வாங்கப் பார்த்தான். பலிக்கவில்லை. பாரி நகரிலிருந்த சில நண்பர்கள் இவனுக்குச் சுமார் நூற்றிருபது பவுன் கடனாகக் கொடுத் தார்கள். இதைக் கொண்டு சிறிது காலம் தள்ளினான். இவனுடைய களங்கமற்ற மனதையே ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு நண்பன், இவனுக்கு ஒரு சிறுதொகை நன்கொடையென்று சொல்லிக் கொடுத்துப் பிறகு அதற்கு வட்டி போட்டு பூராவையும் வசூலித்துவிட்டான்! இத்தலியிலுள்ள சில நண்பர்கள், இவனுக்காகச் சந்தா மாதிரி வசூலித்து அதனை நன்கொடையாகக் கொடுப்பதாக இவனுக்கு யோசனை கூறினார்கள். நன்கொடையா? என் தாயார் இதைக் கேட்டால் வெட்கத்தினால் இறந்து போவாள் என்று சொல்லி இந்த யோசனையைக் கண்டிப்பாக நிராகரித்துவிட்டான். எனவே, வேறு வழியின்றி லேவாதேவிக்காரர்களின் கையில் சிக்கிக் கொண்டான். அபார வட்டி! நூற்றுக்கு நூறு விகிதங்கூட வட்டி கொடுத்திருக்கிறான். ஏழை மனிதனுடைய கடைசி சொட்டு ரத்தத்தையும், அவனுடைய சுயமரியாதையின் கடைசி கிழிசலையும் பறித்துக்கொண்டு விடுகிறார்கள் கடன் கொடுக்கிறவர்கள் என்று மனம் வெதும்பி இவன் ஓரிடத்தில் கூறுகிறான். ஆனால் இவன் ஒருவனுடைய நிலைமை மட்டும் இப்படி யில்லை. அநேகமாக, அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளி லிருந்து ஓடி வந்து விட்ட எல்லாருடைய நிலைமையும் இப்படித் தானிருந்தது. இப்படி இவன் வாழ்க்கையானது இருள் மயமாக இருந்த போதிலும், சில பேருடைய நட்பு இவனுக்கு ஒரு பிரகாசத்தைக் கொடுத்தது. சிறந்த மேதையாகிய தாம கார்லைல்1 என்பவ னுடைய நட்பு இவனுக்குக் கிடைத்தது. கார்லைல் தம்பதிகளின் வீட்டுக்கு அடிக்கடி சென்று மனச்சாந்தி பெறுவான். கார்லைலுக்கும் இவனுக்கும் கருத்து வேற்றுமைகள் பல உண்டு. இரண்டு பேரும் பல தடவைகளில் முரட்டுத்தனமாக வாதஞ் செய்திருக்கிறார்கள். ஆனால் இவைகளினால் இவர்களுக்கு நட்பு வளர்ந்ததே தவிரக் குறையவில்லை. இங்ஙனமே, சுதந்திரத்தைப் பற்றி விதரித்து எழுதிய ஜான் டூவர்ட் மில்1 என்ற பேரறிஞனுடைய நட்பும், இன்னும் பல அறிஞர்களுடைய நட்பும் இவனுக்கு ஏற்பட்டன. இவைதான், இவனுக்குப் பெரிய ஆறுதலா யிருந்தன. இந்த நண்பர் களுடைய சிபார்சின் பேரிலும் முயற்சியின் பேரிலும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இவன் எழுதி வந்த கட்டுரை களுக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நிவேதனம் கிடைத்தது. தேவைக்கு அதிகமான பணம் கிடைத்துவிட்டால், அதை எப்படிச் சேமித்து வைப்ப தென்பதைப் பற்றி அறிஞர்கள் சிந்திப்பதேயில்லை. மற்றவர் களுடைய நன்மையை உத்தேசித்து அதை எப்படிச் செலவழிப்பது என்பதுதான் இவர்கள் கவலை. மாஜினியும் தனது வருவாயைக் கொண்டு, தொழிலாளர்களின் நலனுக்காக அப்போட்டோ லேட்டோ போப்பாலாரே2 என்ற பத்திரிகையை ஆரம்பித்தான். இந்தப் பத்திரிகையைத் தொடங்கு வதற்கு முன்னரே, லண்டனில் வசித்துக் கொண்டிருந்த இத்தாலியத் தொழிலாளர்களை ஒன்று சேர்ப்பித்து அவர்களுக்காக ஒரு சங்கத்தை ஏற்படுத்தினான். இந்தச் சங்கத்தின் ஓர் அங்கமாகவே மேற்படி பத்திரிகையை வெளியிட் டான். இதில் தான் மனிதன் கடமை என்ற நூலின் முதல் ஆறு அத்தியாயங்கள் தொடர்ந்து வெளிவந்தன. இன்னும் சமுதாய சேவைகள் பலவற்றில் மாஜினி ஈடு பட்டான். லண்டனில் வசித்துக் கொண்டிருந்த சில இத்தாலியர்கள், இத்தலியி லிருந்து ஏழைப் பிள்ளைகள் பலரை ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி அழைத்து வந்து, அவர்களைப் பிச்சை யெடுக்கு மாறும் வேறு இழிதொழில்கள் புரியுமாறும் செய்து, அவர்கள் மூலம் பணம் சம்பாதித்து வந்தார்கள். மாஜினி, இவர்களிற் பலரைக் கண்டுபிடித்துத் தண்டனைக் குட்படுத்தினான். இவர்களுடைய பிடியினின்று விடுவிக்கப்பட்ட ஏழை மக்களுக்கென்று இராப் பள்ளிக்கூடமொன்று ஏற்படுத்தி நடத்தினான். இவர்களுக்கு ஆங்காங்கு வேலை தேடிக் கொடுத்தான். இந்த இத்தாலிய இளைஞர் களுக்கு அடிக்கடி இத்தலியின் புராதன வரலாற்றைப்பற்றியும், அது தற்போது அடைந்திருக்கும் தாழ்ந்த நிலையைப் பற்றியும் பிரசங்கங்கள் செய்வான். இத்தலியை இவன் எப்பொழுதுமே ஜனங் களுடைய இத்தலி என்றுதான் அழைப்பான். இத்தலியின் வருங்கால வாழ்வில் இளைஞர்களுக்குத்தான் பங்கு உண்டு என்பதை இவர்களுக்கு வலியுறுத்தி வந்தான். இங்ஙனம் இவன் உழைப்பிலே மனநிம்மதி பெற்றுவந்தான். இந்தக் காலத்திலே இவனுக்கு, ஆங்கில அரசியல் உலகத்திலும் இலக்கிய உலகத்திலும் ஒரு செல்வாக்கு ஏற்பட்டு வந்தது. முதல் மூன்று வருஷத்துப் பரிதாபகரமான வாழ்க்கைக்கு நஷ்டஈடு செய்வதுபோல், பிந்திய சுமார் எட்டு வருஷ வாழ்க்கை இருந்ததென்று சொல்லலாம். ஆக, இவன் லண்டனில் பதினொரு வருஷங்களுக்கு மேல் கழித்தான். 7. ஏமாற்றம் மாஜினி, இத்தலியில் இல்லாதிருந்தாலும் இவனுடைய சக்தி அங்கு வேலை செய்து கொண்டுதானிருந்தது. லண்டனிலிருந்து இவன் வெளி யிட்டு வந்த அப்போட்டோலேட்டோ போபாலாரே பத்திரிகையையும், மற்றப் பத்திரிகைகளில் இத்தாலிய ஒற்றுமையைப் பற்றியும் எழுதி வந்த கட்டுரைகளையும், இத்தாலியிலுள்ளவர்கள் உற்சாகத்தோடும் கவனத்தோடும் படித்து வந்தார்கள். மாஜினியின் மாசற்ற தேசபக்தியும், உயர்ந்த லட்சியமும் அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்தன. ஆனால் இவர்களுக்கு ஒரு சந்தேகமும் தோன்றியது. இவ்வளவு உயர்ந்த லட்சியமுடைய ஒரு தலைவ னுடைய முயற்சியின் பேரில் ஆரம்பிக்கப்பெற்ற புரட்சிகள் யாவும் ஏன் தோல்வியடைந்தன? அனாவசியமாக எத்தனை உயிர்கள் சேதமாயின? இந்த மாதிரியான சந்தேகங்களினால் பெரும்பாலோர் மாஜினியின் லட்சியத்தைப் போற்றினார்களே தவிர இவனுடைய முறைகளைப் பின்பற்றவில்லை. இப்படிப்பட்டவர்களெல்லோரும் ஒரு கட்சியினராகச் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் பொதுவாக ‘ÈgušfŸ’(Liberals) என்று அழைக்கப் பட்டார்கள். ஆனால் இவர் களுக்குள்ளேயே பல பிரிவினைகள் இருந்தன. ஒரு சிலர் போப் பரசரைத் தலைமையாகக் கொண்டு பல மாகாணங்களும் அடங்கிய ஒரு சமஷ்டியை ஏற்படுத்தவேண்டுமென்று கூறினர். இன்னொரு கட்சியினர், பீட்மாண்ட் அரசனைத் தலைவனாகக் கொண்ட ஒரு முடியாட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று சொல்லினர். வேறு சிலர், அரசியல் புரட்சிகள், கிளர்ச்சிகள் முதலியன ஒன்றுமே இப்பொழுது தேவையில்லை என்றும், பள்ளிக்கூடங்கள், சேவிங் பாங்கிகள், விவசாயப் பண்ணைகள், ரெயில்வேக்கள் முதலியவைகளை ஏற்படுத்தி, இவற்றின் மூலமாக ஜனங்களின் அறிவைப் பெருக்கி, பொருளாதார நிலைமையை உயர்த்தினால், தானாகவே தேசத்தில் க்ஷேமம் ஏற்பட்டு விடுமென்று கூறினார்கள். இப்படி இவர்கள் பல மாதிரியான குரல்களில் பேசினாலும், ஒரு விஷயத்தில் மட்டும் ஒரே மாதிரியான அபிப்பிராய முடையவர்களாயிருந்தார்கள். அதாவது, இத்தலியிலிருந்து ஆதிரிய ஆதிக்கத்தை அப்புறப்படுத்திவிட வேண்டும். இந்த ஒற்றுமையான அபிப்பிராயத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ள வேண்டுமென்று லண்டனி லிருந்த மாஜினி தீர்மானித்தான். தேசத்தில் எந்தவிதமான அரசாங்க முறை இருக்கவேண்டுமென்பதைப் பற்றி இப்பொழுது அதிகம் வற்புறுத்திப் பேசாமல், ஆதிரியாவை அப்புறப் படுத்தும் விஷயத்தில் மிதவாதிகளோடு சேர்ந்துழைக்குமாறு, இத்தாலியின் பல பாகங்களிலும் சிதறிக் கிடந்த தன் சகாக்களுக்குத் தெரிவித்தான். 1848ஆம் வருஷத்தை புரட்சி வருஷம் என்றுதான் ஐரோப்பிய இதிகாசக்காரர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனென்றால் இந்த வருஷத்தில்தான், ஒவ்வொரு நாட்டிலும், ஜனங்கள், தங்கள் தங்கள் அரசாங்கத்தினருக்கு விரோதமாகக் கிளம்பினார்கள்; சுயேச் சதிகாரம் ஒழிய வேண்டுமென்று கூக்குரலிட்டார்கள்; ஜனாதிக்கமே இருக்க வேண்டுமென்று கோரினார்கள். இத்தலியிலும் இந்த மாதிரி யான கலகங்கள் பல இடங்களிலும் தோன்றின. ஆதிரியாவின் ஆதிக்கத்தி லிருந்த பெரும்பாலான மகாணாங்களில், ஜனங்கள் ஆதிரியத் துருப்பு களை விரட்டியடித்து விட்டு சுயேச்சைக் கொடியை நாட்டிவிட்டார்கள். பீட்மாண்ட் மன்னனும் டக்கனி (Tuscany) அரசனும் யுத்த முழக்கஞ் செய்துவிட்டார்கள். போப் பரசரும், ne¥ãŸÞ(Naples) வேந்தனும், தங்கள் துருப்புகளை ஆதிரியப் போர்முனைக்கு அனுப்பினார்கள். கிராமவாசிகள் பலர், தொண்டர்களாகத் தங்களைப் பதிவு செய்துகொண்டு யுத்த களத்திற்குச் சென்றார்கள். பிரபுக்கள் முதல் ஏழைக் கூலிக்காரர்கள் வரையில், பாதிரிகள் முதல் பள்ளிக்கூட மாணாக்கர் வரையில், எல்லோரும், தங்களுடைய சொந்த அலுவல்களையும் சுக சௌக் கியங்களையும் தூரத் தள்ளிவிட்டு, தேசத்தினையே குறிக்கோளாகக் கொண்டு ஆதிரிய ஆதிக்கத்திற்கு, விரோதமாகப் புறப்பட்டார்கள். அந்நிய ஆதிக்கத்தை அப்புறப்படுத்திவிட வேண்டுமென்பதில் இத்தலியர்களுக்கு அவ்வளவு ஆத்திரம் இருந்தது. ஆங்காங்குச் சில்லரைச் சண்டைகள் நடைபெற்றன. ஜனங்களுக்கு எங்கும் வெற்றி! சுமார் ஒரு வார காலத்திற்குள் ஆதிரியாவின் ஆதிக்கம் சின்னாபின்னப்பட்டுப் போய்விட்டது. இந்த நற்செய்தியைக் கேட்டு மாஜினி, லண்டனிலிருந்து இத்தலிக்கு ஓடோடியும் வந்தான். 1848ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஏழாந் தேதி y«gh®o(Lombardy) மாகாணத்தின் தலைநகரான ÄyhD¡FŸ(Milan) பிரவேசித்தான். ஜனங்கள் இவனை ராஜ மரியாதையோடு வரவேற்றார்கள். இவனும், தன் கனவுகளெல்லாம் நனவாகிக்கொண்டு வருவதைக் குறித்துச் சந்தோஷமடைந்தான். ஆனால் இந்த நனவுகளே வெகு சீக்கிரத்தில் கனவாகி விடப் போவது இவனுக்குத் தெரியாது. மிலான் நகரத்தில் தற்காலிகமாக ஓர் அரசாங்கம் தாபிக்கப்பட்டது. ஆனால், இனி ஏற்பட வேண்டி யது குடியரசா, முடியரசா என்பதைப் பற்றிக் கட்சி வேற்றுமைகள் உண்டாகிவிட்டன. ஆதிரிய ஆதிக்கத்தை அடியோடு அப்புறப் படுத்துகிற வரைக்கும், இந்தக் கட்சிச் சண்டைகளைத் தள்ளி வைக்கலாமென்றும், அதுவரை எல்லோரும் தற்காலிக அரசாங் கத்தை மதித்து நடக்குமாறும் மாஜினி எவ்வளவு கூறியும், சுயநலக் காரர்கள் பலர் செவி கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட உட் பிணக்குகள் ஏற்படுவது வெளிச் சத்துருவுக்குப் பெரிய சாதகமல்லவா? ஆதிரியா, சிதறிப்போன தன் படைகளை ஒழுங்குபடுத்தியது; படை எண்ணிக்கையை அதிகரித்தது. எல்லா மாகாணங்களிலும் படையெடுத்து, ஜனப்படைகளைச் சீரழித்துவிட்டது. எந்தெந்த மன்னர்கள் ஆரம்பத்தில் ஆதிரியா வுக்கு விரோதமாக ஆவேசத்துடன் கிளம்பினார்களோ அவர்களெல் லோரும் இப்பொழுது ஒருவர் பின்னொருவராகச் சரணடைந்து விட்டார்கள். இழந்துவிட்ட பிரதேசங்களை யெல்லாம் ஆதிரியச் சேனை மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. மிலான் நகரத்திலும் மேற் படி சேனை பிரவேசித்தது. இனி மாஜினி அங்கு இருக்கமுடியுமா? எல்லா மாகாணங்களிலும் ஜனப்புரட்சி ஏற்பட்டது போல, போப்பரசருடைய நிருவாகத்தின் கீழிருந்த மாகாணங்களிலும் புரட்சி ஏற்பட்டது. போப்பரசர் ஜனங்களுக்குத் தெரியாமல் தலை தப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ரோமாபுரியிலுள்ள அவ ருடைய மாளிகையில் ஜனங்கள் சுயேச்சைக்கொடி நாட்டிவிட் டார்கள். தற்காலிக அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. நூற்றைம்பது அங்கத்தினர் கொண்ட அரசியல் நிர்ணய சபை ஒன்று தெரிந்தெடுக்கப்பட்டது. இந்த சபையானது, தேசத்தின் ஆட்சி முறை குடியரசேயென்றும், போப்பரசருடைய அரசியல் அதிகாரத்தை ரத்து செய்து விடுவதாகவும், ஆனால் அவர் மதத் தலைவர் என்ற பதவியை வகித்துக்கொண்டு வரலாமென்றும் தீர் மானித்தது. தவிர, மாஜினியின் தேச சேவைகளைப் பாராட்டுவதற்கு அறிகுறியாக, அவனை ரோமாபுரியின் பிரஜையாக்கியது; ரோமா புரிக்கு அவனை வரும்படி அழைப்பு அனுப்பியது. மாஜினியும் இந்த அழைப்புக்கு இணங்கினான். ரோமாபுரிக்கு வந்தான். மிகுந்த ஆடம்பரத்துடன் வரவேற்கப்பட்டான். சிறிது காலம் வரை இவன் இட்டது சட்டமாக இருந்தது. ஜன சபையானது, அரசாங்க நிரு வாகத்தை மூவர் அடங்கிய ஒரு சிறு குழுவினிடத்தில் ஒப்படைத் தது. இந்த மூவரில் மாஜினியே முதன்மையானவன். இம்மூவரும், தங்களுடைய அதிகாரத்தில் தங்களை இழந்துவிடாமல், ஜனங் களுடைய நன்மைகளை நாடுவதிலேயே கவனமனைத்தையும் செலுத்தினார்கள். இப்படியிருக்கையில், ஆதிரியச் சேனைகள், தாங்கள் இழந்துவிட்ட பிரதேசங்களையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு வருவதையும், கலகஞ் செய்தவர்கள் ஒருவர் பின்னொருவராகச் சரணடைந்து வருவதையும் கேள்வியுற்று nf£lh(Gaeta) என்ற ஊருக்கு ஓடிப்போய்விட்ட போப்பரசர் தன் சுவாதீனத்திலிருந்த நாடுகளைச் சில கள்ளர்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார் களென்றும், அவர்களுடைய பிடியினின்று அவற்றை விடுவித்துத் தன்னிடத்தில் ஒப்புவித்து உதவுமாறும் எல்லா கத்தோலிக்க அரசாங்கங்களுக்கும் விண்ணப்பஞ் செய்துகொண்டார். குறிப்பாக, இஃது ஆதிரியாவின் உதவியைக் கோரி அனுப்பப்பட்ட வேண்டு கோள்தான். ஆனால், இதற்குப் பதில், எதிர்பாராத இடத்திலிருந்து போப்பரசருக்கு உதவி கிடைத்தது. 1848ஆம் வருஷம் பிரான்சிலும் ஒரு பெரிய புரட்சி நடைபெற்றது. இதுபூரண வெற்றியடையவில்லை. இந்தக் காலத்தில் பிரான்சின் சர்வாதிகாரி போலிருந்தவன் லூயி நெப்போலியன்1 என்பவன். இவன், தன் அதிகாரத்தை ஊர்ஜிதம் செய்துகொள்ளும் பொருட்டு, ராணுவத் தலைவர்களினுடையவும் மதாசாரியார்களி னுடையவும் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில், போப்பரசருடைய வேண்டு கோள் இவனுக்குக் கிடைத்தது. புதிதாக தாபிக்கப்பட்டு, குழந்தைப் பருவத்திலிருக்கும் ரோமக்குடியரசு, இவனுக்கு ஒரு தீங்குஞ் செய்வில்லையாயினும், போப்பரசருடைய தயவைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, ரோமாபுரி யின்மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக்கொள்ளும் பொருட்டு எண்ணாயிரம் பேரடங்கிய ஒரு படையை தளபதி அவ்டினாட்2 என்பவனுடைய தலைமையின்கீழ் அனுப்பினான். ரோமாபுரிக் குடியரசு அரசாங்கத்தினர், எதிர்பாராத இந்த எதிர்ப்பைக் கண்டு திகைத்துப் போய்விட்டனர். மாஜினி இந்தப் படையெடுப்பை எதிர்ந்து நிற்பதென்று தீர்மானித்தான். நல்ல தருணத்தில் இவனுக்கு காரிபால்டியின்3 உதவி கிடைத்தது. இந்த காரிபால்டியைப் பற்றி இங்குச் சிறிது தெரிந்து கொள்வது நல்லது. காரிபால்டி, 1807ஆம் வருஷம் நை4 என்னும் நகரத்தில் பிறந்தான். பாலியத்திலேயே மாலுமித்தொழிலில் பயிற்சி பெற் றிருந்தானாதலின், நல்ல தேகக்கட்டும், கஷ்டங்களைச் சமாளிக்கிற ஆற்றலும் இவனுக்கு ஏற்பட்டன. 1833ஆம் வருஷம் யௌவன இத்தலி சங்கத்தில் அங்கத்தினனாகச் சேர்ந்தான். 1834ஆம் வருஷம் ஜினோவா நகரத்தில் நடைபெற்ற ஒரு புரட்சியில் இவன் சம்பந்தப் பட்டிருந்தானென்று சொல்லி அரசாங்கத்தார் இவனுக்கு மரண தண்டனை விதித்தனர். ஆனால் இவன், பிரான்சுக்குத் தப்பியோடி விட்டான். அங்கிருந்து 1836ஆம் வருஷம் தென்னமெரிக்காவுக்குச் சென்று, ரையோகிராண்டி5 என்ற ஒரு குடியரசு நாட்டில் சேனைத் தலைவனாக நியமிக்கப்பட்டு, அங்குத் தன் போர்த்திறமைகளைக் காட்டினான். 1848ஆம் வருஷம் இத்தலி யெங்கணும் புரட்சிகள் நடைபெறுகின்றனவென்பதை அறிந்து, தாய் நாட்டின் விடுதலை யில் தானும் பங்குகொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் இத்தலிக்குத் திரும்பி வந்தான். ஒரு பெரிய தொண்டர் படையைச் சேர்த்துக்கொண்டான். ஆதிரியர்களுக்குப் பலவித துன்பங் களை விளைவித்தான். பின்னர், ரோமாபுரிக் குடியரசை தாபிக்கிற முயற்சியில் மாஜினியோடு சேர்ந்துழைத்தான். பிரெஞ்சுப் படை, ரோமாபுரியை வந்து தாக்கியபோது, காரிபால்டி ஒரு பெரிய படைக்குத் தலைமை பூண்டு எதிர்த்து நின்றான். கடைசியில் இவனால் சமாளிக்க முடியவில்லை. மூவாயிரம் பேருடன் ரோமாபுரியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இங்ஙனம் இவன் திரும்பிச் சென்ற காலத்தில் பட்ட இன்னல்கள் பல. 1860ஆம் வருஷம் நேபிள் ராஜ்யத்தின் கீழிருந்த சிஸிலி தீவு வாசிகள், அரசாங்கத்திற்கு விரோதமாகக் கிளம்பினார்கள். காரிபால்டி, அவர்களுக்குத் துணை செய்யும் பொருட்டு, ஒரு பெரிய சேனையைத் திரட்டிக் கொண்டு சென்று வெற்றிகண்டான். நேபிள்ஸைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால், நேபிள்ஸுக்கும் சிஸிலிக்கும் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டான். பின்னர், இந்த இரண்டு பிரதேசங்களும் ஐக்கிய இத்தலியுடன் சேர்க்கப்பட்டு முடியாட்சிக் குட்படுத்தப்பட்டபோது, இவன், தன் பதவியை விட்டுக் கொடுத்தான். இந்தச் சமயத்தில் இவனுக்கு அநேக கௌரவங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இவன் அனைத்தையும் மறுத்துவிட்டான். இதனால் தேச மக்களின் மதிப்பிலே இன்னும் உயர்ந்தவனானான். கடைசியில் fh¥nuuh(Caprera) என்னும் ஊரில் ஒதுங்கி வாழ்ந்து 1882ஆம் வருஷம் இறந்து போனான். இனி ரோமாபுரிக் கதைக்கு வருவோம். ரோமாபுரியில் பிரெஞ்சுப் படையை எதிர்த்து நிற்கும் பொறுப்பு காரிபால்டி வசம் ஒப்படைக்கப் பட்டது. பிரெஞ்சுப் படையானது, சுமார் ஒரு மாத காலம் ரோமாபுரியை முற்றுகையிட்டது. காரிபால்டியின் தலைமை யில் ரோமர்கள் மிகத் துணிவுடன் எதிர்த்து நின்றனர். ஆயினும் பிரெஞ்சுப் படை எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் மேலோங்கி நின்றது. எனவே ரோமாபுரி ஜன சபையானது சரணடைந்து விடுவதாகத் தீர்மானித்து விட்டது. மாஜினி மட்டும் சரணடையக் கூடாதென்று கடைசி வரை போராடினான். ஆனால் இவன் கட்சிக்கு ஆதரவில்லை. எனவே, மூவர் சபையிலிருந்து விலகிக் கொண்டு விட்டான். ஏனென்றால், தன்னுடைய தலைமையின் கீழ் ரோமாபுரி சரணடைந்ததாக இருக்கக்கூடாதென்பது இவன் எண்ணம். பிரெஞ்சுப் படையானது, வெற்றி முழக்கஞ் செய்து கொண்டு 1849ஆம் வருஷம் ஜூலை மாதம் மூன்றாந்தேதி புனித ரோமாபுரிக்குள். பிரவேசித்துவிட்டது. போப்பரசரின் ஆதிக்கம் மீண்டும் ரோமாபுரி முதலிய பிரதேசங்களில் ஊர்ஜிதமாயிற்று. காரிபால்டி, தனது மூவாயிரம் தொண்டர்களுடன், பிரெஞ்சுக் காரர்களிடம் சரணடையக் கூடாதென்று, ரோமாபுரியை விட்டு ஓடிவிட்டான். இந்தக் காலத்தில் இவன்பட்ட கஷ்டங்களை, இத்தாலிய இதிகாசக்காரர்கள் கண்ணீரில் எழுதுகோலைத் தோய்த்துக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால், மாஜினி, ரோமாபுரியிலேயே இருந்தான். காரிபால்டியுடன் ஓடிப்போகவு மில்லை; பிரெஞ்சுக்காரரிடம் சரணடையவுமில்லை. பிரெஞ்சுக் காரரும் இவனைக் கைதி செய்யவோ, சுட்டுக்கொல்லவோ இல்லை. இவன் நிரம்பச் சோர்வடைந்திருந்தான். முற்றுகை ஆரம்பித்த காலத்திலிருந்து இவன் ஒருநாள்கூட படுக்கையில் படுத்துறங்கிய தில்லை. சரியான ஆகாரமும் கிடையாது. இவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டும் பயன் ஒன்றுமில்லை. இஃது இவன் மனதை அரித்துவிட்டது. சுமார் இரண்டு மாதங்களுக்குள் இவனுடைய ரோமங்கள் நரைத்துப்போய் விட்டன; முகத்திலே சுருக்கங்கள் நிறைய உண்டாகிவிட்டன. இவன் பழைய மாஜினியாவென்று இவனொடு பழகியவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். 8. அதமனம் உள்ளத்திலும் உடலிலும் சேர்ந்துபோன மாஜினி, கடைசியில் ரோமாபுரியை விட்டுவிட்டு விட்ஜர்லாந்தின் வழியாக இங்கிலாந்து போய்ச் சேர்ந்தான். இதற்குப் பிறகு இவனுடைய வாழ்நாள் முழுவ தும், இடையிடையே சிலசில வருஷங்கள் தவிர, லண்டனிலேயே கழிந்தது. 1850ஆம் வருஷத்திலிருந்து - அதாவது இவனுடைய நாற்பத்தைந்தாவது வயதிலிருந்து - இவனுடைய வாழ்நாளை வாழ்ந்த நாளென்று சொல்லமுடியாது; வீழ்ந்த நாளென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் காலத்திலிருந்து இவனுடைய அதமன வாழ்வு ஆரம்பித்துவிட்டது. லண்டனில் இவனுடைய பழைய நண்பர்கள் இவனைப் பழைய உற்சாகத்தோடு வரவேற்றார்கள். ரோமாபுரி யுத்தத்தில் இவன் தோல்வியுற்றுப் போனாலும், அந்தக் காலத்தில் இவன் பட்ட கஷ்டங்கள், செய்த தியாகங்கள் முதலியனவெல்லாம் ஆங்கில அரசியல் வாழ்வில் இவனுக்குக் கட்டியங்கூறிக்கொண்டு நின்றன. பிற்காலத்தில் அரசியல் அறிஞர்கள் இவனைப் பாராட்டியதற்கும் வின்பர்ன்1 போன்ற பிரபல கவிஞர்கள் இவனைப் புகழ்ந்து பாடியதற்கும் இவைகளே காரணமா யிருந்தன. ஆனால் மாஜினி, புகழொளியிலே, பொருளாசையிலே தன்னை இழந்து விடக் கூடியவனல்ல; தன் கடமையை மறந்துவிடக் கூடியவனல்ல. தாய் நாட்டுச் சேவை என்பது இவனோடு ஒன்றிப்போன ஓர் அமிசமா யிருந்தது. எத்தனை தரம் தோல்வியுற்றால் என்ன, எத்தனை பேருடைய தூற்றுதல்களுக்கு ஆளானால்தானென்ன, இவன், இத்தலியை எப்படி அந்நிய ஆதிக்கத்தினின்று விடுதலை செய்வது, எங்ஙனம் ஐக்கிய இத்தலியைச் சிருஷ்டிப்பது, எவ்வாறு குடியரசை தாபிப்பது என்பவைகளைப் பற்றிப் பல திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தான். என்னுடைய இருதயத்தைத் திறந்து பாருங்கள். அதன் உட்புறத்தில் இத்தலி என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும் என்று இவன் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வான். இவனுடைய தாயார் 1852ஆம் வருஷம் - அதாவது இவனுடைய நாற்பத்தேழாவது வயதில் - இறந்து போனாள். அப்பொழுது இவன் புலம்பிய புலம்பல் இவனுடைய நாட்டுப் பற்றை நன்கு விளக்குகிறது. அவளுடைய தானத்தைப் பூர்த்திசெய்யக் கூடியவர் இந்த உலகத்தில் வேறு யார் இருக்கிறார்? இத்தலி சுதந்திரமடைந்து பார்க்க அவள் கொடுத்துவைக்கவில்லையே. ஆனால் அவள் - என் தாயார் - உயிரோடிருந்த போது எவ்வளவு சமீபத்தில் இருந்தாளோ அதைவிடச் சமீபமாக இப்பொழுது - இறந்த பிறகு - இருக்கிறாள். என்னுடைய கடமைகள் என்னென்னவென்று அவள் அங்கீகரித்து வந்தாளோ அந்தக் கடமைகளின் புனிதத்தன்மையை இப்பொழுது நான் அதிகமாக உணர்கிறேன். இந்தப் பூலோகத்திலே இனி எனக்கு வேறு தாயில்லை. எனது நாடுதான் எனக்குத் தாய். என் தாய் என்னிடம் எப்படி உண்மையோடு நடந்துகொண்டாளோ அதைப்போல் எனது தேசத்தினிடமும் நான் நடந்து கொள்வேன். இத்தலியின் சுதந்திரப் போராட்டத்திற்கு, இங்கிலாந்திலுள்ள வர்களின் அநுதாபத்தையும் ஆதரவையும் பெறும் பொருட்டு மாஜினி லண்டனில் இத்தலியின் நண்பர்கள் சங்கம்1 என்ற ஒரு சங்கத்தை 1851ஆம் வருஷம் தாபித்து, அதில் அடிக்கடி, இத்தலியைப் பற்றிப் பிரசங்கங்கள் செய்து வந்தான். இவனுடைய தாயார் இறக்கிறபோது, இவனுக்கு வருஷந் தோறும் ஒரு சிறு தொகை கிடைக்குமாறு ஒரு சேமநிதி ஏற்படுத்திப் போயிருந்தாள். இந்தத் தொகை இவனுடைய லண்டன் வாழ்க்கை யில் மிகவும் பயன்பட்டது. இது தவிர பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி அதன் மூலமாகவும் சிறிது சம்பாதித்தான். பொது வாக, இவனுடைய பொருளாதார நிலைமை, முந்திய தடவையைக் காட்டிலும் சிறிது மேலாக இருந்தது. இங்ஙனம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இவன், தன் சொந்த சௌகரியங்களை அதிகப்படுத்திக் கொள்ளவில்லை. முன்போலவே, அநாதைகளை ஆதரிப்பது, தொழிலாளர்களுக்கு இராப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது போன்ற காரியங்களுக்காகச் செலவழித்தான். இவன் இங்ஙனம் லண்டனில் வாழ்ந்துவந்த காலத்தில் இத்தலியில் நிலைமை எப்படி யிருந்தது என்பதைச் சிறிது கவனிப்போம். 1848ஆம் வருஷம் இத்தலியின் பல பாகங்களிலும் நடைபெற்ற புரட்சி தோல்வி யுற்றுப் போனதானது, இத்தாலிய அரசியல்வாதிகளுக்குள்ளே, பெரிய மனமாற்றத்தை உண்டு பண்ணி விட்டது. ஒழுங்கான ராணுவப் பயிற்சி யில்லாத தொண்டர் படை களின் உதவியைக் கொண்டு புரட்சியில் வெற்றிபெற முடியாதென் றும், இந்தத் தோல்விகளினால் அந்நிய ஆதிக்கமானது இன்னும் பலமாக ஊர்ஜிதமடைவதோடு, அதற்கு மதிப்பும் ஏற்பட்டு விடுகிற தென்றும், தவிர அடிக்கடி ஏற்படும் இந்தப் புரட்சி களினால் ஜனங் களுக்கு அதிகமான கஷ்ட நஷ்டங்கள் உண்டாகின்றன வென்றும் இவர்கள் உணர்ந்தார்கள். இதே சமயத்தில், போப்பரசரிடமும் ஜனங்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. ரோமாபுரிக் குடியரசை நசுக்க, அவர் பிரான்சின் உதவி பெற்றது யாருக்குத்தான் பிடிக்கும்? பீட்மாண்ட் அரசனுடையவும், அவன் ராணுவத்தினுடை யவும், அவன் மந்திரிமார்களினுடையவும் உதவியைக் கொண்டுதான் இத்தலிக்கு விமோசனம் கிடைக்கக்கூடுமென்றும், பீட்மாண்ட் அரசனுடைய கொடியின்கீழ் எல்லோரும் ஒன்றுபட்டு ஆதிரிய ஆதிக்கத்தை அப்புறப் படுத்துவதுதான் முதலிற் செய்யவேண்டிய வேலையென்றும், குடியரசுப் பிரச்னையைப் பின்னர் தள்ளி வைத்துக் கொள்ளலாமென்றும், இந்த நோக்கங்களைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமானால், ராஜதந்திர முறைகளைக் கையாள வேண்டுமே தவிர, புரட்சி முறைகளைக் கையாளக்கூடாதென்றும் கருதினார்கள். மாஜினியோடு சேர்ந்து யௌவன இத்தலி சங்கத்தில் உழைத்தவர்கள் பலரும் இந்த மாதிரியான அபிப்பிராயங்களைக் கொள்ளலானார்கள். ஆனால் மாஜினிக்கு இவையெல்லாம் பிடிக்க வில்லை. நெறிமுறையில்லாத ஓர் அரசனாலும், தந்திரசாலியான மந்திரிகளாலும் இத்தலிக்கு விமோசனம் கிடைக்குமென்று இவன் நம்பக்கூடவில்லை. இந்தக் காலத்தில் பீட்மாண்ட் சிங்காதனத்தில் வீற்றிருந்தவன் இரண்டாவது விக்டர் இமானுயுவல்1 என்பவன். இவன் 1849ஆம் வருஷம் பட்டத்துக்கு வந்தான். அப்பொழுது இவனுக்கு இருபத் தொன்பது வயது. அந்த வருஷத்தில், இத்தலி யெங்கணும் ஒருவித சோர்வு குடி கொண்டிருந்தது. ஏனென்றால் முந்திய வருஷத்தில் நடைபெற்ற புரட்சி களெல்லாம் தோல்வியுற்றுப் போயினவல்லவா? விக்டர் இமானுயுவலுக்குப் பிரதம மந்திரியா யிருந்தவர்களில் முக்கியமானவன் காவர்2 என்பவன். இவன் 1810ஆம் வருஷம் ஆகட் மாதம் பத்தாந்தேதி டூரின்3 என்ற நகரத்தில் ஒரு பிரபு வமிசத்தில் பிறந்தான். இவன் சிறுவயதிலிருந்தே ஆங்கில அரசியலில் பழக்கம் பெற்றான். இங்கிலாந்தில் பல வருஷ காலம் வசித்தான். பின்னர் இத்தலிக்கு வந்து பீட்மாண்ட் பார்லிமெண்டில் ஓர் அங்கத்தினனாக முயன்றான். பல தடவை தோல்வியுற்றான். கடைசி யில் ஒருமுறை வெற்றிபெற்று அப்பொழுதிருந்து தொடர்ந்து அரசாங்கத்திலே பதவி வகித்துக்கொண்டு வந்தான். பின்னர் 1852ஆம் வருஷம் பிரதம மந்திரியானான். இந்தக் காலத்திலிருந்து இவ னுடைய ராஜதந்திரம் பிரகாசிக்கத் தொடங்கியது. ஆதிரியாவை நேரடியாகத் தாக்கக் கூடிய சக்தி பீட்மாண்டுக்கு இல்லையென்பது இவனுக்குத் தெரியும். இதற்காக இவன் முதலில் பிரெஞ்சு அரச னாகிய மூன்றாவது நெப்போலியனுடன்1 ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டான். மெதுவாக ஆதிரியாவுக்கு விரோதமாக பிரான்ஸைத் தூண்டிவிட்டான். 1859ஆம் வருஷம் ஆதிரியாவுக்கும் பிரான் ஸுக்கும் யுத்தம் மூண்டது. அதே சமயத்தில், காவர், ஆதிரியாவி னுடைய செல்வாக்கின் கீழிருந்த மாகாணங்களை யெல்லாம் தாக்கித் தோல்வியுறச் செய்து, பீட்மாண்டின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்துவிட்டான். இந்த மாகாணங்களுக்கு உதவி செய்ய வந்த சொற்ப ஆதிரியச் சேனைகள் ஆங்காங்கு முறியடிக்கப் பட்டன. இதே சமயத்தில், போப்பரசரின் ஆதிக்கத்தின் கீழிருந்த தெற்கு இத்தாலியப் பிரதேசங்கள் அந்தப் போப்பரசருக்கு விரோத மாகக் கிளம்பின. காரிபால்டியின் உதவியைக் கொண்டு காவர், இந்தக் கலகங்களைப் பீட்மாண்டுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டான். போப்பரசரின் ஆதிக்கம் இந்தப் பிரதேசங்களில் ஒழிந்தது. இவை யாவும் பீட்மாண்டின் கீழ் வந்தன. 1861ஆம் வருஷம் விக்டர் இமானுயுவல், இத்தலியின் மன்னன் என்ற பெயரால் டூரின் என்ற நகரத்தில் பட்டஞ் சூட்டப்பட்டான். இதே வருஷம் காவரும் இறந்துபோனான். இத்தாலிய ஒற்றுமையில் பாதி நிறைவேறியது. ஆனால் இன்னும் ரோமாபுரி, போப்பரசருடைய ஆதிக்கத்திலும், வெனி, ஆதிரியாவின் ஆதிக்கத்திலும் இருந்தன. இவற்றையெல்லாம் இத்தலியின் சுவாதீனத்திற்குக் கொண்டுவர காரிபால்டி பெருமுயற்சிகள் செய்தான். இத்தாலிய இதிகாசத்திலே இவை மகா அற்புதமான பாகம். சுருக்கமாகச் சரித்திரத்தை முடிப்போம். 1871ஆம் வருஷம் ரோமாபுரி முதலிய பிரதேசங்கள் விக்டர் இமானுயுவலின் ஆதிக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ஐக்கிய இத்தலி உதயமாயிற்று. ஆனால் மாஜினியின் அரசியல் வாழ்வு அதமித்தது. அவன் உலக வாழ்வு மறையுந்தறுவாயிலிருந்தது. காவர், காரிபால்டி ஆகிய இரண்டுபேருடைய முயற்சிகளின் பேரில் ஐக்கிய இத்தலி உருவமாகிக் கொண்டிருந்த சமயத்தில், லண்டனில் வசித்து வந்த மாஜினி, இத்தலியில் அடிக்கடி ரகசியப் புரட்சிகள் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தான். காவர், காரிபால்டி இவர்களின் போக்கு இவனுக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. எனவே, இவர்களுக்கு விரோதமாகவும் பிரசாரஞ்செய்ய ஆரம்பித் தான். ஆனால் இத்தலியில் இவனுக்கு முன்போல் செல்வாக்கில்லை. சமுதாயத்தின் மேல்படியி லிருந்தவர்கள், லிபரல்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு காவரையும் விக்டர் இமானுயுவலை யும் ஆதரித்தார்கள்; கீழ்ப்படியி லிருந்தவர்களான தொழிலாளர் முதலியோர், மார்க்ஸின்2 சமதர்ம சித்தாந்தத்தை ஆதரித்து வந்தார்கள். இந்தக் காலத்திலேயே, மார்க்ஸீயர்கள், மார்க்ஸீயத்தை எதிர்த்து வந்த மாஜினியின் உதவி பெற்றே, மார்க்ஸீயத்தை இத்தலியில் பரப்பிவிட்டார்கள். கார்ல் மார்க்ஸும் அவனுடைய சகாவாக அந்தக் காலத்திலிருந்த பக்குனின்1 என்பவனும் தன்னை ஏமாற்றிவிட்டதாக மாஜினி கருதினான். இதற்காக அவர்கள்மீது இவனுக்கு ஆழ்ந்த வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. சமுதாயத்தின் மத்திய வகுப்பைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டும், மாஜினியர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டு ஆங்காங்குப் புரட்சி செய்து வந்தார்கள். இந்தப் புரட்சிகளையெல்லாம். மாஜினி ஆதரித்து வந்தான். இவர்களுடைய புரட்சிகள் வெற்றிபெறக்கூடுமென்று தவறாக நம்பி, அநேக சந்தர்ப்பங்களில் மாறுவேஷம் போட்டுக் கொண்டு இவனே நேரில் இத்தலிக்கு வந்தான். மறைமுகமாக இருந்து சில புரட்சிகளை நடத்தினான். ஆனால் ஒன்றுகூடப் பலிக்கவில்லை. இப்படி இவன் ஒளிவுமறைவாக இத்தலியின் பல பாகங்களுக்கும் வந்தது ஏறக்குறை ஐந்து அல்லது ஆறு தடவை இருக்கும். இவன் கோரியதும் பாடுபட்டதும் குடியரசு இத்தலிக்காக. ஆனால் இவன் கண்டது முடியாட்சி இத்தலி! போராட்டத்திலேயே பிறந்து, போராட்டத்திற்காகவே வாழ்ந்த மாஜினியின் உடலம் வயோதிகத்தினால் தளர்ச்சி யடைந்தது; மனம் தோல்விக்குமேல் தோல்வி ஏற்பட்டு வந்ததனால் தளர்ச்சி யடைந்தது. இந்தவாழ்க்கை யந்திரம், எழுதி, எழுதி, முப்பத்தைந்து வருஷங்களாக எழுதிக் களைத்துப்போன இந்த யந்திரம், இப்பொழுது எனக்கு ஒரு பெருஞ்சுமையா யிருக்கிறது. என்ன ஆச்சரியம்! என்று இவன் வருத்தப்படுகிறான். இவனுடைய அந்திம காலத்தில், இவனுடன் யார்யார் நெருங்கிப் பழகினார் களோ அவர்களெல்லோரும் இவனுடன் பிணங்கிக் கொண் டார்கள். ஜீவிய தசையிலிருந்த இவனுடைய ஒரே சகோதரி இவனை வந்து பார்க்கக் கூட மறுத்துவிட்டாள். இவனோடு பல அரசியல் போராட்டங்களிலே கலந்து கொண்ட காரிபால்டியும் இவனிடம் மனதாபப்பட்டுக் கொண்டுவிட்டான். கஷ்டங்கள் வந்தால் ஒன்றுக்குமேல் ஒன்றாகத்தானே வரும்! ஆனால் மாஜினி இவை களையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தான் ஆரம்பித்த வேலை தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதுதான் இவன் கவலை. இந்த மண்ணின்மீது நான் இன்னும் எத்தனை வருஷங்கள் அல்லது எத்தனை மாதங்கள் இருந்தாலென்ன? நான் வேறோரிடத்திற்கு வேலை செய்யச் சென்று விடுவதனாலேயே உங்களைக் குறைவாக நேசிக்கிறேனென்று அர்த்தமில்லையே. அப்படியே நீங்கள் என்னை நேசிக்கிறீர்களென்று சொன்னால், என் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருவதன் மூலமாகத்தான் நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களனைவரையும் நான் விட்டுப் பிரிந்து சென்ற பிறகு என் வாழ்நாள் வீணாகிப் போகாமல் தடுக்கும் பொருட்டு, நீங்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் வேலை செய்வீர்களல்லவா? என்று தன்னைச் சுற்றியுள்ள நண்பர்களைப் பார்த்துக் கூறினான். இத்தாலியத் தொழிலாளர் களுக்குக் கடைசி முறையாக இவன் பின்வருமாறு உபதேசித்தான்:- இந்தப் பெருமை வாய்ந்த ஆனால் துரதிருஷ்டம் நிறைந்த நமது தாய்நாட்டை நேசியுங்கள்; அதற்காக உழையுங்கள். மேலான பாதையில் செல்ல வேண்டுமென்பதே இதற்கேற்பட்ட நியதி. ஆனால் அந்தப் பாதையை அறியாதவர்களால், அறிந்துகொள்ள மறுக்கிறவர் களால் இது தடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தடைகளை விலக்கிக் கொண்டு செல்லுங்கள். அதுதான், என்னை நீங்கள் உண்மையாக நேசிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம். மற்றவர்களை உழைக்கச் சொன்னதோடு அல்லாமல், இவன், தனது கடைசி மூச்சு இருக்கிற வரையில் உழைத்து வந்தான். இந்தக் காலத்தில் நோய்வாய்ப்பட் டிருந்த தன் நண்பன் ஒருவனுக்கு இவன் எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக் கிறான்;- உனக்கு உடம்பு சௌகரிய மில்லை யென்று கேள்விப்படுகிறேன். நோய்வாய்ப்படாதே. தேசங்க ளெல்லாம் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறபோது, நோயாகிவிட்டேனென்று சொல்வது மிகக் கேவலம். கடைசியில் 1872ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பத்தாந்தேதி ஞாயிற்றுக்கிழமை எந்த ஜினோவாவிலே இவன் பிறந்தானோ அந்த ஜினோவாவுக்குத் தெற்கேயுள்ளதும், சாய்வுக் கோபுரத்திற்குப் பிரசித்தி பெற்றதுமான ig[h(Pisa) நகரத்தில், இவனுடைய ஒளி வீசிக் கொண்டிருந்த கண்கள் சாசுவதமாக மூடிவிட்டன. பின்னர், இவன் விருப்பப்படியே, ஜினோவா நகரத்தில் இவனுடைய தாயாரின் கல்லறைக்குப் பக்கமாக இவன் அடக்கம் செய்யப் பட்டான். மாஜினியிடம் யாரார் என்னென்ன விதமான குற்றங் குறைகளைக் கண்டுபிடித்தபோதிலும், இவன் ஓர் உத்தம புருஷன் என்பதில் யாருமே குறை கூற முடியாது. இவனுடைய அந்தரங்க வாழ்க்கை பளிங்குபோல் மாசுமறுவற்றிருந்தது. சில சமயங்களில் இவன், தன் எதிரிகளைப் பலமாகத் தாக்கியிருக்கிறானென்பது உண்மை. ஆனால் இவன் கீழான முறையில் கோபமூட்டப்பட்டான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவனுடைய பரிசுத்தமான உள்ளத்திலே, விசாலமான இருதயத்திலே, அற்பத்தனத்திற்கோ கோழைத்தனத்திற்கோ இடமிருக்கவில்லை. ஐரோப்பிய அரச சபைகளிலே தன் பெயர் பயத்தோடு உச்சரிக்கப்படுகிற தென்பது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்த காலத்தில்கூட இவன் சிறிதளவு கர்வமுங்கொண்டது கிடையாது. இவன் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவான்; பணிவோடு பேசுவான். பெரிய மனிதனென்றும் சிறிய மனிதனென்றும் எவ்வித வித்தியாசமும் பாராட்ட மாட்டான். யார் இவனிடத்தில் ஆறுதல் பெற வந்தாலும் அவர்களுக்கு உடனே ஆறுதல் கிடைக்கும். சோர்வுற்று வந்திருந்தால் அவர்களோடு சில நிமிஷங்களே பேசி உற்சாகப்படுத்திவிடுவான். தான் வருந்திப் பிறர்க்குதவும் தண்ணளியான்; செம்மனத்தான் தனக்கு யாரேனும் கடுகத்தனை உதவி செய்தாலும் அதற்கு மலையத்தனை நன்றி பாராட்டுவான். ஆனால், தான் யாருக்கேனும் மலையத்தனை உபகாரஞ் செய்திருந்தாலும் அதற்குக் கடுகத்தனை நன்றியையும் எதிர்பார்க்க மாட்டான். மற்றவர்களுடைய துன்பத்தைக் கண்டு கண்ணீர் உகுப்பான். ஆனால் இவன் அனுபவித்த துன்பங்களோ சிறுசிறு குன்றுகளாக இவனுடைய வாழ்க்கைப் பாதையை மறைத்துக் கொண்டிருந்தன. எல்லா ஜீவராசிகளிடத்திலும் இவன் பாரபட்சமில்லாமல் அன்பு செலுத்தி வந்தான். சிறைவாசத்தின் போதும் தனி வாசத்தின் போதும் இவனுக்கு ஆறுதல் கொடுத்தவை ஒரு பூனையும் சில பட்சிகளுமாகும். மானிட சமுதாயத்தினிடம் அன்பு செலுத்துவது, அதற்குத் தொண்டு செய்வது என்பவை இவனைப் பொறுத்த மட்டில் வெறுந்தத்துவங்களா யிருக்கவில்லை; இவனுடைய புருஷத்தன்மையிலே கலந்த அமிசங் களாக, பிரிக்க முடியாத அமிசங்களாக இருந்தன. கடமை யென்பதும் இப்படித்தான் இவன் விஷயத்தில். தன்னை மறந்துகூட கடமையை மறந்துவிடக்கூடா தென்பது இவன் கவலை. மனச்சாட்சிப்படி கடமை களைச் செய்து கொண்டு போகிற ஒரு பௌதிகவாதியல்லன் மாஜினி. தெய்விக சக்தியொன்று, மனித முயற்சி ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டு வருகிறதென்பது இவன் திடமான நம்பிக்கை. ஓர் அறிஞர் மாஜினியைப் பின்வருமாறு மதிப்பிடுகிறான்:- இவன் - மாஜினி - தன் லட்சியத்தைத் தன் வாழ்க்கையிலேயே விகசித்துக் காட்டினான். தொடர்ந்து வினையாற்றித் தன் புருஷத் துவத்தை வெளிப்படுத்தினான். இவனுடைய (வாழ்க்கையாகிற) நாடகத்தில் இவனே சோகநாயகன்; லட்சியத்தையடைவதற்காக எல்லாத் துன்பங்களையும் தானே வலிந்து ஏற்றுக்கொண்ட வீரபுருஷன். உலகத்தில் அகத்தூய்மைக்கும் மனிதத் தன்மைக்கும் மதிப்பு இருக்கிறவரையில், அதிகாரத்தைக் காட்டிலும், வெற்றியைக் காட்டிலும், துறவுதான் மேலானது, கடமைதான் உயர்ந்தது என்று மனிதர்கள் கௌரவித்துக் கொண்டிருக்கிற வரையில், எவனுடைய பெயர் இத்தலியில் முழங்கிக் கொண்டிருக்குமோ அவனுடைய பெயர் தான் மாஜினி. முக்கிய நிகழ்ச்சிகள் (மாஜினி வாழ்க்கையில்) ஆண்டு நிகழ்ச்சி 22-6-1805 மாஜினி ஜினோவாவில் பிறந்தது. 1814-1815 வியன்னா காங்கிர. 18-6-1815 வாட்டர்லூ யுத்தம். நெப்போலியனின் தோல்வி. 15-7-1815 நெப்போலியன் சரணடைந்தது. அவன் செயிண்ட் ஹெலீனா தீவுக்கு அனுப்பப்பட்டது. 1815 இத்தலியை, பல சுயேச்சாதிகாரிகள் பங்கு போட்டுக் கொள்ளத் தொடங்கியது. ஆதிரியாவின் ஆதிக்கம் மேலோங்கி யிருந்தது 1819 மாஜினி மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் தேறியது. 1821 தாய்நாடு, சுதந்திரம் பெறப் பாடுபடவேண்டு மென்று உணர்ச்சி பெற்றது. 1826 சட்டப் பரீட்சையில் தேறியது. 1829 கார்போனாரி சங்கத்தில் சேர்ந்து கொண்டது. 1830 கைதியானது; ஸாவோனா சிறைக்கு அனுப்பப் பட்டது. சிறையில் யௌவன இத்தலி சங்கத்துக் கான திட்டங்கள் வகுத்தது. 1831 ஆறுமாத வாசத்திற்குப் பிறகு ஸாவோனா சிறையி லிருந்து வெளிவந்தது. உடனே தேசப்பிரஷ்டம். மார்சேல் நகரம் வந்து தங்கியது. 1832 அங்கு யௌவன இத்தலி சங்கம் தாபிதமானது. 1833 மார்சேலிலிருந்து ஜினீவா நகரம் சென்றது; அங்குப் பல அல்லல்களுக்குட்பட்டது. ஆயினும் இத்தலி யில் புரட்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்தது. 1837 லண்டன் அடைந்தது. 1837-1848 லண்டன் வாசம். பல சங்கங்களை தாபித்தது; சமுதாய சேவைகளில் ஈடுபட்டது; மனிதன் கடமை என்ற நூலின் ஒரு பகுதியை கட்டுரைகளாக வெளி யிட்டது. 1848 ஐரோப்பாவெங்கணும் புரட்சிகள். மாஜினி, புரட்சியை நடத்த இத்தலிக்கு வந்தது. 1849 ரோமாபுரியில் புரட்சி தோல்வியுற்றது. மாஜினியின் வருத்தம். 1850 மீண்டும் லண்டன் அடைந்தது. 1851 லண்டனில் இத்தலியின் நண்பர்கள் சங்கம் என்ற ஒரு சங்கத்தை தாபித்தது. 1852 மாஜினியின் தாயார் மரணம். 1853 புரட்சியை நடத்த மிலான் நகரம் போந்தது. ஆனால் புரட்சி தோல்வியுற்றது. எனவே லண்டன் திரும்பி விட்டான். 1856 புரட்சி நடத்த மீண்டும் ஜினோவா நகரம் போந்தது. ஆனால் புரட்சி தோல்வியடைந்தது. பலமான அடக்குமுறை. 1859 திரும்பவும் லண்டன் வந்தது. ஆனால் உடனே இத்தலிக்குச் சென்று புரட்சிக்குத் தூண்டியது. 1860-1866 புரட்சிகள் நடத்தவும், காரிபால்டிக்குத் துணை செய்யவும், இத்தலிக்கு வருவதும் போவதுமா யிருந்தான். 1861 விக்டர் இமானுயுவல் இத்தலியின் மன்னனாக முடிசூடியது. முடியரசு தாபிம். 1866-1872 மாஜினியின் குடியரசு முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. 10-3-1872 பைஸா நகரத்தில் மரணம். மனிதன் கடமை பதிப்பாளர் வார்த்தை மனிதன் கடமை யென்னும் இந்த நூலை எங்களுடைய தமிழ்நாட்டாருக்குச் சமர்ப்பித்துக் கொள்கிறோம். இந்நூல் எங்களுடைய கழகத்தின் இரண்டாவது வெளியீடு. இந் நூலுக்குக் கர்த்தா, இத்தாலியர்களால் போற்றப்படும் ஜோஸப் மாஜினி என்பவன். இவனுடைய வாழ்க்கை மிகவும் கரடு முரடானது. இவனுடைய உபதேசங்களோ, இத்தாலியர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே மிகவும் பிரயோஜன முள்ளவை. தன்னுடைய சொந்த தேசத்து மக்களாகிய இத்தாலியர்களைப் பார்த்துச் சுமார் எண்பது வருஷங் களுக்குமுன் இவன் உபதேசித்த வார்த்தைகள் தமிழ்நாட்டாராகிய நமக்குப் புதியனவாயிருக்கின்றன. ஆம், புதியவைதான். இனிமேல்தானே அந்த வழிகளை நாம் சந்திக்கப் போகிறோம். இந்த நூலிலே கொடுக்கப் பட்டிருக்கும் மாஜினியினுடைய உபதேசங்கள், எங்களது தமிழ் நாட்டாரிடையே ஒரு சிந்தனையைத் தூண்டிவிடவேண்டும். அதுதான் எங்களது விருப்பம். சுதந்திரம் என்ற எண்ணம் உண்டாகியது மேனாட்டிலேதான். இந்தச் சுதந்திரத்திற்காக அநேக போராட்டங்கள் நடத்தியதும் மேனாட்டார்தான். மேனாட்டு இதிகாசங்களின் ஒவ்வொரு ஏட்டிலும்இந்தப் போராட்ட வைபவங்களை நாம் நிறையக் காண்கிறோம். அடிமையாக அவல வாழ்வு வாழ்வதைப் பார்க்கி லும் சுதந்திரத்திற்காகப் போராடி மண்ணோடு மண்ணாவதே சிறந்தது என்ற கொள்கையுடையவர்கள் மேனாட்டார். இன்றுங் கூட இந்த எண்ணங்களையும், இவற்றினடியாகப் பிறக்கும் செய்கை களையும், இவற்றினடியாகப் பிறக்கும் செய்கைகளையும் நாம் பார்க்கிறோம். நம்முடைய தேசத்திலே சுதந்திரமிருந்தது. இந்தச் சுதந்திரத்தை மக்கள் அனுபவித்தார்கள். ஆனதாலேயே, சுதந்திரக் கிளர்ச்சியும் போராட்டமும் நம்முடைய தேசத்திலிருக்கவில்லை யென்று கூறுவது, வாதத்துக்குப் பொருத்தமா யிருக்கலாம். ஆனால் இஃது உயிரற்ற வாதம். மேனாட்டாருடைய எண்ணங்களும், அந்த எண்ணங்கள் சித்தியடைவதற்காக அவர்கள் செய்த, செய்கிற தியாகங்களும் ஆசியாக்காரர்களாகிய நமக்கு, அதிலும் அமைதி யிலே இன்பங்காணப் பழகிக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு புதிர் போலிருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், அந்த அமைதிலேயே இன்பங்காணப் பழகிக் கொண்டதால், நாம் அடைந்திருக்கும் பலனைப் பிரத்தியட்சமாகத் தெரிந் திருந்தும் இன்னும் சிந்தனை செய்யக் கூட முயற்சி செய்யாதிருக் கிறோமே அதுதான் பெரிய ஆச்சரியம். எங்களுடைய கழகத்தின் முதல் வெளியீடாகிய மகாத்மா காந்தி என்ற புத்தகம் வெளியாகி இரண்டு மாதங்களாகின்றன. ஆனால் தற்போது எங்கள் கையில் விற்பனைக்கிருப்பது சொற்பப் பிரதிகள்தான். இதிலிருந்து, நல்லனவும், பெரியனவுமான விஷயங் களைப் படிக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுடைய தமிழ் நாட்டாரிடையே பரவி வருவதும் தெரிகிறது. இதனைக் கண்டு நாங்கள் பொருமை கொண்டு விட மாட்டோம். ஏன்? எங்களுடைய கடமையை நாங்கள் உணர்கிறோ மாதலின். மனிதன் கடமை யென்னும் இந்நூலோடு மாஜினியின் ஜீவிய சரிதத்தைச் சுருக்கமாகக் கொடுத் திருக்கிறோம். இஃது ஒருவாறு, மாஜினியின் சரிதத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா யிருக்கும். இந்நூலின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் வாசகர்களுக்கு மிகவும் உதவியாயும் பலனுள்ளதாயு மிருக்கும். இந்நூலை எழுதி உதவிய ஸ்ரீ வெ. சாமிநாத சர்மா அவர் களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகச் சொல்வது வெறும் சம்பிரதாயம்; உபசார வார்த்தை. இதைக் கொண்டு அவர் திருப்தியடைந்து விடமாட்டார் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஏன்? ஒரு லட்சியத்தை முன் வைத்துச் சென்று கொண்டிருக்கும் பிரயாணி அவர். அவரை உபயோகித்துக் கொள்வது தமிழநாட்டாருடைய கடமையல்லவா? வந்தே மாதரம் விஷு வருஷம் ஆனி மாதம் புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகத்தார் உரு, 8-7-41 இரங்கூன் சொல்வதென்னவென்றால் - மாஜினி, கவிபுனையாத ஒரு கவிஞன்; மகான் கவிஞன். இவன் அரசியலிலே சேராதிருந்தால், இத்தாலிய கவிதா மண்டலத்தில் இரண்டு நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் வர்ஜிலைப் போலவும், தாந்தேயைப் போலவும், மூன்றாவது நட்சத்திரமாகப் பிரகாசித்துக் கொண்டிருப்பான். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு இத்தலி, தனது தலையை இரண்டு முழங்கால்களுக்கு நடுவே புதைத்துக் கொண்டு அழுத குரல், துன்பத்தைக் கண்டு துடிக்கும் இவனுடைய இருதயத்தைப் பலமாக மோதியது. அந்தமோதுதலினின்று கவிதா மலர்கள் உண்டாகவில்லை; புரட்சிப் பொறிகளே பிறந்தன. மாஜினியின் வாழ்க்கை, புரட்சிமயமான வாழ்க்கை. இவனுடைய புரட்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியடைந்து வந்திருக்கின்றன. ஆனால் இத்தலியின் வருங்கால வாழ்வுக்கு இவன் பலமான அதிவாரம் போட்டு விட்டான். இந்த அதிவாரத்தின் மீதுதான் காரிபால்டியும் காவரும் ஐக்கிய இத்தலி என்னும் மாளிகையைக் கட்டினார்கள். எப்படி, அதிவாரமானது மேற் பார்வைக்குப் புலப்படாமல் பூமியில் மறைந்து கிடக்கிறதோ அதைப் போல், மாஜினியின் புகழும், உருவச் சிலைகளாகவோ அல்லது வேறுவித சின்னங்களாகவோ மேற் பார்வைக்குத் தெரியாமல், ஜனங்களுடைய இருதயத்தில், சிந்தனா சக்தியைத் தூண்டி, செயலுக்கு உந்தும் தூண்டா விளக்கு மாதிரி, அதிகப் பிரகாசமும் அதிக மங்கலும் இல்லாமல் நிதானமாக எரிந்து கொண்டிருக்கிறது. மாஜினி இறந்த இரண்டாவது நாள் லண்டன் டைம் பத்திரிகை. இவனுடைய மரணத்தைப் பற்றி எழுதுகிற போது, இந்தச் செய்தி, ஐரோப்பாவிலுள்ள அநேக முடிதரித்த மன்னர் களுக்கும், முடிதுறந்த மன்னர்களுக்கும் அசுபமான செய்தியா யிராது என்று குறிப்பிட்டது. இந்த ஒரு வாசகத்தைக் கொண்டே ஐரோப்பாவிலுள்ள சாதாரண ஜனங்களின் களங்கமற்ற உள்ளத்தில் எப்படி மாஜினி சாசுவதமான ஒரு தானத்தைப் பெற்றிருக்கிறான் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். மாஜினியின் எழுத்திலே ஓர் ஓசையுண்டு; பேச்சிலே ஒரு வன்மை யுண்டு. இந்த இரண்டுமே, இவனுடைய அரசியல் வேலை களுக்கு முக்கிய துணைக் கருவிகளாயிருந்திருக்கின்றன. இவன் தனியாக ஒரு நூலையும் எழுதவில்லை. ஆனால், நூல்கள் பல எழுத வேண்டுமென்ற திட்டமென்னவோ போட்டிருந்தான். திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இவன் அவகாசம் பெறவில்லை. இவன், பத்திரிகைகளுக்குப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறான். அவற்றில் இவனுடைய புலமை நன்கு வெளியாகின்றது. இங்ஙனம் தொடர்ச்சி யாக வெளியிடப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்த மனிதன் கடமை என்பது இவனுடைய எழுத்துக்களுக்கெல்லாம் சிகரம் போலிருப்பது இந்த மனிதன் கடமை என்று இவனுடைய ஜீவியசரித்திரத்தை எழுதியுள்ள போல்டன் கிங் என்ற அறிஞன் அபிப்பிராயப்படுகிறான். தமிழர்கள் இதனைப்படித்துச் சிறிதளவேனும் சிந்திக்கத் தொடங்க வேண்டு மென்பதுவே என் பிரார்த்தனை. காத்லாந்து வீரனாகிய ராபர்ட்ட ப்ரூ என்பானுடைய வாழ்க்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நான், 1924ம் வருஷம் பாணபுரத்து வீரன் என்ற ஒரு நாடகத்தை எழுதி வெளி யிட்ட காலத்திலேயே, விட்ஜர்லாந்தின் சுதந்திர கர்த்தாவான வில்லியம் டெல், புது உலகத்தைக் கண்டு பிடித்த கொலம்ப, அடிமை வழக்கத்தை ஒழிக்கப் பாடுபட்ட வில்பர் போர், உழைப்பினால் முன்னுக்கு வந்த அமெரிக்காவின் பதினாறாவது பிரசிடெண்ட் அப்ரஹாம் லிங்கன், நவ இத்தலியின் சிருஷ்டிகர்த்தர் களில் ஒருவனான ஜோஸப் மாஜினி முதலிய பலருடைய ஜீவிய சரிதங்களை விரிவான முறையில் எழுதி வெளியிட வேண்டுமென்று ஒரு திட்டம் போட்டிருந்தேன். ஆனால் காலச் சூழல் என்னை எங்கேயோ அடித்துக் கொண்டு போய் விட்டிருக்கிறது. பதினேழு வருஷங்களுக்கு முன் நான் கண்டு கொண்டிருந்த அகன்ற கனவு களில் ஒன்றான மாஜினியின் ஜீவிய சரிதம், இப்பொழுது சுருங்கிய நனவாகப் பரிணமித்திருக்கிற தென்பதைக் கண்டு மகிழ்ச்சி யடைகிறேன். இந்த மகிழ்ச்சியை அளித்த புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகத்தாருக்கு எனது நன்றி. விஷு ஆனி உரு வெ. சாமிநாதன். 1. இத்தாலியத் தொழிலாளர்கள் இத்தாலியத் தொழிலாளர்களே! உங்களுக்கு உங்களுடைய கடமை களைப்பற்றிச் சொல்லப் போகிறேன். நமக்குத் தெரிந்துள்ள புனிதமான விஷயங்களைப்பற்றி, அதாவது கடவுள், மானிட சமுதாயம், நமது தந்தையர் நாடு, குடும்பம் ஆதிய விஷயங்களைப்பற்றி, என் மனச்சாட்சி என்ன சொல்கிறதோ அதன்படி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்களிடத்திலே எனக்குள்ள அன்பினால் உங்களோடு இவைகளைப் பற்றிப் பேசு கிறேன். அப்படியே நீங்களும் என்னிடம் அன்பு வைத்து இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். நான் அநேக வருஷ காலம் துயரம நுபவித்திருக்கிறேன்; விஷயங்களைக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன்; ஆராய்ச்சி செய்திருக்கிறேன். இவைகளினால் ஏற்பட்ட அநுப வத்தைக் கொண்டே மனோ உறுதியைக் கொண்டே இந்த வார்த்தைகளை உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுடைய கடமைகள் என்று இப்பொழுது நான் எவைகளை எடுத்துச் சொல்லப்போகிறேனோ அந்தக் கடமைகளை நான் என்னைப் பொறுத்தமட்டில் நிறை வேற்ற முயல்வேன்; என் வாழ்நாள் உள்ளவரையில் முயல்வேன்; என் சக்திக்கி யன்றவரையில் முயல்வேன். நான் தவறுகள் செய்து விடலாம்; ஆனால் என்னுடைய இருதயம் உண்மையானது. என்னை நான் ஏமாற்றிக் கொள்ளலாம்; ஆனால் உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். ஆதலின், உங்களுடைய சகோதரன் என்று என்னைக் கருதி என் வார்த்தைகளைக் கேளுங்கள். நான் உண்மையைத்தான் சொல்கிறேனாவென்று உங்களுக் குள்ளேயே நீங்கள் நன்றாகக் கலந்தாலோசித்து ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள். நான் சொல்வதெல்லாம் பொய் என்று நீங்கள் நினைப்பீர் களானால், என்னை ஒதுக்கித் தள்ளிவிடுங்கள். ஆனால் நான் உண்மையைச் சொல்கிற ஒரு தூதன் என்று உங்களுக்குப் படுமானால் என் உபதேசப்படி நடவுங்கள்; என்னைப் பின்பற்றி வாருங்கள். தவறு செய்வது என்பது துரதிருஷ்டமான விஷயம்; இரக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் உண்மை இன்னதென்று தெரிந்து கொண்டு அதன்படி காரியங்களைச் செய்யாமலிருப்பது ஒரு பெரிய குற்றம். வானுலகும் பூவுலகும் சேர்ந்து கண்டிக்கிற குற்றம். உங்களுடைய உரிமைகள் என்னவென்பதைப் பற்றிச் சொல்வ தற்கு முன்னால் உங்களுடைய கடமைகள் என்னவென்பதைப்பற்றி ஏன் சொல்கிறேன்? நீங்கள் எந்தச் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ அந்தச் சமுதாயத்தில், உங்களை எல்லோரும் விரும்பியோ விரும்பாமலோ அடக்கி ஒடுக்கி வைக்கப் பார்க்கி றார்கள்; மனிதனுடைய உரிமைகள் என்ன உண்டோ அவை உங்க ளுக்கு அடிக்கடி மறுக்கப்படுகின்றன; துயரமே உங்களுடைய தலைவிதியாகிவிட்டிருக்கிறது; சந்தோஷ மென்பது மற்றவர் களுக்குத்தானே தவிர உங்களுக்கில்லை யென்னும் படியாகி விட் டிருக்கிறது. இப்படிப்பட்ட சமுதாயத்திலே வாழ்ந்துவரும் உங்க ளிடத்தில் வந்து, நான், வெற்றியைப்பற்றிப் பேசாமல் தன்னலத் தியாகத்தைப்பற்றி ஏன் பேசுகிறேன்? வாழ்க்கைச் சுகத்தைப்பற்றிப் பேசாமல் சீலம் என்றும், ஆத்ம வளர்ச்சி என்றும், கல்வி என்றும் ஏன் பேசுகிறேன்? முதலில் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, பிறகு மற்ற விஷயங்களைப்பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். ஏனென்றால் நமக்கும், இன்று ஐரோப்பாவில் என்ன கொள்கைகள் உபதேசிக்கப் படுகின்றனவோ அந்தக் கொள்கைகளைப் பின்பற்று வோருக்குமுள்ள வித்தியாசம் இந்தக் கேள்வியில்தான் இருக்கிறது. தவிர துன்பத்திலே உழன்று உழன்று ஆத்திரமடைந்திருக்கிற தொழிலாளியின் மனதிலும் இந்தக் கேள்வி எழுகிறது. நாங்கள் ஏழைகள்; அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்; சந்தோஷமில்லா மலிருக்கிறோம். வாழ்க்கையின் மேலான நிலைமையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்; சுதந் திரத்தைப் பற்றிக் கூறுங்கள்; சந்தோஷத்தைப் பற்றிப் பேசுங்கள். நித்தியமான துன்பத்திலே உழன்று கொண்டிருப்பது தான் எங்கள் தலை விதியா அல்லது நாங்களும் சுகத்தை அநுபவிக்கலாமா வென்பதை எங்களுக்கு எடுத்துக் காட்டுங்கள். கடமையைப் பற்றி எங்கள் எஜமானர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்; எங்களுக்கு மேலே இருந்து கொண்டு, எங்களை யந்திரங்கள் மாதிரி நடத்துகிறார்களே, எல்லோருக்கும் சொந்தமான சௌக்கியங்களைத் தங்களுக் கென்றே உரிமைப்படுத்திக் கொள்கிறார்களே அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எங்களுக்கு, எங்களுடைய உரிமைகள் என்ன வென்பதைப் பற்றி சொல்லுங்கள்; அந்த உரிமைகளையடையும் மார்க்க மென்ன வென்பதைப் பற்றிச் சொல்லுங்கள்; எங்களுடைய பலத்தைப் பற்றிச் சொல்லுங்கள். எல்லோராலும் அங்கீகரிக்கப்படுகிற விதமான வாழ்க்கை அந்தது எங்களுக்கு ஏற்படுகிறவரையில் பொறுத்திருந்து, பிறகு எங்களிடம் வந்து கடமையைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் உபதேசம் செய்யலாம். தொழிலாளர்களிற் பெரும்பாலோர் இப்படித்தான் சொல்கி றார்கள். இவர்களுடைய இந்த அபிப்பிராயத்திற்கிணங்கினாற் போல் பேசுகிறவர் களுடைய வார்த்தைகளையே இவர்கள் கேட்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இவர்கள் - இந்தத் தொழிலாளர்கள் - மறந்து விடுகிறார்கள். தங்களுக்கு எந்த மாதிரி யான உபதேசம் வேண்டுமென்று இவர்கள் கோருகிறார்களோ அந்தமாதிரியான உபதேசம் சென்ற ஐம்பது வருஷ காலமாக ஐரோப்பாவில் உபதேசிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இவர் களுடைய வாழ்க்கை அந்தது ஒரு சிறிது கூட உயரவில்லை. சுயேச்சாதிகார அரசாங்கங்களுக்கு விரோதமாகவும், பரம்பரை யான பிரபுத்துவ ஆட்சி முறைக்கு விரோதமாகவும் சென்ற ஐம்பது வருஷ காலமாக என்னென்ன காரியங்கள் செய்யப்பட்டிருக் கின்றனவோ, முன்னேற்றத்தையும், நன்மையையும் லட்சியமாகக் கொண்டு என்னென்ன காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவோ, அவையெல்லாம் மனிதனுடைய உரிமைகளின் பெயராலேயே செய்யப்பட்டிருக்கின்றன. வாழ்க்கையின் நோக்கம் சுகசௌக்கிய மென்றும், அதனையடைவதற் கான சாதனம் சுதந்திரமென்றும் சொல்லப்பட்டே மேற்படி காரியங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. 1பிரெஞ்சுப் புரட்சியின்போதும், அந்தப் புரட்சியைப் பின்பற்றியும், அதனை நகல் செய்தாற்போலவும் உண்டான புரட்சிகளின்போதும் நடைபெற்ற எல்லாச் செயல்களும் மனிதனுடைய உரிமைச் சாஸனத்தின் விளைவுகள்தான். பிரெஞ்சுப் புரட்சிக்கு அடிகோலிய தத்துவ சாதிரிகளின் நூல்களெல்லாம், சுதந்திரத்தை அடிப்படை யாகக் கொண்டே எழுதப்பட்டன; பிரதி மனிதனுக்கும், அவ னுடைய உரிமைகளைத் தெரியப்படுத்த வேண்டுமென்ற அவசி யத்தை முன்னிட்டே எழுதப்பட்டன. புரட்சியை நோக்கமாகக் கொண்டு அப்பொழுது எழுந்த கட்சிகளெல்லாம், மனிதன் சுகத்திற் காகவே பிறந்திருக்கிறானென்றும், தன்னிடத்திலேயுள்ள சக்தி யனைத்தையும் பிரயோகித்து அந்தச் சுகத்தை யடைய அவனுக்கு உரிமை யுண்டென்றும், இந்த முயற்சியிலே அவன் ஈடுபட்டிருக்கிற போது அவனைத் தடை செய்ய யாருக்கும் உரிமை யில்லை யென் றும், அவன் செல்கிற பாதையில், அவன் முயற்சிக்கு ஏதேனும் இடை யூறுகள் ஏற்படுமாயின் அவற்றை அப்புறப் படுத்திக் கொண்டு செல்ல அவனுக்கு உரிமை யுண்டென்றும் உபதேசித்து வந்தன. அப்படியே இடையூறுகள் யாவும் அப்புறப்படுத்தப் பட்டன; சுதந்திரமும் கிடைத்தது. இந்தச் சுதந்திரம் அநேக வருஷ காலம் பல நாடுகளில் ஊர்ஜிதம் பெற்றிருந்தது; இப்பொழுதும் சிலநாடுகளில் ஊர்ஜிதம் பெற்றிருக்கிறது. ஆனால், இந்தச் சுதந்திர ஊர்ஜிதத்தி னால் ஜனங்களின் நிலைமை ஏதேனும் அபிவிருத்தி யடைந்திருக் கிறதா? அன்றாடம் கைவேலை செய்து பிழைக்கிற லட்சக் கணக்கான ஜனங்கள், சுதந்திரம் பெற்றதன் விளைவாக எந்தச் சுக சௌக்கியத்தை எதிர்பார்த்தார்களோ, எந்தச் சுக சௌக்கியம் கிடைக்குமென்று அவர்களுக்கு உறுதி கூறப்பட்டதோ, அந்தச் சுக சௌக்கியத்தில் ஒரு பகுதியேனும் அவர்களுக்குக் கிடைத்திருக் கிறதா? இல்லை; ஜனங்களுடைய நிலைமை அபிவிருத்தியாகவில்லை. அதற்கு மாறாக அவர்களுடைய நிலைமை ஒவ்வொரு நாட்டிலும் கேவலமாகிக்கொண்டு வந்திருக்கிறது. இன்னும் கேவலமாகிக்கொண்டு போகிறது. வாழ்க்கைக்கு அவசியம் தேவையாயுள்ள பொருள்களின் விலைகள் வரவர ஏறிக்கொண்டே போகின்றன. ஆனால் தொழிலாளி களின் கூலி விகிதமோ வரவரக் குறைந்துகொண்டே போகிறது. இவை களுக் கேற்றாற்போல் ஜனத் தொகையும் பெருகிக்கொண்டு போகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாளர்களின் நிலைமை யானது வர வர திரமற்றதாகிக்கொண்டு வருகிறது. நிச்சயமற்றதாகிக் கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைச் சும்மா யிருக்கும்படிச் செய்துவிடுகிற தொழிலாளர் நெருக்கடிகள் அடிக்கடி உண்டாகிக்கொண்டு வருகின்றன. இதனை எவ்வாறு நிரூபித்துக் காட்டலாமென்றால், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வருஷந் தோறும் எத்தனைபேர் குடியேறிக்கொண்டு வருகிறார்க ளென்பதைப் பாருங்கள். ஐரோப்பாவிலிருந்து, உலகத்தின் மற்றப் பாகங்களுக்கு ஜனங்கள் வருஷந்தோறும் அதிகமாகச் சென்று வருகின்றனர். ஏழை மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பெறும் தாபனங்கள் வருஷத்திற்கு வருஷம் அதிகப் பட்டு வருகின்றன. ஏழை மக்களுக்கும், நிர்க்கதியாகிப் போய்விட்ட வர்களுக்கும் செலவழிக்கப்படுகிற தொகை யானது பிரதி வருஷமும் ஏறிக்கொண்டு வருகிறது. