தமிழக வரலாற்று வரிசை -11 தமிழகச் சமூகப் பாண்பாட்டு வரலாறு (முதல் பாகம்) ஆசிரியர் பேரா. முனைவர் கோ. தங்கவேலு மேனாள் வரலாற்றுத் திணைக்களத் தலைவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் அமிழ்தம் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழக வரலாற்று வரிசை - 11 தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு - (முதல் பாகம்) ஆசிரியர் : பேரா.முனைவர். கோ. தங்கவேலு பதிப்பாளர் : இ. வளர்மதி முதற்பதிப்பு : 2013 தாள் : 18.6 கி. வெள்ளைமேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 16+ 448 = 464 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 435 /- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் “பெரியார் குடில்” பி-11, குல்மோகர் குடியிருப்பு, தியாகராயர் நகர், சென்னை - 600 017 தொ.பேசி: 24339030 அறிமுகவுரை உலகெலாம் நிறைவுகொண்ட மாத்தன் விண்வெளியிலும் தன் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டான். ஆனால், மனநிறைவுப்பெற அவன் வள்ளுவன் நாட்டையே நாடுகிறான். அங்குதான் வாழ்வாங்கு வாழும் வகையை அவனால் பெறமுடிகிறது. அத்தகைய வாழ்வின் பட்டாங்கைத் தனது கருவூலமாகக் கொண்ட தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வரலாற்றையே இச்சிறுயேட்டில் காண்கிறோம், பேரூழிகளாலும், பிறநாட்டார் படையெடுப்புகளாலும், இயற்கை இடர்பாடுகளாலும் நிலைகுலையாது நிற்கும் அறுபடாத தமிழ்ச் சமூகமும், பண்பாடும் உலக வரலாற்றில் தனித்தன்மை யோடு திகழ்கின்றன. இதற்கு ஒரு கரணியம் தமிழ் மொழியும், படிமுறை வளர்ச்சியில் சிறந்து நிற்கும் தமிழர் பண்பாடுமாகும். இதனை, வரலாற்றுக்கு முந்திய தொல் பழங்காலந்தொட்டு இன்றுவரைவுள்ள 'தமிழக சமூகப் பண்பாட்டு வரலாற்றில் காணலாம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய தமிழ்ச் சங்க காலத்தையே தமிழரின் பொற்காலம் என்கிறோம். கடைச் சங்க காலத்தின் கொடையாகக் கிடைத்தவைதான் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், பதினெண்கீழ் கனக்கு நூல்களும் ஆகும். இவை கடக்க முடியாத ஆழ்கடல்களையும், காடு, மலைகளையும் கடந்து ஓர் அகன்ற நிலத்தில் தமிழர் நாகரிகமும், பண்பாடும் பரவியதைப் பறைசாற்றுகின்றன. ஆனால், தமிழக வரலாற்றின் பொற்காலம்' கோயில் கோபுரங்கள் உயர்ந்து நின்ற காலமே என்பாரும் உளர். இதற்கு ஒரே சுரணியம் வரவாற்றியலில் பின்பற்றப்பெறும் மரபியல் குருட்டுத்தனமாகும். இதையே செம்மறியாட்டுப் போக்கு யென்றும் கூறலாம். இந்திய வரலாற்றில் ஒவ்வொரு ஆறு நூற்றாண்டுக்கும் ஒருமுறை ஏற்பட்ட பண்பாட்டு மறுமலர்ச்சியும் இத்தகையதே யாகும். ஆனால், தமிழக வரலாற்றில் ஒவ்வொரு மூன்று நூற்றாண்டுக்கொருமுறை இத்தகைய பண்பாட்டு மாற்றத்தைக் காண்கிறோம். தமிழறிஞர்கள் இதனைப் பண்பாட்டுச் சீரழிவு என்பர். அதாவது ஆரியப் பண்பாடு மிளிரும் காலத்தையே "பொற்காலம்' என்பதையே இவர்கள் “தமிழனின் பண்பாட்டுச் சீரழிவு" என்கின்றனர். ஆரியம் மங்கும் காலத்தை வரலாற்றாளர்கள் "இருண்ட காலம் என்பர். களப்பிரர் காலத்தை "இருண்ட காலம்" என்பதற்கு ஓரே கரணியம் அக்காலம் சமணமும், பவுத்தமும் கோலோச்சிய பகுத்தறிவுக் காலமாகும். இந்திய வரலாற்றில் ஏசுபிரான் அவதரிப்பதற்கு மூன்று நாற்றாண்டுக்கு முன்பே தமிழகம் தவிர்த்த இந்தியாவை ஒரு குடைகீழ் ஆண்டஅசோகன் (இ.மு. 273 - 236) போக்குவரத்து ஏந்துகளேயற்ற அக்காலத்தில் உலகெலாம் தனது சமயப்பரப்பு ஊழியர்களையனுப்பி, விலங்காண்டி மாந்தர்களைப் பண்பாளராக்க பவுத்த நெறியைக் கோலோச்ச செய்தான். ஆனால், இவன் காலத்தைப் "பொற் காலம்" என்றழைக்காமல் சமற்கிருத மொழியும், இந்துத்துவா கோட்பாடும் மலர்ந்த குப்தருடைய காலத்தையே "பொற்காலம்" என்கின்றனர். சங்க காலத்தில் குடிகள் உண்டு. ஆனால் சாதிகள் இல்லை; தீண்டாமையும் இல்லை. இத்தகைய சாதிகள் முடுக்கமாய் நிலைபெற்றக் காலம் பல்லவர் காலமேயாகும். கரணியம், பல்லவர் தமிழரல்வர். முதன்முதலில் ஆரியப் பூசாரிகளைத் தமிழகத்திற்கு இறக்குமதி செய்து தேவதானங்களாகவும், பிரம்ம நேயங்களாகவும் தமிழ் நிலத்தைப் பகிர்ந்தளித்தவர்கள்; தமிழனின் கலைகளையும் பண்பாட்டையும் ஆரியாயமாக்கியவர்கள்: தமிழரின் பணியா லமைந்த மாமல்லபுரம் தேர்களையே "பஞ்ச பாண்டவர் ரங்கள்" ஆக்கியவர்கள்; இவர்களின் அடியொற்றித்தான் பாண்டியரும், சோழரும், விசயநகர மன்னர்களும், நாயக்கர் களும், கலை, பண்பாடுகளை ஆரிய மயமாக்கினர். பல்லவர் கால வரிகளின் பெயர் பட்டியல் அக்கால சாதிப் பெயர்களின் பட்டியவாகவே திகழ்வதைக் காணலாம். குறிப்பாக இறைநெறி (பக்தி) இலக்கியங்களின் சாதிகளின் பட்டியலும், சமூகப் பண்பாடுகளம் படம்பிடித்துக் காட்டப் பெற்றுள்ளன. இத்தகைய இலக்கியங்களுக்கும் மேலாக சோழரின் கல்வெட்டுகளிலேயே தமிழ்ச் சமூகம் சாதிகளின் கொடுமைக்கும் தீண்டாமையின் கோரப்பிடிக்கும் ஆளாகியிருப்பதைக் காண் கிறோம், சோழருக்கும் பின்வந்த பாண்டியப் பெருவேந்தர் காலத்திலும், விசய நகர ஆட்சியிலும் இவை மேலும் வலுப் பெற்றதைக் காண்கிறோம். ஆங்கிலேயனின் அடிமை ஆட்சியில் இவை யாவும் ஆவணங்களாகி விட்டன. எனவேதான், சங்க காலத்தைத் “தமிழரின் பொற்காலம்" என்கிறோம். இத்தகைய சமூக அமைப்பையும், மாய்மாலத்தையும் மாற்றி யமைத்தப் பெருமை தந்தை பெரியாரையும், பேரறிஞர் சேரும். பிற்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணொனிப் பெற்றனர். சாதியற்றச் சமுதாயம் மலரத் தொடங்கியது. விடுதலைக்குப்பின் பச்சைத் தமிழர்கள் ஆளத் தொடங்கினர், வகுப்புவாரிப் படிநிகராளியம் சமுதாயச் சமநிலைக் காண உதவியது. எல்லோரும் ஓர் நிலை, எல்லோரும் ஓர் நிறை எனும் சட்டத்தின் ஆட்சி மலர்ந்தது. ஈராயிரம் ஆண்டுகளாய் ஏற்றத் தாழ்வோடு வாழ்ந்துவிட்ட தமிழ்ச் சமுதாயம் திடீரெனச் சமநிலைப் பெற்றுவிட முடியுமா? மகாத்துமாக்கள் வந்தார்கள், சென்றார்கள். ஆனால் சாதிகளும், தீண்டாமையும் மட்டும் செல்ல வில்லையே என்பது அண்ணல் அம்பேத்காரின் குமறல் ஆகும். பெரியார் வந்தார்; சாதி இரண்டொழிய வேறில்லையென. ஆக்கினார். அவர் அடியொற்றி நின்ற அண்ணாவும், தம்பிகளம் அப்பாதையிலே செல்ல முயல்கின்றனர். இவர்களின் முயற்சியில் தொய்வு ஏற்படலாம். ஆனால் தோல்வி ஏற்படாது. இன்று நிலவும் மக்கள் நலம் நாடும் நல்லாட்சியே இதற்குத் தக்க சான்றாகும் இந்நூல் உருவாக உதவிய அனைவருக்கும், குறிப்பாக இதனை அச்சேற்றி அழகுற அமைத்து, `தமிழ்மண்' பதிப்பக உரிமையாளர், தமிழ்க்காவலர் கோ. இளவழகனார் அவர்களின் துணைவியார் அமிழ்தம் பதிப்பகம் வழி வெளியிடுகிறார். அவர்களுக்கு நன்றிக் கடப்பாடுடையேன். - கோ. தங்கவேலு பதிப்புரை ‘வரலாறு என்பது உணர்ச்சிகளின் தொகுப்பு அல்ல. உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு.’ ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சான்று கூறும் நினைவுச் சின்னம்’. ‘வரலாறு என்பது மாந்த இனத்தின் அறிவுக்கருவூலம்’. ‘தமிழினத்தின் வரலாறு நெடியது; நீண்டது; பழம்பெருமை மிக்கது; ஆய்வுலகிற்கு அரிய பாடங்களைத் தருவது.’ வரலாறு என்பது கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வாழும் காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் உயிர்ப் பாகக் காட்டுவது. ‘வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந் திருக்கலாம் என்பதைப்பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தனொருவன் தன் மனத்தில் உருவாக்கிக் கொள்வதே வரலாறாகும் என்பர் காரி பெக்மன் (Gary Bachman; JAOS - 2005) . இவ்வரலாற்றை எழுதுபவர் அறிவுநிலை, மனநிலை, சமுதாயப் பார்வை,பட்டறிவு, கண்ணோட்டம், பிறசான்றுகளை முன்வைத்து எழுதுவர். அஃது அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் ஊற்றாகத் திகழ்வது. ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அந்த இனம் நடந்து வந்த காலடிச்சுவடுகளைப் பொறுத்தே அமையும். ஒரு நாட்டின் வரலாற்றிற்கு அந் நாட்டில் எழுந்த இலக்கியங்கள், கண்டறியப் பட்டுள்ள கல்வெட்டுக்கள், புதைபொருள்கள், செப்பேடுகள், நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயங்கள் தான் சான்று பகர்வன. அத்தனையும் பெருமளவு உள்ள மண் தமிழ்மண்ணே ஆகும். மொழி, இன, நாட்டு வரலாறு என்பது ஒரு குடும்பத்திற்கு எழுதப்படும் ஆவணம் போன்றது. இவ்வரலாறு உண்மை வரலாறாக அமைய வேண்டும் என்பார் மொழிநூல் மூதறிஞர் பாவாணர். இந்தியப் பெருநிலத்தின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்படக் கூடாது. அந்த வரலாறு இந்தியாவின் தென்முனையி லிருந்து எழுதப்படவேண்டும். அதுவே உண்மை வரலாறாக அமையும் என்பது மனோண்மணீயம் சுந்தரனார் கூறியது; வின்சென்ட் சுமித் ஏற்றது. தமிழினத்தின் பழமையைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, தொல்காப்பியம் உட்பட்ட சங்கநூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதன்முதலில் 1929இல் தமிழர் வரலாறு எழுதியவர் பி.டி.சீனிவாசய்யங்கார் ஆவார். அந்நூலில் தமிழரே தென்னாட்டில், ஏன் இந்தியாவில், தொன்று தொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தம் ஆழ்ந்த ஆய்புல அறிவால் நிறுவினார். தமிழ்நாட்டில் இன்று வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அந்நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். அதனைத் தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) எனும் நூலாகத் தமிழ்மண் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. இவ்வரலாற்று வரிசைக்கும் திரு. இராமநாதன் அவர்கள் அறிமுகவுரைகள் வழங்கி அணி சேர்த்துள்ளார். பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர்சரித்திரம், பல்லவர் வரலாறு, களப்பிரர் காலத் தமிழகம் (வரலாற்றாசிரியர் நால்வர் நூல்களின் தொகுப்பு), கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தாய்நில வரலாறு, தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு, எனும் நூல்களைத் தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக வரலாற்று வரிசை எனும் தலைப்பில் வெளியிடுகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இன்றும் வரலாற்று மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய கருவிநூல்களாகவும், என்றும் பயன்தரும் (classic) நூல்களாகவும் கருதப்படவேண்டியவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைகள் ஆகியவற்றின் மாணவர்களும், கல்லூரி/பல்கலைக்கழக ஆய்வுத்துறைகளும் இந்நூல்களை வாங்கிப் பயன் கொள்வாராக. தமிழக வரலாற்றுக்கு அணிகலனாக விளங்கும் இவ்வரலாற்றுக் கருவூலங்களைப் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், ஒளவைதுரைசாமிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், இர,பன்னீர் செல்வம், மயிலை னி.வேங்கடசாமி, மு.அருணாசலம், புலவர் குழந்தை, நடன.காசிநாதன், பேரா.முனைவர். கோ. தங்கவேலு போன்ற பெருமக்கள் எழுதியுள்ளனர். இவ்வருந்தமிழ் பெருமக்களை நன்றி உணர்வோடு நினைவுகூர்கிறோம். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டும் கேட்கப் பட்டும் வந்த அரிய செய்திகளை தம் அறிவின் ஆழத்தால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலை நின்று உண்மை வரலாறாக எழுதியுள்ள இந் நூல்கள் ஆய்வுலகிற்கும், தமிழ் உலகிற்கும் பெரிதும் பயன்படத் தக்க அரிய வரலாற்றுப் பெட்டகமாகும். பண்டைத் தமிழ்க்குலம் நடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளவும், இனி நடக்கவேண்டிய பாதை இது என அறுதியிட்டுக் கொள்ளவும், தள்ள வேண்டியவை இவை, கொள்ளவேண்டியவை இவை எனத் திட்டமிட்டுத் தம் எதிர்கால வாழ்வுக்கு வளமானவற்றை ஆக்கிக் கொள்ளவும், தமிழ் இனத்தைத் தாங்கி நிற்கும் மண்ணின் பெருமையை உணரவும், தொலைநோக்குப் பார்வையுடன் இவ்வரலாற்று வரிசையைத் தமிழர் முன் தந்துள்ளோம். வாங்கிப் பயன்கொள்ளுங்கள். தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. பணிசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தர் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். மொழியாலும், இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு தமிழரின் வரலாறு. இவ்வரலாற்றை மீட்டெடுக்க உழைத்த பெருமக்களை வணங்குவோம். அவ்வகையில் உழைத்து நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பெருமக்களுள் தலைசிறந்தோர் தந்தை பெரியாரும்,மொழி ஞாயிறு பாவாணரும் ஆவர். இப்பெருமக்கள் அனைவரையும் நன்றியுணர்வுடன் இந்த நேரத்தில் வணங்குவோம். அவர்கள் வழி பயணம் தொடருவோம். தமிழ் இனமே! என் தமிழ் இளையோரே! நம் முன்னோரின் வாழ்வையும் தாழ்வையும் ஆழ நினையுங்கள். இனத்தின் மீளாத் துயரை மீட்டெடுக்க முனையுங்கள். - பதிப்பாளர். உள்ளடக்கம் அறிமுகவுரை பதிப்புரை நூல் 1. தமிழகத்தின் இயற்கை அமைப்பு 2. வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் 3. தமிழரின் தாயகம் 4. சங்க காலம் 5. களப்பிரர் காலம் 6. பல்லவர் காலம் 7. முதலாம் பாண்டியப் பேரரசுக் காலம் 8. சோழப் பேரரசர் காலம் தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 1 தமிழகத்தின் இயற்கை - அமைப்பு 1. இருப்பிடம் 2. எல்லைகள் 3. ஆறுகள் 4. மலைகள் 5. சமவெளிகள் 6. தட்ப, வெப்ப நிலை 7. மண் வகைகள் 8. கனிப்பொருள்கள் 9. தாவரங்கள் 10. உணவுப் பொருள்கள் 11. பாசன ஏந்துகள் 12. பிற தொழில்கள் 13. வணிக வளர்ச்சி 14. மக்கள் தொகை 15. தமிழக நிலப்பரப்பின் தொன்மை 16. உலகத்தோற்றம் 17. கடல்கோள்கள் 18. ஆதிமாந்தன் தமிழகத்தில்தான் தோன்றினானா? 1, தமிழகத்தின் இயற்கை - அமைப்பு 1. இருப்பிடம் உலகெலாம் மாந்த இனமே தோன்றாதபோது தமிழகத்தில்தான் மாந்தன் முதலில் தோன்றினான் என்று புவியியல், மாந்தவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழத்தின் இயற்கை அமைப்புகளே இதற்குக் காரணம் ஆகும். தமிழ்நாடு, இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கிழக்கு மூலையில் தெற்கே 85 பாகை நெடுங்கோட்டிலிருந்து 13.6 பாகை நெடுங்கோடு வரையிலும், தெற்கே 76.15 பாகை குறுங் கோட்டிலிருந்து கிழக்கே 80.20 பாகை கிழக்குக் குறுங்கோடு வரையிலும் பரவியிருப்பதே ஆகும். அதாவது தமிழகம் உயிரினம் தோன்றி வளர்வதற்கான சாத்தியக் கூறுகளை இயற்கையாகவே பெற்றுள்ளது. தமிழகம் வடக்கில் ஆந்திரம் வடமேற்கில் கருநாடகம், மேற்கில் கேரளம் ஆகிய மாநிலங்களை எல்லைகளாகக் கொண் டிருக்கிறது. கிழக்கிலும், தெற்கிலும் முறையே வங்கக் கடலும், இந்துமாக் கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. 2. எல்லைகள் ஆனால், பண்டைய தமிழகத்தின் எல்லைகளாக வடக்கே வேங்கட மலையும், தெற்கே குமரிமுனையும் இருந்தன என்பதைச் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் சங்கப்பாடல்களாலும் அறிகிறோம். காலந்தோறும் எல்லைகள் கூடியும் குறைந்தும் காணப்பெற்றன. 3. ஆறுகள் தமிழ்நாட்டின் நிலப்பரப்பு பொதுவாகத் தென்கிழக்கு நோக்கிச் சற்றுச் சரிந்துள்ளது. எனவேதான், பெரும்பாலான ஆறுகள் கிழக்கு நோக்கி ஓடுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளை வற்றாத ஆறுகள் (ஜீவநதிகள்) என்று கூறுவதற் கில்லை . காரணம் இவற்றில் கங்கை , யமுனை, சிந்து ஆகிய ஆறுகளைப் போல் வற்றாத நீர் ஓடுவதில்லை, இவ்வாறுகள் பனி உறைந்த இமயமலையில் உற்பத்தியாவதால் வற்றாதநீர் ஓடிக்கொண்டே உள்ளது. ஆனால், மழை வெள்ளத்தால் மட்டுமே ஓடும் ஆறுகள்தான் தமிழ்நாட்டில் உள்ளன. எனவே, இவற்றைக் கோட்டாறுகள்' என்கின்றனர். இலக்கியச் சான்றுகளைப் பார்க்கும்போது தமிழக ஆறுகளில் வற்றாது நீர் ஓடியதைக் காண்கி றோம். காவிரி, வைகை, பொருநை (தாம் பரபரணி), வைப்பாறு, பாலாறு, வெள்ளாறு முதலிய ஆறுகள் வங்கக்கடலில் கலக்கின்றன. சந்திரகிரி ஆறு, பொன்னானி ஆறு, பேய்ப்பூராறு, பெரியாறு, பம்பை ஆறு முதலியன மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபிக் கடலில் கலக்கின்றன. பழம்பெரும் நகரங்கள் ஆற்றங்கரைகளில் தோன்றின. தென்கோடியிலிருந்த பஃறுளி ஆறு குமரிக்கண்டம் கடல்கொண்டபோது கடலால் கொள்ளப்பட்டுவிட்டது. 4. மலைகள் அ. மேற்குத் தொடர்ச்சி மலைகள் தமிழகத்தின் மேற்கிலும், கிழக்கிலும் பெரிய அரண்களைப் போல் முறையே மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் பரவி உள்ளன. மேற்குத்தொடர்ச்சிமலை ஒரு சுவரைப்போல் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இதில் ஆங்காங்கே பல கணவாய்கள் உள்ளன. மேலைக் காற்றைப் பிற பாகங்களுக்கு அனுப்ப இக்கணவாய்கள் இயற்கைக் கதவுகள் போல் அமைந்துள்ளன. நெல்லைக்கு அண்மையில் ஆரல்வாய்மொழிக் கணவாயும், கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கோட்டைக் கணவாயும், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முகாமையான கணவாய்கள் ஆகும். இவற்றைத் தவிர கொல்லூர், நீலம்பூர், போடி நாயக்கனூர், அச்சன்கோயில் முதலிய கணவாய்களும் உள்ளன, மேற்குத் தொடர்ச்சி மலை மேலைக்கடலை நோக்கிப் படிக்கட்டுகளைப் போல் அமைந்திருப்பதால் ஆங்கிலேயர்கள் இதனை 'மேலைப் படிகள்' (Western Ghates) என்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஆனைமலைக்காடுகள் அடர்ந்து காணப் படுகின்றன. இதில் பல் ஆழமான பள்ளத்தாக்குகளும் உள்ளன. இக்காடுகளில் தேக்கு, மூங்கில், கடுக்காய், வேங்கை, நூக்கமரம் ஆகியவை செழித்து வளர்கின்றன. வேங்கை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான், கடம்மை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி முதலிய விலங்குகள் வாழ்கின்றன. யானைகளும் மிகுதியாக வாழ் வதனால் இதனை 'யானை மலைகள்' என்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் தேக்கடி, கொடைக்கானல், பழநி ஆகிய கோடை வாழிடங்களும் உள்ளன. மேற்கு மலைத் தொடர்ச்சியும், கிழக்கு மலைத் தொடர்ச்சியும் இணையும் இடத்திற்கு "கொங்குநாடு என்று பெயர். இதனையொட்டி நீல மலைகள் உள்ளன. இவற்றில்தான் ஒத்தைக்கல் மந்து (உதகமண்டலம்), கூனூர் ஆகிய கோடை. வாழிடங்கள் உள்ளன. நீலமலையில் 2,677 மீட்டர் உயரமுள்ள பெரிய சிகரம் உள்ளது. இதனைத் தொட்ட பெட்டா' என்பர். நீல மலைக்குத் தெற்கே உள்ள இடைவெளியில் 'பாலைக்காட்டுக் கணவாய் உள்ளது. மேற்கு மலைத் தொடர்ச்சியில் மிக உயரமான சிகரம் ஆனைமலையிலுள்ள 'ஆனைமுடி' எனும் சிகரமாகும். இதன் உயரம் 2,699 மீட்டர் ஆகும். ஆனை மலைக்குத் தெற்கே பழநி மலைகளும் அவற்றின் கிழக்குப் பகுதியில் கொடைக்கானல் மலைகளும் தெற்கில் ஏல மலையும் அகத்திய மலையும் உள்ளன. அகத்திய மலையில் தான் ''ஆரியன் காவு" எனும் கணவாயும் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்கள் தேயிலை, பாக்கு, ஏலம் முதலியவற்றைப் பயிரிட்டும், மரங்களை வெட்டியும், பிழைக்கின்றனர். பழங்குடி மக்களான காடர், இருளர், தொதுவர், முதுவர், புலையர் முதலியோர் இம்மலைப் பகுதியில் வாழ்கின்றனர். ஆ. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மேற்குமலைத் தொடர்ச்சியிலுள்ள நீல மலையில் இருந்து திருப்பதி வரை காணப்படும் மலைத் தொடர்ச்சிக்கு கிழக்குத்தொடர்ச்சி மலை' என்று பெயர். கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிடக் குறைவானவை. இடைவெளி களும் அதிகம். இம்மலைத் தொடரில்தான் சேர்வராயன் மலை. கல்விராயன் மலை, சவ்வாது மலை, கொல்லி மலை, பச்சை மலை, கஞ்ச மலை முதலிய மலைகளிருக்கின்றன. சேர்வராயன் மலையுச்சி யில்தான் 'ஏர்க்காடு' எனும் கோடை வாழிடம் உள்ளது. . இவ்விரு மலைத் தொடர்களும் நீலமலையில் ஒன்றுகூடி ஈழம் வரை தொடர்ந்து சென்று, கடலுள்ளும் தொடர்கின்றன என்பது தமிழக சமூகப் பண்பாட்டு வரலாறு கடல் ஆராய்ச்சியாளரின் கண்டுபிடிப்பாகும். அதுவே, கடலுள் மூழ்கிய 'குமரிக்கோடு' என்றும், அதில்தான் தமிழர் நாகரிகம் இருந்தது என்றும், இவ்வாறு மலைத் தொடர்களில் இந் நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்றும் நம்புகின்றனர். 5. சமவெளிகள் தமிழகத்தின் நிலப்பரப்பு, கிழக்கு நோக்கிச் சற்றுத் தாழ்ந்திருப்ப தால் அதன் கிழக்குப் பக்கத்தில் ஒரு பரந்த சமவெளி ஏற்பட்டுள்ளது, இதனைக் 'கருநாடகச் சமவெளி' என்பர். இதனுடைய கடற்கரைப் பகுதியைச் 'சோழ மண்டலக்கரை' என்பர். இந்த நீண்ட சமவெளி யை மூன்று பகுதிகளாகப் பிரித்து 1. காவிரி பாயும் சமவெளி 2. வையை, தாம்பரபரணி பாயும் சமவெளி 3. வடக்கேயுள்ள தாழ் நிலங்கள் என அறியலாம். கோவை, தருமபுரி, சேலம், திருச்சி, தஞ்சை ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்த்துத்தான் 'காவிரி பாயும் சமவெளி' என்கிறோம். இந்நிலப் பரப்பைக் காவிரியும் அதன் துணை ஆறுகளான பவானி, நொய்யல், ஆண்பொருனை (அமரா வதி) ஆகியனவும் செழிக்கச் செய்கின்றன. நெல், சோளம், பருத்தி, கம்பு, கேழ்வரகு, நிலக் கடலை, புகையிலை ஆகிய பயிர்கள் இதில் விளைவிக்கப்படுகின்றன, மதுரை, முகவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில்தான் வையையும், தாம்பரபரணியும் பாய்கின்றன. இச்சமவெளிப் பரப்பில் மழை குறைவு. இவ்வாறுகளால்தான் ஓரளவு இப்பகுதி செழுமை அடைகிறது. நெல், பருத்தி, கேழ்வரகு ஆகியவை இச் சமவெளியில் விளைவிக்கப்படுகின்றன. காவிரி பாயும் சமவெளிக்கும் கடற்கரைக்கும் இடையேயுள்ள பகுதியையே "வடக்கிலுள்ள தாழ்நிலங்கள்" என்கிறோம். இப்பகுதி யில்தான் சென்னை, செங்கை, தென்னார்க்காடு, வடஆர்க்காடு ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஆண்டொன்றுக்கு 60 செ.மீ., மழை பெய்கிறது. பாலாறு, தென் பெண்ணை , செய்யாறு, ஆரணி ஆறு முதலிய ஆறுகள் இத் தாழ்நிலப் பகுதியைச் செழிக்கச் செய்கின்றன. நெல், கேழ்வரகு, நிலக்கடலை, 'கரும்பு ஆகியவை இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. 6. தட்பவெப்ப நிலை தமிழ்நாடு வெப்பமண்டலத்தில் அமைந்துள்ளது. நிலநடுக்கோடு இதன் தெற்கில் வெகு அருகில் ஓடுகிறது. நிலநடுக் கோட்டிற்கும், கடகரேகைக்கும் இடையில் இருப்பதால் தமிழகம் வடவெப்ப மண்டத்தி லிருக்கிறது. மார்ச்சு 21 முதல் செப்டம்பர் 21 வரை சூரியன் நிலநடுக் கோட்டிற்கு வடக்கே இயங்குவதால் அதன் கதிர்கள் செங்குத்தாகத் தமிழ்நாட்டின் மீது விழுகின்றன. மே, சூன், சூலை, ஆகசுடு ஆகிய மாதங்களில் சூரியக்கதிர்கள் தமிழ்நாட்டின்மீது செங்குத்தாக விழுவதாலும் கடற்கரைப்பகுதிகள் அருகில் இருப்பதாலும், கடற்கரைப் பகுதிக்கும் உள்நாட்டுப் பகுதிக்கும் வெப்ப அளவு வேறுபடுகிறது. செப்டம்பர் 21 முதல் மார்ச்சு 21 வரை சூரியன் நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே இயங்குவதால் நவம்பர் முதல் பிப்ரவரி வரை தமிழ்நாட்டில் குளிர் அதிகமாக உள்ளது. அக்டோபர் நவம்பர் மாதங்கள் மழைக் காலமாக உள்ளது. இக்காலத்தில் கடற் கரைப் பகுதிகளைவிட உள்நாட்டில் குளிர் அதிகமாக உள்ளது. தென் மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று ஆகி யவை தமிழ்நாட்டிற்குப் பருவ மழையைக் கொண்டு வருகின்றன. 7. மண் வகைகள் 1 வண்டல் மண் ஆற்றுப் படுகையில் வண்டல் மண் ஏற்படுகிறது. இந்த வண்டல் மண் படிந்த காவிரிச் சமவெளியான தஞ்சைப் பகுதியில் தான் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை முதலியன பயிராகின்றன. 2 கரிசல் மண் நெருப்புப் பாறைகளால் உண்டாகும் குறுநிற மண்ணுக்குக் கரிசல் மண் என்று பெயர். இது கோவை, மதுரை, முகவை (இராம் நாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய மண் பருத்தி விளைச்சலுக்கு ஏற்றதாயுள்ளது. 3 சரளை மண் படிவுப் பாறைகள் நொறுங்குவதால் உண்டாகும் மண் 'சரளை மண்' எனப்படும். இம்மண்ணில் அமிலச் சத்தும் அதிகம் காணப்படும். மலைச்சரிவுகளில் இத்தகைய மண் அதிகம் காணப்படும். தேயிலை பயிரிட இது மிகவும் உதவுகிறது. 4 கலப்பு மண் தாழ்நிலப் பகுதிகளில் சரளை மண்ணுடன் குறு மண்ணும், களி மண்ணும் கலந்து புன்செய்ப் பயிர்கள் பயிரிடுவதற்குப் பயன் படுகிறது. இத்தகைய கலப்புமண் வடஆர்க்காடு, தென்ஆர்க்காடு, திருச்சி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, சென்னை ஆகிய பகுதி களில் காணப்படுகின்றது. 8. கனிப்பொருள்கள் சேலம் மாவட்டத்தில் கஞ்சமலை, கோதுமலை, தீர்த்தமலை, கொல்லிமலை, கஞ்சலூர், பச்சைமலை, சுண்ணாம்புக்காடு, சிராப் பள்ளி, பெருமாலை, இராசிப்பூர், ஆத்தூர் முதலிய இடங்களில் இரும்புத் தாது கிடைக்கிறது. அலுமினியம் செய்யப் பயன்படும் 'பாக்சைட்டு' எனும் தாதுப்பொருளும் சேலத்தில் கிடைக்கிறது. களிமண்ணுடன் கலந்து சிமெண்டு செய்ய உதவும் சுண்ணாம்புக்கல் சேலம் மாவட்டம் சங்ககிரி துருக்கம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மதுக்கரை, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, களக்காடு, வள்ளியூர், இராமநாதபுரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களிலும் சுண்ணாம் புக்கல் கிடைக்கிறது. கடல் உப்பு தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஏராளமாய் கிடைக்கின்றது. 9. தாவரங்கள் (காடுகள்) மனிதனுடைய முயற்சி இல்லாமலேயே தானாக வளரும் ' மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகியவை 'தாவரங்கள்' எனப்படும். பொதுவாக மழை அதிகமாக உள்ள இடங்களில் காடுகளும், அளவான மழை பெய்யுமிடங்களில் புல்வெளிகளும், குறைவாக மழை பெய்யு மிடங்களில் முட்புதர்களும் காணப்படும். இத்தகைய மூவகை நிலைத் திணைகளும் தாவரங்களும்) தமிழ்நாட்டில் வளர்கின்றன, தமிழ்நாட்டின் தென்மேற்குப்பகுதியில் 100 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்கிறது. அத்தோடு வெப்பமும் அதிகமாக . இருக்கிறது. இதனால் இரப்பர், கருங்காலி, கோங்கு முதலியனவும் அதிகம் வளருகின்றன. இதனால் இப்பகுதி 'பசுமை மாறாக் காடுகள்" என்றழைக்கப்படுகின்றது. தேக்கு, நாக்கு, சந்தனம் முதலிய அகன்ற இலை மரங்களும் வளர்வதால் 'அகன்ற இலைக் காடுகள்' என்றும் ஒரு பகுதிக்குப் பெயருண்டு. அத்தகைய அகன்ற இலைக்காடுகள் நீலமலை, ஆனைமலை, பழநி மலை, சேர்வராயன் மலை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. யூக்கலிப்டஸ், சின்கோனா ஆகிய மரங்கள் வளரும் பகுதியை 'ஊசியிலைக் காடுகள்' என்பார்கள். தமிழ்நாட்டில் மழை குறைவான இடங்களில் குட்டையான மரங்க ளும், முட்புதர்களும் காணப்படுகின்றன. இத்தகைய காடுகளைக் 'குறுங்காடுகள்' என்பர். இக்காடுகளில் உற்பத்தி ஆகும் காட்டுப் பொருள்களும், விலங்குகளும், பறவைகளும் கூடத் தமிழ்நாட்டின் செல்வங்களாகும். 10. உணவுப் பொருள்கள் தமிழ்நாட்டு மக்கள் அரிசி உணவையே உண்கின்றனர். நெல், ஆற்றுப்படுக்கைகளிலும், சமவெளிகளிலும் பயிராகும் தவச் (தானிய மாகும். ஆறு, குளங்களிலிருந்து நீர்ப்பாசனமில்லாத இடங்களிலும் கிணற்று நீர் இறைத்து நெல் பயிரிடுகின்றனர். இந்த வகையில் நோக்கும்போது தமிழ்நாடு முழுவதும் நெல் பயிரிடப் படுகிறது. கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றையும் உணவாக உட்கொள்ளுகின்றனர். திருநெல்வேலி, இராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் இத்தானியங்கள் அதிகம் பயிரிடப்படு கின்றன. கோதுமை மட்டும் இறக்குமதி செய்யப்படுகின்றது. நீலமலையில் மிகச் சிறிய அளவு கோதுமை பயிரிடப்படுகிறது. பயறு வகைகள், இறைச்சி, மீன் ஆகியவை உணவாகின்றன. மலைச்சரிவு களில் தேயிலை, குளம்பி (காபி மற்றும் நறுமணப் பொருள்கள் பயிராகின்றன. கரும்பு, புகையிலை, எண்ணெய் வித்துகள் மிகக் குறைவாகப் பயிரிடப் படுகின்றன, பருத்தி விளைச்சலில் தமிழகம் தன்னிறைவு கொண்டுள்ளதோடு அது ஏற்றுமதியும் செய்கிறது. 11. பாசன ஏந்துகள் நாம் மேலே குறிப்பிட்டதைப் போல் தமிழ்நாட்டில் வற்றாத ஜீவந்திகள் இல்லை. பெரும்பாலனவை காட்டாறுகளே. ஆயினும், காவிரி போன்ற ஆறுகள் ஜீவநதிகள் போல் உள்ளன. ஆறுகளி விருந்து கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் வெட்டி நீரைப் பரவலாகப் பாயச் செய்து சாகுபடி செய்கிறார்கள், ஏரி, குளம், கிணறு முதலியனவும் நீர்ப்பாசனத்திற்குத் துணைபுரிகின்றன. மேலே கூறப்பட்ட ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம், கிணற்றுப் பாசனம் தவிர்த்து வேறு ஒரு முகாமையான நீர்ப்பாசன வசதியும் தமிழ்நாட்டி விருக்கிறது. அதாவது, மழைக்காலத்தில் நீரைத் தேக்கி வைத்துக், கால்வாய்களின் மூலம் நீர்ப்பாய்ச்சிப் பயிரிடும் முறை ஆகும். மேட்டூர்க் கால்வாய்த் திட்டம், மணிமுத்தாறு திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி அணைத்திட்டம், புதிய கட்டளைக் கால்வாய் அணைத் திட்டம், புள்ளம்பாடிக் கால்வாய்த் திட்டம், விடூர் அணைத்திட்டம், பரம்பிக்குளத்திட்டம், சாத்தனூர் அணைத் திட்டம், வையை அணைத்திட்டம் முதலிய நீர்ப்பாசனத் திட்டங் களால் தமிழகத்தில் நெல் பயிர்கள் செழிக்கின்றன. இத்தகைய பெரிய, சிறிய திட்டங்கள் பல உள்ளன. ஏரிகளும், குளங்களும் மட்டும் 39,000 உள்ளன. தென் ஆர்க்காடு, வடஆர்க்காடு, செங்கை ஆகிய மாவட்டங்களில் ஏரிகள் அதிகம் உள்ளன. இவற்றில், செம்பரம் பாக்கம் ஏரி, புழல் ஏரி, மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு ஏரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும், காவேரிப்பாக்கம் ஏரி, வீராணம் ஏரி ஆகியன மிகுதியும் பாசனத்திற்காகப் பயன்படுகின்றன. கிணறுகளும் ஆழ்துளைக் கிணறுகளும் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகின்றன. 12. பிற தொழில்கள் பயிர்த் தொழிலைத் தவிர்த்த பிறவற்றையே பிற தொழில்கள் என்கிறோம். அவை ஆலைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள் எனப் பிரித்தறியப்படும். கோவை மாவட்டம் பருத்தி ஆலை களுக்குப் பெயர் போனதாகும். எனவேதான் இம்மாவட்டத்தைத் ''தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்பர். இம் மாவட்டத்தில் பருத்தி அதிகம் விளைவிக்கப்படுகிறது. நூல் நூற்பதற்கான ஈரக்காற்று வீசுகிறது. பெரிய ஆலைகளை அமைக்கும் செல்வந்தர்களும் வணிகர்களும் உள்ளனர். மதுரை, தேனி, தூத்துக்குடி, பாபநாசம், கோவில்பட்டி, நாசரேத்து, நாங்குநேரி, ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், சென்னை, சேலம் முதலிய இடங்களிலும் பருத்தி ஆலைகள் உள்ளன. அடுத்து, இரும்பு, எஃகு ஆலைகள். சேலம் எஃகு ஆலை இதில் தலை சிறந்ததாகும். இங்கு இரும்புத் தாதுப்பொருளும், சுண்ணாம்புக் கல்லும் கிடைப்பதால் இரும்புத் தொழிற்சாலைக்குச் சாதகமாயுள்ளது. நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரி ஆலை களுக்குப் பயன்படுகின்றது. கரும்பு விளையும் பகுதிகளில் சருக்கரை ஆலைகள் உள் ளன. நெல்லிக்குப்பம், பாண்டியராசபுரம், வடபாதிமங்கலம், மனோ சிப்பட்டி, திருவாரூர், புகழுர், காட்டூர், பேட்டைவாய்த்தலை, ஆப்பக் கூடம், மோகனூர், பாலக்காடு, ஆம்பூர், மதுராந்தகம் முதலிய இடங் களில் இத்தகைய சருக்கரை ஆலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம் ஆகிய மூலங்களைக் கொண்டு பைஞ்சுதைத் சிமெண்ட் தொழிற்சாலைகள் ஏற்பட்டுள்ளன. அவை ஆலங்குளம், துலுக்கப்பட்டி, சங்ககிரி துருக்கம், தாழையூத்து, கருவூர் முதலிய இடங்களில் ஏற்பட்டுள்ளன. வேளாண்மைக்கு உறுதுணையாகவுள்ள உரத் தொழிற் சாலைகள் நெய்வேலி, கடலூர், தாழையூத்து, ஆற்றூர், தூத்துக்குடி, இராணிப் பேட்டை, எண்ணூர் முதலிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பருத்தி, பட்டுக் கம்பளி உற்பத்தி செய்யும் குடிசைத் தொழில்கள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் உள்ளன. இவை. ஆலைத் தொழிலாகவும் நடக்கின்றன. மற்றும் மரம், பிரம்பு, நெகிழி (பிளாஸ்டிக்), தோல் முதலியவற்றால் பலவகைத் தொழில்கள் நடக்கின்றன, செங்கல் தயாரித்தல், கோரைப்பாய் பின்னுதல், கதர்த் தொழில்கள் முதலியன தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் நடைபெறுகின்றன. 13. வணிக வளர்ச்சி . பண்டைய வரலாற்று அமைதிப்படி நோக்கினால் தமிழகம் தரை வழியாகவும், கடல் வழியாகவும் அயல்நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது தெளிவாகிறது. நண்ணிலக் கடல் வழியாக மேலை நாடுகளுடனும் இந்துமாவாரியத்தின் வழியாகக் கீழை நாடுகளுடனும் நீர்வழி வாணிகத் தொடர்பைப் பெற்றிருந்தது. இதனால்தான் தமிழக அரசும் 'பூம்புகார் கப்பல் வாரியம்' அமைத்து அரசுக்குச் சொந்தமாகக் கப்பல்களையும் வாங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து தோல், வெங்காயம், பருத்தித்துணி வகைகள் ஆகியவை அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இயந்திரங்கள், மருந்துப் பொருள்கள், பொறிகள் (மோட்டார்கள்). தாள் பேப்பர்) முதலியவற்றைத் தமி முகம் இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்குத் தமிழகம், அரிசி, நிலக்கடலை, பருத்தி, தீப்பெட்டி, ஏலம், மத்தாப்பு முதலியனவற்றை ஏற்றுமதி செய்கின்றது. கோதுமை, பயறு வகைகள், மரம், சணல், கம்பளி, பேப்பர் முதலியனவற்றை பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் இறக்குமதி செய்கிறது. வாணிகப் போக்குவரத்துக்கு ஏந்தாகத் தேசிய நெடுஞ் சாலைகள், மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகள், ஊர்ச் சாலைகள் என நான்கு வகைச் சாலைகள் உள்ளன. தேசியச் சாலைகள் பெரும் பாலும் தலை நகரங்களையும், துறைமுகங்களையும் மாநிலச் சாலை களையும் இணைக்கின்றன. இத்தகைய தேசியச் சாலைகளை இந்திய அரசும் பிறவற்றை மாநில அரசுகளும் கண்காணிக்கின்றன. சென்னை - கல்கத்தா, சென்னை - பம்பாய் ஆகியவை நேரடி நெடுஞ் சாலைகளாகும். உள்நாட்டிலுள்ள பிற சாலைகளையும், மின் இணைப்புகளையும் தமிழக அரசே கண்காணிக்கிறது. இத்தகைய தரைவழிப் பாதைகளைத் தவிர, தொடர் வண்டி (இரயில்) வழிப் பாதைகள் இந்திய அரசால் பராமரிக்கப்படுகின்றன. இவை, முக்கிய நகரங்களையும், துறைமுகங்களையும் இணைக் கின்றன. வானூர்தி நிலையங்கள் தமிழகத்திலுள்ள முக்கிய நகரங் களில் உள்ளன. இவை உள்நாட்டு, தேசிய, பன்னாட்டு வானூர்தி வழிகளை இணைக்கின்றன. தமிழ்நாட்டில் கடல் வழியாகத்தான் நீர்வழிப்பாதைகள் உள்ளன. ஆறுகள் எதுவும் நீர்வழிப் போக்குவரத்துக்குப் பயன் படவில்லை. ஆனால் நாகப்பட்டினம் - வேதாரண்யம் கால்வாய், மரக்காணம் - கிருட்டிணை, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை சிறுசிறு நீர்வழிப் பாதைகளாய்ப் பயன்படுகின்றன. சென்னை, தூத்துக்குடி, ஆகிய தமிழகத் துறைமுகங்கள் செயற்கைத் துறைமுகங்களே. அகில உலகப் போக்குவரத்துத் தரத்திற்குச் சென்னைத் துறைமுகம் திருத்தி யமைக்கப்பட்டு வருகிறது. 14. மக்கள் தொகை தமிழகத்தில் தமிழர்களேயன்றி, கன்னடம், மலையாளிகள், தெலுங்கர், உருது மொழி பேசுவோர், ஆங்கிலம் பேசுவோர் எனப் பலரும் உள்ளனர். இந்துக்கள், இசுலாமியர், கிறித்துவர், சமணர், சீக்கியர், பெளத்தர் ஆகியோரும் உள்ளனர். தமிழர்கள் 84.5 விழுக்காடு இந்துக்களாக உள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் மொத்த மக்கள் தொகை 6,21,10, 839 பேர்களாகும். தமிழ்நாட்டில் மொத்த பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும். ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 438 பேர் உள்ளனர். சென்னை மண்டலமென்று இருந்ததைத் தமிழக அரசு 1969-ல் 'தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்தது. இதன் தலை நகரான 'மதராஸ்' என்பதை, 1996-ல் சென்னை ' என்று மாற்றியது. தமிழகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக உருவானது 'அரியலூர் மாவட்டம்' ஆகும். 15. தமிழக நிலப்பரப்பின் தொன்மை உலகத்தில் கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பாகவே தமிழக நிலப்பரப்புத் தோன்றியது. ''கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி" என்பது 'புறப் பொருள் வெண்பாமாலை'யின் கூற்றாகும். பல இயற்கை மாறுதல் களைப் பெற்ற பின்புதான் இன்றைய நிலையை அடைந்தது. இன்றைய நிலையிலுள்ள கல்லும், மண்ணும், காடுகளும், பாலை வனங்களும், நிலங்களும், நீர்த்தேக்கங்களும் பல மாறுதல்களுக்குப் பின்தான் ஏற்பட்டன என்பது அறிவியலார் கூற்றாகும். ஆனால், தமிழக நிலப் பரப்பில் இன்றுள்ள மண்ணும் பாறைகளும் கன்னித் தன்மை மாறாமலே உள்ளன என்கின்றனர். இங்கிலாந்து, அயர்லாந்து, ஃபிரான்சு ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் இணைந்திருந்தன. இதைப் போலவே, அலாஸ்கா, சைபீரியா, சப்பான் ஆகியவையும் மலேசியா, சுமத்ரா, சாவா, போர்னியோ ஆகியவையும் ஆசுத்திரேலியா, நியூகினி, தாசுமேனியா ஆகியவையும், இந்தியாவும் இலங்கையும் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தன. பின்னர்தாம் இவை பிரிந்தன. இந்தியாவின் தென்முனையிலிருந்த குமரிக்கண்டம்' என்ற நிலப்பரப்பு கடலுள் மூழ்கிவிட்டது என்றும் கூறுவர். இவ்வாறு உலக நிலப்பரப்புகள் மாறியும் மறைந்தும், கூடியும் குறைந்தும் பல மாற்றங்களைப் பெற் றிருந்தாலும் தமிழகத்தின் மேல்பரப்பு மட்டும் எத்தகைய மாறுதல் களுக்கும் ஆட்படாமல் இருப்பதை அதிலுள்ள மண், பாறை, உயிரினங்கள் ஆகியவற்றைக் கொண்டு நன்கறியலாம். 16. உலகத் தோற்றம் இன்றைக்கு ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன் நாம் வாழும் உலகம் சூரியனிலிருந்து பிரிந்து தனிக்கோளமாக மாறியது. அப் பொழுது அது தணல்பிழம்பாக இருந்தது. காலப்போக்கில் தணற் குழம்பாக இருந்த அதன் மேற்பரப்பில் இறுகிய தணல்பாறைகளே தோன்றின. பின்னர் அடியிலிருந்த தணற் குழம்பு மேற்பரப்புக்கு வந்து ஆறிய பின் படிவுப் பாறைகளாக மாறின. இயைபியல் மாற்றத்தின்போது தோன்றி இடைவிடாத பெரும் மழையால், மழை நீர் ஊறிய பகுதி கடல்களான போது, மேட்டுப் பகுதி மலைகளாகவும் குன்றுகளாகவும் மாறின. இந்த மாற்றம் அதாவது கடலும், மலையும், குன்றும் ஏற்பட்ட மாற்றம் ஏறத்தாழ நானூற்றைம்பது கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாகும். அதுபோது, கடல்நீர்ப் பொங்கி மேட்டுப்பகுதியைக் கொள்வதும், மேட்டுப்பகுதி கடலுள் மூழ்குவதும், கடல் நீர் வற்றுவதுமான இயற்கை மாறுதல்கள் ஏற்பட்டன. இத்தகைய கடல் கோள்களையே ''ஊழிக்காலம்' என்பர். இக்கடல்கோள்கள் பேரளவில் தாக்கிய காலத்தைப் 'பேரூழி' என்பர். இத்தகைய ஊழிக்காலம், பேரூழிக்காலம் ஆகியவை காலந் தோறும் நிகழ்ந்து கொண்டே இருந்தன, சூரிய ஒளியும், உலகின் சுழற்சிக்கேற்ப வெப்பமும் குளிருமான பருவ நிலைகளை ஏற்படுத் தியது. இவை மாறிமாறி நிகழ்ந்துகொண்டே இருந்தன. இந்தச் சூழலில்தான் வாய்ப்பான சூழலொன்றில் இன்றைக்கு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிரினங்கள் தோன்றத் தொடங் கின. ஆயினும், மனித இனம் இன்றைக்கு நான்கு கோடி ஆண்டு களுக்கு முன்புதான் தோன்றியது. 'சிம்பன்' என்னும் குரங்கின் மூலத்தினின்றே மனித இனம் தோன்றியது. இத்தகைய வழிகளும், பேரூழிகளும் நிகழ்ந்த காலங்களிலும் தமிழக நிலப்பரப்பு முழுவதுமாக அழியாமல் தனித்து நின்றது. இவற்றில் 'ஆர்கேயன் - பேருழி' (Archaen Era [ar] Azoic Era) என்பது உயிரினமற்றப் பேருழி ஆகும். இதன் காலம் இன்றைக்கு 450-460 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அக்காலத்தில் தோன்றிய தமிழகப் பாறைகளில் ஒன்று இன்றும் மாறாமல் அதே நிலையில் இருக்கின்றது. அத்தகைய பாறைகளில் ஒன்றானதும், இன்று சேலம் மாவட்டத்தி லுள்ள கஞ்சமலைப்பாறை என்பதும் இப்பேருழிக் காலத்தில் தோன்றியதாகும். இதனைப் 'பேருழி' அல்லது 'தொன்முதல் ஊழிக் காலப் பாறை' என்பர். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கிடைத்துள்ள பாறையை ஆய்ந்த ஆலண்டு (Holland) என்பார், இஃது உலகில் வேறெங்கும் கிடைக்காத தொன்மையான பாறை என்று குறிப்பிடுகிறார். இரும்பும் மக்னீசியக் கனிப்பொருள் களும் கலந்த இப்பாறை வகையைச் 'சர்னோகைட்டுப்பாறை' (Charnokite) என்பர். மாமல்லபுரத்துக் குடைவரைக் கோயில்கள் இத்தொன்மையான சார்னோகைட்டுப் பாறைகளால் குடைந்து தவையே ஆகும். இத்தகைய சார்னோகைட்டுப் பாறைகள் தமிழகத்தில் உள்ள நீலமலை, பழநிமலை, ஆனைமலை ஆகிய மலைகளில் உள்ளன. சங்ககிரி துாக்கம் சுண்ணாம்புப் பாறைகளும் இக்காலத்தில் தோன்றி யவையே ஆகும். ஆர்க்கேயன் பேரூழிக்காலத்திற்குப் பிறகு தோன்றிய ஊழிக் கால மாற்றங்களெல்லாம் நிலத்தைக் கடல் கொண்ட மாற்றங்களே ஆகும். இதனால்தான் ஆர்க்கேயன் பேருழி அல்லது உயிரினமற்ற ஊழிக்காலத்தே தோன்றிய தமிழகப் பாறையும், நிலப்பரப்பும் உறுதி யாக நிலைப்பெற்றன. இதையே "கல் தோன்றி மண்தோன்றாக் காலம்' என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகின்றது. பாறையாயிருந்த நிலம், ஊழிக்கால் மாற்றத்தால் பாறை உடைந்து மண்ணாகியது. ஆகவே கல்தோன்றிய (பாறை) பின்னர் தான் மண் தோன்றியதென்ற தமிழ் அறிவு, அறிவியலாரால் நிலைப் படுத்தப்பட் டுள்ளது. 17, கடல்கோள்கள் தமிழ், சமற்கிருத இலக்கியங்களில் 'கடல்கோள்கள்' பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, இவை இன்றைய அறிவியலாரால் உண்மையென நிலைநாட்டப்பட்டுள்ளன. தமிழ் நிலத்தோடு நீண்டிருந்த நிலப்பரப்பு ஊழிக்காலத்தில் கடலால் விழுங்கப்பட்டு விட்டது. தென்னகத்தில் இருந்து இங்கிலாந்து வரை ஒருவகை மொழிக் கோர்வை இருந்தது என்றும், தென்னகத்தில்தான் முதல் மாந்தன் தோன்றினான் என்றும், தென்னகம் கடல் கொண்டபோது ஆசியா, ஐரோப்பா முதலிய நாடுகளுக்குச் சென்று, பின்னர் கைபர், போலன் கணவாய்கள் வழியாக மீண்டும் தென்னகம் போந்தான் என்றும், இதனால் தென்னகத் தொல் பழந்தமிழனே பிற நாட்டு நாகரிகத்திற்கு மூலக் கூறுபாடாய் நின்றான் என்றும், பழந்தமிழ் னுடைய தென்னகம் அழிந்தாலும் அவன் இன்றையத் தமிழகத்தி னின்றும் குடிபெயராமல் நிலைத்திருக்கிறான் என்றும், எனவே, தமிழன் நாகரிகம் அறுபடாமல் இருக்கிறது என்றும், ஆய்வாளர் கூறுகின்றனர். 'தென்னாடு கடலால் கொள்ளப்பட்டது' என்பது உண்மை. அத்தகைய தென்னாடே 'இலெமூரியாக் கண்டம்" என்றும், "குமரிக் கண்டம்' என்றும் அழைக்கப்படும் நிலப்பகுதி ஆகும். ஆயின், தமிழ் இனம் என்று தோன்றியது? இன்றைக்கு நான்கு கோடி ஆண்டுகளுக்குமுன் 'மாந்த இனம் தோன்றியது. அதுவே, தமிழினம். அப்பொழுது வட இந்தியப்பகுதி கடலாக இருந்தது. இமய மலைப் பகுதியே கடலாகத்தான் இருந்தது. அன்று இமயமலை தோன்றவில்லை. இன்றும் இம்மலையில் கடல்வாழ் உயிரிகளின் படிவுகள் இருப்பதைக் கொண்டு இமயம் கடலாக இருந்தது என்பதை உறுதி செய்யலாம். இமயம் தோன்றிப் பனி படர்ந்த மலையாக நின்றதால் அதிலிருந்து உருகி ஓடிய நீரோடைகள் கங்கை, யமுனை முதலிய ஆறுகளாயின. 18. ஆதிமாந்தன் தமிழத்தில்தான் தோன்றினானா? இந்த வினாவிற்கு அறிவியலடிப்படையில் விடையிறுப்போம். தமிழகம் நிலநடுக்கோட்டிற்கு வெகு அருகில் உள்ளது. உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை நிலப்பெயர்ச்சி அடையாமல் நிலைப்பாடு உடைய நிலமாகத் தமிழகம் உள்ளது. கடல் கோள்களால் அழிந்துவிடவில்லை. பனிப்படலமும் மற்றும் பல இயற்கைக் கேடுகளும் தமிழ் மண்ணில் ஏற்படவில்லை. கண்டங் களே பெயர்ந்து இடம் மாறியுள்ளன. ஆனாலும் தமிழகமும் அதிலுள்ள காவிரியும் பரங்கி மலையும் உண்டானபடியே உள்ளன. எனவே நீர்வளமும், மண்வளமும், தாவரங்களும், விளைபொருள்களும் மாற்றமடையவில்லை. ஆறுகள் திசைமாறி ஓடவில்லை: மலைகள் சரிந்து விழ வில்லை; கடல் அரிப்பால் நிலம் குறையவில்லை ; பருவ மழையும், தட்பவெப்பமும் மாந்தன் வாழ் ஏற்றனவாயுள்ளன. எனவேதான், மாந்தன் தமிழகத்தில் தோன்ற இயற்கையில் வாய்ப்புகள் அதிக மிருப்பதால் முதல் மாந்தன் இங்கேதான் தோன்றினான் என்று அறிவியலார் கூறுவர். அதற்கான மாந்தவியல் எச்சங்களும், மொழியியல் கூறுபாடுகளும் இங்கு உள்ளன. கடைசியாஉலகின்படிமுறை வளர்ச்சி (பரிணாம வளர்ச்சி)யை நோக்கும்போதும், தமிழகத்தில் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கான இயல்புகள் காணப்படுகின்றன. உலகம் தோன்றிய காலம் முதல் ஏற்பட்டுள்ள படிமுறை வளர்ச்சியில் தமிழகத்தில் நிலப்பொதிஇயல். மண்ணியல், உயிரியல், குமுகாய (சமுதாய இயல் போன்றவற்றில் ஏற்பட்ட ஒவ்வொரு அங்கமும் தமிழ்நாட்டில் காணப்படுகின்றது. ஏறத்தாழ பதினொரு கோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகம் 'கோண்டுவானா' எனும் பெருநிலப்பரப்புடன் இணைந்து ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா ஆகிய கண்டங்களுடன் ஒன்றியிருந்ததால் இப்பரந்த நிலப்பரப்பில் விலங்கினங்களும், தாவரங்களும் ஒரே மாதிரியான படிமுறை வளர்ச்சியினைப் பெற்றுள்ளன. அத்தோடு பண்பாடு, நாகரிகம் முதலியவற்றிலும் இவற்றிற்கிடையே பரிமாற்றமும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு வழிகளால் ஆட்கொள்ளப்பட்டாலும் பனிப் படலத்தால் மூடப்பட்டாலும் தமிழகம் எவ்வித மாற்றமும் அடை யாமல் உள்ளது. 'பனிபடர் ஊழிக்காலம்' (Glacial Age) ஏற்பட்ட போதும் தமிழகத்தில் மாந்த வினம் வாழ்வதற்கேற்ற தட்ப வெப்பமே இருந்ததால் மாந்தவினம் அழிவுறாமல் நீடித்து நின்றது. எனவே, அன்றைய தமிழன் பனிபடர் ஊழியைக் கண்டான். ஆனால், அதனால் மாண்டு போகவில்லை. இதையறிந்த நாட்டினப் பாவலர் பாரதி ‘’தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணர்களும் இவள் என்றுபிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் " என்று வியந்து பாடுகிறார். எனவே ஆதிமாந்தன் தமிழகத்தில் தோன்றினான் எனலாம். 2 வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் முன்னுரை 1. பழைய கற்காலம் 2. இடைக் கற்காலம் 3. கடைக் கற்காலம் 4. புதிய கற்காலம் 5. பெருங்கற்காலம் 6. தொல்பழங்கால நாகரிகம் 7. சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா? 2. வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் முன்னுரை வரலாற்றுக்கு முந்திய காலத்தைத் தொல் பழங்காலம்' (Pre-his toric Period) எனவும் அழைக்கலாம். இக்காலம் எழுத்துச் சான்றுகள் தோன்றுவதற்கு முன்னுள்ள காலமாகும். இத்தொல் பழங்காலம் நாடுதோறும் வேறுபடும். இக்கால கட்டத்தில் தொல் மாந்தன் வாழ்க்கை முறையில் அடைந்த படிமுறை வளர்ச்சியைக் கொண்டு இக்காலத்தையும் கணக்கிடலாம். சங்க காலத்திற்கு முந்திய காலத்தையே 'வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்' என்கிறோம். - தொல்பழங்காலத்தைக் 'கற்காலம்' என்றும் 'உலோகக் காலம்' என்றும் இரு பெருங் கூறுகளாகப் பிரித்துள்ளனர். கற்காலத்தை 'பழைய கற்காலம்' என்றும் 'புதிய கற்காலம்' என்றும் இரண்டாகப் பிரித்துள்ளனர். பின்னர் பழைய கற்காலத்தை இரண்டாகப் பிரித்து இடைக்கற்காலம்' என்றும் பழைய கற்காலத்தின் இறுதிக்காலத்தைக் 'கடைக்கற்காலம்' என்றும் பிரித்து உள்ளனர். புதிய கற்காலத்தின் ஒரு பகுதியைப் பெருங்கற்காலம்' என்றும் பிரித்துள்ளனர். இதனைக் கீழே சற்று விரிவாகக் காணலாம். 1. பழைய கற்காலம் (Paleolithic Period) தொல்பழங்கால வரலாற்றை அறிந்து கொள்வதற்குக் கிடைக்கும் மூலச்சான்றுகள் அக்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளே ஆகும். அக்கருவிகளுடன் அவர்கள் பயன்படுத்திய எலும்பு, மான்கொம்பு, மரம், சங்குப்பொருள்கள் முதலியனவும் ஆகும். இவை குறைந்த அளவில் கிடைக்கின்றன. இந்தப் பொருள்களைக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளை உய்த்து உணரலாம். இயற்கையாகக் கிடைக்கும் கற்களை ஓரளவுக்கு அதே வடிவில் தொல்பழங்கால மனிதன் பயன்படுத்தினான். அக்கற்களை விலங்குகளை அடித்துக் கொல்லவும், அவற்றின் தசைநார்களைக் கிழிக்கவும், கிழங்குகளைத் தோண்டவும் பயன்படுத்தினான். விலங்குகளின் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், மரப்பொந்துகளிலும், இயற்கையாக வுள்ள குகை களிலும் மறைந்து வாழ்ந்தான். ஆக அவன் இயற்கையாகக் கற்றுக் கொண்டவை வேட்டையாடுதலும், பாதுகாப்பாக வாழ்தலும் ஆகும். இவை இரண்டும் பட்டறிவால் அவனுக்கேற்பட்ட படிமுறை வளர்ச்சியே ஆகும். கற்கால மாந்தர் பயன்படுத்திய கருவிகள் செங்கை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கின்றன. இத்தகைய கருவிகள் கி.பி. 1863இல் இராபர்ட் புருசுபுட் என்பவரால் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்டன. இத்தகைய கருவிகளைத் திருவள்ளூரிலும் கண்டறிந்தார். கொசற்றலை யாற்றுப்படுகை, பொன்னேரிப் பகுதிகள் முதலிய இடங்களிலும் இக்காலக் கருவிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அத்திரப்பாக்கம், நம்பாக்கம், குடியம், வடமதுரை, எருமை வெட்டிப்பாளையம், மஞ்சனதரணை ஆகிய திருவள்ளுர்ப் பகுதி ஊர்களிலும் பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றில் அத்திரப்பாக்கத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவிகள் கிடைத்துள்ளன. இது பழைய கற்காலக் கருவிகளின் உற்பத்திக்கூடமாக இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். திருச்சி, தஞ்சை, மதுரை மாவட்டங்களிலும் இத்தகைய கருவிகள் கிடைத் துள்ளன. ஆயினும் வடதமிழ்நாட்டில் குறிப்பாக, திருவள்ளூர், பொன்னேரிப் பகுதிகளில்தான் அதிகம் கிடைத்துள்ளன. தொல்பழங்கால மனிதன் வாழ்ந்த குகைகளிலும் அவன் பயன் படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் பழைய கற்கால மாந்தர் வாழ்ந்த குகைகள் அத்திரப்பாக்கம், குடியம் ஆகிய பகுதிகளில் உள்ளன. தமிழகத்தில் ஏறத்தாழ பதினாறு குகைகள் உள்ளதாக இந்தியத் தொல்பொருள்துறை 1962-ல் கூறி யுள்ளது. இங்குக் கிடைத்துள்ள கருவிகள் சதுரவடிவிலும் வட்ட வடிவிலும் நீள்சதுர செவ்வக வடிவிலும் முட்டை வடிவிலும் உள்ளன. இக்கால மாந்தன் சொரசொரப்பான கரடுமுரடான கற்கருவிகளையே பயன்படுத்தினான். கூழாங் கல்லை இரண்டு முனைகளை யும் கல்லில் தேய்த்துக் கூரான முனைகளை ஏற்படுத்தினான். இத்தகைய வேலைப்பாடு நிறைந்த கருவிகள் "குவார்ட் சைட்", என்னும் ஒரு வகை உறுதியான கல்லால் செய்யப்பட்டுள்ளன, இவ்வகை கருவிகள் பெரும்பாலும் கோடரிகளாக உள்ளன. நீண்ட கத்திகளாகவும் இவை பயன்பட்டன. இவற்றை ஒரு கல்லிலிருந்து பிளந்து எடுத்து பயன்படுத்தி உள்ளனர். - எனவே, இவற்றைச் செதில் கருவிகள்' அல்லது "சில்லுக் கருவிகள்' எனலாம். இவை வசதிக்கேற்றவாறு பாறைகளின் மீது தேய்த்தும் மற்ற கற்களால் நறுக்கியும் வேலைப்பாடுள்ளவையாக மாற்றப்பட்டன. இக்கருவிகளைத் துளையிடவும், தோல், இலை ஆகியவற்றைக் கிழிக்கவும் பயன்படுத்தினர். மேலே கூறிய கருவிகளை ஒருகணம் சிந்தித்தால் அவை படிப் படியாக வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணலாம். அவை வெட்டிகள், கிழிப்பான்கள், கைக்கோடரிகள், கரண்டிகள் எனப் பெயரிடப்பட் டுள்ளன. ஒரு மாபெரும் குறை என்னவென்றால் இக்கால மாந்தனின் உடற் கூறுகளையும் அழைப்பையும் நம்மால் அறியமுடியவில்லை. இத்தகைய கருவிகளைச் செய்த மக்களை ஆப்பிரிக்காவில் 'ஒமோ எரெக்டசு' (Hams Erectus) என்று அழைக்கின்றனர். தமிழகத்தில் இக்காலத்தில் வாழ்ந்த மக்களும் 'ஓமோ எரெக்டசு' இனத்தவராகவே இருக்க வேண்டும். இந்த இனத்தி விருந்தே தான் தமிழினம் உண்டாகி இருக்க வேண்டும். கருவிகளைச் செய்யும் அறிவுத்திறன் ஆப்பிரிக்க ஓமோ எரெக்டசு இனத்தவ ருக்கும், தமிழகத் தொல்பழந் தமிழினத்தவருக்கும் ஒரே மாதிரி இருந்திருக்கிறது. இத்தகைய பழைய கற்கால நாகரிகம் தமிழகத்தில் தோராயமாக இன்றைக்கு இரண்டு இலக்கம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்க வேண்டும். பிறநாடுகளில் இத்தகைய காலக் கணிப்பு வேறுபடுகின்றது. இக்கால மாந்தன் விலங்குகளிலிருந்து வேறு பட்டான். ஆடை யின்றியே வேட்டையாடி இறைச்சியைப் பச்சை யாகத் தின்றான். ஏனெனில் அன்று அவனுக்குத் தீயின் பயன்பாடு தெரியாது. கிழங்கு களையும், காய்கனிகளையும் உண்டான். தனக்கு வேண்டிய ஏனங்களைச் செய்து கொள்ளும் அறிவும் அவனுக்குக் கிடையாது. காரணம் அன்று அவன் மண்பாண்டம் செய்யும் சக்கரத்தைக் கண்டு பிடிக்கவில்லை, இவன் கற்களையே தனது முக்கிய கருவிகளாகப் பயன் படுத்தினான். கற்களை, அவை கிடைத்தபடியே முதலில் பயன்படுத் திய இவன் ஒரு பெரும்பாறையிலிருந்து உடைத்தெடுத்து, அல்லது பெயர்த்தெடுத்துத் தனக்கு வேண்டியவாறு வெட்டும், பிளக்கும். கிழிக்கும் கருவிகளாகச் செய்யக் கற்றுக் கொண்டான். இதுதான் அவனுடைய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. 2) இடைக் கற்காலம் பழைய கற்காலத்தின் முதல் கட்டத்திற்கும், கடைசிக் கட்டத் திற்கும் இடைப்பட்டக் காலத்தையே இடைக்கற்காலம்' என்கிறோம். கல் கருவிகளைப் பயன்படுத்தி வளர்ந்த நாகரிகத்தின் இடைக்காலம் சிறிது வளர்ச்சி பெற்றதாகக் காணப்படுகிறது. 'இடைக்கற்காலக் கருவிகள்' தமிழகத்தில் முதல் கற்காலக் கருவிகள் கிடைக்கும் இடங் களிலேயே கிடைக்கின்றன. இவை கிடைத்த ஆற்றுப் படுக்கைகளைக் கொண்டே இவற்றின் காலத்தைக் கணித்துள்ளனர். படுக்கைகளில் தோண்டினால் மண் அடுக்குகள் வரும். அடியிலுள்ள அடுக்குகள் அழுத்தத்தால் இறுகியும், மேலேயுள்ளவை சற்று - இலகுவாகவும் காணப்பெறும். எனவே, இந்த மண் அடுக்குகளுக்குக் காலத்தைக் கணித்து, எந்த அடுக்கில் கருவி கிடைத்ததோ அந்த அடுக்கின் காலத்தையே (வயது) அதற்கும் கணித்துவிடுவர். இதனை அடிப் படையாக வைத்து நோக்கினால் முதல் பழைய கற்காலக் கருவிகள் மேலேயும், இடைக்கற்காலக் கருவிகள் கீழும் கிடைக்கும். இவற் றிற்கு அடியில் கிடைப்பது கடைக் கற்காலக் கருவி ஆகும். இத்தகைய கருவிகள் செங்கை மாவட்டம் அத்திரப்பாக்கம், மதுரை மாவட்டம் புதுப்பட்டி, சீவரக்கோட்டை, நெல்லை மாவட்டம் மெய்ஞ்ஞானம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட் டுள்ளன. பெரும்பாலான கருவிகள் 'சில்லுக் கருவிகள்' (பெரும் பாறைகளில் இருந்து உடைத்து அல்லது பிரித்து எடுத்த) கருவிகளாகவே உள்ளன, இவை 'ஜாஸ்பர்' வகைக் கல்லிலும், செர்ட்' வகைக் கல்லிலும் செய்யப்பட்டுள்ளன, இடைக் கற்காலக்கருவிகள் உருவில் சிறியன வாகவும் நுட்பமான வேலைப்பாடுடனும் காணப்படுகின்றன. மரக் காம்பு போட்டுப் பயன்படுத்தும் புதிய முறை இக்கருவிகளில் கை யாளப் பட்டுள்ளன. இக்கருவிகளில் செதுக்கிய மரக்கொம்புகளைப் பொருத்தி வேல்களாகப் பயன்படுத்தும் புதிய முறை கையாளப் பட்டது. ஆடையற்ற முதல் பழைய கற்கால மாந்தனைவிட ஒருபடி மேலாக விலங்குகளின் தோல்களை ஆடையாக ஆணியும் அறிவை இந்த இடைக்கால மாந்தன் பெற்றான். இதற்கு ஏற்றதாக இவ னுடைய கருவிகள் தோல் உரிக்கவும் பயன்பட்டன. இக்காலக் கருவிகள் வேலைப்பாடுடையவை, உருவில் சிறியவை, ஆதலால் அவற்றைச் சுமந்து கொண்டு வெகு தொலைவு சென்று வேட்டை யாடினான். எனவே, இக்கால வேட்டையாடும் நிலப்பரப்பு அதிக மானது. ஆற்றோரங்களிலும் கடலோரங்களிலும் மீனைப் பிடித் துண்ணும் தொழிலையும் கற்றான். ஆயினும் இவன் குகைகளில் மட்டுமே வாழ்ந்த நிலை மாறி, வேட்டை நிலங்களிலும் நீர்நிலை ஒரங்களிலும் வாழ முற்பட்டாலும், நிலையான வாழ்க்கையை மேற் கொள்ளவில்லை. இந்த இடைக் கற்காலக் கருவிகள் இன்றைக்கு 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கணக்கிடப்படுகின்றன. இக் கருவிகள் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் சமகாலக் கருவி களோடு ஒத்துள்ளன. நர்மதை, கிருட்டிணை, கோதாவரி ஆகிய ஆற்றங்கரைகளிலும் இத்தகைய கருவிகள் கண்டெடுக்கப் பெற் றுள்ளன. 3. கடைக் கற்காலம் இக்காலக் கருவிகள் ஓர் அங்குல நீளத்திற்கும் குறைவான சிறு கருவிகளாய் உள்ளன, பிடிகளில் பொருத்தித்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் முனைகள் உள்ளன. சிறுகுச்சி யின் முனையில் பொருத்தி அம்பாகப் பயன்படுத்துமாறு உள்ளன. எனவே, கடைக் கற்காலம் வில்லும் அம்பும் பயன்படுத்தக் கற்ற காலமாகும். விலங்குகளைக் கற்கருவிகளைக் கொண்டு கையால் அடித்துக் கொன்ற நிலையிலிருந்து அம்பெய்திக்கொல்லும் நிலைக்கு மாந்தன் மாறி விட்டான். கல்துண்டுகளை மரத்துண்டில் இணைத்து இயற்கையாக விளையும் உணவு தானியங்களை அறுவடை செய்ய அம்மாந்தன் கற்றான். பிறை வடிவிலுள்ள கற்கருவிகளைக் கொண்டு தொடராகப் பயன்படுத்தி உயரமான இடத்திலுள்ளவற்றை அறுக்கக் கற்றுக் கொண்டான். கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் வாழத் தொடங்கிய மாந்தன் எப்பொழுதும் பசுமை நிறைந்த தாவர வகைகளைக் கண்டான். அவற்றிலிருந்து உணவுக்குப் பயன்படும் காய், கனி, கிழங்கு, இலை, கதிர்வகை ஆகியவற்றை உண்டான். மீன் போன்ற நீர்வாழ் உயிரிகளையும் உண்ணத் தொடங்கினான். தாம்பரபரணி (பொருநை ஆற்றின் இருகரைகளிலும் நெல்லைக் கடற்கரை யோரங்களிலுள்ள 'தேரி' என்னும் மணல் திட்டுப்பகுதிகளிலும் கடைக்கற்காலக் கருவிகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இந்த மணல் திட்டுகள் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கிறார் சாய்னர் என்பார், மதுரை மாவட்டம் கோடாங்கிப்பட்டி, திருமங்கலம், கல்லுப் பட்டி முதலிய இடங்களிலும் குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் அம்பாண்டி விளையை அடுத்த முட்டம் தேரியிலும், திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி, கல்லாங்குளத்திலும் கடைக் கற்காலக் கருவிகள் கிடைத் துள்ளன. செங்கை மாவட்டம் அத்திரப்பாக்கத்தில் கிடைத்துள்ளன. காவேரி வடிகால் பகுதியிலும் கிடைத்துள்ளன. இக்கால மக்கள் கூடை முடைதல், பாய்பின்னுதல் ஆகியவற் றையும் கற்றுக் கொண்டனர். இறந்தவரைப் புதைத்தனர். இறுதிச் சடங்குகள் செய்தனர். இவற்றால் கடைக்கற்கால மக்கள் சிறிது நாகரிகத்திலும் பண்பாட்டிலும் முன்னேற்றமடைந்துள்ளதைக் காண்கிறோம். 4. புதிய கற்காலம் பழைய கற்காலத்தைப் போலல்லாமல் புதிய கற்காலக் கருவிகள் வழவழப்பாகவும், மெருகு ஏற்றப்பட்டும், புதிய தொழில் நுட்பத்துடனும் காணப்படுகின்றன. இக்கால மாந்தன் நாடோடியாக இல்லாமல் நிலைத்த வாழ்வை மேற்கொண்டான். இயற்கையில் கிடைத்த உணவை உண்டு. அவை கிடைக்கும் இடங்களுக்குச் சென்று அதனைச் சேகரித்து வாழ்ந்த மாந்தன் தனது தேவைக்கேற்ற உணவுகளைப் பயிரிட்டு, வீடுகட்டி வாழ்ந்து, அதில் உணவு தானியங்களைச் சேமித்து வைக்கும் பெரிய மண்சாடிகளை வைத்து, அவற்றில் தானியங்களைச் சேமித்து வைத்தான். பழைய கற்காலத்தில் அறியாதிருந்த மண் பாண்டங்களையும், சக்கரத்தையும் கண்டுபிடித்து மண் பாண்டங்களைச் செய்யக் கற்றுக் கொண்டான், கல்லையே கோடரியாகப் பயன்படுத்தியதை விட்டு அக்கல் கோடரிக்கு மரப் பிடியைப் போட்டுப் பயன்படுத்தினான், களிமண் சுவர்களை எழுப்பி, அதன்மீது கோரைப்புல் தாள்களைப் பரப்பி, கூரையெழுப்பி வீட்டைக் கட்டினான். இக்காலத்தில் இவன் நீளமான முக்கோண வடிவிலான கருவிகளைப் பயன்படுத்தினான். அவன் செய்த கற்கருவிகளைத் தேய்த்து மெருகேற்றினான். இவை உலோகங்களால் செய்யப்பட்ட கருவிகளைப் போலவே காட்சி அளித்தன. இத்தகைய கருவிகளைச் செய்தவர்களுக்கு 'டெக் கான்டிராப்' என்னும் ஒருவகைக் கல் பயன்பட்டது. இத்தகைய கற்கருவிகள் தக்காணப் பகுதியில் பெல்லாரி, ரெய்ச்சூர் மற்றும் சில ஆந்திரப் பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி மாவட்டங்களிலும், குறிப்பாகச் சேர்வராயன் மலைத் தொடர்களிலும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் பையம் பள்ளியை அடுத்த மலையடிவாரத்திலும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில்தான் புதிய கற்காலத்தில் (1) புதிய கற்காலம் (2) பெருங் கற்காலம் எனும் இரண்டு கட்ட நாகரிகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். முதற் காலகட்டத்தில் எலும்பினால் செய்யப்பட்ட கருவிகளும், 'சாசுப்பர்', 'அகேம்' 'செர்ட்' ஆகிய கல்வகைகளைக் கொண்டு செய்யப்பட்ட சிறு தூவற்கத்தி போன்ற கருவிகளும், 'செல்ட்' என்று அழைக்கப்படும் வழவழப்பான கைக்கோடரிகளும் கிடைத்துள்ளன. இரண்டாம் கால கட்டத்தில் மண்பாண்டங்களில் மாற்றம் காணப் பட்டது. சாம்பல் நிறமாகச் செய்யப்பட்ட பானைகளின் மீது செந்நிறம் பூசப்பட்டது. புதிய கற்கால முதற்கட்ட காலத்தில் பழைய கற் காலத்தினைவிட முதிர்ந்த வளர்ச்சியடைந்த நிலைகள் காணப் பட்டன. மேலே கூறியபடி கற்கோடரிகளுக்கு மரக்காம்புகளிட்டுப் பயன்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. கல்லுளி, கல்வாய்ச்சி, கற்கொத்து முதலான கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. கறுக்கு அரிவாள் கொண்டு கதிர்களை அறுப்பதற்கு அதனை மரப்பிடியில் பொருத்தி அறுக்கும் நுட்பம் இக்காலத்தில் காணப்பட்டது. 'மண்வெட்டி, களைக் கொத்து போன்று மண்ணைக் கிளறும் கற்கருவிகளும் கண்டுபிடிக்கப் பட்டன. அவைதான் 'கற்கொத்து' எனப்படுகின்றன. கல்லைக் கொத்துவ தற்கும் பொலிதல்) இவை பயன்பட்டன, இவற்றால் மரம் வழவழப் பாகச் செதுக்கப்பட்டுத் துளையிடப்பட்டது. உலோகத்தாலான கடப்பாரையைப் போன்று கல்லாலான கடப்பாரை கண்டுபிடிக்கப் பட்டது. இதற்குத் 'தோண்டும் தடி என்று பெயர். இதைக்கொண்டு நிலத்தைத் தோண்டிச் செப்பனிட்டுப் பயிர் செய்தனர். அம்மி, குழவி, திரிகை முதலான வீட்டுப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இக்காலக்கருவிகளில் துளைபோடும் கருவிகள், சுரண்டும் (குடையும்) கருவிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். இவை தோல்களைத் துளைபோட்டுத் தைக்கப் பயன்பட்டகா-தோலாடை தயாரிக்கும் தனல இவற்றால் வளர்ந்தது. பானை ஓடுகளை அளவையாகக் கொண்டு நாகரிகத்தைக் கனாக்கிடும் முறையும் உண்டு. இதன் அடிப்படையில் இக்கால மண். பாண்டங்களின் வாய்விளிம்பில் செங்காவியினால் வண்ணம் தீட்டப் பட்டிருப்பது நாகரிக முன்னேற்றத்திற்கு ஒரு படிக்கல்லாகும். பாறைகளில் திமிலும் நீண்ட கொம்புகளுமுடைய மாட்டின் உருவம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. கருநாடகப் பகுதியில் இத்தகைய ஓவியமும் மாட்டுருவத்தில் பொம்மைகளும் கிடைத்துள்ளன. இவை புதிய கற்கால மக்களின் கலை உணர்வைக் காட்டுகின்றன, உணவு வகைகள் இக்கால மக்கள் கேழ்வரகு, கொள்ளு, பச்சைப்பயிறு ஆகியவற்றையும் பயிரிட்டனர். இவற்றைச் சேமித்து வைக்க பெரிய மட்கலத்தைப் பயன்படுத்தினர். இவை யாவும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆடு, மாடு, கோழி, புள்ளிமான், பன்றி, காட்டுப்பூனை, காண்டா மிருகம் முதலான விலங்குகளின் இறைச்சியை இவர்கள் உண்டார்கள். இவற்றை வீட்டு விலங்குகளாகவும் வளர்த்தனர். இவர்களின் வீடுகள் பெரும்பாலும் குறிஞ்சிநிலப் பகுதிகளாக உள்ளன, களஆய்வு நடந்த பையம்பள்ளியைக் கொண்டு இவர் களின் வீடுகளின் அமைப்பை அறியலாம். இவர்களின் குடிசைகள் பெரும்பாலும் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் ஆனவை; ஓரிரு அறைகளைக் கொண்டவை, மூங்கில் கழிகளை நிறுத்திச் சுவர்கள் அமைக்கப்பட்டன, வாயிற்படி உள்ளது. பெரிய பலகைக் கற்களைப் பரவித் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின்மேல் கூழாங்கற் களும் மண்ணும் பிசைந்து சாந்து பூசப்பட்டுள்ளது. அதன்மேல் சாணம், சுண்ணாம்பு மெழுகப்பட்டுள்ளது. வீட்டினுள் ஒரு பக்கம் கல்லடுப்பும் மற்றொரு பக்கம் தவசம் (தானியம்) சேமித்து வைக்கும் பெரிய மட்பாண்டங்களும் உள்ளன. குடிசைக்கு. வெளியில் குப்பைகளைக் கொட்டிவைக்கும் குழிகள் உள்ளன. சேர்வராயன், சவ்வாது மலைப்பகுதிகளில் வாழ்ந்த புதிய கற்கால மாந்தர்களின் குடியிருப்புகளில் சில இயற்கையாகவே பாறைகளாலான அரண் கொண்டவையாக உள்ளன. பெரிய பெரிய பாறைகளை உருட்டி அரண் அமைத்து அவ்வரணுக்குள் குடிசைகள் கட்டப்பட்டுள்ளன. ஒர் அரணுக்குள் 10 அல்லது 15 குடிசைகள் இருந்திருக்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 200-லிருந்து 300 பேர் வரை வாழ்ந்திருக்கலாம். பையம் பள்ளியில் காணப்படும் புதிய கற்காலச் சின்னங்கள் கி.மு. 1300-1200ஐச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஈரான் நாட்டு மண்பாண்டங்கள் தமிழ் நாட்டு மண்பாண்டங்களை ஒத்திருப்பதால், ஈரான் நாட்டு மக்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்திருக்க வேண்டும் என ஆல்சின், சங்காவியா முதலிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். புதிய கற்கால நாகரிகம் ஓரளவு கடைச் சங்ககால நாகரிகத்தை ஒத்துள்ளது என்றும், புதிய கற்கால மக்கள் திராவிட மொழி பேசும் மக்களின் மூதாதையர் என்றும் கூறி முடிக்கலாம். 5. பெருங்கற்காலம் புதிய கற்காலத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியை பெருங் கற்காலம்' என்கிறோம். முதற்கட்டத்தில் கண்ட கருவிகள், ஏனங்கள் யாவுமே கல்லாலானவை ஆகும். இது மாழையின் (உலோகத்தின்) பயனைக் கண்டறியாத காலமாகும். இதைப்போலவே பெருங்கற் காலம் என்பதும் கல்லையே பயன்படுத்திய காலம்போல் தென்படு கிறது. ஆனால் இரும்பும்' பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதனைச் சிலர் இரும்புக்காலம்' என்பார்கள். மாந்தனின் நாகரிக வளர்ச்சியை யும் பண்பாட்டுக் கூறுபாடுகளையும் கருத்திற் கொண்டு, இக்காலத் தில் இறந்தோரைப் புதைக்கும் புதைகுழிகளைச் சுற்றிப் பெரிய பெரிய கற்களை இவர்கள் பயன்படுத்தியதால்தான் இதனைப் "பெருங் கற்காலம்'' என்கிறோம். பெருங்கற்காலச் சின்னங்கள் பெருங்கற்காலச் சின்னா"களை ஆய்ந்து அவற்றை வகைப் படுத்திக் கூறியுள்ள, வி, டி. கிருட்டிணசாமி என்பார் தனது "சென்னையைச் சுற்றிலும் வரலாற்றுக்கு முந்திய மனிதன்" என்ற நூலில் கல்திட்டை, கல்பதுக்கை, கல் குகை, கல்குடை, மண்குவை, குத்துக்கல், கல்வரிசை, தொப்பிக் கல், குடைக்கல், குடைவரைத் தாழ்வரை, முது மக்கள் தாழி முதலியன பற்றி விளக்கியுள்ளார். கல்திட்டை நிலமட்டத்திற்கு மேல் பக்கத்திற்கு ஒன்றாக நான்கு பக்கங் களிலும் நான்கு கற்களை நட்டு, அவற்றின் மேல் இரண்டு மூன்று கற்பலகைகளை வைத்து மூடப்படும் திட்டையே 'கல்திட்டை' ஆகும். இவற்றிற்கிடையேயுள்ள அறையில் ஈமப்பொருள்கள் இடப்பட்டிருக்கும். நடப்பட்ட கற்கள் சாய்ந்து விடாமலிருக்க இவற்றை அணைத்தாற் போல் சிறு சுவர்களும் எழுப்பப்பட்டிருக்கும். மேலே மூடப்பட்ட தளத்தின் மேல் கூழாங்கற்கள், சரளை மண் முதலியன கொண்டு மெழுகி இருக்கும் இந்தத் திட்டை, சாய்ந்து விடாமலிருக்க பெரிய உருண்டையான கற்களை வட்டமாக வைப்பதுண்டு. இத் திட்டைக்குள்தான் தரைக்கடியில் சவக் குழி இருக்கும். கல் பதுக்கை நிலமட்டத்திற்குக் கீழே செதுக்கப்பட்ட கற்களைப் பக்கச் சுவர்களாகப் பயன்படுத்தி, அந்தப் பக்கச் சுவர்கள் 'ஸ்வஸ்திகா' வடிவில் சாய்ந்து விடாமல் துருத்திக் கொண்டு நிற்கும். அறைக்குள் ஈமப்பொருள்கள் இடப்பட்டு மூடப்பட்டிருக்கும். இதனைச் சுற்றிலும் கல்திட்டைக்கு உள்ளதைப் போலவே பாதுகாப்புச் சுவர்களும், கல் அடுக்குகளும் இருக்கும். மேற்கூறிய கல் திட்டைகளிலும், கல்பதுக்கைகளிலும் இறந்தவரின் எலும்புகளே இட்டுப் புதைக்கப்பட்டிருக்கும். இவற் றில் காணப்பெறும் ஈமத்தொட்டிகள் ஆடுபோல் உருவங் கொண்டு, மண்ணாலானதும், ஓவிய வேலைப்பாடு உடையதுமாயும் இருக்கும், இவற்றினுள் மாந்த எலும்புகளோடு பல அணி மனணிகளும், மண் பாண்டங்களும், இரும்பினால் செய்யப் பெற்ற கலன்களும் இருக்கும். கல்பதுக்கைகளிலும் பக்கக்கல் ஒன்றில் துளையிட் டிருக்கும். இந்த இடுதுளை கிழக்கு நோக்கியே இருக்கும். இதன் வழியாக ஈமப் பொருள்களை இடுவார்கள். மண்குவை; கல்குவைர கல்கிடை; கல்திட்டை, கல்பதுக்கை தவிர்த்த வேறு வகையாகவும் இறந்தவரைப் புதைப்பதுண்டு. அவ்வாறு புதைத்த இடத்தில் மண்ணைக் குவித்து வைப்பார்கள், அதையே 'மண்குவை" என்சி றோம். கல்லைக் குவித்து வைத்தால் அதனைக் ''கல்குவை " என்கிறோம். பெரிய கற்கள் கிடத்தப்பட்டிருப்பின் அதனைக் ''கல்கிடை" என்கிறோம். சவக் குழிகளின் மேல் இவ்வாறு அடையாளம் தெரியும்படி மேட்டை உண்டாக்குவது, அவை மரஞ் செடியால் மூடப்பட்டு அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதற்காகவே ஆகும். குத்துக்கல்; கல்வரிசை, சில இடங்களில் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு கல்லை நிறுத்துவார்கள். அதுவே "குத்துக்கல்" எனப்படும், சில இடங்களில் கற்களை வரிசையாக நட்டிருப்பர். இதுவே ''கல் வரிசை" எனப்படும். இவை 12 மீட்டர் உயரம் இருக்கும். தொப்பிக்கல்; குடைக்கல்; குடைவரைத் தாழ்வரை; கேரளப்பகுதியில் செப்பம் செய்யப்பட்ட கற்களைச் சாய்வாகக் கூம்பு போல் நிறுத்தி அதன் உச்சியில் வட்ட வடிவமான கல்லை வைத்து மூடிவிடுவர். இச்சின்னத்தைத் 'தொப்பிக்கல்' என்பர். நடப்பட்டுள்ள கல்வரிசைக்குள் ஈமப் பொருள்களை இட்டிருப்பர், சாதாரணமாகக் குடைபோன்ற வட்டவடிவமான கல்லைச் சவக் குழியின் மேல் முடிவைத்திருப்பது இன்னொரு வகை. இதற்குக் 'குடைக்கல்" என்று பெயர். இதற்கு நடப்பட்ட குத்துக்கல் கிடையாது. மூன்றாவதாகக் கூறப்படும் "குடைவரைத் தாழ்வரை" என்பது பாறைகளைத் தாழ்வாகக் குடைந்து, அதனுள் ஈமப் பொருள்கள் இடப்பட்டிருக்கும். பாறையில் ஆள் புகுமளவுக்குச் சதுரமான பள்ளம் தோண்டப்படும். பள்ளத்தின் அடிமட்டத்தில் ஆள் நுழையுமளவு ஒரு துளை போடப்படும். இதுவே வாயிலாகும். அதனுள் நுழைந்தால் அறை இருக்கும். அவ்வறையில் விசிப்பலகை, முக்காலி’ போன்ற அமைப்புகள் கல்லிலேயே இருக்கும். அங்குள்ள கல் மேடையின் வாயிலாக அமைக்கப்பட்ட துளையும் கல்வைத்து - மூடப்படும். இதிலிருந்து இரண்டு செய்திகள் நமக்குத் தெளிவாகின்றன. அவை ஈமச்சடங்குகளுக்குள்ள அரிய திருத் (புனிதத்) தன்மை, கற்காலத்தி லேயே கல்லைக் குடையும் கலைத்திறன் ஆகியவை ஆகும். தாழி இது மிகப்பெரிய மண்சாடி ஆகும். இதனை ''முதுமக்கள் தாழி' என்றும் அழைப்பர். இதில் மாண்ட முதுமக்களை இட்டு அடக்கம் செய்வது தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டது. தாழியின் அளவைவிடச் சற்றுப் பெரியதான பள்ளம் தோண்டி அதில் தாழியை இறக்கிவிடுவர். குழியின் அடியில் திண்ணை அமைக்கப்பட்டு ஈமப் பொருள்கள் வைக்கப்பட்ட பின் தாழி இறக்கப்படும். தாழியினுள் எலும்புகளும் இடப்படும். பின்னர் தாழிக் குழியை மண்ணால் மூடிவிடுவர்.. இத்தகைய தாழி அடக்க மேடுகளைத் திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள ஆதிச்சநல்லூரிலும், செங்கை மாவட்டத்தில் பாலாற்றங்கரையிலும், சென்னைக்கருகிலுள்ள திரு முடிவாக்கம் (குரோம்பேட்டை என்னுமிடத்திலும் புதுக்கோட்டை யிலும் கண்டெடுத்துள்ளனர். ஆதிச்சநல்லூர் இவ்வூர் 'முதுமக்கள் தாழிகளின் தோட்டம்' எனப்படும். இங்குள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் சரளைக் கல்மேடு உள்ளது. அதில் தோண்டிப் புதைக் கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளன. அத்தாழிகளிலும், அவற்றிற்கு வெளியிலும், அம் மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைக்கின்றன. அப் பொருள்கள் பொன்னாலும், வெண்கலத்தாலும் இரும் பாலும் செய்யப்பட்டுள்ளன.. இதனால் இம்மக்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கணிக்கப்படுகின்றனர். இத்தாழிகளை "சவக்குழிகள்" என்று கூறிவிட முடியாது. இவை அம்மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் எனலாம். இவை கழகக் (சங்க காலத்திற்குச் சற்று முற்பட்ட காலத்துப் பண்பாட்டை விளக்குகின்றன, இங்கு கிடைக்கும் எலும்புக்கூடுகள், விலங்குகளின் வெண்கல உருவங்கள், சேவல், நாய், எருமை, நெற்றிப் பட்டங்கள், வேல், சூலம், சங்கு வளையல்கள், நறுமணப் பெட்டிகள் முதலியன அம்மக்களின் பொருளாதார நிலையையும் சமய நிலையையும் அறியச் சான்றுகளாய் உதவுகின்றன. இறை வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி, இவர்கள் முருகனை வழிபட்டனர் என்று கொள்ளலாம். பொன், இரும்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களை உருக்கி வார்க்கவும், வேண்டிய உருவங்களைச் செய்யவும் அறிந்திருந்தனர். 6. தொல் பழங்கால நாகரிகம் மதுரை மாவட்டத்தில் விளாங்குடி, அனுப்பானடி, பரவை முதலான ஊர்களிலும் தாழிகள் கிடைத்துள்ளன. கொடைக்கானல், பழநி மலைப் பகுதிகளிலும் தாழிகள் கிடைத்துள்ளன. திருச்சூரிலும், ஐதராபாத்திலும், ஈசுடர் தீவிலும், மேற்காசியாவிலும் இத்தகைய சான்றுகள் கிடைத்துள்ளதால் சங்ககாலத் தமிழரின் முன்னோர்களின் நாகரிகம் ஒரு பரந்த நிலத்தில் பரவியிருந்ததைக் காணலாம். எலும்புக் கூடுகளை ஆய்வு செய்தபோது சங்கத்தமிழரின் முன்னோர்களே அவர்கள் என்பது உறுதியாகிறது. புதுக்கோட்டைப் பகுதியில் முதுமக்கள் தாழி, குரங்குப் படை, பாண்டவர்குழி என்னும் பெயர்களால் அழைக்கப்படுபவை இத்தகைய முதுமக்கள் தாழியைக் குறிப்பனவாகலாம், எலும்புக்கூடுகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒரே குழியில் பல எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. மக்கள் பிணத்தை வெட்ட வெளியில் விட்டுவிட்டுப் பிறகு எலும்புகளைச் சேகரித்து மேற்கூறப்பட்ட ஈமச்சின்னங்களில் வைத்தனர் போலும், புதிய கற்கால மக்கள் பிணங்களைத் தங்கள் வீடுகளிலேயே புதைத்துக் கொண்டனர் என்றும், பெருங்கற்கால மக்கள் வேளாண்மைக்கு உதவாத சரளைக் காடுகளில் புதைத்தார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால் பிணங்களை எரித்ததாகத் தெரியவில்லை . அவர்கள் வாழ்விடங்களும் நீர்வளம் குறைந்த இடங்களாகவே உள்ளன. வடஇந்தியாவில் பெருங் கற்காலத்தில் கட்டப்பட்ட கோட்டை, கொத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் அத்தகையவை காணப்படவில்லை. பையம்பள்ளி: வீடுகள் குடிசைகளே. அவை வட்டமாகவும் நீள்வட்டமாகவும் உள்ளன. சுவரில் மாடக் குழிகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. இவை கற்களால் செய்யப் பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுண்ணாம்புச் சரளையும் பாவப்பட்டுள்ளது. பையம்பள்ளி மலைசார்ந்த ஊர். எனவே குறிஞ்சி நிலக் குடிசைகள்தான் காணப் படுகின்றன. மருத நிலழாயின் மாடி வீடுகள் இருந்திருக்கலாம். மண்பாண்டங்கள் கிடைத்துள்ள மண்பாண்டங்கள் நிறத்தால் நான்கு வகைப் படுகின்றன. அவை 1) சிவப்பு 2) கருப்பு 3) கருப்பு - சிவப்பு 4) செம் பூச்சு ஆகியவையாம். சட்டி, சருவச் சட்டி, கிண்ணம், தட்டு, போகனி, உலைமூடி, மண்டை முதலான பலவகை மண் ஏனங்கள் இருந்தன. இரும்புப் பொருள்கள் மரப்பிடிகளில் பொருத்திப் பயன்படுத்தும் மண்வெட்டிகள், கோடரிகள், கொத்து, அரிவாள். கறுக்கரிவாள், வேல், வாள், ஈட்டி, அம்பு, பட்டாக்கத்தி ஆகிய பெரிய கருவிகளும், சிறுகத்தி, உளி, வாய்ச்சி, ஆணி, தூண்டில், குதிரைக் கடிவாளம், தொங்கும் விளக்கு, பலமுனை விளக்குக் கொக்கிகள், முக்காலிகள் முதலான பல்வேறு பயன்பாட்டுச் சாமான்களும் இரும்பால் செய்யப்பட்டவை ஆகும். தங்க, வெண்கலப் பொருள்கள் நீலமலையிலும், ஆதிச்சநல்லூரிலும் கிடைத்த ஈமச் சின்னங். களோடு, தங்கம், வெண்கலம் ஆகியவற்றாலான பொருள்களும் கிடைத்துள்ளன. சாடி, குவளை, வளையல், மணிச்சிலம்பு, பன்னீர்க் குழல் முதலானவை வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் நுண்ணிய வேலைப்பாடுகளும் இவற்றிலுள்ள கீற்று ஓவியங்களும் சிறந்து காணப்படுகின்றன. ஏனங்கள் சாயாமலிருக்க அடியில் வைக்கும் சல்லடைகள் (பிரிமனை) ஆடு, புலி, எருமை, சேவல், மான் போன்ற விலங்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இலையோடு கூடிய கொடி ஒன்றும் கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூரில் தங்கத்தகட்டால் செய்யப்பட்ட இலைகள் கிடைத்துள்ளன. இவற்றில் இரு முனைகளையொட்டித் துளைகள் காணப்படுகின்றன. இதனால், இவை நெற்றிப்பட்டமாகப் பயன்பட் டிருக்கலாமெனக் கொள்ளப்படுகிறது. தங்கத்தகடுகளைக் கொண்ட தாழி பிற தாழிகளைவிட ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட இரும்பு, தங்கம், வெண்கலம் முதலிய உலோ கங்களாலான பொருள்களேயன்றி வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், 'சங்காலும்', 'கார்னீலியன்', 'ஜாஸ்பர்', 'அகேட்' ஆனிக்ஸ்', செர்பன்டைன்', 'ஸ்மடைட்', 'லாபில்வ ஜீலி', 'குவார்ட்ஸ்' முதலிய அரிய கல்வகைகளைக் கொண்டும் கண்ணாடிகளைக் கொண்டும் செய்யப்பட்ட பல்வேறு பொருள்களும் கிடைத்துள்ளன. இவை ஒவிய வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. கண்ணாடி, சங்கு, பளிங்குகளாலான வளையல்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத் துள்ளன. எட்டு முக்குக் கொண்ட அகல்விளக்கு, மண்ணால் செய்யப்பட்ட காதுகம்மல் முதலியனவும் இங்குக் கிடைத்துள்ளன. பையம்பள்ளியில் மண்பதுமை கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூரில் பருத்தி ஆடையின் எச்சங்கள் கிடைத்துள்ளன, சமய நம்பிக்கை இறந்தவரை இவர்கள் மதிப்போடும் பயபக்தியோடும் அவர்களின் எலும்புகளைப் புதைத்துப் பாதுகாத்திருப்பதும், ஈமச்சடங்குகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவர்களுக்கு இறந்த பின்னும் வாழ்க்கையுண்டு என்ற நம்பிக்கையும், இறந்த வரைப் பயபக்தியுடன் வணங்க வேண்டுமென்ற பண்பும் உள்ளதை கண்காணிப் பார்க்கும் போது இவை சமய நம்பிக்கையி னடியாகப் பிறந்தவையாகலாம். இடுதுளைகள் கிழக்கு நோக்கியே காணப்படுவதால் இவர்கள் சூரியனை வணங்குபவராக இருக்கலாம் என்பதும் பெறப்படுகிறது. வெண்கல முடியில் உள்ள சேவல் உருவம் முருகனின் சேவற்கொடியோடு தொடர்புடையது என்றும், வேல் படை முருகனுடையதாதலால் இவர்கள் முருகவழிபாடுடையவர்களாகவும், சூலம் உள்ளதால் சிவ வழிபாடு உடையவர்களாகவும், இச் சமயப் பண்புகள் தமிழரோடு பிறந்தவையாகு மெனவும் அறியலாம். வாழ்க்கைப் பண்பாடு பழைய, புதிய உலோகக்கால் மாந்தர்கள் புன்செய்ப் பயிர் களான கொள், கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும், குறுவை வகை நெல்லையும் உண்டனர். ஏரிகளுக்கு அண்மையில் வாழ்ந்த பெருங் கற்கால மாந்தர் கூட்டு முயற்சியில் ஏரிகளை உருவாக்கி இருக்கலாம். கூட்டுப் பண்ணைகளாகக் கூட அவர்கள் வேளாண்மை செய்திருக்கலாம். மண்பாண்டம் செய்தல், கொல்லுத் தொழில், கன்னாரத் தொழில், தச்சுத் தொழில், கல் தச்சுத் தொழில், நெசவுத்தொழில் முதலியவற்றில் அவர்கள் ஈடுபட்டனர். கிடைத்துள்ள வில், வாள், வேல் முதலியவற்றைக் கொண்டு அவர்கள் போர் வீரர்களாகவும் இருந்திருக்கலாம் என்பது பெறப்படுகிறது. வேட்டையாடுவதிலும் சிறந்து விளங்கினர். தங்களை நன்கு ஒப்பனை செய்து கொள்வதிலும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதிலும் நாட்டமுள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள். தொல்பழங்கால நாகரிக காலம் எது? தென்னிந்திய நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம் என்பது மேலே நாம் கண்டதமிழ்நாட்டின் பெருங்கற்கால நாகரிகம் அல்லது 'இரும்புக்கால' நாகரிகம் நிலவியிருந்த காலமாகும். தமிழகத்தில் இது கி.மு. 300 - 100 ஆண்டுக்கால எல்லையில்தான் தொடங்கு கிறது. இந்தக் கால எல்லையில் நாம் சங்ககால நாகரிகத்தில் திளைத்து நிற்கிறோம். பையம்பள்ளிச் சின்னங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து நிலவியவை. கோவை மாவட்ட சூலூர் கல்பதுக்கையில் கி.மு. 3ஆம் நரற்றாண்டைச் சேர்ந்த காசு ஒன்றும் கிடைத்துள்ளது. கிடைத்துள்ள பானை ஓடுகளில் கருப்பு - சிவப்பு ஓடுகள் கி.மு. 10 ஆம் நூற்றாண் டிலேயே வழக்கத்திற்கு வந்தவையாகும். இவற்றை ஒருங்கு திரட்டி ஆயும்போது பெருங்கற்காலச் சின்னங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம், முதலாம் " நூற்றாண்டுக்கு உட்பட்ட கால எல்லைக்குள் அடங்கும். இது கடைச் சங்க காலத்தின் முற்பகுதி ஆகும். (சங்ககாலம் கி.மு. 3ஆம் நூற்றாண் டில் இருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை ஆகும்) சிந்து வெளி மக்களுக்கும், தமிழ்நாட்டுப் பெருங்கற்கால மக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக பி.சி. லால் கூறுகிறார். இவ்விரு நாக ரிகங்களிலும் கிடைத்த பானையோட்டுக் கீறல்களைக் கொண்டே அவர் அவ்வாறு கூறுகிறார். ஆரியர்கள் கி.மு. 1500 -ல் தான் இந்தியாவிற்குள் நுழைய முனைந்தனர். அவர்களுக்கு முன்பே திராவிடர் சிறந்த நாகரிக. முடையவர்களாக வாழ்ந்தார்கள். அதற்கொரு எடுத்துக்காட்டு. பெருங் கற்காலச் சின்னங்களேயென பி. சுப்பாராவ் என்பார் கூறுகிறார். 7. சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா? 1922ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தியா முழுவதிலுமுள்ள நாகரிகம் ஆரிய நாகரிகத்தின் அல்லது வேதகால நாகரிகத்தின் மூலத்திலிருந்து வந்ததென அறிஞர்கள் அனைவருமே கருதினர், ஆனால், 1922 ஆம் ஆண்டில் சிந்துவில் புதையுண்டு கிடந்த மொகஞ்சோதாரோவை ஆர். டி. பானர்ஜியும், அரப்பாவைத் தயாராம் சகானியும் கண்டுபிடித்த பின்தான் ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் தொல்பழம் நாகரிகம் ஒன்று இருந்தது தெரிய வந்தது. இந்த நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன் கி.மு. 3000 ஆம் ஆண்டில் சிறப்புற்றிருந்ததென தெரியவருகிறது. "எகிப்திய நாகரிகத்தின் கருப்பொருளாய் விளங்குவது அங்குள்ள பிரமிடு கோபுரங்களே" என்று ஏ. ஜே. தாயின்பி கூறுகிறார். இதைப் போலத்தான் மொகஞ்சோதாரோ, அரப்பா கட்டடங்கள் இந்திய நாகரிகத்தின் கருப்பொருளாய் விளங்குகின்றன'' என்றும் கூறுகிறார். இந்தக் கட்டடங்கள் கி.மு. 3000-2000 ஆண்டு தளில் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆரியர்கள் கி.மு. 1500-ல் தான் - இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டனர். எனவே, இதனை அழித்து ஒழித்தவர்கள் ஆரியர்களே. அதற்கான சான்றுகளும் வேதங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுகின்றன. ''இருக்கு வேதத்தில் இந்திரனை ஏவிக் கருப்பர்களை (திராவிடரை) அழிக்கும்படியும், அவர்களின் நகரங்களை அழிக்கும் படியும் கூறப்பட்டுள்ளது. ஆரியர்கள் குறிப்பிடும் கருப்பர்கள் திராவிடரே என்றும், நகரங்கள் சிந்துவெளி நகரங்களே" என்றும் ஆர். கே. முகர்ஜி கூறுகிறார், "இந்நிலம் தாசரைப் புதைக்கும் சவக்குழி ஆகும். இந்திரன் 30,000 தாசர்களையும், 50,000 கிருட்டிணர்களையும் கொன்றான். கருப்பரை ஒழிக்க நடத்திய போரில் யச்சுவான் என்பவன் வாங் கிரிதன் என்பவனுடைய நூறு நகரங்களைத் தாக்கினான். தாசரின் தலைவனான சம்பரனுக்குச் சொந்தமான 90 முதல் 100 வரையிலிருந்த நகரங்கள் அழிக்கப்பட்டன்" என்றும் ஆர். கே. முகர்ஜி கூறுகிறார். இதனால் சிந்துவெளி நாகரிகத்தைப் படைத்தவர்கள் ஆரியர்கள் தான் எனும் கூற்றுப் பொய்த்துப் போகிறது. "ஆரியர்கள் கி. மு. 2500-ல் சிந்துவில் குடியேறி கி. மு. 2500 முதல் 1500 வரை சிந்துவில் தங்கள் நகரக்குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். அவை மண்மூடிப் போனபின் கி.பி. 1500 -ல் இருக்கு வேதகால நாகரிகத்தை உருவாக்கினர்" என்று கூறும் அவர்களுடைய கூற்று ஒப்புக்கொள்ள முடியாததாகும். சிந்துச் சமவெளி நாகரிகம் நகர நாகரிகம்; வேதகால நாகரிகம், கம்ம (கிராம) நாகரிகமாகும். ஆரிய பண்பாடுகள் வேறு; சிந்துச் சமவெளி மக்களின் பண்பாடு வேறு. குடிசைகளில் வாழ்ந்த ஆரியர் பல்லாயிரம் கதவுகளையும், தூண்களையும் உடைய கருப்பருடைய நகரங்களை அழிக்கும்படி இந்திரனை ஏவுவானேன்? "சிந்துச் சமவெளி நாகரிகச் சின்னங்கள் எகிப்திய, மெசப் தோமிய, சுமேரிய, ஏலம், பாபிலோனிய நாகரிகச் சின்னங்களோடு ஒத்துக் காணப்படுவதால் சிந்துச் சமவெளி மக்கள் மிகப்பரந்த பரப்பில் வாழ்ந்து, பொதுப் பண்பில் தோய்ந்த நாகரிகத்தை வளர்த்தார்கள்'' என்று பி. பி. லால் கூறுகிறார். எனவே, ஆரிய நாகரிகத்தோடு ஒப்புவமை கூறவோ அல்லது ஆரிய நாகரிகத்தின் எச்சமெனக் கூறவோ முடியாத அளவு தனித் தன்மையுடன் காணப்படுவது சிந்துச் சமவெளி நாகரிகமாகும். வேதகாலத்தில் எழுத்தறிவே இல்லை. ஆனால் சிந்துச் சமவெளி எழுத்துகள் திராவிடமொழி எழுத்துகளை ஒத்துள்ளன வென ஈராசுப் பாதிரியார் முதலிய பல அறிஞர்களும் கூறுகின்றனர். சிந்துச் சமவெளி நாகரிகத்தின் தனித்தன்மையை அரப்பாவில் கண்டதால் இதனை அரப்பா நாகரிகம் என்றே பின்னர் அழைத்தனர். குசராத்துக்கு மேற்கில் கடலுக்கு அடியில் பண்டைய துவாரகை நகரின் எச்சங்களைக் கண்டுபிடித்தபின் இது பெருங் கற்கால நாகரிகத்திற்கு முந்திய நாகரிகம் எனக் கண்டனர். இந்த பெருங்கற்கால நாகரிகம், இடைச்சங்க கால நாகரிகத்தோடு தொடர்பு உடையதாகக் கண்டனர். விழுப்புரத்துக்கு அருகிலுள்ள கீழ்வாலையில் கண்டுபிடிக்கப் பட்ட செந்நிற ஓவியங்களும், எழுத்துகளும் அரப்பா எழுந்துக ளோடும், லோதால், காளிபங்கன் ஆகிய இடங்களிலுள்ள எழுத்து களோடும் பெரிதும் ஒத்திருக்கின்றன வென்றும் எனவே தமிழகப் பெருங்கற்கால நாகரிகம் இந்தியா முழுவதும் பரந்து நின்றதென்பதை கீழ்வாலை எழுத்துகள் விளக்கி நிற்கின்றனவென்றும் இதனைக் கண்டறிந்த புதுவை வரலாற்றுக் கழகம் கூறுகிறது. பானை ஓடுகள் தான் தொல்பழங்காலப் பண்பாட்டையும் காலக் கணிப்பையும் அறிய உதவும் காலக் கண்ணாடி ஆகும். பெருங்கற் காலத்துப் பானை ஓடுகளிலுள்ள குறியீடுகள் சிந்து வெளியில் கிடைத்துள்ள பானை ஓடுகளிலுள்ள குறியீடுகளோடு பெரிதும் ஒத்து உள்ளன வென்று இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் பி. பி. லால் கூறுகிறார். இத்தகைய பானைக் குறியீடுகளே பின்னர் ஒலி எழுத்தாகவும், ஓவிய ஓலி எழுத்தாகவும் (சங்கேதம்) மாறின வென்றும், கொற்கையில் கிடைத்த பானை ஓடுகளில் இத்தகைய எழுத்துகள் உள்ளன வென்றும் தொல்லியல் துறையினர் கண்டுள்ளனர். இதே வகை எழுத்துகளே அரப்பாவிலும் உள்ளன. காலப்போக்கில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் அசோகன் கல்வெட்டுகளில் இவை பிராமி (கழுதை உதடு போன்ற) எழுத்துக்களாகவும், தமிழகத்தில் தாமிழி எழுத்துக்களாகவும் வளர்ச்சி அடைந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். அரப்பா நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளும், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் எலும்புக் கூடுகளும் ஒரே மாதிரியாய் உள்ளன. எனவே, தொல்பழம் திராவிடரே இந்தியா முழுவதும் பரவி இருந்தனர் என்பது புலனாகிறது. மேலும், அரப்பாவிலுள்ள சவக்குழிகளில் பிணங்கள் வடக்குத் தெற்காக புதைக்கப்பட்டுள்ளதைப் போலவே தமிழக ஈமச் சின்னங்களிலும் காணப்படுகின்றன. முதுமக்கள் தாழிகளும் இதைப் போலவே ஒத்திருக்கின்றன. இதனாலும், திராவிடர்களின் பண்பே சிந்து வெளிப் பண்பாடும் நாகரிகமும் என முடிவு செய்யலாம். காவிரிப்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்காலக் கிணறுகளும், அரப்பனில் காணும் கிணறுகளும் வட்ட வடிவில் ஒரே மாதிரி இருக்கின்றன. கட்டடத்திற்குப் பயன்படுத்தப் பெற்ற செங்கற்களும் தமிழ் மக்கள் பயன்படுத்திய செங்கற்களோடு அரப்பன் செங்கற்களும் ஒத்திருக்கின்றன. சுருங்கை, துருத்தி ஆகிய நிலத்தடி சாக்கடை, சங்க இலக்கியங் களில் பெரிதாகப் பேசப்படுகின்றன. இது அரப்பனில் உள்ளது. ஆதிச்சநல்லூர், திருக்காம்புலியூர் முதலிய இடங்களிலுள்ள சக்தி, சிவன், இலிங்க வழிபாடுகளும் அரப்பன் சமய வழிபாட்டிலும் உள்ளன, இவற்றால் தொல்பழம் தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தனர் என்பதும், சிந்துவெளி நாகரிகம் திரவிடர் (தமிழர்) நாகரிகம் என்பதும் வெளிச்சமாகின்றது. எகிப்திய, மெசபத்தோமிய, சிந்துவெளி நாகரிகங்கள் ஒத்த தன்மையுடையனவாகவும், நெருங்கிய தொடர்புடை யனவாகவும், மக்களின் வாழ்க்கை முறைகள், வழிபாட்டு நிலைகள், எழுத்து அமைதி முதலியனவும் ஒருமித்துக் காணப்பெறுவதால் இவற்றிற்கெல்லாம் மூலம் ஒன்றிருக்க வேண்டுமல்லவா? அந்த மூலமே இந்து மாவாரியத்தில் மூழ்கிப் போன குமரிக்கண்ட - (பழம்பாண்டிய நாடு) நாகரிகமாக இருத்தல் வேண்டும். எனவே, அரப்பன் பண்பாடு. குமரிக்கண்ட தென்தமிழ்ப் பண்பாட்டின் போலியே ஆகும். 3 தமிழரின் தாயகம் 1. குமரிக் கண்டத்தினர் 2. கலப்பினத்தவர் 3. மொழி அடிப்படையில் 4. உடற்கூறு அடிப்படையில் 5. இனக்கூறு அடிப்படையில் அ. நீக்ரோவர்? ஆ. ஆசுத்திரேலியர்? 6. நண்ணிலக் கடற்பகுதியினரா? 7. மங்கோலிய இனத்தவரா? 8. ஆசுத்திரேலியரின் முதாதையரா? 9. நாகர் இனத்தவரா? 10. எகிப்தில் இருந்து வந்தவரா? 11. திராவிடரின் மூதாதையர் தமிழரே? 12. முடிவுரை 3. தமிழரின் தாயகம் முன்னுரை மாந்தன் தோன்றியது தொல் பழந்தமிழகமே என்பது மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் கருத்தாகும். மரக்கிளையின் சருகு கிடந்த இடத்தில்தான் மரம் இருந்தது என்பதைப் போல சில வந்தேறி களும், தமிழ்ப் பகைவர்களும் சருகு கிடந்த இடங்களை யெல்லாம் 'தமிழரின் தாயகம்' என்று ஆராய்ச்சி யென்ற பெயரால் குழப்பு கின்றார் என்பதும் அவர் கூறும் கூற்றே ஆகும். வரலாற்று அறிஞரும், காய்தல் உவத்தல் அகற்றி ஆய்ந்து சமன் செய்யும் கோல் போல் கூறும் அறிஞருமான வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய 'தமிழரின் தோற்றமும் பரவலும்' என்ற ஆய்வு நூலிலுள்ள கருத்துக் களைப் பாவாணர் பெரிதும் ஏற்றும் போற்றியும் கூறியுள்ளார். தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றியவர்கள் என்பதுதான் இன்றைய கடலாய்வு அறிஞர்களின் முடிந்த முடிவாகும். ஆனால் விதண்டாவாதக்காரர்கள் சிலர் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததே இல்லை என்கின்றனர். தமிழர்கள் நடு ஆசியக் கண்டத்தில் தோன்றித் தமிழகத்தில் குடியேறினார்கள். இவர்களைப் போல ஆரியரும், பிறரும் வந்தேறிகளே என்றும் சிலர் கூறுகின்றனர். அதாவது தமிழரின் தாயகம் (பூர்விகம் தமிழ்நாடே என்றும், அயல் நாடே என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றைச் சற்று விரிவாக ஆய்ந்து முடிவைக் காண்போம். 1. இலெமூரியக் கண்டத்தினர் மேலே வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்' என்ற தலைப்பில் தமிழ் நிலம் எத்தகைய ஊழிக்கால இயற்கை மாறுபாடுகளுக்கும் ஆட்படாமல் எப்படித் தனித்தன்மை மாறாமல் தனது கன்னித் தன்மையுடன் நின்றது என்பதைக் கண்டோம். தமிழர்கள் இத்தகைய கன்னி மண்ணிலேதான் தோன்றினர். நிலநூல் அறிவியலின்படி தென்னிந்தியாவும் இலங்கையும் ஏறத்தாழ 4500 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி இந்தியத் தீவக்குறை, தென் ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய பெருநிலப் பகுதியுடன் இணைந்து கொண்டவனம்' என்ற பெரு நிலப் பரப்பாக (கண்டம் இருந்தது. எம்ஸோஸோமிக்' ஊழிக் காலத்தில் இந்த பெருநிலப் பரப்பான கோண்டவனம் உடைந்து அதன் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்டது. இதனால் ஆசுத்தி - ரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா முதலியவை தனித்தனி கண்டங்களாகப் பிரிந்து விட்டன. ஆனால் இந்தியா மட்டும் ஒரு பெரிய கற்பாறையாக நிலைத்து நின்றது. அவ்வாறு நிலைத்து நின்ற பகுதியைத்தான் 'இலெமூரியா கண்டம்' என்று அழைத்தனர். பின்னர் 'ஜுராஸிக்' என்ற வரலாற்று ஊழிக் காலகட்டத்தில் இன்றைக்கு 150 முதல் 200 கோடி ஆண்டுகட்கு முன்பு இந்தியத் தீவக்குறையின் கிழக்குப்பகுதி கடலுள் மூழ்கிவிட்டதால் வங்காள விரிகுடா தோன்றியது. " மேலும் 'பனிக்கட்டிக் காலம்' எனும் ஊழிக்காலத்தில் பனிக் கட்டிகள் உருகியதால் மேலும் பல நிலப்பகுதிகள் கடலுள் மூழ்கி விட்டன. இதனால் கடற்பகுதி அதிகரித்தது. முழ்கிய நிலப் பகுதிகள் போக, அங்குமிங்கும் எஞ்சி நிற்கும் நிலப்பகுதிகளாக சுமத்திரா, சாவா, போர்னியா முதலிய கிழக்கிந்தியத் தீவுகள் தோன்றின. இந்த நில - இயல் நிகழ்ச்சிகள்தான் வேதம், புராணங்களில் 'பிரளயங்கள்' எனப் பட்டன. இவற்றையே நாம் கடல் கோள்கள் என்கிறோம். இத்தகைய பிரளயங்களிலும் மாண்டு மடிந்து, மறைந்து விடாமல் நிலைத்து நின்ற தமிழ்நிலத்தில் வாழ்ந்தவர்களே தமிழர்கள்' ஆவர். எனவே, இவர்களின் தோற்றம் இலெமூரியா கண்டமே ஆகும். பாகவத புராணத்தின்படி பிரளயம் (கடல்கோள்) ஏற்பட்டு பெருநிலப் பரப்பு நீரில் மூழ்கியபோது இமயமலையை நடுவிடமாகக் கொண்ட திராவிட நாட்டின் நடுப்பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் நின்றது. அச்சமயத்தில் திருமால் (விஷ்ணு) மச்ச அவதாரம் எடுத்து நீந்தித் தப்பி வந்தார் என்று கூறப்படுகிறது. கடல்கோளால் மாண்டு மறைந்து விடாத தமிழர், இதனால்தான் மீனை வணங்கினர். பாண்டிய அரசர்களும் மீனை அரசச் சின்னமாகக் கொண்டனர். தொன்மமும் புராணமும் வரலாற்றுச் சான்றாக உதவும் என்பதனை மச்ச அவதாரக் கற்பனைக் கதையால் அறியலாம். 'மீன்', 'நீர்' என்ற சொற்கள் தமிழர் நாகரிகத்திலும் சிந்துவெளி நாகரிகத்திலும் நிலைத்து இருப்பதையும் காணலாம். பிரளய காலங்களில் நீருள் மூழ்கி மூழ்கி மீண்டதால் இவர்கள் "முக்குவர்" எனப்பட்டனர், 2. தமிழர்கள் கலப்பினத்தவர் என்று கூறும் கருத்து ஏற்புடையதன்று பிரளயங்கள் ஏற்பட்டபோது தமிழர்கள் ஆரியர், சாகர், அல்லது இந்தியர் மற்றும் மங்கோலியர் இனத்தோடு கலப்புண் டவர்கள் என்று எச். ரிஸ்வி என்பார் கூறுவார். முதலில் திராவிடர் (தமிழர்) குள்ள வடிவமும் கருத்த தோலும் நீண்ட தலையும் பரந்த சப்பை மூக்கும் நீண்ட முன்கைகளும் உடையவர்களாக இருந்தனர் என்றும், பின்னர் ஆரியர், சாகர்களோடும், மங்கோலியரோடும் கலந்து நால்வகை இன மூலங்களின் அடிப்படைக் கூறுகளைப் பெற்றுவிட்டனர் என்றும் தனது இந்திய மக்கள்' (The People of India) என்ற நூலில் ரிஸ்வி குறிப்பிடுகிறார். இத்தகைய திராவிட- ஆசுத்திரேலிய இன உறவு, திராவிட - இந்திய (துருக்கியர்) இன உறவு, திராவிட- மங்கோலிய இனஉறவு, திராவிட - இமயமலைக்கு அப்பாலுள்ளோர் இன உறவு, ஆகிய கலப்பு இனக் கோட்பாட்டை எவரும் ஏற்றிலர். குருக் (W, Croch) என்பாரின் திராவிடர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்ற கூற்றும் ஏற்புடையதன்று. தொல் பழந்தமிழர்கள் சிற்றாசியா, கிரேக்கம் ஆகிய நாடு களுக்குச் சென்றிருக்கலாம், சிற்றாசியாவிலுள்ள 'விசியன்' மக்கள் கிரேக்க இனத்துடன் குருதிக்கலப்பு அற்றவர்களாய் இருந்தனர் என்றும், அவர்களைப் போலவே அங்கு வாழ்ந்த 'டிரெட்மிலி' என்பவரே திராவிடர் (தமிழர்) ஆகலாம். பின்னர் பண்டைய வீரபாவியமாகிய திரோய்' நகர மக்களாகிய த்ரோஜன்' மக்களோடு குருதிக்கலப்பு உடையவராயினர் என்று கூறப்படும் முடிவை ஏற்றால், தமிழரில் ஒரு பிரிவினர் சிற்றாசியாவில் குடியேறி 'டிரெட்மிலி' என அறியப்பட்டதி லிருந்து அறியலாம். இதுவே 'தமிழர்' எனும் சொல்லாக மருவியது என்பார் கனகசபை பிள்ளை , இதனையும் ஏற்பதற்கு இல்லை. எது எப்படியாயினும் தமிழரின் தாயகம் கிரேக்க போ, சிற்றாசியாவோ அல்ல. அங்கு சென்றவர் என்பது உண்மையானாலும், தமிழகத்தில் தான் அவர்களின் தாய் வீடு உள்ளது என்பது உறுதி. 3. மொழியின் அடிப்படையில் நோக்கினாலும் தமிழர் கலப்பினத்தவர் ஆகார் திராவிட மொழியும், வடகிழக்கு இந்திய மலைகளிலும், காடு களிலும் வாழ்ந்த பழங்குடி மக்களின் முண்டாமொழியும் இரண்டறக் கலந்திருப்பதால் தமிழர்களும் அப்பழங்குடியினரின் கலப்பால் தோன்றியவர்களோ என்ற ஐயப்பாடும் எழுகிறது, வடகிழக்குப் பகுதியிலிருந்து வந்தவராகலாம் என்று முண்டா மொழிக் கலப்பை வைத்துக் கூறுவதைப் போலவே திராவிட மொழிக் கலப்பால் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படும் பிராகுயி மொழி "திராவிடர் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தனர்" என்ற கூற்றும் ஏற்புடையதாயில்லை . பிராகுயிமொழி பலுசிஸ்த்தானத்தில் காணப்படும் மொழி, அது ஆரிய மொழியால் வளம்பெற்ற மொழி. அம்மொழி பேசும் மக்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள். ஆயினும் அதிலுள்ள பெயர்ச்சொற்கள், சுட்டுப் பெயர்ச் சொற்கள் முதலியன திராவிட மொழிச் சாயலையுடையன. இதை வைத்துக்கொண்டு பலுசிஸ்த்தானம் வழியாகவும் திராவிடர் (தமிழர்) வடமேற்குக் கணவாய்களின் வழியாவும் வந்தார்கள் என்பது ஏற்புடைத்தன்று. தென்னாட்டிலிருந்து திராவிடர்களில் ஒரு பிரிவினர் வடக்கிற்கும், வடமேற்குத் திசைக்கும் சென்று குடியமர்ந்தனர் எனலாம். ஆனால் கலப்பினத்தவரல்லர். 4. உடற்கூறு அடிப்படையில் இதைப் போலவே பழங்குடித் திராவிடர் சிலர் தென்னாட்டி விருந்து இராசபுதனத்திலும், மத்திய இந்தியாவிலும் பரவினர். திராவிட மொழிகளோடு நெருங்கிய ஒருமைப்பாடு உடைய மொழிக ளாகிய 'வில்லி', மற்றும் 'சந்தால்' ஆகிய மொழிகளில் பரவலாகத் திராவிட மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. இதனையொட்டித் தான் 'அரப்பன்' பண்பாட்டிலும் திராவிடப் பண்பாடே மிகுந்து. காணப்படுவதை அறியலாம். நாகரிக அடிப்படையிலும் இவை ஒத்துள்ளன. மொழிப்பரவலை அடிப்படையாகக் கொண்டே மொழி பேசும் மக்களுடைய தாயகமும் அமைந்திருப்பதாகக் கூறக் கூடாது. "ஒரே வித மொழிகளைப் பேசுவோரெல்லாம் குருதிக் கலப்புடை யவர்களாக இருக்க வேண்டும் என்பது நியதியல்ல. மொழியும் அறிவும் இனம், தேசியம் என்ற வேறுபாடு இல்லாமல் தடையின்றி எங்கும் பரவலாம். எனவே மொழியை அடிப்படையாகக் கொண்டு இனம் காண்பதும், இடம் காண்பதும் சரியான ஆராய்ச்சியின் முடிவுகள் அல்ல என்பது எல்.டி. பர்னத் என்பாருடைய கருத் தாகும். இக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது தமிழரின் மொழியில் பிற மொழிக் கலப்படங்களோ அல்லது பிற மொழிகளில் தமிழ் மொழியின் கலப்படங்களோ இருப்பதைக் கண்டு தமிழர் இன்ன இடத்தைத் தாயகமாகக் கொண்டவர் என்று முடிவு செய்வது சரியான ஆய்வு அல்ல. மொழியை அடிப்படையாகக் கொண்டு பேசும்போது மொழியைப் பேசும் மக்களின் குருதி, எலும்பு, மயிர், மண்டை ஓடு முதலிய வற்றைக் குறிப்பிடும் மானுட வர்க்கத்தைப் பற்றிப் பேசக்கூடாது. இந்த அடிப்படைத் தத்துவத்தை மறந்துதான் மாக்சு முல்லர், சர். வில்லியம் ஜோன்சு ஆகியோர் ஆரிய மொழி பேசும் மக்கள் கூட்டத்தை மட்டும் குறிக்கும் அளவோடு நிறுத்தாமல் ஆரிய இனம் பற்றியும் பேசிவிட்டனர். இதனால் ஆரிய இனக்கொள்கை வலுப்பட்டு விட்டது, கடைசியில் மாக்சுமுல்லர், தான் குறிப்பிட்டது ஆரிய மொழி பேசும் மக்களையே என்றும் ஆரிய இனத்தை அல்லவென்றும் கூறித் தப்பித்துக் கொண்டார். எனவே, மொழியை வைத்து இனத்தையும் இனப் பண்பையும் இனத்தின் தாயகத்தையும் முடிவு செய்வது கூடாது என்பது வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதரின் கருத்தாகும். 5. இனக்கூறு அடிப்படையில் தென் இந்தியாவில் மக்கள் வாழ்க்கை பழங்காலம் முதல் இன்று வரை தொடர்ந்து வந்துள்ளது என்ற வாதம் ஏற்புடைத்தன்று. திராவிடர்களுக்கு முந்தியவர்கள் பழங் கற்காலத்தைப் படைத்தவர்கள் ஆவர். இந்த 'முந்தியவர்கள் வழி வந்தவர்கள்தான் இன்றைய இருளரும், குறும்பரும், தோடரும், இலங்கையிலுள்ள வேடரும் ஆவர். தென்னிந்தியப் பழங்குடியினரிடையே ஆப்ரிக்க நீக்ரோ அல்லது மலேசிய பாலசீனிய நீகிரிட்டோ மக்களின் இனத்தின் மூலமும் காணப்படுகிறது என்பது பலருடைய கருத்தாகும். இந்த 'நீகிரிட்டோ இன மூலம்' மலேசியாவிலிருந்து வந்தது என்றும், மலேசியத் தீவக் குறையில் உள்ள சகை இனத்தவரோடு தென்னிந்திய பழங்குடிகளின் முலம் ஒத்துக் காணப்படுகிறது என்பதும் எட்கர் தர்சுடன் அவர்களின் கருத்தாகும். தென்னிந்தியா, மலேசியா மற்றும் பொலினீசியாவோடு வரலாற்றுக் காலத்திற்கு முன்பே வணிகத் தொடர்பு கொண்டிருந்ததால் மலேசிய, பொலினீசிய மக்கள் தென்னிந்தியாவில் குடியேறி இங்கிருந்த பழங்குடியினரோடு இரண்டறக் கலந்துவிட்டனர் என்றும் இதனால் தென்னிந்திய மொழிச் சொற்கள் மலேசியா, பொலினீசிய மொழிகளிலும் காணப் படுகின்றன என்றும் தர்சுடன் கூறுகிறார். இன்றும் மலேசியாவில் தமிழரும், தமிழகத்தில் மலேசியரும் வாழ்வதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். . மேலே கூறப்பட்ட பல் திறப்பட்ட கருத்துகளைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிக் கூறுவோம். உலகில் மாந்தனின் தோற்றம் ஒரே இடத்தில் நிகழ்ந்தது என்பது ஒரு கருத்து. உயிரினம் தோன்றுவதற்கேற்ற தட்பவெப்பச் சூழல் தமிழகத்தில் அமைந்திருந்ததால் இங்கேதான் உலகின் முதல் மாந்தன் தோன்றினான் என்பது இக்கருத்தின் அடிப்படையில் தோன்றிய முடிவாகும். மாந்த உயிரினம் தோன்றுவதற்கான தட்பவெப்பச் சூழல்கள் அமைந்துள்ள உலகின் பலவிடங்களிலும் மாந்தன் தோன்றி இருக்கக்கூடும் என்பது மற்றொரு கருத்தாகும். இவ்வாறு உலகின் பல்வேறு இடங்களில் தோன்றிய ஆதி மாந்தன் வளர்ச்சியில், பல்வேறு மாற்றங்களும் கலப்புகளும் ஏற்பட்டதால் இனப் பாகுபாடுகள் தோன்றக் கரணியமாகலாம். ஆனால், உலகில் மாந்த உயிரினத் தோற்றம் தமிழகத்தில் மட்டுமே நிகழ்ந்தது என்ற கோட்பாட்டை நிலவியல், மண்ணியல், மொழியியல் ஆய்வாளர்கள் ஆகியோர் உறுதி செய்கின்றனர். பல தாழிகளுக்குப் பின்னும் குமரிக்கண்டத்தில் முதல் மாந்தன் தோன்றி னான் என்பதும், பின்னர் ஏற்பட்ட கடல் கோள்களுக்குப் பின்னர் (பிரளயங்களுக்குப் பின்னர்) குமரிக் கண்ட மக்கள் கால் வழியினரே உலகெங்கிலும் பரவினர் என்பதும் இந்த ஆய்வாளர்களின் முடிவாகும். மேலே கூறிய தோற்றத்திற்குப் பின்னர் வளர்ச்சி பெற்ற உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களை நீக்ரோவர், ஐரோப்பியர், மங்கோலியர் எனும் மூன்று பேரினங்களாகப் பிரித்து அறிவர். இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் இத்தகைய மூன்று பேரினங்கள் உள்ளன எனக் கருதுகின்றனர். இப்பாகுபாடு கள் உடலமைப்பு, சமுதாயப் பண்பாடு, மொழியமைப்பு ஆகிய வற்றின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. உடலமைப்புக் கூற்றைக் கொண்டு பாகுபடுத்தும்போது உடல், மேனி நிறம், மண்டை ஓட்டின் அமைப்பு, தலைமயிர், உடல் வாட்டம், உதடு ஆகியவற்றின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களைப் பிரிக்கின்றனர். சமுதாயப் பண்பாடு, மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு செய்வது உடலமைப்போடு ஓரளவு தொடர்புடையதாக உள்ளது. நீக்ரோவர் இப் பேரினத்தை 1) ஆப்பிரிக்க நீக்ரோவர். 21 ஆசுத்திரேலிய நீக்ரோவர் (Australoid) என இரண்டு இனமாகப் பிரித்தறியலாம். ஆப்பிரிக்க நீக்ரோவர் உடலமைப்புகள் இவர்கள் கரிய மேனியர் (அடர் பழுப்பு நிற மேனியரும் உண்டு), கண்ணும் தலைமயிரும் கருப்பு நிறமானவை; மண்டை வட்ட வடிவிலானது. தலைமயிர் சுருண்டு இருக்கும்; மேனியில் உள்ள மயிர் அடர்த்தி குறைந்து தனித்தனியாக இருக்கும்; முக்கு அகன்று பெரிதாய் இருக்கும், காதுகள் குவிந்து சிறியனவாய் இருக் கும் கைகள் நீளமானவை; உயரம் ஐந்தடிக்குக் கீழும் ஏழடிக்குள் ளும் உள்ளவர்களாக இரு வேறு தரப்பினர் உண்டு. இத்தகைய உடலமைப்புகள் தென்னிந்தியப் பழங்குடி மக்கள் பலரிடம் காணப்படுகின்றன என்று அட்டன், பி. எசு. குகா ஆசிய அறிஞர்கள் கூறுகின்றனர். அசாமில் வாழும் நாகர்கள், மலேசி யாவில் வாழும் பழங்குடிகள் ஆகியவர்களிடமும் இத்தகைய கூறு பாடுகள் உள்ளன என்பதும் இவர்களுடைய கருத்தாகும். கேரளா விலுள்ள காடர் முதலான பழங்குடி மக்களிடமும் இத்தகைய கூறு பாடுகள் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால் தென்னிந்தியப் பழங்குடிகளைப் பற்றி ஆய்ந்த தர்சுட்டன் இக்கூற்றை ஏற்க மறுக்கிறார். ஆப்பிரிக்க நீக்ரோவர் பண்பாடுகள் முதன்முதலில் வில்லையும் அம்பையும் செய்து பயன் படுத்தியவர்கள் நீக்ரோ மக்களேயாவர். இவர்கள் அத்தி மரத்தை வழிபட்டனர். இறந்தவர்களைப் பூதம் காவல் புரிவதாக நம்பி னார்கள், மீன், செடி, கொடிகள், விலங்குகளைத் தங்கள் குலச் சின்னங்களாகக் கொண்டனர்; இவர்களின் மொழி இன்னது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆனால் பழந்திராவிட மொழிகளையே பேசி வந்தனர். ஆசுத்திரேலிய நீக்ரோவர் உடலமைப்புகள் நீக்ரோ பேரினத்தின் மற்றொரு பிரிவினர் ஆசுத்திரேலிய நீக்ரோவர் ஆவர். இவர்களின் மேனி கருப்பு நிறமுடையது. சிலர் நடு நிலை வெண்பழுப்பு நிறமுடைய மேனியராகவும் இருப்பர். தலை மயிர் நெளிந்து நேராக இருக்கும் (சுருட்டை மயிராக இருக்காது). முதுமையில் தலை வழுக்கையாகி விடும். இவர்களுடைய மேனி யெல்லாம் மயிர் இருக்கும். கண்கள் குழி விழுந்திருக்கும். தென்னிந்தியப் பழங்குடியினரான மலைவேடர், இருளர், குறும்பர், காடர், சோழகர், பழநிமலை பழையர், இலங்கை வேடர்கள் முதலியோர் இவ்வினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுகின்றனர். தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் (Scheduled Castes) இவ் வினத்தைச் சேர்ந்தவரென்றே கூறுவர். ஆசுத்திரேலிய நீக்ரோவர் காலப்போக்கில் ஆப்பிரிக்க நீக்ரோவருடன் கலந்து விட்டனர், இவர்களின் பண்பாடு: நெல், வெற்றிலை, பருத்தி, கரும்பு முதலியவற்றைப் பயிரிட்டும், பருத்தியால் நூல் நூற்று ஆடை நெய்தும் வாழ்ந்தனர். யானைகளைப் பழக்கிப் பயன்படுத்துதல், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றைப் பயன் படுத்துதல், வெற்றிலை பாக்கு கொடுத்தல், அரசமரத்தைச் சுற்றுதல், கண்ணேறு கழித்தல், தீட்டு விலக்குக் கொள்ளுதல், திங்களை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடுதல் முதலான பண்பாடுகள் இம்மக்களிடம் இருந்தன. இவர்கள் பயன்படுத்திய 'பூம் ரேங்கு' எனும் வளைதடியும், அது குழல்களும் பண்டைய போர்க் கருவிகளாகும். 'முதுமக்கள் தாழி'யி விட்டுப் புதைக்கும் வழக்கமும் மூதாதையரை வழிபடும் வழக்கமும் இவர்களுடைய சமயப் பண்புகளாகும். விலங்குகளைப் பற்றிய கதைகள் இவர்களிடம் வழங்கப்பட்டன. தமிழர்கள் நீக்ரோ இனத்தின் கூறுபாட்டிலிருந்து வந்தவர்கள் என்று மேற்கண்ட அமைதி ஒற்றுமைகளால் கூறுகின்றனர். 6. தமிழர்கள் நண்ணிலக் கடற்பகுதி இனத்தவரா? நீக்ரோவின் கூறுபாடுகள் தமிழக மக்களிடையே காணப் படுகின்றன என்கிறோம். இதைப்போலவே ஐரோப்பிய இனத்தின் கூறுபாடுகள் தமிழரிடையே காணப்படுகின்றன என்றும், அவர்கள் நண்ணிலக் கடற்பகுதி (மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து வந்திருக்கலாமென்றும் கூறுவாருமுண்டு. ''தென்னிந்தியத் திராவிடர் கள் நண்ணிலக் கடல்பகுதி மக்களே" என்று அட்டன் கூறுகிறார், இதே கருத்தை ஜேம்சு ஆர்னல் என்பாரும் கூறுகிறார். நண்ணிலக் கடற்பகுதி மக்களின் மேனி மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் உடையது. அரேபியப் பகுதியில் வாழும் இப்பேரினத் தவரின் மேனி பழுப்பு நிறமுடையனவாகவும் உள்ளனர் ஆனால் நண்ணிலக் கடற்பகுதியில் வாழ்வோரின் மேனி, பொதுவாகக் கரும்பழுப்பு நிறமுடையது. தலைமயிர் மஞ்சள், சிவப்பு, பழுப்பு கருப்பு நிறங்களில் உள்ளது. சுருட்டை மயிராகவும் நேராகவும் தனித்தனியாகவும் இருக்கும். மூக்கு அகன்று உயர்ந்து குறுகிய துளைகளை உடையதா யிருக்கும். உடல் மெலிந்திருக்கும். இத்தகைய உடற்கூறுகள் தமிழர்களுக்கு உண்டா? அவர்களின் மொழிக் கூறுபாடுகளுக்கும் தமிழ் மொழிக்கும் ஒப்புமை உண்டா? தமிழரில் ஒரு பகுதியினர் நண்ணிலக் கடற்பகுதிக்குச் சென்று குடியேறியிருக்கலாம். ஆனால் நண்ணிலக் கடற்பகுதி தமிழரின் தாயகமாகாது. 7. தமிழர்கள் மங்கோலிய இனத்தினின்று வந்தவர்களா? தமிழர்கள் திபெத்திலிருந்து வந்த மங்கோலிய இனத்தவர் என்று கனகசபைப் பிள்ளை கூறுகிறார். ஆயின், மங்கோலியரின் உடற் கூறுபாடுகளையும், பண்பாடுகளையும் ஒருமுறை பார்த்து விடுவோம். மங்கோலியர் உடற்கூறுகள் மங்கோலியர் மஞ்சள் நிறமுடையவர்கள். தடித்த, கருத்த, நீண்ட தலைமயிரை உடையவர்கள், இவர்களின் நீண்டுயர்ந்த முகம், புடைத்த எலும்புகளுடன் காணப்படும் கன்னத்தில் தசை படிந் திருக்கும்; கை கால்கள் குட்டையானவைர நகங்கள் உட்புறம் குவிந்தனவாய் இருக்கும். இத்தகைய கூறுபாடுகளையுடைய உடலமைப்புகளைக் கொண்ட மங்கோலியரின் வழிவந்தவர்களே தமிழர்கள் என்று எக்சுதெட்டு (Eicktedt) என்பார் கூறுகிறார். மேலும் மலபாரிலுள்ள வயநாட்டுப் பகுதியில் வாழும் பழையன் இனத்தவரும், மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவரே என்பதும் அவருடைய கருத்தாகும். மங்கோலியரும் நண்ணிலக் கடற்பகுதியினரைப் போலவே கைபர், போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்களே என்பதும் அவருடைய கருத்தாகும். மேலும் கருமை கலந்த பழுப்பு நிற மேனியுடைய ஆசுத்திரேலியப் பேரினத்தின் ஒரு சிறு பகுதியான பசிபிக் கடல்தீவுப் பகுதி மக்களான மெலனேசியன் [Melanesian) இனத்தவரும் தமிழகத்தில் உண்டு என்பதும் எக்சுதட்டு என்பாரின் கருத்தாகும். சந்தலர், முண்டர், ஏனாதியர் முதலானோரும் இந்த இனத்தவர் என்றும் அவர் கூறுகிறார், 8. தமிழர் ஆசுத்திரேலியரின் மூதாதையர் இனத்தைச் சேர்ந்தவர்களா? ஆதிச்சநல்லூரில் கிடைத்த பதின்மூன்று மண்டை ஓடுகளை யும், சிந்துவெளியில் கிடைத்த சில மண்டை ஓடுகளையும் ஆய்ந்த லாமார்க்கு (Lamark), டார்வின் (Darwin) போன்றோர் இவர்களைப் பற்றிய சரியான முடிவுகளை வெளியிடவில்லை . ஆனால் ஆர்.கே. சட்டர்ஜி (R. K. Chatterjee) பி. குப்தா (P. Gupta) ஆகியோர் அவற்றைப் பற்றித் தம் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள்' ஆசுத்திரேலியாவின் மூதாதையர் (Proto-Astroloids) களுடையன என்று கூறியுள்ளனர். ஆயினும், தமிழர் ஆசுத்திரேலியாவின் மூதாதையர் அல்லர். 9. நாகர்களின் இனமே தமிழ் இனம் ? 'வில்லவரும், மீனவரும் தமிழகத்தில் வாழ்ந்த பழங்குடி களாவர்' அரை நாகரிகமும் பாதி விலங்காண்டித்தனமும் உடைய இவர்களை நாகர் என்னும் வகுப்பார் வெற்றி கொண்டனர். நாகர் நாகரிகம் உடையவர்கள். நாகர்களில் எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் முதலான பல கிளை இனத்தவர் இருந்தனர். நாகர்கள் இந்தியா." விலும் பர்மாவிலும் இலங்கையிலும் பரவி வாழ்ந்தனர். இவர்களிடம் மிருந்துதான் கைபர் போலன் கணவாய்கள் வழியாக நடு ஆசியாவி விருந்து இந்தியாவுக்கு வந்த ஆரியர் எழுத்துக் கலையைக் கற்றனர். அவர்கள் கற்ற எழுத்தைத்தான் தேவநாகரி என்கிறோம். இந்த நாகர்களே தமிழர்கள் என்பது டாக்டர். பி. ஆர். அம்பேத்காரின் கருத்தாகும், 10. எகிப்திலிருந்து வந்தவர்களா? ஏறத்தாழ கி.மு. 3000-ல் தொடங்கி கி.மு. 1800-க்குள் எகிப்தி விருந்து வந்த மக்கள் இந்தியப் பழங்குடி மக்களுடன் குருதிக் கலப்புற்றுத் "திராவிடர்" ஆயினர் என்பது ஜி. எலியட் சிமித் (G.Elliot Smith), ஜே.டி கொர்நீலியஸ் (I.T.Cornelius) ஆகியோரின் கருத்தாகும், இதுவும் ஏற்புடைத்தன்று. 11. திராவிடரின் மூதாதையர் தமிழரே! தமிழரின் தாயகம் தமிழகமே! உலகில் பல்வேறு பாகங்களில் மக்கள் ஒரே சமயத்தில் தோன்றியவர்கள் என்னும் ஒத்த கருத்துடைய ஆய்வாளர்கள் அவ்வாறு மக்களினம் தோன்றிய பகுதிகளில் ஆசியாவின் தென் கிழக்குப் பகுதியும் ஒன்றாகுமென்பர். சுகாட் எலியட் (Scott Elliot) என்பார் இப்போதுள்ள இந்துமாக் கடலில் மூழ்கி மறைந்த இலெமூரியாக் கண்டமே மாந்தன் பிறந்த முதலிடம் என்கிறார், கடல் கோள்களுக்குப்பின் இலெமூரியா மக்கள் அதாவது குமரிக் கண்டத்து மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் ஓடிப் பிழைத்தனர். இவ்வாறு வடதிசையை நோக்கி ஓடி வந்து பிழைத்தவரே தமிழர்கள் என்றும், குடிபெயர்ந்து காலந்தோறும் வந்துகொண்டிருந்த பலரோடும் கலப் புற்றும் தமிழராகவே உள்ளனர் என்றும் எலியட் கூறுகிறார். எனவே தமிழன் தோன்றியதும் தமிழ் மண்ணிலே குமரிக்கண்டம் தான் வாழ்வதும் தமிழ் மண்ணிலே (குமரிக் கண்டம்) தான். உலகின் பல பாகங்களுக்கும் சென்று வாழ்ந்து இருக்கலாம். பலரும் இங்கு வந்திருக்கலாம். ஆனால் தமிழனின் தாயகம் தமிழகமே, தமிழன் குடிபெயர்ந்தறியா பெருங்குடி ஆவான். சில நிலப்பொதியியலார் (Geologists) குமரிக்கண்டம் இருந்த போது மாந்த இனமே தோன்றவில்லை என்றும், மாந்தனின் மூதாதை விலங்கினம் (லெமூர்) அங்கு வாழ்ந்திருக்க வேண்டு மென்றும், அதுவே மேற்குத் திசைக்கு வந்து இன்றைய தமிழகத்தில் தப்பிப் பிழைத்திருக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர். அப்படியே யாயினும், தமிழ் மாந்தனின் மூதாதையர் தோன்றியதும், அவனைத் தொடர்ந்து அறுபடாமல் வாழும் மாந்த இனம் தமிழர் இனமே என்பதும் அதுவும் தமிழகத்தில்தான் என்பதும் உறுதியாகிறது. பழந்தமிழர் பண்பாடுகள் தமிழகத்தில் வாழ்ந்த தொல்பழந்தமிழர்கள் பல்வேறு இனத் தவர் இங்கு வந்து குடியேறிய பின்னும், தங்களின் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்தனர். எனவே, அவர்களுடைய பண்பாடுகள் கலப்பட மில்லாதவையே ஆகும். கடவுள் உண்டென நம்பினர். கடவுளை 'கோ' அல்லது இறைவன்' என்றழைத்தனர். திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர். சட்டதிட்டங்களும், வழக்காற்று நெறிமுறைகளும் அவர்களிடமில்லை. பண்பாடே அவர்கள் வாழ்க்கை நெறியாயிற்று. ஈயம், வெள்ளியம், துத்தநாகம் நீங்கலாகப் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு முதலிய உலோகங்களைப் பயன்படுத்தினர். உழவு, நெசவு, கடல் வாணிகம் முதலிய உடலக நெறிகளை அறிந் திருந்தனர். கலை, ஆன்மீகம், யோகம், எழுத்தறிவு ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்றிருந்தனர். மலர் தூவி இறைவனை வழிபட்டனர். மூதாதையர் வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு ஆகிய வழிபாட்டு நெறிகள் இவர்களிடம் உண்டு. இந்தியப் பண்பாட்டில் எண்பது விழுக்காடு தமிழருடைய பண்பாடாகும். - ஆரியப் பண்பாட்டிலுள்ள வேத முறை, சடங்கு, சாங்கிய முறைகள் தவிர்த்த மற்ற பூசை சடங்குகளும், உருவ வழிபாடுகளும் தமிழருடையனவே ஆகும். உருவ வழிபாட்டைத் தமிழரிடமிருந்து தான் ஆரியர் கற்றனர். ஆரியப் பண்பாடு ஒரு கடல் பஞ்சைப் போன்றது. உலகில் உள்ள பண்பாடுகளை எல்லாம் உறிஞ்சிக் கொண்டுள்ளது. அதற்கென்று முலம் கிடையாது. இருக்கு வேதத்தின் கடைசி சூத்திரத்தில் புருஷ சூக்தம்' கூறப் பட்டுள்ள புருசனிடமிருந்து நான்கு வருணங்கள் தோன்றின என்ற உவமைக் கதையே தமிழருடையதுதான். இறைவன் அண்ட சராசரங்களுக்கும் பெரியவன். அவனிடத்திலிருந்தே அனைத்தும் தோன்றின்' என்னும் அவர்களின் கடவுள் பற்றிய தத்துவமே ஆரிய வேதத்தில் ஆண்டவன் நான்கு வருணத்தையும் படைத்தவனாகத் திரித்துக் கூறப்பட்டது என்று கே. ஏ. நீலகண்ட சாத்திரியார் கூறுவார். வைதீக சமயத்தில் வருகின்ற மரபுகளும், புராணங்களில் வருகின்ற கதைகளும், வீரர் கதைகளும் ஆரியர் வருகைக்கு முன்பே திராவிட இந்தியாவில் இருந்தன என்று எசு. கே, சட்டர்சி என்பார் கூறுவார். எனவே திராவிடர் பராம்பரியம் ஓர் அனைத்திந்திய அடித்தளம் உடையது. ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் 'தாய்ப் பண்பாட்டை உருவாக்கியது. "வேதப்பண்பாடு என்பது, திராவிடப் பண்பாடே" என்றும், "அது இதிகாசங்களில் பிரதிபலிக்கின்றது ' என்றும் தத்துவ மேதை சர்வபள்ளி இராதா கிருட்டிணன் கூறுவதை யும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொல்பழந்தமிழர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதிலும் பரவியிருந்தனர். கங்கைவெளியில் வாழ்ந்த பழங் குடிகள் திராவிடரே என்றும், இதைப்போலவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த பழங்குடிகள் திராவிடரே என்பதை அவர்களின் பண்பாடுகள், மொழித்தொடர்பு இவற்றைக் கொண்டு அறியலாமென்றும் மொழியியல், பண்பாட்டு ஆய்வாளரான எசு. கே. சட்டர்சி கூறுவார். 12. முடிவுரை தமிழ் மண்ணே தமிழரின் தாயகம் ஆகும். குமரிக்கண்டமே தமிழர் தோன்றிய இடமாகும். தமிழர் பண்பாட்டின் மூலத்திலிருந்து தோன்றியதே அரப்பன் பண்பாடு. ஆரியப் பண்பாடு கலப்புண்ட பின் இது கலப்பு பண்பாடானது. இதைப் பிரித்தறிய முடியாதோர் அரப்பன் பண்பாடு. ஆரியப் பண்பாடு என்கின்றனர். 4 சங்க காலம் (கி. மு. 300-கி.பி. 300) அ: அடிப்படைச் சான்றுகள் ஆ. சங்கமும் அதன் காலமும் இ. ஆட்சிமுறை ஈ, பொருளியலும் பண்பாடும் உ. சமுதாய வாழ்க்கை ஊ. சமயமும் தத்துவமும் எ. நாகரிகமும் பண்பாடும் ஏ, கலைகள் 4. சங்க காலம் அ) அடிப்படைச் சான்றுகள் 1. அகச்சான்று இலக்கியங்கள் 2. புறச்சான்று இலக்கியங்கள் 3. தொல்லியல் சான்றுகள் 4. கல்வெட்டுச் சான்றுகள் 5. நாணயச் சான்றுகள் 1. அகச்சான்று இலக்கியங்கள்: கழக (சங்க) இலக்கியங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு கூறுகளாகப் பிரித்து இந்தப் பதினெட்டு நூல்களையும் பதி னெண்மேற்கணக்கு நூல்கள் என்றனர். எட்டுத்தொகை நூல்கள் 11 நற்றிணை, 2) குறுந்தொகை, 3) ஐங்குறு நூறு, 4) பதிற்றுப் பத்து 5) பரிபாடல், 6) கலித்தொகை, 7) அகநானூறு, 8) புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத் தொகை நூல்கள் எனப்படும். "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் - கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம் புறமென்ற இத்திறத்த எட்டுத் தொகை" இவற்றைப் பொருள் நோக்கி அகம், புறம் என இருவகையாகப் பிரிக்கலாம். உள்ளமொத்த தலைவனும் தலைவியும் ஒன்று கூடித் தாம் துய்த்த இன்பத்தை இத்தகையது என்று எடுத்துக்கூற முடியாது விளங்கும் பொருள் பற்றிக் கூறும் நூல்களை அகநூல்கள் என்றும், இத்தகையது என்று எடுத்துக் கூறவல்ல பொருளுடைய நூல்களைப் புறநூல்கள் என்றும் பிரித்தறியலாம். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றிக்கூறும் புறப்பொருள் நூல்களென அறியலாம். "பரிபாடல்' என்ற நூல் மட்டும் அகம், புறம் ஆகிய இருபொரு - பற்றியும் கூறும் நூலாகும். 1. நற்றிணை நானூறு பாக்களைக் கொண்ட இந்நூலில் அரசர்களின் ஆட்சி முறையும் நீதிமுறையும் பேசப்படுகின்றன. குறிஞ்சி நில ஊர்கள், ஊர்க் காவல் முறை, ஆயர், பரதவர் ஆகியோரின் வாழ்க்கை முறை இதில் விவரிக்கப்படுகின்றன. தொண்டி, கொற்கை, மாந்தை, கூடல், கிடங்கில், குடந்தை வாயில், வெண்ணி ஆகிய பட்டினங்களைப் பற்றியும் கூறப்படுகின்றன. ஓரி, பாரி, பழை யன், தித்தன் அழிசி, மலைய மான், பெரியன், ஆய், அண்டிரன், அன்னி, விராசன், நன்னன், மிஞலி, தழும்பன், பாணன், அருமன், நெடுமான் அஞ்சி, முடியன் முதலிய சிற்றரசர் கள் பற்றியும் நற்றிணை கூறு கிறது. இவர் களில் பலர் வள்ளல் களாகவும் விளங் கினர். உயிர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல பிறவிகளை எடுக்கும் என்பதையும், செல்வம் நிலையற்றது என்பதையும் இந்நூல் கூறுகிறது. 2. குறுந்தொகை இந்நால் 205 புலவர்களால் பாடப் பெற்ற 402 பாக்களைக் கொண்டது. காதற் காட்சிகளைக் கொண்ட இந்நூல் ''வாழ்க்கை வாழ்வதற்கே" என வலியுறுத்துகிறது. இடுப்பில் கை கோத்து ஆடும் துணங்கைக் கூத்துப் பற்றியும், பல்வேறு இசைக்கருவிகள் பற்றியும் ஆண், பெண் நடனக் காட்சிகள் பற்றியும் இந்நூலில் கூறப்பெற்றுள் ளன. எவ்வி, நன்னன், ஆய், அஞ்சி, எழினி, வல்வில் ஓரி, பாரி, மலையமான் முதலிய சிற்றரசர்களைப் பற்றியும், காஞ்சியூர், மாந்தை, சிறுநல்லூர், உறந்தை, தொண்டி, குன்னூர், முன்னூர், குறும்பூர் முதலிய ஊர்களைப் பற்றியும் இந்நூலில் காணலாம். நல்வினை, தீவினை, மோட்சம், பெரும்பெயர் உலகம்) நரகம் ஆகியவை பற்றிய தமிழ்த் தத்துவங்களை இந்நூலில் காணலாம். 3. ஐங்குறுநூறு இந்நூலில் 500 பாடல்கள் உள்ளன, ஐந்து திணைக்குரிய மக்களைப் பற்றிப் பேசுகிறது. சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றியும் கூறுகிறது. ஆமூர், இருப்பை , மந்தி, தொண்டி, கொற்கை, வயலூர் முதலிய ஊர்கள் இந்நூலில் குறிக்கப்படுகின்றன. போரில் பட்ட வீரனுக்கு நடுகல் நாட்டி வழிபடும் முறையும் கூறப்படுகிறது. 4. பதிற்றுப்பத்து சேரமன்னர் பதின்மரைப் பற்றிப் பத்துப் புலவர்கள் தலர் பத்துப் பாடல்கள் வீதம் பாடியதின் தொகுப்பே இந்நூலாகும். ஆனால், முதற் பத்தும் இறுதிப் பத்தும் கிடைத்தில், எனவே 80 பாடல்களே உள்ளன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ப்ல்யானைச் செல்கெழுகுட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், செங்குட்டுவன், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், செல்வக் கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை, ஆகிய எட்டுச் சேர மன்னர்கள் பற்றிய செய்திகள் இந் நூலில் காணப் பெறுகின்றன. சேர நாட்டுத் துறைமுகங்கள், பார்கள், ஆட்சிமுறை, பால், பளிங்கு, முத்து வகைகள் ஆகியவை பற்றியும் இந்நூல் விவரிக் கின்றது. சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பும் இந்நூலில் கூறப் பெற்றுள்ளது. 5. பரிபாடல் எழுபது பாடல்களைக் கொண்ட இந்நூலில் 22 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. மதுரை, திருப்பரங்குன்றம், திருமாலி ருஞ்சோவை, வைகை ஆறு, செவ்வேள், இறைவழிபாடுகள், இரதி, மன்மதன் பற்றிய புராணக்கதை முதலியன இதில் கூறப் பெற் றுள்ளன. 6. கலித்தொகை மதுரை நகரையும், பாண்டிய வேந்தனையும், வைகை ஆற்றையும் பற்றி இந்நூல் கூறுகிறது. ஒருதலைக் காதல் பற்றியும், மகாபாரதக் கதையைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது. இளவேனிற் காலத்தில் புலவர்கள் கூடி மதுரையில் தமிழ் ஆய்ந்த செய்தியும், பிரமன், திருமால் பற்றியும் பலவகை அணிகலன்கள் பற்றியும் இந்நூலில் கூறப்பெற்றுள்ளன. 7. அகநானூறு அகப்பொருள் பற்றிய 400 பாக்களே அகநானூறு ஆகும். குறுநில மன்னர்கள், ஊராட்சி முறை, மெளரியரின் தமிழ் நாட்டுப் படை யெடுப்பு, கிரேக்க - தமிழக வணிகத் தொடர்பு, யவனரின் வாணிகம் முதலியனவும் காணக்கிடைக்கின்றன. கண்ணன் யமுனை ஆற்றில் நீராடிய கோபியர் சேலைகளைத் திருடியதும், சூரபதுமனை வதைத்த செவ்வேளின் வீரமும், சத்திரிய குலத்தை அழித்த பரசுராமன் ஆற்றலும், இராமன் கோடிக் கரையில் பறவைகளின் ஒலியை அடக்கிய கதையும், திங்கள் உரோகிணி யுடன் கூடிய கதையும் அகநானூற்றில் காணப் படுகின்றன. பண்டைத் தமிழரின் திருமணமுறை இந்நூலில் சிறப்பிக்கப் படுகிறது. திருமணத்தில் முழங்கிய இசைக் கருவிகள், விருந்து வகை, நன்னீராட்டுதல் முதலியன "ஆரியம் கலவாத தமிழர் திரு மணம்" எனப் புகழப்படுகின்றன: 8. புறநானூறு இந்நூல் 400 பாக்களையுடையது. இது தமிழரின் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கரிகால் பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப் பெருங்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, வேல்பறை டக்கைப் பெருவிறற் கிள்ளி முதலிய சோழ மன்னர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன. நடுகல், உடன்கட்டை ஏறுதல், கைம்மை நோற்றல், முது மக்கள் தாழி முதலிய பண்பாட்டுச் செய்திகளையும், பதினெட்டுச் சோழர்கள், பதினெட்டுச் சேரர்கள், சி32 வள்ளல்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரைப் பற்றியும் கூறுகிறது. தமிழரின் அரசியல், சமுதாயம், பழக்க வழக்கங்கள், உணவு, உடை, அணிகலன்கள் பண்பாடு, கல்வி, பொருளாதாரம் முதலியவற்றை அறிய இது கருவூலமாயுள்ளது. பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை முதலாக குறிஞ்சிப் பாட்டு ஈறாகவுடைய பத்து நூல்களும் பத்துப்பாட்டு நூல்களாகும். ‘'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாஅத்தொடும் பத்து." இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலை படுகடாம் (சுத்தராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும். பட்டினப் பாலை, முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு ஆகிய மூன்றும் அகப் பொருள் பற்றிய நூல்களாகும். மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை ஆகிய இரண்டும், அகமும், புறமும் பற்றிய நூல்களாகும். 1. திருமுருகாற்றுப்படை பொதுவாகப் பொருட்கொடை பெறும் பொருட்டு வள்ளல்களை நாடிச்செல்லும் புலவர்களை, கொடை பெற்றுத் திரும்பும் புலவர்கள் வள்ளல்களின் இருப்பிடம், போகும் வழி, வள்ளல்களின் நற்குணம் முதலியவற்றைக் கூறி அவர்களை வழி நடத்துவதையே ஆற்றுப் படுத்துதல் என்பர். இதனைக் கூறும் நூல் ஆற்றுப்படை நூலாகும். ஆனால் முருகனிடம் சென்று அருட் செல்வம் பெற்றுத் திரும்பும் பக்திமான்கள் முருகன் அருள் வேண்டிச் செல்வோரை முருகனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள நக்கீரர் எழுதிய இந்நூல் முருகனின் ஆறு படை வீடுகளைப் பற்றிக் கூறுகிறது. முருகனை வழிபடும் முறைகளையும், படைக்கும் பொருள்களையும் பெரும் அருட் செல்வத்தையும் பற்றி விவரிக்கிறது. 2. பொருநராற்றுப்படை சோழன் கரிகாலனிடம் பரிசில் பெற்றுத் திரும்பி வரும் பொருநன் ஒருவன் எதிரில்படும் மற்றொரு பொருநனைக் கண்டு கரிகால் சோழனிடம் ஆற்றுப்படுத்துவதாக முடத்தாமக்கண்ணியார் என்ற பெண்பாற் புலவரால் இந்நூல் பாடப் பெற்றதாகும். கரிகாலனின் இளமை, அரசாட்சி, பரிசளிக்கும் கொடை மனம், யாழின் அமைப்பு முதலியன பற்றி இந்நூலில் காணலாம். 3. சிறுபாணாற்றுப்படை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் சிறிய யாழை வாசிக்கும் பாணனொருவன் வழியில் காணும் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது தான் இந்த நூலாகும். இதனை இயற்றியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத் தனார். இந்நூலில் வீரமிக்க செங்குட்டுவனும் கரிகாலனும், நெடுஞ் செழியனும் மறைந்த பிறகு தமிழகம் வளமற்று வாடிய நிலையும், வாழ்வு நிலையும், வாழ்வு தேடி வரும் பாணன் மூவேந்தரை நாடியும் பரிசில் பெற முடியாமல், கடையெழு வள்ளல்களையும் நினைத்து வருந்திக் கடைசியில் நல்லியக் கோடனிடம் சென்று பரிசில் பெற்றதை இந்நூல் கூறுகிறது. புலவர்களின் ஏழ்மை , பரதவரின் வாழ்க்கை , விறலியர், பாணர் வாழ்க்கை முறை ஆகியவற்றை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. எயினர் பட்டினம், ஆமூர், மாவிலங்கை ஆகிய நகரங்களைப் பற்றியும் இந் நூல் குறிப்பிடுகிறது, 4. பெரும்பாணாற்றுப்படை காஞ்சித் தலைவன் தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பரிசில் பெற்ற, பெரிய யாழை இசைக்கும் ஒரு பாணன் மற்றொரு பாணனை அத் தலைவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. இதனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவார். இதில் இளந்திரையனின் வீரம், ஆட்சிச் சிறப்பு. மாமல்லபுரத்தின் சிறப்பு, முல்லை, மருதநில் மக்களின் வாழ்க்கை முறைகள், அந்தணரின் வாழ்க்கை முறைகள் யாழின் சிறப்பு முதலியன கூறப்பெற்றுள்ளன. 5. முல்லைப்பாட்டு நப்பூதனரால் பாடப்பெற்ற இந்நூல், பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் புகழ்ந்துரைக்கிறது. இதில் தலைவன், தலைவி ஆகியோரின் பிரிவாற்றாமை விவரிக்கப் படுகிறது. கார்காலத்தில் தலைவி வருந்துவதும், பாடி வீட்டில் தலைவன் னின் நிலைமையும், திரும்பி வரும் தலைவனைக் கண்டு தலைவி மகிழ்ச்சியடைதலும் விவரிக்கப்படுகின்றன. இதில் கார்காலத்தின் வருணனையும், முல்லை நிலத்தின் இயல்பும், பாடிவீட்டில் நேரம் கூறுவது பற்றியும் விவரிக்கப்படுகின்றன. நெடுஞ்செழியன், காயமுற்ற தன் வீரர்களிடம் காட்டும் பரிவு சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. இஃது 103 வரிகளைக் கொண்ட மிகச் சிறிய நூலாகும். 6. மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார் பாடிய இந்நூல் பத்துப்பாட்டு வரிசையில் 782 அடிகளைக் கொண்ட மிக நீண்ட பாக்களை யுடைய நூலாகும். இந்நூலில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்கு வீடுபேறு அடையும் வழிகளை மாங்குடி மருதனார் கூறியுள்ளார். இதில் இவனுடைய வெற்றிகள், கொடை, வீரம் முதலியன விவரிக்கப்படுகின்றன. வானதால் பற்றிய குறிப்பு களும் இந்நூலில் காணப்படுகின்றன. 7. நெடுநெல்வாடை இந்நூலில் பாண்டியன் நெடுஞ்செழியன் போர் மேற் சென்று விட்ட பிறகு அவன் மனைவி கோப்பெருந்தேவி அவனுடைய பிரிவால் வாடிய வாட்டம், தமிழகப் போர்முறைகள், காலத்தைக் கணக்கிடுவது, அரண்மனை கட்டும் விதம், கார்காலக் குளிரின் கொடுமை முதலியன பற்றி நக்கீரர் கூறுகிறார். 8. குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சிநில் ஒழுக்கமான களவொழுக்கத்தைக் கூறுவதால் இந் ; நூல் குறிஞ்சிப்பாட்டு எனப்பட்டது. ஆரிய அரசனான பிரகத்திரத னுக்குத் தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் பொருட்டுக் கபிலரால் இந்நூல் பாடப்பட்டதாம். தலைவனும் தலைவியும் காதலித்துக் களவு முறையில் பழகி வரும் களவு ஒழுக்கத்தைப் பற்றி இந்நூல் கூறு கிறது. குறிஞ்சி நிலத்தின் சிறப்பை வருணனை செய்யும் இந்நூலில் 99 வகை குறிஞ்சி நில மலர்களின் பெயர்கள் வருகின்றன. 9. பட்டினப்பாலை இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ண னார். காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்து பாலைத் திணையில் இந்நூலைப் பாடி யுள்ளார். இது ஒரு காதல் நூல், தலைவன் தலைவி ஆகியோரின் பிரிவாற்றாமையைப் பற்றிக் கூறுகிறது. காதலியைப் பிரிய மன மில்லாத காதலன் புகழும், செல்வமும் மிக்க காவிரிப் பூம்பட்டினமே கிடைப்பதாயினும் தன் காதலியைப் பிரிய மாட்டேன் எனக் கூறுகிறான். இந்நூரலைப் பாடிய உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகாலன் பதினாயிரம் பொன் பரிசளித்தான் எனக் கூறப்படுகிறது. 10. மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) இதன் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங் கௌசிகன் என்பவர் ஆவார். செங்கண் மாநாட்டு மன்னனிடம் பரிசில் பெற்று வரும் ஒரு சுத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. இதில் மன்ன னுடைய நாட்டு வளம், மலை மீது பாயும் சேயாறு, செங்கண் மாநகரம், மலையடிவார ஊர்கள், பழவகைகள், உணவுவகைகள், மன்னனின் கொடைத்திறன், இசைக் கருவிகள் முதலியன கூறப் பட்டுள்ளன. மூவேந்தர்களைப் பற்றியும் ஆரியப் பண்புகள் பற்றியும் இந்நூலில் காணப் பெறவில்லை. ஆய்வுரை பத்துப்பாட்டு நூல்கள் யாவும் ஒரே காலத்தில் ஆக்கப் பட்டவை யல்ல. இத் தொகையில் வரும் ஆற்றுப்படை நூல்கள் ஆற்றுப்படுத்து வோர் பெயரால் ஆனவை ஆகும். ஆனால் திருமுரு காற்றுப்படை மட்டும் முருகனிடம் ஆற்றுப்படுத்தப்படும் நூலாக அமைந்துள்ளது. இந்நூல் ஒரு பக்தி நூலாகும். மேலும் காலத்தால் பிற்பட்ட நூலாகவும் உள்ளது. இதில் நக்கீரர் "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் நின் கவி குற்றமே'' எனக் கூறித் தமிழரின் அஞ்சாத வாய்மையை மெய்ப்பிக்கிறார். ஆனால் கடைசியில் ஆரியத்திற்கு அடிபணிகிறார். அதன் விளைவுதான் முருகன் மீது பாடிய இந் நூலாகும். எனவே சமற்கிருதச் சொற்களும், வேத வழிபாடுகளும் இதில் விரவி வருகின்றன. இதில் பரவலாகச் சமற்கிருதச் சொற்களும், புராணக் கதை களும் காணப்பெறுகின்றன. முருகனின் திருவருளைத் தான் பெற்று, உய்ந்ததைப் போல ஏனையோரும் உய்ந்து இன்புற வேண்டும் மென்பதற்காகவே, நக்கீரர் ஏனையோரை முருகன்பால் வழிப் படுத்துவதால் இஃது திருமுருகாற்றுப்படையென அழைக்கப்பெற்றதாம். சமற்கிருதச் சொற்கள் கி.பி. 2, 3 ஆம் நூற்றாண்டுகளிலேயே தமிழில் கலந்துவிட்டன. எனவே, இந்நூல் காலத்தால் பிற்பட்டது என்பர். - நெடுநெல்வாடையின் ஆசிரியரும் நக்கீரரேயாவார். இதன் பாட்டுடைத் தலைவனான தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும், நக்கீரரும் சம காலத்தவர் என்று கருதுகின்றனர். எனவே திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, பெரும் பாணாற்றுப்படை ஆகிய பத்துப்பாட்டு நூல்கள் சமகாலத்து நூல்களாக லாம். சிறுபாணாற்றுப்படையில் வரும் கடை ஏழு வள்ளல்கள் காலத்தால் பிற்பட்டவர்கள். எனவே, சிறுபாணாற்றுப் படை காலத்தால் பிற்பட்ட நூலாகலாம். நெடுநெல்வாடை (306 -2) யில் மேழ (மேஷம்) இராசியைப் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. இதைப் போலவே புறநானூற்றி லும் ஓரிடத்தில் (புறம். 229) இராசிகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இப்புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் கூடலூர் கிழார் ஆவார். இத்தகைய குறிப்புகளைக் கொண்டு வானவியல் நூலறிஞர் எல். டி. சுவாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள். கீழ்க்காணும் உண்மையைக் கூறுகின்றார். "கி.பி. 300-க்கு முன்பு தமிழ் இலக்கியங்களிலும், சமற்கிருத இலக்கியங்களிலும் இராசிகள், கோள்நிலைகள் திரிதல், ஒரு குழந்தை பிறக்கும் போதுள்ள கோள்நிலை குறித்தல் ஆகிய இம்மூன்றையும் பற்றிய குறிப்புகள் இல்லை '' என்பர். எனவே, நக்கீரரின் நெடுநெல் வாடையும், கூடலூர் கிழாரின் புறப்பாட்டும் கி.பி. 300 - க்கு முன்பு எழுந்ததில்லை எனலாம். முல்லைப் பாட்டில் வரும் "கன்னல்'' என்ற சொல் * நாழிகை வட்டில்" என்ற பொருளில் பயன்பட்டுள்ளது. - இச்சொல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் உரோமர்கள் தமிழகத்துக் ''கன்னல் " என்ற நாழிகை வட்டிலைக் கொண்டு வந்துள்ளனர். என்பதை உறுதிப்படுத்துகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் நெடுநெல்வாடையின் பாட்டுடைத் தலைவன். எனவே இவனுடைய காலம் தோராயமாக கி.பி. 20-க்கும் 128-க்கும் இடைப்பட்ட காலமாகலாம். உரோமர்கள் கி.பி. முதல், இரண்டு நூற்றாண்டுகளி லேயே தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியதை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. மேலே கூறப்பெற்ற பத்து நூல்களினால் தமிழ் நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை யிலிருந்த நிலைகளையும், சமய ஒழுக்கத்தையும், உரோம் நாட் டோடு கொண்டிருந்த தொடர்பையும் அறிகிறோம். புராணம், வான நூல் அறிவு ஆகியவற்றில் தமிழகம் பெற்றிருந்த அறிவையும் உணருகிறோம். தொல்காப்பியம் இந்நூலில் பழந்தமிழரின் வாழ்க்கை நெறிமுறை பற்றி விளக்கப் பெறுகின்றன. சங்க கால இலக்கியங்களான பதினெண் மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், தொல்காப்பியம் ஆகிய 39 நூல்கள் சங்க காலத்தை அறிவதற்கான அகச் சான்றுகளாய்ப் பயன்படுகின்றன. பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய 36 நூல்களிலும் மொத்தம் 2,381 பாடல்கள் உள்ளன. தொல்காப்பியம் கூறும் சான்றுகள்: தொல்காப்பியம் கடைச்சங்கக் காலத்திற்கு முற்பட்டது. ஆயினும் சங்கத்தைப் பற்றி அறிய சான்று நூலாக உள்ளது. தொல் காப்பியத்தில் நான்கு வகை மக்கள் பற்றியும், நானிலங்கள் பற்றியும், அவற்றிற்குரிய கடவுளர் பற்றியும் கூறப் பெற்றுள்ளன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று சமுதாயத்தை நான்கு வகையின் ராகப் பிரித்துக் கூறும் தொல்காப்பியம் பார்ப்பனரின் கடமைகளை விரித்துரைக்கிறது (தொல். பொரு. கற்பு. 