தொழில் நுட்ப வரலாறு நூற்களஞ்சியம் - தொகுதி பத்து தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக் கலை -2 சாத்தன்குளம் அ. இராகவன் சிதைந்து போகும் நிலையில் இருந்த கையெழுத்துப்படியினைப் பெற்று இந்த நூலை முதன்முதலாக வெளியிடுகின்றோம். அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி பத்து தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை - 2 | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 2007 | தாள் : 16 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 8 + 328 = 336 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 315 | படிகள் : 1000 | நூலாக்கம் : மலர், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல் களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன் குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். உங்கள் கைகளில் தவழும் தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை எனும் இந்நூல் கையெழுத்துப் படியாக நூலாசிரியர் இராகவன் அவர்களின் மகனார் இரா.மதிவாணன் அவர்களிடம் இருந்தது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று மனமுவந்து கையெழுத்துப்படியினை கொடுத்து உதவினார். இதனை முதன்முதலாக வெளியிடுகின்றோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க் கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளிவரு கின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப்போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள்ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரிய தாகும். நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல் களையும், வெளிவராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங்களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதி களாக உங்கள் கைகளில் தவழ விட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்து விட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவிய தோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், திருமதி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன்,இல.தருமராசு, ரெ. விஜயகுமார் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர் களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) பொருளடக்கம் பதிப்புரை iii உரிமையுரை v 1. கோயிற் பிரிவுகள் 3 2. கோயில் வகைகள் 19 3. திருமதில்கள் 201 4. ஆயுதங்களும் அணிகலன்களும் ஆடைகளும் 247 5. கோயில் வளர்த்த கலைகள் 268 6. ஆலயத்தின் தத்துவ விளக்கம் 301 தமிழ்நாட்டுக் கோயிற் கட்டக்கலை - 1 தோற்றுவாய் 1950-ஆம் ஆண்டிற்கு முன்பே திருக்கோயில் என்னும் ஓர் ஆய்வு நூல் எழுத எண்ணினேன். எனது எண்ணம் இருபத்தைந்து ஆண்டுகாலமாக ஈடேறவில்லை. நான் 1922-ஆம் ஆண்டிலிருந்து எழுத்தாளனாக 55-ஆண்டுகட்கு மேலாக எழுத்துப் பணியாற்றி வருகின்றேன். 1922-ஆம் ஆண்டிலிருந்து 1930-வரை சமய எதிர்ப்பு, சாத்திர வெறுப்பு கோத்திரவெறுப்பு சமய சீர்திருத்தம், நாட்டுப்பற்று, சமதர்மம் போன்ற துறைகளில் பணி ஆற்றி வந்தேன். 1948-இல் இலங்கைக்கு பொருள் தேடச் சென்றேன். அங்கு போனதும் அறிஞர் ஆனந்தக் குமாரசாமி, இலங்கைத் தொல் பொருள் ஆய்வு துணை ஆணையாளர் சு. சண்முகநாதன், கலைப்புலவர்கள் நவரத்தினம், புலவர் கே. கணேஷ்(தலத்துயா) டாக்டர் தனிநாயக் அடிகள் போன்றோர் நட்பைப் பெற்றேன். இவர்கள் நட்பு எனது வாழ்க்கையின் ஒரு திருப்புமையமாய் விட்டது. பழங்காசுகள் சேகரிக்கமுற்பட்டேன், நவமணிகளைச் சேகரித்தேன், சிப்பி சங்குகள் சேகரித்தேன், அணிகலன்கள், விளக்குகள், இசைக் கருவிகள் சேகரித்துச் சிறப்புப் பெற்றேன். அப்பால், 1. திருவிளக்கு, 2. வெண்கலப் படிமங்கள், 3. தமிழர் பண்பாட்டில் தாமரை, 4. மலர்கள், 5. தமிழ்நாட்டு ஓவியங்கள், 6. தமிழ்நாட்டுக் கப்பல்கள், 7. தமிழ்நாட்டுச் சிப்பி, சங்குகள், 8. தமிழ்நாட்டு இசைக்கருவிகள், 9. தமிழ்நாட்டு அணிகலன்கள், 10. தமிழ்நாட்டுப்படைக்கலன்கள், 11. தமிழர் இசை, 12. தமிழகச் சாவகக் கலைத் தொடர்புகள், 13. தமிழக மேற்காசிய இனத்தொடர்புகள், 14. தமிழ் இசை அகராதி, 15. தமிழர்களின் ஆடைகள், 16. சிந்துவெளிச் சைவ வேளாளர் பண்பாடு, 17. தமிழர்களின் கலைகளும் கைப்பணி களும், 18. தமிழர் நாடகம், 19. தமிழ்நாட்டியம், 20. இசையும் யாழும் தமிழ்நாட்டுக் காசுகள் என்று பல நூல்களை எழுதிக் குவித்தேன். சில சிங்கப்பூர் தமிழ்முரசு என்னும் நாள் ஏட்டில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன. சில நூல் வடிவில் வெளிவந்து அறிஞர்கள் பாராட்டைப் பெற்றன. திருவிளக்கு, தமிழர் பண்பாட்டில்தாமரை, தமிழகச் சாவகக் கலைத் தொடர்புகள் என்ற நூற்கள் தமிழக அரசின் பாராட்டையும் பரிசையும் பெற்றன. தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற நூல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் பி. V., பி. எ.சி வகுப்புகளுக்கு 1971-ஆம் ஆண்டில் பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டது. என்றாலும் கோயிலைப்பற்றி நான் நூல் எழுதத் தொடங்க வில்லை. ஒன்றிரண்டு முறை சிலபக்கங்கள் எழுதி அவற்றைத் தவறவிட்டதும் உண்டு. கலை வித்துக்களை எனது உள்ளத்தில் ஊன்றி அதற்கு உரமிட்டு, நீர்வார்த்து வளர்ச்சிபெறச் செய்த இலங்கையில்கூட திருக்கோயில் முளைத்துக் கிளம்ப இடம் அளிக்கவில்லை. எனது மகள் தமிழ் அரசி 1974- ஜனவரியில் வெளிவந்த சோவியத் நாடு (Soviet land) என்ற ஆங்கில ஏட்டை எடுத்துக் காட்டி நீங்கள் தமிழ்நாட்டுத் திருக்கோயில் என்ற நூலை எழுத சோவியத் நாட்டில் வெளிவந்த லெமூரியாக் கண்டத்தின் மர்மம் என்ற கட்டுரை உங்கள் நூலுக்கு நல்ல அடித்தளமாக இருக்கும் என்றும் எடுத்துக் காட்டினாள். படித்துப் பார்த்தேன். கட்டுரை வரைந்த அறிஞர் கோந்ரோத் அவர்கள் தெளிந்த ஆய்வுடன் எழுதியிருப்பினும் உறுதியாக அவரது எழுத்துக்கள் புலப்பட வில்லை. தமிழில் மொழியாக்கம் செய்தவர் வேண்டும் என்றே பல பகுதிகளை மொழியாக்கம் செய்யாது விட்டுவிட்டார். தமிழர்கள் ஆரியரினும் நாகரிகம் வாய்ந்த நல்லினம் என்று உருசிய மொழியில் கூறிய உயரிய ஆய்வு மொழிகளைத் தமிழில் கூறக்கூட அவருக்குக் கசப்புப் போலும். என்றாலும் ஆங்கிலக் கட்டுரையைப் படித்து ஓரளவு நிறைவு கொண்டேன். எனது மகள் 1977-ஆம் ஆண்டில் எப்படியும் தமிழ்நாட்டுத் திருக்கோயில் என்ற நூலை எழுதி முடிக்குமாறும் அதற்கு வேண்டிய எல்லா உதவியும் தான் செய்வதாக வாக்களித்தாள். நூல் எழுதுவதற்கு வேண்டிய 100 நிழற்படங்களும் 100 வரைபடங்களும் என்னிடம் இருந்தன. திருமதில், கோபுரம், பலிபீடம், கொடிமரம், நந்தி சிவலிங்கம், திருஉண்ணாழிகை, விமானம், மண்டபங்கள், தூண்கள் கோயில் அமைப்புகள், உபபீடம், அதிர்ஷ்டானம், பஞ்சவரிகள், கால்கள், தோள் உறுப்புகள், கர்ணக்கூடு பஞ்சரம், சாலை, மாடம், அணிமாடம் போன்ற படங்களைவரைந்து வைத்திருந்தேன். எழுதவும் தொடங்கினேன். ஆனால் எதிர்பாராது வேறு வேலைகள் எழுந்ததால் எழுதி முடிக்கமுடியாமற் போய்விட்டது. மீண்டும் 1976-ஆம் ஆண்டு இறுதியில் திருக்கோயில் என்னும் நூலை தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். எனது சிந்தனையும், ஆய்வின் போக்கும் அறிவும் மாறிவிட்டதால் முன் எழுதியவற்றை எழுதியும் மாற்றியும் விரிவாக எழுதத் தொடங்கினேன். முன்னர் எழுதிய 100-பக்கங்களை மாற்றியும் திருத்தியும் புதிதாக எழுதுவதற்கு இரண்டு திங்கள் சென்றன. காரணம் முன்போல் விரைவாக எழுத என் உடல் நிலை இடங்கொடுக்கவில்லை. ஏனெனில் எனக்கு 74-வயது நடந்து கொண்டிருக்கிறது. 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் நாள் எனது 75-ஆம் வயது நிறைவுற்று 76-ஆம் வயது தொடங்கும் அதற்குள் இந்நூலை எழுதி முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஊக்கமுடன் எழுதத்தொடங்கினேன். ஆனால் 1976-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ஆம் நாள் எதிர்பாராவண்ணம் என்னை இதயநோய் தாக்கி ஒரு திங்கள் படுக்கையில் வைத்து விட்டது. கோயில்களைப் பற்றிப்படிக்குந்தோறும் படிக்குந்தோறும், எனக்கு ஆக்கம் அரும்புகின்றது. ஊக்கம் உந்துகின்றது கோயிலின் தோற்றம் அமைப்பு, அழகு, உறுதி வரலாறு இன்னோரன்ன எண்ணிலாச் சிறப்புகள் எனது எலும்பிற்கு எஃகு போன்ற பலத்தை ஊட்டுகிறது. கோயிலின் சதுரம், நீண்ட சதுரம், வட்டம், அரை வட்டம், ஆறுபட்டம் எட்டுபட்டம் போன்ற அமைப்புகள் உயர்ந்த விமானம், பெரிய கோபுரம் மண்டபங்கள் உண்ணாழிகை, சுற்றுக்கள், தூண்கள் போதிகைகள் போன்ற அரியபடைப்புகள் சீரியவைகளாய் ஆகும். தமிழர்கள் கருங்கல்லைப் பதமாக்கி தேக்குமரங்களைப் போல் சீவி கொத்தி இழைத்து பளிங்கு போன்ற திருஉருவங்களையும் சமைத்தார்கள் என்பது பெரியகாரியமல்ல - கருங்கல்லையும் கனிய வைக்கும் கைவண்ணமும் கைத்திறனும் உடையவர்கள் என்பதைக் காட்டி நிற்கும் திருநெல்வேலி, சுசீந்திரம், ஆழ்வார் திருநகரி கற்றூண்கள் என் உள்ளத்தையும் உணர்வையும் பெரிதும் கவர்ந்துள்ளது. 1972-ஆம் ஆண்டில் (சுப்ரீம் கோர்ட்டில்) உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் பெரிய வழக்குறைஞர் (அட்வக்கேட் செனரல்) திரு. எ. கோவிந்தசாமி நாதன் அவர்கள், அர்ச்சகர் வழக்கில், தமிழ்நாட்டில் 10040 கோயில்கள் இருக்கின்றன என்று கூறியதாகப் பத்திரிகையில் படித்தேன் - ஆனால் அவர்கள் கூறியது இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்திற்குள் அடங்கிய கோயில்கள் என்றே நம்புகிறேன். இந்தச் சட்டத்திற்குள் வராத கோயில்கள் இன்னும் 10,000-ம் இருக்கும் நமது ஊர்களில், தெருவிற்கு ஒன்றுவீதம் உள்ள பிள்ளையார் கோயிலையும், காளி அம்மன், கூளி அம்மன், மாரி அம்மன் போன்ற அம்மன் கோயிலையும் கணக்கிட்டால் சுமார் 30,000 ஏரி அம்மன் கோயிலாவது இருக்கலாம் என்று எண்ணுகின்றேன். இத்துணை கோயில்கள் இருந்தும் அதில் இலட்சக்கணக்கான தெய்வங்கள் இருந்தும், அதைவழிபடும் கோடானு கோடி குடிமக்கள் இருந்தும், அறநிலையப்பாதுகாப்பு மன்றங்கள் இருந்தும், கோடி கோடியாய் வெள்ளிப் பணங்களை தங்கப் பவுண்களை அடுக்கி வைத்திருக்கும் எண்ணற்ற மடங்கள் இருந்தும் அளவற்ற பக்தர் களும் எழுத்தாளர்களும் இருந்தும் பலபதிப்பகங்கள் இருந்தும் திருக்கோயில் என்ற ஒரு நிறைவான நல்ல நூலை எழுதி வெளியிடவில்லை என்பதை எண்ணினால் வருந்தாதிருக்க முடிய வில்லை. எனவேதான் ஆத்திரத்தோடும், ஆர்வத்தோடும், அபிமானத் தோடும் ஊக்கத்தோடும் உண்மை உணர்வோடும் இந்நூலை எழுத முன்வந்துள்ளேன். எனவே இந்நூல் அச்சிட்டு வெளிவந்தாலும் சரி வராவிடினும் சரி எழுதி முடிப்பது எனது கடமை என்று எழுதி முடித்துள்ளேன். இந்நூலை எழுதி, விற்றுப் பணம் சேகரிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை. இதற்கு முன்பு சில நூல்கள் எழுதி சில வெளியீட்டாளர் மூலம் வெளிவரச் செய்துள்ளேன். மூன்று நூற்கள் நானே எழுதி வெளியிட்டுமுள்ளேன். அவைகளில் கிடைத்த ஊதியம் மிகச்சொற்பம். அவைகள் எழுதி முடிக்க நான் செலவிட்டதொகையில் பாதிகூட எனக்கு வரவில்லை. இந்த நூல்களை எழுதிமுடிக்க எனது இல்லத்தில் இருபதாயிரத்துக்கு மேல் செலவிட்டு ஒரு நூலகம் அமைத்துள்ளேன். நூல்கள் எழுதி விற்று செலவில் பாதியையேனும் பெறமுடியாத நிலையில் என் போன்ற எழுத்தாளர் தமிழகத்தில் பலர் உளர். இஃதின்றி, பக்தி கொண்டும் தியாக உணர்ச்சியோடும் இந்நூலை எழுத நான் முன்வரவுமில்லை. நான் தமிழ்நாட்டில் பிறந்தவன்; தமிழ்நாட்டில் வளர்ந்தவன்; தமிழனுக்குப் பிள்ளை யாகப் பிறந்தவன்; சைவனாக வளர்ந்தவன்; நான் எனது நாட்டிற்கும் எனது நெறிக்கும் எனது கலைக்கும் செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத கடமைகள் சில உண்டென்ற கருத்தோடு இத்துறையில் இறங்கியுள்ளேன் என்பதே எனது உளமார்ந்த உண்மை. இந்நூலில், எங்கும் எனது கொள்கைகளை, அரசியல் கருத்துக்களையோ புகுத்த எண்ணியதே இல்லை. பெரியார் ஜி.யு. போப் அவர்கள் தம் திருவாசக முன்னுரையில் குறிப்பிட்டது போல், தமிழ்ச்சிந்தனையோடும், தமிழ் உணர்வோடும் எழுதியுள்ளேன் என்று தைரியமாக எனது வாசகர்களிடம் பெருமையோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்நூலை எழுதிமுடிக்க, இந்துக் கோயில் (Hindu temple) என்று கல்கத்தா பல்கலைக் கழகத்தின் கலைத்துறைப் பேராசிரியை டெல்லா கிராமரிஷ் என்ற செர்மன் நாட்டு அம்மையார் எழுதிய அரியநூலையும், அப்பால் அவரும் திருவாங்கூர், தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் பொடுவால் எழுதிய திருவாங்கூர் கலையும் கைப்பணிகளும் என்ற நூலையும், பிரஞ்சுப் பேரறிஞர் ஜோவியோ துப்ரயல் எழுதிய திராவிடக் கட்டிடக்கலை (Dravidian Architecture) என்று ஆங்கிலத்திலும், பிரஞ்சு மொழியிலும் எழுதிய இரு நூலையும் படித்துள்ளேன். அதோடு எவ். எய்ச். கிரேவ்லி (F.H. Gravely D. s.c) எழுதிய இந்தியக் கோயில் கட்டிடக் கலையின் பொதுக் கோட்பாடுகள் (An outline of Indian Temple Architecture) எய்ச். ஆர் ஹேவல் (H.R. Havel) எழுதிய இந்தியக் கட்டிடக் கலை (Indian Architecture) பெர்கூசன் (J. Ferguson) எழுதிய இந்தியக் கிழக்கத்தியக் கட்டிடக் கலை வரலாறு (History of Indian and Eastern Architecure) பெர்சி பிரவுண் (Percy Brown) இந்தியக் கட்டிடக்கலை (Indian architecture) போன்ற மேனாட்டறிஞர்கள் எழுதிய நூற்களை இறுதியாக 1976 டிசம்பர் திங்களில் செகதீச ஐயர் எழுதிய இந்தியக் கோயில் (Indian shrines) என்ற நூலையும் படித்துள்ளேன். அதற்காக அவர்களைத் தமிழன் இன்றும் என்றும் பாராட்டக்கடமைப் பட்டுள்ளான். தமிழகத்தில் உள்ள இப் பெருந்திருக் கோயில்களில் பன்னாள் சென்று வழிபட்டு, மாவிளக்கேற்றி, உண்ணாநோன்பு இயற்றி கோயில்களில் உள்ள திரு உருவங்களின் முன்னின்றும், மண்டி யிட்டும் கால்களும் கைகளும் நெற்றியும் ஏனைய உறுப்புகளும் நிலத்திற்பட வீழ்ந்து பாடியும் மலர்ந்து ஆடியும் அழுதும் தொழுதும், ஆடியும், பாடியும், பொருள் பெற்றும், அருள் பெற்று தமிழகத்தில் பிறந்த தமிழ் மகன் ஐரோப்பிய ஆசிரியர்களைவிட திருக்கோயில்களைப் பற்றிச் சிறந்த நூலை எழுதவில்லை என்று உளமாற நம்புகிறவன். நம்மால் உயர்ந்த நூல்களைப் படைக்கத்தக்க அறிவும் ஆற்றலும் பண்பும், பாங்கும், சூழ்நிலையும், திறமான மொழியும் உண்டு. ஆனால் இத்துறையில் ஈடுபடாது சிந்தனையைச் செலுத்தாது இருந்துவிட்டோம். இது தமிழ் இனத்திற்கு மாறா இழுக்காகும். நான், இப்பொழுது தமிழ் உணர்வோடு, தள்ளாத முதுமைப் பருவத்தில், உணவையோ, ஓய்வையோ, பொருட்படுத்தாது காலை 6.00 மணியிலிருந்து ஒரு நாளையில் 10- மணி நேரம் உழைத்து இந்த நூலை எழுதி முடித்துள்ளேன். இந்த நூல் கோயிலைப்பற்றிய ஒரு நிறைவான நூல் என்று நான் எண்ணாவிடினும் வருங்காலத்தில் உள்ள நமது மக்கள் கோயில் என்ற ஒரு நிறைவான நூலை எழுத இது அடிப்படியாக இருக்கும் என்று உறுதியோடு இந்நூலை எழுதி முடித்துள்ளேன். ஆனால் இந்த வாய்ப்பு இன்னும் எத்தனை ஆண்டில் கிட்டுமோ அறியேன்? தமிழர் வாழும் இந்த மாநாடு கோடானு கோடி ஆண்டுகளாய்த் தோன்றி மாற்றம் எய்து வருகின்றது. 15 கோடி ஆண்டுகளுக்குமுன் கோண்ட்வானா என்னும் கண்டமாக இருந்தது. அப்பால் கோண்ட்வானா அழிந்து சிதைந்தபின் லெமூரியா என்னும் கண்டம் தோன்றியது. 19-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் கிலேட்டர் என்னும் ஆங்கில நாட்டு விலங்கியல் நிபுணர் கோண்டுவானா சிதைந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு லெமூரியா என்னும் நிலப்பரப்பு எழுந்திருக்கக் கூடும் என்ற ஊகத்தை வெளியிட்டார் கிலேட்டர் ஊகத்தை பல அறிவியல் விற்பன்னர்களும் உயிரியல் நிபுணர்களும் நிலநூல் வல்லுநர்களும் தாவர இயலாளர்களும் மாகடல் ஆராய்ச்சி நிபுணர்களும் புதை படிவ ஆராய்ச்சி ஆளர்களும் ஆதரித்தனர். மக்கள் இனத்தின் தோற்றத்தைப்பற்றி ஆயும் பண்டைய மக்கள் இன ஆய்வியலின் பேராளர்கள் இன்றைய மக்கள் இனத்தின் பொது வளர்ச்சித் திட்டத்திலும் லெமூரியா, ஒளிநாடு, குமரி நாடு, மூநாடு, தமிழ்நாடு என்ற இடங்களுக்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்தனர். இலெமூரியாவில்தான் குரங்கு மனிதத் தன்மையை அடைந்து இன்றைய மனித இனமாக மாறுதல் அடைந்தது என்ற உண்மையை உலகம் ஏற்றது. இந்துமாக்கடலில் மூழ்கிப் போன பரதகண்டத்தில் தான் வாலில்லாக் குரங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்று பிரடரிக் எங்கல், குரங்கிலிருந்து மனிதனின் தோற்றத்தின் பங்கு என்ற தம்நூலில் குறிப்பிட்டார்1. பல்லாயிரம் ஆண்டுகள் சென்றபின்னர், பழைய லெமூர்கள் மறைந்து உயர்ந்த கலையும் உயரிய நிலையும் பெற்ற மக்கள் லெமூரியாவின் மிச்ச சொச்சமாய் நிலவிய இந்துமாக்கடலில் உள்ள நிலப்பரப்பில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தனர். இந்த இடம் குமரிக் கண்டம் ஒளிநாடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டது இங்கு தமிழர் வாழ்ந்த நாடுகளும் உயர்ந்த குமரிக்கோடும் பஃறுளியாறும், தமிழ்ச்சங்கங்களும் தமிழ் அரசர்களும், சங்கப் புலவர்களும், சங்கமருவிய ஏடுகளும் பண்களும், முரசுகளும், யாழ்போன்ற நரம்புக் கருவிகளும் 10,000 ஆண்டுகளுக்குமுன் நிலவிய முதற் சங்கமும் கடற்கோளால் அழிந்தொழிந்து போய்விட்டன. இவர்களில் எஞ்சிய மக்களும் இரண்டாம் சங்கமும் பாண்டியப் பேரரசர்களும் இரண்டாம் முறையும் கடற்கோளால் அழிவுற்றனர் என்றாலும் இவர்கள் முற்றாக அழிந்து போகவில்லை. சிலர் குமரி தொட்டு இமயம் வரை அசாம் தொட்டு இந்து குஷ் வரை பரவி நின்றனர். பலர் கடல் கடந்து பர்மா, இலங்கை, அந்தமான், நிக்கோபார், கடாரம், மலையம், சிங்கப்பூர், சாவகம், சுமத்திரா, பார்லி, போர்னியோ, கம்போடியா, தாய்லாந்து, இந்தோசீனம் முதலிய நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறினர். பலர் எகிப்து, உபனதியா, எல்லம், மெசபொத்தாமியா, அசீரியா, காகசஸ முதலிய வடமேற்கு ஆசியப்பகுதிகளுக்கெல்லாம் தரைமூலமாகவும் கடல் வழியாய் கப்பல்கள் மூலமாகவும் பல்லாண்டாய்ச் சென்று குடியேறி, உழுது பயிரிட்டு, கைத்தொழில்களை வளர்த்து, தங்கள், மொழி, எழுத்து, பண்பாடு, கலை நாகரிகம், ஒழுக்கம் முதலிய வற்றை வளர்த்தனர். எங்கும் நாடும் நகரமும் ஆட்சியும் பரப்பி நாகரிகத்தைப் பரப்பி வந்தனர் வணிகம் வளர்த்து வந்தனர்.1 தமிழர்களின் அல்லது அவர்களின் உறவினர்களான திராவிடர்களின் தாயகம் இந்துமாக் கடலின் ஓரிடத்தில் இருந்தது. அப்பால் அவர்கள் வாழ்ந்த நாட்டின் பெரும்பகுதியைக் கடல் விழுங்கிவிட்டது என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கடல் கொண்ட தமிழகம் மனிதவர்க்கத்தின் தொட்டில். இதிலிருந்து பழமையான நாகரிகுங்கள் பல திராவிட மொழி பேசும் மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வருகிறது. இந்தியாவின் நாகரிகங்கள் எதுவாய் இருப்பினும் அவைகள் அனைத்தும் தெற்கினின்று வடக்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் சென்றவைகளேயொழிய எதுவும் தெற்கே சென்றது என்பதற்குச் சான்றே இல்லை. பேராசிரியர் எர்னட் ஹெக்கல் டாக்டர் லாங்டன், எய்ச். ஆர் ஹண்டர், ஹால், பண்டேகார் போன்ற அறிஞர்கள் பலரும் கொண்ட முடிபு இதுவே யாகும். மக்கள் முதலில் தோன்றி உலகின் நான்கு பகுதிகளுக்கும் சென்று குடியேறிய மக்கள் குளத்தின் தாயகம் தென் இந்தியாவே யாகும். மக்கள் இனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் வடக்கே உள்ள குலத்தவர்களும் மையநிலக் கடற்கரைப் பக்கத்தில், உறைந்தமக்களும் (Mediterranean race) தென் இந்தியாவினின்று சென்று குடியேறியவர்கள் என்பது உறுதி. கிழக்குக் கரைகளில் மக்களின் என்பு முதலிய சின்னங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவை இத்துணைகாலத்திற்கு முற்பட்டனவென்று கூறமுடியாத பழமை வாய்ந்தனவாகும். தென் இந்தியாவிலிருந்த பழம்பெரும் இனத்தவர்கள் தமது அரிய அறிவையும், உயரிய தன்மைகளையும் தமது தோற்றம், வடிவம் முதலியவற்றையும் உலகம் முழுவதிலும் பரப்பியவர்களாகக் காணப்படுகின்றனர் என்றார் டாக்டர் மகலீன்.1 அமெரிக்காவிலே மெக்சிக்கோ யூக்காட்டன்2 என்னும் இடங்களில் காணப்படும் கோயில்களின் அழிபாடுகள் எகிப்திலுள்ள அழிபாடுகளை ஒத்துள்ளன. அமெரிக்கா எகிப்து இந்தியா போன்ற நாடுகளிலுள்ள கோயிற்கட்டிடங்களிற் காணப்படும் அணிகள், கொத்து வேலைப்பாடுகளும் ஒரே வகையின. சுவரில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள் சிலவும் ஒரே வகையின. அமெரிக்க மக்களிடையே, தம்முன்னோர் ஞாயிறு உதயமாகும் நாட்டினின்றும் வந்தார்கள் என்னும் பழைய நம்பிக்கை உண்டு. அயோவா, தக்கோவா என்னும் தீவுமக்கள் எல்லா அமெரிக்கா மக்களும் ஞாயிறு உதயமாகும் திசையில் உள்ள ஒரு தீவில் ஒருமித்துவாழ்ந்தார்கள் எனக் கூறுவர் என மேசர் லின் கூறுகின்றார். சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்களைச் சூழ இருந்த மக்கள் குலத்தைவிட வேறுபாடு உடையனவாய் இருந்தனர். அவ்வாறே அவர்கள் மொழியும், செமிட்டியர் அல்லது ஆரியர் அல்லது மற்றவர்களுடைய மொழிகளோடு சம்மந்தம் இல்லாமல் இருந்தது. அவர்கள் திட்டவட்டமாக இந்தியரின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாகத் தற்கால இந்தியனின் முகவெட்டு இற்றைக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த திராவிட இனத்தின் முன்னோர்களின் வடிவை ஒத்திருக்கின்றது. இன்று தெக்காணத்தில் திராவிட மொழிகளைப் பேசுகின்ற இந்தியரை சுமேரியர் முற்றிலும் ஒத்தவர்களாகக் காணப்படுகின்றன. இந்தியாவினின்று தரை மார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாகச் சென்று பாரசீகத்திற்குக் கூடாக டைக்கிரி யூப்பிரட்டிஷ் என்னும் இரு ஆறுகளின் பள்ளத்தாக்குகளை அடைந்த மக்களே சுமேரியராவர். இந்தியாவிலேயே அவர்களின் நாகரிகம் வளர்ச்சி யுற்றது. அங்கே அவர்கள் எழுதும் முறையை அறிந்திருத்தல்கூடும். முதல் ஓவிய முறையாகவும் அதிலிருந்து இலகுவாகவும் சுருக்கமாக வும் எழுதும் முறையை அவர்கள் பயின்றனர். அவர்கள் பாபிலோன் நாட்டை அடைந்தபோது சதுரமான எழுது கோலினால் மிருதுவான களிமண்ணில் எழுதி வந்தார்கள். இதனால் எழுத்துக்கள் கூர்நுதி வடிவினவாகக் காணப்பட்டன. மக்கள் முதலில் நாகரிகம் அடைந்தவிடம் இந்தியா என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. சுமேரியர் இந்தியர் இனத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படும்போது கிழக்கிலிருந்து மேற்கை நாகரிகப்படுத்துவதற்குச் சென்ற செமித்தியரும் ஆரியரும் அல்லாத சாதியார் இந்திய உற்பத்தியினரேயெனத் தெரிகிறது. இந்திய நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது. ஆகவே இந்திய நாகரிகம் என்பது ஆரியருடையது அன்று. சுமேரியர் தமிழ்நாட்டினின்று சென்றவர்கள் என்பது ஐரோப்பிய பண்டிதர்கள் கருத்தாகும்.1 தமிழ்மக்கள் 10000-ஆம் ஆண்டுகளாய் அடுத்தடுத்து எழுந்த கடற்கோள்களாலும், அரசியல் மாற்றங்களாலும், பொருள் தேடும் முயற்சியாலும் தாயகத்தைவிட்டு அதாவது திராவிட இந்தியாவை விட்டு கலங்களின் மூலமாயும் இலங்கை மலேசியா, சாவா முதலிய நாடுகளுக்குமட்டுமின்றி மெசபொத்தாமியா, எகிப்து முதலிய நாடுகளுக்கும் போய் நிரந்தரமாகக் குடியேறினர். அங்கு உழுது பயிரிட்டு தானிய மணிகளை மலைமலையாகக் குவித்தனர். கைப்பணிப் பொருட்களை வண்ணந்தீட்டி செய்து எங்கும் பரப்பினர். காடுகளை வெட்டித்திருத்தி வீடுகள் கட்டி சிற்றூர் களும் நகரங்களும் ஆட்சி முறைகளும் அமைத்தனர். எங்கும் சிறு குடிசைகளும் பெரிய இல்லங்களும் மாளிகை களும் கோயில்களும் பள்ளிகளும் கட்டினர். இசைக் கருவிகளும் படைக்கலன்களும் அமைத்தனர். தமிழர் குடியேறிய இடமெல்லாம் நகரங்களும் பட்டினங் களும், பாக்கங்களும் எழுந்தன. தோணிகளும், அம்பிகளும் மரக்கலன்களும் பெருகின. கடல் வணிகம் வளர்ந்தது. மக்கள் கட்டிடக் கலையில் நல்ல நிபுணர்களாய் விளங்கினர். தமிழர் குடியேறிய எகிப்து, உபைதியா, எல்லம், அசிரியா, அக்கேடியா, சால்டியா சிரியா, பாலதீனம் முதலிய நாடுகளிலெல்லாம் சிவன், உமை, முருகன் முதலிய பெருந்தெய்வங்களை பல்வேறு பெயர்களால் வழிபட்டு வந்ததுடன் காற்றுக் கடவுள் மழைக் கடவுள், நீர்க்கடவுள் மரக்கடவுள், மீன்கடவுள், காளைக்கடவுள் போன்ற சிறு தெய்வங் களையும் வழிபட்டனர். எங்கும் தமிழர்கள் சிவனை காளைமீது இருப்பவராயும், கையில் திரிசூலம் தாங்கியவராயும் மனைவியோடும் மக்களோடும் மலைமுகடுகளில் இருப்பவராயும் சிவனை ஞாயிறாகவும் உமையை திங்களாகவும் முருகனை செவ்வாயாகவும் கருதி சிக்குராத் என்னும் கோயில் கட்டி வந்தது தமிழர் எங்கு குடியேறினும் எத்தனை ஆண்டுகள் ஆயினும் தங்கள் மரபு வழுவாது வந்துள்ளனர் என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. எகிப்தியக் கட்டிடக் கலை 1932-ஆம் ஆண்டு சிந்துவெளி அகழ்வு நூல் வெளிவருவதற்கு முன், உலகிலே எகிப்தில்தான் கட்டிடக்கலை முதல்முதலாக துளிர்த்து எழுந்து பீடுற்று உயர்ந்து நின்றது என்ற ஐரோப்பிய அறிஞர்கள் கருதினர். எகிப்தில் கி.மு. 2000-ஆம் ஆண்டிற்கு முன் கட்டிடக்கலை மட்டுமின்றி இசை அறிவும், வானநூற்புலமையும், மருத்துவக்கலையும், ஆடற்கலையும், நாகரிகமும் சிறப்புற்றோங்கி இருந்தன. பண்டைய எகிப்திய நாட்டினின்றே கட்டிடக் கலை அறிவும், வானநூற்புலமையும், இசை நுணுக்கமும் மேனாட்டிற்குச் சென்றன. எகிப்தியர் வீடுகளையும் அரண்மனைகளையும் கோயில் களையும் கட்டுவதற்கு மரக்கட்டைகளையும், சுடாத செங்கற்களை யும் மண்சாந்தையும் பயன்படுத்தி வந்தனர். பண்டைக் காலக் கோயில்களும், சமாதிகளும் மரக்கட்டைகளாலும் மண்செங்கல் லாலும், மண்சாந்தாலும் கட்டப்பட்டு வந்தன. பிற்காலத்தில் பழைய அமைப்புகளைத் தழுவி கற்களால் கோயில்களும் சமாதி களும் எடுப்பிக்கப்பட்டுள்ளன. கட்டிட அடிப்படைகளும், அடிச்சுவர்களும் அகலமாக அமைக்கப்பட்டன. சமாதிச் சுவர்கள் சிற்பவேலைப்பாடுகளாலும், ஓவியங்களாலும் அணிபெறச் செய்யப்பெற்றன. எகிப்தியக் கட்டிட வேலைகள் பலதிறப்பட்டன. அவைகளுள் உலகப் புகழ்பெற்ற மலைப்பூட்டும் மாபெரும் பிரமிடுகள் வியத்தகு கோயில்கள், சீர்பெறும் பிங்க்களும் அணியுறத்திகழும் அரண்மனைகளும், அற்புதமான சமாதிகளும் குறிப்பிடத்தக் கனவாகும். உலகிலே முதன்முதலாக வரலாற்றை வரைந்த வரலாற்றாசிரியர் ஹெரட்டோட்ட எகிப்திற்கு நேராகச் சென்று நாட்டைப் பார்த்து பல ஏடுகளை ஆய்ந்து எழுதிய உலக வரலாற்றில் எகிப்திய கட்டிடக்கலை உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. எகிப்தில் கி.மு. 4000-ஆம் ஆண்டுகட்கு முன் எகிப்தியர் அரசர்கள் தங்களுக்கெனக் கட்டிய பிரமிட் கோபுரங்களே எகிப்தின் உயரிய நாகரிகங்கள் - அவைகள் சுமார் 80 சிறப்பானவை. அவற்றில் பெரியது 764 சதுர அடிப் பரப்பும் 97 ½ அடி உயரமும் உள்ளது. இது எடை 7,00,000 றாத்தல் நிறையுள்ளவை. இவை நான்கு அல்லது ஐந்து அடுக்குகளையுடைய 22 ஆயிரம் வீடுகளைக் கொண்ட நகரங்களை அமைக்கப் போதுமானவை. இந்தப் பிரமிட் கோபுரங்களில் பண்டைய எகிப்திய மன்னர்கள் பயன்படுத்திய எழுத்துக்களும் பானைசட்டிகளும் ஆயுதங்களும், அணிகலன்களும் இசைக்கருவிகளும், ஆடைகளும், பதனிடப்பட்ட உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1 இங்கு நிலவியது கல்லரை நாகரிகமே ஒழிய நகர நாகரிகம் அன்று. இங்குள்ள இல்லங்களும், கோயில்களும், தெய்வங்களும் இசையும், இசைக்கருவிகளும் திராவிட நாகரிகத்தைப் போன்றதாகக் காணப்படுகின்றனர். இங்குள்ள மக்கள் தங்களை பண்டு நாட்டினின்று குடியேறிய மக்கள் என்று கூறிக் கொள்கின்றனர். பண்டு நாடு பாண்டிய நாடு என்று உலகிற் பெரிய வரலாற்று நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. பண்டைய எகிப்திய மக்கள் செமிட்டியரல்லாத மக்களே என்று பேராசிரியர் சேயி (Proffessor Sayee) கூறியுள்ளார். அதனைப் பல அறிஞர்கள் தழுவி ஆய்ந்து எகிப்தியர் தமிழ்நாட்டினின்று குடியேறிய மக்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.2 பாபிலோனியக் கட்டிடக்கலை பண்டையப் பாபிலோனியர்கள் கட்டிடச் சிற்பக் கலையைப் பேணிவளர்த்து வந்தனர். திராவிடர்களைப் போல் அவர்களுக்கு கோயில்கள் எழுப்புவதில் தனி ஆர்வம் உண்டு. பபிலோனியர்கள் தமிழர்களைப் போல் குன்றுகளிலும், பாறைகளிலும் கோயில்களை எடுப்பித்து வந்தனர். பாபிலோனியர்கள் கோயில்களில் சிறந்த சிற்ப வேலைகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய பாறைகளின் மீது பாபிலோனியர்கள் கட்டுமலைமீது கட்டிய கோயில்கள் சிகரத் (ziggurat) என அழைப்பிக்கப் பெற்றது. தமிழர்கள் கட்டுமலை மீது எடுப்பித்த கோயில்கள் பெருங்கோயில் என்று கூறப்படும். பெருங்கோயில்கள் சோழ நாட்டில் சுமார் 100-க்கு மேல் உள்ளன. பாபிலோனியர் சிந்து வெளித் திராவிடர்களைப் போல் தங்கள் கட்டிடங்களுக்கு சுட்டசெங்கற்களையும் சுடாத செங்கற்களையும் பயன்படுத்திவந்தனர். கால்டியாவில் பண்டையப் பாபிலோனியர் கட்டிடச் சிதைகள் பலவுள. அசிரியர் காலத்தில் அரண்மனைக் கட்டிடங்கள் பல எழுந்தன. நீனிவே (Neneveh) நிம்ருது (Nimrod) கார்சாபாத் (Khorssabad) ஆகிய இடங்களில் உள்ள அரண்மனைச் சிதைவுகள் குறிப்பிடத் தக்கவைகள் ஆகும். கார்சாபாத்திலுள்ள சார்கோன் அரண்மனை அசிரியரின் கட்டிடக் கலைச் சிறப்பிற்குச் சீரிய எடுத்துக்காட்டு ஆக மிளிர்கின்றது. அசிரியர்கள் தமிழர் களைப் போல் கட்டிடத்தின் வெளிப்புறத்தை எளிய முறையில் அமைப்பர் - உட்புறத்தை சுண்ணச் சாந்து பூசி வண்ணந்தீட்டி, புடைப்பு சிற்பங்களால் அலங்கரித்துள்ளனர். இவர்கள் கட்டிடங்களில் தூண்கள் காணப்படவில்லை. வளைவுகளையும் வில் மச்சுக் கூரைகளையும் அமைத்துள்ளனர். அரண்மனைத் தலைவாயிலின் இருபுறங்களிலும் தலை உருவங்களையும் இறக்கை களையும் உடைய நந்தி உருவங்களையும் அமைத்துள்ளனர். பாபிலோனில் உள்ள அமுரபி அரசன் காலத்தில் ஆபிரகம் சால்டியாவின் தலைநகராகிய ஊர் நகரைவிட்டு கானானில் குடியேறினான் பாபிலோனிய அசிரிய நாகரிகங்கள் இணைந்து அசிரியப் பண்பாடாக மாறியது. பாபிலோனியாவை சுமேரியர்கள் கைப்பற்றி அங்கு வானநூற்புலமையை வளர்த்தனர். கட்டிடக் கலையை வளர்த்தனர். கோயில்களைக் கட்டினர். பாறைகளின் மீது சிகாரத் என்னும் கோயில்களைக் கட்டினர். சுமேரிய நாகரிகம் சிந்து வெளி நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்புடையது சுமேரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் குடியேறி திராவிடர்கள் என்ற பெயரைத் தாங்கி உலகில் உயர்ந்த கட்டிடக் கலை வளர்த்துள்ளனர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். பல தெய்வங்களுடன் ஞாயிறு, திங்கள் கடவுள்கள் திராவிடக் கடவுளாக எண்ணப்படுபவர்கள். ஞாயிறு (சூரியன்). பாபிலோனி லும் சால்டியாவிலும் பேல் மார்துக் (Bel Marduk) எனப்பட்டார். திங்கள் (சந்திரன்) இதார் (Istar) எனப்பட்டார். இத் தெய்வங்களின் கோயில்களில் நடனமாடும் நங்கையர் இருந்து வந்தனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்த தேவதாசிகளை ஒப்பர். கோயில்களில் பல சடங்குகள் நடைபெறும். கோயில்கள் தமிழகத்தைப் போன்று அமைந்திருந்தது. கோயில்கள் சோலைகள் நடுவே இருந்தது. அவர்களின் கடவுள் அடையாளம் மரமாக இருந்தது. அங்கு பகல் (Bagal)flîS«, பலபீடமும், கொடிமரமும், நந்தியும் சூரியனைக் குறிக்கும் சிலுவை அல்லது கல்தூணினால் குறிக்கப்பட்டன. அவர்கள் மொழியில் திராவிட (Dravida) திராபட (Drapada) என்னும் பெயர்கள் உள்ளன. சால்டியர்கள் தமிழர்களே.1 தென் இந்தியத் திருக்கோயில்களின் திருந்திய அமைப்பும் அசிரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகக் காணப்படு கின்றன. அசீரியரின் கட்டிட சிற்பங்களில் தமிழர்கள் கட்டிட சிற்பங்களைப் போன்று தாமரை அரும்பு, மலரும் போன்ற வடிவங்கள் பல காணப்படுகின்றன. அசீரிய - இந்திய சிற்பக் கலைகளுக்கு இடைய அதிக ஒருமைப்பாடுகள் உள்ளன. இவ்விரு பழம்பெரு நாட்டு மக்களும் ஒரு பொதுக் கூட்டத்தினின்று பிரிந்தவர்கள் ஆதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்.2 நாகரிகம் முதன்முதலாக அரும்பிய இடம் தென்இந்தியா என்று நாம் எடுத்துக்காட்டுவது ஆதாரமற்ற கட்டுக் கதை (Myth) அன்று. அது அறிவியல் பாங்கானது; வரலாற்று ரீதியானது என்று டாக்டர் ஆர். எய்ச். ஹால் (Dr. R.H. Hall) கூறியுள்ளார். இவர் சுமேரியரின் தோற்றத்தைப் பற்றிக் கூறுவது உண்மையாய் இருந்தால் நாகரிகம் முதலில் இந்தியாவில் தோன்றிய பழந் தமிழரிடம் பரவியது என்பது உறுதியாகும். இதனை திரு. விவேகானந்தர் அடிகளும் ஏற்றுக் கொள்ளார்.1 உலகில் முதன்முதல் கட்டிடங்களையும் பட்டினங்களையும் உண்டாக்கியவர்கள் சுமேரியர்கள். இவர்கள் யூதர்களும் இல்லை ஆரியர்களுமல்ல. இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று இன்று சொல்வதற்கில்லை. இவர்கள் மொழி பலுச்சிதானிலும் காகேசியா மலை நாட்டிலும் உள்ள மொழிகளையும் பெயன் நாட்டிலுள்ள பாக் மொழியையும் ஒத்திருக்கிறது. இம்மொழிகள் திராவிட மொழியோடு நெருங்கிய சம்பந்தம் உடையன. சுமேரியர் கோபுரத்தோடு கூடிய கோயிலைக் கட்டினர். நிப்பூர் என்னும் இடத்தில் தமது தெய்வமாகிய எல் - லில் என்னும் ஞாயிறு தேவனுக்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தனர். ஊர், போசிப்பா பாபிலோன் கலா, துர்சர்க்கினா முதலிய இடங்களிலெல்லாம் பெரிய கோயில்கள் எழுப்பப்பெற்றிருந்தன. பாபிலோன், எகிப்து ஆகிய நாடுகளில் சுடுமண் செங்கற் களால் எழுப்பப்பட்ட வீடுகளும், அரண்மனைகளும் மண்டபங் களும் கல்லரைகளும் இப்பொழுது அகழ்ந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பல அணிகலன்களும், மட்பாண்டங்களும், இசைக்கருவிகளும், ஆயுதங்களும் தட்டுமுட்டுச் சாமான்களும் கிடைத்துள்ளன. கட்டிடங்கள் சிந்து வெளியில் முந்தி எழுந்த கட்டிடங்களோடு நெருங்கிய ஒருமைப்பாடுடையவையாயுள்ளன. பிறபொருள்களும் சிந்துவெளிப்பொருள்களைப் போன்றவை களாக காணப்படுகின்றன. வெள்ளைக் கோயிலும் அதன் சிறிய 223 X 17.5 மீட்டர் அளவுள்ள அகநாழிகையும் (Sanctuary) அதன் முன்னுள்ள பெரிய மண்டபங்களும் பாறைகளின் மீது எழுப்பப் பெற்ற சிகாரத் என்னும் கோயிலும் அனுய சிகாரத் (Anu ziggurat) ஈ என்னாவின் (Eanna-É‹) பெரிய கருவறைகளும் திராவிடக் கோயில்களின் அமைப்புடையவைகளே என்று பேராசிரியர் திரு. வி. கோர்டன் சைல்ட்டு தம் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.1 பாலதீனம் பாலதீனம் மைய நிலக் கடற்கரையிலுள்ள பழம்பெரும் நாடுகளில் ஒன்றாகும். பாலதீன நாடு அதன் பெயரை கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் தெற்குக் கடற்கரைப் பகுதியில் குடியேறி நிலையான வாழ்க்கையைப் பெற்ற பிலிதீனிய - ( philistines or pelesta) மக்களிடம் இருந்து பெற்ற பெயராகும். பிலிதிய மக்கள் குடியேறிய பகுதி பிலிதிய (Joel 3:4 etc) என்று வழங்கப்பட்டு அப்பால் கிரேக்கர்களால் பாலதீனம் என்ற பெயரைப் பெற்றது. முதலாவது வரலாற்று நூலை வரைந்த ஹெரட்டோட்ட பொனிசியா என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் பொனிசியர் வாழ்ந்து வந்தமையால் அவர் பொனிசியா என்று கூறியுள்ளார். எகிப்தினின்று, சிரியா சில பாகங்களும் பாலதீனம் ஆய்விட்டது. பாலதீனம் சிரியாவின் ஒரு பகுதியே யாகும். இன்று பாலதீனம் அனைவரும் அறிந்த பெயராக இருக் கிறது. அதன் பழைய மக்கள் கண்ட பெயர் கானான் என்பதாகும். பைபிளில் (ஆதி. 11:31) கானான் நாடு என்றே கூறப்பட்டுள்ளது. எகிப்திய நூற்களிலும் இது கானான் நாடு என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. இதைச் சிலர் சானான் நாடு என்றும் கூறுவர். இங்கு குடியேறிய திராவிட மக்கள் (பீனிசியர்) ஆவார். இங்கு ஈந்து என்னும் பனைகள் அதிகம். எனவே பனை பீனீசியநாடு என்று திரிபுற்றது. பீனிசியர் பரதர் எனப்பட்டனர். இவர்கள் அக்காலத்தில் சிறந்த கடலோடிகள் ஆவர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் இங்கு குடியேறிய மக்கள் ஆவர். இவர்கள் பயன் படுத்திய எழுத்துக்கள் பிராமி எழுத்தோடு நெருங்கிய தொடர் புடையது. இதன் ஒற்றுமையைக் கொண்டு சில அறிஞர்கள் பீனிசிய எழுத்தினின்று பிராமி எழுத்துத் தோன்றியது என்று கூறுகின்றனர். மேற்கு ஆசியாவில் குடியேறிய பீனிசியர் பிராமி எழுத்தைப் பயன்படுத்தினர். பீனிசியரிடமிருந்து கிரேக்கரும், கிரேக்கர்களிடமிருந்து உரோமரும் உரோமரிடமிருந்து ஏனைய ஐரோப்பியர்களும் எண்ணையும் எழுத்தையும் அறிந்தனர் - பாலதீனம் யோர்தான் ஆற்றிற்கும் மேற்குப் பகுதியில் உள்ள நாட்டைக் குறிக்கும். இது 150-கல் நீளமும் 40-கல் அகலமும் உள்ளது. இந்நாடு, 4000- சதுரக் கல்கள் (Miles) கொண்ட பாலைவனத்தை உள்ளடக்கி 6000-சதுரக் கல்கள் பரப்பளவுள்ள நாடாகும். எகிப்தையும், மெசபொத்தாமியாவையும் இணைக்கும் பாலமாகப் பாலதீனம் அமைந்துள்ளது. பாலதீனம் அன்னிய நாட்டாரின் படை எடுப்பிற்கு அடிக்கடி ஆளாகியது. எனவே அதன் வரலாற்றுப் பாங்கான வளர்ச்சியை நன்கு அறிய முடியவில்லை. இங்கு எகிப்தைப் போன்று வரிசையாகத் தொடர்ந்து ஆட்சிபுரிந்த அரசர்களின் மாட்சியை நாம் அறியமுடியவில்லை. மெசபொத்தாமியா போன்று வலிமை வாய்ந்த அரசர்கள் ஆட்சி நடத்தி சிறந்து விளங்கினர் என்று சொல்வதற்கில்லை. பைபிள் சில தகவல்களைத் தருகின்றது. இப்பொழுது நடைபெற்ற அகழ் ஆய்வும் பல தகவல்களைத் தந்துள்ளன. பீனிசியர் கடல் வணிகம் செய்வதில் திறமை வாய்ந்தவர்கள். கி.மு. 13-ஆம் நூற்றாண்டளவில் இவர்கள் பல்வேறு நாடுகளிலும் காணப்பட்டனர். இவர்களின் பழம்பெரும்பட்டினங்களாக தயர், சிடோன் என்பன தலைதூக்கி அழியாப் புகழைப் பெற்றன. காதேஜ் ஆப்பிரிக்காவில் இருந்த பீனிசியக் குடியேற்ற நாடு. இங்கு அன்னிபால் (Hannibal) என்னும் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். அவன் உலகை ஆள எண்ணினான் உரோமர்கள் போரில் அவனைத் தோல்வியுறச் செய்தனர். பாபிலோனியர் கடவுள் டார் (Ishtar) என்னும் பெண் தெய்வம் பின்னால் ஆத்தாள் (Athtar) ஆகத் தோன்றினாள். இக்கடவுள் பாலதீனத்தில் வழிபடப்பட்டு வந்தது. இந்த ஆத்தாள் என்னும் தேவி பாலதீனத்தில் அடார்ட்ட (Astarte) என்ற பெயருடன் பொனிசியர்களால் வழிபடப்பட்டு வந்தது. பைபிளில் இப்பெயர் எதர் என்று கூறப்படுகிறது. பீனிசியர்கள் பெரிய கோயில்கள் அமைத்து அவைகளில் சிவலிங்கங்கள் வைத்து வழிபட்டனர். கோயில்களில் எருது உருவம் இடம் பெற்றிருந்தது. இவர்களின் தலைநகராகிய தையர்பட்டினத்தில் அமைக்கப்பட்ட பகலவன் கோயிலில் மரகதத்தினாலும், பொன்னாலும் செய்யப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இருந்தன என்று வரலாற்று ஆசிரியர் ஹெரட்டோட்ட கூறியுள்ளார். இவர்கள் உழவுத் தொழிலில் அக்கறை காட்டவில்லை. இவர்கள் கடல் கடந்து சென்று வணிகம் புரிந்து பொருள் தேடி வந்தனர். பீனிசீயாவிற்கு வடக்கே சீரியர் வாழ்ந்து வந்தனர். சூரியா என்றபதம் சீரியர் என்று திரிபுற்றுள்ளது என்று வடல் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். சீரியாவில் பால்பெக் என்னும் இடத்தில் 60, 70 அடி உயரமுள்ள, தனிக் கல்தூண்களை நிறுத்திக் கட்டப்பட்ட பெரிய பகலவன் கோயில் அழிபாட்டை இன்றைய அகழ் ஆய்வுத்துறை அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்திய சமாதிகளைப் போல் இக்கோயிலும் வியப்பை அளித்துள்ளது. இந்த மக்கள் ஒரு கையில் சூலமும் மற்றொரு கையில் மழுவும் தாங்கி எருதின் மீது நிற்கும் தந்தைக் கடவுளையும் ஒரு கையில் கேடகத்தையும் பிறிதோர் கையில் தண்டையும் தாங்கி நிற்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட்டு வந்தனர். ஆதியில் சதுரம் அல்லது வட்டமான கல்வேலிகளின் நடுவே இலிங்கமும் அதன் முன்னால் பல பீடமும் வைத்து வழிபடப்பட்டது. இவ்வகைக் கல்வேலியின் ஒரு புறத்தே மூன்று கல்லினால் எடுக்கப்பட்ட கட்டிடங்கள் - அதாவது போன்றகட்டிடங்கள் பொனிசியர்களின் கட்டிடக் கலையில் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் பாபெல் (Babel) பால்பெக் கோயில்கள் எழுந்தது. மெக்காவில் எடுப்பிக்கப்பட்ட கஃபா கோயிலும் முற்கூறியவகைக் கோயிலுக்கு எடுத்துக் காட்டாகும்.1 அறிஞர் தர்டன் இந்தியாவின் பழைய கட்டிடங்களில் எகிப்திய கல்தேய, பொனிசீய அமைப்பு முறைகள் காணப்படு கின்றன என்று எடுத்துக்காட்டியுள்ளார். மேற்குப் பாலதீனம் பாலதீன நாட்டில் மேற்குக் கரையோரங்களில் யூதர்கள் குடியேறி அங்கு தங்கள் அரசை நிறுவி ஒரு நாகரிகத்தை வளர்த்தனர். எபிரேய நாகரிகம் கி.மு. 1500- முதல் தொடங்குகிறது. இது இசுரவேலர் எகிப்திலிருந்து பயணப்பட்டதற்கு சிறிது பிற்பட்ட காலம். யூதர்கள் நாடு நகரம் தோற்றுவித்து இல்லங்களும் மண்டபங் களும், மாளிகைகளும் கோயில்களும் அமைத்துள்ளனர். பாலதீனிய மக்களும் ஆதியில் விண்மீன்களை வழிபடு பவர்களாகவே இருந்தனர். அப்பால் ஞாயிறு திங்கள் வழிபாடு நிலைத்தபின் சிவ வழிபாடும் காளை வழிபாடும் தோன்றியது. இன்றைய அகழ் ஆய்வின் மூலம் மேற்குப் பாலதீன மக்களும் தேவன், தேவி, பாலகன் என்னும் தெய்வ வழிபாட்டுக்காரர்களாய் இருந்தது நன்கு தெரிகிறது. நாளடைவில் இவர்கள் ஆண் பெண் தெய்வ உருவ வழிபாட்டை அகற்றியதோடு காளை வழிபாட்டையும் அகற்றி அப்பால் நீண்டகாலம் பெட்டி வழிபாட்டுக் காரர்களாய் கடவுள் பெட்டியின் மீது வீற்றிருக்கும் கெருபீன், சேறாபின் என்னும் தெய்வத் தூதர்கள் நடுவில் காட்சி அளிப்பதாய் நம்பி, தெய்வ உருவத்தின் முன் ரொட்டியையும் அப்பத்தையும் வைத்து ஆடிப் பாடி வழிபட்டதும் உண்டு. தமிழர்களைப் போல் தங்கள் தெய்வம் சீனாமலை மீதும், ஒலிவ் மலை மீதும் சீயோன் மலை மீதும் இருப்பதாகக் கூறி தீர்க்கத்தரிசிகள் என்போர் ஒளி வடிவான இறைவனைக் கண்டு பேசி வந்ததாகக் கூறிய கதைகளும் உண்டு. இவர்கள் தமிழர்களைப் போல் ஆங்காங்கு திருக்கோயில் எழுப்பினர் என்பது மறுக்க முடியாத உண்மையேயாயினும் இவர்கள் எழுப்பிய மொத்தக் கோயில்கள் தமிழர்கள் எழுப்பிய கோயில்களில் 1000-க்கு ஒன்று வீதம் கூட இருந்தது என்று சான்று காட்ட முடியாது. ஞாயிறு வழிபாடு தமிழர்கள் கண்ட அம்மை அப்பர் வழிபாடு மேற்கு நாடுகள் அனைத்திலும் ஞாயிறு திங்கள் (சூரியன் சந்திரன்) வழிபாடாக எழுந்துள்ளது. இவ்வுலகில் இருள் அகற்றி ஒளி அளிக்கும் ஞாயிறு முழுமுதற் கடவுள் என்று மக்கள் உணரத் தலைப்பட்டனர். அவர்கள் செவ்வண்ணன், தீவண்ணன், பவள மேனியன், சோதியானவன் அல்லது சிவந்த ஒளியுடையவன் என்னும் பொருளில் ஞாயிற்றுக்குச் சிவன் என்னும் பெயர் அளித்து வழிபடுவாராயினர். சிவன் என்னும் தெய்வப் பெயர் அல் இல், எல், பெல் அல்லா, எலோ, எலோகிம், பகல், (Bael) பால் (Ba - al B’al) என்ற பெயர்களால் புகழ்ந்து ஓதி வழிபடப்பட்டது. உலக மக்கள் கடவுளை அஞ்ஞான இருளை அகற்றி ஞான ஒளியை அளிப்பவன் என்னும் பொருள் தரும் முறையில் முழு முதல் கடவுளை வழிபட்டனர். தமிழர்கள் மகேந்திர மலையில் சிவ உருவை ஏற்றி வழிபட்டனர். அப்பால் திராவிடர்கள் இமயமலை மீது சிவனை ஏற்றிப் போற்றிவந்தனர். எபிரேயர்களும், பாபிலோனியர்களும், சால்டியர்களும், அசீரியர்களும் அக்கேடியர்களும், சீரியர்களும், பொனிசியர்களும் ஞாயிற்றுக் கடவுளை மலை முகட்டில் வைத்து வழிபட்டனர். எபிரேயர்கள் சீனா மலையில் எல் என்னும் ஒளிக் கடவுளைக் கண்டு வழிபட்டனர். தமிழர்களைப் போல் உலகில் பெரும்பாலான மக்கள் தெய்வங்களை மலை முகட்டில் வைத்து வழிபட்டனர். தெய்வத் திருமகனாகிய ஏசு கிறிது ................. மலையில் உண்ணா நோன்பு இருந்து இறைவனை வழிபட்டார். இறுதித் தீர்க்கத் தரிசியாக ஏற்றமுடன் போற்றப்படும் முகம்மத் நபி அவர்கள் ஹிராமலையின் பொதும்பிலிருந்து வழிபட்டு ஜிப்ரயல் என்னும் தேவ தூதன் மூலம் தெய்வ வெளிப்பாட்டைப் பெற்றார். திருமறையின் முதல் வசனத்தைப் பெற்று உலகிற்கு உணர்த்தினார். மலைகள் இல்லாத நாடுகளில் கடவுள் செய்குன்றின் மீது கட்டப் பெற்ற கோயில்களில் வழிபடப்பட்டு வந்தது. இவ்வகைச் செய்குன்றுகளின் மீதுள்ள பழங்காலப் புனிதக் கோயில்களில் ஒன்று பெபலின் கோபுரம் இந்த வகையான செய்குன்றின் மீது எடுப்பிக்கப்பட்ட திருக்கோயில்கள் மேற்கு ஆசியா ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளன. உலக வியக்கும் எகிப்திய கூர்நுனிக் கோபுரங்கள் வகையினவேயாகும். ஞாயிறு நடு உச்சிக்கு வரும் நாளில் அது எழும் திசையைப் பார்க்கும் படி கட்டப் பெற்றுள்ளன.1 இன்றையத் தென் இந்தியக் கோயில்களும், கிறித்தவர்களின் சர்ச்சும் (கோயில்களும்) கிழக்கு நோக்கி கட்டப்படுவது சிறப்பானது என்று எண்ணப்படுகிறது. பெதூ அல்லது பேபெலின் கோபுரம் பண்டையப் பாபிலோன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சால்டியாவில் (கல்தேயாவில்) உள்ள பகல் கடவுளின் (Bel) கடவுளின் புனிதக் கோயிலாகும். பகல் என்பது (Ba-el, Ba-al or Pal) பிற்காலத்தில் பலூ என்று கூறப்பெற்றுள்ளது. மெசபொத்தாமியாவின் தாழ்ந்த பகுதியில் இன்றையப் பக்தாத்திலிருந்து தெற்கே 50-கல் தொலைவில் புகழ் பெற்ற பாப் - பிலு (Babilu) நகர் இருந்தது. இதன் பொருள், தெய்வ வாயில் (Gate of God) என்பதாகும். எபிரேய மொழியில் இப்பெயர் பாபெல் எனப் பெற்றது. கிரேக்க, லத்தீன் மொழியில் பாபிலோன் என்று கூறப்படும். பாபிலோன் என்னும் பதத்தின் அடிப்படையில் பேபிலின் எழுந்தது. ஊர் நகரில் வாழ்ந்த மூன்றாவது அரச பரம்பரை பேரும் பெருமையும் பெற்றெழுந்தது. முதலாவது அரசர் ஊர் நம்மு, அக்கத்திய சுகமேரிய அரசர் என்ற புதிய பெயரைத் தாங்கி அரச கட்டிலில் அமர்ந்தான். அவன் ஆற்றிய அரிய திருப்பணிகளில் உயரியது ஒப்பற்றது ஊர் நகரில் எடுப்பித்த சிக்குராத் எனும் கோயிலாகும். இந்த சிக்குராத் ஹமுராய் காலத்தில் பாபிலோனில் எட்ட மென்னாங்கி (Etemenanki) மண்ணையும் விண்ணையுமுடைய வீட்டின் மேடை என்ற சிறப்புப் பெயரை (The House of the nerrace Platform of Heaven and earth) த் தாங்கி நின்றது. பாபெல் கோபுரம் எபிரேயர் பாரம்பரியத்துவக் கலைத் திறனுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மிளிர்ந்தது. இந்த சிக்குராத் இன்றும் பழம் பெரும் பாபிலோனியர் கட்டிடக் கலையின் தன்மையை நமக்கு நன்கு உணர்த்துகிறது. 1918-ல் டாக்டர். எய்ச். ஆர். ஹால் அவர்கள் இதனை அகழ்ந்து ஒரு பகுதியைத் தோண்டி உலகிற்கு இதன் பெருமையை உணர்த்தினார். 1922-1923-ஆம் ஆண்டுகளில் சி.ஐ உல்லி என்னும் பேரறிஞரால் இப்பகுதி முழுவதும் அகழ்ந்து ஆராயப்பெற்று இதன் சிறப்பு உலகிற்கு உணர்த்தப் பெற்றுள்ளது. இந்த பேபெலி கோபுரம் கி.மு. 2070-க்கும் 1960 -க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்தது. பேபெல் கோபுரம் செங்கல்லால் கட்டப்பட்டது. 200-அடி நீளமும் 150 அடி அகலமும் 70-அடி உயரமும் உள்ளது. இது நன்னர் என்ற திங்கள் கடவுளின் திருக்கோயில் என்று அதன் மிக உயர்ந்த மேலே உள்ள தளத்தின் மூலம் அறியக் கிடக்கின்றது. கோயிலின் முதல் பட்டத்தில் (Panel) நிங்கள் என்ற திங்கள் தேவி முன்னரும் வலது புறம் நன்னர் தேவன் முன்னரும் ஊர் நம்மு அரசன் நின்று அவர்களுக்கு ஒரு இல்லம் அமைக்கும் ஆணையைப் பெறுகிறான். அடுத்தபடத்தில் அரசன் ஆயுதங்களைத் தாங்கி நிற்கின்றான் மூன்றாவது படத்தில் ஏணியைத் தாங்கி கோபுரத்தின் நுனிப் பகுதியைக் கண்டி முடிப்பது போல் சித்தரிக்கப் பெற்றுள்ளது. பெலு, வெய்யிலில் காய்ந்த களிமண் கற்களாலும் சுடுமண் செங்கற்களாலும் கட்டப் பெற்றது. இதன் படிக்கட்டுகள் அடியில் அகன்றும் மேலே செல்லச் செல்ல ஒடுங்கியும் இருக்கின்றன. இதன் ஒவ்வொரு படியும் உயரமாக உள்ளது. இதன் உச்சியிலிருந்த மேடை ஆதிகால அருக்னுக்கு (சூரியனுக்கு) உரியது. டிராபோ என்னும் ஆசிரியர் இதனை பெலூ சமாதி என்று குறிப்பிட்டார். இதன் உச்சிக்கு ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. உயரே ஏறிச் செல்பவர்கள் இடை இடையே தங்கிச் செல்வதற்கு ஏற்ற இடங்கள் இருந்தன. இங்கும் ஏறிச் செல்லும் படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விண்மீனுக்கு (கிரகத்திற்கு) உடையது. அடியில் அமைந்துள்ளபடி சனி எனும் கோளுக்கு உடையது. இது கருப்பு வண்ணம் வாய்ந்த திண்ணம் ஆர்ந்த படிக்கல்லாகும். இரண்டாவது படி வியாழனுக்குடையது இது தோடம்ப வண்ணம் பூசப் பட்டிருந்தது. மூன்றாவது படி செவ்வாய்க்குடையது. இது சிவப்பு வண்ணம் தீட்டப் பட்டிருந்தது. நான்காவது படி வெள்ளிக் குடையது; இதன் வண்ணம் மஞ்சள். ஐந்தாவது புதனுக்குடையது; இதன் நிறம் நீலம். ஆறாவது திங்களுக்கும் (சந்திரனுக்கும்) ஏழாவது ஞாயிற்றுக்கும் உடையது. டையோ டோர (Diodorus) என்பார் இதன் உச்சியில் உள்ள மேடையில் பெல்டி, ரீயா பெல் என்னும் தெய்வங்கள் உறையும் திருக்கோயில்கள் இருந்தன என்று கூறியுள்ளார். பகல் கடவுளுக்கு முன்னால் இரண்டு பொன் அரச கட்டில்கள் (சிங்காசனங்கள்) இருந்தன. பெல்டி வெள்ளியால் செய்யப்பட்ட பெரிய பாம்புகள். இவை முப்பது டேலண்டு (talent)1 நிறையுள்ள வெள்ளியால் செய்யப்பட்டுள்ளன. இம்மூன்று உருவங்களின் முன் 40 X 15 அடி பொன் மேசையும், மேசையின் மீது 3 நீர் அருந்தும் கிண்ணங்களும் இருந்தன. ஒரு ஆண்டில் 1000-டாலண்ட் நிறையுள்ள சாம்பிராணி இங்கு எரிக்கப்பட்டது என வரலாற்றாசிரியர் ஹெரட்டோட்ட கூறியுள்ளார். அவர் காலத்தில் இதன் அடியில் பொன்னாற் செய்யப் பெற்ற பகல் உருவமும், அதன் முன் ஒரு பொன் மேசையும் இருந்தன. உச்சியில் உள்ள மேடையில் ஒரு மேசையும் கவினுறும் கட்டிலும் இருந்தன. மக்களை பெறாத பெண்கள் பிள்ளை வரம் வேண்டி இங்கு சென்றனர்.2 மினோவர் கட்டிடக் கலை கிரீட், மத்திய தரைக்கடலில் கிரேக்க நாட்டிற்குத் தெற்கே யுள்ள ஒருதீவு. ஆனால் கிரீட் மக்களுக்கும் கிரேக்க மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. கிரீட் மக்கள் மினோவர் என்று அழைக்கப்படுவர். இவர்கள் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள மீனவர்கள் என்ற நெய்தல் நிலமக்களின் குருதித் தொடர்புடைய மக்கள் என்று எண்ணப்படுகிறது. கிரீட் தீவு சுமார் 155 கல் நீளமும், 6.35 கல் அகலமும் உள்ள சிறு தீவு. இதன் மக்கள் தொகை 163,459 (1951). இது மலைப் பாங்கானது. இங்குள்ள ஐடா மலை 8195-அடி உயரம் உள்ளது இங்கு சில சமவெளிகள் உண்டு. குறுகிய பல நீரோடைகளும் உள்ளன. சில பீட பூமிகள் மேய்ச்சல் தரையாகப் பயன்படுகின்றன. இங்கு நல்ல தட்ப வெப்ப நிலை உண்டு. கிரீட் தீவின் தலை நகரம் கனியா (Canea) பிற முக்கிய நகரம் காண்டியா, ரேதிம்னான் எனப்படும். வரலாறு கிரீட் தீவு ஈஜிய நாகரிகத்தின் பிறப்பிடமாகும். இங்கு கி.மு.2500 - ஆம் ஆண்டளவில் மிக உயர்ந்த மீனோவன் நாகரிகம் நிலவி இருந்தது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட நகரங்கள் நல்ல அமைப்புடையதாய் நனி சிறந்த நாகரிகம் பெற்று விளங்கின. இங்கு நாச (Gnossus) என்ற நகரில் மினோ என்ற அரசர் அரச பீடத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தி வந்தார். இவர் கிரீட் தீவின் கடல் ஆதிக்கத்திற்கு கால் கோலிய காவலர் என்று கூறப்படுகிறது. நாகரிகம் கிரீட் தீவில் உள்ள மன்னன் மாளிகையில் கலைச் சிறப்பு மிக்க உலோக வேலைப்பாடுகள் செய்யப் பொருள்கள் மிகுதியாக இருந்தன. அரசர் மினோன் (மைசீனக்) கல்லறையில் பொன், வெள்ளி, வெண்கலமாகிய உலோகப் பொருள்களில் செய்யப் பெற்ற அணிகளும் பாத்திரங்களும், கலைப் பொருள்களும் அகழ் ஆய்வில் கிடைத்துள்ளன. பண்டையக் கிரீட் மக்கள், சிந்து வெளி மக்களைப் போல், எகிப்து, சுமேரிய நாட்டு மக்களைப் போல் நல்ல நகரங்களை நன்கமைத்து மாட மாளிகை கூட கோபுரங்களை நிறுவி நல்ல செல்வச் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். கிரீட் தீவில் உள்ள மினோவன் அரண்மனை இலங்கைத் தீவில் உள்ள இராவணன் அரண்மனையைப் போல் எழில் பெற்றிருந்தது என்று கூறப்படு கிறது. இங்குள்ள கட்டிடங்கள் அகன்ற சுவர்களையுடையன. கழிநீர் வடிகால், சாக்கடை முதலியவை நல்ல சுகாதார முறையில் அமைக்கப்பட்டிருந்தன. சுவர்களை அழகிய சுவர் ஓவியங்கள் அணி செய்துள்ளன. அவைகளில் எருதுகளும், எருதுச் சண்டை களும் சித்தரிக்கப் பெற்றிருந்தன. அங்கு அகழ்ந்து கண்ட கல் மண் பாண்டங்களும் அணிகலன்களும், கருவிகளும் ஒப்பற்றவை; எழில் மிக்கவை; உயரிய வேலைப்பாடுகள் நிறைந்தவை. இங்கு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் சாசனங்கள் பல கிடைத்துள்ளன. இங்கு வாழ்ந்த மக்கள் தாய்த் தெய்வ வழிபாடு செய்து வந்தனர். இத் தெய்வம் இரு முனைக் கோடரி, இரு தலைப் பாம்பு, தூண் மீது அமர்ந்திருக்கும் புறா போன்ற சிலைகளை எழுப்பி கோயில்கள் அமைத்து வழிபட்டு வந்தனர். கிரீட் மக்கள் நல்ல நகரங்களை அமைப்பதிலும் உறுதியான வீடுகளையும் அழகிய அரண்மனைகளைக் கட்டுவதிலும் ஓவியம், சிற்பம், முதலிய கலைகளை வளர்ப்பதிலும் வல்லவர்கள். எழுதும் முறைகளை நன்கு உணர்ந்திருந்தனர். நீரைக் கடக்கவும் கப்பல் களையும், நிலத்தைக் கடக்க வண்டிகளையும், உருவாக்கியுள்ளனர். இவர்களில் ஏராளமான கடலோடிகள் இருந்தனர். அண்டைத் தீவுகளுடனும், எகிப்து. பாபிலோன் இந்தியா போன்ற நாடு களுடனும் வணிகம் வளர்த்து பெரும் பொருள் ஈட்டி நலமுற வாழ்ந்தனர். அயல் நாடுகளைப் பிடித்து அடிமைப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். உலகிலே ஒப்பற்ற நாகரிகங்களாகிய சிந்து வெளி நாகரிகத்தையும், எகிப்திய, சுமேரிய நாகரிகங்களையும் அழித்த கொள்ளைக்கார கொடிய மறவர் இனம் அலை அலையாய் கிரீட் தீவின் மீது படையெடுத்துச் சென்று அது என்றும் தலை தூக்கா வண்ணம் அடித்து நொறுக்கி வீழ்த்தினர். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் பயிரிடுவோர்களாய் இருந்தனர். அவர்களின் வாழ்க்கை ஒழுங்கு ஆகிய நாகரிகப் பாங்கு அவர்கள் திறமுடன் அமைத்த நகரங்களையும், கவினுறக் கட்டிய கட்டிடங்களையும் கொண்டு அறியக் கிடக்கின்றது. கட்டிடங்கள் சூளையில் வெந்த களிமண் கற்களால் (செங்கற்களால்) கட்டப் பட்டுள்ளன. மெசபொத்தாமியாவிலும் (பாபிலோனிலும்) கிரீட் தீவிலும் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு சாளரங்களும், நிலைகளும் இருந்தன. தரைக்குச் சாந்து பூசப் பெற்றிருந்தது. கழிநீர் செல்லச் சாக்கடைகள் இருந்தன. வீடுகளுடன் குளிக்கும் அறைகள் இருந்தன. பலவகையான ஏனங்கள் செய்யப்பட்டன. செம்பு, தகரம், ஈயம் முதலிய தாதுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. பொன் வெள்ளி தந்தம் என்பு, பன்னிறக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.1 கிரேட்டா (Crete) மக்கள், தமிழ் நாட்டினின்று கடல் கடந்து சென்று கிரீக் நாட்டின் அருகேயுள்ள சின்னஞ்சிறு தீவில் குடியேறி பென்னம் பெரிய நாகரிகத்தை உருவாக்கியுள்ள மக்களாக எண்ணப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக எண்ணப்பட்டனர் என்று ஹெரடோட்ட என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் பழக்க வழக்கங்கள் சேர நாட்டில் வாழ்ந்த தமிழர் களைப் போன்றதாய் இருந்தன. கிரேட்டா தீவில் ஆண்களினும் பெண்களுக்கு அதிக அதிகாரம் இருந்தது. பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டனர் இவர்களின் கடவுள் சிய - சிய சிவன் என்பதின் திரிபு. கிரேட்டாவில் சிவன் என்ற பழைய இடம் ஒன்று உண்டு. இவர்கள் மரங்களின் அடியில் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டு வந்தனர். சங்கு கொம்பு வாத்தியங்களைப் பயன்படுத்தி வந்தனர். இங்கு பண்டையத் தமிழர்களிடம் நிலவிய ஏறு தழுவுதல் என்னும் வழக்கம் உண்டு. கிரேத்தாவில் இருந்த மீனோன் என்ற அரசன் அரண்மனை அழகியது. உயர்ந்த உப்பரிக்கைகளை யுடையது. பல அரிய ஓவியங்களையுடையது. சிந்து வெளி திராவிட நாகரிகத்தை அழித்தவர்கள் ஆரியர்கள். எகிப்திய திராவிட நாகரிகமும், கிரேட்டா திராவிட நாகரிகமும் கிரேக்க ஆரியர்களால் அழிக்கப்பட்டன. உலகில் எங்கும் கோயில்கள் இருக்கலாம்; தெய்வ உருவங் களும் இருக்கலாம். ஆனால் அவைகளை உன்னிப்பாய் உற்று நோக்கினால் கோயிலாயினும் சரி, திரு உருவங்களிலாயினும் சரி உறுதியாக தமிழர் கலைப்பாணி நன்கு ஒளிர்வதைக் காணலாம். காரணம், தமிழ் இனம் மிகத் தொன்மையான இனம். 10-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதற் சங்கமும், சங்கப் புலவர்களையும் சங்க மருவிய ஏடுகளையும் கண்ட இனம். இவர்கள் கட்டிடக் கலையில், சிற்ப நுணுக்கத்தில் பண்பாட்டில், ஓவியத் திறனில் பட்டறிவில் வேறு எந்த நாட்டினரும் எந்த இனத்தவரும் பெற்றிருக்க முடியாது. உலகிலே இன்று காணப்படும் உயரிய நகர் அமைப்பில், நாடமைப்பில் வீடமைப்பில் கோட்டை கொத்தள அமைப்பில் சமய அமைப்பில், தெய்வத் திரு உருவ அமைப்பில் ஐயாயிரம் ஆண்டளவில் தமிழர்களைப் போல் சிறந்தவர்களாய் உயர்ந்தவர் களாய் யார் இருந்தனர்? ஐயாயிரம் ஆண்டு காலமாய் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் பெற்ற பட்டறிவின் பயனாய் நாம் எடுப்பித்து திருக்கோயிலின் சிறப்பை திருக்கோயிலின் மதிலினின்று அதன் உயர்ந்த விமானத்தின் கலயத்தின் நுனிவரை அக்கு வேறாக அலகு வேறாக அலசி அலசி எடுத்துக் காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடே இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. இந்நூல், தமிழர்களுக்கு உலக மக்கள் அனைவரும் உறவினர் யாதும் ஊரே, யாவரும் கேளீர் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கூறும் தமிழன் கண்ட அறவழி நிலைக்குமாறு செய்வதே இந்நூலின் முழு நோக்கமாகும். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமந்திரத்தைப் பறை சாற்றுவோமாக. இந்தியக் கட்டிடக் கலை இந்தியக் கட்டிடக் கலை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. அது தனக்கே உரித்தான தனித் தன்மையும், தனி மரபும், தனிப் பண்பும் வாய்ந்தது. அது பிற நாட்டுக் கலைத் தொடர்பால் உருப் பெற்று வளர்ந்ததல்ல. இந்திய கட்டிடக் கலை, கலப்புக் கலை அல்ல. புனிதமான புகழ் பெற்ற உயர் தனிக்கலை. திராவிட இந்தியா மிகத் தொன்மையான காலத்திலிருந்தே கட்டிடக் கலையத் தோற்றுவித்து அதை நன்கு பேணி வளர்த்து வளமுறச் செய்து வந்துள்ளது. இந்தியாவில் ஆதித்த நல்லூரினின்று அரப்பா வரை காணப்படும் அழிபாடுகள் அனைத்தும் பண்டையத் திராவிட இந்தியாவின் பண்பிற்கும் நாகரிகத்திற்கும் உயர்விற்கும் எடுத்துக் காட்டாகக் காணப்படுகின்றன. பழந்திராவிடர் காலம் சிந்து வெளியில் கி.மு. 3000 -ம் ஆண்டுகளுக்கு முன் தலை தூக்கி நின்ற மகத்தான கட்டிடக் கலை உலகம் இதுவரை உலகில் உள்ள ஒப்பற்றக் கட்டிடக் கலையாக எண்ணப்படுகிறது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து வெளியில் அகழ்ந்து கண்ட அரப்பா மொகஞ்சாதாரோ, ரூபார் நகரங்களைப் போன்ற மகோன்னதமான நகரங்கள் எவரும் எங்கும் கண்டதில்லை. அரப்பா மொகஞ்சாதாரோ, ரூபார் நகரங்களைப் போன்ற நனி சிறந்த நகர் அமைப்பை உலகில் எந்த வரலாற்றிலும் இதுவரை எவரும் கண்டதில்லை. சிந்து வெளி திராவிடப் பெருங்குடிமக்கள் ஞாலம் போற்றும் நகர் அமைப்பு முறையை நன்கறிந்து சுடப்படாத பச்சைமண் செங்கல்லையும், சுடுமண் செங்கல்லையும் பயன்படுத்தி அணியணியாகப் பல வீடுகளையும், மாளிகைகளையும், அரண் களையும், நெற்களஞ்சியங்களையும் கட்டி இனிது வாழ்ந்து வந்தனர். அவர்கள் அமைத்திருந்த மாளிகைகள் பல நிலா முற்றங் களையுடையனவாய்த் திகழ்ந்தன. பல ஒன்று இரண்டு மாடி களையுடையதாகத் திகழ்ந்தன. அவர்கள் அமைத்த மாளிகைகள் சுகாதார வசதியுள்ளதாய் நாற்புறமும் நல்ல பல கணிகள் உள்ளதாய்த் திகழ்ந்தன. சிறிய அறைகளிலும் கூட காற்றும், வெய்யிலும் தாராள மாகப் புகுந்து வந்தன. மொகஞ்சதாரோவில் இரண்டிற்கு மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட செல்வர்களின் மாளிகைகள் பல காணப்படுகின்றன. இவை பெரிய கூடங்கள் அகன்று நீண்ட உயரிய தாழ்வாரங்கள் அகன்ற பெரிய முற்றங்கள் இடைகழிகள், சிறிய பெரிய வாயில்கள் எண்ணற்ற அறைகள் பலவும் உள்வாய்க் காணப்படுகின்றன. மேன் மாடங்களில் செங்கல் தளவரிசைகள் சீர் பெற அமைந்துள்ளன. சில மேன் மாடங்களில் படுக்கை அறைகள் பாங்குற அமைந்துள்ளன. சில மாடங்கள் உள்ள மாளிகைகளில் பள்ளி அறைகள் குளிக்கும் அறைகள், மலங் கழிக்கும் ஒதுக்கிடம் முதலியன நன்கு அமைந்துள்ளன. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் ஒழுங்குடன் காணப்படுகின்றன. சில மாளிகைகளுக்கு மரத்தினாலான ஏணிகள் வைத்து செல்லப்படும் மாடிகைகள் அமைக்கப் பெற்றுள்ளன. பல மாடிகளுக்குப் படிக்கட்டுகள் தெருப்புறமே வைத்துக் கட்டப் பட்டுள்ளன. சில வீடுகளில் படிக்கட்டுகள் உட்புறம் வைத்துக் கட்டப் பெற்றுள்ளன. ஒரு மாளிகையில் முன்புறம் 85 அடி நீளம் விட்டும் பின்புறம் 87-அடி நீளம் இடம் விட்டும் கட்டப்பட்டுள்ளது. முன்புறமும் பின்புறமும் இடம் விட்டு வீடு கட்டும் முறை பன்னெடும் காலமாக இந்தியாவில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு மாளிகை 242 - அடி நீளமும் 112 அடி அகலமும் உள்ளது. அதற்கு அண்மையில் 177 அடி நீளமும் 118 அடி அகலமும் உள்ள பெரிய மாளிகை ஒன்றும் உள்ளது. இக்கட்டிடத்துள் பல அறைகளும் கிணறுகளும் உள்ளன. இங்கு 42 சதுரம் அடி உள்ள தூண்கள் பல காணப்படுகின்றன. தூண்கள் கட்டிட வாயிலின் வளைவுகளைத் தாங்குபவைகளாகும். சிறிய இல்லங்கள் 30 அடி நீளமும் 27 அடி அகலமும் நான்கு ஐந்து அறைகளும் உள்ளதாய் அமைந்துள்ளன. இவை செங்கற் களால் செம்மையுறக் கட்டப்பட்டு, தரை சாணத்தால் மெழுகப் பட்டுள்ளது. சில வீடுகளுக்கு மேலே தளம் இடப் பெற்றுள்ளன. சுற்றிலும் கைபிடிச் சுவர்கள் உள்ளன. மேற்றளத்தில் பெய்யும் மழை நீர் உடனுக்குடன் கீழே வருவதற்கேற்ற குழாய்கள் உள்ளன. இக் குழாய்கள் மண்ணாலும் மரத்தாலும் ஆனவை. இங்கு சில அங்காடி களும் உள்ளன. சில திருக்கோயில்கள் போன்ற கட்டிடங்கள் உள்ளன. மொகஞ்சதாரோவில் வீடுகளின் பின்புறம் படுக்கை அறைகள், சமையல் அறைகள் மகளிர்கள் தங்குவதற்கு ஏற்ற தனியறைகளும் உள்ளன. ஒவ்வொரு இல்லத்திற்கும் வாயிற் படிகள் உண்டு. அவற்றை அடுத்து திறந்த சிற்றரை ஒன்று வாயிற் காவலனுக்காகக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நீராடும் அறை உள்ளது. சில மாளிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குளிப்பறைகளும் உள்ளன. இவை தெருப்பக்கம் அமைந்துள்ளன. இவற்றில் உள்ள கழிவு நீர் வெளியே செல்ல வடிகால்கள் நன்கு அமைக்கப் பெற்றுள்ளன. வடிகால்கள் தெருக்கால்வாயுடன் அமைக்கப் பெற்றுள்ளன. இத்தகைய நீராடும் அறை எஷ்னன் னாவில் இருந்த அக்கேடியர் அரண்மனையில் உள்ளது. அக்கேடியர் குளிப்பறை அமைக்கும் முறையை சிந்து வெளி மக்களிடமிருந்து கற்றிருக்க வேண்டும்.1 இங்கு பல அங்காடிகளும், பெரிய மண்டபங்களும் உள்ளன. 85 அடி சதுர அடிப்பரப்புள்ள ஒரு மண்டபமும் உள்ளது. இதன் மேற் கூரையை இருபது செங்கற் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவை நான்கு நான்காய் நிற்கும் சதுரத் தூண்களாகக் காணப்படு கின்றன. பொதுவாக எல்லாக் கட்டிடங்களும் பெரிய சுவர்களை யுடையனவாகவே காணப்படுகின்றன. சுவர்கள் 3 ½ அடி முதல் 6 ½ வரை அகன்ற சுவர்களாக உள்ளன. பெரிய கட்டிடங்களின் புறச் சுவர் 5 அடி 9- அங்குலம் கனம் உடையது. ஏனைய சுவர்கள் 3 அடி 6 அங்குலம் 4 அடி 10 அங்குலம் கனம் உடையதாய் உள்ளன. பெரிய கட்டிடச் சுவர் 18 அடி உயரம் உள்ளது. சில இடங்களில் 25 அடி உயரமும் உள்ளன. சுவர்கள் செங்கல் முறைப்படை குறுக்கும் நெடுக்குமாக வைத்து இடை இடையே மண் சாந்து வைத்துக் கட்டப்பட்டுள்ளன. மேலே மேற்பூச்சாக மண் சாந்தே பூசப் பெற்றுள்ளது அடிக்கடி பழுதுபார்க்கப் பெற்று வந்துள்ளது நன்கு தெரிகிறது. குளம் மொகஞ்சதாரோவில் அகழ்ந்து கண்ட கட்டிடங்களில் அரண்மனை என்று எண்ணத்தக்க கட்டிடம் ஒன்றும் அழகிய செய் குளமும் வியத்தகு பெற்றியை வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன. செய்குளம் மேலை நாட்டு பொறிவல்லாரும் கண்டு திகைக்குமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதில் நீர் நிற்கும் இடம் 40 அடி நீளமும் 23 அடி அகலமும் 8 அடி ஆழமும் உள்ளது. இக்குளத்திற்கு அடி வரை ஒழுங்கான படிக்கட்டுகள் உள்ளன. குளத்தைச் சுற்றி நான்புறமும் நடை வழி விட்டு 4 ½ அடி அகலமுள்ள சுவர் எழுப்பப் பெற்றுள்ளது. இச்சுவருக்கு அப்பால் குளத்திற்கு நாற்புறமும் 7அடி அகலமுள்ள பெருஞ்சுவர் உள்ளது. இதன் மீது நடை வழி அமைக்கப் பெற்றுள்ளது. அடிப்பகுதி நன்றாக இழைத்து வழவழப்பாக்கப்பட்ட செங்கற் பதித்து ஒரு வகைத்தார் பூசப் பெற்றுள்ளது. முதலில் சூளையிடப்பட்ட வழவழப்பான செங்கற் களை ஒருவகை வெள்ளைக் களிமண் கொண்டுவந்து ஒட்ட வைத்துள்ளனர். இவ்வாறு நாலு பக்கமும் நாலு அடிக் கனத்தில் சுவர் எழுப்பப் பெற்றுள்ளது. பின் அச்சுவர் மீது ஒரு அங்குலக் கனத்தில் நிலக் கீல் பூசப் பெற்றுள்ளது. இங்கு பயன்படுத்தப்பட்ட கீல் இந்தியாவில் இல்லை. சுமேரியாவில் இருந்து கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. குளத்திற்கு அண்மையில் எட்டு அறைகள், குளித்து விட்டு ஆடைகள் மாற்றிக் கொள்வதற்காக அமைக்கப் பெற்றுள்ளது. இச் செய் குளத்தில் அழுக்கு நீரை அடிக்கடி மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. இக்குளம் சிவ நெறியைச் சார்ந்த சான்றோர்கள், நாயன்மார்கள், சிவாச்சாரியர்கள் குளிப்பதற்கென்று கட்டப்பட்ட குளமாகக் கருதப்படுகிறது. குளத்திற்கு அருகில் கோயில் போன்ற இடமும் உள்ளது. அரண்கள் அரப்பா மொகஞ்சதாரோ, ரூபார் போன்ற இடங்களில் செய்த அகழ் ஆய்வில் அரண்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. திராவிடர்கள் தொன்று தொட்டு தங்கள் நகரத்தைச் சுற்றி அரண்கள் அமைக்கும் வழக்கத்திற்கு மாறாக சிந்து வெளியில் அரண் காணப்படாதது ஒரு குறையாக எண்ணப்பட்டது. இது திராவிடர்கள் எழுப்பிய நகரங்கள் என்பதில் ஒரு ஐயப்பாடும் எழுந்தது. அப்பால் டாக்டர் ஆர்.இ. எம். உயிலர் மேற்கொண்டு செய்த அகழ் ஆய்வில் 1944 -இல் அரப்பாவில் 30 -அடி அகலத்தில் கட்டப்பட்ட பேரரண் ஒன்று அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவை செங்கற்களைக் கொண்டு மண் சாந்தினால் கட்டப் பட்டுள்ளது. சிந்து வெளியில் மூன்று பெரிய கோட்டைகள் இருந்தன. ஒன்று செங்கல்லால் கட்டப்பட்டது. மற்றொன்று சுடப்படாத மண் செங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டது. மற்றொன்று அதிகச் சூட்டால் மண் வெந்து உருகிக் கருத்து இரும்பு போல் காணப்படும் உருக்கான் செங்கற்களால் கட்டப்பட்டது. இதனை ஆரியர்கள் செம்புக் கோட்டை வெள்ளிக் கோட்டை இரும்புக் கோட்டை என்றும் அதை தங்கள் தலைவனாகிய இந்திரன் அழித்தான் என்று அவர்கள் வேதமாகிய இருக்குவில் கூறப்பட்டிருப்பதையும் விளக்கி டாக்டர் உயிலர் உலகிற்கு உயர்த்தியுள்ளார் (பிற்காலத்தில் சிவபெருமான் அசுரர்களின் முப்புரம் எரித்த புராணக் கதையை இது என ஆரியர் இணைத் துள்ளனர்) 1 ஆரியரின் வேதகாலம் சிந்து வெளி நாகரிகத்தை அடுத்து வட இந்தியாவில் அரும்பியது ஆரியாவர்த்தம். இங்கு எழுந்தது வேத கால நாகரிகம். இது கி.மு.1500- முதல் கி.மு.500 - வரையுள்ள காலம். வேத காலத் தொடக்கத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட நகரங்கள் எதுவும் எங்கும் இல்லை. மட்சுவர்களும் ஓலைக் கூரைகளும் உள்ள எளிய குடிசைகளே இருந்தன. நாளடைவில் கட்டிடச் சிற்பக் கலை வளரத் தொடங்கியது. கி.மு. முதல் ஆயிரம் ஆண்டின் இடைப்பகுதியில் ஆரியரின் சமூக அமைப்பு விரிவடைந்ததையொட்டிச் சில இடங்களில் நகரங்கள் தோன்றின. மரங்களைப் பயன்படுத்தி வீடுகள் கட்டினர். கி.மு.5 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் நிறுவப் பெற்ற தலை நகரங்களில் அமைப்புத் திட்டத்தை வகுத்துத் தந்தவர் மகா கோவிந்தர் என்ற சிற்பி என்கின்றனர். எனினும் ஆரியர்கள் அழகுக் கலைகளில் தனிப்பட்ட கவனம் செலுத்தாத காரணத்தால் வேத காலத்தில் கட்டிடச் சிற்பக் கலை சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்ததைப் போல் உயர்ந்த நிலையில் இல்லை. 1 என்று திரு மொ.க. தேசாய் அவர்கள் உள்ளதை உள்ளவாறே எடுத்துக் காட்டியுள்ளார். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வரும் பொழுது ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளாய் வந்தனர். அவர்கள் அற வழியில், தற்பாதுகாப்பிற்காக சில சிறுபடைகளை வைத்திராத சிந்து வெளி சிவ நெறியாளர்களான சைவ அந்தணர்களை மற வழியில் வென்றனர். அவர்கள் நாடு நகரங்களை அழித்தனர். அதனால் அவர்கள் பெரிய கட்டிடங்கள், மாட மாளிகைகள் அரண்கள் முதலியவற்றை அமைத்து விட முடியும் என்று எண்ணுவது தவறு. ஆரியர்கள் சிந்து வெளி அழிவிற்குப் பின் நீண்ட காலம் சென்று கட்டிடக் கலை அறிவைப் பெற்றனர் என்று கூறுவது பொருந்தும். அது உண்மையுமாகும். ஆரியர்கள், இராமாயண காலத்தில் கூட கட்டிடக் கலை அறிவை அதிகம் பெற வில்லை. வான்மீகி கூறும் இராமனுடைய அரண்மனை அழகும் இராவணனுடைய அரண்மனைச் சிறப்பும் படிப்போர்க்கு நன்கு புலனாகும். ஆரியர்கள் கட்டிடங்களை அழிப்பதில் அகாயசுரர்கள்; கட்டிடங்களைக் கட்டுவதற்கு பல காலம் பயில வேண்டியதா யிருந்தது. இந்தியாவிற்கும், பாபிலோனுக்கும், பாரசீகத்திற்கும், அசீரியாவிற்கும், அக்கேடியாவிற்கும், அரேபியாவிற்கும், சால்டியா விற்கும் இடையே தொன்மையான காலத்திலிருந்து வணிகத் தொடர்பு இருந்தது வந்தது. கி.மு-6-ஆம் நூற்றாண்டில் வட மேற்கு இந்தியா பாரசீகர் படை யெழுச்சிக்கு ஆளாகியது. சில காலம் அவர்களது பயங்கர ஆட்சி நிலவியது. அப்பால் கி.மு.4-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.மு.327) கிரேக்க வீரன் மா அலெக்சாந்தரின் படையெடுப்பாலும், அப்பால் எழுந்த மொகலாயர்களின் ஆதிக்கத்தாலும் அயல் நாட்டுக் கலை முறைகள் வட இந்தியக் கலை முறையோடு சிறிது கலந்தன. இக்கலப்பின் பயனை காந்தாரச் சிற்ப முறையிலும், மௌரியச் சிற்ப முறையிலும், மொகலாய சிற்ப முறையிலும் காணலாம். சந்திரகுப்தன் மெசபொத்தாமியக் கலையைத் தழுவி அரண்மனையை அழகுற அமைத்தான். சாஜகான் அரேபியக் கட்டிட முறையைத் தழுவி தாஜ்மகாலை அமைத்தான். பௌத்த சிற்பம் ஆரியர்களின் வருணாசிரம முறையையும், புரோகித ஆதிக்கத்தையும் எதிர்த்து வட இந்தியாவில் பௌத்த நெறி எழுந்தது. அதன் பயனாக பௌத்த சிற்பமும் பிறந்தது. பௌத்த கட்டிடசிற்பம் (கி.மு.250- கி.பி.750) வட இந்தியா, தென் இந்தியா இலங்கை, சாவா, முதலிய நாடுகளிலெல்லாம் பரவியது. அசோகன் என்னும் மாமன்னன் பௌத்த நெறியைத் தழுவியதின் பயனாக பௌத்த கட்டிடச் சிற்பம் பெரிதும் வளர்ச்சியுற்றது. கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சிற்ப வேலைகள் சிறப்புற்று எழுந்தன. பௌத்தர்கள் பெரிய கோயில்களையும் மடங்களையும் மண்டபங்களையும் அமைத்தனர். நாலாந்தாவில் உள்ள நந்தாப் பெருமை வாய்ந்த பௌத்த மடம் 10,000 துறவிகள் தங்குவதற்கேற்ற பெரிய மடமாக இருந்தது. பௌத்தர்கள் நாட்டின் நானாபகுதிகளிலும் குடைவரைக் கோயில்களையும், தூபிகளையும், மடங்களையும், தூண்களையும் கல்வெட்டுகளையும் அமைத்துப் புகழ் பெற்றனர். சுங்க - ஆந்திர காலச் சிற்பம் மௌரிய ஆட்சி அசோகனுக்குப் பின் அடியுடன் சாய்ந்தது. வடக்கு, மேற்குப் பகுதிகளில் சுங்கர்களின் ஆட்சி அரும்பியது. அவர்களின் ஆட்சி கி.மு.70 வரையில் தலை தூக்கி நின்று அப்பால் வீழ்ந்தது. அதன் பின்னர் ஆந்திரர் (சாதவாகனர்) ஆட்சி அரும்பி கி.பி.150-வரையில் நிலவி மறைந்தது. கி.மு.185-இல் இருந்து கி.பி.180-வரை கிட்டத் தட்ட 300-ஆண்டுகள் சுங்க - ஆந்திரர் ஆட்சியில் அவர்களின் கட்டிட சிற்பமும் வளர்ந்தன. அவர்கள் பல குகைக் கோயில்களையும் மடங்களையும் நிறுவினர். இவர்களின் கலைக்கு எல்லோரா சைத்தியமும் கைலாசக் கோயிலும் ஏற்ற எடுத்துக் காட்டுகளாக உள்ளன. சாளுக்கியர் கட்டிட சிற்பம் கி.பி.ஐந்தாம் ஆண்டில் தென் இந்தியாவில் சாளுக்கியர் ஆட்சி தலை தூக்கியது. அதன் பயனாக சாளுக்கியர் கட்டிட சிற்பம் எழுந்தது. முதன் முதன் கற்களால் கோயில்கள் கட்டத் தொடங்கினர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து பல கோயில்களை அமைக்க முயன்றனர். மைய இந்தியாவில் பல கற் கோயில்கள் இவர்களின் பாணியில் பல எடுப்பிக்கப் பெற்றுள்ளன. இவர்களால் ஆதியில் எடுப்பிக்கப் பெற்ற கற் கோயில்கள் பீஜாப்பூரில் உள்ளன. சாளுக்கியர்களின் கட்டிடச் சிற்பமும் இந்தியாவின் கட்டிடக் கலையில் ஒரு சிறந்த சிற்பக் கலைக் கருவூலமாய் போற்றப்பட்டு வருகிறது. இந்திய இசுலாமிய கட்டிட சிற்பம் இந்தியாவில் மொகலாயர் ஆட்சி அரும்பிய பின் இசுலாமியக் கட்டிட சிற்ப முறை செல்வாக்குப் பெற்றது. மொகலாயர்கள் பெரிதும் அந்தந்த இடத்துக் கலை முறையைத் தழுவி பள்ளிகளும், சமாதிக்கட்டிடங்களும் அரண்மனைகளும் வீடுகளும் அமைத்தனர். பழைய தில்லியில் உள் இல்துத்னிஷ் மசூதியும், பீஜப்பூர் பழைய பள்ளிகளும் நாகூர் தர்காவும் பிறவும் சான்றுகளாகும். மொகலாயர் ஆட்சியின் தொடக்க காலம் இசுலாமியர் கட்டிடக் கலையின் பொற்காலம் என்று புகழப்படும். மொகலாயர் கட்டிடக் கலையில் இந்து, இசுலாமிய பாரசீக மரபுகள் கலந்து விளங்கின. மொகலாயர் பண்டைய எகிப்திய மன்னர்களோடு போட்டி போட்டு பள்ளிகளும் சமாதிகளும் கட்டினர். அக்பரின் பட்டேப்பூர் சிக்ரி நகரில் எழுப்பிய கட்டிடங்களின் சிற்பங்களும் ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலும், முத்து மசூதியும், அரண்மனையும் மிகச் சிறந்தவை. மொகலாயர் காலத்தில் எழுச்சியுற்ற அவர்களின் கட்டிடக் கலை அவர்கள் ஆட்சி அழிந்ததும் அவர்களின் கட்டிடக் கலை பெரிதும் குன்றி விட்டது. மேனாட்டு கட்டிடக் கலை இந்தியாவில் போர்ச்சுக்கீசியரும், உலாந்தாக்காரரும், பிரஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் புகுந்து ஆள முற்பட்டனர். தங்களின் கிறித்து சமயத்தையும் கட்டிடக் கலையையும் புகுத்தினர். அரசாங்கக் கட்டிடங்களும் கிறித்தவக் கோயில்களும் காத்திய கலை முறைப்படி கட்டப் பெற்றது. தமிழ் மக்களுக்கு சுதந்திர உணர்ச்சி எழுந்த பின் கிறித்தவக் கோயில்கள் ஐரோப்பிய பாணியில் கட்டுவது முறை அன்று என்ற எண்ணம் எழுந்தது. ஆந்திர நாட்டிலுள்ள தோர்ணக்கல் பகுதியில் முதல் இந்திய நல்லாயராய்த் தோன்றிய பிசப் அவர் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் கிறித்தவக் கோயில்கள் திராவிடப் பாணியில் அமைக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் இந்தியக் கட்டிடக் கலை மறுமலர்ச்சியுற்று வருகிறது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் தமிழ் மக்களின் தெய்வ வழிபாடு தமிழ் மக்கள் மிகத் தொன்மையானவர்கள் அவர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நாளிலிருந்தே இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அயல் நாட்டினின்று இந்நாட்டில் குடியேறியவர்கள் என்று சில ஆசிரியர்கள் கூறினர். அது தவறு; ஆதாரமற்ற கூற்று என்று இன்று அறிஞர்களால் கருதப்படுகிறது. தமிழகத்தின் நிலமும், நீரும் பாறைகளும் மக்களும், மரம் செடி கொடிகளும் விலங்குகளும் பறவைகளும் இந்நாடு மிகத் தொன்மையானது என்பதை உணர்த்தும். மனித குலத்தின் தொட்டில் தென்இந்தியா என்று சில நில நூலாரும் மானிட இயல் நூல் வல்லாரும் கருதுகின்றனர். தென் இந்தியாவின் பாறைகள், அது மிகத் தொன்மை மிக்க நாடு என்பதற்கு என்றும் பொன்றாச் சான்றாக நின்றொளிர்கிறது. பழங்கால மனிதன் காடுகளில் தம் வாழ்க்கையைத் தொடங்க வில்லை. குன்றுகளிலே முதன் முதலாக வாழ்க்கையைத் தொடங்கி யுள்ளான் என்று அறிஞர்களால் கருதப்படுகிறது.1 தமிழர்கள் 10,000-ம் ஆண்டுகளுக்கு முன்னின்றே -அதாவது வரலாற்றுக் காலத்திற்கு முன்னிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் பழம் கற்காலத்திலிருந்து புதுக் கற்காலம் வரை, புதுக் கற்காலத்திலிருந்து பெருங்கல்லறைப் பண்பாட்டுக் காலம் வரை, பெருங் கல்லறைப் பண்பாட்டுக் காலத்திலிருந்து இரும்புக் காலம் வரை இங்கு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பழம் பெரும் பண்பாட்டை, இந்நாட்டை ஆக்கிரமித்த திராவிடர்கள் கைப்பற்றிப் புதைத்து விட்டார்கள் என்று சிலர் கூறுவது போல் நாம் எளிதில் கூறி விட முடியாது. திராவிடர்களின் ஆதிமுன்னோர்களைச் சார்ந்த இனத்தவர்களைப் பற்றி முன்னர் கொண்ட தவறான முடிபினின்று தப்புவிப்பதற்காகத் தமிழர்கள் வெளி நாட்டினின்று வந்தவர்கள் என்று சில ஆசிரியர்கள் கூறியுள்ளனர். திராவிடர்களின், ஆதி முன்னோரைச் சார்ந்த இனத்தவர்கள் அயல்நாட்டினின்று வந்தவர்கள் என்ற கருத்து சிறிதும் ஆதாரமற்ற கொள்கையாகும் அது திராவிடர்கள் அயல்நாட்டினின்று இங்குவந்து குடியேறியவர்கள் என்ற ஒரு தவறான கொள்கையை உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர்கள் வெளி நாட்டினின்று இங்கு போந்த ஆக்கிரமிப்பாளர்கள் அன்று. அவர்கள் தென் இந்தியாவின் கற்காலப் பண்பாட்டின் மரபுவழிவந்தவர்கள்.1 குமுகாய அமைப்பு பண்டைக் காலத்தில் இருந்த தமிழர் குமுகாயந்தான் இன்றும் இருந்து வருகிறது என்றாலும் பண்டைய நிலையினின்று மிகவும் மாற்றம் அடைந்துள்ளது. குமுகாய அமைப்பு, மொழி, பண்பாடு, பழக்க வழக்கம் முதலிய அனைத்தும் மாறுபட்டுள்ளன. அவர்களின் அன்றாட தேவைகளும் உணவுப் பிரச்னையும் அவர்களிடையே பெரிய மாற்றத்தை விளைவித்துள்ளன. அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் செய்யாவிடில் அழிந்து ஒழிந்து போகும் நிலையை அடைந்தனர். மாறு அல்லது மாண்டுபோ என்ற பொன் மொழி அவர்கள் உள்ளத்தில் அடிக்கடி அரும்பியது. மக்களின் வாழ்க்கை தமிழ் மக்கள் ஆதியில் மலைகளிலும் குன்றுகளிலும் விலங்கு களைப் போல் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஆடைகள் அணிய அறியார்கள். வீடுகள் அமைக்க எண்ணியதே இல்லை. பானை சட்டி குடம் முதலின எதுவும் அவர்களுக்குச் செய்யத் தெரியாது. அவர்கள் மலையில் உள்ள நீரூற்றுகள் வரண்டனவாயின் கற்பாறை மீதுள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் நீரை அருந்துவர். அவர்கள் காலடியில் கிடந்த கூளாங்கற்களை ஆயுதங்களாக பயன்படுத்த முதலில் பயின்றனர். அவர்கள் பல்லாண்டுகள் சென்று கற்களை, கத்தி, வாள், கோடரி, ஈட்டி, உளி போன்ற ஆயுதங்களாகப் பயன்படுத்தப் பயின்றனர். அக்கால மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் பல கடப்பா நெல்லூர், செங்கற்பட்டு, மெஞ்ஞானபுரம், சாயர்புரம் திருமங்கலம் போன்ற விடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மலைகளில் வாழ்க்கையைத் தொடங்கிய மக்கள் அங்கு கிடைத்த காய், கனி, கிழங்கு, கொட்டை, கீரை முதலியவற்றை உண்டு உயிர் வாழ்ந்தனர். இவைகள் கிடைக்காத காலங்களில் விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனை உண்டு உயிர் வாழ்ந்து வந்தனர். கொடிய விலங்குகளினின்று, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வில்லையும் கண்டனர். அப்பால் மனிதன் உணவின் பொருட்டு வேட்டை ஆடுவதில் திறமை பெற்றான். ஆண் பெண் ஆகிய மக்கள் இனத்தில், ஆண் பெரிதும் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டான். வேட்டையாடச் சென்ற ஆண் வேட்டையாடிக் கொண்டே பல நாள் அல்லது பல திங்கள் சென்று விடுவான் அவன் தன் மனைவி என்றும், மக்கள் என்றும் எவரையும் எண்ணியதும் இல்லை. அவர்கள் வாழ்க்கைக்காகக் கவலைப் பட்டதும் இல்லை. குமுகாயத்தில் மனைவி, கணவன் மக்கள் என்ற உறவு எழவில்லை. தாய் கருவுறவும், மக்களைப் பெறவும் பால் கொடுக்கவும் வேண்டிய இன்றியமையாத நிலை எழுந்ததால் மக்களுக்காக உணவு தேடவும், விலங்குகளினின்று மக்களைக் காக்கவும் வேண்டிய இன்றியமையாத நிலைக்கு ஆட்பட்டாள். தாய் தான் பெற்ற மக்களோடே எப்பொழுதும் வாழ்ந்து வந்தாள். பழங்களைப் பொறுக்குவதிலும், கிழங்குகளை அகழ்வதிலும், மூங்கில் அரிசி சாமை மலை நெல், தினை முதலியவற்றைச் சேகரித்து தான் உண்டதோடு மக்களுக்கும் ஊட்டிவந்தாள். அடிக்கடி மலையில், உணவு தட்டுப்பாடு எழவே மலையி னின்று கீழே ஓடி வரும் ஆறுகள் மூலம் அவற்றின் கரைகளின் வழியாக சிலமக்கள் கூட்டம் கூட்டமாகக் கீழிறங்கி மலை அடிவாரத்தில் முல்லைச் செடிகள் அடர்ந்திருந்த பகுதியில் வாழத் தலைப்பட்டனர். இவர்கள் முன்னர் மலையின் உச்சியில் குறிஞ்சி மரங்களின் அடியில் வாழ்ந்தனர். எனவே குறிஞ்சி நில மாக்கள் என அழைக்கப்பட்டன. இவர்கள் குரவர் எனவும் கூறப்படுவர். இவர்கள் பெரிதும் வேட்டையாடுவதையே, தொழிலாகக் கொண்டிருந்தனர். தேன் அடைகளைச் சேகரிப்பதும் விலங்குகளின் தோல்கள், கொம்புகள் முதலியவற்றை சேகரிப்பதும் தொழிலாகக் கொண்டிருந்தனர். மலை அடிவாரத்தில் குடியேறிய மக்கள் ஆடுமாடுகளைப் பழக்கி பால், தயிர், மோர், வெண்ணெய் நெய் முதலியவைகளைச் செய்யும் கைத்தொழில்களை உருவாக்கினர். தினை, சாமை போன்ற புஞ்செய் தானியங்களை விதைக்கவும் அறுக்கவும் வழி கண்டனர். இவர்கள் ஆயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் முல்லை நிலமாக்கள் என்றும் கூறப்படுவர். சிலர், அங்கிருந்தும் புறப்பட்டு ஆற்றங்கரை வழியாக வந்து நீர் நிரம்பிய குளங்களும், கழனிநிலங்களும் நிறைந்த இடங்களில் மருத நில மரங்களின் அடியில் தங்கினர். இவர்கள் கல்லினால் நிலங்கிள்ளி பயிர்த் தொழில் புரியத் தொடங்கினர். நிலங்கிள்ளும் தொழின் மூலம் பூமிக் கடியிலிருந்து தாதுப் பொருள்களைக் கண்டெடுத்தனர். களிமண் உபயோகத்தை அறிந்து, மண்பானை, மண் சட்டிகளை வளைய முற்பட்டனர். இந்நிலம் அதிகமான நஞ்செய் புஞ்செய் தானியமணிகளின் விளைவால் வளம் பெற்றது. வாழை கரும்பு முதலிய பயிர்கள் எழுந்தன. இந்நிலத்தில் விளைந்த பொருள்களுக்காக பிற நிலத்திலுள்ளோர் தங்கள் நிலத்தில் கிடைத்த பொருள்களைப் பண்டமாற்றாகக் கொடுத்து நெல், புல், எள், கொள் முதலிய பொருள்களைப் பெற்றுச் சென்றனர். மருத நிலத்தில் மக்களின் வாழ்வு மலர்ந்தது. நெல்,எள், புல், கொள், உளுந்து பயறு முதலிய விளை பொருள்களின் விளைவால் வளம் பெற்றது. இங்கு வாழ்ந்த மக்கள் மருத நிலமக்கள். இவர்கள் வேளாளர்காராளர் எனப்படுவர். இங்கு குயவர்கள் தோன்றி மட்பாண்டங்களைச் செய்தனர். மேலும் பஞ்சு விளைந்ததால் நூற்றல் தொழிலும் நெய்தல் தொழிலும் இந்நிலத்தில் வளர்ந்தது, தச்சர், கொல்லர், தட்டார்கன்னர், கொத்தர் முதலிய தொழிலாளர்கள் பெருகினர். மேலும் பாணர்கள் தோன்றி ஆடல் பாடல் தொழில்களைச் செய்து வந்தனர். இந்நிலத்தில் செல்வப் பெருக்கால், வீடுகள் எழுந்தன. எங்கும் நாடு நகரம் அமைக்கப்பட்டன. மன்னர்கள் செல்வர்கள் தோன்றினர். ஆடல் பாடல் அரும்பின. மத்தளத்தின் ஒலியும் கிணைப் பறையின் ஆரவாரமும் மார்ச்சனையுடைய முழவின் ஆர்ப்பும், யாழின் இன்னொலியும் எழுந்தன. இந்நிலத்தில் வாழ்ந்தோர் வேளாளர் நாகரிகத்தின் அடிகோலியவர்கள் ஆயினர். ஒரு சிலர், ஆற்றங்கரை வழியாக கடல் வரை சென்று கடற்கரையில் உள்ள நெய்தல் செடியின் பக்கலில் தங்கினர் இவர்கள் நெய்தல் நிலமக்கள் அல்லது பரதவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர். அப்பால் படகு, ஓடம், தோணி, கப்பல், நாவாய், வங்கம், அம்பி முதலியவை களை ஓட்டவும் உப்பை விளைவிக்கவும் மீன்களைப் பிடித்து பிற நிலத்தவர்களுக்குப் பண்டமாற்றாக விற்கவும் செய்து வந்தனர். இவர்கள், கடல் வணிகத்திற்கு ஆதரவாக பிற நாடுகளுடன் வணிகம் நடத்த கப்பல் ஓட்ட முன் வந்ததால், நாடு செல்வம் பெறவும் நாகரிகம் சிறப்பு பெறவும் துணையாக இருந்தது. தெய்வங்களின் தோற்றம் சில அறிஞர்கள் உலகில் புரோகிதர் தோன்றி தங்கள் நலனுக்காகக் கடவுள் நம்பிக்கையை உருவாக்கியுள்ளனர் என்று கூறுகின்றனர். சிலர் மக்களின் அறியாமையால் குமுகாயத்தில் தெய்வ உணர்ச்சி எழுந்தது என்பர். சிலர் பயத்தால் தெய்வ நம்பிக்கை பிறந்தது என்பர். சிலர் அடிமைப் புத்தியால் மக்கள் தாமாகவே தெய்வ நம்பிக்கையை உருவாக்கி விட்டனர் என்று கூறுகின்றனர். ஆனால் சமூக நூல் (Social science) தாய் ஆதிகாலத்தில் மக்களைக் காப்பாற்றி வந்ததோடு மக்களுக்காக அவள் விலங்கு களோடு போரிட்டும், வெற்றி பெற்றும், கால், கை, கண், காதுகளை இழந்தும், உயிரை இழந்ததும் உண்டு. மிகத் தொன்மையான கால மக்களுக்கு, தாய் குடும்பத் தலைவியாகியும், காக்கும் தெய்வமாகவும் கருணை காட்டும் அரசியாகவும் விளங்கினாள். அவள் இறந்ததும் அவளைப் புதைத்து அந்த இடத்தில் நடுகல் நாட்டி அதில் மக்கள் வழிபட்டு வந்தனர். இதனால் நாட்டில் பல தாய்த் தெய்வங்கள் தோன்றின. எனவே நமது நாட்டில் மட்டுமல்ல எகிப்து, பாபிலோன், அசிரியா, அக்கேடியா, எல்லம், சீரியா, சின்ன ஆசியா, காகஸ கிரீட, கிரீசு, உரோம் முதலிய எல்லா நாடுகளிலும் தாய்த் தெய்வங்கள் தோன்றின. நீண்ட காலத்திற்குப் பின் தாய் ஆட்சி மறைந்த பின் தாய்த் தெய்வ வழிபாடும் குன்றி கணவன் தெய்வம் (சிவன்) அண்ணன் தெய்வம் (மாயோன்) மகன் தெய்வம் (முருகன்) போன்ற பல தெய்வங்கள் தோன்றின. ஆதியில் தமிழர் வாழ்ந்த நானிலத்தும் நாலு தெய்வங்கள் எழுந்தன. தொல்காப்பியம் அகத்திணை இயல் சூத்திரத்தில், மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்று கூறப்படுகிறது. இதனால் பண்டைக் காலத் தமிழர் முல்லைக்கு மாயோனும் குறிஞ்சிக்குச் சேயோனும் (முருகனும்) மருதத்திற்கு வேந்தனும் (ஐந்திரனும்) நெய்தலுக்கு வருணனும் தெய்வம் என்று வழிபட்டனர் என்று சாதாரணமாக எல்லாப் புலவர்களும் உரை கூறுவது இயல்பு. ஆனால் உயர் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், காட்டிற்குத் தெய்வம் மாயோன் எனப்பிற்காலத்தவர் கருதினும் மாயோளாகிய கருநிறமுடைய அம்மையையே சிறப்பாகக் கொள்ள வேண்டும். மாயோள் மேய காடுறை உலகமும் என்ற பாடமே சிறந்தது. காடுகிழாஅள் என்றதுமது. நாட்டுப்புறங்களிலும் காடுகளிலும் பெருவழக்காக வழிபடப்பட்டுத் தெய்வசக்தியின் வேக வடிவாகிய தேவியை பிற்காலத்தே மரபொற்றுமை பற்றிக் கோவலர், மாயோன் வழிபாட்டைக் கொண்டனர். மாயோளும் மாயோனும் உடன் பிறந்தார் என்னும் கொள்கையுங் காண்க. மாயோனுக்கு மருகனாகிய முருகன் வழிபாடு குறிஞ்சி நிலத்திற் சிறப்பாக நிகழ்ந்தது. ஆனைமுகக் கடவுளின் வழிபாடுங் குறிஞ்சி நிலத்திற்கே உரியதாயினும் ஐந்திணைக் காதல் ஒழுக்கத்திற்குச் சிறப்பாவது முருக வழிபாடேயாம் என்பது பற்றி முருகனையே குறிஞ்சிக்குத் தெய்வம் என்றார் போலும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறினமையால் மருத நிலத்துத் தெய்வம் வேந்தன் என்பது வெளிப்படை இந்திரனை வேந்தன் என்பதற்குக் காரணம் அவன் மழைத் தெய்வம் ஆதல் பற்றியும் வயலுக்கு இன்றியமை யாதது பற்றியுமென்க. இன்றிரன் என்ற சொற்றொடரே இந்திரன் என மருவிற்றென்ப. மன்றிறம் மந்திரம் என மருவியது போல. மருத நிலத்திற்குரிய நகரங்களில் முதன்மையாக வழிபடப்பட்டதெய்வம், சிவன் என்பது நுதல் விழி நாட்டத் திறையோன் கோட்ட முதலாக என்ற சிலப்பதிகார அடியாற் புலனாதலின் வேந்தன் என்பானைச் சிவன் என்பாருமுளர் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.1 தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை இயல் சூத்திரத்தில் கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணியே வருமே என்று கூறப்படுகிறது. இதற்கு ஞாயிறு, திங்கள் தீ போன்ற இயற்கைப் பொருள்கள் தொல்காப்பியர் காலத்தில் தெய்வமாக வழிபடப்பட்டிருக்கிறது என்று திரு. சாமி சிதம்பரனார் பொருள் கூறியுள்ளார்.2 சைவப் பெரும்புலவர் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு பொருள் கூறும் பொழுது, காலம் பால்வரை தெய்வம், வினைத் தெய்வம், சொற்றெய்வம், பூதத் தெய்வம் ஞாயிறு திங்கள் என்பன விதந்தோதப் பட்டன. காலக் கடவுளைக் காலம் என்றார். அக்கடவுளை உருத்திரன் என்பாருமுளர். பால்வரைத் தெய்வம் என்பது எல்லார்க்கும் இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையை வகுக்குங் கடவுள். இக்கடவுளை அயன் என்பாருமுளர். வினைத் தெய்வம் என்பது அறத்தெய்வம் என்று சேனாவரையர் கூறியுள்ளார் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.1 சிந்துவெளித் திராவிட நாகரிகத்தில் எழுந்த ஓவிய எழுத்துக் களை ஆய்ந்த பின்லாந்து பேரறிஞர் டாக்டர் அகோ பார்போலாவும் பிறரும் சிந்துவெளி மக்கள் முதன்முதலாக விண்ணிலுள்ள ஞாயிறு (சூரியன்) திங்கள் (சந்திரன்) செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கோள்களை வழிபட்டுள்ளனர். அப்பால் அவை களுக்குப் பதிலாக இவ்வுலகில் ஞாயிற்றிற்குப் பதிலாகச் சிவனையும், திங்களுக்குப் பதிலாக உமா தேவியையும் செவ்வாய்க்குப் பதிலாக முருகனையும், புதனுக்குப் பதிலாக, நான்முகனையும் வியாழனுக்குப் பதிலாகத் திருமாலையும், சனிக்குப் பதிலாக கிருட்டினனையும் வழிபட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறோம் என்று கூறியுள்ளனர். அதோடு தமிழர் கண்ட ஐந்து நிலங்களில் குறிஞ்சி நிலத்தில் செயோன் என்று கூறப்படும் செவ்விய நிறமுடைய செவ்வண்ணண் ஆகிய செஞ்சடையோனாகிய சிவபெருமானும், பாலை நிலத்தில் அம்மையாகிய கொற்றவையும், முல்லை நிலத்தில் மாயோனாகிய திருமாலும் நெய்தல் நிலத்தில் வருணனும் மருத நிலத்தில் வேந்தனும் (அரசனும்) வழிபடப்பட்டிருக்க வேண்டும். அப்பால் குறிஞ்சி நிலத்தில் முருகனும், மருத நிலத்தில் சிவனும் தெய்வமாக வழிபடப் பட்டிருக்கவேண்டும் என்று எண்ணப்படுகிறது. சிந்துவெளியில் மட்டுமல்ல பாபிலோனிலும், எகிப்திலும் பாலதீனத்திலும், பிறநாடுகளிலும் உழவர்களின் தெய்வமாக சிவபெருமானே கடவுளாக வழிபடப்பட்டுள்ளார். இன்று பாபிலோன், எல்லம் எகிப்து அசிரியா, அக்கேடியா, சால்டியா, ஹிட்டைட் முதலிய உழவர்களின் நாகரிகம் எழுந்த நாடுகளில் எல்லாம் சிவபெருமான் காளைமீது நிற்பதோடு கையில் திரிசூலம் (மூவலைவேல்) தாங்கி நிற்பது போன்ற உருவங்கள் தீட்டப்பட்டிருப்பது பைபிள் அகராதி போன்ற நூற்களிலும், பண்டைய கிழக்கு நாடுகளில் புதிய ஒளி என்ற பெயர்களில் வந்தபல நூற்களிலும் அழகிய ஓவியம் தீட்டி எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. அதோடு தமிழ்நாட்டுத் தெய்வங்களான சிவன் கொற்றவை முருகன் போன்ற தெய்வங் களைப் பற்றி தொல்காப்பியம் என்ன கூறுகிறது என்று அறிவது மிகவும் சால்புடைத்ததாகும் என்று எண்ணுகிறேன். திராவிட நாகரிகம் பரவியதாக இன்று மேனாட்டு ஆசிரியர்கள் கருதும் மைய நிலக்கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய் வழிபாடே சிவ வழிபாடாகவும், சக்தி வழிபாடாகவும் முருகன் வழிபாடாகவும் மலர்ந்துள்ளன என்று தெளிவாக எடுத்துக் காட்டப்பெற்றுள்ளது. மிகத் தொன்மையான காலத்தில் தமிழ்நாடு தொட்டு, சிந்துவெளி வரை, தாய்த் தெய்வ வழிபாடே நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தாய்த் தெய்வம் கொற்றவை, காடுகிழாஅள், பழையோள் முதியோள் காளி துர்க்கை என்று பல பெயர்களால் வழிபடப்பட்டுள்ளாள். அவளே ஈடும் எடுப்பு மற்ற முழுமுதற் கடவுளாகக் கருதப்பட்டாள் என்று தெரிகிறது. மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே என்ற தொல் காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை இயல் சூத்திரம் கொற்றவை வீரத்தினால் எய்த வெற்றியை கொண்டாடுவதற்கு துடிநிலை என்று எடுத்துக்காட்டுகிறது. இவ்வெற்றிக்குத்துணை செய்த தெய்வம் பழையோள். அந்தத் தாய்த் தெய்வத்தைப் புகழ்ந்து போற்றி வழிபடும் விழாவிற்குக் கொற்றவை நிலை என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தமிழர் தெய்வமாக எழுந்த சிவபெருமான் ஐயாயிரம் ஆண்டிற்கு முன் சிந்துவெளியில் சிறப்புற்றிருக்கும் பொழுது மூவாயிரம் ஆண்டிற்குமுன் இலக்கியங்களில் சிவன் என்ற பெயர் காணப்படாததால் தமிழ்நாட்டில் சிவனே இல்லை என்று கூறுதல், தகுமா? தமிழ்நாட்டில் 2000, ஆம் ஆண்டிற்கு முன்னுள்ள எத்தனையோ நூற்கள் அழிந்துபோயின. அவைகளில் சிவன் என்ற பெயர் இடம் பெற்றிருக்கலாம் அல்லவா? தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல், அதில் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் தெய்வங்களின் எல்லாப் பெயர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையாகும். நிலங்களுக்குரிய தெய்வங்களைக் குறிப்பிட்டு நிலங்களுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத் திற்குரிய பெருந்தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடாது விடப்பட்டும் இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் தொல் காப்பியத்தை விட பழம் நூல் என்று எண்ணப்படும் நூற்களில் பிறவாயாக்கைப் பெரியோன், கண்ணுதற் பெருங்கடவுள், முக்கண்ணன் என்று குறிப்பிடப்படுவதே சிவன் தமிழகத்தின் முழுமுதற் கடவுள் என்பதை நிலை நாட்டப் போதிய சான்றாகும். சிவபெருமான் உருவினை விளக்க எழுந்த சைவப் பெரும் புலவர் கா. சு. பிள்ளை அவர்கள், கதிரவனை இடமாகக் கொண்ட சிவபெருமான், வெம்மை யினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது, தண்ணளியுடையதாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள நீரின் நிறம் நீலமாதலின் தாய்த் தெய்வம் நிறமும் நீலமாயிற்று. திங்கள் குளிர்ச்சி தருவதாகத் தோன்றுவதாய், சந்திரன் தாயின் அருவுரு வடிவமாகக் கருதப்படுவதற்கு ஏதுவாயிற்று. ஞாயிற்றின் ஒளியில் தோன்றும் ஏழு நிறங்களில் முதலில் உள்ளது சிவப்பும், இறுதியில் உள்ளது நீலமும் ஆம். பாதி ஆணும் பாதிப் பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும், பெண்பகுதி நீலநிறமாகவும் கொள்ளப்பட்டது. சிவம் என்ற சொல் முழுமுதற்கடவுளைக் குறிக்கப் பயன்பட்ட போது எங்கும் நிறைந்திலங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப் பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள்காரணமாம் என்ற கொள்கை எழுந்த போது சிவசக்தி அருள் எனவும் தாயெனவும் வழங்கப்பட்டது. கதிரவனை சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகியவிண்ணும் சக்திக்குப் பேராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று. திருமால் கோயிலில் உள்ள பெருமாள் கண்ணன், இராமன் அனுமான் கருடன் முதலிய தெய்வங்கள் திராவிடத் தெய்வங்களே யாகும். கடவுள் சக்தியைத் தாயாக வழிபடும் தமிழர் வழக்கங்காரண மாக சைவ வைணவக் கோயில்களில் தெய்வங்களின் ஆற்றல் பெண் வடிவில் வழிபடப் படுவதாயிற்று. அதுவும் தமிழர் கருத்தின் விளைவேயாகும். ஆழ்வார்கள் அடியார்களாகத் திருமால் கோயில் களில் இடம் பெற்றனர். ஆதியில் ஒரு தெய்வக் கோயில்களே ஏற்பட்டிருந்தன. பிற்காலத்தில் தெய்வங்களின் பரிவாரங்களும் அவைகளில் இடம் பெறலாயின. எனினும் இக்கோயில்களில் முக்கிய தெய்வம் ஒன்றே வழிபடப்படுகிறது. வடமொழி வேதத்தில் பேசப்படும் பல்வேறு தெய்வங்கள் தமிழர் கோயில்களில் இடம் பெறவில்லை என்பது தெளிவு. இக்கருத்தினை டாக்டர் கில்பர்ட் கிலேட்டர் போன்றவர்கள் விளக்கியுள்ளனர்.1 தமிழ்ப் பெரும்புலவரான பேராசிரியர் ஞா. தேவநேயன் அவர்கள், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் - என்ற நூலில் குறிஞ்சி நிலத்தின் தெய்வம் சிவனாக இருந்தார் என்பதை ஆதரித்து எடுத்துக் காட்டியுள்ளார். அது அடியில் வருமாறு! சேயோன் சிவந்தவன் சேந்தன் என்னும் பெயரும் அப்பொருளதே. முருகன் வேலன் குமரன் என்னும் பெயர்களும் இவனுக்குண்டு - சிவன் என்பது சேயோன் என்பதன் உலக வழக்கு வடிவம்.1 இப்பெயர் வடிவு வேறுபாட்டைக் கொண்டு பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கி தந்தையும் மகனுமாகக் கூறிவிட்டனர். குமரன் என்பதற்கும் சேய் என்னும் குறுக்கத்திற்கும் மகன் என்று தவறாகப் பொருள் கொண்டதே இதற்கு அடிப்படை. சிவன் என்னும் ஆரியத் தெய்வம் ஒன்றும் இல்லை. சிவ என்னும் சொல் நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில் உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவான அடை மொழியாகவே ஆரியவேதத்தில் வழங்கிற்று. புறக்கண் காண முடியாதவற்றையும் நெடுந்தொலைவில் உள்ளவற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக் கண்போன்ற உறுப்பு, குமரி நாட்டு மகள் நெற்றியில் இருந்தது என்றும் அதனாலேயே அவர் தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்) ஒரு நெற்றிக் கண்ணைப் படைத்துக் கூறினர் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வெள்ளி மலை (கைலை) இருக்கையும், காளையூர்தியும் சிவனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் காட்டுவது கவனிக்கத் தக்கது. அதோடு சிவபெருமானின் தோற்றம், புலி ஆடை, யானைத் தோல் போர்வை முதலியவைகளும் சிந்துவெளியில் உள்ள முத்திரை களில் சிவபெருமான் அருகில் யானை, புலி, காண்டாமிருகம், மான் முதலியவைகள் சூழ நிற்பதும், அவர் தமிழ்நாட்டில் மகேந்திர கிரியை உறைவிடமாய்க் கொண்டதும் வடஇந்தியாவில் இமய மலையில் வீற்றிருந்ததும் மேலும் அவர் மலைமகளை மணந் திருப்பதும், அவரது மைத்துனனாகிய மாயோனும், மகனாகிய முருகனும் மலைத் தெய்வம் ஆக இருப்பதும் சிவன் மலைத் தெய்வம் என்பதை உறுதிப்படுத்தும். உலகம் முழுதும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை, சிவபெருமான் உழுது பயிர் செய்யும் மருத நிலமக்களின் தெய்வம் என்பதாகும் சிவபெருமான் உழவர்களாகிய வேளாளரின் தெய்வமாகிய படியால் வேளாளர்களுக்கு உறுதுணையாகிய காளையை வாகனமாக அவர் கொண்டார். காளை, நிலத்தை உழவும், உழுதபின் சேறு நிரம்பிய நிலத்தை மட்டம் அடிக்கவும் அப்பால் நெல் விளைந்து அறுவடையானபின் சூடு அடிக்கடவும், பின்னர் நெல்மணிகளை சாக்கில் கட்டி முதுகில் சுமந்து செல்லும் பொதிமாடாகவும், வண்டிகளில், நெற்சாக்கை ஏற்றி மிகத் தொலைவில் உள்ள நாடுகளுக்கெல்லாம் செல்லும் வண்டி மாடாகவும் பயன்பட்டுவந்ததால் தமிழர்களின் தலைவனானது சிவன் காளைமாட்டைக் காப்போனாகவும் காளை மாடுகளையும் நஞ்செய் புஞ்செய் பயிர்களை அழிக்கும் புலிகளையும் யானை களையும் எதிர்த்து காளைகளைக் காப்போனாய், எப்பொழுதும் கையில் திரிசூலம் (மூவிலைவேல்) தாங்கியவனாகவும், பரசு என்னும் கைக் கோடரியைத் தாங்கியவனாகவும், இடியேற்றை (வச்சிராயுதத்தை)த் தாங்கியோனாகவும், விளைந்த பயிர்களின் மணிகளைப் பறவைகள் தின்ன வொட்டாது விரட்டும் தமருமகம் என்னும் தானியங்கிப் பறையை வலது கையில் தாங்கியோனாகவும், இரவில் வயல்களில் உள்ள பயிர்களை அழிக்க வரவொட்டாது கையில் நெருப்பைத் தாங்கியவனாகவும், உழவர்களின் பகைவர் களாகிய யானையையும் புலியையும் அழிப்பவன் என்பதைக் காட்டுவதற்கு அரையில் புலித்தோலை அணிந்தும், மேலே யானைத் தோலைப் போர்த்தும் உள்ளான். தாமரை மருத நில மலராக சிவபெருமான் விரும்பும் மலராக, தமிழ் அறிஞர்கள் போற்றுவர். கம்பன் மருத நிலத்தின் மாண்பை எடுத்துக்காட்ட எண்ணியபொழுது அவன் உள்ளத்தி னின்று தண் பொருநை ஆற்றில் தண்ணீர் பொங்கி எழுந்து வருவது போல், கவிதை பொங்கத் தொடங்கியது, தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்கக் கொண்டல்கள் முழலின் ஏங்கக் குவளைகள் விழித்து நோக்கத் தெண்டிரை எழினிகாட்டத் தேம்பிழி மகரயாழின் வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ என்று இனிது பாடினான். மருத நிலம், மாற்றுயர்ந்த பொன்னிலம் என்று புலவர்கள் புகழ்வர். ஏனைய மூன்று நிலமக்களும் தங்கள் நிலத்திற்கிடைத்த செய்பொருள்களையும், விளைபொருளையும் மருத நிலமக்களிடம் பண்டமாற்றாக அளித்து நெல் புல், எள், கொள், பயறு முதலிய பொருள்களைப் பெற்றுச் சென்றனர். பொருள் வளத்தால் அங்கு இயல் இசை நாடகம் போன்ற நுண்கலைகள் வளர்ந்திருப்பதை மக்கள் கண்டுகளித்துச் சென்றனர். அங்கு, எங்கும் காயும் கனியும் நிறைந்திருந்தன. மலர்கள் கொத்துக் கொத்தாய் மலர்ந்து தொங்கின. கம்பன் இவற்றையெல்லாம் கூறாது மயில்கள் தாமரை மலர்கள், குவளைப் பூக்கள் வண்டுகள் ஆகியவைகளின் ஆட்டத்தையும் அழகையும் மணத்தையும், ரீங்காரத்தையும் வைத்து மருத நிலத்தின் மாண்பை எடுத்துக் காட்டுகிறான். ஆடக அரங்கில் ஆய் மயில்கள் ஆடவும் அந்த ஆட்டத்திற்கு ஏற்றவாறு தாமரை தனது பூவாகிய விளக்கைக் காட்டுதாகவும், குவளை மலர்களை நாடகம் பார்ப்பவர் களாகவும் நீரில் எழும் அலைகளைத் திரைச் சீலைகளாகவும் வண்டுகளின் இனிய ஓசையை யாழாகவும் மருத நிலம் கலையின்று வீற்றிருக்கும் ஒரு பெரும் நிலப்பிரபுவாகவும் ஒரு புதிய நாடக அரங்கை நமக்குக் கற்பனை செய்து கம்பன் காட்டியுள்ளான். நாடகம், இசை, விளக்கு, திரைச்சீலை ஆகியவைகள் நாட்டியத்திற்கு இன்றியமையாத பாத்திரங்கள். இதனைக் கம்பன் கவினுற எடுத்துக் காட்டுவது சுவைத்து இன்புறத்தக்கதாகும். இஃதன்றி, மருத நிலத்தில் பொருளாதார வளத்தாலும், அறிவின் ஆற்றலாலும், கற்பனைத் திறத்தாலும் மக்கள் சிவனை மருத நிலத் தெய்வமாக உயர்த்தினர். அவனை விண்ணில் கோடானு கோடி கல் தொலைவில் சுழன்றோடும் செஞ்ஞான்றினுக்கும் மேலும் உயர்த்தினர். பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலும் மாற்றுயர்ந்த பசும்பொன்னாகப் புகழ்ந்தனர். அவன் ஏழுலகிற்கும் அதற்கு அப்பால் எண்ணிலாத் தொலைவிற்கும் எல்லாப் பிரபஞ்சத்திற்கும் முதல்வனாகக் கொண்டனர் உலகில் சிவனைத் தவிர வேறு தெய்வமே இல்லை. உலகிலே ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் குமரி தொட்டு இமயம் வரை மட்டுமல்ல ஈழம், மலயம், சிங்கபுரம், சாவகம், சுமத்திரா போர்னியோ, தாய்லாந்து, கம்போடியா, அந்தமான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மட்டுமல்ல ஆப்பிரிக்கா மெசபொத்தாமியா, பாபிலோன், சுமேரியா, எல்லம், சீரியா, அசீரியா அக்கேடியா சால்டியா, பாலதீனம், சின்ன ஆசியா காகச இத்தாலி, கிரீபாகு துருயிதியர் (Druids) அமெரிக்கா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று சிவன் என்னும் நாமத்தைப் பரப்பி, கோயில்கள் கட்டி, கலைவளர்த்து இசை பயின்று பண்பாடு பரப்பி ஒழுக்கம் ஓம்பி வந்தனர். உலகில் முதன் முதலாக சமயத்தை அன்னிய நாட்டார்க்குப் பரப்ப 1600- ஆண்டுகட்கு முன் வந்தவர்கள் கிறித்தவர்கள் என்று 20 -ஆண்டுகட்கு முன் சில வெள்ளையர்கள் கூறிவந்தனர். 