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? தொழிலாளர்களின் கேவல நிலைமையை. தவிர, ஏழை மக்களுக்கு அதிகமாகப் பணம் செலவழிக்கப்படுகிறதென்று சொன்னால், அது, பொதுஜனத்தின் கவனமானது ஏழை ஜனங்களின் துயரத்தைப் போக்கும் விஷயத்தில் விழிப்படைந்துகொண்டு வருகிற தென்பதைக் காட்டுகிறது. ஆனால், அந்தப் பொதுஜன சக்தியோ, ஜனங்களின் துயரங்களைக் குறைக்கும் விஷயத்தில் அதிகமான பலனை அடைய முடியவில்லை. அதற்கு மாறாக, எந்த ஜனங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நாம் முயற்சி செய்கிறோமோ, அந்த ஜனங் களிடத் தில் தரித்திரமானது அதிகப் பட்டுக்கொண்டுவந்திருக்கிறது. சென்ற ஐம்பது வருஷ காலமாக உலகத்தில், சமுதாயத்தின் செல்வமும், மற்ற உலக சுகங்களும் படிப்படியாக அதிகப்பட்டுக் கொண்டு வந்திருக்கின்றன. பொருள்களின் உற்பத்தி ஒன்றுக்கு இரண்டாகியிருக் கிறது. ஒழுங்கான திட்டங்கள் இல்லாத காரணத்தினால், வியாபார உலகத்தில் அடிக்கடி நெருக்கடிகள் ஏற்பட்டுக்கொண்டு வந்திருந்தாலும், வியாபாரச் செழிப்பு அதிகப் பட்டுக்கொண்டுவந்திருக்கிறது. வியாபாரம் பல தேசங்களிலும் விசாலமடைந்துகொண்டு வந்திருக்கிறது. ஏறக்குறைய எல்லா இடங்களிலும் போக்குவரவு சாதனங்கள் திரப்படுத்தப்பட்டும், துரிதப் படுத்தப்பட்டும் வந்திருக்கின்றன. போக்குவரத்துச் செலவு குறைவுபட்டுப் போனபடியால், பொருள்களின் விலையும் குறைந் திருக்கிறது. இவை இப்படியிருக்க, இன்னொருபுறத்தில், மனித சுபாவத்திலேயே உரிமை யென்பது வேரூன்றியிருக்கிறதென்ற சித்தாந்தத்தை ஏறக்குறைய எல்லோரும் அங்கீகரித்துக்கொண் டிருக்கின்றனர். இந்த உரிமையைச் செயலளவில் புறக்கணிக்கப் பார்க்கிறவர்கள்கூட, வாய் வார்த்தையாக இந்தச் சித்தாந்தத்தை அங்கீகரித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி யெல்லாமிருந்தும், ஜனங்களுடைய நிலைமை ஏன் அபிவிருத்தியடைய வில்லை? ஐரோப்பிய சமுதாயத்தின் எல்லா அங்கத்தினர்களுக்கும் சம பாகமாகச் செல்லவேண்டிய பொருள்கள், ஏன் ஒரு சிலருடைய கையில் - பிரபு வமிசத்தினராகத் தங்களை அமைத்துக்கொள்ள பார்க்கிற ஒரு சிலருடைய கையில் - போய்க் குவிந்துகிடக்கின்றன? தொழிலுக்கும் வியாபாரத்திற்கும் ஏற்பட்டிருக்கிற ஒரு புதிய உத்வேகமானது, ஏன் பலருக்குச் சுகத்தை உண்டாக்காமல், ஒரு சிலருக்கு ஆடம்பர வாழ்க்கையை அளித்திருக்கிறது? இதற்கு விடை, விஷயங்களை நெருங்கிப் பார்ப்போர்க்குத் தெளிவாகக் கிடைக்கும். கல்வியினாலாக்கப்பட்டவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு எந்த முறையில் கல்வி போதிக்கப்படுகிறதோ அந்த முறையை அநுசரித்தே அவர்கள் காரியங்களைச் செய்கிறார்கள். இது காறும் புரட்சிகளைச் செய்தவர்களத்தனைபேரும் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்பட்ட உரிமைகளென்னவென்ற கருத்தை அடிப் படையாகக் கொண்டே காரியங்களைச் செய்துவந்திருக்கிறார்கள். இந்தப் புரட்சிகளின் பயனாக உரிமை கிடைத்தது. தனிப்பட்ட மனிதனுடைய உரிமை, எந்தக் கொள்கையையும் எடுத்துச் சொல்கிற உரிமை, எவ்விதமான நம்பிக்கைகளைக் கொள்ளவும் உரிமை, வியாபார உரிமை, எல்லா விஷயங்களிலும் உரிமை, எல்லோ ருக்கும் உரிமை போன்ற எல்லா வகை உரிமைகளும் கிடைத்தன. ஆனால், யாருடைய உரிமைகளை நாம் அங்கீகரிக்கிறோமோ, அவர்களுக்கு, அந்த உரிமைகளை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரப் போதிய சாதனங்களில்லாவிட்டால், அவர்களுக்கு அவர்க ளுடைய உரிமைகளை அங்கீகரித்துவிட்டதனால் மட்டும் என்ன பயன்? எந்தவிதமான கொள்கையையும் பிரசாரம் செய்ய உரிமை உண்டு என்று நாம் சொல்கிறோம். ஆனால் அந்தப் பிரசாரத்தைச் செய்ய அவகாசமில்லாதவர்களுக்கோ அதனால் சாதகமடைய முடியாதவர்களுக்கோ அந்த உரிமையினால் என்ன பயன்? வியாபார உரிமை அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறோம். ஆனால் வியாபாரஞ் செய்வதற்கு வேண்டிய மூலதனமோ, கடன் தொகையோ இல்லாதவர்களுக்கு அந்த உரிமையினால் என்ன பயன்? எந்த நாடுகளில் இந்த உரிமைகள் பிரகடனம் செய்யப் பட்டனவோ அந்த நாடுகளில் சமுதாயமானது ஒரு சிறு தொகுதி யினரைக் கொண்டதாகவே இருந்திருக்கிறது. இந்தச் சிறு தொகுதி யினரிடத்தில் தேசத்தின் விவசாய நிலம், கொடுக்கல் வாங்கல், மூலதனம் முதலியனவெல்லாம் இருக் கின்றன. மற்றும் இந்தச் சிறு தொகுதியினருடைய அடக்கத்தில், ஏராளமான ஜனங்கள் இருக்கி றார்கள். இவர்களுக்கோ, இந்த ஏழை ஜனங்களுக்கோ, இவர்க ளுடைய கையுழைப்பைத் தவிர வேறு ஒன்றுங் கிடையாது. இவர்கள் எந்த நிபந்தனைக்குட்பட்டாவது, தங்கள் தேக உழைப்பை, மேற்சொன்ன சிறு தொகுதியினரிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டி யிருக்கிறது. ஏனென்றால், இவர்கள் அன்றாட ஜீவனத்தை நடத்த வேண்டியவர்களாயிருக்கிறார்கள். இதற்காக நாள் முழுவதையும் லௌகிகப் பிரயோஜனமான, சலிப்பு தரக்கூடிய உழைப்பில் கழிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, பசிப்பிணி யோடு போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குட்பட்டிருக்கிற இவர் களுக்கு, உரிமையென்று சொன்னால் அது, பொய்த் தோற்ற மல்லாது வேறென்ன? கசப்பான ஓர் அலங்காரப் பொருளல்லாது வேறென்ன? இவையல்லாத வேறு ஒரு பொருளாக அந்த உரிமையைச் செய்யவேண்டுமானால், மேலேசொன்ன சிறு தொகுதியினரான பணக்கார வகுப்பினர், தொழிலாளர்களுடைய வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும். சம்பள விகிதத்தை உயர்த்த வேண்டும்; பாமர ஜனங்களுக்கு ஒரேமாதிரியான இலவசக் கல்வித் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். உழைப்புக்கு வேண்டிய கருவிகள் எல்லோ ருக்கும் கிடைக்கும்படியாகச் செய்ய வேண்டும்; திறமையும் நன் னோக்கமுடைய தொழிலாளர்களுக்கு ஒரு சகாய நிதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் இவைகளையெல்லாம் இவர்கள் ஏன் செய்ய வேண்டும்? வாழ்க்கையின் மேலான நோக்கமென்ன? சுக சௌக்கியத்துடனிருப்பதுதானே. எல்லாவற்றையும் விட லௌகிக சுகங்களை அடைவதுதானே முக்கிய விஷயம்? மற்றவர்களுடைய சௌகரியத்திற்காக நாங்கள் ஏன் எங்கள் சுகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்? அவரவர்களும், அவர்களால் முடிந்த வரையில் சுகத்தை அநுபவித்துக்கொள்ளட்டும். மனித சுபாவத்திற்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிற எந்த உரிமை உண்டோ அந்த உரிமையை உபயோகிக் கிற வழி, சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. அதைப் பின்பற்றி எல்லோரும் சௌக்கியத்தையடையலாமே. தன்னுடைய சுற்றுச்சார்பு காரண மாக யாருக்கேனும் இந்த மனித உரிமை களை உபயோகிக்கிறவிதம் தெரியாவிட்டால் அவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்; மற்றவர் களை - அதாவது மேற்படி உரிமைகளை உபயோகிக் கிறவர்களை - குறைகூறக் கூடாது. இப்படி யெல்லாம் அவர்கள் - அந்தச் சிறு தொகுதியினர் - சொல்வது சகஜந்தான். இப்படிச் சொல்லியு மிருக்கிறார்கள். அதிருஷ்ட வசத்தினால் சுகத்தை அநுபவிக்கக் கொடுத்து வைத் திருக்கிற வகுப்பினர், ஏழை மக்களிடத்தில் காட்டுகிற இந்த மனப் பான்மையானது, சீக்கிரத்தில், எல்லா மனிதர்களிடத்திலும் பரவ ஆரம்பித்தது. சாதாரண மனிதன், மற்றொரு சாதாரண மனிதனிடத் தில் இந்த மாதிரியான மனப்பான்மையையே கொள்ள ஆரம்பித் தான். பிரதியொரு மனிதனும், மற்றவர்களைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய உரிமைகளை மட்டும் பாதுகாத்துக் கொள்ளத் தொடங்கினான்; தனது வாழ்க்கை அந்ததை மட்டும் உயர்த்திக் கொள்ள முயன்றான். தன்னுடைய உரிமைகள், மற்றவர்களுடைய உரிமைகளோடு முரண் படுகிற போது விளைவு என்ன? யுத்தம். இந்த யுத்தமோ, ரத்தஞ் சிந்துகிற யுத்தமல்ல; பண யுத்தம்; தந்திர யுத்தம். இந்த யுத்தம், ரத்தஞ் சிந்துகிற யுத்தத்தை விட மனிதத் தன்மையில் குறைந்தது; ஆனால் அதைப் போல் அழிவை உண்டு பண்ணக் கூடியது. இந்தக் கொடுமையான யுத்தத்தில், யாரொருவருக்கு அதிகமான வசதிகளும் வலிவும் இருக்கிறதோ அவர்கள், பலஹீனர் களையும், திறமையற்றவர்களையும் நிர்த்தாட் சண்யமாக அழித்து விடுகிறார்கள். இந்த மாதிரியான போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வருவதன் காரணமாக, மனிதர்களுக்கு அகங்கார புத்தி அதிகமாகிறது; உலக சுகங்களை மட்டும் அடைய வேண்டு மென்ற ஆசை அதிகரிக்கிறது. எந்த விதமான நம்பிக்கைகளையும் கொள்ள லாமென்கிற உரிமையானது, மானிட ஜாதியினிடத்திலேயுள்ள நம்பிக்கையை இழக்கும்படிச் செய்து விட்டது. எந்த விதமான கல்வியையும் கற்கலாமென்கிற உரிமையானது, மனிதர்களுடைய ஒழுக்கத்திலே ஒரு கலக்கத்தை உண்டு பண்ணி விட்டது. எல்லோரும் மானிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒற்றுமை உணர்ச்சி இல்லாமல், ஒன்றுபட்ட ஒருமத நம்பிக்கையோ அல்லது மத நோக்கமோ இல்லாமல், சுகத்தை அநுபவிக்க வேண்டுமென்ற ஒரே லட்சிய முடையவர்களாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைப் பின்பற்றிச் செல்கின்றனர். அப்படிச் செல்கிறபோது, தங்கள் சகோதரர்களுடைய தலையில் - ஆம், பெயரளவில் தான் சகோதரர்கள்; உண்மையில் சத்துருக்கள் தானே - கால் வைத்து மிதித்துக் கொண்டு போகிறார்கள். அதைக் கூட இவர்கள் பொருட் படுத்துவதில்லை. உரிமைகள் என்கிற சித்தாந்தத்தின் விளைவாக நாம் இப்பொழுது இந்த திதிக்கு வந்திருக்கிறோம். உரிமைகள் இருப்ப தென்னவோ வாதவம். ஆனால் ஒரு தனி நபருடைய உரிமைகள், மற்றொரு தனி நபருடைய உரிமை களோடு முரண்படுகிறபோது, இந்த உரிமைகளுக் கெல்லாம் மேலான தொன்றுக்கு விண்ணப்பித்து கொள்ளாமல் மேற்படி முரண்பாடுகளை எப்படிச் சமரஸப் படுத்த முடியும்? எப்படிப் பொருந்தப் பண்ண முடியும்? மற்றும், ஒரு தனி நபருடைய உரிமை களோ அல்லது பல பேருடைய உரிமைகளோ தேசத்தினுடைய உரிமைகளோடு முரண் படுகிறபோது, இவைகளைத் தீர்த்து வைக்க, நாம் எந்த விசாரணை தலத்திற்கு விண்ணப்பித்துக் கொள்வது? ஜீவ தசையிலிருக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் சுக சௌக் கியத்தோடிருக்க உரிமையுண்டு என்று சொன்னால், தொழி லாளிக்கும் முதலாளிக்கும் ஏற்படுகிற பிணக்குகளைத் தீர்த்து வைப்பது யார்? ஒவ்வொரு மனிதனும் ஜீவித்திருக்க உரிமையுடை யவன். இஃது அவனுடைய முதல் உரிமை; புறக்கணிக்கப்பட முடியாத உரிமை. அப்படிப்பட்ட அந்த உரிமையை அவன், மற்ற வர்களுடைய நலனுக்காகப் பலி கொடுத்துவிடவேண்டுமென்று யார் சொல்வது? அவனைப் பார்த்து ஓ! மனிதனே! உன்னுடைய உரிமையை மற்றவர்களுடைய நலனுக்காக தியாகம் செய் என்று தேசத்தின் பெயரால் சொல்வாயா? சமுதாயத்தின் பெயரால் சொல்வாயா? உன்னுடைய சகோதரர்கள் அத்தனை பேருடைய பெயராலும் சொல்வாயா? தேசம் என்றால் என்ன? எந்த இடத்தில் தனிப்பட்ட மனிதர்களுடைய உரிமைகள் க்ஷேமமாயிருக்கின் றனவோ அந்த இடத்திற்குத் தான் தேசம் என்று பெயர். சமுதாயம் என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனுடைய உரிமைகளையும் பல பேர் சேர்ந்து தங்கள் பலத்தினால் பாதுகாக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிற ஒரு ஜனத் தொகுதிக்கே சமுதாயம் என்று பெயர். மனிதன் தன்னுடைய உரிமை களைத் தாராளமாக அநுஷ்டிக்கலா மென்று உறுதி கூறுவதற்காகவே சமுதாயம் ஏற்பட்டிருக்கிறதென்று சென்ற ஐம்பது வருஷ காலமாக ஒவ்வொரு மனிதனுக்கும் போதனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. அப்படிப் போதனை செய்துவிட்டு, இப்பொழுது அவனைப் பார்த்து, உன்னுடைய உரிமைகளைச் சமுதாயத்திற்கு அர்ப்பணஞ் செய்துவிடு; அந்தச் சமுதாயத்தின் அபிவிருத்திக்காக ஓயாமல் உழை; தேவை யானால் சிறைவாசத்தையும் தேசப்பிரஷ்டத்தையும் அநுபவி என்று நீ சொல்வாயா? வாழ்க்கையின் நோக்கமே சுக சௌக்கியத்தோ டிருப்பது தான் என்று எங்கு பார்த்தாலும் அவனுக்கு நீ போதித் திருக்கிறாய். இப்பொழுது திடீரென்று அவனைப் பார்த்து அந்நியர் களுடைய ஆதிக்கத்தினின்று நாட்டை விடுதலை செய்வதற்காகவும், அவனுடைய வருக்கத்தினரல்லாத வேறொரு வருக்கத்தினருடைய நிலைமையை உயர்த்திக் கொடுக்கவும் அவனுடைய சுக சௌக்கி யத்தையும், அவனுடைய பிராணனையுங்கூட விட்டுவிடுமாறு நீ கூறுவாயா? உலக சுகங்களைப்பற்றி இத்தனை வருஷங்களாக அவ னுடன் பேசி வந்திருக்கிறாய். இப்பொழுது செல்வமும் அதிகார மும், அவன் கைக்கு எட்டுகிற தூரத்தில் வந்திருக்கின்றன. இந்தச் சமயத்தில் அவன் அவைகளைப் பற்றிக் கொள்ளக் கையை நீட்டக் கூடாதென்றும், அதனால் அவனுடைய சகோதரர்களுக்குப் பாதகம் ஏற்படுமென்றும் நீ எப்படிச் சாதிக்கலாம்? இத்தாலியத் தொழிலாளர்களே! உண்மையான ஆதாரமில் லாமல், ஏதோ என் மனத்திலெழுந்ததை இங்கு பேசுகிறேன் என்று நீங்கள் கருதக்கூடாது. நான் சொல்வது சரித்திரம்; நமது காலத்துத் சரித்திரம்; ரத்தக்கறை பட்டிருக்கிற, ஆம், ஜனங்களுடைய ரத்தக் கறைப்பட்டிருக்கிற ஏடுகளைக் கொண்ட சரித்திரம். 1830ஆம் வருஷத்துப் புரட்சியில்1 கலந்து கொண்ட யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். இவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு சிலருக்குப் பதில் வேறு சிலரை அதிகார தானத்திலே கொண்டு வைத்தார்கள். மூன்று நாள் புரட்சியிலே சண்டை போட்டுச் செத்துப்போன உங்கள் பிரெஞ்சு சகோதரர்களின் தேகங்களை, தாங்கள் அதிகார பதவிக்கு வருவதற்கான படிகளாக உபயோகித்துக் கொண்டார்கள், இவர்களுடைய சித்தாந்தங்களெல்லாம் (1830ஆம் வருஷத்திற்கு முன்னே) மனிதர்களுடைய உரிமைகள் என்னவென்பதை அதி வாரமாகக் கொண்டெழுந்தனவேயல்லாமல் அவனுடைய கடமை களின்மீது கொண்ட நம்பிக்கையின்மீது எழுந்தவையல்ல. மனப் பூர்வமாகவே இவர்கள் பத்தாவது சார்ல2 மன்னனுடைய அரசாங்கத்துடன் போராடினார்கள். ஏனென்றால், சமுதாயத்தின் எந்த வருக்கத்திலிருந்து இவர்கள் உற்பத்தியானார்களோ அந்த வருக்கத்திற்கு விரோதமாக அந்த அரசாங்கம் இருந்தது, அவர் களுடைய உரிமைகளைத் திரகாரஞ் செய்யவும் நசுக்கவும் ஆரம் பித்தது. தாங்கள் எந்த அளவுக்குச் சுக சௌக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று இவர்கள் கருதினார்களோ அந்த அளவுக்குத் தங்களுடைய சுக சௌக்கியம் இல்லை யென்பதற்காக அந்தச் சுக சௌக்கியத்தின் பெயரால் இவர்கள் போராடினார்கள். சிலர் சுதந்திரத்துடன் எண்ணியதற்காகத் துன்புறுத்தப்பட்டார்கள். மனோதிட முள்ள இன்னுஞ் சிலர், தாங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதையும், தங்களைவிடத் திறமையில் தாழ்ந்தவர்கள் உத்தி யோகத்தில் அமர்ந் திருப்பதையுங் கண்டார்கள். பின்னர் ஜனங் களுடைய தவறுகளும் அவர்களுக்குக் கோபத்தை மூட்டின. எனவே அவர்கள் தைரியமாகவும் நல்லெண்ணத்துடனும், ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமான உரிமைகளென்னென்ன வென்பதைப் பற்றி எழுதினார்கள். பின்னர் தங்களுடைய அரசியல் உரிமைகளும் அறிவு சம்பந்தப்பட்ட உரிமை களும், அதாவது சுயமாகச் சிந்திப்பது, சிந்தித்தபடி எழுதுவது முதலிய உரிமைகளும் கிடைத்துவிட்ட பிறகு, உத்தியோகம் பெறுவதற்கான மார்க்கம் ஏற்பட்டுவிட்ட பிறகு, தாங்கள் கோரிய சுக சௌக்கியத்தை அடைந்து விட்டபிறகு, அவர்கள் ஜனங்களை மறந்துவிட்டார்கள். படிப்பிலும், லட்சியங் களிலும் தங்களை விடத் தாழ்வாயுள்ள லட்சக்கணக்கான மக்கள், வேறொரு விதமான உரிமைகளை உபயோகிக்க விரும்புகிறார் களென்பதையும், வேறொரு விதமான சுக சௌக்கியத்தையடைய ஆசை கொள்கிறார்களென்பதையும் மறந்துவிட்டார்கள். தங்களைத் தவிர்த்து மற்றவர்களைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளவே இல்லை. இப்படிப்பட்டவர்களைத் துரோகிகள் என்று ஏன் சொல்லவேண்டும்? அவர்களுடைய சித்தாந்தங்கள் நயவஞ்சக முடையவையென்று ஏன் சொல்லக் கூடாது? அந்தக்காலத்தில் பிரான்சில் ஒரு மனிதன் வாழ்ந்துகொண் டிருந்தான். அவன் அநேக நூல்களை எழுதியிருக்கிறான். அவனை நீங்கள் மறக்க வேகூடாது. மேலே சொல்லப்பட்டவர்களைவிட, அதாவது உரிமை களை மட்டும் வற்புறுத்தினார்களே அவர்க ளெல்லோரையும் விட அவன் அதிக மனோசக்தி வாய்ந்தவன். அந்தத் காலத்தில் அவன் நமக்கு விரோதியாயிருந்தான்; ஆனால் அவன் கடமையில் நம்பிக்கை கொண்டவன். பொதுநலத்திற் காகவும் சத்தியத்தை நாடிச் செல் வதற்காகவும், அந்தச் சத்தியம் வெற்றி பெற வேண்டு மென்பதற்காகவும் சர்வத்தையும் தியாகஞ் செய்ய வேண்டும்; அப்படித் தியாகஞ் செய்வது மனிதனுடைய கடமையென்னுங் கொள்கையில் அவன் நம்பிக்கை கொண்டவன். அவன், தன் காலத்திய மனிதர்களைப்பற்றியும் நிலைமை களைப் பற்றியும் நன்றாக ஆராய்ச்சிசெய்தவன். அவன், ஜனங்களுடைய ஆரவாரத்தைக் கண்டு வழி தவறி விட்டவனல்லன்; அல்லது தனக் கேற்பட்ட ஆசாபங்கங்களிலிருந்து சோர்வடைந்தவனல்லன். அவன், பாமர ஜனங்களைக் கை தூக்கிவிடும் முயற்சியில் ஒன்றில் தவறி விட்டாலும் மற்றொன்றில் ஈடுபட்டுழைத்தான். பாமர ஜனங்களை உய்விக்க வேண்டுமானால் அஃது ஒரே ஒரு சக்தியினால் தான் முடியுமென்றும், ஜனங்களுடைய நலனை நாடி உழைப்ப தாகப் பாசாங்கு செய்கிறவர்களைக் காட்டிலும் ஜனங்களே, காரிய சாதனையில் அதிக ஒழுக்கமுள்ளவர்களாகவும் நம்பிக்கையுடைய வர்களாகவும் இருக்கிறார் களென்றும் அப்பொழுதைய கால சம்ப வங்கள் அவனுக்கு உணர்த்தின. எனவே, அவன், லாமென்னயி1 என்ற அவன், ஓர் ஆதிகனுடைய வார்த்தைகள் என்ற நூலின் ஆசிரியனான அவன், நாம் இப்பொழுது எந்த லட்சியத்திற்காகப் பாடுபடுகிறோமோ அந்த லட்சியத்தின் சிறந்த பிரதிநிதி யானான். அவனையும், மற்றவர்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தோ மானால், உரிமைகளைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கும் கடமைகளைப் பற்றிப் பேசுகிறவர்களுக்குமுள்ள வேற்றுமைகள் நன்றாகத் தெரியும். உரிமைகளைப் பற்றிப் பேசுகிறவர்கள், தங்களுக்கு உரிமைகள் கிடைத்து விட்ட பிறகு, முன்னோக்கிச் செல்ல முடியாதவர்களாகி விடுகிறார்கள். கடமைகளை வற்புறுத்திப் பேசுகிறவர்களுக்கோ, அவர்களுடைய இந்தப் பூலோக வாழ்க்கை முடிகிற வரையில் வேலை இருந்து கொண்டிருக்கிறது. பரிபூர்ணமாக அடிமைப்பட்டுக் கிடக்கிற ஜனங்களிடத்திலே (சுதந்திர) போராட்டமானது, பலவகை ஆபத்துக்களை யுடையதா யிருக்கிறது. இந்தப் போராட்டத்தில், தற்போதைய நிலைமையி லிருந்து மேல் நிலைமைக்குப் போகிற ஒவ்வொரு படியிலும், யாரோ ஒரு வீரனுடைய ரத்தக் கறை படிந்திருக்கிறது. இந்தப் போராட்ட காலத்தில், உயர் பதவியிலிருந்து, இழைக்கப்படுகிற அநீதிகளுக்கு விரோதமாக எடுத்துக் கொள்ளப் படும் நடவடிக்கைகள், அவசி யத்தை முன்னிட்டு ரகசியமாகவே இருக்க வேண்டியிருக்கின்றன. தவிர, இந்த நடவடிக்கைகள் பகிரங்கத்துக்கு வருவதில்லை; புகழப் படுவது மில்லை. இப்படிப்பட்ட போராட்டம் ஜனங்களுடைய நன்மைக்காக நடத்தப்படுகிற போராட்டம். இதை நாம் புனிதத் தன்மையுடைய போராட்டமென்று கருதி நடத்துகிறோம். இதைச் சிலர், தங்களுடைய உரிமைகளுக்காக நடத்துகிற வெறுஞ் சண்டையாகக் கருதி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களிட மிருந்து, முன்னேற்ற மார்க்கத்தில் தொடர்ந்து செல்வதற்கான உற்சாகம் இருக்கிறதென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அல்லது இவர் களிடமிருந்து என்ன சாதகத்தை எதிர்பார்க்க முடியும்? நான் இங்கே பொதுப்படையாகத்தான் சொல்கிறேனே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் சொல்கிற லட்சணங்களுக்குப் புறம்பானவர்கள், எல்லாக் கட்சிகளிலும் இருத்தல் கூடும். கொடுங்கோன்மைக்கு விரோதமாக எழுந்த எந்த ஆத்திர உணர்ச்சியானது போராட்டத்தில் இளைஞர்களை இழுத்துவிடுகிறதோ அந்த உணர்ச்சி அடங்கிவிட்டபிறகு, கொதித்துக் கொண்டிருந்த ஜனங்களுடைய ரத்தமானது சாந்தமடைந்து விட்ட பிறகு, மேலே சொல்லப்பட்ட மனிதர்கள் சோர்வு கொண்டுவிடுகி றார்கள். இவர்கள் சில வருஷ காலம் முயற்சி செய்து பார்க்கி றார்கள். இந்த மாதிரியான போராட்டங்களில் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆசாபங்கங்கள் இவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே இவர்கள் சோர் வடைந்து போகிறார்கள். அப்படிச் சோர்வடையாமலிருக்க இவர் களைத் தடுக்கக் கூடியது என்ன இருக்கிறது? தொடர்ந்தாற்போல் போராட்டம் நடத்திக்கொண்டும், அடிக்கடி ஆபத்திற்குட்பட்டும் இருப்பதைக்காட்டிலும், சிறை வாசத்திலோ, தூக்கு மேடையிலோ, தேசப்பிரஷ்டத்திலோ வாழ் நாளை முடிக்க நேரிடுமேவென்ற அச்சத்தினால் பீடிக்கப்பட்டிருப் பதைக் காட்டிலும், ஏன் ஒதுங்கினாற்போலிருந்து அமைதியான வாழ்க்கையை நடத்திக் காலத்தைக் கழித்துவிடக்கூடாது என்று இவர்கள் நினைக் கிறார்கள். இன்று இத்தாலியரிற் பலருடைய வாழ்க்கை இப்படித்தானிருக் கிறது. ஏனென்றால், பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் ஏற்பட்ட எண்ணங்கள் தான் இவர்களிடத்தில் குடிகொண்டிருக்கின்றன. இந்தமாதிரி இவர்கள் இருப்பது விசனிக்கத்தக்கதுதான். ஆனால் இவர்களுடைய நிலைமையை நாம் எப்படி மாற்ற முடியும்? இவர்கள் எந்தக் கொள்கையை வழிகாட்டி யாகக் கொண்டு ஆரம்பித்தார்களோ அந்தக் கொள்கையை இவர்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால் இவர்களுடைய நிலைமையை நாம் எப்படி மாற்றமுடியும்? போராட்டத்தில் இயற்கையாக உண்டாகிற ஆபத்துக்களும், ஏற்படுகிற ஆசாபங்கங்களும், இன்னும் அதிகமான மனோ உறுதியைக் கொடுக்க வேண்டுமென்றும், ஒரு சில வருஷங்கள் மட்டும் நடத்தி விட்டுத் திருப்திகொள்ளாமல் வாழ் நாள் முழுவதும் போராட வேண்டு மென்றும் இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? யார் பெயரால் எடுத்துச் சொல்வது? உரிமை களுக்காகப் போராடாமலிருப்பதைக் காட்டிலும் போராடுவ தனால் ஒரு மனிதனுக்கு அதிகமான கஷ்டங்கள் உண்டாகின்றன. அப்படியிருக்க அந்த மனிதனைப் பார்த்து உன் உரிமைகளுக்காக நீ போராடு என்று யார் சொல்லமுடியும்? நம்முடைய சமுதாயத்தைக்காட்டிலும் இன்னும் நியாயமான முறையில் அமைந்திருக்கும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளில்மட்டும் நம்பிக்கை கொண்டுள்ள ஒருவன் இருக்கிறானென்று வைத்துக் கொள்வோம். அவனிடம் நீ பொதுநலத்திற்காக உழைக்க வேண்டும்; சமுதாய எண்ணத்தை வளர்க்கக் கூடியவிதமாக நீ வேலை செய்ய வேண்டும் என்று யார் சொல்வது? அவன், தன் உரிமைச் சித்தாந்தத்தையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கலகத்திற்குக் கிளம்புகிறானென்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் தனது பலத்தை உணர்ந்துகொண்டவனாய், சமுதாயக் கட்டுப்பாடு என்பதை நான் உடைத்தெறிகிறேன். எனது எண்ணப்போக்கு, எனது திறமைகள் முதலியனவெல்லாம் வேறு இடத்திற்கு என்னை அழைக்கின்றன. அவை களைப் போற்றி வளர்க்க வேண்டுவது எனது புனிதமான கடமை. இதற்குக் குறுக்காக நிற்கிற யாரிடத் திலும் நான் போராடத் தயார் என்று சொல்வானாகில், அவனுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? நீங்கள் பெரும்பான்மையோ ராக இருக்கிற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, அவனுடைய அபிலாஷைகளுக்கும், அவனுடைய தனிப்பட்ட கோரிக்கை களுக்கும் பொருந்தாத சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு அவனை வற்புறுத்த உங்களுக்கென்ன உரிமை இருக்கிறது? மேற்படி சட்டங்களை அவன் மீறி நடப்பானாகில் அவனைத் தண்டிக்க உங்களுக்கென்ன அதிகாரம் இருக்கிறது? உரிமை யென்பது எல்லாருக்கும் உண்டு. எல்லோரும் ஒரு சமுதாயமாக ஒன்று சேர்ந்து வாழ்வதனால், விசேஷமான உரிமையொன்றுஞ் சிருஷ்டியாகிவிட வில்லை. தனிப்பட்ட நபர்களைக்காட்டிலும் ஒரு சமுதாயத்திற்கு அதிகமான பலம் இருக்கலாம்; ஆனால் அதிகமான உரிமைகள் இல்லை. அப்படியிருக்க, ஒரு தனி மனிதன், தனது இச்சையை, தன் சகோதரர்களுடைய இச்சையோடு, அதாவது தனது தேசத்திலுள்ள வருடைய, மானிட சமுதாயத்தைச் சேர்ந்தவருடைய இச்சையோடு ஒன்றுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் எப்படி வற்புறுத்தக் கூடும்? தூக்குமேடையின் மூலமாகவா? அல்லது சிறையின் மூல மாகவோ? இதுகாறும் நிலவிவந்த சமுதாயங்களெல்லாம் இந்த மாதிரியான முறைகளையே கையாண்டிருக்கின்றன. ஆனால் அது யுத்தம்; நாம் கோருவது சமாதானம். அது, கொடுமையான அடக்குமுறை; நாம் கோருவது கல்வி. கல்வி என்று சொன்னோம். நமது சித்தாந்தமனைத்தையும் திரட்டிச் சொல்வது இந்த வார்த்தை. இந்த நூற்றாண்டில் முக்கிய பிரச்னையாயிருப்பது கல்விதான். பலாத்காரத்தைத் துணையாகக் கொண்டு புதியதொரு சமுதாயத்தை நாம் அமைக்கக்கூடாது. அப்படி பலாத்காரத்தினால் அமைக்கப்படுகிற சமுதாயம், முன் னிருந்ததைக் காட்டிலும் சிரேஷ்டமானதாயிருந்தபோதிலும் அது கொடுமையானது தான். முன்னேற்றத்திற்காக நாம் செய்கிற முயற்சி களை எந்தப் பலாத்கார சக்தியேனும் தடுக்குமானால், அதனை நாம் பலாத்காரங் கொண்டு அடக்க வேண்டியதுதான். அப்படி அடக்கி விட்டு எது சிறந்ததென்று நாம் கருதுகிறோமோ அப்படிப்பட்ட தொரு திட்டத்தை ஜனங்களுடைய அங்கீகாரத்திற்கென்று கிளத்த வேண்டும். அதைப்பற்றித் தாராளமாக ஜனங்கள் அபிப்பிராயஞ் சொல்லுமாறு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை விருத்தி செய்யக்கூடிய வகையிலும் இதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிற வகையிலும் ஜனங்களை நாம் பயிற்சி செய்ய வேண்டும். உரிமைச் சித்தாந்தமானது நம்மைத் தலைநிமிர்ந்தெழச் செய்கிறது; நமக்குக் குறுக்காக வரும் தடைகளை விலக்கிக்கொள்ளும் ஆற்றலை அளிக்கிறது. அவ்வளவுதான். ஆனால் எந்தெந்த சக்திகள் ஒன்று சேர்ந்தால் ஒரு சமுதாயமாகிறதோ அந்தச் சக்திகளை நிரந்தரமான ஒற்றுமைக்குட்படுத்தி வைக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. சந்தோஷ மாகவும் சுக சௌக்கியத்தோடும் இருக்க வேண்டு மென்பதே வாழ்க்கையின் லட்சியம் என்று மனிதர்களுக்கு நாம் உபதேசித்து விட்டோமானால், அகங்காரமுள்ள மனிதர்களைத்தான் நாம் சிருஷ்டித்தவர்களாவோம்; லௌகிக சக்திகளைப் போற்றும் மனிதர் களைத்தான் உண்டு பண்ணினவர்களாவோம். இவர்கள் தங்களுடைய பழமையான ஆத்திர உணர்ச்சிகளைப் புதிய அமைப்பில் கொண்டு புகுத்தி, சில மாதங்களுக்குள்ளேயே சமுதாயத்தைக் களங்கப்படுத்திவிடுவார்கள். எனவே இந்தச் சித்தாந்தங்களுக் கெல்லாம் மேலான ஒரு கல்வி முறையைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்தக் கல்வி முறையானது மேலான நிலைமைக்கு மனிதர்களை அழைத்துச் செல்லக்கூடியதாயும், இடைவிடாமல் தியாகஞ் செய்து கொண்டு வரவேண்டுமென்கிற உணர்ச்சியை உண்டுபண்ணக்கூடிய தாயும், சகோதர மனிதர்களோடு ஒன்றுபட்டு வாழ வேண்டு மென்கிற எண்ணத்தை ஏற்படுத்திக்கொடுப்ப தாயும், ஒரு தனிப் பட்ட மனிதன் வெளிப்படுத்தும் எண்ணங்களின் மீதோ அல்லது எல்லோருடைய பலத்தின் மீதோ சார்பு கொள்ளாமலிருக்குமாறு செய்யக் கூடியதாயும் இருக்கவேண்டும். இதுதான் கடமை. மனிதர் களாய்ப் பிறந்த நாம் எல்லோரும் ஒரே கடவுளின் மக்கள். இந்தப் பூலோகத்தில் நாம் ஒரே சட்டத்திற்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். பிரதி மனிதனும் தனக்காக வாழக்கூடாது; பிறருக்காக வாழவேண்டும். அதிகமான சந்தோஷத்துடனிருப்பதா அல்லது குறைவான சந்தோஷத்துடனிருப்பதாவென்பது வாழ்க்கையின் நோக்கமல்ல; தன்னையும் பிறரையும் உயர்நிலைக்குக் கொண்டு செல்வதுதான் வாழ்க்கையின் நோக்கம். தனது சகோதரர்களுடைய நன்மையை முன்னிட்டு, அநியாயத்தோடும், தீமையோடும் போராடு வது உரிமை மட்டுமல்ல; கடமையுமாகும். இந்தக் கடமையைப் புறக்கணிப்பது பாவம். நமது வாழ்நாள் முழுவதும் நாம் செய்து கொண்டிருக்கவேண்டிய கடமை இது. இந்தமாதிரியான எண்ணங் களை நாம் ஜனங்களுடைய மனதில் பதிய வைக்கவேண்டும். இத்தாலியத் தொழிலாளர்களே! எனது சகோதரர்களே! என்னை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய உரிமைகளைப்பற்றி நீங்கள் தெரிந்துகொண்டிருப்பதனால்மட்டும், பிரயோஜனகரமான அல்லது நிரந்தரமான ஓர் அபிவிருத்தியை நீங்கள் அடையமுடியா தென்று நான் சொல்வதனால், உரிமை களைத் துறந்துவிட வேண்டு மென்று நான் கூறுவதாக நீங்கள் கருதக் கூடாது. நாம் நமது கடமைகளை நிறைவேற்றாவிட்டால் அந்தக் கடமைகளின் விளைவாக உண்டாகும் உரிமைகள் கிடைக்கவே கிடைக்காதென்றுதான் நான் கூறுகிறேன். எனவே, உரிமைகளை நாம் பெறவேண்டுமானால், கடமைகளை முதலில் செய்யவேண்டும். சந்தோஷத்தையும், சுக சௌக்கியத்தையும், லௌகிக சித்திகளையும் வாழ்க்கையின் நோக்கமாக வைத்துக் காட்டு வோமானால், அகங்கார புத்தியுள்ள மனிதர்களைத்தான் நாம் சிருஷ்டித்தவர்களாவோம் என்று நான் சொன்னால், மேற்படி சந்தோஷ, சுக சொளக்கியம், லௌகிக சித்திகள் முதலியவற்றை நீங்கள் அடையவே கூடாது என்பது அர்த்தமல்ல. லௌகிக சுகங்களைமட்டும் நாம் பின்பற்றிச் செல்வோமானால், அந்த லௌகிக சுகங்களைச் சாதனமாக உபயோகியாமல் லட்சியமாக வைத்துக்கொண்டு விட்டோமானால், விபரீதமான பலன்கள் உண்டாகின்றனவென்றுதான் நான் கூறு கிறேன். ரோம ஏகாதிபத்தியம், சக்ரவர்த்திகளின் ஆட்சிக்குட்பட் டிருந்த காலத்தில் ரோமர்கள் வயிற்றுக்கு ரொட்டியும், வாழ்க்கைக்கு வேடிக்கைகளும் இருந்தால் போதுமென்ற மனப்பான்மைகொண் டார்கள். விளைவு என்ன? நாம் நினைக்கக் கூட முடியாத அவ்வளவு கேவலமான அடிமைத் தனத்திற்கு வந்துவிட்டார்கள்; காட்டு மிராண்டி ஜாதியினரின் படை யெடுப்புக்கு எளிதில் வசப்பட்டு விட்டார்கள்1 இப்படித்தான் பிரான்சிலும் மற்ற நாடுகளிலும், சமுதாயம் முன்னேற்றமடையக் கூடாதென்று கருதிய சமுதாயத்தின் சத்துருக்கள், ஜனங்களிடத்தில் ஒழுக்க ஹீனங் களைப் புகுத்தி வந்தார்கள், மனிதர்களுடைய முற்போக்கான எண்ணத்தை, மாற்ற மடைய வேண்டுமென்கிற எண்ணத்தைத் திருப்பும் பொருட்டு, அவர்களுக்கு லௌகிக சுகங்களைக் காட்டிக்கொடுத்தார்கள். நமது கைகளைக்கொண்டே நமது சத்துருக்களுக்கு நாம் உதவி செய்ய லாமா? உலகமார்க்கத்தில் அபிவிருத்தியடைய வேண்டியதென் னவோ அவசியந்தான். அந்த அபிவிருத்தியை நமக்கு நாமே அடைய முயற்சி செய்வோம். ஏன்? நன்றாக உண்பதும், நல்ல வீட்டிலே வசிப்பதும் மனிதனுக்கு அவசியமாயிருக்கின்றனவென்பதற்காக வல்ல. அன்றாடத் தேவைகளுக்காக இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தில் தொடர்ந்தாற்போல் ஈடுபட்டு வந்திருக்கிறீர்களோ அந்தப் போராட்டத்தில் சுய மதிப்பும், ஆத்ம முன்னேற்றமும் உங்களுக்கு இருக்கவேண்டு மென்பதற்காக, ஒரு நாளைக்குப் பத்து அல்லது பன்னிரண்டு மணி நேரம் நீங்கள் உழைக்கிறீர்கள். கல்வி யறிவு பெற உங்களுக்கு எங்கே அவகாசமிருக்கிறது? உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றுவதற்குப் போதுமான அளவுதான் உங்களிற் பெரும்பாலோர் சம்பாதிக்கிறார்கள். அப்படி யிருக்க, கல்வி யறிவு பெறுவதற்கான சாதனங்களை உங்களால் எப்படித் தேட முடியும்? ஆயுள் பூராவும் வேலை கிடைக்கும் என்ற நிச்சயம் உங்களுக்குக் கிடையாது. அடிக்கடி உங்களுக்கு வேலை யில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது. இதனால் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியமும், அல்லது சோம்பேறித் தனமாகக் காலங் கழிக்க வேண்டிய அவசியமும் மாறி மாறி உங்களுக்கு உண்டாகின்றன. அப்படியிருக்க, ஒழுங்கு, விடாமுயற்சி முதலிய சுபாவங்கள் உங்களுக்கு எப்படி அமையும்? நீங்கள் சம்பாதிப்பது மிகச் சொற்பம். அந்தச் சம்பாத்தியத்திலிருந்து, ஒரு நாளைக் கில்லாவிட்டால் ஒரு நாளைக்காவது நமது குழந்தைகளுக்கேனும், அல்லது நமது வயோதிக காலத்திற்கேனும் உபயோகமா யிருக்கட்டு மென்று சொல்லி கொஞ்சம் சேமித்து வைக்கலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படக் காரணமேயில்லை. அப்படியிருக்க சிக்கன முறையிலே உங்களை நீங்கள் எப்படி பயிற்சி செய்துகொள்ள முடியும்? வறுமை காரணமாக, உங்களுடைய குழந்தைகளை நீங்கள் அப்புறப்படுத்தி வைக்க வேண்டி யிருக்கிறது. உங்களுடைய ஜாக்கிரதையான போஷணையிலிருந்து அப்புறப்படுத்திவைக்க வேண்டியிருக்கிறதென்று நான் சொல்லவில்லை - தொழிலாளர் களுடைய ஏழை மனைவிமார்கள், தங்கள் குழந்தைகளுக்கு என்ன விதமான போஷணையை அளிக்க முடியும்? ஆனால் தாய்மார் களின் அன்பு, கண்ணோக்கம் இவைகளிலிருந்து குழந்தைகளை அப்புறப் படுத்திவைக்கவேண்டியிருக்கிறதென்றுதான் நான் சொல்கிறேன். தாய்மார்கள், ஒரு சில காசுகள் சம்பாதிப்பதற்காகத் தங்கள் குழந்தை களைத் தொழிற்சாலைகளில் ஆரோக்கிய வசதிக ளில்லாத இடங்களில் விட்டுவைக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலைமையில் குடும்பப் பற்று என்பது உங்களிடத்தில் எங்ஙனம் விகாசமடைய முடியும்? எங்ஙனம் பெருமையடைய முடியும்? உங்க ளுக்குப் பிரஜா உரிமைகள் கிடையாது. எந்தச் சட்டங்கள் உங்கள் நடவடிக்கைகளையும் உங்கள் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின் றனவோ அந்தச் சட்டங்களை நிறை வேற்றும் விஷயத்தில், தேர்த லிலோ ஓட்டுக் கொடுப்பதிலோ கலந்து கொள்ள உங்களுக்கு உரிமை கிடையாது. அப்படியிருக்க பிரஜையா யிருப்பதிலே ஒரு பெருமை இருக்கிறதென்பதை நீங்கள் எப்படி உணர முடியும்? ராஜ்யத்தி னிடம் உங்களுக்கு எப்படி உற்சாகம் இருக்க முடியும்? சட்டங்களி னிடத்தில் உங்களுக்கு உண்மையான அன்பு எப்படி இருக்க முடியும்? சமுதாயத்திலுள்ள மற்ற வருக்கத்தினருக்கு எப்படி நீதி வழங்கப் படுகிறதோ அப்படியே உங்களுக்கும் வழங்கப்படுவதில்லை. அப்படி யிருக்க நீதியினிடத்தில் உங்களுக்கு எப்படி மரியாதை உண்டாகும்? அன்பு உண்டாகும்? சமுதாயம், உங்களிடம் ஒரு சிறிது அநுதாபங் கூடக் காட்டுவதில்லை. அப்படியிருக்க, சமுதாயத்தினிடத்தில் நீங்கள் எப்படி அநுதாபங்காட்ட முடியும்? ஆகையால், மனிதத் தன்மையிலே நீங்கள் அபிவிருத்தி யடைய வேண்டுமானால், உங்களுடைய லௌகிக நிலைமையில் மாறுதல் ஏற்பட வேண்டும். நீங்கள் குறைவான நேரம் வேலை செய்ய வேண்டும். ஏனென்றால், அப்பொழுதுதான் மிகுதிப் படுகிற காலத்தில் நீங்கள் உங்கள் மனதை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். உங்களுடைய உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தை நீங்கள் பெற வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் கொஞ்சம் சேமித்துவைக்க முடியும்; வருங்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்தனை யற்றிருக்கலாம். மற்றும், பழிக்குப் பழி வாங்க வேண்டு மென்ற எண்ணமில்லாமல், நம்மிடத் திலே அநியாயமாக நடந்து கொண்டவர்களிடத்தில் நாமும் அநியாயமாக நடந்து கொள்ள வேண்டு மென்ற எண்ணமில்லாமல், உங்களை நீங்கள் பரிசுத்தப் படுத்திக் கொள்ள முடியும். எனவே, இந்த மாறுதல் ஏற்படுவதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உண்மையோடு முயற்சி செய்கிறவர்கள், வேண்டியதைப் பெறுவார்கள். ஆனால், அந்த மாறுதலுக்காக முயற்சி செய்வதை நீங்கள் சாதன மாகக் கொள்ள வேண்டு மன்றி, அதனையே லட்சியமாகக் கொண்டு விடக்கூடாது. அப்படி முயற்சி செய்வதை உரிமையாக மட்டு மில்லை; கடமையாகவும் கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ளும் பொருட்டு, மேற்படி மாறுதலுக்காக நீங்கள் முயற்சி செய்யவேண்டும்; லௌகிக விஷயத்தில் நீங்கள் சந்தோஷமா யிருக்க வேண்டு மென்பதற்காக மட்டுமல்ல. அப்படியில்லா விட்டால், உங்களுக்கும் உங்களை ஆள்கிற கொடுங்கோலர் களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சுக சௌக்கியத்தையும், சந்தோஷத்தையும், அதிகாரத்தையும், தவிர, வேறொன்றைப் பற்றியும் நினைக்காமலிருப்ப தனால்தான் அவர்கள் கொடுங்கோலர்களாயிருக்கிறார்கள். உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதுதான் உங்கள் வாழ்க்கையின் லட்சியம். நீங்கள் நிரந்தரமான மனக் கிலேசம் அடையாமலிக்க வேண்டுமானால், உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. உலக சுகங்களின் பெயராலோ, அல்லது குறிப்பிட்ட ஒரு தாபனத்தின் பெயராலோ நீங்கள் போராடு வீர்களாயின், உங்களிலேயே ஆயிரக் கணக்கான கொடுங்கோலர்கள் தோன்றக்கூடும். சமுதாய அமைப்பிலே ஒரு மாறுதல் ஏற்பட்டு விடுமானால் அது பெரிதல்ல. உங்களிடத்திலும் மற்ற வகுப்பாரிடத்திலும் இப்பொழுதிருக்கிற ஆத்திர உணர்ச்சி யும், அகங்கார புத்தியும் அப்படியே விடாமல் பற்றிக் கொண் டிருக்குமானால், மேற்படி மாறுதலினால் என்ன பயன் உண்டாகும்? உலகத்திலே சில செடிகள் இருக்கின்றன. அவற்றை நாம் எப்படி போஷித்து வளர்க்கிறோமோ அதைப்போலவே அவை நல்ல பலனையும் கொடுக்கின்றன; கெட்ட பலனையும் கொடுக்கின்றன. இவை போல்வனவே தாபனங்களும், நல்ல மனிதர்கள், கெட்ட தாபனங்களில் சேர்ந்து அவற்றை நல்ல தாபனங்களாக்கி விடுகி றார்கள். அப்படியே கெட்ட மனிதர்கள் நல்ல தாபனங்களில் சேர்ந்து அவற்றைக் கெட்ட தாபனங்களாக்கி விடுகிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ உங்களை இன்று எந்தப் பிரிவார் அடக்கி வைத்திருக்கிறார்களோ அவர்களை நீங்கள் உயர்த்த வேண்டும்; அவர்களுடைய கடைமையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆனால் இஃது எப்படி சாத்தியமாகும்? உங்களால் முடிந்த வரை உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கினால்தான். சமுதாயத்திலே ஒரு மாறுதல் ஏற்பட வேண்டியது அவசிய மென்றும், உங்களுடைய உரிமைகளை வற்புறுத்துவதன் மூலம் அந்த மாறுதலை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றும் உங்களுக்கு யாராவது உபதேசம் செய்தால், அவர்கள் நல்லெண்ணமுடைய வர்கள். அவர் களிடம் நன்றி செலுத்துங்கள். ஆனால் அவர்க ளுடைய உபதேசங் களினால் ஏற்படுகிற பலன்கள் விஷயத்தில் அவநம்பிக்கை கொள்ளுங்கள். ஏழை மக்களின் துயரங்களை, மேல் வகுப்பினர், அதாவது பணக்கார வகுப்பினர் தெரிந்து கொண் டிருக்கலாம்; ஆனால் உணரமுடியாது. பணக்கார வகுப்பினரும் ஏழை மக்களும் ஒன்றுபடக் கூடிய பொதுவான நம்பிக்கை எதுவு மில்லாத காரணத்தினாலும், சுக சௌக்கியமே வாழ்க்கையின் லட்சியமென்று பல வருஷ காலம் உபதேசிக்கப்பட்டு வந்ததன் பயனாக ஏற்பட்டுவிட்ட அகங்கார புத்தி யினாலும், வறுமையாகிற துன்பத்தை அநுபவியாதவர்கள், எந்த மாதிரியான மனப்பான்மை யுடன் வளர்ந்து விட்டார்களென்றால், சமுதாய அமைப்பிலே ஏழை யென்றும் பணக்கார னென்றும் ஏற்றத் தாழ்வுகளிருப்பது விசனிக்கத் தக்கதாயினும் அவசியமாயிருக்கிற தென்னும் மனப்பான்மையுட னும், அடுத்து வரும் தலைமுறையினர் இதற்குப் பரிகாரந் தேடிக் கொள்வார்களாதலினால் இதைப் பற்றி இப்பொழுது நாம் கவலைப்படத் தேவையில்லை யென்னும் மனப்பான்மையுடனும் வளர்ந்து விட்டார்கள். இந்த உண்மையை அந்தப் பணக்காரர் களின் மனத்தில் பதிய வைப்பது கடினமல்ல; ஆனால் அவர்க ளுடைய மந்த நிலையிலிருந்து அவர்களை அசைத்துக் கொடுப்பது கடினம். அவர்கள் மனத்திலே இந்த உண்மை பதிந்த விட்ட பிறகு, அவர்களைச் செயல் புரியுமாறு தூண்ட வேண்டும். எந்தச் சமுதா யத்தில் உங்களுடைய துன்பங்களும், அவர்களுடைய அச்சங்களும் மானிட ஜாதியின் நிலைமைகள் அநுமதிக்கிற அளவுக்கு இல்லாம லிருக்கமோ அந்தச் சமுதாயத்தை அமைக்கும் விஷயத்தில் உங்க ளோடு சகோதரர்களாக இருந்து உழைக்குமாறு அவர்களைச் செய்ய வேண்டும். இது, நம்பிக்கையுடன் செய்ய வேண்டிய வேலை. பூலோகத்தில் மனிதன் என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டு மென்று கடவுளால் கட்டளையிடப் பட்டிருக்கிறானோ அந்தக் கட்டளையில் நம்பிக்கை வைத்துச் செய்ய வேண்டிய காரியம். இந்தக் கட்டளையை நிறை வேற்றாதவர்களுக்கு என்னென்ன பொறுப்பு உண்டு என்பதிலே நம்பிக்கை வைத்து செய்ய வேண்டிய திருப்பணி. சத்தியத்திற்காக ஒவ்வொருவனும் தன்னலத் தியாகஞ் செய்து உழைக்க வேண்டிய கடமை. உரிமைகளைப் பற்றிச் சொல்லப்படுகிற சித்தாந்தங்களிலும், உலக சுகத்தை அநுபவிப்பது தான் வாழ்க்கையின் லட்சியம் என்பன போன்ற சித்தாந்தங்களிலும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிற வரையில், உங்களுடைய பலத்தின் துணை கொண்டு மட்டும் நீங்கள் நிற்கிற வரையில் உங்க ளுடைய முயற்சிகள் யாவும் பயன் தராத முயற்சிகளாகவே முடியும். அது மட்டுமல்ல; அந்த முயற்சிகள், சமுதாயத்தில் பல குற்றங்கள் நிகழ் வதற்கும் காரணமாயிருக்கும்; வர்க்கப் போராட்டத்தைத் தூண்டிக் கொடுப்பதாயிருக்கும். இத்தாலியத் தொழிலாளர்களே! எனது சகோதரர்களே! யேசுநாதர் அவதரித்து, இந்த உலகத்தின் போக்கை மாற்றிவிட்ட காலத்தில், அவர், பணக்காரர்களிடம் சென்று அவர்களுடைய உரிமைகளைப்பற்றி உபதேசிக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு உரிமைகளை அடைய வேண்டிய அவசியம் இல்லாமலிருந்தது. அப்படியே ஏழை மக்களிடம் சென்று அவர்களுடைய உரிமை களைப் பற்றி அவர் உபதேசிக்கவில்லை. அப்படி உபதேசித்திருந் தால், அவர்கள், அந்த உரிமைகளை, பணக்காரர்களைப் பின்பற்றி துஷ்பிரயோகம் செய்திருப்பார்கள். அவர், ஜனங்களுக்கு வாழ்க்கை யின் பிரயோஜனத்தைப்பற்றியோ, அல்லது சுயநல வாழ்க்கையைப் பற்றியோ உபதேசிக்கவில்லை. ஏனென்றால் இவ்விரண்டும் ஜனங் களை ஒழுக்க ஹீனர்களாக்கி விட்டிருக்கின்றன வென்பது அவருக்குத் தெரியும். அவர் கடமையைப்பற்றிப் பேசினார்; அன்பை உபதேசித் தார்; தியாகத்தை வற்புறுத்தினார்; நம்பிக்கை கொள்ளவேண்டு மென்று கூறினார். யாரொருவர், தங்களுடைய உழைப்பினால் அதிகமான பேருக்கு அதிகமான நன்மையைச் செய்திருக்கிறாரோ அவர்தான் எல்லோரிலும் முதன்மையாக வைத்து எண்ணப்பட வேண்டியவர் என்று உபதேசித்தார். இந்தமாதிரியான எண்ணங் களை, இந்த மாதிரியான உபதேசங்களை, ஜீவகளையே இல்லாத ஒரு சமுதாயத்தின் செவியில் அவர் உபதேசித்தார். உடனே அந்தச் சமுதாயம் உயிர்பெற்றெழுந்தது. லட்சக்கணக்கான மக்கள் இந்த உபதேசங்களுக்காட்பட்டார்கள். உலகமே ஆட்பட்டது. மானிட ஜாதி ஒரு படி முன்னேறியது. இத்தாலியத் தொழிலாளர்களே! யேசு நாதர் வாழ்ந்த யுகத்தைப் போன்றதொரு யுகத்திலேயே இப் பொழுது நாம் வாழ்கிறோம். ரோம ஏகாதிபத்தியத்தின் காலத்தில் சமுதாயமானது எப்படி அழுகிப்போயிருந்ததோ அதுபோலவே இப்பொழுது நமது சமுதாயமும் அழுகிப்போயிருக்கிறது. இந்தச் சமுதாயத்தைப் புனருத்தாரணம் செய்யவேண்டும்; இதனை மாற்றியமைக்கவேண்டும். இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த தொழி லாளர்களுள்பட எல்லா அங்கத்தினர் களையும் ஒரே நம்பிக்கையின் கீழ், ஒரே சட்டத்தின்கீழ், ஒரே நோக்கத்தின்கீழ் ஒற்றுமைப்படுத்தி வைக்கவேண்டும். இப்படியெல்லாம் ஆத்ம பூர்வமாக நாம் உணர் கிறோம். ஜீவராசிகளுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட சக்திகள் யாவும் சுயேச்சையாகவும் படிப்படியாகவும் வளரவேண்டுமென்று ஆசைப் படுகிறோம். கடவுள் ஆட்சியைப் பூலோகத்தில் நிலவச் செய்ய வேண்டுமென்று ஆவல் கொள்கிறோம். அல்லது மோட்ச லோகத் தின் தயாரிப்பாக இந்தப் பூலோகத்தை ஆக்கிவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். மானிட சமுதாய மனைத்தும் ஒரு குடும்பம் என்கிற தெய்விக லட்சியத்தைப் படிப்படியாக அடையவேண்டு மென்ற முயற்சியில் ஈடுபட விழைகிறோம். யேசுநாதர் செய்த காரியங்கள், அவர் எந்த நம்பிக்கையோடு உபதேசங்களைச் செய்தாரோ அந்த நம்பிக்கையின் பிரதி பலிப்பாகவே இருந்தன. அவரைச் சுற்றியிருந்த சிஷ்யர்கள், அவர் புகுத்திய நம்பிக்கையுடனேயே காரியங்களைச் செய்தார்கள். அவர் களைப் போலவே நீங்களும் நம்பிக்கைகொண்டு காரியங்களைச் செய்யுங்கள் வெற்றிபெறுவீர்கள். உங்களுக்கு மேற்பட்டிருக்கிற வகுப்பாருக்குக் கடமையை உபதேசம் செய்யுங்கள். அதேமாதிரி, உங்களால் முடிந்தவரை உங்களுடைய கடமைகளை நிறைவேற் றுங்கள். சீலம், தியாகம், அன்பு ஆகிய இவைகளை மேல்வகுப் பாருக்கு உபதேசம் செய்யுங்கள். அதேபிரகாரம் நீங்களும் சீல முடையவர்களாக இருங்கள்; தியாகஞ் செய்யத் தயாராயிருங்கள்; எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். உங்களுடைய தேவை களை, உங்களுடைய எண்ணங்களை தைரியமாக எடுத்துச் சொல் லுங்கள். ஆனால் கோபங் கொள்ளாமல், வன்மங்காட்டாமல், பயமுறுத்தாமல் சொல்லுங்கள். காரிய சாதனைக்காக நீங்கள் யாரையேனும் பயமுறுத்த வேண்டி யிருந்தால், கோபமாகப் பேசா தீர்கள்; கண்டிப்பாகப் பேசுங்கள். உங்களுடைய சகோதரர்களுக்கு அவர்களுடைய எதிர்கால வாழ்வைப் பற்றிப் பிரசாரஞ் செய்வதற்கு முன்னர், எந்தச் சமுதாயத்திலுள்ளவர் களுக்கு நற்பெயரும், கல்வி ஞானமும், வேலையும், நியாயமான கூலியும் கிடைக்கிறதோ, எந்தச் சமுதாயத்திலுள்ளவர்கள் தன்மதிப் போடும், ஒழுங்கான வேலை செய்து கொண்டும் வாழ்கிறார்களோ அந்தச் சமுதாயத்தை உங்கள் சகோதரர்களுக்கு உருவகப்படுத்திக் காட்டுவதற்கு முன்னர், நமது கொடிய அரசாங்கத்தையும் அந்நியர்களையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதை லட்சியமாகக் கொண்டு நடைபெறப்போகிற போராட்டத்திற்குத் தயாராகும்படி ஜனங்களுக்குச் சொல்வதற்கு முன்னர், உங்களை நீங்கள் பயிற்சி செய்துகொள்ள முயலுங்கள்; உயர்த்திக்கொள்ள முயலுங்கள்; உங்கள் கடமைகளைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு அதனை அப்பியாசத்துக்குக்கொண்டு வாருங்கள். இத்தலியின் பெரும் பாகத்திலுள்ள பாமர ஜனங்களுக்கு இது முடியாத காரியம். ஜனங் களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்திக் கொடாமல், அரசியல் புரட்சி இல்லாமல், எந்தவிதமான பொது ஜனக் கல்வி முறையையும் நாம் நிறைவேற்றிவைக்க முடியாது. நாம் விடுதலையடைய வேண்டு மானால் அதற்கு அடிப் படையாக நமது கல்வி முறை மாற வேண்டு மென்று உபதேசிக்கிற வர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள் கிறவர்களா கிறார்கள்; ஜனங்களுக்குச் சோம்பேறித்தனத்தை உபதேசித்தவர் களாகிறார்கள். வேறொன்றுமில்லை. ஆனால் உங்களிலே நல்ல திதியிலுள்ளவர்கள் யாரேனும் அந்நிய நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்து வந்திருப்பார்களாயின், அப்படிச் சுற்றுப் பிரயாணஞ் செய்துவந்ததன் பயனாக, தாராள மனப்பான்மையை உண்டு பண்ணும் கல்வி முறையைப் பயின்றிருப்பார்களாயின், அவர்கள், பொது ஜனக் கல்வித் திட்டமொன்றை வகுத்து அதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரப் பார்க்கவேண்டும். அப்படி அவர்கள் செய்வது அவசியமாகும். இங்ஙனம் ஒரு சிலர், ஜனங் களுக்கு எந்தமாதிரியான கல்வியைப் புகட்ட வேண்டுமென்பதைச் செவ்வனே தெரிந்துகொண்டு, ஆயிரக்கணக்காயுள்ள பாமர ஜனங் களிடையே அந்தக் கல்வியைப் பரப்புவார்களாயின், அதுவே, அந்தக் கல்வி முறையே, ஏழை மக்களின் ஜீவன மார்க்கத்திற்கு வழி காட்டுவதாயிருக்கும்; அவர்களை வழி மறிக்கத் தோன்றும் தவறான தத்துவங்கள், பொய்ச் சித்தாந்தங்கள் முதலியவைகளினின்று காப்பாற்றுவதாயிருக்கும். 2. கடவுள் கடவுளிடத்திலிருந்துதான் உங்கள் கடமைகள் ஆரம்பமா கின்றன. ஆண்டவனுடைய சட்டத்தில், உங்களுடைய கடமைகள் விவகரிக்கப் பட்டிருக்கின்றன. அந்தச் சட்டத்தைப் படிப்படியாகக் கண்டுபிடித்து அதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவருவது தான் மானிட ஜாதியின் வேலை. கடவுள் உண்டு. அதை உங்களுக்கு ருஜுப்படுத்தத் தேவை யில்லை; ருஜுப்படுத்தவும் நான் விரும்பவில்லை. அப்படி ருஜுப் படுத்தப் பார்ப்பது, கடவுளை தூஷணை செய்வதாகும். அப்படியே கடவுளை மறுப்பது முட்டாள் தனமாகும். கடவுள் இருக்கிறார். ஏனென்றால் நாம் இருக்கிறோம். கடவுள், நமது இருதயத்தில், மானிட சமுதாயத்தின் இருதயத்தில், நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சிருஷ்டிகளில் இருக்கிறார். நமக்குத் துக்கம் ஏற்படுகிற போதும், சந்தோஷம் ஏற்படுகிற போதும் நாம் அவரைப் பிரார்த்திக்கிறோம். கடவுளின் திருநாமத்தை மானிட ஜாதி யானது மாற்றி வைத்திருக் கலாம்; அதனைக் களங்கப்படுத்தி யிருக்கலாம்; ஆனால் இதுவரை அதனை அடக்கி ஒடுக்கி விடவில்லை. உலகம் ஒழுங்காக இயங்கிக் கொண்டு வருவதிலே ஆண்டவனின் பரம கருணை புலனாகின்றது. உங்களிலே நாதிகர்கள் யாருமில்லை. அப்படி யாரேனும் இருந்தால் அவர்களைப் பார்த்துச் சாபமிடாதீர்கள்; ஆனால் கண்ணீர் விடுங்கள். நட்சத்திரங்கள் ஆகாயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிற இரவு காலத்திலோ, நமக்கு அருமையானவர்கள் யாரேனும் இறந்து போயிருந்தால் அவர்களின் சவக் குழிக்குப் பக்கத்திலோ, மதப் பற்றுக் கொண்டு அது காரணமாக வீர மரண மடைந் திருக்கிறானே அவன் முன்னிலையிலோ நின்று கொண்டு எவனேனும் கடவுளில்லையென்று மறுப்பானாகில் அவன் ஒன்று, அதிக துக்கமடைந்திருக்கிறவனாகவாவது இருக்க வேண்டும்; அல்லது அதிகமான கொடுந்தன்மையுடையவனாகவாவது இருக்க வேண்டும். முதன் முதலாக நாதிக வாதம் பேசியவன் எப்படிப் பட்டவனாயிருந் திருக்க வேண்டுமென்றால், தான் செய்த குற்றத்தை மற்றவர்களிட மிருந்து மறைக்கும் பொருட்டு, தன்னுடைய செய லுக்கு ஒரே சாட்சியாக இருந்த கடவுளை, தன்னுடைய செயலை எந்தக் கடவுளிடமிருந்து மறைக்க முடியாதோ அந்தக் கடவுளை மறுத்திருக்க வேண்டும். அப்படி மறுத்துவிட்டதனால் அவனுக்கு ஏற்பட்ட மனத் துன்பமானது அவனை மிகவும் கஷ்டப்படுத்தி யிருக்கும். அந்த நாதிகன், தன் சகோதர மனிதர்களின் பாதி ஆத்மாவை, அவர்களுடைய சுதந்திரத்துடன் பறித்துக் கொண்ட ஒரு கொடுங் கோலனாயிருந்திருக்கலாம். அவன், கடமையில் நம்பிக்கை, தெய்விக உரிமை இவைகளுக்குப் பதிலாக மிருக பலத்தைப் போற்றியவனாயிருந்திருக்கலாம். இதற்குப் பின்னர், ஒவ்வொரு நூற்றாண்டிலும், நாதிகக் கொள்கையைப் பரப்பு வதற்கென்று சிலர் தோன்றினர். இவர்கள், தங்கள் கொள்கைகளுக் காக வெட்கப்பட்டுப் போயினர். இவர்களுக்குப் பின்னர், சமீப காலத்தில், கடவுளை மறுக்கிற ஒரு கூட்டத்தினர் தோன்றினர். யாரோ ஒரு ஜாதியினர் அல்லது கொடுங் கோலரசினர், தங்களுடைய சுயநலத்திற்காகக் கடவுளைப் பற்றித் தவறான எண்ணத்தை, முட்டாள்தனமான கொள்கையைப் பரப்பி வந்ததை இந்தக் கூட்டத்தினர் சகிக்க முடியாமல் போய்தான் கடவுளையே மறுக்கத் துணிந்தனர். ஆனால் இவர்களுடைய நாதிக புத்தி வெகு சொற்ப காலமே இருந்தது. ஏனென்றால், தெய்வ சக்தியின் தேவை இவர் களுக்கு அவசியம் வேண்டியிருந்தது. எனவே, இவர்கள் அறிவாகிற கடவுளை, இயற்கையாகிற கடவுளைப் போற்றித் துதித்தனர். இப்பொழுதோ, எந்த மதமும் வேண்டாமென்று சொல்லி, மதத் திற்குப் பயப்படுகிறவர்கள் பலர் இருக்கின்றனர். ஏனென்றால், மத மானது அநுஷ்டானத்தில் கறைபட்டுப் போயிருப்பதை இவர்கள் காண்கிறார்கள். இதனால் எதிர்காலத்திலேனும் மதமானது பரிசுத்த மடையும் என்ற நம்பிக்கையையும் இவர்கள் இழந்துவிடுகிறார்கள். இப்படியெல்லாம் இவர்கள் இருந்தாலும், இவர்களில் ஒருவர்கூட தம்மை நாதிகவாதி என்று சொல்லிக்கொள்ளும் துணிச்சலைப் பெறவில்லை. பணத்திற்காகவோ, அல்லது அதிகாரிகளுக்குப் பயந்தோ கடவுளின் திருநாமத்தைத் துஷ்பிரயோஜனப்படுத்துகிற புரோகிதர்கள் இருக்கிறார்கள். தங்கள் கொடுங்கோன்மைக்கு ஆதரவு தரவேண்டுமென்று பிரார்த்தித்து, அந்தப் பிரார்த்தனையின் மூலமாகக் கடவுளின் திருப் பெயரைக் கறைப்படுத்தும் கொடுங் கோலர்கள் இருக்கிறார்கள். ஆனால், சூரியன், சில சமயங்களில் கெட்ட வாயுக்களினால் மறைக்கப்பட்டு மங்கலாக நமது கண் களுக்குத் தென்படுகிறபோது, அந்தச் சூரியனே இல்லையென்று நாம் சொல்லிவிடு கிறோமா? அல்லது சூரிய கிரணங்களின் சக்திதான் குன்றிவிடுகிறதா? ஒரு சில துஷ்டர்கள், சில சமயங்களில் தாங்கள் பெற்ற சுதந்திரத்தை வியாஜமாக வைத்துக் கொண்டு கலகத்தை உண்டு பண்ணுகிறார் களென்று சொன்னால், அதற்காகச் சுதந் திரத்தை நாம் சபிப்பதா? பொய்களாலும், ஒழுக்க ஹீனங்களாலும் மானிடர்கள், கடவுளின் திருப்பெயரைக் களங்கப்படுத்தி வைத் திருந்த போதிலும், இந்தப் பொய்களுக்கு நடுவே, இந்த ஒழுக்க ஹீனங்களுக்கு மத்தியில், கடவுளிடம் மானிட ஜாதி கொண் டிருக்கும் நம்பிக்கையானது அணையாத அமர ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. கொடுங்கோன்மைகள் மறைந்து போவதைப் போல், பொய்களும் ஒழுக்க ஹீனங்களும் நாளா வட்டத்தில் மறைந்து போகின்றன. ஆனால் கடவுள் சாசுவதமா யிருக்கிறார்; பூலோகத்தில் அந்தக் கடவுளின் பிம்பமாக மானிட ஜாதியும் சாசுவதமாயிருக்கிறது. இந்த மானிட ஜாதியானது எப்படி, அடிமைத்தனத்திலிருந்து, துன்ப அநுபவத்திலிருந்து, வறுமையி லிருந்து படிப்படியாக மனச்சாட்சியின் மீது வெற்றி கொண்டதோ, பலம் பெற்றதோ, விடுதலை யடைந்ததோ, அதைப்போல, மதத்தின் பெயரால் நிகழ்கிற பலவித ஒழுக்க ஹீனங்களிலிருந்து கடவுளின் புனிதமான பெயரானது, பிரகாசத்துடன் எழுந்திருக்கிறது. பரிசுத்த மான உள்ளத்துடனும், தீவிர பக்தியுடனும், விசாலமான திருஷ்டி யுடனும் அந்தத் திருநாமத்தை ஜனங்கள் பிரார்த்தனை செய்யத் தொடங்கு கிறார்கள். கடவுள் இருக்கிறா ரென்பதை நிரூபித்துக்காட்டவோ, அல்லது நீங்கள் அவரை வணங்க வேண்டுமென்று சொல்லவோ இப்பொழுது நான் உங்கள் முன்னிலையில் பேச வரவில்லை. உங்களுடைய வாழ்க்கையை, உங்களைச் சுற்றியுள்ள ஜீவராசிகளின் வாழ்க்கையை நீங்கள் உணருகிற ஒவ்வொரு சமயத்திலும் கடவுளின் பெயரைச் சொல்லாமலே அவரை வணங்குகிறீர்களென்பதை நான் அறிவேன். ஆனால், அவரை நீங்கள் எப்படி வணங்க வேண்டு மென்பதைப் பற்றியே சொல்லப் போகிறேன். உங்களை எந்த வர்க்கத்தினர் ஆளுகின்றனரோ அந்த வர்க்கத்தினரிற் பெரும் பாலோருடைய உள்ளத்தில் ஒரு தவறான எண்ணம் குடி கொண் டிருக்கிறது. அவர்களுடைய மாதிரியைப் பின்பற்றுகிற உங்களிடத் திலும் அந்த எண்ணம் குடி கொண்டிருக்கிறது. இதனைக் கண்டிக்கவே நான் இங்குப் பேச வந்திருக்கிறேன். ஏனென்றால், இந்த எண்ணமானது நாதிக வாதத்தைப் போல் தீமை உண் டாக்குவது; நாசம் விளைவிப்பது. இந்தத் தவறான எண்ணந்தான் என்ன? கடவுள் வேறு, உங்களுடைய வாழ்க்கையின் பெரும்பாகத்தை எந்தப் பிரபஞ்சத் தில் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்களோ அந்தப் பிரபஞ்சம் வேறு என்று பிரித்துக் காட்டுவது பெரிய தவறாகும். ஒரு சிலர் சொல்கிறார்கள்:- வாதவம். கடவுள் இருக்கிறார். அதனை நீங்கள் அங்கீகரித்துக்கொண்டு அவரை வணங்க வேண்டியது உங்கள் வேலை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதென்பதை யாரும் தெரிந்துகொள்ள முடியாது; விவரித்துச் சொல்லவும் முடியாது. அவரவர் களுடைய மனச்சாட்சிதான் இதைப்பற்றிக் கடவுளோடு பேசிக்கொள்ள வேண்டும். இந்தச் சம்பந்தத்தைப்பற்றி எந்தவிதமாக வேண்டுமானாலும் நீங்கள் அபிப்பிராயங் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் அபிப்பிராயத்தை அல்லது நம்பிக்கையை மற்றவர்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள்; உலக விவகாரங்களில் கொண்டுவராதீர்கள். அரசியல் வேறு; மதம் வேறு. இரண்டையும் ஒன்றுபடுத்திக் குழப்பாதீர்கள். பாரமார்த்திக விஷயங் களைக் கவனிப்பதற்கென்று ஏற்படுத்தப்பெற்றிருக்கும் அதிகார தாபனத்தினிடம் - அஃது எதுவாயிருந்தாலும் - அந்தப் பாரமார்த்திக விஷயங்களை விட்டுவிடுங்கள். அந்த தாபனம் அதற்கேற்படுத்தப்பெற்ற நோக்கத்தினின்றும் பிறழ்ந்துவிட்ட தென்று உங்களுக்குப்பட்டால் அதற்கு மதிப்புக் கொடுப்பதி னின்றும் மறுத்துவிடுகிற உரிமையைமட்டும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அவனவனும் அவனவன் இஷ்டப்படி சிந்தனை செய்யட்டும்; எந்தக் கொள்கையிலேனும் நம்பிக்கை வைக்கட்டும். உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லோருடனும் நீங்கள் சேர்ந்து உழைக்க வேண்டும். நீங்கள் உலகாயதக் கொள்கையுடைய வராகவோ, பாரமார்த்திகத்தைப் பின் பற்றியவராகவோ, எப்படி யிருந்தாலும் சரிதான். சுதந்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக் கிறதா? மனிதனுக்கு மனிதன் சமம் என்ற கொள்கையில் நம்பிக்கை இருக்கிறதா? அதிகமான பேர் சுகசௌக்கியத்துடன் இருக்க நீக்கள் கோருகிறீர்களா? வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பு கிறீர்களா? அப்படியானால் இவைகளை அடைவதற்காக ஒற்றுமையுடன் வேலை செய்யுங்கள். இதற்காக பாரமார்த்திக சம்பந்தப்பட்ட விஷயங் களில் ஒரேமாதிரி யான அபிப்பிராயங் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. வேறு சிலர் பின்வருமாறு கூறுகிறார்கள்:- கடவுள் இருப்பது உண்மை. ஆனால் அவர் மிகப் பெரியவர். எல்லாப் படைப்பு களுக்கும் மேலானவர். மனித முயற்சிகளைக்கொண்டு அவரை அடைதல் அசாத்தியம். உலகம் அழியுந் தன்மையது. இதில் நமது வாழ்க்கையோ ஒரு மணி நேர அவகாசங் கொண்டது. ஆரம்பத்தி லிருந்தே உலக விஷயங்களிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள். இந்த உலகத்தைச் சாசுவதமென்று கருதாதீர்கள். அழிவற்ற உங்களுடைய ஆத்மாவுக்கு முன்னர் இவ்வுலக நலன்கள் எம்மாத்திரம்? இதை நினைவு கூருங்கள். பரலோகத்தைப் பாருங்கள். இந்த இகலோகத் தில் உங்களுடைய வாழ்க்கை எந்நிலையில் இருந்தாலென்ன? மரணமென்னவோ நிச்சயம். இந்நிலவுலகைப்பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; கடவுளைப்பற்றி உங்கள் சிந்தனை என்ன என்பதுதான் முக்கியம். அதைக்கொண்டே கடவுளும் உங்களை மதிப்பிடுவார். நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் அந்தக் கஷ்டங்களைத் தந்தருளிய ஆண்டவனை ஆசீர்வதியுங்கள். இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை உங்களைப் பரிசோதிப்பதற்காக ஏற்பட்டது. உங்களை ஒதுக்கி வைத்திருக்கிற பிரதேசம் இந்த உலகம்; இதனை இகழுங்கள். இதனின்றும் மேலே செல்லுங்கள். துன்பம், வறுமை, அடிமைத்தனம் இவைகளுக்கு மத்தியில் நீங்கள் கடவுள் பக்கம் திரும்பிப் பாருங்கள். இந்த உலக விஷயங்களைத் துச்சமாகக் கருதியும், உயர்ந்த சன்மானத்தை அளிக்கப் போகிற வருங் காலத்தில் நம்பிக்கை கொண்டும், அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள். அதன் மூலமாக உங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள். இங்ஙனம் சொல்கிறவர்களில் முதற் பிரிவினர் கடவுளை நேசிக்கவில்லை; இரண்டாவது பிரிவினர் கடவுளைத் தெரிந்து கொள்ளவில்லை. மனிதன், ஒன்றுபட்ட ஒரு வியக்தி. அவனை இரண்டு பிரிவாகப் பிரிக்க முடியாது. சமுதாயத்தை ஒழுங்குபட அமைத்து, அதனை நடத்திச் செல்கிற கொள்கைகளில் உங்களோடு ஒன்றுபட்டுப் போகிற ஒரு மனிதன், மனிதனுடைய சிருஷ்டி வரலாற்றைப் பற்றியும், அவனுடைய இறுதிக் காலத்தைப் பற்றியும், இந்த உலகத்தில் அவன் அநுஷ்டிக்க வேண்டிய அறநெறிகளைப் பற்றியும் உங்கள் அபிப்பிராயத் திற்கு மாறாக இருக்க முடியாது. மதங்களே இந்த உலகத்தை ஆட்சி புரிகின்றன. மனித சிருஷ்டியைப் பற்றி இந்தியர்களின் நம்பிக்கை என்ன வென்றால், தங்கள் கடவு ளாகிய ப்ரஹ்மாவின் தலையிலிருந்து சிலரும், புஜங்களிலிருந்து சிலரும், கால்களிலிருந்து சிலரும் பிறந்தார்கள் என்பதாகும்.1 இந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டுதான் அவர்கள் சமுதாயத்தை, அறிவுத்துறையில் உழைப்பவர்களென்றும், யுத்த விஷயங்களைக் கவனிப்பவர்களென்றும், மற்றக் கீழ்த்தரமான வேலை களைச் செய்பவர்களென்றும், ஜாதி வாரியாகப் பிரித்து வைத்தார்கள். கீழான வேலைகளைச் செய்வதற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட வர்கள் வளர்ச்சியடைய முடியாத ஒரு நிலைமையில் இருக்க வேண்டியவர் களானார்கள். ஜாதி உற்பத்தியைப்பற்றி மேலே சொல்லப்பட்ட நம்பிக்கை இந்தியர்களிடையே இருக்கிற வரையில் இந்த ஒதுக்கப்பட்டவர்களுடைய நிலைமையும் இப்படியேதா னிருக்கும். மனிதர்களெல்லோரும் கடவுளின் திருக்குமாரர்கள்; சகோதரர்கள். எனவே, மனிதனை மனிதன் அடிமை கொள்ளக் கூடாது என்று உண்மைக் கிறிதவர்கள் உபதேசித்த காலத்தில், அரசியல் வேறு; மதம் வேறு என்ற பழைய கொள்கையை வற்புறுத்திப் பேசினவர்களுடைய முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. மத நம்பிக்கைகளில் ஜனங்கள் எந்த அளவுக்கு முன்னேறி யிருக்கிறார்களோ அந்த அளவுக்குச் சமுதாயமும் முன்னேறி இருப்பதை மானிட ஜாதியின் சரித்திரத்தில் நாம் காண்கிறோம். மத விஷயங்களில் அலட்சிய புத்தி ஏற்பட்டுவிட்டால் விளைவது கலகந்தான். இதுவரையில் மத அவநம்பிக்கையினால் அழிவுதான் ஏற்பட்டிருக்கிறது; நிர்மாணம் ஒன்றும் ஏற்படவில்லை. இதை யாரும் மறுக்கமுடியாது. எந்தக் கொள்கையை புராடெடெண்ட் மதமானது ஒரு காலத்தில் மிகைப்படுத்திக் கூறி இப்பொழுது அதனை நிராகரிக்கப் பார்க்கிறதோ1 அந்தக் கொள்கையினால் இப்பொழுது விளைந்திருப்பது என்ன? தனிப்பட்ட மனிதனுடைய உரிமைகள் அதிகமாக வற்புறுத்தப்பட்டதன் பயனாக இப்பொழுது நாம் எந்த நிலைக்கு வந்திருக்கிறோம்? வியாபார உலகத்திலே ஒரு கலக்கம்; அதாவது பலஹீனர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அரசியல் உலகத்திலே சுதந்திரம். அதாவது தங்களுடைய நியாயமான உரிமை களை உபயோகிக்கப் போதிய சாதனமோ, அவகாசமோ, அறிவோ இல்லாத பலஹீனர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். அறவாழ்க்கையிலே, மனிதனுக்கு, தான் என்ற அகங்கார புத்தி ஏற்பட்டிருக் கிறது. அதாவது, தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடி யாத பலஹீனர்கள் ஒதுக்கப்பட்டு, காலக்கிரமத்தில் நாசமாகிவிடு கிறார்கள். ஆனால் நாம் கோருவது சங்கம். ஒரே லட்சியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிற, ஒரே கொள்கையைப் பின்பற்றுகிற, ஒரே பெயரைச் சொல்லிப் பிரதிக்ஞை செய்துகொள்கிற சகோதர மனிதர்களாலல்லாது வேறு யாரால் இந்தச் சங்கத்தை தாபிக்க முடியும்? நமக்குக் கல்வி வேண்டும். உலகத்தில், மனிதன் தோன்றிய வரலாறு, இகவாழ்க்கையில் அவன் கொள்ள வேண்டிய லட்சியம் ஆகிய இவைகளைப்பற்றி நாம் பொதுவாகக் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தக் கூடியதான கல்வி முறையைத் தவிர்த்து வேறெவ்விதமான கல்வி முறையை நாம் அளிக்க முடியும்? அல்லது பெற முடியும்? பொதுப்படையான கல்விமுறை வேண்டு மென்று நாம் கோருகிறோம். பொதுப்படையான நம்பிக்கையை அதிவாரமாகக் கொள்ளாமல் இந்தக் கல்வி முறையைக் கொடுப் பதும் வாங்குவதும் எப்படிச் சாத்தியம்? நாம் ஒரு ஜாதியினராக வேண்டுமென்று விழைகிறோம். பொதுவான நோக்கத்திலும், பொதுவான கடமையிலும் நாம் நம்பிக்கைகொள்ளாமல் இஃதெங்ஙனம் சாத்தியமாகும்? நாம், கடவுளின் எந்த அமிசத்தைச் சேர்ந்தவர்கள், அவருக்கும் நமக்குமுள்ள சம்பந்தமென்ன என்ப வைகளைப்பற்றி ஒரேவிதமான அபிப்பிராயங் கொள்ளாவிட்டால், பொதுவான கடமையொன்று இருக்கிறதென்பதை நாம் எப்படி உணரப்போகிறோம்? வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டுமென்பது நல்ல விஷயந்தான். அடிக்கடி நெருக்கடிகள் ஏற்படாமல் ஒரு தேசம் தன்னைத்தானே ஆண்டுகொள்ள வேண்டு மானால், இதுதான் - ஓட்டுரிமையளிப்பது-சட்ட ரீதியான வழி. ஆனால், எந்தத் தேசத்தில் ஒரே கொள்கையுடைய ஜனங்கள் இருக்கிறார்களோ அந்தத் தேசத்தில்தான், வயது வந்தவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்னும் சட்டமானது, ஜனங்களின் மனப் போக்குகளையும் அவர் களுடைய இச்சையையும் சரியானபடி பிரதிபலிக்கச் செய்வதாயிருக்கும். ஆனால் பொதுப்படையான நம்பிக்கையில்லாத ஜனங்களைக் கொண்ட ஒரு தேசத்தில், வயதுவந்தவர்களுக்கு ஓட்டுரிமையளிக்கிற இந்தத் திட்டமானது, ஜனத்தொகையில் பெரும்பாலோராக யார் இருக்கின்றனரோ அவர் களுடைய நலனைத்தான் பாதுகாப்ப தாயிருக்கும்; மற்றவர்களை அடக்கி ஒடுக்கி வைப்பதாயிருக்கும். மதமில்லாத நாடுகளில் அல்லது மதத்தை அலட்சியப்படுத்தியிருக்கிற நாடுகளில் நிறை வேற்றப்படுகிற எந்த அரசியல் சீர்திருத்தமும், தனிப்பட்ட ஒரு சிலருடைய பேராசைக்கும், சுயநலத்திற்கும் பொருந்தி யிருக்கிற வரையில்தான் நடைமுறையில் இருக்கும்; அதற்குமேல் ஒரு க்ஷணமும் இராது. சென்ற ஐம்பது வருஷ காலத்தில் நாம் அடைந் திருக்கிற அநுபவமானது, இது விஷயத்தில் நமக்குப் போதிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது. இகலோகம் வேறே, பரலோகம் வேறே என்று உங்களுக்குப் பிரித்துக் காட்டுகிறார்களே அவர்களுக்கு நீங்கள் பின்வருமாறு பதில் சொல்லுங்கள்:- வழியும், அதன் முடிவும் எப்படி ஒன்றோ அதைப் போலவே இகலோகமும் பரலோகமும் ஒன்று. இந்தப் பூமியை வெறும் மண்தரையென்று எங்களுக்குச் சொல்லாதீர்கள். கடவுளின் சிருஷ்டி இந்தப் பூமி. ஜனங்கள், பூலோகத்தின் மூலமாகத் தம்மை யடையட்டும் என்பதற்காகவே, கடவுள் இதனைப் படைத் திருக்கிறார். மனிதர்களுடைய பாவங்களுக்குப் பிராயச் சித்தம் செய்துகொள்கிற இடமாகவோ, அல்லது ஆசைகளைத் தூண்டி விடுகிற இடமாகவோ இந்த உலகம் இல்லை. மனிதன், தனது ஆத்ம அபிவிருத்திக்கு உழைக்கிற இடமாகவும், வாழ்க்கையின் மேலான திதியை அடைவதற்குரிய இடமாகவும் இந்தப் பிரபஞ்சம் இருக் கிறது. வெறுந் தியானஞ் செய்து கொண்டிருப்பதற்காகக் கடவுள் நம்மை இந்த உலகத்தில் சிருஷ்டிக்கவில்லை; காரியங்களைச் செய்து கொண்டிருக்கவே சிருஷ்டித்திருக்கிறார். அவர் தம்முடைய பிரதிபிம்பமாகவே நம்மைச் சிருஷ்டித்திருக்கிறார். அவரோ, சிந்தனையும் செயலுமாக இருக்கிறார். ஏன்? அவர் விஷயத்தில், சிந்தனையும் செயலும் ஒன்றுதான். பிரபஞ்ச விஷயங்களை ஒதுக்கித் தள்ளவேண்டுமென்றும், உலக வாழக்கையைத் துச்சமாகக் கருத வேண்டுமென்றும், அப்பொழுது தான் நாம் பரலோக வாழ்க்கையில் ஈடுபட முடியுமென்றும் நீங்கள் சொல் கிறீர்களே. பிரபஞ்ச வாழ்க்கையென்பது என்ன? பரலோக வாழ்க்கையின் முகவுரை மாதிரி; அதனை - அந்தப் பரலோகத்தை - அடைவதற் கென்றேற்பட்ட ஒரு படி மாதிரி. எந்த ஏணியின் வழியாக நாமெல்லோரும் ஏறிச் செல்ல வேண்டுமோ, அந்த ஏணியில் மேல்படி புனிதமானதென்றும், கீழ்ப்படி புனிதமல்லாததென்றும் நீங்கள் கூறுவது, எங்களுடைய மார்க்கத்தினின்று எங்களைப் பிரித்துவிடுவது போலில்லையா? ஓர் ஆத்மாவினுடைய ஜீவிய காலமானது, அது முன்னேறிச் செல்கிற ஒவ்வொரு படியிலும் புனிதமுடையதாகவே இருக்கிறது. பூலோகத்திலுஞ் சரி, அதற்கு அப்பாற்பட்ட உலகங்களிலுஞ் சரி அது புனிதமுடையதுதான். ஆகையால், நாம் செல்கிற ஒவ்வொரு படியும் அடுத்த படியின் தயாரிப்பாக இருக்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் கடவுளால் தூண்டிவிடப்பட்டிருக்கிற நித்தியமான ஜீவன் இருக் கிறதே அந்த ஜீவன் தொடர்ந்து மேனோக்கிச் செல்வதற்குத் துணை யாகவே நாம் தற்காலிகமாக அடைகிற ஒவ்வொரு முன்னேற்றமும் இருக்கவேண்டும். இப்படியே, தனிப்பட்ட நபர்களுடைய ஜீவ சக்தியின் திரளாக இருக்கும் மானிட சமுதாயமும், அந்தத் தனிப் பட்டவர்களின் செயல்களைக்கொண்டே வளர்ச்சியடைகிறது. கடவுள் உங்களைப் பூலோகத்தில் பிறப்பித்திருக்கிறார். உங்களைச் சுற்றி லட்சக்கணக்கான ஜீவராசிகளைச் சிருஷ்டித்து வைத்திருக்கிறார். உங்களுடைய மனோ அபிவிருத்திக்கிசைந்தாற் போலவே அவை களுக்கும் மனோ அபிவிருத்தியுண்டாகிறது. நீங்கள் முன்னேற்றமடை கிற அளவிற்கு அவைகளும் முன்னேற்றமடை கின்றன. உங்களுடைய வாழ்க்கையால் அவைகளுடைய வாழ்க்கை பண்படுகிறது. தனிப்பட்டு வாழ்வதனால் உண்டாகிற ஆபத்துக்களி னின்றும் உங்களைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, கடவுள் உங்களாலே பூர்த்தி செய்து கொள்ள முடியாத சில தேவை களை உங்களுக்கு உண்டுபண்ணியிருக் கிறார்; சமுதாய உணர்ச்சியை ஊட்டியிருக்கிறார். இந்தச் சமுதாய உணர்ச்சி மனிதனிடத்தில் இருப்பதால்தான் அவன் மிருகத்தினின்றும் வேறுபட்டவனாக இருக்கிறான். லௌகிக வாழ்க்கைக்கேற்ற அநேக விஷயங்களை உங்களுக்காகக் கடவுள் இந்த உலகத்தில் சிருஷ்டி செய்து வைத் திருக்கிறார். அவை அழகினால் சோபிக்கின்றன; ஜீவசக்தியினால் நிரம்பியிருக்கின்றன. இந்த ஜீவசக்தியானது கடவுளின் பிரத்யக்ஷ நிரூபணமாக எங்கணும் வியாபித்திருக்கிறது. இந்த உண்மையை நீங்கள் மறக்கவே கூடாது. இந்த ஜீவசக்தியானது பகிரங்கமாகப் பிரகாசிக்க வேண்டுமானால் அஃது உங்களையும் உங்களுடைய வேலையையும் பொறுத்திருக்கிறது. உங்களுடைய வேலைப்பாடு அதிகமாக அதிகமாக அதனுடைய சக்தியும் அதிகப்படுகிறது. கடவுள் உங்களுக்கு அதிகமான அநுதாப உணர்ச்சியை அளித்திருக் கிறார். துக்கப்படுகிறவரிடத்தில் இரக்கங்காட்டுங்கள்; சிரிக்கிறவர்க ளிடத்தில் சந்தோஷப்படுங்கள்; உங்களுடைய சகோதரப் பிராணி களை அடக்கி ஒடுக்குகிறவர்களிடத்தில் கோபங்கொள்ளுங்கள்; சத்தியத்தை நாடிச் செல்வதிலே தீவிரமாகப் பற்றுள்ளங் கொள்ளுங்கள்; இதுவரையில் கண்டுபிடியாத உண்மைகளில் ஒரு சிறு பகுதியையேனும் கண்டுபிடித்துக் காட்டுகிற திறமைசாலிகளை வியந்து பாராட்டுங்கள்; அந்த உண்மைகளை எல்லோருக்கும் உபயோகப் படும்படியாகச் செயல்முறையில் கொண்டுவருவோரைப் பார்த்து உற்சாகங் கொள்ளுங்கள்; தங்களுடைய மதக்கொள்கை காரணமாக பல அவதிகளுக்குட்பட்டுக் கடைசியில் தங்கள் ரத்தத்தையே சாட்சியாக வைத்துவிட்டு வீர மரணமடைகிறார்களே அவர்களை பக்தி வினயத் தோடு போற்றுங்கள். இங்ஙனமெல்லாம் செய்யக்கூடிய சக்திகளைக் கடவுள் உங்களுக்குத் தந்தருளியிருக் கிறார். அப்படியிருந்தும் லட்சிய வாழ்க்கையின் சூசகங்களாயுள்ள இவற்றை நீங்கள் மறுக்கிறீர்கள்; துச்சமாகக் கருதுகிறீர்கள்; உங்களைச் சுற்றியுள்ள கடவுள் சிருஷ்டி களைச் சபிக்கிறீர்கள். நம்முடைய சக்திகளையெல்லாம் சுயபரிசுத்தத் திற்கான வேலையி லேயே உபயோகப்படுத்த வேண்டுமென்று கட்டளை யிடுகிறீர்கள். இந்தக் காரியத்தைத் தனிப்பட்டுச் செய்வதென்பது அசாத்தியம். அப்படிச் செய்தாலும் அஃது அரைகுறையாகவே முடியும். இந்த மாதிரி செய்ய முயற்சிக்கிறவர்களைக் கடவுள் தண்டிக்கிறார். அடிமை வாழ்க்கையை நடத்துகிறவன் அவமானப்படுத்தப்படுவ தில்லையா? தினசரி கூலி வேலை செய்து பிழைக்கிறவன், கல்விப் பயிற்சியினால் பிரகாசமடையாத, அதாவது