36) இதனால் பார்ப்பனர் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தனர் என்பது தெளிவாகிறது. டாக்டர் கே. கே. பிள்ளை அவர்களின் கருத்துப்படி இவர்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு. 4ஆம் நூற்றாண்டிற் கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் குடியேறி இருக்கலாமெனக் கருதப்படுகிறது. மேலும் தொல்காப்பிய நடையும், சொல்லாட்சியும் இலக்கண மரபுகளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய சங்க இலக்கியத் தினின்று வேறுபடுகின்றன. "ஐந்திரம்' என்ற இலக்கண நூலைத் தொல்காப்பியர் கற்றுத் தேறியவர். இஃது கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பாணினிக்கு மூன்பே இருந்த இலக்கண நூலாகும். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் தொல்காப்பியரின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண் டாக, அதாவது மூன்றாம் சங்கம் தொடங்குவதற்கு முற்பட்டதாக இருக்க வேண்டுமென்பர். தொல்காப்பியர் குறிப்பிடும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய தெய்வங்கள் சங்க இலக்கி யங்களில் முறையே முல்லை , குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நானில் மக்களால் திருமால், செவ்வேள், இந்திரன், வருணன் ஆக் வழிபடப்பட்டனர். சகுனம் பார்ப்பது தமிழரின் வழக்க மென்பதைத் தொல்காப்பியம் செப்புகிறது. மேலும் மூவேந்தரின் குலப்பூக்கள், அரசச் சின்னங்கள், போர் முறைகள், அரசியல் நீதி ஆகியவற்றையும் தொல்காப்பியர் விளக்கு கிறார். தானில் மக்களின் வாழ்க்கை முறை, திருமண முறை, முதலியவற்றையும் தொல்காப்பியர் விளக்குகிறார். 'ஐயர்' என்ற சொல்லைத் தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். இஃது ஒரு குறிப்பிட்ட சாதியாரைக் குறிக்கும் சொல்லாகப் பயன் படுத்தப்படவில்லை . ''ஐ'' என்றால் "தலைவன்" என்பது பொரு ளாகும், தொல்காப்பியர் 'அகவையில் மூத்தோன்" என்ற பொரு ளில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அவர் கூறும் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய சமூகப் பிரிவுகள் ஆரியப் பண்பாடான சத்திரியர், பிராமணர், வை யர், சூத்திரர் என்ற பொருளில் வருவன அல்ல. அவை வருணாசிரம் முறை ஆகும். ஆனால் தொல்காப்பியர் தொழில் வழி மக்களைப் பிரித்துத் திணை, உரி, கருப் பொருளாக அறிகிறார். எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையைத் தொல்காப்பியர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம், வரைதான் குறிப்பிடுகிறார். ஆனால் புறநானூறு, பரிபாடல் முதலிய சங்க நூல்களில் கோடி, நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம் ஆகிய எண்ணளவைகள் காணப்படுகின்றன. இத்தகைய காரணங்களால் மூன்றாம் சங்க இலக்கியங்களுக்கு முற்பட்டது தொல்காப்பியம் என்றும், குறிப்பாக இடைச் சங்கத்தைச் சேர்ந்தது என்றும், தோராயமாக கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் கூறுகிறார்கள். இரட்டைக் காப்பியங்கள் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூல்களில் சிறப்பானவை சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களும், பின் வந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆகும். இளங்கோ அடிகள் ஆர்த்த சிலம்பின் கதையான சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகியின் கதையைக் கூறுகிறது. இது சேர, சோழ, பாண்டிய தாட்டு, அரசியல், சமூகம், சமயம், பண்பாடு, நாகரிகம் முதலியன பற்றிய ஓர் ஆய்வேடு எனலாம். சோழ நாட்டின் காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்து, பாண்டிய நாட்டின் மதுரை மாநகர் போந்து, சேரநாட்டில் பத்தினிக் கடவுளாக ஆன கண்ணகியின் கதை இது. இக்கதை சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் பட்டியலையும், அவர்களின் செயல்களையும், மக்களையும், நிலவளங்களையும், சமய, சமுதாய, ஒழுக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கையும், வாழ்க்கையின் நிலையாமை, மறுபிறவி முதலிய தத்துவங்களையும் கூறுகிறது. ஒரு பிறவியில் செய்த வினை மறுபிறவியிலும் தொடரும்: நீதி பிழைத்தோரை நீதியே கூற்றாக வந்து கொல்லும் கற்புடைய மங்கையரை மன்ன வரேயன்றி விண்ணவரும் ஏற்றிப் போற்றுவர் என்ற மூன்று தத்துவ நீதிகளைச் சிலப்பதிகாரம் செப்புகிறது. செல்வத்தால் சிறப்பும், அது இழந்தால் சிறுமையும் ஏற்படுமென்பதைக் கோவலன் கதை நீதியாக அமைகிறது. மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார், பசியின் கொடுமையையும், பசிக்கு உணவிட்டோர் பெருமையையும், இளமையும் யாக்கையும் நிலையாமை பற்றியும், துறவின் மேன்மை யையும் பற்றிக் கூறுகிறார். இஃது சங்க காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட வாழ்வியல், பண்பாட்டு வீழ்ச்சியைக் காட்டுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மேலே கூறப்பெற்ற பத்துப்பாட்டும், எட்டுத்தொகையு மாகிய பதிசினட்டு நூல்களும் ''பதினெண் மேற் கணக்கு'' என்பர். இவற்றைத் தவிரச் சங்க இலக்கியங்களில் சமுதாய மக்கள் வாழ் வேண்டிய அறநெறிகளைப் பற்றிக் கூறும் நூல்கள் பதினெட்டு உள்ளன. அவற்றை "பதினெண் கீழ்க்கணக்கு" என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாவன: 1. திருக்குறள் 2. நான்மணிக்கடிகை 3. இன்னா நாற்பது 4. இனியவை நாற்பது 5. கார்நாற்பது 6, களவழி நாற்பது 7. திரி கடிகம் 8. ஆசாரக் கோவை சி. பழமொழி 10. சிறுபஞ்சமூலம் 11. முது மொழிக் காஞ்சி 12. ஏலாதி 13. ஐந்திணை ஐம்பது 14. திணைமொழி ஐம்பது 15, ஐந்திணை எழுபது 16. திணைமாலை நூற்றைம்பது 17. கைக்கிளை 18. நாலடியார், சங்கங்களைப் பற்றிக் கூறும் "இறையனார் களவியல் உரை'யில் இந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிய குறிப்புகளில்லை ; ஆனால், இந்நூல்களில் சங்கம் பற்றியும், சங்கத் திலிருந்த அறிஞர்கள் பற்றியும் குறிப்பிடப் பெற்றுள்ளது. சங்ககாலத்திற்குப்பின் தமிழகத்தில் மக்களின் வாழ்க்கை நிலை இருண்டு விட்டது. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டுவரை (பல்லவரின் ஆட்சி நிலைபெறும் வரை) மக்களின் வாழ்க்கையில் நிரந்தரமான சூழ்நிலை இல்லாமல் வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. இக்கால கட்டத்தில்தான் இரட்டைக் காப்பியங்களும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் தோன்றின. சீர்குலைந்த சமுதாயத்திற்கு வாழ்வின் நிலையாமை, செல்வம், இளமை நீடித்து நில்லாமை முதலிய வாழ்வின் துன்பப் பகுதியையே கூறி நீதி புகட்டும் நூல்களாக இவை தோன்றின. எனவேதான், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை 'அறநூல்கள்" என அழைக்கின்றனர். இவற்றுள் தலையாயது திருவள்ளுவரின் திருக்குறளாகும். இது உலகப் பொதுமறை" எனப் போற்றப்படுகிறது. வாழ்க்கையின் இனிமைப் பகுதி இல்லறமே என்றும், அதற்கு ஆதாரமானது பொருளே என் நும் , அறம் வழி வாழ்ந்தால் வீடு தானே வருமென்றும் உலகியலையும், மெய்ப் பொருள் இயலையும், வள்ளுவம் வலியுறுத்துகிறது. நாலடி நானூற்றில் சமண முனிவர்கள் பாடிய 400 பாடல்கள் உள்ளன. மக்கட்பண்பு, கல்வியின் சிறப்பு, வாழ்வின் நிலையாமை ஆகியவை இந்நூலில் விளக்கப்படுகின்றன. 'முத்தரையர்' பற்றிய குறிப்பும் இந்நூலில் காணப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவின் சிறப்பைக் கூறுவது நான்மணிக்கடிகை ஆகும். இனியவை பற்றிக்கூறும் "இனியவை நாற்பதும்' இன்னாததைப் பற்றிக் கூறும் "இன்னா நாற்பதும் " நோயுற்ற உடலுக்குச் சுக்கு, மிளகு, திப்பிலி போல் மனநோய்க்கு மருந்தாகப் பயன்படும் இம்மூன்று அரிய கருத்துகளைக் கூறும் "திரி கடிகமும் பண்டைத் தமிழரின் பண்பாட்டை அறிய உதவுகின்றன. சங்காலத்திற்குப் பின் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிப் பாகுபாடு களைக் (வருண பேதங்கள் கூறும் சாதிக்கேற்ற ஆசாரத்தைப் படைக்கும் ''ஆசாரக்கோவையால் சாதியப் பிரிவுகளை உணர லாம். 'பழமொழி' என்ற நூலும் ஓரளவு ஆசாரக் கோவையைப் போல் சாதிய குணங்களைக் கூறும் நூலாகவே உள்ளது. - சிறுபஞ்ச மூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி ஆகிய நூல்கள் அற நெறிகளையும் ஒழுக்கங்களையும் வலியுறுத்துகின்றன. ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய நூல்கள் ஐந்திணைகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நெறிகளை அறிய உதவுகின்றன. கடைசியாக வரும், "களவழி நாற்பது" எனும் நூல் ஒரு வரலாற்றுச் சம்பவத்தையும், மாந்த நேயத்தையும் கூறுகிறது. இதில் போரினால் ஏற்படும் கொடுமைகள், மனிதரின் அறியாமை யால் மனிதகுலமே அழியும் கொடுமை ஆகியவை வலியுறுத்தப் படுகின்றன. சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவன் சோழன் செங்கணானிடம் கழுமலப்போரில் தோல்வியுற்றுக் குடவாயிற் கோட்டத்தில் சிறையடைக்கப் பட்டதையும், அவனை மீட்கப் பொய்கையார் என்ற புலவர் போர் மாந்தநேயத்தை அழிக்கக் கூடியதென விளக்கிப் பாடி, அவனை மீட்டார். அவர் பாடிய 40 பாடல்களே "களவழி நாற்பது ஆகும். 2. புறச்சான்று இலக்கியங்கள் இதுகாறும் சங்க கால வரலாற்றை அறிவதற்குச் சங்க நூல்களே அகச்சான்றுகளாய்ப் பயன்பெறுவதைக் கண்டோம். இனி அயல் நாட்டார் குறிப்புகளின் சான்றுகளை நோக்குவோம். 1. மெக்சுதனிசுவின் இண்டிகா சிரியாநாட்டின் அரசராயிருந்த செல்யுகசு நிகேடர் என்பவர் தான் கொண்ட நட்பின் காரணமாக மகத நாட்டரசன் சந்திரகுப்தன் (கி.மு. 325 - 30) அவைக்கு கி.பி. 302-ல் மெக்சுதனிசு என்பவரைத் துாதுவராக அனுப்பினார். அவர் மகத நாட்டின் கோநகரான பாடலிபுரத்தில் ஆறு ஆண்டுகள் தங்கி இருந்தார். எனவே அரச தந்திரங்களையும், அரண்மனை நகர அமைப்பையும், மக்களையும் பற்றி நேரில் கண்டு, உணர்ந்த உண்மைகளை 'இண்டிகா' எனும் நூரலாக யாத்துள்ளார். கோநகரான பாடலிபுத்திரத்தின் சுற்றளவு, மதிற்சுவர், கோபுரங்கள் வாயில்கள் பற்றிய விளக்கங்களையும், அந் நகரின் நகராட்சியைப் பற்றியும், நகராண்மைக் கழகம் பற்றியும் கூறுகிறார், இந்தியாவில் ஒரு வகையான சமுதாயப் பிரிவுகள் இருந்த தாகக் கூறுகிறார். இது சரியான கருத்து அல்ல. ஆயினும் இந்தியா வின் தென் பகுதியிலுள்ள பாண்டிய நாட்டைப் பற்றியும் குறிப்பிட் டுள்ளார். எனவே, கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே பாண்டிய நாட்டைப்பற்றிய செய்தி கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இண்டிகா வில் கிடைக்கிறது. 2. பிளினி கி.பி. 39-73) பிளினி எழுதிய "இயற்கை வரலாறு' எனும் கிரேக்க நூலில் தமிழகத்தைப் பற்றிய பல செய்திகள் காணப்பெறுகின்றன. இவர் மலையாளக் கரைப்பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். முசிறித் துறைமுகம் கரையிலிருந்து வெகு தொலைவில் கடலுள் இருப்பதால் கடற்கொள்ளைகள் அதிகம் நடப்பதாகவும், எனவே விலையுயர்ந்த பொருள்கள் இத் துறைமுகத்தில் கையாளப் படுவதில்லை என்றும் குறிப்பிடுகிறார். கப்பல் போக்குவரத்துக்குச் சிறந்தது காவிரிப் பூம்பட்டினத்தை அடுத்த 'பிகாரே' (புகார்) துறைமுகம்தான் என்கிறார், மேலும் பல துறைமுகங்களின் பெயர்களையும் பிளினி குறிப்பிடுகிறார். மேலைக்கரை மலைச்சாரல்களில் பொன், வெள்ளிச் சுரங்கங் கள் இருப்பதாகக் குறிப்பிடும் இவர் பாண்டிய மன்னன் கோநகரான மதுரையில் வசித்தான் எனக் கூறுகிறார். 3. பெரிபுளுஸ் (கி.பி. 50-80) " "பெரிபுளுஸ்' என்ற சொல்லுக்குப் 'பயணக் குறிப்புகள்' என்பது பொருளாகும். இதனைச் செங்கடல் பயணக்கையேடு' என்றும், 'கடல் படம்' என்றும் குறிப்பிடுவர். இந்தியாவில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவுடன் உரோமானியர் நடத்திய "நடுக்கடல் வாணிபம் பற்றி அறிய இந்நூல் பெரிதும் உதவுகிறது. தமிழகத்திலுள்ள ‘தொண்டி’ துறைமுகத்தின் சரியான இருப்பிடம் பற்றியும், ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்களைப் பற்றிய விளக்கங்களும், அவை திருவனந்தபுரம் வழியாக எகிப்திற்குச் சென்றது பற்றியும் கூறப்படுகிறது. சொலாண்டியா எனப்படும் மரத்துண்டுகளை இணைத்துக் கட்டப்பட்ட கப்பலான 'சங்கரா' எனும் கப்பல் வதைகளே தென்னகத்தில் அதிகம் உள்ளனவென்றும் இது கரையோரக் கப்ப லென்றும் பெரிபுளுஸ் கூறுகிறது. இந் நூலை எழுதியவர் பெயர் தெரியவில்லை . . 5. தாலமி (கி.பி. 119-161) கிளாடியஸ் தாலமி என்னும் கிரேக்க மீகாமன்(மாலுமி) பொதுவாக இந்தியாவைப் பற்றியும், சிறப்பாகத் தமிழகத்தைப் பற்றியும் தமது புவியியல் நூலில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத் துறை முகங்களான தொண்டி, முசிறி, மரக்காணம், நெல்சிண்டா, குமரிமுனை ஆகியவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் கடல் வாணிகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் பெற்றிருந்த சிறப்பை அறிய உதவுகிறது. 5. பான்கென கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பான்கள் என்ற சீன ஆசிரியர் சியன் ஹான்கென என்ற தம் நூலில் காஞ்சி நகரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மேற்படி நூல் பக்கம் 34-45.) சீன அரசர் காஞ்சி அரசனின் அவைக்குத் தன் தூதுவனை அனுப்பிக் காண்டாமிருகம் (யானை), ஒன்றையும் ஒரு தூது வனையும் தம் நாட்டிற்கு அனுப்பும்படி கேட்டார் என்று பான் கெள குறிப்பிடுகிறார். இதில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கும் சீனாவுக்கும் தொடர்பு இருந்ததைக் காண முடிகிறது, இவற்றைத்தவிர பண்டைய தமிழகம் பற்றிய குறிப்புகளைச் சிங்கள் நூல்களான மகாவம்சம் தீபவம்சம் ஆகிய நூல்களிலும், எரதோதசு, அகத்தசுசீசர், தராபோ முதலியோரின் குறிப்புகளில் இருந்தும் காணலாம். அபிதம்மாவதாரம், விநய விநிச்சயம் ஆகிய புத்த மதத்தாரின் நூல்களிலிருந்தும் அறியலாம். இவை பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்களாகும். சாயனர் என்பவர் எழுதிய பாலி மொழி இலக்கண நூலில் தமிழகம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. பாணினி எழுதிய வியாகரணம், வேதங்கள், சாத்திரங்கள் முதலிய சமற்கிருத நூல்களிலும், சாணக்கியரின் அர்த்த சாத்திரம், பரதரின் நாட்டிய சாத்திரம் ஆகிய சமற்கிருத நூல்களிலும் தமிழகம் பற்றிய செய்திகள் வருகின்றன. 3. தொல்லியல் சான்றுகள் மண்ணுக்கடியிலும், நீருக்கடியிலும், தொல்பழங்காலச் சின்னங் கள். கலைந்தெடுக்கப்பட்டு, பண்டைய மக்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் அறிய அவற்றைச் சான்றுகளாகப் பயன்படுத்து வதையே 'தொல்லியல் சான்றுகள்' என்கிறோம். இந்த ஆய்வில் கிடைத்த சின்னங்களாகிய பானை ஓடுகள், சாடிகள், கட்டடங்களின் எச்சங்கள், காசுகள், முத்திரைகள் ஆகியவை நமக்குப் பண்டைய வரலாற்றை அறியச் சான்றுகளாகின்றன, தமிழகத்தில் அத்தகைய அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களையும், கிடைத்துள்ள சின்னங் களையும், அவை தரும் செய்திகளையும் ஈண்டு காண்போம். பூம்புகார் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் பூம்புகார் கரிகால் பெருவளத்தான் காலம் முதல் சோழர்களின் சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியது என்பதைப் பார்க்கிறோம். இதனைப் பட்டினம், புகார், பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன, இத் துறைமுகத்தில் எப்பொழுதும் கப்பல்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. குதிரை, மணி, பொன், அகில், முத்து, பவழம், கோதுமை போன்றவை இத் துறைமுகத்தில் இறக்குமதி யாயின என்றும், இதனால் இத் துறைமுகம் செழிப்புற்றிருந்தது என்றும் பட்டினப்பாலை செப்புகிறது. வாணிபச் செல்வத்தால் செழித்த புகார் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அகழ்வாராய்ச்சிகள் அ) படகுத் துறை தமிழக அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையும், கோவா தேசியக் கடலாய்வு நிறுவனமும் இணைந்து 1995-ல் கடலுள் மறைந்த பூம்புகாரை அறிய நடத்திய ஆய்வு வெற்றிகரமாக முடிந்தது. இதில் நவீனக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் இருந்தது. அந்த இடத்தில் இன்று கீழையூர் என்னும் சிற்றூர் உள்ளது. கடற்கரையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலுள் 76 ஆடி ஆழத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு (கடலுக்கடியில்) செங்கற்களால் கட்டப் பெற்ற கட்டடத்தின் நடுப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இத் துறையின் மீது கம்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. படகுகளைக் கட்டி வைக்கவும், சுமைகளை ஏற்றி இறக்கவும் இம் மேடை பயன்பட்டிருக்க வேண்டுமென்கின்றனர். இக் கம்பங்களிலுள்ள மரச்சட்டங் களை அறிவியல் முறைப்படி ஆய்ந்து இத்துறை தோராயமாகக் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றிருக்க வேண்டுமென்கின்றனர். ஆ) பெளத்தப்பள்ளி மேலே கூறப்பட்ட, கீழையூருக்கு மேற்கேயுள்ள மேலை யூரிலுள்ள பல்லவனீச்சுரம் என்னும் கோயிலுக்கருகில் நடத்திய அகழ் வாராய்ச்சியில் ஒரு பௌத்தப் பள்ளிக் கட்டடம் கண்டு பிடிக்கப் பெற்றுள்ளது. இது வழிபாட்டுக் கோயிலாகவும் (விகார்) பௌத்தப் பிக்குகள் தங்கும் மடமாகவும் (சங்காரம்) இருந்த தெனக் கருதுகின்றனர். இதன் அறையொன்றில் புத்தர் சிலை யொன்றும், சலவைக் கல்லில் செதுக்கப்பெற்ற புத்த பாதங்களும் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. பூம்புகாரில் பௌத்தப் பள்ளி இருந்ததென்பதைச் சிலப் பதிகாரமும், மணிமேகலையும் கூறுகின்றன. மேலும், இந்நகர் கடலுள் மூழ்கிவிட்டதென்பதையும் கூறுகின்றன. இத்தகைய இலக்கியச் சான்றுகளை இவ்வாராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இ. அரிக்கமேடு மார்ட்டிமர் வீலர் என்பார் 1945ஆம் ஆண்டு புதுச்சேரிக்குத் தெற்கே அரிக்கமேட்டில் ஆய்வு நடத்தி, உரோமானியரின் குடியிருப்புகளைக் கண்டுபிடித்தார். அங்கு சிதையுண்ட பண்டகச் சாலைகள், சாயத் தொட்டிகள், உரோமானிய நாணயங்கள், வண்ணம் தீட்டப் பெற்ற பளபளப்பான பானை ஓடுகள், பிராமி எழுத்துகளை யுடைய பானை ஓடுகள், இத்தாலி நாட்டு அரிட்டைன்" மண்பாண்ட ஓடுகள், இரட்டைக் கைப்பிடியுடைய மண் சாடிகள், கண்ணாடிக் கோப்பைகள், பல வண்ணக்கற்கள், சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், தந்தப் பொருள்கள் ஆகியவை கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இத்தகைய பொருள்களை ஆய்ந்த அறிஞர்கள் இவை கி.மு. முதல் நூற்றாண்டிற்கும், கி.பி. முதல் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவை என்கின்றனர். இக்காலத்தில் தமிழகம் நண்ணிலக் கடல்நாடுகளோடு கொண்டிருந்த வாணிகத் தொடர்பால் உரோமானிய வாணிகர்கள் இங்கு தங்கியிருந்தமை தெளிவாகிறது. ஈ. கல்வெட்டுச் சான்றுகள் தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாகப் பூம்புகார், அரிக்கமேடு ஆகிய இடங்களில் நடந்த 'அகழ்வாராய்ச்சி களைப் பார்த்தோம். தமிழ்ச் சங்க காலத்தை அறிவதற்குக் கல்வெட்டு கள் (சில சாசனங்கள் சான்றுகளாவதைக் காண்போம். தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானவை அசோகன் கல்வெட்டுகளும், சமணருடைய கல்வெட்டுகளுமே ஆகும். சங்க காலக் கல்வெட்டுகளும் அசோகன் கல்வெட்டுகளும் "பிராமி' அல்லது "தாமிழி அல்லது ''தமிழி எழுத்துகளால் ஆனவை ஆகும். இதனால்தான் சங்க காலமும், அசோகன் காலமும் ''சம காலம்' என்பர். சமண முனிவர்கள் தங்கவும் படுக்கவும் கல்படுக்கைகளை வெட்டினர். அவற்றில் வெட்டியவர் பெயர்களும், முனிவர்களின் பெயர்களும், 'தாமிழி' எழுத்துகளில் பொறிக்கப்பட்டன. இத்தகைய கல் வெட்டுகள் உள்ள இடங்களைக் காண்போம், 1) மீனாட்சிபுரம் கல்வெட்டுகள் மதுரையையடுத்த மீனாட்சிபுரம் கழுகுமலைப் பாறைகளில் வெட்டப் பெற்றுள்ள கல்வெட்டுகள் சங்க காலக் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டில் நந்தி என்ற சமணத்துறவி இங்கு தங்கியிருந்தார் என்ற செய்தியும், அவருடைய மாணாக்கர் (சீடர்) ஆதன் என்னும் பெயருடையவர் என்றும், அவர் வெள்ளாறை என்னும் ஊரைச் சார்ந்தவர் என்றும், இங்குள்ள கல் படுக்கைகளை ஆக்கியவன் நெடுஞ்செழி யனும் உறவினன் சடிகன் என்பவனும் ஆவர் என்ற செய்தியும் இக் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன.தன் ஊர் மக்கள் எல்லோரும் துறவு பூண்டு இங்கு தங்கி இருந்தார்கள் என்றும், அவர்களுக்கெல்லாம் அச்சுதன் என்னும் -வேளாளன் உணவளித்து வந்தான் என்றும் ஆறு கல்வெட்டுகளில் பொறிக்கப் பெற்றுள்ளன. இந்த மீனாட்சிபுரம் கல்வெட்டுகளை அரிட்டாபட்டிக் கல்வெட்டுகள் என்றும் மாங்குளம் கல்வெட்டுகள் என்றும் அழைப்பர். பொதுவாக, இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வேறு பல செய்திகள்: சங்க நூல்களில் காணப் பெறும் செய்திகளோடு இவை ஒத்துள்ளன. சங்க கால அரசர் பெயர்கள், உறவுமுறை, வாணிகர் களின் பெயர்கள் வாணிகப் பொருள்களின் பெயர்கள், சங்க கால ஊர்ப் பெயர்கள் முதலியனவும் கல்வெட்டுகளில் பொறிக்கப் பெற்றுள்ளன. காவிதி, எட்டி, ஆரிதி, பணயன் முதலான பட்டப் பெயர்களும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் வரும் வாசகங்கள் தொல்காப்பியத்தில் கூறப் பெறும் இலக்கணத்திற்கேற்ப அமைந்துள்ளன. தமிழின் சிறப்பெழுத்து களான ழ, ற, ன ஆகிய எழுத்துகள் இக் கல்வெட்டுகளில் பொறிக் கப்பட்டுள்ளன. 2) கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் உள்ள கொங்கர் புளியங் குளத்தையடுத்த நாக மலைக்குத் தெற்கிலுள்ள குன்றில் மூன்று கல் வெட்டுகள் உள்ளன. அவற்றில் வரும் செய் திகள் பின்வருவன வாகும். உப்பாறு என்னும் ஊரைச் சேர்ந்த வெற் றிலை வாணிகன் மேல் பாறையில் இருந்து மழை நீர் வழியாமல் தாழ் வாரம் அமைத்துக் கொடுத்தான். இங்கிருந்த துறவிகளுக்கு ஆதன் என்பவன் உணவளித்து, படுக்கைகளைக் கூறுபடுத்தி அமைத்தான். மேலும் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள பொன்னையும் கொடுத்தான் என்று பொறிக்கப் பெற்றுள்ளது. பாகனூரில் வாழ்ந்த போத்தன் மகன் பிட்டன் என்பவனும் அங்கிருந்த துறவிகளுக்கு ஒரு குறிப்பிட்ட எடையுள்ள பொன்னைக் கொடுத்தான். 3) அழகர்மலைக் கல்வெட்டுகள் மதுரை மாவட்டம் அழகர் கோயிலுக்குக் கிழக்கிலுள்ள சுந்தராசன்பட்டி என்னும் பலருக்கு வடபால் அழகர்மலையில் உள்ள ஒரு குகையில் 12 கல்வெட்டுகள் பொறிக்கப் பெற்றுள்ளன. இவற்றில் அங்குள்ள துறவிகளுக்கு நாணயம், பொன் முதலியன உதவி செய்த பதினோரு புரவலர்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன, 4) கீழ்வளைவுக் கல்வெட்டு மதுரை மாவட்டம் மேலூாருக்கும் கீழுருக்கும் இடையிலுள்ள கீழ்வளைவுக் குன்றிலுள்ள இக் கல்வெட்டில் வெற்றிலை வணிகன் ஒருவன் இங்கிருந்த துறவிகளுக்கு உணவு வழங்கியதைப் பற்றியும், குகையைச் சீரமைத்துத் தந்ததைப் பற்றியும் கூறுகிறது. இவ்வாறே சமணத் துறவிகளுக்குப் பொன்னும், பொருளும் முதலீடு செய்து உணவும், இருக்கையும் அமைத்தவர்களின் பெயர்களை மேட்டுப்பட்டி, அழகர்மலை, விரிச்சியூர், திருப்பரங் குன்றம், முத்துப்பட்டி, ஆனைமலை முதலிய இடங்களிலுள்ள கல் வெட்டுகளால் அறியலாம். இவை யாவும் மதுரை மாவட்டத்தி லுள்ளவை ஆகும். இவற்றைத் தவிர திருச்சி மாவட்டம் புகழரிலும், திருச்சி மலைக்கோட்டையிலும், இராமநாதபுரம் மாவட்டம் குன்றக் குடியிலும், பிள்ளையார் பட்டியிலும், மேலூர் மாவட்டம் மாமன் நீரிலும், அரியலூர் மாவட்டம் அரியலூரிலும், தென்னார்க்காடு மாவட்டம் செஞ்சியை யடுத்த திருநாதர் குன்றிலும் சங்க காலக் கல் வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளால் நாம் கீழ்க்காணும் உண்மைகளை அறியலாம். மதுரையைச் சுற்றியுள்ள குன்றுகளில் வாழ்ந்த சமணத் துறவிகள்தான் கி.பி. 470 -ல் வச்சிர நந்தியின் தலைமையில் "திரமிள சங்கம்"" (திராவிடச் சங்கம் (அ) தமிழ்ச்சங்கம்) ஒன்றை மதுரையில் ஏற்படுத்தினார்கள். சமணத் துறவிகளில் பெண் துறவிகளும் உண்டு. எனவே, பெண்களைச் சமமாக காண்ணும் கோட்பாடு தமிழகத்தில் சங்க காலத்திலேயே நிலவியது. துறவிகள் கொல்லாமை, புலால் உண்ணாமை, உயிர் வதை செய்யாமை ஆகிய பண்புகளை மக்களிடையே பரப்பினார்கள், தமிழ்மொழி வளர்ச்சியில் சமண முனிவர்கள் அருந்தொண்டு ஆற்றியுள்ளனர். தமிழுக்கேயுரிய ழ, ற, ன ஆகிய சிறப்பெழுத்துகள் இக்கல்வெட்டுகளில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. தொல்காப்பிய இலக்கண மரபு இவற்றில் கையாளப் பெற்றுள்ளது. பெரும்பாலான தமிழ் இலக்கண நூல்கள் சமணத் துறவிகளால் ஆக்கப்பெற்றவை ஆகும். அசோகரின் கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுகளிலும் ''தாமிழி" வகை எழுத்துகளே பயன்பட்டுள்ளமை ஊன்றி நோக்கத்தக்கதாகும். அசோகர் காலத்தில் (கி.மு. 273-236) சங்கமிருந்தது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் புகழுடன் ஆண்டார்கள். இதற்கான ஆதாரம் அசோக ரால் கி.மு. 258 - ல் செதுக்கப்பட்ட 13 ஆம் பாறைக் கல்வெட்டில் உள்ளது. இதில் சோழ, பாண்டிய, சேர நாடுகளிலும் தமது புத்த மதம் பரவியிருப்பதாக அசோகன் குறிப்பிடுகிறான். கி.மு. 257-க்குப் பின் அசோகரால் செதுக்கப்பட்ட இரண்டாம் பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, கேரள, சத்திய புத்திரர் நாடுகளிலெல்லாம் மக்களுக்கேயன்றி, மாக்களுக்கும் மருந்தகங்களைத் தான் அமைத்த தாகக் குறிப்பிடுகிறான். இந்நாடுகள் தன் ஆட்சிக்குட்பட்டவையல்ல என்றும், தனித்தாளப்பட்டவை என்றும் குறிப்பிடுகிறான். இதனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆண்ட அசோகரின் ஆட்சி காலத்திலேயும்கூட தமிழ்நாட்டு மூடியுடை மூவேந்தர்கள் வீரத்துடன் தனித்தாண்டனர். என்பதையறியலாம். கலிங்க நாட்டுக் காரவேலன் கல்வெட்டு ----கருநாடகத்திலுள்ள கலிங்க நாட்டை ஆண்ட காரவேலன் (கி.மு. 176-163) உதயகிரியில் யானை வடிவிலான ஒரு குகைக் கல்வெட்டைச் (அத்திக்கும்பா) செதுக்கியுள்ளான். அதில் தனது பதினொன்றாவது ஆட்சி ஆண்டில், கி.மு. 165-ல் 113 ஆண்டு களாய் இணைந்திருந்த திராவிடக் கூட்டணியைத் திரமிள சங்காதம்) தோற்கடித்து விட்டதாகக் குறிப்பிடுகிறான். அதாவது கி.மு. 278 - ல் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து வடவரின் படையெடுப்புகளைத் தடுக்க தங்களுக்குள் ஒரு கூட்டணியை அமைத்துள்ளனர் என்பது புலனாகிறது. இக்கால கட்டத்தில் தான் சங்கமிருந்தது. நாணயச் சான்றுகள் சங்க காலத்தில் புழக்கத்திலிருந்த காசுகளைக் 'கானம்' என்றனர். இவற்றில் புலி, யானை போன்ற சின்னங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. இந்த நாணயங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக் கும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அச்சிடப்பட்டவை ஆகும். சதுர வடிவிலான செப்புக் காசுகளில் ஒரு புறம் புலியும், மறுபுறம் யானையும் உள்ளன. புவிக்கு மேல் உதயசூரியன் சின்ன முள்ளது. இத்தகைய செப்புக் காசுகள் காவிரிப் பூம்பட்டின அகழ் வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. திருவண்ணா மலைக்கு அண்மையி லுள்ள செங்கத்தில் 120 ஈயக்காசுகள் கிடைத் துள்ளன. இக்காசுகளில் "தாமிழி" வகை எழுத்துகளில் "தின்னன் எதிரான் சேந்தன்" என்று பொறிக்கப் பெற்றுள்ளன. இவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகலாம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பெற்ற இரண்டு ஈயக் காசுகளிலும் சேந்தன், ஆதி என்ற சங்க கால மன்னர்களின் பெயர்கள் 'தாமிழி" வகை எழுத்துகளில் பொறிக்கப் பெற்றுள்ளன. இவ்வகை எழுத்துகள் 'தமிழ்ப் பிராமி" வகை எழுத்துகளாய் வளர்ச்சியடைந்து இன்றைய "தமிழ்" எழுத்துகளாயின. உரோமாபுரி நாணயங்கள் தமிழகத்தில் கோவை, சேலம், நெல்லை, மாமல்லை, அரிக்கமேடு, திருவொற்றியூர் முதலிய இடங்களில் உரோமாபுரிக் காசுகள் கிடைத்துள்ளன. இத்தகைய காசுகளில் பொற்காசுகளில் உரோம் நாட்டை ஆண்ட அகச்சுதசு, டைபரிசு, திரோசன், ஏத்ரியன் முதலிய மன்னர்களின் உருவங்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. முடிவுரை மேற்கண்ட இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், அகழ்வாய்வுகள், கல்வெட்டுகள், காசுகள், முதலியன சங்க காலத்தை அறிய வரலாற்றுச் சான்றுகளாய் உதவுகின்றன. அரிக்க மேட்டில் கிடைத்த விளக்கும், சில முத்திரைகளும் கூட, சான்றுகளாய் உதவுகின்றன. ஆ) சங்கமும் அதன் காலமும் அறிஞர்களின் கருத்து: 1. கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. 2. கி.பி. 7-8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. 3. கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. 4. கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. 5. கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. அ) கி.மு. 3ஆம் நூற்றாண்டு சான்றுகள்: 1. மோரியர் படையெடுப்பு 2. அசோகன் கல்வெட்டு 3. காரவேலன் கல்வெட்டு 4. மெக்சுத்தனீசு (கி.மு. 302-296) ஆ) கி.மு. 2 ஆம் நூற்றாண்டு சான்றுகள்: 1. கண்ணகிக்குச் சிலையெடுத்தது. 2. தாலமி (கி.பி. 119-161) 3, பான் கெள (கி.மு. 2ஆம் நூற்றாண்டு) இ) கி.பி. முதலாம் நூற்றாண்டு சான்றுகள்: 1. சட்ரபோ (கி.பி. 64-24) 2. பிளினி (கி.பி. 28-73) 3. பெரிப்புளுசு (கி.பி. 50 - 80] , சங்கம் இருந்ததா! இருந்தது. சங்க காலம் எது? சங்க காலம் என்றவுடன் நம் நினைவுக்கு வரவேண்டியது மூன்றாம் தமிழ்ச் சங்க காலமே ஆகும். அது நிலவிய காலத்தைக் கணித்துக் கூற வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான 500 ஆண்டுகள் சங்கம் நிலவியிருந்த தென்பதே இன்றைய பொதுவான கருத்தாகும். ஆனால், இதனைக் கி.பி. முன்றாம் நூற்றாண்டிற்கும் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அடங்குமென்று சிலர் கூறுவர். 1. உள்நாட்டார் கூற்றுகள் கால்டுவெலார் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு அல்லது 10 ஆம் நூற் றாண்டிற்குப்பிறகே சங்கமிருந்தது என்கிறார். அவர் காலத்தில், தொல்காப்பியமும், பிற சங்க இலக்கியங்களும் நன்கு ஆய்ந்து அறியப்படவில்லை . எனவேதான், அவருக்கு இக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. 2. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை சங்க காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டிற்குள் அடங்கும் என்கிறார். பரிபாடலிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படும் சில வானவியல் குறிப்புகளைக் கொண்டே இவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார், ஆனால், வானநூல் வல்லுநர் களான. கே. சி. சங்கரையர், கே. சி. சேசையர், திருவாருர் எசு. சோம் சுந்தர தேசிகர், பி.டி. சீனிவாசையங்கார் முதலியோர் எல்.டி. சாமிக்கண்ணுப் பிள்ளையின் கணிப்பு தவறானது . என்கின்றனர் 3. மு. இராகவைங்கார், டாக்டர், என். பி. சக்கரவர்த்தி ஆகியோர் சங்க காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு என்கின்றனர். மணி (மேகலையில் ''குச்சரக் குடிகை குமரியை மரீஇ" எனவரும் சொற்றொடர் குச்சரர் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனைச் சான்றாகக் கொண்டு தான், இவர்கள் சங்க காலமும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு என்கின்றனர். 4. சங்க காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டேயாகுமென்று மு. இராகவையங்கார் கூறுகிறார். இந்த அரசனான தனநந்தன் பெருஞ் செல்வத்தைச் சேர்த்துப் பாடலிபுரம் அருகே கங்கை யாற்றின் நடுவே புதைத்து வைத்திருந்தான் என்றும், கி.மு. 5ஆம்!'' நூற்றாண்டில் பாடலிபுரத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தின் அழிவால் அச்செல்வமும் அழிந்தது என்றும் இச்சம்பவத்தை அகநானூறு குறிப்பிடுகிறதென்ற சான்றை இதற்கு ஆதாரமாக இவர் கூறுகிறார். தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 'பல்புகழ் நிறைந்த வெல்போர் சீர்மிகு பலிக்குழீஇக் கங்கை நீர் முதற்கரந்த நிதியங்கொல்லோ '' (அகம் 265 - 3-6) இக்கருத்தும் ஏற்புடைத்தன்று. 5. சங்க காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்பர் சிலர். மாவீரன் அலெக்சாந்தர் படையெடுப்பின் போது (கி.மு. 327-325) வலிமையுடன் இருந்தவர்கள் தந்தார்களே என்று கிரேக்க எழுத் தாளர்கள் குறிப்பிடுகின்றனர். நந்தர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் வருகின்றன. இக்கருத்தும் ஏற்புடைத் தன்று: இன்று சங்கத்தின் காலம், கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட 600 ஆண்டுகளாகு மென்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆயினும் பலருடைய கருத்துகளையும் ஆய்ந்தறிதல் வேண்டப்படுகிறது. சங்க காலத்தின் பின் எல்லை சங்க காலம் முடிந்த பின் தமிழகத்தில் சிறப்புடன் ஆண்டவர் கள் பல்லவர்கள் ஆவார். அவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதலே ஆளத் தொடங்கி விட்டனர். ஆனால், பல்லவர்களைப் பற்றிய எத்தகைய குறிப்பும் சங்க இலக்கியங்களில் இல்லை. எனவே, சங்க காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட தென்பதை உணரலாம். பல்லவர்களின் வரலாற்றை அறிய உதவும் பல்லவர் செப்பேடு களில் காலத்தால் முந்தியவை கந்தவர்மன் காஞ்சியிலிருந்து வெளி யிட்ட மயிதவோலு. எரகத அள்ளி ஆகிய செப்பேடுகளாகும். இவனது காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டதாகும். இவன் காஞ்சியி லிருந்த சமணரின் கடிகையைக் கைப்பற்றினான் என்ற செய்தி பெறப்படுகிறது. காஞ்சிபுரத்தை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் என்பவனைப் பற்றிய செய்தி சங்க இலக்கியங் களில் வருகிறது. ஆனால், கந்தவர்மன் காஞ்சிக் கடிகையைக் கைப்பற்றினான் என்ற செய்தி மட்டும் சங்க இலக்கியங்களில் இல்லை. எனவே சங்க காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது எனலாம். அதாவது கி.பி. முன்றாம் நூற்றாண்டோடு சங்கம் முடிவு பெற்றிருக்கவேண்டும். கி.பி. 5ஆம் நூற்றாண்டிலும் சங்கம் இருந்தது இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை என்பவர் எழுதிய "பண்டைய கேரளம்' என்ற நூலில் தொண்டைமான்கள் என்போர் பல்லவர்களே என்றும், எனவே பல்லவர் ஆட்சி சங்ககால ஆட்சிக்குட்பட்டது என்றும் கூறுகிறார். (பக்கம் - 93) மேலும் கதம்பர் என்ற சொல் சங்க இலக்கியமான புறநானூற்றில் (235-7) வருகிறது. கடம்ப மரத்தை காவல்மரமாகக் கொண்டகதம்பம் என்ற சொல்லும் ஒன்றே என்றும், அந்த கதம்பர் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே அரசாண்டவர் களென்பதால் சங்க காலமும் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட தேயென "பண்டைய கேரளம்" கூறுகிறது (பக்கம் -219). மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பு சங்க காலப் புலவரான மாமூலனார் அகநானூற்றில் மூன்று பாடல்களில் (251,275,281) மெளரியர் தங்களுடைய நண்பர்களான கோசருடன் சேர்ந்து கொண்டு, மோகூர் நாட்டுக் கொங்குநாடு) குறுநில மன்னனான பழையன் என்பவனைத் தாக்கினார்கள், ஆனால் பழையன் மெளரியரையும் துணைவந்த கோசரையும் புறங்கண்டான். தோற்ற மோரியருக்குத் துணையாக மேலும் புதிய படைகள் மகதத்தில் இருந்து வந்தன, வடுகரும் அப்படையுடன் சேர்ந்து கொண்டனர். இவ்வாறு மோரியரும், கோசரும், வடுகரும் கூட்டாகச் சேர்ந்து தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வருவதைக் கண்ட சோழன் இளஞ்சேட் சென்னி, அக்கூட்டணிப் படையை எதிர்த்துப் போரிட்டு மோரியரை நாட்டை விட்டே துரத்தினான். இந்த வரலாற்றுச் சம்பவத்தை மாமூலனார் அகநானூற்றில் இந்த மூன்று பாடல்களின் மூலம் விவரிக்கிறார். இவ்வாறு தமிழகத்தின் மீது படையெடுத்த மெளரிய அரசன் பிந்துசாரன் (கி.பி. 301-273) ஆவான். இதனை டாக்டர் கே.கே. பிள்ளையும் கே.ஏ. நீலகண்ட சாத்திரியும், டாக்டர். இராய்ச்சௌத்திரி யும், டாக்டர். எசு. கே. ஐயங்காரும், வி. ஏ. சுமித்து போன்றவர்களும் ஒப்புக்கொள்ளுகின்றனர். எனவே, மோரியர்ப் படையெடுப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் நடந்துள்ளது என்பது விளங்குகிறது. 'நந்தர் மோரியர்' என்ற சொற்றொடர் நந்தரையும், மோரியரையும் சேர்த்தே குறிப்பிடுவனவாகும். அசோகன் கல்வெட்டுகள் அசோகன் (கி.மு. 273-236) தனது கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர் சத்தியபுத்திரர் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடு கிறான். இவர்களுடைய நாடுகளில் இவர்களின் அனுமதியுடன் விலங்குகள், பறவைகள் ஆகிய உயிர்களுக்கும் மருத்துவச் சாலைகள் வைத்ததாகக் கூறுகின்றான். எனவே, இவனுடைய காலத்திலும் தமிழகம் தனித்தும், பலம் பொருந்தியதாகவுமே திகழ்ந்தது என்பதை அறிகிறோம். அசோகனுடைய காலமான கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தான் சங்கம் இருந்தது என்பதும் தெளிவாகிறது. காரவேலன் கல்வெட்டு கலிங்க நாட்டை ஆண்ட காரவேலன் (கி.மு. 176-163) ஓரிசாவிலுள்ள உதயகிரிக் குன்றில் அமைத்த ஆனை வடிவிலான குகைக் கல்வெட்டிற்கு அத்திக்கும்பா கல்வெட்டு என்று பெயர். இக் கல்வெட்டில் காரவேலன் தான் ஆண்ட பதின்மூன்று ஆண்டுகளில் (கி.மு. 176 - 163) நடந்த சம்பவங்களைப் பொறித்துள்ளான். தனது பதினோராவது ஆட்சி ஆண்டில் அதாவது (176-11=165) கி.மு. " 165-ல் தான் 113 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பெற்ற திரமிள் சங்காதம் (திராவிடக் கூட்டணி என்ற கூட்டணியை அழித்து விட்ட தாகப் பொறித்துள்ளான். ஆயின் திராவிடரின் கூட்டணி (165-113 278) கி.மு. 278 - ல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், தமிழக வர லாற்றைப் பற்றிக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கான கல்வெட்டுச் சான்றாக அத்திக்கும்பா விளங்குகிறது. எனவே கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் சங்கம் இருந்திருக்க வேண்டும். நந்த அரசனான பிந்துசாரன் (கி.மு. 301-273) மோகூர்ப் பழையனோடும், கோச ரோடும் கூட்டாகச் சேர்ந்து தமிழ்நாட்டின் மீது படையெடுத்த போதும் அசோகன் (கி.மு. 273-236) காலத்திலும் தமிழகத்தில் கி.மு. 278-ல் அமைக்கப்பட்ட திராவிடக் கூட்டணி வலுவாக இருந்திருக்க வேண்டும். கண்ணகிக்குச் சிலை எடுத்த சம்பவம் சிலப்பதிகாரச் சான்று சேரன் - செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையெடுத்துப் பத்தினித் தெய்வ வழிபாடு செய்தான். அவ்விழாவிற்கு இலங்கை மன்னன் முதலாம் கயவாகு (கி.பி. 171-180), சாதவாகன மன்னன் யாக்ளுசிறீ சதகர்ணி (கி.பி. 170-199), ஆகியோரும் வந்து சிறப்பித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இத்தகைய சான்றுகளால் பத்தினி விழா கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனால் (சங்ககால மன்னனால் நடத்தப்பட்டதை அறிகிறோம். எனவே, கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சங்கமிருந்த தென்பதை டாக்டர் எசு. கிருட்டிணசாமி ஐயங்கார், கனகசபைப் பிள்ளை ஆகியோரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். தமிழ்ச் சங்கம் கி.பி. முதலாம் நூற்றாண்டி லும் இருந்ததென எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை , கா. சுப்பிரமணி யம் பிள்ளை , வி. ஆர். இராமச்சந்திர தீட்சதர். உவே. சாமிநாத ஐயர், டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்திரம் முதலியோர் கூறுவர். இத்தகைய சான்றுகளால் கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை சங்கம் இருந்ததென்பதை அறியலாம். அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நுாற்றாண்டு வரை சங்கமிருந்ததை அனைவரும் ஏற்கின்றனர். 2. வெளிநாட்டார் குறிப்புகள் 1, சட்ரபோ (கி. பி. நிதி-4) இவர் கி.மு. முதலாம் நூற்றாண்டில் உரோம நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பையும் அரசியல் உறவையும் குறிப்பிடுகிறார். பாண்டிய நாட்டின் கோ நகரம் கொற்கையில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடு கிறார். உரோம நாட்டுத் துறைமுகமான ஆர்ம்சு துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு 120 கப்பல்கள் போய் வந்து கொண்டிருந்தன என்றும் கூறப்படுகிறது. 2. பிளினி (கி.பி. 28 - 73) கி.பி. முதலாம் நூற்றாண்டு தமிழகத்தைப் பற்றி அறிவதற்கு பிளினி எழுதிய 'இயற்கை வரலாறு' என்னும் நூல் உதவுகிறது. இப்ளாசு(பருவக்காற்று) உதவியால் தமிழகத்தின் மேலைக்கரையி லுள்ள முசிறித் துறைமுகத்தை அடைவதற்கு 40 நாட்கள் ஆகிறது எனப் பிளினி கூறுகிறார், இவ்வாறு பருவக்காற்றின் உதவியால் பெருங்கடலைக் கடந்த கரிகாற்சோழனுடைய முன்னோன் ஒருவனைப் பற்றிப் புறம் (6:1-2) குறிப்பிடுவதை இங்கு நோக்கலாம். முசிறித் துறைமுகத்திற்கண்மையில் கடற் கொள்ளைக் காரர்கள் அதிகம் என்று பிளினி கூறுவது இலக்கியத்திலும் குறிப் பிடப்படுகிறது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடற் கொள்ளையரை அடக்கினான் என்பது அக் குறிப்பாகும். மிளகு மிகுந்த நியாசிண்டன் துறைமுகத்தைப் பிளினி ''பிகாரே" என்று குறிப்பிடுகிறார். இந்து பதிற்றுப்பத்தில் குறிப்பிடப் படும் பந்தர் என்னும் துறைமுகப்பட்டினமாக இருக்கக்கூடும். முசிறியின் மன்னன் பெயர் கலோபோத்ராசு என்றும் குறிப்பிடுகிறார். கேர்ளன் அல்லது சேரன் என்ற பொருளில் தான் இவர் குறிப்பிட்டி ருப்பார். ‘'கொட்டனாரா" என்று அவர் குறிப்பிடுவது குட்டநாடு ஆகும். முசிறிக்குத் தெற்கே பாண்டியரின் துறைமுகம் அரபிக் கடலிலிருந்தது என்றும் குறிப்பிடுகிறார், இவ்வாறு பிளினி கி.மு. முதலாம் நூற்றாண்டில் சேர நாட்டி லும், பாண்டிய நாட்டிலுமிருந்த துறைமுகங்களின் இருப்பிடங் களையும், அவற்றில் இருந்து ஏற்றுமதியான பொருள்களைப் பற்றியும் தரும் குறிப்புகளும், சங்க இலக்கியங்களில் வரும் குறிப்பு களும் ஒத்து வருகின்றன. எனவே, கி.மு. முதலாம் நூற்றாண்டில் சங்கம் இருந்ததென்பதை கிரேக்கரின் குறிப்புகளும் வலுப்படுத்துகின்றன. 3. பெரிப்புளுசு கி.பி. 50 - 80) இஃது உரோமானியர். காலத்துக் கடற்செலவைப் பற்றி எழுதப் பட்ட ஒரு கடற் பயணநூல் ஆகும். இதனைச் செங்கடல் பயணக் கையேடு' என்றும் குறிப்பிடுவர். இதனை எழுதிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை . கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கும் உரோமாபுரிக்கும் இடையே இருந்த கடற்பயணங் களைப் பற்றி அறிய இந்நூல் உதவுகிறது. இந்நூலில் தொண்டி (திண்டிஸ்) என்னும் துறைமுகப் பட்டினத்தின் இருப்பிடமும் நெல்சிண்டா நகரம் அமைந்திருந்த ஆற்றின் கழிமுகத்திலிருந்த பொரக்காடு (பிகாரே) என்னும் துறையில் விருந்து.- ஏற்றுமதியான பொருள்களைப் பற்றியும் குறிப்பிடப் படுகிறது. இச்செய்தி அப்படியே சங்க நூல்களிலும் கூறப்பட் டுள்ளது. "கன்னியாகுமரியில் ஒரு தேவதை நீராடச் சென்றதைப் பற்றியும் பெரிப்புளுசு குறிப்பிடுகிறது. "நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரிஎல்லை '' என்று பாரதியாரும் கூறுகிறார். கொற்கை(கோல்சி) பாண்டியனின் துறைமுகப்பட்டினம் என்று பெரிப்புளுசு குறிப்பிடுகிறது. உறையூர் (ஆற்கரு) மெல்லிய ஆடைக்குப் பெயர் போனது என்றும், காவிரிப்பூம்பட்டினம் (கமரா) என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பற்றிச் சங்க நூல்களில் வரும் செய்திகளை அப்படியே பெரிப்புளுசு குறிப்பிடுகிறது. மற்றும் பொதுக்காபுதுச்சேரி), சோபாட்மா(எயில்) முதலிய இடங் களையும், சேர மன்னரைப் பற்றியும் பெரிப்புளுசு குறிப் பிடுகிறது. இப்பெயர்கள் சங்க நூல்களிலும் உள்ளன. எனவே, கி.பி. முதலாம் நூற்றாண்டில் சங்கமிருந்ததை அயல்நாட்டார். குறிப்புகள் உறுதிப் படுத்துகின்றன. 4. தாலமி கி.பி. 119-161) - இவர் அலெக்சாந்திரியாவிலிருந்த ஞாலநூல் அறிஞர் ஆவார். இவர்தான் முதலில் உலகப்படத்தை (World Map) தயாரித்தவர். தொண்டி, முசிறி, நெல்சித்தா, குமரி, உறையூர் ஆகிய ஊர்களின் இருப்பிடத்தைப் பாகைகளால் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். முசிறியிலிருந்த யவனர் குடியிருப்பைப் பற்றியும், அங்கிருந்த அக்சுதசு கோயில் பற்றியும் இவர் குறிப்பிடுகிறார். இச் செய்தி சங்க இலக்கியத்திலும் வருகிறது. ஆகவே கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் சங்கமிருந்ததை இவருடைய குறிப்பால் அறியலாம். 5. பான்சிகள் (Pan Kou) கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பான்கள் என்ற சீன ஆசிரியர் 'சியன் ஆன்கெள்' என்னும் தனது சீன நூலில் காஞ்சி புரத்தின் பெருமையைக் குறிப்பிடுகிறார். சீனப் பேரரசன் காஞ்சி அரசனைத் தன் சபைக்கு ஒரு தூதுவனையும், காண்டாமிருகம் (யானை) ஒன்றையும் அனுப்பும்படி கேட்டான் என்று இவர் குறிப்பிடுகிறார். சி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பௌத்தம் பெற்றிருந்த சிறப்பையும், குறிப்பாகக், காஞ்சி அதன் சிறப்பிடமாகத் திகழ்ந்தமையையும் இவர் குறிப்பிடுகிறார். இது தொல்பொருள் ஆய்வுகளாலும் இன்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது, 6. மெக்சுத்தனிக (கி.மு. 302 -296) 'இண்டிகா' எனும் இவருடைய கிரேக்க நூலில் பாண்டிய நாட்டைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மலையத்துவசனுடைய மகளான பண்டேயா (தடாதகைப் பிராட்டி) மதுரையை ஆண்டாள் என்றும், அவருடைய நாடு 365 ஊர்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு நாளைக்கு அரசுக்குரிய இறைமையைச் செலுத்தியதைக் குறிப்பிடுகிறார். எனவே, சந்திரகுப்தன் காலத்திலும் தமிழ்ச் சங்கத்தின் தலைமையிடமான மதுரை சிறப்புடனிருந்ததை அறியலாம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சங்கமிருந்ததற்கு இண்டிகா சிறப்புச் சான்று அளிக்கிறது. 3. தமிழ்க் கல்வெட்டுகள் காட்டும் காலக்குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் செய்திகளைப் பிராமி (அ) தாமிழி கல்வெட்டுகளில் காண்கிறோம். எனவே, சங்க காலத்தைப் பற்றி அறிவதற்குத் தமிழ்க் கல்வெட்டுக்கள் சான்று களாய் உள்ளதோடு, சங்ககாலக் கணிப்பையும் அவை தருகின்றன, ஐராவதம் மகாதேவன் தாமிழி எழுத்துகளின் பருமன், எழுத்துகளின் உருமாற்றம் முதலியவற்றின் அடிப்படையில் காலத்தைக் கணித் துள்ளார். தமிழ்க் கல்வெட்டுக்களைப் படித்துக் கூறுவதில் வல்ல டாக்டர் ஏ. சுப்பராயலு, டாக்டர் இல.தியாகராசன் போன்ற தமிழ்க் கல்வெட்டு அறிஞர்களின் கருத்துப்படியும் காலம் கணிக்கப்படுகிறது. கல்வெட்டு என்ற வெளியீடும் புதுப்புது கல்வெட்டுகளை அறிய உதவுகின்றது. பிராமிக் கல்வெட்டுகளில் சங்க காலச் சேரர், பாண்டியர் மற்றும் குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகளும், மற்றும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறைகளும் பொறிக்கப்பட்டடுள்ளன. இக்கல்வெட்டுகள் யாவும் கி.பி. 250 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை ஆகும். இவற்றில் வரும் பெயர்கள் சங்க இலக்கியங் களிலும் வருகின்றன. எடுத்துக்காட்டு - 1 புகழுர் ஆறுநாட்டான் மலையிலுள்ள கல்வெட்டில் கோஆன் செல் இரும்பொறை, அவன் மகன் பெருங்கடுங்கோ அவன் மகன் இளங்கடுங்கோ என்பவனையும் உறவுமுறையுடன் கூறுகிறது. இவர்களைப் பொறை குடி அரசர்கள் என்றும் பதிற்றுப்பத்து குறிப்பிடு கிறது. பதிற்றுப்பத்தில் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று குறிப்பிடப்படும் அரசனையே கல்வெட்டில் கோஆன்செல் இரும்பொறை என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. முதலாம், இரண்டாம் நூற்றாண்டு ஆகும். சங்க காலத்தின் முற்பகுதியே இக்கால மென்பது குறிப்பிடத் தக்கதாம். எடுத்துக்காட்டு - 2 மீனாட்சிபுரம் கல்வெட்டில் நெடுஞ்செழியன் என்ற பெயரும் திருப்பரங்குன்றம் கல்வெட்டில் அந்துவன் என்ற பெயரும் பொறிக் கப்பட்டுள்ளன. இவ்விரு பெயர்களும் முறையே பாண்டியன் நெடுஞ் செழியனையும், சேரன் அந்துவன் சேரல் என்பனையும் குறிக்கின்றன. இக் கல்வெட்டுகளின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகும். சங்ககாலம் இந்த நாற்றாண்டில்தான் தொடங்குகிறது. எடுத்துக்காட்டு - 3, கடலன்வழுதி, பிட்டன் ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் வரும் குறுநில மன்னர்களின் பெயர்களாகும். இவைப் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டாகும். இக்காலப்பகுதி சங்ககாலத்தின் கடைசி எல்லை ஆகும். நாணயங்கள் கி.மு. 44 முதல் கி.பி. 323 வரை உரோமபுரியில் ஆண்ட அகசுதசு (கி.மு. 24-14) முதல் கான்சுடன்டைன் வரையிலான அரசர் களின் காலத்திய நாணயங்கள் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, வெள்ளனூர், கரூர், கலயமுத்தூர் முதலிய இடங்களில் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இவை பொன் வெள்ளி ஆகிய உலோகத்தாலா னவை. தினார், திராட்சம் என்று மதிப்பிடும் நாணயங்களாகும். இவற்றில் அகசுதசு, சீசர், அந்தோணியார், அக்ரினா முதலான அரசர் களின் உருவங்களும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அரிக்க மேட்டு அகழ்வாய்விலும் இத்தகைய நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான தென்பதை உணரலாம். முடிவுரை கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கான அசோகன் கல்வெட்டுகள், நந்தமோரியர்கள், வெளிநாட்டார் குறிப்புகள் ஆகியவற்றால் சங்க காலத்தின் தொடர்ச்சியைக் காணலாம். தமிழ் கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகர்கின்றன. களப்பிரர், பல்லவர் ஆகியோர் சங்க காலத்திற்குப் பின் ஆண்டவர்கள், அவர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் இல்லை . எனவே, சங்கத்தின் கடைசிக் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டே ஆகும். எனவே, கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை 600 ஆண்டுகள் சங்கம் இருந்தது. சங்கம் இருந்ததா? தமிழை வளர்க்கத் தமிழகத்தில் ஒரு நிறுவனம் வழிவழியாகச் செயல்பட்டு வந்தது. பாண்டிய மன்னரின் கோநகரான மதுரையி விருந்து செயல்பட்டது. அந்தச் சங்கத்திலிருந்த புலவர்கள் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலிய இலக்கியங்களை யாத்தும், தொகுத்தும் வெளியிட்டனர். ஆனால் இச்சங்கத்திற்கு அன்று 'சங்கம்' என்ற பெயரில்லை. இச்சொல் சங்க இலக்கியங்களிலும் இல்லை. இதில் ஆன்றவிந்த சான்றோர் பங்கேற்றதால் இதனைச் 'சான்றோர் அவை' என்று அழைத்தனர். சான்றோர் பலரும் மதுரையில் கூடித் தமிழ் ஆய்ந்த தால், தமிழ் கெழுகூடல் என்றழைத்தனர். அவர்கள் கூடிய இடமான மதுரை மாநகரமும் கூடல் அல்லது கூடல் நகரம் என்றே அறியப் ஆக, அவை, கூடல், மதுரை முதலிய சொற்கள் அக்கால தமிழ் வளர்த்த சான்றோர் அவைக்குச் சிறப்புப் பெயராகவும் குறிப்புப் பெயராகவும் விளங்கின. இடைக்காலத்தில் மதுரையிலும், அதைச்சுற்றியுள்ள பகுதி களிலும் சமணம் தழைத்தோங்கி மக்களிடையே பிரபலமடைந்தது. மதுரைப் பகுதியிலிருந்த சமண முனிவர்கள் கிபி 470 -ல் வச்சிரநந்தி என்ற சமண முனிவரின் தலைமையில் மதுரையிலே ஒரு சமண சங்கத்தைத் தோற்றுவித்தனர். இதிலிருந்து மக்களிடையே 'சங்கம்' என்ற சொல் பரவியது. இதன் வழி, தமிழை வளர்த்த மதுரையில் ஏற்பட்ட மரபுவழிவந்த ஆன்றோர் அவை அல்லது வழுதியார் அவையும் சங்கம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப்பட்டது. வழுதியர் அனவ, சான்றோர் அவை, தமிழ்கெழு கூடல் முதலிய சொற்றொடர்கள் வழக்கற்றுப் போயின. இது தான் காலவெள்ளத் தில் ஏற்பட்ட மாறுதல். சமணசங்கம் அல்லது சாக்கிய சங்கம் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டதால் தமிழக மக்கள் சங்கம்' என்ற சொல்லையே தமிழ் வளர்த்த கழகத்திற்கும் பயன்படுத்தினர். இதுதான் உண்மை . ஆனால் ஆரியர் தொடர்பாலும் சமற்கிருதத் தொடர்பாலும் தமிழர்கள் பண்பாடு அடைந்தனர். தமிழ் இலக்கியங்கள் உதய மாயின. அவற்றில் வேத, உபநிடத, புராணக் கருத்துக்களும், தத்துவங்களும் இருப்பதைக் கண்டாலே இது புலனாகும். இதனால் தான் சங்கம் என்ற சமற்கிருதச் சொல் அவ்வாறு மொழியையும், பண்பாட்டை யும் வளர்த்த நிறுவனத்திற்கு உண்டானது என்று சிலர் வாதிட்டு சங்கமென்பதே ஒரு கட்டுக்கதை' என்றும் அது வரலாற்றுக்கு ஒவ்வாது என்றும் கூறினர். இதனால் க. அ. நீலகண்ட சாத்திரியாரும், செண்பக இலக்குமி அம்மையாரும், எம். ஜி. எசு. நாராயணன் போன்றோரும் சங்கமிருந்த காலத்தையே மாற்றிச் சமீப காலத்தில் அதாவது கி.பி, 100 முதல் 150–க் குள்தான் சங்கம் தோன்றியது என்கின்றனர். சங்க இலக்கியங்களில் வரும் பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் 2381 ஆகும். இவை ஒன்றில் கூட சங்கம் என்ற சொல் இல்லை என்பதே இல்லை' என்பாரின் வாதமாகும். சங்கங்களைப் பற்றி அறிவதற்கான திறவுகோல் நமக்கு கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலெழுந்த இறையனார் களவியலுரை என்ற நூலாகும், இதில் முதல், இடை, கடைச்சங்கழென மூன்று சங்கங்களிருந்த தாகக் கூறப்படுகிறது. முதற் சங்கம் கபாடபுரத்திலும் (கதவபுரம்) இரண்டாவது சங்கம் மதுரையிலும், மூன்றாவது சங்கம் இன்றுள்ள வடமதுரையிலும் இருந்ததாக இதில் கூறப்படுகிறது. முதற் சங்கம் இருந்த மதுரையைக் கடல் கொண்டதால் அதற்கும் வடக்கிலிருந்து இடத்தில் சங்கம் தொடங்கியது. எனவே, அதனை வடமதுரை என்றனர். கடல் கொண்ட மதுரை தென்மதுரை ஆயிற்று. முதற் சங்கத்தில் அல்லது தலைச் சங்கத்தில் புரவலரான 52 அரசர்களும் 4449 புலவர்களும் 549 உறுப்பினர்களும் இருந்தனர். இச்சங்கம் 4449 ஆண்டுகள் இருந்தது. இதன் தலைவராக சிவபெருமான் வீற்றிருந்தார். இரண்டாவது சங்கம் அல்லது இடைச்சங்கம் தென் மதுரையில் லிருந்தது. இதில் 3700 புலவர்களும், 59 அரசர்களும் (புரவலர்கள்) 59 உறுப்பினர்களும் இருந்தனர். அச்சங்கம் 3700 ஆண்டுகள் இருந்தது. அதன் தலைவராக முருகவேல் வீற்றிருந்தார். மூன்றாம் சங்கம் அல்லது கடைச்சங்கம் இன்றைய மதுரையில் (வடமதுரை) இருந்தது. இதில் 449 புலவர்களும், 49 உறுப்பினர் களும் இருந்தனர். இஃது 1850 ஆண்டுகள் நிலவி இருந்தது. பாண்டிய மன்னர் பலரும் இதில் புரவலராக வீற்றிருந்தனர். இச்சங்கம் தான் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களைத் தொகுத்தளித்தது. இதுதான் இறையனார் களவியல் உரை கூறும் முச்சங்க வரலாறு ஆகும். முதல் சங்கத்தில் யாத்த நூல்கள் யாவும் கடல் கொண்டு விட்டனவென்றும், அகத்தியம் மட்டும் தப்பி நின்றது என்றும், அகத்தியத்தின் ஆசிரியர் அகத்தியரிடம் பயின்ற தொல்காப்பியர், அதங் கோட்டாசான், காக்கைப்பாடினியார், முதலான பன்னிரு மாணவர்கள் அகத்தியத்திற்கு வழி நூலாகத் தொல்காப்பியம், வாய்ப்பிடம், அவிநயம், காக்கைப்பாடினியம் முதலிய நூல்களை யாத்தனர். இப்பன்னிருவரும் கூட்டாகச் சேர்ந்து 'பன்னிருபடலம்' என்னும் இலக்கண நூலையும் யாத்தனர். - இடைச் சங்க காலத்தில் கலி, குருகு, வெண்டாலி முதலிய இலக்கியங்களும், அகத்தியம் தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் முதலிய இலக்கண நூல்களும் ஆக்கப் பட்டனவாகும். ஆனாலும், சங்கங்களின் வரலாற்றைக் கூறும் இறையனார் களவியல் உரையில் கூறப் பெறும் செய்திகளை நம்ப மறுக்கின் றனர். இதில் கூறப்படும் புலவர்களின் எண்ணிக்கையும் ஆயுட்கால் ஆண்டுகள் எண்ணிக்கையும் நினைவாற்றலுக்கு ஏற்புடைத்ததா யில்லை என்றும் மறுப்புரைப்போர் கூறுவர். முதல் சங்கத்திற்குச் சிவபெருமானே தலைவராயிருந்தார் என்றும், இடைச்சங்கத்திற்கு முருகனே தலைவராய் இருந்தார் என்றும், சிவபெருமான் நக்கீரன் னோடு வாதிட்டார் என்றும் கூறும் கூற்றுகள் ஏற்புடைத்தாயில்லை என்பர். இறையனார் களவியல் உரை கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. செவி வழிச் செய்தியாகக் கேட்டதையே இவ்வுரைகாரர் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் இது போன்ற எந்தச் செய்தி யும் காணப் பெறவில்லை. எனவே சங்க வரலாறு ஒரு கட்டுக்கதை என்றும் தொல் கதை போல் காலச்சான்று இல்லாமல் புனையப் பட்டுள்ளது என்றும் கூறுவர். ஆயினும் கழகம், கூடல் தமிழ்கெழு கூடல், வழுதியர் அவை ஆகிய பெயர்கள் சங்க இலக்கியத்திலேயே வருகின்றன; தேவாரத் திலும், திருவிளையாடல் முதலியவற்றிலும் வருகின்றன. 1, "வான் உயர்மதில் கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்" (திருக் கோவையார்-20) 2. ‘'உயர் மதில்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்'' (மாணிக்கவாசகர்) 3. "'கூடல் ஆலவாய்" (தேவாரம் 3:32 - 2) தேவாரத்தில் கூடல் என்ற சொல் வருகிறது.) 4. திருமங்கை ஆழ்வார் (கி. பி 9ஆம் நூற்றாண்டு) பெரிய திருமொழியில் "சங்கமலி தமிழ் மாலைப் பத்து '' - என்றும் 5. வில்லிபுத்தூர் ஆழ்வார் தனது பாயிரத்தில் 'நன்றறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல்' என்றும் கூறி "கூடல்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 6. அப்பர் தமது தேவாரத்தில் ''நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நன்கனகக் கிழிதருமிக்கருளினோன் காண்'' என்று சங்கம் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். 7. பரஞ்சோதி முனிவர் தனது திருவிளையாடல் புராணத்தில் மதுரையைப் பற்றியும், மதுரையிலிருந்த தமிழ்ச் சங்கத்தைப் பற்றியும் தமிழ்ச் சங்கத்தலைவராகவும் பின்னர் தருமிக்காவும் அச்சங்கத்தில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றியும் விவரித்துள்ளார். பாண்டியர்கள் மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததையும் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததையும் ''மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்றும் பாண்டியர் செப்பேட்டில் கூறப் பட்டுள்ளது. இனி சங்கப்பாடல்களிலேயே மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்பு வருவதைக் காண்போம். 'தமிழ்கெழு கூடல்' என்ற சொற்றொடர் புறநானூற்றில் வருகிறது (58:13) 'புணர் கூட்டு என்ற சொற்றொடர் சங்கம் என்ற சொல்லுக்கு இணையானது. "தொல்தாணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன்போல்" (மதுரைக் 'காஞ்சி 731/63) 'வழுதியர் அவை' என்ற சொல்லும் சங்கத்தையே குறிக்கும் ''புழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவு வீற்றிருந்த செறிவுடைமளத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ அருந்தமிழ் முன்றும் தெரிந்தகாலை" (அகம் - உரைப்பாயிரம்) வால்மீகி இராமாயணத்தில் முதற் சங்கமிருந்த கபாடபுரம் குறிப் பிடப்படுகிறது. சங்கம் எப்படி செயல்பட்ட தென்பதையும் சங்க நூல்களிலேயே காணலாம். ''பல்கேள்வித் துறை போதிய தொல்லாணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்,'' சங்கத்தில் வந்து கூடும் பன்னூல் அறிஞர்கள் குறிப்பாக இலக்கண ஆசிரியர் (நல்லாசிரியர்) சொற்களை ஆய்ந்துரைப்பர்'' என்று பாலை பாடிய உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை 169-171) கூறுகிறார். இதைப்போலவே சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், கலித் தொகை முதலிய சங்க நூல்களில் புலவர்கள் கூடித் தமிழ் ஆய்ந்த சங்கம் மதுரையிலிருந்தது என்பதனைக் குறிப்பிடுகின்றனர், மதுரையில் சித்திரை, வைகாசி மாதங்களில் சங்கம் கூடும். அதில் நெற்றிக் கண்ணையுடைய கடவுள் சிவபெருமான் தலைவராய் இருப்பார்; பாவலர் பாடும் தமிழிசை கேட்டு அவர் இன்புற்றுத் தலை யசைக்கும் போது காதிலே உள்ள குண்டலம் ஆடும் அழகும் அவருடைய புன்முறுவலும் சிறப்பானவை என்பது, ''கண்ணுதல் கடவுள் கழகமோடு அமர்ந்து" என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. கருவி, காரணம், காரியம் ஆகியவற்றை வைத்தே ஒரு சம்பவம் நடந்ததை உறுதி செய்வர். இங்கே சங்க இலக்கியங்கள் உள்ளன. அவை பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் மேல்கணக் கென வகைப் படுத்தப் பெற்றுள்ளன. ஆயின் இவற்றை யாத்தவர்கள் இருக்க வேண்டுமல்லவா? ஒருங்குபடுத்தி வகைப்படுத்திய ஓர் இடம் இருக்க வேண்டுமல்லாவா? அதுவே தமிழ்ச் சங்கம்! இது கற்பனையோ கட்டுக்கதையோ அல்ல. (இ) ஆட்சிமுறை 1) ஆட்சி உரிமை 2) ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் 3) படையும் போர் முறையும் 4) முறை வழங்குதல் 5) ஊராட்சி முறை சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேரர், பாண்டியர், சோழர் ஆகிய முடியுடை மூவேந்தர்களுடையனவும், குறுநில மன்னர் களுடையனவுமான ஆட்சிமுறையையே 'சங்க கால ஆட்சி முறை' என்கிறோம், மூவேந்தர்களும், குறுநில மன்னர்களும் ஒரே மாதிரி யான ஆட்சிமுறையையே பின்பற்றினார்கள். பொதுவாக, சங்க கால ஆட்சிமுறை 'முடியாட்சி' முறையே ஆகும். இக்காலக் குறுநில மன்னர்கள் தோராயமாக 120 பேர் இருந்தனர். இவர்கள் மூவேந்தர்', களைத் தழுவியே ஆண்டனர். 1. ஆட்சி உரிமை இக்காலத்தில் ஆட்சி உரிமை தலைமகனுக்கே உரியது. - அவனுக்குப் பின் அவனுடைய மகன்களில் அகவையில் முத்தவ னுக்கே இவ்வுரிமை போய்ச் சேரும். ஓர் அரசனுக்குப் பல மனைவி யரும், பல பிள்ளைகளுமிருந்தாலும், அப்பிள்ளைகளில் அகவை யில் மூத்தவனுக்கே ஆளும் உரிமை உண்டு. இதனைப் 'பிறங்கடை உரிமை' என்பர் அவ்வாறு அரசனாகும் முத்த பிள்ளைக்கு மற்ற பிள்ளைகள் இளவரசர்களாகவும், மண்டலத் தலைவர்களாகவும் அடங்கி ஆளுவார்கள்; அரசனைத் தேர்ந்தெடுப்பதுமுண்டு. சங்க கால வரலாற்றில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசன் கரிகால் பெருவளத்தானே ஆவான். இளவரசர்களாயிருந்து ஆளும் அரசகுமாரர்களுக்கு அவர்கள் ஆளும் பகுதிகளைக் கொண்ட விருதுப் பெயர்களும் ஏற்பட்டன. தானைத் தலைவர்கள் தனி நகரங்களில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் முவேந்தர்களின் குடிப்பெயர்ப் பட்டத்தையும் சூடிக் கொள்வர். எடுத்துக் காட்டாக, சேர மன்னனின் தானைத் தலைவன் 'பழையன்மாறன்' என்றழைக்கப்பட்டான். பொதுவாக, தானைத் தலைவர்களுக்கு 'வயவர் பெருமகன்' (வீரர் களின் தலைவன்) என்ற பட்டப் பெயருண்டு. சங்ககால மூவேந்தர் நாடுகளிலும் அக்காலத்தில் 'பெண்' அரசாண்டாதாக சான்றுகள் இல்லை. பாண்டிய நாட்டைத் தடா தகைப் பிராட்டியார் ஆண்டதாகத் தொல்கதை கூறுகின்றது. முடிசூட்டு விழாவும், அரசவையும் – அரசன் அரியணை ஏறுதலை ஒரு பெரும் நாட்டு விழாவாகக் கொண்டாடுவார்கள். இவ்விழாவின் போது மூத்தோர் அவையின் ரும், ஆன்றோர்களும் கூடி அரசனை ஏற்பதாகக் கூறி, நீராட்டி, மணி முடியை அணிவித்துச் செங்கோலையும் மற்ற அரசச் சின்னங்களை யும் அணிவிப்பார்கள். அரசனும், குடிமக்களைத் தம்மக்களைப் போல் காப்பதாகவும், அறவழி பிறழாமல் ஆட்சிபுரிவதாகவும் வாக் களிப்பான். அவனுக்கு அறிவுரை கூற அவைக்களப் புலவர்களும், அமைச்சர்களும், பூசாரிகளும், குடி- கல்வி, வாய்மை, தூய்மை , நடுநிலைமை, தன்னலமின்மை முதலிய பண்புகள் நிறைந்த சான் றோர்களும் இருப்பர். இவர்கள் அரசனின் ஆட்சியில் தலையிட்டு, அறம் பிறழும் பொழுது, அறத்தின் ஆட்சியை எடுத்துக் கூறி அரசனைத் திருந்தச் செய்வர். எனவே, அரசன் அறம் வழுவாமலும், நீதி தவறாமலும் நாட்டை ஆட்சி செய்வான். அரசன் அன்றாடம் அரசவையைக் கூட்டி, காட்சிக்கு எளிய வனாகி, குடிமக்களையும், அரசவையில் அமரச்செய்து, குறை கேட்டு முறை வழங்குவான். அரசவைக்கு அயல்நாட்டுத் தூதுவர் களும், விருந்தினரும் வருவதுண்டு. கற்றறிந்த புலவர்களையும் அறிஞர் பெருமக்களையும் அரசவையில் அமரச் செய்து, அவர் களுக்குப் பரிசுகளும் பட்டங்களும் நல்கிப் பெருமைப்படுத்துவான்.. 2) ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் அரசனுக்கு அறிவுரை கூறுவதற்கென்றே குழுக்கள் இருந் தனவா என்பது ஐயத்திற்குரியதாகும். மேலே கூறப் பெற்ற புலவர் களும், சான்றோர்களும், அமைச்சர்களும் அரசனுக்கு அறிவுரை கூறி, நெறிமுறைப்படுத்தியதாகவே சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், அதற்காகத் தனிக் குழுக்கள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டு என்னும் நூலில் கூறப்படும் அமைச்சர். புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், சாரணர் ஆகிய மூவரும் ''ஐம்பெருங் குழுவும்"" கரணத் தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரைமறவர் ஆகிய எண்மரும் 'எண்பேராயத்திலும்' இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கூறும் மந்திர மொழிகளை அரசன் ஏற்றான். எனவே, மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மன்னன் தன்னிச்சை போல் செயல்படாமல் தடுத்து நிறுத்தி ஆட்சியை நேர்வழியில் செல்ல இக்குழுக்கள் உறுதுணையாக நின்றன. திவாகர நிகண்டில் கூறப்படும் ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் சங்க காலத்தில் இல்லை. ஆயினும், சங்க கால் அரசனுக்கு ஆலோசனை கூறும் மக்களை இவ்வாறு கூறி இருக் கலா மெனக் கூறுகின்றனர். அமைச்சரவை சங்ககால மன்னர்களுக்கு ஆலோசனைகள் கூறியோரை 'அமைச்சரவை அல்லது 'உழை இருந்தார்' அல்லது 'கூற்றம்' என்றும் அழைப்பர். அரசனோடு கூடவே இருப்பதால் அவர்களை அருகிலிருப்பவர் அல்லது 'உழை இருந்தார்' என்பர். அரசனைச் சூழ்ந்து நிற்பதால் அவர்களைச் சுற்றம் " என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் அழைப்பார். அமைச்சர்கள் கருவியும் காலமும் அறிந்து செயலாற்றும் செயல்திறனும், நுண்ணறிவும் பெற்றிருக்க வேண்டும் மென்றும், கடுஞ்சொல் இன்மை, குடிகாத்தல், ஆள்வினைத்திட்பம் ஆகிய பண்புகளோடுமிருக்க வேண்டுமென்றும் வள்ளுவர் கூறுகின்றார். அரசனுக்கும் ஆட்சிக்கும் இரண்டாம் நினைக்கும் அமைச்சன் ஏழு கோடி பகைவரைவிட கொடியவன் ஆவான் என்றும் வள்ளுவர் கூறுகிறார். செய்யவேண்டிய காரியங்களை உரிய நேரத்தில் அரசன் செய்யவும், செய்யக்கூடாத காரியங்களைச் செய்யாதிருக்கவும், செய்ய வேண்டியது அமைச்சர்களின் கடமை ஆகும், தலைசிறந்த அமைச்சர்களுக்கு அரசன் தக்க விருது கொடுத்துப் பாராட்டுவான். தூதுவர் (தூதர்) தூதர்கள் அரசனின் உள்ளமாக இருந்து எதிரொளிப்பர். அயலகம் சென்று தம் அரசரின் கருத்துகளைக் கூறவும், அங்கு பெறும் செய்திகளை அப்படியே வந்து தங்கள் அரசரிடம் கூறவும் மதிநுட்பமும் செயல் திறமையும் படைத்தவர்களே தூதுவர் ஆவர். அரசனது தூதர்கள் உயிருக்கே ஆபத்து வந்தாலும் அஞ்சாமல் அயல்நாட்டு அரசரிடம் தம் அரசர் கருத்தை எடுத்துரைப்பர். தூதர்கள் இயற்கை அறிவும், பலரும் விரும்பத்தக்க தோற்றமும், ஆய்ந்து உண்மையைக் காணும் நுண்ணறிவுமுடையவராக இருக்க வேண்டும். தூதுவர்களில் மூவகையானவர் உண்டு. பிறநாட்டுச் சபையில் தம் நாட்டு நலன்களைக் காத்து, தம் நாடு கொண்டுள்ள கொள்கையினை விளக்கிக் காட்டுவார். இவர்களை அயல்நாட்டு அமைச்சர்களெனலாம், ஒரு குறிப்பிட்ட காரியத்தை மட்டும் முடித்து விட்டுத் திரும்புவோர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாவர். பொது நலன் கருதித் தக்கவற்றைச் செய்து முடிப்பவர்கள் முன்றா வது வகையைச் சேர்ந்தவராவர். உரோமாபுரி மன்னர் அக்சுதசு சீசரின் சபைக்குச் சென்ற தூதுவர்கள், அதியமான் நெடுமானஞ்சி சார்பில் தொண்டைமானிடம் தந்து சென்ற ஒளவையார் போரை நிறுத்தியது; கோவூர்க்கிழார் பொது நலன் கருதி நெடுங்கிள்ளியிடம் தூது போனது ஆகியவை முறையே மேலே கூறிய முவகைத் தூதுக்ளாகும். அந்தணன் ஒருவன் படைத் துணையோடு தூதோலை யெடுத்துச் சென்றானென்ற செய்தி புறநானூற்றில் (புறம்:95) கூறப்படுவதால், அமைச்சர்கள், புலவர்களே யன்றி, அந்தணரும் தூது போவார்களென்பது புலனாகிறது. படைக்கு ஆள் சேர்ப்பது தூதுவரின் கடமைகளில் ஒன்றாகும். ஒற்றர்கள் ஒற்றுப் பணியைச் செய்வோர் ஒற்றர் ஆவர். பகைவரின் நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிந்து அரசனுக்குத் தெரிவிப் போர் ஒற்றராவர். இவர்கள் அரசனது கண்ணாகவும், செவியாக வுமிருப்பர். இவர்கள் சங்கேதக் குறிகளைப் பயன்படுத்துவர். எனவே இவர்கள் வெளிப்படையாக எவரிடமும் பேசமாட்டார்கள். ஒற்றர்கள் முவகைப் படுவர். ஓர் ஒற்றன் கூறியதை மற்ற இரு ஒற்றரின் கூற்றைக் கொண்டு உறுதிப்படுத்திய பின்பே அரசன் செயல்பட வேண்டும்; இரவுபகல் இல்லாமல் எந்த நேரத்திலும் ஒற்றறிதல் வேண்டும் ஏனென்றால் அவர்களை மக்களிடம் அடை யாளம் காட்டக் கூடாது. நரம்புகள் உடல் முழுவதும் சூழ்ந்திருப் பதைப்போல் ஒற்றர்கள் எங்கும் சுற்றிக்கொண்டே இருப்பர். தூதுவனை அரசனுக்கு ஈடாக மதித்து நடத்த வேண்டும். ஆனால், ஒற்றன் சிக்கிவிட்டால் கொன்று விடலாமென்பது அரச நியதி. ஒற்றர்களுக்கு அரசன் வெளிப்படையாக விருது, பட்டம், பரிசு எதையும் தரமாட்டான் என்று குறள் கூறுகிறது. 3) படையும் போர்முறையும் சங்க காலத்தில் நிலையான படை (Standing Army) இல்லை என்றும், போர் மூண்டதும் வீட்டுக்கு வீடு உடல் வலிமை உள்ள இளைஞர்கள் தங்கள் கையில் கிடைக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்குப் புறப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் திருவள்ளுவர், படைகளில் 'தொல்படை' என்று ஒரு வகைப் படையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ""உரைவிடத்து ஊறஞ்சாவன் கண் தொரைவிடத்துத் தொய்பாடக் கற்களால் அரிது'' (குறள்-772) தொல்படை என்பது மூலப்படை ஆகும். படை பல திறப்படும், ''கூலி கொடுத்துக் கொள்ளும் படை, நாட்டினின்றும் வரும் படை. உறவினரும் துணைவரும் விடுக்கும் படை, துணையாக வரும் படை, பகைப்படை ஆகியவை ஆகும். மூலப்படை என்பது அரசனது முன்னோரைத் தொடங்கி வரும், அன்புடைமையும், தான் சிறியதாகிய விடத்தும் வலியுடைமையும் உடைய படை ஆகும்'' என்று திருக்குறளின் உரையாளர் கூறுவதில் இருந்து தொல்படை' என்பது நிலையான படை என்றும், அரசன் பட்டமேற்பதற்கு முன்பிருந்தே முன்னோருடைய நிலையான நிரந்தரப் படை இருந்தது என்பது புலனாகிறது. 'வல்லான் வகுத்ததே வழி' என்னும் கோட்பாடு நிலவிய அக் காலத்தில் படை இல்லாமல் நாடும் இருக்க முடியாதல்லவா? ஆகவே தமிழக மன்னர்களும் படைகளை வைத்தே மக்களைக் காத்தும், பிற நாடுகளைக் கவர்ந்தும் வந்தனர். யானை, குதிரை, தேர், காலாட்படை ஆகிய பிரிவுகள் ஒவ்வொரு மன்னரிடத்திலும் இருந்தன, மூவேந்தர்களிடம் கப்பற்படையும் இருந்தது. கரிகால் பெருவளத் தானின் முன்னோர் பருவக் காற்றின் உதவியால் பெருங்கடல்களை யும் கடந்ததைக் காண்கிறோம். பல்வேறு கப்பல்கள் பற்றிய விளக்கங்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம், படையில் யாவரும் சேர்ந்தனர், வடபுலத்தில் இருந்ததைப் போல் சத்திரியர்' என்ற குலப்பிரிவு இங்கில்லை , படம், குப்பாயம் (கோட்டு), மெய்ம்மறை (கவசம்), வட்டுடை முதலியவற்றைப் படைவீரர்கள் அணிந்தனர். வீரக்கழலும் காலுறையும் அணிந்தனர். 'வீரப்பண்பு' அக்காலத்தமிழர்களின் தலையாயதாகும். போர்க் களத்தில் விழுப்புண் பட்டு மாள்வதும், வீரசுவர்க்கம், அடைவதும் அவர்களின் வாழ்க்கைத் தத்துவமாயிருந்தது. வீரப் பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் பெருமிதமடைந்தனர். வீரனைச் சுமந்த தாயின் வயிறு புலியிருந்த குகையாயிற்று. போரில் மாண்ட வருக்கு 'நடுகல் நட்டு வழிபட்டனர். வீரர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப் பட்டன. உடல் பலத்தை உறுதிப்படுத்த யானையின் மருப்பொடிக்கும் பயிற்சி முதலான பலவும் செய்தனர். வேல், வாள், ஈட்டி, கோல், சக்கரம் முதலிய தாக்கும் படை களையும், கேடயம், கவசம் முதலிய காக்கும் படைகளையும் கையாளக் கற்றிருந்தனர், வில் வீரரும் வேல் வீரரும் காலாட் படை யில் சிறப்புடன் காணப்பட்டனர். காலுறை, கையுறை, வாள், வேல், அம்பு முதலியன வைக்கும் பையுறைகள் தோலால் செய்யப் பட்டிருந்தன, யானை, குதிரைகளுக்கும் கூடத் தாக்கும் கருவிகளும், காக்கும் கருவிகளும் பொருத்தப் பட்டிருந்தன. பல்வேறுபட்ட வாள்கள், வேல்கள் பற்றிய பெயர்களும் விவரங்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. போர்முறை தொல்படையினர் போர் மேல் செல்வதற்கு முன் புனித நாளில் படைகளை நீராட்டி, பூச்சூடி, காலக்கணக்கர் குறித்த நேரத்தில் போருக்குப் புறப்படுவார்கள்; புறப்படும் முன் வீரர்களும், அரசனும் பகைவரை வென்று திரும்புவோம்; அன்றேல் போர்க்களத்தில் வீரமரணமடைவோம் என்று சூளுரைப்பர். இதனை 'வஞ்சினம்' (சபதம்) என்று கூறுவர். அடுத்து, 'அணிவகுப்பு ஊர்வலம்' நடக்கும். வாள், குடை, முரசு, கொடியுடன் அணிவகுத்துச் செல்வர். வெள்ளாடை (சீருட்ை) அணிந்து அணிவகுப்பில் வீரநடை போட்டுச் செல்வர். தாங்கள் படையெடுக்கும் செய்தியை முன்கூட்டியே பகையரசனுக்குத் தெரிவிப்பார்கள். முப்படைந்தோர், குழந்தைகள், ஊனமுற்றோர், இயலாதோர், பெண்டிர், பசுக்கள், பார்ப்பனர், நன்மக்கள் ஆகியோரை வெளியேறும்படி அறிவிப்பர். படைத் தலைவர்களும் அரசனும் யானை மீதுள்ள அம்பாரி கள் மீது அமர்ந்து கொடி பிடித்துச் செல்வர். இதனால் பகைவர் படைத் தலைவர்களையும் அரசனையும் தொலைவில் இருந்தே அடையாளம் காண முடியும். போர் பெரும்பாலும் கோடைக்காலத்தில் சமதளத்தில் நடக்கும். இரு நாட்டின் எல்லைகள் முடியுமிடத்திலும், இயற்கை எல்லைகள் அமைந்த இடங்களிலும், குறிப்பிட்ட இடத்தில், - குறிப்பிட்ட நேரத்தில் போர் தொடங்கும். தொல்காப்பியர் தாம் கேட்ட கண்ட போரின் ஐந்துவித நிலைகளைக் குறிப்பிடுகிறார். அவை: 1. வெட்சி 2. வஞ்சி 3. உழிஞை 4. தும்பை 5. வாகை ஆகும், படைகளைப் பயன்படுத்திப் போரிடும் முன் பகைவர் நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வருவர். இதற்கு "ஆநிரை கவர்தல்" என்று பெயர். ஆநிரை கவர்வோர் சகுனம் பார்த்து வெட்சி மாலையைச் சூடிச் செல்வர்; தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டோரும், படையெடுத்துச் செல்வோரும் வஞ்சி மாலையைச் சூடிச் செல்வர். கோட்டையை முற்றுகையிடுவோர் உழிஞை மாலையைச் சூடிச் செல்வர் முற்றுகையை உடைத்து வெற்றி பெறுவோர் தும்பை மாலையைச் சூடிக் கொள்வர். பொதுவாகப் போர்க்களத்தில் வெற்றிபெறுவோர் வாகை மாலையைச் சூடிக் கொள்வர். ஒரு மண்ணை (நாட்டை]க் கவரும் நோக்கத்துடன் தொடுக் கும் போர் வெட்சிப்போர்' என்றும், மண்ணைக் கவரும் நோக்க மில்லாமல் பழிவாங்கவும் தம் வீரத்தைக் காட்டவும் தொடுக்கும் போர் 'வாகைப் போர்' என்றும் அழைக்கப்பட்டன. பெரும்பாலும் வாகைப்போருக்குப் பிறகு வெற்றி பெற்ற அரசனிடம் தோல்வியுற்ற அரசன் அடங்கி அவனுடைய மேலாண்மையை ஏற்று நடப்பான், வீரப்பண்பு (போர் மரபு) மறவன் மறவனோடு மட்டுமே போரிடுவான். இதனால் தான் படையெடுப்பு அறிவிப்பைக் கூறி மறவர் தவிர்த்த மற்றவரை வெளியேறும்படி செய்வார்கள். போரில் புறமுதுகிட்டு ஓடுபவரை. யும், ஆடையிழந்து நிற்போரையும், மேய்ச்சல் நிலத்தில் வாழ் வோரையும், நீரில் பாய்ந்தோரையும், ஆடையின்றித் தவிப்போரை யும், மகளிர் ஆடையை உடுத்தியோரையும், புண்பட்டோரையும், பெண்களையும், குழந்தைகளையும், போர்க்களத்தில் படைக் கருவிகளால் தாக்க மாட்டார்கள். முற்றுகையிடும் போது, பகைவருக்கு அஞ்சி உள்ளேயே முடங்கிக் கிடப்பதைக் கோழைத்தனமாகக் கொண்டனர். போர் நடந்து ஓய்வு கிடைக்கும் போது பாசறையில் தங்கி அரசனும் தானைத் தலைவர்களும் நேற்றைப் பொழுதில் நடந்த சம்பவங் களையும் நாளை நடக்கும் போரில் கையாளப்பட வேண்டிய வலக்காரங்களையும் (யுக்திகளையும்) ஆய்ந்து நாளைப் போரின் வெற்றிக்கு வழிவகை களையும், செயல்திறன்களையும் முடிவு செய்வார்கள். காட்டூர் பாசைனறகளின் அமைப்பைப் பற்றியும் (InfrastructurE) அவற்றில் காவல் புரியும் யவனப் பெண்களைப் பற்றியும் பல விளத்தங்கள் புறநானூற்றில் கூறப்பெற்றுள்ளன. பாசறை, சகல வசதிகளும் நிறைந்ததாகவும், செங்கற்களால் கட்டப் பெற்ற பல அறைகளை உடையதாகவும் இருக்கும். வட்டுடையணிந்த யவன மறத்திகள் அச்ச மூட்டும் கண்களுடனும், குறுவாளை இடுப்பில் சொறுகிக் கொண்டும், எரியும் விளக்குகளைப் பராமரித்துக் கொண்டும் மணித் துளிகளைத் துல்லியமாகக் கணக்கிடும் வட்டிலைப் பார்த்து நேரத்தை அறிவித்துக் கொண்டும் காவல் ரோந்து) காப்பர். அறை களுக்கு நடுவே பூவேலைப் பாடுடைய திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டிருக்கும்;. பாசறை யானது ஓர் ஊரைப் போலவே சகலயேந்துகளுடனும் அமைக்கப் பட்டிருப்பதால் இதனை 'காட்டூர்' என்பர். அரசன் கையில் தீபம் ஏற்றிக் கொண்டு விழுப்புண்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் பாசறைகளுக்குச் சென்று , அன்பும் பரிவும் காட்டி உற்சாகமூட்டுவான். வெற்றிவிழா போரில் வாகை சூடிய மன்னரும் படை வீரர்களும் வெற்றி விழா கொண்டாடுவர். இது ஏழு நாட்கள் நடக்கும். விழாவில் பெரு விருந்து அளிக்கப்படும். கறிச்சோறும் கள்ளும் பரிமாறப்படும். உண்டு களித்தும், கைகோர்த்தும், இடையில் கையணைத்தும் 'துணங்கைக் கூத்தாடுவர். இவர்களுக்கு அளித்த உணவு ''பேருண்டி எனப்படும். போரில் கவர்ந்த பொருள்கள் "கொண்டிப் பொருள்கள்" எனப்படும். இதனை அரசன் வீரர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். வீரர்களுக்குப் பட்டமும், பொன்மலர்களைப் பரிசாகவும் அளிப்பான். மாண்டவர்களின் குடும்பத்தாருக்குக் 'கல்லெடுப்பு வீடும்' 'இறையிலி' (வரியில்லாத) நிலங்களையும் கொடுப்பான். தோல்விகண்டோர் நிலை போரில் தோல்வியடைந்த அரசனின் அரண்மனையை இடித்து நிரவி, கழுதைகளைப் பூட்டி ஏர் உழுது கள்ளிச்செடியும் மற்ற முட் செடிகளையும் நடுவர். அவ்வரசனைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்து, சிறையிலடைப்பர். அரண்மனைப் பெண்களை மொட்டையடித்து, மொட்டையடித்த தலைமயிரைக் கொண்டு கயிறு திரித்து, காவல் மரத்தை வெட்டி, அதன் அடிப்பாகத்தை அக்கயிற்றால் கட்டி யானைக்காலில் பிணைத்து இழுத்து வந்து அந்த அடி மரத்தைக் கொண்டு முரசு செய்து கட்டிலின் மேல் வைத்து வணங்குவர். தோற்ற அரசர்களான கனகவிசயர் தலைமீது நெய்யை பற்றி, கையில் பொன் விலங்கு மாட்டி, தலைமீது கல்லைச் சுமந்து வரச்செய்து, அக் கல்லினால் கண்ணகிக்குச் சிலையெடுத்து விழாக் கொண்டாடியதை ஈண்டு நினைவு கூறலாம். கிள்ளி வளவன் தன்னிடம் தோற்ற காரியின் பிள்ளைகளைக் - கொல்ல அவர்களை யானைக்காலில் இடறும்படி ஆணையிட்ட சம்பவத்தால் தோற்ற மன்னரின் சுற்றத் தாரையும் கொன்று குவிக்கும் பண்பாடு தமிழ் மன்னருக்கு உண்டு என்பதை உணரலாம். போரில் கிடைத்த பொருளைக் கொண்டிப்பொருள்" என்பதைப் போலவே தோற்ற மன்னனையும் கொண்டி மன்னன்' என்பர். கொண்டிப்பொருளை வீரர்களுக்குப் பகிர்ந்து அளித்தன் ரென்றதால் படைவீரர்களுக்கு மாத ஊதியமோ ஆண்டு ஊதியமோ அல்லது மானியமோ கொடுக்கவில்லை என்பது உறுதியாகிறது. பட்டமும் பரிசும் மட்டும் கொடுக்கப்பட்டன. போர்க்களத்தில் புலவர்கள் நுழைந்து இருதரப்பிலும் போரிடும் மன்னர்களுக்கு அறிவுரை கூறிப் போரைத் தடுத்துள்ளனர். பகைவன் பணிந்தால் அவன் நாட்டை அவனுக்கே கொடுத்து அவனிடம் நட்புறவு பூண்டொழுகும் நிகழ்ச்சிகளுமுண்டு. 4) முறை வழங்குதல் படைக்கும் ஆட்சிமுறைக்கும் நீதிக்கும் அரசனே தலைவன் ஆவான். சங்க காலத்தில் நீதிவழங்கத் தனிப்பட்ட நீதிமன்றங்களோ சட்டங்களோ தொகுத்திருக்கவில்லை. 'அறம்' ஒன்றையே அடிப் படையாகக் கொண்டு நீதிவழங்கும் நெறிமுறைகள் செயல்பட்டன. ஆயினும், நாடு முழுவதும் முடிவேந்தராயினும் குறுநில மன்னர்கள் ளாயினும் கடைப்பிடித்த நெறிமுறை ஒரே விதமாகவே இருந்தது. அரசனுடைய கொலுமண்டபமே நாட்டின் நீதி மன்றமாகவும் இருந்தது. ஒரு வழக்கில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், தெரிந்தவன், உறவினன், ஏழை, பணக்காரன் முதலிய கண்ணோட்டமில்லாமல் எந்த வேறுபாடுமின்றிக் குற்றவாளி' 'குற்றம்' இவற்றை மட்டும் ஆய்ந்து அறம் வழுவாது நீதிவழங்க வேண்டுமென்பதே அக்கால் நீதிமுறை ஆகும். இத்தகைய நீதி முறையால் பருவமழை பெய்கிறது என்று நம்பினர். அரசன் நீதிமுறையில் தவறினால் தெய்வமே அவனைத் தண்டித்துவிடும் எனவும் நம்பினர். நாடு முழுவதற்கும் அரசனே நீதிபதியாவான். ஆனால் கிராமப் பஞ்சாயத்துச் சபைகள் ஆங்காங்கே நீதிமன்றங்களாகத் திகழ்ந்தன. குற்றவாளிகள் கொலைக் குற்றவாளிகளாக இருந்தால் அவர்களுக்குக் கொலைத்தண்டனை அளித்தனர். அது பயிருக்குக்களையெடுப் பதைப் போலாகுமென்றனர். மன்னர்கள் நீதி தவறாமல் நடப்பர் என்பதற்குப் பொற்கைப் பாண்டியன், மனுநீதிச் சோழன் ஆகி யோரின் கதைகளைக் கூறுவர். வழக்கை ஆராயாது நீதி வழங்கிய பாண்டியன் நெடுஞ் செழியன் கோவலனைக் கொன்றதற்காகப் "பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! கெடுக என் ஆயுள்!'' என்று கூறி அரியாசனத்திலேயே உயிர் விட்டான் என்பதும், "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என்பதற் கொப்ப அரசமா தேவியும் உடன் உயிர் நீத்தாளென்பதும் சிலப்பதி காரம் கூறும் செய்தி ஆகும் "அறம்பிழைத்த அரசனை அறமே கூற்றாக வந்து கொல்லும்'' என்பதே சிலப்பதிகாரம் கூறும் நீதி ஆகும். குறுந்தொகையில் பெண் கொலை புரிந்த தன்னன் கதை யொன்று வருகிறது. செங்கன்மாவாவில் ஆண்ட நன்னன் என்ற குறுநில மன்னன் தன் தோட்டத்தில் விளைந்த மாங்கனி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றதை ஒரு பெண் எடுத்துப் புசித்து விட்டாள். அதற்காக அவளுக்கு நன்னன் மரணதண்டனை விதித்தான். அவளுடைய பெற்றோர் அவளுடைய எடை அளவு பொன்னையும் 81 யானைகளையும் தண்டமாகக் கொடுக்க முன்வந்தனர். ஆயினும், அக்கொடிய குறுநில மன்னன் அப் பெண்ணைக் கொன்று பெண் கொலை புரிந்த நன்னன்' என்று பழித்துரைக்குமாறு ஆனான். குற்றங்களும் தண்டனைகளும் பொய்யான குற்றங்களைக் கூறுவதும், பொய்சாட்சிக் கூறுவதும் தண்டிக்கப்பட்டன, பொய் சாட்சி கூறுவோரின் நாக்குத் துண்டிக்கப் பட்டது. பிறன்மனை நயத்தல் குற்றமாகும். அவ்வாறு நயப்பவனின் கால் துண்டிக்கப்படும். ஒரு பெண்னைக் காதலித்து, உடலுறவு கொண்டபின் கடிமணம் செய்ய மறுத்ததால் முட்செடியில் கட்டி வைத்து, காய்ச்சிய எண்ணையைத் தலையில் ஊற்றி, சுண்ணாம்பு நீரினை அவன் தலை மீது தெளித்ததாகப் புறநானூறு (256) கூறுகிறது. ஒற்றுப் பார்க்கும் ஒற்றர்களின் தலை துண்டிக்கப்படும். அரச இரண்டகர்கள் (துரோகிகள்) மரண தண்டனைப் பெற்றனர். நிலவரி போன்ற அரசுக்குச் சேரவேண்டிய கடமைகளைச் செலுத்தாத வர்கள் உரிய தண்டனைப் பெற்றனர். சில குற்றங்களுக்காக உடல் தொடர்பான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. ஒடத்தில் துடுப்புத் தள்ளும் தண்டனை இத் தகையதாகும். இதனைச் 'செங்கடற் பயணச்செலவு' என்ற கிரேக்க நாலும் குறிப்பிடுகிறது. ஒருவனுடைய பசு விளைந்த வயலில் மேய்ந்து நாசப்படுத்தி விட்டதற்காக அப்பசுவை மேய்த்தவனுடைய கண்ணைத் தோண்டும்படி தண்டனை விதிக்கப்பட்டதை அகநானூறு (262-5) கூறுகிறது. தோற்ற மன்னர்களையும் குற்றவாளியாகக் கொண்டு அவர்களைச் சிறையிலடைத்துக் குடிக்க நீரும் கொடுக்காமல் செய்த கொடுமையான தண்டனையுமிருந்தது. சோழன் செங்கணான் என்ற அரசன், சேரன் கணைக்காலிரும்பொறை என்பானைச் சிறைப் பிடித்துக் குடவாயிற் கோட்டத்தில் சிறைவைத்தான். அவனைச் சங்கிலியால் பிணைத்து நீரும் கொடுக்காமல் கொடுமைப்படுத்திய தாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. சங்ககாலத்தில் குற்றவாளிகளின் அட்டவணை இருந்தது. அதற்கான தண்டனை அட்டவணையும் இருந்தது. ஆனால், குற்ற வாளிகளைத் திருத்தும் வழிவகை இல்லை. எழுதப்பட்ட சட்டத் தொகுப்பு அக்காலத்தில் இல்லை; சட்டம் படித்த நீதிபதிகள் இல்லை; ஆனால், அறநெறிகளே எழுதாச்சட்டங்களாக மரபுவழி நீதிகளை வகுத்தன. நீதி விசாரணை முறையும் வரையறை செய்யப்பட வில்லை, எனவேதான் முறையற்ற தண்டனைகள் விதிக்கப்பட்டன. சங்ககாலத்தில் கொடுக்கல் வாங்கல், ஒப்பந்தங்கள், உடன் படிக்கைள் தொடர்பான (சிவில்) குற்றங்களும், பார்ப்பானைக் கொல்லுதல், பசுமடி அறுத்தல், இராசதுரோகம், கருக்கலைப்பு, மனிதக் கொலை முதலிய குற்றங்களும் இருந்தன. இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தலையை வெட்டுதல், யானைக்காலில் இடரச் செய்தல், சுண்ணாம்புக் காள வாயில் வைத்துச் சுட்டுச் சாகடித்தல் முதலிய வகையில் நிறைவேற்றப் பட்டன. மாற்றாள் கணவனை நயக்கும் பெண்ணுக்கு உறுப்பு சிதைக்கும் தண்டனை முறையுமிருந்தது. பொன், யானை, குதிரை முதலியன தண்டமாகப் பெறப்பட்டன. குற்றங்களைக் கண்டறிய பாம்புக் குடத்தில் கைவிடும்படி செய்வதுண்டு. இத்தனைக் குறைபாடுகள் தென்பட்டாலும், இவற்றை நீக்கிப் பார்த்தால் சங்க கால நீதிவழங்கும் முறை மனசாட்சியும், தெய்வீகமும் நிறைந்த தாகவுள்ளது. ஊராட்சி முறை சங்க காலத்தில் ஊராட்சி முறை இருந்ததா? க. அ. நீலகண்ட சாத்திரியார் 'வனராட்சி முறை' சங்க காலத்திலிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலங்கியங்களில் இல்லை யென்கிறார். கல்வெட்டு களில் மிகச் சிறந்த ஊராட்சி முறை இருந்ததற்கான சான்றுகளிருக் கின்றன. ஆனால், அச்சான்றுகள் சங்க காலத்தையொட்டியதாக இல்லை . வி. ஆர் இராமச்சந்திர தீட்சதர் "சங்க கால் ஆட்சி இயல் என்பது நடுவண் ஆட்சியை யும், ஊராட்சியையும் உள்ளடக்கியது தான் என்றும், திருக்குறள் கூறும் ஆட்சி இயல் என்பது இவற்றைப் பற்றியதே ஆகும்'' என்றும் கூறுகிறார். திருக்குறளில் 'நடுவண் ஆட்சி' என்றும் 'ஊராட்சி' என்றும் தனித்தனியே குறிப்பிட்டுக் கூறப்பட வில்லை. ஆனால் ஆட்சி இயல் பற்றிப் பொதுவாக கூறப் பட்டுள்ளது. குறள் கூறும் 'ஆட்சி இயல்' என்பது அரசனின் 'முடி யாட்சியைப் பற்றியதாகும் என்று வி. ஆர். இராமச்சந்திர தீட்சதர் விளக்குகிறார். இதனால்தான் க., அ. நீலகண்ட சாத்திரியார், ''திருக்குறளில் ஊராட்சி பற்றிய சான்று எதுவுமில்லை" என்கிறார். ஆனால், மற்ற சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே வரும் சில சொற்றொடர்களைக் கொண்டு சங்க காலத்தில் 'தளராட்சி முறை' இருந்ததென்பதை உறுதி செய்யலாம். மன்றம், பொதியில், அம்பலம், அவை முதலிய சொற்களுக்கு உரையாசிரியர் நச்சினார்க் கினியர், "ஊர்மக்கள் ஊரின் நடுவிலுள்ள பொது இடத்தில் மரநிழலில் கூடுமிடமே இத்தகைய சொற்களால் குறிப்பிடப்பட்டன' என்கிறார். இது பொதுமக்கள் அனைவரும் கூடும் பொதுவான இடமாகும். இதனால்தான் இதற்கும் பொது + இல் = பொதியில்' என்றும், பொதியம்' என்றும் பொதுவில்' என்றும் பெயர் உண்டாயிற்றாம். ஊர்த் திருவிழாக்கள் கொண்டாடு மிடமாகவும் இது இருந்தது. தெய்வங் களுக்குக் காவு கொடுத்து வணங்குமிடமாகவும் இது இருந்தது என்று புறநானூற்றால் அறிகிறோம் (புறம் 276), எயினர்கள் தாங்கள் கவர்ந்து வந்த பசுக்களைப் பொதியிலில் கட்டி வைப்பது என்றும், பகைவர்கள் ஓர் ஊரைக் கைப்பற்றிய வுடன் பொதியிலைக் கழுதைகளைக் கட்டி ஏர் உழுது விடுவர் என்றும் கூறப்படுகிறது. மன்றம் ' மன்றத்தில் கவர்ந்து வந்த கால்நடைகளைக் கட்டி வைப்பர் என்றும் அவற்றைக் காக்கும் காவலர்கள் 'மன்றாடியார் ஆவர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுக்கின்றன. எனவே, மன்றத்தின் காப்பாளர் மன்றாடியார்' எனப்பட்டனர். காலப்போக்கில் இப்பெயர் ஒரு குறிப்பிட்ட சாதிப் (இடையர்) பெயரைக் குறிப்பதாயிற்று. சங்க காலத்தில் ஆட்சிமுறை அலுவல்களும், நீதி விசாரணை யும், தண்டனையும் மன்றத்தில்தான் நிறைவேற்றப்பட்டன. எடுத்துக் காட்டாக, சோழன் கிள்ளிவளவன் தன் பகைவனான மலையமானின் பிள்ளைகளை யானைக் காலில் இடரச்செய்து கொல்வதற்கு இத்தகைய மன்றத்தில் தான் செயல்பட முனைந்தான். இக்கொலையைக் கோவூர்கிழார் எனும் புலவர் தலையிட்டுத் தடுத்தார் என்பது சங்க இலக்கியம் கூறும் சான்றாகும் (புறம் 46). மன்றம் பொது விசாரணையும், தண்டனையும் வழங்கும் இடமாக இருந்ததை இதனால் உணரலாம். தான் விரும்பும் பெண் ணுக்குப் பரிசளித்து விலை கொடுத்துப் பெண்ணைப் பெறுகின்ற இடமாகவும், திருமணக் கூடமாகவும், 'மன்றம்' பயன்பட்டதென் பதை நாலடியார் கூறுகிறது (96), மன்றத்தில் உடற்பயிற்சிகளும் விளை யாட்டுகளும் நடக்கும் என்பதனைப் பட்டினப்பாலையால் (246 - 49) அறிகிறோம். பொதியில் பொது + இல் = பொதியில் - பொது இடம் என்பது பொரு ளாகும். இதில் ஊருக்குப் புதியதாய் வருபவர்களும், பாணர்களும், புனித யாத்திரைக்கு வரும் பயணிகளும் தங்குவர். இது ஊரின் நுழை வாயிலிலேயே இருக்குமென்றும், இது ஒரு வழிபாட்டுத் தலம் என்றும் நச்சினார்க்கியர் கூறுகிறார். க. அ. நீலகண்ட சாத்திரியர் 'மன்றம்' என்பது ஒரு "மண்டபம்' என்றும், பொதியில் ஒரு பொது இடம் என்றும் கூறுகிறார். இந்தப் பொதியிலை அன்றாடம் சாணத்தால் மெழுகித் தூய்மைப் படுத்தியும், வழிபாடு செய்து, தங்களின் விடுதலைக்கு வழி செய்ய வேண்டுமெனத் தெய்வத்தை வேண்டியும், போரிலே சிறைப் பிடிக்கப்பட்ட கொண்டி மகளிர் இங்குத் தங்கியிருப்பர் என்று பட்டினப்பாலை கூறுகிறது (246-49) ஆக, பொதியில் வழிபாட்டுத் தலமாகவும், ஊராட்சி மன்ற மாகவும் பயன்பட்டதென்பதை உணரலாம். இது ஊருக்குச் சொந்தமான, வாருக்கு வெளியிலுள்ள மரநிழலில் அமைந்த இடமாகும். இங்குதான் அரசியல் விவகாரங்கள் விவாதிக்கப்படும். நீதி விசாரணைகள் நடக்கும், எனவே இது ஒரு வாழையடி வாழை யாக வரும் பொது இடமாக விளங்கியது. பொதியில் சமயச்சார்பான வழிபடுமிடமாகவும், உடற் பயிற்சிக் கூடமாகவும், விசாரணைக் கூடமாகவும் திகழ்ந்ததென் பதைக் கண்டோம். " அம்பலம்' என்ற சொல் மலைபடுகடாம் என்னும் சங்க நூலில் குறிப்பிடப்படுகிறது. இதில் நடனமாதர்கள் தங்குவார்கள் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். இது வழி பாட்டுத் தலமாகவும் இருந்தது. - அவை (அ) அவையம் = என்ற சொல் கனரார் கூடுமிடத்தைக் குறித்தது. நல்லோர் கூடும் அவை 'நல்லவை யாகுமெனத் திருக்குறள் குறிப்பிடுகிறது (728), அரசன் அவையில் எழுந்தருளி இருக்கும் போது அது 'அரசவை' அல்லது வேட்டவை' எனப்படும். ஊரார் மட்டுமே அமர்ந்து காரியங்களைச் செயல்படுத்தும் போது அது 'அவையோம்' என்றழைக்கப்படும். மதுரைக் காஞ்சியில் அத்தகைய 'அவையோம்' இருந்ததாகக் குறிப்பிடுகிறது. அவையில் பெரும்பாலும் வழக்கு விசாரணைகள் தான் நடை பெறும். திருமண வழக்குகள், கணவன் மனைவிக்கிடையே நிகழும் தகராறுகள், கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகள் முதலியன இதில் நடந்தன. இவ்வாறு நீதி வழங்கியதால் அவை "அறங்கூறும் அவை' எனப்பட்டன. இத்தகைய அவையில்தான் பசு விளைச்ச வில் மேய்ந்து அழித்த வழக்கொன்று வந்தது. அவ் வழக்கில் மாடு மேய்த்தவனுடைய இரு கண்களையும் பிடுங்குமாறு அவையார் தீர்ப்பு அளித்ததாக அகநானூறு (262:5-6) கூறுகிறது. மற்றொரு வழக்கில் ஒரு காதலன் காதலினையைப் புணர்ந்து விட்டுக் கடிமணம் செய்ய மறுத்ததால், அவையோர் சான்றாளர் (சாட்சிகளை உசாவி ! நிகழ்ச்சி நடந்தது உண்மையெனக் கண்டு அவனை முள்மரத்தில் கட்டி வைத்து அவனுடைய தலையில் சுண்ணாம்பைக் கரைத்து ஊற்றி உண்மையை வரவழைத்தார்கள். பின்னர் அவனை அப்பெண்ணுடன் சேர்த்து இல்லறம் நடத்துமாறு பணித்தனர் என்று அகநானூறு (256:16 - 20) கூறுகிறது. இதைத்தான் தொல்காப்பியர், பொய்யும், களவும் உற்றபோது ஐயர் வகுத்தர் கரணம் என்கிறார். காதல் கடிமணமாக முடியாமல் பொய்யும் பித்தலாட்டமுமாக அது முடியு மாயின் அகவையில் முத்தோர் (ஐயர்) அதனை மணமாக முடித்து இல்லறம் நடத்தச் செய்தனர் என்கிறார். அரசன் இத்தகைய ஊராட்சி அவையில் பங்கேற்கும் சமயத் தில் புலவர்களும், பாணர்களும், பெண்களும் கூட தாராளமாக அவைக்குள் வர இசைவளிக்கப்பட்டனர். அவர்கள் நேரடியாக அரசனிடம் தங்கள் குறைகளைக் கூறிப் பரிகாரம் பெறவும் அரசனை மகிழ்விக்க இசையும், நடனமும் நடத்தவும் அனுமதிக்கப் பட்டனர். அப்பொழுது அரசன் அவைக்காகத் தாராளமாக நன்கொடை நல்குவதுண்டு என அகநானூறு (76:5-6) கூறுகிறது, சில நேரங்களில் அரசன் தனது படிநிகராளிகளை அவைக்கு அனுப்புவதும் உண்டு (புறம்:71:4-7). இவர்கள் அரசுக்குச் சேர வேண்டிய வரிகளை அவையத்தார் மூலம் தண்டல் செய்து செல்வது முண்டு. இத்தகைய நிகழ்ச்சிகளால் ஊரவையில் அரசனும், அலுவலர் ரும் தலையிட்டனரெனக் கொள்ளுதல் கூடாது. தொல்காப்பியர் எட்டுவிதமான அவையங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் தொல்: பொருள் 17:17). இதைத்தவிர வேறு சான்றுகள் இல்லை , பொது - வாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ''ஜாராண்மை' என்ற சொல் காணப்படுவதால் ஊராட்சிமுறை இருந்ததை அறிகிறோம். கிழார் 'கிழார்' என்ற சொல் ஊர் அவையின் தலைவரைக் குறிக்கு மென்பர். புறநானூற்றில் (157) இச்சொல் கற்றறிந்த மேதைகளையே குறிப்பதாயுள்ளது. எடுத்துக்காட்டாக, பெருங்குன்றூர் கிழார், கோவூர் கிழார் ஆகியவற்றைக் கூறலாம். ஆனால், கற்றறிந்த அனைவரையும் "'கிழார்" என்ற அடைமொழியுடன் அழைப்பது கிடையாது ஆகவே இவர்கள் அவையோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அமர்த்தம் செய்யப்பட்ட அவைத்தலைவர்களாக இருக்க வேண்டும். எனவே, 'கிழார்' என்ற சொல் ஊராட்சி மன்றத் தலை வரையே குறிப்பதாகும். ஆனால், அவரை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? அதற்குரிய தகுதிகள் எவை? என்பன போன்ற விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை, குடவோலை முறை ஊரவைக்குத் தகுதியுடைவர்களின் பெயர்களைப் பனை ஓலைகளில் எழுதி, அவற்றைப் பிரிவுகளாகப் பிரித்துக் கட்டாகக் கட்டி ஒரு பானையில் (குடம்) இட்டு வைத்திருப்பர். எத்தனை உறுப்பினர் வேண்டுமோ அத்தனை ஓலைகளை அந்தக் குடத்தில் இருந்து எடுக்கும்படி ஓர் அறியாச் சிறுவனைக் கொண்டு எடுப்பர். அந்த ஓலையில் எவர் பெயர் வருகிறதோ அவருடைய பெயரை அவை உறுப்பினர்ப் பட்டியலில் சேர்ப்பார்கள். இதுவே ''குட வோலை' முறை ஆகும். பெயர் எழுதப்பட்ட பனை ஓலைகளை அடுக்கிச் சுவடியாகக் கட்டிவைப்பார்கள். கட்டைப் பிரித்து வேண்டிய எண்ணிக்கையில் ஒவ்வொரு ஓலையாக எடுப்பார்கள். குடத்திலிட்டுக் குலுக்கிய பின்னர் எடுப்பதால் இது குட ஓலை யானது. இந்தத் தேர்தல் முறையைக் கண்காணிக்கவும், அதனைப் பதிவு செய்யவும் அரசு அதிகாரி ஒருவர் வந்திருப்பாரென அக நானூறு (77:7-11) கூறுகிறது. முடிவுரை சங்க கால ஊராட்சிமுறை முழுக்க முழுக்க மக்களாட்சி முறை ஆகும். இதில் அரசுத் தலையீடு கிடையாது. இந்த ஊராட்சி முறையைத்தான் திருக்குறள், நாலடியார், கலித்தொகை ஆகிய நூல்கள் "ஊராண்மை'' என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றன. ஆனாலும், ஊராட்சியின் அமைப்பு (Structure), நடைமுறை அலு வல்கள், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, உறுப்பினர் களின் தகுதி, மன்றத்தின் ஆயுட்காலம் முதலிய விவரங்கள் எந்தச் சங்க நூலிலும் குறிப்பிடப் படவில்லை. பானையிலிருந்து ஓலை யெடுக்கும் காட்சி, எருவைப்பறவை (கழுகு) தன் அலகுகளால் போரிட்டுப் போர்க்களத்தில் சாய்ந்த வீரனின் குடலை ஈர்க்கும் காட்சி போலிருந்தாகக் குடவோலை முறைக்கு ஓர் உவமை அகநானூற்றில் கூறப்படுகிறது. குடவோலை, ஊராண்மை , கிழார், ஆவணமக்கள் முதலிய சொற்களால் சங்க காலத்தில் குடியாட்சி முறையில் ஊராட்சி நடந்ததென்பதை அறியலாம். ஊராட்சிக்கு உடலுறுப்பைச் சிதைக்கும் அதிகாரமும் இருந்ததை அறிகிறோம். (ஈ) பொருளியலும் பண்பாடும் 1. பொருளின் இன்றியமையாமை 2. தொழில்கள் (அ) உழவுத் தொழில் (ஆ) கால்நடை வளர்த்தல் 3. ஆடைகள் 4. அணிகலன்கள் 5, உணவு வகைகள் 6, வாணிகம் அ. உள்நாட்டு வாணிகம் ஆ. வெளிநாட்டு வாணிகம் இ. தரைவழி வாணிகம் ஈ. கடல்வழி வாணிகம் 1. கரையோர வாணிகம் 2. நடுக்கடல் வாணிகம் உ. நாணயம் ஊ. உரோமானியர் நாணயங்கள் 1 பொருளின் இன்றியமையாமை உலக வாழ்க்கைக்கும், நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும் பொருளியலே உயிர்நாடியாகவுள்ளது. வற்றாத செல்வமும், உயர்ந்த எண்ணமுமே நாகரிகமும், பண்பாடும் வளர உதவுகின்றன. ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் அதன் பொருளியலின் வளத்தைக் கொண்டே அளவிட முடியும். இந்த அடிப்படையில்தான் திருவள்ளுவரும், "அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு இவ்வுலக மில்லை யாங்கு." (குறள் :247) என்றார். பொருட்செல்வத்தால் இவ்வுலகில் வாழ வழிதேடிக் கொண்ட தமிழன், அருட்செல்வத்தால் மெய்யுலகிலும் வாழ வழி தேடிக் கொள்கிறான். இதுதான் பொருளியலில் அவன் கண்ட பண்பாடாகும். எப்பொருளையும் அறவழியிலேயே தேடிக்கொள்கிறான். அவ்வாறு தேடிய பொருளால் வாழ்வாங்கு வாழ்ந்து, செழுங்கிளை தாங்கி, தென்புலத்தார் தெய்வம் விருந்தோம்பி வானுறையும். தெய்வத்தில் உறைவதே அவனுடைய வாழ்க்கைப் பட்டாங்கு ஆனது. அறமும் இன்பமும் பொருளால்தான் வருமென்பதும் அந்தப் பொருளை இயற்ற வருத்தம் பாராமல் உழைக்க வேண்டுமென்பதுமே தமிழர் கண்ட பண்பாடாகும். அவ்வாறு உழைத்துச் சம்பாதித்து தேடிய பொருளைத் துன்பத்தில் உழலும் உறவினருக்குக் கொடுத்து உதவிடல் வேண்டுமென்பதும் அவர்தம் ஒழுகலாறு ஆகும். ''அறம் தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த கேளிர்கேடு பல ஊன்றலும், நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்" (புறம்; 173-{1-3) எனும் நல்நெஞ்சம் படைத்தவரே தமிழர். சங்ககாலத்தில் தமிழ்ச் சமுதாயம் பொருளியலில் ஏற்றத் தாழ்வுடையதாகவே இருந்தது. மன், உணவு, உண்டு களித்தவர் பால் கலந்து செய்த பண்ணியங்களையும், பாகு கூட்டிச் செய்த இன்னடி சிலையும் உண்டனர். (புறம்:381) அதே சமயத்தில், மழை நீரையும் பகிர்ந்துண்டு நிறையா வாழ்க்கை வாழ்ந்த மக்களும் ஒரு புறம் இருந்தனர். (புறம் 325,3-5) நெடுங்கொடி பறக்கும் பேரூர் களில் தேர்மீது ஊர்ந்து செல்லும் வாழ்க்கை ஏந்துகளைப் படைத்த வரும் வாழ்ந்தனர். இரந்துண்டு நாடோடிகளாய் வாழ்ந்த கோடியர்களும் இருந்தனர். சங்க காலத்து நாட்டுப்புற வாழ்க்கைக்கும், நகர்ப்புற வாழ்க் கைக்கும் இடையே நிறைந்த வேறுபாடுகள் காணப் பெறுகின்றன. நானில் வாழ்க்கை ஒன்றுக்கொன்று வேறுபடுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், அவ்வந் நிலத்துப் பொருளியலே ஆகும், இஃது அவரவர்தம் தொழிலின் காரணமாகவும் அமைந்துவிட்டது. இதுவே காலப்போக்கில் தொழில் வழி சாதிப் பாகுபாடுகள் தோன்ற வழி வகுத்துவிட்டது. 2. தொழில்கள் அ. உழவுத்தொழில் சங்க காலத்தில் பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்பட்டன வாயினும், வேளாண்மையே தலையாய தொழிலாகக் கொள்ளப் பெற்றது. இதனைச் "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' (குறள்:1031) எனும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாம். அரசனுடைய வெற்றியால் போர்க்களத்தில் உணவுத்தானியங்கள் விளைவதில்லை. ஆனால், கலப்பையால் உழுத படைச்சால்களில்தான் தானியங்கள் விளை கின்றன. இக் கருத்தைப், "பொருபடை தருஉங் கொற்றமும், உழுபடை ஊன்று சான் மருங்கின் ஈன்றதன் பயனே'' (புறம்: 1, 35:25-26) என்று வெள்ளைக்குடி நாகனார் கூறுவதை நோக்கலாம். இத்தகைய உயர் நாடியான உழவுத் தொழிலை எல்லா மக்களும் செய்தார்களா என்றால் 'இல்லை' என்றே கூற வேண்டி யுள்ளது. நிலக்கிழார், வேளாண்மைத் தொழிலாளர்கள் என்ற இரு வகை யானோர் இக்காலத்திலிருந்தனர்; அவர்களை முறையே உழுவித்துண்ட வேளாளர் என்றும், உழுதுண்ட வேளாளர் என்றும் தொல்காப்பியத்தின் உரையாசிரியர் நச்சினார்க் கினியர் அழைக்கிறார். சங்க கால நாகரிகமும் பண்பாடும் நகர வாழ்க்கையிலும், ஊர்ப்புற வாழ்க்கையிலும் வேறுபடுகின்றன. எனவே, உழுதுண்டோரும், உழுவித்துண்டோரும் இருந்தனரென அறியலாம், நாகரிகம் வேறுபட்டுக் காணப்பெற்றாலும், பண்பாடு மட்டும் தமிழர் பண்பாடாகவே இருந்தது. அவரவர் உழுநிலப் பரப்புக் கேற்றவாறு, ஏர் (கலப்பை)களின் எண்ணிக்கையும் வேறுபட்டன. உழவுக்குப் பயன் படுத்தப் பெறும் எருதுகள், எருமைகளின் எண்ணிக்கையும் வேறுபட்டன, நெற்பயிர் செய்வது முகாமையாகக் காணப்பெற்றது. நாற்றங் காலில் நெல் விதைகளைத் தூவி, வளர்ந்தபின் பிடுங்கி, உழுத வயல்களில் நட்டுப் பயிர் செய்தனர். நெல், வாழை, கரும்பு முதலியன பயிரிடப்பட்டன. நெல் அறுவடையானவுடன் பயிறுகள் (பருப்பு வகைகள்) பயிரிடப்பட்டன. ஆறு, குளம் முதலிய நீர்நிலை களிலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. வேளாளர் வீடுகளி லிருந்து தானியக் குதிர்களில் நிறைந்த தானியங்கள் எப்போதும் காணப்பட்டதால் இம்மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தார்க ளென்பதை அறியலாம். இந்த உழவுத்தொழிலும் தானியத்தில் வெவ்வேறாகக் காணப்பெற்றது. நெல்வகைகளிலும் வேறுபட்டன. சங்ககாலத்து உணவுப் பொருள்களை மலைபடுகடாம் குறிப்பிடுவதைக் காணலாம். அவை எள், தினை, அவரை, வரகு ஐவன வெண்ணெல், கரும்பு, தோசை, இஞ்சி, ஐயவி (கடுகு) கவலைக் கிழங்கு, தேமாங்கனி, ஆசினிப் பலா, பலா முதலியனவாகும். (மலைபடுகடாம் : 105-144), உழவுத் தொழிலில் ஈடுபட்டோர் வளமாக வும், மகிழ்வாகவும் வாழ்ந்தார்களென்றாலும், சில சமயங்களில் வறுமையின் காரணமாக விதை நெல்லையே குற்றி உண்டதாகவும் அறிகிறோம். (புறம்:230: 12-13) ஆ. கால்நடை வளர்த்தல் உழவுத்தொழிலுக்குக் கால்நடைகள் உறுதுணையாக நின்றன. எனவே, வேளாளர்களிடம் அதிகமான கால்நடைகள் இருந்தன. 'மாடு' என்ற சொல்லுக்கே அக்காலத்தில் 'செல்வம்' என்பதுதான் பொருளாகும். இவைகளைப் பேணிக் காப்பதற் கென்றே ஆயர் 'குடியினர் இருந்தனர். ஆடு, மாடுகளின் பால் தயிர், நெய் முதலியவற்றை வணிகப்பொருளாகக் கொண்டு விற்று வாழ்ந்தனர். இவற்றிற்கு விலையாகப் பணத்தைப் பெறுவதைவிட எருமை, பசு, நாகு ஆகியவற்றையே அவர்கள் ஈடாகப் பெற்றனர். (பெரும்பாணாற்றுப் படை: 155-165). ஒரே ஒரு பசுவை மட்டும் வைத்துக் கொண்டு அதன் பால், தயிர், நெய்யை விற்று வாழ்ந்த ஏழை ஆயரும் இருந்தனர். (அகம் 369, 22-25; குறுந்தொகை 205:4) நல்ல மாட்டினங்களைக் கொண்டிருந்த கொங்கு நாட்டின் சில பகுதிகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக இருந்த தச்சர், கொல்லர், வலையர் முதலானோரும், சங்கறுப்பவர், மணிகளைத் துளைப்பவர், பொன்னகை செய்வோர், பொன்னைமாற்றுக் காண்போர், துணி விற்போர், செம்பு விற்போர், பூ, சாம்பிராணி முதலியன விற்போர், ஒவியர் ஆகியோரை (மதுரை : 511-21க் கம்மியர் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது, வாள், வேல், கோடரி' (நவியம்) ஒளசி இரும்புக் கருவிகளும், கட்டில், தேர், கலப்பை முதலான மரச்சாமான்களும் கூட இக் காலத்தில் செல்வங்களாகக் கருதப்பட்டன. 'கலம் செய்கோ' என்றும், வேட்கோ' என்றும் அழைக்கப் பெற்ற குயவர்கள் சங்க காலத்தில் எல்லா வித ஏனங்களையும் மண்ணால் செய்தளித்தனர். வீட்டிற்கு வேண்டிய ஏனங்களைச் செய்த குயவர்கள் இறந்தோரை வைத்துப் புதைக்கும் பெரிய தாழிகளையும் செய்தனர் (புறம்: 12-13, 256 : 5-6). இ. ஆடைகள் ஆள் பாதி, ஆடை பாதி என்பது மூத்தோர்மொழி, நாகரி கத்தைக் காட்டும் கண்ணாடிதான் ஆடை. சங்க காலத்தில் பருத்தி, பட்டு, மயிர் ஆகிய மூவிதப் பொருள்களைக் கொண்டும் ஆடை நெய்தனர். பாலாடை அன்ன மேலாடையைத் 'துகில் ஆடை' என்றனர். கலிங்க நாட்டிலிருந்து வந்த பருத்தி ஆடையைக் கலிங்கம் என்றனர். இதுவே பட்டாடையானால் இதற்கு 'நூலாக்கலிங்கம்' என்று பெயராயிற்று. மூங்கிலிலிருந்து உரிக்கப்பட்ட வெள்ளிய தோல் போன்று நெய்யப்பட்ட ஆடைக்கு 'ஒண்பூங் கலிங்கம் என்று பெயர். தூய வெண்மையான அறுவைகளைக் கொண்டு பிணங்களை மூடி வைத்தனர். ஆடைகளுக்குக் கஞ்சி ஊட்டும் பணியைச் செய்த பெண்டிர் புலைத்தியர் எனப்பட்டனர். மணப்பெண்கள் கோடிக் கலிங்கமும் சுருங்காக்கலிங்கமும் அணிந்தனர். வண்ண ஆடைகள், பூ வேலைப்பாடுடைய ஆடைகள் முதலியனவும் இருந்தன. இவ்வாறு ஆடை அணிபவர்களைக் கொண்டே அவர்களின் செல்வச் செருக்கையும், பொருளாதார மேம்பாட்டையும் அறியலாம். அதே சமயம் தழையுடை, மரவுரி ஆடை, பூவாடை முதலியன அணிந்தவர்களும் இருந்தனர். இஃது இவர்களின் வாழ்விடம், சூழ்நிலைக் கேற்றவாறு அமைந்தன் என்பதைவிடப் பொருளாதார நிலைக்கேற்றவாறு அமைந்தன, எனலாம். பட்டு, எலிமயிர், பருத்தி ஆகியவற்றின் நூல்களைக் கொண்டு பின்னல் வேலை செய்தோர் சாலியர் எனப்பட்டனர். பின்னப்பட்ட மார்புக் கச்சைக்கு வம்பு முடிதல் என்று பெயர். ஈ. அணிகலன்கள் ஆடைகளைக் கொண்டு ஒருவரின் செல்வத்தைக் கணக்கிடு வதைப் போலவே அவர் அணியும் அணிகலன்களைக் கொண்டும் கணக்கிடலாம். அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை எனும் சொற்கள் அணியைக் குறித்தன, அணிவதால், 'அணி, என்றும் ' பண்ணப்படுவதால் 'பண்' என்றும், இழைத்துச் செய்யப்படுவதால் 'இழை' என்றும் இவை அழைக்கப்பெற்றன. அணி யிழை , நனிஇழை, இலங்கிழை, பாசிழை, மாணிழை, ஆயிழை முதலி யன சங்க காலத்தில் வழக்காற்றிலிருந்த இழைகளின் வகைகளாகும். முன் கைகளிலும் தோள்களிலும் தொட்டுக்கொண்டு இருக்கின்ற வாறு அணியும் அணிகலன்களுக்குத் தொடி என்று பெயர். அவை ஒண்டொடி, ஆய்தொடி, செறிதொடி பைந்தொடி எனப் பல்வேறு வகைப்படும். காதில் அணியும் அணியைக் குழை என்பர். இதிலும் மகரக்குழை, பொலங்குழை, ஒண்குழை, பூங்குழை, வார்குழை, சிறுகுழை எனப் பல்வேறு வகையுண்டு. முன்கையில் அணியும் வளைந்த அணி 'வளை' எனப்பெறும். இதிலும் பொன்னாலும் சங்காலும் ஆமை ஓட்டாலும் செய்த வளைகள் இருந்தன. சுருங்கக் கூடரின் தலை முதல் உள்ளங்கால் வரை ஆணும், பெண்ணும் உலோகத்தாலும் சங்கு, தழை, பூ, மூங்கில்வாரை முதலியவற்றாலும் ஆன பல்வேறு அணிகளை அணிந்தனர். பொன், வெள்ளி, உயர் மணிகள், முத்து பவளம் முதலிய விலையுயர்ந்த பொருள்களாலான அணிகலன்களை அணிந்தவரின் பொருளியல் நிலையைக் கொண்டு அவர்களின் செல்வச் செழிப்பை அறியலாம். சங்கு, மூங்கில், தழை, பூ முதலியவற்றை அணிந்தவரைக் கொண்டு அவர்களின் ஏழ்மை யான பொருளாதார நிலையையும் காணலாம். பிற்காலத்தில் பிரபலமாகப் பேசப் பெறும் ஒன்பான்மணிகள்' (நவரத்தினங்கள்) பற்றிச் சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய காலத்து இலக்கியங்களிலும் குறிப்பாகச் சிலப்பதிகாரத்திலும், கூறப் பெற்றுள்ளது (சிலம்பு - 14:180-198]. தமிழர் முத்தையும் பவளத் தையும் கடலில் மூழ்கி எடுத்தனர் என்று சங்க நூல்கள் கூறுகின்றன (பதிற்றுப்பத்து 30 :6-7). வணிகப்பொருள்களின் பட்டியலில் நவமணிகளும், நவதானி யங்களும் (தவசம்), ஆடை, அணிகலன்களும், காணப்பெறுவ தோடு, மலர்களும் மாலைகளும் கூட காணப் பெறுகின்றன. நவமணிகளையும், பொன்னையும், சந்தனத்தையும், கற்பூரத் தையும், புனுகையும் பனி நீரில் நனைத்து இடித்து விரைமா (முகத்துப் பூசும் பவுடர்) தயாரிக்கப்பட்டதாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது, (மதுரைக்காஞ்சி : 329) மணப்பொருள்களை அம்மியில் சாந்தாக அரைத்துச் செல்வ மகளிர் பூசிக் கொண்டார்கள் (மதுரைக்காஞ்சி; 49-50), சந்தன விறகைக் கொளுத்தி அதில் கண்டசருக்கரையையும் அதிலையும் சேர்த்து வீடுகளில் புகைத்து நறுமண மூட்டினர். (மதுரைக்காஞ்சி : 49-56). ஒன்பது மணிகள் வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புட்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவை நவமணிகள் ஆகும். உ. உணவு வகைகள் உணவு வகைகளிலும் மக்கள் ஒரே விதமான உணவையே உண்டார்கள் என்று சொல்ல முடியாது. அவரவர் பொருளாதாரத் திற்கும், வாழ்விடங்களுக்கும் ஏற்பவே உணவு வகைகளும் "அமைந்திருந்தன. ஆயினும், 'விருந்தோம்பல்' என்ற தமிழரின் அரிய பண்பாடு எல்லோருக்கும் பொதுவாக அமைந்திருந்தது. பால், பால்பொருள்கள், காய்கறி வகைகள், கீரை வகைகள் முதலியன உணவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இறால் மீன், ஆமை ஆகியவை சுவையானவையாகக் கூறப்பெறுகின்றன. விலங்கு களின் இறைச்சியை விரும்பி உண்டனர். அரசர்கள் பாணர்களுக்கு ஊனையும், சோற்றையும், கலந்து உருண்டையாகக் கவளம் பிடித்துக் கொடுத்தார்கள் என்று புறநானூறு கூறுவதிலிருந்து அக்காலத் தமிழர் புலவு [பிரியாணி போன்ற தான் உணவை உண்ட தையும் அறிகிறோம் (புறம் 33 : 13-14). இதனை அக் காலத்தில் 'அமலைக் கொழுஞ்சோறு' என்றனர். நெய்ச் சோற்றைப் பொன் கலங்களில் செல்வரும் அரசரும் குறுநில மன்னரும் உண்டனர். பெரிய விருந்து படைக்கும் வழக்கம் அரசர்களிட மிருந்தது. இதனை பெருஞ்சோறு படைத்தல்' என்றனர் (புறம் 160 : 11-12). இவ்வாறு, செல்வம் படைத்தோர் உண்ணும் உணவு வகைகளை யும், பழவகைகளையும் காணும் நாம் பொருளற்ற ஏழைகள் ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியின்றி வாடியதையும் காண்கி றோம். வள்ளல்களின் வரிசைகளைக் காணும்போது ஏழை எளியவர் களின் எண்ணிக்கையும் நமக்குப் புலனாகிறது. இக்காலத்தில் சிறார் களுக்குச் சத்துணவு படைப்பதை அதிசயமாகப் பேசுவோர் அறிய வேண்டிய ஓர் உண்மை புறநானூற்றில் கூறப் பெற்றுள்ளது. பசி யுடன் வரும் சிறுவர்களுக்கு வள்ளல்கள் சோறு வழங்கினார்கள். இதனை 'அறச்சோறு' என்றனர். எறும்புகள் சாரை சாரையாக முட்டைகளை ஏந்திக்கொண்டு செல்வதைப் போல் சிறுவர்கள் வரிசை வரிசையாக இச்சோற்றினைக் கையிலேந்திக் கொண்டு சென்றார்கள் மேற்படி நூல்: 173:7-9). சமைத்த மான் தசையுடன், சோற்றையும் சேர்த்துப் பனை யோலையில் பொட்டலங்கட்டி பசியுடன் வருபவருக்கு வள்ளல்கள் அளித்தனர் (மேற்படி நூல் : 177; 8 -11]. இதிலிருந்து அன்றாடம் சோற்றுக்கே கையேந்தும் வறியவர்களும் அக்காலத் தமிழகத்தில் இருந்தார்களென்பதை உணர முடிகிறது. ஆனாலும் மண்ணுயிர்க் கெல்லாம் உண்டியும், உடை யும், உறையுளும் அளிப்பதையே தமிழர் அறமாகக் கொண்டனர் (மணிமேகலை: 25:228-37). ஊ. வாணிகம் அ. உள்நாட்டு வாணிகம் உழவுத் தொழிலோடு பல்வேறு தொழில்களையும் செய்த பண்டைய தமிழர்கள் செல்வம் செழிக்க, தன்னக, அயலக வாணிகத்தையும் மேற்கொண்டனர். போக்குவரத்து ஏந்துகள் அதிகமாக இல்லாத அக்காலத்தில் ஒவ்வொரு ஊரும், 'தன்னிறைவு' பெற்றே விளங்கினதெனலாம். ஆயினும், ஒருசில பொருள்களை இடம் விட்டு இடம் கொண்டு சென்று விற்றும், வாங்கியும் வந்தனர். இதனால் உள்நாட்டு வாணிகம் பெருகியது. இன்றியமையாத உணவுக்கு உதவும் உப்பு இத்தகைய வணிகத்தின் முதற்பொரு ளாகும். உப்பு வணிகர் உமணர் எனப்பட்டனர். உப்பைப் பரதவர் தயாரித்தனர். அதனை எடுத்துச் சென்று விற்றவரே உமணராவர். இவர்கள் தங்கள் குடும்பங் களுடன் வண்டிகளில் உப்பை ஏற்றிச் சென்று விற்றனர் (அகம். 17: 11-13). அக்காலத்தில் ஆறலைக் கள்வர்களால் தாக்கப்படாமலிக்க வணிகர்கள் பாதுகாவலர்களை உடன் அழைத்துச் செல்வர். பெரும் பாதைகள் இணையுமிடங்களில் அரசு சுங்கச் சாவடிகளை அமைத்திருந்தது. மலையில் கிடைக்கும் பொருள்களும், கடலில் கிடைக்கும் பொருள்களும் வணிகர்களால் - பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன (பெரும் பாணாற்று:67). நகரங்களிலிருந்த அங்காடிகளில் எப்பொழுதும் ஆரவாரம் இருக்கும். நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (இரவுக்கடை) ஆகியவை இருந்தன. நாளங்காடியில் பண்ணியங்கள், நறிய பூக்கள், பலவகையான பூமாலைகள், நறுமணச் சுண்ண்வ கைகள், அடைக்காய் (பாக்கு), வெற்றிலை, நூறு (சுண்ணாம்பு) முதலியன விற்கப்பட்டன. சில தலைச்சுமை வியாபாரிகள் வீடு வீடாகப்பொருள் களைக் கொண்டு சென்று விற்றனர் (மதுரைக்காஞ்சி 422 - 23). சுருங்கக்கூறின் மலையி லிருந்து வந்த பொருள்களும் நவமணிகளும், முத்தும், பவளமும், பொன்னும், துணியும் இந்த அங்காடிகளில் அறம்பிழையாது முறையாக விற்கப்பட்டன. இத்தகைய வணிகர்கள் மதுரையி லிருந்தனர் (மேற்படி நூல்: 500-506,511-18). காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த அங்காடியில் கடல் வழியாக வெளி நாட்டிலிருந்து வந்த குதிரைகளும், நிலத்தின் வழியாக வண்டிகளில் வந்த மிளகு முட்டைகளும், இமயமலைப் பகுதியில் இருந்து வந்த பொன்னும் மணியும், மேற்கு மலையிலிருந்து வந்த சந்தனமும், அகிலும், தென்கடல் முத்தும், கீழைக்கடல் பவளமும், ஈழ நாட்டு : உணவு வகைகளும், கங்கை, காவிரிப் படுக்கைகளிலிருந்து வந்த பொருள்களும் காணப்பட்டன (பட்டினப்பாலை 185-193), இந்த தகர வணிகர்கள் அறவழியில் வாணிபம் செய்தனர். பிறர் பொருளைத் தன்பொருள் போல் உயர்வாக நினைத்தனர்; விற்கும் பொருள்களைக் குறைத்து எடை போட்டு அதிக ஊழிய (இலாபத்திற்கு விற்கவில்லை என்று பட்டினப்பாலை குறிப்பிடு கிறது மேற்படி நூல்: 209-212) கடைகளில் பலவண்ணக் கொடிகள் பறந்தன. வணிகர்கள் பொருளின் பெயரையும், விலையையும் கூறிக் கூவி அழைத்தனர். இவ்வாறு மதுரை நகர அங்காடிகளைப் பற்றி, மதுரைக் காஞ்சியிலும் புகார் நகர அங்காடிகளைப் பற்றி பட்டினப்பாலையிலும் காணலாம். பெரும்பாலான சிற்றூர் அங்காடிகளில் பண்டமாற்று முறை வணிகமே நடந்தது. ஆ. வெளிநாட்டு வாணிகம் பண்டைய தமிழகம் முப்புறமும் கடலால் சூழப் பெற் றிருந்தது. கைத்தொழில் சிறந்திருந்தது. கப்பல் கட்டும் தொழிலும் சிறப்பிடத்தைப் பெற்றிருந்தது. இங்கு விளைந்த விளைபொருள்களுக்கு வெளி நாடுகளில் அதிகமான வரவேற்பு இருந்தது. தமிழர்களும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதலைத் தங்கள் மரபாகக் கொண்டிருந்தனர். அவர்களின் பண்பியல் கூறுபாடுகளில் 'கலத்தில் பிரிதல் என்பது பெருளீட்டுவதற்காகத் தம் மனைவி மக்களைப் பிரிந்து செல்வதாகும். இஃது ஒரு வாழ்க்கைக் கட்ட மாகவே பின்பற்றப்பட்டது. இதனால் கடல் கடந்த வாணிபம் அக் காலத்தில் அன்றாட வாழ்க்கைக் கூறுபாடாகவே நின்றது. இதன்வழி மன்னர்களும் அயல்நாட்டு அரசர்களுடன் அரசியல் உறவு கொண்டு தூதுவரைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். தமிழகத்தைச் சுற்றிலும் சிறந்த பட்டினங்களும், துறைமுகங்களும் ஏற்படுவதற்கு இத்தகைய அயலக வாணிபமே காரணமாகும். அண்டையிலுள்ள ஈழத்தோடும், கிழக்கிந்திய மேற் கிந்திய தீவுகளோடும், பர்மா வோடும், மேற்கிலுள்ள தொலைதூரக் கிரேக்க ரோமானிய நாடுகளோடும், சீனம், ஜப்பான் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகளோடும் தமிழகம் வணிகத்தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்தின் கடல் வளத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரு கியது. தொல்காப்பியம்: பொருள், அகம்: 34] மீன் பிடித்தலும், முத்தெடுத்தலும், செல்வச் செழிப்பை அதிகரித்தன. கப்பல்களில் பலவகை இருந்தமை பற்றி இலக்கியங்களால் அறிகிறோம். அவை நாவாய், வங்கம், பஃறி. அம்பி, திமில், தோணி முதலியனவாகும். அம்பி மீன்பிடிக்கும் தொழிலுக்கே பயன்பட்டது. திமிலும், தோணியும் கடலோரமாகவே செல்லும் நீர்க்கலங்களாகும். கடலில் நிற்கும் பெரிய கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்கி வந்து துறைமுகம் மூலமாகக் கரை சேர்க்கும் நீர்க்கலத்திற்குத் தோணி என்று பெயர் (புறம் 342: 5-6) கடற்கரை ஓரமாகவே சென்று பக்கத்து தர்களோடு வாணிபம் செய்யப்பயன்பட்ட நீர்க்கலம் பஃறி ஆகும். பெரும்பாலும் இதில் உப்பு வணிகமே நடந்தது. (பட்டினப் பாலை: 29 - 31) வங்கம், நாவாய் என்பவை நெடுங்கடல் பயணத்திற்குப் பயன்பட்ட கப்பல்களாகும். ' இவ்வாறு சங்க இலக்கியங்களில் வரும் நீர்க்கலங்களின் வகைகளைப்பற்றி யவனர்களின் குறிப்புகளிலும் காணப்படு கின்றன, செங்கடல் பயணச்செலவு' (The periplus of the Erythics) என்ற நூலில் சிறிய கப்பல்கள் 'சங்கரா' என்றும், பெரிய கப்பல்கள் சொலாண்டியா' என்றும் துறைமுகப் பட்டினங்கள் குறிப்பிடப்படு கின்றன. இவை முறையே கண்ணனூர், தொண்டியாக இருக்கலா மெனக் கருதப்படுகின்றன. மேலும் முசிறி, கொற்கை, காவிரிப் பூம்பட்டினம், புதுச்சேரி, மரக்காணம், எயிற்பட்டினம், மருங்கூர்ப் பட்டினம் முதலிய துறைமுகப் பட்டினங்களைக் கிரேக்க, உரோ மானிய அரேபிய நாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இத்துறைமுகங்களின் வழியாக வெளிநாடுகளுக்கு மிளகு, மலபத்திரம் (நறுமண இலை) கண்ணாடி வகைகள், வைரம், நீலக் கல், சங்கு, முத்து, தேக்கு, சந்தனம், தந்தம், மயில் தோகை, கருங்காலி முதலிய பொருள்கள் உரோம் நாட்டிற்கும், எகிப்து, அரேபியா, மலாயா, சீனா, ஈழம், கிழக்கிந்தியத் தீவுகள் முதலியவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன் நாணயங்கள், புட்பராகம், துணி வகைகள், மது வகைகள், ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த திரைச் சீலைத் துணிகள், பாவை விளக்குகள், சங்கிலிகள், அஞ்சனக்கல், பவளம், சாதாரணக் கண்ணாடி வகைகள், செம்பு, தகரம், ஈயம், தாளகம் (அரிதாரம்) முதலியன இறக்குமதி செய்யப்பட்டன. பாண்டியநாட்டுக் கொற்கை, முத்துக்குப் பெயர் பெற்றதென தன்னக, அயலகச் சான்றுகளில் அறிகிறோம். கீழைக்கடற்கரையில் சிறந்து நின்ற புகார் (காவிரிப் பூம்பட்டினம்) பற்றிய சிறப்புகளைப் பற்றி யவன நூல்களும், பட்டினப்பாலையும் விவரிக்கின்றன. இறக்குமதி யான பொருள்களின் பட்டியலைப் புறநானூறு விவரிக்கின்றது (புறம் : 30 : 11-13. ]. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் எப்பொழுதும் ஆரவாரம் காணப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி ஆகும் பொருள்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. வரிசை வரிசையாக கப்பல்கள் நின்றிருந்தன. பொருள்களைச் சோதனையிட்ட சோழ நாட்டின் சுங்க அதிகாரிகள் சோழ அரசின் சின்னமான புவி முத்திரையைப் அப்பொருள்களின் மீது பதித்தனர். சுங்கவரியால் சோழநாடு வளம் பெற்றது. காவிரிப்பூம் பட்டினமும் செல்வர் குடிகொண்ட நகர மாயிற்று. நகரில் வணிகத்தின் பொருட்டு வந்திருந்த பல நாட்டுமக்கள் பேசும் பல்வேறு மொழிகளின் ஒலிகள் ஒலித்தன (பட்டினப்பாலை: 185-93]. இவ்வாறு பண்டைய தமிழகத்துடன் கிரேக்கம், உரோமப் பேரரசு, எகிப்து, அரேபியா, மலேசியா (மலைநாடு) கிழக்கிந்தியத் தீவுகள், ஈழம், சீனம் முதலியன வணிகத் தொடர்பு கொண்டிருத் தாலும் கிரேக்கம் அதிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தது. அலேக்சாந்திரியா இந்திய வணிகப் பொருள்களால் சிறப்புற்றது. உரோமப் பேரரசு வாழ்ந்த தற்கும், வீழ்ந்ததற்கும் தமிழகத்தோடு அது கொண்டிருந்த வணிகத் தொடர்பே காரணமாகும். ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 120 கப்பல்கள் உரோமாபுரிக்கும் தென்னகத்திற்கும் இடையே கடலில் வளர்ந்த வண்ணம் இருந்தன. யவனரின் இத்தகைய வணிகத் தொடர்பை இன்றைய அகழ்வாராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. சங்ககாலத் தமிழரின் உணவு, உடை, உறைவிடம், அணி கலன்களைக் கொண்டும், அவர்களின் தொழில் வணிகம் முதலிய வற்றினைக் கொண்டும் அக்காலப் பொருளாதார நிலையைக் கண்ட நாம், அவற்றில் அவர்கள் கையாண்ட பண்பாடுகளையும், விட்டுச் சென்ற நாகரிகத்தையும் ஒருவாறு கண்டோம். 'தமிழர் நாகரிகம் என்பது பண்பாட்டினின்று வேறுபட்டதென்பர். ஆனால் அது உண்மை யல்ல, தமிழரின் நாகரிகமும், பண்பாடும் ஒன்றே ஆகும். உள்ளத்தின் வளர்ச்சி உணர்வின் வளர்ச்சி இரண்டும் சேர்ந்து அகவளர்ச்சி' எனப்படும். உலக வாழ்க்கையைப் புறவாழ்க்கை (ITIaterialism) என்கிறோம். இதில் காணும் மேம்பாடுகள் புறவளர்ச்சி ஆகும். இந்த அகம், புறம் இரண்டும் சேர்ந்ததே தமிழரின் நாகரிகமாகும். தனி மனிதனின் அக, புற வளர்ச்சியே அவன் வாழும் சமுதாயத்தின் அக, புற வளர்ச்சி ஆகும் போது அது பரந்த அளவில் காணப்பெறும் சமுதாய நாகரிகமாகிறது. 'நாகரிகம்' என்ற சொல்லுக்குக் 'கண்ணோட்டம்" என்றும், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் காணும் நற்குணங்கள் என்றும் கூறுவர். இவற்றில் பண்பாடும், உணர்ச்சியும் இரண்டறக் கலந்துள்ளமையால் நாகரிகமும், பண்பாடும் தமிழரின் இரு கண்கள்' என்றனர். இவர்களின் வாழ்க்கை இன்பமயமாகி முழு நிறைவடை வதையே பண்பாடு' என்றனர். இதற்கு அவர்களின் பொருளியலே அடிப்படையாக அமைந்தது. மனிதனுடைய உணர்வுகள், செயல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பண்பாட்டு வளர்ச்சியில் முதிர்ந்து நின்று மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பண்பாடாக அது வளர்ந்து நின்ற பின், அவன் விட்டுச் செல்லும் எச்சங்களையே நாம் 'நாகரிகம்' என்கிறோம். எனவே பண்பாடும், நாகரிகமும் ஒரே பொருளின் படிமுறை வளர்ச்சி ஆகும். ஏழ்மை, இல்லாமை, வறுமை, வளமை முதலிய பல்வேறு நிலைகளிலும் தமிழர் தங்களின் விருந்தோம்பல், பொறையுடைமை, கண்ணோட்டம் முதலிய அரிய பண்புகளிலிருந்து வழுவாமல் சங்கு சுட்டாலும் வெண்மை தருவதைப்போல் வாழ்ந்தவர்களே தமிழர்கள்; அதுவே அவர்களின் பண்பாடாகும். இதனைச் சங்க காலத்தில் மட்டுமேயன்றி பின்வந்த களப்பிரர், பல்லவர், பாண்டியர், சோழர், விசயநகர், நாயக்கர் ஆட்சிக் காலங்களிலும், ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்திலும் காணலாம் வருவாயில் கால் வழங்கி வாழ்தல்' தமிழர் பண்பாடு, அவர்கள் அறச்சாலைகளை அமைத்தும், வறியவருக்கு உண வளித்தும், அறப்பண்போடு வாழ்ந்ததைக் கண்டோம், வணிகத்திலும் அவர்களின் வாய்மையையும், நேர்மையையும் கண்டோம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்ற பட்டாங்கை உணர்ந்த தமிழர், அப் பொருளைத் தேடுவதற்கு ஓயாது உழைத்து, அதனைத் தாமும் உண்டு, மற்றவருக்கும் வாரிவழங்கி வாழ்ந்தனர். பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவைகளைப் போல் இல்லையெனாது கொடுக்கும் வள்ளல் களிடம் வறியர் பலரும் சென்று கொண்ட பெற்றனர். அவ்வறியவர் களும் தம்மை யொத்தவருக்கு வழங்கினர். இதுவே, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தமிழன் பண்பாகும். எனவே தான் பண்டைத் தமிழர் பொருளுக்காக மட்டுமே வாழ்பவர்களாக இல்லாமல் மாந்த நேயப் பண்பாட்டிற்காகவும் வாழ்ந்தவராவர். சங்ககாலத் தமிழரின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண் மையே முதலிடம் பெற்று நின்றது. அடுத்தபடியாக வாணிகமும், கைத்தொழில்களும் முதன்மை பெறுகின்றன. ஏற்றுமதிப் பொருள் களில் மிளகு முக்கியமான இடத்தைப் பெற்றது. இதனையடுத்து அரிய கற்கள் குறிப்பாகப், பச்சைக்கல் (மரகதம்) ஏற்றுமதி செய்யப் பட்டது. இப் பச்சைக்கல் கோவை மாவட்டத்திலுள்ள படியூர் என்ற ஊரில் இருந்து ஏற்றுமதியானதாகப் பெரிபுளுசு கூறுகிறது. இன்றைய அகழ் வாராய்ச்சிகளில் பெரும்பாலான உரோம நாணயங்கள் கோவை மாவட்டத்தில் கிடைப்பதைக் கொண்டு, உரோமர்கள் பச்சைக்கல் வணிகத்தில் காட்டிய அக்கறையை உணரலாம். உரோம் நாட்டு வாணிகர்கள் மேலைக் கடற்கரையை அடைந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கோவை மாவட்டத்திற்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரையை அடைந்தனரென வின்சென்ட் சுமித்து கருது கிறார். இத்தகைய உரோம வணிகத்தால் தமிழ்நாடு ஆண்டுக்கு உருபாய் 56,10,260 அந்நியச் செலாவாணரி ஈட்டியுள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. "நாளிரு முந்நீர்நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்டஉரவோன் மருக" இ. தரைவழி வாணிகம் கடல்வழிச் சென்று அயல்நாடுகளுடன் வாணிகம் செய்த தமிழர், தரை வழியாகவும் சென்று அயலகத்திலும் உள்நாட்டிலும் வாணிகம் செய்தனர். அவர்களின் வாணிகப் பண்டங்களை கழுதைகள், எருதுகள், வண்டிகள் ஆகியவற்றில் ஏற்றிச் சென்றனர். இவ்வாறு செல்வோருக்கு 'வணிகச் சாத்தர்' என்று பெயர். அன்று பலநாடுகளிலும் வழிப்பறிக் கொள்ளையர்கள் இருந்தனர். இதனால் வணிகச்சாத்தர்கள் கூட்டமாகச் செல்வதோடு தங்களின் வழித் துணைக்கு வில், வாள் ஏந்திய படை வீரர்களையும் உடன் அழைத்துச் சென்றனர். வழிப்பறிக் கொள்ளை யர்களை வில் வேடர் என்கிறது அகநானூறு. இவ்வேடர்கள் பண்பில்லாத வாழ்க்கை வாழ்ந்தனர் புறம்:66, 38 + அகம்:245:5-7 வணிகச் சாத்தர்கள் மிளகு மூட்டைகளைப் பலாப்பழம் அளவு சிறுசிறு முட்டைகளாகக் கட்டிக் கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு வில் வீரர்கள் காவல் வர, தரை வழியாக வாணிகப் பயணத்தைத் தொடர்ந்தனர் என்றும், வழியிலிருந்த சுங்கச் சாவடிகளில் அரசு அலுவலர்களிடம் குறிப்பிட்ட தொகையைச் சுங்கமாகக் கட்டிக் சென்றனர் என்றும் பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார். பெரும்பாணாற்றுப்படை: 73 82) பாலைநிலப் பயணத்தின் போது வாணிகச் சாத்தருடன் பாலை நிலக் கொள்ளையர் களான வேடர்கள் போர் செய்த சம்பவத்தை மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார் (அகம்: 89:9-14). இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது அக்காலத் தரை வாணிகப் போக்குவரத்துப் பாதைகளும் பாதுகாப்பற்ற நிலைகளில் இருந்ததைக் காண்கிறோம். ஆயினும், தமிழர்கள் பொருள் தேடுவதில் கொண்ட அரிய முயற்சியினைப் போற்றுகிறோம். தங்களின் பொருளுக்கும், உயிருக்கும். ஆபத்து இருந்தாலும் வணிகச் சாத்தர்களின் அஞ்சா நெஞ்சத்தைக் காண முடிகிறது, அவர்களின் வணிகச் சாத்துகளின் தலைவனுக்கு 'மாசாத்துவான்' என்று பெயர். அவன் சோழ அரசனுக்கு அடுத்தபடியான பெருங்குடி மகனாயிருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. ஈ) கடல்வழி வாணிகம் ஏற்கனவே கடல் வாணிகம் பற்றி ஓரளவு கண்டோம், நீரில் மிதந்து தொலைதூர நாடுகளுக்குச் செல்வது சங்க காலத் தமிழர் களுக்கு கைவந்த கலை ஆகும். தொல்காப்பியருக்கும் முன்பிருந்த தமிழர் கடல் வாணிகம் செய்தார்கள். கடலில் பயணம் செய்யும் போது தங்களுடன் மகளிரை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்பது அவர்களின் மரபுவழிப் பண்பாடாக இருந்ததென்பதைக் தொல்காப்பியர் "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை '' எனக் குறிப்பிடுகின்றார் (தொல், பொருள்: அகம்). தொல்காப்பியர், தமிழர் 'வருணன்' என்னும் கடல் தெய்வத்தை வழிபட்டதாகக் குறிப்பிடுகிறார். எனவே, தமிழ் வாணிகர்கள் கடல் கடந்து போகும்போது அதனை ஒரு திருச் செல்வாக (புனிதப் பயணமாகவே கொண்டன ரென்பதை அறிகிறோம். ஈ. 1) கரையோர வாணிகம் பாடலிபுரம் தமிழகக் கரையோரங்களிலுள்ள துறைமுகப் பட்டினங்களான கொற்கை, தொண்டி, பூம்புகார், சேரப் பட்டினம் முதலிய துறை முகங்களின் வழியாக வாணிகம் நடைபெற்றது. கீழைக்கரைத் துறை முகங்களான நெல்லூர், கலிங்கப்பட்டினம், வங்க தேசத்திலுள்ள தம்ரலிப்தியிலிருந்து கங்கையாற்றினூடே சென்று காசி, பாடலி புத்திரம் முதலிய நகரங்களிலும் வாணிகம் செய்தனர். இதனைச் சங்க நூலான நற்றிணை குறிப்பிட்டுப் பேசுகிறது. ''கங்கை வங்கம் போகு வோர் கொல்லோ " (நற்றிணை : 189:6) இவ்வாறு பாடலிபுத்திரத் தோடு தொடர்பு கொண்ட தமிழர்கள் அந்நகரம் அமைந்திருந்த கங்கை யாற்றின் கரைப்பகுதியில் ஆற்றின் நடுவே நந்த அரசர்களின் பெருஞ் செல்வம் புதைத்து வைத்திருப்பதையும் அறிந்தனர். இத்தகைய நந்தருடைய நிதியைப்பற்றி மாமூலனார் என்ற சங்கப் புலவர் குறிப்பிடுகிறார். (அகம் 265:4-6) கலிங்கம் கலிங்க நாட்டுடன் தமிழ் வாணிகர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பைப் பற்றிக் கலிங்க நாட்டுக் காரவேலன் (கி.மு. 176-163) தனது அத்திக்கும் பாக் கல்வெட்டில் குறிப்பிடுகிறார். அக்கல் வெட்டில் தனது பதினோராவது ஆட்சி ஆண்டில் (பதினோராவது வரியில்) காரவேலன் கி.மு. 165ஆம் ஆண்டு "திரமிள சங்காதம் "' (திராவிட தேசக் கூட்டணியைத் தோற்கடித்ததாகக் கூறுகிறார். இதனை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமிழக வணிகரின் கூட்டணியை (வணிகச் சாத்து) அழித்தான் என்கிறார். மயிலை சீனி. வேங்கடசாமி "பழங்காலத் தமிழர் வாணிகம் (சங்ககாலம்) சென்னை 1974, பக்கம் 34-35, ஆனாலும் ஓர் உண்மை இதனால் புலனாகிறது. சங்ககாலத் தமிழர் கலிங்க நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டு அந்நாட்டிலிருந்து 'கலிங்கம்' எனும் பெயர் பெற்ற பருத்தி ஆடை யைத் தமிழகத்திற்கு இறக்குமதி செய்தனரென்பதாகும். மேலும் கலிங்கத்தில் இருந்து கொண்டுவரப் பெற்ற 'வடவர் தந்த வான் கேழ் வட்டம்' எனப்படும் சந்தனக்கல் ஆகும். அமராவதி ஆந்திர நாட்டிலுள்ள அமராவதி நகரத்தில் (தான்யகடகம்) கட்டப் பெற்றுள்ள அமராவதி துமிளியைக் கட்ட அங்கு வாழ்ந்த தமிழ் வாணிகக் குடும்பத்தார் பொருளுதவி செய்தனர். தமிள் இளங்கண்ணன், இளங்கண்ணன் ஆகிய சகோதரர்களும், அவர்களின் தங்கை நாகை என்பாரும் கைங்கரியம் செய்ததாக ஒரு கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இக்கல்வெட்டு இன்று இலண்டன் பொருட் காட்சியி லுள்ளது. இலங்கை இதைப்போலவே, தமிழக வாணிகச்சாத்து (வணிகக்குழு) கி.மு 2ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அதன் தலைநகரான அநுராதபுரத்தில் தங்களின் வாணிகத் தங்குதளத்தை அமைத்து வாணிகம் செய்தனர். இதற்கான சான்று அங்கு கிடைத்துள்ள தமிழ்ப் பிராமி கல்வெட்டில் காணக்கிடக்கிறது. அவர்கள் தங்கியிருந்த மாளிகை, தமிழ்நாவாய்த் தலைவன் பெயர், மற்ற வாணிகத்தலைவர் களின் பெயர்கள் முதலியன அக்கல்வெட்டில் எழுதப் பெற் றுள்ளன. சிங்கள நூலான மகாவம்சத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்த -குதிரை வாணிகர்களான சேனன், குட்டகன் ஆகியோர் இலங்கை அரசன் சூரதிசன் என்பவனை வென்று இலங்கையை கி.மு. 177 155 வரை நீதி வழுவாது ஆண்டார்கள் என்று கூறப்பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டு வாணிகர்கள் இலங்கைக்குச் சென்று வாணிபஞ் செய்ததாகச் சங்க இலக்கியங்களில் சான்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈ. 2) நடுக்கடல் வாணிகம் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் தமிழர்கள் வாணிகம் செய்தனர். சங்க காலத்தில் இத்தீவுகளைச் 'சாவகம்' என்றழைத்தனர். வங்கக் கடலை கடந்து கடலின் நடுவிலமைந்த இத்தீவுகளுக்குத் தமிழ் வாணி கர்கள் சென்று வாணிபம் செய்தார்கள். இங்கு சுமத்திரா, சாவா, போர்னியோ, செலுக்சு முதலிய தீவுகள் உள்ளன. சாவா சிறந்த வணிக மையமாகத் திகழ்ந்தது. சீனர்கள் பட்டுத் துணிகளையும், பீங்கான் பாத்திரங்களையும் இங்கு விற்று மாற்றாக நறுமணப் பொருள்களை வாங்கிச் சென்றனர். மிளகு, சந்தனம், இலவங்கம் கிராம்பு) சாதிக்காய், கற்பூரம், பச்சைக் கற்பூரம் (பனிதம்), பவளம், ஆகிய வணிகப் பொருள்களைத் தமிழர்களும் வாங்கினர். சீன வாணிகர்கள் சங்க காலத்தில் தமிழ் நாட்டிற்கு வரவில்லை. ஆயினும், அவர்களின் பட்டுத் துணிகளையும், பீங்கான் ஏனங் (பாத்திரங்) களையும் சாவாவிலிருந்து தமிழ் வாணிகர்கள் வாங்கி வந்தனர். சீனப் பட்டை "நூலாகக் கலிங்கம்" என்று சங்க இலக்கியம் அழைக்கிறது. கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் தமிழ் வாணிகர்கள் இலங்கையின் வடகோடியிலுள்ள யாழ்ப்பாணம் (மணிபல்லவம்) சென்று அங்கிருந்து நாகமலைத் தீவுகளைக் கடந்து சாவாவிற்கும் பிற தீவுகளுக்கும் சென்றனர். அக்காலத்தில் நாகமலைத் தீவுகளில் விலங்காண்டிகள் வாழ்ந்தனர். அவர்கள் மனிதர்களையே கொன்று தின்னும் வழக்கமுடையவர்கள். இத்தீவுகள் சோழர் ஆட்சியில் பிற்காலத்திலிருந்தன. அப்போது அவற்றை 'நிக்கோபார் தீவுகள்' என்றழைத்தனர். இவ்வாறு கடல் வாணிகத்தில் இடுக்கண்களி விருந்தும் தமிழர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர். தமிழ் மூவேந்தர்களும் இத்தகைய கடல் வாணிகத்திற்கு ஊக்கம் அளித் தனர். இத்தகைய கடல் வாணிகத்தால் செல்வம் ஈட்டிய வாணிகர்கள் 'மாசாத்துவர்' 'மாநாயகர்' என்றழைக்கப் பெற்றனர். அவர்களுக்கு அரசர்கள் எட்டிப் பூசை அளித்து எட்டி என்ற பட்டமும் அளித்துச் சிறப்புச் செய்தனர். 'எட்டிப்பு பொன்னாலான பதக்க மாகும். காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த சாயலன் என்னும் வரணி கனுக்கு எட்டிப்பட்டம் கொடுக்கப்பட்டது என்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. (சிலம்பு, அடைக்கலக்காதை : 163 -164) கோவலன் 'மாசாத்து வாணிகனின் மகன்' என்பதையும் சிலம்பு செப்புகிறது. சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த வணிக நகரமாக இருந்தது. இந்நகரில் பல நாட்டு வணிகரும் வந்து வாணிகம் செய்தனரென்பதற்குச் சங்கமருவிய காலத்துச் சிலப்பதிகாரத்தில் சான்றுகள் உள்ளன. பல மொழி பேசும் அவர்கள் இப்பட்டினத்தின் ஒரு பகுதியில் தங்கியிருந்தனர். மேற்படி நூல் 10 - 13, 6-13). பட்டினப் பாலையிலும் இதே குறிப்பு வருகிறது (பாட்டினப்பாலை, 210-218). இவ்வாறு வந்த அயல் நாட்டு வாணிகர்களில் அரபு நாட்டவரும் அடங்குவர். முசிறியில் அவர்கள் தங்கிய இடத்தைப் 'பந்தர்' என்றழைத்தனர். யவன வாணிகர் என்போர் கிரேக்க நாட்டவரும் உரோம் நாட்டவரும் ஆவர். இவர்கள் தமிழகம் வந்து வாணிகம் செய்தனர். அவர்களையே சங்க இலக்கியங்கள் 'யவனர்கள்' என்கின்றன. இவர்கள் நண்ணிலக்கடல் பகுதியிலும் குறிப்பாக அலக் சாந்திரியா துறைமுகப் பட்டினத்திலும் வாணிகம் செய்தனர். அலக் சாந்திரியா அக்காலத்தில் உலக நாடுகளின் "நாகரிகங்கள் கூடும் இடமாகியிருந்தது. இதனால் உலக நாகரிகங்களின் பண்பாட்டுப் பரிவர்த்தனைக்கு இந்நகரம் பிறப்பிடமாக அமைந்தது. யவனர்கள் செங்கடலை எரித்தரைக்கடல் என்றழைத்தனர். யவனர்கள் பாரசீகக் கடல், சிந்து, கச்சு, குச்சரம் வழியாக மேலைக் கரைத் துறை முகங்களுக்கு வந்து வாணிபம் செய்தனர். குமரி முனைக்கு வந்து வங்கக் கடலோரத்திலுள்ள கீழைக்கரைத் துறைமுகப்பட்டினங்களிலும் வாணிகம் செய்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டில் இப்பலாசு என்னும் கிரேக்க மாலுமி பருவக்காற்றின் உதவியுடன் நடுக்கடலில் பயணம் செய்து கரையோர நாடுகளை அடையலாமெனக் கண்டுபிடித்தான். இத்தகையப் பருவக் காற்றுத் தத்துவத்திற்கும், பருவக்காற்றுக்கும் அவன் பெயராலேயே 'இப்பலாசு' என்று பெயராயிற்று. இதனால் கரையோரமாகவே வந்து போய்க் கொண்டிருந்த யவனர்கள் நடுக் கடலில் பயணம் செய்து விரைந்து தமிழகப் பட்டினங்களை வந்தடைந்தனர். * யவன - தமிழர் வாணிக உறவைப் பலப்படுத்தும் 'உரோம நாணயங்கள்' தமிழகத்தில் பல இடங்களில் புதைபொருள் ஆய் வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரோமப் பேரரசன் அக்சுதசு என்பவனுடன் பாண்டிய நாட்டு அரசர்கள் கொண்ட உறவு குறிப்பிடத்தக்கதாகும். உரோம் வணிகர்களின் தங்குதளங்களும் அவர்களின் வணிகச் செயல்களும் பற்றி தாலமியின் நாவிலும் செங்கடற் பயணச்செலவு என்ற நூலிலும் காணலாம். அரிக்கமேடு என்ற இடத்திலிருந்த அவர்களின் பண்டகச் சாலையும் இதற்குச் சான்று கூறுகிறது. - பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையைச் சூழ்ந்திருந்த கோட்டை வாயில்களை யவனர்கள் காத்து நின்றனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது (சிலம்பு, ஊர்காண்: 66 - 67). பாண்டியரின் பாசறையில் யவனர்கள் வட்டுடை அணிந்து மெய்ப்பை போர்த்தி குதிரைச் சம்மட்டியைக் கையிலேந்தி காவல் புரிந்தனர் என்று முல்லைப்பாட்டு கூறுகிறது (முல்லை - 59 - 61). இவ்வாறு ஏற்பட்ட யவனரின் தொடர்பால் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டில் பல்வேறு பரிவர்த்தனை களேற்பட்டன. தமிழகத்திலிருந்த பல்வேறு பழங்காலத் துறை முகங்களின் பெயர்களை அயலரின் சான்றுகளால் அறிகிறோம். அவற்றுள் பல தூர்ந்து போயின. கீழைக் கரையிலுள்ள கொல்லம், எயிற்பட்டினம் (சேர பட்டினம்), அரிக்கமேடு, காவிரிப் பூம்பட்டி னம், தொண்டி, மருங்கை, கொற்கை முதலியவற்றை அயல்நாட்டு வணிகரின் தொடர்பால் ஏற்பட்ட சான்றுகளால் அறியலாம். இதைப் போலவே மேலைக் கரையிலுள்ள மங்களூர், துறவு, தொண்டி, மாந்தை, முசிறி, வைகரை, மேல்கிந்த, விழிஞம் முதலியனவும் அறியப் படுகின்றன. உ) நாணயம் வாணிகத்தில் பண்டமாற்று முறை, நாணயம் ஆகியவை பயன் பட்டன. பொன், துளையிட்ட பொன், கானம், ஆகிய தங்க நாணயங்களும், செப்புக்காசுகளும், ஈயக்காசுகளும் புழக்கத்திலிருந்தன. மூவேந்தர்களும் தங்களது முத்திரையிட்ட காசுகளையே வெளி யிட்டனர். அவை சேரன் காசு, சோழன் காசு, பாண்டியன் காசு என வழங்கப் பெற்றன. சங்ககாலத்தில் பொன்நாணயங்களே மிகுதியாக இருந்தன (குறுந்தொகை : 67). நாணயங்கள் செய்த இடம் அஃக சாலை எனவும், நாணயத்தைச் செய்த தட்டார்கள் அக்கசாலையர் எனவும் அழைக்கப்பெற்றனர். நாணயங்களைப் பரிசோதிக்கவும், கட்டுப் படுத்தவும் 'வண்ணகார்' என்ற அரசாங்க அதிகாரி இருந்தார். கி.