50 - ஆண்டுகட்கு முன் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபுரம், சாவகம், கம்போடியா, தாய்லாந்து, இந்தோசீனம், சம்பான், சீனா, ரசியா, கொரியா முதலிய நாடுகளுக்கெல்லாம் புத்த சந்நியாசிகள் சென்று பௌத்த நெறியைப் பரப்பி வந்தனர் என்று சில வட இந்தியர்கள் கூறிவந்தனர். இன்று, சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன், சைவர்கள் சைவ நெறியை குமரி தொட்டு நேப்பாளம் வரை, பர்மாதொட்டு பலுச்சிதான் வரை மட்டுமல்ல எகிப்து, அமெரிக்கா, பாபிலோன், பாலதீனம் முதலிய உலக நாடுகள் அனைத்திற்கும் சைவ முனிவர்கள் சென்று சிவநெறியைப் பரப்பி, திருக்கோயில்களை எழுப்பி, சைவப் பண்பாட்டையும் சைவக்கலைகளையும் பரப்பி வந்துள்ளனர் என்றும் உண்மை உணரப் பெற்றுள்ளது. 1922- ஆம் ஆண்டு சிந்துவெளி அகழ் ஆய்விற்குப் பின் 5000-ம் ஆண்டுகட்குமுன் சிந்து வெளியில் சிவன், உமை, சிவலிங்கம் முருகன், பிள்ளையார், நிலத்தெய்வம், நீர்த்தெய்வம் மரத் தெய்வம் போன்ற தெய்வங்கள் வழிபடப்பட்டு வந்தனர் என்றும் ஆரியர் வருமுன் இந்தியா முழுவதும் சிவனெறி பரவியிருந்தது என்றும் இந்திய மைய அரசின் அகழ் ஆராய்ச்சித் துறையினர் கண்டு உலகிற்கு இந்த உண்மையை உணர்த்தியுள்ளனர். இதனை விளக்கி இ.பி. ஹேவல் என்னும் அறிஞரும், பேட்ரிக் கேர்ல்ட்டன் போன்ற அறிஞரும் உலகிற்கு முதன் முதலாக உணர்த்தியுள்ளனர் அதோடு தமிழ் மொழிக்கு ஏற்றம் அளித்ததில் சிறந்த பங்கு நல்லாயர் கால்டுவெல் அவர்களுக்கு உண்டு.1 ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் திராவிடர்களும் சைவசமயமும் நிறைவுற்றிருந்தது. இந்தியாவில் சுமார் 4000-ம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய திராவிடர்கள் சமயம் சைவம் எனப்படும். இது இந்தியாவின் தேசிய மதம். சைவம் உலகளாவிய பழம்பெரும் சமயம். இது ஆரியம், பௌத்தம், கிறித்தவம் எகோவா நெறி (யூதர் நெறி), எபிரேயர்களின் எல் நெறி ஆகிய எல்லாச் சமயத்திற்கும் முந்திய நெறி; நீண்ட வாணாளைப் பெற்ற பலம் வாய்ந்த பழம்பெரும் சமயம்; இன்றும் இளமை குன்றாது எழில் மாறாது இளமைப் பொலிவுடன் ஏற்றமுடன் திகழும் நன்னெறி என்று பொருள் தரும் முறையில் சிந்துவெளி அகழ் ஆய்வை நடத்திய இயக்குநர்களின் தலைவரும், இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர்களின் தளபதியுமான சாண்மார்சல் உலகிற்கு எடுத்துக்காட்டினார்.2 சைவம் பழம்பெரும் சமயந்தான்; உலகளாவிய உயர்ந்த நெறிதான்; என்றாலும் அது சுமார் கி.மு. 7500-க்கு முன்னர் ஆரியர்களால் பெருந்தாக்குதலுக்கு ஆட்பட்டு சிந்து ஆற்றங்கரையி னின்று தண்பொருநை ஆற்றங்கரை வரை பின் தள்ளப்பட்டது. அதனால் சைவம் அழியவில்லை; சிதையவில்லை. ஆரியம், சைவச் சடங்குகள் பலவற்றை தழுவியது; ஆரியர்களிற் பலர் சைவராயினர். ஆரியப் பார்ப்பனர் ஆரிய நெறியைத் துறந்து, ஆரியநெறியைத் தாக்கி அதன் அகத்தையும் முகத்தையும் மாற்றிவிட்டனர். பல ஆரியப் பார்ப்பனர் சைவந்தழுவி புலால் உணவைத் துறந்து, யாகத்தை மறந்து, உடலில் திருநீறு அணிந்து கழுத்தில் உருத்திராக்கம் பூண்டு சிசினதேவர் என்று ஒரு காலத்தில் தம் முன்னோர் இழித்துக் கூறிய சிவலிங்கத்தை வழிபட முன்வந்தனர். சிலர் அறுபத்து மூன்று நாயன்மார்களின் இடங்களைக் கூட கைப்பற்றினர். சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோர் சைவ சமய குரவர்களாய் ஆரிய (சமயத்தையும்) பௌத்த சமண சமயங்களையெல்லாம் எதிர்த்து வெற்றியீட்டினர். இந்தியாவிற்குள் ஆரியர்கள் இந்திரன் தலைமையில் புகுந்து திராவிடர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தென் இந்தியாவரைப் பின் தள்ளினர். இதனால் ஆரியர்கள் இந்தியாவில் புகுந்து இந்நாட்டில் தங்கும் இடத்தைப் பெற்றனர். என்றாலும் அவர்கள் வெற்றி வெறும் போலி வெற்றி என்பதை ஒரு ஆங்கிலப் பேரறிஞர், இந்திரன் சிறு பூசலில் திராவிடரை வென்றான்; ஆனால் சிவன் போரில் ஆரியரை வென்றான் என்று ஆணித்தரமாக எடுத்துக் காட்டியுள்ளார்.1 சைவந்தழுவாத ஆரியர்கள் சைவம் ஒரு சமயம் அல்ல என்று உலகம் முழுவதும் பறை அடித்து வந்தனர். சைவத்திற்கு ஒரு தத்துவசாதிரம் (Philosophy) கூட உண்டு என்று ஐரோப்பிய தத்துவ ஞானிகள் பலர் அறிந்து கொள்ளா வண்ணம் இருட்டடிப்புச் செய்துள்ளனர். பௌத்தர் களும், சமணர்களும் முசுலிம்களும், கிறித்தவர்களும் சிவநெறியைத் தாக்கித் தமிழகத்தில் தங்கள் சமயத்திற்கு ஆள்சேர்க்கும் பணியில் தமிழர்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழ் நெறிக்கும் இடர்விளைத்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டின் வரலாறு, தமிழகத்தில் நாட்டிற்கு புதிதாக வந்த இந்திய தேசீயமதமல்லாத எந்த சமயமும் நிலைத்து நிற்க வில்லை என்று கூறுகிறது. இந்தியாவையும், தமிழ் நாட்டையும் புத்த சமண நெறிகள் ஆட்சி செலுத்திய காலத்தில் சைவசமய குரவர்கள் தோன்றி அவ்விரு சமயர்களையும் தமிழகத்தினின்று அது இருந்த தடம் கூட அறிய முடியா வண்ணம் அவற்றைத் துடைத்து அழித்துவிட்டனர். பௌத்த, சமண சமயங்களை நாட்டைவிட்டு விரட்டியடித்த வரலாறு, தேவார திருவாசகங்களில் இன்றும் பொன்றாது பொலி வுற்றுத் திகழ்கின்றது. அனைத்திந்திய நெறியாகிய சமணத்தையும் அனைத்துலக நெறியாக நின்ற பௌத்த சமயத்தையும் மிக எளிதில் எதிர்த்து ஒரு சொட்டு உதிரமும் சிந்தாது இந்திய தேசீய நெறியான சைவம் வெற்றியீட்டியுள்ளது. அயல் நெறியாளர்களை வென்ற சைவசமயத் தலைவர்களில் அப்பர் சரியை வழி நின்றவர் என்றும் சம்பந்தர் கிரியை வழி நின்றவர் என்றும், சுந்தரர் யோகநெறி நின்றவர் என்றும் மாணிக்கவாசகர் ஞானநெறி நின்றவர் என்றும், தமிழ் நெறியாக எழுந்த சரியை, கிரியை, யோகம், ஞானம் (அறிவு) என்னும் பேரொளியின் முன் சமண பௌத்த அந்நிய நாட்டு நெறிகள் எளிதில் மறைந்தன என்றும் தமிழக வரலாறு கூறுகிறது. ஏழாம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டு அரசர் களின் பேராதரவை சமண பௌத்த சமயங்கள் முற்றாகப் பெற்றிருந்தும் அவைகளை தமிழ்ப்பண் இயைந்த ஒரு சில தேவராப் பாடல்களின் மூலம் அடியற்ற மரம்போல் விழுந்து மறைந்து ஒழியுமாறு செய்துவிட்டது சைவநன்னெறி. மன்னர்கள் அனைவரும் தம் தவறுக்கு மன்னிப்புக்கோரி சிவன் அடியார்கள் காலில் வீழ்ந்து வணங்கி சிவனுக்கு ஆட்பட்டுவிட்டனர். அப்பர் அடிகள் தலைமையில் சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலியோர் ஆற்றிய சிவத் தொண்டின் மூலம் இந்திய நாட்டின் தேசீய நெறியாகிய சிவநெறி வெற்றியீட்டியது. சமண பௌத்த நெறிகளை எதிர்ப்பதில் சிவநெறியாளர்களுக்கு ஆரியர்கள் பலர் துணை நின்றனர். அதன் மூலம் ஆரியர்கள் தமிழ்நாட்டில் தங்களுக்கும் தங்கள் மொழிக்கும் ஓரளவு இடம் தேடிக் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்றாலும் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, நெல்லை கா. சு. பிள்ளை, நாகை மறைமலை அடிகள் முயற்சியால் சைவமும், தமிழும் புனிதமுறிவும் ஆரிய மாயைவிட்டு அகலவும் ஒருபேர் இயக்கத்திற்கு அடி கோலப் பெற்றுள்ளது. சிவனை வழிபடும் கூட்டத்தார் சைவர் என்று தேவார ஆசிரியர் காலத்திற்குச் சிறிதுமுற்பட்டுப் பெயர் வைத்திருக்கலாம் என்றாலும் கி.மு. 3000 - ஆண்டளவில் அரப்பன் பண்பாடு அரும்பிய காலத்திலே சிந்துவெளியில் சிவன், ஆடவல்லான், பசுபதி, உமாதேவி போன்ற சைவத் தெய்வங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. இன்று அந்தத் தெய்வ உருவங்கள் பொறித்த முத்திரைகளும், தாயத்துகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. ஆதிகாலத் தமிழர் வழிபட்ட செம்பொருளாகிய சிவத்திற்கு சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் இறையோன், கடவுள், பெரியோன் என்ற பெயர்கள் கூறப் பெற்றுள்ளன. நுதல் வழி நாட்டத் திறைவன், என மணிமேகலையிலும் கடவுள் என புறநானூற்றிலும் பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிலப்பதிகாரத்திலும் செம்பொருள் என்று திருக்குறளிலும் கூறப் பெற்றுள்ளன. பல அறிஞர்கள் ஈசன், கண்ணுதற் பெருங்கடவுள், முக்கண்ணன், வேலன், சூலன், சடையன், முக்கட் கடவுள், மங்கைபங்கன், முழுமுதற்கடவுள் என்றெல்லாம் கூறிவந்துள்ளனர். மேலும் சிவன், சியன், சிபா, சியோன், எல், எல்சடை, விரிசடை, அல், இல், ஒல் பால், (பகல்) ஆண்பில் அசுர், அத்தாத், டயோனிச, மர்தூக் நன்னர், தங்கள் என்ற பெயர்களில் பல்வேறு நாடுகளில் சிவபெருமான் வழிபடப்பட்டுள்ளார். அவர் காளை மீது நிற்பதும், அவர் கையில் திரிசூலம் தாங்கி நிற்பதும் அவர் சிவன் என்பதை உறுதிப்படுத்தும் சிவ வழிபாட்டைத் தொடர்ந்து உமாதேவி வழிபாடும் நந்தி வழிபாடும் சிவலிங்க வழிபாடும் பல நாடுகளில் பரவி உள்ளன. நிற்க, மக்கள் தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலே தெய்வ வழிபாட்டைத் தொடங்கிவிட்டனர். பழங்கற்காலத்திலே ஆல மரத்தின் அடியில் ஒரு சிறிய குரடு எழுப்பி அதில் ஒரு கல்லை நாட்டி வழிபடத் தொடங்கிவிட்டனர். ஒரு சிறிய கடுகு போன்ற வித்தினின்று முளைத்துக் கிளைத்து பன்னூறு பேர் தங்கக் கூடிய பெரிய மரத்தின் கீழ் தங்கள் தெய்வ உருவங்களை வைத்து வழிபடும் இடமாகக் கொண்டனர். தமிழர்களின் முன்னோர்கள் ஆதியில் இறைவனைக் கல்லால மரத்தின் கீழ் கண்டனர் என்பது தமிழர்களின் ஐதீகம்; நம்பிக்கை; உறுதி. தமிழர்களின் தெய்வ வழிபாடு முதன் முதலாக ஆலமரத்தின் அடியினின்று அரும்பியது என்று அனுமானிக்கப்படுகிறது. மகேந்திரமலையில் சிவபெருமான் தட்சணாமூர்த்தியாய் அதாவது தென்முகக் கடவுளாய், குருமூர்த்தமாய் கல் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகர், சனாந்தரர், சனற்குமாரர், ஆகிய நான்கு தமிழ் முனிவர்களுக்கு நான்மறைகளை அருளினார் என்று தமிழர்களின் சமயநூற்கள் கூறுகின்றன. அதனால் சிவபெருமானை ஆலமர் கடவுள் என்று இன்றும் போற்றி வருகின்றார்கள். நமது திருவாசகத்தில் மாணிக்கவாசகர், நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறம் உரைத்தான் காணேடி என்று கூறியுள்ளார். தேவாரத்தில் அப்பர், கல்லால நிழல் மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்று எல்லாஅறனுரையும் இன்னருளால் சொல்லினான் என்றும் கூறியுள்ளார். இவை நமக்கு நல்ல சான்றாக இருக்கிறது. மேலும் மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் - என்ற திருவாக்கு அதை உறுதிப்படுத்துகிறது. ஆலமரம், தமிழர்களின் உள்ளத்திற்கு உகந்ததாயும் கருத்தைக் கவர்ந்ததாயும் இருந்தது. அணுப் போன்ற ஒரு சிறிய கடுகுபோன்ற விதையினின்று எழுந்த ஒரு நீண்ட பரந்த பெரிய மரம் தன் நீண்ட கிளைகளைத் தாங்க இடை இடையே விழுது விட்டு நிலத்தைத் தொட்டு, வேர்விட்டுள்ளது. பெரிய பந்தலைத் தாங்க இடை இடையே தூண்கள் நட்டியது போல் விழுதுகள் வேர்விட்டு மரம் எவ்வளவு பெரிதாகப் படர்ந்தாலும் கிளைகள் நொடிந்து விழாமல் தாங்கி நிற்பதையும் பன்னூறு மக்கள் அதன் அடியில் தங்கி அதன் நிழலை நுகர்ந்தும் பழத்தைத் தின்று மகிழ்வதையும் தமிழர்கள் கண்டு வியந்தனர். ஆலமரத்தையும் அதன் பயனையும் அறிந்து அதனைப் புனித மரமாக எண்ணிப் போற்றினர். ஆல மரத்தின் அடியில் மண்ணைக் குவித்து மேடாக்கி அதைச் சமதளமாகச் செய்து, அந்தச் சமதளமாக உள்ள குரட்டின் நடுவில் ஒரு முக்கோண வடிவிலான கல்லையோ, அல்லது நீண்ட மரக்கட்டையையோ, நட்டு வழிபட்டு வந்தனர். முக்கோண வடிவமான கல் தாயின் சின்னமாகவும், நீண்ட மரக் கொம்பு தந்தையின் சின்னமாகவும் கருதப்பட்டது. உலகில் முதலில் தாய் ஆட்சியும் தாய் வழிபாடும் நிலவியது. அப்பால் தந்தை ஆட்சியும் தந்தைத் தெய்வ வழிபாடும் நிலவியது என்று பல சமூக இயல் நூலை உணர்ந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஊர் தோறும் ஆலமரத்தின் அடியில் திருஉருவம் அமைத்து வழிபடும் ஒரு மரபு தமிழகத்தில் எழுந்தது. இந்த வழிபடும் இடம் பொது இல் எனப்பட்டது. அப்பால் அது அம்பலமாக மாறியது. அம்பலத்தில் தெய்வத் திருஉருவம் இடம்பெற்றது. அம்பலத்தில் தெய்வம் உறையும் தறியாகிய தூண் ஒன்று நடப்பட்டது. நீராடித் தூய்மை யுடையோராய் மகளிர் அம்பலத்தை அடைந்து மெழுகி, கோலமிட்டு, நந்தா விளக்கேற்றி மலர் தூவி போற்றி வழிபட்டு வந்தனர். பின்னர் பகைவர்கள் ஊரினின்று சிறைபிடித்து வந்த மகளிரையும் இந்த வழிபாட்டில் ஈடுபடச் செய்தனர். ஊருக்குப் புதியவர்கள் வந்தால் அம்பலத்தில் தங்குவதும் உண்டு. பட்டினப்பாலை என்னும் பழம் பெரும் சங்க நூல் அடியில் வருமாறு கூறுகிறது. கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப்பலர் தொழ வம்பலர் சேர்க்கும் கந்துடைப் பொதியில் - இப்பாட்டிற்கு நச்சினார்க் கினியர், பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த மகளிர் பலரும், நீருண்ணுந் துறையிலே சென்று முழுகி, மெழுகும் வழக்கத்தினையும் அவர்கள் அந்தி காலத்தே கொழுத்தின அவியாத விளக்கத்தினையும் நறுமணம் நாறும் நல்ல பூக்களையும் சூட்டிய தறியினையுடைய அம்பலம் என்று கூறுகிறார். கந்து தெய்வம் உறையும் தறியாகும். வம்பலர் சேர்க்கும் பொதியில் புதியவர்கள் பலரும் ஏறித் தொழுவதற்கும் தங்குவதற்கும் உரிய இடமாயிற்று பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்ப மகளிரை வைத்தார். அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதினர் என்று விரிவுரை தரப்பட்டது. இவ்வாறு தமிழர்கள் ஊர் தோறும் ஆலமரத்தின் அடியில் கந்தினை வைத்து வழிபட்டு வந்தனர். ஆலமரத்தின் அடியில் கந்து வைத்து வழிபடும் இடம் ஆலமுற்றம் எனப்பேர் பெற்றது. ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கண் செல்வம் ஆலமுற்றம் கவின் பெறத் தை இய பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர் - எனப் புறநானூற்றுச் செய்யுள் புகழ்கிறது. ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் வேல்கெழு குரிசில்கண் டேன்ஆகலின் என்ற புறநானூற்றுச் செய்யுளும் ஆலமரத்தின் அடியில் அரனாரின் திரு உருவை வைத்து வழிபடுவது பண்டைக் காலத் தமிழர் மரபு என்பதை நன்கு புலப்படுகிறது. ஆதிகாலத்தில் தமிழர்கள் ஆலமரத்தின் அடியில் கந்துவை வைத்து வழிபட்ட வழக்கம் நீண்ட காலமாக அவர்கள் குமுகாயத்தை விட்டு அகலவில்லை. ஆலமரங்கள் இல்லாத ஊரில் தங்கள் ஊரில் உள்ள வேறு மரங்களின் அடியில் தெய்வ உருவங் களை வைத்து வழிபட்டு வந்தனர். தமிழர் குமுகாயம் வளர்ச்சி பெற்று கோயில்கள் கட்டி அதன் உள்ளே தெய்வ உருவங்களை வைத்து வழிபடும் நாகரிகம் எழுந்த காலத்தும் அவர்கள் ஆதிகாலத்தில் தெய்வ உருவங்களை வைத்து வழிபட்ட மரத்தை மறக்கவில்லை. அதை தல விருட்சமாகக் கொண்டு கோயிலுள் அதற்கு ஒரு சிறப்பான இடம் அளித்துள்ளனர். திருப்புத்தூரில் தலவிருட்சம் கொன்றை, அகத்தியான் பள்ளியில் தல விருட்சம் வன்னிமரம், திருவாடானையில் தல விருட்சம் வில்வமரம், திருஆமர்த்தூரில் தல விருட்சம் வன்னி மரம், திருஆனைக்காவில் தல விருட்சம் வெண்ணாவல், திருகள் என்றும் ஊரின் தல விருட்சம் பாரிசாதம், சிக்கல் என்னும் ஊரின் தலவிருட்சம் மல்லிகை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தலவிருட்சம் மூங்கில், திருக்குற்றாலத்தில் தலவிருட்சம் பலாமரம்; திருவீழிமிழலையில் தல விருட்சம் வீழிச் செடி; மதுரையில் தல விருட்சம் கடப்பமரம்; திருப்பாதிரிப் புலியூரில் தல விருட்சம் பாதிரி மரம், திருப்புகலூரில் தல விருட்சம் புன்னைமரம்; திருமழபாடியில் தலவிருட்சம் பனைமரம்; திருநெல்லிக்காவில் தலவிருட்சம் நெல்லிமரம்; இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மரம் தல விருட்சமாக உள்ளது. இது திருக்கோயில் எழுமுன் ஆதியில் மரத்தின் கீழ் தெய்வ உருவம் வைத்து வழிபடப்பட்டது என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. ஆலமும் கடம்பும், நல்யாற்று நடுவும் கால் வழக் கறுநிலைக் குன்றமும் என்ற பரிபாடல் செய்யுளும், காடும் காவும் கவின் பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங்கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையும் என்ற திருமுருகாற்றுப் பாடலும் முற்காலத்தில் மரங்களின் அடியில் காடுகளிலும் மேடுகளிலும், ஆற்றங்கரைகளிலும், குளக்கரை களிலும், கடற்கரைகளிலும் குன்றுகளிலும், மன்றுகளிலும் தெய்வ உருவங்கள் வைத்து வழிபடப்பட்டு வந்தன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. பெரிய நாகரிகம் எழுந்த இக்காலத்தும் பெரும்பாலான தெய்வத்திரு உருவங்கள் மரங்களின் அடியிலே இருந்து வருகின்றன. பெரும்பாலும் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று பிள்ளையார் உருவங்கள் இருக்கும். அவைகள் பெரும்பாலும் வேம்பு, அரசு மரங்கள் அடியிலே இருந்து வருகின்றன. சில ஊர்களில்தான் பிள்ளையார் கோயிலில் இடம் பெற்றுள்ளார். இஃதன்றி தமிழ் நாட்டில் பல தாய்த் தெய்வங்கள் உள்ளன. அவைகள் பெரும்பாலும் நான்கு புறமும் சுவர் எழுப்பப் பெற்று மேலே சட்டமும் விட்டமும் வைத்து மல்லுக் கைகள் வைத்து ஓடுகள் வேய்ந்த கூரைக் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இன்றும் சிற்றூர்களிலும், ஏன்? பேரூர்களிலும் சில தாய்த் தெய்வங்களுக்கு அடி பெருத்தும் நுனி சிறுத்தும் சதுரத் தூண் வடிவில் 4, 5 அடிமுதல் 8 வரை மண்ணால் கட்டப் பெற்றோ, அல்லது செங்கற்களால் கட்டப்பெற்றோ மேலே சுண்ணச்சாந்து பூசப்பெற்ற பீடங்கள் உள்ளன. சில பீடங்களில் தெய்வ உருவங்களும் பலவித வண்ணத்தில் தீட்டப் பெற்றுள்ளன. ஆதிகாலத்தில் ஒன்று அல்லது நான்கு ஐந்து ஆக இருந்த தெய்வங்கள் பலவாகி ஆயிரக்கணக்கான கோயில்களைப் பெற்றுள்ளன. இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூல்கள் 1. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் - சாமி சிதம்பரனார் - சென்னை 1961. 2. தொல்காப்பியம் - கழக வெளியீடு. 3. தொல்காப்பியப் பொருளதிகார உரை. கா. சுப்பிரமணிய பிள்ளை M.A., M.L., 4. இராமாயணம் - கம்பன் 5. The History of the Aryan rule in India E.B. Havell 6. Hinduism - Baba Govinda Das 7. Burried Empire - Patric empire 8. Comparative grammar of Dravidian Language - R. Caldwell 1913. 9. Mohenjo - Daro and the Indus civilization Sir. John Marshall Vol. I. 10. திருவாசகம் - மாணிக்கவாசகர். 11. தேவாரம் - திருநாவுக்கரசர். 12. புறம் நானூறு - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு 13. பரிபாடல் - உ. வே. சாமிநாத ஐயர் பதிப்பு 1946. 14. திருமுருகாற்றுப்படை - ஆறுமுக நாவலர். 1909 15. பன்னிரு திருமுறை வரலாறு. க. வெள்ளை வாரணன் அண்ணாமலைநகர் 1961. கட்டிடக் கலை கவின் கலைகளில் கட்டிடக் கலை ஒன்று. கட்டிடக் கலையைவிட, மக்களுக்கு இன்றியமையாத கலை எதுவும் இல்லை. மக்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வெய்யில் மழை, காற்று இன்னோரன்ன இயற்கையின் கோபத்திற்குத் தப்புவிக்க மனிதன் உறையுளை உருவாக்கினான். முற்காலத்தில் இல்லங்கள் மக்களைக் கொடிய விலங்குகளின் பசிக்கு தப்பும் அரண்களாவும் விளங்கின. ஆதிகாலத்தில் மனிதன் காடுகளில் விலங்குகளின் நடுவே, விலங்குகள் போல் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அக்காலத்தில் உடுக்க உடையும், படுக்கப் பாயும் உண்ண உணவும், ஒண்டக் குடிசையும் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தான். அவன் உயிரை ஓம்ப உடலைப் பாதுகாக்கத் தலைப்பட்டான். உணவுப் பொருள்களைச் சேகரிக்க முற்பட்டான். விலங்குகளை எதிர்த்து வெட்டவும், மரஞ்செடி கொடிகளைத் துண்டிக்கவும், மரங்களி லுள்ள பழங்களை கீழே வீழ்த்தவும் கற்களைப் பயன்படுத்தவும் முன் வந்தான். கல் அவனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும், சிறப்பிற்கும் நாகரிகத்திற்கும் துணையாக இருந்தது. மக்கள் நாளடைவில் படிப்படியாக நாகரிகம் அடைந்தனர். அறிவு வளர்ச்சி பெற்றனர். வசிக்க வீடும் புசிக்க உணவும் உண்டாக்கிக் கொள்ள உணர்ந்தனர். விலங்கின் ஒரு பிரிவாக வாழ்ந்த மனிதன் அறிவாற்றல் பெற்று நாகரிக வாழ்க்கையை எய்தினான். அவன் நாகரிக வாழ்க்கையை அடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உடை உறையுள் ஆகியவற்றைப் பெற இடைவிடாது முயன்றான் அவனது அரிய முயற்சியின் பயனாய் பலவிதத் தொழில்களை உணர்ந்தான். முதலில் அவன் பயிர்த் தொழிலைத் தொடங்கினான். அப்பால் நூல் நூற்கவும் நெசவு நெய்யவும், வீடு கட்டவும் வழிகண்டான். அவனது பட்டறிவின் பயனாக தொழில்கள் பல நாட்டில் உருப் பெற்றெழுந்தன. ஒரு தொழிலை உணர்ந்து அதை நிறைவான தொழிலாக விளங்கச் செய்வதற்கு மனிதன் பன்னூறு ஆண்டுகளைக் கடக்க நேர்ந்தது உலகில் மனிதன் பல தொழில்களைப் படைத்தான். அவன் தொழில்களைப் படைப்பதற்கு உயர்ந்த கருவிகளை உருவாக்கினான். அவன் கண்ட தொழிலுக்கு இன்றியமையாத உயர்ந்த மூலப்பொருள்களைக் காண பல இடங்களுக்கும் சென்று அலைந்து திரிந்துள்ளான். அப்பால் அவன் அரிதிற் கண்ட தொழில்களை எளிதாக முடிக்கவும் எழில் பெறச் செய்யும் முயற்சி செய்தான் அவனது முயற்சியில் அவன் பெரிய வெற்றியை ஈட்டினான். அவனது கைவண்ணம் மெய்வண்ணத்தையும் வென்றது. சிற்பத் தொழிலாளி தெய்வம் போல் உயர்ந்தான். அவன் படைத்த சிற்பப் பொருள்கள் இயற்கையையும் வென்றன. அவன் தெய்வத்தை யும் விஞ்சி விட்டான் என்று புலவர்கள் புகழ் மாலை சூட்டினர். மனிதன் ஆதியில் உணவுப் பொருளைச் சுட்டுத்தின்னத் தொடங்கினான். அப்பால் அதை நெய்யிலிட்டு வதக்கிச் சாப்பிடவும், உப்பு, புளி, மிளகு முதலியவற்றைச் சேர்த்து அறுசுவையுடன் உண்ணவும் தெரிந்தான். அவன் மெல்லிய நூலை நூற்கவும், அழகிய ஆடைகளை நெய்யவும், துணிகளுக்கு சிவப்பு, மஞ்சள், கருப்பு, நீலம், ஊதா போன்ற எண்ணிலா வண்ணங்களை ஊட்டவும் வழி கண்டான். ஆடைகளில் பறவை, விலங்கு, செடி, கொடி, இலை, பூ, காய் போன்ற உருவங்களைத் தீட்டி எழில் மிகும் உடைகளை அணிய முன் வந்தான். பட்டாடைகளையும், கம்பளி ஆடைகளையும் செய்து அணிந்து அகமகிழ்ந்தான். அவன் ஆதியில் ஓலைக் குடிசைகளைத் தான் கண்டான். அப்பால் மண் சுவர்களை நாற்புறமும் எழுப்பி மேலே ஓலைகளால் கூரை வேய்ந்து அதில் உறைந்தான். பின் மரவீடுகளையும், செங்கல்லும் சுண்ணாம்பும் கலந்து சுவர் எழுப்பி மேலே மரத்தினால் சட்டமும் விட்டமும், மல்லுகளும், பட்டியல்களும் அமைத்து கூரைக்கு ஓடு வேய்ந்தான். பின்னர் சுவர்களின் மீது உத்தரமும், கட்டைகளும் வைத்துக் கட்டி செங்கல்லும் சுண்ணாம்பும் சேர்த்து மேற்றளம் இட்டு மட்டப் பாய் வீடுகளைக் கட்டினான். பிறகு ஒன்றிரண்டு மாடிகளையும் அமைத்தான். வீடுகளில் தூண்களும், பலகணிகளும், நிலைகளும், கதவுகளும், உத்தரமும், கட்டைகளும், பலகைகளும், போதிகைகளும் இடம் பெற்றன. வீடுகள் முற்றம், தாழ்வாரம் பட்டாலை, இரண்டாம் கட்டு, அரங்கு, துயிலிடம், அடுக்களை, பண்டக சாலை, நிலா முற்றம் போன்ற உறுப்புகளைப் பெற்றன. கட்டிடம் சிற்றில்லம், மாளிகை, அரண்மனை, கோயில், களஞ்சியம், அரண் போன்று பலவகையாய் வளர்ச்சியுற்றது. மனிதன் தான் கண்ட எல்லாத் தொழிலிலும் எல்லாத் துறையும் நுண்ணுணர்வைச் செலுத்தி அவைகளை அழகு பெறவும், சுவையுறவும், உறுதி பொலியவும், இனிமை செறியவும் செய்தான். இவற்றை மனிதன் கலை என்று கூறினான். மக்கள் கண்ட உணவு, உடை, உறையுள் போன்றவைகளில் மட்டுமல்ல மருத்துவம், ஓவியம், நாடகம், நாட்டியம், எழுத்து, மொழி, இசை போன்றவை அனைத் திலும் கலையைப் புகுத்தினான். கலை எட்டாக எழுந்து எட்டெட்டாக அறுபத்து நான்காக மலர்ந்து நூற்றெட்டாக உயர்ந்து இன்று ஆயிரத் தெட்டாக வளர்ந்து மேலும் எண்ணற்ற தாக விரிந்துள்ளது. மக்களது அக உணர்ச்சியின் தெளிவான நிலையினின்றே பெருக்கெடுத்து வெளித் தோன்றும் சீரிய கலை உணர்ச்சியின் பயனாகத்தான் உலகம் கண்டு வியந்து போற்றும் உலகில் ஒப்பற்ற சிந்து வெளிப் பண்பாடு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் மலர்ந்தது. அழகுணர்ச்சியின் அரிய நுணுக்கமே அவனி போற்றும் அஜந்தா ஓவியமாக உருப்பெற முடிந்தது. கலையின் நுண்ணிய எழுச்சியே எல்லோராக்குகைச் சிற்பமாக காந்தாரக் கவின் சிற்பமாகத் துளிர்த்தெழுந்தது. தமிழ் நாட்டுச் சிற்பிகளில் கைவண்ணச் சிறப்பே தில்லை ஆட வல்லனாய், நெல்லைக் கூத்தனாய், கோனேரிராசபுரம் அம்பலவாணனாய் எழில் பெற்றிலங்கும்படி செய்தது. சோழ நாட்டு கட்டிடக் கலை வல்லுநர்களின் அளப்பறிய சிற்பச் சிறப்பே தஞ்சைப் பெருவுடையார் கோயிலாக உலகில் ஒப்பற்ற விண்முட்டும் விமானமாய் எழுந்தோங்கும்படி செய்தது. கட்டிடக் கலை மக்கள் கண்டகவின் கலை ஒன்று. அது நன்றான நாகரிகக் கலை என்றும் கூறலாம். கட்டிடக் கலை, மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத ஏற்றமுற்ற எழிற்கலை என்றும் சொல்லலாம். கட்டிடக் கலையில், தொழில் நுட்பம், அழகு, கற்பனை ஆகிய மூன்று உயரிய நிலைகளை ஒருங்கே பெற்ற ஒப்பற்ற கலையாயிற்று. கட்டிடம் கட்டுவதற்கு செங்கல் செய்யும் தொழில், கொத்து வேலை, தச்சுவேலை, இரும்பு வேலை, கட்டிடப் படம் வரையும் வேலை முதலிய தொழில்களின் நுட்பம் தெரிந்திருக்க வேண்டியதாயிற்று கட்டிடம் உறுதியாகவும் உயரமாகவும், விசாலமாகவும் மட்டும் இருந்தாற் போதாது. அதில் வாழ்பவர்களின் வசதிக்கு உரியதாகவும், சுகாதாரத்திற்கு ஏற்றதாகவும் உள்ளத்திற்கு உவகை அளிப்பதாகவும் எழில் நலம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். உறையுள் கட்டிடச் சிற்பமாகச் சிறந்திருக்க வேண்டும் என்றால் அது காண்பவர்களின் கற்பனையைத் தூண்டத் தக்கதாகத் துலங்க வேண்டும். கற்பனை பலவகைகளில் தூண்டப் பெறலாம். சில கட்டிடங்கள் வரலாற்றுத் தொடர்பால் கற்பனையைக் கவரலாம். சில கட்டிடங்கள் அதன் புனிதத் தன்மையால் மக்கள் உள்ளத்தைக் கவரக் கூடும். கற்பனையைத் தூண்டக் கூடிய கட்டிடங்களையெல்லாம் கட்டிட சிற்பம் என்று கூற முடியாது. கவர்ச்சி அழகின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். கட்டிடம் சிறிதாகவோ, பெரிதாகவோ, புதிதாகவோ, பழையதாகவோ, குள்ளமாகவோ, உயரமாகவோ-எப்படியும் இருக்கலாம். ஆனால் அது அழகு அமைந்ததாய் சிற்ப நுட்பம் செறிவதாய் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அது கட்டிட சிற்பம் என்று அழைக்கப்படும். அழகு என்பது கற்பனையை தூண்டும் வேலைப்பாட்டைக் குறிப்பதாகும். ஒரு நாட்டுக் கட்டிடச் சிற்பக் கலை வளர்ச்சிக்கு மூலதாரமாய் அமைந்துள்ளது அவர்கள் சமயங்களாகும். அவை கட்டிடக் கலை வளர்ச்சிக்கு அடி கோலியது பொன்னே போல் போற்றி வளர்த்தது. மேலும் அது சிறப்பாகக் கோயில் கட்டிடக் கலையைப் பேணிவளர்த்தது. சமயம் வளர்த்த கோயில்கள், படிமக்கலைக்கு உறைவிடமாய் இருந்தன. கோயில்கள், இசை, நாடகம், நாட்டியம், கணிதம், உணவு, அணிகலன், திருவிளக்கு, ஆடைகள், கல்வெட்டு, செப்பேடுகள், இசைக் கருவிகள், வெள்ளி, செம்புப் பாத்திரங்கள், ஓவியம் இன்னோரன்ன எண்ணிலாக் கலைகளையும் வளர்த்தன. அவற்றை கலைப் பொருள்களைக்காக்கும் கலை அரண்கள் என்று கூறினும் சாலப் பொருந்தும். இந்தியக் கட்டிடக் கலை ஆய்வுத் துறை வல்லுநராக மதிக்கப்படும் அறிஞர் திரு. பெர்கூசன் அவர்கள், கடவுள் வழிபாட்டிற்காகக் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆர்வமே எல்லோரும் வியந்து போற்றும் கட்டிடங்கள் தோன்றுவதற்கு மூலாதாரமாய் இருந்தது என்று கூறியது ஆழ்ந்த கருத்துடையதாகும். இறைவன் உறைவதற்கு ஏற்ற இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் கலை வளர்ச்சிக்கு இன்றியமையாத கருப்பொருளை உண்டாக்கியது. அந்த மாபெரும் நோக்கத்தின் தூண்டுதல் எண்ணிலாக் கோயில்களை எழுப்பியது. மன்னர்களும் மக்களும் கவின் பெறும் கலைக் கோயில்களை உருவாக்கினர். எனவே கோயில், எல்லாக் கட்டிடங்களையும் விட கவினுறும் வனப்புள்ளதாய், என்றும் பொன்றாத உறுதியுள்ளதாய் உலகம் வியக்கும் உயர்ந்த நிலையில் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டில், சோழப் பேரரசன் கோச்செங்கணான் எழுபது மாடக் கோயில்களை எடுப்பித்தான். இராசராசன் உலகில் உயர்ந்த விமானத்தையுடைய தஞ்சைப் பெருவுடையர் கோயிலை எடுப்பித்தான். இது பக்தியின் சின்னம். மொகலாய மன்னன் ஷாஜகான் தன் மனைவியின் நினைவாக உலகிலே விலையுயர்ந்த அழகிய மணி மாளிகையாக மதிக்கப் பெறும் தாஜ்மகாலை எழுப்பினான். இது காதலின் சின்னம். இரண்டும் இந்தியக் கட்டிடக் கலையின் கண் எனக் கருதப்படுபவை. உலகிலே பக்தியும் காதலும் உலகில் உயர்ந்த கட்டிடக் கலைகளை எழுப்புவதற்கு அடிப்படையாய் இருந்தன என்பது நன்கு தெரிய வருகிறது. தமிழ் நாட்டு மன்னர்கள் சம்பந்தபட்ட மட்டில் அவர்களின் அரண்மனைகள் என்று கூறத்தக்கவைகள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் எழுப்பிய கோயில்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அழியாது நிலைத்து நிற்கின்றன. நமது மாமன்னர்கள் தங்களுக்கு உயர்ந்த அரண்மனையை அமைத்திருந்தனர்களா? சின்னஞ் சிறு கல்லில் வாழ்ந்திருந்தனரா என்ற ஐயப்பாட்டைக் கூட எழுப்புவதாக உள்ளது. அது எவ்வாறாயினும் இருக்கட்டும், அவர்கள் தங்களுக் கென்று விலையுயர்ந்த கோயில்களை (அரண்மனைகளை) அமைப்பதை விட இறைவனுக்கென்று கோயில் அமைப்பதிலும், அவை என்றும் நிலைத்து நிற்பதிலும் அது உலகம் உள்ளளவும் இருந்து எப்பொழுதும் பூசை, நைவேத்தியங்கள் நடைபெறுவதிலும் அதிக அக்கரை கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் கோயில்களுக்கு அளித்த நிபந்தங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் நன்கு எடுத்துக்காட்டுபவையாக உள்ளன. உலகிலே இந்தியாவில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன. அதிலும் என்றும் அழியாத கற்கோயில்கள் உயரிய சிற்பங்களை யுடைய அழகிய கோயில்கள் உண்டென்று எல்லா நாட்டறிஞர்கள் கருதுகின்றார்கள். உலகிலே உயர்ந்த கட்டிடங்களையும், திருக்கோயில்களை யும், அரண்களையும் அமைக்கும் பண்பும் மரபும் திறனும் திராவிட இனத்திற்கே உண்டு. உலகிலே எந்த நாட்டிலாயினும் ஆயிரம் ஆண்டிற்கு முன் உள்ள கட்டிடங்கள் இருக்கிறது என்று கூறப்பெற்றால் அது நிச்சயம் திராவிடர்களால் அல்லது அவர்களது இரத்த சம்பந்தமான உறவினர்களால் எடுப்பிக்கப்பட்டதாக இருக்கும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது தந்தையார் திரு.வடி. அருணாசலக்கவிராயர் அவர்கள் கூறினார்கள். அன்று அவர்கள் கூறிய கூற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று அவர்களது வார்த்தையில் 100க்கு 100 சதவிகிதம் உண்மையிருக்கிறது என்று நம்புகிறேன். கவின் பெறும் கட்டிடம் எது? சிறந்த கலை எது? மக்களுக்கு இன்றியமையாத பணி எது? என்பது காலத்திற்குக் காலம் மாறு படும். நாட்டிற்கு நாடு மாறுபடும். இனத்திற்கு இனம் வேறுபடும். மக்களின் எண்ணம், நோக்கம், அழகுணர்ச்சி அவர்களின் அறிவு வளர்ச்சி, பொருளாதார நிலை, தட்ப வெப்ப நிலை, கிடைக்கக் கூடிய பொருள்கள் நாகரிகம் போன்றவை கட்டிடச் சிற்பத்தின் அமைப்பை, தரத்தை நிர்ணயம் செய்யத் துணையாய் இருந்து வந்துள்ளன. பண்டைக் காலத்திய எகிப்திய நாட்டு மக்களின் வாழ்க்கை அறிவுலகம் என்றும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாய் அமைந்துள்ளது. ஒரு புறம் கொடிய கோர நிலையையுடைய பாலைவனம். மற்றொரு பக்கம் எங்கும் பசுமையை பரப்பி எழில் தரும் செடி கொடி களையும், கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களையும், திரண்ட காய்களையும், பழுத்துத் தொங்கும் இனிய பழக் குலைகளையும், உயர்ந்த உணவுப் பொருளான வாற் கோதுமை வயல்களை பிற வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை செழித்து வளரச்செய்யும் Ús(Neela) நீல ஆற்றங்கரைகளில் உள்ள ஊர்களிலும் அதை அடுத்துள்ள நகர்களிலும் சிற்றூர் களிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் திராவிட இனத்தின் நெருங்கிய உறவினர்கள். அதை அவர்கள் சமயமும், தெய்வங்களும், மொழியும் பண்பாடும் வரலாறும் கலைகளும் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் சாவிற்கு அஞ்சியதில்லை. மரணம் ஒரு முடிவான நிலை என்று நம்பியதில்லை. உயிர் உடலை விட்டுப் பிரிவது உண்மை. ஆனால் அது உயிரின் இறுதிநிலை அல்ல. சாவு உயிர்களுக்கு எழும் ஒரு மாற்று நிகழ்ச்சியைத் தவிற வேறல்ல. ஒருவனுடைய உயிர் உடலை விட்டு நீங்கிய பின் - அதாவது இவ்வுலகைத் துறந்தபின் வேறு உலகிற் சென்று எல்லா வாழ்க்கை நலத்தையும் பெற்று இன்புற்று வாழ்ந்து வரும் என்பது பண்டைய எகிப்திய மக்களின் நம்பிக்கை. எனவே அவர்கள் உயிர்துறந்த பின்னரும் உடலை கெடாதவாறு மருந்திட்டு பெட்டிகளில் வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருள்களை யெல்லாம் வைத்து புதைத்து சமாதி எழுப்பினர். அன்று அவர்கள் எழுப்பிய சமாதிகளின் கோபுரங்களே (பிரமிடுகளே) கோயில்களாக மலர்ந்தன. நிலையான பேறும் உறுதியும் எகிப்திய மக்களின் குறிக்கோளாக இருந்தன. அவர்கள் திராவிடர்களைப் போல் பெரிய கல் தூண்கள் விட்டு, கல் உத்தரங் களை வைத்து பெரிய கட்டிடங்களை எழுப்பினர். அவர்கள் நாட்டில் தகுதியான கற்கள் கிடைக்கவில்லை. வெளிநாடு களினின்று மிகுந்த சிரமப்பட்டு கற்களைக் கொண்டு கல்லாலான சமாதிக் கோபுரங்களை எடுப்பித்தனர். சாவக நாட்டிலுள்ள பெருங்கோயில்கள் அனைத்தும் மன்னர்களின் சமாதிகளின் மீதே எடுப்பிக்கப் பெற்றுள்ளது; தமிழ் நாட்டிலுள்ள பல பழைய கோயில்கள் சித்தர்கள் சமாதியின் மீது எடுப்பிக்கப் பெற்றவை என்று இன்னின்ன சித்தர்கள் சமாதியின் இன்னின்ன ஊர்க் கோயில் எழுப்பப் பெற்றுள்ளன என்றும் சில அறிஞர்கள் விளக்கந் தந்துள்ளனர். இதன் மூலம் எகிப்திய நாகரிகம், திராவிட மரபை அடிப்படையாகக் கொண்டது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது எனத் தெரியவருகிறது. கிரேக்கர்கள் இயற்கை எழிலும், எண்ணற்ற வளமும் வாய்ந்த நாட்டில் வாழ்ந்த மக்கள். அழகும், உண்மையும் கிரேக்கர்களின் பண்பாட்டில் இருகண்களாக நிலவின. அவர்கள் கலைகளில் அழகும் மெய்யும் இணைந்து ஏற்றமுற்று இலங்கின. அவர்கள் நாட்டிற் கிடைத்த சலவைக் கற்களால் கோயில்களையும், கட்டிடங் களையும் அமைத்து கட்டிடக் கலைக்கு சிறப்பூட்டினர். கிரேக்கர் களின் கட்டிடக் கலையிலும், சிலைக்கலைகளிலும் மென்மையும் திண்மையும், நயமும் பொலிவுற்றன. திராவிடர்கள் தெய்வ நம்பிக்கை வாய்ந்தவர்கள். உடலை இறைவன் வாழும் கோயிலாக எண்ணுபவர்கள் இதனை நடமாடுங் கோயில் என்று அவர்கள் மறைநூல்கள் கூறுகின்றன. என்றும் அழியாது நிலை பெற்றிருக்கும் இறைவனுக்கு என்றும் அழியா உறைவிடமாக குகைக் கோயிலையும் குடை வரைக் கோயிலையும் கற்றளிகளையும் அமைத்தவர்கள் ஆண்டவன் அழிவற்றவன் அவன் உறையும் கோயிலும் அழிவற்றது என்று உலகிற்கு மெய்ப் பித்தவர்கள். கல்லால் அடிப்படையும், தளமும், சுவர்களும், தூண்களும், உத்தரமும், பாவு கல்லும் கொண்டு கோயில் அமைத்தவர்கள். உலகம் அழியினும் தான் அழியாது நிற்கும் தனித் தன்மை பெற்ற தங்கள் இறைவனை வழிபட நிலையான கோயில்களை உருவாக்கியவர்கள் திராவிடர்கள் என்று உலகக் கோயில் வரலாற்றில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். திராவிட மக்கள் படைத்த விண்முட்டும் விமானங்களும், முகிலளாவும் கோபுரங்களும் திராவிடர்களின் உயர்ந்த கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரு உயரிய சின்னம் போல் திகழ்கின்றன. உலகில், மக்கள் வாழும் பல்வேறு பகுதிகளிலும் தொன்மை யான காலத்திலே தனித்தனியே கட்டிடக் கலை எழுந்துள்ளது. அது அன்றையச் சூழ்நிலைகளுக்கேற்பவும், மக்களின் தேவைகளுக் கேற்பவும் வளர்ந்துள்ளது. பழங்கால கட்டிடங்கள், அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், அவற்றின் அழிபாடுகள் அம்மக்களின் அறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, சமயம் முதலியவற்றை அறிந்து கொள்ளத் துணையாக இருக்கின்றன. ஆதிகாலக் கட்டிடக் கலையிலும் இடைக்காலக் கட்டிடக் கலையும், கட்டிடக் கலைச் சிற்பமும் அழகும், உறுதியும் உள்ளவை களாய்த் திகழ்கின்றன. அரசர்களும், நிலக்கிழார்களும், வணிகர் களும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்தனர். என்றாலும் கலை வளர்ப்பதிலும் கண்ணோட்டம் செலுத்துபவர்களாய் இருந்தனர். அரசர்களின் ஆதரவைப் பெற்று சிற்பிகள் தங்கள் கல்வி அறிவை யும் கலை அறிவையும், கற்பனைத் திறனையும் பயன்படுத்தி சிறந்த கட்டிடங்களையும், ஒப்பற்ற ஓவியங்களையும், சீரிய சிலைகளை யும், பாவங்கள் ஒளிரும் படிமங்களையும் படைத்து தெய்வம் உறையும் திருக்கோயில்களையும் அரசன் வாழும் அரண்மனை களையும் அழகு பொலிய அமைத்துள்ளனர். இது நிலக்கிழார்கள் தங்களின் பிரபுத்துவ நிலையை என்றும் நிலை பெற்று நிற்கச் செய்த தந்திரம் என்பர் சிலர் முற்போக்கு எழுத்தாளர்கள். இன்று, உலகில் உள்ள எல்லா நாடுகளும் அண்மையில் உள்ள நாடுகளைப் போல் நெருங்கித் தொடர்பு கொள்ளத் தொடங்கி யுள்ளன. ஒளியையும் ஒலியையும் விட வேகமாகச் செல்லும் விண்ணூர்தி சிலமணி நேரங்களில் உலகைச் சுற்றி வருகின்றது. ஒருவாரத்திற்குள் திங்களை அடைகின்றன. சில திங்களுக்குள், செவ்வாய், புதன், வியாழன் போன்ற கோள்களை அடைகின்றன. அங்குள்ள நிலைகளைப் பூமியில் உள்ள மக்களுக்கு உணர்த்து கின்றன. உலகம் அனைத்திற்கும் பொதுவான காங்கிரிட் போன்ற கட்டிடப் பொருள்கள் பயன்படுகின்றன. சிற்பம், ஓவியம் போன்ற கலையணிகள் நிறைந்த கவினுறும் கட்டிடங்கள் எங்கும் எழுப்பப் பெறுகின்றன. மக்கள் வாழ்க்கையில் எழுந்துள்ள கல்வி, குடியிருப்பு, அரசாட்சி முதலியவைகளுக்கு ஏற்ப கட்டிடங்கள் உறுதியாகவும், வசதியாகவும், அழகாகவும் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆதியில் அரும்பியது தெய்வ திரு உருவங்கள் தான். தெய்வத் திரு உருவங்கள் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டு களுக்குப் பின்னர் திருக் கோயில்கள் எழவில்லை. ஆனால் தெய்வத் திரு உருவங்களை பெரிய மரங்களின் அடியில் வைத்தே வழிபட்டு வந்தனர். பெரியார் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் (முன்னாள் இந்து அறநிலையப் பாதுகாவற் கழகத்தின் ஆணையாளர்) இந்தியாவோ சமயத்தைக் கொண்டது ஆனால் தமிழ்நாடோ சமயத்திலும், சமய நிலையங்களைச் சிறந்த குறிக்கோளாகக் கொண்டு விளங்குகிறது வேறு நாட்டு அறிஞர்கள் எவர் இந்த நாட்டிற்கு வந்த போதிலும் இங்குள்ள சமய நிலையங்களைக் கண்டு மகிழ்ந்து வியந்து எழுதாதார் இல்லை. ஆகவே தமிழ் மக்கள் சமய நிலையங்களுக்கு வளர்ச்சி தந்து அவைகளைச் சீரிய முறையில் வைக்கப்படுவதையே குறிக் கோளாகக் கொண்டிருந்தார்கள் என்பதில் ஐயமில்லை சமய உணர்ச்சி எப்போது ஏற்பட்டது என்று சொல்ல இயலாது என்று எடுத்துக் காட்டியுள்ளார். மக்கள் இனத்தில் சமய உணர்ச்சி அவர்கள் கற்கால மக்களாய் இருக்கும் காலத்திலே துளிர்த்து விட்டது. தாயே ஆதியில் தன்னைப் பெற்றவளாய் காப்பவளாய் அரசியாய், மருத்துவச்சியாய், பாதுகாக்கும் தன்னலமற்ற கடவுளாய்க் காணப்பட்டாள். அவள் இறந்த இடத்தில் நடுகல் நாட்டி அவளை வழிபடத் தொடங்கினான் அப்பால் தந்தைக்கும், பெருஞ்சித்தர்களுக்கும், நினைவுகல் கட்டி வழிபடத் தொடங்கினோம். நீண்டநாட்களுக்குப் பிறகே நம்மைப் போல நமது சமூகத் தலைவர்களின் மாளிகையைப் போல் இறுதியாய் நமது அரசனின் அரண்மனையைப் போல் நாம் வழிபடும் தெய்வ உருவங்களுக்கு கட்டிடம் எழுப்பத் தொடங்கி னோம். நகரம், நியமம், கோட்டம், பள்ளி, ஆலயம் என்ற பதங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டன. கோயில் என்னும் பதம் கோ + இல் எனப் பிரித்து அரசன் வீடு என்னும் பொருளில் பயன்படுத்தி அப்பால் இறைவன் உறையும் இடத்திற்கே நிலையான பெயராக நிலைத்து நிற்கச் செய்து விட்டோம். ஒரு காலத்தில் மன்னனைக் கடவுளாக, அல்லது கடவுளின் அவதாரமாக எண்ணிய காலத்தில் அவன் உறையும் இடத்தைக் கோயில் என்று பயன்படுத்தியது தவறல்ல. அப்பால் மக்கள் அறிவு முதிர்ச்சியின் பயனாக மன்னன் தெய்வமாக முடியாது அவன் உறையும் இடம் தேவ கோட்டமாக தெய்வ உறையுள்ளாகவோ ஆக முடியாது என்ற எண்ணம் பிறக்கவே இறைவன் உறையும் இல்லம் கோயிலாகவும் அரசன் உறையும் மனை அரண்மனையாகவும் நிலைபெற்று விட்டது. இறைவனுக்கு எழிலார்ந்த இல்லங்களை அமைத்தது மிகத் தொன்மையான ஏற்பாடு. ஆதியில் மக்கள் அக நாழிகையை மட்டுமே அமைத்தார்கள். மக்கள் இறை உருவத்திற்கே இல்லம் கண்டார்களே யொழிய மக்கள் வெயிலுக்கும், காற்றிற்கும், வெப்பத்திற்கும், மழைக்கும் கோயிலோடு சேர்த்து இடம் அமைக்க வில்லை - அமைப்பது கூடாது என்றும் எண்ணினர். நமது கோயில்களின் அடிப்படையிலே சாஞ்சி, காஞ்சி, சாரநாத், பூரி போன்ற இடங்களில் பௌத்தர்கள் அக நாழிகையை மட்டும் அமைத்துள்ளார்கள். மெசபொத்தாமியா, எகிப்து, கிரீட் கிரீசு, உரோம், பாரசீகம், பெரு, மெக்சிக்கோ, ஆப்பிரிக்கா, சீனம் முதலிய நாடுகளில் நிலவி மங்கி மறைந்துபோன மதங்கள் சுமார் இருபது இருக்கலாம். இன்று உயிருடன் நிலவும் இந்து சமயம், பௌத்த சமயம், இலாமிய மதம், கிறித்துவ மதம், யூத மதம், சொராஷ்டடிரிய மதம், சிண்டே சமயம், கன்பூசிய மதம் டோவோ மதம், ஜைனசமயம் ஆகிய பத்து மதங்களைச் சிறப்பாகக் கூறலாம். இலாமிய சமயம் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் யூத கிறித்தவ சமயத்தின் அடிப்படையில் எழுந்த வயதில் குறைந்த சமயம், கி.மு. 1980-ஆண்டிற்கு முன் பிறந்த கிறித்துவின் வழியை யொட்டி எழுந்த சமயம் இலாமிய நெறிக்கு முன் தோன்றிய மதம், மற்றைய மதங்கள் எதுவாய் இருந்தாலும் இன்றைக்கு 2500 -ம் ஆண்டிற்கு முற்பட்டவைகளே. இறைவனை வழிபடும் இடங்கள் என்னும் பொருளில் எல்லா மதங்களுக்கும் கோயில்கள் எடுப்பித்து அவற்றின் அமைப்பு காலத்திற்கும் இடத்திற்கும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப வளர்ந்துள்ளது. பண்டு தொட்டு இன்று வரை உலகனைத்தும் கோயில் எழுந்துள்ளதற்குக் காரணம் சமய உணர்ச்சி மக்களிடம் எப்பொழுதும் ஏதோ ஓரளவில் இருந்து வந்ததே என்பதில் ஐயமில்லை. அஞ்சியாயினும், அன்புபட்டாயினும் நெஞ்சம்! வாழி, நினை நின்றியூரை நீ என நமக்கு அறிவுறுத்தியுள்ளார் ஆளுடைய பிள்ளையார். முதலில் ஆதிகால மக்கள் தாய்க்கும், தாய்த் தெய்வத்திற்கும் ஏன்? அம்மையப்பனுக்கும் அஞ்சி வழிபட்ட மக்களேயாவர். நம் கண்ணிற்குப் புலப்படாது அணுவினுக்கும் அணுவாய் நிலவும் அறிவுடைய பெருஞ்சக்தியென்றும் பெரும்பாலும் அதற்கடங்கி நடந்து தம் முட்பொருது கொண்டிருக்கும் வேறு சிறு சக்திகள் தேவதைகள் பலவும் உண்டென்றும் அவையெல்லாம் மக்கள் வாழ்க்கையில் கலந்து கொண்டு நன்மை தீமை முதலியவற்றை நல்கும் தன்மை வாய்ந்தன என்றும் அவற்றையெல்லாம் நாம் வழிபட்டால் அவை நம்மைத் துன்புறுத்தாது என்று மக்கள் நம்பி வாழ்க்கையை நடத்தினார்கள். பண்டைக் கால மக்கள் வழிபட்ட தாய்த் தெய்வங்கள் தந்தைத் தெய்வங்கள், கண்ணன் தெய்வம் மகன் தெய்வம் போன்றவை படிப்படியாய் உயர்ந்தன. மேட்டிற்கும் மலைக்கும், விண்ணிற்குமாக உயர்ந்தன. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், முதலிய கோள்களாகவும், நெருப்பு, நிலம், நீர் காற்று, ஆகாயம் மட்டுமின்றி இடி, மழை முதலியவைகளும் தெய்வங்களாயின. இவற்றைத் தெய்வங்களாகக் கொண்டு இவற்றிற்கு உயிர் பலி இடுதல் பைபிளில் கூறும் ஆதாம் காலத்தில் இருந்து இன்று வரை எல்லா மதங்களும் பல்வேறு பெயரில் பெரும் வழக்காய் இருந்து வந்தது என்பது உறுதியாகும். பழங்காலத்தில் நமது சமயங்களில் இருந்த மூதாதையர்கள் ஆடுமாடு குதிரை ஒட்டகம் கோழி முதலியவற்றை மட்டுமின்றி மனித உயிர்களையும் பலியிட்டு வந்தார்கள். அந்த வழக்கம் இன்று கூட முற்றாக நிறுத்தப்படவில்லை. தாம் உண்ணும் காய்கறிப் பொருளையும் தம் கடவுளுக்குப் படைத்ததுண்டு. இப்படி பலி, வேள்வி செய்யும் பொழுது தாம் வழிபடும் தெய்வத்தைப் போற்றி புகழ்ந்து தம் குறைகளைக் கூறுவதுண்டு. உண்மையை உரைப்பதானால் இன்று கோயிலில் இருக்கும் பலிபீடம் கேரளத்தில் பலிக்கல் என்ற பெயரில் இருப்பவைகள் அனைத்தும் ஆதிகாலத்தில் உயிர்களைப் பலியிட்ட இடமேயாகும். இன்று உயிர்ப்பலி சைவர்கள் கோயிலில் மட்டுமல்ல கத்தோலிக்க கிறித்தவர்கள் கோயில்களிலும் பலிப்பீடங்கள் உள்ளன. ஆனால் உயிர்ப்பலி செய்வதில்லை. ஆனால் சைவ சமய அறிவர்கள் பலிப்பீடங்கள், மனிதன் இறைவன் சந்நிதிக்குப் போகும் முன் தன் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களை விட்டுவிட்டு (அகற்றி) புனிதமான உள்ளத்தோடு செல்க என்பதை நினைவூட்டுவதற்கு வைத்திருக்கிறது என்று தத்துவக் கருத்துக்கள் கூறுவது போல் கிறிதவர்களும் கூறுகிறார்களாம். ஆனால் ஆதிமனிதனாகிய ஆதாம்-ஏவாள் என்பவர்கள் மக்கள் இருவர் இருந்தார்கள் அவர்களில் ஒருவன் காபயர் காயீன் அவன் விவசாயி, மற்றவன் ஆடுமாடுகளை மேய்ப்பவன். இவ்விருவர்களில் ஆடுமேய்ப்பவன் கடவுளுக்கு (கர்த்தருக்கு) ஆடு மாடுகளைப் பலியிட்டு வந்தான். கடவுள் அவன் மீது பிரியமாக இருந்தார். அவனுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து வந்தார். மூத்தவனாகிய காயீன் வேளாண்மை செய்பவன் அவன் கடவுளுக்கு அப்பம், பழம், காய்கனி கிழங்கு முதலியவைகளைப் படைத்து வழி பட்டு வந்தான். கடவுள் (தேவன்) அவன் மேல் பிரியமாக இல்லை. எனவே அவன் கோபமும் பொறாமையும் கொண்டவனாக ஆபேல் என்னும் தம்பியை வெட்டிக் கொன்று விட்டான். இதனைப் பைபிள் என்னும் கிறித்தவத் திருமறை எடுத்துக் காட்டுகிறது. ஆபிரகாம் தன்மகனைப் பலியிட அழைத்துச் சென்றதும் கடவுள் அதைத் தடுத்ததும் பின் அவன் அண்மையில் நின்ற ஆட்டைப் பலியிட்டதும் தெளிவாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிதவர்கள் இன்று பலிபீடம் வைத்திருக்கிறார்கள். பலி இடுவதில்லை என்றாலும் அவர்களின் கடவுளாகிய எகோவா ஆடு மாடு, முதலிய பலிகளை விரும்பி ஏற்றுக் கொண்டதோடு மனிதப் பலியையும் ஏற்றுக் கொண்டிருக் கிறார் என்று சான்று காட்ட முடியும். இன்று சிவன் கோயில்களிலும் பல தாய்த் தெய்வங்களின் பலிபீடம் உண்டு பலி இடுவதில்லை. அப்பர் சாமி காலத்திற்கு பின் சிவபெருமானுக்கு ஆடுமாடு, எருமை கோழி முதலியவைகள் பலியிட்டதுண்டு சிவபெருமான் தன் பக்தர்களிடம் பிள்ளைக்கறி கேட்ட கதையும் உண்டு. பல கோயில்களிலும் தேர் இழுக்கும் போது கோழிக்குஞ்சியைப் பட்டதுண்டு. வீடுகட்டி முடிந்ததும் தச்சுக் கழித்தல் என்னும் பெயரால் ஆட்டை பலியிட்டு அதன் உதிரத்தை வீட்டில் தெளிப்பதும் உண்டு. இறந்த உயிர்களுக்கு கோழிக்குஞ்சை சப்பரத்தில் (பாடையில்) கட்டிக் கொண்டு போய் பலியிட்டு அதை வண்ணார்கள் எடுத்துக் கொள்வதும் உண்டு. இதனை மறையாது சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை யவர்கள் B.A.B.T முதல் முதல் மனிதன் வழிபட கோவிலா இருந்தது. இப்பணி மேடையே இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் இயற்கை வளம் செறிந்ததோர் பக்கத்தில் செழித்துத் தழைத்து வளர்ந்த மரத்தடியில் பலிப்பீடம் அமைக்கப்பட்டிருந்தது.1 கடவுள் அங்கெழுந்தருளி தன்னை வழிபடுவோர் தரும் பலிகளையும் செய்யும் தோத்திரங்களையும் ஏற்று கொள்கின்றார் என்னும் நம்பிக்கை வலுத்ததும் அப்பாறை இருந்த இடத்திற்கே பெரும் மதிப்பேற்பட்டு விட்டது. குறித்த நாட்களில் அம்மேடைக்கும் சென்று பலியிட்டுப் போற்றி வரம் வேண்டும் போது மட்டுமின்றி அம்மேடையைக் காண நேர்ந்த போதெல்லாம் கடவுளை நினைத்து வணங்கி செல்வதும் இயல்பாயிற்று. நெடுங்காலம் வரையில் இப்பலிமேடையைத் தவிர வேறு கோயில்கள் எவையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பின்பு மனிதன் தன் கருத்துகளைப் பருப் பொருளாக வெளியிடுவதற்கு முயன்றபோது தான் கண்ட பொருள்களின் உருவங்களை வரையத் தலைப்பட்டான் சித்திரம் இவ்வாறு தோன்றியது. பின்பு புறக்கண்ணாற் காணப் பெறாத மனக் கண்ணாற் கண்ட காட்சி களையும் உருவங்களையும் சித்தரிக்கலானான். நாளடைவில் இவ்வடிவங்களை மண்ணிலும் மரத்திலும் கல்லிலும் பன்னாட் களுக்குப் பின் உலோகங்களிலும் செய்யும் திறமையும் வழக்கும் பெருகின. இப்படிக் கடவுளை வழிபடுவதற்கு ஏற்பட்ட பருவுருவங் களைப் பண்டைய மனிதன் பலி மேடைக் கெதிரில் எழுந்தருளப் பண்ணினான். இவற்றுள் மிகவும் பழையது அனற் கொழுந்து வடிவாயுள்ள சிவலிங்கமே என்று கருத இடமுண்டு எங்ஙன மென்று சிறிது காண்பாம். ஞாயிறு, திங்கள் தீ முதலிய இயற்கைப் பெரும் பொருள்களைத் தனித்தனி தேவதைகளாய்க் கொண்டு வணங்கிய மக்கள் நாளடைவில் அறிவு பெருக அவருட் சிறந்தோர் அவற்றிலுள்ள நலமும் வலியுமெல்லாம் ஒரே இறைவனுடைய தென்று கண்டனர். அப்போது அவற்றை இறைவனது மாபெரும்மேனிகளாக விளக்க நிலையங்களாகக் கருதி வழிபடத் தலைப்பட்டார்கள் அவற்றுள் தீயானது மக்கள் கைக்கெட்டுவதாய் அவர்களால் வளர்க்கக் கூடியதான போது அவ்வனற் பிழம்பை சிறப்பு வகையில் ஆண்டவன் திருமேனியாகக் கொண்டு போற்றும் வழக்கம் பெருகிற்று. கொற்கைத் தீயானது நெய்யும் விறகும் கொண்டு ஓம்பப்பட்ட போதன்றித் தோன்றாது. அன்றியும் மனிதன் தன் அன்பின் அறிகுறியாக அவ்வனற் கொழுந்திற்கு நீராடலும் ஆடை சந்த மணிமலர் புனைதலும் இயலாவன்றே? ஆதலின் அவ்வனற் பிழம்புருவத்தை கல்லில் அமைத்து வணங்கும் வழக்கம் தோன்றியது. இவ்விலிங்க வழிபாடு பண்டைய மெக்சிக்கோ, எகிப்து, அராபியா முதலிய வெளிநாடுகளில் இருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. நமது நாட்டில் இப்பண்டைய வழிபாடு இமயம் முதல் குமரி வரையில் இன்றளவும் காணக் கிடக்கின்றது அறிஞர்கள் இவ்விலிங்கத்தின் கண் தத்துவம் கடந்த தனி முதற் பொருளாங் கந்தழியை வழிபடுகின்றனர். மற்றையோரிற் பலர் ஒரு மரத்தின் கீழ் கல்லிலோ மண்ணிலோ இவ்விலிங்க வடிவைச் சமைத்து தம் இஷ்ட தெய்வத்தை அதனில் வருவித்து வணங்குதல் இன்றும் கண் கூடாயுள்ளது. மிகவும் பண்டையதான சிவலிங்க வழிபாட்டுடன் கை கால் முதலிய உறுப்புகள் பொருந்திய பல்வேறு உருவங்களை வைத்துச் செய்யும் வழிபாடுகள் பின்னாற்பல்கின இவற்றை விரிக்கிற் பெருகும். இவ்வாறெல்லாம் உருவ வழிபாடு பெருகி வருகையில் அளப்பரும் பெருமையுடைய ஆண்டவன் வதிதற்குத்தக்க சிறப்பமைந்த கோயில் வேண்டும் என்னும் விருப்பமும் முயற்சியும் தோன்றின. அரசனில்லத்தினும் பார்க்க ஆண்டவன் உறையுள் சீரினும் சிறப்பினும் விஞ்சி விளங்க வேண்டும் என்னும் ஆர்வம் பெருகிற்று. இவ்வாறு கோயில்கள் உலகெங்கும் தோன்றிப் பெரும் பொலிவோடு நிலவலாயின என்று சைவ சித்தாந்த சமயத்தை பிரசுரிக்க எழுந்த செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் ஏட்டில் உண்மையை மறைக்காது வெளியிட்டுள்ளார்.1 கோயில்கள் எப்படித் தோன்றியது. உருவ வழிபாடு எப்படித் தோன்றியது. எக்காலத் தோன்றியது என்ற ஆராய்ச்சி தமிழர்களுக்கு எழுந்ததே இல்லை. அதோடு தாம் அறிந்த உண்மையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணமும் எழுந்ததே இல்லை. சைவ சமயத்தைப் பரப்ப எழுந்த கழகங்களும் நூற்பதிப்புக் கழகங்களும், திங்கள் இதழ்களும் நமது கோயில்களைப் பற்றி நூல் எழுத முன் வந்ததே இல்லை. பெர்சி பிரவுண், சோவியத் துப்ரயல், டெல்லா கிராம்ரிஷ் போன்ற மேனாட்டறிஞர் நூல்களைப் பரப்பவோ அல்லது தமிழாக்கம் செய்து வெளியிடவோ இது வரை முன் வரவில்லை. தேவாரம், திருவாசகம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற நூற்களையும் வெளியிட்டு காசு சம்பாதிப்பதிலே கண்ணும் கருத்தாக இதுவரை இருந்து வந்துள்ளனர். உலகமெங்கணும் தமிழர்கள் சென்று ஆங்காங்கே அகழ் ஆய்வு செய்து தமிழர்களும் அவர்களின் முன்னோர்களான திராவிடர்களும் உபைதியா, எல்லம், அசிரியா, அக்கேடியா, சுமேரியா, எகிப்து, கிரீட் முதலிய இடங்களுக்கும் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, சாவகம், பாலித்தீவு போன்ற இடங்களுக் கெல்லாம் சென்று பலப்பல பெரிய கோயில்களையும் திரு உருவங் களையும் செய்து சிவனெறியைப் பரப்பிய செய்திகளை அயல்நாட்டு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி களையும், நூற்களையும் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சிறிதும் அவர்கள் எண்ணியதில்லை. சிந்து வெளியில் சைவ நன்மக்கள் எழுப்பிய சிறந்த நாகரிகத்தைப் பற்றி எத்தனை நூற்கள் வெளிவந்துள்ளன. சிந்து வெளி மக்கள் எழுதிய எழுத்துக்களைப் படிக்க கோபன் கேகன் அறிஞர்களும் லெனின் கிராட் பல்கலைக் கழகமும் எண்ணற்ற அறிஞர்களைக் கொண்டு லட்சம் லட்சமாக பொற்காசுகளைச் செலவிட்டு ஆய்வு செய்து வெளியிட்டு வருவதில் நமது தமிழ் நாட்டு சைவசித்தாந்தக் கழகமோ சமயப் பிரசாரக் கழகமோ, திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமோ, அகில இந்திய அண்ணா தி.மு.க நிறுவனமோ கடுகளவும் கவலைப்பட்டதுண்டா? இதற்கு ஒரு செலவுக் காசும் செலவிட்ட துண்டா? தமிழ் நாட்டில் தமிழர் பெயரால் எழுந்துள்ள அரசியல் நிறுவனங்களும், சமய நிறுவனங்களும் தம் வயிற்றாத்திறத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தேடுவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறதே ஒழிய தமிழ் இனத்தின் நலனை நாடியதே இல்லை. இன்றல்லாவிடினும் விரைவில் தமிழ் மக்கள் உண்மையை உணர்ந்து இவர்களிடம் கணக்குக் கேட்க முன் வருவார்கள் என்பது உறுதி. அப்பொழுது கா. சு. பிள்ளைக்கு கல்லெடுத்தேன், அண்ணாவிற்குச் சமாதி கட்டி மலர்மாலை சூட்டி தூப தீபங்காட்டினேன், அண்ணா பெயரை அகில இந்தியா முழுவதும் பரப்பி அவர் சிலைக்கு மாலை சூட்டினேன் என்று கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழகத்திலே சைவ சமயத்தைக் காப்பதற்கு எழுந்த மடங்களோ, அல்லது பக்தர்களோ நமது தமிழர்களுக்கு கோயிலைப் பற்றியோ, சிலைகளைப் பற்றியோ செப்பு உருவங் களைப் பற்றியோ நல்ல நூற்கள் ஆங்கிலத்திலோ வெளியிடவில்லை. நமது நாட்டைச் சேர்ந்த காஷ்மீரத்தில் வளர்ந்துள்ள சைவ நெறியைப் பற்றியோ, சாவகம், பாலி, கம்போசகம் முதலிய நாட்டில் சைவ சமயிகள் கட்டிய கோயில்களைப் பற்றியோ ஒரு நூலும் எழுத எண்ணியதே இல்லை. சால்டிய நாட்டில் 5000-ம் ஆண்டுகட்கு முன் ஒரு பெருங்கோயில் எழுந்தது. மெசபொத்தாமியாவில் முகோ என்னும் அகழ் ஆய்வில் நன்னர் என்ற சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் சுடுமண் செங்கற்களாலானது கீழ் இருந்து மேலே ஒவ்வொரு பிரகாரமும் பரப்பிற் குறைந்ததாய் ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றாவது மேடையில் உச்சியில் ஒரு அக நாழிகை உள்ளது அதன் முன் பலிமேடையாக ஒரு கற்பாறை உள்ளது. கோயிலின் சுவர்களில் வெளிப்புறம் பளபளப்பான நீல வண்ணத்தில் எனாமல் ஓடுகள் பதிப்பிக்கப் பெற்றுள்ளது உட்புறம் மரப்பலகைகள் அடிக்கப் பெற்றுள்ளது. இவற்றின் இடை இடையே பளிங்குக் கற்களும் பொன்னும் மணியும் கொண்டு செய்த அரிய சிற்பங்கள் பல உள. இது திராவிடர்கள் கட்டிய பெருங்கோயில் என்று மேனாட்டறிஞர்கள் கூறுகின்றார்கள். அடியிலிருந்து மேலேயுள்ள அக நாழிகை வரை படிகள் உள்ளன. வட அமெரிக்காவில் கொலாடோ என்னும் ஆற்றங்கரையில் உள்ள குன்றின் மீதுள்ள சிவன் கோயில் 1937-ஆம் ஆண்டு அமெரிக்கத் தொல் பொருள் ஆய்வினர் கண்டுபிடித்து இந்தக் கோயில் 10-ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்று முடிவு கட்டினர். இது இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்தது. தமிழனுக்கு தெரியாது. தேவாரம் பாடிக் கொண்டு இருக்கும் சிவ பக்தனோ, பெரிய புராணம் படித்தால் சிவலோகம் கிட்டும்என்று நாடோறும் சிவநேயச் செல்வர்களுக்கே தெரியாது தெரிந்தாலும் அங்கு போய் பார்க்கவோ நமது மக்களுக்கு இதைப் பற்றி விளக்கிக் கூறவோ அவசியம் இல்லாமல் போகிறது. அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர் சிவபெருமான் எங்கள் தெய்வம். அவன் செவ்விந்தியனாக இருப்பதால் இந்தியர்கள் கூட அவனை இன்று வரை மீனாட்சி, உமா தேவி முதலிய சிவன் மனைவியைக் கருப்பி என்று கூறுவதைப் போல் சிவனை கருப்பன் என்று கூறத் தைரியம் பிறக்கவில்லை. இந்தியர்கள் சிவனை தீ வண்ணன், செவ்வண்ணன், செய்யோன், செஞ்சடையோன் என்றெல்லாம் கூறி சிவபெருமான் வட அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியன் என்றும், அவன் இமயமலை மீதுள்ள இந்திய அரசனாகிய தக்கன் மகளாகிய பார்வதியையும், தென் இந்தியாவில் உள்ள பரத்தியாகிய மீனாட்சியையும் மணந்து கொண்டான் என்றும் சிவன் அமெரிக்க செவ்விந்தியர்களிடமிருந்து இரவலாகப் பெற்ற தெய்வம் என்று கூறுகின்றனர்.1 எகிப்து நாட்டின் தலைநகராகிய கெய்ரோவிற்கு அண்மையில் உள்ள கீஜா என்னும் இடத்தில் பிங்க் கோயில் ஒன்றுள்ளது. இது 5000-ம் ஆண்டுகட்கு குறைந்ததன்று. கருங்கல் எளிதில் அகப்படாத சால்டியா நாட்டுக் கோயில் போலன்றி எகிப்தில் எளிதில் கிடைக்கும் இக்கோயில் கருங்கல்லால் கட்டப் பெற்றது. இங்குள்ள மண்டபம் 55 அடி நீளமுள்ளது. சிற்ப வேலைப்பாடு சிறிதுமற்ற சதுரத் தூணாலானது. தூண்கள் இரண்டு வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. கி.மு.1600 ஆண்டிலிருந்து தான் எகிப்தில் பெருங்கோயில்கள் எழுந்தன. அப்பு சிமபல் என்னும் இடத்தில் 150-அடி நீளமும் 100 - அடி உயரமும் உள்ள கோயில் பாறையைக் குடைந்து செய்யப்பட்டுள்ளது. எகிப்திய நாட்டில் முற்காலத்தில் தமிழர்கள் குடியேறி அங்கு கோயில்களை எழுப்பினர். அங்கு தெய்வ உருவத்தை பலரும் எளிதில் காண முடியாத வகையில் வழிபடும் முறைகள் அமைக்கப்பட்டிருந்தனவாம். எகிப்தில் சிவ வழிபாடும் காளை வழிபாடும் இருந்தது. இஃதன்றி காளை முகமும் மனித உடலும் உடைய அதிகார நந்தி (Apis) வழிபாடும் இருந்தது . கிட்டை நாட்டில் உள்ள கோயிலில் நந்தியும் அதன் மீது சிவபெருமான் நின்று கொண்டு கையில் மழுவும் சுத்தியலும் திரிசூலமும் தாங்கி நிற்பது போன்ற உருவங்கள் இருந்தன என்று பல ஆசிரியர்கள் தம் நூற்களில் குறிப்பிட்டுள்ளனர். அந்நாட்டின் கோயில்கள் நமது நாட்டின் திருக்கோயிலோடு ஒப்புவமைகாட்டி ஒரு ஆய்வு நூலை எழுத சைவ சித்தாந்திகளோ அவர்கள் சமயமோ, மடமோ நூல் வெளியீட்டுக் கழகமோ எண்ணியதே இல்லை. தெருவில் கிடக்கும் ஒரு உடைந்த கல்லை எடுத்து வைத்துக் கொண்டு சிவ சிவ என்று தலையில் தட்டுவதும் கன்னத்தில் போட்டுக் கொள்வதும் கோயில் கட்டுவதற்கு தனக்கு வேண்டியவர் செல்வர்கள் மடாதிபதிகள் காலில் வீழ்ந்து கெஞ்சி பொருள் திரட்டுவதும் பெரிய திருப்பணியாக நினைக்கிறார். இருக்கிற எண்ணற்ற கோயில்கள் செப்பனிட வழியற்று சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும் போது உடைந்து தெருவில் கிடக்கும் ஒரு கல்லை சிவலிங்கம் ஒன்று கூறி கும்பிடுவதும் கோயில் கட்ட மக்களிடம் பணம் கேட்பதும் வெட்கமான செயல். முதலில் கும்பிடுவதற்கு ஆட்களைத் திரட்டு அப்பால் ஒரு சிறு கோயிலைக் கட்டு. சைவ நன்மக்கள் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி படிக்க வழியின்றி, படித்தவர்களுக்கு வேலையின்றித் திண்டாடும் பொழுது தெருவில் கிடந்த கல்லுக்கு சிவலிங்கம் என்று பெயர் சொல்லி ஆயிரக்கணக்கான பொருளைப் பொது மக்களிடம் திரட்ட முயற்சிப்பதா? இது அறமா? இந்தக் கோயிலிக்கு சிவன் வருவானா? கோயில்கள் எல்லாம் குச்சுக் காரிகள் வீட்டிற்குச் சமம் என்றார் காந்தி அடிகள். கோயில்கள் கள்ளர்களின் குகைகள் என்றார் ஏசுநாதர். எனவே இக்கால மக்களுக்கு முதலில் கோயில் என்றால் என்ன? சமயம் என்றால் என்ன? நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பவற்றினை விளக்கி நமது இளம் வாலிபர்களை, உனது கைப்பணத்தை வீட்டு கோயிலுக்கு வரச் செய். நமது சமூக மக்கள் ஒன்று சேர, நமது சமய பொருளாதார முன்னேற்றம் பெற கால்துட்டும் செலவழியாது ஏமாற்றி வாழும் ஒருசிலர், கூரையேறி கோழி பிடிக்க இயலாத குருக்கள் வானத்தைக் கீறிவைகுந்தம் காட்டப் போவது போல் இப்பொழுது தன்னலத்திற்காக திருப்பணி செய்ய முன் வந்துள்ளார்கள். இவர்கள் திருப்பணி ஒழிக! ஒழிக! என்று கூறி விட்டு நாம் உலகில் உள்ள நமது கோயில்களையும், நமது நாட்டு கோயில்களைபற்றி ஆராய்வோம்; அழிந்து கொண்டிருக்கும் கோயில்களைப் பாதுகாப்போம் கலைக் கருவூலமாக சிற்ப மணிகளாய் மூலை முடுக்குகளில்அழிந்து வீழ்ந்து கொண்டு இருக்கும் திருக்கோயில்களைப் பழுது பார்க்கவும் நமது கோயில்களையும் சிலைகளையும் செம்புப்படிமங்களையும் பாதுகாக்க முன் வரவேண்டும். தமிழ் மக்களை வணங்கி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் இதன் உண்மையறியாத மக்கள் ஓய்வு பெற்ற காலத்தில் மோட்சம் போக எண்ணி பிறர் பொருளைப் பயனற்ற வழிகளுக்காகப் பயன்படுத்துவதில் முனைய வேண்டாம். தான் மோட்சம் போக வேண்டும் என்றால் தன் சொந்தப் பொருளைச் செலவிட்டுக் கோயில் கட்டட்டும். அல்லது தனது வீட்டையே கோயிலாக மாற்றட்டும். அதை வரவேற்கின்றோம் வாழ்த்துகின்றோம். காந்தி அடிகள், ஒருவனுக்கு 2 வேட்டிகள் தேவை 4,6,18 வேட்டிகள் வைத்துக் கொண்டால் இது திருட்டுத்தனம். 4 வேட்டிகள் வைத்திருப்பவன் திருடன் 6 வேட்டிகள் வைத்திருப்பவன் கொள்ளைக்காரன் 8 வேட்டிகள் வைத்திருப்பவன் தீவட்டிக் கொள்ளைக்காரன் என்றார் என்பதை எனது தமிழ்ச் சகோதரர் களுக்கும் சகோதரிகளுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நிற்க கிரேட்டா (Crete) என்னும் இத்தாலி நாட்டிற்கு அண்மையில் உள்ள தீவு பண்டையத் தமிழர்களுடைய குடியேற்ற நாடு. ஹெரட்டோட்ட என்னும் பழம் பெரும் வரலாற்றாசிரியர் கிரேட்டா மக்கள் தமிழர் (தமிழ்) எனப்பட்டார் என்று கூறியுள்ளார். கிரேட்டா நாகரிகம் சிந்து வெளி நாகரிகத்தோடு மிக நெருங்கிய ஒருமைப்பாடுடையது. கிரேட்டா மக்கள் மீனவர்கள் எனப் பெற்றனர். சிந்து வெளி எழுத்தும் கிரேட்டா எழுத்தும் ஒன்று போலக் காணப்படுகிறது. கிரேட்டா நகரில் உள்ள ஒரு நகரிற்கு சிவன் என்று பெயர். கிரேட்டாவில் சிந்து வெளியில் கட்டெடுத்ததைப் போன்ற பல பழம் பொருளும் அந்நாட்டு மினோன் அரண்மனை யும் (Palace of Minon) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு சிவ வழிபாடும் சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1 இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. History of Architecture - James Fergusson. 2. Architecture - A.L.N. Russel. 3. Architecture - Sir I.G. Jackson 4. Seven Lamps of Architecture - Ruskin 5. The Substance of Architecture - A.S.G. Butter. 6. India and Pacific world - Kaalidas Nay 7. Origin and Spread of Tamïls - V.R. Ramachandra Iyer M.A (Madras) 1971. 8. The Arts and Crafts of Travancore - Dr. Stella Kramrisch (London) 1948 9. Egypt and syria - sir J. William Dawson C.M.G.LL.D FRS (London) 1892 10. தேவாரம் - திருநாவுக்கரசு நாயனார். 11. அகநானூறு 167 (கடியலூர் உருத்திரங் கண்ணனார்) 12. திருவாசகம் - மாணிக்கவாசகர். 13. தொல்காப்பியம் - கழக வெளியிடு. சென்னை 1953 14. செயற்கை நலம் - சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார். 1950. (சென்னை) 15. சிவன் - ந. சி. கந்தையா பிள்ளை (சென்னை) 1907 Ed 1,1947 Reprint 1958,1968. சிந்து வெளி அகழ் ஆய்வு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்திய அறிஞர்களிற் சிலர் இந்தியாவில் தேவர்களும் அரக்கர்களுமே உண்டென்று கூறி வந்தனர். அப்பால் அநாதி காலம் தொட்டு இந்தியாவில் பிராமணர் களும் சூத்திரர்களுமே வாழ்ந்து வருகின்றனர். அப்பால் ஆங்கிலேய வரலாற்றாசிரியர் இந்தியாவில் ஆரியர்களும், திராவிடர்களும் உண்டு. ஆரியர்கள் அழகுவாய்ந்தவர்கள். ஜெர்மன் மக்களும் அவர்கள் மொழியும் ஆரியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாயும் விளம்பரப்படுத்தப்பட்டது. பின்னர் ஆரியர்கள் காண்டிநேவியன் நாட்டிலிருந்து வந்த நாகரி மக்கள். அவர்கள் கருப்பு நிறமும் சப்பை மூக்கையுமுடைய இந்திய நாட்டின் பழங்குடிமக்களை வென்று அவர்களை நாகரிகப் படுத்தியுள்ளனர். அவர்களின் மொழி சமகிருதம், அவர்களின் வேதம் இருக்கு, யசுர், சாமம் அதர்வணம் ஆகியவைகளாகும். சமகிருதத்தினின்றே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் துளு, வங்காளம், மராட்டிரம் அஸாம், பஞ்சாபி முதலிய மொழிகள் அனைத்தும் பிறந்தன. இந்தியாவில் உள்ள எல்லாத் தெய்வங்களையும் கலைகளையும் இந்தியமக்களுக்கு வட மொழி வேதமே வழங்கின என்றெல்லாம் கூறப்பட்டு வந்தன. வேதகாலப் பண்பாட்டிற்கு முன்பு இந்தியாவில் சமயமோ, திருந்திய மொழியோ, எழுத்தோ, பெருந் தெய்வங்களோ, கட்டிடக் கலையோ, சிலையோ, வெண்கலப்படிமங்களோ, இசையோ, இசைக்கருவிகளோ, கோயிலோ, அணிகலன்களோ, இலக்கணங்களோ, இலக்கியங்களோ, ஓவியங்களோ, பிற கலைகளோ, பண்பாடோ எதுவும் கிடையாது. சிவன், பிரம்மா, விஷ்ணு சுப்பிரமணியன், உமாதேவி, சரவதி, லட்சுமி முதலிய தெய்வங்கள் எல்லாம் ஆரியர்களிடமிருந்து திராவிடர்கள் இரவலாகப் பெற்றவைகளே என்று கூறி வந்தனர். இந்தியாவின் வரலாறு கி.மு. 1500-க்கு முற்பட்டதன்று (அதாவது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டதன்று) சில மேனாட்டாசிரியர்கள் கூட எழுதி வந்தனர். 1922-முதல் 1931-ஆம் ஆண்டுவரை சிந்து வெளியில் நடைபெற்ற தொல் பொருள் ஆய்வு இந்திய வரலாற்றின் தொடக்கமும், தொன்மையும், தன்மையும் ஒப்புவமையற்றது என்று உலகிற்கு உணர்த்தியது. சிந்து வெளியில் எழுந்த ஆய்வு இந்திய வரலாற்றில் கவ்விக் கிடந்த இருளை அகற்றும் பேரொளியாய் எழுந்தது. நந்தாப் பெருமை வாய்ந்த சிந்து வெளிப் பண்பாடு உலக வரலாற்றிற்கே ஒரு திருப்பு முனையாக மாறியது. இந்திய வரலாற்றின் இருண்டகாலத்தை ஏற்ற மிகு பொற்காலமாக ஒளிபெறச் செய்துள்ளது. பாரதப் பண்பாட்டின் அடிப்படையாக அமைந்த பண்புகள் அனைத்தும் சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்பியல்புகளே என்றும் வரலாறு கூறும் செய்தி கேட்டு உலகம் வியப்புற்றுள்ளது. சிந்து வெளி வரலாறு இந்தியாவின் தொன்மைக்கு ஓர் அளவுகோல். இந்தியப் பண்பாட்டின் தன்மையை (மாற்றை) உணர்த்தும் உரைகல். திசை தவறிச் செல்லும் மாலுமியை நேர்வழிச் செல்லத் தூண்டும் கலங்கரை விளக்கினைப் போல் தவறான பாதையில் சென்ற வரலாற்றாசிரியர்கள் பழைய இந்தியாவின் மீது வீசும் புதிய ஒளி என்று நேர் வழி செல்லச் செய்துள்ளது. இன்று இந்தியப் பள்ளிச் சிறார்களெல்லாம், சிந்து வெளி நாகரிகம் உலகில் ஒப்பற்ற நாகரிகம். 5000 -ம் ஆண்டிற்கு முன் சிந்து வெளி நாகரிகத்தை சிறந்த நாகரிகம் எங்கும் அரும்பவில்லை. சிந்துவெளி நாகரிகத்தினைப் படைத்தமக்கள் தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்களே. இந்தியாவின் எழுத்தும், சமயமும், மொழியும், கலைகளும், பண்பாடும், நாகரிகமும் சிந்து வெளிப் பண்பாட்டினின்று கிளைத்தவைகளே என்று தெளிவாக உணர்ந்துள்ளார்கள். இப்பொழுது இந்தியாவில் நூல் எழுதுபவர்கள் எவராக இருப்பினும் சிந்துவெளிப் பண்பாட்டை முதல் அத்தியாயமாக வைத்தே நூல் எழுதத் தொடங்கியுள்ளார்கள். சமீபத்தில் வெளிவரும் பல நூல்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். வரலாறு, மொழி, எழுத்து, சமயம், நாட்டியம், இசை, இசைக் கருவி, ஆடை, அணிகலன்கள், நகர் அமைப்பு, மருத்துவம், முதலிய பல துறைகளைப் பற்றி வெளிவந்த நூற்களிலும் சிந்து வெளி முதல் இடம் பெற்றுள்ளது. எனவே திருக்கோயிலைப் பற்றி எழுதப் பெற்ற இந்நூலிலும் உலகக் கட்டிடக் கலையில் தொன்மையான உயர்நிலையைப் பெற்றிருக்கும் சிந்து வெளிக் கட்டிடக் கலையும் இங்கு இடம் பெறுதல் சிறப்புடைத்தாகுமன்றோ? அரப்பாவின் கட்டிடக்கலை அரப்பாவின் கட்டிடக் கலை சிறப்பு மிக்கது. சிந்து வெளி நகரங்களில் மிகத் தொன்மைவாய்ந்த நகர் அரப்பாவாகும். அரப்பாவில் சிறப்பான ஆட்சி கி.மு.3000 -ம் ஆண்டிற்கு முன் எழுந்தது. அது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வேளாண் குடிமக்கள் ஆட்சியாகும். அங்கு அரசர்கள் இருந்தனர். அவர்கள் வேளாளர் மரபில் வந்தவர்கள். அந்த அரசன் கொடி ஏர்க் கொடியாகும். கோயில்களில் உள்ள கொடிகளில் எருது பொறிக்கப் பட்டிருந்தது. சிந்து வெளியில் வேளாளர் (காராளர்) ஆட்சி நிலவியது. அங்கு ஆட்சி புரிந்த வேளாளர் சிவபெருமானை (கயிலை மலையில் வீற்றிருப்பவரை) பசுபதி வடிவிலும், இலிங்க வடிவிலும் வழிபட்டு வந்தனர். அவர்கள் சிவன் கோயிலுக்குத் தென் இந்தியாவைப் போல (தமிழகத்தைப் போல)க் கோயிலுக்கு ஏராளமான வருவாயுள்ள நிலங்களை மானியமாக விட்டிருந்தார்கள். அவர்களில் பகல் வெள்ளாளர் (சூரிய குல வேளாளர், திங்கள் (சந்திர) குல வேளாளர் என்றும் இரு பிரிவினர் இருந்தனர். வேளாளர் குல முடி மன்னர்கள் முடி கொடி, குடை, இணைக் கயல், கட்டில், விளக்கு, முரசு முதலிய அரச சின்னங்களையுடையவர்களாக இருந்தனர். அவர்கள் நடுமலையில் (இமயமலையில்) உள்ள புனித மீனை-அதாவது எண் குணத்தானை (சிவபெருமானையும்) வெள்ளைமலையில் உறைந்த முருகனையும் வழிபட்டு வந்தனர். அங்கு இலிங்கத்தை வழிபடும் வில்லவர்களும், (குறிஞ்சி நில மக்களும் மீனாட்டை ஆண்ட மீனவர்களும் நெய்தல் நில மக்களும்) இருந்தார்கள் என்றும் மீனவர்கள் (பரதவர்கள்) வேளாளர் அரசிற்குத் துணையாக இருந்தார்கள் என்றும் அறிகின்றோம். இதனை ஹிரா அடிகள் தம் கட்டுரைகளில் விளக்கி எழுதியுள்ளார்.1 நகரங்கள் 1920-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் இரவி சட்லெச் ஆறுகளுக்கு இடையில் தோண்டிய பொழுது அரப்பா என்னும் இடம் அகழ்ந்து காணப்பட்டது. இந்த நகரம் சிந்து வெளியில் அகழ்ந்து கண்ட நகரங்களில் மிகத் தொன்மையானது. இது சிந்து வெளியில் நிலவிய ஆட்சியின் தலைநகராக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இந்த நகரம் அகழ்ந்தெடுத்த பொழுது மிகவும் சிதைந்து போன நிலையில் இருந்தது. 1922-ஆம் ஆண்டில் சிந்து மாநிலத்தில் லர்க்கானா மாவட்டத்தில் உள்ள மொகஞ்ச-தாரோ என்னும் நகர் ஆகும். இந்த நகர் 70-அடி உயரமுள்ள மண்மேட்டின் அடியில் புதைந்திருந்தது. இது அரப்பாவை விட சிதைவுறாது நல்ல நிலையிலே உள்ளது. இது சிந்துவெளி ஆட்சியில் அரப்பாவிற்குப் பின் தலை நகராக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது இஃதன்றி சிந்து மாநிலத்திலும், பலுச்சிதான் மாநிலத்திலும் பல ஊர்கள் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகள் குவேட்டா, அமரி, நல் குள்ளிமெகி, சோபு வெளி, சான்கு தாரோ, லொகுஞ்சொ, தாரோ, ரூபார், காளிபங்கன், சக்பூர்பானிசியால், அலிமுராத் பாண்டிவாகி, கோட்சா நிகாங் கான், சுகார், காச்சிசா போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களும் சிற்றூர்களும் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு அகழ்ந்து கண்டெடுத்த வீடுகளும் பொருள்களும் அரப்பா மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் கிடைத்த பொருள்களுக்கும் இடையே சிறு வேறுபாடுகளும் இல்லை. இவை அனைத்தும் சிந்து வெளிப் பண்பாட்டுடன் இணைந்த நகர் அமைப்புகளுடன் இணைந்து காணப்படுகின்றன.1 நகர் அமைப்பு சிந்து வெளியில் அகழ்ந்து கண்ட நகரங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன அரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் எனலாம். இது பண்டையத் திராவிட மக்கள் பெற்றிருந்த நகர் அமைப்புத் திறனை எடுத்துக் காட்டுவதாகும். அரப்பா இரவி ஆற்றங்கரையில் இருந்தது. மொகஞ்சதாரோ சிந்து ஆற்றங்கரையில் இருந்தது. மரக்கலங்களில் விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லவும், மக்களின் போக்குவரத்து வசதிக்குமாக ஆற்றங்கரையில் நகரங்களை அமைத்துள்ளனர். இங்கு வாழ்ந்த உழவர்கள், செம்புக் காலத்தில் அமைத்த இந்தப் பண்பாட்டை ஆற்றங்கரைப் பண்பாடு என்று கூறுகின்றனர். இந்த மாநகர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஒன்றிற்கொன்று வேற்றுமை காணமுடியாதவாறு ஒழுங்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு செம்மையான அடிப்படையில் சீராக அமைக்கப்பட்டுள்ள இம்மாநகர் நேரான தெருக்களையும் வசதியான இல்லங்களையும் பெரிய மாளிகைகளையும், உறுதியான பொதுக் கட்டிடங்களையும் உடையனவாய் எழில் பெற்று விளங்குகின்றன. அரப்பா மொகஞ்சதாரோ உரூபார் முதலிய நகரங்கள் முன் கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு உறுதியான அடிப்படையில் அமைக்கப்பட்ட நகர்களாகக் காணப்படுகின்றன. அரப்பா நல்ல அரணையுடைய பெரும் நகராகக் காணப்படுகின்றது. மொகஞ்சதாரோ அதினும் சிறப்புடைய மாநகராகத் தோன்றுகின்றது. மொகஞ்சதாரோ இன்றைய லங்காசையர் வட்டத்தில் உள்ள பாட்டாளி மக்களின் நகரப்பகுதியினைப் போல காணப்படுகிறது என்று கூறுகிறார் ஒரு ஆங்கில நாட்டு எழுத்தாளர். வீடுகள் அமைப்பு அரப்பாவில் பொதுக் கட்டிடங்கள் ஒருவிதமாகவும் செல்வர்கள் குடியிருக்கும் கட்டிடங்கள் ஒருவிதமாகவும் ஏழை மக்களும், நடுத்தர மக்கள் வாழும் மனைகள் ஒருவிதமாகவும் உள்ளன. செல்வர்கள் வாழும் மாளிகை மாடிகளையுடையனவாயும் பல அறைகள் உள்ளனவாயும் விசாலமானதாயும் உள்ளன. மாளிகையில் விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்குத் தனி அறை உள்ளது. தையலர்கள் இருப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் தனி இடங்கள் இருந்தன. பொதுக் கட்டிடங்களில் வட்ட வடிவமான மேடைகள் உள்ளன. ஏழைகளும், தொழிலாளர்களும் தங்கும் சிறு வீடுகள் ஏழு வீடுகள் இரண்டு வரிசைகளில் ஒன்றாக அமைக்கப் பட்டிருந்தன. இரண்டு வரிசைகட்டும் இடையே குறுகிய பாதை இருந்தது. இரு பாதைகளின் இருபக்கங்களும் பொதுத் தெருக் களில் வந்து கலந்துள்ளன. தொழிலாளர் இல்லங்களில் பெரிய முற்றங்களும் சிறிய அறைகளும் இருந்தன. அரப்பாவில் அமைக்கப்பட்ட இல்லங்கள் கி.மு.3000-க்கும் முற்பட்டன. எகிப்தில் கட்டப்பட்ட இல்லங்கள் கி.மு.2000-க்குப் பிற்பட்டன வாகும். அரப்பாவில் கட்டப்பட்ட சிறு இல்லங்கள் கூட நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாய் சுகாதார நலத்தை எண்ணி அமைக்கப்பட்டன. சுமேரியர், எகிப்தியர் இல்லங்கள் சுகாதார நலன்கள் கவனிக்கப்படாவிடினும் அழகுடையதாய் இருந்தன. இறந்தவர்களுக்காக அங்கு பிரமிட் கோபுரம் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த இல்லங்களும் இருந்தன. அரப்பாவில் சித்திர வேலைப்பாடுகளில் அதிகச் சிரத்தைக் காட்டப்படவில்லை. இறந்தவர்களுக்காகப் பெரிய சமாதிகள் கட்டப்படவில்லை. உயர்ந்த கோயில்கள் கூட கட்டப் பட வில்லை. ஆனால் மக்கள் வாழ்வதற்கேற்ற சுகாதாரமுள்ள வசதியான வீடுகள் பலகணிகள் உள்ளதாய் அமைக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. சிறிய இல்லங்கள் அரப்பாவில் ஏழைகள் வாழும் சிறு இல்லங்களும் செம்மை யாக சுடுமண் செங்கற்களைக் கொண்டு ஒழுங்காகக் கட்டப் பட்டுள்ளது. அவைகள் நன்றாகச் சூளையிலிடப்பட்ட சுடுமண் செங்கற்களால் சிவப்பு நிறமுடையதாக நெடுக்கும் குறுக்குமாய் அடுக்கி உறுதியாகவும் அழகாகவும் இருக்குமாறு கவர்ச்சியாக இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் செல்வர்கள் வீட்டில் மட்டுமின்றி ஏழைகள் வீடுகளிலும் தனிக்கிணறுகள் உள்ளன. பொதுக் கிணறுகள் தெருவிலும் உள்ளன. கிணறுகள் வட்டமாக அமைக்கப்பட்டதால் கிணறுகள் கட்டுவதற்கென்று தனியாக வளைந்த செங்கல்கள் சூளையில் இடப்பட்டு வெந்ததாகப் பார்த்துக் கட்டப்பட்டது. சில இடங்களில் சுண்ணாம்புச் சாந்தினாலும் செங்கல்கள் வைத்துக் கட்டப்பட்ட சுவர்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான வீட்டுச் சுவர்கள் களிமண் சாந்து கொண்டே கட்டப்பட்டிருந்தன. அக்காலத்தில் சிந்து வெளியில் இருந்த குளிர்ந்த தட்ப நிலைக்கு சுடு மண் சுவர்களால் கட்டப்பட்ட வீடுகள் தக்க வெப்பந்தருவனவாய் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரப்பாவில் உள்ள எந்த வீடுகளிலும் மாடிமுன் முகப்பு (Balcony) எங்கும் காணவில்லை. அங்கு வாழ்ந்த செல்வர்களும் வயல்களுக்குப் போய் ஏர் எடுத்து உழுது வந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதற் கேற்ப செல்வர்கள் வீடுகளில் தவறாது ஒரு கலப்பையுள்ளது. மகளிர்கள் கோசா பெண்களாக இல்லை. வட இந்திய இந்துப் பெண்கள் போல் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்படவில்லை. சமூக வாழ்வில் எல்லாத் துறை களிலும் புகுந்து ஆண்களோடு ஒத்துழைத்து சமூகம் உயரப் பாடுபட்டு வந்தனர் என்று தெரிகிறது-ஒவ்வொரு வீட்டிலும் மலங்கழிக்கத் தனியிடம் இருந்தது. மாட மாளிகைகள் அரப்பா பெரிய பரப்பான சம நிலத்தில் அமைக்கப்பட்ட பழம் பெரும் கோநகர். செல்வர்களும், வணிகர்களும், நிலக் கிழார்களும் மன்னர்களும் பெரிய மாட மாளிகைகள் கட்டி சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். மாளிகைகளின் அடிப்படைகள் அகன்றதாய் ஆழம் உள்ளனவாய் நன்கு சூளையிடப்பட்ட சுடுமண் செங்கற்களை மண் சாந்து கலந்து நன்றாக மொங்காள் போட்டு உறுதியான அடையிட்டு அகலமான சுவர்கள் எழுப்பி இரண்டுக்கு மேற்பட்ட மாட மாளிகைகள் உள்ள கட்டிடங்கள் அரப்பாவில் பல காணப்படுகின்றன. ஆனால் சிறிய இல்லங்களில் அடிப்படை இடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அவைகள் உடைந்த ஓடுகள் செங்கற்துண்டுகள் முதலியவற்றை மண் சாந்து கொண்டு கலந்து போட்ட அடிப்படை மீது கட்டப்பட்டுள்ளன. மாளிகைகளின் சுவர்களும், தளங்களும், மூடுசாக்கடைகளும் ஒருவிதக்கல் கொண்டு நன்றாக வழவழப்பாகத் தேய்த்து நீர் அடியில் கசியாவண்ணம் உறுதியாக அமைக்கப்பட்டிருந்தன. தளவரிசையில் இடப்பட்ட கற்கள் தளதளப்பாகவும் உறுதியாகவும் இருந்தன. மாடிப் படிக் கட்டுகள் உறுதியாக அமைக்கப்பட்டிருந்தன. குப்பைத் தொட்டிகள் கழிவு நீர்த் தேக்கங்கள் வாய்க்கால்கள் வடிகால்கள் நல்ல நிலையில் கட்டப்பட்டிருந்தன. இல்லங்கள் தோறும் வட்டவடிவிலான கிணறுகள் உள்ளன. கிணறுகளுக்கு நாற்புறமும் கைபிடிச் சுவரும் கிணற்றினின்று கழிவு நீர் வெளியே செல்வதற்கு சற்றுச் சாய்வான தளமிடப்பட்ட அங்கணமும் உடையதாய் இருந்தன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் மழைநீர் வெளியே சென்று தெருவில் உள்ள மூடுசாக்கடைக்கு செல்லத்தக்கதாய் சிறு கால்வாய் கட்டப்பட்டிருந்தது. கூலக் களஞ்சியம் மொகஞ்சதாரோவை விட அரப்பாவில் அதிகமான கூலக் களஞ்சியங்கள் சாலச் சிறப்புற்றிருந்தன. இவைகள் அணி அணியாய் அடுத்தடுத்து அகலமும் நீளமும் உயரமும் உள்ளதாய் அமைந் திருந்தன. ஒரு கூலக்களஞ்சியம் 168 அடி நீளமும் 13 அடி அகலமும் 58 அடி உயரமும் உடையது. இவற்றின் சுவர் 9 அடி கனம் உள்ளது. இவை இரண்டு வரிசையாய்க் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு வரிசையில் ஒன்றுக் கொன்றுள்ள தொலைவு 23-அடியாகும் இதன் மேலே உறுதியான தளம் - அதாவது மட்டப்பாய் போடப் பட்டிருக்கின்றது. இக்கூலக் களஞ்சியத்தின் இரண்டு வரிசையாக எடுப்பிக்கப் பெற்றிருக்கும் நெடிய சுவர்களுள் ஒவ்வொரு வரிசையிலும் ஆறுமண்டபங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு மண்டபத்தையும் சீராக அமைக்கும் வகையில் ஐந்து இடைகளிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டபங் களிலும் மூன்று நெடுஞ் சுவர்கள் எழுப்பப் பெற்று நான்கு அறை களாகக் பிரிக்கப் பெற்றுள்ளன. அடியில் மரப்பலகைகள் பதிக்கப் பெற்றுள்ளன. இவைகள் கூலப் பொருள்களை (தானிய மணி களை)க் கொட்டி வைப்பதற்கென்றே கட்டி வைக்கப் பெற்றதாய்க் காணப்படுகின்றன. இவைகள் அரசாங்கப் பண்டக சாலைகள் போலக் காணப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு நிலச்சுவான்தார் களும் ஏராளமான நிலங்களை உடையவர்களாய் சிற்றரசர்கள் போல் வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. அரசுக்கு வரியாக இந்த நிலச் சுவான்தார்கள் பணம் கொடாது கூலப் பொருள்களையே அளந்து கொடுத்திருக்க வேண்டும் என்று அறிஞர்களால் கருதப்படுகிறது.1 இவற்றிற்கு ஈடான களஞ்சியம் உலகில் எங்கும் எவரும் கண்டதில்லை என்று கருதப்படுகிறது. மொகஞ்சதாரோ மொகஞ்சதாரோ என்ற பெயர் ஆதிகாலத்தில் சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் இட்ட பெயர் அல்ல, இந்தப் பகுதியில் உள்ள மக்கள், இப்பொழுது இம்மாவட்ட மொழியில் மொகஞ்சதாரோ (mohenjo-daro) - மறைந்தோர் மண்மேடு என்னும் பொருள்படும் முறையில் பெயரிட்டு அழைத்தனர். இந்நகர் 5000- ம் ஆண்டு முன் அடிப்படை இட்டு கட்டப்பட்ட கோ நகர் ஆகும். முதல் கோ நகர் அரப்பா. அரப்பா தலைநகராக இருப்பதில் பல இடையூறு இருக்கிறது என்றோ அல்லது அது அழிபாடுற்ற தென்றோ மொகஞ்சதாரோவை தலைநகர்ஆக எழுப்பி இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. மொகஞ்சதாரோ நகர் கட்டப்பட்ட இடம் மிகப் பரந்த சமவெளி ஆகும். இந்நகர் ஆதியிலே நன்கு திட்டமிட்டுக் கட்டப் பட்ட மாநகர் ஆகும். இது இரண்டாவது கோநகர் ஆக இருக்கலாம் என்றும் எண்ணப்படுகிறது. இது முதலில் ஒரு சதுரக் கல் பரப்புடையது. இதில் பத்தில் ஒரு பகுதியே அகழ்ந்து ஆய்வு செய்யப் பெற்றது. இந்நகர் ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த தலைநகராக திகழ்ந்தது. இங்குள்ள மண்மேட்டினை அகழ்ந்து கண்டெடுத்ததின் பயனாக ஏழடுக்குகளைக் கொண்ட அழிந்த நகரைக் கண்டுள்ளனர். 1950-இல் இந்நகரின் ஏழாவது அடுக்கை இன்றை (பாக்கிதான்) அரசின் தொல் ஆய்வுத்துறை அகழ் ஆய்வுத்துறை இயக்குநர் தளபதி சர் மார்ட்டி மர் உயிலர் தோண்டிப் பார்த்து மொகஞ்சதாரோ நாகரிகத்தில் எத்தகைய வேறுபாடும் காணப்படவில்லை என்று கூறினார். தெரு அமைப்பு மொகஞ்சதாரோவின் தெருக்கள் கிழக்கு மேற்காகவும் தெற்கு வடக்காகவும் அமைக்கப் பெற்றுள்ளன. தென் கிழக்கு, வடகிழக்குப் பருவக் காற்றினை உளத்திற் கொண்டு நல்ல இளங்காற்றை எதிர்பார்த்தே தெருக்கள் நீளமாகவும், அகலமாகவும் அமைக்கப் பட்டுள்ளன. பெரிய தெருக்கள் 6-பர்லாங்கு (முக்கால் கல்) நீளம் உடையன. 9-முதல் 34-அடி வரை அகலம் உடையன. பெரிய தெருக்களில் மூன்று வண்டிகள் ஒரே காலத்தில் செல்லலாம். பெரிய தெருக்களை பல குறுந்தெருக்கள் நேராக வெட்டிச் செல்கின்றன. நான்கடி அகலமுள்ள சிறு சந்துகளும் உள்ளன. பெரிய தெருக் களினின்று குறுந்தெருக்களுக்கு வண்டிகள் செல்லும் பொழுது தெருவின்கடை கோடியில் உள்ள வீட்டின் நேரான மூலையை சேதப்படுத்தாமல் வீட்டின் முனை வளைவாகக் கட்டப்பட்டுள்ளது. எல்லாத் தெருக்கழிவுகளிலும் நீர்ப்பாதை (மூடு சாக்கடைகள்) உள்ளன. சந்து முனையில் உள்ள வளைவான மூலைகளையுடைய வீடுகளின் அருகில் செல்லும் மூடு சாக்கடையும் வளைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறுந்தெருவிலும் கூட கிணறுகள் உள்ளது. தெருக்கள் நல்ல காற்றோட்டம் உள்ளனவாய் இருக்கின்றன. சுகாதாரத்தை நன்கு கவனித்து தெருக்களும் வீடுகளும் அமைக்கப் பட்டுள்ளன. வீடுகள் வரிசையாக தம் எல்லைக்குள்ளாக ஒழுங்காக அமைக்கப் பட்டுள்ளன இந்நகர மக்களின் குடிமைப் பண்பு போற்றற்குரிய தாகும் பெரிய தெருக்களின் கோடியில் காவற் கூடங்களும் சிற்றுண்டிச் சாலையும் உள்ளன. கட்டிடங்கள் அமைப்பு முறை சிந்து வெளி மக்களின் பண்பாடும் அறிவும் நாகரிகமும் அவர்களின் கட்டிட அமைப்பு முறையில் நன்கு அமைந்து விளங்குகிறது. இவர்கள் எழுப்பிய கட்டிடங்களுக்கு சுட்ட செங்கற்களையும், உலர்ந்த மண் செங்கற்களையும் பயன்படுத்தி யுள்ளனர். செங்கற்கள் எல்லாம் ஒரே அளவில் செய்யப்பட்டன வாகும். அதாவது நீளத்திற்பாதி அகலம் அகலத்திற்பாதிகனம். இவைகள் தேவைக்கேற்றவாறு பலவடிவில் செய்யப்பட்டிருந்தன. சில சதுரமாகவும் சில வளைவாகவும், சில மூலைக்கு ஏற்றவாறு முக்கோண வடிவிலும் செய்யப்பட்டிருந்தன. உலர்ந்த மண் செங்கற்களைச் சுடுவதற்கு கால்வாய்கள் பல வட்ட வடிவில் இருந்தன. பொதுவாகச் செங்கற்கள் ஒன்பது அங்குல நீளமும் 4 ½ அங்குல அகலமும் 2 ¼ அங்குலப் பருமனும் உடையனவாய் உள்ளன. செங்கற்கள் மேடுபள்ளங்களின்றி நன்றாக அறுக்கப் பட்டுச் சமன் செய்யப் பட்டிருந்தன. கிணறு கட்ட தனியான ஆப்புச் செங்கல் செய்யப் பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கழிவுநீர்க்கால் வாய்கள் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு மேலே மூடப் பட்டுள்ளன. பெரிய மதிலும் அரணும் அமைப்பதற்கு 29 அங்குல நீளமும் 14 ½ அங்குல அகலமும் 7 அங்குலப் பருமனும் உடைய செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோவில் இரண்டு, நான்கு, ஏழடுக்கு வரையுள்ள உயர்ந்த வீடுகள் கட்டப் பெற்றிருந்தன. மாடிகள் உயரமின்றி இருந்தன. மூன்றடுக்கு வீடுகளே அதிகம் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்கள் நாட்டின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப கட்டிடங் களைக் கட்டியுள்ளனர். கட்டிடங்களின் புறச் சுவர்களை தட்ப வெப்ப நிலைகள் தாக்குவதால் அவைகளைச் சுடுமண் செங்கற்களால் அமைத்துள்ளனர். தட்ப வெப்ப நிலையின் தாக்குதல்களுக்கு உட்படாத உட்புறச் சுவர்களை உலர்ந்த-சூளையிடப் பெறாத செங்கற்களால் கட்டியுள்ளார். சுவர்களை, செங்கற்களை வைத்து மண் சாந்தாற் கட்டி, மேற்பூச்சாகக் களிமண் சாந்தையே பூசி இருக்கின்றனர். சில இடங்களில் களிமண்ணுடன் தவிடுகலந்து நன்றாகக் குழைத்து சாந்தாகச் செய்து மெழுகியுள்ளனர். சுவர்களும், தரையும் கூரையும் களிமண்ணால் பூசப் பெற்றிருந்தது. சுவர் மீது மரத்தினாலான பெரிய உத்திரங்களை வைத்து அவற்றின் மீது கூடைகளைப் பரப்பி அவற்றின் மீது நாணற்பாய்களைப் பரப்பி அப்பாய்கள் மீது களிமண் சாந்தைக் கனமாகப் பூசிக் கூரைமீது அமைத்து இல்லம் அமைத்து வாழ்ந்தனர் கட்டிடம் கட்டும் கொத்தர்கள் சுவர்களை ஒழுங்காகவும் நேராகவும் கட்டுவதற்கு மட்டப் பலகைகளைப் பயன்படுத்தியுள்ளனர். உத்திரங்களை வைப்பதற்கென்றே சுவர்களில் பெரிய சதுரமாக துளைகளை விட்டிருந்தனர். அவைகள் இன்றும் நன்றாகக் காணப்படுகிறது. கொத்தர்கள் சுவர்களையும் தரையையும் மேற்கூரையையும் சிறிதும் பெரிதுமான மட்டப் பலகைகள், கைப்பாணிகள், கரண்டிகள் முதலியவைகளைப் பயன்படுத்தி யுள்ளனர். வீட்டுச் சுவர்கள் சாளரங்கள், வாயிற்படிகள் ஒழுங்காக வும் பெரிதாகவும் அமைத்து கட்டிடம் உறுதியாகவும் வசதியாகவும் அமைத்திருப்பது அக்காலக் கொத்தர்கள் கட்டிட அமைப்பில் நிறைந்த பட்டறிவுடையவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. சுவர்கள் செங்கற்களை வைத்து மண் சாந்து கொண்டு கட்டி எழுப்பப் பெற்றதால் உறுதியாக இருக்க சுவர்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுச் சுவர்கள் மூன்றரை அடிமுதல் ஆறு அடி வரை அகலம் உள்ளதாய் மிகப்பருமனாக இருக்கின்றன. சிந்து ஆற்றின் வெள்ளத்தை எண்ணியே சுவர்கள் பருமனாக அமைக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. ஒன்றிற்கு மேற்பட்ட மாடிகளையுடைய மாளிகைகள் அமைக்கும்போது மேல் உள்ள பாரத்தைத் தாங்குவதற்காக சுவர்களின் அகலம் நீட்டப்பட்டுள்ளது. ஒரு பெரிய கட்டிடத்தின் ஒரு சுவர் அகலம் 5 அடி 9 அங்குல கனமுடையதாயும் பிற சுவர்கள் 3 அடி 6 அங்குலம், 4 அடி 10- அங்குலம், 4 அடி 5 அங்குலம் உள்ளதாய் அமைக்கப்பட்டுள்ளன. 25 அடி அகலத்தில் ஒரு சுடுமண் செங்கல்லால் கட்டப்பட்ட அரணும் உள்ளது. மொகஞ்சதாரோவில் பல திறப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இரண்டு, மூன்று, நான்கு நிலைகளையுடைய வீடுகள் ஏராளமாக உள்ளன. அகன்ற முற்றங்களையுடைய ஒரே அடுக்குடைய மாடமுடைய வீடுகளும் உள்ளன. எல்லா இல்லங்களும் மேற்றளம் உடையவைகளாகவே இருக்கின்றன. நாலு புறமும் மேற்றளத்தில் கைபிடிச்சுவர்கள் உள்ளன. மேற்றளத்தில் விழும் மழை நீர் மேற்றளத்தில் சிறிது நேரமும் தங்க வழியின்றி கீழே இறங்க மேற்றளத்தில் வாட்டம் வைத்துக் கட்டப்பட்டிருப்பதோடு கீழே நீர் வந்து சேர குழாய்களும் வைக்கப்பட்டுள்ளன. குழாய்கள் மண்ணாலும் மரத்தாலும் ஆனவை. சிறிய இல்லம் சிறிய இல்லங்களும் பல உள்ளன. அவை பாட்டாளி மக்களின் இல்லம் என எண்ணப்படுகின்றன. சிறிய இல்லம் 4-அறைகள் உள்ளதாய் 30 அடி நீளமும் 27 அடி அகலமும் உடையது. இவைகள் எல்லாம் செங்கற்கட்டிடங்களேயாகும். இவற்றின் தளம் சாணத்தினால் மெழுகப்பட்டுள்ளன. இஃதன்றி குடில்கள் அமைத்து வாழும் ஏழைகள் இருந்திருப்பாரோ என்ற ஐயமும் உண்டாகிறது. சிந்துவெளிப் பண்பாட்டில் பிச்சைக்காரர்களும் இல்லாதவர்களும் இருந்திருப்பார்களா என்று ஐயம் எழுகிறது. சில பெரிய மாளிகைகளின் நடுவில் அகன்ற முத்தங்கள் காணப்படுகின்றன. அதனைச் சுற்றிப் பல அறைகள் உள்ளன. அறைகள் சிறிதாக நல்ல காற்றோட்டம் உள்ளதாய்க் காணப்படு கின்றன. வாயிற்படியும் கூரையும் உயர்ந்ததாய் இருக்கின்றன. ஆனால் இதன் உபயோகம் நமக்குப் புலப்படவில்லை. இத்தகைய இல்லங்கள் பல தமிழ் நாட்டில் இன்றும் உள்ளன. பேரில்லம் அக்காலத்து வேளாண்மையால் உயர்ந்த வாழ்வைப் பெற்ற பெருங்குடிமக்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் நாடி வாழ்ந்தனர். தாய் தந்தையுடன் ஆண்மக்கள் தங்கள் துணைவியரோடும், பெண்மக்கள் தங்கள் கணவரோடும் ஒரு இல்லத்தில் ஒற்றுமையுட னும் அன்புடனும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அவர்களுடைய பெரிய இல்லமும் அவற்றிலுள்ள பல அறைகளும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. பெரிய வீடுகளில் சகோதரர்கள் வாழ்வதற்கு வீட்டினிடையே நெடுஞ்சுவர்கள் வைத்து வீடு பிரிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் கூலப் பொருள்களை சேகரித்துவைக்கும் குதிர்கள் போன்றவைகள் தரையில் பதிப்பித்து வைக்கப்பட்டுள்ளன. சில இல்லங்களில் மாடங்களும் சுவர் அறைகளும் அமைந்து உள்ளன. சில வீடுகளில் சமையற் பாண்டங்களை வைத்தற்குரிய மரப் பெட்டகங்கள் சுவர்களில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. மாளிகைகள் செல்வர்கள் வாழும் மாடங்கள் உள்ள மாளிகைகள் பல உள்ளன. அவை இரண்டிற்கு மேற்பட்ட அடுக்குகளையுடைய மாளிகைகள் ஆகும். இவை அகன்ற கூடங்கள், நீண்ட தாழ் வாரங்கள் பெரிய முற்றங்கள் இடை கழிகள் சிறிய வாயில்கள் சிறிதும் பெரிதுமான பல அறைகளையும் உடையன. இவற்றில் உள்ள மேனிலை மாடங்கள் செங்கல் தளவரிசைகளை உடையன. சில மேன்மாடங்கள் படுக்கை அறைகள் உள்ளன. சில மாடங்களில் பயிலும் இடம்,நீராடும் அறைகள், மலங்கழிக்கும் சிற்றறைகள் போன்றவைகளும் உள்ளன. மாடங்களுக்குச் செல்ல செங்கற் களால் கட்டப்பட்ட படிக்கட்டுகளும், மரத்தினால் செய்யப்பட்ட படிக்கட்டுகளும் உள்ளன. சில மாடங்களுக்கு ஏணிகள் மூலம் செல்வதும் உண்டென்று தெரிகின்றது. படிக்கட்டுகள் பெரும்பாலான மாளிகைகளில் வெளிப்புறமே அமைந்துள்ளது. சில வீடுகளில் படிக்கட்டுகள் உட்புறம் உள்ளன. ஒரு மாளிகையில் இரண்டு படிக்கட்டுகள் ஒன்றிற் கொன்று அண்மையிலே இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. இது பெரிய தலைவனுடைய இல்லம் போல் காணப்படுகிறது. ஒரு மாளிகையின் முன்புறம் சுமார் 100 அடி முன்புறம் அகன்ற முற்றம் உள்ளது. பின்புறம் 100 அடி அகன்ற தோட்டம் உள்ளது. மாபெரும் மாளிகை இங்குள்ள மாளிகைகள் அனைத்தினும் பெரிய மாளிகை ஒன்று மிகவும் உயரமாகவும் அகன்று நீண்டதாயும் அழகு நிறைந்ததாயும் உள்ளது. இந்த மாளிகை 242 அடி நீளமும் 112 அடி அகலமும் உள்ளது. இதன் அண்மையில் இதை விடச் சற்றுக் குறைந்த அளவில் 177-அடி நீளமும் 117அடி அகலமும் உடைய மாளிகை ஒன்றும் காணப்படுகிறது. இதற்கு அடுத்தாற் போற் மற்றொரு சிறிய மாளிகை ஒன்று உள்ளது. அதன் வடபுறம் 87அடி நீளமும் தென்புறம் 83 அடி நீளமும் உள்ள சுவர்கள் உள்ளன. மேற்குப் புறச் சுவர் 38 அடி நீளமும் கிழக்குப் புறச்சுவர் 48 அடி நீளமும் உள்ளது. இங்கு பல அறைகள் உள்ளன. வீட்டின் பின்புறம் வட்டவடிவான கிணறும் உள்ளது. இங்கு 4 அடி அகலமுள்ள சதுரமான தூண்கள் பல காணப்படுகின்றன. இத் தூண்கள் இந்த மாளிகையின் வளைவுகளைத் தாங்குபவை. இந்த மாளிகைகளின் அண்மையில் 56-அடி நீளமான சிறு விடுதி உள்ளது. இதில் நீண்ட தூண்களைக் கொண்ட மண்டபம், பல கூடங்களும் உள்ள வழிகளுடன் கூடிய பல அறைகள் உள்ளன. இந்த அறைகள் பண்டங்களை வைப்பதற்கும் சமையல் செய்வதற்கும், துயில்வதற்கும் உணவு உண்பதற்கும் ஏற்பட்டன. இது அரசனது அரண்மனையாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அடுத்த மாளிகைகள் அமைச்சர் இளவரசர் போன்றவர்களின் மாளிகைகளும் ஏவலாளர்களின் இல்லங்களுமாக இருக்க வேண்டும் என்று எண்ணப் படுகிறது. இங்குள்ள இல்லங்களில் மகளிர்கள் வசிப்பதற்குத் தனியிடமும், மாளிகை வாயிற்புறத்தை அடுத்து காவலர்க்கு ஒரு சிற்றம் இருந்தது. வீட்டின் பின்புறம் வீட்டுக்காரர்கள் அமர்ந்து பேசுவதற்கேற்ற கூடங்களும் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறைகளும், படுக்கை அறைகளும் தவறாது உள்ளன. தனியே குளிக்கும் அறைகளும் உள்ளன. குளிப்பறைகள் தெருப்பக்கம் உள்ளன. செங்கற்களால் தளவரிசை இடப்பட்டு அறைகள் சுத்தமாக உள்ளன. கழிவு நீர் ஓட வடிகால்கள் உள்ளன. வடிகால் தெருவில் உள்ள மூடு சாக்கடையுடன் பொருந்தியுள்ளது. நீராடும்அறையின் தரைமட்டம் சற்று சரிந்து வெளியே நீர் செல்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. சமையல் அறை ஒவ்வொரு வீட்டிலும் தனியே சமையல் அறை இருந்தது. அங்கு விறகு வைக்கவும் பிற, சமையற் பண்டங்களை வைக்கவும் தனி இடம் இருந்தது என்றாலும் சமையல் முற்றத்தின் அண்மையில் செய்வதும் உண்டு. சமையல் அறையில் பெரியதாழிகள் பதிப்பிக்கப் பட்டிருந்தன. சமையல் அறையில் தாழிகள் பதிப்பிக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளன. இவை நீரைச் சேமித்து வைப்பதற்காக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. சமையலுக்குரிய சாமான்கள் வைக்கப் பலமண் சாடிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த வழக்கம் இன்றும் மொகஞ்சதாரோவைச் சுற்றியுள்ள கிராமத்தா ரிடம் நிலவுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறையில் அடுப்புகள் உள்ளன. சில வீடுகளில் அடுப்புகள் காணப்படாவிடி னும் அடுப்புகள் இருந்ததற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. இந்த அடுப்புகள் மெசபொத்தாமியாவில் உள்ள அடுப்புகளைப் போன்றவைகளாக இருக்கின்றன. கோயில் மொகஞ்சதாரோ சிந்து வெளி அகழ் ஆய்வில் அரப்பாவிற்கு அடுத்த தொன்மையான நகரம். ஆனால் அரப்பாவை விட நல்ல நிலையில் அழிவுறாத நிலையில் இருக்கிறது என்று அகழ் ஆய்வில் ஈடுபட்ட ஆர்.டி. பானர்ச்சி அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். மொகஞ்சதாரோவில் மட்டுமல்ல சிந்து வெளியிலே எண்ணற்ற சிவ லிங்கங்களும், தாய்த் தெய்வ உருவங்களும், சிவபெருமான் திரு உருவம் தீட்டப் பெற்ற முத்திரைகளும், நந்தி(காளை) உருவம் தீட்டப்பட்ட முத்திரைகளும், தாயத்துகளும் கிடைத்துள்ளன. ஒரு நடராசர் உருவம் கூட கிடைத்துள்ளன. இஃதன்றி பல நீர்த் தெய்வம், நிலத் தெய்வம், மரத் தெய்வம், மீன் தெய்வம் போன்ற எண்ணற்ற தெய்வ உருவங்கள் கிடைத்தன. சிவலிங்கங்களும், சிவனார் உருவம், அவரது காளை வாகனமாகிய நந்தி உருவமும் சிந்து வெளிப் பண்பாடு திராவிட மொழிபயின்ற, சைவ நெறியைத் தழுவிய வேளாளர் பண்பாடு என்பதை உறுதிப்படுத்த ஒப்பற்ற முதல் தரச் சான்றாக இருந்தன. சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று வரலாற்றைப் பொய்ப் படுத்த முன்வந்த சில சாதிவெறியும், சமய வெறியும் கொண்ட அறிஞர்கள் முயற்சி முறியடிக்கப்பட்டன. அவர்கள் இறுதியாக சிந்து வெளி முத்திரை களில் பொறிக்கப்பட்ட ஓவிய எழுத்துக்களை வட மொழிச் சார்பானது என்று நிலை நாட்ட முயன்றனர். அந்த இறுதி முயற்சியும் உலாந்தாவின் தலைநகரான கோபன் ஹேகன், காண்டி நேவியன், ஆசியர் ஆராய்ச்சி நிலையம், மாகோ, லெனின் கிராட் பல்கலைக் கழகங்களின் பல்வேறு துறைகளிலுமுள்ள அறிஞர்களின் குழுவும் சேர்ந்து சிந்து வெளி முத்திரைகளிலும், தாயத்துகளிலும் காணப்படும் ஓவிய எழுத்து களுக்கு மறைகுறி எழுத்துப் பொருள் விளக்கம் (Deceipherment) செய்ய முயன்று, தமிழ் அறிஞர், திராவிட மொழிகளின் ஆராய்ச்சி வல்லுநர் துணை கொண்டும் மிக நுண்ணிய கணித மின் அணுக் கருவியின் (Computer) துணை கொண்டும் உறுதியாக சிந்து வெளி ஓவிய எழுத்துக்கள் திராவிட மொழி எழுத்துக்களே என்று உலகிற்கு உணர்த்தியுள்ளனர். சிந்து வெளியின் அகழ் ஆய்வில் கோயில்களே காணப்பட வில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது தவறு சிந்து வெளியில் கோயில்கள் உள்ளன என்று டாக்டர் மெக்கே அவர்கள் திட்ட வட்டமாக எடுத்துக்காட்டியுள்ளார். அதனை சர் சாண்மார்சல், சர் மார்ட்டிமர் உயிலர் போன்றவர்கள் ஆதரித்துள்ளனர். சிந்து வெளியில் கி.மு. 3000 -ம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த பண்பாடு, ஒரு பெரும் நாகரிகத்தைப் படைத்த மக்களுடையது என்பது புலனாயிற்று. அதனை தாமிர நாகரிகக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இங்கு ஆழமாக அகழ்ந்து பார்த்த பொழுது செவ்வையாக அமைக்கப்பெற்ற கோயில்களும் வீடுகளும் காணப்பெற்றன. கோயில்களில் சிறு அறைகள் கனமான சுவர்களை உடையனவாய் இருந்தன. அதனால் அறைகளுக்கு மேல் விமானம் போன்ற கட்டிடங்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்த அறைகளைச் சுற்றி விசாலமான முற்றமும் அம்முற்றத்தின் நான்கு புறங்களிலும் சிறு மாடங்களும் காணப் பட்டன. நடுவில் உள்ள அறை திரு உண்ணாழிகையாக (மூலதானமாக) இருக்கலாம். மலையாளத்துக் கோயில் அமைப்பு அதனை யொத்தது போலும். சங்குத் தட்டுகள், நீல வளையல்கள், தோண்டி யெடுக்கப்பட்டுள்ளன. சில முத்திரைகளில் அரசமரம், மான் கொம்பு, புலி, யானை, காண்டாமிருகம் முதலியவற்றின் வடிவங்கள் காணப்பட்டுள்ளன. குதிரைவடிவம் காணப்பட வில்லை என்று திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் மிக விளக்கமாகத் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். இங்கு கோயில்கள் இருந்தன. கோயில்களின் திரு உண்ணாழிகையின் தமிழகத்தைப் போல இலிங்கங்கள் இருந்தன என்பதை முதலில் கண்டவர் சர்.சாண்மார்சல் அவர்களேயாகும். அவர்தம் நூலில் இதைப் பற்றி விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அங்கு கண்ட இந்த விசாலமானதும், நுட்பமான பெரிய கட்டிடங்கள் சில தனிப்பட்ட செல்வர்களின் சொந்த மாளிகையாக யிருக்கலாம். அல்லது அவைகளிற் சில திருக்கோயில்களாக இருக்கலாம் என்று தெளிவாக ஆய்ந்து முடிவு செய்ய முடிய வில்லை. மெசபொத்தாமியாவில் தெய்வம் உறையும் திருக் கோயில்கள் வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள் உள்ளதாயும், விளக்கமான குறிக்கோளைக் கொண்டதாயுமுள்ள மன்னர்களின் மாளிகையாகவும் இருக்கும்-அதாவது உணவை உண்டு நீரை அருந்தும் கடவுளின் குடியிருப்பு இடங்களாகவும், மரணம் அடையக் கூடிய ஏதாவது ஓர் இளவரசன் களிகொள்ளச் செய் விக்கப்பட்டதாகவும் இருக்கும். தன்னுடைய சமயச் சடங்கள் செய்யும் பெண் பூசாரியின் திருமண வைபவங்களுக்காகவும் இருக்கலாம். அதே நோக்கத்தோடு மொகஞ்சதாரோவில் அமைக்கப் பட்ட பேரில்லமாகவும் இருக்கலாம் என்று எண்ணலாம். இவை களில் சில விதிவிலக்காக பெரிய விசாலமான கட்டிடங்கள் சில கடவுள்களுக்காக கட்டப்பட்ட இல்லங்களாக இருக்கலாம். முதலாவது, இரண்டாவது ஐந்தாவது ஆறாவது எண்ணுள்ள மேலே கண்ட கட்டிடங்கள் சிறப்பாக வழிபாட்டிற்குரிய திருக்கோயிலுக்கு என்று ஒதுக்கிவைக்கப்பட்ட இடமாக இருக்கும் என்று கருதலாம். இன்னும் பல இடங்களில் கிடைத்துள்ள தனிச்சிறப்புமிக்க ஆவுடையார் வடிவங்கள் (ringstones) போன்ற பொருள் சமயக் கோட்பாட்டு முறையில் வழிபடுபவைகளாக இருக்கலாம் என்று நம்புவதற்குப் போதிய காரணங்கள் உள்ளன. இவைகளை யெல்லாம் ஆய்ந்து பார்க்கும் பொழுது சிந்து வெளிமக்கள் கிரீட்தீவிலுள்ள மினோவர்கள் போன்று பொதுவான வழிபடு இடங்கள் அமைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. அப்படியே அவர்கள் கோயில் அமைத்திருந்தாலும் இன்றைய இந்தியக் கோயில் போலன்றி சாதாரணமாக மக்கள் வாழும் இல்லங்கள் போன்று கோயில்கள் அமைத்திருக்கலாம் என்று கருத முடியும்.1 ஏனைய கோயில் அமைப்புகள் மொகஞ்சதாரோவில் உள்ள கட்டிடங்கள் பலவற்றில் பல வற்றின் உபயோகம் நம்மால் திட்ட வட்டமாக நிர்ணயிக்கப் படவில்லை. அவைகளில் சில திருக்கோயில்களாக இருக்கலாம்; அல்லது வேறாகவும் இருக்கலாம். சில பகுதிகளில் உள்ள சிறிய கட்டிடங்கள் சில இரண்டு அறை வீடுகளில் ஒன்று பெரிதாகவும் மற்றொன்று பக்கத்தே பிரகாரம் போல் சிறிதாகவும் உள்ளன. அதே இடத்தில் 5-ஆவது பிளாக் ஒரு பெரிய அமைப்பு பெரிய மைய அரையை உள் கூறாகக் கொண்டிருக்கிறது. இரண்டு அறை களுக்கும் இடையேயுள்ள நடைக் கூடம் அதன் மேற்குப் புறத்திலும் தெற்குப் புறத்திலும் ஒரு சுவரும் இரண்டு சிறு அறைகளும் அதன் தெற்குப் பகுதியில் சில பெரிய அறைகளும் உள்ளன. அதன் வடக்கு புறத்தில் கட்டிடத்தின் மூலப்பகுதி தெளிவற்றதாய் அடிப்பகுதி பின்னர் எழுந்ததாகக் காணப்படுகிறது. இடது பகுதி அழிவுற்றுள்ளது; அடிப்படை மட்டும் உள்ளது. இது வழக்கத்திற்கு மாறாகத் திண்மையாக 10-அடி ஆழத்தில் கரடுமுரடான செங்கல்லால் அடிப்படையிடப்பட்டுள்ளது இது அழகாக மேல்கட்டுமானம் உள்ளதாய் மிகுந்த அக்கறையோடு மையப்பகுதியில் மேலே ஒரு சிகர அமைப்பை உண்டுபண்ணி இருக்கிறது. அதே போன்று மற்றொரு கட்டிடம் நீண்ட சதுரம் உள்ளதாக இருக்கிறது. தென்புறம் ஒரு சிறிய ஒடுக்கமான அறையும் மேற்குப்புறம் இரண்டு வேறு சிறு அறைகளும் உள்ளன. இவை எண் 1-இல் பிளாக் 4, செக்சன் வி.எ பரப்பில் உள்ளது. இதில் உள்ள மூன்றாவது அறை ஒன்றில் கணிசமான அளவு மனித எலும்புகளும், சாம்பலும், மட்பாண்டங்களும் பாத்திரங்களும் ஏனைய பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் ஒரு தனிப் பட்ட மனிதனுடைய குடி இருப்பு இடமாக எண்ணுவதற்கில்லை. இது ஒரு பொது இடமாகவோ, புனித இல்லமாகவோ, வழிபடும் இடமாகவோ கருதத்தக்கதாகும். இறுதியாய் ஒரு குன்றுப் பகுதியின் ஒரு சிறிய அழிபாடு காணப்பட்டது. அது டிகே பரப்பில் 2-வது பிளாக்கில் ஏ.