அறிவில்லாத செயல்களைச் செய்து அதுகாரணமாக அவனிடத்திலேயுள்ள தெய்வ சக்தியானது வீணாகக் கழிந்துபோகிறது. இந்திரிய சுகங்களை அநுபவிப்ப திலும், லௌகிக வாழ்க்கையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்று வதிலும் அவனுடைய ஆத்மாவின் பாதி பாகம் அலைக்கழிக்கப் படுகிறது. தன்னுடைய நாட்டிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போர்புரிகிற ஒரு போலந்து வாசியினிடத்தில் காணப்படுகிற தெய்வ நம்பிக்கையைக் காட்டிலும்,1 ஒரு ருஷ்ய அடிமையினிடத்தில் அதிகமான தெய்வ நம்பிக்கை யிருக்கிறதென்று நீங்கள் கருதுகிறீர் களா.? பன்னிரண்டாவது நூற்றாண்டில் குடியரசு ஆட்சி முறைக்காகப் பாடுபட்ட லம்பார்டி மாகாண வாசியினிடத்திலும் பதினான்காவது நூற்றாண்டு ப்ளாரென் மாகாண வாசியினிடத் திலும் நிறைந்திருந்த தெய்வ பக்தியைக்காட்டிலும்1 போப்பாண்ட வருடைய, அல்லது ஒரு கொடுங்கோல் மன்னருடைய அடிமைப் பிரஜையினிடத்தில் அதிகமான தெய்வ நம்பிக்கை இருக்கிற தென்று நீங்கள் எண்ணுகிறீர்களா? எங்கே கடவுள் சக்தி இருக்கிறதோ அங்கே சுதந்திரம் இருக்கிறதென்று நமக்குத் தெரிந்த மகா புருஷர் ஒருவர் கூறிவிட்டுப் போனார். அவர் எந்த மதத்தை உபதேசித் தாரோ அந்த மதமானது அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டு மென்று ஆணையிடு கிறது. கடவுளின் சிருஷ்டிகளிடத்தில் பணிந்து நிற்கிறவன்தான் கடவுளை உண்மையாக அறிகிறவன்; உண்மையாக வழிபடுகிறவன். நீங்கள் அநுஷ்டிக்கிற மதம் மதமல்ல; தங்களுடைய பிறப்பு வரலாற்றை மறந்துவிட்ட ஒரு சிலருடைய, அழுகிப்போன ஒரு சமுதாயத்தை எதிர்த்த, தங்கள் மூதாதையர்களின் போராட்டங் களை மறந்துவிட்ட ஒரு சிலருடைய, இப்பொழுது எந்த உலகத்தை நீங்கள் நிந்திக்கிறீர்களோ அந்த உலகத்தை மாற்றியமைக்கும் விஷயத்தில் பல வெற்றிகளடைந்த ஒரு சிலருடைய கோட்பாடு களையே நீங்கள் மதமாகக் கொண்டிருக்கிறீர்கள். நைந்து போன பழைய சித்தாந்தங்களின் அழிவிலிருந்து உதயமாகிற உண்மையான எந்தக் கோட்பாடும் இப்பொழுதுள்ள சமுதாய அமைப்பை மாற்றிக் கொடுக்கும். ஏனென்றால், உண்மையான ஒரு கோட்பாடு மனித வாழ்வின் எல்லா அமிசங்களிலும் பரவியிருக்குந் தன்மையது. ஒவ்வொரு யுகத்திலும் வசித்த மகான்கள் இகலோக வாழ்க்கை யானது பரலோக வாழ்க்கையை ஒட்டிப்போகுந் தன்மையதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்திப் போனார்கள். மானிட ஜாதியானது, காலத்திற் கேற்றாற்போல் பல வழிகளாக, பல அளவு களாக, கிறிதவர்கள் சொல்கிற ஒரே பிரார்த்தனையைத்தான் சொல்லிக்கொண்டு வந்திருக் கிறது. ஆண்டவனே! உன்னுடைய ராஜ்யம் மோட்சலோகத்திலிருக்கிற படி இந்தப் பூலோகத்திற்கு வரட்டும் என்பதுதான் அந்தப் பிரார்த்தனை. இந்த வாசகத்தை முன்னிலும் அதிகமாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அதிகமாக அநுஷ்டானத்திற்குக் கொண்டு வாருங்கள். எனது சகோதரர்களே! இதுவே உங்களுடைய நம்பிக்கை யின் வாசகமாக, பிரார்த்தனையின் வாசகமாக இருக்கட்டும். இதைத் திருப்பித் திருப்பிச் சொல்லுங்கள். இது நிறைவேறக் கூடிய விதமாகக் காரியங் களைச் செய்யுங்கள். நடப்பது நடக்கட்டும் என்று சொல்லி உங்களைச் சும்மாயிருக்கும்படியும், உலக விஷயங்களை அலட்சியப்படுத்திவிடு மாறும், அரசியல் சக்தியானது அநியாயமாக நடந்துகொண்டாலும் அதற்குக் கீழ்ப்படிந்து போகு மாறும், உங்களுக்குப் போதிக்கிறார்களே அந்தப் போதனைகளை யும், சீஸர் மஹாராஜனுக்குரிய பொருள்களை சீஸர் மஹாராஜ னிடமே ஒப்புவியுங்கள்; கடவுளுடைய பொருள்களைக் கடவு ளிடமே ஒப்புவியுங்கள் என்ற கிறிதவ வாசகத்தை அதன் அர்த்தந் தெரியாமலே உங்களுக்குப் போதிக்கிறார்களே அந்தப் போதனை களையும் செவிகொடுத்துக் கேளாதீர்கள். அப்படிக் கூறுகிறவர்கள் கடவுளுடையதல்லாதது என்று ஏதேனும் ஒரு பொருளை உங்களுக்குச் சொல்ல முடியுமா? தெய்வ சட்டத்தை நிறைவேற்றுகிற அளவுக்குத்தான் சீஸருடைய பொருள்கள் என்று சொல்லலாமே தவிர இந்த உலகத்தில் சீஸருக்கென்று சொந்தமான பொருள் ஒன்று மில்லை. சீஸர் என்று இங்கே சொன்னால், உலக விவகாரங்கள் சம்பந்தப்பட்ட அரசியல் அதிகாரத்தையே, பொதுஜன அரசாங் கத்தையே குறிக்கிறது. இந்த அரசாங்கமானது தன் சக்திக் கியைந்தாற்போலவும், காலத்திற் கேற்றாற் போலவும் கடவுளின் ஏற்பாட்டை நிறைவேற்றும் பொறுப்புடையது. அது தன் பொறுப்புக்கு எப்பொழுதேனும் துரோகம் செய்யுமானால் அதனை மாற்றுவது உங்களுடைய உரிமைமட்டுமல்ல; கடமையுமாகும். உங்களிடத்திலேயுள்ள சாதனங்களைக்கொண்டு, உங்களுடைய பிரதேசத்தில், கடவுளின் உத்தேசத்தை நிறைவேற்றிவைப்பதற்காகத் தவிர வேறெதற்காக இந்த உலகத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்? கடவுள் ஒன்றுபட்ட ஒரு சக்தி. இதன் பரிணாமந்தான் மானிட ஜாதியின் ஒற்றுமை. இந்த ஒற்றுமையில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது உண்மையானால், இதனை அடைய நீங்கள் அல்லும் பகலும் உழைக்கவேண்டாமா? மானிட ஜாதியைப் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கும் வேற்றுமைகளையும், துவேஷங்களையும் எதிர்த்துப் போராட வேண்டாமா? மானிட ஜாதியின் பொறுப்புக்கு அதிவாரமா யுள்ளது மானிட ஜாதியின் சுதந்திரம். இவ்விரண்டுக்கும் இடையூறா யுள்ளவற்றை அழிப்பதற்கு முயற்சி செய்யாமல் இவற்றின்மீது நீங்கள் நம்பிக்கை கொண் டிருப்பதில் அர்த்தமில்லை. நமது சகோதரர்கள் தினந்தோறும் நசுக்கப்படுகிறார்கள்; கீழே தள்ளப்படுகிறார்கள்; இழிவு செய்யப் படுகிறார்கள். இவற்றை நீங்கள் அநுமதித்துக்கொண்டிருக் கிறீர்கள். இருந்தும் சகோதரத்துவத்தைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்? இந்த உலகம் நமது உழைப்புக்குரிய இடம். இதனை நாம் சபிக்கக் கூடாது; புனிதப்படுத்தவே வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள பௌதிக சக்திகள் நமது உழைப்புக்கென்றேற்பட்ட கருவிகள். அவற்றை நாம் புறக்கணியாமலிருப்போம்; நன்மைக்காக உபயோகப் படுத்துவோம். ஆனால் கடவுளின்றி இந்தக் காரியங்களை நீங்கள் செய்ய முடியாது. கடமைகளைப்பற்றி உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உரிமைகளைப்பற்றி இப்பொழுது என்ன தெரிந்துகொண்டிருக் கிறீர்களோ அந்த அறிவைக் கொண்டுமட்டும் நீங்கள் முன்னேற்ற மார்க்கத்தில் நிரந்தரமாகச் சென்றுகொண்டிருக்க முடியாது; இப்பொழுதுள்ள நிலைமையிலிருந்து தொடர்ந்தாற்போல் மேனோக்கிச் சென்று உயர் நிலையை யடைய முடியாது. கடவு ளின்றிக் கடமை ஏது? எந்தவிதமான அரசாங்க முறையை நீங்கள் தழுவிக்கொண்டிருந்தபோதிலும் அந்த ஆட்சி முறையில் கடவுள் அமிசம் இல்லாவிட்டால், தெய்விகத் தன்மை இல்லாவிட்டால், அஃது - அந்த ஆட்சிமுறை - குருட்டுச் சக்தியாக, மிருக சக்தியாக, கொடுங்கோன்மைச் சக்தியாக இருக்கும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியில்லை. எந்தத் தெய்வ ஆணையை நாம் கண்டு பிடித்து அநுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டியவர்களா யிருக் கிறோமோ அந்தத் தெய்வ ஆணையைப் பொறுத்துத்தான் மனித விவகாரங்கள் நடைபெறுகின்றன; அல்லது சந்தர்ப்பங் களையும் கால நிலைமைகளையும் பொறுத்து நடைபெறுகின்றன. இந்தச் சந்தர்ப்பங்களையும் கால நிலைமைகளையும் எவனொரு வன் சரியாக உபயோகிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறானோ அவன் மேற்படி மனித விவகாரங்களைத் திறம்பட நடத்துகிறான். ஒன்று, நாம் கடவுள் ஆக்ஞைக்குக் கீழ்ப்படியவேண்டும்; அல்லது மனிதர் களுக்குத் தொண்டு செய்யவேண்டும். அந்த மனிதர் ஒருவராகவும் இருக்கலாம்; பலராகவும் இருக்கலாம். மனித சக்திகளுக்கெல்லாம் மேலானதொரு சக்தி இல்லா திருக்குமானால், நம்முடைய சகோதர மனிதர்கள், நாம் பலஹீனர்களா யிருக்கிற தருணம் பார்த்து நம்மைக் கொடுமைப்படுத்தினால் அந்தக் கொடுமையினின்று நம்மைக் காப்பாற்றுவது யார்? மனிதர்களால் சிருஷ்டிக்கப்படா ததும், எந்தவிதமான அழிவுக்குட்படாததுமான தெய்விகச் சட்ட மொன்று இல்லாவிட்டால், குறிப்பிட்ட ஒரு செயல், நியாயமான தென்றோ அநியாயமானதென்றோ, நாம் எந்த விதியைக் கொண்டு நிர்ணயிப்பது? யாருடைய பெயரால், எதனுடைய பெயரால், கொடுமைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் நாம் கண்டிப்பது? கடவுளில்லையென்று சொன்னால், அதற்குப் பிறகு, உண்மையைத் தவிர்த்து வேறு அரசு இல்லை. இந்த உண்மையை, புரட்சி என்றாவது சொல்லுங்கள்; போனபார்ட்டே1 என்றாவது சொல்லுங்கள். பௌதிகவாதிகள் இந்த உண்மைக்கு முன்னர்தான் தலைவணங்கு கிறார்கள். இத்தலியிலும் மற்றப் பிரதேசங்களிலுமுள்ள பௌதிக வாதிகள், நம்முடைய கொள்கைகளைத் தத்துவ அளவில் அங்கீகரிக்கிற பௌதிக வாதிகள், தாங்கள் எவ்வித செயலும் புரியாமல் சும்மாயிருப் பதற்குக்கூட இந்த உண்மையை ஆதாரமாக உபயோகிக்கிறார்கள். தன்னலத் தியாகஞ் செய்யுமாறும், மதத்திற் காகத் துன்பத்தை அநுபவிக்கு மாறும், நம்முடைய சொந்த அபிப் பிராயங்களின் பெயரால் அவர்களை எப்படிக் கேட்பது? நமது நலன்களைமட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு, தத்துவ ரீதியாக வுள்ள ஒரு பிரச்னையை, அநுபவரீதியான ஒரு பிரச்னையாகச் செய்துவிடமுடியுமா? பெயர் மாத்திரமாகவுள்ள ஒரு கொள்கையைச் செயலளவில் கொண்டு வந்துவிடமுடியுமா? ஏமாந்து போகாதீர்கள். தனிப்பட்ட நபர்கள் என்ற ஹோதாவில் நாம் பேசுகிற வரையில், நமது சொந்த அறிவு எந்தத் தத்துவத்தைப் பிரேரிக்கிறதோ அந்தத் தத்துவத்தின் பெயரால் பேசுகிறவரையில், இன்றையதினம் நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதுதான் நமக்கு இருக்கும்; மேலே ஒன்றும் கிடைக்காது. அதாவது, செயலைக் கடைப்பிடிக்காமல், வார்த்தைகளை மட்டும் கடைப்பிடித்துக்கொண்டு நடப்போம். பெரிய புரட்சிகள் நடைபெற்ற காலத்தில், எந்தக் கூக்குரல் எழுந்ததோ, சிலுவைப் போர்கள்1 நடைபெற்ற காலத்தில் எந்தக் கூக்குரல் எழுந்ததோ அந்தக் கூக்குரல் ஒன்றுதான், கடவுள் ஆணை! கடவுள் ஆணை!! என்ற அந்தக் கூக்குரல்தான், மந்தத்தனமாயிருக்கப்பட்டவர்களைக் காரியஞ் செய்யும் படித் தூண்டும்; அச்சப்படுகிறவர்களுக்கு அஞ்சாமையை ஊட்டும்; எதிலும் கணக்குப் பார்த்துக் கொண்டு செல்கிறவர்களுக்கு, தியாகஞ் செய்ய வேண்டு மென்ற உற்சாகத்தையளிக்கும்; சாதாரண மனித எண்ணங்கள் தானென்று எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு ஒதுக்கித்தள்ளு கிறார்களே அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். விடுதலை முயற்சிகள், முன்னேற்ற முயற்சிகள் முதலியனவெல்லாம் கடவுளின் ஏற்பாடு என்று ஜனங்களுக்கு நிரூபித்துக் காட்டுங்கள். யாரும் உங்களுக்கு விரோதியாகக் கிளம்பமாட்டார்கள். பூலோகத்திலே நாம் சாதிக்க வேண்டிய காரியங்கள், நமது அமர வாழ்வின் ஒரு முக்கியமான அமிசம் என்று, ஜனங்களுக்கு, அவர்கள் மனதில் பதியுமாறு எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை முன்னிட்டு, அவர்களுடைய தற்கால உத்தே சங்கள் யாவும் மறைந்து போகும். கடவுளின் திருவருளின்றி நீங்கள் பிறரை ஆணையிடலாம்; ஆனால் அன்பினால் வசப்படுத்த முடியாது. நீங்கள் கொடுங்கோலர் களாயிருக்கலாம்; ஆனால் பிறருக்குக் கல்வியறிவு புகட்டுபவர் களாகவோ உபதேசகர்க ளாகவோ இருக்க முடியாது. கடவுள் ஆணை! கடவுள் ஆணை!! சகோதரர்களே! இதுதான் ஜனங்களுடைய கூக்குரல்; உங்கள் ஜனங்களுடைய கூக்குரல்; இத்தாலிய ஜாதியின் கூக்குரல். உங்களுடைய ஜாதீய அபிவிருத்திக் காக நீங்கள் மனப்பூர்வமான அன்போடு உழைக்கிறீர்கள். அப்படிப் பட்ட உங்களிடம் வந்து, இத்தாலியர்களுக்கு அரசியல் அறிவு இல்லை; இத்தலியிலிருந்து மத உணர்ச்சி போய் விட்டது என்று யாராவது சொல்வார்களானால், அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து போகாதீர்கள். இத்தலியில் பல பிரிவினைகள் ஏற்பட்டிருந்த போதிலும், அது, பெருமை யோடும், காரியத்தைச் சாதிக்கிற திறனோடும் இருந்த வரையில், அதனிடமிருந்து மத உணர்ச்சி யென்பது அகன்று போகவே இல்லை. ஆனால் கி. பி. பதினாறாவது நூற்றாண்டில்,1 அதாவது எந்த நூற்றாண்டில் ப்ளாரென் பிரதேசம் வீழ்ந்து விட்டதோ, எந்த நூற்றாண்டில், அந்நியர்களின் உதவி கொண்டு ஐந்தாவது சார்ல மன்னன், இத்தலியின் சுதந்திரத்தை நசுக்கிவிட்டானோ, எந்த நூற்றாண்டில் போப்பரசர்கள் ஜனங்களை ஏமாற்றத் தொடங்கினார்களோ அந்த நூற்றாண்டில், இத்தலியிலிருந்து மத உணர்ச்சி போய்விட்டது; நமது தேசீயத் தன்மையை இழக்க ஆரம்பித்தோம். பானிஷ்காரர் களைப் போல, ஜெர்மானியர்களைப் போல, பிரெஞ்சுக்காரர் களைப் போல வாழத் தொடங்கினோம். நமது அறிஞர் பெருமான்கள், சிற்றரசர்களுடைய இச்சைகளுக் கெல்லாம் இசை பாட ஆரம்பித்தார்கள்; யாரையும், எதையும் பரிகசித்துத் தங்கள் எஜமானர்களைத் திருப்தி செய்வித்தார்கள் நமது புரோகிதர்கள், மத உண்மைகளை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருவது அசாத்திய மென்பதைக் கண்டு, தெய்வ சம்பந்தமான வதுக்களில் வியாபாரஞ் செய்யத் தொடங்கினார்கள்; எந்த ஜனங்களுடைய அறிவை விருத்தி செய்திருக்க வேண்டுமோ, எந்த ஜனங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டுமோ அந்த ஜனங்களைப் பற்றி நினையாமல், தங்களைப் பற்றியே நினைக்க ஆரம்பித்தார்கள். இதனால், ஜனங்கள், அறிஞர் களால் இகழப்பட்டார்கள்; புரோகிதர்களால் ஏமாற்றப்பட் டார்கள்; கசக்கிப் பிழியப்பட்டார்கள்; பொது விவகாரங்களி லிருந்து புறக்கணிக்கப் பட்டார்கள். இவைகளுக்குப் பழி தீர்த்துக் கொள்கிற மாதிரி, ஜனங்கள் என்ன செய்ய ஆரம்பித்தார்களென் றால், படித்த அறிஞர்களைப் பரிகசித்தார்கள்; புரோகிதர்கள் மீது அவ நம்பிக்கை கொள்ளலானார்கள்; பழைய மதக் கோட்பாடு களங்கப்பட்டுப் போய்விட்டதென்று கருதி எல்லா மதக் கோட்பாடு களின் மீதும் வெறுப்புக் காட்டினார்கள். அந்தக் காலத்திலிருந்து நாம், கேவலமாக, ஆண்மையற்ற விதமாக நமது வாழ்க்கையை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். நமது பழக்கத்தினால் ஏற்பட்ட, நமது அதிகாரிகளால் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைக ளென்ன, சந்தேக மனப்பான்மையென்ன, இவைகளுக்கு மத்தியில் நமது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் மீண்டும் நாம் தலை நிமிர்ந்தெழுந்திருக்க வேண்டும்; பெருமை யோடும் கௌரவத்தோடும் வாழ வேண்டும். இது விஷயத்தில், நமது தேசீய பரம்பரையை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோமாக! 1கி. பி. பன்னிரண்டாவது நூற்றாண்டில், நமது லம்பார்டி மாகாணத்துச் சகோதரர்கள், கடவுளின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு, தங்களுடைய மதச் சின்னங்களை யுத்தகளத்தின் நடுவில் நிறுத்திக் கொண்டு, ஜெர்மானியர்களோடு போர் புரிந்தார்கள்; அவர்களைத் தோற்கடித்து துரத்தினார்கள்; தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட சுதந்திரத்தை மறுபடியும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண் டார்கள். அப்படிப்பட்ட லம்பார்ட் சகோதரர்களை நினைவு படுத்திக் கொள்வோமாக! 2டகனி மாகாணத்து நகரங்களில் வசித்த குடியரசுக் கட்சியினர், தங்கள் பார்லிமெண்ட் கூட்டங் களைத் தேவாலயங்களில் வைத்து நடத்தினார் களென்பதை ஞாபகப்படுத்திக் கொள்வோமாக! 3ப்ளாரென் பிரதேச வாசிகள், தங்களுடைய ஜனநாயக சுதந்திரத்தை, மெடீஷி அரச குடும்பத்தி னிடம் ஒப்புக் கொடுக்க மறுத்து, யேசுநாதரையே, தங்கள் குடியரசுக்குத் தலைவராகத் தெரிந்தெடுத்தார்களல்லவா, அந்த ப்ளாரென் வாசிகளை நினைவு படுத்திக் கொள்வோமாக! 1கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் ஜனங்களுடைய உரிமைகளைப் பற்றியும் சேர்ந்தாற் போல் உபதேசித்த ஸவோன ரோலாவை ஞாபகப்படுத்திக் கொள்வோமாக! 2ஜினோவா நகரவாசிகள் கி.பி. 1746ஆம் வருஷம் கற்களையே ஆயுதங்களாக உபயோகித்தும், தங்கள் இஷ்ட தேவதையாகிய கன்னி மேரியின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும், தங்கள் நகரத்தை ஆக்ரமித்துக் கொண்ட ஜெர்மானியச் சேனையை விரட்டியடித்து, நகரத்தைக் காப்பாற்றி னார்களல்லவா, அந்த ஜினோவா வாசிகளை நினைவுபடுத்திக் கொள்வோமாக! இந்த மாதிரி நமது நாட்டிலே நிகழ்ந்த பல சம்பவங் களிலும் மத உணர்ச்சியானது ஊடுருவிப் பரந்திருக்கிறது. இந்த மத உணர்ச்சிதான், ஜனங்களுடைய எண்ணத்தைப் பாது காத்தும் பண் படுத்தியும் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட சம்ப வங்கள் அனைத்தையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோமாக! நமது ஜனங்களிடத்திலே மத உணர்ச்சியானது உறங்கிக் கிடக்கிறது. இதனை நாம் தட்டியெழுப்ப வேண்டும். எவனொரு வன் இந்த வேலையைச் செய்கிறானோ அவன், அதிகமான அரசியல் சித்தாந்தங் களினால் தேசத்திற்கு என்ன நன்மை உண்டாகிறதோ அதைக்காட்டிலும் அதிகமான நன்மையைச் செய்தவனாகிறான். அந்நிய நாட்டு முடியாட்சித் திட்டங்களைப் பின்பற்றி, நமது நாட்டில் இதுகாறும் அரசியல் கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார் களே, இவர்களுடைய முயற்சிகளை ஜனங்கள் அசட்டையாகத் தள்ளிவிட்டதற்குக் காரணம், மேற்படி கிளர்ச்சிக் காரரிடத்தில் மத உணர்ச்சி இல்லாமலிருந்ததுதான். ஆதலின் சகோதரர்களே! கடவுளின் பெயரால் உபதேசம் செய்யுங்கள். இத்தாலிய மனப் பான்மை கொண்ட யாரும் உங்களைப் பின்பற்றி வருவார்கள். கடவுளின் பெயரால் உபதேசம் செய்யுங்கள். அறிஞர்கள் உங்களைப் பார்த்துச் சிரிக்கலாம்; ஆனால் அவர்களைப் பார்த்து தாய்நாட்டிற்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேளுங்கள். புரோகிதர்கள் உங்களை ஜாதிப் பிரஷ்டம் செய்யலாம்; அவர்களைப் பார்த்து உங்களைத்தனைபேருக்கும் சேர்ந்து கடவுளைப் பற்றி என்ன தெரியுமோ அதைவிட அதிகமாக எங்களுக்குத் தெரியும். கடவுளுக்கும் அவருடைய சட்டத்திற்கும் நடுவில் எவ்வித தரகரும் வேண்டியதில்லை யென்று சொல்லுங்கள். அப்பொழுது ஜனங்கள் உங்களைத் தெரிந்து கொள் வார்கள். உங்களோடு சேர்ந்து கொண்டு எங்களது பரம பிதாவும், அறிவும் அன்புமானவரும், உலகத்தின் சிருஷ்டி கர்த்தரும் உபதேசகருமான கடவுளையே நாங்கள் நம்புகிறோம் என்று சொல்வார்கள். இந்த வாசகத்தின் மூலமாக நீங்களும் ஜனங்களும் வெற்றி யடைவீர்கள். 3. சட்டம் நீங்கள் வாழ்கிறீர்கள்; ஆதலின் வாழ்க்கை நியதியென்ப தொன்று உங்களுக்கிருக்கிறது. நியதியின்றி வாழ்க்கையில்லை. உலகத்திலேயுள்ள வதுக்கள் யாவும் குறிப்பிட்ட ஒரு முறை யிலும், குறிப்பிட்ட ஒரு நிலைமையிலும், குறிப்பிட்ட ஒரு நியதிக் குட்பட்டுமே இருக்கின்றன. உலோகப் பொருள்கள் தொகுப்பு என்ற நியதிக்குட்பட்டிருக் கின்றன. செடி கொடிகள் வளர்ச்சி யென்ற நியதிக்குட்பட்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் அசைவு என்ற நியதிக்குட்பட்டிருக்கின்றன. இவை போலவே நீங்கள் ஒரு நியதிக்குட்பட்டிருக்கிறீர்கள்; உங்களுடைய வாழ்க்கையும் ஒரு நியதிக்குட்பட்டிருக்கிறது. ஜீவசிருஷ்டிகளில் எப்படி மனிதர் களாகிய நீங்கள் உயர்ந்தவர்களோ அப்படியே உங்களை ஆட் கொண்டிருக்கிற நியதியும் அல்லது சட்டமும், மேலே சொன்ன நியதிகள் அல்லது சட்டங்களைக் காட்டிலும் உயர்ந்தவை; போற்றத் தகுந்தவை. மனிதனுக்கேற்பட்ட நியதிப்படி உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ள வேண்டும்; காரியங்களைச் செய்ய வேண்டும்; வாழ்க்கையை நடத்தவேண்டும். இஃது உங்கள் முதற்கடமை. ஆம்; இஃதொன்றே உங்கள் கடமை. கடவுள் உங்களுக்கு வாழ்வைக் கொடுத்திருக்கிறார். அதனால் வாழ்க்கை நியதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கடவுள் ஒருவர்தான் மானிட ஜாதியின் சட்டகர்த்தர். அவருடைய சட்டம் ஒன்றுக்குத்தான் நீங்கள் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அவருடைய திருச்சட்டத்திற்கு எவ்வளவுதூரம் பொருந்துகிறது, அதனை எவ்வாறு வியாக்கியானப்படுத்துகிறது, எம்முறையில் அநுஷ்டானத் திற்குக் கொண்டுவரக்கூடிய மாதிரியாக இருக்கிறது என்கிற நிறுவை களைக் கொண்டுதான் மனிதர்களால் இயற்றப் படுகிற சட்டங் களை நாம் நோக்கவேண்டும். அப்பொழுதுதான் அவை செல்லுபடியாகின்றன; நல்லவையாகின்றன. அந்தத் தெய்விகச் சட்டத்தை மறுக்கிற அளவுக்கு; புறக்கணிக்கிற அளவுக்கு அவை - அந்த மனித சட்டங்கள் - தீமை பயப்பனவாய்விடுகின்றன. அப்பொழுது, தீமை பயக்கிறபோது அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுப்பதும் அவைகளை மாற்ற முயல்வதும் உங்கள் உரிமை மட்டுமல்ல; கடமையுமாகும். கடவுள் சட்டத்தை, எவனொருவன் உலக விவகாரங்களில் அநுஷ்டானத்திற்குக் கொண்டுவந்து காட்டுகிறானோ, அவன்தான் உங்களுடைய நியாய மான தலைவன். அவனை நேசியுங்கள்; அவனைப் பின்பற்றுங்கள். ஆனால் ஒரு விஷயம். கடவுளைத் தவிர்த்து உங்களுக்கு வேறு எஜமானனில்லை; இருக்கவும் முடியாது. அப்படியிருந்தால் அவன் கடவுளுக்குப் பொய்யனாகவும் கடவுள் விரோதியாகவுந்தான் இருக்கமுடியும். உங்களுடைய வாழ்க்கை நியதியைப்பற்றி, கடவுளின் திருச்சட்டத்தைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர் களோ அதுதான், அந்த அறிவுதான், தருமத்தின் அதிவாரமா யிருக்கிறது. அதுதான் உங்களுடைய செயல்களுக்கும் கடமை களுக்கும் நியமமாயிருக்கிறது. அதுதான் உங்களுடைய பொறுப்புக் களின் அளவுகோலாயிருக்கிறது. ஒரு மனிதனோ அல்லது பல மனிதர்களோ உங்கள்மீது நியாயத்திற்கு விரோதமான சட்டங் களைத் திணிக்க முயற்சி செய்வார்களானால், அந்த முயற்சியினின்று உங்களைத் தடுத்துக்கொள்வதற்கு இந்த அறிவு - அதாவது வாழ்க்கை நியதி, கடவுள் சட்டம் இவைகளைப் பற்றிய அறிவு - வேண்டும். இந்த அறிவு இல்லாமல் நீங்கள் மனிதர்களைப் பற்றியோ மனித உரிமைகளைப் பற்றியோ பேச முடியாது. எல்லா உரிமைகளும் ஒரு சட்டத்தினடியாகவே பிறக்கின்றன. அந்தச் சட்டத்தை நீங்கள் துணையாகக் கொள்ளாதவரையில் நீங்கள் ஒன்று கொடுங் கோலர் களாயிருக்கலாம்; அல்லது அடிமைகளா யிருக்கலாம். வேறுவிதமா யிருக்க முடியாது. தேகபலமுள்ளவர்கள் கொடுங்கோலர்களாகி விடுகிறார்கள்; தேக பலமில்லாதவர்கள் அந்தக் கொடுங்கோலர்களுக்கு அடிமைகளாகிவிடுகிறார்கள். ஆனால் நீங்கள் மனிதத் தன்மையோடு கூடிய மனிதர்களாயிருக்க வேண்டுமானால், மிருகங்கள், செடி கொடிகள், உலோகப் பொருள்கள் முதலியவற்றை மனித சுபாவத்தினின்று பிரித்துக் காட்டுகிற சட்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அதன்படி நடக்க வேண்டும். அதனை எப்படித் தெரிந்துகொள்வது? கடமையைப்பற்றி உபதேசித்து வந்திருக்கிறவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைத்தான், மானிட சமுதாயமானது, ஒவ்வொரு யுகத்திலும் கேட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இதற்கு விதவிதமான விடைகளே இதுவரையில் அளிக்கப்பட்டு வந்திருக் கின்றன. சிலர், ஒரு சட்ட புத்தகத்தையோ, நீதி நூலையோ காட்டி மனிதன் அநுசரிக்க வேண்டிய தருமங்கள் யாவும் இதில்தானிருக் கின்றன வென்று சொல்கிறார்கள். வேறு சிலர் ஒவ்வொரு மனித னும் தன் மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளட்டும்; நன்மைக்கும் தீமைக்கும் அது வியாக்கியானம் கூறும் என்று சொல்கிறார்கள். இன்னுஞ் சிலர் தனிப்பட்டவர்களுடைய அபிப்பிராயத்தைப் புறக்கணித்து, ஜன சமூகத்தின் அபிப்பிராயத்தைக் கோரியவர்களாய், மானிட சமுதாயம் எந்த ஒரு நம்பிக்கையை அங்கீகரிக்கிறதோ அதுவே உண்மையானது என்று பகர்கிறார்கள். இவர்களுடைய அபிப்பிராயங்கள் யாவும் தவறு. இவை களின் பயனற்ற தன்மையை, மானிட ஜாதியின் சரித்திரமானது, மறுக்க முடியாத உண்மைகளைக் கொண்டு நிரூபித்துக் காட்டி யிருக்கிறது. மனிதன் அநுசரிக்க வேண்டிய தருமங்கள் யாவும் ஒரு சட்ட புத்தகத்திலோ, அல்லது ஒரு தனி மனிதனுடைய உபதேசத் திலோ இருக்கின்றனவென்று கூறுவோர், மானிட ஜாதியானது நூற்றாண்டுகள் கணக்காகக் குறிப்பிட்ட ஒரு சட்டத்தை அநுசரித்து வந்து, பின்னர் அதைவிடச் சிறந்ததொரு சட்டத்தைக் கண்டுபிடிக்க வும் உபதேசிக்கவும் தயங்கியதில்லையென்ற உண்மையை மறந்து விடுகிறார்கள். நன்மை யென்றும், தீமையென்றும் பகுத்துப் பார்ப்பது, அவரவர்களுடைய மனச்சாட்சியைப் பொறுத்த விஷயம் என்று சொல்வோர், மனச்சாட்சிப்படி நடந்துகொண்டதனால் பல துன்பங்களுக்காளான பலர் ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறார் களென்ற உண்மையை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய மனச்சாட்சிப்படி நடந்துகொள்ள உரிமையுடைய வர்கள் என்ற கருத்தே, புராடெடெண்டெண்ட் மதத்தில் ஆயிரக் கணக்கான பிரிவினைகளை ஏற்படுத்தியிருக்கிறது; இன்றைய ஐரோப்பிய ஜன சமுதாயத்திலேற்பட்டிருக்கிற அரசியல், சமுதாயப் பிணக்குகளுக்கெல்லாம் காரணமாயிருக்கிறது. தனிப்பட்டவர் களுடைய உரிமைகளை மறுத்து மானிட ஜாதி கொள்கிற நம்பிக்கையே உண்மை யான நம்பிக்கை யென்ற அபிப்பிராயமுடை யவர்கள், மானிட ஜாதியின் முன்னேற்றத்திற்குத் துணை செய் திருக்கிற எல்லாப் பெரிய கருத்துக்களும், ஆரம்பத்தில் பொதுஜன நம்பிக்கைக்கு விரோதமாகவே தோன்றியிருக்கின்றன என்ற உண்மையையும், மானிட சமுதாயத்தினால் ஏளனஞ்செய்யப்பட்ட, துன்புறுத்தப்பட்ட தனிப்பட்ட நபர்களாலேயே உபதேசிக்கப்பட் டிருக்கின்றனவென்ற உண்மையையும் மறந்துவிடுகிறார்கள். எனவே இந்த அபிப்பிராயங்கள் யாவும், கடவுளின் திருச் சட்டத்தை, உண்மையை, அறிந்து கொள்ள உதவியாயிருக்கவில்லை யென்பது தெளிவாகிறது. ஆயினும், தனிப்பட்ட மனிதர்களுடைய மனச்சாட்சி யானது புனிதமானது; அப்படியே ஜன சமுதாயத்தின் அபிப்பிராயமும் புனிதமானது. இவற்றில் ஒன்றையேனும் மறுக்கிறவன், உண்மையை அறிந்துகொள்ளும் சாதனத்தை இழந்தவனாகிறான். மேற்கண்ட அபிப்பிராயங்களில் ஏதேனும் ஒன்றினைப் பின்பற்றி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற தவறையே இதுகாறும் மனிதர்கள் திருப்பித் திருப்பிச் செய்து வந்திருக்கிறார்கள். இதனால் விளைந்திருக்கிற பலன்கள் விபரீதமா யிருந்திருக்கின்றன. தனிப்பட்டவர்களுடைய உரிமைகளை அதிக மாக வற்புறுத்தி வந்ததனால், சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட் டிருக்கிறது. இப்படியே சமுதாயத்தின் உரிமைகள் வரம்புமீறி வற்புறுத்தப்பட்டதனால், தனிப்பட்டவர்களுடைய உரிமைகள் நசுக்கப் பட்டு, கொடுங்கோன்மையில் வந்து முடிந்திருக்கிறது. இந்தத் தவறை மனிதர்கள் திரும்பத் திரும்பச் செய்து வந்திருக் கிறார்கள். தனிப்பட்டவர் களுக்கு முன்னேற்ற வழியைக் காண்பித்துக் கொடுப்பது சமுதாயத்தின் கடமையென்ற உண்மையை மறந்து, சிலர், தனிப்பட்டவர்களுடைய உரிமைகளைமட்டும் அதிவார மாகக் கொண்டு சமுதாயத்தை அமைக்கப் பார்க்கிறார்கள். இன்னுஞ் சிலர், தனிப்பட்டவர்களுடைய உரிமை களையும் செயல் களையும் புறக்கணித்துவிட்டு, சமுதாய உரிமை என்கிற அதிவாரத்தின்மீது சமுதாயத்தை அமைக்கப் பார்க்கிறார்கள். முதல் சொல்லப்பட்ட நிபந்தனையின்மீது, (புரட்சிக்குப்பிறகு) பிரான்சிலும், இங்கிலாந்திலும் சமுதாய அமைப்பு ஏற்பட்டது. அதாவது தனிப்பட்டவர் களுடைய உரிமைகள் அதிகமாக வற்புறுத்தப்பட்டன. இதன் பலன் என்ன? சமுதாய அந்ததில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டன; ஜன சமூகத்தின் பெரும்பாலோர் கொடுமைகளுக்காளாயினர். இரண்டாவது சொல்லப்பட்ட நிபந்தனையின் மீது, அதாவது சமுதாய உரிமைக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிற நிபந்தனையின் மீது சமுதாயம் அமைக்கப்படு மானால், அதாவது கம்யூனிஸம் என்கிற பொதுவுடமைத் திட்டம் அமுலுக்கு வருமானால், சமுதாயமானது, இயங்கும் சக்தியை இழந்து முற்போக்கடையாமல் தேக்கத்திற்குட்பட்டுவிடும். தனிப் பட்டவர்களின் உரிமைகள் அதிகமாக வற்புறுத்தப்பட்டதனால் ஏற்பட்ட பலன் என்ன? அவரவரும் அவரவர் இஷ்டப்படி வியாபாரம் முதலிய விஷயங்களில் போட்டி போடலாமென்று இந்த உரிமைக்கு வியாக்கி யானஞ் செய்துகொண்டு சமுதாயத்தின் பொருளாதார முறையை அமைத்திருக்கிறார்கள். அமைத்திருக் கிறார்களா? அழித்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். சமுதாய ஒற்றுமையையே முக்கிய நோக்கமாகக் கொண்ட வேறு சிலர் தேசத்தின் உற்பத்திச் சக்திகளை யெல்லாம் அரசாங்கத்தின் சுவாதீனமாக்கிவிட வேண்டுமென்று சொல் கிறார்கள். இதனால் சமுதாயம் வளர்ச்சியடையாமல் தேங்கி போய்விடுகிறது; கொடுங்கோன்மை அதிகமாகிறது. கடவுள் உங்களுக்கு இரண்டு இறக்கைகளைக் கொடுத்திருக் கிறார். இந்த இறக்கைகளின் துணை கொண்டு, மனிதர்கள் தம்மை வந்தடையட்டும் என்பது அவருடைய திருவுளம். இந்த இரண்டு இறக்கைகள் என்ன? ஒன்று, உங்களுடைய மனச்சாட்சி; மற்றொன்று ஜன சமூகத்தின் அபிப்பிராயம். இவற்றில் ஒன்றைத் துண்டித்துவிட வேண்டுமென்று ஏன் வற்புறுத்துகிறீர்கள்? ஒன்று, உலகத்தினின்று பிரிந்து வாழ வேண்டுமென்கிறீர்கள்; அல்லது சமுதாயத்தினால் விழுங்கப்படச் சம்மதிக்கிறீர்கள். ஏன் இரண்டும்? உங்களுடைய மனச்சாட்சியின் அபிப்பிராயத்தையோ அல்லது ஜன சமூகத்தின் அபிப்பிராயத்தையோ ஏன் அழுத்திவிடப் பார்க்கி றீர்கள்? இரண்டும் புனிதமானவை. இரண்டின் மூலமாகவும் கடவுள் பேசுகிறார். இரண்டும் ஒன்றுபட்டுப் போகிற இடத்தில் தான், அதாவது உங்கள் மனச்சாட்சியின் கூக்குரலை ஜனசமூகத்தின் அபிப்பிராயம் அங்கீகரிக்கிற இடத்தில்தான் கடவுள் இருக்கிறார். அந்த இடத்தில்தான், சத்தியமானது உங்கள் கைப்பிடிக்குள் அகப்படும். ஒன்றையொன்று சரிபார்த்துக் கொள்வதற்கு இந்த இரண்டும் தேவைதான். உங்களுடைய கடமைகள் எதிர்மறையாக மட்டுமிருந்தால், அதாவது தீங்கு செய்யாதிருக்க வேண்டுமென்கிற அளவோடு இருந்தால், உங்களுடைய மனச்சாட்சிமட்டும், உங்களுக்கு வழி காட்டியாயிருக்கப் போதுமானது. அப்பொழுது குறைந்த பட்சம் கல்வியறிவு பெற்றிருக் கிறவர்கள் அடைந்திருக்கிற முன்னேற் றத்தைத்தான் நீங்கள் அடைய முடியும். ஆனால் நன்மை செய்வதற் காகவே நீங்கள் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறீர்கள். கடவுளின் திருச்சட்டத்திற்கு விரோதமாக நீங்கள் நடக்கிற ஒவ்வொரு சமயமும், குற்றம் என்று கருதப்படுகிற செயல் களைச் செய்து கொண்டு வருகிற ஒவ்வொரு சமயமும் உங்களுக் குள்ளேயே இருக்கப்பட்ட ஏதோ ஒன்று உங்கள்மீது குற்றஞ் சாட்டுகிறது. ஏதோ ஒரு குரல் இருந்துகொண்டு உங்களைக் கண்டிக்கிறது. இதனை மற்றவர்களிடமிருந்து நீங்கள் மறைக்கலாம்; ஆனால் உங்களிடமிருந்து மறைக்க முடியாது. உங்களுடைய முக்கியமான கடமைகளெல்லாம் நிச்சயமானவை, செய்யவேண்டியவை. அதாவது (தீமையைச்) செய்யா மலிருந்தால்மட்டும் போதாது. (நன்மையைச்) செய்யவும் வேண்டும். கடவுள் சட்டத்திற்கு விரோதமாக நடக்காமலிருப்பதைக் கொண்டு மட்டும் நீங்கள் திருப்தியடையக் கூடாது; கடவுள் சட்டத்தை யநுசரித்து நீங்கள் நடக்கவும் வேண்டும். உங்கள் சகோதரர்களுக்குத் தீமை செய்யாம லிருந்தால் மட்டும் போதாது; நன்மையைச் செய்யவும் வேண்டும். இதுகாறும் தருமமானது எதிர்மறை முறையில் உபதேசிக்கப்பட்டு வந்திருக்கிறதன்றி உடன்பாட்டு முறையில் உபதேசிக்கப்பட்டு வரவில்லை. கொல்லாதே; திருடாதே என்று தான் இதுவரையில் உபதேசித்து வந்திருக்கிறார்கள். ஒரு சிலர்தான், மனிதர்கள் தங்கள் சகோதர மனிதர்களுக்கு எப்படி நன்மையைச் செய்ய வேண்டு மென்பதைப் பற்றியும், எந்த நோக்கத்தோடு கடவுள் ஜீவராசிகளை சிருஷ்டித்திருக்கிறாரோ அந்த நோக்கத்தை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டுமென்பதைப் பற்றியும் உபதேசித்திருக்கிறார்கள். எனவே உடன்பாட்டு முறையாக நன்மையைச் செய்ய வேண்டுமென்ற சுபாவம் மனிதனிடத்திலே எப்பொழுதும் இருக்க வேண்டுமானால், அவன் தன் மனச்சாட்சிப்படி மட்டும் நடந்துகொண்டால் போதாது. ஒருவனுடைய கல்விப் பயிற்சி, மனப்போக்குகள், பழக்க வழக்கங்கள், உணர்ச்சிகள் இவைகளை அநுசரித்தாற்போலவே அவனுடைய மனச்சாட்சியும் பேசுகிறது. வட அமெரிக்காவிலுள்ள ஈரோகாயி என்ற இந்திய ஜாதியார்களின் மனச்சாட்சி பேசுகிற பாஷை வேறு; பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியர்களின் மனச்சாட்சி பேசுகிற பாஷை வேறு, நேபிள் நகரத்திலே வசிக்கும் ஓர் ஏழை மகனையோ, அல்லது லம்பார்டி மாகாணத்தில் வசிக்கும் தொழிலாளியையோ போய்க் கேளுங்கள், இவர்ளுக்குத் தருமத்தைப் போதிக்கிற ஆசிரியர் யாரென்றால் கெட்ட சுபாவமுள்ள புரோகிதர். இவர்கள், இந்த ஏழை மக்கள், படிக்க அநுமதிக்கப்பட் டிருப்பது அல்லது இவர்களுக்குப் படிக்கத் தெரிந்தது ஆதிரிய அரசாங்கத்தாரால் வெளியிடப் பெறுகிற பைபிள். இவர்கள் என்ன சொல்வார்களென்றால், எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் பொறுப்பு. அதற்காக என்ன கூலி கொடுக் கிறார்களோ அந்தக் கூலிக்குச் சம்மதித்து ஓயாமல் உழைக்கவேண்டு வது எங்கள் கடமை. சட்டங்களுக்கு-அவை எந்த மாதிரியாயிருந்த போதிலும் - நாங்கள் கீழ்ப்படியவேண்டும். பிறருக்கு நாங்கள் தீங்கு செய்யக்கூடாது என்று தான் கூறுவார்கள். இவர்களைப் பார்த்து உங்கள் நாட்டுக்கும் மானிட ஜாதிக்கும் நீங்கள் செய்யவேண்டிய கடமையொன்றும் இல்லையா? உங்களுடைய உழைப்புக்கு என்ன மதிப்பு உண்டோ அந்த மதிப்புக்குக் குறைவான கூலியைப் பெற நீங்கள் சம்மதிப்பதனால், உங்களுடைய சகோதர தொழிலாளர் களுக்கு நீங்கள் தீங்கு செய்தவர்களாகிறீர்களில்லையா? அநியாய மான சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதனால், நீங்கள், கடவுளுக்கும் உங்கள் ஆத்மாவுக்குமே துரோகம் செய்தவர்களாகிறீர்களில்லையா? என்றெல்லாம் சொல்வீர் களாயின், இவர்கள் ஒன்றுந் தெரியாத வர்களாய் புருவத்தை நெரித்துக் கொண்டு பிரமிப்படைந்து போவார்கள். நல்ல சந்தர்ப்பங்களும் அறிஞர்களின் தொடர்புகளும் ஏற்பட்டதன் காரணமாக உண்மையை ஒருவாறு உணர்ந்திருக்கிற இத்தாலியத் தொழிலாளிகளைப் பார்த்துக் கேளுங்கள். அவர்கள், தங்கள் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறதென்றும், தங்களுடைய சகோதரர்கள் கஷ்ட ஜீவனத்துடனும், ஒழுக்கமில்லாமலும் வாழ்க்கையை நடத்தி வருகிறார்களென்றும், தங்களால் முடிந்த வரை இந்த அநீதத்தை ஒழிக்கப் பார்ப்பதே தங்கள் கடமை யென்றும், இந்தக் கடமையையே தங்கள் மனச்சாட்சி வற்புறுத்து கிறதென்றும் கூறுவார்கள். ஒரே காலத்தில், ஒரே நாட்டில் வசிக்கிற ஒரே தொழிலாளர்களிடையில் ஏன் இந்த வித்தியாசமான அபிப்பிராயங்கள்? இதேமாதிரி மானிட ஜாதியின் முன்னேற்றத்தை லட்சியமாகக் கொண்ட, குறிப்பிட்ட ஒரு கொள்கையை அநுஷ்டிக்கிற ஒரு ஜாதியாரிடத்தில், அல்லது ஒரு பிரிவாரிடத்தில் மேற்படி கொள்கை சம்பந்தப்பட்ட கடமைகளைப்பற்றிப் பல விதமான அபிப்பிராயங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். இவை யெல்லாம் எதைக் காட்டுகின்றன? மனிதனுடைய மனச்சாட்சி மட்டும் அவனுக்கு வழிகாட்டியாயிருக்கப் போதுமானதல்ல என்பதையே தெரிவிக்கின்றன. கடவுளின் திருச்சட்டமொன்று இருக்கிறதென்பதைத் தெரிவிக்கிற அளவுக்குத்தான், மனிதனுக்கு அவனுடைய மனச்சாட்சி வழிகாட்டியாயிருக்கும். ஆனால் அந்தத் திருச்சட்டத்தின்கீழ் அவனுக்கு என்னென்ன கடமைகள் விதிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்கு அந்த மனச்சாட்சி வழிகாட்டியா யிராது இந்தக் காரணத்திற்காகவே மானிட ஜாதியினிடம் எவ்வளவு அகங்கார புத்தி குடிகொண்டிருந்த போதிலும் மதாபிமானம் காரணமாக பல அவதிகளுக்குட்பட்டு, வீர மரணமெய்துவ தென்பது மனிதர்களிடத்தில் எப்பொழுதும் இருந்துகொண்டிருக் கிறது. ஆனால், கடமைகளென்று தாங்களே கற்பனை செய்து கொண்டு அதற்காக எத்தனை மகான்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்துவிட்டிருக்கிறார்கள்! தவறு என்று இப்பொழுது நமக்குப் பிரத்தியட்சமாகத் தெரிகிற விஷயங்களுக்காக எத்தனை பேர் உயிரை விட்டிருக்கிறார்கள்! எனவே, உங்கள் மனச்சாட்சிக்கு ஒரு வழிகாட்டி தேவையாயிருக்கிறது. அதனைச் சுற்றி இருக்கும் இருட்டுகள் நுழைந்து பார்ப்பதற்கு ஒரு வெளிச்சம் தேவையா யிருக்கிறது. அதன் சுய அறிவுக்கியைந்தாற்போல் போக ஒரு சட்டம் தேவையாயிருக்கிறது. இந்தச் சட்டமே அறிவு; மானிட சமுதாயம். கடவுள் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறார். அவருடைய சட்டத்தை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு உங்கள் அறிவை நீங்கள்விருத்தி செய்து கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது நூற்றாண்டுகள் கணக்காக வேரூன்றிப் போயிருக்கிற வறுமையும், உங்களுடைய எஜமானர் களின் மனப்போக்கும் சேர்ந்து, உங்களை, உங்களுடைய அறிவை, விருத்திசெய்து கொள்ளவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை, இந்த இடையூறுகளை உங்கள் பலத்தின் துணை கொண்டு நீங்கள் அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். அப்படி இவை அப்புறப்படுத்தப்பட்டாலும் உங்களுடைய சொந்த அறிவைக் கொண்டுமட்டும் கடவுளின் சட்டத்தை நீங்கள் தெரிந்து கொள்ளமுடியாது. மானிட ஜாதியின் அறிவு அதற்குத் துணை செய்ய வேண்டும். உங்களுடைய வாழ்நாள் மிகவும் குறைவானது; உங்களுடைய திறமைகள் பலஹீனமுள்ளவை; நிச்சயமற்றவை. எனவே, இவைகளுக்கு ஓர் ஆதரவு தேவையருக்கிறது. இதற் காகவே, கடவுள் உங்கள் பக்கத்தில் ஒரு சக்தியை வைத்திருக்கிறார். அது தொடர்ச்சியான வாழ்க்கையை யுடையது. சென்ற நாலாயிர வருஷ காலமாக, தனிப்பட்ட மனிதர்களால் உபயோகிக்கப்பட்டிருக்கிற திறமைகளின் தொகுப்பாயிருப்பது. தனிப்பட்ட நபர் களினுடைய பல தவறுகளுக்கிடையே ஞானத்திலும், ஒழுக்கத் திலும், சதா முன்னேறிச் சென்றுகொண்டிருப்பது. இதன் வளர்ச்சி யிலே கடவுள் ஒவ்வொரு யுத்தத்திலும் தன்னுடைய திருச்சட்டத்தின் ஒரு வரியை எழுதிவைக் கிறார். இந்தச் சக்தியையே மானிட சமுதாயம் என்ற பெயரிட்டழைக் கிறோம். மானிட சமுதாயத்தை, எப்பொழுதும் புது புது விஷயங் களைக் கற்றுக்கொண்டிருக்கிற ஒரு மனிதனுக்கு ஒப்பிட்டுப் பேசினான் ஓர் அறிஞன். தனிப்பட்ட மனிதர்கள் இறந்துபோகி றார்கள். ஆனால் அவர்கள் வெளியிட்ட உண்மைகளும், அவர்கள் செய்த நல்ல காரியங்களும் அவர்களோடு மறைந்து போவதில்லை. மானிட சமுதாயமானது இவைகளைப் பொக்கிஷம்போல் சேகரித்து வைக்கிறது. அவர்களுடைய சவக்குழிகளின்மீது நடக்கிறவர்கள், இவற்றின் பலனை அநுபவிக் கிறார்கள். மானிட சமுதாயமானது இதுகாறும் சேகரித்துவைத்துப் போயிருக்கிற எண்ணங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றின் மத்தியில்தான், நாம் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறோம். அதே பிரகாரம், நம்மிலே ஒவ்வொருவரும், நம்மையறியாமலே வருங்கால மானிட சமுதாயத்தின் நல் வாழ்வுக்குத் தேவையாயுள்ள முக்கிய மானதோர் அமிசத்தை அளிக்கிறோம். வாழ்க்கையென்னும் பாதையில் செல்லும் ஒவ்வொரு பிரயாணியும், ஒவ்வொரு கல் வைத்து உதவி, மானிட சமுதாயம் என்கிற கோபுரத்தை வளர்த்துக் கொண்டு போகிறான். ஒரு நாள் வழிப் பிரயாணிகளாகிய நாம், அதாவது அற்ப ஆயுளையுடைய நாம், நமது சொந்தக் கல்விஞானத்தை வேறோர் இடத்தில் - மானிட சமுதாயத்தினிடத்தில் - பூர்த்தி செய்து கொள்ளுமாறு கூறப்படு கிறோம். மானிட சமுதாயத்தின் கல்வி ஞானமானது, நம்மில் ஒவ்வொரு வரிடத்திலும் அவ்வப்பொழுது மின்னல்போல் தோன்றி மறைகிறது. ஆனால் அந்த மானிட ஜாதியினிடத்தில், அதன் கல்வி ஞானம் தொடர்ந்தாற்போல் படிப்படியாகப் பிரகாசிக்கிறது. கடவுள் என்ற பெயருக்கு உயிரைக் கொடுத்தால் அதுவே மானிட சமுதாயம் என்ற வார்த்தையாகிறது. மானிட சமுதாயத்தினிடம் கடவுள்தன்மை இருப்பதனால்தான் அது பயனுடையதாக விளங்கு கிறது. அந்தக் கடவுள் தன்மையானது சில சமயங்களில் தனிப்பட்ட மனிதர்களின் மூலமாகவும், வேறு சில சமயங்களில் ஒரு ஜாதி யினரின் மூலமாகவும் யுகத்திற்கு யுகம் தூய்மையாகவும், கிரியா சக்தியோடு கூடியதாகவும் மானிட சமுதாயத்தினிடம் பிரதி பலித்துக் காட்டுகிறது. உழைப்புக்குமேல் உழைப்பாக உழைத்து, நம்பிக்கைக்குமேல் நம்பிக்கைகொண்டு, இங்ஙனம் மெது மெது வாகவே மானிட சமுதாயமானது, தனது சொந்த வாழ்வை, தனது லட்சியத்தை, கடவுளை, கடவுள் சட்டத்தைத் தெளிவாகப் பார்க்கத் தொடங்குகிறது. மானிட சமுதாயத்தினிடையே கடவுள் அடிக்கடி அவதரிக் கிறார். கடவுள் எப்படி ஒருவரோ, அப்படியே அவருடைய சட்டமும் ஒன்று. நமது முந்திய தலைமுறையினரின் அறிவு நிறைந்த அநுபவமானது சேரச் சேரத்தான் உலகத்திலேயுள்ள பல ஜாதி யினரும், பல ஜனங்களும், பல மனிதர்களும் நெருங்கிப் பழகப் பழகத் தான், கடவுள் சட்டத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு வரியையும் தெரிந்துகொள் கிறோம். ஒரு மனிதன், ஒரு ஜாதி, ஒரு நூற்றாண்டுமட்டும், கடவுள் சட்டத்தைப் பூரணமாகக் கண்டுபிடித்துவிட்டதென்று சொல்ல முடியாது. என்னென்ன சக்திகள் சேர்ந்து மனித சுபாவமாயமைகிறதோ அந்தச் சக்திகள் யாவும் அபவிருத்தியடைந்து, செயலாகப் பரிணமித்து, பின்னர் மானிட சமுதாயத்தினிடம் ஐக்கியப்பட்டுப் போகிற காலத்தில்தான், அந்த மானிட சமுதாயம் பூராவும் சேர்ந்து, தரும சட்டம் முழு வதையும், மானிட சமுதாயத்தின் வாழ்க்கை நியதி முழுவதையும் கண்டுபிடிக்க முடியும். மானிட சமுதாயத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினர், கல்வியறிவில் அதிகமான முன்னேற்றமடைந்திருக் கின்றனரோ அந்தப் பிரிவினர், கடவுள் சட்டத்தின் எந்தப் பகுதியை நாம் தேடிக்கொண்டிருக் கிறோமோ அந்தப் பகுதியை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றனர். மானிட சமுதாயத்தின் சரித்திரத்தில் கடவுளின் ஏற்பாடு இன்னதென்பதை நாம் படிக்கிறோம். அத னுடைய தேவைகளில் நமது கடமைகள் இருக்கின்றன வென்பதை உணர்கிறோம். இந்தத் தேவைகளுக்குத் தகுந்தாற் போலவே கடமை களும் மாறுதலடைகின்றன; அல்லது புதிதாகச் சிருஷ்டிக்கப்படு கின்றன. கடவுளும் கால தேவதையும் சேர்ந்து எந்த அளவுக்கு மானிட சமுதாயத்தைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார்களோ அந்த அளவுக்கு அதனை முன்னேற்றுவிக்கிற விஷயத்திலும் படிப்பிக்கிற விஷயத்திலும் அதனோடு ஒத்துழைக்க வேண்டுவது நமது முதற் கடமையாகும். ஆதலின் கடவுள் சட்டத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உங்களுடைய மனச்சாட்சியைப் பரிசோதனை செய்து கொள்வதோடு மட்டுமல்ல, மானிட சமுதாயத்தின் மனச் சாட்சியையும் அதாவது அதனுடைய பொதுப்படையான நம்பிக்கையையும் தெரிந்து கொள்ள வேண்டும். மானிட சமுதாயத் தின் கல்விப்பயிற்சியும், உங்களுடைய கல்விப் பயிற்சியும் எப்படி வளர்ச்சியடைகிறதோ அதைப்போலவே தருமமும் வளர்ச்சி யடைகிறது. கிறிதவ மதம் தோன்று வதற்கு முன்னர் இருந்த தரும நியாயங்கள், கிறிதவ மதம் தோன்றிய பிறகு மாறிவிட்டன. நாம் இந்த நூற்றாண்டில் எதை தருமமென்று கொண்டிருக்கிறோமோ, அது, பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேறுபட்டதாக இருந்தது. இப்பொழுது உங்களுடைய எஜமானர்கள், மற்ற வகுப்பாரிடமிருந்து உங்களைப் பிரித்து வைத்தும், மற்றவர்களோடு உங்களைக் கலக்கவிடாமல் செய்தும், பத்திரிகைகள் மூலம் உங்களுக்கு எல்லாச் செய்திகளும் எட்டவிடாமல் பண்ணியும் உங்களிடமிருந்து உங்களுடைய கடமைகளை மறைத்து வைக்கப் பார்க்கிறார்கள். அப்படியே மானிட சமுதாயத்தின் தேவைகளை யும் மறைத்துவைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இவற்றை, அதாவது உங்கள் கடமைகளையும் மானிட சமுதாயத்தின் தேவைகளையும், தெரிந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு விரைவில் ஏற்படும். எந்த நாடுகளில் ஜனங் களுடைய அபிப்பிராயங்கள் தாராளமாக வெளியிடப்படுகின்றனவோ அந்த நாடுகளில் தினசரி நடைபெறும் சம்பங்களின் மூலமாக, மானிட சமுதாயத்தின் தேவைகள் இன்னவையென்று உக்கிரத்துடனும் அரை குறையாக வும் தெரிவிக்கப்படுகின்றன. அடிமை நாடுகளில் வசிக்கும் சகோதரர் களே! இந்தச் சம்பவங்களைத் தெரிந்து கொள்ளவேண்டா மென்று உங்களை யார் தடுப்பது? இத்தாலியர்களிற் பலர் வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்கிறார்கள். அப்படியிருக்க, ஐரோப்பா கண்டத்திலே நடைபெறும் சம்பவங்களை, இத்தலியில் வசிக்கும் லட்சக்கணக்கான ஜனங்கள் தெரிந்து கொள்ளக்கூடாதென்று சந்தேக மனப்பான்மையுடன் கூடிய எந்தக் கொடுங்கோலாட்சி தடுக்க முடியும்? இத்தலியின் ஏறக்குறைய எல்லாப் பாகங்களிலும் பொதுஜன சங்கங்கள் நடைபெறக்கூடாதென்று தடுக்கப்பட்டிருக்க வில்லை. உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆவல் கொண் டிருந்ததன் காரணமாகத் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிற பலர் ஆங்காங்கு வசிக்கிறார்கள். அவர்கள் சத்தியப் பிரசாரகர்கள். உங்கள்மீது கொண்ட அன்பினாலும், தங்களுடைய படிப்பினா லும், தேசப்பிரஷ்ட காலத்தில் தங்களுக்கேற்பட்ட அநுபவத்தி னாலும் அவர்கள், மானிட சமுதாயத்தின் பரம்பரையைப்பற்றியும் அதன் ஆவல்களைப் பற்றியும் உங்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டார்களா? அவர்கள் எழுதுவதைப் படியுங்கள். அவர்கள் மேலும் மேலும் தொடர்ந்து வேலை செய்வதற்கு உதவுங்கள். போதிய கல்வி ஞானம் இல்லாமல், உங்களுடைய கடமைகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது. அந்தக் கல்வி ஞானத்தை உங்களுக்கு அளிக்கச் சமுதாயம் மறுக்குமானால், அந்தச் சமுதாயத் திலே நடைபெறுகிற ஒவ்வொரு குற்றத்திற்கும் அந்தச் சமுதாயம் பொறுப்பாளி, நீங்களல்ல. கல்விப் பயிற்சி பெற உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டு அதனை நீங்கள் புறக்கணிக்கிறபோது தான் உங்கள் பொறுப்பு ஆரம்பமாகின்றது. எந்தச் சமுதாயமானது உங்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்திருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை மாற்றியமைக்க உங்களுக்குப் போதிய சாதனங்கள் அளிக்கப்பட்டு அவற்றை உபயோகியாமல் இருந்துவிட்டீர்களா னால், அப்பொழுதிருந்து தான் உங்கள் பொறுப்பு ஆரம்பமா கின்றது. அறியாதவர்களாயிருப்பதனால் நீங்கள் குற்றவாளிகளாக மாட்டீர்கள். ஆனால் அறியாமைக்கே உங்களை ஒப்புக்கொடுத்து விடுகிறீர்களே அப்பொழுதுதான் நீங்கள் குற்றவாளி களாகிறீர்கள். கடவுள் உங்களுக்குச் சில சக்திகளைக் கொடுத்திருக்கிறார். ஏன்? அவைகளை அபிவிருத்தி செய்து உபயோகப்படுத்த. அப்படியிருக்க அந்தச் சக்திகளை உங்களுடைய ஆத்மாவுக்குள் தூங்கச் செய்கிறீர் களே அப்பொழுதுதான் நீங்கள் குற்றவாளிகளாகிறீர்கள். சத்தி யத்தை நேசிக்கிற சக்தியைமட்டும் கடவுள் உங்களுக்கு அருள வில்லை. அதனை அநுஷ்டிப்பதற்கான சாதனங்களையும் அளித் திருக்கிறார். ஆனால் அந்தச் சத்தியத்தைத் தேடுகிற முயற்சியில் நீங்கள் செல்லாமல், அது நம்மாலாகாத காரியமென்று கைசோர விட்டுவிட்டு, அதிகாரிகள் எதை எதை உண்மையென்று சொல்கி றார்களோ அதையெல்லாம், அந்த அதிகாரிகளுக்குத் தங்களை விற்றுவிட்ட புரோகிதர்கள் எதை எதை உண்மையென்று சொல்கி றார்களோ அதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறீர்களே அப்பொழுது தான் நீங்கள் குற்றவாளிகளாகிறீர்கள். நம்மெல்லோருக்கும் தந்தையாகவும், மானிட சமுதாயத்தின் குருவாகவும் இருக்கிற கடவுள், தமது சட்டத்தை இடப்பொருத்தம், காலப்பொருத்தம் இவற்றை அநுசரித்து வெளிப்படுத்துகிறார். மானிட சமுதாயத்தின் பரம்பரையைப் பரிசீலனைச் செய்யுங்கள். ஒரு நூற்றாண்டு அல்லது குறிப்பிட்ட ஒரு கொள்கையுடைய அறிஞர் கூட்டம் என்னும் சிறிய வட்டாரங்களிலே இருந்து கொண்டு இந்தப் பரிசீலனையைச் செய்யாதீர்கள். கடந்துபோன பல நூற்றாண்டுகளிலே நடைபெற்றிருக்கிற சம்பவங்களை யநுசரித்தும், பல மகான்களின் வாழ்க்கையை யொட்டியும் இந்தப் பரிசீலனையைச் செய்யுங்கள். உங்களுடைய மனச்சாட்சியும் மானிட சமுதாயத்தின் மனச்சாட்சியும் ஒன்றுபட்டுப்போகுமானால் அப்பொழுது நீங்கள் சத்தியத்தை தெரிந்துகொண்டு விட்டீர்க ளென்பது நிச்சயம்; கடவுள் சட்டத்தின் ஒரு வரியை அறிந்து கொண்டுவிட்டீர்களென்பது நிச்சயம். கடவுள் சட்டத்தைப் பூலோகத்தில் வியாக்கியானஞ் செய்வதற்கென்று நியமிக்கப் பட்டிருக்கும் ஒரே பிரதிநிதியான மானிட சமுதாயத்தினிடம் நாம் நம்பிக்கை கொள்கிறோம். இந்த மானிட சமுதாயத்தின் அபிப்பிராயம், நம்முடைய அபிப்பிராயத்தோடு ஒன்றுபட்டுப் போவதினின்றுமே நமது கடமைகள் இன்னவையென்று தெரிந்து கொள்கிறோம். அந்தக் கடமைகளையே இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். 4 மானிட சமுதாயம் உங்களுடைய முதற்கடமைகள் - காலத்திலேயல்ல, முக்கியத் துவத்திலே முதன்மையாயிருப்பன - மானிட சமுதாயத்திற்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகள். ஏனென்றால், இந்தக் கடமைகளை நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டால் மற்றக் கடமைகளை நீங்கள் அரை குறையாகத்தான் நிறைவேற்ற முடியும். ஒரு ராஜ்யத்தின் பிரஜைகள் என்ற ஹோதாவிலும், பெற்றோர்களுடைய பிள்ளைகள் என்ற தோரணையிலும், பத்தினிமார்களின் புருஷர்கள் என்ற தன்மையிலும், குழந்தைகளின் தந்தையர் என்ற முறையிலும் உங்களுக்குக் கடமைகள் பல இருக்கின்றன. அந்தக் கடமைகள் புனிதமானவை; மீற முடியாதவை. இவைகளைப்பற்றி இப்பொழுது உங்களுக்கு விதரித்துச் சொல்கிறேன். ஆனால் இந்தக் கடமை களைப் புனிதமாக்குவது எது? மீறமுடியாமற் செய்வது எது? மனித னாக இருந்து நீங்கள் செய்கிற கடமைதான். குழந்தைகளுக்குத் தகப்பன்மாராக நீங்கள் ஏன் இருக்கிறீர்களென்றால், கடவுள் சட்டத்தைப் போற்றி அதனை விவகரித்துக் காட்டும்பொருட்டு மனிதர்களுக்குக் கல்வி ஞானத்தைப் புகட்டுவதற்குவதற்குத் தான். ஒரு ராஜ்யத்தின் பிரஜைகளாகவும், ஒரு தேசத்திற்குரியவர்களாகவும் நீங்கள் ஏன் இருக்கிறீர்களென்றால், வரம்பிட்ட ஒரு வட்டாரத்தில், ஏற்கனவே உங்களோடு பேச்சிலும், மனப்போக்கிலும், பழக்க வழக்கங்களிலும் ஒன்றுபட்டிருக்கிற ஜனசமூகத்தின் மத்தியில் இருந்துகொண்டு, எல்லா மனிதர்களுடைய நன்மையை நாடியும் - அவர்கள் இப்பொழுது எப்படி இருந்தாலும் - இனி எப்படியிருந் தாலும் - உழைக்கும்பொருட்டுத்தான். இதனை யாரும் தனிப்பட இருந்து செய்ய முடியாது. ஏனென்றால், தனிப்பட்ட மனிதன், பலஹீனனாயிருக்கிறான்; தனது சகோதர ஜனங்களடங்கிய கூட்டத் தில் தனது தனித்துவத்தை இழந்துவிடுகிறான். குடும்பத்திற்கும் தேசத்திற்கும் செய்யவேண்டிய கடமைகளையே எல்லையாகக் கொண்டு உங்களுக்குத் தருமோபதேசஞ் செய்கிறார்களே அவர்கள், குறுகிய மனப்பான்மையைக் கொடுக்கிற உபதேசத்தையே உங்களுக்குச் செய்கிறார்கள். அதனால் மற்றவர்களுக்கும் கெடுதல்; உங்களுக்கும் கெடுதல் குடும்பமும் தேசமும், நீங்கள் மேலேறிச் செல்வதற்கான இரண்டுபடிகள், ஆனால் அவைகளின்மீதே நீங்கள் தங்கிவிடக்கூடாது. நீங்கள் மனிதர்கள் அதாவது, பகுத்தறிவுள்ள, சங்கமாகச் சேர்ந்து வாழ வேண்டுமென்ற இச்சையுள்ள பிராணிகள்; சங்கமாகச் சேர்ந்து வாழ்வதன் மூலமாகத்தான் முன்னேற்றமடையக் கூடிய வர்கள். இந்த முன்னேற்றத்திற்கு யாரும் எல்லை வகுக்க முடியாது. மானிட சமுதாயத்திற்களிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கைச் சட்ட மென்பதைப்பற்றி இப்பொழுது நமக்கு இவ்வளவுதான் தெரியும். இந்த விசேஷத் தன்மைகள்தான் மனித சுபாவமாயமைகின்றன. இவைதான், உங்களைச் சுற்றியுள்ள ஜீவராசிகளிடமிருந்து உங்களைப் பிரித்துக் காட்டுகின்றன. உங்கள் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் விதைகள் போல்வன இவை. இவற்றிலிருந்து பலனைக் காண வேண்டுவது உங்கள் பொறுப்பு. ஆதலின், உங்கள் சுபாவத்திலேயே யமைந்திருக்கும் இந்தச் சக்திகளைப் பிரயோகத் திற்குக் கொண்டுவந்து காட்டுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் உங்கள் வாழ் நாட்களைச் செலவழிக்க வேண்டும். இந்தச் சக்தி களில் ஏதேனுமொன்றை பூராவாகவோ அல்லது பாகம் பாக மாகவோ நீங்கள் அடக்கி வைப்பீர்களாயின் அல்லது அடக்கி விடும்படி அநுமதிப்பீர்களாயின் மனித நிலையிலிருந்து மிருக நிலைக்கு இழிந்துவிட்டவர்களாகிறீர்கள்; உங்களுடைய வாழ்க்கை நியதியையும், கடவுள் சட்டத்தையும் மீறினவர்களாகிறீர்கள். இப்படியே பிறரிடத்திலுள்ள மனித சக்திகளை அடக்கி வைத் தாலும் நீங்கள் மிருக நிலையையடையகிறீர்கள். கடவுள் சட்டப் படி நீங்கள் நடந்தால் மட்டும் போதாது; மற்றவர்களையும் நடத்திச் செல்ல வேண்டும்; பூலோக முழுவதிலும் இந்தச் சட்டம் நடை முறையிலிருக்குமாறு நீங்கள் பார்க்கவேண்டும். கடவுளால் இந்த உலகத்திற்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் இரண்டு. அவையே பூரணத்துவம் பெறவேண்டுமென்ற எண்ணம், அன்பு என்பன வாகும். இந்த இரண்டும் பூரண ஒளியோடு பிரகாசிக்க வேண்டு மென்பதும், எல்லோராலும் போற்றப்பட வேண்டு மென்பதும், எல்லோரிடத்திலும் அதிகமாக விகசித்துக் காட்ட வேண்டு மென் பதும் அவருடய திருநோக்கம். பூலோகத்தில் நீங்கள் நடத்திவரும் தனிப்பட்ட வாழ்க்கையானது அதன் குறுகிய காலத்திலும் குறைந்த திறமைக்குட்பட்டும் இருப்பதனால் அதில் மேற்படி பூரணத்துவம் பெறவேண்டுமென்ற எண்ணமும் அன்பும் அரை குறையாகவும் விட்டு விட்டும் விகசித்துக் காட்டுகின்றன. தலைமுறை தலைமுறை யாகத் தொடர்ந்துவரும் மானிட சமுதாயந்தான், அந்தத் தெய்வத் திருநோக்கத்தை மெது மெதுவாக விகசித்துக்காட்டுந் தன்மையது; அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரக்கூடியது; புகழோடு பிரகாசிக்க வைக்கும் ஆற்றலுடையது. கடவுள் உங்களுக்கு ஜீவியத்தை அளித் திருப்பது எதற்காகவென்றால் அதனை நீங்கள் மானிட சமுதாயத் தின் நன்மைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். உங்களிடத்தில் தனிப்பட்டு விளங்கும் சக்தியை, உங்கள் சகோதர மனிதர்களின் சக்திகளை அபிவிருத்தி செய்வதற்கு உபயோகப் படுத்த வேண்டும். உங்களுடைய உழைப்பை உலகத்திலே நடை பெற்றுக் கொண்டு வரும் முன்னேற்ற வேலைகளின் ஒரு பகுதிக் கேனும், தலை முறை தலைமுறையாகப் பல அறிஞர்கள் சத்தியத்தைக் கண்டுபிடிப் பதற்காக இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டு வந்திருக்கிறார்களே, அந்த முயற்சியின் ஓர் அமிசத்திற்கேனும் காணிக்கையாக அளிக்க வேண்டும். நீங்கள் கல்வியறிவு பெற வேண்டும். அதைப் போல் மற்றவர் களுக்கும் அந்தக் கல்வியறிவைப் புகட்ட வேண்டும். உங்களை நீங்கள் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அதைப்போல் மற்றவர்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும். கடவுள் உங்களிடத்திலிருக்கிறார். இதில் சந்தேகம் வேண்டாம். உங்களிடத்திலிருப்பது போலவே இவ்வுலகத்தில் குடி கொண்டிருக்கும் எல்லா மக்களிடத்திலும் வீற்றிருகிறார். இதைப் போலவே, சென்ற கால சந்ததியாருடைய வாழ்வில் வீற்றிருந்தார். நிகழ்கால சந்ததியாருடைய வாழ்வில் வீற்றிருக்கிறார்; எதிர் கால சந்ததியாருடைய வாழ்விலும் வீற்றிருப்பார். இந்தச் சந்ததியார், கடவுளைப் பற்றி மானிட சமுதாயத்தின் கருத்தென்னவோ அதனை, கடவுளின் திருச்சட்டமென்னவோ அதனை, கடவுளின் திருச் சட்டமென்னவோ அதனை, மனிதன் கடமைகளென்னவோ அவை களைப் படிப்படியாக விருத்தி செய்து கொண்டு வந்திருக்கின்றனர்; இனியும் விருத்தி செய்து கொண்டு வருவர். சர்வ வியாபியாயுள்ள கடவுளை நீங்கள் வணங்க வேண்டும்;புகழ வேண்டும். உலகம், அவருடைய திருக்கோயில். இந்தத் திருக்கோயில் அசுத்தப்படுத்தப் படுமானால் அதனை நாம் தடுக்க வேண்டும். உங்களை நீங்கள் பரிசுத்தர்கள் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் பயனில்லை. உலகத்தினின்று ஒதுங்கி வாழ்வதன் மூலம் உங்களுடைய பரிசுத் தத்தைக் காப்பாற்ற முயன்றாலும், உங்களுக்கு இரண்டடி தூரத்தில் ஒழுக்க ஹீனங்கள் இருந்து கொண்டிருக்க அவற்றை நீங்கள் ஒழிக்க முற்படாவிட்டால், உங்கள் கடமையினின்று நீங்கள் பிறழ்ந்தவர்களா கிறீர்கள். உங்கள் இருதயத்திற்குள் நீங்கள் சத்தியத்திற்கு வணக்கஞ் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. நம்மெல்லோருக்கும் தாயாயிருக்கப் பட்ட பூமாதேவியின் ஓரிடத்தில், அதாவது பூலோகத்தின் ஏதோ ஒரு மூலையில், உங்களுடைய சகோதரர்கள் தீமைக்காட்பட்டிருக்கிற போது, அதற்கு உங்களால் முடிந்த வரை பரிகாரங் காணா விட்டால், அந்த தீமையை விலக்காவிட்டால், உங்கள் கடமையைச் செய்யத் தவறியவர் களாகிறீர்கள். உங்க ளுடைய சகோதரர்கள் தீமைக்காட்பட்டிருக்கிறார் களென்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? உங்கள் சகோதரர் களுடைய அழியாத ஆத்மாவில் கொலு வீற்றிருக்கும் கடவுள் களங்கப் படுத்தப்படுகிறாரென்பதுவே அர்த்தம். கடவுளின் திருவுளம் என்ன வென்றால், அவருடைய சட்டத்தைப் பின் பற்றுவதன் மூலம் அவரைத் தொழவேண்டுமென்பதாகும். ஆனால் உங்களைச் சுற்றி என்ன காண்கிறீர்கள்? கடவுளுடைய சட்டம் தவறாக வியாக்கி யானஞ் செய்யப் படுகிறது; மீறப்படுகிறது; மறுக்கப்படுகிறது. கடவுள், தமது திருச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை மனிதர் களிடத்தில் ஒப்படைத் திருக்கிறார். ஆனால் லட்சக்கணக்கான மக்கள், அந்தப் பொறுப்பை நிறை வேற்றாமல் மனித சுபாவத்திற்கு விரோதமாக நடக்கிறார்கள். நீங்கள், உங்கள் பொறுப்பை நிறைவேற்றாமல் ஆதிகர்கள் என்று தைரியமாகச் சொல்லிக் கொள்வீர்களா? கிரேக்கர்களோ, போலிஷ்காரர்களோ, ருஷ்யாவிலுள்ள ஸர்க்கேஷ்யா பிரதேச வாசிகளோ,1 தங்கள் நாட்டிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் சண்டை போடுகிறார்கள்; வெற்றியடைகி றார்கள்; அல்லது இறந்துபோகிறார்கள். அந்தச் சண்டைகளைக் கேட்ட மாத்திரத்தில் உங்களுடைய இருதயம் படபடத்து அடித்துக் கொள்கிறது; வெற்றிகளைக் கேட்டு உங்கள் மனம் சந்தோஷத்தி னால் பொங்கிப் போகிறது; தோல்விகளைக் கேட்டு உங்கள் உள்ளம் சோர்வடைந்து போகிறது. எங்கணும் குடிகொண்டிருக்கும் மௌனத்தின் மத்தியில், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் - அவன் உங்கள் நாட்டானாகவாவது இருக்கலாம்; அல்லது அந்நிய நாட்டானாகவாவது இருக்கலாம் - தான் உண்மை யென்று நம்புகிற சில எண்ணங்களை வெளியிடுகிறான். அதற்காக, அந்த எண்ணங்களை வெளியிட்டதற்காக, அவன் அநேக துன்பங் களை அநுபவிக்கிறான்; விலங்கிடப்படுகிறான்; தூக்குமேடை யிலும் ஏறிவிடுகிறான். ஆயினும் அவன், தன் எண்ணங் களை விடாமல் பின்பற்றிக்கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனை ஏன் மகானென்றும், வீரனென்றும் கௌரவிக்கிறீர்கள்? அவனுடைய ஞாபகத்திற்கு ஏன் மரியாதை செலுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளை களுக்கும் அந்த ஞாபகத்திற்கு மரியாதை செலுத்துமாறு ஏன் சொல்லிக்கொடுக்கிறீர்கள்? கிரேக்க இதிகாசத்திலுள்ள தேசபக்தி ததும்பும் பல வீரக் கதைகளை, நீங்கள் உங்களுடைய மூதாதையர் களின் கதைகளை எவ்வளவு ஆவலுடன் படிப்பீர்களோ அவ்வளவு ஆவலுடன் ஏன் படிக்கிறீர்கள்? அந்தக் கதைகளை ஒருவித பெருமை யோடு உங்கள் குழந்தைகளுக்கு ஏன் சொல்கிறீர்கள்? கிரேக்க தேசத்து இந்த வீரச் செயல்கள் இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்னே நடைபெற்றவை; வேறொரு நாகரிக காலத்திலே நடை பெற்றவை. தன் கொள்கைக்காக வீர மரண மெய்திய மகான் என்று யாராரை நீங்கள் போற்றுகிறீர்களோ அவர்கள், உங்களினின்றும் மாறுபட்ட ஓர் அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததற்காக இறந்து போயிருக்கலாம். எப்படியும், அவர்கள், தாங்களே வலிய வர வழைத்துக்கொண்ட மரணத்தினால், தங்களுடைய இந்நிலவுலக வாழ்வைச் சுருக்கிக் கொண்டுவிட்டார்கள். எந்த ஜனங் களுடைய வெற்றியையும், தோல்வியையுங்கூட நீங்கள் பாராட்டுகிறீர் களோ அந்த ஜனங்கள் உங்களினின்றும் அந்நியர்களாயிருக்கலாம்; உங்க ளுக்குத் தெரியாதவர்களாயிருக்கலாம்; வேறு பாஷை பேசுகிறவர் களாயிருக்கலாம்; உங்களுக்குச் சம்பந்தப்படாத பழக்கவழக்க முடையவர்களாயிருக்கலாம்; அவர்கள் சுல்தானாலோ, பவேரிய மன்னராலோ, ருஷ்ய ஜாரினாலோ, ஜனப் பிரதிநிதித்துவ முறையி னாலோ ஆளப்படுகிறவர்களாயிருக்கலாம். எப்படி இருந்தால்தா னென்ன? உங்களுடைய இதயத்திலிருந்து ஒரு குரல் எழுந்திருக்க வில்லையா? இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னிருந்த அந்த ஜனங்கள், இன்று நம்மினின்றும் தொலைதூரத்திலிருந்துகொண்டு சண்டை செய்கிறார்களே அந்த ஜனங்கள், தங்களுடைய எண்ணங் களுக்காக வீர மரணமெய்திய மகான்கள் - அந்த எண்ணங்களுக் காக நீங்கள் உயிரை விடமாட்டீர்களல்லவா? - அனைவரும் உங்க ளுடைய சகோதரர்கள். பிறப்பினாலும் சுபாவத்தினாலும் மட்டு மல்ல; உழைப்பிலும் லட்சியத்திலுங்கூட சகோதரர்கள் என்று அந்தக் குரல் பேசவில்லையா? புராதன காலத்திலிருந்து அந்தக் கிரேக்கர்கள் மறைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் செய்த காரியங்கள் மறைந்து போக வில்லை. அவை மறையாமல் திரமாக இருப்பதனால்தான், இப்பொழுது நீங்கள் அறிவு அபிவிருத்தி யிலும் சீல சுபாவத்திலும் எந்த நிலையை யடைந்திருக்கிறீர்களோ அந்த உயர் நிலையையடைந்திருக்கிறீர்கள். தேசீய சுதந்திரம் என்கிற எந்த எண்ணத்திற்காக தூர தேசங்களிலுள்ள ஜனங்கள் தங்கள் ரத்தத்தையே காணிக்கையாகச் செலுத்தி வருகிறார் களோ, அந்தச் சுதந்திர எண்ணத்திற்குத்தான் இப்பொழுது நீங்கள் போராடுகி றீர்கள். சத்தியம் என்று தான் எதை நம்புகிறானோ அதற்காக, மனிதன், எல்லாவற்றையும் தியாகஞ் செய்துவிட வேண்டும், அவசிய மானால் உயிரையும் அர்ப்பணஞ் செய்துவிட வேண்டுமென்ற கருத்தை தங்கள் மரணத்தின்மூலம் முழக்கஞ் செய்து காட்டி னார்கள் மகான்கள். ஆனால், இவர்கள், இவர்களைப் போல் தங்கள் நம்பிக்கையைத் தங்கள் ரத்தத்தினால் முத்திரையிடுகிற வர்கள், இங்ஙனம் மரணவடைவதன் காரணமாக இந்நிலவுலகில் தாங்கள் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடையாமல் தங்கள் வாழ்நாளைக் கத்தரித்துக் கொண்டுவிடுகிறார்களென்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அஃது அவ்வளவு முக்கிய விஷயமல்ல. கடவுள் இவர்களுக்கு வேறு இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார். இவர்கள் மூலமாக மானிட சமுதாயம் விருத்தியடைகிறதே அது தான் முக்கியம். உங்களுடைய வருங்கால சந்ததியார்; இப்பொழுது நீங்கள் நடத்துகிற போராட்டங்கள், செய்கிற தியாகங்கள் ஆகிய வற்றினின்று பாடங் கற்றுக்கொண்டு, கடவுள் சட்டத்தை அறிந்து கொள்கிற விஷயத்திலும் சத்தியத்தைப் போற்றுகிற வகையிலும் உங்களைக் காட்டிலும் அதிகமான முன்னேற்றத்தையடைய வேண்டும்; சக்தி மிகுந்தவர்களாக வளரவேண்டும். மனித சுபாவ மானது, ஏற்கனவே நடைபெற்றிருக்கிற பல உதாரணங்களை அரணாகக்கொண்டு சீர்திருத்த வேண்டும்; பூலோகத்தில் கடவுளின் இச்சை யென்ன வென்பதை நன்றாக உணரவேண்டும். இவை யெல்லாந்தான் முக்கியம். மனித சுபாவம் எங்கே சீர்திருந்தினாலுஞ் சரி, புதிய உண்மை எங்கே வெற்றியடைந்தாலுஞ் சரி, கல்வி, வளர்ச்சி, சீலம் முதலிய விஷயங்களில் எங்கே ஓர் அடி முன்னேற்றம் ஏற்பட்டாலுஞ் சரி, அந்தச் சீர்திருத்தம், அந்த வெற்றி, அந்த முன்னேற்றம் ஆகிய யாவும் மானிட சமுதாயமனைத்திற்கும் இப்பொழுதேனும் எப்பொழுதேனும் நல்ல பலனைத் தரும். ஒரே முயற்சியில் வெற்றியடைவதற்காகப் பல பகுதி களாகப் பிரிக்கப் பட்டுப் பல வழிகளில் சென்றுகொண்டிருக்கும் சேனா வீரர்கள் நீங்கள். தற்பொழுது நீங்கள் உங்களுக்கருகாமையிலுள்ள தலைவர் களையே பார்க்கிறீர்கள். நீங்கள் அணிந்துகொண்டிருக்கிற பல்வேறு உடுப்புகள், உங்களுக்குப் போதிக்கப்படுகிற பல்வேறு ராணுவ பாஷைகள், யுத்தஞ் செய்கிற படைகளுக்கிடையிலேயுள்ள தொலைவு, ஒரு படையிலிருந்து மற்றொரு படையை