மு. ஆம் அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க காலக் காசுகள் இன்று கிடைத்துள்ளன. பாண்டிய மன்னர்கள் ' வெளியிட்டுள்ள பெரும்வழுதி' என்று பொறித்துள்ள காசுகளும் சேரமன்னர்கள் வெளியிட்டுள்ள 'கொள்ளிப்பொறை', 'மாக்கரை', 'குட்டுவன்கோதை' எனப் பொறிக்கப்பட்டுள்ள காசுகளும் கிடைத் துள்ளன. பெரும்வழுதி யின் காசுகளில் ஒரு பக்கம் தலை உருவமும், மறுபக்கம் ஒரு தொட்டியில் கடல் ஆமை உருவமும் உள்ளன. சங்க கால மலையமான் ஆண்ட திருக்கோவலூர்ப் பகுதியிலுள்ள பெண்ணை ஆற்றங்கரையில் கண்டெடுக்கப் பெற்ற செப்புக் காசுகளில் ஒரு பக்கம் மீனின் உருவமும், மறுபக்கம் குதிரையின் உருவமும் உள்ளன. இவை சதுர வடிவிலானவை (நடனகாசிநாதன், தமிழர் காசுகள், பக்கம், 18). இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் கண்டெடுக்கப் பெற்றுள்ள சங்க காலச் செப்புக் காசுகள் ஒன்றில் ஒரு பக்கம் யானையும், எட்டு மங்கலச் சின்னங்களும் உள்ளன, மறுபக்கம் மீன் உள்ளது. மற்றொரு காசில் ஒரு பக்கம் காளையும், மறு பக்கம் மீனும் உள்ளன (டாக்டர், இரா. நாகசாமி, * பூம்புகார் " * சென்னை , 1973 பக்கம் 16). காவிரிப் பூம்பட்டின அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சதுர வடிவமான காசுகளும், வட்ட வடிவிலான காசுகளும் சங்க காலத்தவையாகு மென டாக்டர். கே. வி. இராமன் கூறுகிறார். இவற்றில் ஒரு புறம் காலைத்தூக்கி நிற்கும் புலியும் அதன் மேல் சூரியனின் உருவமும் உள்ளன. இவை கரிகாற் பெருவளத்தான் காலத்தவையென டாக்டர். இரா. நாகசாமி கூறுகிறார் ஊ) உரோமானியர் நாணயங்கள் இந்தியாவில் கிடைத்துள்ள 68 வகையான உரோம நாணயங் களில் பெரும்பகுதி தமிழகத்தில் கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் இருந்தன. இவற்றின் போலிகைகளாவும் தமிழக மன்னார்கள் நாணயங்களை வெளியிட்டனர். இவற்றில் பொன்னா லும், வெள்ளியாலும் செய்த நாணயங்களும் துளையிட்ட நாணயங்களும் அடங்கும். உரோமர்கள் மிக அதிகமாக முசிறியில் தங்கி வாணிகம் செய்தார்கள், அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் உரோம் நாணயங்கள் கிடைத்துள்ளன. பாலாறு கடலில் கலக்குமிடமான வாசவ சமுத்திரத்தில் உரோம நாட்டுப் பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் கி. மு. முதலாம் நூற்றாண்டில் உரோம வணிகம் உச்சக்கட்டத்தை அடைந்தது என்று தெரிகிறது. குறிப்பாக அவர்கள் சேரநாட்டுடன் கொண்டிருந்த வாணிகம் சிறப்பாக வளர்ந்தது. சேரநாட்டில் முத்திரை யிட்ட நாணயங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அதிகமாக பொன் நாணயங்களைப் புழக்கத்தில் விட்டுடிருந்ததென்பதனைச் சங்க இலக்கியங்களில் காணலாம். நார்முடிச்சேரல் எனும் சேர அரசன் காப்பியன் என்ற புலவருக்கு நாற்பது இலக்கம் பொன்னைப் பரிசாக அளித்தான். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், ஒன்பது கானம் பொன் னையும், நூறாயிரம் கானத்தையும் நச்செள்ளை என்ற பெண்பாற் புலவருக்குப் பரிசாக அளித்தான் என்றும், அதைக் கொண்டு அப்புலவர் தங்க அணிகலன் செய்து கொண்டார் என்றும் கூறப்படு கிறது. இதைப் போலவே புலவர் கபிலருக்குச் செல்வக் கடுங்கோ , இலக்கம் கானத்தையும் இளஞ்சேரல் என்ற அரசன் பெருங்குன்றூர் கிழார் என்ற புலவருக்கு முப்பது ஆயிரம் கானம் பொன்னையும் வழங்கினார். (கானம் - சிறிய பொன் நாணயம் ) சங்க கால நாணயங்கள் கவினுற அமையவில்லை, சிறியதும் பெரியதுமான உருண்டைகள் போலிருந்தன. உ. சமுதாய வாழ்க்கை 1. நானில வாழ்க்கை அல்லது நாட்டுப்புற வாழ்க்கை 2. நகர வாழ்க்கை : 3. சாதி வேறுபாடு உண்டா ? 4. வருணவேறுபாடு உண்டா ? 5. அடிமைகள் உண்டா? 5. பரத்தையர் வாழ்க்கை 7. உணவு, உடை, அணிகலன்கள், பழக்க வழக்கங்கள் 8. விழக்களும் விளையாட்டுகளும் 9. ஊர்திகள் (அ) தரைவழிப் போக்குவரத்து (ஆ) நீர்வழிப் போக்குவரத்து (இ) வான்வழிப் போக்குவரத்து 10, சமயம் 11. நம்பிக்கை 12. முடிவுரை சங்க காலச் சமுதாயத்தைப் பற்றி அறிவதற்கு அடிப்படைச் சான்றாய் அமைவது சங்க இலக்கியங்களே ஆகும். சங்க காலம் ஒரு பொற்காலம். மக்கள் பசியும் பகையும் போருமின்றித் தன்னிறைவு பெற்று வாழ்ந்தனர். அவர்களின் சமுதாயம் சமயச் சார்பற்றதாகும். சங்க கால மக்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களே, ஒரு சிலர் தான் காடு, மலைகளில் வசித்தனர். வேட்டைக்காரர்களாகவும், திரிந்த னர். தோடர், நாடர், வேடர் முதலியோரும், நாகர்களும் வாழ்ந்தனர். ஆயினும் சங்க காலச் சமுதாய வாழ்க்கையை நானில் வாழ்க்கை ' அல்லது 'நாட்டுப்புற வாழ்க்கை ' என்றும், 'நகர வாழ்க்கை ' என்றும் பிரித்தறியலாம். நானில வாழ்க்கை அல்லது நாட்டுப்புற வாழ்க்கை: பொதுத் தன்மைகள் சங்க காலத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்தனர். குடும்பத் தலைவனுக்குக் கிழவன் என்றும், தலைவிக்கு மனையோள் என்றும் பெயர். குடும்பங்கள் அனைத்தும் சேர்ந்து வாழ்ந்தால் அது சேரி எனப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் அர்த் தலைவன் இருந்தான். அத்தலைவனின் கீழ் ஊர்மக்கள் குழுமனப் பான்மையுடன் கட்டுக்கோப்பாய் வாழ்ந்தனர். வாழ்ந்த இடங்களுக் கேற்ப சேரிகளின் வாழ்க்கை நெறிகளும் வேறுபட்டன. சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நானிலமாக இயற்கை யினடிப்படையில் வாழ்க்கை நெறிகள் பிரித்தறியப் பட்டன. இதனால் நிலவழியாகவும் தொழில் வழியாகவும் சமுதாய அமைப்புகள் ஏற்பட்டன. அந்தந்த அமைப்புகளின்படி மரபு வழிகள் தோன்றின. அவற்றின் வழி குடிகள் அல்லது குலங்கள் அமைந்து விட்டன. இவ்வாறு தோன்றியவைதான் மறவர்குடி வேட்டுவர் குடி, ஆயர்குடி, கானவர்குடி, உழவர்குடி, பரதவர்குடி, நுளையர்குடி, எயினர்குடி முதலியன ஆகும். இவர்கள் வாழ்ந்த இடத்திற்கும் செய்த தொழிலுக்கும் ஏற்ப, பல குடிகளாய் அறியப்பட்டனர். இவ்வாறு தோன்றிய பல குடியினரும் மொத்த மாகத் "தமிழ்க் குடிகள்" என்றே அறியப்பட்டனர். இக்குடிகளுள் சிறப்பானவை ''துடியன், பாணன், பறையன், கடம்பன்'', என்றும் "இந் நான்கு அல்லது குடியும் இல்லை '' என்றும் புறநானூறு கூறுகிறது. குறிஞ்சி நில வாழ்க்கை மலையும், மலை சார்ந்த இடமும், 'குறிஞ்சி' எனப்படும் குறிஞ்சிச் செடிகள் மிகுந்து காணப்பட்டதால் இந்நிலம் குறிஞ்சி எனப்பட்டது. இந் நிலத்திலுள்ள ஊர் குறிஞ்சி எனப்பட்டது. இதில் வாழ்ந்த மக்கள் குறவர் அல்லது கானவர் என அழைக்கப்பட்டனர். ஆடவரைக் குறவன், கானவன், வெற்பன், புனவன் என்றும், பெண்டிரைக் குறத்தி, கொடிச்சி என்றும் அழைத்தனர். மரக்கிளை களில் சிறு குடில்களை அமைத்து வாழ்ந்தனர். ஐவனம் என்ற மலை நெல், தினை, வாழை. வள்ளிக்கிழங்கு முதலியவற்றைப் பயிரிட்டும், விலங்குகளை வேட்டையாடியும் பழங்களையும், கிழங்குகளையும் தின்றும், சுனைநீரைப் பருகியும் வாழ்ந்தனர். பரண் மீது அமர்ந்து பல ஒசைகளை எழுப்பியும், இரவில் தீ மூட்டியும் பறவைகளையும், விலங்குகளையும் விரட்டிப் பயிரைப் பாதுகாத்தனர். இவர்களின் வழிபடு கடவுள் முருகன் ஆவான். குரவைக் கூத்தாடியும், மரியைக் காவு கொடுத்தும், பண்டங்களைப் படைத்தும் முருகனை வணங்குவர். முல்லை நில வாழ்க்கை காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்பட்டது. இதில் முல்லைக் கொடிகள் அதிகமிருந்ததால் இந்நிலம் 'முல்லை ' எனப் பட்டது. இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் கோவலர், ஆயர், எனவும் நானிலங்களுக்கும் இடையிலிருப்பதால் இடையர் எனவும் அழைக்கப்பட்டனர். மகளிர் ஆய்ச்சியர் என்றழைக்கப்பட்டனர். 4 கேழ்வரகு, வரகு, அவரை முதலிய புன்செய் தானியங்களைப் "பயிரிட்டும், ஆடு மாடுகளை மேய்த்தும் வாழ்ந்தனர். மேற்கண்ட புன்செய் தானியங்களையும், பால் பொருள்களையும் வாணிகப் பொருள்களாகக் கொண்டு சென்று விற்றுப் பண்டமாற்று முறையில் நெல்லையும், மீனையும் பெறுவர். பால், தயிர், நெய் ஆகிய பால் பொருள்களைப் பெண்களே விற்கச் செல்வார்கள். கிளிகளை வளர்ப்பது இவர்களின் பொழுது போக்கு, மந்தைகளை ஓட்டிச் செல்லும் ஆயர்கள் குழலூதி மகிழ்வான். ஆயர்களின் வழிபாடு தெய்வம் மாயோன் (திருமால்) ஆகும். மருதநிவவாழ்க்கை வயலும் வயல் சார்ந்த இடமும் மருதமாகும். காட்டுக்கும், கடலோரத்திற்கும் இடைப்பட்ட செழிப்பான சமநிலம் 'மருதம்' எனப்படும். மருத மரங்கள் செழித்து வளர்வதால் இது 'மருதம்' எனப்பட்டது. இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் உழவர், களமர், கடையர் எனப்பட்டனர். மகளிர், உழத்தியர், கடைசியர், என்றழைக்கப்பட்ட னர். மருத நிலத்தின் தலைவனை மகிழ்நன், ஊரன் என்றும், தலைவியை மனைவி என்றும் அழைத்தனர். பலதிறப்பட்ட நெல் பயிர்கள், வெற்றிலை, கரும்பு, வாழை முதலிய நன்செய்ப் பயிர் களையே பயிர் செய்தனர். உழவுக்கு இன்றியமையாத காளைகளை வளர்த்தனர். 'ஏறு தழுவுதல்' எனப்படும் காளையை அடக்கும் நிகழ்ச்சியும், அதன்வழிக் காதலரை வரிக்கும் நிகழ்ச்சியும் இந்த நிலத்தில் சிறந்த விழாவாகும். வேந்தன் (இந்திரன்) இவர்களின் வழிபடு தெய்வமாகும். நெய்தல் நிலவாழ்க்கை கடலும் கடலோரப் பகுதிகளும் (கடல் சார்ந்த நிலங்களும்) நெய்தலாகும். இது மணல் செறிந்த நிலப்பகுதி யாதலால் பெரு மணல் உலகம்' என்றனர். இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் பரவர் அல்லது பரதவர் ஆவர். இவர்கள் சேர்ந்து வாழ்ந்த சேரிகளுக்குப் பாக்கம் அல்லது குப்பம் என்பது பெயராகும். இம்மக்களை 'நுளையர் குடியினர்' என்றும் அழைத்தனர். கடலில் மீன்பிடிப்பது இவர்களின் முகாமைத் தொழிலாகும். இவர்களின் சேரித் தலைவன் சேப்பன், புலம்பன் கொண்கன், துறைவன் என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றான். இம்மக்கள் மீன், உப்பு ஆகியவற்றையே தங்களின் வாணிகப் பொருள்களாகக் கொண்டு சென்று விற்றுப், பண்டமாற்று முறையில் பால் பொருள்களையும், உணவுத்தானியங் களையும் பெற்றனர். பனை, தென்னை, புன்னை, ஞாழல், கண்டல், தாழை, அடப்பங் கொடி முதலியன கடலோரப் பகுதிகளில் செழித்து வளர்ந்தன. புன்னை மரத்தடியில்தான் இவர்களின் தர்மன்றங்கள் கூடும். இவர்களின் வழிபடு தெய்வம் வாரணன் (வருணன் ஆவான். பாலை நிலவாழ்க்கை பாலையென்ற நிலப்பகுதி தனியே இல்லை. பருவமழை பொய்த்தபோது மேற்கண்ட நானிலம் வறண்டு பாலை போல் காட்சியளிக்கும். எனவேதான், 'நானில் வாழ்க்கை ' என்று மட்டும் குறிப்பிட்டோம். பாலையில் வாழ்ந்த மக்கள் எயினர், மறவர், வேட்டுவர், எனப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் வழிப்பறி செய்து வந்ததால் 'ஆறலைக் கள்வர்' என்ற பொதுப் பெயரும் இவர்களுக் குண்டு. மகளிர் எயிற்றியர், மறத்தியர் எனப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த ஊர்கள் குறும்பு, பறந்தலை, ஐயை என அழைக்கப்பட்டன. இருப்பை, ஓமை, நெருமை, யா, பாலை என்ற மரங்கள் இங்கு அதிகம் காணப்பட்டன. ஆண்களும் பெண்களும் அஞ்சாநெஞ்ச முடையவர்களாதலால் இவர்களை மறக்குடி மாந்தர் என்றே அழைத் தனர். இவர்களின் வழிபடு தெய்வம் கொற்றவை ஆகும். 2) நகர வாழ்க்கை சங்க காலத்தில் மூவேந்தர்களின் கோநகரங்களும் துறைமுகப் பட்டினங்களும் வேறு பல நகரங்களும் இருந்தன. அவற்றில் வாழ்ந்த மக்கள் செல்வச் செழிப்போடு மாட மாளிகைகளிலும் வாழ்ந்தனர். அரசர்களும் அலுவலர்களும் வணிகர்களும் வாழ்ந்தனர். எனவே, இவர்களின் நகர வாழ்க்கை முறை நாட்டுப்புற வாழ்க்கையிலும் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படும். எடுத்துக்காட்டுகளாகச் சங்கம் இலக்கியங்களின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு சில்" நகரங்களில் நிலவிய மக்கள் வாழ்க்கை நெறிகளைக் காண்போம். மதுரை நகர வாழ்க்கை பாண்டியரின் கோநகரான மதுரை வைகை ஆற்றங்கரையில் இருக்கிறது. சங்க காலத்தில் இந்நகரில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளைக் காண்போம், வைகை ஆற்றங்கரையின் துறைகளி லுள்ள சோலைப் பகுதியில் பெரும்பாண்' மக்கள் வாழ்ந்தனர். வேந்தன் வாழும் கோட்டைப் பகுதியில் பிறநாட்டு அகதிகளும் பாண்டிய நாட்டைத் தாக்கித் தோற்ற மன்னர்களும் குடிபெயர்ந்த பிறநாட்டு மக்களும் கோட்டைக்குள் அமைந்திருந்த மாளிகைகளில் வசித்தனர். நாள் அங்காடி -நகரில் அகன்ற தெருக்கள் பல இருந்தன. அத்தெருக்களில் ஆங்காங்கே பாணர்கள் நின்று யாழ் இசைத்து, போவோரை இன்புறச் செய்தனர். தெருக்களில் 'பகல் கடைகள்' (நாள் அங்காடி) பல இருந் தன, ஒவ்வொரு கடையிலும் கொடி கட்டி, விற்கும் பொருளின் பெயர் சொல்லிக் கூவினர். கள்ளுக் கடையில் கள்ளுண்ட மறவர்கள் செருக்குற்றுச் சென்றனர். மலர் மாலைகள், மேனிமணப் பொடிகள், வெற்றிலை, அடைக்காய் (பாக்கு), சுண்ணாம்பு முதலிய பொருள்களை விற்போர் படை நடமாட்டத் திற்கு அஞ்சி, உயர்மனைகளின் நிழலில் நின்று விற்றனர். யானை, குதிரை, தேர்ப்படைகள் தெருக்களில் நடமாடும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தின. பெண்கள் கையில் வண்ணச் செப்புகளை ஏந்திக் கடை வீதிகளில் திரிந்து வேண்டிய பொருள் களை வாங்கிச் சென்றனர். பண்பற்ற இளைஞர்கள் அவர்களைக் கண்டு நகையாடி நின்றனர். படைவீரர்கள் அவர்களை ஒழுங்குபடுத். 'தினர். இவ்வாறு நாள் அங்காடிகளில் எழுந்த ஆரவார ஒலிகள் எப்படி இருந்தன என்பதற்கு மதுரைக்காஞ்சியில் ஓர் எடுத்துக்காட்டு கூறப்படுகிறது. மன்னனின் வெற்றிக்குப் பிறகு ஏழு நாள் நடக்கும் பெருஞ்சோற்று விழாவில் எழும் ஆரவாரத்தைப் போன்றிருந்ததாம். அல் அங்காடி (இரவுக் கடைகள்) . பகலில் தெருக்களில் நடக்கும் கடைவணிகத்தைப் போலவே இரவிலும் மதுரை நகரின் தெருக்களில் கடைகள் திறக்கப்பட்டு வாணிபம் நடந்தது. இதனை முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு என மூன்று பகுதிகளாகப் பிரித்து அறியலாம். முன் இரவு முன்னிரவில் செல்வந்தர்கள் குதிரைகள் பூட்டிய தேர்களில் காவலர் பின்தொடர உலா வருவர். மகளிர் மாடங்களில் நின்று நிலா முற்றங்களில் உலாவிக் கொண்டிருப்பார். தாய்மார்கள் தங்கள் கைக் குழந்தைகளையும் பூக்கூடைகளையும் ஏந்திக் கொண்டு சிவன் கோயிலுக்குப் போவார். அந்தணர்கள் தீ வளர்த்து மறை ஓதும் ஒலி (புரியாத மொழியில்) கேட்கும். சமணப் பள்ளிகளில் பூவும் புகையு. மிட்டுப் பூசை நடக்கும் பணிகளுக்குச் சென்று இரவில் அவற்றிற்கு விலையாகப் பொன்னும் மணியும் முத்தும் பெற்று வீடுதிரும்பும் வாணிகர்களையும், வேந்தனுடைய பணியிலீடுபட்டிருந்த கலை ஞர்கள் பணிமுடித்து வீடு திரும்புவதையும் வீதிகளில் காணலாம். மா, பலா முதலிய கனிகளையும், ஊன் சோற்றையும் உண்ட மக்கள் வயிறு நிரம்பிய மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர். பொதுமகளிர் முழுநிலா இரவில் தங்களைப் பலவாறு ஒப்பனை செய்துகொண்டு மேனி மினுக்கி ஆடித்திரித்தனர். இளம் பிள்ளைத்தாய்ச்சிகள் பொங்க விட்டுப் பூசை செய்து விட்டு ஆடிக்கொண்டே சென்றனர். இவர்களைப் போலவே சாமியாடும் சாலினியும், வெறியாடும் வேலனும் குரவைக் கூத்தாடிச் சென்றனர். ஆங்காங்கே உள்ள சேரிகளில் சொற்பொழிவு களும், இசைக் கச்சேரிகளும், கூத்துகளும் நிகழ்ந்தனவென்று மதுரைக் காஞ்சி (431-630) கூறுகிறது. நள்இரவு நடு இரவில் விற்பனைக் கடைகள் மூடப்பட்டன. அடை, பாயாசம், கொழுக்கட்டை (மோதகம்) முதலியனவற்றை விற்றனர். விழாவில் மூங்கில் கழிகளை நட்டு அவற்றின் மேல் கயிற்றைக் கட்டி அதன்மேல் (கழிக்கூத்து ஆடியவர்கள் அயர்ந்து தூங்கினர். ஆயினும் நடு இரவில் ஊர்க்காவல் படைகள் நடமாடிக் கொண்டே (ரோந்து) இருந்தன என்று மதுரைக்காஞ்சி படம் பிடித்துக் காட்டுகிறது. (621-653) பின்னிரவு துயிலெழுந்த மன்னன் குளித்துவிட்டு கஞ்சி போடப்பட்ட வெள்ளாடை உடுத்தி, பொற்கலத்தில் மகளிர் தந்த தேறலைப் பருகி னான். பின்னர் கொலு மண்டபத்தில் அமர்ந்து மறவருக்கும். புலவருக்கும் கலைஞருக்கும் பரிசுகள் வழங்கினான், யாவரும் வாழ்த்தும் ஒலி கேட்டது. இவ்வாறு மதுரை நகர மக்கள் வாழ்க்கை பகலிலும் இரவிலும் இன்பமாகக் கழித்தென்பதை மதுரைக்காஞ்சி கூறுவதைப் போலவே, புகார் நகர மக்களும் கழித்தனர் என்பதைப் பட்டினப்பாலை கூறுகிறது. புகார் நகர வாழ்க்கை செல்வம் செழித்த இந்நகரில் பொன்னும் மணியும் நிரம்பி யிருந்தன. பரதவர், யவனர் ஆகியோரின் சேரிகளில் குதூகலம் நிரம்பி யிருந்தது. இந்நகரில் வாணிகர், பலவகைத் தொழிலாளர்கள், உழவர்கள் கலைஞர்கள் பலரும் வாழ்ந்தனர். சங்கு அறுப்போர், யானை மருப்புகளைக் கடைவோர் பொன் வேலை மணி வேலை செப்பு வேலை மார்புக் கச்சை செய்வோர் (வம்பு முடிவோர்) ஓவியம் தீட்டுவோர், மாலை கட்டுவோர், சுண்ணம் இடிப்போர், திரையல் மடிப்போர் (பிடாசெய்வோர்) ஆகிய சிறுதொழில் வாணிகர் களும் வசித்தனர். வெண்கல வேலை, நெசவு, சிவிகை, வண்டி, தேர், மெய்புகு கவசம், யானைத்தொட்டி, கையுறை, மருந்து, ஆழியம், வண்டி வெண் சாமரம், கேடயம் முதலிய கைத்தொழில்களைச் செய்யும் கைவினைஞர்களும் புகார் நகரில் வசித்தனரெனப் பட்டினப்பாலை கூறுகிறது. மதுரையிலும் புகாரிலும் அரண்மனை வாழ்க்கை : இத்தகைய ஆரவாரங்களும், பலதிறப்பட்ட மக்களும் வாழ்ந்த நகரங்களின் நடுவில்தான். அரசனது கோயில் (அரண்மனை) இருந்தது. இரவுப் பொழுதைப் பல மனைவியரோடு உல்லாசமாய் மன்னன் கழித்தான். பலவாறு ஒப்பனை செய்யப்பட்ட அரண்மனை மாளிகையில் வசித்தான். அரசனும் அரசியரும் அரண்மனை வாசி களும் உண்ட உணவும், உடுத்திய ஆடைகளும், அணிந்த அணி கலன்களும், அளவிடமுடியாத செல்வச் சிறப்புடையனவாகும். அரசன் இறந்தால் அரசியரும் படைத்தலைவரும் பிறரும் உடன் கட்டை யேறும் வழக்கம் இருந்தது. யானையேற்றம், குதிரை யேற்றம், வேட்டையாடுதல், மனம் போனவாறு பிற பெண்டாட்டி 'களுடன் கூடிக்களித்தல் முதலிய பழக்கங்கள் மன்னர்களிடம் இருந்தன. 3) சாதி வேறுபாடு சங்ககாலத்தில் உண்டா? சங்ககாலத்தில் சாதி முறையும் வேறுபாடுகளும் உண்டா என்ற வினாவுக்கும் இல்லையென்பதே விடை ஆகும். சங்க இலக்கியங் களில் வரும் கடையன், இழிசினன் என்ற சொற்கள் சாதியில் தாழ்ந்த வரையே குறிப்பிடுகிறது என்பர். 'புலையன்' என்ற சொல் இழிந்த சாதியினையே குறிக்கிறது என்பர். புலால் உண்பவன் புலையன் ஆயின் சங்க காலத்தில் பறவைகள், மீன், விலங்குகளின் புலாலை யும், ஈசல் போன்ற பூச்சிகளையும் உண்டுள்ளனர். ஆகவே, புலை யனை மட்டும் கீழ்ச்சாதிக்காரன் என்று கூற முடியாது. சங்கம் மருவிய காலத்து நூல்களான மணிமேகலையிலும், சிலப்பதிகாரத்திலும், வேதப்பாணியைப் பின்பற்றி, நான்கு வருணப் பிரிவுகளைப்(சாதிகள்) பற்றிக் குறிப்புகள் வருவதைக் கொண்டு பல அறிஞர்கள் ''சங்ககாலத்தில் சாதிப் பிரிவினைகள் இருந்தன'' என்றனர். ஆரியர் சமுதாயத்திலும் இருக்கு வேதகாலத்திலும் சாதி வேறுபாடுகள் இல்லை . அதில் 10வது மண்டலத்தின் கடைசி யில் வரும் 'புருஷ சூக்தம்' என்ற சூத்திரத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நால்வரும் முறையே புருடனின் வாயி விருந்தும், தோளி லிருந்தும், தொடையிலிருந்தும், பாதத்திலிருந்தும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இருக்கு வேத காலத்தில் சாதிப்பாகுபாடே இல்லை. இதைப் போலத்தான் சங்ககாலத்திலும் சாதிப் பாகுபாடுகள் இல்லை ஆகும். மாங்குடி மருதனார் என்ற புலவர் 'துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை' என்று (புறம். 335:7-8) குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகளை ஆய்ந்த அறிஞர்கள் சிலர் இந்த நான்கு குடியினரும் திராவிடருக்கும் முற்பட்ட மக்களாவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நான்கு அல்லது குடியுமில்லை' என்பது வியப்பாக உள்ளது என்றும், ஒருகால் ஆரியர், கலப்பிலாத ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழங்குடி என்பதால் இப்பெயர்கள் சுட்டுவதாகலாம் என்று டாக்டர் கே.கே. பிள்ளை தனது தமிழர் வரலாறு' என்னும் நூலில் (பக்கம் 232) குறிப்பிடுகிறார். 'திராவிடருக்கும் முற்பட்ட குடிமக்கள்' என்பதால் திராவிடருக்கும் முற்பட்டவர்கள் திராவிடரே' என்றும் அந்த திராவிடர் என்போர் 'ஆதி திராவிடர்' அல்லது 'பழந்திராவிடர்' என்றும் சிலர் கூறுவர். எனவே இனவழியாகப் பிரித்தறிய முடிகிறதே ஒழிய சாதிவழியாக சங்கத் தமிழரைப் பிரித்தறிய முடியவில்லை , மேலும் மாங்குடி மருதனார் கூறும் இந்நான்கு குடிகளும் மறவர் குடியோடு தொடர்புடையவர்கள். போர்மேல் செல்லும் போது துடியை முழக்கும் துடியனும், பண்ணினை இசைக்கும் பாண ணும், பறையை அறையும் பறையனும், குடமுழா என்னும் கருவியை அறைகின்ற கடம்பனும் உடன் செல்வர். ஆகவே, இது தொழில்வழிவந்த பெயர்கள் என்றும், குடிப்பெயர் சாதியைக் குறிப் பிடாது என்றும் சுடறுவர். இந்த நான்கு மட்டும் குடிகள் என்று கூறியது போர்மேல் செல்லும் வீரர்களுக்குத் துணையாகச் செல்பவர் குடிகளும், சங்க காலத்தி லிருந்தன என்பதை நோக்கவும், பலவகைப் பூக்களும், பலவகை உணவு வகைகளும் இருக்கும்போது நான்கு பூக்களையும், நான்கு வகை உணவுகளையும் மட்டுமே இப்பாடல் கூறியுள்ளதால் மறவர் உணவு வகை நான்கு, அவர்கள் சூடிச்செல் லும் பூக்கள் வகை நான்கு, அவர்களுடன் செல்லும் இசைக்கருவி யாளரின் எண்ணிக்கை நான்கு என்று குறிப்பிடுவது முதின் முல்லைத் துறைக்குரிய இலக்கணமாகும். 4. வருணப் பாகுபாடு சங்ககாலத்தில் உண்டா ? இந்த வினாவுக்கும் இல்லை என்பதே விடை ஆகும். தொல் காப்பியர் கூறும் அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர், என்பது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வரும் வட இந்திய வருணப்பாகுபாடே எனப்படுவதாகுமெனக் கூறுவாருமுண்டு. தொல் காப்பியர் குறிப்பிடும் அந்தணர் வேறு, பிராமணர் வேறு. 'அந்தணர் என்போர் அறவோர் மற்றறெவ்வுயிருக்கும் செந்தண்மை பூண் டொழுகலால்" என்னும் வள்ளுவன் கூறும் தன்மையுடையவரே அந்தணர் ஆவர். ஆனால் பிராமணர் புருடனின், வாயில் பிறந்தவர் என்று வேதம் கூறுகிறது. அரசர் தம் குடிமக்களுக்குத் தந்தையாவார், அறத்தையே மையமாகக் கொண்டிருப்பவர் என்று தொல்காப்பியம் கூறும். ஆனால் சத்திரியர் புருடனின் தோளில் பிறந்தவன் என்று வேதம் கூறும். வாணிகன் பொருள்களின் விலையைக் குறித்து பண்ட மாற்றல் செய்பவன் ஆவான். வைசியன் மூன்றாம் சாதிக்காரன் என்பது வேதக்கருத்து. இவன் புருடனின் தொடையில் பிறந்தவனாம். வேளாளன் உலக உயிர்களுக்கு உயிர் போன்றவன், மற்றவர் உடல் போன்றவர். ஆனால் சூத்திரன் கீழ்ச்சாதிக்காரன் வைப்பாட்டியின் மகன், மற்ற மேல்சாதிக் காரர்களுக்கு குற்றேவல் செய்பவன் என்பதே வேதக்கருத்து. இவன் புருடனின் பாதத்தில் பிறந்தவன், ஈண்டு, 'புருடன்' என்று குறிப்பிடப்படுவது 'கடவுள்' ஆகும். எனவே தொல்காப்பியர் கூறும் நான்கு மக்களின் பிரிவும், வேதம் கூறும் சதுர்வருணப்பிரிவும் ஒன்றாகாது. இதனை அடிப் படையாகக் கொண்டு ஈண்டு அந்தணரைப் பற்றி சங்க நூல்களில் கூறப் பெற்றவற்றைக் காண்போம். சங்க இலக்கியங்களில் அந்தணர், பார்ப்பார், ஐயர் என்ற மூன்று சொற்களைத்தவிர வேறு சொற்கள் பிராமணர்'களைக் குறிப் பதாயில்லை. பிராமணர் என்ற சொல்லே பல்லவர் காலத்தில்தான் தமிழகத்திற்குள் புகுந்தது. 'ஐயா' என்ற சொல்லும் 'அகவையில் முத்தோர்' என்னும் பொருளில் தான் கையாளப்பட்டுள்ளது குறிப் "பிட்ட சாதிப் பெயராக இஃதில்லை . அந்தணர் அந்தணர் அறமுடையவர் என்றும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுபவர்கள் என்றும் வள்ளுவம் கூறுகிறது. இவர்கள் ஐம்புலன்களை வகை தெரிந்து ஆள்பவர்கள், பண்புக்குன்றின் மேல் ஏறி நின்றவர்கள் நிறைமொழி மாந்தர்கள் என்றும் வள்ளுவம் கூறுகிறது. மதுரை, புகார், ஆமூர் முதலான நகரங்களில் அந்தணர் வாழ்ந்தனர். அரசனது அரண்மனையில் அவர்களுக்கு வரவேற் புண்டு. வேள்வித்தூண்களை நட்டு வேள்வி செய்வார்கள். காலை, மாலை மறைகளை ஒதுவர். இமயமலைச் சாரலில் வாழ்ந்த அந்தணர் முத்தீ வளர்த்து வழிபாடு செய்தனர். வேதம் ஓதுவதும், பிறரை ஓதும்படி செய்தலும், வேள்வி செய்தலும் பிறரைச் செய்வித்தலும், பிறருக்கு ஈதலும், பிறரிடமிருந்து ஈகைகளைப் பெறுதலுமாகிய ஆறு தொழில்களை அந்தணர் செய்தனர். காதலர்களை ஒன்று சேர்த்து வைப்பதும் இவர்களின் பணியாக இருந்தது. அந்தணர் ஒரு புரிக் கொள்கையுடையவர்; இரு பிறப்பாளர் முத்தீ வளர்ப்பவர் நான்மறை அறிவுடையவர்; ஐம் பெரும் வேள்வி செய்பவர், ஆறு தொழில் புரிபவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பார்ப்பார் இல்லற வாழ்க்கையின் தலைவன் தலைவிக்கு உறு துணை யாக இருப்பவர்களே பார்ப்பார் ஆவர். அவர்களின் களவு வாழ்க்கை பயிலும் கடிமண வாழ்க்கையிலும் தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும்போதும் உறுதுணையாகவும் இருப்பர். பார்ப்பார், வேந்தனுக்காகத் தூது செல்வதுண்டு; மான்தோலும் பூணூலும் அணிந்திருப்பர்; வேள்வி செய்தனர். காவிநிற ஆடையும் அணிவர்; பல பெண்களை மணந்தனர்; பரத்தையரோடும் கூடிக் களித்தனர், சங்கறுத்து வளையல் செய்யும் பார்ப்பாருமுண்டு. நோன்பு நோற்றுப் பட்டினி கிடந்த பின்தான் வேந்தனுக்கு அறிவுரை கூறிப் போரை நிறுத்தச் செய்வர். வேள்வி செய்யும் போது கையேந்தி நிற்பர். கைகளில் மன்னரும் பிறரும் பூவையும் பொன்னையும் விலையுயர்ந்த பொருள்களையும் சொரிவர்; பார்ப்பனப் பிள்ளைகள் முருங்கை மரத்தின் தண்டையும், கமண்டலத்தையும் கையில் வைத்திருப்பர். மகளிர் முல்லை பூவைச் சூடிக் கொள்வர். என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நான்மறை முனிவர்கள் மன்னனிடம் கையேந்தி நிற்கும் போது - மன்னன் அவர்களைக் கண்டு தலைதாழ்த்தி வணங்குவான். அவன் வேள்வி செய்யும்போது மறையவர்கள் அவனைச் சுற்றிச் சுற்றம் போல் சூழ்ந்து நிற்பர்; நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலைப் பசும்புல்லின்மீது படுக்கவைத்து விழிப் புண்ணின் அடையாளமாக உடலில் வாளால் வடுச் செய்து அடக்கம் செய்வர்; அந்த பசும்புல் நான்மறை முதல்வருடையதாகும், மன்னர்கள் பசுவையும், உளர்களையும் பார்ப்பாருக்குக் கொடையாகக் கொடுப்பார்கள் என்று பதிற்றுப்பத்தில் (6:1) கூறப் பட்டுள்ளது. 'மன்னன் பத்து வேள்விகள் செய்தால் பார்ப்பான் தன் மனைவியுடன் சொர்க்கம் புகுவான்' என்று பதிற்றுப்பத்து கூறு கிறது. பார்ப்பார்காதில் கடுக்கண் அணிவதுண்டு. கையில் கண்டிகை, வெண்குடை, தீ வளர்ப்பதற்குக் கள்ளிவிறகு (காட்டம்) முதலான வற்றை வைத்திருப்பார்கள். பார்ப்பனச் சிறுவர்கள் குடுமித்தலை யுடன் இருப்பர்; பூணூல், கடகம், தோடு அணிந்திருப்பர். பார்ப்பார் மன்னர்களை வேள்வி செய்யத் தூண்டுவர்; பார்ப்பன மகளிரில் கற்புத் தவறியவர்களும் உண்டு என்பதை மணிமேகலை கூறுகிறது, ஐயர் அகவையில் மூத்தோரை ஐயர் என்று நன்னூல் கூறுகிறது. சங்க நூல்களான அகநானூறு, புறநானூறுகூட அகவையில் முத்த அண்ணன், தந்தை ஆகியோரை உணர்த்துகின்றன. ஆனால், சமு தாயத்தில் உயர்ந்தவராகக் கொள்ளப்பட்டவரே சங்க காலத்தில் ஐயர் எனப்பட்டனர். விசயநகரப் பேரரசுக் காலத்தில்தான் தமிழகத்தில் ஐயர் என்ற சொல் குறிப்பிட்ட சாதியைக் குறித்தது. எனவே, அன்புடையோர் அந்தணராகவும் மன்னன் முதல் குடிமக்கள் வரை நன்மை செய்வோர் பார்ப்பாராகவும் சமுதாயத்தில் உயர்ந்த பண்புடன் திகழ்ந்தோர் ஐயராகவும் இருந்தனரென்பதை அறிகிறோம். ஆனால், இவை குறிப்பிட்ட சாதியைச் சுட்டும் பெயர்கள் அல்லவென்பதையும் அறிகிறோம். உழவர் உழுதுண்டு வாழ்வோர், உழுவித்துண்போரென இருவகை உழவர்களைக் காண்கிறோம். உழுவித்து உண்போர் பெரும் நிலக்காரர் எனலாம். உழவர்களை வேளாளர் என்றும் அழைப்பர். வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்றும், மண்ணை ஆள்பவன் என்றும் இதற்குப் பொருளாகும். செல்வமும் செல்வாக்கும் பெற்ற வேளாளர் படைத் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும், குறுநில் மன்னர்களாகவும் திகழ்ந்தனர். வேளாண்மையில் சிறந்து விளங்கிய உழவர்களுக்கு மன்னன் 'காவிதி' என்ற பட்டம் வழங்கினான். இவர் கள் மதுரை நகரிலும் வாழ்ந்திருந்ததாக 'மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவர்கள் மார்பிலே சந்தனம் பூசி, நறுமணப் புகையூட்டிய ஆடை களை அணிந்து அன்பும் அடக்கமும் உடையவர்களாகப் புகழோடு வாழ்ந்தனர். குடியின் அடையாள மாலையைச் சூடி, தேரும் குதிரை ஊர்திகளும் கொண்டு வாழ்ந்தனர் என்று கூறப்படுகிறது. வேளிர் வேளாளருள் உயர்குடி மக்களை 'வேளிர்' என்பர். இவர் . களின் மகளிரை முடியுடை வேந்தர்களும் விரும்பி மணப்பார்கள். உழவர்களை 'ஏரின் வாழ்நர்' ஏராளர், களமர், காராளர், தொழுவர் என்றெல்லாம் அழைப்பர், எருதுகளால் ஏர் உழுது, மட்டைகளால் நீர்ப்பாய்ச்சி பயிர்செய்தனர். வேலை முடிந்ததும், கள்ளுண்டு களித் தனர். 'முழவு' எனும் இசைக் கருவியை முழக்கிப்பாடுவர். உழவர் மகளிர் ஆம்பல் பூவைத் தலையில் சூடிக்கொள்வர். வெண்ணெல் லைக் கொடுத்து பண்டமாற்றாக வேட்டுவரிடம் மான் இறைச்சியை யும், ஆயர் மகளிரிடம் தயிரையும் பெற்றனர் என்று புறநானூறு (33: 2- 4) கூறுகிறது. "உழுவார் உலகத்தார் ஆணி' என்பது பழமொழி ஆயினும், காலப்போக்கில் உழுபவர்கள் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனும் நால்வகையில் கடைசிப் பிரிவாகக் கருதப்பட்டனர். இதற்குப் புரட்சிக் கருத்தாக : ‘’வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலவனும் அவன்கட்படுமே" (புறம் 2:8-10) என்று புறநானூறு அறிவித்தது. மேற்கூறிய நான்குவகை வருணப் பாகு பாடு சங்க காலத்தில் இல்லை. பிற்காலத்திலும் இல்லை. சங்க காலத் தில் குழுக்களைக் கொண்ட சமுதாயமே இருந்தது. இக்குழுக்களில் உயர்ந்தது என்று எதுவுமில்லை. பிற்காலத்தில்தான் வேதக் கருத்து களான வருணாசிரமக் கருத்துக்கள் வட இந்தியாவிலிருந்து தமிழகம் புகுந்தன. சடங்குகள் மிகுதியாயரின. சாதிப் பாகுபாடுகளும் உறுதியாயின என்று ஏ. எல். பாசம் என்ற வரலாற்று அறிஞர் தனது "வியத்தகு இந்தியா' என்னும் நூலில் (பக்கம் : 138) குறிப்பிடுகிறார். வாணிகர் பண்டமாற்றியும், விலைகளைக் கூவி விற்றும் வந்தவர் வாணிகர் ஆவர். வாணிகர் இடம்பெயர்ந்து சென்றும், நாடு கடந்து சென்றும் வாணிகம் செய்தனர். உணவுப்பொருள்கள், பசும்பொருள் 'கள், பூணும் பொருள்கள், உடுக்கும் பொருள்கள், மலைபடுபொருள் கள், கடல்படுபொருள்கள் எனப் பல திறப்பட்ட பொருள்கள் சங்க கால் வணிகப் பொருள்களாகும். கூல வாணிகம் (தானியம்), உப்பு வாணிகம், பொன்வாணிகம், அறுவை வாணிகம், கடல் வாணிகம், முதலிய வாணிகங்களைச் செய்தோர் முறையே கூல வாணிகர், உமணர், பொன் வணிகர், அறுவை வணிகர், மாநாய்கர் எனப்பட்ட னர். தொழில் அடிப்படையில் வாணிகர்கள் குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர். வாணிகர் தலையில் பூச்சூடியும், கழுத்தில் குடி மாலை அணிந்தும் பலவித அணிகலன்களை அணிந்துமிருப்பர், வாணிகரை "வைசியர்' என்றும் அழைப்பர். மற்ற பிரிவினர் ஆயர், வெட்டுவர், மறவர், பரதவர், புலையர், உமணர், வேட்டுவர் வேடர்) முதலியோரும் இருந்தனர். மதுரை, உறையூர், புகார் ஆகிய இடங்கள் நெசவுக்குப் பெயர் போனவை ஆகும். பருத்தி, பட்டு, எலி மயிர் ஆகியவற்றால் நெசவுத் தொழில் நடந்தது. சங்க காலத்தில் தையற்காரர் இருந்தார்கள் என்றும். அவர்கள் "துன்ன காரர்" என்று அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. 'கலம் செய்கோ ' 'வேட்கோ ' எனப்படுவோர் குயவர் ஆவர், பொற் கொல்லர், தோல் பொருள் செய்வோர், பால் பொருள் விற்போர் (இடையர்) முதலியவரும் இருந்தனர். 5. அடிமைகள் உண்டா ? கிரேக்க நாட்டிற்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தபோதிலும் அந்நாட்டிலிருந்த அடிமைமுறை சங்கத் தமிழ் நாட்டில் இல்லை . சிலப்பதிகாரத்தில் 'உரிமைச் சுற்றம்' என்ற சொற்றொடர் வருகிறது. இதற்கு 'அடிகளின் கூட்டம்' என்று பொருள் கூறுவர். ஆனால் அவர்கள் அடிமைகள் அல்லர். அன்புக் கும், பாசத்திற்கும், அடிமைப்பட்ட பணியாட்கள் கூட்டமே ஆகும். உரோம் நாட்டு அடிமை முறைக்கும் அதற்காக 'ஜெசுடினியன்', வகுத்த சட்ட திட்டங்களுக்கும் இதற்கும் எள்ளளவேணும் பொருத்த மில்லை , வேளாண்மைச் சமுதாயத்தில் உழுதுண்போர் உழுவித்துண் போர் என்ற இரு பிரிவுகள் இருந்தன, தோற்ற மன்னர்களின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்து வந்தனர்; தோற்ற மன்னரின் அரண்மனைகளை இடித்து நிரவிக் கழுதைகளைக் கட்டி 'ஏர் உழுதனர். அவர்களின் பெண்டிரை மொட்டையடித்து, அவர்களின் தலைமயிரைக் கயிறாகத் திரித்து, காவல்மரத்தை வெட்டி அதைக் அக்கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர் போன்ற செயல்களை நோக்கினால் போர்க் கைதிகள்' உண்டு என அறிகிறோம். ஆனால் அவர்கள் அரண்மனையை ஒட்டிய பட்டினப்பாக்கத்தில் சொகுசான தனி மாளிகையில் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். தண்டனை பெற்றோர் அடிமைகளாய்க் கோட்டைக் கொத்தளங்களைக் கட்டும்படி பணிக்கப்பட்டதாக எங்கும் சான்று இல்லை. இவை யெல்லாம் உரோமாபுரியில் இருந்தன. எனவே சங்கத் தமிழகத்தில் அடிமைமுறை இல்லை. மனிதர் மனிதராகவே நடத்தப்பட்டனர் தீண்டாமையும் இல்லை, 6. பரத்தையர் வாழ்க்கை சங்க காலப் பெண்களின் அன்புயென்பது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நற்குணங்களைப் போற்றுவதாகும். அதே நேரத்தில் மேனி மினுக்க மணப் பொடிகளைப் பூசி, ஆண்களைத் தங்கள் காமப்பசிக்கு இரையாக்கும் பெண்களும் இருந்தனர். அவர்கள் தங்களின் உடலைக் காமப்பசிக்கு இரையாக விற்பவர் களாவர். மதுரைக் காஞ்சியில் இவர்களின் வகைகளும், செயல்களும் சித்திரிக்கப் படுகின்றன, "கொண்டி மகளிர்' என்றும் இவர்கள் அழைக்கப் படுகின்றனர். சிலப்பதிகாரத்தில் இவர்களுக்கென தனி வீதிகள் இருந்தனவென்று குறிப்பிடப்படுகிறது. (சிலம்பு 14: 125 157) பரத்தையர் இசை, நடனம், முதலிய நுண்கலைகளிலும் வல்ல வர்கள் ஆவர். இவர்களில் சிறப்பான, எழில் மங்கையரை அரசர்களே காமக் கிழத்தியராக வைத்துக்கொள்வர் என்று சிலப்பதிகாரம் (6:125) கூறுகிறது. சங்க காலத்தில் ஆண்கள் பரத்தையர் வீடுகளுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இது அவர்களின் உயர்வை உயர்த்துவதாகக் கருதினர். மதுரையில் வைகையாற்றுப் படுகையிலமைந்த சோலை களில் இவர்கள் ஆண்களோடு கூடிக் களித்தனர். வண்டிகளிலும், வந்திறங்குவர். அர்த்த சாத்திரத்தில் பரத்தையரைப் பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது. அவர்களின் தொழிலை அரசு அனுமதித்து வரித் தண்டலும் செய்தது. இதனால் வாடிக்கையாளரை மகிழ்விக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாவர் என்று சாணக்கியர் கூறுகிறார். சங்ககாலத்தில் அரசரும் செல்வந்தரும் பரத்தையரிடம் மகிழ்ந்திருந்த தை இலக்கியங்கள் கூறுகின்றன. கோவலன் தன் செல்வத்தை எல் லாம் மாதவியிடமிழந்து வறியவனாகி மதுரை சென்று சிலம்புவிற்று மாண்டானென்பதைக் கூறுவதே சிலப்பதிகாரக் கதை ஆகும். எனவே, பரத்தையர் தொடர்பைப் பிற்கால நீதி நூல்கள் இழித் துரைத்தனர். அவர்களைத் தழுவும் இன்பம் இருட்டறையில் பிணத்தைத் தழுவுவது போலாகுமென வள்ளுவர் இடித்துரைக்கிறார். 7. - மக்களின் உணவு, உடை, அணிகலன்கள், பழக்க வழக்கங்கள் இதுவரை நானில் வாழ்க்கை, நகரவாழ்க்கை, அரண்மனை வாழ்க்கை ஆகியவற்றைப் பார்த்தோம். இனிச் சங்க கால மக்களின் பொதுவான வாழ்க்கை முறைகளைப் பார்ப்போம். உணவு மக்களின் வாழ்விடத்திற்கும், பொருளாதார ஏந்துக்கும் ஏற்றவாறு உணவுப் பழக்கம் இருந்தது. பொதுவாக அரிசி உணவே அதிகம் உண்ணப்பட்டது. வரகு, சாமை, தினை ஆகிய புன்செய்த் தானியங்களையும் உண்டனர். மீன், இறைச்சி, கனி, கிழங்கு வகை களையும் உண்டனர். உணவுடன் உப்பு, புளி, மிளகு முதலிய வற்றையும் சேர்த்துண்டனர். அரண்மனை விருந்தில், மன்சோறும் பிறவும் பரிமாறப்பட்டன. கைம்பெண்டிர், துறவிகள், வீரர்கள் முதலியோரின் உணவு வகைகள் வேறுபட்டன. பல்வேறு சிற்றுண்டி களையும் உண்டனர். பலதரப்பட்ட மது வகைகளையும், பழச்சாறு களையும் குடித்தனர். வெள்ளாடு, செம்மறி ஆடு, மான், முயல், ஆமை, மான், மீன், நண்டு, ஈசல், கோழி, காட்டுக் கோழி, காடை, உடும்பு முதலியவற்றின் புலாலையும் உண்டனர். பால், பால்" பொருள்களும் பருப்புவகைகளும் பழவகைகளும் உண்ணப்பட் டன. பன்றிக்கறி உண்டதைப் பற்றி வருகிறது. மாட்டுக்கறி தின்றதைப் பற்றிக் குறிப்பு இல்லை. உடை மக்களின் வாழ்விடம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப் படையில்தான் அவர்களின் உடைகளும் அமைந்திருந்தன. ஏழை எளிய மக்கள் தழை, மரப்பட்டை, பூ, கொடிகளால் ஆன ஆடைகளை அணிந்தனர். புலித்தோல், மான்தோல் முதலியவற்றா லான ஆடைகளையும் அணிந்தனர். மென்துகில், கலிங்கம், வண்ண ஆடை ஆகியன அணியப்பட்டன. மூங்கிலின் மேலுள்ள ஓடு போலவும், பால் ஆடைபோலவும், வெண்மையும், மென்மையும் முடைய ஆடை துகில் (மல்லு) எனப்பட்டது. கலிங்க நாட்டில் இருந்து வந்த ஆடைகலிங்கம் எனப்பட்டது. பருத்தி நூலால் ஆனதை நூலாக்கலிங்கம் என்றும், பட்டாலானதைக் கலிங்கப்பட்டு அல்லது ஒண்பூங்கலிங்கம் என்றும் கூறுவர். சுருங்காத கலிங்கம் வெள்ளிய ஆடை ஆகும். மணப் பெண்ணுக்கு இதனை அணிவிப் பார்கள். இத்தகைய ஆடைகளோடு எலிமயிரால் நெய்யப்பட்ட கம்பள, ஆடைகளையும் சாலியர் செய்த பின்னல் ஆடைகளையும் சங்ககால மக்கள் அணிந்தனர். பெண்கள், கொய்சகம் வைத்து ஆடை அணிந் தனர். மார்பகங்களுக்கு வம்பு அல்லது வார்' என்னும் மார்புக் கச்சைகளை அணிந்தனர். ஆண்கள் அணியும் சட்டைக்கு படம் அல்லம் மெய்ப்பை என்று பெயர். தலைப்பாகை அணிவதும், தோள்மேல் துண்டு போடுவதும், இடுப்பில் கச்சை கட்டுவதும் உண்டு. வீரர்கள் முழங்கால் வரை அணியும் ஆடைக்கு வட்டுடை என்று பெயர். அணிகலன்கள் சங்க காலத்தில் ஆண், பெண் இருபாலரும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அணிகலன்களை அணிந்திருந்தனர். இழை, கலம், தொடி, குழை, வளை முதலிய சொற்களால் அணிகலன்கள் குறிப்பிடப் பட்டன. பெண்கள் காலில் தண்டை, தண்டு) சிலம்பு ஆகியவற்றையும், ஆண்கள் (மறவர்) வீரக்கழல், காரை ஆகியவற் றையும் அணிந்தனர். கிண்கிணி எனப்படும் சிறு சலங்கையைச் சிறுவரின் கால்களில் அணிவித்தனர். கழுத்தில் முத்துவடம், பொன் மாலை, கற்கள் பதித்த மாலை, ஆகியனவற்றை ஆண்களும், பெண் களும் அணிந்தனர். ஆண்கள் அணிகலன்களையும், பெண்கள் முன் கையில் தொடியும், கையில் வளையும் அணிந்தனர். தொடிகளில் குறுந்தொடி, அவிர்தொடி, ஆய் தொட்டி, பூந்தொடி , செறிதொடி எனப் பலவகை இருந்தன. மகளிர் தோளுக்குக் கீழே அணிந்த அணி 'வந்த' (வங்கி) எனப்பட்டது. சங்காலும், வளைசெய்து அணிந்தனர். அது வலம்புரிச் சங்காலானதால் வலம்புரி வளை எனப்பட்டது. இலங்கவளை, எல்வளை என்பன சங்கறுத்துச் செய்யப்பெற்ற வளைகளாகும். மகளிர் அணிந்த காதணிகள், பூங்குழை, பொலங்குழை, மகரக்குழை , வரிக்குழை எனப் பலதரப்பட்டவை ஆகும் பூ* தழை, கம்பி போன்ற பொற் காதணிகளும், பச்சைக்கல் (மரகதம்) பதித்த காதணிகளும் இருந்தன. பெண்களின் கூந்தல் ஒப்பனைக்கும் பல அணிகலன்களைப் பயன்படுத்தினர். அவை தலையணி, சுரிதகம் முதலியனவாகும். அரசரும் செல்வரும் உடல் உறுப்புக்கள் அனைத்திலும் அணி கலன்களைப் பூண்டிருந்தனர். எனவே, சிறுவர், சிறுமியர், ஆண், பெண் ஆகிய அனைவரும் அணிகலன்கள் அணிவதில் விருப்ப முடையவரா யிருந்தனர். இடையில் இடுப்பில் அணிந்த அணிகலன்கள் குறும்பொறி, சில்காழ், பருமம், பல்காழ் என பல திறப்பட்டன. மார்பில் அணிந்த அணி 'மதாணி' எனப்பட்டது. குழந்தைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவிப்பர். 'ஐம்படைத்தாலியும் குழந்தைகளுக்கு அணிவிப்பார்கள். கூந்தலைச் சடையாகப் பின்னி அதில் திருகணி யும் அணிவிப்பார்கள். அதற்கு தொய்யகம்' என்று பெயர். சுறாமீன் வடிவிலான பொன் வளையம் "மகர வளையம்' எனப்பட்டது. நீலமணி பதித்த பொன்மணி 'குணிம்பை' எனப்பட்டது. நறுமணப் பொருட்கள் மலர் சூடுவது, மலர் மாலை சூடுவது, மஞ்சத்தில் மலர்களைத் தூவுதல் பலவண்ணப் பூக்களையும், பச்சைக்காய்களையும் கதம்ப மாலையாகக் கட்டிச் சூடுதல் யாவும் நறுமணம் துய்க்கவே ஆகும், வெற்றி பெற்ற அரசன் ஏழு நாட்கள் வரை வெற்றியைக் கொண்டாட வீரர்களுக்கு விருந்தளிப்பான். அந்த விருந்தில் அவன் வீரர்களுக்கு அளித்த ஊன் சோற்று உருண்டை, கதம்பமாலை போலிருந்ததாகப் புறநானூறு கூறுகிறது. கறிச்சோற்றிலுள்ள தசையும், கொழுப்பும் சிவப்பு வெள்ளை நிறமானவை, இஃது கதம்ப மாலை போலிருந்த தென உவமை கூறப்படுகிறது. நறுமணத்தை விரும்பும் சங்க கால் மக்கள் நறுமணப் பொருள்களையும் தயாரித்தனர். அட்டிகம் (சாதிக் காய்), தக்கோலக்காய், காட்டுமல்லி, வெண்டகாளி மலர் ஆகியவற் றைக் கதம்பமாலையாகத் தொடுத்து வெறியாடும் வேலன் அணிந் தான். கஞ்சான் குலைப்பூவைத் தலையில் அணிந்தனர். செங்கழுநீர் மாலை, காந்தள் கண்ணி, களங்காய்க்கண்ணி, வெண்டாளிமாலை, பித்திமாலை முதலிய மலர் மாலைகளையும் அணிந்தனர். மெல்லிய பொன்தகடு, தொண்மணிகள் (நவரத்தினம்), கற்பூரம் முதலியவற்றைப் பன்னீரில் நனைத்து இடித்து மாவாக்கி விரைமாவாகப்மேனிப்பொடி பூசிக்கொண்டனர். சில நறுமணப் பொருள்களை அம்மியில் அரைத்துச் சாந்தாகவும் பூசிக்கொண்டனர். அகில் புகை போட்டுத் துணிகளையும் கூந்தலையும் மணமடையச் செய்தனர். துணிகள் பூச்சியரிக்காமலிருக்கவும் புகை போட்டனர். 8.. விழாக்களும், விளையாட்டுகளும் விழாக்கள் நானிலங்களிலும் நிலத்திற்கேற்ற விழாக்கள் கொண்டாடப் பட்டன, விளக்கீட்டு விழா கைகளில் விளக்குகளை ஏற்றிக்கொண்டு மாற்றி விளையாடும் விழா விளக்கீட்டு விழா, முழுநிலவன்று நடைபெறும். தெருக்களில் விளக்குகளை ஏற்றி, மலர் மாலைகளைத் தொங்கவிட்டுப் பால் பொங்கலிட்டும் விழாக் கொண்டாடுவார்கள். மலை முகட்டில் விளக்கு ஏற்றி திருமால் உலகத்தில் பிறந்தநாளை 'ஓணம் பண்டிகை யாகக் கொண்டாடினார்கள். அன்று வீரர்கள் யானைகளைச் சண்டையிடச் செய்து விழாக் கொண்டாடுவார்கள். மற்றும் தை நீராடும் விழா, மணிகளை இடுப்பில் கட்டிக் கொண்டு தெருவிலே ஓடும் விழாக் கொண்டாடுவார்கள். இதற்கு "உள்ளிவிழா " என்று பெயர். முதன்முதலில் அம்புவிடக் கற்கத் தொடங்கும்போது கொண்டாடும் விழா 'வீரர் விழா '; சேர்ந்து கொண்டாடும் விழா 'கோடியர் விழா, சித்திரை மேழம்) ஓரையில் முழு நிலா இரவில் கொண்டாடும் 'வேந்தன் (இந்திரன்) விழா', இளவேனிலில் கொண்டாடும் 'காமவேள்விழா' ஆகிய விழாக்களும் கொண்டாடப்பட்டன. விளையாட்டுகள் பலர் கூடியும். தனித்தும் பல்வேறு விளையாட்டுக்களைச் + "சங்ககால ஆணும், பெண்ணும் விளையாடினார்கள். பெண்கள் மணல்வீடு கட்டுதல், கழற்சிக்காய், அம்மானைக்காய் முதலியன ஆடுதல், ஊஞ்சலாட்டம், பறவைகளை வைத்து ஆடுதல், புனலாட் டம் முதலிய ஆட்டங்களிலீடுபடுவர். நெற்றிக் கிழங்கு விளையாட்டு அல்லது குரவை விளையாட்டு, பொருநை ஆற்றங்கரையில் பெண் கள் கைகோர்த்துப் பின்னி ஆடும் விளையாட்டைத்தான் இவ்வாறு கூறுவர். சிறுமிகள் விளையாட்டு பாவைகள், கிழங்குகள், பூக்கள் முதலியவற்றைக் கொண்டு, சிற்றில் கட்டியும், சோறாக்கிக் குடும்பம் நடத்தியும் சிறுமிகள் ஆடும் விளையாட்டுகளும் இருந்தன, சிறுவர்கள் விளையாட்டு கன்றுகளுடன் சேர்ந்தும் நீரில் மூழ்கியும் மரத்தின் கிளைகளில் தாவியும் சிறுவர்கள் விளையாடினர். நீருள் நீந்திப் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் தொடும் நீர் விளையாட்டு ஓரிவிளை யாட்டு எனப்பட்டது. உடற்பயிற்சி வீரர்கள் விளையாட்டுக் களங்களில் பல்வேறு உடற்பயிற்சி களைச் செய்தனர். யானையின் மருப்புகளைப் பிடித்துத் தள்ளி வலிமையைக் காட்டும் விளையாட்டு, காளைகளைத் தழுவும், விளையாட்டு முதலியவற்றையும் செய்தனர். 9.. ஊர்திகள் அ. தரைவழிப் போக்குவரத்து சங்க காலத்தில் தரைவழிப் போக்குவரத்திற்காக யானை, குதிரை, எருமை, கோவேறு கழுதை முதலியனவும் குதிரைவண்டி, மாட்டுவண்டி முதலியனவும், வேந்தரும் வீரரும் செல்வரும் செல்லத் தேர்களும், தானிய மூட்டைகளை ஏற்றிச் செல்ல பொதி சுமைக் கடாக்களும் வண்டிகளும் பயன்பட்டன. ஆ - நீர்வழிப்போக்குவரத்து நீரைக் கடப்பதற்குக் கட்டுமரங்கள், 'கலம்' எனும் பெரிய கப்பல்கள், 'தோணி' எனும் சிறு ஓடங்கள், பெருங்கடல் நீரைப் பிளந்து செல்லும் 'வங்கம்' எனும் பெரிய கப்பல் முதலியன இருந்தன. 'வங்கம்' 'நாவாய்' என்றும் அழைக்கப்படும், இ - வான் வழிப்போக்குவரத்து சங்க காலத்தில் வான்வழிப் போக்குவரத்து இருந்ததாகத் தெரியவில்லை . ஆயினும், புறநானூற்றில் வரும் ஒரு பாடல், வானூர்தியைப் பற்றியும், வானபர்தியை தட்டிச்செல்லும் விமானம் ஒட்டி, 'வலவன்' பற்றியும் குறிப்பிடுகிறது. போரிலே வீரமுடன் போரிட்டு உயிர் நீக்கும் வீரன், விமானியில்லாத விமானத்தில் வானில் பறந்து செல்லும் வான ஊர்தியிலே சுவர்க்கம் சென்று, என்றும் இளமை மாறாத எழிலுறு மங்கையரை மணமுடித்து இன்புற்று இருப்பான். இதனைப் புலவரும் பாடி ஏத்துவர், என்று கூறப்படு கிறது. 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பன் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக் கேட்பல்’ (புறம் 27: 7-10) ஆனால் சங்கமருவிய காலத்துக் காப்பிய நூல்களில் வான ஊர்திகள் இயந்திரப் பொறிகளால் பறந்தன என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. 10. சமயம் சங்க கால மக்களின் வாழ்க்கையில் சமயமும் வாழ்க்கை நெறியாக இருந்தது. கடவுள் உண்டு என்றும், அதற்கு உருவம் உண்டு என்றும் கருதி உருவ வழிபாட்டைப் படைத்தவர்கள் தமிழரேயாவர். கர்ம விதிக்கேற்பவே பிறப்பு உண்டாகிறது. வீடுபேறும் மோட்சமும்) நரகமும் வினைக்கேற்பவே வரும்; கூடு விட்டுக் கூடு பாயும் பறவைபோல் தோலுரிக்கும் பாம்பு போலப் பிறவிகள் தொடரும்; ஆனால், ஆத்துமாவுக்கு அழிவு இல்லை, என்றெல்லாம் நம்பினர். இறந்தவருக்குக் கல்லெடுத்தும், கோயில் கட்டியும் வழிபட்டனர். இல்லறத்தாளுக்குரிய கடமைகளில் தென் புலத்தாரை ஓம்புதலும், தெய்வத்தை வழிபடுதலும் சிறந்தவை ஆகும். இறந்தவரைப் புதைப்பதும், எரியூட்டுவதும் உண்டு. கைம் பெண்கள் நோன்பு நோற்று வாழ்ந்தனர். பலர் உடன் கட்டை யேறினர். இவர்களை மாசத்திக் கல்லெடுத்து வழிபட்டனர். சமயத் தொடர்பான பல நோன்புகளும் விழாக்களும் எடுத்தனர். வேள்வியும் செய்தனர். நானிலக் கடவுள்களையும் இயற்கைகளையும், வழிபட்டனர். ஆயினும், ஒன்றே குலம் ஒருவனே தேவனுமென்பது அவர் களின் பாங்கு. சிவனும் திருமாலும் வழிபாட்டில் முகாமை பெற்றிருந் தனர். இதனால் காலப்போக்கில் சிவனியமும், மாலியமும் இரு பெரும் சமயப் பிரிவுகளாய் வளர்ச்சியைப் பெற்றன. சங்க காலத்தின் பிற்பகுதியில் பௌத்தமும், சமணமும், ஆதிக்கம் பெற்றன. வேதக்கடவுள்களும், குறிப்பாகத் தோற்றரவு களும் (அவதாரங்கள்), புராணக் கருத்துகளும் மக்களிடையே செல் வாக்குப் பெற்றன. இதனால் சங்ககாலத் தமிழ்ச் சமயங்கள், சமணம், பெளத்தம், ஆரியம் ஆகியவற்றின் மேலாதிக்கத்தால் மங்கிப் போயின. 11. நம்பிக்கைகள் 'சங்க கால மக்களின் அறம் வழி நின்ற வாழ்க்கை நெறியும், சமயத்தைச் சார்ந்த ஆன்மநெறியும் பல்வேறு நம்பிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன. சகுனம் பார்த்தல், நற்சொல் கேட்டல், கதிரவன், நிலவு, விண்மீன்களின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். கிரகணம் ஏற்படுவதைத் திங்களைப் பாம்பு விழுங்குகிறது என்று நம்பினர், விண்மீன் குறித்த காலத்தில் விழுமானால் அரசர் போலும் தலைவர்கள் இறப்பர் என்று நம்பினர். போர்க்களத்திலும், இடுகாட்டிலும் பேய்களிருப்பதாக நம்பினார்கள். நெய்யையும், வெண்சிறு கடுகையும் கலந்து தூவிக் கண்ணேறு கழிப்பார்கள். இவற்றைத் தலையில் அப்பிக் கொண்டால் பேய்கள் அணுகாது என்று நம்பினர். பாம்புகள் மாணிக்கக் கற்களை உமிழும் என்று நம்பினார்கள். - நிமித்தம் பார்த்தல் அவர்களின் பண்பாடாயிற்று. பறவைகள், ஓணான், நிறைகுடம் முதலியன எதிர்ப்படும்போது எதிர்ப்படும் நேரத்தைக் கொண்டு இன்ன நிகழ்ச்சி நடக்குமென நம்பினர். இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களின் பேச்சைக் கொண்டு தாங்கள் எண்ணும் எண்ணம் நிறைவேறுமா, நிறைவேறாதா என்பதைக் கணித்தனர். பேச்சைக்கேட்டு நம்பும் செயலுக்கு 'விரிச்சி கேட்டல்' என்று பெயர்- முறத்தில் நெல்மணி போன்ற தவசத்தை வைத்து ஒற்றை, இரட்டையாக எண்ணி ஒற்றை வந்தால் நடக்கும், அல்லது இரட்டை வந்தால் நடக்குமென எண்ணிப் பார்த்தல், குறத்தியிடம் "குறி கேட்டல்' நம்பிக்கை இவர்களிடமுண்டு. கண் போன்ற உடலுறுப்புகள் துடித்தல், கனவுகள், பல்லிச் சொல், காக்கை கரைதல் முதலிய வற்றிலும் நம்பிக்கை வைத்தனர். பகலில் பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்தால், பற்கள் விழு வதைப் போல் கனவு கண்டால் கெடுதல் விளையுமென நம்பினர். வேலன் வெறியாடல். சாலினி பேயாடல் ஆகியவற்றில் தெய்வம் ஆவியாக வந்து இவர்கள் மீது இறங்கிப் பேசுகிறது என்று நம்பினர். 12. முடிவுரை சங்க காலச் சமுதாய வாழ்க்கை முறைகளைப் பார்க்கும்போது இருவேறு வகைப்பட்டனவாகத் தெரிகிறது. நகரத்திலிருப்பவர் வாழ்க்கையும் நாட்டுப்புறங்களிலிருப்பவர் வாழ்க்கையும் வேறுபடு கின்றன. நகர மக்கள் அரசன், அரச குடும்பத்தினர், மேலதிகாரிகள், தானைத் தலைவர்கள், வாணிகர்கள், செல்வர்கள் முதலிய மேட்டுக் குடி மக்கள் மாட மாளிகைகளில் வாழ்ந்தும், உயர் தர உணவு வகைகளை உண்டும் சிறந்த ஆடை அணிகலன்களை அணிந்தும், விழாக்கள், வேடிக்கைகள், கேளிக்கைகளில் கழித்தும் வாழ்கின்ற னர். நானில மக்களும், குறிப்பாகப் பாலைநில மக்களும் தொல் பழங்கால மாந்தர்களைப் போலவே வாழ்கின்றனர். உணவு கிடைக்கு மிடம் தேடி அலைந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாகக் குடிகொண்டு உணவையும், உற்பத்தி நிலையையும் அடைந்த மாந்தவியல் வரலாற்றின் இரண்டாவது கட்டத்தில்தான் இவர்கள் காணப்படு கின்றனர். ஆடு மாடு மேய்த்தல், வேட்டையாடுதல், கிழங்கு, காய் கனிகளைச் சேகரித்து உண்டல், இலை, மரப்பட்டை முதலியவற்றா லான ஆடைகளை அணிதல், சங்கு, மூங்கிலான கொடி முதலியவற் றாலான அணிகலன்களை அணிதல், காவு கொடுத்துக் சாமி கும்பிடு தல் போன்ற வாழ்க்கை அவர்களுடையதாய் உள்ளது. இசைக் கருவிகள், பண்கள், விழாக்கள் முதலியன நகரத்தில் நடந்தன. இவை அவர்களுக்கு அதிசயமாக இருந்தன. . கடையெழு வள்ளல்களையும் மற்றும் பல் கொடையாளர் களையும் நாடிச் செல்லும் பாணர்களையும், படித்தறிந்து அடங்கிய புலவர்களையும் காணும்போது வயிற்றுக்கு அல்லற்படும் மக்கள் கூட்டம் மேட்டுக் குடி மக்களின் கருணையால் வாழ்ந்ததை அறிகிறோம். எனவே குவிந்து கிடந்த செல்வத்தையும், கஞ்சிக்குக் குமுறும் ஏழை வயிற்றையும் ஒருங்கே காண முடிகிறது. உறுபசியும் ஓவாப் பிணியும் செருபகையும் சேராத்து நாடு அல்லவா? மூவேந்தர்கள் தங்களுக்குள் இட்டுக் கொண்ட கரடிச்சண்டை கள் செருபகையுள்ளதைக் காட்டுகிறது. எனவே இது சங்க காலம் பொற்காலம் என்பதைக் கேள்விக் குறியாக்கி விட்டது. பல மனைவியரை மணக்கும் வழக்கமும், பல பெண்டாட்டி களைவைத்துக்கொள்ளும் செல்வந்தர் செருக்கும், பரத்தையர் மேனி மினுக்கித் திரிந்த காட்சிகளும், கணவன் இறந்தால் கைம்மை நோற்றலும், உடன்கட்டை ஏறுதலும் சங்ககால மகளிரின் மேன்மை யைக் காட்டுகின்றனவா? சமணமும் சாக்கியமும் ஆச்சரியமும் கோலோச்சின. கள்ளுண்டு களித்ததைக் கண்டித்து வள்ளுவரும் கூறினார். புலால் உண்பதை யும் இச்சமயங்கள் தடுத்தன. ஆனால், அதே சமயத்தில் வேத முறைப்படி வேள்விகள் செய்யும் முதுகுடுமிப் பெருவழுதி போன்ற மன்னரும் இருந்தனர். இந்திரன், வருணன், மாயோன், சேயோன், கொற்றவை முதலிய கடவுளரோடு சதுக்கப்பூதங்களும், பேய்களும் நடமாடின. ஆயினும், பிற்காலத்தை நோக்கிச் சங்க காலத்தை ஒரு பொற்காலம் என்றே அழைக்கலாம். அறமும், ஒழுக்கமும், வீரமும், பண்பும், கற்பும், விருந்தோம்பலும், கல்வியும், பொருளும் மக்களிடையே பஞ்சமின்றிக் காணப்பட்டன. வல்லான் வகுத்ததே வழி, இரத்தமும் இரும்பும் என்ற கோட்பாடுகள் நிரம்பிய அக்காலத் தில் போர்களைத் தவிர்க்க முடியாது. மக்கள் தன்னிறைவு கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து இன்பம் கண்டனர். ஊ. சமயமும் தத்துவமும் முன்னுரை: 1. தொல்காப்பியர் கண்ட தமிழர் சமயமும் தத்துவமும் 2. புறநானூறு கூறும் தமிழர் சமயமும் தத்துவமும் 3. திருவள்ளுவர் கண்ட சமயமும் தத்துவமும் 4. துவைதம் 5, சாங்கியம் 6, விசிட்டாத்துவைதம் 7. தெய்வ வழிபாடுகள் 1. முருகன் 2. மாயோன் 3. வேந்தன் 4. வருணன் 5. கொற்றவை 6. திருமகள் 8. பிற தெய்வ வழிபாடுகள் 1. காமன் 2. ஐயனார் 3. நடுகல் 4. இயற்கை 5. வேள்வி வேட்டல் 6. கோயில் முன்னுரை மாந்தன் முதலில் தான் கண்டு அஞ்சியவற்றைத் தொழுதான், பின்னர் தான் வாழ்வதற்குக் காரணங்களாய் அமைந்தவற்றைக் கண்டு தொழுதான் கடைசியாகத் தான் கொண்ட அன்பின் அல்லது பக்தியின் காரணமாக அன்பு பூண்ட பொருள்களைத் தொழுதான். இதுவே அவனது சமயமாகியது என்பது சமயத் தோற்றம் பற்றிச் சிந்தனை யாளர்கள் கூறும் பட்டாங்கு ஆகும். இதனடிப்படையில் வைத்து நோக்கும் போது சங்க கால மாந்தரைத் தொடக்க கால மாந்தர்களை, பண்பாடும் நாகரிகமுமற்ற விலங்காண்டிகள் என்றும் கூற முடியாது. விலங்காண்டி மாந்தன்தான் இடி, மின்னல், மற்றும் இயற்கை இடர்ப் பாடுகளைக் கண்டு பயந்து வணங்கினான். ஆனால், சங்ககால மாந்தன், மூன்றாவது நிலையை அடைந்த பண்பாடும் நாகரிகமும் நிறைந்தவன். எனவே தனது தெளிந்த மதியினால் தான் வாழக் காரணமானவற்றை நன்றியோடு நினைத்து வழிபட்டான். இந்த வழிபாட்டை வாழையடி வாழையாக அவன் கால் வழியினரும் பின்பற்றினர். இதுவே அவனுடைய சமயத் தத்துவம் அல்லது பட்டாங்கு என்றனர். - . சமைத்து (கருத்து தெளிந்து நிற்பது சமையமாகும். ஆனால் இதனைச் சமயம் என்றே வழக்காற்றில் கூறுவர். தத்துவம் தத்துவம் ஆகும். இதன் பொருள் அதன் தன்மை ' என்பதாகும். பொருள் தன்மைகளை ஆய்ந்து மெய்ம்மையினை நிலைநாட்டுவதே , தத்துவம் என்ற அறிவுக்கலை ஆகும். இவ்வாறு பொருட்டன்மை களை ஆராய்ந்து மெய்ம்மையினை உணர்ந்த வல்லவரை மெய்ப் பொருள் அறிஞர்' அல்லது 'தத்துவஞானி' என்கிறோம். உலகமும் உலகப் பொருள்களும் அழியக் கூடியவை என்றும், அழியாத பொருள் ஆன்மாவே என்றும் சங்கத்தமிழர் கண்டனர். அந்த அழியாத ஆன்மாவோடு தொடர்புடையது 'சமயமே" எனக் கண்டனர். அத்தகைய சமயப் பொருளின் உண்மைகளைக் கண்டு ரைக்க வல்லாரைச் சமயக் கணக்கர் என்றனர். (மணிமேகலை 27:2) மாந்த வாழ்வின் குறிக்கோள் சமயத்தின் உண்மையை அறிவதே ஆகும். இதனையே வள்ளுவப் பெருந்தகை மெய்ப்பொருள் காண்ப தறிவு" என முடிந்த முடிவாகக் கூறுகிறார். வையத்துள் வாழ் வாங்கு வாழ்பவனே வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்பதே தமிழர் கண்ட சமயத் தத்துவம், உலக வாழ்க்கையில் கடைப் பிடித்த மெய்யுணர்வு நெறி முறைகளையே தத்துவம்' என்கிறோம். ஆயின், அவர்கள் கடைபிடித்த நெறி முறைகள் யாவை? 1. தொல்காப்பியர் கண்ட தமிழர் சமயமும் தத்துவமும் சங்க இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப் பியமாகும். இதில் கடவுட் கொள்கை வினைப்பயன் கோட்பாடு ஆகியவற்றைத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். கடவுள் கொள்கை, உலகின் நிலையாமை இவற்றின் பல்வேறு திறன்களையும் ஒட்டு மொத்தமாக 'காஞ்சி' என்கிறார் தொல்காப்பியர், செய்வினைக் கேற்ப உயிர்கள் கூடு விட்டுக் கூடு பாயும் பறவை போல் மறுபிறவி அடைகின்றன என்பது தொல்காப்பியர் கண்ட பிறவித் தத்துவ மாகும். இதையே கல்லாடனார் விளக்குகிறார் (கல்லாடம்). உருவ வழிபாடு அடுத்தபடியாகப் பண்பாட்டை உருவமாக்கி உருவவழிபாட்டு நெறியை உலகிற்கு நல்கியவர்கள் தமிழர்களே. ''உருவ வழிபாடு'' தமிழருக்கே உரியது. பின்னர் ஆரியர் இதனைத் தமிழரிடமிருந்தே பெற்றனர்'' என்று தத்துவமேதை டாக்டர் இராதாகிருட்டிணன் கூறுகிறார். கிரேக்கர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்புதான் உருவ வழிபாடு தோன்றியது என்ற வரலாற்று ஆசிரியர் கூற்றைச் சங்கத் தமிழ் இலக்கியங்கள் பொய்ப்பிக்கின்றன. உருவ வழிபாடு தமிழ் ருக்கே உரியது. அதுவும் இயற்கை எழிலை முருகன் அல்லது எழிலாக வழிபட்டனர்; அடர்ந்து காணும் கருநிறப் பண்பையும் காட்டிடை மலர்ந்த காயாம்பூ மலரையும் திருமாலாக வழிபட்டனர்; இதையே தொல்காப்பியர் பூவை நிலை என்கிறார். "மாயோன் மேய மண் பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் (தொல், செய் 138). பூவை என்பது காயாம்பூ ஆகும். அதன் நிறம் நீலமாகும். அதையே உருவமாக்கித் திருமாலாகத் தமிழர் வழி பட்டனர். இதைப் போலவே கடவுளைக் கருப்பொருளாக வைத்து தொல்காப்பியர் ஐந்து வகை நிலங்களிலும் வணங்கப்பெற்ற தெய்வங்களை அவற்றின் நிறத்திற் கேற்ப மாயோன், சேயோன் என்றும் இடத்திற்கேற்ப வேந்தன், வருணன் என்றும் குறித்தமைக் காணலாம், ''மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம் புனலுலகமும் வருணன்மேய பெருமணல் உலகமும் முய்யை, குறிச்சி, மருதம், தெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனி உருவம் அமைத்துத் தேவர்ப் பராய முன்னிலைக் கண்ணோ " (தொல், செய். 138) அவ் வுருவத் தின் முன்னால் நின்று சூளுரை செய்யும் வழக்கமும் தமிழருக்குண்டு (அகம், 26, 20-21). "திருமணங்கள் தெய்வலோகத்தில் நிச்சயிக்கப் படுகின்றன" என்பது தமிழர் கண்ட தத்துவமாகும். தொல் கற்பு- 6:35) தெய்வ வழிபாடு நன்மை தரும் 'தெய்வவழிபாட்டால் நன்மையே விளையும் என்பது தமிழரின் நம்பிக்கை ஆகும். வழிபடுவோர் நன்மையுடன் வாழ்வர் என்பதும் அவர்களின் நம்பிக்கை ஆகும் தொல் - பொருள், செய், 106). தெய்வக்கடன் இவ்வாறு தெய்வம் தமக்குச் செய்யும் நன்மைக்காக அத் தெய்வத்திற்கு நன்றிக் கடனாக ஆற்றும் செயலே தெய்வக் கடனா கும். இதுவே நன்றிக்கடன் ஆகும் (தொல் - பொருள், செய், 106). எல்லாம் இறைவன் செயல் தனி மனிதனுடைய செயல்கள் யாவும் இறைவன் திரு 'வருளால் நடப்பவை என்று தமிழர் நம்பினர். இதனை கொடிநிலை, கந்தழி, வள்ளி என்றனர் தெல் 85:1-3). மக்கள் அடையும் உறுதிப்பொருள் அறம், பொருள், இன்பம் இவை மூன்றுமே மனிதன் அடையும் உறுதிப் பொருள்களாகும். இவற்றில் 'வீடு' அடைவதே வாழ்வின் முடிவாகும் என்பது தமிழர் கண்ட பட்டாங்கு ஆகும். ஒழுக்கம் வழுவாமை அறநெறியில் வழுவாமையைக் 'கட்டமை ஒழுக்கம்' என் கிறது தொல்காப்பியம். அந்தணர், சான்றோர், மறையோர் முதலான எல்லோருக்கும் ஒழுக்கம் பொதுவாகும். ஒழுக்கம் உயிரைக் காட்டி லும் சிறந்தது. ஒழுக்கத்திலிருந்து தவறுதல் கொடுமையான செயலா கும், ஒழுக்கக்கேடு மனிதனைத் தாக்கும் என்பன பண்டைத் தமிழரின் கோட்பாடாகும் என்பதைத் தொல்காப்பியர் வலியுறுத்தினார். துறவுக் கோட்பாடு வாழ்வாங்கு வாழ்ந்து முதுமையில் துறவு பூண்டு நிற்பதே தமிழரின் மெய்ப்பொருள் காணும் தத்துவமாகும். பிறவாநெறி வேண்டியே துறவு பூண்டனரெனவும். இஃது உலகைத் துறந்து காடு சென்று துறவியாக வாழ்வதன்று; மனத்தால் உலகைத் துறந்து தன்னலமற்ற விருப்பு, வெறுப்பு அற்ற நிலையை அடைதலாகும். எனவே, தொல்காப்பியர் கூறும் கடவுள் கோட்பாடுகளி விருந்து தமிழர் இறைவன் உண்டு' என்று நம்பினர். அத்தெய் வத்தை வணங்க வேண்டுமென்றும், அதனை வணங்கினோருக்கும் தெய்வத்திற்கும் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமென்றும் எல்லாம் இறைவன் செய லென்றும், அவ்விறைவனைத் தமிழர் உருவத்தால் கற்பித்து வணங்கினர் என்றும் அறியலாம். மெய்ப்பொருளை (வீடு) அடைய ஒழுக்கமும், துறவும், (தாய்மை) தேவை என்றும் நம்பினர் என்பது தொல்காப்பியர் கூறும் உண்மை ஆகும். வருணன்' எனும் கடல் தெய்வம் பழங்காலத் தமிழர் 'வருணன்' எனும் கடல் தெய்வத்தை வழிபட்டார்களென்பதை தொல்காப்பியர் "வருணன் மேய பெரு மணல் உலகம்" (தொல். பொருள். அகம்) எனக்கூறுகிறார். பழங் காலப் பாண்டியனான நெடியோன் என்பவன் முந்நீர்த் திருவிழா வைக் கடல் தெய்வத்திற்குச் செய்தான் என்று நெட்டியார் எனும் | புலவர் கூறுகிறார். 'முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9:10-11) இவ்வாறு அவனைப் புலவர் வாழ்த்துகிறார். எனவே "வருண வழிபாடு என்பது தமிழரின் பழமையான வழிபாடு என்பது தெளிவாகிறது. ஆனால் பௌத்தம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் காலத்தில் (கி.பி. 273-326) தமிழகத்திற்கு வந்தது. கி.பி. இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றது. அப்போது அம்மதத்தின் சிறுதெய்வமாகிய ''மணிமேகலா தெய்வம்' வருணனுக்குப் பதிலாக வணங்கப்பட்டது. எனவே, அது கடல் தெய்வமானது. கடலில் பயணம் செய்வோர் துன்பம் நேராமல் காக்க வேண்டுமென மணிமேகலா தெய்வத்தை வணங்கலாயினர். வணிகரின் வழிபடு தெய்வமாக மணிமேகலா தெய்வம் ஆனது. இதனைச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்கள் கூறுகின்றன என்று ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார். பழங்காலத் தமிழர் வாணிகம் (சங்ககாலம்) சென்னை 1978, பக்கம் 32-33). 2. புறநானூறு கூறும் தமிழர் சமயமும், தத்துவமும் இதைப் போலவே ஆரியத்தின் தாக்கத்தால் தமிழரின் சமயக் கோட்பாடுகள் மருவி நிற்கின்றன. உலக அமைப்பு புறநானூற்றில் உலகம், மேல் உலகம், கீழுலகம் எனப் பிரித்துக் கூறப் பெற்றுள்ளது. கோள்களுடன் தோற்றமளிக்கும் விண்வெளியை மேலுலகம் என்றும், நீருடன் கூடிய ஆழ்கடலை 'அளறு' அல்லது கீழ் உலகம் என்றும் புறநானூறு கூறுகிறது. ஆனால், ஆரியத்தின் தாக்கத்தால் முறையே இவை விண்ணவர் வாழும் விண்ணுலகம் என்றும், நரகம் என்றும் அழைக்கப்பட்டன. ஊழ்வினைக் கோட்பாடு நல்ல ஊழ்வினையால் ஒருவன் முக்தி மோட்சம்) அல்லது வான் உலகம் அடைவான் என்றும், தீவினையால் மீளாத் துன்பம் முடைய கீழுலகம் (நரகம்) அடைவான் என்றும் நம்பப்பட்டது. இவ்வுலகில் புகழைத் தேடிக் கொண்டவரும் போரில் வீரமரணம் அடைந்தவரும் மேலுலகம் சேருவர். உயிர்களைத் துன்புறுத்துவோர் நரகம் அடைவார்கள் என்று புறநானூறு கூறுகிறது. நல்ல செயல்களைச் செய்தும், அச்செயல்கள் பிறருக்கு நன்மை பயப்பதாகவும் இருக்குமானால் அவர்கள் மறுபிறவியில் உயர்ந்த பிறவிகளாகப் பிறப்பார்கள் என்றும், அவ்வாறு செய்யா தவர்கள் இழிந்த உயிரிகளாகவே பிறந்து துன்புற வேண்டி வரும் என்றும் புறநானூறு கூறுகிறது. (புறம், 71:18-19). ''நல்வினையாலும், உயர்ந்த செயலாலும் இந்த உலகத்தில் புகழ் நிலைபெறும்: புகழே இல்லாமல் போனாலும் நற்செயல் யாக்கைக்குத் திண்மை உறுதி ஆகும். தீதற்ற வாழ்க்கை வாழ்வதே மிக உயர்ந்த பேறாகும். (புறம், 214:9-13) என்பது தமிழரின் பட்டாங்கு ஆகும். ''ஒருவனை நல்ல நிலையில் வாழச்செய்வது அவன் செய்த நல்வினையே ஆகும். அந்த நல்வினை என்னும் தெப்பம் ஒன்று தான் அவன் இறக்கும்போது உதவி செய்து, மறுபிறவியில் நலமடையச் செய்யும்" (புறம், 367:10 -15). மறுப்புக் கோட்பாடு ''நல்லதைச் செய்தால் நன்மை அடைவர் என்றும் தீயதைச் செய்தால் தீமை அடைவர் என்றும் கூறப்படுகிறது. புறநானூற்றுக் காலத்திலேயே இந்த உலக வாழ்வு நிலையில்லாத்து, உலகம் ஒரு நாடகமேடை உலகிலுள்ள மக்களெல்லாம் அதில் ஆடும் ஆட்டக் காரர்கள், இவர்கள் தம் தம் ஆட்டம் முடிந்தவுடன் போய் விடுவார்கள். எனவே, இந்த உலகில் வாழும் போதே இன்ப துன்பங்களைத் துய்த்து மகிழ வேண்டும்.'' (புறம், 2:23-26) என்னும் மறுப்புக் கோட்பாட்டைக் கூறுபவராகச் சிலர் இருந்தனர், ஆனால், இதனை மறுக்கும் சான்றோர் நாடாண்டவரும் காடான (சுடுகாடுச் செல்வர். ஈசல் போல் ஒருநாள் மட்டும் வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்கக் கூடாது; அவ்வாறு வாழும் மக்களின் நிலைமை வருந்தத் தக்கதென்றனர் (புறம், 359:8 - 51:9-11). "இளமையும், செல்வமும் நிலையற்றவை, பலர் பிறந்து மாண்டனர். இன்று வாழ்பவர்களும் மாளப்போகிறவர்களே. வாழும் நிலமகளும் தான்' அழியப்போவதை எண்ணி அழுகிறாள். இதுவே உலகியல்" என்கிறது புறநானூறு (புறம், 365:7-11). இன்பமும், துன்பமும் இயற்கையின் நியதிப்படியே வரும் "இன்பமும், துன்பமும் இயற்கையின் நியதிப்படியே வரும். இவை இரண்டையும் மனப்பக்குவத்தால் சமமாகத் துய்க்க வேண்டும், இன்பம் வரும்போது உலகவாழ்வைப் போற்றுவதும், துன்பம் வரும்போது தூற்றுவதும் கூடாது. மலை அருவியில் மிதந்து வரும் கட்டை போல் அவை மிதந்து கொண்டே வரும். மெய்யுணர்வு கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து இன்புற வேண்டும்" (புறம், 192: 1-11). "பெரியோரைப் புகழ்ந்து பாராட்டும் போதும் சிறியோரை இகழ்ந்துரைத்தல் கூடாது" (புறம், 192:11-13) என்று புறம் கூறுகிறது. இவ்வாறு வாழும் போது, வாழ வேண்டிய பண்புகளோடு, வாழ்ந்தால்தான் சாகும்போது மனநிறைவோடு மாண்டு மறு உலகி லும் நிம்மதி அடையமுடியும் என்பதைக் கூறுகிறது புறநானூறு துறவு - தொல்காப்பியரைப் போலவே புறநானூற்றை யாத்த புலவர் பெருமக்கள் துறவை வலியுறுத்தினர். துறவு என்பது பற்றற்ற வாழ்க்கை ஆகும். அந்த வாழ்க்கை ''தவம்'' என்றழைக்கப் படும். 'தவசிகளிடம் திருமகள் தானே வலியச் சென்று அவர்களோடு வாழ்கிறாள். பிறரோ செல்வத்திடம் பற்றுக் கொண்டு அவளை அழைத்தாலும், அவள் அவர்களை விட்டுவிட்டுச் சென்று விடுகிறாள்" (புறம், 368:3-7) என்று புறம் கூறுகிறது, தமிழரின் துறவு மக்களையோ செல்வத்தையோ புறத்தே ஒதுக்கி விட்டுக் காட்டிற்குச் சென்று தவம் செய்வது அன்று, மக்களோடு மக்களாய் செல்வ வளங்களோடு வாழும் போதே அவற்றின் மீது பற்றில்லாமல், அதாவது மக்களும், செல்வமும் தமக்கே உரியன என்று கொள்ளாமல் எல்லோருக்கும், எல்லா உயிர்களுக்கும் உதவும் வகையில் தம் மக்களையும், தம் செல்வத்தையும் வழங்கி வாழ்வதே துறவு அல்லது தவம் ஆகும். செல்வத்தை எப்படி நுகர்தல் வேண்டும்? செல்வம் உண்டு மகிழ்வதற்கே ஆகும். ஆனால் ஒருவன் எவ்வளவு செல்வமிருந்தாலும் தானே உண்டுவிட முடியாது. ''உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்தான்". அதனால் செல்வத் தைத் தான் மட்டும் உண்டு களிக்காமல், பிறருக்கும் கொடுத்து மகிழ்தல் வேண்டும். அதற்காகவே செல்வம் ஒருவனிடம் கொடுக் கப்பட்டுள்ளது (புறம்.189: 5- 8). செல்வத்தின் பயன் பிறரும் துய்க்கும்படி செய்வதே ஆகும் (புறம், 189:5-8). இவ்வாறு அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களில் அறமே பொருளாக வும், இன்பத்தின் ஊற்றாகவும், திகழ்கிறது என்பதை உணர்ந்த தமிழர் அறஞ்செய்து தவசிகளாகி, மெய்யறிவு கண்டனர். உடல், உயிர், பற்றிய தத்துவம் - உணவின் பிண்டமே உடல் ஆகும். உணவு இன்றேல் உயிர் இல்லை, எனவே உணவுக் கொடையே உயிர்க்கொடை ஆகும். ஆயினும் உயிரே மேலானது (புறம், 18:18-20). கண்ணோட்டம், அன்புடைமை தேவை அன்புடையவர்கள் இந்த உலகத்தில் இருப் பதால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றேல் மண் ணோடு மண்ணாகப் போய் விடும் (குறள் - 96). பிறருக்காகவே உலகில் வாழும் வாழ்க்கையைத்தான் தமிழரின் மெய்யறிவு தத்துவம் என்றனர். நீதிவழுவாது செங்கோல் நடந்தால் பருவமழை பெய்யும். கடமை தவறாது மக்கள் வாழ்ந்தால் இம்மையும் மறுமையும் இன்பமும் தேடிவரும் எனத் தமிழர் நம்பினர். (புறம், 85:27-28). இவ்வாறு ஓட்டில் ஒட்டாத புளியம்பழம் போல், தாமரை இலையில் ஒட்டாத தண்ணீரைப் போல் செல்வமும், மக்களும் பிறரும் வாழவே என்று எண்ணி, இறுமாந்து நிற்காமல் வாழ்ந்தால் இவ்வுலகம் வாழும். மறு உலகை இவ்வுலகிலேயே கண்டு மகிழலாம் என்பதே தமிழரின் வாழ்க்கைப் பட்டாங்கு ஆகும். 3. திருவள்ளுவர் கண்ட சமயமும் தத்துவமும் பண்டைத் தமிழரின் சமயநெறியும், சமயத் தத்துவமும் உள்ள படியே அறிய வேண்டுமானால் வள்ளுவமே சிறந்த சான்றாகிறது. உலகியல், மெய்ப்பொருள் இயல் ஆகிய இவற்றை ஆய்ந்துரைத்த வர் வள்ளுவரே. ''திருவள்ளுவர் அறத்தை முதலாகக்கொண்டு தம் நூலைத் தொடங்கி துறவறத்தை அதன்பின் வைத்து, இல்லறத்தால் துறந் தாரைப் பேணி, துறந்தார் துணை கொண்டு இல்லறத்தில் நடந்து செல்லுகிறார்: இல்லறத்தாரையும், துறவறத்தாரையும் காத்து, அறம் பிறழாது நடத்தும் அரசு, அமைச்சு முதலியவற்றைக் கூறியபின், சான்றோர், குடிப்பிறப்பாளர், உழவர், மருத்துவர் முதலியோரைச் சிறப்பித்த பின் அவர்களின் அக ஒழுக்கமாகிய காதல் வாழ்வை ஈற்றில் வைத்து முடிக்கிறார். இல்லறத்தாருக்கு 'அறன் வலியுறுத் தலையும்', 'துறவறத்தாருக்கு நீத்தார் பெருமையினையும் எடுத்துக் கூறி மெய்யறிவு நிலைக்கு அழைத்துச் செல்கிறார். இதுவே வள்ளு வம் காணும் பட்டாங்கு (தத்துவம்) ஆகும்''. (டாக்டர் கோ. தங்க வேலு, தமிழ்நாட்டு வரலாறு: சங்க காலம் - வாழ்வியல் மெய்ப் பொருளியல்" பக்கம் 304, சென்னை - 1953). இல்லறம் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையே இல்லறம், 'இல்லறமல்லது நல்லறமன்று' 'உடலும் உயிரும் போல் கணவன் மனைவி சேர்ந்து வாழ்தலே நல்லறம்' என்கிறார் வள்ளுவர். ''உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையோடு எம்மிடை நட்பு (குறள் : 1122) இவர்கள் உலகியல் செல்வம், மக்கள் செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். தென்புலத்தார், தெய்வம், விருந்தோம்பல் ஆகியன வாழ்வாங்கு வாழ்தலாகும். ஆண் பிறன்மனைவியை விழையாத பேராண்மையுடனும், பெண் தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்தும் வாழவேண்டுமென்கிறார். இவ்வாறு வாழும் வழுவிலா வாழ்க்கைக்குத் தெய்வம் முன்னின்று உதவும் என்கிறார், ''குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்'' (குறள் : 1023) தங்களுக்குத் துணையாக நின்றவர்களுக்கு நன்றியறிதலோடு வாழும் இல்லறத்தாருக்கே மெய்யுலகம் (மோட்சம்) உண்டு என்றும், இன்றேல் உய்வு இல்லை என்றும் கூறுகிறார். ''எந்தன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வுஇல்லை செய்தன்றி கொன்ற மகற்கு" (குறள் : 11) ஈண்டு திருவள்ளுவர் நன்றியறிதல் ஒன்றே மோட்சத்திற்கு வழி என்றும், இஃது இல்லறத்தானுக்கும், துறவறத்தானுக்கும் பொருந்து மென்றும் கூறுகிறார். துறவு பூண்டு காடு சென்று கடுந்தவம் புரிந்து மோட்சமடைவதைத் காட்டிலும் இல்லறத்தில் இருந்து கொண்டே நன்றியறிதலோடு வாழ்ந்தாலே மோட்சமடையலாமென்பது வள்ளுவர் கண்ட பட்டாங்கு ஆகும். அறம் செய்தல் இல்லறத்தானின் கடமை, வறுமையில் வாடுவோருக்கு ஈதல் வேண்டும். ஈதலால் மேலுலகமே கிட்டா 'தாயினும் ஈந்து கெடுக என்கிறார் வள்ளுவர். வறுமையால் வாடி இரந்துண்ணும் உயிரிகளைப் படைத்தவன் உண்டாயின் அவனே கெடுக என்கிறார், "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து , கெடுக உலகியற்றி யான்" (குறள் 1062) இவ்வாறு, அறம்பிறழாது வாழும் இல்லறத்திலேயே துறவறத் தையும், கடவுள் நிலையையும் காணும் வள்ளுவர் இதனை விழித்துக் கொண்டே துயில்கொண்டுதுய்ப்பது போலாகுமென்கிறார். - இல்லறத் தருமங்களைச் செய்யும் ஒவ்வொரு நிலையிலும் இறை நிலையை அடைய ஏறிச் செல்லும் ஏணிப்படிகளாக இல்லறத் தருமங்கள் அமைவதால் இருள் நீங்கி மாசற்ற இறைவன் காட்சி களையே இல்லறத்தான் காண்கிறான். "இருள்நீக்கி இன்பம்பயக்கும் மருள்நீக்கி மாசு அறு காட்சியவர்க்கு (குறள் 352) இவ்வாறு அறம் வழுவாது வாழும் பொன்மனத்தானாகிறான். இப்பொன் மனத்தில் உயிரைப் படர்ந்து நின்ற ஆணவ இருள் உள் ளொளியால் நீங்கி விடுகிறது. எனவே உயிர்தானே இறையருளில் தோய்ந்து விடுகிறது -என்பதே வள்ளுவரின் ஆன்மநேய தத்துவ மாகும். இறைவன் நிலை இறைவனின் நிலையைக் கூறும் வள்ளுவர் அவன் தன்னிலை யால் தானே இயங்கியும், உயிர்களுக்கெல்லாம் உயிராக இருந்து இயக்கியும், மெய்களில் கலந்து நின்றும், அவற்றிற்கு உறுதுணை யாக விளங்குகிறான் என்கிறார். ஓர் எடுத்துக்காட்டால் இதனை விளக்க வந்த வள்ளுவர், ''அகரமுதல எழுத் தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" (குறள் 1) எல்லா எழுத்துகளும் "அ"' என்ற உயிர் எழுத்தை முதலாவதாகப் பெற்றிருப்பதைப் போலவே எல்லா உயிர்களும் ஆண்டவனாகிய உயிரை முதலாவதாகப் பெற்றுள்ளன. உயிரெழுத்து உயிர்மெய் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் இயக்குவதைப் போல் ஆண்டவன் எல்லா உயிர்களையும் இயக்கிச் செல்லுகிறான் என்கிறார். இவ்வாறு இறைவனை உயிராகவும் உயிரோடு கூடிய உடலாகவும் இவை இரண்டும் சேர்ந்த ஆண் பெண்ணாகவும் காணும் வள்ளுவர் இவர்கள் சென்றடையும் இடம் "வீடுபேறு " ஆகுமென்கிறார். எனவே, இறைவன் உலகியலுக்கு அப்பாற் பட்டவன் என்றும் உலகியலே இறைவன் ஆவான் என்பதும் வள்ளுவம். வள்ளுவர் கூறும் வானுலகம் எது? வானுலகம் (மேலுலகம்) உண்டு என சங்ககாலத் தமிழர் நம்பினர். வள்ளுவரும் ‘’வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" (குறள் 50) என்கிறார். இல்லறத்திலேயே நல்லறத்தைக் கண்ட வள்ளுவர், வானுல கமே இருப்பதாயினும் வாழ்வாங்கு வாழும் வையமே சிறந்தது என்கிறார். 'மண்ணுலகமே வானுலகம்' என்பதே வள்ளுவர் கூறும் தத்துவமாகும். மில்டன் கூட பிற்காலத்தில் "இன்பமும் துன்பமும் தான் தர வருமே" என்றும், "இன்பத்தில் உழலும் போது மோட்சத்தி லும், துன்பத்தில் உழலும்போது நரகத்தையும், காணும் மனத்தி னுள்ளேயே மோட்சமும் நரகமும் உள்ளது'' என்கிறார், எனவே வள்ளுவர் கூறும் வாழ்வாங்கு வாழ்தலே தெய்வம் உறையும் வானுலகம் என்கிறார். 'வள்ளுவர் குறிப்பிடும் வானவர், அமரர், தெய்வம் என்பன வாழ்வாங்கு வாழும் மக்களேயாவர். இருள் உலகம் வானுலகத்தைத் தெய்வம் உறையும் உலகம் என்றும், அது இன்பத்தின் இருப்பிடம் என்றும் நம்பியதைப் போலவே, கீழுலகத்தைத் தீயோர் வதியும் உலகம் என்றும், அது துன்பத்தின் இருப்பிடம் என்றும் நம்பினர். வள்ளுவர் கூறியபடி வாழ்வாங்கு வாழாதவன் வாழ்க்கையில் செம்மை காணாமல் துன்பம் துய்ப்ப வனே இருள் சூழ் உலகமடைவான்; அவனுடைய மனம் தூய்மை யற்றதாதலால் வாழ்வும் ஒளியற்று இருள் சூழ்ந்து இருக்கிறது என்கிறார். இருள் சூழ்ந்த மனம் மேலும், மேலும் தீமையைச் செய்து விடுபடாத துன்பத்தில் உழன்று நிற்கும் என்கிறார் வள்ளுவர், இவனைக் கண்டு பிறர், ஏளனம் செய்து நகைக்க வேண்டிய தில்லை; அவனுள் உள்ள பூதங்களே (புலன்களே) நகைக்கும் என்கிறார். 'வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் ஐந்து அகத்தே நகும் - (குறள் 271) இவனைத்தான் இருள் உலகத்திலிருப்பவன் என்று கூறுவர். ஆனால் வாழ்வாங்கு வாழ்பவனுடைய மனம் நிறைவுபெறு கிறது : தெளிந்த அவனுடைய உள்ளொளி வானத்தையும் ஊடுருவி அப்பாலிலுள்ள காட்சிகளையும் காணுகின்றது. இதனை வள்ளுவர் ‘'ஜயத்தின் நீங்கித் தெளித்தார்க்கு வையத்தின் வானம் தணியது உடைத்து" (குறள் 353) என்கிறார். இவனே வானுலகத்தில் வாழ்பவன் ஆவான். இவ்விரு கருத்துகளையும் வைத்து ஊன்றி நோக்கும்போது வானவர் உலகம் (மோட்சம்) இருள்சேர் உலகம் (நரகம்) ஆகியவை தனித்தனி உலகமாகக் கொள்ளாமல் நல்வினையால் நன்மை அடை வதை வானவர் உலகமென்றும் தீவினையால் தீமையடைவதை இருள் உலகம் என்றும் கூறுகிறார். இவையே வள்ளுவம் கூறும் மோட்சம், நரகம் ஆகியவை பற்றிய தத்துவங்கள் ஆகும். உயிர் உயிர் என்றுமுள்ளது. இயல்பாகவே இருள் கலப்புள்ளது: சார்ந்ததன் வண்ணமானது; உணர்த்த உணருவது; வினைக்கேற்பப் பலனை நுகர்வது. ஆயினும், இறுதியில் வானுலகையே அடைவது என்பதே உயிரைப்பற்றி வள்ளுவம் கூறும் தத்துவமாகும். உயிரை ஓம்புதல் வேண்டும்; தன் இன்னுயிரைத் துறக்க நேர்ந்தாலும் பிற உயிரை நீக்கித் துன்பம் தேடிக் கொள்ளாதே என்பதே வள்ளுவம் கூறும் உயிரின் சிறப்பு ஆகும். இதனை, 'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை" (குறள் 327) என்று கட்டளை இடுகிறது வள்ளுவம், உயிர் போல உடலும் நிலையாக இல்லையே என வருத்தல் கூடாதாம். ஏனென்றால் தன்னுயிர் போல் மன்னுயிரை மதித்து வாழ்வதால் மகிழ்ச்சியே உண்டாகும். ஊழ்வினை ''ஊழ்வினை' என்ற சொற்றொடருக்கு 'மலர்தல்', 'உதிர்தல் என்ற இருபொருள்கள் உண்டு. மலர்வதே உதிர்ந்தும், உதிர்வதே மலர்ந்தும் தொடர்ந்து நிகழும் செயலையே "ஊழ்வினை"* என்கிறோம். இது சங்கிலி போல் தொடர்ந்து நிகழும் செயலாகும். "பால் வரைத் தெய்வம்" என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது ஊழ்வினையை நடத்திச்செல்லும் கடவுளையே, ஒருவன்தான் செய்த வினைக் கற்பப் பலனைத் தானாகவே அடைவான் என்பதே பால்வரைத் தெய்வ விதிமுறை ஆகும். ஒருவன் செய்த வினைக்கேற்புப்பலனை எப்படி அனுபவிப்பானென்பதனை வள்ளுவர் கூறுகிறார். ''இருளில் மூழ்கிய உயிர் உடலோடு கலந்து ஒரு பிறவியி லேயே ஏழு பிறவிகளில் செய்யக் கூடிய வினைகளைச் செய்து --- விடுகிறது, "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தாண்டிக் கழித்து மளறு" (குறள் 835) ஒரே பிறவியில் ஆராயாது விரைந்து செய்யும் வினை உயிரை மீளாத்துயரத் துன்பமாகிய பிறவிக் கடலில் வீழ்த்தும் என்பதே வள்ளுவர் கூறும் இமாழ்வினையின் தன்மை ஆகும். ஆகூழ், போகூழ் என்பன யாவை? ஒருவன் சோம்பலின்றி உழைத்து ஈட்டும் செல்வத்தைத் துய்த்தும் பிறருக்கும் ஈகிறான். இதனால் மறுமையிலும் மகிழ்ச்சி அடைகிறான். இதுவே ஆகூழ் ஆகும். மற்றொருவன் சோம்பலோடு திரிந்து செல்வமின்றி வறியவனாகி இவ்வுலக வாழ்விலும் துய்க்க முடியாமல் மறுஉலக வாழ்விலும் துன்புறுகிறான். இதுவே போகூழ் ஆகும். இதையே ஊழ்வினை என்கிறார் வள்ளுவர். ஆக ஊழ்வினை என்பது ஒருவனுடைய உழைப்பாலும், உழைப்பு இன்மையாலும் வருவதே ஆகும். இதற்கு எவரும் காரணமாகார். ஆயினும், நன்மை , தீமை எதுவரினும் அவற்றைப் பக்குவமாகத் துய்க்கும் மனப்பாங்கு வேண்டும். இதுவே ஊழ்வினையை வெல்லும் உபாயமாகும். வாழ்வைச் செவ்வனே நடத்துகிற எவனும் ஊழ் வினைப் பயனைத் தானே அடைவான் என்பதே வள்ளுவர் கண்டதத்துவம். ஆயின், "இவ்வுலகப் பொருள்களும் ''இறைவன்" என்னும் ஒரு முழுமுதல் சக்தியால் படைக்கப் பெறவில்லை" என்பதே வள்ளுவர் கண்ட முடிவாகும். ஆனால், இறைவன் நம்மோடு நாமாகவே இருந்து நமக்கு உதவுகிறான். அவன் நமது அறிவு வடிவில் இருந்து செயல்படுகிறான். எனவேதான் இறைவனை வள்ளுவர் ''வாலறிவன்" என்கிறார். உலக வாழ்க்கைக்கு வேண்டிய செல்வங்களும், அவற்றைப் பெற்று வாழும் வாழ்க்கை நெறிகளும், நன்னெறிகளைப் பிறழ்ந்து வாழ்வதால் சூழும் கேடும் (போகூழ்) வள்ளுவத்தால் தெளிவு படுத்தப்படுகின்றன. ஆகவேதான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை மட்டும் கூறி " 'வீடு' என்பதைக் கூறாமல் விடுத்தார். ஐம்பெருங்கரிசு (பஞ்சமாபாதகம்) சங்க காலத்தில் ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்களும், அரசரும் கூட புலால் உண்ணுதல், கள்குடித்தல், பரத்தையரைச் சேருதல் முதலியவற்றை வேறுபாடின்றிச் செய்தனர். பிற்காலத்தில் தான் இவற்றை ஐம்பெருங்கரிசு (பஞ்சமா பாதகம்) என்றும், இதனால் நரகமே ஏற்படுமென்றும் கூறினர். குறிப்பாகச் சமணமும், பௌத்தமும் இவற்றை வெறுத்து ஒதுக்கின. அந்தணரான கபிலர் புலால் உண்டார்: கள்குடித்து மகிழ்ந்தார் வள்ளல் அண்டிரன் முள்ளம்பன்றிக் கறியைச் சமைத்துப் பன்னூல் பண்டிதருக்கும் மெய்யறிவாளருக்கும் படைத்தான்; கள்ளும், கறியும் சங்ககால மக்களின் வாழ்வோடு ஒன்றிய பழக்கங்கள் விழாக்களில் நிணச் சோறும் (பிரியாணி) கள்ளும் உண்டனர்; இறைவழிபாட்டு விழாவி லும் இவை படைக்கப் பெற்றதை நக்கீரர் உட்படப் பலரும் கூறுகின்றனர். ஒருவரும் கண்டித்துப் பேசவில்லை ; கள் குடித்தல், புலால் உண்ணுதல், பரத்தையரோடு துய்த்தல் இவற்றைப் பெருமை யாகவும் நாகரிகமாகவும் கருதினர். ஆனால், வள்ளுவப் பெருந்தகை இவற்றைக் கண்டித்து, வரும் கேடுகளையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார். "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்" என்று வள்ளுவர் கூறியமை, வேள்விகளில் பலியிடுவதையே கண்டித்துப் பேசுகிறார் என்பதாகும். இதனால் சங்க காலத்துத் தத்துவம் வேதக் காலத்துத் தத்தவத்தினின்று வேறுபடுவதை அறியலாம். வள்ளுவரின் தத்துவங்களைக் கபிலரின் சாங்கியக் கோட்பாடு. இருமைக் கோட்பாடு (துவைதம்), விசிட்டாத்துவைதம் ஆகியவற்றி லும் காணலாம். 4. துவைதம் ''உலகமும் உயிரும் இறைவனால் ஆளப்பெற்று அவனுக் காகவே இருப்பவை என்பதும், ஆனால் அவற்றால் இறைவனுக்கு ஒருபயனும் இல்லை' என்பது துவைதக் கோட்பாடாகும். இறை வன் தனித்து நிற்பான். ஆனால் உலகும் உயிரும் இறைவனை வீட்டுத் தனித்திருக்க முடியாது. உலகம் உயிரோடு கலந்தும் வேறு பட்டும் நிற்குமென்பதே இருமைக் கோட்பாடு அல்லது துவைதம் ஆகும். 5. சாங்கியம் சாங்கியம் என்ற சொல்லுக்குப் 'பகுத்தறிதல்' அல்லது 'எண்ணுதல்' என்பது பொருளாகும். உலகம் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி அறிய கபிலர் உலகப் பொருள்களைப் பல கூறுபாடுகளாக ஆய்ந்து இருபத்தைந்து விதமான தத்துவங்களைக் கண்டார். இவையே சாங்கியத் தத்துவங்கள் அல்லது சாங்கியம் எனப்பெறும். உலகத்திற்கும் மனிதனுக்குள்ள உறவுமுறைகளை ஆய்ந்து, அவனுடைய துன்பங்களுக்கான காரணங்களைத் தெளிந்து அவற்றைப் போக்கும் வழிவகைகளைக் கூறுவதே சாங்கியம் ஆகும். உலகிலேயே பகுத்தறிவைக் கொண்டு உலகம், மனிதன் ஆகியவற்றை அளவை நூல்படி ஆய்ந்து வழிகண்ட நூல் சாங்கிய மே என்று ஜான்டேவிசு கூறுகிறார். உலக வரலாற்றிலேயே முதன் " முதலில் மனிதனின் மனதில் முழு விடுதலையும் சுதந்திரமும், வாழ்க்கையில் நம்பிக்கையும் ஏற்படச் செய்தது கபிலரின் சாங்கியத் தத்துவமே" என்று ரிச்சர்டு கார்பே கூறுகிறார், சாங்கியத்தின் சிறப்புத் தத்துவம் "உலக உற்பத்திக் கோட்பாடான "உலகம் இறைவனால் படைக்கப் பட்டது' என்பதைச் சாங்கியம் ஏற்கவில்லை. 'உலகம் பரிணாம வளர்ச்சி (படிமுறை வளர்ச்சியின்படி பிரகிருதியாகிய மூலத்திலிருந்து தோன்றியதாகும். உலகமும், உலக உயிரிகளும் தனித்து இயங்கு கின்றன' என்பது சாங்கியத்தின் முகாமைக் கோட்பாடாகும். கபிலர் கி.மு. 7 அல்லது 8வது நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் ராவார். சாதி, சமய வேறுபாடுகளைச் சாடி, மாந்த உணர்வோடு மனிதனைப் பார்க்கும் "கபிலர் அகவல். இவருடையது என்பர். இவருடைய தத்துவம் சிவஞான சித்தியார் முதலியவற்றில் பரவிக் காணப்படுகின்றது. புத்தம், சமணம், பிராமணியம் முதலிய சமயங்களிலும் சீனம் முதலிய வெளிநாடுகளிலும், சைவம், வைண வம் முதலிய சமயங்களிலும் பரவிக் காணப்படுகின்றது. எனவே, இந்தியத் தத்துவங்களின் அடித்தளமே கபிலரின் சாங்கியமாகிறது. 6. விசிட்டாத்துவைதம் விசிட்டம் என்ற சொல்லுக்கு 'மேலானது " என்று பொருள். உடலுக்கும், உயிருக்குமுள்ள தொடர்பு வேறு வேறு அன்று. அதாவது உயிர் வேறு, உடல்வேறு அன்று; அவை இரண்டுமே இரண்டறக் கலந்தவை ஆகும். கலந்து நிற்கும் இக்கோட்பாட்டை யுடையதே அத்துவைதக் கோட்பாடு ஆகும். ஆனால் உயிருக்கும் இறைவனுக்குமுள்ள இரண்டறக் கோட்பாடு உயிருக்கும் உடம்புக்குமுள்ள இரண்டறக் கோட்பாட்டை விட மேலானது அல்லது விசிட்டமானது என்பதே விசிட்டாத்துவைதம் ஆகும். சீவாத்மா பரமாத்மாவை விடக் குறைந்தது. இத்தகைய கருத்துக்கள் சங்க இலக்கியங்களில் துளிர் விடுகின்றன. ஆனால் பிற்காலத்தில் அவை சமைந்து "சமையம்' ஆயிற்று, ஆன்மா வீடுபேற்றினை அடைய வேண்டுமென்ற தாகம், முயற்சி சங்க காலத்தில் ஏற்பட்டதாகும். இம் முயற்சியைச் சமைந்து பின்னர் சிவனியம் (சைவம்) மாலியம் (வைணவம்) முதலிய சமையப் பிரிவுகளாயின. பிற்காலத்தவையான ஆசிவகமும், பௌத்தமும், சமணமும் கூட சங்க இலக்கியங்களிலுள்ள, குறிப்பாக திருக்குறளிலுள்ள தத்துவங்களை உள்ளடக்கி உள்ளன. எனவேதான் இந்தியாவில் தோன்றிய சமயத் தத்துவங்களை விடத் தமிழர் வினைக்கோட்பாடு (கர்ம விதி தனித்தன்மை வாய்ந்தது என்பர். ஆனால் ஆரியக் கலப்பால் வேள்வி முறையும், புராண, இதிகாசத் தெய்வங்களும் புகுந்து விட்டன. உண்மையான கருப்பொருளாகிய மெய்ஞ்ஞான மார்க்கம் மறைந்து விட்டது. ஆரியத்திற்கும் இதே நிலை ஏற்பட்டது. இதனால் தான் மெய்ஞ்ஞானத்தை நிலை நாட்ட உபநிடதங்கள் தோன்றின. ஆத்துமா, பரமாத்மா, ஒரே கடவுள் கொள்கைகள் தோன் றின. இவை தமிழரின் கோட்பாடே ஆகும். இவையாவற்றையும் பௌத்தமும் சமணமும் ஆசிவகமும் மறுத்தன, அதாவது பல் கடவுளும் இல்லை . ஒரே கடவுளுமில்லை என்று ''கடவுள் கோட்பாட்டையே மறுத்தன.'' ஆசிவகம் இது கருமவினைக் கோட்பாட்டையே மறுக்கிறது. இயற்கை யின் நியதிப்படியே யாவும் நடக்கும் என்பது ஆசிவகக் கோட்பாடா கும். அதாவது நன்மை செய்தவர் நன்மையும், தீமை செய்தவர் தீமையும் அடைவதில்லை. மாறாக நிகழ்வதுண்டு. இயற்கையின் நியதிப்படியே நடக்கும் என்பது தான் ஆசிவகக் கோட்பாடாகும், இதுவே " 'நியதிக் கொள்கை'' ஆகும். இதனைக் கணியன் பூங்குன்ற னார் புறநானூறு 192வது பாடலில் தெளிவாகக் கூறியுள்ளார். ஒரு மிதக்கும் பொருள் நீர் ஓடும் போக்கில் மிதந்தவாறே தானும் ஓடுவதைப் போன்றதுதான் நியதி (முறை) என்கிறார் கணியன் பூங்குன்றனார். இதுவே ஆசிவக மாகும். நியதியை எதிர்த்து எவரும் செயல்பட முடியாது. நியதியை எதிர்த்தோ , மீறியோ எவரும் செல்ல இயலாது என்பது தமிழரின் தத்துவம். இதைத்தான் கணியன் பூங்குன்றனார் மேற்கண்டவாறு விளக்குகிறார். அண்டமும், பிறவும் அதனதன் சுபாவத்தால் தோன்றியவை என்றும், முயற்சியால் (வினைப்பயனால்) தோன்றியவையல்ல என்பதும் ஆசிவகக் கோட்பாடே ஆகும். இதைப் போலவே பிறப்பு, இறப்புப் பற்றியும் ஆசிவகம் கவலைப்படவில்லை . எல்லா உயிரும் நியதிப்படி முடியும் என்பதே அதன் வீடுபேற்றுக் கோட்பாடாகும். 'மோட்சம்' என்பதைப் பற்றி அது கவலைப்படவில்லை. ஆசிவகம் வானியல், புவி இயல், உயிரியல் முதலியவற்றின் அடிப்படை யிலான தத்துவமாகும். சங்க காலத்தில் பத்து வகையான சமயத் தத்துவங்களிலிருந்த தாக மணிமேகலையின் ஆசிரியரான சாத்தனார் குறிப்பிடுகிறார். அவை : 1. அளவைவாதம், 2. சைவவாதம், 3. வைணவவாதம், 4. வேத, வாதம், 5. பூதவாதம், 6. ஆசிவகவாதம், 7. நிகண்டவாதம், பி, சாங் கியவாதம், 9, வைசேடி வாதம், 10. பிரமவாதம் ஆகியவை ஆகும். இவற்றுள் நிகண்டவாதம், பூதவாதம், ஆசிவகவாதம் ஆகிய முன்றும் வேதக் கோட்பாடுகளை மறுப்பனவாகும். எனவே இவற்றை 'நாத்திகவாதம்' என்றனர். மற்ற ஏழும் 'ஆத்திகவாதம்' எனப்பட்டன. சங்கமருவிய காலத்தவையான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலை யிலும் பல்வேறு சமயத் தத்துவங்கள் கூறப்படு கின்றன. இதனைத் தத்துவப் போராட்டக்காலம் எனலாம். புத்த, சமணத் தத்துவங்கள் சங்கமருவிய காலத்தில், கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் புத்தமும், சமணமும் தமிழகத்தில் கோலோச்சி நின்றன. எனவேதான் வள்ளுவரின் தத்துவங்கள் பௌத்த, சமணத் தத்துவங்களே என்றும், வள்ளுவரைப் பௌத்தர் என்றும், சமணர் என்றும் கூறிக் குழப்புவர். வள்ளுவர் காணும் ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், மாண்டி சேர்ந்தான், அறவாழி அந்தணன், வாலறிவன், ஐந்தவித்தான், எண் குணத்தான் முதலிய பெயர்கள் புத்தரையே குறிக்கின்றன என்பர். இவையே அருகனையும் சுட்டுவதாகவும் கூறுவர். குறிப்பாகப் ''பற்றற்றான்" என்பது புத்தனையும் அருகனை யுமே குறித்து நிற்கிறது என்பர். கொல்லாமை, கள்ளுண்ணாமை, அகிம்சை , மனவடக்கம், எண்குணம் முதலியன புத்தரும், அருகரும் போதித்தவை ஆகும். புத்தரும் அருகரும் வள்ளுவனும் கடவுளின் தோற்றம், வளர்ச்சி, உருவம் முதலியவற்றை விவரிக்கவில்லை. வள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றோடு நிறுத்திக் கொண்டார். புத்தரும், அருகரும் மும்மணி, தசசீலம் முதலியவற்றை மட்டுமே கூறிச் சென்றனர். இதுகாறும் சங்க காலத்திலிருந்த தத்துவங்களைப் பார்த்தோம். இனி நடைமுறையில் பின்பற்றப்பட்ட சமய நெறிகளைப் பார்ப்போம். 7. தெய்வ வழிபாடுகள் சங்க காலத் தமிழர்கள் தெய்வம் உண்டு என்று நம்பினர். ஆன்மா அழியாதது. மறுபிறவி உண்டு. ஊழ்வினைக்கேற்ப பிறவி ஏற்படும் என்றெல்லாம் நம்பினர். உருவவழிபாட்டையே பின்பற்றினர். குளித்துவிட்டு ஈரத்துணியோடு சம்மணம் போட்டு அமர்ந்து இறை வழிபாடு செய்வர். உருவ வழிபாட்டையே பின்பற்றிய அவர்கள் வாழ்விடத்திற்கேற்ற தெய்வங்களை வழிபட்டனர். குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளிலும் வாழ்ந்த மக்கள் திணைக்கேற்ற கடவுளை வழி பட்டனர். முறையே சேயோன், மாயோன், வேந்தன், வருணன் கொற்றவை முறையே ஐந்து நிலங்களுக்கும் தெய்வங்களாயினர். அ. முருகன் குறிஞ்சி மலர் பூக்கும் மேட்டு நிலமக்கள் வழிபட்ட தெய்வம், முருகன் ஆவார். திருமுருகாற்றுப்படை, பட்டினப்பாலை, பரிபாடல், கலித்தொகை ஆகிய சங்க நூல்களில் "முருக வழிபாடு பற்றிக் கூறப் பெற்றுள்ளது. திருமுருகாற்றுப்படையில் முருகன் கொற்றவையின் மகனாகப் போற்றப்படுகிறான். கலித்தொகையில் முருகன் சிவனுடைய மகனாகப் போற்றப்படுகிறான். கார்த்திகைப் பெண்கள் அறுவருக்கும் பிறந்தவன் முருகன் என்று பரிபாடல் கூறுகிறது. மேலும் பரிபாடலில் முருகன் குடிகொண்டுள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், பழமுதிர் சோலை, திருத்தணி ஆகிய அறு படை வீடுகளைப் பற்றிக் கூறப்படுகிறது. முருகனை . வழிபடும்போது பக்தர்கள் படைத்த படையல்களின் விவரமும் வழிபட்ட முறையும் திரு முருகாற்றுப்படையில் விவரிக்கப்பட் டுள்ளன. சங்கமருவிய காலத்து நூலாகிய சிலப்பதிகாரத்திலும் முருக வழிபாடு பற்றிய குறிப்பு வருகிறது .. மலர்கள் தூவி, மஞ்சள் சந்தனம் தெளித்து சிவப்பு அரளிப்பூவை மாலையாகத் தொடுத்துச் சூடி, நறுமணப்புகை காட்டி, குறிஞ்சிப் பாட்டுப் பாடி, "முருகா! வருக!" என வழிபட்டனரெனத் திருமுருகாற்றுப்படையில் விளக்கப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியரான நக்கீரர் முருகனைத் துதித்துப் பாடும்போது வேலாயுதன், சேவற் கொடியோன், யானையையும் மயிலையும் வாகனங்களாகக் கொண்டவன், ஆலமர் செல்வன், கொற்றவை மைந்தன், போர்க்கடவுள் என்றெல்லாம் போற்றுகிறார். முருகனைக் குறவர்கள், அந்தணர்கள் மந்திரங்களை ஓதி வழிபட்டனர்; கை கூப்பி உடலை வளைத்து மக்கள் வழிபட்டனர் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆ- மாயோன் முல்லை நிலக்கடவுளான மாயோனைப் (திருமால் பற்றி நற்றிணை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், சங்கமருவியகால ' நூலான சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் வருகிறது. சங்க காலத்தில் " திருமால் வழிபாடு இருந்தது. ஆனால் வைணவம் பற்றிய தனி வரலாறு இல்லை , மாயோன், மால், திருமால், நீலமேனியன், சங்கு சக்கரம் ஏந்தியவன், திருமகள் மார்பன் என்றெல்லாம் கூறப்படுறார். நற்றிணையில் இவர் ஆலிலை மேல் உறைபவர் என்று கூறப் பட்டுள்ளது. ஆயர்பாடியில் நடத்திய வேடிக்கை விளையாட்டுகள் பற்றிக் கூறப்படுகிறது. பாம்புப் படுக்கையில் படுத்துள்ளவர் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் திரு மாவின் இராமாவதாரம், கிருட்டிணாவதாரம், திருவிக்ரம் அவதாரம் பற்றிய அவதாரக் கதைகள் கூறப்பட்டுள்ளன. திருமால் காக்கும் கடவுள், பிரமன், காமன், ஆகியோருக்குத் தந்தையாவார். வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பலராம அவதாரம், பரசுராம அவதாரம் ஆகியவை பற்றி யும் பாற்கடலைக் கடைந் தமை பற்றியும், பரிபாடல் முதலிய சங்கப் பாடல்களில் கூறப்பட்டுள்ளன. கணவனும், மனைவியும், தங்கள் குழந்தைகளுடன் திருமால் கோயிலுக்குச் சென்று பூவும், புகையும் இட்டு வழிபட்டதாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. திருமாவின் பிறந்தநாளை ஆய்ச்சியர் -குரவை பாடி, ஆடிக்கொண்டாடினர். இ. வேந்தன் (இந்திரன்) திருமுருகாற்றுப்படை, பரிபாடல், ஐங்குறு நூறு முதலிய சங்க நூல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க மருவிய காலத்து நூல்களிலும் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடப்பெற்றுள்ளது. இந்திரன் வச்சிர ஆயுதம் ஏந்தி, யானை மீது வருவான் என்று திருமுருகாற்றுப்படையும். இவனுக்கு கோயிலிருந்தது என்று புறநானூறும் கூறுகின்றன. ஐராவதம் எனும் யானை மீது வருபவன் என்றும், வானவருக்கு வேந்தன் என்றும், அவனுக்காக இந்திரன் விழா' எடுத்த காட்சியையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. புகார் நகரிலிருந்த இந்திரன் கோயிலில் நடந்த இந்திரவிழா பற்றிஐங்குறுநூறு - கூறுகிறது. ஈ. வருணன் "வருணன் மேய பெருமணல் உலகம்" என்று தொல்காப்பியம் கூறுகிறது. எனவே, பழங்காலத் தமிழர் வருணன் என்னும் கடல் தெய்வத்தை வழிபட்டார்கள் என்பதையறியலாம். பாண்டிய மன்னரும் வருண வழிபாடு செய்த காட்சிகள் புறநானூற்றில் கூறப் படுகின்றன. நெய்தல் நில மக்களின் தெய்வமாகிய வருணனை நெய்தல் நில மக்கள் சுறாமீனின் கோட்டை நட்டு வணங்கினர். உ. கொற்றவை - பாலை நில மக்களின் தெய்வமான கொற்றவை முருகனுடைய தாய் என்று திருமுருகாற்றுப்படையிலும், போரில் வெற்றி பெற உதவும் வெற்றித் தெய்வமென்று நெடுநல்வாடையிலும் கூறப் படுகிறது. இத்தெய்வத்திற்குக் காவு கொடுத்து விழா எடுப்பர் என்பதைப் பதிற்றுப்பத்து கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் கொற்றவையை, வர்ணிக்கும் போது கவுரி, சதரி, சூலி, நீலி, மாவின் தங்கை , நெற்றிக்கண் உடையவள், பேய்க் கண்களை உடையவள், காட்டிலே வாழ்பவள் என்றெல்லாம் பேசப்படுகிறது. காட்டிடைக் கோயில் கொண்ட கொற்றவைக்குப் பாண்டிய நாட்டின் கோநகரான மதுரை யிலும் கோயிலிருந்ததெனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பின்னாளில் கொற்றவை வழிபாடு சக்தி வழிபாடாக மாறித் , தாய்த் தெய்வ வழிபாடாகிறது. சக்தி சிவனுடைய பாதியாகி, கொற்றவை சைவத் தெய்வமாகினாள். பின்னர் சக்தி வழிபாடே பத்தினி வழிபாடானது. ஊ, திருமகள் வழிபாடு செல்வத்திற்குரிய தேவதையாகத் திருமகள் வழிபடப்பட்டாள் திருமாலின் மார்பில் உறைபவள் திருமகள் என்று முல்லைப்பாட்டு குறிப்பிடுகிறது. யானைகள் திருமகளைப் பூவும் நீரும் கொண்டு தொழுது வழிபட்டதாக கவித்தொகை கூறுகிறது. திருமகளின் ஓவியங்களை மதிற் சுவர்களிலும் வாயில் நிலைகளிலும் உட்புறங் களிலும் வரைந்து வழிபட்டதாக மதுரைக்காஞ்சியிலும் நெடுநல் வாடையிலும் கூறப்படுகிறது. 8. பிற தெய்வ வழிபாடுகள்: அ. காமன் வழிபாடு கரும்பு வில்லும் மலர் அம்பும் கொண்டு, மீன்கொடியுடன் அன்னப்பறவை மீது வருபவன் காமன். அவன் மனைவி இரதி யாவாள். சங்க கால மக்கள் காமனுக்கு விழாவெடுத்து வணங்கினர். எமன் "கூற்றுவன்' என்று சங்க நூல்கள் எமனைக் குறிப்பிடுகின்றன. இவனுடைய உடன் பிறப்பாளன் சனி ஆவான்; எமனுக்கு எருமைக் கிடா வாகனமாகும். இவன் இரக்க மற்றவன் என்றெல்லாம் சங்க நூல்களில் கூறப்படுகின்றான். இவனையும் சங்க காலத் தமிழர் வணங்கினர். ஆ. சாத்தன், சதுக்கப்பூதம் அரிக்கும் சிவனுக்கும் பிறந்த சாத்தனைச் சங்க கால மக்கள் தொழுதனர். இவரே "ஐயனார்" எனப்பெறும் கடவுளாவார். காவிரிப் பூம்பட்டினத்தில் தெருக்கள் கூடும் சந்திப்பில் வழிபட்டனர். வஞ்சி நகரத்திலும் சதுக்கப் பூதத்திற்குக் கோயில்களிலிருந்தன. கற்பிழந்த பெண்களை யும், பொய் பேசுவோரையும், நேர்மையற்றவரையும் சதுக்கப் பூதம் அழிக்கும் என நம்பி வழிபட்டனர். இ. நடுகல் வழிபாடு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இறந்தோரை வழிபடும் வழக்கம் தமிழகத்திலிருந்தது. இதற்காக கோயிலெடுத்துக் கும்பிட்டார்கள். போரில் வீரமரணமடைந்த வீரருக்கு நடுகல் எடுத்து வழிபடும் விழாவைத் தான் நடுகல் விழா என்றனர். இதற்கான கல்லெடுக்கும் விழாவை நடத்தினர். கல்லில் இறந்துபட்ட வீரனின் பெயரும் புகழும் எழுதி, மயில் இறகு, மலர்கள் ஆகியவற்றைச் சூடி, கள் (மது), பால் சோறு, பூக்கள், நெல்மணிகள் ஆகியனதூவி, நடுகல்லுக்கு மேலே வெள்ளைத் துணி போர்த்திய பந்தல் இட்டு வழிபாடு செய்வர் என்று தொல்காப்பியம் கூறுகிறது. காலப்போக்கில் தவசீலருக்கும் சித்தர்களுக்கும் அரசர்க்கும், பத்தினிகளுக்கும் நடுகல் எடுக்கும் வழக்கம் ஏற்பட்டன. இதுவே பெயர்பெற்ற பள்ளிப் படைக் கோயில் ஆகியது. புதைகுழியிலிருந்து தான் "கோயில் உருவானது என்னும் கருத்தும் இதையே குறிக்கும். ஈ. இயற்கை வழிபாடு - ஆதியில் மனிதன் கண்டு அஞ்சியதன் காரணமானவை, அன்பு கொண்டவை ஆகியவற்றை வழிபட்டான் என்று பார்த்தோம். ஆனால் சங்க காலத் தமிழன் நாகரிகமும், பண்பாடும் நிறைந்தவன். "575 நூலறி புலவர்களும் 40 நூல்களும் சங்க காலத்திலிருந்தன, உலகறிந்த வேந்தர்களும் மூதறிஞர்களும் இருந்தனர். ஆயினும் தொல்பழங்கால வழிபாட்டு முறைகளையும் விடாது சூரியன், நிலா, விண்மீன்கள், மலைகள், ஆறுகள், கடல்கள், இடி, மின்னல், புயல், மேகம் முதலிய வற்றையும் தீ, பாம்பு முதலியவற்றையும் வழிபடும் வழக்கத்தைத் தவிர்க்கவில்லை, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ஞாயிறு, திங்களைப் போற்றியே தம் நூலைத் தொடங்குவதால் இதனை அறிகிறோம். விலங்குகளையும் மரங்களையும் கூட வழிபட்டனர். ஆலமரத்தைத் திருமாலாகவும் கொன்றை மரத்தைச் சிவனாகவும் கடம்ப மரத்தை முருகனாகவும் வழிபட்டனர்; எருது, காளை, யானை முதலிய விலங்குகளும், மயில், கருடன் முதலிய பறவைகளும் தொடர்புடைய கடவுளரின் வாகனங்களென வழிபட்டனர். உ. வேள்விவேட்டல் வேதமுறைகளைப் பின்பற்றி வேள்வி செய்யும் வழக்கமும் தமிழரிடையே இருந்தது. முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய வேந்தன் வேதத்தில் கூறப்பட்ட விதிகளின் படி பந்தக் கால் நாட்டி, குழிகள் தோண்டி, வேள்வி செய்தான்; குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் தனது சோழ நாடெங்கிலும் வேள்வி செய்யப் பணித்தான். சங்க கால முதல் வேந்தனான கரிகாற் பெருவளத்தானும் வேள்வி செய்து தனது பாவத்தை அறுத்தான் எனப் புறநானூறு கூறுகிறது. வேள்வியின் போது வேள்வித் தீக்கு நெய்சொரியும் பெண் களைப் பற்றியும், தோலுடை அணியும் மன்னர்களைப் பற்றியும் வேள்விக்குப் பின் பெருவிருந்து படைப்பது பற்றியும் மூலங்கிழார் விளக்குகிறார். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை தன் மனைவியுடன் நோன்பு நோற்று வேள்வி கேட்டான் என்றும், இதனால் மகப் பேறு பெற்றான் என்றும், பதிற்றுப்பத்து கூறுகிறது. சோழன் பெரு நற்கிள்ளி வேள்வி வேட்டுப் புகழ்பெற்றதால் "இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளி" என அழைக்கப் பெற்றான், ஊ, கோயில் வழிபாடு கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே தமிழகத்தில் கோயில்க ளெழுந்தன என்பது பொருந்தாக் கூற்று. பல்லவர்கள் பாறைக் கோயில்களையும், குடைவரைக் கோயில்களையும் கட்டுமானக் கோயில்களையும் படைத்தனர். அவை இன்றும் அழியாமலிருக்க கின்றன. இதை வைத்து, அழிந்துபட்ட சங்ககாலக் கோயில்களைப் பற்றி அறியாதார் பல்லவர் காலம் முதற்கொண்டுதான் தமிழகத்தில் கோயில்களெழுந்தன எனக்கூறும்கூற்று பொருந்தாக் கூற்றே ஆகும், சங்க காலத்தில் கோயில்களைக் கோட்டம்', "நகரம்' என் றெல்லாம் அழைத்தனர். முருகன் கோயிலை அணங்குடை முருகன் கோட்டம்' எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் அமரர் தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம், பகல்வாயில் உச்சிக் கிழான் கோட்டம், வச்சிரக் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற் கோட்டம், புறம்பணையான் வாழ்கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலக்கோட்டம் எனப் பல்வேறு கோயில்களைப் பற்றிப் புறநானூறு குறிப்பிடுகின்றது. சமணர் வழிபடும் அருகன் கோயிலை ''நிக்கந்தக் கோட்டம்" என்பர். சங்க காலக் கோயில்கள் செங்கல்களாலும் மரத்தாலும் கட்டப் பெற்றவை ஆகும். இதனால்தான் இவற்றைச் "சுடு மண்ணோங்கிய நெடு நிலைக்கோட்டம்" எனச் சங்க இலக்கியம் கூறுகிறது. இக்காலக் கட்டடக்கலையறிஞர்கள் நூலறி புலவர், நூல்நெறிமாக்கள்" என்றும் அழைக்கப் பெற்றனர். "மயமதம்" என்ற சமற்கிருத நூலில் சங்க காலக் கட்டட அமைப்புகளைப் பற்றி அறியக் கிடக்கிறது. சங்க காலத்தில் மாயோனுக்கு அழகர்மலையில் கோயிலிருந் ததைப் பற்றிப் பரிபாடல் கூறுகிறது. மதுரையிலிருந்த சிவன் கோயில் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. முருகனுக்கும், காளிக்கும் கூட காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில்களிலிருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. துர்க்கைக் கோட்டம் பற்றி மணிமேகலை கூறுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகள் பற்றிய குறிப்புகளைக் கொண்டு, இத்தகைய கோயில்கள் இயற்கைக் கேடுகளால் அழிந்து விட்டிருக் கலாமெனத் தோன்றுகிறது. சோழன் செங்கணான் காவிரியின் இருமருங்கிலும் கட்டிய 78 கோயில்கள் கரக்கோயில், மாடக் கோயில், மரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங் கோயில், மணிக் கோயில், ஆலக்கோயில் எனும் ஏழுவகையின் என்று அப்பர் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். எனவே, சங்க காலத்தில் கோயில்களும் கோயில் வழிபாடும் இருந்தன என்பது தெளிவாகிறது. இக்கோயில்களில் காலப் பூசை களும் விழாக்களும் நடந்தன. எ. நாகரிகமும் பண்பாடும் முன்னுரை சங்க கால வரலாறு என்பது அக்கால மக்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உள்ளடக்கியதே ஆகும். உள்ளத்தின் மாண்பைக் காட்டுவது பண்பாடு என்றும் புறத்தின் எச்சங்களைக் கொண்டது நாகரிகமென்றும் மேலைநாட்டார் விளக்கம் தருவர். குறிப்பாக நாகரிகம் நகரங்களிலும் பட்டினங்களிலுமே தோன்றி வளர்ந்தது ஆகுமென்பர். அறிவியலில் சிறந்த முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளையே 'நாகரிக நாடுகள்' என்று அழைப்பர். அவர்களின் சமூக வாழ்க்கையில் கையாளப்படும் குண நலன்களையே பண்பாடு என்பர். ஆனால், சங்கத்தமிழர் கண்ட பண்பாடும், நாகரிகமும் இவ்வாறு இருவேறு கூறுபாடுகளாய் இல்லாமல் அகமும் புறமும் பண்பாடும் நாகரிகமே மிளிர்வதைக் காணலாம். 'நாகரிகம்' இச்சொல்லை ஐயன் திருவள்ளுவரும் கையாண் டுள்ளார். அவர் கூறும் கூற்றே தமிழர் கண்ட. நாகரிகமாகும், அதாவது, கண்ணோட்டம் (தாட்சண்யம் உள்ளவரே நாகரிக மானவர் என்பது விளங்குகிறது. பிறர் செய்த எத்தகைய குற்றத்தை யும் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவமுடையவரே நாகரிகமுடையவர் என்பது இதன் பொருளாகும். தமிழரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. அது அறம், பொருள், இன்பம், ஆகிய பண்புகளைக் கொண்டது. அறத்தை அடிப்படையாகக் கொண்ட அக வாழ்வு பண்பாடு எனவும் பொரு ளையும் இன்பத்தையும் நுகரும் வாழ்வு நாகரிகம் எனவும் கூறுவர். இவை இரண்டுமே இணைந்ததுதான் சங்க காலத் தமிழரின் நாகரிக மும் பண்பாடுமாகும். சங்கத் தமிழர்களின் நாகரிகம் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் எனும் நானிலத்திலும் சிறந்து நின்றதாகும். இடையிலே புகுந்த பௌத்தமும், சமணமும் இல்லறத்திலும், இன்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வாழ்வின் நிலையாமையைக் கூறி ஒரு இருண்ட சூழலை உண்டாக்கிய இச் சமயங்களால் பண்பட்ட தமிழ்ச்சமுதாயத்தின் இல்லற இன்பத்தை குலைக்க முடியவில்லை. அதற்கடுத்தாற் போல் வந்த ஆரிய வைதீக வெள்ளத்தாலும் இது அடித்துப் போகவில்லை. இல்லற வாழ்க்கை அறத்தின் வழி நின்ற விருந்தோம்பல் ஆகிய பண்பட்ட ஒன்றாகும். தென்புலத்தார், தெய்வம், விருந்தோம்பல் ஆகிய பண்பாடு களின் பட்டறையாகத் திகழ்ந்ததே தமிழரின் இல்லறம். காதலும், களவும் கடி மணமாக மலர்ந்து கூடிவாழும் குடும்பமும், விருந்தோம்பி வேளாண்மை செய்யும் செயலும் யாதும் ஊரே, யாவரும் கேளிரென உலக உடன்பிறப்பான்மையை உருவாக்கியது. இல்லற மல்லது நல்லறமன்று என்னும் நாகரிகமும் பண்பாடும் கொண்ட இல்லறத்தில் மகளிர்நிலை உச்சிமேல் வைத்து மெச்சத் தகுந்தாகும். சங்க கால மகளிர் நிலை - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் மகளிர் பண்புகளாகுமென இறையனார் அகப்பொருள் குறிப்பிடுகிறது, இக்காலப் பெண்களுக்கு அணிகலனாய்த் திகழ்ந்தது கற்பு ஆகும். கற்பில் சிறந்தோரைக் கற்புக்கரசி என்று போற்றினர். கற்பின் அடிப்படையில் கணவனோடு உடன்கட்டை ஏறியவர்களுக்காக 'மாசாத்திக்கல்' எடுத்து வழிபட்டனர். கற்புத் தெய்வம் கண்ணகிக்கு மன்னர்களும் விழவெடுத்து வணங்கினார்கள். கற்புடைய மகளிர் நன்னெறியில் வழுவாது நடப்பாள்; தலைவனைப் பிரிந்திருக்கும் -- போது தலையில் பூச்சூட மாட்டாள்; கண்ணிமைகளில் அஞ்சனம் பூச மாட்டாள்; உணவையும் உறக்கத்தையும் மறந்து விடுவாள்; இதனால் உடல் மெலிந்து வளை கழன்று ஓடும் என்றெல்லாம் அவளுடைய பிரிவாற்றாமை பற்றிப் பேசப்படுகிறது. கற்பை மூன்று விதமாக பிரித்துக் கூறுவார்கள். கணவன் இறந்த உடனே உடன் உயிர் நீப்பது முதல்நிலைக் கற்பு' என்றும், அவனை எரியூட்டும் போது அத்தீயில் விழுந்து மாள்வது (உடன்கட்டை ஏறுதல்) இடை நிலைக்கற்பு என்றும், கணவன் இறந்துவிட்ட பின்பு நோன்பிருந்து தலை மயிரை மொட்டை யடித்துக்கொண்டு, உணர்ச்சியைத் தூண்டும் உணவும், படுக்கையுமின்றி துறவு வாழ்க்கை வாழ்ந்து மாள்வது கடைநிலைக்கற்பு என்றும் அழைக்கப்பட்டது. இதனால், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் சங்க காலத்தில் இல்லை என்பது புலனாகிறது, பெண்கல்வி சங்க காலப் பெண்கள் ஆண்களோடு சமமாகக் கல்வி பயின்றனர். இதனால் தான் 473 சங்கப் புலவர்களில் 30 பெண் புலவர்கள் இருந்தார்கள். சிலர் தூதுவர்களாகவும் போர்க்களம் புகுந்தும் அறவுரை கூறும் ஆன்மவலு படைத்தவர்களாகவும் விளங்கினர். வீரம், நுண்ணறிவு (விவேகம்) முதலியவற்றிலும் ஆண்களுக்கு நிகராக விளங்கினர். துரத்தி வந்த புலியை முறத்தாலடித்த வீரப் பெண் மணியையும், அரசவை சென்று நீதி கேட்ட அச்சமற்ற பெண் மணியையும் சங்க கால மகளிர் வரிசையில் பார்க்கிறோம். பெண்பாற் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், நாகையார், நப்பசலையார், நன்முல்லையார், முடத்தாமக்கண்ணியார், வெள்ளிவீதியார், பொன்முடியார் முதலியோராவர். பெண்களின் வீரம் சங்க காலத் தாய் தன் மகன் வீரனாக வாழ வேண்டுமென்ற வீரப் பண்பில் தோய்ந்தவள். இதனை விளக்க ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண்பாற் புலவர் புறநானூற்றில் பாடிய பாடலொன்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். 'வீரத்தாயின் மகன் முதுகிலே புறப் புண்பட்டு இறந்து விட்டான்' என்று கேள்விப்பட்டதும், வாளேந்திப் போர்க்களம் சென்று 'அவன் புறப் புண்பட்டு மாண்டிருப்பானே யானால் அவனுக்குப் பால் கொடுத்த மார்பகத்தைத் தன் வாளால் அறுத்து எறிவேன்' என்று வஞ்சினம் கூறினாள். ஆனால் அவன் மார்பிலே விழுப்புண் பட்டு மடிந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் என்று ஒக்கூர் மாசாத்தியார் கூறுகிறார். தன் வயிற்றைப் புலியிருந்த குகை என்கிறாள். இதனால் மகளிரின் வீரப்பண்பு எத்தகையதென உணரலாம். திருமணம் பெண்ணின் பருவங்கள் ஏழு ஆகும். அவை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பனவாகும். இவற்றில் ஐந்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையைப் பேதை என்றும், ஐந்து முதல் பத்து வயதிற்குட்பட்ட பெண்ணைப் பெதும்பை என்றும், பதினைந்து வயதான பெண்ணை மங்கை என்றும், பதினாறு முதல் இருபதுவரையிலான வயதுடைய பெண்ணை மடந்தை என்றும், இருபத்தைந்து முதல் நாற்பது வரையிலான வயதுடைய மகளிரை அரிவை என்றும், நாற்பத்தைந்து முதல் அறுபது வயது வரையுள்ள மாதரைத் தெரிவை என்றும், அறுபது வயதும் அதற்கு மேலும் உள்ள மூதாட்டியரை பேரிளம் பெண் என்றும் குறிப்பிடுவார்கள். இதில் நாம் காண வேண்டிய சொல்லாட்சி அறுபது அகவை நிரம்பியவரையும் இளம் பெண் என்று அடைமொழியோடு பேரிளம் பெண் என்றுதான் குறிப்பிடுகின்றனர். எனவே சங்ககால மகளிர் உள்ள அழகோடு உடலழகும் குன்றாது வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. அதற்குக் காரணம் அவர்களின் நிலையான இல்வாழ்க்கை அறத்தின் மேல் கட்டப்பட்டதே ஆகும். பெண் மங்கையாகவும் மடந்தையாகவும் மலர்ந்த பின்பே திருமணம் செய்வார்கள். அது பெரும்பாலும் காதல் திருமணமாக இருக்கும். ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த உடல், ஒத்த மனநிலை யுள்ளவர்களுக்கே திருமணம் ஆகும். குழந்தை மணம், முதியோர் மணம் இவை சங்க இலக்கியங்களில் காணப்பெறவில்லை, மண மக்களுக்குப் பத்துப் பண்புகள் நிறைந்திருக்க வேண்டுமென்பதைத் தொல்காப்பியர் கூறுகிறார். அவையாவன, பிறப்பே குடிமை’ ஆண்மை ஆண்டொடு உருவுநிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடுதிருவென முறையுறக் கிளந்த ஒப்பினதுவகையே அதாவது நற்குடியில் சிறந்த பிறப்பாகப் பிறப்பது, ஆண்மை யோடு இருப்பது, அருளுடைமை முதலிய நற்பண்புகளிருக்க வேண்டு மென்பதாகும். கடிவரை. வரைவு மன்றல், மணம், வதுவை என்னும் சொற்கள் சங்க கால இலக்கியங்களில் திருமணத்தைக் குறிப்பன வாகும். 'கலியாணம்' பிற்காலத்தில் கையாண்ட வழக்காகும். 'வேட்டல்' கம்பராமாயணத்தில் கையாளப்பட்ட சொல்லாகும். மணமகனின் தாய்மாமன் (மாதுளன்) பெண் கேட்கப் போவான், பொன்னும் பொருளும் மணப்பெண்ணுக்குப் பரிசமாகக் கொடுத்து மணம் பேசுவர். மணமகன் பெண் வீட்டாரிடமிருந்து எதையும் வாங்க மாட்டான். திருமண மேடை பச்சைப் பந்தலாக இருக்கும். புதுமணல் பரப்பி யிருப்பர். நாளும், கோளும், நிமித்தமும், பார்த்துத்தான் திருமண நாளை நிச்சயிப்பார்கள். வளர்பிறையில் திங்கள் உரோகினியைச் சேர்ந்திருக்கும் நாளில் அதிகாலை திரு மணம் நடக்கும். அதிகாலை மணமகள் குடத்தினை ஏந்தி நிற்பாள். அது சமயம் மக்களைப் பெற்ற நான்கு மகளிர் மணமக்களை வாழ்த் துவர். பின்னர் திருமணம் நடக்கும் இதில் சடங்குகளோ, புரோகிதரோ எரியோம்புதலோ (ஓம குண்டம்) தீவலம் வருதலோ கிடையாது. கடவுளைப் போற்றி வழிபட்டனர். வாழ்த்துரை வழங்குவர் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதில்லை . இது ஆரியச் சார்பற்ற எளிய திருமணமுறை ஆகும் என்று பி.டி. சீனிவாச ஐயங்கார் போற்றுகிறார். சமயச் சடங்குகள் இல்லை , ஆனால் கசங்காத கஞ்சி போட்ட ஆடையை மணமகள் உடுத்துவாள். இருவரும் மலர் மாலை சூடுவர். மங்கள வாத்தியங்கள் முழங்கும். இத்தகைய திருமணம் சங்கப் பாடல்கள் இரண்டில் விளக்கப் பெற்றுள்ளது. ஆனால் தாலி கட்டியதைப் பற்றிய விளக்கமில்லை. ஆயினும், மணமகனை வாழ்த்தும் நான்கு மகளிரைப் பற்றிக் கூறும் போது அவர்களை 'வாலிழை மகளிர் நால்வர் கூடி' என்று குறிப்பிடுவதால் அதற்கு விளக்கம் கூறும் அறிஞர்கள் 'வாழை' என்பது அரிய இழை அணி என்று பொருள் கொண்டு திருமண நான் என்கின்றனர். 'திருமணம் ஆகிவிட்டது' என்பதையறிய மணமகள் அணிந்த நாண் (இழை) என்று கூறுவர். இதனை மணமகன் அணிவித்தானா அல்லது நால்வர் அணிவித்தனரா என்ற ஐயத்திற்கு விடை இல்லை. திருமணத்தின் போது வாழ்வரசியர் நால்வரும் மலர் மாலையையும் வெண்ணூலையும் சூட்டினர் என்று (அகநானூறு 136:13-14) கூறப்படுவதால் வாலிழை அல்லது மங்கலநாண் கட்டினார்கள் என்று கூறலாம், சிலப்பதிகாரம் இதனை மங்கலவணி என்கிறது (சிலம்பு 1:47 சங்கமருவிய காலத்தில் பூமாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட மணமக்கள் தீவலம் வரும் பழக்கமும் ஏற்பட்டதைச் சிலப்பதிகாரத்தால் அறிகிறோம். தீவலம் வருவதும், இதற்கு அந்தணன் வழிகாட்டுவதுமான ஆரியச் சடங்குகளும் புகுந்து விட்டன. இவ்வாறு திருமணத்தில் இணைந்த மணமக்கள் இல்லற மேற்று நன்மக்களைப் பெற்றுப் பிறவிப் பயனை அடைவர். இதனை ஐயன் வள்ளுவரும், ''மங்கலமென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு" (குறள் 40) என்கிறார். பழக்க வழக்கங்கள் சிலம்பு கழி நோன்பு திருமணத்திற்கு முன் அணிந்திருந்த சிலம்பைத் திருமணமான பிறகு, ஒரு நன்னாளில் அச்சிலம்பை நீக்கும் விழா ஒன்று நடை பெறும். அதனைச் "சிலம்பு கழி நோன்பு'' என்பர். இதில் வயது முதிர்ந்த இல்லத்தரசியர் சடங்குகள் செய்து சிலம்பை நீக்குவர். மண மகள் இல்லறம் தொடங்குமுன் இந்த நோன்பு நடைபெறும் (ஐங்குறு நூறு 3991-2; அக். 385 17-18; நற்றிணை , 27:10-11) இல்லற மேற்ற பின்னும் வேறுவிதச் சிலம்பை இவள் அணிவதுண்டு, திருவிளக்கு வழிபாடு நெடுநெல்வாடையில் (41-44) திருவிளக்கு வழிபாடு பற்றிக் கூறப்படுகிறது. சங்க கால மக்கள் விளக்கேற்றி அதனை வழிபடு வார்கள். தீ ஓம்புதல் வேறு, விளக்கேற்றுவது வேறாகும். மலை மீதும், குன்றுகள் மீதும் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் இன்றைக்குமுள்ளது. ஒரு நல்ல காரியம் தொடங்குமுன்பு விளக் கேற்றுவதும், அதனைச் சுற்றி நெல்லையும் மலரையும் தூவுவது முண்டு. வாழ் மனைகளில் விளக்கேற்றிக் குல தெய்வத்தை வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. பிறை தொழுதல் திங்களைப் போற்றுதும் என்றுதான் சிலப்பதிகாரம் தொடங்கும், எனவே, திங்களை வணங்குவது பண்டைய பண்பாடு. பருவ மடைந்த பெண்களுக்கு நல்ல கணவனும், சிறந்த வாழ்க்கையும் அமைய வேண்டும் என வேண்டிப் பிறையினைத் தொழுவது சங்க கால மரபு. திங்களைப் பெண் தெய்வமாகக் கருதி இவர்கள் போற்றினர் (குறுந் 128:5, மதுரை 193). பத்தினி வழிபாடு கற்புடைய மங்கையரைப் பாராட்டிப் போற்றுவதுண்டு கண்ணகிக்கு கல் எடுத்து வழிபட்டதும் பத்தினி வழிபாடே ஆகும். உடன்கட்டை யேறிய பத்தினிப் பெண்டிற்கு மாசாத்திக்கல் நட்டு வழிபட்டனர். காலப்போக்கில் இது சக்தி வழிபாடு ஆயிற்று. மலர் வழிபாடு நானிலவழிபாடும் தெய்வங்கள் இயற்கையை வழிபடும் பாங்கே ஆகும். மலரை வழிபடுவதும் அது போன்றதே. கற்புக்கு அடையாள மாக முல்லை மலரையும், காதலன் காதலி ஆகிய இருவரின் ஓர் உயிரின் சின்னமாகக் குறிஞ்சி மலையும் வளம்மிக்க வாழ்க்கையின் சின்னமாகக் குவளையையும் தாமரையையும் பல்வேறு மலர்களையும் தமிழர்கள் வழிபட்டனர். இவற்றைத் தலையில் சூடியும் மாலையாகப் போட்டும் மகிழ்ந்தனர். போரின் பல்வேறு நிலைகளைப் புலப்படுத்தவும் தமிழர்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, தும்பை, உழிஞை, வாகை போன்ற மலர்களைச் சூடினர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் நாகரிக நாடுகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை எவரும் விரும்புவதில்லை. ஆனால் தமிழகத்தின் வெப்பத்திற்கு இது ஒரு உடல் பாதுகாப்புச் செயலாகவுள்ளது. பிள்ளை பெற்ற தாய்மார்களும் தெய்வ வழிபாடு செய்யும் முன்னும், போருக்குப் புறப்படும் பொழுதும் திரும்பி வந்த பின்னும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள் என்பதை சங்க இலக்கியங்களால் அறிகிறோம். பண்டைய கிரேக்க உரோமானியர் 'ஆலிவ் எண்ணெய் தேய்த்துக் குளித்தார்களென அறிகிறோம். வெள்ளணி விழா (பிறந்த நாள் விழா) சங்க கால மன்னர்களும் மக்களும் தாங்கள் பிறந்த நாளை விழா எடுத்துக் கொண்டாடினர். மன்னன் பிறந்த நாளைச் செங்கம் மக்கள் சிறப்பாகக் கொண்டாடியதாக மாங்குடி மருதனார் தனது மதுரைக்காஞ்சியில் (618 - 617) குறிப்பிடுகிறார். கார்த்தகை தீபம் முருகனுக்குக் கார்த்திகையில் விளக்கேற்றி வழிபாடு செய்வது சங்க காலத்திலுண்டு. வீதிகளிலும் வீட்டின் கூரைகள் மீதும் சிறுசிறு விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுவார்களென அக நானூறு கூறுகிறது. செல்வர்கள் கார்த்திகைத் தீபத்தன்று பல்வேறு பொருள்களைத் தானமாகக் கொடுப்பார்களென நற்றிணைகூறுகிறது. மார்கழி நோன்பு கன்னிப் பெண்கள் மார்கழியில் நோன்பிருந்து நல்ல கணவரை அடைய வேண்டித் தெய்வம் தொழுவர் என்று நற்றிணைகூறுகிறது. தைநீராடல் தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் விழா கொண்டாடிப் படும். அப்பொழுது நீராடிப் புத்தாடை அணிந்து தமிழர் மகிழ்வோடு கொண்டாடினர். இது திருவாதிரைத் திருநாளாகக் கொண்டாடப் பட்டதாகப் பரிபாடல் கூறுகிறது. கழிகல மகளிர் கணவன் இறந்தவுடன் இறக்கும் மனைவியும், உடன்கட்டை ஏறும் மனைவியும் முதல், இடைக் கற்புடையவராகக் கொள்ளப் பட்டனர். ஆனால் கணவனை இழந்து கைம்பெண்ணாக வாழும் மகளிர் கூந்தல் களைந்து குறுந்தொடி நீக்கி, முக்காடிட்டு முலையிலே அமர்ந்து துறவி போல் வாழும் கைம்பெண்டிரைக் கழிகலமகளிர் என்பர். வாளால் வெட்டி அடக்கம் செய்தல் ஆண் மகவு பிறந்தவுடன் இறந்துவிட்டாலோ அல்லது இறந்தே பிறந்தாலோ அந்த பிணத்தை வாளால் வெட்டியே புதைப்பர். ஆண் வீரத்தின் சின்னம், அவன் விழுப்புண் பட்டே சாக வேண்டுமென்ற கோட்பாட்டில்தான் இவ்வாறு செய்தனர். வெட்டிய பின் போர் மறவன் போர்க்களத்தில் மாண்டு வீர சுவர்க்கம் போனானே அதே இடத்திற்கு நீயும் போ என்று கூறிக்கொண்டு புதைப்பார்களாம் (புறம் 74, 93:7-11). கல் எடுப்பு (நடுகல்) வீரராக இறந்தவருக்கு நடுகல் நட்டு வழிபடும் மரபுக்குத் தான், கல் எடுப்பு என்பார்கள். கல்லெடுத்து நீராடி, பூச்சூடி, பெயர் எழுதி நட்டு, வெண்மையான துணியினால் பந்தலிட்டு, பூவும் மலரும் மயிலிறகும் சூடி நெல் தூவி வழிபடுவர். இவ்வாறு காலப்போக்கில் அரசர்கள் இறந்த இடத்தில் கட்டிய கோயில்களை பள்ளிப்படைக் கோயில்கள் என்றனர். கண்ணகிக்குச் சிலை எடுத்ததும் ஒருவகை நடுகல்லே ஆகும். கலந்தொடா மகளிர் பெண்கள் பூப்பெய்திய பின் மாதவிடாய் ஏற்படும் காலத்தில் வீட்டுப் பண்டங்களை (ஏனங்களை) தொடாமல் ஒதுங்கி இருப்பர். அப்பொழுது அவர்களுக்குக் கலந்தொடா மகளிர் என்று பெயர். கைம்மை நோன்பு கணவனை இழந்த பெண்கள் நெய் உண்பதில்லை. தண்ணீர்ச் சோற்றைப் பிழிந்து எடுத்துக்கொண்டு, அரைத்த எள்ளையும் புளியையுங் கூட்டி, வெந்த வேளைக் கீரையுடன் சேர்த்து உண்பார்கள். பாய்மேல் படுப்பதில்லை. தலையை மழித்துக் கொள்வர். முக்காடிட்டு வெள்ளாடையோடு இருப்பார், தாலிச்சரடும் திலகமும் மஞ்சள் பூச்சும், பூச்சூடலும் மற்ற ஒப்பனைகளையும் கைவிட்டு விடுவர். இதுவே கைம்மை நோன்பு ஆகும். சங்க கால மக்களின் வாழ்வியல் நோக்கம் சங்க கால மக்கள் ''வாழ்வே மாயம்" என்ற கோட்பாட்டை அறியாதவர்கள். வாழ்வே நிலையானது, இன்பமயமானது எனக் கொண்டனர். எனவேதான் அவர்களின் அகவாழ்வில் காதலும், புறவாழ்வில் வீரமும் இருந்தன. அறம் வழி நின்று அகத்தையும், புறத்தையும் துய்த்தனர். பொருள் தேடி இன்பம் துய்த்தலே அவர் களின் பொருளியல் கோட்பாடு ஆகும். எனவேதான் அவர்களுடைய வாழ்க்கை இன்பமானது. அதைவிட இன்பமானது கடிமண வாழ்வு (இல்லறம்) என்றிருந்தனர். இல்லறத்தில் மக்கள்பேறு கண்டு, விருந் தோம்பி, செழுங்கிளை தாங்கி, யாதும் ஊரே, யாவரும் கேளிரென வாழ்ந்தனர். புறவாழ்க்கையில் தாய், தந்தை, அரசன், கொல்லன், ஆகியோரிடம் கடமைகளைச் செய்தனர். பெற்று வளர்த்தல் தாயின் கடமை. பெரியோனாக்குதல் தந்தையின் கடமை. வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனின் கடமை. போரில் வெற்றி பெறுதல் இளைஞனின் கடமையெனக் கொண்டனர். நன் மக்களைப் பெற்றோர் உலக இன்பங்களைப் பெறுவர். இன்றேல் புத் என்னும் நரகத்திற்குப் போவார் என்று நம்பினர். வாழ்க் கைத் துணையாகக் கொண்ட மனைவியும், மக்களும், கணவரும் தங்களனைவருக்கும் துணையாக நின்று அறம் வழி செலுத்த ஆண்டவனைத் தொழுது துணையாகக் கொண்டனர். அவர்களின் நடுகல் வழிபாடும் சக்தி வழிபாடும் தென்புலத்தாரைத் தொழும் வழி பாடுகளாகும். தெய்வ வழிபாடும் சடங்குகளும், நம்பிக்கைகளும் அவர்களுக்கு மனநிறைவைக் கொடுத்தன. இறந்த பின்பும் துறக்கம் மோட்சம்) போக வழி வகுத்தன. துறவு பூண்டு உலகைத் துறந்து வாழவேண்டும் என்ற காஞ்சித்திணை சங்க காலத்தில் இல்லை. வாழ்வாங்கு வாழ வேண்டும்; மகிழ்வு நல்நோக்கத்தோடு வாழ வேண்டும்; எல்லோரும் இன்புற்றிருக்க வாழ வேண்டும். நல்லது செய்ய இயலாதாயின் அல்லது செய்வதை அகற்றி வாழ வேண்டு மென்பதே அவர்களின் வாழ்க்கையின் கோட்பாடாகும். காலப்போக்கில் வேற்றுச் சமயங்களின் ஆதிக்கத்தாலும் ஆரியத்தின் தாக்கத்தாலும் இன்பமயமான உலகம் துன்ப மயமாக வும், உலகே மாயம் என்றும் மருவி விட்டது. கள் குடித்த சங்கத் தமிழன் அது பஞ்சமா பாதகத்தின் ஊற்றுக்கண் எனக் கொண்டான். கற்புடைய மகளிரைக் காமக்கிழத்தியர், பொருட் பெண்டிர் எனக் கண்டான். எனவே, நேர் எதிரான கோட்பாடுகள் ஏற்பட்டன. நல்வழி கூறும் அறிஞர்களால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்தாலும் நிலை மாறாது இருப்பதே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டனர். ஏ. கலைகள் 1. கட்டடக் கலை 2. நகர அமைப்பு 3. சிற்பக் கலை 4. ஓவியக் கலை 5. இசைக் கலை 6. நாடகக் கலை முன்னுரை இன்று சங்க காலத்துக் கட்டடமோ, சிற்பமோ, ஓவியமோகன் கூடாகக் காணுமாறில்லை. அவையாவும் அழிந்துவிட்டன. கிடைக்க வில்லை, காலவெள்ளத்தில் மறைந்து விட்டன. ஆயினும், சங்க இலக்கியங்களில் அவை பற்றிய விளக்கங்கள் காணப்பெறுகின்றன, அகழ்வாராய்ச்சிகளின் அதன் எச்சங்கள் கண்டெடுக்கப்பெறுகின்றன. இவற்றைக் கொண்டு சங்க காலக் கட்டடக்கலை, சிற்பக்கனல், இசைக்கலை, நாடகக் கலை ஆகியவற்றைச் சங்க இலக்கியங்களை யும், சங்கமருவிய கால இலக்கியங்களையும் சான்றுகளாகக் கொண்டு அறியலாம். கட்டடக்கலை பந்தல் கட்டடக் கலையின் படிமுறை வளர்ச்சியை ஆயும் போது மரநிழல், பந்தல் ஆகியவற்றிலிருந்தே கட்டடம் வளர்ந்திருக்க வேண்டு மெனத் தோன்றுகிறது. பந்தற்கால் நட்டு, இலைகளாலும், துணிகளாலும் மேற் கூரையை முடி அதனுள் தங்கினர். இத்தகைய பந்தல் அமைப்பைப் பற்றிப் புறநானூற்றுப் பாடல் (260:28) ஒன்று விவரிக்கிறது. கோவலனும், மாதவியும் புன்னை மரநிழலில் பந்த விட்டு, மணல் பரப்பிக் கானவ்வரி பாடி மகிழ்ந்தனரெனச் சிலப்பதி காரம் (3,168-170) கூறுகிறது. கட்டிலைச் சுற்றிலும் ஓவியத் திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டிருந்தன. வீட்டிற்கு முன்புறத்தில் புன்னை மரக் கொம்புகளை வெட்டிக் கால்கள் நட்டுப் பந்தலிட்டு பந்தலின் நிழலில் புதுமணல் பரப்பினர். இதன் கூரைக்குத் தாளரி வேய்ந்தனர். சில் பந்தல்களின் தரையை இளஞ்சேறு கொண்டும் மொழுகினர். இன்று சிறப்பாகப் பேசப்படும் உயிர்ப்பந்தல் சங்க காலத்தில் மக்கள் இயற்கையாகவே மரங்களினூடே கொடிகளைப் படரவிட்டுக் கதிரவன் வெயில் படாமல் தடுத்து உள்ளே வசித்தனர். சிறு குடில்கள் இவ்வாறு தோன்றிய பந்தல்தான் படிமுறை வளர்ச்சியில் * எழிலுறும் கட்டடமாக மாறியது. முதலில் மீனவர், பாணர், எயினர், உழவர், வேடர் முதலான எளிய மக்களின் சிறு குடில்களாகத் தோன்றின. கூரைகள் வரகு தாள்கள், இலை தழைகள், ஈச்சமரத்தின் ஓலைகள், தருப்பைப் புல், வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு வேயப்பட்டன. கட்டுவதற்கு மிளகுக் கொடியைக் கட்டுக் கொடி யாகப் பயன்படுத்தினர். இந்தக் குடிசை வீட்டைச் சுற்றிலும் முள்செடிகள் வளர்க்கப்பட்டன. ஐந்திணை மக்களுக்குமேயன்றி ஆடு மாடுகளுக்கும் இத்தகைய குடில்கள் கட்டப்பட்டன. மாட மாளிகைகள் சங்க காலத்தில் நகர வாழ்க்கை, நாட்டுப்புற வாழ்க்கை என இரண்டு வகை இருந்தன. செல்வர்கள், வணிகர்கள், வேந்தர்கள் முதலியோர் மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். வான் தோய் மாடம், நிரைநிலை மாடம், மலைபுர மாடம், நெடுநிலை மாடம், மங்குல் தோய் மாடம், வேயா மாடம். முகில் மாடம், முகில்தோய் மாடம், நீரணி மாடம் முதலிய பல்வேறு மாடங்களிருந்ததாகப் பெரும் பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்கள் கூறுகின்றன. மதுரையிலும், புகாரிலும் மாட மாளிகைகள் மதிலோடு இருந்தனவென்றும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் சிகரங்கள் கண்ணால் காணமுடியாத உயரமிருந்ததென வும், அவற்றில் பருந்துகள் உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளு மென்றும் கூறப்படுகின்றது. செங்கல், சுண்ணாம்பு கட்டடங்கள் கட்டச் செங்கலும், சுண்ணாம்பும் பயன்பட்டதாக நெடுநல்வாடையிலும், மணிமேகலையிலும், சான்றுகள் உள்ளன. இவ்வாறு கட்டுவதற்கும், பூசுவதற்கும் சுண்ணாம்பு பயன்பட்டதால் அதன் மீது ஓவியம் தீட்டவும் வழுவழுப்பான மேற்பரப்பு பயன்பட்டது என்று மணிமேகலை கூறுகிறது. கட்டடத்தில் மரம், இரும்பு உத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. 'கருங்கைக் கொல்லணிரும்புவிசை தெறிந்த கூடத் தண்ணிசை வெரீமாடம்" (பெரும்பாண் 437-8) சுவர்களின் மீது விட்டம் அமைத்து அவற்றின் மேல் மாடம் அமைத்தார்களென்பதனை, 'இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம்" (அகம் 167-13) என்று அகநானூறு கூறுகிறது. பெரிய கட்டடங்களின் கடைக்காலில் சுட்ட செங்கற்களும், சுடாத செங்கற்களும் பயன்படுத்தப் பட்டதைத் திருக்காம்புலியூர் அகழ்வா ராய்ச்சியில் காண்கிறோம். இதைப் போலவே அரிக்க மேட்டில் உரோமானியர் குடியிருப்பாகக் கருதப்படும் கட்டடத்தில் செங்கல் கட்டடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் தரைத்தளம் சல்லி, மண்கலந்து கெட்டிப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள சாயத் தொட்டியின் அடித்தளமும், சல்லியும் மண்ணும் கலந்து பூசப் பெற்றுள்ளது. இதைப் போலவே பூம்புகாரில் சிறந்த செங்கல் கட்டடம் கண்டு பிடிக்கப்பட்டது. சங்க கால மன்னர்களின் மாளிகைகள் ஏன் அழிந்தன? சங்க காலத் தமிழகம் ஒரு கரடிக் காடாயிருந்தது. மன்னர்களுக்குள்ளேயே ஓயாது போர்கள் நடந்தன. வெற்றி பெற்ற மன்னன் முதல் வேலை யாகத் தோல்வி கண்ட மன்னனின் அரண்மனையை இடித்து நிரவிக் கழுதைகளைப் பூட்டி ஏர் உழுதான் என்று புறநானூறும், மதுரைக் காஞ்சியும், அகநானூறும், நெடுநல் வாடையும், மணிமேகலையும் பேசுகின்றன. எனவேதான், இலக்கியத்தில் பேசப்படும் அரச மாளிகைகளைக் காண முடியவில்லை, மாடத்தின் அமைப்பு அடியில் அகன்று பெருத்துள்ள மாடக் கட்டடம் போகப் போக சிறுத்து வானுயரக் காணப் பெறும். இறுதிமாடம் அரைவட்ட வடிவில் அமைந்து வெண்சுதையால் பூசப்பட்டிருந்தது. இதனைக் 'குவிமாடம்' என்றழைத்தனர். இதில் கல்லுக்குக் கல் நீண்டு கொண்டே போய் குவிந்து முடியும். இப்பகுதியைத் தண்டையக் கட்டு என்பர். இந்தப் பொறியியல் முறையைப் பின்பற்றித்தான் தஞ்சைப் பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலும் கட்டப்பட்டுள்ளன. வளைவு வளைவாகக் கற்களை அடுக்கிக் கொண்டே போய் கடினமானதலைக் கல்லைப் போட்டு மூடிவிடிவர். மதலை மாடம் நெடுஞ்சுவரில் தனியாக வெளிப்புறம் துருத்திக்கொண்டு நிற்கும் மாடமே மதலை மாடமாகும். இதனைப் புறா மாடம்" என்றும் அழைப்பர், தெருவில் செல்லும் உலாவை வீட்டிலிருந்த படியே இவற்றில் நின்று பெண்கள் பார்ப்பார்கள். எனவே இதனைக் 'காட்சிமாடம்' என்றும் அழைப்பர். இதுபற்றி நெடுநல்வாடையில் கூறப் பெற்றுள்ளது. நிலா முற்றம் மாடமாளிகையின் மேற்பகுதியை 'வேயா மாடம்' (அ) 'நிலா மாடம்' (அ) "நிலா முற்றம்' என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. வேனிற்காலத்தில் இரவில் துய்க்குமிடமாக இம்மாடம் பயன்பட்ட தால் இதனைக் 'கதிர் மாடம்' என்றும் பெருங்கதையில் குறிப்பிடப் படுகிறது. நெடுநல்வாடையில் அந்தப்புரத்துக்கு முன்னால் அமைந்த நிலா முற்றம் ஒன்று குறிப்பிடப்படுகிறது. எனவே, நிலா முற்றம் என்பது மாதனி வீட்டில் இருந்து நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றமும், வேறு பல பொது மகளிர் வீடுகளிலிருந்த இளநிலா முற்றங்களும் ஆகும். சதுரக்கட்டு வீடுகளில் தான் நிலா முற்றங்கள் அமைக்கப்பட்டன. முற்றம் அல்லது முன்றில் மாளிகைகளின் முன்னால் அமைந்ததுதான் முன்றில் அல்லது முற்றம். இதில் யானைகளும் கட்டப்பட்டன. பொதுவாக இவற்றில் அவ்வப்போது புதுமணல் பரப்புவார்கள். பள்ளியறை (படுக்கை அறை) பருவங்களுக்கேற்பப் படுக்கை அறைகள் அமைக்கப்பட் டிருந்தன. ''வானுயர் சிவ மேனியை மருங்கின் வேனிற்பள்ளி* * என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் படுக்கையறை வேனிற் காலத்திற்கு ஏற்றவாறும் கூதிர் காலத்திற்கேற்றவாறும் இருந்தது. நெடுநல்வாடை யில் அந்தப்புரம் தனியாகவும், ஒதுக்குப் புறமாகவும் அமைந்திருந் தது என்று கூறப்படுகிறது. இதனைக் காவலர் காத்தனர். மன்றங்கள் சுவரும், கூரையுமின்றி வெறும் தூண்களை மட்டுமே கொண்டு நின்ற மன்றங்களும் இருந்தன. இதற்கு "நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றம்" என்று பெயர் படிவம் உள்ளது. "பாவை மண்டபம்" என்றழைக்கப்பட்டது. கோட்டங்கள் சங்க காலக் கோயில்களையே இலக்கியங்கள் கோட்டங்கள் என்று குறிப்பிடுகின்றன. கோயில் கட்டடங்கள் நடுகல் இருபக்கங்களிலும் இரண்டு கற்களும் பின்னால் ஒரு கல்லும் நட்டுக் கூரை சுவர் எதுமில்லாது போரில் மடிந்த வீரருக்கு எடுக்கும் "நடுகல் ஒரு வழிபாட்டு இடமாகும். இது சாலை ஓரங்களில் இருக்கும்.. ஐயைக் கோட்டம் மதுரை நகரின் புறஞ்சேரியில் ஐயைக் கோட்டம் அமைந்திருந் தது. இதைச் சுற்றிலும் முள்வேலி நடப்பட்டிருந்தது. தெய்வம் உற்ற பெண்கள் ஆடிச் சுற்றிவரச் சுற்றிலும் வலம்வரும் பாதை இருந்தது. கோழிச்சேவல் கொடியோன் கோட்டம், அறவோர்(சமணர் பள்ளி, பெரியோன் கோயில், செவ்வேள் கோயில், வலியோன் கோயில், நெடியோன் கோயில், மன்னவன் கோயில், அறநிலைக் கோட்டம், அமரதருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், பகல்வாயில் கோட்டம், வச்சிரக் கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம் முதலிய கோயில்கட்டடங்கள் சங்க காலத்திலிருந்தன. காவிரி கடலோடு கலக்குமிடத்தில் காமவேள் கோட்டம் இருந்தது. அதனருகே சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற இரு குளங்களும் இருந்தன. மேலும் அறவோர் பள்ளி, அட்டிற்சாலை, அருந்துநர் சாலை, குணவாயிற் கோட்டம் முதலியன சமணப் பள்ளிகளாக இருந்தன என மணிமேகலை அழைக்கிறது. அகழியில் ஆம்பல், கழுநீர், குவளை, தாமரை முதலிய நீர்க்கொடிகளிருந்தன. மதுரையைச் சுற்றி ஓடும் வைகை யாற்று நீரும், வஞ்சியைச் சுற்றியோடும் ஆன்பொருநை ஆறும் நீரும் முறையே மதுரை நகர் அகழியிலும் வஞ்சி நகர் அகழியி லும் ஓடிப் பாய்ந்தன. கோட்டைக் கதவுகளில் வெற்றியின் தேவதையான கொற்றவை யின் உருவம் பொறிக்கப் பெற்றது. (மதுரைக்காஞ்சி 286) புகார் நகரக் கதவுகளில் புலியின் உருவம் பொறிக்கப்பட் டிருந்தது. (பட்டினப்பாலை 40) இக்கதவுகளில் இரும்புப் பட்டைகள் இணைக்கப்பட்டுப் பூட்டுவதற்கு ஏதுவாக தாழ்ப் பாள்கள் அமைக்கப்பெற்றன (நெடுநல்வாடை 63). இரவு நேரங்களிலும், போர்க் காலங்களிலும், பயன்படக் கதவுகளில் நடுவில் ஆள் போய்வரச் சிறு கதவு அமைக்கப் பெற்றது. இதற்குப் 'புதவம்' என்று பெயர். நகர அமைப்பு சங்க காலத்து நகரங்கள் திட்டமிடப்பட்டுக் கட்டப் பட்டவை ஆகும். அவைதாமரை மலர்போல் வட்ட வடிவமாக வடிவமைத்துக் கட்டப்பட்டன. அம்மலரின் நடுவிலுள்ளமொட்டுப் போல் அரசனின் அரண்மனையிருந்தது. அரசு அலுவலர்கள், அறங்கூறும் மக்கள் முதலியோர் மனைகளும் அரண்மனையோடே ஒட்டியிருந்தன. தொண்டைமான் கோன் கோநகரான காஞ்சியும், பாண்டியரின் கோநகரான மதுரையும் தாமரை மலர் போல் வட்ட வடிவமாக இருந் தன். மற்றவர் வாழ்ந்த தெருக்கள் ஆறு கிடந்தன்ன அகன்ற தெருக் களாகவும், நெடுங்கண் வீதி, நெடுந்தெரு, அகல்நெடுந்தெரு, பெருந் தெரு என பலதரப்பட்ட தெருக்களாகவும் இருந்தன. தெருக்களின் சந்திப்பைக் 'கவலை' என்றனர். அம்பிகாவலர் சுத்தம் தெரு, மாடமலி மறுகு, பீடிகைத்தெரு முதலியனவாகப் பல தெருக்களிருந்தன. படைகள் செல்லும் தெருக்கள் கருங்கல்லானவையான தெருக் களின் இருமருங்கிலும் செல்வர், வணிகர், அரசு அதிகாரிகள், அறங் கூறும் மாந்தர் முதலியோர் வீடுகளும் இருந்தன, நிரைநிலை மாடம். மலைபுரை மாடம், நெடுநிலை மாடம், மங்குல்தோய் மாடம், வேயா மாடம், முகில்தோய் மாடம் முதலிய மாடங்களைக் குறிப்பிடும் சிலப்பதிகாரம் அத்தகைய மாட வீடுகளில் உயர்குடி மக்கள் வாழ்ந்தார்கள் என்றும் கூறுகிறது. இத்தகைய மாடங்கள் நிறைந்திருந்ததால் மதுரை மாநகர் மாடமலி 'மறுகிற் கூடல்' என்றும், வஞ்சிமா நகரம், மாடமலி மறுகிற் பீடிகைத் தெருவமைந்த நகரமென்றும், அழைக்கப் பெறுகின்றன. சோலைகள், வாவிகள் வேனிற்காலத்தில் மாந்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக நகரங்களில் சோலைகள் அமைக்கப் பெற்றன. பகற்பொழுதில் மக்கள் நீராடுவதற்காகச் செய்குளங்கள் அமைக்கப் பெற்றிருந்தன. அவை 'வாவிகள்' எனப்பெறும். இவற்றில் அழுக்கு நீரை வெளி யேற்றவும், புதுநீரைப் பாய்ச்சவும் இயந்திரப் பொறிகள் அமைக்கப் பெற்றன. எனவே, இச் செய்குளங்கள், 'எந்திரவாவிகள்' என்றழைக் கப்பெற்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு 'வன கிரிதூம்பு' எனும் செய்குளமாகும். இஃது புகார் அகழ்வாராய்ச்சியில் காணப்பட்டது. மதுரை மாநகரம், புகார் நகரம் ஆகியவை இத்தகைய அமைப் புகளுடனும் ஏத்துகளுடனும் அமைக்கப் பெற்றிருந்தன. இந்நகரங் களின் சிறப்பைப் பற்றி புத்தரின் அபிதம்மாவதாரம் புத்தவம்சாத்த கதை ஆகிய நூல்களில் காணலாம். மதுரை நகரில் புத்தசேதியம் இருந்தது. புகார் நகரிலிருந்த புத்த சேதியத்தைக் கோவலனின் முன்னோர்கள் கட்டி வழிபட்டதாக மணிமேகலை கூறுகிறது. சாத்தனார் காலத்தில் புத்தவிகாரம் அங்கு கட்டப்பட்டதாகக் கூறுகிறார். இத்தோடு வெள்ளிடை மன்றம், பூதச்சதுக்கம், பாவை மன்றம் ஆகிய ஐந்து மன்றங்களும் புகாரிலிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது (11-133). இவற்றைத் தவிர புகார் நகரில் இருந்த இடுகாட்டைப்பற்றியும் குறிப்பு உள்ளது. 