செக்சனில் காணப்படும் இந்த அழிபாடுகள் திரு தீக்சிதர் அவர்களால் அகழ் ஆய்வு செய்து ஓர் உறுதியான ஒரு புனித கோயிலாக இருக்கிறது என்று முடிவிற்கு வந்தார். இங்கு கோயில்கள் போல் பல கட்டிடங்கள் அகழ் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவைகளில் தெய்வ உருவங்களோ பூசைக்குரிய பொருள்களோ கிடைக்கவில்லை. ஆனால் உறுதியாக சிந்து வெளி மக்கள் சிவன், சக்தி முதலிய தெய்வ வழிபாட்டுக் காரர்கள். உருவங்களை வைத்து வழிபட்டுவந்தனர் என்பதற்கும் ஐயம் இல்லை. இன்றைய தென் இந்தியத் திராவிடர்களைப் போல் திருக்கோயில் கட்டி சிலைகள் அமைத்து வழிபடவில்லை. Ändht®(Minoar) போன்று மக்கள் வாழும் இல்லத்திலும் அரண்மனையிலும் தெய்வ உருவங்களை வைத்து வழிபட் டிருக்கலாம் என்றே சிலர் கருதுகிறார்கள். கால்களைக் குறுக்காக வைத்துக் கொண்டிருக்கும் (ஆடவல்லான்) தெய்வ வடிவம், பாம்பு, தேவி, லிங்கம் முதலியன கோயில்களில் காணப்பட்டன. சிவலிங்கங்கள் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டன. காலத்தாற் பிற்பட்ட இடங்களில் பிரேதங்களைப் புதைப்பது மாத்திர மல்லாமல் அவற்றைச் சுட்டெரித்த சாம்பலையும் எலும்பையும் பெரிய மண்பாண்டத்தில் வைத்து புதைப்பதும் அவற்றின் மேல் செங்கல்லினால் சமாதி போன்ற கட்டிடங்கள் அமைப்பதும் புலனாயின. புதையல், நிலங்களில் காணப்பட்ட முத்திரையில் உள்ள எழுத்துக்கள் முதலில் பட எழுத்தாயிருந்து பின் ஒலிகளைக் குறிப்பனலாயின அவற்றை ஆய்ந்த ஹீரா அடிகள் அவை தமிழ் எழுத்துக்களின் மூலவடிவுகளாய் இருத்தல் கூடும் என்றார். சிந்து நாகரிகம் எகிப்திய நாகரிகத்தினின்றும், சுமேரியா நாகரிகத்தி னின்றும் வந்தது என்று சிலர் கூறினர். ஆனால் கர்னல் ஆல்காட் எகிப்திய நாகரிகமே பாண்டிய நாட்டினின்று (பண்டு நாட்டி னின்று) வந்தது என்றும் இந்திய நாகரிகத்தோடு ஒப்புவமை காட்டி யுள்ளார்.1 சிறப்பு வாய்ந்த செய்குளம் சிந்து வெளியின் கட்டிடக் கலையைப் பற்றி நூல் எழுதும் எவரும் மொகஞ்சதாரோவில் உள்ள சிறப்புமிக்க செய்குளம் (Great Bath) பற்றி எழுதாமல் விட்டுவிடுவாராயின் அது ஒரு நிறைவான நுலாக எண்ணப்படத்தக்க தன்று. அந்நூல் அறிஞர்களால் சிறப்பானது என்று அறிஞர்கள் மதிக்க மாட்டார்கள். குளத்தில் நீர் நிற்கும் இடம் 39 அடி நீளமும் 23 அடி அகலமும் 8 அடி ஆழமும் உள்ளது. இதன் வெளிப்புறச்சுவர் 7 அல்லது 8 அடி அகலமுள்ளது. இன்றையப் பெரும் நகரில் உள்ள நீச்சல் குளங்களைப் போல் வசதியும், சொகுசும் எழிலும் ஏற்றமும் உடையது. குளத்தில் அண்மையில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங் களையெல்லாம் சேர்த்துக் கணக்கிட்டால் 180-அடி நீளமும் 108-அடியும் உள்ள ஒரு போதிய நிலப் பரப்பில் இக்குளம் கட்டப்பட்டுள்ளது.1 இக்குளத்தின் நீர் நிற்கும் பகுதியைச் சுற்றி நாற்புறமும் நடைபாதைகள் உள்ளன. நடைபாதை உட்புறம் உயர்ந்து வெளிப்புறம் சாய்ந்து மட்டம் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. மழை பெய்தால் நடையில் விழும் நீர் ஒரு சொட்டும் உள்ளேயுள்ள குளத்து நீரில் கலக்காது வெளியே சென்று விடும் குளத்திற்கு அடுத்த நடை பாதையின் விளிம்பில் நாற்புறமும் கைபிடிச்சுவர்கள் எழுப்பப் பெற்றுள்ளன. நடைபாதையின் ஒவ்வொரு முனையிலும் உயரமான மேடை ஒன்று உள்ளது. அம்மேடைக்குச் செல்ல பல படிக்கட்டுகள் உள்ளன. இப்பாதையை அடுத்துப் பெரிய சுவர் உள்ளது. அதன் மீதும் நடைபாதை உண்டு. இப்பெருங்குளத்தின் அடிப்பகுதி-நீர் நிற்கும் இடம் நல்ல வழவழப்பான செங்கற்களால் மண்ணும் சுண்ணமும் கலந்த சாந்தும் கொண்டு கட்டப்பட்டது. அதன் மீது ஒரு விதத் தார் (கீல்) பூசப்பட்டுள்ளது. குளத்தின் அடிப்பாகம் வரை செல்வதற்கு வடபுறமும் தென்புறமும் வரிசையாகப் படிக்கட்டுகள் உள்ளன. 6 ½ அடி உயரத்தில் கழிவு நீரை வெளியே அகற்றி விட்டு புதிய நீரை உள்ளே கொண்டுவர நல்ல மதகும் உண்டு. இக்குளத்தில் மூன்று புறங்களிலும் தாழ்வாரங்கள் உள்ளன. தாழ்வாரங்களில் சுரங்கப் பாதையும் முடியில் எட்டு மாடியுள்ள அறைகளும் உள்ளன. அறைகள் இக்குளத்தில் குளிக்கும் சமய குருக்கள் எவரும் அறியாவண்ணம் வந்து குளித்து விட்டு அறைகளுக்குச் சென்று உடைமாற்றம் செய்வதற்காக அமைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிவன் கோயிலில் பூசை செய்யும் சமய குருமார்கள் ஆறுகாலப் பூசைக்கும் ஆறுமுறை குளிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பூசாரிகளின் வழியில் இவர்களும் ஆறுகால் குளிப்பை (நானத்தை) விடாது பின்பற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குளத்திற்கு நீரை நிரப்புவதற்குக் குளத்தின் சிறிது தொலைவில் மூன்று பெரிய கிணறுகள் உள்ளன. அவைகளினின்றே நீரை இறைத்து சிறு கால்வாய் மூலம் நீரை வார்த்து நிரப்புகிறார்கள். இக்குளத்தின் அடிப்பகுதியில் உள்ள தளத்தில் பூசப்பட்டிருக் கும் நிலக்கீல் இந்தியாவில் கிடைப்பதில்லை. இது அயல் நாட்டிலிருந்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலக்கீல் சுமேரியாவில் உண்டு. சுமேரியர் தம் கட்டிடங்களை இந்த நிலக்கீல் மூலமே அழகும் உறுதியும் செய்து வந்தனர். எனவே சிந்து வெளி வணிகர்கள் இந்தக் கீலை சுமேரியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும். சிந்து வெளி நாகரிகமும் தமிழகமும் 1922-இல் சிந்து வெளி அகழ் ஆய்வு செய்யப்பட்டு, அகழ் ஆய்வுத்துறையின் தலைவரும் இந்திய மைய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநர் தலைவர் சர் சாண் மார்சல் சிந்து வெளிப் பண்பாட்டின் மூலகர்த்தர்கள் திராவிடர்கள் என்று உறுதியாக 1931-இல் உலகிற்கு உணர்த்தியுள்ளார். அவருக்குப் பின்னர் இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வு இயக்குநர் களின் தளபதியாக வந்த சர் மார்ட்டிமர் உயிலரும் மொகஞ்சதாரோ அகழ் ஆய்வை பொருப்புடன் நடத்திய பேராசிரியர் ஆர்.டி. பானர்ச்சியும், பேராசிரியர் டாக்டர் கோர்டன் சைல்டு டாக்டர் ஜி.ஆர்.ஹண்டர், டாக்டர் எய்ச்.ஆர். ஹால் - பேராசிரியர் லாங்டன், எ-ஏ-வாடல் அறிஞர் எய்ச்.ஹிரா அடிகள், டாக்டர் அகோபார்போலா, டாக்டர் கொனரசோவ் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் சிந்து வெளிப்பண்பாடு திராவிடப் பண்பாடு என்று எண்ணற்ற நூற்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். என்றாலும் ஆரியப் பண்டிதர்கள் சிலரும் ஆச்சாரிகளும் பைராகிகளும், பண்டாரங்களும் லம்பாடிகளும் சிந்து வெளிப் பண்பாடு ஆரியப்பண்பாடு என்று அதற்றிப்பிதற்றித் திரிவதை இன்னும் நிறுத்தவில்லை. சிந்துவெளிப் பண்பாடு ஆரியப்பண்பாடு என்றால் சிந்து வெளியின் வீழ்ச்சிக்குப் பின் ஆரியர்கள் சிந்து வெளி நகரங்களைப் போன்ற நகரங்களை கட்டிடங்களை நிறுவினர் என்று ஒரு சிறு சான்று காட்ட முடியுமா? முடியாது. ஆனால் சிந்து வெளிப் பண்பாட்டை விட சீரிய பண்பாடு இலங்கையில் இருந்ததாக வான்மீகி கூறியுள்ளார். சிந்து வெளிப் பண்பாட்டை விட சீரிய பண்பாட்டை சிறந்த நகரை, வான் அளாவிய மாட மாளிகைகளை, திருக்கோயில்களை எடுப்பித்தனர் என்றுதமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன இன்று கூட தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வட நாட்டில் காண முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூல்கள் 1. The Velalas in Mohenjo - Daro- H.Heras. Indian Historical Quarterly Vol IX 1938 calcutta 2. Annual Reports of the Archaeological survey of India (1929-1930) 3. Cambridge History of India-The Indian Civilization-Martimer wheeler 4. Mohenjo- Daro and the Indus Civilization vol I sir John Marshall (London) 1931 5. Pre historic Civilization of the Hindus valley - K.N- Dikshit. 6. 5000 years of India Architecture-The Publication Division Govt of India New Delhi1951 7. மொகஞ்சதாரோ அல்லது சிந்து வெளி நாகரிகம்-டாக்டர் மா. இராசமாணிக்கம் பிள்ளை M.A.M.O.L (சென்னை)1952 8. சிந்து வெளி தரும் ஒளி - க.த. திருநாவுக்கரசு, M.A வரலாறு (M.A) தமிழ் 9. Mohenjo - Daro - Dr. R.E. Mohenjo Daro. தமிழ் நாட்டுக் கட்டிடக்கலை - இலக்கியச் சான்றுகள் தமிழ் நாட்டில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நன்கு வாழ முற்பட்டுவிட்டனர். நாடும் நகரும் பேர் ஊரும் சிற்றூரும் எழத் தொடங்கிவிட்டன. அரசும் முரசும், படையும் குடையும், அரணும், திறனும், அகமும், புகழும், கோயிலும், கோட்டமும், மாளிகைகளும், மனைகளும், மாடங்களும் கூடங்களும், மண்டபங்களும் எழுந்து விட்டன. அன்று, இன்று போல் கற்றளிகளோ, செங்கற்களும், சுண்ணச்சாந்தும் வைத்துக் கட்டப்பட்ட கட்டிடங்களோ கட்டப் பெறாததால் அவை நீண்ட நாள் அழியாது நிலைத்து நிற்க முடியவில்லை. மேலும் அடுத்தடுத்துத் தமிழகத்தில் எழுந்த பல கடற் கோள்கள், அனைத்தையும் கொள்ளை கொண்டு போய் விட்டன. பெரும்பாலான ஏடுகள் கூட அழிந்து போய் விட்டன. என்றாலும் எஞ்சிய ஒரு சில ஏடுகள் இன்றும் பீடுதரும் சான்றுகளாக உள்ளன. அதோடு இன்று எழுந்துள்ள அறிவியல் ஆய்வு முறைகளும் அரிய துறைகளும் கி.மு 1000 -ம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து 10,000 -ம் ஆண்டுகள் வரை தென்னிந்தியாவைப்பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களின் மொழி, வாழ்க்கை, கலை, பண்பாடு, நாகரிகம், வீடு, மாளிகை, கோயில் முதலியவற்றை அறியத்துணை செய்கின்றன. கி.மு. 3000 -ம் ஆண்டிற்கு முன் சிந்து வெளியில் எழுந்த திராவிட நாகரிகத்தின் சிறப்பை M§»nya®-r®.ஜh‹ மார்சல் அவர்கள் தலைமையில் நிறுவப் பெற்ற இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறை, சிந்து வெளியில் 5000 -ம் ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட பண்பாடும், நகரங்களும் திராவிட மக்களுக்கு உரியது என்று உலகிற்கு உரைத்தார். பண்டைக்கால மக்களின் வரலாற்றையும் மொழிகளையும், ஓவிய எழுத்துக்களையும் அறிவியல் முறையில் ஆய்வதற்குப் பயின்ற பண்பாளரும் கத்தோலிக்க சமயகுருவும் பெயின் தேச நாட்டிற் பிறந்தவரும் மேதகு புலவரும் பம்பாய் சவேரியார் கல்லூரி வரலாற்றாசிரியரும் புதிய அறிவியல் பாங்கில் பண்டைக் கால மக்கள் எழுதிய ஓவிய எழுத்துக் கலைகளுக்கு மறைகுறியெழுத்து மூலத்தின் பொருள் விளக்கம் (Decpher) காணும் துறையினைப் பழுதறப் பயின்ற பாவாணருமான ஹெண்டிரி ஹிரா அடிகள் சிந்து வெளி முத்திரைகளிலும், தாயத்துகளிலும் காணப்பெற்ற எழுத்துக்களைப் படித்து அது திராவிடர்களின் முன்னோர்களால் எழுதப்பட்ட எழுத்து என்றும் சிந்து வெளி நாகரிகம் தமிழர்களின் முன்னோர்கள் உருவாக்கிய நாகரிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பித்தார். உலாந்தா நாட்டின் தலைநகரான கோபன் ஹேகனிலுள்ள ஆசிய ஆராய்ச்சியின் காண்டி நேவியன் நிலையம் என்னும் அறிவியல் கழகத்தின் குழுஒன்று டாக்டர் அகோபார்போலா அவர்கள் தலைமையில் ஆய்ந்து அறிஞர் ஹிரா அடிகள் வழியில் ஆய்ந்து வடமொழி, தமிழ் மொழிப் புலவர் ஒத்துழைப்போடும் கணித நுண் பொறி (computer)Æ‹ துணையோடும் மீண்டும் மீண்டும் நன்கு ஆய்ந்து சிந்து வெளி எழுத்து திராவிடப் பண்பாட்டினின்று எழுந்த எழுத்தே என்பதை ஆமோதித்தனர். இறுதியாக சோவியத் ரசியாவில் உள்ள லெனின் கிராட் பல்கலைக் கழகத்திலும் மாகோ பல்கலைக் கழகத்திலுமுள்ள மனித இனப்பரப்புப் பற்றிய அறிவியல் விளக்க ஆய்வியல் அறிஞர்கள் பன் மொழிப்புலவர் தோழர் யூ.கொனரசோவ் அவர்கள் தலைமையில் காலஞ்சென்ற எமது அன்பிற்குரிய தோழர் தமிழறிஞர் சைமன் ருடின் துணை கொண்டும் உயர்ந்த கணித நுண் பொறி இயந்திரத் துணை கொண்டும் ஆய்ந்து சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை எஃகுப் போன்ற அசைக்க முடியாத சான்றுகளின் துணை கொண்டு அரண் செய்துள்ளனர். அதோடு சிந்து வெளிப் பண்பாடும் திராவிட மக்களும் அயல் நாட்டிலிருந்து வரப்பட்டன என்பதை மறுத்து தென் இந்தியாவில்-சிறப்பாக மறைந்து போன ஒளி (குமரி) நாட்டிலிருந்து (லெமூரியாவிலிருந்து) சுமேரியா, எகிப்து, காகஸ, சிந்து வெளி முதலிய நாடுகளுக்குப் பரவின என்ற உண்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்த இந்து மாக்கடலின் அடித்தளம் எல்லாம் அறிவியல் முறையில் ஆராயப்பட்டு வருகின்றன. ஸோவியத் உருசியப் பேரறிஞரும் திராவிட இன மக்களின், வரலாற்றுக் காலத்திற்கு முந்திய வாழ்க்கையைப் பற்றியும் தென் இந்தியாவினின்று திராவிட மக்கள் எகிப்து, எல்லம் உபைதியா, சுமேரியா, காகஸ பகுதிகளில் எல்லாம் குடியேறியவர்கள் என்பதைப் பற்றியும் அறிய அவர்கள் மொழி இனம் பண்பாடு முதலியவைகளைப் பற்றியெல்லாம் நன்காய்ந்த அறிஞர் ஏ.கொந்ராத் தோவ் அவர்கள், தொன்மை மிகுந்த பண்பாட்டைக் கொண்ட தமிழ் மக்கள் பேசும் மொழி ஒரே திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய சகோதர மொழிகளுடன் தொடர்புடைய மொழியாகும். திராவிடர்கள், இந்தியாவின் தொன்மைமிக்க மனித இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருக்கு வேதத்தில் கூறப்பெற்றுள்ள போர் வெறிகொண்ட ஆரியர்கள் இந்த வியத்தகும் அரிய நாட்டிற்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே இங்கு வாழ்ந்து வருபவர்கள் ஆவர். இப்பொழுது திராவிட மொழி தென் இந்தியாவில் பரவி யுள்ளன. ஆனால் ஒரு காலத்தில் மைய இந்தியாவிலும்-ஏன்? வட இந்தியாவிலும் கூடப் பரவி இருந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், பலுச்சிதானத்திலும், ஈரானின் தென் பகுதியிலும் கூட திராவிட மொழிகளைப் பேசி வரும் மக்கள் வாழ்ந்து வந்தனர். மெசபொத்தாமியாவில் முதன் முதலாக நிலையான வாழ்க்கையைப் பெற்று தலையாக வாழ்ந்த மக்கள் அவர்களாகவே இருக்கக் கூடும். அவர்களே நமது உலகில் மிகத் தொன்மையான நாகரிகத்தைப் பெற்றிருந்த சுமேரியர்களின் (Sumerians) முன்னோர்களாகவும் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன.1 என்று சோவியத் நாடு என்று சோவியத் அரசின் இந்தியத் தூதரின் நிலையத்தினின்று வெளிவரும் திங்களுக்கு இருமுறை வரும் வெளியீட்டில் எழுதியுள்ளார். மேலும் திராவிடர்கள், உபைதியா, எல்லம் (குஜிதான்- தெற்கு ஈரான்), சுமேரியா, மெசபொத்தாமிய நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள் திராவிடர்களே என்று தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். திராவிடர்கள் எல்லம் நாட்டின் தந்தையர்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளார். எல்லம் நாட்டின் தலை நகர் ஊர். இங்குதான் கிறிதுநாதர் குடும்பத்தின் ஆதி பிதா ஈசாக்கும், இலாமிய சமய தூதர் முகம்மத் நபியின் முன்னோனுமான இமாயிலும் பிறந்தனர். இற்றைக்கு 5000-ம் ஆண்டுகட்கு முன் எல்லம் எகிப்து, மெசபொத்தாமியா, கிரீட், தென் அமெரிக்காவில் உள்ள பெரு, மெக்சிக்கோ, ஈடா தீவு அசீரியா, சால்டியா போன்ற பல்வேறு நாடுகளில் தென் இந்தியாவிலிருந்து சென்ற திராவிட மக்கள் துளிர்க்கச் செய்த சீரிய பண்பாடேயாகும் என்று அறிஞர் மக்களின், சர் தாம ஹோல்டிச், பேராசிரியர் லாங்டன், டாக்டர் சி.ஆர்.ஹண்டர் டாக்டர் எய்ச்.ஆர். ஹால் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர். தென் இந்தியக் கோயில்களின் அமைப்பும் அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரே வகையாக உள்ளன என்று கலோனியல் தாம ஹோல்டிச் கூறியுள்ளார். ஹெரட்டோட்ட என்னும் வரலாற்றாசிரியர் தம் நூலில் கி.மு.4000 - ஆண்டிற்கு முன் தென் இந்தியர்கள் எகிப்தில் இந்து மதத்தை நிலை நாட்டினர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். பாபிலோன் நாட்டிலும், அதை அடுத்த அக்கேடியா, சிரியா முதலிய நாடுகளில் எழுந்த சிக்குராத் என்னும் கோயில்களும் தெய்வங்களும் தென் இந்தியாவில் உள்ள கோயில் அடிப்படையிலிருந்து அரும்பியவைகளேயாகும்.1 உலகில் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் உள்ள கட்டிடக் கலைக்கு வித்திட்ட திராவிட நாட்டில் இன்று கிறித்தவ ஊழிக்கு முன்புள்ள கட்டிடங்கள் காணப்படவில்லை என்பதாலே அகழ் ஆய்வில் இதுவரை கிறித்துவ ஊழிக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தின் அடிப்படை எதுவும் கண்டுபிடிக்கப் படாததால் தமிழர்களுக்கு கிறித்துவ ஊழிக்குமுன் கட்டிடக் கலை தெரியாது என்று கூறுவது பிழையாகும். வரலாற்றுப் புகழ்பெற்ற பாண்டியர்களின் துறைமுகப் பட்டினமும் தலைநகரும், சங்கம் மருவிய மூதூரும் யவன நாடுகளுடனும், கிழக்காசிய நாடுகளுட னும், மையக் கடற்கரை நாடுகளோடும் கடல் வணிகம் வளர்த்த கொற்கையில் கி.மு785-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மட்பாண்டங் களை தமிழக அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் 1970-ஆம் ஆண்டு அகழ்ந்து கண்டனர். ஆனால் கொற்கை எனும் கோ-நகர் இது தான் என்று கூற ஒரு கட்டிடம் கூட அகழ்ந்து காணப்படவில்லை. கொற்கையின் அரணும் அதன் பொற்கதவு களும் வான்மீகி இராமாயணத்தில் இராமன் அனுமானிடம் குறிப்பிட்டுப் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. அதே போல் வான்மீகி இராமாயணம் கி.மு.1000 -ம் ஆண்டிற்கு முன் இராவணன் வான் அளாவிய அரண்மனையில் பவளத்தூண்களும், பொற்கட்டிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கிறித்துவ ஊழிக்கு முன் உள்ள ஒரு சிறு வீட்டையும், கோட்டையும் அகழ்ந்து காணமுடியவில்லை. ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் பானை சட்டிகளும் எஃகு ஆய்தங்களும் மண்டை ஓடுகளும் கிடைத்தன. கட்டிடம் ஒன்றையும் அகழ் ஆய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர். தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய நகர்களும் பட்டினங்களும் அரண்மனைகளும் 8 மாடங்களும் மாளிகைகளும் இருந்தன என்பதற்கு எண்ணற்ற இலக்கியச் சான்றுகள் உள்ளன. அவை அடியில் வருமாறாகும். மதுரையும் மாடங்களும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழர்கள் கட்டிய நகரம் மதுரை. அம்மதுரை உலகிலே ஓர் ஒப்பற்ற நகர் அமைப்பாக இன்றும் மதிக்கப்படுகிறது. நகர் நடுவே, திருக்கோயிலும் கோயிலின் நாற்புறமும் மாடவீதியும் அதை அடுத்து சதுரம் சதுரமாக அமைக்கப்பட்ட மதுரை மாநகர், தாமரை மலரின் நடுவே பொகுட்டும் அதை அடுத்து வரிசை வரிசையாக பூ இதழ்களும் இருப்பது போன்று காணப்படுகிறது என்று தமிழ்ப் புலவர்கள் வியந்து பாடியுள்ளனர். அப்பாடல் அடியில் வருமாறாகும்: மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவம் இதழகத்து அரும் பெர் குட்டனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான் மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே - பரிபாடல் இதன் பொருள், மதுரை மாநகரின் தோற்றம் ஒரு தாமரை மலரைப் போன்றிருந்தது. தாமரை மலரின் அக இதழ்களைப் போன்று தெருக்கள் அடுக்கடுக்காய் அழகுற அமைந்திருந்தன. அவ்விதழ்களின் நடுவே உள்ள பொகுட்டைப் போன்று மதுரை நடுவில் அண்ணல் அகநாழிகை அமைந்துள்ளது மலரின்கண் உள்ள மகரந்தத் தூளைப் போலத் தண்டமிழ்க் குடிகள் வாழ்கின்றனர். அந்தத் தாதுண்ணும் வண்டு கூட்டத்தைப் போன்று இரவலர் கூட்டம் நாடி வருகின்றது. சேரர் கோநகரான வஞ்சியில் வாழ்வோரும் சோழர் தலைநகரான உறந்தையில் வாழ்வோரும் காலையில் கோழியின் கூக்குரல் கேட்டே துயில் எழுவர். ஆனால் மதுரையில் வாழும் மக்கள் கோழிகூவி எழுந்திலர். நாள்தோறும் அதிகாலையில் மறைகளை முழக்குவோரின் இனிய ஒலி கேட்டுத் துயில் எழுவர் என்பதாகும். இந்த மாநகர் மதுரையில் உள்ள மனைகளும், மாளிகைகளும், அரண்மனைகளும் பல மாடங்களையுடையதாய் விளங்கின. அதிகமாக நான்கு மாடங்களையுடைய மாளிகைகள் இருந்ததால் இந்த நகர் மாடக் கூடல் என்றும் நான்மாடக்கூடம் என்றும் பெயர் பெற்றது. மாடமலி மறுகிற் கூடல் - (திருமுருகாற்றுப் படை) என்பது நக்கீரர் திருவாக்கு. நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் - (கலித்தொகை) என்று கலித்தொகை நான்கு மாடியுள்ள மாளிகையில் வாழும் மதுரை மகளிரையும் மக்களையும் போற்றுகின்றது. தென்னவன் நான்மாடக் கூடல் நகர் - (பரிபாடல்) என்று பரிபாடல் பாண்டியனின் நான்குமாடமுள்ள பெருநகர் என்று புகழ்கிறது. இங்கு எழுநிலைமாடங்களுடைய அரண்மனைகளும் இருந்தன என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது. தெருக்கள் சிற்றூர்களும், பேரூர்களும், பட்டினங்களும் கோநகர்களும் படிப்படியாய் வளர்ந்தன. சிற்றூர்களில் மனைமுன்றில், மனைப் புழக்கடை இவற்றை உள்ளடக்கி வேலிகளிடப்பட்டிருந்தன. பேரூரில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருந்தமையால் இடநெருக்கடி எழுந்தது. எனவே மக்கள் தம் மனையில், மாடங்கள் அமைத்து கட்டிடங்களை எழுப்பினர். மாடங்கள் ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஏழு என உயர்ந்து கொண்டே சென்றன. பேரூர்களில் நெடுநிலை மாடங்கள் நிறைந்து உயர்ந்து நின்றன. நகரங்களும் பட்டினங்களும் நீண்டு அகன்ற தெருக்களையும், குறுந்தெருக்களையும் உடையனவாய் இருந்தன. அன்று நீண்ட தெருக்களின் இருமருங்கினும் வான்றோய் மாடங்கள் அணி அணியாய் அழகுற அமைந்திருந்தன. சல் சல் என்று ஒலி எழுப்பி அகன்று ஓடும் ஆற்று வெள்ளம் வெளியே செல்லவொட்டாது நிற்கும் கரைகள் போன்று மாநகரின் தெருக்களின் இருபுறங்களிலும் மாடங்கள் உயர்ந்து காட்சி அளித்தது இதனைச் சங்க இலக்கியங்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன; மாடமோங்கிய மல்லன் மூதூர் ஆறு கிடந்தன்ன வகல் நெடுந் தெருவில் - நெடுநல் 29-30 என்று அழகுற எடுத்துக்காட்டுவது ஆராயத்தக்கதாகும். மாடம் தமிழ் மக்கள் சிற்பக் கலையில் தேர்ந்திருந்தனர். அரசர்களும், அமைச்சர்களும், வணிகர்களும், நிலக்கிழார்களும் சுடு செங்கல்லால் கட்டப்பட்ட உயர்ந்த மாடமாளிகைகளில் மாண்புற வாழ்ந்து வந்தனர். வான் அளாவிய மாளிகையின் மாடங்களில் மேகங்கள் தவழ்ந்தன இதனை, வானமூன்றிய மதலை போல வேணி சாத்திய வேற்றருஞ்சென்னி விண்பொற நிவந்த வேயாமாடத்து - பெரும் 346-8-11 சுடுமண் ணோங்கிய நெடுநகர் வரைப்பின் பெரும் 405- என்று பெரும்பாணாற்றுப் படை வியந்து கூறுகிறது. சோழ அரசனது அரண்மனை புதிதாக அரும்பிய பிறை போன்ற வெண்மை பொருந்திய சுதையால் சமைக்கப்பட்ட மாடத்தையுடையது என்று சங்க நூல் சான்று தருகிறது. நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்து - (புறம் 378-5) என்று புறநானூறு கூறுகின்றது. மேலும், மாடம் மயங்கெரி மண்டி - (புறம் - 373 - 20) மலைக்கணத் தன்ன மாடஞ்சிலம்ப - (புறம்) என்றும் எடுத்துக் காட்டுகிறது. (1) பீடிகைத் தெருவும் பெருங்குடி வணிகர் மாடமறுகு மறையோர் இருக்கையும் - - சிலப் இந்திர 41-42 (2) வேயா மாடமும் வியன்கல விருக்கையும் நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழி - - சிலப், மனையா 13 (3) அணிகிளர் அறவின் அறிதுயில மர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ் செயாக் கழிந்து -சிலப் நாடு 9-8 என்று சிலப்பதிகாரம் தமிழகத்தில் மாடம் நிறைந்த மாளிகை இருந்ததை நன்கு எடுத்துக்காட்டுகிறது. .................................................. நன்னகர் விண்தோய் மாடத்து விளங்கு சுவர்உடுத்த - பெரும். 11: 368-369 முகில் தோய் மாடம் சிலப். XIX : 65 நிரை நிலை மாடத்து அரமியம் தோறும் - மதுரை. 450 மாடம் பிறங்கிய மணிபுகழ்க் கூடல் - மதுரை 429 மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர - மதுரை 406 ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண் சாளரம் பொளித்த கால்போகுபெருவழி வீதிமருங்கியன்ற பூஅனைப்பள்ளி - மணி 4:52-54 மால்வரை சிலம்பின் மகிழ் சிறந்து ஆலும் பீலிமஞ்ஞையின் இயலிக் கால தமனியம் பொற்சிலம்பு ஒலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ - பெரும் 330-335 வானம் கீழே விழாதபடி முட்டுக் காலாக ஊன்றிவைத்த ஒரு பற்றுக் கோல் போல விண்ணைத் தீண்டும்படி உயர்ந்ததும் ஏணி சாத்தியும் ஏறற்கரிய தலையினையுடையதும், கற்றை முதலிய வற்றால் வேயாறு சாந்திட்ட அரமியத்தையுடையதுமாகிய மாடத்து உச்சியிலே இரவின்கண் ஏற்றிய விளக்கு நிவந்து திசை தப்பிப் பெருங்கடல் பரப்பிலே ஓடாநின்ற மரக்கலங்களை அழையா நின்ற நீர்ப்பாய்த்துறைமுகம் பின்னே இருக்கிறது வா என்று கலங்கரைவிளக்கு கலங்களை அழைப்பது போல் நின்றது என்று பெரும்பாணாற்றுப் படை கூறியுள்ளது. வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாற்றிய ஏற்றருஞ் சென்னி விண் பொர நிபந்த வேயா மாடத்து இரவின் மாட்டிய இலங்குசுடர் நெகிழி பெரும் 346-349 சித்திரமாடம் முற்காலத்தில் பலவித மாடங்களையுடைய மாளிகைகளை மன்னர்களும் செல்வர்களும் பெற்றிருந்தனர் மன்னர்கள் சித்திர மாடம் என்னும் மாளிகையைத்தனியே அமைத்திருந்தனர். பாண்டியன் நன்மாறன், அவனது சித்திரமாடத்தில் உயிர் துறந்தான். எனவே, அவன், சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று கூறப்பட்டான். பாண்டியனுடைய சித்திரமாடம் வெண்மையான சுவர்களையுடையதாய் இருந்தது. அதில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. தூண்கள் கருமையாய் பளிங்குபோல் விளங்கின. சில சுவர்கள் செம்புபோல் வண்ணந்தீட்டப் பட்டிருந்தன. சில அரண்மனைச் சுவர்களின் ஆற்றலைச் சீவகசிந்தாமணி என்னும் காப்பியம் அடியில் வருமாறு அழகுற எடுத்துகாட்டுகிறது1 பெருங்கதை மாளிகையின் சுவர்களில் கண்டமான்மறி செடி கொடிகளைப் பாங்குறச் சித்தரித்துள்ளது.2 மதுரைப் பாண்டியர்களின் கோநகர். அதுபாண்டிய மன்னர் களின் இறுதிக் காலம் வரை தலைநகராய் விளங்கியது. இன்றும் அந்நகர் மாண்புடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. அந்த நகரின் அமைப்பும், மாளிகைகளின் உயரமும் அழகும் உறுதியும் தமிழர்களின் நகர் அமைப்புத்திறனுக்கும் கட்டிடக் கலையின் சிறப்பிற்கும் ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகிறது. அம்மா நகரின் மாளிகையின் மாடங்கள் விண்முட்ட எழுந்து நின்றன. மாளிகையின் மேற்றளத்தில் மேகங்கள் தவழ்ந்தன; மாடங்கள் மலையென உயர்ந்து நின்றன என்றெல்லாம் தமிழ் இலக்கியங்களில் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. மேன்மாடிகள், ஆயிரம்பேர் அமைந்து விருந் துண்ணக் கூடியதாக இருந்தது. இவைகளை யெல்லாம் எடுத்துக் கூறும் தமிழ் இலக்கியங்களை நன்கு பயின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர், பழங்கால யாழ்ப்பாணம் என்னும் நூலில் அடியில் வருமாறு எடுத்துக்காட்டி யுள்ளார்.1 சாளரங்கள் (சன்னல்கள்) மாநகரங்களில் மாளிகைகளும், அரண்மனைகளும், இல்லங்களும் நல்லகாற்றும் ஒளியும் புகுமாறு பெரிய அழகிய சாளரங்கள் (பலகணிகள்) அமைக்கப் பெற்றிருந்தன. இதனை, மதுரைக் காஞ்சி, வகைபெறு எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல்புழை நல்இல் - மதுரை 357-358 என்று எடுத்துக் காட்டுகிறது. சோழ நாட்டு இளவரசன் உதயகுமாரனின் நண்பன் எட்டியின் மகன் புகார் பட்டினத்திலுள்ள பரத்தையர் தெருவில், பொற்றகடு போர்த்திய மாளிகையின் உயர்ந்த மாடத்தில், கட்டிலில் படுத்துக் கொண்டு சாளரங்களின் வழியாக வரும் தென்றற் காற்றின் பொன்றா இன்பத்தை நன்றாக நுகர்ந்தவாறே தெருவில் நிகழும் காட்சியைக் கண்டுகளித்தான் என்று தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டு கின்றன. ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண் சாளரப் பொளித்த கால்போரு பெருவழி வீதிமருங்கியன்ற பூஅணைப் பள்ளி - மணி 4 : 52 - 54 மான்கட் காதலர் மாளிகை - சிலப் - காண் V : 1-8 மான்கண் போன்ற சாளரம் மான் கண்கள் போன்ற சாளரங்கள் மாளிகையில் அழகுறப் பொலிந்தன. அவற்றில் காற்று வரும் புழைகள் மான்களின் கண்கள் போன்று கவின் பெறத் திகழ்ந்தன. வண்டுகள் நுழையும் அளவு சிறிய புழைகளையுடைய அழகிய சாளரங்களில் அழகிய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மாலைத் தாமத்து மணி நிறைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - சிலப் II: 22 -24 மாடங்களில் உள்ள பலகணிகள் மூலம், மக்கள் நல்ல காற்றையும் ஞாயிற்றின் ஒளியையும் நுகர்ந்து இன்புற்றனர். உடல் நலமும் உள நலமும் எய்தினர் இதனைச் சிலப்பதிகாரம், வேயாமாடமும் வியன்கல இருக்கையும் மான்கண் காதலர் மாளிகை இடங்கள் சிலப் 5 : 7-8 மலையென உயர்ந்த மாளிகை தமிழ் வேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்களின் தலைநகர்களான, வஞ்சி, புகார், கொற்கை மதுரை, உறையூர் முதலிய நகரங்களில் மாளிகைகள் மலையென உயர்ந்து நின்றன. மக்கள் மாடத்தில் மேனிலையில் கூதிர் காலத்தே சிறிது பொழுது செலவிடுவர். பெரும் பொழுதை இடைநிலைகளில் கழிப்பர். இரவு காலங்களில் துயில மாடங்கள் ஏற்ற இடமாக இருந்தது. பகற்பொழுதில் மாடங்களில் நெருப்புச் சட்டியைவைத்து அதில் நெருப்பையிட்டு அதில் கட்டைகளை அதன் மேலிட்டு நறுமணப் புகை எழுப்பி அதை நுகர்ந்து மகிழ்வர்; கூதிர் காய்வர் முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்காலை வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர - சிலப் XII 98-103. அரண்மனைகள் மக்கள் வாழும் இடம் இல்லம், வீடு அகம் எனப்பட்டது. அரசர் வாழும் அழகிய மனை அரண்மனை என அழைக்கப்பட்டது. அரசன் வாழும் இடம் கோயில் என்றும் அழைக்கப்படும். மன்னர்கள் வாழ்ந்த மாளிகைகள் சுற்று மதில்களையுடையதாயும், உயர்ந்த வாயிலையும், வாயிலில் உயர்ந்த கோபுரம் வாய்ந்ததாயும், வண்ணங்கள் தீட்டப்பட்ட சுவர் ஓவியங்கள் நிறைந்ததாயும் திகழ்ந்தது. மன்னன் மாளிகைகள் பல மாடங்களையுடையதாயும் அழகு நிறைந்ததாயும் அமைந்திருந்தன. இதனை அடியில் வரும் பைந்தமிழ் நூற்கள் பாங்குற எடுத்துக் காட்டுகின்றன: நல்வழி யெழுதிய நலங்கிளர் வாயிலும் வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத் துள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கிற் றொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலு நாற்பெரு வாயிலும் - மணி - சக் 42-48 குறியவு நெடியவுங் குன்று கண்டன்ன சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் - மணி - சக் 58-59 விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத் தொல்வலி நிலைஇய வணங்குடை நெடுநிலை நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் மழையாடு மலையி னிவந்த மாடமொடு - மதுரை - 352-355 இரும்புக் கதவுகள் வான் அளாவிய வண்ண மாடங்களைச் சுற்றி அமைக்கப் பெற்ற மதில்களும், வாயில்கள் மீதுள்ள கோபுரங்களும், வாயிற் கதவுகளும் பாங்குறத் திகழ்ந்தன. அவ்வாயில் கதவுள் இரும்புத் தகடுகள் பொருத்தப் பெற்றதாய் எஃகு ஆணிகளால் தரையப் பட்டதாய்க் காணப் பெற்றது. இரும்புக் கதவுகளும் எஃகு ஆணிகளும் துரு ஏறா வண்ணம் சிவந்த நெய் வண்ணம் தீட்டப் பெற்றிருந்தது. இதனைச் சங்கமருவிய தங்க ஏடான நெடுநல் வாடை, ஒருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற் பருவிரும்பு பிணைத்துச் செல்வரக் குரீஇத் துணை மாண் கதவம் பொருந்தி யிணைமாண்டு நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப் போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத் தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந் தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை வென்றெழு கொடியொடு வேழஞ் சென்று புகக் குன்று குயின் றன்ன வோங்குநிலை வாயில் -நெடுநல் 79-88 மாளிகையின் மாண்பு அரசன் வாழும் அரண்மனை தலைநகரின் நடுவே தலை நிமிர்ந்து நின்றது. அது, மக்கள் வாழும் மனைகளும், வணிகர் வாழும் மாளிகைகளும், நிலக்கிழார்கள் வாழும் நெடிய மாடத் தெருக்களும், அமைச்சர்கள், படைத் தலைவர்கள் வாழும் அரண்போன்ற தெருக்களும் நாற்புறமும் நிலவ நடுவே உயர்ந்து நின்றது. படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவின் கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய தமனிய மாளிகை - சிலப் நடுநற் 47-50 அரண்மனைகள், மக்கள் உறையும் மனைகளைப் போல் அடுத்து வீடுகள் கட்டி வாழ்வது காணப்படுவதில்லை. நகரின் நடுவே நாற்புறமும் உயர்ந்த மதில் சூழ அமைந்த அகன்ற நிலத்தில் நறுமணம் வீசும் பொழிலுக்கு நடுவே பல மேனிலைகளையுடைய பாங்கான வண்ண மாளிகையாய் எழில் பெற்றிலங்கும். அரண்மனையைச் சுற்றி அழகுற அமைக்கப் பெற்ற இனிய பொழிலில், வேண்டும் பொழுது வேண்டும் அளவு நீரை இறைக்கவும், நீரைப் போக்கவும் வல்ல, இயந்திரப் பொறிகள் அமைந்த பொய்கைக் கரையில் அமைக்கப் பெற்றிருந்தது. இதனால் அரசன் வாழும் அரண்மனை இலவந்திகை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்தக் குளிர்தரு மாடத்தின் மருங்கே காற்று வசதியும் நீர்வசதியும் பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ள மண்டபம் ஒன்று இருந்தது. அது நீராளி மண்டபம் என அழைக்கப்பட்டது. அரண்மனையில் மகளிர் தங்கும் அந்தப்புரம் தனியே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஆண்கள் உட் செல்ல முடியாது. மன்னர் வாழும் இடம் அகன்று நீண்ட அழகிய அறைகள் பல உள்ளதாய் அமைக்கப்பட்டிருக்கும். அரண்மனை யில் அரசன் துயிலுமிடம் தனியே அமைக்க பெற்றிருக்கும். அவற்றில் அழகிய கட்டிலும், சிற்றுண்டிகளும், நல்ல நறுமணப் பொருள்களும் நிறைந்திருக்கும். மாநீர் வேலிக் கடம் பெறந்து இமயத்து வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவர் தோன்றல் வாய்வாட் கோதை விளங்கு இல வந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மா ளுடனிருந்தருளி -சிலப் காட்சி - 25:1-5 சோழ அரசனுக்கு காமன அழகிய வேனிலொடு பொதியிற் தென்றலையும் தியிடுகின்ற பல மலர்களை நிரைத்த நல்ல மர நிழலையுடைய இலவந்திகை என்னும் மன்னன் மாளிகையினின்று மதிற் புறத்தே செலவர் என்பதைச் சிலப்பதிகாரம் கலையிலான் காமர் வெனிலொடு மலயமாருதம் மன்னவற்கிருக்கும் பன்மலரடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகையின் எயிற்புறம் போகி - சிலப் 10 நாடுகள் 28-31 நீராழி மண்டபம் நீராழி மண்டபம் நீராவி மண்டபம் என்றும் கூறப்படும். குளங்களின் நடுவே அமைந்துள்ள மண்டபம் நீராழி மண்டபம் எனப்படும் தாமரை சூழ்ந்த நீராவி மண்டபம் என்று சீவக சிந்தாமணி 2800-ன் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரண்மனையின் அமைப்பு அரண்மனை, உறுதியாய், உயரமாய் உப்பரிக்கைகளை யுடையதாய் ஒளிர்ந்தது. அரண்மனை சுடுமண் செங்கல்லால் கட்டப் பெற்று மேலே கல் சுண்ணச் சாந்தும், சிப்பிச் சுண்ணச் சாந்தும் பூசப்பெற்று நன்றாகப் பளபளப்பான கல்லால் தேய்க்கப் பெற்றுப் பளிங்குச் சுவர் போல் விளங்க மேலே ஓடுகள் வேயப் பெற்றிருந்தன. பல மாளிகைகளில் வெள்ளித் தகடுகள் பொதியப் பெற்றிருந்தன. சில மாளிகைகள் செம்பொன்னாற் செய்த ஓடுகள் வேயப் பெற்றிருந்தது. பவளத் தூண்களும், பைம்பொன் தூண்களும் அரண்மனையை அழகு பெறச் செய்தது. அரண்மனை தமிழ் நாட்டுச் சிற்பிகளால் மட்டும் கட்டப் படுவதில்லை. யவன நாட்டுத் தச்சரும்; அவந்தி நாட்டுக் கொல்லரும்; மராட்டிர நாட்டுக் கம்மியர்; மகத நாட்டு கொத்தர்களும், கூடிக் கட்டப்பட்டது. பல்வேறு நாட்டிலுள்ள பொன், மணி, பவளம், முத்து, பட்டு, தந்தம் முதலிய பொருள்களால் அரண்மனை அணி செய்யப் பெற்றிருந்தது. முக்காலிகள் நாற்காலிகள், கட்டில்கள், விசுப்பலகைகள் நிறைந் திருக்கும். மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர்-தம்மொடு கூடிக் கொண்டினி தியற்றி கண்கவர் செய்வினைப் பவளத் திரள்கால் பன்மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச் சந்தி மாண்வினை விதானத்துத் தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபம் -மணி. 19:107-115 மாடத்தில் பந்தாட்டம் மன்னர்களும், நிலக்கிழார்களும், வணிகர்களும் பல நிலைகளையுடைய மாட மாளிகைகளைக் கட்டியிருந்தனர். மன்னர்களின் பெண்மக்களும் நிலக்கிழார்களின் இளம் பெண்களும் வணிகர்களின் பெண்மக்களும் மாலை வேளைகளில் தத்தம் மாடத்தின் மேற்றளத்தில், காற்சிலம்புகள் கணீர் கணீர் என்று ஒலிக்கக் களிகொண்டு பந்தாடினர். இது மாமலையில் மயில்கள் தம் அழகிய தோகைகளை விரித்து ஆடி மகிழ்வது போல் மாடங்கள் மீது மதி முக மங்கையர்கள் பந்தாடிய காட்சி இருந்தது. இதனை சங்க மருவிய தங்க ஏடுகளில் பீடுற எங்கள் பெரும் புலவர்கள் எழில் திகழ எடுத்துக் காட்டியுள்ளனர். மால்வரை சிலம்பின் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனியப் பொற் சிலம்பு ஒலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ பெரும் 330-333 மதுரை, புகார் நகர்களில், பண்டைக்கால மாளிகைகளிலும், மாடங்களிலும் நில முற்றம்அமைத்திருந்தனர். நிலா முற்றம் வேனிற்காலத்தும் குளிர்காலத்தும் இரவு நிலாக் காலத்தும், காலையிலும் மகளிரும் மைந்தர்களும் ஒருங்குகூடி, ஆடிப்பாடிப் பொழுது போக்கும் இடமாக இருந்தது. இதனைச் சிலப்பதிகாரம், எடுத்துக் காட்டுகிறது. நிலா முற்றம் மாளிகைகளில் வாழ்ந்த மக்கள் இரவில்-நிலாக் காலத்தில் திங்களின் பயனை நன்கு பயன்படுத்தி வந்தனர். மாளிகைகளில் தண்ணொளி தரும் வெண்மதியின் பயனை நுகர்வதற் கென்றே நெடு நிலா முற்றம் அமைக்கப்பட்டதுபோல் கருதப்பட்டது. நிலவு தரும் இன்னொளி இன்பம் எழுப்பும்; தென்றலின் இனிமை களியூட்டும்; காதல் வளர்க்கும். இன்பம் எழுப்பும் வேனிற் பள்ளியும் கூதிர் காலத்து வாடை புகாத கூதிர் பள்ளியும் நன்கு அமைத்து பருவ நிலைகளுக்கேற்ற உறையுளும் உணவும் உடையும் பிறவும் அமைத்து இல்லத்தை இன்பலோகமாக்கி வாழ்ந்து வந்தனர். வெப்பம் மிகுதியாக இருக்கும் வேனிற்காலத்தில் நிலா முற்றத்தை அடுத்துக் கீழே இருக்கும் மனையில் பவழ இல்லத்தில் கதிரவனின் வெப்பம் புகாது இனிது வாழ்ந்தனர் அவர்கள் வெளியே புகாது வீட்டினுள்ளே இருப்பர். அவ்விடம் மேன் மாடியைப் போலின்றி நாற்புறமும் சுற்றுச் சுவர்களும் மேற்றளமும் பெற்றிருப்பதால் அங்கு வெப்பம் தாக்காது; வெப்பக் காற்றுப் புகாது. வேனிற் காலத்து வீசும் தென்றல் தவழ்ந்து வரும் வண்ணம் சுவரில் பலகணிகள் அமைந்திருந்தன. வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம் நேர்வாய்க் கட்டளைத் திரியாது திண்ணிலை -நெடுநல் 62-64 நிலா முற்றம் வேனிற் காலத்தும் கூதிர்காலத்தும் பயன்படும். குளிர் காலத்து காலைக் குளிர் போகவும் உடலுக்கு ஊக்கமும் உரமும் ஊட்டும். ஞாயிற்றின் ஒளியினைப் பெறவும் எதிர் நோக்கி, கூதிர் காலத்தில் அதிகாலையில் மக்களொடு மாந்தரும் நிலா முற்றத்தில் சிறிது நேரம் இருப்பதுண்டு. இதனை, வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றில் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலம் தெற்கேற்பு வெண்மழை அரிதில் தோன்றும் அச்சிரக் காலை - சிலப் - 14:102-105 என்னும் செய்யுளால் சிலப்பதிகார ஆசிரியர் நிலா முற்றத்தின் சிறப்பை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். கூதிர் காலத்து மேன்மாடியில் சிறு பொழுதைக் கழிப்பர். பெரும்பாலும் அவர்கள் இடை நிலை மாடத்திலே அதிகப் பொழுதைக் கழிப்பர். இடைநிலை மாடத்தில் குளிர் காற்றுப் புகாது. எனவே இரவு காலத்தில் அங்கேயே துயில்வர். குளிர் மிகுந்திருந்தால் நெருப்புச் சட்டியில் தீ மூட்டி குளிர் அகற்றுவர். பனிக் காற்று நெருப்பின் வெப்பத்தைத் தணித்து குளிர் அதிகரிக்க குளிர் காற்று உட்புகா வண்ணம் சாளரங்களை மூடுவர் வேனிற் பள்ளி மேவாது கழிந்து கூதிர் பள்ளிக் குறுங்கண் அடைத்து -சிலப் 4:60-61 முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து நருஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலை -சிலப் 14:98-101. சங்க காலக் கோயில்கள் சங்க காலத்தில் அரண்மனைகளும் கோயில்களும் மண்டபங் களும் சிற்ப நூல் உணர்ந்த அறிஞர்களால் நாள் கணித்து நாளிகை பார்த்து நேரறி கயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன. இதைப்பற்றி அடியில் வரும் நெடுநல் வாடைச் செய்யுளும், சிலப்பதிகாரச் செய்யுளும் இனிது விளக்கும்: ஒரு திறம் சாரா வரைநா ளாமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேயங் கொண்டு தெய்வ நோக்கிப் பெரும் பெயர் மன்னர்க் கொப்பமனை வகுத்து நெடுநல் 75-78 அறங்களத் தந்தண ராசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று மேலோர் விழையு நூனெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டம் சிலப். நடு. 28: 222-25 சங்க காலத்தில் மதுரை மாநகரில் சிவபெருமான் திருமால் புத்தன் முருகன் முதலிய தெய்வங்கள் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கோயில்கள் இருந்து வந்தன. அதைப்பற்றி ஐம்பெருங் காப்பியங்களில் சிறந்த சிலப்பதிகாரத் திலும் புறநானூற்றிலும் நன்கெடுத்துக் கூறப் பெற்றுள்ளன. அவை அடியில் வருமாறாகும்: பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னன் கோயிலும் -சிலப்-இந் 169-172 அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து சிலப்பதி. நாடு.9-10 பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே - புறம் 6:17-18 தமிழ் நாட்டின் கோயில்களிலும் பொது மண்டபங்களிலும் நிறுத்தப்பட்ட தூண்களில் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அது அழகுறப் பொலிந்தது என்பதை மணிமேகலையில், நெடுநிலைக் கந்தி னிடவயின் விளங்கக் கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும் - மணி 20 உதயகுமாரனை வாளால். 110-111 மயனெனக் கொப்பா வகுத்த பாவையி னீங்கேன் யானென் னிலையது கேளாய் மணி 21: கந்திற் 132-139 என்று கூறப் பெற்றுள்ளது. வாயில்களிலும் தூண்களிலும் உருவங்கள் சுதையினாற் செய்யப்பட்டிருந்ததுடன் கோயில்களிலும் தெய்வ உருவங்கள் மண்ணினாலும் கல்லினாலும் மரத்தாலும் செய்யப்பட்டிருந்தன. மண்ணினும் கல்லினு மரத்தினுஞ் சுவரினும் கண்ணிய தெய்வங் காட்டுநர் வகுக்க வாங்கத் தெய்வ அவ்விட நீங்கா -மணி.21:கந்திற் 125-127 வித்தக ரியற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கல முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புடை நிறுத்தி வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்கென வேவினன் சிலப் 28 நடுகற் 239-242. கோ(அரசன்) வாழும் இல்-கோயில் என்னப் பெற்றது. தெய்வம் (கோ) உறையும் இல்லும் கோயில் எனப்பட்டது. மன்னர்கள் கோயிலை இறைவனுக்காக அமைத்தனர். இறைவனுக்காக அமைக்கப்பட்ட கோயிலை அரண்மனை போல் அழகாக அமைத்தனர். கோயிலுக்கு வெளி அரண்களும் உள் அரண்களும் அகழும் அமைத்தனர். அவசியம் எழுந்தால் அரசன் கோயிலுக்குள் அமர்ந்து பகைவர் களோடு போர் ஆற்றியதும் உண்டு. இதனை நமது சங்க இலக்கிய மாகிய நெடுநல்வாடை ஒருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற் பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத் துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத் தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரை தீர்ந்து ஐயவி யப்பிய நெய்யணி நெடு நிலை வென்றெழு கொடியொடு வேழஞ் சென்று புகக் குன்று குயின் றன்ன வோங்குநிலை வாயில் -நெடுநல் 79-85 அரண்மனையில் பாவை விளக்கு தமிழ் நாட்டு மன்னர்களின் அரண்மனையில் மகளிர் வாழும் அந்தப்புரம் தனியே இருந்தது. அங்கு அரசனுடைய மனைவியும்-அதாவது பட்டத்தரசியும் மறுமனையாட்டிகளும் அவர்களின் பணிப் பெண்களும் இருப்பர். அங்கு அரசன் அல்லது அயலார் எவரும் அணுக முடியாது. பலமான காவல் உண்டு. பாண்டிய மன்னர்களும் சோழர், சிங்களவர், சேரர், கன்னடர், ஆந்திரர் முதலிய நாட்டு மன்னர்களோடு பெண் எடுத்தும் கொடுத்தும் உள்ளனர். உரோம் நாட்டுப் பெண்கள் மெய்க்காவலர்களைப் பாண்டியர்கள் அந்தப்புரத்தில் இடம் பெற்றிருந்தனர். சோழர் பாண்டியர், சாளுக்கியர், ஆந்திரர், கலிங்கர், கடார நாட்டினர், (மலேசியர்) முதலிய நாட்டிலுள்ள அரசிளங்குமரிகளை மணந்தும் பெண் கொடுத்தும் உள்ளனர். அரண்மனை அயல்நாட்டு பொருள்களால் அலங்கரிக்கப் பெற்றிருந்தது. பாண்டியர் அரண்மனையில் யவனநாட்டுப் பாவை விளக்கு அணிபெறத் திகழ்ந்தது. இதனை நெடுநல்வாடை யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந்து அகல நிறை நெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி -நெடுநல் 101-104 கூறுவதன் மூலம் நன்கறியலாம். அன்னம் வைத்த விளக்கு இஃதன்றி அன்னம் போன்ற பாவைகள் உருவில் செய்யப்பட்டு வந்த விளக்கும் பாண்டியர்கள் அரண்மனையில் பயன்படுத்தப்பட்டு வந்தனவென்று பெரும்பாணாற்றுப் படை என்னும் பழைய தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம்: ---------------------- யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசை கொண்ட வைகுறு மனீற் பையகத் தோன்று நீர்ப் பெயற் றெல்லை -பெரும்பாண் 11:316-19 தமிழகம் போந்த யவனர்களின் மரக்கலங்களில் உள்ள கூம்புகளில் அன்னம் உருவமுள்ள சிற்பவேலைப்பாடமைந்த அழகிய விளக்குகள் இருந்தன. அவைகள் தமிழக அரசர்களின் கோயில்களிலும் சிவனார், திருமால் கோயில்களிலும் நந்தா விளக்கு என்னும் பெயரில் இடம் பெற்றன என்று தெரிகிறது. அன்னம் தமிழ் நாட்டுப் பறவையல்ல. அந்த அன்ன விளக்குகளை ஆதியில் உரோமர்கள் தமிழ் நாட்டிற்கு அளித்தனர் என்பது வரலாற்றுப் பாங்கான உண்மை. அரண்மனையில் எழிற் பூங்கா இயற்கை இன்பத்தை இனிதுணர்ந்த தமிழ் நாட்டு மன்னர்கள் தம் அரண்மனையில் செயற்கைக் குன்றுகள், இயந்திர வாவிகள் கால்வாய் அமைத்து உயர்ந்த மரங்களையும், பூஞ்செடிகளையும், பூமரங்களையும், பழ மரங்களையும் அமைத்து எழில் பெறச் செய்திருந்தனர். அங்கு மயில்கள் ஆடின. குயில்கள் பாடின. கிள்ளைகளும் பூவையும் மழலை மிழற்றின. மான்கள் துள்ளிக் குதித்து விளையாடின. இங்கு அரசிளங் காளைகளும், அரசிளங் குமரிகளும் ஆடிப்பாடி இன்புற்று வந்தனர். இதனை நெடுநல் வாடை, நன்கு எடுத்துக் காட்டுகிறது. நெருமயிர் எகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை நெடுநல் 91-92 அரசன் வாழும் கோயிலில் நிலா முற்றத்தில் ஒருபகுதியில் மீன் வடிவம் போற் செய்யப்பட்ட அகன்றை வாயையுடைய நீர்த் தூம்பினின்று எப்பொழுதும் நீர் பொங்கி எழுந்து கொண்டே இருந்தது. மற்றொரு பக்கம் அந்த அருவி நீர் கண்டும் அதன் ஒலி கேட்கும் மாமயில் மகிழ்ந்து தோகையை விரித்து ஆடி அகவும். மயிலும் அருவியும் அமைந்தயிடம் மலைக் காட்சியைக் காட்டிலும் இனிதே திகழ்ந்தது. இதனை நெடுநல்வாடையில் மிக அழகான ஓவியமாகத் தீட்டப் பெற்றுள்ளது. அது அடியில் வருமாறாகும்: நிலவும் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறையக் கலுழ்ந்து வீழ் அருவிப் பாடுவிறந் தயல ஒலி நெடும் பீலி ஒல்க மெல் லியல் களிமயல் அகவும் வயிர் மருள் இன்னிசை நளிமலைச் சிலமயில் சிலம்புங் கோயில் -நெடுநல் 95-100 வீடுகள் முற்காலத்தில் தமிழகத்தில் வீடுகளின் அமைப்புகள் பரந்த தாயும் நான்கு புறமும் காலியான நிலப்பரப்புகள் உள்ளதாயும் வீட்டின் பின்புறத்தில் கிணறும் பூமரங்களும் காய்கனிகள் தரும் மரங்கள் உள்ளதாயும் இருந்தன. வீடுகள் பல அறைகள்உள்ளதாயும் அழகுள்ளதாயும் அமைந்திருந்தது. இறையனார் அகப்பொருள் என்னும் நூலின் உரை பண்டைக் காலத் தமிழ்மக்களின் மனை அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது.1 அது அடியில் வருமாறு: அட்டில் (அடுக்களை), கொட்டகாரம்(பண்டங்கள் வைக்குமிடம்), பண்ட சாலை (அணிகள் முதலியன வைக்கும் இடம்) கூட காரங்கள் (மேன்மாடம்) பள்ளியம்பலம் (துயிலும் இடம்) கூத்தப் பள்ளி (நாடக மன்றம்) என இவற்றுள் நீக்கி செய்குன்றும் இளமரக்காவும், பூம்பந்தரும் விளையாடும் இடமும் இவற்றைச் சார்ந்தனவற்றுள்ளும் பிறவற்றுள்ளுமாக என்றவாறு. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மன்னன் மனையா, பெரிய நிலக் கிழார் மனையா என்று ஐயப்படும் அளவில் அமைந்துள்ளது. இதுகாறு எடுத்துக் காட்டிய சான்றுகள் சங்க காலத்திலும்-கிறித்தவ ஊழிக்கு முன்னர் தமிழ்நாட்டில் எழுந்துள்ள கட்டிடக் கலையின் ஏற்றத்தை ஒருவாறு உணர முடியும். அதற்கு முன்னுள்ள கட்டிடங்களைப் பற்றி நாம் அறிவதற்கு தமிழ் இலக்கியங்கள் ஒன்றும் கிட்டவில்லை. கட்டிடங்கள் எதுவும் இதுவரைக் கண்டு பிடிக்கப்படவில்லை. அகழ் ஆய்வில் சிந்து வெளியில் கிடைத்தது போல் நகரங்களோ, கட்டிடங்களோ கிடைக்கவில்லை, அதோடு தமிழ் நாட்டில் அக்கரையோடு அகழ் ஆய்வில் இறங்கச் செய்ய அரசு முயற்சி எதுவும் செய்யவில்லை. சிறிது காலத்திற்கு முன் இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் செய்த அகழ் ஆய்வில் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள கோத்தலையாற்றுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இஃதன்றி அதிராம் பாக்கம் பூண்டி முதலிய இடங்களிலும் சில பழங்கற்கால மக்களின் கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்திய அகழ் ஆய்வில் பல புதிய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1867-லும் 1904-லும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகழ் ஆய்வில் பலவிதமான மண்சட்டிகள் பானைகள் கலயங்களோடு, இரும்பினால் செய்த ஈட்டித்தலை, உளி, மூவிலை வேல், ஈட்டி, இருபுறமும் கூரானவாள், குத்துவாள், வேல், வாச்சி கத்தி, மண் வெட்டி, கோடரி, எறி வேல் போன்ற ஆயுதங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல வெண்கல பாத்திரங்களும் சிறுவர்களின் விளையாட்டுப் பொருள்களும் பொன் அணிகலன் களும் கிடைத்துள்ளன. 1970-ஆம் ஆண்டையொட்டி சென்னைத் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் கொற்கையில் நடத்திய அகழ் ஆய்வில் பல அரிய பானை சட்டிகளும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. இவைகள் கி.மு.785 ஆண்டில் உள்ளவை என்று கூறப்பெற்றுள்ளது. 1965-ஆம் ஆண்டையொட்டி இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் நடத்திய அகழ் ஆய்வில் பல பானை சட்டிகள், ஆயுதங்கள் உடைந்த சிலைகள் போன்ற பல அரிய பொருள்களும் வீடுகளின் அடிப்படைகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அங்கு பல பழைய கோயில்களின் அழிபாடுகளும் கிடைத்தன. இவற்றிற்கு முன் 1945-ஆம் ஆண்டில் புதுச் சேரியைச் சேர்ந்த அரிக்கன் மேடு என்னும் பகுதியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயற்சியால் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறையின் முயற்சியால் அறிஞர் மார்ட்டிமார்ட்டிமா உயிலர் (Director general) தலைமையில் ஆய்ந்து அங்கு கி.மு200-ஆம் ஆண்டில் நிலவிய துறைமுகம், யவனச் சேரி, சுடுமண் செங்கல்லால் கட்டப்பட்ட பண்டகச் சாலைகளும் அகழ்ந்து கண்டுபிடிக்கப் பட்டன. கண்ணாடி, பளிங்கு, NJgts«(Carnelian) முதலியவை களில் கடைந்த மணிகளும், பல பதக்கங்களும் பொன்மணிகளும் கிடைத்துள்ளன. இங்கு தான் யவனர் விரும்பிய மிக மெல்லிய மலின் துணிகளுக்குச் சாயம் ஏற்றப்பட்டது. இங்கு உரோமர் இத்தாலியர் நகரத்துக் குயவர்கள் செய்த பல அழகிய உயர்ந்தவகை அரிட்டைகளும் (Arretine) மட்கலன்களும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் பல கண்ணாடிக் கோப்பைகளும், மதுச்சாடிகளும், கிறித்துவ ஊழிக்கு முன் நாம் யவன நாடுகளுடன் செய்த கடல் வணிகத்தை உறுதிப்படுத்துவதாய் உள்ளன. கி.மு.1400-ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கருதப்படும் இராமன் வரலாற்றில் (வான்மீகி இராமாயணத்தில்) கூறும் இராவணனுடைய பல மாடிகளையுடைய உபரிக்கைகளையுடைய அரண் மனையும், பாண்டியனின் தலைநகரான கபாட புரத்தில் பாண்டியப் பேரரசின் கோட்டை வாயிலின் பொற்றகடு போர்த்த கதவுகளின் சிறப்பையும் இந்த அகழ் ஆய்வு மெய்ப்பிக்கிறது. இந்த அகழ் ஆய்விற் கண்ட பொருள்களும், தமிழ் இலக்கியங்கள் கூறும் அரண்மனைகளும், மாளிகைகளும், கோயில் களும் சங்க காலத்தில் திடீரென்று முளைத்து விட்டது என்று எவரும் கூற முடியாது. தமிழ் இலக்கியங்கள் கூறும் கட்டிடக் கலையின் ஏற்றத்தை எய்துவதற்கு தமிழ் மக்களும் தமிழ் நாட்டுச் சிற்பிகளும், கொத்தர்களும் 5000 - ஆண்டுகளாகப் பண்பட்டிருக்க வேண்டும் என்பது அறிவுடையார் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். எனவே சிந்து வெளி நாகரிகம் எழுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு சிந்து வெளி நாகரிகத்தை விடச் சிறப்புற்று விளங்கியது என்ற உண்மை உணரப்படுகிறது. தமிழ் நாட்டில் 8000 -ம்ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த கட்டிடங்களை எழுப்பிப் பண்பட்ட கரங்களே உபைதியா, எல்லம், சுமேரியா, கிரீட் சிந்து வெளிப் பண்பாட்டை எழுப்பி உலகிலே ஒப்பற்ற நாகரிகம் என்று உலகம் வியக்குமாறு செய்தன. சிந்து வெளி நாகரிகம் மக்களின் வரலாற்றிற்கும் புத்தொளி தந்து புதியதொரு பொலிவினை அளித்திருக்கிறது இந்திய வரலாற்றின் இருண்ட காலத்தை எழில் மிக்க பொற்காலமென இயம்புகிறது. இந்திய நாகரிகத்தின் அடிப் பண்புகளாக விளங்குவன யாவும் சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்பியல்புகளே என்னும் வரலாற்றின் குரலைக் கேட்டு உலகம் வியக்கும் வண்ணம் செய்துள்ளது. சிந்து வெளி நாகரிகம் இந்தியாவின் ஒரு அளவு கோல்; இந்தியப் பண்பாட்டிற்குள் சிறப்பிற்கு ஓர் உரைகல் என்னும் அரிய உண்மையை உணர்த்துகிறது என்று பேரறிஞர் பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் கூறியது மிகப் பொருள் செறிந்த பொன் மொழியாகும்.1 கட்டிடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் கி.மு.4000-ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலும் விசுவகர்மா மயன் போன்ற தெய்வ கம்மியர்கள் வாழ்ந்து வந்தனர். விண்முட்டும் வீடுகளையும் முகில் தவழும் மாடங்களையும் எஃகுக் கோட்டை களையும் எடுப்பித்து தமிழகத்திற்குப் பேரும் பெருமையும் அளித்தனர். இறைவனை இமைப்பொழுதும் மறவாத இராவணன், மாதேவர் மலரடியைத் தொழும் மண்டோதரி உலகில் திருநீறு அணிந்தவர்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவராகிய இராவணன் மனைவியும் பாருலகில் உள்ள பத்துக் கற்பரசிகளில் ஒரு சிறு மாசும் கூற முடியாத இராவணன் மனைவி மண்டோதரியின் தந்தை விசுவகர்மாவாக இருந்தான் எனவே தன் மருமகன் இராவணனுக்கு எழுநிலை மாடங் களையும் எஃகு போன்ற அரண்களையும் சிறந்த ஆயுதங்களையும் செய்து கொடுத்தான். இராவணன் அரண்மனை ஒரு யோசனை நீளம் உள்ளதாய் முகிழ் தவழும் மாடம் உள்ளதாய் உயர்ந்து விளங்கியது. பவளத் துண்களும் பளிங்குப் படிகளும், பொற்கட்டிலும் மணிகள் இழைத்த அரச கட்டிலும் அங்கு இருந்தன. நவமணிகள் இழைத்த பொன் அணிகலன்கள் எண்ணிலாது காணப்பட்டன. தரை சந்தனக் குழம்பால் மெழுகப்பட்டு அழகுறப் பொலிந்தன. எங்கும் விலையுயர்ந்த விரிப்புகள் காணப்பட்டன. நறுமண வாசனை இன்பமூட்டின. இரவில் எண்ணிலா விளக்குகள் அரண்மனையில் பட்டப் பகலென ஒளிவீசச் செய்தன. அங்குள்ள பூங்காக்களும், அங்கு வாழும் மயிலும், குயிலும், கிளியும், கின்னரப்பறவைகளும், பரதீசுப் பறவைகளும், மான்கள், குதிரைகள், ஆடு மாடுகள் முதலியவைகளெல்லாம் அரண்மனையை அழகு செய்வது போல் பொலிவுற்றிருந்தன என்று எழில் பெற எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இது ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தென் இந்தியாவில் இருந்த கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டினின்று இருபதாம் நுற்றாண்டு வரை நிலவியதாகக் கருதப்படும் ஆதித்த நல்லூர் நாகரிகத்தில் இருந்த இரும்பு ஆயுதங்களும் வெங்கல பாத்திரங்களும் மட்பாண்டங் களும், விளையாட்டுப் பொருள்களும் தமிழகத்தில் உயர்ந்த கட்டிடக் கலை நிலவி இருந்தது என்பதை ஊகிக்க இடம் தருகிறது. ஆனால் ஆதித்த நல்லூர் நாகரிகம் பரவிய நகரம் இது வரை நமக்குக் கிடைக்கவில்லை. ஆதித்த நல்லூர் நாகரிகம் அரப்பா நாகரி கத்தோடு சங்கிலித் தொடர் போல பிணைந்துள்ளது. என்றார் ஆர்.டி.பானர்ஜி. கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் பாண்டியர்களின் தலை நகராயும், துறைமுகப் பட்டினமாயும் விளங்கிய கொற்கை சமீபத்தில் அகழ் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் நகரமோ, வீடுகளையோ அகழ்ந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கி.மு.800 ஆண்டில் பல உடைந்து போன பானை சட்டிகளும் உடைந்த சாடிகளும் பிறவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் கொற்கையில் நிறைவான அகழ் ஆய்வு செய்யப் பெற்றால் கி.மு.2000 -ம் ஆண்டளவில் தமிழகம் பெற்றிருந்த கட்டிடக்கலையின் சிறப்பை மெய்ப்பிக்க முதல் தரமான சான்றுகள் கிடைக்கக் கூடும். கி.மு. இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னுள்ள தமிழ் நாட்டு மன்னர்களின் தலை நகரங்களும், அரண்களும் அரண்மனைகளும் அழிந்து பட்டன. பிற்காலத் தமிழ் அரசர்கள் வாழ்ந்த கொற்கையும், வஞ்சியும், பூம்புகாரும் கூட நிறைவான அகழ் ஆய்வு செய்யப்படவில்லை. ஆய்வு செய்யப் பெற்றால் நமது பழம்பெரும் கட்டிடக் கலையின் சீரும் சிறப்பும் வெளிவரும். பிற்காலப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது இன்றைய மதுரை. இது ஆலவாய் என்றும் நான்மாடக்கூடல் என்றும் கூறப்படும். கிறித்துவ ஊழி கிளர்ந்தெழுவதற்கு முன் மதுரை நான்கு மாடி களையுடைய பல அரண்மனைகளையும், அரண்களையும், மாளிகைகளையும் வீடுகளையும் கோயில்களை யும் பெற்றிருந்தன. இந்தக் கட்டிடக் கலையின் சிறப்பை ஆய்ந்தோர் தமிழர்கள், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீரான கட்டிடக்கலையின் அறிவையும், நகர் அமைப்பின் திறனையும் பெற்றிருந்தால்தான் இந்த மதுரையை நிர்மாணித்திருக்க முடியும் என்று நவில்கின்றனர். தமிழர் கட்டிடக் கலை தனிச் சிறப்பு வாய்ந்தவை. பிற இனத்தவரினின்று கடன் வாங்கியவை அல்லது-மதுரை மாநகரின் நகர் அமைப்பு திறன் பாண்டிய நாட்டு சிற்பிகளின் பட்டறிவிற்கும், கைவண்ணத்திற்கும் சிற்ப அறிவிற்கும் நல்ல எடுத்துக் காட்டாகும். மதுரை நகர் அமைப்புத் திறன் உலகிற்கோர் புதுமை. வியத்தகு பெற்றி வாய்ந்தது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பின் கி.மு.4-ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த சந்திர குப்தரின் அரசவையில் கிரேக்க தூதனாக இருந்த மெகதனி கூற்றிலும் கி.மு.300 -ம் ஆண்டின் அசோகன் கல்வெட்டிலும் கி.பி.77-ஆம் ஆண்டில் இந்தியா போந்த பிளினி என்னும் அயல் நாட்டறிஞரும் கி.பி.77-இல் மதுரை மாநகர் உலகிற்பெரிய பண்டக சாலை என்று கூறிப் போந்தார். வரலாற்றுப் புகழ் பெற்ற தாலமி என்ற அறிஞர் கி.பி.140-ஆம் ஆண்டில் மதுரைப் பாண்டியரின் மாண்பை எடுத்துக் காட்டியதிலிருந்தும் பாண்டியப் பேரரசர்கள் உரோம சக்கரவர்த்தி அகடர் அரசவைக்கு அமைச்சர்களை அனுப்பி அரச தூதுவர் களைப் பரிமாற்றம் செய்து கொண்டதும், பின்னர் பாரசீகப் பயணியும், சீனவழிப் போக்கனும், மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகன் எழுதி வைத்த குறிப்புகளும் மதுரை நகரின் பண்பாட்டையும் கட்டிடக் கலையின் சிறப்பையும் நன்கு புலப் படுத்துகின்றன. மிகத் தொன்மையான காலத்திலேயே நமது தமிழ்நாட்டில் கட்டிடக் கலை எழுந்துள்ளது. ஆனால் அன்று மண்ணாலும் மரத்தாலும் அமைக்கப்பட்டன. அப்பால் செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் சுவர்கள் எழுப்பியும் கூரைகள் வேய்ந்தும் கட்டப்பட்டுள்ளன. வீடுகள், அரண்மனைகள், அரண்கள் மண்டபங்கள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டன. தமிழ் நாட்டில் மண்ணாலே அமைக்கப்பட்ட அரண்களும் வீடுகளும் இன்றும் உள்ளன. சிற்றூர்களில் காளி,கூளி,மாரி, மாடத்தி, இசக்கி பிடாரி வண்டி மலைச்சி போன்ற தாய்த் தெய்வங்களின் கோயில்கள் நாற்புறமும் மண்சுவர் எழுப்பி மேலே பனை ஓலை வேய்ந்தும் மரக்கதவுகள் போட்டும் இருந்து வருகின்றன. கோயிலின்றி காற்றையும், வெய்யிலையும், மழையையும் பொருட்படுத்தாது வெறும் பீடத்தின் மீது நிற்கும் மண்ணாலான தெய்வ உருவங்களும் உள்ளன. இன்று பெரும்பாலான தாய்த் தெய்வங்களில் நாற்புறம் செங்கல்லும் சுண்ணாம்பும் வைத்துக் கட்டி மேலே மட்டப்பாய் இட்டு சுண்ணாம்பு அல்லது சிமிண்டால் மேற்பூச்சுப் பூசப் பெற்று இரும்புக் கம்பிகளாலான கதவிட்டு பூட்டப் பெற்றிருக்கும் கோயில்களே அதிகம் உள்ளன. மக்களின் பொருளாதார நிலை உயர உயர கோயில்களும் சிறப்புற்று எழுந்துள்ளன. கி.பி.ஆறாம் நுற்றாண்டிற்குப் பின் தமிழகத்தில் குகைக் கோயில்களும், குடை வரைக் கோயிலும் கற்றளிகளுமாகப் பலகோயில்கள் எழுந்தன. கல்லும் சுண்ணாம்பும் கலந்து அடிப்படையிட்டு கருங்கற் பாளங்களை ஒன்றின் மீது ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து கட்டும் கோயிலே கற்றளிகள் எனப்படும். சங்க காலக் கோயில்கள் சங்க காலத்திலே-அதாவது இரண்டாம் சங்கம் நிலவிய காலத்திலே அதாவது கி.மு.300-முதல் கி.மு.100-வரையுள்ள காலத்திலே தமிழகத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. கோயில்கள் பல கட்டப் பெற்றன. ஆனால் அவைகள் மண்ணாலும் செங்கல்லாலும் மரத்தாலும் கட்டப் பெற்றிருந்ததால் நாட்டில் எழுந்த கொடிய தட்ப வெப்ப நிலைகளைத் தாங்க முடியாமல் அழிந்து விட்டன. பழங்கற்காலந் தொட்டு, புதிய கற்காலம்-உலோக காலம் வரலாற்றுக் காலம் வரை தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். 1 சங்கம் நிறுவியுள்ளார்கள். இலக்கியங்கள் இயற்றியுள்ளனர். எண்ணற் கரிய கலைகளைப் படைத்துள்ளனர். ஆழ்கடல் கடக்கும் கலங்களைக் கட்டி இலங்கை, சிங்கப்பூர், கடாரம், மலையம் சாவகம் முதலிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்கள். அங்கு தங்கள் சமயத்தை நிலை நாட்டியுள்ளார்கள். எகிப்து, எல்லம், சுமேரியா, கிரீட் முதலிய நாடுகளுக்கும் போய்க் குடியேறி அங்கு தங்கள் சமயத்தையும் பண்பாட்டையும் நிலை நாட்டியுள்ளார்கள். சிந்து வெளியிற் குடியேறி கி.மு.3000 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒப்பற்ற உயரிய கலைகளை உருவாக்கியுள்ளார்கள். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் எந்த இனமும் கண்டும் கேட்டும் இராத சாதனைகளைச் சாதித்துள்ளார்கள். அரப்பா மொகஞ்சதாரோ, சங்குதாரோ நகர் அமைப்பும் உயரிய கட்டிட அமைப்பும் உலகம் கண்டும் வியக்கும் பெற்றியை உடையன அல்லவா? இத்தகைய நனிசிறந்த நாகரிக மக்கள் சங்க காலத்தில் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கி இருந்தனரா என்பதில் சிறிதும் ஐயப்பட வேண்டிய தில்லை. சிலர் கி.மு.3000 ஆம்ஆண்டில் சிந்து வெளியில் சிறந்த நாகரிகத்தைப் படைத்த மக்கள் சுமேரிய நாட்டினின்று குடியேறியவர்கள். அவர்கள் ஆரியர்களால் தென் இந்தியாவிற்குத் தள்ளப்பட்டு கிறித்தவ ஊழியை ஒட்டி அங்கு குடியேறி இருக்கலாம். எனவே அங்கு அவர்களால் பெரிய கட்டிடக்கலையை உருவாக்கி இருக்க முடியாது என்று எண்ணுகிறார்கள். இது தவறான முடிபாகும். கி.மு.10000 ஆம் ஆண்டிற்கு முன்பே தமிழர்கள் தென் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் பழங்கற்காலம் புதுக் கற்காலம், உலோக காலம் அனைத்தையும் படைத்தவர்கள். அவர்களிற் சிலர் சுமேரியாவிற்குடியேறி, அப்பால் சிந்து வெளிக்கு வந்து ஆரியர்களால் வெருட்டப்பட்டுப் பின் தெற்கு நோக்கி வந்து தங்கள் தாய் இனத்தோடு வந்து கலந்து இருக்கலாம் என்று கருதுகிறேன். தென் இந்தியத் திராவிட மக்கள் வட இந்தியாவில் குடியேறி இருக்கலாம். இது வரலாற்று ஆசிரியர் வி.ஆர் இராமச் சந்திர ஐயர் பேராசிரியர் லாங்டன், டாக்டர் ஹண்டர் டாக்டர் எய்ச்.ஆர்.ஹால் போன்றவர்கள் கருத்துமாகும். சங்க காலத்திலே தமிழர் கட்டிய கட்டிடங்களைக் காட்ட முடியாவிட்டாலும் எண்ணற்ற இலக்கியச் சான்றுகளைக் காட்ட முடியும். கிறித்தவ ஊழிக்கு முன்பே முதற்சங்கமும், தமிழரும், தமிழ் மொழியும் தமிழ்நாடும், தமிழ் நாகரிகமும் நிலவி இருந்த பகுதி கடற்கோளால் மறைந்து போனதை இந்நாட்டில் வாழும் சில புல்லுருவி வர்க்கம் போதிய சான்று இல்லை என்று ஒதுக்கித் தள்ளி விடுகின்றனர். மூவாயிரம் ஆண்டுகட்கு இவர்கள் வேதங்களும் தெய்வங்களும், தேவர்களின் சண்டையும் கிளியும், கழுதையும், குதிரையும், சிங்கமும், புலியும், யானையும் மக்களைப் பெற்ற மாக்கதைகளும் புராணப் பொய்மூட்டைகட்கும் சான்று காட்ட முடிகிறது என்று வருத்தத்துடன் கூற வேண்டியவனாக இருக் கின்றேன். குமரி முனைக்கு தெற்கே, தமிழ்நாடு, குமரி நாடு, ஒளி நாடு என்னும் பெயரால் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அங்கு பாண்டிய மன்னர் ஆட்சிபுரிந்தனர் என்றும் அவர்கள் நிறுவிய முதற்சங்கமும் சங்கத்தில் உறுப் பெற்ற உறுப்பினர்கள் பெயர்களும் அங்கு அரங்கேற்றிய நூற்களும் அக்காலத்தில் உள்ள நாடுகளின் பெயர்களும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வீடுகளும், அரண்மனைகளும், அரண்களும் கோயில்களும் உள்ளன என்பது மறுக்கற் பாலதன்று. நடுகல்லின் தோற்றம் ஆதிகாலத்தில் தமிழ் நாட்டில் தாய் இறந்ததும் அவளின் நினைவாகவும், அவளது வழிபாட்டிற்காகவும் நடுகல் நடப்பட்டது. அப்பால் சிறந்த வீரர்களுக்கும் நடுகல் நாட்டுவதும் அவர்களுக்கு வழிபாடு செய்வதும் எழுந்தது. கற்புடைய மகளிர்க்கும் சதிக்கல் நடுவதும் பத்தினிப் படிமம் நாட்டுவதும் வழிபடுவதும் உண்டு காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபிற் பெரும்படை வாழ்தல் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர -(தொல்.பொருள் 60) என்பதாகும். கோயிலும் வாழ்கையும் தமிழர்கள் கோயிலைத் தம் உயிராக எண்ணுபவர்கள். கோயிலை உடல் அமைப்பிலே உருவாக்கியுள்ளனர். உடம்பில் உயிரும், கோயிலில் இறைவனும் இருப்பதாக மக்கள் எண்ணுவர். மக்கள் எங்கு குடியேறினும் அங்கு முதலில் அமைப்பது கோயிலாக இருந்தது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவர்கள் கண்ட முதுமொழி. இது அவர்கள் கண்ட மந்திரமும் ஆகும். தமிழ் மக்கள் கோயில் இல்லாத ஊர் திருவுடைய ஊர் ஆகா என்று எண்ணினர். ஒரு ஊர் அமைப்பிற்குக் கோயிலை மையமாக (கேந்திரமாக)த் தமிழர் கொண்டனர். கோயிலை ஊர் நடுவில் அமைத்து அதன் நான்கு புறமும் சதுரமாக நான்கு தெருக்களை அமைத்து அவைகளை மாட வீதி என்று அழைத்தனர். அதற்கு அப்பால் நான்கு பெரிய தெருக்களை அமைத்து தேரோடும் தெரு (ஏதவீதி) என்று அழைத்தனர். இவ்வாறு கோயிலை மையமாக அமைத்து சதுரம் சதுரமாக தெருக்களை அமைப்பது பண்டைக் கால மக்களின் நல்ல நகரின் அமைப்பு முறையாக இருந்தது. மதுரை மாநகர் இந்த அமைப்பு முறையை அடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. கோயில் இல்லாத ஊர்கள் நல்ல நகர் ஆகா. அது கொடிய விலங்குகள் வாழும் காட்டிற்குச் சமம் ஆகும். கோயில் இல்லா ஊர்களில் வாழும் மக்கள் நற்பண்புகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் பெற முடியாது என்று நம்பினர். திருக் கோயில் இல்லாத திருவிலூரும் திருவெண்ணீ ரணியாத திருவிலூரும் பருக் கோடிப் பத்திமையாற் பாடா வூரும் பாங்கினொடு பலதுளிகள் இல்லாவூரும் விருப் போடு வெண் சங்கம் ஊதா வூரும் விமானமும் வெண்கொடியும் இல்லா வூரும் அருப்போடு மலர்பறித் திட்டுண்ணா வூரும் அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே என்று கூறும் திருத்தாண்டகம் நமது கருத்தை வலியுறுத்துவதாக மிளிர்கின்றது. தமிழ் மக்கள் திருக்கோயில்களை, மிகத் தொன்மையான காலத்திலே இயற்கை எழில் இயைந்த குன்றுகளிலும் குன்றின் அடி வாரத்திலும், குளக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும், சோலை களின் நடுவிலும், அமைத்தனர். கோயில் மக்கள் அனைவரும் ஒன்று கூடும் இடமாக அமைக்கப்பட்டது. கோயில்களில் ஆறுகாலப் பூசை நடைபெற்றது. மக்கள் தவறாது பூசைக்குச் செல்வர். மக்கள் காலை மாலை உடற்றூய்மை செய்யவும் கோயில்களின் உட்புகும் பொழுது கைகால், முகம் முதலிய உறுப்புகளை கழுவிச் செல்லவும் கோயில்களோடு குளமும் அமைத்திருந்தனர். கோயில்களில் மக்களுக்குப் பிரசாதம் என்னும் பெயரால் உணவு வழங்கப்பட்டது. குறைந்த செலவில் அதிக அளவு சோறும் விற்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்ச் சாதம், தோசை, வடை, அதிரசம் போன்றவைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இன்றும் விற்கப்பட்டு வருகிறது. சுக்கு வெந்நீர், பானக்காரம் போன்ற குடிநீர்களும் பாலும் வழங்கப்பட்டன. தீர்த்தம் என்னும் பெயரால் தண்ணீரும் அளிக்கப்பட்டது. சந்தனம், பன்னீர் வழங்கப்பட்டன. சாம்பிராணி, கற்பூரம் முதலிய நறுமணப் புகைகளும் காட்டப்பட்டன. கோயில்கள் கட்டிடக் கலைக்கும், சிலை, படிமம், ஓவியம் ஆகிய கலைகளுக்கும் நல்ல ஊற்றாக இருந்தது. ஆடைகள் அணிகள், மணிகள் முதலியவைகளைப் பேணிப் பாதுகாக்கும் தாயகமாய் அமைந்தன. இசையும் நாட்டியமும் வளர்க்கும் மாமன்றமாகக் காட்சி நல்கியது. அங்கு யாழ், வீணை, முழவு, நாதசுரம், வீணை, தவில், உடுக்கை பாணி, தக்கை முதலிய கருவிகள் மீட்டப்பட்டு வந்தன. பொதுமக்களுக்கு கோயில்கள் கலைக் கருவூலமாக எழுந்தன. அரண்மனையை விட கோயில்கள் உள்ளத்தில் அன்பும், அருளும், அமைதியும், இன்பமும், எழுச்சியும் அளிக்கும் இன்ப புரியாய் விளங்கின. தமிழகத்திலே கற்காலத்திற்கு முன்பே தெய்வ வழிபாடு துளிர்த்துள்ளது. ஆதியில் மக்கள் தாயை வழிபடத் தொடங்கினர். தாய் இறந்த பின் அவள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மரத்துண்டையோ கல்லையோ நட்டு வழிபடத் தொடங்கினர். கற்காலம் தொடங்கு முன்பே, மக்கள் முதிராப் பண்புடைய முதுமக்களாய் வாழும் பொழுதே இடி,மின்னல், காற்று, நெருப்பு முதலியவற்றைக் கண்டஞ்சினர். அவற்றைத் தொழுதனர். அப்பால் ஞாயிறு, திங்கள், செவ்வாய் முதலிய கோள்களை வழிபட்டனர். பின் இரவிலும், இருட்டிலும், கார்காலங்களிலும் தீ, விளக்கு ஞாயிறு போன்ற முச்சுடர் வழிபாட்டைத் தொடங்கினர். முத்தீ வழிபாட்டிலிருந்துதான் கந்து வழிபாடும் இலிங்க வழிபாடும் தோற்றம் பெற்றன. மக்கள் நாகரிக வளர்ச்சியில் வீடுகளும் அரண்மனைகளும் அமைத்த காலத்தில் இறைவன் உறைவிடம் என்று கோயில்கள் அமைக்க முற்பட்டனர் (மாணிக்க வாசகர் காலமும் வரலாறும்-மறைமலை அடிகள்) விண்ணில் உள்ள கோள்களை மண்ணில் வழிபட மக்கள் முதலில் நெருப்பு, விளக்கு முதலியவைகளைப் பயன்படுத்தினர். அப்பால் அவற்றிற்கு திருஉருவம் அமைத்து வழிபடலாயினர். தமிழர் கண்ட ஒளி வழிபாடு உலக மெங்கும் பரவியது. எல்லா சமயத்திற்கும் ஒளி வழிபாடு மூலவழிபாடாய் உயர்ந்தது. மக்களின் அறிவு வளர்ச்சியில் அதற்குப் பெரிய தத்துவப் பொருள்கள் கூறப்பட்டன. மக்களின் அறிவு வளர வளர தெய்வங்களின் தன்மையும் சிறப்பும் உயர்ந்தன. சங்க காலத்திலே தமிழகத்தில் கற்கோயில்களே இல்லை. செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட கூரைக் கோயில்களே இருந்தன. அந்தச் செங்கற் கட்டிடக் கோயில்கள் கூடி அப்பொழுது எழுந்த தட்ப வெப்ப நிலைகளைத் தாங்க முடியாது சரிந்தன. மக்களால் செப்பனிட முடியவில்லை. அவைகளைக் கண்ணுற்ற சங்க காலப் புலவர் உருத்திரங் கண்ணார் இடிந்து சிதைந்து வீழ்ந்து கிடக்கும் திருக்கோயிலைக் கண்டு மனம் பொறாது, இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து, எழுதணி கடவுள் போக விற் புல்லென்று ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன்றிணை என்று பாடிப் புலம்பியுள்ளார். இதற்கப்பாலும் கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரை கோச் செங்கெட் சோழன் போன்ற பக்தர்கள் சிவ பெருமானுக்கும் திருமாலுக்கும் எழுபது கோயில்களைக் கட்டியுள்ளான். அப்பால் சிலர் சிவபெருமானுக்குச் சில வகை கோயில்களைக் கட்டி உள்ளனர். இவைகள் எல்லாம் செங்கற்களால் சுண்ணச் சாந்து கொண்டு பூசிக் கட்டப்பட்ட கோயில்களேயாகும். தமிழ் நாட்டில் இன்று பெரிதும் கற் கோயில்களாகவே மாறி வருகின்றன. ஆனால் கல்கள் ஏராளமாக கிடைக்கும் கேரளத்தில், அந்நாட்டு மக்கள் இதை மரபு வழக்காகக் கொண்டு கூரைக் கோயில்களையும் கற்களால் மட்டப் பாய் போட்ட சதுரம்,வட்டம், அரைவட்டம் போன்ற வடிவில் கட்டியுள்ளனர். கூரைக் கோயில்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் கட்டப் பெற்ற கோயில்கள் ஒன்றைக் கூடப் பார்ப்பது அரிதாய் விட்டது. ஆனால் கேரளத்தில் சங்க காலக்கோயில்கள் சிலவற்றைக் காண முடியும் என்று சிலர் கூறுகின்றனர். கேரளத்தில பல கூரைக் கோயில்கள் இன்றும் உள்ளன. அவைகளை சங்க காலக் கோயில் என்று நீங்கள் ஏற்காவிடினும் சங்க காலத்தில் நிலவிய கோயில்களின் மாதிரிக் கோயில்கள் என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளலாம். சங்க காலத்தில் தமிழ் நாட்டில் கற்கோயில்களே கிடையாது. பெரும்பாலும் கூரைக் கோயில்களே உள்ளன. சங்க காலத்தில் கோயில்கள் நாற் புறமும் மண்சுவர் எழுப்பி, மேலே மரக் கட்டைகளும் சட்டங்களும் வைத்துக் கட்டி மட்டைகளால் கட்டைகள் மீது பட்டியல் போல் பனை நார்களால் கட்டப்பட்டு மேலே பனை யோலை, தென்னை ஓலை, தட்டை சுக்கு நாரி புல் முதலியவைகள் வேயப் பெற்ற கூரைக் கோயிலே எங்கும் இடம் பெற்றிருந்தன. அப்பால் நாற்புறமும் மரக்கால்களை நாட்டி, மேலே பலகைகள் வைத்து ஆணி அடித்துட்டு மேலே பலகைகளைக் கொண்டு கூரையாக வேய்ந்த கோயில்கள் எடுப்பிக்கப்பட்டன. சங்க காலத்திலே நல்ல நாகரிகம் எழுந்த பின் நாற்புறமும் செங்கற்கள் வைத்து சுண்ணச் சாந்து இடை இடையே வைத்துக் கட்டி மேலே மரச் சட்டங்களும், விட்டங்களும், மல்கைகளும் பட்டியல்களும், பலகைகளும் அடிக்கப்பட்ட கோயில்கள் எழுந்தன. சுவர்கள் மீது சுண்ணச் சாந்து பூசப் பட்டது. மேலே பல கோயில்களில் பலகைகள் மீது செங்கற்துண்டுகளும் சுண்ணச் சாந்துகளும் விரவி விரிக்கப்பட்டு மேலே கனமான சுண்ணச் சாந்து கொண்டு மெழுகி வெய்யிலுக்கும் மழைக்கும் தாங்கும்வண்ணம் செய்யப்பட்டது. இறுதியாக, சட்டமும், விட்டமும் பல கைகளும் வைத்து இரும்பு ஆணி அடித்து பட்டியல்கள் இணைத்து மேலே ஓடு போடும் நிலை எழுந்தது. இன்றும் பல குக்கிராமங்களில் ஓடு போடப்பட்ட கோயில்கள் உள்ளன. கெட்டுப் போனாலும் அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சங்ககாலத்தில் நிலவிய கோயில்களைப் போன்ற கூரைக் கோயில்கள் இன்றும் கேரள நாட்டில் பல உள்ளன. சிற்சில அமைப்புகள் வேறுபட்டதாக இருந்தாலும் பொதுவாக ஒரு அமைப்புடையதாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணப் படுகிறது. இன்று தமிழ் நாட்டுக் கோயில்களை இது பாண்டிய நாட்டுப் பாணி, இது சோழ நாட்டுப் பாணி, இது பல்லவர் நாட்டுப் பாணி, இது நாயக்கர் நாட்டுப் பாணி, என்று கூறுவது போல் பண்டைக் காலத்தில் சேரர் நாட்டுப் பாணி என்று சில புதிய அமைப்புகளையும் அலங்காரங்களையும் சேர நாட்டுக் கோயில்கள் பெற்றிருக்கலாம். மேலும், மக்களின் பெருக்கமும், சூழ்நிலைகளும் பொருளாதாரச் செழிப்பும் சோழ, பாண்டிய, தொண்டை நாட்டுக் கோயில்களில் சேர நாட்டுக் கோயில்களை விட பல புதிய அமைப்புகளை எழுப்பியுள்ளன. உயர்ந்த மதில்கள், வான் அளாவிய கோபுரங்கள், கார் முகில்கள் தவழும் உயரிய விமானங்கள் மணி மண்டபம், மகா மண்டபம், மண மண்டபம், வசந்த மண்டபம், 108 கால் மண்டபம், 1008 கால் மண்டபங்கள், தெப்பக் குளங்கள், போன்ற பல மாற்றங் களை எழுப்பியுள்ளன. இங்கு காட்டப்பட்ட திருச்சூர் கோயில் போன்ற ஒன்றிரண்டு கோயில்கள் தான் பண்டையச் சங்க காலக் கோயில்களோடு ஒப்பிட்டு நோக்கலாம். இஃதன்றி விழிஞம் என்னும் இடத்திலுள்ள 9-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட கோயில் சோழர் பாணியில் திரு உண்ணாழிகையும் முக மண்டபமும் உடையதாய் உள்ளது. 10-ஆம் நுற்றாண்டில் கன்னியாகுமரியில் எடுப்பிக்கப்பட்ட குகநாத சுவாமி கோயிலும் 9-ஆம் நூற்றாண்டில் எழுப்பப் பெற்ற பார்த்திவ சேகரபுரம் கோயிலும், 16 -ஆம் நூற்றாண்டில் உருப்படுத்தப்பட்ட சுசீந்திரம் கோயிலும் 13 -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருவல்லம் அரை வட்டக் கோயிலாகிய பரசுராமர் கோயிலும், 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிர்மங்கராவில் உள்ள வட்ட வடிவிலான கோயிலும் 16- ஆம் நூற்றாண்டில் வலிய உதையாதிச்ச புரம் கோயிலும் இவைகள் போன்று சிலவும் தமிழ் நாட்டிலும், மைசூர் மாநிலத்திலும் உள்ள இன்றையக் கோயில்களின் பாணியில் உள்ளன. கேரளாவில் கட்டப்பட்ட கோயில்கள் எல்லாம் திராவிடப் பாணியில் கட்டப்பட்ட கோயில்களேயாகும். அங்கு திரு உண்ணாழிகை (கருவறை) சிரிகோயில் என்று கூறப்படும். அங்குள்ள கோயில்களின் கருவறை பெரும்பாலும் சதுர வடிவிலே உள்ளன. அரை வட்டம், வட்டம், சதுரம் நீண்ட சதுர வடிவில் இருந்தாலும் மரக்கட்டைகளால் கட்டப்பட்டு இருமல் கட்டைகள் கூம்பிய வடிவில் அடுக்கடுக்காய் வைத்து பட்டியல்கள் வைத்து அடித்து மேலே ஓடுகள் வேயப் பெற்றிருக்கும் கூரைகள் முக்கோண வடிவில் இருக்கும். சிரிகோயிலின் (திரு உண்ணாழிகையின்) மேற் கூரையின் தோற்றம் அகன்ற கூம்பிய வடிவில் இருக்கும். அதன் அண்மையில் உள்ள இடங்களின் (Halls) கூரைகள் முக்கோண வடிவில் நீள் சதுர வடிவில் இருக்கும். மழைத் தண்ணீர் உட்புகாது எளிதில் வெளியே செல்வதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கூரைக்கோயில் சில தமிழ் நாட்டில் உள்ள சாதாரண வீடுகள் போல் உள்ளன. சில-அதாவது எட்டமனூர் கோயில் முன்புறம் ஓடு போட்ட தாழ்வாரமும் அப்பால் உயரமான ஒரு தட்டுள்ள கூரையும் உள்ளன. இதை விமானம் என்று கூறுகிறார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு கோப்புள்ள கோயிலை இரண்டு விமானம் அல்லது இரண்டு மாடிக் கோயில் என்கின்றனர். திரு உண்ணாழிகையின் முன் உள்ள படிக் கட்டுகள் சோபானம் எனப்படும். கேரளக் கோயிலின் முன், நமகார மண்டபமும் அதை அடுத்து நாலம்பலம் என்னும் உறுப்பும் அதனை அடுத்து பலிக்கல் (பலிபீடம்) கொடி மரம் ஆகிய பாகங்கள் அமைந்திருக்கும். கொடி மரத்தின் அருகே யானைக் கொட்டில்கள் இடம் பெற்றிருக்கும். கோயில்கள் அனைத்தும் திராவிட சிற்ப முறையில் கட்டப் பட்டதேயாகும்.1 மரக்கோயில்கள் முற்காலத்தில் தமிழ் நாட்டில் எங்கும் மரத்தினால் கோயில்கள் கட்டப்பட்டன. மண்கோயிலை விட மரக்கோயில் சிறப்புடையதாய் இருந்தன. மண்ணை விட ஓலையை விட மரம் உறுதி வாய்ந்ததாயும் மழை வெய்யில் காற்று முதலியவைகளை நீண்டகாலம் தாங்கும் சக்தி வாய்ந்ததாயும் இருந்தது. அதோடு மண்ணை விட அதிக உறுதியான அழகிய நுண்ணிய சிற்ப வடிவங்களை மரத்தினால் செய்வது எளிதாக இருந்தது. கல்லைப் போன்ற கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட திரு உருவங்களும் தேக்கினால் செய்யப் பட்ட திரு உருவங்களும் நீண்ட நாள் கெடாதிருந்து வந்தன. 5000 ஆம் ஆண்டிற்கு முன் மண்ணில் புதைந்துள்ள இந்திய தேக்கு மரத்துண்டு சுமேரிய நாட்டில் கண்டெடுக்கப்பட்டு இன்றும் பொன்றாது இருந்து வருவது கண்டு உலகம் வியப்பில் ஆழ்ந்துள்ளது. இன்றையக் கேரள நாட்டில் முற்காலத்தில் மரத்தால் கட்டப் பெற்ற கோயில்களை எங்கும் காணலாம். சிதம்பரத்தில் உள்ளஆட வல்லான் சபாநாதர் மண்டபம் மரத்தினாலே செய்யப்பட்டது. இன்றும் அப்படியே காட்சி அளிக்கிறது. சிதம்பரத்திலே உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் கோயில் ஆதியிலே மரத்தினாலே கட்டப் பெற்றிருந்தது. அப்பால் அது கருங்கல்லால் கட்டப்பட்டது என்றாலும் அதன் தூண்களும், கூரை முதலிய அமைப்புகள் மரத்தினாலே அமைக்கப்பட்டதாய் இருப்பது அது பழைய மரக்கோயில் என்பதை மெய்ப்பிப்பதாய்க் காணப்படுகிறது. சிதம்பரம் ஆடவல்லான் கோயிலின் பழைய கட்டிடங்கள் அனைத்தும் ஆதியில் மரத்தினாலும் அமைக்கப் பட்டிருந்தது என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை. முற்காலத்தில் எங்கும் மரக்கோயில்களே நிலவின என்பதற்கு இது ஏற்ற எடுத்துக் காட்டாகும். பிற்காலத்தில் கோயில்கள் கருங்கல்லில் அமைக்கப் பட்டன என்றாலும், மரத்தைச் செதுக்கி அமைக்கப்பட்டது போன்ற அமைப்புகளை கற்கோயிலிலே காணப்படுவது நமது கருத்தை அரண் செய்வதாக அமைந்துள்ளது. மரக் கட்டிடங்கள் தட்ப வெப்ப நிலையினால் தாக்குண்டு விரைவில் பழுதுண்டு அழிந்து விடும். இந்தத் தாக்குதலால் முக்கியமாக மரத்தினாலான மேற்கூரையே பெரிதும் தாங்கி அழியும். ஆகவே மரக் கூரை எளிதில் பழுதுறாத வண்ணம் கூரையின் மீது முற்கால மக்கள் செம்புத் தகடுகளை வேய்ந்து வந்தனர். செம்புத் தகடு மரத்தை விட நீண்ட காலம் மழை வெய்யில் காற்று முதலியவைகளைத் தாங்கி பழுதுறாது இருந்து வந்தன. ஆட வல்லான் கோயிலில் மிகப் பழமையானது திரு நெல்வேலியில் உள்ள முனிதாண்டவ மூர்த்தியின் அம்பலமேயாகும். இத்தாண்டவ மூர்த்தி படைப்புத் தொழிலைக் காட்டும் காளி காதாண்டவ மூர்த்தி என்றும் கூறுவர். இந்தத் தாண்டவ மூர்த்தி ஆடிய நிருத்த சபை செம்பு அம்பலம் அல்லது செப்பறை என்று கூறப்படும். ஆதியில் மக்கள் பொருளாதார நிலை குன்றிய காலத்தில் எழுந்த அம்பலமாக இருப்பதால் இந்த சபை தூண்களும், உத்தரங் களும், சட்டங்களும், விட்டங்களும், மல்கைகளும் பட்டியல்களும் மரத்தினால் செய்து மேற் கூரை மரத்தினால் அமைத்து மேலே செம்புத் தகட்டை வேய்ந்தனர். அதனால் இந்த நிருத்த சபை தாம்பிர சபை என்று அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆடவல்லான் ஆடிய சபைகள் ஐந்து தோன்றியது. (1) நெல்லையில் உள்ள தாம்பிர சபை, (2) மதுரையில் உள்ள இரசித சபை (வெள்ளியம்பலம்) (3) திருக்குற்றாலத்தில் உள்ள சித்திர சபை (4)திருவாலங்காட்டில் உள்ள இரத்தின சபை (5) தில்லையில் உள்ள பொன்னம்பலம் என்பர். நெல்லையை அடுத்து எல்லா அம்பலங்களும் ஆதியில் மரத்தினாலே அமைக்கப்பட்டு அப்பால் அரசர்களால் கூரைகள் வெள்ளித் தகடுகளும், பொன் தகடுகளும் வேயப்பட்டன. செங்கல் கட்டிடம் மரங்கள் ஒரு சில ஆண்டுகளிலும் மழையாலும் வெய்யிலா லும் காற்றாலும் பழுதடைவதை எண்ணியும் எளிதில் தீப்பிடித்துக் கொள்வதை உணர்ந்தும் இறைவன் உறையும் இல்லம் உறுதி உடையதாய் இருக்க வேண்டும் என்பதைக் கருதி செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கோயில்கள் கட்டத் தொடங்கினர். செங்கற் கோயில்கள் மண்கோயில்களை விட, மரக் கோயில்களே நெடுநாள் உறுதியாக இருந்தன. ஆனாலும் செங்கற் கோயில்கள் தட்ப வெப்பங்களை ஒரு நூற்றாண்டிற்கு மேல் தாங்கக் கூடியதாக இல்லை. செங்கல்லால் கட்டிய கோயில்கள் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு மேல் எங்கும் நீடித்து நிற்கவில்லை. கி.பி.600-க்கு மேல் தமிழ் நாட்டில் எடுப்பிக்கப்பட்ட கோயில்கள் அனைத்தும் செங்கற்கட்டிடங்களேயாகும். அவைகள் அடிக்கடி பழுது பார்க்க வேண்டிவைகளாக இருந்தன. பழுது பார்த்து வந்தாலும் ஆறு நூற்றாண்டிற்கு மேல் அவற்றால் நிலைத்து நிற்க முடிய வில்லை. கல்லைப் போல் சுடுமண் செங்கல்கள் தட்ப வெப்ப நிலைகளை எதிர்த்து நிற்க முடியவில்லை. கடற்கரைகளில் உள்ள கோயில் சுவரின் உப்புக் காற்றினால் பொடிப்படியாகி உதிர்ந்து விழுந்து கட்டிடங்கள் சாய்ந்துள்ளன. இன்று திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் என்று கூறப்படுவது ஆதியில் சிவன் கோயிலாக இருந்தது. திருச்செந்தூர் சாசனங்கள் இக்கோயிலை உடையவர் (சிவன்) கோயில் என்றே கூறுகின்றன. சிவன் கோயிலில் இருந்த இலிங்கத்தை ஒரு புறம் (இன்றைய முருகன் கோயில் திரு உண்ணாழிகைக்குப் பின்புறம், ஒதுக்கி வைத்து விட்டு இந்த முருகன் கோயிலைப் புதிதாய் எழுப்பியுள்ளனர். கடல் அருகே இருப்பதால் கடலின் உப்புக் காற்றால் பழைய கோயிலின் கற்கள் கூட உவர் பட்டு கல் தூள் தூளாக உதிர்ந்து தேய்ந்து போனதைக் காண முடியும். கோயில் அமைப்பும் உறுப்பும் நமது கட்டிடக் கலை இன்று, நேற்று ஏற்பட்ட ஒரு கலை அல்ல. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி பட்டறிவால் உறுதியும் உயர்வும் அழகும், வசதியும் உள்ளதாய் அமைக்கப் பெற்றுள்ளது. நமது கோயில் கட்டிடக் கலை ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. சிவாகமங்கள் இருபத்தெட்டு. இவை முறையே (1) காமி (2) யோகசம் (3) சிந்தியம் (4) காரணம் (5) அசிதம் (6) தீபத்தம் (7) சூக்குமம் (8) சத்திரம் (9) அஞ்சுமான் (10) சுப்பிரபேதகம் (11) விசயம் (12) விசுவாசம் (13) சுவாயம் புவம் (14) அனலம் (15) வீரம் (16) இரௌபரம் (17) மகுடம் (18) விமலம் (19) சந்திர ஞானம் (20) விமபம் (21) புரோற் கீதம் (22) இலளிதம் (23) சித்தம் (24) சந்தான சருவோத்தம் (25) பாரமேச்சுரம் (26) கீரணம் (27) பேதம் (28) வாதுளம் எனப்படும். இஃதன்றி பஞ்சராத்ரா ஆகமங்களும், சாக்த ஆகமங்களும் உள்ளன. நமது திருக்கோயில்கள் ஆகமங்களின் அடிப்படையிலே, அமைக்கப் பெற்றுள்ளன. பூசை முறைகளும், மந்திரங்களும், ஆகம விதிப்படியே செய்யப் பெற்று வருகின்றன. சிவ நெறிக்கும் சைவர்களுக்கும் ஆகமமே முடிவான சட்ட நூல். அதற்கு முரணாக எதுவும் நடை பெறுவது முறை கேடானது. உறுப்புகள் நமது சிவாகமங்களும் சிற்ப நூற்களும் கோயில் கட்டுவதற்கு நிலம் எப்படி இருக்க வேண்டும், எப்படிக் கட்ட வேண்டும் என்று விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவைகளைப் பற்றி இங்கு விரிவாக விளக்க இந்நூல் இடந்தராததால் சுருக்கமாக ஆனால் தெளிவாக இங்கு ஆய்வோம். கோயில் கட்டிடங்களை ஆகமங்கள் ஆறு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை 1 அதிர்ஷ்டானம் 2 பாதம் 3 மஞ்சம் 4 கண்டம் 5 பண்டிகை 6 தூபி எனப்படும். இவைகளைத் தமிழில், 1 அடி, 2 உடல் 3 தோள் 4 கழுத்து 5 தலை என்று கூறப்படும். 1. அதிர்ஷ்டானம் இதற்கு அடி, நிலம், தலம், பூமி ஆதாரம், மசூகம் போன்ற பெயர்கள் உண்டு. 2. பாதம் இதற்கு உடல், உண்ணாழிகை (அக நாளிகை) கால், பாதம், கம்பம் தம்பம் என்ற பெயர்கள் உண்டு. இப்பெயர்கள் உண்ணாழிகையினைச் சூழ்ந்திருக்கும் சுவர்களை குறிக்கின்றன. 3. மஞ்சம் இது தோள், தளவரிசை பிரதாரம், கபோதம் போன்ற பெயர்களை உடையது. 4. கண்டம் இது கழுத்து, கர்ணம், முதலிய பெயர்களைப் பெற்றுள்ளது. 5. பண்டிகை இது தலை, கூரை, சிரம், சிகரம், பண்டிகை, மதகம் போன்ற பெயர்களால் அழைக்கப் பெறும். 6. தூபி இது முடி, தூபி, கலசம்(கலயம்), சிகை, சூளம், உச்சி முதலிய பெயர்களால் அழைக்கப்படும். திருக்கோயில் கட்டிடத்தில் இருக்கவேண்டிய இந்த ஆறு உறுப்புகளும் மக்கள் உடலில் காணப்படும் அடி(பாதம்) உடல், தோள், கழுத்து, தலை, முடி (உச்சி) என்னும் உறுப்புகளை அடிப்படையாக வைத்தே பெயர்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மனிதன், மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பதைக் காட்டுவது நமது திருக்கோயிலின் திரு உண்ணாழிகை (மூலதானம்) முதல் வாயில் கோபுரம் வரையுள்ள பகுதி. (படம் 1 பார்க்க) எட்டுச் சாண் அளவுள்ள எழில் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பது போன்று நமது திருக்கோயில்களுக்கு திரு உண்ணாழிகை (கருவறை) முகம். அர்த்த மண்டபம் கழுத்து; துவார பாலகர்கள் (வாயிற் காவலர்கள் நிற்கும் இடங்கள் மக்கள் உடலினைக் காவல் புரியும் இரு தோள்கள்; கொடி மரம் (துவஜதம்பம்) வரையுள்ள பகுதி இடுப்பிற்கும் தோளுக்கும் இடையேயுள்ள உடம்பாகும்; இனி கொடி மர நிலை குதானமாகவும், கொடி மரம் முதுகுத் தண்டாகவும், குடைவரை வாயிற் கோபுரம் உயர்ந்து நிற்கும் பாதங்கள்; என்று சிவாகமங்கள் உருவகப்படுத்திக் காட்டுகின்றன. உடலை உடம்பு அன்னத்தை உண்டு வளர்ந்து நிலை பெற்றிருப்பதால் அன்னமய கோசம் அனை உடம்பு எனப்படும். உடல் ஐம்பொருள்களைக் கொண்டு இயங்குவதால் தூல உடம்பு என்றும் கூறப்படும். சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியே இருக்கும். அதற்கு, நான்கு திசைகளிலும் மதில் வாயில்கள் இருப்பினும் கோயில் புகுந்து வழிபடச் செல்பவர் கிழக்கு வாயில் வழியே செல்வது முறை. கிழக்கிலிருந்து வருபவன் முதலாவது காண்பது படுத்திருப் பவனுடைய பாதங்களேயாம். அவையே படுத்திருப்பவன் உடம்பில் கூடுதலாக உயர்ந்திருக்கும் உறுப்புகள். அதனால் முன் கோபுரங்கள் கோவில் சற்று உயரமாகக் கட்டப்படுகின்றன. கோபுரத்தை நடுவில் கட்டாது முகப்பில் கட்டியிருப்பது இந்தக் கருத்தைக் கொண்டேயாகும். மூலதானத்திற்கு மேல் உள்ள விமானம் மனிதனுடைய பிரம்மரந்திரம் என்ற சகராரச் சக்கரத்தின் அறிகுறியாக இருக்கிறது. அச்சக்கரம் ஆயிரம் இதழ்களையுடைய இரண்டடுக்குத் தாமரை மலர் போன்றது. இந்த அடிப்படையிலே விமானங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. அதிக உயரமின்றி தாமரை மலர் வடிவில் பெரிய கோயில்கள் பொற்ற கட்டால் கூரை வேயப்பட்டு ஒளி வீசுவது, சிவன் முத்தனுடைய சகராரம் போன்று ஒளி வீசும். திருமூலர் தமிழகத்தின் தலை சிறந்த சித்தர். அவர் எழுதிய திருமந்திரம் தமிழ் ஆகமம் ஆகும். அதில் உடலில் உயிர் வாழ்வதும் உயிரினுக்குயிராய் உடையவன் இருப்பதையும் உணர்த்த உடம்பின் அமைப்பில் இறை இல்லம்-திருக்கோயில் அமைக்கப் பெற்றது என்று உலகிற்கு உணர்த்து கின்றார். உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக் குள்ளே உறு பொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே - திருமந்திரம் உள்ளம் பெருங்கோயில் ஊண் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே - திருமந்திரம் 1792 உடம்பில் உள்ள உறுப்புகள் ஒரு அளவிற்கு உட்பட்டிருப்பது போல் கோயிலில் உள்ள உறுப்புகளுக்கும் அளவுகள் அளிக்கப் பட்டுள்ளன. அந்த அளவுகள் நமது சமயச் சான்றோர்களால் மிக உயரிய தத்துவ முறைப்படி தேர்ந்து தெளிந்து தரப் பெற்றுள்ளது. அவைகள் அடியில் வருமாறாகும்; 1. அதிர்ஷ்டானம் (அடி) உயரம் 1-பங்கு 2. பாதம் (உடல்) உயரம் 2 பங்கு 3. மஞ்சம் (தோள்) உயரம் 1 பங்கு 4. கண்டம் (கழுத்து) உயரம் 1 பங்கு 5. பண்டிகை (தலை) உயரம் 2 பங்கு 6. தூபி (முடி) உயரம் 1 பங்கு இந்த அளவுகள் ஒரு நிலையை உடைய கோயில்களுக்கு உரியன. இஃதன்றி வேறு அளவைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நிலைக் கோயில் அமைப்பதும் உண்டு. சில சிற்ப நூற்களில் பல நிலைகளையுடைய கோயில்களும் பலவித அளவைகளும் தரப் பெற்றுள்ளன. அமைப்பு 1. இரண்டு நிலைக் கோயில்கள் பின்வரும் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெறுவதாகும் 1) தரை 2) சுவர் 3) தளவரிசை 4) சுவர் 5) தளவரிசை 6) கழுத்து 7) கூரை 8) கலயம் 2. மூன்று நிலைக் கோயில்கள், அடியில் வரும் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெறுவதாகும்: 1) தரை 2) சுவர் 3) தளவரிசை 4) சுவர் 5) தளவரிசை 6) சுவர் 7) தளவரிசை 8) கழுத்து 9) கூரை 10) கலசம். இஃதன்றி இன்னும் பல அமைப்புகளும் சிற்ப நூற்களில் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. கோயில்கள் 1) சுத்தம் 2) மிசுரம் 3) சங்கீரணம் என்று மூன்று வகையாக கட்டப் பெறுகின்றன. 1) சுத்தம் முழுவதும் மரத்தினாலோ செங்கல்லினாலோ, கல்லினாலோ கட்டப்படுவது. 2) மிசிரம், இரண்டு பொருள்களைச் சேர்த்து கட்டப்படுவது. 3) இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைச் சேர்த்துக் கட்டப்படுவது சங்கீரணம் கோயில், விமானம் 1) அதிர்ஷ்டானம், 2) பாதம், 3) மஞ்சம், 4) கண்டம் 5) பண்டிகை 6) தூபி என்ற ஆறு உறுப்புகள் இருப்பது பற்றி மேலே கூறியுள்ளோம். இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றும் பல துணை உறுப்புகளை உடையதாக இருக்கின்றன. அவை அடியில் வருமாறு; 1. அதிர்ஷ்டானம் (அடி) 1) துணை உறுப்புகளாவன: 1) பிரத்தானம் 2) உபானம் 3) மகாபத்மம் 4) பலகை 5) அதோபத்மம் 6) குமுதம் 7) கவோந்த பத்மம் 8) துக்கோடு 9) வேதிகை 10) கண்டப் பரப்பு 11) கண்டம் 12) கண்ட வேதிகை 13) செகதி 2. தம்பம் (திருஉண்ணாழிகை) 1. வேதிகை 2. நாக பந்தம், 3. கால், 4. கலசம், 5. குடம், 6. பலகை - போதிகை (இவை தூணின் உறுப்புகள்) 3. பிரதாரம் (தோள்) 1. உத்திரம் 2. எழுதகம் 3. கபோதகம் 4. யாளம் எனப்படும். 4. கண்டம் (கழுத்து) 1. வேதிகை 2. கால் 3. போதிகை 4. பண்டிகை 5. கலசம் இதில் பஞ்சரக் கூடு மையசாலை, பஞ்சரம் கர்ணக் கூடு ஆகியவைகளு முண்டு. 5. பண்டிகை (தலை); 1. உத்திரம் 2. எழுதகம் 3. தூக்கோடு 4. மாலைத் தட்டு 5. பத்மம் 6. மாலைக்கட்டு 7. இடைக்கட்டு 8. பண்டிகை 9. மாலைக்கட்டு 10. கண்ணாடிக் கட்டம் 11. மாலைக் கட்டு 12. மகாபத்மம் எனப்படும். 6. தூபி (முடி): 1. மகாபத்மம் 2. மகாபத்ரம் 3. கண்டம் 4. அரடா 5. கண்டம் 6. கண்டா 7. அரடா 8. அலா 9. கிரீவா 10. கால் முதலிய உறுப்புகளை உடையது. 9. கண்டம் 10. நகதலிப்பூ குறிப்பு:- அதிர்ஷ்டானத்திற்கு அடியில் உபபீடம் உள்ளது. அதுவும் கபோதம் காந்தம் குமுதம் உபானம் போன்ற உட்பிரிவுகளை உடையது. முழு நிறைவான விமானத்தின் அதிர்ஷ்டானம் ஐந்து வரிகளை (பஞ்ச வரிகளை)ப் பெற்றிருக்கும் இங்கு குறிப்பிட்ட விமானம் கோயில் அமைப்பு முறை தமிழர்களின் கோயில் அமைப்பு முறைகள் அனைத்தும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப் பட்டுள்ளது. தமிழில் ஆகமங்கள் இயற்ற வந்த திருமூலர் தாம் பெற்ற ஒன்பது ஆகமங்களின் பெயர்களைக் குறிப்பிடும் தருமத்துப் பாலில் முதலாவதாகக் காரணம் என்ற ஆகமத்தின் பெயரைக் குறிப்பிடு கின்றார். திருக்கோயிலின் அமைப்புகளைப் பற்றி காரணம் என்னும் ஆகமம் பல அரிய விளக்கங்களை நமக்கு அளிக்கிறது. இடம் ஆண்டவன் அமர்ந்து அருள்புரியும் இல்லமான கோயில்கள் தூய்மையான இடத்தில் இருக்க வேண்டும். நல்ல மனநிறைவு அளிக்கும் நிலத்தில் விரிவான அடிப்படையிட்டுக் கட்ட வேண்டும். புனிதமான சிவாலயங்களை எழுப்பும் இடத்தின் கீழ் எலும்புகள், நகங்கள், மயிர் முதலிய பொருள் இருக்கக் கூடாது. திருக்கோயில்கள் எடுப்பிக்கும் இடத்தின் கீழே ஆழமாக அகழ்ந்து அருவருப்பான பொருள்களை அகற்றிவிட வேண்டும் என்று கர்சணவிதி என்ற பகுதி கூறுகிறது. அமைப்பு முறை திருக் கோயிலின் முக்கியமான பகுதி திரு உண்ணாழிகையும் (கர்ப்பக் கிருஹமும்) மேலுள்ள விமானமுமேயாகும். திரு உண்ணாழிகையை மூலதான என்றும் மொழிவார்கள். இதனுள்ளே மூலவரான இறைவனின் சின்னமாக இலிங்கம் அமைக்கப் பெற்றது. உண்ணாழிகையின் மேல் அமைக்கப்பட்ட விமானத்தின் அமைப்பைக் கொண்டே கோயில்களின் வகைகள் பிரிக்கப்பட்டன. திரு உண்ணாழிகையை முதலாவதாக வைத்தே அர்த்த மண்டபம், மகா மண்டபம், குளிப்பு மண்டபம், அலங்கார மண்டபம், திருமண மண்டபம், வசந்த மண்டபம், நூற்றெட்டுக் கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், ஆடல் மண்டபம், நாடக மண்டபம் போன்றவைகள் அமைக்கப்பட்டன. அப்பால் இராய கோபுரங்களும் வலம் வருவதற்கேற்ற சுற்றுப் பிரகாரங்கள் ஒன்று இரண்டு மூன்று ஏழு என்று விரிவடைந்தும் திருக்கோயில்களின் தோற்றம் விரிடைந்து வந்தது. மூவகை அமைப்பு திருக் கோயில்களுக்கு உயிர் போன்றது இலிங்க வடிவம் இடம் பெற்றிருக்கும் திரு உண்ணாழிகை. இந்த உண்ணாழிகையின் தோற்ற அமைப்பை ஆகமங்கள் மூன்று வகையாகக் கண்டுள்ளன. அதாவது 1. திராவிடம், 2. நாகரம் 3. வேசரம் எனப்படும். காரணம் என்றும் ஆகமம், திராவிடம் நாகரம், வேசரம் என மூன்று கோயில்கள் உண்டு என்று உரைக்கிறது. 1. நிலத்தின் மட்டத்திலிருந்து தூபி வரை நான்கு பட்டமுள்ள சதுரக் கோயில் நாகரம் எனப்படும். 2. வேதி (மேடை) யிலிருந்து எண் கோண வடிவமாக அமைக்கப்படும் கோயிலுக்கு திராவிடம் எனப்படும். கர்ண கூடத்திலிருந்து வட்டவடிவமாக அமைக்கப்படும் கோயிலுக்கு வேசரம் என்று கூறப்படும். சதுரம், எண்கோணம், வட்டம் ஆகிய மூவகைத் தோற்றமுள்ள கோயில்கள் கூறப் பட்டுள்ளன. இந்த மூவகைத் தோற்றங்களையும் முறையே கோயிலின் அடித்தலத் தினின்று சிகரம் வரைக் காண வேண்டும். தமிழ் நாட்டில் பூமி மட்டத்திலிருந்து சிகரம் வரை நான்கு மூலை பட்டையுள்ள நாகரம் என்ற கோயில் அமைப்பு முறையைப் பெரிதும் காணலாம் விமானத்தில் உள்ள கர்ண கூடத்திற்கு மேல் சிகரம் முடிய வட்ட வடிவமுள்ள வேசம் என்ற கோயில் அமைப்பையும் எளிதாகக் காணலாம். மேடைக்கு மேல் எண் கோண வடிவமாக விமான உச்சி வரை அமைந்துள்ள திராவிடம் என்ற கோயில் அமைப்பைக் காண்பது மிக அரிது. இந்த அத்தியாயம் எழுதுவதற்குத் துணையாய் இருந்த நூற்கள் 1. Encyclopaedia of Britanica - 9th edition. 2. The Indus Civilization - Sir Mortimer Wheeler 3rd ed. 1968 (LONDON) 3. Mohenjo - Daro and Indian Civilization - Sir John Marshall. 4. Dravidian - Civilization - R.D. Banerji (modern Raview calcutta sep. 1927) 5. Epigraphica India - Vol 6. Pallava Architecture Part I - A.H. Lonchurst.(Simla) 1924 7. Dravidian Civilization - R.D. Banerji (Modern Review (1932) 8. Indian and Pacific world. - Kal Das Nag 9. தொல்காப்பியம் - கழக வெளியீடு 10. தேவாரம் - அப்பர் அடிகள் (திரு அடைவு திருத்தாண்டகம் 5) 11. அகநானூறு - கடியலூர் உருத்திரங்கண்ணனார். 12. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்- மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1969 13. Arts and crafts of Travancore - Stella Kramrisch & others (London) 1948 அக நாழிகை (கர்ப்பக் கிரகம்) அக நாழிகை (கர்ப்பக் கிரகம்), திருக்கோயிலின் இன்றியமை யாத பகுதி. முற்காலத் தமிழ் மக்கள் அக நாழிகையைத்தான் கோயில் என்று அழைத்தனர். இந்த அகநாழிகையை மூலத்தானம் (மூலதானம்) என்றும் கூறுவர். இங்குதான் மூலவர் இருப்பர். அதாவது சிவலிங்கம் இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் உயர் நிலையாய் இருப்பது மூலதான மூர்த்தியாகிய அக நாழிகைத் திரு உருவம் வாயில் கோபுரம் பாதமாகவும் அக நாழிகையைச் சிரசாகவும் மதிக்கப்படும். அக நாழிகை, உண்ணாழிகை, கருவறை, (கர்ப்பக் கிருகம்) திருவறை, புனித உறையுள், புனித இடம், தெய்வமனை வழிபாட்டிடம் என்றெல்லாம் தமிழர் அழைப்பர். வட மொழியாளர் கர்பக்கிரகம் என்று கூறுவர். ஆங்கிலத்தில், சாங்டம் சாங்டம் (sanctum sanctum) என்று அழைக்கப்படும் திருக்கோயிலின் உறுப்புகளை மகாங்கம், அங்கம், உபாங்கம் பிரத்தியாங்கம் என்றும் நான்கு வகையாகப் பிரிக்கப்படும். அகநாழிகை மகாங்கம் என்றும் அர்த்த மண்டபம் அங்க மென்றும், மகாமண்டபம் முதலானவை உபாங்கம் என்றும் பிரகாரங்கள் பிரத்தியாங்கம் எனவும் பொதுவான அங்கம் சொல்லப்படுகிறது. அக நாழிகை (கர்ப்பக் கிரகம்) தலையாகவும், அந்தராளம் முகமாகவும் கண்டமாகவும் அர்த்த மண்டபம் மார்பாகவும், மகா மண்டபம் வயிராகவும் பிரகாரங்கள் முழங்கால் கணுக்காலாகவும் கோபுரத்துவாரம் பாதமாகவும் சிற்ப நூற்களில் கூறப்படுகின்றன.1 உண்ணாழிகை (அக நாழிகை) யின் - கருவறையின் விமானத்தை தூலலிங்கம் என்றும் அதன் உள்ளிருக்கும் திரு உரு சூட்சம லிங்கம் என்றும் கூறப்படும். விசுவகர்மீயம் என்ற சிற்ப நூல், விமானத்தை சிவனுரு என்றும் சிவன் உடல் என்றும் சிவ பெருமானின் நின்ற கோலத்திற்கு விளக்கம் தருகிறது. உண்ணாழிகையின் மேலுள்ள எழிலார்ந்த வடிவத்தின் வேலைப் பாடுகளும் உறுப்புகளும் அடுக்குகளும் சிற்ப நூற்களில் சிறப்பித்துப் பாராட்டப்பட்டுள்ளன. அவற்றை அடியிலிருந்து 1. உபானம். 2. செகதி 3. குமுதம் 4. கந்தரம் 5. பட்டிகை 6. வேதிகை 7. தூண் (தம்பம்) 8. உத்தரம் 9. கபோதம், 10. பிரதரம் 11. ஹதி வேதிகை 12. கிரீவம் 13. மஞ்சம் 14. மகா நாசி 15. பார் சுவ நாசி 16. சந்திர மண்டலம் 17. பாலிகை 18. பத்மம் 19. மகா பத்மம் 20. தூபி (சிகரம்) வரை 20- உறுப்புகள் ஆக வகுத்து கூறப் பெற்றுள்ளன. இவற்றை சிவ வடிவத்தின் பாதம், கெண்டைக் கால், முழங்கால் தொடை, அரை(மேட்ரம்), நாபி, உதரம், மார்பு, தோள், புஷ்டிதம், கழுத்து, ரேகை, உதடு, மூக்கு, காது, கண், நெற்றி, தலை, சிரசு, சிகை முதலிய உறுப்புகளாகப் பாவிக்கப் பெறுகின்றது. இஃதன்றி, உண்ணாழிகையையும் (கருவறையையும்) விமானத்தையும் பெண் வடிவம் என்றும், அதன் உள்ளிருக்கும் திரு உருவை, உதரத்திலுள்ள கர்ப்பம் என்றும் விளக்கம் தரப்படுகிறது. உதரத்தில் கர்ப்பமாகிய மூர்த்தி அமைக்கப் பெற்றிருப்பதாலேயே உண்ணாழிகைக் கட்டிடத்தை கர்ப்பக் கிரகம் (கருவறை) என்று அழைக்கப்படுகிறது. இக்கருத்தினை உளத்தில் கொண்டு மூல மூர்த்தி வீற்றிருக்கும் கட்டிடத்தைச் சிற்ப நூல் வல்லுநர்கள் குக்குடாண்டம்- கோழி முட்டை வடிவமாகவும் அமைக்கலாம் என்று கூறுகின்றார்கள். இத்தகைய, குக்குடாண்ட வடிவத்தில் கோயில்கள் அமைப்பதும் உண்டு. சிவபெருமானின் நின்ற கோலத்தையும் நன்றாகத் தீட்டப்பட்ட திரு உருவத்தை ஒரு நிறைவாக உருவாக்கப்பெற்ற விமானத்தையும் அருகருகே வைத்து ஒப்புநோக்கினால் உண்மை புலனாகும். மக்கள் உடம்பின் உறுப்புகளை அங்கம் (உறுப்பு), மகாங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் என்று பிரித்துள்ளது போல் இறைவனின் திரு வடிவமாகக் கற்பிக்கப் பெற்ற விமானத்தின் அதிர்ஷ்டானம் (Basement) என்ற உறுப்பை மகாங்கம் என்றும் தம்பம் அல்லது சுவர்ப்பகுதியை (Superstructure) அங்கம் என்றும், பிரதாரத்தை (Entablature) உபாங்கம் என்றும் சிகரத்தை (Doom or roof) பிரத்தியாங்கம் என்றும் சிற்ப நூற்களில் கூறுகின்றன கோயில் என்று கூறப்படுவது குறிப்பாக - ஏன்? சிறப்பாக உண்ணாழிகையையும் அதன்மீதுள்ள விமானத்தையுமே குறிப்பிடப்பட்டுள்ளது.1 விமானம் விமானம் என்றால் அகநாழிகை மீதுள்ள தூபி என்று அகராதிகளில் பொருள் கூறப் பெற்றுள்ளது. சிற்ப நூற்களில் விமானம் என்பதற்கு, நன்றாக அளக்கப்பட்டது என்று விளக்கந்தரப் பெற்றுள்ளது. விமானங்களைப் பற்றி அதிகார பூர்வமாக விளக்கந் தரும் நூற்கள் ஆகமங்கள் ஆகும். தமிழ் ஆகமமாகப் போற்றப் பெறும் நூல் திரு மந்திரம் ஆகும். அதில் தூய விமானமும் தூலம தாகும் - 1689என்று கூறப் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம், அக நாழிகை மீது அமைக்கப் பெற்றுள்ள மேன் மூடி- உச்சியாகிய விமானம் தூய்மையும் பருமையும் வாய்ந்த சிவக் குறியாகும். (சிவக் குறி - சிவலிங்கம்) விமானத்தின் கீழ் அகத்தே அக நாழிகையில் (கருவறையில்) விளங்கும் அருளோன் ஆகிய சதாசிவன் நுண்ணிய சிவக் குறியாவன் என்று கூறப்படுகிறது. பொதுவாக விமானம் என்பது உயர்ந்த மாடி என்று பொருள் தந்தாலும், சிறப்பாக திருக்கோயிலில் கருவறையின் மீதுள்ள உயர்ந்த அமைப்பையே குறிப்பிடுகிறது என்பதை எவரும் மறுக்கார். மாடம், என்பது மாளிகைகளின் மீதுள்ள மாடிகளைக் குறிப்பிடும் பதமாகும். என்றாலும் திருக்கோயிலில் உள்ள உயர்ந்த அமைப்புகளே மாடம் என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. கோயில்களின் வகைகளைக் குறிப்பிடும் பொழுது மாடக் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. மாடம், உப்பரிகை, உபரிகை என்றும் கூறப் படுகின்றன. இருக்கிலங்கு திரு மொழிவாய் எண்டோழீசற்கு எழில் மாடம் எழுபதுசெய் துலக மாண்ட திருக்குலத்து வளச் சோழன் என்று சோழன் செங்கணான் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் ஆக எழுபதுக்கு மேற்பட்ட விமானங்களை கட்டினான் என்று திருமங்கையாழ்வார் கூறுகின்றார். மேலும் அவர், திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே என்றும் கூறுகின்றார். என்றாலும், கருவறையின் மீதுள்ள உயர்ந்த கட்டிட அமைப்பிற்கு விமானம் என்ற பெயரே பொருத்தமானதாகும். மாடம் என்பது வீடு, மாளிகை, அரண்மனை போன்றவைகளின் உபரிக்கைகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்வது சாலப் பொருத்தமானதாகும். கருவறையின் மீதுள்ள மேல் அடுக்குகளை, சைவ சமய நாயன்மார்கள் பல இடங்களில் விமானம் என்றே குறிப்பிடுகின்றார்கள். கருப்ப மிகு முடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலை என்னும் பொருப் பெடுக்க லுறு மரக்கன் பொன் முடிதோ ணெறித்த விரற் புனிதர் கோயில் றருப்பமிகு சலந்தரன்ற னுடறடிந்த சக்கரத்தை வேண்டி யீண்டு விருப்பொடுமால் வழிபாடு செய்ய விழி விமானஞ் சேர் மிழலை யாமே என்று சம்பந்தப் பிள்ளையார் தம் தேவாரப் பதிகத்தில் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. விமானம் விமானம் என்றால் நன்றாக அளக்கப்பட்டது என்பது பொருளாகும். கோயில்களில் திரு உண்ணாழிகையினுள் திரு உருவம் இடம் பெற்றிருக்கும். அதன் மீது உயரமாக விமானம் அமைக்கப்படும். அயல் ஊர்களிலிருந்து வரும் மக்கள் தொலைவில் வரும் பொழுதே விமானத்தைக் கண்டதும் இறைவன் திருமுடியைக் கண்டதாக எண்ணி வழிபடுவர். முற்காலத்தில் கோயிலின் உயர்ந்த பகுதியாக விமானம் இருக்கும். வாயில் கோபுரங்கள் உயரமாக அமைப்பதில்லை. கோபுரத்தைக் கண்டு இறைவன் திரு முடியாக எண்ணி வழிபடுவது தமிழர் மரபன்று. அது முறையும் அன்று. விமானம் ஒரு நிலையினின்று பதினான் நிலை வரை தமிழ் நாட்டில் இருந்தது என்று கூறப்படும். தமிழ்நாட்டில் அரண்மனைகளும் ஏழு நிலைகளை உடையதாய் இருந்தன என்று சங்க நூல்கள் சான்று தருகின்றன. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங் களில் தட்சணாமூர்த்தி, இலிங்கோற்ப மூர்த்தி, காளி திருமால் முதலியவர்களின் திரு உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சிவ பெருமானுக்கு திராவிட முறையிலும், உமாதேவிக்கு நாகர முறையிலும், முருகனுக்கு திராவிட முறையிலும், பிள்ளையார்க்கு வேசர முறையிலும் பிற்காலத்தில் கட்டப்பட்டன என்று சில சிற்ப நூல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இது வட மொழியில் உள்ள சிற்பப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தன என்று எண்ணப்படுகிறது. தமிழ் நாட்டில் வேறு சில சிற்பப் பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. சதுர வடிவிலான திரு உண்ணாழிகை, நீண்ட சதுர வடிவிலான திரு உண்ணாழிகை வட்ட வடிவிலான திரு உண்ணாழிகை அரை வட்டவடிவிலான திருஉண்ணாழிகை போன்ற பல்வேறு அமைப்புள்ள திரு உண்ணாழிகைகள் கூறப்பட்டாலும் எங்கும் சதுரத் திரு உண்ணாழிகைகள் தான் காணப்படுகின்றன. ஆனால் தொண்டை நாட்டில் அரை வட்டத்திரு உண்ணாழிகைகள் மிகுதியாக உள்ளன. திரு நின்ற ஊர், பனங்காட்டூர், மழீசை, மாடம் பாக்கம் முதலான இடங்களிலுள்ள கோயில்களின் விமானங்கள் அரை வட்டக் கருவறைகளைக் கொண்டதாகும். கருவறைகளுக்கு மேல் விமானம் சதுரம், நெல்லிக் கனி, வட்டம் முதலிய உருவங்களில் உள்ளன. அரை வட்டக் கருவறையின் மீது யானை முதுகும் போல் செய்யப் பட்டிருக்கும். திருநின்றஊர் முதலிய கோயில்களில் காணப்படுவது இது போன்றதேயாகும். திருத்தணி நந்தியாற்றங் கரையில் யானை முதுகும் அரைவட்ட முகமும் உடைய விமானம் உண்டு. பெருமாள் கோயில்களில் மூன்று அடுக்குள்ள அஷ்டாங்க விமானம் உண்டு. காஞ்சி வைகுண்ட நாதர் கோயிலிலும் திருக் கோட்டியூர்க் கோயிலிலும் இந்த அஷ்டாங்க விமானம் காட்சி அளிக்கிறது. திரு அதிகையில் கர்ப்பகிரகத்தின் மீது எழுப்பப் பெற்றிருக்கும் விமானத்தை திரிபுரத் தகனத்தேராகக் கட்டிய சிற்பிகளின் திறமை போற்றத்தக்கது. விருப்பொடுமால் வழிபாடு செய்ய விழி விமானஞ் சேர் மிழலை யாமே என்ற தேவாரப் பாடல் விமானத்தின் ஏற்றத்தைக் குறிக்கின்றது. கருவறைகளின் மேல். உள்ளே இருக்கும் தெய்வ உருவங்களுக்கு மகுடம் சூட்டினாற் போன்று உயர்ந்த ஒற்றைக் கோபுரங்கள் அமைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது என்று கூறப் படுவதற்குச் சான்றாக இன்று தஞ்சாவூரில் இராசராசன் கட்டிய திருக்கோயிலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் இரா சேந்திரன் கட்டிய கோயிலும் சிறந்த எடுத்துக் காட்டாய் இலங்குகிறது. சிற்ப நூற்களில் விமானங்கள் அமைப்பதைப் பற்றி விரிவான விளக்கம் தரப் பெற்றுள்ளது. விமானத்தின் வகைகள், பெயர்கள், உருவங்கள் மாடிகள், வாயில்கள் பலகணிகள் அகலம், நீளம், உயரம் முதலியன அனைத்தும் தெளிவாகக் காணப்படுகின்றன. அவை அடியில் வருமாறாகும்: 1. மேரு: அறு கோண உருவத்தில் பன்னிரண்டு மாடிகளை யுடையதாய் நான்கு வாயில்களும் பன்னிறப் பலகணிகளும் பாங்குற அமைக்கப் பெற்றதாய் இருக்கும் இது முப்பத்திரண்டு முழ அகலம் உடையது. 2. மந்தாரம்: இது முப்பது முழம் அகலம் உடையது. பத்து மாடிகளும் சிகரங்களும் உடையது. 3. கைலாசம்: இது எட்டு மாடங்களையும் 28 முழம் அகலமும் உடையது. 4. விமானம்: இது இருபத்தொரு முழம் அகலமும் கிராதிகளையும் பல கணிகளையும் 10 மாடிகளையும் உடையது. 5. நந்தனம்: இது ஆறு மாடங்களையும் பதினாறு கபாலங் களையும் உடையது. 32 முழம் அகலம் உடையது. 6. சமுக்கம்: இது வட்டமான பெட்டி வடிவில் இருக்கும். 7. பத்மம்: இது தாமரை வடிவில் எட்டு முழ உயரமான ஒரு தூபியையும் ஒரு மாடத்தையும் உடையது. 8-9. கருடன், நதனம்: இவை சூரியக் கழுகு போன்ற அமைப்பில் 24 முழ அகலமும் ஏழு மாடங்களையும் உடையது. இதில் இருபது கபாலங்கள் உள்ளன. 10. வர்த்தனா: .......................................................... 11. குஞ்சரம்: இது யானையின் முதுகு போன்றதாக இருக்கும் 16 முழ நீளம் உடையதாய் அடி அகன்றதாயும் இருக்கும். 12. குக ராஜன்: இதுவும் குஞ்சரம் போன்று 16 அடி முழம் அகலமும் அதே போன்ற மேற் கூறையும் மூன்று செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பல கணியும் பெற்றிருக்கும். 13. இடபம்: இது காளை மாட்டின் வடிவில் ஒரு மாடமும் ஒரு தூபியும் வட்ட வடிவில் 12 முழ அகலம் உள்ளது. 14. அம்சம்: அன்னப் பறவையின் வடிவில் அழகாக அமைந்திருக்க வேண்டும். 15. கடம்: இது குடத்தின் வடிவத்தினைப் பெற்றிருக்கும் 8 - முழ அகலம் இருக்கும். 16. சர்வதோபத்திரம்: இது நான்கு வாயில்களை உடையது. பல, செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பலகணிகளையும் உடையது. ஐந்து மாடங்கள் அமைந்தது 25 முழம் அகலம் வாய்ந்தது. 17. சின்ஹ: இது சிங்கத்தின் தோற்றம் வாய்ந்த பன்னிரண்டு பட்டங்களையுடையது. 25 முழம் அகலம் உடையது. 18-20. எஞ்சி நிற்கும் ரோட்டுண்ட, சதுர்ப்புயம் எண்டோள் ஆகிய மூன்று மாடங்களும் பதினாறுபட்டைகளையுமுடையன. சதுர்ப்புயம் ஐந்து கபோலங்களையுடையது மற்றவை ஒரே கபோலத்தை உடையன. சிந்து வெளி அகழ் ஆய்விற் கண்ட கட்டிடங்களின் மூலம் 5000 - ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் கட்டிடக் கலை அமைப்பில் வல்லுநராய் விளங்கினர் என்பது நன்கு பெறப்படும். தமிழர்களுக்கு சிந்து வெளி மக்களின் பாரம்பரியத்துவம் உண்டு என்று சர். சாண் மார்சல், சோவியோ துப்ரயல் ஹிரா அடிகள் போன்ற பேரறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கிறித்துவ ஊழி அரும்புவதற்கு முன்பே தமிழ் நாட்டில் பெரிய கோயில்களும், அழகிய அரண்மனைகளும், மாபெரும் மாளிகைகளும், அளப்பரிய மலையென்ன உயர்ந்த மாபெரும் அரண்களும் இருந்தன. விண்முட்டும் எழுநிலை மாடங்களும் முகில் தவழும் நான் மாடக் கூடங்களும், பத்துக்கு மேற்பட்ட பல அடுக்குகளை விமானக் கோயில்களும், பொற் கோட்டைகளும், கற்கோட்டைகளும், செம்புக் கோட்டைகளும் இருந்தன என்று நமது இலக்கியங்களும், சிற்ப நூல்களும், புராணக் கதைகளும் சான்று தருகின்றன. ஆரியர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழித்த அரப்பாவின் அன்று உயர்ந்து நின்று வீழ்ந்த அரணை இன்று பாக்கிதான் அகழ் ஆய்வுத்துறை இயக்குநர்களின் தளபதி சர். kh®£ok® cÆy® mfœªJ f©L gl« ão¤J¡ fh£o., இது தான் ஆரியர்கள் தெய்வமாகிய இந்திரன் அளித்ததாக இருக்கு வேதம் கூறும் ஆரியர் அல்லாதாரின் (திராவிடர்களின்) கோட்டை என்று உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார். கிறித்துவ ஊழி அரும்புமுன் திராவிட மக்கள் தமிழகத்தில் கட்டிய கோயில்களும், கோபுரங்களும், கோட்டைகளும், மாளிகை களும், மண்டபங்களும், செங்கல்லாலும், மண்ணாலும் கட்டப் பட்டதால் இயற்கையின் சீற்றத்தாலும், பகைவர்களின் தாக்குதல் களினாலும் அழிக்கப்பட்டு விட்டன. இன்று நமக்கு சான்று காட்ட முடியவில்லை. ஆனால் இலக்கியச் சான்றுகள் பல உண்டு. இங்கு நாம் சிறப்பாகச் சிந்திக்கக் கூடிய செய்திகள் சில உள. புத்தர் காலத்திற்குப் பின்னரே வட நாட்டிலும் நடு நாட்டிலும் கோயில்கள் தோன்றின. அக்கோயில்களில் கோபுரங்களோ, விமானங்களோ அமைக்கப் பெறவில்லை. குப்தர்களின் இறுதிக் காலத்திலே தான் விமானங்கள் தோன்றின. கி.மு. 1000-ஆண்டிற்கு முன் நடைபெற்றதாகக் கூறப்படும் இராம காதையில், இராமன் பாண்டிய நாட்டின் தலைநகரான கபாடபுரத்தில் உள்ள பாண்டியன் தலைநகரையும், அரணையும் அதன் பொன்னாலான கோட்டை வாயிற் கதவுகளையும் பற்றிக் கூறுவது வான்மீகி இராமாயணத்தில் கூறப் பெற்றுள்ளது. அதில் இராவணனின் வானளாவிய அரண் களையும், மாபெரும் அழகிய மாளிகை களையும் பற்றி விரிவான விளக்கம் தரப் பெற்றுள்ளது. கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் நூற்களானவை தமிழ் நாட்டில் மாளிகைகளும், மாடங்களும், கோயில்களும் கோபுரங்களும், விமானங்களும் இருந்தன என்பதற்குச் சான்று தருகின்றன. கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் செங்கற் களாலும், சுதைச் சாந்தாலும் கட்டப் பெற்ற கோயில்கள், கோபுரங்கள், விமானங்களிருந்தவையாயின் கி.மு. நாலாம், ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த வட நாட்டினர் விமானங்கள் அமைக்கும் முறையைத் தமிழர்களிடமிருந்து அறிந்து கொண்டிருந்தனர் என்று எண்ணுவதில் தவறில்லை என்க. தமிழ் நாட்டில் விமானங்கள். பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630-660) மாமல்லபுரத்தில் ஒற்றைக் கல்லில் சமைத்த மாதிரிக் கோயில்களே தமிழ் நாட்டில் விமானங்களுடன் முதன் முதலாக அமைத்த கற்கோயில் என்பது சிற்ப வல்லுநர்கள் கருத்து. இந்தக் கோயில் களை முன் மாதிரியாகக் கொண்டே தமிழகத்தில் கோயில்கள், விமானங்களுடன் அமைக்கப்பட்டன என்று சிலர் கருதுகின்றனர். இக்கருத்து நாம் முன்னர், எடுத்துக்காட்டிய பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரும்பாணாற்றுப் படை, நெடுநல் வாடை முதலிய நூற்களில் உள்ள நற்சான்றுக்கு மாறானதாகும். இஃதன்றி கி.பி.6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அப்பர் அடிகளும், திருஞான சம்பந்தப் பிள்ளையாரும், அவர்கள் காலத்திற்கு முற்பட்ட சிதம்பரம், சீர்காழி, பெண்ணாடகம், மதுரை, திருநெல்வேலி, வைகல், திருப்பாதிரிப் புலியூர் முதலிய ஊர்களில் உள்ள பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், தூங்கானை மாடக் கோயில், இளங்கோயில், மணிக் கோயில், மாடக் கோயில் போன்ற கோயில்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபட்டது உள்ளங்கை நெல்லிக் கனி போல் நன்கறியப்படுகின்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்த கோச்செங்கண்ணான் என்னும் சோழ வேந்தன் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியதை சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் பாடிய பாக்கள் மறுக்கற்பாலதன்றாம். மகேந்தர வர்மனும், பரமேசுவரவர்மனும், இவர்களுக்குப் பின் வந்த மன்னர்களும், மாமல்லபுரத்திலும், காஞ்சிபுரத்திலும் கட்டிய கோயில்களும், கோபுரங்களும், விமானங்களும் பண்டையத் தமிழர்கள் கண்ட வழியில் எடுப்பித்த கோயில்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.1 கோயில்கள் கோபுரங்கள் விமானங்கள் அமைக்கும் வழக்குத் தமிழ் நாட்டில் கிறித்தவ ஊழி எழுவதற்கு முன்பே இருந்ததாகும். பல்லவர்கள் தமிழர் நெறியாகிய சிவநெறியைத் தழுவிய பின் தமிழர் வழக்கினையொட்டி கருங்கற் கோயில்களைத் தமிழகத்தில் அமைக்கத் தொடங்கினர். அவர்களுக்கு தமிழர் கண்ட ஆகமங்களும், சிற்பநூற்களும் தமிழ் நாட்டுச் சிற்பிகளின் பட்டறிவும் வழி காட்டியாக இருந்தன. தமிழர்கள் சங்க காலத்தில் செங்கற்களாலும், சாந்தினாலும் அமைத்த அதிக கோயில்கள் அப்பால் கருங்கற் கோபுரமாக கோயிலாக விமானமாகப் பரிணமித்தன என்று நமது கட்டிடக் கலை வரலாறு கூறுகின்றது. இக்காலத்திலும் பல வண்ணங்கள் தீட்டப் பெற்ற சுதை உருவங்களையுடைய கோபுரங்களும் விமானங்களும் தமிழ் நாட்டில் தான் உண்டு. கோபுரங் களை மாடங்களைப் போல் அடுக்கடுக்காய் அழகுபெற, அணிதிகழ, ஒளியுற அமைக்கும் வழக்கு திராவிடர்கள் கைக் கொண்ட உயரிய முறையாகும்.1 இதனை பெர்கூசன், சோவியோ துப்ரயல், டெல்லாகிரெமரிஷ் போன்ற மேனாட்டுக் கட்டிடக் கலை வல்லுநர்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றனர். திருக்கோயிலில் சிறப்பான பகுதி அக நாழிகை (உண்ணாழிகை) என்று கூறும் கருவறையும் அதன் மேல் எழுப்பப் பெற்ற விமானமும் ஆகும். திருமதிலில் உட்புறம் செல்லும் வாயிலின் மேல் எழுப்பப்பெற்ற மேல் தளம் கோபுரம் எனப்படும். இதன் பொருள் யாதா யிருப்பினும் கருவறையின் மீது எழுப்பப் பெற்ற விமானத்தை உண்ணாழிகையின் உள்ளே உருப் பெற்றிருக்கும் தெய்வ உருவின் மணி முடியாக எண்ணி மக்கள் தொலைவில் வரும் பொழுதே விமானத்தைக் கண்டதும் இறைவன் திரு உருவைக் கண்டாற் போன்று பக்தியுடன் கைகுவித்து வழிபடுவர். வாயிற் கோபுரத்தைக் கண்டு எவரும் வழிபடுவதில்லை. அது ஆகம விதியும் இல்லை தமிழர் மரபும் அன்று. ஆனால் சிலர் விமானத்தைக், கோபுரம் என்றும் கோபுரத்தை விமானம் என்றும் கூறி இடர்ப்படுகின்றனர். அது சமய அறிவிலார் கூற்று என்று கூறிவிடலாம். ஆனால் நமது நாட்டுத் திருக்கோயில்களை சிற்ப நூற்களின் விதிப்படியும் சிவாகம முறைக்கு மாறுபாடின்றியும் அமைத்துத்தரும் தபதிகள் தம் நூற்களில் விமானத்தைக் கோபுரம் என்று கூறுவதோடு கோபுரக் கட்டிட அமைப்பும் அதன் பெயரும் என்ற தலைப்பின் கீழ் ஒரு தபதி I- வட்டமாய் இருக்கும் கோபுரங்களுக்கு விருத்த விமானம் II- சதுரமாய் இருக்கும் கோபுரங்களுக்கு சதுர விமானம் என்றும் கூறி விமானங்களுக்கு விளக்கம் தந்து கொண்டு போகிறார். இது சிற்ப நூற்பயிற்சி இல்லாத பொது மக்களுக்குக் குழப்பந்தருவதாய் இருக்கிறது. இத்தவறுகள் திருத்தப் பெற வேண்டும். விமானக் கட்டிட அளவும் பெயரும். 1. ஏகபூம விமானம்: அகலம் இருக்கும் அளவு உயரம் வைத்துக் கட்டிய விமானத் திற்கு ஏக தள விமானம் அல்லது ஏகபூம விமானம் என்று பெயர். 2. சாந்தீக விமானம்: அகலம் ஏழு பங்கு செய்து உயரம் பத்துப் பங்கு செய்துக் கட்டப்பட்ட விமானம் சாந்தீக விமானம் என்று அழைக்கப்படும். 3. பவுஷ்டீக விமானம்: அகலம் ஒரு பங்கு உயரம் 1 1/2 பங்கு வைத்துக் கட்டிய விமானத்திற்கு பவுஷ்டீக விமானம் என்று பெயர். 4. செய்ங்கள விமானம்: அகலம் ஒரு பங்கு உயரம் 1 3/4 பங்கு வைத்துக் கட்டப்பட்ட விமானத்திற்கு செய்ங்கள விமானம் என்று பெயர். 5. அற்புத விமானம்: அகலம் ஒரு பங்கு உயரம் இரண்டு பங்கு வைத்துக் கட்டிய விமானத்துக்கு அற்புத விமானம் என்று பெயர். என்று ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம் என்ற நூல் ஐந்து வித விமானங்களுக்கு அளவு தருகிறது. இதன் மூலம் நமது முன்னோர்கள் கண்ட விமானங்களின் வகைகளும் அதன் அளவுகளும் நன்கு புலனாகின்றன. விமான அமைப்பும் அதன் பெயரும் ஏக தள விமானம் அல்லது விமானத்தின் மேல் நிலை கழுத்தடியில் இருந்து பண்டி மகாபத்மம் வரையில் உள்ளதாகும். 1. விருத்த விமானம். வட்டமாக இருக்கும் விமானத்திற்கு விருத்த விமானம் என்று பெயர். 2. சதுர விமானம்: சதுர வடிவில் அமைக்கப்படும் விமானம் சதுர விமானம் என்று சாற்றப்படும். 3. சட் கோண விமானம்: ஆறு பட்டையாய் இருக்கும் விமானம் ஷட்கோண விமானம் என்று சொல்லப்படும். 4. அஷ்ட கோண விமானம்: எட்டுப் பட்டையாய் அமைக்கப்பட்டிருக்கும் விமானம் அஷ்ட கோண விமானம் எனப்படும். 5. தூங்கானை மாட விமானம்: எதிர்ப்புறம் மர மாடி போலும் இரண்டு மூலையாய் பின்னால் யானை முதுகு போல் அமைக்கப்படும் விமானங்களுக்கு கஜப் பிருஷ்ட விமானம், அத்தி புஷ்ட விமானம், தூங்கானை மாடம் என்றெல்லாம் அழைக்கப்படும். 6. சக்தி நிள விமானம்: இரண்டு பக்கம் மரமாடியும் ஒன்றுக்கு மேற்பட்ட கலயங்களும் இருக்கும் விமானங்களுக்கு சக்தி நிளம், மகா துவார கோபுரம், இராச கோபுரம்1 என்றெல்லாம் அழைக்கப்படும்.2 அக நாழிகை அக நாழிகை கோயிலின் கேந்திர நிலையமாக உயிர் நிலை (ஜீவ நாடி) யாக விளங்குகிறது. கோயிலின் சிறப்பெல்லாம் உண்ணாழிகையிலும், அதன் மேலுள்ள விமானத்திலும் அடங்கி யுள்ளது. அக நாழிகையின் முன்புறம் உள்ள சிறு மண்டபத்தை இடை நாழிகை (அர்த்த மண்டபம்) என்று கூறுவர். அக நாழிகை பெரும்பாலும் சதுர வடிவாக இருக்கும். சில இடங்களில் நீண்ட சதுர வடிவாகவும் அமைக்கப் பெற்றிருக்கிறது. சில அக நாழிகைகள் வட்ட வடிவிலும் சில அரை வட்ட வடிவிலும் சில முட்டை வடிவிலும் - அதாவது நீள் உருண்டை வடிவிலும் (Coval) உள்ளன. இஃதன்றி முக்கோண வடிவிலோ, ஐங்கோண வடிவிலோ, அறு கோண வடிவிலோ, ஐங் கோண வடிவிலோ, அறுகோண வடிவிலோ எண் கோண வடிவிலோ அக நாழிகைகள் கட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விமானங்களில் ஆறு பட்டை வடிவங் களும் எட்டுப் பட்டை வடிவங்களும் உள்ளன. அவைகளுக்கு தனித்தனி பெயர்களும் உள்ளன. உண்ணாழிகை ஆனால் வட இந்தியாவில் அறு கோண வடிவிலும் எண் கோண வடிவிலும் கர்ப்பக் கிரகங்கள் உள்ளனவென்று சிலர் கூறுகிறார்கள். நான் அறிந்த அளவில் எங்கும் அத்தகைய அமைப்புடைய கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நமது நாட்டில் பல்வேறு இடங்களிலும் உள்ள கோயில்களை நேரிற் சென்று பார்த்து உண்ணாழிகையின் தரையின் வரைபடங்களை நன்கு வெளியிட்ட பெர்கூசன், ஹேவல், டெல்லா கிரெமரிஷ், லாங்கர்ட், சோவியோதுப்ரயல், கிரேவ்லி போன்ற எந்த மேனாட்டாசிரியரும் இந்த உண்ணாழிகைகளைப்பற்றி எதுவும் கூறவில்லை. தமிழ் நாட்டுக் கோயில் அமைப்புகளை ஆய்ந்தால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவியல் சார்ந்த கணிதத்தில் (Geometrical) நுணுக்கமான கணிதப் புலமை பெற்றிருந்தது நன்கு புலனாகிறது. நீண்ட சதுர வடிவ அக நாழிகை தமிழ் நாட்டில் உள்ள சில பெரிய கோயில்கள் எல்லாம் நீண்ட சதுர அக நாழிகையை உடைய கோயிலாகவே காணப்படுகின்றன. சதுரக் கோயில்களை விட நீண்ட சதுர அக நாழிகையையுடைய கோயில்களே தமிழகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. நீண்ட சதுர வடிவான கோயில்கள், அக நாழிகையில் உள்ள திரு உருவ அமைப்பிற்கும் பூசை செய்யும் சிவாச்சாரியார்களின் வசதிக்கும் ஏற்பவே அமைக்கப் பெற்றுள்ளன. படுத்திருக்கும் நிலையில் உள்ள திருமாலின் கோயில் உண்ணாழிகைகள் சில நீண்ட சதுரமாக இருக்கின்றன. திருக்கழுக்குன்றத்திற்கு அண்மையில் உள்ள உத்தரன் கோயில் என்னும் ஊரில் உள்ள கோயிலானது நீண்ட சதுர அக நாழிகையை (கருப்பகிருகத்தை) உடைய அழகான அமைப்பையுடைய கோயி லாகும். (படம் பார்க்க) இந்தக் கோயிலில் இடை நாழிகையை (அர்த்த மண்டபத்தை) தவிர வேறு மகா மண்டபமோ மணி மண்டபமோ பிரகாரங்களோ அமைக்கப்படவில்லை. இவ்வாறு அகநாழிகையைச் சூழ்ந்து மண்டபங்களும் பிரகாரங்களும் இருந்தால் மண்டபங்களின் நடுவில் அகநாழிகை இடம் பெற்று கோயிலில் அழகையும் பார்வையையும் சிற்பச் சிறப்பையும் மறைத்து விடும். பல கோயில்களில் மண்டபங்களும் பிரகாரங்களும் பெரிதாக எழுந்து மூலவர் அமர்ந்திருக்கும் அக நாழிகையின் மீதுள்ள விமானமே தெரியா வண்ணம் மறைத்து விட்டிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் கோயிலுக்குள் காற்றும் வெளிச்சமும் புகாத படி மறைத்துப் பட்டப் பகலில் இருள் சூழ்ந்து வௌவால்கள் உறையும் பாழும் இடம் போலாகி விட்டன. நமது புனிதமான திருக்கோயில்களில் இருள் சூழ்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் சுற்று மண்டபங்களேயாகும். ஆதியில் தமிழர் கண்ட கோயில்கள் அக நாழியை மட்டும் உடையாது அப்பால் இடை நாழிகை எழுந்தது. அதை அடுத்தே எண்ணிலா மண்டபங்களும் பிற்காலத்தில் எழுந்து அக நாழிகையின் அழகையும், சிற்பச் சிறப்பையும் கண்டு களிக்க முடியாமலும் தூய்மையை உணர முடியாமலும் சுகாதாரக் குறைவு உண்டாகும்படி செய்து விட்டது. சதுர வடிவ அக நாழிகை மிகத் தொன்மையான காலத்தில், அக நாழிகை (கருப்பக் கிரகம்) பெரும்பாலும் சதுர வடிவிலே அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அகலமும், நீளமும் சமமாக அளவில் வைத்து அமைத்த அக நாழிகை அழகும் வசதியும் உடையதாக இருந்தது. துரோபதை இரதம் சதுர அமைப்புடைய அக நாழிகையைக் கொண்ட ஒரு கோயிலுக்கு எடுத்துக்காட்டாக மாமல்லபுரத்தில் உள்ள துரோபதை இரதத்தை ஏற்ற எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். இது துரோபதைக்காக எடுப்பிக்கப்பட்ட கோயில் அல்ல. துர்க்கை என்னும் கொற்றவைக்காக எடுப்பிக்கப்பட்ட கோயில் ஆகும். இது ஒரே பாறையில் சீர் பெறச் செதுக்கி, மிகக் கச்சிதமாகக் கவின் பெறக், காட்சிக் கினியதாகக் கட்டப் பெற்ற கருங்கற் கோயிலாகும். இது 1300- ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மாதிரிக் கோயில் என்றாலும் இது புத்தம் புதிய கோயில் போல் காணப்படுகிறது. இக்கோயிலின் முன் மூன்று படிகள் நன்கு அமைந்துள்ளன. இந்தக் கோயிலுக்கு இடை நாழிகையும் (அர்த்த மண்டபமும்) முக மண்டபமும் இல்லை. அக நாழிகை மட்டும் அழகுறப் பொலிகின்றது. அக நாழிகை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலுக்கு மேலே இரண்டு வளைவுள்ள மகர தோரணங்களும் இருக்கிறது. வாயிலின் இரு மருங்கினும் துவார பாலிகையர் (பெண் வாயிற் காப்பாளர்கள்) உருவங்கள் உள்ளன. இந்தக் கருவறையின் உள்ளே தெய்வத் திரு உருவம் இல்லை. ஆனால் உள் சுவரில் கொற்றவையின் வடிவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. சுவரின் வெளிப்புறத்தில் மூன்று பக்கங்களிலும் கொற்றவையின் உருவம் செதுக்கப் பெற்றுள்ளன. நமது வரலாற்றறிவோ, சமய அறிவோ, சிற்ப நுணக்குமோ அதிகம் பெறாத ஆங்கில அறிஞர்கள் இக்கோயிலை துரோபதை இரதம் என்றும் உள்ளே இருக்கும் உருவம் திருமகள் வடிவம் என்றும், வாயில் காக்கும் மகளிர் பௌத்தர்களின் தலைப் பாகைகளை உடையவர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.1 தமிழ்க் கலை அறிவும், மொழி அறிவும் மிக்க எனது மதிப்பிற்குரிய நண்பர் உயர்திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் இதற்கு, தம் நூற்களில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்.2 இந்தக் கோயில் அக நாழிகையின் மீது அமைக்கப்பட்ட விமானம் நான்கு பட்டையாக காணப்படுகிறது அதன் நான்கு மூலைகளிலும் சுருள் கொடி அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏனைய கோயில் விமானம் போல் கர்ணக் கூடு பஞ்சரம் சாலை போன்ற உறுப்புகள் இல்லை. மேலே உச்சியில் உள்ள கும்பக் கலசமும் காணப்பட வில்லை. அக நாழிகை முன், இடை நாழிகையும் (அர்த்த மண்டபமும்) இல்லை. இக்கோயில் எளிய வடிவில் எழில் பெற அமைக்கப் பட்டுள்ளது. இது இளங்கோயில் அமைப்பையுடையது. இங்கு இந்த இளங்கோயிலின் உருவப்படமும் அதன் சதுர வடிவான தரைப்படமும் அமைக்கப் பெற்றுள்ளன. இதே போன்ற சதுர வடிவிலான திருவறைகள் (கருவறைகள்) பனமலைக் கோயிலிலும், காஞ்சிபுரம் கயிலாச நாதர் கோயிலிலும் நாகார்ச்சுன கொண்டாவில் குடியேறிய பௌத்த துறவிகளுக்காக பௌத்த சமய பக்தி மிக்க பெண் சீமாட்டியால் கட்டப்பட்ட இரு விகாரைகளும், திருக்கழுக்குன்றம் குகைக் கோயிலிலும் சிற்றன்னல் வாயில் அறிவன் கோயிலிலும், மேலைச் சேரி சிவ செஞ்சிக்குடைவரைக் கோயிலிலும் திருப்பாப்புலியூர் கோயிலிலும் உள்ளன. இங்கு எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் உத்தரன் கோயில் காளி குடி கொண்டிருக்கும் அக நாழிகை சுமார் 15 அடி அகலமும் 20- அடி அகலமும் உள்ள அழகான அக நாழிகையுடையது. முன்புறம் ஒரு சிறு இடை நாழிகையும் பெற்று மாமல்லபுரத்தில் உருவாக்கப் பெற்ற மாதிரிக் கோயிலைப் போல் கச்சிதமாக விளங்குகிறது. நமது நாட்டிலே நீண்ட சதுர அமைப்புள்ள கருவறைகளைக் கொண்ட கோயில்கள் பல. மாமல்லபுரத்தில் மாதிரிக் கோயிலாக உருவாக்கப் பெற்ற கணேசரதம் - நீண்ட சதுர அக நாழிகையைக் கொண்டது. - தமிழ் நாட்டில் மட்டுமல்ல கேரளம், ஆந்திரம், கன்னடம் போன்ற நாட்டிலும் வட இந்தியாவிலும் பல சதுர வடிவான அக நாழிகையையுடைய கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவைகள் அனைத்தும் உண்மையில் சதுர வடிவான அமைப் புடையதல்ல. நீண்ட சதுர வடிவமைப்பை உடையவைகளேயாகும். ஆனால் அகலத்தை விட நீளம் இரட்டிப்பு மடங்கு கொண்டவைகள் அல்ல. ஆனால் அகலம் 10 அடியும் நீளம் 11 அடியும் இருக்கும். இவற்றை யெல்லாம் நீண்ட சதுர வடிவக் கோயிலாகக் கருதலாம். எடுத்துக் காட்டாக தளவானூர்க் கோயில் கருவறையின் நீளம் 8 அடி 6 அங்குலம் அகலம் 7 அடி 10 அங்குலம்; உயரம் 6 அடி 10 அங்குலம் 1இவற்றைப் பெரும்பாலோர் சதுர வடிவக் கருவறை என்று கூறுகின்றனர். இது தவறு; நீண்ட சதுர வடிவ அக நாழிகையேயாகும். முட்டை வடிவ அக நாழிகை முட்டை வடிவில் தமிழ் நாட்டில் அக நாழிகை அமைக்கப் பட்டிருக்கிறது. முட்டை வடிவான அக நாழிகை (கர்ப்பக் கிரகம்) அதிகம் இல்லை. ஒன்றே யொன்று தான் உண்டு. அது காஞ்சிபுரத்தில் உள்ள சுரஹரேசுவரர் கோயில் ஆகும். சுரஹரேசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் (பெரிய காஞ்சிபுரத்தில்) காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயிலின் தெற்குத் தெருவில் ஜ்வர ஹரேவரம் என்ற பெயரில் ஒரு கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் இன்று பூசை நடை பெறுவதாகத் தெரியவில்லை. இது தில்லி மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பல கோயில்களில் அக நாழிகையின் (மூலதானத்தின்) மேல் உள்ள விமானத்தையும் மண்டபங்களையும், கோபுரங்களையும் ஆய்ந்தால் அக நாழிகையின் மேல் விமானம் சிறிதாகவும் ஏக தளத்தை உடையதாகவும், தாழ்ந்தும் அமைக்கப்பட்டிருக்கும். பிரகாரங்களும், கோபுரங்களும், திருமதில்களும் அடுக்கடுக்காகப் பரந்தும் விரிந்தும் உயர்ந்தும் காணப்படும். இவை, விரிந்து பரந்து வியாபித்துள்ள பிரபஞ்சத்தையும் அதனுள் சூட்சமமாக இறைவன் உள்ளான் என்பதையும் காட்டுகிறது என்று சிற்ப நூற் புலவர்கள் கூறுகின்றார்கள். நமது திருக் கோயிலின் அமைப்பை பிரபஞ்சத்தின் மாதிரி உருவம் (Universe in Miniature) என்று அறிஞர்கள் கூறுவர். காஞ்சி சுரஹரேசுவரர் கோயில் (சிவன் கோயில்) விமானம் வட்ட வடிவிலே அமைக்கப் பெற்றிருக்கிறது. எனவே அக நாழிகையும் வட்ட வடிவமாக அமைந்துள்ளது என்று கூறிவிடுகின்றார்கள். கோயில்களைப் பற்றி நூல் எழுதுகிறவர்கள் கோயிலின் உயிர் நாடியாக இலங்கும் அக நாழிகையைப் பற்றி நன்கு ஆய்ந்து நூல் எழுதுவதில்லை. அகலம் நீளம், உயரம், ஆகியவைகளை அளந்து விளக்கம் கூறுவதில்லை. கருவறை சதுரமா நீண்ட சதுரமா, வட்டமா நீள் உருண்டை வடிவமா (Oval) என்று ஆய்ந்து பார்த்து எழுதுவதில்லை. பல அறிஞர்கள் சுரகரேசுவரர் கோயில் விமானம் வட்ட வடிவம் என்று எழுதி முடித்து விட்டார்களே யொழிய அக நாழிகை எத்தகைய அமைப்புடையது என்று எழுதத் தவறிவிட்டனர். எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரியவராய் விளங்கிய மறைந்த (மார்ச் 1940) மாமேதை டாக்டர் சி. மீனாட்சி எம். ஏ. பி. எய்ச். டி. அவர்கள் கூட வட்ட வடிவமான அக நாழிகை என்று தான் குறிப்பிட்டிருந் தார்களே அல்லது இது முட்டை வடிவமானது என்று குறிப்பிடத் தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.1 ஆனால் நமது தமிழ் நாட்டு தபதிகளின் பரம்பரையில் உதித்தவரும், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி முதல்வருமான உயர் திரு. வை. கணபதி ஆச்சாரி. பீ.ஏ. அவர்கள் ஜ்சுரகரேசுவரர் கோயிலின் கருவறையை (அக நாழிகையை) நேரில் பார்த்து ஆய்ந்து இது நீள் உருண்டை வடிவானது - அதாவது முட்டை tothdJ(Oval) என்று ஐயமற எடுத்துக் காட்டியுள்ளார். அது அடியில் வருமாறாகும்: கருவறை என்று சொல்லப்படும் விமானத்தைப் பெண் வடிவம் என்றும் அதனுள்ளிருக்கும் மூர்த்தியை உதரத்தில் உள்ள கர்ப்பம் என்றும் வருணிக்கப்படுகிறது. உதரத்தில் கர்ப்பமாக மூர்த்தி அமையப் பெற்றிருப்பதாலேயே இக் கட்டிடத்தைக் கர்ப்பக் கிருஹம் என்னும் கருவறை என்றும் அழைக்கின்றோம் இக்கருத்தினை வலியுறுத்தும் பொருட்டே மூலமூர்த்தி வீற்றிருந்தருளும் கட்டிடத்தைக் குக்கிடாண்ட (கோழி முட்டை) வடிவமாகவும் அமைக்கலாம் என்று சிற்ப நூல்கள் கூறுகின்றன. இத்தகைய குக்கிடாண்ட வடிவத்தில் ஒரு கோயில் காஞ்சிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது இக்கோயில் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயில் தெற்கு வீதியில் ஜ்வர ஹரேவரம் என்ற பெயரில் அமைக்கப் பெற்றிருக்கிறது. என்று குக்கிடாண்டக் கருவறை அமைப்பிற்கு விளக்கம் கூறி சான்றும் எடுத்துக் காட்டியுள்ளனர்.2 நீள் உருண்டை வடிவில், காஞ்சி சுரகரீரசுவரர் கோயிலைத் தவிர வேறு கோயில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. சுரகரேசுவரர் கோயில் அதிர்ஷ்டானமும், கருவறையின் வெளிப்புறப் பகுதியும் விமானமும் அழகிய சிற்ப நுட்பம் செறி வதாகத் திகழ்கின்றது. வட்ட வடிவான அக நாழிகை வட்ட வடிவமான கோயில் இந்தியாவில் இல்லை. தமிழர் களுக்கு ஏன்? இந்தியர்களுக்கும் வட்டமான வடிவில் கட்டிடங்கள் அமைக்கத் தெரியாது என்று கூறி வந்துள்ளனர். இவர்களின் பேச்சு அறியாமையால் எழுந்த பேச்சாகும். ஏன்? எனில் தமிழர்களில் பலருக்கு, தமிழ் நாட்டில் வட்ட வடிவில் கோயில் இருப்பது தெரியாது. vdJ cwÉd® xUt®; fšÿÇ MáÇa®, v«.V., பி.டி. பட்டதாரி அவர் ஒரு நாள் என்னிடம், முற்காலத்தில் தமிழர்களுக்கு வடிவியல் கணித அறிவு உண்டா? (Geometrical knowledge) என்று வினாவினார். அவருக்கு விடையாக தம்பீ! நீர் என்றைக்காவது நமது திருக்கோயிலுக்குச் சென்ற துண்டா? இதற்கு முன் போகா திருந்தாலும் இன்றாவது கோயிலுக்குப் போங்கள். இறைவன், தமிழர்களின் நுண்ணிய வடிவியல் கணித நுட்பம் எத்துணை சிறப்புவாய்ந்தது என்பதை உணர்த்துவான்: நமது கோயிலில் உள்ள சதுரம், நீண்ட சதுரம், வட்டம், அரை வட்டம் ஆறு பட்டம், எட்டுப் பட்டம் முக்கோணம், அறு கோணம் ஆகிய வடிவில் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் அமைக்கப்பட்ட தூண்களும், உண்ணாழிகைகளும் விமானங்களும் ஓம குண்டங்களும், குளங் களும் மண்டபங்களும், போதிகைகளும், கோயிலில் தீட்டப்பட்ட கோலங்களும் மலர்களின் சிற்பங்களும் கோயில்களும் தெளிவாக உணர்த்தும் என்றேன். கணிதப் புலமையில் பண்டும், இன்றும் என்றும், ஆங்கிலேயர், அமெரிக்கர் மட்டுமல்ல உருசியர்களும் தமிழர்களை மிஞ்ச முடியாது என்று பதில் விடுத்தேன். அவர் வாய் அடைபட்டுப் போய் விட்டது. பண்டையத் தமிழர் உலகிலே கணிதத் துறையில் மிக நுட்பமான புலமை வாய்ந்தவர்கள் என்பதற்குச் சான்றாக ஈண்டு இரண்டோர் அளவை வாய்ப்பாடுகளை எடுத்துக் காட்டு கின்றோம். கீழ் வாய் இலக்க வாய்ப்பாடு1 1/2 323 8245, 302272000,00,000 - தேர்த்துகள் 61/2=1 நுண்மணல் 1/3575114 661 8880,0000,000 - நுண்மணல் 100 = 1 வெள்ளம் 1/35751 1466188, 80 00,000 - வெள்ளம் 60 = 1 குரல் வளைப்பிடி 1/595 8524 436 480 0,000 - குரல் வளைப் பிடி 40 = 1 கதிர்முனை 1/1489 63110 9120000 - கதிர் முனை 20 = 1 சிந்தை 1/74 481 55 545 6000 - சிந்தை 14 = 1 நாக விந்தம் 1/532011, 11,04,000 - நாக விந்தம் 17 = 1 விந்தம் 1/31294, 77,12,000 - விந்தம் 7 = 1 பாகம் 1/4470, 68,16,000 - பாகம் 6 = 1 பந்தம் 1/745,11,36,000 - பந்தம் 5 = 1 குணம் 1/149,0027,200 - குணம் 9 = 1 அணு 1/16 5580,800 - அணு 7 = 1 மும்மி 1/23654,400 - மும்மி 11 = 1 இம்மி 1/21,50,400 - இம்மி 21 = 1 கீழ் முந்திரி 1/1,02,400 - கீழ் முந்திரி 320 = 1 மேல் முந்திரி 1/320 - மேல் முந்திரி 320 = 1 (ஒன்று) கீழ்வாய் இலக்கம் அடையாளம் அளவு பெயர் வித 1/ 320 முந்திரி, முந்திரை ங 1/ 160 2/320 அரைக்காணி ? 1/80 4/320 காணி சபு 1/40 8/320 அரைமா க்ஷ 3/80 12/320 முக்காணி ப 1/20 16/320 ஒருமா ஐ 1/10 32/320 இருமா நூ 3/10 48/320 மும்மா சப 1/5 64/320 நான்மா ? வித 1/64 5/320 கால்மாகாணி, ¼ வீசம் சபு ங 1/32 10/320 அரைமாகாணி, ½ வீசம் க்ஷஙவித 3/64 15/320 முக்கால் மாகாணி 3/4 வீசம் g?ய 1/16 20/320 மாகாணி, வீசம் ஹ லு 1/8 40/320 அரைக்கால் ஙா, ஙா 8/16 60/320 மும்மாகாணி 3 வீசம் வ ¼ 80/320 கால் இ ? ½ 160/320 அரை ளு, தெ 3/4 240/320 முக்கால் க 1 320/320 ஒன்று மேற்கூறிய கீழ்வாய் இலக்கத்தைச் சேர்ந்த அளவுகளும் தொல்காப்பியர் காலத்திலே வழங்கினதாகத் தெரிகிறது. நான் இற்றைக்கு 65-ஆண்டுகளுக்கு முன் சாத்தன்குளத்தில் சூசை முத்து வாத்தியாரிடம் இந்த வாய்ப்பாடுகள் பயின்றிருந்ததோடு பெருக்கல், பகுத்தல், கழித்தல், கூட்டல் முதலிய தமிழ்க் கணக்கும் செய்யப் பயின்றிருந்தேன். 20-ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப் பள்ளிக் கூடங்கள் எண் சுவடி, தானப் பெருக்கம் போன்ற கணிதம் ஏடுகள் எழுதி நாள் தோறும் படித்து ஆசிரியரிடம் ஒப்புவித்துள்ளேன். நீட்டலளவை வாய்ப்பாடு 8 அணு = 1 தேர்த்துகள் 8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை 8 பஞ்சிழை = 1 மயிர் 8 மயிர் = 1 நுண்மணல் 8 நுண்மணல் = 1 கடுகு 8 கடுகு = 1 நெல் 8 நெல் = 1 பெருவிரல் 12 பெருவிரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 கோல் அல்லது பாகம் 500 கோல் = 1 கூப்பிடு தூரம் (கூப்பிடு தொலைவு) 4 கூப்பிடு தொலைவு = 1 காதம் இலக்கியச் செறிவு மிக்க சிலப்பதிகாரத்தில் பஃறுளி யாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையிலிருந்த சேய்மை எழு நூற்றுக் காதம் என்று அடியார்க்கு நல்லார் கூறியது இவ்வளவு பற்றியதாயின் அது ஏறத்தாழ 1600 மைல்களாகும். பஃறுளியாற்றிற்கு தெற்கும் குமரியாற்றிற்கு வடக்கும் இருந்த நிலத்தையுஞ் சேர்த்துக் கணிப்பின் அழிந்து போன தமிழ் நாடு எவ்வகையினும் 2000 மைலுக்குக் குறையா தெனலாம். அங்ஙனமாயின் இற்றை இந்தியா அளவு ஒரு பெரு நிலம் தென் கடலில் மூழ்கியதாகும்.1 இதனால், அக்கால மக்கள் விண்மீன்களை எண்ணவும் உலகை அளந்து கணக்கிடவும் கண்ணிற்கு தெரியாத நுண் பொருள் களை அளவிடவும் கணிதம் கண்டிருந்தனர் என்பது நன்கு புலனாகிறது. விசயால சோழீச்சுவரம் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள புதுக் கோட்டைக்கு அடுத்து நகரத்தார் மலை (நாரத்தா மலை) என்னும் மேல மலையி விசயால சோழீச்சுவரம் என்னும் ஒரு பிரதான கோயில் உள்ளது. இது வட்டமான அக நாழிகையை (கர்ப்ப கிருகத்தை) உடையது. இந்த வட்டமான கருவறையைச் சுற்றிய சுவர்கள் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அக நாழிகைக்கு முன் நீண்ட சதுரமான ஒரு அழகிய முக மண்டபமும் உண்டு இந்தக் கோயிலின் தரைப்படத்தைப் பார்த்தால் ஒரு சுவர்க் கடிகாரம் போல் காணப் படுகிறது. பல வட்டமான திரு உண்ணாழிகைகள் நமது நாட்டில் உள்ளன. இந்த உண்ணாழிகை அமைப்பு ஒரு சிறப்பானதாகக் காணப்படுகிறது. இதைப் போன்ற அமைப்பு வேறு எங்கும் காணப்படவில்லை. வெளித் தோற்றத்தில் சதுரமான கோயில் போல் காணப்படுகிறது. உள்ளே போய்ப் பார்த்தால் திரு உருவம் இருக்கும் இடம் - அதாவது உண்ணாழிகை மட்டும் வட்ட வடிவிலும் பிரகாரம் என்னும் திருச்சுற்று சதுர வடிவிலும் உள்ளது. இந்தக் கோயிலின் திருச்சுற்று அதாவது திரு உண்ணாழிகை அமைந்திருக்கும் சதுரம் 22 அடி நீளமும 22 அடி அகலமும் உள்ளது. அதன் நடுவில் திரு உண்ணாழிகையின் விட்டம் 8 ½ அடியுள்ளது. இதன் சுவர்களில் வெளிப்புறம் அகலம் 29 அடி நீளமும் 29 அடி அகலமும் உள்ளது. இத் திருக்கோயில் கி.பி. 8-ஆவது நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப் பெற்றுள்ளது. இந்தத் திரு உண்ணாழிகையின் முன் நான்கு தூண்களும் நான்கு மூலையிலும் நான்கு தூண்களும் உள்ளன. இந்தத் திருக்கோயிலைப் பற்றி படத்துடன் விளக்கமாக இந்நூலில் வட்டக் கோயில்கள் என்னும் அதிகாரத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளதோடு அதன் நிழற்படமும் இணைக்கப் பட்டுள்ளதால் இங்கு அதிகமாக எழுதவில்லை. தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும் காணப்படுவது போல் அதிகமான வட்டம், அரை வட்டம், வாய்ந்த அக நாழிகை களை (கருவறைகளை) யுடைய கோயில்களை பாண்டிய நாட்டில் அதிகம் காண முடியவில்லை. சேர நாட்டில் கூட, சில வட்ட வடிவமான கோயில்கள் எனக்குத் தெரிந்த அளவில் மதுரைக்கு அண்மையில் உள்ள அழகர் கோயில் ஒன்று தான் வட்டமான அக நாழிகையையும் விமானத்தையும் பெற்றிருக்கிறது. இந்த இடம் மதுரைக்கு வட கிழக்கே 15 கல் தொலைவில் உள்ளது. இதனைத் திருமாலிருஞ் சோலை என்றும் கூறுவர். இந்த அழகர் கோயில், சோலை மலையை யொட்டி அதன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூன்று கோட்டைச் சுவர்களுக்கு அப்பால் கோயில் இடம் பெற்றிருக்கிறது. கோயிலின் அமைப்பும் சுற்றுப்புறமும் இனிதாக இருக்கின்றன. இத்திருக் கோயிலின் அகநாழிகையின் உபபீடமும், அதிர்ஷ்டானமும் அழகுற அமைந்துள்ளது. அக நாழிகை வட்ட வடிவில் வனப்புடன் காணப்படுகிறது. கருவறைமீது சோம சுந்தர விமானம் என்று கூறப்படும் வட்டமான பொன் வடிவமானப் பொலியும் தக தகவென்று ஒளிவிட்டு கண்ணையும் கருத்தையும் கவர்வனவாய் அமைந்துள்ளது. மூலத்தானத்தில் இருக்கும் இறைவனுக்கு பரம சுவாமி என்றும் உற்சவ மூர்த்திக்கு சுந்தரராசன் என்றும் பெயர். வலது புறம் தாயார் சந்நிதியும் இடது புறம் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன. முன் மண்டபத்தில் 4 சுரங்களுடன் அமைக்கப் பெற்ற கல் தூண் உள்ளது. இரண்டாவது திருச்சுற்றில் திருப்பள்ளியறை அமைந்துள்ளது. முற்றிலும் தந்த வேலைப்பாடுடைய சிறு விமானமும் இங்கு இடம் பெற்றுள்ளது. கோயிலில் அருகே அடியிலிருந்து நுனிவரை வட்ட வடிவிலான ஒரு நெற் களஞ்சியம் அழகுறத் திகழ்கிறது. பாண்டிய நாட்டில் ஒரே ஒரு வட்ட வடிவக்கோயில்தான் உண்டு. ஆனால் அது பிற பகுதிகளில் உள்ள எல்லா வட்ட வடிவக் கோயிலையும் விட அழகுறப் பொலியும் பொற்கோயில் என்று போற்றிப் புகழும் பாங்கினையுடையது. தஞ்சை மாவட்டம் பாபனாசத்தில், கும்பகோணம் - தஞ்சை கற்சாலையில் பாலைவனநாத சுவாமி கோயில் ஒரு பெரிய வட்ட வடிவமான நெற் களஞ்சியம் கைலோ இருக்கிறது. இது அழகர் கோயில் நெற்களஞ்சியம் போல் அழகுறக் காணப்படாவிடினும் சுமார் 50- அடிக்கு மேற்பட்ட உயரமுடைய பெரிய களஞ்சியமாகும். இது முற்காலத்தில் வட்ட வடிவமான கருவறையை உடைய கோயிலாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். காஞ்சிபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரிலுள்ள வர்த்தமானர் ஆலயம் வட்டக் கோயிலாகும். இது சமணர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இது பல்லவர்கள் சமண சமயத்தைத் தழுவிய காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்பிகளால் 5-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற கோயிலாகும். மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த சிக்மாகலூர் மாவட்டம், கோப்பா வட்டத்தில் உள்ள சிருங்கேரி சிரி வித்தியா சங்கர் சிவன் கோயில் வட்ட வடிவமான கருவறையும் வட்ட வடிவமான விமானமும் வட்ட வடிவமான அர்த்த மண்டபத்தையும் உடைய அழகிய கோயிலாகும். இந்தக் கோயிலின் மண்டபத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் நீண்ட சிறு சிறு மாடங்கள் செய்யப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தெய்வத் திரு உருவம் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது இது அழகிய சிற்ப வேலைப்பாடுகளையுடையது. திராவிட நாட்டிலுள்ள வட்டக் கோயில்களில் இதைப் போன்ற அமைப்பை எங்கும் காண முடிவதில்லை. இத்திருக்கோயில் கி.பி. 1338-ல் கட்டப்பட்ட கவின் பெரு கோயிலாகும். மற்றொரு வட்டக் கோயில் மைசூர் மாநிலத்தில் பெங்களூர்க் கண்மையில் உள்ள கான்புரம் கவி கங்காதீசுவரர் கோயிலாகும். இக் கோயிலுக்கு அர்த்த மண்டபம் கிடையாது. வட்டமான கருவறையும் அதன் மீது வட்டமான ஒரு பத்தியும் அதன் மேலே நல்ல சிற்ப வேலைப்பாடுகளையுமுடையது. மேலே அழகிய எழுதகமும் சிகரமும் உடையது. உச்சியில் கலசம் அணி பெறத் திகழ்கிறது. இது 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதைப் பார்ப்போர் இத்தகைய சிவன் கோயிலும் உண்டா? என்று வியப்புறுவர். திருவாங்கூர் வட்டக் கோயில்கள் திருவாங்கூரில் உள்ள பெரும் பழுத்தூர் என்னும் ஊரில் உள்ள சிரி கோயில் மையப்பகுதிகள் அழிந்து அதன் அடிப்பகுதி மட்டும் இன்று காணப்படுகிறது. அடித்தானத்தின் வரிகளும் முன்புறமுள்ள படிகளும் காணப்படுகின்றன. இந்த வட்ட வடிவமான கோயில் பண்டையத் திராவிட மக்களின் சிற்ப முறைப்படி அக நாழிகையையும், விமானமும் உடைய கோயிலாக இருந்தது என்பதை யூகிக்க முடிகிறது. இது பெரிய கோயிலாக குறுக்களவு சுமார் 40 அடிக்கு மேல் உள்ளது போல் திகழ்கிறது. இது கி. பி. 9 - ஆம் நூற்றாண்டில் இருந்த கோயிலாகும். திருவல்லம் பரசுர ராமர் கோயில் வட்டமான அகநாழிகையும் வட்டமான விமானமும் உடையது. அர்த்த மண்டபம் நீண்ட சதுரமானது. இது காஞ்சி சுரஹரேசுவரர் கோயிலைப் போல் காணப்படுகிறது. விமானத்தில் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இது 13-ஆம் நூற்றாண்டில் எழுந்த கோயிலாகும். மற்றொன்று நிர மாங்காராவில் உள்ள வட்டக் கோயிலாகும் இதன் அக நாழிகை அமைப்பும், விமானத்தின் அமைப்பும் மைசூர் மாநிலத்தில் உள்ள சிருங்கேரி வித்தியாசங்கர் சிவன் கோவிலைப் போல் உள்ளது. கருவறையும் விமானமும் வட்டமானவை. 14-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்றது. வலிய உலையாதிச்சபுரம் வட்டமான அக நாழிகையும் வட்டமான விமானமும் உடைய கோயில். இது தமிழ் நாட்டுக் கோயில்களைப் போல் உயர்ந்த விமானத்தையும் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் உடையது. இது 16-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற அழகிய கோயிலாகும். திரிக்கேட்டித்தனம் என்ற ஊரில் உள்ள கோயிலும் வட்டக் கோயிலேயாகும். இது திருவாங்கூர் தனக்கே உரிய தனிப்பண்பு என்று கூறும் கூரை அமைப்பில் எடுப்பிக்கப் பெற்றுள்ளது. 10-11-ஆம் ஆண்டில் கட்டப் பெற்றது. இதே அடிப்படையில் வைக்கம் கோயிலும் (கி.பி 1539) பிற வட்டக் கோயிலும் பல திருவாங்கூரில் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. கி.பி. ஆறாவது நூற்றாண்டில், வாது சாதிர விதிப்படி இந்தியக் கட்டிடக் கலையின் விஞ்ஞானம் பல்வேறு அமைப்புகளையுடையதாய் பதினாறாம் நூற்றாண்டுவரை இந்தியா முழுவதிலும் எழுந்தது. மிகத் தொன்மையான காலத்திலே பௌத்தர்கள் வட்டமான தூபிகளைக் கட்டினர். சாஞ்சியில் எழுப்பப்பெற்ற வட்டமான தூபி இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஜெய்ப்பூர் இராசபுதனம் பைரத் ஆகிய இடங்களில் கி.மு. மூன்றாவது இரண்டாவது நூற்றாண்டிலே வட்டமான அமைப்புகள் எழுந்துள்ளன என்ற உண்மையை மெய்ப்பிப்பதாக உள்ளன. சிற்பக் கலை வல்லுநரும் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறைப் பேராசிரியையுமான திருமதி டெல்லா, கிராமரிஷ் அவர்கள், 10-ஆம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை எழுந்த திராவிடக் கட்டிடக் கலையில் வட்டமான கோயில் அமைப்பு மிகவும் சுவைத்தற்குரியது; வாது சாத்திரத்தில் கண்ட வட்டக் கோயிலுக்கு இந்தியாவில் போதிய இடம் அளிக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலே வட்டக் கோயில்கள் மிகக் குறைவு என்றாலும் பைரட் (Bairat) வட்டக் கோயில் அனைத்திலும் பழமையானது. திருவாங்கூரில் ஏராளமான எண்ணிக்கையுள்ள வட்ட வகைக் கோயில்கள் உள்ளன. ஆனால் திருவலம் கோயிலைத் தவிர மற்றவை வரைபடங்களுடன் மட்டும் வெளியிடப்படவில்லை. வட்ட வடிவமுள்ள அமைப்பு முறைகள் திராவிட கோயில்களின் குழுவில் உள்ளது என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. திராவிட நாட்டுக் கோயில்கள் எந்த நாட்டு கோயில் அமைப்பு முறையையும் பார்த்தோ தழுவியோ அமைக்கவில்லை தனக்கே உரிய சொந்தப் பாணியில் தம் அரிய புத்தி நுணுக்கத்தால் பலவகையான கோயில் களை உருவாக்கி யுள்ளனர்1 என்று கூறியுள்ளார். அரைவட்ட வடிமான அக நாழிகை தமிழ் நாட்டில் வட்டக் கோயில்கள் அதிகம் இல்லை. ஆனால் அரை வட்டக் கோயில்கள் பல உண்டு. அரைவட்டக் கோயில்களிலே பல வகைகள் உள்ளன. குட்டையான அரைவட்டக் கோயில் ஒரு வகை. நீண்ட அரை வட்டமுள்ள அக நாழிகை அமைப்புள்ள கோயில் மற்றொரு வகை. பெரும்பாலான அரை வட்டக் கோயில்கள் மாடம் இல்லாத ஆலக் கோயிலாகவும், மாடமுள்ள தூங்கானை மாடக் கோயிலாகவும் காணப்படுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற ஐகோல் (Aihole) காளி கோயில் விமானம், கஜபிருஷ்ட விமானமாகக் காணப்பட வில்லை. இது குட்டையான அரைவட்டக் கோயிலாகக் காணப் படுகின்றது. இதே போன்று கி.மு முதல் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற கார்லி (karle) சைத்தியக் குகைக் கோயிலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த பாஜா (Bhaja) பௌத்த சைத்தியமும் குகை விகாரையும் நீண்ட அரைவட்டக் கோயில் அமைப்புடையதாகக் காணப்படினும் விமானம் தூங்கானை மாடம் என்று கூறத்தக்கதாக இல்லை. ஆனால் விமானத்தின் பின்புறம் சிறிது வளைவு மட்டும் காணப்படுகிறது. அதை வைத்து இது படுத்திருக்கும் யானை முதுகு போன்று கூறுவதற்கில்லை. இஃதன்றி வட இந்தியாவில் சில கஜபிருஷ்டக் கோயில்கள் உள்ளன. ஐதராபாத்தில் உள்ள நாள்துர்க் (Naldurg) மாவட்டத்தில் உள்ள டர் (Tur) நகரில் உள்ள பழங்கால பௌத்த சைத்தியம் கஜபிருஷ்ட விமானம் உடையதாக இருக்கிறது. இது மகாபலிபுரம் சகாதேவ இரதம் போன்று காணப்படுகிறது. தமிழ் நாட்டில் தூங்கானை மாடக் கோயில்களே அரை வட்டக் கோயில்களாக உள்ளன. நாம் இந்த அத்தியாயத்தில் விமான அமைப்புகளை ஆராயவில்லை. கருவறைகளை (அக நாழிகை) மட்டும் ஆராய்வதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். சில தூங்கானை மாடக் கோயில்களின் கருவறை கிட்டத்தட்ட அரைவட்டவடிவிலே அமைந்துள்ளன. செங்கற்பட்டுக்கு அண்மையில் உள்ள ஒரகடம் என்னும் ஊரில் உள்ள வடமலேசுவரர் கோயில் அக நாழிகை அரை வட்ட அமைப்பையுடையது என்று கூறலாம். பொதுவாக எல்லா தூங்கானை மாடக் கோயிலும் அரை வட்டக் கோயில் என்று கூறிவிடலாம் ஆயினும் சில கருவறைகள் குறுகிய அரை வட்டக் கோயிலாகவும் சில நீண்ட அரைவட்டக் கோயிலாகவும் காணப் படுகின்றன. இந்தக் கோயிலுக்கு நீளமற்ற அக நாழியும் ஒரு சிறிய இடை நாழிகையும் மற்றும் ஒரு மண்டபமும் உள்ளன. இது கி.பி.10-ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல அரை வட்டக் கோயில்கள் உள. என்றாலும் இந்தக் கோயிலின் அமைப்பை வியந்து இந்தியக் கட்டிடக் கலை ஆய்வில் ஈடுபட்ட வங்கப் பேரறிஞர் திரு. ஓ.சி கங்கோலி அவர்கள் இதைப் பற்றி தனது சிறப்பு மிக்க ரூபம் (Rupam) என்னும் திங்கள் இதழில் 30-ஆண்டு களுக்கு முன் ஒரு தரையின் வரைபடமும், ஒரு நிழல் உருவப்படமும் தீட்டி ஒரு அரிய கட்டுரை தீட்டியுள்ளார். அப்பால் இந்தியக் கட்டிடக் கலை (Indian Architecture) என்னும் நூலிலிலும் இந்த ஒரகடம் வட மலேசுவரர் கோயில் இடம் பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட அரை வட்டக் கோயில் தமிழ் நாட்டில் உள்ள தூங்கானை மாடக் கோயில்களில் பல நீண்ட அரை வட்ட அமைப்புடையதாகவே உள்ளன. பல கோயில்கள் நீண்ட அரை வட்ட அக நாழிகையை மட்டும் உடையனவாகவே உள்ளன. வட இந்தியாவில் உள்ள பௌத்தர் களின் பாஜா குகை விகாரைகளும் (Bhaja Vihara Cave) சைத்தியங்களும் கார்லி (Karle) குகைச் சைத்தியங்களும் நீண்ட சதுர அரைவட்ட அக நாழிகைகளையுடையனவாய் உள்ளன. இங்கு நாம் நீண்ட அரை வட்ட அக நாழிகை என்பது அரைவட்டத்தோடு ஒரு நீண்ட சதுரமும் இணைத்து அமைக்கப்பட்ட கருவறையையுடைய கோயிலையே குறிக்கும். திருக்கச்சூர் ஆலக்கோயிலும், திருவேற்காடு ஆலக் கோயிலும், பெண்ணாடகம் தூங்கானை மாடக் கோயிலும், திருக்கழுக்குன்றம் பக்தவசலேசுவரர் தூங்கானை மாடக் கோயிலும் கோவூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இராசராசன் தந்தை சுந்தர சோழன் கட்டிய சுந்தரேசுவரர் - சௌந்திர நாயகி கோயிலும் திரு மீயச்சூர் தூங்கானை மாடக் கோயிலும், திருவொற்றியூர் தூங்கானை மாடக் கோயிலும் திருமாகறல், அகத்திசுவரர் - புவன நாயகி தூங்கானை மாடக் கோயிலும் பிற எண்ணற்ற தூங்கானை மாடக் கோயிலும் நீண்ட சதுர அரை வட்டக் கோயில்களேயாகும். இங்கு இரு அரை வட்ட நீண்ட சதுர தூங்கானை மாடக் கோயில்களின் வரை படங்கள் இணைக்கப் பட்டுள்ளன. கண்டு தெளிக. இவை களை மிக விரிவாக பின்வரும் அத்தியாயத்தில் விளக்கிக் கூறுவோம். சுவரின் அணி உறுப்புகள் தமிழர்களின் நினைவு மண்டபங்களில் பொதுவாகச் சாளரங்கள் அமைக்கப்படுவதில்லை. என்றாலும் சுவர்கள் கோலஞ் செய்யப் பெறாது வெறிச்சோடி இருப்பதில்லை. அக நாழிகை வெளிப்புறத்தில் உள்ள இடை நாழிகையின் (அர்த்த மண்டபத்தில்) வாயில் சுவர்களின் இருபுறமும் வாயிற் காவலர்கள் (துவார பாலகர்கள்) உருவம் இடம் பெற்றிருக்கும். அக நாழிகையின் (கர்ப்பக்கிரகத்தின்) வெளிப்புறத்திலும், இடை நாழிகையின் (அர்த்த மண்டபச்) சுவரிலும் அணிகள் செய்யப்படுவது சிற்ப மரபாகும். (உருவம் 6) கோயிலின் சுவர் மாடச் சட்டத்தின் அணி நிலைகளைக் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மாடத்தின் ஏதேனும் ஒரு புறத்தில் சுண்ணச் சாந்து பூசப் பெற்றிருக்கும். அதற்கு மேலே பஞ்சரம் என்னும் சுவர் அணி அமைக்கப்படும். இது சாலை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மாடங்கள் பொதுவாகச் சுவர்களின் பகுதிகளை அணி செய்கின்றன. அவை சுவரின் முன்னே துருத்திக் கொண்டு புடை சிற்பம் போன்றிலங்கும் கோயிற் சுவரில் காணப்படும் பின் அணியை கோஷ்ட பஞ்சரம் கும்ப பஞ்ச ஆகியவைகளால் அழகு செய்யப் பெற்றுள்ளன. அக நாழிகையின் பின்புறச் சுவர்களில் பின்புறம் ஒன்றும் வலது புறம் இடது புறமுள்ள சுவர்களில் ஒவ்வொன்றுமாக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், இடை நாழிகையின் வலப் புறச் சுவர்களில் ஒவ்வொன்றுமாக இரண்டு கோஷ்ட பஞ்சரங்களுமாக ஐந்து பஞ்சரங்கள் அழகிற்காக அமைக்கப் பெறுகின்றன. கோஷ்ட பஞ்சரம் சிற்ப வேலைப் பாடுகள் செறிந்துள்ள ஒரு வில்மச்சு மாடம் (Pavilan) ஆகும். கோஷ்ட பஞ்சர மாடத்திலே பிள்ளையார், நான்முகன், கொற்றவை (நாராயணி) போன்ற தெய்வ உருவங்கள் இடம் பெற்றிருக்கும். பல்லவர்கள் காலத்தில் எடுப்பிக்கப் பெற்ற திருக் கோயில்களில் உள்ள வில் மச்சு மாடங்களில் தெய்வத் திரு உருவங்கள் அமைக்கப் பெறவில்லை. மைசூர் மாநிலத்தில் எடுப்பிக்கப் பெற்ற சிருங்கேரி வித்தியாசங்கரர் கோயிலின் வட்ட வடிவமான இடை நாழிகை மண்டபத்தில் - அதிர்ஷ்டானத்திற்கு மேலே உள்ள சுவர் முழுவதும் மாடங்கள் அமைத்து அணி பெறப் பல தெய்வத் திரு உருவங்கள் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்தில் - அதாவது 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின் கோஷ்ட பஞ்சர மாடங்களிலே தெய்வத் திரு உருவங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. கோஷ்ட பஞ்சர மாடங்களுக்கு இடை இடையே கும்ப பஞ்சரம் என்ற சுவர் சிற்ப அணி உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. கும்ப பஞ்சரம் என்பது சுவர் மீது சுண்ணச் சாந்தால் அழகுக்காக மட்டும் அமைக்கப்படும் ஒரு அணி உறுப்பாகும். இந்தப் பூச்சு, இரண்டு சிறப்புக் கூறுகளின் பெயர்களையுடையது. கீழ்ப்பகுதி ஒரு விதக் கிண்ணம் போன்றிருக்கும். இதனை கும்பம் என்று கூறுவர். மேற்பகுதி சிறுமாடம் போன்றிருக்கும் அதனை பஞ்சரம் என்று கூறுவர். நாலாவது அமைப்பு முறையானது ஐந்தாவது அமைப்பு முறையினின்று வேறுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் ஐந்தாவது அமைப்பு முறையில் தாமரை மலர் (புஷ்பம்) முழுமையாக எஞ்சியகல்லினின்று தொடர்பற்று உள்ளது. இறுதியில் ஒருவகைப் பூமுனையைப் பெற்றுள்ளது. பதினாறாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஐந்தாவது அமைப்பு முறை என்பது நிலவி இருந்ததாகத் தெரியவில்லை. திராவிடப் போதிகையின் வரலாறு (உருவம் 28,29) திராவிட கலை வளர்ச்சியில் உயர்ந்த பொருள் தரும் வழியில் மிக நன்றாக உருவறைகளால் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. பழைய முறைகள் கல் தச்சர்களின் கலையினின்று அழகாகத் துளிர்த்தெழுந்துள்ளன. போதிகைகள் கைக் கோடரின் அடிகளோடு வெட்டுண்ட துண்டுக் கட்டையை விட வேறல்ல. போதிகையின் தற்கால அமைப்பு முறை மிகக் கவனமாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சிற்பிகள் மாளிகைகளின் பகுதியை கற்பனையை இணைத்து சுவை பெருக்க ஒப்பனை செய்வதற்குக் கல்லின் மீது கையை வைத்துள்ளார் என்றே விளக்கந்தரப் பெற்றுள்ளது. திராவிடப் போதிகைகள் பல்வேறு ஊழிகளிலும் அதே அமைப்பு முறையில் நிலைத்துள்ளது. அது மண்டபத்தின் காலத்தைச் சுட்டிக் காட்டுவதற்குப் போதுமானதாக இருக்க வில்லை. போதிகைக்கும், போதிகையின் வளர்ச்சிக்கும் அதன் அணிதிகழும் சிற்ப வேலைப்பாட்டிற்கும் அடிப்படையிட்டு சிறப்புறச் செய்தவர்கள் பல்லவர்கள் என்பதில்லை. சோழர்களின் முயற்சியும் போதிகை வளர்ச்சிக்குப் போதிய உதவி அளித்துள்ளது. இந்த அத்தியாயம் எழுதத் துணையாயிருந்த நூற்கள் 1. Memoirs of the Archaeological Survey of India No.54 Buddhist Antiquities of Madras Nagarjuna kondo Presidency Delhi 1938. 2. The Arts and Crafts of Travancore - Prof Dr. Stella Kramrish (London) 1948 3. Kanchi Prof. Dr. C. Meenakshi M.A. Ph. D. Madras Delhi 1965. 1922.Delhi 4. South Indian Shrines P.V. Jegadisa Iyer 5. Mahabalipuram - D.R. Tyson. Madras. 1949 6. Seven pagodas - J.W. Coombes B.A., A.M.S.T. (LONDON) 1914. 7. Studies in Pallava History - H. Heras 8. Indian Architecture - O.C. Gangoly (Calcutta) 1940 9. The pallavas - Jouveaw. Dubreuil 10. Principles of Indian Silpasastra - Prof. Panidra Nath Bose M.A (Lohore) 1926. 11. The Art of Indian Asia zimmer Heiurica 12. காஞ்சிக் கோயில்கள் டாக்டர் எம். கே. சீனிவாசன் (மலர்) 13. மதுரைக் கும்பாபிசேக மலர் - திருக்கோயில் - கட்டுரை தபதி. வை. கணபதி. பீ.ஏ மதுரை 1963. 14. தெய்வக் கலைமலர் எம். செல்லக்கண்ணு தபதி (பழனி) - காஞ்சி 1964. 15. தேவாரம் - திருஞான சம்பந்தர் 16. தென் இந்திய சிற்ப வடிவங்கள் - க. நவரத்தினம், யாழ்ப் பாணம் 1941. 17. ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம்- தபதி டி.பி. கணேசமூர்த்தி (சென்னை) 1959. 18. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கட சாமி (3-ஆம் பதிப்பு) சென்னை.1969. 19. நரசிம்மவர்மன்- மயிலை சீனி வேங்கடசாமி (முதற் பதிப்பு) (சென்னை) 1957. 20. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1955. குடைவரைக் கோயில் கி.பி ஏழாவது நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மன் சமணம் துறந்து சைவந் தழுவினான். அவன் முதன் முதலாகச் சிவபெருமான் அழிவற்றவராக இருப்பதால் அவரது கோயிலும் அழிவற்றதாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே முதன் முதலாக, அழியா மலைக் குகைகளில் சிவ பெருமானை வைத்து வழிபட ஏற்பாடு செய்தான். அப்பால் மலைகளைக் குடைந்து உள்ளே திரு உண்ணாழிகையும், முக மண்டபமும் பிரகாரமும் (சுற்றும்) உருவாக்கிக் குடைவரைக் கோயில்களை உருவாக்கினான். இம்மன்னன் மகேந்திரன் வட மொழி பயின்றவன். இசைக் கலையில் ஈடுபட்டவன், சிற்பக் கலையில் சிறந்தவன். இவன் பல கலையும் பயின்ற பாவேந்தனு ஆகம சைவத் தோன்றலும் தெய்வத் தூதனுமாகிய திருநாவுக்கரசு அடிகளைக் குருவாகக் கொண்டவன். அவன் தமிழகத்திலே குடைவரைக் கோயில்கள் பலவற்றை நிறுவினான். கற்றளிகள் எடுப்பிக்க வழிகாட்டினான் அவற்றிற்கு அடிப்படையும் அமைத்தான். குடை வரைக் கோயில் அமைப்பு மகேந்திரவர்மன் அமைத்த என்றும் அழியாக் குடைவரைக் கோயில்கள் மலையின் நடுவே குடைந்து உள்ளே உயர்ந்த தூண் களும் சுவர்களும் அறைகளையும் மண்டபங்களும் மூர்த்தங்களும் இடம் பெறுமாறு செய்யப் பெற்றிருந்தன. தூண்கள் சதுரமாக இருந்தன. அதில் அழகாகத் தாமரைச் சிற்பம் இடம் பெற்றிருந்தன. அவைகளில் குணபரன் பெயரும் தீட்டப் பெற்றிருந்தன. சுவர்களில் சுண்ணம் பூசப் பெற்று வண்ண ஓவியம் வகை வகையாக இலங்கும் படி செய்யப்பெற்றிருந்தது. போதிகைச் சதுரப் பலகையாக இருக்கும் சுவர்களில் மண்கலந்த சுண்ணச் சாந்து பூசப் பெற்று அதன் மீது சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா வண்ணம் பூசப் பெற்ற எழில் ஓவியங்கள் பல தீட்டப்பட்டிருந்தன. நடுவே திரு உண்ணாழிகை (கருவறை) திகழும். வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர்கள் (துவார பாலகர்கள்)இடம் பெற்றிருந்தனர். கோயில்களில் உள்ள நீண்ட சுவர்களில் புராணக்கதைகளை விளக்கும் புடை சிற்பங்கள் திகழ்ந்தன. கோயில்களில் வட மொழியிலும் தென் மொழியிலும் பல கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டிருந்தன. கோயில்கள் புனித இடமாக மதிக்கப் பெற்றன. சிவனை வழிபடும் அடியவர்களான ஆண்களும் பெண்களும் குளிர்ந்த நீரில் குளித்து நல்லாடை புனைந்து திருக்கோயிலை பெருக்கி, மெழுகி, சுத்தமாக வைத்தனர். கோயிலை புனித இடமாக எண்ணி எவரும் அசுத்தம் செய்யவோ அசுத்தமானவர்கள் உள்ளே புகவோ அஞ்சுவர். கோயிலில் இரவு எங்கும் திருவிளக்குகள் ஒளி செய்யும் மணி ஓசை எழும். இன்னிசை முழங்கும். சாம்பிராணி, சந்தனம், கற்பூர வாசனை கமகம என எழும். தமிழகத்தில் முதன் முதலாக எழுந்த குடை வரைக் கோயில்களில் சில அடியில் வருமாறாகும்: 1. தளவானூர் குடை வரைக் கோயில் தளவானூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டாரத்தில் உள்ளது. இது செஞ்சிக்குத் தென்கிழக்கில் 10-கல் தொலைவில் உள்ளது. பேரணிப் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே 5-கல் தொலைவில் உள்ளது. தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பல்லவர்களின் குடைவரைக் கோயில்களில் தளவானூர்க் குடை வரைக் கோயில் ஒரு சிறந்த கோயிலாகக் கருதப்படுகிறது. ஊருக்கு வடக்கேயுள்ள குன்றில் இக் கோயில் தெற்குப் பக்கத்தில் குடைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இது ஒரு சிவன் கோயில் ஆகும். இது சத்துரு மல்லேசுவராலயம் என்று அழைக்கப்படும். இந்தக் கோயிலைப் பஞ்ச பாண்டவர் மலை என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இக்கோயிலில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இங்கு இப்பொழுது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. கோயில் சிறிதாக இருக்கிறது. இலிங்கம் கிழக்கு நோக்கி இருக்கிறது. திரு உண்ணாழிகை 7 அடி 10 அங்குல நீளமும் 8 அடி 6 அங்குல அகலமும் 6 அடி 10 அங்குல உயரமும் உள்ளது. பின்னர் சேர்க்கப்பட்ட முன் மண்டபமும் 21-அடி 10 அங்குல நீளமும் 19 அடி அகலமும் 8 அடி 10 அங்குல உயரமும் உள்ளது. சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. இலிங்கம் 2 அடி 5 அங்குல உயரமும் 4 அடி 6 அங்குலச் சுற்றளவும் உள்ளது. இலிங்கத்தின் அடிப்பகுதி-ஆவிடையார் வழக்கமான வடிவில் 6 அடி 2 அங்குல நீளம் உள்ளது. இலிங்கத்தின் மீது முன்புறமாகக் கீழ் நோக்கி நெருக்கமான கோடுகள் காணப் படுகின்றன. திருக்கோயிலின் முன் உட்புகும் மண்டபம் தெற்கு நோக்கி இருக்கிறது. (படம் 1 (அ) ) இலிங்கம் கிழக்குமுகமாக இருக்கிறது. மண்டபத்தின் வாயிலின் இரு மருங்கினும் வெளிப் புறம் இரு வாயிற் காப்போர் (துவார பாலகர்) உருவங்கள் காணப்படுகின்றன. அவர்கள் வழக்கம் போல் தலைப்பாகை அணிந்து கெம்பீரமாக நிற்கின்றனர். கோயிலில் உள்ள இரு தூண்கள் 2 சதுர அடி அளவுள்ளதாய் தலை உறுப்புகளோடு 7 அடி உயரம் உள்ளதாய் உண்ணாழிகை முன் உள்ள மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. மண்டபத்தின் மேற்கூரை இயற்கையாக அமைந்த பாறையாக இருக்கிறது. மண்டபத்தில் உள்ள தூண்கள் மூன்று இடைவெளிகள் உள்ளதாய் அமைக்கப் பட்டுள்ளன. மண்டபத்தின் வெளிப்புறத்து நடுத் தூண்களில் மகர தோரணம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தரை பூமி மட்டத்திற்கு மேல் 4 அடி உயரமாக இருக்கிறது. மண்டபத்தின் இரு கோடியிலும் தெற்கு நோக்கி இரு வாயில் காப்போர்கள் 6 அடி உயரத்தில் நிற்பது போல் செதுக்கப்பட்டு மண்டபத்தில் மேற்குக் கோடியில் உள்ள உருவம் வணக்கம் செய்யும் முறையில் இடது கையை உயர்த்தி நிற்பது போல் காணப்படுகிறது. கிழக்குப் பக்கமுள்ள உருவம் வழக்கம் போல் வலது கையில் கதை (கம்பு) தாங்கி நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் இடது கோடியில் வட மொழியில் பல்லவகிரந்த எழுத்தில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இதில் இக் கோயில் மகேந்திரவர்மன் ஆணைப்படி கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.1 இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தமிழ் வரி வடிவில் செய்யுள் வடிவமாகச் செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்ட இடம் வெண்பட்டு என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமராவதி புத்தர் கோயிலின் வேலிப்பட்டிகை போல் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய தாமரைப் பூச் சிற்பங்கள் தூண்களில் காணப்படுகின்றன. பிரதான வாயிலில் இருபக்கங் களிலும் இரு தூண்கள் உள்ளன. தூண்களின் மேற்குப் பக்கம் மகர தோரணம் மாண்புறக் காணப்படுகிறது. இது திருவாசி என்றும் கூறப்படுகிறது. இரு கோடிகளிலும் மகர மீன்கள் உள்ளன. அதன் வாய்களிலிருந்து தோரணம் எழுந்து வருவது போல் செதுக்கப் பட்டுள்ளது. மேலே இசை வாணர்கள் (கந்தர்வர்கள்) காணப்படு கின்றனர். தோரணத்திற்கு மேலே மண்டபம் முழுவதும் பௌத்த முறையில் பலகணிக்குரிய மஞ்சடைப்பு அணிகள் அலங்கரித் துள்ளன. இலிங்கத்தைத் தவிர காவலர் உருவமும் அணி செய்துள்ள முறைகளும் பௌத்த பண்பைக் காட்டுவதாகத் திகழ்கின்றன. திருவாசியில் இரு வளைவுகள் உள்ளன. எனவே இது இரட்டைத் திருவாசி எனப்படும். மகேந்திரவர்மன் பகைவரை வென்று இக்கோயிலை அமைத்ததால் இம் மலை மீது சத்துரு மல்லேசுவராலயம் என்று எழுதப்பட்டுள்ளது. 2. திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயில் திருச்சிராப்பள்ளி நகரின் நடுவே உள்ள குன்றின் மீது இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ஒன்று மேலே இருப்பது; இது பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அமைத்த திருக்கோயிலாகும். இது மகேந்திர பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கீழே இருப்பது மன்னன் மகேந்திரவர்மன் மகன் மாமல்லன் உருவாக்கிய கோயில் ஆகும். மகேந்திரவர்மன் அமைத்த இந்த குடை தழி தெற்கு நோக்கி இருக்கிறது. இது பல்லவர்களின் நல்ல திருப்பணிக்கு ஏற்ற எடுத்துக் காட்டாக இலங்குகிறது. இங்கு சிறந்த கல்வெட்டுகள் உள்ளன. இக்குடை வரைக் கோயில் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி மகேந்திரவர்மன் ஆணையின் மீது அமைக்கப் பெற்ற கோயில் என்று மெய்ப்பிக்கப் பெறுகிறது. மண்டபத்தில் உள்ள சாசனங் களில் ஒன்று நான்கு வட மொழிச் செய்யுட்களாக அமைந்துள்ளன. இக்கோயில் தெற்கு நோக்கி இருக்கிறது. இதில் திரு உண்ணாழிகையும் (கருவறையும்) முக மண்டபமும் உள்ளன. உண்ணாழிகையின் வலது பக்கத்தில் மேற்பூச்சின் மீது கல்வெட்டு காணப்படுகிறது. இதில் குணபரன், சத்துருமல்லன், புருடோத்தமன் லலிதாங்குரன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவைகள் மன்னன் மகேந்திரன் பெயர்களாகும். கோயிலிலும் சுவர்களிலும் மகேந்திரவர்மனுடைய விருதுப் பெயர்களான, சிரி மகேந்திர விக்ரமன், குண பரன் பிண பிணக்கு, சித்திரகாரப்புலி முதலிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல் வெட்டுகள் திட்ட வட்டமாகப் பல்லவர்கள் கல்வெட்டுகளில் காணப்படுவதைப் போல் இருக்கிறது. இதில் குணபரன் ஆணைப்படி இக்கோயில் அமைக்கப்பட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இங்கு சிவலிங்கமும் குணபரன் உருவமும் இருக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெளிவாக முன்னர் மன்னர் மகேந்திரவர்ப் பல்லவனால் துன்புறுத்தப்பட்ட அப்பர் அடிகள் அன்பால் அரசனை இலிங்கத்திற்கு வழிபடும்படி செய்து அவனைச் சைவ நெறியின் காவலனாகச் செய்தது நன்கெடுத்துக் காட்டப்படுகிறது.2 இந்தக் குடைவரைக் கோயில் அமைப்பு மிக எளிதாகவும் கரடு முரடாகவும் உள்ளது. இந்தக் கோயிலின் மண்டபம் 30 அடி நீளமும் 15 அடி அகலமும், 9-அடி உயரமும் உள்ளது. கிழக்குப் புறமுள்ள சுவரில் திரு உண்ணாழிகை மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 7 அடி 10 அங்குல நீளமும் 7-அடி 10-அங்குல அகலமும் உள்ள சதுரமாயும் 7-அடி உயரம் உள்ளதாயும் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு, நான்கு கனசதுரம் வடிவமுள்ள கல் தூண்கள் மண்டபத்தை ஐந்து சம அளவாகப் பிரித்து நிற்கும் படி செய்திருக்கின்றனர். இத்தூண்கள் தளவானூர் அமைப்பிலும் காணப்படுகின்றன. இங்கு தோரணங்களோ ஏனைய சிற்ப வேலைப்பாடுகளோ இல்லை. ஆனால் அமராவதி பௌத்த கோயில் தூண்கள் மீதுள்ள உத்தரங்களின் மீது காணப்படுவது போல், கனசதுரத் தூண்கள் மீது கவின் பெரும் கமல மலர் கண்களையும் கருத்தையும் கவர்வதாய் காட்சி அளிக்கின்றன. கீழ்ப்பகுதியிலும் சில சுருள் வடிவமான அலங்காரங்கள் காணப்படுகின்றன. திரு உண்ணாழிகையின் தரையின் நடுவே 2-சதுர அடியில் ஒரு குழி செய்து அதில் இலிங்கத்தை நிலை நாட்டி இருந்ததாகத் தெரிகிறது. அதன் அருகே இரண்டாவது குழி 1-அடி சதுர வடிவில் உள்ளது. முதற் குழி இலிங்கம் இருந்த அடையாளம் ஆகும். இரண்டாவது குழி மகேந்திரவர்மன் சிலை வடிவம் இருந்த இடமாகும். ஆனால் இப்பொழுது கோயிலில் எவ்வித உருவங்களும் காண முடியவில்லை. இக்கோயில் ஒரு காலத்தில் பிரஞ்சுக்காரர்களால் போர்த் தளவாடங்களையும் துப்பாக்கி மருந்தையும் சேகரித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மண்டபத்தின் தூண்களுக்கு இடையே இருந்த இடைவெளிகள் செங்கற் சுவர்களால் அடைக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது அவைகள் அகற்றப்பட்டு விட்டது. கோயிலுக்கு மேலே வாயிலில் எழுதகங்களும் பலகணிக்குரிய மஞ்சடைப்பும் அணி செய்கின்றன. வாயிலின் ஒவ்வொரு பக்கமும் உயர்ந்த புடை சிற்பம் உள்ளன. திரு உண்ணாழிகை வாயிலின் இரு மருங்கினும் இரு வாயில் காப்போர்களின் உருவங்கள் கையில் தடியுடன் நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளன. வாயில் காப்போர் ஒரு காலைக் கீழே உறுதியாய் ஊன்றி மற்றொரு காலை மடக்கி நின்று கையில் உள்ள கதையை நிலத்தில் ஊன்றி நிற்பது போல் செதுக்கப் பெற்றுள்ளன மண்டபத்தின் மேற்குச் சுவரில் கண்கவர் உருவங்கள் பல தீட்டப்பட்டுள்ளன. கோயிலை நோக்கி ஒரு பெரிய அரங்கம் உள்ளது. அது 7-சதுர அடியுள்ளது அதனுள்ளே கங்காதர மூர்த்தியின் சிலை வடிவம் உள்ளது. அது புடை சிற்பமாக அமைந்திருக்கிறது. அதன் நிலையும் முக அழகும் கண்டு களிக்கத் தக்கதாகும்.1 சிவபெருமானது சடையிலிருந்து விழும் கங்கையை அவர், மேலே உள்ள வலக்கையில் தாங்கி நிற்கிறார். பூணூலாக அணிந்துள்ள அரவத்தின் தலையை அவர் மற்றொரு வலது கையால் பிடித்தும், கீழேயுள்ள இடக்கையை இடுப்பில் வைத்தும் எழில் பெற நிற்பது போல் சிற்பி சிலையைச் சீர் பெறச் செதுக்கியுள்ளார். சிவபெருமானுடைய வலது சீர்பாதம் மேலே தூக்கி முயலகன் மீது வைத்து அழுத்திக் கொண்டு நிற்பது போல் காணப்படுகிறது. சிவபெருமானைச் சுற்றி நான்கு அடியவர்கள் வழிபட்டு நிற்கின்றனர். மேலே விண்ணில் யாழோர் (கந்தருவர்கள்) பறந்து கொண்டு நிற்கின்றனர். சிவபெருமான் தலைக்கு மேலே ஒரு சிறிய மனித உருவம் மேகத்தினின்று வெளியே கிளம்பி வருவது போல் செதுக்கப் பெற்றுள்ளது. அதன் தலையும் இடுப்பிற்கு மேற்பட்ட பகுதியும் நன்றாகத் தெரிகிறது. கைகளை உயர்த்தி வணங்குவது போல் காணப்படுகிறது. மற்றொரு பக்கம் ஒரு சிறிய விலங்கு காணப்படுகிறது. அது மானாக இருக்கலாம். மான் மாடு போல் படுத்திருக்கும் நிலையில் உள்ளது. அரங்கின் அடித்தளம் சென்னை பழம் பொருள் காட்சி சாலையில் உள்ள அமராவதிப் புடைசிற்பம் போல் பௌத்த சமய சிற்ப அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 3. மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் மண்டகப் பட்டு தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டாரத்தில் இருக்கிறது. இது விழுப்புரம் புகை வண்டி நிலையத்திற் வடமேற்கே 12-கல் தொலைவிலும் பாண்டிச்சேரிப் பக்கத்தில் உள்ள சின்னபாடி சமுத்திரம் புகை வண்டி நிலையத்திற்குத் தெற்கே 2-கல் தொலைவிலும் இருக்கிறது. மேலும் இது தளவானூருக்கு தென் மேற்கில் 6-கல் தொலைவிலும் இருக்கிறது என்று கூறலாம். மண்டகப் பட்டு என்னும் சிற்றூருக்கு மேற்கே அரைக்கல் தொலைவில் உள்ள குன்றின் வடக்கு பக்கத்தில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது. இந்தப் பல்லவர் குடைவரைக் கோயில் தளவானூர் கோயிற் பாணியில் உருவாக்கப் பெற்றுள்ளது. இங்கு சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் இல்லை. மண்டபத்தின் வெளிப் பக்கத்தில் இரு வாயில் காப்போர் உருவங்கள் உள்ளன. மண்டபத்தில் வடக்கு நோக்கி இரு சதுரத் தூண்கள் வழக்கம் போல் நடுவில் இருக்கின்றன. மண்டபத்தில் தூண்கள் மூன்று இடை வெளிகள் உள்ளதாக இருக்கின்றன. மண்டபத்தின் இரு கோடிகளிலும் இரண்டு பெரிய அரங்கங்கள் மண்டபத்தின் மூன்று இடைவெளிகளைப் போல் உருவிலும் பரப்பிலும் உள்ளன. கரடு முரடாக செதுக்கப் பெற்ற வாயில் காவலர் உருவங்கள் வாயிலின் இருமருங்கினும் நிற்கின்றன. இவ்வாயில் காப்போர்கள் வலது கையை இடுப்பில் வைத்துக் கொண்டும் இடது கையில் தடியைத் தாங்கிக் கொண்டும் நிற்பது போல் காணப்படுகின்றன. கிழக்குப் பக்கத்தில் நிற்கும் வாயில் காப்போன் தோற்றம் மற்றக் காவலன் உருவத் தோற்றத்தினின்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இயற்கையான பூமியினின்று கோயிலின் தளம் 4 அடி உயரத்தில் உள்ளது. பல பழம் பல்லவர்கள் கோயில்களைப் போல வாயிலை அடைவதற்கு தகுந்த படிகள் இன்றி இக்கோயிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயில் மண்டபம் நீண்ட சதுர அமைப்பில் உள்ளது 24 அடி நீளமும் 22 அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளதாக மண்டபம் திகழ்கிறது. (படம் III (இ) ) நான்கு சதுரத் தூண்கள் மேற் கூரையைத் தாங்கி நிற்கின்றன. பின் புறத்தில் தெற்குச் சுவரில் வடக்கு நோக்கி 4 அடி ஆழமான 3 மாடங்கள் உள்ளன. தரையைப் பிரித்து, ஒவ்வொரு மாடத்தின் பின் சுவருக்கும் எதிராக மூன்று சதுரத் துவாரங்கள் மாடத்தில் நிற்கும் சிலைகளைப் பார்ப்பதற்காகச் செய்யப்பட்டுள்ளன. இது தனித் தன்மை வாய்ந்த கோயில் போல் திகழ்கின்றது. இந்தச் சதுரத் துவாரங்கள் மூலம் தெளிவாகச் சிலைகளைப் பார்க்கலாம். ஆனால் கோயிலில் அமைக்கப் பட்டிருக்கும் சிவலிங்கத்தை அதன் வழியாகப் பார்க்க முடியாது. மேற்கூறிய சதுரத்துவாரங்கள் மூலம் சிவன், திருமால், நான்முகன் உருவங்களைப் பார்க்க மாடங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இப்பொழுது இங்கு திரு உருவங்கள் எதுவும் காணப்படவில்லை. இங்குள்ள கல்வெட்டு இங்கு சிவன் திருமால் நான்முகன் உருவங்கள் இருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்து கின்றன. இக்கோயிலில் உண்ணாழிகை முன் நிற்கும் வாயில் காப்பாளர்கள் பாம்பணிந்துள்ளார்கள். அதனால் நடுவில் உள்ள உண்ணாழிகையில் சிவபெருமான் திரு உருவம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் கோயில் அரசன் ஆணைப்படி கட்டப்பட்டு அவன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் அரசன் பெயர் விசித்திர சித்தன் என்று குறிப்பிடப்படுகிறது இப்பெயர் முதலாம் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயராகும். இந்தக் கல்வெட்டின் எழுத்துக்கள் தளவானூர்க் கல்வெட்டின் எழுத்துக்களைப் போன்று இருக்கின்றன. இவ்விரு கோயில்களும் அருகருகே ஒரு சில கல் தொலைவிற்குள் அமைக்கப் பட்டிருப்ப தோடு ஒரே விதமான பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் மண்டகப்பட்டு குடை வரைக் கோயில் மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூற முடியும். கல்வெட்டின் மூலம் கல், மரம், சுண்ணாம்பு, தாதுப் பொருள்களின் துணையின்றி பல்லவன் கோயில் அமைத்தான் என்று அறிகிறோம். ஆதலால் இக் கோயிலே மகேந்திரவர்மன் சைவந் தழுவிய பின் அமைத்த முதற் கோயில் என்று எண்ணப்படுகிறது. அழியாத ஆண்டவனுக்கு அழிவில்லாத கோயில்களை உருவாக்க வேண்டும் என்று மகேந்திரவர்மன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குகைகளைச் செதுக்கிக் கோயிலாக்கினான். அப்பால் மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கண்டான் என்று கல்வெட்டு ஆராய்ச்சிகளின் மூலம் அறிகின்றோம். 4- பல்லாவரம் குடை வரைக் கோயில் பல்லாவரம், செங்கற்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டையில் உள்ள சிற்றூராகும். பல்லாவரம் தென் இந்திய இருப்புப் பாதையில் உள்ள ஒரு புகைவண்டி நிலையம் ஆகும். இது பழைய பல்லாவரம், புதிய பல்லாவரம் என்னும் ஊருக்கு இரண்டு கல் தெற்கில் இருக்கிறது. எதிரே பல குன்றுகள் அரை வட்ட வடிவில் அமைந்துள்ளன. கீழ்பக்கம் உள்ள குன்று பஞ்ச பாண்டவர் மலை என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் பல்லவர் குடைவரைக் கோயில் உருவாக்கப் பெற்றிருக்கிறது. பல்லவர் புரம் பல்லாவரம் எனத் திரிபுற்றிருக்கிறது என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. பல்லவ அரச குடும்பத்தவர்கள் வாழ்ந்து வந்ததும் குடைவரைக் கோயில்களையுடையதுமான மூன்று பல்லாவரங் களில் இது ஒன்று. மகேந்திரவர்மன் எடுப்பித்த பல்லாவரம் குகைக்கோயிலில் இன்று சைவக் கோயிலின் சின்னங்கள் ஒன்றும் இல்லை. இப்பொழுது முலிம்களின் சமாதியாக மாற்றப்பட்டிருக்கிறது. இது முலிம்களின் ஆதிக்கத்திலே இருந்து வருகிறது. குகையில் சுண்ணாம்பு தீட்டப் பெற்றிருக்கிறது. இந்தக் குடை வரைக் கோயில் மண்டகப் பட்டுக் கோயிலைப் போல் இருக்கிறது. இதில் உள்ள மண்டபம் 32 அடி நீளமும் 12 ½ அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளது. இம்மண்டபத்தில் இரு வரிசையாக நான்கு நான்காக எட்டுத் தூண்கள் உள்ளன. தூண்கள் சதுர வடிவில் உள்ளன. தூண்கள் ஐந்து சம அளவுள்ள இடை வெளியுள்ளதாய் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு ஐந்து திரு உண்ணாழிகைகள் உள்ளன. உள்ளே சிலைகள் எதுவும் இல்லை. வாயில்காப்போர் உருவங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் காண முடியவில்லை. இக்கோயில் அமைப்பு மண்டகப்பட்டுக் கோயில் அமைப்பை ஒத்ததாகத் தெரிகிறது. வாயிலின் வலது பக்கம் உள்ள தூண் ஏனைய தூண்களைப் போல் எட்டுப்பட்டம் நடுவில் இருப்பதற்குப் பதிலாக அடியில் நடுப்பாகத்தில் இருக்கிறது. இது தவறாகச் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. தூணின் மேற்பகுதி பிற்காலத்தில் செதுக்கப்பட்டதாகக் கூற முடியவில்லை. மண்டபத்தில் உள்ள உட்புறத் தூண்களிலும் மேற்குப் பக்கத்தில் உள்ள பாறையிலும் பல்லவர் கல்வெட்டுகள் உள்ளன. இவை பல்லவ கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப் பட்டுள்ளன. அதில் பல்லவ மன்னர்களின் சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அதில் முதன் முதலாகக் காணப்படுவது சிரி மகேந்திர விக்கிரவர்மன் என்பதாகும். இதே பெயர் திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயிலிலும் உள்ளது. இந்தக் கல்வெட்டில் சிரி மகேந்திரவர்மன், விசித்திரசித்தன், மத்தவிலாசன் வலிதாங்குரன் சேத்தகாரி, பகாப்பிடுகு, சித்திரகாரப்புலி என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இந்த விருதுப் பெயர்கள் அனைத்தும் முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனுடையதேயாகும். இந்தக் குடைவரைக் கோயிலின் முன் மண்டபத்தின் பின்புறம் ஐந்து திரு உண்ணாழிகைகள் (கர்ப்பகிருகங்கள்) உள்ளன. அவைகள் 2½ அடிச் சதுரமாக உள்ளமாடங்கள் போல் காணப்படுகின்றன. இந்த அரைகளில் தான் சிலைகள் வைக்க மேடைகள் உள்ளன. முற்காலத்தில் இங்கு ஐந்து தெய்வச் சிலைகள் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. இன்று நடு அறையில் (உண்ணாழிகையில்) முலிம்களின் பீலி வைக்கப் பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள அரைகள் நான்கினும் ஒன்றும் காணப்படவில்லை. கடைசிப் பக்க அறைகளில் இரண்டில் கதவுகள் போட்டு பூட்டப்பட்டுள்ளன. இந்தக் குடைவரைக் கோயிலில் தீட்டப்பட்டுள்ள கல்வெட்டுகள் மீது அடிக்கடி சுண்ணாம்பு தீட்டப்பட்டு சுண்ணாம்பு அடையடையாகப் படிந்து எழுத்துக்களை மறைத்து விட்டது. கல்வெட்டுகள் இன்று படிக்க முடியாத நிலையில் உள்ளன. இந்தப் பழம் பெரும் பல்லவர் குடைவரைக் கோயில்களிலும் உள்ள சிலைகள், முலிம் மன்னர்கள் ஆட்சியின் போது அகற்றப்பட்டு அங்கு ஒரு முலிமைப் புதைத்து இது தர்கா என்று கூறப்பட்டு அது போற்றப்பட்டு வந்திருக்கலாம். ஆனால் அங்கு மகேந்திரவர்மன் காலத்து சிலைகள் இல்லாது இருப்பதை அறிந்த பிற்காலப் பல்லவர் புர மக்கள் உண்மையை உணராது. இக் கோயிலுக்கு பஞ்ச பாண்டவர் கோயில் என்று பெயரிட்டனர். அப்பெயரே இன்றளவும் வழங்கி வருகிறது. கல்வெட்டுகளில் மகேந்திரன் விருதுப் பெயர்கள் வட மொழியிலும் தெலுங்கிலும் உள்ளன. 5. மகேந்திர வாடிக் குடைவரைக் கோயில் இது வட ஆர்க்காடு மாவட்டத்தில் வாலாசாப் பேட்டை வட்டாரத்தில் சோளிங்கூர் (சோழ சிங்கபுரம்) புகைவண்டி நிலையத்திற்கு தென் கிழக்கில் மூன்று கல் தொலைவில் இருக்கிறது. மகேந்திர பாடி என்பதின் திரிபே, மகேந்திர வாடி என்று கருதப்படுகிறது. மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இவ்வூர் அமைக்கப்பட்டதால் மகேந்திர வாடி என்று பெயர் பெற்றது. இங்கு அதிகமாக வைணவப் பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஊருக்கு அருகில் ஒரு நல்ல குளம் உள்ளது. குளத்தின் பக்கத்தில் முற்காலத்தில் பெரிய அரண்கள் அமைக்கப்பட்டிருந்தது என்பதற்கு அடையாளமாக தரை மீது சுவர்கள் காணப்படுகின்றன. இங்குள்ள குன்றில் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் முன் மண்டபமும் திரு உண்ணாழிகையும் உள்ளது. மண்டபத்தின் இறுதியில் வாயில் காவலர் உருவங்கள் உள்ளன. (படம் IV (அ)) மண்டபத்தின் நடுவே சதுரமான நான்கு தூண்கள் இரண்டு வரிசையாக நிலை நாட்டப் பட்டுள்ளன. அவைகளில் ஏனைய பல்லவர்கள் தூண்களைப் போல் தாமரைப் பூ வடிவமுள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன. (படம் V (இ)) நீண்ட சதுரமான இம்மண்டபம் 18 அடி நீளமும் 13 ½ அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளது. நான்கு தூண்களும் மேற்கூரையைத் தாங்கி நிற்கின்றன. கிழக்கு நோக்கி இருக்கும் உண்ணாழிகையின் வாயிலின் இரு மருங்கினும் வாயில் காப்போர்கள் (துவார பாலகர்கள்) உருவங்கள் நின்ற கோலத்தில் உள்ளன. இக்கோயில் திருமால் கோயிலாகும். இதனை மகேந்திர விட்னுக் கிருகம் என்று அழைக்கப் பெறும். இங்கு ஒரு நரசிங்கப் பெருமான் சிலை உள்ளது. வாயில் காவலர்கள் உருவம் நிலையும் கைகளும் தளவானுர் கோயில் வாயில் காவலர்கள் உருவம் போல காணப்படுகின்றன. மண்டபத்தின் இடது பக்கத்தினின்று வடக்கு நோக்கி நிற்கும் முதல் தூணில் பல்லவர் கிரந்த எழுத்தில் ஒரு கல் வெட்டு உள்ளது.1 இதில் இக் கோயில் குணபரனால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில், குளம், ஊர் அனைத்திற்கும் மகேந்திரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 6. வல்லம் குடைவரைக் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற்பட்டுப் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கில் 2-கல் தொலைவில் வல்லம் என்ற ஊர் உள்ளது. இவ்வூர் திருக்கழுக்குன்றம் செல்லும் அரச பாட்டையில் இருக்கிறது. இங்குள்ள குன்றுக்குக் கிழக்குப் பக்கத்தில் மூன்று குகைகள் உள்ளன. இவற்றில் இரண்டு குகைகளில் வேலைப்பாடுகள் முற்றுப் பெறவில்லை. ஒரு கோயில் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிவன் கோயிலாகும். இக் கோயிலுக்கு திருவயந் தீசுவரமுடைய நாயனார் கோயில் என்று பெயர் கூறப்படும். இது தமிழகத்தில் உள்ள பழைய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் பழைய கல்வெட்டுகள் உள்ளன. அதில் கோயிலை உருவாக்கியவர்கள் யார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவத் தமிழ்க் கல்வெட்டாகும். மகேந்திரவர்மன் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ் கல்வெட்டு ஒன்றிரண்டே உள்ளன. அவைகளில் இது ஒன்று. (இந்தப் பல்லவத் தமிழ் எழுத்தின் அமைப்பை வாசகர்கள் அறியும் பொருட்டு அடுத்த பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது) இந்தக் கல்வெட்டு தென் இந்திய சாசனங்கள் தொகுதி II பகுதி II, 340, 341 - ஆம் பக்கங்களில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.1 அதன் வாசகம் அடியில் வருமாறு: பகாப்பிடு லளி தாங்குரன் சத்துரு மல்லன் குணபரன் மயேந்திரப் போத்தரசன் அடியான் வயந்தப்பிரி அரசரு மகன் கந்தசேனன் செய்வித்த தேவகுலம் இந்தக் கல்வெட்டின் கருத்து, பகாப்பிடு, லளிதாங்குரன் சத்துரு மல்லன் குணபரன் என்ற சிறப்புப் பெயர்களையுடைய மகேந்திரப் போத்தரசன் கீழ் குரு நில மன்னனாக இருக்கும் வயந்தப் பிரிய அரசன் மகன் கந்தசேனன் இந்தக் கோயிலை அமைத்தான் என்பதேயாகும். இங்கு குறிப்பிடப்பட்ட மகேந்திரவர்மன் முதலாம் மகேந்திர வர்மனேயாகும். இதனை அறிஞர் வேங்கையர் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார் இந்தக் கல்வெட்டு கி.பி 7-ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாகும்.2 இங்குள்ள இரு சிறு முற்றுப் பெறாத குடைவரைக் கோயில்களும் முக்கியமானவைகளேயாகும். பெரிய கோயில்கள் அதாவது முற்றுப் பெற்ற கோயில்களும் சீரற்றே கிடக்கின்றது. இந்தப் பெரிய கோயில் மேலச்சேரி கோயில் போல காணப்படுகிறது. மண்டபத்தின் தூண்கள் சாதாரணத் தூண்களாகவே இருக்கின்றன. சதுர வடிவமான திரு உண்ணாழிகையில் இலிங்கம் உருண்டை வடிவில் உருவாக்கப் பெற்றுள்ளது. இன்றும் இங்கு வழிபாடுகள் நடை பெற்று வருகின்றன. முன் மண்டபத்தில் பிற்காலத்தில் செங்கற் சுவர் எழுப்பி அடைத்து விட்டதால் கோயில் பெருமை குன்றிவிட்டது. உண்ணாழிகையின் முன் வாயிலில் இரு பக்கங்களிலும் வாயிற் காப்போர் உருவங்கள் காணப்படுகின்றன. தலையில் இரு கொம்புகள் உள்ளவர்களாயும் கையில் தடி தாங்கியவர்களாயும் வாயில் காவலர்கள் நிற்கின்றார்கள். கோயிலின் வெளியே குன்றின் மீது இளங்குழந்தை உட்கார்ந் திருப்பதைப் போல் உள்ள வலம்புரி விநாயகர் (பிள்ளையார்) உருவமும் சுவரில் மூதேவி (சேஷ்டா தேவி) உருவமும் காணப் படுகின்றன. பிள்ளையார் உருவம் பிற்காலத்தில் இடம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மண்டபத் தூண்களின் இடை வெளிகளில் செங்கற் சுவர் எழுப்பி மரக்கதவு இடப் பட்டுள்ளது. இந்தக் குடை வரைக் கோயில் கல்வெட்டு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது. இக் கோயிலுக்கு நுந்தா விளக்குத் தானம் செய்யப் பட்ட செய்தியைக் கூறுகிறது. சலபுவன சக்கரவர்த்திகள் சிரி கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 14-வது களத்தூர்க் கோட்டத்து வல்ல நாட்டு வல்லத்து உடையார் திருவயந்தீசுரமுடைய நாயனார்க்கு என்று இந்தச் சாசனம் தொடங்குகிறது.1 7. மேலைச் சேரி குடைவரைக் கோயில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் செஞ்சி நகருக்கு வட மேற்கில் 3-கல் தொலைவில் மேலச் சேரி என்னும் ஊர் உள்ளது. அது ஒரு சிற்றூராகும். அவ்வூருக்கு வடக்கில் சிறு கருங்கன் மலை மேற்கு நோக்கி இருக்கிறது. அதன் நடுவில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது. அங்குள்ள மக்கள் இதை மத்திலேவரர் கோயில் என்று அழைக்கிறார்கள். இது இன்னும் மக்கள் வழிபடும் கோயிலாக இருந்து வருகிறது. குடைவரைக் கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது. ஆனால் இதன் தோற்றத்தை மறைத்து அதன் முன் பக்கத்தை அடுத்து ஒரு மண்டபம் செங்கல்லால் கட்டி மேற்பூச்சு பூசப்பட்டிருக்கிறது. நடுவே இரு சதுரத் தூண்கள் உள்ளன. மண்டபத்தை மூன்று சம இடைவெளியிட்டுத் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு உட்புகும் மண்டபம் 19 அடி 9 அங்குல உயரமும் 8 அடி 9 அங்குல அகலமும் 6 அடி 8 அங்குல உயரமும் உள்ளதாக இருக்கிறது. பின்னர், குறுக்கிடும் கிழக்குச் சுவரும் மேற்கு நோக்கி இருக்கும் ஒரு சிறு கோயிலும் அதனுள் சிவ லிங்கமும் இருக்கிறது. அந்த சிறு கோயில் 8 X 4 X 8 7 பரப்புள்ளதாயும் அதே உயரம் உள்ளதாயும் உட்புகும் மண்டபம் போல் இருக்கிறது. கல்லில் செதுக்கப் பெற்ற இந்த இலிங்கம் வட்டமாக உருண்டை வடிவில் கீழே ஆவிடையாருடன் தரைக்கு மேல் 4 9 உயரமாக இருக்கிறது. இது பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் எவ்விதமான சிற்ப வேலைப் பாடுகளோ சிலைகளோ படிமங்களோ இல்லை. ஆனால் இங்குள்ள தூணின் மீது ஒரு பல்லவர் கல்வெட்டு உள்ளது. இது 1916-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சு பேராசிரியர் திரு. எச். சோவியோ துப்ரயல் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பல்லவர் பழம் பொருள்கள் என்னும் நூலின் முதல் தொகுதி 66ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு இந்தக் குடை வரைக் கோயில் சந்திராதித்திய அரசனால் கட்டப் பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுகள் எதுவும் காணப்பட வில்லை. சந்திராதித்தியன் என்னும் பெயர் பல்லவ மன்னர்களில் ஒருவருடைய பெயராக இருக்கலாம். ஆனால் இது எந்தப் பல்லவ அரசனின் விருதுப் பெயர் என்று நம்மால் கூற முடியவில்லை. வேறு எந்த கல்வெட்டுத் துறை நிபுணர்களும் இது வரை விளக்கமாகக் கூறவில்லை. இதனை நிழற் படமாக எடுக்க முடியவில்லை. இதன் தோற்றத்தை முன்னர் கட்டப்பட்டுள்ள செங்கற் சுவர் மறைத்து நிற்கிறது. ஆனால் ஒரு வரை படம் மட்டும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது ஆனால் இந்தக் குடைவரைக் கோயில் மகேந்திர பாணியில் உள்ளது. எனவே இது இங்கு வெளியிடப்பட்டுள்ளது. 8. சிங்கவரம் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் மேலச் சேரிக்கு ஒரு கல் தொலைவில் சிங்கவரம் என்னும் ஊர் உள்ளது. இங்கு பல்லவர்களால் எடுப்பிக்கப் பெற்ற குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. இது இரங்கநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது, மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலைப் போல் அனந்தசயனம் காட்சி தரும் பெரிய பாறையில் செதுக்கப் பெற்ற சிலையாக இருக்கிறது. இந்த உருவம் பிற்காலத்தில் செதுக்கப்பட்டது போல் காணப்படுகிறது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கோயில் முன்புள்ள குடை வரை மண்டபத்தில் சதுர வடிவான ஒற்றைக் கல் தூண்கள் உள்ளன. அது வழக்கமான சிற்பவேலைப்பாடுகளும் வழக்கில் உள்ள தாமரை மலர்களாலான வேலைப்பாடுகளுடனும் நிற்கின்றன. வாயிலின் ஒவ்வொரு சுவர் இறுதியிலும் வாயில் காப்போர் உருவம் உள்ளது. இது பெரிதும் தளவானூர் கோயில் மண்டபத்தின் வாயிலில் காணப்படுவதைப் போன்று காணப் படுகிறது. பேராசிரியர் சோவியோ துப்ரயல் அவர்கள், சிங்கவரம் எனப்படும் இவ்வூர்ப் பெயர் சிங்கபுரம் என இருக்கலாம் என்றும் இது சிங்கபுர நாடு என்னும் ஒரு கோட்டத்தின் தலை நகராக இருக்கலாம் என்றும் கருதுகின்றார். எனவே இந்தப் பெயர் பழமையானதும் வாயில் காப்போர் உருவங்கள் முதலாம் மகேந்திரவர்மன் பாணியில் காணப்படுவதும் சிங்கவரம் சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ மன்னனால் அடிப்படையிடப்பட்டு அவனுக்குப் பின் அவனது அரச கட்டிலை அடைந்த அவன் மகன் முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் அவனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு பல்லவர் கல்வெட்டு ஒன்றும் காணப்படவில்லை. அதோடு இங்கு ஏதாவது இருந்திருக்கும் என்ற அடையாளம் எதுவும் இல்லை. ஏனெனில் கோயிலின் மண்டபத்திற்கு எதிராக இப்பொழுது புதிதாகக் கட்டப்பட்ட மண்டபம் தூண்களின் அடிப்பகுதியை மறைத்து நிற்கிறது. கோயில் வழிபடுவதற்காக உள்ளது போல் இருக்கிறது. இக் கோயிலின் ஒரு பகுதியில் புரோகிதர்களின் பண்டங்கள் வைப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள பகுதிகள் அப்புறப்படுத்தப் பட்டது போல் காணப்படுகிறது. எனவே இந்தக் குடைவரைக் கோயிலைத் தோண்டிய மூல அரசன் யார் என்பதைக் கூறுவதில் பல்வேறு ஐயப்பாடுகள் காணப்படுகின்றன. 9. திருக்கழுக் குன்றம் குடைவரைக் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில், செங்கற்பட்டுப் புகைவண்டி நிலையத்தினின்று மகாபலிபுரம் அரச பாட்டையில் தென் கிழக்கில் 9-கல் தொலைவில் திருக்கழுக்குன்றம் என்னும் ஒரு சிற்றூர் உள்ளது. இவ்வூர் வேத கிரீசுவரர் மலை என்னும் அழகிய குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. வேத கிரீசுவரர் மலையின் உச்சியில் மற்றொரு சிறிய சிவன் கோயில் உள்ளது இக் கோயிலுக்குப் போக வேண்டுமானால் மலையின் தெற்குப் பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும். பாதி வழியில் கிழக்கு மேற்காகப் பாதை பிரிந்து செல்கிறது. கிழக்கே சென்றால் குடைவரைக் கோயிலை அடையலாம். இந்தக் கோயில் மலையுச்சியுள் வேத கிரீசுவரர் கோயிலுக்கு 50 அடி கீழே இருக்கிறது. இக் குடைவரைக் கோயிலை இங்குள்ளவர்கள் ஒற்றைக் கல் மண்டபம் என்று கூறுகிறார்கள்1 இக் கோயில் கிழக்கு நோக்கி குன்றின் சரிவிற்கு வெளியே இருக்கும் ஒரு பெரிய பாறையில் இருக்கிறது. மண்டபம் கிழக்கு நோக்கி சிற்ப வேலைப்பாடுகள் அதிகமின்றி எளிய முறையில் இருக்கிறது. இங்கு எழுதகங்கள் எதுவும் புடைத்துக் கொண்டு இருக்கவில்லை. மேலும் இங்கு பெரிய அறைகள் எதுவுமில்லை. மண்டபத்தின் இறுதியில் வாயில் காப்போர்களின் உருவங்கள் உள்ளன. இது தோற்றத்திலும், தரைப்படத்திலும் மகேந்திரவாடியிலுள்ள பல்லவர் கோயிலைப் போன்று காணப்படுகிறது. மண்டபத்தின் நடுவில் இரு சாதாரணத் தூண்கள் வழக்கம் போல் மண்டபத்தைப் பிரித்து சம அளவுள்ள மூன்று இடைவெளிகள் உள்ளதாக அமைக்கப் பட்டுள்ளது. மத்திய இடைவெளி, பூமியினின்று தளவரிசை 5 அடி உயரத்தில் உள்ளது. மேலே ஏறுவதற்குக் கற்படிகள் அமைக்கப் பட்டுள்ளன. மண்டபம் 22½ அடி நீளமும் 17 அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளதாக இருக்கிறது. இரு வரிசையாகத் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மேற்குச் சுவரை ஒட்டி திரு உண்ணாழிகை 8 அடி நீளமும் 7 அடி அகலமும் உள்ளதாக இருக்கிறது. கிழக்கு நோக்கி ஒரு சிறு வாயில் இருக்கிறது. உண்ணாழிகையின் தளம் மண்டபத் தளத்தினின்று 3 அடி உயரத்தில் உள்ளது. உண்ணாழிகையின் நடுவில் சிவலிங்கம் சீர் பெற நிலைநாட்டப் பெற்றுள்ளது. வாயிலில் காவலர் உருவங்கள் உள்ளன. வாயில் காப்போர்கள் இரு கைகளை உடையவர்களாய்க் காணப் படுகின்றனர். ஒரு கையை மடக்கி இடுப்பின் மீது வைத்திருக் கின்றனர். மற்றொரு கையில் பெரிய தண்டாயுதத்தை வைத்திருக் கின்றனர். அவர்களது தலைப்பாகையும், நிற்கும் நிலையும் அமைப்புப் பாணியும் மகேந்திரன் காலத்தில் உள்ளவைகள் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. உண்ணாழிகையின் மேல் வாயிலில் வழக்கம் போல் கார்னி புடைத்துக் கொண்டு இருக்கிறது. பல கணிகளின் அணிகளும் உள்ளன. மாடங்களுக்குக் கீழே படிகளின் ஒவ்வொரு பக்கமும் உண்ணாழிகையின் வெளியே யுள்ள அடித்தளத்தில், திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயிலை யொத்த சிற்ப வேலைப்பாடுகள் இருவரிசைகளாக இலங்குகின்றன. திரு உண்ணாழிகையின் பின் புறத்தில் உள்ள கற் சுவர் மீது இருகோடிகளிலும் புடை சிற்பமாக நான்முகன் திருமால் ஆகிய தெய்வங்கள் நின்று கொண்டு இருக்கும் நிலையில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரு உருவங்களும் தனித் தனியே நான்கு கைகள் உடையதாகச் செய்யப்பட்டுள்ளன. நான் முகன் உருவம் உண்ணாழிகையின் தெற்குப் பக்கத்தில் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு குழிப்பான சிறப்பான தலை அணியோடு காணப்படுகிறது. திருமால் உருவம் மாமல்லன் காலத்தைச் சேர்ந்த மாபலிபுரம் ஏழு பகோடா கோயில்களில் உள்ள பிந்திய கால சிலைகள் சிலவற்றைப் போன்று திகழ்கின்றது. உண்ணாழிகையின் வாயிலைக் காவல் புரிந்து நிற்கும் இரு வாயிற் காப்போர்களின் உருவத்தை விட நான்முகன் திருமால் சிலைகள் காலத்தால் பிந்தியவைகளாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் மூலக் கோயில் சிவ பெருமான் திருக்கோயிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இந்து மத எழுச்சியில் மும்மூர்த்திகள் - நான்முகன் திருமால் சிவன் ஆகிய தெய்வங்களை வழிபடும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. இப்பொழுது இக் கோயிலில் அன்றாடப் பூசை எதுவும் நடைபெறவில்லை. ஆனால் மக்கள் அடிக்கடி வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கு ஒரு தல புராணம் உண்டு. அதில் இரு முனிவர்கள் சாபத்தினால் பறவையாக மாறி தங்கள் சாபம் நீங்க வழிபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பரிசுத்த முனிப் பறவைகள் இன்றும் ஒழுங்காக மாலை தோறும் மலைக்குப் போந்து திருக்கோயிலைத் தெரிசிக்க வருகிறது. பூசாரி கைகளின் மூலம் கொடுக்கும் சோற்றைப் பெற்றுச் செல்லுகிறது. பிரதான மண்டபத்தின் வடக்குத் தெற்குச் சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றை யொன்று பார்த்துக் கொண்டு நிற்கும் நிலையில் சுமார் 5 அடி உயரத்தில் இரு வாயிற் காப்போர் உருவங்கள் நிற்கின்றன. அவைகள் உயர்ந்த புடை சிற்பமாக கண்ணைக் கவரும் முறையில் மூலப்படிமத்தினின்று படியெடுத்த உருவம் போல் செதுக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் இரு கைகளை உடையதாய் ஒரு கை மேலேயுயர்த்தி வழிபடுவது போலவும் மற்றொரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது போலவும் காணப்படுகிறது. அவைகள் வழக்கமான நீண்ட தலை அணியும் அணிகலன்களும் உடையதாய்த் தளவானூர் திரு உண்ணாழிகையின் வாயிலின் இரு பக்கங்களிலும் நிற்கும் இரு வாட்போர்களைப் போல் காணப்படுகின்றனர். இந்தக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுப் படிக்கப்பட்டுள்ளன. 1908-1909-ஆம் ஆண்டைய தெற்குப் பகுதிக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையினர் ஆண்டு அறிக்கையின் 73-76ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கோயிலுக்குச் சென்றதும் முதன் முதலாக நமது கண்களில் காணப்படுவது 17-ஆம் நூற்றாண்டில் உலாந்தாக்காரர்களின் (டச்சுக்காரர்கள்) எண்ணற்ற கையொப்பங்கள் உள்ள கல்வெட்டுகள் மட்டும் காணப்படுகின்றன. உலாந்தா அதிகாரிகள் குழுவொன்று பக்கத்தில் உள்ள சத்ரா துறைமுகத்தினின்று பார்வையிட்டது சம்பந்தமாகக் காணப் படுகிறது. சுவர்களிலும், தூண்களிலும் உள்ள எல்லா இடங் களிலும் இந்தக் கையொப்பங்களால் நிரப்பப்பட்டுள்ளன. பின் பக்கத்திலுள்ள தூண்கள் ஒன்றின் தலைப்புறுப்பில் பழந்தமிழ் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டின் தொடக்கப் பகுதி சீர்குலைந்துள்ளது. அதோடு எக்காரணத்தி னாலோ இறுதிப் பகுதி நிறைவு பெறாதிருக்கிறது. ஆனால் மற்றப் பகுதிகள் நன்றாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப முதல் இறுதி வரை வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரசர் என்ற பெயர் தெளிவாகக் காணப்படுகிறது. இது முதலாம் மகேந்திர வர்மப் பல்லவன் மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வரையப்பட்ட கல்வெட்டு என்று உறுதியாகத் தெரிகிறது. இது, முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 642-இல் மேலைச் சாளுக்கியர்களின் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டியதை நினைவூட்டுவதாக வரையப்பட்டது. வாதாபி பம்பாய் மாநிலத்தில் உள்ளது. வாதாபியை வெற்றி கொண்டதால் முதலாம் நரசிம்ம வர்மன் வாதாபி கொண்டான் என்ற தமிழ்ப் பட்டத்தைச் சூடிக் கொண்டான். ஆனால் இந்தக் குடைவரைக் கோயிலை யார் நிர்மாணித் தார்கள் என்று கூறக் கூடிய அகச் சான்றுகள் ஒன்றும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால் இத்திருக்கோயிலின் பாணியும் அமைப்பு முறைகளும், கட்டிடக் கலையின் தோற்றமும் இது மகேந்திரவர்மன் காலத்தியவை என்று உறுதியாகக் கூறக் கூடியவைகளாய் இருக்கின்றன. இங்குள்ள திருமால் நான்முகன் உருவங்கள் ஒரு வேலை நரசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. ஒரு சிலர் மகேந்திரவர்மன் காலத்தில் இக்கோயில் பணி தொடங்கப் பெற்று நரசிம்மவர்மன் காலத்தில் நிறைவெய்தி இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். நரசிம்மவர்மன் வாதாபியை வெற்றி கொண்டது. கி.பி. 642-ஆம் ஆண்டாகும். அவனுடைய படைத்தலைவர்களில் ஒருவர் சிறுத் தொண்ட நாயனார் என்னும் சைவப் பெரியார் ஆகும். பெரிய புராணத்தில், மன்னவர்க்குத் தண்டு போய் வட புலத்து வாதாபித் தென்னகரைத் துகளாகத் துளைநெடுங்கை வரையு கைத்துப் பன்மணியும் நிதிகுவையும் பட்டினமும் பரித்தொகையும் இன்ன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன் கொணர்ந்தார். (பெருய சிறுத் தொண்டர்: 6) என்று கூறுவதன் மூலம் நரசிம்மன் வாதாபியைக் கொண்டது சிறுத் தொண்டர் மூலம் என்று தெரிகிறது. திருக்கழுக்குன்றம் வேத கிரீசுவரர் கோயிலில் உள்ள அறையின் மேற்குச் சுவரில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அதை காலஞ் சென்ற திரு வெங்கையா அவர்கள், படியெடுத்துப் படித்து புத்தகமாக அளித்துள்ளார். மூலத்தானக் கோயிலுக்கு கந்தசிசிய மன்னன் என்னும் பல்லவ மன்னன் மானியம் அளித்ததையும் முதலாம் நரசிம்மவர்மனால் அது புதுப்பிக்கப்பட்டதையும் பிற்காலத்தில் சோழ அரசன் முதலாம் இராச கேசரிவர்மன் அதனை மீண்டும் புதுப்பித்ததையும், ஆதிக் கல்வெட்டை உறுதிப் படுத்துவதாக இருக்கிறது. ஒற்றைக் கல் மண்டபத்தில் மூலத்தான கோயிலுக்கு நரசிம்மவர்மன் அளித்த தானம் அவனது கல்வெட்டில் காணப்படுவதோடு இராசகேசரிவர்மன் கல்வெட்டில் அது உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒற்றைக் கல் மண்டபத்தின் ஆதி மூலத்தானத்தில் உள்ள இலிங்கம் அகற்றப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. தென் இந்தியாவில் உள்ள திருக்கழுக்குன்றத்து சைவத் திருக்கோயில் களிலெல்லாம் மிகத் தொன்மையான தொன்றாக கந்தவர்மனால் உருவாக்கப் பட்டதாகும். வேதகிரீசுவரர் கோயில் மலை நடுவே குடைந்து உருவாக்கப் பெற்றது. இது மிகத் தொன்மை வாய்ந்த கோயில்களில் ஒன்று இதில் சில பகுதிகள் பிற்காலத்தில் உருவாக்கப் பெற்றது. பிரதான கோயில் மூன்று பெரிய கல்பாளங்களால் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே சுவர்கள் மீது புடைசிற்பங்களால் பல உருவங்கள் ஆக்கப்பட்டன. அது அடியில் வருமாறு; (1) மேற்குச் சுவர் மீது - சிவனும் பார்வதியும் நடுவே இள முருகனோடு வீற்றிருக்கும் சோமகந்த சுகாசனமூர்த்தி உருவம் உள்ளது. தென் பக்கத்தில் நான்முகனும் வட பக்கத்தில் திருமாலும் காணப்படுகிறார்கள். கீழே சிவபெருமான் திருவடிகளின் கீழே மார்க்கண்டன் அமர்ந்துள்ளார். (2) தெற்குச் சுவர் மீது - கையில் ஆயுதத்துடன் சண்டிகேசுவரரும் நந்திக்கேசுவரரும் இருக்கிறார்கள். சோமகந்த அரங்கம் பிரதான கோயிலின் பின்புறச் சுவர் மீது செதுக்கப் பெற்றுள்ளது. இந்தக் கோயில் ஒற்றைக் கல் மண்டபத்தை விடப் பிந்தியது. மலை உச்சியில் சில அடிகளுக்கு அப்பாலிருந்து கோயில் வரை கற்படிகள் செதுக்கப்பட்டுள்ளன. பூமியில் கருங்கல் தூண் இருக்கும் பாதைப் பக்கத்தில் நிலை நாட்டப்பட்டுள்ளது. அதில் இராச சிம்மன் பாணியில் கட்டப்படும் கோயில் வழக்கமாகப் பெரிதும் காணப்படும் சிங்கங்கள் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் தூணின் தோற்றம் இராச சிம்மன் காலத்தைச் சேர்ந்த பல்லவர்கள் குகைக் கோயில் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. எனவே இக்கோயில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்கு முந்திய காலத்தில் உள்ள பல்லவர்களின் அரண் என்பதை மெய்ப்பிப்பதற்கு போதிய சான்றாக இருக்கிறது. (3) வடக்குச் சுவர் மீது - யோக தட்சணாமூர்த்தி காணப் படுகிறார். அவருக்கு அருகில் சிவ பெருமானின் சாபத்தைப் பெற்ற இரு முனிவர்கள் இருக்கின்றார்கள். அவ்விருவர்களும் புனிதப் பறவையாக மாறி மலைக்கு நாடோறும் வந்து கண்டு உணவு பெற்று செல்கிறார்கள். 