மறைத்துக் கொண்டிருக்கிற மலைகள் முதலியனவெல்லாம் சேர்ந்து, அனைத் திற்கும் மேலான உண்மையை மறக்கும்படி உங்களைச் செய்துவிடு கின்றன. உங்களுடைய கவனமனைத்தையும் சமீபத்திலேயுள்ள லட்சியத்திலேயே கொண்டுபோய் நிறுத்துகின்றன. ஆனால் எல்லா வற்றிற்கும் மேலாக இருந்து பார்க்கிற, எல்லா இயக்கங்களையும் நடத்தி வைக்கிற ஒருவர் இருக்கிறார். அந்தக் கடவுள் ஒருவருக்குத் தான் போராட்டத்தின் ரகசியங்கள் தெரியும். உங்களெல்லோரை யும் ஒரு கூட்டமாக ஒரு கொடியின்கீழ்ச் சேர்த்து வைக்கும் ஆற்றல் அவருக்குத் தான் உண்டு. கடவுளின் இந்த மகத்தான சக்தியிலே நமக்கேற்பட்டுள்ள நம்பிக்கையானது, நமது ஆத்மாவில் ஓர் அசைவை உண்டு பண்ணு கிறது. இனி ஏற்படப்போகிற யுகத்தில் நாம் எதை தருமமென்று வரையறுக்கப் போகிறோமோ அதற்கு அதிவாரமாக இருக்கப் போவது இந்த நம்பிக்கை தான். இதற்கும், அதாவது இந்த நம்பிக்கைக்கும், நமது முன்னோர்கள் எந்த நம்பிக்கையை தருமத் திற்கு அதிவாரமாகக் கொண்டிருந்தார்களோ அந்த நம்பிக்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்! தெய்விக ஆட்சி என்பதைப் பற்றி நாம் கொண்டிருக்கிற எண்ணத்திற்கும், கடமை என்பதைப் பற்றி நாம் கொண்டிருக்கிற எண்ணத்திற்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது! ஆதி மனிதர்கள், கடவுள் இருக்கிறாரென்பதை உணர்ந்தார்கள்; ஆனால் அவரையறியவில்லை; அவருடைய திருச் சட்டத்தின் மூலமாகக் கூட அவரைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வில்லை. அவர்கள், கடவுளை, வல்லமை பொருந்தியவர் என்றுதான் கருதினார்களே தவிர, அன்புமயமானவர் என்று கருத வில்லை. அவர்கள், தங்களுக்கும் கடவுளுக்குமுள்ள சம்பந்தத்தைப் பற்றி குழப்பமானதோர் அபிப்பிராயத்தைத்தான் கொண்டிருந்தார் களே தவிர வேறொன்று மில்லை. அவர்கள், ஐம்பொறிகளால் அறியக்கூடிய வதுக்களினின்று தங்களை அப்புறப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாய், தங்கள் கண் களுக்கு முன்னே இடி விழுந்து பட்டுப்போன மரத்திலும், தாங்கள் எந்த மலைப் பாறை யின் கீழ் குடிசை கட்டிக் கொண்டார்களோ அந்தக் கற்பாறை யிலும், தங்கள் கண்களுக்கு முதன் முதலாகத் தென்பட்ட மிருகத்தி னிடத்திலும் கடவுள் இருக்கிறாரென்று கொண்டார்கள். இதனையே இயற்கைப் பொருள் வணக்கம் என்று மத சரித்திரக்காரர்கள் கூறுகிறார்கள், அப்பொழுது ஜனங்களுக்கு, குடும்பத்தைத் தவிர, வேறு வெளித் தொடர்பு இல்லாமலிருந்தது. இந்தக் குடும்பத்திற்குப் புறம்பானவர்கள் அந்நியர்களென்றும், அநேகமாகச் சத்துருக்க ளென்றும் கருதப்பட்டார்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தினை யும் போஷித்துக் காப்பாற்றுவதுதான், தருமத்தின் அதிவார மென்று அப்பொழுது கருதப்பட்டது. இதற்குப் பின்னர், கடவுளைப் பற்றிய எண்ணம் விரிவடைந்தது. மனிதன், தனது ஐம்பொறிகளினால் அநுபவிக்கப்படுகிற விஷயங்களிலிருந்து அப்பாற் சென்று, மெது மெதுவாக, சங்கோஜத்துடன், கடவுளுக்குக் குணம், உருவம் முதலியன உண்டு என்கிற பொதுப் படையான தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டான். கடவுள், குடும்பத்தை மட்டும் ரட்சிக்கிறவராகக் கருதப்படாமல், பல குடும்பங்களை, பல நகரங்களை, பல ஜாதியினரை ரட்சிக்கிறவராகக் கருதப்பட்டார். இந்தக் காலத்தில் தான், பல கடவுளர்கள் உண்டு என்ற கொள்கை ஏற்பட்டது. இதே பிரகாரம், தருமத்தின் எல்லையும் விசால மடைந்தது. குடும்ப சம்ரட்சணை என்கிற கடமையைத் தவிர்த்து வேறு பல கடமைகள் இருக்கின்றன வென்பதை மனிதர்கள் ஒப்புக் கொண்டு, குல அபிவிருத்திக்காகவும் ஜாதி அபிவிருத்திக்காகவும் உழைத்தார்கள். ஆயினும் மானிட சமுதாயம் என்கிற விசால நோக்கம் இவர்களுக்கு ஏற்படவில்லை. ஒவ்வொரு ஜாதியும், தங்களுக்குப் புறம்பானவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக்கொண்டு வந்தது; அப்படியே நடத்தி வந்தது; பலாத்காரத் தினாலோ, வேறு உபாயத்தினாலோ, அவர்களை வெற்றி கொள்ள வும் அல்லது அவர்களை அடக்கி ஒடுக்கவும் முயன்றது. ஒவ்வொரு ஜாதியின் மத்தியிலும், அன்னியர்கள் அல்லது காட்டு மிராண்டிகள் லட்சக்கணக்கில் இருந்தார்கள். இவர்கள், அந்த ஜாதியினரின் மதச் சடங்குகளில் கலந்து கொள்ள அநுமதிக்கப்பட வில்லை. இவர் களுடைய சுபாவமே வேறு என்றும், அடிமைகளா யிருக்கவே தகுதியுடையவர்களென்றும் கருதப்பட்டார்கள். கடவுளின் ஒன்றுபட்ட தன்மையை அங்கீகரிக்கிறவர்களுக்குத்தான், மானிட ஜாதியனைத்தும் ஒற்றுமையுடையது என்ற எண்ணம் உண்டாகும். ஆதி காலத்தில் சில மகான்களின் இருதயத்தில் இந்த எண்ணம் உற்பத்தியாயிற்று. மோஸ1 என்ற மகான் இதனைப் பகிரங்கமாக முழக்கஞ் செய்தார். ஆனால், இவர், குறிப்பிட்ட ஒரு ஜாதியார்தான், கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களென்று வரையறுத்து உபதேசஞ் செய்தார். கடவுள் ஒன்றுபட்ட ஒரு சக்தி என்ற எண்ணம், ரோம ஏகாதிபத்தியம் கலைந்து போன பிறகுதான்1 கிறிதவ மதப் பிரசாரத்தின் மூலமாக ஊர்ஜிதமடைந்தது. யேசுநாதர், தமது உபதேசங்களில், பிரிக்க முடியாத இரண்டு உண்மைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதாவது கடவுள் ஒருவரே; எல்லா மனிதர்களும் அவருடைய குமாரர்கள். இந்த இரண்டு உண்மை களும் உபதேசிக்கப்பட்டதன் பயனாக, மக்களின் மனப்போக்கு மாறுதலடைந்தது. தருமமானது, உலகமனைத்திற்கும் விரியுந் தன்மையதென்று அங்கீகரிக்கப்பட்டது. மனிதன், தன் குடும்பத் திற்கும், தன் தேசத்திற்கும் செய்யவேண்டிய கடமைகளுடன் மானிட சமுதாயத்திற்கும் செய்யவேண்டிய கடமை களென்று ஏற்பட்டன. மனிதன், தன்னைப்போல் ஒரு மனிதனை எங்கேனும் கண்டானாகில், அவன் தன் சகோதரன், தன்னைப்போல் அவனுக்கு அழியாத ஆத்மா உண்டு, அவனும் கடவுளை அடைய வேண்டி யவன், அவனிடத்தில் அன்பு கொள்ள வேண்டும், அவனுடைய நம்பிக்கையில் கலந்து கொள்ளவேண்டும், அவனுடைய தேவைக் காலத்தில் அவனுக்கு ஆலோசனை சொல்லவும் உதவி செய்யவும் வேண்டும் என்றெல்லாம் எண்ணத் தொடங்கினான். இதற்குப் பின்னர், யேசுநாதரின் சிஷ்யர்கள், கிறிதவ மதத்தில் அடங்கிய பல அருமையான உண்மைகளை உபதேசருபமாக ஜனங்களுக்குப் போதித்தார்கள். இந்த உபதேசங்களை முற்காலத்தவர் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. மேற்படி சிஷ்யர்களுக்குப் பின்வந்த பரம்பரையினர் இந்த உபதேசங் களைத் திரகாரம் செய்தார்கள். ஒரு சிஷ்யர் உபதேசஞ் செய்தார்:- ஒரே சரீரத்திலே அநேக அவயவங்கள் இருந்து எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இல்லாததுபோலே, அநேகராயிருக்கிற நாம் கிறிதுவுக்குள் ஒரே சரீரமாயிருக்கிறோம். அவனவனைப் பார்த்தாலோ, ஒருவர்க் கொருவர் நாம் அவயவங்களாயிருந்து, நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே பலவித வரங்கள் உள்ளவர்களாய் இருக்கி றோம்.1 இன்னொரு சிஷ்யர் கூறுகிறார்:- ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாம்.2 இந்த உபதேசங்கள் செய்யப்பட்டு இப்பொழுது ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு வருஷங்களாகின்றன. இந்தக் காலத்தில் மனிதர்கள் பல அநுபவங்களை அடைந்திருக்கிறார்கள்; பலவிதமாக உழைத்திருக் கிறார்கள். எனவே, இப்பொழுது, மேற் படி உபதேசங்களின் சாரத்தை, தனிப்பட்ட நபர்களின் விஷயத்தில் மட்டுமல்ல, மானிட சமுதாயத்தின் விஷயத்திலும் அநுஷ்டானத் திற்குக் கொண்டுவர வேண்டிய காலம் வந்திருக்கிறது. மானிட சமுதாயமனைத்தும் ஒன்றுதான் என்னும் உண்மையை, கடவுளின் ஒரே சட்டத்தின் கீழ்தான் இந்த மானிட சமுதாயம் இயங்க வேண்டு மென்னும் உண்மையைப் பிரசாரஞ் செய்யவேண்டிய காலம் வந்திருக்கிறது. கடவுள் சட்டத்தின் முதல் விதியானது, அந்தக் கடவுளின் ஏற்பாட்டை இந்த உலகத்தில் நிறைவேற்றி வைப்பதும், வருங்கால நல்வாழ்வுக்குப் பயிற்சி செய்துகொள்வதும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும் என்று வற்புறுத்துகிறது. மானிட சமுதாயமென்பது ஒரு தேகமென்றும், அதில் நாம் பல அங்கங்க ளென்றும், ஆதலின் அந்தத் தேகம் வளர்ச்சியடையுமாறும் சுறுசுறுப் பாயிருக்குமாறும், வலுவுள்ளதாயிருக்குமாறும் பார்த்துக் கொள்வது நமது கடமையென்றும், மனிதர்களுக்குப் போதிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நமது சகோதர மனிதர்களின் வளர்ச்சியின் மூலமாகத்தான் நாம் கடவுளையடையமுடியும். ஆதலின் அவர்களிடம் வலியச் சென்றாவது அவர்களை முன்னேற்று விக்க வேண்டும்; அவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும். கடவுளின் ஏற்பாடு என்னவோ அதனை இந்த உலகத்தில் நிறைவேற்றி வைக்க வேண்டுமானால் அதற்கு மானிட சமுதாயமனைத்தும் சேர்ந் துழைக்க வேண்டும். எல்லா மக்களும் சங்கமாகச் சேர்ந்து வாழ வேண்டுமென்பதற்காக, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் குடும்பத் தையும், தேசத்தையும் தயார்ப்படுத்த வேண்டும். வாழ்க்கை நியதியைப்பற்றி நமக்கு இன்னும் அதிகமான தெளிவு ஏற்பட ஏற்பட, எதிர் காலத்தில் நமது கடமைகளும் விரியும். பரமபிதா வான கடவுள், மதக் கல்வியை மெதுவாகவும் தொடர்ச்சியாகவும் ஜனங் களுக்குப் புகட்டச் செய்து அதன் மூலமாக மானிட சமுதா யத்தை முன்னேற்றுவிக்கிறார். இந்த முன்னேற்றத்தில், ஒவ்வொரு தனி நபருடைய முன்னேற்றமும் இருக்கிறது. மானிட சமுதாயத்தின் முன்னேற்றத்தையொட்டியே நமது முன்னேற்றம் இருக்கிறது. உங்களுடைய அற வாழ்வும், லௌகிக வாழ்வும் விருத்தியடைய வேண்டுமானால், உலக மக்களின் அற வாழ்வையும் லௌகிக வாழ்வையும் உயர்த்த நீங்கள் பாடுபட வேண்டும். பொதுவாகச் சொல்லப் போனால், மானிட சமுதாயத் தின் வாழ்வினின்று உங்களுடைய வாழ்வை - நீங்கள் பிரிக்க வேண்டுமென்று பார்த்தாலும் - தனியாகப் பிரிக்க முடியாது. மானிட சமுதாயத்தின் மத்தியில் நீங்கள் வாழ்கிறீர்கள்; அதனா லேயே வாழ்கிறீர்கள்; அதற்காகவே வாழ்கிறீர்கள்; ஒரு சில மகான் களைத் தவிர, பொதுவாகப் பெரும்பான்மையான ஜனங்களுடைய வாழ்க்கை, அவர்கள் எந்தச் சுற்றுச் சார்பின் மத்தியில் வசிக்கிறார் களோ அதன் செல்வாக்கினின்று அகன்றிருக்க முடியாது. திட காத்திரமுள்ள ஒரு மனிதன், அசுத்தமான காற்றின் மத்தியில் வசிப்பானாகில் அவனுடைய தேகம் எப்படி நாளாவட்டத்தில் பலஹீன மடைந்து போகிறதோ அதைப்போலத்தான், ஜனங்க ளுடைய வாழ்க்கையும் அசுத்தமான சுற்றுச்சார்பின் மத்தியில் சீர்கெட்டுப் போகிறது. தங்கள் மனதுக்கு எது உண்மையென்று படுகிறதோ அதைச் சொல்கிறவர்கள், எந்த நாட்டில் கொடுங் கோலர்களும் ஒற்றர்களும் நிறைந்திருக்கிறார்களோ அந்த நாட்டில், தலைமறைவாக இருக்குமாறு நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்; அல்லது தங்களுடைய அபிப்பிராயங் களில் பெரும்பாகத்தை மறுக்குமாறு வற்புறுத்தப்படுகிறார்கள். இதனைத் தெரிந்துகொண்டிருக்கிற உங்களில் எத்தனை பேருக்கு உங்களுடைய மக்களை, சத்திய மார்க்கத்தைக் கடைப்பிடிக்குமாறு பயிலுவிக்க தைரியம் இருக்கிறது? எந்தச் சமுதாயத்தில், பொன்னுக்கும் பொருளுக்குந் தான் பதவி கிடைக்கிறதோ, செல்வாக்கு ஏற்படுகிறதோ, மரியாதை உண்டாகிறதோ, எந்தச் சமுதாயத்தில், பொன்னைக்கொண்டும் பொருளைக் கொண்டுமே அதிகாரிகளின் உபத்திரவங்களினின்று காப்பாற்றிக் கொள்ள முடியுமோ, அப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழ்ந்து வருகிற உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் மக்களை, பணத்தைத் துச்சமாகக் கருதுமாறு பயிலுவிக்க தைரியம் இருக் கிறது? மனிதர்களை நம்பாதீர்கள்; யோக்கியனாயுள்ள மனிதன், ஒதுங்கியிருப்பானே தவிர பொது வாழ்வில் ஈடுபடமாட்டான்; தருமமென்பது வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றதுஎன்பன போன்ற உபதேசங்களை உங்களுக்குச் சிலர் செய்கிறார்கள். இவர்கள் உங்களிடத்திலே அன்புடையவர்கள் தான். நல்லெண்ணத் துடன்தான் உங்களுக்கு இப்படிச் சொல்கிறார்கள். ஆனால் இப்படி உபதேசிப்பது நியாய விரோதம்; அதருமம். இவர்கள் ஏன் இப்படி உபதேசிக்கிறார்கள்? நமது சமுதாயத்தின் திதி இந்தமாதிரி இருக்கிறது. இப்படி உபதேசிப்பது அநியாயமென்றும், அதருமமென்றும் தெரிந்திருந்தும், இப்படிச் சொல்லாதவர்கள் உங்களில் எத்தனைபேர்? மானிட சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டுச் சுயேச்சையாக வீர மரணத்தை எந்த மகான் ஏற்றுக் கொண்டாரோ அந்த மகானாகிய யேசுநாதரின் சிலுவையைத்தான் நமது தாய்மார்கள் வணங்குகிறார்கள். ஆயினும், அவர்களிலே எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து மகனே! உன் சகோதர மனிதர் களுடைய நன்மையை நாடுவதென்பது உயர்ந்த லட்சியந்தான். ஆனால் அதற்காக ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடாதே என்று சொல்லி, அவர் களுடைய கழுத்தின் மீது கையைப் போட்டுத் தடுக்காமலில்லை? இவைகளுக் கெல்லாம்-இந்தமாதிரியான அழுகிப்போன எண்ணங்களுக் கெல்லாம்-விரோதமாக உபதேசிக்கிற ஆற்றல் உங்களுக்கு இருந்தாலும், அதனை, உங்களுடைய உபதேசத்தின்பலனை, சமுதாயமானது ஆயிரக் கணக்கான குரலெடுத்துக்கொண்டு, தனது எண்ணிறந்த தீய உதாரணங் களின் மூலமாகக் கெட்டழித்துவிடாதா? கறைபட்டுப் போயிருக்கிற, இழிவுபட்டுக் கிடக்கிற இந்தச் சுற்றுச் சார்பிலிருந்து உங்களுடைய ஆத்மாவை நீங்கள் பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியுமா? உயர்த்திக் கொள்ள முடியுமா? உங்களுடைய லௌகிக நிலைமையை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போதுள்ள நிலைமையிலிருந்து நீங்கள் மேலுக்கு வரவேண்டுமானால் மற்றவர்களை உயர்த்தாமல் நீங்கள் மட்டும் மேலுக்கு வரமுடியுமா? இங்கிலாந்தில் லட்சக்கணக்கான பணம் ஏழை மக்களின் உதவிக்கென்று வருஷந்தோறும் செல வழிக்கப்படுகிறது. ஆயினும் வருஷந்தோறும் ஏழை மக்கள் அதிகப் பட்டுக்கொண்டே வருகின்றனர். தனிப்பட்ட மனிதர் களுக்கு இங்ஙனம் உதவி செய்வதனால் வறுமை நீங்கவில்லை. கூட்டுறவு முறையில் இந்த வறுமைக்குப் பரிகாரம் தேட வேண்டியதன் அவசியத்தை ஜனங்கள் அதிகமாக உணர்ந்துவருகிறார்கள். அநீதமான சட்டங்கள் நடைமுறையிலிருக்கின்றதன் விளைவாக ஒரு நாட்டில் ஒடுக்குகிறவர்களுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் உக்கிரமான போராட்டம் இடைவிடாது நடைபெற்றுக் கொண் டிருக்குமானால், வறுமையைப் போக்குவதற்கென்று பெரிய காரியங்களை எடுத்துச் செய்யப் போதிய மூலதனம் எங்கிருந்து கிடைக்கும்? எந்த நாட்டில் ஒரு சுயேச்சாதிகார அரசாங்கமானது தன்னிஷ்டப்படி வரிகள் விதித்தும், நிர்ப்பந்தங்களை உண்டு பண்ணியும் வருகிறதோ, எந்த நாட்டில் அரசாங்க மானது, தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்கிற அவசியம் அதிகப்பட அதிகப்பட தன்னுடைய ராணுவத்திற்காகவும், ஒற்றர்களுக்காகவும், மற்ற உத்தியோகதர்களுக்காகவும் ஏற்படுகிற செலவுகளையும் அதிகப் படுத்திக்கொள்கிறதோ, அந்த நாட்டில் கைத்தொழிலும் வியாபாரமும் தொடர்ந்து வளர்ச்சியடைய முடியுமென்று நீங்கள் கருதுகிறீர்களா? இதற்குப் பரிகார முறைகளாக, உங்கள் நாட்டு அரசியலையும், சமுதாய நிலைமையையும் சீர்திருத்தினால் போது மென்று நீங்கள் பதில் சொல்வீர்களானால், அது போதாதென்று நான் கூறுவேன். எந்த நாட்டு ஜனங்களும் இப்பொழுது அந்த நாட்டிலே உற்பத்தியாகிற பொருள்களைக் கொண்டுமட்டும் ஜீவிப்பதில்லை. பரபரம் பண்ட மாற்றல் செய்தும், ஏற்றுமதி இறக்குமதிகள் செய்துமே வாழ்கிறார்கள். உங்களோடு வியாபார சம்பந்தப்பட் டிருக்கிற எந்த ஓர் அந்நிய நாட்டில் தரித்திரம் அதிகமாகிக் கொண்டு வருகிறதோ அந்த நாட்டில் உங்களுடைய வியாபாரம் குறைந்து விடுகிறது. அங்கே உங்களுடைய வாடிக்கைக் காரர்கள் குறைந்துபோகிறார்கள். எந்த அரசாங்கம் அந்நியநாட்டு வியாபாரத்தின் மீது நெருக்கடிகளையும் அழிவையும் உண்டுபண்ணு கிறதோ, அந்த அரசாங்கம் தன்மீது நெருக்கடிகளையும் அழிவையும் வருவித்துக் கொள்கிறது. இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ வியாபார நெருக்கடிகள் ஏற்பட்டால் அஃது இத்தலியையும் பாதிக்கிறது. பணப் போக்குவரத்து என்பது இப்பொழுது தேசீய விவகாரமாகமட்டுமில்லை; ஜரோப்பிய விவகாரமாகவும் இருக்கிறது. மற்றும் உங்கள் தேசத்திற்கு மட்டும் ஏதேனும் சீர் திருத்தம் செய்துகொள்வீர்களாயின், அதனால் மற்ற அரசாங்கங்க ளெல்லாம் உங்களுக்கு விரோதமாயிருக்கும். ஆதலின் எல்லா நாடுகளுக்கும் ஏற்ற சீர்திருத்தத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதிலும், ஜரோப்பிய மகா ஜனங்களிடையே சகோதரத்துவத்தை உண்டுபண்ணுவதிலும், அதன் மூலமாக உலக சகோதரத்துவத்தை உண்டுபண்ணுவதிலுமே உங்களுடைய விமோசனம் இருக்கிறது. ஆதலின், எனது சகோதரர்களே! உங்களுடைய முதற்கடமை மானிட சமுதாயத்திற்குரியதென்பதை இங்கே வலியுறுத்திச் சொல் கிறேன். இந்த முதற் கடமையை நீங்கள் செய்யாவிட்டால், குடும்பத் திற்கும் தேசத்திற்கும் நீங்கள் செய்யவேண்டிய கடமை களைச் சரிவரச் செய்ய முடியாது. நீங்கள் சொல்கிற வார்த்தையும், செய்கிற செயலும் யாவும் எல்லோருடைய நலனுக்காகவும் இருக்கட்டும். ஏனென்றால் கடவுள் எல்லாருக்குரித்தானவர்; எல்லோரிடத்திலும் அன்பு செலுத்து கிறவர்; எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை இயற்றி வைத்திருக் கிறவர். உரிமைக்காகவும், நியாயத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் யார் எந்த இடத்திலிருந்து சண்டை போட்டாலும் அவர் உங்களுடைய சகோதரர்தான். குற்றத்தினாலும், அநீதியினாலும், கொடுங்கொன்மை யினாலும் யார் எங்கு அவதிப்பட்டுக்கொண்டிருந்தாலும் அவர் உங்களுடைய சகோதரர்தான். சுதந்திர புருஷர்களாகட்டும் அடிமைகளா கட்டும். எல்லோரும் உங்களுடைய சகோதரர்கள்தான். அனைவருடைய பிறப்பும், அனைவருக்காக ஏற்பட்டிருக்கிற கடவுள் சட்டமும், அனைவருடைய லட்சியமும் ஒன்றுதான். அதுபோலவே உங்களுடைய கோட்பாடு, உங்களுடைய செயல், எந்தக் கொடியின் கீழ் நின்றுகொண்டு நீங்கள் சண்டை செய்கிறீர்களோ அந்தக் கொடி ஆகிய யாவும் ஒன்றாயிருக்கட்டும். வேறு வேறு பாஷை களையல்லவோ நாங்கள் பேசுகிறோமென்று சொல்லாதீர்கள். மனிதர்கள் விடுகிற கண்ணீர், அவர்களுடைய செயல், அவர்க ளுடைய வீர மரணம் முதலியன யாவும் எல்லா மனிதர்களும் அறிந்துகொள்ளக்கூடிய பாஷையாக இருக்கிறது. இந்தப் பாஷை எல்லோருக்கும் புரிகிற பாஷை, மானிட சமுதாயம் மிக விரிந்த தென்றும், அதிலே நாம் எம்மாத்திரம் என்றும் சொல்லாதீர்கள். கடவுள், உங்களுடைய சக்திகளைக்கொண்டு உங்களை அளக்க வில்லை; உங்களுடைய நோக்கத்தைக்கொண்டுதான் உங்களை அளந்து பார்க்கிறார். ஆதலின் மானிட சமுதாயத்தை நேசியுங்கள். உங்களுடைய தேசத்தை பொறுத்தமட்டிலோ அல்லது குடும் பத்தை பொறுத்தமட்டிலோ நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்கிறபோது, நான் இப்பொழுது செய்வதைப்போல் எல்லோரும் எல்லோருக்காகவும், செய்தால், அது மானிட சமுதாயத்திற்குச் சாதகமாயிருக்குமா, பாதகமாயிருக்குமா வென்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய மனச்சாட்சி, இது மானிட சமுதாயத்திற்குப் பாதகமாயிருக்கு மென்று சொன்னால் அந்தக் காரியத்தைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்வதனால், உங்களுடைய நாட்டுக்கோ, உங்களுடைய குடும்பத்திற்கோ ஒரு சாதகம் உண்டு என்று தெரிந்தால்கூட அதைச் செய்யாதீர்கள். தேசங்களின் சகோதரத்துவத்தை, மானிட ஜாதியின் ஒற்றுமையை, பிரசாரஞ் செய்யும் தூதர்களாயிருங்கள். இந்தச் சகோதரத்துவத்தை, மானிட ஜாதியின் ஒற்றுமையை, பிரசாரஞ்செய்யும் தூதர்களாயிருங்கள். இந்த சகோதரத்துவத்தை, இந்த ஒற்றுமையை இப்பொழுது எல்லோரும் சொல்லளவில் அங்கீகரித்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால் செயலில் நிராகரிக்கிறார்கள். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலுஞ் சரி, எந்த நிலைமையில் இருந்தாலுஞ் சரி, இந்தச் சகோதரத்துவத்தின் தூதர்களாக, இந்த ஒற்றுமையின் தூர்களாக இருங்கள். கடவுளோ, மனிதர்களோ, இதைவிட அதிகமாக உங்க ளிடமிருந்து கேட்கவில்லை. அதிகமாக உங்களால் செய்யமுடியா விட்டால், உங்களைப் பொறுத்தமட்டிலேனும் நீங்கள் மேற்படி பிரசாரகர்களாயிருப்பீர்களாயின், மானிட சமுதாயத்திற்கு அதிக நன்மையைச் செய்தவர்களாவீர்கள். மானிட சமுதாயம் எத்தனை படிகள் முன்னேறியிருக்கிறதென்பதை நாம் அளந்து பார்க்க வேண்டு மானால், பரிசுத்தவான்கள், கடவுள் நம்பிக்கை கொண்ட மகான்கள் எத்தனை பேர் தோன்றியிருக்கின்றனர் என்பதைக் கொண்டு பார்க்கலாம். நீங்கள் தூய்மையுடையவர்களாகவும், பெரும்பாலோராகவும் இருக்கும் பட்சத்தில், கடவுள், உங்களைக் கணக்கிட்டுக்கொண்டிருக்கிற கடவுள், செயல் மார்க்கம் இன்ன தென்பதை உங்களுக்குக் காண்பிப்பார். 5. தேசம் மானிட சமுதாயத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் முதன்மையானவை யென்றும் முக்கியமானவையென்றும் ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு நாட்டின் பிரஜைகளாக இருக்கலாம்; குழந்தைகளின் தந்தைமாராக இருக்கலாம்; ஆனால் இவற்றிற்கெல்லாம் முதலாவதாக நீங்கள் மனிதர்கள். மானிட சமுதாயமனைத்தையும் ஒரு குடும்பமாகக் கருதி அந்தக் குடும்பத்தை உங்கள் அன்பினால் அணைக்க வேண்டும். கடவுள் ஒருவரே என்ற உண்மையின் பரிணாமமாகவுள்ள மானிட சமுதாயத்தின் ஒற்றுமையில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த ஒற்றுமையைச் செயல் பூர்வமாகக் கொண்டு காட்டுவதுதான் மானிட சகோதரத்துவம். இந்தச் சகோதரத்துவத்திலே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். எங்கெங்கே உங்களுடைய சகோதர மனிதர்கள் துன்பத்தினால் உழன்று கொண்டிருக்கிறார்களோ, எங்கெங்கே மனிதத் தன்மையானது, பொய்மை யினாலும் கொடுங்கோன்மையினாலும் நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நீங்கள் துரிதமாகச் சென்று உதவ வேண்டும். அந்த உதவியைச் செய்யாவிட்டால், அவர்களுடைய துன்பத்திலே அநுதாபங் காட்டா விட்டால், அவர்களுக்குப் பரிந்து போராடாவிட்டால், நீங்கள், உங்களுடைய வாழ்க்கை நியதியையே மறுத்தவர்களாகி றீர்கள்; எந்த மதமானது, உங்களுடைய எதிர்கால நல்வாழ்வை ஆசீர்வதிக்குமோ அந்த மதத்தைத் தெரிந்து கொள்ளாதவர்களா கிறீர்கள். ஆனால் உங்களிலே ஒவ்வொருவரும் உங்களுடைய தனிப் பட்ட சக்திகளைக் கொண்டு மானிட சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் அதனுடைய முன்னேற்றத்திற்கும் என்ன செய்ய முடியும்? அவ்வப் பொழுது உங்கள் நம்பிக்கைகளைப் பலன் கொடாத விதமாக வெளி யிட்டுக் கொண்டிருக்கலாம்; அல்லது உங்கள் நாட்டா னல்லாத யாரோ ஒருவனுக்கு எப்பொழுதேனும் ஒரு சமயம் ஏதோ ஓர் உபகாரத்தை நீங்கள் செய்யலாம். அவ்வளவுதான். ஆனால் எதிர்கால நல்வாழ்வை நமக்கு நிர்ணயித்துக் காட்டுகிற வார்த்தை, உபகாரம் என்ற வார்த்தைதான். ஒரே லட்சியத்திற்காக எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவதிலேதான் நமது எதிர்கால வாழ்வு இருக்கிறது. உங்களிலே ஒவ்வொருவரும் தனித்தனியாக வசிப்பதற்கு வீடு கட்டிக்கொள்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அப்படி வீடு கட்டிக்கொள்கிறபோது ஒருவருக்கொருவர் பரபரம் செங்கல் சுண்ணாம்பு முதலியன உதவிக் கொள்கிறீர்கள். இந்த அளவுக்கு நல்லதுதான். ஆனால் எல்லோரும் வசிப்பதற்கேற்ற வித மாக, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கட்டிடம் சமைப்பது, இதை விட நல்லதில்லையா? இதைப் போல்தான் சங்கமாகச் சேர்ந்து வேலை செய்வதும். ஆனால் மனிதர்கள், பாஷை, மனப் போக்கு, பழக்க வழக்கங்கள், சக்தி முதலியவற்றினால் வேறு வேறு பட்டவர்களாயிருக்கிறார்கள். எனவே, இவர்கள் பொதுவாக ஒரு வேலையில் ஈடுபட முடியாதவர்களாயிருக்கிறார்கள். மனிதன் சிறியவன்; பலஹீனன். ஆனால் மானிட சமுதாயமோ மிகப் பெரியது. சமுத்திரத்திலே கப்பல் செலுத்திக் கொண்டு புறப்படுகிற மாலுமி என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறானென்றால், எனது ஆண்டவனே! என்னுடைய கப்பல் மிகச் சிறியது; உன் னுடைய சமுத்திரம் மிகப் பெரியது. என்னைக் காப்பாற்று என்றுதான் பிரார்த்திக்கிறான். இந்த வாசகத்தைப் போல்தான் நம் ஒவ்வொருவருடைய நிலைமையும் இருக்கிறது. ஆதலின் நமது சக்திகளையும், செயலாற்றும் திறனையும் அதிகப்படுத்திக்கொள்ளக் கூடிய ஒரு சாதனம் நமக்கு இருக்கவேண்டும். உங்களுக்கென்று ஒரு தேசத்தைக் கொடுத்து அதன் மூலமாக இந்தச் சாதனத்தை உங்களுக்கு அளித்திருக்கிறார் கடவுள். எப்படி ஒரு புத்திசாலியான மேதிரி, வேலைக்காரர்களுடைய சக்திக்குத் தகுந்தாற் போல் அவரவர்களுக்கும் வேலையைப் பங்கிட்டுக் கொடுப்பானோ அதைப்போல் கடவுளும், மானிட சமுதாயத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, தனித்தனியான ஜாதியினராக வாழ்ந்து வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். கடவுளின் ஏற்பாடு மகா அற்புதமானது. நதிகள், மலைகள் மற்ற பூகோள நிலைமைகள் முதலியவைகளைச் சிருஷ்டித்து இவற்றின் மூலமாக ஒவ்வொரு நாட்டிற்கும் எல்லை வகுத்துக் கொடுத்திருக்கிறார் கடவுள். சிறப்பாக ஐரோப்பாவில் இதனை நன்கு காணலாம். ஆனால், இந்த அற்புதமான ஏற் பாட்டை, கெட்ட அரசாங்கங்கள் பல தோன்றி கலைத்துவிட்டிருக் கின்றன; மற்ற நாடுகளின் மீது வெற்றி கொண்டும், பேராசையினால் உந்தப்பட்டும், மற்றவர்களுடைய நியாயமான ஆதிக்கத்தின்மீது பொறாமை காட்டியும், இந்த ஏற்பாட்டைக் களங்கப்படுத்தியிருக் கின்றன; இப்பொழுது இந்த ஏற்பாட்டுக்கிசைந்தாற்போல் உலகத்திலே இங்கிலாந்தும், பிரான்சும் தவிர எந்த நாடும், அல்லது எந்த ஜாதியும் இல்லாமல் செய்து விட்டிருக்கின்றன. அவை, அந்தக் கெட்ட அரசாங்கங்கள், தங்களுடைய குடும்பம், அரச பரம்பரை, நாடு, இவைகளைத் தவிர்த்து வேறெதனையும் அங்கீகரிப்பதில்லை. அவைகளிடத்தில் அகங்கார புத்தி அதிகமாகக் குடிகொண்டிருக் கிறது. ஆனால், கடவுள் ஏற்பாடானது எவ்விதக் குறைபாடு மில்லாமல் நிறைவேறும். இப்பொழுது கெட்ட அரசாங்கங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற செயற்கைப் பிரிவினைகள் யாவும் ஒழிந்துபோய் இயற்கையான பிரிவுகள், ஜனங்களுடைய மனதி லிருந்து சுயமாக உண்டாகிற எண்ணங்களின் விளைவினால் அமைகிற பிரிவுகள் ஏற்படும். ஐரோப்பாவின் பூகோள படமானது திருத்தி எழுதப்படப் போகிறது. அரசர்களும், உரிமைகளை ஏகபோகமாகத் தாங்களே அநுபவித்துக்கொண்டு வந்திருக்கிற ஜாதியாரும், எந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு வந்திருக்கிறார்களோ அந்த நாடுகள் அழிந்து போகும். அந்த அழிவின் மீது ஜனாதிக்கமுடைய நாடுகள் சுதந்திர ஒலியை முழக்கிக் கொண்டு தோன்றும். அப்படித் தோன்றுகிற நாடுகளுக்கிடையில் பரபர அன்பும், சகோதர எண்ணமும் நிலவும். அந்தக் காலத்தில் தான் மனித வாழ்க்கையின் லட்சியமானது அனுஷ்டானத் திற்குக் கொண்டு வரப்படும். அதாவது கூட்டுறவு முறையில் பலரும் அநேக காரியங்களைச் சாதிப்பார்கள். அதுவும் சமாதான முறையிலேயே நடைபெறும். மானிட சமுதாயம் படிப்படியாக முன்னேற்றமடை யும். உங்களிலே ஒவ்வொருவரும் பாஷையிலும், மனப்போக்கு களிலும், சரித்திர பரம்பரையிலும் உங்களோடு ஒன்றுபட்டிருக்கிற லட்சக் கணக்கான மக்களின் உதவி பெற்று உங்களுடைய சொந்த முயற்சி யினால் மானிட சமுதாயமனைத்திற்கும் நன்மையைச் செய்யப் போகிறீர்கள். அந்தக் காலம் வரப்போகிறது. இத்தலியில் பிறந்துள்ள உங்களுக்குக் கடவுள், ஐரோப்பாவி லேயே மிகச் சிறந்ததொரு நாட்டை அளித்திருக்கிறார். இதைப் பார்க்கிறபோது, அவர் உங்களுக்கு ஏதோ விசேஷ சலுகை காட்டி யிருக்கிறார் போலிருக் கிறது. மற்ற நாடுகளில், நிச்சயமில்லாத அல்லது இடையிடையே தடைப் படுகிற எல்லைகள் ஏற்பட்டிருக் கின்றன. இதனால் பல பிரச்னைகள் கிளம்பியிருக்கின்றன. இவை யெல்லாம் ஒரு காலத்தில் சமாதான முறையில் தீருமென்றாலும், இதுவரையில் இந்த எல்லைத்தகராறுகள் காரணமாக, கண்ணீரும் ரத்தமும் பெருக்கெடுத்தோடியிருக்கின்றன. ஆனால் உங்கள் நாட்டிலோ அப்படியில்லை. கடவுள், உங்கள் நாட்டைச் சுற்றி அழகானதும், யாராலும் தகராறு செய்யப்படாமலிருக்கக் கூடியது மான எல்லைகளை அருளியிருக்கிறார். ஒரு பக்கத்தில், ஐரோப்பாவி லேயே மிக உயர்ந்ததாயுள்ள ஆல்ப் மலை இருக்கிறது, மற்றொரு புறத்தில் விசாலமான சமுத்திரம் இருக்கிறது. ஐரோப்பாவின் பூகோள படமொன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், இத்தலி யின் வடபாகத்திலுள்ள பார்மா என்னுமிடத்தில், இரு முனையுள்ள ஓர் ஊசியின் ஒரு முனையை நாட்டுங்கள். மற்றொருமுனையை வார் என்னும் நதியின் முகத்துவாரத்தண்டை வையுங்கள்; ஆல்ப மலைப் பக்கமாக ஓர் அரை வட்டக்கோடு இழுங்கள். இதன் ஒரு முனை, இஸோன்ஸோ நதியின் முகத்துவாரத்தண்டை பதியும். இதுதான், கடவுளால் உங்களுக்கு அருளப்பட்ட எல்லை. இந்த எல்லைவரை உங்களுடைய பாஷையை எல்லோரும் பேசுகி றார்கள்; எல்லோரும் தெரிந்துகொள்கிறார்கள். இதற்கப்பால் உங்களுக்கு உரிமைகள் கிடையாது. சிஸிலி, ஸார்டீனியா, கார்ஸிக்கா முதலிய தீவுகளும், இவைகளுக்கும் இத்தலிக்கும் மத்தியிலேயுள்ள தீவுகளும் உங்களுக்குச் சொந்தமானவை. இதை யாரும் மறுக்கமுடியாது. பலாத்கார சக்தி யானது சில சமயங்களில் எழுந்து, உங்களுக்கு இந்த எல்லைகள் இல்லையென்று மறுக்க லாம். ஆனால் இந்த எல்லைகளை பூர்வ காலந்தொட்டு இத்தாலிய மகாஜனங்கள் அங்கீகரித்துக் கொண்டிருக் கிறார்கள். சகோதரர் களே! உங்களுடைய சக்திகளைப் பரிசோதிக்கிற காலம் ஒன்று வரப்போகிறது. அந்தப் பரிசோதனை, கடைசி பரிசோதனையாக இருக்கலாம். அதில் நீங்கள் வெற்றிபெற்று, உங்களுடைய மூவர்ணக் கொடியை மேற்கூறப்பட்ட எல்லையில் நாட்டிவிட்டீர்களாயின், அப்பொழுது ஐரோப்பா முழுவதும் சேர்ந்து, புதிய இத்தலி உதயமாகிவிட்டதென்று சொல்லி உங்களை ஆரவாரத்தோடு பாராட்டும். அப்பொழுது சர்வ தேசங்களும் சேர்ந்திருக்கிற சங்கத்தில் இத்தலிக்கு ஒரு முக்கியதானம் கிடைக்கும். ஆதலின் மேலே சொன்ன கடைசி பரிசோதனைக்கு, உங்களுடைய முயற்சி களனைத்தையும் உபயோகிப்பீர்களாக. சொந்த நாடில்லாமல், உங்களுக்குப் பெயரில்லை; உங்க ளுடையதென்று அடையாளமொன்றுமில்லை. உங்களுக்கென்று சொந்தக் குரல் கிடையாது; உரிமைகளும் உங்களுக்கில்லை; சர்வதேச ஜனசபையிலே உங்களை ஒரு தோழராகச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். மானிட சமுதாயத்தில், நீங்கள் வேசை மக்கள்போல்தான் கருதப்படுவீர்கள். சொந்த நாடில்லாதவர்கள், பதாகையில்லாத படை வீரர்கள் மாதிரி; ஜாதியினருக்குள்ளே யூதர்கள் மாதிரி. உங்களை யாரும் நம்பவும்மாட்டார்கள்; காப்பாற்ற வும் முன்வரமாட்டார்கள். உங்களுடைய நன்னடத்தைக்கு யாரும் ஜாமீனாக இருக்கமாட்டார்கள். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு நாட்டை ஏற்படுத்திக்கொள்ளாமல், இப்பொழுதுள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளிலிருந்து விமோசனங் கண்டுவிடலாமென்று பொய் நம்பிக்கை கொள்ளாதீர்கள். நாடில்லா விட்டால், பொதுவான தொரு சக்திக்கு நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியாது. உங்களுடைய சக்திகளையெல்லாம் ஒருமுகப்படுத்துவது தேசந்தான். இந்தத் தேச உணர்ச்சி இல்லாவிட்டால், மனிதனுக்குச் சுயநலம் உண்டாகிவிடுகிறது; அகங்கார புத்தி ஏற்பட்டுவிடுகிறது. எல்லோருடைய நலன்களையும் பாதுகாக்கக்கூடிய ஒரு சக்தி இல்லாமற் போய்விடுகிறபடியால், எவனுக்கு வல்லமை இருக் கிறதோ அவன் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கிவிடுகிறான். தேசீயப் பிரச்னைக்கு முதலில் பரிகாரங் காணாமல் உங்களுடைய லௌகிக வாழ்க்கையை அபிவிருத்தி செய்துகொண்டுவிடலாமென்ற எண்ணத்தில் மயங்கி விடாதீர்கள், அப்படிச் செய்யவே முடியாது. உங்களுடைய தொழில் தாபனங்களும், கூட்டுறவுச் சங்கங்களும் எவ்வளவு தூரம் பியோஜன முடையவை யென்றால், உங்களைப் பயிற்சி செய்து கொள்கிற அளவுக்கும், உங்களை ஒரு கட்டுப்பாட்டுக் குட்படுத்திக்கொள்கிற அளவுக்குத்தான். ஆனால், உங்களுக்கென்று சொந்தமாக இத்தலி தேசம் இராதவரையில் அவை பொருளாதார விஷயத்தில் எவ்வித பலனையும் கொடுக்கமாட்டா. நம்முடைய பொருளாதார நிலைமை அபிவிருத்தி யடைய வேண்டுமானால், தேசத்தின் மூலதனம் பெருகவேண்டும்; பொருளுற்பத்தி அதிகமாக வேண்டும். ஆனால் இன்றைய இத்தலியோ, பல துண்டுப் பிரதேசங் களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது; ஒரு பிரதேசத்தி லிருந்து மற்றொரு பிரதேசத்திற்குச் சாமான்கள் செல்லவேண்டுமானால், சுங்கவரிகள் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கிறது; இன்னும் இயற்கைக்கு முரணாயுள்ள பல தொந்திரவுகள் உண்டு பண்ணப்பட்டிருக்கின்றன. இதனால் உங்களுடைய சரக்குகள் செலாவணியாகிற இடம் சுருங்கிவிடுகிறது. இந்த நிலைமையில் பொருளாதார அபி விருத்தியை நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. இன்று, நீங்கள்தான் இத்தலியின் தொழிலாளர்கள் என்று கருதிக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள். தொழிலாளர் சமுதாயத்திலே நீங்கள் ஒரு பாகந்தான். உங்களுக்கோ அதிகாரமில்லை. நீங்கள் மேற்போட்டுக் கொண் டிருக்கும் காரியங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உங்களுக் கில்லை. உங்களுக்கு விமோசன காலம் எப்பொழுது ஆரம்பமாகு மென்று சொன்னால், தேசீய அரசாங்கம் ஏற்படுகிறபோதுதான். அப்படி ஏற்படுகிற தேசீய அரசாங்கமோ, கால நிலையை அறிந்து கொண்டிருப்பதாய் இருக்க வேண்டும். அது ரோமாபுரியிலே வீற்றிருக்கவேண்டும். இத்தலியின் முன்னேற்றத்திற்கான வழிகளைக் காட்டுவதாயிருக்கும் கொள்கைகளை யுடைய அறிக்கையைப் பிரகடனப்படுத்தவேண்டும். அந்த அறிக்கையில் உழைப்பு புனிதமானது; இத்தலியின் செல்வ அபிவிருத்திக்கு அதுதான் மூலம் என்ற வாசகங்கள் அடங்கியிருக்கவேண்டும். தற்போதைய நிலைமையிலிருந்துகொண்டு நீங்கள் உங்க ளுடைய லௌகிக வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளலாமென்று யாராவது உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பார்களானால், அதைக் கேட்டு மயங்கி விடாதீர்கள். உங்களுடைய தேசம் மட்டுந்தான், வடக்கே ஆல்ப் மலையி லிருந்து தெற்கே சிஸிலி வரையில் பரந்து நிற்கிற இத்தலிதான், செழுமை யுள்ள இத்தலிதான், இந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்யக்கூடும். கடமையின் கட்டளை களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடவாவிட்டால், உங்களுடைய உரிமைகளை நீங்கள் அடையமுடியாது. உரிமைகளை அடைவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள்; கட்டாயம் அவற்றை அடைவீர்கள். எனது சகோதரர்களே! உங்களுடைய தேசத்தை நேசியுங்கள், நமது தேசந்தான் நமது வீடு. நமக்காகக் கடவுள் அருளிய வீடு. இந்த வீட்டிலே அவர் ஒரு பெரிய குடும்பத்தை ஏற்படுத்தி வைத்திருக் கிறார். இந்தக் குடும்பத்தினரை நாம் நேசிக்கிறோம்; குடும்பத்தினரும் நம்மை நேசிக்கிறார்கள். மற்றவர் களுடையதைக்காட்டிலும், நமது குடும்பத்தினருடைய உணர்ச்சி களையும் எண்ணங்களையும் நாம் நன்றாகவும் சீக்கிரமாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தக் குடும்பத்தினராகிய நாம், குறிப்பிட்ட தோரிடத்தில் - அதாவது தேசத்தில் - நமது சக்திகளை யெல்லாம் ஒருமுகப்படுத்துகின்றோம். தவிர நமது சக்திகளெல்லாம் ஒன்றுபடும் இயல்புடையன. இந்தச் சக்திகளின் துணைகொண்டு, மேற்படி குடும்பத்தினராகிய நாம். இந்த உலகத்தில் குறிப்பிட்ட தொரு காரியத்தைச் செய்கின்றோம். நமது தேசம், நமது உழைப்புக் கென்றேற்பட்ட இடம். இந்த உழைப்பிலிருந்து உண்டாகிற பொருள்கள், அகில உலகத்தின் நன்மைக்காகவும் உபயோகப்பட வேண்டும். திறமை வாய்ந்ததும், பயன்தரத்தக்கதுமான கருவிகள் என்னென்ன நமது உழைப்புக்குத் தேவையோ அவை யாவும் நமது நாட்டிலேயே இருக் கின்றன. இவற்றை நாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் நிராகரிப்போமானால், கடவுளின் திருநோக்கத்திற்குத் துரோகம் செய்தவர்களாவோம்; நமது பலத்தையும் குறைத்துக் கொண்டவர்களாவோம். உண்மை யான நோக்கத்தோடு நாம் நமது நாட்டுக்கு உழைப்போமானால், அதுவே மானிட சமுதாயத்திற்கு உழைத்தது போலாகும். நிறை தூக்கும் யந்திரத்திற்கு ஆதாரக் கருவியிருப்பதுபோல், நாம் பொது நல சேவை செய்தவற்காக நமது தேசத்தை உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த ஆதாரக் கருவியை நாம் இழந்து விட்டோமானால், நமது நாட்டிற்கும் மானிட சமுதாயத்திற்கும் நாம் பயனில்லாதவர்களாகிப் போய்விடுவோம். பல தேசங்களின் கூட்டுறவினாலேயே மானிட சமுதாயம் என்பது ஏற்படுகிறது. அந்தக் கூட்டுறவிலே ஒருவராகச் சேர்வதற்கு முன்னர், நம்மை நாம் ஒரு தேசத்தினராக - ஜாதியினராக – ஆக்கிக் கொள்ளவேண்டும். சம அந்ததிலுள்ளவர்களிடையில்தான் கூட்டுறவு ஏற்படும். இந்தக் கண்கொண்டு பார்க்கிறபோது, இத்தாலியர்களாகிய உங்களுக்கு எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்க்கை அந்தது ஏற்படவில்லை. மானிட சமுதாயமென்பது, முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒரு படை மாதிரி. முன்பின் தெரியாத நாடு களின்மீது வெற்றி கொள்ளவும், பலமும், எச்சரிக்கையுமுள்ள சத்துருக்களுக்கு விரோதமாகவும் இந்தப் படையானது சென்று கொண்டிருக்கிறது. பூலோகத்தில் பல ஜாதியினர் வசிக்கிறார்களல்லவா, இந்த ஜாதியினர்தான் மேற்படி படையின் பல பகுதிச் சைனியங்கள். இந்த ஒவ்வொரு பகுதிச் சைனியத்தினிடமும் ஒவ்வொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்டதொரு வேலையைச் செய்யுமாறு உத்தரவிடப் பட்டிருக்கிறது. இப்படி எல்லாப் பகுதிகளும் தத்தம் வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டு வருமானால், படையானது, அதாவது மானிட சமுதாயமென்னும் படையானது வெற்றி பெறுமென்பது நிச்சயம். யுத்த ஒழுங்கைக் கலைத்துவிடாதீர்கள். உங்களுக்குக் கடவுளால் அருளப்பட்டிருக்கிற கொடியை அப்புறப்படுத்தி விடாதீர்கள். நீங்கள் எங்கே யிருந்தாலுஞ் சரி, எந்த ஜனங்களின் மத்தியில் வசித்துக்கொண்டிருந்தாலுஞ் சரி, அவசியம் உண்டாகிற போது, அந்த ஜனங்களின் சுதந்திரத்திற்காகப் போர்புரியுங்கள்; ஆனால் இத்தாலியர்களாக இருந்து போர்புரியுங்கள். ஏனென்றால், இந்தப் போராட்டத்திலே நீங்கள் சிந்துகிற ரத்தமானது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் நாட்டிற்கும் கௌரவத்தைக் கொடுக்கும். உங்கள் நாட்டாரும் உங்களை அன்போடு பாராட்டுவர். நீங்கள் எண்ணுகிற ஒவ்வோர் எண்ணமும் இத்தாலிக்காக இருக்கட்டும்! நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியமும் அதனுடைய கௌரவத் திற்குப் பொருந்தியதாயிருக்கட்டும்! மானிட சமுதாயத்தின் நலனுக் காக நீங்கள் எந்தக் கொடியின் கீழ் நின்றுகொண்டு உழைக்கிறீர் களோ அஃது இத்தாலியின் கொடியாயிருக்கட்டும்! நீங்கள் பேசுகிற போது, நான் என்று சொல்லாதீர்கள்; இத்தாலியர்களாகிய நாங்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் தேசத்தின் அவதாரமாயிருங்கள். நமது நாட்டாருக்கு நாம்தான் பொறுப்பாளி என்று உணருங்கள்; அப்படியே நடந்து காட்டுங்கள். நீங்கள் நடந்துகொள்கிற மாதிரியைப் பார்த்து மற்ற வர்கள் உங்கள் நாட்டை நேசிக்கவேண்டும்; கௌரவப்படுத்த வேண்டும். அந்த மாதிரி நடந்துகொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய நாடு ஒன்றே. அதைத் துண்டு துண்டாகப் பிரிக்க முடியாது. பலர் சேர்ந்த ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவர் எங்காவது தொலைதூரத்தில் இருந்துவிட்டால், அல்லது குடும்பத்தினரின் அன்புக்குப் புறம்பானவராகிவிட்டால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றெல்லோரும் எப்படி ஒரு விருந்தில் சந்தோஷமாகக் கலந்துகொள்ள முடியாதோ, அப்படிப்போல், உங்கள் நாட்டிலிருந்து ஒரு பகுதியை, உங்களுடைய பாஷை எந்தப் பகுதியில் பேசப்படுகிறதோ அந்தப் பகுதியைப் பிரித்துவிட்டால், நீங்கள் சந்தோஷப்பட முடியாது; சந்தோஷப் படவுங் கூடாது; அந்தச் சந்தோஷம் இல்லாதிருக்கிறவரையில் நீங்கள் ஓய்வுங்கொள்ளக்கூடாது. மானிட சமுதாயத்தில் எந்த லட்சியத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டியவர்களா யிருக்கிறீர்களோ அந்த லட்சியத்தின் அடையாளமாகவே, கடவுள் உங்களுக்கு ஒரு நாட்டை அளித்திருக் கிறார். இந்த லட்சியத்திற்காகவே, நீங்கள் உங்கள் திறமைகளை உபயோகப்படுத்த வேண்டும்; ஒற்றுமைப்பட வேண்டும். யாராவது உங்களைப் பார்த்து நீ யார் என்று கேட்டால், நான் ஓர் இத்தாலியன் என்று பதில் சொல்கிறீர்களல்லவா, அந்தப் பதிலிலே, உங்களுடைய கடமைகளும் உரிமைகளும் சேர்ந்திருக்கின்றன வென்பது நினைவிருக்கட்டும். உங்களுடைய இந்தக் கடமை களுக்கும் உரிமை களுக்கும் பிரதிநிதியாயிருப்பது எது? உங்களுடைய ஓட்டுகளின்மூலம் ஏற்படுகிற ஐக்கிய அரசாங்கம். ஒரு தேசத்திற்கு ஒரே அரசாங்கந்தான் இருக்க வேண்டும். இத்தாலியைப் பல துண்டு நாடுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அரசாங்கம் ஏற்படுத்தி, இவை யனைத்தையும் ஒன்று கூட்டுவிக்கிற சமஷ்டி அரசாங்கம் இருக்க வேண்டுமென்று சொல்கிற அரசியல்வாதிகள், இத்தலியைத் துண்டு வேறாகப் பிரித்துவிடப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஒற்றுமையின் முக்கியத்துவம் தெரியாது. இத்தலி இன்று பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதென்று சொன்னால், அது நமது ஜனங்களின் சிருஷ்டியல்ல; சிற்றரசர்கள், நம் நாட்டின்மீது படையெடுத்து வெற்றி கொண்ட அந்நியர்கள், ஆகிய இவர்களுடைய பேராசைகளின் தோற்றம்; அதிகாரத்தை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று கணக்குப்போட்டுப் பார்க்கிற வர்களுக்குக் கிடைத்த விடை. சுயேச்சாதிகாரிகள், அதிகார ஆடம்பரத்தோடு வாழ்ந்துகொண்டிருக்க வேண்டுமானால், அவர்களுக்கு விசாலமான தேசம் ஏற்ற இடமல்ல; குறுகலான ஒரு மாகாணந்தான் சரி. அப்படிப்பட்டவர்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்வதற்குத்தான், இந்தப் பிரிவினை உபயோகப்படுகிறதே தவிர, வேறொன்றுக்கும் உபயோகப்பட வில்லை. மகா ஜனங்க ளாகிய நீங்கள் எதைச் சிருஷ்டித்திருக்கிறீர்களோ, எதை அழகு படுத்தியிருக்கிறீர்களோ, எதை உங்களுடைய அன்பினாலும், சந்தோஷத்தினாலும், துக்கத்தினாலும், ரத்தத்தினாலும் நிரப்பி யிருக்கிறீர்களோ அது நீங்கள் வசிக்கிற நகரம், அல்லது ஜில்லா; மாகாணமல்ல, ராஜ்யமுமல்ல. நகரத்தில்தான், ஜில்லாவில்தான், உங்களுடைய பெற்றோர்கள் நித்திரை செய்கிறார்கள். உங்க ளுடைய குழந்தைகள் வாழப் போகிறார்கள்; உங்களுடைய சக்தி களையும் உரிமைகளையும் உபயோகிக்கிற இடம் இந்த நகரம் அல்லது ஜில்லாதான். இந்த இடத்தில்தான், உங்களுடைய தனித்துவத்தை இழந்து விடாமல் வாழ்கிறீர்கள். வெனி நகரத்தில் வசிக்கிறவர்கள், தங்கள் நகரத்தைப்பற்றி என்ன சொல்லிக் கொள்கிறார்களோ அதைப்போல, அதாவது வெனி எங்க ளுக்குச் சொந்தமானது; அதை உண்டு பண்ணியவர்கள் நாங்களே என்று சொல்கிறார்களே அதைப்போல, நீங்கள் உங்கள் நகரத்தைப் பற்றி மட்டுமே, உங்கள் ஜில்லாவைப்பற்றி மட்டுமே சொல்லிக் கொள்ள முடியும். தேசத்தைப் பொறுத்தமட்டில் நீங்கள் எப்படிச் சங்கமாகச் சேர்ந்து வாழ வேண்டியவர்களாயிருக்கிறீர்களோ அப்படிப் போல, நகரத்தில் நீங்கள் உரிமைகளுடன் வாழ வேண்டிய வர்களாயிருக்கிறீர்கள். எனவே, நகரம் அல்லது ஜில்லாவின் சுதந்திரம், தேசத்தின் ஒற்றுமை என்பவையே உங்களுடைய கோட்பாடுகளா யிருக்கட்டும். ரோமாபுரியும் டகனியும் என்றோ, ரோமாபுரியும்லம் பார்டியு மென்றோ, ரோமாபுரியும் சிஸிலியு மென்றோ சொல்லாதீர்கள்; ரோமாபுரியும் ப்ளாரென்ஸும் என்றும், ரோமாபுரியும் ஸீனாவுமென்றும், ரோமாபுரியும் லெக்ஹார்னு மென்றும்1 சொல்லுங்கள். இப்படியே இத்தலியிலுள்ள எல்லா ஜில்லாக்களைப்பற்றியும் சொல்லுங்கள். இத்தாலிய வாழ்க்கையின் பிரதிநிதியாயிருப்பது ரோமாபுரி; உங்களுடைய தனித்துவ வாழ்க்கையின் பிரதிநிதியாயிருப்பது நீங்கள் வசிக்கிற நகரம் அல்லது ஜில்லா. இந்தப் பிரிவினை தவிர மற்றப் பிரிவினைகள் யாவும் போலிப் பிரிவினைகள்; உங்களுடைய தேசீய பரம்பரையை அநுசரியாத பிரிவினைகள். ஒரே லட்சியத்திற்காக, சுதந்திரமும் சம அந்ததும் உடைய ஜனங்கள் சகோதர உறவு பூண்டு வேலை செய்கிறார்களே, அந்த வேலை செய்கிற இடத்திற்குத்தான் தேசம் என்று பெயர். இப்படிப் பட்ட தேசமாக உங்களுடைய தேசத்தை நீங்கள் ஆக்கவேண்டும்; அப்படியே அதனை வைத்துக் காப்பாற்ற வேண்டும். ஒரு தேச மென்பது, பல பிரதேசங்களின் அல்லது ஜனங்களின் சேர்க்கை யல்ல; பல பிரதேசங்களின் அல்லது ஜனங்களின் கூட்டுறவு. எந்தத் தேசத்தில் ஜனங்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளில்லையோ அந்தத் தேசம் உண்மையான தேசமல்ல. எந்தத்தேசத்தில், இந்த ஒரே மாதிரியான உரிமைகளை, ஜாதிப்பிரிவினை, ஏகபோக உரிமை களின் அநுபவம், ஏற்றத்தாழ்வுகள் முதலியன இருந்து கொண்டு அழிக்கின்றனவோ, எந்தத் தேசத்தில் பெரும்பாலான மக்களின் திறமைகளும் சக்திகளும் அடக்கிவிடப் படுகின்றனவோ அல்லது அழுந்திக்கிடக்கின்றனவோ, எந்தத் தேசத்தில் ஒரே மாதிரியான கொள்கையை ஜனங்கள் ஏற்று, அங்கீகரித்து, அபிவிருத்தி செய்யா மலிருக்கிறார்களோ அந்தத் தேசம் உண்மையான தேசமல்ல. இப்படிப்பட்ட தேசத்தில் வசிக்கிற மக்களை, ஒரு ஜாதியென்றோ அல்லது ஜனம் என்றோ சொல்ல முடியாது; ஒரு கூட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ சில சந்தர்ப்பங்களினால் ஒன்று சேர்ந்திருக்கிறவர் களென்றும் அதே சந்தர்ப்பங்களினால் பிரிந்து போகக் கூடியவர் களென்றுந்தான் இந்தக்கூட்டத்தை, இந்தக் கும்பலைக் கூறவேண்டும். ஆதலின், எந்த நாட்டை நீங்கள் நேசிக்கிறீர்களோ அந்த நாட்டின் பெயரால், உங்களுக்குப் பிறப்பைக் கொடுக்கிற மண்ணிலே, அதாவது நீங்கள் பிறந்துள்ள நாட்டிலே நிலவுகிற எல்லா ஏகபோக உரிமைகளையும், எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் நீங்கள் எதிர்த்துப் போராடவேண்டும். இது விஷயத்தில் சமரஸமே கூடாது. ஒரே விஷயத்தில் மட்டும் நீங்கள் உரிமை பாராட்டலாம். அதுதான் அதிவிவேகம். எவனொரு வனுக்கு அதிவிவேகமிருந்து, அந்த விவேகத்தோடு சீலமும் சேர்ந்திருக் கிறதோ அவனே விசேஷ உரிமை பாராட்டக்கூடியவன். ஆனால் இந்த உரிமை கடவுளால் அருளப்பட்டது; மனிதர்களா லல்ல. அந்த உரிமையை ஒருவன் ஏற்றுக்கொண்டு அதனை உபயோகப்படுத்துகிறானென்று சொன்னால், அவன் தன் சுய அறிவைக்கொண்டும், தன்னிஷ்டப்படியுமே உபயோகப்படுத்து கிறான். பலாத்காரத்தைக் காட்டியோ, பரம்பரையாக அநுசரிக்கப் பட்டு வந்திருக்கிறதென்று சொல்லியோ, பொதுஜன உரிமை யில்லாத விசேஷ உரிமையென்று ஏதேனுமொன்றைக் காட்டியோ, சலுகைகள் கோரப்படுமானால் அவை அத்து மீறியவையாகும்; கொடுங்கோன்மையாகும். அவற்றை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும்; அழித்துப் போடவேண்டும். உங்களுடைய தேசந்தான் நீங்கள் வணங்கும் கோயிலாக இருக்கவேண்டும். இந்தக் கோயிலின் மேற்பாகத்திலே கடவுள்; கீழ்ப்பாகத்திலே சம அந்ததுடைய ஜனங்கள். இதைத் தவிர வேறு விதமான ஏற்பாட்டை, வேறுவித மான தரும நியாயத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அப்பொழுது தான் உங்கள் தேசத்தின் மானத்தையும் உங்களுடைய மானத்தையும் காப்பாற்றினவர்களாவீர்கள். உங்களுடைய வாழ்க்கைச் சம்பந்த மாக நீங்கள் வகுத்துக்கொள்கிற மற்றத் திட்டங்களெல்லாம், மேலே சொன்ன ஏற்பாட்டை அதிவாரமாகக் கொண்டிருக்கட்டும், இந்த ஏற்பாடு திரமாக இருக்க வேண்டுமானால், இதற்காக எல்லோரும் சேர்ந்துழைக்கவேண்டும். ஜனங்களிலே ஒரு சாரார் மட்டும் தனியாக நின்று சில சட்டதிட்டங்களைச் செய்வார்களா னால், அவை, அந்தச் சாராருடைய எண்ணங்களையும் ஆவல்களை யுமே பிரதிபலிப்பதாயிருக்கும்; எல்லோருடைய எண்ணங்களையும் ஆவல்களையும் பிரதிபலிப்பதாயிராது. எந்த ஒரு சட்டமும் பொது ஜன ஆவலை வெளிப்படுத்துவதா யிருக்க வேண்டும்; எல்லோ ருடைய நலனையும் அபிவிருத்தி செய்வதாயிருக்க வேண்டும்; தேசத்தின் இருதயத் துடிப்புக்குச் செவி கொடுப்பதாயிருக்க வேண்டும். எனவே, ஒரு சட்டம் இயற்றப்படுமானால் அது, தேச மனைத்துமே சேர்ந்து நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இயற்றினதாக இருக்க வேண்டுமே தவிர வேறு விதமாக இருக்கக் கூடாது. இந்தச் சட்டமியற்றும் பொறுப்பை ஒரு சிலரிடத்தில் ஒப்படைத்துவிடுவீர்களானால், தேசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதற்குப் பதிலாக அந்த ஒரு சிலருக்கு முக்கியத் துவம் கொடுத்துவிடுகிறீர்கள். இதனால் அந்த ஒரு சிலருக்கு தான் என்ற மமதை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஜனங்களனைவரையும் ஒன்று சேர்த்து வைக்கக்கூடியது தேசம் ஒன்றுதான். தேசம் என்று சொன்னால் வெறும் நிலப்பரப்பல்ல. குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பு, ஒரு தேசத்தின் அதிவாரமே தவிர வேறொன்றுமில்லை. இந்த அதிவாரத்தின் மீது எழுந்திருக்கிற எண்ணம் எதுவோ அதுதான் தேசம். மேற்படி நிலப்பரப்பில் வசிக்கும் எல்லாமக்களையும் ஒன்று சேர்த்து வைக்கிற அன்பு உணர்ச்சியெதுவோ, கூட்டுறவு எண்ணம் எதுவோ அதுதான் தேசம். தேசீய வாழ்வின் அபிவிருத்தி விஷயத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமையை, உங்கள் சகோதரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஓட்டு பலத்தைக்கொண்டு பெறாத வரையில், படித்தவர்கள் மத்தியில் உங்களில் ஒருவரேனும் படிப்பில்லாமல் உழன்று கொண்டிருக்கிற வரையில், வேலை செய்வதற்குச் சக்தியும் விருப்பமுமிருந்தும் வேலை கிடைக்காமல் வறுமையால் வாடிக்கிடக்கிற ஒருவரேனும் இருக்கிறவரையில், உங்களுக்கென்று ஒரு தேசமில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஏதேனுமொன்று இருந்தால், அது, தேசம் இருக்கவேண்டிய லட்சணத்தில் இல்லை, எல்லோருக்காகவும் எல்லோருடையதாகவும் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். எல்லோருக்கும் ஓட்டுரிமை. எல்லோருக்கும் கல்விவசதி, எல்லோருக்கும்வேலை என்கிற இந்த மூன்றுந்தான், ஒரு தேசத்தின் முக்கியமான தூண்கள் போல்வன. இந்த மூன்றும் திரமாக தாபிதமாகாத வரையில் நீங்கள் ஓய்வுகொள்ளக் கூடாது. மேற்சொன்ன மூன்று தம்பங்களையும் நிலை நிறுத்திவிட்ட பிறகு, ஒவ்வொருவருடைய தேக வளர்ச்சிக்கும், ஆத்மவளர்ச்சிக்கும் தேவையான ஆகாரம் கிடைக்குமாறு செய்துவிட்டபிறகு, உங்க ளுடைய தாயாரை நீங்கள் எப்படி அணைத்துக் கொள்வீர்களோ அதைப்போல் நீங்கள் அனைவரும் சகோதரர்களாகக் கட்டித் தழுவிக்கொண்டு, இத்தலியின் லட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்காக உங்களுடைய சக்திகளனைத்தையும் உபயோகப்படுத்தி அழகாக வும் ஒன்றாகவும் முன்னேறிச் செல்ல வேண்டும். அப்படியானால், இத்தலியின் லட்சிய மென்ன? ஐரோப்பாவை, தரும ரீதியான ஒற்றுமைக் குட்படுத்துவது. இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நீங்கள் நிறைவேற்றவேண்டிய கடமைகள் அதிகமென்பது உங்கள் ஞாபகத்திலிருக்கட்டும். பிரிந்து போயிருக்கிற தேசங்கள் யாவும் ஒன்று சேர வேண்டுமென்ற மகத்தான வார்த்தையை, இத்தலி ஒன்றுதான் இரண்டுதரம் முழக்கஞ்செய்தது. ஐரோப்பா கண்டத்தின் தலைநகரமாக, திருக்கோயிலாக இரண்டுமுறை ரோமாபுரி இருந்திருக்கிறது. ஒருமுறை, நமது கழுகுக் கொடிகள் உலகத்தின் பல பாகங்களுக்கும் பறந்துசென்று ஆங்காங்கு நாகரிக தாபனங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொடுத்தபோது.1 மற்றொரு முறை, இத்தலியை நோக்கி வடக்கேயிருந்து வந்த ஜாதியார், இயற்கையின் சக்தியினால் தோல்வியடைந்துவிட்ட பிறகு ஏற்பட்ட மத புனருத்தாரணம் இருக்கிறதே அது, போப்பரசர் தானத்தை நிறுவி அதன் மூலமாக எல்லா ஆத்மாக்களும் ஒன்றுதான் என்ற உபதேசத்தை, கிறிதவ உலகத்திலே வசிக்கும் ஜனங்களுக்குச் செய்தபோது.2 இப்பொழுது, மூன்றாவது முறையாக இத்தலி செய்யவேண்டிய முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. இது முற்காலத்துக் காரியங்களைக் காட்டிலும் முக்கியமானது. நீங்கள் தாபிக்கப்போகிற சுதந்திர இத்தலி, ஐக்கிய இத்தலி, சீஸர்கள் காலத்து இத்தலியைக்காட்டிலும், போப்பரசர்கள் காலத்து இத்தலியைக்காட்டிலும் மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும், இத்தலி, இப்படி மகத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிற தென்ற கற்பனையே, இன்றைய ஐரோப்பாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. எல்லா நாட்டாருடைய கவனமும் இப்பொழுது இத்தலியின் மீது விழுந்திருப்பதற்குக் காரணம் இதுதான். ஆதலின் இந்த லட்சியத்தை, அதாவது ஐரோப்பாவை தரும ரீதியான ஒற்றுமைக் குட்படுத்த வேண்டுமென்கிற லட்சியத்தை நீங்கள் எவ்வளவு உன்னத தானத்திலே வைத்துப் போற்றுகிறீர்களோ அந்த விகிதாசாரப்படி தான் உங்களுடைய தேசத்திற்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை களும் இருக்கும். இந்த லட்சியத்தை, அகங்கார புத்தி என்பதோடு சேர்க்கவிடாமல் பரிசுத்தமாக வைத்திருங்கள். பொய்மைகள் இதனைத் தீண்டிக் களங்கப்படுத்தாதிருக் கட்டும். ராஜதந்திரம் என்று சொல்கிறார்களே அது சம்பந்தப்பட்ட மாசுக்களெல்லாம் இதன்மீது படியாதிருக்குமாக. ஒரு சிலருடைய நலனுக்காகவோ, சந்தர்ப்பங்களை அநுசரித்தோ நீங்கள் உழைக்கக்கூடாது; கொள்கைகளுக்காகவே உழைக்க வேண்டும். அப்படி உழைக்கிற உழைப்புத்தான் உங்கள் தேச அரசாங்கத்தின் அதிவாரமாயிருக்கவேண்டும். ஐரோப்பாவிலேயுள்ள பல நாடுகளில் இப்பொழுது சுதந்திரமென்பது புனிதத்தன்மை யோடு உச்சரிக்கப் படுகிறது; ஆனால் பகிரங்கமாக, கிரமமாக நசுக்கப்படுகிறது. இன்னுஞ் சில நாடுகளில் சத்தியம் வேறு; லாபம் வேறு. கோட்பாடு வேறு; அநுஷ்டானம் வேறு என்று சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்கிற நாடுகள், தனியாக ஒதுக்கப்பட்டுப்போய், அடக்கு முறைக்கும் கலகத்திற்கும் இரை யாகி, அவை மூலமாகத்தான் தங்கள் குற்றத்தைக் கழுவிக் கொள்ள வேண்டி வரும். ஆனால், நமது தேசத்தின் லட்சியத்தைத் தெரிந்து கொண்டிருக்கிற நீங்களோ வேறு பாதையில் செல்லவேண்டும். உங்கள் மூலமாக உலகத்திலேயே இத்தலி ஒன்றில்தான் ஒரே கடவுள், ஒரே சத்தியக் கோட்பாடு, ஒரே நம்பிக்கை, ஒரே அரசியல் வாழ்க்கை என்பவைகள் ஏற்படப் போகின்றன. இத்தாலிய மகாஜனங்கள் எழுப்பப் போகிற இந்த மகத்தான கட்டிடத்தின்மீதுதான், சுதந்திரம் - கூட்டுறவு என்கிற கொடியை எல்லா நாட்டாருடைய பார்வையிலும் பிரகாசிக்கும்படியாக நீங்கள் நாட்டவேண்டும். இந்தக் கொடியை நீங்கள் சுயேச்சாதிகாரிகளின் அச்சுறுத்தலைக் கண்டு இறக்கக் கூடாது; அல்லது தற்காலிகமாகக் கிடைக்கும் சாதகங்களுக்கு ஆசைப்பட்டும் இறக்கக் கூடாது. உங்களுக்கு எப்படி திடநம்பிக்கை இருக்கிறதோ அப்படியே தைரியமும் இருக்க வேண்டும். இத்தலியின் இருதயத்திலே எந்த எண்ணங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனவோ அந்த எண்ணங்களை உலகம் கேட்கும்படியாக, உலகத்தை ஆளும் பிரபுக்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள் கிறார்களே அவர்களுடைய செவியில் கேட்கும் படியாக உரத்த குரலில் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுடைய சகோதர நாடுகளைப் புறக்கணித்து விடாதீர்கள். உங்கள் மூலமாக இத்தலியின் நல்வாழ்வானது, அழகிலும் பலத்திலும் வளர்ச்சி பெறட்டும். அடிமைகளுக்குரிய அச்சத்தினின்றும் சஞ்சலபுத்தியி னின்றும் அது விடுபட்டிருக்கட்டும். இத்தலியின் நல்வாழ்வுக்கு இத்தாலிய ஜன சமூகமே அதிவாரம்; தனக்கென்று சில கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு அவற்றை அநுஷ்டானத் திற்குக் கொண்டு வருவதே அதன் விதி; எல்லோருடைய பலமுமே அதன் பலம்; எல்லோரையும் உயர்த்துவதே அதன் வேலை; கடவுள் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதே அதன் லட்சியம். மானிட சமுதாயத்தின் நன்மைக்காக நீங்கள் உங்கள் உயிரைவிடத் தயாராயிருக்கிறபோது உங்கள் தேசம் அமர வாழ்வு பெற்றுப் பிரகாசிக்கும். 