'ஈமப் புறங்காடு' என்று இதனை அழைத்தனர். இதற்கும் சுற்றிலும் மதிற்சுவரும், நான்கு வாயிற் கதவுகளும் இருந் தன. ஒருவாயிலில் தேரொன்று எழுப்பப் பெற்றிருந்தது. மற்றொரு வாயிலில் மேல் மாடமிருந்தது. இஃது காவல் மிகுந்த இடமாக யிருந்தது. மதுரை, புகார் ஆகிய இரண்டையும் தவிர வேறுபல நகரங் களும் சங்ககாலத் தமிழகத்திலிருந்தன. 3. சிற்பக்கலை கட்டடக் கலைக்கு அடுத்தபடியாக சங்ககால சிற்பக்கலைச் சிறப்புடையதாகும். மாந்தர், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், மரம், செடி, கொடிகள் மற்றும் பல்வேறு கண்களால் காணும் உருவங்களையும், காணாத கற்பனை உருவங்களையும் மரம், சுதை, கல், மண், தந்தம், உலோகம் முதலியவற்றால் வடித்து, பல்வேறு உருவங்களைப் படைத்துக் கண்ணுக்கும் உள்ளத்திற்கும் இன்பமூட்டும் கலையே 'சிற்பக்கலை ' எனப்படுகிறது. கல்லால் செய்த உருவத்தைக் கற்சிலை என்றனர். நாளடைவில் சிலை என்றே வழங்கப்பெற்றது. கல்லேயன்றி மண்ணாலும், சுதையாலும், மரத்தாலும், உலோகத்தாலும், மற்ற வற்றாலும் செய்தவற்றையும் ''சிலை " என்றே அழைத்தனர். ''சிலை"" என்ற சொல் ''ஒன்றன் உருவத்தைக் குறிப்பதாய் நிற்கிறது" - சிலை எடுக்கும் வழக்கம் தொல்காப்பியருக்கு முன்பிருந்த தமிழத்திலிருந்து போரில் மாண்ட வீரனுக்கு அவனுடைய உற்றார் உறவினர், நண்பர் முதலியோரும் அரசனும் கல்லெடுத்து நீரில் தூய்மைப்படுத்தி, அவ்வீரனுக்குப் பெயரும் பீடும் அதில் எழுதி நாட்டிப் பூவும், பீலியும் சூடி, நட்டுப் பின் பாணரைக் கொ.. " "டு அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடி, அக்கல்லை வீரத் தெய்வமாக வழிபட்டனர். பின்னர் அவ்விடத்தில் "வீரசாலை' என்ற கட்டடம் கட்டி வழிபாடு செய்தனர். இதைப் போலவே கணவன் இறந்த வுடன் தானும் உடன் இறக்கும் மகளிருக்கும் மாசாத்திக்கல்' நட்டு வழிபட்டனர். நடுகல்லும் மாசாத்திக் கல்லும் ஆகியவை முறையே மாண்ட வீரன், உடன்கட்டையேறிய கற்புடைய மனைவி ஆகி யோரின் உருவங்களாக (சிலைகளாகக் கொள்ளப்பட்டன. இவ்வாறு நடுகல்லாய்த் தொடங்கப் பெற்ற சிற்பம் கோயில் சிலைகளாகப் பின்னால் எழுந்தன. வேலூர் மாவட்டம் சோழபுரம் என்னும் ஊரில் இராசாதித்திய சோழன் தன் தந்தையின் புதைக்குழி மேல் ஒரு சிவன் கோயிலைக் கட்டியதும், முதலாம் இராசராசன் மனைவி பஞ்சவன் மாதேவியாருக்குப் பழையாறை என்னும் ஊரில் 'பஞ்சவன் தேவி ஈச்சுரம்' என்னும் கோயிலைக் கட்டியதும் இதன் வளர்ச்சியே ஆகும். தொல்காப்பியர் சுட்டும் 'நடுகல் பண்பாட்டின் வளர்ச்சி ஆகும். இன்றும் இதிகர், கொல்லர், போயர் முதலிய பழங்குடியினர் சவக்குழிகள் மீது நடுகல் நாட்டி வழிபடுவதைக் காணலாம். சிற்பம் செய்யப் பயன்படும் பொருள்கள் மாசில்லாத மரமும், நல்ல மண்ணும், நல்ல கல்லும், தெய்வப் படிமங்களும் பாலை உருவங்களும் செய்யப் பயன்பட்டனவென மணிமேகலை கூறுகிறது. கல், மண், மரம், உலோகம், ஆகியவற்ற லான சிற்பங்களைச் செய்து வாழ் மனைகளின் மேல் வைத்தனர். காவிரிப்பூம்பட்டினத்து இந்திரவிழாவைக் காணவரும் மக்கள் இந்தச் சிற்பங்களைக் கண்டுகளித்தனரென மணிமேகலை கூறுகிறது. திருக்குறளிலும் சுதையாலான சிற்பம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. நூலறிவு இல்லாத ஒருவன் தன் அறிவைக் காட்டப் பொய்மையாக எழுச்சிப் பெறுவது சுதையாலான பாவையொன்று எழுச்சி பெறுவதைப் போலாகுமென்று வள்ளுவர் கூறுகிறார். இதில் இருந்து கல், மண், மரம், உலோகம், சுதை முதலியவற்றால் சிற்பங் களைச் செய்வது சங்ககால மரபு என்பதனை உணரலாம். இந்த மரபு வழியைத்தான் பிற்காலத்தில் பின்பற்றினர். கி.பி. 7-ம் நூற் றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டு என்னும் நூலில் சிற்பம் செய்வ தற்குக் கல், உலோகம், செங்கல், மண், மரம், சுதை, தந்தம், சருக்கரை, அரக்கு, மெழுகு ஆகிய பத்துப் பொருள்களைப் பயன்படுத்தியதாகக் கூறப் படுகிறது. (திவாகர நிகண்டு). உருவ வேறுபாடுகள் சிலைகள் (சிற்பங்கள்) யாவும் ஒரே மாதிரி உருவம் கொண்ட வையல்ல. ஒரு சிற்பத்தைக் கண்டவுடன் இன்னாருடைய சிலை என்று அதனன தனகித்தறியுமாறு அமைக்கப்பட்டது. அதற்கு அதன் உருவ அமைப்பு, தாங்கியுள்ள படைகள் (ஆயுதம்) முதலியன துணை நின்றன. சிவன், திருமால், செவ்வேள், பலராமன் முதலிய பதுமைகள் சங்ககாலக் கோயில்களிளிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. (சிலம்பு 5:169-173), அரசன் வதியும் அரண்மனையைக் கூட சங்ககால மக்கள் கோயில் என்றே அழைத்தனர். அதனை அமைத்த கலைஞனை "நூலறி புலவன்' என்றனர். அவன் கணிதம், வானநூல், நிமித்தகம், பொறியியல் முதலிய கலை அறிவையும் பெற்றவன். அரண்மனை யின் பாதுகாப்பு, தட்பவெப்பநிலை, சுற்றுப்புறச் சூழல் முதலியவற் றிற்கேற்ப அரண்மனையை அமைப்பான். அதற்கு முன் அதன் வரைபடத்தைத் தயாரிப்பான். கட்டடத்தின் மேல்திசைக்கேற்றவாறு தெய்வப் படிமைகளை அமைப்பான் என்று நெடுநெல்வாடை கூறுகிறது. ஈண்டு தெய்வ உருவங்களைப் படிமம் என்றும், மாந்த உருவங்களைப் பிரதிமை என்றும், பெண் உருவங்களைப் பாவை" என்றும் சிற்பநூலார் குறித்தனர். இவையேயன்றி தேவர்களின் உருவங்களும் விலங்குகளின் உருவங்களும் சிற்பங்களாகச் செய்யப்பட்டன. சின்னங்கள் காலப்போக்கில் தெய்வ உருவங்களைத் தொழுதவர்கள் அவற்றின் சின்னங்களையும், பல்வேறு உருவங்களையும் (தத் ரூபம்) தொழுதனர். எடுத்துக்காட்டாக முருகனுடைய வேலும், மயி லும் புத்தரது பாத பீடிகையும், அரசிலையும், இந்திரனுடைய வச்சிரப் படையும், வெள்ளையானையும், கற்பகத்தருவும், சின்னங்கள் (சிற்பங்கள்) ஆயின, வேல்கோட்டம் என்று முருகன் கோயிலும், வெள்ளையானைக் கோட்டமென இந்திரன் கோயிலும் அழைக்கப் பட்டதைக் காணலாம். 'பாவை' சிற்பம் படைப்பது சங்க காலச் சிற்பக்கலையின் வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது 'மாசாத்திக்கல்' கணவனோடு உடன்கட்டையேறிய கற்புடைய மகளிருக்கு எடுக் கப்பட்ட கல்லாகும். பெண்ணுக்கு எடுக்கப்பட்டதால் இது 'பாவை' எனப்பட்டது. இதுபோன்ற பாவைக் கோயில்களிருந்த்தாக மணி மேகலையில் குறிப்பிடப்படுகிறது. கொல்லிமலையில் கொல்லிப் பாவையும், புகார் நகரத்தில் நந்திற்பாவையும் பெண்கள் வழிபட்ட உருவங்களாகும். இதனைப் பின்பற்றித்தான் கண்ணகிக்குச் சிலை யெடுத்து வழிபாடு செய்ததுமாகும். செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையெடுத்து அதில் அவளுடைய உருவத்தையும் பொறித்தான், இவ்வாறு உருவம் பொறிக்கும் கலைஞர்களைக் 'கம்மியர்' என்றும் நூலறி பெருமக்கள் என்றும் சிலப்பதிகாரம் கூறும். கோலங்கள் (திலைகள்) திருமால் தெய்வத்திருமேனிகளை இருந்த வண்ணம், நின்ற வண்ணம், கிடந்த வண்ணமாக மூன்றுவிதக் கோலங்களில் படிமங்களைப் படைத்தனர். புகார் நகரிலிருந்த திருமால் கோட்டத்திலிருந்த தெய்வப் படிவம் பாம்பின் மேல் துயில் கொள்ளும் கிடந்த கோலத்திலிருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. திருமால் பாம்பின் மேல் படுத்துள் ளது பெரும்பாணாற்றுப் படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (373) திருவரங்கத்தில் ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன் மீது அரங்கன் பள்ளி கொண்டிருப்பதால் திருப்பதியில் வேங்கடன் நின்ற வண்ண மிருப்பதாகவும் இடையில் ஆடையும், மார்பில் மணியாரமும், கைகளில் சங்கும், சக்கரமும் அருகில் வில்லும் கொண்டு வேங்கடன் விளங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றைப் போலவே திருமால்குன்றம், வஞ்சியிலுள்ள திருமால் கோட்டம் ஆகிய இடங்களிலும் பாம்பின் மேல் கிடந்த வண்ணமாகத் திருமா விருந்தாரென சிலப்பதிகாரம் கூறுகிறது. சிவன் திருமாலின் மூன்று கோலங்களில் தெய்வப் படிமங்களிருந் ததைப் போலவே சிவனுடைய கோலங்களையும் காணலாம். வஞ்சி நகரிலிருந்த சிவன் கோயிலில் சிவன் தலை முடியில் நிலாவை அணிந்து இருந்தான். மதுரையிலிருந்த சிவன் கோயிலான வெள்ளி யம்பலத்தில் சிவன் சடாமுடியும், கொன்றைப்பூவும் அணிந்து காட்சி யளித்தான், கொடும்பையில் மூன்றாம் பிறையும், சடாமுடியும், கண்ணி, சூலம் முதலியவற்றோடு காட்சி தந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. சிற்பிகள் மண்ணால் சிற்பங்களைச் செய்த சிற்பிகளை 'மண்ணீட்டாளர்' என்றும், கற்பனை உருவங்களைப் படைக்கும் சிற்பிகளுக்கு 'வித்தகர்' என்றும் கல்லால் சிற்பங்களைச் செய்வோர்களைக் கல்தச்சர் என்றும் சுதையால் சிற்பங்களைச் செய்தவர்களைக் கொத்தர் என்றும், மரத்தால் சிற்பங்களைச் செய்தவர்களை தச்சர் என்றும், மரப்பதுமைகளைச் செய்தவர்களைப் பதுமைத் தச்சர் என்றும் அழைத்தனர். இத்தகைய கலைஞருக்கெல்லாம் தலைவனாக உள்ளவனைப் "பெருந்தச்சன்' என்றனர். இவ்வாறு தனித்தனிப் பிரிவுகளில் சிறப்புற்ற பலநாட்டுக் கலைஞர்களும் ஒன்றுகூடி பேரிணையமாகச் செயல்பட்டதை மணிமேகலை கூறுகிறது. இவ்வாறு தொழில் நுட்பக் கலைஞர்கள் தொழிற்சங்கம், தொழிலாளர், கூட்டணி, பேரிணையம் ஆகிய கருத்துகள் சங்க காலத்தில் முளைத்தன. பரிவாரச் சிற்பங்கள் ஒரு முலதெய்வத்தின் உருவத்தைச் சிற்பமாக வடித்த கலை ஞர்கள் சமயக் கருத்துகள் பல்கிப் பரவும்போது அத்தெய்வத்தோடு தொடர்புடைய சிறுதெய்வங்களின் உருவங்களையும், அவற்றின் வாகனங்களையும் சிற்பங்களாக வடித்தனர். இவையே 'பரிவாரச் சிற்பங்கள்' எனப்படும். இன்றைய அகழ்வாராய்ச்சியில் புகார், உறையூர், காஞ்சி, அரிக்கமேடு, கொற்கை முதலிய இடங்களில் கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்கள் மதுரைவீரன், ஐயனார், சுடலைமாடன் முதலியன தெய்வ உருவங்களாகவும், யானை, குதிரை, நாய் முதலியன வாகனங்களாகவும், வேல் படையாகவும், உள்ளன. சுடுமண்ணால் சிற்பம் செய்வது சங்க காலத்திலிருந்து வரும் மரபு வழி ஆகும். இந்த மரபு வழியின் வளர்ச்சியால்தான் சிற்பங்கள், ஆகமங்கள், தத்துவங்கள், கற்பனைகள் அடிப்படை யில் பல்வேறு விதமான சிற்பங்களைப் படைக்க வழிவகுத்தன, ஒரே பொருளால் செய்த சிற்பம் "சுத்தம்' என்றும், பல பொருள்களால் செய்த சிற்பம் 'மிஸ்ரம்' என்றும் அழைக்கப்பட்டது. எ-கா: கற்சிலை சு சுத்தம் : செங்கல்லும் சுதையும் சேர்ந்த சிலை = மிஸ்ரம். 4. ஓவியக்கலை: 'ஒவ்வு' என்னும் சொல்லினடியாகப் பிறந்தது 'ஓவியம்' என்ற சொல்லாகும். இதற்கு 'ஒன்றைப் போலவே இருப்பது ' என்பது பொருளாகும். ஒப்பு, ஓவம் என்ற சொற்களும், 'ஒன்றன் மறுவாக இருக்கின்ற' மற்றொன்றைக் குறிக்கும் சொற்களாகும். காட்சி ஓவியம், கற்பனை ஓவியம் காணுகின்ற ஒன்றை அப்படியே தீட்டிக் காட்டுவது 'காட்சி ஓவியம் ஆகும். மனதில் பட்ட காட்சியைக் கற்பனையாகத் தீட்டுவது 'கற்பனை ஓவியம்' ஆகும். இதைச் சமற்கிருதத்தில் முறை யே, 'திருஷ்டம்' என்றும், 'அதிருஷ்டம்' என்றும் கூறுவர், ஓர் உருவம் கண்ணாடியில் தெரிவதைப் போல் தீட்டுவதை 'அவித்தம்' என்றும் கூறுவர். தெய்வத்தின் திருவுருவத்தைத் தத்துவங்களின் அடிப்படையில் மனத்திலிறுத்திக் கொண்ட பின்தான் அதன் உருவத் தைத் தீட்ட வேண்டுமென்றும், அதனைக் கண்ணுறுவோருக்கு அத் ' தத்துவங்கள் கண்முன்னே தோன்ற வேண்டுமென்றும் பிற்கால நூலான "சுக்கிர நீதி கூறுகிறது. இன்று தமிழ்நாட்டில் காணப்பெறும் ஓவியங்கள் பல்லவர் காலத்திலிருந்தே காணப்படுகின்றன. ஆனால் சங்க காலத்திலும் ஓவியங்கள் இருந்தன. அவற்றின் மரபு வழித் தொடர்பால்தான் பல்லவர் கால ஓவியம் தோன்றியிருக்கலாம். ஓவிய எழுத்தும், ஓவிய நாலும் பரிபாடல், குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் ஓவிய எழுத்துகள்' பற்றிய குறிப்புகள் வருகின்றன. 'எழுத்து' என்ற சொல்லுக்கே ஓவியம்' என்பதுதான் பொருள். எழுத்தும், ஓவியமும் உள்ளக்கருத்தை விளக்குவனவாகும். மாதவி ஒரு நாடகமங்கை, தனது தொழிலுக்குப் பலவகைக் கலைகளையும் கற்றாள் என்றும், அவற்றில் ஓவியக்கலையும் ஒன்றாகுமென்றும் சாத்தனார் கூறுவதிலிருந்து அந்நாளில் ஓவியம் பற்றி ஒரு நூல் இருந்ததென்பதை உணரலாம். உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் அந்நூலிலிருந்து ஒரு பாட்டை மேற்கோள் காட்டுகிறார். இந்த ஓவிய நூலில் இருத்தல், நிற்றல், கிடத்தல், இயங்குதல் ஆகிய நான்குவகைக் கோலங்களும் அவற்றின் விகற்பங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. இளங்கோவடி களும், சாத்தனாரும் முறையே சிலப்பதிகாரத்திலும், மணிமேகலை யிலும், நாடக மகளிர் ஓவியம் கற்றனரென்பதைக் கூறுகின்றனர், அக் கலைக் கெனத் தனி நூலொன்று இருந்ததென்பதனையும் நாம் அறிகிறோம். ஓவியமாடம் சங்க கால மூவேந்தர்களும் தங்களின் அரண்மனையில் ஓவியம் தீட்டி அழகு செய்வதற்கென்றே தனியாக ஒரு மாடத்தைக் கட்டி யிருந்தனர். அதற்கு 'ஓவியமாடம்' என்று பெயர். இதனைச் 'சித்திரக் கூடம்' என்றும் கூறுவர். "எது ஒன்றன் பிரதி ரூபமாக இருக் கிறதோ அதுவே சித்திரமாகும்" என்று நடன நூலாரும் விளக்கம் தந்தனர். பாண்டியன் நன்மாறன் தனது சித்திரமாடத்தில் தங்கியிருக்கும் போது உயிர் நீத்தான். இதனால் அவனைச் 'சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்' என்று குறிப்பிட்டனர். இச்சிறுமாடம் வெண்சாந்தால் பூசப்பட்டிருந்தது. இதன் தூண்கள் நீலமணிபோல் திரட்சியாகவும் கருமையாகவும் இருந்தன. சுவர்கள் செம்பினால் செய்யப்பட்டவை போல் சிவந்திருந்தன என்றும், அதில் தீட்டப்பட்டிருந்த ஓவியங் களும் கொடி படர்ந்துள்ள' காட்சி சிறப்புடையதாக உள்ளது என்றும் நக்கீரர் தனது நெடுநெல்வாடையில் வருணிக்கிறார். [110-114). பாண்டியனின் மதுரையிலிருந்த சித்திரக்கூடம் போன்றே. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், 'சித்திரக்கூடம்' இருந்ததை குன்றம் பூதனார் தனது பரிபாடலில் குறிப்பிடுகிறார். (14:27-29). இந்த ஓவியக் காட்சியரில் இந்திரன், அகலிகை, கௌதமர், ஆகியோர் கதையும் இரதி, மன்மதன் உருவங்களும் தீட்டப்பட்டிருந்தன.. இவ்வாறு அரண்மனை, கோயில் ஆகிய இடங்களிலும், செல்வர்கள் வாழும் வளமனைச் சுவர்களின் மீதும், தேவர் முதல் எல்லா உயிர்களின் உருவங்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட் டிருந்தன. விழாக்காலங்களில் மதுரை மாநகருக்கு வரும் பொது மக்கள் அந்த ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர். அரசனது பள்ளி அறை ஓவியம் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் போர்மேல் சென்றுவிட்டான். கணவனைப் பிரிந்த அவன் மனைவி கோப்பெருந்தேவி தனது பள்ளியறைச் சுவர்களில் தீட்டப் பெற்றிருந்த ஓவியங்களைக் கண்டு மனம் வருந்தினாள். ஓர் ஓவியத் தில் நிலாவின் பக்கத்தில் உரோகினி இருப்பதைப் போன்ற காட்சியைக் கண்டுதான் மட்டும் தன் தலைவனைப் பிரிந்திருக் கிறோமே என்று உள்ளம் வெதும்பினாள். இவ்வாறு பள்ளி அறையில் மட்டுமேயல்லாது கோயில் சுவர் கள், மாளிகை முதலியவற்றின் விதானங்களிலும், சிலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. கேடயம், வாள்பிடி, ஆடைகள், அணி கலன்கள் முதலிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களின் மீதும் ஓவியங்கள் தீட்டப்பட்டன. திரைச்சீலை தனியாகச், சீலைகளின் மீது ஓவியம் தீட்டினார்கள். அஃது - 'படாம்' என்று பெயராயிற்று. பந்தல், கூடாரம், கட்டிலைச் சுற்றிலும் ஒவியம் தீட்டிய திரைச்சீலைகள் கட்டினார்கள். இத்தகைய திரைச் சீலைகளைப் படம், சித்திரச் சீலை, ஓவியஎழினி முதலிய பெயர் களால் அழைத்தனர். மடலேறுதல் காதலித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடியாமல் போனால் அக்காதலன் அக்காதலியின் உருவத்தைப் பனை ஓலையில் எழுதி அதனை ஊரார் அறிய தூக்கிப் பிடித்துக் கொண்டு, கறுக்குள்ள பனைஓலை மட்டைகளைத் தனது இரு தொடைப் பகுதி களிலும் படும்படி குதிரை போல் கட்டிக்கொண்டு அந்த மட்டை களின்மேல் ஏறி நிற்பான். இதையே 'மடல் ஏறுதல் என்பர். இதனால் இக்கறுக்குகள் அறுத்து அவனுடைய தொடைப் பகுதிகளில் குருதி வடியும், வரிவடிவ ஓவியத்தில் உள்ள தன் காதலிக்காகத் துன்பப் பட்டு உயிர்விடத் தயாராவான். அவளுடைய உறவினரும் ஊராரும் வந்து அவனைத் திருமணம் செய்வதாக உறுதியளித்தால் மடல் களை விட்டுக் கீழே இறங்குவான், இங்கு அவன் தீட்டிய ஓவியம் தான் புனையா ஓவியம் அல்லது வரிவடிவ ஓவியம் என்றழைக்கப் படும். இதுவண்ணம் தீட்டப்படாத வரிவடிவமான ஓவியமே ஆகும். இவ்வாறுதான் முதலில் ஓவியம் தீட்டுவர், உருவத்தை அமைத்துவிட்டு, வேண்டிய முகபாவனைகளையும், கோலங்களை யும் புனைந்து வண்ணம் தீட்டுவர். இதுவே முழு ஓவியமாகும். இதனைக் காண்போர் உண்மையா போலியா என்று தீர்மானிக்க முடியாமல் மயங்கி நிற்குமளவுக்கு உண்மை வடிவம்போல் (தத்ருபமாக) ஓவியம் தீட்டப்படும். இவ்வாறு தீட்டும் ஓவியரைக் 'கைவினைஞர்' என்பர். இவனை முழு ஓவியன் அல்லது ஒவியப் புலவன், வித்தகன், கண்ணுள் வினைஞன், ஓவிய வல்லோன் என்றும் அழைப்பர். பார்ப்பவர், கண்ணையும் கருத்தையும் ஈர்க்குமாறு ஓவியம் தீட்டுபவரே 'கண்ணுள் வினைஞர்' ஆவர் என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். மெய்ப்பாட்டு ஓவியம் சிலப்பதிகாரம் அழற் படுகாதையில் பாண்டியன் நெடுஞ் செழியன் கண்ணகியின் வழக்குரைக்குப்பின் அரியணையி (சிம்மாசனத்திலேயே உயிர் விடுகிறான். அருகில் நின்ற புரோகிதன் (ஆசான்) நிமித்தகன், அந்தணர், மந்திரக் கணக்கர், ஏவலாளர் முதலிய பலரும் திகைத்து. துயரமடைந்து கண்ணீர் மல்கி நிற்கின்ற னர். இவர்களின் வெகுளி, அவலம், அச்சம், அழுகை முதலிய மெய்ப்பாடுகள் தோன்ற இளங்கோவடிகள் இந்நிகழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார். ''சித்திரப் படங்களில் எழுதப்பட்ட மக்கள் அசைவற்றுக் காணப் பெறுவதைப் போல் இவர்கள் அசைவற்று நின்றனர்'' என்று தீட்டிய ஓவியத்திற்கு உவமையாகக் கூறுகிறார். "ஓவியத்தில் காணப்படும் மக்கள் கூட்டத்திற்கு ஒப்பாக நின்றனர்" என்றதால் ஓவியம் மெய்ப்பாடுகளை விளக்குமாறு அமைய வேண்டு மென்பதைச் சிலப்பதிகாரம் கூறுவதாய் அறியலாம், இயற்கை காட்சி மணிமேகலை மலர்வனம் புக்க காதையில் வரும், 'உவ வனம்', இயற்கையான மலர்கள், செடி, கொடிகள், தெய்வ உருவங் கள் முதலியவற்றை இந்த உவவனத்தைப் படைத்துக் காட்டுகிறார். மெய்ப்பாடுகளும் விருத்திகளும் ஓவியம் உயிரோட்டத்தோடு அமைய கோடுகள், கீறல்கள், புள்ளிகள், வண்ணங்கள் ஆகியவற்றோடு உள்ளத்திலெழும் உணர்வு களையும், உடலின் நிலைகளையும் ஐம்புலன்களின் மாறு பாடுகளையும் காட்டுவதாக ஓவியம் அமைய வேண்டும். வீரத் தோடு நிற்பது, அவலத்தோடு நிற்பது, முதலியவற்றைக் காட்ட உருவங்களின் உடல், புலன்கள் ஆகியவற்றின் தோற்றங்களை விளக்கிக் காட்ட வேண்டும். நகை, உவகை, வீரம், வெகுளி, இளிவரல், மருட்கை, பெருமிதம், அச்சம், அழுகை முதலிய ஒன்பது உணர்வுகளை மெய்வழிகாட்டி ஓவியத்தைப் படைப்பவனே சிறந்த ஓவியன் ஆவான். ஆனால் பிற்காலத்துப் பெருங்கதை மெய்ப்பாடு கள் எட்டு வகைப்படும் என்கிறது. பெண் ஓவியம் நல்ல அழகான பெண்களை ஓவியத்திற்கு ஒப்பிட்டுப் பேசுவர். ஆனால் பெண்களே ஒவியராகவும் சங்க காலத்தி விருந்தனர். அவர்களைக் 'கண்ணுள் வியர்' என்று அழைத்தனர். காதலனைத் தன் கண்ணுள்ளே ஓவியமாக நிலையாக நிறுத்திக் கொள்பவளே கண்ணுள் ஓவியர் ஆவாள். கண்ணுள்ளே கலந்திருப்பதால் கண்ணுக்கு மைதீட்ட மாட்டாளாம். 'கண்ணுள்ளார் காதலானவர் ஆகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கறிந்து என்று சீவக சிந்தாமணியில் திருத்தக்கத் தேவர் குறிப்பிடுகிறார். கண்ணிமைத்தால் கண்ணுள் உள்ள காதலர் மறைந்து விடுவா ரென்பதற்காகக் காதலி கண்ணையும் இமைக்க மாட்டாள் என்று வள்ளுவர் கூறுகிறார். கண்ணுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கும் காதலர்கள் கண்ணுள்ளே பதித்துவிட்டவர்களாவர் என்றும் வள்ளுவர் கூறுகிறார். இதனால்தான் பெண்களை ஓவியர் என்றே அழைப்பர். ஓவியம் வரையும் முறை வெண்சுதைப் பூசி மெழுகிட்டு ஓவியம் வரைய வேண்டிய இடத்தைத் தகுதிப்படுத்திக் கொண்டு, பலதிறப்பட்ட தூரிகைகளைக் கொண்டு மேலோட்டமாக வண்ணம் தீட்டிய பிறகு வேண்டியவாறு வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை ஆக்க வேண்டும். நுண்ணிகைத் தூரிகையை வெட்டிகை" என்பர். இதனால் வரையப்பட்ட ஓவியத்தை 'வட்டிகைச் செய்தி' என்பர், சீலையில் ஓவியம் தீட்டப்பட்ட பின் அதைத் திரைச்சீலை என்பர். இஃது ஒப்பனைக்காகப் பயன்படும் யானை முகத்தில் போர்த்தப்பட்ட ஓவியச்சீலை 'முகபடாம்' எனப் படும். பலகையில் வண்ணங்களை முதலில் பூசிப் பார்ப்பார். அப் பலகை 'வட்டிண்கப்பலகை' எனப்படும். சுவர்களில் வண்ண ஓவியங் களைத் தீட்ட சிவப்பு வண்ணத்தைப் பூச வேண்டும். இதனால் சுவர் செம்புத் தகடு போலாகும். வண்ணங்களைக் குழைத்துப் பூசும் முறைகளை, தடித்த தூரிகையால் குழப்பி, மெல்லிய தூரிகையால் பூசவேண்டு மென்ற முறையும் மேற்கண்டயாவும் சங்க இலக்கியங் களிலிருந்து தொடுக்கப்பட்டவை ஆகும், 5. இசைக்கலை: உயிர்களை இசையச் செய்வதால் 'இசை' எனப்பட்டது. விலங்காண்டி மாந்தனே இசைக்கு மயங்கினான். எனவே, சங்க கால நாகரிக மாந்தர்கள் இசையைப் பலவாறு வளர்த்திருந்தனர். ஐந்து திணைகளிலும் வாழ்ந்த மக்கள் தனித்தனிப் பண்ணை வளர்த்துள்ள னர். குறிஞ்சிப்பண், முல்லைக்குரிய சாதாரிப்பண் மருதத்திற்குரிய மருதப்பன், நெய்தலுக்குரிய இரங்கற் பண், பாலைக்குரிய பஞ்சாப் பண் ஆகியவை வளர்ச்சியடைந்தன. இசைக் கருவிகளும் திணைக்கேற்ப வளர்ச்சி யடைந்துள்ளன. குறிஞ்சிக்குத் தொண்டகப் பறையும், முல்லைக்கு ஏறுகோட் பறையும், மருதத்திற்கு நெல்லரி கிணையும், பழவும் நெய்தலுக்கு மீன்கோட் பறையும், நாவாப் பம்பையும், பாலைக்குத் துடியும் பறைகளாகப் பயன்பட்டன. இவற்றைத் தோற் கருவிகள் என்பர். இவற்றைப் போலவே திணைக்கேற்ற நரம்புக்கருவிகள் பயன் பட்டுள்ளன. அவை குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ், விளரி யாழ். பாலையாழ் எனப்பெயர் பெற்றன. நிலத்திற்குரிய யாழும், யாழுக்குரிய பண்ணும் பண்ணுக்குரிய காலமும் வரையறை செய்யப்பட்டன. குழலும், யாழும், முதலில் தோன்றியதாகும். இவை முகாமையான இசைக்கருவிகளாகு மென்பதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. யாழ் வல்லுநர் களால் மட்டுமே பல்வேறு பணிகளை வாசிக்க முடியும். ஒரு பெரிய பண்ணை மையமாக வைத்துப் பிற பெண்களை வாசிக்க அல்கு, மாற்றங்களைக் கையாள வேண்டுமென்பதையும் அகநானூறு கூறுகிறது. குழல்களின் துளைகளின் மாற்றங்களால் இசையை மாற்ற லாம். இதில் ஐந்து துளைகளையுடைய குழல் 'ஐம்புழை' என்றும், ஏழு துளைகளையுடைய குழல் 'ஏழுபுழைக் குழல்' என்றும் அழைக்கப் பட்டன. 'குழல்' எனும் துளைக்கருவி திராவிடர்களால் உலகத் திற்கு அளிக்கப்பட்ட நன்கொடை ஆகும். இசைக்கல்வெட்டு ஈரோட்டைச் சேர்ந்த அரச்சலூர், நாகமலை ஆண்டிப் பாறையில் சங்க காலத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதிலுள்ள 'தாமிழி வகை எழுத்தாலான கல்வெட்டு முகாமை வாய்ந்ததாகும். குழலும், யாழும் இசைக்கருவிகளில் முதலில் தோன்றியது குழல்தான். வள்ளுவரும் 'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்று கூறும்போது குழலைத் தான் முதலில் வைத்துக் கூறுகிறார். முல்லை நிலத்து ஆயர்களே முதன்முதலாக குழற்கருவியைக் கண்டனர் என்னும் வரலாற்றைப் பெரும்பாணற்றுப் படையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வாயிலாக அறிகிறோம். 'ஆநிரை மேய்க்கச் சென்ற இடையன் காட்டில் வண்டுகளால் துளைக்கப்பட்ட மூங்கில் துளைகளின் வழி எழும் ஒலியைக் கேட்டு இன்புற்று மூங்கில்களைத் துண்டுகளாகச் செதுக்கி யெடுத்து குழல் செய்தான்' என்று பெரும்பாணாற்றுப்படை (176-179) கூறுகிறது. குழல் துளையில் வாய் வைத்து ஊதுவதால் அது 'தூம்பு' எனப் பட்டது. குழலின் பருமன், நீளம், துளைகளின் எண்ணிக்கை இவற்றிற்கேற்றாற் போல் இசையும் மாறுதலையடையும். இதனால் குழல், குறுங்குழல், குறுவங்கியம், நெடுவங்கியம் என பல திறப் பட்டனவாய் இருந்தன. குழலை மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங் காலி முதலியவற்றாலும் செய்தனர். மூங்கிலால் செய்த சூழல், 'வேய் குழல்' எனப்பட்டது. குழற்கருவிகளை 'வங்கியம்' என்று அழைப்பர். துளைகளைக் கணக்கில் கொண்டு 'ஏழ் புழை, ஐம்புழை என்றெல்லாம் அழைப்பரென்பதைப் பரிபாடலில் காண்கிறோம். வில்லின் நாணொலி கேட்ட உணர்வினால் யாழ் ஒலியைக் கண்டவரும் ஆயர்களே என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுவர். பெரும்பாண்: 179 - 182 குழல் ஊதி அதில் எழும் இசைக் கேற்ப யாழ்க் கருவியின் நரம்புகளை வலித்து முழக்கிக்காட்டி ஓசை எழுப்பிப் பண் அமைக்கப்பட்டது என்பது விபுலானந்த அடிகளார் கண்ட உண்மை ஆகும். யாழ்க் கருவிகளின் நரம்பு அமைதிகளைக் கொண்டு யாழ்க் கருவிகள் சிறுயாழ். பெருயாழ் என வகைப்படுத்தப்பட்டன. எனவே, 'குழல் வழி நின்றது யாழே' என்றதால் குழலோசை யை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே யாழ் என்ப தும், அதன் நரம்புகளின் எண்ணிக்கையும், அவை அமைக்கப் பெறும் பாங்கையும் கொண்டு அவை வேறுபடுகின்றன என்பதும் புலனாகிறது. இதனடிப் படையில்தான் ஐந்து நிலத்துக்குமான குறிஞ்சியாழ், முல்லையாம், பாலையாழ், மருதயாழ், நெய்தல் யாழ் அல்லது விளரியாழ் என்று வெவ்வேறு யாழ்கள் தோன்றின. ஒரே நரம்புடைய வில்யாழ் முதற் கொண்டு ஆயிரம் நரம்புகளையுடைய யாழ்வரை இருந்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மேற்கூறிய ஐந்து முதல் ஏழு துளைகளையுடைய குழலும், ஒன்று முதல் ஆயிரம் நரம்புடைய யாழும் எழுப்பும் ஓசைகளைக் கொண்டு இசைகளையும் பல்வேறு வகையாக அறிந்தனர். தமிழ்நாட்டின் தனித்த இசைக்கலையை இதன் நுட்பத் தன்மை யோடு நுண்ணிய ஒலிப்பகுதிகளை வளர்க்க வேண்டி அரும்பாடு பட்டவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதராவார். பல்வேறு நூல்களிலுமுள்ள இசை விளக்கக் கருத்தினைத் திரட்டி, வல்லுநர்களோடு ஆய்ந்து அவர் வெளியிட்ட இசைநூல் 'கருணாமிர்த சாகரம்' என்னும் பெருந்தொகுப்பு நூலாகும். விபுலா னந்த அடிகளாரின் 'யாழ்நூல்" தமிழிசைக்குக் கிடைத்த மற்றொரு கருவூலமாகும். இவ்வாறு சங்க கால இசை ஓரிசை, மூன்றிசை, ஐந்திசை, ஏழிசை என வளர்ந்து பன்னிரு பாலையாகி, பொது முறை யில் நூற்று மூன்று பண்களாக பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்றென விரிவுப் படுத்தப்பட்டுள்ளது. சங்ககால மன்னர்களின் அரண்மனையில் அந்தந்தப் பொழுதுக் குரிய பண்களை இசைக்கும் பாணர்களை அமர்த்தி இருந்தனர். பள்ளி எழுச்சி பாடுவோர், புறநீர்மைப் பண்பாடி மன்னனை எழுப்பு வர். இரவில் மன்னனைத் துயில் கொள்ள காலமுறையோடு பண் களை இசைப்பார்கள். இவ்வாறு வளர்ந்த இசைக்கலையில் பேரிகை, படகம், உடுக்கை , மத்தளம், திமிலி, குடமுழா, முழவு, முரசு, பறை, துடி முதலிய வாத்தியக் கருவிகளும் பயன்பட்டன. பாணர், பொருநர், வயிரியர், கோடியர், விறலியர், கூத்தர் எனும் பலவகை இசைக்கலைஞர்களும் இருந்தனர். இசை கேட்டு உயிரினங்களேயன்றி செடி, கொடிகள் முதலிய தாவரங்களும் மயங் கின. 'வரிவண்டுகளின் இசையில் மயங்கி பாட்டிசையில் மயங்கிய வேழம் தான் உட்கொண்டிருந்த தினைக்கதிர்களை கீழே போட்டு விட்டு துயில் கொண்டுவிட்டது' என அகநானூறு கூறுகிறது. இக்கால அறிவியலார் இசையால் செடிகள் வளரும் கனி தரும் என்றெல்லாம் கண்டு பிடித்துள்ளனர். இதைச் சங்க காலத்துப் புலவர்களே ஆய்வக மின்றியே கண்டுவிட்டனர். 6. நாடகக்கலை: தமிழ், இயல், இசை, நாடகம் என மூன்றாகப் பிரித்து அறியப் படுகிறது. அகத்தில் உள்ளதைப் புறத்தே உடலாலும் உணர்வு களாலும் நடித்துக் காட்டுவதே நாடகமாகும். சங்க காலத்திலேயே நாடகம் வேறு, நாட்டியம் வேறு என உணருமாறு இக்கலை வளர்ந்தது. விழாக் காலங்களில் மகளிரின் ஆட்டங்களைப் பற்றிக் குறுந்தொகையும் மதுரைக்காஞ்சியும் குறிப்பிடுகின்றன. இவ்வகை ஆட்டத்தைக் "குரவைக் கூத்து' என்றனர். முருக வழிபாட்டின் போது ஆடும் ஆட்டத்தில் இளம் மகளிர் கலந்து கொண்டு ஆடுவர். அதனை 'வெறியாட்டுக் கூத்து' எனப் பட்டினப்பாலை (150-160) கூறுகிறது. போர்க்களத்தில் பகைவர்களைத் தோற்கடித்த உற்சாக மிகுதியால் வீரர்கள் ஆடும் ஆட்டத்தைத் துணங்கைக் கூத்து' எனப் பதிற்றுப் பத்து (77) கூறும். முல்லை நில மக்கள் திருமாலைப் புகழ்ந்து பாடி ஆடும் கூத்துக்கு 'ஆய்ச்சியர் குரவை' என்று பெயர். இத்தகைய நாடகச் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாடகத் தமிழ் தமிழ்மொழியோடு தோன்றிய ஒன்றாகுமென்பதை அறிகி றோம். தொல்காப்பியர் 'நாடக வழக்கு' என்று நாடகத்திலுள்ள சொல்லடையைக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியத்தில் 'வாடாவயவர் ஏத்தும் வள்ளி' என்ற தொடர் வருகிறது. இதற்கு உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் 'வள்ளி என்பது வள்ளிக் கூத்தையே குறிக்கும் என்கிறார். எனவே தொல்காப்பியர் காலத்திலேயே 'வள்ளி நாடகம் " இருந்ததை உணரமுடிகிறது. 'பாலசரித நாடகம்' என்ற நாடகமும் பண்டைத் தமிழகத்தில் வழக்காற்றிலிருந்ததென்பதையும், அஃது கண்ணன் நப்பின்னைமார் - பிராட்டியரோடும், பலராமனோடும் செய்த லீலைகளைப் பற்றிய நாடகம் ஆகும். ஆனாலும் பண்டைய நாடக நூல்கள் காலத்தால் மறைந்து விட்டன. அடியார்க்கு நல்லார் அகத்தியம் - பாரதம், மகாபுராணம் , பூதபுராணம் முதலிய நாடக நூல்கள் மறைந்து போயின என்கிறார். அவர் காலத்தில் வழக்கி லிருந்த 'மதிவாணன் நாடகத்தமிழ்', பரதசேனாபதியம்' என்னும் இரண்டு நூல்களைப் பற்றிப் பேசுகிறார். இவை இரண்டில் 'மதிவாணன் நாடகத்தமிழ் " மட்டும் இன்றுள்ளது. இந்த நூல்கள் யாவும், நாடகம் அமைக்கும் விதம், நடிகர்களை ஒப்பனை செய்யும் விதம் முதலியன பற்றிக் குறிப்பிட்டுள்ளன. இதற்கும் முன்ன மேயே, பல நாடக நூல்கள் தமிழில் இருந்திருக்க வேண்டுமென அறிகிறோம், 'சிலப்பதிகாரம்' ஒரு தலைசிறந்த நாடகநூல். இது சங்கம் மருவிய காலத்தில் தோன்றியது எனினும் சங்க காலத் தமிழக நாடகத் தையறிய உதவுகிறது. இதில் நாடகக் கணிகை என்று மாதவியையும் நாடகத்தையும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. 5 களப்பிரர் காலம் (கி.பி. 300-600) சான்றுகள் அ) பட்டயச் சான்றுகள் - ஆ) இலக்கியச் சான்றுகள் களப்பிரர் யார்? களப்பிரர் ஆட்சியால் விளைந்த நன்மைகள் 5. களப்பிரர் காலம் (கி.பி. 300-600) சான்றுகள் அ) பட்டயச் சான்றுகள் 1. வேள்விக்குடிச் செப்பேடு பராந்தகன் நெடுஞ்செழியன் (கி.பி. 756-15) என்பவனால் வெளியிடப்பட்ட இச்செப்பேட்டில், தன் முன்னோனான கடுங் கோன் (கி.பி. 560-590) என்பவன் களப்பிரர்களை அழித்துப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் எனக் கூறப்படுகிறது. களப் பிரர் கொடூரமானவர்கள் என்றும், சிறப்புமிக்க சங்ககால மன்னர் களிடமிருந்து தமிழகத்தைக் கைப்பற்றியவர்கள் என்றும் இச்செப் பேட்டில் பராந்தக நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறான். மேலும் இச்செப்பேட்டில் மற்றொரு செய்தியும் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கக் கொற்றன் என்கிறவன் கொற்கைக் கிழான் என்ற வேதியனுக்கு வேள்விக்குடி என்ற கிராமத்தைத் தாரை வார்த்துப் பிரமதேயமாகக் கொடுத்தான் என்பதாகும். இது பிராமணருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட பிரம தேயச் சிற்றூர். " ஆதலால் இதிலிருந்து வரித்தண்டல் செய்யக் கூடாது என்பது மரபு. எனவே இதனை இறையிலி கிராமம் என்பர். இந்தக் கிராமத்தைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிய பொழுது வரித்தண்டல் செய்தார்கள், களப்பிரரை வென்று பாண்டிய நாட்டைப் பாண்டிய மன்னன் கடுங்கோன் (கி.பி. 560-590) கைப்பற்றிய பின், கொற்றன் பரம்பரையில் வந்த நற்சிங்கன் என்ற பிராமணன் தன் முன்னோருக்கு வேள்விக்குடிக் கிராமம் இறைவி யாகப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் கொடுக்கப்பட்ட தைக் கூறினான். இதனை உணர்ந்த பராந்தகன் நெடுஞ்செழியன் மீண் டும் வேள்விக் குடியை நற்சிங்கன் குடும்பத்தாருக்கு இறையிலியாகக் கொடுத்தான் என்பதே வேள்விக்குடிச் செப்பேட்டின் சாரமாகும். இதிலிருந்து பிரமதேயச் சிற்றூர்களுக்கு வரியில்லை என்பது புலனாகிறது. களப்பிரர் சங்ககாலத்திற்குப் பின் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள் என்ற வரலாற்று உண்மையும், அவர்கள் கி.பி. 300லிருந்து கி.பி. 600 வரை தமிழகத்தை ஆண்டார்களென்ற உண்மையும் புடனாகிறது. களப்பிரரிடமிருந்து பாண்டிய நாட்டைக் கடுங்கோன் மீட்டானென்ற உண்மையும் தெளிவாகிறது. இச்செப்பேட்டில் களப்பிர அரசன் பெயர் கவிஅரசன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கலி அரசனிடம் இருந்துதான் கடுங்கோன். நாட்டை மீட்டான் என்று கூறப்படுகிறது. கவி என்ற சொல் களப்பிர அரச குடும்பத்தின் பெயராகுமெனக் கிருட்டிண சாத்திரியார் கருதுகிறார். கலி என்ற சொல் கலியுகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதென ஹில்ட்ரீகுறிப்பிடுகிறார். வேள்விக்குடிச் செப்பேட்டில் கூறியதைப் போலவே கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரரை வென்றதாகத் தென்னக அரசர்கள் அனைவருமே கூறுகின்றனர். அவர்களின் கூற்றுகளைக் க ணும் போது மயக்கமே மேலிடுகிறது. 2. காசாக்குடி செப்பேடுகள் முற்காலப் பல்லவன் சிம்மவிசுணு (கி.பி. 570-600) களப்பிரரை வென்று தமிழகத்தை மீட்டதாக காசாக்குடிச் செப்பேட்டில் காணப் படுகிறது. 3. கூரம் செப்பேடுகள் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668) களப்பிரரை வென்றதாக இச்செப்பேடுகளில் கூறப்படுகிறது. மேலும் நரசிம்மவர் மன் சோழர், பாண்டியர், கேரளர், களப்பிரர் ஆகியோரையும் வென்றதாக இச்செப்பேடுகள் கூறுகின்றன. 4. பட்டத்தான்மங்கலம் செப்பேடுகள் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 730-795) களப்பிரரை வென்றான் என்று இச்செப்பேடு கூறும் சான்றாகும். இவனுடைய வாசலில், வல்லபர், களப்பிரர், கேரளர், பாண்டியர், சோழர், துளுவர், கொங்கணர் முதலியோரும் இவன் காலில் விழுந்து வணங்கக் காத்திருந்தனர் என்பது இச்செப்பேடு கூறும் செய்தி ஆகும். 5. வேலாஞ்சேரிச் செப்பேடுகள் அபராசித பல்லவன் (கி.பி. 895-913) பல்லவ அரசர்களில் கடைசி அரசன் ஆவான். இவன் காலத்திலேயே கி.பி. 909-ல் பல்லவராட்சி முடிவு பெற்றது. ஆயினும் வேலாஞ்சேரிச் செப்பேட் டில் இவன் களப்பிரரை அடக்கி ஒடுக்கினான் என்று கூறப்படுகிறது. இவனே களப்பிரரை வென்று பல்லவர் நாட்டைக் கைப்பற்றினதாக இச்செப்பேடு கூறுகிறது. மேலே நாம் கண்ட ஐந்து செப்பேடுகளால் சங்க காலத்திற்குப் பின் ஆதிக்கம் பெற்ற களப்பிரரைப் பாண்டியர், பல்லவர் ஆகியோர் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றினார்களென்ற உண்மை புலனாகிறது. சாளுக்கியரின் செப்பேடுகள் பாண்டியர், பல்லவர்களைப் போலவே தமிழகத்தின் வட பகுதியை ஆண்ட சாளுக்கிய மன்னர்களும் களப்பிரரை வென்று நாட்டை மீட்டதாகக் கூறுகின்றனர். ஹரிஹர் பட்டயம் வினயாதித்தியன் (கி.பி. 681-696) களப்பிரரை வென்றதாக இந்தப் பட்டயத்தில் கூறுகிறான். நேரூர்ப் பட்டயம் இரண்டாம் விக்கிரமாதித்தியன் (கி.பி. 734-745) களப்பிரரை வென்றதாகத் தன்னுடைய நேரூர்ப் பட்டயத்தில் கூறுகிறான். வக்கலேரிப் பட்டயம் இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி. 744-753) களப்பிரரரை வென்றதாக இப்பட்டயம் கூறுகிறது. 4. கொப்பரம் பட்டயம் இரண்டாம் புலிகேசி (கி.பி. 611-642) கலி குல அரசர்களான களப்பிரரை வென்றதாக இந்தப் பட்டயம் கூறுகிறது. மேற்கூறிய நான்கு செப்பேடுகளின் சாரத்தின்படி களப் பிரர்களைச் சாளுக்கியர்கள் வென்று நாட்டை மீட்டனர் என்பது பெறப் படுகிறது. இவற்றால் தென்னக அரசர்களான பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் ஆகியோர் தமிழகத்தைக் கைப்பற்றி ஒரு இருண்ட காலத்தை ஏற்படுத்திவிட்ட களப்பிரரை ஒழித்து, தமிழக வரலாற்றுக் கட்டத்திலிருந்த தடையை நீக்கி விட்டார்களென்பது பெறப்படுகிறது. ஆ) இலக்கியச் சான்றுகள் 1) கலித்தொகை சங்கம் மருவிய காலத்து நூலான இதில் பாரதக் கதைகளும், மதுரையில் இளவேனிற் காலத்தில் புலவர்கள் கூடித் தமிழ் ஆய்ந்த செய்திகளும், மதுரையைக் களப்பிரர் கைப்பற்றி ஆண்ட செய்தியை யும் கூறுகின்றது. இந்தக் களப்பிரர் சமணர்களென்பது கலித்தொகை யில் காணப்பெறும் செய்தி ஆகும். (கலி 57:12-14) 2) 2) கல்லாடம் இந்நூல் சைவசமயம் மதுரையில் மறுமலர்ச்சி அடைந்ததைக் குறிப்பிடுகிறது. மூர்த்தி நாயனார் என்பவர் கருநாடக அரசன் ஒரு வனிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி ஆண்டார் என்றும், அவர் வைதீக சமய எதிர்ப்பாளர்களை ஒடுக்கிச், சைவத்தை மதுரையில் மறு மலர்ச்சி அடையச் செய்தார் என்றும் கூறுகிறது. மதுரையை ஆண்ட கருநாடக அரசன் ஒரு களப்பிர அரசன் என்பதும், அவன் சமண அல்லது பௌத்த சமயத்தவன் என்பதும் இதனால் பெறப்படுகிறது. 3 பெரிய புராணம் இதன் ஆசிரியர் சேக்கிழார் ஆவார். இவர் கி.பி. 12- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தன் பெரியபுராணத்தில் களந்தையை ஆண்ட களப்பிர மன்னனான கூற்றுவ நாயனார் என்பவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்கிறார். இதிலிருந்து மதுரையைக் களப்பிரர் கைப்பற்றி ஆண்டனர் என்பதும், அவர்கள் வைதிக சமய எதிர்ப் பாளர்களென்பதும், ஆனால் காலப்போக்கில் சிவனடியார்களாகி - விட்டனர் என்பதும் புலனாகிறது. 4) வினயவினீச்சயம் – ... இது ஒரு பாவிமொழி நூல். இதன் ஆசிரியர் புத்ததத்தர் என்பவராவார். இந்நூலில் அச்சுதவிக்ரந்தன் என்னும் களப்பிர மன்னன் காவேரிப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டான் என்றும், அவன் காலத்தில் நாட்டில் பௌத்த மடாலயங்கள் செல்வாக்குடனிருந்தன என்றும் கூறப் படுகிறது. (பாடல்கள் 3168-3179) 5) தமிழ் நாவலர் சரிதை - இந்நூல் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் - களப்பிர மன்னன் பிடியிலிருந்தனரெனக் கூறுகிறது. இந்நூல் கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 6) யாப்பருங்கல விருத்தியுரை , இந்நூல் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், களப்பிரரால். சிறைப்பட்ட செய்தியை உறுதிப்படுத்துகிறது. இக் களப்பிரமன்னன் பெயர் அச்சுதன் அல்லது அச்சுதக் களப்பாளன் என்றும், அவன் நந்தி மலையை ஆண்டான் என்றும் கூறப்படுகிறது. இந்நூலில், திருமால் வணக்கம் காணப்பெறுவதால்" களப்பிரர் காலப்போக்கில் வைணவர்களாக மாறி விட்டாரோ என்றும் ஐயம் ஏற்படுகிறது. மேலே கூறப்பட்ட ஆறு இலக்கியச் சான்றுகளையும் ஒருங்கே ஆயும் போது சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் சங்க காலத்திற்குப் பின் இறந்து விட்டனர் என்றும் அவர்களை ஆந்திர நாட்டிலிருந்தும் "கருநாடக நாட்டிலிருந்தும் வந்த களப்பிரர் அடக்கி விட்டுத் தமிழகத் தைப் பற்றி ஆண்டனர் என்றும், அவர்கள் பௌத்த, சமண சமயத்த வர் என்றும் காலப்போக்கில் வைதீக சமயத்தைப் பின்பற்றிச் சைவர் களாகவும் வைணவர்களாகவும் மாறி விட்டனர் என்றும் உணர முடி.. கிறது. இவர்கள் தஞ்சை , மதுரை, காஞ்சி ஆகிய இடங்களிலிருந்து, ஆண்டதாக அறிகிறோம். இவர் மூன்று கூறுகளாக வந்து இவ்விடங் - களைக் கைப்பற்றி ஆண்டனரெனக் கருதுகின்றனர். இவர்களைப் பற்றிய சான்றுகள் வைகுந்தப்பெருமாள் கோயில் கல்வெட்டு களிலும் செந்தலைத் தூண் கல்வெட்டுகளிலும் கிடைக்கின்றன. ஆனால் மொத்தத்தில் மேற்கூறிய சான்றுகளில் விவரங்கள் அதிக மில்லை. பெயர்கள் மட்டும் காணப்பெறுகின்றன. எனவே தான் இன்றுவரை களப்பிரர் யார் எங்கிருந்து வந்தவர்கள் போன்ற விவரங்களைச் சரிவரக் கணித்துக் கூறமுடியவில்லை . எல்லாம் ஊகங்களாகவே உள்ளன. களப்பிரர் யார்? அகநானூறு (83) கூறும் செய்தியின்படி களவர் (கள்ளர்) இனத்தைச் சேர்ந்த புல்லியென்ற மன்னன் வேங்கடத்தை ஆண்டு வந்தான். அவனுடைய வழித் தோன்றல்களே களப்பிரர் என்பர். . தமிழகத்திற்கு வடக்கில் ஆட்சிபுரிந்து வந்த சாதவாகனரின் வீழ்ச்சி யாலும், பல்லவரின் எழுச்சியாலும் சமுத்திரகுப்தனால் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது வேங்கட மலைப் பகுதியி லிருந்த களப்பிரர்கள் தமிழகத்திற்குள் புகுந்து கலகம் விளைவித்தனர். பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோரைஒடுக்கி, சோழ நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர். அவ்வாறு ஆண்டகளப்பிர மன்னன் அச்சுத விக்கிரந்தன் என்பவன் ஆவான் என்பது டாக்டர் கே.கே. பிள்ளை அவர்கள் கூறும் கருத்தாகும் (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் பக்கம் 185) தொண்டை நாட்டில் களந்தை என்னுமிடத்தில் கூற்றுவன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். இவன் சிறந்த சிவபக்தன். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இவன் கூற்றுவ நாயனார் என்று சிறப்பிக்கப்படுகிறான் என்றும் கூறுவர். வைகுந்தப்பெருமாள் கோயில் கல்வெட்டில் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் தன்னைக் கள்வர் கள்வன் எனக் குறிப்பிடுகிறான். எனவே இவன் ஒரு களப்பிரன் என்று டி. ஏ. கோபிநாதராவ் கூறுகிறார். மைசூர் நாட்டு பேலூர் கல்வெட்டின் அடிப்படையில் களப்பிரர்கள் கன்னட நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறுவர். களப்பிரர் ஆட்சியால் விளைந்த நன்மைகள் களப்பிரர் முதலில் பௌத்தர்களாகவும், பின்னர் சமணர் களாகவும் இருந்தனர் என்று கூறப்படுகிறது. இதனால் களப்பிரர் காலத்தில் பௌத்த, சமண சமயங்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. இவர்கள் ஆரிய சமயத்தின் உயிர்மூச்சான வேத வேள்விமுறையை யும், காவுகொடுப்பதையும், புலால் உண்பதையும், சாதி வேற்றுமை களையும் மறுத்தனர். கொல்லாமை, பொய்யாமை முதலிய உயரிய ஒழுக்கங்களை ஓம்பினர். ஓர் உயிரைக் கொல்லாமை, ஆயிரம் வேள்விகளை வேட்டலிலும் மேலானது என்றனர். நாடெங்கிலும் சமணப் பள்ளிகளும் பௌத்த விகாரைகளும் (கோயில்) ஏற்பட்டன. பௌத்த, சமணத் துறவிகள், ஊன் உண்ணாமை விரதத்தையும் ஏற்படுத்தினர். யுவான்சுவாங் என்ற சீனப்பயணி கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வந்தார். பாண்டிய நாட்டில் எண்ணற்ற சமணத் தீர்த்தங்கரர்கள் (துறவிகள்) வாழ்ந்திருந்ததைக் குறிப்பிடு கிறார். இதனால் தமிழகத்தில் ஒரு தலைசிறந்த சமுதாய மாற்றம் ஏற்பட்டது. சாதி வேறுபாடுகள் குறைந்தன. வேத வேள்விகள் மறைந்தன. இதனால் வைதீகருக்கும். இவர்களுக்கும் இடையே சமயப் பூசல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், களப்பிரரில் பலர் சைவர்களாக உள்ளனரென்பதையும் மறுக்கமுடியாது. சாதியும் வேள்வியும் ஒழிந்த தமிழ்ச் சமுதாயத்தைக் களப்பிரர் கண்டனர். களப்பிரர் காலத்தில் சமுதாய நலன் கருதிப் பல நீர்ப்பாசனத் திட்டங்களும் நீர்த்தேக்கங்களும் ஏற்படுத்தப் பட்டன. மண் சுவர்களை எழுப்பி மழைநீரைத் தேக்கி வைத்தனர். இதனால் மனிதர்களுக்கே யன்றி விலங்குகளுக்கும் நன்மை பயக்குமாறு பல நல்ல பணிகளைச் செய்தனர். ஆனால் களப்பிரர் ஆட்சியில் கொலை, கொள்ளை முதலிய தீய செயல்கள் நடந்தனவென்றும், சமூகம் முறைகேடாக ஒழுகியது என்றும் கூறுவது அவர்களுடைய ஆட்சி, வேதக் கோட்பாட்டிற்கு மாறுபட்டதென்ற ஒரே காரணத்தால்தான் என்பதை உணர வேண்டும். இந்து சமய மறுமலர்ச்சியும், சமற்கிருத மொழியின் மறுபிறப்பும் சிறந்தோங்கிய குப்தர் காலத்தைப் பொற் காலம் என்பதும், இதற்கு மாறான வருணாசிரமத்தை மறுத்த, உயிர் பவியை மறுத்த, சமண பௌத்தக் கொள்கைகள் மலர்ந்த களப்பிரர் ஆட்சி போன்ற காலத்தை இருண்டகாலம் என்பதும் வரலாற்றில் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் கெட்ட முறை ஆகும். இவர்கள் காலத்தில் சமய ஒழுக்கங்கள் யாவும் பாலி மொழியில் வெளிவந்தன. தேவ மொழி யான சமற்கிருதம் மறுக்கப்பட்டதும் இவர்கள் மீது பகை உணர்வு கொண்டதற்கு மற்றொரு காரணமாகும். களப்பிரரின் தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் களப்பிரர் காலத்தில் பாலி மொழி. அரசு மொழியானது. இதனால் சங்கம் வளர்த்த தமிழ்மொழி தாழ்வுற்றது: பாவி ஆட்சி மொழியாகி விட்டாலும், களப்பிரர்கள் தங்களின் சமயக் கருத்துகளை மக்கள் மொழியாகிய தமிழில்தான் கற்பிக்க வேண்டுமென்பதை உணர்ந்தனர். எனவே தமிழுக்கு முகாமை இடமளித்தனர். பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்ப வரைத் தலைவராகக் கொண்ட சமண முனிவர்கள் மதுரையில் கி.பி., 470-இல் 'திராவிட சங்கம்' என்ற ஒன்றை மக்களை அறவழி ஒழுகச் செய்யத் தோற்றுவித்தனர். இதனால் புலமைமிக்க சமணத் துறவிகள் பலர் தமிழில் பல நூல்களை யாத்தனர். சங்க இலக்கியங்களைக் களப்பிரர்கள் அழித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டும் சரியானதல்ல. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பலவும் சமண, சாக்கியக் கோட்பாடுகளைக் கொண்டவை ஆகும், சமணரின் திராவிட சங்கம் (கி.பி. 470) எடுத்துக் கொண்ட முயற்சியால்தான் சீவகசிந்தாமணி, நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம் முதலிய காவியங்கள் தோன்றின. களப்பிரர் காலத்தில் பலதிறப்பட்ட சமயக்குரவர்கள் தம் சமயங் களை நிலைநாட்டப் போட்டி போட்டுக் கொண்டு மக்களிடையே சமயக் கொள்கைகளைப் பரப்பினார்கள் என்பதை மணிமேகலை யில் காணலாம். இளந்துறவியான மணிமேகலை முன்பு சமயச் சான் றோர் பலரும் தம் சமயம் தான் பெரிதென வாதிட்டதாக இந்நூல் கூறு கிறது. இதனால் அக்காலத்தில் வைதீகம், சைவம், பிரமவாதம், ஆசி வகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம், லோகாயதம் பெளதிகம்) முதலிய சமயங்கள் போட்டி போட்டுக் கொண்டு வளரத் துடித் ததைக் காண்கிறோம், சாக்கியர் கடவுள் இல்லை என்றனர். சமணர்கள் அருகனே கடவுள் என்றனர். சமண சமயக் கொள்கைகளை விளக்கக் கூடிய பல நூல்களைத் தமிழில் இயற்றினர். அவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றன. தமிழ் மொழிக்கான பல இலக்கண நூல்கள் சமண முனிவர்களால் எழுதப்பட்டவை ஆகும். இதற்குப் பவணந்தியின் நன்னூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எனவே சங்ககாலத்திற்குப் பின் ஏற்பட்ட சமற்கிருத ஆதிக்கத் தை மட்டுப்படுத்தித் தமிழுக்கு மறுமலர்ச்சி அளித்தது களப்பிரர் ஆட்சியே ஆகும். சமய வழிபாட்டில் சமணர்கள் வாசுதேவனையும், பல தேவனை யும், திருமகள் ஆகிய தேவதைகளையும் ஏற்றுக் கொண்டனர். இதனை விரும்பாத சாக்கியர் சமணரோடு பொருது நின்றனர். ஒரளவு வைதீக சமயத் தேவதைகளை ஏற்றுக் கொண்ட சமணர்களுக்குச் செல்வாக்குப் பெருகியது. அதனால் நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும் சமணர் களுக்குச் செல்வாக்கு அதிகரித்தது. அவர்களின் கோவில்கள் வைத்க சமயக் கோயில்களைப் போலவே இருந்தன. ஒரே வேறுபாடு பார்ப்பனப் பூசாரிகள் சமணக் கோயில்களில் இல்லை. ஆனால் இவர்களை எதிர்த்த சாக்கியரின் செல்வாக்கு மக்களிடையே குன்றியது. சாக்கியர் கடவுள் மறுப்பாளர்கள், பூசை காவு முதலியவற்றை ஏற்காதவர்கள். எனவே இவர்களின் விகாரைகள் காஞ்சி, புகார் போன்ற பழமையான பெருநகரங்களில் மட்டும் இருந்தன, சமணக் குகைகளோ நாடு முழுவதும் இருந்தன. இதனால் சைவ, வைணவ சமயங்களை எதிர்த்து நின்ற சமணம் ஓரளவு மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. கடைசியில் சைவர்கள் சமணர்களைக் கழுவில் ஏற்றியதாகவும் புராண வரலாறு உள்ளது. ஆனால், கழுவில் ஏற்றப் பட்டவர்கள் சாக்கியரே என்று 'தமிழன்' அயோத்திதாசப் பண்டிதர், தனது ஆய்வு நூலான ஆதி வேதம் என்ற நூலில் கூறுகிறார். எனவே களப்பிரர் ஆட்சியால், தத்துவமும், சமய மாற்றமும் தோன்றின என்பது உண்மை. அவர்கள் கருநாடக நாட்டி லிருந்து தமிழகம் வந்து காஞ்சி, புகார், மதுரை ஆகிய நகரங்களில் செல்வாக்குடன் ஆண்டனர் என்பதை யும் பின்னர் பல்லவர், பாண்டியரால் ஒடுக்கப்பட்டனர் என்பதையும் அறிகிறோம். இவர்கள் சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றினர். தமிழுக்குத் தலையாய தொண்டு செய்தனரென்பதையும் உணருகிறோம், 6 பல்லவர் காலம் (கி.பி. 600 - 900) அ. சான்றுகள் 1. செப்பேடுகள் 2. கல்வெட்டுகள் ஆ. பல்லவரின் தாயகம் எது? இ. பல்லவ மன்னர்கள் ஈ. ஆட்சிமுறை உ. சமுதாய வாழ்க்கை ஊ. சமயம் எ. பொருளாதார நிலை ஏ. கலைகள் 1. கட்டடக்கலை 2. சிற்பக்கலை 3. ஓவியக்கலை பல்லவர் காலம் (கி.பி. 600 - 900) முன்னுரை பல்லவர்கள் கி.பி. 3- ஆம் நூற்றாண்டிலிருந்து 9 - ஆம் நூற்றாண்டுவரை ஆண்டனர். கி.பி. 250 முதல் 30 வரை ஆண்ட பல்லவர்களை முற்காலப் பல்லவர்கள் என்றும், கி.பி. 340 முதல் 575 வரை ஆண்டவர் இடைக்காலப் பல்லவர்கள் என்றும், 575 முதல் 900 வரை ஆண்ட பல்லவர்களைப் பிற்காலப் பல்லவர்கள் என்றும், கூறும்போது நாம் பிற்காலப் பல்லவரிலிருந்தே பல்லவர்கள் பற்றி அறிய உள்ளோம். இடைக்காலப் பல்லவர் களில் கடைசி அரசனான சிம்ம விசுணு (கி.பி. 570 - 800 காஞ்சியைக் கைப்பற்றி அதனைத் தன் கோநகராக்கி கிருட்டிணை ஆறு முதல் தெற்கே காவிரி ஆறு வரையுள்ள நிலப்பரப்பை ஆண்டான். அவன் கங்க அரசன் துருவிந்தன் என்பானுக்கும், சாளுக்கிய அரசன் விசுணுவர்த்தனன் என்பானுக்கும் சமகாலத்தவன் என்பதை அறிகிறோம். பாண்டியன் அவனிசூளாமணி என்பவனும் சமகாலத்தவனேயாவான். அவனுடைய மகனான முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 - '30) காலத்திலிருந்தே நாம் பல்லவர் வரலாற்றை அறிய உள்ளோம். அதாவது தோராயமாகக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9- ஆம் நூற்றாண்டு வரையில் ஆண்ட பல்லவர்களின் வரலாறு மிக முக்கியமானது. இவர்கள் 'காஞ்சிப் பல்லவர்கள்' எனப்பட்டனர். இவர்கள் காலத்தில் வாத பி அல்லது பாதாமியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் முற்காலச் சாளுக்கியர் அல்லது மேலைச் சாளுக்கியர் எனப்பட்டனர். முதலாம் புலிகேசி (கி.பி. 535-556) என்ற சாளுக்கியன்தான் மகாராசன் என்று பட்டம் பெற்றவன். இவனுக்கு பின் முதலாம் கீர்த்திவர்மன் (கி.பி. 567 -598) ஆகியோர் சாளுக்கிய நாட்டை ஆண்டனர். இரண்டாம் புலிகேசிதான் பல்லவர் நாட்டின் மீது படையெடுத்து முதலாம் மகேந்திரனை (கி.பி. 800 - 630த் தோற்கடித்தான். இவனுக்குப் பின் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 734-741), இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி. 746 - 757) ஆகி யோர் ஆண்டனர். இவர்களும் பல்லவ மன்னர்களோடு தொடர்ந்து போரிட்டு வந்தனர். இரண்டாம் கீர்த்தி வர்மனோடு பாதாமிச் சாளுக்கியர் ஆட்சி மறைந்தது. இவ்வாறு, சுமார் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவரும் மேலைச் சாளுக்கியரும் ஆண்டனர். ஆனால், சாளுக்கியர் தென்னாட்டவரோ, அல்லது தமிழ் நாட்டவரோ அல்லர். அவர்கள் தக்காணத்தை ஆண்டவர்கள். இவர்கள் காலத்தில் முற்காலப் பாண்டியப் பேரரசர்கள் தமிழகத்தின் தென்பகுதியை ஆண்டார்கள். இவர்களின் ஆட்சிக் காலமும் ஏறத்தாழ சி.பி. பி -ஆம் நூற்றாண்டில் இருந்து 9-ஆம் நூற் றாண்டு வரை இருந்தது. முதலாம் பாண்டியப் பேரரசு கடுங்கோன் (கி.பி. 595 - 90 முதல் வீரபாண்டியன் (கி.பி. 946 - 968) வரை நீடித்தது. இக்கால கட்டத்தில் பன்னிரெண்டு பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள். ஆக, பல்லவரில் முதலாம் மகேந்திரவர்மனில் (கி.பி. 600 - 630) தொடங்கி கடைசி அரசனான அபராசிதவர்மன் (கி.பி. 870 - 80) வரையிலான காலகட்டமும் முற்காலச் சாளுக்கியரின் காலகட்டமும் முதல் பாண்டிய பேரரசின் காலகட்டமும் ஏறத்தாழ கி.பி. 6 ஆம் நூற் றாண்டிலிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை மூன்று நூற்றாண்டுகள் தொடர்ந்து இருந்ததால் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த காலகட்டமாக உள்ளது. இதனை அறிவதற்கு முகாமைச் சான்றுகளாய்ப் பயன்படுவன இக்காலச் செப்பேடுகளும் கல் வெட்டுகளும் ஆகும். அ. சான்றுகள்: 1. செப்பேடுகள் பல்லவர்கள் காஞ்சியைக் கோநகராகக் கொண்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை தொண்டை மண்டலத்தையும், அதனைச் சுற்றியுள்ள நாடுகளையும் ஆண்டார்கள். இவ்வாறு ஆண்டவர்களின் செப்பேட்டு மொழியைக் கொண்டு அவர்களுடைய வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். தொடக்கத்திலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டு இடைப் பகுதியில் வரை ஆண்டவர்களை முதற் பிரிவாகப் பிரிக்கலாம், இவர்களின் செப்பேடுகள் பிராகிருத மொழியில் வெளியிடப்பட்டன. தொடக்கத்தில் இருந்து கி.பி. 6 ஆம் நூற்றாண்டு இடைப்பகுதியில் இருந்து 8 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை ஆண்டவர்களை இரண்டாம் பிரிவாகப் பிரிக்கலாம். இவர்கள் வெளியிட்ட செப் பேடுகள் சமற்கிருத மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களை மூன்றாவது பிரிவினராகக் கொள்ள லாம். இவர்கள் வெளியிட்ட செப்பேடுகள் சமற்கிருதமும் தமிழும் கலந்து வெளியிடப் பட்டன. எனவே பல்லவர்கள் செப்பேடுகளை : 1. பிராகிருத மொழிச் செப்பேடுகள் 2. சமற்கிருத மொழிச் செப்பேடுகள் 3. சமற்கிருதமும் தமிழும் கலந்த செப்பேடுகள் என மூன்றுவகையாகப் பிரித்தறியலாம். பிராகிருத மொழிச் செப்பேடுகள் பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட செப்பேடுகளில் கிடைத்துள்ளவை மூன்று ஆகும். அவை மயிதவோலு செப்பேடு கள், ஈரகதகள்ளிச் செப்பேடுகள், குணபதேயம் செப்பேடுகள் என்பனவாகும். இந்த மூன்று செப்பேடுகளுமே சிவகந்தவர்மன் (கி.பி. 345 - 355) காலத்தவை என்று கருதுகின்றனர். 1. மயிதவோலு செப்பேடுகள் 1889 -இல் குண்டூர் மாவட்டம் மயிதவோலு என்னும் ஓனரி லிருந்து இச்செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள எட்டு ஏடுகளைக் கொண்ட இச்செப் பேடுகள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. காஞ்சியில் இச் செப்பேட்டை வெளியிடும் போது சிவஸ்கந்தவர்மன் இளவரசனாக இருந்தான். இவன் பரத்வாச கோத்திரத்தில் பிறந்த பல்லவ குலத்த வன். தாணிய கடகத்திலுள்ள அதிகாரிக்கு இது எழுதப் பட்டுள்ளது. அதில் விரிபரம் என்னும் ஊரைப் பூர்வகோட்டி ஆர்யன், கோநந்தி ஆர்யன் ஆகிய பிராமணர்களுக்குப் பிரமதேயமாகத் தானம் செய்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2. ஈரகதகள்ளி செப்பேடுகள் எட்டு ஏடுகளைக் கொண்ட இந்த சாசனம் பெல்லாரி மாவட்டம் ஈரகதகள்ளி என்னும் ஊரில் கிடைத்தது. இன்று சென்னை அருங் காட்சியகத்தில் உள்ளது. இச்செப்பேடு சிவகந்தவர்மனை இராசாதிராசன் என்று குறிப்பிடுகிறது. இவன் காஞ்சியில் அக்னித்தோம், வாசபேய, அசுவமேத வேள்விகளைச் செய்த பரத்துவாச கோத்திரத்தில் பிறந்த இராசாதிராசன் என்றும் புகழ்கிறது. பல்லவமன்னன் சிவகந்தவர்மன். அவனுடைய முன்னோன், பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்திருந்த ஊருடன், மேலும் பூமிகளையும் சேர்த்துத் தானமாகக் கொடுத்த செய்தி இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டயம் பல்லவர் ஆட்சியின் தொடக்கத்தை அறிய உதவுகிறது. 3. குணபதேயம் செப்பேடுகள் இவை குண்டூர் மாவட்டத்திலுள்ள குணபதேயம் என்னும் இடத்திலிருந்து கிடைத்தவை ஆகும். மூன்று ஏடுகளைக் கொண்ட இச்சாசனம் இன்று பிரிட்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. யுவமகாராசன் விசபுத்தவர்மன் தேவியான சாரு தேவி என்ப வெள் பகவான் நாராயணன் கோயிலுக்கு நிலதானம் (தேவதானம்) அளித்த செய்தியை இச்செப்பேடு கூறுகிறது. இந்த மூன்று செப்பேடுகளும் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றுள்ளன. 2. சமற்கிருதமொழிச் செப்பேடுகள் சமற்கிருத மொழியில் எழுதப் பெற்ற பல்லவ செப்பேடுகள் பதினைந்து ஆகும். இவற்றுடன் சிக்மகளூர் என்னுமிடத்தில் கிடைத்த செப்பேட்டையும் சேர்த்து பதினாறு செப்பேடுகள் சமற்கிருத மொழிச் செப்பேடுகள் ஆகும், சமற்கிருத மொழிச் செப்பேடுகள் நல்கிய அரசன் பெயர் செப்பேட்டின் பெயர் 1. விசயகந்தவர்மன் - ஓங்கோல் 2. சிம்மவர்மன் - வேசந்தா, உருவப்பள்ளி, நெடுங்கராயம் 3. விசுணுகோபவர்மன் - தர்சி, மிகிரா, முடிவெட்டி, ஓங்கோகரா, ஓசாக்கோட்டை ஆகியவை முக்கியமானதாகும். இச்செப்பேடுகளில் இவற்றை வழங்கிய மன்னர்களின் பெயர்களோடு அவர்களின் தந்தையாரின் பெயர்களும், பாட்டனாரின் பெயர்களும் அவர்களின் கோத்திரமும் உள்ளன. பல்லவர் கால அரசியல், பொருளாதார, சமூகச் செய்தி களை அறிய இவை மிகவும் உதவுகின்றன. குறிப்பாக நாட்டுப் பிரிவுகளின் பெயர்களும், வணிகப் பொருள்களின் பெயர்களும், வரிகளின் பெயர்களும் மக்களின் பழக்க வழக்கங்களும் இவற்றால் அறியப்படுகின்றன. 3. சமற்கிருதமும் தமிழும் கலந்த செப்பேடுகள் பல்லவர் செப்பேடுகளின் முற்பகுதியில் சமற்கிருதமும், பிற்பகுதியில் தமிழும் கலந்த செப்பேடுகள் மொத்தம் பத்து உள்ளன. மேலும் கங்கமன்னன் சிறிமாறனுடைய அல்லகெரே செப்பேடுகளும், கோபால தேவனுடைய ஆல்தியர் செப்பேடுகளும் சமற்கிருதமும், தமிழும் கலந்தவையாக உள்ளன. நல்கிய அரசன் பெயர் செப்பேட்டின் பெயர் 1. சிம்மவர்மன் பள்ளன் கோயில் (1) 2. முதலாம் நந்திவர்மன் காசாக்குடி, புல்லூர், தண்டந்தோட்டம், கொற்றங்குடி (4) 3. இரண்டாம் நந்திவர்மன் உதயேந்தரம் (1) 4. இரண்டாம் நரசிம்மன் ரேயூர் (1)உன்னகுரவாய பாளையம் (2) 5. முதலாம் பரமேசுவரவர்மன் கூரம், 6. மூன்றாம் நந்திவர்மன் வேலூர்ப்பாளையம் (1) ஆகிய பத்தோடு, கந்தசிசியனுடைய இராயக்கோட்டைச் செப்பேடும், அபராசிதவர்மனுடைய வேல்சேரி செப்பேடும் சேர்த்து சமற்கிருதமும் தமிழும் கலந்த செப்பேடுகளாக எண்ணப்படுகின்றன. பல்லவர் செப்பேடுகளைத் திரட்டி பல்லவர் செப்பேடுகள் முப்பது என்னும் நூலாகத் தமிழ் வரலாற்றுக் கழகம் (1966) வெளியிட்டுள்ளது. 2. கல்வெட்டுக்கள் பல்லவர் கல்வெட்டுகள் 300க்கும் குறைவாகவே கிடைத் துள்ளன. மஞ்சுக்கல்லு என்னுமிடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு முதலாம் சிம்மவர்மன் காலத்தது ஆகும். அடுத்துள்ள அமராவதித் தூண் கல்வெட்டு இரண்டாம் சிம்மவர்மன் தானிய கடம் அல்லது அமராவதி என்னுமிடத்திலுள்ள புத்தவிகாரைக்கு நன்கொடை அளித்தது பற்றிக் கூறுகிறது. அடுத்துள்ள கல்வெட்டு சிம்மவிசுணு வின் தந்தையான மூன்றாம் சிம்மவர்மன் (கி.பி. 550 - 570) காலத் தது. இது ஒரு நடுகல் ஆகும். இது திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கிடைத்துள்ளது. இவனுடைய மற்றொரு கல்வெட்டு வேலூர் மாவட்டம் சோழபுரத்தில் கிடைத்துள்ளது. ஆக மஞ்சுக் கல்லு. அமராவதி, செங்கம், சோழபுரம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் சிம்மவர்மன்களின் கல்வெட்டுகளாகும். இவையே பல்லவர் கால கல்வெட்டுகள் ஆகும். முடிவுரை கல்வெட்டுகள் கிடைக்கும் இடங்கள் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டவை என்றும், கிடைக்காத இடங்கள் ஆட்சிக்கு உட் படாதவை என்றும் கூற, கல்வெட்டுகளே சான்றாக உள்ளன. தொடக்கத்தில் பல்லவராட்சி தருமபுரி, வேலூர், செங்கை, ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பரவி இருந்ததை இங்கெல்லாம் கிடைக்கும் சிம்மவர்மன், சிம்மவிசுணு, மகேந்திரவர்மன் ஆகியோர் கல்வெட்டுகளால் அறிகிறோம். சிம்மவிசுணுவுக்கு முற்பட்டோரின் கல்வெட்டுகள் ஆந்திரப் பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன. எனவே, அவர்கள் முதலில் தமிழகத்தில் கால்வைக்கவில்லை என்பது தெரிகிறது. களப்பிரர், முத்தரையர் ஆகியோர் தஞ்சைப் பகுதியில் இருந்ததால் பல்லவர் கல்வெட்டுகள் அங்கு அதிகம் காணப்படவில்லை. சோழரின் எழுச்சியால் பல்லவர் ஆதிக்கம் குறைந்தது என்பதையும் பல்லவரின் கல்வெட்டுகளால் அறியலாம். கடைசிப் பேரரசனான அபராசிதன் கல்வெட்டுகள் செங்கை, வேலூரர், தென்ஆற்காடு, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் காணப்படுவதால் பல்லவர் ஆட்சி சுருங்கி விட்டதை யே இது காட்டுகிறது. பல்லவர் கல்வெட்டுகளில் தமிழில் வெளியிடப்பட்டவை அதிகமுள்ளன. காரணம் இவை பல்லவ மன்னர்களின் கடைசிக் காலத்தில் பொறிக்கப்பட்டவை ஆகும். தமிழ்நாட்டுப் பகுதிகளில் கிடைப்பவையுமாகும். இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 730-785) காலம் முதல் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமே பல்லவர்களால் வெளியிடப் பட்டன. பல்லவர் கல்வெட்டுகள் வட்டெழுத்தில் உள்ளன. ஆனால் தமிழ், கிரந்தம் ஆகியவற்றிலும் இவை வெளியிடப் பட்டுள்ளன. செங்கை, தென் ஆர்க்காடு, திருச்சி ஆகிய பகுதிகளில், தமிழ், கிரந்த எழுத்தால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. நடுகல் கல்வெட்டுகள் வட்டெழுத்து உடையன. . குடிமக்கள் பொறிப்பதற்கு ஒரு வகையான எழுத்தையும், மன்னர்கள் பொறிப்பதற்கு ஒரு வகையான எழுத்தையும் கல்வெட்டில் கையாண்டுள்ளனர்.. திருமெய்யம் கல்வெட்டு போன்ற இசைக் கல்வெட்டுகள் பல, பாடல் கல்வெட்டுகளாக உள்ளன. மன்னரின் விருதுப் பெயர்கள் கல்வெட்டுகளில் ஏராளமாகக் காணப்பெறுகின்றன. பல்லவர் கால் இலக்கியங்களில் சில செப்பேடுகளும் கல்வெட்டுகளும் வந்துள்ளன. ஆ) பல்லவர்களின் தாயகம் எது? பல்லவர்களைப் பற்றி அறிவதற்கான அடிப்படைச் சான்றுகளான கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகியவற்றை வைத்தே அவர்களின் தாயகத்தைக் கணிப்பாரும் உண்டு. அவர்களின் தாயகம் பற்றி கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகப் பல்வேறு ஊனகங்களைக் கூறிவந்தோர் தற்காலிகமாக இன்று பல்லவர்கள் சாத வாகனர்களின் கீழ் சிற்றரசர்களாயிருந்து, அச் சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின் தனித்தாள முற்பட்டவர்கள் என்றும், அவர்களின் தனி ஆட்சி, தொண்டை மண்டலத்தில் தொடங்கியது என்றும் முடிவு செய்துள்ளனர். அதாவது அவர்கள் தமிழரல்லர், வெளியிலிருந்து தமிழகம் போந்து ஆட்சியில் அமர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். அவர்களின் பட்டயங்களில் அவர்கள் தங்களைப் பரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வதால் அவர்கள் தமிழரல்லர் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், தமிழனுக்குக் கோத்திரமும் குலமும் கிடையாது. மேலும் பல்லவர்களுடைய மகேந்திரவாடி, தளவானூர், பல்லா வரம், திருச்சி, திருக்கழுக்குன்றம், வெல்லம், மாமண்டூர், மண்டகப் பட்டு, சித்தன்ன வாசல், மாமல்லபுரம் முதலிய இடங்களில் காணப் படும் கல்வெட்டுகளும், செப்புப் பட்டயங்களும் பல்லவர்களைப் பற்றி அறிய சான்றுகளாய் உள்ளன. பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்கள், பிராகிருதம், சமற்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப் பட்டுள்ளன. முதன் முதலில் பல்லவர்களால் வெளியிடப்பட்ட சாசனங்கள் பிராகிருத மொழியில் வெளியிடப்பட்டுள் ளன. இவை கி.பி. 250 முதல் 350 வரையிலான காலத்தில் வெளி யிடப்பட்டுள்ளன. பின்னர் கி.பி. 350 முதல் கி.பி. 650 வரையில் சமற்கிருத மொழியிலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் கிரந்த - தமிழ் எழுத்துகளிலும் வெளியிடப் பட்டுள்ளன. இதனை ஆய்வாளர்கள் "பல்லவுகிரந்த கல்வெட்டுகள்' என்பர். மேலும் பிராகிருத, சமற்கிருத சாசனங்களில் வரும் பண்பாடுகள் ஆட்சிமுறைகள் இவை தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இவை அர்த்தசாத்திரம் கூறும் கோட்பாடுகளுடன் ஒத்திருக்கின்றன. தமிழ்மண்ணே தமிழாக மணக்கும்படிச் செய்த சங்க காலத் திற்குப் பின் பாவியும், சமற்கிருதமும், களப்பிரரால் போற்றிக் காக்கப் பட்டதை யடுத்து பல்லவர்கள் ஆட்சியையும் பண்பாட்டையும் சமற்கிருத மயமாக்கிவிட்டனர். எனவே, அவர்கள் தமிழர்கள் அல்லர் என்பதும், சாதவாகனரோடு இணைந்து அல்லது கீழ்ப்பட்டு ஆண்டவர்க ளென்பதும் பின்னர் தமிழகம் போந்து ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டனர் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும். பல்லவர்கள் பரிவேள்வி செய்துள்ளனர். பரிவேள்வி செய்வது தமிழ் மன்னர்களின் மரபு அல்ல என்பதாலும் இவர்கள் அயலவர் என்பதைப் பெறலாம். பல்லவர்கள் வாகாடர்கள் வழி வந்தவர்கள் என்றும் கூறுவர். வாகாடர் தங்களைப் பரந்து வாசக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளுவதைப் போலவே, பல்லவர் களும் தங்களைப்பரத்துவாசக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்றனர். இருவரும் பிராமணப் பண்பாடுகளையே பின்பற்றியவர்கள். பல்லவர்களில் ஒருவனான வீரகூர்ச்சன் என்பவன் நாகக் கன்னி ஒருத்தியை மணந்தான் என்பது வரலாறு. இதைப் போலவே சோழன் வெள்வேற்கிள்ளி என்பவன் பீலிவளை என்ற நாகக்கன்னியை மணந்து தொண்டைமான் இளந்திரையன் என்பவனைப் பெற்றான் என்றும், அவனுடைய பெயரால்தான் தொண்டை நாடு என்று பெயர் வந்தது என்றும் மணிமேகலையால் அறிகிறோம். "தொண்டையர்" என்னும் பெயரும் "பல்லவர் " என்ற பெயரும் ஒன்றே என்றும், எனவே தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் வழி வந்தவர்களே பல்லவர் என்றும் டாக்டர் கிருட்டிணசாமி ஐயங்கார் கூறுகிறார். சாதவாகனர்களின் ஆட்சி கி.பி, 225இல் வீழ்ச்சியுற்ற பின் பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங் கினர். காலப்போக்கில் அவர்களுடைய ஆட்சி ஆந்திராவிலுள்ள திருட்டிணை ஆறுவரை பரவியது. அக்காலத்தில் அவர்கள் வெளி யிட்ட சிவகந்தவர்மனுடைய மயிதவொளு, ஈரக்கள்ளி என்னும் ஊர்களில் கிடைத்துள்ள பிராகிருத மொழிச் செப்பேடுகளில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. சாதவாகனரோடு தொடர்புடையவர்களாக இருந்ததால் பல்லவர்கள் அவர்களைப் பின்பற்றிப் பிராகிருதம் சமற்கிருத மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இதனால் பல்லவர்கள் சாதவாகனர் வழி வந்தவர்கள் அல்லது சாதவாகனர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறலாம். இவ்வாறு. வீரகூர்ச்ச மன்னன் தொடங்கி, சிவகந்தவர்மன் கந்தவிசயன் முதலானோர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அவர்களின் சாசனங்கள் பிராகிருத, சமற்கிருத மொழி களிலேயே வெளியிடப்பட்டன. அவர்கள் தோராயமாக கி.பி. 330 விருந்து 575 வரை ஆண்டனர். அப்பொழுது அவர்களின் ஆட்சிப் பரப்பு தெற்கே தென்பெண்ணை ஆற்றிலிருந்து வடக்கே கிருட்டினை ஆறு வரை பரவி இருந்தது. அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் பிராமணக் கடிகைகள் இருந்தன. இவை பிராமணர்களுக்குச் சமற்கிருதத்தை யும் வேதங்களையும் பயிற்றுவித்து வந்தன. விசுணுகோபன் என்ற பல்லவ மன்னன் காஞ்சியில் கி.பி. 350 முதல் 375 வரை அரசாண்டான். அவன் காலத்தில் தென்னகத்தின் மீது படையெடுத்த சந்திரகுப்த மெளரியன் தென்னகத்தில் பன்னிரெண்டு மன்னர்களைத் தோற்கடித்ததாகவும், அவர்களுள் காஞ்சி விசுணு கோபன் என்பானும் ஒருவன் என்றும் கூறப்படுகிறது. ஆக, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழகத்தில் கடிகை வைத்துச் சமற்கிருதத்தையும், வேதங்களையும் வளர்த்த பல்லவர் கள் தமிழரல்லர் என்பது மேலும் உறுதியாகிறது, பல்லவர்கள் தமிழர்களே என்றும், தொண்டைமான் இளந் திரையன் வழிவந்தவர் என்றும், முத்தரையர் வழி வந்தவர் என்றும் கூறுவாருமுளர். இ) பல்லவ மன்னர்கள் பல்லவர் ஆட்சியை முதன் முதலில் தோற்றுவித்தவன் பப்பரதேவன் என்று கூறுவர். இவனைத் தொடர்ந்து ஆண்ட பல்லவர்களை முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூவகையாகப் பிரித்து அறியலாம். கி.பி. 250 முதல் 340 வரையில் ஆண்ட பல்லவர்களை முற்காலப் பல்லவர்கள் என்றும், கி.பி. 340 முதல் 575 வரை ஆண்டவர்களை இடைக்காலப் பல்லவர் என்றும், கி.பி. 575 முதல் 900 வரை ஆண்டவர்களைப் பிற்காலப் பல்லவர்கள் என்றும் கூறினோம். இங்கு பிற்காலப் பல்லவர்களைப் பற்றியே அறிய முற்படுகிறோம். இவர்களில் முதல் ஏழு பல்லவ மன்னர்கள் மூத்த கால்வழியினர் என்றும், பின்னவரை இளைய கால்வழியினர் என்றும் அழைக்கலாம். இவர்களின் ஆட்சிக் காலம் கி.பி. 570 முதல் 13 வரை, தோராயமாக மூன்றரை நூற்றாண்டுகள் இருந்தது. . மூத்த தலைமுறையினர் 1, சிம்ம விசுணு (கி.பி. 570 500) சிம்மவிசுணு இடைக்காலப் பல்லவர்களின் கடைசி அரசனான சிம்மவர்மன் (கி.பி. 550 - 570) என்பவனுடைய மகன் ஆவான். இவன் தம்பியின் பெயர் பீமவர்மன் என்பதாகும். பாண்டிய மன் னன் கடுங்கோன் களப்பிரரிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டதைப் போலவே, சிம்மவர்மனும் அவனுடைய மகன் சிம்மவிசுணுவும் களப்பிரரிடமிருந்து சோழநாட்டை மீட்டனர். சிம்மவிசுணு கங்க அரசனான துருவிநீதன், சாளுக்கிய அரசன் விசுணுவர்த்தனன் ஆகியோரின் சம காலத்தவன். இதனை வேலூர்ப்பாளையம், காசாக்குடி, கூரம் ஆகிய செப்பேடுகளால் அறியலாம். இவனுடைய மகனான மகேந்திரவர்மன் இயற்றிய 'மத்தவிலாசப் பிரகசனம்' என்னும் நாடக நூலில் சிம்மவிசுணு பல்லவர் குலத்தை நிலைநாட்டி நாட்டுக்கு வேண்டிய பொருள்களைத் தேடித்தந்தவன் என்றும், வீரத்தில் இந்திரனையும், செல்வத்தில் குபேரனையும் ஒத்தவன் என்றும், அரசருள் அரிமா போன்றவன் என்றும் புகழ்கிறான். வேலூர்ப்பாளையம் செப்பேடுகளில் இவன் சோழ நாட்டை வென்ற செய்தி உவமையோடு சித்திரிக்கப் பட்டுள்ளது. பாண்டியர் சேரர் சிங்களரை வென்றான் எனப் பிற்காலப் பட்டயங்கள் கூறுகின்றன. காஞ்சிபுரத்தைச் சிம்மவிசுணுதான் முதன் முதலில் கைப்பற்றி அதனைக் கோநகராக்கினான் என்றும், தெற்கே காவிரி ஆறுவரைத் தன் ஆட்சியை விரிவுபடுத்தினான் என்றும், காஞ்சியில் கடிகா என்ற அறிவியல் கல்லூரியை ஏற்படுத்தி அதில் பிராமணருக்கு வேதக் கல்வியைப் பயிற்றுவிக்க ஏந்துகள் செய்தான் என்றும் இதனால் காஞ்சிபுரத்துக்கே கடிகா என்ற பெயர் ஏற்பட்டது என்றும் ஆர். கோபாலன், ஈராசுப்பாதிரியார் ஆகியோர் கூறுவர். புதுக்கோட்டை வரையிலுள்ள சோழநாட்டையும், திருக்கோவலூர்ப் பகுதியை உள்ளடக்கிய மலைநாடு அல்லது மலாடு பகுதியையும் வென்றான். இவ்வாறு பெரும் ஆட்சிப் பரப்பை ஏற்படுத்திக் காஞ்சியைக் கோநகராக் கொண்டு ஆண்ட சிம்மவிசுணு ஒரு சிறந்த வைணவப் பக்தன் ஆவான் என்பதை உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற ஆதிவராகர் குடைவரைக் கோயிலில் சிம்மவிசுணுவின் உருவச்சிலை உள்ளது. அதில் 'சிரசிம்மவிசுணு போத்த ராசன்' என்று பல்லவக் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. 2. மகேந்திரவர்மன் கி.பி. 500 - 530) கிருட்டிணை ஆற்றிலிருந்து புதுக்கோட்டை வரையிலான ஒரு பெருநிலப்பரப்பை சிம்மவிசுணு தன் மகன் மகேந்திரனுக்கு விட்டுச் சென்றான். மகேந்திரன் காலத்தில் சாளுக்கியர்கள் புகழ்மிக்க இரண்டாம் புலிகேசி (கி.பி. 909 - 042) தலைமையில் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தனர். இப் படையெடுப்பின் விவரத்தைப் புலிகேசி யின் அய்கோளிக் கல்வெட்டு கூறுகிறது. புலிகேசியின் படையைக் கண்டு மகேந்திரன் காஞ்சிபுரம் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்! என் என்றும் இக்கல்வெட்டுக் கூறுகிறது. இப்போரின் முடிவில் ஆந்திரப் பகுதியிலிருந்த தனது நாட்டின் ஒரு பகுதியான நெல்லூர், குண்டூர், மாவட்டங்களைப் புலிகேசியரிடம் தோற்றானென்பதைக் குண்டூர் மாவட்டத்திலுள்ள சராலா என்னுமிடத்திலுள்ள கபோதீசுவரம் என்ற கோயிலுள்ள கல்வெட்டால் அறிகிறோம். இக்கல்வெட்டில் வேகவதி ஆற்றங்கரையிலுள்ள காஞ்சித் தலைவன் மகேந்திரன் என்று இவன் குறிப்பிடப்படுகிறான். மகேந்திரன் புலிகேசியிடம் முதலில் தோற்றாலும், பின்னர் புலி கேசியையும் அவனுக்குத் துணைநின்ற பல அரசர்களையும் காஞ்சிக்கு வடக்கேயுள்ள புள்ளலூர் என்னுமிடத்தில் ஒறுத்தான். இழந்த தன் ஆந்திரப்பகுதிகளயும் மீட்டான் எனக் காசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. , இதற்குப்பின் மகேந்திரனின் ஆட்சிப்பரப்புநெல்லூர் மாவட்டத் தின் ஒரு பகுதி, சித்தூர், செங்கல்பட்டு வடஆர்க்காடு, தென் ஆர்க்காடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாயிருந்தது, இவன் காலத்தில் மல்லை அல்லது 'கடல்மல்லை' எனப்படும் மாமல்லபுரம் ஒரு சிறந்த துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்தது. இது தொண்டைமான் இளந்திரையன் எனும் சோழ மன்னன் காலத்தி லேயே சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. இதனைக் கடிய லூர் உருத்திரங் கண்ணனார் என்னும் சங்ககாலப் புலவர் பெரும் பாணற்றுப்படையில் சிறப்பித்துப் பாடியுள்ளார் (வரி : 319) மகேந்திரவர்மன் காலத்தில் சைவமும் வைணவமும் தமிழகத் தில் சிறப்புற்று நின்றன, சமற்கிருதமும், அம்மொழியில் எழுந்த இலக்கியங்களும், சமற்கிருத பள்ளிகளும், கல்லூரிகளும், (கடிகா) சமற்கிருதப் பண்டிதர்களும் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றனர். காஞ்சிக்குச் சமற்கிருதப் பண்டாரம் (கடிகா) என்றே பெயர் ஏற்பட்டது. மகேந்திரன் வேளாண்மை சிறக்க வேலூர் மாவட்டம் வாலாசாப் பேட்டைக்கு அருகில் சோளிங்கருக்குத் தெற்கில் மகேந்திர வாடி என்ற ஊரையும், அதன் பாசன ஏந்துக்காக மகேந்திர தடாகம் என்ற ஏரியையும் ஏற்படுத்தினான். இதைப் போலவே மாமண்டூரில் சித்திரமேகத் தடாகம் என்ற ஏரியையும் வெட்டினான். தஞ்சை மாவட்டத்தில் மகேந்திரப்பள்ளி என்னும் ஊரை ஏற்படுத்தி அங்கு ஒரு சிவன் கோயிலையும் கட்டினான். இன்று இவ்வூர் கோயிலடிப் பாளையம் என்றழைக்கப்படுகிறது. மகேந்திரவர்மன் சாளுக்கியருடனும் கங்கர்களுடனும் பாண்டி யருடனும் போரிட்டு வாகை சூடினான். இதனால் ஒரு பெரும் வலுவு டைய நாட்டைத் தொண்டை மண்டலத்தில் உருவாக்கினான். காஞ்சி உலக மக்கள் வியக்குமாறு எழுந்து நின்றது. இவனுக்கு இன்றளவும் உலக வரலாற்றில் இடம் கிடைத்திருப்பதற்குக் காரணம் இவன் கலைக்கு ஆற்றிய புதிய, சிறப்பான பணிகளே ஆகும். கலைப்பணி பாறைகளைக் குடைந்து கோயில்களைச் சமைக்கும் புதிய கலைப்பாணியைக் கண்டான். கல், காரை, செங்கல், உலோகம் முதலியவற்றைக் கொண்டு கட்டடம் கட்டும் மரபு முறைக்கு மாறாக இவை இல்லாமல் தனிப்பாறைகளைக் குடைந்து குகைக் கோயில் களை முதன் முதலில் தொண்டை மண்டலத்தில் உருவாக்கினான். இதனால் இவனை 'விசித்திர சித்தன்' என்றார்கள். இவன் காலத்தில் இசை, நடனம், சிற்பம், ஓவியம், நாடகம் ஆகிய நுண் கலைகள் வளர்ந்தன. சித்தன்னவாசல் ஓவியங்கள் இவன் காலத்தில் ஏற்பட் டன. இங்குள்ள சமணக் கோயிலில் சிறந்த ஓவியங்கள் தீட்டப் பெற்றுள்ளன. சமணத் தீர்த்தங்கரரின் ஓவியங்களும், நடன மாதர் ஓவியங்களும் இன்றும் இங்கு சிறப்பாகக் காணப்படுகின்றன. குடுமியான்மலை இசைக் கல்வெட்டு புதுக்கோட்டையிலுள்ள குடுமியான்மலையிலுள்ள பாறையில் இசையின் ஓசைநயங்களை விளக்கும் ஒரு கல்வெட்டுச் செதுக்கப் பட்டுள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்த இசை வளர்ச்சியைப் பற்றி மகேந்திரன் இக்கல்வெட்டில் வடித்துள்ளான். குடுமிநாதர் (சிகநாதர் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளதால் இதற்குக் குடுமியான்மலைக் கல்வெட்டு என்று பெயர். இக்கோயில் மூலவரான லிங்கத்தின் தலையில் குடுமி உள்ளது. இக்கல்வெட்டில் இசையின் ஓசை நயங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மகேந்திரன் முறைப்படி இசை பயின்றவன் என்பதற்கு இதனடியில் செதுக்கப் பட்டுள்ள குறிப்பே சான்றாக உள்ளது. இந்தக் கல்வெட்டு இசைமாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்த உருத்திராச்சாரியாரின் மாணவரான மன்னரின் கட்டளைப்படி வெட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் இசையில் பண்களைக் கலந்து அமைத்துப் பாடும் முறையைக் கண்டுபிடித்தான். எனவே இவனைச் சங்கீரணசாதி என்பர். இவன் பண்ணமைத்த இசைக்கு இப் பெயரென்பதால் இவனையே அவ்வாறு அழைத்தனர். மாமண்டூர் குடைவரைக்கோயில் மாமண்டூரில் ஒரு பாறையைச் செதுக்கி அதில் சிவன், திருமால், பிரமன் ஆகிய திரிமூர்த்திகளுக்கும் குடைவரைக் கோயிலைச் சமைத்தான். அதில் உள்ள பல்லவகிரந்த எழுத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டில் கல், காரை, செங்கல், உலோகம் முதலியன இன்றி விசித்திரசித்தனான மகேந்திரனால் பிரமன், விசுணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சமைத்த கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாமண்டூர்ப் பகுதியில் மகேந்திரமங் கலம் என்ற ஊரையும் ஏற்படுத்தினானென்பதைத் திருப்பருத்திக் குன்றத்திலுள்ள வர்த்தமானர் கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. சமயம் இவன் காலத்தில் தமிழகத்தில் சமணமும் சாக்கியமும் சிறந்து விளங்கியது. சைவக்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணச் சமயக்குரவராக தருமசேனர் என்ற பெயருடன் திருப்பாதிரிப் புலியூரிலிருந்தார். பின்னர் சைவத்திற்கு மதம் மாறினார். சமணனாக இருந்த மகேந்திரனையும் சமணத்திலிருந்து சைவத்திற்கு மதம் மாறச் செய்தார். சைவத்திற்கு மாறிய இவன், சிவனுக்கு வல்லம், தள் வானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சி முதலிய இடங்களில் குடை வரைக் கோயில்களை ஏற்படுத்தினான். ஆனாலும் இவன் சைவ வெறியன் அல்லன். திருமாலுக்கும் மகேந்திரவாடியில் குடைவரைக் கோயிலொன்றைச் சமைத்தான். இவனுடைய காலம் தமிழகத்தில் இறைநெறி இயக்கம் பக்தி இயக்கம்) பரவத் தொடங்கிய காலமாகும். 3. முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630 - 668) இவனை மாமல்லன் என்றும் அழைப்பர். கடல் மல்லை அல்லது மாமல்லை இவன் காலத்தில் சிறப்புற்றதால் இவனுக்கு அப்பெயர் ஏற்பட்டது. வாதாபி கொண்ட நரசிம்மன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி நரசிம்மன் பட்ட மேற்ற சிறிது காலத்திற்குள் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். சாளுக்கியப்படை பல்லவரின் கோநகரான காஞ்சியை நோக்கிப் புறப்பட்டது, அப் படை காஞ்சியை அணுகுமுன் காஞ்சிக்கு வடக்கே இருபது கல் தொலைவிலுள்ள மணிமங்கலம் என்னுமிடத்தில் அதனை மடக்கிப் பல்லவப் படைகள் போரிட்டுத் தோற்றோடச் செய்தன. அத்தோடு நிற்காமல் பெரியளம், சூரமாரம் ஆகிய இடங்களிலும் சாளுக்கியப் படைகள் தோல்வியுற்று வாதாபி நோக்கி ஓடின. இதனால் நரசிம்மன் புலிகேசியின் முதுகுப்பட்டயத்தில் வெற்றியைப் பொறித்தான் என கூரம் செப்பேடு புகழ்பாடுகிறது. தோற்றோடிய புலிகேசி மீண்டும் பல்லவ நாட்டின் மீது படை யெடுத்து வந்தான். நரசிம்மன் இம்முறையும் அவனை வெற்றிக் கொண்டான். போர்க்களத்திலேயே புலிகேசியைக் கொன்றே விட்டான். அத்தோடு நில்லாமல் சாளுக்கிய படைகளைத் துரத்திச் சென்று தலைநகராகிய வாதாபியைக் கைப்பற்றி அதனை அழித்தான். இதனால்தான் முதலாம் நரசிம்ம வர்மனுக்கு 'வாதாபி கொண்ட நரசிம்மன்' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது. இவன் வாதாபியை வெற்றி கொண்ட செய்தியைக் காசாக்குடி பட்டயமும், உதயேந்தரப் பட்டயமும் வேலூர்ப் பாளையம் பட்டயமும் சிறப்பித்துக் கூறுகின்றன. வாதாபி மீது படையெடுத்துச் சென்ற படைக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் பரஞ்சோதியார் என்றும், அவர் ஒரு சிறந்த சிவபக்தனாதலால் திருத்தொண்டர் திருத்தொகையில் சிறப்பிக்கப் பட்டார் என்றும் இவரை, 'சிறுத்தொண்ட நாயனார்' எனச் சிறப்பித்து சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் பாடியுள்ளார். இவ்வாறு, வாதாபியைக் கைப்பற்றிய நரசிம்மன், அதனைப் பதின்மூன்று ஆண்டுகள் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். தன் தந்தையான மகேந்திரவர்மன் இழந்த ஆந்திரப் பகுதிகளை மீட்டதோடு, சாளுக்கியரின் கோநகரான வாதாபியையே கைப்பற்றிய பெருமை நரசிம்மவர்மனையே சாரும். வாதாபி கி.பி. 642 முதல் 655 வரை பல்லவரிடமிருந்தது. இரண்டாம் புலிகேசியின் இளைய மகனான முதலாம் விக்கிரமாதித்தன் அதனை மீட்டு கி.பி. 655லிருந்து 681வரை ஆண்டான், இந்த வாதாபிப் போரில் பல்லவர்களுக்கு ஏராளமான கொண்டிப் பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் குதிரைகள், யானை கள் முதலியனவும் அடங்கும். படைத் தலைவரான பரஞ்சோதியார் வாதாபியிலிருந்து கணபதி சிலை ஒன்றையும் கொண்டிப் பொரு ளாகக் கொண்டுவந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங் குடியில் கோயில் கட்டி வழிபட்டார். அதிலிருந்து கணபதி வழிபாடு தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தது. இதனால் இவரை 'வாதாபி கணபதி' என்றும் இன்றும் துதிக்கின்றனர். இரண்டாம் புலிகேசியின் இளைய மகனான முதலாம் விக்கிர மாதித்தனுடைய கர்நூல் பட்டயமும், பெயரரான விநயாதித்தனது சோராப் பட்டயமும் நரசிம்மன் படையெடுப்பால் வாதாபியிலிருந்த கோயில்கள் வருவாயின்றித் தவித்தன என்றும், மேலைச் சாளுக்கிய ரின் அழிவிற்கும் பல்லவரே பொறுப்பாளிகள் என்றும் கூறுகின்றன. பல்லவர் - பாண்டியர் போர் நரசிம்மவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டு அரசனாக இருந்தவன் அரிகேசரி - பராங்குசன் நெடுமாறன்) (கி.பி. 641-670) ஆவான். இவன் சோழரிடம் பெண் கொண்டு பிற குறுநில மன்னர் களை வென்றும் தென்னாட்டிலேயே அரசனாக வலுப்பெற்று விளங்கினான். இவன் நரசிம்மவர்மனைச் சங்கரமங்கை என்னுமிடத் தில் புறங்கண்டான் என சின்னமனூர்ச் செப்பேடு கூறுகிறது. ஆனால், நரசிம்மன் சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர் ஆகியோ ரைப் போரில் வென்றான் எனக் கூரம் செப்பேடு கூறுகிறது. எனவே பல்லவருக்கும் பாண்டியருக்கும் இடையே போர் நடந்தது என்பதும் அதில் பல்லவர் வெற்றி பெற்றனர் என்பதும் புலனாகிறது. பல்லவர் - கங்கர் போர் பல்லவர் - சாளுக்கியர் போரில் இரண்டாம் புலிகேசி, கி.பி. 642இல் இறந்தபின் அவனுடைய இளையமகன் விக்கிரமாதித்தன் கி.பி. 655இல் பட்டமேற்றான். இவனுக்கு இரண்டு அண்ணன்மார் இருந்தனர். அவர்களுக்கும் இவனுக்கும் இடையே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. அப்போரில் விக்கிரமாதித்தன் கங்கநாட்டு அரசன் துர்விநீதன் துணையை நாடினான். துர்விநீதன் ஆண்ட கங்க நாட்டின் ஒரு பகுதியான கொங்கு நாட்டை நரசிம்மவர்மன் ஏற்கனவே கைப் பற்றித் துர்விநீதன் தம்பிக்குக் கொடுத்துவிட்டான். இதனால் துர்வி நீதனுக்கும் நரசிம்மவர்மனுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சாளுக்கிய நாட்டு அரசுரிமைப் போரில் விக்கிர மாதித்தனுக்குத் துர்விநீதன் உதவி செய்தபோது, நரசிம்மன் விக்கிர மாதித்தன் அண்ணன்மாருக்கு உதவி செய்ய முன் வந்தான். கடைசி யில் விக்கிராமதித்தனே சாளுக்கிய மன்னன் ஆனான். இதன் விளை வாகக் கங்கனும், பல்லவனும் மோதிக் கொண்டனர். இப்போரில் நரசிம்மவர்மன் வெற்றி பெற்றான். ஈழநாட்டுடன் போர் ஈழநாட்டு அரசன் மானவர்மன் என்பவனை அட்டதத்தன் என்பவன் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். மானவர்மன் பல்லவ - நரசிம்மன் உதவியை நாடினான். பல்லவ நாட்டிலேயே தங்கிவிட்டான். இரண்டாம் புலிகேசியுடன் நடந்த போரிலும் நரசிம்மனுக்குத் துணையாகப் படையெடுத்துச் சென்றான். இவ்வாறு உறுதுணையாகிவிட்ட மானவர்மனுக்கு உதவ நரசிம்மன் தம் படைகளை அனுப்பி அட்டதத்தனை விரட்டிவிட்டு ஈழ்நாட்டு அரியணையில் மானவர்மனை அமர்த்தினான். ஆனால் பல்லவர்படை காஞ்சிக்குத் திரும்பியதும் மீண்டும் மானவர்மன் துரத்தப்பட்டான். இம்முறை நரசிம்மவர்மன் பெரும் படையுடன் ஈழநாடு சென்று அட்டதத்தனைத் தோற்கடித்து மானவர்மனை அரியணையில் அமர்த்தினான். இவ்வாறு, பல்லவர்படை இருமுறை ஈழத்தின் மீது படையெடுத்ததையும், அப்படை மாமல்லபுரம் துறைமுகப் பட்டினத்திலிருந்து கப்பலேறிச் சென்றதையும் காசாக்குடிப் பட்டயங்களும் மகாவம்சமும் குறிப்பிடுகின்றன. காஞ்சியில் யுவான் சுவாங் சீனப்பயணியான யுவான் சுவாங் கி.பி. 640இல் காஞ்சிபுரம் வந்தார். தொண்டை மண்டலத்தைத் தன் நாலாகிய சி. யு. சி. (மேலை நாட்டு ஆவணம்) என்பதில் தாலேபீட்டு என்றும் காஞ்சிபுரத்தைக் காஞ்சிபுலோ என்றும் குறிப்பிடுகிறார். காஞ்சிபுரத்தின் பரப்பளவு 10 கிலோ மீட்டராகு மென்றும், அந்நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் (கோயில்கள்) இருந்தன என்றும், அவற்றில் 16 ஆயிரம் பௌத்தத் துறவிகள் தேரவாதபுத்த வேதங்களைக் கற்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் பௌத்தத்தின் மூலக்கூறு பாட்டையும், தருக்கம், நுண்பொருள் கோட்பாட்டியல் முதலியவற் றில் வல்ல பௌத்தப் பேரறிஞர் தருமபாலர் காஞ்சியிலே பிறந்தவர் என்றும் யுவான்சுவாங் கூறுகிறார். பொதுவாகத் தமிழர்கள் கல்வி யிலும், வீரத்திலும், பிறருக்கு உதவும் பண்பாட்டிலும், தாய்நாட்டுப் பற்றிலும், தலை சிறந்தவர்கள் என்று யுவான்சுவாங் கூறுகிறார். சமயம் பெளத்தம் நரசிம்மவர்மன் காலத்தில் நாட்டில் சைவமும், வைணவமும், புத்தமும், சமணமும், பிரபலமான சமயங்களாய் இருந்தன. இறை நெறி இயக்கம் (பக்தி இயக்கம்) இவன் காலத்தில் சிறக்க முற்பட்டது. இவன் காலத்தில் காஞ்சிபுரம் வந்த யுவான் சுவாங் புத்தம் சிறப்புற்றி ருந்ததைக் குறிப்பிடுகின்றார். நாலந்தா பல்கலைக் கழகப் பேராசிரி யராக இருந்த தரும் பாலர் காஞ்சியில் பிறந்தவர் என்று யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். அசோகனுடைய மகன் மகேந்திரன் காஞ்சியில் கட்டியிருந்த புத்தவிகாரை இடிந்த நிலையிலிருப்பதாகவும், புத்த பெருமானே காஞ்சிக்கு வந்து தங்கித் தமிழர்களைப் பெளத்த சமயத் திற்கு மாற்றியதாகவும் சீனப் பயணி குறிப்பிடுகிறார். பாண்டிய நாட்டிலும் இலங்கையிலும் பௌத்தமும் சமணமும் பரவி இருப்ப தாகவும் யுவான் சுவாங் கூறுகிறார். சைவம் நரசிம்மவர்மன் இவ்வாறு, மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தத்தையும், சமணத்தையும் எதிர்த்துதான் சைவ சமய அடியார்களான திருநாவுக்கரசர், அப்பூதி அடிகள், சிறுத் தொண்டர், திருஞான சம்பந்தர், திருநீலகண்டர், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், திருநீல நக்கர், முருகநாயனார், குங்கிலியக் கலையர் முதலான சைவ அடியார்கள் சைவத்தை மக்களிடையே பரப்பினார்கள். குறிப்பாகத் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமிழகம் எங்கிலும் சுற்றிச் சமணம், சாக்கியம் ஆகிய சமயங்களை மூர்க்கமாக எதிர்த்தார்கள். அவர்களின் தேவார் திருவாசகப் பாடல்களால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். பின்னர் அவை ''பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. தாந்திரிக முறை களையும் இவர்கள் கையாண்டனர். இதனால் சைவம் தழைத்தது. திருமுறைகளால் தமிழ் மொழிக்கு ஆக்கம் ஏற்பட்டது. வைணவம் வைணவத்தின் முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேய் ஆழ்வார் ஆகியோரின் பக்திநெறிப் பாடல்கள் தமிழரின் தாய்மை மனத்தை நெறிப்படுத்தின. திருமழிசை ஆழ்வார் நரசிம்மன் காலத்தவர். இவர்களுடைய பாடல்கள் யாவும் பிற்காலத்தில் ''நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்"' ஆகத் தொகுக்கப் பட்டன. இந்த எண்ணிக்கை சங்கப் பாடல்களின் எண்ணிக்கையை விட அதிகமானது. எனவே நாலாயிரத் திவ்விய பிரபந்தமும், பன்னிரு திருமுறைகளும் தமிழ்க் கருவூலத்திற்கு ஆக்கமாயின. சமணமும் சாக்கியமும் குன்றிச் சைவம் தலைதூக்கி நின்றது. வைனாவம் மறுமலர்ச்சியடைந்தது. கோயில்கள் மகேந்திரனால் தொடங்கப் பெற்ற 'குடைவரைக் கோயில் சகாப்தம்' நரசிம்மன் காலத்திலும் தொடர்ந்தது. திருச்சிக் குடைவரைக் கோயில், நாமக்கல் மலையடிவாரத்திலுள்ள நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோயில், மாமல்லபுரத்து மகிசாசுரமர்த்தினி மண்டபம், வராகமண்டபம், திரிமூர்த்தி மண்டபம், மாமல்லபுரத்துப் பஞ்ச பாண்டவர் ரதங்கள் முதலியன நரசிம்மனால் படைக்கப்பட்டவை ஆகும். ஆனால், மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் யாவும் இரண்டாம் நரசிம்மனால் கி.பி. 695 - 722 சமைக்கப்பட்டவை என்று டாக்டர் ஆர். நாகசாமி கூறுகிறார். நரசிம்மவர்மன் சமைத்த கோயில் களின் அவனுடைய விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன, 4. இண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி. 668-670) முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பிறகு அவனுடைய மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் பல்லவ அரியணை ஏறினான். இவனைப் பற்றிய விளக்கமான வரலாற்று விபரங்கள் கிடைக்க வில்லை . ஆயினும் இவனுடைய மகன் பரமேசுவரவர்மனுடைய கூரம் செப்பேடுகளில் இவனைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன, வருணாசிரம தருமத்தைக் கடைப்பிடித்தவன் என்ற செய்தி கூரம் செப்பேடுகளில் கூறப்பெற்றுள்ளது. காசாக்குடிச் செப்பேடுகளில் தன் பகைவர்களை வச்சிராயுதம் கொண்டு தாக்கி அழித்தான் எனக் கூறப் பெற்றுள்ளது. அவன் காலத்தில் பிராமணர்கள் வளம் பெறவும், நல்வாழ்வு வாழவும் அறச் செயல்கள் பல பெருகின; அவர்களுக்கு வேதக் கல்வியை வளர்க்கும் கடிகைகளைக் கட்டிக்கொடுத்து அவற்றைப் பேணிக்காத்தனர். ''வருண தருமம்'' பிழையாது காப்பாற்றப் பட்டது, - சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்கிரமாதித்தன், தன் தந்தை பல்லவரிடம் இழந்த பகுதிகளை மீட்டதோடு பல்லவநாட்டின் மீதும் படையெடுத்தான். தொடர்ந்து நடந்த சாளுக்கியர் பல்லவர் போரில் இரண்டாம் மகேந்திரன் இறந் திருக்கக் கூடுமென்று டாக்டர் என். சுப்பிர மணியம் கருதுகிறார். 5. முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670 - 95) உன்னக்குரவயாப்பாளையம் செப்பேட்டின்படி இவன் கி.பி. 668 - 69இல் அரசுக் கட்டிலேறியதாக அறிகிறோம். இவனைப் பற்றி அறிய கூரம் செப்பேடுகள், வேலூர்ப் பாளையம், உதயேந்தரம் ஆகிய செப்பேடுகளும், சாளுக்கியர் செப்பேடுகளும், பெரிய புராணமும் உதவுகின்றன. பல்லவர் - சாளுக்கியர் போர் சாளுக்கிய நாட்டு இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-590) தன் தந்தையைப் போரில் கொன்று கோநகரான வாதாபியை அழித்த பல்லவரைப் பழிவாங்க நினைத்துப் பல்லவர் நாட்டின் மீது படையெடுத்தான். காஞ்சியைக் கைப்பற்றினான் என்று கர்நால் செப்பேடுகள் கூறுகின்றன. ஆனால், காஞ்சியை இழந்ததாகப் பல்லவர் பட்டயங்கள் கூறவில்லை, பரமேசுவர்மன் போர்க்களத்தில் பல்லாயிரம் வீரர்களை வென்று விக்கிரமாதித்தனைப் புறமுதுகு இடச் செய்தான் என்றும் அவன் தோற்டோடும் போது கந்தையைச் சுருட்டிக் கொண்டு தனியாக ஓடினான் என்றும் கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாறு ஒவ்வொருவரும் தானே வெற்றிப் பெற்றதாகத் தங்களின் பட்டயங்களில் கூறுவதால் வரலாற்று ஆசிரியர்களான சோவேதுப்ராய்ல், ஈராசுப் பாதிரியார் ஆகியோர் இருதரத்தாரும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறிப் பெற்றனர் என்றும், கடைசியில் பரமேசுவரவர்மனே வெற்றி பெற்றான் என்றும் கூறுவர். கைலாசநாதர் கோயில் கல்வெட்டில் இவன் வாதாபியை அழித்தான் என்று கூறப்பட்டிருக்கிறது. கலைப்பணி முதலாம் பரமேசுவரவர்மன் சிறந்த சிவபக்தன், பல் சிவன் கோயில்களைக் கட்டினான். கூரம் என்ற இடத்தில் இவன் கட்டிய முதல் கட்டுமானக் கோயில் (கற்றளி) சிறப்பானதாகும். இக்கோயி லுக்குப் பரமேசுவரமங்கலம் என்ற சிற்றூர் தேவதானமாக வழங்கப் பட்டது. ஆறுகால பூசை நடத்தவும், இக்கோயிலில் பாரதம் படிக்க வும் தனித்தனியே மானியம் வழங்கப்பட்டது. இதைத் தவிர மாமல்லபுரத்திலுள்ள கணேசர் கோயில் கணேசரதம்) இராமானுசர் மண்டபம், தருமராசர் தேரில் உள்ள மூன்றாம் அடுக்கு ஆகியவை இவனால் சமைக்கப்பட்டவை ஆகும். கணேசர் தேரில் காணப்படும் பதினோரு சமற்கிருதப் பாடல்கள் இவனுக்கும், சிவபெருமானுக்கும் பொருந்துமாறு சிலேடையாகப் பாடப்பட்டுள்ளன. இதனால் இவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்பதையும், சமற்கிருதத்தை வளர்த்தவன் என்பதையும் தெளியலாம். காடவர்கோன் - ஐயடிகள்? சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய திருத்தொண்டர் தொகை யில் தனி அடியார் அறுபத்து மூவரில் 'ஐயடிகள் காடவர்கோன்' என்பவரையும் சேர்த்துப் பாடியுள்ளார். இந்த ஐயடிகளின் வரலாறு நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியிலும் கூறப் பெற்றுள்ளது. ஆயின் இவர் யார்? இவர் பல்லவ மன்னனான முதலாம் பரமேசுவரவர்மனே என்று கூறுவர். இதிலிருந்து இவன் தன் மணிமுடி துறந்து சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபட்டு எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கத் தவம் செய்து மோட்சமடைந்த வன் எனக் கூறப்படுகிறது. 6. இரண்டாம் நரசிம்மன் (அல்லது) இராசசிம்மன் கிபி 590 - TBS) முதலாம் நரசிம்மன் ஐயடிகள் காடவர்கோன் என்று புகழப் படுவதைக் கண்டோம். அவன் மகன்தான் இரண்டாம் நரசிம்மவர்மன் அல்லது இராசசிம்மன் ஆவான். காடவர்கோன் கழற்சிங்கன் என்று இவனை அழைப்பர். இராசசிம்மன் என்பது சமற்கிருதம் இதற்குக் கழற்சிங்கன் என்பது சரியான தமிழ்ப் பெயராகும். ஐயடிகள் என்ற சொல்லுக்குப் பெருமையுடையவன் என்று பொருள். எனவே பெருமை பொருந்திய காடவர்கோன் என்பது பொருளாகிறது. காடவர்கோன் மகன் கழற்சிங்கன் என்றால் முதலாம் நரசிம்மன் மகன் இராசசிம்மன் என்பது பொருள். 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் சிங்கன்'' என்ற அடைமொழியோடு இவனைச் சுந்தர மூர்த்தி நாயனார் தம்முடைய திருத்தொண்டர் திருத்தொகையில் குறிப்பிடுசிறார். இராசசிம்மன் சாளுக்கிய மன்னன் விநயாதித்தன் (கி.பி. 60-696) என்பவனோடு போர் நிகழ்த்தினான். எனவே பல்லவர் சாளுக்கியப் போர் ஒரு தொடர்கதை ஆனது. இந்தப் போரினால் பல்லவ நாட்டிலும் சாளுக்கிய நாட்டிலும் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. தான் சாளுக்கியரோடு போரில் ஈடுபட்டிருக்கும் போது கங்கர்கள் தனக்கிழைத்த இன்னலுக்காகக் கங்கர் மீதும் போரிட்டான். கங்கபாடியை ஆண்ட முதலாம் சீமாறன் (கி.பி. 679-726) என்ப வனைப் பல்லவன் வென்றான் என்று கங்கர் பட்டயம் கூறுகிறது. இராசசிம்மன் அரேபியர்களுக்கும் திபேத்தியருக்கும் எதிராகப் போரிட சீனநாட்டு அரசரிடம் யானைப் படை + குதிரைப்படை, ஆகியவற்றைக் கேட்டுப் பெற்றான் என்று அவ்வரசனுடைய கி.பி. 720 ஆம் ஆண்டு ஆட்சிக் குறிப்பு கூறுகிறது. ஆனால், இவன் அரேபிய நாட்டின் மீதும், திபெத்திய நாட்டின் மீதும் போர் தொடுத்தானா என்பது தெரியவில்லை. கலைப்பணிகள் கைலாசநாதர் கோயில் இராசசிம்மன் சமைத்த கோயில்களில் கலைக்கூடமாகத் திகழ்வது காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகும். இவன் விசயாதித்த னுடைய கோநகராகிய இரணரசிகபுரத்தை வென்று அங்கிருந்து பெரும் பொருட்குவியலைக் காஞ்சிபுரத்திற்குக் கொண்டு வந்து காஞ்சிக் கைலாசநாதர் கோயிலைச் சமைத்திருக்கலாம். இராச சிம்மனால் சமைக்கப் பெற்றமையால் இக்கோயிலை இராசசிம் மேசுவரம்' என்றே அழைப்பர். இஃது அன்றைய உலகிலிருந்த கோயில்களில் தலைசிறந்த கலைச் செல்வம் படைத்ததாக இருந்தது, பெரியபுராணத்தில் பூசலார் நாயனார் வரலாற்றில் இராசசிம்மன் அமைத்த கைலாசநாதர் கோயிலைப் பற்றியும் அவனுக்கு வானொலி (கேட்ட சம்பவம் குறிப்பிடப் படுகின்றன. இக்கோயில் விமானம் திருவதிகை வீராட்டானேசுவரன் கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆகியவற்றின் விமான அமைப்புக்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இக்கோயில் கட்டுமான வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் கருங்கற்களையும் செங்கற்களையும், கொண்டு கட்டாமல் மணற் பாறை (காரைகளைக் கொண்டு அமைக்கப் பெற்றதாகும். இதனு டைய கட்டடமும் சிற்பங்களும் காரையைக் கொண்டே அமைக்கப் பட்டவையாதலால் தட்ப, வெப்ப மாற்றங்களால் வெடிப்புண்டு காணப்படுகின்றன. இதன் திருச்சுற்றில் உள்ள ஆறு சிறிய கோயில் கள் இராசசிம்மன் மனைவி அரங்கபதாகை என்பவரால் அமைக்கப் பெற்றவை ஆகும். மாமல்லபுரக் கோயில்கள் மாமல்லபுரத்தில் இராசசிம்மன் சத்திரிய சிகாமணி, பல்லவே சுவரம், தலசயன பெருமாள் கோயில் ஆகிய மூன்றையும் கட்டி கனான். இவற்றுள் மூன்றாவதாகக் கூறப்பட்ட தலசயனப் பெருமாள் கோயில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது, இராசசிம்மன் அவைக்களப் புலவரான தண்டி என்பார் இயற்றிய தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் சிறப்புடைய தாகும். தண்டி காவியதர்சம் என்ற நூலையும் எழுதியுள்ளார். இராச சிம்மனுக்கு வாத்ய வித்யாதரன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய நுண் கலைகளில் சிறந்தவனாகவும், சமற்கிருதப் புலவனாகவும் இருந்ததால் இவனுக்கு இவ்விருதுப் பெயர் ஏற்பட்டது. 7. இண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 723-730) இராசசிம்மன் மகனான இவன் நீண்ட நாள் அரசாளவில்லை . சாளுக்கியர்கள் பல்லவர் மீது போர்தொடுத்தனர். விளந்தை என்ற ஊரில் நடந்த போரில் இரண்டாம் பர்மேசுவரவர்மனைக் கங்க நாட்டு அரசன் சிறீபுருடன் என்பவன் கொன்று விட்டான். திடீரெனப் போரில் மாண்ட பரமேசுவரனுக்குப் பிறகு அரசுக் கட்டிலேற வாரிசே இல்லை, பல்லவரின் இளைய தலைமுறையைச் சேர்ந்த இரணிய வர்மனிடம் மக்கள் முறையிட்டனர். இரணியவர்மன் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தனது பன்னிரெண்டே அகவை நிரம்பிய மகன் பரமேசுவரவர்மனைக் காஞ்சிக்கு அனுப்பி முடி சூட்டும்படி செய்தான். அச்சிறுவன் முடிசூட்டுப் பெயராக தன் பெயரை 'இரண்டாம் நந்திவர்ம பல்லவன்' என்று மாற்றிக் கொண்டு பல்லவ நாட்டு மன்னனானான், இவனில் இருந்து பல்லவ வமிசத்து இளைய தலைமுறையின் ஆட்சி தொடங்கியது. எனவே சிம்ம விசுணு (கி.பி. 722-730) வரை ஆண்ட ஏழு அரசர்களுடைய மூத்த தலைமுறையினரின் ஆட்சி முடிவுற்றது. இந்த வரலாற்றுச் செய்தியை காஞ்சி வைகுந்த பெருமாள் கோயிலில் உள்ள சுவர் புடைப்புச் சிற்பங்களால் அறிந்து கொள்கிறோம். இளைய தலைமுறையினர் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 73] - 795) நந்திவர்ம பல்லவ மல்லன் ' இம்மன்னனைப் பற்றி அறிவதற்குப் பல்லவர், பாண்டியர் சாளுக்கியர், இராட்டிரகூடர் செப்பேடுகளும், வைகுந்தப் பெருமாள் கோயில் புடைப்புச் சிற்பங்களும் சான்றுகளாய் உள்ளன. பல்லவர் - சாளுக்கியர் போர் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சி புரத்தின் மீது படையெடுத்தான். இப்போரில் நந்திவர்ம பல்லவ மல்லன் காஞ்சியைக் கைவிட்டு ஓடிவிட்டான். சாளுக்கியப் படைகள் "கோநகர் காஞ்சியைக் கொள்ளையிட்டன; பல்லவரின் கடுமுகவாத் தியம், சமுத்திரகோசம், கத்வாங்கம், போர் யானைகள், நவமணிகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்தன; ஆனால், கைலாசநாதர் கோயில் கலை எழிலைக் கண்டு வியந்து அதனை அழிக்காமல் விட்டு விட்டன. ஏழைகளுக்கும் பிராமணர்களுக்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கின என்று சாளுக்கியரின் பட்டயங்கள் கூறுகின்றன. காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தன் அங்கு தங்கியிருந்தபோது, பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்த சேர சோழ பாண்டியரை எதிர்த்துக் காஞ்சியைக் காப்பாற்றினான். காஞ்சியிலிருந்த கடிகையார், கோயிலார்கள் மனம் மகிழ விலையு யர்ந்த அணிமணிகளைப் பரிசாக வழங்கினான். தம் முன்னோர்கள் கொள்ளையடித்துச் சென்ற கடிகைகளுக்கும், கோயில்களுக்கும் சொந்தமான பொருள்களைத் திருப்பித் தந்தான். கைதேர்ந்த தமிழகச் சிற்பிகளைத் தன் நாட்டிற்கு அழைத்துச் சென்று பட்டடக்கல் முதலிய இடங்களில் தமிழகப் பாணியில் கோயில்களைக் கட்டினான். காஞ்சியை மீட்டல் நந்திவர்மன் காஞ்சியைச் சாளுக்கியரிடம் தோற்றான், ஆயினும் தனது திறன் மிக்க படைத்தலைவன் உதயசந்திரன் துணை கொண்டு காஞ்சியை மீட்டுக் கொண்டான். பின்னர் இராட்டிரகூட இளவரசி ரேவா என்பளை மணந்தான். அப்பொழுது அவனுக்கு அகவை இருபத்து மூன்றாகலாம். அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் தன் தாய்வழிப் பாட்டனான தந்திதுருக்கள் நினை வாகத் தந்திவர்மன் என்று பெயர் சூட்டினான். பல்லவர் - கங்கர் போர் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கங்கநாட்டை ஆண்டவன் சிறீபுருடன் (கி.பி. 725 - 778) என்பவன் ஆவான். இவன் விக்கிர மாதித்தன் சாளுக்கியனுக்கு உடந்தையாகப் பல்லவநாட்டின் மீது கி.பி. 731-இல் படையெடுத்தான். போரின் தொடக்கத்தில் கங்கன், நந்திவர்மன் மேல் வெற்றி கண்டான். பல்லவனின் பெருமாண்பு' என்ற விருதையும் கொற்றக் குடையையும் பறித்துக் கொண்டான். ஆரணியையடுத்துள்ள ஊரின் பெயர் சிறீமங்கலம் என்றழைக்கப் பட்டது. இன்று இவ்வூர் சீயமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வாகைகள் அவனுக்கு நிலைத்திருக்கவில்லை. கடைசியாக நடந்த போரில் பல்லவனே வெற்றி பெற்றான். கங்கர்களிடமிருந்து கங்கபாடி ஆறாயிரம் என்ற நிலப்பகுதியைக் கைப்பற்றித் தனக்குத் துணைபுரிந்த பாண மன்னனுக்கு நன்றிக்கடனாக அளித்தான். நந்திவர்மன் படைத்தலைவனான உதயசந்திரன் நினைவாகப் பாலாற்றங்கரை மேலிருந்த குமாரமங்கல வெள்ளட்டூர் என்ற ஊரின் பெயரை 'உதயசந்திரமங்கலம்' எனப்பெயர் சூட்டி, அங்கிருந்த பொதுமக்களை விரட்டிவிட்டு, நூற்றெட்டுப் பிராமணருக்குப் பிரம் தேயமாகத் தானம் வழங்கினான் என்று உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன. இச்செப்பேடுகளில் அதர்மவாசிகளை விரட்டிவிட்டுத் தர்ய வான்களைக் குடியேற்றியதாகக் கூறப்படுகிறது. பரம்பரையாகக் குடியிருந்த சூத்திரர்களை வெளியேற்றி விட்டுப் பிராமணர்களைக் குடியேற்றினான் என்பது இதன் பொருளாகும். சமற்கிருதத்தில் வரையப்பட்ட இந்த உதயேந்திரம் செப்பேடுகளை எழுதியவன் பரமேசுவர கவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமயப் பணி நந்திவர்மன் சிறந்த வைணவன் ஆவான். காசாக்குடிச் செப்பேடு, தண்டன் தோட்டப் பட்டயம், கொற்றங்குடி செப்பேடு ஆகியவை இவனைச் சிறந்த வைணவனென்றே கூறுகின்றன, காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோயில், முத்தேசுவரன் கோயில், கூரம் கேசவப்பெருமாள் கோயில், புதுக்கோட்டை. குன்றாண்டார் கோயில், திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் ஆகியவற்றை நந்திவர்மன் கட்டினான். அவைகளுக்குத் தானங்களும் வழங்கினான். இவன் வைணவனானாலும் ஆற்காட்டிற்கு அருகிலுள்ள பஞ்சபாண்டவர் குகையை இவன் குடைவித்துச் சமணத் துறவிகளுக்கு அளித்தான். கல்விப் பணி நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் முதலியவற்றில் வல்ல பிராமணர்களுக்குப் பல ஊர்களைத் தானமாகக் கொடுத்து வேதக் கல்வியின் வளர்ச்சிக்குச் சிறந்த தொண்டு ஆற்றினான். செய்யுள், கூத்து, இதிகாசம் ஆகியவற்றில் வல்லவருக்கும், வேதச் சடங்கு களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், வேத சாத்திரப்படி ஆச்சாரமுடைய வருக்கும் 'கடிகை' எனப்படும் சிறந்த பல்கலைக்கழகங்களை ஏற் படுத்தி அவற்றில் சமற்கிருத இலக்கியங்களையும், புராணங்களை யும், இதிகாசங்களையும், வேதங்களையும் வளரச் செய்தான். இவனே தலைசிறந்த கல்விமானாகவும், புலவனாகவும், இசை இலக்கணத் தில் வல்லவனாகவும் திகழ்ந்தான். இவற்றில் பிரகசுபதி போன்று அறிவுக் கூர்மை யுடையவனாய் விளங்கினான் என்று கூரம் செப்பேடு கூறுகிறது. 2. நந்திவர்மன் (கி.பி. 796 - 846) இரண்டாம் நந்திவர்மனுக்குப்பின் அவன் மகன் தந்திவர்மன் அரசுக்கட்டிலேறினான். இவன் இராட்டிரகூட இளவரசி ரேவாவுக்குப் பிறந்தவன். இவனுக்கு வைரமேகன் என்ற விருதுப் பெயரும் உண்டு. இவன், கதம்ப குலப் பெண்ணான அக்கள் நிம்மடி என்ற கதம்ப இளவரசியை மணந்தான். பல்லவர் - இராட்டிகூடர் போர் தந்திவர்மன் தாயான ரேவாவின் தந்தை தந்திதுர்க்கன் இறந்த பின் அவன் மகன் முதலாம் கிருட்டிணன் இராட்டிரகூட அரசனானான். இவன்தான் எல்லோராவில் கைலாசநாதர் கோயிலைக் குடைவித்த வன் ஆவான். இவன் 722 - இல் இறந்து விட்டான். இவனுக்குப் பிறகு இராட்டிரகூட மரபில் அரசியல் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. அதில் முதலாம் கிருட்டிணணுடைய மூத்த மகன் கோவிந்தனுக்கும், இளைய மகன் துருவனுக்கும் இடையே அப்போர் தொடங்கியது. இதில் பல்லவ அரசன் தந்திவர்மன் கோவிந்தன் பக்கம் சேர்ந்து போரிலீடுபட்டான். போரின் முடிவில் துருவனே வெற்றி பெற்றான். தனக்கு எதிராக நின்ற கோவிந்தனுக்கு உதவிய பல்லவமன்னன் மீது துருவன் போர் தொடுத்தான். காஞ்சியைக் கைப்பற்றினான். தந்திவர்மன்துருவனுக்கு அடங்கிக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டான். இவ்வாறு மூன்று முறை நடந்த இராட்டிட கூடர் வாரிசுமைப் போரிலும் தந்திவர்மன் பங்கேற்றுத் தோற்றான். இதனால் பல்லவ நாட்டின் செல்வம் அழிந்தது. பல்லவர் - பாண்டியர் போர் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் (கி. இ. 800 - 830) குறுநில மன்னனான தகடூர் அதிகமானை எதிர்த்துப் போரிட்டான். தந்திவர்மன் அதிகமானுக்கு ஆதரவளித்ததால் பாண்டியன் பல்லவ ரோடு போரிட வேண்டியதாயிற்று. இப்போரில் வரகுண பாண்டியன் வெற்றி பெற்றான். முடிவில் பாண்டியன் பல்லவருக்குச் சொந்த மான சோழ நாட்டுப் பகுதியையும் தொண்டை நாட்டிலுள்ள பெண்ணை யாற்றுப் பகுதியையும் பிடித்துக் கொண்டான். இவ்வாறு தந்திவர்மனுக்கு வடக்கே இராட்டிரகூடரும், தெற்கே பாண்டியரும் பகைவர்கள் ஆயினர். எனவே படை பலத்திலும் செல்வத்திலும் பல்லவ நாடு ஒடுங்கிப் போய்விட்டது. பொதுப்பணி இந்நிலையிலும், தந்திவர்மன் நீர்ப்பாசன ஏற்றத்துக்காகப் பல ஏரிகளை வெட்டினான். அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை திருச்சி ஆலம்பாக்கத்திலுள்ள மார்ப்பிடுகு ஏரி, புதுக்கோட்டையில் லுள்ள வாவிஏரி, திருவெள்ளறையிலுள்ள மார்ப்பிடுகு பெருங் கிணறு, திருச்சிக்கு அண்மையிலுள்ள வைர மேகன் வாய்க்கால் முதலியனவாகும். சமயப்பணிகள் , திருச்சிக் கோட்டத்திலுள்ள ஆலம்பாக்கத்திற்குத் தந்திவர்ம மங்கலம்' என்று பெயரிட்டு அங்கு ஒரு கைலாசநாதர் கோயிலையும் கட்டி பிராமனாருக்குப் பிரமதேயமாக வழங்கினான். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலுக்கு, பொன்னாலானா குடம் ஒன்றையும் தானமாக வழங்கினான், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அன்றாட பூசைக்கும் அமுதூட்டவும் மானியம் வழங்கினான். இதுவும் இது போன்ற மற்ற கோயிற் . பணிகளையும் பார்த்தசாரதி கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869) இவன் தந்திவர்மன் மகன் ஆவான். இவனுடைய முதல் மனைவி இராட்டிரகூட இளவரசி சங்கா என்பவளாவாள். இவள் வயிற்றில் பிறந்தவனே நிருபதுங்கன். நந்திவர்மனின் மற்றொரு மனைவி கண்டன்மாறப்பாவை, இவளுடைய வயிற்றில் பிந்த வனே அபராசித விக்கிரமவர்மன். மூன்றாம் நந்திவர்மனுக்கு நந்திப் போத்தரசன், நந்திவிக்கிரவர் மன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்ற பெயர்கள் உண்டு. இவ னுடைய தெள்ளாறு வெற்றியைப் புகழ்ந்து நந்திக் கலம்பகம் பாடப் பெற்றுள்ளது. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை , சேர, சோழ, பாண்டியரை வெறியனூர், பழையாறு, வெள்ளாறு, தெள்ளாறு ஆகிய இடங்களில் நடந்த போர்களில் தோல்வியடையச் செய்தான் என்று நந்திக் கலம்பகம் கூறுகின்றது. இதனால் இவன் மூவேந்தரிட மும், வடபுலத்து அரசர்களிடமும் திறை பெற்றான் என்றும் இந்நூலில் கூறப்படுகிறது. இவனுடைய விருதுப் பெயர்களில் அவனிநாரணன் என்பதும் ஒன்று. அவனி நாரண சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இன்றைய காவேரிப்பாக்கம் நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது. இவன் காலத்தில் கடல் வாணிபத்தின் புகழ்பெற்ற தமிழர்களில் ஒரு வணிகன் சயாம் நாட்டில் செல்வம் மிக்க வணிகனாகத் திகழ்ந்தான். அங்கு ஒரு குளத்தை வெட்டி அதற்கு அவனி நாரணன் குளம் என்று பெயர் சூட்டினான். பல்லவர்களிடம் ஒரு சிறந்த கடற்படை இருந்த தென்பதை நந்திக் கலம்பகத்தால் அறியலாம். எனவே இவனை ''துரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்' என்று அழைத்தனர். இவன் காலத்தில் மல்லையிலும், மாலையிலும் சிறந்த துறைமுகங்கள் இருந்தன. மூன்றாம் நந்திவர்மன் இராட்டிரகூடர் மீது படையெடுத்து வெற்றி கண்டான். இதனை தந்திக் கலம்பகம் விவரிக்கிறது. மேலும் பல வடபுலங்களில் பெற்ற வெற்றிகளைப் பற்றி வேலூர்ப் பாளையம் செப்பேடுகள் கூறுகின்றன. இதனால் பல்லவ நாட்டின் வட எல்லை வலுவாக அமைக்கப்பட்டது. இராட்டிரகூடருக்குக் கப்பம் கட்டியதும் நின்றது. இதனால் இவன் பேரரசன் (இராசாதி ராசன்) என்று புகழ் பெற்றான். கங்கநாட்டு அரசன் அமோகவர்சன் மகள் சங்கா என்பவளைப் பல்லவன் மணந்தான். இதனால் இராட்டிரகூடர், கங்கர், பல்லவர் ஆகியோர் உறவுமுறையினர் ஆகிவிட்டனர். போரும் உட்பகையும் நீங்கின. தெள்ளாறு எறிந்த நந்தி மூன்றாம் நந்திவர்மன் இராட்டிரரோடும், வடபுல அரசர்க ளோடும் போர் மேற்கொண்டு வடக்கே சென்றிருந்த போது பாண்டிய மன்னன் வரகுணன் மகனான சிறீவல்லபன் தனக்கு அடங்கியிருந்த சோழ, சேரருடன் சேர்ந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக் கூற்றத்தின் மீது படையெடுத்தான். வடபுலத்தில் இருந்து திரும்பிய நந்திவர்மன் இந்த மூவர் கூட்டணிப் படைகளைத் தெள்ளாறு என்ற இடத்தில் படுதோல்வி அடையச் செய்தான். தோற்றோடிய இவர்களை விரட்டிச் சென்று கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு என்னுமிடங்களிலும் தோற்கடித்தான். விடாது துரத்திப் பாண்டியநாட்டுக்கு உள்ளும் சென்று பாண்டியனை வெற்றிக் கண்டு மீண்டான். இதனால் இவனைத் 'தெள்ளாறெறிந்த நந்தி' என்றும் போற்றிப் புகழ்ந்தனர். இதனை நந்திக் கலம்பகமும், அவனது பத்தாம் ஆட்சி ஆண்டுக்குப்பின் வந்த கல்வெட்டுகளும் பட்டயங்களும் கூட சிறப்பித்துக் கூறுகின்றன. இவன் காவிரி நாடான சோழநாட்டையும் கைப்பற்றினான். ஆதலால் காவிரிநாடன், காவிரி வள நாடன், காவிரி நன்னாடன், பொன்னி நன்னாட்டு மன்னன் முதலிய விருது பெயர்களைப் பெற்றான். வடக்கிலும் தெற்கிலும் இவன் அடைந்த வெற்றிகளால் வடபுலத்தரசர்களும், மூவேந்தர்களும் இவனுக்குக் கப்பம் கட்டினர். ஆயினும், இவன் சிறந்த செங்கோலன்; அறங்காத்த பெருமான் என்று சேக்கிழாரும் பாராட்டி உள்ளார். இவன் சிறந்த சிவபக்தன் எண்ணி லடங்காத் திருப்பணிகளைச் செய்தவன் என்பதனைப் பெரிய புராணமும், வேலூர்ப்பாளையம் பட்டயமும், நந்திக்கலம் பகமும் கூறுகின்றன. இவன் தமிழ் மொழியின் மீது தணியாத தாகம் கொண்டான், நந்திக் கலம்பகத்தைப் பாடக் கேட்டால் மரணம் நேரும் என்பதையும் பொருட்படுத்தாமல் அத்தமிழைக் கேட்டவாறே உயிர்நீத்தான் என்பது நம்மையெல்லாம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பிற்காலப் பல்லவர்கள் 1. நிருபதுங்க வர்மன் (கி.பி. 870 - 895) இவன் நந்திவர்ம பல்லவனுக்கும், இராட்டிரகூட இளவரசி சங்கா என்பவளுக்கும் பிறந்தவன். இவனுடைய தாயின் தந்தை யுடைய பெயர் நிருபதுங்கன் என்பதாகும். இவனுக்கும் பாட்டன் பெயரையே சூட்டினர். பாண்டியர் மீது வெற்றி சிறீமாறன் சிறீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் மூன்றாம் நந்திவர்மனிடம் தெள்ளாற்றில் தன் கூட்டாளியுடன் தோற்றுக் கடைசி யாக பாண்டிய நாட்டிலேயே தோல்விகண்டு கப்பம் கட்டினான் என் பதைக் கண்டோம். இந்த இழிவைப் போக்கிக் கொள்ள நிருபதுங்க வர்மன் ஆட்சியின் போது சிறிமாறன் சிறீவல்லபன் பல்லவநாட்டின் மீது படையெடுத்தான். ஆனால், குடமூக்கு, என்னுமிடத்திலும் அரிசி லாற்றங்கரையிலும் பல்லவப் படையிடம் தோல்வி கண்டான். இத் தகைய நிருபதுங்கன் வெற்றியைப் பாகூர்ப் பட்டயம் விவரிக்கிறது. ஆனால் பிற்காலத்தில் நிருபதுங்கன் ஈழ நாட்டார் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த பொழுது தன் கடற்படை வலிமையால் ஈழ நாட்டாரைத் தோற்கடித்து பாண்டிய நாட்டைக் காப்பாற்றினான். திருப்புறம்பியம் போர் (கி.பி. 895) வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கிடைத்துள்ள இரண்டு நடுகல் கல்வெட்டுகளில் திருப்புறம்பியம் போர் கி.பி. 895இல் நடந்தது, குறிப்பிடப் பெற்றுள்ளது. இஃது நிருபதுங்க வர்மனின் 26 ஆம் ஆட்சி ஆண்டில் (ராஜ்ய வத்ஸாம்) வெளியிடப் பட்டது ஆகும். இக் கல்வெட்டில் பிருதிவிபதி அபராசித பல்லவனுக்காக நிருபதுங்கனுடன் போரிட்டு அப் போர்க்களத்திலேயே வீரசுவர்க்கம் அடைந்ததாக கூறப் படுகிறது. பிருதிவிபதியின் தக்கோலம் கல்வெட்டிலும் திருப்புறம்பியம் போர் கி.பி. 895இல் நடந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தத் திரும்புறம்பியப் போரில் வெற்றிபெற்ற அபராசிதவர்மன் அந்த ஆண்டிலேயே அரசு கட்டிலேறினான். கி.பி. 913 ஆம் ஆண்டு வரை இவன் 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்பதும் உறுதியாகிறது. இதனால்தான் டி. வி. மகாலிங்கம் திருப்புறம்பியம் போர் கி.பி. 895இல் நடந்தது என்கிறார். இப்போர் தென்னாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏறத்தாழ பல்லவர் ஆட்சிக்கு இது சாவுமணி அடித்தது. இராட்டிர கூடர் பல்லவர் நாட்டின் பாதுகாவலராயினர்; சோழர் தலைதூக்கினர். 2. அபராசிதவர்மன் (கி.பி. 885-13) நிருபதுங்கனுக்குப் பிறகு அரசுக் கட்டிலேறிய அபராசிதவர்மன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி ஆண்ட சோழரிடம் தோற்று மாண்டான். இவன் கி.பி. 913 வரை 18 ஆண்டுகள் ஆண்டான் எனத் தெரிகிறது. இவனை ஆதித்த சோழன் போரிட்டுக் கொன்றான் என்று இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. திருத்தணியில் கருப்புக் கருங்கற்களால் கட்டப்பட்ட வீரட் டானேசுவரர் கோயில் அபராசிதனால் கட்டப்பட்டதாகும். இக் கோயிலின் கட்டடக் கலைப்பாணி பல்லவர் ஆட்சியின் காலத்தைக் காட்டுகிறது. சோழர்கள் குறிப்பாக ஆதித்த சோழனும், அவன் மகன் பராந்தக சோழனும் தொண்டை மண்டலத்தின் (பல்லவர் ஆட்சியின்) தென் பகுதியை நிரந்தரமாகவே சோழப்பேரரசுடன் இணைத்து ஆண்டனர். அபராசிதன் மரணத்திற்குப் பிறகு தொண்டை மண்டலம் முழுவதுமே சோழப் பேரரசின் ஒரு பகுதியாயிற்று. அபராசிதனுக்குப் பிருதிவி மாணிக்கம், வீரமாதேவியார் என்று இருமனைவியர் இருந்தனர். உக்கல் என்ற வளரிலுள்ள திருமால் கோயிலுக்கு இவ்வம்மையார் நினைவாகப் 'புவனமாணிக்கவிசுணு கிருகம்' என்று பெயர் ஏற்பட்டது. பிருதிவி மாணிக்கம் என்ற முகத்தல் அளவை (மரக்கால்]யும் இவர் பெயராலேயேற்பட்டது. திருக்கோடிக் கல்வெட்டுக் கூறுகிறது. இவர் துலாபாரம் செய்து அதில் ஐம்பது கழஞ்சுப் பொன்னையெடுத்து அன்றாடப் பூசைகளுக்காக கோயில் களுக்கு வழங்கினார் என்று அக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் இரணியகர்ப்பம் விழா நடத்தி அதில் வந்த பொன்னையும் அன்றாடப் பூசைக்கு அளித்தான். பல்லவர் ஆட்சியின் முடிவு இவ்வாறு பல்லவ அரசன் இறந்து, பல்லவர் ஆட்சியே முடி வுற்ற பிறகும், அவனுடைய விதவைகள் கோயில் திருப்பணிகளுக் கும், பிராமணர் சேவைக்கும் வழங்கிய தானங்களைப் பார்க்கிறோம், பல்லவர் நாட்டைக் கி.பி. 909 - இலேயே இராட்டிரகூடர் கைப்பற்றி னார்கள் எனலாம். ஈ) ஆட்சி முறை மன்னர் ஆட்சி பல்லவர் ஆட்சி மன்னர் ஆட்சி ஆகும். மன்னர்களை மக்கள் கடவுளைப் போல் எண்ணினர். மன்னனின் வாழ்விடம் கோயில் என்றே அழைக்கப்பட்டது. மன்னனைக் 'கோன்' என்றழைத்தனர். "தொண்டையர்கோன் காடவர்கோன்' என்று பல்லவ மன்னர்களின் பெயர்கள் வழங்கப்பட்டன. ஆனாலும், மன்னன் தெய்வீகக் கோட் பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை. சிவனையும், திருமாலையும், சிந்தை யில் நிறுத்திய மன்னர்கள் மக்களைக் கண்ணெனப்போற்றினர். எனவே மக்கள் மன்னரின் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இல்லை. பல்லவ மன்னர்கள் ஆந்திரப் பகுதியிலிருந்து வந்தவர்கள். ஆயினும் இவர்களின் ஆட்சிமுறை தமிழ் மன்னர்களின் ஆட்சியைப் போலவே உள்ளது. இவர்களின் நாட்டுப்பிரிவுகளை நோக்கும் போது, சாதவாகன, குப்த மெளரியர் நாடுகளின் நாட்டுப் பிரிவு களைப் போலவே காட்சியளித்தாலும் தமிழ்நாட்டு வழக்கத்தையும் ஒத்துள்ளது. மன்னர் முடிசூடும் முன் பெற்றோர் இட்ட பெயருட னும் முடிசூடியபின் விருதுப் பெயருடனும் விளங்குவர், எடுத்துக் காட்டாகக் கூறுவோமானால் "இராசசிம்மன்" இயற்பெயர், "இரண்டாம் நரசிம்மன்" முடிசூட்டுப் பெயர். முடிசூட்டுப் பெயரை ''அபிசேக நாமம்" என்றனர். வேததருமப்படி நடந்ததால் தரும் மகராசன் எனும் விருதுப் பெயரையும் பெற்றனர். வேள்விகளைச் செய்து புகழ்பெற்ற அரசர்கள் இந்த வேள்விகளின் பெயராலேயே அழைக்கப்பெற்றனர் சிவஸ் கந்தவர்மன் அக்னிஷ் டோம், வாச்பேய, அசுவமேத வேள்விகளைச் செய்ததால் அவனை அவ் வேள்வி களின் பெயராலேயே அழைத்தனர். நாட்டுப்பிரிவுகள் பல்லவர்கள் பேரரசு ஆந்திராவிலுள்ள கிருட்டிணை ஆற்றி விருந்து காவிரி ஆறு வரையிலும் பரவி இருந்தது. கிழக்கிலும், மேற் கிலும், கடலே எல்லையாகவும் இருந்தது, நாடு முழுவதும் சீரான ஆட்சிமுறை வேண்டும் என்பதற்காகப் பல்லவர்கள் ஓரளவு சமச்சீராக நாட்டைப் பிரித்தனர். பேரரசின் பெரும் பிரிவுக்கு விசயம் என்றும், இராட்டிரம் என்றும் பெயரிட்டனர். ஆனால் பல்லவர் வருகைக்கு முன்பே தமிழ்நாட்டில் மண்டலம், கோட்டம் என்ற பிரிவுகள் இருந் தன. இதன் கடைசிப்பிரிவு ஊர் {அ} கிராமம் ஆகும், தொண்டை மண்டலத்தில் 24 கோட்டங்களிலிருந்தன. கல்வெட்டுச் சான்றுகளின் படி 27 கோட்டங்களிருந்ததாக அறிகிறோம். அவை, 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவில் கோட்டம் 4. செங்காட்டுக்கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7.தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக்கோட்டம் 13. பல்குன்றக்கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க்கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20, குன்றவட்டானக் கோட்டம் 21. வெங்கடன் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர் கோட்டம் 24. புலியூர்க் கோட்டம் ஆகியவை ஆகும். இலச்சினை பல்லவரின் அரச முத்திரை அல்லது ஆட்சி இலச்சினை நந்தி என்றும் அரிமா என்றும் கூறுவர். பெரும்பாலும் பல்லவ அரசர்கள் போர்க்களங்களில் விடுத்த செப்புப் பட்டயங்களில் அரிபாவின் இலச்சினையுள்ளது. இது வீரத்தின் சின்னமாகும். மற்ற யாவும் நந்தியின் உருவம் பதித்த ஆணைகளாகவே உள்ளன. மேலும் அவர்களில் பெரும்பாலோர் சிவனியத்தைப் பின்பற்றியவர்கள், இதனால் நந்தியைத் தங்கள் சின்னமாகக் கொண்டனர். மேலும் அவர்களின் ஆணைகளை "'விடேல்விடுகு" என்றே அழைத்தனர். இச்சொற்றொடருக்கு (விடை வெல்விடுகு விடேல் விடுகு) அதாவது வெற்றியுடைய நந்தி இலச்சினையோடு விடப்பெற்ற ஆணை என்பது பொருளாகும். பிற்காலப் பல்லவர்கள் சிவனுடைய கத்வாங்கம் எனப்படும் ஆயுதத்தைத் தங்கள் சமயச் சின்னமாகவும் கொண்டனர். முதலாம் பரமேசுவரவர்மன்தன் கொடியில் கதவாங்கத் தைச் சின்னமாகக் கொண்டான் என்று காசாக்குடிப் பட்டயம் குறிப் பிடுகிறது வைகுந்தப் பெருமாள் கோயில் புடைப்புச் சிற்பத்தில் இரண்டாம் நந்திவர்மனுக்கு அளித்த படைகளில் கத்வாங்கமும் ஒன்றாக உள்ளது. ஆக, நந்தி அரிமா, கத்வாங்கம் ஆகிய மூன்று இலச்சினை களில் நந்தியே நிலையான அரசச் சின்னமாகப் பல்லவருக்கு ஏற்பட்டதென முடிக்கலாம். நடுவண் ஆட்சி அமைச்சரவை அரசனே நடுவண் ஆட்சியின் தலைவன். அவனுக்கு நிருவாகத்தில் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களில் பலர் பரம்பரையாகவும் இருந்தனர். அரசிளங் குமரர்களும் அமைச்சர் களாக இருந்தனர். பிராமணர்களும் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பிரம் சிறீராசன் என்ற விருதுப் பெயர் உண்டு. பிரமராயன், பேரரையன் என்பனவும் அமைச்சர்களின் விருதுப் பெயர்களாகும். பிராமணப் பூசாரிகள் அரசரின் ஆலோசகராகவும் இருந்தனர். பல்லவர் அரசவையிலிருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை எட்டுப் பேர் என்றும் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் மனுவை ஆதாரமாகக் கொண்டு கூறுகின்றனர். ஆனால், பதினாறு பேர் வரை இருந்திருக்கலாமெனச் சாணக்கியனை ஆதாரமாகக் கொண்டு கூறுவர். தேவைக்கேற்ப அவ்வப்பொழுது இந்த எண்ணிக்கை மாறி இருக்கலாம். இதில் சேனாதிபதியும், குறுநில மன்னர்களும் இடம் பெற்றிருக்கலாம். செயலகம் ஒவ்வொரு துறைக்கும் தலைவராக ஒரு செயலர் இருப்பார். இவருக்கு உடன்பாடு கருமத்தலைவர் என்று பெயர். இவரைத் தவிர வாயில் கேட்போர், கீழ்வாயில் கேட்போர் ஆகிய இருவர் இருந்தனர். இவர்களைச் துணைச் செயலர் உதவிச் செயலர்கள் எனலாம். நடுவண் ஆட்சிக்கு உதவியாக அமாத்தியர், மாடலிகர் (சுங்க அதிகாரிகள்) அரையர் மாணிக்க பண்டாரம் (கருவூலக் காப்பாளர்), கோசா அத்தியட்சா (கருவூல் மேற்பார்வையாளர்கள்), அதிகரணிகர் (நீதிபதிகள்) முதலிய அதிகாரிகளும் இருந்தனர். ஈரகதகள்ளி செப்பேட்டில் கிராமப் போசகர் (ஊர்க்காப்பாளர்), கோவல்லபர் (ஆநிரைக் காப்போர்), அரக்திகளர் (காவலர்), குமிகர், தூதிகர். நெய்கர், நஞ்சாநாதர் முதலிய அலுவலர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. காடுகளை மேற்பார்வை யிட்டோர் குமிகர் எனப்பட்ட னர். குளியல் குளங்களில் குளிப்போரைக் காவல் காத்தவர்கள் தீர்த்தி கர் எனப்பட்டனர். இவர்களைத் தவிர அரண்மனையில் பணிபுரிந்த பல்வேறு கைவினைக் கலைஞர்களும், பணியாளரும் இருந்தனர். நீதி பல்லவரின் பெருநகரங்களில் நீதி மன்றங்கள் இருந்தன. அவை அதிகரணங்கள் என்றழைக்கப்பட்டன. அவற்றின் அதிகாரிகள் "அதிகாரிகள்'' எனப்பட்டனர். சிற்றூர் நீதிமன்றங்களும் இருந்தன. இவை கரணம் என்று அழைக்கப்பட்டன, உயர்நீதி மன்றத்திற்கு தருமாசனம் என்று பெயர். இவற்றில் குற்றவழக்குகளை உசாவும் நீதிமன்றங் களுக்கு அதிகரணம் என்றும், பொது வழக்குகளை உசான்னவது தருமாசனம் என்றும் அழைக்கப்பட்டன. வழக்குகளை உசாவுவதும் தீர்ப்பு வழங்குவதும் ஆட்சி, ஆவணம், அயலார் சாட்சி என்ற மூன்று வகை மரபுகளின் அடிப் படையில்தான் அமைந்தன. ஆட்சி என்பது மரபுவழி ஒழுக்கத்தை யும், ஆவணம் என்பது வழக்குச் சுவடிகளையும், அயலார் சாட்சி என்பது உசாவலைக் கண்ணுற்றார் தரும் ஒப்பந்த இசைவுகளையும் குறிக்கும். அவர்களின் கையொப்பமிட்ட சுவடிகளை அரசின் கர்ப் பொது நியாயமன்றத்தில் பாதுகாத்து வைப்பார்கள். சிற்றூர்களில் இத்தகைய நீதிமன்றங்களைக் காப்பவருக்குக் கரணத்தார் என்று பெயர். சான்றாகக் கையொப்பம் இடுபவருக்கு 'மேலெழுத்து இட்டவர்' என்பது பெயர், இத்தகைய பத்திரங்களை எழுதுவோரும், பட்டயங்களைத் திட்டுவோரும் பொற்கொல்லர்களேயாவார். அரசிக்கு அணிகலன் செய்யும் பொற்கொல்லர் மாதேவி தட்டார் எனவும், பட்டயம் தீட்டுவோர் பட்டய எழுத்தாளர் என்றும், இத்தகைய பட்டயங் களையும் கல்வெட்டுகளையும் வரைபவர்கள் ''காரணகர்'' என்றழைக்கப்பட்டனர். உசாவுமுறையும், தீர்ப்பு வழங்குதலும் , வழக்குத் தொடுப்பவர் மன்றாடி எனப்படுவார். மன்றாடி, வழக்குச் சாட்டப்பட்டவர், ஆவணங்கள், சாட்சிகள் ஆகியோரை உசாவியே தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்புகளை நிறைவேற்றும் அதிகாரி சாசனசஞ்சாரி எனப்படுவார். தண்டனைகள் குற்றவாளிகளைக் கைது செய்தல், சிறையில் அடைத்தல், உடல் பாதிப்புத் தண்டனை வழங்குதல் முதலிய தண்டனைகள் உண்டு. நீதிமன்றங்கள் அரசனது நேரடிப் பார்வையில் செயல்பட்டன. ஒப்பந்தங்கள் "இசைவு" எனப்பட்டன. சிலவற்றில் சான்றாள ராகக் கையெழுத்திடுவோர் * மேல் கையெழுத்திடுவார்' எனப்பட்ட னர். ஊராரின் கையொப்பங்களைச் சேகரித்துக் காப்பகங்களில் பாது காத்து வைப்பர். இத்தகைய அரசாங்கக் காப்பகங்களை அறச்சாலை என்றும் அரண் தரும் காப்பகம் என்றும் அழைப்பர். படை பல்லவரிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை ஆகிய நான்குவகைப் படைகள் இருந்தன. படைகளின் தலைவருக்குச் சேனாதிபதி என்பது பெயர். சாளுக்கியப் படையெடுப்பின் போது பரஞ்சோதியார் வாதாபிக்குச் சேனாதிபதியாகச் சென்றாரென்பதை அறிகிறோம். நந்திவர்மனின் படைத்தலைவர் சிம்மவர்மனுக்கு விசுணுவர்மன் என்பவனும் இரண்டாம் நந்திவர் மனுக்கு உதயச் சந்திரன் என்பவனும், மூன்றாம் நந்திவர்மனுக்குப் பதிவிக்கிரகேசரி என்பவனும் சேனாதிபதிகளாக இருந்தனர். நரசிம்ம வர்மன் தன் நண்பனுக்கு உதவ இரண்டு முறை இலங்கைக்குத் தன் கடற்படையை அனுப்பினான் என்பதிலிருந்து பல்லவரிடம் சிறந்த கடற்படை இருந்ததென்பதை அறியலாம். சிறிமாறன் என்ற பாண்டிய மன்னன் நிருபதுங்கவர்ம பல்லவன் என்பவனிடமிருந்து கடற்படை யைப் பெற்று இலங்கை மீது படையெடுத்ததை நோக்க, பாண்டிய ரிடம் கடற்படை இல்லை அல்லது வலுவான கடற்படை இல்லை என்பதையும் கடற் படைக்குப் பல்லவர்களே பெயர் போனவர்கள் என்பதையும் உணரலாம். இராசசிம்மப் பல்லவன் கடற்படையால் இலங்கையை வென்றுள்ளான், மண்டில் ஆட்சி படை, நீதி, அயலுறவு முதலியவை நேரடியாக நடுவண் ஆட்சியின் கீழ் இருந்தன. ஆயினும் மண்டி நிலங்களிலும் ஆட்சி நடந்தது. இராட்டிரம் என்பது தான் மண்டிலம் எனப்படும். இதனை ஓரளவு இன்றைய மாநிலங்களுக்கு ஒப்பிடலாம். மண்டிலத் தலைவர்களாக அரசிளங் குமரர்கள், அரச குடும்பத்தார் ஆகியோரே பெரும்பாலும் இருந்தனர். இவர்களை 'யுவராசாக்கள்', 'யுவமகாராசாக் கள்' என்றழைத்தனர். இதைப் போலவே படைத் தலைவர்களாக வும், அரச குடும்பத்தாரும், இளவரசர்களும் இருந்தனர். மண்டில் ஆட்சியாளருக்கு உதவியாக ஆயுக்தர்கள், அத்தியக்சர்கள் முதலிய உயர் அதிகாரிகள் அமர்த்தம் செய்யப்பட்டனர். மண்டிலத் தலை வரும், அவருக்குத் துணையாகவுள்ள உயர் அதிகாரிகளும் அரசரால் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் எவருமே ஊராட்சி முறையில் தலையிட மாட்டார்கள். இதைப் போலவே நடு வண் ஆட்சியரும், அமைச்சரனவயும் கூட தராட்சி முறையில் தலை யிடா. மண்டில் ஆட்சியைப் பரிசீலிக்கவும் மேற் பார்வையிடவும் இன்றைய ஆணையருக்கு ஒப்பான ஆளுங் கணத்தார் இருந்தனர். நாட்டாட்சி இராட்டிர ஆட்சி இராட்டிரம், இராட்டிரபாலர் என்பவரின் கீழ் இருந்தது. இராட்டிர பாலருக்குத் தனியான அரசவையும் படை அமைப்பும் இருந்தன. இராட்டிரர்கள் எத்தனை ஆண்டுகள் இராட்டிரத்தின் தலைவர்களாக இருக்கலாமென்ற நிபந்தனை இல்லை. அவர்களின் வழித்தோன்றல்கள் தொடர்ந்து இராட்டிரத்தின் நிருவாகத்தை நடத்திச் செல்லலாம். இராட்டிரத்தை அடுத்து, ஒவ்வொரு இராட்டிரமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த்து. நாட்டார் நாட்டின் தலைவர்களாக இருந்தனர். நாட்டார் என்போர் அப்பகுதியின் சான்றோர்கள் ஆவர். அரசரால் கொடையாக வழங்கப்படும் நிலங்களை ஆணைப்படி அளந்து, கல்லும், கள்ளியும் நட்டுச் சரியான எல்லைகளைக் குறிப்பிட்டனர். அந்த நிலங்களுக்கான அரசின் சலுகைகளை உறுதி செய்தனர். நாட்டாட்சி என்பது ஊராட்சியினின்று வேறுபட்டது. நாட்டார் தங்களின் ஆட்சிமுறைச் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களை விவரமாக அரசனுக்கு எழுதி அனுப்புவார்கள். அத்தகைய தகவல் களைத் திருமுகம் அல்லது விண்ணப்பம் என்பார்கள். அப்பகுதியில் அரசனுக்கு அடங்கியே சட்டமும் ஒழுங்கும் இருக்கும்படி நாட்டார் கள் பார்த்துக் கொள்வார்கள். பிரமதேய மங்கலங்களை அரசன் பிராம் ணர்களுக்கு வழங்கும் போது அதனைச் செயல்படுத்தி அவற்றிற்கு வரி இல்லாமல் செய்து இறையிலி நிலங்களாக்கும் பொறுப்பும், ஏற் கனவே குடியிருப்போரை அகற்றி அந்நிலத்தைக் கையகப்படுத்து வதும் நாட்டாரின் அதிகாரப் பொறுப்பாகும். தனராட்சி ஊரார் என்போர் ஊரை ஆண்ட சான்றோர் ஆவர். திருமால் விண்ணகரப் பட்டயங்கள் (காவேரிப்பாக்கம் பட்டயங்கள்) மற்றும் பலவும் ரொட்சி முறையை அறிவதற்குச் சான்றுகளாய் உள்ளன. வேளாண்மை , நீர்ப்பாசனம், கோயில் பணரிகள், அறங் கூறல் முதலிய பணிகளை தயார் மன்றங்கள் கவனித்தன. பட்டயங்களின் படி பார்க்கும்போது சுமார் இருபது ஊர் மன்றங்கள் பல்லவராட்சியில் இருந்தன. ஊர் மன்றம் பல பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டது. ஒவ்வொரு பிரிவும் வாரியம் என்றும் இதில் பங்கேற்றவர்கள் வாரியப் பெருமக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஏரிகளைப் பழுது பார்க்க உதவும் வாரியம் ஏரிப்பட்டி எனப்பட்டது. அரசின் நேர்முகப் பொறுப்பாளர்களால் ஆளப்பட்ட ஊர்களுமுண்டு. அத்தகைய நேர்முகப் பொறுப்பாளர்களுக்கு ஆளுங்கணத்தார் என்று பெயர். கோயில்களைப் பராமரிக்கும் ஆட்சியாளர்களுக்கு 'அமிர்த கணத்தார்' என்று பெயர். ஊரார் செயல்பட்ட அவையானது ஊர் அவை அல்லது மகா சபை என்று வழங்கப்பட்டது. ஊரிலுள்ள ஆண்மக்கள் யாவரும் ஓர் அவை உறுப்பினராயசிருப்பர். ஊருக்குப் பொதுவான குளங்கள், ஓடைகள், நெற் கதிர் அடிக்கும் களத்து மேடுகள் முதலியன இந்த ஊர் அவையால் பராமரிக்கப்பட்டன. நிலத்தொடர்பு வழக்குகளை இந்த ஊர் அவை உசாவும். ஊர் அவைக்கு வழக்குச் செலவாக நில உடைமையாளர்கள் பொன் கொடுத்தனர். இன்றேல் பொன்னிற்கு ஈடாக நிலத்தை விற்று சபையார் எடுத்துக் கொள்வர். அவை உறுப் பினர், வாழ்வில் ஈடுபட்டால் அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அவைக்கு உண்டு. புனிதப் பயணிகள் நலன்களை ஊரவை போற்றிக் காக்கும். அதன் செலவுக்காக அவையினர் பொன்னைப் பெற்று, அதினின்று வரும் வட்டியைச் செலவிடுவர். இத்தகைய புனிதப் பயணி களுக்கும், குளம் தூர் எடுக்கும் பணி போன்றவற்றிற்கும் நார் அவை தாளாளரிடம் கொடை பெற்றுப் பணிகளைச் செய்வதுமுண்டு. இவ் வாறு பொதுப் பணிகளையும், தரும் காரியங்களையும் செய்வதற் கான வைப்புத் தொகைகள், அவற்றிற்கான வட்டித் தொகைகள், நன்கொடைகள் (தானம்) முதலியவற்றை வளர் அவையிலேயே வைப்பர். இதனால் ஊர் அவை ஒரு வங்கி போலவும் செயல்பட்டது. இத்தகைய பலதிறப்பட்ட காரியங்களையும் பொறுப்பேற்றுச் செய்யத் தனித் தனியாகக் குழுக்கள் அமைக்கப்படும். அவற்றில் ஊரவை உறுப்பினர்களே பொறுப்பேற்பார்கள். இவர்களை வாரியப் பெருமக்கள் என்று அழைப்பார்கள். அதாவது குறிப்பிட்ட பணிக் காக, குறிப்பிட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுச் செய்யும் பணி வாரியப் பணி என்றும், இதனைச் செய்வோர் வாரியப் பெருமக்கள் என்றும் அழைக்கப்படுவர். எடுத்துக்காட்டாகக் ஏரி வாரியப் பெரு மக்கள், தோட்ட வாரியப் பெருமக்கள், நியாய வாரியப் பெருமக்கள், பொன்வாரியப் பெருமக்கள், பஞ்ச வாரியப் பெருமக்கள் முதலி யோரைக் கூறலாம். பொதுவாக வாரியங்களைப் பராமரிக்க ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படுத்தப்படும் ஒரு குழுவைச் சம்வத்சர வாரியம் என்பர். இது தனித்து இயங்காமல் எல்லா வாரியங்களை யும் கண்காணிக்கும். கணப் பெருமக்கள் கோயில்களைப் பராமரிக்கும் பெருமக்கள் கணப்பெரு மக்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், பொது நோக்குடன் பலர் நடத்திய கூட்டுத் தொகுதிப் பணிகளைக் கவனித்தோர் கணப்பெரு மக்கள் என்றும், பிராமணர்களும், பிறரும் சேர்ந்து சில காரியங் களைச் செய்வார் என்றும், அவர்களே கணப் பெருமக்கள் என்றும் கூறுவர். கோயில்களுக்குச் சேர வேண்டிய வரிகளைச் சேர்த்து வைப்போர் கணப்பெருமக்கள் என்றும், அவர்கள் கோயில் நிருவாகத்தையும் கவனிப்பார் என்றும் கூறுவர். இவர்களை ஆளும் கணத்தார் என்றும் அழைப்பர். அமிர்த கணத்தார் கோயில்களைப் பராமரிக்கும் வாரியத்தார் அமிர்தகணத்தார் என்று மேலே கூறினோம். ஒரு குறிப்பிட்ட பணிக்காக நியமிக்கப் படுவோரும் அமிர்த கணத்தார் எனப்படுவர். கோயில் பணிக்காகப் பொன்னைப் பெறுவதற்காக இவர்கள் நியமிக்கப் பட்டனர். பொன்னைப் பெற்று அதனைப் பாதுகாத்து வட்டிக்கு விட்டு, வட்டிப் பணத்தைத் தண்டல் செய்து கோயில் பணிகளுக்காகச் செலவிட ரேவைக்கு உதவுவர். பிரம் தேயங்கள் வேதங்கள் பயின்ற பிராமணர்களுக்காக அரசன் கொடுக்கும் நிலக்கொடையே பிரமதேயம் எனப்பெறும். கல்வியில் சிறந்தோர், நல்ல நடத்தையுடையோர், வேதத்தைப் பாராயணம் செய்து ஒப்பு விப்போர், அதனை 'வியாக்யானம் செய்வோர் ஆகிய பிராமணருக்கு இத்தகைய நிலக்கொடை வழங்கப்பட்டது. இந்த நிலக்கொடைகளுக்கு வரி கிடையாது. எனவே இதற்கு இறையிலி என்று பெயர். உப்பும், சருக்கரையும், அரசாங்கத்தின் ஏகபோக உரிமை ஆகும். ஆனால் பிரம் தேயத்தார் மட்டும் இவற்றை உற்பத்தி செய்து கொள்ளலாம். அரசு அதிகாரிகள் வருகை தரும் போதும் ஓர் காரில் இருந்து மற்றோர் ஊருக்கு அவர்கள் போகும்போதும் அதற்காக, காளைமாடுகளைச் சவாரிக்காகப் பொதுமக்கள் கொடுக்க வேண்டும். அதற்கு, சவாரி ஊழியம் என்று பெயர். ஆனால் பிரமதேயத்தார் கொடுக்க வேண்டிய. தில்லை. அவ்வாறு வரித்தண்டல் செய்யவும் வேறு பல அரசு காரியங் களுக்காகவும் வரும் அரசு அதிகாரிகளுக்கு பால், காய்கறிகள், கீரை, பூக்கள் முதலியன கொடுக்க வேண்டும் என்பது விதி. இதற்கு வெட்டி முட்டை என்று பெயர். ஆனால் பிரமதேயத்தாரிடம் இவற் றைப் பெறக் கூடாது. செங்கழுநீர்க்கொடி * மருதாணிச் செடி ஆகிய வற்றைப் பிரமதேயத்தார் மட்டுமே பயிரிட உரிமை உண்டு. ஓட்டு வீடுகள், அடுக்குமாடிகளைக் கட்டவும், இவர்களுக்கே உரிமை உண்டு. பிரம் தேயத்திலுள்ள குளத்திலிருந்து மீன் பிடிக்கவோ, தென்னைப் பனை மரங்களிலிருந்து கள் இறக்கவோ அரசுக்கு உரிமை இல்லை. தென்னை மரங்களின் நடுபாகத்தை அரசின் பொதுக் காரியங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற பொது விதி பிரம் தேயத்தில் செல்லாது. இத்தகைய தனிச்சலுகைகளுடன் வாழ்ந்த பிரம் தேய் மக்கள் பொதுவாக உள்ள தர் அவையால் பரி பாவிக்கப்பட மாட்டார்கள். எனவே, பிரமதேயச் சிற்றூர்ச் சபைகள் தனியாகச் செயல்பட்டன. இவை மங்கலச் சபை அல்லது அக்ரகாரச் சபை எனப்பட்டன. இதன் உறுப்பினர்களாக பிராமணர்கள் மட்டுமே இருப்பர். பிரம் தேய நிலக்கொடையை அளிப்பதற்கு முன், ஊர் அவைக்கு அரசன் அறிவிப்பு கொடுப்பான். ஆனால் அவையின் இசைவுக்காகக் காத்திருக்க மாட்டான். விளை நிலமாயினும் நிலசொந்தக்காரரை வெளியேற்றிக் கல்லும், கள்ளியும் வேலியாக நட்டு எல்லைகள் குறிப்பிடப்படும். இவ்வாறு 18 விதமான முழுச் சலுகைகளுடன் (சர்வ பரிகாரங்களுடன்) பிராமணர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட பிரம் தேயத்தை அவர்கள் எவருக்கும் தானமாகத் தரவோ, விற்கவோ உரிமை கிடையாது. நீலோற்பவ மலர் (குவளை) செங்கழுநீர்க் கொடி ஆகியவை பயிரிடுவதற்கு குவளை நடுவரி அல்லது குவளைக்காணம் என்றும், கொடிக்காணம் என்றும் வரிகள் செலுத்துவதில் இருந்து பிரம் தேயத்தாருக்கு வரி விலக்கு உண்டு. சித்தர் மூலம் எனும் மூலிகைச் செடியைப் பயிரிட்டால் அதற்காக செங்கொடிக் காணமும், கரிசலாங் கண்ணியைப் பயிரிட்டால் அதற்காக கண்ணிட்டுக் காணமும் வரியாகச் செலுத்த வேண்டும். இதிலிருந்து பிரம் தேயத்தார் விலக்குப் பெற்றனர். ஆனால் புரோகிதத் தொழிலைச் செய்யும் பிராமணர்கள் பிராமணராச காணம் என்ற தொழில் உரிம வரி செலுத்த வேண்டும். தேவதானம் மேற்கூறியவாறு சகல பரிகாரங்களுடனும் இறையிலி நிலமாக வழங்கப்படுமானால் அது தேவதானம் அல்லது கோயில் தானம் ஆகும். சமணப் பள்ளிகளுக்குக் கொடுக்கப்படுமானால் அதனைப் 'பள்ளிச் சந்தம்' என்பர். பிரம் தேய சபா பிரம் தேயச் சிற்றூர் ஒரு தனி ஊராகவும், சில இடங்களில் சில இனணந்தும் இருக்கும். இதில் பிராமணர்கள் மட்டுமே வசிப்பதால் இதிலுள்ள சபையும் பிராமணர் சபை அல்லது 'சதுர்வேதி மங்கல சபா' என்றே அறியப்படும். இத்தகைய சபைகள் உத்திரமேரூர் திருப் பெரும்பேடு, மணலி, பெருங்குழி, வெங்குன்றம், விடேல்விடுகு சதுர்வேதி மங்கலம், அன்பில் பெரும்புலியூர், அவனிநாராயண சதுர்வேதி மங்கலம், திருத்தணி, உக்கல்களத்தூர் முதலிய இடங்களி லிருந்தன. சதுர்வேதி மங்கல சபையை 'மகா சபை' என்றும் அழைப்பர். இச்சபையின் முகாமைப் பணிகளைப் பற்றிச் சாசனங்கள் கூறு கின்றன. கோயில்களுக்குத் தானமாகக் கொடுக்கும் பொன்னைப் பெற்றுக் காப்பதும், அதனை வட்டிக்கு விட்டுப் பணம் ஈட்டுவதும் அந்த வட்டிப் பணத்தை வருகின்ற புனிதப் பயணிகளுக்குச் செலவிடுவதும் இச்சபையின் பணி ஆகும். கோயில் குளங்களைத் தார் எடுத்துத் தூய்மைப்படுத்தவும் அந்த வட்டி வருவாயைப் பயன்படுத்துவார்கள். கோயில்களில் காலப் பூசைகள் நடத்தவும், சாமிக்கு விழாக்கள் நடத்தவும் அமுது படைக்கவும், ஆடை, அணி கலன்களைச் செய்யவும் வேண்டுதல் செய்வோர் இதற்கான ஒப்பந்தங்களை எழுத்து மூலம் செய்வர். இதற்கு ஸ்ரீகாரிய ஒப்பந்தம் என்று பெயர். இதனைச் செய்பவர்கள் மகாசபையிலுள்ள குறிப்பிட்ட வாரியப் பெருமக்களே யாவர். தாண்டாவிளக்கு எரிக்க ஆடு. மாடுகளைக் கொடுத்து அவற்றிலிருந்து நெய்விளக்கேற்றவும் அதற்கான ஆடு, மாடுகளைப் பெறவும், அவற்றை மன்றாடியார் பராமரிக்கவும், அவற்றிற்கான காரியங்களை மகாசபையாரே செய்வர். சுருங்கச் சொன்னால் கோயில் அறங்காவலராக (தர்ம கர்த்தாவாக) இச்சபை செயல்பட்டது. பொதுவாக ஊர்ச்சபை இரவு, பகல் எந்த நேரத்தில் கூடும். உறுப்பினர்களுக்கு எத்தகைய ஊதியமும் இல்லை. ஊரிலுள்ள அனைவரும் அகவை (வயது) வேறுபாடின்றி அவை உறுப்பினர் களாக இருந்தார்களா என்பது தெரியவில்லை. சபை கூடும் நாள், நேரம் குறித்து முன்கூட்டியே தண்டோரா போட்டு அறிவிக்கப்படும். சங்கு ஊதியும் அறிவிக்கப்படும். உறுப்பினராவதற்குச் சபையுள்ள ஊரில் வசிக்க வேண்டுமென்ற தகுதி தவிர வேறு தேவையில்லை. பிற் காலத்தில்தான் சொத்து இருக்க வேண்டும்: வேதம் தெரிந்திருக்க வேண்டும்; குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற தகுதிகள் தேவைப்பட்டன. வாரியங்களாகப் பிரித்துச் செயல்படும் போதுதான் அரசு அலுவலர்கள் உதவி செய்வர். ஆனால் தலையிட மாட்டார்கள். ஊர்ச்சபை கோயில் மண்டபம், மரத்தடி ஆகிய இடங்களில் கூடும். குறைந்த அளவு இத்தனை உறுப்பினர் வந்திருந்தால்தான் தீர்மானம் நிறைவேறும் என்ற கட்டாயமும் கிடையாது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு முறையும் கிடையாது. எந்த ஒரு தீர்மானமும் ஏகமனதாகவே நிறைவேற்றப்படும். ஒவ்வொரு ஊர்ச் சபையிலும் இத்தனை உறுப்பினர்கள்தான் இருக்க வேண்டுமென்ற வழக்கமும் இல்லை. தொட்டியம் என்ற ஊரில் 48 உறுப்பினரும், உக்கல் என்ற ஊரில் 98 உறுப்பினரும், பாண்டிச்சேரியை அடுத்துள்ள திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் 400 உறுப்பினரும் கொண்ட சபைகள் இருந்ததாக கல்வெட்டுச் சான்று கூறுகின்றன, ஊர் மணியக்காரர் அரசாங்கத்தால் அமர்த்தம் செய்யப்பட்ட அரசின் கடைசிப் பிரிவான ஊரின் அரசு அதிகாரி மணியக்காரர்தான். இது தகப்பனுக் குப்பின் மகன் என்ற முறையில் வரும் பணி ஆகும். இவருக்கும் வளர்ச்சபைக்கும் தொடர்பு இல்லை . ஆனாலும், அரசுச் சார்பில் சில நேரங்களில் வளர்ச்சபையில் அமர்ந்து நடவடிக்கையை இவர் கவனிப்பார். அரசுக்குச் சேர வேண்டிய வரிப்பணத்தைத் தண்டல் செய்து அனுப்புவதுதான் இவருடைய முக்கிய வேலை ஆகும். ஊர் தொடர்பான நிலம், வீடு, ஏரி, புறம்போக்கு மற்ற எல்லாவித ஆவணங் களையும் காப்பாற்றும் காப்பாளர் இவரே ஆவார். இவரைக் கிராம கேயன் என்பர். ஊர்ச்சபைக்கும் அரசுக்கும் இடையில் இவர் பாலம் போலிருப்பார். அரசு ஆணைகள் (சிறீ முகம் ) இவர் மூலமாகத்தான் நேரடியாக அரசிடமிருந்து பெற வேண்டும். ஊராரின் உடமைகளை யும், நலன்களையும் காப்பவராக அரசர் சார்பில் இவர் செயல்பட்டார். நடுவண் அரசின் வருவாய் இத்தகைய மிகப்பெரிய நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டிக்காத்து நல்லாட்சி நடத்திய பல்லவருக்கு அவற்றின் செல் -வினங்களைச் சமாளிக்கப் போதிய வருவாய் வேண்டுமல்லவா? அது எப்படிக் கிடைத்தது? அன்றைய நிலையில் அரசின் மிகப்பெரிய வருவாய் நிலவரி யும், நிலவருவாயும் ஆகும். வழக்கமாக நிலத்தின் வருவாயில் ஆறி லொரு பங்கு வருவாய், அரசுக் கருவூலத்திற்கு அனுப்பி விடுவார். அரசுக்கே உரியநிலம், அடைநிலம், என்றும் பெருநிலக்கிழார்களுக்கு உரிய நிலம் பயல்நிலம் என்றும் அழைக்கப்பட்டன. உப்பெடுத்தல், - சருக்கரை தயாரித்தல் ஆகிய இரண்டும் அரசின் தனி உரிமைகள் ஆகும். நிலவரியைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட வரிகள் பல்வேறு பொருகள்களின் மீதும், தொழில்களின் மீதும் தண்டப்பட்டன. நீதிமன்றங்களில் விதிக்கப்படும் தண்டங்களும் அரசின் வருவாயாகக் கருதப்பட்டன. சில வரிகள் வயல் நிலங்களிலிருந்து ஆறிலொருபங்கு வரியாகப் பெற்ற னர். அது பணமாகவும், பொருள் ஆகவும் பெறப்பட்டது. இத்தகைய வரியைப் பரவு வரி என்றழைத்தனர். தினைக் காத்தார் என்னும் அலுவலர் வரியினைப் பெற்று அரசுக்குச் செலுத்துவர். அரசருக்குச் சொந்தமான அடைநிலம் கூலி ஆட்களால் பயிரிடப்பட்டது. அதில் அரசன் தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. தென்னை , பனை, பாக்கு ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப் பட்டது. கல்லால மரம், செங்கொடி, கருசலாங்கண்ணி முதலியன பயிரிடுவோரும் அதற்காக முறையே கல்லால்காணம், சொங்கொடிக் காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும். தென்னை, பனையி விருந்து கள் இறக்குவோர் ஈழப்பூச்சி (ஈழப்பூச்சி) என்ற வரியைச் செலுத்த வேண்டும். இம் மரங்களை வெட்டினால் கண்டப் பகுதி களை அரசுக்கும் கொடுத்து விட வேண்டும். மரிக்கொழுந்து செடி, சீனம், சீயம் முதலிய தேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுப் பயிரிடப்பட்டது. ஆனால், இதைப் பிராமணர்கள் தவிர மற்றவர் பயிரிடக்கூடாது, பயிரிட்டால் மரிக்கொழுந்திற்கென வரி செலுத்த வேண்டும். நீலோற்பவம் என்பது நீலக்குவளை மலர்ச்செடி ஆகும். இதனை நடுவதற்கும், மலர்களை விற்பதற்கும் முறையோ குவளை நடுவரி, குவளைக்காணம் ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும். ஆனால் இதனைப் பிரம் தேயம் தேவதானச் சிற்றூர்களில் வரி இல்லாமலே நடவும் விற்கவும் உரிமை பெற்றிருந்தனர். பட்டினச் சேரி என்பது மீன்பிடிக்கும் தொழிலாளர் செலுத்த வேண்டிய பரி ஆகும். இடைப்பூச்சி என்பது கால்நடை வளர்ப்போரிடமிருந்து அரசு பெற்ற வரி ஆகும். சோழர் காலத்தில் இது இடைப்பாட்டம் எனப் பட்டது. குயவர்கள் செலுத்திய வரி குசக்காணம் எனப்பட்டது. சுத்தியைக் கொண்டு பொன் வெள்ளி முதலிய உலோகங்களைத் தட்டித் தட்டி நகை செய்வோர் தட்டார் ஆவர். அவர்களும் தங்கள் தொழிலுக்கு வரி செலுத்தினர். அதற்குத் தட்டுக்காணம் அல்லது தட்டார் பட்டம் என்று பெயர். துணிவெளுப்போர் பாறை மீதி அடித்துத் துவைப்பர் அதற்காக அவர்கள் பாறைக் காணம் என்ற வரியைச் செலுத்தினர். தற்காலிகமாகத் துணிக்கூடாரம் அமைப்போர் செலுத்த வேண்டிய வரி' பட்டிகைக்காணம் எனப்பட்டது. தறியில் குறிப்பிட்ட அளவு நெய்த துணிக்கு (கூறைக்கு வாங்கிய வரி "தறிக் கூறை" ஆகும். செக்காடி எண்ணெய் எடுப்போர் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெயை அரசுக்குக் கொடுப்பர். இதனைச் செங்கு என்பர். தரகு செய்வோரும் வரி செலுத்தியே தொழில் செய்ய வேண்டும். இதற்கு தரகு அல்லது தரகுவரி என்று பெயர். துணி நெய் வதற்கான நூல் நூற்போரிடம் பெறப்பட்ட வரி பட்டாம்கழி எனப் பட்டது. கத்திக்காணம் என்பது கத்தி உற்பத்தி செய்யும் கொல்லர் கட்டிய வரி ஆகும். சிற்றூர்த்தலைவன் சிற்றூர் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று வந்தான். அதற்குச் செக்காணம் என்று பெயர். அரசு ஆணைகளைக் கொண்டு வருவோருக்குத் திருமுகக் காணம் எனும் குறிப்பிட்ட வரி கொடுக்கப்பட வேண்டும். பறை அடிப்போர் செலுத்த வேண்டிய வரிக்கு நெடும்பறை என்று பெயர். அறுவடை சமையத்தில் நெல்லைப் பெற வரும் அரசு அதிகாரிக்குத் தரப்படும் வரி 'எல் சோறு' அல்லது 'எச்சோறு' என்று பெயர். தளர்ச்சபையார் விதிக்கும் தண்டத்திற்கு மன்றுபாடு என்று பெயர். நெய்விற்றோர் செலுத்திய வரிக்கு நெய் விலை என்று பெயர். இவற்றைத் தவிர சூதாட்ட விடுதிகள் உலோகத் தொழில் கூடங்கள் (உலகடம்) ஆகியவற்றிலிருந்தும் வரிகள் தண்டப் பட்டன. ஒற்றர்கள், பூசாரிகள், கழைக் கூத்தாடிகள் கிணறு தோண்டு வோர் முதலியோரும் வரி செலுத்தினர். இவ்வாறு தொழில் வரிகள் பலவும் உரிமம் பெற்றுத் தொழில் செய்ய உரிமம் பெறப் பணமும் வருவாயாக வந்தன. எனவே தான் பல்லவர் ஆட்சி சிறப்பாக நடந்தது. மிகப்பெரிய படைகளும், குறிப்பாகக் கப்பல் படையும் வைத்துப் பல்வேறு அதிகாரிகளையும் வைத்து ஆளமுடிந்தது. உ) சமுதாய வாழ்க்கை பல்லவர் காலத்தில் நிலவிய சாதியப் பாகுபாடுகள், பல்லவர்கள் தமிழரல்லர் என்பதையும் ஆரியப் பண்பில் தோய்ந்தவர் என்பதையும் அறிவோம். எனவே தான், வடவாரிய முறைப்படித் தமிழ்ச் சமுதாயத்தை அவர்கள் பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு பிரிவுகளாகப் பிரித்தாண்டனர், ஆயினும், என்றுமே தமிழ்ச் சமுதாயம் இத்தகைய நான்கு வருணப் பாகுபாட் டால்தாக்கமடையவில்லை. சங்க காலத்திலும், களப்பிரர் காலத்திலும் இத்தகைய நான்கு வருணப் பாகுபாடுகள் இருந்ததில்லை. சிம்ம விசுணு மரபினர் ஆண்ட காலத்தில்தான் முதன் முதலாக தமிழர்கள் வேத, சாத்திர மரபுப்படி ஆளப் பெற்றனர். ஆரிய பார்ப்பனச்சமயத் தைப் பின் பற்றி, சாத்திர முறைப்படி சாதிக்கேற்ற நீதியைப் புகுத்தி ஆண்ட அவன்தான் முதன் முதலில் அரச நீதியில் பரிவேள்வியையும் ஆணையிடப்பட்ட மற்ற வேள்விகளையும் வேத முறைப்படி செய்தான். முதலாம் பரமேசுவரவர்மன், தனது தந்தையாகிய இரண்டாம் மகேந்திரவர்மன் தமிழகத்தில் வருண தருமத்தை வலுக்கட்டாய மாகத் தவிர்த்து மக்களைச் சாதி அடிப்படையில் ஆண்டான் என்று தனது கூரம் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடுகிறான், பல்லவ மன்னர் அனைவருமே சாதிக்கேற்ற நீதிகளையும், சட்ட திட்டங்களையும் வகுத்து ஆண்டனரென்பதை காசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாறு நோக்கும் போது நான்கு வருணப் பாகுபாடுகளேயன்றி அவரவர் செய்த தொழில் வழியாலும், வேறுவழியாலும் உண்டான பல்வேறு சாதிப் பெயர்களையும் பல்லவர் காலச் செப்பேடுகளிலும் இலக்கியங்களிலும் காண்கிறோம். பிராமணர்கள் 'பிராமணன்' என்ற சொல்லே சங்க இலக்கியங்களில் இல்லை. 