10. சீய மங்கலம் குடைவரைக் கோயில் சீயமங்கலம் வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் உள்ளது. இது தேசூரில் இருந்து தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ளது. சீயம் என்பதற்குச் சிங்கம் என்று பொருள் கொள்ளப்படும். எனவே இது மகேந்திரவர்மன் தந்தை சிம்ம விட்ணுவின் பெயரால் இவ்வூர் எழுந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இந்தக் கோயில் ஏனைய பல்லவர் குடைவரைக் கோயில் களைப் போல் முன் மண்டபத்தையும் உண்ணாழிகையும் உடையது. உண்ணாழிகையின் உள்ளே சிவலிங்கமும் வாயிலின் இரு மருங்கினும் வாயில் காப்போர் உருவங்களும் உள்ளன. இஃதன்றி மண்டபத்தின் இரு கோடிகளிலும் இரு போர் வீரர் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த உருவங்கள் கையில் கேடயமும் வாளும் தாங்கி நிற்கின்றன. இத்தகைய உருவங்கள் ஏனைய கோயில்களில் காணப்படவில்லை. மண்டபத்தில் உள்ள தூண்களில் சிங்க உருவம் நின்று கொண்டு முன்காலைத் தூக்கி நிற்பது போல் காணப்படுகின்றது. வழக்கம் போல் தாமரைப் பூவும் உள்ளது. இந்தக் குடைவரைக் கோயிலின் முன்புறத்தில் தூண்களின் இடை வெளியில் செங்கல் சுவர் எழுப்பி கோயிலுக்குள் காற்றும் வெளிச்சம் வராதபடி தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் கோயிலுக்குள் எப்பொழுது இருள் சூழ்ந்து இருக்கிறது. இந்தத் தடுப்புச் சுவர் பிற்காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள கல்வெட்டில் கோயிலை அமைத்தவன் லலிதாங்குரன் என்றும் கோயிலின் பெயர் அவனபாசன பல்லவேசுவரம் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது சாசனத்தில் லலிதாங்குரேண ராஜ்ஞாவ ரிபாஜன பல்லவேவரந்நாம் காரிதமே தத் ஸவேதா கரண்ட மிவபுண்ய ரத்நாநம் என்று கூறப்பட்டுள்ளது1. சீயமங்கலம் குடைவரைக் கோயில் தளவானூர்க் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இக்கோயில் சிம்ம விட்னுவின் காலத்தில் தொடங்கப் பெற்று அவன் மகன் மகேந்திரவர்மன் காலத்தில் முற்றுப் பெற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 11. குரங்கணின் முட்டம் குடைவரைக்கோயில் குரங்கணின் முட்டம், வட ஆர்க்காடு மாவட்டத்தில் செய்யாறு வட்டாரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து தென் மேற்கே மூன்றுகல் தொலைவில் இருக்கிறது. இது சைவ சமய நாயன்மாரால் பாடல் பெற்ற கோயில். குரங்கணின் முட்டத்துக்கு அருகில் பல்லாவரம் (பல்லவ புரம்) என்ற ஊர் உள்ளது. அதன் அருகில் ஒரு குடைவரைக் கோயில் உண்டு. இது பஞ்ச பாண்டவர் மலை என்று கூறப்படுகிறது. பல்லவபுரம் என்ற மூன்று ஊர்களில் இது ஒன்று. இது ஏனைய குடைவரைக் கோயிலை விட புதிய முறையில் உள்ளது. மண்டபமும் எதிரில் மூன்று திரு உண்ணாழிகைகளும் மண்டபத்தின் இரு மருங்கினும் இரு திரு உண்ணாழிகைகளுமாக ஏழு திருஉண்ணாழிகைகள் உள்ளன. இங்கு முற்காலத்தில் சிலைகள் இருந்த அடையாளங்கள் உள்ளன. இப்பொழுது எதுவும் இல்லை. இங்கு ஒரு கல்வெட்டு உள்ளது. அது தஞ்சையையும் காஞ்சியையும் வென்ற இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்ணனின் 24 ஆண்டைய சாசனம். அதில், அவனால், ஆழ்வாரின் சிரிபலிக்காக இவ்வூரார் அளித்த நிலதானத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனால் இது பெருமாள் கோயில் என்று கருதப்படுகிறது. ஆனால் இக் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் எல்லாம் சைவ சமய சம்பந்தமானதாகவே காணப்படுகின்றன. உண்மையில் இக்கோயில் சிவன், திருமால் நான்முகன் ஆகியவர்களுக்காக உருவாக்கப்பட்ட கோயிலாகும். மண்டபத்திற்கு முன் உள்ள மூன்று உண்ணாழிகை களில், தெற்கில் உள்ள உண்ணாழிகை வாயிலில் மீசை தாடியுள்ள வாயில் காப்போர்களும், நடுவில் உள்ள உண்ணாழிகையில் கொம்பு போன்ற அணியையுடைய வாயில் காப்போரும் வடக்கிலுள்ள உண்ணாழிகையில் தாடி மீசையில்லாத வாயில் காப்போர்களும் காணப்படுகின்றனர். மண்டபம் 28 அடி 4 அங்குல நீளமும் 14 அடி அகலமும் 8 அடி 4 அங்குல உயரமும் உள்ளது. தூண்டுகள் இரண்டு வரிசையாக நான்கு சதுரத் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது மகேந்திரன் காலத்துத் தூண்கள் போன்றிருக்கின்றன. தூண்கள் அமைப்பு வாயில் காப்போர் உருவ அமைப்பு முதலியவைகள் மகேந்திரன் காலத்தவை என்று எடுத்துக் காட்டுகின்றன. இங்கு கல்வெட்டுகள் காணப்படவில்லை. மண்டபத்து முன் பக்க பல்லவ கிரந்த எழுத்து இருந்து அழிக்கப்பட்ட அடையாளம் காணப்படுகிறது. 12. கீழ் மாவிலங்கைக் குடைவரைக் கோயில் கீழ் மாவிலங்கை தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் இருக்கிறது. இங்குள்ள கோயில் பழம் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப் பெற்ற ஒரு சிறு குடை வரைக் கோயிலாக எண்ணப்படுகிறது. இது திண்டிவனம் புகைவண்டி நிலையத்தினின்று 7-கல் தொலைவில் இருக்கிறது. ஊருக்கு வெளியே கழனிகளின் நடுவே பல பெரிய கருங்கல் பாறைகளுக்கு இடையே இக்குடைவரைக் கோயில் இலங்குகிறது. இக் கோயிலின் உண்ணாழிகை 5 அடி உயரமும் 3 அடி உயரமும் உள்ளதாய் வட கிழக்கு முகமாக அமைந்திருக்கிறது. இங்கு சுவரில் புடை சிற்பமாக திருமால் உருவம் கரடு முரடாகச் செதுக்கப் பெற்றுள்ளது. இந்த சிலை 4 அடி 4 அங்குல உயரம் உள்ளதாய் நான்கு கைகள் உள்ளதாய்க் காணப்படுகிறது. இடது புறமுள்ள மேற்கையில் சங்கும் இடது புறமுள்ள கீழ்க்கை இடுப்பில் வைக்கப்பட்டுள்ளது. இடது புறமுள்ள மேற்கை உயர்ந்து சக்கரம் ஏந்தியதாய்த் திகழ்கிறது. வலது புறமுள்ள கீழ்க்கை அபய முத்திரை அமைந்ததாய் இருக்கிறது. சங்கும் சக்கரமும் அக்கினிச் சுவாலை இன்றி இருப்பதால் பழம் பல்லவர்கள் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சிற்பமாகக் கருதப்படுகிறது. இத் திருஉருவம் வழக்கமான உயர்ந்த மகுடமும் அணிகளும் அருமையான ஆடைகளும் அணிந்து அழகுடன் திகழ்கிறது. தலை, மார்பு கைகளில் எண்ய் பூசி மக்கள் வழி பட்டு வருகிறார்கள். இந்தக் கோயிலைச் சுற்றி வாழும்மக்கள் இந்தச் சிலையை அலங்கோலப்படுத்தி அதை நிழற்படம் எடுக்க முடியாத வாறு செய்துள்ளார்கள். கோயில் வாயில் குறுகியதாய் பாறையின் வெளியே தோண்டப்பட்டு மேடு பள்ளமாய்க் கிடக்கிறது. ஒவ்வொரு வாயிலின் வெளிப்புறமும் கரடு முரடாக நிறைவெய்தாததாக வாயிற் காப்போர்கள் நிற்பது போல் காணப்படுகிறது. கோயிலின் வாயில் முன்புறமாக இல்லை. இதனுடைய தோற்றத்தை ஆராய இங்கு கல்வெட்டுகள் ஒன்றும் இல்லை. ஆனாலும் ஏழாவது நூற்றாண்டில் உருவாக்கப் பெற்ற பல்லவர்கள் கோயில் என்று லாங்கர்ட் போன்ற பல அறிஞர்கள் கருதுகிறார்கள் ஒரு சிலர் தான் இது மன்னன் மகேந்திரவர்மனால் உருவாக்கப்பட்டது என்று கருதுகிறார்கள். 13. சித்தன்ன வாசல் குடைவரைக் கோயில் அண்ணல் வாயில் அறிவன் கோயில் என்று கூறப்படும் பல்லவர் குடைவரைக் கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இது அன்னல் வாசல் என்னும் ஊருக்குக் கிழக்கே அரைக்கல் தொலைவில் உள்ள சிறு குன்றை அடிப்பகுதியில் குடைந்து இக் கோயிலை அமைத்துள்ளார்கள். இது மக்களால் சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் என்று கூறப்படுகின்றன. அறிஞர்கள் அண்ணல் வாயில் அறிவன் கோயில் என்று அழைக்கிறார்கள். இது ஒரு சமணக் குடைவரைக் கோயில். இக் கோயிலில் முன், முக மண்டபமும் அப்பால் உண்ணாழிகையும் இருக்கிறது. முக மண்டபம் 22 அடி 10 அங்குல நீளமும் 11-அடி 6 அங்குல அகலமும் உள்ளது. மண்டபத்தை இரு சதுர வடிவமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. உண்ணாழிகை 10 அடி 6 அங்குல நீளமும் 10 அடி 6 அங்குல அகலமும் உள்ள ஒரு சதுர திருஅறையாக இருக்கிறது. இதன் வாயில் 5 அடி 7 அங்குல உயரமாகவும் 2 அடி 6 அங்குல அகலமுமாக அமைந்திருக்கிறது. உண்ணாழிகையின் உள்ளே மூன்று பக்கமும் உள்ள சுவர்களில் மூன்று அருகக் கடவுளின் புடை சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை நாம் இதுவரை ஒரு ஓவியக் கருவூலமாகவே எண்ணி வந்தோம். ஆனால் இது ஒரு குடை வரைக் கோயிலாகவும் போற்றத்தக்கதாகும். இது சமணர்கள் அமைத்த அற்புதமான பொற்புறும் புனித பள்ளியாகும் இங்குள்ள மூன்று புடை சிற்பங் களும் முக்குடைகளுடன் காணப்படுகிறது. உண்ணாழிகை யின் இரு கோடிகளிலும் எதிர் எதிரே இரு உருவங்கள் உள்ளன. வட புறத்தில் உள்ளது. குடையுடனும் தென்புறத்தில் உள்ளது ஐந்து தலைப் பாம்புடனும் காணப்படுகின்றன. கி.பி.862-ஆம் ஆண்டில் பாண்டியப் பார்வேந்தன் அவனிப சேகரன் சிரிவல்லபன் காலத்தில் எழுதப் பெற்ற கல்வெட்டு ஒன்று இக் கோயிலின் அண்மையில் காணப்படுகின்றது. அதில் மதுரையாசிரியன் இளங்கௌதமனால் இக் கோயில் மண்டபம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணல் வாயில் அறிவன் குடைவரைக் கோயிலுக்கு வட கிழக்கே பாறை மீது பதினேழு கற்படுக்கைகள் அமைந்துள்ளன. அவைகள் நல்ல மழு மழுப்பாகச் செதுக்கப் பெற்றுள்ளன. படுக்கையின் தலைப்பக்கம் தலையணை போல் சற்று உயரமாகச் செய்யப்பட்டுள்ளன. சமண முனிவர்கள் கற்படுக்கையில் படுத்து உறங்குவர். இங்கு பிராமி வரிவடிவத்தில் செதுக்கப்பெற்ற கல்வெட்டுகள் உள்ளன. அவைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பெற்றவை. மகேந்திர காலத்தில் அதாவது ஏழாவது நூற்றாண்டில் வரையப் பெற்ற கல்வெட்டுகளும் உள்ளன. இதில், தொழக் குன்றத்துக் கடவுளன் நீலன், திருப்பூரணன் திட்டைச் சாணன், திருச்சாத்தன், சிரிபூரணச்சந்திரன் நியத் கரன் g£l¡fhÊ............த்ö®¡ கடவுளன் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. முனிவர்களைக் கடவுளன் என்று சமணர்கள் கூறிக் கொள்வார்கள். குன்றின் மீதுள்ள கற்படுக்கைக்கு செல்லும் இக்கட்டான இந்தப் பாதைக்கு ஏழடிப்பாட்டம் என்று கூறப்படுகிறது. இந்தக் குடைவரைக் கோயிலின் முக மண்டபம் இடிந்து விழவே சமண முனிவர்கள் தங்கள் கோயிலை பழுது பார்த்துத் தருமாறு பாண்டியன் அவனிபசேகரன் சிரிவல்லபனை வேண்ட அவனும் சமய வேற்றுமைபாராது கலை அழகைக் காப்பாற்றக் கருதி அறிவன் கோயில் மண்டபத்தைப் பழுது பார்த்துக் கொடுக்குமாறு ஆணையிட்டான். அதனால் மண்டபத்தின் முன்புறத் தூணில் பாண்டியன் அவனிபசேகரன் சிரிவல்லபனையும் அவன் மனைவியையும் அழகிய ஓவியமாக எழுதப்பட்டிருக்கிறது. இது மகேந்திரனும் அவன் மனைவியும் நிற்கும் கோலத்தில் தீட்டப்பட்ட ஓவியம் என்று கூறுவாறும் உண்டு. ஆனால் பாண்டியனும் அவன் மனைவியும் நிற்கும் கோலத்தில் தீட்டப்பட்ட ஓவியம் என்பதற்கே நல்ல சான்றுகள் உள்ளது. அறிவன் கோயிலுக்கு அண்மையில் உள்ள கல்வெட்டு அதற்கு அரும் பெரும் சான்றாகத் திகழ்கின்றது. மேலும் அண்ணல் வாயில் அறிவன் கோயில் மகேந்திரவர்மன் காலத்தது அல்ல என்றும் சிலர் கருதுகிறார்கள்.1 நாமக்கல் குடைவரைக் கோயில் நாமக்கல் சேலம் மாவட்டத்தில், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள ஒரு பேரூர் ஆகும். இவ்வூரில் புகுந்த உடன் பெரிய குன்றும் குடைவரைக் கோயிலும் காட்சி அளிக்கின்றன. இங்குள்ள பள்ளி கொண்ட பெருமானின் திரு உருவம் மிகச் சிறந்த வேலைப்பாடு உடையது. இந்தக் குடைவரைக் கோயில் மிக அற்புதமான அமைப் புடையது. முன் மண்டபத்துக்கு வெளியே, மூங்கிலால் செய்த தாழ்வாரத்தைப் போல் மலையைக் குடைந்து மாண்புற நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கோயில் சுவர்களில் திருமாலின் அவதாரம் அழகுறச் சிற்பவடிவில் சீர் பெறச் செதுக்கப்பட்டுள்ளன.1 இந்த அத்தியாயம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. Epigraphia Indica Part V Vol XII Jan 1914. 2. South Indian Inscriptions Vol I Vol II Nos 33 & 34 PP 28-30 3. Epigraphia, Indica Vol III P 277 4. Pallava Architecture No-17. Part I (Early Period) by A.H. Lonchurst (1924) Simla. 5. Proceedings of the Indian History congress 7th Session Madras. PP 168-176 6. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1955. மாமல்லபுரம் குடைவரைக் கோயில் மாமல்லபுரம் சென்னை பட்டினத்திற்கு தென் புறம் 40-கல் தொலைவில் உள்ளது. இது செங்கற்பட்டு மாவட்டத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. மாமல்லபுரம் செங்கற்பட்டு புகைவண்டி நிலையத்தினின்று 20- கல் தொலைவில் இருக்கிறது. மாமல்லபுரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கப்பெறும். இந்த மாமல்லபுரம் பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியது. இவ்வூர் முன்னர் மல்லை என்று அழைக்கப்பட்டு வந்தது. மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் தனது சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்ற பெயரை இப்பட்டினத்திற்குச் சூட்ட நினைத்து மாமல்லபுரம் என்ற பெயரால் அழைக்கும்படி செய்தான். மாமல்லபுரத்தில் பல குடைவரைக் கோயில்களும் இரதங்கள் என்று அழைக்கப்படும் ஒற்றைக்கல் கோயில்களும் உண்டு. இவைகளில் மகேந்திரவர்மன் கோடிக் கால் குகை பஞ்சமூர்த்தி குடைவரைக் கோயில் தர்மராச மண்டபம் ஆகியவைகளை அமைத்தான் என்று அறிஞர்களால் முடிவு கட்டப்பட்டுள்ளது. கிறிதவ சகாப்தம் அரும்பும் முன்னரே மாமல்லபுரம் உலகப் புகழ் வாய்ந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க மாலுமி ஒருவன் எழுதிய பெரிப்ளூ ஆவ் தி எரித்ரியன் சீ என்ற நூலில் மாமல்லபுரம் இடம் பெற்றுள்ளது. கிரேக்க பூதத்துவ நிபுணர் தாலமி இத்துறைமுகத்தை மலாங்கே என்று குறிப்பிட்டுள்ளார். மார்க்கபோலோ என்ற இத்தாலிய நாட்டு வழிப் போக்கனும் தனது பயணக் குறிப்பில் இந்தக் கோயிலின் சிகரங்களைக் கண்டதாக எழுதியுள்ளான். இப்பட்டினம் முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்த இடம் என்று கூறப்படுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமானை திருமங்கையாழ்வார், புலன்கொள் நிதிக் குவை யொடு புழைக் கை மாகளிற்றினமும் நலங்கொள் நவமணிக் குவையும் சுமந்தெங்கும் நான்றொசிந்து கலங்கள் இயங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம் வலங்கொள் மனத்தார வரை வலங் கொள்ளென் மட நெஞ்சே என்று பாடியுள்ளார். 1. கோடிக்கால் மண்டபம் கோடிக்கால் மண்டபம் என்று கூறப்படும் மாமல்லபுரம் குடைவரைக் கோயில் ஒரு சிறு தனித்த குன்றின் மீது குடையப் பட்டுள்ளது. இது மேற்கு முகமாக இருக்கிறது. இது திரி மூர்த்தி மண்டபத்திற்கு சிறிது தொலைவில் இருக்கிறது. இதனைத் திரௌபதை மண்டபம் என்று கூறுவாறும் உண்டு. இது மகேந்திரவர்மன் அமைத்த மகேந்திரவாடிக் குடைவரைப் போல் காணப்படுகிறது.1 இங்கு கல்வெட்டுகள் ஒன்றும் காணப்படவில்லை. இக் குடைவரைக் கோயிலின் முன் மண்டபம் பல்லவர்களின் ஏனை குடைவரைக் கோயில்களைப் போல் அமைந்திருக்கும். இதில் உண்ணாழிகையும் உள்ளது. முன் உள்ள மண்டபம் 21-அடி 10-அங்குல நீளமும் 8 அடி அகலமும் 8-அடி 3-அங்குல உயரமும் உள்ளதாக இருக்கிறது. மண்டபத்தின் முன்புறம் இரு தூண்கள் உள்ளன. அவைகள் நடுவில் எட்டுப்பட்டையாகவும் மேலும் கீழும் சதுரமாகவும் செய்யப்பட்டுள்ளன. இக் கோயில் கொற்றவைக்காக அமைக்கப்பட்டதாகும். எனவே இந்தக் குடைவரைக் கோயிலின் உண்ணாழிகை வாயிலின் இரு பக்கங்களிலும் பெண் வாயிற் காப்போர்கள் கைகளில் வில்லேந்தியவர்களாயும் தடியேந்தியவர்களாவும் வீரமுடன் நிற்கின்றார்கள். இவர்களின் கழுத்திலும் காலிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. காவற்காரிகளுக்கு ஏற்ற ஆடைகள் அணிந் திருக்கின்றார்கள் இந்த வாயிற் காவலர்கள் (துவார பாலிகைகள்) மகேந்திரவர்மன் உருவாக்கிய ஏனைய கோயில் காவலர்களைப் போன்று எதிர்ப்பார்வையில் நிற்பது குறிப்பிடத்தக்கது. திரு உண்ணாழிகை உயர்ந்ததாகக் காணப்படுகிறது. முன் மண்டபத்தின் தரைமட்டத்தைவிட உண்ணாழிகை 2 அடி உயரத்தில் இருக்கிறது. இரண்டு படிகள் முன்புறம் உள்ளன. முன் இருக்கும் முதற் படி அரைவட்டமாக இருக்கிறது. இக் கோயிலின் உண்ணாழிகையில் கொற்றவை உருவம் காணப்படவில்லை. ஆனால் முற்காலத்தில் கொற்றவை (துர்க்கை) உருவம் இருந்தது என்பதற்குச் சான்றுகள் உள. இவ்வூர்ப் புறத்தில் உள்ள சப்தமாதர்கள் உருவங்களுடன் காணப்படும் சிதைந்திருக்கும் கொற்றவையின் சிலை இக் கோயிலில் முற்காலத்தில் இருந்த மூல உருவம் என்று கருதப்படுகிறது. 2. தர்மராச மண்டபம் தர்மராச மண்டபம் என்று கூறப்படுவது மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க குடைவரைக் கோயிலாகும். இது கலங்கரை விளக்கு நிற்கும் பாறையின் மீது உருவாக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மகேந்திரவர்மன் அமைத்த மண்டகப்பட்டுக் குடைவரை கோயிலைப் போன்று காணப்படு கிறது. இது சிவன் கோயிலாகும். சைவ வைணவப் பிணக்குகள் எழுந்த காலத்தில் வைணவர்கள் இக்கோயிலில் உள்ள சைவப் படிமங்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். உண்ணாழிகை வாயிலில் இரு மருங்கினும் நின்று கொண்டிருந்த வாயிற் காப்போர்களின் வடிவங்களை உடைத்து அவர்கள் நின்ற அடையாளங்களே தெரியாமல் செதுக்கி விட்டார்கள். இங்குள்ள தூண்களில் வைணவச் சின்னங்களைப் பொறிக்க முயன்று சங்கு சக்கரங்களைச் செதுக்கியுள்ளார்கள். அது மட்டுமின்றி இந்தக் குடைவரைக் கோயிலுக்குத் தர்மராச மண்டபம் என்றும் பெயர் சூட்டி விட்டனர். அப்பெயரே இன்று வழங்கி வருகிறது. ஆனால் இதன் பழைய பெயர் நமக்குத் தெரியவில்லை. இந்தக் குடைவரைக் கோயிலின் முக மண்டபம் 21-அடி 2 அங்குல நீளமும் பதினான்கு அடி 6 அங்குல அகலமும் உள்ளது. மண்டபத்துக்குப் பின், மூன்று திரு உண்ணாழிகைகள் உள்ளன. அவைகளில் நடுவே காணப்படும் உண்ணாழிகை ஏனைய இரண்டு உண்ணாழிகையையும் விடச் சற்றுப் பெரியது. உண்ணாழிகையின் தரை மண்டபத்தின் தரையை விட 2-அடி உயர்ந்ததாய் அமைக்கப் பட்டிருக்கிறது. உண்ணாழிகைக்கு ஏறிச் செல்வதற்கு மூன்று படிகள் உள்ளன. இந்தக் குடை வரைக் கோயிலின் அமைப்பும் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகளும் மகேந்திரவர்மன் பாணியில் அமைந்த தாய்க் காணப்படுகிறது. இதை உறுதிப்படுத்தி வரலாற்றறிஞர் இராசு அடிகள் தமது நூலில் நல்லதொரு விளக்கம் அளித்துள்ளார்.1 இந்தக் குடை வரைக் கோயிலில் ஒரு அரிய வடமொழிக் கல்வெட்டு காணப்படுகிறது. அது பல்லவக் கிரந்த வரிவடிவில் எழுதப்பட்டுள்ளது. அதில் இக் கோயிலை அத்தியந்த காம பல்ல வேவரக் கிருகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியந்த காமன் என்ற பெயர் மகேந்திரவர்மன் பேரன் பரமேசுவரனுக்கு உரியது. எனவே இந்தக் கல்வெட்டுப் பிற்காலத்தில் - அதாவது பரமேசுவரவர்மன் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். எழுத்தின் அமைப்பும் பெயரும் பரமேசுவரவர்மன் காலத்தைச் சேர்ந்ததாகக் காணப்படினும் இக் குடைவரைக் கோயிலின் அமைப்பு தூண்கள் முதலியன மகேந்திரவர்மன் காலத்தவைகள் என்று சான்று கூறி நிற்கின்றன. இந்தக் கோயில் தனியாக சிவனுக்கென்று அமைத்த கோயில் அன்று. சிவன் திருமால், நான்முகன் ஆகிய முத்தேவர்களுக்கும் அமைத்ததாகும். இதனால் மூன்று திருஉண்ணாழிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடைவரைக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல் வெட்டில் கூறப்படுவதாவது: 1. ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முச் செயல்களுக்கும் காரணமாயும் ஆதிநாயகராயும் இருக்கிற காமாந்தக மூர்த்தி மானிடரின் அத்தியந்த கர்மங்களை (விருப்பங்களை) நிறை வேற்றி யருள்வாராக. 2. மாயைகளோடு கலந்திருந்தும் மாயை இல்லாதவராயும் பல குணங்களைக் கொண்டிருந்தும் குணங்கள் இல்லாதவராயும் தமக்குத் தாமே காரணராயிருப்பவரும் எல்லாருக்கும் தலைவராக இருப்பவரும் தமக்கோர் இறைவன் இன்றித் தாமே இறைவனாக இருப்பவரும் ஆகிய அவருடைய வெற்றி வாழ்வதாக. 3. கயிலாய மலையையும் அதைத் தூக்கிய தசமுகனையும் (இராவணனையும்) பாதலத்தில் அழுந்தும்படி கால் விரலால் அழுத்திய அத்தகைய ஆற்றலையுடைய பிறப்பிலியாகிய சிவ பெருமானை ஸ்ரீ நிதி தமது தலையில் தாங்கி இருக்கிறார். 4. நில மகளைக் காதலோடு கைகளில் அணைத்துக் கொண்டு, பக்தி நிறைந்த உள்ளத்திலே பவனை (சிவனை) வைத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ உபரன் வெற்றியுடன் நெடுங்காலம் வாழ்வானாக. 5. பகை மன்னரின் நாடுகளைத் தன் அடிமைப்படுத்தி ரணஜயன் என்னும் பெயர் படைத்த அத்யந்த காம அரசன் சம்புவுக்கு (சிவனுக்கு) இந்த இல்லத்தை அமைத்தான். 6. காற்றும் தீயுமாகவும் பீமனும் சிவனுமாகவும் சங்கரனும் காமாந்தகனுமாகவும் உள்ள அவன் வெற்றியுடன் விளங்குவானாக. 7. மகாராஜனுக்கும் (குபேரனுக்கும்) மகாராஜனும் ஆனால் குரூபியாக இல்லாதவனும் மக்களைத் துன்புறுத்தாமல் அருளுடன் காக்கும் சக்கரவர்த்தியும் சந்திரனைப் போன்றவனும் ஆனால் உடம்பில்லாமல் நல்லுடம்பு பெற்றவனும் ஆகிய தருணாங்குரன் வெற்றி பெறுவானாக. 8,9. பகை மன்னரின் ஆற்றலை அழித்தவனும் திருமகள் தங்குவதற்கு இடமாகவுள்ளவனும் காமனைப் போன்று அழகுள்ளவனும் அரனை (சிவனை) எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பவனும் ஆகிய அத்தியந்த காமனுடைய, தாமரை மலர்கள் அலரப் பெற்று நீராடுவதற்கு ஏற்ற நறு நீர்ப் பொய்கை போன்று பட்டாபிஷேக நீரினாலும் இரத்தின மணி முடியினாலும் விளங்குகின்ற திருமுடியில் சங்கரன் எழுந்தருளியிருக்கிறான். 10. தன் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் சங்கரனுடைய அருளைப் பெறுவதற்காகவும் தூர்ஜதி (சிவன்) எழுந்தருளும் பொருட்டு இந்தப் பெரிய தளியை அவன் அமைத்தான். 11. தீய வழியில் ஒழுகாமல் தடுக்கிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனமுடையவர்கள் ஆறு மடங்கு சபிக்கத்தக்கவர் ஆவர்1. குடைவரைக் கோயில்கள் 1. திரிமூர்த்தி குடைவரைக் கோயில் திரி மூர்த்தி குடைவரைக் கோயில் மாமல்லபுரத்தில் ஒரு சிறு குன்றின் மீது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவன், திருமால், நான்முகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கு உரியதாக அமைக்கப்பட்டது. எனவே இது திரிமூர்த்தி கோயில் என்று அழைக்கப்பட்டது. வடபுறம் நான்முகனுக்கும் தென்புறம் திருமாலுக்கும் நடுப்புறம் சிவபெருமானுக்குமாக மூன்று உண்ணாழிகை அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் உண்ணாழிகைகள் தரைமட்டத்திற்கு மேல் மூன்று அடி உயரத்தில் இருக்கின்றன. உட்புக வாயில்களில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடைவரைக் கோயிலுக்கு ஏனைய கோயில்களைப் போல் முன் மண்டபம் இல்லை. கோயிலின் மேலே முகப்பில் பல்லவர் பாணியில் கர்ணக்கூடு, பஞ்சரம் சாலை முதலியவைகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இதன் தென்புறம் கற்பாறையிலே கொற்றவை எருமை எருமையின் தலைமேல் நிற்பது போல் ஒரு புடைசிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. நான்முகன் வீற்றிருக்கும் உண்ணாழிகையின் வாயிற்படியின் மேலே பல்லவ கிரந்த வரிவடிவில் மல்ல என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனால் இக் கோயில் மாமல்லன் நரசிம்ம வர்மன் காலத்தில் குடைந்தெடுக்கப் பட்டது என்று நன்கு தெரிகிறது. உண்ணாழிகையின் வாயிலின் இரு மருங்கினும் இரண்டு வாயிற் காப்போர்கள் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறார்கள். பல்லவர்களுக்குக் கொற்றவை சிவன் திருமால், நான்முகன் ஆகிய தெய்வங்கள் மீது அதிகப் பற்று இருப்பதாகத் தெரிகிறது. திருமாலின் பாதத் தடியில் இருவர்கள் பணிவிடை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் தலை மயிர் முடியப் பெற்றிருப்பது மிக விசித்திரமாக இருக்கிறது. நரசிம்மன் அமைத்த கோயில்களும் தூண்களும் அவனது தந்தை முதலாம் மகேந்திரவர்மன் அமைத்ததை விட அழகும் சிறப்பும் உடையதாய் இருக்கின்றன. 2. வராக மண்டபம் மாமல்லபுரம் வராக மண்டபத்தை வராகப் பெருமாள் குகைக் கோயில் என்றும் சிலர் கூறுவார்கள். இந்தக் குடைவரைக் கோயிலை பிற்காலத்தில் சிலர் வைணவக் கோயிலாக மாற்றி விட்டனர். இக் கோயிலில் இன்றும் வழிபாடு நடந்து வருகிறது. இக் கோயிலில் உள் பக்கம் பாறைச் சுவர் மீது இடது புறமாக வராக அவதார உருவம் சிற்பமாகச் செதுக்கி இருக்கிறது. பூமியைக் கவர்ந்து சென்ற அசுரன் கைகூப்பி நிற்கின்றான். திருமால் பன்றி (வராக) வடிவம் தாங்கி திருமகளைத் தாங்கி நிற்கிறார். மேலே தேவர்கள் நின்று வழிபடுகிறார்கள். எதிர்ப்புறம் சுவரில் மாபலியின் கர்வத்தைக் கருவறுக்க திரிவிக்கிரம அவதாரமாக உலகார்ந்த பெருமாள் (திருமால்) நிற்கிறார். மண்ணினின்று காலால் விண்ணை அளப்பது போல் ஒரு கால் தூக்கி இருக்கிறது. கீழே மாபலி அமர்ந்திருக்கிறான். அவன் உள்ளத்தில் எழும் வியப்பும் அச்சமும் அவன் முகத்தில் பிரதிபலிக்கிறது. இந்தச் சீரிய சிற்பத்தில் சிற்பியின் கலைத்திறனும் கைவண்ணமும் அறிவாற்றலும் நன்கு புலப்படுகிறது. இங்கு புடை சிற்பமாக தென் புறச் சுவரில் முதலாம் மகேந்திரவர்மன் தனது பட்டத்தரசி ஒருவளுடன் காணப்படுகிறான். வட புறச் சுவரில் அவனது தந்தை சிம்ம விட்னு தனது அரசிகள் இருவர்களுடன் காணப்படுகிறார். உண்ணாழிகைக்கு (கருவறைக்கு) தென் புறம் கங்காதர மூர்த்தி, மகிசாசுர மர்த்தினி கொற்றவை உருவங்களோடு இருயானைகளால் குட முழுக்குச் செய்யப்படும் திருமகள் (கச லட்சுமி) நான்முகன் ஆகியவர்களின் உருவங்களும் இருக்கின்றன. அவைகள் அனைத்தும் கண்டுகளிக்கத் தக்கது. இங்கு பெரிய மண்டபமும் பின்புறச் சுவரின் நடுவில் உண்ணாழிகையும் இருக்கிறது. மண்டபத்தில் இரு வரிசையாகத் தூண்கள் நிற்கின்றன. முன் வரிசையில் சிங்கங்கள் உருவத்தின் மீது தூண் வடிவம் காணப்படுகின்றன. பின் வரிசையில் சாதாரணத் தூண்கள் உள்ளன. முன் மண்டபம் 38 அடி நீளமும் 14 அடி அகலமும் 11 அடி 6 அங்குல உயரமும் உள்ள இந்த உண்ணாழிகை மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. முன்னர் முன்புறம் மண்டபம் திறந்த வெளியாக இருந்தது. வைணவர்களான விசய நகர நாயக்க மன்னர்களின் ஆதரவைக் கொண்டு இதை வைணவக் கோயிலாக்கியதோடு முன்புறத்தை மூடிச் சுவர்கட்டி எவரும் எளிதில் உட்புக முடியாதபடி தடுத்து விட்டனர். ஒரு சிறு கதவு போடப்பட்டுள்ளது. எனவே இக்கோயில் உள்ளே இருள் சூழ்ந்து கிடக்கிறது. திரு உண்ணாழிகை மிகச்சிறிது. தரைமட்டத்திற்கு மேல் இரண்டடி உயர்ந்திருக்கிறது. முன்னே சற்று உயர்ந்திருக்கிறது. உள்ளே வராகப் பெருமாள் திரு உருவம் தெள்ளத் தெளியக் காட்சி தருகிறது. இது சுதையினால் செய்யப்பட்டு முக அழகுடன் அமைக்கப்பட்டு இதன் எழில் நலங்கண்டு எல்லோரும் இன்புற்று வருகின்றார்கள். குடைவரைக் கோயில்கள், முன்னர் ஆந்திர நாட்டில் ஆட்சி புரிந்த விஷ்ணு குண்டி என்ற அரச மரபினர்களால் ஆந்திர நாட்டில் உருவாக்கப்பட்டன. முதலாம் மகேந்திரவர்மனின் தந்தை சிம்ம விஷ்ணு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் விஷ்ணு குண்டி அரசு வம்சத்துப் பெண்களை மணந்திருக்கலாம். அதனால் சிம்மவிஷ்ணு தனது ஆந்திரமனைவியின் தந்தையாகிய விக்கிரமேந்திர என்ற பெயரைத் தன் மகனுக்கு மகேந்திரன் என்று மாற்றி இட்டிருக்கலாம். இந்தத் தொடர்பால் ஆந்திர நாட்டுக் குடை வரைக் கோயிலைப் போல் மகேந்திரவர்மன் தமிழகத்திலும் உருவாக்கி இருக்கலாம் என்று புதுச்சேரி கல்லூரி பிரஞ்சுப் பேராசிரியர் சோவியோ துப்ரயல் அபிப்பிராயப்பட்டார்1. அதை அறிஞர் ஆர் கோபாலன் எம்.ஏ.அவர்கள் தனது நூலில் மறுத்துரைத் துள்ளார்.2 3. பஞ்ச மூர்த்தி குடைவரைக் கோயில் பஞ்சமூர்த்தி குடைவரைக் கோயில் மாமல்லபுரம் குடைவரைக் கோயில்களில் ஒரு உயரிய கோயிலாக மதிக்கப் படுகிறது. இங்குள்ள குடைவரைக் கோயிலில் ஐந்து திரு உண்ணாழிகைகள் இருப்பதால் இதற்குப் பஞ்சமூர்த்தி கோயில் என்று பெயர் எழுந்தது. இதன் பழைய பெயர் தெரியவில்லை. இக்குடைவரைக் கோயிலை மகேந்திரவர்மப் பல்லவனே அமைத்தான். இதன் அமைப்பு அதை நன்கு உறுதிப்படுத்துகிறது. இது கோடிக்கால் மண்டபத்திற்கு அதாவது கொற்றவையின் கோயிலுக்கு தெற்கே இருக்கிறது. இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மன் கோயில்களை உருவாக்க வில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். மாமல்லபுரத்தின் கோயில்கள் அனைத்தும் மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மன் அமைத்தவைகளே ஆராய்ச்சியாளர்கள் கூட ஆராயாது கூறி வருகின்றார்கள். பல்லாவரத்தினின்று புதுக்கோட்டை வரை பல்வேறு குடைவரைக் கோயிலை உருவாக்கிய மகேந்திரவர்மன் காஞ்சிக்கு அண்மையில் உள்ள தம் துறைமுகப்பட்டினமாகிய கடல் மல்லையில் குடை வரைக் கோயில் அமைக்க எண்ணற்ற சிறு குன்றுகள் இருப்பதை அறியாமல் இருந்திருக்க முடியுமா? ஒரு பொழுதும் முடியாது. எனவே அறிஞர்கள் தருமராச மண்டபம் கோடிக்கால் மண்டபம் பஞ்ச மூர்த்தி குடைவரைக் கோயில் ஆகியவைகளை மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்கள். கிருஷ்ணையாற்றங்கரையில் காணப்படும் குடைவரைக் கோயிலைப் பார்த்த பிறகு மகேந்திரன் அமைத்த முதற் குடை வரைக் கோயில் - சுண்ணாம்பு மண், செங்கல் முதலியவைகள் இன்றி அமைத்த தமிழ் நாட்டு முதல் குடைவரைக் கோயில், மண்டகப்பட்டுக் கோயிலேயாகும். இவனுக்கு முன்னுள்ள பல்லவ அரசர்கள், கற்கோவிலோ, குடைவரைக் கோயிலோ அமைக்க வில்லை என்பதை இவனது மண்டகப்பட்டுக் குடைவரைக் கோயில் கல்வெட்டு நன்கு எடுத்துக் காட்டுகிறது. சாருதேவி காலத்துத் திருமால் கோயிலும் இரண்டாம் கந்தவர்மன் காலத்துப் திருக்கழுக்குன்றக் கோயிலும் மண்ணாலும் மரத்தாலும் செய்யப் பட்டவைகள். அதனால் அவைகள் அழிந்து போயின. அழிவிலாத ஆண்டவன் உறையும் இல்லம் (கோயில்) அழியாதனவாக இருக்கக் கற்கோயிலைக் கண்ட பெருமை மகேந்திரவர்மனுக்கே உரியதாகும்.1 கிருஷ்ணையாற்றங்கரையில் கி.பி.450-620வரை ஆண்ட விஷ்ணுகுண்டி என்னும் மரபினர் பெசவடா, மொகல் ராசபுரம் உண்டவல்லி முதலிய இடங்களில் அமைத்த குடைவரைக் கோயில்களைக் கண்டுகளித்த மகேந்திரவர்மன் தனது நாட்டிலும் பல குடைவரைக் கோயில்களை உருவாக்கினான்.2 இக்கோயிலின் முன் மண்டபம் 35 அடி 2-அங்குல நீளமும் 12 அடி 6-அங்குல அகலமும் உடையது. மண்டபத்தில் இரண்டு வரிசையில் நான்கு தூண்கள் காணப்படுகின்றன. அடியிலும் நுனியிலும் சதுரமாகவும் நடுவில் 8-பட்டையாகவும் தூண்கள் இருக்கின்றன. உள்வரிசையில் நிற்கும் தூண்கள் அடி முதல் முடி வரை உருண்டும் குழைவான பட்டைகள் உடையனவாயும் இடையே கொடி பட்டைகளால் பிணைக்கப்பட்டும் உள்ளன. இந்தக் குகைக் கோயில் முற்காலத்தில் சிவன் கோயிலாகவே இருந்தது. பிற்காலத்தில் எழுந்த சைவ - வைணவச் சச்சரவில் இந்தக் கோயிலின் உண்ணாழிகையில் இருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு விட்டது. மண்டபத்திற்கு வெளியே கற்சுவரில் பொறிக்கப்பட்ட வைணவர்களின் சமயச் சின்னமான சங்கு சக்கரங்களின் உருவங்கள் இன்று பொன்றாது ஒளிர்கின்றன. இந்தக் கோயில் பல்லாவரம் குடைவரைக் கோயிலைப் போல் காணப்படுகிறது. உண்ணாழிகைகள் ஐந்திற்கும் உள் புகப் படிகள் உள்ளன. அவைகள் செம்மையாக அமைக்கப்படவில்லை. கரடு முரடாக இருக்கின்றன. உண்ணாழிகையில் சிவலிங்கங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக தளத்தின் மீது 3 அங்குல ஆழமுள்ள சிறு குழிகள் காணப்படுகின்றன. வாயிலின் இரு மருங்கினும் வாயிற்காப்போர் உருவங்கள் மகேந்திர பாணியில் உள்ளன. மகிசாசுர மண்டபம் மாமல்லபுரம் மகிசாசுர மண்டபம், கலங்கரை விளக்குக்கு அருகில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். இதை இங்குள்ள மக்கள் கயிலாச நாதர் கோயில் என்று கூறுகின்றனர். இங்கு மண்டபம் என்று கூறப்படுபவைகள் எல்லாம் மண்டபங்கள் அல்ல, கோயில்களேயாகும். இக் குடைவரைக் கோயில் எழில் மிக வாய்ந்ததாயும் நல்ல தோற்றந் தருவதாயும் இருக்கிறது. இக் கோயில் களின் சில பகுதிகளில் வேலைகள் முற்றுப் பெறவில்லை. முற்றுப் பெறாத பகுதிகள் கூட கவின் பெறக் கண்ணுக்கினிதாய்க் காட்சி அளிக்கிறது. இந்த அழகிய குடைவரைக் கோயில் முன் மண்டம் 32-அடி நீளமும் 15 அடி அகலமும் 12 அடி 6 அங்குல உயரமும் உள்ளது. மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் உருண்டு திரண்டு 16-பட்டைகள் உள்ளதாய் திகழ்கின்றன. இத் தூண்களில் ஒன்றை வராகப் பெருமாள் குடைவரைக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தூணையும் அப்புறப்படுத்த முயன்றுள்ளார்கள் அவர்கள் முயற்சி முற்றுப் பெறவில்லை. உச்சியில் உளியினால் செதுக்கப்பட்ட அடையாளம் உள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட தூணுக்குப் பதிலாக இப்பொழுது புதை பொருள் ஆராய்ச்சித் துறையினர் ஒரு ஆபாசமான தூணை நிறுத்திவைத்திருக்கின்றனர். மண்டபத்திற்குப் பின்புறம் மூன்று உண்ணாழிகைகள் உள்ளன. நடுவில் உள்ள உண்ணாழிகைக்கு முன் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு இரண்டு தூண்கள் உள்ளன. அதை இரு சிங்கங்கள் தாங்கி நிற்பது போல் செதுக்கப் பெற்றுள்ளது. இத்தூண்கள் அழகாய் அமைந்திருக்கின்றன. இங்கு சிவலிங்கம் ஒன்றும் காணப்படவில்லை. பின்புறச் சுவரில் சோமகந்தர் உருவம் புடை சிற்பமாகச் செதுக்கப்பெற்றுள்ளது. மண்டபச் சுவரில் செதுக்கப் பெற்ற பாம்பணைப்பள்ளி (அநந்த சயனம்) அழகு மிக்கது. உண்ட வல்லி குடைவரைக் கோயிற் சுவரில் உள்ளதைப் போல் இருக்கிறது. மகிடாசுரனை வெல்வதைக் குறிக்கும் சிற்பம் தனிச்சிறப்புடையதாகும். இது எங்கும் அக்காலத்தில் காணமுடியாத அரிய சிற்பமாக இருந்தது. கொற்றவை (துர்க்கை) தன் வாகனமாகிய சிங்கத்தின் மீதமர்ந்து எருமைத் தலை கொண்ட அசுரன் மீது1 அம்புகளைப் பொழிகிறார். அசுரனைச் சுற்றியிருக்கும் பெரும் படைகள் அனைத்தையும் அவள் அழிக்கின்றார். இக் காட்சியை அமைத்த சிற்பிகளின் கை வண்ணம் மெச்சத்தக்கது. அறிஞர்கள் இதற்குப் புகழ் மாலை சூட்டியுள்ளனர். முன் மண்டபத்தில் தென்புறம், சுவரில் செதுக்கப் பெற்ற அநந்த சயனமூர்த்தி, வட புறத்தில் செதுக்கப்பெற்ற கொற்றவையின் மகிசாசுரப் போர் ஆகியவைகளின் அரும் பெரும் சிற்பக் காட்சி அற்புதமானவை. கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத் தக்கன. இங்கு மொத்தம் 17-உருவங்கள் உள்ளன. இதற்கு எதிராக அமைதியாய் ஐந்து தலை பாம்பின் மீது நித்திரை செய்கிறார் திருமால். அவர் பாதி மூடிய கண்களும் அகன்ற மார்பும் நீண்ட கால்களும் பாம்பின் மீது வைத்த தலையும் கொண்டு அவர் திகழ்கிறார். திருமாலுக்கு எதிரே அடிபட்ட இருவரைக் காணலாம். அவர்கள் தான் மதுகைடபர்கள். இவ்வாறு ஒரு மண்டபத்திலே கோபாவேசத்தைக் காட்டும் அரும் பெரும் தோற்றத்திற்கு எதிரே சாந்தமே உருவாக அமைந்த திருமாலின் பாம்பணைப் பள்ளியின் கோலத்தைக் காண முடிகிறது. இராமாநுச மண்டபம் மாமல்லபுரம் இராமாநுச மண்டபம் ஒரு அழகிய குடைவரைக் கோயிலாகும். இது இராமாநுசர் காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இது பரமேசுவர வர்மன் காலத்தில் (கி.பி 670-688) உருவாக்கப்பட்டது. இதனால் பிற்காலத்தில் இராமாநுச மண்டபம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்று நன்கு தெரிகிறது. இதன் பக்கத்தில் உள்ள குன்றுகளில் ஏறினால் பல்லவர்கள் காலத்தில் இருந்த பழைய கலங்கரை விளக்கைக் காணலாம். இன்று அது இடிந்து கிடக்கிறது. இக் கோயிலில் இருந்த நல்ல சிற்பங்கள் உளியால் செதுக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள தூண்களைச் சிங்கங்கள் தாங்கி நிற்கின்றன. இங்குள்ள சீரிய சிற்பங்கள் வன் கண்ணாளர்களால் சிதைத்து மறைத்து விடப்பட்டிருப்பது கண்டு கலை மேதைகள் வருந்தாதிருக்க முடியாது. இங்குள்ள இராவண அனுக்கிர மூர்த்தியின் சிற்ப வடிவம் சிறப்பானது. இதை வைணவர்களும் சைவர்களும் போற்றுகிறார்கள். மேலும் இங்கு அடுத்தாற் போல் ஒரு அழகிய முற்றுப் பெறாத இராய கோபுரம் உள்ளது. கணேசன் இரதத்திற்கு தெற்கே மறைவான இடத்தில் இராமாநுசர் மண்டபம் உள்ளது. தூண்களின் அடியில் நான்கு சிங்கங்களும் அழகாக இருக்கின்றன. உள்ளே உருவங்கள் இல்லை தென் பக்கம் 13 படிகள் வெட்டப்பட்டுள்ளன. தரையில் ஒரு சிறிய கல்வெட்டு உள்ளது. மாமல்லபுரத்தில் கலைக் கோயில்களை உருவாக்கியவர்களில் முதலாம் பரமேசுவரவர்மன் மூன்றாவதாக எண்ணப்படுகிறான். கணேசரதமும், இராமாநுச மண்டபமும் நரசிம்ம வர்மன் பாணியில் உள்ளன. ஆனால் உள்ளே இருக்கும் கல்வெட்டுகளில் அத்யந்த காம என்ற பெயர் காணப்படுகிறது. அது முதலாம் பரமேசுவர்மனுக்கு உரியது. இதனால் சில அறிஞர்கள் இதுவும் நரசிம்ம வர்மனால் தொடங்கப்பட்டு பரமேசுவரவர்மனால் முடிக்கப் பெற்றிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.1 சிலர் இது பரமேசுவரவர்மன் கட்டியதே என்று உறுதியாகக் கூறுகிறார்கள். புலிக் குகை மாமல்லபுரத்தின் வடக்கே மூன்றுகல் தொலைவில் சால்வன் குப்பம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது. இது பழைய மாமல்லபுரத்தின் ஒரு குக்கிராமம். இங்கு புலிக்குகை என்று கூறப்படும் குடைவரைக் கோயிலும் ஆதிர நாச்சாண்ட மண்டபமும் உள்ளது. இவைகளின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆதிர நாச்சண்ட மண்டபமும் முதலாம் மகேந்திரவர்மன் பாணியில் உள்ள குகைக் கோயிலாக இருக்கிறது. இதன் பெரும் பகுதி சிவபெருமானுக்காக அளிக்கப்பட்டுள்ளது. புலிக்குகை யானது ஒரு நூதனமான தனி அமைப்புடையதாய் இருக்கிறது. அது கடல் மீதுள்ள ஒரு பெரிய தொங்கற் பாறை மீது குடையப்பட்ட ஒரு சிறு கோயிலாகும். அது சதுரமான வாயிலையுடையது. சுற்றிலும் வழக்கமான பல்லவர்கள் சிங்கங்கள் மாதிரி அல்லது புலி மாதிரி ஒன்பது உருப்படிகள் பெரிய தலையுடன் வாயைப் பிளந்து கொண்டு வாயிலைச் சுற்றி அமைந்திருக்கிறது. இப்பொழுது இந்தக் குகைக் கோயிலில் ஒன்றும் இல்லை. ஒரு வேளை ஆதிகாலத்தில் கொற்றவை உருவம் இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இதற்கு அண்மையில் இதே காலத்தில் எழுப்பப் பெற்ற இரு பெரும் பாறைக் கோயில்கள் உள்ளன. இரு குகைகளும் மண்டபமும் அடுத்தடுத்துள்ளன. ஒரே மன்னன் இவைகளையெல்லாம் உருவாக்கி இருப்பான் என்று எண்ண இடந் தருகிறது. ஆனால் இந்தக் குடைவரைக் கோயிலில் எவ்விதக் கல்வெட்டும் இதுவரை எவரும் கண்டதில்லை. மண்டபத்தைப் பற்றி இருகல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அறிஞர் கல்ட்ச் (Hultsch ) என்பவர் இந்தப் பட்டயங்களை படித்துள்ளார். இந்த இரு கோயில்களும் நந்திவர்மன் பல்லவமன்னன் அமைத்ததற்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளார். இது நந்திவர்மனுடைய காசக்குடிப்பட்டயத்தின் எழுத்துகளைப் போன்று காணப்படுகிறது என்று கூறுகின்றார். செம்புப்பட்டயங்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் சில வேற்றுமைகள் காணப்பட்டாலும் இது நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆதிரநாச்சண்டன் என்னும் பட்டத்தை பல்லவ மல்லன் ஒரு பொழுதும் உபயோகித்ததில்லை. அது இரண்டாம் நரசிம்மனுக்கு உரியது. என்றாலும் நந்திவர்மப் பல்லவனும் அவனுக்குப் பின் வந்தவர்களும் இக்கடற்கரைப் பட்டயத்தில் ஒரு பொழுதும் அக்கறை காட்டியதில்லை. கற்றளிகள் கற்றளி என்றால் கல்லால் கட்டப்பட்ட கோயில் என்று பொருள்படும் ஆதியில் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோயில் கட்டினர். முதலில் இரண்டு கற்களுக்கு இடையில் சிறிது சுண்ணம் வைத்துக் கட்டினர். அப்பால் சுண்ணம் இன்றி கற்களை அடுக்கிக் கோயில் கட்டினர். இந்தக் கற்றளி அமைக்கும் முறை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை நாட்டில் இருந்த பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராச சிம்மன் காலத்தில் எழுந்த முறையாகும். தொடக்கத்தில் மகாபலிபுரம் கடற்கரைக் கற்றளியும் காஞ்சி கயிலாச நாதர் கோயிலும், பனை மலைக் கோயிலும் முதன் முதலாக அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். கற்கோயில் அழியாது என்றும் நிலைத்து நிற்பவை. இவற்றிற்குப் பல்லவ மன்னர்கள் அடிகோலினர். அப்பால் 8 ஆம் நூற்றாண்டில் பல மன்னர்கள் கற்றளிகளை எழுப்பினர். 10-ஆம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்கள் பல்லவரைவிட கற்றளிகள் எடுப்பிப்பதில் சிறப்புப் பெற்றனர். இவர்கள் புதிதாகத் தம் நாட்டில் பல கற்றளிகளை எடுப்பித்தனர். முன் எழுந்த செங்கற் கோயிலை இடித்து கற்றளிகளாக மாற்றினார்கள். இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் தஞ்சையிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் கட்டிய கோயில் உலகப்புகழ் பெற்றவைகள். கயிலாச நாதர் கோயில் காஞ்சிபுரத்தில் உலகப் புகழ் பெற்ற கயிலாச நாதர் கோயில் ஊருக்கு மேற்கே நாற்புறமும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போன்று எங்கும் பசுமையான காட்சி தரும் கன்னிகளுக்கிடையே இருக்கிறது. இக்கோயில் கட்டப்படும் பொழுது நாற்புறமும் நகரத் தெருக்கள் இருந்தன. கோயிலைச் சுற்றி அழகிய மாட வீதிகள் இருந்தன வென்று தெரிகிறது. இக் கோயிலைச் சுற்றி சிறிய கற்கோயில்கள் எட்டு உள்ளன. எதிரே நந்தியும் குளமும் உள்ளன. நந்தியின் பக்கத்தில் நிற்கும் சிங்கத் தூண்களை நோக்கும் பொழுது முற்காலத்தில் மேலே கற்கள் பாவப்பட்ட கூரை இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இக் கோயில் நீண்ட சதுர வடிவில் அமைந்திருக்கிறது. சிறிது தொலைவு சென்று வாயிலைக் கடந்து உட்புகுந்தால் எதிரே தனியாக நிற்கும் சிறு கோயில் ஒன்று காணப்படும். அதற்கு இருபுறங்களிலும் வழிகள் உள்ளன. உள்ளே புகுந்து சென்றால் சதுரமான கோயிலும் அதைச் சுற்றித் திருச்சுற்றும் காணப்படுகிறது. திருச்சுற்றில் உள்ள சுவர்களில் சிறு மாடங்கள் கோயில்கள் போல் காணப்படுகின்றன. உண்ணாழிகை முன்மண்டபம் ஆகிய இரண்டும் சுவர்களை யுடையவை. உண்ணாழிகையின் உட்புறமும் வெளிப்புறமும் சுவர்களில் சிற்ப உருவங்கள் காணப்படுகின்றன. வெளிச் சுவரில் சிறு சிறு மாடங்களும் உள்ளன. மேலே விமானத்தில் அழகிய கலயம் (கும்பம்) ஒளிர்கின்றது.1 வாயிலுக்கு எதிரில் இலங்கும் சிறிய கோயிலில் பெரிய இலிங்கம் உள்ளது. அது 16 பட்டைகளை உடையதாய் 4 அடி 6 அங்குல உயரத்தில் உள்ளது. இலிங்கத்திற்குப் பின்புறம் சுவரில் அம்மை அப்பர் அரியணையில் அமர்ந்துள்ள அருங்கோலம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியே மண்டபத்தின் சுவர்களில் சிவபெருமானைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஆடவல்லானின் அரிய நிலைகள் மிக அற்புதமானது; மிகத் தொன்மையானது. இந்த அரிய ஆடல் நிலைகள் வேறு எங்கும் காண முடியாது. சைவ சித்தாந்த தத்துவக் கொள்கைகளுக்கு பல்லவர்கள் கண்ட சிறந்த கருத்துக்களை இங்கு காணமுடியும். கயிலாசநாதர் உண்ணாழிகையில் உள்ள இலிங்கம் பதினாறு பட்டைகள் உள்ளது. எட்டு அடி உயரம் உள்ளது. இதன் பின் சுவரில் சோமாகந்த சுகாசனமூர்த்தியின் படிமம் உள்ளது. உண்ணாழிகையின் வெளிப்புறம் உள்ள திருச்சுற்று இரண்டடி அகலம் உள்ளது. உண்ணாழிகையின் அடுத்து இருக்கும் வலப் புறமுள்ள அறையில் அழகிய ஆடற் சிற்பம் சுவரில் செதுக்கப் பெற்றுள்ளது. அம்மையப்பர் சிற்பங்களும் உள்ள இடப்புற அறையிலும் சில ஆடற் சிற்பங்கள் இருக்கின்றன. எதிரில் உள்ள மண்டபம் அழகிய தூண்களையுடைய அற்புதமான மண்டபம் தரையிலும் கூரையிலும் கல்வெட்டுகள் உள்ளன. வெளியில் உள்ள மண்டபத்தில் பதினாறு தூண்கள் உள்ளன. அவைகள் ஐந்தில் கல்வெட்டுகள் உள்ளன. மூன்று பழுதுற்றிருக்கின்றன. உண்ணாழிகையைச் சுற்றி நாற்புறமும் சுவரில் சிறு மாடங்கள் உள்ளன. தாண்டவ சிற்பங்களும் சிவபெருமானை நான்முகன் திருமால் முதலிய தெய்வங்கள் தங்கள் மனைவிகளுடன் வழிபடும் கோலங்களும் சிற்ப வடிவில் உள்ளன. கொற்றவை பதினாறு கைகளுடன் சிங்கத்தின் மீது காணப்படும் சிற்பம் அழகானது. இங்கு இராச சிம்மப் பல்லவ மன்னன் குடும்பத்துடன் நிற்பது போல சிற்ப வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுப் பாதையை அடுத்துள்ள கோயில் மதிலில் உட்புறம் சிறு மாடங்கள் 58 உள்ளன. அதில் உள்ள அற்புதமான சிற்பங்கள் ஆராயத்தக்கன. எல்லா இடங்களிலும் சிங்கத்தூண்கள் சிறப்பாக நிற்கின்றன. இங்குள்ள வாயில் காப்போர்கள் இரு கரங்களுடன் இமை கொட்டாது காத்து நிற்பவர்கள்போல் காணப்படும் சிற்பக் காட்சி காணத்தக்கது.1 கைலாசநாதர் கோயிலில் எண்ணற்ற கல்வெட்டுகள் உள்ளன. அவைகள் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டுவரை செங்கோலோச்சிய பல்லவர்கள், சோழர்கள் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகளாகக் காணப்படுகின்றன. இவைகளில் இராசசிம்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் அவன் மனைவி இரங்க பதாகை முதலியவர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவரை வென்று தொண்டை நாட்டை ஆண்ட சோழ மன்னர்களான பராந்தகன் இராச இராசேந்திரன் குலோத்துங்கன் முதலியவர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. இக் கோயிற் கல்வெட்டுகள் கருங்கல்லில் செதுக்கப் பெற்றனவாகும். கல்வெட்டினின்று முதற் கோயிலுக்கு நித்திய விநீத ஈசுவர கிருகம் என்ற பெயர் உண்டு என்று தெரிகிறது. நித்திய விநீன் என்பது முதல் மகேந்திரவர்மன் விருதுப் பெயர்களில் ஒன்று. கோயிலுள் புகுந்ததும் குதிரை லாடம் போன்ற விமானத்தைக் காணலாம். இதற்குப் பின்புறம் பிரதான கோயில் இருக்கிறது. அதற்கு மகேந்திர வர்மேசுவர கிருகம் என்று பெயர். இது மூன்றாம் மகேந்திர வர்மன் நினைவுக் குறியாக எடுப்பிக்கப்பட்டது. கயிலாச நாதர் கோயில் காமுறு விமானம் 50-அடி உயரம் உள்ளது. இது பலபுஜ கோபுரமாகும். இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்தில் உள்ளன. கி.பி. 1882-ஆம் ஆண்டில் சர் வாலடர் எலிபட் என்னும் பேராசிரியர் கல்வெட்டுகளை தேடிப்பிடித்து இந்நகரில் 283 கல்வெட்டுகளைக் கண்டு ஆராய்ந்துள்ளார். கி.பி. 640-இல் சீன வழிப்போக்கன் யுவான் சுவாங் இங்கு வந்து காஞ்சி பௌத்த பல்கலைக் கழகத்தில் பயின்றுள்ளான். இவன் கல்விக் கரையிலாத காஞ்சி நகரின் பெருமையை வியந்துள்ளான். பல்லவர் ஆட்சியில் மாட்சியையும், தெரு வீதிகளின் அழகையும் பாண்டிய நாடு சோழ நாடு ஆகியவைகளின் பௌத்த நெறி இருந்த நிலையையும் விளக்கியுள்ளான். இராச சிம்மன் காஞ்சிபுரத்தில் எடுப்பிடித்த கயிலாச நாதர் கோயில் வரலாற்றுப் புகழ் மிக்கது.1 கலை நுட்பம் வாய்ந்த இந்த கற்றளி தமிழகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த முதல்கலைக் குன்று என்று அறிஞர்கள் புகழ் மாலை சூட்டுகின்றார்கள். இக்கோயில் எழுப்பப் பெற்றகாலம் 8-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.2 இராச சிம்மன் மாமல்லபுரத்தின் கலைக்கோயில்களை உருவாக்கிய பல்லவ மன்னர்களில் நான்காவது மன்னனாவான். பனமலைக் கோயில் அபராசிதவர்மன் (கி.பி. 872-890) அபராசித வர்மன், பல்லவர் மன்னர்களில் இறுதியானவன். இவன் பல்லவ அரசன் நிருபதுங்கன் (கி.பி. 850-882) மகன். தந்தையின் முதுமைப் பருவத்திலே தனயன் அபராசிதவர்மன் நாட்டை ஆண்டுவர முற்பட்டான். நிருபதுங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சியவன் சீமாறன் சீயல்லபன். அவனுக்குப்பின் இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 862 முதல் 880 வரை அரசாண்டான் பல்லவர்கள் இந்த இரு பாண்டியர்கள் காலத்திலும் போர் நடத்தினர். முதற் போரில் பாண்டியன் பல்லவ மன்னன் நிருபதுங்கனை குட மூக்கில் வென்றான். மீண்டும் நிருபதுங்கன் அரிஇலாற்றங்கரைப் போரில் பாண்டியனை வென்றான். இறுதியாக இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் நிருபதுங்கப் பல்லவனுக்கும் போர் மூண்டது. பல்லவர் படைக்கு நிருபதுங்கன் மகன் அபராசிதவர்மன் தலைமை தாங்கினான். அவனுக்குத் துணையாக அவனது பாட்டனும் (தாயின் தகப்பன்) கங்க அரசனுமான முதலாம் பிருதிவீபதி படையுடன் சென்றான். பல்லவர்க்குத்துணையாக ஆதித்த சோழன் (கி.பி. 870-907) சேர்ந்து கொண்டான். இம்மூவரும் கூடி திருப்புறம்பியம் (கும்பகோணத் திற்குப் பக்கத்தில் உள்ளது) போரில் பாண்டியனைத் தோல்வி பெறும்படி செய்தனர். அபராசிதன் போரில் வெற்றி பெற்றான். ஆனால் இப் போரில் ஆதித்த சோழனே ஊதியம் பெற்றான். அவன் சோழநாடும் முழுவதையும் தனதுடைமை ஆக்கிக் கொண்டான். கி.பி. 882-ம் ஆண்டில் நிருபதுங்கன் இறந்ததும் ஆதித்த சோழன் செங்கற்பட்டு வரையுள்ள தொண்டை நாட்டைச் சொந்தமாக்கிக் கொண்டான். கி.பி. 890-ம் ஆண்டில் தொண்டை நாடு சோழ ஆட்சிக்குட்பட்டது. கி.பி. 890-ஆம் ஆண்டில் அபராசிதவர்மன் ஆட்சியும் முடிவுற்றது. அபராசிதவர்மன் ஆட்சியோடு பல்லவப் பேரரசும் முடிவுற்றது. அபராசித வர்மன் கால முழுவதும் போரில் ஈடு பட்டிருந்ததால் அவனால் அதிகமான திருப்பணிகள் செய்ய முடியவில்லை. அபராசித வர்மன் கலை ஆர்வம் உள்ளவன். பல்லவர்களின் கட்டிடக் கலையில் அபராசிதவர்மன் பாணி என்ற ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தினான். அபராசிதவர்மன் 18-ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் அவன் திருத்தணிகைக் கோயிலை எடுப்பித்தான் என்று தெரிகிறது. திருத்தணிகைக் கோயில் (கி.பி 890) திருத்தணிகைக் கோயில் ஆலக் கோயிலாகும். இது அபராசித வர்மன் காலத்தில் கிட்டத்தட்ட கி.பி. 890 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இக் கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம் வீரட்டானேசுவரர் எனப்படும். இத் திருக்கோயில் அபராசிதவர்மன் பாணியில் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயில் மிக அற்புதமான அமைப்புடையது என்று சோவியோ துப்ரயல் போன்ற அறிஞர்கள் புகழ்ந்துள்ளார்கள். இங்கு அபராசிதவர்மன் 18-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது.1 அபராசித பாணி பழஞ் சோழர்களுக்கும் பிற்காலப் பல்லவ மன்னன் இராச சிம்மனுக்கும் இடையே எழுந்துள்ள ஒரு அழகிய இடைக்காலப் பாணியாகும். இது 9-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியில் அரும்பியது. திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோயில் ஆலக் கோயிலாகும். இதனைச் சிற்பநூற்களில் கஜப்பிருஷ்ட விமானக் கோயில் என்று கூறப்படும். தமிழில் தூங்கானைமாடக் கோயில் என்றும் கூறப்படும். இது மாமல்லபுரம் சகாதேவ இரதத்தின் அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது குதிரை லாடம் போல் பழைய பல்லவர்களின் ஆலக் கோயில் அமைப்பில் எழுப்பப் பெற்றது என்றாலும் விமான அமைப்பில் வேற்றுமை உள்ளது. கூடுகளின் மீது சிங்க வடிவம் காணப்படுகிறது. இந்தக் கோயிலின் அமைப்பை தொண்டை மண்டலத்தில் எங்கும் காணமுடியாது. எந்த விதமான ஆராய்ச்சிக்கண்ணோடு திருத்தணிக் கோயிலை நோக்கினாலும் இந்த சகாப்தத்திற்கு உரியதான கோயிலாக எண்ணப்படுகிறது. கற்றளிகள் கிறித்துவிற்குப் பின்னர் எழுந்த 7-ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் கட்டிடக் கலையில் ஒரு மலர்ச்சி தோன்றியது. தமிழகத்தில் அரசோச்சிய அருக மதம் அருகத் தொடங்கியது. தமிழகத்தின் தேசிய மதமாகிய சிவனெறியை வன்செயலால் அடக்கத் தொடங்கியது. இந்த நாடு தமிழ் நாடு. தமிழகத்தில் தமிழர்களால் வளர்க்கப்பட்ட நெறி சிவநெறி என்பதைக் கூட மறந்தது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியைத் துரத்த முயன்று, உள்ளதையும் இழந்து ஓடியது போல் அருக மதம் சிவமதம் தமிழகத்தில் தலை தூக்கா வண்ணம் தடுத்து ஒழிக்க முனைந்தது. அப்பர் அடிகள் ஆதியில் சைவனாகப் பிறந்து தம் வாலிபப் பருவத்தில் அருகமதத்தைத் தழுவி சமண சமயத்தை நன்கு பயின்று சமண குருவாகப் பட்டம் பெற்று, தரும சேனர் என்னும் பட்டமும் பெற்றார். அவரது முதுமைப் பருவத்தில் பின்னர், அந்தச் சமயத்தில் கசப்புற்று சைவந்தழுவி சிவனது மெய்அடியாராக, துறவியாய் சிவத்தொண்டு செய்து வந்தார். அது சமணர்களுக்குப் பிடிக்க வில்லை. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலே உயரிய நெறி என்று வாழும் சமணர்கள் அப்பர் அடிகளுக்கு அளவிலாத் துன்பம் உண்டாக்கினர். அவரது உயிரைக் குடிக்கத் துடி துடித்தனர். அவர் உறைந்த இடத்தைத் தீயிட்டுப் பொசுக்கினர். அவரை நெருப்பி லிட்டனர். அவரைக் கல்லிற் பிணைத்து கடலில் ஆழ்த்தினர். அவர் அஞ்சவில்லை, சாகவில்லை. அப்பர் அடிகளின் அஞ்சாநெஞ்சமும், உறுதியும், வெற்றியும் இக்கொடுஞ் செயலுக்கு ஆக்கம் அளித்த சமண மன்னன் மகேந்திர மன்னன் உள்ளத்தை மாற்றியது. அசோகனைப் போல் அவன் சமயம் துறந்து பௌத்தம் தழுவாது சைவம் தழுவினான். அப்பரைக் குருவாகக் கொண்டு சிவத் தொண்டாற்ற முன் வந்தான். கி.பி. 620-ஆம் ஆண்டில் அவன் சிவதீட்சை பெற்று குணபரன் என்று பெயர் சூட்டிக் கொண்டு சைவம் வளர்க்க முற்பட்டான். சிவன் பிறவாதவன் இறவாதவன். அவன் முழுமுதற் கடவுள் என்பதையும் சைவ சமய தத்துவமாகிய பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையையும், அதன் தொன்மையும் அப்பர் வாயிலாக உணர்ந்தான். அப்பர் அடிகளின் பேச்சும், தொண்டும் தோற்றமும் ஏற்றமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது.1 அன்பே சிவம், அன்பு வேறு சிவம் வேறு என்று கூறுவது அறிவிலாச் செயல் என்று சைவ நெறி கூறுவதை உளமாற உணர்ந்து சிவபணி செய்ய முற்பட்டான். மகேந்திரவர்மன் வடமொழியை நன்கு பயின்றவன். சிற்பக் கலையை நன்கு உணர்ந்தவன். இசையை இழுக்கிலாது கற்றவன். வீணை வாசிப்பதில் இணையற்றவன். அவனது கல்வியும், கலையும் சிவநெறி ஓம்புவதற்குப் பெரிதும் துணையாக நின்றது. சமண நெறி நாட்டிற்கொவ்வாதது; காலத்திற்கேற்காதது என்று கண்டான். அன்பு நெறியாம் சிவநெறியை அழிக்க வன் செயலாற்றும் வம்பர்களான சமணர்களை நாட்டை விட்டு ஓட்டினான். பல சமணக் கோயிலை சிவன் கோயிலாக மாற்றினான். பல குகைக் கோயிலையும் குடைவரைக் கோயிலையும், கற்றளிகளையும் எழுப்பினான்.2 மகேந்திரவர்மன் சைவனாக மாறியதுடன் தமிழ் வளர்க்க முற்பட்டான். தமிழ்க்கலையை ஓம்பத் தலைப்பட்டான். வேளாண்மை உயரத்திட்டமிட்டான். அவனது அருந்தொண்டால் தமிழகம் மீண்டும் ஒளி பெற்றுயர்ந்தது. திருப்பாதிரிப் புலியூரிலிருந்த சமணப் பள்ளிகளையும் பாளிகளையும் மகேந்திரவர்மன் கருவறுத்தான். அதிலுள்ள கற்களை எடுத்து திருவதிகையில் சிவபெருமானுக்கு ஒரு திருக் கோயிலை எடுப்பித்து அதற்குத் தன் பெயரால் குணபர ஈச்சுரம் என்று அழைத்தான். மகேந்திரன் தமிழகத்தில் சிவபெருமானுக்குச் சில கற்கோயில்கள் எழுப்பத் திட்டமிட்டான். கோயில்களில் சிறந்த சிலைகளையும் பண்புமிக்கபடிமங்களையும் உயர்ந்த ஓவியங்களையும் அமைக்க உறுதி கொண்டான். கோயிலில் இசை முழங்க பண்பாட ஏற்பாடு செய்தான். சிற்பிகள் சிற்ப இலக்கணங்களைப் பயிலவும், சமய ஓதுவார்கள் கோயிலில் பண்ணோடு சிவன் புகழ் பாடவும் ஆகமங்கள் ஓதவும் வழி செய்தான். அவன் வடமொழியில் எழுதிய சிறிப்பு நாடக நூல் (மத்த விலாசப் பிரகடனம்) இன்று சிறந்த நாடக நூலாகப் போற்றப் பெற்று வருகிறது. செங்கற் கோயில் மகேந்திரவர்மன் காலத் தொடக்கத்தில் எங்கும் பல வகையான எழில் சார்ந்த செங்கற் கோயில்களே இருந்தன. அவைகள் தமிழகத்தில் எழுந்த வெயில் புயல், மழை முதலியவைகளைத் தாங்கச் சக்தியற்றனவாய் இருந்தன. அவைகளில் பல அடிக்கடி பழுதுற்று வந்தன. பல சிற்றூர்களில் கவனிப்பாரற்று அழிந்தும் விழுந்தும் மறைந்தும் போயின. அவற்றைக் கண்டு மன்னன் மனம் வருந்தினான். சிவபெருமான் அழிவற்றவன் என்றால் அவன் உறையும் உறையுள்ளும் அழிவற்றதாக இருக்க வேண்டுமே என்று எண்ணினான். மலைக் குகைகளில் சிவலிங்கத்தை வைத்து வழிபடச் செய்தான். இது குகைக் கோயில் என்று கூறப்பட்டது. அப்பால் ஆகம விதிப்படி கோயிலை அமைக்க எண்ணி குகைகளைப் பெரிதாகக் குடைந்து நடுவே திருவுண்ணாழிகையையும், அதன் முன் தூண்களையும் முக மண்டபத்தையும் அமைக்கச் செய்தான். தமிழகக் கோயில் வரலாற்றில் ஒரு புதிய முறையில் கோயில்கள் அமைத்து மக்கள் பக்தியுடனும் ஊக்கமுடனும் உற்சாகத்துடனும் இறை வழிபாடு இயற்ற வழி செய்தான். இவனுக்கு குணபதீசுரன், விசித்திர சித்தன் என்று பலர் பெயர்கள் உண்டு. குடைவரைக் கோயில் மகேந்திரவர்மனின் பெரும் முயற்சியால் தமிழகத்தில் கற்பாறைகளைக் குடைந்து பலகுடைவரைக் கோயில்கள் எழுப்பப் பெற்றன. அவன் தளவானூர், திருச்சி, மண்டகப்பட்டு, பல்லாவரம், மகேந்திரவாடி, வல்லம், மேலச்சேரி, சிங்கவரம், திருக்கழுக்குன்றம், கீழமாவிலங்கம் சீயமங்கலம், மாமண்டூர் முதலிய இடங்களில் உள்ள குன்றுகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை எடுப்பித்தான். அவைகளில் மகேந்திரவாடி, மாமண்டூர், நாமக்கல், சிங்கவரம் ஆகிய ஊர்களில் எடுப்பித்த கோயில்கள் திருமாலுக்கும், பல்லாவரம் சீயமங்கலம் திருக்கழுக்குன்றம் திருச்சிராப்பள்ளி வல்லம் தளவானூர் ஆகிய இடங்களில் உள்ள குன்றுகளில் குடைந்த கோயில் சிவபெருமானுக்கும் உரியதாக சமைக்க ஏற்பாடு செய்தான். மண்டகப் பட்டு குகையில் எடுப்பித்த கோயிலை மும்மூர்த்திகளுக்கு உரியதாக்கினான். இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள். 1. The seven pagodas - J.W. Coombes, London 1914. 2. Mahabalipuram - Miss. Padma Trivekrama Narayanan B.A,B.T. Madras.1957 3. Mahabalipuram or seven pagodas - D.R. Tyson Madras - 1931. 4. A History of India - K.V. Rengaswamy Iyenkar M.A., London 1910. 5. Studies in pallava History - Rev. H. Heras S.J. 1913 (Bombay) 6. A guide to mahabalipuram Miss. P.T. Narayana 7. Indian Architecture - V.R. Iyer. 8. History and institutions of the pallavas - C. SrinivasaChary (Madras). 9. Pallavas - P.T. Srinivasa Ayangar Part II 10. Epigraphic India vol.X 11. History of the pallavas of kanchi R. Gopalan (Madras). 1928 12. Kanchi Dr. Miss C. Meenakshi M.A. Ph.D. (Delhi).1941 13. Pallava Architecture Part I - A.H. Lonchirst (Simla) 1923. 14. நரசிம்மவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி சென்னை 1957. 15. பல்லவர்கள் வரலாறு - டாக்டர் மா. ïuhrkh¡f« ãŸis M.A., M.o.c., Ph.D. மண்டபங்கள் மண்டபங்கள் கோயில்களின் உட்புறத்தில் விழாக்காலத்தில் தெய்வங்களுக்கு திருமணவிழா திரு ஊஞ்சல் ஆடல், (மாலை வேளைகளில் உல்லாசப் பொழுது போக்குதல்), தாண்டவம் நடனம் ஆடுதல் போன்றவைகளுக்காக அமைக்கப்பட்ட அகன்று நீண்ட பொது அறை (Big hall) எனலாம். கோயில்களுக்கு வெளியே தெய்வத்திரு உருவங்கள் ஊர்வலம் வரும்பொழுது பெரிய வீதிகளில் ஆங்காங்கே தங்கிச் செல்வதற்காக மக்களும் மன்னர் களும் வணிகர்களும் மண்டபங்கள் கட்டி வைத்துள்ளார்கள். பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டு மன்னர்களின் அரண்மனையில் பல மண்டபங்கள் இருந்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கோயில்களில் அமைக்கப்பட்ட மண்டபங்களில் திரு உருவங்கள் பிரதிட்டை செய்து நாடோறும் வழிபாடு செய்யப் படுவதில்லை. இங்கு தெய்வ உருவங்கள் சப்பரங்களில் ஊர்வலம் வரும்பொழுது சில மணிநேரம் தங்கும். அப்பொழுது மக்கள் அங்கு சௌகரியமாய் நின்று வழிபடுவார்கள். மற்றையக் காலங்களில் மண்டபங்களில் இசைக் கச்சேரிகளும், நாட்டியக் கச்சேரிகளும் சொற் பொழிவுகளும் நடைபெறும். கோயிலுக்கு வெளியே தெருக்களில் தனிப்பட்ட நபர்களும், இனத்தவர்களும் அமைத்த மண்டபங்களில் மக்கள் தங்குவார்கள். திருச்செந்தூர் மதுரை போன்ற இடங்களில் பல இனத்தவர்கள் தங்கள் இனத்தின் பெயரால் மண்டபங்கள் அமைத்திருக்கின்றார்கள். இந்த மண்டபங்கள் இரு வகைப்படும். ஒன்று பயனைக் கருதி எழுதி எழுந்தவை; மற்றொன்று கால்களை (தூண்களை)ப்பற்றி எழுந்தவை என்று அறிஞர்கள் பிரித்துள்ளார்கள். பயனை யொட்டி எழுந்த மண்டபங்களாவன: 1 திரு உண்ணாழிகைக்கு (கர்ப்பக்கிருகத்திற்கு) முன்னர் காணப்படும் மண்டபம் இது (1) அர்த்த மண்டபம் எனப்படும்; இது நான்கு கால்களைக் (தூண்களைக்) கொண்டது. கருவறைக்கும் இம்மண்டபத்திற்கு இடையிலுள்ள வெளி அந்தராளம் எனப்படும். மற்றொன்று (2) மகாமண்டபம், ஆறு கால்களைக் கொண்டது. இன்னொன்று (3)நபன மண்டபம்; எட்டுக் கால்களை உடையது. பிறிதொன்று (4) நிருத்தமண்டபம்; பன்னிரண்டு அல்லது இருபது கால்களைக் கொண்டது. வேறொன்று (4) விருச மண்டபம்: பதினாறு அல்லது முப்பத்திரண்டு கால்களை யுடையது. திருக்கோயிலில் உள்ள திருஉண்ணாழிகையும் அம்பலமும் மண்டபங்களாகவே கருதப்படும். திருஉண்ணாழிகை தலை; அர்த்த மண்டபம் நெற்றி; மகா மண்டபம் கண்கள்; நபன மண்டபம் மூக்கு; நிருத்த மண்டபம் வாய்; விருசப மண்டபம் கழுத்து என்று அறிஞர்களால் விளக்கம் அளிக்கப் பெற்றுள்ளது. இந்த ஐந்து மண்டபங்களைத் தவிர வேறு பல மண்டபங்களும் உண்டு. அவை (1) திரு உண்ணாழிகை, (2) அந்த ராளம், (3) அர்த்த மண்டபம் (4) மணிமண்டபம், (5) மாமண்டபம், (6) முன்மண்டபம் எனப்படும். இந்த மண்டபங்கள் எல்லாம் எல்லாக் கோயில்களிலும் இராது முற்றுப் பெற்ற கோயில்களில் தான் இருக்கும். முற்றுப்பெறாத கோயில்களில் ஒன்றிரண்டு மண்டபங்கள்தான் இருக்கும். இம்மண்டபங்களில் வழிபட வருபவர்கள் தங்கள் பக்குவத்திற்கு ஏற்ப நின்று வழிபடுவார்கள். கோபுரத் தோற்றம் வெகு தொலைவில் தெரியும். அதை தூல லிங்கம் என்பர். (விமானந்தான் தூலலிங்கம் எனப்படும். ஆசிரியர். அ. இராகவன்) முதலில் அதையே (விமானத்தையே) தரிசிக்க வேண்டும். இங்கு ஆசிரியர் தவறாக விமானத்தை இறைவனது திரு முடியாக வழிபடவேண்டும் என்பதை கோபுரத்தைத் தூல லிங்கமாக வழிபடவேண்டும் என்பது தவறு. கல்லையும், குல்லையும், நெல்லையும் புல்லையும், சிலுவைதாங்கிய மணி முடிதரித்த எட்வர்ட் உருவம் தாங்கிய வெள்ளிப் பணத்தையும் அரபி எழுத்துள்ள பொற்பணத்தையும் வடமொழி ஏட்டையும் கருடன் உறைந்த கூட்டையும் கண்டதும் தொட்டு கண்ணில் ஒற்றில் இறைவனாக எண்ணி வழிபடும் மக்கள் கோபுரத்தையும் தூல லிங்கமாக வழிபடலாம்1 என்று இந்து அற நிலையப் பாதுகாவல் கழகத்தின் ஆணையாளர் திரு. சி. இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் கூறி இருக்கிறார் என்பதை அறிந்தால் இனிக்கோயில் சுவரையும், தூண்களையும், படிக்கற்களையும் கதவுகளையும் குழவிக்கல்லையும் இறைவனாக எண்ணி வழிபட ஆரம்பித்து விடுவர். மண்டபம் பற்றியவை சில கோயில்களில் நந்தி மண்டபம், கலியாண மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், கொலு மண்டபம், அலங்கார மண்டபம், காட்சி மண்டபம் என்று சில மண்டபங்களும் உள்ளன. திருமால் கோயில்களில் கருடன், அனுமான், ஆழ்வாராதி போன்றவர்களுக்கும் மண்டபம் உண்டு. திரு உண்ணாழிகை பற்றியவை கோயில்கள் என்று பழந்தமிழர்கள் கண்டது திருஉண்ணாழிகை ஒன்றைத்தான். ஆதியில் திரு உண்ணாழிகையை எழுப்பி அதன் மீது பெரிய விமானத்தை எடுப்பிப்பார்கள். திரு உண்ணாழிகையின் நடுவில் சிவலிங்கம் இருக்கும். இதனை மூலவர் என்பவர். மூலவர் சிவன் ஆகும். சிவனுடைய திருமுடி விமானமாக மதிக்கப் பெற்றது. தொலைவில் வருபவர்கள் விமானத்தைக் கண்டே இறைவனை வழிபடுவர். திருஉண்ணாழிகையைச் சுற்றி நாற்புறமும் உயர்ந்த மதில்கள் எழுப்பப்பெற்றிருக்கும் மதில்களில் இருபுறத்திலும் அல்லது நான்கு புறத்திலும் வாயில்கள் இருக்கும். இத்திருக் கோயில்கள் பெரிய நிலப்புரப்புள்ள இடத்தில் நடுவே திரு உண்ணாழிகை இருக்கும். புத்தவிகாரை பற்றியது திருஉண்ணாழிகையின் நாற்புறமும் உள்ள அகன்ற வெளியில் மக்கள் நின்று நடுவேயுள்ள சிவலிங்கத்தை நோக்கி வழிபடுவார்கள். இந்த அமைப்பில்தான் ஆதியில் தமிழர்கள் கோயிலை அமைத்தனர். அனைத்துலகப் பௌத்த சமயங்களும் புனிதக் கோயிலாக எண்ணி லட்சோப லட்சம் மக்கள் கூடி நின்று வழி பாடியியற்றும் போபாலுக்கு அருகில் உள்ள சாஞ்சி பௌத்த விகாரை மேற்கூறிய அடிப் படையிலே அமைக்கப் பெற்றுள்ளது. நான்கு வாயில்களிலும் அளியில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த தோரண வாயிலில் மூன்று தோரணங்களை இருபெரும் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்களிலும் போதிகைகளிலும் தோரணங் களிலும் புத்தரின் வாழ்க்கை வரலாறும் சாதக கதை நிகழ்ச்சிகளும் தூபி, சக்கரம், மரம் முதலிய சின்னங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த வாயில்களைக் கடந்து உள்ளே புகுந்ததும் பெரிய மதில்கள் அதனுள் பெரிய மைதானத்தின் நடுவில் பெரியதூபி உள்ளது. இவை அரைக்கோளாகும் வட்டவடிவில் உள்ளது. இதில் புத்தரின் புனித அதி அடக்கம் செய்யப் பெற்றுள்ளது. சாஞ்சியில் ஒப்பற்ற சின்னங்களை அகழ்ந்தெடுத்துப் புதுப்பித்த பெருமை சர் சாண் மார்சலுக்கு உரியதாகும். இவரே சிந்துவெளி அகழ் ஆய்வை நடத்தியவர். இவர் சாஞ்சியைப்பற்றி சாஞ்சியின் நினைவுச் சின்னம் என்று ஒரு சிறு அரிய நூலை எழுதியுள்ளார். அதில் விளக்கம் தரப்பெற்றுள்ளது.1 மசூதி பற்றியது இதே போன்ற அமைப்பில் இலாமியர்களின் புனிதக் கோயிலாகத் திகழும் அரேபியா நாட்டிலுள்ள மக்கா மாநகரில் உள்ள கஃபா என்னும் தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் உலகின் நானாதிசைகளினின்றும் லட்சோபலட்சம் மக்கள் நின்று இறைவழிபாடு நடத்துகிறார்கள். பிரகாரங்கள் பற்றியது இந்த அடிப்படையிலே தமிழகத்தின் திருக்கோயில்கள் துளிர்த்தெழுந்தன. திருஉண்ணாழிகையின் உறுப்புகள் அனைத்தும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. விமானமும் உயர்ந்து அழகிய சிற்பச் சிறப்புடையதாய்த் திகழ்ந்தன. மக்கள் அவற்றைக் கண்டுகளித்துத் தொழுது வந்தனர். இன்று அவைகள் மறைக்கப்பட்டு நாற்புறமும் பிரகாரங்களும் மண்டபங்களும் எழுப்பப் பெற்றுள்ளன. மக்கள் மழை வெய்யில் முதலிய இயற்கையின் கோபத்திற்கு ஆளாகாது நிம்மதியாக நின்று வழிபாடுச் செய்வதற்கென்பதற்கேயாம். இவைகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களால் நிறுவப் பெற்றது. இந்தப் பிரகாரங்கள் சிறப்பாக மதுரை, திருநெல்வேலி இராமேசுவரம், சுசீந்திரம் முதலிய இடங்களில் உள்ளன. இதைப் பற்றிப் பின்னர் விரிவாய் ஆராய்வோம். இந்தப் பிரகாரங்களை இடைக்காலத்தில் இங்கு வந்த நாயக்க மன்னர்கள் மக்களின் நாகரிக வளர்ச்சிகேற்ப்ப பிரகாரங்களை அமைத்துள்ளனர் என்றாலும் ஆதியில் தமிழர்கள் அழகிய உண்ணாழிகையை அமைத்த மூலக் கருத்தை மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த ஒரு மரபு மாற்றப் பட்டுள்ளது. நிற்க, கோயில் பிரகாரங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்பிகள் கூறுகின்றார்கள். அதாவது, (1) காப்பாவரணம், (2) அந்தராக்கம் (3) மத்தியார்க்கம் (4) மரியாதை (5) மகாமரியாதை என்று கூறப்படும். மண்டபங்கள் பற்றியது கால்கள் பற்றி எழுந்த மண்டபங்களாவன: (1) நாலு கால் மண்டபம் (2) எட்டுக்கால் மண்டபம் (3) பதினாறு கால் மண்டபம் (4) முப்பத்திரண்டு கால் மண்டபம் (5) அறுபத்து நான்கு கால் மண்டபம் (6) நூற்றெட்டுக் கால் மண்டபம் (7) ஆயிரத் தெட்டுக்கால் மண்டபம். இவைகளில் பெரும்பாலும் பெரிய மண்டபங்கள் வெளிப் பிரகாரங்களில் தான் இருக்கும். இவைகள் விழாக்காலங்களில் பெரிதும் பயன்படும். மற்றையக் காலங்களில் உபயோகமற்றவைகளாய் இருந்தன. இன்று ஆயிரக்கால் மண்டபம், நூற்றெட்டுக் கால் மண்டபங்கள் கலைக் கூடங்களாக மாற்றப் பட்டு வருகின்றன. மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள மண்டபத்தில் ஒரு கலைக் கூடம் நிறுவப்பெற்றுள்ளது. திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் திருக்கோயிலில் உள்ள மண்டபத்தை கலைக்கூடமாக மாற்றத் திட்டமிட்டு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா செய்யப் பெற்று அடிப்படை வேலைகள் அனைத்தும் செய்யப்பெற்றுள்ளன. தமிழகத்தில் பல கோயில்களில் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்து நான்கு கால்கள் கொண்ட மண்டபங்கள் உள்ளன. ஆனால் 108, 1008 கால் மண்டபங்கள் ஒரு சிலவே உள்ளன. அவற்றின் விவரம் அடியில் வருமாறாகும்: மண்டபங்கள் முற்காலத்தில் நமது கோயிலினுள் கருவறையும் முகமண்டப மும் மட்டும் இருந்தன. அப்பால் மக்கள் தொகை அதிகப்படவே நின்று வழிபடவும் வேறுகாரியங்களுக்காகவும் மண்டபங்கள் பல எழுந்தன. இந்த மண்டபங்கள் இரு விதப்படும். ஒன்று பயனை அனுசரித்தவை. மற்றொன்று கால்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பெயர் பெற்றவை. 1. பயனை அனுசரித்து எழுந்த மண்டபங்கள் 1. திரு அகநாழிகை முன்னிருக்கும் இடை நாழிகை (அர்த்தமண்டபம்) - 4 கால் 2. மகாமண்டபம் (அடுத்திருப்பவை) - 6 கால் 3. நபன மண்டபம் - 8 கால் 4. நிருத்த மண்டபம் - 12 அல்லது 20 - கால் 5. விருசபமண்டபம் - 16 அல்லது 32 கால் (2) கால்களின் எண்ணிக்கைகளை கொண்டு பெயர் பெற்றவை. 1. நான்கு கால் மண்டபம் 2. எட்டுக் கால் மண்டபம் 3. பதினாறு கால் மண்டபம் 4. முப்பத்திரண்டு கால் மண்டபம் 5. அறுபத்து நான்கு கால் மண்டபம் 6. நூற்றுக்கால் மண்டபம் (இது 108 கால்களையுடையது) 7. ஆயிரக்கால் மண்டபம் (இது 1008 கால்களையுடையது) பிற்காலத்தில் தான் தமிழ்நாட்டுத் திருக்கோயிலின் பிரகாரங்களில் மண்டபங்கள் சேர்க்கப்பட்டன. சிற்ப நூற்களின் விதிப்படி ஏறக்குறைய 108-பெயர்கள் உள்ள பெரிதும் சிறிதுமான மண்டபங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; இவைகளின் பெயர்களை எல்லாம் இங்கு குறிப்பதற்கு இடமில்லை. இவற்றுள் சில நூற்றுக்கால் மண்டபம் ஆயிரக்கால் மண்டபம் என்பதை மாத்திரம் குறிக்கின்றேன். கடைசியாக உற்சவமூர்த்திகள் அமைக்கப்பட்ட பிறகு பெரிய கோபுரங்களுக்கு எதிரில் நான்கு அல்லது பதினாறு கால் மண்டபங்கள் கட்டப்பட்டன. பதினாறுகால் மண்டபத்தருகில் இரதோற்சவ காலத்தில் தெய்வத் திருஉருவங்கள் தேரில் ஆரோ கணிப்பதற்காகத் தேர்முட்டிகள் என்று சொல்லப்பட்ட தேர் நிலையங்கள் அமைக்கப்பட்டன என்று சிவாலய சிற்பங்கள் என்ற நூலில் இராவ் பகதூர் பி. r«gªj KjÈah® ã.V., பி. எல் அவர்கள் கூறுகிறார்கள்.1 இம்மண்டபங்களின் தோற்றங்களின் தோற்றத்தை யும் அதன் அவசியத்தையும், விளக்கிக் கூறிவிட்டு எங்கெல்லாம் எவ்வெவ்விதமான மண்டபங்கள் இருக்கின்றன என்பதையும் முன்னாள் இந்து அறநிலையப் பாதுகாப்பான காவற் கழகத்தின் ஆணையாளர் இராவ் பகதூர் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் அடியில் வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்: பிரகாரம் பற்றி 1. கோயில்களிலே பிரகாரங்கள் (திருச்சுற்றுக்கள்) ஐந்து வகைப்படும். 1. கர்ப்பாவரணம், 2 அந்தராக்கம், 3 மத்தியார்க்கம், 4 மரியாதை, 5 மகாமரியாதை எனப்படும் இவ்விதமான பிரிவினைகள் காமிக ஆகமத்தில் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மண்டபத்திலும் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்று அது கூறுகின்றது. மண்டபங்கள் பற்றி 2 எண்ணிக்கை மண்டபங்கள்:- இவைகளின் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்து நான்கு, நூற்றெட்டு, ஆயிரத் தெட்டுக் கால்களைக் கொண்ட மண்டபங்கள் உண்டு. இவைகளில் பெரியவைகள் பெரும்பாலும் வெளிப்பிரகாரங்களில் உண்டு. அவை பெருந்திருவிழாக்களில் பயன்படுபவை 100-கால்களும் 1000 - கால்களும் கொண்டவை. இந்த மாபெரும் மண்டபங்கள் விசயநகர மன்னர்கள் காலத்தில் தமிழகத்தில் எடுப்பிக்கப் பெற்றவைகளாகும். (அ) 1008 கால்கொண்டவை - 1 சிதம்பரம் இராசசபை சேக்கிழார் காலத்திலே இருந்தது. 2 திருவண்ணாமலை-1505-ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயன் கட்டினது, முடிவு பெறவில்லை. 3 மதுரை 1561-ஆம் ஆண்டில் அரிய நாயக முதலிய கட்டினது. அருமையான வேலைப்பாடு உள்ளவை. 4 திருநெல்வேலி நாயக்க மன்னர் காலத்தில் எடுப்பிக்கப் பெற்றது. சிறு சிற்பங்கள் மிகுதி. 5. திருவரங்கம் - 952 கால்கள் உள்ளன. விழாக்காலத்தில் 56-கால்கள் சேர்ப்பார்கள். இதன் தூண்கள் சிறந்த சிற்ப பணிகள் வாய்ந்தன. 6 காஞ்சிபுரம் ஏகாம்பரர் - மூன்றாம் திருச்சுற்றில் கால்களில் உருவங்கள் உண்டு. 7 திருப்பதித் திருமலை - 1464-இல் சாளுவமல்லையன் கட்டினது. 8 திருவக்கரை - சந்திர மௌலீசர் கோயில் கட்டினது சம்புவராயன், 13 - ஆம் நூற்றாண்டு. 9 திருவாரூர் - தேவாசிரிய மண்டபம். காவணமாயிருந்தது கற்றூணாக்கப்பட்டது. 10. திருவானைக்கா - முன்னால் உள்ளது, பூவேலை, கொடி மிகுதியும் உள்ளது. 1. 108-கால் கொண்டவை: - 1. சிதம்பரம், நரலோக வீரன் கட்டியது. 12-ஆம் நூற்றாண்டு. 2. திருச்சிராப்பள்ளி - தாயுமானவர் மலைமேல் இடதுபுறமாக உள்ளது. 3. திருவதிகை - வலதுபுறம், மணலிக் கூத்தன் நரலோக வீரன் கட்டியது. 12 - ஆம் நூற்றாண்டு. 4. காளையார் கோயில் - 1038-ஆம் ஆண்டு மாறவர்மன் குலசேகரவர்மன் 1-ன் ஆட்சிகாலம். 5. காளத்தி-இரண்டாம் பிரகாரம், 1517-இல் கிருஷ்ண தேவராயன் கட்டியது. 6. முட்டம் - (தென்ஆர்க்காடு) குறுநிலமன்னர்கள் ஆற்றிய திருப்பணி. 7. மதுரை - புது மண்டபம் - 1625 திருமலை நாயக்கன் கட்டியது. நாயக்க மன்னர்கள் தூண்களில் உள்ளன. 8. காஞ்சி வரதராசர், அனந்தசரசின் தென்கரை 1515-இல் கிருஷ்ணதேவராயன் கட்டியது. சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை. யாளிகள், சிங்கங்கள், சங்கிலிகள், தாமரைகள் போல சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. 9. காஞ்சி ஏகாம்பரம் - இதில் கச்சிமயானர் தளி உண்டு. 10. திருவானைக்கா - மூன்றாம் பிரகாரம் - சாதாரண வேலைப்பாடுகள். 11. திருக்கடவூர் - முதல் பிரகாரம், இடதுபக்கம் மேலே வளைவு கொண்டது. 108- ம், 1008-ம் கால்கள் கொண்ட பெரிய மண்டபங்கள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்கள் சிற்ப வேலைப்பாட்டில் ஒரு பெரும் ஆக்க வேலைக்காரர்களாகக் கொள்ளவேண்டும். திருவிழாக்கள் சொற்பொழிவுகள் முதலியன நிகழ்வதற்கே இவை இயற்றப்பட்டன. சிதம்பரத்தில் ஆயிரக்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் அடிகள் திருத்தொண்டர் புராணத்தை எடுத்துரைத்தார் என்பது வரலாறு. காஞ்சிக் கோபுரத்தில் அதிகாரிகள் விருந்தும் விளையாட்டும் வைத்திருந்தார்கள். அத்தனை பெரியது என்க. முற்காலத்தில் திருமதில்களுக்குள்ளே சட்டங்களும் விட்டங்களும், பட்டியல்களும், பலகைகளும் கொடுங்கைகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாய் அமைத்தனர். முற்காலத்தில் தஞ்சை ஆவுடையார் கோயிலில் உள்ள மண்டபத்தில் உள்ள கொடுங்கை மிக வியத்தகு வேலைப்பாடுகளை உடையது. இன்றுள்ள சிற்பிகள் செய்வதற்கு அரியது என்று மதிப்பிடுகின்றார்கள். அதுபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு வீழி மிழலை வௌவால் நத்து மண்டபமும் அருமையான சிற்பநுட்பம் வாய்ந்ததாகும். இன்று கோயில்கள் நிர்மாணிக்கும் சிற்பிகள் கோயில்கள் அமைக்கும் செல்வர்களிடம், ஆவுடையார் கோயில் கொடுங்கையையும் வௌவால் நத்து மண்டபத்துத் தூண்களையும் தவிர்த்து வேறு எந்த வேலையையும் சிறப்பாக, நிறைவாக முடித்துத் தருகிறோம் என்று ஒப்பந்தம் எழுதி வருகின்றார்கள். இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. செயற்கை நலம் - சி. எம். இராமச்சந்திரன் செட்டியார். சென்னை 1950. 2. கோயிற்கலையும் சிற்பங்களும் - பி. ஆர். ஸ்ரீனிவாசன் M.A. சென்னை 1965. 3. Principles of indian silpa sastiras. Prof Phanmidra.Nath Bose M.A. (Lahore)1926. 4. South Indian Shrines P.V. Jegadisa Iyer Madras 1922. 5. Siva temple Architecture ete in tamil S. Sambanthan. B.A. B.L. Madras 1948. 6. The Mouments of sanchi - Sir John Marshal - K.T. C.I.E Lit., D.F.S.A. (Bombay) 1927. 7. An outline of Indian Temple Architecture - F.H. Gravely F.R.A.S. (Madras) 1950. 8. Kanchi - Dr. C. Meenakshi M.A. Ph. D., New Delhi. 19 . . . published by . .. .of India. 9. History of India - K.V. Rangasamy Ayangar M.A. (London) 1910. தூண்கள் - கால்கள் முற்காலத்தில் தமிழ்நாட்டுக் கோயில்களிலும் வீடுகளிலும், அரண்மனைகளிலும் மாளிகைகளிலும், மண்டபங்களிலும் மரங்களால் தூண்கள் விடப்பட்டன. அப்பால் சுடுமண் செங்கற் களைக் கொண்டு தூண்கள் கட்டப்பட்டன. பின்னர் கருங்கல்லால் வட்டவடிவிலும் சதுரவடிவிலும் நீண்ட வடிவிலும் அறுகோண வடிவிலும் தூண்கள் விடப்பட்டன. தூணில் யாழி, புலி, சிங்கம், யானை பக்தர்கள் உருவம், தாமரை மலர் போன்றவைகள் செதுக்கி விடப்பட்டன. இத்தூண்கள் சேரர்பாணி, பாண்டியர் பாணி, சோழர்பாணி, பல்லவர்பாணி என பலவகைப் பட்டதாய் செய்யப் பட்டன. நமது நாட்டில் அணி வெட்டிக்கால் என்னும் பெருந்தூண் களும் செய்யப்பட்டுள்ளன. அழகாகவும் உறுதியாகவும் அடுத்து அடுத்து இருதூண்கள் நிற்பது போல் பெரிய தூண்களும் செய்து விடப்பட்டன. தூண்களுக்கு உறுதியான அடிப்படையிட்டு மேலே உள்ள பெரும்பாரத்தைத் தாங்குவதற் கேற்றதாய்ச் செய்யப்பட்டது. தூண்களை அடியில் சதுர வடிவாக அமைத்து சுமார் 2 ½ அல்லது 3 அடி உயரத்தில் நாகபந்தம் என்று அணிதிகழச் செய்வார்கள் அதன் மேலே தூண்கள் 6 அல்லது 8 பட்டைகள் இருக்குமாறு செய்வார்கள். கல்லால் அடித்தளம் அமைத்து அதன் மீது தூண்கள் நிறுத்தி தூண்கள் மேல் உத்திரம் அதன்மேல் பாவுகற்களை வரிசையாக அடுக்கி வைத்து மண்டபமோ கருவறையோ (உண்ணாழிகையோ) விமானமோ அமைப்பது திராவிடக் கட்டிடமுறையாகும். தூண்கள் தான் மேற்கூரையையோ அல்லது உயரமான கோபுரங்களையோ தாங்கி நிற்பனவாகும். இத்தூண்கள் பெரிதும் கல்லால் அமைக்கப் படும். தூண்கள் பெரிதாகவும் உறுதியாகவும் இருக்கும். திராவிட சிற்பத்தில் தூண்கள் சதுரமாயும், நீண்ட சதுரமாயும் வட்டவடிவமாயும், ஆறுபட்டம் அல்லது எட்டுப்பட்டங்கள் கொண்டதாயும் இருக்கும். தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் காணப்படும் தூண்கள் அழகுமிக்கவைகள். பல்லவர்கள் எடுப்பித்த கோயில்களிலும் மண்டபங்களிலும், கோபுரங்களிலும் உள்ள தூண்களின் அடியில் சிங்கம் உட்கார்ந்திருப்பது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. பாண்டிய நாட்டுக் கோயில்களில் யானை முதுகின் மீது தூண்கள் நிற்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. சில தூண்களில் யாழிகளும் குதிரைகளும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுத் தூண்கள் பல்வேறு உறுப்புகளை உடையன வாய்க் காணப்படுகின்றன. அவை அடியில் வருமாறாகும்: (1) வேதிகை (2) நாகபந்தம் (3) கால் (4) கலயம் (5) குடம் (6) பலகை (7) போதி எனப்படும். சில தூண்கள் (1) கால், (2) பதுமபந்தம், (3) கலயம், (4) தாடி, (5) குடம், (6) இதழ், (7) முனை, (8) பலகை (9) கண்டம். சில தூண்கள், 1 அசுவபாதம், 2 சதுரம், 3 நாகபந்தம், 4 கட்டு, 5 சதுரம், 6 பட்டம், 7 கட்டு, 8 சதுரம் போன்ற உறுப்புகளை யுடையது. பல்லவர் காலக் கோயில் தூண்கள் பலவகைப்பட்டனவாய் உள்ளன. நாற்புறமும் ஒரே அளவுடைய சதுரத் தூண்கள் ஒரு வகையின. அடியிலும் மேலும் பருத்து இடையில் சிறிதளவு சிறுத்து நிற்கும் சிங்க வடிவின் மீது எழுந்த தூண்கள் வேறு ஒருவகையின. முன் காலை ஊன்றி குன்றி உட்கார்ந்துள்ள சிங்க வடிவில் அமைந்துள்ள தூண்கள் மற்றொரு வகையின. சதுரத் தூண்களுள் நீள்சதுர அமைப்புடைய தூண்கள், சிம்ம விஷ்ணு மகேந்திரவர்மன் காலத்தவை. உட்கார்ந்துள்ள சிங்கத்தூண்கள் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை. சிங்க உரு அமைப்பைப் பெற்ற தூண்கள் இராசசிம்மன் காலத்தவை என்று கருதப்படுகின்றன. சதுரத் தூண்களின் கீழ் காணப்படும் தாமரை மலர்களும் வட்டங்களும் பல்வேறு அழகிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்கள் நிற்கும் மண்டபம் அல்லது வாயில் அடிப்பகுதியில் இரட்டைத் திருவாசி காணப்படும். அதனில் வளைவுக் கோடுகள் மகர மீன்கள் யாழி குதிரை முதலியன எழிலுறச் செதுக்கப்பட்ட அமைப்புப் பார்க்கத் தக்கதாகும். தூண்கள் பல்வேறு வடிவில் பல்வேறு பொருளில் அமைக்கப் பெற்றுள்ளன. (1) சதுரத்தூண்கள் (2) நீண்ட சதுரத் தூண்கள் (3) உருண்டைத் தூண்கள் (4) கனசதுரத் தூண்கள் (5) (6) ஆறு பட்டமுள்ள தூண்கள் (7) எட்டு பட்டமுள்ள தூண்கள் (8) அடியில் சதுரமாயும் அதன் மேல் ஆறுபட்டமாயும் உள்ள தூண்கள் (9) அணி வெட்டிக் கால் தூண்கள் (10) குமிழ்ப் போதிகைத் தூண்கள் எனப்பலவகைத் தூண்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் இன்றும் காணலாம். இத்தூண்கள் நாட்டுக்கு நாடு வேறுவிதமாயும் காலத்திற்குக் காலம் மாறியும், வளர்ந்தும் பரிணமித்துள்ளன. குமிழ்ப் போதிகைத் தூண்கள் பல்லவர்கள் நாட்டில் கி.பி. 600-இல் எப்படி இருந்தது. சோழ நாட்டில் கி.பி. 1000-ல் எப்படி இருந்தன பாண்டிய நாட்டில் கி.பி. 1300இல் எப்படி இருந்தது. பாண்டிய நாட்டில் நாயக்கமன்னர் ஆட்சியில் கி.பி. 1650இல் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் இலகு இணைக்கப் பெற்றுள்ளது காண்க. முற்காலத்தில் தமிழ்நாட்டில் பல்வடிவில் செங்கல்லால் சுண்ணச் சாந்து வைத்து மேலே சுண்ணச் சாந்து தீட்டிய சுதைத் தூண்களும், மணற் கல் தூண்களும் கருங்கல் தூண்களும் மரத் தூண்களும், பவளத் தூண்களும் மரத்தூண்கள் மீது வெள்ளித் தகடுகளும், பொற்றகடுகளும் பொதியப் பெற்ற தூண்களும் உள்ளன. இத்தூண்கள் பல வடிவில் சோழர் பாணி, சேரர் பாணி, பாண்டியர் பாணி, பல்லவர் பாணி, விசயநகர நாயக்கர் பாணி என்று இருந்தன. என்றாலும் அனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்த தாக இருந்தன. தமிழ்நாட்டுத் தூண்கள் ஏனைய நாட்டுத் தூண் களை விட எழிலும் ஏற்றமும் பெற்றதாய் விளங்கின. பெரியகோயில் களில் ஒரு தூணும் அருகருகே சிறுதூணும் அடுக்கடுக்காய் மூன்று விண் களும் அமைக்கப்பட்ட பெரிதும் நெடிதுமான தூண்கள் உள்ளன. அவைகளையொட்டி ஒரு குதிரை மீது ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பது போலவும் குதிரை முன் உள்ள காலைத்தூக்கிக் கொண்டு பாய்வது போலவும் கீழே ஒரு மனிதன் நிற்பது போலவும் காணப்பெறும். பெருந்தூண்கள் சிரிரெங்கம், மதுரை, திருநெல்வேலிக் கோயில்களில் காணப்படுகின்றன. சில பெருந்தூண்களில் ஒரே கல்லின் ஒரு மனிதன் வருவோர்களையும் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டிருப்பது போலவும் காணப்படுகின்றன. இது சிவபக்தர்கள் தங்கள் திருஉருவம் திகழத் தூண்கள் செய்வித்து கோயில் கட்டும்பொழுது காணிக்கையாக அளித்த தூண்கள் என்று எண்ணப்படுகிறது. தூண்கள் அசுவ பாதத்தின் மீது அமைந்திருக்கும். அதன்மீது சதுரவடிவாகவோ அல்லது வேறு வடிவாகவோ தூணை அமைத்து அதன்மேல் நாகபந்தம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய அலங்கார வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த அலங்கார வடிவம் பாம்பின் படம் போன்று இருப்பதால் இதற்கு நாகபந்தம் என்ற பெயர் எழுந்தது. நாகபந்தத்திற்கு மேல் தூண் சதுர வடிவம் பெற்றிருக்கும். அதனைப் பட்டை என்று கூறுவர். அதற்கு மேல் மூன்று கனப்பகுதியாக அமைந்திருப்பதைச் சதுரம் எனப்படும். இது சிற்ப நூல் வழக்கில் எழுந்துள்ள பெயர்களாகும். திரண்ட முதன்மையான தூண் மண்டபங்களின் வில் வளைவைத் தாங்கி நிற்பதற்காக மட்டும் மிக அபூர்வமாகச் செய்யப்படுகிறது. ஆனால் பெரிய கோயில்களில் பொதுவாக திரண்ட முதன்மையான தூண்களின் கூட்டுக் காணப்படுகின்றன. அதே கல்லிலும் ஒரு முதன்மையான கன வடிவம் உள்ளதை அணிவேட்டிடக்கால் என்று அழைக்கப்படும். உருவம் ஒரு வில்வலைவைத் தாங்கி நிற்கும் அணிவெட்டிக் காலின் உருவப்படமாகும். அடிக்கடி அணிவெட்டிக்காலின் பிரதான திரண்ட தூண் களுக்குப் பதிலாக ஒரு கற்பனை மிருகம் - அதாவது ஒரு குதிரை அல்லது ஒரு சிங்கம் அல்லது ஒரு யானையின் துதிக்கையோடுள்ள சிங்கம் (யாழி) அமைக்கப்பட்டிருக்கும். உருவம் 25 பொறிக்கப்பட்ட ஒருவகைத்தூண் மிகவும் நுணுக்கமான பகுதிகளைக் கொண்டதாகும். தற்காலத் தூண்களினின்று (உருவம் 14) முற்றிலும் வேறுபட்டுத் திகழ்கிறது. பல்லவர்களின் தூணில் முக்கியமான நுணுக்கங்கள் அதனுடைய விழிம்புகளை உடையதாய் நடுவில் மட்டும் வளைந்து காணப்படுகிறது. அது இருகன வடிவம் பகுதிகளை உடையதாயும் உருவம் 14-ல் காணப்படுவதைப் போல் மூன்றுகன வடிவம் காணப்படவில்லை. கனவடிவப்பகுதிகள் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பௌத்த சின்னங் களிலுள்ள திராவிடச் சட்டங்களை அலங்கரிக்கும் தாமரைப் பூக்களுக்கு கிட்டத்தட்ட ஒப்பானதாக இருக்கிறது. தூணின் அமைப்பு பல்லவ சகாப்தத்தின் முதன்மையான கனவடிவத்தோடு அதனுடைய உற்பத்தியைத் தெளிவாய் எடுத்துக் காட்டி நிற்கிறது. அது சாதாரணமான ஒரு சதுர உத்திரமாக அதனுடைய உயரத்தில் நடுவில் அதன்பக்கங்கள் வளைவுள்ளதாக இருக்கிறது. பௌத்த தூபிகளின் மர உத்தரங்களின் தோற்றத்தை இது எடுத்துக் காட்டி நிற்கிறது. இவைகளில் மகேந்திரவர்மப் பல்லவ மன்னன் காலத்தில் முதன்முதலாக எழுந்த கற்றூண்கள் நீள்சதுரமாகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் இல்லாமல் காணப்படும். பின்னர் எழுந்த தூண்கள் வேலைப்பாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது. முதலாம் நரசிம்மன் காலம் எழுந்த தூண்களை கொண்டதாகும். தூண்கள் இருக்கும் சிங்கங்கள் மீது அரும்பிய தூண்களாக இருக்கும் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் உருவான தூண்கள் நிற்கும் நிலையிலுள்ள சிங்கத்தின் முதுகின்மீது எழுந்த இவ்வகைத் தூண்கள் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் வைகுந்தப் பெருமாள் கோயிலிலும், மாமல்லபுரத்திலும் காணலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முன்மண்டபம் நாயக்கர்காலத்தில் கட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு யானையின் முதுகின் மீது தூண்கள் எழுப்பி அதன்மீது மரத்தினால் கொட்டகை போடப்பட்டிருக்கிறது. இசைத் தூண்கள் பாண்டிய நாடு தமிழ் வளர்த்த பழம்பெரும் நாடு என்று நமது சமயச் சான்றோர்கள் புகழ்ந்து கூறுவர். ஆனால், நமது புலவர்கள் பாண்டிய நாடு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வளர்த்த முதுபெரும் நாடு என்று சிறப்பித்துக் கூறுவர். பாண்டிய நாட்டில் முற்காலத்தில் முத்தமிழ் வளர்க்க முப்பெரும் சங்கங்கள் இருந்தன. சிவபெருமான் முதன்முதலாகத் தென் பாண்டி நாட்டிலேதான் முத்தொழிலைக் காட்டும் முப்பெரும் தாண்டவத்தை ஆடி, ஆடவல்லான் என்ற பெயரைப் பெற்றான். சிவபெருமான் நெல்லையில், செப்பறையில் ஆதியில் ஆடிய முனிதாண்டவம் காளிகா தாண்டவம் என்று கூறப்பெறும். இங்குதான் ஆடற்கு உரிய இசைகளும், இசைக் கருவிகளும் எழுந்தன. ஒப்புவமை இல்லாத குழல் தூண்களும், கல் நாதசுரமும் இசைப் படிமங்களும் இசைத் தூண்களும் இப் பழம்பெரும் பாண்டிய நாட்டில் உள்ளன. கருங்கல்லில் கண்ட கவின் பெறும் இசைக் கருவிகள் கால வேற்றுமையாலும் தட்பவெட்ப மாற்றத் தினாலும் அரும்பும் அழிவுகளையெல்லாம் எதிர்த்து நின்று இசைப் புலவர்களால் வரையறுக்கப்பட்ட தமிழ் இசை நுட்பங்களை இன்றும் நமக்கு எடுத்துக் காட்டும் நந்தா விளக்காய் ஒளிர்கின்றன. இந்தியாவில் எப்பகுதியிலும் ஏன்? உலகிலே எங்கும் இத்துணை அற்புதமான பாடும் - சிறந்த கற்றூண்களைக் காணவே முடியாது. எங்காவது ஒன்றிரண்டு தூண்கள் தென்பட்டாலும் அவைகள் எதுவும் பாண்டிய நாட்டுப் பாடும் கற்களுக்கு ஒலி நிறையிலோ எழில் நிறையிலோ ஒப்புவமை கூறக் கூடியதாக இருக்கவே முடியாது. கைவண்ணம் வாய்ந்த - கற்றுணர்ந்த தமிழ் நாட்டுச் சிற்பிகள், எதிரொலி கிளர்த்தும் கருங்கல் வகைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவைகளை நன்கு பரிசோதித்து அதனின்றே இசைப் படிமங்களையும், இசைத் தூண்களையும் உருவாக்கி யுள்ளார்கள். இந்த இனிய ஒலியைக் கிளர்த்தும் கற்களினின்று ஒரு மெல்லிய துண்டை எடுத்து அதைப் பூதக் கண்ணாடியால் பரிசோதித்துப் பார்த்தபொழுது அதில் சில அபூர்வமான குறிகள் காணப்படுகின்றன; இதன் மூலம் எத்தகைய கற்கள்தான் இசைத் தூண்களை உருவாக்குவதற்கு உபயோகப் படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அறிய முடிந்தது என்று அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். தட்டினால் பல்வேறு சுர ஒலிகளை எழுப்பும் தூண்களையோ, படிமங்களையோ அமைக்கச் சாதாரணமான கற்களை உபயோகப்படுத்தவில்லை என்றும் அதற்கு உரிய கற்கள் வேறு உள என்றும் இதனால் அறியப்படுகின்றன. இசைத் தூண்கள் பலவிதமான அழகு தரும் பலப்பல வடிவங்களில் பல வரிகளையும், பல உருட்டுக் கம்பிகளையும் உடையதாய்ப் பெரிய அளவில் காணப்பட்டாலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் இணையிலாத எடுத்துக் காட்டாக இலங்குவன நமது பாண்டிய நாட்டிலுள்ள மதுரை, திருநெல்வேலி, ஆழ்வாழ் திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பக ராமநல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம் முதலிய இடங்களில் உள்ளனவாகும். இஃதன்றி திருவானைக்காவு, தாடிக் கொம்பு, தாராசுரம், திருவனந்தபுரம், திருப்பதி, தாட்பத்திரி, லேபாக்சி, ஹம்பி, விஜயநகர், பெங்களூர், சாமராஜன் பேட்டை முதலிய இடங்களிலும் இசைத் தூண்களும் இசைப் படிமங்களும் உண்டு. அவைகள் பாண்டிய நாட்டின் பாடும் கற்தூண்களுக்கு ஒப்பாகா. இசைத் தூண்கள் எல்லாம் உயர்ந்த இன்னிசையை ஒன்று போல ஒலிக்கும் தன்மையுடையன என்று சொல்வதற்கில்லை ஒரு சில தூண்களின் ஒலிகள் மந்தமானதாக இருக்கின்றன; ஒரு சில தூண்கள் மூன்று அல்லது நான்கு சுரங்கள் மட்டிலும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன. சில தூண்கள்தான் தெளிவாகவும் சுத்தமாக வும் சிறப்பாகவும் கணீர் என்று ஒலி எழுப்புவனவாய் விளங்குகின்றன. இந்தக் கல்லிசைத் தூண்களின் நிறம் கறுப்பாகவோ வெள்ளையாகவோ, சாம்பல் நிறமாகவோ இருக்கும்; சில சந்தன நிறம்போலவும் இருக்கின்றன. இவை அனைத்தும் வடிவில் சதுரமாகவும் புரிகள் உள்ளதாகவும் வட்டமானதாகவும் அறுகோணம் எண்கோணம் போன்ற உருவம் உள்ளனவாகவும் காணப்படுகின்றன. பொதுவாக இத்தூண்கள் மூன்று அடிக்குமேல் ஆறு அடிவரை உயரம் உள்ளனவாய் இருக்கின்றன. இசைத் தூணிற்குக் கல் தேர்ந்தெடுக்கும் சிற்பி மிகக் கவனமாக நுணுகி ஆராய்ந்து ஏற்ற கல்லை மீண்டும் உளியால் தட்டியும், கொட்டியும் பார்த்துக் கல்லின் தரம் ஒலியின் தன்மை முதலியவைகளை ஆய்ந்து சிற்ப நூல் விதிப்படி தேவையற்ற பகுதிகளை உளியால் உடைத்து எறிந்துவிட்டு, அழகு பொலியும் பல்வேறு சுர ஒலிகள் எழத்தக்கதாக தூணை உருவாக்குகிறான். இத் தூணில் ஒரு சிறிய பகுதியும் உடைந்துவிடாமல் மிகக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து உருவாக்கிவிடுகின்றான். கரடுமுரடான கற்களையும் சிற்பி தன் கைவண்ணத்தால் செதுக்கி மெருகுதீட்டிய உலோகப்படிமம்போல தொட்டுப் பார்த்தால் பளிங்கு போல மழமழவென்றிருக்கும்படி செய்துவிடுகின்றான். இசைத் தூண்களைத் தட்டினால் ஓசை எழும். ஆனால் சில இசைத் தூண்களில் எழும் நாத ஒலி, எதிரே இருக்கும் இசைத் தூண்களையும் தாக்கி அவைகளை அதிர வைக்கின்றன. அதிரும் அத்தூண்களை விரல்களால் தொட்டுப் பார்த்தால் தூண்களின் ஒலி அசைவை நாம் உணர முடியும். ஆனால் தூணின் நடுப்பாகத்தில் இந்த ஒலி அசைவு எழுவதில்லை. அது தூணின் அமைப்பு முழுவதையும் தாங்கிக்கொள்வதற்கும், உறுதியைக் கொடுப்பதற்கும் உறு துணையாய் மட்டும் உதவுகிறது. அது இசைச் சுரங்களை எழுப்ப முடியாதவாறு கனமானதாகச் செய்யப்பட்டிருக்கிறது. சில இசைத் தூண்கள் எப்பகுதிகளை (அடி முதல் நுனிவரை)த் தட்டினாலும் வெவ்வேறு சுரங்களைத் தருகின்றன இந்த இசைத் தூண்கள் ஒலிகளை, தூண்களின் விளிம்புகளில் அல்லது சுற்று வட்டத்தில் நெடுகப் பகிர்ந்து கொடுக்கின்றன. மதுரை சுசீந்திரம் கோயில்களில் உள்பக்கம் சுற்று வரிசையில் இசைத் தூண்களின் இரண்டாவது வரிசையும் உள்ளன. இசைத் தூண்களைச் செய்யத் தொடங்குமுன் சிற்பி, தூண் களின் நீளம் அகலம் ஆகியவைகளை அளந்து, ஆய்ந்து இசையை எழுப்புவதற்கு ஏற்ற உருவ அமைப்பைத் தீர்மானித்துக் கொள்வர். அப்பால் சிற்பி கல்லைத் தேர்ந்தெடுத்து அதனைச் செதுக்க ஆரம்பிப்பார். அவர் அக் கல்லினின்று சரியான சுர ஒலியை எழும்பும் நிலை வரும்வரை அக் கல்லைத் துண்டுதுண்டாகப் பேர்த்துத் தூணின் எழில் உருவைக் காண்பார். சில சமயம் தூணின் சில பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்பொழுது அதில் (தூணில்) நல்ல சுர ஒலி எழுந்துவிட்டால் மேற்கொண்டும் தூணில் உளியை உபயோகித்து ஒலியின் ஓசையைக் குறைத்துவிடாமல் அப்படியே தூணை வைத்து விடுவதும் உண்டு. இவ்வாறு எழும் நிலை பெரிதும் ஏற்படுவதில்லை ஏற்பட்டால் சிற்பியின் கணிதத்தில் உள்ள குறைபாடு என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இசைத் தூண்களின் நடுவிட்டம் எல்லாத் தூண்களிலும் ஒரே அளவுடையனவாகவே இருக்கின்றன. இவைகள் தட்பவெப்ப நிலைகள் தாக்கவொண்ணாதவாறு நன்கு ஆய்ந்து அமைக்கப் படுகின்றன. இவைகளுக்கு எளிதில் எவ்விதமான பழுதும் ஏற்படுவது இல்லை. பழுதுபார்ப்பதும் தேவைப்படுவதில்லை இவைகள் எக்காலத்தும் தொடர்ந்து ஒரே அளவில் இனிய ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. எனவே யாழ், வீணை, தம்புரு, மத்தளம், உடுக்கை, குழல் போன்ற இசைக் கருவிகளைப்போல் அடிக்கடி தந்திகளை முறுக்கவோ, திருகவோ, வார்களை இறுக்கவோ, பட்டைகளைச் சுருக்கவோ, மாவு போன்ற பொருள்களை ஒட்டவோ, துவாரங்களைப் பெருக்கவோ குறுக்கவோ வேண்டிய அவசியம் எழுவதில்லை. மழை காலத்து மத்தளம் போல் இதன் ஓசை என்றும் குன்றுவதில்லை. என்றும் எக்காலத்தும் கணீர் கணீர் என்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது. செண்பகராம நல்லூர்த் தூண்குழல்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டத்தில் செண்பக ராம நல்லூர் (நாங்குநேரியிலிருந்து 5 கல் தொலைவில் உள்ளது) என்று ஒரு சிற்றூர் இருக்கிறது. இங்கு ஒரு சிறு பெருமாள் கோயில் உண்டு. இதன் சிற்பச் சிறப்பு மிகப் பெரியது; போற்றுதற் குரியது. இக் கோயிலில் உள்ள கருங்கல் தூணில் குடைந்துள்ள ஒரு இசைக்குழல் அதிசயமான ஒரு சீரிய சிற்பப் படைப்பாகச் சிறந்து இலங்குகிறது. இத் தூண்குழல் கோயிலின் திருவறையின் தென் மேற்கு மூலையில் இருக்கிறது. இத் தூணில் குடைந்திருக்கும் துவாரம் அடிபெருத்தும் நுனி சிறுத்தும் குவிந்தவண்ணமாக தூணின் நடுப்பாகத்தில் காணப்படுகிறது. இதனால் இக் குழலை நின்றுகொண்டு எளிதில் ஊதமுடிகிறது! ஆழ்வார் திருநகரியிலுள்ள தூணில் தோண்டப்பட்டிருக்கும் குழல் துவாரம் அடியில் இருப்பதால் எவரும் அதை நின்றுகொண்டு ஊதமுடியாது; தரையில் படுத்துக்கொண்டுதான் ஊதமுடியும். அதோடு அக் குழலில் உட்பக்கத்தை உற்றுப் பார்க்கவும் முடியாது. ஆனால் இக் கோவிலிலுள்ள தூணில் காணப்படும் குழலின் உட்பக்கத்தில் மின்விளக்கின் ஒளியைப் பாய்ச்சி நன்றாகப் பார்க்க முடிகிறது. இத் தூண் குழல் துவாரம் கீழிருந்து மேல்நோக்கும் வண்ணம் சற்றுச் சாய்வாகச் செய்யப்பட்டிருக்கிறது. குழலின் உட்பக்கம் மென்மையாகவும் வழவழப்பாகவும் சுத்தமாகவும் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் இந்த வட்டவடிவமான துவாரத்தின் குறுக்களவு முக்கால் அங்குலமும் மற்றொரு பக்கத்தில் துவாரத்தின் குறுக்களவு ஒரு அங்குலத்தில் இருக்கிறது. குழலின் இரு நுனிகளும் வட்ட வடிவமாக இருக்கின்றன. இத் தூணில் ஒரு பக்கம் ஊதினால் சங்கொலியும் மற்றொரு பக்கம் ஊதினால் எக்காள ஒலியும் பொங்கி எழுகிறது. இது இந்தியாவிலே ஒரு அரிய - அற்புதமான ஒரு உற்பவமாகும். இத் தூண் குழலின் நீளம் ஒரு அடி. இக் குழல், தூணில் கீழ் - மேலாக கீழிருந்து சற்றுச் சாய்வாகச் - செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கிறது. இக் குழலின் உட்பகுதியில் சங்கின் உள்ளே அடுக்கடுக்காய் இருக்கும் புரிகள் போல் இரு மடிப்புகள் காணப்படுகின்றன. இந்த மடிப்புகள் குழலின் ஒருபக்கம் நின்று ஊதும்பொழுது பலவிதமான கரஒலிகளை ஒலிப்பதற்கு உகந்தவண்ணம் உருவாக்கப்பட்டிருக் கிறது என்று கருதப்படுகிறது. ஒத்துணர்வு ஓசையுடைய இரு நுனிகளிலிருந்தும் ஊதும்பொழுது பலவிதமான சுரங்கள் பிறக்கின்றன. இரு நுனிகளிலும் இருவர் நின்றுகொண்டு மாறி-மாறி ஊதினால் அதன் விளைவு மிகப் பிரமாதமானதாக இருக்கிறது. இந்த அற்புதமான தூண்கள் ஆழ்வார் திருநகரீ, செண்பகராம நல்லூர் ஆகிய இரு ஊர்களைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. இவ்வரிய சிற்பக் கருவூலங் களைப் படைத்த பழம்பெரும் பாண்டியநாட்டுச் சிற்பிகளின் பெருமை இன்று மட்டுமல்ல, பல்லாயிரம் ஆண்டுகள் வரை - பாரதநாடு மட்டுமல்ல - பார் முழுதும் ஏற்றிப் போற்றுதற் குரியது. ஆழ்வார் திருநகரி இசைத்தூண்! திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி ஒரு உயர்ந்த வைணவத்தலமாகும். இங்குள்ள ஆதிபிரான் கோயில் பிரசித்திபெற்ற ஒரு திருக்கோயிலாகும். இக் கோயிலின் வாயிலைக் கடந்ததும் உள்ளே கண்ணாடி மண்டபம் வாகன மண்டபம், வசந்த மண்டபம் - முதலியவைகள் காணப்படுகின்றன. இங்குள்ள வசந்த மண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள இவ்விசைத் தூண் களை ஒரு சிறு மூங்கிற் குச்சைக் கொண்டோ அல்லது சிறிய கல் துண்டைக் கொண்டோ தட்டினால் இன்னொலிகள் எழுகின்றன. இசை வல்லுநர்கள் இதனைத் தட்டிப் பார்த்து 3 சுரங்களும் பிறக்கின்றன என்று கண்டுள்ளார்கள். இதில் எழும் சுரஒலிகள் மணி ஒலிபோல் கணீரென்று ஒலிக்கின்றன. இத் தூண்களில் எழும் சுரங்களைக் கொண்டு தமிழ்மறையைப் பாடமுடியும் என்று முடிவு கட்டப் பட்டுள்ளது. மேலும் இங்குள்ள ஒரு தூணில் இரு துவாரங்கள் இடப் பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் இருவர் நின்று கொண்டு மாறிமாறி ஊதினால் செண்பகராமநல்லூர் குழல் தூணைப்போல் ஒரு பக்கம் எக்காளத் தொனியும், மற்றொருபக்கம் சங்கு ஒலியும் எழுகின்றன. எனவே, இத் தூண்கள் இசைத்தூண்கள் வரிசையில் மட்டுமல்ல, குழல்தூண்கள் வரிசையிலும் சேர்ப்பதற்கு உரியதாகச் சமைக்கப்பட்டுள்ளன. இக் கோயிலில், கல்லால் செய்யப்பட்ட ஒரு நாதசுரமும் இருக்கிறது. இது இன்றும் ஊதப்பட்டு வருகிறது. நமது நாட்டிலுள்ள மூன்று - நான்கு கல் நாதசுரத்தில் இதுதான் சிறப்புடையது. திருநெல்வேலி இசைத்தூண்கள்! திருநெல்வேலி, தென்பாண்டிநாட்டின் தலைநகர், பாண்டிய மன்னர்கள் இதனை இரண்டாவது தலைநகரமாகக் கொண்டிருந்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களுக்கு இது தலைநகரமாகவும் இருந்தது. இந்த மாவட்டத்திலுள்ள கொற்கை, பாண்டிய நாட்டின் துறைமுகமாக விளங்கியது. இங்கு பாண்டிய மன்னர்களின் சகோதரர்களோ, மக்களோ இளவரசராய் (கொற்கையில்) இருந்து வந்தனர். திருநெல்வேலி நகரின் நடுப்பகுதியில் மதுரையைப் போன்று அழகிய - பெரிய கோயிலும், இரத வீதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நகர் தண்பொருனை ஆற்றின் மேல்கரைக்கு அண்மையில் சிறப்புற்று விளங்குகிறது. இங்குள்ள கோயிலில் நெல்லையப்பரும் - காந்திமதி அம்மையும் பிரதான தெய்வங்களாய் விளங்குகின்றனர். இங்குதான் பஞ்சசபையில் ஒன்றான செப்பறை (தாம்பிரசபை) இருக்கிறது. அதில் சிவபெருமான் படைப்புத் தொழிலைக் காட்டும் முனிதாண்டவத்தை முதன் முதலாக உலகில் ஆடிக் காட்டியதாக ஐதீகம் உண்டு. இதனால் தில்லைத் தாண்டவமூர்த்தியை தென்பாண்டிய நாட்டான் என்று மணிவாசகப் பெருமான் பாடி மகிழ்ந்துள்ளார். எனவே, நெல்லைக் கூத்தன்தான் தில்லையில் ஆடினான் என்பதை நமக்கு நினைவூட்ட, தில்லையுட்கூத்தனே! தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறப்பறுப்பானே என்று தமிழ்மறையிலே மணிவாசகப் பெருமான் உள்ளம் உருகப்பாடி இருப்பதை இப்பொழுது நம்மால் நினையாதிருக்க முடியவில்லை. தென்பாண்டி நாட்டை சிவலோகம் என்று தேவாரம் புகழ்வதற்கு திருநெல்வேலி முக்கிய காரணமாய் மிளிர்கிறது. இங்குள்ள ஆலயம் மிகத் தொன்மையானது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பெருமையை உடையது. இதன் நீளம் 850 அடி, அகலம் 756 அடி அம்மன் கோயிலும் அருகே இதே அளவில் அழகுடன் பொலிகிறது. இங்கு மணிமண்டபம், மகாமண்டபம் அர்த்த மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், யாக சாலை மண்டபம் கிளிக்கூடு மண்டபம், சங்கிலி மண்டபம், தெப்ப மண்டபம் போன்ற பல மண்டபங்கள் உண்டு. நெல்லையப்பர், காந்திமதி, கோவிந்தன், சந்திரசேகரன் தட்சணாமூர்த்தி, ஆடவல்லான் முருகன், சிவலிங்கம், அஷ்டலட்சுமி போன்ற பல தெய்வ உருவங்களும் உண்டு! இங்குள்ள நெல்லையப்பர் கோயிலின் மணி மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில்தான் மாநிலம் போற்றும் பாண்டிய நாட்டின் பண்ணிசைக்கும் தூண்கள் கெம்பீரமாக உயர்ந்து எழிலுடன் நிற்கின்றன. இங்கு கொல்லம் 721-ஆம் ஆண்டில் பாண்டிய நாட்டையாண்ட ஜயதுங்க நாட்டை வென்று மண்கொண்ட பூதல வீரசங்கிலி வீரமார்த்தாண்ட வர்மன் திருப்பணியாக அறுபத்து நான்கு கால்கள் கொண்டதாய் ஒரு அழகிய மண்டபத்தை அமைத்துள்ளான். திருவறையின் முன்பக்கம் இரு இசைத் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இத் தூண்கள் இம்மண்டபத்தையும் இக் கோயிலையும் அணி செய்பவைகளாய் இலங்குகின்றன. இந்த இசைத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே பெருங்கல்லால் செய்யப்பட்டதாகும். நடுவில் பெரிதாக ஒரு தூணும் அதைச் சுற்றிலும் உருவிலும் திருவிலும் உயரத்திலும் வித்தியாச மான 48 சிறு தூண்கள் போன்ற உருட்டுக் கம்பிகள் இணைக்கப் பட்டாற் போன்று செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் முன்பக்கம் இவ்விதமான இரு பண்ணிசைக்கும் பணித் தூண்கள் பாரிய மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த அற்புதமான அழகிய இசைத் தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிறிய உருட்டிலும் ஒரு சிறு குச்சைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு சுரம் எழுமாறு இத்தூண்களை அமைத்திருப்பது வியப்பையும் மகிழ்ச்சியையும் எழுப்புகிறது. ஆனால், இம்மண்டபத்தை அமைத்தவர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சிய கூன்பாண்டியன் என்று இவ்வூர்த்தலப்புராணம் கூறுகிறது. இக்கோயிலின் மணி மண்டபத்தை அலங்கரிக்கும் இசைத் தூண்கள் ஆழ்வார் திருநகரி இசைத் தூண்களை விட அழகாகவும் கெம்பீரமாகவும் காணப்படுகின்றன. இதே போன்று இரு இசைத் தூண்கள் அம்பாள் சந்நிதியிலும் உள்ளன. இவைகள் நான்கும் சிறந்த இசைத்தூண்களாய் அற்புத நாதத்தை அள்ளிச் சொரி கின்றன. தூணில் உள்ள சிறு உருட்டுக் கம்பிகளில் வெவ்வேறு சுரம் எழுவதற்கு நமது சிற்பிகள் இங்கு கையாண்டிருக்கும் முறை எங்கும் காணமுடியாத ஒரு அலாதியான அரிய முறையாகும். உருட்டுக் கம்பிகள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய அணில் ஏறிப் பாய்வது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தூணில் இருக்கும் அணிலை அடுத்த தூணில் உள்ள அணில் எட்டிப்பிடிக்க முயல்வது போல் செய்யப் பட்டிருக்கிறது. இது சுரங்களின் தொடர்பைக் காட்டச் சிற்பிகள் கையாண்ட ஒரு அரும்பெரும் குழூஉக் குறியாகும் என்னே! இந்தப் பாண்டிய நாட்டு சிற்பிகள் கண்ட கல்லைக் கனிவிக்கும் கவினுறும் கைவண்ணம். இத் தூண்கள் ஏனைய தூண்களைப் போன்று மேற்கூரையை மட்டும் தாங்கி நிற்கும் தூணாக நிற்கவில்லை. ஏழு சுரங்களை எழுப்பும் பண்ணிசைக்கும் பாட்டுத் தூண்களாக மட்டும் இலங்கவில்லை; எழில்மிக்க சிற்பச் செல்வங்களையுடைய சீரிய தூண்களாகவும் மிளிர்கின்றன. இவை நல்ல அகலமும் உயரமும் உடையதாய் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் இசையொலிகளை எழுப்பும் உருட்டுக் கம்பிகள் தூண்களை அணிபெறச் செய்கின்றன. தூண்களின் உச்சியில் காணப்படும் பதுமபந்தம், கலசம், தாடி, குடம், இதழ்முனை, பலகை, கண்டம் போதிகை அதில் உள்ள மதனை, பூமுனை, நாணுதல் போன்ற உறுப்புகளும் உச்சி அலங்காரங் களும் பல்வேறு பூக்களும் யாழிகளும் பிறவும் சிற்பச் சிறப்பை மேலும் உயர்த்துகின்றன. இவ்விசைத் தூண்கள் கோயிலின் கவினுறு கலைத் தோற்றத்தைப் பூர்த்தி செய்யும் அணியில் தனது பங்கைக் குறைவற நிறைவேற்றும் குன்றா விளக்காய் ஜொலிக்கின்றன. சுசீந்திரம் இசைத் தூண்கள் பண்டும் இன்றும் பாண்டிய நாட்டில் ஒரு பகுதியாகக் கருதப் பெற்றது சுசீந்திரம். இங்குள்ள தாணுமாயன் கோயிலிலும் இசைத் தூண்கள் உள்ளன. இக்கோயிலின் முன்னுள்ள பெரிய மண்டபத்தை உருவாக்கியவர்கள் தேரூர் முத்துச்சாமிப்பிள்ளை வகையினர் ஆவார்கள். இம் மண்டபம் கி.