6 . குடும்பம் இருதயத்தின் தேசமாயிருப்பது குடும்பம். அந்தக் குடும்பத் திலே ஒரு தேவதை இருக்கிறது. அது தன்னுடைய அழகு, இனிமை, அன்பு ஆகிய இவற்றின் பிரபாவத்தினால், நமது கடமைகளைச் செய்யும்போது உண்டாகிற சிரமத்தைக் குறைக்கிறது; நமக்கு ஏற்படுகிற துயரங்களில் கடுமையை எளிதாக்கிக் கொடுக்கிறது. இந்தத் தேவதையின் கருணை யினால் உலகத்திலே மனிதன், துக்கங் கலவாத சந்தோஷத்தை எங்கே அநுபவிக்கிறானென்று கேட்டால், அது குடும்பத்தில்தான். எவனொருவன் சந்தர்ப்ப பேதத்தினால் தெய்விகத் தன்மையோடு கூடிய குடும்ப வாழ்க்கையை நடத்த முடியாதவனாயிருக்கிறானோ அவனுடைய ஆத்மாவில் துயரத்தின் நிழல் படிந்துவிடுகிறது, அவனுடைய இருதயத்தில், எதைக் கொண்டும் நிரப்ப முடியாத ஒரு சூனியம் உண்டாகி விடுகிறது. இதை நான் நன்கு அறிவேன்.1 ஆதலின் குடும்பத்தின் சந்தோஷத்தை யும் ஆறுதலையும் அடைந்திருக்கிற எனது சகோதரர்களே! மேலே சொன்ன தேவதையைச் சிருஷ்டித்த கடவுளை ஆசீர்வதியுங்கள். மற்ற இடங்களில் இன்னும் அதிகமான சந்தோஷத்தை யடையலாம், நமது துயரங்களுக்கு வெகு சீக்கிரத்தில் ஆறுதல் பெறலாமென்று கருதிக்கொண்டு குடும்பத்தினால் ஏற்படுகிற சந்தோஷத்தையும் ஆறுதலையும் குறைவாக எண்ணிவிடாதீர்கள். மற்ற இடங்களில் நாம் காணமுடியாத ஒரு நல்ல அமிசத்தைக் குடும்பத்தில் காண்கி றோம். அதுதான் மனவுறுதி. குடும்பப்பற்றானது, உங்களுக்குத் தெரியாமலே உங்களைச் சுற்றிக்கொள்கிறது. எப்படி ஒரு கொடியானது ஒரு மரத்தைத் தழுவிக் கொள்கிறதோ அப்படியே அந்தக் குடும்பப் பற்றும் உங்களை உறுதியாகவும் நிரந்தரமாகவும் பற்றிக்கொள்கிறது. அஃது ஒவ்வொரு கணமும் உங்களைப் பின் தொடர்ந்து வருகிறது; மௌனமாக இருந்துகொண்டு உங்க ளுடைய வாழ்க்கையோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு விடுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் நீங்கள் அதனை அறியாமலே இருக்கிறீர்கள். ஏனென்றால், அஃது உங்களோடு கலந்த ஓர் அமிசமாகிவிட்டது. ஆனால் அதனை இழந்துவிட்டீர்களானால், விவரிக்க முடியாத ஒன்றை, உங்களோடு நெருங்கிய ஒன்றை, உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையாயுள்ள ஒன்றை இழந்து விட்டதாக உணர்கிறீர்கள்; நிம்மதி இழந்து மனச் சஞ்சலத்துடன் அங்குமிங்குமாகத் திரிகிறீர்கள். குடும்பப் பற்று இல்லாமல் நீங்கள் அவ்வப்பொழுது சிறு சிறு சந்தோஷங்களை அடையலாம்; சிறு சிறு ஆறுதல்களைப் பெறலாம். ஆனால் நிரந்தரமானதோர் ஆறுதல் பெற முடியாது; அமைதி அடைய முடியாது; ஓர் ஏரியின் அலைமீது எந்தவிதமான அமைதி காணப்படு கிறதோ, ஒரு தாயாருடைய மார்பின்மீது கவலையற்றுப் படுத்துறங்கும் ஒரு குழந்தையின் முகத்தில் எந்தவிதமான அமைதி காணப்படுகிறதோ அந்த விதமான அமைதியை நீங்கள் அடையவே முடியாது. குடும்பத்தின் தேவதை யார்? திரீ. தாயாரோ, மனைவியோ, சகோதரியோ, திரீயாயிருக்கிற யாரும் நமது வாழ்க்கையைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு சக்தி; அன்பின் இனிமை; கருணாமூர்த்தியான கடவுளின் பிரதி பிம்பம். மென்மையின் பொக்கிஷம் அவள். அதைக்கொண்டு நம்முடைய துயரம் ஒவ்வொன்றையும் துடைத்து விடுகிறாள். தவிர நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய எதிர்கால வாழ்வை நிர்ணயித்துக் கொடுப்ப வளாகவும் அவள் இருக்கிறாள். ஒரு தாயார் தன் குழந்தைக்கு முதன் முதல் கொடுக்கிற முத்தத்தின் மூலமாக, அன்பு இன்னதென்பதை அந்தக் குழந்தைக்குத் தெரிவிக்கிறாள். ஒரு திரீ தன் கணவனுக்கு முதன்முதலாகக் கொடுக்கிற தெய்விக முத்தத்தின்மூலம் அவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளுமாறு உணர்த்துகிறாள். எவனொருவனுக்கு அன்பும் நம்பிக்கையுமிருக்கிறதோ அவனுக்கு பூரணத்துவம் அடைய வேண்டு மென்கிற ஆசை யுண்டாகிறது. அந்தப் பூரணத்துவத்தைப் படிப்படியாக அடையும் சக்தியையும் அந்த அன்பும் நம்பிக்கையும் அளிக்கின்றன. சுருங்கக் கூறினால், திரீதான் எதிர்காலத்தைச் சிருஷ்டிக்கிறாள். அந்த எதிர்காலத்தின் உயிருள்ள அடையாளமாயிருப்பது குழந்தை. அந்தக் குழந்தையே நம்மையும் நமது வருங்கால சந்ததிகளையும் பிணைத்து வைக்கும் சங்கிலி, ஒரு திரீயின் மூலமாகத்தான் தெய்வத்தன்மையோடு கூடிய பிரஜோற்பத்தி சக்தியைத் தன்னகத்தே கொண்டிருக்கிற இல்லற வாழ்க்கையானது, நித்தியமாயுள்ள கடவுளிடம் நம்மை அழைத்துச் செல்கிறது. ஆதலின் எனது சகோதரர்களே! குடும்பத்தைப் புனிதமுடைய தாகப் போற்றுங்கள். வாழ்க்கையினின்று பிரிக்கமுடியாத ஓர் அமிசம் என்று அதனைக் கருதுங்கள். பொய்மையும் மிருகத் தன்மையும் வாய்ந்த தத்துவோபதேசகர்கள் இந்தக் குடும்பத்தைத் தாக்குவார்களானால், அந்தத் தாக்குதல்களையெல்லாம் எதிர்த்துப் போராடுங்கள். இந்தக் குடும்ப மானது மனிதனிடத்தில் சுயநலத்தையும் ஜாதி அகங்காரத்தையும் உண்டுபண்ணுகிறதென்றும், இவற்றை அகற்ற வேண்டுமானால் குடும்பத்தையே அழித்துவிட வேண்டு மென்றும் வெளியிடப்படுகிற எண்ணங்களை எதிர்த்துப் போராடுங்கள். குடும்பம் என்பது கடவுள் சிருஷ்டி; மனிதனுடைய சிருஷ்டியல்ல. எந்த மனித சக்தியும் இதனை அழிக்க முடியாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவனுடைய தேசம் எப்படி ஒரு முக்கிய அமிசமாயிருக்கிறதோ அதைப்போல், அதைவிட அதிகமாக அவனுடைய குடும்பம் அவனுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய அமிசமாயிருக்கிறது. தேசத்தைவிட குடும்பம் முக்கிய மானது என்று சொன்னேன். ஏன்? இன்று நமக்குப் புனிதமாயுள்ள நமது நாடு பின்னொரு காலத்தில் இல்லாமலே மறைந்து போகலாம். அப்பொழுது பிரதி ஒருவனும் மானிட சமுதாயத்திற்குரிய தெய்வத் திருச் சட்டத்தைத் தன் மனதிற்குள்ளேயே வைத்துப் போற்ற வேண்டியவனா யிருக்கிறான். ஆனால், குடும்பம் அப்படிப்பட்ட தல்ல. அஃது அழியாதது. மனிதன் இருக்கிறவரையில் குடும்பமும் இருக்கும். குடும்பம் என்பது மானிட சமுதாயத்தின் தொட்டில். மனித வாழ்கையின் பல அமிசங்களைப்போல, குடும்பமாகிற அமிசமும் முன்னேற்ற மார்க்கத்தைத் திறந்து காட்டும் தன்மையது; யுகத்திற்கு யுகம் மனிதனுடைய மனப்போக்குகளையும் ஆவல்களை யும் வளர்க்கும் சுபாவமுடையது. ஆதலின், யாரும் அதனை அழிக்கக் கூடாது. குடும்பத்தைப் புனிதமுடையதாகக் கருதிப் போற்றுங்கள். குடும்பத்திற்கும் தேசத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்குமாறு செய்யுங்கள். இவை இரண்டும் உங்களுடைய முக்கியமான கடமைகள். மானிட சமுதாயத்தின் மத்தியில் ஒரு தேசத்திற்கு என்ன தானம் உண்டோ அதே தானந்தான் ஒரு தேசத்தின் மத்தியில் குடும்பத்திற்கும் உண்டு. ஒரு தேசத்தின் கடமை, தன் ஜனங்களை மனிதர்களாகப் பயிற்சி செய்யவேண்டுவது என்று முன்னே சொன்னேன். அதைப்போல, ஒரு குடும்பத்தின் கடமை பிரஜை களைப் பயிலுவிப்பது என்பதை இப்பொழுது எடுத்துக் காட்டுகி றேன். ஒரு கோட்டின் இரு முனைகளெப்படியோ அப்படியே தேசமும் குடும்பமும் இருக்கின்றன. இந்த இரண்டும் சம்பந்தப் பட்டிராவிட்டால் குடும்பத்தில் அகங்கார புத்தி உண்டாகிவிடு கிறது; அன்பு என்பது இல்லாமலே போய்விடுகிறது. காலவசத்தினால் இப்பொழுது குடும்பங்களில், தான் என்ற மமதை அதிகமாகக் காணப்படுகிறது. சமுதாய சம்பந்தமாக ஏற்பட்டிருக்குங் கெட்ட தாபனங்கள் பல, இந்த மமதையை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றன. எந்தச் சமுதாயமானது ஒற்றர்கள், போலீ, சிறைக்கூடம், தூக்குமேடை இவைகளின் ஆதரவுபெற்று இயங்கி வருகிறதோ, அந்தச் சமுதாயத்தின் மத்தியில் வசிக்கும் ஓர் ஏழைத் தாயார் தனது அருமை மகன் உயர்ந்த லட்சியமுடையவனாயிருப்பதைக்கண்டு நடுநடுங்கிப் போகிறாள். அவனுக்கு அவநம்பிக்கை உண்டாகும்படி உபதேசம் செய்கிறாள். மகனே! ஜாக்கிரதை! எவனொருவன் உன்னிடம் வந்து தேச மென்றும், சுதந்திரமென்றும், எதிர்காலமென்றும் சொல்லி, தன் மார்போடு உன்னை அணைத்துக் கொள்ளப் பார்க்கிறானோ அவன் ஒரு துரோகியாயிருக்கலாம் என்று சொல்லிக் கொடுக்கிறாள். எந்தச் சமுதாயத்தில் யோக்கியதையுடன் கூடியிருப்பது ஆபத்தோ, எந்தச் சமுதாயத்தில் பணத்தைக் கொண்டுதான் அதிகாரத்தை அடைய முடியுமோ, பத்திரமாக இருக்க முடியுமோ, ஆளும் வர்க்கத்தினரின் அடக்குமுறை, அகந்தை இவற்றினின்றும் தப்பித்துக் கொள்ள முடியுமோ அந்தச் சமுதாயத்தில் வசிக்கும் ஒரு தகப்பன், சத்தியத்தை அடைய ஆவல் கொள்ளும் தன் மகனைப்பார்த்து, அந்த மகன் மீது வைத்த அன்பினால் மகனே! ஜாக்கிரதை! பணத்திலே தான் உன் பத்திரம் இருக்கிறது. மற்றவர்களுடைய அதிகாரத்தினின்றும், ஒழுக்கஹீனங் ளினின்றும் சத்தியம் ஒன்று மட்டும் உன்னைக் காப்பாற்றிவிடாது என்று போதிக்கிறான். ஆனால் நான் நிகழ்காலத்தைப் பற்றிப்பேசவில்லை; வருங்காலத்தைப் பற்றியே பேசுகிறேன். வருங்காலத்தில் உங்களுடைய சந்ததியார் வாழ்வதற்கென்று, ஒரு தேசத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள். உங்களுடைய வியர்வையினாலும் உழைப்பினாலும் ஏற்படுகிற அந்தத் தேசத்தில் சுதந்திர புருஷர்களே வசிப்பார்கள். யோக்கி யதையையும், பரோபகாரத்தையும் முக்கிய ஆதாரங்களாகக்கொண்டு அந்தத்தேசம் சாசுவதமாக இருக்கும். அப்படிப்பட்ட காலம் வருகிறவரையில், உங்களுக்கு முன்னேற்ற மார்க்கம் ஒன்று தான் இருக்கிறது; உங்களால் நிறைவேற்றப்படவேண்டிய கடமை ஒன்றுதான் இருக்கிறது. அஃது என்ன? அதுதான் இத்தலியை உங்களுடைய தாக்கிக் கொள்ளும் கடமை; அதற்காக உங்களைத் தயார்படுத்திக்கொள்கிற கடமை; அப்படித் தயார்ப்படுத்திக் கொண்டு தக்க சமயம் பார்த்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கவேண்டும். அந்தப் போராட்டத்திலே வெற்றியடைந்த பிறகு தான், உங்களுடைய மற்றக் கடமைகளை எவ்விதத் தடையு மின்றி நீங்கள் நிறைவேற்றிக்கொண்டு செல்லமுடியும். அப்பொழுது நான் மண்ணிலே புதைக்கப்பட்டுக் கிடப்பேன். ஆனால் இப்பொழுது நான் சொல்கிற வார்த்தைகளைமட்டும் அப்பொழுது எடுத்துப்படியுங்கள். சகோதர பாவத்துடன் நான் சொல்கிற இந்த வார்த்தைகள், உங்களை நேசிக்கிற இருதயத்திலிருந்து தோன்றி யவை, மனப்பூர்வமாகவும் நம்பிக்கையோடும் எழுதப்பட்டவை யென்று உங்களுக்குப் புலப்படும். திரீயினிடம் அன்பு செலுத்துங்கள்; அவர்களைக் கௌர வியுங்கள். அவர்களிடமிருந்து ஆறுதல் மட்டும் பெறப்பார்க்கா தீர்கள்; பலமும் ஊக்கமும் பெறப் பாருங்கள். அவள் மூலமாக உங்களுடைய அறிவுத்திறமையையும், சீலசுபாவத்தையும் இரண்டு மடங்காக்கிக் கொள்ளுங்கள். பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்கிற எண்ணத்தை அடியோடு உங்கள் மனத்திலிருந்து அகற்றி விடுங்கள். அப்படிப்பட்ட உயர் தன்மை உங்களிடத்தில் ஒன்று மில்லை. திரீகள் குறைவான அறிவுடையவர்களென்று சொல்லி அநேக காலமாக அவர்கள்மீது ஒரு துவேஷம் ஏற்பட்டு வந்திருக் கிறது. ஆனால் இது காறும் நடைபெற்று வந்திருக்கிற அடக்கு முறைகளின் சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், அடக்குமுறையைப் பிரயோகிக்கிறவர்கள் எப்பொழுதுமே, தாங்கள் சுயமாகச் சிருஷ்டித்துக் கொண்ட சில ஆதாரங்களை வைத்துக்கொண்டு மேற்படி அடக்குமுறையை உபயோகிக் கிறார் களென்பது தெரியவில்லையா? நிலச்சுவான்தார்கள் பொதுஜனங் களாகிய உங்களுடைய பிள்ளைகளுக்கு நாளது தேதி வரையில்கூட கல்விப் பயிற்சி கொடுக்க மறுக்கிறார்கள். அப்படி மறுத்து விட்டு உங்களுக்குக் கல்வியில்லையென்று காரணங்காட்டி, பிரஜா உரிமை, ஓட்டுரிமை முதலியவற்றை உங்களுக்கு மறுக்கிறார்கள். அமெரிக்காவில், நீக்ரோவர்களை வியாபாரப் பொருள்களாக உபயோகிப் பவர்கள், அந்த நீக்ரோவர்கள், ஜாதியிலே தாழ்ந்தவர் களென்றும், அவர்களால் கல்வியறிவு பெற முடியாதென்றும் சொல் கிறார்கள். ஆனால் அதே சமயத்தில், அந்த நீக்ரோவர்களுக்கு யாரேனும் கல்வி புகட்ட முயன்றால் அவர்களைத் தொந்திரவு களுக்குட்படுத்துகிறார்கள்.1 சென்ற ஐம்பது வருஷ காலமாக, இத்தலியில், ஆளும் வர்க்கத்தினருக்கு ஆதரவு அளித்து வருவோர் இத்தாலியர்களாகிய நாம் சுதந்திரத்திற்கு அருகதையுடையவர் களல்லவென்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதே சமயத்தில், சுதந்திரத்திற்கு இடையூறாயுள்ளவற்றைக் கடந்து செல்ல நாம் முயன்றால், அப்படி நம்மைச் செய்யவொட்டாதபடி சட்டங்களை இயற்றியும், ராணுவ பலத்தைக்கொண்டும் தடுக்கி றார்கள். கொடுங்கோன்மையின் மூலமாக நாம் சுதந்திரத்தையடை வதற்கான கல்வியை நமக்குக் கொடுக்கப் பார்க்கிறார்கள் போலும்! இதே மாதிரியான குற்றத்தைத்தான் நாம் தீரிகளின் விஷயத்திலும் செய்து வந்திருக்கிறோம். இனியேனும் இந்தக் குற்றத்தின் நிழல்கூட உங்களை அணுகாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மானிட சமுதாயமென்னும் குடும்பத்தை இரண்டு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவை மற்றொரு பிரிவு அடக்கியாளப் பார்ப்பது, கடவுள் முன்னிலையில் செய்யப்படுகிற பெரிய குற்றமாகும். பரமபிதாவான கடவுளின் திருமுன்னர் ஆணென்றும் பெண்ணென்றும் வேற்றுமையே கிடையாது; மனிதத் தன்மை யுள்ள வியக்திதான் உண்டு. அந்த வியக்தி, தீரியாகவும் இருக்க லாம்; புருஷனாகவும் இருக்கலாம். எந்தெந்தத் தன்மைகள், மிருகத்தினின்று மனிதனைப் பிரித்து காட்டுகின்றனவோ அந்தத் தன்மைகள் - அதாவது, சமுதாயமாகச் சேர்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணம், கல்வியறிவுபெறும் திறமை, முன்னேற்றமடையுஞ் சக்தி முதலிய தன்மைகள் - எங்கெங்கே வெளிப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனித சுபாவம் குடி கொண்டிருக்கிறதென்பது வெளிப்படை. இந்தச் சுபாவத்தின் விளைவாக எல்லாருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளும் கடமைகளும் ஏற்படுகின்றன. ஒரே மரத்திலிருந்து இரண்டு கிளைகள் பிரிந்து போகிற மாதிரி, ஆணும் பெண்ணும், மானிட சமுதாயமென்னும் அடிவாரத்திலிருந்து வெவ்வேறு வடிவத்தில் தோன்றும் இரண்டு ஜீவன்கள். இவர்களிருவருக்குமிடையில் எவ்வித ஏற்றத் தாழ்வுகளு மில்லை. ஆனால் எப்படி இரண்டு பேருடைய மனப்போக்குகள் , வேலைப் பாடுகள் முதலியன வேறுபடுகின்றனவோ அதைப் போல் ஆண் பெண் களுடைய மனப் போக்குகளும் வேலைப்பாடுகளும் வித்தியாசப்படு கின்றன. ஒரே வீணைத் தந்தியிலிருந்து கிளம்பும் இரண்டு வரங்கள் அந்ததில் ஏற்றத் தாழ்வுடையனவென்றோ, வேறு வேறு சுபாவ முடையன வென்றோ சொல்லமுடியுமா? இதே மாதிரி ஆணும் பெண்ணும் இரண்டு வரங்கள் மாதிரி. இந்த வரங்களில்லா விட்டால் மனித வீணை இல்லை. இரண்டு விதமான ஜாதியாரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாதியார், தங்களுடைய விசேஷத் திறமையையும், வாழ்க்கை நிலைமையையும் உபயோகித்து, ஆங்காங்குக் குடியேறித் தங்கள் ஆதிக்கத்தை தாபிப்பதன் மூல மாக மானிட சமுதாயத்தின் கூட்டுறவு எண்ணத்தை வளர்க்கிறார்க ளென்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு ஜாதியார், உலகத்தின ரனைவராலும் வியந்து பாராட்டப் படுகிற கலைகளையும் இலக்கி யங்களையும் உற்பத்தி செய்து அவற்றின் மூலமாக மேற்படி கூட்டுறவு எண்ணத்தைப் பரப்புகிறார்களென்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பேருடைய கடமைகளும் உரிமைகளும் வெவ்வேறு விதமாக இருக்க முடியுமா? இந்த இரண்டு ஜாதியாரும், மானிட சமுதாயமனைத்தும் ஒரு கூட்டுறவு தாபனம் என்ற தெய்வீக எண்ணத்தை உலகத்திலே பரப்பத் தோன்றிய இரண்டு தூதர்கள் மாதிரி. தங்களுடைய நோக்கத்தைப் பொறுத்த மட்டில் இவர்க ளிரண்டு பேரும் சமமானவர்களே; சகோதரர்களே. இதைப் போலவே, ஆணும் பெண்ணும் மானிட சமுதாயத்திற்கு மத்தியில் இரண்டு விதமான வேலை களைச் செய்யத் தோன்றியிருக்கிறார்கள். இவ்விரண்டு பேருடைய வேலைகளும் புனிதமானவை; மானிட சமதாயத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை. இவ்விரண்டு பேரும், கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிற இரண்டு சத்திகள். ஆதலின், தீரியை, உங்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்கிற சகபாடியாக மட்டும் கொள்ளாதீர்கள்; உங்களுடைய ஆவல்கள், எண்ணங்கள், ஆராய்ச்சிகள், சமுதாய நலனுக்காக நீங்கள் செய்கிற முயற்சிகள் ஆகிய இவற்றிலும் பங்கெடுத்துக் கொள்கிற தோழ னாகக் கொள்ளுங்கள். சமுதாய வாழ்க்கையிலாகட்டும், அரசியல் வாழ்க்கையிலாகட்டும், உங்களுடன் சமமானவள் என்று அவளைக் கருதுங்கள். மனித ஆத்மாவின் இரண்டு இறக்கைகள் மாதிரி, ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். இந்த இரண்டு சிறகுகளும் சேர்ந்து அடித்தால்தான், மானிட சமுதாய மென்னும் பறவையானது, லட்சியத்தை நாடி மேலே பறந்து செல்ல முடியும். “flîŸ M© kfid¢ áUZo¤jh®.; ஆண் மகனுக்காகப் பெண் மகளைச் சிருஷ்டித்தார் என்று வேத (பைபிள்) வாசகம் கூறுகிறது. ஆனால் உங்களுடைய எதிர்கால வேதமானது. கடவுள் மானிட ஜாதியைச் சிருஷ்டித்திருக்கிறார். அஃது ஆணாகவும் பெண்ணாகவும் பரிணமித்திருக்கிறது என்று கூறவேண்டும். கடவுளால் உங்களுக்கு அனுப்பப்படுகிற குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள். ஆனால் அந்த அன்பானது, உண்மையான அன்பாயிருக் கட்டும்; ஆழமான அன்பாயிருக்கட்டும்; கண்டிப் பான அன்பாயிருக்கட்டும். தளர்ச்சியுற்ற, யுக்திக்கநுசரணையில்லாத குருட்டுத்தனமான அன்பாக இருக்கவேண்டாம். இந்தமாதிரியான அன்பு, உங்களுடைய அகங்கார புத்தியை வெளிப்படுத்துவதோடு , குழந்தைகளுக்கு நாசத்தையும் உண்டாக்குகிறது. புனிதமானது என்று நாம் எதை எதைப் போற்று கிறோமோ, அந்த அனைத்தின் பெயராலும் நான் உங்களுக்குச் சொல் வதென்ன வென்றால், எதிர்கால சந்ததியாருடைய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதென்பதை மறந்துவிடக் கூடா தென்பதுதான். இந்தச் சந்ததியாரின் விஷயத்திலும், மானிட சமுதாயத்தின் விஷயத்திலும், கடவுள் முன்னிலையிலும் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மகத்தானது என்பதையும் மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு வாழ்க்கைச் சுகங்களிலே வாழ்க்கைப் பேராசைகளிலே அட்சராப்பி யாசம் செய்து வைக்காதீர்கள். வாழ்க்கையில், வாழ்க்கைக் கடமை களில், வாழ்க்கையை அநுசரித்திருக்கிற தருமத்தில் அவர் களுக்கு அட்சராப்பியாசம் செய்து வையுங்கள். மதப்பற்று நிறைந்துள்ள இந்த நூற்றாண்டில், சிறப்பாக , பணக்கார வகுப்புகளில், ஒரு சில தாய்மார்கள்தான், ஒரு சில தகப்பன்மார்கள் தான், தங்கள் கடமையை, அதாவதுகுழந்தைகளுக்கு நல்வழியைக் காண்பிக்க வேண்டுமென்ற புனிதமான கடமையை உணர்ந்திருக்கிறார்கள். கடமைகளை நிறைவேற்றுவதற்கும், லட்சியத்தையடையவதற்கும் இந்த வாழ்க்கை ஒரு கருவியாக உபயோகப் படுகிறதென்பதைத் தெரிந்து கொள்ளாமல், அது, சுகத்திற்காவும், சுயநல அபிவிருத்திக் காகவுமே ஏற்பட்டதென்று கருதிக் கொண்டு, அதே பிரகாரம், சென்ற தலைமுறையினர் தங்கள் குழந்தைகளை வளர்த்து வந்திருக் கின்றனர். இதனாலேயே, இப்பொழுது நாம் ஓயாத போராட்டத்தை நடத்திக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. அநேக கஷ்டங்களுக்கு உட்பட வேண்டியிருக்கிறது. இதனை நம்மிலே ஒரு சில தாய்மார்கள் தான் ஒரு சில தந்தைமார்கள் தான் உணர்ந்திருக் கிறார்கள். ஆனால் தொழிலாளர்களாகிய உங்களுக்கு இந்த ஆபத்து, அதாவது வாழ்க்கைச் சுகமென்கிற ஆபத்து, அதிகமாக ஏற்படக் காரண மில்லை. இதனால் உங்களுடைய குழந்தைகள், வறுமைப் பாடத்தைத் தான் அதிகமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வியறிவு பெறக்கூடிய வசதிகளும் இல்லை. ஆயினும், நீங்கள், உங்களுடைய வாழ்க்கையினாலும், வாய் மொழியினாலும், குழந்தைகள் விஷயத்தில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றலாம். ஒழுங்காக வாழ்க்கையை நடத்திக் காட்டுவதுதான் சிறந்தது. உங்களுடைய குழந்தைகள் உங்களைப் போல் தானிருப் பார்கள். நீங்கள் ஒழுக்கமுள்ளவர்களாயிருந்தால் அவர்களும் ஒழுக்கமுள்ளவர் களாயிருப்பார்கள். நீங்கள் ஒழுக்க ஹீனர்களா யிருந்தால் அவர்களும் ஒழுக்க ஹீனர்களாயிருப்பார்கள். உங்களிடத்தில் நேர்மையும், சகோதர மனப்பான்மையும் இல்லாவிட்டால், அவர்கள் மட்டும் எப்படி நாணயதர்களாக வும், கருணையுடைய வர்களாகவும், மனிதத்தன்மை யுடையவர் களாகவும் இருக்க முடியும்.? நீங்கள் எந்த விஷயத்திலும் அளவுக்கு மீறி நடப்பீர்களானால், அவர்கள் மட்டும் எப்படி நிதானமாக இருப்பார்கள்? நீங்கள் அவர்கள் முன்னிலையில் ஒழுங்கீனமான காரியங் களைச் செய்து கொண்டும், கேவலமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டும் இருப்பீர்களாயின், அவர்கள் மட்டும் எப்படித் தங்கள் மனத்தைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பார்கள்? உங்களுடைய வாழ்க்கை யென்னும் வார்ப்படத்தில் தான் அவர்களுடைய குணம் அமைகிறது. உங்களுடைய குழந்தைகள் மனிதர்களாகிறார்களா மிருகங்களாகிறார் களாவென்பது உங்களைப் பொறுத்திருக் கிறது.1 வாய்மொழி மூலமாகவும் உங்கள் குழந்தைகளை நீங்கள் படிப்பிக்கலாம். நமது நாடு, முற்காலத்தில் எப்படி இருந்தது, இனி எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உங்களுடைய அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு, மாலை வேளையில் வீடு வந்து சேர்கிறீர்களல்லவா? அப்பொழுது தாயார் புன்சிரிப்பு சிரிக்கிறாள்; குழந்தைகள், மழலைச் சொற்களைப் பேசிக் கொண்டு உங்கள் மடிமீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவை களைப் பார்த்து உங்களுடைய களைப்பை யெல்லாம் மறந்துவிடுகிறீர்கள். அந்தச் சமயத்தில், உங்கள் குழந்தைகளிடம் நமது முன்னோர்கள் என்னென்ன வீரச் செயல்கள் புரிந்தார்கள் என்பனவற்றை எடுத்துச் சொல்லுங்கள். இத்தலியையும், இத்தாலிய மகாஜனங்களையும் நேசித்த மகான்கள் யாரார், அவர்கள் எப்படிப் பல துன்பங்களை அநுபவித்தும், நிந்தை மொழிகளைக் கேட்டும், பல கொடுமைகளுக்காளாகியும், இத்தாலியை முன்னேற்றுவிக்க முயன்றார்கள் என்ற வரலாறுகளை யெல்லாம் எடுத்துக் கூறுங்கள். அவர்களுடைய பசுமனதிலே, நம்மை ஹிம்சிக்கிறவர்களின் மீது துவேஷ எண்ணத்தைப் பதிய வைக்காதீர்கள். அதற்குப் பதிலாக,அந்த ஹிம்சையை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற உறுதியைப் பதிய வையுங்கள். உங்கள் வாயிலிருந்து வருகிற வார்த்தை களின் மூலமாக, தாயார், அந்த மொழிகளைக் கேட்டு மௌமாகத் தலையசைத்துக் கொடுக்கி றாளே அந்த அங்கீகாரத்தின் மூலமாக, அவர்கள் - உங்களுடைய குழந்தைகள் - தரும மார்க்கத்தைப் பின்பற்றுவதிலே என்ன அழகிருக்கிறதென்பதையும், சத்திய தூதர்களாக உறுதியுடன் நிற்பதில் எவ்வளவு பெருமை இருக்கிறதென்பதையும், தனது சகோதரர்களுடைய நன்மையை முன்னிட்டு அவசியமானால் தன்னையே தியாகஞ் செய்துவிடுவதில் எத்தகைய புனிதத் தன்மை இருக்கிறதென்பதையும் தெரிந்து கொள்ளட்டும். பலாத்காரத்தின் துணைகொண்டு தாபிதமாயிருக்கிற எந்த அதிகார சக்தியுண்டோ அந்த அதிகார சக்தியை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற உறுதியை அவர்களுடைய பசுமனதிலே ஊன்றச் செய்யுங்கள். ஆனால் அதே சமயத்தில், உண்மையான அதிகார சக்தி யெதுவோ, அதி விவேகத்தி னாலும் சீலத்தினாலும் அமைந்திருக்கிற அதிகார சக்தி யெதுவோ அந்த அதிகார சக்திக்கு மரியாதை செலுத்தும்படிச் செய்யுங்கள். மதத்திலிருந்து கிளம்புகிற கொடுங்கோன்மைகள், கலகங்கள் முதலியவற்றை அவர்கள் வெறுக்கிற மாதிரி அவர்களை வளருங்கள். ஆனால் அவர்கள் அப்படி வெறுப்பதற்குப் பரம்பரை வாசனை காரணமாயிருக்கக்கூடாது; மனச் சாட்சியே காரணமா யிருக்க வேண்டும். இந்த வேலையைச் செய்ய உங்களுக்குத் தேசம் உதவியாயிருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் பெயரால் இந்த உதவியை எதிர்பார்க்க உங்களுக்கு உரிமையுண்டு. தேசீயக் கல்வியில்லாமல், உண்மையான தேசம், உண்மையான ஜாதி, அமையவே அமையாது. உங்கள் பெற்றோர்களை நேசியுங்கள். உங்களிடமிருந்து எந்தக் குடும்பம் உண்டாகி, பெருகுகிறதோ, அந்தக் குடும்பம், நீங்கள் எந்தக் குடும்பத்திலிருந்து உண்டாகி, பெருகி வந்தீர்களோ அந்தக் குடும்ப பரம்பரையை மறவாதிருக்கும்படி பார்த்துக் கொள் ளுங்கள். அநேகமாக, புதிய சம்பந்தங்கள் பழைய சம்பந்தங்களை அறுத்து விடுகின்றன. அப்படியிருக்கவே கூடாது. புதிய சம்பந்தங்கள், பழைய சம்பந்தங்களின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். ஒரு குடும்பத்திலே, குறைந்தது மூன்று தலைமுறை யினரை ஒரே விதமான அன்பு, கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். தலை நரைத்துப் போன உங்கள் தாயாரையும் , தகப்ப னாரையும், அவர்களுடைய கடைசி காலம் வரையில் மரியாதை யோடும், அன்போடும் போற்றிக் காப்பாற்றுங்கள். அவர்கள் எந்த மயானத்திற்குச் செல்கிறார்களோ அந்த மயான வழி முழுவதிலும் புஷ்பத்தைத் தூவுங்கள். களைப்படைந்து போயிருக்கிற அவர் களுடைய ஆத்மாவின் மீது நம்பிக்கை, அமரத்துவம் என்னும் வாசனை வீசுமாறு செய்யுங்கள். அடிக்கடி உங்களுடைய அன்பை அவர்களுக்குத் தெரிவியுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோர் களிடத்தில் எந்த விதமான அன்பைச் செலுத்துகிறீர்களோ, அதே விதமானஅன்பைத்தான் உங்களுடைய குழந்தைகள் உங்களிடத்தில் செலுத்துவார்கள். பெற்றோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், மனைவி, மக்கள் முதலிய அனைவரும் ஒரே விருட்சத்திலிருந்து பல வழிகளாகச் செல்லும் கிளைகள். இந்த அனைவரிடத்திலும் அன்பு செலுத்து வதன் மூலம் குடும்பத்தைப் புனிதமாக்குங்கள். உங்கள் தேசத்திற் காக, உங்கள் சுற்றத்தார் அனைவரும் சேர்ந்து பலியாகக்கூடிய ஒரு கோயிலாகக் குடும்பத்தை ஆக்குங்கள். நீங்கள் சந்தோஷமா யிருப்பீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால், குடும்பத்தின் புனிதத் தன்மையை மட்டும் நீங்கள் காப்பாற்றி வருவீர்களானால், உங்களுடைய பலகஷ்டங்களுக்கு மத்தியிலே மனச்சாந்தி பெறுவீர்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அந்த மனச் சாந்தியானது, எந்தவிதமான பரிசோதனைகள் உங்களுக்கு ஏற்பட்டாலும் அதில் ஒரு தைரியத்தோடு இருக்குமாறு செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான புயற்காற்றடித்த போதிலும், உங்களுடைய பார்வையானது,உங்கள் லட்சியத்தி னின்று மாறவே மாறாது. 7. உங்களுடைய கடமைகள் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்:- நீங்கள் வாழ்கி றீர்கள். ஆதலின் வாழ்க்கை நியதியென்ப தொன்று உங்களுக்கிருக் கிறது. மனிதனுக்கேற்பட்ட நியதிப்படி உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும்; காரியங்களைச் செய்ய வேண்டும்; வாழ்க் கையை நடத்த வேண்டும்; இஃது உங்கள் முதற்கடமை. ஆம்; இஃதொன்றே உங்கள் கடமை தவிர, உங்கள் வாழ்க்கை நியதி இன்னதென்பதைத் தெரிந்து கொள்வதற்கு கடவுள், உங்களுக்கு இரண்டுவிதமான சாதனங்களை யளித்திருக்கிறாரென்றும், அவற்றில் ஒன்று உங்கள் மனச்சாட்சி யென்றும் மற்றொன்று மானிட சமுதாயத்தின் மனச்சாட்சியென்றும் கூறியிருக்கிறேன். இன்னும், உங்கள் மனச்சாட்சியின் குரலும், சரித்திரத்தின் மூலம் வழி வழியாக வந்து கொண்டிருக்கிற மானிட சமுதாயத்தின் மனச்சாட்சி யின் குரலும் எப்பொழுது ஒரேவிதமான குரலில் ஒலிக்கிறதோ அப்பொழுதே, நித்தியமாயும் மாற்றமில்லாத தாயுமான சத்தி யத்தைக் கைப்பற்றினவர்களாகிறீர்களென்றும் பகர்ந்திருக்கிறேன். சரித்திரத்தின் மூலம் மானிட சமுதாயத்தின் குரலானது உங்களோடு பேசுகிறதாகச் சொன்னேனல்லவா, அந்தக் குரலை இப்பொழுது நீங்கள் கேட்க வேண்டுமானால் மிகவும் கஷ்டப் பட்டுத்தான் கேட்க முடியும். ஏனென்றால் எல்லோரும் தெரிந்து அநுபவிக்கக் கூடிய நூல்கள் இப்பொழுது வெளியாகவில்லை. தவிர, அவைகளைப் படிப்பதற்கு உங்களுக்கு அவகாசமுமில்லை. ஆயினும், சென்ற அரை நூற்றாண்டில் அநேக சரித்திராசிரியர் களும், மானிட சமுதாயமென்னும் சாதிரத்தை ஆராய்ச்சி செய்திருக்கிறவர்களும் சேர்ந்து, தங்களுடைய திறமையாலும் சுய அறிவினாலும், மேற்படி மானிட சமுதாயத்தின் குரலை ஒருவாறு கேட்டு அதிலிருந்து, நமது வாழ்க்கை நியதியின் தன்மைகள் இன்னின்னவையென்று ஒருவாறு அநுமானித்திருக்கிறார்கள். மனித சுபாவமானது, சமுதாயமாகச் சேர்ந்து வாழுந் தன்மைய தென்றும் கல்வியறிவுபெறுந்தன்மைய தென்றும், அவர்கள் கண்டுபிடித்திருக் கிறார்கள். தவிர, கடவுள் எப்படி ஒருவரோ, ஒரு கடவுள் தான் இருக்க முடியுமோ அப்படியே தனி மனிதனுக்கும், மானிட சமுதாயத்திற்கும் ஒரே விதமான சட்டந்தான் இருக்க முடியும் என்றும், இந்தச் சட்டத்திற்கு அடிப்படையாயிருப்பது முன்னேற்றமென்றும் அவர்கள் வரையறுத்திருக்கிறார்கள். இந்தச் சித்தாந்தத்தை இப்பொழுது யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால், மனித அறிவினால் இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிற எல்லாஆராய்ச்சிகளும் இதை வலியுறுத்துகின்றன. இந்தச் சித்தாந்தத்திலிருந்துதான் உங்களுடைய கடமைகளும் உரிமை களும் பிறக்கின்றன. அவையென்ன? எவ்வித கட்டுப்பாடுமின்றிச் சுதந்திர மாயிருக்கவும், உங்களுடைய கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் குறிப்பிட்ட சில எல்லைக்குள், மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கவும் உங்களுக்கு உரிமையுண்டு. நீங்கள் சுதந்திரமாயிருக்கிறீர்கள். அப்படியே தான் உணர் கிறீர்கள்.1 சிலர் கூறுகிறார்கள்:- எப்படியும் மனிதர்கள் மரிக்க வேண்டியவர்கள். அப்படியிருக்க, சுதந்திரம் முதலிய தெரியாத விஷயங்களுக்காகக் கஷ்டப்படுவானேன்? ஏதோ இருக்கிற வரையில் சுகமாயிருந்து காலங் கழித்து விடலாமே என்று. ஆனால் இந்தப் பொய் வேதங்களெல்லாம் சேர்ந்து, சுதந்திரத்திற்குச் சாதகமாயுள்ள இரண்டு சாட்சிகளை மறுக்கவே முடியாது. அவைதான் ஆத்ம நிந்தை; கொள்கைக்காக அடையும் மரணம். அதாவது, சுதந்திர மில்லாத ஒரு நிலையைக் கண்டு , மகான்கள் பலர் மனவேதனை யடைந்து ஐயோ, இந்த நிலையை நம் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று தங்களைத் தாங்களே நொந்து கொள்கிறார்கள். இப்படித் தங்களை நொந்து கொள்வதோடு இவர்கள் சும்மாயிருந்துவிடுவதில்லை. அந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுக்கிறார்கள்; அவைகளுக்காக அநேக கஷ்டங்களை யடைகிறார்கள்; கடைசியில், அவசியமானால் தங்கள் உயிரையும் கொடுக்கிறார்கள். ஸாக்ரடீ2 முதல் யேசுநாதர் வரை, யேசுநாதர் முதல், அவ்வப்பொழுது தங்கள் தேத்திற்காக மரிக்கிற பலர்வரை எல்லோரும் என்ன கூறினார்கள்? எங்களுக்குக்கூட வாழ்க்கையின் மீது ஆசைதான். எங்கள் வாழ்க்கையைச் சிறப்பாகச் செய்தவை எவை எவையோ அவைகளை யெல்லாம் நாங்கள் நேசிக்கிறோம். எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுக்குமாறு எங்களை வேண்டிக் கொள்கிறார்களே அவர்கள் மீதும் எங்களுக்கு அன்பு உண்டு. எங்களுடைய இருதயத்தின் ஒவ்வோர் உணர்ச்சியும் எங்களை உயிரோடிருக்குமாறு தான் கூறின. ஆனால் வருங்கால சந்ததியாரின் நலனுக்காக நாங்கள் மரணமடையவே தீர்மானித் தோம். தன் சகோதரனைக் கொன்ற கெய்ன்1 முதல், நமது காலத்து இழிகுணமுள்ள ஒற்றன் இருக்கிறானே அவன் வரையில், தங்களுடைய சகோதரர்களைக் காட்டிக்கொடுக்கிற அத்தனை பேரும், தீயவழியில் சென்று கொண்டிருக்கிற அத்தனை பேரும், தங்கள் மனதுக்குள்ளேயே தங்களை வெறுத்துக் கொள்கிறார்கள்; கண்டித்துக் கொள்கிறார்கள். ஒரு விதமான மனச்சஞ்சலம் அவர்கள் மனத்தில் உண்டாகிறது. ஏன் சன்மார்க்கத்திலிருந்து அகன்று விடுகிறாய் என்று கண்டிக்கிற மாதிரி ஏதோ ஒரு குரல் தங்களுடன் பேசுவதாக அவர்கள் உணர்கிறார்கள். நீங்கள் சுதந்திரமுடையவர்கள். அதனால் பொறுப்புடைய வர்கள். இந்தப் பொறுப்பிலிருந்துதான் உங்களுடைய அரசியல் சுதந்திரம் பிறக்கிறது; அந்தச் சுதந்திரத்தை உங்களுக்காகப் பெற்று சிதைவுபடாமல் அதனைக் காப்பாற்றுகிற கடமையும் தோன்று கிறது. இந்தச் சுதந்திரத்தை வரையறுக்கக் கூடாதென்கிற மற்றவர் களுடைய கடமையும் இதிலிருந்து தான் ஏற்படுகிறது. நீங்கள் கல்வி ஞானம் பெறுஞ் சக்தியுடையவர்கள். உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சில சக்திகள், அறிவுத்திறன்கள்,சீல சுபாவங்கள் முதலியன இயற்கையாகவே இருக்கின்றன. அவை களுக்கு உயிர் கொடுக்க வேண்டுமானால், செயல் புரியும் தன்மையை அளிக்க வேண்டுமானால் நீங்கள் கல்வியறிவு பெறவேண்டும். அதைப் பெறாவிட்டால், உங்களிடத்திலேயுள்ள சக்திகள் முதலியன பயனற்றுப் போய் விடும். மந்தத்தனமடைந்து ஒழுங்கான வளர்ச்சி பெறாமல் ஒரோ ஒரு சமயம் அந்தச் சக்திகள் வெளிப்படும். ஆத்மாவுக்கு ஆகாரமாயிருப்பது கல்வி. எப்படி ஒரு மனிதனுடைய தூல தேகமானது, உணவின்றி வளர்ச்சி பெறாதோ அதைப்போல் மனிதனுடைய ஆத்மாவும் அறிவும் வளர்ச்சி பெறுவதற்கு வெளிப்புறத்து உதவிகள் சில தேவையாயிருக்கின்றன. அதாவது வெளியார் பலருடைய எண்ணங்கள், ஆசைகள், லட்சியங்கள் முதலியனவற்றின் அமிசங்களில் ஓரளவேனும் பிரதி மனிதனுடைய ஆத்மாவிலும் அறிவிலும் பதியச் செய்யவேண்டும். ஒரே விதமான மண்ணில் பலவிதமான செடிகள் உற்பத்தி யாகின்றன. ஒவ்வொரு செடியும் தனித்தனி சுபாவமுடையது; தனித்தனி வாழ்க்கையுடையது. இருந்தாலும், எல்லாச் செடி கொடி களுக்கும் ஒரே விதமான ஆகாரமே அளிக்கப்படுகிறது. அதுபோல் மானிட சமுதாயத்திலிருந்து உண்டாகிற ஒரு செடி மனிதன். மானிட சமுதாயம் அளிக்கிற ஆகாரத்திலும், அதனுடைய பலத்திலும் அவன் வளர்கிறான். மானிட சமுதாயத்திற்கு அளிக்கப்படும் கல்வியென்னும் ஆகார மானது,நேர்முகமாகவோ, மறைமுக மாகவோ அந்தத் தனி மனிதனையும் போய்ச் சேருகிறது. இந்தக் கல்விதான் என்ன? மானிட சமுதாயமானது தொடர்ந்து முன்னேறி வந்திருக்கிறதே அந்த முன்னேற்றத்தின் பரிணாமமெதுவோ அதுதான் இந்தக் கல்வி. ஆதலின், கல்வியானது வாழ்க்கையில் அவசியமாக வேண்டியிருக்கிற பொருளாக மட்டுமில்லை; நமது முன்னோர்களுடன் நாம் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கேற்ற சாதனமாகவும் இருக்கிறது. உங்களிடத்தில் இயற்கையாயமைந் திருக்கும் சக்திகள் யாவும் விதைகள். அந்த விதை களிலிருந்து பழம் பழுக்க வேண்டுமானால் அதற்குக் கல்வி அவசியம் தேவையா யிருக்கிறது. தவிர மானிட சமுதாயத்தையும் தனி மனிதனையும் பந்தப்படுத்தி வைப்பது இந்தக் கல்வி தான். இந்தக் கல்வி ஞானமானது உங்களுக்குச் சீக்கிரமாகக் கிடைக்க வேண்டுமென்பதற்குத்தான், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, மானிட சமுதாயத்தின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டு மென்பதற்குத்தான், கடவுள், உங்களைச் சமுதாயப் பிராணிகளாகச் சிருஷ்டித்திருக்கிறார். மனிதனைத் தவிர்த்த மற்ற ஜீவராசிகள் தனித்து வாழமுடியும். இயற்கையோடு உறவு பூண்டு வாழ முடியும். ஆனால் மனிதன் அப்படியில்லை. அவனால் சங்கமாகச் சேர்ந்துதான் வாழ முடியும். உங்களுடைய வாழ்க்கைப் பிரயாணத்தின் ஒவ்வோர் அடியிலும், உங்கள் சகோதரர்களின் உதவி உங்களுக்குத் தேவையாயிருக் கிறது. உங்க ளுடைய வாழ்க்கையின் சாதாரண தேவைகளைக் கூட அவர்க ளுடைய உதவியின்றிப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. மற்ற மனிதர்களோடு சேர்ந்து வாழ்கிற போது மனிதன், எல்லா, ஜீவராசிகளைக் காட்டிலும் பலமுடையவனாயிருக்கிறான். ஆனால் தனிப்பட்டு வாழ்கிற போது, அநேக பிராணிகளைக் காட்டிலும் பலஹீனமுடையவனாயிருக் கிறான்; வளர்ச்சி பெறுஞ்சக்தியை இழந்து விடுகிறான். பூரண வாழ்வை நடத்த முடியாதவனாகிவிடு கிறான். உங்களுடைய இருதயத்திலிருந்து உற்பத்தியாகிற தேசபக்தி முதலிய உன்னத ஆவல்களும், புகழடைய வேண்டும், மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டுமென்பன போன்ற சாதாரண ஆவல் களும் எதைக் காட்டுகின்றன? உங்களுடைய வாழ்க்கைப் போக்கை யும், உங்களைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையுடன் ஒன்றுபடுத்த வேண்டு மென்ற உங்கள் இயற்கையான சுபாவத்தையும் காட்டுகின்றன. ஆதலின் சேர்த்து வாழ்வதற்காகவே நீங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். அப்படிச் சேர்த்து வாழ்வதிலே, உங்களுடைய பலம் நூறு மடங்கு அதிக மாகிறது. மற்றவர்களுடைய எண்ணம், முன்னேற்றம் முதலியன வெல்லாம் உங்களுடைய எண்ணமாகவும் முன்னேற்றமாகவும் வந்து சேர்கின்றன. மானிட சமுதாயத்தின் அன்பு, அதற்கும் உங்க ளுக்கும் ஏற்பட்டிருக்கிற ஒற்றுமை முதலியனவெல்லாம் சேர்ந்து உங்களுடைய சுபாவத்தை உயர்த்துகின்றன; புனிதமடையச் செய்கின்றன. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகவும் நெருக்க மாகவும் உங்களுடைய சகோதரர்களுடன் நீங்கள் கூட்டுறவு கொள்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு அதிகமாக உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்ற மடையும். வாழ்க்கைச் சட்டம் பூரணமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டு மானால், அஃது எல்லோரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதன் மூலமாகத் தான் முடியும். வாழ்க்கைச் சட்டமானது, முன்னேறியிருக் கிற அளவுக்கு , அந்தச் சட்டத்தின் ஒரு பாகத்தைக் கண்டுபிடிக்கிற அளவுக்கு, ஜன சமூகத்தின் கூட்டுறவு அதிகமாயிருப் பதையும், ஒரு ஜாதியார் மற்றொரு ஜாதியாருடன் நெருங்கிப் பழகியிருப்பதையும் நாம் காண்கிறோம். மனிதர்கள் இரண்டு விதமான சுபாவமுடையவர் களென்றும், ஒன்று எஜமான சுபாவ மென்றும் மற்றொன்று அடிமைச் சுபாவமென்றும் சொல்லப்பட்டு வந்ததை மறுத்து, மனித சுபாவம் எங்கும் ஒன்று தான் என்று கிறிதவ மதப் பிரசாரகர்கள் அறிவித்ததும், ரோம தேசத்து மகாஜனங்கள், தங்கள் கழுகுக் கொடியை ஜரோப்பாவின் பல பாகங்களுக்கும் வெற்றியுடன் தூக்கிச் சென்றார்கள். லௌகிக சக்தியைக் காட்டிலும் பரமார்த்திக சக்திதான் விசேஷமுடைய தென்று போப்பரச பீடமானது அறிவித்ததற்கு முன்னர், ஜெர்மானி யர்களும் லத்தீனியர் களும் கடுமையான போராட்டத்தில் ஈடு பட்டார்கள். சுதந்திரம் என்ற எண்ணத்தினின்றும் தோன்றிய எந்த தேசீய எண்ணமானது, இப்பொழுது ஜரோப்பாவின் சிந்தையைக் கலக்கிக் கொண்டிருக்கிறதோ, எது கடைசியில் வெற்றி பெறுமோ அந்தத் தேசீய எண்ணமானது பிரகடனமா வதற்கு முன்னர் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியும், மற்ற நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளும் அதுகாறும் ஜரோப்பிய விவகாரங்களிலிருந்து ஒதுங்கியிருந்த லாவியர்களை, மேற்படி விவகாரங்களில் ஈடுபடும்படிச் செய்தன.1 மனிதர்கள் முன்னேற்ற சக்தி வாய்ந்தவர்கள். இந்த முன்னேற்ற மென்ற சொற்றொடரானது, முற்காலத்தில் ஜனங்களுக்குத் தெரியாம லிருந்தது. ஆனால் இனி இந்த வார்த்தையானது, மானிட சமுதாயத்தின் புனிதமான வார்த்தையாகிவிடும் சமுதாயம், அரசியல்,மதம் முதலிய விஷயங்களில் ஏற்படுகிற ஒரு மாறுதலையே இந்த வார்த்தை குறிக்கிறது. முற்காலத்தில் மனிதர்கள், தலைவிதி, அதிருஷ்டம் என்பன வற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அமானுஷ்ய சக்தியொன்று இருக்கிறதென்றும், அந்தச் சக்திதான், மனித விவகாரங்களை நடத்துகிற தென்றும், மனிதர்களை ஆக்கு வதும் அழிப்பதும் அந்தச் சக்தி தானென்றும், அதனை மனிதர்கள் தெரிந்து கொள்ள முடியாதென்றும் நம்பிக்கொண்டிருந்தார்கள். பூலோகத்தில் திரமாக ஏதேனுமொன்றை ஏற்படுத்துஞ் சக்தி மனிதனுக்குக் கிடையாதென்று அவர்கள் கருதினார்கள். இந்த நிலவுலகத்தில் யாரோ ஒரு சிலரால் வகுக்கப்பட்ட ஒரு வட்டத்திற் குள்தான் மனிதர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அவர்கள் படிப்படியாக மேலுக்கு வந்து, அதிகார ஆதிக்கஞ் செலுத்தி விட்டு, பிறகு முதுமையடைந்து கடைசியில் இறந்து விடுகிறார்களென்ற கிரமத்தை நம்பினார்கள். அவர்கள் குறுகிய எண்ணமுடையவர்களாயிருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்திருந் ததும் சொற்பந்தான். தங்களுடைய ஜாதியைப் பற்றியும், தங்க ளுடைய நகரத்தைப் பற்றியுமே தவிர, வேறு சரித்திரம் அவர் களுக்குத் தெரியாது. மானிட சமுதாயமென்பது மனிதர்களடங்கிய ஒரு கூட்டமென்றும், அதற்கென்று சொந்தமான வாழ்க்கையோ, வாழ்க்கைச் சட்டமோ கிடையாதென்றும் அவர்கள் கருதினார்கள். அந்த மானிட சமுதாயத்தைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட்டிருந்த எண்ணவிகாசமெல்லாம், தனிப்பட்ட நபர்களைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த எண்ணத்தையொட்டித்தான். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால், அவர்கள், தங்கள் முன்னிலையிலிருந்த விஷயங்களை அப்படியே சரியென்று ஒப்புக் கொண்டார்கள். அவைகளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் அவர்கள் கொள்ளவில்லை; அதற்காக முயற்சியும் செய்யவில்லை. சந்தர்ப்பங் காரணமாக ஒரு நாட்டின் அரசாங்க முறை குடியரசாயிருக்கு மானால், அந்த நாட்டு ஜனங்களுக்கும் குடியரசு வாதிகளாயிருந் தார்கள்; அல்லது சுயேச்சாதிகார ஆட்சிமுறை நிலவுமானால் ஜனங்களும் அடங்கி ஒடுங்கிப் போகிற அடிமைகளாயிருந்தார்கள். தாங்கள் முன்னேற்ற மடைய வேண்டுமென்பதில் கொஞ்சங்கூட சிரத்தை காட்டாதவர்களா யிருந்தார்கள். ஆனால் மானிட சமுதாய மானது எங்கும், ஒரு குடியரசின் கீழ் இருந்தாலுஞ் சரி, சுயேச்சாதி காரத்தின் கீழிருந்தாலும் சரி, பல பகுதிகளாகப் பிரிந்திருப்பதையும், இதற்கு உதாரணமாக, கீழ்நாட்டில் மனிதர்களை நான்குவித ஜாதிகளாகப் பிரித்திருப்பதையும், கிரீ தேசத்தில் சுதந்திரப் பிரஜைகள் என்றும், அடிமைகளென்றும் இரண்டு பிரிவாகப் பிரித்திருப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். இதனால் அவர்கள், மனிதர்களைப் பிரித்து வைக்கிற முறைதான் சரியென்று நம்புகி றார்கள். கிரேக்க தேசத்துப் பிரபல அறிஞர்களென்று கருதப்படும் பிளேட்டோவும் அரிடாட்டலும்1 இந்த மனிதப் பிரிவினையை ஒப்புக் கொண்டிருக் கிறார்கள்.இப்படிப்பட்டவர்களிடையில் தொழிலாளர்களாகிய உங்களுக்கு விமோசனம் கிடைக்குமென்பது முடியாத காரியம். யேசுநாருடைய உபதேசங்களை அடிப்படையாகக் கொண்டு உலகத்திலுள்ள மற்றெல்லா மதங்களைக் காட்டிலும் சிரேஷ்ட மானதொரு மதத்தை தாபித்தவர்களுக்கு அதாவது கிறிதவர் களுக்கு முன்னேற்றம் என்ற வார்த்தையில் அடங்கியிருக்கும் உட்கருத்து மங்கலாகத்தான் தெரிந்ததே தவிர, அதனுடைய புனிதத் தன்மை அவர்களுக்குத் தெரியவில்லை; அவர்கள் தெரிந்து கொள்ளவுமில்லை. மானிட சமுதாயத்தின் ஒருமையையும், கடவுள் திருச்சட்டத்தின் ஒருமையையும், மனிதன் பூரணத்துவம் அடையக் கூடிய வனென்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த ஒருமையை எப்படிக் காண்பது, இதற்கு வழியென்ன வென்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை. மானிட சமுதா யத்தை அவர்கள் தனித்தனி மனிதர்களாகத்தான் பிரித்துப் பார்த் தார்களே தவிர அதனை ஒரு தொகுப்பாகக் காணவேயில்லை. தெய்வத் தன்மையை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அது தனிப்பட்ட மனிதர்களைக் காப்பாற்றக் கூடிய தென்று தான் கருதினார்களே தவிர, அதுவே, மானிட சமுதாயத்தின் திருச்சட்ட மென்பதை உணரவில்லை. பூரணத்துவம் என்று சொல்லி எந்த லட்சியத்தை அவர்கள் வகுத்துக் கொண்டார்களோ அதற்கும், தனிப்பட்ட மனிதனுடைய துக்ககரமான அற்ப வாழ்க்கைக்கும் இடையில் அதாவது கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவில் ஒரு மத்தியதர் அவர்களுக்குத் தேவையாயிருந்தது. இதனாலேயே ஒரு சிலரை தெய்வத்தின் அவதார புருஷர்களென்று அங்கீகரித்துக் கொண்டார்கள். இந்த அவதார மகிமையில் நம்பிக்கை வைப்பது தான் மனிதனுக்கு விமோசனந் தரக் கூடியது, அதுதான் அவனுக்கு பலம், அதுதான் அவனுக்கு அழகு என்று அவர்கள் சாதித்தார்கள். கடவுட் சக்தியானது, மானிட சமுதாயத்தின் மூலம் பிரதி மனிதனிடத்திலும் தொடர்ந்து பிரகாசிக்கிறதென்பதை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் ஒரே ஒருசமயத்தில் தான், அதுவும் உடனேயே, அந்த தெய்வசக்தி பிரகாசிக்கிறதென்றும் அப்படி பிரகாசிப்பதுங்கூட கடவுளின் விசேஷ கருணையினாலென்றும் அவர்கள் நம்பினார்கள். கடவுளுக்கும் மனிதனுக்கும் எந்தவிதமான தொடர்பு இருக்கிறதென்பதை அவர்கள் தெரிந்து கொண்டார் களே தவிர, மனிதனுக்கும் மனிதனுக்கும் எந்தவிதமான தொடர்பு இருக்கிறதென்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வில்லை. ஒரு தலைமுறை, அதற்குப் பின்வரும் தலைமுறையை எப்படிப் பாதிக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளாதவர்கள், தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் தலைமுறைகளைப் பற்றி முக்கியமாகக் கருதுவதில்லை. இதனால் தான் அவர்கள், இந்த உலகமானது மனிதர்களுடைய பாவத்தையெல்லாம் போக்கடித்துக் கொள்வதற் கான இடமென்றும் இந்த உலகத்திற்கும் மோட்ச லோகத்திற்கும் சம்பந்த மில்லையென்றும் கடவுளின் திருவருளினாலும் அவர் மீது வைக்கிற நம்பிக்கையினாலுமே அந்த மோட்ச லோகத்தை அடைய முடியுமென்றும், நம்பினார்கள். அவர்கள் யேசுநாதரின் புனித வாக்கை மறந்து விட்டார்கள். யேசுநாதர் அருளினார்:- இன்னும் அநேக காரியங் களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதா யிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங் களை உங்களுக்கு அறிவிப்பார்.1 இந்த வாசகங்கள் முன்னேற்றம் என்றால் என்னவென்பதைச் சூசிப்பித்துக் காட்டுகின்றன; சத்திய மானது மானிட சமுதாயத்தின் மூலம் எப்படித் தொடர்ந்து வெளியாகிறதென்பதைத் தெரிவிக்கின்றன. இந்த வாசங்கள்தான் ரோம ஏகாதிபத்தியத்தை விழிக்கச்செய்தவை. அதனுடைய குடியரசு ததாவேஜுகளில் கடவுளும் பிரஜைகளும் என்ற எந்தக் கோட்பாடு பொறிக்கப்பட்டிருக்கிறதோ அதனை அங்கீகரிப்ப தாகவும் இவை இருக்கின்றன. ஆனால் ஜரோப்பிய இதிகாசத்தின் மத்தியகாலத்தில், அதாவது கி. பி. 500வது வருஷத்திலிருந்து கி.பி. 1500வது வருஷம் வரையிலுள்ள சுமார் ஆயிரம் வருஷ காலத்தில், எந்த நம்பிக்கைகள் நிலவியிருந்தனவோ, அந்த நம்பிக்கைகளில் ஊறிப் போயிருந்தவர்கள் மேற்படி வாசகங்களின் உட்கருத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அறிவுப் பக்குவம் ஏற்படவில்லை. மேலே சொல்லப்பட்ட யேசுநாத ருடைய வாசகங்கள் வெளியான ஆயிரத்து முந்நூறு வருஷங் களுக்குப் பின்னர், இத்தாலிய சிரேஷ்டனான ஒருவன் பின்வரும் உண்மைகளை வெளியிட்டான்:- கடவுள் ஒருவரே. கடவுளின் திருவுள்ளமே இந்தப் பிரபஞ்சம். ஆகையால் இந்தப் பிரபஞ்சம் ஒன்றே. எல்லாப் பொருள்களும் கடவுளினிடமிருந்தே தோன்றுகின்றன. எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மனிதர்கள் சிருஷ்டிக்கப்படு கிறார்களோ அந்த நோக்கத்தின் அளவுக்கு, பிரதி மனிதனும் தெய்விகத் தன்மையை ஏற்றுக் கொள்கிறான். கடவுள் சிருஷ்டி களில் மனிதன் மிக மேலானவன். கடவுள் தன்மையானது எல்லா ஜீவராசிகளிடத்திலும் இருக்கிறதாயினும் மனிதனிடத்தில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. கடவுளிடத்திலிருந்து வருகிற எந்தச் சக்தியும் பூரண நிலைமையை யடையக்கூடியதாயிருக் கிறது. ஆனால் மனிதனிடத்திலே இந்தப் பூரணத்துவம் பெறுகிற தன்மை அதிகமாயிருக்கிறது. மானிட சமுதாயம் என்பது ஒன்று தான். கடவுள் எதனையும் பிரயோஜனமற்றதாகச் சிருஷ்டிக்க வில்லை. மானிட சமுதாயமென்பது ஒன்றாகவே இருப்பது போல, எல்லா மனிதர்களுக்கும் ஒரே விதமான லட்சியந்தான் இருக்க வேண்டும். இந்த லட்சியத்தை யடைவதற்காக எல்லோ ரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அப்பொழுதுதான், மானிட சமுதாயத்தின் அறிவுத்துறையும், செயலாற்றும் துறை யும் வளர்ச்சியடையும். எனவே, மானிட சமுதாயமனைத் திற்கும் பொதுப்படையாக ஒரே ஒரு மதந்தான் உண்டு என்பது பெறப்படுகிறது. இந்த வாசகங்களை வெளியிட்டவன் பெயர் தாந்தே.1 இத்தலி, சுதந்திரமடைந்துவிட்ட பிறகு, இத்தலியிலுள்ள ஒவ்வொரு நகரத் திலும் அவனுக்கு உருவச் சிலைகள் எழுப்பப்பட வேண்டும். ஏனென்றால் மேலே சொல்லப்பட்ட அவனுடைய வாசகங்கள் தான், எதிர்கால உலக மதத்தின் வித்துக்களாயிருக்கின்றன. இந்த வித்துக்களை, உலக மகாஜனங் களுடைய அறிவு நிலத்திலே விதைத்துவிட்டோமானால் அவை ஒரு நாளும் அழியா. மனிதர்கள், தங்களுடைய சிருஷ்டி வரலாற்றை மறந்து விட்டாலும், இந்த வித்துக் களின் விளை பயனை அநுபவிப்பார்கள். ஓங்கி வளர்ந்திருக்கிற விருட்சத்தைப் பார்த்து எல்லோரும் வியப்படை கிறார்கள். ஆனால் அஃது எந்த வித்திலிருந்து உற்பத்தியாயிற்றென்பதை யார் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? வெளிநாட்டிலிருந்து தாந்தே விதைத்த விதைகள்2 பலன் கொடுத்துவருகின்றன. அவ்வப்பொழுது பல அறிஞர்கள் இந்த விதைகளைப் பண்படுத்திக்கொண்டும் போதித்துக்கொண்டும் வந்தார்கள். கி. பி. பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதியில் இவை பூரண வளர்ச்சி யடைந்தன. முன்னேற்றமென்பது வாழ்க்கை யின் நியதியென்பதை இப்பொழுது எல்லோரும் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நியதி இப்பொழுது மிகவும் வளர்ச்சியடைந்தும் இருக்கிறது. சரித்திரத் தினால் பரிசீலனை செய்யப்பட்டும், விஞ்ஞானத்தினால் ஊர்ஜிதம் செய்யப் பட்டும் இருக்கிற முன்னேற்றம் என்னும் இந்த நியதியானது வருங்காலத்துச் சின்னமாக விளங்குகிறது. இப்பொழுது, இந்த நியதியைத் தனது சேவையின் மையமாக வைத்துக் கொள்ளாத அறிஞன் யாரு மில்லை. வாழ்க்கையின் நியதி, முன்னேற்றமென்பதை இப்பொழுது நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம். தனிப்பட்ட மனிதன் முன்னேறவேண்டும், மானிட சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். பூலோகத்தில் இந்த நியதியை மானிட சமுதாயம் பூர்த்தி செய்கிறது. மனிதனோ இந்த நியதியை, பூவுலகில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் பூர்த்தி செய்கிறான். கடவுள் ஒருவர்தான். அவருடைய திருச்சட்டம் ஒன்றுதான். மானிட சமுதாயமானது, தனது வாழ்க்கையின் ஆரம்ப தசையிலிருந்து, இந்தத் திருச்சட்டத்தை மெது மெதுவாகப் பூர்த்தி செய்துகொண்டு வந்திருக்கிறது. அப்படிப் பூர்த்தி செய்வது அதற்கு இன்றியமையாத தாகவும் இருக்கிறது. சத்தியமானது, எப்பொழுதும் பூராவாகவோ, அல்லது ஒரே சமயத்திலோ தன்னைப் பிரத்தியட்சப் படுத்திக் கொள்வதில்லை. ஒவ்வொருயுகத்திலும் தொடர்ந்தாற்போல் தோன்றிக் கொண்டுவருகிற கடவுள் வாசகங்கள், சத்தியத்தின் ஒரு பாகத்தைத்தான், கடவுள் சட்டத்தின் ஒரு வார்த்தையைத்தான் வெளிப்படுத்து கின்றன. பூரணத்துவத்தை நாடி எந்தப் பாதை சென்று கொண்டிருக்கிறதோ, அந்தப் பாதையில் வழி நடக்கும் மனிதனுடைய வாழ்க்கையை, மேலே சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மாற்றி யமைக்கிறது. அதுவே, மனிதனுக்கு ஒரு நம்பிக்கையாகவும் ஆகிறது. எனவே மதத்தைப்பற்றி ஏற்பட்டிருக்கிற பல கருத்துக்களும் முன்னேற்றத்தின் பரிணாமங்கள்தான். இவை யனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரு காலத்தில் ஒரே மதமாகும். அதுவே மானிட சமுதாயமென்னும் மாளிகையின் அதிவாரமாகவு மிருக்கும். யாரொருவருக்குச் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமான அறிவும், உயரிய சீல சுபாவமும், கடவுளின் திருவருளால் ஏற்பட்டிருக்கிறதோ அவர்களே மேற்படி மதத்தின் தூதர்கள். ஜனங்கள் அதற்கு வியாக்கியான கர்த்தர்கள். இவர்கள் தங்களுடைய பின் சந்ததியாருக்கு இந்த வியாக்கியானத்தில் கண்ட உண்மைகளை அப்படியே ஒப்புவிக்கிறார்கள்; இவற்றை மனித வாழ்க்கையின் பல துறைகளிலும் அநுஷ்டானத்திற்கு கொண்டுவருமாறு செய்கி றார்கள். மானிட சமுதாயமானது, என்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிற, எப்பொழுதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு வருகிற ஒரு மனிதனைப்போன்றது. எனவே மனிதர் களிடத்திலோ அல்லது அதிகார சக்திகளிடத்திலோ, குற்றமற்ற தன்மை அல்லது பிழைபடாத்தன்மை இல்லையென்று சொல்ல முடியாது; அப்படியிருக்கவும் முடியாது. அங்ஙனமே கடவுள் சட்டத்தின் காப்பாளர்கள் அல்லது அதன் வியாக்கியானகர்த்தர்கள் என்று சொல்லி, தனியான ஒரு ஜாதியார் இல்லை; இருக்கவும் முடியாது. அங்ஙனமே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில், மானிட சமுதாயத்தைத்தவிர வேறு மத்தியதர் இல்லை; இருக்க வும் முடியாது. கடவுள், மானிட சமுதாயமானது படிப்படியாகக் கல்வி கற்றுக் கொள்ள வேண்டு மென்பதற்கான தெய்விக ஏற்பா டொன்றைச் செய்திருக்கிறார். அப்படியே பிரதி மனிதனுடைய இருதயத்திலும் முன்னேற்ற உணர்ச்சிகளை அருளியிருக்கிறார். மேற்படி கல்வி ஏற்பாட்டையும், முன்னேற்ற உணர்ச்சிகளையும் நிறைவேற்றக்கூடிய சக்திகளையும் அவர், மனிதர் களுக்கு அளித் திருக்கிறார். மனிதன், சுதந்திரமும் பொறுப்புள்ள பிராணி யாகிய மனிதன், மேற்கண்ட சக்திகளை தனக்குச் சாதகமாக உபயோகப் படுத்தியும் கொள்ளலாம்; பாதகமாகத் துஷ்பிரயோகப் படுத்தியும் கொள்ளலாம். கடமை என்கிற பாதையில் சென்றால் அவனுக்குச் சாதகம்; அகங்காரத்தின் வசப்பட்டு அதன்வழியே சென்றால் பாதகம். அவனுடைய முன்னேற்றம் அவன் கையிலேயே இருக்கிறது. அதனைத் தடைப் படுத்தியும் கொள்ளலாம்; துரிதப்படுத்தியும் கொள்ளலாம். ஆனால் மேற்படி கடவுள் ஏற்பாட்டை எந்த மனிதசக்தியும் ரத்துசெய்ய முடியாது. மானிடசமுதாயத்தின் கல்விப்பயிற்சி முறை யானது பூர்த்தி யடையுந்தன்மையது. உதாரண மாக, அநாகரிகமான ஒரு ஜாதியார் ஒரு நாட்டின்மீது படை யெடுத்து வருகின்றனர். அதனால் அந்த நாட்டின் நாகரிகமே அழிந்துவிடுகிறது. ஆனால் அதனைவிட மேலானதொரு நாகரிகம், அந்த அழிவின்மீது தாபிக்கப்பட்டு, மற்ற இடங்களுக்கும் பரப்பப் படுகிறது. ஒரு சிலருடைய கொடுங்கோன்மையினால், சுதந்திர ஒளி சீக்கிரம் உதயமாகிறது. மோட்சலோகத்தைப்போலவே பூலோகத்திலும் இந்த முன்னேற்றச் சட்டமானது பூர்த்திசெய்யப்பட வேண்டியதா யிருக்கிறது. மோட்சலோகத் திற்கும் இந்தப் பூலோகத்திற்கும் எவ்வித முரண்பாடு மில்லை. அப்படியிருக்க, கடவுளின் ஏற்பாட்டை இகழ்வது குற்றமாகும். அவர் நமக்கு அருளியுள்ள வீட்டை துச்சமாகக்கருதி அதனை அதிகார சக்திகளிடம் - அவை எத்தகைய சுபாவமுடையனவாயிருந்தபோதிலும் - ஒப்புவிப்பது, தீமை, அகங்காரம், கொடுங்கோன்மை இவைகளிடம் ஒப்புவிப்பது, தெய்வ நிந்தனையாகும். இந்தப் பிரபஞ்சம், நமது பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக ஏற்பட்ட இடமல்ல. நம் ஒவ்வொருவருடைய ஆத்மாவிலும் வேரூன்றியிருக்கிற சத்தியம், நீதி என்ற லட்சியத்தை யடையும் பொருட்டு வேலைசெய்வதற்காக ஏற்பட்டது இந்தப் பிரபஞ்சம். பூரணத்துவத்தையடைவதற்கென்றேற்பட்ட ஏணி போன்றது இந்தப் பிரபஞ்சம் நமது சகோதரர்களுக்கு நாம் என்ன நன்மையைச் செய்திருக்கிறோம், மற்றவர்களை முன்னேற்றுவிக்க நாம் எவ்வளவு தூரம் உதவியிருக்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான், நம்மைப்பற்றிய தீர்ப்பு அளிக்கப்படும். அதாவது நாம் முன்னேறியிருக் கிறோமா அல்லது பிற்போக்கடைந்திருக்கிறோமா வென்பது கணிக்கப்படும். நமது சகோதர மனிதர்களுடன் நாம் வைத்துக்கொள்கிற தொடர்பு அதிகமாக அதிகமாக நமது பலம் அதிகமாகிறது; நமது கர்மக்ஷேத்திரம் விசாலமடைகிறது; நமது முன்னேற்றப்பாதை அகன்று செல்கிறது. மானிடசமுதாய மனைத்தையும் ஒரு குடும்பமாக்க நாம் பாடுபடவேண்டும். இந்தக் குடும்பத்தைச்சேர்ந்த ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய நலனுக் காகவே இருப்பதாக உணர வேண்டும். எப்படி மானிட சமுதாய மானது யுகத்திற்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை பூரணத்துவம் பெற்றுக்கொண்டு வருகிறதோ அதைப்போல, தனிப்பட்ட மனிதனும் தனது வாழ்க்கையின் மூலம், தனது சொந்த முயற்சிகளின் மூலம் பூரணத்துவம் பெறவேண்டும். முன்னேற்றம் என்கிற அந்த மகத்தான வார்த்தையிலே அடங்கி யுள்ள சில உண்மைகள் இவை. இந்த முன்னேற்றம் என்பதி லிருந்துதான் எதிர்காலத்து மதம் உற்பத்தியாகப் போகிறது. இந்த முன்னேற்றம் என்கிற வார்த்தையிலிருந்துதான் உங்களுக்கு விமோசனம் பிறக்கும். 8. சுதந்திரம் நீங்கள் வாழ்கிறீர்கள். அந்த வாழ்க்கையானது ஏதோ அதிருஷ்ட வசத்தினால் ஏற்பட்டதென்று சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த அதிருஷ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே கிடையாது. சில விஷயங் களைப் பற்றி மனிதர்களுக்கிருந்த அறியாமையை வெளிப்படுத்து வதற்காக இந்த வார்த்தை கண்டு பிடிக்கப்பட்டது. உங்களிடத்திலேயுள்ள ஜீவனானது கடவுளால் தந்தருளப்பட்டது. அது தன்னுடைய வளர்ச்சி யடையுந் தன்மை யினால், புத்திசாலித்தனமான ஓர் ஏற்பாட்டை, கடவுளின் ஏற்பாட்டை வெளிப்படுத்துவதாயிருக்கிறது. ஆகவே உங்கள் வாழ்க்கை ஒருநோக்கமுடையது; லட்சியமுடையது. நாம் எந்த லட்சியத்திற்காகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோ மென்பது இப்பொழுது நமக்குத் தெரியாது. தெரியவும் முடியாது. ஆனால் இதற்காக நாம் இந்த லட்சியத்தை மறுக்க வேண்டுமென்ப தில்லை. ஒரு சிறு குழந்தை குடும்பம், தேசம், மானிட சமுதாயம் ஆகிய இவற்றைப் பொறுத்த மட்டில் தன்னுடைய நோக்கமென்ன வென்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறதா? இல்லை. ஆனால், அது தெரிந்து கொள்ளவில்லை யென்பதற்காக அதனுடைய நோக்கம் இல்லாமல் போகிறதா? மானிட சமுதாயம், கடவுளின் குழந்தை. அஃது எந்த லட்சியத்தை நாடி முன்னேற வேண்டுமென்பது கடவுளுக்குத் தெரியும். முன்னேற்றம் என்பது தனக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட சட்டமென்பதை இப்பொழுதுதான் மானிட சமுதாயம் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தைப்பற்றியும் அந்தப் பிரபஞ்சத்திலுள்ள மனிதர்கள், அநாகரிகத் தன்மை, அடிமைத்தனம், போதிய கல்விப் பயிற்சியின்மை முதலியவை காரணமாக மேற்படி சட்டத்தைப் பயிலக்கூடிய தகுதியை இன்னும் பெறவில்லை யென்பதைப் பற்றியும் இப்பொழுதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. நம்மை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னர், இந்தச் சட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய தவசியமாயிருக்கிறது. ஒரு சிலருக்குத்தான் அறிவை, அறிவிற்காக விருத்தி செய்துகொள்ளுஞ் சக்தியிருக்கிறது. ஆனால் உங்களிற் பெரும்பாலோருக்கோ கல்விப் பயிற்சியே அளிக்கப்படவில்லை. உங்களுடைய ஜீவனோபாயத்தை முன்னிட்டு தேக சிரமப்பட்டு உழைக்க வேண்டிய அவசியத்துக்குட் பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய உழைப்புச் சக்தியும் ஒழுங்குபட அமைக்கப்படாமலிருக்கிறது. இந்த நிலைமையில் உங்களுடைய சக்திகளெல்லாம் உறங்கிக் கிடக்கின்றன. அதனால் நீங்கள் ஞான சிகரத்தையடைய முடியாதவர்களாயிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நிலைமையில், எல்லோரும் சேர்ந்து செய்யக் கூடிய வேலைகள் எவை எவை யென்பதை நீங்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? புனிதமானதும் பயன்தரத்தக்கதுமான அந்த வார்த்தை இருக்கிறதே, அதாவது முன்னேற்றம் என்ற வார்த்தை, அதனை, மழலைச் சொல் மாதிரி இப்பொழுதுதான் உச்சரிக்க ஆரம்பித்திருக்கிறோம். அப்படியிருக்க அந்த முன்னேற்றத்தின் கடைசிபடியை இன்னும் நாம் அடைய வில்லையென்று ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? ஆதலின் எந்தெந்த விஷயங்களை நம்மால் நெருங்கிப் பார்க்க முடியவில்லையோ அவைகளைப் பற்றி நாம் அறியாதவர்களாகவே இருந்துவிடுவோம். ஆனால் அகப்படாத வதுவுக்காக அகப் படுகிற வதுவையும் குழந்தைகள் கோபித்துக்கொண்டு தள்ளி விடுவது போல, நாமும் தள்ளி விடாமலிருப்போமாக! நமக்குச் சாத்தியமாயுள்ள விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மறுக்காமலிருப்போமாக! சத்தியத்தைக் கண்டுபிடிக்க வேண்டு மென்றால் அதற்கு நிதானம் வேண்டும்; தன்னடக்கம் வேண்டும்; இடைவிடாத உழைப்பு வேண்டும். அநேகம் பேர் சன்மார்க்கத்தை இழந்துவிட்டிருக்கிறார்கள்; அல்லது அந்தச் சன்மார்க்கத்தினின்றும் தவறி விட்டிருக்கிறார்கள். ஏன்? சன்மார்க்கத்தினின்று வழுவிச் செல்ல வேண்டுமென்று பிடிவாத எண்ணத்துடன் அவர்கள் அப்படிச் செல்கிறார் களா? அப்படியுமில்லை. அவர்களுக்குப் பொறுமையில்லாததுதான் காரணம்; அவர்களுடைய அகம்பாவம் தான் காரணம். முற்காலத்தில் சுயேச்சாதிகாரம் வாய்ந்த ஒருவன், மோட்சலோகத்தை யடைவதற்காக இந்தப் பூலோகத்திலிருந்தே ஒருகோபுரத்தைக் கட்டவேண்டுமென்று முயற்சிசெய்து கடைசியில் இந்தப் பூலோகத்திலேயே ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி விட்டான்1 என்றும், ஒலிம்ப என்ற மலையைத் தாக்க முற்பட்ட ராட்சதர்கள், இடியினால் சிதற அடிக்கப்பட்டுப் போய், இப் பொழுது எரிமலைகளின் கீழ் விழுந்து கிடக்கிறார்கள்.2 என்றும் இந்த மாதிரியான வரலாறுகளை நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துச் சொன்னார்கள். எதற்காக இவைகளை எடுத்துச் சொன்னார்களென்றால், மனிதன், பொறுமையற்ற தன்மையி னாலும் அகம்பாவத்தினாலும் அழிந்து போகிறான் என்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான். எந்த லட்சியத்தை நாடி நாம் செல்ல வேண்டுமென்று நமக்கு வரையறுக்கப் பட்டிருக்கிறதோ அஃது, அந்த லட்சியம் எதுவா யிருந்தாலும், அதனைக் கண்டுபிடிப்பதற்கும் அதனை அடைவ தற்கும், நமது அறிவுச் சக்திகளை அபிவிருத்தி செய்து கொண்டு அதனைப் பிரயோகம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் நமது லட்சியத்தை நாம் கண்டுபிடிக்க முடியும்; அதனை அடைய முடியும். இந்த முக்கியமான விஷயத்தை நாம் மனதில் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும். ஆதலின், மனிதர்களுடைய அறிவுச் சக்திகள் அபிவிருத்தியடைவதும், அப்படி அபிவிருத்தியடைவ தற்குத் துணை செய்வதும் அவசியமாகும். அந்தச் சக்திகளைப் பிரயோகம் செய்வதிலே சுதந்திரம் வேண்டும்; அவைகளைப் பாதுகாக்கவும் வேண்டும். சுதந்திர மில்லாமல், நீங்கள் உங்க ளுடைய கடமைகள் எதனையும் நிறைவேற்ற முடியாது. ஆதலின் அந்தச் சுதந்திரத்தை யடைய உங்களுக்கு உரிமையுண்டு. எந்தவித மான அதிகார சக்தியேனும் அதனை உங்களுக்கு அளிக்க மறுக்கு மானால், அதனிடமிருந்து எந்த முறைகளைக் கையாண்டேனும் அந்தச் சுதந்திரத்தைப் பறித்துக் கொள்வது உங்களது கடமை. சுதந்திர மில்லாவிட்டால் ஒழுக்கம் இல்லை. v¥goba‹ whš ešyJ ïJ, bf£lJ ïJ v‹W«., பொது நலம் இது, சுயநலம் இது என்றும் பாகுபடுத்திக் கொண்டு உங்களுக்கு விருப்பமானதைத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு இல்லையானால், உங்களுக்குப் பொறுப்புமில்லை. சுதந்திர மில்லாமல் உண்மையான சமுதாயமில்லை. ஏனென்றால் சுதந்திரமாயுள்ளவர்களென்றும் அடிமைகளென்றும் இரு பிரிவினராயுள்ள சமுதாயத்தில், அதாவது ஆள்வோரென்றும் ஆளப்படுவோரென்றும் உள்ள ஒரு சமுதாயத்தில் ஜனங்களுக்கும் சம அந்ததோடு கூடிய ஒரு கூட்டுறவு இருக்க முடியாது. ஒரு சிலர், பலர்மீது ஆதிக்கஞ் செலுத்துவதுதான் இருக்கும். மனிதனுக்குப் பிராணன் முக்கியமானது; புனிதமானது. அதைப் போல, அந்தப் பிராணனின் பிரதி நிதியாயிருக்கும் சுதந்திரமும் முக்கியமானது; புனிதமுடையது. எங்கே சுதந்திரம் இல்லையோ அங்கே மனித வாழ்க்கையானது, ஐம்பொறி களுடைய ஒரு யந்திரம் போலாகி விடுகிறது. எவனொருவன், தன் சுதந்திரம் பறிக்கப்படுவதை, நசுக்கப்படுவதை அநுமதித்துக் கொண்டிருக் கிறானோ, அவன் மனித சுபாவத்திற்கே துரோகஞ் செய்தவனாகிறான்; கடவுளின் ஆணைக்கு விரோதமாக நடந்து கொண்டவனாகிறான். தெய்வீக உரிமை என்னும் போலி உரிமை காரணமாகவோ, அல்லது பிறப்பினால் ஏற்படுகிற உரிமை காரணமாகவோ, அல்லது பணத்தினால் உண்டாகிற உரிமை காரணமாகவோ, ஒரு வகுப்பினர் அல்லது ஒரு குடும்பத்தினர் அல்லது ஒரு தனி மனிதன், மற்றவர் களின் மீது ஆதிக்கஞ் செலுத்தப்பார்ப்பார்களானால் அந்த இடத்தில் சுதந்திரம் என்பது இருக்கவே முடியாது. சுதந்திரம் என்று சொன்னால் அஃது எல்லோருக்காகவும் இருக்க வேண்டும்; எல்லோரும் அடையக் கூடியதாக இருக்க வேண்டும். பிறர்மீது ஆதிக்கஞ் செலுத்துகிற உரிமையை அதாவது அரச உரிமையைக் கடவுள் எந்த ஒரு தனி நபரிடத்திலும் ஒப்புவிக்கவில்லை; மானிட ஜாதியினிடத்திலே, தேசத்தினிடத்திலே, சமுதாயத்தினிடத்திலே ஒப்புவித்திருக்கிறார். மானிட சமுதாயமோ, தேசமோ, சமுதாயமோ, மேற்படி உரிமையை மற்றவர்களுடைய நலனுக்காக உபயோகியா விட்டால், கடவுளின் ஏற்பாட்டைப் பூர்த்தி செய்கிற வகையில் உபயோகியாவிட்டால் அந்த உரிமை என்பது இல்லாமலே போய்விடுகிறது; அஃது - அந்த உரிமை-மானிட சமுதாயத்தின் பல பகுதிகளாகிய தேசம், சமுதாயம் முதலியவை களுக்குப் பயனற்றதாகி விடுகிறது. எனவே ஆதிக்கஞ் செலுத்துவதென்ற உரிமை யாருக்கும் சொந்தமானதில்லை. லட்சியத்திலே, லட்சியத்தை யடைவதற்கான சாதனங்களிலே நாம் ஆதிக்கஞ் செலுத்த வேண்டும். நம்முடைய லட்சியமும், அதை அடைவதற்கான மார்க்கங்களும் எல்லோ ருடைய அபிப்பிராயத்தையும் அநுசரித்ததாயிருக்க வேண்டும். அப்பொழுது ஒருவர்மீது மற்றொருவர் ஆதிக்கஞ் செலுத்துவ தென்பது நிரந்தரமாயிராது; இருக்கவும் முடியாது. எந்த தாப னத்தை அரசாங்கம் என்ற பெயரிட்டழைக்கிறோமோ அது நமக்கு வழி காட்டியே தவிர வேறொன்றுமில்லை. ஒருதேசத்தை அதனுடைய லட்சியத்திற்குத் துரிதமாக அழைத்துச் செல்லும் பொறுப்பு ஒருசிலரிடத்தில் ஒப்படைத்திருக்கிறதென்பதுதான் அரசாங்கத்தின் அர்த்தம். அந்த ஒரு சிலர், தங்களுடைய பொறுப்பைச் சரியாக நிறைவேற்றாவிட்டால், அவர் களுக்கு அளிக்கப்படுகிற அதிகாரம் உடனே ரத்து செய்யப்படவேண்டும். அரசாங்கத்தில் பதவி வகிக்கும் ஒவ்வொருவனும் ஜன சக்தியை நிருவாகம் செய்கிறவன். அவன் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். மேற்படி ஜன சக்தியை அவன் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டாலோ அல்லது வேண்டுமென்றே அதற்கு விரோதமாக நடந்தாலோ, அவனை மேற்படி பதவியிலிருந்து எடுத்துவிட வேண்டியதுதான். ஆகையால், மீண்டும் நான் உங்களுக்குச் சொல்வ தென்னவென்றால் பிரத்தியேகமான எந்த ஒரு வகுப்பினரோ அல்லது குடும்பத்தினரோ தங்களுக்கென்று மட்டும் ஏற்பட்ட விசேஷ உரிமை காரணமாக உங்களுடைய சுதந்திரத்தைச் சின்னா பின்னப் படுத்தாமல் அதிகாரத்தை வகித்துக் கொண்டிருக்க முடியாது என்பது தான். உங்களுடைய சம்மதமில்லாமல், உங்களை ஆணையிடுகிற அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பவர் முன் னிலையில் நீங்கள் உங்களைச் சுதந்திர புருஷர்களென்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்? ஆதலின், அரசியல் முறைகளிலே, குடியரசு முறைதான், நியாயப் பொருத்தமுள்ள முறையென்பது பெறப்படும். மேலுலகத்திலே கடவுளும், பூவுலகத்தில் ஜன சமுதாயமும் தவிர வேறு எஜமானன் உங்களுக்குக் கிடையாது. கடவுள் திருச் சட்டத்தில் ஒரு வரியையோ அல்லது கடவுளின் இச்சையையோ கண்டுகொண்டு விட்டீர்களானால், அதனை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்; அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்களும் உங்களுடைய சகோதர மனிதர் பலரும் சேர்ந்த ஜன சமுதாயமானது, குறிப்பிட்ட தொரு சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்குமானால், நீங்கள் அதற்குத் தலை வணங்க வேண்டும்; அதற்கு விரோதமான ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது. ஆனால் உங்களுடைய தனித்துவத்தை அமைத்துக் கொடுக்கிற சில விஷயங்கள் இருக் கின்றன. அவை மனித வாழ்க்கைக்கு இன்றியமை யாதவை. அவற்றின் மீது ஆதிக்கஞ் செலுத்த ஜன சமுதாயத்திற்குக் கூட அதிகாரமில்லை. என்னென்ன தன்மைகள் சேர்ந்து உங்களை மனிதர்களாக்கியிருக் கின்றனவோ அவற்றை, எந்தப் பெரும் பான்மையான ஜனத்தொகுதியும் அல்லது எந்தக் கூட்டுச் சக்தியும் உங்களிடத்திலிருந்து பறிக்க முடியாது. எந்தப் பெரும்பான்மையான ஜனத்தொகுதியும், கொடுங் கோலாட்சி முறைதான் நடைபெற வேண்டுமென்று உத்திரவு போடாது. அப்படி உத்திரவு போட்டு தன்னுடைய சுதந்திரத்தைப் பறிகொடாது; பராதீனப்படுத்தாது. அப்படிச் செய்வது தற்கொலை செய்துகொள்வது போலாகும். அப்படிச் செய்து கொள்கிறவர் களுக்கெதிரே நீங்கள் பலாத்காரத்தை உபயோகிக்க முடியாது. ஆனால் சந்தர்ப்பத்தை யொட்டி உங்களுடைய கண்டன உரிமையை உபயோகிக்கிறீர்களே அது சாசுவதமாக இருக்கும். உங்களுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். உங்களுடைய சீல சுபாவம், லௌகிக வாழ்க்கை இவைகளை அபிவிருத்தி செய்துகொள்வதற்காக எவை யெவை தேவையோ அவையெல்லாமும் உங்களுக்கு இருக்க வேண்டும். சொந்த விவகாரங்கள் சம்பந்தமான உரிமை, அங்குமிங்கு மாகச் செல்லும் உரிமை, இஷ்டமான மதக் கொள்கையை அவலம்பிக்கிற உரிமை எல்லா விஷயங்களிலும் அபிப்பிராயங் கொள்ளும் உரிமை, பத்திரிக்கை மூலமாகவோ அல்லது வேறெந்த சமாதான முறைகளிலோ அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை, இருதய விசாலமடையும் பொருட்டு மற்றவர்களுடன் கலந்து பழகும் உரிமை அறிவைக் கொண்டும், தேக உழைப்பைக் கொண்டும் என்னென்ன உற்பத்தி செய்யப் படு கின்றனவோ அவற்றை வியாபாரஞ் செய்யும் உரிமை, ஆகிய இவைகளை யாரும் உங்களிடத்திலிருந்து பறித்து விட முடியாது. ஏதோ சில விசேஷ சந்தர்ப்பங்களில் இந்த உரிமைகளை உங்களிடத்திலிருந்து அப்புறப் படுத்திவைக்கலாம். அந்த விசேஷ சந்தர்ப்பங்கள் யாவை என்பதைப் பற்றி இங்கு எடுத்துச் சொல்லவேண்டுவது அவசியமில்லை. இந்த விசேஷ சந்தர்ப்பங்களைத் தவிர்த்து மற்றச் சாதாரண சந்தர்ப்பங் களில் மேற்படி உரிமைகளை உங்களிடமிருந்து பறிப்பதென்று சொன்னால், அஃது உங்களுக்குப் பெரிய அநீதி இழைப்பதாகும். அந்த அநீதியைக் கண்டனஞ் செய்வது உங்கள் கடமை. சமுதாயத்தின் பெயரால் உங்களைச் சிறையிடவோ, நிர்ப் பந்தங் களுக்குட்படுத்தி வைக்கவோ, வேவு பார்க்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படிச் சிறையிடவோ, நிர்ப்பந்தங்களுக்குட் படுத்தவோ, வேவு பார்க்கவோ செய்தால் அதற்கான காரணங்களை எவ்விதத் தாமதமுமில்லாமல் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; உடனே உங்களை தேசத்தின் நியாய அதிகாரிகளின் முன்னர் அழைத்துச் செல்லவேண்டும். உங்களுடைய சொந்த தேசத்தில், ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீங்கள் செல்கிற போது, பிரயாண அநுமதிச் சீட்டுப் பெற வேண்டுமென்று சொல்லியோ, அல்லது வேறு விதமான நிர்ப்பந்தங்களுக் காளாக்கியோ உங்ளைத் தடை செய்ய யாருக்கும் உரிமையில்லை. மத சம்பந்தமாக நீங்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங் களுக்காக உங்களைத் தொந்திரவுகளுக்குட்படுத்தவோ,அல்லது உங்கள் மீது துவேஷங் கொள்ளவோ, அல்லது உங்கள் மீது விசேஷமானதொரு