'ஐயர்' என்ற சொல் அகவையில் முத்தவர்களையே குறித்து நின்றது. அறவோரெல்லாம் அந்தணரெனப் பெற்றனர். முதன் முதலாகப் பல்லவரின் பட்டயங்களில் தான் பிராமணன் என்ற சொல் காணப் பெறுகிறது. பல்லவ மன்னர்கள்தான் தேவதானங்களை ஏற்படுத்தி, அவற்றில் பழியஞ் செய்யப் பிராமணர்களை அமர்த்தம் செய்து, அவர்களுக்குப் பிரமதேயங்களையும், சதுர்வேதி மங்கலங்களையும் தானமாக வழங்கினர். பேரூர்களிலும், நகரங்களிலும் கூட இவர்களுக்கெனத் தனி வாழ்விடங்கள் தானமாக அளிக்கப்பட்டன. அவ்வாறு அவர்கள் தங்கியிருந்த இடங்களைப் 'பிரமபுரி' என்றனர். பல்லவ மன்னர்கள் வேதக் கல்வியைப் பார்ப்பன மாணவர்களுக்கே கற்பித்தனர். இவர் களைப் பின்பற்றித்தான் பின்வந்த சோழ மன்னர்களும் பார்ப்பன ஆசிரியர்களுக்குப் 'பட்ட விருத்தி " எனும் வாழ்விடங்களைத் தங்களின் தலை நகரங்களிலும், பட்டினங்களிலும் அளித்தனர். பார்ப்பன ஆசிரியர்களைப் பப்பபட்டாரகர் என்றும், நல்கூர் நற்பார்ப்பார் என்றும் அழைத்தனர். பார்ப்பனருக்கென்றே தனி ஊர்களைத் தானமாக வழங்கிப் பிரம்ம தேயக் குடியிருப்புகளாக அவற்றை அமைத்தனர். அவை பார்ப்பனச்சேரியென்றே பொது மக்களால் அழைக்கப்பட்டன. அரசனுடைய பொது ஆணைகளோ, வளர்ச்சபை யாரின் ஆணைகளோ இந்தச் சேரிகளில் செல்லாது, தங்க ளுக்கே உரிய பிரமதேயச் சபைகளால் நிறைவேற்றப்படும் ஆணை களுக்கே அவர்கள் கட்டுப்பட்டவர்களாவர். அரசன் அல்லது குறுநில மன்னன் பிராமணருக்கு வளமிக்க நிலங்களைத் தானமாகக் கொடுக் கும் முன் அவற்றிற்கு எல்லைப் பாதுகாப்பாக வேலிகள் போட்டு, கல்லும் கள்ளியும் நட்டு, அங்கிருக்கும் சூத்திரரை வெளியேற்றிய பின்தான் தானமாகக் கொடுப்பார்கள். தானம் கொடுப்பவரின் பெயரால் அந்த பிரமதேயங்கள் அறியப்படும். இந்நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் எத்தகைய வரியும் இல்லை , உப்பும், கரும்பும், அரசுக்கே உரிய தனியுரிமையான விளைச்சல்கள். ஆனால், பிரம் தேயத்தார் இதனைச் சட்டை செய்யாமல் தாங்களே இவற்றை உற்பத்திச் செய்து கொள்வர், மருதாணிச் செடியும், செங்கழுநீர்க் கொடியும் அவர்களின் தனியுரிமைப் பயிர்கள். பிரம தேயத்திலுள்ள குளங்களில் மீன் பிடிக்கக் கூடாது. தென்னை பனைமரங்களில் கள் இறக்கக் கூடாது: அரசன் 'சவாரி' செய்ய அவர்களிடம் எருது கேட்கக் கூடாது; போர்க் காலங்களில் படைகள் பிரமதேயத்தின் வழியே வளர்ந்திடக் கூடாது முதலியன அவர்களின் உரிமைகளாகும். மெத்தை வீடு, ஓட்டு வீடு முதலியன கட்ட பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. பிராமணர் வாழ்க்கை முறை பிராமணச் சிறுவர்கள் ஏழு அகவை அடைந்தவுடன் உப நயனம் பெறுவார்கள். அன்று முதல் பதினேழு வயது வரை வேதக் கல்வியைக் கற்பார்கள். பலர் வாழ்நாள் முழுவதும் கூட வேதங் களைக் கற்று ஓதிக் கொண்டேயிருப்பார்கள். நான்கு வேதங்கள், வியாக்கரணம், மீமாம்சம், நியாயம், கல்பம், கிரியை, தருமசாத்திரங் கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள், சைவ, வைணவ ஆக மங்கள், பதஞ்சலியின் யோகசாத்திரம் மற்றும் மருத்துவ நூல்களை யும் கற்பர். இவற்றைக் கற்பிக்கப் பல கல்விக் கூடங்களிலிருந்தன. அத்தகைய கல்விக் கூடங்களில் மிகப் பெரியனவற்றை இன்றைய பல்கலைக் கழகங்களோடு ஒப்பிடலாம். அவற்றைக் 'கடிகை' என்றனர். காஞ்சியிலும், பாகூரிலும், சோழலிங்க நல்லூரிலும் அத்தகைய பல்கலைக் கழகங்களிலிருந்தன. இக் கடிகைகளில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் பிராமணர்களேயாவர். இவர்களுக்கு உணவு, உறைவிடம், உடுக்கை, பராமரிப்புகள் யாவும் இலவசமாகவே அரசாங்கத்தால் வழங்கப் பட்டன. வடமொழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டது. தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும் இவற்றில் இடமில்லை. வரம்பில்லாத மானியங் களும் செல்வங்களும் இவற்றிற்கு வாரி வழங்கப்பட்டன. பிராமணரின் திருமணம், முதலிய பழக்க வழக்கங்கள் கி.பி. 7ஆம் 8-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிராமணர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்தனர். நல்ல நாள் பார்த்து மணமகள் வீட்டில் அலங்காரப் பந்தலில் வேதங்கள் ஒலிக்கத் தீ முட்டி ஓமம் வளர்த்துத் திருமணம் செய்வார்கள். காப்புக் கட்டுவர். ஆனாலும் தாலி கட்டியதாகச் சான்று இல்லை, ஒவ்வொரு பார்ப்பானும் கருத்தரித்தது முதல் சுடுகாடு போகும் வரை அரசாலேயே பராமரிக்கப்படுவதால் குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பற்றவனாகி விடுவான். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணப்பான். அவ்வாறு மணக்கும் போது, சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்களை யும் மணப்பான். இத்தகைய திருமணம் 'பிரதிலோமா' திருமணம் என்று அழைக்கப்படும். கீழேயுள்ள மூன்று வருணத்து ஆண்மகன்களை பிராமணப் பெண்கள் மணப்பதுண்டு. அத்தகைய திருமணத்தை அனுலோமா' என்றும் அழைப்பர். இத்தகைய கலப்புத் திருமணங்களால் சாதிகள் பெருகின. கலப்புச் சாதிகள் ''சங்கீர்ண சாதிகள்" என்று அழைக்கப்பட்டன. குறிப்பாக, கம்மாளர் அல்லது தபதிகளைச் சங்கீர்ண சாதியென்றே அழைத்தனர். பிராமணரின் தொழில்கள் வேத இலக்கியங்களைக் கற்பதும் கற்பிப்பதுமே பிராமணர்களின் தொழிலாகும். இதற்காகவே பல்லவ அரசர்கள் பிராமணர்களுக்குப் பிரமதேய ஊர்களைத் தானமாகக் கொடுத்தனர். பல பிராமணர்கள் அமைச்சர்களாகவும் இருந்தனர். தூய்மைக்கும், குடிமைக்கும் மிக உயர்ந்த வேத அறிவுக்கும் பெயர் போன பிராமணர்களைப் பப்ப பட்டாரகர்' அல்லது நல்கூர்நற் பார்ப்பனர்' என்று அழைத்தனர். பல பிராமணர்கள் அரசரின் செயலாளர்களாகவும், முன்னமை எழுத்தர்களாகவும், ஊர் கணக்கர்களாகவும் பணியாற்றினர். அவர்கள் முறையே வாயில் கேட்போர், திருமந்திர ஓலை நாயகம், தளர்க் கணக்கரென அழைக்கப் பெற்றனர். அரசனது ஆணைப்படி, தானமாக வழங்கப் பெறும் பொருள்களையும், நிலங்களையும் முறைப்படிச் செயல் படுத்தும், பிராமண அதிகாரிகளுக்குப் பிரமாதி ராசர் என்று பெயர். அரசுப் பணிகளில் பிராமணருக்கே சிறப்பிடம் வழங்கப்பட்டது. அவர்கள் உண்மைக்கும் வாய்மைக்கும் இருப்பிடமான சாதியினர் என்பதும், படிப்பிலும், அறிவிலும் சிறந்தவரென் பதுமே இதற்குக் காரணமாகும். ஆயினும், பெருவாரியான பிராமணர்கள் கோயில்களில் அமர்ந்து கோலோச்சினர். கோயில் காரியங்களைச் செய்யும் தனி யுரிமை அவர்களுக்கே உண்டு. எனவே, அவர்கள் கணத்தார் என்று அழைக்கப் பட்டனர். வாரியத் தலைவர்களாகவும் செயல்பட்டனர், எக்காரணத்தைக் கொண்டும் ஏர் உழுதல் மற்றும் வயல்களில் வேலை செய்தல் போன்ற உடலுழைப்பில் பிராமணர்கள் ஈடுபட்டதில்லை. சமற்கிருத மொழியைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஏகபோக உரிமை (தனி உரிமை) பெற்றிருந்ததால் அரசவைப் புலவர்களாக வும், அரசரின் மெய்க்கீர்த்திகளைப் பட்டயங்களிலும் கல்வெட்டுக் களிலும் சமைக்கும் எழுத்தாற்றல் பெற்றவர்களாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். அத்தகைய பட்டயங்களும், கல்வெட்டுகளும், ஊர்ப் புறங்களிலே தீட்டப்படும் போது, பொது மக்களால் பேசப்படும் தமிழ்மொழியிலேயே தீட்டுவார்கள். எனவே, தமிழிலும் இவர்கள் வல்லமை பெறலானார்கள். தமிழிலே வல்லவரான தேவார ஆசிரியர்களான சம்பந்தரும், சுந்தரமூர்த்தியும் பிராமணரே என்பதைக் கூர்ந்து நோக்கும் போது இஃது புரியும். அரசர்கள் வேள்விகளைச் செய்யும் போது பிராமணர்களே அவற்றின் தலைவர்களாக இருப்பர். இவ்வேள்விகளில் அளவற்ற பொன்னையும், நவமணிகளையும், ஊர்களையும் அரசர்கள் அவர்களுக்குத் தானமாக வழங்குவர். அவற்றைப் பெற்றுக் கொண்டு அரசருக்கு வேத்தருமத்தைக் கட்டிக் காக்கும் தரும் மகாராசா' முதலிய பட்டங்களைப் பிராமணர்கள் வழங்குவார்கள். அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை பிராமணரின் வாழ்க்கை நெறிகளையடுத்து நாம் காண வேண்டியது அரசரும் அவர்களின் குடும்பத்தினரும் வாழ்ந்த வாழ்க்கை முறைகளாகும். பல்லவ அரசர்கள் சிறந்த சமயப் பற்றாளர் கள். கடவுளையும், தருமத்தையும் உச்சிமேல் வைத்துப் போற்றிய வர்கள், தருமம் என்பது வேத தருமமாகும். வேத சாத்திரங்களில் கூறப்பட்ட சாதிக்கு ஏற்ற நீதியைக் கடைபிடித்தவர்கள், எனவே, வேதப் பிராமணர்களைச் சமுதாயத்தின் உச்சக்கிளையில் உட்கார வைத்தார்கள். கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளையும், சமற்கிருதம், தமிழ் இலக்கியங்களையும் போற்றி வளர்த்த அவர்களில் பலர் சிறந்த நூலறிவும், கலையறிவும், பெற்றுத் திகழ்ந்தனர். பலர் நாயன் மார்களோடும், ஆழ்வார்களோடும் வைத்து எண்ணத் தக்கவராய் இருந்தனர். பல்லவ மன்னர்கள் காடுவெட்டி நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி, மக்களைக் கண்ணைப் போல் காத்து, மக்கள் நலம் நாடும் நல்லாட்சியை நடத்தினார்கள், இரணியகர்ப்பம், துலாபாரம், பவுசுவர்ணம், கோச அர்சம் முதலிய புனித விழாக்களை நடத்திப் பொன்னையும் மணியையும், பிராமணர்களுக்கு எடையின்றி, நிறையின்றி வாரி வழங்கினார்கள். அக்னி ஓமம், அசுவ மேதம் முதலிய வேள்விகளைச் செய்து பிராமணச் சமய உணர்வைப் பரப்பியதால் பரம் பிராம்மணயர்' என்று புகழப்பட்டவர்கள், அதிகாலையிலெழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிறப் பட்டாடை யுடுத்தி, மணிமுடி தரித்து, காதில் மகரக் குழலணிந்து, தோள்வளை யும், கையில் கடகமும் அணிந்து கொண்டு அரியணையில் அமரும் அரசன் காலையில் நான்கு மணிநேரம் பிராமணருக்குத் தானம் வழங்கிக் கடவுளைப் போற்றி, சமயச் சார்பான செய்திகளையே பேசிக் கொண்டிருப்பான்; நண்பகலில் ஆட்சி தொடர்பான செய்திகளில் ஈடுபடுவான். மாலை நேரம் முழுவதும் கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுவான். பெண்களின் நிலை (அரச மாதேவியர்) அரசர்களைப் போலவே அரசமாதேவியர்களும் தனிப்பட்ட முறையில் கோயில்களுக்கு ஆறுகாலப் பூசை நடைபெறுவதற்கான பொருள்களைத் தானம் செய்தார்கள். இதற்காக நிலங்களை நிவந்தமாக விட்டனர். பல கோயில்களையும் கட்டுவித்தனர். பல அரசமாதேவியர் சிறந்த 'கலையரசியாகவும் திகழ்ந்தனர். பொதுவாக நோக்கும் போது, பிராமணப் பெண்களும், அரச குலத்துப் பெண்களும் உயர்வாகவே காணப்பட்டனர். அரசர்களும், செல்வந்தர்களும், பல் மனைவியர்களை மணந்தனர். பெண்கள் நூல் நூற்றல், தறி நெய்தல், பூ விற்றல், பால் மற்றும் உணவுப் பண்டங் களை விற்றல் முதலிய தொழில்களைச் செய்தனர். சதி அல்லது உடன்கட்டை ஏறும் வழக்கம் பரவலாகக் காணப்பட்டது. வைசியர், சூத்திரரிடையே இவ்வழக்கம் அறவே இல்லை யெனலாம். விலை மகளிர் இருந்தனர். அவர்கள் உரிமம் பெற்றுத் தொழில் செய்தனர். தொழில் வழிச் சாதிகள் பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்குள்ளேயே சாதி வேறு பாடுகள் இருந்தன. சிவ பிராமணர், வைணவ பிராமணர் ஆகிய பிரிவு களும், குலம் கோத்திரம் வழி வந்த பிரிவுகளும் அவர்களிடையே இருந்தன. கடல் வாணிபம் செய்தவர்களிடையே மணிக்கிராமத்தார், நானாதேசிகள், ஐநூற்றுவர் முதலிய சாதிப் பிரிவுகளிருந்தன. கைவினைஞர்களான கம்மாளர், தச்சர், தட்டார் முதலியோரும் வாணியர், இடையர் முதலியோரும் சாதிவழிதான் அறியப்பட்டனர். உழவுத் தொழில் செய்வோர், உயிர் வாழ உணவுகளை ஆக்கித் தந்தாலும், வணிகர்களே சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்பட்டனர். உழவர்கள் கீழானவராகக் கருதப்பட்டனர். பல்லவ மன்னர்களின் தொழில் வரிகளை உற்று நோக்கும் போது சாதிகளின் பட்டியலும் நமக்குக் கூடவே கிடைக்கிறது. பிராமணப் பூசாரி, வைசியன், ஆதி சைவன், வெள்ளாளன், குயவன், வண்ணான், வேடுவன், இடையன், மம்மட்டியான், செம் படவன், பறையன், பாணன், ஈழவன், சாலியன் முதலிய பல்வேறு சாதிகள் இக்காலத்தில் இருந்தன. கீழ்ச்சாதிக்காரர்கள் ஊருக்கு வெளியில் தாழ்வான பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் வீடுகள் குடிசைகளாயிருந்தன. புலையர், சண்டாளர் ஆகிய சாதிகள் மிகவும் தாழ்ந்த சாதிகளாகவும், இச் சாதி மக்கள் பசுக்கறி உண்பார்கள் என்று ஆழ்வார் பாசுரங்கள் கூறுகின் றன். பெரிய புராணத்தில் நாயன்மார்களின் கதைகளைக் கூறும் போதும் திருநாளைப்போவார் (நந்தனார்) நாயனாரின் வாழ்க்கையை விவரிக்கும் போதும் பறையர்கள் பற்றியும், அவர்கள் வாழும் பறைச்சேரி பற்றியும் அவர்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள் முதலியன பற்றியும் விவரிக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து கீழ்ச் சாதிக்காரர்களின் கழி விரக்க (பரிதாப நிலையும் அவர்கள் பிராமணர், வேளாளர் முதலிய உயர்சாதிக்காரர்களிடம் வேளாண் அடிமைகளா யிருந்தமையும் அறிய முடிகிறது. உணவு இக்கால மக்களின் உணவு வகைகளில் பாலும், பாற்பொருள் களுமே முதலிடம் வகித்தன. பால், சருக்கரை இரண்டையும் கலந்து அப்பத்துடன் உண்ணும் உணவை அப்பம் கலந்த சிற்றுண்டி என்பார்கள். பால் கலந்த ஆகாரம், பருப்பும், நெய்யும் கலந்த கும்மாய் அமுது, ஆகார அடிசில் (சருக்கரைப் பொங்கல், தயிர் போனகம் (தயிர்ச்சோறு), அவல் அமுது முதலியனவாகப் பல்வேறு வகை உணவை உண்டனர். சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கமும், குழைத்த சந்தனத்தை மார்பிலும் கழுத்திலும் பூசிக் கொள்ளும் பழக்கமும் இருந்தன. ஆயினும், பார்ப்பனப் பூசாரிகள் சாமிக்கு செல்வந்தர் படைக் கும் மிக உயர்ந்த உணவுகளையே உண்டனர். தொழிலாளர், ஏழைகள், போர்வீரர்கள் முதலியோரின் உணவு வகைகள் வேறுபட்டனவாக இருந்தன. மீன், முட்டை, இறைச்சி முதலிய உணவு வகைகளு முண்டு. மாட்டிறைச்சி உண்போர் தாழ்குலத்தவராகக் கருதப்பட்டனர். ஆடை பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை ஆண், பெண் இருபால் ரும் அணிந்தனர். செல்வர், வணிகர், உயர்சாதிக்காரரின் ஆடைகள் மற்றவரினின்று வேறுபட்டன, துறவிகள், ஞானிகள், விதவைகள் முதலியோரின் ஆடைகள் மற்றவரினின்று முற்றிலும் வேறுபட்டன. இன்று பெண்கள் உடுத்தும் எட்டு மீட்டர் சேலை அல்லது ஆறு மீட்டர் சேலைகளைப் போல் உடலை மறைக்கக் கூடிய ஆடைகளை அன்றைய பெண்கள் அணியவில்லை. சுடிதார் போலவே கீழுடையும், மேலே மாராப்பு இல்லாத சட்டையையுமே அன்றைய பெண்கள் அணிந்தனர். மார்புப் பகுதி பெரும்பாலும் ஆடையின்றியே காணப்பட்டது. ஆண்களில் போர் மறவர்கள் வட்டுடை அணிந்தனர். செல்வந் தர்கள் இடுப்பைச் சுற்றிக் கட்டும் ஓராடையையும் கழுத்தைச் சுற்றிக் கட்டி உடலை மறைக்கும் மற்றோர் ஆடையையும் தலைப்பாகை யையும் அணிந்தனர். இடுப்பைச் சுற்றிக் கச்சை போலும் கட்டினர். பொதுவாகக் கீழாடையைச் சிற்றாடை என்றும் மேலேயுள்ளதை மேலாடை என்றும் கூறினர். துய்மையான பட்டாடையைக் கலிங் கம் என்றனர். சிவப்பு நிறப் பட்டாடையைப் பீதாம்பரம் என்றும், செவ்வராட்ட உடை என்றும் அழைத்தனர். இவற்றைச் செல்வந்தர் களே அணிந்தனர். சந்நியாசிகளும் துறவிகளும் மஞ்சள் நிறமானதுவ ராடை அல்லது செந்நிற ஆடை அணிந்தனர். அதன் நிறம் சுட்ட செங் கல்போல் காணப்பட்டதால் செங்கல்பொடிக் கூறை எனப்பட்டது. சமயம் பல்லவர் காலத்தில் இந்து, புத்தம், சமணம் ஆகிய மூன்று முகாமைச் சமயங்களும் மற்றும் சில சமயப் பிரிவுகளும் இருந்தன. ஓரளவு சமயப் பொறையும் காணப்பட்டது. அரசர்களே அதற்கு வழிகாட்டிகளாய் இருந்தனர். தீவிர சைவத்தைப் பின்பற்றும் அரசர்கள் வைணவக் கோயில்களைக் கட்டித் தானங்களைச் செய்தனர். இதைப் போலவே வைணவத்தைப் பின்பற்றும் அரசர் கள் சைவத் திருத்தலங்களை அமைத்தனர். இருபாலருமே சமனப் பள்ளிகளை அமைத்து அவற்றிற்குப் பள்ளிச்சந்தமும் அளித்தனர். எனவே தான் சமயப் பொறை நிலவியதாகக் கூறுகிறோம். ஆனால் வைதீக சமயமும் அல்லது இந்து சமயமும் அதன் தத்துவங்களும் வேகமாக வளர்ச்சியடைந்து இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பொழுது மற்றப் புறச் சமயங்களான சாக்கியத்திற்கும் சமணத்திற்கும் எதிராகத் தோன்றிய கருத்துகளால் மோதல்களும், அச்சமயங்களின் வளர்ச்சிக்குத் தடைகளும் ஏற்பட்டன. வைதீக சமயம் இதையே இந்துச் சமயம் என்கிறோம். பல்லவ மன்னர்கள் இந்துச் சமயத்தைப் பின்பற்றியே அசுவமேத யாகம், வாஜ்பேய யாகம், சோம யாகம் முதலிய வேள்விகளைச் செய்தனர். வேள்வி செய்வதிலே யார் முந்தி நிற்பது என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்பட்டது. நூறுயாகங்களைச் செய்த சிம்மவர்மன் ஒரு சாதனை யாளன் ஆனான், அக்கினி ஓமம், வாஜ்பேயம், அசுவமேதம் ஆகிய யாகங்களைச் செய்த வேள்வி வேந்தர்கள் என்று வேத பிராமணர் களால் போற்றப்பட்ட பெருமைக்கு உரியவர்கள் விசுணு கோபன், குமாரவிசுணு, சிம்மவர்மன் ஆகியோராவர். மற்றும் துலாபாரம், இரண்யகர்ப்பம் முதலிய விழாக்களை நடத்திப் பொன்னையும், மணியையும் வேதப் பிராமணருக்கு மன்னர்கள் தானமாக வழங் கினார்கள். எனவேதான் பல்லவ மன்னர்களைத் தரும் மகாராசாக்கள் என்றழைத்தனர். அதாவது இந்து தருமத்தைக் காப்பவர்கள் என்றழைத்தனர். வைணவம் திருமாலை வழிபடும் மானியம் வைணவம் ஆகும். முற்காலப் பல்லவர்கள் சிறந்த வைணவ பக்தர்கள் ஆவர். எனவேதான் அவர்கனள விசுணு பக்தர்களில் தலையாய பக்தர்கள் (பரம் பாகவதர் என்றனர். மக்கள் பாகவத பல்லவ அரசர்களைப் பற்றிக் கூறும்போது திருமாலைக் கண்டோம் தேவனைக் கண்டோம் என்றனர். கடவுளைக் காண்பதும் அரசனைக் காண்பதும் ஒன்றெனக் கொண்டனர். அரசியார் திருமகள் உருவமானவர் எனக் கருதினர். அரண்மனையைக் கோயில் என்றனர். திருமால் கிடந்த வண்ணம், அமர்ந்த வண்ணம், நின்ற வண்ணமாகவும், பத்து அவதாரங்களாகவும் வணங்கப்பட்டார். நரசிம்ம அவதாரம் இவற்றுள் சிறப்பானதாக வணங்கப்பட்டது. கண்ணனின் திருவிளையாடல்களும் போற்றி வணங்கப்பட்டன. திருமகளை இலட்சுமி வடிவிலும் வழிபட்டனர். திருமால் வழிபாடென்பது பூசை செய்வதும் பூச்சொரிவதும் தானங்கள் செய்வதுமாகும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் திருமாவின் புராணக் கதைகளையொட்டித் திருவிழாக்கள் நடந்தன. சைவம் சிவனிய வழிபாடே சைவமாகும். பல்லவர் காலத் தொடக்கத் தில் வைணவம் சிறப்புற்றுக் காணப்பட்டாலும் சைவமும் இருந்தது. ஆனால் பிற்காலப் பல்லவர் காலத்தில் அதாவது இரண்டாம் நரசிம்மன் காலம் முதல் சைவம் தழைத்தோங்கியது. சோமசுந்தரர் வழிபாடு பிரபல மடைந்தது. அதாவது சிவன், பார்வதி, பாலமுருகன் மூவரும் சேர்ந்ததே சோம சுந்தரர் ஆகும். இந்த உருவம் கருவறை யின் பின்புறச்சுவற்றில் சிற்பமாகவும் ஓவியமாகவும் காட்சியளித்தது. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்திலிருந்து தான் இலிங்க வழிபாடு ஏற்பட்டது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகும், சிறப்பாக இலிங்க வழிபாடும், கங்காதரர், திரிபுராந் தகர், கைலாசநாதர், கபால மூர்த்தி ஆகிய வழிபாடுகளும் ஏற்பட்டன. இக்காலக் கடவுள் பூசை அல்லது வழிபாடு பூசைப் பொருள் கனளப் படைத்தும், நீராட்டியும், மலர் சொரிந்தும், சந்தனம் பூசியும், நறுமணப் புகையூட்டியும், இன்னிசை முழங்கியும் நடத்தப்பட்ட தாகக் கூரம் செப்பேட்டால் அறிகிறோம். சைவ சமயப் பிரிவுகள் அ) கபாலிகம் இக்காலத்தில் சிவனியத்தில் கபாலிகம், பாசுபதம், காளாமுகம் ஆகிய முகாமைப் பிரிவுகளிலிருந்தன. கபாலிகப் பிரிவினர் பைர வரை வணங்கினர். மனித மண்டையோடுகளை மாலையாக்கி அணிந்தனர். மனிதரையும், மற்ற உயிர்களையும் பைரவருக்குப் பலியிட்டனர். பலியிட்ட உடல் இறைச்சியையும் மதுவையும் உண்டனர். பெண்களை 'ஆதிசக்தி' அவதாரமாக வணங்கினர். இதனால் சக்தி வழிபாடு சிறப்புற்றது. கபாலிகளில் கபாலினி எனப்படும் பெண்பாலரும் இருந்தனர். இத்தகைய சமயப் பிரிவினரைக் கேலிச் சித்திரமாகத் தீட்டியதே மகேந்திர வர்மனரின் சமத்த விலாசப் பிரகசனம்" என்னும் ஓரங்க நாடகமாகும், ஆ) பாசுபதம் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு, மேனியெல்லாம் சுடு காட்டுத் திருநீற்றைப் பூசிக் கொண்டு, லிங்கத்தை வணங்கும் பிரிவினர் பாசுபதர் ஆவர். சிலர் மொட்டையடித்துக் கொண்டும். சிலர் குடுமி வைத்துக் கொண்டும், சிலர் ஆடையேயின்றியும் இருப்பர். இவர்கள் உலகப் பற்றைத் துறந்து மேல் நிலை அடையக் கடுந்தவம் புரிந்தார்கள். இவர்களில் சிலர் சிவகணங்கள் எனப்பட்டவற்றிடம் நம்பிக்கை வைத்து அவற்றை மகிழ்விக்க மனிதர்களைப் பலியிட்டனர். இந்த மனிதர்களின் இறைச்சியை உண்டனர். இ) காளாமுகம் இப்பிரிவினர் பக்தி நெறியைப் பின்பற்றி, மந்திரம் செபித்தல், இறைவனைப் பாடி, ஆடி, துதித்தல் ஆகிவற்றைப் பின்பற்றினர். இவர்கள் சிறந்த கல்வியும், தத்துவங்களும் பெற்றவர்களாவர். இவர்களின் மடங்கள், காஞ்சி, திருவொற்றியூர், மயிலை, கொடும் பாளூர் ஆகிய இடங்களில் இருந்தன. ஆறு சமயங்கள் மேலே கூறிய சைவ, வைணவப் பிரிவுகளைத் தவிர பல்லவர் காலத்தில் வேறு ஆறு வகையான சமயப் பிரிவுகளிலிருந்ததாகவும் அறிகிறோம். அவை. 1. காணாபத்யம் (கணபதி வழிபாடு) 2. கெளமாரம் (குமரன் வழிபாடு) 3. செளரம் (சூரியன் வழிபாடு) 4. சாக்தம் (சக்தி வழிபாடு) 5. சைவம் (சிவன் வழிபாடு) 6. வைணவம் (விசுணு வழிபாடு) ஆகியவை ஆகும். இவற்றுள் கணபதி வழிபாடு, பல்லவர் காலத்தில் தான் தமிழ்நாட்டில் ஏற்பட்டது. வாதாபி கொண்ட நரசிம்மன் வாதாபி யிலிருந்து கணபதி சிலையொன்றைக் கொண்டு வந்து தமிழகத்தில் வைத்து வழிபாடு நடத்தினான். பல்லவர் சிற்பங்களில் முதலில் புடைப்புச் சிற்பமாகவே கணபதி காட்சியளிக்கிறார். பின்னர்தான் மூலவரானார். பரமேசுவர மங்கலத்தில் கட்டிய கைலாசநாதர் கோயி வில் கணபதி சிற்பம் காணப்படுகிறது. பிற்காலப் பல்லவர் சிற்பங் களில் சப்த மாதர் சிற்பங்களுடன் இணைந்து கணபதி சிற்பமும் வணங்கும் தெய்வமானார். ஆனால், முருக வழிபாடு தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. முருகன் ஆரியத் தாக்கத்தால் குமாரக் கடவுளாகி, குமரன் சுப்பிரமணியனாகி சைவ வழிபாட்டிற்குள் வந்தது. துர்க்கை வழிபாடு மேலே கூறிய ஆறுவகை வழிபாடுகளுடன் துர்க்கை வழிபாடு மிருந்தது. இந்தத் துர்க்கையைப் போர்க்களச் செல்வி அல்லது வெற்றி மாது என்றனர். தம் மன்னனைக் காப்பாற்றும் கடமையாகப் போர் மேல் சென்று பகைவரை வென்று திரும்பும் வீரன், போருக்குச் செல்லும்முன் துர்க்கைமுன் நின்று தான் போரில் வென்று திரும்பி னால் தன் தலையை அறுத்து அவளுக்குக் காவு கொடுப்பதாக வஞ்சினம் கூறுவான். தான் வெற்றி பெற்றுத் திரும்பியவுடன் தன் தலையைத் தானே அறுத்துச் சபதத்தை நிறைவேற்றி விடுவான். இத்தகைய தியாகத்திற்கு 'நவகண்டம்' என்று பெயர். தனது உடலிலுள்ள ஒன்பது (நவ) உறுப்புகளில் ஒன்றான தலையை அறுத்துக் காவு கொடுப்பதால் இது நவகண்டம் எனப்பட்டது. இத்தகைய வீரனுடைய குடும்பத்தாருக்கு அரசன் நிலதானமும் 'பொட்டி' என்ற விருதும் வழங்குவான். இத்தகைய தியாகத்திற்கு நவகண்ட சிற்பம் மாமல்லையிலுள்ள திரௌபதி தேரில் துர்க்கையின் பாதத்தின் கீழே எடுத்துக்காட்டாக உள்ளது. வராக மண்டபத்திலும் நவகண்ட சிற்ப அணியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாண்டியர், முற்காலச் சோழர் காலக் கோயில்களிலும் நவகண்ட சிற்ப அணிகள் உள்ளன. தனி மனிதனைப் பலிகொடுக்கும் (நரபலி) வழிபாட்டு முறையும் பல்லவர் காலத்திலிருந்தது. வராக மண்டபத்தில் உள்ள துர்க்கைக்கு மனிதன் ஒருவனைக் காவு கொடுக்கும் சிற்பம் இதனை உறுதிப்படுத்துகிறது. பரஞ்சோதி முனிவர் (சிறுத்தொண்ட நாயனார்) தன் மகன் சீராளனை அறுத்துச் சிவனுக்கு அமுது படைத்த கதையும் நரபலி ஆகும். சப்தமாதர் வழிபாடு பல்லவர் காலத் தொடக்கத்தில் சப்த மாதர் வழிபாடு இல்லை . இராச சிம்மன் கட்டிய காஞ்சிக் கைலாச நாதர் கோயிலில் சப்தமாதர் சிலைகள் உள்ளன. ஆயினும், சப்தமாதர் வழிபாடு தண்டிவர்மன். (கி.பி. 786 - 846) காலத்திலிருந்தே சிறப்புப் பெற்றது எனலாம். சப்தமாதருக் கென்ன அபராசிதன் (கி.பி. 900) காலத்தில் கட்டப்பட்ட திருத்தணி வீரட்டானேசுவரர் கோயிலில் சிலைகள் அமைக்கப் பட்டன. இந்த சப்தமாதர் சிலைகளோடு கணபதி சிலையும் காணப் படுவது குறிப்பிடத் தக்கதாகும். திருச்சி வட்டம் ஆலம்பாக்கத்தில் தண்டிவர்மன் கட்டிய சப்தமாதர் கோயில் சிறப்புடையதாகும். வேளச்சேரியிலும் சப்தமாதர் கோயில் உள்ளது. சேட்டா வழிபாடு தொடக்ககாலப் பல்லவர் குடைவரைக் கோயில்களில் திருமகளின் மூத்த சகோதரியான சேட்டா வழிபாடும் இருந்தது. தீங்கான செயல்கள் நடவாமல் இருக்க சேட்டாவை வழிபட்டனர். காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் சேட்டாவின் உருவமுள்ளது. சேட்டா பிற்காலப் பல்லவர் கோயில்களிலும், பாண்டியர் கோயில் களிலும் காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் பாண்டியர் குகையில் உள்ள கல்வெட்டும், நந்திக் கலம்பகமும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் சேட்டாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. கலம்பகம் சேட்டாதேவி இலக்குமியின் மூத்த சகோதரி என்று குறிப்பிடுகிறது. ஆனால் காலப் போக்கில் சேட்டாவை வணங்கினால் தீயது சேரும் என்ற எண்ணம் தோன்றவே இந்த வழிபாடு நின்று விட்டது. திருப்பரங்குன்றத்தில் சேட்டா கோயில் மூடப்பட்டு விட்டது. புறச் சமயங்கள் புத்த சமயம் (சாக்கியம்) புத்தசமயம் சங்க காலத்திலேயே தமிழகத்திலிருந்தது, அசோகன் காலத்தில் (கி.மு. 273 - 232) புத்தம் தமிழகத்தில் பரவியது. அவனுடைய இரண்டாம் பாறைக் கல்வெட்டில் சேர, சோழ, சத்திய புத்திர, கேரளபுத்திர நாடுகளில்தான் மனித இனங்களுக்கேயன்றி விலங்குகளுக்கும் மருத்துவச் சாலைகளை அமைத்ததாகவும் தனது புத்த தருமத்தை நிலைநாட்டியதாகவும், அசோகன் குறிப்பிடுவதி விருந்து தோரயமாகப் பெளத்த மதம் (புத்ததருமம்) கி. மு. 250இல் தமிழகத்திற்கு வந்ததாகக் கொள்ளலாம். பல்லவர் காலத்தொடக்கத்தில் அது மிகவும் சிறப்புற்று மலர்ந் ததைப் பார்க்கிறோம். ஆனால், பெளத்தம் வடநாட்டிலிருந்து வந்த தைப் போலவே ஆசிவகம், சமணம், பிராமண வைதீகமதம் ஆகிய வையும் வடக்கிலிருந்து தமிழகம் வந்தன. இவற்றில் ஆசிவகம் இன்று அழிந்து ஒழிந்துவிட்டதாகும். இதனை ஏற்படுத்தியவர் கோசலமக்கலி புத்தர் என்பவராவர். இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால் கோசால் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறுகின்றன. மக்கலியின் மகன் மக்கலிபுத்திரர் எனப்பட்டார். முதலில் சமண மதத் தலைவரான மகாவீரருடன் இருந்து, பின்னர் பிரிந்து தானே ஆருகதம் என்னும் மதத் தை ஏற்படுத்திய மக்களிபுத்திரர் சமண சமயத்தின் சில கோட்பாடு களையும், தனது கோட்பாடுகளையும் சேர்த்து மக்களிடையே பரப்பினார். இவர் கி.மு. 500இல் மறைந்தார். ஆயினும் பல்லவர் காலத்தில் இம் மதம் ஒரு சிலரால் பின்பற்றப்பட்டது. சமணமும், ஆருகதம் அல்லது ஆசிவக மதமும், வைதீக மதமும் பெளத்தத் திற்குப் போட்டியாக எழுந்தன. காலப்போக்கில் ஆசிவக மதமும், சமணமும் போட்டியில் இருந்து விலகின. பௌத்தத்தை வைதீக சமயமே நேரடியாக எதிர்த்தது, பௌத்தத்திற்குள்ளேயே ஆறு வகையான புத்த பிக்குகள் (தேரர்) இருந்ததாகத் திருஞான சம்பந்தரே குறிப்பிடுகிறார். இவர்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டனர். பல்லவ மன்னர்களின் பேராதரவு பெற்ற வைதீக மதத்தினர் பௌத்தத்தை எதிர்க்கலாயினர். வைதீக இந்து சமயத்திற்கு மறுமலர்ச்சியை உண்டாக்கிய சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமங்கை ஆழ்வார் முதலியோர் இந்துமதத்தை நிலைநாட்டவும், சமண சாக்கிய சமயங்களை ஒழிக்கவும் தலைப்பட்டார்கள், சம்பந்தர், போதி மங்கை மடத்தில் இருந்த புத்த அறிஞர்களோடு வாதிட்டு வென்றார். இவ்வாறே தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்த பௌத்த மடங்களும் குகைகளும் முதலில் சமணர்களால் கைப்பற்றப்பட்டுப் பின்னர் சைவர்களால் முறியடிக்கப் பட்டன. மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் பெளத்தருடன் வாதிட்டு அவர்களை இலங்கைக்குத் துரத்தினார். திருமங்கை ஆழ்வார் நாகப்பட்டினத்திலிருந்து பொன்னால் ஆன புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து திருவரங்கத் திருப்பணிக்குச் செலவிட்டார். கி.பி. 641இல் காஞ்சிக்கு வந்த யுவான் சுவாங் புத்தர் கோயில் இடிந்த நிலையிலிருப்பதையும், வைதீக இந்துமதம் தலைதூக்கி இருப்பதையும் குறிப்பிடுகிறார். புத்த மடங்களில் பெண்கள் சேர்ந்து பிக்குணிகளாய் இருந்ததையும், அவர்கள் பிக்கு களோடு தங்கியிருந்ததையும், செல்வர்கள் மடங்களுக்கு அளித்த செல்வங்களால் அவர்கள் கடமை மறந்து கேளிக்கையில் ஈடுபட்ட தையும் புத்தம் தமிழ் நாட்டில் அழிந்ததற்குக் காரணமாய்க் கூறுவர். சமணம் பல்லவர் காலத்தில் சமண சமயமும் பெரும்பாலனவர்களால் பின்பற்றப்பட்டது. பொதுவாக வைதீக இந்து மதத்தில் வேள்வி களும் உயிர்ப்பலியும் சாதி வேற்றுமைகளும் இருந்ததால் சமண ; சாக்கிய நெறிகள் பெரிதும் மக்களால் விரும்பப்பட்டன. மகேந்திர வர்மனே சமணனாக இருந்து அப்பரைப் பின்பற்றி சைவனானான். கி.பி. 47இல் மதுரையில் ஏற்பட்ட சமணச் சங்கம் சிறந்து இறை நெறி இயக்கத்தையும் இலக்கியங்களையும் பரப்பியது. காஞ்சிபுரம், திருபான்மலை, திருப்பருத்திக்குன்றம், வள்ளி மலை, பொன்வனைந்தான்பட்டி, சித்தன்ன வாசல், திருப்பாதிரிப் புலியூர் முதலிய இடங்களில் சமண மடங்கள் இருந்தன. சமணப் பள்ளிகளும் பல இடங்களிலிருந்தன. மலையடிப்பட்டி, கீழ்ச் சாத்த மங்கலம், பஞ்சபாண்டவர் மலை ஆகிய இடங்களிலிருந்த சமணப் பள்ளிகள் குறிப்பிடத்தக்கனவாகும். வெடால் என்னுமிடத்தில் பெண் துறவிகளுக் காகவே சமணப் பள்ளி யொன் றிருந்தது. சமண முனிவர்களை தீர்த்தங்கரர்) வழிபடுதல் இச் சமயத்தின் முகாமை வழிபாடு ஆகும். மன வடக்கம், ஒழுக்கம், யோகம், ஆகியவை சமண சாக்கிய சமயங்களின் முக்கியக் கோட்பாடுகள் ஆகும். பல்லவர் கால சமயத் தத்துவங்கள் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைநெறி இயக்கத்தால் முக்தி பெறலாம் என்றனர். இதற்குச் சாதி தடையாக இருக்காது என்றனர், சடங்குகள் தேவை இல்லை என்றனர். ஆனால் சங்கரரும், குமரில் பட்டரும் சடங்கு செய்வதில் மாறுபட்டனர்; மறுபிறப்பு உடணடு என்றனர். எ. பொருளாதார நிலை நிலவருவாய் பல்லவர் காலத்தில் நிலவரியே முகாமை வருவாயாக இருந்தது. ஆனால் நாட்டிலுள்ள நிலப்பரப்பு மொத்தமாகப் பயிரிடும் நிலமாக வும், வரி செலுத்தும் நிலமாகவுமில்லை . பெரும் பாலான நிலம் காட்டுப் பகுதியாக இருந்தது. பெரும்பரப்பான நிலங்களில் ஏரிகள், தரிசுக்காடு, கோயில், கடைத் தெருக்கள், சுடுகாடு, குடிநீர்க் கிணறுகள், பிரமதேயங்கள், தேவதானங்கள், பள்ளிச் சந்தங்கள், மடங்கள், ஊர்கள் முதலியனவாக இருந்தன. குறிப்பிட்ட பிராமணனுக்குத் தானமாக விடப்பட்ட நிலம் ஏகபோக பிரமதேயம் என்றும் அழைக் கப்பட்டது. ஏரிகளைப் பழுது பார்க்கும் செலவுக்கு விடப்பட்ட மானியம் 'ஏரிப்பட்டி' என்றும், நிலமானியதாரருக்கு விடப்பட்ட நிலம் "அடைநிலம்' என்றும் பெயர் பெற்றன. இவை போக எஞ்சியுள்ள பயிரிடும் நிலங்களி லிருந்துதான் நிலவருவாய் அரசாங்கத்திற்குக் கிடைக்கும். நிலங்கள் அளக்கப்பட்டுத் தரம் பிரிக்கப்பட்டிருந்தன. பல்லவர் காலம் கி.பி. 6 - 9 நூற்றாண்டுகள் களப்பிரருக்குப்பின் பல்லவர்கள் தமிழகத்தில் ஆளுமைப் பெற்று கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் காலத்துப் பொருளாதார நிலை யையும், பண்பாட்டையும் சுருங்கக் காண்போம். வேளாண்மை - ஏரிகளும், கால்வாய்களும் பல்லவர் காலத்திலும் வேளாண்மையே முக்கிய தொழிலாக இருந்தது. மன்னர்கள் காடு கொன்று விளைநிலமாக்கி, உழவுத் தொழிலைப் பெருக்கினார்கள். எனவே அவர்களைக் காடுவெட்டி என்றனர். காவிரி, பாலாறு, பெண்ணையாறு முதலிய ஆறுகளும், பல்வேறு காட்டாறுகளும், தொண்டை மண்டலத்தைச் செழிப் படையச் செய்தன. இவற்றிலிருந்து பல்வேறு கால்வாய்களை வெட்டியும் ஏரிகளை அமைத்தும் நாட்டை நீர் வளமுள்ள நாடாக் கினர். நந்திவர்மன் திருச்சி மாவட்டத்திலுள்ள வைரமேசு தடாகத் தையும், பாலாற்றிலிருந்து பெரும்பிடுகுக் கால்வாயையும் அமைத் தான், பரமேசுவரன் கூரத்திற்கு அருகில் பரமேசுவரன் ஏரியையும், பல்லவ மன்னர்கள் கால்வாய்களையும் அமைத்துத் தம் தம் பெயரால் அவற்றை அழைத்தனர். மகேந்திரவாடியில் மகேந்திரத் தடகமும், மாமண்டூரில் சித்திர மேகத் தடாகமும், உத்திரமேரூரில் வைரமேகத் தடாகமும், புதுக்கோட்டைக்கு அருகில் வாலிதடாகமும், ஆலம் பாக்கத்தில் மால்பிடுகு தடாகமும், அமைத்தனர். இவை, வெவ்வேறு காலங்களில் அமைக்கப்பட்ட ஏரிகளாகும். காஞ்சிக் கருகிலுள்ள திரையனேரியும், காவேரிப்பாக்கம் ஏரியும் பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட முக்கிய ஏரிகளாகும். கம்பன் ஆரியன் என்ற குறுநில மன்னன் மாற்பிடுகு, பெருங்கிணறு என்ற ஏரியை திருவெள்ளா றையில் வெட்டினான். இத்தகைய நீர்ப்பாசன ஏரிகளைப் பராமரிக்க ஏரி வாரியம் என்ற குழு இருந்தது. நில அளவைகளும், வரிமுறைகளும் பல்லவர் காலத்தில் நிலம் துல்லியமாக அளவு செய்யப்பட்டு, தரம் பிரிக்கப் பட்டது. உழவு, பட்டிகை என்ற பெயர்களால் உழுது பயிரிடும் நிலம் அறியப்பட்டது. சொந்தமாகத் தாமே பயிரிடப்படும் நிலம் படாகம் (அ) பாயல் நிலம் எனப்பட்டது. பெரு நிலக்கிழார்கள் தம் நிலத்தை வாரத்திற்குப் பயிரிட விட்டனர். விளைச்சலில் பாதி பயிரிடுவோருக்கும், பாதி நிலச் சொந்தக்காரருக்கும் சேரும், அரசாங்கத்திற்கு எனத் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்ட நிலம் அடைநிலம் எனப்பட்டது. அடைநிலத்தைப் பயிரிடுவோர், வரிக்கு ஈடாக விளைச்சலில் பாதியை அரசுக்குக் கொடுக்க வேண்டும், சருக்கரை காய்ச்சுதலும், உப்பு எடுத்தலும், அரசுக்கே உரிய தனி உரிமை ஏகபோக உரிமை) ஆகும். கோயில்களுக்கும், சமண, சாக்கியப் பள்ளிகளுக்கும், பிராமணருக்கு விடும் நிலங்களுக்கும் வரி கிடையாது. ஒரு நிலம் சொந்த நிலமாயினும், அடைநில மாயினும், வாரத்திற்குப் பயிரிடும் நிலமாயினும், தேவதான, பிரம்ம தேய நிலமாயினும் அதன் பரப்பளவும், எல்லைகளும் தரமும் துல்லிய மாகக் குறிக்கப்பட்டு ஆவணங்களில் பதியப்பட்டன. பொதுவாக ஒவ்வொரு நிலத்தைச் சுற்றிலும் கள்ளிச்செடியும், கல்லும் வேலியாக நடப்பட்டன. இதன் பிறகுதான் அதற்கான வரி விதிக்கப்பட்டது, கோயில்களுக்கு விடப்படும் தேவதான நிலத்திற்கும், சமண சாக்கியப் பள்ளிகளுக்கு விடப்படும் நிலத்திற்கும் வரி கிடையாது. இவை, இறையிலி நிலங்கள் எனப்பட்டன. இவை முறையே தேவ தானம், பள்ளிச் சந்தம் என்று அழைக்கப்பட்டன. பிராமணர்களுக்கு விடப்பட்ட வளமான நிலங் களுக்கு இறை இறுத்த நிலங்கள் என்று பெயர். இயற்கை இடர்ப் பாடுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் போது, அவற்றிற்கு வரிக் குறைப்பும், வரித் தள்ளுபடியும் உண்டு. இவை முறையே இறை இலேசு, இறையிலி எனப்பட்டன. மற்றபடி, பொதுவாக விளைச்சலில் 1/6 பங்கு வரிவிதிக்கப்பட்டது. பொது வரிகள் பல்லவர் காலச் செப்பேடுகளில் வரும் பல்வேறு வரிகளின் பெயர்களைக் கொண்டு, இக்காலப் பொருளியல் நிலைமையை நன்குணரலாம். களக்குடி, வேலூர்பாளையம், குற்றங்குடி, புள்ளார், கூரம், விழாவெட்டி, அல்திபூர் முதலிய செப்பேடுகளில் வரும் பல்வேறு வரிகளின் பெயர்களைக் காணலாம். அரசுக்குச் செலுத்தப் படும் வரியைக் கடமை, முறைப்பாடு, குடிமை, கந்தராயம் முதலிய பெயர்களால் அழைத்தனர். இவற்றுள் குடிமை என்பது குடியுரிமை வரி' ஆகும். குடிமக்களால் செலுத்தப்பட்ட மற்றொரு வரி காணிக்காசு, அல்லது இறை திரவியம் எனப்பட்டது. அரசன் அல்லது அலுவலர் பருக்கு வரும்போது அவருக்குச் செலுத்தும் வரிக்கு சவாரி ஊழியம் என்று பெயர். அரசன் ஒரு விழாவில் எழுந்தருளிப் பொது மக்களுக்குத் தரிசனம் கொடுத்தால் அதற்காக மக்கள் அவ னுக்குச் செலுத்த வேண்டிய வரி திருவெழுச்சிக் குடிமை என்றழைக் கலாயிற்று. அரசனது ஆணையை ஒரு குடிமகன் அல்லது மக்கள் கையில் வாங்கும் போது அதற்காக அவர் தரும் அன்பளிப்புக்குத் திருமுக்கானம் அல்லது திருமுக எழுத்து என்று பெயர். எல்லை யோரத்தில் அல்லது தனிப் பிரிவில் வசிக்கும் குடிமகன் செலுத்தும் வரிக்கு விசக்கானம் என்று பெயர். மக்களின் பொதுநல நிதிக்காகக் குடிமக்களிடமிருந்து பெறப்பெற்ற வரிக்கு, 'வெட்டி முட்டை ஆள்' என்று பெயர். கோயில் அல்லது சத்திரத்திற்குக் கட்டாயமாகச் செலுத்தும் வரிக்கு ''மகமை'' என்று பெயர். ஒரு அலுவலர் வந்து ஓர் இடத்தைப் பார்வையிடும் போது அவருக்கு அளிக்கப்படும் தினசரிப் படிக்கு எச்சோறு (எல்சோறு) என்று பெயர். பார்வையிட வரும் அலுவலருக்குக் கட்டாயம் உணவு அளிக்க வேண்டும். அதற்கு ஈடாகக் கொடுக்கப்படும் பணத்திற்குச் சோற்று மாற்று என்று பெயர். தொழில் வரிகள் தொழில் செய்வோர் அதற்காக வரி செலுத்தினார்கள். கழைக் கூத்தாடியென்பது மூங்கில் கழியின் மேல் நின்று ஆடும் கூத்துக்காகச் செலுத்தும் வரி ஆகும். இதைப் போலவே தோல் பதனிடுவோர், கண்ட வைத்திருப்போர், கிணறு வெட்டுவோர், உலோக வேலைகளைச் செய்வோர் முதலிய தொழிலாளிகளும் தொழில் வரி செலுத்தினார்கள், வேடங்கள் தரித்துக் கூத்தாடுவோர் செலுத்திய வரிக்கு முகதரகர் என்று பெயர். சூதாடுவோர் செலுத்திய வரிக்குத் தந்திர் வாயம் என்றும், தறி நெய்வோர் செலுத்திய வரிக்குத் தறிக்கிறை என்றும், செக்காட்டும் வாரியர் செலுத்திய வரிக்குச் செக்கிறை என்றும், மீன் பிடிப்போர் செலுத்திய வரிக்குப் பட்டினச்சேரி என்றும், கள் இறக்குவோர் செலுத்திய வரிக்குத் ஈழப்பூச்சி என்றும், நெய் விற்போர் செலுத்திய வரிக்கு நெய் விலை என்றும் பெரும்பறை யடிப்போர் செலுத்திய வரிக்கு நெடும்பறை என்றும், சாதாரணப் பறையடிப்போர் செலுத்திய வரிக்குப் பறைக்கானம் என்றும், கால்நடை மேய்ப்போர் செலுத்திய வரிக்கு இடைப் பூச்சி என்றும், கருமார வேலை செய்வோர் செலுத்திய வரிக்குக் கட்டிக் கானம் என்றும் பொன் வேலை செய்வோர் செலுத்திய வரிக்குத் தட்டாரக் கானம் என்றும் பெயர். பிராமணர் கோயில் பூசாரியாகப் பணியாற்ற உரிமம் பெற பிராமண வசக்கானம் செலுத்த வேண்டும். குயவன் குசக்கானம் செலுத்தித்தான் தொழில் செய்ய வேண்டும். துணிவிற்போர் புத்தகவிலையெனும் வரியையும், தோணி செலுத்து வோர் பட்டி கைக்கானம் என்னும் வரியையும், தரகர்கள் தரகுக் கானம் எனும் வரியை யும் மழிப்போர் நாவிதகானம் எனும் வரியை யும் செலுத்த வேண்டும், கள் இறக்கப்படும் தென்னை , பனை, ஈச்சன் முதலிய மரங் களுக்காகச் செலுத்தப்படும் வரிக்கு சாற்றுவரி அல்லது பள்ளுச்சாறு என்று பெயர். புதிதாக அமையும் குடியிருப்புகளிலிருந்து தண்டப் படும் வரிக்கு நாட்டுக்கானம் என்றும் ஆயுதங்கள் செய்யப்படும் பட்டாரச் சாலைகளிலிருந்து தண்டப்படும் வரிக்குக் கட்டிக்கானம் என்றும், கல் ஆலம் மரத்திற்காகச் செலுத்தப்படும் வரிக்குக் கல்லால கானம் என்றும், செங்கொடி பயிரிடுவோர் செலுத்தும் வரிக்குச் செங் கொடிக் கானம் என்றும், திருமணம் செய்துகொள்வோர் செலுத்தும் வரிக்கு கல்லாணக் கானம் என்றும் பெயர், பரத்தையரும் வரி செலுத்தியபின்தான் உரிமம் பெற்றுத் தொழில் நடத்தினர். ஏரி, குளம், முதலியவற்றின் அடியில் தேங்கி நிற்கும் வண்டல் மண்ணை நீர் வற்றிய பின் வாரி வயல்களுக்கு உரமாகப் போடுவார்கள். இதற்காகவும் அரசுக்கு வரி செலுத்தினார்கள். அவ்வரிக்குக் குளக் குப்பை அல்லது கனசொப்பு என்று பெயர். உப்புக் காய்ச்சுதல் அரசருக்கே உரிய தனியுரிமை இதனை உப்பாய உரிமை அல்லது உப்புக் கொச்சிகை என்றனர். ஆடை, அணிகலன்கள் ஆணும் பெண்ணும் பருத்தி, பட்டு ஆடைகளை அணிந்தனர், தலைப்பாகை அணிவதும் மேலாடை அணிவதும் வழக்கம். வேலை யாட்களும், வீரர்களும் பட்டுடையணிந்தனர். துறவிகளும் முனிவர் களும் எளிய ஆடைகளை அணிந்தனர். அரச குடும்பத்தினர் இடுப்பைச் சுற்றிக் கட்டி முன்புறம் நீளமாக தொங்கவிடப்பட்ட உத்திரியம் எனப்படும் ஆடையை அணிந்தனர். தூய்மையான பட்டாடையைக் கலிங்கம் என்றும், சிவப்பு நிறப் பட்டாடையைப் பீதாம்பரம் என்றும், துறவிகள் அணியும் மஞ்சள் நிறக்காவி ஆடையைத் துவராடை என்றும் அழைத்தனர். தலைநகரமாகிய காஞ்சியில் அரசரும் அரச குடும்பத்தினரும் பெரு மக்களும் அயல்நாட்டுத் தூதுவரும் அலுவலர்களும் வாழ்ந்தார்கள். இவர்களின் ஆடை அணிகலன்களும் வாழ்க்கை முறைகளும் வேறுபட்டே காணப்பெற்றன. பொன், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த மணிகள் பதித்த அணிகலன்களை, மக்கள் அணிந்தனர். இதிலும் மேற்கூறிய அரசரும் அரச குடும்பத்தினரும், பிறரும் அணிந்த அணிகலன்கள் மற்றவரினின்றும் வேறுபட்டன. பொது வாகக் காரை, கொடிப்பு, செவப்பு, தோடு, குண்டலம், மகரக் குழை, பதக்கம், சிலம்பு முதலிய அணிகலன்களை மக்கள் அணிந்தனர். கிண்கிணி, பட்டை, ஐம்படை, அரைத்தோடு. கங்கணம், சுட்டி, மோதிரம் முதலியன சிறுவர் சிறுமியர் அணிகலன்க ளாகும். ஓலை, தோடு, மகரக்குழை, குண்டலம், பத்ர் குண்டலம் முதலியன காதணிகளாகும். புயத்தில் தோள்பட்டை அணியும் அணி கலனுக்குத் தோள்வளை என்றும், மார்பின் குறுக்கே அணியும் முத்து வடத்திற்கு வீரசங்கிலி என்றும் பெயர். பல்வேறு விதமான வளையல்கள், மார்புக் கச்சைகள் முதலியவற்றைப் பெண்கள் அணிந்தார்கள். பல்லவர் காலத்தில் வலுவான கடற்படை இருந்தது என்பதில் இருந்து, இவர்கள் கடலாதிக்கம் பெற்றிருந்தனர் என்பது தெளி வாகிறது. எனவே கடல் வாணிபமும் இவர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது. இதனால் பல்லவர் காலத்தில் பொருளாதாரம் சிறந்து வளர்ந்தது. போர்களின் மூலம் கிடைத்த கொண்டிப் பொருள்களை யும் மக்களின் நன்கொடைகளையும் கொண்டு கட்டப்பட்ட கோயில் கள் கலைக் கூடங்களாக விளங்கின. இக்கோயில்களில் நடைபெற்ற விழாக்களும் நிவேதனங்களும் இக்கால மக்களின் மனவளத்தையும் செல்வ வளத்தையும் எடுத்துரைப்பனவாக உள்ளன. மடங்களில் வசித்த சைவ சமயத்தவரின் வாழ்க்கை நெறி களும் நம்மை வியப்படையச் செய்கின்றன. கோயில்களுக்கும் மடங்களுக்கும் மக்கள் கட்டாயமாக வழங்கிய தானம் மகமைகள் எனப்பட்டது. உளத்தூர் நந்திவர்ம பல்லவ மல்லன் கல்வெட்டில் பிற்காலப் பல்லவர்களின் கோயில்கள் பெரும்பாலும் மக்களின் நன்கொடையி லிருந்தே பராமரிக்கப்பட்டதைக் காண்கிறோம். ஊர்ப்புறங்களில் குடிசைத் தொழில்களை நடத்தி மக்கள் பயன்பெறுமாறு கோயில் நிதியைப் பயன்படுத்தினார்கள். குறிப்பாக நெசவாளர் களுக்குக் கோயில் நிலங்களைக் கொடுத்துப் பயிரிட்டு வாழும்படி செய்தார்கள். பல்லவர்கால அரண்மனைகள், பிரம்ம தேய நளர்கள் முதலிய வற்றில் கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டுச் சுற்றிலும் அழகிய பூங்காக்கள் அமைக்கப் பட்டிருந்தன. மாடி வீடுகள் ஏராளமாக இருந்தன. ஆனாலும் புலையரும், பறையரும் இருக்கு வெளியில் வசித்தனர். பிராமணர்கள் பூலோகத்தில் 'தேவர் 'களராய் வாழ்ந்தார் கள். நூல் நூற்போர், தறிநெய்வோர், குயவர்கள், மரத்தச்சர்கள், கால் நடை வளர்ப்போர், பொற்கொல்லர்கள், கலைஞர்கள், கைவினைஞர் கள், செக்கு வாணரியர்கள், தரகர்கள், வியாபாரிகள் முதலியோர் கிராமங்களில் வசித்தனர். இவர்கள் அரசிடம் உரிமம் பெற்றும் வரி செலுத்தியும் தொழில் புரிந்தனர். இத்தகைய தொழிலாளரும், பறை யரும் கூட கோயில்களுக்குத் தானமளித்தனர். எனவே அக்காலக் கோயில்களும் மடங்களும் இக்கால வைப்பகங்களைப் போல பணம், நகைகளைச் சேமித்து வைக்குமிடங்களாயிருந்தன, ஒவ்வொரு ஊரிலும், நகரத்திலும் சந்தைகளிருந்தன. பதி னெட்டு விதமான தானிய வகைகள் (கூலம்) இவற்றில் விற்கப்பட் டன, எண்ணெய், நெய், தேங்காய், பாக்கு, சருக்கரை, காய் வகை கள், பூக்கள் முதலியனவும் உள்ளூர்ச் சந்தைகளில் விற்கப்பட்டன. கோயிலைச் சுற்றிலும் அங்காடிகள் இருந்தன. ஆடை, அனாரிகாலன் களும் ஆயுர்வேத மருந்துப் பொருள்களும் கடைகளில் விற்கப்பட் டன. சித்திரமூலம், கொடி வள்ளி ஆகிய மருந்துச் செடிகள் இக்காலத் தில் பயிரிடப்பட்டன. இவற்றைப் பயிரிட்ட நிலத்திற்கு வைத்திய போகம்' என்று பெயர். கரிசிலாங்கண்ணிச் செடி இக்காலத்தில் ஓர் அரிய மூலிகையாகக் கருதப்பட்டது. தவனம், மரிக்கொழுந்து ஆகிய நறுமணச் செடிகளைத் தேவதான், பிரம் தேய ஊர்களில் மட்டுமே பயிரிட்டனர். இவை பூசைக்குப் பயன்படும் தழைகளாகும். இதைப் போலவே செங்கழுநீர் செந்தாமரைக் கொடியும், நீலோற்பல மலர்க் கொடியும் பூசைக்குப் பயன்படும் மலர்க் கொடிகளாகும். இவற் றையும் தேவதான ஊர்களும், பிரமதேயங்களும் மட்டுமே பயிரிடும் உரிமை பெற்றிருந்தன. மேலே குறிப்பிட்ட அரிய பயிர்வகைகளும் பயிரிடப் பட்டன. எனவே மக்கள் வளமோடு வாழ்ந்தனர், ஆயினும், பல்லவர்களின் ஓயாத போர்களால் இடை யிடையே பஞ்சங்கள் தோன்றின. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைநெறி இயக்கத்தை வளர்த்து, மக்களைப் பண்போடு ஒழுகச் செய்தனர். நாணயங்கள் சங்க கால நாணயங்கள் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டன. ஆனாலும் பொன் நாணயம் இருந்ததாக இலக் கியங்களிலிருந்து அறிகிறோம். பொன், கானம், துளையிடப்பட்ட பொன் என்று அவை அழைக்கப்பட்டன. சங்க கால நாணயங்களில் உதய சூரியன், யானை முதலிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் கால நாணயங்களில் பல்லவரின் அரசுச் சின்னமான எருதின் உருவமும், சங்கு, சக்கரம், மீன், பிறை நிலா, சவுரி, குடை சுவச்சிதிகம் முதலிய உருவங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. இதுவரை கிடைத்துள்ள பல்லவர் கால நாணயங்களில் பொன்னா லும் வெள்ளியாலும் செய்தவை கிடைக்கவில்லை. ஆனாலும் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு கானம், பழங்காசு, துளைப் பொன், துளையிட்ட செம்பொன் முதலிய பொன் நாணயங்களைப் பற்றி அறிகிறோம் (அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பொன் நாணயம் எனக் கருதப்படும் நாணயம் கிடைத்ததாகக் கூறுவர்) எடைகளும், அளவு முறைகளும் பல்லவர்காலத்தில் நிலத்தை உழவு, குழி, படாகம், வேலி முதலிய அளவுகளால் அளந்தனர். இதற்குக் கோல் அளவுகோல்) பயன்படுத்தப்பட்டது. 240 குழியளவு கொண்ட நிலம் படாகம் எனப்படும், செவிடு, ஆழாக்கு, உரி, நாழி முதலிய முகத்தல் அளவுகளால் நெய், எண்ணெய், பால், தயிர் முதலிய திரவப் பொருள்களை அளந் தனர். பிடி என்பது ஒருவகையில் அள்ளி எடுக்கும் அளவாகும். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் திரவப் பொருள்களை யும், தானியங்களையும் அளந்தனர். நெல் முதலிய தவசங்களை அளப்பதற்குப் படி, மரக்கால், குறுனி, பதக்கு, நாழி, காடி, கலம் முதலிய முகத்தல் அளவுமுறைகள் கையாளப்பட்டன், பொன்னை எடை போட கழஞ்சு, மஞ்சாடி முதலிய எடுத்தல் அளவைகள் கையாளப்பட்டன. சங்க காலத்தில் நாணயமுறை இருந்தது. ஆனாலும் அவர்கள் பண்டமாற்று முறையையே விரும்பினார்கள். ஆரியரின் வேதக் காலத்தில் பசுவை மாற்று அளவாகக் கொண்டதைப் போல சங்க காலத்திலும், பின் வந்த பல்லவர் காலத்திலும் கையாளவில்லை யென்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏ) கலைகள் பல்லவர்காலக் கலைகளைக் கட்டடக் கலை, ஓவியக் கலை சிற்பக் கலை என மூன்று வகையாகப் பிரித்து அறியலாம். முதலான தாகப் பல்லவரின் கட்டடக்கலை என்பது ஈண்டு பல்லவரின் கோயில்கள் என்றே பொருள்படும். ஏனென்றால் பல்லவரின் அரண்மனைகள், கோட்டைகள் போன்ற சமயச் சார்பற்ற கட்டடங்கள் பற்றி இங்கு பேசப் போவதில்லை. எல்லாமே சமயச் சார்புடைய கோயில்களே ஆகும். இக் கோயில்கள் யாவும் ஆகம் விதிகளின் படியும், மனையடி சாத்திரத்தின் படியும் தான் கட்டப் பட்டுள்ளன. இக் கோயில்கள் யாவும் இறைவழிபாடுகளுக்காகவே கட்டப் பெற்றவை ஆகும். ஆனால், அக்கால சமுதாயத்தின் பண் பாட்டுக் கூடங்களாகவும் கலை, கலாச்சாரங்களின் கருவூலங்களாக வும் திகழ்ந்தன். 1. கட்டடக்கலை குடைவரைக் கோயில்கள் பல்லவரின் காலத்தைக் "கோயில் ஊழி (சகாப்தம்)" என்றும் அழைப்பர். இவை மண்டபங்களைப் போலுள்ளதால் குடை வரை மண்டபங் கள் என்றே முதலில் அழைத்தனர். ஒரு பெரும் பாறையை அல்லது குன்றைத் திட்டமிட்டபடிச் செதுக்கி உருவாக் கப்படுவதே குடைவரைக் கோயிலாகும். மலையை அல்லது பாறையைக் குடைந்து கல்லுளியால் செதுக்கி உண்டாக்கும் கோயில்தான் குடைவரைக் கோயிலாகும். இதனை முதன் முதலில் நுணுக்கத்தோடு கண்டு வெற்றி கண்டவன் மகேந்திரவர்மனே. 2. ஒற்றைக்கல் தேர்கள் கோயில்கள் இந்துக் கோயில்களில் வீதி வலம் வர இழுத்துச் செல்லும் தேர் போன்று ஒரே கல்லிலான கோயிலையே ஒற்றைக்கல் தேர் அல்லது இரதம் என்கிறோம். 3. கட்டுமானக் கோயில்கள் இன்று நாம் பெருவாரியாகக் காணும் கற்கோயில் அல்லது கற்றளியைத்தான் 'கட்டுமானக்கோயில்' என்கிறோம். கற்கள் வேண்டிய அளவுகளில் உடைக்கப்பட்டு அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து வேண்டிய வடிவத்தில் (மாதிரியில்) கட்டடம் கட்டுவது கட்டு மானம் எனப்படும். அத்தகைய கட்டுமானக் கோயில்கள் கருங்கற் களாலும் செங்கற்களாலும் மரத்தாலும் கூடக் கலந்தும் கட்டப் பட்டன. இத்தகைய கட்டுமான வேலைக்கு மண், மரம், சுண்ணாம்பு முதலியனவும் தேவைப்படும். ஆனால் மேலே கூறிய இரண்டு வகை களுக்கும் இவை தேவையில்லை. தொன்று தொட்டுக் கட்டுமானக் கட்டங்களே கட்டப்பட்டு வந்தன. ஆனால், மகேந்திரன்தான் கல், மண், மரம், காரையின்றித் தனிப்பாறையைச் செதுக்கி அல்லது குடைந்து குடைவரையைக் கண்டான். எனவே தான் இத்தகைய புதுமையைக் கட்டடக் கலையைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தியதால் அவனை 'விசித்திர சித்தன்' என்பர். அவன் ஒரு புதுமையைக் கட்டடக் கலையில் புகுத்தினான். நான்கு வகைப் பாணிகள் இவ்வாறு மூன்று விதமான கட்டடக்கலை தமிழகத்தில் பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கின. அவற்றின் பருவ வளர்ச்சி நிலைகளைக் கொண்டு மகேந்திரன் பாணி, மாமல்லன் பாணி, இராச சிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி என நான்கு பிரிவுகளாகப் பிரித்து அறியலாம். இவற்றின் காலநிலைகளையும் கணக்கிலெடுத்துத் தான் இவ்வாறு பிரிக்கப்பட்டன. மகேந்திரன் பாணி தன்மைகள்: இந்த பாணியினாலானவை பெரும் பாலும் குடைவரைக் கோயில் களே. இக்குடைவரைக் கோயில்கள் யாவும் அதிக ஒப்பனைகள் (அலங்காரம்) இல்லாமல் எளிமையாகக் காணப் பெறும். இக்குடை வரைகளில் மகேந்திரனுடைய விருதுகள் (பட்டப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்; நாற்கர வடிவில் அமைந்திருக் கும், பின் சுவற்றில் மூலவரை வைக்கும் இடம் இருக்கும்; முன்புறம் வரிசையாகத் தூண்களும் இடையில் வரிசையாகத் தூண்களும் இருக்கும். இதனால் கோயில் (மண்டபம்) இரு பகுதியாகப் பிரிந்திருப் பதைப் போல் காணப்பெறும்: தூண்கள் சதுரமாகவும் கனமாகவும் இருக்கும்: தூணிலுள்ள போதிகையின் அடிப்பகுதியில் அரம்பப் பற்கள் போல் வெட்டப்பட்ட கருக்கு காணப்படும்; கூடுகள் முகடு களாகவே காணப் பெறும். பல்லவர் காலக் குடை வரைகளின் வளர்ச்சியை முதற் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவமெனப் பிரித்து, அவை உள்ள இடங்களையும் காண்போம். முதற்பருவம் மண்டகப்பட்டு - இவச்சிதன் குடைவரை இது மகேந்திரவர்மன் அமைத்த முதல் குடைவரைக் கோயி லாகும். தென்னார்க்காடு மாவட்டம் மண்டகப் பட்டிலுள்ள இக் கோயில் ஓர் ஏரியையடுத்து மண்டப வடிவில் நீள் சதுரத்தில் அமைந் துள்ளது. முன்புறம் இரு பெருந்தூண்களும், இருபுறமும் இரு பெரும் சுவர்த் தூண்களும் உட்புறம் இருபுறம் இரு பெரும் சுவர்த் தூண்களும் உள்ளன. வாயிலில் கொம்பு முளைத்த வாயிற்காப் போர் உருவங்கள் உள்ளன. முன் மண்டபம், இடை மண்டபமென இரண்டாகப் பிரிந்துள்ளது. தூண்கள் அடியில் சதுர வடிவிலும் நடுவில் எண்கோண வடிவிலும் தலைப்பில் பட்டையாகவும் அமைந்துள்ளன. உட்புற மாடக் குழிகளில் சிவன், திருமால், நான்முகன் ஆகிய திருமேனிகள் இருந்ததற்கான எச்சங்கள் உள்ளன. இக்குடைவரையில் உள்ள கல்வெட்டு பல்லவக் கிரந்த எழுத் தில் சமற்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. செங்கல், மரம், உலோகம் ஆகியவையின்றி பிரமன், ஈசுவரன், விசுணு ஆகியோருக் காக விசித்திரசித்தனால் இக்கோயில் சமைக்கப் பெற்றது என்று இக் கல்வெட்டு கூறுகிறது. குடைவரை என்பது அதிசயமாக முதன் முதலில் மகேந்திரனால் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டதா என்ற வினா எழுகிறது. பல்லவர் காலத்திற்கு முன்பும் குடை வரைகள் தமிழகத் தில் இருந்தன. சங்க காலத்தில் "குன்றைக் குடைந்தாற்போல் அந்தணர் வீடுகள் இருந்தன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. களப்பிரர் காலத் தில் குடைவரைகளில் தங்கிய சமண முனிவர்கள் ஏராளமாய் இருந்த னர். ஏன், சங்க காலக் கல்வெட்டுகள் யாவும் இத்தகைய கற்பாறைப் படுக்கைகளில் தானே காணப்படுகின்றன. எனவே, குடைவரை பல்லவர்கள் காலத்தில் மகேந்திரனால் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய மென்றும், இதனால் அவனை விசித்திர சித்தன் என்றும் கூறுவது பொருந்தாது என்பர். ஈண்டு, அவன் குடைவரையைக் கோயிலாக்கி அதில் தெய்வங்களை உறையச் செய்தான். செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றால் கோயில் கட்டும் மரபில் இருந்து வேறுபட்டு புதுமை யைப் புகுத்தியதால்தான் இவனை 'விசித்திர சித்தன்' என்கின்றனர். அடுத்து, மகேந்திரவர்மனின் முதற்பருவ வளர்ச்சியின் போது அமைத்த குடை வரைகள் பல்லாவரம் - பஞ்சபாண்டவர் குடை வரை, மாமண்டூர் - உருத்திர வாலீசுவரர் குடைவரை, குரங்கணில் முட்டம் குடைவரை, மகேந்திரவாடி விசுனுக்கிரகம், தளவானூர் – சத்துரு மல்லன் குடைவரை, சீயமங்கலம் - அவனிப் பாசனப் பல்லே சுவரம், திருச்சி லலிதாங்குரன் குடைவரை ஆகியனவாகும். சில குடை வரைகளில் இவனுடைய கல்வெட்டுகள் இல்லை. ஆயினும் அவற்றின் பாணியை நோக்கி மகேந்திரன் குடைவரை எனக் கூறலாம். அவை, விளாப் பாக்கம் - பஞ்ச பாண்டவர் குடைவரை, அரகண்ட, நல்லூர் சமணர் குகை ஆகியவை ஆகும். மகேந்திரன் பாணியிலானவை யாவும் குடைவரைக் கோயில்களே, ஆயினும் அழிந்துபட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் பெளர்ணமி மண்டபம் இவன் கட்டியதாகக் கொள்ளலாம். அதிலுள்ள தூண் மகேந்திரன் பாணியிலானது. அது மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் எண்பட்டையாகவும் உள்ளது. அதில் மகேந்திரவர்ம னுடைய விருதுப் பெயர்களான குசாகிரன், மகாமேகன், சித்ரகாரப் புலி முதலியன காணப்படுகின்றன. எனவேதான், மகேந்திரவர்மன் காலத்தில் கட்டுமானக் கோயில் களும் இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. மகேந்திரவர்ம னுடைய காலத்தவரான அப்பர் அடிகள் தம் தேவாரத்தில் சிவபெரு மானுக்குக் காவிரியின் இருமருங்கிலும் பலதரப்பட்ட கோயில்கள் இருந்தனவாகக் குறிப்பிடுகிறார். இரண்டாம் பருவம் மகேந்திரன் பாணியிலேயே அவனுக்குப் பின் வந்த முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630-668) இரண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி. 668-670) முதலாம் பரமேசுவர வர்மன் (கி.பி. 670-695) ஆகியோர் சமைத்த குடைவரைகளை இரண்டாம் பருவ வளர்ச்சிக்கான குடைவரைகள் என்று கூறலாம். 1. திருக்கழுக்குன்றம் ஒருகல் மண்டபம்; இது முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் சமைக்கப்பட்ட மகேந்திரன் பாணியிலானது. 2. சிங்கப்பெருமாள் கோயில் இது மகேந்திரன் பாணியிலிருந்து சிறிது வேறுபட்டு முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேசுவரவர்மன்காலப் பாணியில் உள்ளது. 3, மாமல்லபுரம் கொடிக்கால் மண்டபம் 4. சிங்கவரம் 5, மேலைச்சேரி 6. மாமண்டூர் 7. சாளுவன் குப்பம் 8. தருமராசர் தேர் 9. கணேசர் தேர் ஆகியவையும் இந்த இரண்டாம் பருவத்திற்குள் அடங்கும். இவை முதலாம் பரமேசுவரனுடைய காலத்தவையெனலாம் என கே. ஆர். சீனிவாசன் கூறுகிறார். முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 3) - நிதிதி பாணியைத் தொடர்ந்து அவனுடைய பேரனான முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670-695) கடல் மல்லையில் உள்ள தருமராசர் தேர், கணேசர் தேர், மும்மூர்த்திக் குடைவரை ஆகியவற்றைச் சமைத்தான் என்ப தை அவனுடைய செப்பேட்டுச் சான்றுகளால் அறியலாம். முதலாம் பரமேசுவரவர்மன் தன் காலத்தில் செங்கற்களால் கோயிலைக் கட்டினான் என்று கூரம் செப்பேடு கூறுகிறது. மூன்றாம் பருவம் இராச சிம்மன் (கி.பி. 695 - 722) இராசசிம்மன் காலந்தொட்டு அபராசிதவர்மன் (கி.பி. 895 - 913) காலம் வரையிலான பல்லவரின் கட்டடக் கலை வளர்ச்சியை மூன்றாம் பருவ வளர்ச்சி என்கிறோம், 1. காஞ்சிக் கைலாச நாதர் கோயில் 2. மாமல்லைக் கடற் கரைக் கோயில் 3, பனைமலை தாளகிரீசு வரர் கோயில் ஆகியவற்றை இம் மூன்றாம் பருவத்தில் எழுந்த கோயில் களாகக் கொள்ளலாம். இவை மேலே கூறப்பட்ட இருபருவக் கோயில்களிலும் முற்றிலும் மாறுபட்டவை ஆகும். இவைக் கட்டுமானக் கோயில்களாகும். சாளுவன்குப்பம்- புலிக்குகை, வல்லம், கீழ்மாவிலங்கை முதலிய இடங்களிலுள்ள குடைவரைக் கோயில்களும் இவனால் சமைக்கப் பட்டவை ஆகும், 1. "கோபுர அமைப்பு' இராசசிம்மன் காலத்தில் தொடங்கப் பெற்ற கட்டடக் கலையின் புதிய அங்கம் ஆகும். 2. சிகரம், பல்லவர் கால எண்பட்டை வடிவிலிருந்து மாறுபட்ட வடிவிலான வேசரபாணியாய்க் காட்சியளிப்பதும் இராச சிம்மன் காலத்ததாகும், 3. பிற பல்லவர் தூண்களில் சிம்ம உருவம் உட்கார்ந்து காணப் படுகிறது. ஆனால் இராசசிம்மன் தூண்களில் சிம்மம் நின்ற வண்ணமுள்ளது. இத்தகைய புதிய அங்கங்களைக் கொண்ட மூன்றாம் பருவக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் மாமயிலை மலை மேலுள்ள தாள கிரீசுவரர் கோயில், கடற்கரைக் கோயில், காஞ்சிக் கைலாச நாதர் கோயில் முதலியன வாகும். காஞ்சிக் கைலாயநாதர் கோயில் ஒரு சிறந்த கலைக் கூடம் ஆகும். இதன் ஒவ்வொரு அங்கத் திலும் கட்டடக் கலை யின் இலக்கணத்திற்கு ஏற்ற உறுப்புகள் உள்ளன. கோயிலில் அதிட்டானம், சுவர், கழுத்து கீரிவம்), சிகரம், தூபி (துமிளி) அனைத்து அங்கங் களும் உள்ளன. கருவறைச் சுற்றுப்பாதையும், இத் திருச்சுற்றில் சிற்றாலயங்களும் உள்ளன. நந்திவர்மப் பல்லவன் (கி.பி. 70-847 காலத்தில் கட்டப்பட்ட திருச்சி ஆலம்பாக்கம் கோயிலும் மூன்றாம் பருவத்தில் கட்டப் பட்டதாகும். நிருபதுங்கவர்மன் (கி.பி. 865-9d5) மனைவி பிருதுவி மாணிக்கம் என்பவரால் உக்கவில் கட்டப்பட்ட கோயில், நார்த்தாமலை பழியிலீச்சுரம் கோ (சிவன்) கோயில் ஆகியன சிறப்புடையன் வாகும். பல்லவரின் கட்டடக் கதைக்கோர் இறுதிச் சான் றாக உள்ளது திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோயில் ஆகும். இது அபராசிதவர் மன் (கி. பி. 870 – 890) படைப்பாகும். இது முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்ட கோவிலாகும். அதிட்டானம் முதல் பிரஸ் தரம் வரை சதுரமாகவும் அதன் மேலுள்ள கிரீடமும் சிகரமும் தூங்கானை வடிவிலும் உள்ளது. மற்ற கோயில் பகுதிகள் யாவும் அவற்றின் அங்கங்களைச் சீராகக் கொண்டு திகழ்கின்றன. ஆ. மாமல்லன் பாணி முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு அவனுடைய மகனான நரசிம்மவர்மன் அல்லது மாமல்லன் (கி.பி. 630-668) பல்லவ மன்ன னானான். தன் தந்தையின் பாணியில் பல் குடைவரைகளைச் சமைத் தான். அவற்றில் சிலவற்றை மகேந்திரன் பாணியில் இரண்டாம் பருவத்தில் கண்டோம். ஆயினும் தனக்கென ஒரு தனிப் பாணியை மாமல்லன் கையாண்டான். அந்தப் பாணியைத்தான் இவன் பெயராலேயே மாமல்லன் பாணி என்றழைக்கிறோம். மாமல்லன் பாணியின் தனிச் சிறப்புத் தன்மைகள் 1. குடைவரைகள் கபோதம் 1, முகப்பிலுள்ள கபோத வார்ப்புகள் ஒப்பனை ககளுடன் காணப்படும், தூண்2. மகேந்திரன் குடைவரைத்தூண்கள் சதுரமாகவும், கன மாகவும் இருக்கும். ஆனால் மாமல்லன் பாணியிலான தூண்களும் தலைப்புகளும் தெளிவாகவும் நளினமாகவும் காணப்படும். தூண் போதிகை வட்டமாகவும் பதினாறு பட்டைகளுடனும் இருக்கும். அவை சுருள் போதிகையாக இருக்கும். சிற்பங்கள் தூண்களில் திறந்த வாயுடன் உறுமிக்கொண்டிருக்கும் சிம்மங்கள் இருக்கும். இவை பின்னங்கால்கள் மடக்கி முன்னங் கால்களை ஊன்றி அமர்ந்த வண்ணம் இருக்கும். வியப்பான (அதிசய) விலங்குகளின் உருவங்கள் இருக்கும். அன்னப் பறவைகளின் அணிகள் இருக்கும். ஒப்பனைச் சிற்ப வணீகள் இருக்கும். இவை போன்ற சிற்பங்கள் மாமல்லன் பாணியி லான அவனுக்குப் பின் வந்த இராசசிம்மன் குடைவரைகளிலும் காணப்படும். ஒற்றைக்கல் தேர்கள் மாமல்லபுரத்தில் மொத்தம் ஒன்பது ஒற்றைக்கல் தேர்கள் இருக்கின்றன. அவற்றைப் போலவே ஒற்றைக் கல்லினாலான யானை, சிம்மம், எருது ஆகிய மூன்றும் உள்ளன. ஒற்றைக்கல் தேர்களாவன : 1. துரோபதைத் தேர் 2. அருச்சுனன் தேர் 3. பீமன் தேர் 4. தரும ராசன் தேர் 5, சகாதேவன் தேர் ஆகிய ஐந்தாகும். இவ்வைந்தையும் பஞ்சபாண்டவர் தேர்கள் என்றே பொதுமக்கள் அழைப்பர். இவற்றைத் தவிர கணேசர் தேர், வலையன் குட்டைத்தேர், பிடாரித் தேர்கள் இரண்டு ஆக மொத்தம் ஒன்பது ஒற்றைக்கல் தேர்கள் மாமல்லபுரத்தில் உள்ளன. கணேசன் தேரை அந்தியந்திக் காழப் பல்லவேச்சுரம் என்ற கோயிலாகுமென்பர். துரோபதைத்தேர் கொற்றவைக் கோயில் என்றும் பள்ளிப்படைக் கோயில் என்றும் கூறுவர். கணேசர் தேரும் துரோபதைத் தேரும், மாடக்குழி (கோஷ்ட் பஞ்சாரம்), கருவறை, விமானம் முதலிய உறுப்புகளையும் பெற்று முழுமை பெற்ற தனிக்கோயில்களைப் போலவே உள்ளன. இத்தேர்கள் யாவும் திராவிடக் கட்டடப் பாணிகளின் மாதிரி கள் என்றும், அவை மொத்தமாக இங்கே ஒருங்கே நிறுவப்பட்டிருக் கின்றன என்றும், இவை இல்லாமற் போயிருந்தால் பழங்காலத் திராவிடக் கோயில்களைப் பற்றிய சுவடே மறைந்து போயிருக்கும் என்றும் ஈராசுப்பாதிரியார், தனது 'பல்லவர் வரலாற்றில் " கூறுகிறார். இவை யாவும் பெருங்கற்காலச் சின்னங்களாகும் என்ற ஒரு கருத்து முள்ளது, ஈமச் சின்னங்களிலிருந்து திராவிடக் கோயில்களின் தோற் நம் தொடங்கியது. இவை அவற்றினின்று சற்று வளர்ச்சி பெற்றுத் தோற்றங்க ளோடு காணப்படுகின்றன என்று டாக்டர் பி. கே. குருராச ராவ் கூறுகிறார். மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைந்து திராவிடப் பாணியின் அடித்தளத்தின் சின்னமாக மண்டபங் களை அமைத்தான். அவற்றில் நிறைவு செய்யப்படாத விமானங் களும் பிற உறுப்புகளும் இத்தேர் களில் தெளிவாக படைக்கப்பட்டுத் திராவிடர் கட்டடம் நிறைவு செய்யப்பெற்ற நுள்ளது என்று மயிலை சீனி வேங்கடசாமி, தனது 'வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்" என்ற நூலில் குறிப்பிடுகிறார். எனவே இவை தேர்கள் அல்லது இரதங்கள் அல்ல, பஞ்ச பாண்டவர்கள் இரதங்களும் அல்ல. திராவிடப் பாணிக் கோயில்களே ஆகும். வடக்கிலிருந்து தெற்கே நோக்கி பார்த்துக் கொண்டு சென்றால் துரோபதைத் தேர், அருச்சுனன் தேர், பீமன், தருமராசர் தேர் ஆகிய நான்கும் வரிசையாகக் காணப்படுகின்றன. இவை யாவும், ஒரு பெரிய நீண்ட பாறையை வெட்டித் தனித்தனியே செதுக்கப்பட்ட தேர்கள் எனலாம். இற்றிலுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் விருதுப் பெயர்கள் யாவும் இராசசிம்மன் (கி.பி. 695-722) விருதுப் பெயர்களாகவே உள்ளன என்றும், இதனால் இவை இராசசிம்மனால் சமைக்கப் பெற்றவை ஆகும் என்றும் முனைவர் இரா. நாகசாமி 'தமிழ்நாட்டுக் கலை' என்னும் நூலில் குறிப்பிடுகிறார். இத் தேர்களின் கருவறை களில் மூலவர் வண்ணம் தீட்டிய சுதையால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் மிகவும் பெரிய தேர் தருமராசர் தேராகும். மிகவும் சிறியது துரோ பதைத் தேர் ஆகும். துரோபதைத் தேர் ஒரு துர்க்கைக் கோயிலாகும். இதன் முன்புறத்தில் சிம்ம உருவமும், யானை உருவமும் உள்ளன. இதில் கோயில் உறுப்புகள் யாவும் அமைந்துள்ளன. இதனை ஒரு நாகர வகைக் கோயில் என்பர். இதன் விமானம் இளங்கோயில் வகையைச் சேர்ந்தது. 2. அருச்சுனன் தேர்: இரண்டு தளங்களைக் கொண்ட சதுர வடிவிலானது. இதன் சிகரம் ஆறு பட்டைகளைக் கொண்டது. அருச்சுனன் தேர், ஒரு பெளத்த சைத்தியம் போலுள்ளது என்பர். இதன் விமானம் எட்டுப் பட்டைகளை உடையதும் மணி' வடிவில் ஆனது மாகும். இது எந்தக் கடவுளுக்குச் சமைக்கப்பட்ட கோயில் என்பது விளங்கவில்லை. 3. பீமன் தேர்: நீள சதுர வடிவமானது, சிதம்பரம் நடராசர் கோயிலைப் போலுள்ளது. மேற்புற அமைப்பும், சாளர அமைப்பும் காஞ்சிக் கைலாயநாதர் கோயிலை ஒத்துள்ளான். நால் சதுர மண்டப மும், அதன் மேல் ஒரு படகைக் கவிழ்த்து வைத்தாற் போன்ற விமானமும், நாற்புறமும் தாழ்வாரமும் உள்ளன. அடியில் முகப்பி லுள்ள மண்டபத்தில் நரசிம்மன் பாணியிலான சிம்மங்களின் உருவங் கள் பொறிக்கப் பட்டுள்ளன. விமானத்தில் இரட்டைத் தூண்களைக் கொண்ட கோட்ட பஞ்சரங்கள் உள்ளன. இதில் தெய்வப் படிமங் களோ, வாயிற் காப்போரோ இல்லை. 4.தருமராசர் தேர்: இது ஒரு சிவன் கோயிலாகும். கல்வெட்டில் அந்தியந்திக் காமப் பல்லவேச்சுர கிரகம்' என்று இதன் பெயர் குறிப் பிடப்படுகிறது. இதன் சுவரில் இராசசிம்மனின் விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்தேர்களில் மிகவும் உயர மானது இத் தருமராசர் தேர்தான். இதன் உயரம் 39 அடி ஆகும். இதன் அமைப்பு 28 அடி பக்கமுள்ள சம் சதுர அமைப்பாகும். மூன்று தளங்களையுடையது. ஒவ்வொரு தளத்திலும் கருவறை யுள்ளது. சிகரம் எட்டுப் பட்டைகளுடையது. இதன் விமானம் பனைமலைக் கோயில், கைலாசநாதர் கோயில், கடற்கரைக் கோயில் விமானங்களை ஒத்திருக்கிறது. 5. சகாதேவன்தேர்: இது மேற்கண்ட நான்கு தேர்களை விடச் சற்றுத் தனித்து நிற்கிறது. இது ஆலக்கோயில் அல்லது யானைக் கோயில் வகையைச் சேர்ந்தது. திருத்தணி வீரட்டானேசுவரன் கோயில், ஓரகடம் வாடாமல்லீசுவரர் கோயில் ஆகிய ஆனைக் கோயில்கள் மாதிரியே உள்ளது. இதன் அகலம் 16 அடி நீளம் 18 அடி உயரம் 16 அடி ஆகும். முன்புறமுள்ள தூண்களில் சிம்மம் உள்ளது. மூன்று தளங்களை உடையது. முகப்பில் புத்தக் கோயி லைப் போன்ற புடைப்புச் சிற்பம் உள்ளது. மூன்று கொம்புள்ள மனித உருவமும், புடைப்புச் சிற்பமாக உள்ளது. இத்தேரைப் "பூமிஜா' பாணியோடு ஒப்பிடலாம். 5. இரண்டு பிடாரித் தேர்கள்: இவை இரண்டும் முடிவுறாத தேர்கள் ஆகும். உச்சியில் நான்கு பட்டைகளால் ஆன இளங்கோயில் விமானமுள்ளது. இவை. ஊர்த்தேவதைக் கோயிலாகும். இ) இராசசிம்மன்பாணி (கட்டுமானக் கோயில்கள்) தனிப்பாறைகளைச் செதுக்கி சமைத்த தனிப்பாறைக் கற் கோயில்களைத் தேர்கள்) கடல்மல்லையில் கண்டோம். அவற்றை மாமல்லன் பாணி என்கிறோம். ஆனால் இவற்றைச் சமைத்தவன் இராசசிம்மனே என்பது கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு சொன்னோம், பல்லவரின் கட்டடக் கலைப் பாணியில் இராசசிம்மன் பாணியின் கீழ் சில கட்டுமானக் கோயில்களைப் பார்ப்போம். தன்மைகள் இப் பாணியிலான கோயில்களின் எடுப்புத் தோற்றம் ஒரு தேரைப் போலவே இருக்கும். அடியிலிருந்து மேலே செல்லச் செல்ல நாற்கர வடிவில் அமைந்துள்ள அதன் விமானத் தட்டுகள் குறைந்து கொண்டே சென்று முடியும், கருவறைக்கு மேல் விமானம் இருக்கும். விமானத் தட்டில் கொடுங்கை இருக்கும். மூலவர் இலிங்க வடிவில் இருப்பார். கட்டடத்தின் மூன்று பக்கங்களிலும் மாடக் குழிகள் இருக்கும். இவற்றிலும் இலிங்கம் இருக்கும். இலிங்கம் பட்டை வடிவிலிருக்கும். எட்டு அல்லது பதினாறு பட்டைகளை உடையது. தூண்களில் சிம்மம், பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றிருக் கும். கருவறையில் மூலவரான இலிங்கத்திற்குப் பின்னுள்ள சுவரில் சோமாஸ்கந்தர்' புடைப்புச் சிற்பமாகக் காணப்படுவார். இதனைச் சுற்றிச் சிற்ப அணிகளும் சோடனைகளும் இருக்கும். எடுத்துக்காட்டுகள் 1. பனைமனை - சிவன்கோயில் விழுப்புரம் வட்டத்திலுள்ள இவ்வூரில் இராசசிம்மன் கட்டிய தாலகிரீசுவரர் கோயில் உள்ளது. இது சிவப்புக் கருங்கல்லால் கட்டப் பட்டது. சமசதுர அமைப்புடைய மூன்று விமானங்களைக் கொண்டது. மூன்றாவது தளம் செங்கற்களால் கட்டப்பட்டது. கருவறையில் சிவலிங்கமும், அர்த்த மண்டபத்தில் (இடை நாழிகை) விசுணுவும், பிரம்மாவும் உள்ளனர். இக்கோயிலில் வாயிற் காப்போர் (துவாரபாலகர்) சிற்பம் தவிர வேறு சிற்பமில்லை. இதே போன்ற அமைப்பு உடையதுதான் மாமல்லபுரத்து முகுந்த நாயினார் கோயில் ஆகும். காஞ்சிக் கைலாசநாதர் கோயிலின் சிறு போலிகையே (மாதிரியே) பனை மலைக் கோயில் என்பார் கலைஞர் பெர்சி பிரௌவுன். இவ்விரு கோயில்களும், ஒரே காலத்தில் ஒரே பாணி யில் இராசசிம்மனால் கட்டப் பட்டவையாகுமெனவும் கூறுவர். 2. காஞ்சிக் கைலாசநாதர் கோயில் பல்லவரின் கட்டுமானக் கோயில்களில் மிகவும் பெரியதும், புகழ்பெற்ற கலைச் செல்வமுடையதும் இக்கோயிலே ஆகும். இக்கோயில் முழுவதும் மணற்கல்லால் கட்டப்பட்டதாகும். இதனை "இராச சிம்மேசுவரம்' என்றே அழைப்பர். இது நான்கு தளங்களை யுடையது. சுமார் 60 அடி உயரமுள்ளது. நீள்சதுர வடிவிலானது. விமானம் சதுரமானது. கழுத்தும், சிகரமும் எண் பட்டைகளாக உள்ளன. அர்த்த மண்டபத்தில் இராசசிம்மன் கல்வெட்டும், முன் மண்டபத் தூணில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்த னுடைய கன்னடக் கல்வெட்டும் உள்ளன, சிம்மத் தூண்களைக் கொண்ட மேடை மீது நந்தியுள்ளது. கருவறையில் ஆறு அடி உயரமுள்ள பதினாறு பட்டைகளைக் கொண்ட இலிங்கம் உள்ளது. வலம் வரும் பாதை குறுகலாக ஒரு புழை வழியாகச் செல்கிறது. கோபுரம் பிரமிடு வடிவில் முடிகிறது. 3. காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் இரண்டாம் நந்திவர்மப் பல்லவனால் கட்டப்பட்டதாகக் கொள்ளப்படும் இக்கோயில் 'பரமேசுவர விண்ணகரம்' என்று போற்றப்படுகிறது. பொதுவாகப் பல்லவர்களால் கட்டப்பட்ட திருமால் கோயில்கள் 'விண்ணகரம்' என்றே அழைக்கப்படும். இக்கோயில் நீள்சதுர வடிவிலானது . இக் கோயிலில் இருந்த வண்ணம், நின்ற வண்ணம், கிடந்த வண்ணம் ஆகிய மூன்று நிலை களில் திருமால் உள்ள மூன்று கருவறைகளைக் கொண்ட மூன்று தளங்கள் உள்ளன. இக்கோயில் பல்லவர் வரலாற்றை அறிய உதவும் புடைப்புச் சிற்பப் பாணியைக் கொண்டுள்ளது. பல்லவர் கட்டடங்களில் முதன் முதலாக அட்டாங்க வகைக் கட்டடம் இதுவே ஆகும், தென்னிந்தியக் கோயில்களில் 'பொதுவாக" ஆறு அங்கங்களான அதிட்டானம், பிட்டி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், கலசம் ஆகியவையே உள்ளன. ஆனால் இக்கோயிலில் மேலும் இரண்டு கருவறைகள் உள்ளதால் இதனை அட்டாங்க விமானம் என்பர். இதில் தான் விசுணுவின் நின்ற, அமர்ந்த, கிடந்த வண்ணமுள்ள உருவ அமைதி நிலைகள் உள்ளன. இதனை ஒரு மூன்றடுக்கு மாடிக் கோயில் என்றே பொதுமக்கள் அழைப்பர். ஈ) நந்திவர்மன் பாணி பல்லவர்கள் சாளுக்கியராலும் சோழர்களாலும் தோற்கடிக்கப் பட்ட பின்னும் நந்திவர்மனும் அவனுக்குப் பின் வந்தவரும். கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். கடைசி மன்னனான அபராசிதன் என்பவன் முதலாம் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டான். இதன் பிறகு சோழர்களும் பிற்காலப் பல்லவர் பாணியைப் பின்பற்றியே கோயில்களைக் கட்டினர். நந்திவர்மன் பாணியிலான கோயில்கள் பல்லவர் காலக் கட்டடக் கலையின் தேய்மானக் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். கைலாச நாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில் போன்று மாபெரும் கட்டடங்களை இதில் காணமுடியாது. சிறிய கட்டடங் களே ஆயினும் பல்லவரின் கலைத்திறன், நளினங்கள் காணப்படு கின்றன. அவ்வாறு கட்டப்பட்ட ஒரு சில கோயில்களை இங்கு எடுத்துக்காட்டாகப் பார்ப்போம். 1. கூரம் சிவன் கோயில் (கற்றளி) காஞ்சிக்கு வடக்கில் ஒன்பதாவது கல்லில் உள்ள கூரத்தில் உள்ள இக்கோயில் முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 570-695) என்பவனால் கட்டப்பட்டது. இது பற்றிய செய்திகள் கூரம் செப் பேட்டில் கிடைக்கின்றன. இதன் அடித்தளம் சோழர் பாணியில் உள்ளது. கோபுரம் எடுப்பாகவும், மேல்தளங்களில் நந்தியின் உருவங் களும் உள்ளன. இது பல்லவரின் முதல் கட்டுமானக் கோயிலென்றும், அது அழிந்த பின் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் மீண்டும் கட்டப் பட்டது என்றும் கூறுவர். 2. ஓரகடம் - வாடாமல்லீசுவரன் கோயில் காஞ்சிக்கு வடக்கில் ஒன்பது கல்லில் உள்ள கூரத்தில் உள்ள இக்கோயில் முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670 - 895) என்ப வனால் கட்டப்பட்டது. இது பற்றிய செய்திகள் கூரம் செப்பேட்டில் கிடைக் கின்றன. இதன் அடித்தளம் சோழர் பாணியில் உள்ளது. கோபுரம் எடுப்பாகவும், மேல்தளங்களில் நந்தியின் உருவங்களும் உள்ளன. இது பல்லவரின் முதல் கட்டுமானக் கோயிலென்றும், அது அழிந்தபின் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் மீண்டும் கட்டப் பட்டது என்றும் கூறுவர். மாமல்லபுரத்துச் சகாதேவன் தேரைப் போன்ற இக்கோயில் செங்கல்பட்டுக்கு ஏழுகல் தொலைவில் உள்ளது. இதில் கல்வெட்டுகள் இல்லை. எனவே, இதன் வரலாற்றை அறிய முடியவில்லை . 3. திருத்தணி - வீரட்டானேசுவரர் கோயில் சதுரவடிவிலான இக்கோயிலில் இலிங்கம் மூலவராக உள்ளது. மாடக்குழிகளில் பிரமன், சிவன், திருமால் ஓருவங்கள் உடள்ளன. முகமண்டப மாடக் குழியில் கொற்றவையின் உருவம் உள்ளது. கொற்றவைக்கு இரு கைகளும், மற்ற சிலைக்கு நான்கு கைகளும் உள்ளன. இது பல்லவர் சிற்பத்தில் காணும் ஒரு புதுமை ஆகும். விமானம் புத்தத் துமிளி போல் உள்ளது. இக்கோயில் முழுவதும் கல்லால் கட்டப்பட்டதாகும். 4. குடிமல்லம் - பரமேசுரர் கோயில் 5. காஞ்சி - முத்தேசுவரர் கோயில் 6. காஞ்சி - மதங்கேசுவரர் கோயில் 7. காஞ்சி - திருப்பராந்தகேசுவரர் கோயில் 8. காஞ்சி - ஐராவதேசுவரர் கோயில் ஆகியனவும் நந்திவர்மன் பாணியிலான கட்டடங்களே, முடிவுரை இவ்வாறு குகைக் கோயில்களையும், ஒற்றைக் கல் தேர் களையும், கட்டுமானக் கோயில்களையும் பல்லவர்கள் படிப்படியாக வளர்த்துப் பல் பாணிகளில் கட்டினர். கட்டுமானக் கோயில் களில் சிவன் கோயிலாயின் அவற்றில் இலிங்கம் மூலவராகவும், சோமாசுகந்தர் புடைப்புச் சிற்பமாகவும் இருக்கின்றன. தூங்கானை மாடக் கோயில்களின் (கஜபிரஸ்டம்) வளர்ச்சியும் இக்காலத்தில் ஏற் பட்டதாகும். திசைக்கேற்ப தேவதைகளை அமைக்கும் வழக்கமும் இக் கோயில்களில் ஏற்பட்டன. தெற்கே கணபதியும், வடக்கே துர்க்கையும் கோட்ட தேவதைகள்) வைக்கும் முறையைப் பின் பற்றினார்கள். தூண்கள், அரைத் தூண்கள் ஆகியவற்றில் அமர்ந்த, நின்ற வண்ணமுள்ள அரிமாக்களை அமைக்கும் பாணியும் இவர் களால் தொடங்கப்பட்டது. தூண் தலைப்புகள் கோணப் போதிகை, தரங்கப் போதிகை என கலைநயத்தோடு வளர்ந்தன. 2. சிற்பக்கலை பல்லவர் காலச் சிற்பங்களை முழுவுருவச் சிற்பங்கள், சுவர்ச் சிற்பங்கள். (அல்லது புடைப்புச் சிற்பங்கள்) என இருவகையாகப் பிரித்து அறியலாம். இவற்றையும் தெய்வத் திருமேனிகள், மாந்தப் படிமங்கள், பிற உருவங்கள் என மூன்றாகப் பிரித்தறியலாம், முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600-630) காலத்துக் குடைவரைக் கோயில்களில் சிற்பங்கள் முகாமை பெறவில்லை. கோயில்களின் முகப்பிலும், தூண்களின் மீதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இவற் றுள்தாமரைப்பூ, அணி அலங்காரம் ஆகியவைதான் காணப்பட்டன. கோயில் கருவறை யில் தெய்வ உருவங்கள் செதுக்கப்படவில்லை. வாயிற் காப்போர் சிற்பங்கள் இருந்தன. தூண்களின் மேற்பகுதியில் சிவபெருமான், உமையாள் உருவங்கள் சிறிய அளவிலிருந்தன. வாயிற்காப்போர் மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மகேந்திரவாடி, திருச்சி, தளவானூர் ஆகிய இடங்களில் மகேந்திரவர்மன் காலத்தில் எடுக்கப் பட்ட குடைவரைக் கோயில்களில் வாயிற் காப்போர் சிற்பங்கள் ஒன்றே போலில்லாமல் மாறுபட்டுள்ளன. இவை கூம்பு வடிவான கிரீடமும் நீண்ட முகமும் தடித்த உதடும் அகன்ற தோளும் குறுகிய இடையும் கொண்டுள்ளன. பெரும்பாலும் இவற்றின் அடிப்பாகம் செம்மையாகச் செதுக்கப்படவில்லை. மகேந்திரவர்மன் காலத்துப் புடைப்புச் சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன. வாயிற் காப்போர் சிற்பங்கள் இரண்டு கைகளுடனும் தலை யில் கொம்புடனும் கையில் கதையுடனும், காதில் பத்ர குண்டலங் களுடனும், கழுத்தில் அணிகலன்களுடனும் மார்பில் பெரிய புரி நூலுடனும் (யக்ஞோபவீதம்) உள்ளனர். பிள்ளையார் கோட்டங்களிலுள்ள சிற்ப வரிசையில் பிள்ளையார் காணப் படுகிறார். இவருடன் சேட்டை தேவி சிற்பமும் உள்ளது. மகேந்திர வர்மன் காலத்தில் பிள்ளையார் இல்லை. வாதாபியைக் கொண்டு நரசிம்மன்தான் வாதாபியில் இருந்து பிள்ளையாரை வாதாபி கணபதியாகக் கொண்டு வந்தான். எனவே வல்லம் வசந்தேசுவரர் குடைவரையிலுள்ள கணபதி பிற்காலச் சிற்பமாகலாம். காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் பிள்ளையார் உள்ளது. ஆனால் வெல்லம் குடைவரைச் சிற்பம் சிற்ப அணியாகத்தான் உள்ளது. அவருக்கு நான்கு கைகள் உள்ளன. இடது மேல் கையில் தாமரை மொட்டுள்ளது. முப்புரி நூலும் உள்ளது. கங்காதரர் திருச்சி லலிதாங்கேசுவரர் குடைவரை - கங்காதரர் சிற்பம் தத்ரூபமாயுள்ளது. கங்கை வானுலகிலிருந்து இழிந்து வருவதை சிவபெருமான் தன் வலது கையை மேலே தூக்கித் தன் சடா முடியில் தாங்கி விடுகிறார். தனது இடது காலைத் தரையில் அழுத்தமாக பன்றி கங்கையின் வேகத்தைத் தாங்கும் காட்சிக் கண்ணுக்கு இனிதா யுள்ளது. இச்சிற்பத்தின் நான்கு மூலைகளிலும், நான்கு வித்யாதரர் கள் வணங்கிய வண்ணம் உள்ளனர். கங்காதர மூர்த்திக்கு நான்கு கைகள், அகன்ற தோள்கள், குறுகிய இடை உள்ளன. இது ஒரு மாவீரன் உடலைப் பிரதிபலிக்கிறது. புரிநூல் இவருக்கு மட்டுமே யன்றி, வித்தியாதரர்களுக்கும் இருக்கிறது. கணுக்கால் வரையுள்ள ஆடை மடிப்புகளுடன் இடுப்பில் சொருகப்பட்டுள்ளது. வித்தியா தரர்கள் பறப்பது போல் உள்ளனர். இஃது சாளுக்கியர் பாணி ஆகும். மற்ற உருவங்கள் இரண்டு கைகளுடன் உள்ளன. சோழர் காலக் கங்காதரர் சிற்பங்களில் பார்வதியும் இருப்பார். ஆனால் மகேந்திரன் காலக் கங்காதரர் தனியாகவே உள்ளார். கங்கா தரர் சிற்பம் அருச்சுனன் தவம் என்னும் படைப்புச் சிற்பவணியிலும் உள்ளது. மாமல்லபுரத்து ஆதிவராகர் குடைவரையிலும் உள்ளது. இது நரசிம்மவர்மன் காலத்தது. சிவபெருமான் (ஆடலரசன்) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியையடுத்த சீயமங்கலத் திலுள்ள அவனிபாசனன் கோயிலில் ஆடலரசன் சிற்பம் உள்ளது. இந்த ஆடவல்லான் சிற்பம் பிற்காலத்தில் புகழ்பெற்ற சோழர்களின் ஆடவல்லான் சிற்பங்களுக்கும் செப்புத் திருமேனிகளுக்கும் முன்னோடி யானதாகும். பொதுவாக, நடராசன் சிற்பங்களில் முயலகன் உருவம் இருக்கும். ஆனால் இதில் தூக்கிய இடது காலின் கீழ் பாம்பு உள்ளது. கணநாதர் இரு கைகளால் மத்தளம் அடிக்கிறார். கால்களில் கிண்கிணிகள் உள்ளன. நான்கு கைகளையுடைய ஆடலரசர் வலது மேல் கையில் தீச்சுடர் ஏந்தியுள்ளது. இடது கீழ்க்கை தொங்கிக் கொண்டு காணப்படுகின்றது. இச் சிற்பத்தில் நெற்றிக்கண், வளர்பிறை, கபாலம் ஆகிய மூன்றும் உள்ளன. ஆனால் திருச்சி கங்காதரர் மூர்த்தியாக உள்ள சிவபெருமானுக்கு இம்மூன்றும் இல்லை, கிரீட மகுடத்தில் வலப் புறம் வளர்பிறையும், இடப்புறம் கபாலமும் உள்ளன. காதுகளில் பெரிய பத்ர குண்டலங்கள் உள்ளன. இச் சிற்பத்தின் அலைபாயும் சடைமுடியும் பறக்கும் உடையும் மற்ற அங்க அசைவுகளும் நடனமாடும் உடலுறுப்பாகச் செயலில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. இச்சிற்பம், வழவழப்பாகச் செதுக்கப்படாமல் கரடு முரடாகவும், கை கால்கள், சீராக அமையாமலும், சதைப் பற்றுள்ள வட்ட முகத்துடனும், பிதுங்கிய பெரிய கண்களுடனும், தடித்த உதடுகளுட னும், தடித்த அகன்ற மூக்குடனும், காணப்படுவதால் இது உடலுக் கானலட்சணத்துடனில்லை என்று குறை கூறுவர். இது மகேந்திரவர் மனின் தொடக்கக் கால நடராசர் என்று நினைத்தால் இக்குறை தோன் றாது. இதன் தலையைச் சுற்றி 'பிரபை' வளைவு (ஒளிக் கற்றை) அலங்காரமும் இல்லை . மேற்குப் புறமுள்ள சுவர்களில் முக்கோண வடிவிலான மாடக் குழிகளில் பெண்கள் பூக்களைப் பறித்துப் பூக்கூடைகளில் போடு கிறார்கள். அவர்களின் தலைமயிர்ஒப்பனை ஒரே மாதிரியாக இல்லை. சிவ-பார்வதி எருது வாகன மூர்த்தி இதனை 'உமா சகித ரிசப் வாகன மூர்த்தி' என்று அழைப்பர். இச் சிற்பமும் இக் கோயிலில் உள்ளது. சிவன் நந்தி (எருது) மீது சாய்ந்து நிற்கிறார். அருகில் பார்வதி நின்றிருக்கிறார். சிவனுக்கு நான்கு கைகள் உள்ளன. மேலே உள்ள இரு கைகள் மான், அக்க மாலை ஆகியவற்றை ஏந்தியவாறும் வலது கீழ்க்கை 'அபய' முத்திரையுட னும், இடது கீழ்க்கை நந்தியின் மீதும் உள்ளன. சிவனோடு பார்வதியும் இருப்பது என்பதை இந்த சிற்பத்தில் தான் முதலில் பார்க்கிறோம். 6, துர்க்கை (கொற்றவை) செஞ்சி - சிங்கவரத்திலுள்ள புடைப்புச் சிற்பம் கொற்றவை சிற்பமாகும். ஐந்தடி சதுரத்திற்குள் உள்ள இச் சிற்பம் மகிடாசுர மர்த்தினியாக உள்ளது. வலது காலை எருமையின் தலை மேலும் இடது காலைத் தரை மேலும் வைத்து துர்க்கை நிற்பது கோபாக்கினி யோடு காட்சியளிக்கிறது. நான்கு கைகள் உள்ளன. மேலேயுள்ள வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் வைத்துக் கொண்டு, கீழேயுள்ள வலக்கையைத் தொடையில் ஊன்றியும், இடக்கையை இடுப்பில் வைத்தும், அபய முத்திரை காட்டியும் நிற்கிறது. காதுகளில்: பொன் தொடிகளும், வளையல்களும், இடுப்பில் மேகலையும், கால்களில் சிலம்பும் உள்ளன. கண்களில் அச்சம் தரும் பார்வையுடன் உள்ள இக் கொற்றவை மகிடாசூரனைச் சங்காரம் செய்யும் காட்சி அச்சத்தை உண்டாக்குகிறது. கொற்றவைக்கு அருகில் நிற்கும் இருவர் பூசாரிகள் போல் நீடள்ளனர். வலது புறமுள்ளவர் தன்னைத்தானே குறுவாளால் குத்திக் கொள்கிறார். இடப்புறம் இருப்பவர் எதையோ கொற்றவைக்குப் படைக்கிறார். கொற்றவைச் சிற்பங்களில் சிங்கவரம் கொற்றவை ஒரு புதுமை யானதாகும். ஆதிவராகன் குடைவரையிலுள்ள கொற்ற வைக்குத் தலையை அறுத்துக் காவு கொடுப்பதைக் காணலாம். ஆனால் இங்குக் குறுவாளால் தன் தொடையைக் குத்தித் தசையை எடுத்து நவகண்டம் படைப்பதைப் பார்க்கிறோம். மற்ற கொற்றவை எருமைத் தலை மீது நிற்கின்றன. சிங்கவரம் கொற்றவை எருமைத் தலைமீது காலை வைத்துள்ளது. கொற்றவை வழிபாடு தமிழரின் மரபு வழிபாடாகும். கொற்றம் என்றால் வீரம் என்பது பொருள். வீரர்கள் போரில் வெற்றி பெற்றால் தன்னைக் காவு கொடுப்பதாக வஞ்சினம் கூறி அவ்வாறே செய்வர். மகேந்திரவர்மன் காலத்துச் சிற்பங்களில் சிங்கவரம் சிற்பங்கள் தனிச் சிறப்புடையனவாகும். இவனுடைய மண்டகப்பட்டு வாயிற் காவலரில் தொடங்கி திருச்சி - கங்காதர மூர்த்தி, சீயமங்கலம் ஆடலர சன், சிங்கவரம் கொற்றவை வரையுள்ள சிற்பங்கள் தொடக்க காலச் சிற்பங்களாயினும் இவற்றில் வளர்ச்சிப் பருவத்தைக் காணலாம். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மகேந்திரன் காலக் குடைவரைச் சிற்பங்களை வளரும் - நிலையில் கண்டோம். இனி வளர்ச்சியடைந்த நிலையிலான மாமல்ல புரம் சிற்பங்களைக் காண்போம். மாமல்லபுரத்துப் படைப்புகள் இராசிம்மன் (கி.பி. 695 - 722) படைப்புகளே என்றும், இதற்குக் காரணம் இவற்றில் காணப்படும் விருதுப் பெயர்கள் யாவும் அவனும் டையதே என்றும் டாக்டர் ஆர். நாகசாமி அவர்கள் சுட்டிக் காட்டி யதைக் கண்டோம். மகிடாசுர மர்த்தினி குடைவரைச் சிற்பங்கள் மகிடாசுரமர்த்தினி குடைவரையை 'எமபுரிக் குகை' என்று அழைக்கின்றனர். இக் குடைவரையிலுள்ள சிற்பங்களில் சிறந்தது சோமாசுகந்தர் சிற்பமாகும். 1. சோமாசுகந்தர் அணி பல்லவர்காலக் கோயில்களுக்கே தலையாய சிறப்புடையது சோமாசுகந்தர் உருவம்தான். மகிடாசுரமர்த்தினி குடைவரையின் பின் புறச் சுவரில் இந்த உருவம் புடைப்புச் சிற்பமாகவுள்ளது. சிவன், பார்வதி, குழந்தை முருகன் ஆகிய மூவரும், ஒரு நீண்ட கட்டில் போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளனர். சிவன் நான்கு கைகளுட ணும் பார்வதி இரண்டு கைகளுடனும் உள்ளனர். சிவன் இடப்புற மேல்கையில் செபமாலை தாங்கியும், வலப்புற மேல்கையில் பரி வட்டம் தாங்கியும் உள்ளார். இடப் புறக் கீழ்க்கையில் கடக முத்திரையைக் காட்டியுள்ளார். பார்வதி அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வலக் காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, இடக்கையை ஊன்றிச் சற்று ஒருக்களித்து அமர்ந்து உள்ளார். கந்தன் குழந்தையாகப் பார்வதி யின் மடி மீது அமர்ந்து உள்ளார். சிவன், பார்வதி இருவரது கால்களும் கீழே படுத்துள்ள எருதின் முதுகில் உள்ளன. கீழே முனிவர் ஒருவர் அமர்ந்துள்ளார். சிவனுக்குப் பின்னால் பிரம்மன் நான்கு கைகளுடன் நிற்கிறார். மற்றொரு புறத்தில் விசுணு நான்கு கைகளுடன் நிற்கிறார். 2. மகிடாசுர மர்த்தினி அணி இக் குடைவரையிலுள்ள இச் சிற்பம் புடைப்புச் சிற்பமாகவே உள்ளது. இதில் கொற்றவையும் அவளைச் சேர்ந்த பூதகணங்களும் ஒரு புறமும், மகிடாசுரனும் அவனைச் சேர்ந்த அசுரர்களும் மறுபுற மும் எதிர் எதிரே போரிடும் காட்சி உயிரோட்டமாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. சீறிவரும் சிங்கத்தின் மீது அமர்ந்து துர்க்கை , எதிர்த்து நிற்கும் மகிடாசுரனைத் தனது கைகளினால் எதிர்க்கிறாள். கைகளில் வில், அம்பு, சக்கரம், குறுவாள், சங்கு, பாசக்கயிறு முதலிய ஆயுதங் களை ஏந்தியுள்ளாள். அவளுடைய மணமுடிக்கு மேல் பூதகணம் ஒன்று குடைபிடிக்கிறது. கைகளில் கடகம், கழுத்தில் பொன்னரி மாலைகள், காலில் சதங்கை, கச்சை கட்டிய ஆடை இவற்றுடன் சிங்கத்தின் மேல் அமர்ந்துள்ள துர்க்கை மகிடாசுரனை எதிர்க்கிறாள். மகிடாசுரன் பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, வலக் காலைத் தரையில் ஊன்றிக் கொண்டு அவளைத் தாக்க முற்படுகிறான். கொற்றவையின் பின்புறம் ஐந்து பூத கணங்கள் வாளும் கேடயமும் ஏந்தி நிற்கின்றன. இவ்வாறே பல பூத கணங்களும் சுற்றி நிற்கின்றன. மகிடாசுரனுக்கு அருகில் மூவர் நிற் கின்றனர். ஒருவனுடைய தலை துண்டிக்கப்பட்டுக் கீழே விழுகிறது. இத்தகைய வீர உணர்ச்சி மிக்க சிற்பம் இது ஒன்றே ஆகும். 3. அனந்த சயனன் அணி மகிடாசுர மர்த்தினி சிற்பத்திற்கு எதிர்ப் புறத்தில் ஐந்து தலை அரவின் மீது விசுணு துயில் கொள்ளும் காட்சியே அனந்தசயனன் சிற்பமாகும், விசுணுவின் காலருகே இரு அரக்கர்கள் ஆணவத்தோடு நிற்கின்றனர். மேலே போக நித்திரையாக சக்தி பறந்து செல்லுகிறாள். விசுணு ஆதிசேடன் படுக்கையில் நீட்டிப்படுத்துக் கொண்டு வலது கையைத் தொங்க விட்டுக் கொண்டும் இடது கையை மடக்கிக் கடக முத்திரைக் காட்டிக் கொண்டும் உள்ளார். படுக்கைக்குக் கீழே பூமா தேவி இரு கைகளைக் கூப்பி மண்டியிட்டு இவரை வணங்குகிறாள். அவளுக்கு முன்னால் இரண்டு இளைஞர்கள் நிற்கின்றனர். அவ் விளைஞர்கள் திருமாலின் சக்கரமும் வாளுமாகும். சக்கரம் சுதர்சனன் ஆகவும், வாள் நந்தகனாகவும் உள்ளனர். மேலே இரண்டு பறவைகள் பறப்பது போல் காட்சி அளிக்கின்றன. திருமாலின் கொப்பூழில் இருந்து தாமரைக் கொடியும் முனையில் பிரம்மனும் இதில் காணப்பட வில்லை. வராக மண்டபச் சிற்பங்கள் பூவராகன் அணி வராக மண்டபத்தில் வராகம், கஜலட்சுமி, துர்க்கை, திரிவிக்ரமன் ஆகிய சிற்பங்கள் உள்ளன. அவற்றில் முகாமையானதுதான் வராகன் அல்லது பூவராகம் சிற்பமாகும். வராகன் நான்கு கைகளுடன் உள் ளார், மேலே உள்ள கைகளில் சங்கும் சக்கரமும் உள்ளன. கீழுள்ள இரு கைகள் நிலமகளை அணைத்தவாறு உள்ளன. பூமகள் வராக ரின் வலக்கால் முட்டி மேல் அமர்ந்துள்ளார். வலக்காலை ஆதிசேடன் தலை மீது வைத்துப் பூமாதேவியைப் பாதாள உலகில் இருந்து தூக்கிப் பூவுலகத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஐந்து தலைகளிலும் படமெடுத்துள்ள ஆதிசேடன் வராகரை வணங்கி மனித உருவில் நிற்கிறது. பூமாதேவி நீண்ட கூந்தலும், கைகளில் கடகமும், கால்களில் தண்டையும் அணிந்துள்ளார். பின்னால் நான்முகன் திரிபங்க நிலையில் நிற்கிறான். நான்முகனுக்குப் பின்னால் விணையேந்திய முனிவர் நிற்கிறார். மேலே காந்தருவன் பறந்து செல்லுகிறான்.. அடுத்துள்ள திருமகள் (கசலட்சுமி தாமரையின் மேல் அமர்ந் துள்ளாள். சடைமகுடம் பூண்டு கைகளில் தாமரை மலர்களைத் தாங்கி யுள்ளார். யானை தன் துதிக்கையில் குடத்தைத் தூக்கித் திருமகள் தலை மீது நீரை ஊற்றுகிறது. அடுத்துள்ள துர்க்கையில் கலைமானும் உள்ளன. அவளுடைய இரு புறமும் இரு வீரர்கள் உள்ளனர். ஒருவன் வாளேந்தி நிற்கிறான், மற்றொருவன் தன் தலையை அரிந்து தேவியின் அடியில் பலியிடுகிறான். போரில் வெற்றி பெற்ற வீரன் தன் அரசன் சிறப்போடு வாழ் கொற்றவைக்குத் தன் தலையை அரிந்து பலி கொடுப்பது தமிழர் மரபு. வராக மண்டபத்தின் தெற்குச் சுவரில் திரிவிக்கரமன் சிற்பம் காணப்படுகிறது. மாபலியின் ஆணவத்தை அடக்க திருமால் குறளுரு வம்(குட்டையான உருவம்) எடுத்து விண்ணையும், மண்ணையும் அளந்து மூன்றாவது அடியை மாபலியின் தலைமீது வைத்துப் பாதாள உலகிற்குத் தள்ளினார் என்ற கதையை இச்சிற்பம் விளக்கி நிற்கிறது. வாமனபுராணம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில் வரும் மாபலி திரிவிக்கிரமன் புராணக் கதையில் மகேந்திர வர்மன், அர்ச சக்கரவர்த்தி, காஞ்சிபுரம் ஆகியவை பற்றிய குறிப்புகள் வருகின்றன, கோவர்த்தனக் காட்சி பஞ்ச பாண்டவர் தேர்களுக்குத் தெற்கிலுள்ள மண்டபத்தைக் கிருட்டிணன் மண்டபம் என்பார். இதில் 29 அடி நீளமும் 13 அடி உயரமும் உள்ள ஒரு பெரிய பாறையில் கண்ணன் குன்றைத்தன் இடது கையால் தூக்கிப் பிடித்து ஆயர்களைக் காத்த காட்சி அழகாகச் செதுக்கப் பட்டுள்ளது. அவனைச் சுற்றிலும் ஆயர்கள் சூழ்ந்துள்ள னர். அருகில் பலராமன் நிற்கிறான். இங்கு பசுவினிடத் தில் இருந்து பால் கறக்கும் ஆயன் காட்சி சிறப்பாக உள்ளது. பசு தன் தலையைத் திருப்பிக் கன்றுக் குட்டியை தன் நாக்கால் நக்குகிறது. பசுவின். முன்புறம் ஆய்மகள் தன் தலைமீது பனை ஓலைப்பாயை வைத்துக் கொண்டு நிற்கிறாள். மற்றொரு பெண் தலையில் பால்குடத்தை வைத்துள்ளாள். ஒரு முதியவர் தன் தோளில் குழந்தை யொன்றை வைத்துக் கொண்டுள்ளார், பசுக்களும். ஆயமகளிரும், ஆயரும் கோவர்த்தனக் குடைக் கீழ் தங்கியுள்ளனர். ஒவ்வொரு உருவமும் உயிர்த் துடிப்புள்ளதாக உள்ளது. இக்காட்சிக்கு மேல்புறத்தில் வடப்புறப் பாறை விளிம்பில் ஓர் அழகான எருது படிமமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரில் சிங்கம் மற்றும் பல திறப்பட்ட விலங்குகளின் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாறைச் சிற்பங்கள் 90 அடி நீளமும், 43 அடி அகலமும், 43 அடி உயரமும் கொண்ட ஒரு பெரிய பாறையில் பெரிய சிற்ப அணியுள்ளது. உலகி , லுள்ள சிற்பங்களில் இதுவே உன்னதமான சிறப்புடையது என்பர் டாக்டர் ஏ. எல். பாசம். உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது இச் சிற்ப அணியே ஆகும். இதனை 'அருச்சுனன் தவம்' என்றும் 'பகீரதன் தவம்' என்றும் கங்கைக்கரைக் காட்சி' என்றும் 'சகரசாகரர் சிற்பம்' என்றும் பலரும் பலவாறாக அழைக்கின்றனர். டாக்டர் பெர்சி பிரவுன் இதனை அருச்சுனன் தவம் என்றழைப்பது தவறு என்கிறார். பகீரதன் வானிலிருந்து கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர செய்த தவக் காட்சியே என்று டாக்டர் என், சுப்பிரமணியம் கருதுகிறார், ஆனால் இது சகரசாகரர் கதையைக் குறிக்கும் சிற்பமே என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி, இக்காட்சியை இரு பெரும்பகுதியாகப் பிரித்துப் பார்க்கலாம். மேலேயுள்ள பகுதியில் ஒருவன் தவம் செய்யும் காட்சியும், கீழேயுள்ள பகுதியில் ஒரு கோயில் நடுநாயகமாக உள்ள காட்சியும் உள்ளன. மேலேயுள்ள காட்சி (தவக்காட்சி) ஒருவன் இடக்காலை ஊன்றி வலக்காலை மடக்கி இடக் காலின் முட்டி வரை கொணர்ந்து, இருகைகளையும் மேலே தூக்கி விரல்களை இணைத்துக் கொண்டு நிற்கும் காட்சி. இதில் அவன் கடுந் தவம் புரிகிறான் என்பது புலப்படுகிறது. நெடுநாள் தவத்திலிருப்ப தால் தாடியும் மீசையும் நீண்டு வளர்ந்துள்ளன. வயிறு ஒட்டிப் போய் விலா எலும்புகள் தெரிகின்றன. இவனுக்கு எதிரில் நான்கு கைகளுடன் னும், திரிசூலம், மான், மழு ஏந்தி சிவன் நிற்கிறார். சிவனுக்கு வலப் பக்கம் ஐந்து பேரும், இடப்பக்கம் ஒருவருமாக ஆறு சித்திரக் குள்ளர் கள் உள்ளனர். இவர்களைப் பூதகணங்கள் என்று கூறுகின்றனர். தவசியின் கீழேயுள்ள இரு உருவங்கள் அரசனும், அரசியும் ஆவர். இவர்களும் பிறரும் ஓடுவதைப் போல் காணப்படுகிறது. பூதகணங்கள் மட்டும் அசையாமல் உள்ளன. இங்குள்ள எட்டு உருவங்களும் அங்கலாய்த்து நிற்பது போல் காணப்படுகின்றன. கீழேயுள்ள காட்சி (பெருமாள் கோயில் காட்சி) மேற்குப்பகுதிக் காட்சிக்குப்பின் கீழ்ப்பகுதி காட்சிக்கு வருவோம். இதில் கூறியபடி ஒரு பெருமாள் கோயிலை மையமாக வைத்துக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இப்பெருமாள் கோயில் திராவிடப் பாணியிலான கோயில் போல் உள்ளது. இதனருகில் ஒரு முதியவர் சடைமுடியும் தாடியும் மீசையும் வைத்துக் கொண்டு கால் களை மடக்கிச் சம்மணம் போட்டுக் கொண்டு, உட்கார்ந்து மோனத் தில் ஆழ்ந்துள்ளார். இடப் பக்கத்தில் இருவர் அமர்ந்து பெருமாளை வணங்கிக் கொண்டு உள்ளனர். எதிரில் ஒருவன் குத்துக் காலிட்டுக் கொண்டு இரு கைகளையும் முட்டியின் மீது வைத்துக் கொண்டு துதிக்கிறான். இவ்வாறு பலரும் பலவிதமாக துதித்துக் கொண்டுள்ள . னர். நிரோடையுள்ளது. பாதி மனித உடலும், பாதி பாம்பு உடலுமுள்ள ஒரு ஆணும் பெண்ணும் உள்ளனர். தலைக்கு மேல் முன்னங்கால் களைத் தூக்கி நிலைத்திருக்கும் பூனையும், அதனைச் சுற்றி வளை யாடும் எலிகளும் உள்ளன. இவ்வாறு இருபகுதிகளாய் உள்ள வற்றின் நடுவில் நீரோடையுள்ளது. மேலேயுள்ள தவம் செய்யும் காட்சியும், கீழேயுள்ள கோயில் காட்சியும், இருபெரும் யானைகள், அவற்றை யொட்டியுள்ள சிறுயானைகள், குரங்குகள், மான்கள் முதலிய விலங்குகளும் இடம் பெற்றுள்ள காட்சி, இதனை அருச்சு னன் தவம் செய்து பாசுபதம் பெறும் காட்சியாகக் கொள்வதும் கங்கைக்கரைக் காட்சி என்பதும், பகீரதன் தவம் என்பதும் இக்காட்சி ஒரு வனத்தில் ஆற்றுப் பகுதியில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட் டுள்ளதால் புராண, இதிகாசக் கதைகளே கற்பனைக்கு வருகின்றன. முடிவு பெறாத பாறைச் சிற்பம் கலங்கரை விளக்கத்திற்கு எதிரிலும் மற்றொரு பாறைச் சிற்பம் தொடங்கி முடிவு பெறாமல் உள்ளது. இதைப் போலவே முடிவு பெறாத யானை உருவச் சிற்பமும் உள்ளது. தேர்ச் சிற்பங்கள் பஞ்ச பாண்டவர் தேர்களிலும் பல்வேறு சிற்பங்கள் உள்ளன: துரோபதைத் தேரில் புடைப்புச் சிற்பமாகக் கொற்றவைச் சிற்பம் உள்ளது. இதுபோன்ற கொற்றவைச் சிற்பம் சிறிது மாறுபாடு களுடன் திரிமூர்த்திக் குடைவரையிலும் வராக மண்டபத்திலும் உள்ளன. அருச்சுனன் தேரில் புடைப்புச் சிற்பங்களாகக் கருடாழ் வார் மீது அமரும் திருமாலின் சிற்பம், ஐராவதம் என்ற யானை மீதமர்ந்த இந்திரன் சிற்பம், இந்திராணி சிற்பம், சிவனாரின் சிற்பம், வாயிற் காப்போர் சிற்பங்கள் முதலியன சுவர்ச் சிற்பங்களாக டள்ளன, மூன்று தளங்களையுடைய தருமராசர் தேரில் தோட்ட பஞ்சரங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் எட்டுத் தெய்வச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றின் அடியில் சமற்கிருதத்தில் அடிக்குறிப்புகள் காணப்படு கின்றன. சிவன், பிரமன், மாதொரு பாகன் நின்ற கோலத்தில் சிவன் ஆகிய சிவனுடைய பல்வேறு தோற்றங்கள் சிற்பங்களாக உள்ளன. இரண்டாம் தளத்தில் சிவனோடு தொடர்புடைய சிற்பங்கள் மாடக் குழிகளில் உள்ளன. இவற்றில் கங்காதர மூர்த்தியின் சிற்பம் சிறப்பாக உள்ளது. திருமாலின் சிற்பமும் ஒரு மாடக்குழியில் உள்ளது. மூன்றாம் தளத்திலும் சிவன், திருமால் சிற்பங்கள் உள்ளன. 4. கற்றளிச் சிற்பங்கள் அ. கடற்கரைக் கோயில் சிற்பங்கள் இராசசிம்மனுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களில் கணேசன், கார்த்திகேயன் ஆகியோரின் சிற்பங்கள் அதிகம் காணப்படவில்லை. ஆனால் இராசசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் கணேசன், கார்த்திகேயன், சோமாஸ்கந்தன் ஆகிய உருவச் சிற்பங்கள் காணப்படு கின்றன. கடற்கரைக் கோயிலில் நான்கு கைகளுடைய வாயிற் காப்போர், சிம்மம், சோமாசுகந்தர், மதிலைச் சுற்றிலுமுள்ள எருதுகள் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன வாகும். இக் கோயிலில் அருச்சுனன் தவம் போன்ற காட்சியுள்ளது. முதலில் இதையே அருச்சுனன் தவம் என்றனர். ஆ - காஞ்சிக் கைலாசநாதர் கோயில் முன்புறம் இக்கோயிலில் முன்புறப் பகுதியில் சுவர்ப்படிமங்களும், ஓவியங்களும் பல உள்ளன. இங்குள்ள பதினாறு பட்டைகளைக் கொண்ட இலிங்கம், அதற்கும் பின்புறச் சுவரிலுள்ள சோமாஸ்கந்தர், விரிசடை சிவன், தட்சிணாமூர்த்தி, அகோர வீரபத்திரன் ஆகியோரின் நடனக்காட்சிகள் உள்ளன. கருவறை முன்புறக் கோயிலில் கருவறையும் இலிங்கமும் உள்ளன. பின்புறக் கோயிலிலும் ஆறடி உயரமுள்ள மிகப்பெரிய இலிங்கம் உள்ளது. பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தர் உள்ளது. கடற்கரைக் கோயில், பனைமலைக்கோயில் ஆகியவற்றில் உள்ளதைப் போன்றே சோமாஸ்கந்தர் உள்ளது. இங்கு சிவன் நின்று, அமர்ந்த இரு கோலங் களும் பல்வேறு சிவ நடனக் காட்சிகளும் உள்ளன. மண்டபச் சுவரில் இராசசிம்மன், அவனுடைய மனைவியின் உருவங்களும், அவர்களுடைய மகனுடைய உருவமும் உள்ளன. அடுத்து பதினாறு கைகளையுடைய காளியின் சிற்பமுள்ளது, சுற்றுப்பாதை மதிலின் உட்புறத்தில் 58 மாடக்குழிக் கோயில்கள் உள்ளன. இவற்றிற்கிடையே சிவன், பார்வதி உருவங்கள் உள்ளன. சுவரில் சக்தியின் எழுஉருவங்களும், உருத்திரமூர்த்தியின் பதினொரு உருவங் களும் உள்ளன. சிவனாரின் குஞ்சித நடனக் காட்சி சிறப்பாக உள்ளது. இ. வைகுந்தப் பெருமாள் கோயில் சிற்பங்கள் வரலாற்றுச் சிற்பங்கள் இக்கோயிலின் மேற்குச் சுவரில் தொடங்கும் வரலாற்றுச் சிற்பங்கள் பல்லவரின் தோற்றம் வளர்ச்சி ஆகிய வரலாற்றை வரிசை யாகக் சித்திரிக்கின்றன. பட்டத்தான் மங்கலம், கொற்றக் குடிச் செப் பேட்டில் உள்ளபடி இவை அமைந்துள்ளன. திருமாவின் கொப்பூழிலிருந்து நான்முகன், அவன் படைப்பில் இருந்து அங்காரகன், அவனுக்குப் பின் பிரகசுபதி, சம்யூ மரத்துவாசர், துரோணர், அசுவத்தாமன் இவ்வாறாகப் பல்லவரின் முன்னோர் மரபு சிற்ப வடிவில் உள்ளது. பின்னர் வரும் சிற்பங்கள் பல்லவர் வளர்ச்சிப் பருவத்தைக் குறிப்பிடுகின்றன. இஃது வேலூர்ப் பாளையம், காசாக்குடி செப்பேடுகளின்படி உள்ளன. போர்க் களக் காட்சிகள் 21 சிற்பங்களாக வும், பரமேசுவரன் வெற்றி பெற்றுத் திரும்பும் காட்சிகள் 19 சிற்பங்களாகவும் மொத்தம் 10 சுவர்களில் தொடர்ச்சியாகப் பல்லவர் வரலாற்றுச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன , பெரும்பாலான சிற்பங்களுக்கு அடிக் குறிப்புகள் உள்ளன. இவற்றுள் போர்க்களக் காட்சிகளும் முடி சூட்டு விழாக் காட்சிகளும் சிறப்பாக உள்ளன. ஈ. திருத்தணி - வீரட்டானேசுவரன் கோயில் சிற்பங்கள் இதிலுள்ள படிமங்கள் யாவும் தொடக்க காலப் பல்லவர் படிமங்களைப் போல் உள்ளன. இலிங்கம் பட்டையில்லாமல் உள்ளது. வாயிற்காப்போர்க்கு நான்கு கைகள் உள்ளன. சிவன், திருமால் உருவங்களுக்கும் நான்கு கைகள் உள்ளன. அவற்றில் உள்ள மாடக்குழியில் கொற்றவைப் படிமம் உள்ளது. தட்சிணாமூர்த்தி, சூரியன் ஆகிய சிற்பங்கள் சிறப்பானவை ஆகும். உ. குடிமல்லம் பரசுராமேசுவரன் கோயில் சிற்பங்கள் ஆந்திராவிலுள்ள சித்தூர் மாவட்டம் ரேணுகுண்டாவிற்கு அருகில் குடிமல்லம் உள்ளது. இங்குள்ள பரசுராமேசுவரன்கோயில் திருத்தணி வீரட்டானேசுவரன்கோயில், ஒரகடம் வாடாமல்லீசுவரன் கோயில் ஆகியவற்றைப் போலவே தூங்கானை மாடக்கோயில் ஆகும். இலிங்கம் இக்கோயில் மூலவர் இலிங்கமாகும். இதில் அடிமேடை - கோமுகம் இல்லை. இதைப்போன்ற இலிங்கத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாதென் லாங்கர்ஸ்டு கூறுகிறார். இந்த இலிங்கத் தின் முனை ஆண் குறியின் முனை போல் உள்ளது. அதன் கீழ்ப் பகுதியில் சிவன் நின்ற வண்ணமுள்ளார். சடைமுடி தரித்து நீண்ட போர்க்கோடரியை உடம்போடு அணைத்துக் கொண்டு, நீர்க் கமண்டலத்தைப் பிடித்துக் கொண்டு வலக்கையில் தகர்ப் படை ஏந்தி தி உள்ளார். கழுத்தில் அட்டிகையும், கைகளில் கடகமும் அணிந் துள்ளார். இரு பாதங்களையும் அரக்கன் தலை மீது வைத்துள்ளார், இவ்வாறு இலிங்கத்திலேயே சிவன் உருவத்தைப் படைத்திருப்பது இஃதொன்றில்தான் காண முடிகிறது. பிற்காலப் பல்லவர் சிற்பங்களைத் திருத்தணி வீரட்டானேசுவரர் கோயிலிலும் காவேரிப் பாக்கம், சத்திய மங்கலம் முதலிய இடங்களிலும் பார்க்கிறோம். காவேரிப்பாக்கத்தில் வாயிற் காப்போர், தட்சிணாமூர்த்தி, சூரியன், நான்முகன், சங்கநிதி, முதலிய சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் உருவங்கள் குட்டை வயிறு பானை போலிருக்கும். சத்தியமங்கலம் வராகி, சாமுண்டி சிறப்பானவை. வராகி சிற்பம் உலோகம் போன்ற கல்லால் ஆனது (இன்று இவை இரண்டும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.) சத்தியமங்கலம் சிற்பம் வேங்கி நாட்டுப் பாணியிலும், திருத்தணிச் சிற்பம் இராட்டிரகூடர் பாணியிலும் உள்ளன. முடிவுரை தோராயமாக நானூறு ஆண்டுகள் ஆண்ட பல்லவர்கள், தென்னிந்தியக் கட்டடக் கலையிலும், சிற்பப் படைப்பிலும் ஒரு புதிய சகாப்தத்தையே ஏற்படுத்திச் சென்றுள்ளனர். இவர்களின் சிற்பங்கள் சமயச் சார்புடையனவாகவும் சமயச் சார்பற்றவையாக வும் உள்ளன. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சிற்பங்கள் குறிப்பாகச், சைவ, வைணவ சமயக் கருத்துக்களை அடிப் படையாகக் கொண்டு எழுந்த சிற்பங்கள் இறை நெறி இயக்கத்திற்கு வலுவூட்டின. முதலாம் மகேந்திர வர்மன் காலத்திலிருந்தே கங்காதர மூர்த்தி சிற்பம் சிறப்புடையதாய் அமைந்துவிட்டது. அடுத்து மகிடா சுரமர்த்தினியின் சிற்பம் பல்லவரின் சிற்ப உலகில் சிறப்பிடம் பெற்ற தாகும். இது வீரத்தின் சின்னமாய், அச்சத்தின் உருவமாய் அமைந்த தாகும். பதினாறு கைகளுடனும், அவற்றில் தாங்கிய படைகளுடனும் காட்சி அளிக்கும் மகிடாசுர மர்த்தினியும், நான்கு கைகளையுடைய கொற்றவையுமாகப் பல்லவர் சிற்பக்கலையைச் சிறப்பிக்கிறது, உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் பெரும்பாறைச் சிற்பக் காட்சியான அருச்சுனன் தவம் பல்லவரின் சொத்தாகும். நரசிம்மவர்மன் காலத்திலிருந்தே மெலிந்த உயரமான அழகிய, பெண் சிற்பங்கள் அசந்தா சிற்பங்களை ஒத்தவையாக உள்ளன. இவர்களின் மாமல்லபுரம் சிற்பங்கள், அமராவதி சிற்பங்களை ஒத்துள்ளன. அருச்சுனன் தேர், வராக மண்டபம், மகிடாசுரமர்த்தினி குகை ஆகியவற்றிலுள்ள துடியிடையும், வாழைத்தண்டு போன்ற தொடையும் இலட்சணமான உடற்கட்டுமுடைய பெண்களின் சிற் பங்கள் எழிலார்ந்தவை ஆகும். இதைப் போலவே, ஆண் உருவம் வீரத்தின் சின்னமாயுள்ளது. பொதுவாகப் பல்லவர் காலச் சிற்பங் களில் மனித உருவத்தில் அணிகலன்கள் அதிகமில்லை. தெய்வ உருவங்களான சிவனுடைய பல்வேறு உருவங்களும், திருமாவின் உருவங்களும் கொற்றவையின் உருவங்களும், பிறவும் அணிகலன் களுக்கும் படைக்கும் பெயர் பெற்றவை ஆகும். 3. ஒவியங்கள் முன்னுரை பல்லவர்கள் கலைகளை வளர்ப்பதற்கென்றே கடிகைகளை ஏற்படுத்தி இருந்தனர். அவை வளமோடு வளர்ச்சி பெற மானியங் களும், திருப்பணித் தானமும் (ஸ்ரீகாரியம்) வழங்கினர். காஞ்சியி விருந்த கடிகைக்கு நிருபதுங்கவர்மன் (கி.பி. 870- 895) சோத்துப் பாக்கம், விளாங்காட்டங் கடுவனூர், சிறைபுனைச் சேரி ஆகிய மூன்று சிற்றூர்களை மானியமாக விட்டான். மறையோர் வதியும் பார்ப்பனச் சேரிகள் கலை வளர்ச்சிக்கும் இடங்களாகத் திகழ்ந்ததால்தான் பிரம் தேயங்கள் விடப்பட்டன. அவை இறையிலிவரிக்கட்டாத) ஊர் களாயின. பேரூர்களிலும் நகரங்களிலும் பிராமணர்கள் வாழ்ந்த இடங்கள் பிரம்மபுரி என்று வழங்கப்பட்டன. அவற்றிற்கு மன்னர் தனிச் சலுகைகளும் வழங்கினர். தனிப்பட்ட பிராமணர் கல்வி, கலை வளர்ச்சிக்கென வழங்கிய உதவி பட்ட விருத்தி என வழங்கப்பட்டது. இதனால்தான் பல்லவர் காலத்தில் கலைகள் தடையின்றி வளர்ச்சி பெற்றன. பல்லவர் காலக் கோயில்களே கல்விக் கூடங்களாகவும், கலைக் கூடங்களாகவும் செயல்பட்டன. கைலாசநாதர் கோவிலில் சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், சமயக்கல்வி முதலியன அரசின் செலவில் கற்பிக்கப்பட்டன. துறவிகள், அறிவர்கள் முதலியோர் தங்கும் மனைகளும், மடங்களும், கலை புகட்டும் இடங்களாகவே செயல்பட்டன. காபாலிக மடம், பாசுபதமடம், காளாமுக மடம் எனச் சைவ மடங்கள் பலவும் வைணவ மடங்களும் சமண, பௌத்த மடங்களுங்கூட அரசர்களால் ஆதரிக்கப்பட்டன. அவற்றில் இசை யும் நடனமும் சமயக்கல்வியின் இரு கண்களாகக் கொண்டு வளர்க் கப்பட்டன. சிற்பம் சமைப்பதற்கு ஓவியமே அடிப்படைக் கல்வி யானது. ஓவியம் உயிராகவும், சிற்பம் உடலாகவும் கருதப்பட்டன. தூக்கிய திருவடி நடனம் ஆடிய பாதம் இன்று மறைந்து விட்டாலும், இதனைப் பல்லவர் ஓவியக்கலையால் அறிய முடிகிறது. இன்று பல்லவர் கால ஓவியங்களை அவர்களின் கோயில் சுவர் களில் முழுமையாகக் காணமுடியவில்லை. ஆயினும் அவையிருந்த இடங்களில் அவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. பல வண்ணங் களைக் கொண்டு அவை தீட்டப்பட்டிருந்தாலும் இன்று எஞ்சி நிற் பவை சிவப்பு வண்ணங்கள் மட்டுமே ஆகும். அவற்றின் சுற்றுக் கோடுகளும் கீறல்களும் ஆகும். சிறு கீறல்களைக் கொண்டு தான் முகத்தோற்றம். உடலுறுப்பின் தன்மை தசை முறுக்குகள் ஆகிய வற்றை ஆக்குகிறார்கள். பல்லவரின் ஓவியப் பாணிகளையே பின் வந்த பாண்டியரும், சோழரும் பின் பற்றியதால் இன்று சித்தன், வாசல் ஓவியங்களைப் பல்லவர், பாண்டியர், சோழர் ஓவியங்களென மாற்றி மருவிப் பேசுகின்றனர், தாமரை மலர், தாமரைக் குளம், மீன்கள், யானை முதலியன எல்லா ஓவியங்களிலும் ஒன்றே போல் காணப்படுகின்றன. நடன். மாதர் அவர் தம் கூந்தல், ஆடை, அணிகலன்கள் முதலியனவும் பல்லவர், பாண்டியர் காலங்களிலும் வேறு பாடின்றிக் காணப்படு கின்றன. பல்லவர் கால ஓவியமும் பிற கலைகளும் தமிழ் நாட்டிற்கு அப்பாலுள்ள விசுணு குண்டர் கலைகளைப் போல் உள்ளன, இதற்குக் காரணம் மகேந்திரவர்மன் (கி.பி. 800--630) தந்தையான சிம்ம விசுணு (கி. பி. 570-600) கிருட்டிணை ஆற்றுப்பகுதியை ஆண்டு வந்தான், விசுணு குண்டரோடு மண உறவு பூண்டான். அவன் காலத்தில் தொண்டை நாட்டின் இளவரசனாக இருந்து பின்னர் தமிழகத்தின் அரசனாக வந்தவன் மகேந்திரவர்மன். எனவே விசுணு குண்டர்களைப் போலவே குடைவரைகளையும், மற்ற கலை களையும் தமிழகத்தில் தன்னை அறியாமலேயே அப்பாணிகளைப் பின்பற்றி வளர்த்து விட்டான் என்பார். எனவே ஓவியக் கலையின் தந்தையான முதலாம் மகேந்திர வர்மன் ஓவியங்களில் பல்வேறு சாயல்கள் காணப்பட்டாலும் அதைத் தமிழ் மரபில் வந்ததாகவே கொள்ள வேண்டும். இவன் முதன் முதலில் சமைத்த மண்டகப் பட்டுக் குடைவரையில் இவனைச் "சித்திரகாரப் புலி' என்ற விருதுப் பெயரால் அறிகிறோம், இதே விருதுப் பெயர் பல்லவபுரம் குடைவரை, காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் பெளர்ணமி மண்டபத் துாண்கள் ஆகியவற்றிலும் காணப்படுகிறது. தக்கணச் சித்திரம் என்ற ஓவிய நூலுக்கு, இவன் உரை எழுதினான் என்று மாமண்டூர் குடைவரைக் கல்வெட்டுக் கூறுகிறது. இதிலிருந்து இவன் சிறந்த ஓவியன் மட்டுமல்லன், ஓவிய நூல் வல்லவன் என்பதையும் அறிதி றோம். இராசசிம்மன்(கி.பி., 65-725) கட்டிய கலைக் கோயில்தான் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் ஆகும். இவனது மனைவியானா அரங்கப் பதக்கம் என்பவர் கலை வளர்ப்பதில் இவனுக்கு உறு துணையாக இருந்தவள். இம்மன்னன் கட்டிய மற்றொரு கோயில் விழுப்புரத்தை அடுத்த பனைமலைக் கோயிலாகும். 1. சோமாசுகந்தர் ஓவியம் காஞ்சிக் கைலாச நாதர் கோயிலில் நீண்ட சதுரமான கட்டில் போன்ற மேடை மீது சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்கப் பார்வதி மடி மீது முருகன் (கந்தன்) சிறு குழந்தையாக அமர்ந்துள்ளான். இவ் வாறு தீட்டப்பட்ட ஓவியம் அக்காலத்தில் சிறப்புற்று நின்றது. சிவனுக்குப் பக்கத்தில் பூதகணங்களும், பார்வதிக்குப் பக்கத்தில் அழகிய பெண்களும் நிற்கின்றனர். சடாமுடியும். பூணூலும் சிவனுக்கு இருக்கின்றன. பார்வதி மார்புக் கச்சை, மேகலை முதலியவற்றை அணிந்துள்ளார். முருகன் தலையில் சிறு மகுடம் உள்ளது. பார்வதி வலக்காலை மடக்கி இருக்கையில் அமர்ந்து இடக்காலைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார். பார்வதி அழகிய பெண்ணின் இலச் கணத்தோடு காட்சியளிக்கிறார். 2. பனைமலை தாலகிரீசுவரன்கோயில் சிற்பம் - அழகிய பெண் ஓர் அழகிய தேவதை மணிமுடி தரித்துத் தலைக்குப் பின்புறம் குடை விரித்து நிற்கிறாள். இது அமராவதி ஓவியம் போல் காட்சியளிக் கிறது. பிற்காலத்தில் சோழர்கள் தீட்டிய திரிபுவனம் சரசுந்தரியின் தோற்றம் போலவும் உள்ளது. இதனைப் பவானி ஓவியம் என்றும் கூறுவர். 3. ஊழிக் கூத்து ஓவியம் பனைமலைக் கோயிலின் இலிங்கத்தின் பின்புறம் சிவத் தாண்டவம் ஊழிக்கூத்து (சம்ஹாரத்தாண்டவம்) ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளது. சிவபெருமான் ஊழிக் காலத்தின் இறுதியில் இத்தகைய கூத்து ஆடுவார். வலது காலை மடக்கித் தரையில் பதிய வைத்து, இடது கால் முட்டிப் பகுதியைத் தரையில் தொடும்படி செய்து, பாதத் தைப் பின்புறமாக மடக்கி, முன் வலது கை ஆணை முத்திரை காட்டி, இடது முன்கையை மேலே உயர்த்தித் தலையைத் தொட்டு நிற்பது தான் ஊழிக் கூத்தாம். சிவனுடைய கைகளில் தீ, உடுக்கை, சூலம் முதலிய படைகள் இருக்கும். இதுபோன்ற ஊழிக் கூத்து, காஞ்சிக் கைலாசநாதர் கோயிலிலும் மாமல்லை கடற்கரைக் கோயிலிலும் உள்ளது. 4. ஆம்பூர். ஆர்மாமாவைச் சமண, ஓவியம் வேலூர் மாவட்டம் ஆம்பூர் மாலையாம்பட்டையடுத்த ஆர்மா மலையில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சமண சமயத்தைத் தழுவிய ஓவியங்களாம். இங்குள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இவை கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன என்பர். 4. செப்புத் திருமேனிகள் பல்லவர் காலத்தில் செம்பாலான தெய்வப் படிமங்கள் இருந்தன. கோயில்களில் இவை ஏராளமாயிருந்தன. இன்றும் பல்லவர் வரலாற்றுச் சான்றுகளாக உள்ள பல்லவர் செப்பேடுகள் பொலிவு குன்றாமல் காணப்படுவதிலிருந்து செம்பால் நாணயங் களும், முத்திரைகளும், ஏனங்களும், படைகளும் செய்வதும் படிமங் களச்செய்வதும் இக்காலத்தில் சிறந்து காணப்பட்டது என்றறியலாம். 1. அவலோகிதீசுவரர் செப்புத் திருமேனி கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத் திய அவலோகிதீசுவரர் செப்புத்திருமேனி கிருட்டிணை ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளது. இன்று இது இலண்டன் பொருட்காட்சிச் சாலையில் உள்ளது. 2. காவிரிப் பூம்பட்டினம் - தியானத் திருமேனி கி.பி. 5 அல்லது 6 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தியானத்தில் : அமர்ந்துள்ள ஒரு செப்புத் திருமேனி காவிரிப் பூம்பட்டின ஆய்வில் கிடைத்துள்ளது. சுருட்டைத்தலை முடியும், நீண்டு தொங்கும் காதுகளும் மெல்லிய ஆடை, இடது தோலின் மீதும், கண்களை முடியுமுள்ள இந்தத் தியானச் செப்புத் திருமேனி கால்களை மடக்கி - வைத்து உள்ளங்கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தியானம் செய்கிறது. இதனைத் தியான புத்தர் என்பர். 3. செப்புத் திருமேனிகள் ஊர்கள் 1. சோமாஸ்கந்தர் - திருவாலங்காடு 2. விடாபாரணர் - கீழ்ப்புதூர் ) 3. ஆடவல்லான - கூரம் 4. மைத்ரேயர் - காவிரிப் பூம்பட்டினம் 5, மாலவன் - பெருந்தோட்டம், கொடுமுடி 6, மாலவன் = வேளச்சேரி 7. உலகளந்த பெருமாள் - சிங்காநல்லூர் 8. திருமால் - திருநெய்ப்போர் 9. முப்புரம் எரித்த முதல்வன் - திருநெய்ப்போர் இத்திருமேனிகள் யாவும் கோயிற் சிற்பங்களைப் போலவே அனைத்து உறுப்புகளுடனும் காணப்படுகின்றன. இவற்றில் திருமால், சோமாஸ்கந்தர், திரிபுராந்தகர், ஆடவல்லான் ஆகியவை அதிகமுள்ளன. பல்லவர் சைவ, வைணவச் சமயங்களைப், பின்பற்றியவர்கள், அதற்கான கோயில்களைக் கட்டியவர்களாவர். 7 முதலாம் பாண்டியப் பேரரசுக் காலம் (கி.பி. 600 - 920) அ. சான்றுகள் 1. செப்பேடுகள் 2. கல்வெட்டுகள் ஆ. பேரரசர்கள் இ. ஆட்சிமுறை 1. நடுவண் ஆட்சி 2. ஊராட்சி ஈ, பொருளாதார நிலை உ. கலைகள், 1. கட்டடக் கலை 2. ஓவியக்கலை 3. சிற்பக் கலை 7. முதலாம் பாண்டியப் பேரரசுக் காலம் (கி.பி.600-920) அ. சான்றுகள் முன்னுரை சங்க காலத்திற்குப் பின் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறத் தாழ கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர். கி.பி. 6ஆம் நூற்றாண்டின் கடைசியில் பல்லவ அரசர் சிம்மவிசுணு, பாண்டிய அரசன் கடுங்கோன் ஆகியோர் களப் பிரரை வென்று தங்கள் ஆட்சியை நிலைநாட்டியதாக அவர்களின் செப்பேட்டுச் சான்றுகள் கூறுகின்றன. அவ்வாறு களப்பிரரிடமிருந்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பாண்டிய மன்னன் கடுங்கோன் (கி.பி. 575-600) ஆவான். இவன் களப்பிரரை வென்று, பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்ற செய்தியை வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இதைப்போலவே களப்பிரரை வென்றுப் பல்லவ நாட்டைச் சிம்ம விசுணு கைப்பற்றினானென்ற செய்தியைக் 'காசாக் குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. கடுங்கோன் முதல் தொடங்கும் பாண்டியர் ஆட்சியை "முதலாம் பாண்டியப் பேரரசு' என்கிறோம். இஃது ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் நிலைத்திருந் தது. பன்னிரண்டு அரசர்கள் ஆண்டனர். அடிப்படைச் சான்றுகள், பாண்டியர் செப்பேடு களும் கல்வெட்டுக்களுமாகும். பாண்டியர் செப்பேடுகள் தன்மைகள் முதலாம் பாண்டியப் பேரரசர்களின் வழிவந்தோரின் வம்சா வழி, போர்களின் வெற்றிகள் முதலியவற்றை அறியப் பாண்டியர் செப்பேடுகள் உதவுகின்றன. இவர்களின் குறுநில மன்னர்களான ஆய்குலத்தோரின் செப்பேடுகளும் பயன் படுகின்றன. பாண்டியர் செப்பேடுகளின் முற்பகுதி சமற்கிருதத்திலும், பிற்பகுதி தமிழிலும் எழுதப் பெற்றுள்ளது. சமற்கிருதப் பகுதியில் கடவுள் வணக்கம், மரபு வழி வரலாறு, கொடையளித்த மன்னனின் முன்னோர்கள் பற்றிய விவரம், கொடையளித்த இடம், நேரம், கொடையைப் பெற்றவர் பற்றிய விவரம் முதலியன குறிப்பிடப் பட்டுள்ளன. தமிழ்ப் பகுதியில் கொடையாளர்களின் முன்னோர்களின் வெற்றிச் செயல்களும், கொடையாளரின் ஆட்சி ஆண்டும் குறிப் பிடப்பட்டுள்ளன. சங்க காலப் பாண்டியர் சிலருடைய பெயர்களும், மதுரையில் சங்கம் வைத்ததும், மகாபாரதம் தமிழில் எழுதப்பட்டதும் கூடத் தமிழ்ப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாண்டியர் செப் பேடுகளில் இதுவரை கிடைத்துள்ள ஆறும், அவர்களின் குறுநில 'மன்னர் வழங்கிய நான்கும் ஆக பத்துச் செப்பேடுகள் கிடைத்துள்ளன. இந்த பத்துச் செப்பேடுகளையும் தொகுத்து பாண்டியர் செப்பேடுகள் பத்து" என்னும் தலைப்பில் தமிழ் வரலாற்றுக் கழகம் (1967) வெளியிட்டுள்ளது. 1. வேள்விக்குடிச் செப்பேடுகள் நெடுஞ்சடையன் பராந்தகன் அல்லது முதலாம் வரகுணன் (கி.பி. 768-815) என்பவனால் வெளியிடப் பெற்றது. பத்து ஏடு களைக் கொண்ட இச் செப்பேடு இலண்டன் பொருட்காட்சிச் சாலை யில் உள்ளது. இச்சாசனம் பாண்டியர் செப்பேடுகள் யாவற்றிலும் முக்கியமானதாகும். பாண்டியர் நாட்டைக் களப்பிரர் கவர்ந்தது பற்றியும், அதனைப் பாண்டியர் மீட்டது பற்றியும் இச்சாசனம் கூறுகிறது. பராந்தக நெடுஞ் சடையனுக்கு முன் ஆண்ட 1) கடுங்கோன் 2) மாறவர்மன் அவனி சூளாமணி 3) செழியன் சேந்தன் 41 மாற வர்மன் அரிகேசரி 5) கோச் சடையன் இரணதீரன் ) இராசசிம்மன் ஆசிய ஆறு பாண்டிய மன்னர்களைப் பற்றிய விவரங்கள் இந்த சாசனத்தில் தான் கிடைக்கின்றன. இச்சாசனம் கிடைக்காமல் போயிருந்தால் "முதலாம் பாண்டியப் பேரரசின் முதல் ஆறு மன்னர்கள் யார் என்பதே தெரியாமல் போயிருக்கும். அத்தோடு, சங்க காலப் பாண்டியனும், வேத வழி வேள்வி செய்து ஆரியப்பண்யைச் சங்க காலத்திலேயே நிலை நாட்டியவனு மான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனைப் பற்றிக் கூறும் முதல் சாசனமும் இதுவே ஆகும். இச்சாசனத்தில் தமிழ்ப்பகுதியிலும் சமற்கிருதச் சொற்களே கிரந்த எழுத்தில் எழுதப் பெற்றுள்ளன. பாண்டிய மரபின் பண்டைய மன்னர்களின் வரலாற்றைப் புராணத் தோரணையில் இச்சாசனம் கூறுகிறது. தானம் பெற்ற ஊர் வேள்விக்குடி. இதனை முதுகுடுமிப் பெருவழுதி தானமாக அளித்தான். இடையிலே களப்பிரர் ஆட்சியில் இத்தான நிலத்தை அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டது. பாண்டியர் ஆட்சி மீண்டும் ஏற்பட்ட பொழுது, ஏழாவது மன்னனான பராந்தக நெடுஞ்சடையன் இத்தான நிலம் மீண்டும் தானம் பெற்றவன் வழிவந்தோன் ஒருவனுக்குத் தானமாக வழங்கப்பட்டது. அவ்வாறு தானம் பெற்றவன் பெயர் நரசிங்கன் என்பதாகும். இதனை நிறைவேற்ற கரவந்தபுரத்து மங்கலப் பேரரையன் என்பவன் நியமிக்கப்பட்டான். 3. சிறீவர மங்கலம் செப்பேடுகள் வேள்விக் குடிச் செப்பேட்டை வழங்கிய அதே பராந்தக - நெடுஞ்சடையன்தான் இச் செப்பேடுகளையும் வழங்கினான். சிறீவரமங்கலம் என்ற பாரைத் தானமாக வழங்கியதால் இது அப்பெயர் பெற்றது. இதில் ஏழு ஏடுகள் உள்ளன. சமற்கிருதப் பகுதி பிரமன், விசுணு, சிவனுக்கு வணக்கம் கூறிப் பாண்டியர் சந்திர குலத் தில் தோன்றியதாகக் கூறுகிறது. நெடுஞ்சடையனை இப்பகுதி சடில் வர்மன் என்று குறிப்பிடுகிறது. பொதுவாக இச் செப்பேடு நெடுஞ்சடையனின் வெற்றிகளை யும், காஞ்சியில் திருமாலுக்குக் கோயிலெடுத்ததையும், கரவந்த புரத் திற்கு மதிலையும் அகழியையும் அமைத்தது பற்றியும் கூறுகிறது. இன்று இச்செப்பேடு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. 3. சின்னமானூர்ச் சிறிய செப்பேடு மதுரை மாவட்டம் சின்னமனூரில் இரண்டு வகைச் செப்பேடு கள் கிடைத்துள்ளன. ஒரு வகை சிறிய செப்பேடுகள் என்றும், மற் றொரு வகை பெரிய செப்பேடுகள் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தச் சிறிய செப்பேடுகளில் மூன்று ஏடுகள் உள்ளன, இன்று மைசூரிலுள்ள இந்தியக் கல்வெட்டுத் துறை அலுவலகத்தில் உள்ளன. இச்சாசனத்தில் நிலம் தானம் கொடுத்தது பற்றியும் இதனை எழுதியவன் பெரும் பண்ணகாரன் மகன் அரிகேசி என்றும், ஆனத் தியாக இருந்தவன் குண்டூரில் இருந்த உத்தரமந்திரி தாயசிங்கன் என்றும் தெரிகிறது. 4. தளவாய்ப்புரச் செப்பேடுகள் மதுரை மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ளது தளவாய்ப் புரம். இங்கு கண்டெடுக்கப்பட்ட ஏழு ஏடுகளைக் கொண்டது இச்செப் பேடு ஆகும். இச்சாசனத்தை அளித்தவன் இரண்டாம் இராசசிம்மன் (கி.பி. 900-920) ஆவான். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் மாபாரதத்தைத் தமிழ்ப் படுத்தியதையும், மதுரையில் சங்கம் வைத்ததையும் இச்சாசனம் சிறப்பித்துக் கூறுகிறது. இராசசிம்மனுடைய தந்தையான பராந்தக வீரநாராயணன் (கி.பி. 850 - 805) என்பவன் அளித்த தானம் பற்றியும், அரிகேசரி, சடையவர்மன், இராசசிம்மன், வரகுணன், சிரீவல்லபன் பராந்தகச் சடையன் ஆகிய பாண்டியரின் வரிசையைப் பற்றியும் இது கூறுகிறது. 5. சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகள் இவை பாண்டியன் இரண்டாம் இராச சிம்மனால் (கி.பி. 900 920) வழங்கப் பெற்றவை ஆகும். இதில் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும், இராச சிம்மன் வெற்றிகளைப் பற்றியும் கூறப் பட்டுள்ளன. 6. சிவகாசிச் செப்பேடுகள் இதனை வெளியிட்டவன் வீரபாண்டியனே ஆவான். இது திருநெல்வேலிப் பாண்டியர்களின் வரலாற்றை அறிய உதவுகிறது. ஆய்குல மன்னர்களின் நான்கு செப்பேடுகள் பொதியமலை, திருவிதாங்கூர், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளை ஆண்ட ஆய்குல மன்னர்கள் பாண்டியரின் கீழ் குறுநில மன்னர்களாயிருந்தனர். அவர்கள் வெளியிட்ட நான்கு செப்பேட்டு கள் பாண்டியர் வரலாற்றை அறிய உதவுகின்றன. இவற்றிலும் தமிழும் சமற்கிருதமும் கலந்தே எழுதப்பட்டுள்ளன. இந்த ஆய்குல் மன்னர்கள் பாண்டியருடைய விருதுப் பெயர் களையே தாங்களும் சூடிக்கொண்டனர். இச் செப்பேடுகளில் காந்தளூர்ச் சாலை, கேசரபுரச் சாலை ஆகிய இடங்களில் படித்த சட்டர்களின் ஒழுக்கத்தையும், இச்சாலைகள் நடந்த முறையைப் பற்றியும் இச் செப்பேடுகள் கூறுகின்றன. இந்த ஆய்குல மன்னர்கள் அமைத்த கோயில்களைப் பற்றியும், சமய ஒழுக்கம் பற்றியும் அறிகிறோம். 2. பாண்டியர் கல்வெட்டுகள் முதலாம் பாண்டியர் பேரரசு வெளியிட்ட கல்வெட்டுகளின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 325 ஆகும். இவற்றில் சமண சமயச் சார்பான கல்வெட்டுகள் ஏறத்தாழ 125 ஆகும். இவை பெரும்பாலும் மதுரைக்கு அண்மையில் ஆனைமலை, கழுகுமலை, ஐவர்மலை ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. முதலாம் பாண்டியப் பேரரசு இவற்றுள் அடங்கும். இவற்றில் ஒன்றுதான் பழமையானதாகும். இது திருநெல்வேலி மாவட்டம் மலையடிக் குறிச்சியில் உள்ளது. அடுத்து அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்திய கல்வெட்டுகள் இரண்டும், பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்திய கல்வெட்டுகள் இருபத்து மூன்றும், சிறீமாற சிறீவல்லபன் கல்வெட்டுகள் நான்கும், இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் இருபத்தி ரெண்டும், இரண்டாம் இராசசிம்மன் காலத்திய கல்வெட்டுகள் முப்பத்து நான்கும் வீரபாண்டியன் கல்வெட்டுகள் பதினேழும் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் மதுரையைச் சுற்றிலும், திருநெல்வேலி, திருச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. குறுநில மன்னர்கள், அதிகாரிகள் முதலியோர்களைப் பற்றி அறியவும், இக் கல்வெட்டுகள் உதவுகின்றன. தமிழகத்தில் ஊராட்சி நிலவியதைப் பற்றி அறிய மானூர்க் கல்வெட்டு சான்றாக உள்ளது. இது பிரம் தேய மகாசபையின் நடைமுறைகளைப் பற்றிக் கூறுகிறது. மானநிலை நல்லுார், பிரமதேய மகாசபை ஒருங்கு கூடிச் செய்த தீர்மானங்களைக் கூறுகிறது. மகாசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்குக் கீழ்க்கண்ட தகுதிகள் தேவை. 