பி. 1548ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப் பட்டதாக இக் கோயில் சாசனங்கள் கூறுகின்றன. இங்கு வடக்குப் பிரகாரத்தில் காலபைரவர் சந்நிதிக்கு எதிரே இசைத் தூண்கள் நான்கு காணப்படுகின்றன. வடபக்கத்துத் தூண்கள் ஒவ்வொன்றி லும் 24 சிறு உருட்டுக் கம்பிகள் உள்ளன. தென்பக்கத்துத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 35 உருட்டுக் கம்பிகள் உள்ளன. இந்த உருட்டுக் கம்பிகள் அடியில் சதுரமாகவும் மேலே எட்டுப் பட்டைகள் உள்ளன. வாயும் புரிகள் உள்ளனவாயும் இருக்கின்றன. இந்தத் தூண்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன், மிகக் கெம்பீரமாகக் காணப்படுகின்றன. இக் கோயிலில் உள்ள ஏட்டுச் சுவடிகளில் இம் மண்டபமும் இசைத் தூண்களும் கி.பி 1798 ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பட்டதாகக் காணப்படுகின்றன. இந்த இசைத் தூண்கள் சுத்தமான சுர ஒலிகளைத் தருகின்றன. இதில் சுர ஒலிகளைச் செவிமடுத்த இசைப் புலவர்கள் இத்தூண்களில் பிறக்கும் நாதம் சுத்தமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன என்று இயம்பு கின்றார்கள். நமது சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுப் பகுதித் துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் திரு. கே.கே. பிள்ளை அவர்கள் சுசீந்திரம் கோயில் என்ற ஆங்கில நூலில், இசையின் இனிமையிலும் சிற்ப நுட்பங்களிலும் இந்த இசைத் தூண்களுக்கு நிகரான தூண்கள் வேறு எங்கும் பார்ப்பது அரிது என்று புகழ் மாலை சூட்டியுள்ளார்கள். நான் அறிந்த மட்டில் இது திருநெல்வேலி இசைத் தூண்களுக்கு ஒப்பானவை. பாண்டிய நாட்டின் இசைக் கருவூலங்களில் இணையற்ற மணிகள் பதித்த அணிகளாக இந்த இசைத் தூண்களும் மதிக்கத்தக்கனவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மதுரை இசைத் தூண்கள் மதுரை, பாண்டிய மன்னர்களுக்கு இறுதியாய் விளங்கிய கோநகர் - பாண்டிய நாட்டின் அகநகர் - தலைநகர், மதுரை. (கூடல்) பாண்டிய நாட்டின் புறநகர்-துறைமுகப்பட்டினம் கொற்கை, மதுரை மாநகர், ஆலவாய் என்றும் நான்மாடக் கூடல் என்றும் போற்றும் பெருமை வாய்ந்தது! தேனுறை தமிழும் திருவுறை கூடலும் என்று தமிழையும் மதுரையையும் சேர்த்துக் கல்லாடம் புகழ் மாலை சூட்டுகிறது. மதுரை நகரின் நடுவே மாண்புற நிற்கும் திருக்கோயில் தாமரையின் பொருட்டுப் போலவும் சுற்றிலும் அடுக்கடுக்காய் அமைந்துள்ள தெருக்கள் தாமரையின் இதழ்கள் போலவும் அமைந்துள்ளது என்று தமிழ் இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றது. மதுரையின் நகர், அமைப்புத் திறன் இன்றைய மேனாட்டு விற்பன்னர்களால் வியந்து பாராட்டப் பெறுகிறது. உலகிலே மதுரை மாநகரின் அற்புத அமைப்பிற்கு ஒப்பான நகர் எங்கும் காணமுடியவில்லை என்று சிற்ப நூல் வல்லவர்கள் பலரும் சிறப்பித்துக் கூறிவருகின்றார்கள். இந் நன்னகர் வரலாற்றுப் புகழ்பெற்ற பொன்னகர் ஆகும். மதுரைதான் தெய்வத் திருவிளையாடல்கள் பலவும் நிகழ்ந்த சீரிய இடமாக மதிக்கப்படுகிறது. இந்நகரின் நடுவே நனி சிறந்திலங்கும் மீனாட்சி சுந்தரேவரர் கோயிலுக்கு ஒப்பான அழகிய பெருங்கோயிலைப் போல் நாம் எங்கும் காண முடியாது. இது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு அப்பால் இந்நாட்டை ஆக்கிரமித்த நாயக்க மன்னர்களால் பேணி வளர்க்கப்பட்டது. இத் திருக்கோயிலுக்கு நான்கு பக்கமும் உயர்ந்த நான்கு மதில்களும் நான்கு பெரிய வாயில்களும் அதன்மேல் நான்கு பெரிய இராஜகோபுரங்களும் அணிபெறத் திகழ்கின்றன. மதிலுக்கு உள்ளே இருக்கும் திருக்கோயில் 830 அடி நீளமும் 730 அடி அகலமும் உள்ளது. இதற்குள்ளே மணிமண்டபம், மகாமண்டபமும் ஆயிரக்கால் மண்டபம் முதலிய பல மண்டபங்கள் அடங்கியுள்ளன. இங்குள்ள சிற்ப வடிவங்கள் சிறப்பு மிக்கவைகளாகும். ஓங்கி உயர்ந்து நிற்கும் ஒற்றைக் கல் தூண்களில் செதுக்கப்பட்ட சிவ நடனம், பத்திரகாளி வீரபத்திரர் போன்ற சிற்பச் செல்வங்கள் கண்கொள்ளாக் காட்சியாக இலங்குகின்றன. இங்குள்ள எண்ணற்ற திருவிளக்குகள் சிற்பக் கலைஞர்களுக்கு நல்ல கலை விருந்தளிப்பனவாய்த் திகழ்கின்றன. இக் கோயிலை எழில் பெறச் செய்யும் பொற்றாமரைக் குளம் தமிழ் மொழியின் வரலாற்றோடுப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. மதுரைக்குப் பெருமைதரும் வைகை நதி தமிழர் வரலாற்றோடு இணைந்து கிடக்கின்றது. இங்குள்ள மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலே இசைப் புலவர்கள் அனைவராலும் போற்றப்படும் ஐந்து அறிய இசைத் தூண்கள் மிகக் கெம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றன. எனது ஆராய்ச்சியில் இங்கு இதைப் போன்ற பல இசைத் தூண்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவைகள் நமது கவனக் குறைவால் பழுதுபட்டுப் போயிருக்கலாம், அல்லது நமது பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்த கலைக்கண்ணற்ற மிலேச்ச மன்னர்களால் நிர்மூலஞ் செய்யப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று இங்கு காட்சி அளிக்கும் இசைத் தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரிய கல்லினின்றே செதுக்கப்பட்டிருக் கின்றது. இத் தூணின் நடுப்பாகம் பெருத்து இருக்கிறது. சுற்றிலும் சிறு தூண்கள் போல் 22 உருட்டுக் கம்பிகள் இணைந்து அணிபெறத் திகழ்கின்றன. தூண் முழுவதும் ஒரே கல்லில் ஆக்கப் பட்டிருக்கிறது என்பது பலருக்கும் பேராச்சரியம் விளைவிக்கிறது. இதன் நடுவே ஒரு பெரிய தூண் நிற்பதுபோலவும் அதைச் சுற்றிப் பல சிறிய தூண்கள் இணைந்து நிற்பதுபோலவும் செதுக்கப் பட்டுள்ளது. சிறிய தூண்கள் மூன்று அங்குல கனத்தில் வட்டம், முக்கோணம் சதுரம், வளைவு, எட்டுப் பட்டை முதலிய பற்பல வடிவங்களில் காணப்படு கின்றன. நடுவில் உள்ள பெரிய தூணின் அடிப்பாகம் சுமார் 5 அடி சதுரமும் 9 அடி உயரமும் இருக்கலாம். இந்த இசைத் தூணை ஒரு சிறிய குச்சைக் கொண்டோ கல்துண்டைக் கொண்டோ தட்டினால் அது மெல்லிய நாதத்தை எழுப்புகிறது. இதில் எழும் சுரத்தின் கிளைச்சுரங்கள் பக்கத்தில் நிற்கும் இசைத் தூண்களிலிருந்தும் தாமாகவே ஒலிக்கின்றது. இத் தூண்களில் துணைக் கருவிகளி லிருந்து தோன்றும் நாத ஒலியைப் போல் சுரங்களைத் தரக்கூடிய தந்திரமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தூணின் உள்ளே சுருள் சுருளான காலி இடம் உள்ளன. இத் தூண்களில் மிகச் சுத்தமாக 4 வகைச் சுரங்களும் அமுதம்போல் பிறக்கின்றன. இதனை மேனாட்டு இசை விற்பன்னர்கள் பியோனாக் கம்பங்கள் என்று புகழ்ந்து போற்று கின்றார்கள். வடநாட்டு இசை வல்லுநர்கள் ஜகம் ஏற்றும் ஜலதரங்க தம்பங்கள் (அலை எறி நீரியம்) என்று கூறுகிறார்கள். தமிழ் நாட்டு இசை மேதைகள் கல்லில் செய்யப் பெற்ற வில்யாழ் என்று புகழ்மாலை சூட்டுகின்றார்கள். தமிழ் நாட்டுத் தெய்வக் கலைஞனாகப் போற்றப் பெறும் சிற்பியின் அற்புதக் கைவண்ணத்தால் தூண்களிலே அன்றி சிற்ப வடிவங்களிலும் இன்னிசை எழுப்பப்பட்டன. மதுரைக் கோயிலில் உள்ள காதல் தெய்வமான இரதிதேவியின் சிலையில் விரல், கை முதலிய உறுப்புகளைத் தட்டினால் ச, ரி, க என்ற மூன்று சுரங்கள் எழுகின்றன. இதேபோன்ற திருவானைக் கோவில் உள்ள ஆடவல்லானின் செம்புப் படிமத்தில் கூட சில சுரங்கள் அரும்பு கின்றன. சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்ட மலர்களில் இதைப்பற்றி சில அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அப்பால் நமது தமிழ்நாட்டு இசை வல்லுநர்கள் குறிப்பாக நமது மதிப்பிற்குரிய இசைமேதை பி. சாம்பமூர்த்தி அவர்கள் இசைத் தூண்கள் அனைத்தையும் நேரிற் போய்ப் பார்த்துத் தனது கட்டுரைகளிலும் நூலிலும் இவைகளை விளக்கி இதற்கு மகோன்னதமான நிலையை அளித்துள்ளார்கள். இக் கற்களில் 4 சுரங்களும் எழுவதை, கண்டும் கேட்டும் பரிசித்தும் இக் கலை உயிர்க்கலை என்று உறுதிப் படுத்தியுள்ளார்கள். போதிகைகள் கட்டிடத்தின் அடித்தளத்தின் மேல் தூண்கள் நிறுத்தப் பெற்றிருக்கும். தூண்களுக்கு மேல் உள்ள ஒரு சிறு பகுதி போதிகை (Capital) எனப்படும். தூணின் விட்டத்தைவிட போதிகையின் விட்டம் பெரிதாக இருக்கும். போதிகை அகலமாக அமைந் திருப்பதால், அதன் மீதுள்ள உத்திரத்தின் பளுவையும், மேற்கூரையின் பளுவையும் தாங்க முடிகிறது. மேலும் இது பார்வைக்கு எழிலுறச் செய்யப் பெற்றுள்ளது. விளக்கமாகக் கூறுவதனால் தூணின் மேல் - உத்திரத்தின் கீழ் கட்டிடத்தின் பளுவைத்தாங்கி நிற்கும் ஒரு உறுப்பு - போதிகை கட்டிடச் சிற்பத்தின் வழங்கும் ஒரு சொல்லாகும். தாமரை மொக்கு, மணி, பனை ஓலை போன்ற வேலைப் பாடுகள் பொதிந்த போதிகைகள் கி.மு. 2000-ஆம் ஆண்டளவில் எகிப்தில் எழுந்துள்ளன. மலர்ந்த தாமரை, சிக்கலான மடல்கள் (Lobes) நீர்த்தாவரங்கள் தேவதைகளின் திருமுகங்கள் முதலியன திகழும் போதிகைகள் எகிப்தில் கி.மு. 500-இல் அமைந்துள்ளன. திராவிட மக்கள் கி.மு. 4000 -ம் ஆண்டிற்கு முன்பே எகிப்தில் குடியேறி அங்கு பயிர்த் தொழிலை நிலைநாட்டினார்கள். அதோடு அங்கு இந்து மதத்தையும் இந்தியக் கலையையும் நிலைநாட்டி உள்ளனர். இதனை உலகப் புகழ்பெற்ற பழம்பெரும் வரலாற்று ஆசிரியர் தம் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 அதனால் தூண்கள் மீது போதிகைகள் வைக்கும் பாணி திராவிடப் பாணி, இந்திய நாகரிகம் என்று கூறுவது பொருந்தும். சிந்து வெளியில் கி.மு. 1500 -ம் ஆண்டிற்கு முன் உந்தி எழுந்த திராவிட நாகரிகத்திலும் போதிகைகள் வைக்கும் வழக்கம் உள்ளது. இந்தியக் கட்டிடக் கலைக்கு முன்னோடியாக இருப்பது சிந்து வெளி நாகரிகம் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை. போதிகைகள் கிரேக்க கட்டிடக் கலையிலும் பைசாண்டிய கட்டிடச் சிற்ப வேலையில் உரோமன் அயோனிய (Roman Ionic) கொரிந்திய கூட்டு வகைகளில் சில சமயங்களில் போதிகைகள் இடம் பெற்றுள்ளன. ஆரிய நெறியையும் ஆரிய நாகரிகத்தையும் எதிர்க்க எழுந்த பௌத்தக் கட்டிடக் கலையில் போதிகைகளில் விருதுகளையாவது விலங்குகளையாவது அமைத்து எழில் பெறச் செய்துள்ளது இன்றும் காணப்படுகிறது. பம்பாய் மாநிலத்தில் உள்ள பெட்சா பெருங்குகையில் முன் தூண்களில் உள்ள போதிகைகளில் ஆண் பெண் ஆகிய மனித உயிர்களைத் தாங்கி நிற்கும் அசுவம், யானை ஆகிய சிற்ப உருவங்கள் உள்ளன. கார்லே குகைகளில் உள்ள கவின் பெரும் சிற்பங்களில் போதிகைகளில் யானைகள் மண்டியிட்டுப் படுத்திருப்பதுபோல் செய்துள்ளார்கள். காந்தார விகாரையில் காணப்படும் தூண்களில் கொரிந்தியப் பாணியில் இலை, சுருள், பூவேலைப்பாடுகள் செய்யப் பெற்றுள்ளது. அஜந்தாவில் 16-ஆம் எண்ணுள்ள பௌத்த விகாரையில் காணப்படும் போதிகை கண்ணைக் கவரும் கவின் பெறும் வனப்பு வாய்ந்தவை. இவைகள் பாஜாவில் உள்ள போதிகையை விட, நாசிக்கில் உள்ள கௌதம புத்தர் குகையில் உள்ள போதிகையைவிட எளிமையும், எழிலும், உறுதியும் உள்ளது. அசோகன் காலத்து (கி.மு. 250-232) காலத்து எழுந்த போதிகைகளும் நல்ல சிறப்புடையனவாகவே காணப்படு கின்றன. தூண்களைப் போன்று போதிகைகள் ஒரே கல்லில் உருப்பெற்றுள்ளன. ஒவ்வொரு போதிகையிலும் பலகை, மணி, முடி போன்ற உறுப்புகள் மூன்றும் உள்ளன. தூணையும் பலகையையும் இணைக்கும் பகுதி கழுத்துப் போன்று காணப்படுகிறது. போதிகையின் சிகரத்தில் முடிவைத்தாற் போன்றுள்ள பகுதியில் சக்கரம், சிங்கம், எருது, கரி, பரி போன்ற சிற்ப உருவங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. பலகையில் விளிம்புகளில் புடைப்புச் செதுக்கு சிற்பம் காணப்படுகிறது. சாரநாத் என்னும் இடத்தில் சிங்கப் போதிகையும் சாஞ்சியில் புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாறு செதுக்கப்பெற்ற போதிகையும் காணப்படுகின்றன. காஷ்மீரில் உள்ள சைவ சமயஞ் சார்பான கோயில் கட்டிடங் களில் தாமரை மலரின் பொகுட்டுகள் பொலிகின்றன. போதிகைகளின் அடிப்பகுதிகள் நீர்க்குடம் போன்றுள்ளன. அதன்மேல் குவிந்த திண்டுபோன்ற பகுதியும் உச்சியில் தாமரை மலர்ப் பொகுட்டும் உள்ளது. இந்திய இலாமியக் கட்டிடக் கலைகளிலும் போதிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போதிகைகள் வைக்கும் பழக்கம் அராபிய நாகரிகத்தில் அரும்பியதாகத் தெரியவில்லை. திராவிட நாகரிகத்தில் சிறப்பாக தமிழர் நாகரிகத்தில் போதிகைகள் தொன்மையான காலத்திலிருந்து தோன்றி வளர்ந்துள்ளன. அதன் பரிணாம வளர்ச்சியைக் கட்டிடக் கலை வல்லுநர்கள் நன்கெடுத்துக் காட்டியுள்ளனர். தமிழர்கள் தங்கள் கட்டிடக் கலையில் போதிகைக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள வீடுகளிலும் கோயில்களிலும் பலவிதமான சிற்ப நயம் செறிந்து மரச்சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த போதிகைகளும், கல் சிற்பவேலைப்பாடுகள் மிகுந்த போதிகைகளும் உள்ளன. திராவிடச் சிற்ப போதிகைகளில் கால், பதும பந்தம், கலசம், தாடி, குடம், இதழ், முனைப் பலகை கண்டம் முதலிய பல அழகிய உறுப்புகள் உருப்பெற்றுள்ளன. குமிழ்ப் போதிகை மதலை, நாணுதல், பூமுனை முதலிய பகுதிகளையுடைய மலர்ப் போதிகை (புஷ்ப போதிகை), சாதாப் போதிகை, தாங்கு போதிகை போன்ற பல்வேறு அழகுப் போதிகைகளைத் திராவிடச் சிற்ப வேலையில் காணலாம். சாதாப் போதிகை பல்லவர் காலத்தில் (கி.பி. 600-800) முற்காலச் சோழர்காலத்திலும் (கி.பி. 800-1100) தாங்கு போதிகை பிற்காலச் சோழர் காலத்திலும் (கி.பி. 1100-1350) மலர்ப் போதிகை விசய நகர மன்னர் ஆட்சி காலத்திலும் (கி.பி. 1350-1600) அதற்குப் பிற்பட்ட காலத்திலும் அரும்பியுள்ளன. பல்லவர் காலத்திலும் முற்காலச் சோழர் காலத்திலும் போதிகையில் இடம் பெற்றிருக்கும் இதழ் என்னும் உறுப்புகள் காணப்படவில்லை. பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகர மன்னர் காலத்திலும் எழுந்த போதிகைகளிலும் பலகை என்னும் போதிகை உறுப்பிற்குக் கீழே இதழ் எனப்படும் பகுதியின் முனைகள் பல் பல்லாகக் காணப்படும். பல் போன்ற பகுதியே முனை என்று கூறப்படும். எனவே முனையுள்ள போதிகை முனையில்லாப் போதிகை என இருவகைப் போதிகைகள் தமிழ் நாட்டில் உள்ள கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் பிரகாரத்தில் இடம் பெற்றிருக்கும் முருகன் கோயிலில் உள்ள போதிகை அழகு மிகுந்தது. இது இராசராசன் எடுப்பித்த கோயில் இல்லை. அவன் காலத்திற்குப் பின் வந்த நாயக்க மன்னர்களால் எடுப்பிக்கப் பெற்றது.1 போதிகைகள் வட்டமாயும், சதுரமாயும் நீண்ட சதுரமாயும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளனவாயுள்ளன. திராவிட நாட்டிலே பல்லவர்கள் நாட்டு போதிகைகள் ஒருவிதமாகவும் சோழநாட்டுப் போதிகைகள் வேறு ஒரு விதமாகவும் பாண்டிய நாட்டுப் போதிகைகள் மற்றோர் விதமாகவும் அமைந்துள்ளன. இதன்றிக் கால வளர்ச்சியில் ஒரு நாட்டிலே உள்ள போதிகைகள் பல்வேறு விதமாக எழில் பெறப் பரிணமித்துள்ளன. இங்குப் பல்வேறு காலங்களில் போதிகைகள் பெற்றுள்ள வளர்ச்சியை உருவப்படங்கள் மூலம் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. (1) பல்லவர்கள் கி.பி. 600 முதல் 800- வரையுள்ள காலங்களில் அமைத்த போதிகை. (2) முற்காலச் சோழர்கள் கி.பி. 850- முதல் 1100 வரை உருவாக்கிய போதிகை. (3) பிற்காலச் சோழர்கள் கி.பி. 1100 முதல் 1350 வரை அமைத்துள்ள போதிகை (4) விசய நகர நாயக்கர் மன்னர்கள் கி.பி 1350-1600 வரையுள்ள காலத்தில் அமைத்த போதிகை (5) பிற்காலத்தில் அதாவது கி.பி. 1600 முதல் 1976 வரை தமிழ்நாட்டில் பரிணமித்துள்ள அழகிய பூபோதிகை போதிகைகள் நாட்டிற்கு நாடு வேறுபட்டவைகளாய் இருந்தன. தமிழ்நாட்டிலே போதிகைகள் பல்லவர் பாணி, பாண்டியர்பாணி, சோழர் பாணி விசய நகரப் பாணி என்று மாற்றம் பெற்றவைகளாய் விளங்கின அது மட்டுமன்று ஒவ்வொரு ஊழியிலும் அவை வளர்ச்சி பெற்று வெவ்வேறு விதமாய் விளங்கின. சில போதிகை இடத்திற்கேற்பவும் மாறுபட்டவைகளாய் இருந்தன. எடுத்துக்காட்டாக, கோயில் பிரகாரங்களின் திரும்புமுனையிலும் மண்டபங்களின் நடுவிலும் போதிகைகள் + இந்த வடிவில் அமைக்கப் பட்டன. பல்லவர்கள் சகாயத்தில் இந்தப் போதிகைகள் அதிகமாகப் பல்வேறு வடிவில் துளித்தெழுந்தன. பல்லவர்கள் போதிகைகள் மிக எளிதாகவும் அழகாக அதிக நுணுக்கமான வேலைப்பாடு களின்றியும் இருந்தன. இங்கு காட்டப்பெற்றுள்ள தூணும் போதிகையும், லாகூரில் பல்லவர்களால் செதுக்கப் பெற்ற உறுதியான வேலைப்பாடுள்ள ஒரு கல்தூணாகும். பல்லவர்கள் தூண்களையும் போதிகைகளையும் விட மிக அழகாகச் சோழர்களின் சகாப்தத்தில் எழுந்தன. சோழர்கள் பல்லவர்களை விட மிக அழகான தூண்களையும் போதிகை களையும் உருவாக்கிச் சிற்ப உலகில் என்றும் அழியாப் புகழை ஈட்டியுள்ளார்கள். இங்கு நாம் பல்வேறு சகாப்தங்களில் எழுந்த தூண்களையும், போதிகை களையும், கோயில்களையும் எடுத்துக் காட்டியுள்ளோம். அதோடு போதிகைகளின் சிற்பங்களுக்குத் தனிச்சிறப்பு அளித்து போதிகைகள் பல்வேறு காலங்களிலும் பெற்றெழுந்த வளர்ச்சியையும் தனிச் சிறப்பையும் எடுத்துக்காட்டி யுள்ளோம். இங்கு நாம் எடுத்துக்காட்டியிருப்பது சிலுவை வடிவமுள்ள சோழர்களின் அழகான போதிகையின் உருவமாகும். அதைப் பல்வேறு கோணத்தினின்று பார்த்து படம் தீட்டி காட்டியிருக்கிறது. இவ்வாறு மிக அழகாகவும் தெளிவாகவும் பாண்டிச்சேரியில் இருந்த பிரஞ்சுப் பேரறிஞர் சோவியோதுப்ரயல் 1914-ஆம் ஆண்டில் பிரஞ்சு மொழியில் எழுதிய கட்டிடக் கலை என்ற நூலில் இருந்து பெறப் பட்டவைகளாகும். அவர் பல்லவர் களின் ஓவியம் பல்லவர்களின் படிமம் முதலியவற்றை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்காய்ந்து உலகிற்கு உணர்த்திய பேரறிஞராவார். அவருக்குத் தமிழ் உலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் எழுதத்துணையாக இருந்த நூற்கள் 1. History of herodotus - george Rawlinson M.A (London) 1862. 2. Dravidian Architecture - G. Jouvean Dubreui Madras - 1917. 3. The great Temple at Tanjore J.M.Somasundaram B.A.B.L. (Madras) 1935. 4. The Chola Temples - C. Sivaramamurthi New Delhi (1960) 5. Temples of India - publication Division goot of India New Delhi 1968. 6. கலைக் களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக் கழகம் (சென்னை) 1960. 7. தமிழகக் கோயிற் கலைகள் - இரா - நாகசாமி; மந்திர மூர்த்தி. 8. தமிழ் இந்தியா ந.சி. கந்தையா பிள்ளை (சென்னை) 1949 9. பாண்டிய நாட்டின் பாடும் கற்றூண்கள் - அ. இராகவன் (மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிசேக மலர்) 10. கோயிற் கலையும் சிற்பங்களும் பி. ஆர். ஸ்ரீனிவாசன் எம்.ஏ சென்னை. 1965. ஒருமைப்பாடுடைய கட்டிடக் கலை இந்தியாவில் ஆரியர்கள் தம் கால் அடிகளை எடுத்து வைப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் முன்னோர்கள் என்று கூறப்படும் திராவிடர்களும் (Dravidians) திராவிடர்களின் ஆதி முன்னோர்களைச் சேர்ந்தவர்களும் (proto dravidians) திராவிடர்கள் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படுகின்ற மக்களும் (pre - dravidians) 10000-ம்ஆண்டுகளுக்கு முன்னரே மாபெரும் மாடமாளிகைகளையும் அளப்பரிய அரண்களையும் கட்டத் தொடங்கிவிட்டனர். கி.மு. 3000-ம் ஆண்டுகளுக்கு முன் மேற்காசிய மக்களுக்கும் நாகரிகத்தின் முன்னோடிகள் என்று கி.மு. 1500 வரை வரலாற்றாசிரியர்களால் கருதப்பட்ட எகிப்தியர்களும், ஐரோப்பியர்களும் சுடுமண் செங்கல்களை (bricks) கண்டும் கேட்டும் அறியார்கள்; அதை எந்த ஏட்டிலும் பார்த்தும் அறியார்கள். ஆனால் கி.மு. 4000-ம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் 1 ½ அடிநீளமும், அடி அகலம் 3/8 அடி உயரமும் உள்ள செங்கற்களையும் சிறிய ஆப்புச் செங்கற்களையும் தளத்திற்கு இடும் சதுரச் செங்கற்களையும் செய்து மலை மலையாய்க் குவித்துள்ளார்கள். அரண்கள், வீடுகள், மதில்கள் கோபுரவாயில்கள் தூண்கள், கோயில்கள், விமானங்கள் மண்டபங்கள், அரண்மனைகள், மாளிகைகள், கலங்கரை விளக்குகள், அம்பலங்கள், நாடக அரங்குகள் பள்ளிகள் போன்ற எண்ணிலாக் கட்டடங்களை எழுப்பியுள்ளனர். ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்ததும் செம்பு கோட்டைகளும் வெள்ளி அரண்களும் எஃகுக் கோட்டைகளும் திராவிட மக்கள் கட்டியிருப்பதால் அவைகளை கண்டு பயந்தனர். அவைகளைக் கடந்து செல்லவும் அவைகளை தாண்டவும் அரண்களைக் கடக்கவும் திராவிடர்களின் மதில்களைக் கண்டு கதி கலங்கினர் என்று இருக்குவேதமும் பல புராணங்களும் கூறுகின்றன. உலகிலே பழம் பெரும் நாகரிகத்தைப் பெற்ற நாடு திராவிட இந்தியா. உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை முதன்முதலாக உருவாக்கிய மக்கள் திராவிடர்களின் முன்னோர்கள். உலகிலே முதன்முதலாக உருவாக்கப் பெற்ற தெய்வப் பெயர் சிவன். உலகிலே முதன்முதலாகத் தெய்வத்திற்கு உறைவிடம் கண்டவர்கள் தமிழ் மக்களேயாவர். இதற்கு தமிழர் ஆதியில் வாழ்ந்த இடமும் சூழ் நிலை களும் முக்கியகாரணமாகும். ஆதிகாலத் தமிழர்களில் முன்னோடிகளான மக்கள் மருத நில மக்கள் - அதாவது வேளாண்குல மக்கள் - அவர்கள் ஆற்றங்கரை களிலும், குளக்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும், நல்ல நீர்ப் பிடிப்புள்ள நிலங்களிலும் அதன் அண்மையிலும் தம் வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்கள் முதல் முதலாகத் தொடங்கிய தொழில் பயிர்த்தொழில். அங்கு நஞ்செய்ப் பயிர்களும் புஞ் செய்ப் பயிர் களும் நல்ல விளைவைத் தந்தன. ஏனைய நானில மக்களும் தங்கள் நிலத்தில் கிடைத்த பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் பண்டமாற்றாக, இந்நிலத்தில் கிடைக்கும் பொருள்களைப் பெற்றுச் சென்றனர். இந்த மருத நிலத்தில் பல்வேறு கூலப் பொருள்கள் பெருகின. பலவிதமான உணவுப் பொருள்கள் செய்யப் பெற்றன. இவைகளையெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து வைக்க தாழிகளும், குடங்களும், குதில்களும், வீடுகளும் களஞ்சியங்களும் இன்றியமையாததாக எழுந்தது. எனவே 10-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வீடுகள் பீடுற்று எழுந்தன. வீடுகள் ஆதியில் மண்சுவர்கள் எழுப்பி மேலே கூரைகள் பனை ஓலைகளாலும், தட்டைகளாலும் சுக்கு நாரிப்புற்களாலும் வேயப் பெற்றன. அப்பால் மண்சாந்தால் நீண்ட சதுர வடிவில் செய்யப் பெற்ற சுடாத செங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் சுடுமண் செங்கலைச் செம்மண் கொண்டு சுவர் கட்டி மேலே கூரைவேயப் பெற்றது. இறுதியாக சுடுமண் செங்கலைச் சுண்ணச் சாந்து கொண்டு கட்டி மேலே உத்தரமும் கட்டைகளும் பாவி உறுதியான வீடு கட்டினர். பனம் கட்டைகளும் சட்டங்களும் விட்டங்களும் மல் கட்டை களும் கொண்டு மல்லைக் கூட்டி வைத்து கூரைகள் அமைத்து ஓடுகள் வேய்ந்தனர். சுடுமண் செங்கல்கள் தமிழகத்தில் கி.மு. 4000 -ம் ஆண்டு களுக்கு முன்பே செய்யப்பட்டு விட்டன என்பதற்கு அரப்பா நாகரிகம் சிறப்பான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. உலகில் பழம்பெரும் நாகரிகம் துளிர்த்த எகிப்தில் கூட சுடுமண் செங்கல் கண்டுபிடிக்கப் பட்டது கி.மு. 1460 -ம் ஆண்டுகள் பின்னர் தான்.1 அதோடு உலகிலே 10-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சைவ நெறியும் சிவபெருமானும் பல தெய்வங்களும் தோன்றியதால் திராவிடர்கள் சுடுமண் செங்கற்களைக் கொண்டு ஏராளமான கோயில்கள் எழுப்பினர். உலகிலே - அதுவும் சிறப்பாக 4000 -ம் ஆண்டுகளுக்குமுன் உபைதியாவிலும், எல்லத்திலும், பாலதீனத்திலும் அசீரியாவிலும் அக்கேடியாவிலும் சால்டியாவிலும், சீரியாவிலும் பிறவிடங் களிலும் சிக்குராத் என்னும் பெருங்கோயிலும், பிற தெய்வத் திருக்கோயிலும் பெரிதாக எடுப்பிக்கப் பெற்றதாக ஏட்டில் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. ஆனால் எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட வெறுங்கோயிலாக இருக்குமேயொழிய சிந்து வெளியில் அல்லது சிறப்பாக அரப்பாவில் உள்ள ஒரு வீட்டிற்கோ அல்லது ஒரு கூலக் களஞ்சியத்திற்கு ஈடாக எதையும் ஒப்புவமை கூறமுடியாது. நாட்டிலோ ஏட்டிலோ பாட்டிலோ இலங்கையி லுள்ள இராவணன் அரண்மனையை ஒப்ப விளங்கிய ஒரு திருமனையை எவரும் எங்கும் கண்டதே இல்லை. இந்திரன் அரண்மனையையோ, சந்திரன் கோயிலையோ எந்தக் கவிஞனும் இதுவரை, நான் மாடக் கூடல் என்றோ எழுநிலை மாடம் என்றோ. விண்தோய் மாடம் என்றோ, கார் முகில் தவழும் உயர்ந்த உபரிக்கையுடைய உயரிய அரண்மனையென்றோ வருணித்ததில்லை. ஆனால், இன்று கற்பனையால் அல்ல. உண்மையிலே மேனாட்டு கிறித்தவ அறிஞர்கள் அகழ்ந்து கண்டு அரப்பாவிலும், மொகஞ்ச தாரோவிலும் உரூபாரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மூன்று, ஐந்து ஏழு, நிலைகளையுடைய மாடங்களையும் 200 அடி நீளமும் 100 அடிக்கு மேற்பட்ட அகலமும் உள்ள செங்கற்களைக் கொண்ட சீரான மாளிகைகள் பலவற்றையும் நேராகக் கண்டு வியந்து இன்றைய லங்காசயர் நகருக் கொப்பாக விளங்குகிறது என்றுமே நாட்டறிஞர்கள் வியந்து பாராட்டும் பேற்றை எய்தியது. 3000 -ம் ஆண்டிற்கு முன்பே தமிழர்கள் விண்முட்டும் விமானங்களை யுடைய மாளிகைகளையும் பவளத் தூண்களையும், பொற்றகடு போர்த்திய தூண்களையும் கனக சபைகளையும், வெள்ளி அம்பலத்தையும் தாம்பிர சபையையும் இரத்தின மன்றத்தையும் செப்பறைகளையும் 200 அடிக்கு மேற்பட்ட 10,15 நிலைகளையுடைய கோயிலில் உள்ள விமானங்களையும், கோபுரங்களையும், கோட்டைகளையும் கட்டி தமிழர்கள் கட்டிடக் கலையில் கைதேர்ந்த நிபுணர்கள் என்ற பேற்றை எய்தியுள்ளனர். இரும்புக் காலப் பண்பாடு உலகில் எங்கு முதன்முதலாக உலோக காலம் - அதிலும் சிறப்பாக எஃகு காலம் அரும்புகிறதோ அங்குதான் சிறப்பான நாகரிகம் எழும். சிந்துவெளி 6000-ம் ஆண்டுகளுக்கு முன் எஃகு காலத்தில் அல்ல செம்புக் காலத்தில் தான் உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தைப் பெற்றுள்ளது என்றாலும் மிக மிகப் பிற்காலத்திலே எஃகு நாகரிகத்தைப் பெற்ற ஆரிய மக்களே செம்புக்காலத் திராவிட மக்கள் போர் புரிந்து வெற்றியீட்ட முடியவில்லை. ஐரோப்பாவிலே முதன் முதலாக இரும்புக் காலத்தை (Iron age)¡ கண்ட மக்கள் உலகிலே உயர்ந்த எஃகுவினால் கட்டப்பட்ட கப்பல்களையும், போர்க்கருவிகளையும் பிற எண்ணற்ற இரும்பு கருவிகளையும் செய்து உலகில் பெரிய வல்லரசாக விளங்கினார்கள் என்பது வரலாறுகண்ட உண்மை. ஆங்கில ஆட்சியில் ஆதித்தன் அதமிப்பதே இல்லை என்ற பெரும்பேற்றைப் பெற்றது. 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு பிரான்சு நாட்டின் சிறையில் ஒரு பிரஞ்சுக்காரனும் ஆங்கிலேயனும் குற்றம் செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்களாம். ஒரு நாள் அவர்கள் சம்பாசனை யில் பிரிட்டிஷ்காரன் சந்திரனில் மக்கள் வசிக்கிறார்கள். அங்கு மக்கள் வசிக்கத் தக்க சூழ்நிலைகள் உண்டு என்று பற்பல ஆதாரங்கள் காட்டி வாதித்தானாம் ஆனால் அவனோடு பேசிக் கொண்டிருந்த பிரெஞ்சு கைதிகள் இதை என்னால் நம்பவே முடியாது. உலகிலே ஆங்கிலேயர்கள் எஃகையும் நிலக்கரியையை யும் கண்டவர்கள். உலகிலே ஒப்பற்ற எஃகு கருவியை உருவாக்கியவர்கள். உலகில் வடதுருவம் தொட்டு தென் துருவம் வரை எங்கெங்கு சென்றாலும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த தீவிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் ஆங்கிலேயர் கொடி (யூனியன் ஜேக்) பறக்கிறது. ஆழ் கடலின் நடுவிலெல்லாம் உங்கள் கப்பலில் உங்கள் கொடிகள் பறக்கின்றன. 100 மக்கள் வாழும் சின்னம் சிறு தீவுகளிலும் திட்டுகளிலும் மனிதர்கள் இருந்தால் அங்கு ஆங்கிலேயர் கொடி பறக்கும். சந்திரனில் மக்கள் இருப்பது மெய்யானால் இன்றல்ல ஐம்பது ஆண்டுகட்கு முன்பே சந்திரனில் உங்கள் கொடி பறந்திருக்கும். அங்கு உங்கள் கொடி இல்லாததால் மக்கள் அங்கு இல்லை என்று அந்தப் பிரஞ்சுக்காரன் ஆங்கிலேயன் வாயை அடைத்தான். திங்களில் முதன் முதலாக ஸோவியத் இராக்கெட் இறங்கியதும் ஆங்கிலேயர்களோ அமெரிக்கர்களோ சந்திரனில் (திங்களில்) தங்கள் கொடியை நாட்டுமுன் முதன்முதலாக சுத்தியலும் பன்னரி வாளும் மேலே ஐந்து முனையுள் பொன்மீன் (நட்சத்திரம்) பொறித்த செங்கொடியை நிலை நாட்டிவிட்டார்கள். இங்கிலாந்து உலகில் எண்ணிலா நாடுகளை அடிமைப்படுத்தி கோடானு கோடிக் குடிமக்களைச் சுரண்டிக் கொழுத்து வந்ததற்கும் கடல் அரசி என்ற பெரும்பேற்றைப் பெற்றதற்கும் முக்கிய காரணம் அரசுகள் முதன்முதலில் இரும்புக் காலத்தை எய்தியதே யாகும். வட இந்தியாவில் சிந்துவெளி மக்கள் செம்புக் காலத்தைக் கி.மு. 3000-ம் ஆண்டிற்கு முன்னர் பெற்றிருந்ததால் அவர்கள் கப்பல் கட்டுவதிலும் பயிர்த் தொழில் செய்வதிலும் ஆடை அணிகள் செய்வதிலும் பிற துறைகளிலும் முன்னேறி இருந்தனர். ஆனால் அவர்கள் எஃகு நாகரிகத்தை பெற்றிருந்தால், இந்தோ ஆரியர்கள் படையெடுப்பையும், அப்பால் எழுந்த கிரேக்கப்படை யெடுப்பையும், ஈரானிய, ஆரியர் படைஎடுப்பையும், மொகலாயர், படை எடுப்பையும், தார்த்தாரியர் படை எடுப்பையும் எளிதில் முறியடித்து அவர்கள் ஊனையும் உதிரத்தையும் எலும்பையும் சிந்துவெளி மண்ணில் புதைத்து நல்ல உரமாக்கி சாலச் சிறந்த கூலப் பொருள்களை விளைவித்திருப்பார்கள். உலக வரலாறே வேறு விதமாக எழுதப் பெற்றிருக்கும். வடதுருவத்திலும் தென்துருவத் திலும் மட்டுமல்ல சந்திரனிலும் புதனிலும், வெள்ளியிலும் சிந்துவெளி வேளாளரின் ஏர்கொடி பறந்து கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் கி.மு. 2000 -ம் ஆண்டிலே எஃகு நாகரிகம் பிறந்துவிட்டது. இன்றைக்கு 2000 -ம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதித்த நல்லூரில் நடத்திய அகழ் ஆய்வில் பல எஃகு ஆயுதங்கள் கிடைத்துள்ளன. தமிழர்கள் கி.மு. 8000 -ம் ஆண்டுகளுக்கு முன்பே உழவுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் இரும்பைக் கண்டுபிடித்து கலப்பைக் கொழு, பன்னரிவாள், வெட்டரிவாள், ஈட்டி, வேல் கம்பு, எஃகு அம்புத்தலை, கொடு, வீச்சரிவாள், வாச்சி, உளி, இளைப்புளி மண் வெட்டி கோடரி, சுத்தியல், சம்மட்டி கடப்பாரை முதலிய எண்ணற்ற கருவிகளைச் செய்து குவித்தனர். கி.மு. 1500-இல் இராமன் தென் இந்தியாவிற்கு வரும்பொழுது பாண்டிய அரசனின் அரண் வாயிலின் கதவுகள் பொன்னால் செய்யப்பட்டது என்று இராமன் அனுமானுக்குச் சொன்னதன் மூலம் தமிழ்நாடு எஃகு காலத்தைக் கடந்து பொற்காலத்தில் அடி வைத்து விட்டது என்று கூறலாம். கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பொற்காலத்தில் வாழ்ந்ததால் தமிழ் நாட்டு மகளிர்கள் உச்சி தொட்டு உள்ளங்கால் வரை மணிகள் பதித்த பொன் அணிகள் அணிந்து வந்தனர். தலையில் பொன்னாற் செய்த இராக்குடி, தாழம்பூ, சடாரங்கம், நெற்றிச் சுட்டி, நிலவுபிறை சிந்தாமணி, தோடு, பூடி, கர்னப்பூ, சிமிக்கி மூக்குத்தி, புல்லாக்கு கழுத்தில் உட்கட்டு கண்டசரம், காரை, மருதங்காய் மாலை நெல்லிக்காய்மாலை பிச்சி அரும்பு மாலை போன்ற எண்ணற்ற பொன் கழுத்தணிகளும் கொந்திக் காய்கொலுசு, காப்பு, சூடகம், மோதிரங்கள் மேகலை, கலாபம், விரிசிகை, காஞ்சி, தாமம், ஒட்டியாணம், குறங்கு செறி (தொடையணி) பாதசரம், கொலுசு தண்டை கால் சரிகை, கைச்சரிகை போன்ற எண்ணற்ற வைரம், மரகதம், மாணிக்கம், புஷ்பராகம், வைடூரியம், நீலம், கோமேதகம் போன்ற ஏழு மணிகள் இழைத்த பல்வேறு பொன் அணிகள் பூண்டிருந்தன. திருக் கோயிலில் உள்ள திருஉருவமும், பொன்னாற் செய்யப்பட்டது. பொன்னாற் செய்யப்பட்ட வாகனங்களும், பொற்றேர்களும், பொற் கலயங்களும் திருக் கோயிலை அணி செய்தன. மன்னர்கள் வீட்டில் பொன் அணிகளும் பொன்வட்டில்களும், பொற்கிண்ணங் களும் மட்டுமல்ல அரசிகள் ஏராளமான பொன் அணிகளைப் பூண்டிருந்தனர். அரண்மனையின் தூண்கள் பொற்றகடுகள் போர்த்தப்பட்டிருந்தன. பவளத்தூண்கள் அரண்மனையை எழில் பெறச் செய்தன. மன்னர்கள் தங்கபஷ்மம் சாப்பிட்டு உடம்பைப் பொன்னிறமாக்கச் செய்து போக போக்கியங்களை அனுபவித்து வந்தனர். ஆதித்த நல்லூரில் எண்ணற்ற எஃகு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது ஒன்றே தமிழர்கள் எஃகுகாலத்தில் எஃகு சுத்தியலும், உளிகளும், இழைப்புளிகளும் வாள்களும் வாச்சிகளும், கல் உளிகளும் பெற்றிருந்தார்கள் என்பதற்கு நல்ல சான்றாக விளங்குகின்றன.1 சிந்து வெளியில் எழுந்த செம்பு ஊழியில் (Chalcolithic age) கற் கோயில்களைக் கட்டவில்லை. ஆனாலும் கல்லில் ஓவிய எழுத்துக் களைச் செதுக்கியுள்ளனர் ஆனால், சிந்துவெளியில் வாழ்ந்த திராவிட இனத்தவர்களின் ஆதி முன்னோரைச் சார்ந்தவர்கள் (Proto dravidian race) செம்புக் காலத்தவர்களாக இருந்தும், செம்புக் கருவிகளைக் கொண்டு மரங்களை வெட்டியும், அறுத்தும், கொத்தியும், செதுக்கியும் இழைத்தும் அழகான வீடுகளைக் கட்டியுள்ளார்கள்; வெண்கலப் படிமங்களைச் செதுக்கியுள்ளார்கள். கல்லில் எழுத்துக் களைச் செதுக்கி யுள்ளார்கள். எழுநிலை மாடங்களை எழுப்பி உள்ளனர். ஆழ்கடல் களையெல்லாம் கடந்து செல்லும் கலங்களைக் கட்டியுள்ளனர். ஆனால் புதிய கற்காலத்திலேயே எஃகு ஆயுதங் களைக்2 கண்டுபிடித்த ஆதித்த நல்லூர் பண்பாட்டைப் பண்டைத் திராவிட இனத்தவர்களின் ஆதிமுன்னோரைச் சார்ந்தவர்கள் (proto-dravidian race) ஆவர். இவர்கள் எண்ணற்ற கல் உளிகளையும் சிலைகளுக்கு மெருகேற்றும் அரங்களையும், கற்களில் நகாஷ் வேலைகளைச் செய்து மெருகேற்றும் சிற்றுளிகளைக் கண்டவர்கள் தமிழகத்தில் நாவுக்கரசர் காலத்திற்கு முன்பே (கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே) எண்ணற்ற தெய்வச் சிலைகளையும் கற்படிகளையும், அம்மிகளையும், உரல்களையும், குந்தாணி களையும் எண்ணற்ற எஃகு ஆயுதங்களையும் படைத்தவர்கள். கற்கோயிலைப் படைக்கத் தெரியாதவர்கள். மகேந்திரவர்மன் காலத்தில் தான் தமிழ்நாட்டுச் சிற்பிகளுக்குக் கற்கோயிலை உருவாக்கத் தெரியும் என்று தமிழகம் கூறிவருகிறது; நானும் எழுதி வருகிறேன். ஆனால் எனக்கு இதில் பெரும் ஐயப்பாடுண்டு. பாடல் பெற்ற கோயில்களில் கூட பல கற் கோயிலாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்பர் அடிகளின் அருள்வாக்கால் தென் கடம்பைத் திருக்கடம்பைத் திருக்கரக் கோயிலான் என்று புகழ்ந்து பாடிய திருக்கடம்பந்துறை (குழித்தலை புகை வண்டிநிலையத்தி லிருந்து 2-கல் தொலைவில் உள்ளது) கடம்பவன நாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். தேர் வடிவாக அமைக்கப்பட்ட கவின்பெறு கோயிலாகும். ஆகமங்கள் சிறப்பித்துக்கூறும் எழுவகைக் கோயிலாகும். இதை அப்பர் அடிகள் தமிழ்ப் பெயரால் கரக் கோயில் என்று புகழ்ந்தேத்திப் பாடியுள்ளார். இது மகேந்திரவர்மன் காலத்திற்கு முன்னரே எழுந்த கற்கோயில் என்பது சிலரது கருத்தாகும். இதை அறிஞர்கள் நன்கு ஆய்ந்து முடிவு கட்டவேண்டிய விசயமாகும். தமிழர்கள் வரலாற்றுக் காலத்திற்குமுன்பே இரும்பு நாகரிகத்தைப் பெற்றிருந்தமையால் பாலும் தேனும் ஓடும் பொன்னான தென் மதுரை நன்னகர் என நாவலரும் பாவலரும் போற்றும் நாகரிகத்தையும், கற்பகம் என்றும் கவிஞர்கள் பாடும் கொற்கை நாகரிகத்தையும் திருமகள் வாழும் செந்தாமரை வடிவார்ந்த மாட மாளிகை நிறைந்த மாநகர் என்றும் மதுரை நாகரிகத்தையும் பெற்றிருந்தனர். தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இரும்பு நாகரிகத்தைப் பெற்றிருந்தமையால் உலகில் ஒப்பற்ற உயரிய மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் இசைத் தூண்களையும் குழல் தூண்களையும் பெற்றிருந்தனர். நிலைபெற்ற கலை தமிழர்கள் முதன்முதலாக எஃகின் உபயோகத்தை உலகிலே உணர்ந்தவர்களாக இருந்தமையால் கல்லை ஆயுதமாக முதலில் கண்டனர். கல்லைக் குறிதவறாது வீசக்கற்றனர். கல்லை கவணில் வைத்து பழத்தை வீழ்த்தவோ, குருவிகளை அடித்து வீழ்த்தவோ கற்றனர். கல்லை தாயின் நினைவுச் சின்னமாகக் கண்டனர். கல்லைக் குழலாகக் கண்டனர். கல்லை இசைத்தூணாகச் சமைத்தனர். கல்லைக் கோயிலாக, விமானமாக, கோபுரமாக, மண்டபமாக, தூணாக, படியாக, தெய்வமாக, அழகு என்றும் பொன்றா சிலை வடிவான ஆரணங்காக, நிறையாக (படிக்கல்லாக) எல்லையைக் குறிப்பிடுவதாக (எல்லைக்கல்லாக) தொலைவின் அளவாக (மைல் கல்லாக) படிப்பாக அறிவாக (கல்+வி=கல்வி=மேலான அறிவாக) பல உயர்ந்த தன்மைகளையெல்லாம் கல்லுக்குத் தமிழர்கள் நல்கினர். உலகில் தமிழர்களைப் போல் கல்லுக்கு பெருமை அளித்தமக்கள் எவரும் இல்லை. உயர்ந்த மணிகளுக்கே (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம் கோமேதகம்) ஆகியவைகளைக் கூடத் தமிழர் கல் என்றே அழைப்பர். நிற்க 10-ஆயிரம் ஆண்டுகட்கு முன் தமிழகத்தில் விண்தோய் மாடங்கள் கட்டப்பட்டன. 5-ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் மஞ்சு தவழும் மாட மாளிகைகள் கட்டப் பெற்றன. கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ் மன்னர்கள் சேரர், சோழர் பாண்டியர் என்று பிரிந்தும், அடிக்கடி போரிட்டும் பலங்குன்றிய காலத்தும் தஞ்சாவூரில் 220- அடி உயரமுள்ள விண்முட்டும் பெருமை உடைய கோயில் விமானத்தை, கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் வென்றதோடு குமரி முதல் இமயம் வரை வென்று இமயத்தின்மீது மீன், புலி, வில் சின்னம் பொறித்த வெற்றிக் கொடியை நாட்டி தமிழர் புகழை நாட்டினான் மாமன்னன் இராசேந்திரன். கட்டிடக்கலை நிற்க, இந்தியாவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழகான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் எண்ணற்ற எழிலார்ந்த கட்டிடங்கள் எடுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில், நினைவுச் சின்னங்கள் எழுவதற்கு முன்பே இந்தியாவில் எண்ணற்ற எழிலார்ந்த மாளிகைகளும், அரண்மனை களும் அரண்களும் கோயில்களும், கோபுரங்களும் கட்டத் தொடங்கி விட்டனர். இந்திய சிற்பிகள் அயல் நாட்டு சிற்பிகளின் வழிகளையோ, அமைப்பு முறைகளையோ பாணிகளையோ கலைப் பண்புக் கூற்றினையோ பின்பற்றித் தங்கள் கட்டிடக் கலைக்கு உயிர்ப்பூட்டப்பட்டவர்களாக இல்லை. தனக்கென்று ஒரு தனிப் பெரும் பண்பை உருவாக்கி கொண்டவர்கள் ஆவர். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுடைய முன்னோர்களிட மிருந்து பெற்ற கட்டிடக்கலையின் பழைய மரபு வழியினின்று பிறழாது மறுமலர்ச்சி பெற்று வளர்ச்சி பெற்று வந்துள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் புதுக் கற்காலத்தைக் கடந்து இரும்புக் காலத்தை அடைந்ததே ஆகும். கிரேக்கர்களால் சமீப காலத்தில் கட்டப்பெற்ற முக்கோண முகப்பு முகடு (வில் முகப்பு முகடும்) உடைய பகோடா கட்டப் பட்டதும் அல்லது உரோமர்களின் கவிகை விளவு அல்லது பிரஞ்சுக்காரர்களின் மேல் கவிகை மாடம் சமீபத்தில் கட்டியது புதுமைப் பொலிவுடன் அழகு பெற்றிலங்குகிறது. ஆனால் இவை முன்பின் முரணானதாக இருக்கிறது. இந்தியர், அவர்களுக்கு மாறான வேறு தட்ப வெப்ப நிலையிலும், வேறு, வேறு நிலங்களுக்கு ஏற்ப புதிய முறையில் திராவிடக் கட்டிடக் கலை நாளுக்கு நாள் வண்ணமும், திண்ணமும் பெற்று எழிலும் பொழிலும் பெற எடுப்பித்து வருகின்றனர்.1 வெப்பம் நிறைந்த நாட்டில் கூர்மையான கூரையையுடைய வீட்டைக் கட்டவேண்டும். ஏன் பெரிய கல்வீட்டைக் கட்ட வேண்டும். இந்து நாகரிகப்படி தூண்கள் விட்டு அசைக்க முடியாத அரும்பெரும் கற்கோயிலைக் கட்டி, ஏனைய எந்த நாகரிகம் எழுந்தாலும் மாற்றமுடியாத மகோன்னதமான குன்றெனப் பொன்றாது நின்றிலங்கும் கோயில்களை எடுப்பிக்க வேண்டும். சூழ்நிலைகளுக்குரியவாறு மாற்றியமைக்கும் விதிகளுக்கு ஏற்ப மக்கள் கட்டிடக் கலையின் புறஉருவ அமைப்பும் தட்ப வெப்ப நிலைக்கும், சமூகத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருள்களுக்கும் ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது இன்றியாமையாதது. சமகால கட்டிடக் கலையின் மாண்பை அறிவதன் பொருட்டு, கோயில்களைப் பழுதுபார்க்க வேண்டும். அவர்களுடைய வேலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் பொழுது உழைப்பாளிகளே அவர்களுக் குள்ளே இதை முடிவு செய்து ஆலோசனை செய்து கொள்ளுவார்கள். கல் தச்சர்கள் எந்தக் கற்பணியாய் இருப்பினும் - சாரம் (தண்டையக் கட்டு) அல்லது தூண் தலை உறுப்பை கல் உளியால் செதுக்குதற்கு ஏற்றதாய் அவைகளை தக்க இடத்தில் வைத்துக் கொள்ளுவார்கள். அனைத்திற்கும் பணி தொடங்குமுன் திட்டமிட்டு சுவரில் வரைந்து கொண்டே செதுக்கு வேலையை ஆரம்பிப்பர். இறுதியாக சிற்பிகளைக் கேட்க, ஒவ்வொரு வார்ப்பட உருவத்தின் கலைப் பண்புக் கூற்றின் பெயரை சொல்லாலோ எழுத்தாலோ சிற்பிகள் விளக்கிக் காட்டுவார்கள். அவர்கள் தொழில் நுட்பத் தகவல் நிறைந்ததால் அதை நாம் இங்கு தலைப்புகளை வரிசையாகப் படித்துக் கொண்டு போகக்கூடியதாய் இருக்கும். இந்தத் தகவல்களில் பல கரிவலம் வந்த நல்லூரிலும் கோயில் பணியாற்றும் தபதிகளிடமிருந்தும் பெரும்பகுதிகள் விளக்கம் பெற்றவைகளாகும். திராவிடக் கட்டிட ஒழுங்குமுறை கட்டிடக் கலையின் அடிவானம் சார்ந்த பிரிவை ஒருவர் குறிப்பிடும் பொழுது கட்டிடத்தை அழகுபடுத்தும் அமைப்பு முறையைப் பற்றி ஆலோசிக்கத் தொடங்குவர். மற்றொரு வார்த்தையில் கூறுவதானால் ஒருவர் ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கத் தொடங்கும் பொழுது அதே ஒழுங்கு முறைதான் உள்ளத்தில் தோன்றும். அதே அமைப்பு முறையின் வடிவமும் அதே அழகும் தூண் தலைப்பு அமைவின் அடிப்படைத் தூணின் மேல் வைப்பு நிலையும் அதே வரிசை நிலையில் அமைத்து அது இப்பொழுது அமைக்கப்பட்டது போல் உருவாக்குகின்றனர். கிரேக்கர் கலையில், முக்கியமான மூன்று ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். அதாவது டோரிக், ஐயோனியன், கொரிந்தியன் என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற முறைகளாகும். திராவிடக் கட்டிடக் கலையில் ஒரே ஒரு ஒழுங்கு வரிசை முறைதான் பயன்படுத்தப்படுகிறது அது திராவிட ஒழுங்குமுறை என்று அழைக்கப்படும். உருவம் 17 (A) ஒவ்வொரு சித்திர வேலைப்பாட்டின் பெயர் களையும் காட்டுவதாக இருக்கிறது. எப்படியிருந்தாலும் சில விளக்கங்களைச் சேர்த்து தருவதாக உள்ளது. (1) உபபீடம் (அடிப்பகுதி) மிக எளிதாக சிலசமயம் அணிகள் செய்யப்பட்டதாய் இங்கு நாம் எடுத்துக் காட்டியிருப்பவைகளோடு எழில் மிக்கதாய்ச் செய்யப்பட்டுள்ளது. (2) அடிப்படையில் - அதாவது அதிர்ஷ்டானத்தில் கட்டிடத்தின் கற்பணி அல்லது மரவேலையின் அடிப்படை அதிர்ஷ்டானம் பத்மம் என்று அழைக்கப்படும். அது ஒருவகை மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவுமுள்ள பிழம்புருவாகப் பிரதிபலிக்கும் தாமரையின் இதழ்களால் எழில் பெற்றிலங்கும். அது இன்றியமை யாதது. ஏனென்றால் பெருஞ் செயற் கட்டமைவில் சில பகுதிகளாய் கவின் பெற விளங்குகிறது. சில சமயங்களில் வலிந்து கட்டுப் படுத்தப்பட்டதாய் விளங்குகிறது. மூடிமழுப்பாத சில சித்திர வேலைப்பாடுகள் இங்கு குமுதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவை சில வேளைகளில் சிதைந்து கிடக்கிறது. சில பகுதிகளின் சித்திர வேலைப்பாடுகள் அக்கரப்பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. கபோதம் அடிக்கடி திரும்ப அமைக்கப்படுகிறது. உச்சியில் அவையாளத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டிட வேலையின் சித்திர வேலைப்பாடுகள் முழு மொத்த நிலையைக் காட்டுகிறது. அதை நாம் விளக்கும்பொழுது பிரதாரம் என்று விளக்கிக் காட்டுகிறோம். தம்பம் அல்லது தூணின் மேற்பூச்சு சில வேளைகளில் சதுரப் பிரிவாகவும், சில வேளைகளில் எண்கோண வடிவிலும் உள்ளது. தூணின் அடிப்பகுதியில் உள்ள அணி செய்யப்பட்டபகுதி நாகபந்தம் என்று கூறப்படும். முதல் உருவம் பெரிய அளவில் தூண்தலைப்புறுப்பின் மீது மிகப் பெரிதாக இருக்கும் தூண்தலைப்புறுப்பின் மீதுள்ள பெயரை குமிழ் என்று பெயரிட்டு அழைக்கிறோம். குமிழ் அமைப்பு முறை தூணின் மேல் தட்டு மீது அமைந்திருக்கும். கல் மண்டபங்களின்மீது மேல் நோக்கி விரிந்துள்ள தாமரை மலர் பதுமம் என்று அழைக்கப்படும். கீழ்நோக்கி விரிந்து மலர்ந்துள்ள தாமரை கமலம் என்று அழைக்கப்படும். கமலம் பதுமம் என்ற பெயர்கள் பொதுவாகத் தாமரைக்கு வழங்கப்பட்ட பெயராக இருந்தாலும் மேல் நோக்கி மலர்ந்து நிற்கும் சிற்பத் தாமரைக்குப் பதுமம் என்றும் கீழ் நோக்கி விரிந்து கவிந்து தொங்கும் சிற்பத்தாமரைக்கு கமலம் என்றும் அழைப்பது சிற்பிகளின் மரபு வழக்காக இருந்து வருகிறது. அதிர்ஷ்டானத்தில் சிற்பிகள் கல்லால் ஐந்து வரிகள் அமைப்பது வழக்கம். அவைகள் பஞ்சவரிகள் எனப்படும். அவை முறையே பதுமம், கமலம், தாமரை, நளினம் எனப்படும். இவை அதிர்ஷ்டானத்திலும் இருப்பதில்லை. சிலவற்றில் மூன்றும் உள்ளன. பலகை மணிச் சட்டத்திற்கு (abacus)V‰òila¡fhŒ இருக்கும். உருவம், ஒரு மலர் அமைப்பில் மிக நுணுக்கமான வேலைப் பாடமைந்த தண்டையக் கட்டையின் தூண்மீதுள்ள போதிகை - புஷ்ப போதிகை எனப்படும். சில தாங்கு பட்டிகையில் அடங்கிய நான்கு உறுப்புகளான (1) உத்தரம் (2) ஏராதகம் (3) கபேதம் (4) யாளம் என அழைக்கப்படும். அழகிய கபோதம் கூடு என்னும் உறுப்பால் எப்பொழுதும் எழில் செய்யப்பட்டிருக்கும். யாழம் என்று அழைக்கப்பட்ட உருவ அமைப்பு படம் 4-ஐப் பார்க்க. இது சிங்கம் முகத்தோடு இணைக்கப்பட்டிருப்பதாலும் யானையின் துதிக்கையோடு இணைக்கப்பட்டிருப்பதாலும் இது யாளி என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேன்மாடச் சிறு அறைகள் பல்வேறு வகையான சிறிய அணி மாடல்களாய் (pavilion) அமைத்திருக்கின்றன. அணிமாடங்களின் அமைப்பு முறைகள் அவர்கள் தாங்கள் பெற்ற பெருஞ்செயற் கட்டமைவிற்கு ஏற்ப அமைத்துள்ளார்கள். அவர்கள் அமைத்த கட்டமைவு படம் 4-இல் உள்ளது. அவை கர்ணக் கூடு என்று அழைக்கப்படும். அவற்றின் கூரை சதுரமாகவோ வட்டமாகவோ அமைப்பர். அதை ஒரு தனி தூபி ஒன்றினாலேதான் அமைப்பர். அவைகள் சாலையின் மேல் நடுவில் அமைக்கப்படும். அவைகள் கூரையின் மீது எவரும் எளிதில் அறியுமாறு அமைந்திருக்கும். அவைகள் தூபங்கள் என்று அழைக்கப்படும் மேலே மூன்று தூபங்கள் (கலயங்கள்) திகழ்வதை நன்கு காணலாம். கர்ணக் கூட்டிற்கும் சாலைக்கும் இடையே சில வகையான சிறு சன்னல்கள் காணப்படும். அவைகள் பஞ்சரம் என்று கூறப்படும். நமது ஆகமங்களும், சிற்பநூற்களும் வடமொழியில் இருப்பதால் திருக்கோயிலின் உறுப்புகள் பலவும் வட மொழியிலே அமைந்துள்ளது. இப்பொழுதுதான் நமது கோயில்கள் பற்றி ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் என்ன கூறப்பட்டுள்ளது என்று தமிழ் அறிஞர்களால் ஆய்வு செய்யத் தொடங்கப்பட்டுள்ளது. நமது தெய்வத் திரு உருவம் நிலை பெற்றிருக்கும் இடம் கர்ப்பக்கிரகம் என்ற வடமொழிச் சொல்லாலே அழைக்கப் பட்டது. அப்பால் அதன் மொழியாக்கமாக கருவறை திருவறை என்றெல்லாம் கூறப்பட்டு வந்தன. இப்பொழுது நமது மன்னர்கள் எழுதி வைத்த பழைய கல்வெட்டுகள் மூலம் திருஉருவம் இருக்குமிடம் அகநாழிகை, உண்ணாழிகை என்னும் பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. அடியில் கண்ட லெப்சிய குறிப்புரைகளின்படி இந்த மரபொழுங்கின் வயப்பட்ட உன்னிப்பான உற்று நோக்கும் பார்வை மிகப் பயன் தருவதாகும். முன் அறிவிப்புக் கலைப் பணியின் படிப்பிற்காகவும் அதனுடைய இயல்பு கண்டறிந்த இடம் இன்னும் வழக்காற்றுத் தொடர்புள்ளதாகவே இருக்கின்றது. ஆனால் அது ஒரு நாகரிகமற்றதாக அல்லது அறிவற்றதாகவோ இல்லை என்று எவரும் தனது இஷ்டம் போல் மறுதலிக்க முடியாது. உண்மையான கலைஞன் கூட இந்த முறையை அதனுடைய தகுதியான இடத்தில் வையாது புறக்கணித்துவிட முடியாது. ஆனால் அவனுடைய சொந்த அடையாளத்தை நுட்பமாகக் கூறுவதானால் தனிச் சிறப்பான ஒரு அடையாளம் இலங்கும். அது உண்மையான கலைப்பண்பாடு - சுவை முதலியவற்றின் திறனாய்பவராக ஏற்றுக் கொள்ளப்படும். தனிமுறைச் சிறப்புப் பேரவை எப்பொழுதும் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லாவிட்டாலும் இதைப் போன்று எப்பொழுதும் போல் இல்லாவிடினும் கலை ஆக்கக்கூறு ஒரு இன்றியமையாத மெய்பாடுள்ளதாக இருக்கும்.1 இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. South Indian Temple - V. G. Ramakrishna Iyer B.A. (Madras) 1946 2. A Survey of Indian Histroy - K. M. Panikkar (Bombay) 1956 3. The Dravidian Culture and its diffusion (Cochien) 1936 4. Architecture du sud de L’s India - G. Jouvean Dubreuil (Paris) 1914 5. Th e Interprcters Dictinary of the Bible vol. III 6. Catalogue of the Prchistoric Ambguities from Adichanallur and Perambain - J. R. Hendason (Preface) Madras 1914. 7. Dravidian Architeclivre - C. Jouvdau Dubre nine Madras 1917. 8. Bells Egyplion Archutcture 9. ஆலயங்களின் உட் பொருள் விளக்கம் - ஏ. சொக்கலிங்கம் (சென்னை) 1952. மாமல்லபுரம் மாதிரிக் கோயில்களும் கற்றளிகளும் மாமல்லபுரம் இன்று மகாபலிபுரம் என்று அழைக்கப்படு கிறது. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னன் நரமசிம்மவர்மன் தன் தந்தை மகேந்திரவர்மன் ஆற்றிய கோயில் திருப்பணிகளைத் தொடர்ந்து பல மாதிரிக் கோயில்களை (Model temples) எடுப்பித்தான். அவன் எடுப்பித்த கோயில்கள் மக்கள் வழிபாடு பெற்றவைகள். அவற்றில் வழிபடும் தெய்வ உருவங்கள் இல்லை. அவைகளில் சிலவற்றை மக்கள் அறியாமையால் பஞ்சபாண்டவர் இரதங்கள் என்று அழைத்துவந்தனர். சமண சமயத்தைத் துறந்து சைவம் தழுவிய மகேந்திரவர்மன் (600-630 A.D) தமிழ்நாட்டுக் கட்டிடக் கலை வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கியவன் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். இவன்தான் முதன் முதலாகக் குகைக் கோயிலைக் கண்டவன். குடைவரைக் கோயிலை உருவாக்கியவன் என்று கூறப்படுகிறது. இவன் மகன் மாமல்லன் நரசிம்மவர்மனும் (630-668 A.D) அவனுக்குப்பின் பரமேசுவரப் பல்லவனும் (670-690 A.D) அரச கட்டிலில் அமர்ந்து மகேந்திரவர்மன் வழியில் பல கற்றளிகளை எழுப்பி இப்பார் உலகம் அழியும் வரை பல்லவர் பெயர் அழியாது நிலவச் செய்தனர் என்ற பெயரை நிலைநாட்டினர். மாமல்லபுரம் என்ற பெயரே நரசிம்மவர்மன் பெயரால் எழுந்த பல்லவர்களின் துறை முகப்பட்டினமாகும். மாமல்லபுரத்திலும் சாளுவன்குப்பத் திலும் பிறஇடங்களிலும் அவன் பல குடைவரைக் கோயில் களையும் ஒன்றைக் கல் தேர்களையும் (இரதங்களையும்) உருவாக்கி உலகில் பெரும் புகழை எய்தியுள்ளான். கல்லில் செய்யப்பட்ட தேர்களும் கோயில்களும் மரத்தில் செதுக்கப்பட்டவைகளைப் போல் சிற்பச் சிறப்பு வாய்ந்ததாய் அணிபெறத் திகழ்கின்றன. இந்தக் கற்கோயில்களுக்கு முன் தமிழ கத்தில் பெரிதும் மரக் கோயில்களே சிறப்புற்றதாய் விளங்கின. மாமல்லன் நரசிம்மவர்மன் எடுப்பித்த மாமல்லபுரத்து சிற்பச் செல்வங்கள் இந்திய நாட்டிற்கும் சிறப்பாகத் தமிழ்நாட்டிற்கும் பெரும் புகழை ஈட்டி என்றும் அழியாக் கலைகளாய்த் திகழ்கின்றன. நரசிம்மவர்மனின் கி.பி. 630-668) திருப்பணி முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின் பல்லவர்களின் அரச கட்டிலை அடைந்தவன் அவன் மகன் மாமல்லன் நரசிம்மவர்மன் ஆகும். இவனை வரலாற்றாசிரியர்கள் வாதாபி கொண்ட முதலாம் நரசிம்மவர்மன் என்று கூறுவார்கள். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் தொண்டை நாட்டைக் காஞ்சியில் இருந்து ஆட்சி புரிந்து வந்தான். கவின்மகன் நரசிம்மவர்மன், பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கடல் மல்லையில் (மாமல்லபுரத்தில்) இருந்து ஆட்சி நடத்தி வந்தான். இங்கிலாந்து நாட்டில் அரசர் இலண்டன் மாநகரில் இருப்பார். இளவரசர்கள் உவேல் நாட்டில் வாழ்ந்து வருவார்கள். அவர்கள் உவேல் நாட்டு இளவரசர் (prince of wales) என்று அழைக்கப்படுவார்கள். அதே போல் மல்லையில் வாழ்ந்து வந்த நரசிம்மவர்மனை இளவரசன் மாமல்லன் என்று அழைத்தனர் போலும். இலங்கை அரசுக்குரிய மானவர்மன் என்பவன் அரசு இழந்து தொண்டை நாடு போந்து நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் சாளுக்கிய மன்னன் புலிகேசியுடன் போரிட்டு வாதாபியை வென்றான். அப்போரில் மானவர்மன் பல்லவர்கள் படையோடு சேர்ந்து போரிட்டு நரசிம்மவர்மனுடைய வெற்றிக்குத் துணை நின்றான். அதனால் நரசிம்மவர்மன் தன் படைகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்று மானவர் மனுக்கு முடிசூட்டினான். இதன் நினைவாக நரசிம்மவர்மன் ஒரு காசு வெளியிட்டுள்ளான் என்று சில அறிஞர்கள் கருதுகின்றான் (அக்காசு ஒன்று என்னிடம் உள்ளது) நரசிம்ம வர்மனுடைய படைத்தலைவராக இருந்த பரஞ்சோதியார் (சிறுத்தொண்டர்) பல்லவர்களின் யானைப் படைக்குத் தலைமை தாங்கி வாதாபியை வென்றார். அங்கு இருந்த யானை முகத்தையுடைய பிள்ளையாரைக் கொண்டு வந்து தமிழகத்தில் பிள்ளையார் பேரும் புகழும் பெறச் செய்தார். மாமல்லன் நரசிம்ம வர்மன் பல்லவர்கள் ஆட்சியை விரிவு படுத்தினான். வடக்கே வட பெண்ணை ஆறுமுதல் தெற்கே வெள்ளாறு வரை பல்லவர்களின் கொடி பறந்து வந்தது. இவன் கி.பி. 640-இல் சீனநாட்டு பௌத்த வழிப்போக்கன் காலத்தில்தான் ஹியூங்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வந்து அங்கு சிலகாலம் தங்கியிருந்தான் இவனது காலத்தில் அப்பர், சம்பந்தர், மங்கையர்க் கரசியார், திருநீல கண்டப் பெரும் திரு நீலநக்கர், முருக நாயனார் முதலியவர்களும் முதல் ஆழ்வார்கள் மூவரும் திருமழிசை ஆழ்வார் களும் வாழ்ந்திருந்தார்கள். நரசிம்மவர்மனுடைய சிலை இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவன் நீண்ட மகுடம் புனைந்துள்ளான். காதுகளில் குண்டலங்கள் கழுத்தில் மணிமாலைகள் மார்பில் பூணூல் அணிந்து மிகக் கெம்பீரமாய் நிற்கின்றான். இடக் கையை இடுப்பில் ஊன்றி வலக்கையைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டு நிற்கிறான். அரையில் அழகிய பட்டாடை அணிந்திருக்கிறான். மேலே சட்டையோ, போர்வையோ காணப்படவில்லை. முகத்தில் அமைதியும், கண்களில் உறுதியும் ஆழ்ந்த சிந்தனையும் காட்சி அளிக்கிறது. பல்லவப் பார்வேந்தர்களின் சிலைகள் பலவும் அரசனும் அரசியும் அண்மையில் நெருங்கி நிற்பது போல அமைக்கப் பட்டிருக்கும். மாமல்லபுரம் வராகப் பெருமாள் குடைவரைக் கோயிலில் மன்னன் மகேந்திரவர்மன் பட்டத்தரசியோடு நிற்கும் சிலை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. அங்கு மற்றொரு சிற்பம் மகேந்திரவர்மன் தந்தை சிம்மவிஷ்ணு அவனுடைய அரசியோடு நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத் தில் உள்ள அர்ச்சுன இரதம் என்னும் ஒற்றைக் கற்கோயிலில் இருக்கிற பல்லவ மன்னர் சிலையும் உத்திரமேரூர் மாடக் கோயிலில் காணப்படும் மற்றொரு பல்லவ மன்னர் சிலையும் பட்டத்தரசி யோடு நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நரசிம்மவர்மனின் சிலை மட்டும் தனியாக பட்டத்தரசியின்றிக் காணப்படுவது வியப்பாக இருக்கிறது. நரசிம்ம வர்மன் பிறப்பாலே சைவன். அவன் காலமுழுதும் சைவனாகவே வாழ்ந்தான். அவன் தனது தந்தையைப் போலவே சிவபக்தியுடையவனாகவே வாழ்ந்தான். தந்தையின் வழியைப் பின்பற்றி அவன்பல கற்றளிகளை எடுப்பித்தான். தந்தையைப் போலவே சிவபெருமானுக்கு மட்டுமின்றித் திருமாலுக்கும் கோயில்கள் எடுப்பித்தான். அதோடு கடல் மல்லையில் தந்தை மகேந்திரவர்மன் ஆரம்பித்த திருப்பணியைத் தொடர்ந்து செய்வித்து வந்தான். இன்று நரசிம்மவர்மன் எழுப்பிய ஒற்றைக் கல் கோயில் பல இன்றும் மாமல்லபுரத்தில் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றன. கட்டிடக் கலை (630-668) மாமல்லன் நரசிம்ம வர்மன் காலத்தில் தொண்டை நாட்டில் கட்டிடக் கலை மறுமலர்ச்சி பெற்றெழுந்தது. கி.பி. 600-க்கு முன்பே கட்டிடங்கள் செங்கல் சுண்ணாம்பு மரம் முதலியவற்றால் செய்யப்பட்டு வந்தன. கி.பி. 600க்குப்பின் தமிழகக் கட்டிடக் கலையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது. மகேந்திரவர்மன் மலைகள் அல்லது சிறு குன்றுகள் இருக்கும் இடத்தில் குன்று களைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்கினான். ஆனால் நரசிம்ம வர்மன் குடைவரைக்கோயில் களையும் இரதங்கள் என்று கூறப்படும் ஒற்றைக் கல் கோயில்களையும் உருவாக்கிப் பேரும் புகழும் பெற்றான். நரசிம்ம வர்மன் சிவபக்தன் சைவத்தைக் கண்ணின் கருமணி எனப் போற்றி வந்தான். என்றாலும் வைணவத்தையும் பேணி வந்தான். பல்லவர்கள் சமணத்தை இகழ்ந்து அவர்கள் கோயில் களை இடித்து வந்ததுபோல் வைணவத்திற்குக் கேடு செய்யவில்லை. சிவபெருமானுக்கு திருக்கோயில்கள் எடுப்பித்ததோடு திருமாலுக்கும் கோயில் எடுப்பித்து வந்தது ஆழ்ந்து ஆராயத்தக்கது. சைவமும் வைணமும் தமிழகத்திலே பிறந்த தேசீய சமயமாகையி னாலே இரண்டையும் இரு கண்கள் போல மகேந்திரவர்மனும் நரசிம்மவர்மனும் போற்றிவந்தார்கள். மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் எழுதப் பெற்ற கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பல உண்டு. ஆனால் அவைகள் இன்னும் நமக்குக் கிட்டவில்லை. சமீபத்தில் நரசிம்மவர்மன் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ்க் கல்வெட்டு ஒன்று நமக்குக் கிடைத்துள்ளது. அது திருக்கழுக்குன்றத்து மலைமேல் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்று கூறப்படும். குடைவரைக் கோயிலில் எழுதப்பட்ட சாசனமாகும். இதில் சில எழுத்துக்கள் மறைந்தும் சில எழுத்துக்கள் மழுங்கியும் காணப்படுகின்றன. நிற்க இங்கு நரசிம்மவர்மன் அமைத்த குடைவரைக் கோயில்களையும் ஒன்றைக்கல் இரதங்களையும் பாறைப்படிமங் களையும் இங்கு ஆராய்வோம். ஒற்றைக்கல் கோயில்கள் (இரதம்) முதலாம் மகேந்திரவர்மன் தமிழகத்தில் முதன்முதலாகக் குடைவரைக் கோயிலை அமைத்தான். அவன் மகன் முதலாம் நரசிம்மவர்மன் அவனைப் போல் குடைவரைக் கோயில்களை அமைத்ததோடு பல தேர் போன்ற வடிவில் ஒற்றைக் கற்கோயில் களை அமைத்தான். ஆண்டவன் அழியாதவன்; அவன் உறையும் கோயிலும் அழியாதிருப்பதே சரி என்ற எண்ணத்தில் மகேந்திர வர்மன் குன்றுகளைக் குடைந்து கோயிலாக ஆக்கினான். இந்தக் கோயில்களை உட்புற மட்டும் தோண்டி திருஉருவம் இருக்க உண்ணாழிகையும் மக்கள் நின்று வழிபட மண்டபமும் ஆக்க முடிந்தது. ஆனால் மேற்புறமாக அழகிய விமானங்களை ஆக்க முடியவில்லை. அதனை முதலாம் மகேந்திரவர்மனே செய்து முடித்தான். மகேந்திரவர்மன் காலத்திலே இந்த ஒற்றைக் கல் தேர்க் கோயில் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் நரசிம்ம வர்மன் காலத்திலே நன்கு நிறைவேற்றப்பட்டது. சிற்ப நூற்களின் விதிப்படி இளங்கோயில், தூங்கானை மாடக் கோயில், மாடக் கோயில் போன்றவைகளை உருவாக்கி தமிழகத்திற்கு நல்ல மாதிரிக் கோயில்களாக அமைக்கப்பட்டன. இந்தக் குடைவரை ஒற்றைக்கல் கோயில்கள் முற்காலத்தில் செங்கல்லாலும் சுண்ணாம்பினாலும் செய்யப்பட்ட விமானங் களைப் போன்று நுணுக்கமான அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தாய் இருந்தன. இந்தக் கற்கோயில் விமானங்கள் மரத்தால் கடையப் பெற்றதைப் போல் கற்கள் நன்கு செதுக்கப் பெற்று மெருகிடப்பட்டதாக விளங்கின. இந்த ஒற்றைக் கல்கோயில் தோற்றத்தில் சோழர்களின் கட்டிடக் கலையின் சிறந்த அம்சங்கள் ஒளிர்வதாகக் காணப்படுகிறது என்று அறிஞர்களால் எண்ணப்படுகிறது.1 இந்த ஒற்றைக்கல் கோயிலைப் பாமர மக்கள் தேர் என்றனர். ஐந்து கோயில்கள் வரிசையாக இருந்ததால் பாண்டவர்கள் இரதம் (தேர்) என்று கூறினர். பாமரமக்கள் இட்டபெயர்களையே இன்று அறிஞர்களும் வழங்கி வருகின்றனர். இந்த ஒற்றைக்கல் தேர்களாக தருமராசன் ரதம், வீமசேனன் இரதம், அர்ச்சுனன் இரதம், திரௌபதி இரதம் சகாதேவன் இரதம் ஆகிய ஐந்து சிற்பக்கலை குன்றுகளை நரசிம்மவர்மன் உருவாக்கினான். வீம இரதம் வீம இரதம், அர்ச்சுனன் இரதத்திற்கு தெற்கில் அமைக்கப் பட்டு இருக்கும் ஒரு இருநிலைமாடக் கோயிலின் மாதிரிக் கோயில். இது நீண்ட சதுர வடிவில் குன்றைக் குடைந்து செய்யப்பட்ட ஒரு குடைவரைக் கோயிலாகும். இது சிதம்பரம் ஆடவல்லான் கோயில் அமைப்பில் மண்டபத்தையும் மேற்கூரையையும் (விமானத்தையும்) நான்குபுறமும் தாழ்வாரமும் உள்ளது. இதன் அடிப்பகுதியின் வேலைகள் முற்றுப் பெறவில்லை. மேற்பகு - கர்ணக்கூடு கோஷ்ட பஞ்சரங்கள் ஆகியவைகளின் சிற்ப வேலைகள் சீர்பெற நிறைவு பெற்றிருக்கின்றன. இந்தக் குடைவரைக் கோயில் 42 அடி நீளமும் 25 அடி அகலமும் 25 அடி உயரமும் உள்ளது. மேற்குப்புறம் நோக்கி இருக்கும் தாழ்வாரத்தை நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்கள் சிங்கத்தின் மீது நிற்பது போல் செய்யப்பட்டுள்ளன. இதைப் பார்த்த உடனே பல்லவர் பாணியில் செய்யப்பட்டவைகள் என்பதை எடுத்துக்காட்டும். இதன் நடுவே வெடிப்பு ஏற்பட்டதால் வடக்குப் பகுதியின் வேலை நிறைவடையாமல் இருக்கிறது முதலில் இத்தகைய கட்டிடங்களின் மேற்கூரை மரத்தினால் அமைக்கப் பட்டது. (சிதம்பரத்தில் கூட மரத்தினால்தான் அமைக்கப் பட்டுள்ளது) ஆனால் இங்கு மேற்கூரைக் கருங்கல்லில் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் வெடிப்பேற்பட்டதினால் இதைக் கட்டியவர்கள் தம் பணியை நிறைவுசெய்யாமல் நிறுத்திவிட்டனர் என்று அறிஞர் சே. டப்ளியூ கூமப பீ.ஏ.ஏ.எம்.எ.டி ஆவர்கள் அபிப்பிராயப் படுகின்றார்.1 ஒற்றைக் கல் தேர் வடிவில் அமைக்கப்பட்ட இக் கோயில் நீலகிரிக் குரும்பர்கள் குடிசையைப் போல் வண்டிக் கூண்டு அமைப்பில் காணப்படுகிறது. இந்தக் குரும்பர்கள் இன்று உண்மையான பல்லவர்கள் பிரதிநிதிகளாய் காணப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது. மேலும் இக்குருமார்கள் கைதேர்ந்த சாளுக்கிய சிற்பிகளோடு தொடர்பு கொண்டிருந்த தொழிலாளர் களாகும், என்பதை நமது தேசீய கண்ணோட்டத்தோடு ஆராய்ந்த பல ஐரோப்பிய அறிஞர்கள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆனால் வடஇந்திய நாகரிகமயக்கில் வீழ்ந்து கிடக்கும் சிலர், வீம இரதம் பௌத்த விகாரைகள் (மடங்கள்) போன்று காணப்படுகின்றது என்று கூறுகின்றார்கள்.2 இந்த ஒற்றைக் கல் கோயில் அமைப்பு, சிற்ப நூற்களில் வேசரம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் சிலர், சிற்ப நூற்களில் குறிப்பிடப்படும் திராவிடம், நாகரம், வேசரம் என்ற மூன்று பிரிவுகளில் தமிழ்நாட்டினர் அமைக்கும் கட்டிடம் திராவிட முறையைத் தழுவியது. வட நாட்டில் அமைக்கும் கட்டிடம் மூன்று வேசரத்தைத் தழுவியது என்று எண்ணுகிறார்கள். சிலர் பௌத்த விகாரைகள் (அம்பலங்கள்) வேசர அமைப்பை உடையது என்று கூறுகிறார்கள். இது மிகத் தவறான எண்ணம் சிற்ப நூற்களில் கூறும் திராவிடம், நாகரம், வேசரம் என்ற மூன்று அமைப்புகளும் தமிழர்களுக்கு உரியவைகளேயாகும். தமிழ்நாட்டிலே இந்த மூன்று முறைகளில் தங்களுக்கு விருப்பமான முறையில் பண்டு தொட்டுக் கோயில்கள் அமைத்து வருகிறார்கள். ஆனால் பௌத்தர்கள் இந்த வேசர அமைப்பு முறையைத் தழுவி அதிகமான கோயில்கள் அமைத்து வரலாம். அதே போல் தமிழர்கள் திராவிட அமைப்பு முறையைத் தழுவி அதிகமான கோயில்களை அமைத்து வரலாம். அதோடு தமிழகத்தில், ஏன்? ஆந்திரா, கன்னடம் கேரளம் முதலிய திராவிட நாடுகளிலும் மேற்கூறிய மூன்று அமைப்பு முறைகளையும் தழுவிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் விமானத்திலும் ஆலயங்கள் இல்லை. ஆனால் அவைகள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. விமானத்தின் முக சாலையில் சிற்ப உருவங்கள் செதுக்கப்பெற்றுள்ளன. 4. சகாதேவ இரதம் மாமல்லபுரம் முற்காலப் பௌத்தர்களின் கோயிலைப் போல் இருக்கிறது.1 இது போன்ற துர்க்கை கோயில் சாளுக்கிய நாட்டில் உள்ள அய்கோல் என்னும் இடத்தில் உள்ளது. இது தூங்கானை மாடக் கோயிலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயிலாகும். இத்தகைய கோயில்கள் தமிழகத்தில் பிற்காலத்தில் எழுப்பப் பட்டன. தொண்டை நாட்டில் பல்வேறு விதமான தூங்கானை மாடக் கோயில்கள் உண்டு. இதன் பின்புறம் அரைவட்ட அமைப்பிலும் - அதாவது உண்ணாழிகை அரைவட்டமாகவும் முன்புறம் மண்டபம் நீண்ட சதுரமாகவும் இருக்கும். இத்தகைய பல்லவர்கள் கோயில் ஒன்று திருத்தணிகையில் உண்டு.2 இக்கோயிலுக்கும் இதை அடுத்து நிற்கும் நான்கு கோயிலுக்கும் முன்னர் வெளிப்புறத்தில் சிற்ப உருவங்களே இல்லை. ஆனால் இந்திரன் இங்கிருந்து மும்மூர்த்திகளை வழிபட அமைந்த கோயிலாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்திரனது வாகனம் ஐராவதம் என்ற வெள்ளையானை. அது பின்னால் இருக்கிறது. இக் கோயிலின் அருகில் தெய்வங்களுக்குரிய வாகனங்கள் பல கல்லில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவை நந்தி (எருது) சிங்கம், யானை ஆகியவைகளேயாகும். இவைகள் மூன்றும் அமைதியாக ஓரிடத்தில் வாழ முடியாது. இதை அறிந்தும் வடக்கு நோக்கி சிங்கத்தையும் அதன்பின் தெற்கே பார்க்கும்படி யானையையும் கோயிலுக்குக் கிழக்கில் எருதையும் (நந்தியையும்) செதுக்கி வைத்த பல்லவ நாட்டு சிற்பியின் திறமையை அறிஞர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். இந்த இரதம் தூங்கானை மாடக் கோயில் அமைப்பிற்கு ஏற்ற மாதிரிக் கோயிலாகத் திகழ்கிறது. இந்தச் சகாதேவ இரதம் 18 அடி நீளமும் 11 அடி அகலமும் 16 அடி உயரமும் உள்ளது. முன்புறம் ஒரு சிறு மண்டபமும் பின்புறம் உண்ணாழிகையும் இருக்கிறது. முன் மண்டபத்தை இரு சிங்கத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்தக் கோயில் விமானத்தில் கூடு என்னும் உறுப்புகள் உள்ளன. மஞ்சத்திற்கு மேலே கர்ணக் கூடு, கூடம் கோஷ்டம் பஞ்சரம் போன்ற உறுப்புகள் பல்லவர்கள் பாணியில் பாங்குற அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் உச்சியில் ஐந்து கலயங்கள் இருந்த அடையாளங்கள் உள்ளன. இன்று ஒன்று கூடக் காணமுடிய வில்லை. விமானத்தின் முன்புறம் நெற்றி, அரசிலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மேலே கொம்புள்ள மனிதத் தலை உருவம் இருந்தது. இப்பொழுது அத்தலை உடைந்துவிட்டது. நெற்றியில் புடை சிற்பம் கணேச ரதத்தில் இருப்பது போல் காணப்படுகிறது. இந்தப் புடை சிற்பம் கொம்புள்ள மனிதமுகமே யாகும். இக் கோயில் இந்திரனுக்காக அமைக்கப்பட்டது என்று அறிஞர் லாங்கர் போன்றவர்கள் கருதுகின்றார்கள். எமது நண்பர் மயிலை சீனி வேங்கட சாமி அவர்கள் யானையின் உருவத்தை அமைத்து இந்திரனை வழிபடும் வழக்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து வந்த வழக்கம். அது மாமல்லன் நரசிம்மன் காலத்திற்கு முன் அழிந்துவிட்டது. எனவே இது இந்திரனுக்காக அமைக்கப்பட்டதல்ல. இந்த யானைக் கோயில் யானையின் உருவம் போன்று அமைக்கப்பட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கு இவ்வானையில் உருவம் அமைக்கப்பட்டது போலும் என்று நரசிம்மவர்மன் என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 திரௌபதை இரதம் திரௌபதை என்று அழைக்கப்படும் கொற்றவை கோயில் மிகச் சிறிதாய் எழில் ஒழுக அமைக்கப் பெற்றிருக்கிறது. இது மாமல்லபுரத்தில் ஒற்றைக் கல் கோயிலாகும். இது சிற்ப நூற்களிலும் ஆகமங்களிலும் கூறப்படும் சிரிகரம் என்று கூறப்படும் கோயில் அமைப்புக்கு ஒரு நல்ல மாதிரிக் கோயிலாகும். இதனையே அப்பர் அடிகள் இளங் கோயில் என்று தமிழ்ப் பெயரிட்டு அழைத்துள்ளார் என்று கருதப்படுகிறது. இந்தக் குடைவரைக் கோயிலுக்குத் திருஉண்ணாழிகை மட்டும் இருக்கிறது. மண்டபங்கள் எதுவும் இல்லை. உண்ணாழிகை 11-அடி சதுரத்திலும் 18-அடி உயரத்திலும் அமைந்துள்ளது. வாயில் 6-அடி 7-அங்குல உயரமும் 2-அடி 10 அங்குல அகலமும் உள்ளது வாயிலுக்கு மேலே இரு வளைவுள்ள மகர தோரணங்கள் உள்ளன. இது கொற்றவை கோயிலாக இருப்பதால் வாயிலின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெண் வாயில் காப்போர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கையில் வில் காணப்படுகின்றன. ஆனால் இன்று உண்ணாழிகையின் உள்ளே கொற்றவை உருவம் இல்லை. உண்ணாழிகைச் சுவரில் புடை சிற்பமாகக் கொற்றவை யின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. சுவரின் வெளிப்புறம் மூன்று பக்கங்களிலும் கொற்றவை உருவம் தீட்டப்பட்டுள்ளன. இத் திருக் கோயிலின் விமானம் நான்கு பட்டையாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ்ப்புறம் நான்கு மூலைகளிலும் சுருள் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் விமானத்தில் கர்ணக்கூடு, பஞ்சாரம் முதலிய அமைப்புகள் ஒன்றும் இல்லை. உச்சியில் இருக்க வேண்டிய கலயம் இக்கோயிலின் பக்கத்தில் உள்ள மேடையில் இருக்கிறது. இக் கோயிலுக்கு, உச்சியில் இருக்க வேண்டிய கலயத்தைத் தனிக்கல்லில் செதுக்கி வைக்க எண்ணியிருக்கிறார் இதை அமைத்த சிற்பி. ஆனால் அந்தச் சிற்பிக்கு அதை நிறைவேற்றும் வாய்ப்புக்கிட்டாது போய்விட்டது. இந்தக் கோயிலின் அடிப்புறத்து மேடையை யானைகளும் சிங்கங்களும் எருதுகளும் தாங்குவது போல் கீழே கல்லின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோயில் உள்ளே புகுவதற்கு மூன்று படிக்கட்டுகள் உள்ளன. பரந்த இரண்டாவது மேடையின் மீது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் மேற்கு முகமாக இருக்கிறது. இதைச் சில மேனாட்டறிஞர்கள் பௌத்த நெறியினைத் தழுவிய தலைமைத் துறவிகள் உறைவதற்காக ஒரு முழுப்பாறையி லிருந்து குடைந்தெடுக்கப்பட்ட ஒரு மடம் (பன்சால்) அல்லது அறை என்கிறார்கள். இங்கு துறவிகள் கீழே படுப்பதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. இரவை இங்கு உட்கார்ந்திருக்கும் நிலையிலே கழிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். வேறு சில அறிஞர்கள், துர்க் கொற்றவை (துர்க்கை) வழிபாடு சிறப்பாக நடக்கும் இடம் வங்காளம், வங்காளத்தில் கொற்றவைக்கு அமைத்திருக்கும் கோயிலின் அடிப்படையிலே மாமல்லபுரத்திலும் கொற்றவைக்குக் கோயில் அமைத்திருக்கின்றார்கள். ஆனால் மாமல்லபுரத்தில் வங்கத்தை விட சிறப்பான முறையில் ஒற்றைக் கல்லைக் குடைந்து கோயிலாக அமைத்திருக்கிறார்கள். இத்தகைய கோயில் வங்கத்திலும் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்று தைரியமாகக் கூறமுடியும். இது பண்டையத் தமிழகத்தின் சிறு கோயிலை நினைப்பூட்டுவதாக இருக்கிறது.1 இக்கோயில் எந்த நாட்டுக் கோயிலைப் பார்த்தும் அமைக்கப்பட்டதில்லை. பழந்தமிழர் கண்ட கோயில் அமைப்பேயாகும். சிவாகமங்களிலும் சிற்பநூற்களிலும் காணும் எழுவகைக் கோயில்களில் ஒருவகைக் கோயிலாகும். இத் திருக்கோயில் மிகவும் அற்புதமான அமைப்புடையது. எல்லா இரதங்களுக்கு மூலமான ஒரு இரதம் என்று கூட சொல்லலாம். தென் இந்தியாவில் இதைப்போன்ற கோயிலை நான் கண்டதே இல்லை. துர்க்கைக்கு உருவாக்கப்பட்ட இக்கோயில் பல்லவர்கலையின் ஒரு சிறந்த படைப்பேயாகும் என்று இராசு அடிகள் போன்றோர்கள் கூறியுள்ளனர்.1 இதைப் போன்ற கோயில் தென் இந்தியாவில் இல்லை என்று கூறுவது தவறு. சோழர்கள் கட்டிய இளங்கோயில்கள் தஞ்சை மாவட்டத்தில் இன்றும் காணமுடியும். அவைகள் இதே அமைப்பில் உள்ளது. வலயன்குட்டை இரதம் மாமல்லபுரத்திற்கு அருகே பக்கிங்காம் கால்வாய்க்கு கிழக்கே குட்டைக்கு அருகில் வலயன் குட்டை இரதம் என்ற சிறு கோயில் இருக்கிறது. இது ஊருக்கு வெளியே ஒருபுறம் ஒதுங்கி இருப்பதால் மாமல்லபுரத்திற்கு வருபவர்களும் மாமல்லபுரத்து சிற்பச் சிறப்பு களைக் கண்டுச் சுவைக்க வருபவர்களும் ஆராய வருபவர் களும் வலயன் குட்டை இரதத்தையும் பிடாரி இரதங்களையும் கவனியாமலே போய்விடுகிறார்கள். இது ஏனைய இரதங்களைப் போலவே ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலேயாகும். இக் குடைவரைக் கோயிலின் அடிப்பாகமும் உண்ணாழிகை யும் நன்கு அமைக்கப்படாமல் இயற்கைப் பாறையைப் போல் காணப்படுகிறது. ஆனால் மேற்பகுதி மட்டும் சிற்பியின் உளிக்கு இலக்காகி கோயிலின் மேற்புற அமைப்பைப் பெற்று சீரும் சிறப்பும் பெற்று விளங்குகிறது. இக் குடைவரைக் கோயில் அர்த்த மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அர்த்த மண்டபமும் உண்ணாழிகையும் செம்மையாக அமைக்கப்படவில்லை. மேற்பகுதி - அதாவது விமானம் நன்கு செதுக்கப் பெற்று கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நன்கு அமைந்துள்ளது. ஆனால் இக் கோயில் இளங்கோயில் அமைப்பில் நான்கு பட்டையாக விமானம் இருக்கிறது. ஆனால் திரௌபதை இரதத்தைவிட சிறப்புடன் விளங்குகிறது. திரௌபதை இரதத்தில் மஞ்சம், கழுத்து கூடுகோஷ்ட பஞ்சரம் முதலியன ஒன்றும் கிடையாது. ஆனால் வலயன் குட்டை இரதம் மூன்று நிலையுள்ள இளங்கோயிலாக விமான உறுப்புகள் எல்லாம் பெற்று எழில்பெற்று இலங்குகிறது. இந்த விமானத்தில் கலயம் காணப்படவில்லை. இளங்கோயிலை எவ்வளவு சிறப்புடையதாய்க் காட்ட முடியும் என்பதை இந்தக் கோயிலை அமைத்த சிற்பி நன்கு எடுத்துக்காட்டிப் பெரும்பு கழுக்குரியவராய்த் தன்னை ஆக்கிக் கொண்டுள்ளார் என்பதை நாம் மறப்பதற்கில்லை. பிடாரி இரதங்கள் பிடாரி இரதங்கள் வலயன் குட்டை இரதத்திற்கு வடக்கே சிறிது தூரத்தில் பிடாரி இரதங்கள் என்று கூறப்படும் இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. மாமல்லபுரத்தின் கிராம தேவதையாகிய பிடாரிக்கு அமைக்கப்பட்ட கோயிலாக இது கருதப்படுகிறது. பிடாரி இரதங்களில் வடக்கு நோக்கிய இரதம் (கோயில்) வலயங்குட்டைப் பாறைக் கோயிலைப் போன்று மூன்று நிலையுள்ளதாய் விளங்குகிறது. இது ஒரு இளங்கோயில் அமைப்பை போன்று இருக்கிறது. இக் கோயிலில் அடிப்பகுதியும் உண்ணாழிகையும் அமைக்கப்படாமல் மேல்பகுதிகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிலைகளும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளது. விமானத்தில் உறுப்புகள் எல்லாம் காணப்படுகின்றன. மற்றொரு இரதம் கிழக்குநோக்கி இருக்கிறது இதுவும் உண்ணாழிகை செம்மையாக அமைக்கப்படாது விமானப் பகுதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் அர்ச்சுனன் இரதம் தருமராசன் இரதம் போன்ற எட்டுப்பட்டையுள்ள மணிக்கோயில் (கந்தகாந்த) அமைப்பில் காணப்படுகிறது. இன்று இக் கோயில்களில் சிலைகள் எதுவும் இல்லை. இன்று மாமல்லபுரத்தைக் காவல் செய்யும் கிராம தேவதையாகிய பிடாரி அங்கு காணப்படவில்லை. ஊருக்குள் போவோரை ஊரின் புறத்தே இவ்விரு இரதங்களே வரவேற்பது போல் நிற்கின்றன. மாமல்லபுரத்தைப் பற்றிப் பல்வேறு அறிஞர்கள் நூல்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பிடாரி இரதங்களைப் பற்றி ஒருவார்த்தையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்கள். ஆனால் பிடாரி இரதங்கள் அலட்சியமாய் விடப் படுவதற்கு உரியதல்ல. இந்தக் குடைவரைக் கோயில்களின் விமானங்களில் கூட கோஷ்ட பஞ்சரங்களும் அதற்கு மேல் கழுத்தும் அதற்கு மேல் எண்கோண அமைப்பையும் செதுக்கி சிற்பி தன் கைவண்ணத்தை மக்களுக்குக் காட்ட பெரிய முயற்சி செய்திருக்கிறார் என்பது இக் கோயிலைப் பார்த்து நுணுகி ஆராய்பவர்களுக்கு நன்கு புலனாகும். பரமேசுவர வர்மன் (கி.பி. 640-685) கி.பி. 668 முதல் 670 வரையுள்ள இரண்டு ஆண்டுகள் பல்லவர்கள் நாட்டில் சிற்பக்கலை எதுவும் துளிர்த்ததாக நமக்குத் தெரியவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளிலும் நரசிம்மவர்மன் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் ஆட்சி நடத்தியகாலம். இவன் அரச கட்டிலேறிய இரண்டு ஆண்டிற்குள் இவனிடமிருந்து பெரிய கலைப்பணியை எதிர்பார்ப்பதில்லை. மேலும் இவன் வரலாறு கூறும் பட்டயங்கள் எதுவும் இதுகாறும் நமக்குக் கிடைக்கவில்லை. இவனுக்குப் பின் பல்லவர்களின் அரச கட்டிலை அடைந்தவன் பரமேசுவரவர்மன். இவன் கி.பி. 670-இல் அரச கட்டிலில் அமர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து வந்துள்ளான். இவன் தன் ஆட்சி காலத்தின் பெரும் பகுதியைப் போரிலே கழித்துள்ளான். எனவே இவன் கலைத்துறையில் பெரும்பணி புரியவில்லை. இவனுடைய பட்டயங்கள் பல நமக்குக் கிடைத்துள்ளன. அதன் மூலம் இவன் ஆற்றிய கலைப்பணிகள் நன்கு தெரிகின்றன. இவனது கூரம் பட்டயம் இவனது கலைப் பணியை விளக்குகிறது. இப்பொழுது தொண்டை நாட்டிலுள்ள பல பெரிய கோயில் களில் நடக்கும் வழிபாடுகள் எல்லாம் இவன் காலத்தில் எழுந்தன என்பதைக் கூரம்பட்டயம் அறிவுறுத்துகின்றது. இவன், பல்லவர்கள் நாட்டிலுள்ள கோயில்களில் முதலாகப் பாரதம் படிக்க ஏற்பாடு செய்தான். முதன் முதலாக தமிழகத்தில் வடநாட்டுப் போர்க் கதைகளை மக்களுக்கு உணர்த்தியவன் இவனேயாகும். ஒருவேளை போர்க்கதைகளை அறிவதால் மக்களுக்கு வீர உணர்ச்சியும், போர்வெறியும் எழும் என்று பாரதம் படிக்கச் சொன்னான் போலும். இவனது கூரம்பட்டயத்தில் முதல் மூன்று சுலோகங்கள் கடவுளை (பரமேசுவரனை) வாழ்த்தியுள்ளன. அதாவது, (1) காமனை அழித்த சிவன், படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் காரணன்; இவன் அகாரணனான அத்யந்தகாமனுக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பானாக. (2) கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம் வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீநிதி (தலைமேல்) வைத்துள்ளான். (3) பக்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும் கைமீது அழகிய நகைபோல நிலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக என்பதாகும். கூரம் கோயில் முதற் கற்கோயில் பரமேசுவர்மன் சிறந்த சிவபக்தன். இவன் காலத்தில் பல சிவன் கோயில்களைப் புதுப்பித்தான். சில சிவன் கோயில்களை கட்டு வித்தான். இவன் கட்டிய கற்கோயில்களில் குறிப்பிடத்தக்கது கூரம் என்ற சிற்றூரில் எடுப்பித்த சிவன் கோயிலேயாகும். இது கல்லால் கட்டப் பெற்றதாகும். இதனை அரசன் பரமேசுவர மங்கலம் எனத் தனது விருதுப் பெயரைப் பெற்ற சிற்றூரை மானியமாக அளித்தான். இக் கோயிலுக்கு வித்யா விநீத பல்லவ - பரமேசுவர க்ருகம் எனப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.1 இதுதான் தமிழகத்தில் துளிர்த்த முதல் கற் கோயில் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். மாமல்லபுரம் இரதங்கள் இவன் தனது முன்னோர்களால் தொடங்கப் பெற்று முற்றுப் பெறாதிருந்த தர்மராசர் தேரின் மூன்றாம் நிலையை முடிவு பெறச் செய்தான். அந்த அடுக்கில் ரணசயன் (ரணரசிகனான விக்கிர மாதித்தனை வென்றவன்) அத்யந்தகாம பல்லவேசுவர க்ருகம் என்பவற்றை வெட்டுவித்தான். இதனால் இவன் ரணசயன் அத்யந்தகாமன் என்ற பெயர்களைப் பூண்டவன் என்று தெரிகிறது. இவனே மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I ஆகிய தம் முன்னோர்கள் வழியில் கணேசர் கோயிலையும் இராமானுசர் மண்டபத்தையும் உருப்படுத்தியவன் என்று அறிகிறோம். மேலும் இவன் சிறந்த சிவபக்தியுடையவனாக இருந்ததாலே தருமராசர் மண்டபம், கணேசர் கோயில், இராமானுசர் மண்டபம் முதலியவை களை உருவாக்கினான் என்று தெரிகிறது இதை இங்குள்ள கல்வெட்டுகள் நன்கு எடுத்துக்காட்டுகிறது. பரமேசுவரப் பல்லவ மன்னனுக்கு, சித்திரமாயன், குணபாசனன், அத்தியந்த காமன், வதன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்று அவனது கல்வெட்டுகளால் அறிகின்றோம். இவனது கல்வெட்டுகள் மூலம் இவனுடைய சிவபக்தியும் சைவ சமயப் பற்றும் நன்கு தெரிகிறது. இவன் நவமணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவமாகச் செய்யப் பெற்ற முடியைத் தலையில் தரித்திருந்தான் என்று தெரிகிறது.2 மேலும் இவனது கல்வெட்டுகள் இவனுக்குள்ள வடமொழிப் புலமையை நன்கு எடுத்துக் காட்டு வதாக இருக்கிறது. இவன் எடுப்பித்த கணேசர் கோயிலில் வெட்டிய 11 வடமொழிக் கல்வெட்டுகளும் படித்துப் பயன்பெறத் தக்கவைகள் கண்டுகளிக்கத் தக்கவைகள். அதில் அரசனுக்கும் சிவபெருமானுக்கும் பொருந்தும்படியாக சிலேடையாக செய்திகள் அமைந்துள்ளன.3 5. கணேச இரதம் கணேச இரதம் என்று கூறப்படும் மாமல்லபுரத்தில் உள்ள மாதிரிக் கோயில் கணேசருக்காகக் கட்டப்பட்ட கோயில் அல்ல. இது சிவபெருமானுக்காகச் செய்த ஒற்றைக் கல் கோயிலாகும். ஒரு சிறு பாறையைச் செதுக்கியும் குடைந்தும் செய்யப்பட்டுள்ளது. இக் கோயிலில் இருந்த சிவலிங்கம் பிற்காலத்தில் அகற்றப் பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இவ்வூர் மக்கள் இக்கோயிலில் ஒரு பிள்ளையார் உருவத்தை வைத்துள்ளார்கள். அதன் பின்னர் இக் கோயிலுக்கு கணேசர் இரதம் என்று பெயர் எழுந்தது. இது ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட குடைவரைக் கோயில். இங்கு பல்லவகிரந்த எழுத்தில் எழுதப் பெற்றச் சாசனத்தின் மூலம் அத்யந்த காம பல்லவேச்சுரகிருகம் என்ற பெயரையுடையதாகத் தெரிகிறது.1 இப்பெயர் மூலம் இது சிவபெருமானுக்காக அத்தியந்த காமன் என்ற சிறப்புப் பெயர் வாய்ந்த பரமேசுரவர்மன் கட்டிமுடித்த கோயில் என்று தெரிகிறது. இவன் நரசிம்மவர்மன் பேரன் என்று தெரிகிறது. இக் கோயில் நரசிம்மன் காலத்தில் தொடங்கப் பெற்று பேரன் காலத்தில் முற்றுப் பெற்றது என்று கூறுவாரும் உண்டு. இக் கோயிலுக்கு பேரன் பரமேசுவர்மன் சிறப்புப் பெயர் இடம் பெற்றுள்ளது. இத் திருக்கோயில் 20 அடி நீளமும் 11 அடி 6 அங்குல அகலமும் 25 அடி உயரமும் உள்ளது. மேற்கு நோக்கி அமைந் திருக்கும் இக் கோயிலின் முன்னர் 20-அடி நீளமுள்ள அர்த்த மண்டபம் உள்ளது. இக் கோயில் ஒரு எழில்மிக்க சின்னஞ்சிறு கோயிலாகும். இதன் மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. வண்டிக் கூண்டின் வடிவில் அமைந்த இக் கோயிலின் விமானம் பிற்கால இராயர் கோபுரம் போன்று பெரிதான நீண்ட தோற்றத்தை அளிக்கிறது. இன்று இது தமிழகத்தில் மிக உயர்ந்த கலைக் கோயில்களில் ஒன்றாக ஒளிர்கிறது. இக் கோயிலில் மேற்கு நோக்கி இருக்கும் தாழ்வாரத்தில் சிங்கத் தூண்களும் சிங்க மேற்பூச்சும் (அதாவது சுவரருகே பாதித் தூண்கள் இருபுறமும் சுவர்களின் ஒரு பகுதியாக இணைந்திருக் கிறது. வெளிச்சுவர்களின் மேற்பூச்சு மரத்தூண்களைப் போல் காணப் படுகிறது. தூண்களின் மேலே உச்சியில் வெளியே துருத்துக் கொண்டிருக்கும் எழுதகம் (கார்னி) சிறு அரைவட்டப் பலகணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கார்னிக்கு மேலே விமானத்தின் சிற்ப உருவங்கள் சுற்றிலும் அணி செய்கிறது. இதற்கு மேலே இரண்டாவது கார்னி விமானத்தின் சிற்ப வேலைப் பாடுகளின் மேல் வரிசையில் காணப்படுகிறது. இரண்டாவது நிலை வண்டிக் கூண்டின் வடிவமான சாய் கூரையில் செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பலகணிகள் இருக்கிறது. இதைப் போலவே பீம இரதம் என்னும் கோயிலும் அமைந்துள்ளது. இக் கோயில் இரு நிலைகள் உடையதாய் மேலே ஒன்பது கலயங்களுடன் ஒரே கல்லில் செதுக்கப் பெற்ற ஒற்றைக் கற்கோயில் ஆகும். இக் கோயிலின் அர்த்த மண்டபத்தின் இரண்டு கோடியிலும் புடை சிற்பங்களாக இரு மனித உருவங்கள் உள்ளன. இது மன்னர் உருவங்களாக மதிக்கப்படுகிறது. மண்டபத்தின் நடுவே திருஉண்ணாழிகை 6 அடி 11 அங்குல நீளமும் 3 அடி 9 அங்குல அகலமும் 6 அடி 8 அங்குல உயரமும் உடையதாய்ச் செதுக்கப் பெற்றுள்ளது. இக் கோயிலுக்கு மேலே மஞ்சமும் (பிரதாரமும்) கூட கோஷ்ட பஞ்சரமும் கர்ணக்கூடும் பிற உறுப்புகளும் உள்ளன மஞ்சத்திற்கு மேலே இரண்டாவது நிலை உள்ளது. இரண்டாவது நிலைக்கு மேலே மஞ்சம் கூட கோஷ்ட பஞ்சரம் கர்ணக் கூடு போன்ற உறுப்புகள் உள்ளன. இந்த நிலைக்கு மேல் கழுத்தும் மேலே சால்கார விமானமும் உள்ளது. இவ்விமானம் பீம இரத விமானம் போல் இருக்கிறது. இதன் முகசாலைகள் நெற்றி முகமும் பீம இரதத்தை ஒத்ததாகவே காணப்படுகிறது. இக்கோயில் வேசர அமைப்பு உடையது. இந்த சாலாகால விமானக் கோயில் மாதிரி யாகக் கொண்டே பிற்காலத்தில் காஞ்சியில் கயிலாசநாதர் கோயில் முற்றத்தில் உள்ள மகேந்திரவர்மேசுவரக் கிருகம் என்னும் கோயில் மூன்றாம் மகேந்திரவர்மப் பல்லவனால் கற்றளியாக கவின் பெறச் செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது. இராச சிம்மன் (கி.பி. 665-705) இராச சிம்மன் ஆட்சி கி.பி. 665-ஆம் ஆண்டில் 40-ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. இவனது ஆட்சி காலத்தில் எந்தப் போரும் நடைபெறவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் பலரும் கூறுகின்றார்கள். ஆனால் சிலர் இக்காலத்தில் இராசசிம்மன் சாளுக்கியரோடு மட்டும் போரிட்டு வெற்றி பெற்றான் என்று கூறுகிறார்கள். இராச சிம்மன் போர்த்திறம் மிக்கவன். அவனது நாட்டைச் சூழ்ந்திருந்த பிற அரசர்கள் அனைவரும் அவனோடு போரிட அஞ்சிக் கிடந்தனர். இவன் சிறந்த சிவபக்தனாகவும் மிளிர்ந்தான். காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலை எடுப்பித்தவன் இவனேயாகும். அதன் பின்னர் அங்கு ஐராவச்தேச்சுவரர் கோயிலை எடுப்பித்தான். மாமல்லபுரத்தில் தனது முன்னோர்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றித் தானும் சில குடைவரைக் கோயிலை உருவாக்கிப் பேரும் புகழும் பெற்றான். வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பன்மலைக் கோயிலை எடுப்பித்துப் பேரும்புகழும் பெற்றான். ஒவ்வொரு கோயிலிலும் தனது விருதுப் பெயர்களை எழுதுவித்தான். கயிலாச நாதர் கோயிலில் மட்டும் கிட்டத்தட்ட இவனது விருதுப் பெயர்கள் 250 காணப்படுகின்றன. இவைகளில், சங்கரபக்தன், சிவசூடாமணி, ரிஷபலாஞ்சனன், ஆகமப்பிரியன் போன்ற பெயர்கள் இவனது சமயப்பற்றையும் சிவபக்தியையும் காட்டுவதாக இருக்கின்றன. இவனது விருதுப் பெயர்களில் ஸ்ரீவாத்ய வித்யாதரன் என்பது இதன் மூலம் இவனுக்குள்ள இசைப்பற்று நன்கு புலனாகும். இவன் இசைக் கருவிகளை இயக்குவதில் இணையற்ற புலவனாக இருந்தான் என்று அறிகிறோம். இவன் மும்மலங்களையும் ஒழித்தவன், தேவரைக் கண்டவன்; வான் ஒலிகேட்டவன் இவன் மகாதேவனுக்கு அடியான்; சைவசித்தாந்த தூநெறிப்படி ஒழுகுபவன்; மக்களுக்காக எல்லாத் தியாகத்தையும் செய்யவல்ல அமர அரசன் என்று அக்காலத்தில் உள்ள சைவ சமய பக்தர்களும் அறவோர்களும் குடிமக்களும் இவனைப் போற்றி வந்தனர். இவன் பரமேசுவரவர்மனைப் பின்பற்றி நல்ல திருப்பணிகள் இயற்றிவந்தான். இவன் இயற்றிய திருப்பணி களாவன. கடற்கரைக் கோயில்(பள்ளி கொண்டருளிய தேவர் கோயில்) மாமல்லபுரத்தில் இராச சிம்மன் மூன்று கடற்கரைக் கோயிலை எடுப்பித்தான். அவைகளில் சத்திரிசிகாமணி பல்லவேச்சுரம், இராச சிம்ம பல்லவேச்சுரம் என்னும் இரு கோயில்களையும் கடல் கொண்டுவிட்டன. ஆனால் அவைகளில் உள்ள சில பகுதிகள் இன்று எஞ்சி நிற்கின்றன. இரண்டு பலி பீடங்களும் ஒரு கற்கொடிமரமும் இன்றும் இருக்கின்றன. கடலை நோக்கியவாறே ஒரு சிவலிங்கம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இது கடல் கொண்ட சத்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரத்தில் இருந்ததாம். இது போலவே கடல் கொண்ட இராச சிம்ம பல்லவேச்சுரமும் சிவன் கோயில் என்று கூறப்படுகிறது. இப்பொழுது அதன் பலிப்பீடம் எஞ்சிநிற்கிறது. சுற்றிலும் இராசசிம்மன் விருதுகள் காணப்படு கின்றன.1 இப்பொழுது காணப்படும் பள்ளி கொண்டருளிய தேவர் கோயில் திருமாலுக்குரியது. பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்தெம் பெருமானார்க்கிடம் விசும்பில் கணங்க ளியங்கு மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் வணங்கு மனத் தாரவரை வணங்கென்றன் மட நெஞ்சே என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இதனால் இக் கோயில் பாடல் பெற்ற சலசயனம் ஆகும். சலசயனப் பெருமாள் என்பதற்கு நீர் அருகில் பள்ளி கொண்ட திருமால் என்பது பொருளாகும். தரையில் பள்ளி கொண்ட பெருமாளை தலசயனம் ஆகும் என்பர் இக் கோயிலை திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இக்கோயில் பிற்காலத்தில் விசயநகர நாயக்க மன்னர்களால் புதுப்பிக்கப் பெற்றுள்ளது. இராச சிம்மன் காலத்துப் புலவரான தண்டி என்பான் இக் கோயிலைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பள்ளி கொண்ட தேவர் கோயில் மாமல்லபுரத்தில் உள்ள ஏனைய கோயில்களைப் போல் ஒற்றைக் கல் கோயில் அல்ல பல்வேறு பெரிய கற்களால் செதுக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப் பட்ட கோயிலாகும் இரு கோபுரங்களையுடைய இக்கோயில் சைவ வைணவச் சமய ஒற்றுமைக்கு அடிகோலுகிறது. பிணங்களிடு காட்டில் விளங்கும் சிவனும் திருச்சக்கரத்துத் திருமாலும் ஒன்றாக இருக்கின்றனர். கலைவளர்த்த இடத்தில் சமய ஒற்றுமையும் வளர்க்கப்பட்டது. இந்தக் கடற்கரையில் தலை தூக்கி நிற்கும் கோயிலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் சிவன் கோயில் ஒரு பிரிவு; நடுவே பள்ளி கொண்டிருக்கும் திருமால் கோயில் கொண்டிருப்பது மற்றொரு பிரிவு. மேற்கு நோக்கி இருக்கும் சோமா கந்தருள்ள இடம் இன்னொரு பிரிவு கிழக்கு நோக்கி இருக்கும் உண்ணாழிகையின் உள்ளே இருக்கும் சிவலிங்கம் கலைகளையும் அடிவானத்தின் அற்புதத்தையும் கண்டுகளித்து கவினுற நிற்கிறது. இந்த இலிங்கம் கருங்கல்லில் ஆனது. இந்த இலிங்கம் தலைப்பாகம் சாதாரண இலிங்கம் போன்றது. அடிப்பாகம் பட்டை வடிவமானது. சலசயனப் பெருமாள், எட்டடி நீளம் உள்ள பெரிய உருவம். ஆழ்த்துயிலில் அமர்ந்திருக்கும் அரங்களின் முகத்தில் ஒளிரும் அமைதியை அறிஞர்கள் கண்டு அகமகிழ்கின்றனர். இந்தக் கடற்கரைக் கோயில் ஆறு அடுக்குக் கும்ப விமானத்தை உடையது. உள்ளறை ஒன்றேயொன்றுதான். அதைச் சுற்றி திருச் சுற்று உள்ளது. அதில் ஒன்பது சிறு கோயில்கள் உள்ளன. இக்கோயிலைத் தொலைவினின்று நோக்கினால் தருமராசன் தேர்போல் திகழும். இவைகளின் விமானம் மேல் நோக்கிச் செல்லச் சிறுத்து உயரும் தட்டுகளை (நிலைகளை)க் கொண்டது. உள்ளறை வேறு கோபுரம் வேறு என்று பிரித்துக் காண முடியாது. உள்ளிருக்கும் இலிங்கங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்தவை சிலபக்கங்களில் காடிவெட்டப்பட்டிருக்கிறது. சிவலிங்கத்திற்குப் பின்னர் சுவர் மீது சோமா கந்தர் சிலை உள்ளது திருவாகி ஒற்றை வளைவு உடையது. இங்கும் தூண்களுக்கடியில் பின்கால்கள் மீது எழுந்து நிற்கும் சிங்கங்கள் இருப்பதேயாகும் சில சிங்கங்கள் சுதையினால் ஆக்கப்பட்டன. கலைப் பண்புக் கூற்றின் வளர்ச்சி மிகத் தொன்மையான காலந் தொட்டு தமிழகத்தில் கோயில் அமைப்பிற்கு அழித்து வரும் சிறப்பான மரபு வழக்கை இதன் முன் எழுதியுள்ள அதிகாரங்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளோம். பழைய அமைப்புகளுக்கும் புதிய அமைப்புகளுக்கும் வேறுபாடுகள் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் இங்கு காணப்படும் வேற்றுமைகள் எல்லாம் அடிப்படையில் எழுந்த வேற்றுமைகள் அல்ல. சிறிய வேலைப் பாடுகளில் எழுந்த வேற்றுமை களேயாகும். திராவிடக் கட்டிடக் கலையில் கால மாற்றங்களில் பல்வேறு சூழ்நிலையில் பல்வேறு பண்பு வேறுபாட்டின் தன்மையால் சிற்சில மாற்றங்கள் எழுந்துள்ளன. இது இயற்கையேயாகும். இவற்றை உன்னிப்பாக உற்றுணர வேண்டியது கலை வரலாற்றை ஆராயும் அறிஞர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டியது இன்றியமையாததாகும். கலைப் பண்புக் கூற்றின் நிலையான வரலாற்றில் பல்வேறு நூற்றாண்டிலும் பல்வேறு சூழ்நிலையிலும் பல்வேறு நாட்டிலும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு கலைப் பணிக்குறிய பொருள்களின் தன்மைக்கு ஏற்ப, கலை சிற் சில மாற்றங்களைப் பெறுகிறது. இது தவிர்க்க முடியாத தன்மையில் எழும் இயற்கை மரபு என்பர் அறிவர்கள். இதனை கலை நூற்புலவர்கள் இந்த உண்மையை கலை வரலாறும் பண்பு வரலாறும் என்று எடுத்துக் காட்டுகின்றனர். கலைஞர்கள் இதனைக் கலை மாற்றம் என்று கூற மாட்டார்கள். எழுத மாட்டார்கள். ஆனால் உள்ளது சிறத்தல் (பரிணாம வளர்ச்சி) என்று கூறுவார்கள். அழகு செய்யும் சிறப்புக் கூறுகள் அனைத்தும் உறுதியாக ஒன்று போல் எங்கும் வளர்வதில்லை. ஒரே கால கட்டத்தில் நன்கு ஒரு பகுதியில் பெரிய வளர்ச்சி எழும். சில இடத்தில் சில கால கட்டத்தில் வளர்ச்சியின் அறிகுறி கூட எழுவ தில்லை. சில இடங்களில் கட்டிடங்கள் பெரும் வளர்ச்சியை எய்தியுள்ளது. சில இடங்களில் வளர்ச்சியின் தொடக்க நிலை கூட காண முடிவதில்லை. இவ்வாறாக சின்னங்களின் காலங்களை ஆய்ந்து இவற்றின் காரணங்களை நன்குணர்ந்து விடை காண வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. அதற்காக வேறு பட்டுள்ள பண்புருவங்களையுடைய பல்வேறு பாணிகளின் சிறப்புக் கூறுகளை உற்று ஆய்ந்து முடிவு காண வேண்டியது இன்றிமை யாதது. உரு நிலை மாற்ற ஆய்வில்தான் நாம் முதன் முதலாக இறங்க வேண்டும். இரண்டாவதாக தென் ஆர்க்காடு வட ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள நினைவுச் சின்னங்களை (Momuments) சிறப்பாக ஆய்வது இன்றியமையாத தாகும். திராவிடக் கட்டிடக் கலையைப் பற்றிய திறனாய்வு நமது நாட்டில் இன்னும் சிறப்பாக நிகழவில்லை. என்றாலும் நமது நாட்டில் சிறப்பாய், செவ்வியதாய், திறனாய் செய்யப் பெறுவது இன்றியமையாதது. ஒரு இடத்திலாவது நமது திராவிடற் கலை முறைகளை நன்கு ஆராய முற்பட்டுவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஊழியில் நன்கு ஆராயப்பட்டு எங்கும் ஒரு சீராக கலை ஒழுங்கு பெற்று ஒரு நிலையில் எழுந்து விடும். ஒருவர் ஒரு ஒழுங்கு முறையை அறிவியல் பாங்காக ஆய்ந்து உண்மையை வெளிப்படுத்திவிட்டால் அதே முறை விரைவில் நாடெங்கும் எளிதில் பரவி விடும். பிற பகுதியில் உள்ளவர்கள் மேலும் ஆய்வது எளிதாகி விடும்.1 இறுதியாக இந்தியா முழுவதும் ஏன் வெளிநாடுகளிலும் பரவி நிற்கும். திராவிடக் கலைகளை ஒப்பிட்டு ஆய்வதற்கு பெரிய கட்டிடத்தில் ஒவ்வொரு சிறுசிறு பகுதிகளையும் ஆராய்ந்து எல்லாக் கோயில்களையும் அதிலுள்ள போதிகைகளையும் பூமுனையையும் அங்குள்ள கல்வெட்டுக்களையும் பற்றித் தெள்ளத் தெளிய ஆராய வேண்டும் என்று நான் சொல்ல முன் வரவில்லை. நமது நல் ஆய்விற்கு ஒரு ஊழியில் ஒரு பகுதியில் ஒரு விதப் பாணியில் அமைக்கப்பட்ட கோயில்களை நன்கு ஆய்ந்து விட்டால் மற்றவைகளை யெல்லாம் எளிதில் ஆய்ந்து விடலாம் என்பதே எனது பட்டறிவில் காணும் உண்மை. இன்று தீர்க்க முடியாத அகில உலகப் பிரச்சினைகளையெல்லாம் 10 பேர்கள் மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்து சில மணி நேரங்களில் முடிவு கட்டி விடும் அறிவியல் ஊழியில் நமது கலைகளை ஆய்ந்து முடிவு கட்டுவது பெரிய காரியம் அல்ல. எல்லாக் கலையும் மனம் போனவாறு அமைக்கப்பட்டதல்ல. சிற்ப விதிப்படி, ஆகமச்சட்டங்களுக்கு அணுவளவும் மாற்றமின்றி அமைக்கப்பட்டதாகும். எனவே அவற்றிற்கு முடிவு காண்பது எளிது. இங்கு நமது முன்னுள்ள முக்கியமான வினாவிற்குரிய பிரச்சினையாவது: தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் தலைநகரங்களுக்கும் பேரூர்களுக்கும் சிற்றூர்களுக்கும் பலமுறை பயணம் செய்து வர வேண்டும். கோயில் அமைப்புகளில் சில விதிகளும் கொள்கைகளும் எப்பொழுதும் நிரந்தரமாக இருந்து வருவதை நாம் நன்கு உணர வேண்டும். இங்கு இவைகளைப் பற்றி நான் தெளிவாக விவரிக்க விரும்பு கிறேன். அவை தவறு என்று மெய்ப்பிக்கப்படும் வரை நமது கருத்து செயல் விளக்கம் உள்ளதாகத் தாராளமாக ஒப்புக் கொள்ள வேண்டும். நமது சமயம் பாண்டிய நாட்டிற்கு உரியது என்றோ சோழ நாட்டிற்கு உரியது என்றோ எண்ணுபவன் சிவத் துரோகியாவான். இல்லை காசியிலும் சைவம் உண்டு இமய மலையிலும் சிவ பெருமான் உமா தேவி யோடு வீற்றிருக்கின்றார் என்று இந்திய நாட்டுச் சைவர்கள் கருதுகிறார்கள். என் போன்றவர்கள் எமது தந்தை உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியன் என்று பாடியதைக் கேட்டறிந்தவர்கள். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போன்றி என்று இளமையில் கை கூப்பி நின்று பாடியதை இன்றும் மறவாதவர்கள். அதோடு நமது நாட்டு அறிஞர்கள் சிலர் சர்சாண் மார்சல் போன்றவர்கள் சைவம் உலகம் முழுவதும் பரவி இன்றும் துஞ்சாது உயிருடன் நிலவும் தூநெறி என்றியம்பியதை மறவாதவர்கள். சிவ பெருமான் தென் அமெரிக்காவிலும் எகிப்திலும், மெச பொத்தாமியாவிலும், அசீரியா, அக்கேடியா, சால்டியா, சீரியா, எத்தோப்பியா மலையம் கடாரம், சாவகம் புட்பகம், பாலித் தீவு, போனியோ முதலிய நாடுகளிலெல்லாம் பரவி இன்றும் நிலவும் ஒரு உலகளாவிய தெய்வம் என்பதை உணர்ந்தவர்கள். எனவே எதையும் திட்டவட்டமாக ஆய்ந்து உண்மையை உணர்வதற்கு நாம் முன் கூட்டியே என்ன செய்ய வேண்டும். தொல் பொருள் ஆய்வுத் துறையினரும் கல்வெட்டு ஆய்வுத் துறையினரும் கூடி ஆய்ந்து முக்கியமாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்ந்து செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். நமது முடிவான வாய்மைத் தேர்வு நாம் என்ன முடிவு செய் திருக்கிறோம் என்பதை மட்டும் உறுதி செய்கிறது என்று நம்பலாம். நமது கட்டிடக் கலை வளர்ச்சியை நன்கு உணர்வதற்கு நாம் பல நூற்றாண்டுகளாக உள்ள நமது நினைவுச் சின்னங்களை மிக நெருங்கி அணுக வேண்டும். வேறு துறைகளைப் போன்று இது எளிதில் முடிக்கும் சிறு பணி அன்று கட்டிடக் கலை வரலாற்றை முதலில் பல காலப் பகுதி களாகப் பகுத்துக் கொள்ள வேண்டும். அறிஞர்கள் நமது கட்டிடக் கலை வரலாற்றை ஐந்து பகுதிகளாகப் பகுத்துள்ளதாகத் தெரிகிறது. அவைகளை கிட்டத்தட்ட சமமான காலங்களாக - அதாவது ஒவ்வொன்றையும் 250 ஆண்டுகளாகப் பிரித்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரிவுகள் களங்கமற்ற - கட்டுப்பாடுகளுக்கு உட்படாததாக இருக்கிறது. மேலும் கலை, மிக நுட்பமான உள்ளது சிறத்தல் என்னும் இயற்கை நியதியான வளர்ச்சியால் (பரிணாம வளர்ச்சியால்) மாறுதல் அடைந்திருக்கிறது. அந்த வளர்ச்சி, தொடர்பு அற்றுப் போகாத வழியில் நிலவியுள்ளது. எனினும், இந்த ஐந்து காலப் பிரிவுகளும் கலந்து ஆயும் வாய்ப்பை நமக்கு அளிப்பதாக இருக்கிறது. இந்த ஐந்த காலப் பிரிவுகளும் அடியில் வருமாறாகும்: 1. பல்லவர் ஊழி (சகாப்தம்) - கி.பி. 600 முதல் 850 வரை 2. முற்காலச் சோழர் ஊழி - கி.பி. 850-முதல் 1100 வரை 3. பாண்டியர் ஊழி - கி.பி. 1100 முதல் 1350 வரை 4. விசயநகர ஊழி - கி.பி. 1350-முதல் 1600 வரை 5. மதுரை ஊழி - கி.பி. 