சட்டத்தைக் கொண்டு வந்து பிரயோகிக்கவோ யாருக்கும் உரிமை யில்லை. மானிட சமுதாயம் எந்தக் குரலெடுத்துப் பேசுகிறதோ அந்தக் குரல் ஒன்றுதான், உங்கள் மனச் சாட்சிக்கும் கடவுளுக்கும் மத்தியில் பிரவேசிக்க உரிமை பெற்றிருக்கிறது. கடவுள் உங்களுக்குச் சிந்தனா சக்தியை அளித்திருக்கிறார். அதுதான், உங்களுடைய ஆத்மாவுக்கும் உங்களுடைய சகோதரர்களின் ஆத்மாவுக்கும் தொடர்பாயிருப்பது; அதனைக் கொண்டுதான் மனிதர்கள் முன்னேற்றமடைய முடியும். அப்படிப் பட்ட சிந்தனா சக்தியைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதனை வெளியிடக் கூடாதென்று தடை செய்யவோ யாருக்கும் உரிமையில்லை. பத்திரிகைகள் பூரண சுதந்திரம் பெற்றவையாயிருக்க வேண்டும். அறிவு சம்பந்தமான உரிமைகள் இருக்கின்றனவே, அதாவது எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன, அவை அழிக்க முடியாதவை. அந்த உரிமையைத் தடை செய்கிற விதமாகப் பரிசோதனை முதலியன செய்வது கொடுங் கோன்மை யாகும். குற்றமான காரியங்களைச் செய்யுமாறு தூண்டு வதும், அல்லது ஜனங்களிடத்தில் பகிரங்கமாக ஒழுக்க ஹீனங் களைப் புகுத்துவதுமான எழுத்துக்களுக்குத்தான், சமுதாயம் தண்டனை விதிக்கலாம். அப்படித் தண்டிப்பது, மற்றக் குற்றங் களைத் தண்டிப்பது போல. பகிரங்கமான விசாரணைக்குப் பிறகு தண்டனை விதிப்பதாகத் தீர்ப்புக் கூறப்பட்டால், அது, மனிதப் பொறுப்பை உணர்ந்து செய்கிற செயலாகும். அப்படிக்கின்றி, ஒருவனுடைய குற்ற மின்னதென்று தெரிந்து கொள்ளாமல் அதற்கு முன்னரேயே அவனுடைய உரிமையில் தலையிடுவதென்பது மானிட சுதந்திரத்தை மறுப்பதாகும். மனிதனுக்கு அவனுடைய சிந்தனா சக்தி எப்படிப் புனிதமானதோ அப்படிப் போல, சமாதான முறையில் சங்கமாகச் சேர்ந்து வாழ்வதும் அவனுக்குப் புனிதமானது. மனிதர்கள் முன்னேற்றமடைய வேண்டுமானால் அதற்கு ஒரு நிரந்தரமான சாதனம் வேண்டுமல்லவா? இதற்காகவே, கடவுள் , அவர்களுக்கு, (மனிதர்களுக்கு) சங்கமாகச் சேர்ந்து வாழ வேண்டு மென்ற சுபாவத்தை அளித்திருக்கிறார். இந்தச் சாதனத்தின் மூலமாகத் தான், மானிட சமுதாயமென்னும் குடும்பம் ஒற்றுமையைக் காண முடியும். எனவே, இந்தச் சாதனத்தை, அதாவது சங்கமாகச் சேர்ந்து வாழ்கிற உரிமையைத் தடை செய்யவோ அல்லது வரையறுக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. கடவுள் உங்களுக்கு எந்த வித மான வாழ்க்கையை அருளியிருக்கிறாரோ அந்த வாழ்க்கையை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும்; அதனைப் போற்றிக் காப்பாற்ற வேண்டும். அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆதலின், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உழைப்பைக் கொண்டு அந்த வாழ்க்கையைப் பயன்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். உங்களுடைய உழைப்புத்தான், உங்களுடைய லௌகிக வாழ்க்கைக்கு ஜீவாதாரமாயிருப்பது. இதனால்தான் உழைப்பு என்பது புனித மாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட உழைப்பை, அதாவது மனிதனுடைய உழைப்புச் சக்தியை தடை செய்யவோ, அல்லது கட்டுப்படுத்தவோ, அல்லது கொடுங் கோன்மையான சட்டங்க ளியற்றி அதனை (உழைப்புச் சக்தியை) நிஷ்பிரயோஜனமாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. அந்த உழைப்புச் சக்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிற பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோ ரிடத்திற்குத் தாரளமாகக் கொண்டு செல்வதையோ, கொண்டு வருவதையோ தடை செய்ய யாருக்கும் உரிமையில்லை. உங்க ளுடைய சொந்த தேசம் உங்களுடைய சந்தை. அதில் எந்தப் பாகத்தி லிருந்தும் நீங்கள் விலக்கப்படக் கூடாது. மேலே சொல்லப்பட்ட உரிமைகள் யாவும் புனிதமானவை, அதாவது மற்றவர்களால் சுலபமாகப் புறக்கணிக்க முடியாதவை, என்ற அங்கீகாரத்தை நீங்கள் பெற்றுவிட்ட பிறகு, மனிதர்களுக்கு இயற்கையாயமைந்துள்ள சக்திகளை அபிவிருத்தி செய்து கொள்ள எல்லோருக்கும் சந்தர்ப்பம் இருக்கிற மாதிரியாகவும், எல்லோ ருடைய ஓட்டு பலத்தின் பேரிலும், ஓர் அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு விட்ட பிறகு, நீங்கள் அடைய வேண்டிய மேலான லட்சியம் ஒன்றிருக்கிற தென்பது உங்களனைவருக்கும் நினைவிருக் கட்டும். அஃதென்ன வென்றால் உங்களுடைய சீலத்தை எவ்விதக் குறைபாடுகளுமில்லாமல் பூரணப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியே மற்றவர்களுடைய சீலத்தையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது எல்லா மனிதர்களையும் சீல சுபாவமுடைய வர்களாக்க வேண்டும். மானிட சமுதாயமென்னும் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்குள்ளும் நெருங்கிய சம்பந்தம் இருக்குமாறு செய்யவேண்டும். இந்த நெருங்கிய சம்பந்தத்தினால், எதிர் காலத் தில், மானிட சமுதாயமனைத்திற்கும் பொதுவாக ஏற்பட்டிருக்கிற கடவுள் சட்டம் ஒன்றுதான் என்பதை எல்லோரும் அங்கீகரிப்பர். உங்களுடைய வேலை, மானிட சமுதாயமென்னும் குடும்பத்தை அமைப்பது; கடவுள் ராஜ்யத்தை தாபிப்பது; உங்களுடைய உழைப்பின் மூலம், கடவுளின் திருநோக்கத்தை மானிட சமுதாயத்தினிடம் நிறைவேற்றி வைப்பது. நீங்கள் மற்றவர்களை உங்கள் சகோதரர்கள் போல் நேசிக்க வேண்டும்; அப்படியே மற்றவர்களும் பரபரம் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் மூலமாகத்தான் நீங்கள் உங்கள் நன்மையை யடையவேண்டும். உங்களுடைய வாழ்க்கையை, மற்றவர்களுடைய வாழ்க்கை யோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர் களுடைய நலனுக்காக உங்களைத் தியாகஞ் செய்து கொள்ள வேண்டும். அப்படியே மற்றவர்களும் , உங்களுடைய நலனுக்காகத் தங்களைத் தியாகஞ் செய்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி யான மனப்பான்மை எவ்லோருக்கும் ஏற்பட்டு விடுமேயா னால், தற்போது மானிட சமுதாயத்தை அழுத்திக் கொண் டிருக்கும் அநேக துன்பங்கள், சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து போகும். பலவாரியாகச் சிதறிக் கிடக்கும் மானிட சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டுமானால் அஃது அன்பினால் தான் சாத்தியமாகும். அப்படிச் சாத்தியமாவதும் மெது மெதுவாகத்தான் நடைபெறும். ஆனால் அஃது இடைவிடாது நெருங்கியிருக்கும். எப்படிக் கடவுள் ஓருவரோ அப்படியே மானிட சமுதாயமும் ஒன்றாகவே இருக்க வேண்டும். இதுதான் அந்தக் கடவுளின் திருநோக்கம்.1 இந்த வார்த்தைகளைச் சொன்னவன் ஒருமகானைப் போலவே வாழ்ந்தான்; மகானைப் போலவே இறந்தான். அவன் ஜனங்களை நேசித்ததோடு மட்டுமில்லை; அவர்களுடைய எதிர்காலத்தையும் நேசித்தான். அப்படிப்பட்ட ஒருவனுடைய இந்த வாசகங்கள் உங்கள் மனத்திலிருந்து அகலாதிருக்கட்டும். எனது சகோதரர்களே! சுதந்திரம் என்பது சாதனந்தான்; அதுவே லட்சியமல்ல. அப்படி லட்சியமாகக் கருதுவீர்களாயின் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுடைய சந்ததியாருக்கும் ஆபத்து. மனிதர்களாகிய நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். அந்தத் தனித்துவத்திற்குச் சிலகடமைகளும் உரிமைகளும் உண்டு. அவற்றை யாருக்கும் நீங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஆனால் அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் செய்கிற முயற்சி யானது, உங்களுக்கு அகங்கார புத்தியை உண்டுபண்ணிவிடக் கூடாது. அப்படி உண்டு பண்ணிவிடுமானால் அஃது உங்களுக்கும் ஆபத்து; உங்கள் பின்வரும் தலைமுறையினருக்கும் ஆபத்து. உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதென்று சொன்னால், அஃது எல்லா அதிகாரங்களையும் மீறுவதென்பது அர்த்தமல்ல. சமுதாயத் தின் பொது நோக்கத்திற்குப் பிரதிநிதியாயில்லாத எந்த அதிகாரத் தையும், உங்களுடைய சுய சம்மதத்தைப் பெறாத எந்த அதிகாரத்தை யும் மறுப்பதற்குச் சுதந்திரம் இருக்கிறதென்பதுதான் அர்த்தம். மனசாட்சிப்படி நடக்க வேண்டுமென்று சொல்கிற சிலருடைய சித்தாந்தங்களைப் பின்பற்றிப் பிற்காலத்தில் சிலர் இந்தச் சுதந்திரத்தின் புனிதத்தன்மையைத் திரித்துக் கூறியிருக்கிறார்கள். இன்னுஞ் சிலர், இந்தச் சுதந்திரமானது மனிதனுடைய தனித்துவப் பொருளென்றும் மனித உழைப்பு சமுதாய அமைப்பு முதலியன வெல்லாம் அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே ஏற்பட்டனவென்றும் சொல்லியிருக்கிறார்கள். வேறு சிலர் எல்லாவிதமான அரசாங்க முறைகளும் எல்லாவிதமான அதிகார முறைகளும் இன்றியமையாத தீமைகளென்றும், ஆதலின் அவற்றைக் கூடிய வரையில் ஒருவித கட்டுப்பாட்டுக்குட்படுத்த வேண்டுமென்றும் மொழிந்திருக்கிறார்கள். மற்றுஞ் சிலர், சுதந்திரமென்பதற்கு எல்லையேயில்லையென்றும், எவ்வித வரம்பும் இடாமல் அதனை வளர்த்துக் கொண்டு போவது ஒவ்வொரு சமுதாயத்தின் முக்கியமான வேலை யென்றும், பிறருக்குத் தீங்கு உண்டாகாமல், எவனொருவனும் தன்னுடைய சுதந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலா மென்றும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீங்கு செய்யாமல் பார்த்துக் கொண்டிருப் பதைத் தவிர ஓர் அரசாங்கத்திற்கு வேறு வேலை யில்லையென்றும் சாதித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பொய்ச் சித்தாத்தங்களை யெல்லாம், எனது சகோரர்களே! ஒதுக்கித் தள்ளுங்கள். இவர்கள் தான், இந்தப் பொய்ச் சித்தாந்திகள் தான், இத்தலியின் எதிர்கால நல்வாழ்வுப் பாதையில் முட்டுக்கட்டை போடுகிறவர்கள். இவர்கள் வழியை நீங்கள் பின்பற்றுவீர்களாயின், உங்களுடைய அகங்கார புத்தியை அதிகப் படுத்திக் கொள்ளவே உங்களுடைய சுதந்திரத்தை உபயோகிப்பீர்களாயின், ஏற்கெனவே நீங்கள் பெற்றுள்ள சுதந்திரத்தை இழந்துவிடுவீர்கள்; இழந்துவிடுவதற்குத்தான் நீங்கள் லாயக் குள்ளவர்கள். எல்லோருடைய வாழ்வும் நிறைவுள்ளதா யிருக்க வேண்டு மென்பதற்காக நீங்கள் செய்கிற கடமைகளில் தான், எல்லோருடைய நல்வாழ்விலும் நீங்கள் கொள்கிற நம்பிக்கையில் தான் உங்களுடைய சுதந்திரம் புனிதத் தன்மையடைகிறது. உங்களுக் கிஷ்டமான விதத்தில் உங்களுடைய சக்தியை நன்முறையில் பிரயோகிக்கவோ, அல்லது தீய முறையில்துஷ்பிரயோகஞ் செய்யவோ உங்களுடைய சுதந்திரம் இல்லாமல், எல்லோருக்கும் நன்மை செய்வதற்கேற்ற ஒரு கருவியாக இருக்கிற வரையில், அஃது -அந்தச் சுதந்திரம் - செழித்து நிற்கும்; கடவுளாலும் மனிதர்களாலும் காப்பாற்றப்படும். 9. கல்வி கல்வி ஞானத்தைப் பெறத் தகுதியுடையவர்களாக உங்களைக் கடவுள் சிருஷ்டித்திருக்கிறார். ஆதலின் உங்களால் முடிந்தவரை உங்களுடைய கல்வி ஞானத்தை அபிவிருத்தி செய்துகொள்வது உங்கள் கடமை. நீங்கள் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களா யிருக்கிறீர்களோ அந்தச் சமுதாயமானது, உங்களுடைய கல்விப் பயிற்சிக்குத் தடையா யிருக்கக் கூடாது. அதற்கு மாறாக, உங்க ளுடைய கல்வி அபிவிருத்திக்கு உதவி செய்ய வேண்டும்; அதற்கான சாதனங்கள் உங்களிடம் இல்லாதிருக்கிறபோழ்து அவற்றை உங்களுக்கு அளிக்க வேண்டும். உங்களுடைய சுதந்திரம், நீங்கள் அநுபவிக்கிற உரிமை, அநீத மான சமுதாய நிலைமையிலிருந்து நீங்கள் அடைகிற விமோசனம், இந்தப் பூலோகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் முதலியன, நீங்கள் பெறுகிற கல்வியைப் பொறுத்தே இருக்கின்றன. கல்வி ஞானமில்லாமல் நீங்கள் நல்லது இது, கெட்டது இது என்று பாகுபடுத்திப் பார்த்து, நல்லதைத் தெரிந்து கொள்ள முடியாது; உங்களுடைய உரிமைகள் என்னவென்பதை அறிந்து கொள்ள முடியாது; உங்களுடைய விமோசனத்திற்கு மூலகாரண மாயுள்ள அரசியலில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள முடியாது; எந்த வேலையைச் செய்தால் உங்களுடைய வாழ்க்கை பூர்த்தியடை யுமோ அந்தவேலை இன்னதென்று உங்களால் வகுத்துக் கொள்ள முடியாது; கல்வி என்பது உங்களுடைய ஆத்மாவுக்கு ஆகாரம். பண்படுத்தப்படாத நிலத்தில் விதைக்கப்படுகிற காரணத்தினாலும், போதுமான பாசன வசதியும், விவசாயின் சரியான கவனமும் இல்லாத காரணத்தினாலும், எப்படி ஒருவிதையானது தனது ஜீவ சக்தியை இழந்துவிடுகிறதோ அதைப் போல், சரியான கல்வி ஞானம் உங்களுக்கு அளிக்கப்படாமற் போனால், உங்களிடத்தில் இயற்கையாயமைந்துள்ள சக்திகள் மந்தப்பட்டுப் போகும்; பிரயோஜனமற்றவையாகிவிடும். தற்போது உங்களுக்குக் கல்வி என்பதே அளிக்கப்படுவ தில்லை. அப்படி ஏதேனும் அளிக்கப்பட்டால் அது நன்முறையி லும் அளிக்கப் படவில்லை; வேண்டிய அளவும் அளிக்கப்பட வில்லை. இந்த அரை குறையான கல்வியை உங்களுக்கு அளிக்கிற மனிதர்களும் அரசாங்கத் தினரும் தங்களுக்குத் தாங்களே பிரதிநிதி களாயிருக்கிறார்களே தவிர வேறு யாருடைய பிரதிநிதிகளாகவு மில்லை. அவர்கள் நிர்ணயமான ஒருகொள்கையை அநுஷ்டிப்ப வர்களாயில்லை. அவர்களிலே பிரமுர்களாயிருக்கப்பட்டவர்கள், தங்களால் ஆளப்படுகிற பிரதேசத்தில் அங்குமிங்குமாகச் சில பள்ளிக்கூடங்களை தாபித்து விடுவதோடு திருப்தியடை கிறார்கள். இந்தப் பள்ளிக் கூடங்களில் உங்களுடைய பிள்ளைகள் ஏதோ ஓரளவுக்கு ஆரம்பப் படிப்பைப் படிக்கட்டும் என்பது அவர்கள் கருத்து. வாசித்தல், எழுதுதல், கணக்கு ஆகிய இவைதான் இந்தப் பள்ளிக்கூடங்களில் முக்கியமாகப் போதிக்கப்படுகின்றன. இங்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிற படிப்பு வேறே; நாம் பெற வேண்டிய கல்விவேறே. நமது தேகத்திலுள்ள இந்திரியங்களுக்கும் பிராணனுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அவ்வளவு வித்தியாசம் மேற்படி படிப்புக்கும் கல்விக்கும் இருக்கிறது. இந்திரியங்கள் பிராணனுடைய கருவிகளாயிருக்கின்றன. அந்தப் பிராணனைப் பிரத்தியட்சப்படுத்துவது மேற்படி இந்திரியங்கள் தான். ஆனால் அந்த இந்திரியங்களே பிராணனை ஆட்சிபுரிவ தில்லை; அதற்கு வழிகாட்டுவதுமில்லை. ஒருவனுடைய வாழ்க்கை யானது மேலான மார்க்கத்தில் செல்வதற்கும் கீழான மார்க்கத்தில் செல்வதற்கும் மேற்படி இந்திரியங்கள் துணையாயிருக் கின்றன. அதைப் போலவே மேற்கண்ட படிப்பானது, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கல்விக்குத் துணை செய்கின்றது. அவ்வளவுதான். அதுவே கல்வியாகிவிடாது.1 முதலில் சொல்லப்படுகிற படிப்பானது, மனிதனுடைய அறிவைத் தூண்டிவிடுகிறது. அதற்கடுத்த படியாயுள்ள கல்வி யானது, மனிதனுடைய சீல சுபாவத்தைத் தூண்டிவிடுகிறது. முதலாவதான படிப்பு, மனிதனுக்கு அவனுடைய கடமைகள் இன்னவை யென்பதைத் தெரிந்து கொள்ளுமாறு செய்கிறது. இரண்டாவதான கல்வி, அவனுக்கு, அவன் கடமைகளை நிறை வேற்றும்படியான திறமையை அளிக்கின்றது. படிப்பு இல்லாமற் போனால் கல்வி பிரயோஜனமில்லை. கல்வி இல்லாமற்போனால் படிப்பென்பது, ஆதாரக்கருவியில்லாத நிறைதூக்கும் யந்திரம் மாதிரியாகிவிடுகிறது. உங்களுக்குப் படிக்கத் தெரிந்திருக்கலாம். ஆனால் எந்தப் புதகத்திலே தவறு இருக்கிறது, எந்தப் புதகத் திலே உண்மை இருக்கிறதென்பதை உங்களால் சொல்ல முடியா விட்டால் படிப்பினால் என்ன பிரயோஜனம்? உங்கள் மனத்திலே தோன்றும் எண்ணங்களை உங்கள் சகோதரர்களுக்கு எழுதித் தெரிவிக்கிற சக்தி உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த எண்ணங்கள் உங்களுடைய அகங்காரபுத்தியையே வெளிப்படுத்து வனவா யிருக்கும் பட்சத்தில், உங்களுடைய எழுத்தறிவினால் என்ன பிரயோஜனம்? ஒருவனுக்குப் பணமிருந்தால் அந்தப் பணத்தை அவன் நல்வழிக்கும் உபயோகப்படுத்தலாம்; தீய வழிக்கும் உப யோகப்படுத்தலாம். அதைப் போலவே உங்களுடைய படிப்பைக் கொண்டு, உங்கள் நோக்கப்படி நல்லதும் செய்யலாம்; கெட்டதும் செய்யலாம். உங்களுடைய படிப்பை, பொதுநல முன்னேற்றத்திற்கு உபயோகப் படுத்துவீர்களாயின், நாகரிகத் திற்கும் சுதந்திரத்திற்கும் அதுவே- அந்தப்படிப்பே - ஒருசாதனமாகிறது. அந்தப் படிப்பையே உங்கள் சொந்த நலனுக்கு உபயோகப் படுத்துவீர் களாயின், அதுவே கொடுங்கோன்மைக்கும் ஒழுக்கஹீனத்திற்கும் கருவி யாகிவிடுகிறது. தற்போதைய ஐரோப்பாவில் படிப்புத்தான் சொல்லிக் கொடுக்கப் படு கிறது. அதற்குத் துணையாக, அறநெறியைக் காட்டுகிற கல்வி புகட்டப்படுவதில்லை. இது தீமையையே பயக்கிறது; சமுதாயத்தி லுள்ள ஏற்றத் தாழ்வுகளை திரப்படுத்தி வைக்கிறது. இந்தப் படிப்பினால் மனிதன், எதிலும் கணக்குப் பார்த்துக் கொண்டு செல்கிறான்; மமதை கொண்டு விடுகிறான்; நியாயத்தையும் அநியாயத்தையும் சமரஸப் படுத்திக் கொண்டு போகிறான்; எல்லாப் பொய்ச்சித்தாந்தங்களுக்கும் தலையசைத்துக் கொடுக்கிறான். உங்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க முன் வருகிறார் களே அவர்களுக்கும், உங்களுக்குக் கல்வியைப் போதிக்க முன்வருகி றார்களே அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிக ஆழமானதாயிருக்கிறது. ஆதலின் இதைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். சுயேச்சதிகாரத்தை எதிர்த்து, சுதந்திரத்திற்காகப் போர் புரிகிறார்களே அவர்களில் இரு பிரிவினருண்டு. ஒருபிரிவினர், ராஜத்துவமானது அதாவது அரசாங்கத்தை இயக்குவிக்கும் சக்தியானது, தனி மனிதர் களிடத்தி லிருக்கிறதென்று கூறுகின்றனர்; இன்னொரு பிரிவினர், அந்தச் சக்தியானது சமுதாயத்தைச் சேர்ந்த தென்றும், ஜனங்களிற் பெரும் பாலோருடைய அபிப்பிராயத்தைத் தழுவியே ஆட்சிபுரிகிறதென்றும் சொல்கின்றனர். மனித சுபாவத் தில் இயற்கையாகக் குடிகொண்டிருக்கிற தென்று நம்பப்படுகின்ற எந்த உரிமைகள் உண்டோ அந்த உரிமைகளைப் பிரகடனப் படுத்துவதிலும், சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தங்கள் நோக்கம் பூர்த்தியாகிவிட்டதென்று முதற்பிரிவினர் கருது கின்றனர். இரண்டாவது பிரிவினர், சமுதாயத்தையே முக்கியமாகக் கருதுகின்றனர். அந்தச் சமுதாயம், எந்தச் தனி மனிதர்களுடைய சேர்க்கையி னால் அமைகிறதோ அந்தத் தனி மனிதர்களின் கடமை, சமுதா யத்தைப் பொறுத்த மட்டில் என்ன வென்பதையே முக்கியமாகக் கருதுகிறார்கள். முதற்பிரிவினர், படிப்புக்கு அப்பால் எட்டிப் பார்ப்ப தில்லை. இரண்டாவது பிரிவினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர் களாயிருக்கின்றனர். முதலாவதாகிய படிப்பானது ஒழுக்க சம்பந்தமான விஷயங்களில் ஒருபுரட்சியை உண்டு பண்ணி விடுகின்றது. இரண்டாவ தாகிய கல்வியானது மனிதர்களை, சுதந்திரத்தை மறக்கும்படிச் செய்து விடுகிறது; பெரும்பான்மையோ ருடைய சுயேச்சாதிகாரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறது. 1830ஆம் வருஷம் பிரான்சில் ஏற்பட்ட புரட்சியின் போது ஜனங்கள் என்ன நம்பிக்கை கொண்டிருந்தார்களோ அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டவர்கள்தான் முதற்பிரிவினர். இவர்கள் பிரான்சில் வாய்வேதாந்திகள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள், ஒவ்வொருவரும் படிப்பதற்கு உரிமை யுடையவர்கள் என்று பிரகடனப்படுத்தினார்களே தவிர வேறொன்றையும் செய்யவில்லை. எந்த மத்திய வகுப்பாரிடத்தில், தனி மனிதர்களுடய சக்திகளை விருத்தி செய்து கொள்ளக்கூடிய சாதனங்கள் இருக்கின் றனவோ அந்த மத்திய வகுப்பாருடைய அரசியல்ஆதிக்கத்தை இவர்கள் - இந்த வாய் வேதாந்திகள் - ஊர்ஜிதம் செய்துவிட் டார்கள். இரண்டாவது பிரிவினர், அதாவது கல்வியை வலியுறுத்து கிறவர்கள் இப்பொழுது ஆங்காங்குச் சிதறிக் கிடக்கின்றனர். இவர்கள், பழைய காலத்துக் கொள்கைகளில் நம்பிக்கையுடைய வர்களாகவும், முன்னேற்றமென்பதற்கு விரோதிகளாகவும் இருக்கின்றனர். இந்த இரண்டும் பிரிவினரும் தவறானதும் குறுகலானதுமான பாதையில் செல்கின்றனர் என்பது என்னுடைய அபிப்பிராயம். உண்மை யென்ன வென்றால், எல்லா ராஜ்யத்துவமும் கடவுளிடத் தில் இருக்கிறது; அவருடைய திருச்சட்டத்திலே இருக்கிறது; எந்தக் கடவுளின் ஏற்பாடு இந்த உலகத்தை நிருவாகம் செய்கிறதோ, எந்த ஏற்பாடானது அவ்வப் பொழுது பல மகான்கள் மூலமாகவும் மானிட சமுதாயத்தின் இயற்கையான போக்கிலும் வெளியாகிறதோ அந்தக் கடவுளின் ஏற்பாட்டில் இருக்கிறது. நாம் எந்த லட்சியத்தை உத்தேசிக்கிறோமோ அந்த உத்தேசத்தில் இருக்கிறது; நாம் எந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யவேண்டுமோ அந்த நோக்கத்தில் இருக்கிறது. எவனொருவன் ஆட்சி புரிகிறானோ அவன், ஒன்று, மேற்படி கடவுள் சட்டத்தைச் சரியானபடி வியாக்கியானஞ் செய்து கொண்டு அதனுடைய பெயரால் ஆட்சி புரிகிறவனாயிருக்க வேண்டும். அல்லது, தனது பதவியை அநீதமாகக் கைப்பற்றிக் கொண்டவனாயிருக்க வேண்டும். அப்படிக் கைப்பற்றிக் கொள்கிற வனை விலக்குவது நமது கடமை. பெரும்பாலான ஓட்டுக்களின் மூலமாக மட்டும் ஓர் ஆட்சிமுறை ஏற்பட்டு விடுவ தில்லை. அது கடவுள் சட்டத்திற்கு அநுசரணையாக இருக்க வேண்டும்; எதிர்கால முன்னேற்ற மார்க்கத்தைத் தாராளமாகத் திறந்து விட வேண்டும். அப்படியில்லாவிட்டால் அந்த ஆட்சி முறையானது ஒழுங்காக அமையாது. சமுதாய நன்மை, சுதந்திரம், முன்னேற்றம் ஆகிய இம் மூன்றையும் தவிர்த்து வேறுவிதமான நோக்கங்கள் ஓர் அரசாங்கத்திற்கு இல்லை; இருக்கவும் முடியாது. கல்வியானது, நமக்கு, சமுதாய நன்மைகள் யாவை என்பதைப் போதிக்கின்றன. படிப்போ, அந்தச் சமுதாய நன்மையை முன்னிட்டு நாம் எந்தச் சாதனங்களைத் தொடர்ச்சியாகக் கையாளலாமென்பதைத் தெரிவிக்கின்றன. உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் முக்கியமாகக் கற்றுக் கொடுக்க வேண்டியவை யாவை? 1. அவர்களுடைய சம காலத்தில், அவர்களுடைய சொந்த நாட்டில் வசிக்கும் சகோதர மனிதர்கள், என்னென்ன கொள்கை களோடு, என்னென்ன நம்பிக்கைகளோடு வாழ்க்கையை நடத்துகிறார்களென்பதை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். 2. அவர்களுடைய தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்து, ஆத்மார்த்த, சமுதாய, அரசியல் திட்டங்கள் என்னென்ன போடப்பட்டிருக்கின்றன வென்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 3. அவர்கள் செய்கிற காரியங்கள், எந்தெந்த சட்டங்களைக் கொண்டு நிதானிக்கப்படுகின்றனவோ அந்தச் சட்டங்களின் சாரத்தை அவர்கள் தெரிந்துகொள்ளுமாறு செய்ய வேண்டும். 4. மானிட சமுதாயமானது எந்த அளவுக்கு முன்னேற்ற மடைந்திருக்கிறது, இன்னும் எந்த அளவுக்கு முன்னேற்றமடைய வேண்டுமென்பதை அவர்களுக்குப் புகட்ட வேண்டும். 5. அவர்களுடன் கூடப் பிறந்த லட்சக்கணக்கான மக்களைச் சம திருஷ்டியிலேயே வைத்து நேசிக்குமாறு அவர் களுக்கு உணர்த்த வேண்டும். இப்படிப்பட்ட கல்வி முறையானது, தேசப் பொதுவின் எண்ணத்தி லிருந்து தான் உற்பத்தியாக வேண்டும். இப்பொழுது போதிக்கப்படுகிற ஆத்மார்த்தமான கல்வியானது, வெறுங்குழப் பத்தைத் தான் உண்டு பண்ணுவதாயிருக்கிறது. கல்வி போதிக்கிற பொறுப்பைப் பெற்றோர்களிடமே விட்டு விடுவதாயிருந்தால், அது பலவித சிக்கல் களை உண்டுபண்ணி விடுகிறது. யாரார், வறுமையி னால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்களோ, தங்கள் ஜீவனோபாயத் திற்காக அன்றாடம் தேகத்தினால் உழைக்க வேண்டியவர்களா யிருக்கிறார்களோ அவர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி போதிக்க அவகாசமும் சாதனமும் இல்லாதவர்களாயிருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வி ஞானமே இல்லாமற் போய் விடுகிறது. இன்னுஞ் சில இடங்களில், கல்வி யானது, அகங்கார புத்தியையும், ஒழுக்க ஹீனங்களையும் அதிகப் படுத்தியிருக்கிறது. சௌகரியங்கள் இருக்கிற குடும்பங்களில் இருந்து கொண்டு படிக்கும் பிள்ளைகள் மூட நம்பிக்கைகளிலும் லௌகிக எண்ணங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் ஒன்று, சுதந்திரப் மனப்போக்குடையவர்களாகவாவது இருக்கிறார்கள்; அல்லது கோழைத்தனமுடையவர்களாகவாவது இருக்கிறார்கள். ஒன்று, சுயேச்சாதிகார மனப்போக்குடையவர்களாகவாவது இருக்கிறார்கள்; அல்லது அதற்கு விரோதிகளாகவாவது இருக்கி றார்கள். பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக அமைகிறவர்கள், சாதாரண ஆசிரியர் களாயிருக் கிறார்களா அல்லது புரோகிதர்களாயிருக் கிறார்களா வென்பதைப் பொறுத்து பிள்ளைகளின் மனப்போக்கு அமைகிறது. இங்ஙனம் பல படித்தான கல்வி முறைகளில் வளரும் பிள்ளைகள், பொது நலத்திற்கான ஒரு காரியத்தில் எப்படி சகோதர பாவத்துடன் ஈடுபடுவார்கள்? தேசத்தின் ஒற்றுமையை எப்படி நாடுவார்கள்? சமுதாய எண்ணம் அவர்களுக்குப் போதிக்கப் படுவ தில்லை. அப்படியிருக்க, சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபடும்படி அவர்கள் சொல்லப்படுகிறார்கள். எந்தச் சட்டங்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதோ, எந்தச் சட்டங்களின் நோக்கம், அவற்றின் தன்மை முதலியன அவர்களுக்குப் போதிக்கப்பட வில்லையோ, அந்தச் சட்டங்களை மீறி நடந்ததற்காக அவர்கள் தண்டிக்கப் படுகிறார்கள். பிள்ளைகள், தேசத்தின் பிரஜைகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிற போது, அவர்களுக்கு எந்த ஆசிரியரும் ஒத்துழைப்பைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் போதிப்பதில்லை. ஆனால் அவர்களிடமிருந்து, அந்தப் பிள்ளைக ளிடமிருந்து, சமுதாயமானது ஒத்துழைப்பையும் தியாகத்தையும் எதிர்பார்க்கிறது. மேலே நான் குறிப்பிட்ட வாய் வேதாந்திகள் இருக்கிறார்களே அவர்கள், எல்லோருக்கும் ஆளும் உரிமையுண்டு என்பதை அங்கீகரித்துக் கொண்டு, அதே சமயத்தில் இளைஞர் களுக்குத் தனித்துவத்தைப் பற்றி உபதேசிக்கிறார்கள். கூட்டுறவைப் பற்றி, தேசப் பொதுவைப் பற்றிப் போதிப்பதில்லை. யாருக்கும், எந்த விதமாகப் போதிக்கவும் உரிமை யுண்டு என்று அவர்கள் கூக்குரலிடுவதினால் தேசமானது ஜனங்களை ஒழுக்க மார்க்கத்தில் செல்லும்படிச் சொல்லும் உரிமையை யிழந்து விடுகிறது. ஒரே விதமான நாணயச் செலவாணி முறை, ஒரே விதமான நிறுத்த லளவை, முகத்தலளவை முதலியனவே இருக்க வேண்டு மென்றும், அவைதான் முக்கியமானவையென்றும் அவர்கள் வலியுறுத்து கிறார்கள். தேசீய வாழ்வுக்கு அடிப்படையாக ஒரே மாதிரியான கொள்கைகள் இருக்க வேண்டுமென்பதை அவர்கள் முக்கியமாகக் கருது வதில்லை. சட்ட ரீதியாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் அரசாங்கங்களை ஆதரிக்கிற அத்தனைபேரும் தற்போது மேற்படி கூக்குரலைத் தான் போடுகிறார்கள். இந்தக் கூக்குரலில் நீங்கள் மயங்கி விடக்கூடாது. தேசீயக் கல்வி இல்லாமற்போனால், தேசத் தின் அறவாழ்க்கையும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாயுள்ள ஒரு தேசீயக் கல்வித் திட்டம் இல்லாவிட்டால், பிரஜைகளின் உரிமை களென்றும், பிரஜைகளின் கடமைகளென்றும் சொல்லப் படுவதற்கு அர்த்தமே இல்லை. ஜனங்களின் கடமைகளைப் பற்றிய ஞானமோ, உரிமைகளை உபயோகிக்கிற திறமையோ, ஏதோ அதிருஷ்ட வசத்திற்கு விடப்பட்டிருக்கிறது; அல்லது பிள்ளை களுக்கு ஆசிரியர்களை யார் தெரிந்தெடுக்கிறார்களோ அவர்க ளுடைய சுயேச்சைக்கு விடப்பட்டிருக்கிறது. ஒரேமாதிரியான கல்வி முறை இருக்க வேண்டுமென்று சொல்வது அவரவர்களுடைய சுதந்திரத்தை பாதிப்பதாகுமென்று சிலர் சொல் கிறார்கள். யாருடைய சுதந்திரம்? பெற்றோர்களின் சுதந்திரமா? பிள்ளை களின் சுதந்திரமா? பெற்றோர்களின் சுயேச் சாதிகாரத்தினால் பிள்ளை களின் சுதந்திரம் நசுக்கப்படுகிறது; முதியோர்களுக்காக இளைஞர்களின் சுதந்திரம் பலி கொடுக்கப்படு கிறது. அவரவரும் முன்னேற்றமடைய உரிமையுடையவர்களென்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் மாய வித்தை போலாகி விடுகிறது. தனிப்பட்ட நபர்களின் கொள்கைகள், நம்பிக்கைகள் முதலியன மட்டுமே - அந்தக் கொள்கைகளும் நம்பிக்கைளும் பொய்யாகவும் இருக்கலாம்; முன்னேற்றத்திற்கு விரோதமாகவும் இருக்கலாம். - பிள்ளைகளுக்குப் புகட்டப்படுகின்றன. அப்படிப் புகட்டுவதும் பெற்றோர்களின் அதிகாரத்தைக் கொண்டு புகட்டப்படுகிறது. அது மட்டுமல்ல; தங்களுக்குப் போதிக்கப் படுவதென்ன வென்பதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியாத சிறு வயதில், பிள்ளைகளுக்கு இந்தப் போதனைகள் புகட்டப் படுகின்றன. அந்தப் பிள்ளைகள், பெரியவர்களாகித் தங்கள் ஜீவனத்திற்காக நாள்தோறும் உழைக்க வேண்டிய அவசியத்திற்கு வந்துவிடுகிற போது தங்களுக்குப் புகட்டப்பட்டு வந்த போதனைகளை, மற்றப் போதனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவர்களாகி விடுகிறார்கள்; அதனால் தங்களுடைய நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள முடியாதவர் களாகி விடுகிறார்கள். இதனால், அவர்கள், அறவாழ்க்கையைப் பொறுத்த மட்டில் தனி ஜாதியினராகி விடுகிறார்கள். இந்த மாதிரியான கல்வி முறையை, சுயேச்சாதிகார முறை என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, சுதந்திர முறை யென்று சொல்ல முடியாது. சமத்துவமில்லாத இடத்தில் உண்மையான சுதந்திரம் இருக்க முடியாது. வாழ்க்கை நோக்கத்தில் ஒரே விதமான அடிப்படை இல்லாதவர்கள், பொது வான ஒரு கொள்கையில்லாதவர்கள், கடமையைப் பற்றி ஒரே விதமாக உணராதவர்கள், ஆகிய இவர்களுக்குள் எப்படி சமத்துவம் ஏற்படும்? தீய மார்க்கத்தைக் கடைப்பிடிக்கவும் ஒருவனுக்கு உரிமை இருக்க வேண்டுமென்று சொல்லப்படுவது உண்மையாக சுதந்திர மல்ல. நல்வழிகளிலே, எந்த வழியை வேண்டுமானாலும் கடைப் பிடிக்க ஒருவனுக்கு உரிமையளிக்கப்படுகிறதே அதுதான் உண்மை யான சுதந்திரம். மேற்படி வாய் வேதாந்திகளின் சுதந்திரமோ, குழந்தைகளுக்குத் தீயமார்க்கத்தையே தெரிந்தெடுத்துக் கொடுக்கிற பெற்றோர்களின் சுயேச்சாதிகாரமாகவே இருக்கிறது. ஒரு தகப்பன், அவனுடைய குழந்தையின் தேகத்திற்கு ஏதேனும் உபத்திரவம் உண்டுபண்ணு வானாகில், உடனே பொதுஜன அபிப்பிராயத்தைப் பின்பலமாகக் கொண்டு சமுதாயமானது அந்தக் குழந்தை விஷயத் தில் தலையிடுகிறது. ஆனால், அதே தகப்பன், அவனுடைய குழந்தை யின் ஆத்மாவுக்கு உபத்திரவம் கொடுப்பானாகில், சமுதாயம் சும்மாயிருக்கிறது, தேகத்தை விட ஆத்மா முக்கியமற்றதா? குழந்தை களை, அவைகளின் சக்திகள் சிதைக்கப்படாமலிருப்பதிலிருந்தும், அறியாமையிலிருந்தும், மூட நம்பிக்கையிலிருந்தும் காப்பாற்றுவது சமுதாயத்தின் பொறுப் பில்லையா? கல்வி போதிக்கிற விஷயத்தில் உரிமை இருக்க வேண்டுமென்ற கூக்குரலானது, ஆரம்பத்தில் நல்ல பலனையே கொடுத்தது. இப்பொழுதுகூட சன்மார்க்கக் கல்வியைப் போதிக்கிற உரிமை, ஒரு சுயேச்சாதிகார அரசாங்கத்தினிடமோ, அல்லது பிற்போக்கான ஒரு ஜாதியார் வசமோ, அல்லது முன்னேற்றதிற்கு விரோதமாயுள்ள ஒரு புரோகிதக் கூட்டத்தின் கையிலோ இருக்குமானால், அப்பொழுது, கல்வி போதிக்கிற விஷயத்தில் உரிமை வேண்டுமென்கிற கூக்குரல் பயனுடையதாயிருக்கும். உரிமையென்பது கொடுங்கோன்மைக்கு விரோதமாக உபயோகிக்கப்படுகிற ஓர் ஆயுதம்; விமோசனத்திற்காக உபயோகிக்கப்படுகிற அரை குறையான ஆனால் இன்றியமையாத ஒரு வாசகம். நீங்கள் எங்கெங்கு அடிமைகளாயிருக்கிறீர்களோ அங்கெல்லாம் இந்த உரிமை வாசகம் உங்களுக்கு உபயோகப்படும். ஆனால், எந்தக் காலத்தில் மத நம்பிக்கையானது, ஒவ்வொரு கோயிலின் நுழை வாயிலிலும் முன்னேற்றம் என்ற வாசகத்தை எழுதி வைக்குமோ, எந்தக் காலத்தில் ஒவ்வொரு பொது தாபனமும், மேற்படி முன்னேற்ற வாசகத்தைப் பல்வேறு வடிவங்களுடன் உச்சரிக்குமோ அந்தக் காலத்தைப்பற்றியே நான் இங்குக் குறிப்பிடு கிறேன். அந்தக் காலத்தில் தேசீயக் கல்வி முறைப்படி மாணாக்கர்கள் தங்கள் படிப்பை முடித்துக் கொண்டு கல்வி நிலையங்களைவிட்டு வெளியேறுகிறபோது பின் வரும் வாசகங்களுடன் அனுப்பப் படுவார்களாக:- மாணாக்கர்களே! எல்லோருடனும் ஒத்து வாழவேண்டிய உங்களுக்கு, அந்த ஒத்துழைப்பின் அடிப்படையான அமிசங்கள் யாவை என்பதையும், உங்கள் தேசத்தினரால் நம்பப்படுகிற கொள்கைகள் யாவை என்பதையும் நாங்கள் போதித்திருக் கிறோம். இந்தக் கொள்கைகளில் முதன்மையானது முன்னேற்றம் என்பது உங்கள் ஞாபகத்திலிருக்கட்டும். மனிதன் என்ற ஹோதா விலும், உங்களுடைய தேசத்தின் பிரஜை என்ற ஹோதாவிலும் நீங்கள் செய்ய வேண்டிய கடமை, உங்களுடைய சகோதரர்களின் இருதயத்தை விசாலப்படுத்துவதாகும். ஆங்காங்குச் செல்லுங்கள். பலபடித்தான அபிப்பிராயங்களையும் பரிசீலனை செய்து பாருங்கள். ஓர் அபிப்பிராயத்தோடு மற்றோர் அபிப்பிராயத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். பிறகு, எந்த அபிப்பிராயத்தை நாங்கள் சரியென்று நம்பி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தோமா அந்த அபிப்பிராயத்தைக் காட்டிலும் உங்களுடைய அபிப்பிராயம் சிலாக்கியமானதென்று பட்டால் அதனைத் தைரியமாக வெளியிடுங்கள். அதனால் உங்களுடைய நாட்டார் உங்களை ஆசிர்வதிப்பார்கள். அப்பொழுது, அந்த ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொண்ட பிறகு - அதற்கு முன்னல்ல - படிப்பிக்கும் விஷயத்தில் உரிமை வேண்டுமென்று கூக்குரல், போடாதீர்கள். ஏனென்றால் அஃது உங்களுக்கு அப்பொழுது தேவையில்லை. தவிர, அந்தக் கூக்குரல் உங்கள் தேசத்தின் ஒற்றுமைக்கு விரோதமானது. பின்னர், தேசீய முறையில் எல்லோருக்கும் கட்டாயக் கல்வி போதிக்க வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தி அந்தத் திட்டத்தை தாபித்து வையுங்கள். தன்னுடைய வேலைத் திட்டம் இன்னதென்பதைத் தன் னுடைய ஒவ்வொரு பிரஜைக்கும் தெரிவிக்க வேண்டுவது ஒருதேசத் தின் கடமை. தேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும், பிள்ளை களுக்குச் சன்மார்க்கக் கல்வி போதிக்க வேண்டும்; தேசத்திலுள்ள பல பிரிவினருடைய வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்; மானிட சமுதாயமானது எப்படி முன்னேறிக் கொண்டு வருகிற தென்பதைக் கற்பிக்க வேண்டும். தேசத்தின் சட்ட திட்டங்களென்ன வென்பதையும் பிள்ளை களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தப் பள்ளிக் கூடங்களில் மாணாக்கர்களுக்குச் சமத்துவ உணர்ச்சியையும் அன்பு உணர்ச் சியையும் ஊட்ட வேண்டும். இந்தத் திட்டத்தை அநுசரித்து தேசத்தின் வருங்காலப் பிரஜைகளுக்குக் கல்வி போதிக்கப்படுமானால், சுதந்திரம் தானே உண்டாகி விடுகிறது. பிரதி மனிதனுக்கும் , அவனுடைய கருத்துக் களைத் தாராளமாக வெளியிட உரிமையுண்டு. அப்படியே அந்தக் கருத்துக்களைக் கேட்கப் பிரதி மனிதனுக்கும் உரிமையுண்டு. அந்த உரிமைக்கு ஊக்கங் கொடுப்பதும், அதனைக் காப்பாற்றிக் கொடுப்பதும் தேசத்தின் கடமையாகும். அதுபோலவே பொது நன்மையை முன்னிட்டு சமுதாயத் திட்டத்தை விருத்தி செய்வதும், அவசியமானால் மாற்றியமைப்பதும் தேசத்தின் கடமையாகும். 10. கூட்டுறவு - முன்னேற்றம் கடவுள் உங்களைச் சமுதாயப் பிறவிகளாகவும், முன்னேற்ற மடையக்கூடிய பிறவிகளாகவும் படைத்திருக்கிறார். ஆதலின் மற்றவர் களோடு சேர்ந்து வாழ வேண்டியது உங்கள் கடமை. அப்படியே, உங்களுக் கேற்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களையொட்டி நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர்களோ அந்த வேலையின் மூலமாக முன்னேற்றமடைய வேண்டியதும் உங்கள் கடமை. நீங்கள் சங்கமாகச் சேர்ந்து வாழ்வதையும், முன்னேற்றமடை வதையும் உங்கள் சமுதாயம் தடை செய்யக் கூடாது. அப்படித் தடை செய்யக்கூடாதென்பதை அந்தச் சமுதாயத்திலிருந்து எதிர் பார்க்க உங்களுக்கு உரிமையுண்டு. அது மட்டுமல்ல; உங்களுடைய சமுதாயமானது, நீங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும், முன்னேற்ற மடைவதற்கும் வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்; அதற்கான சாதனங்களைக் கொடுக்க வேண்டும். நன்மை, தீமை என்ற இரண்டில் அதாவது கடமை, மமதை என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை சுதந்திரம் என்பது உங்களுக்கு அளிக்கிறது. எப்படித் தெரிந்தெடுத்துக் கொள்வது என்பதைப் போதிப்பதுதான் கல்வி. அந்தப் போதனையின்படி நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தெரிந் தெடுத்துக் கொண்டு விட்ட பிறகு, அதனை எப்படி அநுஷ்டானத் திற்குக் கொண்டு வருவதென்பதற்குத்தான், சங்கமாகச் சேர்ந்து வாழ வேண்டியதவசியமாகிறது. முன்னேற்றமென்பது லட்சியம். அதனை எப்பொழுதும் நீங்கள் உங்கள் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால்தான் அதனை நீங்கள் அடைய முடியும். அடைந்து விட்ட பிறகுதான் சன்மார்க்கத்தையோ அல்லது துன்மார்க்கத்தையோ ஏதேனும் ஒன்றை நீங்கள் தெரிந் தெடுத்தீர் களல்லவா, அந்த மார்க்கம் சரியானதென்று உங்களுக்கு உறுதிப்படும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று புறக்கணிக்கப் பட்டாலும், மனிதத் தன்மையோடு கூடிய ஒரு மனிதனோ அல்லது பிரஜா உரிமையாடு கூடிய ஒரு பிரஜையோ அந்தத் தேசத்தில் இல்லையென்பதுதான் அர்த்தம். அப்படியிருந்தாலும் அரைகுறை யான வளர்ச்சியோடுதான் அவர்கள் இருப்பார்கள். ஆதலின், இவைகளுக்கெல்லாம் நீங்கள் போராட வேண்டும். சிறப்பாக, சங்க மாகச் சேர்ந்து வாழ்கிற உரிமைக்காக நீங்கள் போராட வேண்டும். ஏனென்றால் அந்த உரிமையில்லாவிட்டால், சுதந்திரமோ, கல்வியோ பயனற்றதாகி விடுகிறது. அந்த உரிமையானது, மதத்தைப் போல் புனிதமானது. ஏனென்றால், சங்கமென்று சொன்னால் அது பல ஆத்மாக்களின் கூட்டுறவல்லவா? நீங்களெல்லோரும் கடவுளின் மக்கள். ஆதலின் எல்லோரும் சகோதரர்கள். சகோதரர் களுக்குள் கூட்டுறவு கூடாதென்று, உண்ணல் முதலியன கூடாதென்று கூறுவது குற்றமல்லவா? பாவமல்லவா? கிறிதுவ பரிபாஷையாகிய கம்யூனியன் என்ற வார்த்தையை இங்கு நான் உபயோகிக்கிறேன். இதற்கு ஒன்று சேர்ந்து சாப்பிடுதல் என்று அர்த்தம். இதனை, மாற்ற முடியாத ஓர் உண்மை யென்று ஆதியில் கிறிதவ மதத்தினர் உபதேசித்தார்கள். உண்மையைச் சொல்லப் போனால், இந்த உடன் உண்ணுதல் என்பது, மானிட சமுதாயத்தினிடையே தோன்றியுள்ள பலவித மதங்களும் அடிப்படையில் ஒன்று தான் என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான ஒரு மார்க்கம். கடவுள் முன்னிலையில் மானிட சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் ஒரு குடும்பத்தினர் என்ற உண்மையை, ஆண்டானும் அடிமையும் ஒன்றுபட்டவரே, ஒரே மோட்ச லோகத்தையடையத் தகுதியுடையவரே என்ற உண்மையை மனிதர்களுக்கு இந்த உடன் உண்ணுதல் என்பது போதித்தது. முற்காலத்தில் ஆண்டானுடைய ஆத்மா வேறு, அடிமையினுடைய ஆத்மா வேறு என்று தத்துவோபதேசகர்கள் போதித்தார்கள்; ஜனங்களும் அதனை நம்பினார்கள். ஆனால் கிறிதவ தர்மம் இதனைக் கண்டித்தது. எல்லா மனிதர்களும் சமத்துவம் வாய்ந்த வர்கள், சகோதரத்துவ முடையவர்கள் என்பதற்கு மேற்படி உடனுண்ணுதல் என்னும் நியதி யானது ஓர் அடையாளமாயிருந்தது. இந்த அடையாளத்திற்குள்ளிருந்த உண்மைகளை விருத்தி செய்து காட்டுவது மானிட சமுதாயத்தின் கடமையாயிருந்தது. கிறிதவ மத பீடங்கள் இதனைச் செய்யவில்லை. ஆரம்பத் தில் இவை அச்சத்துடனும், நிச்சய புத்தி இல்லாமலும் தங்கள் பிரசாரத்தைச் செய்தன. பின்னர், அதிகார வர்க்கத்தினருடன் சேர்ந்து கொண்டன. யேசு நாதருடைய நோக்கத்திற்கு விரோதமான ஒரு மனப்போக்கு, அதாவது பணக்கார மனப்போக்கு இவை களுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் இவை, சரியானமார்க்கத்தி லிருந்து பிறழ்ந்து பிற்போக்கடைந்தன. ஆதலின் உடணுண்ணல் என்னும் சம்பிரதாயத்தை வரையறுத்து விட்டன. பாதிரிமார் களல்லாதவர்கள் ரொட்டி ஒன்றைத்தான் உடனிருந்து உண்ணலா மென்றும், பாதிரிகள் இரண்டு விதமான முறைகளை அனுசரிக்கலா மென்றும் ஏற்பாடு செய்தன. பின்னர், சிலர் கிளர்ச்சி செய்து, எல்லோரும் இந்தஇரண்டு முறைகளையும் அநுசரிக் கலாமென்று ஏற்படுத்தினார்கள். கி.பி. பதினைந்தாவது நூற்றாண்டில் இந்தக் கூக்குரல் மிகப் பலமாயிருந்தது. இது, பின்னாடி ஏற்பட்ட மதச் சீர்திருத்தத்திற்கு முகவுரை மாதிரி இருந்தது. பலர் இதற்காக வீர மரணமடைந்தார்கள். கிறிதவ மதத்தில் சேராதவர்களை நியாய விசாரணைக் குட்படுத்துவதென்னும் முறையினால் கொளுத்தப் பட்ட அக்னியிலிருக்கிறதே அந்த அக்கினி ஜ்வாலையில், பொஹிமி யாவைச் சேர்ந்த ஜான்ஹ1 என்ற மகான் மரித்துப் போனான். பழைய காலத்து இந்தச் சச்சரவுகளைப் பற்றி இப்பொழுது உங்களுக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரிந்திருந்தாலும் ஏதோ மத சம்பந்தமாக ஏற்பட்ட தகராறு களினால் இந்தச் சண்டை ஏற்பட்டதென்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், தேசீயக் கல்வி முறைப்படி நீங்கள் சரித்திரத்தைப் படிக்கிறபோது மத ஆராய்ச்சியில் ஏற்படுகிற ஒவ்வொரு முன்னேற்றத்தின் விகிதாசார மாக மனிதனுடைய நாகரிக வாழ்க்கையும் முன்னேற்றமடைந் திருக்கிறதென்பது உங்களுக்குத் தெரிய வரும். அப்பொழுதுதான், மேற்படி மதப் போராட்டங்களின் பிரயோஜனமும் உங்களுக்குத் தெரியவரும்; அந்த மதப் போராட்டங்களில் ஈடுபட்டு வீர மரணமெய்தியவர்களை நீங்கள் பாராட்டுவீர்கள். இங்ஙனம் வீர மரணடைந்த மகான்கள் தான், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மத்தியதர்களாகத் தனி ஜாதியொன்றில்லை யென்பதை நமக்கு அறிவுறுத்திப் போயிருக் கிறார்கள். நல்லொழுக்கத்திலும், அறிவிலும் நம்மிலும் மேலானவர்கள் யாரோ அவர்கள் நமக்குச் சன்மார்க்கத்தைக் காண்பிக்கத் தகுதியுடைவர் களென்றும், ஆனால் இதற்காக அவர்களுக்கு விசேஷ அதிகாரமோ, சலுகையோ கிடையாதென்றும் அவர்கள் தெரிவித்துப் போயிருக் கிறார்கள். மோட்ச லோகத்தில் எது புனிதமானதோ அது பூலோகத்திலும் புனிதமானதுதான். ஆதலின் கூட்டுறவு என்பதை, சங்கமாகச் சேர்ந்து வாழ்வதென்பதை உங்களுடைய கடமையாகவும் உரிமை யாகவும் கருதுங்கள். உங்களுடைய இந்தக் கடமையையும் உரிமையையும் ஒரு வரம்புக்குட்படுத்தி வைக்க விரும்புகிறவர்கள், ஒரு ராஜ்யத்தின் அல்லது தேசத்தின் பிரஜைகள், அந்த ராஜ்யத் தோடுதான் அல்லது தேசத்தோடுதுதான் கூட்டுறவு கொள்ள வேண்டுமென்றும் , அதாவது பிரஜைக்கும் ராஜ்யத்திற்குந்தான் சம்பந்தம் இருக்க வேண்டுமென்றும், அதுதான் உண்மயைன சம்பந்தம் என்றும் கூறுகிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் அந்த ராஜ்யத்தில் பிரஜைகளாகச் சம்ந்தப்பட்டிருக்கிறீர்கள்; அப்படித்தான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் பிரஜைகளுக்குள்ளேயே ஒருவித சம்பந்தம் அல்லது கூட்டுறவு ஏற்படுமானால் அது ராஜ்யத்திற்கு விரோதமானதாகும்; அல்லது அந்தக் கூட்டுறவு அநாவசியமானதாகும். இப்படியெல்லாம் இவர்கள் வாதஞ் செய்கிறார்கள். ராஜ்யம் அல்லது தேசம் என்றால் என்ன? எந்தப் பிரஜை களைக் கொண்டு அந்த ராஜ்யம் அல்லது தேசம் அமைந்திருக் கிறதோ அந்தப் பிரஜைகளத்தனை பேருக்கும் பொதுவான விஷயங்கள் என்னென்ன உண்டோ, பொதுவான நோக்கங்கள் என்னென்ன உண்டோ அவைகளைப் பொறுத்த மட்டில் கூட்டுறவு பூண்டு, அது காரணமாக அமைந்திருக்கிற கூட்டுறவுதாபனந் தானே ராஜ்யம் அல்லது தேசம். எல்லோருடைய கூட்டுறவுக்கும் சாத்தியமாகாத சில நோக்கங்கள் இருக்கின்றன வென்பது வாதவம். அப்படி விசேஷமான சிலநோக்கங்களையுடையவர்கள், தனியான ஒரு சங்கமாக, தனியான ஒருகூட்டுறவாகத் தங்களை அமைத்துக் கொள்ளலாமன்றோ? தவிர, சங்கமாகச் சேர்ந்து வாழ்கிற உரிமை, மனிதனுக்கு இருந்தால் தான் அவன் முன்னேற்ற மார்க்கத்தில் செல்லமுடியும். அந்த உரிமை, அவனுடைய முன்னேற்றத்திற்கு உறுதி கூறுகிற மாதிரி. ஜனங்கள் பலர் ஏகோபித்து அங்கீகரித்துக் கொண்ட சில கொள்கைகளின் பிரதிநிதியாகவே ஒரு ராஜ்யம் இருக்கிறது. இந்தக் கொள்கைகளைக் கொண்டு தான் அந்த ராஜ்யம் தாபிக்கப்படுகிறது. பின்னர், அந்த ராஜ்யம் வளர்ச்சியடைந்து கொண்டு வருகிற போது, எந்தக் கொள்கைகள் அந்த ராஜ்ய தாபிதத்திற்கு ஜீவதாரமாயிருந் தனவோ அந்தக் கொள்கைகளைப் பற்றிய விசேஷமான பல உண்மைகள் பின்னர் வெளிப்பட்டால் அந்த உண்மைகளை எப்படிப் பரப்புவது? பலருடைய கூட்டுறவினால் தானே முடியும்? உதாரணமாக, விஞ்ஞான உண்மைகள் சில கண்டுபிடிக்கப்படு கின்றனவென்று வைத்துக் கொள்வோம்; அல்லது ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போய் வருவதற்குச் சுலபமா யிருக்கக் கூடிய சில புதிய பாதைகள் திறக்கப்படுகின்றன வென்று வைத்துக் கொள் வோம். இவை காரணமாகவோ, வேறு காரணங் களினாலோ, ராஜ்யத்திற்குச் சாதகங்கள் உண்டாகுமென்று தெரிந்து கொண்ட வர்கள், அந்தச் சாதகங்களைப் பற்றி ஜனங்களுக்குத் தெரிவித்து அவற்றில் அக்கரை கொள்ளுமாறு செய்ய வேண்டுமானால் அதற்கு அவர்கள் - அந்தச் சாதகங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறவர்கள்-சங்கமாகச் சேர்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது? கூட்டுறவு கொள்ளத் தானே வேண்டியிருக்கிறது? ஏற்கெனவே ஜனங்க ளுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்து கிடக்கிற சில எண்ணங்களை அல்லது கொள்கைகளை - அவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதிலும் - ஒரு தனி மனிதன் அசைத்துக் கொடுத்து விட முடியுமா? மாற்றி விட முடியுமா? முடியாது. ஆனால் ஒரு சிலர் சங்மகாகச் சேர்ந்து செய்தால் இந்தக் காரியம் முடியும். இவர்கள் ஆரம்பத்தில் சிறுபான்மையோரா யிருந்தாலும். நாளா வட்டத்தில் வலுத்து, தங்கள் காரியத்தைச் சாதிக்கக் கூடும், ஆதலின் வருங்காலத்து முறை கூட்டுறவுதான்; சங்கமாகச் சேர்ந்து வாழுதல்தான். இந்த முறையில்லாவிட்டால், ஒரு ராஜ்யமானது, ஏற்கனவே அஃது அடைந்துள்ள ஒரு நாகரிக நிலையோடு நின்றுவிடும்; அப்படியே தம்பித்துப் போய்விடும்;மேலும் மேலும் வளர்ச்சியடையாது. சங்கமாகச் சேர்வதன் நோக்கம், முன்னேற்றமடைய வேண்டு மென்பதாயிருக்க வேண்டும். மானிட சமுதாயத்தினாலும், தேசத்தி னாலும் ஏகோபித்து அங்கீகரிக்கப்பட்ட நித்தியமான உண்மை களுக்கு விரோதமாக, சங்கமாகச் சேர்வதன் நோக்கம் இருக்கக் கூடாது. மற்றவர்களுடைய பொருள்களைக் களவாடுவதற்குச் சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிற ஒரு சங்கமோ, பலதார மணத்தை வற்புறுத்து வதற்காக ஏற்பட்ட ஒரு சங்கமோ, தேசத்தின் கட்டுப்பாட்டைக் குலைத்து, சுயேச்சாதிகாரத்தை தாபிக்க வேண்டுமென்று பிரசாரம் செய்கிற ஒரு சங்கமோ சட்ட விரோதமானவையாகும். மனித சுபாவத்திற்கும் ஒழுக்கத்திற்கும், தேசத்திற்கும் விரோதமான கொள்கைகள் எங்கள் நாட்டிலே பரப்பப்படுவதை நாங்கள் சகித்துக் கொண்டிருக்க முடியாது; வேண்டுமானால் எங்கள் நாட்டுக்கு வெளியே சென்று உங்கள் பிரசாரத்தைச் செய்யுங்கள் என்று மேற்படி கொள்கையினரைப் பார்த்துக் கூற சமுதாயத்திற்கு உரிமையுண்டு. கூட்டுறவானது, அதாவது சங்கமானது சமாதான முறையில் இருக்க வேண்டும். எழுத்து அல்லது பேச்சு இவைகளைத் தவிர அதற்கு வேறு வித ஆயுதங்கள் இருக்கக் கூடாது. அதனுடைய நோக்கம் எல்லோரையும் தூண்டிவிடுவதாயிருக்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்துவதாயிருக்கக் கூடாது. மற்றும் சங்கமானது பகிரங்க மானதாயிருக்கவேண்டும். சுதந்திரமும், சுயதேச உணர்ச்சி யும் எங்கு நசுக்கப்படுகிறதோ அங்கு ரகசியச் சங்கங்கள் நியாயமான யுத்தக் கருவி களாகும். ஆனால் எந்த நாட்டில்சுதந்திரமானது அங்கீகரிக்கப்பட்டிருக் கிறதோ, எந்த நாட்டில் ஜனங்களிடையே சிந்தனா சக்தியின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படாமலிருக் கிறதோ அந்த நாட்டில், ரகசியச் சங்கங்கள் நிறுவப்பட்டால் அவை நியாய விரோதமாகும். எப்படி ஒருசங்கமானது, முன்னேற்றப் பாதையைத் திறந்துவிடக்கூடிய தாயிருக்க வேண்டுமோ அதைப் போல, அந்தச் சங்கமானது எல்லோருடைய பரிசீலனைக்கும் தீர்ப்புக்கும் உட்படவேண்டும். மற்றும், ஒரு சங்கமானது மனித சுபாவத்தோடு இயற்கையாக ஒட்டியிருக்கும் உரிமைகள், எல்லோ ரிடத்திலும் இருக்கின்றனவென்பதை அங்கீகரிக்க வேண்டும். எந்தச் சங்கமேனும், உழைக்குஞ் சுதந்திரத்தை, எண்ணுஞ் சுதந்திரத்தை நசுக்கிவிடப் பார்க்குமானால், அந்தச் சங்கத்தை தேசமானது, தனது அரசாங்கத்தின் மூலம் நசுக்கிவிடுவது நியாயமேயாகும்.இந்த மாதிரியான வரம்புகளுக்குட்பட்டிருக்கிறபோதுதான் ஒரு சங்கம் புனிதமடைகிறது. நசுக்கப்பட முடியாததாகிறது; முன்னேற்றத்திற்கு ஜீவ சக்தி அளிக்குந் தன்மையதாயிருக்கிறது. சங்கமாகச் சேர்கிற இந்த உரிமையை, கட்டுத்திட்டங்களுக்குட்படுத்தும் எந்த அரசாங்க மும் தனது புனிதமான லட்சியத்திற்குத் துரோகஞ் செய்துவிடுகிற தென்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட காரியத்தில் அஃது இறங்குவதற்கு முன்னர், ஜனங்கள் அதற்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்; மற்றபடி எல்லாவித சமாதான முறைகயும் கையாண்டு பார்க்க வேண்டும். அவை யாவும் பலிதமடையாவிட்டால், அதனை அப்புறப்படுத்தி விட வேண்டும். எனது சகோதரர்களே! இவை யாவும் உங்களுடைய அடிப்படையான கடமைகள். இந்தக் கடமைகளிலிருந்துதான் உங்களுடைய உரிமைகள் பிறக்கின்றன. உங்களுடைய சமுதாய வாழ்க்கையில் பல விசேஷப் பிரச்னைகள் தோன்றலாம். அவை யாவையிருக்கக் கூடுமென்று ஊகிப்பதோ அல்லது அவைகளுக்குப் பரிகாரந் தேடிக் கொடுப்பதோ, இங்கு என் உத்தேசமல்ல. இந்த மாதிரியான பிரச்னைகள் வந்தால், அவை களுக்குப் பரிகாரந் தேடுகின்றபோது, எந்தெந்தக் கொள்கைகளை அநுசரிக்க வேண்டுமென்பதை இங்கு எடுத்துச் சொல்வதுதான் என் நோக்கம். இந்தக் கொள்கைகளை நீங்கள் அநுஷ்டிப்பீர்களானால், உங்களுடைய பிரச்னைகளுக்குப் பரிகாரம் ஏற்பட்டு விடும். எல்லா மனிதர்களுக்கும் சமத்துவமுடையவர்களென்னும் சித்தாந்தத்திற்கு மூலாதாரமாக இருப்பது கடவுள் என்று நான் குறிப்பிட்டிருக் கிறேன். கடவுள் சட்டத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு தான், நீங்கள் சமுதாயச் சட்டத்தையும், அதனை இயற்றுகிறவர்களையும் பார்க்க வேண்டுமென்றும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். மேற்படி சட்டத்திற்கு வியாக்கியானஞ் செய்கிறவர்கள் ஜனங்களேயென்றும், எல்லா அரசியல் அதிகாரமும் ஜனங்களிடமிருந்தே பிறக்கிற தென்றும் கூறியிருக்கிறேன். கடவுள் சட்டம், சமுதாயச் சட்டம் முதலிய சட்டங்களுக்கு அடிப்படையான தன்மையாயமைந் திருப்பது முன்னேற்றம் இந்த முன்னேற்றம் எல்லையற்றது; யுகத் திற்கு யுகம் தொடர்ந்து வரும் தன்மையது. மனிதனால் செய்யக் கூடிய எல்லாக் காரியங்களிலும், மனிதனால் சிந்திக்கப்படுகிற எல்லாச் சிந்தனைகளிலும், மதம் முதல் தொழில் வரை, பொருள் விநியோகம் உள்பட எல்லாவற்றிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப் பதை நாம் காண்கிறோம். மானிட சமுதாயத்திற்கும், தேசத்திற்கும், குடும்பத்திற்கும் உங்களுக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் யாவை என்பதை நான் கூறியிருக்கிறேன். மனித சுபாவத்திலிருந்து தான் இந்தக் கடமைகள் உற்பத்தியாகின்றன வென்றும், அந்தச் சுபாவத்த நீங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்களென் றும் எடுத்துக் காட்டி யிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனிடத்திலும் நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கும் இந்தச் சுபாவங்கள் யாவை? சுதந்திரம், கல்வி ஞானம் பெறக் கூடிய சக்தி, சமுதாயமாகச் சேர்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணம், திறமை, முன்னேற்றமடைய வேண்டுமென்ற அவசியத்தை உணர்தல் முதலியன வாகும். இந்தச் சுபாவங்கள் எவனிடத்தில் இல்லையோ அவன் மனிதனாக மாட்டான்; பிரஜையுமாக மாட்டான். இந்தச் சுபாவங்களை ஆதார மாக வைத்துக் கொண்டு, நீங்கள் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும், உங்ளுடைய உரிமைகள் என்னென்ன, உங்க ளுடைய தேசத்திற்கு என்ன விதமான அரசாங்க முறையை நீங்கள் வகுத்துக் கொள்ளவேண்டும் என்பவனவற்றையெல்லாம் உங்களுக்கு வகுத்துக் கூறியிருக்கிறேன். நான் வகுத்துக் காட்டிய கொள்கை களை மட்டும் மறவாதீர்கள். இந்தக் கொள்கைகளுக்குப் பாதகம் உண்டாகாதபடி பாதுகாத்து வாருங்கள். அந்தக் கொள்கை களாகவே நீங்கள் ஆகிவிடுங்கள். அப்பொழுது நீங்கள் சுதந்திர புருஷர்களாவீர்கள்; முன்னேற்றமடைந்தவர்களாவீர்கள். உங்க ளுடைய கடமைகளை நிறைவேற்றவும், உரிமைகளை உபயோகிக்க வும் மூன்று விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. அவைமுறையே (1) போதிய அவகாசம். (2) அறிவு அபிவிருத்தி. (3) நிரந்தரமான வாழ்க்கையை நடத்துவதற்கான வசதிகள். முன்னேற்றத்திற் காதாரமாகவுள்ள இந்த வசதிகள் இப்பொழுது உங்களிற் பலருக்கு இல்லை. அன்றாட ஜீவனத்தை நடத்தும் பொருட்டு உங்களிற் பலர் அல்லும் பகலும் உழைக்க வேண்டியிருக்கிறது; போராட வேண்டி யிருக்கிறது. எப்படி முன்னேற்றமடைவதென்பது உங்கள் பிரச்னை யாயில்லை; எப்படி வாழ்க்கையை நடத்துவ தென்பதுதான் உங்கள் பிரச்னையாயிருக்கிறது. இதனால் என்ன தெரிகிறதென்றால், தற்போதைய சமுதாய அமைப்பிலேயே ஏதோ கோளாறு இருக்கிற தென்பதுதான். இந்தக் கோளாறுகளை எடுத்துக் காட்டி, அவற்றிற்குப் பரிகாரங்களையும் உங்களுக்கு எடுத்துச் சொல்வது என் கடமை. ஆதலின் பொருளாதார பிரச்னையைப் பற்றி உங்களுக்கு இனி எடுத்துக் கூறுவேன். 11. பொருளாதாரம் உங்களிற் பலர், ஆம், பெரும்பாலோர் ஏழைகளாயிருக்கிறீர்கள். விவசாயிகளாகட்டும், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களாகட்டும், நான்கில் மூன்றுபேர், தினந் தோறும் தங்களுடைய ஜீவனத்திற்காகப் போராட வேண்டியிருக் கிறது. இவர்கள் தினத்திற்குப் பத்துமணி, பன்னிரெண்டுமணி, பதினான்குமணி நேரங்கூட உழைக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு இவர்கள் உழைத்த போதிலுங்கூட, இவர்களுக்கு, தங்கள் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதற்கு என்ன தேவையோ அதைத்தான் சம்பாதித்துக் கொள்ள முடிகிறது. இந்த நிலையிலுள்ளவர்களுக்கு, முன்னேற வேண்டியதன் கடமையைப் பற்றியும், ஞான வாழ்க்கையைப் பற்றியும், ஆன்ம வாழ்க்கையைப் பற்றியும், அரசியல் உரிமைகளைப் பற்றியும், கல்வியின் அவசி யத்தைப் பற்றியும் போதனை செய்வது, இவர்களைப் பரிகசிப்பது போலாகும். முன்னேற்றமடைவதற்கான அவகாசமோ, சாதனமோ இவர்களுக்குக் கிடையாது. யந்திரங்களோடு சேர்ந்து சில்லரை வேலைகளைச் செய்து செய்து இவர்களுடைய வாழ்க்கையானது களைத்துப் போகிற விதமாக, சோர்வடைந்து போகிற விதமாக, மரணையற்றுப் போகிறவிதமாகக் கழிகிறது. இவர்கள், தங்களுடைய நிகழ்கால துன்பங்களையும், எதிர்கால நிச்சயமற்ற வாழ்க்கையையும் மதுவருந்தி அந்த மயக்கத்திலே மறந்து விடுகிறார்கள். அறைகள் என்று சொல்லப்படுவதற்கு லாயக்கில்லா மல் இருட்டுக் குகைகள் என்று சொல்லப்படுவதற்கே லாயக்கான இடங்களில் இவர்கள் சிரம பரிகாரஞ் செய்து கொள்கிறார்கள்; அதாவது நித்திரை செய்கிறார்கள். மறுநாள் எழுந்து பழையபடி, ஒரே மாதிரியான வேலையைச் செய்கிறார்கள். இதுமகா மோசமான நிலைமை. இதனை மாற்றியமைக்க வேண்டும். நீங்கள் மனிதர்கள். அதனால் உங்களுக்குத் தேக சக்திகள் மட்டுமில்லை; அறிவுச் சக்திகளும், ஒழுக்கச் சக்திகளும் இருக் கின்றன. இவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் ஒரு தேசத்துப் பிரஜைகளாக இருக்க வேண்டும். பிரஜைகள் என்ற ஹோதாவில் பொதுநல நன்மையை முன்னிட்டு உங்களுடைய உரிமைகள் சிலவற்றை உபயோகிக்க வேண்டும். அப்படி உபயோகிக்க வேண்டுமானால் உங்களுக்குப் போதுமான கல்விப் பயிற்சியும் அவகாசமும் இருக்க வேண்டும். இதனால் என்ன தெரிகிறதென்றால், நீங்கள் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் குறைவாக உழைத்து அதிகமாகச் சம்பாதிக்க வேண்டுமென்பது தான். கடவுளின் திருக்குமாரர்களாகிய நாம், அதனால் சகோதரர் களாகிவிட்ட நாம், ஒரு குடும்பத்தினராக இருக்க வேண்டுமென்று கூறப்படுகிறோம். இந்தக் குடும்பத்தில், அவரவருடைய தகுதிக் கேற்றாற் போல், திறமைக்குத் தகுந்தாற்போல், வேலைப் போக்குக் கிசைந்தாற் போல் பலவித வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் ஒரே கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடும்பத் தினர் நடந்து கொள்ள வேண்டும். அந்தக் கொள்கைதான் என்ன? எவனொருவனும் அவனால் எவ்வளவு சாத்தியமாகுமோ அவ்வளவு வேலையைச் செய்து அந்த வேலைக்குச் சரியான பிரதி பலனைப் பெறுவதற்கும், அதன் மூலமாக மனிதத் தன்மைக்கேற்றவை என்று எவையெவைகளைச் சொல்கிறோமோ அவைகளில் அவனுக்குப் பிடித்தமான அமிசங்களை யெல்லாம் வீகரித்துக் கொண்டு அவன் வாழ்க்கையை விருத்தி செய்து கொள்வதற்கும் இடங் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் லட்சியம். இந்த லட்சியத்தை யடைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் என்னென்ன முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றனவென்பதை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதவசியமாகும். உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எத்தனையோ புரட்சிகள் நடைபெற்றிருக் கின்றன. ஆனால் எந்த ஒரு மாற்றம் அல்லது எந்த ஒரு புரட்சி, மேற்படி லட்சியத்தை நாடி ஓர் அடி கூட நம்மை முன்னுக்கு அழைத்துச் செல்லவில்லையோ, அரசியல் முன்னேற்றத்திற்கு விகிதாசாரமாக சமுதாய முன்னேற்றத்தை அடையும்படி செய்ய வில்லையோ, ஏழை மக்களின் உலக வாழ்க்கையில் ஒரு சிறு அளவு அபிவிருத்தியைக்கூட உண்டு பண்ணவில்லையோ, அந்த மாற்றம் அல்லது அந்தப் புரட்சி கடவுளின் திருநோக்கத்திற்கு மாறுபட்டது. ஒருகட்சி, மற்றொரு கட்சியின் மீது ஆதிக்கஞ்செலுத்துவதற்காக நடத்துகிற கட்சிச் சண்டைபோல் அஃது இழி நிலையை அடைந்து விடுகிறது. அந்த மாற்றம் அல்லது புரட்சி ஒரு பொய்; ஒருதீமை. இப்பொழுது நாம் மேற்படி லட்சியத்தில் எவ்வளவுதூரம் சித்தி பெற முடியும்? சித்தி பெறுவதானால் எப்படி? அதற்குச் சாதனங்கள் என்னென்ன? இவைகளைப் பற்றிச் சிறிது ஆராய் வோம். இந்தச் சாதனங் களைப் பற்றிப் பலர் பலவாறாகக் கூறியிருக் கின்றனர். கோழை மனமுள்ள சில நண்பர்கள், தொழிலாளர் களுடைய சீல சுபாவத்தை உயர்த்த வேண்டுமென்றும், அதுதான் அவர்களை உயர்நிலைக்குக் கொண்டுவர முடியுமென்றும் கூறி, ஆங்காங்கு, சேவிங் பாங்கிகள் முதலிய தாபனங்களை நிறுவுகிறார்கள். இவர்களை லோகோபகாரிகள் என்று அழைக்க லாம். இவர்கள் தொழிலாளர்களைப் பார்த்துச் சொல்கிறார்கள்:- நீங்கள் கூலியாகச் சம்பாதித்த பணத்தையெல்லாம், நாங்கள் தாபித்திருக்கிற சேவிங் பாங்கி போன்ற தாபனங்களில் கொண்டு வந்து போடுங்கள் ; உங்கள் பணத்தைச் சேமித்து வையுங்கள். குடி முதலிய துர்ப்பழக்கங்களில் அளவுக்கு மீறி ஈடுபடாதீர்கள். எப்பொழுதும் தேவை தேவையென்று குறைபட்டுக் கொண்டிருக்கிறீர்களல்லவா? தன்னலத் தியாகஞ் செய்து அந்தத் தேவையினின்று விடுதலை செய்து கொள்ளுங்கள். இவைகளெல்லாம் உத்தமமான புத்திமதிகள்தான். ஏனென்றால், தொழிலாளர் களுடைய ஒழுக்கத்தை உயர்த்த வேண்டுமென்ற நோக்கமுடையன வாயிருக்கின்றனவல்லவா? தவிர, எந்த ஒரு சீர்திருத்தமும் ஒழுக்கத்தைத்தானே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது? நிரம்ப சரி. ஆனால், மேலே சொன்ன சீர்திருத்தங்கள், தொழிலாளர்களின் வறுமைக்குப் பரிகாரங் காட்டவில்லை; சமுதாயக் கடமைகள் என்னவென்பதையும் கவனிக்கவில்லை. நீங்கள் சம்பாதிக்கிற சம்பாத்தியத்திலிருந்து ஏதேனும் சொற்பம் மிகுத்த முடியும் என்பது உங்களிலே ஒரு சிலருக்குக் கூட முடியாத காரியம். ஏகதேசமாக யாரேனும் மெது மெதுவாக, மிகப் பொறுமையோடிருந்து அற்ப சொற்பம் மிகுத்தி வைத்தால், அஃது அவர்களுடைய வயோதிக காலத்தில் ஓரளவுக்கு உதவுகிறது. ஆனால் பொருளாதார சம்பந்த மாகச் செய்யப்படுகிற எந்த ஒரு சீர்திருத்தமும், மனிதன் திடகாத்திர மாயிருக்கும் போது அவனுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுக்கும் நோக்கமுடையதாகவும், அப்படி அவன் சுறுசுறுப்புள்ள வனாகவும் தேகபலமுடையவனாகவும் இருக்கிற காலத்தில் அவனுடைய வாழ்க்கையானது, அவனுடைய தேசம், மானிட சமுதாயம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கு அநுசரனை யாக விகாசமடையு மாறு செய்வதாகவும் இருக்க வேண்டும். ஜனங்களுடைய பொருளாதார அந்தது உயர வேண்டுமானால், தேசத்தின் செல்வத்தையும் உற்பத்தியையும் எப்படி அபிவிருத்தி செய்வது என்பதுதான் முக்கியப் பிரச்னையாகக் கவனிக்கப்பட வேண்டும். மேலே சொன்ன சீர்திருத்த வாதிகள், இந்தப் பிரச்னைக்கு என்ன வழியென்பதை எடுத்துக் காட்டவில்லை. தவிர, சமுதாயமானது, அதனுடைய ஜனங்களின் உழைப்பைக் கொண்டு உயிர்வாழ்கிறது. அப்படியே, தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட் டால், அந்த ஆபத்தினின்று தன்னை மீட்க வேண்டுமென்று ஜனங் களைப் பார்த்துக் கேட்கிறது; அதற்காக அந்த ஜனங்களுடைய ரத்தத்தையும் கோருகிறது. இவ்வளவுதூரம் ஜனங்களிடமிருந்து எதிர்பார்க்கிற ஒரு சமுதாயத்திற்கு அந்த ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டல்லவா? அந்தக் கடமைகளும் புனிதமான கடமைகளல்லவா? வேறு வகையான சில சீர்திருத்தவாதிகள் இருக்கிறார்கள். இவர்களை பொருளாதார நிபுணர்கள் என்று அழைக்கலாம். இவர்கள், ஜனங்களுடைய சத்துருக்களல்லர். ஆனால் ஜனங்களிடத் திலே ஒரு விதமான அசிரத்தை யுடையவர்கள்; தொழிலாளர் களுடைய இருதயத்திலிருந்து வரும் எந்தத் துன்ப அழுகை யுண்டோ அந்த அழுகையின் விஷயத்தில் அசிரத்தையுடையவர்கள்; புதிதாக ஏதேனும் மாற்றம் செய்து விட்டால் அதைக் கண்டு அஞ்சுகிறவர்கள். இவர்கள், தொழிலுற்பத்தி விஷயத்தில் பூரண சுதந்திரம் இருக்க வேண்டு மென்பதற்காக அநேக போராட்டங் களை நடத்தி வெற்றி பெற்றவர்கள். ஆனால் இவர்கள் மனித சுபாவத்தில் முன்னேற்றமடைய வேண்டு மென்கிற ஆவலும், சங்கமாகச் சேர்ந்து வாழ வேண்டு மென்கிற எண்ணமும் கலந்திருக் கின்றன வென்ற உண்மையை மறந்து விடுகிறார்கள். அவரவரும், அவரவரால் இயன்ற மட்டும் உழைத்து அதன் பயனாகச் சுதந்திரத் துடன் வாழலாமென்று இவர்கள் சாதிக்கிறார்கள். தொழிலாளர் விஷயமாக இப்பொழுது என்ன முறைகள் அநுஷ்டிக்கப்படுகின் றனவோ அந்த முறைகளில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துவது அநாவசிய மென்றும் அப்படி ஏற்படுத்துவது தீங்காகவே முடியு மென்றும், இவர்கள் கருதுகிறார்கள். அவனவனும் அவனவ னுக்கே; எல்லோருக்கும் சுதந்திரம் என்ற கோட்பாட்டுப்படி நாம் நடந்து கொண்டால் அது போதுமென்றும் இதன் மூலமாகச் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோரும் சுக சௌக்கிய வாழ்க்கையை மெது மெதுவாக அடையக் கூடுமென்றும் இவர்கள் சொல்கி றார்கள். பொருளாதார சம்பந்தமாக இவர்கள் சொல்கிற சீர்திருத் தங்கள் என்னென்ன வென்றால், உள்நாட்டு வியாபாரத்தில் சுதந்திரம் இருக்க வேண்டும்; பலதேசத்தினரும் ஒருவருக்கொருவர் தாராளமாக வியாபாரஞ் செய்து கொள்வதற்கு உரிமை இருக்க வேண்டும்; எல்லாப் பொருள்களின் மீதும் விதிக்கப்படுகிற சிறப் பாக மூலப் பொருள்களின் மீது விதிக்கப்படுகிற சுங்கவரிகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வர வேண்டும்; பெரிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், போக்குவரத்து சாதனங்களை அதிகப்படுத்த வேண்டும்; உற்பத்தியை அதிகப் படுத்துகிற யந்திர வகைகளைப் பெருக்க வேண்டும். ஒரு சமுதாய மானது, இந்தச் சௌகரியங்களைத்தான் செய்து கொடுக்க வேண்டு மென்றும், இதற்கு மீறி அது தலையிடுமானால், தீமையாகவே முடியுமென்றும் இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகள் கட்சி கூறுகிறார்கள். இவர்களுடைய கட்சி சரியாக இருக்கும் பட்சத்தில், தரித்திர மென்பது தீர்க்க முடியாத ஒரு வியாதியாகவே இருக்கும். சகோதரர் களே! இவர்களோடு என்னைச் சேர்த்து விடாதபடி கடவுள் என்னைக் காப்பாற்றுவாராக! உங்களுடைய துயரங்கள், உங்க ளுடைய ஆவல்கள் இவைகளுக்குப் பதிலாக, இந்த