1. பங்குடையவராக சொத்து உடையவராக இருக்க வேண்டும். 2. மந்திர பிராமணம், தருமம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. நல்ல நடத்தையுள்ளவராக இருக்க வேண்டும். 4. சொத்து, விலைகொடுத்து வாங்கியதாகவோ, கொடையாகப் பெற்றதாகவோ, திருமணக் கொடையாகவோ (சீதனமாகப் பெற்றதாக வோ இருக்கலாம். 5. இத்தகைய தகுதி உள்ளவர்களே சபையின் நடவடிக்கை களில் பங்கு கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றலாம், ஒப்புக் கொண்டபின் பிறகு மறுக்கக் கூடாது. 6. அவ்வாறு மறுப்பவரும், துணை நிற்பவரும் ஐந்து காசு தண்டம் கட்ட வேண்டும். 7. தண்டம் கட்டிவிட்டபின் தானும் தீர்மானத்தை ஏற்க வேண்டும், 8. மேற்கண்ட தகுதி இல்லாதவர்களும் தம் விருப்பங்களைக் கூற உரிமையுண்டு. ஆனால் வாரிய உறுப்பினராக முடியாது. இதில் வாரிய உறுப்பினராகும் உரிமையுடையோர் முதல் தர உறுப் பினராகவும், விருப்பங்களை மட்டும் சொல்லுபவர்கள் இரண்டாந்தர உறுப்பினராகவும் இருக்கின்றனர் என்பதும், பாண்டியர் காலத்தி லேயே வாரியமுறை இருந்தது என்பதும் தெளிவாகிறது. வையைக் கல்வெட்டு வைகை ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட இக்கல் வெட்டால் சேந்தனின் மகன் அரிகேசரி என்றும் இவன் கி.பி. 650 - 700இல் ஆண்டான் என்றும், இதே காலத்தில்தான் திருஞான சம்பந் தர் வாழ்ந்தார் என்றும் அறிய உதவுவதுடன் திருஞான சம்பந்தரின் காலத்தைக் கணிக்கவும் இக்கல்வெட்டு துணை செய்கிறது. முடிவுரை 1, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டில் எழுத்துகள் தமிழ், வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவையாக உள்ளன. பொதுவாக, நகர்ப் புறங்களிலுள்ள கல்வெட்டுகளில் வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றாலும், ஊர்ப்புறங்களில் தமிழ் எழுத்தாலும் அல்லது வட்டார வழக்கத்தில் உள்ள எழுத்தாலும் எழுதும் வழக்கம் காணப்படுகிறது. 2. ஆட்சி ஆண்டு சமற்கிருதத்தில் 'ராச்சிய வச்சரம்' என்று குறிப் பிடப்படுகிறது. எழுபத்து ஏழாம் ஆட்சி ஆண்டு என்பதனை எழுபது அதன் எதிரான ஆண்டு ஏழு என்று குறிப்பிடப் பட்டிருக்கும். கலி ஆண்டு, ஆட்சி ஆண்டு, சக ஆண்டு ஆகிய மூன்றும் சில கல்வெட்டுகளில் தரப் பட்டுள்ளன. மாதங்களின் பெயர்கள் இராசிகளின் பெயரால் குறிப்பிடப் பட்டுள்ளன. இதனால் மன்னரின் ஆட்சித் தொடக்கத்தைத் துல்லியமாக அறிய முடியவில்லை . 3. பாண்டியர் கல்வெட்டுகளில் பெரிய அளவில் மெய்க் கீர்த்திகள் இல்லை; பல கவிதை நடையில் உள்ளன. 4. பாண்டியர் கல்வெட்டுகளில் மிகவும் சிறப்பானதாகக் கருதப் படுவது மானூர்க் கல்வெட்டு ஆகும். சோழர் காலத்தில்தான் தமிழகத்தில் ஊராட்சி முறை சிறப்பாக இருந்தது என்பதை மாற்றி, பாண்டியர் காலத்திலேயே தனராட்சி முறை நிலவியதை இக்கல்வெட்டு விளக்குகிறது. விருப்பங்களைத் தெரிவிக்கும் உரிமையுள்ள உறுப்பினர், உரையாடலில் மட்டும் கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்ற உறுப்பினர் என இருவேறு உறுப்பினர்கள் இருந்த ஊராட்சி முறை பாண்டியர் காலத்தி விருந்தது. வாரிய உறுப்பினர்கள் அதிக அதிகாரம் தரப்பட்டு இருந்ததையும், மற்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் வரம்புக் குட்பட்டு இருந்ததென்பதையும் இக்கல்வெட்டால் அறிகிறோம். 5. இக்கல்வெட்டைச் சோழரின் உத்திரமேரூர்க் கல்வெட்டுக்கு ஒப்பிட்டுப் பேசுவர். அரசன் ஆணை பிறப்பித்தவுடனே கல் வெட்டில் பொறிக்காமல் காலந் தாழ்த்திக் கல்வெட்டில் பொறித்துள்ளனர். ஆயினும் ஆணை பிறப்பித்த நாளையும், கல்வெட்டில் பொறித்த நாளையும் குறிப்பிட்டுள்ளனர். சில செய்திகள் செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலுமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 6. பாண்டியர்கால இலக்கியங்களும் கல்வெட்டு, செப்பேட்டுச் சான்றுகளுடன் ஒத்துள்ளன. ஆ) முதலாம் பாண்டியப் பேரரசர்கள் 1. கடுங்கோன் கி.பி. 575-600) சங்க கால பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலென்றே இவனை அழைக்கலாம். களப்பிரர் கைக்கொண்ட பாண்டிய நாடு இருள் சூழ்ந்து கிடந்தது. அதனை உதய சூரியன் போல் தோன்றி இருள் அகற்றி வென்றான் என்று இவனை வேள்விக்குடிச் செப் பேடுகள் ஏற்றிப் போற்றுகின்றன. அத்தோடு பகைவரது ஒளிபொருந் திய நகரங்களை இவன் அழித்தான் தொல்லை தந்தவரை ஒடுக் கினான்; மறையோருக்குத் திருமங்கலம் என்ற ஊரைத் தானமாகக் கொடுத்தான், அதனை மரபுப்படியும் சீர்படுத்தி மறையோருக்குப் பிரமதேயச் சிற்றூராக அளித்தான் என்று தளவாய்புரச் செப்பேடு கூறுகிறது. 2. மாறவர்மன் அவனி சூளாமணி கி.பி. 600-630) இவன் கடுங்கோனுக்குப் பின் அரசுக் கட்டி லேறியவன். அவனி சூளாமணி என்பதே இவன் இயற்பெயர் 'மாறவர்மன்', என்பது இவன் பட்டப்பெயர். இவன் கடுங்கோனின் மகன் ஆவான், "மாறவர்மன்', 'சடையவர்மன்", என்ற பட்டப் பெயர்களைப் பாண்டிய மன்னர்கள் மாறி, மாறி வைத்துக்கொள்ளும் மரபு உண்டு. 3. செழியன் சேந்தன் (கி.பி. 620- 642) இவன் மாறவர்மன் அவனி சூளாமணியின் மகன் ஆவான். இவனைச் சயந்தவர்மன் என்றும் அழைப்பர். இவன் மங்கலபுரம் என்ற நகரை அமைத்தான். பல சிற்றரசர்களையும், மாகதர்களையும் வென்றான். இரணியகர்ப்பம், துலாபாரம் போன்ற மகாதானங் களைச் செய்தான். 4. மாறவர்மன் அரிகேசரி கி.பி. 642- 690 - வேள்விக்குடிச் செப்பேட்டின் படி இவன் நான்காவது பாண்டிய மன்னன் என்பதை அறியலாம். மாறவர்மன் அரிகேசரி யின் மகனான இவன் தமிழ் நூல்களில் கூன் பாண்டியன் என்றும் நெடுமாறன் என்றும் சுந்தரபாண்டியன் என்றும் குறிப்பிடப் படுகிறான். சமணனாக இருந்த இவனைச் சைவனாக மதம் மாறச் செய்தவர் திருஞான சம்பந்தர் ஆவார். இவன் சோழர் குல இளவரசி மங்கையர்க்கரசியை மணந்தான். இவ்வம்மையாரும், அமைச்சர் குலச் சிறையாரும் நாயன்மார்களின் வரிசையில் வைத்து எண்ணப் படுகிறார்கள். வெற்றிகள் வலிமைமிக்க சாளுக்கியரை (வில்லவரை) நெல்வேலிப் போரில் இவன் வென்றான். எனவே தான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறனுக்கும் அடியார்க்கும் அடியேன் என்று திருத் தொண்டர் திருத்தொகையில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியுள்ளார், சின்னமனூர்ப் பெரிய செப்பேடும் இதனை உறுதி செய்கிறது. பின்னர், பாண்டிய நாட்டின் தென் பகுதியில் வாழ்ந்த பரதவரையும் வென்று தென்னாட்டில் அமைதியை ஏற்படுத்தினான். அடுத்து, மதில்களையுடைய கடற்கரைப் பட்டினமான புலியூர்த் துறைமுகத்தில் கேரளனை வென்றான். இவன் மொத்தத்தில் 34 வெற்றிகளைப் பெற்றான். அவற்றில் 15 வெற்றிகளைச் சேரருக்கு எதிராகப் பெற்றான். நெடுமாறன், பூழியன், மீனவன், வானவன், நேரியர், அதியமான் முதலிய விருதுப் பெயர்களும் இவனுக்குண்டு. இவற்றையெல்லாம் பாண்டியக் கோவை என்ற நூலில் காணலாம், சமயப் பற்று இவன் சமணனாக இருந்து னசவனாக மாறியவன். சைவ நாயன்மாரில் ஒருவனாக வைத்துப் போற்றப்படுபவன். இரணய கர்ப்பம், துலாபாரம் முதலிய மகா தானங்களைச் செய்து வைதீக சமயத்தைப் போற்றினான். பிராமணருக்கு முகாமை யளித்தான். கி.பி. 642இல் பல்லவ நரசிம்மன் காலத்தில் காஞ்சிக்கு வந்த சீனப்பயணி யுவன்சுவாங் பாண்டிய மன்னன் ஒருவன் இறந்ததையும், பாண்டிய நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதையும் பற்றிக் குறிப்பிடுகிறார். அவ்வாறு இறந்த மன்னன் இவனுடைய தந்தையான செழியன் சேந்தன் (கி.பி. 620 - 642) எனலாம். இவன் வைகைக் கல்வெட்டின்படி 50 ஆண்டுகள் அரசாண்டதாக அறிகிறோம். எனவே, இவன் கி.பி. 642 இல் பட்டத்திற்கு வந்து 690 வரை ஆண்டதாகக் கொள்ளுகிறோம், 5. கோச்சடையன் இரணதீரன் (கி.பி. 700-730) மாறவர்மன் அரிகேசரி ஐம்பது ஆண்டுகள் ஆண்டு, அயராது பல வெற்றிகளைப் பெற்றுப் பாண்டியப் பேரரசை ஒரு வலுவுள்ள, பரந்த நாடாக்கினான். அவன் மகனான கோச்சடையன் இரணதீரன் தந்தையைப் போலவே, சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். இவன் சேரர், சோழர், கொங்கர், கருநாடகர் ஆகியோரை வென்றான். இதனால் இவனுக்கு வானவன், செம்பியன், மதுர கருநாடகன் என்னும் விருதுப் பெயர்கள் ஏற்பட்டன. இவன் மாரதர் (சாளுக்கியர்) என் பாரை மங்கலாபுரத்தில் வென்றான். ஆய்வேளிரை மருதூரில் வென் றான். இவன் காலத்தில்தான் சுந்தர மூர்த்தி நாயனாரும் சேரமான் பெரு மாளும் மதுரைக்கு வந்தனர். இவன் தன் மகளைச் சோழ இளவரசனுக்கு மணம் முடித்தான். 6. அரிகேசரிபராங்குச மாறவர்மன் அல்லது முதலாம் இராச சிம்ம ன் (கி.பி. 730 - 769) கோச்சடையன் ரணதீரன் பல்லவ இளவரசியை மணந்து அவள் வழித்தோன்றிய தன் மகனுக்கு இராசசிம்மன் என்றே பெயர் சூட்டினான். அவனே அரிகேசரி பராங்குசவர்மன் என்ற ஆறாவது பாண்டிய மன்னனானான். அரிகேசரி என்ற சமற்கிருதப் பெயரே இராசசிம்மன் என்றாயிற்று. இவன் பல்லவர்களை அழித்தவன். 'பல்லவ பஞ்சனன்' என்று சிறீவர மங்கலச் செப்பேடு கூறுகிறது. பல்லவ மன்னன் பரமேசுவரனுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நெருக் கடியைப் பயன்படுத்தி இவன் பல்லவர் மீது போர் தொடுத்தான். அப் போர் நடுவயல், கழும்பூர், குறும் படை - பள்ளிக்குறிச்சி, குவயலூர், திருமங்கை பெரியலூர் முதலிய ஊர்களில் நடந்தன. பல்லவன் புற முதுகிட்டு ஓடியதாக வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. பல்லவ மன்னன் சிறை வைக்கப்பட்டான். அவனைப் படைத்தலைவன் உதய சந்திரன் மீட்டான். பின்னர் மங்கை, நெல்வேலி ஆகிய இடங் களில் பாண்டியனைப் பல்லவன் தோற்கடித்தான். பாண்டியன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் திறை பெற்றான். கொடுமுடியில் உள்ள சிவன் கோவிலுக்குப் பொற் குவியலும், நவ மணிகளும் அளித்தான். கங்க நாட்டின் மீது படையெடுத்துப் பின்னர் அந்நாட்டு மன்னன் பராங்குசனுக்குத் தன் மகள் பசுந்தரியை மண முடித்து உறவு கொண்டான். சமயம் அரிகேசரி பராங்குச மாறவர்மன் சைவபக்தனாயினும் வைண வத்தையும் ஆதரித்தான். பெரியாழ்வார் இவனுடைய அவைக்களத் தை அலங்கரித்தார். கொங்கு நாட்டில் பேரூரில் திருமாலுக்குக் கோயி லெடுத்தான். இவனுடைய காலத்தில் நம்மாழ்வார் என்ற வைணவப் பெரியாரும் வாழ்ந்துள்ளார். திருமாலிருஞ்சோலையிலுள்ள திருமால் மீது நீங்காப் பக்தி கொண்ட இவனைப் பெரியாழ்வார் தமது பதிகங்களில் சிறப்பித்துப் பாடியுள்ளார். மதுரை (கூடல்), கருர் (வஞ்சி), உறையூர் (கோழி) ஆகிய ஊர் களில் மாட மாளிகைகள் எழுப்பி அழகுபடுத்தினான், கோசல்ரம், துலாபாரம் ஆகிய மகாதானங்களைச் செய்தான். சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இவனது மேலாதிக்கம் பரவி யிருந்தது. 7. நெடுஞ்சடையன் பராந்தகன் அல்லது முதலாம் வரகுணன் (கி. பி. 163 - 85) இவனுக்குச் சடிலன் என்ற சமற்கிருதப் பெயரும் உண்டு. இவன் தனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் வேள்விக்குடிச் செப் பேட்டையும், தனது 17 ஆம் ஆட்சி ஆண்டில் சிரீவரமங்கலம் செப் பேட்டையும் வழங்கினான். இவற்றில் இவனுடைய போர்கள், ஆட்சி முறை முதலியன பற்றி கூறப்பட்டுள்ளன. இவற்றுடன் இவனது கல்வெட்டுகள் பலவும் இவனைப் பற்றி அறியச் சான்றுகளாய் உள்ளன, பாண்டியர் - பல்லவர் போர் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 730-795) பாண்டியரை எதிர்த்துக் கேரள அரசனையும், கொங்கு நாட்டு அரசனை யும், தகடூர் அதிகமானையும் இணைத்து ஒரு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு நெடுஞ்சடையன் பராந்தகன் மீது போர் தொடுத்தான். பராந்தகன் அக்கூட்டணியை எதிர்த்துப் போரிட்டுப் புகழியூர் என்ற இடத்தில் அதிகமானை வென்றான். கொங்கு அரசனைக் கைது செய்தான், தொண்டை நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான். கொங்கு நாட்டு வேந்தன் அவன் ஏறிவந்த பட்டத்து யானையுடன் மதுரைச் சிறையிலடைக்கப் பெற்றான். கங்கரையும் வென்றான். விழிஞம் போர் சேர நாட்டில் ஒரு பகுதியான வேணாடு, ஆய்வேளிர் குடியின ரால் தொன்று தொட்டு ஆளப்பட்டு வந்தது. இவர்களின் கடற்கரைக் காவல்பட்டினம் விழிஞம் என்பதாகும். பராந்தகன் இப்பட்டினத் தைக் கைப்பற்றினான். இதனால் இவனுக்குப் பெரிய யானைகளும், பிடரி மயிருடைய குதிரைகளும், விலையுயர்ந்த பொருள்களும் கொண்டிப் பொருள்களாகக் கிடைத்தன. வேணாட்டில் மீண்டும் கவிவரம் தலைதூக்காமலிருக்க இவன் அங்கொரு வலுவான காவற் கோட்டையை மதில்களும், அகழியு முடையதாகக் கட்டினான். கரவந்தபுரம் கோட்டை என்று அதற்குப் பெயர். இக்கோட்டைக்குள் ஒரு சிறந்த காவல் படையையும் வைத்தான். சமயப்பற்று இவன் வைணவப் பற்றாளன் ஆவான். திருச்சித் திருமாலுக்கு 125 கழஞ்சுப் பொன் திருவிளக்கு எரிக்கத் தானமாக அளித்தான். அம்பாசமுத்திரம் திருமாலுக்கு நாள் வழிபாட்டிற்கு 296 பொற்காசு களைத் தானமாகக் கொடுத்தான். கொங்கு நாட்டுப் பேரூர்ப் பெரு மானுக்குக் கோயில் கட்டினான். இவன் இவ்வாறு வைணவத் திருப் பணிகள் செய்த போதிலும் பிரமன், சிவன் ஆகியோரையும் வழிபட்டான். அமைச்சர்கள் 1. மாறன்காரி இவன் நெடுஞ்சடையன் தந்தையான மாறவர்மன் இராச சிம்மன் காலத்திலேயே முதலமைச்சராய் இருந்தவன். இவன் நெடுஞ் சடையன் ஆட்சிக் காலத்திலும் முதலமைச்சனாக இருந்தான். இவன் இவ்வாறு மகனுக்கும், தந்தைக்கும் மகா சாமந்தனாக (முதல் அமைச்சனாக) இருந்தான். இவன் ஒரு தலை சிறந்த கவிஞன் ஆவான். எனவே இவனை 'மதுரகவி' என்றழைப்பர். மாறவர்மன் கங்க நாட்டின் மீது படையெடுத்துக் கங்க அரசனைத் தோற்கடித்து அவன் மகள் பூசுந் தரியை மணக்க விரும்பினான். அத்திருமணத்தைத் தடுத்து எதிர்ப்புத் தெரிவித்த பூர்வ அரசர்களையும் சாளுக்கிய அரசர்களையும் மாறன் காரி எதிர்த்துப் போரிட்டு வென்று தன் மகளுக்கு மணம் முடித்து வைத்தான். இவன் கரவந்தபுரம் என்னும் களக்குடியில் மாறன் என்ற அந்தணனுக்கு மகனாகத் தோன்றியவன், மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலையில் நரசிங்கப் பெருமானுக்குக் கற்கோயில் கட்டத் தொடங்கினான். அக்கோயிலுக்கருகில் அக்கிரகாரம் அமைத்து அந்தணரைக் குடியேற்றினான். இவனை முவேந்தன் மங்கலப் பேரரையன் என்று பராந்தகப் பாண்டியன் போற்றியுள்ளான். 2. மாறன் எயினன் இவன் மேலே குறிப்பிட்ட மதுரகவி காரியின் தம்பியாவான். மாறன்காரி நெடுஞ்சடையனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 771) இறந்தவுடன் மாறன் எயினன் அவ்வரசனுக்கு மகாசா மந்தன் (முதலமைச்சர்) ஆனான். தன் அண்ணன் கட்டத் தொடங்கி முடிக்காமலேயே விட்ட ஆனைமலை - நரசிங்கப் பெருமாள் கோயி லுக்கு முன் மண்டபம் கட்டி முடித்தான். பின்னர் அக்கோயிலுக்கு முழுக்கு அபிஷேகம் செய்தான் என்று அக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. – 3. சாத்தன் கணபதி இவன் கரவந்தபுரத்தில் வாழ்ந்த சாத்தன் என்பவரின் மகன் ஆவான். பராந்தகப் பாண்டியன் ஆட்சியில் மகா சாமந்தனாக (தானைத் தலைவனாக) இருந்தான். இவனுக்கு சாமந்தன் கணபதி, சாமந்தன் பீமன், பாண்டி அமர்தங்கலவரையன் என்றும் வேறு பட்டப் பெயர்களுண்டு. இவன் திருப்பரங்குன்றத்துக் கோயிலுக்குத் திருப்பணி செய்து திருக்குளத்தைச் செப்பனிட்டான். அவ்வூரில் சிவனுக்குக் கோயிலெடுத்து திருமுழக்கும் (அபிஷேகமும்) செய்தான். இவனுடைய மனைவி நக்கயன்கொற்றி என்பவளும், திருப்பரங்குன்றத்தில் கொற்றவைக்கும், சேட்டைக்கும் இரு கோயில்கள் கட்டினாள், 4. ஏனாதி சாத்தஞ்சாத்தன் இவன் சாத்தன் கணபதியின் சகோதரன் ஆவான். வேள்விக் குடிச் செப்பேடுகளில் தமிழ்ப் பகுதியைப் பாடியவன் இவனேயா வான். இவன் ஒரு படைப்பிரிவுக்குத் தலைவனாக இருந்தான். இவன் 'ஏனாதி' என்னும் பட்டம் பெற்றவன். பாண்டிய மன்னர்களின் வரலாறுகளைப் பாடி, அவற்றைச் செப்பேடுகளில் எழுதிவைத்த மாபெரும் புலவனும் வீரனுமாவான். பாண்டியர் வரலாற்றைச் செப் பேடுகளில் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தியவனே இவன்தான். 5. தீரதீரன் மூர்த்தி எயினன் நெடுஞ்சடையனுடைய ஆட்சியின் முற்பகுதியில் பாண்டியப் படைகளுக்கு மகாசாய்ந்தனராக விளங்கியவன். 'வீரமங்கலப்பேரரை யன்' என்ற விருது பெற்றவன் சிறீவரமங்கலச் செப்பேட்டின் ஆணத்தியாக விளங்கியவன். 6. சங்கரன் கிரீதரன் நெடுஞ்சடையன் பராந்தகனின் யானைப் படைக்குத் தலை வனாக விளங்கியவன், இவனுக்குப் பாண்டி இளங்கோ மங்கலப் பேரரையன் என்ற விருது பெயரும் உண்டு. இவ்வாறு அந்தணர் குலத்தில் பிறந்தவர்கள் முதல் அமைச்சர் களாகவும், தானைத் தலைவர்களாகவும், புலவர்களாகவும் பாண்டியர் ஆட்சியில் பணியாற்றி உள்ளனர். இவர்களும் அரசர் களைப் போலவே வைதீக சமயங்களுக்குப் பணி செய்துள்ளனர். 8. சிறீமாறன் சிறீவல்லபன் (கி.பி. 815 - 863) முதலாம் பராந்தகனுக்குப் பின் அவன் மகன் சிறீமாறன் அரசுக் கட்டிலேறினான். இவன் மயிலைத் தலைவனான பொத்தப்பிக் குலச் சோழன் சி கண்டதாசனுடைய மகள் அக்கள நிம்மடியை மணந் தான். இத்தம்பதிகளுக்குப் பிறந்தவன் தான் பராந்தகவீரநாராயணன் ஆவான். இவள் குன்னூர், இலங்கை , விழிஞம் ஆகிய இடங்களில் வெற்றி பெற்று பொன்னாலான வாகை மலரைச் சூடிக் கொண்டான். இலங்கைப் படையெடுப்பு இலங்கையைச் சிங்கள மன்னன் முதலாம் சேனன் ஆண்ட போது பாண்டியப் படைகள் இலங்கையில் புகுந்தன. மகாதவிதா என்னுமிடத்தில் நடந்த போரில் பாண்டியப் படைகள் வெற்றி பெற்றன. சிங்கள இளவரசன் மகிந்தன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டான். முதலாம் சேனன் இலங்கையை விட்டு மலேயா நாட்டிற்கு ஓடிவிட்டான். பாண்டியப் படைகள் இலங்கையைச் சூறையாடின. பொன் னாலான புத்தர் சிலைகளையும், பொன்னையும், மணிகளையும் புத்த விகாரங் (கோயில்களிலிருந்து அள்ளிக் கொண்டு தமிழகம் திரும்பின. இதனால் சிங்கள தேசம் சிறுமையுற்று வறுமையில் மூழ்கியதாக மகாவம்சம் கூறுகிறது. இதனைச் சின்னமனூர் பெரிய செப்பேடும் உறுதி செய்கிறது. மலேசியாவிலிருந்து திரும்பிய முதலாம் சேனன் பாண்டியனோடு சந்து செய்து கொண்டு மீண்டும் அரசுக் கட்டி லேறினான், குடமூக்குப் போர் குடமூக்கு எனும் கும்பகோணத்தில் பல்லவர், சோழர், கங்கர், கலிங்கர், மகதர் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து பாண்டியன் சிறீ மாறனைக் கி.பி. 859 - இல் எதிர்த்தார்கள் இக் கூட்டுப் படையைப் பாண்டியன் தோற்கடித்து வெற்றி வாகை சூடினான். பாண்டியர் -- பல்லவர் போர் கி.பி.854-இல் வந்தவாசியை யடுத்த தெள்ளாறு என்னுமிடத் தில் பல்லவ மன்னன் நந்திவர்மனுடன் நடந்த போரில் பாண்டியன் தோல்வியுற்றான். இதனால் நந்திவர்மன் 'தெள்ளாறு எறிந்த நந்தி "' எனும் அழியாப் புகழ்பெற்றான். தன் தந்தையான நந்திவர்மன் பாண்டியாரிடம் தோற்ற தொண்டை மண்டலப் பகுதியை நந்திவர்மன் மீட்டான். சிறீமாறன் முடிவு பாண்டியனின் இறுதிக் காலத்தில் சிங்கள மன்னன் இரண்டாம் சேனன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையை முற்றுகை யிட்டான். இச் சமயத்தில் சிறீமாறன் மகன் சிங்களரோடு சேர்ந்து கொண்டு தந்தைக்கு எதிராகச் செயல் பட்டான். சிறீமாறன் போர்க் களத்தில் பட்டான். எனவே சிங்களப் படைத்தலைவன் சிறீமாறன் மகன் வரகுணனுக்கு முடிசூட்டி விட்டுச் சேனன் இலங்கை திரும்பி னான். இவனே இரண்டாம் வரிகுணன் (கி.பி. 82 = 885) என்ற அபிசேகப் பெயருடன் பாண்டிய மன்னன் ஆனான், 9. இரண்டாம் வரகுணன் (கி.பி. 862 - 885) இவனுடைய காலத்தில் தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற் பட்டன. சோழர்கள் எழுச்சியடைந்தனர். கி.பி. 850- இல் விசயா லயன் பாண்டியரின் கீழ் இயங்கி வந்த தஞ்சையை முத்தரையரிட மிருந்து கைப்பற்றினான். விசயாலயன் மரபு ஏற்பட்டு தஞ்சையைச் சோழர் தனித்தாள முற்பட்டனர். இது தமிழகத்திலே ஏற்பட்டதொரு புதிய அரசியல் மாற்றம் அல்லது புதிய அத்தியாயம் ஆகும். இரண்டாவதாக இதுவரை பல்லவரும் பாண்டியருமே மாறி மாறி வெற்றியும் தோல்வியும் பெற, தமிழக அரசியலில் இடம் பெற் றிருந்தனர். ஆனால் பல்லவர் ஆட்சியிலும் புரையோடிப் போன ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. அபராசிதவர்மன் (கி.பி.895-913) காலத்தில் பல்லவரிடையே இரு கட்சிகள் தோன்றின, அபராசிதனும், நிருபதுங்கனும் பல்லவ நாட்டின் அரச பதவிக்குப் போட்டியிட்டனர். நிருபதுங்கனுக்குப் பாண்டியன் இரண்டாம் வரகுணன் துணை நின் றான். அபராசிதனுக்குக் கங்க மன்னன் முதலாம் பிருதிவீபதியும், சோழ மன்னன் விசயாலயன் மகன் ஆதித்தனும் துணை நின்றனர். நிருபதுங்கன் சார்பில் பாண்டியன் இரண்டாம் வரகுணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அபராசிதவர்மன் சார்பில் பிருதி பதியும், ஆதித்தனும் போரிலிறங்கினர். இவ்வாறு பாண்டியன் ஆபத்தான பொதிமணாவில் காலைவிட்டு விட்டான். திருப்புறம்பியம் போர் (கி.பி. 885) இவர்களுக்கிடையே நடந்த போர் திருப்புறம்பியம் என்னு மிடத்தில் நடந்தது. போரின் முடிவில் அபராசிதவர்மன் வெற்றி பெற் றான். பல்லவ அரசன் அபராசிதவர்மனுக்குத் துணைநின்ற பிருதிவி பதி போரில் தொல்லப்பட்டான். நிருபதுங்கன் சார்பில் போரிட்ட வர குணன், நிருபதுங்கன் தோற்றதால்தான் கைப்பற்றிய சோழநாட்டுப் பகுதிகளை விடும்படி நேர்ந்தது. இதனால் பாண்டியர் பலம் குன்றியது. இதுவே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. விசயாலயன் தோற்றுவித்த சோழர் மரபு, அவன் மகன் ஆதித்தன் இப்போரில் வெற்றி பெற்ற கட்சியிலிருந்ததால் மேலும் வலுப்பெறலாயிற்று. இரண்டாம் வரகுனரான் தன்னுடைய தம்பி பராந்தகன் வீரநாராயண னுக்கு முடி சூட்டி விட்டு ஆன்மீகத்தில் ஈடுபடலானான். சமயப் பணி இரண்டாம் வரகுணன் காலத்தில் மாணிக்கவாசகர் வாழ்ந்தார். இவன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 1,400 பொற்காசுகளை நிவந்தமாக கொடுத்தான். ஆண்டுதோறும் 25,000 கலம் நெல்லை அக்கோயிலுக்கு வழங்க ஏற்பாடு செய்தான். இச்செய்தி திருச்செந் தூர்க் கோயிலிலுள்ள அவனுடைய 13 ஆம் ஆட்சி ஆண்டுக் கல் வெட்டால் அறியப்படுகிறது. 10. பராந்தகன் வீரநாராயணன் (கி.பி. 860-905) இவன் சிறீவல்லபனுக்கும், அக்களநிம்மடிக்கும் பிறந்த மகன். இரண்டாம் வரகுணவர்மனின் மாற்றாந்தாயின் மகன். இவன் வழங்கிய தளவாய்புரம் செப்பேட்டில் இவனுடைய வீரச் செயல்களும் அறச் செயல்களும் காணப்படுகின்றன. செந்நிலம் என்ற இடத்தில் தன் அண்ணன் வேல்வேந்தன் என்பவனைத் தோற்கடித்தான். கரிகிரி அல்லது களக்குடி அல்லது கரவந்தபுரம் என்ற ஊரில் பகைவரை வென்று யானைகளைக் கைப் பற்றினான். மேலும் பல சிற்றரசர்களை வென்றான். எனவே, இவ னுக்கு வீரருள்வீரன், மதுராபுரி பரமேஸ்வரன், கண்டருள் கண்டன், மகரகேதனன் போன்ற விருதுப் பெயர்கள் ஏற்பட்டன. இத்தகைய வீரமிக்க இவனைவீர நாராயணன் என்றே அழைத்தனர். இவனுடைய மனைவியான வானவன்மாதேவி என்பவள் சேர குலத்து இளவரசி ஆவாள். இவளுடைய பெயரால் சேரன் மாதேவி என்ற ஊரும் ஏற்பட்டது. பிரமதேயங்கள், தேவதானங்கள் பல கொடுத்த இவன் ஒரு சிறந்த வைணவன் ஆவான். 11. இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 900 - 920) இவன் பராந்தகன் வீரநாராயணனுக்கும். வானவன் மாதேவிக்கும் மகன் ஆவான். சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகளை வழங்கியவன் இவனேயாவான். சின்னமனூருக்கு மந்தர கெளரவ மங்கலம் எனப்பெயரிட்டு அதனைப் பிராமணருக்குப் பிரமதேய மாக வழங்கினான். தஞ்சை அரசனை நெப்பர் என்னுமிடத்திலும் பகைவர் பலரைக் கொடும்பாளூரிலும் தோற்கடித்தான். இவன் சோழன் முதலாம் பராந்தக (கி.பி. 97-915னுடைய சமகாலத்தவன் ஆவான். பராந்தகன் பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துக் கி.பி. 910-இல் மதுரையைக் கைப்பற்றி மதுரைகொண்ட கோப்பரகேசரி என்ற சிறப்புப் பெற்றான். இராசசிம்மன் இலங்கை மன்னனிடம் படைத்தவிபெற்று. மீண்டும் சோழனோடு போரிட்டான். ஆனால் வெள்ளூர் என்னுமிடத்தில் தோல்வி கண்டு இலங்கைக்கு ஓடி, இலங்கை அரசனிடம் தனது செங்கோலையும், மணிமுடியையும் மற்ற அரச சின்னங்களையும் வைத்துவிட்டுத் தன் தாய் வானவன் மாதேவியின் பிறந்த நாடான (சேர நாட்டிற்குச் சென்று விட்டான் என மகாவம்சம் கூறுகிறது. ஆயினும் முதலாம் பராந்தகன் இலங்கை மீது படையெடுத்து அவற்றை மீட்க முற்பட்டபோது, இலங்கை அரசன் உதயன் (கி.பி. 915-953) அவற்றை எடுத்துக் கொண்டு உரோகணம் என்னுமிடத்திற்கு ஓடிவிட்டான். பராந்தகன் வெறுங்கையோடு தஞ்சைக்குத் திரும்பினான். இவ்வாறு சோழன் முதலாம் பராந்தகனால் முதலாம் பாண்டியப் பேரரசு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. முடிவுரை இவ்வாறு களப்பிரரை வீழ்த்திப் பாண்டிய நாட்டைக் கைப் பற்றிய கடுங்கோன் தொடங்கிய முதல் பாண்டியப் பேரரசு இரண் டாம் இராசசிம்மன் வரை நீடித்து முதலாம் பராந்தகச் சோழனால் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது. பாண்டியர் மீண்டும் தலைதூக்கி, சோழரிடமிருந்து நாட்டை மீட்டனர். கி.பி. 946-இல் சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் (கி.பி. 946-966) சோழர் ஆதிக்கத்திலிருந்து பாண்டியப் பகுதிகளை மீட்டு 20 ஆண்டு காலம் ஆண்டான். ஆனால் இரண்டாம் ஆதித்த கரிகாலன் என்பான் வீரபாண்டியனை கி.பி. 956இல் கொன்று நாட்டைக் கைப்பற்றினான். முதலாம் இராச ராசன் காலத்தில் பாண்டிய நாடு முழுமையாகச் சோழரிடம் வந்தது. 'இராசராச மண்டலம்' என்று பெயரிடப்பட்டுச் சோழரால் ஆளப் பட்டது. முதலாம் இராசேந்திரன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று இரண்டாம் இராசசிம்மன் இலங்கை மன்னனிடம் வைத்து விட்டு வந்த மாரிமுடியையும், செங்கோலையும், மற்ற அரசச் சின்னங்களையும் மீட்டு வந்தான். இவ்வாறு பாண்டிய நாடும் அதன் உரிமைகளும் சோழ நாட்டிற்குள்ளாயின என டாக்டர் கே.வி.இராமன் கூறுகிறார். இ) ஆட்சிமுறை 1. நடுவண் ஆட்சி பாண்டிய நாட்டைப் 'பாண்டிமண்டலம்' என்றே அழைத் தனர். இது கிழக்கிலும், தெற்கிலும் கடலாலும், மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையாலும், வடமேற்கில் கொங்கு நாட்டாலும், வடகிழக்கில் புதுக்கோட்டையாலும், வடக்கில் வெள்ளாற்றாலும் சூழப்பட்டிருந்தது. பாண்டிமண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு கூற்றங் களாகவும், கூற்றம் ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன. கூற்றம் என்பதே நாடு எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்டது. நாடு இராட்டிரம் எனச் சின்னமனூர்ச் செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது. வளநாடு வளநாடு என்பது பெரும் பிரிவு. இதில் பல நாடுகள் அல்லது கூற்றங்களிருந்தன. அவ்வாறு இருந்த வளநாடுகள் காலந்தோறும் சுட்டியும், குறைந்தும் காணப்பட்டன. வைகுந்த வளநாடு, கேரளசிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு. அமிர்தகுண வள் நாடு, மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, பாண்டிய மார்க்கண்ட வளநாடு முதலியனவாக வளநாடுகள் அறியப்பட்டன. கூற்றம் (நாடு) ஒவ்வொரு வளநாடும் பல கூற்றங்கள் அல்லது நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. கொழுவூர்க் கூற்றம், களவழி நாட்டு வேம்பாற்றூர்க் கூற்றம், அவ்வூர்க் கூற்றம், நடுவில் கூற்றம், முத்தார்க் கூற்றம் முதலிய சுகூற்றங்கள் பட்டயங்களில் குறிப்பிடப்படுகின்றன. இதைப் போலவே தென்களவழி நாடு, களக்குடி நாடு, அண்ட நாடு, அசூர் நாடு, ஆன்மா ,நாடு, இரணியமுட்ட நாடு, வேம்பநாடு, கொற்கை நாடு, தொண்டி நாடு, வேம்பை நாடு, புரத்தாய நாடு, செம்பி நாடு முதலிய நாடுகளும் செப்பேடுகளில் குறிப்பிடப்படுகின்றன. எனவே, பாண்டி. பராட்சியில் கூற்றம், நாடு என்பனவற்றை ஒரு பொருட் குறித்த சொற்களாகக் கொள்ளலாம். நாடு என்பதும் கூற்றும் என்பதும் அந்தந்த ஊர்களின் பெயர் களரின் அடியாகப் பிறந்தவையென்றும் ஆனால், வளநாடு மட்டும் பாண்டிய மன்னர்களின் இயற்பெயர்களாலும், விருது அல்லது சிறப்புப் பெயர்களாலும் அமைந்துள்ளது என்றும் டி. வி. சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார். ஊர்கள் நாடு, கூற்றம் ஆகியவற்றிற்கு அடுத்த பிரிவு பனர் என்பதாகும். தளர்களை மூன்று வகை ஊளர்களாகப் பிரித்து அறியலாம். அரசர்களே உருவாக்கிய பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் ஆகியவை முதல் வக்க பளர்களாகும். வெள்ளாண் வகை ஊர்கள் என்பன இரண்டாம் வகை ஆகும். இவற்றில் பிராமணர் அல்லாத நிலக்கிழார்களும் உழவர்களும் வாழ்ந்தனர். பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் ஊர் களில் பிராமணர் மட்டுமே வாழ்ந்தனர். மூன்றாவது வகை பளர் களென்பது பேரூர் அல்லது நகரமாகும். நார்களின் பெயர்கள் பிராமணர்கள் வதியுமிட மாயின் மங்கலம் என்றும், மற்றவை குடி, ஊர், வயல் என்றும் வழங்கப்பட்டன. பாண்டியநாடு, மண்டலம், வளநாடு, நாடுகூற்றம்), தளர் என ஆட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் மன்னராட்சியின் கீழ் முடியாட்சியால்தான் ஆளப்பட்டது. மாறவர் மன், சடையவர்மன் என்னும் பட்டங்களை ஒருவர் பின் ஒருவராக மாறிமாறிப் புனைந்து வந்தனர். இவர்களைப் போலவே சோழர் களும் இராசகேசரி', பரகேசரி ஆகிய பட்டங்களை மாறிமாறிச் சூட்டிக் கொண்டனர். பாண்டிய மன்னர்களை 'இறைவனின் அவதாரம்' என்றே மக்கள் போற்றினர். மன்னர் வேதவழிவைதீக சமயங்களைப் பய. 7 னார்கள், வேள்விகள் செய்தனர். அரசப் பதவி தந்தைக்குப் பின் மூத்த மகனுக்கே உண்டு. இதனைப் பிறங்கடை உரிமை என்பர். இதனால் பாண்டியரின் முதலாம் பேரரசுக் காலத்தில் வாரிசுரிமைப் போர் எதுவும் ஏற்பட்டதாகக் காணோம். மன்னனுக்கு வாரிசு இல்லாத போது அவனுடைய உடன் பிறப்புக்கு அரசுரிமை வரும். எடுத்துக் காட்டாக, இரண்டாம் வரகுணனுக்குப் பின் அவனுடைய இளவல் பராந்தகன் வீரநாராயணன் அரசுக் கட்டிலேறினான். பராந்தகன் வீர நாராயணனும் சடையவர்மனும் இணைந்து நடத்திய இணையாட்சி முறையையும் காண்கிறோம். மதுரையைக் கோநகராகக் கொண்டு ஆண்டதால் பாண்டிய மன்னர்கள் தங்களைக் 'கூடற்கோன், 'கூடல் நகர்க் காவலன்' என்றும், "மதுராபுரிப் பரமேசுவரன்' என்றும் அழைத்துக் கொண்டனர். அவர்களின் அரியணை (சிம்மாசனம்) பள்ளிக்கட்டில் எனப்பட்டது. அரசரின் செயலகம் எழுத்து மண்டலம் என்றழைக்கப்பட்டது. அரசவை கூடிய கூடம் அழகிய பாண்டியன் கூடம் என்றும் 'மானா பரணன் திருமாளிகை' என்றும் அழைக்கப்பட்டது. தலைமை அமைச்சரை உத்தரமந்திரி என்று அழைத்தனர். இவர்களுக்குத் தென்னவன் பிரமராயன் என்ற பட்டமும் உண்டு. பிரமராயன் என்ற பட்டம் பிராமண முதல் மந்திரிக்கே தண்டு. உத்திரமந்திரிக்குப் பின் அவருடைய தம்பிக்கு அப்பதவி அளிக்கப்பட்டது. உத்தரமந்திரி கல்வி கேள்விகளில் சிறந்தும், உயர் குடியில் பிறந்தும் இருக்க வேண்டும். திருமந்திர ஓலை - திருமந்திர ஓலை நாயகம் மன்னரின் ஆணைகளையும், மன்னரின் மற்ற செய்தி களையும், ஓலையில் எழுதி வைப்பதற்கு திருமந்திர ஓலை என்று பெயர். அவ்வாறு ஓலையில் எழுதியதை மேற்பார்வையிட்டுக் கையொப்ப மிடும் உயர் அதிகாரிக்குத் 'திருமந்திர ஓலை நாயகம்' என்று பெயர். அரசனின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் அதிகாரிகளுக்கு 'அகப் பரிவார முதலிகள்' என்று பெயர். இவர்களில் ஒருவருக்கு 'திரு வாசல் முதலி' என்று பெயர். இவரை வாயால் கேட்போர் எனலாம். அரண் மனையில் பணி செய்யும் பெண்டிர் 'திருவுடையாள்' என்றழைக்கப் பட்டாள். இவர்களைத் தவிர மன்ன னுக்கு உதவியாக அலுவலர் பலர் இருந்தனர். அவர்களின் பரிந்துரை யின் பேரில் அரசன் கட்டளைகள் பிறப்பிப்பதுண்டு. அவர்களுக்கு 'அரையர்கள்' என்று பெயர். அரண்மனையில் பொற்கொல்லர், கல்தச்சர், பட்டய எழுத்தாளர், புலவர் முதலிய பல அலுவலர் இருந்தனர். நாட்டின் நிலங்களை அளந்து, அவற்றின் தரத்தின்படி வரி விதிக்கும் பணியைச் செய்ய "நாடுவகை செய்வோர்' என்னும் அதிகாரிகள் இருந்தனர். ஊர்வாரியாக வாங்க வேண்டிய வரித்தொகைகளைக் குறித்து வைக்கும் கணக்குப் பதிவாளர்களுக்கு 'வரியிலார்' என்று பெயர். மகாசாமந்தன் மன்னன் பேரரையர்களை யானைப்படை, குதிரைப்படை ஆகிய வற்றிற்குத் தலைவர்களாக அமர்த்துவான். அவர்களுக்கு 'மகாசாமந்தர்' என்று பெயர், பட்டயம் எழுதும் குழுவின் தலைவ ராகவும் இவர்களை அமர்த்துவதுண்டு. இவர்களுக்கு 'ஏனாதி' என்ற விருதும் வழங்குவதுண்டு. வேள்விக் குடிச் செப்பேட்டில் தமிழ்ப் பகுதியை எழுதியவன் ஏனாதி சாத்தன் என்பவன் ஆவான். ஏனாதி என்பது விருதுப் பெயர், பொதுவாகப் பட்டயம் எழுதும் புலவர் களைப் பல்லவர் நாட்டில் 'காரணிகர்' என்று அழைப்பார்கள். படை நிருவாகம் பாண்டியர் வரலாற்றைக் கண்ணுறும்போது தொடர்ந்து பாண்டிய மன்னர்கள் பல் போர்க்களங்களில் ஈடுபட்டுள்ளனர். குறுநாடு, சேரநாடு, புலியூர், உறையூர், மங்களபுரம், மழகொங்கம், பெண்ணாடகம், புகழுர், ஆயிரூர், தெள்ளாறு, கும்பகோணம், திருப் புறம்பியம், கரவந்தபுரம் முதலிய எண்ணிறந்த போர்க்களங்களில் பகைவர்களுடன் போரிட் டுள்ளனர். கடல் கடந்து இலங்கைக்குச் சென்றும் போரிட்டுள்ளனர். ஆகவே, இவர்களிடம் சிறந்த படை களும், அவற்றை நிருவகிக்கும் சிறந்த ஆட்சி நிருவாகமும் இருந்தன என்பது தெளிவாகிறது. இவர்களிடம் சின்னமனூர்ச் செப்பேட்டில் மூவகைப் படை என்று குறிப்பிடப்படுவதால், தொடக்கத்தில் சிறப்புற்றிருந்த தேர்ப்படையை விட்டு விட்டு மற்ற யானை, குதிரை, காலாட் படைகளை இவ்வாறு மூவகைப் படைகள் என்று போற்றப்பட்டன என்பதை அறியும்போது தேர்ப் படை பிற்காலத்தில் இல்லாமல் (போயிருக்கலாம். இவர்களிடம் யானை, குதிரை, காலாட்படைகளும், கப்பற்படையும் இருந்தன. படைகள் பல பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு படைத் தலைவரை ஏற்படுத்தி இருந்தனர். படை மறவர்களுக்கு மூவேந்த மங்கலப்பேரரையன், பாண்டிய மங்கலப் பேரரையன், பாண்டிய இளங்கோ மங்கலப் பேரரையன் முதலான விருதுகள் வழங்கப்பட்டன. படைகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக் கும் படைத்தளபதிகளை அமர்த்தினர். நான்கு பிரிவுகளுக்கும், தலைவனாக உள்ள சேனாதிபதியைச் சாமந்தன், தண்ட நாயகன், மகாசாமந்தன், மகா தண்டநாயகன் முதலிய பெயர்களால் அழைப்பர், இவர்கைளத் தவிர அரசரின் மெய்க்காப்பாளர் படையும் இருந்தது. இதற்கு 'அணுக்கப்படை" என்று பெயர். பாண்டிய மன்னர்கள் தாங்கள் வென்ற பகுதிகளில் நிலையான படைகளை நிறுத்தி வைப்பார்கள். பாண்டிய நாட்டுக்குள்ளேயே பொது நிருவாகத்திற்கு உதவும் வகையில் படைப் பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனையம், உக்கிரன்கோட்டை ஆகிய இடங் களில் இத்தகைய படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. உக்கிரன் கோட்டையில்தான் நெடுஞ்சடையன் பராந்தகனின் முதன்மைப் படைத்தளம் இருந்தது. பொதுவாகப் படைத்துறை உயர் அலுவலர் மகா சாமந்தன் என்றழைக்கப்பட்டார். படைத்துறையில் பேரதிகாரி களாகப் பிராமணர்களே இருந்தனர். அவர்களுக்கு 'பிரமராயன்' என்ற பட்டப் பெயர் உண்டு. கோயில் நிருவாகப் பொறுப்புகளைக் கூடப் படைத் தலைவர் கள் ஏற்று நடத்தினார். திருவுடையப்புதூர், கோட்டாறு, சுதீந்திரம், கோயில் பட்டி முதலான கோயில்களில் இத்தகைய படைகள் இருந்தன. பாண்டியரிடம் கடற்படை இருந்தது. ஆயினும், சீமாறன் சீவல்லபன் தன் நட்பு நாடான பல்லவ நாட்டிலிருந்தும் கடற்படை யைப் பெற்று இலங்கை மீது படையெடுத்ததாக அறிகிறோம். 2) நீதி நிருவாகம் பாண்டிய மன்னர்கள் நீதிக்காகவே வாழ்ந்தவர்கள், நீதி தவறியபோது உயிரையே மாய்த்துக் கொண்ட பாண்டியர்களையும் பார்க்கிறோம். பாண்டியர் மனுநெறி தழைப்ப மணிமுடி சூடினர் என்று பட்டயச் சான்றுகள் கூறுகின்றன. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களின் உறுப்புகள் சிதைக்கப்பட்டன; சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன; குற்றவாளிகளின் வாரிசு களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணச் சான்றுகள், ஊரார் சான்று (சாட்சி), மரபுமுறை அல்லது வழக்காறு ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குகளுக்குத் தீர்ப்பு கூறப்பட்டது என்பதைத் தளவாய்ப்புரச் செப்பேடு கூறுகிறது. திருட்டுக் குற்றத்தைப் பிராமணர்களே செய்தாலும் தண்டனை உண்டு. கோயில் அணிகலன்களைத் திருடியதாக, பூசாரிகள் தண்டிக்கப்பட்டனர் என்பதற்குச் சாசனச் சான்று உள்ளது. கடன்பட்டவரிடம் எப்படியும் கடனைத் தண்டல் செய்தனர். இவ்வாறு பாண்டியர் ஆட்சியில் பொது நிருவாகமாயினும், படை, நீதி, ஊராட்சி, கோயில் முதலிய எத்தகைய நிருவாகமாயினும் நிருவாகத் துறைகளில் செய்முறைப் பயிற்சி முதலியன கற்பிக்கப் பட்டன. இவற்றில் தேர்ந்த பிராமணர்கள் அரசு நிருவாகத்தில் படை, நீதி முதலியவற்றில் இடம் பெற்றிருந்தனர். ஊராட்சி ஊராட்சி என்பது ஊர், நாட்டின் கடைசிப் பிரிவாகும். வளர் உயர்ந்தால்தான் நாடு உயரும் என்ற உண்மையை உணர்ந்த பாண்டியர் நல்லாட்சி முறையை ஊர்களிலேற்படுத்தினர். ஆகவே தான் ஆட்சியின் அடிப்படை ஊராட்சியே என்கிறோம். கூற்றம் அல்லது நாடு பல ஊர்களையும் சதுர்வேதி மங்கலங்களையும், பிரம் தேயங்களையும் கொண்டிருந்தது. ஆகவேதான் பெரும்பான்மை யராகச் சதுர்வேதி மங்கலங்களாலும், பிரம் (தேயங்களிலும் வாழ்ந்த பிராமணர்கள் தங்களுக்கென்றே ஊர் அலைகளை ஏற்படுத்திக் கொண்டனர். இவை 'மகாசபாக்கள்' எனப்பட்டன. இச்சபைகளுக் குள்ள சட்டதிட்டங்கள், பொதுவாகவுள்ள ஊர்ச் சபைகளுக்கும், நாட்டுச் சபைகளுக்குமுள்ள சட்டதிட்டங்களினின்று வேறுபட்டன. எடுத்துக்காட்டாக, மானூர் 'மகாசபை' கல்வெட்டை நோக்கி னால் மகாசபையின் சட்டதிட்டங்கள் நன்கு புரியும். இந்த கல் வெட்டுச் சாசனத்தை அளித்தவன் பாண்டிய மன்னன் சடைய வர்மன் ஆவான். இக்கல்வெட்டைச் சோழர் ஊராட்சி முறையை விளக்கும் உத்திர மேரூர்க் கல்வெட்டோடு ஒப்பிடுவர். திருநெல்வேலி மாவட்டம் கி.பி. 800-இல் இயங்கிய ஊராட்சியைப் பற்றி மானூர்க் கல்வெட்டு விவரிக்கிறது. பாண்டியர் ஆட்சியில், 1. பிரம தேய கிராமங்களில் இயங்கிய மகாசபை 2. வணகர்கள் வசித்த நகரங்களிலிருந்த நகரம் என்னும் சபை 3. மற்ற ஊர்களிலிருந்த அர்ச்சபை ஆகிய மூவகை ஊர்ச்சனப் அல்லது கிராம சபைகளைப் பற்றி அறிகிறோம் மகாசனப மகாசபைகள் பெரும்பாலும் கோயில்களைப் பராமரித்தன. எடுத்துக்காட்டாக இரண்டாம் வரகுணன் (கி.பி. 862-885) காலத்தில் அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களிலிருந்த மகா சபையார் அரசனிடமிருந்து அறக்கட்டளை வாங்கி, அவ்வூர்க் கோயில்களைப் பராமரித்ததைப் பற்றி அறிகிறோம். அரசன் 290 பொற்காசுகளை அம்பாசமுத்திரம் அர்ச்சபையாரிடம் கொடுத்து அதனை வட்டிக்கு கவிட்டு வட்டிக்கு வரும் 50 கலம் நெல்லைக் கொண்டு கோயிலுக்கு நான்கு கால பூசை செய்யவும் திருவமுது படைக்கவும் கட்டளை யிட்டான். ஆரி நாட்டிலுள்ள பராந்தகச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் அழகர் கோயில் திருப்பணிக்காகத் தேவதானமாக நிலம் வாங்கினார் கள் என்று கூறப்படுகிறது. இதைப் போலவே கி.பி. 1228-29-இல் சுசீந்திரத்தில் ஒரு மகாசபை இருந்ததையும், அதில் கேரள பிராமணர்கள் உறுப்பினராயிருந்து எட்டுக் குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டதையும் அறிகிறோம், மகாசபை உறுப்பினர்கள் பிராமணர்களே யாயினும் பொதுச் சொத்துக்களை அபகரித்தல் போன்ற குற்றங்களைச் செய்தால் தண்டிக்கப் பட்டனர். ஊர்ச்சனப பிரம தேயமல்லாத ஊர்களில் செயல்பட்ட சபைகள் ஊர்ச் சபைகள் எனப்பட்டன. இவற்றில் பிராமணரல்லாதாரே உறுப்பி னராக இருப்பர். தேரின் எல்லைகளை வரையறுக்கும் அதிகாரம் இச் சபைக்கு இருந்தது. சொத்துக்களை வாங்கவும் விற்கவும் இச்சபை யாருக்கு உரிமைகள் இருந்தன. நகரசபை வணிகர் வசித்த நகரங்களில் நகரசபைகள் இருந்தன. அவற்றிற்கு நகரம் என்று பெயர். கிடக்கிரன் கோட்டை , எருக்கங்குடி, சிவபுரி, கொடும்பாளூர், உறையூர் ஆகிய நகரங்களில் நகர சபைகள் இருந்தன. இதன் உறுப்பினர் நகரத்தார் எனப்பட்டனர். நகரம் வணிகருக்கே ஏற்பட்ட சபை ஆகும். இவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து நகரக் காரியங்களைச் செய்தனர். நாட்டுச்சபை பல ஊர்களைக் கொண்டது நாடு. அவற்றின் ஒன்றியம் போல் செயல்பட்டது தான் நாட்டுச்சபை ஆகும். இதனை நாடு என்றே குறிப்பிடுவர். இதன் உறுப்பினர்கள் நாட்டார் எனப் பட்டனர். நிலங்களை அளந்து தரம் பிரித்தல், வரி நிர்ணயம் செய்து தண்டல் செய்தல், ஏற்றத் தாழ்வுகளை மறு ஆய்வு செய்தல், இவை பற்றிய பரிந்துரைகளை அரசனுக்கு அனுப்புதல் ஆகிய பணிகள் நாட்டுச் சபைக்குண்டு. இது பற்றிய அரசு ஆணைகள் நாட்டாருக்கே அனுப்பப்படும். நாட்டுச் சபை தளர்ச்சபைகளுடன் இணைந்து செய் லாற்றும். அரசனால் தானமாக வழங்கப்படும் பிரமதேய தான நிலங் களை நன்கு அளந்து எல்லைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு நாட்டுச் சபைக்கு உண்டு. இதில் நாட்டுச் சபையாருடன் கணக்கரும் உடனிருப் பார்கள். வரிப்பணம் கட்டாத நிலங்கள் உள்ளூர்க் கோயில்களுக்கு அளிக்கப்பட்டு விட்ட சம்பவங்களுமுண்டு. ஆனால், இதனைச் சபையாருடன் கலந்து பேசிய பின் தான் செய்வர். இவ்வாறு, பாண்டிய நாட்டில் ஊர் ஆட்சிக்கு வளர்ச்சபைகளும், நாட்டுச் சபைகளும் விளங்கின. இவ்வாறு பாண்டியர் ஆட்சியில் ஜனார் ஆட்சி சிறப்பாக விளங்கியதால் தான் சோழர் ஆட்சியிலும் பிறகு வந்த ஆட்சிகளிலும் ஆங்கிலேயர் ஆட்சியிலுங்கூட ஊராட்சி ஓங்கி வளர்ந்தது. மடங்களுக்கு விடப்படும் மடப்புறம், சமணப் பள்ளிகளுக்கு விடப்படும் பள்ளிச் சந்தம், கோயில்களுக்கு விடப்படும் தேவதானம், திருப்பணிகளுக்கு விடப்படும் திருவிடையாட்டம், திருப்பணிப்புறம், கலைஞருக்கு விடப்படும் முத்துக்காணம், கவிஞர்களுக்கு விடப்படும் புலமை விருத்தி ஆகியவற்றையும் ஊர்ச்சபைகளும், நாட்டுச் சபைகளும், நகரமும் கட்டிக் காத்தன. முடியாட்சியே ஆனாலும் பாண்டிய மன்னர்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஊராட்சி முறையில் தலையிடவில்லை. ஈ) பொருளாதார நிலை பாண்டியர் காலத்தில் வேளாண்மையே நாட்டின் உயிர் காக்கும் தொழிலாகும். கோயில், குளம், ஏரி, கிணறு, ஓடை, ஆறு, நந்தவனம், பாதை, வளர்ப் பொதுநிலம், சுடுகாடு ஆகியவை போக மற்றவையே விளை நிலமாகக் கொள்ளப்பட்டன. நிலத்திலிருந்து அரசுக்கு வரும் வரியைக் காணிக்கடன், கடமை என்பர். நிலவரியைப் பணமாகவும், பாண்டமாகவும் கொடுக்கலாம். அரசிடமிருந்து நில உரிமையைப் பெற்றுத் தரும் அதிகாரம் மகாசபையிடமிருந்தது. நிலவரியைத் தவிர தொழில்வரிகளும், சுங்கவரி, மற்றும் காடு கள், கனிப்பொருள்கள், உப்பளங்கள் முதலியவற்றிலிருந்து வரும் வருமானம், சிற்றரசர்கள் கட்டும் கப்பம் முதலியனவும் அரசுக்கு வரு வாயாக வந்தன. பெரும்பாலும் சிற்றரசர்கள் கட்டும் கப்பம் அல்லது திறையை கோயில் திருப்பணிக்கே பாண்டியர்கள் செலவிட்டனர். போர்களால் வரும் கொண்டிப் பொருளும் கோயில் பணிக்கே செல் கவிடப்பட்டது. கோப்பெருஞ்சிங்கன் கட்டி கன கப்பத்தைக் கொண்டு திருவரங்கம் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டதை அறிகிறோம். நிலவரி பாண்டியர் காலத்தில் நிலம் அளக்கப்பட்டுத் தரம் பிரிக்கப் பட்டது. அதன் பரப்பு, உரிமையாளர், தரம் முதலியன அடங்கிய குறிப்பேட்டைச் "சுத்த புத்தகம்'' என்றனர். பல தரப்பட்ட அளவு கோல்களின் பெயர்களும் அறியப்படுகின்றன. நிலத்தின் தரத்திற் கேற்பவே வரிவிதிக்கப்பட்டது. கோயில், குளம், குடிநீர், கிணறு, பூங்காக்கள், ஓடை, சுடுகாடு, வழிப்பாதைகள், ஊர்ப் பொதுநிலம் முதலியன வரி விலக்கு அளிக்கப்பட்டன. பொதுவாக விளைச்சலில் ஆறிலொரு பங்கு, அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட்டது. இதனைக் கடமை அல்லது காளிக்கடன் என்றனர். நிலவரியைப் பணமாக வோ தானியமாகவோ செலுத்தலாம். இதனை ஊர்ச்சபையார் வசூலித்து அரசாங்கப் பொதுக் கருவூலத்திற்கு அனுப்புவர். பஞ்சம் முதலிய இயற்கைக்கேடுகள் விளையும் போது நிலவரியைக் குறைப்பதும் அல்லது நீக்குவதும் அரசின் கடமையாக இருந்தது. வரிச்சுமை அதிகமானால் மக்கள் தங்கள் வரை விட்டு வெளியேறி விடுவர். இஃது அக்கால வரி எதிர்ப்பு முறை ஆகும். நில உரிமை நில உரிமையை மூன்று வகையாகப் பிரித்து அறிகிறோம். முதலாவதாக வழி வழியாக உழவுத் தொழிலைச் செய்வோரின் நிலவுரிமை ஆகும். இவர்களைப் பெருங்குடியினர் என்று அழைத் தனர். இரண்டாவதாக தளர்மக்களுக்கு உறுதுணையாக சில தொழில் களைச் செய்வோருக்குள்ள நில உரிமை ஆகும். மூன்றாவதாகக் கோயில் களுக்கு விடப்பட்ட தேவதானம், பிராமணர்களுக்கு விடப்பட்ட பிரம தேயம், சாலாபோகம் முதலிய நில உரிமை ஆகும். மிராசு உரிமை யுடன் நில உரிமை பெற்ற ஊர்கள் அரசுடன் நேரடித் தொடர்பு கொண்டு வரி செலுத்தி வந்தன. இதனை 'வெள்ளான் வகை ' என்றனர். சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை உள்ளூர்க் கோயில் களுக்கும் கொடுப்பதுண்டு. ஊழிய மானியங்கள் ஊரிலுள்ள பொற்கொல்லர், ஊர் மருத்துவர், மரத் தச்சர், கல்தச்சர், குயவர், சலவைத் தொழிலாளர் முதலியோருக்கு அரசின் உத்தரவுப்படி வளர்ச்சபையார் மானியம் விடுவர். இதனை தாழிய மானியம் என்பார்கள். போகம், சீவிதம், காணி என்றும் இஃது அழைக்கப்பட்டது. கோயில்களில் பணி புரிந்த பட்டர்களுக்கு விடப் பட்ட மானியம் பட்டவிருத்தி எனவும், கோயில்களுக்கு விடப்பட்ட நிலம் கோயில் மானியம் எனவும் மடங்களுக்கு விடப்பட்ட நிலம் மடப்புரம் எனவும் வீரர்களுக்கு விடப்பட்ட நிலம் வீரபோகம் என வும் வழங்கப்பட்டன. ஊழிய மானியக்காரர்கள் ஊரின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். நிலம் தானமாக வழங்குதல் தேவதானம் நில உரிமையைத் தானமாக வழங்கும் முறையும் இருந்தது. கோயில்களுக்குத் தானமாக வழங்கினால் தேவதானம் என்பர். திருவிடையாட்டம், திருநாமத்துக்காணி என்றும் இதனை அழைப் பர். தனியார் நிலங்களைக் கோயில்களுக்குத் தானமாக வழங்க வேண்டுமானால் அந்நிலங்களின் சொந்தக்காரர், அவற்றைப் பயிரி டும் உழவர்கள் ஆகியோருக்கு இழப்பீடு அளித்து விட்டுத் தான் அவற்றைக் கோயில்களுக்கு தாரை வார்த்து நீரொட்டித் தருவர். உரிமை யாளருக்குச் சேர வேண்டிய பங்கு மியாட்சி என்றும், பயிரிடு வோருக்குச் சேரவேண்டிய பங்கு காரண்மை என்றும் அழைக்கப் பட்டன. இத்தகைய உரிமை மாற்றத்தைச் சபையாரே முன்னின்று செய்வார்கள். சிவன் கோயிலுக்கு அளிக்கப்படும் தேவதான நிலங் களின் எல்லைகளைக் குறிக்க திரிசூலக் குறியிட்ட கல்லும், திருமால் கோயில்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லைகளைக் குறிக்க திருவாழிக்கல்லும், சமணப் பள்ளிகளுக்கு விடப்பட்ட நிலங்களுக்கு முக்குடை பொறித்த கல்லும் எல்லைக் கற்களாக நடப்பட்டன. இந் நிலங்களைக் கோயில்களே பராமரித்தன. பிரம தேயம் மேற்கண்ட தேவதான நிலங்களைப் போலவே சிராமணர் களுக்கும் நிலங்கள் தானமாக தாரைவார்த்துத் தரப்பட்டன. இவை, சில சமயம் நிலமாகவும், சில சமயம் ஊராகவும், ஊர்களாகவும் அமைவதுண்டு. இங்கு தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி, கல்லும், கள்ளியும் வேலியாக நாட்டுப் பிராமணர்களுக்குத் தானமாக வழங்குவர். நிலவள ஏந்துகள் பாண்டிய நாட்டில் ஓடும் ஆறுகளில் வைகை, தாமிரபரணி ஆறுகள் முதன்மையானோவை ஆகும். மன்னார்கள் இவ்வாற்றங் கரை களில் மதகுகளை அமைத்ததோடு பல கால்வாய்களையும், ஏரிகளை யும் வெட்டி நீர்ப்பாசன ஏந்துகளைச் செய்தனர். இவர்களைப் பின்பற்றி அமைச்சர்களும், செல்வந்தர்களும் பிறரும் கரரிகளையும், குளங் களையும், கால்வாய்களையும் அமைத்து நிலவளத்தைப் பெருக்கினர். இதனால் காடு கரம்புகளாய்க் கிடந்த பல்வேறு நிலங்களும் விளை நிலங்களாக மாற்றப்பட்டன. இதனால் அரசுக்கு நிலவரி மூலம் வருவாய் அதிகரித்தது, பிற வரிகள் நிலவரி ஒரு முதன்மை வருவாய் பற்றாகப் பயன்பட்டாலும் அரசுக்குப் பல்வேறு வரிகளாலும் வருவாய் கிடைத்தது. நிலவரி யைப் (பேரினர என்றபோது மற்ற சிறிய, வருவாய் தரும் வரிகளைச் சில்லறை, சில்லரி, சிற்றாயம் என்றெல்லாம் அழைத்தனர். அவற்றுள் தறியிறை, செக்கிறை, மனைக்கிறை, அங்காடிப் பட்டம், தட்டாரப் பட்டம் முதலியன குறிப்பிடத்தக்கன. முத்துக் குளித்தோரிடம் பெறப்பெற்ற வரி சலாபத் தேவை எனப்பட்டது. பாண்டிய நாட்டில் ஏராளமான முத்துக்கள் எடுப்பதை, நேரில் கண்ட மார்க்கோபோலோ, அரசனுக்குக் கிடைத்த வருமானத்தில் முத்துக்கள் சாபத்தால் கிடைத்த வருமானம் குறிப்பிடத்த அளவு அதிகமானது என்று குறிப்பிடுவதோடு, கடலிலிருந்து எடுத்த முத்துக்களில் பாதிப்பங்கு அரசிற்குச் சொந்தமானது என்றும், அரை 'அவுன்சு" எடைக்கு மேற் பட்ட முத்துக்கள் நாட்டை விட்டு வெளியே போவதில்லை என்றும், பெரிய முத்துக்களையும் மணிகளையும் அரசனே சேமித்து வைத்துக் கொள்வான் என்றும், அத்தகைய பெரிய முத்துக்கள் மக்களிடமிருந் தாலும் இரட்டை மடங்கு விலை கொடுத்து அரசனே வாங்கிக் கொள் வான் என்றும், அவ்வாறு அவனுடைய கருவூலத்தில் சேர்ந்துள்ள முத்தின் அளவும் மதிப்பும் அளவிற்கரியது என்றும் கூறுகிறான், மேலும் முத்துக் குளிக்கும் முறை, வகையானா முத்துக்கள் இதில் அரசனுடைய அலுவலர், வரிகர், முத்துக் குளிப்போர் முதலியோ ருடைய பணிகளையும், பண்புகளையும் மார்க்கோபோலோ விவரிக்கிறான். முத்துக் குளித்தலுக்கு அடுத்தபடியாகச் சங்கறுத்து வளையல் செய்தல், உப்பு எடுத்தல், மீன் பிடித்தல், நெசவுத் தொழில் முதலிய கைத்தொழில்கள் குறிப்பிடத் தக்கனவாகும். கொற்கையில் செய்யப் பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல்களும் அறுக்கப்பட்ட சங்குகளும் கிடைத்துள்ளன. வலம்புரிச் சங்குகள் விலையுயர்ந் தவை. மீன் பிடிக்கும் தொழில் செய்த பரதவர் வளமும் வலிமையும் மிக்கவராயிருந்தனர். அரிகேசரி மாறவர்ம பாண்டியன் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) இவர்களுடன் பொருது வென்றதாகக் கூறப்படுகிறது. நெசவுத் தொழில் மதுரையில் சிறந்திருந்தது. தறி, இறை, பஞ்சு, பீலி ஆகிய வரிகள் தறிநெய்வோரிடம் வசூலிக்கப்பட்டன. உலோகத் தொழிலாளர்கள், மட்பாண்டம் செய்வோர், நகை செய்வோர் முதலிய தொழிலாளர்களும் பாண்டிய நாட்டில் இருந்தனர். வணிகர்கள் தலைநகரான மதுரையிலும், மற்றும் பல நகரங்களிலும் அறுவை வணிகர், உப்பு வணிகர், பணித வணகர், பொன் வணகர், தவச வணிகர், மணி வணிகர் முதலிய பல்வேறு வணிகக் குடிமக்கள் வாழ்ந்தனர். இவர்கள் பல வகைக் குழுக்களையும் கூட்டு நிறுவனங் களையும் ஏற்படுத்தியிருந்தனர். இவற்றின் உறுப்பினர்களாகப் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர்களும் பல நாடுகளைச் சார்ந்தவர்களும் இருந்தனர். பல தேசங்களுடன் தொடர்பு கொண்ட அல்லது பல் தேசங்களைச் சேர்ந்த வணிகரின் அமைப்புக்கு நானாதேசிகன்' என்று பெயர், சிறிய ஊர் முதல் பெரிய நகரம் வரை வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் நகரத்தார் எனப்பட்டனர். வணிகம் செய்த இசுலாமியர் ஒன்று கூடி 'அஞ்சு வண்ணத்தார் சங்கம்' ஒன்றையும் வைத்திருந்தனர். பெரும் பாலும் இவர்கள் கீழ்க் கடற்கரையில் பாண்டிய நாட்டிலுள்ள தீத்தாண்டதானபுரத்திலும், சோழநாட்டில் நாகப்பட்டினத்திலும் தங்கி நானாதேசிகருடன் வணிகத் தொடர்பு கொண்டு தொண்டி, காயல் பட்டினத் துறைமுகங்களின் வழியாக ஏற்று மதி, இறக்குமதி செய்து வந்தனர். அரபு நாடுகளில் இருந்து குதிரை களை இறக்குமதி செய்வதும், இங்குள்ள நறுமணப் பொருள்களை ஏற்றுமதி செய் தும் இவர்களின் முக்கிய வாணிபத் தொழிலாகும். குதிரை வாணிபம் குதிரை வாணிபம் பற்றியும், குதிரைப் படைகளைப் பல்ல வரும், பாண்டியரும் வைத்திருந்ததைப் பற்றியும் நமக்கு ஏராளமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து, அரசர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் விற்றுவந்த குதிரை வணிகர்களைக் 'குதிரைச் செட்டிகள்' என்றே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ''சிறிவஹர்மாஸ், டோபர், சோவர், ஏடன் ஆகிய இடங்களிலுள்ள வணிகர்கள் போர்க்குதிரைகளை வாங்கிப் பாண்டிய நாட்டு அரசனுக்கும் அவனுடைய நான்கு சகோதரர்களுக்கும் ஆண்டு தோறும் விற்கிறார்கள். ஒரு குதிரையின் விலை 100 வெள்ளி மார்க்குகளுக்கும் அதிகமாக விற்கிறார்கள். அரசன் மட்டும் ஆண்டு தோறும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குதிரைகளை விலைக்கு வாங்குகிறான். அவனுடைய நான்கு சகோதரர்களும் இதே எண்ணிக் கையிலான குதிரைகளை விலைக்கு வாங்குகிறார்கள் என்று மார்க் கோபோலோ கூறுகிறார். ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு குதிரை களை வாங்குகிறார்கள் என்பதற்கு மார்க்கோபோலோ காரணத்தை யும் கூறுகிறான். வெப்பமான பாண்டிய நாட்டிற்குக் குதிரைகள் வந்தவுடன் வெப்பத்தைத் தாக்குப் பிடிக்காமல் வலிமை குன்றி நோய் வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன. மேலும் அவற்றிற்கு இலாடம்' கட்ட அரபு நாட்டிலிருந்து இலாடக்காரர்கள் வராமல் தடுக்கப்பட்டு விடுகின்றனர். இதனால், ஆண்டுதோறும் அரபு நாடு களில் இருந்து குதிரைகள் கொண்டுவரப்பட்டன என்று மார்க்கோ போலோவும், அரபு பயணியான வாசாபும் கூறியுள்ளனர். கடல் கடந்த வாணிகம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் தென்னிந்தியாவிற்கும் தெற்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே நெருங்கிய வாணிகத் தொடர்பு ஏற்பட்டது. இதில் முக்கியப் பங்கேற்ற நாடுகள் சீனாவும் சைலேந்திர வம்சத்தார் ஆண்ட சிறீவிசயமும், அபாசித் கலீபாக்கள் ஆண்ட பாக்தாதும் ஆகும். பதின் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவை ஆண்ட சீனப் பேரரசன் குப்பளாய்கான் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தித் தென்னிந்தியாவின் மேலாண்மையை ஏற்க அழைக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. இதனாலும் தென்னிந்தியா வுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவு முறைகளை அறியலாம். அங்கிருந்து வந்த வணிகர்கள் தென்னகத்தின் முத்து, பருத்தி ஆடைகள், யானைத் தந்தம், நறுமணப் பொருள்கள், அகில், தேக்கு, சந்தனம் முதலியவற்றை எடுத்துச் சென்றனர். இக்காலத்தில் சீனாவை நேரில் கண்டு அங்கு பதினேழு ஆண்டுகள் தங்கி மீண்டும் பாண்டிய நாடு திரும்பிய வெனிசு நகரப் பயணி மார்க்கோபோலோவின் குறிப்புகள் இக்கால வரலாற்றை அறியப் பெரிதும் உதவுகின்றன. அவருடைய குறிப்பின்படி, பாண்டிய நாட்டுத் துறைமுகமான காயல்பட்டினம் அக்காலத்தில் சிறந்து விளங்கிய ஒன்றாகும். அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் யாவும் இத்துறைமுகத்தில் வந்திறங்கின. அயல் நாட்டு வணிகர்கள் இங்கு வந்தவுடன் அவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னன் செய்தான் என்று மார்க்கோபோலோ கூறுகிறார். இத்தகைய வணிகத்தால் அரசனுக்குச் சுங்கவரி பெருமளவில் கிடைத்ததாம். இதே கருத்தை கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னகம் வந்த சுலைமான் அல்மஃரி என்பாரும் கூறுகிறார், நாணயங்கள் இதுவரை அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பாண்டியர் நாணயங்களில், நீள்சதுரவடிவிலான செப்பு நாணயங்களில் ஒரு புறம் இருமீன்களும், மறுபுறம் நடுவில் நின்று கொண்டிருக்கும் யானையும், அதனைச் சுற்றிலும் சூரியன், நிலா, குத்துவிளக்கு, செங் கோல், சாமரம் முதலிய குறிகளும் காணப்படுகின்றன. இதனை ஆனை அச்சுக் காசு" என்று அழைத்தனர். இந் நாணயத்தில் எத்தகைய எழுத் தும் பொறிக்கப்படவில்லை. எனவே இதனை வெளியிட்ட அரசர் பெயரும், காலமும் தெரியவில்லை. மீன்களைக் கொண்டு இதனைப் பாண்டியர் காசு என்பதை மட்டும் உணர முடிகிறது. இரண்டாம் வர குணன் (கி.பி. 862-855) காலத்தில் மற்றொரு பக்கம் "ஸ்ரீவரகுணன்' என்று பொறிக்கப் பட்டும் உள்ளது. இவனுடைய காலத்தில் காசு, பழங்காசு என்னும் பொற்காசுகள் புழக்கத்தில் இருந்தன. பொதுவாகப் பொற்காசுகளைக் கானம், பொன் என்று அழைத்தனர். கழஞ்சு என்ற பொற்காசை சோழநாட்டில் பொன் என்றும் மாடை என்றும் அழைத்தனர். ஆனால் பொன், காசு, பழங்காசு, கழஞ்சு, காணம் ஆகியவற்றிற்கிடையே அவற்றின் எடை, தரம் முதலியன வேறுபட்டனவாக தெரிகின்றன. திரமம்' எனும் ஒருவகை நாணய மும் வழக்காற்றில் இருந்ததாக அறிகிறோம், ஒன்றரைத் திரமம் ஒரு பழங்காசுக்குச் சமம் என்று கல்வெட்டு கூறுகிறது. இதன் மதிப்பும் காலந்தோறும் மாறுபட்டுக் காணப்படுகிறது. சோழ நாட்டுக் காசுகளில் ஒரு புறம் நிற்கும் அரசனது உருவமும், மறுபக்கம் அமர்ந்துள்ள அரசன் அல்லது பூமிகள் உருவ மும் உள்ளன. இதைப் போலவே பாண்டியரும் சில காசுகளை வெளியிட்டுள்ளனர். பாண்டிய நாட்டின் நாணயங்கள் சோழ நாட்டி லும் சோழ நாட்டின் நாணயங்கள் பாண்டிய நாட்டிலும் செலாவணி யாயின. பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்கள் நாணயங்களில் காணப் பெறுகின்றன. கலியுகராமன் கச்சி வழங்கும் பெருமாள், புவனேசுவரன் கோதண்டராமன் நென்மேனி கலியுகராமன் முதலிய " பட்டப் பெயர்கள் அவர்களின் நாணயங்களில் காணப்படுகின்றன. பாண்டிய நாட்டு நாணயங்கள் அந் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாறுதலை நமக்கு உணர்த்துகின்றன. நிலத்தை அளக்க 24 அடிக் கோலும், 14 அடிக்கோலும் பயன்படுத்தப்பட்டன. நிலம் வெள்ளான் வகை, சீவிதம், போகம், சாலபோகம், பிரம் தேயம், தேவதானம் எனப் பல வகையாக அறியப்பட்டன, பிரமதேயத்தைத் தானமாகக் கொடுத்தபின் அதனை அளந்து கல்லும், கள்ளியும் நட்டு எல்லை களைக் குறிப்பார்கள். இதனை மகா சபையாரும் நாட்டாரும் கணக் கரும் ஒன்று கூடிச் செய்வர். பின்னர் இதனை மகாசபைக் குறிப் பேட்டில் பதிவு செய்வர். பிரமேதேயம் நிலமாகவும், ஓர் ஊராகவும், அல்லது பல ஊர்களை இணைத்தும் தானமாகக் கொடுக்கப்படும். ஒருவருக்குக் கொடுத்தால் ஏகபோகப் பிரமதேயம் என்பார்கள். -நான்மறை யறிந்த நற்பார்ப்பார் பலருக்கும் ஒன்றாகக் கொடுப்பதும் உண்டு. ஊர்ப் பணியாளர்களான மருத்துவர், தச்சர், குயவர், கல்தச்சர், கருமார், வண்ணார் ஆகியோருக்கு மரபுப்படி கொடுக்கும் மேரை க்குப் போகம், சீவிதம், காணி என்று பெயர். தட்டானுக்குத் தட்டார் காணியும், தச்சனுக்குத் தச்சுக் காணியும், கொடுப்பார்கள். இதைத் தவிர பட்டவிருத்தி, கோயில் மானியம், மடப்புரம், வீரபோகம் போன்ற கொடை நிலங்களும் உண்டு. இவற்றின் பரப்பளவு மரபுப் படி வரும் அளவே ஆகும். ஆனால் வரி இல்லை. விலையோலை என்று அதற்குச் சபையார் சான்று அளிப்பர். இதற்கு மேல் எழுத்து' என்று பெயர். விற்பவன் வாங்குபவனுக்கு அதனை நீரோட்டிக் கொடுப்பான், விலையோலை எழுதும் தனி அதிகாரிகளுக்குக் 'கரணத்தார்' என்று பெயர். குடிமக்களுக்குள்ள நிலத்தைத் தனக்கு வேண்டுமென்றால் அரசன் பணம் கொடுத்துத்தான் வாங்குவான் ஆனாலும், அரசனுக் கென்று பரம்பரையாக அரசமானியம் இருந்தது. வரி செலுத்தாதவரிடம் கெடுபிடி வரித்தண்டல் செய்யப் படைக்கரணவர் எனும் படை அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் 'புரவு வரித்தினைக் களத்து முகவெட்டி என்று பெயர். இவர்களின் தலைமை அதிகாரி க்கு திணைக்கள நாயகம் என்றும், நிலம் அளவை செய்வோர் நாடு வகை செய்வோர் என்றும் அழைக்கப்பட்டனர். பாண்டியர் காலத்தில் நிலவரியோடு கடமை, விநியோகம், அக்குவரி, அந்தராயம், வெட்டிப்பாட்டம், பஞ்சு பலி, சந்திரவிக்கிர உறப்பேறு, வாசல் பேறு இலாஞ்சினைப் பேறு, உழுதுக்குடி, பாடிக் காவல், தட்டாரப் பாட்டம், இடைவரி, பொன்வரி, தறிஇறை, செக் கிறை முதலிய பலவரிகளும் தண்டப்பட்டன. உ, கலைகள் 1.கட்டடக்கலை (குடைவரைகள்) பல்லவரை அடுத்து ஆண்ட முற்காலப் பாண்டியர்கள் பல்ல வர்களைப் போலவே தென்னாட்டில் பலவகைக் குடைவரைக் கோயில்களை அமைத்தனர், 1. பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கோயில் இது கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதன் கருவறை யின் உட்புறம் தூங்கானை வடிவில் அமைந்துள்ளது. இது கற்பக விநாயகர் அமைந்திருக்கும் குடைவரை ஆகும். கருவறைப் பாறையில் திருவீங்கைக்குடி மகாதேவர் என்றழைக்கப்படும் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் சிற்ப வடிவில் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இக்குடை வரையைச் சமைத்தவன் எக்காட்டூர் என்னும் ஊரைச் சேர்ந்த சிற்பி என்பதனை இங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம். 2. மலையடிக் குறிச்சிக் குடைவரைக் கோயில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்குடைவரைக் கோயில் பாண்டியர் காலத்தது. தூண்கள் - எண்பட்டை வடிவில் சதுரமாக உள்ளன. இதில் காணப்படும் கல்வெட்டு வட்டெழுத்து வடிவில் தமிழ் மொழியில் எழுதப்பட்டதாகும். 3. ஆனைமலைக் குடைவரைக் கோயில் இக்குடைவரைக் கோயில் நெடுஞ்சடையன் பராந்தகனின் உத்தரமந்திரியாக இருந்த மாறங்காரி என்பவனால் தொடங்கப்பட்டு, அவன் தம்பியும், உத்தரமந்திரியுமான மாறன் எயினனால் முடிக் கப்பட்டது. இது. கி.பி. 770இல் முடிக்கப்பட்டதென இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இஃது நரசிங்கப்பெருமாளுக்காக எடுக்கப் பட்ட கோயி லாகும். இதன் அருகில் முருகனும், தெய்வானையும் அமர்ந்துள்ள குடைவரைக் கோயில் உள்ளது. வாயிலின் இரு புறமும் சேவற்கொடியும், மயிற்கொடியும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. 4. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் குடைவரைக் கோயில் இக்கோயில் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகனுடைய காலத்தைச் சேர்ந்தது. இவனுடைய சேனாதிபதி சாத்தன் கணபதி இக்கோயிலைத் திருத்தி அமைத்தான். அவனுடைய மனைவி நக்கன் கொற்றியார் என்பவள் சேட்டை தேவிக்குக் கோயில் எடுத்தாள். இவற்றை இங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம். இக்கோயிலின் மேற்பரப்பில் திருமால், சுப்பிரமணியர், துர்க்கை , கணபதி, சிவபெருமான் ஆகியோர் சிற்பங்களையும், கீழ்ப்பரப்பில் சேட்டை, கஜலட்சுமி, அன்னபூரணி, உக்கிரமூர்த்தி ஆகியோர் சிற்பங் களையும் காணலாம். தரங்கப் போதிகையுள்ள சதுரவடிவிலான தூண்கள் உள்ளன. 5. அரிட்டாபட்டிக் குடைவரைக் கோயில் இக்குடைவரைக் கோயிலில் பிள்ளையார் புடைப்புச் சிற்ப மாகச் செதுக்கப்பட்டுள்ளார். அரைத்தூண்கள் மட்டுமே உள்ளன. முழுத் தூண்கள் இல்லை; வாயிற்காப்போர் உள்ளனர். 6. குன்னத்தூர் குடைவரைக் கோயில்கள் மதுரை சிவகங்கைப் பாதையில் உள்ள வரிச்சியூர் என்ற காருக்கு அருகிலுள்ள குன்னத்தூர் மலையில் உதயகிரி, அஸ்தகிரி எனப்படும் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன, உதய கிரியில் இலிங்கம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வாயிற்காப் போர் உள்ளனர். அஸ்தகிரியில் உள்ள குடைவரைக் கோயில் முடிவடைய வில்லை. இதனை நீலகண்டேசுவரர் கோயில் என்ற ழைக்கின்றனர். வாயிற்காப்போர் உள்ளனர். பிள்ளையார் புடைப்புச் சிற்பமாக உள்ளார். 7. மூவரை வென்றான் குடைவரைக் கோயில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரைக் கோயில் மதுரை மாவட்டம் அழகாபுரிக்கு அருகில் உள்ளது. கருவறை முகமண்டபம், முகப்பு ஆகிய அமைப்புகளுடன் இக்கோயில் உள்ளது. இரண்டு தனித்தூண்களும் இரண்டு சுவர்த்தூண்களும் உள்ளன. ஆனந்தத் தாண்டவமாடும் சிவ பார்வதி உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 8. செவல்பட்டிக் குடைவரைக் கோயில் சிவகாசிக்கு அண்மையிலுள்ள செவல்பட்டி அருணகிரி மலை யில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலின் சுவரில் பிள்ளையார், ஆடவல்லான், திருமால் ஆகியோர் உருவங்கள் செதுக்கப்பட் டுள்ளன. இக்குகை கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கூறலாம். 9. திருச்சி மலைக்கோட்டைக் குடைவரைக் கோயில் பாண்டியரால் அமைக்கப் பெற்ற மலைக்கோட்டையின் அடி வாரத்திலுள்ள குடைவரைக் கோயில் கருவறை, முன்மண்டபம், வாயிற்காப்போர் ஆகிய அமைப்புகளுடன் உள்ளது. சுவரில் பிள்ளையார், சுப்பிரமணியர், பிரமன், சூரியன், துர்க்கை ஆகிய உருவங்கள் உள்ளன. ஒரு புறச் சுவரில் திருமாலுக்குக் கருவறை உள்ளது. மறுபுறம் அதேபோன்ற கருவறை சிவ பெருமானுக்கும் உள்ளது. குடைவரை வாயிலில் நான்கு முழுத்தூண்களும், சுவரை யொட்டி இரு அரைத்தூண்களும் உள்ளன. இக்குடைவரையைப் போலவே, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதையில் மகேந்திர வர்மப் பல்லவனால் அமைக்கப்பெற்ற குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. அதை விட இது கட்டடக் கலை u.ரின் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலே கூறிய பாண்டியர் காலக் குடைவரைக் கோயில்களைத் தவிர பாண்டியர்கள் அரளிப்பட்டி, திருக்கோலக்குடி, குன்றக்குடி, திருக்கோகர்ணம், திருமெய்யம், குடுமியான்மலை, சித்தன்னவாசல், கழுகுமலை முதலிய இடங்களிலுள்ள குடைவரைக் கோயில்களை யும் திருப்புத்தூரிலுள்ள கட்டுமானக் கோயில் முதலியவற்றையும் சமைத்துள்ளார்கள். திருப்புத்தூரிலுள்ள திருத்தளி நாதர் கோயில் பல்லவர் பாணியில் காணப்பெறும் கட்டுமானக் கோயிலாகும். இதில் காணப்படும் மாறஞ்சடையன் கல்வெட்டில் உள்ள வாசகத்தைப் படித்துப் பார்க்கும்போது இது கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றதென அறிகிறோம். பாண்டியர் கால் குடைவரைக் கோயில்களின் தன்மைகள் இக்குடைவரைக் கோயில்கள் பெரிதாக உள்ளன. அவற்றில் காணப்பெறும் தெய்வப் படிமங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. குடைவரைப் பாறையிலேயே சிவலிங்கத்தையும் நந்தியை யும் அமைக்கும் பாணி புது வகை (மாதிரியாக உள்ளது. தூண் களின் மேல், கீழ்ப்பாகங்கள் சதுரமாகவும், நடுப்பாகம் எண்பட்டை யாகவும் உள்ளன. போதிகை தரங்குப் போதிகையாக உள்ளது. நுழை வாயிலில் மகரத் தோரணம் உள்ளது. கட்டுமானக் கோயில்களின் பொதுத் தன்மைகள் கட்டுமானக் கோயில்களில் விமானம் இரண்டு அல்லது மூன்று தளங்களைக் கொண்டுள்ளன. கிரீடமும், சிகரமும் சதுர வடிவில் அல்லது எண் கோண வடிவில் அமைந்துள்ளன. தூங்கானை மாடக் கோயில் தொண்டை மண்டலத்திற்கே உரிய சிறப்பு அம்ச மாகும். எனவே, பாண்டிய நாட்டில் தூங்கானைமாடக் கோயில்கள் இல்லை. கோட்டங்களில் கோட்ட தேவதைகளின் சிற்பங்கள் இல்லை . அவற்றில் மேல் புறத்தில் மட்டும் மகரத் தோரணம் அமைக்கப்பட்டது. கி.பி. 110 முதல் 1350 வரையிலான பிற்காலப் பாண்டியரின் கோயில்கள் இவற்றினின்று முற்றிலும் வேறுபட்டுக் காணப்படு கின்றன. அவை பெரும்பாலும் சோழரின் பெருங் கோயில் பாணிகளைப் பின்பற்றியுள்ளன. 2. ஓவியக்கலை பாண்டியரின் குடைவரைக் கோயில்கள், கற்றளிகள் பலவும் பல்லவரின் குடைவரைக் கோயில்களையும் 'கற்றளிகளையும்" பெரிதும் ஒத்துள்ளன. இதற்குக் காரணம் பல்லவரும் பாண்டியரும் நெருங்கி இருந்தமையே ஆகும். பல்லவ அரசர்களாகன சிம்ம விசுணு, முதலாம் மகேந்திரவர்மன் முதலியோர் பாண்டியரை வென்று தங்கள் ஆதிக்கத்தைத் தென்கோடி வரையில் பரப்பியிருந்தனர். இதைப் போல பாண்டியரும் பல்லவ நாடு வலுக்குன்றிய போதெல்லாம் அதன் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள். மாறவர்மன் இராசசிம்மப் பாண்டியனில் தொடங்கி அவனை அடுத்து வந்த பாண்டிய அரசர் பலரும் பல்லவ நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த மேற்கொண்ட முயற்சிகளை அறிவோம். சாளுக்கியரைப்போலவே பாண்டியரும் பல்லவ அரசர்களோடு மணஉறவு கொண்டதால் பல்லவ நாட்டுக் கலைகளும், பாண்டிய நாட்டுக் கலைகளும், இணைந்து உறவாடி நின்றன. மேலும் பல்லவ நாடும் பாண்டிய நாடும் தமிழகத்தின் அங்கங்களே ஆகும். கலைஞர்களும் தமிழர்களே. கலைகள் வளர்ந்த காலமும் சம காலமே ஆகும். எனவேதான் பல்லவ - பாண்டியர் கலை வளர்ச்சியின் பருவமும், பாணிகளும் தனித்தனி யானவை என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை . பாண்டிய இளவரசியான அரங்க பதக்கம் என்பவள் பல்லவ மன்னன் நரசிம்மவர்மனை மணந்தாள். அவளே காஞ்சியில் பல கோயில்களைக் கட்டினாள். அவை பாண்டி யர் பாணியினாலானவையா அல்லது பல்லவர் பாணியிலானவையா என்று திட்ட வட்டமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளன. எனவேதான், பாண்டியரின் ஓவியங்களைப் பல்லவர் ஓவியமென்றும், பல்லவரின் ஓவியங்களைப் பாண்டியர் ஓவிய மென்றும் மயக்கமுற்றுக் கூறுகின்றனர். பாண்டியர்காலக் கலைக்கு உயிரூட்டியவை எவை? பல்லவர் காலத்தில் எழுந்த வைதீக சமயத்தின் மறுமலர்ச்சியும் குறிப்பாகச் சைவ சமய மறுமலர்ச்சியும், இயக்கமுமே பாண்டியர் காலக் கலைக் கும் இறைநெறிக்கும் உயிரூட்டின. அரிகேசரி பராங்குச பாண்டியன் (கி.பி. 730-768) சமண சமயத்தவன் ஆவான், ஆனால், இவனைச் சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருஞான சம்பந்தர் ஆவார். இதைப் போலவே பல்லவ மன்னன் மகேந்திரவர்மனை, அப்பர் பெருமான் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மதம் மாறிய அரசர்கள் தங்களின் சமயவெறியால் ஆற்றிய செயல்களில் கலைகளை வளர்த்த தும் ஒன்றாகும். இஃது பக்தி இயக்கத்தின் தாக்கமாகும். பாண்டியரின் ஓவியங்கள் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ளன. அவை பாறைகளிலும் இயற்கையான குகைகளிலும் கிடைக்கின்றன. இவற்றைப் பழங்குடி மக்களின் கைவண்ணம் என்கின்றனர். பண்டைய மக்களான பாண்டியரின் மூதாதையரே பறையர் என்றும் அவர்களின் கை வண்ணமே இந்த ஓவியங்கள் என்றும் திருச்சிரபுரம் அ. பெருமாள் பிள்ளை தாம் எழுதிய 'ஆதி திராவிடர் வரலாறு' என்னும் நூலில் பல சான்றுகளை மேற்கோள் காட்டிக் கூறுகிறார். இத்தகைய ஓவியங்கள் சிறு மலை, திருமலை, குடுமியான் மலை, அழகர் மலை, கருங்காலக்குடி, காமயகவுண்டன்பட்டி, திரு. வாதவூர், திருமெய்யம், சுரணாப்பட்டி, முத்துப்பட்டி, சதுரகிரிமலை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பாண்டியர் ஓவியங்கள் வெண்மை, செங்காவி ஆகிய வண்ணங்களால் தீட்டப்பட்டுள்ளன. ஆனால் குடுமியான் மலைஓவியத்தில் மட்டும் கருப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகப் பாண்டியரின் ஓவியங்களில் மனித உருவங்களும் விலங்கு உருவங்களும் இடம் பெற்று உள்ளன. மான், காளை, எருமை, யானை ஆகிய விலங்குகளிருந்த ஓவியங்கள் அதிகம் காணப் பெறுகின்றன. மனிதர்கள் வேட்டையாடுதல், காவு கொடுத் தல் முதலிய காட்சிகளும் ஓவியங்களாக உள்ளன. முதலில் வெண் சுதை பூசி, அப்பூச்சின் மேல் வண்ண ஓவியங்களைப் பல்லவர்கள் தீட்டினார்கள். இதைப் போலவே பாண்டியரும் வெண்சுதைப் பூச்சின் மேல் வண்ண ஓவியங்களைத் தீட்டினார். இத்தகைய ஓவியங், களைத் திருமலைப்புரம், கீழக்குயில்குடி, கீழவளவு, ஆனைமலை, அரிட்டா பட்டி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் காண்கிறோம். திருமலைப் புரம் ஓவியம் பாண்டியர் ஓவியங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை திருமலைப்புரம் ஓவியங்கள் ஆகும். இவை முற்காலப் பாண்டியர் ஓவியங்களிலேயே தொன்மை வாய்ந்தவை ஆகும். நெல்லை மாவட்டம் கடையநல்லூருக்கு அருகில் வண்ணச்சி மலை என்னும் திருமலைபுரம் குடவரைக்கோயில் உள்ளது. இதில் விதானத்திலுள்ள கற்சிற்பங்களின் மேல் சுதைப்பூசப்பட்டு பூச்சின் மேல் வண்ண ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன. இதில் பூதகணங்களின் உருவங் களும், சீறும் அரிமாவின் மீது அமர்ந்துள்ளதேவதையின் உருவமும் கவர்ச்சிகரமாகத் தீட்டப் பெற்றுள்ளன. கணங்களின் காதுகளில் குண்டலங்கள் உள்ளன. இவற்றை முதன் முதலில் கண்டறிந்த சோவண் துப்ரேய், இவை பாண்டியர் காலத்து ஓவியங்களே என்றும் இக்குடைவரைக் கோயில் மகேந்திரவர்மப் பல்லவனின் மாமண்டூர், மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய குடைவரைகளை ஒத்துள்ளது என்றும் கூறுகிறார். இக்கோயில் உடள்விதானம், தெற்குச் சுவர் ஆகியவற்றில் தாமரை, அல்லி, நாட்டிய மங்கை முதலிய ஓவி யங்கள் அழிந்த நிலையில் காணப்பெறுகின்றன. இவை சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பெற்ற காலத்தில் தீட்டப் பெற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரிமா, அன்னம், வாத்து ஆகிய உருவங்கள் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, குங்கும நிறம் ஆகிய வண்ணங்கள் இவற்றில் பயன் படுத்தப் பெற்றுள்ளன. 2. கீழ வளைவு ஓவியம் மதுரைக்கண்மையிலுள்ள இச்சிற்றூரில் அழிந்து பட்டவை போக எஞ்சியுள்ள ஒரு தாமரை மலரின் ஓவியம் உள்ளது. இது சமணச் சமயத்தாரின் எச்சமாகும். சித்தன்ன வாசல் தாமரையைப் போலவே இஃதுள்ளது என்று, டாக்டர் நாகசாமி கருதுகிறார். 3. ஆனைமலை ஓவியம் மதுரைக்கண்மையிலுள்ள ஆனைமலையிலுள்ள சமணரின் புடைப்புச் சிற்பங்களின் மீது சுதை பூசி வண்ண ஓவியங்கள் தீட்டப் பெற்றுள்ளன. இவற்றில் குத்துவிளக்குகள், சாமரங்கள், தாமரை மலர்கள் ஆகிய ஓவியங்கள் முற்றிலும் அழிந்து படாமல் காணப் பெறுகின்றன. இதற்கு மஞ்சள், பச்சை, செங்காவி ஆகிய வண்ணங்கள் பூசப்பெற்றுள்ளன. இந்த ஓவியங்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தீட்டப்பெற்றவை ஆகும். இதே காலத்தில் அரிட்டாபட்டி, கீழக்குயில்குடி ஆகிய இடங் களிலும் இதே காலத்தில் தீட்டப்பெற்ற சமணர் ஓவியங்கள் உள்ளன, சித்தன்னவாசல் ஓவியங்கள் மகேந்திரவர்மன் காலத்தவை யென மயிலை சீனி. வேங்கடசாமி தமது ''மகேந்திரவர்மன் (1959) என்னும் நூலில் கூறுகிறார். இந்தக் குடைவரை ஒரு சமணக் கோயி லாகும் என்று கே. ஆர். சீனிவாசன் கூறுகிறார். ஆனால், இன்றைய ஆய்வாளர்கள் இஃது பல்லவர் காலத்ததன்று என்றும் பாண்டியர் காலத்ததே என்றும் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுக்குச் சான்றாக உள்ளது, இக்கோயிலின் பாறைச் சுவரில் வெட்டப்பட்டுள்ள கல் வெட்டு ஆகும். அவனிய சேகரன் என்ற சீமாறன் கீழக்குயில்குடி சீவல்லபன் (கி.பி. 8150 - 2) காலத்தில் இளங்கௌதமன் என்னும் பெரியாரால் கோயிலின் இடைநாழிகை புதுப்பித்து முக மண்டபம் கட்டப்பட்டது என்ற செய்தி அக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தான் இந்த இடை நாழிகை யிலுள்ள முக மண்டபம் கட்டப்பட்டது என்றும் அதில்தான் வெண் சுதை பூசி ஓவியங்கள் தீட்டப் பட்டனவென்றும் கூறுகின்றனர். ஆனாலும் இதில் ஒரு புதிர் காணப்படுகிறது. இந்த ஓவியங்களை நுணுகி ஆய்ந்த போது இவற்றிற்கு அடியிலும் இதே போன்ற ஓவியங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, பல்லவர் காலத்தில் தீட்டப்பெற்ற ஓவி யங்களின் மேல் சுதை பூசி, அப்பூச்சு மேல் பாண்டியர் காலத்தில் ஓவியம் தீட்டி யுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலை சீனி வேங்கடசாமி, கே. ஆர். சீனிவாசன் ஆகியோரின் கூற்றிலும் உண்மை யுள்ளது. இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் ஐந்து சமணத் துறவி களின் உருவங்களாகும். அவற்றிலொன்று பாசுவெதநாதர் சிற்பமாகும் என்றும் டாக்டர் இரா. நாகசாமி கருதுகிறார். கருவறையின் மேல்விதானத்தில் தரை விரிப்புகளைப் போல் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தாமரைக்குளம் முன்மண்டபக் கூரை முழுவதும் தாமரைக்குளம் ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளது. வெண்தாமரை, செந்தாமரை, அல்லி, ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் பூத்துள்ளன. தாமரை இலைகள் குளத்து நீரை முடி உள்ளன. இலைகளின் நடுவில் அன்னப் பறவைகளும் வாத்துகளும், மீன்களும் நீந்திக் களிக்கின்றன. எருமையும் யானை யும் சலனமின்றிக் காணப்படுகின்றன. ஆழமற்ற இக்குளத்தில் முழங் கால் அளவு நீரில் மூன்று ஆண்கள் இறங்கிப் பூப்பறிக்கின்றனர். பூக்களைத் தாளோடு கொய்து கற்றையாகக் கட்டித் தோளின் மேல் வைத்துக் கொண்டு வருகிறார்கள். இத்தாமரைக் குளக்காட்சி சமணச் சமயத்தில் வரும் 'காதிகா பூமி' எனப்படும் சமண சமயக் காட்சியே என்பதைக் காட்டுகிறது. நடன மகளிர் இக்குகையின் இடைநாழிகையின் வடப்புறத் தூணில் நடன மகளிரின் ஓவியம் உள்ளது. வலப்புறத்தூணிலுள்ள நடன மகள் தன் இடக்கையைத் துதிக்கை போல் வைத்துக் கொண்டு வலக்கை உள்ளங்கையைச் சதுர வடிவில் காட்டுகிறாள். இது சிவபெருமான் ஆடிய 'நாதாந்த நடனம் போலுள்ளதென டாக்டர் மா. இராசமாணிக்க னார் (பல்லவர் வரலாறு 1971) கூறுகிறார். இடது பக்கத்தூணிலுள்ள நடனமகள் லலிதாவிரிச்சு நடனப்பாணியில் காட்சியளிக்கிறாள். இடக் காலைப் பின்புறம் மடக்கி, வலக்கையின் அங்கையும், விரல் களையும் மேல்நோக்கி வளைத்துக் கொண்டு இடக்கையை நன்றாக நீட்ட வேண்டும். இதுவே 'லலிதாவிரிசிக' நடனமாகும். இவ்விரு நடன மாதர்களின் உருவங்கள் இடுப்பளவே தீட்டப் பட்டிருந்தாலும், பல்வேறு மெய்ப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. இவர்கள் கூந்தலை ஒப்பனை செய்து குறையாடையணிந்து நிறை வான அணிகலன்களுடன் காணப்படுகின்றனர். தலை நிறையப் பூச்சி சூடி, கைகளில் வளையல்களும் தோள்களில் வங்கிகளும் கழுத்தில் பல்வேறு மாலைகளும் விரல்களில் கணையாழிகளும் காதில் பத்திரக் குண்டலங்களும் குதம்பையும் அணிந்து சீதேவி, வலம்புரி, பூரப் பாலை, தென்பல்லி, வடபல்லி முதலிய அணிகலன்களைத் தலைக்கு அணிந்து, இடுப்பில் மேகலை அணிந்து காணப்படுகின்றனர். இவ் வணிகலன்கள் பொன்மணி, முத்து ஆகியவற்றால் ஆனவை ஆகும், கூந்தலின் நடுவில் வகிடெடுத்து முடியப்பட்டுள்ளது. அம்முடியில் அணிகலன்களும் மலர்க் கொத்துகளும் தாமரை இதழ்களும், இலை களும் ஒப்பனையாகச் சூடப்பெற்றுள்ளன. வலப்பக்கம் உள்ள வளின் கூந்தல் வேறுபட்ட ஒப்பனையுடன் காணப்பட்டாலும், அணிகலன் களும், ஒப்பனைகளும் ஒரே மாதிரியாகவுள்ளன. வலப் புறம் உள்ளவள் இரண்டு மேலாடைகளை அணிந்துள்ளாள். ஒன்று இடையில் கட்டப்பட்டும், மற்றொன்று தோளைச் சுற்றியும் போடப் பட்டுள்ளது. இக்காலப் பெண்கள் ஓவியங்களில் இத்துணை அணி கலன்கள் காணப்பட்டாலும் முக்கணி (முக்குத்தி) இல்லை. அருகக் கடவுளின் அருளுரை அரங்கில் இத்தகைய ஆடல் அணங்குகளின் ஓவியம் இருப்பது சரியா? அருகக் கடவுளின் அருளுரை இடம் சரவணபவன் என்பதாம். இதில் ஏழுமாடவீதிகள் உண்டு. இதில் இரண்டாம் மாடவீதி அகழி போன்ற மாடவீதி ஆகும். 'காதிகா பூமி' எனப்படும். அருகப் பெருமானின் அருளுரைத் தத்து வங்களை ஆடல், பாடல்களாக நடத்துவதற்கே இத்தகைய ஆடல் அணங்குகள் உள்ளனர் என்று சமண நூலான 'சூத்திரக்ருதாங்கம்' கூறுகிறது. இத்தகைய ஓவியங்கள் அமராவதி சமணக்குகைக் கோயி லிலும் உள்ளன. எனவே இந்த நாட்டின் மங்கையரை அடிகளார் என்கின்றனர். அரசன் அரசியர் ஓவியங்கள் சித்தன்ன வாசலிலுள்ள மற்றோர் ஓவியம் அரசன் அரசியர் ஓவியமாகும். தென்புறத் தூணில் மார்பளவேயுள்ள இந்த ஓவியத்தை மாதொருபாகன் என்று முதலில் கூறினர். ஒரே உருவத்தில் பாதி ஆணாகவும், பாதிப் பெண்ணாகவும் "உள்ளதே மாதொருபாகன் (அர்த்தனாரி) என்பர். ஆனால் இது தனித்தனி ஆண், பெண் உருவங்களாகும். ஆண் உருவம் மணிமுடி சூடிக் காணப்படுவதால் இது அரசரின் உருவம் என்றும், பக்கத்தில் பெண் மலர்சூடி இருப்பதால் அரசியின் உருவம் என்றும் கொள்ளலாம். எதிரில் காவி உடுத்திய துறவியின் உருவம் உள்ளது. இந்த ஆண் உருவம் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் என்றும், பெண் உருவம் அவன் தேவி என்றும் கருதப்படுகின்றன, அந்தத் துறவியின் உருவம் இக்கோயிலைப் புதுப்பித்த மதுரை ஆசிரியர் இளங்கெளதமன் என்றும் கருதப்படுகிறது. முடிவுரை மண்டபத்தை அடுத்துள்ள உள்ளறையின் கூரையிலும் வண்ணப் பூச்சுகள் காணப்படுகின்றன. அதில் சுவாதிகா, சூலம், சதுரம், தாமரை மலர் முதலிய குறிகள் கோலமாகத் தீட்டப்பட்டுள் ளன. தமிழ்நாட்டு ஓவியங்களுள் சித்தன்னவாசல் ஓவியங்கள் காலத் தால் முந்தியவை ஆகும். இவற்றில் அழிந்தது போக எஞ்சியுள்ள வண்ணங்கள் சிவப்பும், ஆரஞ்சு சிவப்புமே ஆகும். இந்த ஓவியங்கள் அசாந்தா ஓவியங்களைக் காட்டிலும் மேன்மையானவை. இவற்றில் கையாளப்பட்டுள்ள தொழில் நுட்பம் அசாந்தா, எல்லோரா, சிகிரி யாபாக் ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்களைக் காட்டிலும் நுணுக்கமானது. இவ்விடங்களில் சுதையில் மண் கலந்துள்ளது. ஆனால் சித்தன்னவாசல் ஓவியங்களில் பூசப் பட்டுள்ளது போன்ற சுதைப் பூச்சின் வண்ணமே முற்றிலும் பயன் படுத்தப்பட்டுள்ளது. . பெருங் கற்காலத்தில் பாறையில் தீட்டப்பட்ட ஓவியம் சங்க காலத்தில் வண்ணச்சதைகளில் வெண்சதைப் பூச்சின் மேல் தீட்டப் பட்ட ஓவியமாக மலர்ந்தது. 3. சிற்பக் கலை பல்லவர் - பாண்டியர் காலச் சிற்பங்கள் சைவ நாயன்மார் களின் பதிகங்களின் அடிப்படையிலும், ஆழ்வார்களின் பாசுரங்களின் அடிப் படையிலும் அமைக்கப்பட்டவை ஆகும். அச்சிற்பங்களே மூலவர்களாக வும் விழா மூர்த்திகளாகவும் பூசைக்குரிய தெய்வத் திருவுருவங் களாகவும் மாறின. இறை இயக்கத்தால் இவை சிற்பங்களாகவும் சிலைகளாகவும் பல்கிப் பெருகின. பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோயில்களே அதிகம். கட்டுமானக் கோயில்களின் எண்ணிக்கை பல்லவர், சோழர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவானதே ஆகும். ஆயினும் பாண்டியர் குடைவரைக் கோயில் சிற்பங்கள் எண்ணிக்கையில் அதிகமானவை ஆகும், ஆயினும் அவை கற்கோயில் களிலும் கட்டுமானக் கோயில்களிலும் இருந்தன. எனவே பாண்டியர் காலச் சிற்பங்களை 1. குடைவரைச் சிற்பங்கள் 2. ஒற்றைக்கற்கோயில் சிற்பங்கள் 3. கட்டுமானக் கோயில் சிற்பங்கள் என மூவகைச் சிற்பங்களாக அறியலாம். 1. குடைவரைச் சிற்பங்கள் பாண்டியர் கால் குடைவரைச் சிற்பங்களில் அதிக முகாமை பெறுவது பிள்ளையார் சிற்பமாகும். வரலாற்றின்படி வாதாபி கொண்ட நரசிம்மன் காலத்தில்தான் (கி.பி. 642-இல்) வாதாபியி லிருந்து தமிழ் நாட்டிற்குப் பிள்ளையார் கொண்டு வரப்பட்டதாக அறிகிறோம். ஆனால் பாண்டியரின் குடைவரைகளைக் காணும் போது கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே பிள்ளையார் புடைப்புச் சிற்பமாக உள்ளதைக் காண்கிறோம். கீழ்க்காணும் பாண்டியரின் கோயில்களில் பிள்ளையார் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. - அரிட்டாபட்டி, குன்றக்குடி, குடுமியான்மலை, செவல்பட்டி, திரு மலைபுரம், திருப்பரங்குன்றம், திருக்கோலக்குடி, திருக்கோகர்ணம், பிள்ளையார்பட்டி, தேவர்மலை, மகிபாலன் பட்டி, மூவரைவென் றான், விரிச்சியூர், பூவாலக்குடி ஆகிய இடங்களில் பிள்ளையார் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. இவற்றில் பிள்ளையார்பட்டிக் குடைவரையிலுள்ள பிள்ளையார்தான் மிகவும் பழமையானது. 1. பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர் அமர்ந்த வண்ணமுள்ள இந்த விநாயகருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. வலக்கையில் சிறிய லிங்கம் உள்ளது. துதிக்கை வலதுபக்கம் வளைந்துள்ளது. தலையில் மகுடம் உள்ளது. மார்பில் முப்புரி நூல் இல்லை. இச்சிற்பம் பாண்டியர் காலத்தது என்று முனைவர் இரா. நாகசாமி, கே. ஆர். சீனிவாசன், நடன காசிநாதன் ஆகியோர் கருதுகின்றனர். 2. பிள்ளையார்பட்டி இலிங்கோத்பவர் கி.பி. 5ஆம் நாற்றாண்டு முதல் இலிங்கோத்பவர் குடை வரைக் கோயில்களில் காணப்படுகிறார் என்பதற்குப் பிள்ளையார் பட்டியிலுள்ள குடைவரையில் காணப்பெறும் இலிங்கோத்பவ மூர்த்தியைக் கூறலாம். இடுப்பு வரை இலிங்கமாகவும், அதற்கு மேல் இரண்டு கைகளை உடைய சிவனாகவும் உள்ள இச்சிற்பம் வலக் கை வரதமுத்திரை காட்டியும், இடக் கை இடுப்பின் மேல் வைத்தும், சடைமுடி தரித்தும், திடமான பூணூலும் அணிந்துமுள்ளது. இதனைச் சுற்றிப் புராணக் கதைப்படி. பிரமன், வராகன் ஆகியோர் இல்லை , 3. பிள்ளையார்பட்டி அரிஅரன் குடைவரையின் தென் சுவரிலுள்ள இச் சிற்பம் சிவனும் திரு மாலும் ஆகுமென டாக்டர் இரா. நாகசாமி கூறுகிறார். இது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். 4, மலையடிக்குறிச்சி குடைவரைச் சிற்பங்கள் திருநெல்வேலி மாவட்டம் நாதன் மலையின் தென்புறமுள்ள மலையடிக்குறிச்சி குடைவரை, பாண்டிய மன்னன் சேந்தன் செழி யன் ஆணைப்படி கி.பி. 637இல் வெட்டப்பட்டது. இதில் மாடக் குழிகளில் முற்றுப் பெறாத வாயிற்காப்போர் சிற்பங்கள் உள்ளன, தூண்களில் அன்னப்பறவை, தாமரை, கந்தர்வன், கந்தன் ஆகிய சிற்பங்கள் எழிலுடன் காணப்படுகின்றன. 5. திருக்கோகர்ணம் கோகர்ணேசுவரர் குடைவரைச் சிற்பங்கள் இக்கோயிலில் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விநாயகர், 'கங்காதர மூர்த்தி, மங்கையர் எழுவர் (சப்த கண்ணியர்) ஆகிய சிற்பங்கள் உள்ளன, விநாயகர் பிள்ளையார் நான்கு கைகளுடன் அமர்ந்தவண்ணம் உள்ளார். இது பிள்ளையார்ப்பட்டி பிள்ளையாரைப் போலவே உள்ளது. அதைவிட பெரிய உருவில் உள்ளது. கங்காதர மூர்த்தி இத்தகைய சிற்பம் இங்கும் திருப்பரங்குன்றத்திலும் உள்ளது. நான்கு கைகளுடன் சடாமுடியில் கங்கை பெண் உருவில் கரம் கூப்பி வணங்கும் நிலையில் கங்காதரர் நின்ற வண்ணம் உள்ளார், கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இச்சிற்பம் பல்லவர் கால கங்காதர மூர்த்தி யின் சிற்பங்களை விடப் பெரியதும், வனப்புடையதுமாகும். தென் புறமுள்ள பாறைச் சுவரில் 'சப்த' மாதர்களின் சிற்பங்கள் உள்ளன. முன்புறம் சிவபெருமான் 'யோகீசுவர 'ராக அமர்ந்துள்ளார். இது போன்ற அன்னையர் எழுவரின் சிற்பங்கள் வரிச்சியூர் திருப்பரங் குன்றம், திருக்கோளக்குடி, மலையடிப்பட்டி ஆகிய ஊர்களிலும் காணப்படுகின்றன. 6. திருமலைக் குடைவரைக் கோயில் சிற்பங்கள் முருகன் : சிவகங்கை வட்டத்திலுள்ள திருமலைக் குடைவரையில் உள்ள சிவனும், பார்வதியும் அமர்ந்த வண்ணமுள்ள சிற்பம் சிறப்பானதாகும். இக்குடைவரையின் தென் சுவரில் முருகப் பெருமான் சேவற்கொடி யுடன் கணங்கள் புடைசூழ உள்ள புடைப்புச் சிற்பம் சிறப்பானதாகும். முருகன் இரு பங்கமாய் (துவிபங்கம்) நிற்கிறார். தலையில் தலைக்கோலம் உள்ளது. இரு கைகளும், காதுகளில் சுருள் தோடும் (ஓலைத்தோடு கழுத்தில் பிறை வடிவ அணியும், மார்பில் புரிநூலும், தோள் வளையும், இடைக் கச்சையும், காலில் கழலுமாக உள்ளார். அடியார்கள், கணங்கள் " சூழ்ந்துள்ளனர். இச்சிற்பம் கி.பி. 700 இல் இருந்து 750க்குள் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று மா. சுந்தரமூர்த்தி கருதுகிறார். 7. ஆனைமலை நரசிங்கப் பெருமாள் குடைவரை முருகன் இதைப் போலவே மற்றொரு சிறப்பு மிக்க, சேனாதிபதியாக முருகன் காட்சியளிக்கும் சிற்பம் ஆனைமலை நரசிங்கப் பெருமாள் குடைவரையில் உள்ளது, இது பராந்தகன் மாறன் சடையன் காலத் தைச் சார்ந்ததாகும். இதில் முருகன் தேவசேனையுடன் தேவசேனாதி பதியாக உள்ளார். தெய்வயானை அமர்ந்த நிலையில் புன்னகை பூத்தவாறு உள்ளார். கருவறை வாயிலில் சேவற் கொடியும் மயில் கொடியும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. 8. திருப்பரங்குன்றம் குடைவரைச் சிற்பங்கள் முருகன் திருப்பரங்குன்றத்திலுள்ள முருகப் பெருமான் குடைவரைக் கோயில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியன் பராந்தக சடையன் 'காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது, இங்குள்ள ஒரு கருவறையில் சிவன் மூலவராக உள்ளார். இதன் உட்சுவரில் சோமாசுகந்தர் உருவம் புடைப்புச் சிற்பமாக உள் ளது. பாண்டியரின் குடைவரைக் கோயிலில் இங்கு மட்டுமே சோமா சுகந்தர் உருவம் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலில் முருகன் நான்கு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இடப் புறம் தெய்வயானை நின்ற கோலத்தில் உள்ளார். காயத்ரி, கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோரின் உருவங் களும் உள்ளன. கொற்றவை முருகன் கருவறையை அடுத்து எருமைத் தலைமேல் நிற்கும் கொற்றவை, நான்கு கைகளில் படையேந்தி நிற்கிறாள். இரு மருங்கிலும் தங்களைக் காவுகொடுக்க நிற்கும் மறவர்கள் உள்ளனர். இதுபோன்ற படைப்பு துரெளபதை தேர், சிங்கவரன் குடைவரை, திருச்சிக் குடைவரை, குன்றக்குடி ஆகிய இடங்களிலும் உள்ளன. திருப்பரங்குன்றம் குடைவரையில் பிள்ளையார் சதுர நடனம் ஆடும் சிற்பமும் நடராசர் பார்வதி, நரசிம்மர், பூவராக மூர்த்தி ஆகிய சிற்பங்களும் உள்ளன. 9. குன்றக்குடி குன்றக்குடியில் முருகன் நேராக நின்ற கோலத்தில் உள்ளார். 10. குடுமியான்மலைக் குடைவரைச் சிற்பங்கள் இவற்றில் நந்தி, வாயிற் காப்போர், வலம்புரி விநாயகர் ஆகிய சிற்பங்கள் சிறப்பானவை ஆகும். 11. திருக்கோளக்குடி குடைவரைச் சிற்பங்கள் அகத்தியர், புலத்தியர், பிள்ளையார், யோகீசுவரர், பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைணவி, இந்திராணி, வராகி, சாமுண்டி (ஆகிய அன்னையர் எழுவர்), நந்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன. 12. சொக்கப்பட்டிக் குடைவரைச் சிற்பங்கள் இளவரசன் இளவரசி உருவங்கள் மாடக்குழிகளில் அமைந்த சிற்பங்களாக உள்ளன. இவற்றைப் போலவே சேந்தமரம், அழகிய பாண்டியபுரம் கழுகுமலை ஆகிய இடங்களிலுள்ள குடைவரைக் கோயில்களில் திருமால், சிவன் - பார்வதி சிற்பங்களும் சுரமகளிர், தேவ கணங்கள் ஆகியோரின் சிற்பங்களும் உள்ளன. முடிவுரை பாண்டியர் காலச் சிற்பங்கள் அதிக அளவில் முருகன், திருமால், சிவன், பிள்ளையார், கொற்றவை முதலிய தெய்வப் படிமங்கள் உள்ளன. அகத்தியர், அரசன், அரசியர், சுரசுந்தரி முதலிய சிற்பங்களும் உள்ளன. பல்லவர் காலத்தின் சிறப்புடைய சிற்பமாகக் கருதப்பட்ட சோமாஸ்கந்தர் சிற்பம் பாண்டியர் காலத்தும் உள்ளது. பிள்ளையாரின் தமிழ்நாடு வருகை கி.பி. 642 என்று கருதியதைப் பாண்டியர் காலச் சிற்பமாக பிள்ளையார் உள்ளதைக் கொண்டு கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பிள்ளையார் உள்ளார் என்பதை அறிகிறோம். சப்தமாதர் சிற்பங்களும், சேட்டா உருவமும் உள்ளன. 8 சோழப் பேரரசர் காலம் (கி.பி. 850 - 1300) அ) அடிப்படைச்சான்றுகள் 1. கல்வெட்டுகளும் செப்பேடுகளும் 2. இலக்கியங்கள் 3. கோயில்கள், நினைவுச் சின்னங்கள் 4. நாணயங்கள் 5. அளவைகள் 6. அயல்நாட்டுச் சான்றுகள் 7. புதைபொருள் ஆய்வுகள் ஆ) சோழப் பேரரசர்கள் 1. விசயாலயன் மரபு (கி.பி. 850 - 1070) 2. குலோத்துங்கன் மரபு (கி.பி. 1070 - 1279) இ) குறுநில மன்னர்கள் ஈ) ஆட்சிமுறை . உ) சமுதாய வாழ்க்கை ஊ) இலக்கியமும் சமயமும் எ) பொருளாதார நிலை 1. நிலவரிகள் 2. வாணிகம் 3. நாணயங்கள் ஏ) கலைகள் 1, கட்டடக் கலை 2. சிற்பக்கலை 3. ஓவியக்கலை 4. செப்புத் திருமேனிகள் 5. கூத்தும் இசையும் 8. சோழப் பேரரசர் காலம் (கி.பி. 850 - 1300) அ) அடிப்படைச் சான்றுகள் சோழப் பேரரசு பற்றி அறிய கீழ்க்கண்ட வரலாற்றுச் சான்று கள் உள்ளன. சோழப் பேரரசர்கள் ஏறத்தாழ 430 ஆண்டுகள் தமிழ் கத்தை ஆண்டார்கள். இவர்களுடைய ஆட்சி ஓரளவு தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. இவர்களின் ஆட்சியில்தான் தமிழகப் பண்பாடும் நாகரிகமும் கடல் கடந்தும் பரவியது. குறிப்பாகக் கோயிற் கலையில், திருவுருவங்களை அமைப்பதில் உலகப் புகழ்பெற்ற சோழப் பேரரசர்களைப் பற்றி அறிவதற்கு எண்ணிறந்த கல்வெட்டுகளும், செப் பேடுகளும், கட்டடங்களும், இலக்கியங்களும் சான்றுகளாய் உள்ளன. வடக்கே நெல்லூரில் இருந்து தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவி இருந்த சோழ மண்டலம் முழுவதும் இச் சான்றுகள் பரவிக் கிடக்கின்றன. குறிப்பாக அவர்களின் கோயில்கள், சான்றுகளின் கருவூலங்களாகத் திகழ்கின்றன. இவை கி.பி. 850 முதல் 1250 வரையிலான கால கட்டத்திற்குட்பட்ட சான்றுகளாகும். கல்வெட்டுகளும், செப்பேடுகளும் காணப்பெறும் செய்திகள் சோழர் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்பெறும் செய்திகள், சமுதாய நடவடிக்கைகள், வாணிகம், வேளாண்மை , வரிகள் முதலிய பொருளாதாரம் பற்றிய செய்திகளும் பிறவும் ஆகும். கல்வெட்டுகள் குறிப்பாகச் சோழ மன்னர்களின் மெய்க் கீர்த்தி களைப் பற்றிக் கூறுகின்றன. செப்பேடுகள் அரசர்களின் குடிமரபு" கள், புராணச் செய்திகள், பரம்பரைப் பண்புகள், போர்கள், வெற்றி கள் முதலியன பற்றிக் கூறுகின்றன. இச்செப்பேடுகள் தமிழிலும், சமற்கிருதத்திலும், இருமொழிகள் கலந்தும் எழுதப் பெற்றுள்ளன. இவற்றை எழுதிய கலைஞர்கள், வழங்கிய அரசர்களின் பெயர்கள் முதலியன இச்செப் பேடுகளில் பதிவாகி உள்ளன. மெய்க்கீர்த்திகள் பொதுவாகச் சோழரின் மெய்க்கீர்த்திகள் மிகைப்படக் கூறப் பட்டுள்ளதால் இவற்றில் வரும் செய்திகளை அப்பட்டமானவை என்று கூறமுடியாது. மெய்க்கீர்த்திகள் முதலாம் இராசராசன் காலத் தில் இருந்து காணப் பெறுகின்றன, மெய்க்கீர்த்திகளில் ஓர் அரசனின் செயல்களையும் புகழை யும் கூறும் போது அவனுடைய முன்னோர்களின் செயல்களையும் பெருமைகளையும் அவன் மீதே ஏற்றிச் சொல்லப் படுவதுண்டு. சோழ அரசர்களுக்கு இராசகேசரி', 'அரிகேசரி' ஆகிய விருது, கள் மாறிமாறித் தொடர்ந்து வரும். இதனால் அவர்களின் குல மரபை வரிசைப்படி அறிய இவை உதவுகின்றன. எனவே, சோழர்களின் காலக்கணிப்பை அறிவதற்கு இவை பெரிதும் உதவுகின்றன. மெய்க்கீர்த்தியின் தொடக்கத்தைக் கண்ட உடனேயே இது எந்த அரசனுடையது என்று கூறிவிடலாம். எடுத்துக்காட்டாகத், 'திரு மகள் போல' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி முதலாம் இராசராச னுடையது என்றும், திருமன்னிவளர்' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தி முதலாம் இராசேந்திரனுடையது என்றும், 'திங்களேர் திரு' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி இராசாதிராசனுடையது என்றும், "புகழ்மாது' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி முதலாம் குலோத் துங்கனுடையது என்றும் அறியலாம். மெய்க்கீர்த்திகள் வெற்றிகளை மட்டுமே கூறுகின்றன. ஆயினும், ஆங்காங்கே தோல்விகளைப் பற்றியும் கூறுவதையும் காணலாம், கல்வெட்டுகளில் சிற்றரசர்கள் சிலரைப்பற்றியும் கூறப் பெற்றுள்ளன. பொதுவாகக் கல்வெட்டுகளில் வரும் மெய்க்கீர்த்தி களில் அரசனது பரம்பரை, சாதனை, படைப்பு, புகழ் முதலியன கூறப் பெறுகின்றன. செப்பேடுகளில் கூறப்பெற்றுள்ளவை செப்பேடுகளில் கோயில்கள், விகாரைகள், மடங்கள், பிரம் தேயங்கள் முதலியன பற்றியும், பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் (பரிகாரங்கள் பற்றியும் கூறப் பெற்றுள்ளன. தானம் வழங்கிய அரசன், இடம், தேதி முதலியனவும், தானப்பத்திரத்தை (சாசனம் எழுதியவர் பெயர், அதனைச் செயல்படுத்தும் அதிகாரி முதலிய விவரங்களும் செப்பேடுகளில் இருக்கும். முன்னர் கூறிய படி செப்பேடுகள் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப் பெற்றிருக்கும். சில செப்பேடுகள் 1. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் முதலாம் இராசேந்திரன் அளித்த பழையனூர் என்ற தேவதான ஆணையைப் பற்றி இத்திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பேசுகின்றன. 2. கரந்தைச் செப்பேடுகள் முதலாம் இராசேந்திரச் சோழன், அலை கடல்களைக் கடந்து பல நாடுகளை வென்ற செய்தியையும், மற்றும் கீழ்த்திசை நாடுகளு டன் கொண்ட தொடர்புகளையும் இச்செப்பேடுகள் கூறுகின்றன. இதே செய்தியைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் கூறுகின்றன, செப்பேடுகளில் ஆட்சிமுறை தானம் செய்யப்பட்ட விதம், நாட்டார் பொறுப்பு முதலிய விவரங்கள் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டுகளிலும் இத்தகைய செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் முகாமையானது மெய்க்கீர்த்திகளே ஆகும். கால் வாரி யாக இதில் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கல்வெட்டு கள் மீண்டும் பொறிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மீண்டும் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளைத் 'துல்யம்' என்பர். பழைய கல்வெட்டி லுள்ள எழுத்துகள் வழக்கொழிந்து போனதால் அத்தகைய கல் வெட்டுகளை மொழி அறியாக் கல்வெட்டு' எனக் கூறி அதனை அழித்து விடுவர். அதன் படிகளைப் புதிய எழுத்தில் மீண்டும் எழுதிப் பதிப்பார்கள். எதிராமாண்டு கல்வெட்டில் வரும் இத் தொடர் ஆண்டைக் கணக்கிட கையாளப்பட வேண்டிய முறை ஆகும். பத்தாம் ஆண்டுக்கு எதிரா மாண்டு என்றால் பத்தோடு ஒரு ஆண்டைக் கூட்டி பதினோராம் ஆண்டு எனக் கணக்கிட வேண்டும். பத்தாம் ஆண்டுக்கு எதிர் ஏழாம் ஆண்டு என்றால் பதினேழாம் ஆண்டு என்று கணக்கிட வேண்டும். எதிர் என்ற சொல் கூட்டல் குறியைக் குறிக்கும். பத்தாம் ஆண்டு எதிர் இருபதாம் நாள் என்றால் பத்து ஆண்டும் இருபது நாளும் என்பது பொருள். கல்வெட்டுகளில் ஆண்டு நாள்கள் இவற்றோடு 'திதி', 'பட்சம்', 'நட்சத்திரம்' ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. கோயில்களில் அரசர்கள் அக் கோயில்களுக்குச் செய்த தானம், தரூமம், திருப்பணி முதலியவற்றைக் கல்வெட்டுகளில் பொறித் துள்ளனர். அதே வாசகங்களைச் செப்பேடுகளிலும் பொறித்துள்ள னர் என்பதைக் கல்வெட்டுகளிலேயே குறிப்பிட்டுள்ளனர். கோயில் தொடர்பான பெரும்பாலான தாவாக்கள் இக்கல்வெட்டுகளில் உள் ளன. இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளிக்கப் பட்டன. கல்வெட்டில் இலக்கியம் கல்வெட்டுகளில் இலக்கியங்களும் சில போது செதுக்கப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகத், திருஞானசம்பந்தரின் தேவாரம் திருவிடைவாயில் கல்வெட்டொன்றில் காணப்பெறுகிறது. இதைப் போலவே திருச்சி மலையில் அந்தாதி ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. சோழப் பேரரசு பல்லவரின் வலிமை குன்றியபின் விசயால் யன் (கி.பி. 850 - 871) தஞ்சையை முத்தரையரிடமிருந்து கைப்பற்றி ஆளத் தொடங்கியதிலிருந்து சோழரின் ஆட்சி கி.பி. 850-ல் தொடங்கி, மூன்றாம் இராசராசன் காலம் முடியும் வரை கி.பி. 1300 வரை சுமார் 450 ஆண்டுக் காலம் நிலவியது. முதலாம் இராசராசன் (கி.பி. 985-1015) காலத்திலேயே சீரான கல்வெட்டுகள் வெளியிடப்பட்டு, பின்னரும் வெளியிடப்பட்டதால் பல ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. ஆயினும், சேகரிக்கப்பட்ட கல்வெட்டு களே இன்னமும் வெளியிடப் படாமல் உள்ளன. பல அழிந்துபட் டும் போயின. சிறப்பாகக் கூற வேண்டியது கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் ஓரளவு அழிபடாமல் உள்ளன. அவற்றைத் திரட்டித் 'தென்னிந்திய கோயில் சாசனங்கள்' என்ற தலைப்பில் பல மடலங் களாக வெளியிட்டுள்ளனர். இதைப் போலவே இந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் பல மடலங்களாக வெளியிட்டுள்ளனர். இவற்றுள் சோழர் வரலாற்றின் மயக்கமான பகுதிகளை ஆய்ந்து முடிவெடுக்க உதவுவன இராசாதிராசன் காலத்தில் வெளியிடப்பட்ட பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு, ஆர்ப்பாக்கம் கல்வெட்டு ஆகியவை ஆகும். காலத்தைக் கணிப்பதற்கு மட்டுமேயல்லாது ஈழநாட்டை வென்று சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் ஈழத்தின் வட பகுதியைச் சோழப்பேராட்சியின் ஒரு மண்டலமாகவே சோழர்கள் ஆண்டார்கள் என்பதை இலக்கியச் சான்றுகளோடு கல்வெட்டுச் சான்றுகளும் கூறுகின்றன. இராசராசனின் கல்வெட்டுகள் பல இந்த கூற்றை மெய்ப்பிக் கின்றன. இதைப்போலவே மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு களும் இதற்கான சான்று பகர்கின்றன. இவ்விருவரும் 'மதுரை கொண்ட மாமன்னர்கள்' என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்கள் 'மதுரையும், ஈழமும் கொண்டவர்கள்' என்றும் கூறுப்படு வதால் நல்ல சான்றுகளாகப் பயன்படுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் தனிப்பட்ட மாந்தர்களுக்கும் நிலச்சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் நிலையான ஆவணங்களாகப் பயன்படுகின்றன. பாமர மக்களின் அன்றாடப் பொது வாழ்க்கையை அறியவும் இவை உதவுகின்றன. கல்வெட்டுகளைப் போலவே செப்பேடுகளும் வரலாற்றுச் சான்று களாய்ப் பயன்படுகின்றன. பெரும்பாலான செப்பேடுகள் தேவதானம், பிரமதேயம் ஆகியவை பற்றிப் பேசுகின்றன. எடுத்துக் காட்டாக, 'ஆந்திராவிலுள்ள பாபட்லா'வில் கிடைத்துள்ள ஐந்து இதழ்களைக் கொண்ட செப்பேடுகள் குலோத்துங்க இராசேந்திர சோழராசன் என்பவன் இனுங்காறு என்னும் சிற்றூரரைப் பிரமதேய மாக ஓர் அந்தணனுக்குத் தானமாகத் தந்ததைப் பற்றிக் கூறுகிறது. இச் செப்பேட்டில் கீழைச் சாளுக்கியர், மேல்நாட்டுச் சிற்றரசர்கள் ஆகியோரின் குல மரபு வரலாறும் கூறப்பட்டுள்ளது, தென்னிந்தியச் சாசனங்கள், தென்னிந்தியக் கோயில் சாச னங்கள், கல்வெட்டுகள் தொகுப்பு முதலியன சோழர் காலக் கல்வெட்டு களையும், பட்டயங்களையும் உள்ளடக்கியுள்ளன. புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் சிறப்புடைய சான்றுகளாகும். 2) இலக்கியங்கள் சோழப் பெருவேந்தர் காலத்தை இலக்கியத்தார் 'காப்பியக் காலம்' என்பார்கள். இதற்குக் காரணம் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இவர்கள் காலத்தில்தான் பெரியபுராணம், இராமாவதாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்பரணி, முதலிய பரணரிகளும், விக்கிரம சோழன் உலா, இராசராச சோழன் உலா, சங்கர சோழன் உலா முதலிய உலா வகை நூல்களும் குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழ் போன்ற பிள்ளைத் தமிழ் நூல்களும் வளர்ச்சி அடைந்தன. இவை பெரும் பாலும் சோழர் வரலாற்றை விளக்கும் காலக் கண்ணாடிகளாய் உள்ளன, சைவ சமய நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு பெரிய புராணம் ஆகும். இதில் வரும் 63 நாயன்மார்களின் குலமும், கோத்திர மும், சாதியும் வேறு வேறு ஆகும். எனவே இது சமூகத்தைச் சித்திரிக் கும் ஓர் அட்டவணை எனலாம். செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி முதலாம் குலோத்துங்கன் கலிங்க நாட்டின்மீது பெற்ற வெற்றி யைப் பறை சாற்றுகிறது. குலோத்துங்கச் சோழன் கோவை, சங்கர சோழன் உலா, குலோத்துங்கன் உலா ஆகியவை குலோத்துங்கன் அரசுரிமை பெற்றமைபற்றிக் கூறுகின்றன. ஆயினும், இலக்கியங் களில் வரலாற்று உண்மைகள் மிகமிகக் குறைவாகவே காணப்படு கின்றன. எடுத்துக்காட்டாக விக்கிரம சோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா, இரண்டாம் இராசராசன் உலா ஆகியவை ஒட்டக்கூத்தரால் பாடப் பெற்றவை ஆகும். இவற்றில் வரலாற்றுச் செய்திகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன. திவ்வியப்பிரபந்தத் திரட்டு, குருபரம்பரை பிரபாவம், திவ்விய சூரி சரித்திரம் போன்ற வைணவ இலக்கியங்கள் வைணவ மரபு தோன்றி வளர்ந்தமை, வைணவக் கோட்பாடுகள் ஆகியவற்றைக் கூறுகின்றன. ஆழ்வார்கள் பாடல்களில் கோயில்களில் பாடப் பெற்றன என்பதால் வைணவ சமயப் பண்பு சமூகத்தில் மலர்ந்ததை அறிகிறோம். சிலருடைய பாடல்கள் கோயில் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தேட்டருந்திரன் திருப்பாவை, சடகோபன் பாட்டு ஆகியவை முறையே திருவரங்கம் மன்னார் கோயில், அழகர்கோயில் ஆகிய கோயில்களில் பதிக்கப்பட்டுள்ளன. வைணவ இலக்கியமான குருபரம்பரைபிரபாவம் என்ற நூலில் இராமனுசரை கிருமிக் கண்ட சோழன் என்ற சோழ மன்னன் துன் புறுத்தியதால் அவர் போசள நாட்டிலுள்ள மேல் கோட்டைக்குச் சென்றுவிட்டார் என்று கூறப்பெற்றுள்ளது, ஆனால் கல்வெட்டு களில் இதற்கு ஆதாரமில்லை. அவற்றைச் சில செவிவழிச் செய்தி களைத் திரட்டி கர்னல் மெகன்சி என்பார் சில மடலங்களாகத் தொகுத்து உள்ளார். அவற்றிலொன்று கொங்கு தேச இராசாக்கள் சரித்திரம்' என்பதாகும். ஆதித்த சோழன் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றி தலைக்காடு (தழைக்காடு) என்ற பட்டணத்தை அமைத்த செய்தி இதில் கூறப்படுகிறது. பிறமொழி இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களோடு வடமொழி இலக்கியங்களான 'பிரகத்கர மகாத்மியம்' என்ற நூலும் 'சோழ வம்ச சரிதம்' என்ற நூலும் வரலாற்றை அறிய உதவுகின்றன. "நவலோக சோழ சரிதம்' என்னும் கன்னட நூலும், 'மகாவம்சம்' என்ற பாலிமொழிச் சிங்கள நூலும் சோழர் வரலாற்றை அறிய உதவுகின்றன. 3. கோயில்கள், நினைவுச் சின்னங்கள் கட்டடங்கள் எழுதப்பெறாத சான்றுகளாய் உள்ளன. இவற்றில் சோழர்களின் கோயில் கட்டடங்கள் பெரிய நூலகங் களைப் போல் அரசுபதி பண்டாரம்) பயன்படுகின்றன. இவை சமூக, பொருளாதார, கலை வளர்ச்சிகளைப் பற்றி விளக்கும் கருவூலங்களாய் உள்ளன. கலை வளர்ச்சியினைக் காட்டுவதோடு சைவ, வைணவ, சமண, சாக்கிய சமய வளர்ச்சிகளையும் காட்டுகின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் கோயில்களில்தான் பாதுகாப்புடன் காணப்படுகின்றன. 4. நாணயங்கள் சோழர் காலத்தில் தங்கம், செம்பு, வெள்ளி ஆகிய உலோகங் களில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இராசராசன் ஈழத்தை வென்றபின் அங்குப் புழக்கத்தில் விடப்பட்ட நாணயம் 'ஈழக்காசு" எனப்பட்டது. அதன் மதிப்பும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட் டுள்ளது, கழஞ்சு என்பது தங்க நாணயம். இதைத் தவிர பொன் மாடை, மதுராந்தகத் தேவன்மாடை, அன்றாநற்காசு, பழங்காசு, ஈழக்கருங்காசு, அக்கம் திரமம், பஞ்சுலாநக அச்சு எனப் பலவகை நாணயங்கள் சோழர் காலத்திலிருந்தன. நாணயங்களில் சோழர்களின் விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன. நாணயங்களை அச்சிட அக்க சாலைகளிருந்தன. நாணயங்க ளால் சோழர் காலப் பொருளாதார நிலை, பொருள்களின் மதிப்பு முதலிய வாணிக நிலைமைகளையும் அறியலாம். 5. அளவைகள் : நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை ஆகிய அளவைகள் கூட நமக்குச் சான்றுகளாகப் பயன்படுகின்றன. 6. அயல்நாட்டார் சான்றுகள் தமிழக வாணிகர்கள் கடல் கடந்து சென்று வாணிகம் செய் தனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அந்நாடுகளில் தங்கி வாணிகம் நடத்தினர். அவர்களை நானாதேசிகள்', 'திசை ஆயிரத்து நூற்றுவர்', 'மணிக்கிராமத்தார்' என்றெல்லாம் அழைப்பர். அங்கெல் லாம் அவர்கள் தங்களின் நற்பணிகளைச் செய்தனர். அவற்றிற்கான கல்வெட்டுகளும் அங்கெல்லாம் காணப்பெறுகின்றன. அத்தகைய தமிழ்க் கல்வெட்டுகள் நமக்கு வரலாற்றுச் சான்றுகளாய் உள்ளன. இதைத் தவிர ஃபிரான்சு, டச்சு, அரபு ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்து போன ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளும் நமக்குப் பயன்படுகின்றன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலங்களில் சோழ நாட்டுத் தூதுவர்கள் சீனாவுக்குச் சென்று வந்த விவரங்களை செள-ஜூ-கு என்ற சீன அதிகாரி கி.பி. 1225 -ல் தொகுத்து வெளியிட்ட 'சூ - பான்-சி' என்ற சீன நூலில் காணலாம். இதில் சீன வணிகர்கள் தமிழகத்தில் இருந்து வாங்கிய பொருள்களின் எடையை விட அவர்கள் கொண்டு வந்த தங்கம், வெள்ளியின் எடை மிகுதியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறான், 7. புதைபொருள் ஆய்வுகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் தமிழகத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் நடத்திய புதைபொருள் ஆய்வுகளால் சோழன் மாளிகை' என்ற இடத்தில் சீன நாட்டுப் பீங்கான் பொருள்கள் போன்ற பல பொருள்கள் கிடைத்துள்ளன. இதனால் சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருத்த தொடர்புகள் தெரிகின்றன. கங்கைகொண்ட சோழேச்சுவரம் கோயிலை அடுத்து மிகச் சிறந்த அரச மாளிகை இருந்ததும், அது மூன்று தலைமுறை அரசர்களின் இருப்பிடமாக இருந்ததும் இவ் அகழ்வாராய்ச்சியால் புலப்படுகிறது. இவ்வாறு, செப்பேடுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், தன்னக, அயலக இலக்கியங்கள், கோயில்கள் முதலியன சோழர். கால வரலாற்றை அறியச் சான்றுகளாய்ப் பயன்படுகின்றன. ஆ) சோழப்பேரரசர்கள் 1. விசயாலயன் மரபு (கி. பி 850 - 1070) முன்னுரை 'சோழநாடு", "சோழ மண்டலம்", தொன்றுதொட்டு நிலவி பெரும் ஒரு பேரரசு. சங்க காலத்தில் இதனை ஆண்ட மன்னர்களைப் பற்றி சங்க இலக்கியங்களேயன்றி அயலகச் சான்றுகளும் கூறக் காண்கிறோம். அசோகனுடைய கல்வெட்டுகளிலும் சேர, சோழ, பாண்டியர், கேரள புத்திரர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இதிகாசங்களிலும் இவர்களைப்பற்றிக் காணப்படுகின்றன. தாலமி யின் குறிப்புகளிலும் பெரிப்புளுசு என்ற நூலிலும் மூவேந்தர் களின் தொன்மையைப் பற்றி அறிகிறோம். கரிகாற்சோழன் சங்க கால மன்னர்களில் சிறப்புற்றவனான சோழன் கரிகாற் பெருவளத்தான் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கினான். கழக இலக்கியங்களின்படி இவனுடன் இன்னும் பல சோழ வேந் தர்கள் ஆண்டதை அறிகிறோம். ஆயினும் பெரும் படை திரட்டி, ஒரு பரந்த சோழநாட்டை இவன் உருவாக்கினான். கோயில் வெண்ணி என்ற இடத்தில் தன்னை எதிர்த்த சேர பாண்டியரைத் தோற்கடித் தான், சோழர் கோநகரத்தை உறையூரில் இருந்து காவிரிப் பூம்பட்டி னத்திற்கு மாற்றினான், வங்கர், கோசலரை வென்று வடநாட்டார் அடிபணியப் புலிக் கொடியை இமயத்தில் ஏற்றினான். சிங்களத்தை வென்று அங்கிருந்து தன்னிடம் தோற்று அடிமைப்பட்ட பன்னி ரெண்டாயிரம் வீரர்களைக் கொண்டு பொன்னியின் குறுக்கே அணை கட்டினான். இத்தகைய புகழோடு வாழ்ந்த கரிகாற் பெருவளத் தானுக்குப் பிறகு சோழப்பேராட்சி மங்கி மறைந்து விட்டது. ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வரலாற்று ஏடுகளில் சோழரின் சுவடு தெரிய வந்தது. 1. விசயாலயன் மரபு கி.பி. 850 - 1070) 1. விசயாலயச் சோழன் (கி.பி. 850 - 871) விசயாலயன் கடைச்சங்கச் சோழர் மரபில் தோன்றியவன் என்பதனை அன்பில் செப்பேடுகள், ஆனைமங்கலச் செப்பேடு கள், கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் ஆகியவை தெரிவிக்கின்றன. தஞ்சையை முத்தரையரிடமிருந்து கைப்பற்றி அதனைக் கோநகராக்கி ஆளத் தொடங்கினான். அந்த வெற்றியின் சின்னமாகத் தஞ்சையில் நிசும்பசூதனி கோயிலைக் கட்டினான். முத்தரையர்கல்வெட்டுகளில் இவன் 'தஞ்சைக்கோன்' எனவும் "தஞ்சை நற்புகழாளன்' எனவும் குறிப்பிடப்படுகிறான், தஞ்சையைக் கைப்பற்றித் தனது கோநகரைப் பழையாறு என்னுமிடத்தில் இருந்து தஞ்சைக்கு மாற்றினான். அங்கு சுண்ணாம்பால் மாட மாளிகைகளைக் கட்டினான். எனவே தஞ்சை ஒரு தலைநகரமாகத் திகழ்ந்தது என்று திருவாலங்காட்டுச் செப் பேடுகள் கூறுகின்றன. தஞ்சையில் இருந்து ஆளத் தொடங்கிய விசயாலயனுக்குப் பின் தொடர்ந்து சோழப் பேரரசர்கள் ஆளத்தொடங்கினர். இப் பேரரசர்களின் ஆட்சி ஏறத்தாழ 430 ஆண்டுகள் நீடித்தது. எனவே பேரரசு மரபை ஏற்படுத்தியதால் 'விசயாலயன் மரபு' என்றே இப் பேரரசர்களை அழைக்கின்றனர். பல்லவரின் கீழ் ஒரு குறுநில மன்ன னாக இருந்த இவன் ஒரு சோழப் பேரரசை உருவாக்கித் தமிழக வரலாற்றில் ஒரு புதிய படலத்தை ஏற்படுத்தினான். திருப்புறம்பியம் போரில் வரகுண பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபூதி கொல்லப்பட்டான். வெற்றி பெற்ற பல்லவ மன்னன் அபராசிதன் சோழ நாட்டுப் பகுதியைச் சோழருக்கே கொடுத்து விட்டான். எனவே சோழன் விசயாலயன் சோழ மண்டலம் முழுமைக்கும் முடிமன்னனானான். இப்போரில் பங்கேற்றவன் இவன் மகன் முதலாம் ஆதித்தன் ஆவான், கொற்றவைக்கு நிசும் பசூதனி கோயிலெடுத்த விசயாலயன் கி.பி. 881-இல் இறந்தான். ஆனால் ஆதித்தனுக்கு கி.பி. 871-லேயே முடி சூட்டினான். 2. முதலாம் ஆதித்தன் (கி.பி. 871 - 907) இராசகேசரி ஆதித்தன் தன் தந்தை விசயாலயனுக்குப் பின் பேரரசனானான். திருப்புறம்பியம் போரில் அபராசித பல்லவன் சோழ நாட்டின் பகுதிகளை இவனுக்கு அளித்துவிட்டுத் தொண்டை நாட்டின் பகுதிகளைத் தான் எடுத்துக்கொண்டான். ஆனால் ஆதித்தன், பின்னர் அபராசித பல்லவனோடு பொருது நின்று தொண்டை மண்டலத்தைக் கைக் கொண்டான். இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருட்டிணன் மகள் இளங்கோப்பிச்சி என்பவளையும் பல்லவ இளவரசி ஒருத்தியையும் மணந்தான். இவன் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றியதாகக் கொங்கு தேச இராசாக்கள் என்னும் நூலில் குறிப்பிடப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் இருந்து பொன்னைக் கொண்டுவந்து தில்லையம்பலக் கோபுரத்திற்குப் பொன் வேய்ந்தான் என்று திருத்தொண்டர் திருவந்தாதி கூறுகிறது. தாழைக்காட்டை வென்றதாகவும் சிங்களத் தீவின் மீது படையெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவன் சிறந்த சிவபக்தன், சேரமன்னனோடு நட்பு பூண்டு குடகு முதல் காவிரி கடலில் கலக்குமிடம்வரையில் காவிரியின் இரு கரைகளிலுமிருந்த சிவன் கோயில்களைக் கற்றளியாக அமைத்தான் என்று அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் கி.பி. 907-இல் திருக்காளத்திக்கு (காளாஸ்திரி) அருகிலுள்ள தொண்டை மாநாடு என்னுமிடத்தில் இறந்தான். முதலாம் பராந்தகச் சோழன் தந்தையின் நினைவாக அங்கு ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டி னான். அதற்கு ஆதித்தேசுவரம் என்று பெயர். ஆண்டுதோறும் விழா நடத்துவதற்கான நிவந்தங்களையும் வழங்கினான். ஆதித்தனின் முதல் மனைவி இளங்கோப்பிச்சி திருமழபாடி கோயிலுக்கு நந்தா விளக்கேற்ற பத்துக் கழஞ்சு பொன் கொடுத்தாள், 3. முதலாம் பராந்தகன் (கி.பி. 907-955) ஆதித்தன் இறந்தபின் அவன் மகன் முதலாம் பராந்தகன் 'பரகேசரி' என்ற விருதுப் பெயருடன் தஞ்சையில் முடி சூடிக் கொண்டான். சேர மன்னன் மகள் கோக்கிழானடி என்பவனை மணந்தான், மேலும் பல மனைவியரும் இவனுக்குண்டு. இவனுக்கு நான்கு புதல்வர்களும், இரண்டு புதல்விகளும் உண்டு. ஆட்சிப்பரப்பு இவனுடைய ஆட்சி திருக்காளத்தி வரையில் தொண்டை மண்டலம் முழுவதும் பரவி இருந்தது. கொங்கு மண்டலமும் இவன் கீழ் இருந்தது. கி.பி. 910 - ல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வென்றான். இதனால் இவனுக்கு "மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்' என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. வென்னூர் என்னுமிடத்தில் நடந்த போரில் பாண்டியரையும், துணை நின்ற ஈழப்படையையும் தோற்கடித்ததால் இந்த விருதுப் பெயர் ஏற்பட்டது. இப் போரினைப்பற்றி கீழைப் பழுவூர், திருப்பாற்கடல் ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. வாணர்களை வெல்லுதல் பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் மாவட்டம் வரையிலான நிலப் பரப்பை வாணகம்பாடி (வணக்கம்பாடி) என்பர். வாணர்கள் இதனை ஆண்டனர். பல்லவர்களின் கீழ்க் குறுநில மன்னர்களாய் இருந்த இவர்கள் பல்லவப் பேரரசு வீழ்ச்சியடையும்போது தனித் தாண்டனர். திருவல்லம் (திருவலம்), வாணபுரம் ஆகிய இடங் களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இவர்களை வென்று தன் அடிப் படுத்த பராந்தகச் சோழன் கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதியுடன் சேர்ந்து வாணர்களைத் தாக்கினான். அவர்களிடம் மிருந்த வாணகம் பாடியைப் பிடுங்கி, பிருதிவிபதிக்குக் கொடுத்தான். இதனால் பிருதிவி பதிக்கு 'வாணவர் கோன்' என்ற பெயரும் ஏற்பட்டதென உதயேந்திரம் செப்பேடுகள் செப்புகின்றன. இப் போரில் வாணாவருக்குத் துணை நின்ற வைதும்ப மன்னனையும் பராந்தகன் வென்றான் என்று உதயேந்திரம் செப்பேட்டால் அறிகிறோம், திருவல்லம் போர் கி.பி. 910 = 911) இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருட்டிணன் தன் மகள் இளங்கோப்பிச்சி வயிற்றில் பிறந்த கன்னரதேவனைச் சோழ நாட்டின் மன்னனாக்க விரும்பினான். பராந்தகனை எதிர்த்து திருவல்லம் என்னுமிடத்தில் போர் புரிந்தான். இந்த இராட்டிரகூடர். - சோழர் போரில் சோழர் படை. இராட்டிரகூடரை வென்றது. இந்த வெற்றிக்குப் பின் பராந்தகன் வாணவ கோவர், வைதும்பர் ஆகியோரையும் வென்றான். இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன் தன் தங்கை யைக் கங்க மரபைச் சேர்ந்த பூதகன் என்பவனுக்கு மணம் முடித்தான், பராந்தகன் மகளை இராட்டிரகூட மன்னன் கோவிந்தன் மணந்தான். அவனை அரசப் பதவியில் இருந்து நீக்கி விட்டு மூன்றாம் அமோகவர்சன் பட்டத்திற்கு வந்தான். அவன் மறைந்ததும் பராந்தகச் சோழன் தன் மருமகன் கோவிந்தனை அரசு கட்டி லேற்ற, இராட் டிரகூட நாட்டின் மீது படையெடுத்தான். ஆனால் மறைந்த அமோக வர்சனின் மகன் மூன்றாம் கிருஷ்ண தேவன் படைகளும் அவன் தங்கையின் கணவனான கங்க மன்னன் பூதகன் படைகளும் பராந்த கனைத் தோற்கடித்தன. மூன்றாம் கிருஷ்ணன் வெற்றிபெற்ற பின் கங்கர், வைதும்பர், வாணர் ஆகியோர் ஓரணியில் திரண்டனர். இந்நிலையில் பராந்தகன் தன் முத்தமகன் இராசாதித்தனைத் திருமுனைப்பாடியிலுள்ள திருநாவலூரில் இருந்துகொண்டு சோழ நாட்டின் வடபகுதியை ஆளச் செய்தான். தக்கோலம் போர் (கி.பி. 949) தன் பழைய பகையை மறவாத இராட்டிரகூட மன்னன்: மூன்றாம் கிருட்டிணன், தன் மைத்துனன் கங்க மன்னன் பூதகன் சாளுக்கியன் முதலியோருடன் சேர்ந்து கி.பி. 949இல் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர். இப்போரில் இராசாதித்தன், இந்த கூட்டணிப் படைகளை அரக்கோணத்திற்கு அருகிலுள்ள தக் கோலம் என்னும் ஊரில் சந்தித்தான். கங்க மன்னன் பூதகன் விட்ட அம்பு யானை மீதிருந்து போரிட்ட இராசாதித்தன் உடலில் தைத்தது. போர்க் களத்திலேயே இராசாதித்தன் மாண்டான். இராட்டிரகூடர் வெற்றி பெற்றனர். யானை மீதிருந்தே உயிர் நீத்த இராசாதித்தனை செப்பேடு களும், கல்வெட்டுகளும், ஆனைமேல் துஞ்சினார்' என்று குறிப்பிடு கின்றன. பராந்தகனின் திருப்பணிகள் பராந்தகன் தில்லையம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான்; திருவிடை மருதூர், திருவாவடுதுறை, திருச்செந்துறை , உறுமூர் ஆகிய இவர்களிலிருந்த சிவன் கோயில்களைக் கற்றளிகளாக மாற்றினான்; வீரநாராயணசதுர்வேதிமங்கலம், வீரநாராயணன் ஏரி, சோழ ஏரி முதலான ஏரிகளை வெட்டுவித்தான். துலாபாரம் முதலான தானங் களைச் செய்தான். இவன் ஆற்றிய மாபெரும் பணியாகக் கருதப்படுவது குட வோலை முறையால் ஊராட்சியை ஏற்படுத்தி, மக்களாட்சிக்குப் பயிற்சி அளித்ததாகும். இதனை உத்திரமேரூர் மற்றும் பல ஊர்களிலும் முள்ள இவனுடைய கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. - வீரநாராயணன், வீரசோழன், பண்டிதவற்சவன், குஞ்சர் மல்லன், இருமுடிச் சோழன் முதலிய விருதுப் பெயர்கள் இவனுக் குண்டு. முதலாம் பராந்தகன் இறந்தவுடன் மாமன்னர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவன் முதலாம் இராசராசனே ஆவான். பராந் தகன் தன் முத்தமகன் இராசாதித்தன் தக்கோலம் போரில் மாண்டபின் மனம் நொந்து போனான். தனது இரண்டாவது மகன் கண்டராதித் தனுக்கு முடிசூட்டினான். இவன் கி.பி. 950 முதல் 957 வரை ஆண் டான். இவனுக்கு வீரநாரணி, செம்பியன்மாதேவி என்ற இரண்டு மனைவியர் உண்டு. கி.பி. 957இல் கண்டராதித்தன் இறந்த பிறகு செம்பியன்மாதேவி கணவன் பெயரால் கண்டராதித்தம் எனும் கற் கோயில் கட்டினாள். கண்டராதித்தன் இறப்பிற்குப் பிறகு கண்டராதித் தனின் தம்பியான அரிஞ்சய சோழன் கி.பி. 956-957இல் அரசு கட்டிலேறினான். இவனும் வேலூரை அடுத்த ஆற்றூரில் இறந்தான். எனவே இவன் 'ஆற்றுரில் துஞ்சினதேவர்' எனப்பட்டான். இரண்டாம் பராந்தகச் சோழன் (அல்லது) சுந்தரசோழன் (கி.பி. 957 - 970) இவன் அரிஞ்சயனின் நான்கு மனைவிகளில் ஒருவரான கல்யாணி என்பவளுக்குப் பிறந்தவன். இவனுக்கும் பாண்டிய னுக்கும் சேவூர் என்னுமிடத்தில் நடந்த போரில் இலங்கை வேந்தன் நான்காம் மகிந்தன் பாண்டியனுக்குத் துணையாக வந்தான். ஆயினும் சோழனே வெற்றி பெற்றான். இதனால் இவனைப் 'பாண்டியனைச் சுரம் இறக்கின் பெருமாள்' என்றழைத்தனர். இவன் சைவ வைணவக் கோயில்களுக்குப் பல்சமயப் பணிகளைச் செய்தான். 'சுந்தரசோழப் பெரும் பள்ளி' என்னும் பௌத்தப் பெரும் பள்ளி ஒன்றையும் எழுப்பினான். எண்ணாயிரம் என்னு மிடத்தில் சுந்தர சோழ விண்ணகர் என்னும் கோயிலையும் பிரமதேசம் என்னும் இடத்திலுள்ள சுந்தரசோழப் பேரேரி என்னும் ஏரியையும் அமைத்தான். உத்தமச்சோழன் (கி.பி. 973 - 85) சுந்தர சோழனுக்குப் பின் கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் என்னும் உத்தமச்சோழன் பட்டத்திற்கு வந்தான். பல கல்வெட்டு களும் செப்பேடுகளும், உத்தமச் சோழன் ஆட்சியைப் பற்றி அறிய உதவுகின்றன. உத்தமச் சோழன் என்று பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. சென்னைப் பொருட் காட்சியிலுள்ள செப் பேட்டில் உத்தமச்சோழனுடைய ஆட்சி, அவனுடைய மனைவி மார்கள் முதலியன பற்றிய செய்திகள் கிடைத்திருக்கின்றன. இவ் வரசிகள் அனைவருமே கோவில்களுக்கு நிவந்தங்கள் பல அளித்துள்ளனர். இவ்வாறு கி.பி. 955இல் இருந்து 985 வரை ஆண்ட முதலாம் பராந்தகனுக்குப்பின் வந்த அரசர்களான கண்டராதித்தன், இரண்டாம் * பராந்தகன், உத்தமச்சோழன் ஆகியோரின் 30 ஆண்டு கால் ஆட்சி சிறப்புடையதாக அமையாததால் இந்தக் காலகட்டத்தைக் குழப்பம் மான காலம் என்று கூறுகின்றனர். விசயாலயன் வழி வந்த பேரரசர் களின் வரிசையில் இந்த மூவரும் எண்ணப்படவில்லை. எனவே அடுத்த பேரரசன் முதலாம் இராசராச சோழன் ஆகிறான். இவனில் இருந்து சோழப் பெருவேந்தர் வரலாறு தொடருகிறது. 4. முதலாம் இராசராசன் (கி.பி. 985 - 1012) உத்தமச் சோழனுக்குப் பின் முதலாம் இராசராசன் மாமன்னன் என அறியப்படுகிறான். இவனுடைய காலத்தில் சோழர் வரலாற்றில் ஒரு புதிய இயல் தொடங்கப்பட்டது. சோழப் பெருவேந்தர்களி லேயே பேராண்மை படைத்தவன் இவனேயாவான். இராசராசனைப் பற்றி அறிந்து கொள்ள பல கல்வெட்டுகளும், குறிப்பாக அவன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுள்ள கல்வெட்டுகளும், செப்பேடு களும் துணை நிற்கின்றன. செப்பேடுகளில் சிறப்பானவை திருச் செங்கோட்டுச் செப்பேடுகள். நாணயங்கள் பலவற்றில் சிறீராச சோழன் என்னும் பெயர் நாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்ட டுள்ளது. குலோத்துங்கச் சோழன் உலா, இராசராசன் உலா, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் இவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த இலக்கியங்களிலும் மேற்கண்ட கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் இவனுடைய எண்ணிறந்த விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன. இவனுடைய வெற்றிகளைப் பற்றியும் இவற்றில் காணலாம். காந்தளூர்ச் சாலை கலமறுத்த செயல் கி.பி. 988 சேர நாட்டின் வெற்றி இவன் பட்டத்திற்கு வந்த நான்காம் ஆண்டிலேயே சேர நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டின் கடற்கரைப் பட்டின மாகிய காந்தளூர்ச் சாலையை அடைந்து, அங்கு நடந்த போரில் சேர மன்னனைத் தோற்கடித்தான். விழிஞம் எனும் போர்க்களத்தில் சேரரைப் புறமுதுகிடச் செய்து விட்டு அங்கிருந்து பொற் குவியல் களையும், களிறு நிலைகளையும் கைப்பற்றினான். இதனால் தான் இவனனக் ''காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளிய கோ இராச கேசரிவர்மன்" எனப்புகழ்வர். இவன் சேர நாட்டிற்குத் தான் அனுப்பிய தூதுவனைச் சேரன் அவமதித்ததற்காகவே சேர நாட்டின் மீது படையெடுத்தான். சேரனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் தோற்கடித்தான். குடகுமலை நாட்டுப் படையெடுப்பு (கி.பி. 991) குடகு என்பதே குடகுமலை நாடாகும். இராசராசன் அந் நாட்டின் மீது படையெடுத்து குடகு அரசனைத் தோற்கடித்தான். இப்படை யெடுப்பில் இராசராசன் மகன் இராசேந்திரன் பங்கேற்றான் குடகைச் சேர்ந்த கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைப்பாடி முதலிய நாடுகளையும் கைப்பற்றினான். ஈழப் படையெடுப்பு - சோழருக்கு எதிராகப் பாண்டியருக்கு உதவியாக நின்ற ஈழநாட்டு மன்னன் ஐந்தாம் மகிந்தனைத் தாக்க இராசேந்திரன் ஈழ நாட்டின் மீது படையெடுத்தான். போரில் வெற்றி பெற்ற இராசேந் திரன், ஐந்தாம் மகிந்தன் உரோகண நாட்டிற்கு ஓடிவிடவே அந் நாட்டைக் கைப்பற்றி அதற்கு மும்முடிச் சோழமண்டலம் என்னும் பெயரிட்டு சோழநாட்டின் ஒரு மண்டலமாக்கினான். பாண்டிய னுடைய செங்கோலும், மணிமுடியும், மற்ற அரசுச் சின்னங்களும் ஈழ மன்னனிடம் இருந்தன. தோற்றுவிட்ட மகிந்தன் அவற்றை எடுத்துக் கொண்டு உரோகணப்பகுதிக்குள் ஓடிவிட்டான். எனவே இராசேந்திரன் ஈழநாட்டு மன்னனின் மணிமுடி, பாண்டிய நாட்டு மன்னனின் மணி முடி இரண்டும் சோழ மணிமுடியின் கீழ் உள்ளதைக் குறிப்பிடவே அதற்கு 'மும்முடிச்சோழ மண்டலம்" எனப் பெயரிட்டான். உரோகணம் என்பது ஈழத்தின் தெற்கே கடலின் நடுவிலுள்ள ஒரு தீவு ஆகும். சோழர் ஆட்சியின்கீழ்வந்த ஈழத்தில் பொலன்னறுவா என்னுமிடத்தில் சிவன் கோயிலொன்றைக் கற்றளியாகக் கட்டினர். பொலன்னறுவா நகரம் 'சனநாத மங்கலம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்குள்ள மாந்தோட்ட நகரில் இராசராசேச்சுரம் என்னும் சிவாலயம் கட்டப்பெற்றது. இராசராசன் மேலைச் சாளுக்கியன் சத்தியாசிரியனை வென்று கோதாவரி, மகாநதி ஆறுகளுக்கு இடைப்பட்ட கலிங்க நாட்டின் மீது படையெடுத்து சோழராட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த வெற் றியைத் தேடித் தந்தவன் இராசேந்திரன் ஆவான். கலிங்க வெற்றிக் குப் பிறகு முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என அழைக்கப்படும் சாவாவை வென்றான். இராசராசன் தன் மகன் இராசேந்திரனை அனுப்பி இரட்டபாடி, ஏழரை இலக்கம் என்னும் நாடுகளின் மீது படையெடுத்து அந்த நாட்டை ஆண்ட சத்தியாசிரியன் என்ற இராட்டிரகூட மன்னனைத் தோற்கடித்து அவற்றைக் கைப்பற்றினான். கீழைச் சாளுக்கிய நாட்டில் நடந்த வாரிசுரிமைப் போரில் தலை யிட்டுச் சத்தியவர்மன் என்பவனை அரசு கட்டிலிலேற்றினான். இராசராசன் மகள் குந்தவை சத்தியவர்மன் தம்பி விமலாதித்தனுக்கு மண முடித்து வைக்கப்பட்டாள். சமயத் தொண்டுகள் இராசராசன் ஒரு சிறந்த சிவபக்தன். சிவபாதசேகரன் என்று போற்றப்பட்டான். தஞ்சைப் பெருவுடையார் கோயில் இவனை உலகறியச் செய்தது. தான் வென்ற நாடுகளில் கிடைத்த கொண்டிப் பொருளைக் கொண்டு இக்கோயிலைக் கட்டி நிவந்தங்கள் செய்தான், போரினால் அடைந்த செல்வத்தைப் பிராமணருக்குத் தானமாகக் கொடுத்தால் பாவம் தீரும் என்பது சாத்திரம், எனவே இவனடைந்த பொன்னும், மணியும், விலைமதிக்க முடியாத பொருள்களும் இக் கோயிலுக்கும் பிராமணப் பூசாரிகளுக்குமே செலவிடப்பட்டன. சைவ நாயன்மார்களின் உருவச் சிலைகளை இக்கோயிலில் வைத்தான். வென்ற இடங்களிலிருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து இக்கோயிலில் கலைகளைப் படைத்தான். இவன் காலத்தில் தார் மன்றங்கள் சிறப்புடன் நடைபெற்றன. காவிரியில் இருந்து பல கால்வாய்களை வெட்டி, நீர்ப்பாசன ஏந்து களைச் செய்தான். காவிரியின் கிளையாறுகள் உய்யக்கொண்டான், முடி கொண்டான் என்று இவனுடைய பெயர்களைத் தாங்கி உள்ளன. கி.பி. 1010 -ல் வருவாய்த் துறைக்காக ஒரு புள்ளி விவரக்கணக்கை எடுக்கும் துறையை ஏற்படுத்தினான். நில அளவையில் மிகச்சிறிய பகுதிகளாய்ப் பிரித்து எடுக்கும் முறையைக் கையாண்டான். கி.பி. 1012-ல் திருவிசலூர் என்னும் ஊரில் இராச ராசனுக்குத் துலாபார விழா நடந்தது. தன் எடைக்கு எடையாக நிறுக்கப்பட்ட பொன்னையும், மணியையும் கொண்டு திருவலஞ்சுழி யில் கோயில் கட்டினான். பிராமணருக்குத் தானங்கள் வழங்கினான். விழாவின் முடிவில் தன் மகன் இராசேந்திரனுக்கு இளவரசனாக ' முடி சூட்டினான். 5. முதலாம் இராசேந்திரன் கி.பி. 1012-1044 மதுராந்தகன் என்னும் இயற்பெயர் பூண்ட இவன் கி. பி. 1012-ல் இளவரசனாக முடிசூட்டிக் கொண்டபின் முதலாம் இராசேந்திரன் எனும் பட்டப் பெயர் கொண்டான். கி.பி. 1014-ல் இராசராசன் மறைந்தபின் சோழப் பேரரசன் ஆனான். முதலாம் இராசேந்திரன் இளமையிலேயே தன் தந்தையுடன் இணைந்து பல படையெடுப்புகளில் பங்கேற்றவன், ஈழ நாட்டிலும், குந்தள நாட்டி லும், பாண்டியர் நாட்டிலும் வெற்றி பெற்றான். அரசுக் கட்டிலேறிய சில ஆண்டுகளில் ஈழ நாடு முழுவதும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். மேலைச் சாளுக்கியருக்குச் சொந்தமான இடைத் துறை, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடகம் ஆகியவற்றைத் தன்னகப்படுத்தினான், ஈழத்தை வென்றவுடன் முன்பு இராசசிம்ம பாண்டியன் இலங்கை மன்னனிடம் அடைக்கலமாக வைத்திருந்த மணிமுடி, செங்கோல், இந்திர ஆரம் முதலியவற்றைக் கைப்பற்றினான். மீண்டும் எழுச்சி பெற்று எழுந்த மேலைச் சாளுக்கியரை முயங்கி என்னுமிடத்தில் தோற்கடித்து, ஏராளமான பொன்னையும், மணியையும் பல பொருள் குவியல்களையும் கைப்பற்றினான். புதிய கோநகரம் அமைத்தல் இன்று உடையார்பாளையம் வட்டத்தில் சிற்றூராகவுள்ள கங்கை கொண்ட சோழபுரம் இராசேந்திரனால் அமைக்கப்பட்ட சோழரின் புதிய கோநகரமாகும். இவன் வட நாடுகளில் திக்கு விசயம் மேற்கொண்டு பெற்ற வெற்றிச் சின்னமாக இந்நகரை அமைத்தான். " இதனைக் கங்காபுரி என்றும், கங்காபுரம் என்றும் போற்றினர். இந் நகரைத் தூய்மைப்படுத்த கங்கை நீரைக் கொண்டு வருவதற்கு வட நாடு சென்றபோது வட இந்திய மன்னர்களோடு போரிட வேண்டிய தாயிற்று, சக்கரக்கோட்டம் ஒட்டரநாடு, கோசல நாடு ஆகியவற்றைக் கைப்பற்றி, வங்காளத்தை ஆண்ட பால் அரசனுக்குச் சொந்தமான தண்டபுத்தி, தக்காணலாடம், உத்தராடம் ஆகியவற்றையும் கைப்பற்றினான். கீழ் வங்காளத்தில் உள்ள நாடுகளையும் கைப்பற்றி னான். இந்த வெற்றிகளுக்குப் பின் கங்கையில் இருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து சோழபுரத்தில் ஊற்றினான். கங்கை பாயும் நாடுகளை வெற்றிக் கொண்டதால் இவனைக் 'கங்கை கொண்ட சோழன்' என்ற சிறப்புப் பெயரில் விளித்தனர். இந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் என்ற ஏரியை வெட்டி அதில் தான் கொண்டுவந்த கங்கை நீரைப்பற்றினான். இந் நகரின் நடுவில் கங்கை கொண்ட சோழேச்சுரத்தில் பேரழகு மிக்க சிவன் கோயிலைக் கட்டினான். இதனைச் சுற்றி சோழன் அரண்மனை அமைக்கப் பெற்றது. இதில் வெளிக்கோட்டை உட்கோட்டையெனும் காவல் கோட்டைகளும் அமைக்கப்பெற்றன. இவ் வளாகத்தைச் சுற்றிலும் அகழியும் வெட்டப்பட்டன. இவனுக்குப் பின்னும் கோநகராக விளங்கிய இந்நகரில் முடி கொண்ட சோழன் திருமாளிகை, சோழ கேரளன் திருமாளிகை, கேரளன் திருமாளிகை, வீரசோழன் திருமாளிகை ஆகிய மாளிகைகள் எழுந்தன. சமயப்பணிகள் கங்கை கொண்ட சோழேச்சுரத்தின் சிறப்பைக் கட்டடக்கலை என்ற தலைப்பில் காண்போம். இக்கோயிலோடு இராசேந்திரன் பல்வேறு கோயில்களையும் கட்டியுள்ளான். ஈழ நாட்டு மாந் தோட்டம் கோயில், திருவொற்றியூர் கோயில் முதலியனவும், இவன் பெயரால் பலர் கட்டிய கோயில்களும் உள்ளன. அவற்றுள் சேரச் சிற்றரசன் கட்டிய இராசேந்திர சோழ விண்ணகர், காவன் மண்டலத்து இராசேந்திர சோழீச்சுரம், செங் குன்றம் சயங்கொண்ட சோழீச்சுரம், பஞ்சவன் மாதேவீச்சுரம், திருவையாறு தக்கண கைலாயம், அகரம் கைலாசநாதர் கோயில், வானமங்கைகைலாசநாதர் கோயில், கூழம் பந்தல் கங்கைகொண்டசோழீச்சுரம், கோலேச்சுவரர் கோயில் முதலியனவாகும். கங்கைப் படையெடுப்பின்போது கங்கைக்கரை நாடுகளில் வாழ்ந்த சிவபிராமணரை இராசேந்திரன் அழைத்துவந்து சோழ நாட்டிலும், காஞ்சிமாநகரிலும் குடியேற்றினான் என்று சிவாச்சாரி யாரின் சிந்தாந்தசாரிவளியின் உரையில் கூறியுள்ளதை க.அ. நீல் கண்ட சாத்திரியார் ஒப்புகிறார். வடபுலத்தின் வெற்றியின் நினைவாக அங்கிருந்து கொண்டு வந்த பிள்ளையார் சிலையைக் கும்ப கோணத்தில் திருநாகேசுவரர் கோயிலில் இராசேந்திரன் வைத்தான். அதற்கு கங்கை விநாயகர் என்றும் பெயரிட்டான். ஆனால் இராசேந்திரன் பௌத்த சமயத்திற்கு எதிராக நடந்தான் என்ற செய்தியும் உள்ளது. சோழப் படைகள் ஈழப் படையெடுப் பின்போது பௌத்த மடங்களை தரைமட்டமாக்கின என்றும், ஈழ வேந்தன் ஐந்தாம் மகிந்தனும் அவனுடைய மனைவியாரும் சிறையி லிடப்பட்டனர் என்றும், அவன் தனது 49 - வது அகவையில் கி.பி. 1029-ல் இறந்தான் என்றும் மகாவம்சம் கூறுகிறது. இது போர்க் காலத்தில் நடந்த அசம்பாவிதமே ஒழிய புத்த மதத்திற்கு எதிராகச் செய்ததன்று; ஏனென்றால் இராசேந்திரன் மட்டுமல்ல சோழப்பரம் பரையே சமயப் பொறையுள்ளது. புத்த, சமணப்பள்ளிகளைக் காத்துப் பள்ளிச் சந்தம் வழங்கியவர்கள். முதலாம் இராசேந்திரனுக்கு மனைவிமார் பலருண்டு. அவருள் - முக்கோக்கிழானடிகள், அரிந்தவன் மாதேவி, திரிபுவன மாதேவி (வானவன்மாதேவி), வீரமாதேவி, பஞ்சவன் மாதேவி ஆகியோர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்களில் வீரமாதேவி மட்டுமே அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இவனுக்கு இராசாதிராசன், இராசேந்திரன், விர ராசேந்திரன் ஆகிய மூன்று மகன்களும், அருள்மொழி மங்கை, அம்மங்கை தேவி ஆகிய இரண்டு பெண்களும் இருந்தனர். பாண்டிய நாட்டை வென்ற இராசேந்திரன், மதுரையில் அரண்மனை கட்டி, அதில் இருந்து தன் மகனைபாண்டிய நாட்டை ஆளச் செய்தான் என்றும் அம்மகனுக்குச் சோழப் பாண்டியன்' என்று முடி சூட்டினான் என்றும் திருவாலங் காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. இதைப் போலவே தன் மகனுக்குச் சேர நாட்டின் ஆட்சி உரிமையையும் அளித்திருந்ததாகத் தெரிகிறது. சோழப் பாண்டியன் அரசுப் படிநிகராளியாகக் கி.பி. 1018-ல் மதுரையில் முடி சூட்டப் பெற்றான் என்றும், சேரன் திறை செலுத்தி ஆண்டான் என்றும் மன்னார் கோயில் கல்வெட்டு கூறுகிறது. இராசேந்திரன், சி.பி., 1019-ல் தன்னை வளர்த்த பாட்டி செம்பியன்மாதேவியின் உருவச்சிலை ஒன்றைச் செய்து செம் பியன்மாதேவி என்னும் ஊரிலுள்ள கோயிலில் எழுந்தருளச் செய் தான். தன்னுடைய சைவாசாரியான சர்வ சிவபண்டிதருக்கு ஆண்டு தோறும் இரண்டாயிரம் கலம் நெல் அளிக்கச் செய்தான். சிவநெறி யில் உள்ள ஆறுவகைப் பிரிவினுள் ஒன்றாகிய காளாமுகம் பிரிவைச் சேர்ந்த லகுளீசப் பண்டிதர்களை ஆதரித்தான். கி.பி. 