1600 முதல் இன்று வரை முதல் நான்கு ஊழிகளின் பெயர்கள், தமிழ் நாட்டில் நல்ல முறையில் வெற்றிகரமாக ஆட்சி நடாத்திய சிறந்த அரச மரபுகளின் வழிகளாகும். இந்த மன்னர் மரபுகளின் பெயர்கள் கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களிலும், எழுதப் பெற்றிருக்கும் செப்பேடுகளின் மூலமும் அறியப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுடைய தனிச்சிறப்பான பண்புகளின் விருப்ப மேம்பாட்டின் நாகரிகப் பாங்கு தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது. சிலர் வேறு விதமாகவும் பிரிக்கலாம் அதைப் பற்றி நாம் அதில் கவலைப் பட வேண்டாம். எடுத்துக்காட்டாக பல்வேறு ஊழிகளில் உள்ள நினைவுச் சின்னங்களை ஆய்ந்து ஆராய்வோமாக (1) பல்லவர்கள் ஊழியில், மாமல்லபுரம் குகைக் கோயில்களும் ஒற்றைக் கல் தேர்களும், காஞ்சி, கயிலாச நாதர் கற்றளிகளும் வைகுந்தப் பெருமாள் கற்கோயிலும் தோன்றியதாகும். அதோடு திருச்சிராப்பள்ளிக் குடைவரைக் கோயிலும், பாகூர் கோபுரங்களும் எழுந்ததாகவும் கொள்ளலாம். (2) முற்காலச் சோழர் ஊழியில், தாதாபுரம் (திண்டிவனம் வட்டாரம், தென் ஆர்க்காடு மாவட்டம்), சீனிவாச நல்லூர் குரங்க நாதர் கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில், திருவானைக்கா சிம்புக்கேசுவரர் கோயிலும் அடங்கும். (3) பாண்டியர் ஊழியில் சிதம்பரம் ஆடவல்லான் கோயில் கோபுர மும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கோபுரமும், திருவானைக்கா சுந்தர பாண்டியன் கோபுரமும் பிறவு அடங்கும். (4) விசயநகர் ஊழியில், கும்பகோணம் இராமசாமி கோயில், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில், வெல்லூர் திருமண மண்டபம் திருவரங்கம் கோயில் பிரகாரங்கள் போன்றவைகளும் அடங்கும். (5) மதுரை ஊழியில் மதுரைப் புது மண்டபம், தஞ்சாவூர் சுப்பிரமணியர் கோயில், திருப்பாதிரிப் புலியூர் பாடலேசுவரர் கோயில் இன்னோரன்ன பிறவும் அடகும். வளர்ச்சி துளிர்க்கும் பொழுது பரிணாம வழியால் சில சிறப்பான மாதிரி வடிவங்களால் ஒவ்வொரு ஊழியும் குறிப்பிடத் தக்க தனிப் பண்பு மூலம் உணர்ந்திருப்பதை நாம் நன்கு உணரலாம். முந்திய காலங்களில், சில அமைப்புகள் முதிரா நிலையில் உள்ளதாகக் காணப்படுகின்றன. அப்பால் திடீரென்று அவைகள் போதிய அளவு வளர்ச்சி பெற்றுள்ளதாகக் காணப் படுகின்றன. சில காலத்திற்கு அப்புறம் அவைகள் தேய்ந்தும், மாய்ந்தும் சில சமயங்களில் மறைந்தும் போயுள்ளன. இவற்றின் மூலம் திராவிடர்களின் திறம், மாறாத் திருக் கலைகளின் நல்ல பரிணாம வளர்ச்சியை எளிதில் உணர முடிகிறது. எடுத்துக் காட்டாக கட்டிடங்களின் பொதுவான அமைப்பு முறைகளை ஆய்வோமாக: தமிழகத்தில் மலைகளைக் குடைந்து மாதேவனுக்கு குடைவரைக் கோயிலையும், பாறைகளை உடைத்து பாளம் பாளமாகச் செதுக்கி பட்டினங்களின் நடுவில் பரமனுக்குக் கற்றளிகள் எடுப்பிக்கு முறையும் பல்லவர்கள் ஊழியில்தான் எழுந்தது என்று இன்று வரைப் பலரும் கருதுகின்றார்கள். நாமும் அதை ஏற்றுக் கொள்வோம். அறிவியல் பாங்காக இது தவறு என்று, என்றாவது மெய்ப்பிக்கப்படுமானால் நாமும் நமது கருத்தை மாற்றிக் கொள்வதில் இழுக்கு எதுவும் இல்லை. சோழர் ஊழியில் கருவறை (அகநாழிகை)யின் விமானத்தின் மீது கார் மேகங்கள் கவிந்து நிற்கும் காட்சியைக் காணத்தக்க விண் தோய் விமானங்களை பெரிய அளவில் எடுப்பிக்கும் முறை எழுந்தது. அது மிக உயரமான கட்டிடத்தின் பகுதியாக சிற்பிகளின் எல்லாக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் எழுந்த மகோன்னதமான மாபெரும் விமான ஊழியாக மலர்ந்துள்ளது. அவைகள் முழு நிறைவுடன் அணி செய்யப்பட்ட அழகிய அளப்பரிய உயரம் உள்ளவை என்று கூறும் வண்ணம் சுமார் 220-அடி உயரம் உள்ளதாய் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. பின் எழுந்த ஊழிகளில் விமானங்கள் சிறுத்துப் போயின. ஒரு சில அடி உயரத்தில் கோபுர நிலையில் அதாவது தூபி நிலையில் குறைக்கப்பட்டது. பிற்காலச் சோழர் காலங்களுக்கு முந்திய நினைவுச் சின்னங்கள் கோபுரங்களின் முதிரா நிலையில் இருப்பது போல் காணப்பட்டது. காஞ்சிக் கயிலாச நாதர் கோயில் நுண்ணளவில் உள்ள கோபுரத்தை உடையதாக மட்டும் உள்ளது. சோழர்காலத்தில் உள்ள தஞ்சாவூர்க் கோயில் மிகப் பெரிய உருவில் உயர்ந்து நிற்கவில்லை. பிற்காலச் சோழர்காலத்தில் உள்ளது போல் அழகிய கோபுரங்கள் அமைக்க பெற்றுள்ளன. பாண்டியர் ஊழியில் கட்டிடக் கலையில் மாபெரும் மாற்றங்கள் துளிர்க்காவிடினும் சீரும் சிறப்புமிக்க சிதம்பரம் கோபுரமும், திருக்சூனைக்கா சம்புக் கேசுவரர் கோபுரமும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் எழிலார்ந்த திருக்கோயில் கோபுரமும் எழுந்தன. எழில் பெற்றனவாய் ஏற்றமுற்றனவாய் இலங்குகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. விசய நகர ஊழியில் மிகப் பெரிய விண் முட்டும் கோபுரங்கள் நிர்மாணம் செய்யப் பெற்றன. ஆனால் பெரிய கட்டிடங்களின் இந்தப் பகுதிகளின் அமைப்பில் மிகக் கவனம் செலுத்தப்பட்டது என்று கூறுவதற்கில்லை. இதை ஆய்வுத்துறையில் ஈடுபட்ட எவரும் எளிதில் காண முடியும். இதில் சிற்பி, தனது பணியில் சரியான கவனம் செலுத்தவில்லை என்று கூறிவிட முடியாது. சிறந்த திருக் கோயிலை ஆகம விதிகளுக்கு உட்பட்டு எடுப்பிக்க வேண்டும். அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் சிற்ப நூற் சட்டங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று பல்லவ மன்னர்களும், சோழ மாமன்னர் களும் கருதியது போல் விசய நகர மன்னர்கள் கருதியதில்லை. அதோடு அவர்களுக்கு சிவ நெறியின் பற்றும், பக்தியும் சிறிது குறைவு என்று குறிப்பிடாதிருக்க முடியவில்லை. ஆனால் விஜயநகர ஊழியில் ஒரு புதிய அமைப்பு முறை எழுந்தது என்பதை எவரும் நன்கு உணர முடியும். முந்திய ஊழியில் உள்ளவர்கள் இதை உணர்ந் திருக்கவில்லை. அது ஓய்வாக மக்கள் அமரும் இடமான மண்டபங் களேயாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தெய்வங்கள் ஊர்வலம் வரும் பொழுது சிறிது நேரம் தங்கிச் செல்கின்றன. இந்த மண்டபங்கள் நமது சிந்தனையை ஈர்ப்பனவாக அமைந்துள்ளன. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் சிறந்து விளங்கும் பெரிய தூண்களும், முன்கால் களைத் தூக்கிக் கொண்டு மிக வேகமாகப் பாய்ந்து செல்லும் குதிரைகளையும், நிமிர்ந்து அமர்ந்து நிற்கும் சிங்கங்களையும், தெய்வ உருவங்களையும் காணலாம். விசய நகர ஊழியின் வீறார்ந்த பெருமை நிறைந்த கலைக் காலத்தின் தன்மையை வெல்லூர், காஞ்சிபுரம், கலியாண மண்டபங்களில் நன்கு காண முடியும். தற்கால ஊழி எல்லாவற்றையும் விட குறிப்பிடத்தக்க முறையில் திருச்சுற்றுகளை (பிரகாரங்களை)ப் பெற்றுள்ளது. மதுரைப் புது மண்டபம் திருக்கோயிலின் மிகவும் முக்கியமான பகுதியாகும். இது மிகப் பெரிதாக பேர் பெற்று விளங்குகின்றது. திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் திருச்சுற்றுகளும், மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் திருச்சுற்றுகளும் சிறப்புமிக்க பிரகாரங்களாகும். ஆனால் இராமேசுவரம் கோயில் திருச்சுற்றுகள் நமது நாட்டு திருச்சுற்று களில் பெரும் பெருமையும் வாய்ந்தன. திருச்சுற்றுகளுக்கு அடிப்படையிட்ட பெருமை நாயக்கமன்னர்களுக்கே உரியது. தமிழகத்தில் எழுந்துள்ள ஐந்து ஊழிகளில் ஒவ்வொன்றும் கட்டிடக் கலை வரலாற்றில் ஐந்து எல்லைக் கற்களை அமைத் துள்ளன என்று கூறலாம். பல்லவர் காலம் என்றும் அழியா கற்கோயில் எழுந்த ஊழி என்றும், சோழர்காலம் விண்முட்டும் விமானங்கள் எழுந்த ஊழி என்றும், பாண்டியர் காலம் கோல மார்ந்த கோபுரங்கள் துளிர்த்த ஊழி என்றும் விசய நகர மன்னர்கள் காலம் மாபெரும் மண்டபங்களும் திருச்சுற்றுகளும் மலர்ந்த காலம் என்றும் தற்காலம் பீடுயர் பிரகாரங்கள் பிறந்த காலம் என்றும் கூறலாம். கலைப் பண்புக் கூறு (Motive)fis, அணிகளைப்பற்றிய வரலாற்றின் ஆய்வு அடியில் வருமாறாகும்: கட்டிடக் கலை வரலாற்றின் இடை விடாவரிசை முறையான சகாப்தத்தின் நாகரிகப் பாங்குகளுக்கிடையே முக்கியமான அடிப்படை வேற்றுமைகள் இல்லை என்று நாம் தெளிவாகக் கூறுகின்றோம். ஒரு திராவிட நினைவு மண்டபத்தின் தோற்ற அமைதியை தானே தனக்குள் காணும் பொழுது நினைவு மண்டபத்தின் காலத்தை அறியத் திகைப் புற்று ஏறத்தாழ ஒரு காலத்தைத் தீர்மானிக்கின்றான். உண்மையில் திராவிடப் பாணியிலுள்ள ஒரு கட்டிடத்தின் தொன்மையை உணர்வதற்கு கிட்டத்தட்ட கட்டிடக் கலையின், எல்லா நுணுக்கங்களையும் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும். தீர்மானம் செய்வதற்கு முன் சில விதிகளை அறிந்திருப்பது இன்றியமையாதது, குறைந்த அளவு அதனை மதிப்பீடு செய்வதற் காகவாவது அறிந்திருப்பது பயன்தரும். சிற்ப நூல் அறிவு ஆகம நூல் அறிவு ஓரளவாவது இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். 1. போதிகை (Corbel) ஒரு மாளிகை அல்லது மண்டபத்தின் எல்லாப் பகுதியிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பது போதிகையே யாகும். இப்போதிகை தூணின் மீது உத்தரத்தின் அடியில் எல்லாப் பொறுப்பையும் தாங்கியதாக எழில் பெற்றிருக்கும். உருவம் 27 பல்வேறு ஊழிகளில் உள்ள போதிகைகளின் அமைப்பு முறைகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தப் பொருள் பற்றி பல கூர் நோக்கு அவசியம் இருக்க வேண்டும். போதிகை வளைவான பக்கத் தோற்றத்தை உடையது (1) உருவம் 27 சில சமயங்களில் எளிதாக இருக்கிறது. சில சமயம் பல்லவர்களால் தோற்றுவிக்கப்பட்ட போதிகைகளில் உள்ள கலைச் சிறப்பை காட்டப் பெற்று அணி செய்யப்பட்ட உருளை களைப் பற்றியும் முந்திய அத்தியாயங்களில் எடுத்துக்காட்டி யுள்ளோம். பல்லவர்களின் போதிகைகளில் (2) எண்ணுள்ள அமைப்பு முறையை எவரும் அதிகமாகப் பார்த்திருக்க முடியாது. இந்தப் போதிகை அமைப்பு முறைகள் பொதுவாகப் பெரிதும் பல்லவர்கள் ஊழியில் பயன்படுத்தப்பட்டவைகள் என்று கூறுவது இன்றியமையாததாகும். ஒரு பொழுதும் பல்லவர்களின் நினைவு மண்டபங்களில் (3) (4) (5) எண்ணிடப்பட்ட அமைப்பு முறைகளை ஒருவர் கண்டிருக்க முடியாது. எடுத்துக் காட்டாக பழைய கோயில்களில் ஒருவர் புஷ்பபோதிகைகளை ஒரு பொழுதும் பார்த்திருக்க முடியாது. அதைப் போல புஷ்ப போதிகை சில வழிகளில் இது எந்த ஊழிக்கு (சகாப்தத்திற்கு) உரியது என்று கண்டுபிடித்தால் நாம் உறுதிப் படுத்த முடியும். திராவிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் எழுந்த எல்லாக் கருத்துகளையும் நாம் உடனடியாக கைவிட்டு விடலாம். ஆனால் புஷ்ப போதிகை சமீபகாலத்தில் இன்றியமையாத அணி களைப் பெற்றெழுந்த தாகும் என்பதை எண்ணாதிருக்க முடியாது. (2) இந்த அமைப்பு முறை சில வேளைகளில் பல்லவர் ஊழியில் காணப்பட்டாலும், பொதுவாக முற்காலச் சோழர் ஊழியிலும் காணப்படுகின்றது. ஆனால் அது நிறைவாக ஏனைய ஊழியிலும் காணப்படுகின்றது என்று தெரிகிறது. (3) இந்த அமைப்பு முறை முற்காலச் சோழர் கால இறுதியில் காணப்படுகிறது. அது பொதுவாக பிற்காலச் சோழர்காலத்திலும் காணப்பட்டாலும் பிற ஊழியிலும் நிலவி நின்றுள்ளது. அது விசய நகர ஊழியிலும் நிலைத்து விழாது இன்று வரை தொடர்ந்து வருகிறது. பல நினைவு மண்டபங்களின் போதிகைகள் புதிய உருவம் பெற்று அழியாது சிறந்து விளங்குகின்றன. சிறிது சிறிதாக அதில் உள்ள முறைகள் மாற்றம் பெற்றுள்ளன (3) வது அமைப்பு (4) வது அமைப்பாக மாற்றம் அதில் உள்ள மலர்கள் கீழே விழுந்து விட்டன. (கைவிடப்பட்டுள்ளன). (4) பாண்டியர்கள் ஊழியைச் சில ஆசிரியர் பிற்காலச் சோழர் ஊழி என்றும் கூறுவர். அதில் நினைவு மண்டபங்கள் அடிக்கடி ஒரு சிறப்பான நிலையை எய்தி மாற்றம் பெற்றுள்ளன. போதிகைகள் முற்றிலும் மாற்றம் எய்தி (4)-வது முறையை அடுத்து (3)-வது முறையான போதிகை போன்று உருப் பெற்றது. (2) இதழும் நாக பந்தமும் போதிகை வளர்ச்சியின் எட்டுப் பெரும் பிரிவுகளை உடைய தூணின் தலை உறுப்பின் (Capital) பாகமாகிய பலகையைத் தாங்கி நிற்கும் பகுதி இதழ் என்று நாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டியுள்ளோம். இதழ் தாமரை மலரின் புற இதழ் வட்டத்தின் (Calyx) அமைப்பாக குடத்தின் மேல் இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறாக பல்லவர், சோழர் ஊழிகளில் மலரின் பூவிதழ்கள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக பிற்காலத்தில் சோழர், விசயநகர், மதுரை ஊழிகளில் பூவிதழ்கள் இறுதி முனை பலகைக்கு மேலே சிறப்பான முறையில் பல முனைகளை உடையதாய் இடம் பெற்றுள்ளது. தமிழில் அதனை முனை என்ற பெயரால் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. நாம் ஏற்கெனவே நமது தூண்களில் எல்லாம் அழகு படுத்துவதற்கு நாக பந்தம் என்ற அணி இடம் பெற்றிருப்பதையும் அது நல்ல பாம்பின் படத்தை ஒத்திருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம். இவைகள் தற்கால ஊழியில் கிட்டத்தட்ட எல்லாத் தூண்களிலும் அணியாக இடம் பெற்றுள்ளன. ஆனால் பல்லவர் ஊழியில் இந்த அணி காணப் பெறவில்லை. அதே ஊழியில் இதழின் விளிம்பு போல அதனுடைய தோற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பிற்காலச் சோழர் சகாப்தத்தின் இறுதியில் எழுந்ததாகக் கூறலாம். பன்னிரண்டாவது நூற்றாண்டிற்கு முந்தி எழுந்த தூண்கள் ஒவ்வொன்றிலும் நாகபந்தமும் இதழும் இருப்பதை எவரும் அறிய முடியும். (உருவம் 31) தூண்கள் எய்திய பரிணாம வளர்ச்சியில் தூணின் தலையுறுப்பில் உள்ள குமிழ் வடிவை, மூன்று தூண் வகை களைக் கூறும் வரலாற்று ஏடுகளில் காணலாம். அம்மூன்று வகைத் தூணிலும் நாகபந்தம், இதழ் போதிகை ஆகியவைகளைக் காணலாம். (3) கூடு பல்லவர் கூடு மண் வாரி (மண் வெட்டி) யின் தலையைப் போன்றிருக்கும் என்று ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளோம். கூட்டின் பகுதி எப்பொழுதும் சிங்கத்தின் தலையோடு (சிம்ம முகத்தோடு) அணி செய்யப் பெற்றதாய் இருக்கும். என்றாலும் சிலைகள் கூட்டின் வட்டமான பகுதியை அணி செய்கின்றன. இவை ஒவ்வொரு ஊழியிலும் மாற்றம் எய்தியதாய்க் காணப்படுகின்றன. இவ்வாறு அணி செய்யப் பெற்றுள்ள கூட்டின் ஒப்பனை முறையை வைத்து அதன் காலத்தை அளவிட்டுரைக்க முடியும். உருவம் 32, தமிழ் நாட்டின் கட்டிடக் கலையின் வரலாற்றில் பல்வேறு ஊழியிலும் எழுந்துள்ள கூடுகளின் இடைவிடா வரிசை முறையான வினைவடிவ நுட்ப வேறுபாடுகளை அறிய முடியும். (4) சுவர் மாடம் (பஞ்சரம்) சுவர் மாடங்களின் அமைப்பின் நடுவே பல்வேறு ஊழிகளுக் கேற்பத் தெய்வத்திரு உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சுவர் மாடம் (Nich) சிற்பிகளால் கோஷ்டம் என்று கூறப் பெறுகின்றன. இங்கு காணப்படும் 33. அ. எண்ணுள்ள வரை படம் மாமல்லபுரத்தின் தேர்வடிவங்களில் காணப்படும் சுவர் மாடமாகும். உருவம் 33. (ஆ) முற்காலச் சோழர் ஊழியில் அணி செய்யப் பெற்ற அழகிய சுவர் மாடமாகும். உருவம் 33 (இ) பிற்காலச் சோழர் ஊழியினை பிரதிபலிக்கும் பாங்கில் கட்டப் பெற்ற சிதம்பரம் கிழக்குக் கோபுரத்தில் உள்ள சுவர் மாடமாகும். இந்த விதமாக அணி செய்யும் முறை பொதுவாக நமது காலம் வரை நிலை பெற்று வரும் பண்பாடாகும். இதை மேற் கூறிய ஏனைய இரண்டு சாலைகளினின்று பிரித்துணர முடியும். நாம் அடியிற் கண்ட கொள்கைகளை உங்கள் முன் வைக்க முடியும். பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் உள்ள நினைவு மண்டபங்களில் உருவம் 33 (இ) தீட்டப்பட்ட சாலையோடு அணி செய்யப் பெற்ற எந்த சுவர் மாடமும் நிலைத்து இருக்கவில்லை. பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் நிலவிய ஒரு சாலையால் சமாளித்து நின்ற சுவர் மாடங்களையுடைய நினைவு மண்டபங்கள் இதென்று வலியுறுத்திக் கூறுவதற்கு இந்தத் தனிச் சிறப்புப் பண்பு நமக்கு இடம் அளிக்கிறது. (5) கும்ப பஞ்சரம் தற்காலக் கட்டிடக் கலை ஆய்வில் அணி செய்வதைப் பற்றி நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். உருவம் 7-இல் நாம் அதைத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கின்றோம். பல்லவர்கள் ஊழியில் இந்தக் கலைப் பண்புக் கூறுகள் நிலை பெற்றிருக்கவில்லை. அணி செய்யும் கலைப்பண்புக் கூறுகளின் மூலத் தோற்றத்தை ஆராய்வதின் பொருட்டு தாதாபுரத்திலுள்ள சிவன் கோயிலில் உள்ள கும்ப பஞ்சரங்களை (உருவம் 26) -ஐ நன்கு பரிசோதிக்கும் அவசியம் எழுந்தது. அந்த கும்ப பஞ்சரத்தின் பொதுத் தோற்றம் பெரும்பாலும், இத்தகைய மாடத்தில் ஒருவரும் பார்த்திருக்க முடியாது. உருவம் 34. பிற்காலத்தில் கும்ப பஞ்சரமாகக் காணப்படுகிறது. ஆனால் இது தற்கால அமைப்பு முறையினின்று மாறுபட்டுள்ளது. 6. அணி மாடம் (Pavilion) அணி மாடங்களின் தோற்றம், அதன் காலத்தைக் குறைவாக மதிப்பிடுவதற்கு இடம் தருவதாக உள்ளது. மேலும், இந்தப் பகுதி அடிக்கடி புதுப்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. எனவே இந்த நினைவு மண்டபத்தின் மேல் பகுதி, அதன் அடித்தளத்தின் அதே கட்டுமானப் பண்பில் எப்பொழுதும் இருக்கவில்லை. நாம் உருவம் 35-இல் உள்ள அணிமாடத்தின் தோற்றம் மூன்று வெவ்வேறு ஊழிகளிலும் ஒருப் போல இருந்தது என்று காட்ட முன் வரவில்லை. திராவிடக் கட்டிடக் கலை, திராவிடர்களால் திராவிட நாட்டில் உருவாக்கப் பெற்று வளர்க்கப் பெற்ற உயரிய கலை என்பது ஒரு தெளிவான உண்மையாகும். இது இந்தியக் கட்டிடக் கலையும், தென் இந்தியக் கட்டிடக் கலையையும் பற்றி ஆய்ந்துணர்ந்த பெர்சி பிரவுண், ஹேவல், கிரேவ்லி துப்ரயல் போன்ற அறிஞர்கள் அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. திராவிடக் கட்டிடக் கலை அதன் பரிணாம வளர்ச்சியால் முன்னேற்றம் எய்தியுள்ளது. அதனுடைய அமைப்பு முறை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூற முடியாது. ஆனால் அதன் அழகுபடுத்தும் முறைகள் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. இறுதி அத்தியாயத்தில் விளக்கமுற எடுத்துக் காட்டியுள்ள உடற் கூறுகள் பரிணாம வளர்ச்சியில் எய்தியுள்ள உயர் நிலைகள் ஆய்வதற்கு உரியன. திராவிடக் கட்டிடக் கலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அதன் அணியுறுப்புகள் பெற்றிருக்கும் அழகையும் அதன் திண்மையையும் வண்மையும் எடுத்துக் காட்ட இங்கு இணைத்துள்ள படங்கள் போதியதாகும் என்று நம்புகிறேன். இச்சிறு நூல் தமிழ் மக்களுக்கு தம் கட்டிடக் கலையில் ஊக்கத்தை ஊட்டி உணர்வை எழுப்பி, ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் என்ற எண்ணம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். கும்ப பஞ்சரங்களும், அணிமாடங்களும் முற்காலத்தில் வகுக்கப்பட்டவைகள். இவைகளை இப்பொழுது புதுமைப் பொலிவுடன் சிறிது மாற்றஞ் செய்துள்ளார்கள். இந்த மாற்றங்கள் கால நிலைக் கேற்பவும் சூழ்நிலைக்குத் தக்கவும் அறிவுவளர்ச்சி நிலைக்கு உகந்தவாறும் மாறுதல் உறும். இதனை அறிஞர் சி. சிவராம மூர்த்தி சோழர் கோயில்கள் என்ற தம் ஆங்கில நூலில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.1 இந்த அத்தியாயத்தில் மேற்கோளாக உதவிய நூற்கள் 1. Dravidian Architecture - Prof. G. Jouveau Dubreal Madras - 1917 2. The Ecomy of a South Indian temple- V. G. RamaKrishnalyer (Annamalai Nagar) 1946. 3. The Archeohogie Du Sud De L. Inds - G. Jouveau Dubreal. Paris 1914. 4. The Chola Temples - C.Sivaramarmurthi. New Delhi 1960 5. Siva Temple Architecture etc. in Tamil Rao Bahdir Sambanda B.A.B.L Madras 1986. 6. The Dravidian and its diffusion (Cochin) 1932 7. இறைவனின் உறைவிடங்கள் - காளத்தி நடேச முதலியார் 1953. வரலாறும் கோயில்களின் ஒழுங்கும் நமது கோயில்களின் ஒழுங்கு முறையைப் பற்றி நாம் அறிவது மிக இன்றியமையாததாகும். கோயில்களையும் அதன் அமைப்பு முறையைப் பற்றி நாம் அறிவதை விட இன்றியமையாதது எதுவும் இல்லை என்பது உண்மையே யாயினும், நமது வரலாற்றைப் பற்றி நாம் அறியாவிடில் நாமும் நமது சமூகமும் நமது சமயமும் நமது கோயில்களும் அழிந்து போய் விடுவோமோ என்ற கட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். எனக்கு எனது நாட்டின் மீதும், எனது சமயத்தின் மீது எனது மொழி மீது எனது பண்பாட்டின் மீதும் நம்பிக்கையுண்டு. உரத்த குரலில் எனது சமயத்தை, எனது தெய்வத்தை, எனது மொழியை எனது பண்பாட்டை எந்தத் தெய்வத்தாலும், எந்த அரசினாலும் எந்த அணுகுண்டாலும் ஜலவாயுவுக் குண்டாலும் காஷ்மிக் கிரகணத்தாலும் அசைத்து விட முடியாது என்று வீராப்புடன் பேசத் தெரியும். இந்த வீராப்புப் பேச்சுக் காரர்களெல்லாம் இன்று வாயைப் பொத்திக் கொண்டு மூலையில் பதுங்கி கிடக்கின்றார்கள். ஒரு சுண்டைக் காய் அளவுள்ள இரயேல் நாட்டின் முன் இமயமலை போன்ற முலிம் நாடு என்னபாடு பட்டது என்பது நமக்குத் தெரியும். உலகிலே நாங்கள் 100 கோடி முலிம்கள் இருக்கிறோம். நாங்கள் ஒன்று கூடி காரியுமிழ்ந்தால் இரயேல் நாடு இருக்கும் இடம் தெரியாது நீரில் மூழ்கி அமிந்து விடும் என்று கூறிய எனது உழுவலளர் கொழும்பு முஹமத் சாலி சாகிப் இறந்து ஒரு ஆண்டு ஆகிறது. இரயேல் நாடு இன்னும் பலத்தோடும் வீராப்புடனும் இருந்து வருகிறது. எனது நண்பர்கள், சிலர் இரயேல் நாட்டின் நல்லதிர்ஷ்டம் முஹமத் சாலிசாகிப் இறந்து விட்டார். இருந்தால் கண்டிப்பா அது நடந்தே தீரும் என்று சொல்லுவார்கள். எனவே இந்த வீண் சமயப் பேச்சை விட்டு நமது வரலாற்றை ஆராய முன் வருவோமாக. நாம் முன் எந்நிலையில் இருந்தோம். இடைக்காலத்தில் நமது நிலை உணர்வதற்கோ அல்லது தாழ்வதற்கோ காரணம் என்ன? இன்று நாம் எந்நிலையில் இருக்கின்றோம். வருங்காலத்தில் பிற நாட்டு மக்களைப் போல் நல் வாழ்வு வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும். நமது நல் வாழ்விற்கு ஆவனவற்றைச் செய்ய உடனே இறங்க வேண்டும். வரலாற்றில் விசய நகர நாயக்கர் பாண்டிய அரசன் குலசேகரன் காலத்திற்குப்பின் ஆட்சிக்குப் பின் (1268-1310-க்குப் பின்) அவனுடைய பட்டத்தரசியின் மகன் அரச கட்டிலில் அமரவில்லை. அவனது மறுமனையாட்டி மகன் வீரபாண்டியன் அரசாற்றினார். பட்டத்தரசியின் மகன் சுந்தர பாண்டியன் தில்லிச் சுல்தான் உதவியை வேண்டினான். குல சேகரனின் மறுமனையாட்டி மகன் வீரபாண்டியனை அரச கட்டிலினின்று இறக்கி, தன்னை அரச கட்டிலில் அமர்த்தும் படி வேண்டிக் கொண்டான். சுல்தான் ஆணைப்படி அவனது தளபதி மாலிக்கபூர் பட்டத்தரசனையும் விரட்டி விட்டு, சுந்தர பாண்டியனையும் பயமுறுத்திவிட்டு தான் பழம் பாண்டியர்அரச கட்டிலி ஏறி அரண்மனையில் இருந்த அணிகலன்களையும், பொன்னையும் மணிகளையும் வாரிக் கொண்டு பின் இராமேசுவரம் கோயிலிலும் மதுரைக் கோயிலும் உள்ள பொன்னையும் மணி களையும், பாண்டியர்களின் துறைமுகப் பட்டினமாக இருந்த பழைய காயலையும் கொள்ளையடித்து யானைகளிலும் குதிரை களிலும் செல்வங்கள் அனைத்தையும் தில்லிக்கு அனுப்பிவிட்டு தன்னை மதுரைச் சுல்தான் என்று பிரகடனம் செய்து கொண்டான் அவனது கொடுங்கோல் ஆட்சியில் பாண்டியர்களின் இனத்தவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமங்களில் பதுங்கி கிடந்தனர். இறுதியாக பேர் சொல்லப் பயந்து மறைந்து விட்டனர். மதுரையில் முலிம் ஆட்சி 44 ஆண்டுகள் நடை பெற்றது. திராவிட நாட்டில் முலிம் ஆட்சி கால் கோலி விட்டது. திராவிட மக்களுக்கே பெரிய அவமானம் என்று விசய நகர நாயக்கர்கள் வெகுண்டெழுந்து வந்து முலிம் ஆட்சியை 1377-இல் குழி வெட்டிப் புதைத்து விட்டு பாண்டிய அரச குடும்பத்தினரை அரச கட்டிலில் ஏற்றாது தாங்களே (நாயக்கர்களே) அரச கட்டிலில் அமர்ந்து முடி சூடிக் கொண்டு மதுரையைத் தலைநகராக்கிக் கொண்டதோடமையாது நாயக்கத் தளபதிகளே ஆங்காங்கே வரிவசூல் செய்ய ஜமீன்தார்களாக்கிக் கொண்டனர். நாயக்கர் ஆட்சி நாயக்கர் அரசன் குமார கம்பண்ணன் காலம் முதற் கொண்டு கி.பி. 1736-ஆம் ஆண்டில் மீனாட்சி காலம் வரை மதுரையில் நாயக்கர் ஆட்சி நிலைத்திருந்தது. இதற்கிடையில் 1546-இல் பாண்டிய குல இளவரசன் தென் காசியில் ஒரு குறு நில மன்னன் போல் ஆட்சி புரிந்து வந்தான் 1610-இல் அவனது ஆட்சி முடிவுற்று அவனுக்குப் பின் சுந்தர பாண்டியன் என்பவன் ஆட்சி பீடத்தில் இருந்து வந்தான். 1736-இல் மீண்டும் மதுரை அரசி மீனாட்சியை வஞ்சித்து ஆர்க்காட்டு நவாப் சந்தா சாகிப் மதுரையைக் கைப் பற்றினார். இதனிடையில் மதுரையில் மதுரைப் பாண்டியர்குல இளவரசன் ஒருவன் பெயரளவில் அரசனானான். அவனை 16-ஆம் நூற்றாண்டில் தஞ்சை மன்னன் வீர சேகர சோழன் படை யெடுத்து வந்து பாண்டியனை வென்று தானே பாண்டிய நாட்டு மன்னன் என்று கூறி வந்தான். உடனே பாண்டிய இளவரசன் ஒருவன் தப்பி ஓடி விசய நகரம் போய் தன்னை அரச கட்டிலேற்றும்படி கேட்டுக் கொண்டான். விசய நகர மன்னன் கிருஷ்ண தேவராயன் ஒரு படையை நாகம நாயக்கன் தலைமையில் அனுப்பி வைத்தான். அந்த நாகம நாயக்கன் தஞ்சைச் சோழ அரசனை வென்று பாண்டியன் சந்திர சேகரனுக்கோ அவன் மகனுக்கோ பட்டம் சூட்டாது தானே அரச கட்டிலில் அமர்ந்து கொண்டான். அப்பான் கிருஷ்ண தேவராயர் நாகம நாயக்கனை விரட்டி விட்டு அவன் மகன் விசுவநாதநாயக்கனை மதுரையை ஆளும்படி செய்தான். அவனால் மதுரை பெற்ற நன்மைகள் பல. மதுரையின் நற்காலமாக நாயக்க மன்னரின் ஆட்சிக்கு உறுதுணையாய் அமைச்சராய், படைத் தலைவராய் தளவாய் அரிய நாயக முதலியார் நியமிக்கப் பெற்றார். மதுரை அரசை 72 பாளையப் பட்டுகளாய்ப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் நாயக்கர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெற்றனர். இவர்கள் தத்தம் பாளையப்பட்டை ஆண்டு நாயக்க மன்னர்கட்கு ஆண்டு தோறும் திறை செலுத்தி வந்தனர். பாண்டியநாடு தமிழ்நாடுதான் என்றாலும் பாண்டியர்களின் மைத்துனர் உறவுடைய சேர அரச குமாரனோ, மைத்துனன் உறவுடைய சோழர்களோ பாண்டிய அரச கட்டிலில் அமர்ந்து ஆட்சி செலுத்துதற்கு உரிமையில்லை. அப்படியிருக்க திராவிட அரசனாகிய ஆந்திரஅரசர்கள் பாண்டிய நாட்டின் அரச கட்டிலில் அமர்ந்து மணி முடி தரித்து ஆளுதல் அறமன்று. ஆனால் அவர்கள் செய்த தீவினையின் பயனை அவர்கள் அனுபவித்து விட்டனர். பாண்டிய அரசை அழித்து நாயக்கர் அரசை நிலை நாட்ட தளவாய் அரிய நாயக்க முதலியார் செய்தபலனை அவரும் அவரது சுற்றமும் அனுபவித்துள்ளார்கள். நாயக்க அரசிகள் மங்கம்மாள் சிறையிலிடப்பட்டுக் கொல்லப்பட்டாள். அரசி மீனாட்சி நஞ்சூட்டப்பட்டு மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே என்று முதுமொழிப்படி நாயக்க மன்னர்கள் திராவிட ராயிருந்தும் பெண் கொள்வினை கொடுத்து வந்தும் பாண்டிய மன்னர்களை வஞ்சித்து தமிழினத்தை அடிமைப்படுத்தி வாழ நினைத்த தீவினை அவர்களுக்கு ஒரு சாப கேடாய் முடிந்தது. நாயக்கர் ஆட்சிக்குப் பின் பாண்டிய நாட்டில் போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர்கள் ஆட்சி அரும்பியது. 1917- ஆகட் திங்களில் இந்தியாவில் ஆங்கில ஆட்சி மறைந்து சுதந்திர இந்தியா பிறந்தது. இந்தியா 21-மாநிலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர மைய அரசின் நேரிடையான நிர்வாகத்தின் கீழ் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. தமிழ் நாடு ஆதியில் ஒரு தனி அரசாக இராது சேர, சோழ, பாண்டிய நாடாகப் பிரிந்திருந்தமையால் இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் போரிட்டு பலம் குன்றி தமிழ் நாடு சேர சோழ, பாண்டிய, பல்லவ நாடாகப் பிரிந்தது. இவர்கள் நால்வரும் அடிக்கடி சண்டையிட்டு பலங்குன்றிய நிலையில் தமிழகம், ஆரியர்க்கும், மொகலாயர்க்கும், ஆங்கிலேயர்க்கும் அடிமைப்பட்டு தன் பெருமையை இழந்தது. தனது மொழி, சமயம், பண்பாடு, நாகரிகம், பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளிலும் தாழ்வுற்றது. இமயந் தொட்டு குமரி வரை திராவிட இந்தியாவாக விளங்கிய ஒரு புனித பூமியில் ஆரியா வர்த்தம் என்ற பிளவை நோய் முதலில் எழுந்தது. அப்பால் பாக்கிதான் என்ற அங்கப் பழுதேற்பட்டது. கி.பி 1310-ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்ய வந்த டில்லி சுல்தானின் தளபதி பாண்டிய அரசை வீழ்த்தி தமிழகத்தைக் கொள்ளை அடித்து இந்நாட்டின் செல்வம் அனைத்தையும் வட இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். மாபாதகன் மாலிக்கபூர் மதுரையில் சுந்தர பாண்டியன் அரண்மனையில் இருந்தும் பழைய காயலில் இருந்தும் கொற்கையிலிருந்தும் சூறையாடப்பட்ட மணிகள் இழைத்த அணிகலன்களும் பொன்னும் மணிகளும் பொன் வட்டிலும் பொற் கட்டிலும் பிறவும் 96000 மணங்கு (10 கோடிப் பவுண்கள்) பெறுமதி என்று அக்காலத்தில் மதிப்பிடப்பட்டது. இவைகள் 312 யானைகள் மீதும், 1200 குதிரைகள் மீதும் ஏற்றி டில்லி சுல்தான் அரண்மனைக்கு அனுப்பப்பட்டன.1 திராவிட இந்தியா ஆரியர் படை எடுப்பால் அடிமைப் படுத்தப்பட்டது. அவர்களது செல்வம் சுரண்டப்பட்டது. ஆரியர்கள், தேவர்களாக உயர்த்தப் பெற்றனர். திராவிடர்கள் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டனர். திராவிடர்கள் சமயத்திற்குள் புகுந்து அதற்குப் பெரும் கேடு விளைவித்தனர். சிவ தீட்சை பெறாத அன்னிய சமயத்தைத் சார்ந்த ஆரியர்கள் சிவ வேடம் பூண்டு சிவ நெறியாளர்களின் குருக்கள் போல நடித்து மக்களைச் சுரண்டி வாழ்ந்தனர். அவர்களுக்குப் பின் இந்தியாவின் மீது படை யெடுத்து வந்த மொகலாயர் திராவிடர்களின் கோயில்களை இடித்தும் திரு உருவங்களை உடைத்தும் கோயிலில் உள்ள அணிகலன்களைக் கொள்ளை அடித்தும் இலாமிய சமயத்திற்கு ஆள் திரட்டியும் பல கொடுமைகளை ஆற்றிவந்தனர். வட இந்தியாவில் கஜினி முகம்மதுவின் கொள்ளை உலகப் பிரசித்தி பெற்றது. மைசூரில் ஹைதர் அலி, ஸ்ரீரங்கப்பட்டினத்திலுள்ள பொன் திருஉருவங் களைக் கொள்ளையடித்ததும் மாலிக்கபூர் பல பொன்திரு உருவங்களை உடைத்ததும் வரலாறு அறிந்த உண்மை. மாலிக் கபூர் சோழ பாண்டிய நாடுகளை வென்று கோயில் களில் உள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்தான். தனது முலிம் படைகளை ஆங்காங்கு நிறுத்தி பாண்டிய அரச குடும்பங்களை வதைத்தான். எனவே பல பாண்டிய இளவரசர்கள் கொற்கைக்கும் தென்காசிக்கும் கரிவலம் வந்த நல்லூருக்கும் போய்ப் பதுங்கி கிடத்தனர். 44 ஆண்டுகள் முலிம் சுல்தான்கள் பாண்டியர் களின் அரச கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்தனர். அப்பொழுது மதுரையைச் சுற்றி அரண்கள் இருந்தன. அவைகள் இடிக்கப் பட்டன. சிவன் திருமால் கோயில்கள் அடைக்கப்பட்டன. மாலிக் கபூர் படை எடுப்பால் மதுரை மாநகரில் வானளாவ நின்ற பதினான்கு கோபுரங்களும் அவற்றைச் சூழ இருந்த பெரும் பெரும் மதிற் சுவர்களும் தரைமட்டமாக்கப்பட்டன. கோயில் இடிக்கப் படாமல் இருந்த பகுதிகள் இரண்டேயாம். அவை மீனாட்சி - சொக்கநாதர் அக நாழிகைகளாகும். மதுரைக் கோயில் பூசை வழிபாடு முதலியன இன்றி அடைபட்டுக் கிடந்தன. மாலிக் கபூரும் அவனுக்குப் பின்வந்தவர்களும் பலரை வலுக்கட்டாயமாய் இலாமிய மதத்தைத் தழுவச் செய்தனர். பரதவர்கள் மீன் பிடிக்கும் தொழிலுக்கு இடையூறு செய்ததைப் பொறுக்க முடியாமல் போர்ச்சுக்கீசியர் துணையை நாடினர். போர்ச்சுக்கீசியர் இந்து பரதவர்களைக் கத்தோலிக்க கிறித்தவர்களாக்கி, முலிம்களின் வாள்களுக்கு எதிராகத் தமது துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் காட்டி மாலிக் கபூர் வழிவந்த சுல்தான்களின் துடுக்கை அடுக்கினர். இதனிடையே விசய நகர நாயக்கர்கள் மதுரைக்கு படை எடுத்து வந்தனர் கம்பண்ண உடையார் முயற்சியால் அடைபட்டுக் கிடந்த கோயில்கள் திறக்கப்பட்டன. முலிம் ஆட்சி மூழ்கடிக்கப்பட்டது. நல்ல நாளில் லட்சோப லட்சம் மக்கள் கூடி நின்றனர். 48-ஆண்டுகளாய் அடைக்கப்பட்டிருந்த கோயில் திறக்கப்பட்டது. அங்கு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பூமாலைகள் வாடா திருந்தன அவற்றைக் கண்டு கம்பண்ண உடையார் பெரும் வியப்புற்றார் என்று கூறப்படுகிறது.1 நாயக்க மன்னர்கள் ஆட்சியில் மதுரையை வலிவுபடுத்தவும் விரிவு படுத்தவும் திட்டமிட்டார் இடிக்கப்பட்ட கோயில்கள் கட்டப்பட்டன. பழுதுற்ற கோயில்கள் பழுது பார்த்து குட முழுக்குச் செய்யப்பட்டன. பாண்டியரின் பழைய மதிலையும் குழிகளையும் இடித்துத் தள்ளி விட்டு, அவற்றிற்கு மாற்றாக எழுபத்திரண்டு அரண்களைப் பாதுகாக்கக் கூடிய இரு பெரிய சுவர் அரண்களை விரிவாகக் கட்டினார் மதுரை நகர் விரிவு படுத்தப் பட்டது. உடைந்து கிடந்த பகுதிகள் செப்பனிடப்பட்டது. பழைய கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டது. புதிய கோபுரங்கள் புத்துருப் பெற்று எழுந்தன. இவர் காலத்தில் புதிய கோயில்கள் பொல பொல என எழுந்தன. புது ஊர்கள், கண்டம நாயக்கனூர், போடி நாயக்கனூர் எரசப்ப நாயக்கனூர் முதலியனவாகும். மதுரைக் கேவாலி கொண்டபுரத்திலிருந்து குமரி வரை பல நாயக்க சமீன்தார்கள் தோன்றினர். கி.பி.1600-வரை வாழ்ந்த தளவாய் அரிய நாயத் முதலியார் நாயக்கர் தலை விதியை நிர்ணயித்தவர் என்று கூறப்பட்டது. திருமலை நாயக்கர் 1625-இல் ஆட்சிக்கு வந்தார் அவர் 1659-வரை அரசோட்சினார். இவர் திருச்சியிலிருந்து மதுரை வந்து மதுரையில் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் அமைத்தார். மீனாட்சி கோயிலையும் அதன் சுற்றுத் தெருக்களையும் புதுப்பித்தார். பல அணிகலன்களையும் பரிவட்டங்களையும் வாகனங்களையும் தேர்களையும் செய்தளித்தார் இவரது ஆண்டு வருமானம் 12,00,000 பவுண்கள். அதில் ஆண்டொன்றுக்கு 41,000 பவுண்கள் வருமானம் வரக் கூடிய நிலங்களை மீனாட்சி கோயிலுக்கு எழுதி வைத்தார் என்று கூறப்படுகிறது.2 மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையும் வண்டியூர் தெப்பக் குளமும் புது மண்டபமும் இராயர் கோபுரமும் தமுக்கம் அரண்மனையும் இம்மன்னனின் பெயரை என்றும் சொல்லிக் கொண்டிருக்குமாறு இம்மன்னன் தோற்றுவித்தான். மேலும் திருநெல்வேலிக் காந்திமதி கோயிலில் சில பகுதி களிலும் திரு வில்லிப் புத்தூர் ஆண்டாள் கோயிலில் சில பகுதியும் இவரால் கட்டப்பட்டவை. இவரது காலத்தில் தான் சீர் வைகுந்தம் குமரகுருபர அடிகள் மதுரை வந்து மீனாட்சி பிள்ளைத் தமிழைப்பாடி திருமலை நாயக்கர் முன் அரங்கேற்றினார். திருமலை நாயக்கருக்குப் பின் வந்த அரசி மங்கம்மாள் ஆவள். திருமலை நாயக்கர் காலத்திலே இராபர்ட்-டி-நோபிலியினி வந்தார். நாயக்கர் இவரிடம் அன்பு செலுத்திவந்தார். இவரது சொற்படி மீனாட்சி கோயிலுக்குக் கொடுத்து வரும் மானியத்தைக் குறைக்கலானார் என்றும் கூறப் படுகிறது. பாண்டியர் ஆட்சிக்குத் துரோகம் விளைவித்த முலிம் ஆட்சி அரை நூற்றாண்டு கூட நிலைத்து நிற்க முடியாது. வீழ்ந்தது. அப்பால் எழுந்த உட்பகைவர்களான நாயக்கர் ஆட்சி இறுதியாக ஆண்ட மங்கம்மாள் பட்டினியால் துடிதுடித்தும் மீனாட்சி நஞ்சுண்டு கொல்லப்பட்டும் நாயக்கர் ஆட்சி 1377-இல் தோன்றி 1706-வரை 430-ஆண்டு கோயிலில் திருப்பணி செய்து காட்டி இறுதியில் ஆங்கில ஆட்சியால் அடியுண்டு வீழ்ந்தது. ஆங்கில ஆட்சியும் சமய நடு நிலைமையைப் பேசிக் கொண்டே கிறிதவ புரோட்டடாண்டு மதத்தைப் பரப்பி அரசாங்கப் பணத்தை செலவிட்டு கிறித்தவ சமயத்தைப் பரப்பி பிற சமயத்தை தூற்றி இறுதியாக 1947-ஆம் ஆண்டு ஆகட்டு 15-ஆம் தேதியுடன் ஆங்கில புரோட்டடாண்டு ஆட்சி சுமார் 150 காலமாக ஆட்சி புரிந்து இந்தியாவை விட்டு மறைந்தது. ஆங்கில ஆட்சி கிறித்தவ ஆட்சியாய் இருந்ததும் சுமார் 150 காலம் ஆண்டும் ஆரியர் ஆட்சியை விட மொகலாய ஆட்சியை விட கொடுமையாக ஆண்டது என்று சொல்வதற்கில்லை. இந்தியாவை அடிமைப்படுத்தி இந்தியாவைச் சுரண்டி வாழ்ந்தனர் என்பதில் எவருக்கும் அவர்கள் குறைந்தவர் களில்லை. என்றாலும் அடிமை இந்தியாவை ஆரியர்களைப் போல மொகலாயர்களைப் போல் விலங்குகளாக மதித்து நடக்கவில்லை. அவர்கள் கண்ணியமுடன் இந்த நாட்டை நம்மிடம் ஒப்புவித்து சென்றனர். என்றாலும் உலகம் உள்ளளவும் அவர்கள் மீது வரலாற்று அறிஞர்கள் கூறும் தீராப்பழிச் சொல்லாக இந்திய நாட்டை இந்த நாட்டின் ஆக்கிரமிப்பாளர்களான மொகலாயர் களில் இந்திய நாட்டின் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்து ஆண்டுதோறும் இரு நாட்டு மக்களும் லட்சசோப லட்சம் மக்கள் சாகவும் லட்சோப லட்சம் மக்களின் உதிரம் தெருவில் வாய்க்கால் போலவும் ஓடச் செய்த அரசியல் வஞ்சக சூழ்ச்சியாகும். அதை உலகம் இன்று அறிந்து கொண்டது. இந்தத் தீவினையின் பயனை இங்கிலாந்து ஓரளவு அனுபவித்து வருகிறது. அது முழுவதும் அரியும் காலம் வந்தே தீரும். என்றாலும் ஆங்கிலேய ஆட்சி எங்களை விட்டு அகன்று 30 ஆண்டு ஆகிறது. அதற்குள் இந்தியா உலகில் சோவியத் யூனியன், அமெரிக்கா போன்ற வல்லரசுகளில் ஒன்று என்று உலகம் மதிக்கும் நிலைக்கு இந்தியா வந்தது இந்தியாவில் இங்கிலாந்து இட்ட அரசியல், தொழில் கல்வி முதலிய அடிப்படை என்பதை நாங்கள் மறப்பதற்கில்லை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிலவிய காலத்தில் ஆரியர்களைத் தம்மக்களைப்போல் அவர்கள் வாழ்விற்கும் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் உயர் பதவிகளுக்கும் செய்த உதவிகளையும் திராவிட மக்களை மாற்றாந்தாய்ப் பிள்ளைகளைப் போல் கவனியாமல் இருந்ததையும் நாம் அறிவோம். என்றாலும் 1930-ஆம் ஆண்டிலே பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலே திராவிட மக்கள் 5000-ம் ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த நாகரிகம் பெற்ற மக்கள் என்றும் அவர்கள் மதிப்பிற்கும் மாண்புடைய இனத்தவர்கள் என்றும் ஆங்கிலேயர்களும் பெயின் நாட்டவர்களும் பிறரும் கூறும் நிலை எழுந்தது என்பதையும் எண்ணி நாம் பெருமிதம் அடைகின்றோம். திராவிட மக்களின் வருங்காலம் ஒளிமயமாய் இலங்கப் போகிறது எங்கள் அன்பிற்குரிய பெரியார் ஹிரா அடிகள் கூறிய வார்த்தைகளை நாங்கள் தெய்வ வாக்காக எண்ணி முன்னேற முயற்சி செய்து வருகின்றோம். அவரது வார்த்தை திராவிட மக்களுக்குப் பெரிதும் தன்னம்பிக்கையை யூட்டியுள்ளது. அவரது வார்த்தையும் அறிஞர் சர் சாண் மார்சல், சர் மார்ட்டிமர் உயிலர், ஆர்.டி பானர்ச்சி, எனட மெக்கே. கார்டன் சைல்டு போன்ற அறிஞர்களின் ஆய்வுரைகள் என் போன்றவர்கள் ஒரு பெரிய நூலை எழுதி முடிக்கும் தன்னம்பிக்கையை யுண்டாக்கி யுள்ளது. என் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் எழ ஆக்கம் அளித்தது. ஏன்? தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி எழுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது. எத்துணை சூழ்ச்சியும் வஞ்சமும் எதேச்சாதிகார மும் எழுந்தாலும் அனைத்தையும் தகர்த்து வெற்றி நடை போட சக்தியூட்டியுள்ளது. நிற்க, தமிழர்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அங்கெல்லாம் கோயில் எடுப்பிக்கத் தவறாதவர்கள். அதோடு மட்டும் அவர்கள் இருக்கக் கூடாது கோயில்களோடு ஒரு நூல் நிலையம், கழகம், மருத்துவ நிலையம், கல்லூரி முதலியவைகளும் அமைப்பது இன்றியமையாதது. இது இக்காலத்தில் வாழும் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய தெய்வீகத் திருப்பணி என்று நினைப்பூட்டிக் கொள் கின்றேன். நமது கடந்த கால வரலாறும் வீழ்ச்சியும் இப்பணி இன்றியமையாத இறைப்பணி என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொள்கின்றேன். நாம் கோயிலுக்குப் போக எண்ணிச் சென்றால் முதலில் நாற்புறமும் திருமதில்களையும் வாயில்களையும் வாயிற் கோபுரங் களையுமே முதலில் காண்போம். கோபுரத்தை இன்று இராயர் கோபுரம் என்று கூறுகிறோம். முற்காலத்தில், மூவேந்தர் தலைநகர்களிலும் கோநகர் களிலும் மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களும் மணி மண்டபங்களும் மிகுந்திருந்தன. கோ -அரசு, தலைமை, புரம்- உயர்வு, உயர்ந்த கட்டிடம். புரை-உயர்ச்சி, புரை உயர்பாகும் (தொல். உரி 4) வேந்தன் இருந்த உயர்ந்த எழு நிலைக் கட்டிடம் முதலில் கோபுரம் எனப் பட்டது. பின்பு பொற்கோயில் அமைந்த எழு நிலை வானளாவி அப்பெயர் பெற்றது. அதன் அமைப்பு தேரை ஒத்ததாகும். கோபுரம் உள்ள நகர்களின் பெயர்களே முதலில் புரம் என்னும் ஈறு பெற்றன. எ-டு காஞ்சிபுரம், கங்கை கொண்ட சோழபுரம் சாயர்புரம், சிவத்தையாபுரம், சீருடையார்புரம், மெஞ்ஞானபுரம். வேந்தன் தன் தலைநகரை நாற்புறமும் நோக்கவும் தொலைவிற் பகைவர் வரவைக் காணவும், பகைவர் முற்றுகையிட்டு உழிஞைப் போரை நடத்துங்கால் நொச்சிப் போரைக் கண் காணிக்கவும் அவன் அரண்மனை மேல் எழு நிலை கொண்ட ஒரு உயர்ந்த தேர் போன்ற கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அது புரம் போன்று கட்டப் பட்டிருந்தது. அது புரம் எனப்பட்டது. புரம் - உயர்ந்த கட்டிட மான மேன்மாடம் புரவி - உயர்ந்த சுவரைத் தாண்டும் குதிரை. புரம் என்பது, பின்பு புரத்தைக் கொண்ட அரண்மனையையும் அதன் சூழலையும் குறித்து அதன் பின் நகர் என்றும் சொற்போல் தலை நகர் முழுவதையும் குறித்து நாளடைவில் நகரப் பொதுப் பெயராயிற்று. அரண்மனையில் உள்ள புரம் அரசன் இருக்கையாதலால் கோபுரம் எனப்பட்டது. கோ - அரசன் கோ இருந்த இல் கோயில் எனப்பட்டதை நோக்குக. பகைவர் வரவு கண்டற்குக் கோபுரம் சிறந்த அமைப்பு என்று கண்ட பின் நகரைச் சூழ்ந்த கோட்டை மதிலிலும் வாயிலிலும் பெரிதாகவும் மற்ற இடங்களிற் சிறியனவாகவும் கோபுரங்கள் கட்டப்பட்டன. சிறியன கொத்தளம் எனப்பட்டது. மதுரை நகரைச் சூழ்ந்து மதிலின் நாற் புறத்திலும் வாயிலும் மாடமும் வானளாவிய கோபுரமும் இருந்தன. நான்கு வாயில் மாடங்கள் இருந்ததினால் மதுரை நான்மாடக் கூடல் எனப்பட்டது. கூடல் என்பது தமிழ் கழகம் அது பின்பு இடனாகு பெயராய் மதுரையைக் குறித்தது. இதை அறியாது தொல் கதைஞர் (புராணிகர்) ஒரு கதையைக் கட்டி விட்டனர். தமிழ் கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறம் 58:13 தமிழ் நிலை பெற்ற தாங்கருமரபின்- மகிழ நனை மறுகின் மதுரை - சிறுபாண் 66:7 இனி, கூடல் நகர் என்பது நாளடைவில் கூடல் எனக்குறுகிற்று எனினுமாம். மதுரை நகர்வாயில், இடைவிடாது ஒழுகிய வைகையாறு போல் அகன்றும் இடையறாத மக்கள் போக்கு வரத்து மிகுந்தும் இருந்தது. மழையாடு மலையின் நிவந்த மாட மொடு வையை யன்ன வழக்குடை வாயில் என்று மதுரைக் காஞ்சி (355-6) கூறுதல் காண்க. கோபுர மன்றி வாசல் மாடமாகவுஞ் சமைத்தலின், மாட மென்றார். என்னும் நச்சினார்க்கினியர் சிறப்புரை இங்குக் கவனிக்கத் தக்கது. அரசனுக்குரிய சிறப்புகளெல்லாம் இறைவனுக்கும் செய்யப் பெற்றதினால், கோயில் தேர் மிகப் பெரியதாய்ச் செய்யப் பெற்றது போல், கோயில் மதிற் கோபுரமும் மிகப்பெரிய எழு நிலை வானளாவியாகக் கட்டப் பெற்றது. அதன் அமைப்பும் தேரை ஒத்ததாகும். அதன் எழுநிலைகளும் தேரின் எழுதட்டுக்களைப் போன்றவை. எழுநிலை அல்லது எழுதட்டுக் கருத்து ஏழுலகம் என்னும் கருத்தினின்று தோன்றியது. ஏழுலகக் கருத்தும் எழு தீவுக் கருத்தினின்றும் தோன்றிய தாகும். ஏழுடையான் பொழில் (திருக்கோவை ; 7) தச்சுக் கலையில் கோயில் தேர் போல், கட்டிடக் கலையில் கோயிற் கோபுரம் பண்டை தமிழரின் அறிவையும் ஆற்றலையும் சிறப்பையுங் காட்டும். தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரத்திற்கு, நகல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்னும் இடத்திலிருந்து சாரம் காட்டியதாகவும், கடைகாலில் ஒழுகிய நீர்த்துளைகள் அடைத்தற்குக் குறைவை மீன்களைப் பிடித்து விட்டதாகவும் கூறுவர்.1 தமிழர்கள் கோயில்களில் நடுவே திரு உண்ணாழிகையும் அதன் மேலே விமானமும் திரு உண்ணாழிகையின் உள்ளே திரு உருவமும் இடம் பெறச் செய்வது மரபு. ஆகமவிதி சிற்ப நூல் சட்டம். வழிபடச் செல்பவர்கள் முதலில் நாற்புறமும் அரண் போன்ற திருமதில்களையும் வாயிற் கோபுரங்களையும் முதலில் காண்பர் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே புகுந்ததும் முதலில் பலி பீடத்தையும் அப்பால் கொடி மரத்தையும் பின்னர் திரு உருவின் முன்னர் கால்களை மடக்கிப் படுத்திருக்கும் நந்தியையும் (காளையையும்) காண்பர் இவைகளை யெல்லாம் கடந்து சென்ற பின்னரே உண்ணாழிகையை (கருவறையை) அடைவர். அதன் பின்னரே அக நாழிகையில் அமர்ந்திருக்கும் திரு உருவைக் கண்டு வழிபட முடியும். திரு உண்ணாழிகையில் பல கணிகள் இராது. திரு விளக்குகள் இருக்கும். வாயில் திரைச் சிலை இருக்கும். திரைச் சீலையை அகற்றி கோயிற்பூசாரி திரு உருவிற்கு தூப தீபம் காட்டுவார். அப்பொழுது தான் பக்தர்கள் திரு உருவை கண்டு களித்து வழிபடுவர். தமிழ் நாட்டுத் திருக் கோயில்களில் திருமதில்களில் நான்கு புறமும் நான்கு வாயில்கள் உண்டு. கோயிலில் முன் புறம் சாமி சந்நிதிக்கு நேரே ஒரு வாயிலும் அம்மன் சந்நிதிக்கு முன் ஒரு வாயிலுமாக முன்புறம் இரண்டு வாயிலும் ஏனைய மூன்று திசைகளில் மூன்று வாயிலுமாக 5 வாயில்களும் 4 பெரிய கோபுரங்களும் உண்டு. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஐந்து வாயில்களே உள்ளன. திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் கோயிலில் முன்புறம் சாமி சந்நிதியில் ஒரு வாயிலும் ஒரு சிறு கோபுரமும் உண்டு. அம்மன் சந்நிதியில் ஒரு வாயிலும் ஒரு சிறு கோபுரமும் உண்டு. மேல்புறம் ஒரு வாயிலும் ஒரு பெரிய கோபுரமும் வடபுறம் ஒரு வாயிலும் ஒரு பெரிய கோபுரமும் உண்டு. வடக்கு வாயிலைப் பயன்படுத்துவதில்லை. திருச்செந்தூரில் தெற்கு வாயில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வாயில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஒரு பெரிய கோபுரம் உண்டு. மதுரை, திருவாரூர் போன்ற பெரிய கோயிலில் வெளியே 4 மதிலும் 4 கோபுரமும் இருப்பது போல் உள்ளே உள் மதிலும் உள்ளே 4 கோபுரங்களும் உள்ளன. கோபுர வாயில் அகலமாயும் உயரமாயும் இருக்கும். வாயிற் கதவுகள் கனமான உறுதி வாய்ந்த கட்டுகளால் செய்யப் பெற்று பித்தளை குமிழ்களாலும் எஃகு ஆணிகளாலும் மிக உறுதியாகச் செய்யப்பட்டிக்கும் கதவுகள் சிறந்த சிற்பவேலைப்பாடுகள் நிறைந்ததாய் சீர் பெற்றிருக்கும். வாயில்கள் யானைகள் புகக் கூடியதாயும் பெரிய சப்பரங்களில் திரு உருவங்களை வாகனங்களின் மீதேற்றி மக்கள் தோள் மீது சுமந்து செல்லத்தக்கதாய் இருக்கும். சிய தங்கத்தேர்களும் வௌத் தேர்களும் கூட வாயிலில் செல்ல முடியும். சில கோயில்களில் இரண்டு வாயில்களும் இரண்டு கோபுரங்களும் சில கோயில்களில் ஒரு வாயிலும் உள்ளன. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் பழைய தமிழ் நாட்டு அரண்மனையைப் போல வெளியே நாற்புறமும் அகழ்களும் அரணும் சிறு வாயிற் கோபுரமும் இருப்பது போல உள் புறம் ஒரு அரணும் உட்புரக் கோபுரமும் 220அடி உயரமான கல்லால் கட்டப்பட்ட சிற்பவேலைப்பாடுகள் சீர்பெற அமைந்த உலகப் புகழ் பெற்ற விமானமும் உள்ளது. இக் கோயிலுக்கு முன்புறம் மட்டுந்தான் வாயில்கள் உண்டு பின்புறமோ வலப்புறமோ இடப்புறமோ வாயில் இல்லை. தமிழ் நாட்டு சிற்ப மரபு உண்ணாழிகையும் விமானமும் எழுப்புவதுதான். கோபுரங்கள் எழுப்புவதில்லை. பிற்காலத்தில் கோயிலைச் சுற்றி அரண்கள் போல் பெரிய மதில் எழுப்பிய சமயம் பெரிய கோபுரங்களும் எழுப்பும் முறை தோன்றியது. கோயிலில் கோபுரங்கள் வட இந்தியாவிலும் எழுப்புவதுண்டு ஆனால் தமிழ் நாட்டுக் கோபுரங்களில் செய்யப் பெற்றிருக்கும் சிற்ப வேலைப் பாடுகள் எங்கும் செய்யப்படுவதில்லை. கோயிலில் செய்யப்படும் சிற்ப வேலைப்பாடுகள் சுதையினாலே செய்யப்படும். சுதையினால் செய்யப்பட்டாலும் அவைகள் ஆயிரம் ஆண்டானாலும் கெட்டுப் போகாது புத்தம் புதிது போல் பொலியும் படி சுண்ணத் தோடும், பதனீர் அல்லது கருப்புக் கட்டி போன்ற பல பொருள்களைச் சேர்த்து அழகிய சிற்பம் செய்து அதற்கு வண்ணமும் தீட்டி அழகுற அமைப்பார்கள். தமிழ் நாட்டில் வாயிற் கோபுரங்களை உயரமாக அமைப்பது விசயநகர்ப் பாணி என்று கூறப்படும் தமிழ் நாட்டின் புதிய கோபுர வாயில்கள் தமிழர்களின் பழைய தோரண வாயிலினின்று வேறு பட்டதாகும். கோபுரம் வேறு விமானம் வேறு. கோபுரம் பெற்று வாயில் தோரண வாயிலின்று வேறுபட்டதாகும். ஆந்திர நாட்டில் உள் அமராவதியிலும் நாகார்ச்சுன கொண்டாவிலும் வாயில் கோபுரங்கள் பெரிதாக எடுப்பிக்கப் பெற வில்லை. இது கி.மு.முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் கட்டப் பெற்றவைகள். பாண்டியர் களைப் போல் நாகார்ச்சுன கொண்டாவில் எடுப்பிக்கப் பெற்ற பௌத்தர் கோயிலில் சுவர் முகப்பில் உள்ள சிற்ப வேலைகளில் மேல் பகுதியில் இரு மீன்கள் ஒரு வட்ட வடிவினுள் அழகு பொலியத் தீட்டப் பெற்றள்ளது. (L. A Hrieze slab showing Hestoon ornament Hrom slupa 2) 1 இந்தப் பௌத்த விஹாரைகள் திராவிடப் பாணியில் அமைக்கப் பெற்றுள்ளன. வாயில் அமைப்புகள் இரண்டு சுவர்களுக்கு மேல் வண்டிக் கூட்டினைப் போன்று வளைவானதாக அமைக்கப் பெற்றுள்ளன. வட இந்தியாவில் கோபுரம் எழுமுன் நாகார்ச்சுன கொண்டாவில் கோயிலும் கோபுரமும் எழுந்துள்ளன. இன்றுள்ள தமிழ் நாட்டுக் கோயில்களில் கோபுரங் கொண்ட முதல் கற்றளி காஞ்சி கைலாச நாதர் கோயிலேயாகும். ஆனால் அதற்கு சிறிது காலத்திற்கு முன் மாமல்லபுரத்தில் எடுப்பிக்கப் பட்டவைகள் உண்மையான கோயில்கள் அல்ல மாதிரிக் கோயில் (பூசைகள் செய்வதற்கு உரியதல்ல) மாமல்ல புரம் பீமரதம் என்னும் கோயில் உண்மையான கோபுர அமைப்பைப் போல் எடுப்பிக்கப் பெற்ற மாதிரிக் கற்றளியாகும் தொண்டை நாட்டுக் காஞ்சிக் கைலாச நாதர் கோயில் கோபுரம் சிறியது; அணி செய்யப் பெறாதது. 6-ஆம் நூற்றாண்டில் எழுந்த கோபுர அமைப்பைத் தழுவியே பல கோபுரங்கள் அணிகள் செய்யப் பெறாது எளிய அமைப்பை யுடையதாய் இருந்து வந்தன. ஆனால் அக்காலத்திலே விமானம் முக்கியத்துவம் பெற்றதாய் இருந்தது. வட்டிகம் என்ற சோழ நாட்டுக் கோபுரம் கூட எளிய அமைப்பிலே இருந்தது. 11-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமன்னன் இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒன்றன் பின் ஒன்றாக அரண்கள் போல அடுக்கடுக்காய் மதில்களும் வாயில்களும் சிறு வாயிற் கோபுரங்களும் அகழும்உடையதாய் விளங்கின. சாலைகளும் கோஷ்டங்களும் சுதைச் சிற்பங்களும் வாயிற் கோபுரங்களை வண்ணம் உறச் செய்து எழில் பெற்றிலங்கின. 12-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தாரா சுரம் கோயில் கோபுரமும் சிறிது உயரமானதாய் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதாய்த் திகழ்கிறது. 13-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் எடுப்பிக்கப் பெற்ற சிவன் கோயில் கோபுரம் சிறிதாக இருப்பினும் சிறப்புமிக்கது. எழில் மிக வாய்ந்தது. இந்தக் கோயில் சிறிதாகவும் விமானம் பெரிதாகவும் அமைக்கப் பெற்றுள்ளது. கி.பி 1250ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்ட கிழக்குப் பகுதியில் சிதம்பரம் வாயிற் கோபுரம் சிறியதே. ஆனால் அதன் அற்புதமான சிற்ப வேலைப்பாடு போற்றத்தக்கதாகும். இது பிற்காலப் பாண்டியர்களின் அரிய பாணியின் அடிப்படையில் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகும். சிதம்பரம் ஆடவல்லான் கேந்திர நிலையமாகக் கொண்டு 1. படைத்தல் 2. காத்தல் 3. அழித்தல் 4. மறைத்தல் 5. அருளல் என்னும் ஐந்து தொழிலும் 1. நெல்லை 2. மதுரை 3. சுடுகாடு 4. திருக்குற்றாலம் 5. திருவாலங்காடு ஆகிய இடங்களில் முறையே ஆடிவிட்டு இந்த ஐந்து தொழிலும் காட்டும் நாதாந்த நடனத்தைச் சிதம்பரத்திலே முனிவர் களின் வேண்டுகோளுக்காக பொற் சபையில் ஆடிக்காட்டினான் என்பது ஐதீகம். மற்றொரு புகழ் பெற்ற கோபுரம் பாண்டியர் காலத்தில் சிரிரெங்கத்தில் 12-ஆம் நூற்றாண்டில் பழங்காலப் பாண்டியர்களின் பாணிக்கு எடுத்துக் காட்டாகச் சம்புக் கேசுவரர் கோயில் சுவரின் இரண்டாவது சுவர் அணியில் கட்டப்பட்டதாகும். இது பிற்காலப் பாண்டியர் பாணியில் மிக ஆடம்பரமின்றி எளிய அமைப்பு முறையில் உறுதியுடையதாய் கட்டப்பட்டதாகும். இதனுடைய அணி செய்யும் முறைகள் சிறப்பான மரபு வழி மாறாது மிகக் கவனமுடன் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களும் மேற் பூச்சுகளும் கட்டிட அமைப்புத் திறனில் பாண்டியர்களுக்குரிய பண்பு என்று போற்றும் முறையில் மிகக் கவனமுடன் செய்யப்பட்டுள்ளது. ஆதிரங்கம் மையரங்கம் இரண்டும் மைசூர் மாநிலத்தில் உள்ளன. கண்டரங்கம் (அந்தரங்கம்) என்று அழைக்கப்படும் மூன்றாவது அரங்கம் தமிழகத்தில் திருச்சிராப் பள்ளிக்கு அண்மையில் மூன்றாவது கல் தொலைவில் இருக்கிறது. இது இரு ஆறு-காவிரியும் கொள்ளிடமும் பிரியும் இடத்து 20 கல் நீளம் நட்ட நடுவே இரண்டு கல் அகலமுடையது. திருவரங்கம் திருவுக்கு அரங்கமாக இருப்பதினாலும் ஆற்றுக் கிளைகளின் நடுவே இருப்பதினாலும் சிரிரங்கம் (திருவரங்கம்) என்ற பெயரைப் பெற்றது. பொன்னிவள நாட்டிலே இயற்கையின் பேரமைப்பைத் தழுவி எடுப்பிக்கப்பட்டது வைணவர்களின் பெரிய கோயிலாகும். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியப் பேரரசர் செல்வாக்கு எழுந்தது. திருவாரூர் கீழக் கோபுரம், சிதம்பரம் மேலைக் கோபுரம், ஆவுடையார்கோயில் கோபுரம் ஆகியவைகள் பாண்டிய மன்னர்களால் கட்டி முடிக்கப் பெற்றன. இந்தக் கோயில்களில் விமானம் சிறிதாகவும் கோபுரம் பெரிதாகவும் காணப்படுகின்றன. 16-ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு மிகுந்த கிருஷ்ண தேவ ராயன் என்ற நாயக்க மன்னர் சிதம்பரம் வடக்குக் கோபுரத்தையும் திருவண்ணாமலை மேலைக் கோபுரத்தையும் கட்டி, தமிழகத்தில் நாயக்கர்கள் பாணியை நிலை நாட்டியுள்ளார். கோபுரங்களில் சுதைச் சிற்பங்கள் அதிகமாகவும் கோபுரத்தின் உச்சியில் இருபக்கங் களிலும் யாழ் முக வேலைப்பாடுச் சிறந்து விளங்குகின்றது. மதுரை நாயக்க மன்னர்கள் சிற்பச் சிறப்புமிக்கக் கோயில்களைக் கட்டியுள்ளனர். எடுத்துக் காட்டாக 17-ஆம் நூற்றாண்டின் திருமலை நாயக்கர் மரபில் வந்தவர்கள் கட்டிய மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைக் காணலாம். நான்கு மூலைகளும் நேர்கோடு போன்று அமைப்பது ஒரு முறை. இவை உள் வளைவாக வளைந்திருப்பது மற்றொரு முறை. இரண்டாவது எடுத்துக்காட்டு முறைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரமாகும். இக்கோபுரங்களில் எண்ணற்ற சுதைச் சிற்பங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் கட்டிய பின்னர் எழுந்த சிரிவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் அதைப் போல உயரமானது தான். ஆனால் சிற்பவேலைப்பாடுகள் எதுவும் இல்லை. திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி வட்டத்திலுள்ள களக்காடு என்னும் ஊரில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்று எழுந்தது. அதில் சுதை வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் நிறைய உள்ளன. 17 ஆம் 18 - ஆம் நூற்றாண்டுகளில் பல சிறிய கோபுரங்கள் கட்டப் பெற்றுள்ளன. அவற்றில் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் குறைவு. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காளையார் கோயில்புரம் நல்ல எடுத்துக்காட்டாக மிளிர்கின்றது. கோ என்றால் அரசன், இல் என்றால் வீடு, கோயில் என்றால் அரசன் வீடு என்று பொருள் கொள்கின்றனர். அதோடு பௌத்தர் அரச பதவியைத் துறந்து துறவியாய்விட்டதால் அவர் வீடு வழிபடும் கோயிலாற்று. அப்பால் தெய்வம் உறையும் திருவிடத்தே கோயில் என்று பெயர் எழுந்து விட்டது. கோயில் என்ற பதம் எப்படி வந்தாலும் வரட்டும், இன்று தெய்வம் உறையும் இடத்திற்கே கோயில் என்று பொருள் கொள்ளப்படுவது உலக வழக்காயிற்று. அதே போன்று மன்னன் தன் இல்லிற்குப் புகும் வாயில்தான் ஆதியில் கோபுரம் என்றிருந்து இப்பொழுது இறைவன் இல்லிற்குப் புகும் வாயிலும் கோபுர வாயில் என்றாயிற்று என்றும் கூறப்படுகிறது. இக்காலத்தில் கட்டப்பட்டு வரும் கோபுரங்கள் மிகச் சிறியன. அவைகளில் சிற்ப வேலைப்பாடுகளும் குறைவு. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கோபுரம் பெரிது. ஆனால் சிற்ப வேலைப் பாடுகள் மிகக் குறைவு. கோபுரங்களில் பல்வேறு உருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. விரும்பத்தகாத ஆபாச சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் வாயில்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் ஒற்றைப்படை யாகவே அமைந்திருக்கும். வாயில்கள் மூன்றாக இருந்தால் கனவு நனவு சுழுத்தி எனும் மூன்று அவதைகளையும், ஐந்தானால் ஐம்பொறிகளையும் ஏழானால் ஐம்பொறிகளுடன் மலம் புத்தி ஆகிய இரண்டையும் சேர்த்து ஏழாகக் குறிக்கும் என்பர். அத்தனை வாயில்கள் இருந்தாலும் தரைமட்டத்தில் அமைந்துள்ள வாயில் வழியாகத்தான் கோயிலின் உட்புக முடியும். இவ்வாறே கடவுள் நாட்டம் செல்லும் போது நம்மனம் ஒன்றே பயன்படும் என்பர். கோபுர வாயிலைக் கடந்து சென்றால் முதன் முதலாக நாம் காண்பது பலி பீடம். அப்பால் காணப்படுவது கொடி மரம். இறுதியில் காணப்படுவது திரு உண்ணாழிகை. அதன் நடுவே இலிங்கம். இடையில் இருப்பது நந்தி. இந்த முறையில் தமிழர்கள் கோயில் அமைப்பை ஒரு மரபாக வைத்துள்ளார்கள். சிற்ப நூற்களும் ஆகமங்களும் இந்த அமைப்பை - ஒழுங்கை (Order - I) ஆதரிக்கின்றன. முதலில் காண்பது பலி பீடம்; அப்பால் கொடி மரத்தைக் கண்டதும் மக்கள் தம் உள்ளத்தைப் புனிதப் படுத்தி தம் உள்ளத்தில் இறைவன் உவந்து உறைவதற்கு ஏற்ற இடமாகச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்துடன் கொடி மரத்திற்கு அப்பால் அடி எடுத்து வைக்க வேண்டும். இதை நினைப்பூட்டவே கொடி மரம் அங்கு நிற்கிறது. பலி பீடத்தின் அண்மையில் சென்றதும் உள்ளத்தில் உள்ள தீய எண்ணத்தை அங்கு பலியிட்டு - அதாவது தீய எண்ணங்களை உள்ளத்தை விட்டு அகற்றி - உள்ளத்தைப் புனிதப் படுத்தி - தூய்மையானதாய் - பளிங்கு போல் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பலிபீடம் நினைவூட்டுகிறது. அப்பால் மக்கள் இறைவன் திரு உருவைச் சுற்றி வலம் வருதல் பிராணயாம முறையை காட்டுகிறது. பலிப் பீடத்திற்கு அடுத்தாற் போல் தெய்வ உருமுன் காணப்படுவது நந்தி. அது தெய்வத்தின் வாகனம். அது ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மா உள்முகமாக ஆன்மாவை நோக்குகிறது. ஆன்மாவின் குறிக்கோள் இறைவனை அடைவது என்று அது காட்டுகிறது. இறைவனை அடைவதற்கு எப்பொழுதும் உள்ளம் கடவுள் நாட்டத்திலே இருக்க வேண்டும் என்று நந்தி - வாகனம் இறைவனை நோக்கியவாறே அமைந்திருக்கும் நிலை அறிவிக்கிறது. இறைவனை வலமாகச் சுற்றிவரும் மக்கள் வாகனத்தையும் சேர்த்தே சுற்றி வருகிறார்கள். வாகனத்திற்கும் இறைவனுக்கும் குறுக்கே செல்வது வழிபாட்டு முறைக்கு மாறாகும் இடையூறு செய்வதும் ஆகும். திரு உருவை வலம் வந்த பின் மக்கள் கருவறையின் - திரு உண்ணாழிகையின் வாயிலை அடைவர். திருவறையின் வாயிலில் திரையிடப் பட்டிருக்கும். அவ்வறையிலோ சாளரங்கள் கிடையாது. இருளாக இருக்கும். அங்கு காற்றும் வெளிச்சமும் கிடையாது. திரு உண்ணாழிகை காற்றும் வெளிச்சமும் இல்லாத இடமாக இருக்க வேண்டும். அதன் நடுவே இலிங்கம் இருக்கும். ஆனால் பார்க்க முடிவதில்லை. இது இவ்வாறே இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கருவறையின் அருகிற் சென்று இறைவனைக் காண ஒளி வரும் வரை வழிபட நிற்கும் பக்தன் காத்திருக்கின்றான். சிறிது நேரத்தில் மணியொலி கேட்கும். திரை அகலும். கருப்பூர ஆராதனையாலும் விளக்கினாலும் வெளிச்சம் உண்டாகிறது. இறைவனின் திரு உருவம் காட்சி அளிக்கிறது. மனமே கருப்ப கிரகம். அங்கு நிகழ வேண்டிய ஞானக் காட்சியின் புறத் தோற்றமே இது. மனத்தை உள் முகமாக்கிச் செலுத்தும் ஆன்ம சாதகன் முதலில் கார் இருளைத் தன்னுள் காண்கின்றான். மனத்தை உள்முகமாக அமைத்து வைத்திருக்கப் பழக வேண்டும். அப் பழக்கத்தால் உள்ளத்தினுள் இனிய ஓசையும் பின்னர் ஞான ஒளியும் உண்டாகின்றன. ஆகம விதிப்படி கோயில்களும் சுற்றுமதில்களும் பெருங் கோயில் கோபுரமும் வாயிலும் கொடி மரமும் பலிபீடமும் வாகனமும் திரு உண்ணாழிகையும் உடையனவாகி நம் உள்ளக் கோயில் அமைந்திருக்கும் முறையை உணர்த்துகின்றன என்று சமய நூற்கள் எடுத்துக் காட்டுகின்றன. திரு மதில்கள் ஒவ்வொரு கோயிலிலும் புறமதில்களும் அக மதில்களும் உண்டு. இந்த மதில்களே கோயிலுக்குப் பாதுகாப்பாக இருக் கின்றன. பெரிய கோவில்களின் திருமதில்கள் உயரமாகவும் உறுதி யாகவும் கட்டப்பட்டுள்ளன. செங்கல்லாலும், கருங்கல்லாலும் இம்மதில்கள் அழகுறக்கட்டப் பெற்று சிறப்பு வெள்ளைப் பட்டைகள் மேலிருந்து கீழாக வரிசையாகத் தீட்டப் பெற்றிருக்கும். மதில்கள் ஒன்று முதல் பதினொன்று வரை அடுக்கடுக்காய் கட்டப்பட்டிருக்கும். இதனை உடல் அமைப்பிற்கும், அண்ட பிண்டங்களுக்கும் உவமையாகக் கூறுவர். ஊரில் ஒரு பிள்ளை கோயில் இருந்தால், கோயில் நகரத்தில் பதினொன்று இருக்கும். மதில்களின் முன்னால் ஒரு வாயிலும் முன்பின் இரண்டு வாயிலும் நாற்புறங்களில் நான்கு வாயிலும் அமைக்கப்பட்டிருக்கும். மதில்களின் ஒவ்வொரு மூலையிலும் கருடன் நந்தி போன்ற உருவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். திருவண்ணாமலைக் கோயிலின் புற மதிலில் அதைக் கட்டிய விஜய நகர நாயக்கர் மன்னரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சி ஏகாம்பர நாதர் கோவில் புற மதில்களின் மீது புத்த சமய உருவங்கள் காணப் படுகின்றன. சில மதில்களில் உட்புறம் திருச்சுற்று மண்டபங்களும் உண்டு. இம்மண்டபங்கள் மதிலுக்கு ஆதரவாக இருப்பதோடு மக்கள் உட்கார்ந்து இளைப்பாறவும் வசதியாக இருக்கின்றன. மதில்களின் மேல் அழகிய பூ வேலைப்பாடுகளும் காணப்படு கின்றன. இம்மதில்களிலே தான் பெரும்பாலான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில், கோயில் வரலாறும் நாட்டு வரலாறும் உள்ளன. மதில்கள் உள்ளிருக்கும் படிமங்கள், அணிகள், வெள்ளிச் செம்புப் பாத்திரங்கள், அழகு தரும் விலங்குகள், ஆடைகள், வெள்ளி, தங்க வாகனங்கள், சப்பரங்கள் முதலிய கலைக் கருவூலங்களைப் பாதுகாக்கும் அரண்களாகவும் வரலாற்று ஏடுகளாகவும், சிற்பப் பண்டாரங்களாகவும் திகழ்கின்றன. இத் திருமதில்களைக் கட்டியவர்கள் அது என்றும் அழிந்து படாமல் பழுது பார்ப்பதற்காக நில தானஞ் செய்திருக்கின்றார்கள். ஆதியில் அக நாழிகை மட்டும் கட்டப்பட்டு உள்ளே சிவலிங்கம் மட்டும் நிலைபெறச் செய்யப் பெற்றன. எந்த தெய்வத்திற்கும் ஆதியில் தனிக் கோயில் கட்டப்படவில்லை. பின்னால் திருஉண்ணாழிகையை அடுத்து உமா தேவித் தனி அக நாழிகை கட்டப்பட்டது. பின் திருச்சு மதில்கள் தோன்றியதால் ஒவ்வொரு மதிலுக்கும் நான்கு வாயில்கள் எழுந்தன. அந்த உட்சுற்று மதில்கள் ஒவ்வொன்றிற்கும் நான்கு கோபுரங்களை எழுப்பினர். எனவே மதுரை, திருவண்ணாமலை, சிதம்பரம், திருவரங்கம் முதலிய கோயில்களில் பல கோபுரங்கள் எழுந்தன. மிகப் பெரிய கோபுரங்கள் மதுரை, திருவண்ணாமலை, சிதம்பரம், விருத்தாசலம், திருவில்லிப்புத்தூர், திருச்செந்தூர், இராமேச்சுவரம் முதலிய இடங்களில் உண்டு. கோபுரங்கள் ஏழு நிலைகள் உடையதாய் உயரே ஏறப் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் பெரிய அறைகள் இருக்கின்றன. ஒரு நிலையில் 300, 400 பேர்கள் இருக்கத் தக்க அளவுகள் கொண்டது. சிதம்பரம் கோயில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. கீழக் கோபுரத்தைக் கோப்பெருஞ் சிங்கன் கட்டினான். இங்கு தான் நூற்றெட்டு விதமான நடன வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச் சுற்றுகளில் உள்ள மண்டபங்களில் பிற்காலத்தில் பரிவார தேவர்கள் இடம் பெற்றன. நாளடைவில் பிரகாரங்களில் - திருச்சுற்றுகளில் உள்ள மண்டபங்களில் பிள்ளையார், முருகன் திருமால், ஆட வல்லான் போன்ற திரு உருவங்கள் இடம் பெற்றன. பின்னர் பிரகாரத்தில் இவைகளுக்குத் தனித்தனிக் கோயில்கள் எழுந்தன. திருச்சுற்றில் தெய்வத் திரு உருவங்கள் பல இடம் பெற்றதோடு மூலவர் அமர்ந்திருக்கும் அக நாழிகையின் அண்மையில் உமா தேவிக்குத் தனிக் கோயில் இடம் பெற்றது. திருச்சுகளில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் நவக்கிரகங்களும் இடம் பெற்றன. மன்னர்களும், அரசிகளும் மூலவர்கள் இடம் பெற்றுள்ள அக நாழிகையின் வாயிலில் கையில் தீபம் தாங்கி நிற்கும் நிலையில் வெண்கல உருவங்கள் வைக்கவும் அந்த உருவங்களின் கையில் ஏந்தி நிற்கும் அகல் விளக்குகளுக்கு நெய்க்கென ஆடுமாடுகளும் அவைகள் மேய்வதற்கு புஞ்ச நிலங்களும் மானியங்களாக அளிக்கப்பட்டு அதைக் காட்டும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தீட்டப்பட்டன. நமது சாசனங்கள் பல திருவிளக்கு எரிக்க விடப்பட்ட ஆடுமாடுகளும் நஞ்சை புஞ்சைகளும் பொற்காசுகளுமாகவே காணப்படுகின்றன. இந்த அதிகாரம் எழுதத் துணையாய் இருந்த நூற்கள் 1. Dravidian architecture - Prof. Jouveal Dubuel (Madras 1917) 2. Archaelogicdu and de Lirmdef Pt 1 (Paris) 1914 3. The chola Temple - C. Sivaramoorthi. New Delhi 1980. 4. Annual Report of South Indian Epigraphy (Madras 1889-1980) 5. The Colas - K. Neelakanta Sastry Madras 1937 6. The Great Temple of cho Janyose Madras 1935. 7. The Dravidian culture and its diffusion 8. ஆலயங்களின் உட் பொருள் விளக்கம். 9. மதுரை மீனாட்சி கும்பாபிடேக மலர் - மதுரை 1963  தோற்றுவாய் 1950-ஆம் ஆண்டிற்கு முன்பே திருக்கோயில் என்னும் ஓர் ஆய்வு நூல் எழுத எண்ணினேன். எனது எண்ணம் இருபத்தைந்து ஆண்டுகாலமாக ஈடேறவில்லை. நான் 1922-ஆம் ஆண்டிலிருந்து எழுத்தாளனாக 55-ஆண்டுகட்கு மேலாக எழுத்துப் பணியாற்றி வருகின்றேன். 1922-ஆம் ஆண்டிலிருந்து 1930-வரை சமய எதிர்ப்பு, சாத்திர வெறுப்பு கோத்திரவெறுப்பு சமய சீர்திருத்தம், நாட்டுப்பற்று, சமதர்மம் போன்ற துறைகளில் பணி ஆற்றி வந்தேன். 1948-இல் இலங்கைக்கு பொருள் தேடச் சென்றேன். அங்கு போனதும் அறிஞர் ஆனந்தக் குமாரசாமி, இலங்கைத் தொல் பொருள் ஆய்வு துணை ஆணையாளர் சு. சண்முகநாதன், கலைப்புலவர்கள் நவரத்தினம், புலவர் கே. கணேஷ்(தலத்துயா) டாக்டர் தனிநாயக் அடிகள் போன்றோர் நட்பைப் பெற்றேன். இவர்கள் நட்பு எனது வாழ்க்கையின் ஒரு திருப்புமையமாய் விட்டது. பழங்காசுகள் சேகரிக்கமுற்பட்டேன், நவமணிகளைச் சேகரித்தேன், சிப்பி சங்குகள் சேகரித்தேன், அணிகலன்கள், விளக்குகள், இசைக் கருவிகள் சேகரித்துச் சிறப்புப் பெற்றேன். அப்பால், 1. திருவிளக்கு, 2. வெண்கலப் படிமங்கள், 3. தமிழர் பண்பாட்டில் தாமரை, 4. மலர்கள், 5. தமிழ்நாட்டு ஓவியங்கள், 6. தமிழ்நாட்டுக் கப்பல்கள், 7. தமிழ்நாட்டுச் சிப்பி, சங்குகள், 8. தமிழ்நாட்டு இசைக்கருவிகள், 9. தமிழ்நாட்டு அணிகலன்கள், 10. தமிழ்நாட்டுப்படைக்கலன்கள், 11. தமிழர் இசை, 12. தமிழகச் சாவகக் கலைத் தொடர்புகள், 13. தமிழக மேற்காசிய இனத்தொடர்புகள், 14. தமிழ் இசை அகராதி, 15. தமிழர்களின் ஆடைகள், 16. சிந்துவெளிச் சைவ வேளாளர் பண்பாடு, 17. தமிழர்களின் கலைகளும் கைப்பணி களும், 18. தமிழர் நாடகம், 19. தமிழ்நாட்டியம், 20. இசையும் யாழும் தமிழ்நாட்டுக் காசுகள் என்று பல நூல்களை எழுதிக் குவித்தேன். சில சிங்கப்பூர் தமிழ்முரசு என்னும் நாள் ஏட்டில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன. சில நூல் வடிவில் வெளிவந்து அறிஞர்கள் பாராட்டைப் பெற்றன. திருவிளக்கு, தமிழர் பண்பாட்டில்தாமரை, தமிழகச் சாவகக் கலைத் தொடர்புகள் என்ற நூற்கள் தமிழக அரசின் பாராட்டையும் பரிசையும் பெற்றன. தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற நூல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் பி. V., பி. எ.சி வகுப்புகளுக்கு 1971-ஆம் ஆண்டில் பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டது. என்றாலும் கோயிலைப்பற்றி நான் நூல் எழுதத் தொடங்க வில்லை. ஒன்றிரண்டு முறை சிலபக்கங்கள் எழுதி அவற்றைத் தவறவிட்டதும் உண்டு. கலை வித்துக்களை எனது உள்ளத்தில் ஊன்றி அதற்கு உரமிட்டு, நீர்வார்த்து வளர்ச்சிபெறச் செய்த இலங்கையில்கூட திருக்கோயில் முளைத்துக் கிளம்ப இடம் அளிக்கவில்லை. எனது மகள் தமிழ் அரசி 1974- ஜனவரியில் வெளிவந்த சோவியத் நாடு (Soviet land) என்ற ஆங்கில ஏட்டை எடுத்துக் காட்டி நீங்கள் தமிழ்நாட்டுத் திருக்கோயில் என்ற நூலை எழுத சோவியத் நாட்டில் வெளிவந்த லெமூரியாக் கண்டத்தின் மர்மம் என்ற கட்டுரை உங்கள் நூலுக்கு நல்ல அடித்தளமாக இருக்கும் என்றும் எடுத்துக் காட்டினாள். படித்துப் பார்த்தேன். கட்டுரை வரைந்த அறிஞர் கோந்ரோத் அவர்கள் தெளிந்த ஆய்வுடன் எழுதியிருப்பினும் உறுதியாக அவரது எழுத்துக்கள் புலப்பட வில்லை. தமிழில் மொழியாக்கம் செய்தவர் வேண்டும் என்றே பல பகுதிகளை மொழியாக்கம் செய்யாது விட்டுவிட்டார். தமிழர்கள் ஆரியரினும் நாகரிகம் வாய்ந்த நல்லினம் என்று உருசிய மொழியில் கூறிய உயரிய ஆய்வு மொழிகளைத் தமிழில் கூறக்கூட அவருக்குக் கசப்புப் போலும். என்றாலும் ஆங்கிலக் கட்டுரையைப் படித்து ஓரளவு நிறைவு கொண்டேன். எனது மகள் 1977-ஆம் ஆண்டில் எப்படியும் தமிழ்நாட்டுத் திருக்கோயில் என்ற நூலை எழுதி முடிக்குமாறும் அதற்கு வேண்டிய எல்லா உதவியும் தான் செய்வதாக வாக்களித்தாள். நூல் எழுதுவதற்கு வேண்டிய 100 நிழற்படங்களும் 100 வரைபடங்களும் என்னிடம் இருந்தன. திருமதில், கோபுரம், பலிபீடம், கொடிமரம், நந்தி சிவலிங்கம், திருஉண்ணாழிகை, விமானம், மண்டபங்கள், தூண்கள் கோயில் அமைப்புகள், உபபீடம், அதிர்ஷ்டானம், பஞ்சவரிகள், கால்கள், தோள் உறுப்புகள், கர்ணக்கூடு பஞ்சரம், சாலை, மாடம், அணிமாடம் போன்ற படங்களைவரைந்து வைத்திருந்தேன். எழுதவும் தொடங்கினேன். ஆனால் எதிர்பாராது வேறு வேலைகள் எழுந்ததால் எழுதி முடிக்கமுடியாமற் போய்விட்டது. மீண்டும் 1976-ஆம் ஆண்டு இறுதியில் திருக்கோயில் என்னும் நூலை தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். எனது சிந்தனையும், ஆய்வின் போக்கும் அறிவும் மாறிவிட்டதால் முன் எழுதியவற்றை எழுதியும் மாற்றியும் விரிவாக எழுதத் தொடங்கினேன். முன்னர் எழுதிய 100-பக்கங்களை மாற்றியும் திருத்தியும் புதிதாக எழுதுவதற்கு இரண்டு திங்கள் சென்றன. காரணம் முன்போல் விரைவாக எழுத என் உடல் நிலை இடங்கொடுக்கவில்லை. ஏனெனில் எனக்கு 74-வயது நடந்து கொண்டிருக்கிறது. 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் நாள் எனது 75-ஆம் வயது நிறைவுற்று 76-ஆம் வயது தொடங்கும் அதற்குள் இந்நூலை எழுதி முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஊக்கமுடன் எழுதத்தொடங்கினேன். ஆனால் 1976-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ஆம் நாள் எதிர்பாராவண்ணம் என்னை இதயநோய் தாக்கி ஒரு திங்கள் படுக்கையில் வைத்து விட்டது. கோயில்களைப் பற்றிப்படிக்குந்தோறும் படிக்குந்தோறும், எனக்கு ஆக்கம் அரும்புகின்றது. ஊக்கம் உந்துகின்றது கோயிலின் தோற்றம் அமைப்பு, அழகு, உறுதி வரலாறு இன்னோரன்ன எண்ணிலாச் சிறப்புகள் எனது எலும்பிற்கு எஃகு போன்ற பலத்தை ஊட்டுகிறது. கோயிலின் சதுரம், நீண்ட சதுரம், வட்டம், அரை வட்டம், ஆறுபட்டம் எட்டுபட்டம் போன்ற அமைப்புகள் உயர்ந்த விமானம், பெரிய கோபுரம் மண்டபங்கள் உண்ணாழிகை, சுற்றுக்கள், தூண்கள் போதிகைகள் போன்ற அரியபடைப்புகள் சீரியவைகளாய் ஆகும். தமிழர்கள் கருங்கல்லைப் பதமாக்கி தேக்குமரங்களைப் போல் சீவி கொத்தி இழைத்து பளிங்கு போன்ற திருஉருவங்களையும் சமைத்தார்கள் என்பது பெரியகாரியமல்ல - கருங்கல்லையும் கனிய வைக்கும் கைவண்ணமும் கைத்திறனும் உடையவர்கள் என்பதைக் காட்டி நிற்கும் திருநெல்வேலி, சுசீந்திரம், ஆழ்வார் திருநகரி கற்றூண்கள் என் உள்ளத்தையும் உணர்வையும் பெரிதும் கவர்ந்துள்ளது. 1972-ஆம் ஆண்டில் (சுப்ரீம் கோர்ட்டில்) உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் பெரிய வழக்குறைஞர் (அட்வக்கேட் செனரல்) திரு. எ. கோவிந்தசாமி நாதன் அவர்கள், அர்ச்சகர் வழக்கில், தமிழ்நாட்டில் 10040 கோயில்கள் இருக்கின்றன என்று கூறியதாகப் பத்திரிகையில் படித்தேன் - ஆனால் அவர்கள் கூறியது இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்திற்குள் அடங்கிய கோயில்கள் என்றே நம்புகிறேன். இந்தச் சட்டத்திற்குள் வராத கோயில்கள் இன்னும் 10,000-ம் இருக்கும் நமது ஊர்களில், தெருவிற்கு ஒன்றுவீதம் உள்ள பிள்ளையார் கோயிலையும், காளி அம்மன், கூளி அம்மன், மாரி அம்மன் போன்ற அம்மன் கோயிலையும் கணக்கிட்டால் சுமார் 30,000 ஏரி அம்மன் கோயிலாவது இருக்கலாம் என்று எண்ணுகின்றேன். இத்துணை கோயில்கள் இருந்தும் அதில் இலட்சக்கணக்கான தெய்வங்கள் இருந்தும், அதைவழிபடும் கோடானு கோடி குடிமக்கள் இருந்தும், அறநிலையப்பாதுகாப்பு மன்றங்கள் இருந்தும், கோடி கோடியாய் வெள்ளிப் பணங்களை தங்கப் பவுண்களை அடுக்கி வைத்திருக்கும் எண்ணற்ற மடங்கள் இருந்தும் அளவற்ற பக்தர் களும் எழுத்தாளர்களும் இருந்தும் பலபதிப்பகங்கள் இருந்தும் திருக்கோயில் என்ற ஒரு நிறைவான நல்ல நூலை எழுதி வெளியிடவில்லை என்பதை எண்ணினால் வருந்தாதிருக்க முடிய வில்லை. எனவேதான் ஆத்திரத்தோடும், ஆர்வத்தோடும், அபிமானத் தோடும் ஊக்கத்தோடும் உண்மை உணர்வோடும் இந்நூலை எழுத முன்வந்துள்ளேன். எனவே இந்நூல் அச்சிட்டு வெளிவந்தாலும் சரி வராவிடினும் சரி எழுதி முடிப்பது எனது கடமை என்று எழுதி முடித்துள்ளேன். இந்நூலை எழுதி, விற்றுப் பணம் சேகரிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை. இதற்கு முன்பு சில நூல்கள் எழுதி சில வெளியீட்டாளர் மூலம் வெளிவரச் செய்துள்ளேன். மூன்று நூற்கள் நானே எழுதி வெளியிட்டுமுள்ளேன். அவைகளில் கிடைத்த ஊதியம் மிகச்சொற்பம். அவைகள் எழுதி முடிக்க நான் செலவிட்டதொகையில் பாதிகூட எனக்கு வரவில்லை. இந்த நூல்களை எழுதிமுடிக்க எனது இல்லத்தில் இருபதாயிரத்துக்கு மேல் செலவிட்டு ஒரு நூலகம் அமைத்துள்ளேன். நூல்கள் எழுதி விற்று செலவில் பாதியையேனும் பெறமுடியாத நிலையில் என் போன்ற எழுத்தாளர் தமிழகத்தில் பலர் உளர். இஃதின்றி, பக்தி கொண்டும் தியாக உணர்ச்சியோடும் இந்நூலை எழுத நான் முன்வரவுமில்லை. நான் தமிழ்நாட்டில் பிறந்தவன்; தமிழ்நாட்டில் வளர்ந்தவன்; தமிழனுக்குப் பிள்ளை யாகப் பிறந்தவன்; சைவனாக வளர்ந்தவன்; நான் எனது நாட்டிற்கும் எனது நெறிக்கும் எனது கலைக்கும் செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத கடமைகள் சில உண்டென்ற கருத்தோடு இத்துறையில் இறங்கியுள்ளேன் என்பதே எனது உளமார்ந்த உண்மை. இந்நூலில், எங்கும் எனது கொள்கைகளை, அரசியல் கருத்துக்களையோ புகுத்த எண்ணியதே இல்லை. பெரியார் ஜி.யு. போப் அவர்கள் தம் திருவாசக முன்னுரையில் குறிப்பிட்டது போல், தமிழ்ச்சிந்தனையோடும், தமிழ் உணர்வோடும் எழுதியுள்ளேன் என்று தைரியமாக எனது வாசகர்களிடம் பெருமையோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்நூலை எழுதிமுடிக்க, இந்துக் கோயில் (Hindu temple) என்று கல்கத்தா பல்கலைக் கழகத்தின் கலைத்துறைப் பேராசிரியை டெல்லா கிராமரிஷ் என்ற செர்மன் நாட்டு அம்மையார் எழுதிய அரியநூலையும், அப்பால் அவரும் திருவாங்கூர், தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் பொடுவால் எழுதிய திருவாங்கூர் கலையும் கைப்பணிகளும் என்ற நூலையும், பிரஞ்சுப் பேரறிஞர் ஜோவியோ துப்ரயல் எழுதிய திராவிடக் கட்டிடக்கலை (Dravidian Architecture) என்று ஆங்கிலத்திலும், பிரஞ்சு மொழியிலும் எழுதிய இரு நூலையும் படித்துள்ளேன். அதோடு எவ். எய்ச். கிரேவ்லி (F.H. Gravely D. s.c) எழுதிய இந்தியக் கோயில் கட்டிடக் கலையின் பொதுக் கோட்பாடுகள் (An outline of Indian Temple Architecture) எய்ச். ஆர் ஹேவல் (H.R. Havel) எழுதிய இந்தியக் கட்டிடக் கலை (Indian Architecture) பெர்கூசன் (J. Ferguson) எழுதிய இந்தியக் கிழக்கத்தியக் கட்டிடக் கலை வரலாறு (History of Indian and Eastern Architecure) பெர்சி பிரவுண் (Percy Brown) இந்தியக் கட்டிடக்கலை (Indian architecture) போன்ற மேனாட்டறிஞர்கள் எழுதிய நூற்களை இறுதியாக 1976 டிசம்பர் திங்களில் செகதீச ஐயர் எழுதிய இந்தியக் கோயில் (Indian shrines) என்ற நூலையும் படித்துள்ளேன். அதற்காக அவர்களைத் தமிழன் இன்றும் என்றும் பாராட்டக்கடமைப் பட்டுள்ளான். தமிழகத்தில் உள்ள இப் பெருந்திருக் கோயில்களில் பன்னாள் சென்று வழிபட்டு, மாவிளக்கேற்றி, உண்ணாநோன்பு இயற்றி கோயில்களில் உள்ள திரு உருவங்களின் முன்னின்றும், மண்டி யிட்டும் கால்களும் கைகளும் நெற்றியும் ஏனைய உறுப்புகளும் நிலத்திற்பட வீழ்ந்து பாடியும் மலர்ந்து ஆடியும் அழுதும் தொழுதும், ஆடியும், பாடியும், பொருள் பெற்றும், அருள் பெற்று தமிழகத்தில் பிறந்த தமிழ் மகன் ஐரோப்பிய ஆசிரியர்களைவிட திருக்கோயில்களைப் பற்றிச் சிறந்த நூலை எழுதவில்லை என்று உளமாற நம்புகிறவன். நம்மால் உயர்ந்த நூல்களைப் படைக்கத்தக்க அறிவும் ஆற்றலும் பண்பும், பாங்கும், சூழ்நிலையும், திறமான மொழியும் உண்டு. ஆனால் இத்துறையில் ஈடுபடாது சிந்தனையைச் செலுத்தாது இருந்துவிட்டோம். இது தமிழ் இனத்திற்கு மாறா இழுக்காகும். நான், இப்பொழுது தமிழ் உணர்வோடு, தள்ளாத முதுமைப் பருவத்தில், உணவையோ, ஓய்வையோ, பொருட்படுத்தாது காலை 6.00 மணியிலிருந்து ஒரு நாளையில் 10- மணி நேரம் உழைத்து இந்த நூலை எழுதி முடித்துள்ளேன். இந்த நூல் கோயிலைப்பற்றிய ஒரு நிறைவான நூல் என்று நான் எண்ணாவிடினும் வருங்காலத்தில் உள்ள நமது மக்கள் கோயில் என்ற ஒரு நிறைவான நூலை எழுத இது அடிப்படியாக இருக்கும் என்று உறுதியோடு இந்நூலை எழுதி முடித்துள்ளேன். ஆனால் இந்த வாய்ப்பு இன்னும் எத்தனை ஆண்டில் கிட்டுமோ அறியேன்? தமிழர் வாழும் இந்த மாநாடு கோடானு கோடி ஆண்டுகளாய்த் தோன்றி மாற்றம் எய்து வருகின்றது. 15 கோடி ஆண்டுகளுக்குமுன் கோண்ட்வானா என்னும் கண்டமாக இருந்தது. அப்பால் கோண்ட்வானா அழிந்து சிதைந்தபின் லெமூரியா என்னும் கண்டம் தோன்றியது. 19-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் கிலேட்டர் என்னும் ஆங்கில நாட்டு விலங்கியல் நிபுணர் கோண்டுவானா சிதைந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு லெமூரியா என்னும் நிலப்பரப்பு எழுந்திருக்கக் கூடும் என்ற ஊகத்தை வெளியிட்டார் கிலேட்டர் ஊகத்தை பல அறிவியல் விற்பன்னர்களும் உயிரியல் நிபுணர்களும் நிலநூல் வல்லுநர்களும் தாவர இயலாளர்களும் மாகடல் ஆராய்ச்சி நிபுணர்களும் புதை படிவ ஆராய்ச்சி ஆளர்களும் ஆதரித்தனர். மக்கள் இனத்தின் தோற்றத்தைப்பற்றி ஆயும் பண்டைய மக்கள் இன ஆய்வியலின் பேராளர்கள் இன்றைய மக்கள் இனத்தின் பொது வளர்ச்சித் திட்டத்திலும் லெமூரியா, ஒளிநாடு, குமரி நாடு, மூநாடு, தமிழ்நாடு என்ற இடங்களுக்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்தனர். இலெமூரியாவில்தான் குரங்கு மனிதத் தன்மையை அடைந்து இன்றைய மனித இனமாக மாறுதல் அடைந்தது என்ற உண்மையை உலகம் ஏற்றது. இந்துமாக்கடலில் மூழ்கிப் போன பரதகண்டத்தில் தான் வாலில்லாக் குரங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்று பிரடரிக் எங்கல், குரங்கிலிருந்து மனிதனின் தோற்றத்தின் பங்கு என்ற தம்நூலில் குறிப்பிட்டார்1. பல்லாயிரம் ஆண்டுகள் சென்றபின்னர், பழைய லெமூர்கள் மறைந்து உயர்ந்த கலையும் உயரிய நிலையும் பெற்ற மக்கள் லெமூரியாவின் மிச்ச சொச்சமாய் நிலவிய இந்துமாக்கடலில் உள்ள நிலப்பரப்பில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தனர். இந்த இடம் குமரிக் கண்டம் ஒளிநாடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டது இங்கு தமிழர் வாழ்ந்த நாடுகளும் உயர்ந்த குமரிக்கோடும் பஃறுளியாறும், தமிழ்ச்சங்கங்களும் தமிழ் அரசர்களும், சங்கப் புலவர்களும், சங்கமருவிய ஏடுகளும் பண்களும், முரசுகளும், யாழ்போன்ற நரம்புக் கருவிகளும் 10,000 ஆண்டுகளுக்குமுன் நிலவிய முதற் சங்கமும் கடற்கோளால் அழிந்தொழிந்து போய்விட்டன. இவர்களில் எஞ்சிய மக்களும் இரண்டாம் சங்கமும் பாண்டியப் பேரரசர்களும் இரண்டாம் முறையும் கடற்கோளால் அழிவுற்றனர் என்றாலும் இவர்கள் முற்றாக அழிந்து போகவில்லை. சிலர் குமரி தொட்டு இமயம் வரை அசாம் தொட்டு இந்து குஷ் வரை பரவி நின்றனர். பலர் கடல் கடந்து பர்மா, இலங்கை, அந்தமான், நிக்கோபார், கடாரம், மலையம், சிங்கப்பூர், சாவகம், சுமத்திரா, பார்லி, போர்னியோ, கம்போடியா, தாய்லாந்து, இந்தோசீனம் முதலிய நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறினர். பலர் எகிப்து, உபனதியா, எல்லம், மெசபொத்தாமியா, அசீரியா, காகசஸ முதலிய வடமேற்கு ஆசியப்பகுதிகளுக்கெல்லாம் தரைமூலமாகவும் கடல் வழியாய் கப்பல்கள் மூலமாகவும் பல்லாண்டாய்ச் சென்று குடியேறி, உழுது பயிரிட்டு, கைத்தொழில்களை வளர்த்து, தங்கள், மொழி, எழுத்து, பண்பாடு, கலை நாகரிகம், ஒழுக்கம் முதலிய வற்றை வளர்த்தனர். எங்கும் நாடும் நகரமும் ஆட்சியும் பரப்பி நாகரிகத்தைப் பரப்பி வந்தனர் வணிகம் வளர்த்து வந்தனர்.1 தமிழர்களின் அல்லது அவர்களின் உறவினர்களான திராவிடர்களின் தாயகம் இந்துமாக் கடலின் ஓரிடத்தில் இருந்தது. அப்பால் அவர்கள் வாழ்ந்த நாட்டின் பெரும்பகுதியைக் கடல் விழுங்கிவிட்டது என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கடல் கொண்ட தமிழகம் மனிதவர்க்கத்தின் தொட்டில். இதிலிருந்து பழமையான நாகரிகுங்கள் பல திராவிட மொழி பேசும் மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வருகிறது. இந்தியாவின் நாகரிகங்கள் எதுவாய் இருப்பினும் அவைகள் அனைத்தும் தெற்கினின்று வடக்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் சென்றவைகளேயொழிய எதுவும் தெற்கே சென்றது என்பதற்குச் சான்றே இல்லை. பேராசிரியர் எர்னட் ஹெக்கல் டாக்டர் லாங்டன், எய்ச். ஆர் ஹண்டர், ஹால், பண்டேகார் போன்ற அறிஞர்கள் பலரும் கொண்ட முடிபு இதுவே யாகும். மக்கள் முதலில் தோன்றி உலகின் நான்கு பகுதிகளுக்கும் சென்று குடியேறிய மக்கள் குளத்தின் தாயகம் தென் இந்தியாவே யாகும். மக்கள் இனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் வடக்கே உள்ள குலத்தவர்களும் மையநிலக் கடற்கரைப் பக்கத்தில், உறைந்தமக்களும் (Mediterranean race) தென் இந்தியாவினின்று சென்று குடியேறியவர்கள் என்பது உறுதி. கிழக்குக் கரைகளில் மக்களின் என்பு முதலிய சின்னங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவை இத்துணைகாலத்திற்கு முற்பட்டனவென்று கூறமுடியாத பழமை வாய்ந்தனவாகும். தென் இந்தியாவிலிருந்த பழம்பெரும் இனத்தவர்கள் தமது அரிய அறிவையும், உயரிய தன்மைகளையும் தமது தோற்றம், வடிவம் முதலியவற்றையும் உலகம் முழுவதிலும் பரப்பியவர்களாகக் காணப்படுகின்றனர் என்றார் டாக்டர் மகலீன்.1 அமெரிக்காவிலே மெக்சிக்கோ யூக்காட்டன்2 என்னும் இடங்களில் காணப்படும் கோயில்களின் அழிபாடுகள் எகிப்திலுள்ள அழிபாடுகளை ஒத்துள்ளன. அமெரிக்கா எகிப்து இந்தியா போன்ற நாடுகளிலுள்ள கோயிற்கட்டிடங்களிற் காணப்படும் அணிகள், கொத்து வேலைப்பாடுகளும் ஒரே வகையின. சுவரில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள் சிலவும் ஒரே வகையின. அமெரிக்க மக்களிடையே, தம்முன்னோர் ஞாயிறு உதயமாகும் நாட்டினின்றும் வந்தார்கள் என்னும் பழைய நம்பிக்கை உண்டு. அயோவா, தக்கோவா என்னும் தீவுமக்கள் எல்லா அமெரிக்கா மக்களும் ஞாயிறு உதயமாகும் திசையில் உள்ள ஒரு தீவில் ஒருமித்துவாழ்ந்தார்கள் எனக் கூறுவர் என மேசர் லின் கூறுகின்றார். சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்களைச் சூழ இருந்த மக்கள் குலத்தைவிட வேறுபாடு உடையனவாய் இருந்தனர். அவ்வாறே அவர்கள் மொழியும், செமிட்டியர் அல்லது ஆரியர் அல்லது மற்றவர்களுடைய மொழிகளோடு சம்மந்தம் இல்லாமல் இருந்தது. அவர்கள் திட்டவட்டமாக இந்தியரின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாகத் தற்கால இந்தியனின் முகவெட்டு இற்றைக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த திராவிட இனத்தின் முன்னோர்களின் வடிவை ஒத்திருக்கின்றது. இன்று தெக்காணத்தில் திராவிட மொழிகளைப் பேசுகின்ற இந்தியரை சுமேரியர் முற்றிலும் ஒத்தவர்களாகக் காணப்படுகின்றன. இந்தியாவினின்று தரை மார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாகச் சென்று பாரசீகத்திற்குக் கூடாக டைக்கிரி யூப்பிரட்டிஷ் என்னும் இரு ஆறுகளின் பள்ளத்தாக்குகளை அடைந்த மக்களே சுமேரியராவர். இந்தியாவிலேயே அவர்களின் நாகரிகம் வளர்ச்சி யுற்றது. அங்கே அவர்கள் எழுதும் முறையை அறிந்திருத்தல்கூடும். முதல் ஓவிய முறையாகவும் அதிலிருந்து இலகுவாகவும் சுருக்கமாக வும் எழுதும் முறையை அவர்கள் பயின்றனர். அவர்கள் பாபிலோன் நாட்டை அடைந்தபோது சதுரமான எழுது கோலினால் மிருதுவான களிமண்ணில் எழுதி வந்தார்கள். இதனால் எழுத்துக்கள் கூர்நுதி வடிவினவாகக் காணப்பட்டன. மக்கள் முதலில் நாகரிகம் அடைந்தவிடம் இந்தியா என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. சுமேரியர் இந்தியர் இனத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படும்போது கிழக்கிலிருந்து மேற்கை நாகரிகப்படுத்துவதற்குச் சென்ற செமித்தியரும் ஆரியரும் அல்லாத சாதியார் இந்திய உற்பத்தியினரேயெனத் தெரிகிறது. இந்திய நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது. ஆகவே இந்திய நாகரிகம் என்பது ஆரியருடையது அன்று. சுமேரியர் தமிழ்நாட்டினின்று சென்றவர்கள் என்பது ஐரோப்பிய பண்டிதர்கள் கருத்தாகும்.1 தமிழ்மக்கள் 10000-ஆம் ஆண்டுகளாய் அடுத்தடுத்து எழுந்த கடற்கோள்களாலும், அரசியல் மாற்றங்களாலும், பொருள் தேடும் முயற்சியாலும் தாயகத்தைவிட்டு அதாவது திராவிட இந்தியாவை விட்டு கலங்களின் மூலமாயும் இலங்கை மலேசியா, சாவா முதலிய நாடுகளுக்குமட்டுமின்றி மெசபொத்தாமியா, எகிப்து முதலிய நாடுகளுக்கும் போய் நிரந்தரமாகக் குடியேறினர். அங்கு உழுது பயிரிட்டு தானிய மணிகளை மலைமலையாகக் குவித்தனர். கைப்பணிப் பொருட்களை வண்ணந்தீட்டி செய்து எங்கும் பரப்பினர். காடுகளை வெட்டித்திருத்தி வீடுகள் கட்டி சிற்றூர் களும் நகரங்களும் ஆட்சி முறைகளும் அமைத்தனர். எங்கும் சிறு குடிசைகளும் பெரிய இல்லங்களும் மாளிகை களும் கோயில்களும் பள்ளிகளும் கட்டினர். இசைக் கருவிகளும் படைக்கலன்களும் அமைத்தனர். தமிழர் குடியேறிய இடமெல்லாம் நகரங்களும் பட்டினங் களும், பாக்கங்களும் எழுந்தன. தோணிகளும், அம்பிகளும் மரக்கலன்களும் பெருகின. கடல் வணிகம் வளர்ந்தது. மக்கள் கட்டிடக் கலையில் நல்ல நிபுணர்களாய் விளங்கினர். தமிழர் குடியேறிய எகிப்து, உபைதியா, எல்லம், அசிரியா, அக்கேடியா, சால்டியா சிரியா, பாலதீனம் முதலிய நாடுகளிலெல்லாம் சிவன், உமை, முருகன் முதலிய பெருந்தெய்வங்களை பல்வேறு பெயர்களால் வழிபட்டு வந்ததுடன் காற்றுக் கடவுள் மழைக் கடவுள், நீர்க்கடவுள் மரக்கடவுள், மீன்கடவுள், காளைக்கடவுள் போன்ற சிறு தெய்வங் களையும் வழிபட்டனர். எங்கும் தமிழர்கள் சிவனை காளைமீது இருப்பவராயும், கையில் திரிசூலம் தாங்கியவராயும் மனைவியோடும் மக்களோடும் மலைமுகடுகளில் இருப்பவராயும் சிவனை ஞாயிறாகவும் உமையை திங்களாகவும் முருகனை செவ்வாயாகவும் கருதி சிக்குராத் என்னும் கோயில் கட்டி வந்தது தமிழர் எங்கு குடியேறினும் எத்தனை ஆண்டுகள் ஆயினும் தங்கள் மரபு வழுவாது வந்துள்ளனர் என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. எகிப்தியக் கட்டிடக் கலை 1932-ஆம் ஆண்டு சிந்துவெளி அகழ்வு நூல் வெளிவருவதற்கு முன், உலகிலே எகிப்தில்தான் கட்டிடக்கலை முதல்முதலாக துளிர்த்து எழுந்து பீடுற்று உயர்ந்து நின்றது என்ற ஐரோப்பிய அறிஞர்கள் கருதினர். எகிப்தில் கி.மு. 2000-ஆம் ஆண்டிற்கு முன் கட்டிடக்கலை மட்டுமின்றி இசை அறிவும், வானநூற்புலமையும், மருத்துவக்கலையும், ஆடற்கலையும், நாகரிகமும் சிறப்புற்றோங்கி இருந்தன. பண்டைய எகிப்திய நாட்டினின்றே கட்டிடக் கலை அறிவும், வானநூற்புலமையும், இசை நுணுக்கமும் மேனாட்டிற்குச் சென்றன. எகிப்தியர் வீடுகளையும் அரண்மனைகளையும் கோயில் களையும் கட்டுவதற்கு மரக்கட்டைகளையும், சுடாத செங்கற்களை யும் மண்சாந்தையும் பயன்படுத்தி வந்தனர். பண்டைக் காலக் கோயில்களும், சமாதிகளும் மரக்கட்டைகளாலும் மண்செங்கல் லாலும், மண்சாந்தாலும் கட்டப்பட்டு வந்தன. பிற்காலத்தில் பழைய அமைப்புகளைத் தழுவி கற்களால் கோயில்களும் சமாதி களும் எடுப்பிக்கப்பட்டுள்ளன. கட்டிட அடிப்படைகளும், அடிச்சுவர்களும் அகலமாக அமைக்கப்பட்டன. சமாதிச் சுவர்கள் சிற்பவேலைப்பாடுகளாலும், ஓவியங்களாலும் அணிபெறச் செய்யப்பெற்றன. எகிப்தியக் கட்டிட வேலைகள் பலதிறப்பட்டன. அவைகளுள் உலகப் புகழ்பெற்ற மலைப்பூட்டும் மாபெரும் பிரமிடுகள் வியத்தகு கோயில்கள், சீர்பெறும் பிங்க்களும் அணியுறத்திகழும் அரண்மனைகளும், அற்புதமான சமாதிகளும் குறிப்பிடத்தக் கனவாகும். உலகிலே முதன்முதலாக வரலாற்றை வரைந்த வரலாற்றாசிரியர் ஹெரட்டோட்ட எகிப்திற்கு நேராகச் சென்று நாட்டைப் பார்த்து பல ஏடுகளை ஆய்ந்து எழுதிய உலக வரலாற்றில் எகிப்திய கட்டிடக்கலை உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. எகிப்தில் கி.மு. 4000-ஆம் ஆண்டுகட்கு முன் எகிப்தியர் அரசர்கள் தங்களுக்கெனக் கட்டிய பிரமிட் கோபுரங்களே எகிப்தின் உயரிய நாகரிகங்கள் - அவைகள் சுமார் 80 சிறப்பானவை. அவற்றில் பெரியது 764 சதுர அடிப் பரப்பும் 97 ½ அடி உயரமும் உள்ளது. இது எடை 7,00,000 றாத்தல் நிறையுள்ளவை. இவை நான்கு அல்லது ஐந்து அடுக்குகளையுடைய 22 ஆயிரம் வீடுகளைக் கொண்ட நகரங்களை அமைக்கப் போதுமானவை. இந்தப் பிரமிட் கோபுரங்களில் பண்டைய எகிப்திய மன்னர்கள் பயன்படுத்திய எழுத்துக்களும் பானைசட்டிகளும் ஆயுதங்களும், அணிகலன்களும் இசைக்கருவிகளும், ஆடைகளும், பதனிடப்பட்ட உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1 இங்கு நிலவியது கல்லரை நாகரிகமே ஒழிய நகர நாகரிகம் அன்று. இங்குள்ள இல்லங்களும், கோயில்களும், தெய்வங்களும் இசையும், இசைக்கருவிகளும் திராவிட நாகரிகத்தைப் போன்றதாகக் காணப்படுகின்றனர். இங்குள்ள மக்கள் தங்களை பண்டு நாட்டினின்று குடியேறிய மக்கள் என்று கூறிக் கொள்கின்றனர். பண்டு நாடு பாண்டிய நாடு என்று உலகிற் பெரிய வரலாற்று நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. பண்டைய எகிப்திய மக்கள் செமிட்டியரல்லாத மக்களே என்று பேராசிரியர் சேயி (Proffessor Sayee) கூறியுள்ளார். அதனைப் பல அறிஞர்கள் தழுவி ஆய்ந்து எகிப்தியர் தமிழ்நாட்டினின்று குடியேறிய மக்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.2 பாபிலோனியக் கட்டிடக்கலை பண்டையப் பாபிலோனியர்கள் கட்டிடச் சிற்பக் கலையைப் பேணிவளர்த்து வந்தனர். திராவிடர்களைப் போல் அவர்களுக்கு கோயில்கள் எழுப்புவதில் தனி ஆர்வம் உண்டு. பபிலோனியர்கள் தமிழர்களைப் போல் குன்றுகளிலும், பாறைகளிலும் கோயில்களை எடுப்பித்து வந்தனர். பாபிலோனியர்கள் கோயில்களில் சிறந்த சிற்ப வேலைகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய பாறைகளின் மீது பாபிலோனியர்கள் கட்டுமலைமீது கட்டிய கோயில்கள் சிகரத் (ziggurat) என அழைப்பிக்கப் பெற்றது. தமிழர்கள் கட்டுமலை மீது எடுப்பித்த கோயில்கள் பெருங்கோயில் என்று கூறப்படும். பெருங்கோயில்கள் சோழ நாட்டில் சுமார் 100-க்கு மேல் உள்ளன. பாபிலோனியர் சிந்து வெளித் திராவிடர்களைப் போல் தங்கள் கட்டிடங்களுக்கு சுட்டசெங்கற்களையும் சுடாத செங்கற்களையும் பயன்படுத்திவந்தனர். கால்டியாவில் பண்டையப் பாபிலோனியர் கட்டிடச் சிதைகள் பலவுள. அசிரியர் காலத்தில் அரண்மனைக் கட்டிடங்கள் பல எழுந்தன. நீனிவே (Neneveh) நிம்ருது (Nimrod) கார்சாபாத் (Khorssabad) ஆகிய இடங்களில் உள்ள அரண்மனைச் சிதைவுகள் குறிப்பிடத் தக்கவைகள் ஆகும். கார்சாபாத்திலுள்ள சார்கோன் அரண்மனை அசிரியரின் கட்டிடக் கலைச் சிறப்பிற்குச் சீரிய எடுத்துக்காட்டு ஆக மிளிர்கின்றது. அசிரியர்கள் தமிழர் களைப் போல் கட்டிடத்தின் வெளிப்புறத்தை எளிய முறையில் அமைப்பர் - உட்புறத்தை சுண்ணச் சாந்து பூசி வண்ணந்தீட்டி, புடைப்பு சிற்பங்களால் அலங்கரித்துள்ளனர். இவர்கள் கட்டிடங்களில் தூண்கள் காணப்படவில்லை. வளைவுகளையும் வில் மச்சுக் கூரைகளையும் அமைத்துள்ளனர். அரண்மனைத் தலைவாயிலின் இருபுறங்களிலும் தலை உருவங்களையும் இறக்கை களையும் உடைய நந்தி உருவங்களையும் அமைத்துள்ளனர். பாபிலோனில் உள்ள அமுரபி அரசன் காலத்தில் ஆபிரகம் சால்டியாவின் தலைநகராகிய ஊர் நகரைவிட்டு கானானில் குடியேறினான் பாபிலோனிய அசிரிய நாகரிகங்கள் இணைந்து அசிரியப் பண்பாடாக மாறியது. பாபிலோனியாவை சுமேரியர்கள் கைப்பற்றி அங்கு வானநூற்புலமையை வளர்த்தனர். கட்டிடக் கலையை வளர்த்தனர். கோயில்களைக் கட்டினர். பாறைகளின் மீது சிகாரத் என்னும் கோயில்களைக் கட்டினர். சுமேரிய நாகரிகம் சிந்து வெளி நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்புடையது சுமேரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் குடியேறி திராவிடர்கள் என்ற பெயரைத் தாங்கி உலகில் உயர்ந்த கட்டிடக் கலை வளர்த்துள்ளனர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். பல தெய்வங்களுடன் ஞாயிறு, திங்கள் கடவுள்கள் திராவிடக் கடவுளாக எண்ணப்படுபவர்கள். ஞாயிறு (சூரியன்). பாபிலோனி லும் சால்டியாவிலும் பேல் மார்துக் (Bel Marduk) எனப்பட்டார். திங்கள் (சந்திரன்) இதார் (Istar) எனப்பட்டார். இத் தெய்வங்களின் கோயில்களில் நடனமாடும் நங்கையர் இருந்து வந்தனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்த தேவதாசிகளை ஒப்பர். கோயில்களில் பல சடங்குகள் நடைபெறும். கோயில்கள் தமிழகத்தைப் போன்று அமைந்திருந்தது. கோயில்கள் சோலைகள் நடுவே இருந்தது. அவர்களின் கடவுள் அடையாளம் மரமாக இருந்தது. அங்கு பகல் (Bagal)flîS«, பலபீடமும், கொடிமரமும், நந்தியும் சூரியனைக் குறிக்கும் சிலுவை அல்லது கல்தூணினால் குறிக்கப்பட்டன. அவர்கள் மொழியில் திராவிட (Dravida) திராபட (Drapada) என்னும் பெயர்கள் உள்ளன. சால்டியர்கள் தமிழர்களே.1 தென் இந்தியத் திருக்கோயில்களின் திருந்திய அமைப்பும் அசிரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகக் காணப்படு கின்றன. அசீரியரின் கட்டிட சிற்பங்களில் தமிழர்கள் கட்டிட சிற்பங்களைப் போன்று தாமரை அரும்பு, மலரும் போன்ற வடிவங்கள் பல காணப்படுகின்றன. அசீரிய - இந்திய சிற்பக் கலைகளுக்கு இடைய அதிக ஒருமைப்பாடுகள் உள்ளன. இவ்விரு பழம்பெரு நாட்டு மக்களும் ஒரு பொதுக் கூட்டத்தினின்று பிரிந்தவர்கள் ஆதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்.2 நாகரிகம் முதன்முதலாக அரும்பிய இடம் தென்இந்தியா என்று நாம் எடுத்துக்காட்டுவது ஆதாரமற்ற கட்டுக் கதை (Myth) அன்று. அது அறிவியல் பாங்கானது; வரலாற்று ரீதியானது என்று டாக்டர் ஆர். எய்ச். ஹால் (Dr. R.H. Hall) கூறியுள்ளார். இவர் சுமேரியரின் தோற்றத்தைப் பற்றிக் கூறுவது உண்மையாய் இருந்தால் நாகரிகம் முதலில் இந்தியாவில் தோன்றிய பழந் தமிழரிடம் பரவியது என்பது உறுதியாகும். இதனை திரு. விவேகானந்தர் அடிகளும் ஏற்றுக் கொள்ளார்.1 உலகில் முதன்முதல் கட்டிடங்களையும் பட்டினங்களையும் உண்டாக்கியவர்கள் சுமேரியர்கள். இவர்கள் யூதர்களும் இல்லை ஆரியர்களுமல்ல. இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று இன்று சொல்வதற்கில்லை. இவர்கள் மொழி பலுச்சிதானிலும் காகேசியா மலை நாட்டிலும் உள்ள மொழிகளையும் பெயன் நாட்டிலுள்ள பாக் மொழியையும் ஒத்திருக்கிறது. இம்மொழிகள் திராவிட மொழியோடு நெருங்கிய சம்பந்தம் உடையன. சுமேரியர் கோபுரத்தோடு கூடிய கோயிலைக் கட்டினர். நிப்பூர் என்னும் இடத்தில் தமது தெய்வமாகிய எல் - லில் என்னும் ஞாயிறு தேவனுக்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தனர். ஊர், போசிப்பா பாபிலோன் கலா, துர்சர்க்கினா முதலிய இடங்களிலெல்லாம் பெரிய கோயில்கள் எழுப்பப்பெற்றிருந்தன. பாபிலோன், எகிப்து ஆகிய நாடுகளில் சுடுமண் செங்கற் களால் எழுப்பப்பட்ட வீடுகளும், அரண்மனைகளும் மண்டபங் களும் கல்லரைகளும் இப்பொழுது அகழ்ந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பல அணிகலன்களும், மட்பாண்டங்களும், இசைக்கருவிகளும், ஆயுதங்களும் தட்டுமுட்டுச் சாமான்களும் கிடைத்துள்ளன. கட்டிடங்கள் சிந்து வெளியில் முந்தி எழுந்த கட்டிடங்களோடு நெருங்கிய ஒருமைப்பாடுடையவையாயுள்ளன. பிறபொருள்களும் சிந்துவெளிப்பொருள்களைப் போன்றவை களாக காணப்படுகின்றன. வெள்ளைக் கோயிலும் அதன் சிறிய 223 X 17.5 மீட்டர் அளவுள்ள அகநாழிகையும் (Sanctuary) அதன் முன்னுள்ள பெரிய மண்டபங்களும் பாறைகளின் மீது எழுப்பப் பெற்ற சிகாரத் என்னும் கோயிலும் அனுய சிகாரத் (Anu ziggurat) ஈ என்னாவின் (Eanna-É‹) பெரிய கருவறைகளும் திராவிடக் கோயில்களின் அமைப்புடையவைகளே என்று பேராசிரியர் திரு. வி. கோர்டன் சைல்ட்டு தம் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.1 பாலதீனம் பாலதீனம் மைய நிலக் கடற்கரையிலுள்ள பழம்பெரும் நாடுகளில் ஒன்றாகும். பாலதீன நாடு அதன் பெயரை கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் தெற்குக் கடற்கரைப் பகுதியில் குடியேறி நிலையான வாழ்க்கையைப் பெற்ற பிலிதீனிய - ( philistines or pelesta) மக்களிடம் இருந்து பெற்ற பெயராகும். பிலிதிய மக்கள் குடியேறிய பகுதி பிலிதிய (Joel 3:4 etc) என்று வழங்கப்பட்டு அப்பால் கிரேக்கர்களால் பாலதீனம் என்ற பெயரைப் பெற்றது. முதலாவது வரலாற்று நூலை வரைந்த ஹெரட்டோட்ட பொனிசியா என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் பொனிசியர் வாழ்ந்து வந்தமையால் அவர் பொனிசியா என்று கூறியுள்ளார். எகிப்தினின்று, சிரியா சில பாகங்களும் பாலதீனம் ஆய்விட்டது. பாலதீனம் சிரியாவின் ஒரு பகுதியே யாகும். இன்று பாலதீனம் அனைவரும் அறிந்த பெயராக இருக் கிறது. அதன் பழைய மக்கள் கண்ட பெயர் கானான் என்பதாகும். பைபிளில் (ஆதி. 11:31) கானான் நாடு என்றே கூறப்பட்டுள்ளது. எகிப்திய நூற்களிலும் இது கானான் நாடு என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. இதைச் சிலர் சானான் நாடு என்றும் கூறுவர். இங்கு குடியேறிய திராவிட மக்கள் (பீனிசியர்) ஆவார். இங்கு ஈந்து என்னும் பனைகள் அதிகம். எனவே பனை பீனீசியநாடு என்று திரிபுற்றது. பீனிசியர் பரதர் எனப்பட்டனர். இவர்கள் அக்காலத்தில் சிறந்த கடலோடிகள் ஆவர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் இங்கு குடியேறிய மக்கள் ஆவர். இவர்கள் பயன் படுத்திய எழுத்துக்கள் பிராமி எழுத்தோடு நெருங்கிய தொடர் புடையது. இதன் ஒற்றுமையைக் கொண்டு சில அறிஞர்கள் பீனிசிய எழுத்தினின்று பிராமி எழுத்துத் தோன்றியது என்று கூறுகின்றனர். மேற்கு ஆசியாவில் குடியேறிய பீனிசியர் பிராமி எழுத்தைப் பயன்படுத்தினர். பீனிசியரிடமிருந்து கிரேக்கரும், கிரேக்கர்களிடமிருந்து உரோமரும் உரோமரிடமிருந்து ஏனைய ஐரோப்பியர்களும் எண்ணையும் எழுத்தையும் அறிந்தனர் - பாலதீனம் யோர்தான் ஆற்றிற்கும் மேற்குப் பகுதியில் உள்ள நாட்டைக் குறிக்கும். இது 150-கல் நீளமும் 40-கல் அகலமும் உள்ளது. இந்நாடு, 4000- சதுரக் கல்கள் (Miles) கொண்ட பாலைவனத்தை உள்ளடக்கி 6000-சதுரக் கல்கள் பரப்பளவுள்ள நாடாகும். எகிப்தையும், மெசபொத்தாமியாவையும் இணைக்கும் பாலமாகப் பாலதீனம் அமைந்துள்ளது. பாலதீனம் அன்னிய நாட்டாரின் படை எடுப்பிற்கு அடிக்கடி ஆளாகியது. எனவே அதன் வரலாற்றுப் பாங்கான வளர்ச்சியை நன்கு அறிய முடியவில்லை. இங்கு எகிப்தைப் போன்று வரிசையாகத் தொடர்ந்து ஆட்சிபுரிந்த அரசர்களின் மாட்சியை நாம் அறியமுடியவில்லை. மெசபொத்தாமியா போன்று வலிமை வாய்ந்த அரசர்கள் ஆட்சி நடத்தி சிறந்து விளங்கினர் என்று சொல்வதற்கில்லை. பைபிள் சில தகவல்களைத் தருகின்றது. இப்பொழுது நடைபெற்ற அகழ் ஆய்வும் பல தகவல்களைத் தந்துள்ளன. பீனிசியர் கடல் வணிகம் செய்வதில் திறமை வாய்ந்தவர்கள். கி.மு. 13-ஆம் நூற்றாண்டளவில் இவர்கள் பல்வேறு நாடுகளிலும் காணப்பட்டனர். இவர்களின் பழம்பெரும்பட்டினங்களாக தயர், சிடோன் என்பன தலைதூக்கி அழியாப் புகழைப் பெற்றன. காதேஜ் ஆப்பிரிக்காவில் இருந்த பீனிசியக் குடியேற்ற நாடு. இங்கு அன்னிபால் (Hannibal) என்னும் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். அவன் உலகை ஆள எண்ணினான் உரோமர்கள் போரில் அவனைத் தோல்வியுறச் செய்தனர். பாபிலோனியர் கடவுள் டார் (Ishtar) என்னும் பெண் தெய்வம் பின்னால் ஆத்தாள் (Athtar) ஆகத் தோன்றினாள். இக்கடவுள் பாலதீனத்தில் வழிபடப்பட்டு வந்தது. இந்த ஆத்தாள் என்னும் தேவி பாலதீனத்தில் அடார்ட்ட (Astarte) என்ற பெயருடன் பொனிசியர்களால் வழிபடப்பட்டு வந்தது. பைபிளில் இப்பெயர் எதர் என்று கூறப்படுகிறது. பீனிசியர்கள் பெரிய கோயில்கள் அமைத்து அவைகளில் சிவலிங்கங்கள் வைத்து வழிபட்டனர். கோயில்களில் எருது உருவம் இடம் பெற்றிருந்தது. இவர்களின் தலைநகராகிய தையர்பட்டினத்தில் அமைக்கப்பட்ட பகலவன் கோயிலில் மரகதத்தினாலும், பொன்னாலும் செய்யப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இருந்தன என்று வரலாற்று ஆசிரியர் ஹெரட்டோட்ட கூறியுள்ளார். இவர்கள் உழவுத் தொழிலில் அக்கறை காட்டவில்லை. இவர்கள் கடல் கடந்து சென்று வணிகம் புரிந்து பொருள் தேடி வந்தனர். பீனிசீயாவிற்கு வடக்கே சீரியர் வாழ்ந்து வந்தனர். சூரியா என்றபதம் சீரியர் என்று திரிபுற்றுள்ளது என்று வடல் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். சீரியாவில் பால்பெக் என்னும் இடத்தில் 60, 70 அடி உயரமுள்ள, தனிக் கல்தூண்களை நிறுத்திக் கட்டப்பட்ட பெரிய பகலவன் கோயில் அழிபாட்டை இன்றைய அகழ் ஆய்வுத்துறை அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்திய சமாதிகளைப் போல் இக்கோயிலும் வியப்பை அளித்துள்ளது. இந்த மக்கள் ஒரு கையில் சூலமும் மற்றொரு கையில் மழுவும் தாங்கி எருதின் மீது நிற்கும் தந்தைக் கடவுளையும் ஒரு கையில் கேடகத்தையும் பிறிதோர் கையில் தண்டையும் தாங்கி நிற்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட்டு வந்தனர். ஆதியில் சதுரம் அல்லது வட்டமான கல்வேலிகளின் நடுவே இலிங்கமும் அதன் முன்னால் பல பீடமும் வைத்து வழிபடப்பட்டது. இவ்வகைக் கல்வேலியின் ஒரு புறத்தே மூன்று கல்லினால் எடுக்கப்பட்ட கட்டிடங்கள் - அதாவது போன்றகட்டிடங்கள் பொனிசியர்களின் கட்டிடக் கலையில் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் பாபெல் (Babel) பால்பெக் கோயில்கள் எழுந்தது. மெக்காவில் எடுப்பிக்கப்பட்ட கஃபா கோயிலும் முற்கூறியவகைக் கோயிலுக்கு எடுத்துக் காட்டாகும்.1 அறிஞர் தர்டன் இந்தியாவின் பழைய கட்டிடங்களில் எகிப்திய கல்தேய, பொனிசீய அமைப்பு முறைகள் காணப்படு கின்றன என்று எடுத்துக்காட்டியுள்ளார். மேற்குப் பாலதீனம் பாலதீன நாட்டில் மேற்குக் கரையோரங்களில் யூதர்கள் குடியேறி அங்கு தங்கள் அரசை நிறுவி ஒரு நாகரிகத்தை வளர்த்தனர். எபிரேய நாகரிகம் கி.மு. 