நிராசை நிறைந்த, நாதிகத் தன்மையோடு கூடிய, ஒழுக்க ஹீனமான முடிவு களை நானும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு சொல்லாதிருப்பே னாக! இவர்களுடைய பரிகார முறைகளிலிருந்து உங்களுக்கு எந்த விதமான நற்காலம் ஏற்படக் கூடுமோ அதைவிடப் பிரகாசமான தொரு நற்காலம் உங்களுக்கு நிச்சயம் இருக்கிறது. இந்த இரண்டு கட்சியினரும் - அதாவது லோகோபகாரிகளும் பொருளாதார நிபுணர்களும் - சொல்கிற பரிகார முறைகள், செல்வப் பொருளின் உற்பத்தியைத் தற்காலிகமாக அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதே தவிர, உற்பத்தியாகிற பொருளை ஒரே மாதிரி விநியோகிக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொள்ளவில்லை. லோகோபகாரிகளான சீர்திருத்த வாதிகள், மனிதனை முக்கியமாகக் கொண்டு பேசுகிறார்களே தவிர, அவனுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்தி, அதன் மூலமாகத் தேசத்தின் செல்வம் அதிகரிக்க வேண்டு மென்பதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. மற்றொரு சாதாரண பொருளாதார நிபுணர்கள், உற்பத்தியின் மூலங்கள் அதிகரிக்க வேண்டு மென்பதிலேதான் கண்ணுங்கருத்துமா யிருக்கிறார்களே தவிர, மனிதனைப் பற்றிச் சிந்தனை செய்வதில்லை. சுதந்திரத்தை அதிகமாக வற்புறுத்துகிற இவர்களுடைய நிருவாகத்தின் கீழ் உலகத்தில், பொதுவாகப் பொருளுற்பத்தியும் மூலதனமும் அதிகரித்திருக்கிறதே தவிர, எல்லோரிடத்திலும் பரந்து நிற்கும் ஒரு செல்வச் செழுமை உண்டாக வில்லை. தொழிலாளர்களுடைய தரித்திர நிலைமையானது, எவ்வித மாற்றமும் அடையாமல் அப்படியே இருக்கிறது. ஒரு ஜாதி யாருக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அனால் அந்தச் சுதந்திரத்தினின்று பிறக்கும் உரிமை களை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவர அவர்களுக்கு போதிய கல்வி ஞானத்தையோ, சந்தர்ப்பத்தையோ, அவகாசத்தையோ அளிக்கா விட்டால் அந்தச் சுதந்திரத்தினால் என்ன பயன்? அவர் களுக்குச் சுதந்திரம் கொடுத்து விட்டதாகச் சொல்வது ஒரு பொய். அதைப் போல, ஒன்றுமே இல்லாதவர்களுக்கு, தங்களுடைய அன்றாட சம்பாத்தியத்திலிருந்து சொற்பமேனும் சேமித்து வைக்க முடியாதவர்களுக்கு, அது காரணமாக எவ்வித வியாபார முயற்சியி லும் ஈடுபடமுடியாதவர்களுக்கு, வியாபாரப் போட்டி உரிமை அளித்து விட்டதாகச் சொன்னால் அஃது ஒரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை. வியாபாரம் நடைபெறுவதற்கு அதிகமான சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல், பொருள் விநியோகத் திற்கும் பரிவர்த்தனைக்குமான சாதனங்களை அதிகப்படுத்திக் கொடுத்தல் முதலியவைகளின் மூலமாக, தொழிலாளர்களுக்கு, பொருளை உற்பத்தி செய்கிறவர்களுக்கும் பொருளை வாங்கி உபயோகிப்பவர்களுக்கும் மத்தியில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறார்களே அதிலிருந்து கொஞ்சங் சொஞ்சமாக விமோ சனம் கிடைக்கலாம். ஆனால் முதலாளித்துவத்தின் கொடுமையி லிருந்து அவர்களை விடுதலை செய்ய முடியாது; அல்லது உழைப் பதற்குச் சக்தி இருந்தும் சாதனங்களில்லாமல் இருக்கிறார்களே அவர்களுக்குச் சாதனங்களை அளிக்க முடியாது. செல்வமானது ஒழுங்காகப் பரவியில்லாத காரணத்தினாலும், உற்பத்தியாகிற பொருள்கள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படாமையி னாலும், இப்படிச் சரியானபடி விநியோகிக்கப் படாத காரணத்தி னால், பொருள்களை வாங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகப் படாம லிருப்பதனாலும் மூலதனமானது, அதனுடைய உண்மை யான நோக்கத்தினின்று நழுவி விடுகிறது; ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு மாறி மாறி வராமல் ஒரு சிலரிடத்தில் தேக்கமாகத் தங்கிவிடுகிறது. இந்த மூலதனமானது, வாழ்க்கைக்கு அவசியம் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதில் கவனஞ் செலுத்து வதற்குப் பதிலாக அநாவசியமான பொருள்களையும், ஆடம்பரமான பொருள்களையும் உற்பத்தி செய்வதிலும் போலித் தேவைகளை திருப்தி செய்வதிலும் உபயோகிக்கப்படுகிறது. இதனால் ஆபத்தானதும் ஒழுக்கமற்றதுமான வியாபாரப் போட்டி களில் தலையிட்டுக் கொள்கிறது. தற்போது நமது பொருளாதார சமுதாயத்தின் சாபக்கேடு போலிருக்கிற மூலதனமானது, தொழிலாளர்களின் சுயேச்சாதிகாரி யாயிருக்கிறது. பொருளாதாரக் கண்கொண்டு சமுதாயத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். முதலாவது, முதலாளிகள்; தொழிலாளர்கள் என்னென்ன கருவிகளைக் கொண்டு என்னென்ன சாதனங்களைக் கொண்டு உழைக்கிறார்களோ அவைகளையெல்லாம் இவர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதாவது நிலங்கள், தொழிற் சாலைகள், ரொக்கப் பணம், மூலப்பொருள்கள் முதலியனவெல் லாம் இவர்கள் வசத்தில் இருக்கின்றன. இரண்டாவது கண்ட் ராக்டர்கள் என்று சொல்லப்படுகிற தரகர்கள். இவர்கள் தொழிலாளர் மேதிரிகளாகவும் வர்த்தகப் பிரதிநிதி களாகவும் இருக்கிறார்கள். மூன்றாவது தொழிலாளர்கள். இவர்கள் தேக சிரமப் பட்டு உழைக்கிறவர்கள். இவர்களில், முதலாவதான முதலாளிகள், பொருளாதார உலகத்தின் எஜமானர்கள் போலிருக்கிறார்கள். தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை அதிகப்படுத்துவதோ அல்லது தாமதமாகச் செல்ல வைப்பதோ அல்லது துரிதப்படுத்து வதோ, அல்லது குறித்த ஒரு நோக்கத்துக்காகவே உபயோகப்பட வேண்டுமென்று நிர்ணயிப்பதோ இவர்கள் கையிலேயே இருக்கிறது. உற்பத்தி செய்யப்படுகிற பொருளின் மதிப்பும், அதிலே கிடைக்கிற லாபமும் இவ்வளவுதான் என்பது இவர்களுக்கு நிச்சயமாகி விடு கிறது. உழைப்பை உபயோகிப்பதற்கான சாதனங்கள் கிடைக்கும் இடங்களைத் தேடிக் கண்டு பிடிக்கிற முறைகளில் அதிகமான மாற்றங்களை இவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவர்கள், தேவையை உணர வேண்டிய அவசியமில்லாதவர்களாத லினால், இவர்களுக்கு அதிகமான அவகாசம் கிடைக்கிறது. இரண் டாவது வகையினரான தரகர்களுக்குக் கிடைக்கிற பங்கு, இவ்வளவு தான் கிடைக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாத தாயிருக் கிறது. இவர்களுடைய வேலைத் திறன், புத்தி சாலித்தனம் இவை களைப் பொறுத்து இவர்களுக்குப் பங்கு கிடைக்கிறது. சிறப்பாக சந்தர்ப்பங்களை யொட்டியும், போட்டா போட்டியை அநுசரித் தும், மூலதனத்தின் கூடுதல், குறைச்சல் இவைகளைப் பொறுத்தும் இவர்களுக்கு கிடைக்கிற பங்கு நிர்ணயிக்கப்படுகிறது. மூன்றாவ தான தொழிலாளர்களுடைய பங்கு என்னவென்றால் இவர்கள் பெறுகிற கூலி. இவர்கள் செய்கிற வேலைக்கு முன்னாடியே இவர்களுடைய கூலி இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. இவர்கள் எந்த தொழில் தாபனத்தில் வேலை செய்கிறார்களோ அந்த தாபனத்திற்கு அதிகமான லாபம் கிடைத்தாலும், குறை வான லாபம் கிடைத்தாலும், அதற்காக இவர்களுடைய கூலி நிர்ணயம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், தொழிலாளர்களின் உழைப்பு எவ்வளவு தேவையோ அதற்கும், அந்த உழைப்பு எவ்வளவு கிடைக்கிறதோ அதற்கும் உள்ள சம்பந்தத்தைப் பொறுத்தே இவர்களுடைய கூலிவிகிதம் நிர்ணயிக்கப்படுகிது. அதாவது தொழிலாளர்களுக்கும் மூலதனத்திற்கும் உள்ள சம்பந்தத்தை அநுசரித்து நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, அதாவது முதலாளிக்கு எவ்வளவு தேவையோ அதைக் காட்டிலும் அதிகமான பேர் வேலைக்கு வருவதாகச் சொன்னால், அப்பொழுது அந்தத் தொழிலாளர்களின் கூலி விகிதம் குறைகிறது. கூலிவிகிதம் குறைந்துவிட்டதென்று சொல்லி, தொழிலாளி வேலை செய்யாமலிருக்க முடியாது. அப்படி வேலை செய்யாமல் சும்மாயிருக்கக்கூடிய நிலைமை அவனுக்கு இல்லை. தன்னிஷ்டப்படி சௌகரியமான நிலைமையை அவன் தெரிந் தெடுத்துக் கொள்ள முடியாதாவென்று கேட்டால், அஃது அவனால் முடியாது. ஏனென்றால், பண நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் முதலியன ஏற்பட்டு விடுவதினாலும், பொருள் உற்பத்தியில் புதிய யந்திர வகைகளைத் திடீரென்று புகுத்திவிடுவ தனாலும், உற்பத்தி முறைகளில் ஒழுங்கீனங்கள் ஏற்படுவதாலும், ஒரே பொருளை அதிகமாக உற்பத்தி செய்துவிடுவதானாலும், (இப்படி அதிகமாக உற்பத்தி செய்வதென்பது, வியாபாரப் போட்டி என்பதினின்றும் பிரிக்க முடியாத ஒரு தீமை) குறித்த சிலஇடங் களில் குறிப்பிட்ட சில தொழில்களில் அதிகமான தொழிலாளர் களை உபயோகித்துக் கொள்வதனாலும், தொழிலாளர்களுக்கு அதிகமான சங்கடங்கள் உண்டாகின்றன. இதனால் இவர்கள், தங்களிஷ்டப்படி தங்கள் நிலைமைகளை அமைத்துக் கொள்ள முடியாதவர் களாயிருக்கிறார்கள். இப்படி அமைத்துக் கொள்ள முடியாத நிலை யிலிருப்பதோடுகூட இவர்களுடைய தேவையும், அதாவது ஆகாரம் முதலிய தேவையும் இவர்களை வந்து நெருக்கு கின்றன. Mfnt., ஒரு தொழிலாளி எந்த நிபந்தனைகளுக்குட் பட்டேனும் தன் உழைப்பை விற்க வேண்டியவனாயிருக்கிறான். இப்படிப்பட்ட பொருளாதார நிலைமை ஒரு வியாதி மாதிரி. இதற்குப் பரிகாரங் காண வேண்டுவது அவசியமாகும். ஆனால், மேலே சொன்ன பொருளாதார நிபுணர்களின் முறைகள் சரியான பரிகாரங்களாகா. இவ்வளவெல்லாம் இருந்தாலும் தொழிலாளர்களாகிய உங்களுடைய நிலைமை வரவர விருத்தியாகிக் கொண்டு வருகிறது. சரித்திர ரீதியான இந்த அபிவிருத்தியானது, அநேக தடைகளை விலக்கிக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு சமயம் நீங்கள் பரிபூரண அடிமைகளாயிருந்தீர்கள்; பின்னர் நிலச்சுவான்தாரர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்; இப்பொழுது கூலி சம்பாதிக்கிறவர் களாயிருக்கிறீர்கள். இப்படிப்படிப்படியாக விடுதலையடைந்து கொண்டு வந்திருக்கும் நீங்கள் கூலி என்ற இந்தப் பந்தத்தினின்றும் ஏன் விடுதலை பெறக்கூடாது? நீங்களே சுதந்திரமாகப் பொருளுற் பத்தி செய்கிறவர்களாக ஏன் ஆகக்கூடாது? உங்களால் உற்பத்தி செய்யப்படுகிற அனைத் தினுடைய மதிப்புக்கும் நீங்களே ஏன் எஜமானர்களாயிருக்கக்கூடாது? உங்களுடைய முயற்சியைக் கொண்டும், சமுதாயத்தின் துணைபெற்றும், நீங்கள் அமைதியான முறையில், மகத்தான ஒரு புரட்சியை, அழகான ஒருபுரட்சியை ஏன் செய்யக்கூடாது? அப்படி நீங்கள் செய்கிற புரட்சியின் பயனாக என்ன ஏற்படவேண்டுமென்றால், மானிட சகோதரத்துவத்திற்கு உழைப்பே பொருளாதார அடிப்படையாக இருக்கவேண்டும்; அந்த உழைப்பின் பயனே சொத்துரிமைக்கு அடிப்படையா யிருக்க வேண்டும். இதன் மூலமாக உற்பத்தியையும் விநியோகத்தையும் ஒரேதிட்டத்தின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும். இதிலே ஜாதி வித்தியாசம் கூடாது; ஏற்றத் தாழ்வுகள் கூடாது. எல்லோரும் ஒரு தாய்நாட்டின் மக்கள் என்று உணரும்படியாக இந்தப் பொருளா தாரமுறை அமைய வேண்டும். சமுதாயத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு தானம் உண்டு. அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு என்ற ஓர் உணர்ச்சி, சிறிது காலமாக அநேகருடைய மனத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய குடியரசுப் பிரசாரந்தான். இதனால் எதிர்காலத்தில் ஒரு பொதுஜனப் புரட்சி ஏற்படுமென்று நிச்சயமாகத் தெரிகிறது. சென்ற ஒரு முப்பதுவருஷ காலத்திற்குள் ஐரோப்பாவின் பல பாகங்களில், சிறப்பாக பிரான்சில் பல அறிஞர்கள் தோன்றிச் சில புதிய சித்தாந்தங்களைக் கிளத்தி யிருக்கிறார்கள். இவர்கள் நல்லவர்கள்; ஜனங்களின் நண்பர்கள். ஆனால், தங்களுடைய சித்தாந்தங்களின் மீது அதிகமான காதல் கொண்டு அதிலேயே தங்களையிழந்து விட்டவர்கள், தவிர தாங்கள் சொல்வது தான் சரியென்ற அகங்கார புத்தியும் இவர்களுக்கு இருக்கிறது. அபேதவாதம் என்ற பெயரால் இவர்கள், தனிமை வாய்ந்ததும் மிகைப்படுத்திச் சொல்வதுமான சில சித்தாந்தங்களைக் கிளத்தியிருக்கிறார்கள். இவை, ஏற்கெனவே மற்ற வகுப்பினர் அடைந்திருக்கிற செல்வத்திற்கு விரோதமாயிருக்கின்றன; பொருளா தார விஷயத்தில் அநுஷ்டான சாத்தியமில்லாதனவு மாயிருக் கின்றன. இவர்கள் - இந்த அபேதவாதிகள் - கீழ்த்தர மத்திய வகுப்பில் பாமர ஜனங்களாயுள்ளவர்களைப் பயமுறுத்திவிட்டார்கள்; தேசத்துப் பிரஜைகளுக்குள்ளேயே பரபர அவ நம்பிக்கையை உண்டு பண்ணி விட்டார்கள்; சமுதாயப் பிரச்னையைப் பின்னுக்குத் தள்ளி விட்டார்கள்; குடியரசுக் கோஷ்டியில் இரண்டு கட்சிகளை ஏற்படுத்தி விட்டார்கள். இந்தப் பரபரஅவநம்பிக்கை, பயமுறுத்தல் முதலிய வைகளின் விளைவாக பிரான்சில், நிருவாகத்திலிருந்தவர்களுக்குச் சுலபமாக வெற்றி கிடைத்து விட்டது.1 மேலே சொல்லப்பட்ட சித்தாந்தங்கள் ஸான்ஸி மோனிஸம்2 என்றும், பௌரிரிஸம்3 என்றும், கம்யூனிஸம் என்றும் பல பிரிவுகளாக கூறப்படுகின்றன. இவைகளைப் பற்றியெல்லாம் நான் இங்குப் பரிசீலனை செய்யப் போவதில்லை. இவையாவும் நல்லெண்ணத்துடனேயே தோற்று விக்கப்பட்டவை; முன்னேற்றத் தில் நம்பிக்கை கொண்டவர்களால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால் இந்தச் சித்தாந்தங்களை அநுஷ்டானத் திற்குக் கொண்டு வர வேண்டி, பல பொய்யான முறைகளை, பல கொடுமையான முறைகளைக் கையாள வேண்டுமென்று சொல்லி இவற்றின் நோக்கத்தைக் கெடுத்துவிட்டார்கள். இவர்களுடைய தவறுகள் என்னவென்பதை நான் இங்கு எடுத்துச் சொல்ல வேண்டியவனா யிருக்கிறேன். ஏனென்றால், இந்தச் சித்தாந்தங்களினால் ஜனங் களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை மிகவும் பகட்டாக எடுத்துக் காட்டுகிறார்கள். அந்தப் பகட்டு உங்களைக் கூட மயக்கக் கூடும். அப்படி மயங்கி அந்தச் சித்தாந்தங்களில் ஈடுபடுவீர்களானால், உங்களுடைய எதிர்கால விமோசனத்தைத் தடை செய்து கொண்ட வர்களாவீர்கள். இந்தச் சித்தாந்தங்களைக் கிளத்தியவர்கள், சந்தர்ப்ப விசேஷத்தினால் அதிகாரத் திற்கு வருவார்களானால், இவர்கள், தங்களுடைய சித்தாந்தங்களை லவலேசமும் அநுஷ் டானத்திற்குக் கொண்டு வரமுடியாது. இஃதொன்றே, இவர்களைப் பற்றி உங்களுக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணுவதற்குப் போதுமான தாயிருக்கும். இவர்களெல்லோரும், தத்துவங்களைப் பற்றி எழுதச் சொன்னால் அதில்மகா வல்லவர்கள். ஆனால் அநுஷ்டான பூர்வகமாகக் காரியங்களைச் செய்ய வேண்டுமென்று சொன்னால் அப்பொழுது பின் வாங்கி விடுவார்கள். மனித சுபாவங்களென்று இதுகாறும் நான் எதை எதைச் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேனோ அவற்றோடு என்னுடைய சித்தாந்தங் களைப் பொருத்திவைத்துப் பரிசீலனை செய்து பார்த்தீர்களாயின் மேலே சொல்லப்பட்ட சித்தாந்தங்கள் யாவும் முன்னேற்ற நியதிக்கு முரண்பட்டன வாயிருக்கின்றன என்பது நன்கு புலனாகும். முன்னேற்றம் என்பது, படிப்படியாகவும், எந்த மனித சக்தியினாலும் தகர்க்க முடியாத சட்டங்களின் மூலமாகவும் ஏற்படுவது. எந்தச் சக்திகளின் துணை கொண்டு மனிதனுடைய வாழ்க்கையானது நன்முறையில் மாற்றமடைகிறேதா அந்தச் சக்திகளையே நாம் முன்னேற்றப் படிகள் என்று சொல்லுகிறோம். மனித சுபாவத்திலிருந்து பிரிக்க முடியாத இந்தச் சக்திகள் உண்மையில் யாவை என்பதை, உங்களுடைய ஆத்மாவின் சுய உணர்ச்சியிலிருந்தும், எல்லா யுகங்களிலும், எல்லா நாடுகளிலும் பரம்பரையாக மனிதர்களுக்கிருந்து வந்திருக்கிற சுய உணர்ச்சிகளை உங்களுடைய சுய உணர்ச்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். எனவே, வாழ்க்கையின் முக்கிய அமிசங்களான சக்திகள் எவையோ அவற்றைக் காலத்திற்குக் காலம் மாற்றி யமைத்துக் கொண்டும், அபிவிருத்தி செய்து கொண்டும் போக வேண்டுமே தவிர, அவற்றை அடியோடு அழித்துவிடக் கூடாது. அப்படி விருத்தி செய்துகொண்டு போவதைத்தான் முன்னேற்றம் என்ற பெயரிட்டு அழைக்கிறோம். வாழ்க்கையின் முக்கிய அமிசங்களாகக் கருதப்படுவன, மதம், சுதந்திரம், ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிற சுபாவம் முதலியனவாகும். இவற்றைப் போல் சொத்துரிமை என்பதும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அமிசம். எந்தக் கொள்கையைக் கொண்டு இந்தச் சொத்துரிமை ஏற்பட்டதோ அந்தக் கொள்கையும், சொத்துரிமை என்பது எந்த ஆரம்பத்தைக் கொண்டு ஏற்பட்டதோ அந்த ஆரம்பமும் மனித சுபாவத் தோடு ஒட்டியனவாகவே இருக்கின்றன. லௌகிக வாழ்க்கையை நடத்த வேண்டிய கடமைக்குட்பட் டிருக்கிற மனிதனுடைய தேவைகளின் பிரதிநிதி போலவே இந்தச் சொத்துரிமை என்பதிருக்கிறது. மதம், விஞ்ஞானம், சுதந்திரம் முதலியவைகளைக் கொண்டு எப்படி ஒரு மனிதன் தன்னைத்தான் விருத்தி செய்து கொள்ளுவதோடு ஆன்ம உலகத்தையும், அறிவு உலகத்தையும் விருத்தி செய்யக் கடமைப்பட்டிருக்கிறானோ அப்படிப் போல அவன் தன்னுடைய பொருளினாலும் தேகத்தினா லும் உழைத்து இந்தப் பூவுலகத்தை மாற்றவும், அபிவிருத்தி செய்யவும், ஆட்சி புரியவும் கடமைப் பட்டிருக்கிறான். அவன் அந்தக் கடமையை நிறைவேற்றி வருகிறான் என்பதற்கடையாள மாகவே அவனுடைய சொத்து இருக்கிறது. இயற்கையின் உற்பத்தி சக்திகளை அவன் எவ்வளவு தூரம் உபயோகித்திருக்கிறான், எவ்வளவு தூரம் அபிவிருத்திக்குக் கொண்டு வந்திருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டுவது போலவே அவனுடைய சொத்து இருக்கிறது. எனவே, சொத்தின் அடிப்படையான தத்துவம் எப்பொழுதும் சாசுவதமாகவே இருந்து வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். மானிட சமுதாயத்தின் ஆரம்பதசையிலிருந்து இந்தச் சொத்து என்பது இருந்துகொண்டும் பாதுகாக்கப்பட்டும் வந்திருக் கிறது. ஆனால் இந்தச் சொத்தை எப்படி நிருவாகம் செய்வது என்பதைப்பற்றிய முறைகளில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டிருக் கின்றன. வாழ்க்கையின் மற்ற அமிசங்களைப் போல் இதுவும் முன்னேற்ற நியதியை அநுசரிக்க வேண்டியிருக்கிறதல்லவா? ஏதோ ஒருவிதமான ஏற்பாட்டின்கீழ் சொத்தானது நிருவகிக்கப்பட்டு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிற சிலர், அந்த ஏற்பாடே சரி என்றும், அதனை மாற்றக் கூடாதென்றும் சொல்லுகிறார்கள். இப்படிச் சொல்லுகிறவர்கள் முன்னேற்றத்தையே மறுத்தவர்களாகி றார்கள். சரித்திரத்தை நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், சொத்து அமைப்பானது பலவித மாற்றங்களுக்குட் பட்டிருப் பதைப் பார்க்கிறோம். வேறு சிலர், இந்தச் சொத்து நிருவாகமானது சரியாக அமைக்கப்படவில்லை என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, இதனை அடியோடு அழித்து விட வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இவர்கள் மனித சுபாவத்தின் ஓர் அமிசத்தை மறுக்கிறவர்கள். இவர்களால் முடிந்தால், வாழ்க்கையைச் சிதைத்து முன்னேற்றத்தைத் தடை செய்து விடுவார்கள். சொத்துரிமையை இப்பொழுது அழித்து விட்டாலும் பின்னர் இதே வடிவத்திலேயே மறுபடி தோன்றும் என்பதை இவர்கள் மறந்து விடக் கூடாது. தற்காலத்தில் சொத்து நிருவாகமானது சரியாக அமைக்கப் படவில்லை என்பது வாதவம். இதற்குக் காரணங்கள் என்ன வென்பதை ஆராய்வோம். இப்பொழுது எந்த முறையைக் கொண்டு சொத்தானது விநியோகிக்கப்பட்டிருக்கிறதோ அந்த முறை, ஒரு நாட்டை மற்றொரு நாடு வெற்றிபெற்றதையே அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்காலத்தில் ஒருநாட்டின் மீது படை யெடுத்து வந்த ஜாதியார் அந்த நாட்டை வெற்றி கொண்டு அதிலுள்ள நில புலங்களையெல்லாம் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். இரண்டாவது, ஒரு தொழிலுக்குச் சொந்தக்கார னும், அந்தச் தொழிலைச் செய்கிறவனும் சேர்ந்து உழைத்த உழைப்பின் பலனை, உழைப்பின் விகிதாசாரப்படி இரண்டு பேரும் நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்ளுவதில்லை. மூன்றாவது, சொத்துடையவர்களுக்கு அரசியல் உரிமையையும், சட்ட நிரூபண உரிமையும் அளிக்கப் பட்டு, சொத்தில்லாத தொழிலாளர்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால், அந்தச் சொத்தா னது ஒரு சிலரிடத்தில்அதிகமாகப் போய்ச் சேர்ந்து விடுகிறது. பெரும்பாலோருக்கு அந்தச் சொத்து இல்லாமலே போய்விடுகிறது நான்காவது, குறைபாடுகள் நிறைந்த வரி விதிக்கு முறை இந்த வரிவிதிப்பு முறையினால் பணக்காரர்களுடைய சொத்துக்கு எவ்வித பாதகமும் உண்டாவதில்லை. ஆனால், ஏழை மக்கள் எவ்வித சொத்தையும் சேர்த்து வைக்க முடியாமற் போகிறது. இந்தத் தீமைகளை யெல்லாம் நாம் அகற்ற வேண்டும். சொத்து நிருவாகத்தை மெது மெதுவாக மாற்றி அமைக்க வேண்டும். இதை விடுத்துச் சொத்துரிமையையே அழித்துவிடுவோமென்று சொன்னால், செல்வத்தின் மூலத்தையே, உழைப்பின் அடிப் படையையே, அழித்துவிடுவது போலாகும். பழத்திற்காசைப்பட்டு மரத்தையே வெட்டத் துணிந்த காட்டுமிராண்டியைப் போல்தான் நாம் ஆகிவிடுவோம். சொத்து, ஒரு சிலரிடத்தில் மட்டும் இருக்கிற தென்பதற்காக அதனை அழித்து விட வேண்டிய அவசியமில்லை . அதனை எல்லோரும் அடைவதற்கான மார்க்கங்களை நாம் தேடவேண்டும். ஒருவனுடைய உழைப்பின் அளவைக்கொண்டு தான் அவனுடைய சொத்து இருக்க வேண்டும் என்ற பழைய நியதியை ஏற்படுத்த வேண்டும்; அதனை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் அவரவர்களுடைய உழைப்பிற்குத் தகுந்தபடியான ஊதியம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். வரிவிதிப்பு முறையையும் நாம் மாற்ற வேண்டும். வாழ்க்கைக்குப் போதுமான வருமானத்தையுடையவர்களுக்கு வரி விதிக்கப்படக்கூடாது. ஏழை மக்கள் நாளாவட்டத்தில் சொத்து சேர்த்து கொள்வதற்கநுகூலமாகத் தங்களுடைய சம்பாத்தியத்திலிருந்து சிறிது சிறிதாகச் சேமித்து வைத்துக் கொள்ளச் சௌகரி யங்கள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். இவை நிறைவேற வேண்டுமானால் இப்பொழுது சொத்துடையவர்களுக்குக் காட்டப் பட்டு வருகிற சலுகைகள் யாவும் ஒழிந்து போக வேண்டும். சட்ட நிரூபண விஷயத்தில் எல்லோருக்கும் உரிமைஇருக்கும்படியாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம் நியாயமான விஷயங்கள்; சாத்தியமான விஷயங்கள். தற்பயிற்சி செய்து கொண்டும், கட்டுப்பாடான ஓர் இயக்கமாக அமைத்துக் கொண்டும் நீங்கள் இந்தக் கோரிக்கை களை வற்புறுத்திக் கொண்டு வருவீர்களானால், இவைகளைப் பெறுவதாகவே சங்கல்பம் செய்து கொண்டு விடுவீர்களானால் கட்டாயம் இவற்றை அடைந்தே தீருவீர்கள். இதை விடுத்துச் சொத்தையே அழித்து விடுவதென்று புறப்படுவீர்களானால், முடியாத ஒருகாரியத்திற்கு முனைந்தவர்களாவீர்கள். மற்றும், தங்களுடைய உழைப்பினால் சொத்தைச் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அநீதி இழைத்த வர்களாவீர்கள். பொரு ளுற்பத்தியை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக அதனைக் குறைத்த வர்களாவீர்கள். அபேதவாத சித்தாந்தங்கள் பலவும் , சிறப்பாக கம்யூனிஸம் என்று சொல்லப்படுகிற பொதுவுடைமைச் சித்தாந்தம், தனிச் சொத்துரிமையை அடியோடு ஒழித்துவிட வேண்டுமென்று கூறு கின்றன. இன்னுஞ் சில, ஒரு படி முன்னுக்குப் போகின்றன. மதம், அரசாங்கம், தேசம் ஆகிய யாவும் முறையே மத ஊழல்களினாலும், வகுப்புரிமைகளினாலும் அரச பரம்பரையினரின் அகங்கார புத்தியினாலும் களங்கப் பட்டுப் போயிருப்பதைப் பார்த்து, எல்லா மதங்களும், எல்லா அரசாங்கங்களும், எல்லாத் தேசீய உணர்ச்சி களும் ஒழிக்கப்படவேண்டுமென்று இவை கூறுகின்றன. இவை யாவும், குழந்தைகளின் பேச்சைப் போல. காட்டு மிராண்டிகளின் பேச்சைப் போல இருக்கின்றன. இஃது எப்படியிருக்கிற தென்றால் அசுத்தமான காற்றினால்தான் நோய்கள் உண்டாகின்றன என்று சொல்லி அந்தக் காற்றையே அடைத்துவிடு என்று சொல்வதைப் போலிருக்கிறது. சுதந்திரத்தை அழித்து விட்டு அதனுடைய தானத்தில் கலகத்தை தாபிக்க விரும்புகிறவர்களும், சமுதா யத்தை அழித்து விட்டு அதனுடைய தானத்தில் தனிப்பட்டவர் களையும் அவர்களுடைய உரிமைகளையும் மட்டுமே தாபிக்க விழைகிறவர்களும், எவ்வளவு தவறானபாதையில் செல்கிறார்க ளென்பதை என் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டு மென்பதில்லை. ஏனென்றால், இந்தப் பொய்க் கனவுகளை நானும் நீங்களும் சேர்ந்து போற்றுகிற முன்னேற்றம், கடமைகள், மானிட சகோதரத்துவம், சர்வதேச ஐக்கியம் முதலியனவற்றையெல்லாம் மறுக்கிற இந்தப் பொய்க்கனவுகளை, தகர்த்தெறிவதே என் வாழ் நாளின் முக்கிய வேலையாக இருந்து வருகிற தென்பது உங்க ளெல்லோருக்கும் தெரியும். தனிச் சொத்துரிமையை அழித்து விட்டு, பொதுவுடைமைத் தத்துவத்தை நடைமுறையில் கொணர வேண்டுமென்று சாதிக்கிறவர்கள், மனிதனுக்குத் தனித்துவ மில்லாத படி செய்து விடுகிறார்கள்; அவனுடைய சுதந்திரத்தை மறுத்து விடுகிறார்கள்; முன்னேற்ற மார்க்கத்தை அடைத்து விடுகிறார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் இவர்கள் , சமுதாயத்தையே தம்பிதப்படுத்தி விடுகிறார்கள். பொதுவுடைமைச் சித்தாந்தந்தானென்ன? உற்பத்திச் சாதனங் களான நிலம், மூலதனம், யந்திர வகைகள், மற்ற உழைப்புக் கருவிகள் முதலியன அரசாங்கத்தினிடமே ஒருமுகப் படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரும் என்னென்ன வேலை செய்ய வேண்டு மென்பதை அரசாங்கமானது பகிர்ந்து கொடுக்கும். அவரவர் களுடைய வேலைக்கான ஊதியத்தை அரசாங்கமே கொடுக்கும். இங்ஙனம் கொடுக்கப்படுகிற ஊதியமானது, எல்லோருக்கும் சமவிகிதாசாரமாக இருக்க வேண்டு மென்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அவரவர்களுடைய தேவைகளுக்குத் தகுந்தாற் போல அவரவர்களுக்குக் கொடுக்கப்படுகிற ஊதியமும் இருக்கு மென்று கூறுகிறார்கள். இப்படிப்பட்டதொரு நிலைமையேற் பட்டு, இதன் கீழ் மனிதர்கள் வாழ்வார்களானால் அவர்களுடைய வாழ்க்கை, நாய் வாழ்க்கையாகத்தானிருக்குமே தவிர மனித வாழ்க்கையாயிராது. உற்பத்தி செய்யும் யந்திரங்கள் மட்டுமே நிறைந்த இந்த மாதிரியான ஒரு சமுதாயத்தில், மனிதனுடைய சுதந்திரம், தன் மதிப்புணர்ச்சி, மனச்சாட்சி முதலியன யாவும் அடியோடு மறைந்து போய்விடும். இந்தச் சமுதாயத்தில், மனித னுடைய பௌதிக வாழ்க்கைக்கு ஒரு வித திருப்தி ஏற்படலாம். ஆனால் மனிதனுடைய அறவாழ்க்கை, அறிவு வாழ்க்கை முதலியன யாவும் நசித்துப் போகும். இந்த நாசத்தோடு, போட்டி போட்டு முன்னுக்கு வரவேண்டுமென்ற ஆசை, அவரவருடைய மனப் போக்கின் படி வேலையைத் தெரிந் தெடுத்துக் கொள்கிற உரிமை, ஒன்று சேர்ந்து வாழும் உரிமை, அதிகமான பொருளுற்பத்தி செய்வதற்கான ஊக்கம், சொத்தை அநுபவிப்பதனால் உண்டாகிற உற்சாகம் முதலிய முன்னேற்றத்திற்கான எல்லாத் தூண்டுதல்களும் இல்லாமற் போய்விடும். இந்தப் பொதுவுடைமைத் திட்டத்தின் கீழ், மானிட சமுதாய மென்னும் குடும்பமானது, ஆடு மாடுகள் நிறைந்த ஒரு மந்தைமாதிரி ஆகிவிடும். இந்த மந்தையை மேய்ச்சல் தரை யுள்ள இடம் பார்த்து அழைத்துச் செல்ல வேண்டியது தான் தேவை. உங்களிலே யாராவது இந்த மாதிரியான திட்டத்தின் கீழ் வாழச் சம்மதிப்பீர்களா? இந்தத் திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் சம உரிமை ஏற்படுமென்று சொல்லுகிறார்கள். சம உரிமை எப்படி யேற்படும்? உழைப்புச் சக்தியைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதிலா? அது முடியவே முடியாது. எப்படியென்றால் வேலைகள் பலதிறத்தனவா யிருக்கின்றன. கால அளவைக் கொண்டும், குறிப்பிட்ட ஒரு காலத் திற்குள் எவ்வளவு செய்ய முடியுமென்பதைக் கொண்டும் ஒருவேலை யின் மதிப்பைக் கணிக்க முடியாது. வேலையின் கடினம், வேலை செய்கிற போது குறைச்சலான அசௌகரியங்கள் இருக்கின்றனவா அல்லது அதிகமான அசௌகரியங்கள் இருக்கின்றனவா, வேலை செய்யுங்காலத்தில் எவ்வளவு ஜீவ சக்தி செலவழிகிறது முதலியன வற்றைக் கொண்டு தான் ஒரு வேலையின் மதிப்பு கணிக்கப்பட வேண்டும். நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து கொண்டு செய்கிற ஒரு மணி நேர வேலைக்கும், பஞ்சு ஆலையிலிருந்து கொண்டு செய்கிற ஒருமணி நேர வேலைக்கும் எவ்வளவோ வித்தியாசமிருக்கிறது. எனவே, இந்த மாதிரி ஒருவேலையின் மதிப்பைக் கணிக்க முடியா தென்பதை அறிந்த மேற்படி சித்தாந்திகள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலிலும் மாறி மாறி வேலை செய்து, இறுதியில் எல்லாத் தொழில்களிலும் பயிற்சி பெற்றவர்களாயிருக்க வேண்டு மென்று சொல்லுகிறார்கள். இஃதென்ன பரிகாரம்! இந்த முறையை அநுஷ்டித்தால் நல்ல மாதிரிப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியாது. உழைக்குஞ் சக்தி அதிகமாக உடையவர்களுக்கும் குறை வாக உடையவர்களுக்கு முள்ள வித்தியாசத்தை அகற்ற முடியாது. ஒருவனுக்குச் சுலபமாயிருக்கிற வேலை மற்றொருவனுக்குக் கஷ்டமாகத்தானிருக்கும் இந்த ஏற்பாட்டின் கீழ்க் கூட. பொதுவுடைமைத் திட்டத்தின் கீழ்,செய்பொருள்கள் சம விகிதாசாரமாக விநியோகிக்கப்படுமா? அதுவும் முடியாது. எல்லோருக்கும் சம விகிதாசாரப்படி பொருள்களை விநியோகிப்ப தென்று சொன்னால், அவரவர்களுடைய தேவைகளைப் புறக் கணித்து விடுகிறவர் களாகிறோம். தவிர, நம்முடைய சக்திகளையும் திறமை களையும் உபயோகித்து இயற்கையிலிருந்து என்னென்ன பெறுகிறோமோ அவைகளின் தராதரங்களையும் அறியாதவர்க ளாகிறோம். இப்படிக் கில்லாமல், அவரவர்களுடைய தேவை களைப் பூர்த்தி செய்கிற விதமாகப் பொருள் விநியோகம் இருக்குமென்று சொன்னால், சம விகிதாசார விநியோகம் என்பது போய், சமத்துவ மின்மையென்பது ஏற்பட்டு விடுகிறது. எல்லாப் பொருளுற்பத்தியையும் அரசாங்கமே எடுத்துக் கொண்டு விடுவதால், தனிப்பட்டவர்கள் பொருளுற்பத்தி செய்வ தென்பதே இல்லாமற் போய் விடுகிறது. இதனால், தொழிலாளர்கள், தங்கள் உழைப்பின் அடையாளமான சொத்தை உரிமை பாராட்டி அநுபவிக்க முடியாதவர்களாகி விடுகிறார்கள். ஒவ்வொருவருடைய தேவையையும் நிர்ணயிப்பது யார்? அரசாங்கமா? தொழிலாளர்களே! எனது சகோதரர்களே! பொதுச் சொத்தின் எஜமானர்களென்று ஒரு சிலரை நீங்கள் ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறீர்களா? அவர்கள், தாங்கள் பெற்ற ஒரு விசேஷக் கல்வியின் காரணமாக உங்களுடைய மனதை ஆட்டி வைக்கும் எஜமானர்களாயிருக் கிறார்கள். நீங்கள் இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும், உங்களுடைய வேலைத் திறமையென்ன, உங்களுடைய தேவைகள் என்ன முதலியவைகளை யெல்லாம் நிர்ணயிக்கிற அதிகாரம் அவர்களிடத்திலிருக்கிற படியால், அவர்கள் உங்கள் தேகத்திற்கும் எஜமானர்களாயிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் நீங்கள் இசைந்து போவது, பழைய அடிமைத்தனத்திற்குச் செல்வதாகுமல்லவா? இந்த எஜமானர்கள், தங்கள் கைக்கு அதிகமான அதிகாரம் வந்து விட்ட பிறகு, சர்வாதிகார பரம்பரை ஒன்றை, பழைய காலத்தில் பரம்பரையான ஜாதிகள் இருந்தது போல், தாபித்து விடமாட்டார்களா? சகோதரர்களே! பொதுவுடமையினால், தொழிலாளர்களுக்கிடையில் சமத்துவம் ஏற்படாது; பொருளுற்பத்தி அதிகப்படாது. அதிமாகப் பொருளுற்பத்தி செய்ய வேண்டியது தற்போது மிகவும் அவசியமாயிருக்கிறது. வாழ்க்கையில் சாதாரண சௌகரியங்கள் ஏற்பட்டு விட்டால், மனிதன் உடனே திருப்தியடைந்து விடுகிறான். இதுதான் மனித சுபாவம். இதனால், பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டுமென்ற உற்சாகம் அவனுக்கு ஏற்படுவ தில்லை. இந்த உற்சாகம் இல்லை யானால், அவனுடைய திறமைகள் வெளியாவதற்கு மார்க்கமில்லை. இதனால் பொருளுற்பத்தியில் எவ்வித அபிவிருத்தியையும் காண முடியாது. புதிய புதிய விஷயங் களைக் கண்டு பிடிக்க வேண்டு மென்பதில் யாருக்கும் எவ்வித உற்சாகமும் இராது. மற்றும், ஒருசிலரடங்கிய தாபனத்தின் மூலம், துரிதமான முன்னேற்றம் நடைபெறாது. ஜனங்களுடைய துன்பங் களை நீக்க வேண்டுமானால், அவர்களைப் பசிக் கொடுமையி னின்று நீக்க வேண்டுமென்ற ஒரே பரிகார முறையைத்தான் பொது வுடைமைச் சித்தாந்தம் கூறுகிறது. சமுதாய ஒழுங்கைச் சீர்குலைக் காமலே, உற்பத்தியைக் கட்டுப்படுத்தாமலே, முன்னேற்றத்தைத் தடை செய்யாமலே, தனி மனிதனுடைய சுதந்திரத்தை நசுக்கி விடா மலே, கொடுமையான ஒரு தாபனத்தோடு அவனைப் பிணைத்து விடாமலே, இந்தப் பரிகாரத்தைத் தேடிக் கொடுக்க முடியாதா, தொழிலாளர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கை உரிமையையும் வேலை செய்யும் உரிமையையும் வாங்கிக் கொடுக்க முடியாதா? உலக வாழ்க்கைக்கு அடிப்படையாயுள்ள அமிசங்கள் என்னென்ன உண்டோ அவைகளையெல்லாம் புறக்கணித்துவிட்ட யாரோ ஒரு சிலருடைய ஆலோசனையின் பேரில் யதேச்சையாக ஏற்பட்ட ஒரு தாபனத்தின் விசேஷ உத்தரவுகளின் மூலம் தற்போதைய நிலைமையி லிருந்து உங்களுக்கு விமோசனம் ஏற்பட்டு விடாது. மானிட சமுதாயத்தைச் சிருஷ்டிப்பதற்காக நாம் இங்கில்லை; அதனைத் தொடர்ந்து நடத்திச் செல்வதற்காகவே இருக்கிறோம். எந்தெந்த அமிசங்கள் சேர்ந்து மானிட சமுதாயமாகி யிருக்கின்றதோ அந்த அமிசங்களை நாம் மாற்றி யமைக்கலாம்; அவற்றை ஒழுங்காக்கி விடலாம்; ஆனால் அவைகளை நசுக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோ மானால், மானிட சமுதாயம் கட்டாயம் எதிர்த்து நிற்கும். இந்த மாதிரியான பகற் கனவுகளில் நாம் காலத்தைக் கழிப்பது வீண். மற்றும், தொழிலாளர்களுடைய கூலி விகிதத்தை மட்டும் உயர்த்தி விட்டு மூலதனத்தை அதிகப் படுத்தாவிட்டால் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் உண்டாகாது. கூலி விகிதத்தை அதிகப்படுத்தி விடுவதென்று சொன்னால், சாமான்களின் விலையை அதிகப்படுத்த வேண்டும். சாமான் விலை அதிகப்படுத்தினால், வாங்குவோர் எண்ணிக்கை சுருங்கும். இதனால், தொழிலாளர்களுக்கு ஒழுங்கானபடி வேலை கிடைப்பது துர்லபமாகிவிடும். உங்களுடைய தற்போதைய நிலைமையிலிருந்து விமோசனம் காண வேண்டுமானால் மூல தனமும் உழைப்பும் அதாவது முதலாளித்துவமும் தொழிலாளித்து வமும் ஒருவர் கைக்கே வரவேண்டும். பொருளுற்பத்தி செய்வோர், பொருள்களை வாங்குவோர் என்பவர்களைத் தவிர வேறு வகை யான பிரிவினரைச் சமுதாயம் அங்கீகரிக்கக் கூடாது. பொருளை உற்பத்தி செய்கிறவர்களே பொருளை வாங்குகிறவர்களாயிருக்க வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பி லிருந்து உண்டாகிற பொருள்கள், முதலாளியிடமிருந்து சில்லரை வியாபாரி வரையில் பல கைகளுக்கு மாறி மாறி வருவதால், அந்தப் பொருளானது ஒன்றுக்கு அரைபங்கு விகிதம் விலை அதிகமாகி விடுகிறது. இதற்குப் பதிலாக, மேற்படி பொருள்களின் மதிப்பு, விலை நிர்ணயம் முதலியனயாவும் தொழிலாளர் வசத்திலேயே இருக்கும் பட்சத்தில், நீங்கள் வறுமை நிலைமையிலிருப்பதற்கு நிரந்தரமான காரணங்கள் என்னென்ன உண்டோ அவையாவும் இல்லாதொழியும். தற்போதைய பொருளுற்பத்தி முறையில், முதலாளித்துவமானது நேரடியாகப் பங்கு கொள்வதில்லை. அப்படிப்பட்ட முதலாளித் துவத்தின் கைப்பிடியினின்று விடுவிடுத்துக் கொள்வதில் தான் உங்களுடைய எதிர்கால விமோசனம் இருக்கிறது. எதிர்காலத்தில் உங்களுடைய லௌகிக வாழ்க்கையும் அறவாழ்க்கையும் பிரகாசமயமானதாயிருக்க வேண்டுமென்று நான் கூறுகிறேன். உங்களைச் சுற்றிப் பாருங்கள். மூலதனமும் உழைப்பும் ஒருவர் வசத்திலேயே எங்கெங்கு இருக்கின்றனவோ, உழைப்பின் பலனாக உண்டாகிற லாபமானது, உழைக்கிற எல்லோருக்கும் எங்கெங்கு சரிபங்காக விநியோகிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தொழிலாளர்களின் வறுமை குறைவுபட்டிருப்பதை யும், அவர்களுடைய அறவாழ்க்கை உயர்ந்திருப்பதையும் காண லாம். விட்ஜர்லாந்தின் பல பாகங்களில், நிலம், மூலதனம், உழைப்பு முதலியனயாவும் ஒருவர் வசத்திலேயே இருக்கின்றன இந்தப் பாகங்களிலும், இன்னும் நார்வே, பிளாண்டர், கிழக்கு ப்ரிஷ்யா, ஹோல்டீன், பெல்ஜியம், கெர்ன்ஸே தீவு முதலிய பிரதேசங்களிலும்,1 மற்ற இடங்களைக் காட்டிலும் அதிகமான சுபிட்சம் இருப்பதைக் காணலாம். ஏனென்றால், இந்த இடங்களில் நிலமும், நிலத்தின் முதலாளியும் ஒருவராகவே இருக்கின்றனர். இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் விவசாயிகள் ஒழுக்கமுடைய வர்களாகவும், நாணயதர்களாகவும், சுதந்திரமுள்ளவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். இங்ஙனமே, தொழிலாளர்கள் தங்களுடைய முயற்சிகளில் கிடைக்கும் லாபத்தை எங்கெங்குச் சரி சமானமாகப் பங்கிட்டுக் கொள் கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை நிலைமை திருப்திகரமா யிருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக இங்கிலாந்திலுள்ள சில சுரங்கத் தொழிலாளர்களிடையிலும், சமுத்திரங்களில் சென்று திமிங் கிலத்தைப் பிடித்து அதில் வியாபாரம் செய்யும் சில அமெரிக்கர்க ளிடமும் இந்த வழக்கம் இருந்து வருகிறது. தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டு என்னென்ன பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனவோ அந்தப் பொருள்களிலிருந்து கிடைக்கிற லாபத்தை அந்தத் தொழிலாளர்களே அவர்களுடைய உழைப்புக்குத் தகுந்த விதம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இந்த முறையை அநுஷ்டிப்பதில்தான் தொழிலாளர்களின் எதிர்காலம் இருக்கிறது. இதில்தான், உங்களுடைய விமோசனத்தின் ரகசியம் இருக்கிறது. ஒரு காலத்தில் நீங்கள் பரிபூர்ண அடிமைகளாயிருந்தீர்கள்; பின்னர் நிலச்சுவான்தார்களுக்கு அடிமைகளானீர்கள்; பிறகு கூலி சம்பாதிக்கும் தொழிலாளர்களானீர்கள். வெகு சீக்கிரத்தில் நீங்கள் மனம் வைத்தால் நீங்களே பொருளுற்பத்தி செய்கிறவர்களாகவும் ஆகிவிடலாம். சில கொள்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு நீங்கள் ஒரு சங்கமாக அமைத்துக் கொள்ளலாம். இந்த சங்கத்திலே வந்து சேருகிறவர்கள் சுயேச்சையாக வந்து சேர வேண்டுமே தவிர, பிறருடைய கட்டாயத்திற்காக வந்துசேரக் கூடாது. பரபரம் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டிருக்கிறவர்களும், ஒருவர்க் கொருவர் அன்பு செலுத்து கிறவர்களும் இந்தச் சங்கத்தில் அங்கத் தினராகச் சேர வேண்டும். உங்களை மனிதர்களாகக் கருதாமல், பொருளுற்பத்தி செய்கிற யந்திரங் களென்று கருதி, அதே பிரகாரம் நடத்துகிற அதிகாரிகளுடைய கட்டாயத்தின் பேரில் நீங்கள் சங்கமாகச் சேரக் கூடாது. உங்களுடைய சங்கம், உங்களுடைய பிரதிநிதிகளாலேயே நிருவகிக்கப்பட வேண்டும். உங்களுக்கு விருப்பமில்லையானால் சங்கத்திலிருந்து விலகிக் கொள்ள உங்களுக்கு உரிமை இருக்க வேண்டும். உங்களுடைய தேவைகளை யும் உங்களுடைய மனப் போக்குகளையும் உணராத ஒரு சுயேச் சாதிகார அரசாங்கத்திற்கோ, தங்களைத் தாங்களே எஜமானர்களாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டத்திற்கோ நீங்கள் கட்டுப்பட் டிருக்கக் கூடாது. குறிப்பிட்ட ஒருதொழிலிலே ஈடுபட்டிருக்கிற எல்லோரும் தனியாக ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளலாம். இங்ஙனமே ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டிருக்கிறவர்களும் செய்யலாம். ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்திருப்ப தானது, பழைய சுயேச்சாதிகாரமுறையை மீண்டும் தாபிப்பதாகவே இருக்கும். இதனால் பொருளுற்பத்தி செய்கிறவர்கள், தங்க ளிஷ்டப்படி விலையைக் குறைக்கவும் கூட்டவும் செய்வார்கள்; சிறு தொகையினராக வுள்ளவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவார்கள். ஒரு தொழிலிலே அதிருப்தி கொண்ட ஒரு தொழிலாளி, வேறு ஒரு தொழிலில் ஈடுபடமுடியாமற் போகும். தொழில் போட்டி இல்லாத காரணத்தினால், புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற உற்சாகம் யாருக்கும் இல்லாமற் போகும். தொழிலாளர் சங்கங்களை தாபிக்க வேண்டுமென்ற முயற்சி சென்ற இருபது வருஷ காலமாக ஆரம்பித்து, பிரான், இங்கி லாந்து, பெல்ஜியம் முதலிய இடங்களில் வெற்றிகரமாக நடை பெற்றுக் கொண்டு வருகின்றது. ஆரம்பத்தில் இவை மிகுந்த பயத் தோடும், அநேக எதிர்ப்பு களுக்கு மத்தியிலும் இருந்தபோதிலும், பின்னர் பலருடைய உழைப்பு, உற்சாகம், தன்னலத் தியாகம் முதலியவை காரணமாக அபிவிருத்தி யடைந்தன. இத்தலியிலுள்ள நீங்கள் இந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண வேண்டும். சங்கங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக நீங்கள் ஒரு மாற்றத்தை யடைவீர்களானால், அந்த மாற்ற மானது கூலிக்காக அடிமைப்பட்டுக்கிடக்கிற உங்களுக்கு விமோசனத்தை யளிக்கும்; பொருளுற்பத்திக்கு ஒரு புதிய உயிர் ஏற்படும்; அதனால் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோரும் நன்மையடைவர். அதனால் தேசத்தின் பொருளாதாரமும் செழுமை பெறும். தற்போதைய பொருளாதார அமைப்பில், முதலாளியினுடைய நோக்கமெல்லாம் என்னவாயிருக்கிற தென்றால், தன்னால் முடிந்த வரையில் அதிகமான பணத்தைச் சேமித்துக் கொண்டு பின்னர், வேலையி னின்று ஒதுங்கிவிட வேண்டுமென்பதுதான். ஆனால் முதலாளித்து வமும் உழைப்பும் ஒன்று சேருமானால் அப்பொழுது, பொருளுற் பத்தியானது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும். தற்போதைய நிலைமையில் ஒரு தொழிற் சாலையின் சொந்தக் காரனாயிருக்கப்பட்டவன், தன்னிடத்திலுள்ள ஒரு விசேஷத் திறமையினால் பணத்தைக் குவிக்கவில்லை. அவனிடத்தில் மூலதனம் இருக்கிறது. அதன் மூலமாகப் பணத்தைச் சம்பாதிக் கிறான். அவ்வளவுதான் ஆனால் அந்த முதலாளி, அநேகமாக முன்னெச்சரிக்கை யில்லாதவனாகவும், துடுக்குள்ளவனாகவும் திறமையற்றவனாகவு மிருக்கிறான். தொழிலாளர்கள் சேர்ந்து நடத்துகிற ஒரு தாபனத்தில், அந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதி களேயிருந்து மேற்பார்வை செய்தால் மேலே சொல்லப்பட்ட குறைகள் யாவும் காணப்படமாட்டா. இன்றைய நிலைமையில் தேவையுள்ள பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதற்குப் பதில் தேவையில்லாத பொருள்களை உற்பத்தி செய்வதற்குத்தான் தொழிலாளர்களின் உழைப்பு அடிக்கடி பிரயோஜனப்படுகிறது. தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகிற கூலி விகிதத்திலே பலவித ஏற்றத் தாழ்வுகள் இருப்பதால், ஒரு தொழிலில் அதிகமான தொழிலாளர்களும் மற்றொரு தொழிலில் குறைவான தொழிலாளர் களும் இருப்பதைக் காண்கிறோம். தொழிலாளர்களுடைய கூலி விகிதத்தை இவ்வளவுதான் என்று நிர்ணயித்து விடுகிறார்களாத லினால், அவர்கள், தாங்கள் செய்கிற வேலையில் அதிகமான உற்சாகத்தைப் புகுத்தி, தங்களுடைய உற்பத்தியை அதிகப்படுத்திக் காட்ட முடியாதவர்களாகி விடுகிறார்கள். சங்கத்தின் மூலமாக இந்த மாதிரியான குறைகளையெல்லாம் அகற்றி விடலாம். தொழில்களை வைத்து நடத்தக்கூடிய தொழிலாளர் சங்கங்கள் கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டுமென்பது என்னுடைய அபிப்பிராயம்- (1) தொழிலாளர் சங்கத்திலே அங்கத் தினராகச் சேருகிறவர்கள், தங்களுக்கு இஷ்டமில்லையானால், சங்கத்திலிருந்து விலகிக்கொள்ள உரிமை இருக்க வேண்டும். ஆனால் அப்படி விலகிக் கொள்ளும் போது, சங்கத்திற்கு எவ்விதத் தீங்கும் செய்யாமல் விலகிக் கொள்ள வேண்டும். (2) சங்கத்தின் நிருவாக சபைக்கு அங்கத்தினர்களைத் தெரிந்தெடுக்கும் உரிமை எல்லா அங்கத்தினர்களுக்கும் இருக்க வேண்டும். அப்படி நிருவாக சபைக்குத் தெரிந்தெடுக்கப்படுகிற அங்கத்தினர்கள் , குறித்த ஒரு காலத்திற்குத்தான் உத்தியோகம் வகிக்கிறவர்களாயிருக்க வேண்டும். அந்த உத்தியோக காலத்திற்குள், மற்றப் பொது அங்கத்தினர்கள் அவர்கள் மீது அதிருப்தி கொண்டார் களானால் அவர்களை விலக்கி விடலாம். (3) தொழில் தாபனத்திற்குக் குறிப்பிட்ட ஒரு தொகை மூலதனமாகச் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையில்லாமல் யாரையும் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தாபனத்திலிருந்து கிடைக்கிற லாபத்தில், எந்த அங்கத்தினர், மூலதனமாக ஒன்றையும் செலுத்தவில்லையோ அந்த அங்கத்தினருக்குக் கிடைக்கிற பங்கில் ஒரு பகுதியை, சங்கத்தின் பொது நிதிக்குக் கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனை இருக்க வேண்டும். (4) ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட மூலதனமானது பிரிக்கக் கூடாததாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும். (5) ஜீவனத் திற்குப் போதுமானபடி அவரவருக்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். (6) தொழிலாளிகள் செய்கிற வேலையின் அளவுக்கும் தகுதிக்கும் தகுந்தாற்போல் அவரவருக்கு வேண்டிய கருவிகளைக் கொடுத்து உதவ வேண்டும். இந்த மாதிரியான அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு நீங்கள் உங்களுடையதொழிற் சங்கங்களை தாபிக்க வேண்டும். இது விஷயமாக நீங்கள் தற்போது தியாகஞ் செய்தாலும், பிற்காலத் தில் தொழிலாளர் சமுதாயத்திற்கே உங்கள் மூலமாக அதிக நன்மைகள் உண்டாகும். ஆனால் நீங்கள் கேட்கலாம், இந்த மாதிரி யான தொழிற் சங்கங்களை தாபிக்க மூலதனம் வேண்டுமென்று சொன்னீர்களே அந்த மூலதனத்தை நாங்கள் எங்கிருந்து கண்டு பிடிப்பதென்று. இஃதொரு முக்கியமான கேள்வி. இதைப் பற்றி மிகவும் விதரித்துக் கூறவேண்டும். ஆனால் இங்கு அப்படிக் கூற முடியாதவனாயிருக்கிறேன். ஆயினும் இதுவிஷயத்தில் உங்களுடைய கடமை என்ன மற்றவர்களுடைய கடமை என்ன வென்பதைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறேன். உங்களுடைய தொழிற் சங்கங்களுக்கு தேவையான மூலதனம் உங்களிடத்திலிருந்துதான் வர வேண்டும். நீங்கள் தியாகஞ் செய்து ஏதோ அவ்வப்பொழுது சிறிது சிறிதாகச் சேர்த்துக்கொண்டு வருகிறீர்களே அதிலிருந்துதான் இந்த மூலதனத்திற்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும். உங்களிற் பெரும்பாலோருடைய நிலைமை எனக்குத் தெரியும். ஆனால், உங்களிலே ஒரு சிலர் அதிருஷ்டசாலி களாயிருந்து ஒழுங்கான சம்பாதியத்தைப் பெற்று வருகிறார்க ளல்லவா, அவர்களில் பதினெட்டு பேர் அல்லது இருபது பேர் ஒன்று சேர்ந்து தங்களுடைய சம்பாத்தியத்திலிருந்து ஒரு தொகையைக் கொடுத்து, அதனையே மூலதனமாக வைத்துக் கொண்டு தொழிலை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக உங்களிற் சிலர், தங்களுடைய செலவினங்களைச் சுருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் இதனால் கடமையை செய்வதாகிற ஒரு திருப்தியும், நமக்கு விமோசனம் உண்டாகுமென்ற ஒரு நம்பிக்கை யும், உங்களுக்கு ஏற்படும். இங்கிலாந்தில் இப்பொழுது அநேக தொழிற் சங்கங்கள் இருக்கின்றன. இவையாவும், தொழிலாளர்கள் தினந்தோறும் தங்களுடைய சம்பாத்தியத்திலிருந்து ஓர் அணா செலுத்தி, அந்தத் தொகையைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டவை யாகும். இதே மாதிரி பிரான் முதலிய இடங்களிலும் பல தொழிற் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு நன்றாக நடைபெற்று வருகின்றன. நன்மையைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் தொடங்கப் பெறுகிற எந்த ஒரு தாபனமும் இறுதியில் வெற்றியடைவது நிச்சயம். எனவே உங்களிலே ஒவ்வொருவரும், உங்களால் முடிந்த வகையில், நீங்கள் ஆரம்பிக்கும் தொழிற் சங்க மூலதனத்திற்குப் பணமாகவோ, சாமான்களாகவோ, கருவிகளாகவோ கொடுக்கலாம். இதுவும் உங்களால் முடியாவிட்டால், உங்களுடைய உறவினர்களிட மிருந்தோ அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்தோ ஒரு சிறு தொகையைக் கடனாக வாங்கி மேற்படி மூலதனத்தில் போடலாம். ஆனால் அப்படிக் கடனாகக் கொடுக்கிறவர்கள், வட்டியை எதிர் பார்க்கக் கூடாது. தொழில் முயற்சியில் ஏதேனும் லாபங் கிடைத் தால் அதில் ஒரு பகுதியை மட்டுமே எதிர் பார்க்கலாம். மலிவான மூலப் பொருள்கள் தேவையாயிருக்கிற ஒரு தொழிலை நீங்கள் ஆரம்பிப்பீர் களாயின்,உங்களுக்கு அதிகமான மூலதனம் தேவைப் படாது. எப்படியாவது ஒருதொழிலை ஆரம்பித்துவிட வேண்டு மென்ற உறுதி மட்டும் உங்களுக்கு இருக்குமாயின், அந்தத் தொழில் கட்டாயம் ஆரம்பிக்கப்பட்டே விடும். ஆனால் இப்படி ஆரம்பிக்கப் படுகிற தொழிலுக்கு, உங்களுடைய உழைப்பைக்கொண்டு சேர்க்கப் படுகிற ஒரு தொகையோ, அல்லது உங்களுடைய திறமையான உழைப்பின் மூலம் உங்களுக்கு ஒரு நாணயம் ஏற்பட்டிருக்கிறதே அந்த நாணயத்தைக் கொண்டு நீங்கள் பெறுகிற ஒரு தொகையே மூலதனமாக இருப்பது மிகவும் நல்லது. எந்த நாடுகள், தங்களுடைய ரத்தத்தைப் பொழிந்து தன் மூலமாகவே தங்கள் சுதந்திரத்தைப் பெற்றிருக்கின்றனவோ அந்த நாடுகள்தான், தங்கள் சுதந்திரத்தைப் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதைப் போல, உங்களுடைய அதிக நேர உழைப்பினாலும் உங்களுடைய செலவைச் சுருக்கிக் கொள்வதனாலும் உங்களால் எவ்வளவு மூலதனத்தை ஒரு தொழிற் தாபனத்தில் போட முடியுமோ அவ்வளவு போட்டு ஆம்பிக்கப்படுகிற ஒரு தொழில் முயற்சிதான் வெற்றிபெறும்; ஒழுங்கான லாபத்தைக் கொடுத்துக் கொண் டிருக்கும். 1848ஆம் வருஷம் பாரி மாநகரத்தில், அரசாங்க உதவி பெற்றுத் தொழிலாளர் சங்கங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன.1 ஆனால் இவை, தொழிலாளர்களுடைய தியாகத்தின் பரிணாமமாக ஏற்பட்ட சங்கங்களைப் போல செழுமையுறவில்லை. சகோதரர்களே! உங்களை முகதுதிபாடி மகிழ்விக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை, அப்படியே உங்களுடைய பலஹீனங்களைக் குறைத்துப் பேச வேண்டுமென்ற நோக்கமும் எனக்கில்லை. ஏனென்றால் நான் உங்களை உண்மையாக நேசிக் கிறேன். அதனால்தான் உங்களைத் தன்னலத் தியாகஞ் செய்யுமாறு கூறுகிறேன். நீங்கள் உங்கள் கடமை களைச் செய்து கொண்டு போனாலும், மற்றவர்கள் உங்கள் விஷயத்தில் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. சிறப்பாகப் பணமுள்ளவர் கள் இதனை நன்குணர வேண்டும். ஏழைமக்களுக்கு விமோசனம் ஏற்பட வேண்டுமென்பது கடவுளின் திருநோக்கம். பணக்காரர்கள், அந்த விமோசனத்திற்கு சாதகமாயிருந்தாலும் பாதகமாயிருந்தாலும் அது நிறைவேறியே தீரும். குடியரசு எண்ணமுடைய பணக்காரர் களிற் சிலர் இதனை நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உறுதியுடையவர் களாகவும் நாணயமுள்ள புத்திசாலிகளாகவும் இருக்கும் பட்சத்தில், இவர்களுடைய உதவி உங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும். உங்களிற் பெரும்பாலோருக்கு, தொழிலுற்பத்திச் சங்கங்களைத் தொடங்க வேண்டுமென்று உறுதி ஏற்பட்டுவிட்ட தென்று அவர்களுக்குத் தெரிந்து விடுமானால், அவர்கள் உங்க ளுக்குக் கடன் கொடுப்பார்கள், அல்லது உங்களுடைய ஒழுங்கான உழைப்பையே ஜாமீனாக வைத்துக் கொண்டு உங்களுக்குக் கடன் உதவக்கூடிய பாங்கிகளைத் திறப்பார்கள்; அல்லது அவர்களே தொழில் தாபனங்களை ஆரம்பித்து, அந்த தாபனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்குமாறு செய்வார்கள். பெல்ஜியம் நாட்டிலே இந்த மாதிரியான தாபனங் களும் பாங்க் ஆப் ஆண்டிஸிபேஷன் என்றும் பீபிள் பாங்கிகள் என்று அநேக பாங்கிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒரு மனிதனுடைய நாணயத்தையே ஜாமீனாக வைத்துக் கொண்டும், அதே மாதிரி மற்றொரு நாணயதனுடைய ஜாமீன் பேரிலும் கடன் கொடுக்கிற பாங்கிகள் பல காத்லாந்தில் இருக்கின்றன. இன்னும் மேற்படி நாட்டில் முதலாளிகளால் தொடங்கப் பெற்ற அநேக தொழிற் தாபனங்களில், தொழிலாளர் களுக்கு லாபத்தில் ஒரு பங்கு பிரித்துக் கொடுத்து அதுகாரணமாக அந்த தாபனங்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. 12. முடிவுரை ஜனங்களுக்குக் கல்வி ஞானத்தை யளிக்க வேண்டும், அவர் களை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கங்களை அடிப் படையாகக் கொண்டு தாபிக்கப் படுகிற ஓர் அரசாங்கந்தான் நியாயமான அரசாங்கம் என்று கருதப்படும். அப்படிப்பட்டதோர் அரசாங்கம், தன்னுடைய பிரஜைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டுமானால் அஃது உண்மை யான ஒரு தேசீய அரசாங்கமாக இருக்க வேண்டும். அதாவது சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் உள்ள ஒரு ஜாதியினருடைய அரசாங்கமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டதோர் அரசாங் கந்தான் ஜனங்களுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்யமுடியும்; யாருக்கும் எவ்விதபாதகமும் உண்டாகாமல் சமுதாயப் பிரச்னைகள் பலவற்றையும் தீர்த்துவைக்க முடியும். இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிற போது, ஏற்கனவே தனது பிரஜைகளால் சேகரிக்கப்பட்டு வந்திருக்கிற செல்வத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்காது; வர்க்கப் போராட்டத்தை உண்டு பண்ணாது. அப்படி வர்க்கப் போராட்டத்தை உண்டு பண்ணுவது அநீதம்; ஒழுக்கஹீனம்; தேசத்திற்குத் தீமை. இப்பொழுது பிரான் தேசத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்வது இந்தவர்க்கப் போராட்டந்தான். கீழ்க்கண்ட விதமாக ஓர் அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு நன்மைகளைச் செய்யலாம்:- (1) பொது நலத்திற்காக ஏற்பட்டுள்ள சங்கங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா வென்று, அரசாங்க உத்தியோகதர்களைக் கொண்டு கண்காணித்து வரலாம். அந்தச் சங்கங்களின் கொள்கைகளைப் பற்றி ஜனப் பிரதிநிதி சபைகளில் வாதம் நடத்துவிக்கலாம். இப்படிப்பட்ட சங்கங்கள் சட்டபூர்வ மாக அங்கீகரிக்கப் படவேண்டும். (2) போக்குவரவுச் சாதனங்களை அதிகப்படுத்த வேண்டும். பொருள்களின் போக்குவரத்துக்குத் தடைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்ற வேண்டும். (3) விவசாயச் சங்கங்களினால் உற்பத்தி செய்யப்படுகிறபொருள்களை அவ்வப் பொழுதைய உத்தேசவிலைப் பிரகாரம் வாங்கிச் சேகரித்துக் கொள்வதற்கான தானியக் களஞ்சியங்கள் ஆங்காங்கு தாபிக்கப்படவேண்டும். இந்தத் தானியக் களஞ்சியங்களை ஏற்படுத்திவிடுவதனால், சங்கங்களின் மூலம் உற்பத்தியாகிற பொருள் களை, அவசியத்தை, முன்னிட்டு, கண்டவிலைக்கும் விற்று விட வேண்டிய நிர்ப்பந்தம் மேற்படி சங்கங்களுக்கு ஏற்படாது. (4) தனிப்பட்ட நபர்களால் தொடங்கப்படுகிற தொழில் முயற்சி களுக்கு என்னென்ன பொதுநல வசதிகள் அளிக்கப்படுகின்றனவோ அதே வசதிகள் மேலே சொல்லப்பட்ட சங்கங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். (5) சட்டவிவகாரங்கள் இப்பொழுதுள்ளதைப் போல் சிக்கலாகவும் அழிவைத் தரக்கூடியதாகவும் இல்லாமல் எளிதாக்கப் பட வேண்டும். (6) நிலச் சொத்துக்களை விற்கவும் மாற்றவும் சட்ட ரீதியான சௌகரியங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும். (7) வரி விதிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும். ஒரே விதமான வருமான வரி விதிக்கப்பட வேண்டும். ஜீவனத்திற்குப் போதுமான அளவையே வருமானமாக உடையவர்களிடம் வரி வாங்கக் கூடாது. இன்னும் பல நன்மையான காரியங்களையும் ஓர் அரசாங்கம் செய்யலாம். மத தாபனங்கள் பலவற்றின் சொத்துக்களை அரசாங்க மானது தனக்குச் சுவாதீனப்படுத்திக் கொண்டு விட்டால், அதன் மூலமாக அரசாங்கத்தினிடம் அதிகமான ரொக்கப் பணம் வந்து சேரும். இதனோடு , மேற்படி மத தாபனங்களின் தரிசு நில புலங்களைச் சாகுபடிக்கு லாயக்காகும்படிச் செய்து, அவைகளுக்கு ஒரு மதிப்பு போட்டுப் பார்த்தால், அந்த மதிப்புத் தொகை அதிக மாகும். அந்தத் தொகையையும் அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். தவிர, ரெயில்வே முதலியன பொதுஜன சௌகரிய தாபனங்களை அரசாங்கமே நிருவாகம் செய்து அவை மூலமாகக் கிடைக்கிற லாபத்தையும் அரசாங்கமே அடைய வேண்டும். தல தாபனங்களைச் சேர்ந்த நிலச் சொத்துக்கள், அரசாங்கத்தைச் சேர வேண்டும். பிதிரார்ஜிதமல்லாத மற்ற சுற்றத்தார்களிடமிருந்து கிடைக்கும் அனாமத்தான வரவுபொருள்கள் யாவும் நான்காவது தலைமுறைக்குப் பிறகு அரசாங்கத்தை அடைய வேண்டும். இந்த மாதிரி பல வகையாகக் கிடைக்கும், செல்வத்தைக் கொண்டு அரசாங்கமானது தேசீய சேம நிதியொன்றை ஏற்படுத்த வேண்டும். தேசமக்களின் கல்வி அபிவிருத்திக்காகவும் பொருளாதார அபிவிருத்திக்காகவும் இந்தச் சேமநிதி உபயோகப்பட வேண்டும். இந்த நிதியிலிருந்து ஒருபாகத்தை எடுத்து, பொருளுற்பத்தி செய்யும் தொழிலாளர் சங்கங்களுக்கு சொற்ப வட்டிக்குக் கடன் கொடுத்து உதவலாம். இப்படிக் கொடுக்கப்படுகிற கடன் தொகையைக் கொண்டு அந்தச் சங்கங்கள், நிகழ்காலத் தலைமுறை யினருக்கு மட்டு மல்ல, வருங்கால சந்ததியாருக்கும் அநேக நன்மை களைச் செய்யக் கூடும். இங்ஙனம் கடன் கொடுக்கும் வேலையை அரசாங்கமே ஏற்று நடத்தக் கூடாது. ஆங்காங்கு தல பாங்கிகள் ஏற்படுத்தி அவை மூலமாக இந்தக் கடனை விநியோகிக்குமாறு செய்ய வேண்டும். இந்த பாங்கிகளோ ஜில்லா சபைகளினால் நிருவாகம் செய்யப்பட்ட வேண்டும். இந்த மாதிரியான முறைகளை அநுசரிப்பதினால், இப்பொழுது சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பிரிவாரிடத்திலும் எவ்வளவு எவ்வளவு செல்வம் இருக்கிறதோ அந்தச் செல்வமானது குறைந்து போகாது; தேசத்தின் வருமானத்தை ஒரு பிரிவார் மட்டும் அநுபவிப்பதற்கு ஏது விராது எல்லாப் பிரஜைகளுக்கும் வரி விதிக்கப்பட்டு அந்த வரிப்பணமானது எல்லோருடைய நன்மைக் காகவும் உபயோகிக்கப் பெறும். தேசத்திலே பொருளுற்பத்தி அதிகமாகும். எல்லோருக்கும் தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருக்கும் இத்தாலியத் தொழிலாளர்களே! இந்தச் சீர்திருத்த முறைகளை அநுசரிப்பதிலேதான் உங்களுடைய எதிர்காலம் இருக்கிறது. இந்த எதிர்காலத்ததைத் துரிதப் படுத்திக்கொண்டு வருவது உங்கள் பொறுப்பு. தேசத்தை உங்களுடைய தாக்கிக் கொள்ளுங்கள். பொதுஜன அரசாங்கத்தை ஏற்படுத்துங்கள். ஜனசபை ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சபையின் மூலமாக நீங்கள் வெளியிடுகிற அபிப்பிராயத்துக்கு மதிப்புண்டு. ஏனென்றால் அஃது ஒரு சிலருடைய அபிப்பிராயமல்ல; பொதுஜன அபிப்பிராயம். சத்தியமும் நியாயமும் உங்கள் பக்கம் இருக்கின்றன. ஆதலின், தேசமும் உங்களுடைய அபிப்பிராயத்தை செவி கொடுத்துக் கேட்கும். ஆனால். சகோதரர்களே! ஒரு விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கை யுடனிருக்க வேண்டும். ஐரோப்பாவில் சென்ற முப்பது வருஷகால மாக என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டு வந்திருக் கின்றன வென்பதை நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்திருக் கிறேன். புனிதமானதும் பயன் தரத்தக்கதுமான அநேக இயக்கங்கள் நல்ல தருணத்தில், அதாவது வெற்றியடைகிற தருணத்தில் தவறி விட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஏன் இப்படித் தவறிவிட்டன தெரியுமா? இந்த இயக்கங்களைச் சேர்ந்த மனிதர்களின் ஒழுக்க ஹீனத்தினால் தான். இதனாலேயே நீங்கள் எச்சரிக்கையுடனிருக்க வேண்டு மென்று கூறுகிறேன். நீங்கள் உங்களை உயர்த்திக் கொள்ளா விட்டால் உங்களுக்கு வெற்றி கிட்டாது. உங்களுடைய உரிமைகளை நீங்கள் பெறவேண்டுமானால் அதற்காக நீங்கள் தன்னலத்தியாகஞ் செய்ய வேண்டும்; உழைக்க வேண்டும்; எல்லோ ரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு அந்த உரிமைகளைப் பெறுந் தகுதி ஏற்படுகிறது. இந்தத் தகுதிக்குப் பின்னரே அந்த உரிமையை உங்களால் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரமுடியும். கடமைகளைச் செய்ய வேண்டுமென்பதற் காக உரிமைகள் தேவை என்ற நோக்கம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அந்த உரிமைகளை அவசியம் அடைவீர்கள். இதைவிடுத்து, மமதையின் பெயராலும், சுகசௌக்கியத்தை உத்தேசித்தும் மேற்படி உரிமைகளைக் கோருவீர்களாயின், தற்காலிகமான சில வெற்றிகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், இந்த வெற்றிகளுக்குப் பிறகு பெரிய ஏமாற்றங்கள் உங்களுக்கு உண்டாகும். சுக சௌக்கியத்தின் பெயரால், உலக சந்தோஷத்தின் பெயரால் உங்களிடத்தில் வந்து பேசுகிறவர்கள், கடைசியில் உங்களைக் கைவிட்டு விடுவார்கள். அவர்கள் தங்களுடைய சுகசௌக்கியத்தை நாடுகிறவர்கள். அவற்றை யடைவதற்காக உங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுகிறார்கள். ஏனென்றால், தன்னந்தனியராக இருந்து அவர்கள் தங்களுடைய சுகசௌகியத்தை நாடுவார்களாயின் அவர்களுக்கு அநேக முட்டுக் கட்டைகள் ஏற்படுகின்றன. உங்களோடு சேர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு மேற்படி முட்டுகட்டைகளும் அகன்று விடுகின்றன. அவர்களுக்குப் பலமும் உண்டாகிறது. உங்களுடைய துணை கொண்டு அவர்கள் தங்களுடைய சுகசௌக்கியத்தை அமைதியாக இருந்து அநுபவிப்பதற்காக சென்ற அரை நூற்றாண் டில் நடைபெற்ற வரலாறுகள் யாவும் இப்படித்தான் இருக்கின்றன. இந்த அரை நூற்றாண்டை உலகாயத காலம் என்று கூறலாம். இந்த அரை நூற்றாண்டுச் சரித்திரம் இருக்கிறதே அது கடமையைத் துக்கம் நிறைந்த சரித்திரம்; ரத்தக் கறை படிந்த சரித்திரம், கடவுளை, மதத்தை, கடமையை, தன்னலத் தியாகத்தை இன்னும் பலவற்றை மறுத்து விட்டு, சுகம், சௌக்கியம் ஆகியவை களை அடைவது எல்லோருடைய உரிமையுமாகும் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிற அநேகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் ஜனாதிக்கம், சுதந்திரம், என்ற வார்த்தைகளை வாயால் சொல்லிக் கொண்டு தைரியமாகப் போராடினார்கள்; புதிய நம்பிக்கையோடு கூடிய நம்முடன் வந்து கலந்து கொண்டார்கள். நாமும் அவசரப்பட்டு இவர்களைச் சேர்த்துக் கொண்டோம். ஒரு வெற்றி கிடைத்துவுடன், அல்லது கோழைத்தனமான முறையில் சமரஸம் செய்து கொள்ளக் கூடிய ஒருசந்தர்ப்பம் கிடைத்தவுடன் அல்லது தாங்கள் சுகத்தையும் சந்தோஷத்தையும் அடைவதற்கான ஒரு நிலைமை ஏற்பட்டவுடன் இவர்கள் நம்மைக் கைவிட்டுப் விட்டுப் போய் விட்டார்கள். இப்படி ஓடிப்போன மறுநாளே நமது சத்துருக்களாகவும் ஆகிவிட்டார்கள். ஒரு சில வருஷங்கள் ஆபத் தான வாழ்க்கையை நடத்தினாலும், அல்லது துன்பத்தை அநுபவித் தாலும், அதுவே இவர்களைச் சோர்வடையும்படிச் செய்து விடப் போதுமானது. இவர்கள், கடமையை உணராதவர்கள்; தங்களுடைய லட்சியத்திலே நம்பிக்கை இல்லாதவர்கள். அப்படி இருக்க இவர்கள் ஏன் வாழ்நாளின் கடைசிவரை தியாகஞ் செய்து கொண் டிருக்க வேண்டும்! இப்படிப்பட்டவர்களுடைய உலகாயதச் சித்தாந்தங்களிலே பயின்ற எத்தனை பேர், ஐயோ! தங்களுடைய லட்சியத்திற்கும் எதிர்காலத் திற்கும் தேசத்திற்கும், ஏன்? தங்க ளுக்குமே கூட துரோகிகளாகி விடுவதை நான் துக்கத்தோடு பார்த்திருக்கிறேன்! 