1020-ல் சோழ மண்டலத்திலுள்ள 51 தளர்களை இணைத்து திரிபுவன மாநில சதுர்வேதி மங்கலம் என்ற பிரம் தேயமாக்கி வேதப்பிராமணருக்குத் தானமாகக் கொடுத்தான் என்று கரந்தைச் செப்பேடு கூறுகிறது. இது தவிர 1073 பிராமணர்களுக்குக் கொடை யளித்தான். ஈழநாட்டில் சிவன் கோயிலைக் கட்டி நிவந் தங்கள் அளித்தான். கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயிலுக்கு 2250 கலம் நெல்லும் 65 கழஞ்சுப் பொன்னும் வழங்கினான், சோழமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம் என்னும் வேப்பத்தூர் கோயில் லுக்கு நிவந்தங்கள் பல வழங்கினான், கொற்றவைக்குக் கோயி லொன்றைக் கோலாரில் கட்டினான். அதற்குப் பல நிவந்தங்கள் வழங்கினான். காமவல்லிக் கோயிலுக்கு நிலத்தானம் செய்தான், திருவாலங்காட்டுச் சிவன் கோயிலுக்குப் பழையனூரைத் தானமாகக் கொடுத்தான். எண்ணாயிரம் பண்ணையில் 300 ஏக்கர் நிலம் கொடை யாகக் கொடுத்தான். இதைப் போலவே வேப்பத்தூர், திருமுக்கூடல் ஆகிய இடங்களில் வேதக் கல்லூரிகள் அமைக்க அளவிட முடியாத நிவந்தங்களை வழங்கினான். பொதுவாக சோழப் பேரரசர்கள், போர்கள் பல புரிந்தார்க ளென்றால் அவற்றால் வந்த செல்வத்தைப் பிராமணர்களுக்கும், வேதக் கல்லூரிகளுக்கும், கோயில்களுக்குமே தானமாகக் கொடுப்பது வழக்கம். போர் வீரர்கள் பலரும் பிராமணர் அல்லாதவர்க ளாகவே இருப்பர். அவர்களின் உயிர் இழப்புகளும் உடைமை இழப்புகளும் மேற்கூறிய புனிதப் பணிகளுக்கே பயன்பட்டன. இவ்வாறு, விசயாலயன் மரபில் தோன்றிய முதலாம் இரா சேந்திரன் கி.பி. 1012-ல் இளவரசுப் பட்டமேற்று கி.பி. 1014-ல் தன் தந்தையின் மறைவுக்குப்பின் அரசனாகி கி.பி. 1044-ல் வேலூர் மாவட்டம் பிரமதேயம் என்னும் ஊரில் உயிர்நீத்தான். அப்பொழுது அவனுக்கு அகவை 83 ஆகும். மூன்று மனைவியரில் ஒருவரான வீரமாதேவி உடன்கட்டை ஏறினாள். இராசேந்திரன் ஆட்சியின் இறுதிக் காலம் விசயாலயச் சோழ மரபு வரலாற்றில் மிகச்சிறப்பான காலமாய் இருந்தது. பேரரசு மிகவும் பரந்துபட்டிருந்தது. போர்ப்படையும் தம் பெருமையில் மிக உயர்ந்து நின்றது என்று நீலகண்ட சாத்திரியார் கணித்துள்ளார், - இராசேந்திரனுடைய இரண்டு மகள்களில் ஒருத்தியின் பெயர் அம்மங்கதேவி, இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராச ராசன் விமலாதித்தன் என்பவனை மணந்து முதலாம் குலோத்துங் கனைப் பெற்றாள். இவனே சோழர் குலமரபின் கொடி அறுபடாமல் காத்தவன். 6. முதலாம் இராசாதிராசன் (கி.பி. 1018-1054) இவன் இராசேந்திரன் மகன், கி.பி. 1018-ல் இளவரசர்ப் பட்டம் பெற்றான். தன் தந்தையுடன் இணைந்து 26 ஆண்டுகள் அரசியல் பொறுப்புகளில் பங்கேற்றான், பல போர்களில் ஈடுபட்டான். பல் வெற்றிகளைக் குவித்தான். இவனுக்கு விசயராசேந்திரன், ஆகவு மல்ல குலகாலன், கல்யாணபுரம் கொண்ட சோழன், வீரராசேந்திர வர்மன், செயம் கொண்ட சோழன் என்னும் பல விருதுப் பெயர்கள் உண்டு. ஈழப் படையெடுப்பு இவன் அரசுக் கட்டிலேறியவுடன் சிங்கள நாட்டில் சோழ ராட்சியையெதிர்த்து கலகம் ஏற்பட்டது. எனவே, இவன் சிங்கள் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டு மன்னன் விக்கிர பாகு என்பவனைத் தோற்கடித்தான். பாண்டிய நாட்டை இழந்து இலங்கையின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த விக்கிர பாண்டியன் என்பவனையும் தோற்கடித்தான். இவ்விரு மன்னர்களின் மணிமுடிகளையும் இராசாதிராசன் இலங்கையில் இருந்து கைப்பற்றி வந்தான். கன்னியாகுப்சத்தை ஆண்ட வீரசாலமேகன் என்பவன் இலங்கையின் மற்றொரு பகுதியை ஆண்டு கொண்டிருந்தான். அவனையும் இராசாதிராசன் தோற்கடித்தான். சாளுக்கியருடன் போர் கி.பி. 1046-ல் மேலைச் சாளுக்கியருடன் இரண்டாம் முறை யாகப் போரிட்டான். அப் போரில் கண்டர், தினகரன், நாரணன், கணபதி, மதுசூதனன் ஆகியோரைப் புறமுதுகிடச் செய்தான் கம்பளி என்னு மிடத்திலிருந்த சாளுக்கியரின் அரண்மனையை இடித்துத் தள்ளி அங்கு ஒரு வெற்றித் தூணையும் நிறுவினான். - இதற்குக் 'கம்பிளி வெற்றித் தூண்' என்று பெயர். செயங் - கொண்டார் இதனைத் தனது கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடுகிறார். கி.பி. 1048-ல் மூன்றாம் முறையாக இவன் சாளுக்கியருடன் போரிட்டான். குண்டூரில் நடந்த இப்போரில் பல சாளுக்கியத்தலைவர் களை வென்றான். அங்கிருந்து மதில்களை இடித்து மாளிகைகளுக்கு எரியூட்டி, சாளுக்கியரின் வராகக் குன்றின்மேல் புலிச்சின்னத்தைப் பொறித்துவிட்டு, பலரைக் கைதிகளாகச் சிறை பிடித்துக் கொண்டு திரும்பினான். சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் (சோமேசுவரன்) தலைநகரான கல்யாண புரத்தைக் (கல்யாணி) கைப்பற்றி இராசாதி ராசன் அங்கேயே வீராபிடேகம் செய்து கொண்டான். இதனால் 'வீரராசேந்திரன்' என்னும் விருதும் பெற்றான். கல்யாணபுர அரணை இடித்து நிரவினான். அங்கிருந்த வாயிற் காப்போர் படிமங்களைக் கொண்டுவந்து தாராசுரம் இராசராசேந்திரமுடையார் கோயில் வாயிற்படியில் வைத்தான், கலிங்கத்துப் பரணியில் இவ் வெற்றி யைப்பற்றிக் காணலாம். இராசாதிராசன் பாண்டியருடன் போரிட்டு வெற்றி கண்டான். திருவாங்கூர் மீது படையெடுத்து அவ்வரசனை நாட்டை விட்டே துரத்தினான். இராசாதிராசன் கடைசி முறையாக கி.பி. 1052-ல் தன் தம்பி இரண்டாம் இராசேந்திரனுடன் சேர்த்து சாளுக்கிய நாட்டைத் தாக்கி னான். கிருட்டிணை ஆற்றங்கரையிலுள்ள கொப்பம் என்னு மிடத்தில் சோமேசுவரனிடம் போர் புரிந்தான். இராசாதிராசன் யானை மீது அமர்ந்து போரிட்டபோது பகைவனின் அம்பு தைத்து கீழே விழுந்து உயிர் நீத்தான். ஆயினும் அவன் தம்பியான இரண்டாம் இராசேந்திரன் மனம் தளராமல் வீராவேசத்துடன் போரிட்டுச் சாளுக்கியரைத் தோற் கடித்தான். சாளுக்கியரின் யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தையும் கைக்கொண்டான். சாளுக்கிய இளவரசனும் எஞ்சி இருந்தவர்களும் தப்பி ஓடிவிட்டனர். இராசேந்திரனுக்குச் சத்துருபயங்கரன், கரபத்திரன், முலபத்திரன் ஆகிய விருதுகள் ஏற்பட்டன. தன் வெற்றியின் சின்னமாகக் கொல்லாபுரம் என்ற இடத்தில் வெற்றித்தூரணை நாட்டிய இராசேந்திரன் போர்க்களத்திலேயே வெற்றித் திருமுழுக்குச் செய்து கொண்டான். சோழப்பேரரசனாகவும் முடி. சூட்டிக் கொண்டான். கல்வெட்டுக்கள் இராசாதிராசனை கல்யாணபுரமும், கொல்லா புரமும் எரிந்து யானைமேல் துஞ்சின் உடையார், வீர ராசேந்திர தேவர் என்றும் புகழாரம் சூட்டுகின்றன. ஆட்சிமுறை இராசாதிராசன் மிகச் சிறந்த இராசதந்திரியாவான். தன் சிறிய தந்தை, அண்ணன், தம்பியர் அவர்களின் மகள்கள் ஆகியோருக்கு வானவன், மீனவன், வல்லவன், கங்கன் முதலிய விருதுகளை வழங்கிக் கெளரவித்தான். அத்தோடு நாட்டின் பல பகுதிகளுக்கும் அவர்களைத் தலைவராக அமர்த்தினான். தம்பி இரண்டாம் இராசேந்திரனைத் தொண்டை மண்டலத்திலுள்ள வளநாடு ஒன்றுக்கு மண்டலாதிபதியாக அமர்த்தினான். ' நிலங்களை அளந்து தரம் பிரித்தான். இதனால் இவனை "உலகம் அளந்த சோழன்' என்று புகழ்ந்தார்கள். நிலவாரம், நிலக் குத்தகை முறைகளைப் புகுத்தினான். தங்கக் காசுகளும் தங்க முலாமிட்ட வெள்ளிக் காசுகளும் இவனால் வெளியிடப்பட்டன. சமயப்பணிகள் மன்னார்குடியில் சயங்கொண்ட சோழீச்சுரம், இராசாதி ராசேந்திரவரம் ஆகிய கோயில்களைக் கட்டினான். திரிபுவனம் வைணவக் கோயிலுக்கு நிவந்தங்கள் பல அளித்தான். சோழ வேந்தர்களிலேயே பரிவேள்வி (அசுவமேத யாகம் செய்த ஒரே மாமன்னன் இராசாதிராசனேயாவான். 7. இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1051 - 1063) இராசாதிராசன் கொப்பம் போர்க்களத்தில் கி.பி. 1052- ல் இறந்தவுடன் அப் போர்க்களத்திலேயே அவன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் முடிசூட்டிக் கொண்டான். பேரரசனாவ தற்கு முன்பே தன் அண்ணனுடன் இணைந்து இவன் பல படை யெடுப்புகளில் ஈடுபட்டுள்ளான். மேலைச் சாளுக்கியர் நாட்டின் மீது படையெடுத்து இரட்டபாடி ஏழரை இலக்கம் என்னும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ளாபுரம் என்னும் இடத்தில் வெற்றித்தூண் ஒன்றை நாட்டி, சாளுக்கியரின் யானை, குதிரை கருவூலம் ஆகிய வற்றையும் கைப்பற்றி வீராபிடேகம் செய்து கொண்டான். ஈழப்படையெடுப்பு ஈழத்தில் உரோகண நாட்டை ஆண்ட சிங்கள மன்னன் அந் நாட்டைச் சோழர் ஆதிக்கத்தில் இருந்து விடிவித்துக் கொண்டு ஈழத் தின் மற்ற பகுதிகளையும் சோழரின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க முயன்றான். சென்ற முறை சோழரிடம் தோல்வியுற்ற வீரசாலமேகன் ஈழநாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான். மற்றொரு பகுதியை ஆண்ட மானாபரணன் என்பவனுடன் இணைந்து சோழரின் மேலாண்மையை எதிர்த்து நின்றான். இதனை அறிந்த இரண்டாம் இராசேந்திரன் ஈழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று இவர்களை அடக்கி, மீண்டும் இவர் தலை எடுக்காதவாறு தடுத்தான், வீரசால மேகன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான். மானாபரணன் பிள்ளைகள் சிறைபிடிக்கப்பட்டனர். சோழர் ஆட்சி வட இலங்கை யில் நீடித்தது. ஆனால் உரோகண நாடு தனித்தே நின்றது. பொலன்னறுவாவில் சோழர் படை நிறுத்தப்பட்டது. சாளுக்கியருடன் மீண்டும் போர் கொப்பம் போர்க்களத்தில் தோல்வியுற்ற சோமேசுவரன் (ஆகவமல்லன்) தன் இழிவைப் போக்க எண்ணிப் பெரும் படை யுடன் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தான். இரண்டாம் இரா சேந்திரன் தனது இரு தம்பிகளுடன் சாளுக்கியரை எதிர்கொண்டான், கிருட்டிணை ஆற்றங்கரையிலுள்ள முடக்காறு என்னுமிடத்தில் போர் நடந்தது. சாளுக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டனர். சோமேசுவரன் தப்பி ஓடி விட்டான். ஆயினும் திரும்பி வந்து மீண்டும் போரிலீடுபட் டான். இம்முறை நடந்த போரில் இராசேந்திரனின் தம்பியர் கொல்லப் பட்டனர். இராசேந்திரன் சோமேசுவரனைத் துரத்திச் சென்று போரிட் டான். கங்கபாடியை அழித்தான். பெல்கோலாவிலிருந்த சமணக் கோயில்களைத் தீக்கிரையாக்கினான். ஜெயங்கொண்டார் தனது கலிங்கத்துப் பரணியில் இந்த வெற்றிகளை விவரிக்கிறார். கி.பி. 1063-ல் இளவரசனாக வீரராசேந்திரனுக்கு முடி சூட்டப் பெற்றது. சாளுக்கிய நாட்டில் வென்று கைப்பற்றப்பட்ட வனவாசி, நுளம்பப்பாடி ஆகிய பகுதிகளுக்கு ஆளுநரானான். - இவ்வாறே தனது உறவினர் 13 பேரை பல்வேறு ஆட்சிப் பொறுப்பு களில் இராசேந்திரன் அமர்த்தினான். சோழநாட்டில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தைச் சமாளிக்க இரண் டாம் இராசேந்திரன் கோயில் பண்டாரத்தில் இருந்து பொன்னைக் கடனாகப் பெற்றுப் பஞ்சத்தைச் சமாளித்தான். இவன் கி.பி. 1063-ல் இறந்தான். இவனுக்குப்பின் இவன் தம்பி முதலாம் வீர ராசேந்திரன் அரசு கட்டிலேறினான், 8. வீர ராசேந்திரன் (கி.பி. 1063-1070) கி.பி. 1063-ல் இளவரசனாக முடி சூட்டப் பெற்ற வீர ராசேந்திரன் சாளுக்கிய நாட்டிலுள்ள வனவாசி, நுளம்பப்பாடி ஆகிய பகுதிகளுக்கு அரசுப் படிநிகராளியாக அமர்த்தப்பட்டதை அறிவோம். கி.பி. 1066-ல் இரண்டாம் இராசேந்திரன் இறந்தவுடன் இவன் சோழப் பெரு வேந்தனானான், சாளுக்கியருடன் போர் முதல் போர் கி.பி. 1063 மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் மகனான விக்கிர மாதித்தன் சாளுக்கிய நாட்டின் வட பகுதியாகிய வனவாசி, நுளம்பப் பாடி எல்லைகளைக் கண்காணித்து வந்தான். வீரராசேந்திரன் கி.பி.1063 - ல் முடி சூட்டு விழாவில் ஈடுபட்டிருக்கும்போது விக்கிர மாதித்தன் கங்கபாடியைக் கைப்பற்ற முயன்றான். இதனால் சோழ ருக்கும் கங்கருக்கும் இடையே வீரராசேந்திரன் காலத்தில் முதல் போர் 1063-ல் ஏற்பட்டது. இப்போரில் சாளுக்கியப் படைகளை வீரராசேந்திரன் கங்க பாடியில் தோற்கடித்துத் துரத்தினான். இத்துடன் இந்த முதல் போர் முடிந்தது. இரண்டாவது போர் கீழைச் சாளுக்கியர் வேங்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். இவர்கள் சோழருடன் மண உறவு பூண்டவர்கள், கங்கை கொண்ட சோழனின் மருமகனான கீழைச் சாளுக்கிய மன்னன் இராசராசேந்திரன் வேங்கியில் இறந்தான். இதனை வாய்ப் பாக வைத்துக்கொண்டு மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் வேங்கியின் மீது படையெடுத்தான். இப்படைக்குத் தலைமை தாங்கியவன் சாமுண்டராயன் என்னும் அவனது தளபதி ஆகும். வீரராசேந்திரன் அவனைப் போரில் கொன்றான். இத்துடன் இந்த இரண்டாம் போர் முடிந்தது. மூன்றாம் போர் கி.பி. 1064) மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் தானே வீர ராசேந்திரனைப் போருக்குக் கூவி அழைத்ததால் இந்த மூன்றாம் போர் - நடந்தது. இப்போர் கி.பி. 1064-ல் கூடல் சங்கமம் என்ற இடத்தில் நடந்தது. போரில் ஆகவமல்லன் (சோமேசுவரன்) தோற்று ஓடினான். அவனது படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர். இவனுக்குத் துணையாக வந்த சோழநாட்டு மன்னனும் கொல்லப்பட்டான். வீரராசேந்திரன், சோமேசுவரன் ஓடிவிட்ட பிறகு அவனுடைய பாசறையைக் கைப்பற்றி அதனுள்ளிருந்த அவனுடைய மனைவி, பட்டத்து யானை, பிற யானைகள், குதிரைகள், கருவூலம் யாவற்றை யும் எடுத்துக் கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்திற்குத் திரும்பி னான். அங்கே வெற்றி முழுக்குப் போட்டு விழா எடுத்தான். சங்கமத் தில் அவன் பெற்ற இந்த வெற்றியைக் கலிங்கத்துப் பரணியும், விக்கிரம சோழன் உலாவும் சாளுக்கியரைச் சங்கமத்தில் வென்ற வன் எனப் புகழ்கின்றன. நான்காம் போர் (கி.பி. 106) நான்காம் முறை நடந்த இப்போரிலும் வீரராசேந்திரன் வெற்றி பெற்றான். சாளுக்கியப் படைத்தலைவர் பலரும் கொல்லப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக வந்த நுளம்பன், காடவர் கோன், வைதிம்பராயன் ஆகிய அரசர்களும் கொல்லப்பட்டனர். ஐந்தாம் போர் கி.பி. 1067) ஆகவமல்லன் தானே வலிய அறை கூவல் விடுத்து வீரராசேந் திரனைக் கூடல் சங்கமத்தில் தன்னுடன் போரிடுமாறு அழைத்தான். ஆனால் விராராசேந்திரன் கூடல் சங்கமம் சென்று கரந்தை என்னு மிடத்தில் ஒரு திங்கள் காத்திருந்தான். ஆனால் ஆகவமல்லன், வரவில்லை. சினங்கொண்ட வீரராசேந்திரன் இரட்டபாடியைத் தோற் கடித்து விட்டு, பல இடங்களைத் தீக்கு இரையாக்கி, துங்கபத்திரைக் கரையில் வெற்றித்தூண் நாட்டி விட்டுப் பல விதத்திலும் ஆகவ மல்லனை இழிவுபடுத்திவிட்டு வேங்கியின்மீது படையெடுத்து வென்றான். பின்னர் வேங்கியை ஏழாம் விசயாதித்தனிடம் கொடுத்துவிட்டு கி.பி. 1067-ல் தன் கோநகர் திரும்பினான். ஆகவ மல்லனுக்குக் கடும் நோய் ஏற்பட்டு, மருத்துவத்தால் தீராததால் துங்க பத்திரை ஆற்றில் விழுந்து இறந்து விட்டதால்தான், சவால் விட்டபடி வீரராசேந்திரனைச் சந்திக்கவில்லையென்பது பிறகுதான் தெரியும். வீரராசேந்திரன் பாண்டியரையும், சேரரையும் ஒடுக்கினான். ஈழத்தின் மீது படையெடுத்து சோழரின் ஆதிக்கத்தை எதிர்த்த உரோ கண நாட்டை ஆண்ட விசயவாகுவை ஒடுக்கினான். அங்கிருந்து காரம் (சீலிசயம்) சென்று வென்று சோழர் படை நாடு திரும்பியது. முதலாம் விரராசேந்திரன் கி.பி. 1070-ல் இறந்தான். கி.பி. 1067 லேயே தன் மகன் ஆதிராசேந்திரன் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். சமயப்பணிகள் வீரராசேந்திரன் சிவபெருமான் திருவடிகளைத் தலையில் அணிந்தவன் என்று கல்வெட்டுக் கூறுவதால் இவன் சிறந்த சிவ பக்தன் என்பதை உணரலாம். தில்லையம்பலத்து நடராசப் பெரு மானுக்கு விலைமதிக்கமுடியாத திரைலோக்கியசாரம் என்னும் மாணிக்கக் கல்லிலான மணிமுடியைத் தானமாகக் கொடுத்தான். காவிரிக்குக் குறுக்கே கோவிலடிக்கு அருகில் பேரனண ஒன்றைக் கட்டினான், வீரசோழன் என்ற கிளை நதியை காவிரியில் இருந்து வெட்டினான். போர்க்கால வரிமுறை ஒன்றைப் பின்பற்றி ஒரு வேலி நிலத்திற்குக் கழஞ்சு பொன் வீதம் தண்டல் செய்தான். திருமுக்கூடலில் உள்ள திருமால் கோயிலில் சமற்கிருதப் பள் ளியை நடத்தப் பெரும் பொருள் கொடை அளித்தான். இங்கு வேத பாடங்களும், வியாகரணங்களும் கற்பிக்கப்பட்டன. மறைநூல்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு நாளொன்றுக்குப் பதிக்கு நெல்லும் ஆண்டுக்கு நான்கு பொற்காசுகளும் ஊதியமாக வழங்கப்பட்டது. வேதம் பயிலும் பிராமண மாணவர் ஒவ்வொரு வருக்கும் நாளொன்றுக்கு 151 நாழி அரிசியும், தலைக்கு எண்ணெ யும் கொடுக்கப்பட்டன. குற்றேவலுக்கு இரண்டு பணிப்பெண்கள் அமர்த்தப் பட்டனர். மாணவ, ஆசிரியர்களுக்கு 15 படுக்கைகளைக் கொண்ட இலவய மருத்துவமனையும் கட்டப்பட்டது. இதில் அறுவை மருத்துவரும், பரம்பரை மருத்துவரும், செவிலியரும் மற்ற பணியாளர்களும் பணியாற்றினர். இந்த வேதபாடசாலையில் புத்தமித்திரர் பணியாற்றினார். இவர்தான் வீர சோழியம் என்னும் இலக்கண நூலை எழுதியவர். இவருக்குப் பொன்பற்றி என்ற ஊரையே வீரராசேந்திரன் நன்கொ டையாக நல்கினான். புத்தமித்திரர் பௌத்தராயிருப்பினும் அவரை ஆதரித்ததில் இருந்து இவன் சமயப் பொறையாளன் என்பதனை உணரலாம். மூன்று வேதங்களிலும் வல்ல 40 ஆயிரம் பிராமணருக்குப் பிரமதேயம் வழங்கினான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு கூறுகிறது. அரசுக்குச் செலுத்தப்படும் நிலவரிகளைக் கோயில் பணிகளுக்கெனவே ஒதுக்கிவிட்டான், 9. அதிராசேந்திரன் (கி.பி. 1070) வீரராசேந்திரன் இறந்தவுடன் சோழநாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் தன் படையுடன் சோழநாடு சென்று, தன் மைத்துனன் ஆதிராசேந்திரனை அரியணை ஏற்றினான். அவன் தன்நாடு திரும்பிய சில நாட்களுக்குள் ஆதிராசேந்திரன் கி.பி. 1070-ல் கொல்லப்பட்டான். இவனோடு விசயாலயன் கி.பி. 850-ல் தஞ்சையில் தொடங்கிய விசயாலயன் மரபு முடிவுற்றது. ஆதிராசேந்திரனுக்குப் பிறகு விசயாலயனுடைய நேரடி வாரிசான முதலாம் இராசேந்திரனுடைய மகள் அம்மங்கதேவி என்பாளைக் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராசராசனுக்கு (இராசநரேந்திரன்) மணமுடித்திருந்தார்கள். இத்தம்பதிகளுக்கு பிறந்தவன் இராசேந்திரன், சோழ மரபில் வாரிசு இல்லாமல் போகவே இந்த இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் என்ற அபிசேடப்பெய ருடன் சோழப் பெருவேந்தன் ஆனான். இவனில் இருந்து தொடங்கு வதுதான் குலோத்துங்கன் மரபு ஆகும், இது சோழர் சாளுக்கியரின் கலப்பட மரபாகும். குலோத்துங்கன்தந்தைவழிச் சாளுக்கியன், தாய் வழிச் சோழன் ஆவான். இவனுடைய தந்தையின் தாய் (பாட்டி) இராசராச சோழன் மகளான குந்தவை ஆவாள். ஆனாலும் இவன் பிறந்தது தனது தாய்வழிப் பாட்டனான இராசேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனையில்தான். வளர்ந்ததும் அங்கே தான். எனவே இவனை, பிறப்பாலும் வளர்ப்பாலும் தமிழன் என்று கூறுவர். . குலோத்துங்கன் மரபு (கி.பி. 1070-1279) 1. முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1180) இவன் கி.பி. 1030 -ல் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிறந்தான். தனது 40 - வது அகவையில் கி.பி. 1070 -ல் சோழப் பேரரசனானான். கி.பி. 1120 வரை 50 ஆண்டுகள் சோழப் பெருவேந்தனாய் ஆண்டான், தாய்வழிப் பாட்டனான இராசேந்திரன் என்பதே இவனுடைய இயற்பெயர், வேங்கி நாட்டில் அந்நாட்டின் வாரிசாக இளவரசர் பட்டம் சூட்டப்பட்டபோது அவனுக்கு விஷ்ணுவர்த்தனன் என்று பெயர் சூட்டப்பெற்றது. இவனுக்குப் பல்வேறு விருதுப் பெயர்கள் உண்டு. ஆயினும் திரிபுவனச் சக்கரவர்த்தி என்னும் பட்டப் பெயரோடு இவன் சோழப் பேரரசை ஆளத் தொடங்கினான். இவனுக்கு இரண்டாம் இராசேந்திர சோழன் மகள் மதுராந்தகி என்பவள் முதல் மனைவியாவாள். இவனுடைய 26-ஆம் ஆட்சி ஆண்டில் அவள் இறந்துவிட்டாள். அப்பொழுது இவனுக்கு அகவை 86 ஆகும். இவளுக்குப்பின் தியாகவல்லி என்பவளைக் குலோத்துங்கன் மணந்தான். இவளே பட்டத்தரசி ஆனாள். ஆனாலும் ஏழிசைவல்லபி என்பவளையும் மணந்திருந்தான். இவர்களைத் தவிர்த்து கடம்ப மாதேவி, காடவன் மாதேவி, சோழ குலவல்லி, திரைலோக்கிய மாதேவி ஆகிய நான்கு மனைவியரும் இவனுக்குண்டு. இவர்களுக்கும் பல்வேறு பட்டப் பெயர்களுண்டு, முதல் மனைவி யான மதுராந்தகிக்கும் குலோத்துங்கனுக்கும் ஏழு ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் பிறந்தனர். மதுராந்தகிக்கும் குலோத்துங்க னுக்கும் கி.பி. 1052-ல் திருமணம் நடந்தது. வேங்கியின் வாரிசான குலோத்துங்கன் கி.பி. 1061-ல் தன் தந்தை இறந்தபின் தன் சிறிய தந்தை விசயாதித்தனையே வேங்கியின் அரனாக்கினான். ஆனால் சோழநாட்டுக்கு வாரிசில்லாமல் குழப்பம் ஏற்பட்டபோது கி.பி. 1070-ல் தனது நாற்பதாவது அகவையில் சோழப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். "இராச கேசரி" என் னும் பட்டப் பெயருடன் அரசனானான். அரசு கட்டிலேறியவுடன் காலச்சூரி மரபைச் சேர்ந்த யச கர்ணன் என்பவனைக் குலோத் துங்கன் தோற்கடித்து விரட்டினான். வெற்றிகள் குலோத்துங்கன் இளவரசனாக இருந்த போதே பல போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றதை அவனுடைய மெய்க்கீர்த்தியில் காணலாம், 1. சக்கரக்கோட்டத்திற்குச் சென்று அங்கு ஆண்டு வந்த அரசனைப் பணிய வைத்தான். 2. குந்தள நாட்டு அரசனைத் தோற்கடித்து எண்ணற்ற யானை களைக் கைப்பற்றினான். 3. சாளுக்கிய அரசனைத் தோற்கடித்தான். 4. சோழ நாட்டின் உரிமையைப் பெற்று அரசனானான் என்று இவனுடைய மெய்க்கீர்த்தியால் அறிகிறோம். 5, இவன் சோழ நாட்டில் மாமன்னனாவதற்கு முன்பே, சோழ நாட்டில் ஏற்பட்டக் குழப்பத்தைப் பயன்படுத்தி, ஈழ மன்னன் சோழநாட்டுப் பகைவரோடு நட்புறவு கொண்டு சோழரின் மேலாண்மையை உதறித்தள்ள முற்பட்டான். அரசதந்திரி யான குலோத்துங்கன் சிங்கள மன்னன் விசயவாகுவுடன் நட்புறவு கொண்டு அவனுக்குத் தன் மகள் திரிலோகசுந்தரியை மணமுடித்துக் கொடுத்தான். 6. குலோத்துங்கன் கடாரத்தரசனுடன் நட்புறவு பூண்டான். அவனுடைய வேண்டுதலின்படி நாகப்பட்டினத்திலிருந்த இரண்டு புத்த விகாரைகளுக்கு ஏற்கனவே இவனுடைய முன்னோர்கள் கொடுத்திருந்த தானங்களை உறுதிப்படுத்தி ஒரு ஊரையும் இறையிலித் தானமாக அளித்தான். இவ்விரு புத்த விகாரைகளும் முறையே 'இராசேந்திரப் பெரும்பள்ளி', இராசராசப் பெரும் பள்ளி' என அழைக்கப்பட்டன. 7. குலோத்துங்கன்தன்னோடு மாறுபட்ட பாண்டியன் தலையைப் பருந்துக்கிரையாக்கினான் என்று அவனுடைய மெய்க்கீர்த்தி கூறுகிறது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து ஐந்து பாண்டியர்களையும் தோற்கடித்து அவர்களுடைய முத்துக் குளிக்குமிடத்தையும், பொதியமலை, யானைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலை, குடகுமலை, நாட்டுக்கொட்டாரு ஆகியவற்றையும் கைப்பற்றினான். 8. கலிங்க வெற்றிகள் கி.பி. 1096-110) குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது இரண்டு முறை படை யெடுத்து பொற்குவியல், யானை, குதிரை, ஒட்டகம், அழகு மங்கையர் ஆகியவற்றைக் கைப்பற்றினான். ஆனால், கலிங்க நாட்டைக் கைப்பற்ற வில்லை. இப்படையெடுப்புகளில் படைகளை நடத்திச் சென்றவன் கருணாகரத் தொண்டைமான் எனும் தண்ட நாயகன் ஆவான். 9. மேலைச் சாளுக்கியருடன் போர் (கி.பி. 1118) மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தியன் கீழைச் சாளுக்கியரின் தலைநகரான. வேங்கியைக் கைப்பற்றிக் கொண்டான். குலோத்துங்கன் மேலைச் சாளுக்கியரை ஒறுத்து வேங்கியையும், கங்கபாடியின் ஒரு பகுதியையும் மீட்டுத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான். ஆக, குலோத்துங்கன் காலத்தில் ஈழ நாடு முழுவதும் சோழ நாட்டினின்று விடுபட்டு விட்டது. வேங்கியும், கங்கபாடியும் சோழ தாட்டுடன் இணைந்தன. குலோத்துங்கனின் ஏழு புதல்வர்களில் சோழகங்கன், மும் முடிச் சோழன், வீரசோழன், விக்கிரமச் சோழன் ஆகிய நால்வரும் வேங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். கி.பி. 1118-ல் விக்கிரமச் சோழனை வேங்கியில் இருந்து அழைத்து வந்து, கங்கைகொண்டசோழபுரத்தில் இளவரசுப் பட்டங் கட்டினான். விக்கிரமச் சோழன் நாட்டை விட்டுக் கிளம்பிய தும் வேங்கியைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் அதனை மீட்டுக் கொண்டான். குலோத்துங்கன் தன் அரசியர் இருந்த தன் பொன் மாளிகையில் மகிழ்ந்திருந்தான். ஆனால் அவனுடைய கோநகரம் கங்கை கொண்ட சோழபுரமே ஆகும். நிருவாகம் 1. குலோத்துங்கன் கி.பி. 108, 1110 ஆகிய ஆண்டுகளில் நிலங்களை அளந்து புள்ளி விவரங்களைத் தயாரித்தான். 2. குலோத்துங்க சோழப்பேரேரி, இராசேந்திர சோழப் பேரேரி ஆகியவை அவன் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும். 3. வரிச்சுமையைத் தாங்க முடியாமல் மக்கள் காரை விட்டு ஓடி விட்டனர். அவர்களின் நிலங்களை உணர்ச்சபையார் கைப்பற்றி கோயிலுக்கு விற்று விட்டனர். அரசனுக்குச் சேரவேண்டிய வரியை மட்டும் செலுத்தி விட்டனர். 4. தேவதான நிலங்களில் குத்தகை பாக்கி உள்ளவர்களிடமிருந்து, நிலங்களை மீட்டு வேறு குத்தகைதாரர்களுக்கு விட்டனர். 5. பல்முனைச் சுங்கவரிகளை நீக்கி ஒருமுனைச் சுங்க வரியைக் குலோத்துங்கன் விதித்தான். இதனால் இவனைச் 'சுங்கம் தவிர்த்தசோழன்' என்று புகழ்ந்தனர். தஞ்சையை அடுத்த கருத்திட்டைக்குடிக்குச் சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் என்ற பெயரும் சூட்டினர். சமயப்பணிகள் குலோத்துங்கன் சோழர் மரபுப்படி சிவ நெறியைப் பின் பற்றினான். எனவே இவனைத் திருநீற்றுச் சோழன்' என்றே அழைத்தனர். ஆயினும் வைணவம், சமணம், சாக்கியம் ஆகிய சமயங்களுக்கும் கோயில்கள் அமைத்தான். தானங்கள் செய்தான். மன்னார்குடியிலுள்ள இராசகோபால சுவாமி கோயில் இவனால் கட்டப்பட்டது. இதனைக் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றே அழைப்பர். நாகப்பட்டினத்தில் இவன் பெயரால் உள்ள புத்தப் பள்ளி இவனுடைய சமயப் பொறைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாகும். சூரியனார் கோயில், கொற்கையில் சிவன் கோயில் ஆகியவை இவன் காலத்தில் கட்டப்பெற்றவை ஆகும். திருவரங்கம் கோயிலில் திருவாய்மொழி பாட வழி செய்தான். கங்கபாடியில் பிரம் தேயம் ஒன்றை ஏற்படுத்தி 108 சதுர்வேதி பட்டர்களுக்குத் தானமாக அளித்தான். அமாவாசை நாளில் 50 பிராமணர்களுக்கு உணவளிக்க வைணவ மடம் ஒன்றுக்கு நன்கொடை நல்கினான். கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க ஒரு தனிப்படையை ஏற்படுத்தினான். 'கை மாசேனை' என்று அதற்குப் பெயர். கோயில் சொத்தைத் திருடுபவர் அர்ச்சகரே ஆனாலும் தண்டனை கொடுத்தான், தமிழ்த்தொண்டு குலோத்துங்கன் காலத்தை இலக்கியச் சிறப்புடைய காலம் எனலாம். செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி, நாராயண பட்டரின் குலோத்துங்கச் சோழசரிதை ஆகிய இரண்டும் அவனும் டைய கலிங்க வெற்றிகளைக் காப்பியங்களாகக் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணி 5999 தாழிசையினைக் கொண்ட நூல், நெற் குன்றக் கிழாரின், திருப்புகலூர் அந்தாதிக்காகப் பரிசளிக்கப்பட்டது. மற்ற இலக்கியங்களைப் பற்றி சோழர் கால இலக்கியம் என்ற தலைப்பின் கீழ் காணலாம். - கி.பி. 1030 -ல் பிறந்த குலோத்துங்கன் கி.பி. 1120-ல் தனது 90 ஆம் அகவையில் ஐம்பது ஆண்டு கால ஆட்சியைச் சிறப்புறச் செய்து மறைந்தான். இவன் காலத்தில் சோழப்பேரரசு மாபெரும் வளர்ச்சி அடைந்தது. வெற்றி கண்டான்; நட்பு கொண்டான்; ஆனால் புறமுதுகு காட்டவில்லை , 2. விக்கிரமச்சோழன் (கி.பி. 1118-1135) முதலாம் குலோத்துங்கனின் நான்காம் மகனான இவன் இளமையில் வேங்கிநாட்டு அரசுப் படிநிகராளியாக இருந்தவன். கி.பி. 1118 - ல் குலோத்துங்கனால் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றவன், கி.பி. 1120-ல் குலோத்துங்கன் இறந்தவுடன் பரகேசரி என்ற பட்டத்துடன் சோழப் பெருவேந்தனாக அரசு கட்டிலேறி னான். இவன் தன் கீழிருந்த வேங்கியை வலுப்படுத்தினான். கங்க பாடியில் கோலார் போன்ற பகுதிகளை மீட்டான். இவன் காலத்தில் கி.பி. 1125-ல் வடார்க்காடு, தென்ஆர்க்காடு பகுதிகளில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. சமயப்பணிகள் குலோத்துங்கனால் தொடங்கி முடிக்கப்பெறாமல் நின்ற கோயில் களைக் கட்டி முடித்தான். தில்லையம்பலத்துக்குத் திருச் சுற்று மதில் எழுப்பினான். அதற்கு "விக்கிரமச் சோழன் திருமாளிகை' என்று பெயர். பிரமாணருக்குத் தான தருமங்கள் பல செய்தான். இதைப் போலவே திருவரங்கத்திற்கும் திருச்சுற்று மாளிகை அமைத்தான். இவன் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி மக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டான். அதனால் மக்கள் இவனைத் 'தியாக சமுத்திரம்' என்று வாழ்த்தினார்கள். தமிழ்ப்பணி கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இவனுடைய அவைக்களப் புலவராயிருந்தார். 'விக்கிர சோழன் உலா' என்னும் நூலை யாத்து இவன் புகழைப் பரப்பினார். தக்கயாகப் பரணியும் இவர் பாடிய நூலென்பர். குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலும் இவனுடைய காலத்ததே ஆகும். இவன் காலத்தில் பொது மக்களைச் சந்திப்பதற்காகச் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய கார்களில் அரண்மனைகளும், தங்கிச் செல்ல கொட்டாரம் (மண்டபம்) பலவும் இருந்ததாகக் கூறுவர். விக்கிரமச் சோழன் உலாவில் இவனுக்குக் கீழ்பட்டிருந்த குறுநில மன்னர்களின் பெயர்களும், பிறவும் காணப்பெறுகின்றன. இவன் கி.பி. 1135-ல் இறந்தான். 3. இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133-1150) இவன் விக்கிரமச் சோழனின் மகன் ஆவான். கி.பி. 1133-ல் இளவரசுப் பட்டம் சூட்டப்பெற்று கி.பி. 1135-ல் தன் தந்தை இறந்தவுடன் அரசு கட்டிலேறினான். தில்லையில் முடி சூட்டிக் கொண்டு, அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான். எழுநிலைக் கோபுரங்களை எழுப்பினான், திருச்சுற்று மாளிகையையும், திருக்குளத்தையும் அமைத்தான், வசந்த மண்டபங்களைக் கட்டினான் என்றெல்லாம் சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் இவன் தில்லையில் செய்த தொண்டுகளை விவரிக்கிறார். திருவாரூர் கோயிலில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவருக்கும் சிலைகள் அமைத்தான். தில்லைக்கோயில் திருமுற்றத்தைப் பெரிதாக்கும் போது அம்முற்றத்தில் நந்திவர்ம பல்லவமல்லன் அமைத்த கோவிந்தராசப் பெருமாள் கோயிலை இடித்துப் பெருமாளைக் கடலில் வீசினான் என்று கூறப்படும் குற்றச்சாட்டு ஆய்வுக்குரியது. இவன் காலத்தில் சைவ - வைணவ பூசல்கள் ஏற்பட்டதால் இவ்வாறு கூறுகின்றனர் போலும். சேக்கிழார், ஒட்டக்கூத்தர், கம்பர் ஆகிய தமிழ்க்கடல்கள் இவன் காலத்தில் இருந்தனர். 4. இரண்டாம் இராசராச சோழன் (கி.பி. 1146-1163) இவன் இரண்டாம் குலோத்துங்களின் மகன் ஆவான். கி.பி. 1146-ல் இளவரசுப் பட்டம் சூட்டப்பெற்றான். கி.பி. 11150-ல் இருந்து அரசுகட்டிலேறி 13 ஆண்டுகள் ஆண்டான். இராசராசன் சோழன் உலா, தக்கயாகப்பரணி ஆகிய நூல்களிலும், கல்வெட்டு களிலும் இவனைப் பற்றி அறிய முடிகிறது. இவன் தனது ஆட்சியின் பிற்பகுதியில் பழையாறை நகரைக் கோநகராகக் கொண்டான். அந்நகரின் வடபகுதிதான் தாராசுரம் ஆகும். இங்கு இராசராசேச்சுரம் என்னும் கலைக் கோயிலை அமைத் தான். இவன் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். இவனுடைய மெய்க் கீர்த்தியில் இவன் முத்தமிழ்த் தலைவன் எனப் போற்றப் பெற்றுள்ளான். ஒட்டக்கூத்தரிடம் தமிழ் கற்றான், இராசேந்திர சோழ சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த கேசவசுவாமி என்பவரிடம் சமற்கிருதம் பயின்றான். ஒட்டக்கூத்தர் இவனைப் பற்றிப் பாடிய இராசராசன் சோழன் உலாவுக்குப் பல் ஆயிரம் பொன்னைப் பரிசாக வழங்கினான். இவன் புதிதாகக் கட்டிய கோநகரான இராசராசபுரத்தில் (பழையாறை) கலையழகு மிக்க சிவன் கோயிலைக் கட்டினான். இதில் 63 நாயன்மார் வரலாற்றுச் சிற்பங்களையும், சைவ சமய ஆச்சாரிகளின் 180 சிற்பங்களையும் அமைத்தான். பழையாறையில் இருந்த அரண்மனையிலேயே இயற்கை எய்தினான். இவன் காலத்தில் சோழராட்சி தளர்ச்சியடைந்தது. மண்டிலத் தலைவர்கள் கட்டுப்பாடின்றி நடந்தனர். விஷ்ணு வர்த்தனன் ஒய் சாள நாட்டின் மன்னனானதுமே சோழர் ஆட்சி மங்கத் தொடங்கியது. 5. இரண்டாம் இராசாதிராசன் (கி.பி. 1163-1178) இவன் விக்கிரமச்சோழனின் மகள் வயிற்றுப்பெயரன் ஆவான். கி.பி. 1163-ல் இளவரசுப் பட்டம் சூட்டப்பெற்று கி.பி. 11-ல் அரியணை ஏறினான். இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் அரசுரிமைப் போர் தொடங்கியது. மதுரையில் இருந்து ஆண்ட பாண்டியர்களைத் தவிர்த்து ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பல பாண்டிய மன்னர்கள் இருந்தனர். தென் பாண்டி நாட்டில் கீழ்வேம்ப நாட்டிலுள்ள அரியணையிலமர்ந்து ஆண்டு வந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பான் மதுரையை முற்றுகையிட்டான். ஓராண்டுகால முற்றுகைக்குப்பின் பராக் கிரம் பாண்டியனைக் குடும்பத்தோடு கொன்றுவிட்டான். ஆனால் அவன் மகன் வீரபாண்டியன் மட்டும் தப்பி ஓடிவிட்டான். இந்நிலையில் இலங்கை அரசன் பராக்கிரமபாகு, வீரபாண்டியனை அரியணை ஏற்றினான். கி.பி. 1171-ல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழ மன்னன் இரண்டாம் இராசாதிராசனிடம் உதவி கோரி மதுரையைக் கைப்பற்ற விரும்பினான். சோழன் தன் படைத் தலைவன் பல்லவ ராயனை மதுரைக்கு அனுப்பினான். ஆனால் இலங்கைப்படை வீர பாண்டியனுக்காகச் சோழர் படையை எதிர்த்துத் தோற்கடித்தது. பின்னர் நடைபெற்ற போரில் சிங்களப் படைகளைத் தோற்கடித்து குலசேகரப் பாண்டியனுக்கு மதுரையை வழங்கி அவனை ஆளும் படிச் செய்த இராசாதிராசன் "மதுரையும் ஈழமும் கொண்ட கோஇராச கேசரிவர்மன்'' எனும் விருதுப் பெயர் பெற்றான். 6. மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1218) இவன் பாண்டிய நாட்டு அரசியலில் தலையிட்டு வீர பாண்டியனை நீக்கிவிட்டுக் குலசேகர பாண்டியனை மதுரைக்கு அரசனாக்கினான். இதனால் சிங்களப்படைகள் சோழநாட்டின் மீது படையெடுத்தன. அவற்றைச் சோழப்படைகள் தோற்கடித்தன. இவன் காஞ்சியைத் தெலுங்குச் சோழரிடமிருந்து கைப்பற்றி னான். இவன் காலத்தில் பாண்டியருக்கும் சோழருக்கும் இடையே பகை வளர்ந்து இதனால் ஏற்பட்ட போர்களால் சோழர் ஆட்சி சீர்குலைந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தெலுங்குச் சோழர்கள், காடவர், சம்புவராயர்கள், பாணர்கள், அதிகமான்கள் முதலிய குறுநில மன்னர்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கினர். இச்சமயத்தில் சோழ நாட்டில் கொடிய பஞ்சமும் ஏற்பட்டது. சமயப்பணிகள் நிலங்களை அளந்து தரம்பிரித்து அவற்றைப் பதிவு செய்தான். புதிய ஏரிகளை வெட்டித் துயர்துடைப்புப் பணிகளை மேற்கொண் டான். பஞ்சத்தின் காரணமாகப் பலர் கோயில்களுக்குத் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டனர். குலோத்துங்கச் சோழன் தனிநாயகர் சதுர்வேதிமங்கலம் ஊர்ச் சபையில் ஏற்பட்ட ஊழல்களைச் சீர்படுத்த புதிய விதிமுறைகளை வகுத்தளித்தான். கோயில் சொத்தைக்கொள்ளையடிப்பவர் பிராமண ராயினும் தண்டனையில் இருந்து தப்ப முடியாதபடி நெறி வகுத்தான். சிறந்த சிவபக்தனான இவன் திரிபுவன் வீரேச்சுரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். தில்லைப் பேரம்பலத்துக்கு பொன்வேய்ந் தான். இக்கோயிலின் மூன்றாம் திருச்சுற்று, சிவகாமியின் கோயில் கோபுரம் ஆகியவற்றை அமைத்தான். வேலூர் திருமால் கோயிலுக்குக் குலோத்துங்கச் சோழ விண்ண கரம் எனப்பெயரிட்டுச் சோழ நல்லூரைகி.பி. 1181 -ல் வழங்கினான் என அவ்வூர்க் கல்வெட்டால் அறிகிறோம். தமிழ்ப்பணி வீராந்த பல்லவரையர் இவனுடைய அவைக்களப் புலவர் ராவார். வச்சணத்திமாலை இவன் காலத்தில் எழுதப்பட்ட நூலாகும். மகாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. பவணந்தி முனிவரின் நன்னூல் இவன் காலத்தில்தான் எழுதப்பட்டது. சேக்கிழாரின் பெரிய புராணம் இவன் காலத்தில்தான் தில்லையில் அரங்கேற்றப்பட்டது. திருபுவனத்தில் திருபுவன வீரேசுவரர் கோயிலைக் கட்டி இராமாயணக் கதைச் சிற்பங்களை வைத்தான். குகை இடிக்கலகம் தோன்றிச் சைவ மடங்ளும், குகைகளும் இடிக்கப்பெற்றது இவன் காலத்தில் என்பர். மூன்றாம் குலோத்துங்கன் கி.பி. 1218 - ல் மறைந்தான், 7. மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1256) இவன் மூன்றாம் குலோத்துங்கனின் மகன் ஆவான். கி.பி. 1216-ல் இளவரசுப் பட்டம் சூடிய இவன் தன் தந்தையின் மறைவுக்குப் பின் கி.பி. 1218-ல் அரசு கட்டிலேறினான். இவன் காலத்தில் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் கி.பி. 1219-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து சோழரைத் தோற்கடித்து தஞ்சை உறையூர் ஆகியவற்றைத் தீக்கு இரையாக்கினான். பின்னர் சுந்தர பாண்டியன் சோழரின் 'அபிடேக" மண்டபத்தில் திருமுழக்கு (அபிடேகம்) செய்து கொண்டான். இதனால் இவன் சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டியன் எனப் போற்றப்பட்டான். - ஆனால் மூன்றாம் இராசராசனிடமே சோழநாட்டைத் திரும்பக் கொடுத்துத் தனக்குக் கப்பம் கட்டி ஆளும்படிச் செய்தான். ஆனால் இராசராசன் போசள மன்னன் வீரநரசிம்மன் மகளை மணந்ததும் ஊளக்கம் பெற்றான். அவர்களைக் கொண்டு பல சிற்றரசர்களை அடக்கினான். பாண்டியனுக்குத் திரை செலுத்த மறுத்தான். எனவே, சுந்தர பாண்டியன் கி.பி. 1231-ல் சோணாட் டின் மீது மீண்டும் படையெடுத்தான். சோழனைத் தோற்கடித்து பெண்டிர், பட்டத்தரசி ஆகியோரையும் சிறைபிடித்தான். பழை யாறையில் வெற்றித் தூண்களை நட்டுவிட்டு வீராபிடேகம் செய்து கொண்டான், தோற்றோடிய மூன்றாம் இராசராசன் தலைநகரான துவரை சமுத்திரம் சென்றான். ஆனால் வழியிலேயே திருமுது குன்றம் (விருத்தாசலம்) பகுதியை ஆண்ட காடவர்குலச் சிற்றரசன் கோப்பெருஞ் சிங்கன் அவனைத் தெள்ளாற்றில் தோற்கடித்து, சிறைப்பிடித்துத் தன் தலைநகரான சேந்தமங்கலம் சிறையிலடைத் தான். இவனைப் போசளர் சிறை மீட்டு மீண்டும் அரியணை ஏற்றினர். இதற்குப் பின் சோழர்கள் போசளருக்கும், பாண்டியருக் கும் அடங்கியே வாழ்ந்தனர். இவனுடைய காலத்தில் சிவஞானபோதம் இயற்றிய மெய் கண்டார் வாழ்ந்தார். சிவஞானசித்தியார் எனும் நூலை இயற்றிய அருள் நந்தி சிவாச்சாரியார் என்பாரும் இவர் காலத்தவரே. இவன் கி.பி. 1256-ல் மறைந்தான். ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கி.பி. 1246-ல் தன் மகன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான்.. பாண்டியரைக் கப்பம் கட்டும்படி அடக்கி ஆண்டவனும், அவர் களிடமே கப்பம் கட்டி அடங்கி வாழ்ந்தவனும் இவனே யாவான். தனக்கு அடங்கித் திறை செலுத்தி வந்த சிற்றரசர்களிடமே தோற்றுச் சிறையிலடைக்கப்பட்ட சோழ மன்னன் இவனே. அதிக ஆண்டுகள் ஆண்டாலும் இவனுடைய ஆட்சி தேய்மான இயலாகவே உள்ளது. 8. மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1246-1279) இவனுடைய காலத்தில் பாண்டியர்கள் சோழ நாடு முழுவதை யும் தம் வசப்படுத்திக் கொண்டனர். சோழருக்குக் கீழிருந்த குறுநில மன்னனான கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) சோழர், பாண்டியர், போசளர் ஆகியோரையும் மிஞ்சி விட்டான், தென் ஆற்காடு சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இவன் தில்லை தெற்குக் கோபுரத்தைக் கட்டியவன் ஆவான். பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1257-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து மூன்றாம் இராசேந்திரனைப் போரில் வென்று, சோழனுக்குத் துணைநின்ற போசள மன்னன் வீரசோமேசு வரன் என்பவனையும் தோற்கடித்துச் சோழநாட்டையே தன்னடிப் படுத்தினான். இவ்வாறு மூன்றாம் இராசேந்திரனுடன் சோழப் பேரரசர் ஆட்சி முடிவுற்றது. சோணாடு - பாண்டிய நாடாகி விட்டது. பின்னர்த் தோன்றியது விசயநகரப் பேராட்சி ஆகும். இ) குறுநில மன்னர்கள் முன்னுரை சோழப் பேரரசர்களுக்கு அடங்கி ஆண்ட குறுநில மன்னர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தார்கள். சோழப் பேரரசு தோராயமாக 430 ஆண்டுகள் நீடித்திருந்தது. இந்த நீண்ட காலம் முழுவதும் ஒரே விதமான குறுநில மன்னர்களே இருக்கவில்லை . பல் வேறு குலமரபினர் இருந்தனர். எடுத்துக்காட்டாக மிலாடுடையார், பழுவேட்டரையர், கொடும்பாளூர் இருக்குவேளிர் ஆகியோர் பிற்காலச் சோழப் பேரரசர்கள் காலத்தில் மறைந்து விட்டனர். அதே போல் முற்காலத்தில் இல்லாத குறுநில மன்னர்கள் பலர் பிற்காலத்தில் தோன்றனர். சோழர்காலக் குறுநில மன்னர்களைப் பற்றி அறிய சோழர்காலச் சான்றுகளான கல்வெட்டுகளும், இலக்கியங்களும் சான்றுகளாக வுள்ளன. அந்தந்தப் பகுதியில் எழுந்துள்ள குறுநில மன்னர்களின் கோயில்களும், அவற்றிலுள்ள சாசனங்களும் அவர்களைப்பற்றி அறிய சிறந்த சான்றுகளாகப் பயன்படுகின்றன. குறிப்பாக அவர்களுடைய காலக்கணிப்பையும், அவர்களின் குலமரபு பற்றியும் அறிய இவை உதவுகின்றன. 1. கொடும்பாளூர் இருக்குவேளிர் கொடும்பாளூரைத் தலைநகராக கொண்டு ஆண்ட குறுநில மன்னர்கள் இருக்குவேளிர் ஆவார். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பூதி விக்கிரமகேசரியும் அவர் வழிவந்தோரும் ஆவார். இவர்களைப் பற்றி அறியக் கொடும்பாளுர் முவர் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் முகாமையானவை. ஆகும். இவர்கள் சோழருக்குப் போர்களில் உறுதுணையாக நின்றனர். சோழர்களைப் போலவே சைவநெறியினராக நின்று பல சிவன் கோயில்களைக் கட்டினார்கள். 2. பழுவேட்டரையர் திருச்சி மாவட்டம் பழுவூரைத் தலைநகராகக் கொண்டிருந்த இவர்கள் சோழப்படைக்குத் தலைமை தாங்கிப் பாண்டியரைத் தோற்கடித்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் வானவன், கண்டன் அமுதன், கண்டன் மறவன், கண்டன் சத்ருபயங்கரன் ஆகியோராவர். தங்களைத் தேவனார் என்றே குறிப்பிட்டுக் கொண்ட இவர்கள் சோழரின் அடியொற்றியே ஆண்டனர். 3. மிலாடுடையார் கடலூர் மாவட்டம் திருக்கோயிலூர்ப் பகுதியை மிலாடு என்பர். இப்பகுதியை ஆண்ட இவர்களை மிலாடுடையார் என்றனர். சோழருக்கு அடங்கி ஆண்ட இவர்கள் தக்கோலப் போருக்குப் பின் மிலாடு இராட்டிரக்கூடரின் கீழ் வந்துவிட்டதால் இவர்களும் இராட் டிரக்கூடருக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னர்களானார்கள். பின்னர் சுந்தர சோழன் காலத்தில் இருந்து சோழரின் கீழ் குறுநில மன்ன ராகவே இருந்தனர். மிலாடுடையார் பெண்ணை சோழர் மணந்தனர். அருள்மொழித் தேவன், இராசேந்திர சோழ மிலாடுடையான், கங்கை கொண்ட சோழ மிலாடுடையான், உத்தமச் சோழ மிலாடுடையான் முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர். 4. வாணவர்கள் வேலூர் மாவட்டம் பாலாற்றுக்கும், சித்தூருக்கும் இடைப்பட்ட பகுதியே வானவர் ஆண்ட வாணகம்பாடி நாடு ஆகும். இவர்கள் பல்லவருக்குக் கீழும், பின்னர் இராட்டிரக்கூடருக்குக் கீழும் குறுநில மன்னர்களாயிருந்தனர். சோழர் குல மகளிர் அரிஞ்சிகைப் பிராட்டியார் என்பவரை அமரசுந்தரத் தேவன் என்ற வாணவர் குறுநில மன்னர் மணந்தார். இராசராச வாணவ கோவரையன், செம்பியன் மகாபலி வாணவராயன், வானாதி இராசன் முதலியோர் குறிப்பிடத்தக்க வாணவர்கள் ஆவார். பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த வாணவர் குலத் தலைவன் மகதை என்பவன் மிகவும் சிறப்பானவன். இவனைப் போலவே குலோத்துங்கச் சோழ வாணவ கோவரையன் என்பவனும் சிறப்புடையவன் ஆவான். இவன் வழுவூர்ச் சிவன் கோயிலில் அம்மன் கோயிலையும், மகதையின் தலைநகரான ஆரகல்லில் சோழீச்சுரம் உடையார் கோயிலையும், திருவானைக்காவல் கோயிலில் மகதீன் திருமாளிகையையும் கட்டினான். மேலும் வாணவர்கள் வைணவத் தொண்டும், கல்விப் பணிகளும் செய்துள்ளனர். 5. கொங்குச்சோழர் பிற்காலச் சோழர் காலத்தில் கொங்கு நாட்டை ஆண்ட குறுநில மன்னர்களையே கொங்குச் சோழர் என்கிறோம். சேலம், கோவை . மாவட்டங்களையும், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சில பகுதி களையும் கொண்டது கொங்குநாடு ஆகும். வரலாற்று ஆசிரியர் களின் பட்டியலில் ஏறத்தாழ 16 கொங்குச் சோழர்களின் பெயர்கள் காணப்பெறுகின்றன. இவர்களில் பலர் சோழ வேந்தர்களைப் போலவே பெயரும், விருதும் தாங்கியுள்ளதால் மயக்கம் மேலிடு கிறது. இவர்களில் முதல்வனாகக் காணப்படுபவன் முதலாம் விக்கிரமன் ஆவான். முதலாம் இராசராசனின் ஈழப் படையெடுப்பின் போது பங்கேற்றதால் இவன் தன்னைச் 'சிங்களாந்தகன்' என்று அழைத்துக் கொள்வான். இவனுக்குப் பின் வந்தோரில் இராசகேசரி, முதலாம் குலோத்துங்கன், பரகேசரி பெருமாள் முதலியோர் சிறப்பானவராவர். இவர்களும், சோழர்களைப் போலவே விக்கிரம சோழீச்சுவர் முடையார் கோயில், இராசராச ஈச்சுவரமுடையார் கோயில், ஆதிராசா திராதீச்சுவரமுடையார் கோயில், உத்தம சோழீச்சுவரமுடையார் கோயில், வீரராசேந்திரமுடையார் கோயில் முதலிய சிவன் கோயில் களைக் கட்டி உள்ளனர். இவற்றிலிருந்தே இவர்கள் சோழருக்குக் கீழ்பட்டு ஆண்டமையும், அரசர்கள் மீது அன்பு கொண்டமையும் தெரிகிறது, பரகேசரி, இராசகேசரி, திரிபுவனச் சக்கரவர்த்தி, கோனே ரின்மை கொண்டான் முதலிய பட்டங்களையும் இவர்கள் பெற்றிருந் தனர். பேரரசர்களைப் போலவே அமைச்சரவையும், படைகளும் இவர் களுக்குண்டு. பிராமணர்களுக்கு இருந்த மாடி வீடுகட்டிக் கொள்ளும் உரிமை, இரண்டு வாசற்படிகள் வைத்துக் கொள்ளும் உரிமை, சுண்ணாம்பு அடித்துக் கொள்ளும் உரிமை, கொடிபிடித்து, குதிரை ஏறி, ஒத்து ஊதிச் செல்லும் உரிமைகள் இவர்களுக்கும் இருந்தன. 6. காடவராயர் பெருகானூர் நாட்டை ஆண்ட இவர்கள் கூடல், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களில் தலைநகரைக் கொண்டிருந்தனர். இவர்கள் தங்கள் கல்வெட்டுகளில் தங்களைப் 'பள்ளி' என்றே குறிப்பிடுகின்றனர். இவர்கள் பல்லவர் வழிவந்தவர் அல்லர். வன்னியர் குலத்தவரென்ப தற்கும் போதிய சான்று இல்லை. இரண்டாம் பிருதிவிபதி, வாண சாயன் நாட்டை வென்றான். இராசேந்திர சோழர் காடவராயன், கஞ்ச னூர் காடவராயன், ஆகியோரும், நாலு திசைகளும் வென்ற இராசராச காட. வராயன், வீரசேகர காடவராயன் முதலியோரும் சோழர் களுக்குத் துணை நின்று பல போர்களில் பங்கேற்றனர். இவர்களில் மிகவும் சிறப்புற்றவன் ஏழிசை மோகனன் மணவாளப் பெருமாள், அவனுக்குப் பின் வந்த முதலாம், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் மிகமிக முக்கியமான காடவராயர் ஆவார். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனிடம் கடற்படையும் இருந்தது. சோழரிடமும், பாண்டியரிடமும் இவன் நெருங்கிய தொடர்புடையவன் ஆவான். தெலுங்கரிடமிருந்து தமிழகத்தைக் காக்கப் போரிட்டதால் தன்னைத் 'தமிழ்நாடு காத்த பெருமாள்' என்றும் கூறிக்கொள்வான், இவன் தில்லைக்கோயிலின் கிழக்குக் கோபுர உட்சுவர்களில் பரதநாட்டிய முத்திரைகளைச் செதுக்கியுள்ளான். பொதுவாக, காடவராயர்கள் சிறந்த சிவபக்தர்கள், பல சிவன் கோயில்களைக் கட்டி உள்ளனர். தமிழைக் காத்துப் புலவர்களைப் புரத்தவர்கள். காடவரில் சிறந்தவனான இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன் சோழர் வீழ்ச்சியடைந்தபோது, மூன்றாம் இராசராச சோழன் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனிடம் தோற்று, மனைவி மக்களைப் பறிகொடுத்து தன் மாமனார் போள மன்னன் வீரநரசிம்மனிடம் ஓடும் போது அவனைத் தளைப்படுத்தி கைது செய்து), சேந்த மங்கலம் சிறையில் அடைத்தான். இதுதான் காடவர்களின் அரச இரண்டகம் (இராசத் துரோகம்). 7. மலையமான்கள் இவர்கள் திருக்கோயிலூர் பகுதியை ஆண்ட குறுநில மன்னர் கள் ஆவர். மலையன், கோவலராயர், சேதிராயர் என்றெல்லாம் கல்வெட்டுகளால் அறியப்படுவர். பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள் வன்னிய வகுப்பினர். கிளியூரிலும் இவர்கள் வாழ்ந்ததாக அறிகிறோம். இவர்களும் சோழர்களைப் போலவே சைவர்கள். விக்கிரவாண்டி சேதி குல சிந்தாமணி ஈச்சுவரமுடையார் கோயில், குகையூர் சிறீ கைலாசர் கோயில், அரகண்டநல்லூர், கிளியூர், சித்தலிங்கமடம், எலவானாசூர், குகையூர், நெற்குணம், திருவொற்றியூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோயில்களையும் கட்டியவர்கள் மலையமான்களே. 8. சம்புவராயர் இவர்கள் காஞ்சி, திருவள்ளூர், வேலூர், படவேடு, திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை ஆண்ட குறுநிலமன்னர் களாவர். இவர்கள் பல்லவர் வழிவந்தவர் அல்லர். செங்கேணி சாத்த நாலாயிரவனான கரிகால சோழசெங்கேணி நாடாள்வான் என்பவன் முதல் சம்புவராயன் ஆவான். சம்புவராயர்கள் அதிராசேந்திர சோழன் காலம் முதல் மூன்றாம் இராசராச சோழன் காலம் (கி.பி. 1216 - 1257 வரை சோழர்களின் கீழ்ச் சிற்றரசர்களாயிருந்தனர். சோழப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்தில் காடவராயர்களைப் போலவே இவர்களும் தன்னுரிமை பெற்றவர்களைப்போல் ஆண்டனர். தன் னுரிமையை நிறுவியவன் இராச கம்பீர சம்புவராயன் ஆவான். இவனுக்குப் பின் வீரசம்பன், குலசேகர சம்புவராயன், வென்றுமண் கொண்ட சம்புவராயன், இராச நாராயணன் முதலியோர் ஆண்டனர். இவர்கள் படவேட்டைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். கி.பி. 1383-ல் சம்புவராயர் நாட்டை விசயநகர மன்னன் கம்பணன் கைப்பற்றினான். இவர்கள் கட்டிய கோயில்களை விட பழுது பார்த்த கோயில்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களைப்பற்றி இரு நூற்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன, இவர்கள் வன்னியர் வகுப்பினர் அல்லர். 9. யாதவராயர் இவர்கள் காளத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட, சோழருக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னர்கள் ஆவர். விக்கிரம் சோழன் காலத்தில் இருந்து சோழரின் குறுநில மன்னராயினர். நாரணதேவன் என்பவன் முதல் யாதவராயன் ஆவான். வீரசோழன் வானவகோப்பாடி ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்தான். குலோத் துங்க சோழன் ஆட்சியில் சிறப்புற்றிருந்த யாதவராயன் நரசிங்க திருக்காளத்தி தேவன் (கி.பி. 1185 - 1231) என்பவன் ஆவான், இவன் தெலுங்குச் சோழருடன் நட்புறவு கொண்டு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், சித்தூர் முதலிய பகுதிகளை ஆண்டான். இவனுக்குப் பின்னும் பல யாதவராயர்கள் ஆண்டனர். சைவ, வைணவ சமயங்களை ஆதரித்த இவர்கள் குடிமல்லம், தாளாத்தி, தக்கோலம், பாடி, திருவொற்றியூர், திருப்பாச்சூர் முதலிய இடங்களிலுள்ள சிவன் கோயிலுக்குப் பல நிவந்தங்கனளச் செய்தனர். திருப்பதி, திருக்காளத்தி ஆகிய கோயில்களுக்குச் செய்த நிவந்தங்களைக் கல்வெட்டுகளில் காணலாம். 10. தெலுங்குச் சோழர்கள் இவர்கள் தெலுங்கு நாட்டிலுள்ள பொத்தப்பி, வெலநாகுண்டு. நெல்லூர் ஆகிய இடங்களில் ஆட்சி புரிந்தனர். கல்வெட்டுகளில் சோடர் என்று குறிப்பிடப்படுகின்றனர். பிற்காலச் சோழர் ஆட்சி வடக்கே பரவியபோது இவர்கள் அவர்களின் குறுநில மன்னரானார் கள். மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவர்கள் ஆண்டனர். சோழர் ஆட்சி முறையையும், பண்பாட்டையுமே பின்பற்றினார்கள். 11. பிற குறுநில மன்னர்கள் விசயாலயன் ஆட்சியிலிருந்தே சிறப்புற்றிருந்த முத்தரையர், கங்க குலத்தைச் சேர்ந்த மேலைகங்கர்கள், திருமுனைப்பாடி நாட்டவரான முனையதரையர், பங்களநாட்டை ஆண்ட கங்கரையர், தெலுங்கு நாட்டவரான வைதும்பர், தகடூரை ஆண்ட அதியமான் கள், நொளம்பபாடியை ஆண்ட நொளம்பர், பொன்னமராவதி, பிரான்மலைப் பகுதிகளை ஆண்ட நிசதராயர் முதலிய குறுநில மன்னர்களும், சோழரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். சோழரின் வீழ்ச்சிக்கு இவர்களும் காரணமாவர் என்பதை அறிந்தோம். மதிப்பீடு தோராயமாக நானூறு ஆண்டுகள் ஆண்டசோழப் பேரரசர்கள் இன்றைய ஆந்திரம் கருநாடகம் ஆகிய பகுதிகளையும் ஈழத்தையும் தூரக்கிழக்கு நாடுகளையும் ஆண்டு தமிழர் வீரத்தையும் நாகரித்தை யும், பண்பாட்டையும் பரப்பியுள்ளார்கள். இவர்கள் மிகச் சிறந்த புலவர்களாகவும், அறிஞர்களாகவும், சிவநெறிச் செல்வர்களாகவும், வைணவ பக்தர்களாகவும், அதே சமயம் சமயப் பொறையாளர் களாகவும் இருந்துள்ளனர். அவர்களின் இத்தகைய வீரம், மதிநுட்பம் (விவேகம்), இறையன்பு ஆகியவற்றை எண்ணிறந்த கல்வெட்டுகளும், செப்பேடுகளும், இலக்கியங்களும் கூறுகின்றன. சோழப்பேரரசர்கள் தனித்தாண்டார்கள். ஆனால் சர்வாதி காரிகள் அல்லர். மக்கள் நலம் நாடும் நல்லாட்சியை நடத்தினர். ஊராட்சி முறையில் தலையிடாமல் மக்களாட்சியை மலரச் செய் தனர். போர் மறவர்கள்; ஆனால் கொடுங்கோலர் அல்லர். தமிழகம் முழுவதும் ஒரு குடைக் கீழ் ஆண்டு அண்டை நாடுகளுடன் மண உறவும், நட்புறவும் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்த வர்கள். அலைகடல் நடுவில் பல கலங்களைச் செலுத்திச் சென்று பல நாடுகளில் தமிழரின் வீரத்தை விதைத்தவர்கள். சமகால இந்தியாவில் இராசேந்திரன் கடற்படையைப் போல் வேறெவரிட மும் கடற்படை இருந்ததில்லை . உலகமே வியக்கும் மிகச் சிறந்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் போன்ற கட்டடங்களையும், அரண்மனைகளையும் கட்டி னார்கள். அவற்றில் கலையழகு மிக்கப் படிமங்களையும் சிறப்பாக நடராசர் போன்ற செப்புக் கலைப் படைப்புகளையும் சமைத்தார்கள். தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சோழர் காலத்தில்தான் காப்பி யங்களும் உலாக்களும் பரணிகளும் சிறந்தோங்கி நின்றன. புகழ் பெற்றக் கவியரசு கம்பனும் ஒட்டக்கூத்தனும் புகழேந்தியும் சேக்கிழாரும் வாழ்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறந்த கருவூலங்களைச் சேர்த்துச் சென்றனர். அவைக்களப் புலவரும், தண்டநாயகனும், சமய குருவும், வழிபடு தெய்வமும் இல்லாத சோழப் பேரரசனே இல்லை , அவர்களின் கல்லூரிகளில் தமிழும் சமற்கிருதமும், சமய நூல்களும், மருத்துவ, வானநூல்களும், கற்பிக்கப்பட்டன. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதே அவர்களின் பட்டாங்கு. வேதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்களின் தேவதானங்களும், பிரமதேயங்களும் அமைந்தன. இவர்களின் ஆட்சிக்கும், மொழிக்கும், பெருமை சேர்த்தவர்கள் இவர்களின் குறுநில மன்னர்களும், தானைத் தலைவர்களுமே ஆவார். அவர் களே இவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாய் நின்றனர் என்பதும் உண்மையே. இத்தகைய ஒரு சில குறைபாடுகளைக் கழித்து, நிறை பாடுகளைத் தூக்கி எடைபோட்டால் இவர்களுடைய காலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலமே எனலாம். ஆயின் சோழப்பேராட்சி ஏன் விழுந்தது? சோழப்பேராட்சி ஒரு நீண்ட நெடுங்கால ஆட்சி ஆகும். கி.பி. 850-ல் விசயாலயன் தஞ்சையில் தொடங்கிய இவ்வாட்சி மூன்றாம் இராசேந்திர சோழன் வரை (கி.பி. 1280 வரை சுமார் 430 ஆண்டுகள் நீடித்திருந்தது. இக்கால இடைவெளியில் விசயாலயன் மரபில் வந்து பேரரசர்கள் ஒன்பதின்மரும், குலோத்துங்கன் மரபில் வந்த எண்மரு மாக பதினேழு பேரரசர்கள் ஆண்டுள்ளனர். ஒவ்வொருவரின் காலச் சூழலும், ஆற்றலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை . இவர்கள் குறுநில மன்னர்களோடு கொண்டிருந்த அரசியல் தொடர்பு தொடக்கம் முதலே வலுவாக இல்லை. பேரரசில் ஓட்டை ஏற்படும் போதெல்லாம் இவர்கள் தனித்தன்மையோடு ஆளமுற்பட்டனர். பேராட்சியை வலிவு இழக்கச் செய்தவை சாளுக்கியர், போசளர், சிங்களர் உறவுகளாகும். உடன்பிறந்தே கொல்லும் நோயைப் போல் பாண்டியரின் நட்பும், பகையும் கடைசியில் சோழரை அழித்தது. போகூழ் காரணமாக சாதிய பிரிவினைகள், சமயச் சச்சரவுகள் முதலியனவும் சோழப்பேராட்சியை அசைத்திட உதவின. பாண்டி யரின் எழுச்சியும், இலங்கையின் பங்கேற்பும், சோழரின் வீழ்ச்சிக்குக் கடைசி துரும்பு ஒட்டகத்தின் கழுத்தை ஒடித்த கதையாக நின்றன. சோழப் பேரரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்ததும், அது மட்டுமன்றி தமிழகமல்லாத மண்ணில் இருந்து மங்கையரை மணந்ததும் பல பிள்ளைகளை பிறங்கடையினராக (வாரிசாக) விட்டுச் சென்றதும்கூட அவர்களின் அழிவுக்குக் காரணமாகியது. போர்களில் கிடைத்தக் கொண்டிப் பொருள்களைக் கோயில் கட்டவும், பிராமணருக்குத் தானம் செய்யவும் மட்டுமே செலவழித்த னர். போர்வீரர்களுக்குச் செலவழித்திருக்கலாம். ஓரளவு படையை வலுப்படுத்தவும் குறிப்பாக கப்பற்கடையை புதுமையாக்கவும், ஆக்கப்பணிகளைச் செய்யவும் பயன்படுத்தி இருக்கலாம். தாங்கள் வென்ற அயலக மண்ணில் குடியேற்றங்களை ஏற்படுத்தி இருக்க லாம், நிலையாக ஈழத்தைத் தமிழகத்தோடு சேர்த்து தொடர்ந்து ஆண்டிருக்கலாம். வெளிநாட்டுறவை மேலும் வளர்த்து வலுப் படுத்தி இருக்கலாம். ஈ) ஆட்சிமுறை சோழ நாட்டின் பரப்பும் அதன் எல்லைகளும் தொடக்கம் முதல் கடைசி வரை நிலையானவையாக இல்லை. காலந்தோறும் விரிந்தும் சுருங்கியும் காணப்பட்டன. கி.பி. 850-ல் விசயாலயன் தஞ்சையைக் கோநகராகக் கொண்டு சோழப்பேரரசைத் தொடங்கும் போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளே பேரரசின் பகுதிகளாக இருந்தன. இவை உள்ளடங்கிய பகுதியையே சோழ நாடு என்றும் சோணாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைத்தனர். காலப்போக்கில் சோழப் பேரரசர்கள் தங்களின் வாள் முனையால் ஆட்சிப் பரப்பையும், அதிகார எல்லைகளையும் விரிவுபடுத்திக் கொண்டனர். முதலாம் பராந்தகன் காலத்தில் தொண்டைநாடு, கொங்குநாடு, பாண்டியநாடு முதலியவற்றின் பகுதிகள் இணைக்கப்பட்டனர். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோர் காலங்களில் சேர நாடு, தகடூர், நுளம்பபாடி, கங்கபாடி: குடகு, வேங்கி ஆகிய பகுதிகள் வெல்லப்பட்டன. இலங்கை , இலட்சத்தீவு முதலிய தீவுகளின் சில பகுதிகளும் சோழராட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. சோழப் படைகள் வட நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கங்கை வரையுள்ள நாடுகளை வென்றன. ஆயினும் அந்த நாடுகளை நிலையாக ஆட்சிக்கு உட்படுத்தவில்லை. இதைப் போலவே, வென்ற நாடுகளில் சில தனித்தும், மீண்டும் கைப்பற்றப்பட்டும் சோழ நாட்டின் பரப்பு குறுகிப் போனதுண்டு. ஆயினும், சோணாடு, கிருட்டிணை ஆற்றுக் கும், குமரிக்கும் இடையில் கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லை யாகக் கொண்டிருந்தது. 1. நடுவண் ஆட்சி இப்பரந்த பேராட்சியை ஆண்டவர் பேரரசர்களேயாவார். அரசப் பதவி பரம்பரையானது. தந்தைக்குப்பின் மகன் என்ற பிறன்கடை உரிமைப்படி அரசர்கள் வந்தனர். அரசன் காட்சிக்கு எளியவன். மக்கள் அவனை எங்கும் கண்டு தங்கள் குறைகளைக் கூறலாம். எனவே அவர்கள் அவனை 'இறை', 'கடவுள்' என்றனர். எனவே, அவர்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்ப்பான். அதற்கான ஆணைகளைப் பதிப்பிக்கவும், செயல்படுத்தவும் தனிச் செயலர் இருப்பார். அவருக்கு "ஓலை நாயகம்' என்று பெயர். சோழர் வேத வழியைப் பின்பற்றித் தங்களைச் சூரிய குலத்தவர் என்றும், அக்குலம் தழைக்க வேத வேள்விகளையும், தானங்களையும் செய்தனர். பரகேசரி, இராசகேசரி விருதுகளும் இவற்றைத் தவிர ஒவ்வொரு அரசனுக்கும் பல விருதுகளும் இருந்தன. பெரும்பாலும் இந்த விருதுப் பெயர்கள் அவர்களின் வெற்றிகளால் வந்தவை ஆகும். அரசன் தம் குடிமக்களைக் காத்து, நாட்டைப் பகைவர் கை " யில் இருந்து காக்க வேண்டும். சமயநெறிகளைப் பேணவேண்டும். நல்லோர் சொற்கேட்டு, வல்லோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை அறத்தின் வழி நடந்தான். இவற்றுள் சமய நெறி களைக் காப்பதில்தான் இவர்கள் பெரும் பொருளையும், காலத் தையும், செலவிட்டனர். இதனால்தான் கோயில்களும் மடங்களும் எழுந்தன, தேவதானங்களும், பிரம் தேயங்களும் தோன்றின. அரசன் தனக்குப் பின் நாட்டை ஆளப்போகும் பிறங்கடை (வாரிசுக்குத் தானே இளவரசு பட்டம் கட்டி ஆட்சியில் பங்கேற்கச் செய்வான். இதனால் வாரிசுரிமைப் போர்கள் தவிர்க்கப்பட்டன. சிற்றரசர்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். தூரத்து நாடு களையும், எல்லைப் பகுதிகளையும் குறுநில மன்னர்கள் ஆண்ட தால் அந்நியப் படை யெடுப்புகளை அவர்களே சமாளித்துக் கொண்டனர். சோழப் பேரரசர்களின் கோநகரமும் தஞ்சையில் மட்டுமே இல்லை, கங்கை கொண்ட சோழபுரம், பழையாறு என வேறு சில இடங்களிலும் இருந்தன. இவற்றைத் தவிர தங்குமிடங்களாக பல இடங்களில் அரண்மனைகளும் இருந்தன. 1. உடன் கூட்டம் சோழராட்சி முறையில் அரச அலுவலர்களின் பங்கே முதன்மை யானது. இதனால்தான் க. அ. நீலகண்ட சாத்திரியார் அரச அலுவல் ரின் கைவண்ணமே சோழராட்சி என்கிறார். அரசன் அமைச்சர்களை யும், அதிகாரிகளையும், கொண்டுதான் ஆட்சியை நடத்தினான். அதிகாரங்களின் ஊற்றாக அரசன் இருந்தாலும் தன்னிச்சைபோல் அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டான். அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுதான் செயல்படுவான். 'உடன் கூட்டம்' எனப்படும் அலு வலர் மூலம் நாட்டை நிருவகித்தான். அவனுடைய ஆணைகளைப் பதிவு செய்ய திருமந்திர ஓலை என்னும் அலுவலர் இருந்தார், அவருடைய விடையைச் சரிபார்த்து ஆவணமாக்க திருமந்திர ஓலை நாயகம் என்ற மேலதிகாரி இருந்தார். ஆணைகளை உரிய இடங்களுக்குச் சேர்ப்பிக்க விடையில் அதிகாரிகள் பலர் இருந்தனர், நாட்டில் கலகம், களவு முதலியன நிகழாமல் காக்க காவல்துறைக் கண்காணிப்பு செய்ய நாடுகாவல் என்னும் அதிகாரி இருந்தார். இத்தகைய நிருவாகக் குழுவைத்தான் உடன் கூட்டம் என்பர். 2. புரவுவரித்திணைக் கனத்தார் நிலவரி போன்ற வருவாய்களைக் கவனிக்க அலுவலர் பலர் இருந்தனர். அவர்களைத் தான் 'புரவுவரித்திணைக் களத்தார்' என்பர். வருவாய்த்துறைக்குத் தலைவராயிருந்த அதிகாரி புரவழி திணைக் களநாயகம் எனப்பட்டார். இத்துறையில் கண்காணி, வரிப்புத்தகம், வரிப்புத்தக நாயகம், வரிப் புத்தகக் கணக்கு, வரியிடு, முகவெட்டி, பட்டோலை முதலிய அலுவலர்களும் இருந்தனர். அரசு உயர் அலுவலர் பெருந்தனம் என்றும் கீழ்மட்ட அலுவலர் இறுந்தனம் என்றும் அழைக்கப்பட்டனர். அரசு அலுவலர்களுக்கு மாத ஊதியம் என்றில்லை . நிலமானியம் உண்டு. இதற்கு 'ஜீவிதம்' என்று பெயர். அரசு அலுவலர்கள் 'கருவிகள்' என்னும் பெயரால் குறிப்பிடப் படுகின்றனர். படை நிருவாகம் சோழரிடம் யானை, குதிரை, காலாட்படை ஆகிய படைகளும் வேறு எவரிடமும் இல்லாதப் பல படைகளும் இருந்தன. இவை சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு, கடமை உணர்ச்சியும் கொண்டிருந் தன. இதில் யானைப் படையும் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அரசனுக் கெனத் தனியாக மெய்க்காப்பாளர் படை (வேலைக்காரப் படை) ஒன்று மிருந்தது. அரபு நாட்டுச் சாதிக்குதிரைகள் இருந்தன, படைகளின் பொதுத் தலைவருக்குத் 'தண்ட நாயகம் அல்லது 'சேனாதிபதி' என்று பெயர். இவர் யானை, குதிரை, காலாட்படைகளின் தலைவர்களுக் கெல்லாம் தலைவராவார். ஆயினும் நாட்டின் படைகளின் தலைவன் அரசனே ஆவான். படையில் பிராமணரும், வேளாளரும் இருந்தனர். வீரச் செயல்களுக்காகப் படை வீரர்க ளுக்குச் "சத்திரிய சிகாமணி' என்ற விருது வழங்கப்படும். யானை, குதிரைப் படைகளில் உள்ள யானை, குதிரைகளுக்கும் அவற்றின் வீரச் செயல்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். அன்றாடம் அரசன் இவற்றைப் பார்வையிடுவான். சோழரின் நாவாய்ப்படை குமரி(இந்து மாக்கடலில் விளையாடித் திளைத்தன என்றும், இக்கடலைச் சோழர் ஏரி என்றும் க. அ. நீலகண்ட சாத்திரியார் கூறுவார். சோழரின் நாவாய்ப்படை ஒரு பரந்த இந்தியாவைப் படைத்து அந்நிய செலாவணியைப் பெருக்கியது. இதனால் கடல் கடந்த நாடுகளிலெல்லாம் தமிழரின் வீரமும், புண் பாடும், நாகரிகமும் பரவியது. பொதுப்பணித்துறை படைத்துறையைப் போலவே பொதுப்பணித் துறையும் நடுவண் ஆட்சியில் நிருவாகம் செய்யப்பட்டது. சோழரின் அணைக் கட்டுகள், ஏரிகள், கால்வாய்கள் முதலியவற்றை ஏற்படுத்தி சோணாடு சோறுடைத்து எனும் பெருமையைக் காக்க நீர்ப்பாசன ஏந்துகளைச் செய்தனர். போக்குவரத்து ஏந்தாக பல பெருவழிச் சாலைகளையும் ஏற்படுத்தினர். இவை படைகளின் போக்குவரத் துக்குச் சிறப்பாக அமைந்துவிட்டன. கன்னியாகுமரியில் இருந்து கங்கை வரை மகாந்தியையொட்டிச் சோழர்கள் போட்ட பெருவழிப் பாதைக்கு வடக்குவழி என்பது மிகவும் சிறப்பானதாகும். ஆறுகளும், ஆற்றுக் கால்வாய்களும் நீர்வழிப் போக்குவரத்தாகப் பயன்பட்டன. வட்டார ஆட்சி (அல்லது) மண்டல் ஆட்சி மண்டலம் நிருவாக ஏந்துக்காக நாடு எனும் பல ஆட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றில் மண்டலம் என்பது பெரு நிலப்பிரிவாகும். மண்டலாதிபதி, மண்டல முதலி அல்லது அரசிளங் குமாரர்கள் இவற்றின் ஆட்சிப் பொறுப்பிலிருந்தனர், இராசராசன் காலத்தில் சோணாடு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட் டிருந்தன. இவற்றுள் ஜெயங்கொண்ட சோழமண்டலம், மும்முடிச் சோழ மண்டலம், இராசராசமண்டலம் ஆகியவை முக்கியமானவை ஆகும். மண்டலங்கள் அரசிளங்குமாரர்களால் ஆளப்பட்டன. அவர்களை அரசப் படிநிகராளிகள்' என்றனர். வளநாடு மண்டலங்களின் உட்பிரிவுகள் வளநாடுகள் எனப்பெறும். சோழ மண்டலத்தில் பத்து வளநாடுகள் இருந்தன என்பர். வளநாடும் கோட்டமும் வருவாய்த் துறையின் பெரும்பிரிவாகும். தொண்டை நாட்டில் கோட்டம் என்ற சொல் பயன்பட்டுள்ளது. நாடு மண்டலங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. இந்த சிறு பிரிவு நாடு, கூற்றம், முட்டம், குளக்கீழ், ஆற்றுப்போக்கு, கண்டம், இருக்கை எனும் வேறு பெயர்களாலும் அழைக்கப்பெற்றது. நாட்டை நிருவாகம் செய்தவர் நாட்டார் எனப் பட்டனர். ஒரு நாட்டில் பிராமணரல்லாதார் ஊர்களின் தலைவர்கள் சேர்ந்த குழுவே 'நாட்டார்' என்று க. அ. நீலகண்ட சாத்திரியார் கருதுகிறார். நாடு எனும் பிரிவை அடிப்படை அளவாக வைத்துத்தான் சோழர்கால வேளாண்மை சமூகம் செல்வாக்குப் பெற்றது என்று பர்ட்டன் ல்டெயின் கூறுகிறார். நாடு வேளாண்மை சமூகத்தின் கூட்டமைப்பாக விளங்கியது என்பது டாக்டர் எ, சுப்புராயலு கருத்தாகும். மேலும் வெள்ளான் வகை ஊர்களின் தலைவர்கள் அடங்கிய குழு நாட்டார் என்பதும் அவருடைய கருத்தாகும். பிரம் தேயத்தை உருவாக்கும்போது அதனை அளந்து எல்லைகளைக் குறிக்கவும். மொத்தத்தில் ஆவணமாக்கவும், நாட்டாரும் பிரம தேயத்தவரும், ஊர்த் தலைவர்களும், கணக்கரும் ஒன்றிணைந்தே செயல்படுவர். இவர்கள் நாட்டு ஆட்சி, நாட்டு விநியோகம், கொடைகளைக் காக்கும் காப்புப்பணம் முதலிய வருவாய்களைப் பெற்றுக் கொண்டும் வரித்தண்டல் செய்தனர். கோயில் சொத்துக்களை நிருவகிப்பதும், அதற்கான நடைமுறை களைச் செய்வதும் நாட்டாரே யாவார். நாட்டாருக்கும் அரசுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நிலக்கொடை ஆணைகளை நாட்டா ருக்கே அனுப்புவர். அவர்கள் அவ்வாணைகளை நேரடியாக செயல்படுத் துவர், நில எல்லைச் சிக்கல்களையும் இவர்களே தீர்த்து வைப்பர். அரசு கட்டிலேறும் உரிமைச் சிக்கல் வந்தபோதும் நாட்டார், உடன் கூட்டத்தார் ஆகியோரின் முடிவைக் கேட்டுத்தான் செயல் பட்டனர். பெரிய நாட்டாரைச் சித்திர மேழி பெரிய நாட்டார் என்று அழைத்தனர். ஊர் ஆட்சி நிருவாகத்தின் கடைசி அமைப்பு ஊர் ஆட்சி ஆகும். ஊர்களி லுள்ள நில உடமையைக் கொண்டு, 1. வெள்ளான் வகை ஊர்கள் 2. பிராமண ஊர்கள் 3. நகரங்கள் என மூவகையாகப் பிரிக்கலாம். இவற்றைத் தவிர தனியூர் என்றொரு வகை ஊர்களும் இருந்தன. 1. வெள்ளாண் வகை சர்களின் நிருவாகம் விளைநிலங்களும், மக்கள் வாழும் இடங்களையும் கொண் டதே ஊராகும். இவற்றில் சொந்தமாக நிலம் வைத்திருப்போர், உழவுத் தொழில் செய்யும் கூலியாட்கள், ஊர்ப் பணியாளர்கள் பலரும் வசித்தனர். நிருவாகம் செய்வோர் வரார் ஆவர். இந்த ஊர் நிர்வாகிகள் அனைவரும் நில உடமையாளர்களே. இவர்களின் மேற்பார்வை யில்தான் ஊர் நிருவாகம் நடைபெற்றது. நில எல்லை களை முடிவு செய்து கூறுவதும், ஊரில் வரித்தண்டல் செய்தலும், கோயில் சொத்துக்களைப் பராமரித்தலும் காப்புப்பணம் பெற்றுக் கொண்டு வரிநீக்கம் செய்யும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு உதவியாகக் கணக்கரும், கீழ்மட்டப் பணியாளரும் இருப்பர். 2. பிராமண ஊர்களின் நிருவாகம் பிரமதேயம், மங்கலம், சதுர்வேதி மங்கலம், எனவும் இவை அழைக்கப்பட்டன. பிரம் தேய ஊர்கள் அரசரால் ஏற்படுத்தப் பட்டவை. இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். சோழர் காலத்தில் இருந்த அனைத்துவகை ஊர்களிலும் பிரமதேய அல்லது பிராமண ஊர்களைத் தவிர பிற ஊர்களின் நிருவாகம் பற்றிய அதிகமான செய்திகள் கிடைக்கவில்லை. எனவே ஊராட்சி நிருவாகம் அல்லது ஊராட்சி முறை என்பதைப் பிரமதேய ஊர் நிருவாகத்தைக் கொண்டே அறியலாம். உத்திரமேரூர் திருப்பாற்கடல், சேங்கனூர் ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் ஊனர் நிருவாகம் பற்றிய செய்தி களைக் கொண்டுள்ளன. உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தகன் (கி.பி. 907-955) காலத்தவையான கி.பி, 91, 921 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட இரண்டு கல்வெட்டுகள் உத்திரமேரூர் மகாசபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள், உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் முறை, வாரியங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. பிரம தேய ஊர்களிலுள்ள நிலங்கள் பிராமணருக்கே சொந்த மானவை ஆகும், இந்தப் பிராமண ஊர்களில் உறுப்பினர்களையும், வாரிய உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க தகுதிகள் தேவைப்பட்டன. பிராமண ஊர்களில் உள்ள நிருவாக அவைக்கு 'பெருங் குறிச் சபை ' என்று பெயர். பிராமணர் அனைவருமே இச்சபையின் உறுப்பினராக இருப்பர். ஆனால் தகுதியின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தகுதிகள் யாவை? தகுதி உடையோர் யாவர்? 1. உறுப்பினராவதற்குக் கால்வேலி நிலமாவது. சொந்தமாக இருக்க வேண்டும். 2. சொந்த நிலத்தில் சொந்த வீடும் இருக்க வேண்டும், 3. 35 அகவை நிரம்பியவராகவும் 70 அகவைக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 4. நான்கு வேதம், புராணம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும், 5. நல்ல வழியில் பொருளீட்டி அறநெறி பிறழாத வாழ்க்கை உடையவராக இருக்க வேண்டும். 6. ஒரு முறை உறுப்பினராய் இருந்தவர், மீண்டும் உறுப்பினராக விரும்பினால் அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பே தேர்ந்து எடுக்க முடியும். அவருடைய மகன்கள் கூட நான்கு ஆண்டு களுக்கும் அவருடைய சகோதரர்கள் மூன்றாண்டுகளுக்கும் பிறகுதான் தகுதி உடையவர் ஆவர். தகுதியற்றவர் யார்? 1. ஏற்கனவே உறுப்பினர்களாய் இருந்து, கணக்குகளைச் சரிவரக் காட்டாதவர்களும், தங்களது உறவினர்களின் கணக்குகளைக் காட்டாதவர்களும் மீண்டும் உறுப்பினராகத் தகுதியற்றவர் ஆவர். 2. தாங்களோ, தங்களின் உறுப்பினர்களோ பஞ்சமா பாதகங்களைச் செய்திருந்தால் உறுப்பினராக தகுதி யற்றவர் ஆவர். 3. மாற்றாரின் சொத்துக்களை அநீதியாக அபகரித்தவரும், கீழ்த் தரமான செய்கை உடையவருடன் அவரைச் சேர்ந்தோரும் உறுப்பினர் ஆகத் தகுதி யற்றவராவர். 4. கையூட்டுப் பெற்றோர் தகுதியற்றவராவர். 5. ஒதுக்கப்பட்ட அல்லது தள்ளப்பட்ட உணவு வகைகள் உண்டோரும் தகுதியற்றவரே யாவர், குறிப்பு - நெருங்கிய உறவினர்கள் 1.சிற்றவை 2, பேரவை 3. அத்தை 3. மாமன் மக்கள் 5. தாய் தந்தையோடு பிறந்தவர்கள் . அவர்களுடைய மாமனார்கள் 7. மகளை மணந்த மருமகன் 8. தன் மகன் 9. தன் மாமனார் 10. மனைவியோடு பிறந்தவர்கள் ஆகியோர் உறவினர் பட்டியலில் உள்ளனர். தான் தகுதி இழக்கும் போது இவர்களும் தகுதி இழப்பர். – தேர்தல் முறைகள் உத்திரமேரூர் பிரம் தேயத்தில் மொத்தம் 30 குடும்பங்கள் அல்லது சேரிகள் இருந்தன. இவைப் பார்ப்பனச் சேரிகள் எனப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒவ்வொரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஊரின் அமைப்புக்கேற்ப குடும் பங்களின் எண்ணிக்கையும் மாறுவதுண்டு. ஊரின் பணிகளைச் செய் வதற்கு தனித்தனி வாரியங்கள் பிரிக்கப்பட்டன. முப்பது குடும்பங் களைக் கொண்ட உத்திரமேரூர் சபையில் ஐந்து வாரியங்களிருந்தன. ஒவ்வொரு வாரியத்திலும் ஆறு உறுப்பினர்கள் இருந்தனர். வாரியங்களும் பணிகளும் 1. தோட்ட வாரியம் இதில் 12 பேர் உறுப்பினராயிருப்பர். இவர்கள் தோட்டக்கால் பயிர்கள், நீர்ப்பாய்ச்சுதல், சாலைகள், அறுவடை, பாதுகாப்பு ஆகிய பணிகளைக் கவனிப்பார்கள். 2. ஏரி வாரியம் இதில் 5 பேர் உறுப்பினராயிருப்பர். இவர்கள் ஏரிகள், குளங் கள் முதலியவற்றைப் பழுதுபார்த்தல், மீன்பிடிப்பு, நீர் நிரப்புதல், நீர் வடித்தல் முதலிய பணிகளைக் கவனிப்பர். நீர்ப்பாசனத்திற்கு நிலங் களை வாங்கவும், வரிகளைப் போடவும் இவர்களுக்கு உரிமை உண்டு. 3. நியாய வாரியம் இவ்வாரிய உறுப்பினர் நீதி வழங்கும் பணி செய்வர். 4. பொன் வாரியம் இதில் உறுப்பினர் இருப்பர். பொன்னை உரைத்துத்தரம் நிர்ணயித்தல், நாணயப் புழக்கம் ஆகியவற்றை இந்த வாரிய உறுப்பினர் கவனிப்பர். – 5. கிராம காரிய வாரியம் - இதில் மொத்தம் பன்னிரெண்டு பேர் இருப்பர். இவர்கள் கல்வி அறிவு, அகவை, பட்டறிவு[முன் அனுபவம்) ஆகியவற்றில் மூத்தவ ராக இருப்பர். இவ் வாரிய உறுப்பினர்கள் மற்ற எல்லா வாரியங் களையும் கண்காணிப்பர், 6. தரும் வாரியம் இது கோயில்கள், அறச்சாலைகள், முதலியவற்றைக் கண் காணிக்கும். வாரிய உறுப்பினர்களை 'வாரியப் பெருமக்கள்' என்று அழைப்பர். வாரியங்களில் தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றப்படும். எவரும் காழ்ப்பு உணர்ச்சி, கையூட்டு முதலிய அழுக்குகள் இல்லாமல், அறத்தையும், மனச்சான்றையும் அடிப்படையாக வைத்தே செயல்படுவர். யாரேனும் குற்றம் செய்தால் உடனே அவர் நீக்கப்பட்டு, அவரிடத்திற்கு மீண்டும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஊர் அம்பலங்கள், கோயில் மண்ட பங்கள், மரநிழல் மன்றங்கள் முதலிய இடங்களில் பகலிலும் இரவிலும் ஊர் அவை கூடும். உறுப்பினர் ஓராண்டு பதவியில் இருப்பர். எவருக்கும் பாதியம் கிடையாது. ஆனால் சபை நடக்கும் போது ஏற்படும் சில்லரைச் செலவுக்காக 'சபாவிநியோகம்' அல்லது 'தனரிரு வழிபாடு' எனும் வரிப்பணம் தண்டல் செய்து கொள்பவர். ஊரிலுள்ள நிலங்களுக்கு நில வரியைத் தண்டல் செய்யும் உரிமை யும், நிலவரி செலுத்தப்படாத நிலங்களை விற்கும் உரிமையும் சபை யாருக்கு உண்டு. ஒரு காரியத்திற்கு இரண்டாயிரம் காசுக்கு மேல் செலவு செய்ய வேண்டும். குறித்த அளவுக்கு மேல் வரித்தண்டல் செய்பவர் தண்டிக்கப்படுவர். கோயில்களில் இருந்தும், செல்வந்தர் களிடமிருந்தும் சபையார் கடன் வாங்கிச் செலவு செய்தனர். அவை உறுப்பினர், வாரிய உறுப்பினர் எண்ணிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்காது. வாரியங்களும் சபைதோறும் மாறு பட்டுக் காணப்படும். கணக்கு வாரியம், கலிங்குவாரியம், தடிவாரியம், கழனி வாரியம் போன்றவை சில ஊர்களில் இருந்தன. பஞ்ச வாரியம் சில ஊர்களில் இருந்தன. பொன் வாரியத்தில் மட்டும் பிராமணரே இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. ஆயினும் மாடவீதியர், அறுவை வாணியர், சங்கர பாடியார் ஆகிய வணிகக் குழுக்களில் இருந்தும் பொன்வாரியத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை குட ஓலை முறை முதலில் ஊர் பல் குடும்புகளாகப் பிரிக்கப்படும். இந்த குடும்பு களின் எண்ணிக்கையும் ஊருக்கு ஊர் மாறுபடும், உத்திரமேரூரில் 3) குடும்புகள் இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுடையவர்களின் பெயர்களை பனை ஓலைகளில் (அப்பொழுது பேப்பர் கிடையாது) எழுதி ஒரு கட்டாகக் கட்டி அதனை ஒரு மண்குடத்தில் இடுவார்கள். இவ்வாறு குடும்புக்கு ஒரு ஓலைக்கட்டு வீதம் குடத்தில் இருக்கும். தேர்தல் நாளன்று அந்தக் குடத்தை அவையார் முன்னிலையில் நன்றாக குலுக்கியபின் ஒரு சிறு குழந்தையை விட்டு ஒவ்வொரு கட்டையும் காட்டி அதில் இருந்து ஒரு ஓலையை எடுக்கும்படி செய்வர். அதில் வரும் பெயரே உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவிக்கப்படும். வேட் பாளர் பெயர்களைக் குடத்திலுள்ளஓலைகளில் இருந்து தேர்ந்தெடுப் பதால் இம்முறையைக் 'குட ஓலை முறை' என்பார்கள். ஆளுங்கணம் என்ற அமைப்பு இருந்தது. இது ஒரு நிருவாக சபை என்பர். தேர்தல் நடக்கும் போதும், சபை நடக்கும் போதும், காரியங்களைச் செயல்படுத்தும் போதும் கண்காணிப்பு செய்ய அரசோ, அரசரோ ஊர் ஆட்சி முறையில் தலையிட மாட்டார்கள். ஊர் சபையே அவ்வாறு கேட்டுக் கொண்டால் மட்டுமே அரசு தலையீடு இருக்கும். 3. நகர நிருவாகம் நாம் மேலே பிராமண ஊர்களில் நடந்த ஊராட்சி முறையைப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோம். இனி நகரங்களில் நடந்த நிருவாகம் பற்றிக் காண்போம். இக்காலத்தில் வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்த பேரூர்களையே நகரங்கள் என்றனர். அந்த ஊர்கள் "புரம்' என்று முடியும் பெய ருடையதாயிருக்கும். வாணிகர்கள் செய்த தனி நிருவாகத்தையே நகர நிருவாகம் என்றனர். வணிகக்குடி இருப்புகள், கடைவீதிகள் போன்ற பணிகளைச் செய்தனர். அதற்கான வரித்தண்டலையும் இவர்களே செய்தனர். இவற்றைக் கவனிக்க நகரக்கணக்கு என்ற அலுவலர் இருப்பார். நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தொழிற் கூடங்களும், விற்பனை அங்காடிகளும் இருந்தன. சில நகரங்களில் வணிகர்களேயன்றி வெள்ளார், சங்கரப்பாடியார், சாலியர், பட்டினவர் ஆகிய குடிகளும், இவர்களின் சோலியர் முதலி யோரும்கூட குடியிருந்தனர். சோழர் காலத்தில் சிறப்புற்று நின்ற வணிக நகரங்கள் தஞ்சை, காஞ்சி முதலியனவாகும். அரசர்களே, நாட்டின் வணிக வளத்தை மேம்படுத்தப் பல வணிக நகரங்களை ஏற்படுத்தினர். அவ்வாறு ஏற்படுத்தியதுதான் குணமே நகைபுரம் என்பதாகும். இதனைச் சிதம்பரத்திற்கு அண்மையில் எழுபத்தெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் முதலாம் இராசேந்திரன் ஏற்படுத்தினான். இந் நகரை நிருவாகம் செய்ய நகரக்குழு ஒன்று இருந்தது. அதற்கு அங்காடிப் பட்டம் மேல்வாரம் ஆகிய வரிகளைத் தண்டல் செய்து கோயில் பணிகளுக்குச் செலவிடும் உரிமை இருந்தது. இவ்வாறு வரி போடவும், வெளிவணிகருக்குக் கட்டுப்பாடு களை விதிக்கவும் நகர மன்றத்திற்கு உரிமைகள் இருந்தன. அரசனின் ஆணைகளை நிறைவேற்றும் அதிகாரத்தையும் நகரங்கள் பெற் றிருந்தன. 4. தனி நபர்கள் ஊனர் ஆட்சிமுறையைச் செயல்படுத்திய 1. வெள்ளான் வகை ஊர்மன்றங்கள் 2. பிராமண ஊர் மகாசபைகள் 3. நகரமன்றங்கள் ஆகியவற்றோடு 4. தனி ஊளர் எனப்படும் சிறப்புநிலை தளர்கள் அல் லது தனிதர்கள் என்பனவாகும். பிராமண ஊர்கள் (பிரமதேயங்கள்) சில தனி ஊர்களாக இருந்தன. இவற்றிற்குள்ளும் சில தனி ஊர்கள் இருந்தன. அவற்றைப் 'பிடாகைகள்' என்பர். எடுத்துக்காட்டாக கோயில் பிடாகை என்பது தனி ஊருக்குள் இருக்கும் ஒரு தனி ஊர் ஆகும். தனி ஊர் நிருவாகத்தை நடத்திய சபை மகாசபை அல்லது முல் பருடை எனப்படும். இச்சபை ஊரில் வரிகளைத் தண்டல் செய்து அரசுக்கு அனுப்பும். இவ்வூர்களில் கணக்கு வழக்குகளைச் செய்வ தற்கு ஊர் கணக்கு என்ற அலுவலர் இருப்பார். தனி ஊர்கள் வள் நாட்டின் நேரடி நிருவாகத்தில் இயங்கி வந்தன. நீதித்துறை சோழர் கால ஆட்சியில் நீதித்துறை சிறப்பாக நடைபெற்றது. நீதிக்குத் தலைவன் அரசனே என்ற கோட்பாடு இக்காலத்தில் இருந்தது. ஆனால் வழக்குகளின் தன்மை , குற்றங்களின் பட்டியல், விசாரணை விதிகள் முதலிய நடைமுறை விதிகளும், சட்டங்களின் தொகுப்பும் இந்நாளில் இல்லை . ஆயினும், தருமசாத்திர, சம்பிரதா யங்களின் அடிப்படையில்தான் உசாவல் (விசாரணை)களும், தண்டனைகளும் இருந்தன. ஆனால், அவை ஒரே மாதிரியாகவும், முன் எடுத்துக்காட்டு களாகவும் இல்லை. சூழலுக்கேற்றவாறு இருந்தன. குற்றங்களில் குற்றவியல், உரிமை இயல் குற்றங்கள் என்றும் பாகுபாடுகள் இல்லை. எல்லாக் குற்றங்களையும் ஒரே நீதிமன்றமே உசாவும் விசாரிக்கும்); தண்டனையும் வழங்கும். பொருளியல், குற்றவியல் வழக்குகளுக்குத் தனித்தனி நீதி மன்றங்கள் இல்லை. உரிமை இயல் வழக்குகள் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட படலத்தில் ஆட்சி, ஆவணம், அயலவர்தம் சாட்சி என்ற மூன்று வகை சாட்சியின் பேரில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, சாட்சியின் அடிப்படையில்தான் உரிமை இயல் வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கப் பட்டன என்பதை அறிகிறோம். குற்றவியல் வழக்குகள் கொலை, திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்கள் குற்றவியல் குற்றங்களாகக் கருதப்பட்டன. இளவரசனைக் கொல்லு தல் அரச இரண்டகக் (இராச துரோக குற்றமாகக் கருதப்பட்டது. கோயில் சொத்துக்களைக் கொள்ளையடித்தது பெருங் குற்றமாகக் கருதப்பட்டது. குற்றங்களை விசாரிக்க தனியே நீதிபதிகள் இல்லை . கொலைக் குற்றம் போன்றவற்றை அரசனே விசாரித்துள்ளான். ஊர் அவையில் உள்ள தலைவர்களும், சிவப் பிராமணர்களும், பஞ்சா சாரியர்களும், சிறீகாரியம் செய்வோரும், ஆயிரத்து ஐநூற்றுவர், சித்திரமேழி நாட்டார் முதலியோரும் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். கொலை, கொலைக்கருவி, கொலையாளி என்றவற்றின் அடிப்படையில்தான் கொலைக்குற்றம் மெய்ப்பிக்கப் படும். இதைப் போலவே திருடும், திருட்டுப் பொருளும் ஆகும், குற்றம் சாட்டப்பட்ட பின், சாட்டப்பட்டவன் தன்னைக் குற்றவாளி அல்ல என்று மெய்ப்பிக்கத் தவறினால் அவன் குற்றவாளிதான் என்று தீர்மானிக்கப் பட்டு விடுவான். தண்டனைகள் தண்டனைகள் தண்டக் கட்டணங்களாகத் தண்டப்பட்டன. தண்டங்கள் பொற்காசுகளாகவும், பசு போன்ற சொத்தாகவும் இருக்கலாம். சில குற்றங்களுக்குச் சிவில் உரிமைகள் பறிக்கப் பட்டன, எடுத்துக்காட்டாக திருட்டு, கற்பழிப்பு, கோயில் சொத்துக் களைத் திருடுவது, சபைக் கணக்குகளை ஏமாற்றுதல், கையூட்டு வாங்குவது போன்ற குற்றங்களைச் செய்வோர் சபை உறுப் பினராகும் சிவில் உரிமையை இழந்துவிடுவர். கோயில் சொத்துக் களைக் கவர்ந்தோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தண்டத் தொகையைச் செலுத்தத் தவறினால் சொத்துக்கள் பறிமுதல் செய்த வழக்குத் தீர்ப்புகளும் உண்டு. தண்டனையாக கோயிலுக்கு விளக்கெரிப்பது என்பது எல்லோருக்கும் உரிய தண்டனை ஆகும். கொலையாளிகள் கூட விளக்கெரிக்கும் தண்டனை பெற்றுள்ளனர். கொலைக்கு மரண தண்டனைதான் என்பது முடிந்த முடிவு அல்ல. வருவாய்கள் சோழர் கால அரசுக்கு நிலவரியே முக்கிய வருவாய் ஆகும். குடிமக்கள் நிலம், சமுதாயநிலம், அரசனுக்குச் சொந்தமான நிலம் என நிலம் மூவகைப் பிரிவுகளாயிருந்தன. ஆறிலொரு பங்கு வரி என்பது பொது விதியாக இருந்தது. ஆனாலும் நிலவரி இடத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டது. நிலவரியைத் தவிர தொழில் வரிகள் வணிகவரி, சுங்கவரி, உப்பு வரி, நீர்ப்பாசன வரி, நீதிமன்ற தண்டங்கள் முதலியனவும் அரசுக்கு வருவாயாக வந்தன. புதிய கால்வாய்கள் வெட்டி அவற்றின் மூலம் நீர்ப்பாய்ச்சி முப்போகமும் பயிரிட்டால் பங்கு வரி செலுத்த வேண்டும். குறைந்த போகம் பயிரிட்டால் வரிவிகிதமும் குறையும். இது அவ்வப்பொழுது விதிக்கப்படும் வரி ஆகும். முதலாம் இராசராசனும் முதலாம் குலோத் துங்கனும் நிலங்களை அளக்கும்போது பிரித்தனர். அவ்வாறு ஏந்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. தரத்தின் அடிப் படையில் தான் வரி விதிக்கப்பட்டன. விளைச்சல் இல்லாத போதும், பஞ்ச காலத்திலும் வரி தள்ளுபடி செய்யப்பட்டது. நிலவரி இல்லாத போது கருவூல் நிலைப் பணத்தையும், பிற வருவாயையும் கொண்டு செலவுகள் சமாளிக்கப்பட்டன. இதைப் போலத்தான் குலோத் துங்கன் சுங்கம் தவிர்த்த போது செலவைச் சமாளித்தான், பஞ்ச காலத்தில் உழவர்களுக்குப் பஞ்ச நிவாரணங்களும் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் வருவாய் வரும்போதும் நிலவரியைக் கட்டாத உழவர்கள் நிலங்களை விற்று வரிப்பணத்தைச் சரி செய்யும் வழக்கமும் சோழர் காலத்தில் இருந்தது. உழவர்கள் நிலவரியைப் பணமாகவும், தானியமாகவும் கொடுக்கலாம். அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கும் முறையும், மானியம் வழங்கும் முறையும் இருந்தது. படை, விளைநில வசதிகள் முதலியவற்றிற்கே பெரும் தொகை செலவிடப்பட்டது. வருவாய்த்துறையின் பணிகளைச் செய்ய சிறந்த துறை இருந்தது. இதற்குப் 'புரவு வரித்திணைக்களம்' என்று பெயர். இதில் பலதரப்பட்ட அதிகாரிகள் பணியாற்றினர். நிலங்கள் பற்றிய விவரங் கள், வரிகள் பற்றிய விவரங்கள், நில உடமையாளர் பற்றிய விவரங் கள் முதலியன ஆவணங்களில் பதிந்து வைப்பர். அரசின் வருவாய் களைச் சேர்த்துவைக்க இருந்த கருவூலத்தைப் 'பண்டாரம்' என்றனர். நிலப்பதிவேடுகளைக் காத்து வைக்கும் இடம் ஆவணக்களரி' எனப் பட்டது. ஆவணங்களைப் பனை ஓலைகளிலும் செப்பேடுகளிலும் எழுதிவைப்பர். இவை கல்வெட்டுக்களிலும் செதுக்கப்பட்டிருக்கும். மதிப்பீடு சோழர் ஆட்சிமுறையைப் பற்றிப் பலரும் பலவாறு மதிப்பீடு செய்துள்ளனர். பிற நாட்டு ஆட்சி முறைகளோடு ஒப்பிட்டும், மார்க் சியத்தின் அடிப்படையில் ஒப்பிட்டும் மதிப்பீடு செய்துள்ளனர். சோழர் ஆட்சி கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்கும் 13-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டக் காலத்தில் தமிழகத்தில் நடந்தது. இக்காலத்தில் தமிழகம் சிறிதும் போதுமான பல்வேறு ஆட்சிப் பிரிவு களைக் கொண்டிருந்தது. இரத்தமும் இருப்பும் என்ற கோட்பாடு நிலவிய காலம் எனலாம். அரசர்கள் முடியாட்சிக் கோட்பாட்டில் சிறந்து நின்றனர். அக்கோட்பாட்டால் திடமான மைய ஆட்சி ஏற்பட்டது. ஆட்சியைக் காப்பாற்ற போர்கள் தேவைப்பட்டன. போர்கள் கொள்ளையடிக்கப் பட்டதற்காக அல்ல. நாட்டையும், மக்களையும் உறுபகையும், ஓவாப் பிணியும் நாடாமல் இருப்பதற்காகத்தான். நிலமானிய முறை தமிழகத்தில் என்றுமே இருந்ததில்லை. விசய நகரப் பேராட்சி அன்னியர் ஆட்சி. அவர்கள் காலத்தில்தான் நாயக்கர்கள் ஏற்பட்டனர். பிரிட்டானியர் ஆட்சியில் நிலக்கிழார்கள் (ஜமீன்தார்கள்) ஏற்பட்டனர். சோழர் காலத்தில் பணியிலிருக்கும் வரை அனுபவிக்கும் நில உரிமை மட்டுமே வழங்கப்பட்டன. தேவதானங்கள், பிரம்ம தேயங்கள் நிலமானிய முறை அல்லது சமயக்குரவர் ஆட்சியுமில்லை. அவர்கள் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் முழுமையாக என்றுமே கைப்பற்றியதில்லை. பொருளாதாரத்தையும், சமூகத்தையும், சமயத்தால் கைப்பற்றிய தால்தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளும், சாதியப் பூசல்களும் ஏற்பட்டன என்பது பொருந்தாது. பிராமணன் என்ற சொல்லையே அறியாத தமிழகத்தில் பிராமணப் பூசாரிகளை இறக்குமதி செய்தவர்களே பல்லவர்கள்தாம். எனவே சோழர் மரபு வழிதான் பிரமதேய தேவதானங்களைக் கொடுத்தனர். கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனைதான் என்ற முடிந்த முடிவு இல்லை. விளக்கெரிக்கும் தண்டனை கொலைக் குற்றத்திற்கும் இருந்தது. இது இன்று பேசப்படும் மனித உரிமைக் கோட்பாட்டைக் காட்டுவதாகும். ஆகவே, சோழர் ஆட்சிமுறை தண்டல் ஆட்சி அல்ல, விளைச்சலுக்கு ஏந்துகள் செய்யப்பட்டன, பஞ்ச காலத்தில் வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு பஞ்ச நிவாரணப் பணிகளும் மேற் கொள்ளப்பட்டன. வரிக்கட்டாதார் நிலம் விற்கப்பட்டு வரி சரி செய்யப்பட்டது என்பது போதிய விளைச்சல் இருந்தும் வரிக் கட்டாதவரைத் தண்டித்தது சரியான ஆட்சி ஆகும், நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான நிலைப்படைகளை வைத்திருந்தனர். அன்றைய ஆட்சியாளர் எவரிடமும் இல்லாத நாவாய்ப்படை சோழர்களிடம்தான் இருந்தது. இத்தகைய படை முறை ஆட்சி சிறப்பானதாகும். வாரிசுரிமைப் போர்களும், உடன்பிறப்புச் சகோதரத்துவ) சண்டைகளும் அதிகம் சோழர் காலத்தில் ஏற்படவில்லை. அந்த அளவு முடியாட்சிக் கோட்பாடும், செயல்பாடும் சிறப்பாக அமைந்திருந்தது. ஆட்சி அலுவர்கள் அல்லது அதிகாரிகளுக்குக் கட்டுப்பா டில்லாத அதிகாரம் கொடுக்கவில்லை, ஊராட்சி முறையில் உலகமே வியக்கும் சட்ட திட்டங்கள் இருந்தன. அரசு அதில் தலையிடுவதில்லை . சமூக அமைப்பு முறையில் பிராமணர் பெற்றிருந்த செல்வாக்கால் மகாசபை ஆட்சி ஏற்பட்டது. இது பாரபட்சமானதன்று. (உ) சமுதாய வாழ்க்கை சாதிப்பிரிவுகளும் சாதிச் சண்டைகளும் சோழர்கால மக்கள் வாழ்கையில் மேடு பள்ளங்கள் அதிகம் காணப்பட்டன. ஆனால், அக்கால மக்கள் மன்னர் ஆட்சியில் கொண்டிருந்த மனநிலையால் தங்களுக்கேயிருந்த உயர்வு தாழ்வுகளை மறந்து மனநிறைவோடு வாழ்ந்தனர். சோழமன்னர்கள் நில அளவு களை மேற்கொண்டு துல்லியமாக தரம் பிரித்து, வரித் தண்டல் செய்தார்களேயொழிய மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவில்லை. அவர்களுக்குள்ளேயே நிலவும் உயர்வு தாழ்வுகள், சாதிய வேற்றுமைகள்; 'சாதிசமய பிரிவுகளின் பெயரால் அன்றாடம் நடக்கும் சண்டைகள் முதலியன பற்றிக் கவலைப்படவில்லை . வருணாச்சிரம தருமத்தைக் கட்டிக்காத்து, ''தரும் மகாராசாக்கள்" என்று பெய ரெடுத்தனர். சோழர்கால கல்வெட்டு களில்தான் முதன் முதலாக சாதி இழிவுகள் பதியப்பட்டுள்ளமை . அக்கால சமுதாய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தணர், வணிகர், வெள்ளாளர், படைவீரர் தவிர அவரவர் செய்யும் தொழில் வழியே அவரவர் தனித்தனி சாதிகளாய் இருந்தனர். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடுகள் ஒருவரின் அல்லது ஒரு சமுதா யத்தில் செல்வம் அல்லது அறிவுடைமை முதலியவற்றை அடிப் படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டது. அந்த வகையில் பிராமணர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த சாதியாகப் போற்றப்பட்டனர், பிராமணர்கள் பார்ப்பனர், அந்தணர், வேதியர் முதலிய வெவ்வேறு பெயர்க ளால் அறியப்பட்ட பிராமணர், மன்னர்களால் போற்றப்பட்டு பிரம்ம தேயம், சதுர்வேதி மங்கலம் முதலிய தானங்களைக் கொடுத்து, தேவதானங்களில் (கோவில்களில்) அமர்த்தப்பட்டு அரசர்களால் ஆராதனை செய்யப்பட்டனர். இவர்களுக்கு வழங்கப்படும் நிலங் களுக்கு வரித்தண்டல் செய்யமாட்டார்கள். எனவே, இந் நிலங்கள் "இறையிலி நிலங்கள்'' எனப்பட்டன. இவர்களுக்கு நிலங்களை, வழங்கும்போது அவற்றிற்கான எல்லைக்கோடுகளை வகுத்து, வேலியமைத்து நீர்வளம் சேர்த்துப் பல்வேறு பரிகாரங்களுடனும் சலுகைகள் வழங்கப்பட்டன. கோயில்களில் தொல் கதைகளை {புராணங்கள்) மக்களுக்கு விளக்கிக் கூறவும், பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களைப் பற்றிய தொடர் சொற்பொழிவுகளைச் செய்யவும், கோயில் திருப்பூசை செய்யவும், இப்படியாகப் பல்வேறு பரிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. வேதங்களை விளக்கி யுரைப்போருக்கு ''வேதவிருத்தி' என்றும், பாரதக் கதையைக் கூறுவோருக்கு "பாரத விருத்தி" என்றும், புராணங்களை உரைப் போருக்கு புராண விருத்தி" என்றும், இவ்வாறாகப் பல்வேறு இறையிலி நிலங்களை அவர்களுக்கு வழங்கினர். இத்தகைய இறையிலி நிலங்கள் தனிப்பட்ட பிராமணருக்கும், கூட்டாகப் பலருக்கும் வழங்குவதுண்டு. 'பல ஊர்களைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக வழங்கப்படும்போது அது "'பிரம்ம தேயம்" எனப்பெறும். இருக்கு, யசூர், சாம, அதர்வண ஆகிய நான்கு மறை களிலும் தேர்ந்தவருக்கு வழங்கப்படும் ஊர் "சதுர் வேதிமங்கலம் " எனப் பெறும். இவ்வாறு சிற்றூர்களையும், பேரூர்களையும், பல ஊர்களை யும் பெற்ற பிராமணர்கள் அவ்வூர்களில் தங்களுக்கென ஊர் சபை களை அமைத்துக்கொண்டனர். அவற்றில் பிராமணர்கள் மட்டுமே உறுப்பினர் களாகவும், தலைவர்களாகவும் இருப்பர். இச் சபைகளில் நிறை வேற்றப்படும் எத்தகைய தீர்மானத்திற்கும் அரசன் கட்டுப் பட்டே ஆகவேண்டும் என்ற நியதி கிடையாது. எனவேதான் சோழர் காலத்தில் "செங்கோல் பூணூலுக்குத் தலை வணங்கியது" என்பர். கோயில் கோயில் பணிகளும், அவற்றிலுள்ள அறக்கட்டளைகளும் (நிவேதங்கள் பிராமணர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. இவற்றை ஏற்று நடத்தும். பிராமணர்களுக்கு 'மூலப்பருடையோர்" என்று பெயர். இவ்வாறு, கோயில் நிர்வாகம் முழுவதும் பிராமணரிடமே விடப்பட்டது. கல்வி அடுத்து, ''கல்வி' 'அவர்களின் தனியுடமையானது. இக் காலத்தில் கல்வி யென்றால் அது வேதக்கல்வியாகும். அது சமற்கி ருதம் வழிதான் கற்பிக்கப்பட்டது. கல்விக்கூடங்கள் (வேதப் பாட சாலைகள் முழுக்க முழுக்க அரச மானியத்தில் நடத்தப்பட்டன, ஆசிரியர் யாவரும் பிராமணரே! வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலியன இப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு, கோயில் நிருவாகம், பள்ளி நிருவாகம் இரண்டுக் கும் இவர்களே முழு பொறுப்பேற்ற பின், நாட்டின் நிருவாகத் திற்கும், நயன்மை மன்றங்களுக்கும் இவர்கள் கீழ்ப்படிந்து நடப்பு தில்லை. அவர்களின் பிரம்மதேய சபைகள் மகாதேவ மங்கல சபைகள் ஆகியவைகளில் உள்ள நயன்மையரே (நீதிபதிகள்) தீர்ப்புகளை வழங்குவர். இவற்றில் வேத, சாத்திரங்களைக் கற்றறிந்த பிராமணர்கள் நடுநிலையாளர்களாகயிருந்து அறிவுரை யளிப்பர். பிராமணர்களில் சிலர் சிறந்த படைத்தலைவர்களாகவும், பரம்பரை அமைச்சர்களாகவும் விளங்கினர். வேள்வி வேட்டலும், செய்வித்தலும், ஓதுவித்தலும் பிராமணர் தொழிலாகும். மற்ற எவரும் இதனைச் செய்யக்கூடாது என்ற மரபுரிமைப் பெற்றிருந்தனர். "விசுவப் பிராமணர்" என்ற கம்மாளர் முப்புரி நூலும், வேள்வி செய்யவும் உரிமைக் கேட்டபோது அவர்களின் தனியுரிமையாகி விட்டது. இவ்வாறு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும், பொது விதிகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இவர்கள் கட்டுப்படாதவாறு அரசனிடம் தனியுரிமை பெற்றிருந்ததால் இவர்களைப் "பூவுலக தேவர்கள்" என்றனர். எடுத்துக்காட்டாக உயிர்க்கு உயிர் என்பது, எக்காலத்தும் நிலவும் தண்டனைச் சட்டம். ஆனால் முதலாம் இராச இராசனின் அண்ணனான "' ஆதித்த கரிகாலன் கொலைக்கு கரணியமானவன் இரவிதாச சிரமதவித்தன் என்ற பிராமணனாவான். அவனைத் தூக்கி விடுவதற்கு மாறாக அவனுடைய நிலத்தைப் பறிமுதல் செய்தனர். எனவே, அரசனைக் கொலை செய்தாலும் மரணதண்டனை பெறமாலிருக்கும் மாபெரும் தனியுரிமையைப் பிராமணர்களுக்குச் 'சோழ அரசர்கள் கொடுத்திருந்தனர். அனுலோமர் பிரதிவோமர் பிராமணர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாயிருந்தும், சமுதாயத் திலிருந்து பிரிந்து தனித்தே காணப்பட்டனர். அவ்வாறே ஒரு சாதியும், மற்றொரு சாதியும் குருதி உறவால் ஒன்று சேரவிடாமல் காத்தனர். அவர்கள் சொல்படியே சாதிய தருமத்தைக் காத்ததால் தான் அரசர்கள் "தரும் மகாராசாக்கள்" என்று அவர்களால் புகழப் பட்டனர். இத்தகையக் கட்டுப்பாட்டையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டால், அவர்களின் பிள்ளைகளைக் கலப்புச்சாதிப் பிள்ளைகள் அல்லது சங்கரசாதிபிள்ளைகள் என்றழைத்தனர். ஓர் உயர்குலத் தந்தைக்கும், தாழ்குலத்துத் தாய்க்கும் பிறக்கும் குழந் தையை அனுலோமர் குலத்தைச் சேர்ந்ததென்றும், ஓர் உயர் குலத் தாய்க்கும் தாழ்குலத்துத் தந்தைக்கும் பிறக்கும் குழந்தையைப் பிரதி லோமர் குலத்தைச் சேர்ந்ததென்றும் அழைத்தனர். இத்தகையக் கலப்புத் திருமணங்களால் சாதிகள் பெருக்கல் வாய்ப்பாடுகள் எண்ணிக்கையில் பெருகிவிட்டன. கம்மாளர், கைக்கோலர், அகமுடையார் முதலிய சாதியாருக் குச் சமூகத்தில் பல உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. சோழர் "காலத்தில் இவர்கள் போராடி சில உரிமைகளைப் பெற்றனர். மாடி வீடு கட்டிக் கொள்ளவும், குடைபிடித்து நடக்கவும், சவ ஊர்வலத்தில் பாடைக்கு பச்சைப் பாவடைக் கட்டிக் கொள்ளவும், முன்னே சங்கு ஊதிச் செல்லவும், எக்காளம் என்ற இசைக் கருவியை இசைத்துக்கொள்ளவும் உரிமைப் பெற்றனர். கைக்கோலர்களில் அரசகுடும்பத்திற்கு ஆடைகளை நெய்து கொடுப்பவரும், கோயில் கொடிக்கம்பத்திற்கும், பிற பூசைகளுக்கு ஆடை நெய்து கொடுப்பவரும் உயர்வாகக் கருதப்பட்டதோடு அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மற்ற கலப்புச்சாதிகள் இவ்வாறு குலங்கோத்திரங்களைப் பாராமல் கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் இரதக்காரர்கள் என்பவர்களும் ஒன்று. சத்திரிய வகுப்புத் தந்தைக்கும், வைசியவகுப்புத் தாய்க்கும் பிறந்தவர்கள் மாகசியர்கள் எனப்பட்டனர். வைசியத் தந்தைக்கும், சத்திரிய தாய்க்கும் பிறந்தவர்கள் சுரனிகள் எனப்பட்டனர், மாக்சியர் தந்தைக்கும், சுரனிகள் தாய்க்கும் பிறந்தவர்கள் இரதக்காரர்கள் ஆவார். இந்த இரதக்காரர்கள் கட்டடம் கட்டுதல், இரதங்களைச் செய்தல், வேள்விக்கு வேண்டிய தட்டுக்கள் மற்றும் பொருள்கள் செய்தல், மண்டபங்கள் கட்டுதல், மன்னர்களுக்கு வேண்டிய மகுடங்கள் செய்தல் ஆகிய தொழில்களைச் செய்தனர். இவ்வாறு, மன்னர்களோடு தொடர்புடைய தொழில்களைச் செய்ததால் இவர்களுக்கு உபநயனம் செய்து கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டது.) இடையர்கள் இவர்களை மன்றாடிகள் என்றும் அழைப்பர். கோயில் களுக்குத் தானமாக விடும் கால்நடைகளை மேய்த்து கோயில் களுக்குத் தூண்டா விளக்கேற்ற நெய் கொடுப்பர். இவர்களும் அரசனுடைய ஆணையைப் பெற்று, தங்கள் வீடுகளுக்கு இரண்டு வாயில்கள் அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றனர். தாங்கள் கொண்டாடும் விழாக்களில் எக்காளம், முரசு ஆகியவற்றை ஒலிக்கும் உரிமை யையும் பெற்றனர். வணிகர்கள் நாட்டின் முதுகெலும்பாய் திகழ்பவர்கள் வணிகர்கள். இவர்கள் ஊர்களில் நிருவாகப் பொறுப்பையும், கோயில் குளங் களைப் பராமரிக்கும் பொறுப்பையும், கல்வி, கலை வளர்ச்சிக்கும் பொறுப் பேற்று வாழ்ந்தனர். அயல்நாடுகள் சென்று வாணிகம் செய்த இவர்களால் கடல்கடந்து தமிழர் நாகரிகமும், பண்பாடும் பரவியது. எனவே, இவர்கள் அரசர்களிடம் நன்மதிப்பைப் பெற்றி ருந்தனர். நகரத்தார், வலஞ்சியர், நானாதேசிகர், திசையாயிரத்து ஐந் நூற்றுவர், மணிகிராமத்தார் முதலிய வணிகக்குழுவினர் கடல் கடந்து வாணிகஞ் செய்து வந்தனர். இவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக தனிப்படையும் வைத்திருந்தனர். இவர்கள் கடல்கடந்து சென்று கம்போஜம், மலேயம், சீனம், யாவா, சுமத்திரா, அரேபியா முதலிய நாடுகளிலும் பாதுகாப்பு அளித்தனர். முதலாம் இராசேந்திரன் தமிழ்நாட்டு வணிகரின் பாதுகாப்புக்காகவே சிரீ விசய நாட்டின் மீது படையெடுத்தான் என்பது வரலாற்று உண்மையாகும். இவர்கள் தனி ஊர்களிலும், வளாகங் களிலும், வீதிகளிலும் வாழ்ந்தனர். மறவர்கள் மன்னர்களின் புகழுக்கும், ஆட்சிப்பரப்புக்கும் அடித் தளமாய் திகழ்ந்தவர்கள் போர்வீரர்களே. இவர்களுக்கு அரசன் பொருளாகவும் , நிலமாகவும் ஊதியம் அளித்தான். போரின்போது கிடைக்கும் கொண்டிப் பொருளை அரசனும், போர்வீரர்களும் பகிர்ந்து கொள்ளுவர். பெரும்பாலான கொண்டிப் பொருள்களைக் கோயில்கள் கட்டுவதற்கும், அந்தணருக்குத் தானமாகவும் கொடுத் தனர். தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கைகொண்ட சோழீச்சரமும் இத்தகைய கொண்டிப் பொருளால் கட்டப்பட்டவையே என்பது வியப்பாக உள்ளதல்லவா? வேளாளர்கள் உழவுத் தொழிலைச் செய்தவர்கள் வேளாளர் எனப்பட்டனர். வெள்ளத்தை (தண்ணீரை) ஆண்டதால் வேளாளர் எனப்பட்டனர். சோழர்காலத்தில் நிலங்களை அளந்து மிகச்சிறிய அளவையும் ஆவணத்தில் குறிப்பிட்டனர். நிலம் அளப்பதற்கு உலகளந்த கோல் பயன்பட்டது. இவர்களைத் தவிர பொன், வெள்ளி, மாணிக்கக் கற்கள் முதலியவற்றால் நகைகளைச் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்பட்டனர்; இரும்பு வேலை செய்பவர் கருமார் எனப்பட்டனர். மற்ற உலோகங்களால் அன்றாடப் பயன்பாட்டிற்கு வேண்டிய பாத்திரங்களைச் செய்வோரும், நெசவுத் தொழிலைச் செய்வோரும், உப்பு எடுக்கும் உமணரும், பலரும் பல்வேறு தொழில்களைச் செய்வோரும் சாதிப் பெயர்களால் அறியப்பட்டனர். சோழர்காலத் தில் கப்பல் கட்டும் தொழில் வல்லவர்கள் சிறந்து காணப்பட்டனர். இவ்வாறாக, தொழில் வழியும் குலம், கோத்திரம் வழியும் சோழவள் நாட்டில் சாதிவளமே மேம்பட்டு இருந்தது. பறையர்கள் சமுதாயத்தோடு சேர்ந்து வாழாமல் தனித்து வாழ்ந்த பிராமணர் களைப்போலவே பறையர் எனப்படுவோர் தனிச்சேரிகளில் வாழ்ந்தனர். அவர்களுக்குச் சொத்துரிமை, குடியுரிமை யாவும் உண்டு. அரசு ஆவணங்களிலும், பத்திரப்பதிவுகளிலும் அவர்கள் கையெழுத்திட்டனர். கோயில்களுக்குத் தானம் வழங்கினர். பறையர்களில் பல பிரிவினர் இருந்தனர். இவர்களில் ''புல்லறுக்கும் பறையர்" "அரிப்பான் பறையர்" ஆகியோர் தாழ் வானவர்களாக கருதப்பட்டனர். பொதுவாக சிவன் கோயில்களுக்கு விளக்கேற்றும் உரிமையும் இவர்களுக்கிருந்தது. இதற்காக மானிய மும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. பசுக்கறியை உண்பவர்களைப் புலையர்களென்றும், தாழ்வானவர்களென்றும் இழிவாகக் கருதினர். எனவே, பறையரில் பல்வேறு பிரிவினர் இருந்தனர் என்பது தெளி வாகிறது. ஆயினும், இவர்களைத் தீண்டத்தாகதவர்களென்று ஒதுக்கி வைக்கவில்லை. பறையருக்கும், பிறசாதியருக்குமிடையே ஏற்படும் சாதிக்கலவரங்களில் சந்து செய்து வைக்க வேளாளரும், பிரா மணர்களும் தலையிடுவர். வலங்கை , இடங்கைப் பிரிவினர்: சோழர்காலத்தில் ஏற்பட்ட இந்த வலங்கை, இடங்கை சாதிப் பிரிவுகளால் சமுதாயத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இரு பிரிவினருக்குமிடையே மோதல்கள் அதிகரித்தன. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினர் மீது போர் தொடுத்தல், வீடுகளுக்கு எரியூட்டுதல், கோயில்களை இடித்தல், பொருளைச் சூறையாடுதல் முதலியக் கொடிய செயல்களைச் செய்தனர். இதனால் அடிக்கடி அரசனும் தலையிட வேண்டியதாயிற்று. இத்தகையச் சாதிப் போராட்டங்கள் பல நூற்றாண்டுகளாக சோழர்காலம் முழுவதும் தொடர்ந்து காணப் பட்டன. இந்த இடங்கை, வலங்கை சாதிப்பிரிவுகள் ஏன் ஏற்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை! கர்னல் மெக்கன்சி என்பவர் நாடு முழுவதும் அலைந்து திரிந்து பல அரிய ஓலைச்சுவடிகளைத் திரட்டினார். அவற்றிலொன்று கரிகாலனைப் பற்றிக் கூறும் வரலாறு ஆகும். அதில்தான் வலங்கை, இடங்கை பற்றிய ஒரு சில செய்திகள் கிடைக்கின்றன. அதன்படி, இப்பிரிவுகளில் வகைக்குத் தொண்ணூற் றெட்டு சாதிகள் (குலங்கள்) இருந்தனவென்றும், இவ்விரு பிரிவினரும் தங்களுக்குள் சச்சரவு ஏற்பட்டபோது சோழ அரசனிடம் சென்று இடப் பக்கம் பாதிபேரும், வலப் பக்கம் பாதிபேரும் நின்று வழக்குரைத்து நீதி கோரினரென்றும் அதிலிருந்துதான் இடப் பக்கம் நின்றவர்கள் இடங்கையினர் என்றும், வலப்பக்கம் நின்றவர்கள் வலங்கையினர் என்றும் அழைக்கப்பட்டனர். இதுவே ஒலைச்சுவடி தரும் இடங்கை, வலங்கை பிரிவினரின் தோற்றம் பற்றிய வரலாறு ஆகும். இதைப் போலவே மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டொன் றில் இப்பிரிவினரின் தோற்றம் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. காசி யப்பர் என்ற முனிவர் செய்த வேள்வியைக் காக்க, அம்முனிவர் தனது ஓமகுண்டத்திலிருந்து தொண்ணூற்றெட்டு இடங்கைப் பிரிவினரைத் தோற்றுவித்தாரென்று கூறப்படுகிறது. வேள்வி முடிந்த பின்னர் இவர்கள் சோழநாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, பல ஊர்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு அரசனால் பல உரிமைகள் வழங்கப்பட்டன. குடைப்பிடித்துச் செல்லவும், கொம்பு ஊதிக் கொள்ளவும், மற்றும் பல சின்னங்களை வைத்துக்கொள்ளவும் உரிமைகள் பெற்றனர். இது அக்கல்வெட்டில் காணப்பெறும் இடங்கைப் பிரிவினர் பற்றிய வரலாறு ஆகும். இவ்வாறு இடங்கைப் பிரிவினர் பெற்ற உரிமைகளை எதிர்த்த பலர் அரசனிடம் சென்று அவனது வலப் புறத்தில் நின்று நியாயம் கேட்டனர். இவர்களே வலங்கைப் பிரிவினர் என்று நாளாவட்டத்தில் அறியப்பட்டனர். இவ்வாறு ஏற்பட்ட இடங்கை, வலங்கை பிரிவினர் ஒவ் வொன்றிலும் காணப்பட்டனர். இவர்கள்ளுக்காக இடங்கை கோயில் கள், வலங்கை கோயில்கள், இடங்கை தேவரடியார்கள், வலங்கை தேவரடியார்கள் என்று ஏற்பட்டன. இதனைக் குறிக்க, பெண்கள் இடப் புறமும், வலப் புறமும் முறையே மாராப்புப் போட்டனராம். இவர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகளால் புனிதமாகக் கருதப்படும் கோயில்களும் இடிக்கப்பட்டன வென்றால் சாதிச் சண்டைகளின் தாக்கம் பற்றி எளிதில் அறிந்து கொள்ளலாம். அரசன் இவர்களை முறையே இடங்கை மாசேனை, வலங்கை மாசேனை என்றழைத்தான். அரசனுக்குப் பேருதவியாக நின்ற போர் மறவர்கள் போன்றோர் வலங்கையினர் என்றும் இடங்கை யினர் என்றும் ஆயினர். ஆனால் பிராமணரும், வேளாளரும் எந்தப் பிரிவிலும் சேரவில்லை, போர்மறவர்களான வன்னியர் வலங்கை யினர் ஆயினர். அரசனிடம் அதிக சலுகைகளைப் பெற்றவர் வலங்கைப் பிரிவினரேயாவர். கோயிலுக்கு அளிக்கப்படும் நன்கொடை (வரி) "மகன்மை ' எனப்பட்டது. அது கூட வலங்கை மகன்மை, இடங்கை மகன்மையென பிரித்தறியப்பட்டது. சுங்கவரி வணிகர்களிடமிருந்து தண்டல் செய்யப்பட்டது. அதை அதிகமாக ஏற்றித் தண்டல் செய்ததால் வணிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். வணிகர்கள் இடங்கையினர். எனவே இடங்கைப் பிரிவினர் ஒட்டுமொத்தமாக கிளர்ந்து எழுந்து இதனை எதிர்த்தனர். கோயில்களை இடித்தனர். வீடுகளைக் கொளுத்தினர். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளைக்கூட்டத்தினர் கொள்ளை, கொலை முதலிய செயல்களிலீடுபட்டனர். இந்தக் குழப்பத்தை அடக்கமுடியாமல்தான் குலோத்துங்கச் சோழன் சுங்க வரியை நீக்கி ''சுங்கம் தவிர்த்த சோழன்" என்ற பெருமையைப் பெற்றான். இது இடங்கை, வலங்கை சச்சரவுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். ஒரு சமயம் இத்தகையச் சாதிச்சண்டையில் வீரராசேந்திர சோழன் மகனான ஆதிராசேந்திரன் கொல்லப்பட்டான். இவனைக் கொன்றவர்கள் இடங்கைசாதிப் பிரிவினர், இவ்வாறு அரசனையே கொல்லு மளவுக்கு இந்த இடங்கை, வலங்கை சண்டை வலுத்தது. மக்களின் வாழ்க்கை முறைகள் அரசகுடும்பத்தினர் சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரங் களைக்கொண்டு பார்க்கும்போது அரசர்களும், அரச குடும்பத் தினர்களும் உயர்வானவர்களாக மதிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி அரண்மனைகளிருந்தன. அவற்றில் பல பணியாட்களும் மெய்க் காப்பாளர்களுமிருந்தனர். அரண்மனையில் பணியாற்றும் பெண் களுக்குப் பெண்டாட்டிகள்' என்று பெயர். அரண்மனைப் பணியாளர்கள் வசிக்கும் தனி இடங்கள் 'வேளம்' என் றழைக்கப்பட்டன. அவரவர் செய்யும் பணிகளுக்கேற்பவும் வேளங்களிருந்தனர். போரில் சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு இந்த வேளங்களில் வாழ முதலில் இடம் தரப்பட்டது. இவை கோநகருக்கு வெளியிலிருந்தன. குருமார்கள் சோழமன்னரில் பெரும்பாலோர் சைவர். எனவே, சைவ குருமார்களுக்குச் சமுதாயத்தில் மதிப்பு ஏற்பட்டது. குருமார்கள் அரசவையிலும் இடம்பெற்றிருந்தனர். அவர்களைக் கலந்து ஆலோசித்தே அரசன் எந்த முடிவையும் எடுப்பான். நகரவாழ்க்கை சோழமன்னர்களை மக்கள் கடவுளின் திருவுருவமாக வழிபட்டனர். மன்னரும், பட்டத்தரசியும், அரசகுடும்பத்தாரும் அரண் மனையில் வாழ்ந்தனர். மன்னர் வாழ்ந்த கோநகரிலும், அவருடைய உறவினர் வாழ்ந்த பெருநகர்களிலும் பெரிய மாட மாளிகைகளும், அகன்ற தெருக்களும், அதிகமான மக்களும் வாழ்ந்தனர். காஞ்சி, தஞ்சை, மதுரை முதலியன சிறந்து காணப்பட்ட நகரங்களாகும். மக்கள் வாழ்க்கை இந்நகரங்களில் வளமாகவும், வேண்டிய வசதிகளோடும் காணப்பட்டன, நகர வாழ்க்கை முறைக்கு இவை எடுத்துக் காட்டுகளாய் திகழ்ந்தன. அரண்மனை வாழ்க்கை ஓவ்வொரு அரண்மனையும் ஒரு நகரமாகவே காட்சியளித்தது. அதனுள் பல வளாகங்களிருந்தன. காவல்காரர்களுக்கும், படை கலன்களை வைப்பதற்கும், பெண்களின் உடமைகளைப் பாது காப்பதற்கும் தனித்தனி அறைகளிருந்தன. அரசியாரின் உவளகம் அந்தப்புரம்) பெண்கள் மட்டுமே செல்லும் தனியிடமாக இருந்தது. இதனைச்சுற்றிலும் படை யேந்திய காவற் பெண்டிர் பணி புரிந்தனர். உவளகத்தில் வண்ணத் திரைச் சிலைகளும், பட்டாடை களும் போர்த்தப்பட்ட நிலைக் கண்ணாடிகளுமிருக்கும். கூத்துப் பள்ளி (நாடகமேடை), நீராடும் பொழில்கள், வழிபடும் கோயில் முதலியனவும் அரண்மனைக்குள்ளிருந்தன. பெண்கள் விளையாடி மகிழப் பொன்னூஞ்சல்களும், இன்பமுற மணிமண்டபங்களும், நந்தவனச் சோலைகளும் அரண்மனைக்குள்ளிருந்தன. பொன்னாலும், வெள்ளி யாலும், செய்யப்பட்ட யானை, மான், மயில் போன்ற படிமங்கள் ஆங்காங்கே காணப் பெற்றன. அரசனின் கொலுமண்டபம் இவற்றிற் கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் அழகும், ஆடம்பரமு மிக்கதாயிருக்கும். அரண்மனையைச் சுற்றிலும் அகன்ற ஆழமான அகழிகளி ருந்தன. அவற்றில் முதலைகளும், சுறா மீன்களும் வலம் வந்தன. வாயில்களை மிலேச்சர்கள் படையேந்தி காத்து நின்றனர். மகளிர்நிலை சோழர்காலத் தமிழ்ப் பெண்கள் சகல உரிமைகளோடு வீர மாய் வாழ்ந்தார்கள். ஆனால், கற்பு நெறித் தவறாதவர்கள், அரண் மனையிலும், உவளகத்திலும் படையேந்தி காவல் புரிந்தனர். பெண்களுக்குச் சொத்துரிமையும், தனிச்சொத்துமிருந்தது. "ஒருவ னுக்கு ஒருத்தி" யென்ற மரபுவழி வழக்கமே இருந்தது, ஆனாலும், செல்வந்தரும் அரசரும் பல பெண்களை மணந்தனர். கணவன் இறந்ததும் அவனைக் கொளுத்தும் தீயில் தானும் தற்கொலை செய்துகொள்ளும் வடவர் வழக்கம் இக்காலத் தமிழ்ப் பெண்களுக் குண்டு. இதனையே 'உடன் கட்டையேறுதல்' என்கிறோம். அவ்வாறு, தற்கொலை செய்து கொள்ளும் பெண்களுக்குக் கோயிலெடுத்துக் கற்புத் தெய்வமாக 'மாசாத்திக்கல் நட்டு வழிபட்டனர். கணவனை இழந்த பெண்கள் மலர், குங்குமம், தாலி ஆகியவற்றை அணிய மாட்டார்கள். மொட்டையடித்து மூலையில் மறைந்து கிடந்தனர். தேவரடியார்கள் சிறுமிகளைச் சாமி திருவுருவங்களுக்கு முன் தாலிகட்டி கடவுளுக்கே மனைவியாக்கி, கோயில் பணிக்கென விடப்படும் அடியார்களையே (தேவர்+அடியார்கள்) தேவரடியார்கள் என்கி றோம். இவர்களுக்கு நித்தியக்கல்யாணிகள், தலைக் கோழிகள், தளிச்சேரிப் பெண்டிர், பதிவிலார், கோயில் பினாக்கள் முதலிய வேறு பெயர்களும் உண்டு. இவர்கள் கடவுளையே கணவனாக வரித்துக் கொண்டதால் மாந்தர் எவரையும் மணக்கமாட்டார்கள், ஆண்டவ னின் திருஉருவச் சிலை முன் ஆடல் பாடல்களை நிகழ்த்துவதும், ஊர்வலத்தில் அவர்முன் ஆடிப் பாடிச் செல்வதும் இவர்களுடைய பணிகளாகும். அத்தோடு, கோயிலில் திருவிளக்கு ஏற்றுவதும், கோயிலை மெழுகித் தூய்மைப்படுத்துவதும் இவர்களுடைய மற்றத் திருத் தொண்டுகளாகும். இவர்கள் இசை, நடனம், ஒப்பனைக் கலைகளில் சிறந்து காணப்படுகின்றனர். இவர்களுக்கென்றுத் தனியாக நிலங்களும், மானியங்களாக விடப்பட்டன. இவர்களுடைய தொழில் பரம்பரை யானது. கோயில்களில் தேவரடியார்களைத் தவிர நட்டுவனார், பானார் முதலிய பணியாட்களும் இருந்தனர். கோயில்களில் கூத்தும், இசையும் இவர்களால் அரங்கேற்றப்பட்டன. சாந்திக் கூத்து, சாக்கைக் கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க் கூத்து, தெருக்கூத்து முதலிய கூத்துகளும் இவர்களால் நடத்தப்பட்டன. பொதுவாகக் கூத்தாடு வோரைக் 'கூத்தாடிகள்' அல்லது 'கூத்துப் பெருமக்கள்" என்று அழைத்தனர். கோயில் விழாக்காலங்களிலும், கோயில் மடங்களிலும் இத்தகையக் கூத்துக்கள் நடத்தப்பட்டன. அடிமைகள் போர்க்களத்தில் தோற்றவர்களை அடிமைகளாகப் பிடித்து வருவது வழக்கம். ஆனால் சோழர்காலத்தில் அவர்களுக்குத் தனியே "வேளம்' என்ற நகரப்புரத்தை அமைத்து தன்னுரிமையோடு வாழவிட்டனர். கடன்பட்டவர், கடன் கொடுத்தவருக்கு அடிமையாவது முண்டு. ஆயினும், அவர் வாழ்நாள் அடிமையாக இருக்கமாட்டார். கடனுக்காக உடல் உழைப்பை மட்டும் தருவார். எனவே, ''அடிமைகள்' என்று இக்காலத்தில் எவரும் இல்லை . மக்களே தங்களைக் கோயில்களுக்கு அடிமைகளாக்கிக் கொண்டு, திருத் தொண்டு செய்தனர். ஒரு குடும்பமே பல தலைமுறைகளாக கோயி லுக்கு அடிமைகளாயிருந்து தொண்டு செய்வதுண்டு. இவர்களைக் கோயில் பிள்ளைகள் என்றும் அழைப்பர். உதிரப்பட்டி பிறருடைய நலத்திற்காக தன் நலத்தையும், உயிரையும் கூடத் துறப்பவர்களுக்கு ஈகச் (தியாகச்) சம்பளம் வழங்கப்படுவதுதான் ''உதிரப்பட்டி" எனும் தானம் ஆகும். எடுத்துக்காட்டு: தன்னைக் காத்து வந்த ஒருவருக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குவதற்காக ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். இவனுடைய வாரிசுக்கு உதிரப்பட்டி வழங்கப்பட்டது. இதைப் போலவே போரில் விழுப்புண் பட்டு வீரமரணமடைந்தவனுக்கும், கோயில் மண்டபம் கட்டி முடிந்ததை முன்னிட்டுத் தன்னையே காவுக் கொடுத்துக் கொண்டவனுக்கும், கோயில் நிருவாகியின் தவறு களைக் கண்டித்து தீப்பாய்ந்து மாண்டவனுக்கும் இவர்களுடைய வாரிசுகளுக்குத் தியாகச் சம்பளம் அல்லது 'உதிரப்பட்டி' தானம் வழங்கப்பட்டது. உணவுவகைகள் சோழநாடு சோறுடைத்து என்பர். சோழர்காலத்தில் தமிழ் மக்களின் உணவு அரிசியேயாகும். பலவகையான நெல் வகைகள் விளைவிக்கப்பட்டன. அரிசியைச் சமைத்து அக்கார அடிசில், புளிங்கறி முதலிய பலவகையான உணவுகளை உண்டனர். சோற்றுடன் காய்கறிகளைச் சமைத்தும் உண்டனர். பயறு வகைகள், சோளம், தினை, அவரை - மலையரிசி, வரகு, கம்பு, எள், உளுந்து முதலியனவும் உணவாகக் கொண்டனர். களிவகைகளையும், பொரி, அவல் போன்றவற்றையும் விரும்பி உண்டனர். கட்டுச்சோறு உண்பதில் தனிச் சுவையைக் கண்டனர். உணவு விளையும் இடத்திற்கேற்ப அங்கு வாழும் மக்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கத்தைக் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, மனல வேடர்கள் கிழங்கு, தேன், ஆண்பன்றியின் இறைச்சி, முள்ளம் பன்றியின் இறைச்சி, நெய் முதலியவற்றை உண்டனர். சமணமுனி வர்கள் புல்லரிசி, அல்லிக்காய் அரிசி, மூங்கில் அரிசி, கேழல் அரிசி, தோரை அரிசி, வள்ளிக் கிழங்கு, மலை வாழைப்பழம் மற்றும் காய் கிழங்கு வகை களையும் உண்டனர். பொதுவாக இக்கால மக்கள் பலவகையான மது (கள்) உண்டு களித்தனர். கள்ளைச் சாடிகளில் ஊற்றி பதமிட்டுக் குடித்தார்கள், சாப்பிடும்போது மணைக்கட்டை மேல் அமர்ந்து சாப்பிடுவார்கள். உணவைக் காலங்களிலிட்டும், இலைகளைப் பரப்பியும் உண்பார்கள். சமைப்பதற்கு விறகுகளை எரிப்பர். பாலும், பால் பொருள்களும் உணவோடு சேர்த்து உண்பர். இக்காலத்தில் அறு சுவையை விளக்கும் "மடநூல் ஒன்றும் இருந்தது. ஆடைகள் ஆண்கள் வேட்டியைக் கச்சமாகக் கட்டிக்கொண்டனர். முழந்தாள் வரையில் ஆடை இருந்தது. தலையில் தலைப்பாகை இருந்தது. மார்பு, னககள் முதலியவற்றை மறைக்கும் சட்டைப் போட்டதாகத் தெரியவில்லை. பெண்கள் கொய்சகம் வைத்துப் புடவை அணிந்தனர். மேலாடையுடுத்தி மார்பகங்களை மறைக்கும் வழக்கமில்லை. ஆனால், மார்புக்கச்சை அணிந்திருந்தனர். அரச மாதேவியர் மெல்லிய ஆடைகளை அணிந்து தங்கள் உடல்வாகு தெரியத் தோன்றுவர். அவர்களுடைய புடவையும் முழந்தாள் வரையில்தானிருந்தது. பாலாடையன்ன வெண்துகிலாடைகள், மற்றும் செவ்வண்ண ஆடைகள், பொங்கும் நுரை போன்ற கலிங்க ஆடைகள், பச்சைப் பட்டு, வெண்பட்டு மற்றும் இறக்குமதியான அயல்நாட்டுத் துணிகள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. படை வீரர்கள் முழந்தாள் வரை அணியும் வட்டுடையும், துறவிகள் துவராடையும் அணிந்தனர். எலி மயிரைக் கொண்டு எழில்மிகு கம்பள் ஆடைகள் நெய்யப்பட்டன. இவ்வாறு, பருத்தி, பட்டு கம்பள ஆடைகளை அவரவர் தரத்திற் கேற்றவாறு அணிந்தனர். ஆடைகளுக்கு நறுமணப் புகையூட்டுவது முண்டு. அணிகலன்கள் இக்கால ஆடை, அணிகலன்கள், ஒப்பனைகள் ஆகிய வற்றை அறிய இலக்கியங்களை விட இக்காலச் சிற்பங்களும், ஓவியங்களும் நன்கு உதவுகின்றன. ஓரளவு கல்வெட்டுச் சான்று களும் பயன்படுகின்றன. பெரும்பாலான அணிகலன்கள் பொன் னால் செய்யப்பட்டவையாகும். அவற்றில் நவமணிகளும் பதிக்கப் பட்டன. முத்து, பவழம், மணிகள் ஆகியன இழைத்தும் செய்யப் பட்டன. தலை, கழுத்து, மார்பு, கைகள், கால்கள்வரை ஆணும், பெண்ணும் அணிகலன்கள் அணிந்திருந்தனர். சுட்டி, தெய்வ உத்தி, நெற்றியில் சூட்டு, காதுகளில் மகரக்குழை, கழுத்தில் முத்து மாலை, பிறைவடம், நட்சத்திரமணிமாலை, வலம்புரிமுத்து வடம், நிரைத் தாலி, மாணிக்கத்தாவி, தாலிமணவடம் முதலிய அணிகலன்களை யும் பெண்கள் அணிந்தனர். தோளில் சுறாமீன் வடிவிலான தோளணி, இடுப்பில் பவழ மேகலை, பாதங்களில் கிண்கிணி, பாடகம், சிலம்பு, விரலாழிகள் முதலியனவும் அணிந்தனர். பொன் னும், வெள்ளியும் சோழநாட்டிலேயே கிடைத்ததைவிட போர்களில் கிடைத்தக் கொண்டிப் பொருள்கள் மூலம் பொன்னும், வெள்ளியும் அதிகம் கிடைத்தன. . ஒப்பனைகள். பெண்கள் நறுமணம் கலந்த நீரில் மங்கல நீராடுவார்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொள்வார்கள், மார்பில் குங்குமக் குழம் பைப் பூசிக் கொள்வார்கள்; விரல்களுக்கும் பாதங்களுக்கும் செம் பஞ்சுக் குழம்பைப் பூசிக்கொள்வார்கள்: நறுமணப் புகையூட் டிய மலர் மாலை அணிவார்கள்; மாலைகள் பல வகையாக இருந்தன; தலைமயிரை, கொண்டை, கூந்தல், முடிச்சு பின்னல் முதலியனவாக சீவிச் சிங்காரித்து அதில் மலர் செண்டுகளையும் மலர் வளையங் களையும் சூடிக்கொள்வர். மணப்பெண்ணுக்குரிய ஒப்பனைகள் மிக அதிகமாகவும், சிறப்பாகவுமிருக்கும். கூந்தலை சீவிமுடிக்க யானை மருப்பாலான சீப்புகளிலிருந்தன. இத்தகைய ஒப்பனைகளை இலக்கியங்களில் மட்டுமேயல்லாது கற்சிலைகளிலும், ஓவியங்களிலும் காணமுடிகிறது. திருமணமுறைகள் பெண்குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டுப் பிறப்பியல் (சாதகம்) கணிப்பார்கள். அவர்களுக்குப் பன்னிரண்டு அகவை: முடிந்ததும் திருமணம் செய்து விடுவார்கள். பெண்ணுக்கு முறை மாப்பிள்ளை முதலில் அவளுடைய தாய்மாமன்தான். பெண்ணைத் தேடி மாப்பிள்ளை வீட்டார் சென்று பேசி, பரியம் (முலை விலை) போடுவார்கள். பெண்ணுக்கு நிலத்தைச் சீதனமாகக் கொடுப்பதுண்டு: இச் சீதனச் சொத்தில் கணவனுக்கு உரிமையில்லை. திருமணப்பந்தலில் தீவேட்பதுண்டு. அந்தணர்கள் திருமணச் சடங்குகளைச் செய்வார்கள்; மணமகன் மணமகளின் இடக்கையைப் பற்றிக் கொண்டு தீயை வலம் வருவான். மணையில் அமர்ந்தவுடன் மணமக்களுக்குக் காப்புக் கட்டுவர். பெண்ணின் பெற்றோரும் மணமகனுக்குப் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பர். ஓமத்தில் நெய்யும், பொரியும் இடுவர். அம்மி மிதித்து அருந்ததி காட்டி, மணப்பெண்ணின் பாதங்களை மணமகன் பாலால் கழுவ வேண்டும் கடைசியாக மணமகள் கழுத்தில் மணமகன் தாலிக் கட்டுவான். பின்னர், மணமகனும், மணமகளும் எந்திர எழினி' எனப்படும் கொசுவலைக் கட்டிய கட்டிலில் படுத்துக் கொள்வர். நம்பிக்கைகள் நல்ல நாள் பார்த்து எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவர் நிமித்தம், சகுனம் பார்ப்பதுண்டு. விடியற்காலையில் காணும் கனவு பலிக்குமென்றும், ஆண்களுக்கு வலக் கண்ணும், பெண்களுக்கு இடக் கண்ணும் துடித்தால் முறையே கேடும் நன்மையும் விளையும் மென்றும் நம்பினர், பகலில் கோட்டான் கூவினால் கேடு வரும் என்று நம்பினர். தும்மினால் நூறு ஆயுசு' என்றும் நம்பினர். அகவை: முதிர்ந்த நல்ல பாம்பு நீளத்தில் குறைந்து கோழி போல் பறக்கும் என்றும், அது மாணிக்கக்கல்லை உமிழும் என்றும் நம்பினர். பழக்கவழக்கங்கள் கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாள் அன்று குன்றின் மேல் விளக்கேற்றுவது வழக்கம். மன்னர்களின் வரலாறுகளை நாடகமாக நடித்துக் காட்டுவார்கள்; உணவு கொண்டவுடன் நூறடி உலவி வரு வது வழக்கம். குழந்தை பிறந்ததும் அதற்கு மண்ணைக் குழைத்துப் பொட்டிடுவார்கள்; குளிப்பாட்டி மருந்திடுவார்கள், குழந்தைகளுக்குச் கணியம் (சாதகம்) கணித்து வைப்பது வழக்கம். பிறந்த பன்னி ரெண்டாம் தாள் பெயர் சூட்டு விழா நடைபெறும். ஆண் குழந்தை " களுக்கு மொட்டையடித்துக் குடுமி வைப்பதும், 'உபநயனம்' செய்வதும் உண்டு. ஐயாட்டைப் பருவம் வந்தவுடன் பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். ஆசிரியருக்கு அன்று பொற்காசுப் பரிசாகக் கொடுப்பதுண்டு. இறந்தோரைப் புதைக்கும் வழக்கமே நீடித்தது. ஆனாலும், பிணங்களை எரிக்கும் வழக்கம் சோழர்காலத்தில்தான் பிரபலமானது. கணவனை இழந்தவள் விதவைக் கோலம் பூண்டு, நோன்பு நோற்பாள்: பிணத்தை எரித்தவுடன் பிண்டம் படைப்பது வழக்கம். விருந்தினரை வரவேற்று மணைமீது அமர்த்தி உணவிட்டு, வெற்றிலைப் பாக்கு கொடுத்து விருந்தோம்புவர். பொழுது போக்குகள் சதுரங்கம் ஆடுதல், ஏறுதழுவுதல், ஆட்டுடன் ஆட்டை மோத விடும் ஆட்டுச்சண்டை, கோழிடன் கோழியை மோதவிடும் கோழிச் சண்டை , முதலியன ஆண்களின் பொழுது போக்காகவும், பந்து விளையாடல் நீர் விளையாடல் பதுமை (பொம்மை)க் கலியாணம் ஊஞ்சலாடுதல் இசைக்கருவிகளை இசைத்து விளையாடுதல் முதலியன பெண்களின் பொழுது போக்காகவுமிருந்தன. பெண்கள் 'காம பானம்' எனும் ஒருவகை மதுவையருந்தி இன்புறுவர்; வெற்றி லையுடன் பச்சைக் கற்பூரத்தைச் சேர்த்து மென்று தின்பதுமுண்டு. உயர்தர மக்கள் பல்லக்கில் பயணம் செய்தனர். குடைகளைப். பிடித்துச் சென்றனர். நீராடி வீட்டுக்குள் நுழையும்போது மரக் கட்டையாலான செருப்புக்களை அணிந்து செல்லுவர். இராசராச. நாடகம், சாக்கைக் கூத்து முதலியன பொழுது போக்காக நடந்தன. மடங்கள் இக்காலத்து மடங்கள் மக்களின் நற்பணி மன்றங்களாகச் செயல்பட்டன. வழிப் போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய், தண்ணீர் முதலியவற்றை மடங்களில் வழங்கினர். பொதுவாக மடங்களில் மக்களுக்கு மருத்துவப்பணிகளும், கல்விப்பணியும், சமயப்பணியும் நடந்தன. சமய இலக்கியங்களின் பண்டாரமாக (நூலகம்) இவை செயல் பட்டன. - பெரும்பற்றப்புலியூர் மடம், மேலைச்சேரி பதஞ்சலி தேவர் மடம், கீழையூர் மடம், திருவானைக்கா மடம், திருவிடைமருதூர் முதலியார் மடம், திருவாவடுதுறை மடம், முதலியன இன்றும் சிறப் புடன் நடைபெறுகின்றன. கெளககி மடங்கள் என்பன சிவனிய மடங்களாகும். இவற்றுள் சிறப்பானவை திருவற்றியூரில் அமைந் துள்ள சதுரானை மடம் ஆகும். இது கி.பி. 960-ல் அமைக்கப் பெற்றது. திருவாரூரிலுள்ள தட்சிணகோளகி மடம், மதுரையிலுள்ள திருஞானசம்பந்த மடம், திருவாவடுதுறை மடம் முதலிய மடங்கள் பிராமணர்கள் வேதாந்த பயிற்சியைப் பெறுவதற்கு அமைக்கப் பெற்றவையாகும். வைணவ மடங்களில் சிறப்பு வாய்ந்தது வானமாமலை மடம் ஆகும். சேரன்மாதேவி மடம், மன்னார்குடி மடம் ஆகியவையும் சிறந்த வைணவ மடங்களாகும். கல்வி வளர்ச்சி கல்விக்கூடங்கள் பல இருந்தன. பள்ளிகள் மரத்தடியிலும், வீட்டுத் திண்ணையிலும் நடந்தன. ஆசிரியர்களுக்கு ஊர் பொது நிலத்தி லிருந்து வரும் வருவாயை ஊதியமாக வழங்கினர். மடங்கள், விகாரைகள், சமணப்பள்ளிகள், கோயில் மண்டபங்கள் ஆகியவற் நில் பள்ளிகள் நடந்தன. எழுதுதல் பள்ளிகள், படித்தல் பள்ளிகள், கணக்குப் போடுதல் ஆகிய கல்வியே தொடக்கத்தில் கற்பிக்கப் பட்டன. தமிழும், சமற்கிருதமும் கற்பிக்கப்பட்டன. ஆனால், சமற்கிருத கல்விக்கும், சமயக் கல்விக்கும் முதலிடம் கொடுக்கப்பட்ட டது. இதனால் பிராமணர் முழு விழுக்காடு கல்வி கற்றனர். இராசேந்திரன் காலத்தில் மறைநூல் விடுதிக்கல்லூரிகள், திரிபுவனம், எண்ணாயிரம், திருவொற்றியூர், வேம்பந்தூர் முதலிய இடங்களில் இருந்தன. இவற்றில் படித்த பிராமண மாணவர்களுக்கு உணாவும், உடையும், உறையுளும் இலவசமாக வழங்கப்பட்டன. இவற்றில் பணியாற்றியப் பேராசிரியருக்கு அரசே ஊதியம் வழங்கியது. இத னால் சமற்கிருத மொழியே மேலாண்மைப் பெற்றது, வேதங்கள், வேதாந்தங்கள், இதிகாசங்கள், இலக்கணங்கள், மீமாம்சம் முதலி யன உயர்கல்வியாகக் கற்பிக்கப்பட்டன. கோயில் திருச்சுற்றுக்க ளும், கோயில் மண்டபங்களும் இத்தகைய உயர்கல்வி கற்பிக்கும் இடங்களாய் மாறின. எனவேதான் திருச்சுற்றை பிரகாரம்) "திருச் சுற்றானைக் கல்லூரி'' என்றழைத்தனர். கோயில்களில் இராமா யணம், மகாபாரதம், தொன்மங்கள் (புராணங்கள்) பற்றியச் சொற் பொழிவுகளும், பாராயணம் செய்தலும், ஒப்புவித்தலும் நடை பெற்றன. வியாகரணம் (இலக்கணம்) குறிப்பாக பாமுணி வியாகரணம், மீமாம்சை ஆகிய தத்துவங்கள், வேதாந்தம் ஆகியவற்றில் தேறிய வர்கள் சிறந்த அறிஞர்களாக வெளிவந்தனர். எண்ணாயிரம் நாலந்தா, தட்சசீலம் போன்ற வடநாட்டுப் பல்கலைக் கழகங்கள் போலவே, இராசேந்திர சோழன் காலத்தில் தமிழகத்தில் சிறந்து விளங்கியப் பல்கலைக்கழகம் எண்ணாயிரம் ஆகும். இவ்வூர் இராசேந்திரன் காலத்தில் இராச சதுர்வேதிமங்கலம் எனப் பெயரிடப்பட்டது. இவ்வூரில் அமைந்த வேதவிடுதிக் கல்லூரி சிறந்த பல்கலைக்கழகம் போல் செயல்பட்டது. இவ்வூர் விழுப்புரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எண்ணாயிரம் கல்வெட்டில் கண்டுள்ளபடி இக்கல்லூரியில் மொத்தம் 340 மாணவர்கள் கல்விக் கற்றனர். இவர்களுக்குப் பலவகைப் பாடங் களையும் கற்பிக்கும் 14 பேராசிரியர்கள் இருந்தனர். இள நிலை மாணவரில் 75 பேர் இருக்கு வேதமும், 75 மாணக்கர்கள் யசூர் வேதமும், 20 பேர் சந்தோக சாமனும், 25 பேர் வியாகரணமும் கற்றதாகக் கல்வெட்டு கூறுகிறது. மேலும், 40 பேர் உருபாவதார இலக்கணமும், 20 பேர் அதர்வண வேதமும், 20 பேர் சந்தோக சாமனும், 20 பேர் தலவகார சாமனும் பயின்றனரென்றும் கூறப்படுகிறது. முதுநிலை மாணவரில் 25 பேர் உயர்படிப்புக்காக மூன்று பாடங்களையும், 25 பேர் வியாகரணமும், 10 பேர் வேதாந்தமும் கற்றனர். மேலும் பேராசியர்களின் நிலைகள் (Grade) அவர்களின் தனதிய விகிதங்கள், மாணவர்களின் உறைவிட விவரம் உணவு உடை பற்றிய விவரங்களும் அறியப்படுகின்றன. இக்கல்லூரிக்கு ஆகும் செலவைப் பற்றியும், அது எவ்வாறு அரசனால் கொடுக்கப் பட்டது என்பது பற்றியும் அறிகிறோம். எண்ணாயிரத்திலிருந்த கல்லூரிக்கு 300 குறுக்கம் (ஏக்கர்) நிலம் மானியமாக விடப்பட்டிருந்தது. இதைப் போன்ற மற்றொரு கல்லூரியும், 190 மாணவர்கள் பயின்ற மூன்றாவது கல்லூரியும் இருந்தன. வியாகரணக் கல்லூரியொன்று சமற்கிருத மொழி இலக்கணத்தை கற்பதற்கென்றே திருவொற்றியூரில் இருந்தது. வேப்பத்தூர், திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் சமற்கிருதக் கல்லூரிகளிருந்தன. பாண்டிச்சேரிக்கருகிலுள்ள திரிபுவனியில் எண்ணாயிரம் போன்றே மிகப் பெரிய கல்லூரி இருந்தது. இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளைக் கற்பிக்கவும் கல்லூரிகளிருந்தன. ஆனால், தமிழ்க் கல்விக் கற்பிக்க மானியம் விட்டதாக எங்கும் காணப்பட வில்லையென்பது வருத்தமான செய்தியாகும். கோயிலும், சமற்கிருதமும் இணைந்து வளர்ந்தன. தமிழ், ஆர்வமுள்ள புலவர் களால் வளர்க்கப்பட்டது. இப் புலவர்களே சாகாத இலக்கியங்க ளான சைவத்திருமுறைகள், தேவாரம், திருவாசம், இராமாயணம், சமணகாவியங்கள், பெரியபுராணம், வைணவ இலக்கியங்கள், உரை நூல்கள் முதலியவற்றைப் படைத்து, உலக மா புலவர்களான புகழேந்தி, ஒட்டக்கூத்தர், கம்பர், சித்தாந்த ஞானியான மெய் கண்டார், சேக்கிழார் முதலிய எண்ணிறந்த தமிழறிஞர்களையும் உருவாக்கினர். சமயம் சமயமின்றி சமூதாயமில்லை, மாந்தனின் போக்கிடம் சமயமே. சோழர்காலச் சமயநெறிகளைச் சிவனியம் (சைவம்) என்றும், மாவியம்(வைணவம்) என்றும் இரு பெருங் கூறாக கூறினாலும் சமணம், சாக்கியம் போன்ற பிற சமயங்களின் மீது அரசர்கள் வெறுப்புக் கொள்ளவில்லை, சிவன் கோயில்கள் நாடெங்கிலும் மிருந்தன. விழாக்களுக்கும், வேடிக்கைகளுக்கும் குறைவில்லை, ஆக்கல், அளித்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கும் உரிய கடவுளாக ஆண்டவனைத் திரிமூர்த்தி என்றனர். ஊழ்வினையிலும், ' மோட்சம், நரகம் ஆகியவற்றிலும் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. நீதி குற்றவாளிகளை உசாவித்தண்டனை வழங்கப்பட்டது. நந்தா விளக்கிடுதல் மிகாளிய தண்டனையாகும். சில குற்றங்களுக்காக தொழுவிடல், கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வருதல் முதலியனவும், உரிமைப் பொருள்களைப் பறித்தல், நாடு கடத்தல் முதலியனவும் தண்டனைகளாக இருந்தன. கொடிய குற்றங்களுக்கு வேறு வகையான தண்டனைகள் இருந்தன. கொலைக் குற்றத்திற்கு உயிரைப் பறிக்கும் தண்டனைதான். ஆனால், இத்தகைய தண்டனையிலிருந்து பிராமணர் விலக்களிக்கப்பட்டிருந்தனர். குற்றவாளிகளின் பெயர்கள் ஊராட்சித் தேர்தலிலிருந்து நீக்கப்பட்டன. அவர்கள் உறுப்பினராக முடியாது. ஊரில் நடக்கும் குற்றங்களை சம்வத்சரவாரிய பெருமக்கள் உசாவித் தீர்ப்பு வழங்குவர். ஆனால், நாட்டின் பொது நீதித் துறைக்கு மன்னரே தலைமை நீதிபதியாவர். முடிவுரை கி.பி 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையி லான சோழர் காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் நிலைமையை ஒருவாறு அறிந்தோம். சமுதாய மக்கள் பல்வேறு சாதிகளாய்ப் பிரிந்திருந்தனர், கல்வெட்டுகளில் சாதிப் பெயர்கள் பதிக்கப்பட்டுள்ளனர் வலங்கை, இடங்கை பூசல்கள் தலைவிரித்தாடிய காலம் சோழர் காலமே; ஆயினும், பிராமணர்கள் சமுதாயத்தின் முகட்டில் அமர்ந்து செங்கோலும் தலை வணங்குமாறு வாழ்ந்தனர்; கோயில் நிருவாகம் சமுதாயத்தைப் பிரதி பலிக்கின்றது; ஆயினும், அது முழுக்க முழுக்க பிராமணர்களுக்கே சாதகமாக உள்ளது: தமிழ்க் கல்வி அரசர் கண்ணில் படவில்லை; சமற்கிருதமே அவர்களின் உள்ளமும் உடலுமாக உள்ளது: பொன்னுக்கும் பொருளுக்கும் குறைவில்லை; ஆனால், அது விண்ணளவு உயர்ந்த கோபுரங்களாவே நின்றன! ஊ) இலக்கியமும் சமயமும் 1. இலக்கியங்கள் 1. இலக்கிய நூல்கள் சோழப் பேராட்சி அறுபடாமல் தொடர்ந்து 430 ஆண்டுகள் நடந்தது. இந்த நெடிய காலகட்டத்தில் இலக்கியங்கள் பல தோன்றி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய ஆண்டுமானத்தை ஏற்ப டுத்திய பெருமை சோழப் பேராட்சியைச் சேரும். வடமொழிக் கருத்துக்கள் தாராளமாகத் தமிழில் நுழைந்தன. சமற்கிருதத்தையும், வேதக் கருத்துக்களையும் அப்படியே சோழர்கள் ஏற்றுக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். இக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைச் சமயச் சார்பற்ற உலகியல் இலக்கியங்கள், சமயச் சார்பான இலக்கியங்களென இரு பெருங்கூறுகளாகப் பிரித்து அறியலாம். மெய்க்கீர்த்திகள் உடல் வலிமையால் பெறப்படும் புகழைத்தான் மெய்க்கீர்த்தி என்பர். பேரரசர்கள் போர்க்களங்களில் பெற்ற வெற்றிகளைப் பற்றிப் புகழ்ந்து பாடியவை மெய்க்கீர்த்திகளாகும். இத்தகைய மெய்க் கீர்த்திகளை எழுதும் வழக்கம் இராசராச சோழன் காலம் முதற் கொண்டு வந்தது. மெய்க்கீர்த்திகளின் தொடக்கத்தைக் கொண்டே இது இன்ன பேரரசனைப் பற்றியது என்று கூறுமாறு அவை சீரோடும் சிறப்போடும் அமைந்தன. பா(கவிதை) நடையில் பேரரசர்களின் வெற்றிகள் வரிசைக் கிரமமாக எழுதப்பட்டன. மெய்க்கீர்த்திகளை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். எளிய சொற்களாலும், இலக்கண வரம்புக்குட்பட்டும் இசை நயத்துடனும் இவை அமைக்கப் பட்டன. சோழர்கால இலக்கிய வளர்ச்சியில் மெய்க்கீர்த்திகள் ஒரு புதிய இயலை ஏற்படுத்தியது எனலாம். காப்பியக் காலம் சோழர் காலத்தைக் காப்பியக் காலம் என்பார்கள். ஐம்பெருங் காப்பியங்களில் மணிமேகலை, சிலப்பதிகாரம் தவிர்த்த மற்ற மூன்றும் சோழர் காலத்தில் தோன்றியவை ஆகும். அவை சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பனவாகும். பெளத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமண சமய நூலான நீலகேசியும் சோழர் காலத்தில் எழுந்த நூலென்றும் கூறுவதுண்டு. சீவக சிந்தாமணி இந்நூலை யாத்தவர் திருத்தக்கத்தேவர் என்னும் சமண முனிவர். துறவறம் மேற்கொண்டு சமணம் தழுவினால்தான் விடிவு உண்டாகும் என்னும் கருத்தை உணர்த்தவே இந்நூல் எழுதப் பட்டது. இந்நூல் நான்கு அடிகளைக் கொண்ட 3145 பாடல்களைக் கொண்டது. பாட்டுடைத் தலைவனான சீவகன் எட்டுப் பெண்களை மணக்கிறான். இதனால் இந்நூலை மணநூல் என்றும் அழைப்பர். விருத்தப் பாவில் காப்பியம் எழுதிய முதல் ஆசிரியர் திருத்தக்கத் தேவர் ஆவார். இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். வளையாபதி இது ஒரு சமண சமயக் காப்பியமாகும். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதில் 72 பாடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன. சீவகசிந்தாமணியும் வளையாபதியும், குண்டலகேசியும் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் எழுந்தவை என்று கருதப்படுகின்றன. குண்டலகேசி இஃதொரு பௌத்த நூல் என்பர். இதன் ஆசிரியர் தந்த குப்தனார் ஆவார். சமணத்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசும் இந்நூல் ஒரு சிறந்த அளவை நூல் என்பர். இது பிற சமயக் கருத்துக் களையும் தருக்க முறையில் மறுக்கிறது. ஆனால் இந் நூலை மறுப்பதற்கென்றே நீலகேசி என்னும் சமண நூல் 84 பாக்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் ஒரு பெண்ணின் பெயர்தான் நீலகேசி என்பதாகும். அவள் குண்டலகேசியின் திருக்க வாதத்திற்குப் பதில் வாதம் கொடுத்து குண்டலகேசியின் கருத்துக்களை வீழ்த்து கிறாள். ஆக இந் நூல் பிற சமய எதிர்ப்புகளையே கொண்டுள்ளது, இதன் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு ஆகும். சூளாமணி இது ஐஞ்சிறு காப்பியங்களுள் சிறந்ததாகக் கருதப்படும் நூலாகும். இதில் 2330 விருத்தப் பாக்கள் உள்ளன, இதனை இயற்றியவர் தோலாமொழித் தேவர் என்னும் சமணராவார். சமற் கிருதத்திலுள்ள பாட்டுடைத் தலைவன் திவிட்டன் என்றும் அரச குமாரன் ஆவான். இதுவும் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும், முத்தொள்ளாயிரம் இதிலுள்ள மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டு இந் நூலுக்கு இப் பெயர் ஏற்பட்டது. தமிழ்நாட்டு முவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் 900 பாடல்கள்மேனி 2700 பாடல்கள் பாடப் பட்டுள்ளன. ஆனால், இன்று கிடைத்துள்ள மொத்தப் பாடல்கள், 109 ஆகும். மூவேந்தர்களின் இயற்பெயர்களும், விருதுப் பெயர் களும், அவர்களின் ஆட்சிச் சிறப்பும், நாட்டு வளமும் பற்றி இந் நூலில் கூறப்பட்டுள்ளன. பாரதம் இதனைப் பாரத வெண்பா என்றே குறிப்பிடுவர். இதன் ஆசிரியர் பெருந்தேவனார் ஆவார். இப் பாரதம் 12,000 பாடல் களைக் கொண்டது. ஆனால் கிடைத்திருப்பவை 830 பாடல்களே ஆகும். இந்நூல் உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் ஆகும். பாடலும் உரை நடையும் விரவி வருகின்றது. உரைநடை மணிப் பிரவாள நடையில் உள்ளது. பெருந்தேவனார் தொண்டை மண்டல - வேளாளர் குலத்தவராவார். கம்பராமாயணம் இதில் பெரும்பாலும் வெண்பாக்களும் விருத்தப் பாக்களும் அதிகம். இது ஒரு வழி நூல் ஆகும். இதன் முதல் நூல் வால்மீகி இராமாயணம் ஆகும். அது சமற்கிருத்தில் எழுதப்பெற்ற நூலாகும். காப்பியக் காலத்தில் தோன்றிய தலையாய நூல் கம்பராமாயணம் ஆகும். இதில் 15,000 பாடல்களும், 96 வகை சந்த இசைகளும் அடங்கி உள்ளன. சடகோபர் அந்தாதி எனும் நூலும் கம்பருடையதாம். கம்பர் உத்தமச் சோழன் காலத்தவர் (கி.