1852ஆம் வருஷம் டிசம்பர் மாதம் இரண்டாந் தேதி பிரான்சில் இரண்டாவது ஏகாதிபத்தியத்தை அதிகாரிகள் திடீரென்று தாபித்த போது அதை பிரெஞ்சுத் தொழிலாளர்கள் அசட்டையாகத்தான் பார்த்துக் கொண்டிருந் தார்கள்.1 ஏனென் றால் சுக சௌக்கியத்தோடிருப்பதுதான் சமுதாயப் பிரச்னைகளில் முக்கியமான தென்று இவர்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. எந்த மனிதன் இவர்களுடைய தேசத்தின் சுதந்திர விளக்கை அணைத்து விட்டானோ அவனுடைய வாக்குறுதிக ளெல்லாம் உண்மை யென்று நம்பும்படியாக இவர்களுக்குப் போதனை செய்யப்பட்டது. இப்பொழுது அவர்கள் அந்தப் பிரெஞ்சு மக்கள் தங்கள் சுதந்தி ரத்தை இழந்துவிட்டதற்காகப் புலம்புகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுக சௌக்கியத்தையும் அவர்கள் அடைய வில்லை. ஆதலின், உங்களுக்கு நான் உறுதியுடன் கூறுவதென்ன வென்றால், கடவுளின் துணையில்லாமல் கடவுள் திருச்சட்டத்தில் நம்பிக்கையில்லாமல், சீல சுபாவமில்லாமல் தியாகஞ் செய்வதற்கான சக்தியில்லாமல் நீங்கள் ஒரு காலும் வெற்றிடைய முடியாது. அவ்வப் பொழுது சமுதாயத்தினிடையே நீங்கள் சில கலகங்களை உண்டு பண்ணலாம்; ஆனால், நானும் நீங்களும்கோருகிற ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ண முடியாது. உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும்; அப்படியே மற்றவர்களை உயர்த்த வேண்டும். எந்த ஒருசீர்திருத்தத்தினுடைய நோக்கமும், எந்த ஒரு சமுதாய மாற்றத்தினுடைய லட்சியமும் இதுவாகவே இருக்க வேண்டும். ஒருவீட்டிலே ஒரு மனிதன் வசிக்கி றானென்று வைத்துக் கொள்ளுங்கள். வீட்டைப் புதுப்பித்தும் அழகுபடுத்தியும் விடுவதனால் அந்த மனிதன் மாறி விடுகிறானா? அவனுடைய நிலைமை மாறி விடுகிறதா? இல்லை, அந்த வீட்டிலே ஓர் அடிமையுடைய தேகந்தான் மூச்சு விடுகிறது; ஒரு மனிதனுடைய ஆத்மா மூச்சு விடுவிதில்லை. அப்படிப்பட் வீட்டைச் சீர்திருத்துவ தெல்லாம் பயனற்றதுதான். அப்படிச் சீர்திருத்தி அழகுபடுத்தினா லும் அது, சவக்குழி மாதிரிதான். நீங்கள் சங்கமாகச் சேர்ந்து பொருளுற்பத்தி செய்வதானது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்பதை, உங்களுடைய யோக்கியப் பொறுப்பினாலும், நீங்கள் பரபரம் நட்புக் காட்டுவதினாலும் தியாகபுத்தி யினாலும் வேலை செய்ய வேண்டுமென்கிற ஆர்வத்தினாலும் ருஜுபடுத்திக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் கூலிக் காரர்களாயில்லாமல், பொருளுற்பத்தி செய்யத் தகுதியடையவர் களென்பதைச் சமுதாயம் அங்கீகரிக்கும், நீங்கள் முன்னேற்றமடைய வேண்டுமானால், அதற்குண்டான தகுதி உங்களிடத்தில் இருக்கிற தென்பதை நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். மூன்று விஷயங்கள் புனிதமானவை. அவை முறையே பரம்பரை; முன்னேற்றம்; கூட்டுறவு. இருபது வருஷங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறி யிருந்தேன்:- நூற்றாண்டுகள் கணக்காக மானிட சமுதாயத்தின் மூலம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கடவுளின் திருவாய் மொழியை நான் நம்புகிறேன். மனிதன் பொதுவானதொரு லட்சியத்திற்காக உழைக்க வேண்டுமானால், தன்னுடைய சீலத்தையும் மற்றவர்களுடைய சீலத்தையும் உயர்த்த வேண்டு மானால் அவன் குடும்பம், தேசம், மானிட சமுதாயம் ஆகிய மூன்று துறைகளின் மூலமாகத் தான் வேலை செய்ய வேண்டு மென்று அந்தத் திருவாய்மொழி எனக்குக் கூறுகிறது. மனிதன், தன்னுடைய லௌகிக வாழ்க்கையை எப்படி நடத்துகிறா னென்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே அவனுக்குச் சொத்துரிமை என்பது அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே அரசியல் நிருவாகத்தில் அவன் எவ்வளவு பங்கெடுத்துக் கொள்கிறான் என்பதைத் தெரிவிப்பதற்காகவே அவனுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமைகளை அவன் எப்படி உபயோகிக்கிறானென்பதைக் கொண்டு தான் கடவுள், அவனுடைய தகுதியையும் தகுதியின்மையையும் மதிப்பிடு கிறார். மனித சுபாவத்திலேயே அமைந்திருக்கிற இந்த உரிமை களையெல்லாம் மாற்றியும் சீர்திருத்தியும் அமைக்கலாமே தவிர, இவைகளை அடியோடு அழித்து விட முடியாது. பொதுவுடைமை போன்ற கனவுகள், அதாவது மனிதனுடைய தனித்துவத்தை, சமுதாயப் பொதுவிலே ஐக்கியப்படுத்தி விடுவது போன்ற கனவுகள், மானிட சமுதாயத்தின் சரித்திரத்தில் அவ்வப் பொழுது ஏற்படுகிற சில சம்பவங்கள் இவை தற்காலிக மாகத் தோன்றி அழிந்து போகக் கூடியவை. இவை யாவும் சித்திபெறா. கடவுள் சிருஷ்டிகள் யாவும், அவை சென்ற காலத் தனவேயாக, வருங்காலத் தனவோக, சாசுவதமான முன்னேற் றத்தை அடையுந்தன்மையன. சுக சௌக்கியத்தை லட்சியமாக வைத்துக் கொள்வதனால் மட்டும், மனிதன், உயர்ந்து விட மாட்டான்; அன்பு நிறைந்தவனாகமாட்டான்; பெருந்தன்மை யுடையவனாகமாட்டான்; தெய்வீக புருஷனாகமாட்டான். கூட்டுறவு வாழ்க்கையில் தான் மனிதன் முன்னேற்றமடைய முடியும். கூட்டுறவினால் சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் அதிகமாகின்றன; மானிட ஆத்மாவின் பலதிறப்பட்ட தோற்றங் களும் ஐக்கியப்பட ஹேதுவுண்டாகிறது; மனிதனுடைய தனி வாழ்வுக்கும் பொது வாழ்வுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. சுதந்திர மனிதர்கள்தான் சுதந்திர தேசங்கள் தான் சங்கமாகச் சேர்ந்து கூட்டுறவு பூண்டு வாழ முடியும். உண்டு வாழ்வதற் காகவே மனிதன் உழைத்துத் தன் காலத்தையெல்லாம் வீணாக்கக் கூடாது. அவன் தன்னிடத்திலே உறங்கிக் கிடக்கும் உயரிய தன்மைகளையெல்லாம் தட்டியெழுப்பி அபிவிருத்தி செய்ய வேண்டும். தன்னைத் தான் காப்பாற்றி கொள்வதுதான் மனித வாழ்க்கையின் லட்சியம்; சந்தோஷத்தை அநுபவிப்பது அவன் உரிமை என்று சொல்லப்படுகிற வாசகங்களைக் கேட்டு நான் நடுங்கிப் போகிறேன். ஏனென்றால் இந்த வாசகங்களினால் அகங்கார புத்தியுடையவர்கள்தான் அதிகமாவார்கள். இவர் களால் எதிர்கால நல்வாழ்வு நாசமுறும். மானிட சமுதாயம் இப்பொழுது ஜீவகளை யில்லாமலிருப்பதற்குக் காரணம் கடவுளும் பிரபஞ்சமும் ஒன்று என்ற பொதுவான ஒரு நம்பிக்கை யில்லாததுதான். இந்த நம்பிக்கை யில்லாததினால் மனிதன் சுயநல தேவதையை பூஜை செய்யத் தொடங்கிவிட்டான். இந்தப் பூஜை செய்யும் புரோகிதர்கள் யாரார்? கொடுங்கோ லரசர்கள்; தீய அரசாங்கங்கள். அவனவனும் அவனவனுக்கே என்ற கொடிய வாசகத்தை இவர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த வாசகத்தினால் மனிதனிடத்திலே அகங்கார புத்தியை உண்டு பண்ணிவிடலாம் என்பது அவர்களுக்குத் தெரியும், அகங்கார புத்தியுடையவனுக்கு அடுத்த படியிலுள்ளவன் அடிமை என்பதை அவர்கள் அறிவார்கள். இத்தாலியத் தொழிலாளர்களே! எனது சகோதரர்களே! இந்தப் படிகளுக்கு நீங்கள் செல்லாதீர்கள். இதைப் பொறுத்துத் தான் உங்களுடைய எதிர்காலம் இருக்கிறது . நீங்களனைவரும் கடவுளின் திருக்குமாரர்கள்; இதனால் அனைவரும் சகோதரர்கள். இதனை நீங்கள், வாழ்க்கையில் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்படி நிரூபித்துக் காட்டவேண்டுமானால் உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும்; உங்கள் கடமையைச் செய்ய வேண்டும். என்னால் முடிந்தவரை, உங்களுடைய கடமை என்ன வென்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். உங்களுடைய கடமை களிலே முக்கியமானது, உங்கள் தேசத்திற்குச் செய்ய வேண்டிய கடமை, உங்கள் தேசத்திற்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதும், அதில் ஒற்றுமையை நிலை நாட்டுவதும் உங்கள் கடமை. அஃது அவசியமுங்கூட. சுதந்திரமும் ஒன்றுமையுமுள்ள ஒரு தேசத்தில் தான் நான், இதுகாறும் எடுத்துச் சொன்ன திட்டங்களை அநுஷ் டானத்தில் கொண்டு வரமுடியும். தேசத்தின் அரசியல் வாழ்விலே நீங்கள் ஈடுபட்டால்தான் உங்களுடைய சமுதாய நிலைமை உயரும். உங்களுக்கு ஓட்டுரிமையில்லாவிட்டால் உங்களுடைய ஆவல்கள், தேவைகள் இவற்றின் உண்மையான பிரதிநிதிகளை நீங்கள் தெரிந்தெடுக்க முடியாது. ரோமாபுரியைத் தலை நகராகக் கொண்ட ஒரு பொதுஜன அரசாங்கத்தை நீங்கள் தாபிக்க வேண்டும். பொதுஜன சம்மதத்தின் பேரில் இத்தாலிய சட்டம் ஒன்றை நிறுவ வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் தேசத்தின் எல்லாப் பிரஜைகளும் முன்னேற்ற மடைவதற்கு வழி இருக்க வேண்டும். அரசியல் பிரச்னையிலிருந்து சமுதாயப் பிரச்னையை நீங்கள் வேறு பிரித்து விடுவீர்களாயின், தேசத்தின் ஆட்சி முறை எந்த விதமாக இருந்த போதிலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை; எங்க ளுடைய விமோசன மார்க்கத்தை நாங்கள் தேடிக் கொள்வோம் என்று சொல்வீர்களாயின், உங்களுடைய சமுதாய அடிமைத் தனத்தை நீங்களே ஊர்ஜிதப் படுத்திக் கொண்டவர்களாவீர்கள். சகோதரர்களே! உங்களிடத்திலே விடை பெற்றுக் கொள்வ தற்கு முன்னர், கடைசியாக உங்களுடைய மற்றொரு முக்கியமான கடமை யையும் நான் வற்புறுத்திச் சொல்லவிரும்புகிறேன். மானிட சமுதாய மனைத்தும் ஒன்றுபட்ட ஒரு குடும்பம் என்ற சித்தாந்தம் வெற்றி பெறுவதை யொட்டித்தான் உங்களுடைய விமோசனம் இருக்கிறது. மானிட சமுதாயமென்னும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பாதிபேர், இன்று, அரசியல், சமுதாயவிஷயங்களிலே சம அந்ததில்லாதவர் களாயிருக்கிறார்கள். இதனால் இவர்கள் இந்த ஒற்றுமையினின்று விலக்கப்பட்டிருக்கிறார்கள். ஒற்றுமைக்கு விரோதமாயுள்ள இந்த நிலைமையை நீங்கள் விலக்கப் பார்க்க வேண்டும். தொழிலாளர் களுடைய விமோசனத்தோடு, தீரிக ளுடைய விமோசனத்தையும் நீங்கள் காணவேண்டும். அதனால், உங்களுடைய சேவையானது அகில உலகத்திற்கும் பொதுவான ஓர் உண்மையினால் பரிசுத்தமடையும்.  ஜோஸப் மாஜினி 22-6-1805 இல் ஜினோவா நகரத்தில் பிறந்தான். வக்கீல் பரீட்சைக்குப் படித்துத் தேறினான். ஆனால் வக்கீல் தொழிலை அதிககாலம் நடத்தவில்லை. அதில் இவன் மனம் ஈடுபடவில்லை. அரசியலிலேயே இவன் நோக்கமெல்லாம் சென்றது. பதினாறாவது வயதிலிருந்தே அரசியல் விவகாரங்களில் சிரத்தை எடுத்துக்கொண்டான். இருபத்துநான்காவது வயதில், இத்தலியில் மன்னராட்சி ஒழிய வேண்டுமென்ப தற்காக உழைத்துவந்த கார்போனாரி சங்கத்தில் சேர்ந்தான். அதிகாரிகளின் கோபத்துக்காளானான். சிறை வாசம்; தேசப் பிரஷ்டம். 1831 ஆம் வருஷம் மார்சேல் நகரத்தையடைந்தான். அங்கு 1832 ஆம் வருஷம் யௌனவ இத்தலி என்ற சங்கத்தை தாபித்து, அதன் மூலம் இத்தலியின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டான். பல புரட்சிகளைத் தூண்டினான்; சில புரட்சிகளை நடத்தி னான். இங்கிலாந்தில் நீண்ட காலம் வாசஞ் செய்தான். அங்கிருந்துகொண்டு, இத்தலியின் சுதந்திரத்திற்குப் பல விதங்களில் பாடுபட்டுவந்தான். அநேக கஷ்டங்களையும் அனுபவித்தான். கடைசியில் 10-3-1872 இல் அறுபத் தேழாவது வயதில் பைஸா நகரத்தில் இறந்து போனான். மாஜினி மணிமொழிகள் பிரசுராலயத்தின் வார்த்தை (முதற் பதிப்பு) மாஜினி, ஒரு சீல புருஷன்; அரசியலில் பிரவேசித்த மகான்; இத்தலியின் சுதந்திரத்திற்காக, துன்பம் நிறைந்த வாழ்க்கையை மேற் கொண்ட தியாகமூர்த்தி; மனிதன் கடமையை உணர்ந்த மனிதன். அவனுடைய சொல்லிலும் எழுத்திலும் ஜீவகளை ததும்புகிறது. அவன் வாக்கிலிருந்து வந்த அத்தனையும் பொன்னேபோல் போற்றத்தக்கன. அவனது உணர்ச்சி அலைமோதும் அறிவுக்கடலில் எங்கள் ஆசிரியர் முத்துக் குளித்திருக்கிறார். அவர் சேகரித்துத் தொடுத்திருக்கிற இந்த முத்து மாலையை மகிழ்ச்சியுடன் தமிழன்னைக்கு அணிவிக்கிறோம். அரு. சொக்கலிங்கம், பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். வாசகர்களுக்கு (முதற் பதிப்பு) இத்தலியின் சுதந்திரத்திற்காகப் பெரிதும் உழைத்தவன் மாஜினி. இதனால் இவனை வெறும் அரசியல்வாதி என்று கருதிவிட முடியாது. இவன், பல துறை அறிஞன்; அருங்கலை விநோதன். புரட்சிக்குத் திட்டங்கள் வகுப்பதில் இவன் சாமர்த்தியசாலியா யிருந்தது போல், காவிய ஆராய்ச்சியிலும் இலக்கிய விமர்சனம் செய்வதிலும் ஆற்றல் வாய்ந்தவனாயிருந்தான். இத்தாலியக் கவிஞ னாகிய தாந்தே1 யினிடத்திலும், ஜெர்மானியக் கவிஞனாகிய கெதே2 யினிடத்திலும், ஆங்கிலக் கவிஞனாகிய பைரனி3 யிடத்திலும் இவனுக்கு அபார பக்தியுண்டு. ஆங்கில பண்டிதனும் இவனுடைய நெருங்கிய தோழனு மான தாம கார்லைலின்4 இலக்கிய சிருஷ்டி களை, புகழ வேண்டிய இடத்தில் புகழ்ந்தும், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும் அழகாக விமர்சனம் செய்திருக்கிறான். இயல், இசை, நாடகம் இம் மூன்றையும் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறான். இவனுடைய எழுத்துக்களில் அறிவும் உள்ளமும் இசைந்து செல்கின்றன; தாய் நாடும் மானிட சமுதாயமும் ஒன்று கூடுகின்றன; பூலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யம் வந்து கலக்கிறது; தனி மனிதனும் சமுதாய மனிதனும் சேர்ந்து காட்சியளிக்கிறார்கள்; உரிமையும் கடமையும் பின்னிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். மாஜினி, மதப்பற்று மிகவுடையவன்; ஆனால் மத வெறிய னல்லன். மதப் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கும் போலித் தனங்களை இவன் வன்மையாகக் கண்டிக்கிறபோது, நாதிகத்தின் எல்லைக் கோட்டைக்காண கச்சைகட்டிக் கொண்டு விட்டானோ என்று சிலர் ஐயுறுவர். ஆனால் அப்படியில்லை. இவன் சிறந்த ஆதிகன்; கடவுளுண்மையை மனப்பூர்வமாக ஒப்புக்கொண் டவன். மக்களுக்குச் செய்யும் தொண்டுதான் ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு என்பது இவன் கோட்பாடு. சமய வாசனை வீசப்பெறாத அரசியலை இவன் அறவே வெறுத்தான். இவன் கூறிப்போந்த கருத்துக்கள், ஏறக்குறைய மூன்று தலை முறைகளுக்கு முற்பட்டவை. ஆயினும் இன்றைய உலகத்திற்கு மிகவும் பொருத்தமானவை; தேவையானவை. அப்படியே இத்தாலிய மக்களைப் பார்த்து இவன் கூறிய மொழிகள், எல்லா நாட்டவராலும் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தகுதியுடையவை. இதனாலேயே, இவனுடைய எழுத்துக்களிலிருந்து சிலவற்றைத் திரட்டி, இங்குக் கொடுத்திருக்கிறேன். இவன் ஒரே கருத்தைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறான். ஆனால் ஒவ்வோரிடத்திலும் அந்தக் கருத்து, புதியபுதிய சொல்லாடையை அணிந்து கொண்டு தோன்றி நமது உள்ளத்தை மகிழ்விக்கின்றது. இவனுடைய சொற்சாதுரியத்தையும் கற்பனாசக்தியையும் கண்டு நாம் பிரமிப்படைகிறோம். மாஜினியின் மேதைக்கு எடுத்துக் காட்டுப்போல இருப்பது மனிதன் கடமை என்னும் நூல். அதனையும், இந்தச் சிறிய தொகுப்பு நூலையும், மாஜினியின் வாழ்க்கை வரலாற்றையும், மூன்றையும் சேர்த்துப் படிக்குமாறு எனது சகோதரர்களைக் கேட்டுக்கொள் கிறேன். ஒரே மகா புருஷனை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். தியாகராயர் நகர், சென்னை. 1-3-30. வெ. சாமிநாதன் சுதந்திரம் சுதந்திரம் என்பது, நல்லதை யடைவதற்கான ஒரு வழி; அதுவே முடிவல்ல. * * * சுதந்திரம் என்ற வார்த்தையின் உட்கருத்து என்னவென்பதைத் தெரிந்து கொள்ளாமலே, சுதந்திரம், சுதந்திரம் என்று வெறுமனே கூச்சல் போடுவது, அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள ஓர் அடிமையின் சுபாவம்; அவ்வளவுதான். * * * சுதந்திரத்தை ஒரு லட்சியமாகக் கொண்டு அதனை நாம் நாடவில்லை; மேலான, நிலையான ஒரு லட்சியத்தை யடைவதற்கு அஃதொரு சாதனம் என்று கருதியே அதனை நாடினோம். நமது கொடியில் குடியரசின்கீழ் ஒற்றுமை என்ற வாசகங்களைப் பொறித்தோம். புதியதொரு சமுதாயத்தைச் சிருஷ்டிக்கவே விரும்பினோம். * * * தியாகமில்லாமல் சுதந்திரம் பெற்றால், அந்தச் சுதந்திரத்தின் மீது ஜனங்கள் எப்படிப் பற்று வைப்பார்கள்? சுதந்திரம் மதிப்புடையதா யிருந்தால்தான் அது வலுவுள்ளதாயும் நீடித்தும் இருக்கும். மற்றவர்கள், தயை கூர்ந்தோ அல்லது தங்களுக்கு அனுகூலம் என்று கருதியோ நமக்குச் சுதந்திரம் அளிப்பார் களானால், அந்தச் சுதந்திரத்திற்கு மதிப்பேது? * * * சுதந்திரம் நமக்குத் தேவை. ஏன்? உரிமையைச் செலுத்து வதற்காகவும் கடமையை நிறைவேற்றுவதற்காகவும் தேவை. அந்தச் சுதந்திரத்தை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நமது அரசியல் பயிற்சியை மேலான சமயக் கொள்கையாகக் கொண்டுவிடுவோ மானால், சுதந்திரம் எப்படி யிருக்க வேண்டுமோ அப்படியே அஃது ஆகிவிடும். அதாவது நல்லதைச் செய்வதற்குப் பல சாதனங்கள் உண்டல்லவா? அவற்றில் சிறந்தனவற்றைத் தெரிந்தெடுத்துக் கொள்கிற சக்தி நமக்கு ஏற்பட்டுவிடும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் சமத்துவத்தைக் காண்பதற்குச் சுதந்திரம் ஒரு சாதனமா யில்லாவிட்டால் அந்தச் சுதந்திரத்திற்கு அர்த்தமே யில்லை. * * * எல்லா விஷயங்களிலும், எல்லா மனிதர்களுக்கும் சுதந்திரம்; சமுதாய விஷயங்களிலாகட்டும், அரசியல் விவகாரங்களிலாகட்டும், உரிமைகளை அனுபவிப்பதிலும், கடமைகளைச் செய்வதிலும் எல்லோருக்கும் சமத்துவம்; மானிட சமுதாயம் முழுவதும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமென்ற குறிக்கோளைக் கொண்ட எல்லாச் சுதந்திர புருஷர்களினுடைய, எல்லா ஜாதியின ருடைய சகோதரத்துவம். இவைதான் நமது சின்னம்; நமது நோக்கம்; நமது முயற்சி. * * * பிரதியொரு மனிதனும் ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்று வதற்காகவே தோன்றி யிருக்கிறான். அந்தக் காரியத்தை நிறை வேற்றுகிற விஷயத்திலும் அதற்கான சாதனங்களைத் தெரிந் தெடுத்துக் கொள்கிற விஷயத்திலும் அவனுக்கு எந்த விதமான தடைகளோ நிர்ப்பந்தங்களோ இருக்கக்கூடாது. அப்படித் தடை களும் நிர்ப்பந்தங் களும் இல்லாமல் தன்னுடைய சக்திகளை உபயோகிக்க ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருக்க வேண்டும். இந்த உரிமைக்கே சுதந்திரம் என்று பெயர். ஆனால், அவனுக் கிருக்கிற இந்த உரிமை, மற்றவர் களுடைய இந்த உரிமையைப் பாதிப்பதா யிருக்கக்கூடாது. எல்லாருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளுண்டு. அப்படியே கடமைகளுமுண்டு என்பதை அங்கீகரிப்பதுதான் சமத்துவம். எல்லாச் சமுதாய சக்திகளும் சேர்ந்து செய்கிற வேலையின் பலன் களை, ஒவ்வொரு மனிதனும், அவனவனுடைய உழைப்புக்குத் தகுந்தபடி அனுபவிக்கவேண்டும். இதில்தான் சமத்துவம் இருக் கிறது. சகோதரத்துவம் என்பது பரபர அன்பு. அதாவது ஒரு மனிதன், தன் விஷயத்தில் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க் கிறானோ அப்படியே அவன் மற்ற வர்கள் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும். எல்லாவிதமான யதேச்சாதிகாரங்களும் சுதந்திரத்திற்கு முரண் பட்டவை. எல்லாவிதமான சலுகைகளும் சமத்துவத்திற்கு முரண் பட்டவை. அகந்தையினால் செய்யப்படுகிற எல்லாக் காரியங்களும் சகோதரத்துவத்திற்கு முரண்பட்டவை. உரிமையும் கடமையும் உரிமையானது, சங்கிலிகளை உடைத்தெறியும் விஷயத்தில் பேராற்றல் வாய்ந்ததா யிருக்கிறது. ஆனால் ஒத்துழைப்பு, அன்பு போன்ற இழைகளைப் பின்னும் ஆற்றல் அதற்கு இல்லை. * * * உரிமைத்தத்துவமானது, கொடுமைகள் நிறைந்த அல்லது அழுகிக்கொண்டிருக்கிற ஒரு சமுதாயத்தை அடியோடு அழித்துப் போடும் சக்தியுடையதா யிருக்கலாம். ஆனால் திரமான அதி வாரத்தின்மீது புதிதாக ஒரு சமுதாயத்தை தாபிக்கும் சக்தி அதற்கில்லை. * * * உரிமையானது, எதிர்க்கும்; அழிக்கும்; ஆக்காது. ஆனால் கடமையோ, ஆக்கும்; சேர்க்கும்; ஒன்றுபடுத்தும். அது, பொதுவான ஒரு நியதியினின்று பிறப்பது. உரிமை அப்படி யில்லை. அது, தனிப் பட்ட ஒரு மனிதனுடைய இச்சையிலிருந்து, தீர்மானத்திலிருந்து பிறக்கிறது. உரிமைக்கு விரோதமாகப் போராட்டம் நிகழுமானால் அதனைத் தடை செய்வதொன்றுமில்லை. எந்த ஒரு மனிதனும் வேறொருவன் அனுபவிக்கிற உரிமை, தனக்குக் கெடுதலா யிருக்கிற தென்று கருதி கலகஞ் செய்யக்கூடும். இந்த மாதிரியான நிலைமை யில் இரு கட்சியினருக்கும் மத்தியிலே இருந்து தீர்ப்பளிக்கக் கூடியது பலாத்காரந்தான். உரிமையொன்றையே அடிப்படையாகக் கொண்டு எழுந்த சமுதாயங்கள், தங்களை எதிர்த்தவர்களுக்கு இந்த விடையையே-இந்தப் பலாத்கார விடையையே-அளித்திருக்கின்றன. ஆனால் கடமையை அடிப்படையாகக்கொண்டு எழுந்த சமுதாயங்கள், பலாத்காரத்தைக் கையாளமாட்டா. கடமையை ஒரு விதியாக ஏற்றுக்கொண்டுவிட்டால் பேராட்டத்திற்கு ஏதுவே இல்லாமற் போகிறது. அந்தக் கடமையானது பொது நோக்கத் திற்குத் தனிப்பட்ட நபரை உட்படுத்திவிடுவதால், உரிமையினால் எந்தத் தீங்குகள் வராமல் தடுக்க முடியாதோ; அந்தத்தீங்குகளின் அடிவேரையே அறுத்தெடுத்து விடுகிறது; அந்தத் தீங்குகள் ஏற்படாமலேயே செய்துவிடுகிறது. தவிர, முன்னேற்றம் என்று சொல்கிறோம். அந்த முன்னேற்றம் உரிமையின் விளைவல்ல. முன்னேற்றம் வேண்டுமென்பதை அந்த உரிமை ஒப்புக் கொள்கிறது; அவ்வளவுதான். உரிமையை உப யோகிப்பதென்பது, அவசியத்தை முன்னிட்டு, திறமையின் அளவுக் குட்பட்டு இருக்கிறது. இதனால் முன்னேற்றமடைவதை விடுத்து, ஒழுங்கில்லாத, குறிக்கோளில்லாத உரிமையின் சுயேச்சாதிகாரத் திற்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. ஜனங்கள் வானுலகத்தில் நமது ஆண்டை ஒருவரே; அவர்தான் கடவுள். அவருடைய சட்டங்களை பூலோகத்தில் விளக்கக்கூடியவர் ஒருவரே; அவர்தான் ஜனங்கள். * * * ஜனநாயகம் என்றால், எல்லோரும் சுதந்திரம் பெற்றவர் களாகி விட்டார்களென்பது அர்த்தமல்ல; எல்லோராலும் சுயேச்சையாக அங்கீகரிக்கப்பட்ட, எல்லோருக்காகவும் நடை பெறுகிற அரசாங்கம் என்றே அர்த்தம். * * * பொதுவாக ஒரு நாட்டில், சிறப்பாக எந்த நாட்டில் பெரும் பாலான மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களா யிருக்கிறார் களோ அந்த நாட்டில், பாமரஜனங்களுக்குப் புதகங்களா யிருப்பவை யாவை? செயல்கள்தான். * * * உண்மையான அரசாங்கம், ஜனங்களுடைய அறிவாக விளங்குகிறது. அந்த அறிவைச் செயலில் கொண்டுவருகிற வகை யிலேயே அந்த அரசாங்கம் உழைக்கவேண்டும். அந்த முறையிலேயே அதன் அமைப்பு இருக்க வேண்டும். ஆசைக்காகவோ, அதிகாரத்திற் காகவோ ஓர் அரசாங்கம் இருத்தல் கூடாது. நாட்டுப்பற்று என்னுடைய வாழ்க்கை, என்னுடைய மதம், என்னுடைய தாபம் எல்லாம் நான் கொண்டுள்ள நாட்டுப் பற்றுதான். ஆனால் என்னோடு கலந்து உழைப்பதாகப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்ட சிலருக்கு, நாட்டுப் பற்றென்பது ஒரு விளையாட்டுப் பழக்கம் போலவே இருக்கிறது. அவர்களிடத்தில் ஊக்கமில்லை; ஆழ மில்லை. ஊக்கமுடையவர்கள், உணர்ச்சியுடையவர்கள் சாதாரண தொழிலாளர்கள்தான். தேசமும் மானிட சமுதாயமும் நம்பிக்கையும் லட்சியமுமில்லாத சமுதாயம் நீடித்து வாழாது. * * * எந்த ஒரு தேசமும், தனக்கென்று வகுக்கப்பட்டுள்ள காரியத்தை முடிக்காமல் இறந்து போவதில்லை. அந்தக் காரியத்தைச் செய்யக்கூடாதென்று தடுத்து, அதனை நீங்கள் அழித்துவிட முடியாது. ஆனால் அதன் அமைப்பையும் செயல் களையும் நீங்கள் ஓங்கவிடாமல் செய்யலாம். * * * தேசீயம், மானிட சமுதாயம் இரண்டும் புனிதமானவையே. மானிட சமுதாயத்தை மறப்பது, நாம் எந்த நோக்கத்திற்காக உழைத்து வருகிறோமோ அந்த நோக்கத்தை மறப்பதாகும். அப்படியே தேசத்தை மறப்பது, அந்த நோக்கத்தை யடைய எந்தச் சாதனத்தை உபயோகிக்கிறோமோ அந்தச் சாதனத்தைத் துறப்பதாகும். * * * ஒவ்வொரு தேசத்தினுடைய வாழ்கையிலும் இரண்டு நிலை களுண்டு. தன்னைத்தானே திருத்தியமைத்துக் கொள்ளுதல், மானிட சமுதாயத்தின் நன்மைக்காக, தான் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து அவற்றிற்காகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளுதல்; இது முதல் நிலை. பின்னர், சுய நிலையை யடைந்ததும், அதாவது, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றலைப் பெற்றதும், தனது மகத்தான செயல்களினால், மானிட சமுதாயத் தோடு தன்னை இணைத்துக் கொள்ளுதல்; இஃது இரண்டாவது நிலை. * * * தேசமில்லாவிட்டால் மானிட சமுதாயம் இல்லை. தனிப் பட்ட மனிதர்கள் எப்படி ஒரு தேசத்தின் பிரஜைகளா யிருக்கிறார் களோ அப்படியே தனிப்பட்ட தேசங்கள், மானிட சமுதாயத்தின் பிரஜைகளா யிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி அக வாழ்க்கையென்றும் புறவாழ்க்கையென்றும் இரண்டுவிதமான வாழ்க்கைகள் உண்டோ அப்படியே ஒவ்வொரு தேசத்திற்கும் உண்டு. எப்படி ஒவ்வொரு மனிதனும், தன்னிடமிருக்கும் விசேஷ சக்திகளைக்கொண்டு, தனது தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டுமோ அப்படியே ஒவ்வொரு தேசமும், தன்னிட மிருக்கும் விசேஷ சக்திகளைக்கொண்டு, தனக்கென்று வகுக்கப்பட் டுள்ள விசேஷ கடமையைச் செய்வதன்மூலம் மானிட சமுதாயத்தின் படிப்படியான முன்னேற்றத்தை நாடவேண்டும்; அதன் நலனை அதிகரிக்கச் செய்யவேண்டும். உண்மையான குடியரசு எது? குடியரசு என்றால் தேசத்தினரின் பொறுப்பிலிருக்கும் தேசீய அரசாங்கத்திற்கே பெயர். அந்த அரசாங்கம், ஜனங்களுடைய இச்சையைப் பிரதிபலிக்கக்கூடிய சட்ட திட்டங்களினால் அமைக்கப்படுகிறது. தேசத்தின் சுயாதிபத்திய உரிமையானது, அந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலையும் தழுவி நிற்கிறது; அந்த அரசாங்கம் செலுத்தும் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் மூலமாகவும் மையமாகவும் இருக்கிறது. உண்மையான ஒரு குடியரசில் எல்லா நலன்களும் அவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பிரதிநிதித்துவம் பெறுகின்றன எல்லாச் சலுகைகளும் சட்டத்தின் மூலம் மறுக்கப்படுகின்றன. ஒரு செயலின் தராதரத்தைப் பொறுத்தே அதற்குச் சன்மானமோ தண்டனையோ அளிக்கப்படுகிறது. வரிகள், மற்றக் கட்டணங்கள், தொழில் முதலியவற்றிற்கு விதிக்கப்படும் நிர்ப்பந்தங்கள் இவை பலவும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. ஏனென்றால், அரசாங் கத்தின் செலவினங்கள், உத்தியோகதர்களின் எண்ணிக்கை முதலியன மிகவும் குறைவாக இருக்கின்றன. பெரும்பாலோருக்கும் ஏழைகளுக்கும் அதிகமான நன்மையைத் தரக்கூடிய மாதிரியாகவே எல்லா தாபனங்களும் வேலை செய்கின்றன. ஜனங்களிடையே ஒத்துழைப்பு மனப்பான்மை விருத்தியடைகிறது. கல்வியின் மூலம், ஜனங்களுக்கு முன்னேற்றப் பாதையானது திறந்து விடப்படுகிறது. இறுதியாக, சமுதாயம் முழுவதும் வலிமையுடனும், அமைதியுட னும், மகிழ்ச்சி யுடனும் ஒற்றுமைப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சமுதாயமே, சீலத்திற்கும் சுதந்திரத்திற்கும், முன்னேற்றமான நாகரிகத் திற்கும், தருமத்திற்கும், இம்மண்ணுலகின் மீது நிறுவப்பட்ட ஒரு கோயிலாக விளங்கும். வாழ்க்கை ஒன்று, நாம் மேன்மையுற்றவர்களாக வாழவேண்டும்; அல்லது அழியவேண்டும். * * * இடமும் காலமும் நம் வசத்திலேயே இருக்கின்றன. அப்படியே முன்னேற்றம் என்பதும் நம் வசத்தில் இருக்கிறது. * * * உயர்ந்த லட்சியமில்லாத வாழ்க்கை, அந்த லட்சியத்திற்காகப் பாடுபடாத வாழ்க்கை, வாழ்க்கையல்ல. * * * நாம் புத்துயிர் பெற வேண்டுமானால், புத்துயிர் பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்; அந்த நம்பிக்கையைச் செயலில் கொண்டு வரவேண்டும். அந்தச் செயலோ, சுயமானதா யிருக்க வேண்டும்; மற்றவர்களைப் பார்த்து நகல் செய்வதாயிருக்கக் கூடாது. * * * பிரதியொரு மனிதனும் மூன்றுவித நிலைகளை அல்லது மூன்றுவித வாழ்க்கைகளையுடையனவா யிருக்கின்றான். ஒரு நிலையில், மானிட சமுதாயத்திலே ஒருவனாய், அதனோடு ஐக்கியப் பட்டவனாயிருக்கிறான்; அதனுடைய வாழ்க்கையில் பங்குகொள்ள வேண்டியவனா யிருக்கிறான். உலகத்திலே ஒருவனாக, உலக மனிதனாக இருக்கின்ற நிலை இது. மற்றொரு நிலையில், அவன், தன்னோடு, தன்னுடைய மனச்சாட்சியோடு, தன்னைப் படைத்த கடவுளோடு ஐக்கியப்பட்டவனா யிருக்கிறான். அவனுடைய அக வாழ்க்கை இது. இன்னொரு நிலையில், அவன், தனது உடல், உணர்ச்சி, பாசம், போஷணை முதலியவைகளோடு ஐக்கியப்பட்ட வனாயிருக்கிறான். அவனுடைய புற வாழ்க்கை இது. * * * நீ ஒரு மனிதனாக இருக்க விரும்புகிறாயா? அப்படியானால், எது அழகுடையதோ, எது மகத்தானதோ, எது தெய்விகத்தன்மை யுடையதோ, அதனை அறிந்து போற்றக்கூடிய மாதிரி உன் வாழ்க்கையைப் பண்படுத்திக்கொள். அதே மாதிரி மற்றவர்களை யும் பயன்படுத்து. இது பெரிய காரியமில்லையே யென்று நினைக்க லாம். நீ நினைப்பதைக் காட்டிலும் இது கடினமான சாதனை. மனத்தில், செய்யவேண்டுமென்ற விருப்பம் இருந்தால் மட்டும் போதாது. ஏதோ உற்சாக மேலீட்டினால் அவ்வப்பொழுது ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்டால் மட்டும் போதாது. உணர்ச்சி வசப்பட்டவர்களே அப்படிச் செய்வார்கள். அவர்கள் உண்மை யான மனிதர்களுக்கு ஒருபடி தாழ்ந்தவர்களே. நீ அப்படிக் கில்லாமல், எப்பொழுதும் மேலே சொன்னவற்றை வழிபடுதல் வேண்டும். உன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நீ வழிபடுவது புலனாகவேண்டும். அந்த வழிபாட்டின் உருவமாகவும், அதனை மற்றவர்களுக்குத் தூண்டிவிடுகிறவனாகவும் நீ இருக்கவேண்டும். * * * மனிதன், முன்னேறவேண்டும்; படிப்படியாக முன்னேற வேண்டும்; உழைத்து உழைத்து முன்னேறவேண்டும். அவன், நல்ல செய்கைகளைச் செய்தும், மற்றவர்களுக்காகத் துயரத்தை அனுப வித்தும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்கவேண்டுமென்று அவனுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடாது. அதற்கு மாறாக, பிறர் நலத்தின் பொருட்டுத் துன்பத்தை அனுபவிப் பதற்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்; உலகத்தின் விமோசனத் திற்காகப் போராடு மாறு கற்றுக்கொடுக்க வேண்டும். மனிதனே! வாழ்க்கை யென்பது, சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக ஏற்பட்ட ஓர் உரிமை; ஆதலால் நன்றாகச் சுகத்தை அனுபவிக்கவும் என்று அவனைப் பார்த்துச் சொல்லக்கூடாது; வாழ்க்கை யென்பது ஒரு கடமை; பலனைப் பற்றிச் சிந்தனை செய்யாமல் நல்லதைச் செய் என்றே சொல்ல வேண்டும். அவனவனுக்கும் அவனவனுடைய தேவைக்குத் தகுந்த படி அல்லது விருப்பத்திற்குத் தகுந்தபடி சுகம் கிட்டும் என்று அவனுக்கு உபதேசிக்கக்கூடாது; மற்றவர்கள் மீது எந்த அளவுக்கு அவன் அன்பு செலுத்துகிறானோ அந்த அளவுக்கே அவனுக்குச் சுகம் கிட்டும் என்றே உபதேசிக்க வேண்டும். மனித சமூகத்தைப் பார்த்துச் சொல்வோமாக:- சகோதரர்களே! வாருங்கள்; துன்பத்தை அனுபவிக்க வாருங்கள். நீங்கள், பட்டினியாகக் கிடக்கவேண்டி யிருக்கலாம்; ஏமாற்றப்படலாம்; சாபமிடப் படலாம்; ஆயினும் நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். சீலத்தின் குரல் வெகு நாள் வரையில் பிறருக்குக் கேளாதிருக்கலாம். ஆனால் ஒரு நாளில்லாவிட்டால் மற்றொரு நாள்-நிச்சயமாக ஒரு நாள்-கடமையைச் செய்கிறவர்கள் மகா வீரர்களாகக் காட்சியளிப் பார்கள். அன்பு செலுத்துங்கள் அன்பு! அன்பு!! உங்களுடைய சுகதுக்கங்களில் கலந்து கொள்ளச் சித்தமாயிருக்கிற உங்கள் குடும்பம், மனைவி, உற்றார் உறவினர், அனைவரிடத்திலும் அன்பு, செலுத்துங்கள். இறந்து போனவர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள். அவர்கள் உங்களை நேசித்தார்கள்; நீங்களும் அவர்களை நேசித்தீர்கள். ஆனால் நீங்கள் காட்டும் அன்பானது ஆத்மீக அன்பாயிருக்கட்டும். சுகத்தை நாடி அன்பு செலுத்தாதீர்கள். அன்பு, கொடுக்குந் தன்மையது; எதிர்கால வாழ்விற்காக ஓர் உறுதிமொழியைப் பெற்றுக்கொள்வது. வாழ்க்கைப் பாதையிலே சோர்ந்துபோனவர்களுக்கு உதவியளிப்பதற்காகவே, அப்படியே நாம் சோர்ந்து போயிருக்கிற காலத்தில் நமக்கு உதவி கிடைக்கும் பொருட்டே அன்பானது, ஆண்டவனால் அருளப்பட் டிருக்கிறது. கடமை என்னும் பாதையிலே மலர்ந்திருக்கிற மலர் தான் அன்பு. பிறரிடம் அன்பு செலுத்தி, உங்களைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுங்கள்; பலவானாகுங்கள்; விருத்தியடை யுங்கள். * * * மானிட சமுதாயத்தை நேசியுங்கள். உங்கள் நாடுதான் உங்கள் தொட்டில்; மானிட சமுதாயம் உங்களுடைய தாயார். தாயாரை நேசிக்கா விட்டால் உங்களோடு தொட்டிலிலிருக்கும் உங்கள் சகோதரர்களை எப்படி நேசிக்கப்போகிறீர்கள்? சுதந்திரத்திற்காக வும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் பல இடங்களில் பல முகங் களாகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அந்தப் போராட்டங் களை நடத்துகிறவர்களுடன் ஒன்றுபடுங்கள். அவர்களும் உங்க ளோடு ஒன்று சேருவார்கள். நீங்களே தனித்திருந்து வெற்றிகாண முடியுமாயின் மற்றவர்களுடைய உதவியை நாடாதீர்கள். ஆனால் நீதிக்கும் பலாத்காரத்திற்கும் கடுமையான போராட்டம் நடை பெறுங் காலத்தில் நாங்கள் எங்களைப்போல் நீதிக்காக கொடி தூக்கியிருக்கிறவர்களின் பக்கமே சேருவோம் என்று எல்லோ ருக்கும் கூறுங்கள். கடைசியாக, இளைஞர்களே! நீங்கள் கொண்டுள்ள லட்சியத் தின் மீது அன்பு செலுத்துங்கள்; அதனைப் போற்றுங்கள். உங்க ளுடைய மனச் சாட்சிக்கு மரியாதை செலுத்துங்கள். எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். உங்களுடன் சிலர் மாறுபடலாம். ஆனால் நாட்டுக்கு நலந் தரத்தக்க விஷயங்களில் அவர்களுடனும் ஒத்துழையுங்கள். உங்கள் கொடியை மட்டும் இறக்காதீர்கள். தைரியமாக உங்கள் கொள்கையைப் பிரகடனஞ் செய்யுங்கள். மதமும் அரசியலும் மதமும் அரசியலும் பிரிக்கமுடியாதவை. மதச் சார்பில்லாத அரசியலானது, கொடுங்கோன்மையையோ குழப்பத்தையோதான் உண்டு பண்ணும். இந்த இரண்டும் நமக்கு வேண்டாம். நமக்கு, வாழ்க்கை யென்பது ஒரு படிப்பினை. அந்தப் படிப்பை அபிவிருத்தி செய்து கொள்வதற்கும், அதனைக் காரியாமிசத்தில் கொண்டு காட்டுவதற்கும் சாதனமா யிருப்பது சமுதாயம். மதம், நமக்கு உயர்ந்த படிப்பு; அந்தப் படிப்பு செயலில் கொண்டுவரப்படுகிற போது அரசியலாகிறது. * * * மத நம்பிக்கைக்கும் அரசியல் நம்பிக்கைக்கும் மத்தியில் ஒரு பிளவு! பூலோகத்திற்கும் மோட்ச லோகத்திற்கும் மத்தியில் ஒரு பிளவு!! இப்படிப் பிளவு உண்டுபண்ணிவிட்டது தவறு என்பது என் கருத்து. இதனால்தான் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக் கடிக்கும், ஓர் அதிர்ச்சியிலிருந்து மற்றோர் அதிர்ச்சிக்கும் போய்க் கொண்டே இருக்கிறோம். அமைதியை நாம் காணவேயில்லை. ஆதலின் பூலோகத் தோடு மோட்ச லோகத்தையும். அரசியலோடு அதனை வழிப்படுத்தும் நித்தியமான உண்மைகளையும் இணைத்து விட வேண்டியது அவசிய மாகும். இப்படிச் செய்யாமற்போனால், மகத்தான, நிலைத்திருக்கக்கூடிய காரியங்களை நம்மால் சாதிக்க முடியாது. யுத்தம் நியாயமாவது எப்பொழுது? மானிட சமுதாயத்தின் நன்மைக்காகவோ, அல்லது ஒரு பெரிய உண்மையை நிலைநாட்டும் பொருட்டோ, அல்லது ஒரு பெரிய பொய்யைக் குழிதோண்டிப் புதைக்கவோ போர் செய்யலாம். வேறு காரணங்களுக்காகப் போர் தொடங்குவது பெருங்குற்றமே யாகும். * * * மரணம் எப்படி புனிதமானதோ அப்படியே யுத்தமும் புனிதமானது. ஆனால் மரணமானது, எப்படி புனிதமான ஒரு வாழ்க்கையின் நுழைவாயிலைத் திறந்துவிடுகிறதோ அப்படியே யுத்தமும் புனிதமான ஒரு லட்சியத்தையுடையதா யிருக்க வேண்டும். முந்தியும் இப்பொழுதும் முன்னர், நம்முடைய எஜமானர்கள், அதாவது நம்மை ஆண்டு வந்தவர்கள், நம்மிடையே பகைமையை வளர்த்துக்கொடுத் தார்கள்; நம்மிடையே பரபர சந்தேகத்தை உண்டுபண்ணி னார்கள். நாமெல்லோரும் அடிமைகளா யிருந்தபடியால் நாம் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ளவில்லை. நமக்குத் திடமான ஒரு கொள்கையுமிருக்கவில்லை. ஒரு சிலருடைய நலன்களை மட்டுமே நாடினோம். எல்லோரும் சுதந்திரமா யிருக்கவேண்டியவர்கள் என்ற திட நம்பிக்கையிருந்தால்தான் ஒரு ஜாதி சுதந்திரம் பெற முடியும், அதனைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை நாம் தெரிந்து கொள்ளவில்லை. பின்னர் சுதந்திரம் பெற்றோம்; புதிய வாழ்வை அடைந்தோம். அந்த வாழ்வுக்கேற்ற மாதிரி, நமக்குள்ளே யிருக்கப் பட்ட சில பிரதேசங்களைப் பொறுத்த பிரச்னைகளைச் சமரஸ மாகத் தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால்............. மகான்கள் மகான்கள் யார்? மானிட சமுதாயத்தின் முன்னேற்ற மார்க்கத்தில் காணப்பெறும் மைல் கற்கள். * * * பலாத்காரம் காண்கிற கனவுகள் சொற்ப காலந்தான் இருக்கும். நீதியின் மீதும் புனிதமான சுதந்திரத்தின் மீதும் யார் அதிகமான நம்பிக்கை வைக்கிறார்களோ, அவைகளுக்காகப் போராடுகிறார்களோ, துன்பங்களை அனுபவிக்கிறார்களோ, அவர்கள், சாசுவதமா யிருக்கக்கூடிய வெற்றியை யடைகிறார்கள். * * * பழைய யுகம் மறையுந் தறுவாயிலிருக்கிறது; புதிய யுகம் தோன்ற இருக்கிறது. இந்த இடைக் காலத்தில் ஒரு மகான் தோன்று வார். அவர், கர்ம வீரரா யிருப்பார்; மற்றவர்களை ஆட்கொள்வார். அவர் தம்முடைய வாழ்க்கையில், சென்ற காலத்துச் சிறப்பான அமிசங்களை யெல்லாம் பிரதிபலித்துக் காட்டிக்கொண்டிருப்பார். அவற்றை அனுஷ்டானத்தில் கொண்டுவர சில தாபனங்களைத் தோற்றுவிப்பார்; பிற நாடுகளில் அவற்றைப் பரப்புவார். அவர் தம்மை யறியாமலே, எதிர்காலத்தின் நல்வாழ்வுக்கு அடிகோலுவார். ஆனால் அதை அவர் வெளிப்படுத்து வதில்லை. அவருக்கே அது தெரியாமலிருக்கும். எத்தகைய கல்வி வேண்டும்? மாஜினி தன் நண்பனொருவனுக்கு, அவன் மகன் எத்தகைய கல்வி பெறவேண்டுமென்பதைப் பற்றி எழுதிய கடிதம்:- உங்களுடைய மகனின் கல்வியைப்பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் அது முடியாத காரியம் என்று அஞ்சுகிறேன். ஏனென்றால், முதலில் அவனை நான் தெரிந்துகொள்ள வேண்டும்; அவனுடைய மனப்போக்குகள், அவனிடத்திலேயுள்ள சக்திகள், இது வரையில் அவன் என்னென்ன கற்று வந்திருக்கிறான் என்பவைகளையும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுப் படையாக, இப்படியிருக்க வேண்டும், அப்படிச் சொல்ல வேண்டு மென்று சில நியதிகளைக் கூறிவிடுவதில் அர்த்தமில்லை. அவனுடைய மனச்சார்புக்குப் பொருத்தமான சில விசேஷ நியதிகளையே வகுத்துக் கொடுக்க வேண்டும். அவனுடைய மனப்போக்குகளைப்பற்றிக் குறிப்பிட்டேன். அவை யென்ன என்பதை நீங்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதத்தில் விசேஷத் தன்மை யுடையவனாயிருக்கிறான்; குறிப்பிட்ட ஒன்றில் திறமை வாய்ந்தவனாயிருக்கிறான். உங்களுடைய மகனிடத்திலுள்ள விசேஷ சக்தி யென்ன என்பதை நீங்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்; அதற்குத் தகுந்தாற் போல் பின்னர் அவனது கல்வித் திட்டத்தை வகுக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் நன்மை பயக்கக்கூடிய சில பொதுவான விஷயங்கள் இருக்கின்றனவல்லவா, அவற்றை முதலில் அவனுக்குப் போதித்துவிடுங்கள். பிறகு, அவனிடத்திலே நீங்கள் காணும் விசேஷ சக்தி அபிவிருத்தியடையக் கூடிய வழியில் அவனது கல்விப் போக்கைத் திருப்புங்கள். கல்வியென்றால், பையனிடத்திலேயுள்ள சக்திகளைக் கல்லியெடுப்பது, வெளியிலே கொணர்வது என்று அர்த்தம்; அவனிடத்தில் எது இல்லையோ அதைச் சிருஷ்டிப்பது என்று அர்த்தமில்லை. சிருஷ்டிக்க நம்மால் முடியாது. ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் பொதுவாகப் போதிக்க வேண்டிய தொன்றுண்டு. அதை அவர்களுக்குப் போதிக்கவே வேண்டும். வாழ்க்கையென்றால் என்ன, ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்களல்லவா அந்த உலகம் எத்தகையது என்பவைகளைப்பற்றின சரியான கருத்துக் களை அவர்களுக்குப் புகட்ட வேண்டும். நீங்களும் அப்படியே செய்யுங்கள். வாழ்க்கை யென்பது, ஒரு கடமை; ஒரு வேலை; குறிக் கோளுடையது. வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காணவேண்டு மென்ற தத்துவத்தை மட்டும் உங்கள் மகனுக்குப் போதிக்காதீர்கள். அந்தச் சந்தோஷம் அவனொருவனுடைய சந்தோஷமாயிருந் தாலுஞ் சரி, எல்லோருடைய சந்தோஷமாயிருந்தாலுஞ் சரி, அந்தத் தத்துவமே வேண்டாம். அவன் தன்னொருவனுடைய சந்தோஷத்தை மட்டும் நாடுவானாகில், அகந்தை யுள்ளவனாகிவிடுவான்; எல்லோ ருடைய சந்தோஷத்தை நாடுவதும் அதே முடிவுக்குத்தான் அவனைக் கொண்டு போய்விடும். எல்லோருடைய சந்தோஷம் என்று சொல்லிக்கொண்டு அவன் பகற் கனவுகள் காணலாம்; சிறு வயதில் அவைகளுக்காகப் போராடலாம்; பின்னர், தன் கனவுகள் ஒன்றும் பலிக்கவில்லை யென்று கண்டதும், தன்னையே தான் பார்த்துக் கொள்வான்; தனது சந்தோஷத்தை வெற்றி கொள்ள முயலுவான்; அகந்தையுடையவனாகி விடுவான். வாழ்க்கையைக் கடமையாகக் கொள்ளாவிட்டால், அந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை யென்று உங்கள் மகனுக்குப் போதியுங்கள். வழி நடந்து செல்லும் ஒரு பிரயாணியின் மீது எப்படி சூரிய வெளிச்சம் படுகிறதோ அது போல அவனுக்கு வாழ்க்கையிலே சந்தோஷம் வரலாம். அதை அவன் வரவேற்க வேண்டும்; அதற்காகக் கடவுளுக்கு வாழ்த்துக் கூற வேண்டும். ஆனால் அந்தச் சந்தோஷத்தை அவன் நாடிச் செல்வானாகில், அவன் தன் சீலத்தைத் துறந்தவனா வான்; கடமையை மறந்தவனாவான். அந்தச் சந்தோஷத்தை அவன் அடைய முடியாமலே போகலாம். அவன், தன்னுடைய ஒழுக்கத்தை யும் அறிவையும் விருத்தி செய்துகொள்ள வேண்டும். ஏன்? தன் சகோதர ஜீவராசிகளின் அபிவிருத்திக்காக. அவன் உண்மையைக் காண முயல வேண்டும். தான் கண்ட உண்மையைச் சொல்லாலும் செயலாலும் தைரியமாக வெளியிட வேண்டும்; எப்பொழுதும் வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும். உண்மையைக் காண அவனுக்கு இரண்டு அளவைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, அவனுடைய மனச்சாட்சி. மற்றொன்று, பரம்பரை அல்லது ஐதிகம். ஐதிகம் என்பது என்ன? மானிட சமுதாயத்தின் மனச்சாட்சி. தன்னுடைய மனச்சாட்சியும் மானிட சமுதாயத்தின் மனச்சாட்சியும் ஒன்றுபடுவதை எப்பொழுது அவன் காண்கிறானோ அப்பொழுதே அவன் உண்மையைப் பற்றிக்கொண்டு விட்டவனாகிறான். இது நிச்சயம். ஆனால் இந்த ஒற்றுமையை, அதாவது தன்னுடைய மனச்சாட்சி, மானிட சமுதாயத்தின் மனச்சாட்சி ஆகிய இரண்டின் ஒற்றுமையை அவன் எங்கே காணவேண்டும்? ஒரு யுகத்தின் சரித்திரத்தில் மட்டுமல்ல, ஒரு நாட்டு மக்களின் சரித்திரத்தில் மட்டுமல்ல, பல யுகங்களின் சரித்திரத்தில், பல நாட்டு மக்களின் சரித்திரத்தில் காணவேண்டும். உண்மையின்-பரிபூரண உண்மையின்-அடிப்படையா யிருப்பது எது? அறம்; அறத்தைப்பற்றின அறிவு. அந்த அறமோ-தருமமோ-எல்லை யில்லாமல் விருத்தியடைந்து கொண்டுபோகும் பான்மையது. அந்த அறத்திற்கு அவன் ஆட்பட்டவனாயிருக்க வேண்டும். அந்த அறத்தைப்பற்றின அறிவை அவன் பெறுதல் வேண்டுமென்பதே, நீங்கள் அவனுக்குச் செய்யும் போதனைகளின் நோக்கமாயிருக்க வேண்டும். வான சாதிரம், பூமி சாதிரம் இவைகளைப் பற்றின ஆரம்ப பாடத்தை அவனுக்குச் சீக்கிரத்தில் போதியுங்கள். பிறகு உலக சரித்திரம்; அதற்கு பிறகு பாஷைகள். சரியானபடி போதிப்பதுதான் கடினம். உதாரணமாக, வான சாதிரம் என்றால், பிரபஞ்சமனத்தினுடைய-பிரபஞ்சத்தில் இந்தப் பூவுலகு ஒரு பாகந்தான்-பொது ஞானத்தையே குறிப்பிடுகிறேன். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள யாவும் தருமத்தை வெளிப்படுத்துவன வாயிருக் கின்றன. ஆனால் அந்தத் தருமம் ஒன்றுதான், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பாகமும் மொத்தத்தில் ஏதோ ஒரு தொழிலைச் செய்து கொண்டு தானிருக்கிறது என்பன போன்ற கருத்துக்களை அவனுக்குப் புகட்ட வேண்டும். இளமையில் பாஷைகளைக் கற்றுக்கொள்ளுவது சுலபம். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய பாஷைகள் மூன்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டு வருஷ காலம் பயிலுவா னாகில் மூன்று உலகங்களின், அதாவது மூன்று பாஷைகளின் தொடர்பு அவனுக்கு ஏற்படும். குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தைப்பற்றியும் இப்பொழுது அவனுக்குப் போதிக்க வேண்டாமென்று கூறுவேன். ஆனால் பொது வாகக் கடவுளுண்மையைப்பற்றி, ஆத்மாவின் அமரத்தன்மையைப் பற்றி, மனிதனோடு மனிதனைச் சேர்த்து வைப்பதற்கு, அதாவது மானிட சமுதாயத்தில் ஒற்றுமையை வளர்ப்பதற்கு மதம் தேவை யென்பதைப்பற்றி அவனுக்குப் போதியுங்கள். இந்தப் பொதுவான போதனைகள் மேற்சொன்ன தருமத்தை அடிப்படையாகக்கொண் டிருக்கட்டும். பிறகு நாளாவட்டத்தில் அவன், தனக்கிஷ்டமான மதத்தைத் தெரிந்தெடுத்துப் பின்பற்றுவான். பூகோள சாதிரத்தை அவனுக்கு அவசியம் போதீப்பீர்க ளென்று நம்புகிறேன். ஆனால் இதனைப் பொதுவாகப் போதிப் பதில் பிரயோஜன மில்லை; சிறப்பாகச் சில அமிசங்களிலாவது நல்ல தேர்ச்சியுண்டாகக் கூடிய மாதிரி போதிக்கவேண்டும். நல்ல பூகோள படங்கள் சிலவற்றை அவனுக்குச் சேகரித்துக் கொடுங்கள். சரித்திரமோ, கதையோ எதைப் படிப்பதாயிருந்தாலும், கூடவே பூகோள படத்தை வைத்துக்கொண்டு படிக்க வேண்டுமென்ற பழக்கத்தை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள். அப்படிப் படிப்பதுதான் சிறந்தது; நீடித்த பலனைக் கொடுக்கக்கூடியது. சுருக்கமாக, அவன், வாழ்க்கையைச் சமயக் கண்கொண்டு பார்த்தல் வேண்டும்; தான் வசிக்கிற இந்த உலகத்தைப்பற்றின சரியான கருத்துக்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். தன் மனம் எந்தத் துறையில் அதிகமாக ஈடுபடுகிறதோ அதில் பூரண அறிவு பெறுதல் வேண்டும். உங்கள் மகன் பெறக்கூடிய கல்வி பூராவும் இவ்வளவேயாம். இலக்கியம் நமது தேசீய மரபைத் தழுவியும் ஜனங்களுடைய வாழ்க்கையை யொட்டியும் நமது நாட்டில் நூல்கள் எழுதப்பட வேண்டும். * * * நமது கலை, சாதிரம், தத்துவம் முதலிய யாவற்றையும் புத்துயிர் பெறச் செய்யவேண்டும். அதற்காக, விஷயங்களைப் பிரித்துப் பிரித்துப் பார்க்கக்கூடாது; சேர்ந்தே பார்க்கவேண்டும். * * * எங்கே, பெண்களுக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லையோ, எதிர்காலத்தில் நம்பிக்கை இருப்பதில்லையோ, ஜனங்களுக்காகச் செய்யவேண்டிய கடமைகள் உணரப்படுவதில்லையோ அங்கே, உண்மையான தேசீய இலக்கியங்கள் இருக்கமாட்டா. * * * தற்பொழுது நமது எழுத்தாளர்கள் செய்ய வேண்டிய புனிதமான கடமைகள் என்னென்னவென்றால், நமது நாட்டின் புராதன ததவேஜுகளை ஆராய்ந்து, அவற்றினுள் புதைந்து கிடக்கும் நமது நாட்டின் நோக்கத்தையும் கருத்துக்களையும் வெளியே கொணர வேண்டும்; அந்த நோக்கத்தையும் கருத்துக் களையும் எல்லோருக்கும் சொல்லவேண்டும்; அவற்றின்மூலம் ஜனங்களைச் செயலுக்கு உந்தவேண்டும்; நமது மூதாதையர்களின் உயர்வு, அந்த உயர்வுக்குக் காரணம், அவர்களுடைய வீழ்ச்சி, அந்த வீழ்ச்சிக்குக் காரணம், இவைகளை விளக்கிச் சொல்ல வேண்டும்; ஜனங்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை ஊட்டவேண்டும்; கடமைக்காகப் போராடியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, அவர்களிடம் பக்தியுண்டாகும் வண்ணம் விளங்கக் கூறவேண்டும்; அப்படியே, அகந்தையினாலோ, சுகத்தை நாடியோ, துரோகம் செய்தவர் களுடைய சரித்திரங்களையும், அவர்களிடம் வெறுப் புண்டாகுமாறு எடுத்துச் சொல்ல வேண்டும்; முன்னேற்றப் பாதை யில் ஏற்படக்கூடிய இடையூறுகளைச் சமாளிக்கவும், துன்பத்தை அனுபவிக்கின்றபோது இன்பத்தை எதிர்பார்க்கவும், தீமை வெற்றி யடையுங்காலத்தில் நன்மையின்மீது நம்பிக்கை கொள்ளவும், சூதுவாதுகளின் மத்தியில் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவும் வேண்டுமென்று ஜனங்களுக்கு உணர்த்த வேண்டும்; காதற்கோயி லொன்று கட்டி அதில் ஆணையும் பெண்ணையும் சரிசமானமாகச் சேர்த்துவைக்க வேண்டும்; ஜனங்களிடையே உலக சகோதரத்துவக் கொள்கையைப் பரப்ப வேண்டும். கவிதை உண்மையான கவிதைக்கு மரணமே கிடையாது. * * * வானத்தில் சூரியன் இருக்கிறவரையில், கண்ணீர் வடிக்கக் கண்கள் இருக்கிறவரையில், பெண்களிடத்தில் மென்மை இருக்கிற வரையில், அல்லது அந்தப் பெண்களுக்குத் தியாகிகளை உற்பத்தி செய்யும் சக்தி இருக்கிறவரையில், கவிதைதான் மானிட சமுதாயத்தின் சட்டமாயிருக்கும். * * * மானிட சமுதாயத்தின் உயர்ந்த லட்சியத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள், தியாகம் செய்வது நமது கடமை என்று நம்புகின்ற நாங்கள், தாய் நாட்டை மையமாகவும் உலகத்தைச் சுற்றுக் கோடாகவும் கொண்டுள்ள மதத்தைப் பின்பற்றுகிற நாங்கள், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றனை யும் கொண்ட மதத்தை அனுசரிக்கிற நாங்கள், ஒவ்வொரு யுகத்தி லும் கவிதையைக் காண்கிறோம். உரிமைகளுக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதென்று எங்கெங்கு கூக்குரல் எழுகிறதோ அங்கெல்லாம் கவிதை இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கேட்கப்படுகிற இடங்களிலெல்லாம் கவிதை இருக்கிறது. தியாகமும் சுதந்திரமும் உள்ள இடங்களிலெல்லாம் கவிதை இருக்கிறது. ஆக, எல்லாப் பொருள்களிலும் கவிதை இருக்கிறது.  George Meredith 1828-1909 Thomas Paine 1737-1809 Napoleon I (Bonaparte) 1769-1821 Elba. வட இத்தலிக்கு மேற்கிலுள்ளது. Battle of Waterloo 18-6-1815. வாட்டர்லூ என்பது, பெல்சியம் நாட்டின் தலைநகரான ப்ரஸெல்ஸு (Brussels)¡F¢ சமீபத்திலுள்ள ஒரு கிராமம். இதற்கருகில்தான் யுத்தம் நடைபெற்றது. St. Helena. அத்லாந்திக் மகாசமுத்திரத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கேயுள்ளது; பிரிட்டனின் ஆதிக்கத்துக்குட்பட்டது. Vienna Congress. Metternich 1773-1859. 2 Versailles. பாரி மாநகருக்குத் தென்மேற்கே பதினான்கு மைல் தொலைவிலுள்ள ஊர். கார்ஸிக்கா (Corsica) தீவில் இத்தாலிய பரம்பரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன். Columbus 1451-1506. Genova. Giuseppe Mazzini 1805-1872. Liguria. இது தனிக் குடியரசா யிருந்தது. Dante 1265-1321 Byron 1788-1824 Charles X 1757-1836. Young Italy. (La Giovana Italia) Savona. Tacitus. உத்தேச காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. Marseilles. Charles Albert. 1798 - 1849 Alessandria. ஜினோவாவுக்கு வடக்கேயுள்ளது. Jacobo Ruffini. Giutida Citholi. Agostino Ruffini and Giovanni Ruffini. Thomas Carlvle 1795-1881 John Stuart Mill 1806-1873 Apostolato Popalare. Louis Napoleon 1808-1873. இவனை மூன்றாவது நெப்போலியன் என்று சொல்வதுமுண்டு. General Audinat. Garibaldi 1807-1882 Nice Rio Grande Swinburne 1837-1909 Society of the Friends of Itlay. Victor Emmanuel II. 1820-1878 ஆம் வருஷம் முடிசூட்டிக் கொண்டு பதினேழு வருஷகாலம் ஆண்டான். Cavour 1810-1861 Turin லூயி நெப்போலியன் என்றும் இவனைக் கூறுவதுண்டு. Karl Marx 1818-1883. இவனது வாழ்க்கையைப் பற்றிய விவரங்களுக்கு கார்ல் மார்க் என்ற நூலைப் பார்க்க. Bakunin. 1814-1866 1789ஆம் வருஷத்திலிருந்து 1799ஆம் வருஷம் வரை பிரான்சில் நடைபெற்ற புரட்சிகளைப் பொதுவாக பிரெஞ்சு புரட்சியென்று சொல்வர். பிரான்சில் புரட்சி விதைகளை விதைத்த வர்கள் வால்ட்டேர் (1694 - 1788) ரூஸோ (1712 - 1778) என்ற அறிஞர்கள். 1830ஆம் வருஷம் ஜூலை மாதம் 27, 28, 29 ந் தேதிகளில் பிரான்சில் நடைபெற்ற புரட்சியை இங்கு மாஜினி குறிப்பிடுகிறான். 1824ஆம் வருஷம் பட்டத்திற்கு வந்த சார்ல மன்னன், ஏற்கனவே நடைமுறையிலிருந்து கொண்டு வந்த அரசியல் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, சில பிரபுக்களின் துணைகொண்டு சுயேச் சாதிகார ஆட்சி நடத்தத் தொடங் கினான். ஜனங்கள் கலகத்திற்குக் கிளம்பி அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். சார்ல மன்னன் இங்கிலாந்துக்குத் தப்பியோடி விட்டான். மேலே சொல்லப்பட்ட மன்னனையே இது குறிக்கிறது. இவனுடைய ஆட்சி காலம் 1824-1830. எலாமென்னயி - Lamennais 1782 -1854. ஒரு பிரெஞ்சு தத்துவ ஞானி. சிறிது காலம் பாதிரியாயிருந்தான். 1830ஆம் வருஷம் ஜூலை மாதம் நடைபெற்ற புரட்சியின்போது, அரசாங்க நிருவாகத்தில் ஜனாதிக்கமே பிரதானமாக இருக்கவேண்டுமென்ற கொள்கையில் ஈடுபட்டான். 1834ஆம் வருஷம் ஓர் ஆதிகனுடைய வார்த்தைகள் என்ற நூலை வெளியிட்டான். இது பெரிய எண்ணக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. சில வருஷங்களுக்குள் இந்த நூல் சுமார் நூறு பதிப்புகளுக்கு மேல் வெளியாயிற்று. பல பாஷைகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டிருக் கிறது. மாஜினி, இவனைச் சந்தித் திருக்கிறான். இவனிடத்தில் பரம விசுவாசம் மாஜினிக்கு. இவனை பத்தொன்பதாவது நூற்றாண்டின் மார்ட்டின் லூதர் என்று அழைக் கிறான். ஓர் ஆதிகனுடைய வார்த்தைகள் என்ற நூல், மாஜினி எழுதிய மனிதன் கடமை என்ற நூலுக்குத் தூண்டுகோலாயிருந்தது. லாமென்னயி ஜனங்களின் வாழ்க்கை என்ற நூலையும் எழுதியிருக்கிறான். சுமார் கி. மு. 390ஆம் வருஷத்தில் கால் (Gauls) என்னும் ஜாதியினர், வடக்கேயிருந்து ஆல்ப்பைன் கணவாய் வழியே வந்து இத்தலியைச் சீரழித்தார்கள். அநேக ஊர்கள் எரிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் போயின. ஒரு பெரிய ரோம ராணுவம் சின்னா பின்னப்படுத்தப்பட்டது. இவர்களையே காட்டுமிராண்டி ஜாதியினர் என்று ரோம சரித்திரம் கூறுகிறது. ஜன சமுதாயமானது ஒழுங்குபட இயங்க வேண்டு மென்பதற்காக, அறிவுத் துறையிலே உழைக்கிறவர்களென்றும், தேக பலத்தைக் கொண்டு உழைக்கிறவர்க ளென்றும் பல பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இதுவே கடவுளின் திருநோக்கமென்று எடுத்துக் காட்டுவதற்காக நமது முன்னோர்கள் இந்த மாதிரியான வாசகங்களை உபயோகித் திருக்கிறார்கள். கி.பி. 16வது நூற்றாண்டில், ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் என்பவன்தான், இந்தப் புராடெடெண்ட் இயக்கத்திற்கு விதை போட்டவன். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மனிதன், தன் மனச்சாட்சிப்படி கடவுளை வணங்குதற்குரியன் என்ற கொள்கையை வற்புறுத்தினார்கள். ஆனால் அரசியல் காரணங் களினால், இவர்களுடைய பரம்பரை யினர், மேற்படி கொள்கையை நிராகரிக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார்கள். இதனையே இங்கு மாஜினி குறிப்பிடுகிறான். அதாவது காரியங்களைச் செய்யாமல் சும்மாயிருப்பதும் அல்லது குருட்டுத்தனமாக வாழ்க்கையை நடத்துவதும் தெய்வபக்தி யல்ல வென்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. கி. பி. 12 வது நூற்றாண்டில், இத்தலியின் வட பாகத்திலுள்ள லம்பார்டி மாகாண வாசிகள் ஜெர்மானிய ஆதிக்கத்தினின்று விடுதலை செய்து கொண்டு, தனித் தனிக் குடியரசுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். ப்ளாரென் மாகாணத்தை இத்தலியின் மூளை என்று சொல்வதுண்டு. ஏனென்றால் இத்தலியின் பிரபல அறிஞர்கள் பலரும் இங்குதான் தோன்றியிருக்கிறார்கள். கி.பி. 14வது நூற்றாண்டில் இந்த மாகாண வாசிகள், சுயேச்சாதிகாரத்தை எதிர்த்து பலமான போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போனபார்ட்டே என்பது இங்கு சர்வாதிகாரத்துவம் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப் படுகிறது. ஜெருசலேம் முதலிய பாலதீனத்திலுள்ள புனித தலங்களை, இலாமியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்வதற்காக, ஐரோப்பாவிலிருந்த கிறிதவ மன்னர்களும் மதாசாரியார்களும் கி. பி. 11, 12, 13 வது நூற்றாண்டுகளில் தொடுத்த போர்களே சிலுவைப் போர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ப்ளாரென் பிரதேசத்தின் சுதந்திரத்தை இந்தப் பதினாறாவது நூற்றாண்டில் போப்பரசர்கள் பறித்துக் கொண்டு விட்டார்கள். இதன் பொருட்டு போப்பரசர் கட்சி யினருக்கும் ப்ளாரென் பிரதேச வாசிகளுக்கும் பெரிய யுத்தம் நடைபெற்றது. இந்தப் பதினாறாவது நூற்றாண்டில்தான் ஜெர்மன் சக்ரவர்த்தியான ஐந்தாவது சார்ல என்பவன், அப்பொழுது ரோமாபுரியின் போப்பரசராயிருந்த ஏழாவது கிளமெண்ட் என்பவரைச் சிறை செய்து, இத்தலியின் சுதந்திரத்திற்குப் பங்கம் விளைவித்தான். கி.பி. 11, 12, வது நூற்றாண்டுகளில், லம்பார்டி மாகாணத்தில் ஜெர்மானியர்களுடைய ஆக்ரமிப்பு மிக அதிகமாயிருந்தது. இதனை எதிர்த்து, லம்பார்டியர்கள் தீவிரமான போராட்டத்தை நடத்தினார்கள். கி.பி. 15 வது நூற்றாண்டில் காஸிமோ-டி-மெடீஷி என்பவனுடைய தலைமையில் டகனி மாகாணத்தில் குடியரசு முறை ஏற்பட்டபோது நடைபெற்ற சம்பவமே இங்குக் குறிப்பிடப் படுகிறது. டகனி மாகாணத்தைச் சேர்ந்தது தான் இந்த ப்ளாரென் பிரதேசமும், மேலே சொல்லப்பட்ட காஸிமோ-டி-மெடீஷி என்பவனுடைய பேரனாகிய லோரென்ஸோ-டி-மெடீஷி என்பவனுடைய காலத்தில், ப்ளாரென் முதலிய பிரதேசங்களில், சர்வாதிகார ஆட்சி முறையே நடை பெற்ற தென்று சொல்லலாம். இந்த லோரென்ஸோ, தன்னை ஆதரித்தவர் களுக்கு ஆதரவு காட்டியும், எதிரிட்டுக் கொண்டவர்களை அழித்தும் விட்டான். இவன் காலத்தில் ஜனங்கள் இவனுக்கு விரோதமாகக் கிளம்பி, ஜனாதிக்க உரிமையை தாபித்த சம்பவமே இங்குக் குறிப்பிடப்படுகிறது. ஸவோனரோலா - Savonorola. 1452 - 1498 மேலே சொல்லப்பட்ட லோரென்ஸோ-டி-மெடீஷி காலத்திலிருந்த ஒரு மகாத்மா. மதவிஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் ஜனங்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்று அரும்பாடுகள் பட்டு, அதற்காகவே வீர மரணமெய்தியவன். கி.பி. 16வது நூற்றாண்டிலிருந்து 18வது நூற்றாண்டின் மத்தியகாலம் வரையில் இத்தலியின் பலபாகங்களும், பிரான், ஜெர்மனி, பிரிட்டன், ஆதிரியா முதலிய வல்லரசுகளின் விளை யாட்டுப் பொருட்கள் போலிருந்தன. ஜனங்களுடைய சுதந்திரம் மிக லேசாக மதிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையே மாஜினி இங்குக் குறிப்பிடுகிறான். ஸர்க்கேஷ்யா என்பது, ருஷ்யாவில் கருங்கடலோரமா யுள்ள ஒரு பிரதேசம். இது, 1829ஆம் வருஷம் வரை துருக்கியின் சுவாதீனத்தி லிருந்து பின்னர் ருஷ்யாவின் ஆதிக்கத்துக்குட் பட்டது. ஸர்க்கேஷ்ய திரீகள் அழகில் உலகிலேயே மிகச் சிறந்தவர்களென்று பெயர் பெற்றவர்கள். மோஸ. பெரிய யூத ஞானி. எகிப்தில் பிறந்தவர். இவருடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. இவரைப்பற்றிய விஷயங்களை, கிறிதவ பழைய வேதாகமத்தில் பார்க்க. புனித ரோம ஏகாதிபத்தியம் என்பது, 1806ஆம் வருஷத்தோடு முடிவுற்றது. ரோமர்களுக்கு பால் முனிவர் எழுதிய கடிதங்கள். 12 வது அதிகாரம், 4, 5 வாக்கியங்கள். ஜான் முனிவர் எழுதின சுவிசேஷம் 10 வது அதிகாரம் 16 வது வாக்கியம். அதாவது நகரப் பற்றும் தேசப்பற்றுந்தான் இருக்க வேண்டுமே தவிர, மாகாணப் பற்று கூடாதென்பதை இங்கு எடுத்துச் சொல்கிறான். டகனி, லம்பார்டி, சிஸிலி முதலிய வைகள் தனித் தனி ஆட்சி முறைக்குட்பட்ட தனித்தனி மாகாணங்கள். ப்ளாரென், ஸீனா, லெக்ஹார்ன் முதலியவை பிரசித்தி பெற்ற தனித் தனி நகரங்கள். ரோமாபுரி இரண்டு முறை மேன்மையுற்றிருந்ததென்பதைப் பற்றி மாஜினி அடிக்கடி கூறுகிறான். முதன் முறையாக மேன்மை யுற்றிருந்த காலம் கி. மு. 27ஆம் வருஷத்தி லிருந்து கி. பி. 800 வருஷம் வரை என்று உத்தேசமாகச் சொல்லலாம். இந்தக் காலத்தில், ரோம ஏகாதிபத்தியத்தின் அரசியல் செல்வாக்கு அதிகமாயிருந்தது. இரண்டாவது முறை மதச் செல்வாக்குப் பெற்றிருந்த காலம். கி. பி. 800ஆம் வருஷத்தி லிருந்து 1806ஆம் வருஷம் வரை, இதனோடு புனித ரோம ஏகாதிபத்தியம் மறைந்து விட்டது. தான் குடும்ப இன்பத்தை அநுபவியாதவன் என்பதை இங்கு துக்கத்தோடு குறிப்பிடு கிறான் மாஜினி. நீக்ரோவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட க்ரான் வில்லி ஷார்ப், பௌல் பக்டன், தாம க்ளார்க்ஸன், வில்லியம் வில்பர்போர் முதலியவர்கள் அநேக துன்பங்களை அநுபவித்திருக்கிறார்கள். லாமென்னயி என்பவன் எழுதிய ஜனங்களின் வாழ்க்கை என்ற நூலிலுள்ளது இது. மனிதன் சுதந்திரமாகவே பிறந்தான்; ஆனால் எங்கும் கட்டுண்டு கிடக்கிறான் என்று ரூஸோ சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலின் ஆரம்பத்தில் கூறுகிற வாசகம், இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஸாக்ரடீ - Socrates. கி. மு. 460 - 399. சிறந்த கிரேக்க தத்துவ ஞானி. இவனுடைய சம்பாஷணை கள் மிகச் சுவையுடையன. இவனுடைய சிஷ்யன் பிளேட்டோ. கெய்ன் - Cain. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த மூத்த மகன். இவன், தன் சகோதரனாகிய ஆபெல் என்பவனைக் கொலை செய்துவிட்டான். இது சம்பந்தமான விவரங்களை கிறிதவ ஆதியாகமம் 4 வது அதிகாரத்தில் பார்க்க. கி.பி. 19 வது நூற்றாண்டின் மத்திய காலத்தில் ருஷ்யாவில் இரண்டாவது அலெக்ஸாந்தர் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். இவன் காலத்தில், அடக்குமுறை அதிகமா யிருந்தது. இதனால் அநேகர் சேர்ந்து, ஜனங்களுக்கு அரசியல், சமுதாய, பொருளாதார சுதந்திரம் தேவை யென்பதை வற்புறுத்தி ஓர் இயக்கத்தைத் தொடங்கினார்கள். இந்தக் காலத்திலிருந்துதான், ருஷ்யாவில் சுதந்திர இயக்கம் ஆரம்பித்ததென்று சொல்லலாம். ஐரோப்பாவின் கிழக்குப் பாகத்தில், சிறப்பாக ருஷ்யாவில் வசிக்கிற பெரும்பாலோர் லாவியர் என்னும் ஜாதியார். பிளேட்டோ - Plato. கி. மு. 429-347. பெரிய கிரேக்க தத்துவ ஞானி. குடியரசு என்ற பெயரால், லட்சியம் வாய்ந்த ஓர் அரசியல் எப்படி யிருக்க வேண்டுமென்பதைப்பற்றி இவன் எழுதியிருக்கிறான். அரிடாட்டல் (Aristotle) என்பவன்(கி. மு. 384 - 322) பிளேட்டோ வின் சிஷ்யன். இவன், பிளேட்டோவின் அரசியல் சித்தாந்தங்களை ஒருவாறு மறுத்து ஒரு நூல் எழுதியிருக்கிறான். ஜான் முனிவர் எழுதிய சுவிசேஷம் 16 வது அதிகாரம். தாந்தே - Dante Alighieri 1265 - 1321. இத்தாலிய மகான் கவிஞன். இவனுடைய தெய்விக நாடகம் என்ற மகா காவியம் உலகப் பிரசித்தி பெற்றது. ப்ளாரென் நகரத்தில் செல்வாக்காயிருந்த அரசியல் கட்சியாரின் தூண்டுதலின் பேரில் இவன், தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டு பலவித துன்பங்கள் அநுபவித்தான். இந்தப் பிரஷ்ட காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் என்பதுவே இங்குக் குறிக்கப்படுகிறது. பூலோகத்திலிருந்து ஒரு கோபுரத்தைக் கட்டி அதன் மூலம் மோட்ச லோகத்தையடைய வேண்டுமென்ற ஆசை கொண்ட ஒரு மன்னனால் மெஸபொடேமியாவில் கட்டப்பட்டதைப் பற்றி மாஜினி இங்குக் குறிப்பிடுகிறான். இந்தக் கோபுரத்திற்கு பேபல் கோபுரம் என்று பெயர். இதன் வரலாறு பழைய வேதாகமம் ஜெனிஸ 11 வது அதிகாரத்தில் காணலாம். ஒலிம்ப என்பது கிரேக்க தேசத்திலுள்ள ஒரு மலை. இதில் ஜ்யூ என்ற வியாழபகவான் இருக்கிறதாக ஐதிகம். இந்த மலைக்கு அடிவாரத்திலுள்ள மைதானத்திலேயே ஒலிம்பிக் விளையாட்டுகள் நடை பெறுகின்றன. இந்த ஒலிம்ப மலையை ராட்சதர்கள் தாக்கினார்கள் என்ற ஒரு கிரேக்க வரலாற்றையே இங்கு மாஜினி குறிப்பிடுகிறான். லாமென்னயி எழுதிய ஜனங்களின் வாழ்க்கை என்ற நூலைப்பார்க்க. படிப்பு வேறே, கல்வி வேறே என்று இந்த அத்தியாயத்தில் மாஜினி அழகாக எடுத்துக் கூறுகிறான். இது சம்பந்தமாக இன்னும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டு மானால் ரூஸோ எழுதிய எமிலி என்ற நூலையும், ஹெர்பர்ட் பென்ஸர் எழுதியுள்ள கல்வி என்னும் நூலையும் பார்க்க. ஹ - John Huss. 1369 -1415. பொஹிமியாவைச் சேர்ந்த ஒரு மதச் சீர்திருத்தவாதி. இவன், கிறிதவ மதத்திற்கு விரோதமான போதனை களைச் செய்தானென்று உயிரோடு கொளுத்தப் பட்டான். இவனுக்குப் பிறகு பொஹிமியாவில் பல கட்சிச் சண்டைகள் உண்டாகி விட்டன. 1852ஆம் வருஷம் மூன்றாவது நெப்போலியன் அதுகாறும் நிலவி வந்த குடியரசு ஆட்சி முறையை ரத்து செய்து விட்டு, தானே சக்ரவர்த்தியானான். இதற்குக் காரணம், அபேதவாதிகளுக்குள் ஏற்பட்டிருந்த பிணக்குகள்தான் என்பதை மாஜினி இங்கே தெரிவிக்கிறான். பிரான்சிலே செயிண்ட் சைமன் (St. Simon 1760 - 1825) என்ற ஒரு பொருளாதார நிபுணன் இருந்தான். இவனுடைய அபேதவாத சித்தாந்தங்களுக்கு ஸான்ஸி மோனிஸம் என்று பெயர். பௌரியர் - Fourier 1772 - 1837 என்பவன் ஒரு பிரெஞ்சு அபேதவாதி. இவனுடைய சித்தாந்தங்களுக்கு பௌரிரிஸம் என்று பெயர். பிளாண்டர் என்பது, ஹாலந்து, பெல்ஜியம், பிரான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் சொந்தமான பிரதேசம். கிழக்கு ப்ரிஷ்யா, ஹாலந்துக்கு வட கிழக்கில் வட கடலிலுள்ள தீவுத் தொகுதிகளின் பெயர். ஹோல்டீன் ப்ரஷ்யாவிலுள்ள ஒரு பிரதேசம். கெர்ன்ஸே தீவு, இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் மத்தியில் இங்கிலீஷ் கால்வாயில் உள்ள ஒரு தீவு. 1848ஆம் வருஷத்துப் புரட்சிக்குப் பிறகு பிரான்சில் மூன்றாவது நெப்போலியன் என்னும் மன்னன், தொழிலாளர் சங்கங்க ளேற்படுத்திக் கொடுத்து, அவர்களுடைய ஆதரவு மூலம் தன் ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ளப் பார்த்தான். பிரான்சில் மூன்றாவது நெப்போலியன் என்னும் மன்னன், சக்ரவர்த்தியாகப் பட்டஞ்சூட்டிக் கொண்ட பிறகு இரண்டாவது ஏகாதிபத்தியம் தொடங்கப் பெற்ற தென்று சரித்திரக்காரர் கூறுவர். தங்களுக்குச் சாதகம் விளைவிக்கக் கூடிய குடியரசு அரசாங்க முறை போய், ஏகாதிபத்திய முறை, தங்கள் கண் முன்னரேயே தாபிக்கப் படுவதைத் தொழிலாளர்கள் அசிரத்தையோடு பார்த்துக் கொண்டிருந்தார்க ளென்பதையே மாஜினி இங்குக் குறிப்பிடுகிறான். Dante 1265 - 1321 Goethe 1749 - 1832 Byron 1788 - 1824 Thomas Ceryle 1795 - 1881.