பி. 970-985) என்பது சதாசிவப் பண்டாரத்தார் கருத்து ஆகும், நாடக நூல்கள் சோழர் காலத்தில் விழாக் காலங்களில் தஞ்சைப் பெரிய கோயிலில் நடிப்பதற்கென்றே எழுதப்பட்ட நாடகக் காப்பியங் களான 'இராசராச விஜயம்', 'இராசஇராசேச்சுவர நாடகம் ஆகிய இரண்டைக் கூறலாம். இவை முதலாம் இராசராசனின் புகழைப் பற்றிப் பேசும் நூல்களாகலாம். இந் நூல்களைப் பற்றிய செய்தி கல்வெட்டில் காணப்படுகின்றது. ஆனால் நூல்களின் படிகளும், ஆசிரியர் பெயர்களும் கிடைக்கவில்லை , குலோத்துங்க சோழ சரிதை இந்நூலை எழுதியவர் திருநாராயண பட்டன் என்பவர் ஆவார். இந்நூலை எழுதியதற்காக திரிபுலனி என்னும் ஊரார் இவருக்கு நிலக் கொடை அளித்ததாக முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு கூறு கிறது, குலோத்துங்கன் காலத்தின் முற்பகுதி நிகழ்ச்சிகளை இந்நூல் கூறுகிறது. கலிங்க நாட்டுப் போரைப் பற்றிக் கூறவில்லை . கல்லாடம் நூறுபாக்களைக் கொண்ட இந்நூலை எழுதியவர் கல்லாடம் என்னும் ஊரில் பிறந்த கல்லாடனார் ஆவார். அகத்துறையின் கூறு பாடுகளை இறுக்கமான பாக்களால் பாடியுள்ளார். நன்கு கற்றவரே இந்நூலை அறிந்து கொள்ள முடியும். இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களும், தருமி, இடைக்காடர் முதலியோர் பற்றிய செய்திகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. கலிங்கத்துப் பரணி ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் கொன்று வெற்றி பெறும் வீரனைப் புகழ்ந்து பாடுவது பரணி ஆகும். முதலாம்" இராசேந்திரன், இராசராசேந்திரன் ஆகியோரின் வெற்றிகளைப் பற்றிய பரணிகள் இருந்தன. ஆனால், அவை கிடைக்கவில்லை. இன்று கிடைத்துள்ளது. சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி மட்டுமே ஆகும். குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது கொண்ட வெற்றியையும், அதற்குக் காரணமாயிருந்த படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் என்பவனையும், குலோத்துங்கனையும் புகழ்ந்து பாடுவது கலிங்கத்துப் பரனாரி ஆகும். இரண் டிரண்டு அடிகளாலான தாழிசைச் செய்யுளால் ஆன இந் நூல் பரணி வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு நூலாகும். இது கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இந்த பாணியைப் பின்பற்றித்தான் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி பாடியுள்ளார். மூவர் உலா அரசர், தெய்வம் ஆகியோர் வீதி உலா வருவதைப் பற்றிப் பாடும் இலக்கிய வகைக்கு 'உலா' என்று பெயர். இந்த வகையில் ஒட்டக்கூத்தர் பாடியவை விக்கிரம சோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் உலா, இரண்டாம் இராசராச சோழன் உலா ஆகிய மூன்று உலாக்களாகும். இவற்றையே 'மூவர் உலா' என்றழைக்கின்றனர். விக்கிரம சோழன் மேற்கொண்ட கலிங்கப் போரைப் புகழ்ந்து ஒட்டக்கூத்தர் ஒரு பரணியும் பாடியுள்ளார். அதுதான் மேலே குறிப்பிடப்பட்ட தக்கயாகப்பரணி ஆகும். ஒட்டக்கூத்தரின் பிற நூல்கள் 1. செங்குந்தர் மாலை: - தான் பிறந்த கூத்தனூர் செங்குந்தர் எனும் குடியைப் பாராட்டிப் பாடியது. 2. ஈட்டி எழுபது :- இது ஈட்டியின் பெருமையைப் பற்றி ஒட்டக் கூத்தர் பாடிய நூல் ஆகும். 3. எழுப்பெழுபது : இது கடவுளுக்குப் பலியிட்ட இளைஞர்களை எழுப்ப வேண்டுமென வேண்டிப் பாடிய பாடல்களாகும். 4. சரசுவதி அந்தாதி 5, அரும்பைத் தொள்ளாயிரம் புகழேந்திப் புலவரின் நூல்கள் ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவரான புகழேந்திப் புலவர் செங்கை மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். இவருடைய நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, நள வெண்பாவாகும். நளோபாக்கியாணம் என்னும் சமற்கிருத நூலைத் தழுவித் தமிழில் 424 வெண்பாக்களில் நளனுடைய கதையை எழுதி யுள்ளார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். புலந்திரன் களவு, அல்லி அரசாணி மாலை, கொற்றந்தைக் கலம்பகம் முதலிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவ ருடைய காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு என திரு.வி.க. த சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோர் கருதுகிறார்கள். 2. இலக்கண நூல்கள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்து வகை இலக்கணம் சோழப் பேரரசர் காலத்தில்தான் முழுமையாக வளரத் தொடங்கியது. ஐந்து இலக்கணத்தையும் சேர்த்து ஐந்து இலக்கண நூல் என்றும், தனித்தனியாகவும் நூல்கள் எழுந்தன. இக் காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள் யாவும் சமணத் துறவிகளால் எழுதப் பெற்றுள்ளன. அத்தகைய துறவிகளில் முதன்மையானவர் அமிர்த சாகரர் ஆவார். அமிர்த சாகரரின் கீழ்க்கண்ட நூல்கள் சிறப்பானவை ஆகும். 1. யாப்பருங்கலம் தமிழ்ச் செய்யுளில் எழுத்து, சீர், அசை, தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளின் படிமுறை வளர்ச்சிகளைப் பற்றிக் கூறுவது தான் யாப்பருங்கலம் ஆகும். இந்நூலில் உறுப்பியல், செய்யுள் இயல், ஒழிபியல் என்னும் மூன்று பகுதிகள் உள்ளன. இந்நூல் 96 நூற்பாக்களில் யாப்பை விளக்குகிறது. 2. யாப்பருங்கலக்காரிகை இந்நூலாசிரியரும் அமிர்த சாகரரே. இவர் கி.பி. 10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். யாப்பருங்கலத்தின் சாராம்சமாக உள் ளது இந்த காரிகை நூல். குணசாகரர் என்பவர் காரிகைக்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். இந்த உரை கலித்துறை யாப்பில் பாடப் பெற்றுள்ளது. 3. வீரசோழியம் - இதன் ஆசிரியர் புத்தமித்திரர் ஆவார். அவருடைய மாணவ ரான பெருந்தேவனார் இந்நூலுக்கு உரை கண்டுள்ளார். இந்நூல் எழுத்து, சொல், யாப்பு, பொருள், அணி ஆகிய ஐந்தைப் பற்றியும் கூறுவதால் இதற்கு ஐந்திலக்கணம் என்றே பெயர். இந்த இலக்கண நூல் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் வழிகாட்டி யாக உள்ளது. சோழன் வீரராசேந்திரன் பெயரில் எழுதப் பெற்றதே இந்நூலாகும். 4. தண்டி அலங்காரம் தண்டி என்ற புலவர் இதனை யாத்தார். சமற்கிருதத்திலுள்ள காவியதர்சம் என்னும் நூலின் வழி நூல் இது என்பர். இந்நூல் பொது, பொருள், சொல் எனும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அணி அலங்காரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஒரே இலக்கண நூல் இதுவே. இதில் எடுத்துக்காட்டாக 350 வெண்பாக்கள் தரப்பட் டுள்ளன. இந் நூலாசிரியரின் காலம் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133 - 1150) காலமாகும். இந் நூலுக்கு அணி இலக்கணம் என்றும் அணி அதிகாரம் என்றும் வேறு பெயர்களும் உண்டு. 5. நேமிநாதம் நேமிநாதர் என்ற சமண முனிவர் பெயரால் இந்நூல் எழுதப் பட்டது. எழுத்து, சொல், இலக்கணம் பற்றி இந் நூல் கூறுகிறது. இதனை எழுதியவர் குணவீர பண்டிதர் ஆவார். இவர் செங்கை மாவட்டம் களத்தூரைச் சேர்ந்தவர். இவருடைய காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு ஆகும். 6. நன்னூல் இந்நூலாசிரியர் பவணந்தி என்னும் சமண முனிவராவார். இவருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) காலமாகும். எழுத்து, சொல், இலக்கணத்தை விளக்குகிறது. 7. நம்பி அகப்பொருள் இந்நூலை யாத்தவர் நாற்கவிராச நம்பி என்பவராவார். அகப் பொருள் பற்றிய இலக்கணத்தைப் பற்றிக் கூறும் இந்நூல் அகத் திணை, புறத்திணை, களவு, வரைவு, கற்பு ஆகிய ஐந்து இயல் களைக் கொண்டது. இந்த இலக்கண நூலுக்கு இலக்கியமாக இயற்றப்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலமாகிய கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்ற 'தஞ்சைவாணன் கோவை' என்ற நூலாகும். 8. நிகண்டுகள் நிகண்டு என்பதற்கு அகராதி என்று பொருள் கூறுவர். ஆனால் அதைவிட ஒரு படி மேலானதுதான் நிகண்டு. பண்டைய நூல்களி லுள்ள சொற்களுக்குப் பொருள் விளக்கம் இதில் கூறப் பட்டுள்ளது. ஒரு சொல்லுக்கு வரும் பல பொருள்களையும், பல பொருள்களை யுடைய ஒரு சொல்லும் அறிய நிகண்டு உதவும். நிகண்டு செய்யுள் நடையில் மனப்பாடம் செய்யத்தக்கதாக எழுதப் பெற்றுள்ளது. சோழர் காலத்தில் பிங்கலந்தை, சேந்தன் திவாகரம், சூடாமணி ஆகிய நிகண்டுகள் தொகுக்கப்பட்டன. சேந்தன் திவாகரம் தமிழ் மொழியில் முதன் முதலாக இயற்றப்பட்டது திவாகரம் என்ற நிகண்டு ஆகும். இதன் ஆசிரியர் பெயர் சேந்தன். எனவே, இதனைச் சேந்தன் திவாகரம் என்றனர். இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. பிங்கலந்தை பிங்கல முனிவர் இதன் ஆசிரியராவார். இந்நூலில் 4181 பாக்கள் உள்ளன. இவை பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. திவாகர நிகண்டைவிட மிகப் பெரியதாகவும், அதில் வரும் சொற்களை விட அதிகமான சொற்களுக்கு இதில் பொருள் கூறப் பட்டுள்ளது. . இதன் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு எனலாம். சூடாமணி நிகண்டை மண்டல புருடர் என்பார் எழுதினார். இந்த நிகண்டுகளில் வரும் செய்யுட்களை க. அயோத்திதாசப் பண்டிதர் தனது தமிழன் நாளிகையில் மேற்கோள் காட்டியுள்ளார். குறிப்பாக, அவருடைய 'பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதி வேதம்' என்ற நூலில் இவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. * 4, விளக்க உரைகள் பண்டைய நூல்கள் மணிச்சுருக்கமாக செய்யுள் நடையில் எழுதப்பட்டவை ஆகும். அக்காலத்தில் எழுது தாள்கள் கிடையா. எனவே ஓலைச் சுவடிகளில் எழுதினர். விளக்க உரைகள் எழுதா மைக்கு இதுவும் ஒரு காரணமாகும். சோழர் காலத்தில்தான் பண்டைய நூல்களுக்கு விளக்க உரைகள் எழுத முற்பட்டனர். இதனால் திருக்குறள் போன்ற நூல்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட உரைகள் எழுந்தன. உரையாசிரியர் எண்ணிக்கையும் பெருகின. அத்தகைய உரையாசிரியர்களைப் பற்றிக் காண்போம். திருக்குறள் விளக்க உரை ஆசிரியர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியவர் பதின்மர். இவர்களுள் மணக் குடவரும் ஒருவர். இவருடைய உரை எளிமையானது. தம் காலத்து வழக்காறுகளை எடுத்துக்கூறி, தம் உரையை நிறைவு செய்துள்ளார், இவருடைய உரையைப் பின்பற்றியே பரிமேலழகரும் உரை கண்டார். பரிமேலழகர் உரையே தலையாயது எனப் போற்றுவர். மணக்குடவர் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டாகலாம். பரிமேலழகர் தொகை நூலான பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார். பரிமேலழகரின் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டாகும், அடியார்க்கு நல்லார் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திற்கு உரை கண்டவர் அடியார்க்கு நல்லார் ஆவார். சிலப்பதிகாரத்திற்குப் பதவுரை எழுதி யவர் சிலரே ஆவார். தனது விளக்க உரையில் இசைகளின் வகை, நாடக வகை முதலியன பற்றிய குறிப்புரைகளை இவர் தந்துள்ளதால் இதனை ஒரு களஞ்சியம் என்றே கூறலாம். கடைக் கழகக் (சங்க) காலத்திற்கு முன்னும், பின்னுமிருந்த இலக்கிய வளர்ச்சியும், வான நூல் அறிவும் இவருடைய உரையில் காணப்படுகின்றன. இவருடைய காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் முதலிய தலை சிறந்த உரையாசிரியர்கள் சோழர் காலத்தில் வாழ்ந்துள்ளனர். புறநானூறு, திருக்கோவையார் முதலியவற்றிற்கும் சிறந்த உரைகளையாக்கி உள்ளனர். தொல்காப்பிய உரை ஆசிரியர்கள் தொல்காப்பியத்திற்கு விளக்க உரை எழுதியவர் இளம்பூரணர். இவர் சோழர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்காப்பியத்தின் சொல் லதிகாரத்திற்குச் சேனாவரையர் எழுதிய உரை மிகவும் தெளிவானது. தெய்வச்சிலையாரும், சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளார். பொருளதிகாரத்திற்குப் பேராசியரின் உடரை சிறப்பாக உள்ளது. இவரே திருச்சிற்றம்பலக்கோவையார் என்ற நூலுக்கும் உரை எழுதியுள்ளார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரும் தொல் காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளார். சோழர் காலத்தில் இலக்கண நூல்களுக்கு உரை எழுதியவர் களில் குறிப்பிடத் தக்கவர்கள் பவணந்தி முனிவர், புத்த மித்திரர், ஐயனாரிதனார், நாற்கவிராச நம்பி முதலியோராவர். இறையனார் களவியல் உரை மூன்று சங்கங்களின் வரலாற்றைப் பாயிரத்தில் விளக்கும் இந்த உரை நூலை எழுதியவர் நக்கீரர் ஆவார். இறையனார் களவியல் என்ற நூல் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப் பெற்றது. இந்நாலுக்குப் பல் உரைகள் இருந்த போதிலும், நக்கீரர் எழுதிய களவியல் உரை கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்று வெளிவந்தது. இவ்வுரை எதுகை மோனையுடனும், அணி அழகுடனும் உவமைச் செறிவுடனும் காணப்படும் உரை நடை ஆகும். 'வீரசோழியம் உரை' இந்த இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் பெருந்தேவனார் ஆவார். சமற்கிருத இலக்கணத்தைத் தழுவி எழுதப்பட்ட பெருந்தேவனாரின் உரை ஐவகை இலக்கணத்தையும் விளக்கிக் காட்டுகிறது. வீரசோழியத்தின் ஆசிரியர் புத்தமித்திரர் ஆவார். இவர் வீரராசேந்திரன் காலத்தவர். எனவேதான் அவர் பெயராலேயே வீரசோழியம் என்ற இந்த இலக்கண நூலை எழுதினார் எனப் பார்த்தோம். 4. பிறநூல்கள் சோழர் காலத்தில் இலக்கண, இலக்கியங்கள் பெருகின. அத்தோடு தருக்க நூல்கள், சோதிட நூல்கள், தனிப்பாடல்கள் எனப் பல்வேறு நூல்களும் வெளிவந்தன. இவற்றைத் தவிர சமற்கிருத்தில் இருந்து நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் பல நூல்கள் வெளி வந்தன. இவற்றுள் பல இலக்கியங்களாகவும், பல இலக்கணங்க ளாகவும் இருந்தன. 2. சமய இலக்கியங்கள் பல்லவர்காலத்தில் தொடங்கிய பக்தி இயக்கம் சோழர் காலத்தில் உச்ச கட்டத்திற்குச் சென்றது. எனவே சமயக் கோட்பாடு களும், இந்துச் சமய இலக்கியங்களும் இக்காலத்தில் சிறப்பாக வளரத் தொடங்கின. வேதப் பாடசாலைகள் தமிழகம் முழுவதும் தோன்றின. அவற்றில் சமற்கிருத மொழியும் கற்றுக் கொடுக்கப் பட்டது. இந்துச் சமய இலக்கணத்தைக் கற்பிப்பதற்கென்றே சதுர்வேதி மங்கலம், பிரம் தேயம் ஆகியவற்றில் பிராமண குருக்கள் அமர்த்தப்பட்டனர். வடார்க்காடு மாவட்டம் காப்பாளர் (காமப் புல்லூர்), செய்கை மாவட்டம் ஆனூர் முதலிய இடங்களில் இத்தகைய வேதப் பாட சாலைகள் இருந்தன. சைவ மடங்களும், தனிப்பட்டவர் நடத்திய தமிழ்க்கல்விக் கூடங்களிலும் கூட வேதக் கல்வி முகாமை பெற்றது. சைவ சமய இலக்கியங்கள் 1. பெரிய புராணம் சைவ சமயப் பெரியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூல் தமிழில் எழுந்த மூல நூலாகும். இதில் 63 சைவ நாயன்மார் களின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது. இதனை இயற்றியவர் சேக்கிழார் ஆவார். இவர் செங்கை மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர். இவருடைய காலம் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133-1150) காலம் ஆகும், சோழப் பேரரசில் அமைச்சராக இருந்த இவர் சோழ நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, சமயநிலை முதலிய வற்றை நேரில் பார்த்தவர். எனவே, பெரியபுராணம் ஒரு சமய நூல் மட்டுமல்லாமல் அரசியல், சமூக, பொருளாதார, வரலாற்று நூலாகவும் உள்ளது. மேலாக இறைநெறிப் பண்பு இந்நூலில் காணப் படுகிறது. இவர் இந்நூலுக்கு இட்டு வழங்கிய பெயர் 'திருத் தொண்டர் புராணம்', என்பதாகும். இதில் வரும் நாயன்மார்களும் சிவபெருமானின் திருத்தொண்டர்கள் ஆதலால் இப்பெயரைச் சூட்டி னார். இந்நூலுக்கு மூலநூலாக உள்ளது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் திருத்தொகை' என்னும் நூலாகும், வழிநூலாக உள்ளது நம்பி ஆண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூல் ஆகும். சேக்கிழார் தில்லையம்பலம் சென்று சிவபெருமானை வேண்டி நிற்க அவர் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க அவ்வடியை முதலாகக் கொண்டு 4253 செய்யுள்களால் பெரிய புராணத்தை இயற்றினார். இந்த நூல் சோழர் கால மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்குகள், சட்ட திட்டங்கள், கல்வி முறை, கலைகள் முதலியவற்றை விளக்குகிறது. சேக்கிழார் சிவனடியார்களின் புகழைப் பரப்பியதால் இவரைத் தொண்டர் சீர் பரவுவார்' என்றழைத்தனர். 2. கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர் இந்நூலின் ஆசிரியராவார். ஆறு காண்டங்களைக் கொண்ட இந்நூலில் 10,346செய்யுட்கள் உள் என, கச்சியப்ப சிவாச்சாரியார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆதிசைவர் மரபினர். இவருடைய காலம் - கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலை ஸ்கந்த புராணம் என்று சமற்கிருதத்தில் அழைப்பர். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைத்துப் பால் கொடுக்கும்போது அவை ஆறும் ஒன்று இணைந் ததைக் 'ஸ்கந்தம்' என்பர். சிவசங்கரசங்கிதை என்ற சமற்கிருத நூலில் ஒரு பகுதியாகக் கூறப்பட்ட 'ஸ்கந்தன் வரலாறு' தமிழில் ஒரு பெரிய நூலாக இயற்றப்பட்டுள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் வட மொழிப் புராணத்துடன் கோர்க்கப்பட்ட கதையை இது விளக்குகிறது. 3. திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவர் என்பவர் இதன் ஆசிரியர். மதுரையில் சிவ பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களை 1752 விருத்தப்பாக் களில் இந்நூல் விவரிக்கிறது. உத்திரமகாபுராணம் என்ற சமற்கிருத நூலைத் தழுவியது. இந்த ஆசிரியரின் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டாகும். 4. சைவ சித்தாந்த நூல்கள் சிவஞான போதம் சைவ சித்தாந்த நூல்களில் ஒன்று மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் என்ற நூலாகும். இவரைத் தொடர்ந்து சைவ சித்தாந்த நூல்களை யாத்தவர்கள் மெய்கண்டார் பரம்பரை' எனப்பட்ட னர். 1. சிவஞான போதம் 2. திருக்களிற்றுப்படியார் 3. சிவஞான சித்தியார் 4. திருவுந்தியார் 5. இருபா - இருபஃது , உண்மை விளக்கம் 7. சிவப்பிரகாசம் 8. திருவருட் பயன் , 9. வினா வெண்பா 10, கொடிக்கவி 11. போற்றிப் பஃறொடை 12. நெஞ்சுவிடு தூது 13. உண்மை நெறி விளக்கம் 14. சங்கற்ப நிராகரணம் என்பவை இந்த மெய்கண்டார் பரம்பரை பாடிய சைவ சித்தாந்த சாத்திர நூல்க ளாகும். இவற்றுள் முதன்மையானது சிவஞான போதம் ஆகும். மெய்கண்டார் பதி(இறைவன்), பசு(உயிர்), பாசம்(தளை) ஆகிய வற்றை 36 தத்துவங்களில் விளக்குகிறார். மெய்கண்டார் சமற் கிருதத்தில் உள்ள செளரவம்(ஆகமம்) என்ற ஆகம நூலை மொழி பெயர்த்து எழுதியதே சிவஞான போதமாகும் என்று சிலர் கூறுவர். ஆனால், பண்டைய தமிழ்ச் சான்றோரின் ஆகமங்களே சிவஞான போதம் என்று சிலரும் கூறுவர். 5. திருவாசகம் சைவ நூல்களில் திருவாசகம் சிறந்த பக்திநால், இதனை இயற்றியவர் சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்க வாசகர் ஆவார். இவருடைய காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு ஆகும். திருவாசகம் பெருமானைத் தலைவனாகவும், பாடுவோனைத் தலைவியாகவும் கொண்டு பாடும் சைவநெறி பரப்பும் பக்திப் பாட லாகும். இந்நூல் ஒரு இசை நூலாகும். இதனை ஜி.யூ. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார், 6. பட்டினத்தடிகளார் இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் பாடிய திருக்கழுமாலை, மும்மணிக்கோவை, திருவேகம்பம் உடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒரு பஃது எனும் ஐந்து பிரபந்தங்களும் 192 பாடல்களைக் கொண்டவை. இந்நூல்கள் இவருடைய தமிழ்ப் புலமை, பக்திப் பெருக்கம், சமய நுணுக்கம் ஆகியவற்றைப் பிரதி பலிக்கின்றன. இவருடைய இயற்பெயர் வெண்காடர் என்பதாகும். 2. வைணவ இலக்கியங்கள் 1. கம்பராமாயணம் வைணவம் என்ற உடனேயே நினைவுக்கு வருவது கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஆகும். இது உலகப் பெருங்காப்பி யங்களில் ஒன்றாகும். இது ஒரு தலை சிறந்த வைணவக் காப்பிய மாகும். 2. திவ்வியப் பிரபந்தம் இது நாதமுனிகள் தொகுத்து அளித்த வைணவ இலக்கிய மாகும். இது நாலாயிரத்திற்கும் சிறிது குறைந்த எண்ணிக்கையில் பாடல்களைக் கொண்டிருந்தாலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றே அழைக்கப் பெறுகிறது. நாத முனிகளின் காலம் கி.பி. 11ஆம் நுாற்றாண்டு ஆகும், இந்நூலில் ஏறத்தாழ ஆயிரம் இயற்பாடல்கள் உள்ளன. மேலும் வெண்பா, அந்தாதி, விருத்தம் முதலிய பலதிறப்பட்ட பாக்களும் உள் ளன. இந்நூல் மணிப்பிரவாள நடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இதனைத் திராவிட வேதம்' என்றும் இதிலுள்ள திருவாய் மொழியை 'திராவிட உபநிடதம்' என்றும் அழைப்பர். 3. இராமானுச நூற்றந்தாதி இது 108 கலித்துறைப் பாக்களைக் கொண்டது. இதனைப் பாடியவர் திருவரங்கத்தமுதனார் என்பவராவார். இப் பாக்கள் இராமானுசர் மீது பாடப்பட்டவை ஆகும். ஆழ்வார்களின் கால முறையைக் கணிப்பதற்கு இந்நூல் உறுதுணையாக உள்ளது. ஆழ்வார்களைப் பற்றியும், திருமாலின் கோயில்களைப் பற்றியும் இதில் பாடப்பட்டுள்ளது. 4. திருக்குருக்கைப் பிரான்பிள்ளான் இவருடைய நூல்கள் திருவாய் மொழி ஆறாயிரப்படி, பிள்ளான் ரகசியம் என்பனவாகும். 5. தினியன் நாத முனிகள் காலம் தொடங்கி மணவாள மாமுனிகள் காலம் வரை ஆழ்வார்களைப் பற்றியும் பாடிய பாடல்களைத்தான் தினியன் என்று அழைப்பார்கள். தினியன்வகைப் பாடல்கள் 50 ஆகும். உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி ஆகியோர் பாடிய பாடல்கள் தினியனில் இடம் பெற்றுள்ளன. 6. திருவாய்மொழி வியாக்கியானம் இது திருக்குருக்கைப்பிரான்பிள்ளை பாடியதாகும். இதனைத் தொடர்ந்து வைணவத்தில் பல வியாக்கியான நூல்கள் எழுந்தன. வைணவத்தால் ஏற்பட்ட தாக்கங்கள் வைணவத்தால் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட முதல் தாக்கம் தமிழில் மணிப்பிரவாளதடை தோன்றியது ஆகும். பிரபந்த இலக்கியம் தோன்றி வளர்ந்தது. அகம், புறம் என வளர்ந்த தமிழ் இலக்கிய மரபில் இறையன்பு (பக்தி) என்ற புதிய மரபும் தோன்றியது. இது ஆண்டவன் மீது கொண்ட அன்பு ஆகும். வைணவக் கோயில்களில் பாரதம் படிப்பதும் மாலியத்தைப் பரப்புவதுமான இயக்கம் மாவியப் பண்பாட்டை மக்களிடையே பரப்பியது. பக்திப் பாடல்கள் (பஜனைகள்) கூட்டுத் தொழுகை போல் வளர்ச்சி பெற்றன. பொதுவாக சோழர் காலத்தில் கலம்பகம், கோவை, உலா, தூது, அந்தாதி, சதகம், பரணி, திருப்பள்ளி எழுச்சி முதலிய இலக்கிய மரபுகள் வளர்ந்தன. சமண இலக்கியங்கள், சமணக் காப்பியங்கள் பலவும், பௌத்த இலக்கியங்களில் பலவகை நூல்களும் இக்காலத்தில் தோன்றின. அறநூல்களும், உரை நூல்களும், பல தோன்றின. 3. சமயம் சோழர் கால் சமயத்தின் முக்கிய இரு கூறுபாடுகளாவன சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியவை ஆகும். 1. சிவனியம் (சைவம்) சோழப் பேரரசர்கள் பலரும் சைவத்தைப் பின்பற்றினர். பலர் சிவன் கோயில்களைக் கட்டினர். இவர் காலத்தில் ஏற்பட்ட இறை நெறி இயக்கம் (பக்தி இயக்கம்) சைவத்தை மேலும் வலுப் பெறச் செய்தது. சைவ இலக்கியங்கள் பல தோன்றின. சைவமே சோழரின் அரசு சமயம் என்னுமாறு திகழ்ந்தது. சைவ சமயத் தத்துவங்கள் கடவுள் ஒருவரே! உயிர் அழியாதது. அது தன்னை அறியும் போது இறைவனை அறிகிறது. இறைவனை அறியவில்லை என்றால் அறியாமை அதனை மூடி இருக்கிறது என்பது பொருள். சித்தாந்த தத்துவம் இதில் 36 மெய்ம்ம (தத்துவங்கள் உள்ளன, பதி, பசு, பாசம் முதலியவை முறையே இறைவன் உயிர், தளை ஆகியவற்றைக் குறிக்கும். தளை என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருளாகும். இவை அகன்றால்தான் உயிர் இறைவனை அடையும். இறைவனின் தொழில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகும். இறைவன் தனித்தும், உயிர்த்தும், உடனாயும் இருப்பான், இவை யாவுமாய் உள்ளவனே முழுமுதற் கடவுளான சிவன் ஆவான் என்று திருமூலர் கூறுவார். சைவத்தில் பாசுபதம் காபாலிகம், காளாமுகம், கோளகி ஆகிய பிரிவுகள் ஏற்பட்டன. கன்னட நாட்டின் தொடர்பால் ஏற்பட்டதுதான் காளாமுகம், காளாமுகர்களின் கோயில்களும், மடங்களும், தருமபுரி, செங்கல்பட்டு, தென் ஆர்க்காட்டி லுள்ள ஜம்பை, வேடல், மேல்வாடி, திருவையாறு, திருவலஞ்சுழி, கொகும்பாளூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன, காபாலிக சைவம் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் திருவொற்றியூரில் பரவி இருந்தது. கோளகி சைவம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில்தான் தமிழகம் போந்தது. இச்சமய ஆச்சாரியார்கள் சிதம்பரம் மேலச்சேரி பகுதியில் முதலில் பரவி இருந்தனர். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் தமிழகம் முழுவதும் பரவினர். இவர்கள் சுத்தன சைவம் என்ற தத்துவத்தின் அடிப்படை யில் தங்கள் அறச் செயல்களைச் செய்தனர். சைவாச்சாரியார்களில் பலர் சோழப் பேரரசர்களின் குருக்களாக இருந்தனர். இதனால் பேரரசர்கள் சைவ சமயத்தை முடுக்கமாகப் பின்பற்றினர். இதன் விளைவாக மன்னன் எவ்வழி மக்களும் அவ் வழியாக சைவத்தைப் பின்பற்றினர். நாடு முழுவதும் சைவ மடங் களும், கோயில்களும் பெருகின, பல பழைய கோயில்கள் கற்றளியாக மாற்றப்பட்டன. முதலாம் பராந்தகன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான். (சோழன் காலத்திலெழுந்த சிவன் கோயில்களைப் பற்றிக் கலை என்னும் தலைப்பில் காணலாம்.) பேரரசர்களைப் பின்பற்றிச் சிற்றரசர்களும் செல்வர்களும் கோயில்களைக் கட்டினர். இவற்றில் சமயச் சொற்பொழிவுகளும், விழாக்களும் நடந்தன. இதனால் சைவம் உயிரோட்டமாக வளர்ந்தது. கற்கோயில்கள் நாடெங்கும் பரவிய பிறகு, பக்தர்களால் அவற்றிற்கு நிலமும், பொன்னும் பொருளும் நன்கொடையாக வழங்கப்பட்டதால் கோயில்கள் செல்வத்தில் செழித்தன, செல்வம் வரும் போது ஊழல்கள் மலிவது இயற்கை. இதனைத் தடுக்க சோழர் காலத்தில் கோயில் நிருவாகம் வலுப்படுத்தப்பட்டது. அறக்கட்டளை களைச் சரிவர நடைமுறைப்படுத்தவும், அன்றாட பூசைகளை நடத்த வும் முறைப்படி தனித்தனி அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். சிறிய சிவன் கோயில்கள் சிவப் பிராமணர்களின் பொறுப்பிலும் விடப் பட்டன. சில கோயில்கள் சைவ மடங்களிலுள்ள மகேசுவரர் பொறுப் பிலும், சில கோயில்கள் ஊராட்சிப் பொறுப்பிலும் விடப்பட்டன. ஆனால் பெரிய கோயில்களை நிருவகிக்கத் தனி ஆட்சிக்குழுக்கள் ஏற்பட்டன. கோயில்களின் கருவூலங்கள் 'சிறீபண்டாரங்கள்' எனப் படும். அவற்றை நிருவகித்தவர்கள் "சிவ பண்டாரிகள்' எனப்பட்ட னர். இவர்கள் எழுதிய கணக்குப் புத்தகம் சிறீபண்டாரப் பொத்தகம்' எனப்பட்டது. சிவ பண்டாரத்தார் கோயில் நிலங்களை விற்கவும், வாங்கவும் அதிகாரம் பெற்றிருந்தனர். கோயில் ஆடு, பசுக்களுக்கும், தேவரடியார்களுக்கும் சூலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டன. கோயில் வரவு செலவுக்கணக்குகள் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்பட்டன. இதில் மோசடி செய் வோர்களை சிவத் துரோகிகள் எனக் குற்றம் சாட்டித் தண்டித்தனர். சோழர் காலத்துக் கோயில்களில் மிகவும் பெரியனவாகயிருந்த தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழீச்சுவர முடையார் கோயில் ஆகியவற்றில் பணியாற்றிய கோயில் அதிகாரி களும், பணியாட்களும் ஆயிரக்கணக்கிலிருந்தார்கள். இவர்களுக்கு மேலதிகாரியாக கண்காணிநாயகம் இருந்தார். கோயிலில் இசைக் கருவிகளை வாசிப்போர், திருமுறை ஓதுவோர் அல்லது திருப்பதிகங் கள் விண்ணப்பிப்போர் முதலியோர் இருந்தனர். சைவமடங்களும் இக்காலத்தில் பெருகின. அவற்றை நிரு வகிக்கவும் அதிகாரிகள் ஏற்பட்டனர். சைவ மடங்களில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மடங்களும் வளர்ந்தன. காளாமுகப் பிரிவுச் சைவர் கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்கள். அவர்களின் வருகையால் சைவ மடங்களில் பல மாற்றங்களேற்பட்டன. காளாமுக சைவ மடத்தின் தலைவர்களைச் 'சதுரானப் பண்டிதர்கள்" என்றழைத்தனர். இதைப்போலவே கோளகிச் சைவ மடங்கள் பலவும் ஏற்பட்டன. இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் சோழப் பேரரசருக்கு இராஜ குருவாக இருந்தனர். அவர்களின் சொற்படி பிரம் தேயங்களை உருவாக்குவது போன்ற காரியங்களை அரசர்கள் செய்தனர். கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை கோளகி மடங்கள் சோழ நாட்டில் சிறப்புற்றிருந்தன. தமிழ்ச் சைவமடங்கள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் எழுச்சி யுற்றன. அவை, தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, இராமநாதபுரம் முதலிய இடங்களில் தோன்றின. இவை யாவும் வெள் ளாள சைவர்களையே தலைவர்களாகக் கொண்டு இருந்தன. சைவ சித்தாந்தக் கொள்கைகளின் அடிப்படையில் இவை செயல்பட்டன, குகையிடி கலகம் கி.பி. 1200-ல் சைவ மடங்களை இடித்த சம்பவம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடந்தது. சைவ மடங்களையே குகைகள் என்பார்கள். இவை சைவக் குரவர்களின் பெயரால் அமைந்திருந் தன. சைவத் திருமுறைகளில் வல்லவர்களே இவற்றின் தலைவர் களாய் இருந்தனர். இவர்களுக்கு 'முதலிகள்' (தலைவர்கள் என்று பெயர். தமிழர்களாகிய வெள்ளாளர்களின் மடங்களின் (குகைகளின்) மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பிராமணர்கள் திருத்துறைப் பூண்டியிலிருந்த சைவ மடத்தை (குகை) இடித்து தலைவரைக் கொன்று குகையின் சொத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டனர். சைவ மடங்கள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்தன. சைவ இலக்கியங்களின் காப்பகங்களாகத் திகழ்ந்தன. ஆனால் கோளகிச் சைவ மடங்களுக்குப் பிராமணர்களே தலைவர்களாக இருந்தனர். பொதுவாகச் சைவ மடங்கள் மேன் மக்கள், பாமரர் ஆகிய அனை வரையும் ஆன்மீகத் துறைக்கு இழுத்தன. கோயில் பூசைகளும், விழாக்களும் இம்மடங்களால் அதிகரித்தன. இதனால் மக்களின் நெஞ்சத்தில் கோயில் நீங்காத இடம் பெற்றது. சைவ சமயாச் சாரியர்கள் மக்களின் வாழ்வில் நெருங்கிய தொடர்பு கொண்டனர். இதனால் மக்கள் சமயத்தோடு ஒட்டிச் சென்றனர். மக்களின் கல்வி, நல் வாழ்வு, ஒழுக்கம் இவற்றை இம்மடங் கள் மேம்படச் செய்தன. சைவ சித்தாந்தம் பாமரன் வாழ்க்கையோடு கலந்து விட்டது. இதனால் சாதியக் காழ்ப்புணர்ச்சிகள் தளர்ந்தன. 2. மாவியம் (வைணவம்) பொதுவாக சோழர்கள் "சைவக்குஞ்சுகள்' எனப்பட்டனர். ஆயினும் அவர்கள் வைணவத்திற்குப் பகைவர்கள் அல்லர். சிவ பக்தனான முதலாம் பராந்தகன் வைணவத்தின் பெயரால் பிரம் தேயங்களை உருவாக்கினான், பல திருமால் கோயில்களையும் கட்டினான். சைவனான கண்டராதித்த சோழன் தான் அமைத்த கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் திருமால் கோயிலைக் கட்டினான். முதலாம் இராசராசன் கன்னடநாட்டில் மணலூரில் சயங் கொண்ட சோழ விண்ணகரம் என்ற திருமால் கோயிலைக் கட்டினான். தலைக்காட்டில் இராசகுலமாணிக்க விண்ணகரம் என்ற திருமால் கோயிலையும் கட்டினான். அவனும் அவனுடைய தமக்கை யான குந்தவைப் பிராட்டியாரும் பல திருமால் கோயில்களுக்கு நிவந் தங்கள் கொடுத்துள்ளனர். இவ்வாறே ஒவ்வொரு சோழப்பேரரசனும் பல திருமால் கோயில்களைக் கட்டி நிவந்தங்கள் செய்துள்ளனர். சோழர் காலத்தில்தான் வைணவ இலக்கியங்கள் பெருகின. இராமானுசர் போன்ற மேதைகள் தோன்றி வணவத் தத்துவங் களை வளர்த்ததும் சோழர் காலமே. நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார் முதலியோரை வழிபடும் வழக்கம் முதலாம் இராசராசன் காலத்திலேயே தொடங்கியது. ஆழ்வார் பாசுரங்கள் கோயில்களில் பாடப்பட்டன. 3. சமணமும் சாக்கியமும் சோழர்களின் ஆட்சியில் பௌத்தமும் சமணமும் கூட சிறந்த நிலையிலிருந்தன, கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சைவ சமய வளர்ச்சி யால் பாதிக்கப்பட்ட சமணம் சோழர் காலத்தில் துளிர்த்தெழத் தொடங்கியது. பல சமணக் கோயில்கள் புதிதாகக் கட்டப்பட்டன. குறிப்பாகத் தொண்டை நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் சமணரின் குகைக்கோயில்கள் பல எழுந்தன. தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. குகைக் கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்களாக மாறின. கோமதீசுவரர், பார்சுவநாதர், ஆதிநாதர், மகாவீரர், அம்பிகா யட்சி ஆகியோரை வழிபட்டனர். பல குகைக்கோயில்கள் கட்டு மானக் கோயில்களாயின. சைனக் காஞ்சி (ஜீனகாஞ்சியில் திருப் பருத்திக் குன்றத்திலிருந்த பழைய கோயில் சோழர் காலத்தில் கற்றளியாக மாறியது. சமணத் துறவிகளால் மக்களும் தூய்மை பெற்றனர். இவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகள் போற்றுதற்குரியவை ஆகும். திருத்தக்கத் தேவரின் சீவக சிந்தாமணி, குணவீர பண்டிதரின் நேமி நாதம் என்ற இலக்கண நூல், பவணந்தி முனிவரின் நன்னூல் எனும் இலக்கண நூல் முதலியன சமணர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிக ளாகும். சமணத்தைப் போலவே, பௌத்தமும் சோழர்களால் போற்றி ஆதரிக்கப்பட்டது. சுந்தரசோழப் பள்ளி என்னும் புத்தக் கோயிலைச் சுந்தர சோழன் உலகபுரத்தில் கட்டியுள்ளான். சூடாமணி விகாரம் என்ற புத்தக் கோயிலுக்கு ஆனைமங்கலம் என்ற ஊர் பள்ளிச் சந்தமாக சோழர் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதைப் போலவே பலவற்றைக் கூறலாம். பௌத்தர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றி உள்ளனர். புத்தமித்தரரின் வீரசோழியம் என்ற இலக்கண நூலை எடுத்துக்காட்டாகக் கூறலாம். பெளத்த மடங்களும் சமுதாய நலனுக்குப் பல பணிகளைச் செய்துள்ளன. சோழர் காலத்தில் சமயப் பொறை நிலவியதால்தான் கோயிற்கலை வளர்ச்சி அடைந்தது. முடிவுரை ஆகமங்கள் என்றாலே சைவ ஆகமங்கள் என்றவாறு சைவம் முகாமை பெற்றது. ஆகமங்கள் வேதங்கள், இதிகாசங்கள், உப் நிடதங்கள் ஆகியவற்றில் இருந்து தோன்றியவை அல்ல. அவை ஆரியரல்லாதாருடைய ஆவணங்களாகும் என்று கர்மார்கர் 'இந்தியா வின் சமயம்' நூலில் கூறுவதில் இருந்து சோழர் கால சைவத்தின் வளர்ச்சியைக் காணலாம். "மன்னு மாமலை மகேந்திரமதனில் சொன்ன ஆகமம் தோற்று வித்தருளியும்" என்று மாணிக்க வாசகர் கூறுவதை நோக்கலாம், திருமந்திரம் என்பதுதான் தமிழில் வந்த முதல் ஆகமம் ஆகும். சோழர் காலத்தில் பௌத்தம் அழிக்கப்பட்டது என்றும், சைவர்கள் சமணர்களைக் கழு ஏற்றினார்கள் என்றும் தமிழன் அயோத்திதாசர் பண்டிதர் தனது ஆதிவேதத்தில் கூறுவதும் ஈண்டு ஓர்ந்தறியத் தக்கதாம். எ, பொருளாதார நிலை சோழர் காலத்தில் பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டது. காவிரி ஆற்றின் நீர்வழிகளைப் பயன் படுத்திச் சோழர்கள் ஆற்றுக் கால்வாய்களை வெட்டியும், நீர்த் தேக்கங்களைக் கட்டியும் வளமான நிலத்தை ஏற்படுத்தினார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகங்களை வளர்த்து அன்னியச் செலாவணி ஈட்டினர். வணிகப் பொருள்களைக் கொண்டுச் சென்று விற்கவும், வாங்கி வரவும் போக்குவரத்துச் சாதனங்களும் நீர்வழி, நிலவழிப்பாதைகளும் ஏற்பட்டன. அயலக வாணிகத்திற்குக் கடல் வழிப் பெரிதும் பயன்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு சிறந்த கடல் வழி வாணிபம் பெருகியது. சீனப் பீங்கான்கள் தமிழகத் துறைமுகங்களுக்கு வந்தன. தமிழக முத்தும், சந்தனமும், தேக்கும், கருங்காவியும் மணிக்கற்களும் பிற நாடுகளுக்குச் சென்றன. இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு சோழரின் கடல் கடந்த வெற்றி களும், நாணயமுறை வளர்ச்சியும் கூட... உறுதுணையாகின்றன. நிலவரி சோழரின் வருவாய் ஊற்றுக்கண் கலிபெருக்கெடுத்து ஓடின, அவற்றுள் நிலவரி மூலம் கிடைக்கும் வருவாயே தலையாய தாகின்றது. நிலவரியைக் கடமை, காணிக்கடன், இறை என்றெல் லாம் அழைப்பர். நிலவரி விளைச்சலில் ஆறிலொரு பங்காகத் தண்டல் செய்யப்பட்டது. ஆறிலொரு பங்கு வாங்கும் வரி அரசனின் அன்பும் அருளும் நிறைந்த செயலாகக் கருதப்பட்டது. விளை நிலத்தையும், ஆறிலொரு பங்கு வரியையும் குறிக்கும் சொல்லாகப் புரவு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த புரவு வரியைத் தண்டல் செய்ய அமைக்கப்பெற்ற துறைக்குப் புரவு வரித் திணைக்களம் என்று பெயர். எடுத்துக்காட்டு 1. தொண்டை நாட்டுப் புரவு வரித்திணைக்களம். 2. சோணாட்டுப் புரவு வரித்திணைக்களம். இந்தத் திணைக்களச் சபையார் புரவு வரியைத் தண்டல் செய்து பார்க் களஞ்சியத்தில் சேமித்துப் பின்னர் அரசின் பெருங்களஞ்சியத் திற்கு அனுப்புவர், இதற்காக ஊர்தோறும் அக்காலத்தில் களஞ்சியங் களிருந்தன. இவ்வாறு ஆறிலொரு பங்கு நெல்லைத் தண்டல் செய்து ஊர்க்களஞ்சியத்தில் சேர்ப்பது ஊர்ச் சபையின் உட்கழகங்களில் ஒன்றான பஞ்ச வாரியத்தின் கடமை ஆகும். இதற்காக நெல் அளக்கும் மரக்காலுக்கு பஞ்சவாரக்கால் என்று பெயராயிற்று. நிலவள் ஏந்துகள் மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து என்ற புகழுரைக்குக் காரணமே இந்நாட்டில் வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி யாறும், அதன் கிளையாறுகளும் ஓடி வளமாக்குவதே ஆகும். இதனால் தான் இந்நாட்டைக் காவிரி நாடு எனவும், பொன்னி நாடு எனவும் அழைத்தனர். கரிகால் சோழன் முதற்கொண்டு, பிற்காலச் சோழர் வரை சோழர் வேந்தர் அனைவருமே நீர்வளத்தையும், நீர்ப்பாசன ஏந்துகளையும் பெருக்கி வந்தனர். காவிரியோடு, அரசிலாறு மண்ணி, கொள்ளிடம் கடுவாய், வெண்ணி , வடலாறு, மதுராந்தக வடலாறு, உய்யக்கொண்டான், கீர்த்திமான், முடிகொண்டான், வீரச்சோழன், விக்கிரமன் ஆறு முதலிய பல்வேறு சிற்றாறுகள் அந்தந்த காலத்தி லாண்ட சோழ மன்னர்களால் வெட்டப்பட்ட ஆறுகளாகும். இவற்றைத் தவிர பல்வேறு கால்வாய்களும், மதகுகளும் - அணைக் கட்டுகளும், ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் நாடெங்கிலும் ஏற்பட்டன. ஏரிகள் வடார்க்காடு மாவட்டம் சோழ சிங்கப்புரத்திற்கு அண்மை யிலுள்ள சோழவாரிதியென்ற ஏரிகள், தென்னார்க்காடு வள்ளலார் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியும் (வீரநாரணன் ஏரி) முதற் பராந்தக சோழனால் வெட்டப்பட்டவை ஆகும். மதுரை மாவட்டத் திலுள்ள கலியனேரி சோழநாட்டு அதிகாரி அருள் நிதிகலியன் என்பவனால் வெட்டப்பட்டதாகும். தென்னார்க்காடு உலகபுரத்தி லுள்ள கண்டராதித்தன் பேரேரியும், திருச்சி மாவட்டம் திருமழப் பாடிக்கருகிலுள்ள செம்பியன் மாதேவிப் பேரேரியும், கண்ட ராதித்தச் சோழனாலும், செம்பியன் மாதேவியாலும் வெட்டப் பட்டவை ஆகும். செங்கை அண்ணா மாவட்டத்திலுள்ள மதுராந்தகப்பேரேரி திரிபுவனி யிலுள்ள மதுராந்தித்தன் மகன் உத்தம் சோழனால் வெட்டப்பட்டவை ஆகும். வடார்க்காடு அம்பேத்கர் மாவட்டம் பிரதேசத்திலுள்ள சுந்தரசோழப்பேரேரி குந்தவைப் பேரேரி ஆகிய இரண்டும் முறையே சுந்தரசோழனாலும் அவனுடைய புதல்வி குந்தவையாலும் அமைக்கப்பட்டவை ஆகும். முதலாம் இராசேந்திரன் அமைத்தச் சோழகங்கம் என்ற பேரேரி மிகவும் சிறப்புடையதாகும். ஆந்திர நாட்டு சித்தூர் மாவட்டம் புங்கனூரரிலுள்ள இராசேந்திர சோழப் பேரேரி முதலாம் குலோத்துங்க னால் வெட்டப்பட்டதாகும். இவனால் அமைக்கப்பட்ட மற்றொரு ஏரி பாவநாசம் அருகிலுள்ள முனியூர் குலோத்துங்க சோழப் பேரேரி ஆகும். இவ்வாறு பற்பல ஏரிகளைச் சோழ மன்னர்கள் நாடு முழுவதும் அமைத்தனர். இவற்றை ஆண்டுதோறும் ஆழமாக வெட்டியும், கரைகளை உயர்த்தியும் வருவர். இதனால் மழைநீர் அதிகம் தேங்கி நீர்ப்பாசனத்திற்குப் பயன்பட்டது. அர்ச்சபையிலுள்ள ஏரியை பராமரித்தனர். பராமரிப்புச் செலவுக்காக இறையிலி நிலங்கள் ஒதுக்கப்பட்டன. பொது மக்களும், நன்கொடை நல்கினர். நீர்ப்பாசன நிலத்தார் வரியும் கொடுத்தனர். இன்னின்ன ஏரியில் இருந்து இன்னின்ன நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியுண்டு என்று ஆவணங்களிலேயே குறிப்பிட்டனர். நில அளவையும், நில உரிமையும் ஒரு நிலத்தை உரிமை ஆக்குவதற்கும், வரி விதிப்பதற்கும் அதன் அளவு தெரிய வேண்டும். இன்றைய புதிய முறை அளவைப் போல் சோழர் காலத்திலும் நிலங்களைத் துல்லியமாக அளத்தல், தரம் பிரித்தல் முதலியன மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, சோழநாடு முழுவதும் சோழராட்சி காலத்தில் மூன்று முறை அளக்கப் பட்டதையறிகிறோம். முதலாம் நிலை அளவை கி.பி. 1001 முதன் முறையாக கி.பி. 1001-ல் முதலாம் இராசராச சோழன் காலத்தில் சோழநாடு அளக்கப்பெற்றது. இப்பணியை இம்மன் னனின் படைத்தலைவர்களில் ஒருவரான குரவன் இராசராசமாராயன் மேற்கொண்டு இரண்டே ஆண்டுகளில் முடித்தான். இதனால் இவனுக்கு உலகளந்தான் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. இவன் நிலம் அளந்த கோல் உலகளந்த கோல் என்று அழைக்கப் பட்டது. இதன் நீளம் பதினாறு சாண் ஆகும். நில அளவை நன்செய் நிலம் நீர் நிலம் என்றும், புன்செய் நிலம் கொல்லை என்றும், வீட்டுமனை நிலம் நத்தம் என்றும் அழைக்கப்பட்டன. குழி, மா, வேலி முதலிய அளவுகளைக் கொண்டு நிலத்தை அளந்தனர். இருபது மா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பட்டன. நிலத்தை அளந்து எல்லைகளைக் குறிக்க நடப்படும் கற்கள் புள்ளடிக் கற்கள் எனப்பட்டன. தேவதானமாக சிவன் கோவிலுக்கு விடப்பட்ட நிலத்தை யும் திருமால் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்தையும்கூட அளந்து எல்லைக் கற்கள் நட்டனர். புள்ளடிக் கற்கள் நட்டனர். இந்த புள்ளடிக் கற்களில் சிவன் கோயில் நிலத்தில் திரிசூலமும், திருமால் கோயில் நிலத்தில் திருவாழியும் பொறிக்கப் பட்டன. சமணக் கோயில்களுக்கு விடப்பட்ட நிலங்களுக்குக் குண் டிகை அல்லது முக்குடை பொறிக்கப்பட்ட கற்கள் நடப்பட்டன. இவ்வாறு அளக்கப்பட்ட நிலங்களைப் பின்னர் தரம் பிரித்த னர். மண் வளம், நீர் வளம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நிலத்தின் (நிலங்கள்) தரம் பிரிக்கப்படும். தரம் பிரிக்கப்படாத நிலம் தரமிலா நிலம் என்றழைக்கப்பட்டது. தரத்தினடிப்படையில்தான் விளைச்சல் கணக்கிடப்பெற்று வரி வசூலிக்கப்படும், தரம் பிரிக்காமல் (தரமிலி) ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வரி விதிக்க மாட்டார்கள், நத்தம், கம்மாளச்சேரி, வண்ணாச்சேரி, ஈழச் சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சேரி, பறைச்சுடுகாடு, வாய்க்கால் கோயில் இயன்கோயில், பிடாரி கோயில், திருமுற்றம், திருகாருணி, கழனிக்குளம், நந்தவனம், களம், கொட்டாரம், ஓடை, சுடுகாட்டுக் குப் போகும் வழி, ஆறு, பெருவழி, மன்றம், கடைத்தெரு, காடு, உவர் நிலம் முதலியவற்றிற்கு வரி கிடையாது. பெரும்பாலும் நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பு முறையே இருந்தது. தரம் மாறினால் வரியும் மாறும். இவ்வாறு ஒரே நிலையில் அமைந்த வரிவிதிப்பு முறையை நின்நிறை அல்லது நிலை நிறை (நிரந்தர நிலவரி) என்றனர். இரண்டாம் நில அளவை கி.பி. 1086 முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய 6 ஆம் ஆட்சியாண் டில் (கி.பி. 1086) சேணாடு முழுவதும் இரண்டாம் முறையாக அளக்கப் பெற்றது. இப் பணியினை மேற்கொண்டவர்கள் இரு அரசியல் அதிகாரிகளெனக் கல்வெட்டுகளால் அறிகிறோம். ஒருவன் திருவேகம்ப முடையானான உலகளந்த சோழப் பல்லவராயன் என்பவன் ஆவான். மற்றொருவன் குளத்துாருடையான் உலகளந்தானான திருவரங்கத் தேவன். இவர்கள் அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் திருவுலகளந்த ஸ்ரீபாதக் கோல் என அழைக்கப்பட் டது. இதனால் இது குலோத்துங்க னுடைய பாத அளவை அடிப் படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அளவுகோல் ஆகுமென்பர். மூன்றாம் நில அளவை கி.பி. 1236 சோணாடு மூன்றாம் முறையாக கி.பி. 1236-ல் மூன்றாம் குலோத்துங்கனின் 38 ஆம் ஆட்சி ஆண்டில் நடைபெற்றது. நிலவுரிமை சோழருடைய ஆட்சிக் காலத்தில் நிலம் குடிமக்களுக்கே சொந்தமாக இருந்தது. அவ்வுரிமையை மூன்று வகையாகப் பிரித் தறியலாம். 1. வெள்ளாண் வகை பரம்பரையாக உழவுத்தொழிலை மேற்கொண்டோர் நிலங் களை அனுபவிக்கும் உரிமை பெற்றிருந்தனர். இதுவே வெள்ளாண் வகை எனப்படுவதாகும். இவர்கள் வரி செலுத்தும் குடிமக்கள் என்று பொருளில் இறைகுடிகள் என்றழைக்கப்பட்டனர். இவர்களில் தாமே உழுதுண்பர் என்றும், பிறரை உழுவித்து உண்பவர் என்றும் இருவகையினர் இருந்தனர். 2. தானமாக அளிக்கப்பட்ட நிலங்கள் இரண்டாவதாக தான மாக அளிக்கப்பட்ட நிலத்தின் உரிமையை அனுபவிக்கும் நில உரிமையாகும். சிவன் கோவிலுக்கு விடப்படும் தேவதான நிலம், திருமால் கோயிலுக்கு விடப்படும் திருவிடை யாட்டம், சைவக்கோயிலுக்கு விடப்படும் மடப்புரம் அந்தணர், சிவ யோகிகள், அபூர்வ பிறவிகள் முதலியோருக்கு உணவு அளிக்க விடப்படும் சாலபோகம், வேதசாத்திரங்களைப் பயின்று சீலமுடன் வாழும் பிராமணருக்கு விடப்படும் பிரமதேயம் முதலியனவற்றுக்கு வரி கிடையாது. எனவே இவை இறையிலி நிலங் கள் ஆகும். இவற்றை இறையிலியாகப் பெற்றவர்கள் அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஆயினும் சில கல்வெட்டுக்களின் கூற்றுப்படி இவர்கள் ஒரு சிறுவரியை அரசுக்குத் செலுத்தின ரென்றும் அதற்கு இறையிலிக்காசு என்றும் பெயர். 3. காணி நிலம் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதற்காகக் கொடுக்கப்ப டும் நிலம் காணி நிலம், சீவிதம், போகம், விருத்தி, பற்று, புறம், பட்டி, முற்றூட்டு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் பணிக்காகச் சம்பளத்திற் குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக்கொள்ளும்படி அளிக்கும் நிலத்திற்குச் சீவிதம் என்று பெயர். அந் நில அதிகாரிகள் சிறப்புடன் பணியாற்றினால் அவர் வாழ்நாளிலேயே அவர்தம் சந்த தியினருக்கு இறையிலியாக மாற்றிக் கொடுப்பதுண்டு. அவர் இறந்து விட்டால் மனைவி, மக்களுக்கும் உடன் பிறந்தாருக்கும் இறையிலி யாக வழங்குவதும் உண்டு. கோயில்கள், சம்பவங்கள் முதலியவற்றில் சில குறிப்பிட்ட காரியங்களை நாள்தோறும் அல்லது திங்கள் தோறும் அல்லது ஆண்டு விழாக்களில் செய்து வருபவருக்கு அவரவர் வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொள்ளுமாறு அளிக்கப்படும் நிலங்கள் போகம், விருத்தி, காணி, பேறு, புறம், பட்டி" பற்று முதலான பெயர்களால் அறியப்பட்டன. இவை அரசராலும் அரச அதிகாரிகளாலும் ஊர்ச் சபையாராலும் கோயில் அதிகாரிகளாலும், செல்வந்தர்களாலும் அளிக்கப்படும் நிலங்களாகும். இவையும் இறையிலி நிலங்களே ஆகும். சிவன் கோயில்களில் அருச்சனை செய்யும் சிவவேதியருக்கு அர்ச்சனாபோகம் என்ற நில உடைமையும், மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு மருத்துவம் செய்பவருக்கு வைத்திய போகம் என்ற நில உடைமையும் விழாக் காலங்களில் ஆரியக் கூத்து நிகழ்த்தும் கூத்தச் சாக்கையருக்கு நிறுத்த போகம் எனும் நில உடைமையும், கார்களில் இரவில் அம்பலத்தமர்ந்து கோயில் பாரதச் சொற்பொழிவு நிகழ்த்துவோருக்குப் பாரத விருத்தியெனும் நில உடைமையும் கோயில்களில் வேதம் ஓதுவதற்கும், புராணங்களைப் படிப்பதற்கும், பட்ட விருத்தியென்ற நில உடமையும் வழங்கப்பட்டன. கோயில்களில் ஆடல் பாடல்கள் நிகழ்த்தும் பதியிலார் எனும் பெண்டிற்குப் பதியிலார் காணி(தாசி மானியம் ரயும் அவர்களை ஆட்டுவிக்கும் ஆடலாசிரியனான நட்டுவனுக்கு தட்டுவக்காணியும், ஆரியக்கூத்தாடும் சாக்கையனுக்குச் சாக்கைக் காணியும் தமிழ்க் கூத்தாடுபவருக்குக் கூத்தாடிக் காணியும் வீணை இசைப்பவருக்கு வீணாக்காணியும் மத்தளம் கொட்டும் மெய் முட்டிக்கு முரவியக் காணியும் ஒரு கண்ணுடைய பறை கொட்டும் உவச்சனுக்கு உவச்சக் காணியும் கணக்கெழுதும் கணக்கனுக்குக் கணக்கக்காணியும் திருப்பதி நிலங்களை ஒதுக்குவோருக்கு திருப்பதிக் காணியும் வழங்கப்பட்டன. இவையாவும் இறையிலி நிலங்களாகும். அம்பலங்களில் குடிநீர் கொடுக்கவும், நெருப்பைச் சேமித்து வைத்துக் கேட்போருக்கு அளிக்கவும் கொடுக்கப்பட்ட நிலம் அம்பலப்புறம் என்றும், அம்பலங்களை மெழுகித் தூய்மையாக வைப்பவருக்குக் கொடுத்த நிலம் மெழுகுப்புறம் என்றும் சில அறங் களைச் செய்ய தனியாருக்கு அளிக்கப்பட்ட நிலம் அறப்புறம் என்றும் அறியப்பட்டன. போரில் உயிர் நீத்தவனின் உற்றார் உறவினருக்கு வழங்கப் பட்ட நிலம் உதிரப்பட்டி என்றும், ஏரிகளை வெட்டி ஆழப்படுத்தி யும், கரைகளை உயர்த்தி நீர்தேக்கவும் அளிக்கப்பட்ட நிலம் ஏரிப்பட்டி யெனவும், அரசனுக்கு வேண்டிய நேரத்தில் படை உதவி செய்யப் படைத்தலைவனுக்கு அளித்த படை மானியம் படைப் பற்று அல்லது வன்னியப்பற்று எனவும் அழைக்கப்பட்டன. இதுகாறும் நாம் கண்ட இறையிலி நிலங்கள் விருத்தி, காணி, போகம், புறம், பட்டி, முதலிய பெயர்களால் அறியப்பட்டன. இவை பிற்காலத்தில் பொதுவாக மானியம் என்றே அழைக்கப்பட்டன. தேவதானம், பிரமதேயம், மடப்புறம், திருவிடையாட்டம், பள்ளிச் சந்தம் ஆகியவற்றை அரசர், அரசியல் தலைவர், உனர்ச் சபையார் வழங்கினால் வரி இல்லை. இவற்றையே தனிப்பட்ட செல்வந்தர்கள் வழங்கினால் அவர்களிடமிருந்து தனிப்பட்ட தொகை யொன்றைப் பெற்று அதனை முதலீடாகக் கொண்டு (அசல்) அதில் இருந்து வரும் பலிசை (வட்டி) ஆண்டு தோறும் அரசுக்கு வரியாகச் செலுத்துவர். இதனை இறைக்காவல் என்பர். ஓர் இடத்தைத் தான் மாகவோ, பிரமதேயமாகவோ கொடுக்கு முன் அங்கிருக்கும் குடிகளை அப்புறப்படுத்தி, பண்படுத்தி, கல்லும், கள்ளியும் எல்லை யாக நட்ட பின்தான் கொடுப்பர், சோழர் காலத்தில் குடிகளையும், அவர்களின் உரிமைகளயும் சேர்த்துத் தேவதானமாக வழங்குவர். இத்தகைய தேவதானம் குடிநீங்காத் தேவதானம் எனப்பட்டது. இதுவரை சோழர் காலத்திலிருந்த நில உரிமை முறைகளைக் கண்டோம். வரிச்சுமைதாங்க முடியாத பொது மக்கள் குடிபெயர்ந்து ஊரைவிட்டே போய் விடுவார்கள். அரசன் அவர்களுக்கு ஆறுதல் கூறி மீண்டும் அழைத்து வருவான். 2. வாணிகம் சோழர் காலத்தில் நிலவரிக்கு அடுத்தபடியாக அரசுக்கு வருவாய் தேடித் தந்தவர்கள் வணிகர்களே. இவர்கள் சமுதாயத்தில் மிக்க செல்வம் படைத்தவர்களாக இருந்தனர். கோயில், குளம், ஏரி முதலிய பொதுவிடங்களை அமைக்கப் பொருளுதவி செய்தனர். ஒரு நாட்டில் வாணரிகம் செழித்தோங்க வேண்டுமானால் அந்த நாட்டில் போக்குவரத்து ஏந்துகளிருக்க வேண்டும். சிற்றூர்களுக்கும், பேரூர் களுக்கும் இடையில் சிறுவழிப்பாதைகள், பெருவழிப்பாதைகளிருக்க வேண்டும். கடல்வழிச் செல்ல மரக்கலங்களிருக்க வேண்டும். இவை யாவும் சோழர்காலத்தில் செம்மையாக அமைந் திருந்ததால்தான் வாணிகமும், உற்பத்திப் பொருள்களும் பெருகின. கல்வெட்டுகளைச் சான்றாகக் கொண்டு சில பெருவழிப் பாதைகளை நம்மால் அறியமுடிகிறது. திருப்பாசூரில் இருந்து இராசாசிரய புரத்துக்கும் போன வழி, அரங்கம் நோக்கிப் போனவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, பட்டினப் பெருவழி முதலிய பெருவழிகளை அறி கிறோம். பெருவழிகள் மூன்றுகோல் நான்கு கோல் அகலமுடையனவாகயிருந்துள்ளன. தரைவழி வாணிகம் வணிகர்கள் பொதிமாடுகளின் முதுகிலும், வண்டிகளிலும் பண்டங்களை ஏற்றிக் கொண்டு கூட்டங் கூட்டமாகச் செல்லுவர். வழிப்பறிக்கொள்ளையரிடமிருந்து தங்கள் உடமைகளைப் பாது காத்துக் கொள்ள. ஆயுதங்கள் தாங்கிய காவற்படைகளையும் அழைத்துச் செல்வர். முக்கிய இடங்களில் அரசால் அமர்த்தப் பெறும் பெரும் பாடிக்காவல், சிறும்பாடிக்காவல் அதிகாரிகளுமிருப்பர். இவ்வாறு கூட்டமாகச் செல்லும் வணிகக் கூட்டத்தைச் சாத்து என்று அழைப்பர். இதன் தலைவன் சாத்தன் அல்லது மாசாத்துவன் எனப்பட்டான். வணிகருள் சிறந்தோருக்குச் சோழ மன்னர்கள் எட்டியென்ற பட்டம் கொடுத்துச் சிறப்பித்தனர். கடல்வழி வாணிகம் கடல் கடந்து சேய்மை நாடுகளில் வாணிகம் செய்தவர்கள் நாய்கர் அல்லது மாநாய்கர் எனப்பட்டனர். சோழநாட்டு வணிகர் அரேபியா, பாரசீகம் முதலிய மேற்கத்திய நாடுகளோடும், பர்மா, ஸ்ரீவிஜயம், சுவர்ணதீபம், யவத்தீபம், காம்போசம், சீனம் ஆகிய கீழ்த்திசை நாடுகளோடும் வாணிகம் செய்தனர். இக்காலத்தில் நாகப் பட்டினம், காரைக்கால், வீராம்பட்டினம், மாமல்லபுரம், வீரசோழப் பட்டினம் (கோவளம்) மைலாப்பூர் ஆகியவை சிறந்த துறைமுகப் பட்டினங்களாயிருந்தன. இந்தக் கடல் வணிகர்கள் எண்ணிக்கையில் ஐநாறு பேர் வரை, கூடி இணைந்து பல்வேறு திசைகளிலுமுள்ள நாடுகளுக்கெல்லாம் சென்று, அயல்நாட்டு வாணிகம் செய்தனர். இதன் அடிப்படையில் இவர்களுக்கு நானாதேசிகர் என்று பெயர் உண்டாயிற்று. அதாவது, பல நாடுகளுக்கும் சென்று வாணிகம் நடத்தியவர் என்பது இதன் பொருளாகும். எல்லாத் திசைகளுக்கும் சென்று வாணிபம் நடத்திய தாலும், ஐநூறு பேர் கொண்ட குழுவினராகத் திகழ்ந்ததாலும் திசை யாயிரத்து ஐந்நூற்றுவர் என்று அழைக்கப்பட்டனர். தலைநகரங்களி லும், துறைமுகப் பட்டினங்களிலும், வெளிநாடுகளிலும் வாணிகம் செய்த குழுவினரை மணிக்கிராமத்தார் என்றழைத்தனர். பெரிய நகரங்களில் இருந்து கொண்டு வாணிகம் செய்த குழுவினருக்கு நகரத்தார் என்று பெயர். நகரத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இவர்கள் நகராட்சிகளையும் கைப்பற்றி ஆண்டனர். இலங்கையில் இருந்து இங்கு வந்து வாணிகம் செய்தவர்கள் வளஞ்சியர் எனப்பட்டனர். இவர்கள் புத்த சமயத்தைப் பின்பற்றி னார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாணிகம் நடத்திய மற்றொரு அயல்நாட்டார் முகமதியராவர். இவர்களைக் கல்வெட் டுகள் அஞ்சு வண்ணத்தார் எனக் குறிப்பிடுகின்றன. இத்தகைய கடல் வாணிகத்தால் சோழநாட்டு மக்கள் செல்வந்தர்களானார்கள். வணிகர்கள் பல மொழிகளையும் பண்பாடுகளையும், நாகரிகத் தையும் அறிந்தவர்களாயினர். இதனால் தமிழகத்தில் அயல்கக் கலாச்சாரமும் பண்பாடும் பரவியதோடு தமிழர் பண்பாடும். நாகரிகமும் அயல்நாடுகளில் பரவின. சோழநாட்டுத் துறைமுகங்களில் அயல்நாட்டுக் கப்பல்கள் நின்றவண்ணம் இருந்தன, இரவும் பகலும் துறைமுகங்களில் ஏற்று மதி, இறக்குமதிகள் நடந்தவண்ணம் இருந்தன. பல மொழிகளைப் பேசும் பன்னாட்டு வணிகர்கள் ஆர்ந்தவண்ணம் இருந்தனர், சுங்க வரியை வாங்கியவுடன் முட்டைகளின் மேல் புலி முத்திரையைப் பொறித்து அனுமதி அளித்தனர். சுங்க வரியால் சோழர் கருவூலம் நிரம்பியது. 3. நாணயங்கள் சோழர் காலத்தில் பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலான நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன் நாணயங்கள் மாடை, காசு, காணம் முதலிய பெயர்களால் அறியப் பட்டன. மாடையென்ற நாணயம் ஒரு கழஞ்சு அல்லது நாற்பது குன்றிமணி எடையுள்ள ஒரு நாணயமாகும். காசு என்ற நாண யத்தை காசு பழங்காசு என்றும் நிகழ்கால அரசருடைய காசு அன்றாடு நற்காசு என்றும் அழைக்கப்பட்டது. ஈழக்காசு என்பது ஈழநாட்டுப்பொற்காசு ஆகும். ஈழத்தைச் சோழர்கள் வெற்றி கொண்டதின் வெற்றிச்சின்னமாக வெளியிடப் பட்டது என்றும் கூறுவர். இதுவே வெள்ளி அல்லது செப்புக் காசாக யிருந்தால் Fஈழக்கருங்காசு என்றழைத்தனர். கச்சகாணம், அக்கம், திரமம், புசபாலன் மாடை, கண்டகோபாலன் மாடை முதலிய வேறு சில நாணயங்களும் இருந்தன. சின்னங்கள் சோழரின் நாணயங்களில் நடுவில் புலியுருவமும், வலது பக்கத்தில் மீன் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. அரசருடைய பெயர் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின் சோழர்காலத்தில் மக்கள் செல்வச் செழிப் போடு வாழ்ந்தார்கள். மன்னர்கள் அயல்நாடுகளின் மீது படை யெடுத்துக் கவர்ந்த கொண்டிப் பொருள்களும், திறையாகப் பெற்ற செல்வங்களும், கோயில்களைக் கட்டவும், அரண்மனைகளை அழகுபடுத்தவும், வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கவும். விருதுகள் வழங்க வும் பயன்பட்டன. வணிகத்தால் செல்வந்தர்களான நகரத்தார் மாநாய்கர்கள், மாசாத்துவான்கள், மணிக்கிராமத்தார் பலரும் வணிகக் குழுக்களை ஏற்படுத்தி, வங்கிகளைப் போன்ற வைப்பகங்களையும் நடத்தினர். செட்டிகள், செட்டிப்பிள்ளைகள், கவுரவர்கள், கந்தழிகள், பத்திரர்கள், நாவுண்ட சாமிகள், சிங்கம், சிறுபுலி, வலங்கை , வாரியன் ஆகியவர்கள் இத்தகைய குழுக்களிலிருந்ததாக காட்டூர்க் கல்வெட்டு கூறுகிறது. தட்டார், தச்சர், கருமார், கன்னர் முதலியோர் தங்களின் தொழிற் கூடங்களை அமைத்து தொழில் வளத்தைப் பெருக்கினர். இவர்க ளிடமிருந்து ஏராளமான தொழில்வரிகளும் அரசுக்கு வருவாயாக வந்தன, பொன் காசாக மட்டும் பயன்படாமல், சோடனைப் பொருளாகவும், கோயில் படிமங்களாகவும், அணிகலன்களாகவும் பயன்பட்டதை நோக்கும்போது இது ஒரு பொன்மேனிக் காலமோ யென வியப்புற வேண்டியுள்ளது. சோழர்காலத்தில் நிலம் மூன்று முறை அளக்கப்பட்டுத் தரம் பிரிக்கப்பட்டன. இதனால் வரிவிதிப்புகளும் அவ்வப்பொழுது மாற்ற மடைந்தன. நெல்வயல், தரிசாக இருந்து பின்னர் பண்படுத்தப்பட்ட நிலம், காட்டைத் திருத்தி ஆக்கிய நிலம், கடைப்பு நிலம், இரைப்பு நிலம். வாழைத்தோட்டம், கரும்புத்தோட்டம், செந்தாமரை பூக்கும் நிலம், சதுப்பு நிலம், மஞ்சள், இஞ்சி, வெங்காயம், வெள்ளைப் பூண்டு விளையும் தோட்ட நிலம், கத்திரி, பூசணி முதலிய காய்கள் விளையும் நிலம், பருத்தி, வரகுப் பருத்தி, தனிப்பருத்தி, மிளகு, பனிக்கடலை, கோதுமை, கொள், எள், தனியா, குசும்பை, ஆமணக்கு, தினை, சாமை பனிவரகு முதலியன விளையும் நிலங்கள், வேதிகொழுந்து, தனி முழுங்கொழுந்து ஆகியவை விளையும் நிலம், தென்னை , பலா, பாக்கு முதலிய விளையும் நிலம் என நிலங்களைப் பிரித்து, வரி விதிக்கும் முறையை நோக்கும்போது சோழர்கால பொருளாதாரப் புள்ளி விவரங்கள் இல்லை என்பதை அறியலாம். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இல்லை. நத்தம் புறம்போக்கு நிலம், சுடுகாடு. இடுகாடு, ஏரி, குளம், குட்டை, ஏரிவாய், தாங்கல்வாய் எனப்படும் நிலங்களையும், மேடு, பள்ளம், சதுப்பு நிலம் ஆகியவற்றையும் கூடத் துல்லியமாக அளந்து அவற்றில் பெருவாய் வருமானால் அதையும் பெற்றனர். பசு, எருமை ஆகியவற்றிற்கும் வரிகள் (பால்வரி) விதிக்கப்பட்டன. தந்திரிமார் செட்டிகள், கைக்கோல் நெசவாளர்கள், சரிகைத்தறி நெய்வோர், மன்றாடிகள், குயவர், நாவிதர், வண்ணார், வாணியர், பறையர் முதலியோரிடம் தொழில் வரி பெற்றனர். கோயில் பண்டாரம், வணிகத்தொழில் கழகங்கள் ஆகியவை இக்கால் வங்கிகளைப் போல் செயல்பட்டன. குற்றங்களுக்கான தண்டங்களும் வருவாயாக வந்தன. பொய்க் கையெழுத்துப் போடுதல், பொதுப்பணத்தைக் கையாடுதல் ஆகிய குற்றங்களை நிலக்கிழார்களும், அதிகாரிகளும், பிராமணருமே செய்தனர். கோயில் சொத்தைக் கொள்ளை யடிப்பதைப் பிராமணர் மட்டுமே செய்தனர். அன்றும் அன்றாடம் காய்ச்சிகளும், கூலிகளும் இருந்தனர். ஆணுக்குக் கொடுக்கும் கூலியில் பாதிதான் பெண்ணுக்குக் கொடுத் தனர். ஆனாலும் சொத்தில் பெண்ணுக்கு உரிமை இருந்தது. கணவன் இறந்துவிட்டால் அவனுடைய சொத்து மனைவிக்கு மட்டுமே சேரும். விளைநிலத்தையும், ஆறிலொரு பங்கு வரியையும் குறிக்கும் சொல்லாக புரவு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த புரவு வரியைத் தண்டல் செய்ய அமைக்கப்பெற்ற துறைக்குப் புரவு வரித்திணைக்களம் என்று பெயர். எடுத்துக்காட்டு: 1. தொண்டை நாட்டுப்புரவு வரித்திணைக்களம் 2. சோணாட்டுப்புரவு வரித்திணைக்களம் இந்த திணைக்களச் சபையார் புரவு வரியைத் தண்டல் செய்து ஊர்க்களஞ்சியத்தில் சேமித்துப் பின்னர் அரசின் பெருங் களஞ்சியத் திற்கு அனுப்புவர். இதற்காக ஊர்தோறும் அக் காலத்தில் களஞ் சியங்களிருந்தன. இவ்வாறு, ஆறிலொரு பங்கு நெல்லைத் தண்டல் செய்து தீர்க்களஞ்சியத்தில் சேர்ப்பது ஊர்ச் சபையின் உட்கழகங் களில் ஒன்றான பஞ்சவாரியத்தின் கடமை ஆகும். இதற்காக நெல் அளக்கும் மரக்காலுக்கே பஞ்சவாரக்கால் என்று பெயராயிற்று. ஏ) கலைகள் 1. கட்டடக்கலை பல்லவர்களுக்குப் பிறகு சோழப்பேரரசு 430 ஆண்டுகள் நிலைத் திருந்தது. இந்த நீண்டகாலத்தில் கட்டடக்கலை சிறப்புடன் வளர்ந்தது, அவற்றின் வளர்ச்சியை ஆட்சி அடிப்படையில் அறிவது நல்லது. எனவே சோழர் கட்டடப்பணிகளை முதல் கட்ட வளர்ச்சி, இரண்டாம் கட்ட வளர்ச்சி, மூன்றாம் கட்ட வளர்ச்சி என மூன்று கட்ட மாகப் பிரித்து அறிவது நல்லது. சோழர்கால கட்டடங்களில் யாவுமே கோயில்களாக இன்று வைத்துக் காணப்படுவதால் கட்டடங்களைக் கோயில்கள்' என்றே அழைக்கலாம். முதற்கட்ட வளர்ச்சி (கி.பி. 850 - 985) (முதற்காலச் சோழர் கோயில்கள்) இக்காலக் கட்டடம் விசயாலயன் (கி.பி. 850-880) காலம் முதல் உத்தமச் சோழன் (கி.பி. 870-985) வரையிலான காலத்தைக் குறிக்கும். இக்கால கட்டத்தில் வளர்ச்சிப் பெற்ற கட்டடப் பாணியை ''முதற்காலச் சோழர் கலைப்பாணி' என்றும் கூறலாம். இக்காலக் கட்டத்தில் எழுந்த கோயில்கள் பல்லவர் காலக் கட்டடப் பாணியின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன. தன்மைகள் முற்கால அல்லது தொடக்க கால சோழர் கோயில்கள் சிறியன வாகவும் ஒரு சிலவற்றைத் தவிர பிற கோயில்கள் சமசதுரக் கருவறையுடனும், ஓர் இடைநாழிகையுடனும், எங்கோ ஒரு சில பெரு மண்டபங்களுடனும் காணப்பெறுகின்றன. பெரும்பாலான கோயில்கள் ஒற்றைத் தளமுடையனவாகவும், மிகச் சில இரண் டுக்கும் மேற்பட்ட தளங்களுடனும் உள்ளன. நீள்வட்ட வடிவிலான 'தூங்கானைமாடக்கோயில்' சோழர் காலத்தில் இல்லை. இது பல்லவரின் கடைசிக் காலத்தில் ஏற்பட்ட பாணி ஆகும். முற்காலச் சோழர் கோயில்களில் பெரும்பாலானவை சிவன் கோயில்களாகவுள்ளன. இதற்கு அடுத்த எண்ணிக்கையில் திருமால் கோயில்களும், குறைவாகக் கொற்றவைக் கோயில்களும், மிகக் குறைவாக முருகன் கோயில்களும் உள்ளன. முற்காலக் கோயில்கள் (கி.பி. 870 - 985) 1. நிசும்பசூதனிக்கோயில் விசயாலயன் களப்பிரரை வென்று தஞ்சையைக் கைப்பற்றி சோழப்பேரரசை ஏற்படுத்தியதின் நினைவாக தமிழர் மரபுப்படி கொற்றவைக் கோயில் எடுத்தான். தன் கோநகரான தஞ்சையில் அவன் கட்டிய கொற்றவைக்கோயில் நிசும்பசூதனிக் கோயில் ஆகும். இச்செய்தியைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறிகிறோம். இன்று நிசும்பசூதனியின் சிலை தவிர அக்கோயிலின் சுவடே தஞ்சையில் காணப்பெறவில்லை. 2. நார்த்தாமலை விசயாலய சோழீச்சுவரம் விசயாலயன் கட்டிய இக்கோயில் முற்காலச் சோழர் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது திருச்சிக்கு அருகில் நார்த்தாமலைக் குன்று ஒன்றின் மீது கட்டப்பெற்றுள்ளது. இதன் கருவறை வட்ட வடிவிலான மண்டபமாக உள்ளது. அதில் திருச்சுற்றுப் பாதையுள்ளது. சுவர்களில் மாடக் குழிகளோ, தெய்வப் படிமங்களோ இல்லை . கருவறையில் லிங்கம் மூலவராக உள்ளது. கோயிலையடுத்துப் பரிவாரத் தேவதைகளின் கோயில்கள் எட்டு உள்ளன. அவற்றில் ஆறு சதுரமான கருவறைகளையும், நீள்சதுர மண்டபங்களையும் பெற்றுள்ளன. வாயிற்காப்போருக்கு அடியில் காணப்பெறும் கல்வெட்டால் இது முற்காலச் சோழர் காலக் கோயில் என்பதை அறியலாம். முற்காலச் சோழர்களின் கட்டடப் பாணிக்கு இக்கோயில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். விசயாலயன் கட்டிய சிவன் கோயில் பனங்குடி - அகத்தீச்சுவரர் கோயில், திருத்தணிக்கரு கிலுள்ள விளக்களாம்பூண்டி விசாலீசுவரர் கோயில் ஆகியவற்றையும் முதற் கட்டடப்பாணிக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) கோயில்கள் விசயாலயனுக்குப் பின் அவன் மகன் ஆதித்தன் அரசு கட்டில் ஏறினான். இவனால் கட்டப்பட்ட கோயில்களைத் துல்லியமாக அடையாளம் காணமுடியவில்லை என்றும் ஆனாலும் இவனுடைய கல்வெட்டுகள், செப்பேடுகள், சைவ இலக்கியங்கள் ஆகிய வற்றைக் கொண்டு இவன் காலத்தில் தோராயமாக 48 கோயில்கள் கட்டப்பட்டதாகக் கொள்ளலாமென நீலகண்ட சாத்திரியார் கருது கிறார், சோழன் செங்கணான் அப்பரடிகள் 78 கோயில்களைக் காவிரியின் இரு கரைகளிலும் கட்டியதாகக் கூறுகிறார். அன்பில் செப்பேடுகள் இதனை வலியுறுத்துகின்றன. எஸ். ஆர். பாலசுப்ர மண்யம் தனது முற்காலச் சோழர் கலைப்பாணி' என்ற நூலில் 47 கோயில்கள் முதலாம் ஆதித்தன் காலத்திலும் 30 கோயில்கள் முதலாம் பராந்தகன் காலத்திலும் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார், ஆயினும் அவையனைத்தையும் ஈண்டு விவரிக்க முடியாது. ஆதலால் அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் கூறலாம். 3. கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோயில் திருச்சிக்கு அண்மையிலுள்ள திருமெய்யம் வட்டத்திலுள்ள கண்ணனூரர் பாலசுப்பிரமணியர் கோயில் ஆதித்தன் காலத்திய தலைசிறந்த கற்றளிகளில் ஒன்றாகும். இக்கோயிலின் கருவறை சதுரமானது. இடை நாழிகையும் சதுரவடிவமானது. விமானம் வட்ட வடிவிலானது. சிகரம் உருண்டை வடிவிலானது. இதில் காணப் பெறும் முருகனுடைய சிற்பங்களில் கையில் சேவல் கொடியும், பின்புறம் மயிலும் உள்ளன. 4. சீனிவாசநல்லூர் குரங்கநாதக் கோயில் முசிறிவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயில் கல்வெட்டு, இக் கோயில் மூலவரைத் "திருக்கருத்துத் துறைப் பெருமானடிகள்" என்று சுட்டுகிறது. இது சதுரவடிவிலும் அமைந்துள்ளது. மாடக் குழிகளில் நான்முகனும், சிவனும் காணப்படுகின்றனர். இக்கோயில் சோடனை அமைப்புகளில் சிறிது வேறுபடுகிறது. கருவறை, இடை நாழிகை, விமான அமைப்பு ஆகியவை முற்காலச் சோழர் பாணியில் இருந்தாலும், மற்ற பகுதிகள் நவீனமுறையில் அமைந்துள்ளன. முழு உருவச் சிற்பங்கள் சிற்ப அணிகளாக உள்ளன. இலைக் கொத்தணி ஒப்பனை புதிதாகக் காணப்படுகிறது. இரண்டாம் பராந்தகன் (சுந்தரச் சோழன்) கோயில்கள் கி.பி. 957 - 985) முதலாம் ஆதித்தன் கோயில் பலவாயினும், மாதிரிக்கு மட்டும் இரண்டு கோயில்களைப் பார்த்தோம். இதைப் போலவே இரண்டாம் பராந்தகனுடைய இரண்டு கோயில்களை மட்டும் கூறி முடிக்கலாம். 5. புள்ளமங்கை பிரமபுரீசுவர் கோயில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள இக்கோயில் பராந்தகனின் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகும். இக் கோயில் மூன்று தளங்களை உடையது. அடிமுதல் முனைவரை அணிச்சோடனைகளைக் கொண்டது. திசைத் தேவதைகளை உடையது. தெற்கில் தட்சிணா மூர்த்தி யும், மேற்கில் சுடரிலிங்கமும், வடக்கில் நான்முகனும் திசைத் தேவதைகளாக அமைக்கப் பட்டுள்ளனர். அர்த்த மண்டபத்தில் தெற்கில் கணபதி, வடக்கில் கொற்றவை, ஆகிய தேவதைகள் கோட்டத் தேவதைகளாக உள்ளன. இவற்றின் வாகனங்கள் பெருச் சாளி, சிம்மம்) ஆகியவை உள்ளன. 6. கொடும்பாளுர் மூவர்கோயில் இரண்டாம் பராந்தகன் காலத்தில் கட்டிய கோயில்களில் தலை சிறந்தது இக்கோயிலாகும். இது பூதி விக்கிரமகேசரி என்ற கொடும் பாளூர் சிற்றரசனால் தன் தேவியால் இருவாக்கியர்களா லும், தன் பெயராலும் கட்டப்பட்ட மூன்றும் ஒரே வரிசையில் அமைந் துள்ளதால் இப்பெயர் பெற்றது. வரகுணா, கற்றளிப் பிராட்டியார் என்பன அந்த இரு தேவியார் பெயர்களாகும். இந்த மூன்று கோயில்களின் கருவறைகளுமே சதுர வடி விலானவை ஆகும். மூன்றுக்கும் பொதுவாக நீண்ட சதுரத்தில் மகா மண்டபம் உள்ளது. இந்த மூன்று கருவறைகளைச் சுற்றிலும் 15 சிறு கோயில்கள் உள்ளன. இக்கோயில் இரண்டு தளங்களை உடையது. சிகரம் மாமல்ல புரத்து துரோபதைத் தேரின் சிகரம் போல் நடுவில் பிதுங்கிக் காணப்படும் கிறது. ஆறுமுகனும், மாடக்குழி சிற்பங்களும் உள்ளன. விமானச் சுவர்களில் சிவன், உமை, சேட்டா தேவி, சப்தமாதர்கள், மோகினி முதலிய உருவங்கள் உள்ளன. இரண்டாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்ட திருமழபாடிக்கு அண்மையிலுள்ள காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில், திண்டிவனத்திலுள்ள திருத்தண்டீசுவரர் கோயில், மேலைச்சேரி சப்த மாதர் (பிடாரி கோயில், மெய்ஞ்சூர் - வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். முடிவுரை முதற் கட்ட வளர்ச்சியில் காளியாபட்டி - சிவன் கோயில், பனங்குடி, அகத்தீச்சுவரம் ஆகிய கோயில்களும் குறிப்பிடத் தக்கவை ஆகும். முதலாம் ஆதித்த சோழனின் திருக்கட்டளை - சுந்தரேசுவரர் கோயில், லால்குடி - சப்தகிரிசுவரர் கோயில், குடந்தைக் கீழ்க் கோட்டம், முதலாம் பராந்தகனுடைய எறும்பூர் - கடம்பவ னேசுவரர் கோயில், இரண்டாம் பராந்தகனின் உத்தமச் சோழ னுடைய தாய் செம்பியன் மாதேவியினுடைய கோயில்கள் ஆகியவை குறிப்பிடத் தக்கனவாகும். இரண்டாம் கட்ட வளர்ச்சி (கி.பி. 985 - 1070) (இடைக்காலச் சோழர் கோயில்கள்) இக்கால கட்டத்தில் முதலாம் இராசராசன் (கி.பி. 985 - 1014) முதலாம் இராசேந்திரன் (கி.பி.1012-1044). முதலாம் இராசாதி ராசன்(கி.பி.1018-1054 இரண்டாம் இராசேந்திரன் கி.பி.1051-1063) வீரராசேந்திரன் (கி.பி. 1063-1070) ஆதிராசேந்திரன் (கி.பி. 1070 ஆகிய பெருவேந்தர்கள் ஆண்டனர்.. தன்மைகள் - இந்த இரண்டாம் கட்ட வளர்ச்சியில் காணப்பெறும் முக்கிய தன்மைகளைக் காண்போம். முதற்கட்ட வளர்ச்சியில் மிகச் சிறிய கோயில்களையும் ஒன்று இரண்டு மூன்று தளங்களையுடைய கோயில்களையும் ஒப்பனைகளும் உருவ அமைப்புகளும் குறைந்த கோயில்களையும் காண்போம். ஆனால் இந்த இரண்டாம் கட்ட வளர்ச்சியில் அடிமுதல் முனை வரையிலுள்ள பல்வேறு உறுப்புகளிலும் ஒப்பனைகளும் கலை நயங்களும் அதிகமிருப்பதைக் காண்கிறோம். முற்காலச் சோழர் கோயில்களில் ஓரளவு பல்லவர்காலப் பாணரிகள் பிரதிபலித்தன. ஆனால் இரண்டாம்கட்ட வளர்ச்சியில் அவை இல்லை. இது முற்றிலும் சோழர்காலப் பாணியாகவே வளர்ந்தது. அரிமா(சிங்கம்) பல்லவர் தூண்களில் அமர்ந்தும், நின்றும் உள்ளது. சோழர் கலையில் அரிமா மாடக்குழி சிற்பமாகவே உள்ளது. தூண் வளர்ச்சி சோழர் காலத்தில் கீரிவம் (கழுத்து) உள்ளது. தலைப்பின் கீழ் கவசம் என்ற புதிய உறுப்பு வளர்ந்துள் ளது. தேவதைகள் அல்லது திசைக்கேற்ற தேவ உருக் களை அமைப்பது சிறப்பாக வளர்ச்சி யடைந்தது. இந்த இரண்டாம் கட்ட வளர்ச்சி அல்லது இடைக் காலச் சோழர் கோயில்களைச் சோழரின் கோயில் பொற்காலம்' என்று அழைப்பர். இப் பொற் காலத்திற்கு முதலாம் இராசராசனின் தஞ்சைப் பெருவுடையார் கோயிலும், அவள் மகள் முதலாம் இராசேந்திரனுடைய கங்கை கொண்ட சோழீச்சுவர் கோயி லும் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். தஞ்சைப் பெருவுடையார் கோயில் மாவீரன் இராசராசன் தான் வென்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்த கொண்டிப் பொருள்களான பொன்னையும், மணியையும், மற்ற விலையுயர்ந்த பொருள்களையும் ஆகமப்படி பிராமணருக்குத் தானமாகக் கொடுத்ததோடு உலகமே வியக்குமாறு தன் கோநகரமாகிய தஞ்சையில் பிரகதீசுவரர் கோயில் கட்டினான். இது எல்லாக் கோயில்களையும் விட பெரிய கோயிலாகத் திகழ்ந்த தால் மக்கள் இதனைத் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது பெரு வுடையார் கோயில் என்றனர். அமைப்பு இக்கோயில் 500 அடி நீளமும் 250 அடி அகலமும் கொண்ட ஓர் அகன்ற முற்றத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றத்தைச் சுற்றிலும் நான்குபுறமும், மதில் சுவர், காவற்கோட்டை மதில்போல் எழுப்பப்பட்டுள்ளது. மதிலின் உட் பாகத்தில் நான்கு முலைகளிலும் நான்கு துணைக் கோயில்கள் உள்ளன. இவற்றைத் தவிர உட்புறத்தில் நான்கு மதிற்சுவர்களுமுள்ளன. இவை அனைத்தையும் இணைத்துக் கட்டப்பட்ட திருச்சுற்று மாளிகை (இடைக்ககூடம்) சுவர்களின் ஓரமாகவே செல்லுகிறது. உட்புறக் கோபுர வாயிலும், மதிலின் கோபுர வாயிலும் நேராக அமைந் துள்ளன. வெளிப்புறம் மதிலைக் கொண்டு உள்ளது. கருவறை இதன் கருவறை 45 அடிப்பக்கமுள்ள சமசதுர வடிவிலானது. அதில் 9 அடி அகலமுள்ளது வலம் வரும் பாதை ஆகும். இதில் 56 அடி சுற்றளவும் 6 அடி உயரமும் உள்ள ஆவுடையார் மேல் 17 அடி உயரத்தில் நிற்கும் லிங்கம்தான் மூலவர் ஆவார். இதற்கு 'இராச ராசேசுவரலிங்ம்' என்று பெயர். இதனைப் பிரக தீசுவரர் லிங்கம் அல்லது பெருவுடையார் லிங்கம் என்றும் அழைப்பர். இது நிற்கும் மேடையில் இருந்து முனைவரை இரண்டு மாடி உயர முள்ளது. உள்வாயிலில் வாயிற்காப்போர் நிற்கின்றனர். ஒவ்வொரு வரும் மாடக் குழிக்குள் நின்றனர். முன் நாழிகையிலும், அக நாழிகை களிலும் தூண் வரிசைகள் உள்ளன. நந்தி மண்டபம் கருவறைக்கு முன் சிறிது தொலைவில் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஒரே கல் லாலான நந்தி படுத்தவண்ணம் அதில் உள்ளது. விமானம் கருவறையின் மேல் நிற்கும் விமானம் 216 அடி உயர முள்ளது. இதனை 'இராசராசன் தக்கணமேரு' என்பர். தென்னகத் தில் உள்ள இமயமலை' என்பது இதன்பொருளாகும். புவனேசு வரத்தில் உள்ள லிங்க ராசா கோயில் விமானம் 160 அடிதான் உள்ளது. இதுவே வட இந்தியாவிலுள்ள மிக உயரமுள்ள விமானம் ஆகும், இந்த 216 அடி உயரமுள்ள தக்கணமேரு அடித்தளம் சதுரவடிவிலும், போகப்போக சிறுத்துக் கொண்டே சென்று பிரமிடு வடிவிலான 13 நிலைகளைக் கொண்டு முடிந்துள்ளது. கடைசி 13 ஆம் நிலையில் 'துமிளி' உள்ளது. அதன் மீது 12 அடி உயர முள்ள பொற் கவசம் உள்ளது. அந்த துமிளி மாடத்தின் அடித்தளம் 80 டன் எடையுள்ள கருங்கல் ஆகும். இதனைத் 'தக்கணக்கல்' என்பர். இக் கல்லை எப்படி மேலே ஏற்றிப் பொருத்தினார்கள் என்பது இன்றைய பொறியியல் வல்லுநர்களுக்கும் புதிராக உள்ளது. கிழக்குநோக்கியவாயிலைஉடைய இக்கோயில் நுழைந்தவுடன் இடது பக்கம் நடராசர் கோயிலும், எதிரில் குறவஞ்சி மேடையும், நடுவில் நந்திமேடையும் அதனைத் தாண்டியவுடன் இடது பக்கத்தில் பிரகதாம்பாள் கோயிலும், வலது பக்கத்தில் கணபதி கோயிலும் பின்புறம் கருவூரார் கோயிலும் இடது பக்கத்தில் முருகன், சந்திர சேகரக் கோயில்களும் அமைந்துள்ளன. சற்று மனக்கண்முன் நிறுத்திப் பார்த்தால் இது ஒரு தனிக் கோயில் அல்ல என்பதும் ஒரு கற்பனைக் கட்டட உலகமே உருவெடுத்துள்ளதும் புலப்படும், இக்கட்டடம் கட்டி முடிக்க இராச ராசன் ஆறு ஆண்டுகள் செலவழித்தான். ஆயிரக்கணக்கான கலை ஞர்கள் இரவு பகலாக பத்தி உணர்வோடு உழைத்துக் கட்டினர். இதனுள் அமைந்துள்ள முருகன், கணபதி, நடராசர், சண்டிகேசுவரர் ஆகிய கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். கோயி லின் உட்புறச் சுவர்களில் 108 நடனக் கரணங்கள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் இவை போன்ற 108 கரணங்கள் சிதம்பரம் நடராசர் கோயில் கோபுரத்தில் அமைக்கப்பட்டன. 2. கங்கை கொண்ட சோழீச்சுவரம் சோழரின் பொற்காலக் கோயில்களில் பெருவுடையார் கோயில் லுக்கு அடுத்தபடியாக நிற்பது இராசராசன் மகன் முதலாம் இராசேந்திரன் தனது புதிய கோநகரான கங்கை கொண்ட சோழ புரத்தில் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சுவரம் ஆகும். கும்ப கோணத்திற்கு அருகில் உள்ள இக்கோயில் பெருவுடையார் போலவே இருந்தாலும் அதை விடப் பரப்பிலும், உயரத்திலும் குறைந்ததாகும். அமைப்பு இதன் அடித்தளம் 100 அடி பக்கமுள்ள சமசதுர பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மொத்தப் பரப்பு 340 அடி நீளமும், 110 அடி அகலமும் கொண்டது. இதன் விமானம் 188 அடி. உயரமுள்ளது. இக்கோயிலின் மதிற்சுவர் பாதுகாப்புக் கோட்டை மதிற் சுவர் போல்உள்ளது. இதன் வாயில் கிழக்கு நோக்கியுள்ளது. வாயிலில் நுழைந்தவுடன் பெருமண்டபம் 175 அடி நீளமும் 95 அடி அகலமும் உள்ள ஒரு தாழ்வான கட்டடமாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் வேலைப் பாடுடைய 150 தூண்கள் உள்ளன. தூண்கள் 4 அடி உயரமுள்ள மேடைமீது நிற்கின்றன, விமானம் இதன் விமானம் பெருவுடையார்கோயில் விமானத்தைப் போலவே அமைந்துள்ளது. அடிப்பகுதி சதுரமாகவும், நடுப்பகுதி பிரமிடு போலவும், முனைப் பகுதி துமுளி வடிவிலும் அமைந் துள்ளது. தஞ்சை விமானத்தில் 13 நிலைகள் (தளங்கள்) உள்ளன. ஆனால் இதில் 8 நிலைகளே உள்ளன. இக்கோயிலின் உட்புறத்தில் தெற்கில் நடராசர் கோயிலும், வடக்கில் சண்டிகேசுவரர் கோயிலும், மேற்கில் சுடரி லிங்கமும், தெற்கில் கணபதி கோயிலும் அமைந்துள்ளன. அம்மன் கோயில் இதில் அம்மனுக்கென தனிக்கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் விமானமும் மூலக்கோயிலின் விமானத்தைப் போலவே அமைந்துள்ளது. இக் கோயிலில் பறக்கும் தேவதைகள், தேவகணங்கள், அரக்கர்கள் முதலிய சிற்பங்களும் காணப்படுகின்றன. பொதுவாகக் கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயிலில் ஒப்பனைகள் அதிகம் காணப்படுகின்றன. பெருவுடையார் கோயி லும், இக் கோயிலும் பின்வரும் கோயில்களுக்கு வழிகாட்டிகளாக ஒரு நூற்றாண்டு காலம் இருந்தன. முதன் முதலில் சிவன் கோயிலில் அம்மன் கோயில் அமைந்து காணப்படுவதும், 150 தூண்களை 2.டைய பெரிய மண்டபத்தை உடையதும் இராசேந்திரன் கோயிலே ஆகும். இது ஆயிரங்கால் மண்டபத்திற்கு வழிகாட்டியாக நின்றது. 3. கூழப்பந்தல் கங்கைக் கொண்ட சோழீச்சுவரம் இக்கோயில் முதலாம் இராசேந்திரன் காலத்தில் அவனுடைய குருவான ஈசான சிவபண்டிதர் என்பவரால் கட்டப் பெற்றதாகும். காஞ்சிக்கும், ஆரணிக்கும் நடுவில் உள்ள இக் கோயில் இரு தளங் களையுடைய கற்றளி ஆகும். சோழரின் பொற்காலத்தில் ஏற்பட்ட இக்கோயில் அதிட்டானம், சுவர், கூரை, கிரீவம் (கழுத்து) சுவரில் தேவகோட்டங்கள், அரைக் கம்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இடைநாழிகையின் மேற்புறம் கூரை போன்றுள்ளது. இதன் புதிய அம்சமாகும். கருவறையில் லிங்கம் மூலவராக உள்ளது. இதைப் போன்ற மற்றொரு கோயில் விழுப்புரம் மாவட்டம் சேலம் சிவன் கோயில் ஆகும். 1. பெருமுக்கல் கோயில் திண்டிவனத்திற்கண்மையில் ஒரு மலைமீது உள்ள இக் கோயில் முதலாம் குலோத்துங்கனால் செங்கல்லால் கட்டப்பட்டது. ஆனால் இதனை விக்கிரம சோழன் காலத்தில் கட்டி உள்ளனர். இதன் பெயர் திருவான்மிகை, ஈசுவரமுடையான் கோயில் என்று இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மூலவர் பெயர் ''திருமலைமேல் ஆணுடையார்" என்றும் காணப்படுகிறது. எனவே, இக்கோயில் விக்கிரம சோழன் காலக் கலைப் படைப்புக்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இக்கோயிலின் இடைநாழிகை, முன்மண்டபம், கருவறை, தேவக் கோட்டங்கள், மகரத் தோரணங்கள், அரைத்தூண்கள் ஆகியவை பிற்காலச் சோழர்கலைப் பாணிக்கு எடுத்துக்காட்டுகளாய் உள்ளன. தேவ கோட்டத்தில் உருவங்கள் இல்லை. மகரத்தோரணத் திற்குக் கீழ் பிள்ளையாரும், பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. கி.பி. 1121-ல் சிறுத் தொண்டர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருப்ப தோடு அவருடைய பெயரும் உருவமும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன. 2. தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் - இக்கோயில் இரண்டாம் இராசராசன் காலத்தில் கட்டப் பட்ட சோழப்பெருங் கோயில்களில் ஒன்றாகும். சக்கரங்களை அமைத்துத் தேரை இழுத்துச் செல்லுவது போன்ற புது மாதிரி யாக இக்கோயிலின் மகா மண்டபம் 'கல்தேர்' அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் கீழைக்கங்க மன்னன் நரசிம்மன் கி.பி. 1250 -ல் கோன ரக் - சூரியனார் கோயிலைக் கட்டியுள்ளான். இம்மண்டபத் தூணில் ஏராளமாக சிறு உருவத்தில் சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் - ஐந்து தளங்களை உடையதாக உள்ளது. மூலைகளிலுள்ள கர்ண கூடுகள் சதுரமாகவும், எண் கோண வடிவத் திலும் அமைந்துள்ளன. இக் கோயில் கட்டடத்தை உற்று நோக்கினால் நாகரம், திராவிடம், வேசரம் ஆகிய மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கி உள்ளது. நான்கு பக்கங்களிலும் நந்திகள் படுத்த வண்ணமுள்ளன. அரைத்தூண் வளர்ச்சியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பலகையின் அடிப்பகுதியில் தாமரை மலர் இதழ்களை விரித்துக் கவிழ்ந்துள்ளது. பஞ்சரங்கள் வட்ட வடிவமாக உள்ளன. விமானச் சுவர்களில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் உள்ளன. தேவக் கோட்டங்களிலும் சில சிற்பங்கள் உள்ளன. அம்மன் கோயில் இக்கோயிலின் மகாமண்டபத்திற்கு வடக்கே அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கோபுரத்திற்கு எதிரில் நந்தி மண்டப மும், அதற்கப்பால் வெளிக் கோபுரமும் காணப்படுகின்றன. இக் கோயில் வளாகத்தை அடுத்து தெய்வநாயகி அம்பாள் கோயி லொன்றும் உள்ளது. 3. திரிபுவனம் - கும்பகரேசுவரர் கோயில் குடந்தைக்கண்மையிலுள்ளது. திரிபுவனம் இங்குள்ள கும்பகரேசுவரர் கோயில் சோழப்பெருங் கோயில்களில் ஒன்றாகும். ஆனால் தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கைக் கொண்ட சோழீச்சுவரக் கோயில் ஆகியவற்றை விட உயரத்தில் குறைந்தது. பெருவுடையார் கோயிலைப் போன்று அமைப்பு உடையது. மூன்றாம் குலோத்துங்கன் பாண்டியரை வென்று மதுரையிலே திரிபுவன வீரத்தேவன்' என்ற பட்டம் சூடி மணிமுடி தரித்தான், அதன் நினைவாக இக்கோயிலைத் "திரிபுவன வீரேச்சுவரம்" என அழைத்தான். அமைப்பு இக்கோயில் இரண்டு கோபுரங்களைக் கொண்டது. இரண்டு திருச்சுற்றுகளையுடையது. முதல் சுற்றில் கும்பகரேசுவரர் உறை விடம் உள்ளது. அதில் அம்மன் சண்டிகேசுவரர் ஆகியவையும், மண்டபங்களும் உள்ளன. கருவறை சதுர வடிவிலானது. ஆறு தளங்களை உடைய விமானம் 125 அடி உயரமுள்ளது, ஆனால் கீரிடமும், சிகரமும் செங்கற்களால் உள்ளதைப் போலவே முகமண்டபம், தாராசுரத்தில் உள்ளதைப் போலவே 'கல்தேர்" போன்ற அமைப்பு உடையதாகும். தாராசுரம் போன்றே கோபுரவாயிலுக்கு வெளியே காவுமேடையும், நந்தி மண்டபமும் உள்ளன. முடிவுரை விசயாலயன் காலந்தொட்டு மூன்றாம் இராசராசன் வரையில் லான கோயில்கள் கல், செங்கல் ஆகியவற்றால் ஆனவை. சோழர் கோயில்களில் பல்லவர், சாளுக்கியர் ஆகியோரின் கட்டடப் பாணிகளும் இயைந்துள்ளன. பொதுவாக வானளாவிய கோபு ரங்கள் என்றாலே சோழர் கோபுரங்கள்தான். இவை கருவறையின் மேல் நிற்கின்றன. இவற்றுள் அதிகமாக ஐந்து, ஆறு, பதினொன்று என தளங்களை உடையனவாகவும் உள்ளன, தேரோட்டங்கள், அரைத் தூண்கள், விதானங்கள், சிகரங்கள் ஆகியவற்றில் சிற்பங்க ளும், ஒப்பனைகளும் பெருகின. விசயநகர கால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் ஆகியவற்றிற்கு முன்னோடியாக மகா மண்டபங்கள், நூற்று கால் மண்டபங்கள், நந்தி மண்டபங்கள், சபா மண்டபங்கள் பிற்காலச் சோழர் காலத்தில் ஏற்பட்டன. முகாமைக் கோயில்களின் பிறவகைக் கோட்டங்கள் பிற்காலச் சோழர் காலத்தில் சிறப்படைந்தன, எடுத்துக்காட்டாக பெருவுடையார் கோயில் திரிபுராந்தகர், கங்கைக் கொண்ட சோழீச்சுவரத்தில் சண்டி கேசுவரர், தாராசுரத்தில் 63 நாயன்மார்கள் சிற்ப வடிவிலும், கல்வெட்டுகளிலும் சிறப்படைந்தார்கள். 'போதிகை' பிற்காலச் சோழர் கோயில்களில் சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. தாமரை மலர் பூத்து, இதழ் விரித்துப் பலகைக்கு கீழும் தொங்கியது. போதிகையை ஒரு காலக் கணிப்பைக் காட்டும் கண்ணாடி என்பர். பல்லவர், பாண்டியர், சோழர், விசயநகர கால கட்டங்களையும் அறிய தூண் போதிகை ஒரு கருவியாக உள்ளது, 2. சிற்பக்கலை சோழர் காலக் கட்டடங்கள் அணி அழகிற்கும், ஒப்பனைக்கும் எடுப்பான தோற்றத்திற்கும் தென்னகக் கட்டடக் கலையில் ஒரு புதிய திருப்பத்தையே ஏற்படுத்தியதைப் போலவே அவர்களின் சிற்பக் கலையும் ஒரு புதிய மரபை ஏற்படுத்தியது. தன்மைகள் 1. சோழர் காலச் சிற்பங்கள் கோயில் சுவர்களின் நடுவிலும் மூலைகளிலும் காணப்படுகின்றன, 2. மரபிற்கேற்றவாறு சிற்பங்கள் தெய்வ உருவங்கள் அமைந் திருப்பது சோழர் காலச் சிறப்புத் தன்மை ஆகும். பொதுவாகச் சிவன் கோயில்களில் மேற்குப் பக்கத்தில் சுடரிலிங்க உருவமும், தெற்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உருவமும் அமைக்கப் பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கம் நோக்கித்தான் சிவன் கோயில் வாயில் இருக்கும். 3. தெய்வ உருவங்கள் யாவும் மிகப்பெரிய அளவிலும், - ஆளுயரத்திலும் அமைக்கப்பட்டு, கோபுரம், விமானம் ஆகியவற்றின் தோற்றத்திற்கு ஏற்றவாறு எடுப்பாகக் காட்சி அளிக்கின்றன. 4. புடைப்புச் சிற்பங்களும் இதைப்போலவே பெரிய அளவில் உள்ளதால் தனிச் சிற்பங்களைப் போலவே அவை காட்சி அளிக்கின்றன. 5. தெய்வச் சிற்பங்களே அன்றி அரசன், அரசி, இளவரசர்கள், கொடையாளிகள், முதலியோரின் உருவங்களும் தனிஉருவச் சிலைகளும் சோழர்காலக் கோயில்களில் இடம்பெற்றுள்ளன. 6. கருவறைச் சுவர்க் கால்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப் படுகின்றன. இவை பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் உருவங்களாக உள்ளன. 7. விமானச் சுவர்களிலும் அவற்றை அடுத்த பகுதிகளிலும் மூலவரின் பல்வேறு திருத்தோன்றல்கள் (அவதாரங்கள்) அல்லது திருவிளையாடல்கள் சிற்பங்களாக உள்ளன. எடுத்துக் காட்டாக கொடும்பாளூரிலும், அவற்றை அடுத்த பகுதிகளிலும், மாதொரு பாகன், வீணாதரமூர்த்தி, கஜாரி, அந்தகாசுர சம்மாரமூர்தி, இரத மூர்த்தி, கங்காதரர், அரிகரன், உமா தேவர், சந்திரசேகரர், காலாரி முதலிய சிவனுடைய உரு வங்களும் சந்திரன் சூரியன் உமா, சேட்டாதேவி சப்தமாதர்கள், மோகினி ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன. 8. தெய்வ உருவங்களும் மனித உருவங்களும் மட்டுமே அன்றி இயற்கை படைப்புகளின் உருவங்களும், விலங்குகளும், பறவை இனம், தளர்வன் முதலியவற்றின் உருவங்களும், கற்பனை உருவங்களும், கலப்பட இறும்பூது (அதிசய) உருவங்களும் கூடச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இவை கண்ணுக்கு விருந்தாக மட்டுமல்ல கருத்துக்கும் சிந்தனைக்கும் ஆக்கம் தருவன வாகவும் உள்ளன. 9. ஒரு கும்பல் சிற்பம்' உள்ளது. அதில் யார் யார் என்பதை நாமே உணரும்படி சிற்பங்களின் உருவ அமைப்பு, உடை, அணி, முதலியன உள்ளன. ஒரு பெரிய கூட்டத்தில் அரசர், அமைச்சர், புரோகிதர், அதிகாரி, தூதர், பாடகர் முதலியவர்களை நாமே அறிந்து கொள்ளுமாறு சிற்பங்கள் அமைந்துள்ளன. 10. மெல்லிய நெடிய உடலமைப்பு, உயர்த்த மகுடம், பட்டையான பூணூல் இவை முற்காலச் சோழர் சிற்பங்களின் தோற்றங் களாகும். காலப் போக்கில் பல புரிகளை உடைய பூணூல், அரைக்கச்சை, கண்டமாலை போன்றவை சிற்பங்களில் வந்தன. ஆனால் பிற்காலச் சோழர்ச் சிற்பங்களில் அணிகலன்களும், ஒப்பனைகளும், வட்டமாக முக அழகும் தடித்துச் சிறுத்தது மான உடல்வாகும், ஆடைகளில் வரிகளும் காணப்படு தின்றன. உயர்ந்த மகுடம் மறைந்தது. தாமரை இதழ் போன்ற மகுடம் வந்தது. 1. தஞ்சை நிசும்பசூதனி சிற்பம் (படிமம்) தஞ்சையைக் கோநகராகக் கொண்டு சோழப் பேரரசைத் தொடங்கிய விசயாலயன் தன் வெற்றியைக் கொற்றவைக்குப் படைத்தான். அவளுக்கடுத்த கோயில் தான் நிசும்ப சூதனி கோயில் ஆகும். இன்று அக்கோயில் இல்லை, ஆனாலும் நிதம்ப சூதனியின் உருவச்சிலை உள்ளது. இதனை 'வடபத்ரகாளி சிலை' என்கின்றனர். இது ஆறு அடி உயரமுள்ள கம்பீரத் தோற்றமுடைய சிலை ஆகும். இதன் தலையில் தீச்சுடர் போன்று தலைமயிர் அவிழ்ந்து உள்ளது. கைகளில் ஆயுதங்கள் ஏந்தியுள்ளாள்; மனித மண்டை ஓடுகளை (கபாலம் பூணூல் போல் மாலையாக அணிந்துள்ளாள். அமர்ந்த வண்ணமுள்ள அவளுடைய காலடியில் அசுரர் சிக்கித் தவிக் கின்றனர்; பார்ப்பவர் கதிகலங்குமாறு முகத்தோற்றமுள்ளது. இதுவே சோழரின் முதற் சிற்பமாகும். 2. கண்ணனூர் முருகன் சிலை முதலாம் ஆதித்தன் காலத்தில் கட்டப்பட்ட கண்ணனூர் பால் சுப்பிரமணியன் கோயிலில் உள்ள யானை ஊர்தியின் மீது அமர்ந்த முருகன் சிலைசோழர்காலச் சிற்பத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தலையில் மகுடம், மார்பில் வீரச்சின்னமும் அணிந்து நான்கு கைகளுடன் நிற்கும் மூலவர் படிமத்தைக் கல்வெட்டுகள் ''சுப்பிர மணியத் தேவர்" என்று குறிப்பிடுகின்றன. இவருக்குப் பின்னால் மயில் வாகனமும், கையில் சேவற் கொடியுமில்லை . ஆனால் பின்னணி முகவாகனம் என்னும் யானை வாகனம் உள்ளது. இது புறநானூற்றி லும் பதிற்றுப்பத்திலும் "பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்" என்றும் ''கடுஞ்சின விறல்வேன்களிறு''? என்றும் கூறப்படுதற் கேற்ப சங்ககால மரபுப்படி இக் கோயிலில் முருகனுக்குப் பிணிமுக ஊர்தி உள்ளது. இக் கோயிலில் கருவறையின் மேலுள்ள விமானத் தின் நான்கு மூலைகளிலும் மயில், யானை, உருவங்கள் உள்ளன. எட்டுக்காவல் தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. பரிவாரத் தெய்வங்களும் உள்ளன. ஆகம விதிப்படி அமையாமல் 'சுவயம் பிரதானம்' என்றும் தனிப்பட்ட முறையில் அமைந்துள்ள இதனைக் 'குமரக் கோட்டம்' என்பர், 3. திருக்கட்டளை - சேட்டாதேவி முதலாம் ஆதித்தன் காலச் சிற்பங்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிற்பம் திருக்கட்டளையில் உள்ள சேட்டாதேவி சிற்ப மாகும். பல்லவர் காலம் முதலே சேட்டாதேவி வழிபாடு இருந்தது. இங்கு இவள் பரிவார தேவதையாக உள்ளாள். 4. திருக்கட்டளை - திரிபுராந்தகர் இங்குள்ள சுந்தரேசுவரர் கோயில் தேவக்கோட்டத்தில் திரி புராந்தகர் இளமை உருவோடு காட்சி அளிக்கிறார். இரு கைகளிலும் அம்பை வைத்துக் கொண்டு சற்று வளைந்து நிற்கும் இவர் முகத்தில் களிப்போடு காட்சி அளிக்கிறார். இது முப்புரம் எரித்த மகிழ்ச்சி ஆகும். 5. சோழர்கால சிவனார் சிற்பங்கள் பக்தி இயக்கமும் நாயன்மார்களின் தீவிர சமயப்பரப்பும் சோழர்காலத்தில் மிக அதிக அளவில் சிவன் கோயில்களைக் கட்டச் செய்தன. எனவே, சிவனாரின் பல்வேறு உருவச் சிற்பங்கள் சோழர் காலத்தில் உருவாயின. நார்த்தாமலை விசயாலயச் சோழீச் சுவரம் கோயில் வீணாதர தட்சிணா மூர்த்தியின் சிலையும் அதிலொன்று. இன்று புதுக் கோட்டை அரசு கண்காட்சியிலுள்ள இச்சிலை இரு கைகளிலும் வீணையைத் தாங்கியுள்ளது. கடிசூத்தரம் இடையில் தொங்குகிறது. கொடும்பாளூர் மூவர் கோயில் உமா மதேசுவரர் சிலை இதில் சிவனார் உமை அம்மையோடு அமர்ந்து அன்போடு உறவாடுகிறார். இதே கோயிலில் கங்காதரமூர்த்தி, காலசம்கார மூர்த்தி ஆகிய சிலைகளும் உள்ளன. கீழையூர் வைத்தீஸ்வரன் கோயிலில் வீணாதர தட்சிணா மூர்த்தி, சண்டேசுர சிற்பங்கள் சிறப்பானவை ஆகும். புன்முறுவலுடன் காணும் சண்டேசுரர், பாடுவதைப்போல் உதட்டை அசைக்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி சோழர் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். மாயவரத்திற்கு அருகில் உள்ள புஞ்சை நல்துணையீசுரர் கோயில் தட்சிணாமூர்த்தி சிற்பம் மென்மையான முகச் சாயலும், கலையழகும் உள்ளது. இதன் காலடியில் முயலகன் அல்லது பூத கணம் உள்ளது. பக்கத்தில் படமெடுத்தாடும் நாகம், அதன் பக்கத்தில் இரண்டு மான்கள் உள்ளன. இரண்டு முனிவர்களும் அவர்களின் சீடர்களும் அருகில் உள்ளனர். தொன்மையான சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். 6. தஞ்சைப் பெருவுடையார் கோயில் காலசம்கார மூர்த்தி கருவறைத் தெற்குத் சுவரில் சிவனார் எமன் மீது ஏறி நிற்கிறார்; தனது இடது காலைத் தூக்கி, பாதத்தின் பெருவிரலை உதைப்பதாகக் காட்டுகிறார். இந்த செயலைச் செய்யும் போது, ஏற்படும் உணர்வு களும் அங்க அசைவுகளும் இச்சிற்பத்தில் தெளிவாகக் காட்டப்பட் டுள்ளன, காதணி அடி முன்னால் வருகிறது. கீழாடை மடிப்புகளாகத் தொங்குகிறது. தெற்குச் சுவரில் உள்ள நடராசர் சிற்பமும் அசைவு களைக் காட்டுகிறது. சிவனாரின் - பிற சிற்பங்கள் | கருவறையில் 108 கரணங்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் 27 கரணங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோயிலின் நடராசர் சிற்பம் பெருவுடையார் கோயில் நடராசரைவிடச் சற்றுக் கனமான தாக உள்ளது. இரண்டாம் இராசராசன் காலத்தில் கட்டப்பட்டதாராசுரம் ஐராவ தேசுவரர் கோயில் சிற்பங்களில் சிறப்பானது திரிபுராந்தக மூர்த்தியும், பிட்சாடனரும் ஆகும். பிட்சாடன மூர்த்தி தாருகாவனத்தில் செல்வ தும் அங்கு ரிஷிபத்தினிகளைச் சந்திப்பதும் சிறப்பான காட்சிகளாகும். தற்பொழுது இந்தச் சிற்பம் தஞ்சைக் கலைக்கூடத்தில் உள்ளது. பிட்சாடனர் நீண்ட கங்காளத்தைத் தோளில் போட்டிருப்பதால் இவரைக் 'கங்காளர்' என்றும் அழைக்கின்றனர். இச்சிற்பங்கள் மெருகு ஊட்டப்பட்டக் கருங்கல்லினால் ஆனவை. தாருகாவனத்து ரிஷிபத்தினி களை மயக்க பிட்சாடனமூர்த்தி அழகு சுந்தரனாகக் காட்சி அளிக்கிறார். அவரைக் கண்ட ரிஷிபத்தினிகள் அவர் மீது மையல் கொண்டு, ஆடை அவிழ் வதுகூடத் தெரியாமல் நிற்கின்றனர். சோழர் காலச் சிவபெருமான் சிற்பங்களில் இதுவரை நாம் பார்த்த நின்ற வண்ணமுள்ள 'அம்மை அப்பன்' அல்லது 'மாதொரு பாகன்' (அர்த்தனாரி ஈசுவரன்) சிற்பம் சிறப் பானது. அம்மையப்பன்தமிழரின் மரபு வழிபாட்டுத் தெய்வம் அதையே வட மொழியாளர் 'சக்தி சிவன்' என்றனர். அடுத்து, மனிதன் பற்றற்ற நிலையை அடைய வேண்டு மென்பதைக் காட்டுவதே சிவனாரின் பிட்சாடனரின் நிலை ஆகும், - சிவனார் நாதவிந்துவாக உள்ளார் என்பதைக் காட்டுவதே வீணாதர மூர்த்தியின் சிலை ஆகும். " சிவனார் நடராசனாக உள்ள சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும் சோழர் காலத்தின் உலகப் புகழ் வாய்ந்தவையாக உள்ளன. நடனமாடும் சிவன் காற்றோடு கலந்து ஆத்துமா முக்தி நிலை பெறும் தத்துவத்தைக் காட்டவே ஆகும். இடுகாட்டில் தோன்றுவது நீத்தார் வழிபாட்டிலும், மூத்தோர் வழிபாட்டிலும் தமிழர் கொண்டிருக்கும் தத்துவத்தை உணர்த்தவே ஆகும். திரிமூர்த்தி' கோட்பாடாகும். ஆரிய பண்பாடும் சிவனை ஊருக்கு வெளியில் வீற்றிருக்கச் செய்து விட்டன. வட்டத்திற்குள் நடமாடும் சிவனார். சிலை சைவ தத்துவத்தை உணர்த்துவதாகும். 7. கொற்றவைச் சிற்பங்கள் தஞ்சை உக்கிரமாகாளியின் சிற்பத்தைக் கொற்றவைச் சிற்பம் என்பர். இதன் தோற்றம் பற்றி மேலே விளக்கினோம். புஞ்சை நல்துணை ஈசுவரர் கோயில் துர்க்கை திரிபங்கத்தில் மகிசனின் தலைமீது நிற்கும் துர்க்கை இடுப்பில் கைவைத்துக் கடிக அஸ்தத்தில் நின்று புன்முறுவல் பூத்தபடி நிற்கிறாள். தலைப் பக்கத்தில் சிம்மவாகனமும், மானும் காட்டப் பட்டடுள்ளன. பாதங்களுக்கு அருகில் நவகண்டம் உள்ளது. திரிசூலமும், வில்லும் அவளுக்குப் பின்னால் உள்ளன. துர்க்கைக்கு மேலுள்ள மகர தோரணத்திற்குள் சிவபெருமான் ஆனந்த தாண்டவமாடுகிறார். 8. அகத்தியரும் கணபதியும் சோழர்காலச் சிற்பங்களில் அகத்தியரும், கணபதியும் தேவக் கோட்டங்களில் காணப்படுகின்றனர். 9. தொல்கதைச் சிற்ப அணிகள் சோழர் காலச் சிற்பங்களில் புராண இதிகாச கதை நிகழ்ச்சிகள் தொடர்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பெருவுடையார் கோயில் அணிகள் இதனைத் தஞ்சைப் பெரிய கோயிலிலும் காணலாம். இதில் இரண்டாம் கோபுரத்தின் அடித்தளம், நுழைவாயில், மேல், கீழ்த் திசைப் பகுதிகளிலும் காணலாம். திரிபுரம் எரித்த கதை, சண்டீசர் கதை, காலனை உதைத்த கதை, வள்ளித் திருமணம், அருச்சுனன் பாசுபதம் பெற்ற கதை, காமனை எரித்த கதை. கண்ணப்ப நாயனார் கதை ஆகிய சிவ பெருமானின் திருவிளையாடல்கள் சிற்பங்களாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. இக் கோயிலின் கருவறையை ஒட்டியுள்ள தெற்கு, வடக்கு வாயில்களின் பக்க வாட்டில் வீரபத்திரர் தக்கனை அழித்த கதை. சண்டிகேசுவரர் வரலாறு, திருமால் புத்தராக அவதரித்துப் போதி மரத்தடியில் அமர்ந்து அறமுரைக்கும் கதை, திரிபுரம் எரித்த சிவன் கதை ஆகியவை சிறு சிறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கங்கை கொண்ட சோழீச்சுவர சிற்ப அணிகள் . இக்கோயில் கருவறையின் பக்கவாட்டு வாயில்களில் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தல், திருமால் 1008 மலர்களால் சிவனை வழிபடுதல், மலைமகள் சிவனை மணம் புரிந்த கதை, அருச்சுனன் பாசுபதம் பெற்ற கதை, எமனை உதைத்த கதை, ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. சிவனாரின் வடிவங்கள் காமனை எரித்தது, சண்டேசுவரர், கங்காதரர் ஆகியவை யாகவும் உள்ளன. கீழைக்கடம்பூர், மேலைக் கடம்பூர் சிவனடியார் சிற்பங்கள் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட இக் கோயில் கருவறையில் இரண்டு சிற்ப அணிகள் உள்ளன. அதிலொன்றில் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கைலாயம் செல்லும் காட்சி சிறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே கீழைக் கடம்பூரில் தண்டிப் பெருமாள், முருக நாயனார், திருக் குறிப்புத் தொண்டர் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு சிவனடியார்களின் வரலாற்றையும் சிற்பங்களாக வடித்துள்ளனர். இதைப் போன்ற சிற்ப அணிகள் தாராசுரம் கோயில் இராச கம்பீரன் மண்டபத்திலும் காணப்படுகின்றன. திரிபுவனம் வரதராசப் பெருமாள் கோயிலில் இராமாயணக் கதை, கண்ணனின் இளமைக் கால நிகழ்வுகள், திருமாலின் அவதாரங்கள் ஆகியன வைணவத் தொடர் சிற்பங்களாக உள்ளன. திரிபுவனம் சிவன் கோயிலிலும் இராமாயணக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. 1௦. சமயச்சார்பற்ற சிற்பங்கள் கரணங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 108 கரணச் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் 27 இன்னும் முடிவடையவில்லை. புடைப்புச் சிற்பங்களாக உள்ள இவற்றில் தமிழரின் நடனக் கலையில் உள்ள கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. இதைப் போன்ற கரணச் சிற்பங்களைத் தாராசுரம் இராச கம்பீரன் மண்டபம், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரம் ஆகியவற்றிலும் காணலாம். 11. மாந்த உருவங்கள் தெய்வப் படிமங்களைப் போலவே மாந்த உருவங்களைச் சிற்பங்களாக வடிக்கும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்களை "அடியார்களின் சிற்பங்கள்'' எனப் பார்த்தோம். அரசர், அரசியர், இளவரசர்கள், மற்றும் புரவலர்களின் உருவங்களையும் சிற்பமாக வடித்தனர். பெரும்பாலும் இவை புடைப்புச் சிற்பங்களாகவே உள்ளன. பெரும்பாலான இத்தகைய சிற்பங்களின் அடியில் அவை யார் எனக் குறிப்பிடும் கல்வெட்டும் காணப்படுகின்றன. 12. பெளத்தச் சிற்பங்கள் சோழர் காலத்தில் சைவ, வைணவச் சமயங்களைச் சார்ந்த சிற்பங்களோடு பெளத்த, சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில் போதிமரத்துப் புத்தரின் சிற்பமுள்ளது. பிற்காலச் சோழர் காலத்தில் பல பௌத்தச் சிற்பங்கள் உள்ளன. அவை நின்ற வண்ணமும், அமர்ந்த வண்ணமும் சிற்பங்களில் தோளிருந்து கால் வரை நீண்ட அங்கியை அணிந்தும் விளங்கு கின்றன. வலக்கை அபயமுத்திரை காட்டுகிறது. அமர்ந்த வண்ண முள்ள சிற்பத்தில் தலைமயிர் சுருள் சுருளாக உள்ளது. திருவலஞ் சுழி சிவன் கோயிலில் வெளிப்புறத்தில் நின்ற வண்ணமுள்ள புத்தரின் சிற்பத்தையும், திருநாகேசுவரம் அம்மன் கோவில் அமர்ந்த வண்ணமுள்ள புத்தரின் சிற்பத்தையும் காணலாம், 13. சமணச் சிற்பங்கள் சோழபாண்டியபுரம் அனந்தமங்கலம் ஆகிய இடங்களில் முற்காலச் சோழர் காலத்தில் பாறைகளில் செதுக்கப்பட்ட பார்சுவ நாதர், இயக்கி ஆகிய சமண சமய உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. முதலாம் இராசராசனின் சகோதரி குந்தவை கட்டிய சைனாலயம் போளூரை அடுத்த திருமலையில் உள்ளது. இதில் பார்சுவநாதர் சிற்பம் சிறப்பாக உள்ளது. இதைப் போலவே பல சமணச் சிற்பங்கள் தொண்டை நாட்டின் பல பகுதிகளிலும், பாண்டிய நாட்டிலும் உள்ளன. முடிவுரை தஞ்சைப் பெருவுடையார் கோயிலுள்ள வாயிற்காப்போரின் சிற்பங்கள் கோயிலுக்கேற்ப பெரிய அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது போன்ற ஆளுயரச் சிற்பங்கள் தோன்றிய காலம் சோழர் காலமே ஆகும். இப்பாணி பிற்காலப் பாண்டியர் காலம், விசயநகர காலம், நாயக்கர் காலம் ஆகியவற்றிலும் தொடர்ந்தது. சோழர்காலச் சிற்பங்களில் பெரும்பாலும் சைவ சமயப் பிரிவும், சிறிய அளவு வைணவப் பிரிவும் உள்ளன. கொற்றவை, சேட்டா, சப்தமாதர் ஆகிய சிற்பங்களும் உள்ளன. 3. ஓவியக்கலை சோழர்கால ஓவியங்கள் கால வெள்ளத்தால் மறைந்து விட்டபோதிலும் ஒரு சில எஞ்சி நிற்கின்றன. சிலவற்றின் எச்சங் களைக் கொண்டு அவையும் முத்தரையர் ஓவியங்கள் என்று அனுமானித்திருந்தனர். இன்று திட்டவட்டமாக சோழருடைய ஓவியங்கள்தான் பெருவுடையார் கோயில், நார்த்தாமலை, திருமலை, தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ளவை ஆகும். 1. திருமலை ஓவியங்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகில் உள்ள திருமலை என்னும் மலரில் உள்ள மலை மீது அமைந்துள்ள சமணக் கோயிலில் செங்கல் கட்டடச்சுவரில் சாந்து பூசி, கல்பவாசி தேவர்கள் ஓவியங்கள் சோழர் கால ஓவியங்களாகும். கண்களை அகல விரித்தும், அணிகலன்கள் அதிகம் அணிந்தும் காணப்பெறும் இந்த ஓவியங்கள் சோழரின் பிற்காலப் பாணியிலானவை ஆகும். 2. தாராசுரம் - ஐராவதேசுரர் கோயில் இக்கோயிலில் உள்ள ஓவியங்கள் பெரிய புராணக் காட்சி களை விளக்கும் அணி ஓவியங்கள் ஆகும். ஓவியங்களின் மீது சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனால் இவை அழிந்த நிலையில் காணப்படுகின்றன. 3. பெருவுடையார் கோயில் ஓவியங்கள் சோழர்கால ஓவியங்களில் ஓரளவு முழுமையாக அழிபடாமல் காணப்பெறுவது தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் கருவறையைச் சுற்றிலுமுள்ள ஓவியங்களே ஆகும். இங்குள்ள தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தெற்குச் சுவர் ஓவியம் தட்சிணாமூர்த்தி தென் திசைக்கடவுளாக சிவனைத் தட்சிணாமூர்த்திக் கோலத் தில் இந்த ஓவியம் சித்தரிக்கிறது. 'யோக தட்சிணாமூர்த்தியாக ' அமர்ந்துள்ள சிவனாரின் சடை சிவந்த நிறத்தில் உள்ளது. கீழ்ப் பாச்சிக் கட்டியுள்ளார். அவருக்கு வலப்பக்கத்தில் நான்கு ரிஷிகள் உள்ளனர். இடப் பக்கத்தில் ஒரு பக்தர் தலைக்கு மேல் இரு கை களையும் கூப்பி வணங்குகிறார். அவருடைய காலடிக்கு அடியில் ஒரு நீர்க்குவளை உள்ளது. அருகில் இரண்டு ஓலைச் சுவடிகள் உள்ளன. இடப் பக்கத்தில் ஒரு மாது அமர்ந்து கொண்டு வணங்கு கிறாள். அவள் பச்சை நிற ரவிக்கை அணிந்துள்ளாள். ஆலமரத்தின் அருகில் ஆடையின்றி நிற்கும் பைரவர் படைக் கலங்களை ஏந்தியுள்ளார். ஆலமரத்தில் குரங்குகள், ஆந்தை, பாம்பு பெண்கரடி, புலி, ஆகிய விலங்குகள் உள்ளன. தூக்கணாங் குருவிக் கூடு ஒன்று சிவன் அமர்ந்த மேற்புறத்தில் உள்ளது. சிவனுடைய மார்பில் பூணூலும், காலில் கமலும் அணிந்துள்ளார். இதே போன்ற சிவனாரின் சிற்பமும் உள்ளது. மேற்குச் சுவர் ஓவியம் சுந்தரர் கதை பெரிய புராணத்தில் வரும் ''சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட கதை" இங்கு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. சுந்தரர் திருமணம் செய்ய மணமகனாய் நிற்கும் காட்சி, அவரைத் தடுத்து முதியவராய் வந்த சிவபெருமான் ஆட்கொண்ட காட்சி ஆகியன ஒவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. பெண்கள் திருமண விருந்து வைக்கும் காட்சி சிறப்பாக உள்ளது. இக் காட்சிக்குக் கீழே நடராசர் கோயிலும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டமும் உள்ளன. எதிரில் அரசனும் அவனுடைய மூன்று மனைவியரும், பரிவாரங்களும் உள்ளனர். இதில் சுந்தரர் கயிலை செல்லும் காட்சி சிறப்பாக உள்ளது. வடக்குச் சுவர் ஓவியம் முப்புரம் எரித்த காட்சி சிவனார் முப்புரம் எரித்த எண்கைகளுடன் திரிபுராந்தகர் காட்சி இச்சுவரில் உள்ளது. நான்கு மலைகளைத் தேர்களாகப் பூட்டி, தேரைப் பிரமன் ஓட்ட சிவனார் ஒரு காலை ஊன்றித் தூக்கி வில்லில் நாணேற்றி நிற்கிறார். எதிரிலுள்ள மூன்று அசுரர்களும் பயத்தால் நடுங்குகின்றனர். கார்த்திகேயன் மயில் மீதும் கணபதி முருகன் மீதும் காளி சிம்மத்தின் மீதும் அமர்ந்துள்ளனர். சிவனாரின் தேருக்குப் பின்புறம் நந்தியுள்ளது. சிவன் கோபக் கனலுடன் உள்ளார். அசுரர்கள் சிவலிங்கத்தைக் கையிலேந்தி உள்ளனர். இதனையடுத்து இராவணன் கயிலை மலையைப் பெயர்க்கும் காட்சி உள்ளது. இங்குள்ள சடைமுடி தரித்த ஓர் உருவமும் ஆபரணங்களுடன் கூடிய மற்றோர் உருவமும் உள்ளன. இவை இராசராசனும், அவனுடைய குருவான கருவூர்த் தேவரும் ஆவர் என்று கணித்துள்ளனர். பெரும்பாலான ஓவியங்கள் சிற்பங்களாக வும் காணப்படுவது தஞ்சை ஓவியங்களின் சிறப்புத் தன்மை ஆகும். முடிவுரை சோழர் கால ஓவியங்களில் குங்குமச்சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளை நிறங்கள் அதிகம் பயன்பட்டுள்ளன. பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் பெண்களின் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சடைமுடியும் தாடியும், காவி உடையுமுடையவர்கள் பெருமைப் படுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் ரவிக்கை போட்டுள்ளனர். பெரிய புராணக் கதைகள் சோழர் கால ஓவியங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளன. திரிபுராந்தகர் ஓவியம், சோழப் பேரரசர்களின் வீரச் செயல்களின் சின்னமாகக்கொள்ளப் படுகின்றது. சோழர் ஓவியங்கள் தொடர்கதை ஓவியங்களாக (அணி) உள்ளன. சிற்பங்களிலும் இந்த பாணியைக் காணலாம். குடக் கூத்து என்பது திருமால் ஆடிய கூத்தாகும். சாக்கைக் கூத்து என்பது பண்டைத் தமிழர்கூத்து. இவைபோன்ற கூத்து வகைகள் ஓவியத்தில் சிவனாரின் நடனங்களில் பொதிந்துள்ளன என்பர். தஞ்சை ஓவியங்களில் சிறப்புடையனவாக தட்சிணாமூர்த்தி திரிபு ராந்தகர் ஆகியவை உயிரோவியங்களாக உள்ளன. புலித்தோல் மீது அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருகில் பூதக் கணங்கள் சூழ்ந்திருக்கின்றன. நந்தி படுத்த வண்ணமுள்ளது. தேவமாதர் இருவரின் நடனக்காட்சியும் உள்ளது. சிவன் கோயிலை வழிபடும் காட்சியு முள்ளது. அடுத்து திரிபுரம் எரித்த திரிபுராந்தகர் முக்கண் தாரியாகத் தோன்றும் காட்சி இதில் சிவன் எட்டு கைகளுடனும் மூன்று கண்களுடனும், உள்ளார். கைகளில் படைகளைத் தாங்கி, வில்லை வளைத்து அம்பெய்யும்போது கோபக்கனல் பொங்கி வரும் காட்சி போர்க்களக் காட்சியாக உள்ளது. அவருடைய கோபத்தைக் கண்ட தேவர்கள் அஞ்சி ஓடுகின்றனர். சிலர் மரங்களையும் பிடுங்கி எறிகின்றனர். இது போர்க்களத்தில் காணும் விறுவிறுப்பைக் காட்டுகிறது. சோழர் கால ஓவியங்களில் பெண்களைப் பல்வேறு கோணங்' களில் தீட்டி உள்ளனர். அவர்களின் ஆடை அணிகலன்கள், ஒப்பனைகள் நம்மை பெரிதும் ஈர்க்கின்றன. குறிப்பாக அவர்களின், தலைமயிர் ஒப்பனை அஜந்தா பாணிகளை விஞ்சி நிற்கின்றன. பெருத்த கொண்டை , சுருள் சுருளாகத் தொங்கும் மயிர்த் திரள்கள், தூக்கிச் செருகிய மயிர், தூக்கிக் கட்டிய கொண்டை , பின்புறம் தொங்கும் சடைப்பின்னல் முதலியன கலை நயத்துடன் காணப்படு கின்றன. இதைப் போலவே தலை, கழுத்து, தோள் பட்டை, கை, மார்பு முதலியவற்றிலணிந்துள்ள அணிகலன்கள் சிறந்த ஒப்பனைக ளாகவுள்ளன. இவர்களின் கைகளிலேயுள்ள இசைக் கருவிகள் அக்கால இசைக் கருவிகளின் பட்டியலை நினைவூட்டுகின்றன. திரளாக உள்ள மக்கள் பொது மக்களெனச் சட்டென அறியும்படி சோழர் கால ஓவிய நடையும், நளினமும் உள்ளன. . தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள தடுத்தாட் கொண்ட காட்சியில் பல்வேறு மக்களின் உணர்ச்சி யைத்தான் உணர முடிகிறது. இதே காட்சியைத்தான் தாராசுரம் ஐராவதேசுவரம் கோயிலில் சிற்ப வடிவில் காண்கிறோம், கயிலை செல்லும் காட்சி ஓவியத்தில் சுந்தரர் யானை மீது அமர்ந்து கையில் தாளத்துடன் முன் செல்லவும், சேரமான் பெருமாள் குதிரை மீது அமர்ந்து பின் செல்லவும், சுந்தரர் அவரைத் திரும்பிப் பார்க்கவுமான காட்சியைக் கண்டு வானவர் ஆடிப்பாடுகின்றனர். கடல் மீன்கள் துள்ளுகின்றன. 4.செப்புத் திருமேனிகள் பொதுத்தன்மைகள் தெய்வத் திருவுருவங்களைச் சிலையாகச் செய்வதைப் படிமம் என்றும் மாந்தருக்குச் செய்யும் சிலைகளைப் பிரதிமம்' என்றும் கூறுவர். இத்தகைய பிரதிமம் 'பல்லவர்' காலத்தில் கல்லில் செய்தார்கள். ஆனால் சோழர் காலத்தில் மட்டுமே செம்பால் செய்யும் முறை ஏற்பட்டதால் தெய்வத் திருமேனிகளும், பிரதி மங்களும் செப்பால் செய்யும் முறை ஏற்பட்டது. சோழப்பெருவேந்தர் காலத்தில் செம்பினால் மூன்று அல்லது நான்கடி உயரமும் மூன்று அல்லது இரண்டடி அகலமும் உள்ள மிகப்பெரிய உறுதியான செப்புத் திருமேனிகள் செய்யப்பட்டன. கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு முடிய ஏறத்தாழ 10,000 சிலைகள் செம்பினால் செய்யப் பெற்றுள்ளன. இவை செய்வதற்கு இவ்வளவு செம்பு எங்கு கிடைத்ததோ தெரியவில்லை . ஒவ்வொரு கோயிலிலுமிருந்த செப்புத் திருமேனிகளின் பட்டியலைக் கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் - இன்று அப்பட்டியல்படி திருமேனிகள் இல்லை. சோழர் காலத்துச் செப்புத் திருமேனிகள் உடலமைப்பில் அழகும் உயிரோட்டமும் நிறைந்திருக்கும். முற்காலச் சோழர் படிமங்கள் பிற்காலத்தைவிட இயல்பாக படைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலானவற்றிற்குக் கீழாடை மட்டுமே இருக்கும். அணி ஆபரணங்கள் குறைவாகவே இருக்கும். கழுத்தணிகள் தொப்புள் வரை தொங்கும். - பிற்காலச் சோழர் படிமங்களின் முகங்கள் சற்றுக் கருமை யாகவும், மூக்கு நீண்டும், உடல்வாகாகத் திரண்டும் காணப்படும். இத்தகைய பொதுத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு முற்காலப் படிமங்கள் அல்லது "முதல்வகைப் படிமங் கள்" என்றும், பிற்காலப் படிமங்கள் அல்லது "இரண்டாம் வகைப் படிமங்கள்" என்றும் பிரித்தறியலாம். மற்றவற்றை "மூன்றாம் வகை" என்றும் கூறுவர். முதல் வகைப் படிமங்கள் முதலாம் ஆதித்தன் முதல் உத்தமச் சோழன் காலம் – வரை யுள்ள படிமங்களையும் கண்டராதித்தன் மனைவி செம்பியன் மாதேவி உட்பட்ட காலப்பகுதி வரையுள்ள படிமங்களையும் முதல் வகைப் படிமங்கள்" எனலாம். இந்த முதல்வகைப் படிமங்களில் குறிப்பிடத் தக்கது வடக்கலத்தூரில் கிடைத்துள்ள கல்யாண சுந்தரர் படிமமாகும். சிவபெருமான் தனது வலக்கையில் பார்வதியின் கையைப் பிடித்துள்ளார். சிவனார் இளைஞராகவும் மணமகன் போலவும் உள்ளார். ஆடையின் முந்தானையில் மாவிலை போன்று உள்ளது. காதுகளில் வளையங்கள் இருவருக்கும் உள்ளன. சடைமுடி தரித்துள்ளனர். பார்வதி இளைய மண மகள் போல் உள்ளார். முதலாம் ஆதித்திய சோழன் காலத்திய இராமர், இலட்சுமணர், சீதை. அனுமான் ஆகியோரின் படிமங்கள் பருத்தியூரில் கிடைத் துள்ள விஷ்ணு படிமமும் இங்கு கிடைத்துள்ளது. இவைகளும் 'முதல்வகை' படிமங்கள் ஆகும். நடராசர் ஆடலரசன் (நடராசர்) சிலை சோழர் காலச் செப்புத் திருமேனிகளில் தலை சிறந்ததும் உலகப் புகழ் பெற்றதும் ஆகும். முதலாம் பராந்தகன் காலத்திலிருந்தே நடராசர் சிலைகள் ஏராளமாய்ச் செய்யப்பட்டன. அண்மையில் கரைவீரம் என்ற இடத்தில் கிடைத் துள்ள நடராசர், உமையாள் சிலைகள் கி.பி. 917-இல் செய்யப்பட் டவை ஆகும். உமையம்மையின் கீழுள்ள பீடத்தில் கல்வெட்டுக் குறிப்பு முதலாம் பராந்தகன் காலத்தது என அறியப்பட்டுள்ளது. தஞ்சைக்கு அண்மையிலுள்ள திருமெய்ஞானம் என்ற இடத்தி லுள்ள ஞானபரமேசுவரன் கோயிலில் உள்ள நடராசர் உமாபரமேசுவரி படி மங்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இக்காலப் படிமங்களில் பெரும்பாலானவை செம்பியன் மாதேவியால் செய்யப்பெற்றவை ஆகும். இவை உயரமாகவும் ஆனால் மெலிந்தும் செவ்வக வடிவிலும் காணப்பெறும் அணி கலன்கள் குறைந்து காணப்பெறும் இத்தகைய படிமங்களில் குறிப்பிடத் தக்கவை கோனேரிராசபுரம் உமாமகேசுவரர் கோயிலில் உள்ள திரிபுராந்தக மூர்த்தி, கலியாண சுந்தரமூர்த்தி, பார்வதி, கணபதி ஆகியவை ஆகும். சதுர நடனமாடும் திருவரங்குளம் நடராசர் படிமம் சோழர்காலப் படிமங்களில் சிறப்பானதாகும். இரண்டாம் வகைப்படிமங்கள் முதலாம் இராசேந்திரன் முதலாம் இராசராசன் காலத்தவையான படிமங்களை இரண்டாம் வகையைச் சேர்ந்தவை என்கிறோம். இவை முழுவளர்ச்சியடைந்தவை ஆகும். இத்தகைய படிமங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோயில், திருவெண்காட்டுக் கோயில் ஆகியவற்றில் உள்ளன, கலியாணசுந்தரர், பைரவர், சுப்பிரமணியர், அர்த்தநாரி ஆகிய செப்புத் திருமேனிகள் சிறப்பானவை. கங்கை கொண்ட சோழபுரத்து சோமசுந்தரர், பிச்சாடனர், திரிபுராந்தகர் ஆகிய செப்புத் திருமேனிகள் இவ்வகையானவை ஆகும். மூன்றாம் வகைப்படி மங்கள் இவ்வகைப்படிமங்கள் தடித்தும், இறைகலன்களோடும் காணப் பெறும். இவற்றில் ஆந்திரர், சாளுக்கியர் சாயல்கள் காணப்படுகின்றன. "மதுரைவீரன்" செப்புத் திருமேனியை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கூறலாம். 5. கூத்தும் இசையும் சோழற்காலக் கூத்துக்கலையைத் 'தமிழ்க்கூத்து' என்பர். கூத்துக் கலையைச் சோழர்கள் போற்றிக் காத்தனர். கூத்தாடு வோருக்குக் 'கூத்தக் காணி" கொடுக்கப்பட்டது. தமிழ்க் கூத்தை தேசிக்கூத்து' என்றும் அழைப்பர். இது தமிழ்ப்பண்பாட்டை விளக்கும். ஆரியப் பண்பாட்டை விளக்கும் கூத்தை 'ஆரியக் கூத்து' என்பர். இந்த கூத்துக்கும் சோழர்கள் மானியம் அளித்தனர். 'சாக்கைக் கூத்து', 'சாந்திக்கூத்து' முதலிய கூத்துக்களும் இருந்தன. ஆடல் மகளிர் கோயில்களிலும், விழாக்களிலும் நடனம் ஆடுவதற்கென்றே 'தேவரடியார்கள் ' அல்லது 'தேவதாசிகள்' அரசால் அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு 'மானியமும் வழங்கப்பட்டது. இவர்களில் சிறந்த கலைஞர்களுக்கு "மாணிக்கம்', 'காவிதி ', 'தலைக்கோலி', "நக்கன்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. தேவரடியார்களுக்குச் சமூகத்தில் நல்ல மரியாதை இருந்தது. சுந்தரமூர்த்தியாரும், முதலாம் இராசேந்திரன் மனைவி நங்கைப் பரவையாரும் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்கள். இசைக்கலை இக்காலத்தில் சிறந்து விளங்கியது. சோழர் கால இசைக்கலையில் ஆய்ச்சியர் குரவை குறிப்பிடத்தக்க தாகும். ஏழுபண்களை மாறிமாறிப் பாடி இசை எழுப்புவர் நமசிவாயா என்பதை மாற்றி உச்சரித்து ஓசை நயம் கட்டிப்பாடுவர். இதுவே ஆய்ச்சியர் குரவை அல்லது குரவைப்பாட்டு எனப்பெறும். சோழர்கால இசையை மேலும் அறிய நச்சினார்க்கினியாரின் உரைகளைக் காணலாம். கலிங்கத்துப்பரணி, சீவகசிந்தாமணி, பெரிய புராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு முதலியன சிறந்த இசைப்பாடல்கள் ஆகும். இவற்றில் பண்வகைகளையும், பல்வேறு இசைக்கருவிகளையும் காணலாம். தேவாரப் பாடல்களை ஒதவும், திருப்பதிகங்களை விண்ணப் பிக்கவும், இசைக் கருவிகளை இசைக்கவும் கலைஞர்களுக்குத் திருப்பதி யக்காணி நிலம், திருத் தாண்டகம் முதலியன அளிக்கப் “பட்டன. இசைக் கருவிகளில் தோல்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள் எனப் பல்வேறு கருவிகள் இருந்தன. ஐந்து முகங்களையுடைய பஞ்சமுக வாத்தியம் சிறப்பானதாகும். கோயில் இசைக் குழுவினரை உவச்சர்கள் என்றழைப்பர். வீணை வாசிப் போருக்கு வீணைக்காணி எனும் மானியம் வழங்கப்பட்டது. பஞ்சமரபு. இந்தி தாளியம், சங்கீத ரத்னாகாரம் முதலிய இசை நூல்களும், கல்வெட்டுக் களும், இக்கால இசையை விளக்குகின்றன. தேவாரப் பாடல்களுக்கு இருபத்து மூன்று விதமான பண் அமைத்துப் பாடப்பட்டன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள 108 கரணங்களைக் காட்டும் புடைப்புச் சிற்பங்கள் சோழர் கால் இசை, நாட்டியக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கருவிநூல் பட்டியல் (அ) தமிழ் நூல்கள்: 1 அலாய்சியஸ் ஞான (பதிப்பாசிரியர்) அயோத்திதாசர் சிந்தனைகள், முதல்பாகம் : அரசியல், சமூகம் அயோத்திதாசன் சிந்தனைகள், இரண்டாம் பாகம் சமயம், இலக்கியம் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூயசவேரியார் (தன்னாட்சி கல்லூரி, பாளையம்கோட்டை, 999. 2. அமலா. த மொழிபெயர்ப்பு) (சோசப் இடமருகுவின் மலையாள நூல்) இவர்தான் நாராணகுரு நாளந்தா பதிப்பகம், மேல்படப்பை சென்னை, 2000 3. அருணன் தமிழகத்தில் சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு வைகை வெளியீட்டகம் மதுரை, 1999. 4. அப்பாதுரை.க 1 இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு, கழகம், சென்னை , 1963 2 குமரிக்கண்டம் அல்லது உடல் கொண்ட தென்னாடு கழகம், சென்னை , 872 3. தென்னாட்டுப் போர்க்களங்கள் ஒளவை நூலகம், சென்னை, 1957 4. கொங்குத் தமிழக வரலாறு, சென்னை , 1983 5. அருணாசலம். மு தமிழ் இலக்கிய வரலாறு - தொகுப்புகள், தஞ்சை 6. அமுதா அழகன், தமிழர்செல்வம், திருச்சி, 1990 7. இராமன், கே.வி. டாக்டர் 1 தொல்லியல் ஆய்வுகள், சேகர் பதிப்பகம், சென்னை , 1975 2 பாண்டியர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னை , 1973 8. இராகவன் அ 1 கோநகர் கொற்கை பாளையங்கோட்டை,1981 2 தமிழக சாமை கலைத் தொடர்புகள், கழகம், சென்னை, 1967 9. இராகவையங்கார். மு ஆராய்ச்சித் தொகுதி இரண்டாம் பதிப்பு), பாரி நிலையம், சென்னை , 1972 10. இராசமாணிக்கம் மா 1 தமிழக வரலாறு, பாரி நிலையம், சென்னை 2. பல்லவர் வரலாறு, கழகம், சென்னை 1977 3. - சோழர் வரலாறு, கல்வியொளியீடு, சென்னை 1947 4 தமிழகக் கலைகள், பாரி நிலையம், சென்னை 947 5. பத்துப்பாட்டு ஆராய்ச்சி சென்னைப் பல்கலைக்கழகம், 197) 11. இராமச்சந்திரன் செட்டியார் கோ.மா. கொங்கு நாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1964 12. இராசேந்திரன், ம (பதிப்பாசிரியர்) தமிழ் மொழி வரலாறு, தமிழ் வளர்ச்சி இயக்ககம், குறளகம், சென்னை , 1999 13. இராமமூர்த்தி தி.பி. விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை , 1983 14. இராசசேகர தங்கமணி. ம முதலாம் இராசேந்திர சோழன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை , 1973 15. இராசதுரை கீதா, எசு.வி. பெரியார் சுயமரியாதை சுயதர்மம், விடியல் பதிப்பகம், கோவை.1996. 16. இராசதுரை. எசு.வி. இந்து, இந்தி, இந்தியா, அறிவகம், சென்னை , 1993 17. எழிலர்கூ கூ.வ. நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி.எம். நாயர் வாழ்வும் தொண்டும், பாரி நிலையம், சென்னை , 1938 18. கந்தையா பிள்ளை. நசி. 1. தமிழ் இந்தியா, கழகம், 1945, 2. தமிழகம், கழகம், 1945 19. "குனா 1. திராவித்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வான், பெங்கனூர், 991 2. தமிழர் வரபோறு 20. குருமூர்த்தி சா தொல்பொருள் ஆய்வும் - தமிழர் பண்பாடும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974 21. கந்தசாமி, சோ.ந . தமிழும் தத்துவமும், மணிவாசகர் பதிப்பகம், 1976 22. கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், 1979 23. .சதாசிவ பண்டாரத்தார். த.லி. . 1. பாண்டியர் வரலாறு, கழகம், 1972 2. பிற்காலச் சோழர் வரலாறு (மூன்று தொகுதியும் அடங்கிய முழு பதிப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974 3. தமிழ் இலக்கிய வரலாறு, 1967 4. சேரர் வரலாறுறு, கழகம், 1977. 24. சதாசிவம்.டி சென்னை மாகாணத்தில் பொதுமக்கள் கருத்து வளர்ச்சி சென்னைப் பல்கலைக்கழகம், 1983 25. சிவஞானம், பொ, 1. வீரபாண்டியன் சுட்டபொம்மன், இன்ப நிலையம், சென்னை , 1949 2 விடுதலைப் போரில் தமிழ் வளர்த்த வரலாறு. சென்னை , 1970 26. சிரஞ்சிவி வீரபாண்டியன் சுட்டபொம்மன், 1958 27. செகவீரப்பாண்டியனார் பாஞ்சாலக் குறிச்சியின் வீரசரித்திரம், பாகம் 12 28. செல்வம் தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் நூலகம், 1938 * 29. சோமலே" விவசாய முதலமைச்சர் (ஓமந்தூரார் வாழ்க்கை வரலாறு) ""குருகுலம்" வேதாரண்யம், 1978 30. பத்மநாபன். ஆர் தனிவேந்தன் மாமல்லன், ஓரியண்ட் பாங்மேன், 1962 31. பார்த்தசாரதி டி.எம்.. திமுக, வரலாறு - பாகம் 1, பாரி நிலையம், சென்னை , 1975 32. பரிந்தமனார். அகி, மதுரை நாயக்கர் வரலாறு, பாரி நிலைப்பாம், சென்னை , 1980 33. பாலசுப்பிரமணியம். எசு. ஆர் 1.சோழர் கலைப்பணி, சென்னை , 1966 2 முற்காலச் சோழர் கலையும், சிற்பமும் 34. பாலசுப்பிரமணியம் ம . சோழர் காலத்து அரசியல் பண்பாட்டு வரலாறு 35. பிள்ளை . கூகே, தமிழக வரலாறு - மக்களும் – பண்பாடும் 36. பாரதமுனிவர் (சமற்கிருதம்) தமிழில் - ஸ்ரீராமதேசிகன், பரதநாட்டிய சாஸ்திரம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 2001 37. வேங்கடசாமி, மயிலை சீனி. 1. சங்ககாலத் தமிழக வரலாற்றில் - சில செய்திகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1970 2. கொங்கு நாட்டு வரலாறு, சென்னை , 1974 – 3. சமணமும் தமிழும், கழகம், 1980 4, பௌத்தமும் தமிழும், கழகம், 1980 38. வையாபுரிப் பிள்ளை , க, (பதிப்பாசிரியர்) சங்க இலக்கியம், பாரி நிலையம், சென்னை , 1965 39. விவேகானந்தன். கு அண்ணாயியாம் தம்பிக்கு கடிதங்கள், குமரன் வெளியீடு, சென்னை , 1984 40. வில்ஃபிரட் நோயலே திராவிட கலாச்சார வரலாறு தமிழில்: பட்டாபிராமன் பு.எசு. மாக்ஸ்முல்லர் வெளியீடு, 1967 41. ராபர்ட் எவ், ஹார்டுகிரேவ் தமிழில் : பாண்டியன் எகூடி. தமிழக நாடார் வரலாறு. முருகன் பப்ளிகேஷன்ஸ், சென்னை , 1979 42. ஜூன் லாறன்ஸ் செ, பகவதி கு. இந்திய விடுதலைக்குப்பின் தமிழ் இலக்கிய வரலாறு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை , 2001 43. மர்டாலின் குணசேகரன் (தொகுப்பாசிரியர்) விடுதலை வேள்வியில் தமிழகம் (பாகம் 12), நிவேதிகா பதிப்பகம் ஈரோடு, 2000 44. தங்கவேலுகோ 1 தமிழ் நில வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை , 1976 2 இந்தியக் கலைப் பேரபொறு (பாகம்12), தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் சென்னை , - 1976 3. இந்திய வரலாறு 123, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 45. தங்கவேலுகோ, தியாகராசன். இவ சம்புவராயர் வரலாறு, கொரட்டூர், சென்னை, 1990 46. தங்கவேலுகோ. தமிழ் தேசிய உணர்வின் முன்னோடி, தமிழன் அயோத்திதாசப் பண்டிதர், கொரட்டூர், சென்னை , 1999. 47. திருநாவுக்கரசு, சு 1 திராவிட இயக்க வேர்கள், மணிவாசகர் பதிப்பகம், 1991 2 களத்தில் நின்ற காவலர்கள், நக்கீரன் பதிப்பகம், சென்னை 1993 48. தில்லைவனம். சு நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, 1988 49. துரைசாமிப்பிள்ளை ஒளவை சு. பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு, திருவாளர் பதிப்பகம், தூத்துக்குடி – 2 சேரமன்னர் வரலாறு, சாந்தி நூலகம், சென்னை , 1950 50. தெய்வநாயகம். கோ தமிழர் கட்டிடக் கலை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 2002 51. தேவநேயப் பாவாணர், ஞா. 1. பழந்தமிழாட்சி, கழகம், 1972 2 தமிழ் வரலாறு, நேசமணி பதிப்பகம், நாட்டுப்பாடி எபிரபு, 1961 52. நஜன், சுதந்திர சிந்தனைகள், வானதி பதிப்பகம், சென்னை , 1972 53. நாகசாமி, இரா. 1. செங்கம்நடுகற்கள், தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை, 1972 2. கல்வெட்டியல், தமிழகத் தொல்லியல் ஆய்வுத்துறை, சென்னை , 1981 3. கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழகத் தொல்லியல் ஆய்வுத்துறை, சென்னை , 1972 4. பூம்புகார், தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை , 1973 54. நெடுஞ்செழியன், இரா திராவிட இயக்க வரலாறு முதல்பாகம், நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, வெளியீடு, சென்னை - 18, 1996 55. நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்திய வரலாறு, தமிழில் : பெருமாள் முதலியார் மு.ரா. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை 56. நொபுரு காஜிமா வரலாற்றுப்போக்கில் தென்னகச் சமூகம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1995 (அ) தமிழ் இலக்கியங்கள் தொல்காப்பியம், நன்னூல், பெண்பா பாட்டியல், பன்னிரு படலம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கலிங்கத்துப்பாணி, திருத்தொண்டர் புராணம், தொண்டை மண்டலச் சதகம், நளவெண்பா, பெரிய திருமொழி, பெருந்தொகை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பன்னிருதிருமுறை வரலாறு (அண்ணாமலை பல்கலைக்கழகம்), வீரசோழியம். (ஆ) மணிவாசகர் நூலக வெளியீடுகள் இராகவன் விடாசு.வி (நூல்கள் பிளினி (19),கெர்பதனிஸ் (1978), யுவான்சுவாங்(EYE தாலமி (1978), பெரிட்ஸ் [1978], மார்க்கோ போலோ (1979), பாஹியான் (1978), அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிகள் (இ) மலர்கள், தாளிக்கைகள் தென்னக தொன்மொழி நாகரிக ஆய்வு நிறுவனமும், பன்னாட்டு மொழி மையமும் இணைந்து நடத்திய மாநாட்டு மலர்கள் – 1. உலகின் முதல் மாந்தன், உலகின் முதல் மொழி (1997), இந்தியப் பண்பாடுகளின் மூலம் (1998), இந்திய மொழிகளின் மூலம் (1998), நீதிக்கட்சி பொன் விழா மலர், சென்னை (1968) பழங்காசு (காலாண்டிதழ் - இதழ் 1 முதல் 9 வரை), ஆசிரியர் மரு. சுசிலா தேவி, திருச்சிராப்பள்ளி), செங்கோல் (மாத வெளியீடு தலைநகர்த் தமிழ்ச்சங்கம், சென்னை, மதுரைத் தமிழ்ச் சங்க பலர், மதுரை 1945, ஆவணம், தொல்லியல் கழக வெளியீடு (ஈ) சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி (வே. ஆனைமுத்து, தொகுப்பாசிரியர்), பெரியார் ஈ.வெ.ரா, சிந்தனைகள் (மூன்று தொகுதிகள்) 1974 (உ) பாலிமொழி இலக்கியங்கள் மகாவம்சம், தீபவம்சம் (ஊ) பெரியார் களஞ்சியம் (ரழு தொகுதிகள்) பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை -7 (எ) செப்பேடுகள் 1. பல்லவர் செப்பேடுகள் முப்பது, தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை , 1966 2 பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை, 1968 3. கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி, தெய்வநாயகம், மதுணரப்பல்கலைக்கழகம், 1984 (ஏ) கல்வெட்டுகள் 1 தென்னிந்திய சாசனங்கள் 1 - 13, புதுக்கோட்டை சாசனங்கள், தென்னிந்திய கோயில் சாசனங்கள் 1-3 ஆங்கில நூல்கள் Ambedkar, Dr. B.R. "Who were the Shudras?" Thackers, Bombay 1970) Allexamder Rea Pallava Architecture, Govt Museum, Madras 1909. Arokiasamy, Dr. 'The Classical Age of the Tamils, University of Madras, Madras, 1972. Basham, A.L. The Wonda that was India Boagu G.T., I..C.S. 'The Madras Presidency, 1881- 1931", Madras Govt, Madras 1933 Coomaraswamy A.K. Madras Govt. Press, History of Indian and Idonesian Art, New York, 1910 Gopalan, R., 'Pallavas of Kanchi", 1928. Gopalachari, K. "Early History of Andhra Country University of Madras, 1976 Guniraja Rao, B.K., "The Megalithic Culture in South India.' Havell, E.B., "History of Indian Arts", Heras, Rev. S.J. The Pallavi Genealogy, Bombay, 1971 Hard Grave Robert, L.Jr., "The Dravidian Movement' Popular Prakasam, Bombay, 1968 Haviekar, K.K. "Non-Brahmin Movement in South India', Shivaji Univeristy, Kolhapயா, 1979 Irishick, E.F., 1. Brahmin and non-Brahmin struggle 2. Politics and Social conflict in South India 3. The non-Brahmin Movement in Tamil Separaism, Oxford, Bombay, 1969 4. Tamil Rivivalism in 1930s, Madras, 1986 Justice Party Golden Jubilee Souvenir, 1968, Madras Jouveau-Dubrouil, 1. 'The Pallavas (1917). Pondicherry, 2. Dravidian Architecture' Kanakasabhai Pillai, V., 'The Tamils of Eighteen Hundred Years Ago' Keer Dhanarjay. Dr. Mabedkar Life and Mission, Bombay, 1954 Krishnaswamy, A.. 'The Tamil Country under Vijayanagar', Annamalai Nagar, 1964 Kuber, Dr. W. N. "Dr. Ambedkar-A Critical Study' (P.P.H. Delbi, 1973) Love, H.D. Vestiges of Old Madras, 3 Vols. London Longhrust, A. H., 'Pallava Architecture,' Vol. I, II & III. Minakshi, Dr. C. 1. 'Administration and Social Life Under Pallavas, Madras, 1939". 2. 'Historical Sculptures of Kanchi Vaikuntha Perumal Koil." Mookerji. Nilamani "The Ryotwari system in Madras', Calcutta, 1962 Mahalingam, T.V.. 1. 'Administration and Social Life Under Vijayanagar, Univ. of Madras, 1940. 2. South Inidan Polity, Univ. of Madras, 1955 Nambi Arooran, K. "Tamil Renaissance and Dravidian Nationalism, Madurai, 1980 Nilakanda Sastri, K. A., 1. Cholas, Vol. I & IL 2. 'Foreign Notices of South Inida', Univ. of Madras, 1972. 3. "The Pandiyan Kingdom'. 1972. 4. "A History of South India." O'Malley, L.S. 'Indian Castes and Customs', Vikas, Delhi, 1974 Panickar, KM. History of Kerala, 1498 - 1801 A.D., Annamalai University, 1959. Percy Brown, 'Indian Architecture (Buddist & Hindu). 1973. D.B. Taraporcvala Sons, Bombay-I. Patro, A.P. "The Justice Party Movement in India', 1932 Pillay, K.K., 1. Caste system in Tamilnadu, University of Madras, 1977 2. "A Social History of the Tamils', Vol.1. Madras Unity.. 1975 3. South India and Ceylon, Unity, of Madras – Ramachandras, S. (Ed.) Anna speaks at Rajya Sabha, 1962-66, Orient Longman, Madras, 1975 Raja, M.C.. Oppressed Hindus'. The Huxly Press, Madras, 1925. Rajayyön, Dr. K. 1. 'A History of British Diplomacy in Tanjore, 1969 (Rao & Raghavan, Mysore-4) 2. "South Indian Rebellion - The First War of Independance TEH-1BD' EL & EIGHBVHT, My5UTẾ-4). 3. 'Rise and Fall of the Poligars of Tamil Nadu. Univ. of Madras, 1914. Roberts P.E. History of British India, Oxford Unity. Press, London, 1938 Ramachandra Dikshitar, V.R, Orgin and Spread of the Tamils', 1971. "Southern India and China', Madras, 1991 Raja Raman, P.Dr. Justice Party, A Historical Persective, 1916 - 1937, Poom Pozhil Publishers, Madras, 1988 Ramamoorthy. P. The Freedom Struggle and the Dravidian Movement, Orient Longmin, Madras, 1987 Ramaswamy, E.V. Social Reform or Social Revolution, Translated by A.M. Dharmalingam, Viduthalai Press, Madras, 1965 Rao, M.S.A. "Social Movements and Social Transformation - A study of two background classes movements in India, Madras, 1979 Saraswathi, S. "Minoritics in Madras State' Impex, Delhi, Sathianathaier, R. 1. 'The Nayaks of Madura' 1924 2. Tamilaham in the 17th Century, Madras, 1956 Schoff, W.H. (ed.) The Periplus of the Erythrean Sea, New York, 1912 Sivashanmugam Pillai, J. 1. "The Life Select Writings and Speeches' of Rao Bahadur . M.C. Rajah, M.LA (1930) Madras-1. 2. "History of Adi-Dravida, Madras, 1930 Swell, R., "A Forgotten Empire,' London, 1924. Sen, R. "The French in India" 1947 Srinivasa Aiyangar, M., 'Tamil Studies Srinivasan, K.R., 1. The Megalithic Burials and Um Fields of South India in the Light of Tamil Literature and Tradition, 1946.". 2. Cave Temples of the Pallavas, New Delhi, 1964 Srinivasa Ayyangar, P.I., 1. 'History of the Tamils, 1929.' 2. "Prc Aryan Tamil Culture' Madras, 1930 Srinivasichari, CS. "History of Giugee and its Rules' 1943 Subramanian, R.T.P. Rajaji the Braker of caste differences Subramaniyan, Dr, N., History of Tamil Nadu, Madurai, 1972. Swaminathan, S."Karunanidhi - Man of Destiny". Unity of California Press, 1966 thandavan, Dr. R. "All India Anna Dravida Munnertra Kazhagam Politi cal Dynamics in Tamilnadu', Tamilnadu Academy of Political Science, Madras, 1987, Thangavelu, Dr. G. Prathaban, R. Communal Reservation and Constutional Safeguards in Tamilnadu, Madras, 1999. Trilok Nath Politics of the Depressed Classes, Delhi, 1987 Varadarajatu Naidu, T. (Comp) "The Justice Movement, 1917, Madrás, 1932 Vaiyapuri Pillai, S., 'History of Tamil Language and Literature, '1956. Venkataramanaya, N., "The Early Muslim Expansion in South India,' 1942. Vriddhagirisan, V., 1. "Nayaks of Tanjore,' Annamalai Univ., 1942. 2. "The History and Culture is the Indian People", Vols. I - XI, Bharatiya Vidya Bhavan, Bombay, 1942. Viswanathan, E.Sa. E.V. Ramaswami Naikar and Tamilnadu Congress, April, 1975. - Wishbrook, DA The Emergence of Provincial Politics, The Madras Presidency 1870 - 1920, New Delhi, 1977. Yesudhasan, Dr. V. "History of Tamil Society and Culture since 1936' Marthanda, 2002. The Ramakrishna Mission, Institute of Culture, Calcutta, Publications. The Cultureal Heritage of India, Vols. I - VIII ஆசிரியர் குறிப்பு படைப்புகள் : தமிழ் 1. இந்திய வரலாறு (கி.பி. 1506 வணி) 2 இந்திய வரலாறு (கிபி. 1526 முதல் இன்று வரை) 3. இந்திய வரலாறு (கிபி. 1773 முதல் இன்று வரை) 4 இந்தியக் கலை வரலாறு கட்டடக் கலை முதல் மடலம்) 5, 'இந்தியக் கலை வரலாறு (சிற்பக்கலை, ஓவியக் கலைப் இரண்டாம் மடலம்) 6. சப்பானிய வரலாறு 7. தமிழ்நில வரலாறு 8. சம்புவராயர் வரலாறு 9. தமிழன் அயோத்திதாசப் பண்டிதர் 10. அம்பேத்கார் நாட்பொத்தகம் ஆங்கிலம் 1 Essays on the History of Pallava 2 Social Justice in Tamilnadu 3. Communal reservations and constitutional safe guardsin Tamilnadu (1920 - 1976A.L.) 4. Social legislations on depressed classes 5. Religion and society in Tamilnadu - Secularism and communál harmony 6. Hindutuva and its impacts on Tamil society பதிப்பித்தவை: 1. தமிழக வரலாறு - தொல் பழங்காலம் 2 தமிழக பேர பொறு - சங்ககாலம் - இரண்டு மடலங்கள் 3. தமிழக வரலாறு - பல்லவர் பாண்டியர் காலம் - இரண்டு மடலங்கள் 4. தமிழக வரலாறு - சோழர் காலம் - இரண்டு மடலங்கள் 5. தமிழக வரலாறு - பாண்டியர் பெருவேந்தர்கள் 6.- தமிழக வரலாறு ஆய்வுப்பணிக்கு உதவி எம்.ஃபில் மாணவர் - 51 பேர் பிஎச்.டி மாணவர் - 11 பேர் வேறு பணிகள் 1. தமிழ்நாட்டுத் தேர்வாணைய அறிவுரையாளர் 2' அனைத்திந்திய தேர்வாணைய அறிவுரையாளர் 3 நடுவண் ஆட்சிப்பணிகள், வங்கிப்பணிகள். தேர்வுக் குழுக்களின் அறிவுரையாளர் 4 அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்குழு அறிவுரையாளர் 5. மதுரைப் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் 6.. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் 7. தலைவர் - கோபால் நாராயணன் அறக்கட்டளை ஏற்படுத்தியர் முனைவர் கோ.தங்கவேலனார் சமூக, கல்வி, பொருளாதார அறக்கட்டளை 0 0 0