1500- முதல் தொடங்குகிறது. இது இசுரவேலர் எகிப்திலிருந்து பயணப்பட்டதற்கு சிறிது பிற்பட்ட காலம். யூதர்கள் நாடு நகரம் தோற்றுவித்து இல்லங்களும் மண்டபங் களும், மாளிகைகளும் கோயில்களும் அமைத்துள்ளனர். பாலதீனிய மக்களும் ஆதியில் விண்மீன்களை வழிபடு பவர்களாகவே இருந்தனர். அப்பால் ஞாயிறு திங்கள் வழிபாடு நிலைத்தபின் சிவ வழிபாடும் காளை வழிபாடும் தோன்றியது. இன்றைய அகழ் ஆய்வின் மூலம் மேற்குப் பாலதீன மக்களும் தேவன், தேவி, பாலகன் என்னும் தெய்வ வழிபாட்டுக்காரர்களாய் இருந்தது நன்கு தெரிகிறது. நாளடைவில் இவர்கள் ஆண் பெண் தெய்வ உருவ வழிபாட்டை அகற்றியதோடு காளை வழிபாட்டையும் அகற்றி அப்பால் நீண்டகாலம் பெட்டி வழிபாட்டுக் காரர்களாய் கடவுள் பெட்டியின் மீது வீற்றிருக்கும் கெருபீன், சேறாபின் என்னும் தெய்வத் தூதர்கள் நடுவில் காட்சி அளிப்பதாய் நம்பி, தெய்வ உருவத்தின் முன் ரொட்டியையும் அப்பத்தையும் வைத்து ஆடிப் பாடி வழிபட்டதும் உண்டு. தமிழர்களைப் போல் தங்கள் தெய்வம் சீனாமலை மீதும், ஒலிவ் மலை மீதும் சீயோன் மலை மீதும் இருப்பதாகக் கூறி தீர்க்கத்தரிசிகள் என்போர் ஒளி வடிவான இறைவனைக் கண்டு பேசி வந்ததாகக் கூறிய கதைகளும் உண்டு. இவர்கள் தமிழர்களைப் போல் ஆங்காங்கு திருக்கோயில் எழுப்பினர் என்பது மறுக்க முடியாத உண்மையேயாயினும் இவர்கள் எழுப்பிய மொத்தக் கோயில்கள் தமிழர்கள் எழுப்பிய கோயில்களில் 1000-க்கு ஒன்று வீதம் கூட இருந்தது என்று சான்று காட்ட முடியாது. ஞாயிறு வழிபாடு தமிழர்கள் கண்ட அம்மை அப்பர் வழிபாடு மேற்கு நாடுகள் அனைத்திலும் ஞாயிறு திங்கள் (சூரியன் சந்திரன்) வழிபாடாக எழுந்துள்ளது. இவ்வுலகில் இருள் அகற்றி ஒளி அளிக்கும் ஞாயிறு முழுமுதற் கடவுள் என்று மக்கள் உணரத் தலைப்பட்டனர். அவர்கள் செவ்வண்ணன், தீவண்ணன், பவள மேனியன், சோதியானவன் அல்லது சிவந்த ஒளியுடையவன் என்னும் பொருளில் ஞாயிற்றுக்குச் சிவன் என்னும் பெயர் அளித்து வழிபடுவாராயினர். சிவன் என்னும் தெய்வப் பெயர் அல் இல், எல், பெல் அல்லா, எலோ, எலோகிம், பகல், (Bael) பால் (Ba - al B’al) என்ற பெயர்களால் புகழ்ந்து ஓதி வழிபடப்பட்டது. உலக மக்கள் கடவுளை அஞ்ஞான இருளை அகற்றி ஞான ஒளியை அளிப்பவன் என்னும் பொருள் தரும் முறையில் முழு முதல் கடவுளை வழிபட்டனர். தமிழர்கள் மகேந்திர மலையில் சிவ உருவை ஏற்றி வழிபட்டனர். அப்பால் திராவிடர்கள் இமயமலை மீது சிவனை ஏற்றிப் போற்றிவந்தனர். எபிரேயர்களும், பாபிலோனியர்களும், சால்டியர்களும், அசீரியர்களும் அக்கேடியர்களும், சீரியர்களும், பொனிசியர்களும் ஞாயிற்றுக் கடவுளை மலை முகட்டில் வைத்து வழிபட்டனர். எபிரேயர்கள் சீனா மலையில் எல் என்னும் ஒளிக் கடவுளைக் கண்டு வழிபட்டனர். தமிழர்களைப் போல் உலகில் பெரும்பாலான மக்கள் தெய்வங்களை மலை முகட்டில் வைத்து வழிபட்டனர். தெய்வத் திருமகனாகிய ஏசு கிறிது ................. மலையில் உண்ணா நோன்பு இருந்து இறைவனை வழிபட்டார். இறுதித் தீர்க்கத் தரிசியாக ஏற்றமுடன் போற்றப்படும் முகம்மத் நபி அவர்கள் ஹிராமலையின் பொதும்பிலிருந்து வழிபட்டு ஜிப்ரயல் என்னும் தேவ தூதன் மூலம் தெய்வ வெளிப்பாட்டைப் பெற்றார். திருமறையின் முதல் வசனத்தைப் பெற்று உலகிற்கு உணர்த்தினார். மலைகள் இல்லாத நாடுகளில் கடவுள் செய்குன்றின் மீது கட்டப் பெற்ற கோயில்களில் வழிபடப்பட்டு வந்தது. இவ்வகைச் செய்குன்றுகளின் மீதுள்ள பழங்காலப் புனிதக் கோயில்களில் ஒன்று பெபலின் கோபுரம் இந்த வகையான செய்குன்றின் மீது எடுப்பிக்கப்பட்ட திருக்கோயில்கள் மேற்கு ஆசியா ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளன. உலக வியக்கும் எகிப்திய கூர்நுனிக் கோபுரங்கள் வகையினவேயாகும். ஞாயிறு நடு உச்சிக்கு வரும் நாளில் அது எழும் திசையைப் பார்க்கும் படி கட்டப் பெற்றுள்ளன.1 இன்றையத் தென் இந்தியக் கோயில்களும், கிறித்தவர்களின் சர்ச்சும் (கோயில்களும்) கிழக்கு நோக்கி கட்டப்படுவது சிறப்பானது என்று எண்ணப்படுகிறது. பெதூ அல்லது பேபெலின் கோபுரம் பண்டையப் பாபிலோன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சால்டியாவில் (கல்தேயாவில்) உள்ள பகல் கடவுளின் (Bel) கடவுளின் புனிதக் கோயிலாகும். பகல் என்பது (Ba-el, Ba-al or Pal) பிற்காலத்தில் பலூ என்று கூறப்பெற்றுள்ளது. மெசபொத்தாமியாவின் தாழ்ந்த பகுதியில் இன்றையப் பக்தாத்திலிருந்து தெற்கே 50-கல் தொலைவில் புகழ் பெற்ற பாப் - பிலு (Babilu) நகர் இருந்தது. இதன் பொருள், தெய்வ வாயில் (Gate of God) என்பதாகும். எபிரேய மொழியில் இப்பெயர் பாபெல் எனப் பெற்றது. கிரேக்க, லத்தீன் மொழியில் பாபிலோன் என்று கூறப்படும். பாபிலோன் என்னும் பதத்தின் அடிப்படையில் பேபிலின் எழுந்தது. ஊர் நகரில் வாழ்ந்த மூன்றாவது அரச பரம்பரை பேரும் பெருமையும் பெற்றெழுந்தது. முதலாவது அரசர் ஊர் நம்மு, அக்கத்திய சுகமேரிய அரசர் என்ற புதிய பெயரைத் தாங்கி அரச கட்டிலில் அமர்ந்தான். அவன் ஆற்றிய அரிய திருப்பணிகளில் உயரியது ஒப்பற்றது ஊர் நகரில் எடுப்பித்த சிக்குராத் எனும் கோயிலாகும். இந்த சிக்குராத் ஹமுராய் காலத்தில் பாபிலோனில் எட்ட மென்னாங்கி (Etemenanki) மண்ணையும் விண்ணையுமுடைய வீட்டின் மேடை என்ற சிறப்புப் பெயரை (The House of the nerrace Platform of Heaven and earth) த் தாங்கி நின்றது. பாபெல் கோபுரம் எபிரேயர் பாரம்பரியத்துவக் கலைத் திறனுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மிளிர்ந்தது. இந்த சிக்குராத் இன்றும் பழம் பெரும் பாபிலோனியர் கட்டிடக் கலையின் தன்மையை நமக்கு நன்கு உணர்த்துகிறது. 1918-ல் டாக்டர். எய்ச். ஆர். ஹால் அவர்கள் இதனை அகழ்ந்து ஒரு பகுதியைத் தோண்டி உலகிற்கு இதன் பெருமையை உணர்த்தினார். 1922-1923-ஆம் ஆண்டுகளில் சி.ஐ உல்லி என்னும் பேரறிஞரால் இப்பகுதி முழுவதும் அகழ்ந்து ஆராயப்பெற்று இதன் சிறப்பு உலகிற்கு உணர்த்தப் பெற்றுள்ளது. இந்த பேபெலி கோபுரம் கி.மு. 2070-க்கும் 1960 -க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்தது. பேபெல் கோபுரம் செங்கல்லால் கட்டப்பட்டது. 200-அடி நீளமும் 150 அடி அகலமும் 70-அடி உயரமும் உள்ளது. இது நன்னர் என்ற திங்கள் கடவுளின் திருக்கோயில் என்று அதன் மிக உயர்ந்த மேலே உள்ள தளத்தின் மூலம் அறியக் கிடக்கின்றது. கோயிலின் முதல் பட்டத்தில் (Panel) நிங்கள் என்ற திங்கள் தேவி முன்னரும் வலது புறம் நன்னர் தேவன் முன்னரும் ஊர் நம்மு அரசன் நின்று அவர்களுக்கு ஒரு இல்லம் அமைக்கும் ஆணையைப் பெறுகிறான். அடுத்தபடத்தில் அரசன் ஆயுதங்களைத் தாங்கி நிற்கின்றான் மூன்றாவது படத்தில் ஏணியைத் தாங்கி கோபுரத்தின் நுனிப் பகுதியைக் கண்டி முடிப்பது போல் சித்தரிக்கப் பெற்றுள்ளது. பெலு, வெய்யிலில் காய்ந்த களிமண் கற்களாலும் சுடுமண் செங்கற்களாலும் கட்டப் பெற்றது. இதன் படிக்கட்டுகள் அடியில் அகன்றும் மேலே செல்லச் செல்ல ஒடுங்கியும் இருக்கின்றன. இதன் ஒவ்வொரு படியும் உயரமாக உள்ளது. இதன் உச்சியிலிருந்த மேடை ஆதிகால அருக்னுக்கு (சூரியனுக்கு) உரியது. டிராபோ என்னும் ஆசிரியர் இதனை பெலூ சமாதி என்று குறிப்பிட்டார். இதன் உச்சிக்கு ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. உயரே ஏறிச் செல்பவர்கள் இடை இடையே தங்கிச் செல்வதற்கு ஏற்ற இடங்கள் இருந்தன. இங்கும் ஏறிச் செல்லும் படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விண்மீனுக்கு (கிரகத்திற்கு) உடையது. அடியில் அமைந்துள்ளபடி சனி எனும் கோளுக்கு உடையது. இது கருப்பு வண்ணம் வாய்ந்த திண்ணம் ஆர்ந்த படிக்கல்லாகும். இரண்டாவது படி வியாழனுக்குடையது இது தோடம்ப வண்ணம் பூசப் பட்டிருந்தது. மூன்றாவது படி செவ்வாய்க்குடையது. இது சிவப்பு வண்ணம் தீட்டப் பட்டிருந்தது. நான்காவது படி வெள்ளிக் குடையது; இதன் வண்ணம் மஞ்சள். ஐந்தாவது புதனுக்குடையது; இதன் நிறம் நீலம். ஆறாவது திங்களுக்கும் (சந்திரனுக்கும்) ஏழாவது ஞாயிற்றுக்கும் உடையது. டையோ டோர (Diodorus) என்பார் இதன் உச்சியில் உள்ள மேடையில் பெல்டி, ரீயா பெல் என்னும் தெய்வங்கள் உறையும் திருக்கோயில்கள் இருந்தன என்று கூறியுள்ளார். பகல் கடவுளுக்கு முன்னால் இரண்டு பொன் அரச கட்டில்கள் (சிங்காசனங்கள்) இருந்தன. பெல்டி வெள்ளியால் செய்யப்பட்ட பெரிய பாம்புகள். இவை முப்பது டேலண்டு (talent)1 நிறையுள்ள வெள்ளியால் செய்யப்பட்டுள்ளன. இம்மூன்று உருவங்களின் முன் 40 X 15 அடி பொன் மேசையும், மேசையின் மீது 3 நீர் அருந்தும் கிண்ணங்களும் இருந்தன. ஒரு ஆண்டில் 1000-டாலண்ட் நிறையுள்ள சாம்பிராணி இங்கு எரிக்கப்பட்டது என வரலாற்றாசிரியர் ஹெரட்டோட்ட கூறியுள்ளார். அவர் காலத்தில் இதன் அடியில் பொன்னாற் செய்யப் பெற்ற பகல் உருவமும், அதன் முன் ஒரு பொன் மேசையும் இருந்தன. உச்சியில் உள்ள மேடையில் ஒரு மேசையும் கவினுறும் கட்டிலும் இருந்தன. மக்களை பெறாத பெண்கள் பிள்ளை வரம் வேண்டி இங்கு சென்றனர்.2 மினோவர் கட்டிடக் கலை கிரீட், மத்திய தரைக்கடலில் கிரேக்க நாட்டிற்குத் தெற்கே யுள்ள ஒருதீவு. ஆனால் கிரீட் மக்களுக்கும் கிரேக்க மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. கிரீட் மக்கள் மினோவர் என்று அழைக்கப்படுவர். இவர்கள் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள மீனவர்கள் என்ற நெய்தல் நிலமக்களின் குருதித் தொடர்புடைய மக்கள் என்று எண்ணப்படுகிறது. கிரீட் தீவு சுமார் 155 கல் நீளமும், 6.35 கல் அகலமும் உள்ள சிறு தீவு. இதன் மக்கள் தொகை 163,459 (1951). இது மலைப் பாங்கானது. இங்குள்ள ஐடா மலை 8195-அடி உயரம் உள்ளது இங்கு சில சமவெளிகள் உண்டு. குறுகிய பல நீரோடைகளும் உள்ளன. சில பீட பூமிகள் மேய்ச்சல் தரையாகப் பயன்படுகின்றன. இங்கு நல்ல தட்ப வெப்ப நிலை உண்டு. கிரீட் தீவின் தலை நகரம் கனியா (Canea) பிற முக்கிய நகரம் காண்டியா, ரேதிம்னான் எனப்படும். வரலாறு கிரீட் தீவு ஈஜிய நாகரிகத்தின் பிறப்பிடமாகும். இங்கு கி.மு.2500 - ஆம் ஆண்டளவில் மிக உயர்ந்த மீனோவன் நாகரிகம் நிலவி இருந்தது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட நகரங்கள் நல்ல அமைப்புடையதாய் நனி சிறந்த நாகரிகம் பெற்று விளங்கின. இங்கு நாச (Gnossus) என்ற நகரில் மினோ என்ற அரசர் அரச பீடத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தி வந்தார். இவர் கிரீட் தீவின் கடல் ஆதிக்கத்திற்கு கால் கோலிய காவலர் என்று கூறப்படுகிறது. நாகரிகம் கிரீட் தீவில் உள்ள மன்னன் மாளிகையில் கலைச் சிறப்பு மிக்க உலோக வேலைப்பாடுகள் செய்யப் பொருள்கள் மிகுதியாக இருந்தன. அரசர் மினோன் (மைசீனக்) கல்லறையில் பொன், வெள்ளி, வெண்கலமாகிய உலோகப் பொருள்களில் செய்யப் பெற்ற அணிகளும் பாத்திரங்களும், கலைப் பொருள்களும் அகழ் ஆய்வில் கிடைத்துள்ளன. பண்டையக் கிரீட் மக்கள், சிந்து வெளி மக்களைப் போல், எகிப்து, சுமேரிய நாட்டு மக்களைப் போல் நல்ல நகரங்களை நன்கமைத்து மாட மாளிகை கூட கோபுரங்களை நிறுவி நல்ல செல்வச் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். கிரீட் தீவில் உள்ள மினோவன் அரண்மனை இலங்கைத் தீவில் உள்ள இராவணன் அரண்மனையைப் போல் எழில் பெற்றிருந்தது என்று கூறப்படு கிறது. இங்குள்ள கட்டிடங்கள் அகன்ற சுவர்களையுடையன. கழிநீர் வடிகால், சாக்கடை முதலியவை நல்ல சுகாதார முறையில் அமைக்கப்பட்டிருந்தன. சுவர்களை அழகிய சுவர் ஓவியங்கள் அணி செய்துள்ளன. அவைகளில் எருதுகளும், எருதுச் சண்டை களும் சித்தரிக்கப் பெற்றிருந்தன. அங்கு அகழ்ந்து கண்ட கல் மண் பாண்டங்களும் அணிகலன்களும், கருவிகளும் ஒப்பற்றவை; எழில் மிக்கவை; உயரிய வேலைப்பாடுகள் நிறைந்தவை. இங்கு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் சாசனங்கள் பல கிடைத்துள்ளன. இங்கு வாழ்ந்த மக்கள் தாய்த் தெய்வ வழிபாடு செய்து வந்தனர். இத் தெய்வம் இரு முனைக் கோடரி, இரு தலைப் பாம்பு, தூண் மீது அமர்ந்திருக்கும் புறா போன்ற சிலைகளை எழுப்பி கோயில்கள் அமைத்து வழிபட்டு வந்தனர். கிரீட் மக்கள் நல்ல நகரங்களை அமைப்பதிலும் உறுதியான வீடுகளையும் அழகிய அரண்மனைகளைக் கட்டுவதிலும் ஓவியம், சிற்பம், முதலிய கலைகளை வளர்ப்பதிலும் வல்லவர்கள். எழுதும் முறைகளை நன்கு உணர்ந்திருந்தனர். நீரைக் கடக்கவும் கப்பல் களையும், நிலத்தைக் கடக்க வண்டிகளையும், உருவாக்கியுள்ளனர். இவர்களில் ஏராளமான கடலோடிகள் இருந்தனர். அண்டைத் தீவுகளுடனும், எகிப்து. பாபிலோன் இந்தியா போன்ற நாடு களுடனும் வணிகம் வளர்த்து பெரும் பொருள் ஈட்டி நலமுற வாழ்ந்தனர். அயல் நாடுகளைப் பிடித்து அடிமைப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். உலகிலே ஒப்பற்ற நாகரிகங்களாகிய சிந்து வெளி நாகரிகத்தையும், எகிப்திய, சுமேரிய நாகரிகங்களையும் அழித்த கொள்ளைக்கார கொடிய மறவர் இனம் அலை அலையாய் கிரீட் தீவின் மீது படையெடுத்துச் சென்று அது என்றும் தலை தூக்கா வண்ணம் அடித்து நொறுக்கி வீழ்த்தினர். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் பயிரிடுவோர்களாய் இருந்தனர். அவர்களின் வாழ்க்கை ஒழுங்கு ஆகிய நாகரிகப் பாங்கு அவர்கள் திறமுடன் அமைத்த நகரங்களையும், கவினுறக் கட்டிய கட்டிடங்களையும் கொண்டு அறியக் கிடக்கின்றது. கட்டிடங்கள் சூளையில் வெந்த களிமண் கற்களால் (செங்கற்களால்) கட்டப் பட்டுள்ளன. மெசபொத்தாமியாவிலும் (பாபிலோனிலும்) கிரீட் தீவிலும் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு சாளரங்களும், நிலைகளும் இருந்தன. தரைக்குச் சாந்து பூசப் பெற்றிருந்தது. கழிநீர் செல்லச் சாக்கடைகள் இருந்தன. வீடுகளுடன் குளிக்கும் அறைகள் இருந்தன. பலவகையான ஏனங்கள் செய்யப்பட்டன. செம்பு, தகரம், ஈயம் முதலிய தாதுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. பொன் வெள்ளி தந்தம் என்பு, பன்னிறக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.1 கிரேட்டா (Crete) மக்கள், தமிழ் நாட்டினின்று கடல் கடந்து சென்று கிரீக் நாட்டின் அருகேயுள்ள சின்னஞ்சிறு தீவில் குடியேறி பென்னம் பெரிய நாகரிகத்தை உருவாக்கியுள்ள மக்களாக எண்ணப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக எண்ணப்பட்டனர் என்று ஹெரடோட்ட என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் பழக்க வழக்கங்கள் சேர நாட்டில் வாழ்ந்த தமிழர் களைப் போன்றதாய் இருந்தன. கிரேட்டா தீவில் ஆண்களினும் பெண்களுக்கு அதிக அதிகாரம் இருந்தது. பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டனர் இவர்களின் கடவுள் சிய - சிய சிவன் என்பதின் திரிபு. கிரேட்டாவில் சிவன் என்ற பழைய இடம் ஒன்று உண்டு. இவர்கள் மரங்களின் அடியில் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டு வந்தனர். சங்கு கொம்பு வாத்தியங்களைப் பயன்படுத்தி வந்தனர். இங்கு பண்டையத் தமிழர்களிடம் நிலவிய ஏறு தழுவுதல் என்னும் வழக்கம் உண்டு. கிரேத்தாவில் இருந்த மீனோன் என்ற அரசன் அரண்மனை அழகியது. உயர்ந்த உப்பரிக்கைகளை யுடையது. பல அரிய ஓவியங்களையுடையது. சிந்து வெளி திராவிட நாகரிகத்தை அழித்தவர்கள் ஆரியர்கள். எகிப்திய திராவிட நாகரிகமும், கிரேட்டா திராவிட நாகரிகமும் கிரேக்க ஆரியர்களால் அழிக்கப்பட்டன. உலகில் எங்கும் கோயில்கள் இருக்கலாம்; தெய்வ உருவங் களும் இருக்கலாம். ஆனால் அவைகளை உன்னிப்பாய் உற்று நோக்கினால் கோயிலாயினும் சரி, திரு உருவங்களிலாயினும் சரி உறுதியாக தமிழர் கலைப்பாணி நன்கு ஒளிர்வதைக் காணலாம். காரணம், தமிழ் இனம் மிகத் தொன்மையான இனம். 10-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதற் சங்கமும், சங்கப் புலவர்களையும் சங்க மருவிய ஏடுகளையும் கண்ட இனம். இவர்கள் கட்டிடக் கலையில், சிற்ப நுணுக்கத்தில் பண்பாட்டில், ஓவியத் திறனில் பட்டறிவில் வேறு எந்த நாட்டினரும் எந்த இனத்தவரும் பெற்றிருக்க முடியாது. உலகிலே இன்று காணப்படும் உயரிய நகர் அமைப்பில், நாடமைப்பில் வீடமைப்பில் கோட்டை கொத்தள அமைப்பில் சமய அமைப்பில், தெய்வத் திரு உருவ அமைப்பில் ஐயாயிரம் ஆண்டளவில் தமிழர்களைப் போல் சிறந்தவர்களாய் உயர்ந்தவர் களாய் யார் இருந்தனர்? ஐயாயிரம் ஆண்டு காலமாய் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் பெற்ற பட்டறிவின் பயனாய் நாம் எடுப்பித்து திருக்கோயிலின் சிறப்பை திருக்கோயிலின் மதிலினின்று அதன் உயர்ந்த விமானத்தின் கலயத்தின் நுனிவரை அக்கு வேறாக அலகு வேறாக அலசி அலசி எடுத்துக் காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடே இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. இந்நூல், தமிழர்களுக்கு உலக மக்கள் அனைவரும் உறவினர் யாதும் ஊரே, யாவரும் கேளீர் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கூறும் தமிழன் கண்ட அறவழி நிலைக்குமாறு செய்வதே இந்நூலின் முழு நோக்கமாகும். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமந்திரத்தைப் பறை சாற்றுவோமாக. இந்தியக் கட்டிடக் கலை இந்தியக் கட்டிடக் கலை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. அது தனக்கே உரித்தான தனித் தன்மையும், தனி மரபும், தனிப் பண்பும் வாய்ந்தது. அது பிற நாட்டுக் கலைத் தொடர்பால் உருப் பெற்று வளர்ந்ததல்ல. இந்திய கட்டிடக் கலை, கலப்புக் கலை அல்ல. புனிதமான புகழ் பெற்ற உயர் தனிக்கலை. திராவிட இந்தியா மிகத் தொன்மையான காலத்திலிருந்தே கட்டிடக் கலையத் தோற்றுவித்து அதை நன்கு பேணி வளர்த்து வளமுறச் செய்து வந்துள்ளது. இந்தியாவில் ஆதித்த நல்லூரினின்று அரப்பா வரை காணப்படும் அழிபாடுகள் அனைத்தும் பண்டையத் திராவிட இந்தியாவின் பண்பிற்கும் நாகரிகத்திற்கும் உயர்விற்கும் எடுத்துக் காட்டாகக் காணப்படுகின்றன. பழந்திராவிடர் காலம் சிந்து வெளியில் கி.மு. 3000 -ம் ஆண்டுகளுக்கு முன் தலை தூக்கி நின்ற மகத்தான கட்டிடக் கலை உலகம் இதுவரை உலகில் உள்ள ஒப்பற்றக் கட்டிடக் கலையாக எண்ணப்படுகிறது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து வெளியில் அகழ்ந்து கண்ட அரப்பா மொகஞ்சாதாரோ, ரூபார் நகரங்களைப் போன்ற மகோன்னதமான நகரங்கள் எவரும் எங்கும் கண்டதில்லை. அரப்பா மொகஞ்சாதாரோ, ரூபார் நகரங்களைப் போன்ற நனி சிறந்த நகர் அமைப்பை உலகில் எந்த வரலாற்றிலும் இதுவரை எவரும் கண்டதில்லை. சிந்து வெளி திராவிடப் பெருங்குடிமக்கள் ஞாலம் போற்றும் நகர் அமைப்பு முறையை நன்கறிந்து சுடப்படாத பச்சைமண் செங்கல்லையும், சுடுமண் செங்கல்லையும் பயன்படுத்தி அணியணியாகப் பல வீடுகளையும், மாளிகைகளையும், அரண் களையும், நெற்களஞ்சியங்களையும் கட்டி இனிது வாழ்ந்து வந்தனர். அவர்கள் அமைத்திருந்த மாளிகைகள் பல நிலா முற்றங் களையுடையனவாய்த் திகழ்ந்தன. பல ஒன்று இரண்டு மாடி களையுடையதாகத் திகழ்ந்தன. அவர்கள் அமைத்த மாளிகைகள் சுகாதார வசதியுள்ளதாய் நாற்புறமும் நல்ல பல கணிகள் உள்ளதாய்த் திகழ்ந்தன. சிறிய அறைகளிலும் கூட காற்றும், வெய்யிலும் தாராள மாகப் புகுந்து வந்தன. மொகஞ்சதாரோவில் இரண்டிற்கு மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட செல்வர்களின் மாளிகைகள் பல காணப்படுகின்றன. இவை பெரிய கூடங்கள் அகன்று நீண்ட உயரிய தாழ்வாரங்கள் அகன்ற பெரிய முற்றங்கள் இடைகழிகள், சிறிய பெரிய வாயில்கள் எண்ணற்ற அறைகள் பலவும் உள்வாய்க் காணப்படுகின்றன. மேன் மாடங்களில் செங்கல் தளவரிசைகள் சீர் பெற அமைந்துள்ளன. சில மேன் மாடங்களில் படுக்கை அறைகள் பாங்குற அமைந்துள்ளன. சில மாடங்கள் உள்ள மாளிகைகளில் பள்ளி அறைகள் குளிக்கும் அறைகள், மலங் கழிக்கும் ஒதுக்கிடம் முதலியன நன்கு அமைந்துள்ளன. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் ஒழுங்குடன் காணப்படுகின்றன. சில மாளிகைகளுக்கு மரத்தினாலான ஏணிகள் வைத்து செல்லப்படும் மாடிகைகள் அமைக்கப் பெற்றுள்ளன. பல மாடிகளுக்குப் படிக்கட்டுகள் தெருப்புறமே வைத்துக் கட்டப் பட்டுள்ளன. சில வீடுகளில் படிக்கட்டுகள் உட்புறம் வைத்துக் கட்டப் பெற்றுள்ளன. ஒரு மாளிகையில் முன்புறம் 85 அடி நீளம் விட்டும் பின்புறம் 87-அடி நீளம் இடம் விட்டும் கட்டப்பட்டுள்ளது. முன்புறமும் பின்புறமும் இடம் விட்டு வீடு கட்டும் முறை பன்னெடும் காலமாக இந்தியாவில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு மாளிகை 242 - அடி நீளமும் 112 அடி அகலமும் உள்ளது. அதற்கு அண்மையில் 177 அடி நீளமும் 118 அடி அகலமும் உள்ள பெரிய மாளிகை ஒன்றும் உள்ளது. இக்கட்டிடத்துள் பல அறைகளும் கிணறுகளும் உள்ளன. இங்கு 42 சதுரம் அடி உள்ள தூண்கள் பல காணப்படுகின்றன. தூண்கள் கட்டிட வாயிலின் வளைவுகளைத் தாங்குபவைகளாகும். சிறிய இல்லங்கள் 30 அடி நீளமும் 27 அடி அகலமும் நான்கு ஐந்து அறைகளும் உள்ளதாய் அமைந்துள்ளன. இவை செங்கற் களால் செம்மையுறக் கட்டப்பட்டு, தரை சாணத்தால் மெழுகப் பட்டுள்ளது. சில வீடுகளுக்கு மேலே தளம் இடப் பெற்றுள்ளன. சுற்றிலும் கைபிடிச் சுவர்கள் உள்ளன. மேற்றளத்தில் பெய்யும் மழை நீர் உடனுக்குடன் கீழே வருவதற்கேற்ற குழாய்கள் உள்ளன. இக் குழாய்கள் மண்ணாலும் மரத்தாலும் ஆனவை. இங்கு சில அங்காடி களும் உள்ளன. சில திருக்கோயில்கள் போன்ற கட்டிடங்கள் உள்ளன. மொகஞ்சதாரோவில் வீடுகளின் பின்புறம் படுக்கை அறைகள், சமையல் அறைகள் மகளிர்கள் தங்குவதற்கு ஏற்ற தனியறைகளும் உள்ளன. ஒவ்வொரு இல்லத்திற்கும் வாயிற் படிகள் உண்டு. அவற்றை அடுத்து திறந்த சிற்றரை ஒன்று வாயிற் காவலனுக்காகக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நீராடும் அறை உள்ளது. சில மாளிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குளிப்பறைகளும் உள்ளன. இவை தெருப்பக்கம் அமைந்துள்ளன. இவற்றில் உள்ள கழிவு நீர் வெளியே செல்ல வடிகால்கள் நன்கு அமைக்கப் பெற்றுள்ளன. வடிகால்கள் தெருக்கால்வாயுடன் அமைக்கப் பெற்றுள்ளன. இத்தகைய நீராடும் அறை எஷ்னன் னாவில் இருந்த அக்கேடியர் அரண்மனையில் உள்ளது. அக்கேடியர் குளிப்பறை அமைக்கும் முறையை சிந்து வெளி மக்களிடமிருந்து கற்றிருக்க வேண்டும்.1 இங்கு பல அங்காடிகளும், பெரிய மண்டபங்களும் உள்ளன. 85 அடி சதுர அடிப்பரப்புள்ள ஒரு மண்டபமும் உள்ளது. இதன் மேற் கூரையை இருபது செங்கற் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவை நான்கு நான்காய் நிற்கும் சதுரத் தூண்களாகக் காணப்படு கின்றன. பொதுவாக எல்லாக் கட்டிடங்களும் பெரிய சுவர்களை யுடையனவாகவே காணப்படுகின்றன. சுவர்கள் 3 ½ அடி முதல் 6 ½ வரை அகன்ற சுவர்களாக உள்ளன. பெரிய கட்டிடங்களின் புறச் சுவர் 5 அடி 9- அங்குலம் கனம் உடையது. ஏனைய சுவர்கள் 3 அடி 6 அங்குலம் 4 அடி 10 அங்குலம் கனம் உடையதாய் உள்ளன. பெரிய கட்டிடச் சுவர் 18 அடி உயரம் உள்ளது. சில இடங்களில் 25 அடி உயரமும் உள்ளன. சுவர்கள் செங்கல் முறைப்படை குறுக்கும் நெடுக்குமாக வைத்து இடை இடையே மண் சாந்து வைத்துக் கட்டப்பட்டுள்ளன. மேலே மேற்பூச்சாக மண் சாந்தே பூசப் பெற்றுள்ளது அடிக்கடி பழுதுபார்க்கப் பெற்று வந்துள்ளது நன்கு தெரிகிறது. குளம் மொகஞ்சதாரோவில் அகழ்ந்து கண்ட கட்டிடங்களில் அரண்மனை என்று எண்ணத்தக்க கட்டிடம் ஒன்றும் அழகிய செய் குளமும் வியத்தகு பெற்றியை வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன. செய்குளம் மேலை நாட்டு பொறிவல்லாரும் கண்டு திகைக்குமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதில் நீர் நிற்கும் இடம் 40 அடி நீளமும் 23 அடி அகலமும் 8 அடி ஆழமும் உள்ளது. இக்குளத்திற்கு அடி வரை ஒழுங்கான படிக்கட்டுகள் உள்ளன. குளத்தைச் சுற்றி நான்புறமும் நடை வழி விட்டு 4 ½ அடி அகலமுள்ள சுவர் எழுப்பப் பெற்றுள்ளது. இச்சுவருக்கு அப்பால் குளத்திற்கு நாற்புறமும் 7அடி அகலமுள்ள பெருஞ்சுவர் உள்ளது. இதன் மீது நடை வழி அமைக்கப் பெற்றுள்ளது. அடிப்பகுதி நன்றாக இழைத்து வழவழப்பாக்கப்பட்ட செங்கற் பதித்து ஒரு வகைத்தார் பூசப் பெற்றுள்ளது. முதலில் சூளையிடப்பட்ட வழவழப்பான செங்கற் களை ஒருவகை வெள்ளைக் களிமண் கொண்டுவந்து ஒட்ட வைத்துள்ளனர். இவ்வாறு நாலு பக்கமும் நாலு அடிக் கனத்தில் சுவர் எழுப்பப் பெற்றுள்ளது. பின் அச்சுவர் மீது ஒரு அங்குலக் கனத்தில் நிலக் கீல் பூசப் பெற்றுள்ளது. இங்கு பயன்படுத்தப்பட்ட கீல் இந்தியாவில் இல்லை. சுமேரியாவில் இருந்து கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. குளத்திற்கு அண்மையில் எட்டு அறைகள், குளித்து விட்டு ஆடைகள் மாற்றிக் கொள்வதற்காக அமைக்கப் பெற்றுள்ளது. இச் செய் குளத்தில் அழுக்கு நீரை அடிக்கடி மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. இக்குளம் சிவ நெறியைச் சார்ந்த சான்றோர்கள், நாயன்மார்கள், சிவாச்சாரியர்கள் குளிப்பதற்கென்று கட்டப்பட்ட குளமாகக் கருதப்படுகிறது. குளத்திற்கு அருகில் கோயில் போன்ற இடமும் உள்ளது. அரண்கள் அரப்பா மொகஞ்சதாரோ, ரூபார் போன்ற இடங்களில் செய்த அகழ் ஆய்வில் அரண்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. திராவிடர்கள் தொன்று தொட்டு தங்கள் நகரத்தைச் சுற்றி அரண்கள் அமைக்கும் வழக்கத்திற்கு மாறாக சிந்து வெளியில் அரண் காணப்படாதது ஒரு குறையாக எண்ணப்பட்டது. இது திராவிடர்கள் எழுப்பிய நகரங்கள் என்பதில் ஒரு ஐயப்பாடும் எழுந்தது. அப்பால் டாக்டர் ஆர்.இ. எம். உயிலர் மேற்கொண்டு செய்த அகழ் ஆய்வில் 1944 -இல் அரப்பாவில் 30 -அடி அகலத்தில் கட்டப்பட்ட பேரரண் ஒன்று அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவை செங்கற்களைக் கொண்டு மண் சாந்தினால் கட்டப் பட்டுள்ளது. சிந்து வெளியில் மூன்று பெரிய கோட்டைகள் இருந்தன. ஒன்று செங்கல்லால் கட்டப்பட்டது. மற்றொன்று சுடப்படாத மண் செங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டது. மற்றொன்று அதிகச் சூட்டால் மண் வெந்து உருகிக் கருத்து இரும்பு போல் காணப்படும் உருக்கான் செங்கற்களால் கட்டப்பட்டது. இதனை ஆரியர்கள் செம்புக் கோட்டை வெள்ளிக் கோட்டை இரும்புக் கோட்டை என்றும் அதை தங்கள் தலைவனாகிய இந்திரன் அழித்தான் என்று அவர்கள் வேதமாகிய இருக்குவில் கூறப்பட்டிருப்பதையும் விளக்கி டாக்டர் உயிலர் உலகிற்கு உயர்த்தியுள்ளார் (பிற்காலத்தில் சிவபெருமான் அசுரர்களின் முப்புரம் எரித்த புராணக் கதையை இது என ஆரியர் இணைத் துள்ளனர்) 1 ஆரியரின் வேதகாலம் சிந்து வெளி நாகரிகத்தை அடுத்து வட இந்தியாவில் அரும்பியது ஆரியாவர்த்தம். இங்கு எழுந்தது வேத கால நாகரிகம். இது கி.மு.1500- முதல் கி.மு.500 - வரையுள்ள காலம். வேத காலத் தொடக்கத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட நகரங்கள் எதுவும் எங்கும் இல்லை. மட்சுவர்களும் ஓலைக் கூரைகளும் உள்ள எளிய குடிசைகளே இருந்தன. நாளடைவில் கட்டிடச் சிற்பக் கலை வளரத் தொடங்கியது. கி.மு. முதல் ஆயிரம் ஆண்டின் இடைப்பகுதியில் ஆரியரின் சமூக அமைப்பு விரிவடைந்ததையொட்டிச் சில இடங்களில் நகரங்கள் தோன்றின. மரங்களைப் பயன்படுத்தி வீடுகள் கட்டினர். கி.மு.5 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் நிறுவப் பெற்ற தலை நகரங்களில் அமைப்புத் திட்டத்தை வகுத்துத் தந்தவர் மகா கோவிந்தர் என்ற சிற்பி என்கின்றனர். எனினும் ஆரியர்கள் அழகுக் கலைகளில் தனிப்பட்ட கவனம் செலுத்தாத காரணத்தால் வேத காலத்தில் கட்டிடச் சிற்பக் கலை சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்ததைப் போல் உயர்ந்த நிலையில் இல்லை. 1 என்று திரு மொ.க. தேசாய் அவர்கள் உள்ளதை உள்ளவாறே எடுத்துக் காட்டியுள்ளார். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வரும் பொழுது ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளாய் வந்தனர். அவர்கள் அற வழியில், தற்பாதுகாப்பிற்காக சில சிறுபடைகளை வைத்திராத சிந்து வெளி சிவ நெறியாளர்களான சைவ அந்தணர்களை மற வழியில் வென்றனர். அவர்கள் நாடு நகரங்களை அழித்தனர். அதனால் அவர்கள் பெரிய கட்டிடங்கள், மாட மாளிகைகள் அரண்கள் முதலியவற்றை அமைத்து விட முடியும் என்று எண்ணுவது தவறு. ஆரியர்கள் சிந்து வெளி அழிவிற்குப் பின் நீண்ட காலம் சென்று கட்டிடக் கலை அறிவைப் பெற்றனர் என்று கூறுவது பொருந்தும். அது உண்மையுமாகும். ஆரியர்கள், இராமாயண காலத்தில் கூட கட்டிடக் கலை அறிவை அதிகம் பெற வில்லை. வான்மீகி கூறும் இராமனுடைய அரண்மனை அழகும் இராவணனுடைய அரண்மனைச் சிறப்பும் படிப்போர்க்கு நன்கு புலனாகும். ஆரியர்கள் கட்டிடங்களை அழிப்பதில் அகாயசுரர்கள்; கட்டிடங்களைக் கட்டுவதற்கு பல காலம் பயில வேண்டியதா யிருந்தது. இந்தியாவிற்கும், பாபிலோனுக்கும், பாரசீகத்திற்கும், அசீரியாவிற்கும், அக்கேடியாவிற்கும், அரேபியாவிற்கும், சால்டியா விற்கும் இடையே தொன்மையான காலத்திலிருந்து வணிகத் தொடர்பு இருந்தது வந்தது. கி.மு-6-ஆம் நூற்றாண்டில் வட மேற்கு இந்தியா பாரசீகர் படை யெழுச்சிக்கு ஆளாகியது. சில காலம் அவர்களது பயங்கர ஆட்சி நிலவியது. அப்பால் கி.மு.4-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.மு.327) கிரேக்க வீரன் மா அலெக்சாந்தரின் படையெடுப்பாலும், அப்பால் எழுந்த மொகலாயர்களின் ஆதிக்கத்தாலும் அயல் நாட்டுக் கலை முறைகள் வட இந்தியக் கலை முறையோடு சிறிது கலந்தன. இக்கலப்பின் பயனை காந்தாரச் சிற்ப முறையிலும், மௌரியச் சிற்ப முறையிலும், மொகலாய சிற்ப முறையிலும் காணலாம். சந்திரகுப்தன் மெசபொத்தாமியக் கலையைத் தழுவி அரண்மனையை அழகுற அமைத்தான். சாஜகான் அரேபியக் கட்டிட முறையைத் தழுவி தாஜ்மகாலை அமைத்தான். பௌத்த சிற்பம் ஆரியர்களின் வருணாசிரம முறையையும், புரோகித ஆதிக்கத்தையும் எதிர்த்து வட இந்தியாவில் பௌத்த நெறி எழுந்தது. அதன் பயனாக பௌத்த சிற்பமும் பிறந்தது. பௌத்த கட்டிடசிற்பம் (கி.மு.250- கி.பி.750) வட இந்தியா, தென் இந்தியா இலங்கை, சாவா, முதலிய நாடுகளிலெல்லாம் பரவியது. அசோகன் என்னும் மாமன்னன் பௌத்த நெறியைத் தழுவியதின் பயனாக பௌத்த கட்டிடச் சிற்பம் பெரிதும் வளர்ச்சியுற்றது. கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சிற்ப வேலைகள் சிறப்புற்று எழுந்தன. பௌத்தர்கள் பெரிய கோயில்களையும் மடங்களையும் மண்டபங்களையும் அமைத்தனர். நாலாந்தாவில் உள்ள நந்தாப் பெருமை வாய்ந்த பௌத்த மடம் 10,000 துறவிகள் தங்குவதற்கேற்ற பெரிய மடமாக இருந்தது. பௌத்தர்கள் நாட்டின் நானாபகுதிகளிலும் குடைவரைக் கோயில்களையும், தூபிகளையும், மடங்களையும், தூண்களையும் கல்வெட்டுகளையும் அமைத்துப் புகழ் பெற்றனர். சுங்க - ஆந்திர காலச் சிற்பம் மௌரிய ஆட்சி அசோகனுக்குப் பின் அடியுடன் சாய்ந்தது. வடக்கு, மேற்குப் பகுதிகளில் சுங்கர்களின் ஆட்சி அரும்பியது. அவர்களின் ஆட்சி கி.மு.70 வரையில் தலை தூக்கி நின்று அப்பால் வீழ்ந்தது. அதன் பின்னர் ஆந்திரர் (சாதவாகனர்) ஆட்சி அரும்பி கி.பி.150-வரையில் நிலவி மறைந்தது. கி.மு.185-இல் இருந்து கி.பி.180-வரை கிட்டத் தட்ட 300-ஆண்டுகள் சுங்க - ஆந்திரர் ஆட்சியில் அவர்களின் கட்டிட சிற்பமும் வளர்ந்தன. அவர்கள் பல குகைக் கோயில்களையும் மடங்களையும் நிறுவினர். இவர்களின் கலைக்கு எல்லோரா சைத்தியமும் கைலாசக் கோயிலும் ஏற்ற எடுத்துக் காட்டுகளாக உள்ளன. சாளுக்கியர் கட்டிட சிற்பம் கி.பி.ஐந்தாம் ஆண்டில் தென் இந்தியாவில் சாளுக்கியர் ஆட்சி தலை தூக்கியது. அதன் பயனாக சாளுக்கியர் கட்டிட சிற்பம் எழுந்தது. முதன் முதன் கற்களால் கோயில்கள் கட்டத் தொடங்கினர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து பல கோயில்களை அமைக்க முயன்றனர். மைய இந்தியாவில் பல கற் கோயில்கள் இவர்களின் பாணியில் பல எடுப்பிக்கப் பெற்றுள்ளன. இவர்களால் ஆதியில் எடுப்பிக்கப் பெற்ற கற் கோயில்கள் பீஜாப்பூரில் உள்ளன. சாளுக்கியர்களின் கட்டிடச் சிற்பமும் இந்தியாவின் கட்டிடக் கலையில் ஒரு சிறந்த சிற்பக் கலைக் கருவூலமாய் போற்றப்பட்டு வருகிறது. இந்திய இசுலாமிய கட்டிட சிற்பம் இந்தியாவில் மொகலாயர் ஆட்சி அரும்பிய பின் இசுலாமியக் கட்டிட சிற்ப முறை செல்வாக்குப் பெற்றது. மொகலாயர்கள் பெரிதும் அந்தந்த இடத்துக் கலை முறையைத் தழுவி பள்ளிகளும், சமாதிக்கட்டிடங்களும் அரண்மனைகளும் வீடுகளும் அமைத்தனர். பழைய தில்லியில் உள் இல்துத்னிஷ் மசூதியும், பீஜப்பூர் பழைய பள்ளிகளும் நாகூர் தர்காவும் பிறவும் சான்றுகளாகும். மொகலாயர் ஆட்சியின் தொடக்க காலம் இசுலாமியர் கட்டிடக் கலையின் பொற்காலம் என்று புகழப்படும். மொகலாயர் கட்டிடக் கலையில் இந்து, இசுலாமிய பாரசீக மரபுகள் கலந்து விளங்கின. மொகலாயர் பண்டைய எகிப்திய மன்னர்களோடு போட்டி போட்டு பள்ளிகளும் சமாதிகளும் கட்டினர். அக்பரின் பட்டேப்பூர் சிக்ரி நகரில் எழுப்பிய கட்டிடங்களின் சிற்பங்களும் ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலும், முத்து மசூதியும், அரண்மனையும் மிகச் சிறந்தவை. மொகலாயர் காலத்தில் எழுச்சியுற்ற அவர்களின் கட்டிடக் கலை அவர்கள் ஆட்சி அழிந்ததும் அவர்களின் கட்டிடக் கலை பெரிதும் குன்றி விட்டது. மேனாட்டு கட்டிடக் கலை இந்தியாவில் போர்ச்சுக்கீசியரும், உலாந்தாக்காரரும், பிரஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் புகுந்து ஆள முற்பட்டனர். தங்களின் கிறித்து சமயத்தையும் கட்டிடக் கலையையும் புகுத்தினர். அரசாங்கக் கட்டிடங்களும் கிறித்தவக் கோயில்களும் காத்திய கலை முறைப்படி கட்டப் பெற்றது. தமிழ் மக்களுக்கு சுதந்திர உணர்ச்சி எழுந்த பின் கிறித்தவக் கோயில்கள் ஐரோப்பிய பாணியில் கட்டுவது முறை அன்று என்ற எண்ணம் எழுந்தது. ஆந்திர நாட்டிலுள்ள தோர்ணக்கல் பகுதியில் முதல் இந்திய நல்லாயராய்த் தோன்றிய பிசப் அவர் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் கிறித்தவக் கோயில்கள் திராவிடப் பாணியில் அமைக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் இந்தியக் கட்டிடக் கலை மறுமலர்ச்சியுற்று வருகிறது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் தமிழ் மக்களின் தெய்வ வழிபாடு தமிழ் மக்கள் மிகத் தொன்மையானவர்கள் அவர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நாளிலிருந்தே இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அயல் நாட்டினின்று இந்நாட்டில் குடியேறியவர்கள் என்று சில ஆசிரியர்கள் கூறினர். அது தவறு; ஆதாரமற்ற கூற்று என்று இன்று அறிஞர்களால் கருதப்படுகிறது. தமிழகத்தின் நிலமும், நீரும் பாறைகளும் மக்களும், மரம் செடி கொடிகளும் விலங்குகளும் பறவைகளும் இந்நாடு மிகத் தொன்மையானது என்பதை உணர்த்தும். மனித குலத்தின் தொட்டில் தென்இந்தியா என்று சில நில நூலாரும் மானிட இயல் நூல் வல்லாரும் கருதுகின்றனர். தென் இந்தியாவின் பாறைகள், அது மிகத் தொன்மை மிக்க நாடு என்பதற்கு என்றும் பொன்றாச் சான்றாக நின்றொளிர்கிறது. பழங்கால மனிதன் காடுகளில் தம் வாழ்க்கையைத் தொடங்க வில்லை. குன்றுகளிலே முதன் முதலாக வாழ்க்கையைத் தொடங்கி யுள்ளான் என்று அறிஞர்களால் கருதப்படுகிறது.1 தமிழர்கள் 10,000-ம் ஆண்டுகளுக்கு முன்னின்றே -அதாவது வரலாற்றுக் காலத்திற்கு முன்னிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் பழம் கற்காலத்திலிருந்து புதுக் கற்காலம் வரை, புதுக் கற்காலத்திலிருந்து பெருங்கல்லறைப் பண்பாட்டுக் காலம் வரை, பெருங் கல்லறைப் பண்பாட்டுக் காலத்திலிருந்து இரும்புக் காலம் வரை இங்கு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பழம் பெரும் பண்பாட்டை, இந்நாட்டை ஆக்கிரமித்த திராவிடர்கள் கைப்பற்றிப் புதைத்து விட்டார்கள் என்று சிலர் கூறுவது போல் நாம் எளிதில் கூறி விட முடியாது. திராவிடர்களின் ஆதிமுன்னோர்களைச் சார்ந்த இனத்தவர்களைப் பற்றி முன்னர் கொண்ட தவறான முடிபினின்று தப்புவிப்பதற்காகத் தமிழர்கள் வெளி நாட்டினின்று வந்தவர்கள் என்று சில ஆசிரியர்கள் கூறியுள்ளனர். திராவிடர்களின், ஆதி முன்னோரைச் சார்ந்த இனத்தவர்கள் அயல்நாட்டினின்று வந்தவர்கள் என்ற கருத்து சிறிதும் ஆதாரமற்ற கொள்கையாகும் அது திராவிடர்கள் அயல்நாட்டினின்று இங்குவந்து குடியேறியவர்கள் என்ற ஒரு தவறான கொள்கையை உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர்கள் வெளி நாட்டினின்று இங்கு போந்த ஆக்கிரமிப்பாளர்கள் அன்று. அவர்கள் தென் இந்தியாவின் கற்காலப் பண்பாட்டின் மரபுவழிவந்தவர்கள்.1 குமுகாய அமைப்பு பண்டைக் காலத்தில் இருந்த தமிழர் குமுகாயந்தான் இன்றும் இருந்து வருகிறது என்றாலும் பண்டைய நிலையினின்று மிகவும் மாற்றம் அடைந்துள்ளது. குமுகாய அமைப்பு, மொழி, பண்பாடு, பழக்க வழக்கம் முதலிய அனைத்தும் மாறுபட்டுள்ளன. அவர்களின் அன்றாட தேவைகளும் உணவுப் பிரச்னையும் அவர்களிடையே பெரிய மாற்றத்தை விளைவித்துள்ளன. அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் செய்யாவிடில் அழிந்து ஒழிந்து போகும் நிலையை அடைந்தனர். மாறு அல்லது மாண்டுபோ என்ற பொன் மொழி அவர்கள் உள்ளத்தில் அடிக்கடி அரும்பியது. மக்களின் வாழ்க்கை தமிழ் மக்கள் ஆதியில் மலைகளிலும் குன்றுகளிலும் விலங்கு களைப் போல் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஆடைகள் அணிய அறியார்கள். வீடுகள் அமைக்க எண்ணியதே இல்லை. பானை சட்டி குடம் முதலின எதுவும் அவர்களுக்குச் செய்யத் தெரியாது. அவர்கள் மலையில் உள்ள நீரூற்றுகள் வரண்டனவாயின் கற்பாறை மீதுள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் நீரை அருந்துவர். அவர்கள் காலடியில் கிடந்த கூளாங்கற்களை ஆயுதங்களாக பயன்படுத்த முதலில் பயின்றனர். அவர்கள் பல்லாண்டுகள் சென்று கற்களை, கத்தி, வாள், கோடரி, ஈட்டி, உளி போன்ற ஆயுதங்களாகப் பயன்படுத்தப் பயின்றனர். அக்கால மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் பல கடப்பா நெல்லூர், செங்கற்பட்டு, மெஞ்ஞானபுரம், சாயர்புரம் திருமங்கலம் போன்ற விடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மலைகளில் வாழ்க்கையைத் தொடங்கிய மக்கள் அங்கு கிடைத்த காய், கனி, கிழங்கு, கொட்டை, கீரை முதலியவற்றை உண்டு உயிர் வாழ்ந்தனர். இவைகள் கிடைக்காத காலங்களில் விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனை உண்டு உயிர் வாழ்ந்து வந்தனர். கொடிய விலங்குகளினின்று, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வில்லையும் கண்டனர். அப்பால் மனிதன் உணவின் பொருட்டு வேட்டை ஆடுவதில் திறமை பெற்றான். ஆண் பெண் ஆகிய மக்கள் இனத்தில், ஆண் பெரிதும் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டான். வேட்டையாடச் சென்ற ஆண் வேட்டையாடிக் கொண்டே பல நாள் அல்லது பல திங்கள் சென்று விடுவான் அவன் தன் மனைவி என்றும், மக்கள் என்றும் எவரையும் எண்ணியதும் இல்லை. அவர்கள் வாழ்க்கைக்காகக் கவலைப் பட்டதும் இல்லை. குமுகாயத்தில் மனைவி, கணவன் மக்கள் என்ற உறவு எழவில்லை. தாய் கருவுறவும், மக்களைப் பெறவும் பால் கொடுக்கவும் வேண்டிய இன்றியமையாத நிலை எழுந்ததால் மக்களுக்காக உணவு தேடவும், விலங்குகளினின்று மக்களைக் காக்கவும் வேண்டிய இன்றியமையாத நிலைக்கு ஆட்பட்டாள். தாய் தான் பெற்ற மக்களோடே எப்பொழுதும் வாழ்ந்து வந்தாள். பழங்களைப் பொறுக்குவதிலும், கிழங்குகளை அகழ்வதிலும், மூங்கில் அரிசி சாமை மலை நெல், தினை முதலியவற்றைச் சேகரித்து தான் உண்டதோடு மக்களுக்கும் ஊட்டிவந்தாள். அடிக்கடி மலையில், உணவு தட்டுப்பாடு எழவே மலையி னின்று கீழே ஓடி வரும் ஆறுகள் மூலம் அவற்றின் கரைகளின் வழியாக சிலமக்கள் கூட்டம் கூட்டமாகக் கீழிறங்கி மலை அடிவாரத்தில் முல்லைச் செடிகள் அடர்ந்திருந்த பகுதியில் வாழத் தலைப்பட்டனர். இவர்கள் முன்னர் மலையின் உச்சியில் குறிஞ்சி மரங்களின் அடியில் வாழ்ந்தனர். எனவே குறிஞ்சி நில மாக்கள் என அழைக்கப்பட்டன. இவர்கள் குரவர் எனவும் கூறப்படுவர். இவர்கள் பெரிதும் வேட்டையாடுவதையே, தொழிலாகக் கொண்டிருந்தனர். தேன் அடைகளைச் சேகரிப்பதும் விலங்குகளின் தோல்கள், கொம்புகள் முதலியவற்றை சேகரிப்பதும் தொழிலாகக் கொண்டிருந்தனர். மலை அடிவாரத்தில் குடியேறிய மக்கள் ஆடுமாடுகளைப் பழக்கி பால், தயிர், மோர், வெண்ணெய் நெய் முதலியவைகளைச் செய்யும் கைத்தொழில்களை உருவாக்கினர். தினை, சாமை போன்ற புஞ்செய் தானியங்களை விதைக்கவும் அறுக்கவும் வழி கண்டனர். இவர்கள் ஆயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் முல்லை நிலமாக்கள் என்றும் கூறப்படுவர். சிலர், அங்கிருந்தும் புறப்பட்டு ஆற்றங்கரை வழியாக வந்து நீர் நிரம்பிய குளங்களும், கழனிநிலங்களும் நிறைந்த இடங்களில் மருத நில மரங்களின் அடியில் தங்கினர். இவர்கள் கல்லினால் நிலங்கிள்ளி பயிர்த் தொழில் புரியத் தொடங்கினர். நிலங்கிள்ளும் தொழின் மூலம் பூமிக் கடியிலிருந்து தாதுப் பொருள்களைக் கண்டெடுத்தனர். களிமண் உபயோகத்தை அறிந்து, மண்பானை, மண் சட்டிகளை வளைய முற்பட்டனர். இந்நிலம் அதிகமான நஞ்செய் புஞ்செய் தானியமணிகளின் விளைவால் வளம் பெற்றது. வாழை கரும்பு முதலிய பயிர்கள் எழுந்தன. இந்நிலத்தில் விளைந்த பொருள்களுக்காக பிற நிலத்திலுள்ளோர் தங்கள் நிலத்தில் கிடைத்த பொருள்களைப் பண்டமாற்றாகக் கொடுத்து நெல், புல், எள், கொள் முதலிய பொருள்களைப் பெற்றுச் சென்றனர். மருத நிலத்தில் மக்களின் வாழ்வு மலர்ந்தது. நெல்,எள், புல், கொள், உளுந்து பயறு முதலிய விளை பொருள்களின் விளைவால் வளம் பெற்றது. இங்கு வாழ்ந்த மக்கள் மருத நிலமக்கள். இவர்கள் வேளாளர்காராளர் எனப்படுவர். இங்கு குயவர்கள் தோன்றி மட்பாண்டங்களைச் செய்தனர். மேலும் பஞ்சு விளைந்ததால் நூற்றல் தொழிலும் நெய்தல் தொழிலும் இந்நிலத்தில் வளர்ந்தது, தச்சர், கொல்லர், தட்டார்கன்னர், கொத்தர் முதலிய தொழிலாளர்கள் பெருகினர். மேலும் பாணர்கள் தோன்றி ஆடல் பாடல் தொழில்களைச் செய்து வந்தனர். இந்நிலத்தில் செல்வப் பெருக்கால், வீடுகள் எழுந்தன. எங்கும் நாடு நகரம் அமைக்கப்பட்டன. மன்னர்கள் செல்வர்கள் தோன்றினர். ஆடல் பாடல் அரும்பின. மத்தளத்தின் ஒலியும் கிணைப் பறையின் ஆரவாரமும் மார்ச்சனையுடைய முழவின் ஆர்ப்பும், யாழின் இன்னொலியும் எழுந்தன. இந்நிலத்தில் வாழ்ந்தோர் வேளாளர் நாகரிகத்தின் அடிகோலியவர்கள் ஆயினர். ஒரு சிலர், ஆற்றங்கரை வழியாக கடல் வரை சென்று கடற்கரையில் உள்ள நெய்தல் செடியின் பக்கலில் தங்கினர் இவர்கள் நெய்தல் நிலமக்கள் அல்லது பரதவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர். அப்பால் படகு, ஓடம், தோணி, கப்பல், நாவாய், வங்கம், அம்பி முதலியவை களை ஓட்டவும் உப்பை விளைவிக்கவும் மீன்களைப் பிடித்து பிற நிலத்தவர்களுக்குப் பண்டமாற்றாக விற்கவும் செய்து வந்தனர். இவர்கள், கடல் வணிகத்திற்கு ஆதரவாக பிற நாடுகளுடன் வணிகம் நடத்த கப்பல் ஓட்ட முன் வந்ததால், நாடு செல்வம் பெறவும் நாகரிகம் சிறப்பு பெறவும் துணையாக இருந்தது. தெய்வங்களின் தோற்றம் சில அறிஞர்கள் உலகில் புரோகிதர் தோன்றி தங்கள் நலனுக்காகக் கடவுள் நம்பிக்கையை உருவாக்கியுள்ளனர் என்று கூறுகின்றனர். சிலர் மக்களின் அறியாமையால் குமுகாயத்தில் தெய்வ உணர்ச்சி எழுந்தது என்பர். சிலர் பயத்தால் தெய்வ நம்பிக்கை பிறந்தது என்பர். சிலர் அடிமைப் புத்தியால் மக்கள் தாமாகவே தெய்வ நம்பிக்கையை உருவாக்கி விட்டனர் என்று கூறுகின்றனர். ஆனால் சமூக நூல் (Social science) தாய் ஆதிகாலத்தில் மக்களைக் காப்பாற்றி வந்ததோடு மக்களுக்காக அவள் விலங்கு களோடு போரிட்டும், வெற்றி பெற்றும், கால், கை, கண், காதுகளை இழந்தும், உயிரை இழந்ததும் உண்டு. மிகத் தொன்மையான கால மக்களுக்கு, தாய் குடும்பத் தலைவியாகியும், காக்கும் தெய்வமாகவும் கருணை காட்டும் அரசியாகவும் விளங்கினாள். அவள் இறந்ததும் அவளைப் புதைத்து அந்த இடத்தில் நடுகல் நாட்டி அதில் மக்கள் வழிபட்டு வந்தனர். இதனால் நாட்டில் பல தாய்த் தெய்வங்கள் தோன்றின. எனவே நமது நாட்டில் மட்டுமல்ல எகிப்து, பாபிலோன், அசிரியா, அக்கேடியா, எல்லம், சீரியா, சின்ன ஆசியா, காகஸ கிரீட, கிரீசு, உரோம் முதலிய எல்லா நாடுகளிலும் தாய்த் தெய்வங்கள் தோன்றின. நீண்ட காலத்திற்குப் பின் தாய் ஆட்சி மறைந்த பின் தாய்த் தெய்வ வழிபாடும் குன்றி கணவன் தெய்வம் (சிவன்) அண்ணன் தெய்வம் (மாயோன்) மகன் தெய்வம் (முருகன்) போன்ற பல தெய்வங்கள் தோன்றின. ஆதியில் தமிழர் வாழ்ந்த நானிலத்தும் நாலு தெய்வங்கள் எழுந்தன. தொல்காப்பியம் அகத்திணை இயல் சூத்திரத்தில், மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்று கூறப்படுகிறது. இதனால் பண்டைக் காலத் தமிழர் முல்லைக்கு மாயோனும் குறிஞ்சிக்குச் சேயோனும் (முருகனும்) மருதத்திற்கு வேந்தனும் (ஐந்திரனும்) நெய்தலுக்கு வருணனும் தெய்வம் என்று வழிபட்டனர் என்று சாதாரணமாக எல்லாப் புலவர்களும் உரை கூறுவது இயல்பு. ஆனால் உயர் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், காட்டிற்குத் தெய்வம் மாயோன் எனப்பிற்காலத்தவர் கருதினும் மாயோளாகிய கருநிறமுடைய அம்மையையே சிறப்பாகக் கொள்ள வேண்டும். மாயோள் மேய காடுறை உலகமும் என்ற பாடமே சிறந்தது. காடுகிழாஅள் என்றதுமது. நாட்டுப்புறங்களிலும் காடுகளிலும் பெருவழக்காக வழிபடப்பட்டுத் தெய்வசக்தியின் வேக வடிவாகிய தேவியை பிற்காலத்தே மரபொற்றுமை பற்றிக் கோவலர், மாயோன் வழிபாட்டைக் கொண்டனர். மாயோளும் மாயோனும் உடன் பிறந்தார் என்னும் கொள்கையுங் காண்க. மாயோனுக்கு மருகனாகிய முருகன் வழிபாடு குறிஞ்சி நிலத்திற் சிறப்பாக நிகழ்ந்தது. ஆனைமுகக் கடவுளின் வழிபாடுங் குறிஞ்சி நிலத்திற்கே உரியதாயினும் ஐந்திணைக் காதல் ஒழுக்கத்திற்குச் சிறப்பாவது முருக வழிபாடேயாம் என்பது பற்றி முருகனையே குறிஞ்சிக்குத் தெய்வம் என்றார் போலும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறினமையால் மருத நிலத்துத் தெய்வம் வேந்தன் என்பது வெளிப்படை இந்திரனை வேந்தன் என்பதற்குக் காரணம் அவன் மழைத் தெய்வம் ஆதல் பற்றியும் வயலுக்கு இன்றியமை யாதது பற்றியுமென்க. இன்றிரன் என்ற சொற்றொடரே இந்திரன் என மருவிற்றென்ப. மன்றிறம் மந்திரம் என மருவியது போல. மருத நிலத்திற்குரிய நகரங்களில் முதன்மையாக வழிபடப்பட்டதெய்வம், சிவன் என்பது நுதல் விழி நாட்டத் திறையோன் கோட்ட முதலாக என்ற சிலப்பதிகார அடியாற் புலனாதலின் வேந்தன் என்பானைச் சிவன் என்பாருமுளர் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.1 தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை இயல் சூத்திரத்தில் கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணியே வருமே என்று கூறப்படுகிறது. இதற்கு ஞாயிறு, திங்கள் தீ போன்ற இயற்கைப் பொருள்கள் தொல்காப்பியர் காலத்தில் தெய்வமாக வழிபடப்பட்டிருக்கிறது என்று திரு. சாமி சிதம்பரனார் பொருள் கூறியுள்ளார்.2 சைவப் பெரும்புலவர் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு பொருள் கூறும் பொழுது, காலம் பால்வரை தெய்வம், வினைத் தெய்வம், சொற்றெய்வம், பூதத் தெய்வம் ஞாயிறு திங்கள் என்பன விதந்தோதப் பட்டன. காலக் கடவுளைக் காலம் என்றார். அக்கடவுளை உருத்திரன் என்பாருமுளர். பால்வரைத் தெய்வம் என்பது எல்லார்க்கும் இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையை வகுக்குங் கடவுள். இக்கடவுளை அயன் என்பாருமுளர். வினைத் தெய்வம் என்பது அறத்தெய்வம் என்று சேனாவரையர் கூறியுள்ளார் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.1 சிந்துவெளித் திராவிட நாகரிகத்தில் எழுந்த ஓவிய எழுத்துக் களை ஆய்ந்த பின்லாந்து பேரறிஞர் டாக்டர் அகோ பார்போலாவும் பிறரும் சிந்துவெளி மக்கள் முதன்முதலாக விண்ணிலுள்ள ஞாயிறு (சூரியன்) திங்கள் (சந்திரன்) செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கோள்களை வழிபட்டுள்ளனர். அப்பால் அவை களுக்குப் பதிலாக இவ்வுலகில் ஞாயிற்றிற்குப் பதிலாகச் சிவனையும், திங்களுக்குப் பதிலாக உமா தேவியையும் செவ்வாய்க்குப் பதிலாக முருகனையும், புதனுக்குப் பதிலாக, நான்முகனையும் வியாழனுக்குப் பதிலாகத் திருமாலையும், சனிக்குப் பதிலாக கிருட்டினனையும் வழிபட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறோம் என்று கூறியுள்ளனர். அதோடு தமிழர் கண்ட ஐந்து நிலங்களில் குறிஞ்சி நிலத்தில் செயோன் என்று கூறப்படும் செவ்விய நிறமுடைய செவ்வண்ணண் ஆகிய செஞ்சடையோனாகிய சிவபெருமானும், பாலை நிலத்தில் அம்மையாகிய கொற்றவையும், முல்லை நிலத்தில் மாயோனாகிய திருமாலும் நெய்தல் நிலத்தில் வருணனும் மருத நிலத்தில் வேந்தனும் (அரசனும்) வழிபடப்பட்டிருக்க வேண்டும். அப்பால் குறிஞ்சி நிலத்தில் முருகனும், மருத நிலத்தில் சிவனும் தெய்வமாக வழிபடப் பட்டிருக்கவேண்டும் என்று எண்ணப்படுகிறது. சிந்துவெளியில் மட்டுமல்ல பாபிலோனிலும், எகிப்திலும் பாலதீனத்திலும், பிறநாடுகளிலும் உழவர்களின் தெய்வமாக சிவபெருமானே கடவுளாக வழிபடப்பட்டுள்ளார். இன்று பாபிலோன், எல்லம் எகிப்து அசிரியா, அக்கேடியா, சால்டியா, ஹிட்டைட் முதலிய உழவர்களின் நாகரிகம் எழுந்த நாடுகளில் எல்லாம் சிவபெருமான் காளைமீது நிற்பதோடு கையில் திரிசூலம் (மூவலைவேல்) தாங்கி நிற்பது போன்ற உருவங்கள் தீட்டப்பட்டிருப்பது பைபிள் அகராதி போன்ற நூற்களிலும், பண்டைய கிழக்கு நாடுகளில் புதிய ஒளி என்ற பெயர்களில் வந்தபல நூற்களிலும் அழகிய ஓவியம் தீட்டி எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. அதோடு தமிழ்நாட்டுத் தெய்வங்களான சிவன் கொற்றவை முருகன் போன்ற தெய்வங் களைப் பற்றி தொல்காப்பியம் என்ன கூறுகிறது என்று அறிவது மிகவும் சால்புடைத்ததாகும் என்று எண்ணுகிறேன். திராவிட நாகரிகம் பரவியதாக இன்று மேனாட்டு ஆசிரியர்கள் கருதும் மைய நிலக்கடற்கரைப் பகுதிகளிலெல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய் வழிபாடே சிவ வழிபாடாகவும், சக்தி வழிபாடாகவும் முருகன் வழிபாடாகவும் மலர்ந்துள்ளன என்று தெளிவாக எடுத்துக் காட்டப்பெற்றுள்ளது. மிகத் தொன்மையான காலத்தில் தமிழ்நாடு தொட்டு, சிந்துவெளி வரை, தாய்த் தெய்வ வழிபாடே நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தாய்த் தெய்வம் கொற்றவை, காடுகிழாஅள், பழையோள் முதியோள் காளி துர்க்கை என்று பல பெயர்களால் வழிபடப்பட்டுள்ளாள். அவளே ஈடும் எடுப்பு மற்ற முழுமுதற் கடவுளாகக் கருதப்பட்டாள் என்று தெரிகிறது. மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே என்ற தொல் காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை இயல் சூத்திரம் கொற்றவை வீரத்தினால் எய்த வெற்றியை கொண்டாடுவதற்கு துடிநிலை என்று எடுத்துக்காட்டுகிறது. இவ்வெற்றிக்குத்துணை செய்த தெய்வம் பழையோள். அந்தத் தாய்த் தெய்வத்தைப் புகழ்ந்து போற்றி வழிபடும் விழாவிற்குக் கொற்றவை நிலை என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தமிழர் தெய்வமாக எழுந்த சிவபெருமான் ஐயாயிரம் ஆண்டிற்கு முன் சிந்துவெளியில் சிறப்புற்றிருக்கும் பொழுது மூவாயிரம் ஆண்டிற்குமுன் இலக்கியங்களில் சிவன் என்ற பெயர் காணப்படாததால் தமிழ்நாட்டில் சிவனே இல்லை என்று கூறுதல், தகுமா? தமிழ்நாட்டில் 2000, ஆம் ஆண்டிற்கு முன்னுள்ள எத்தனையோ நூற்கள் அழிந்துபோயின. அவைகளில் சிவன் என்ற பெயர் இடம் பெற்றிருக்கலாம் அல்லவா? தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல், அதில் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் தெய்வங்களின் எல்லாப் பெயர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையாகும். நிலங்களுக்குரிய தெய்வங்களைக் குறிப்பிட்டு நிலங்களுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத் திற்குரிய பெருந்தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடாது விடப்பட்டும் இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் தொல் காப்பியத்தை விட பழம் நூல் என்று எண்ணப்படும் நூற்களில் பிறவாயாக்கைப் பெரியோன், கண்ணுதற் பெருங்கடவுள், முக்கண்ணன் என்று குறிப்பிடப்படுவதே சிவன் தமிழகத்தின் முழுமுதற் கடவுள் என்பதை நிலை நாட்டப் போதிய சான்றாகும். சிவபெருமான் உருவினை விளக்க எழுந்த சைவப் பெரும் புலவர் கா. சு. பிள்ளை அவர்கள், கதிரவனை இடமாகக் கொண்ட சிவபெருமான், வெம்மை யினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது, தண்ணளியுடையதாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள நீரின் நிறம் நீலமாதலின் தாய்த் தெய்வம் நிறமும் நீலமாயிற்று. திங்கள் குளிர்ச்சி தருவதாகத் தோன்றுவதாய், சந்திரன் தாயின் அருவுரு வடிவமாகக் கருதப்படுவதற்கு ஏதுவாயிற்று. ஞாயிற்றின் ஒளியில் தோன்றும் ஏழு நிறங்களில் முதலில் உள்ளது சிவப்பும், இறுதியில் உள்ளது நீலமும் ஆம். பாதி ஆணும் பாதிப் பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும், பெண்பகுதி நீலநிறமாகவும் கொள்ளப்பட்டது. சிவம் என்ற சொல் முழுமுதற்கடவுளைக் குறிக்கப் பயன்பட்ட போது எங்கும் நிறைந்திலங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப் பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள்காரணமாம் என்ற கொள்கை எழுந்த போது சிவசக்தி அருள் எனவும் தாயெனவும் வழங்கப்பட்டது. கதிரவனை சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகியவிண்ணும் சக்திக்குப் பேராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று. திருமால் கோயிலில் உள்ள பெருமாள் கண்ணன், இராமன் அனுமான் கருடன் முதலிய தெய்வங்கள் திராவிடத் தெய்வங்களே யாகும். கடவுள் சக்தியைத் தாயாக வழிபடும் தமிழர் வழக்கங்காரண மாக சைவ வைணவக் கோயில்களில் தெய்வங்களின் ஆற்றல் பெண் வடிவில் வழிபடப் படுவதாயிற்று. அதுவும் தமிழர் கருத்தின் விளைவேயாகும். ஆழ்வார்கள் அடியார்களாகத் திருமால் கோயில் களில் இடம் பெற்றனர். ஆதியில் ஒரு தெய்வக் கோயில்களே ஏற்பட்டிருந்தன. பிற்காலத்தில் தெய்வங்களின் பரிவாரங்களும் அவைகளில் இடம் பெறலாயின. எனினும் இக்கோயில்களில் முக்கிய தெய்வம் ஒன்றே வழிபடப்படுகிறது. வடமொழி வேதத்தில் பேசப்படும் பல்வேறு தெய்வங்கள் தமிழர் கோயில்களில் இடம் பெறவில்லை என்பது தெளிவு. இக்கருத்தினை டாக்டர் கில்பர்ட் கிலேட்டர் போன்றவர்கள் விளக்கியுள்ளனர்.1 தமிழ்ப் பெரும்புலவரான பேராசிரியர் ஞா. தேவநேயன் அவர்கள், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் - என்ற நூலில் குறிஞ்சி நிலத்தின் தெய்வம் சிவனாக இருந்தார் என்பதை ஆதரித்து எடுத்துக் காட்டியுள்ளார். அது அடியில் வருமாறு! சேயோன் சிவந்தவன் சேந்தன் என்னும் பெயரும் அப்பொருளதே. முருகன் வேலன் குமரன் என்னும் பெயர்களும் இவனுக்குண்டு - சிவன் என்பது சேயோன் என்பதன் உலக வழக்கு வடிவம்.1 இப்பெயர் வடிவு வேறுபாட்டைக் கொண்டு பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கி தந்தையும் மகனுமாகக் கூறிவிட்டனர். குமரன் என்பதற்கும் சேய் என்னும் குறுக்கத்திற்கும் மகன் என்று தவறாகப் பொருள் கொண்டதே இதற்கு அடிப்படை. சிவன் என்னும் ஆரியத் தெய்வம் ஒன்றும் இல்லை. சிவ என்னும் சொல் நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில் உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவான அடை மொழியாகவே ஆரியவேதத்தில் வழங்கிற்று. புறக்கண் காண முடியாதவற்றையும் நெடுந்தொலைவில் உள்ளவற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக் கண்போன்ற உறுப்பு, குமரி நாட்டு மகள் நெற்றியில் இருந்தது என்றும் அதனாலேயே அவர் தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்) ஒரு நெற்றிக் கண்ணைப் படைத்துக் கூறினர் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வெள்ளி மலை (கைலை) இருக்கையும், காளையூர்தியும் சிவனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் காட்டுவது கவனிக்கத் தக்கது. அதோடு சிவபெருமானின் தோற்றம், புலி ஆடை, யானைத் தோல் போர்வை முதலியவைகளும் சிந்துவெளியில் உள்ள முத்திரை களில் சிவபெருமான் அருகில் யானை, புலி, காண்டாமிருகம், மான் முதலியவைகள் சூழ நிற்பதும், அவர் தமிழ்நாட்டில் மகேந்திர கிரியை உறைவிடமாய்க் கொண்டதும் வடஇந்தியாவில் இமய மலையில் வீற்றிருந்ததும் மேலும் அவர் மலைமகளை மணந் திருப்பதும், அவரது மைத்துனனாகிய மாயோனும், மகனாகிய முருகனும் மலைத் தெய்வம் ஆக இருப்பதும் சிவன் மலைத் தெய்வம் என்பதை உறுதிப்படுத்தும். உலகம் முழுதும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை, சிவபெருமான் உழுது பயிர் செய்யும் மருத நிலமக்களின் தெய்வம் என்பதாகும் சிவபெருமான் உழவர்களாகிய வேளாளரின் தெய்வமாகிய படியால் வேளாளர்களுக்கு உறுதுணையாகிய காளையை வாகனமாக அவர் கொண்டார். காளை, நிலத்தை உழவும், உழுதபின் சேறு நிரம்பிய நிலத்தை மட்டம் அடிக்கவும் அப்பால் நெல் விளைந்து அறுவடையானபின் சூடு அடிக்கடவும், பின்னர் நெல்மணிகளை சாக்கில் கட்டி முதுகில் சுமந்து செல்லும் பொதிமாடாகவும், வண்டிகளில், நெற்சாக்கை ஏற்றி மிகத் தொலைவில் உள்ள நாடுகளுக்கெல்லாம் செல்லும் வண்டி மாடாகவும் பயன்பட்டுவந்ததால் தமிழர்களின் தலைவனானது சிவன் காளைமாட்டைக் காப்போனாகவும் காளை மாடுகளையும் நஞ்செய் புஞ்செய் பயிர்களை அழிக்கும் புலிகளையும் யானை களையும் எதிர்த்து காளைகளைக் காப்போனாய், எப்பொழுதும் கையில் திரிசூலம் (மூவிலைவேல்) தாங்கியவனாகவும், பரசு என்னும் கைக் கோடரியைத் தாங்கியவனாகவும், இடியேற்றை (வச்சிராயுதத்தை)த் தாங்கியோனாகவும், விளைந்த பயிர்களின் மணிகளைப் பறவைகள் தின்ன வொட்டாது விரட்டும் தமருமகம் என்னும் தானியங்கிப் பறையை வலது கையில் தாங்கியோனாகவும், இரவில் வயல்களில் உள்ள பயிர்களை அழிக்க வரவொட்டாது கையில் நெருப்பைத் தாங்கியவனாகவும், உழவர்களின் பகைவர் களாகிய யானையையும் புலியையும் அழிப்பவன் என்பதைக் காட்டுவதற்கு அரையில் புலித்தோலை அணிந்தும், மேலே யானைத் தோலைப் போர்த்தும் உள்ளான். தாமரை மருத நில மலராக சிவபெருமான் விரும்பும் மலராக, தமிழ் அறிஞர்கள் போற்றுவர். கம்பன் மருத நிலத்தின் மாண்பை எடுத்துக்காட்ட எண்ணியபொழுது அவன் உள்ளத்தி னின்று தண் பொருநை ஆற்றில் தண்ணீர் பொங்கி எழுந்து வருவது போல், கவிதை பொங்கத் தொடங்கியது, தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்கக் கொண்டல்கள் முழலின் ஏங்கக் குவளைகள் விழித்து நோக்கத் தெண்டிரை எழினிகாட்டத் தேம்பிழி மகரயாழின் வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ என்று இனிது பாடினான். மருத நிலம், மாற்றுயர்ந்த பொன்னிலம் என்று புலவர்கள் புகழ்வர். ஏனைய மூன்று நிலமக்களும் தங்கள் நிலத்திற்கிடைத்த செய்பொருள்களையும், விளைபொருளையும் மருத நிலமக்களிடம் பண்டமாற்றாக அளித்து நெல் புல், எள், கொள், பயறு முதலிய பொருள்களைப் பெற்றுச் சென்றனர். பொருள் வளத்தால் அங்கு இயல் இசை நாடகம் போன்ற நுண்கலைகள் வளர்ந்திருப்பதை மக்கள் கண்டுகளித்துச் சென்றனர். அங்கு, எங்கும் காயும் கனியும் நிறைந்திருந்தன. மலர்கள் கொத்துக் கொத்தாய் மலர்ந்து தொங்கின. கம்பன் இவற்றையெல்லாம் கூறாது மயில்கள் தாமரை மலர்கள், குவளைப் பூக்கள் வண்டுகள் ஆகியவைகளின் ஆட்டத்தையும் அழகையும் மணத்தையும், ரீங்காரத்தையும் வைத்து மருத நிலத்தின் மாண்பை எடுத்துக் காட்டுகிறான். ஆடக அரங்கில் ஆய் மயில்கள் ஆடவும் அந்த ஆட்டத்திற்கு ஏற்றவாறு தாமரை தனது பூவாகிய விளக்கைக் காட்டுதாகவும், குவளை மலர்களை நாடகம் பார்ப்பவர் களாகவும் நீரில் எழும் அலைகளைத் திரைச் சீலைகளாகவும் வண்டுகளின் இனிய ஓசையை யாழாகவும் மருத நிலம் கலையின்று வீற்றிருக்கும் ஒரு பெரும் நிலப்பிரபுவாகவும் ஒரு புதிய நாடக அரங்கை நமக்குக் கற்பனை செய்து கம்பன் காட்டியுள்ளான். நாடகம், இசை, விளக்கு, திரைச்சீலை ஆகியவைகள் நாட்டியத்திற்கு இன்றியமையாத பாத்திரங்கள். இதனைக் கம்பன் கவினுற எடுத்துக் காட்டுவது சுவைத்து இன்புறத்தக்கதாகும். இஃதன்றி, மருத நிலத்தில் பொருளாதார வளத்தாலும், அறிவின் ஆற்றலாலும், கற்பனைத் திறத்தாலும் மக்கள் சிவனை மருத நிலத் தெய்வமாக உயர்த்தினர். அவனை விண்ணில் கோடானு கோடி கல் தொலைவில் சுழன்றோடும் செஞ்ஞான்றினுக்கும் மேலும் உயர்த்தினர். பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலும் மாற்றுயர்ந்த பசும்பொன்னாகப் புகழ்ந்தனர். அவன் ஏழுலகிற்கும் அதற்கு அப்பால் எண்ணிலாத் தொலைவிற்கும் எல்லாப் பிரபஞ்சத்திற்கும் முதல்வனாகக் கொண்டனர் உலகில் சிவனைத் தவிர வேறு தெய்வமே இல்லை. உலகிலே ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் குமரி தொட்டு இமயம் வரை மட்டுமல்ல ஈழம், மலயம், சிங்கபுரம், சாவகம், சுமத்திரா போர்னியோ, தாய்லாந்து, கம்போடியா, அந்தமான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மட்டுமல்ல ஆப்பிரிக்கா மெசபொத்தாமியா, பாபிலோன், சுமேரியா, எல்லம், சீரியா, அசீரியா அக்கேடியா சால்டியா, பாலதீனம், சின்ன ஆசியா காகச இத்தாலி, கிரீபாகு துருயிதியர் (Druids) அமெரிக்கா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று சிவன் என்னும் நாமத்தைப் பரப்பி, கோயில்கள் கட்டி, கலைவளர்த்து இசை பயின்று பண்பாடு பரப்பி ஒழுக்கம் ஓம்பி வந்தனர். உலகில் முதன் முதலாக சமயத்தை அன்னிய நாட்டார்க்குப் பரப்ப 1600- ஆண்டுகட்கு முன் வந்தவர்கள் கிறித்தவர்கள் என்று 20 -ஆண்டுகட்கு முன் சில வெள்ளையர்கள் கூறிவந்தனர். 50 - ஆண்டுகட்கு முன் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபுரம், சாவகம், கம்போடியா, தாய்லாந்து, இந்தோசீனம், சம்பான், சீனா, ரசியா, கொரியா முதலிய நாடுகளுக்கெல்லாம் புத்த சந்நியாசிகள் சென்று பௌத்த நெறியைப் பரப்பி வந்தனர் என்று சில வட இந்தியர்கள் கூறிவந்தனர். இன்று, சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன், சைவர்கள் சைவ நெறியை குமரி தொட்டு நேப்பாளம் வரை, பர்மாதொட்டு பலுச்சிதான் வரை மட்டுமல்ல எகிப்து, அமெரிக்கா, பாபிலோன், பாலதீனம் முதலிய உலக நாடுகள் அனைத்திற்கும் சைவ முனிவர்கள் சென்று சிவநெறியைப் பரப்பி, திருக்கோயில்களை எழுப்பி, சைவப் பண்பாட்டையும் சைவக்கலைகளையும் பரப்பி வந்துள்ளனர் என்றும் உண்மை உணரப் பெற்றுள்ளது. 1922- ஆம் ஆண்டு சிந்துவெளி அகழ் ஆய்விற்குப் பின் 5000-ம் ஆண்டுகட்குமுன் சிந்து வெளியில் சிவன், உமை, சிவலிங்கம் முருகன், பிள்ளையார், நிலத்தெய்வம், நீர்த்தெய்வம் மரத் தெய்வம் போன்ற தெய்வங்கள் வழிபடப்பட்டு வந்தனர் என்றும் ஆரியர் வருமுன் இந்தியா முழுவதும் சிவனெறி பரவியிருந்தது என்றும் இந்திய மைய அரசின் அகழ் ஆராய்ச்சித் துறையினர் கண்டு உலகிற்கு இந்த உண்மையை உணர்த்தியுள்ளனர். இதனை விளக்கி இ.பி. ஹேவல் என்னும் அறிஞரும், பேட்ரிக் கேர்ல்ட்டன் போன்ற அறிஞரும் உலகிற்கு முதன் முதலாக உணர்த்தியுள்ளனர் அதோடு தமிழ் மொழிக்கு ஏற்றம் அளித்ததில் சிறந்த பங்கு நல்லாயர் கால்டுவெல் அவர்களுக்கு உண்டு.1 ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் திராவிடர்களும் சைவசமயமும் நிறைவுற்றிருந்தது. இந்தியாவில் சுமார் 4000-ம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய திராவிடர்கள் சமயம் சைவம் எனப்படும். இது இந்தியாவின் தேசிய மதம். சைவம் உலகளாவிய பழம்பெரும் சமயம். இது ஆரியம், பௌத்தம், கிறித்தவம் எகோவா நெறி (யூதர் நெறி), எபிரேயர்களின் எல் நெறி ஆகிய எல்லாச் சமயத்திற்கும் முந்திய நெறி; நீண்ட வாணாளைப் பெற்ற பலம் வாய்ந்த பழம்பெரும் சமயம்; இன்றும் இளமை குன்றாது எழில் மாறாது இளமைப் பொலிவுடன் ஏற்றமுடன் திகழும் நன்னெறி என்று பொருள் தரும் முறையில் சிந்துவெளி அகழ் ஆய்வை நடத்திய இயக்குநர்களின் தலைவரும், இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர்களின் தளபதியுமான சாண்மார்சல் உலகிற்கு எடுத்துக்காட்டினார்.2 சைவம் பழம்பெரும் சமயந்தான்; உலகளாவிய உயர்ந்த நெறிதான்; என்றாலும் அது சுமார் கி.மு. 7500-க்கு முன்னர் ஆரியர்களால் பெருந்தாக்குதலுக்கு ஆட்பட்டு சிந்து ஆற்றங்கரையி னின்று தண்பொருநை ஆற்றங்கரை வரை பின் தள்ளப்பட்டது. அதனால் சைவம் அழியவில்லை; சிதையவில்லை. ஆரியம், சைவச் சடங்குகள் பலவற்றை தழுவியது; ஆரியர்களிற் பலர் சைவராயினர். ஆரியப் பார்ப்பனர் ஆரிய நெறியைத் துறந்து, ஆரியநெறியைத் தாக்கி அதன் அகத்தையும் முகத்தையும் மாற்றிவிட்டனர். பல ஆரியப் பார்ப்பனர் சைவந்தழுவி புலால் உணவைத் துறந்து, யாகத்தை மறந்து, உடலில் திருநீறு அணிந்து கழுத்தில் உருத்திராக்கம் பூண்டு சிசினதேவர் என்று ஒரு காலத்தில் தம் முன்னோர் இழித்துக் கூறிய சிவலிங்கத்தை வழிபட முன்வந்தனர். சிலர் அறுபத்து மூன்று நாயன்மார்களின் இடங்களைக் கூட கைப்பற்றினர். சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோர் சைவ சமய குரவர்களாய் ஆரிய (சமயத்தையும்) பௌத்த சமண சமயங்களையெல்லாம் எதிர்த்து வெற்றியீட்டினர். இந்தியாவிற்குள் ஆரியர்கள் இந்திரன் தலைமையில் புகுந்து திராவிடர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தென் இந்தியாவரைப் பின் தள்ளினர். இதனால் ஆரியர்கள் இந்தியாவில் புகுந்து இந்நாட்டில் தங்கும் இடத்தைப் பெற்றனர். என்றாலும் அவர்கள் வெற்றி வெறும் போலி வெற்றி என்பதை ஒரு ஆங்கிலப் பேரறிஞர், இந்திரன் சிறு பூசலில் திராவிடரை வென்றான்; ஆனால் சிவன் போரில் ஆரியரை வென்றான் என்று ஆணித்தரமாக எடுத்துக் காட்டியுள்ளார்.1 சைவந்தழுவாத ஆரியர்கள் சைவம் ஒரு சமயம் அல்ல என்று உலகம் முழுவதும் பறை அடித்து வந்தனர். சைவத்திற்கு ஒரு தத்துவசாதிரம் (Philosophy) கூட உண்டு என்று ஐரோப்பிய தத்துவ ஞானிகள் பலர் அறிந்து கொள்ளா வண்ணம் இருட்டடிப்புச் செய்துள்ளனர். பௌத்தர் களும், சமணர்களும் முசுலிம்களும், கிறித்தவர்களும் சிவநெறியைத் தாக்கித் தமிழகத்தில் தங்கள் சமயத்திற்கு ஆள்சேர்க்கும் பணியில் தமிழர்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழ் நெறிக்கும் இடர்விளைத்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டின் வரலாறு, தமிழகத்தில் நாட்டிற்கு புதிதாக வந்த இந்திய தேசீயமதமல்லாத எந்த சமயமும் நிலைத்து நிற்க வில்லை என்று கூறுகிறது. இந்தியாவையும், தமிழ் நாட்டையும் புத்த சமண நெறிகள் ஆட்சி செலுத்திய காலத்தில் சைவசமய குரவர்கள் தோன்றி அவ்விரு சமயர்களையும் தமிழகத்தினின்று அது இருந்த தடம் கூட அறிய முடியா வண்ணம் அவற்றைத் துடைத்து அழித்துவிட்டனர். பௌத்த, சமண சமயங்களை நாட்டைவிட்டு விரட்டியடித்த வரலாறு, தேவார திருவாசகங்களில் இன்றும் பொன்றாது பொலி வுற்றுத் திகழ்கின்றது. அனைத்திந்திய நெறியாகிய சமணத்தையும் அனைத்துலக நெறியாக நின்ற பௌத்த சமயத்தையும் மிக எளிதில் எதிர்த்து ஒரு சொட்டு உதிரமும் சிந்தாது இந்திய தேசீய நெறியான சைவம் வெற்றியீட்டியுள்ளது. அயல் நெறியாளர்களை வென்ற சைவசமயத் தலைவர்களில் அப்பர் சரியை வழி நின்றவர் என்றும் சம்பந்தர் கிரியை வழி நின்றவர் என்றும், சுந்தரர் யோகநெறி நின்றவர் என்றும் மாணிக்கவாசகர் ஞானநெறி நின்றவர் என்றும், தமிழ் நெறியாக எழுந்த சரியை, கிரியை, யோகம், ஞானம் (அறிவு) என்னும் பேரொளியின் முன் சமண பௌத்த அந்நிய நாட்டு நெறிகள் எளிதில் மறைந்தன என்றும் தமிழக வரலாறு கூறுகிறது. ஏழாம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டு அரசர் களின் பேராதரவை சமண பௌத்த சமயங்கள் முற்றாகப் பெற்றிருந்தும் அவைகளை தமிழ்ப்பண் இயைந்த ஒரு சில தேவராப் பாடல்களின் மூலம் அடியற்ற மரம்போல் விழுந்து மறைந்து ஒழியுமாறு செய்துவிட்டது சைவநன்னெறி. மன்னர்கள் அனைவரும் தம் தவறுக்கு மன்னிப்புக்கோரி சிவன் அடியார்கள் காலில் வீழ்ந்து வணங்கி சிவனுக்கு ஆட்பட்டுவிட்டனர். அப்பர் அடிகள் தலைமையில் சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலியோர் ஆற்றிய சிவத் தொண்டின் மூலம் இந்திய நாட்டின் தேசீய நெறியாகிய சிவநெறி வெற்றியீட்டியது. சமண பௌத்த நெறிகளை எதிர்ப்பதில் சிவநெறியாளர்களுக்கு ஆரியர்கள் பலர் துணை நின்றனர். அதன் மூலம் ஆரியர்கள் தமிழ்நாட்டில் தங்களுக்கும் தங்கள் மொழிக்கும் ஓரளவு இடம் தேடிக் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்றாலும் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, நெல்லை கா. சு. பிள்ளை, நாகை மறைமலை அடிகள் முயற்சியால் சைவமும், தமிழும் புனிதமுறிவும் ஆரிய மாயைவிட்டு அகலவும் ஒருபேர் இயக்கத்திற்கு அடி கோலப் பெற்றுள்ளது. சிவனை வழிபடும் கூட்டத்தார் சைவர் என்று தேவார ஆசிரியர் காலத்திற்குச் சிறிதுமுற்பட்டுப் பெயர் வைத்திருக்கலாம் என்றாலும் கி.மு. 3000 - ஆண்டளவில் அரப்பன் பண்பாடு அரும்பிய காலத்திலே சிந்துவெளியில் சிவன், ஆடவல்லான், பசுபதி, உமாதேவி போன்ற சைவத் தெய்வங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. இன்று அந்தத் தெய்வ உருவங்கள் பொறித்த முத்திரைகளும், தாயத்துகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. ஆதிகாலத் தமிழர் வழிபட்ட செம்பொருளாகிய சிவத்திற்கு சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் இறையோன், கடவுள், பெரியோன் என்ற பெயர்கள் கூறப் பெற்றுள்ளன. நுதல் வழி நாட்டத் திறைவன், என மணிமேகலையிலும் கடவுள் என புறநானூற்றிலும் பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிலப்பதிகாரத்திலும் செம்பொருள் என்று திருக்குறளிலும் கூறப் பெற்றுள்ளன. பல அறிஞர்கள் ஈசன், கண்ணுதற் பெருங்கடவுள், முக்கண்ணன், வேலன், சூலன், சடையன், முக்கட் கடவுள், மங்கைபங்கன், முழுமுதற்கடவுள் என்றெல்லாம் கூறிவந்துள்ளனர். மேலும் சிவன், சியன், சிபா, சியோன், எல், எல்சடை, விரிசடை, அல், இல், ஒல் பால், (பகல்) ஆண்பில் அசுர், அத்தாத், டயோனிச, மர்தூக் நன்னர், தங்கள் என்ற பெயர்களில் பல்வேறு நாடுகளில் சிவபெருமான் வழிபடப்பட்டுள்ளார். அவர் காளை மீது நிற்பதும், அவர் கையில் திரிசூலம் தாங்கி நிற்பதும் அவர் சிவன் என்பதை உறுதிப்படுத்தும் சிவ வழிபாட்டைத் தொடர்ந்து உமாதேவி வழிபாடும் நந்தி வழிபாடும் சிவலிங்க வழிபாடும் பல நாடுகளில் பரவி உள்ளன. நிற்க, மக்கள் தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலே தெய்வ வழிபாட்டைத் தொடங்கிவிட்டனர். பழங்கற்காலத்திலே ஆல மரத்தின் அடியில் ஒரு சிறிய குரடு எழுப்பி அதில் ஒரு கல்லை நாட்டி வழிபடத் தொடங்கிவிட்டனர். ஒரு சிறிய கடுகு போன்ற வித்தினின்று முளைத்துக் கிளைத்து பன்னூறு பேர் தங்கக் கூடிய பெரிய மரத்தின் கீழ் தங்கள் தெய்வ உருவங்களை வைத்து வழிபடும் இடமாகக் கொண்டனர். தமிழர்களின் முன்னோர்கள் ஆதியில் இறைவனைக் கல்லால மரத்தின் கீழ் கண்டனர் என்பது தமிழர்களின் ஐதீகம்; நம்பிக்கை; உறுதி. தமிழர்களின் தெய்வ வழிபாடு முதன் முதலாக ஆலமரத்தின் அடியினின்று அரும்பியது என்று அனுமானிக்கப்படுகிறது. மகேந்திரமலையில் சிவபெருமான் தட்சணாமூர்த்தியாய் அதாவது தென்முகக் கடவுளாய், குருமூர்த்தமாய் கல் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகர், சனாந்தரர், சனற்குமாரர், ஆகிய நான்கு தமிழ் முனிவர்களுக்கு நான்மறைகளை அருளினார் என்று தமிழர்களின் சமயநூற்கள் கூறுகின்றன. அதனால் சிவபெருமானை ஆலமர் கடவுள் என்று இன்றும் போற்றி வருகின்றார்கள். நமது திருவாசகத்தில் மாணிக்கவாசகர், நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறம் உரைத்தான் காணேடி என்று கூறியுள்ளார். தேவாரத்தில் அப்பர், கல்லால நிழல் மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்று எல்லாஅறனுரையும் இன்னருளால் சொல்லினான் என்றும் கூறியுள்ளார். இவை நமக்கு நல்ல சான்றாக இருக்கிறது. மேலும் மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் - என்ற திருவாக்கு அதை உறுதிப்படுத்துகிறது. ஆலமரம், தமிழர்களின் உள்ளத்திற்கு உகந்ததாயும் கருத்தைக் கவர்ந்ததாயும் இருந்தது. அணுப் போன்ற ஒரு சிறிய கடுகுபோன்ற விதையினின்று எழுந்த ஒரு நீண்ட பரந்த பெரிய மரம் தன் நீண்ட கிளைகளைத் தாங்க இடை இடையே விழுது விட்டு நிலத்தைத் தொட்டு, வேர்விட்டுள்ளது. பெரிய பந்தலைத் தாங்க இடை இடையே தூண்கள் நட்டியது போல் விழுதுகள் வேர்விட்டு மரம் எவ்வளவு பெரிதாகப் படர்ந்தாலும் கிளைகள் நொடிந்து விழாமல் தாங்கி நிற்பதையும் பன்னூறு மக்கள் அதன் அடியில் தங்கி அதன் நிழலை நுகர்ந்தும் பழத்தைத் தின்று மகிழ்வதையும் தமிழர்கள் கண்டு வியந்தனர். ஆலமரத்தையும் அதன் பயனையும் அறிந்து அதனைப் புனித மரமாக எண்ணிப் போற்றினர். ஆல மரத்தின் அடியில் மண்ணைக் குவித்து மேடாக்கி அதைச் சமதளமாகச் செய்து, அந்தச் சமதளமாக உள்ள குரட்டின் நடுவில் ஒரு முக்கோண வடிவிலான கல்லையோ, அல்லது நீண்ட மரக்கட்டையையோ, நட்டு வழிபட்டு வந்தனர். முக்கோண வடிவமான கல் தாயின் சின்னமாகவும், நீண்ட மரக் கொம்பு தந்தையின் சின்னமாகவும் கருதப்பட்டது. உலகில் முதலில் தாய் ஆட்சியும் தாய் வழிபாடும் நிலவியது. அப்பால் தந்தை ஆட்சியும் தந்தைத் தெய்வ வழிபாடும் நிலவியது என்று பல சமூக இயல் நூலை உணர்ந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஊர் தோறும் ஆலமரத்தின் அடியில் திருஉருவம் அமைத்து வழிபடும் ஒரு மரபு தமிழகத்தில் எழுந்தது. இந்த வழிபடும் இடம் பொது இல் எனப்பட்டது. அப்பால் அது அம்பலமாக மாறியது. அம்பலத்தில் தெய்வத் திருஉருவம் இடம்பெற்றது. அம்பலத்தில் தெய்வம் உறையும் தறியாகிய தூண் ஒன்று நடப்பட்டது. நீராடித் தூய்மை யுடையோராய் மகளிர் அம்பலத்தை அடைந்து மெழுகி, கோலமிட்டு, நந்தா விளக்கேற்றி மலர் தூவி போற்றி வழிபட்டு வந்தனர். பின்னர் பகைவர்கள் ஊரினின்று சிறைபிடித்து வந்த மகளிரையும் இந்த வழிபாட்டில் ஈடுபடச் செய்தனர். ஊருக்குப் புதியவர்கள் வந்தால் அம்பலத்தில் தங்குவதும் உண்டு. பட்டினப்பாலை என்னும் பழம் பெரும் சங்க நூல் அடியில் வருமாறு கூறுகிறது. கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப்பலர் தொழ வம்பலர் சேர்க்கும் கந்துடைப் பொதியில் - இப்பாட்டிற்கு நச்சினார்க் கினியர், பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த மகளிர் பலரும், நீருண்ணுந் துறையிலே சென்று முழுகி, மெழுகும் வழக்கத்தினையும் அவர்கள் அந்தி காலத்தே கொழுத்தின அவியாத விளக்கத்தினையும் நறுமணம் நாறும் நல்ல பூக்களையும் சூட்டிய தறியினையுடைய அம்பலம் என்று கூறுகிறார். கந்து தெய்வம் உறையும் தறியாகும். வம்பலர் சேர்க்கும் பொதியில் புதியவர்கள் பலரும் ஏறித் தொழுவதற்கும் தங்குவதற்கும் உரிய இடமாயிற்று பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்ப மகளிரை வைத்தார். அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதினர் என்று விரிவுரை தரப்பட்டது. இவ்வாறு தமிழர்கள் ஊர் தோறும் ஆலமரத்தின் அடியில் கந்தினை வைத்து வழிபட்டு வந்தனர். ஆலமரத்தின் அடியில் கந்து வைத்து வழிபடும் இடம் ஆலமுற்றம் எனப்பேர் பெற்றது. ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கண் செல்வம் ஆலமுற்றம் கவின் பெறத் தை இய பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர் - எனப் புறநானூற்றுச் செய்யுள் புகழ்கிறது. ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் வேல்கெழு குரிசில்கண் டேன்ஆகலின் என்ற புறநானூற்றுச் செய்யுளும் ஆலமரத்தின் அடியில் அரனாரின் திரு உருவை வைத்து வழிபடுவது பண்டைக் காலத் தமிழர் மரபு என்பதை நன்கு புலப்படுகிறது. ஆதிகாலத்தில் தமிழர்கள் ஆலமரத்தின் அடியில் கந்துவை வைத்து வழிபட்ட வழக்கம் நீண்ட காலமாக அவர்கள் குமுகாயத்தை விட்டு அகலவில்லை. ஆலமரங்கள் இல்லாத ஊரில் தங்கள் ஊரில் உள்ள வேறு மரங்களின் அடியில் தெய்வ உருவங் களை வைத்து வழிபட்டு வந்தனர். தமிழர் குமுகாயம் வளர்ச்சி பெற்று கோயில்கள் கட்டி அதன் உள்ளே தெய்வ உருவங்களை வைத்து வழிபடும் நாகரிகம் எழுந்த காலத்தும் அவர்கள் ஆதிகாலத்தில் தெய்வ உருவங்களை வைத்து வழிபட்ட மரத்தை மறக்கவில்லை. அதை தல விருட்சமாகக் கொண்டு கோயிலுள் அதற்கு ஒரு சிறப்பான இடம் அளித்துள்ளனர். திருப்புத்தூரில் தலவிருட்சம் கொன்றை, அகத்தியான் பள்ளியில் தல விருட்சம் வன்னிமரம், திருவாடானையில் தல விருட்சம் வில்வமரம், திருஆமர்த்தூரில் தல விருட்சம் வன்னி மரம், திருஆனைக்காவில் தல விருட்சம் வெண்ணாவல், திருகள் என்றும் ஊரின் தல விருட்சம் பாரிசாதம், சிக்கல் என்னும் ஊரின் தலவிருட்சம் மல்லிகை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தலவிருட்சம் மூங்கில், திருக்குற்றாலத்தில் தலவிருட்சம் பலாமரம்; திருவீழிமிழலையில் தல விருட்சம் வீழிச் செடி; மதுரையில் தல விருட்சம் கடப்பமரம்; திருப்பாதிரிப் புலியூரில் தல விருட்சம் பாதிரி மரம், திருப்புகலூரில் தல விருட்சம் புன்னைமரம்; திருமழபாடியில் தலவிருட்சம் பனைமரம்; திருநெல்லிக்காவில் தலவிருட்சம் நெல்லிமரம்; இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மரம் தல விருட்சமாக உள்ளது. இது திருக்கோயில் எழுமுன் ஆதியில் மரத்தின் கீழ் தெய்வ உருவம் வைத்து வழிபடப்பட்டது என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. ஆலமும் கடம்பும், நல்யாற்று நடுவும் கால் வழக் கறுநிலைக் குன்றமும் என்ற பரிபாடல் செய்யுளும், காடும் காவும் கவின் பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங்கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையும் என்ற திருமுருகாற்றுப் பாடலும் முற்காலத்தில் மரங்களின் அடியில் காடுகளிலும் மேடுகளிலும், ஆற்றங்கரைகளிலும், குளக்கரை களிலும், கடற்கரைகளிலும் குன்றுகளிலும், மன்றுகளிலும் தெய்வ உருவங்கள் வைத்து வழிபடப்பட்டு வந்தன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. பெரிய நாகரிகம் எழுந்த இக்காலத்தும் பெரும்பாலான தெய்வத்திரு உருவங்கள் மரங்களின் அடியிலே இருந்து வருகின்றன. பெரும்பாலும் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று பிள்ளையார் உருவங்கள் இருக்கும். அவைகள் பெரும்பாலும் வேம்பு, அரசு மரங்கள் அடியிலே இருந்து வருகின்றன. சில ஊர்களில்தான் பிள்ளையார் கோயிலில் இடம் பெற்றுள்ளார். இஃதன்றி தமிழ் நாட்டில் பல தாய்த் தெய்வங்கள் உள்ளன. அவைகள் பெரும்பாலும் நான்கு புறமும் சுவர் எழுப்பப் பெற்று மேலே சட்டமும் விட்டமும் வைத்து மல்லுக் கைகள் வைத்து ஓடுகள் வேய்ந்த கூரைக் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இன்றும் சிற்றூர்களிலும், ஏன்? பேரூர்களிலும் சில தாய்த் தெய்வங்களுக்கு அடி பெருத்தும் நுனி சிறுத்தும் சதுரத் தூண் வடிவில் 4, 5 அடிமுதல் 8 வரை மண்ணால் கட்டப் பெற்றோ, அல்லது செங்கற்களால் கட்டப்பெற்றோ மேலே சுண்ணச்சாந்து பூசப்பெற்ற பீடங்கள் உள்ளன. சில பீடங்களில் தெய்வ உருவங்களும் பலவித வண்ணத்தில் தீட்டப் பெற்றுள்ளன. ஆதிகாலத்தில் ஒன்று அல்லது நான்கு ஐந்து ஆக இருந்த தெய்வங்கள் பலவாகி ஆயிரக்கணக்கான கோயில்களைப் பெற்றுள்ளன. இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூல்கள் 1. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் - சாமி சிதம்பரனார் - சென்னை 1961. 2. தொல்காப்பியம் - கழக வெளியீடு. 3. தொல்காப்பியப் பொருளதிகார உரை. கா. சுப்பிரமணிய பிள்ளை M.A., M.L., 4. இராமாயணம் - கம்பன் 5. The History of the Aryan rule in India E.B. Havell 6. Hinduism - Baba Govinda Das 7. Burried Empire - Patric empire 8. Comparative grammar of Dravidian Language - R. Caldwell 1913. 9. Mohenjo - Daro and the Indus civilization Sir. John Marshall Vol. I. 10. திருவாசகம் - மாணிக்கவாசகர். 11. தேவாரம் - திருநாவுக்கரசர். 12. புறம் நானூறு - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு 13. பரிபாடல் - உ. வே. சாமிநாத ஐயர் பதிப்பு 1946. 14. திருமுருகாற்றுப்படை - ஆறுமுக நாவலர். 1909 15. பன்னிரு திருமுறை வரலாறு. க. வெள்ளை வாரணன் அண்ணாமலைநகர் 1961. கட்டிடக் கலை கவின் கலைகளில் கட்டிடக் கலை ஒன்று. கட்டிடக் கலையைவிட, மக்களுக்கு இன்றியமையாத கலை எதுவும் இல்லை. மக்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வெய்யில் மழை, காற்று இன்னோரன்ன இயற்கையின் கோபத்திற்குத் தப்புவிக்க மனிதன் உறையுளை உருவாக்கினான். முற்காலத்தில் இல்லங்கள் மக்களைக் கொடிய விலங்குகளின் பசிக்கு தப்பும் அரண்களாவும் விளங்கின. ஆதிகாலத்தில் மனிதன் காடுகளில் விலங்குகளின் நடுவே, விலங்குகள் போல் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அக்காலத்தில் உடுக்க உடையும், படுக்கப் பாயும் உண்ண உணவும், ஒண்டக் குடிசையும் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தான். அவன் உயிரை ஓம்ப உடலைப் பாதுகாக்கத் தலைப்பட்டான். உணவுப் பொருள்களைச் சேகரிக்க முற்பட்டான். விலங்குகளை எதிர்த்து வெட்டவும், மரஞ்செடி கொடிகளைத் துண்டிக்கவும், மரங்களி லுள்ள பழங்களை கீழே வீழ்த்தவும் கற்களைப் பயன்படுத்தவும் முன் வந்தான். கல் அவனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும், சிறப்பிற்கும் நாகரிகத்திற்கும் துணையாக இருந்தது. மக்கள் நாளடைவில் படிப்படியாக நாகரிகம் அடைந்தனர். அறிவு வளர்ச்சி பெற்றனர். வசிக்க வீடும் புசிக்க உணவும் உண்டாக்கிக் கொள்ள உணர்ந்தனர். விலங்கின் ஒரு பிரிவாக வாழ்ந்த மனிதன் அறிவாற்றல் பெற்று நாகரிக வாழ்க்கையை எய்தினான். அவன் நாகரிக வாழ்க்கையை அடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உடை உறையுள் ஆகியவற்றைப் பெற இடைவிடாது முயன்றான் அவனது அரிய முயற்சியின் பயனாய் பலவிதத் தொழில்களை உணர்ந்தான். முதலில் அவன் பயிர்த் தொழிலைத் தொடங்கினான். அப்பால் நூல் நூற்கவும் நெசவு நெய்யவும், வீடு கட்டவும் வழிகண்டான். அவனது பட்டறிவின் பயனாக தொழில்கள் பல நாட்டில் உருப் பெற்றெழுந்தன. ஒரு தொழிலை உணர்ந்து அதை நிறைவான தொழிலாக விளங்கச் செய்வதற்கு மனிதன் பன்னூறு ஆண்டுகளைக் கடக்க நேர்ந்தது உலகில் மனிதன் பல தொழில்களைப் படைத்தான். அவன் தொழில்களைப் படைப்பதற்கு உயர்ந்த கருவிகளை உருவாக்கினான். அவன் கண்ட தொழிலுக்கு இன்றியமையாத உயர்ந்த மூலப்பொருள்களைக் காண பல இடங்களுக்கும் சென்று அலைந்து திரிந்துள்ளான். அப்பால் அவன் அரிதிற் கண்ட தொழில்களை எளிதாக முடிக்கவும் எழில் பெறச் செய்யும் முயற்சி செய்தான் அவனது முயற்சியில் அவன் பெரிய வெற்றியை ஈட்டினான். அவனது கைவண்ணம் மெய்வண்ணத்தையும் வென்றது. சிற்பத் தொழிலாளி தெய்வம் போல் உயர்ந்தான். அவன் படைத்த சிற்பப் பொருள்கள் இயற்கையையும் வென்றன. அவன் தெய்வத்தை யும் விஞ்சி விட்டான் என்று புலவர்கள் புகழ் மாலை சூட்டினர். மனிதன் ஆதியில் உணவுப் பொருளைச் சுட்டுத்தின்னத் தொடங்கினான். அப்பால் அதை நெய்யிலிட்டு வதக்கிச் சாப்பிடவும், உப்பு, புளி, மிளகு முதலியவற்றைச் சேர்த்து அறுசுவையுடன் உண்ணவும் தெரிந்தான். அவன் மெல்லிய நூலை நூற்கவும், அழகிய ஆடைகளை நெய்யவும், துணிகளுக்கு சிவப்பு, மஞ்சள், கருப்பு, நீலம், ஊதா போன்ற எண்ணிலா வண்ணங்களை ஊட்டவும் வழி கண்டான். ஆடைகளில் பறவை, விலங்கு, செடி, கொடி, இலை, பூ, காய் போன்ற உருவங்களைத் தீட்டி எழில் மிகும் உடைகளை அணிய முன் வந்தான். பட்டாடைகளையும், கம்பளி ஆடைகளையும் செய்து அணிந்து அகமகிழ்ந்தான். அவன் ஆதியில் ஓலைக் குடிசைகளைத் தான் கண்டான். அப்பால் மண் சுவர்களை நாற்புறமும் எழுப்பி மேலே ஓலைகளால் கூரை வேய்ந்து அதில் உறைந்தான். பின் மரவீடுகளையும், செங்கல்லும் சுண்ணாம்பும் கலந்து சுவர் எழுப்பி மேலே மரத்தினால் சட்டமும் விட்டமும், மல்லுகளும், பட்டியல்களும் அமைத்து கூரைக்கு ஓடு வேய்ந்தான். பின்னர் சுவர்களின் மீது உத்தரமும், கட்டைகளும் வைத்துக் கட்டி செங்கல்லும் சுண்ணாம்பும் சேர்த்து மேற்றளம் இட்டு மட்டப் பாய் வீடுகளைக் கட்டினான். பிறகு ஒன்றிரண்டு மாடிகளையும் அமைத்தான். வீடுகளில் தூண்களும், பலகணிகளும், நிலைகளும், கதவுகளும், உத்தரமும், கட்டைகளும், பலகைகளும், போதிகைகளும் இடம் பெற்றன. வீடுகள் முற்றம், தாழ்வாரம் பட்டாலை, இரண்டாம் கட்டு, அரங்கு, துயிலிடம், அடுக்களை, பண்டக சாலை, நிலா முற்றம் போன்ற உறுப்புகளைப் பெற்றன. கட்டிடம் சிற்றில்லம், மாளிகை, அரண்மனை, கோயில், களஞ்சியம், அரண் போன்று பலவகையாய் வளர்ச்சியுற்றது. மனிதன் தான் கண்ட எல்லாத் தொழிலிலும் எல்லாத் துறையும் நுண்ணுணர்வைச் செலுத்தி அவைகளை அழகு பெறவும், சுவையுறவும், உறுதி பொலியவும், இனிமை செறியவும் செய்தான். இவற்றை மனிதன் கலை என்று கூறினான். மக்கள் கண்ட உணவு, உடை, உறையுள் போன்றவைகளில் மட்டுமல்ல மருத்துவம், ஓவியம், நாடகம், நாட்டியம், எழுத்து, மொழி, இசை போன்றவை அனைத் திலும் கலையைப் புகுத்தினான். கலை எட்டாக எழுந்து எட்டெட்டாக அறுபத்து நான்காக மலர்ந்து நூற்றெட்டாக உயர்ந்து இன்று ஆயிரத் தெட்டாக வளர்ந்து மேலும் எண்ணற்ற தாக விரிந்துள்ளது. மக்களது அக உணர்ச்சியின் தெளிவான நிலையினின்றே பெருக்கெடுத்து வெளித் தோன்றும் சீரிய கலை உணர்ச்சியின் பயனாகத்தான் உலகம் கண்டு வியந்து போற்றும் உலகில் ஒப்பற்ற சிந்து வெளிப் பண்பாடு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் மலர்ந்தது. அழகுணர்ச்சியின் அரிய நுணுக்கமே அவனி போற்றும் அஜந்தா ஓவியமாக உருப்பெற முடிந்தது. கலையின் நுண்ணிய எழுச்சியே எல்லோராக்குகைச் சிற்பமாக காந்தாரக் கவின் சிற்பமாகத் துளிர்த்தெழுந்தது. தமிழ் நாட்டுச் சிற்பிகளில் கைவண்ணச் சிறப்பே தில்லை ஆட வல்லனாய், நெல்லைக் கூத்தனாய், கோனேரிராசபுரம் அம்பலவாணனாய் எழில் பெற்றிலங்கும்படி செய்தது. சோழ நாட்டு கட்டிடக் கலை வல்லுநர்களின் அளப்பறிய சிற்பச் சிறப்பே தஞ்சைப் பெருவுடையார் கோயிலாக உலகில் ஒப்பற்ற விண்முட்டும் விமானமாய் எழுந்தோங்கும்படி செய்தது. கட்டிடக் கலை மக்கள் கண்டகவின் கலை ஒன்று. அது நன்றான நாகரிகக் கலை என்றும் கூறலாம். கட்டிடக் கலை, மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத ஏற்றமுற்ற எழிற்கலை என்றும் சொல்லலாம். கட்டிடக் கலையில், தொழில் நுட்பம், அழகு, கற்பனை ஆகிய மூன்று உயரிய நிலைகளை ஒருங்கே பெற்ற ஒப்பற்ற கலையாயிற்று. கட்டிடம் கட்டுவதற்கு செங்கல் செய்யும் தொழில், கொத்து வேலை, தச்சுவேலை, இரும்பு வேலை, கட்டிடப் படம் வரையும் வேலை முதலிய தொழில்களின் நுட்பம் தெரிந்திருக்க வேண்டியதாயிற்று கட்டிடம் உறுதியாகவும் உயரமாகவும், விசாலமாகவும் மட்டும் இருந்தாற் போதாது. அதில் வாழ்பவர்களின் வசதிக்கு உரியதாகவும், சுகாதாரத்திற்கு ஏற்றதாகவும் உள்ளத்திற்கு உவகை அளிப்பதாகவும் எழில் நலம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். உறையுள் கட்டிடச் சிற்பமாகச் சிறந்திருக்க வேண்டும் என்றால் அது காண்பவர்களின் கற்பனையைத் தூண்டத் தக்கதாகத் துலங்க வேண்டும். கற்பனை பலவகைகளில் தூண்டப் பெறலாம். சில கட்டிடங்கள் வரலாற்றுத் தொடர்பால் கற்பனையைக் கவரலாம். சில கட்டிடங்கள் அதன் புனிதத் தன்மையால் மக்கள் உள்ளத்தைக் கவரக் கூடும். கற்பனையைத் தூண்டக் கூடிய கட்டிடங்களையெல்லாம் கட்டிட சிற்பம் என்று கூற முடியாது. கவர்ச்சி அழகின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். கட்டிடம் சிறிதாகவோ, பெரிதாகவோ, புதிதாகவோ, பழையதாகவோ, குள்ளமாகவோ, உயரமாகவோ-எப்படியும் இருக்கலாம். ஆனால் அது அழகு அமைந்ததாய் சிற்ப நுட்பம் செறிவதாய் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அது கட்டிட சிற்பம் என்று அழைக்கப்படும். அழகு என்பது கற்பனையை தூண்டும் வேலைப்பாட்டைக் குறிப்பதாகும். ஒரு நாட்டுக் கட்டிடச் சிற்பக் கலை வளர்ச்சிக்கு மூலதாரமாய் அமைந்துள்ளது அவர்கள் சமயங்களாகும். அவை கட்டிடக் கலை வளர்ச்சிக்கு அடி கோலியது பொன்னே போல் போற்றி வளர்த்தது. மேலும் அது சிறப்பாகக் கோயில் கட்டிடக் கலையைப் பேணிவளர்த்தது. சமயம் வளர்த்த கோயில்கள், படிமக்கலைக்கு உறைவிடமாய் இருந்தன. கோயில்கள், இசை, நாடகம், நாட்டியம், கணிதம், உணவு, அணிகலன், திருவிளக்கு, ஆடைகள், கல்வெட்டு, செப்பேடுகள், இசைக் கருவிகள், வெள்ளி, செம்புப் பாத்திரங்கள், ஓவியம் இன்னோரன்ன எண்ணிலாக் கலைகளையும் வளர்த்தன. அவற்றை கலைப் பொருள்களைக்காக்கும் கலை அரண்கள் என்று கூறினும் சாலப் பொருந்தும். இந்தியக் கட்டிடக் கலை ஆய்வுத் துறை வல்லுநராக மதிக்கப்படும் அறிஞர் திரு. பெர்கூசன் அவர்கள், கடவுள் வழிபாட்டிற்காகக் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆர்வமே எல்லோரும் வியந்து போற்றும் கட்டிடங்கள் தோன்றுவதற்கு மூலாதாரமாய் இருந்தது என்று கூறியது ஆழ்ந்த கருத்துடையதாகும். இறைவன் உறைவதற்கு ஏற்ற இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் கலை வளர்ச்சிக்கு இன்றியமையாத கருப்பொருளை உண்டாக்கியது. அந்த மாபெரும் நோக்கத்தின் தூண்டுதல் எண்ணிலாக் கோயில்களை எழுப்பியது. மன்னர்களும் மக்களும் கவின் பெறும் கலைக் கோயில்களை உருவாக்கினர். எனவே கோயில், எல்லாக் கட்டிடங்களையும் விட கவினுறும் வனப்புள்ளதாய், என்றும் பொன்றாத உறுதியுள்ளதாய் உலகம் வியக்கும் உயர்ந்த நிலையில் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டில், சோழப் பேரரசன் கோச்செங்கணான் எழுபது மாடக் கோயில்களை எடுப்பித்தான். இராசராசன் உலகில் உயர்ந்த விமானத்தையுடைய தஞ்சைப் பெருவுடையர் கோயிலை எடுப்பித்தான். இது பக்தியின் சின்னம். மொகலாய மன்னன் ஷாஜகான் தன் மனைவியின் நினைவாக உலகிலே விலையுயர்ந்த அழகிய மணி மாளிகையாக மதிக்கப் பெறும் தாஜ்மகாலை எழுப்பினான். இது காதலின் சின்னம். இரண்டும் இந்தியக் கட்டிடக் கலையின் கண் எனக் கருதப்படுபவை. உலகிலே பக்தியும் காதலும் உலகில் உயர்ந்த கட்டிடக் கலைகளை எழுப்புவதற்கு அடிப்படையாய் இருந்தன என்பது நன்கு தெரிய வருகிறது. தமிழ் நாட்டு மன்னர்கள் சம்பந்தபட்ட மட்டில் அவர்களின் அரண்மனைகள் என்று கூறத்தக்கவைகள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் எழுப்பிய கோயில்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அழியாது நிலைத்து நிற்கின்றன. நமது மாமன்னர்கள் தங்களுக்கு உயர்ந்த அரண்மனையை அமைத்திருந்தனர்களா? சின்னஞ் சிறு கல்லில் வாழ்ந்திருந்தனரா என்ற ஐயப்பாட்டைக் கூட எழுப்புவதாக உள்ளது. அது எவ்வாறாயினும் இருக்கட்டும், அவர்கள் தங்களுக் கென்று விலையுயர்ந்த கோயில்களை (அரண்மனைகளை) அமைப்பதை விட இறைவனுக்கென்று கோயில் அமைப்பதிலும், அவை என்றும் நிலைத்து நிற்பதிலும் அது உலகம் உள்ளளவும் இருந்து எப்பொழுதும் பூசை, நைவேத்தியங்கள் நடைபெறுவதிலும் அதிக அக்கரை கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் கோயில்களுக்கு அளித்த நிபந்தங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் நன்கு எடுத்துக்காட்டுபவையாக உள்ளன. உலகிலே இந்தியாவில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன. அதிலும் என்றும் அழியாத கற்கோயில்கள் உயரிய சிற்பங்களை யுடைய அழகிய கோயில்கள் உண்டென்று எல்லா நாட்டறிஞர்கள் கருதுகின்றார்கள். உலகிலே உயர்ந்த கட்டிடங்களையும், திருக்கோயில்களை யும், அரண்களையும் அமைக்கும் பண்பும் மரபும் திறனும் திராவிட இனத்திற்கே உண்டு. உலகிலே எந்த நாட்டிலாயினும் ஆயிரம் ஆண்டிற்கு முன் உள்ள கட்டிடங்கள் இருக்கிறது என்று கூறப்பெற்றால் அது நிச்சயம் திராவிடர்களால் அல்லது அவர்களது இரத்த சம்பந்தமான உறவினர்களால் எடுப்பிக்கப்பட்டதாக இருக்கும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது தந்தையார் திரு.வடி. அருணாசலக்கவிராயர் அவர்கள் கூறினார்கள். அன்று அவர்கள் கூறிய கூற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று அவர்களது வார்த்தையில் 100க்கு 100 சதவிகிதம் உண்மையிருக்கிறது என்று நம்புகிறேன். கவின் பெறும் கட்டிடம் எது? சிறந்த கலை எது? மக்களுக்கு இன்றியமையாத பணி எது? என்பது காலத்திற்குக் காலம் மாறு படும். நாட்டிற்கு நாடு மாறுபடும். இனத்திற்கு இனம் வேறுபடும். மக்களின் எண்ணம், நோக்கம், அழகுணர்ச்சி அவர்களின் அறிவு வளர்ச்சி, பொருளாதார நிலை, தட்ப வெப்ப நிலை, கிடைக்கக் கூடிய பொருள்கள் நாகரிகம் போன்றவை கட்டிடச் சிற்பத்தின் அமைப்பை, தரத்தை நிர்ணயம் செய்யத் துணையாய் இருந்து வந்துள்ளன. பண்டைக் காலத்திய எகிப்திய நாட்டு மக்களின் வாழ்க்கை அறிவுலகம் என்றும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாய் அமைந்துள்ளது. ஒரு புறம் கொடிய கோர நிலையையுடைய பாலைவனம். மற்றொரு பக்கம் எங்கும் பசுமையை பரப்பி எழில் தரும் செடி கொடி களையும், கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களையும், திரண்ட காய்களையும், பழுத்துத் தொங்கும் இனிய பழக் குலைகளையும், உயர்ந்த உணவுப் பொருளான வாற் கோதுமை வயல்களை பிற வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை செழித்து வளரச்செய்யும் Ús(Neela) நீல ஆற்றங்கரைகளில் உள்ள ஊர்களிலும் அதை அடுத்துள்ள நகர்களிலும் சிற்றூர் களிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் திராவிட இனத்தின் நெருங்கிய உறவினர்கள். அதை அவர்கள் சமயமும், தெய்வங்களும், மொழியும் பண்பாடும் வரலாறும் கலைகளும் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் சாவிற்கு அஞ்சியதில்லை. மரணம் ஒரு முடிவான நிலை என்று நம்பியதில்லை. உயிர் உடலை விட்டுப் பிரிவது உண்மை. ஆனால் அது உயிரின் இறுதிநிலை அல்ல. சாவு உயிர்களுக்கு எழும் ஒரு மாற்று நிகழ்ச்சியைத் தவிற வேறல்ல. ஒருவனுடைய உயிர் உடலை விட்டு நீங்கிய பின் - அதாவது இவ்வுலகைத் துறந்தபின் வேறு உலகிற் சென்று எல்லா வாழ்க்கை நலத்தையும் பெற்று இன்புற்று வாழ்ந்து வரும் என்பது பண்டைய எகிப்திய மக்களின் நம்பிக்கை. எனவே அவர்கள் உயிர்துறந்த பின்னரும் உடலை கெடாதவாறு மருந்திட்டு பெட்டிகளில் வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருள்களை யெல்லாம் வைத்து புதைத்து சமாதி எழுப்பினர். அன்று அவர்கள் எழுப்பிய சமாதிகளின் கோபுரங்களே (பிரமிடுகளே) கோயில்களாக மலர்ந்தன. நிலையான பேறும் உறுதியும் எகிப்திய மக்களின் குறிக்கோளாக இருந்தன. அவர்கள் திராவிடர்களைப் போல் பெரிய கல் தூண்கள் விட்டு, கல் உத்தரங் களை வைத்து பெரிய கட்டிடங்களை எழுப்பினர். அவர்கள் நாட்டில் தகுதியான கற்கள் கிடைக்கவில்லை. வெளிநாடு களினின்று மிகுந்த சிரமப்பட்டு கற்களைக் கொண்டு கல்லாலான சமாதிக் கோபுரங்களை எடுப்பித்தனர். சாவக நாட்டிலுள்ள பெருங்கோயில்கள் அனைத்தும் மன்னர்களின் சமாதிகளின் மீதே எடுப்பிக்கப் பெற்றுள்ளது; தமிழ் நாட்டிலுள்ள பல பழைய கோயில்கள் சித்தர்கள் சமாதியின் மீது எடுப்பிக்கப் பெற்றவை என்று இன்னின்ன சித்தர்கள் சமாதியின் இன்னின்ன ஊர்க் கோயில் எழுப்பப் பெற்றுள்ளன என்றும் சில அறிஞர்கள் விளக்கந் தந்துள்ளனர். இதன் மூலம் எகிப்திய நாகரிகம், திராவிட மரபை அடிப்படையாகக் கொண்டது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது எனத் தெரியவருகிறது. கிரேக்கர்கள் இயற்கை எழிலும், எண்ணற்ற வளமும் வாய்ந்த நாட்டில் வாழ்ந்த மக்கள். அழகும், உண்மையும் கிரேக்கர்களின் பண்பாட்டில் இருகண்களாக நிலவின. அவர்கள் கலைகளில் அழகும் மெய்யும் இணைந்து ஏற்றமுற்று இலங்கின. அவர்கள் நாட்டிற் கிடைத்த சலவைக் கற்களால் கோயில்களையும், கட்டிடங் களையும் அமைத்து கட்டிடக் கலைக்கு சிறப்பூட்டினர். கிரேக்கர் களின் கட்டிடக் கலையிலும், சிலைக்கலைகளிலும் மென்மையும் திண்மையும், நயமும் பொலிவுற்றன. திராவிடர்கள் தெய்வ நம்பிக்கை வாய்ந்தவர்கள். உடலை இறைவன் வாழும் கோயிலாக எண்ணுபவர்கள் இதனை நடமாடுங் கோயில் என்று அவர்கள் மறைநூல்கள் கூறுகின்றன. என்றும் அழியாது நிலை பெற்றிருக்கும் இறைவனுக்கு என்றும் அழியா உறைவிடமாக குகைக் கோயிலையும் குடை வரைக் கோயிலையும் கற்றளிகளையும் அமைத்தவர்கள் ஆண்டவன் அழிவற்றவன் அவன் உறையும் கோயிலும் அழிவற்றது என்று உலகிற்கு மெய்ப் பித்தவர்கள். கல்லால் அடிப்படையும், தளமும், சுவர்களும், தூண்களும், உத்தரமும், பாவு கல்லும் கொண்டு கோயில் அமைத்தவர்கள். உலகம் அழியினும் தான் அழியாது நிற்கும் தனித் தன்மை பெற்ற தங்கள் இறைவனை வழிபட நிலையான கோயில்களை உருவாக்கியவர்கள் திராவிடர்கள் என்று உலகக் கோயில் வரலாற்றில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். திராவிட மக்கள் படைத்த விண்முட்டும் விமானங்களும், முகிலளாவும் கோபுரங்களும் திராவிடர்களின் உயர்ந்த கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரு உயரிய சின்னம் போல் திகழ்கின்றன. உலகில், மக்கள் வாழும் பல்வேறு பகுதிகளிலும் தொன்மை யான காலத்திலே தனித்தனியே கட்டிடக் கலை எழுந்துள்ளது. அது அன்றையச் சூழ்நிலைகளுக்கேற்பவும், மக்களின் தேவைகளுக் கேற்பவும் வளர்ந்துள்ளது. பழங்கால கட்டிடங்கள், அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், அவற்றின் அழிபாடுகள் அம்மக்களின் அறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, சமயம் முதலியவற்றை அறிந்து கொள்ளத் துணையாக இருக்கின்றன. ஆதிகாலக் கட்டிடக் கலையிலும் இடைக்காலக் கட்டிடக் கலையும், கட்டிடக் கலைச் சிற்பமும் அழகும், உறுதியும் உள்ளவை களாய்த் திகழ்கின்றன. அரசர்களும், நிலக்கிழார்களும், வணிகர் களும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்தனர். என்றாலும் கலை வளர்ப்பதிலும் கண்ணோட்டம் செலுத்துபவர்களாய் இருந்தனர். அரசர்களின் ஆதரவைப் பெற்று சிற்பிகள் தங்கள் கல்வி அறிவை யும் கலை அறிவையும், கற்பனைத் திறனையும் பயன்படுத்தி சிறந்த கட்டிடங்களையும், ஒப்பற்ற ஓவியங்களையும், சீரிய சிலைகளை யும், பாவங்கள் ஒளிரும் படிமங்களையும் படைத்து தெய்வம் உறையும் திருக்கோயில்களையும் அரசன் வாழும் அரண்மனை களையும் அழகு பொலிய அமைத்துள்ளனர். இது நிலக்கிழார்கள் தங்களின் பிரபுத்துவ நிலையை என்றும் நிலை பெற்று நிற்கச் செய்த தந்திரம் என்பர் சிலர் முற்போக்கு எழுத்தாளர்கள். இன்று, உலகில் உள்ள எல்லா நாடுகளும் அண்மையில் உள்ள நாடுகளைப் போல் நெருங்கித் தொடர்பு கொள்ளத் தொடங்கி யுள்ளன. ஒளியையும் ஒலியையும் விட வேகமாகச் செல்லும் விண்ணூர்தி சிலமணி நேரங்களில் உலகைச் சுற்றி வருகின்றது. ஒருவாரத்திற்குள் திங்களை அடைகின்றன. சில திங்களுக்குள், செவ்வாய், புதன், வியாழன் போன்ற கோள்களை அடைகின்றன. அங்குள்ள நிலைகளைப் பூமியில் உள்ள மக்களுக்கு உணர்த்து கின்றன. உலகம் அனைத்திற்கும் பொதுவான காங்கிரிட் போன்ற கட்டிடப் பொருள்கள் பயன்படுகின்றன. சிற்பம், ஓவியம் போன்ற கலையணிகள் நிறைந்த கவினுறும் கட்டிடங்கள் எங்கும் எழுப்பப் பெறுகின்றன. மக்கள் வாழ்க்கையில் எழுந்துள்ள கல்வி, குடியிருப்பு, அரசாட்சி முதலியவைகளுக்கு ஏற்ப கட்டிடங்கள் உறுதியாகவும், வசதியாகவும், அழகாகவும் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆதியில் அரும்பியது தெய்வ திரு உருவங்கள் தான். தெய்வத் திரு உருவங்கள் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டு களுக்குப் பின்னர் திருக் கோயில்கள் எழவில்லை. ஆனால் தெய்வத் திரு உருவங்களை பெரிய மரங்களின் அடியில் வைத்தே வழிபட்டு வந்தனர். பெரியார் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் (முன்னாள் இந்து அறநிலையப் பாதுகாவற் கழகத்தின் ஆணையாளர்) இந்தியாவோ சமயத்தைக் கொண்டது ஆனால் தமிழ்நாடோ சமயத்திலும், சமய நிலையங்களைச் சிறந்த குறிக்கோளாகக் கொண்டு விளங்குகிறது வேறு நாட்டு அறிஞர்கள் எவர் இந்த நாட்டிற்கு வந்த போதிலும் இங்குள்ள சமய நிலையங்களைக் கண்டு மகிழ்ந்து வியந்து எழுதாதார் இல்லை. ஆகவே தமிழ் மக்கள் சமய நிலையங்களுக்கு வளர்ச்சி தந்து அவைகளைச் சீரிய முறையில் வைக்கப்படுவதையே குறிக் கோளாகக் கொண்டிருந்தார்கள் என்பதில் ஐயமில்லை சமய உணர்ச்சி எப்போது ஏற்பட்டது என்று சொல்ல இயலாது என்று எடுத்துக் காட்டியுள்ளார். மக்கள் இனத்தில் சமய உணர்ச்சி அவர்கள் கற்கால மக்களாய் இருக்கும் காலத்திலே துளிர்த்து விட்டது. தாயே ஆதியில் தன்னைப் பெற்றவளாய் காப்பவளாய் அரசியாய், மருத்துவச்சியாய், பாதுகாக்கும் தன்னலமற்ற கடவுளாய்க் காணப்பட்டாள். அவள் இறந்த இடத்தில் நடுகல் நாட்டி அவளை வழிபடத் தொடங்கினான் அப்பால் தந்தைக்கும், பெருஞ்சித்தர்களுக்கும், நினைவுகல் கட்டி வழிபடத் தொடங்கினோம். நீண்டநாட்களுக்குப் பிறகே நம்மைப் போல நமது சமூகத் தலைவர்களின் மாளிகையைப் போல் இறுதியாய் நமது அரசனின் அரண்மனையைப் போல் நாம் வழிபடும் தெய்வ உருவங்களுக்கு கட்டிடம் எழுப்பத் தொடங்கி னோம். நகரம், நியமம், கோட்டம், பள்ளி, ஆலயம் என்ற பதங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டன. கோயில் என்னும் பதம் கோ + இல் எனப் பிரித்து அரசன் வீடு என்னும் பொருளில் பயன்படுத்தி அப்பால் இறைவன் உறையும் இடத்திற்கே நிலையான பெயராக நிலைத்து நிற்கச் செய்து விட்டோம். ஒரு காலத்தில் மன்னனைக் கடவுளாக, அல்லது கடவுளின் அவதாரமாக எண்ணிய காலத்தில் அவன் உறையும் இடத்தைக் கோயில் என்று பயன்படுத்தியது தவறல்ல. அப்பால் மக்கள் அறிவு முதிர்ச்சியின் பயனாக மன்னன் தெய்வமாக முடியாது அவன் உறையும் இடம் தேவ கோட்டமாக தெய்வ உறையுள்ளாகவோ ஆக முடியாது என்ற எண்ணம் பிறக்கவே இறைவன் உறையும் இல்லம் கோயிலாகவும் அரசன் உறையும் மனை அரண்மனையாகவும் நிலைபெற்று விட்டது. இறைவனுக்கு எழிலார்ந்த இல்லங்களை அமைத்தது மிகத் தொன்மையான ஏற்பாடு. ஆதியில் மக்கள் அக நாழிகையை மட்டுமே அமைத்தார்கள். மக்கள் இறை உருவத்திற்கே இல்லம் கண்டார்களே யொழிய மக்கள் வெயிலுக்கும், காற்றிற்கும், வெப்பத்திற்கும், மழைக்கும் கோயிலோடு சேர்த்து இடம் அமைக்க வில்லை - அமைப்பது கூடாது என்றும் எண்ணினர். நமது கோயில்களின் அடிப்படையிலே சாஞ்சி, காஞ்சி, சாரநாத், பூரி போன்ற இடங்களில் பௌத்தர்கள் அக நாழிகையை மட்டும் அமைத்துள்ளார்கள். மெசபொத்தாமியா, எகிப்து, கிரீட் கிரீசு, உரோம், பாரசீகம், பெரு, மெக்சிக்கோ, ஆப்பிரிக்கா, சீனம் முதலிய நாடுகளில் நிலவி மங்கி மறைந்துபோன மதங்கள் சுமார் இருபது இருக்கலாம். இன்று உயிருடன் நிலவும் இந்து சமயம், பௌத்த சமயம், இலாமிய மதம், கிறித்துவ மதம், யூத மதம், சொராஷ்டடிரிய மதம், சிண்டே சமயம், கன்பூசிய மதம் டோவோ மதம், ஜைனசமயம் ஆகிய பத்து மதங்களைச் சிறப்பாகக் கூறலாம். இலாமிய சமயம் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் யூத கிறித்தவ சமயத்தின் அடிப்படையில் எழுந்த வயதில் குறைந்த சமயம், கி.மு. 1980-ஆண்டிற்கு முன் பிறந்த கிறித்துவின் வழியை யொட்டி எழுந்த சமயம் இலாமிய நெறிக்கு முன் தோன்றிய மதம், மற்றைய மதங்கள் எதுவாய் இருந்தாலும் இன்றைக்கு 2500 -ம் ஆண்டிற்கு முற்பட்டவைகளே. இறைவனை வழிபடும் இடங்கள் என்னும் பொருளில் எல்லா மதங்களுக்கும் கோயில்கள் எடுப்பித்து அவற்றின் அமைப்பு காலத்திற்கும் இடத்திற்கும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப வளர்ந்துள்ளது. பண்டு தொட்டு இன்று வரை உலகனைத்தும் கோயில் எழுந்துள்ளதற்குக் காரணம் சமய உணர்ச்சி மக்களிடம் எப்பொழுதும் ஏதோ ஓரளவில் இருந்து வந்ததே என்பதில் ஐயமில்லை. அஞ்சியாயினும், அன்புபட்டாயினும் நெஞ்சம்! வாழி, நினை நின்றியூரை நீ என நமக்கு அறிவுறுத்தியுள்ளார் ஆளுடைய பிள்ளையார். முதலில் ஆதிகால மக்கள் தாய்க்கும், தாய்த் தெய்வத்திற்கும் ஏன்? அம்மையப்பனுக்கும் அஞ்சி வழிபட்ட மக்களேயாவர். நம் கண்ணிற்குப் புலப்படாது அணுவினுக்கும் அணுவாய் நிலவும் அறிவுடைய பெருஞ்சக்தியென்றும் பெரும்பாலும் அதற்கடங்கி நடந்து தம் முட்பொருது கொண்டிருக்கும் வேறு சிறு சக்திகள் தேவதைகள் பலவும் உண்டென்றும் அவையெல்லாம் மக்கள் வாழ்க்கையில் கலந்து கொண்டு நன்மை தீமை முதலியவற்றை நல்கும் தன்மை வாய்ந்தன என்றும் அவற்றையெல்லாம் நாம் வழிபட்டால் அவை நம்மைத் துன்புறுத்தாது என்று மக்கள் நம்பி வாழ்க்கையை நடத்தினார்கள். பண்டைக் கால மக்கள் வழிபட்ட தாய்த் தெய்வங்கள் தந்தைத் தெய்வங்கள், கண்ணன் தெய்வம் மகன் தெய்வம் போன்றவை படிப்படியாய் உயர்ந்தன. மேட்டிற்கும் மலைக்கும், விண்ணிற்குமாக உயர்ந்தன. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், முதலிய கோள்களாகவும், நெருப்பு, நிலம், நீர் காற்று, ஆகாயம் மட்டுமின்றி இடி, மழை முதலியவைகளும் தெய்வங்களாயின. இவற்றைத் தெய்வங்களாகக் கொண்டு இவற்றிற்கு உயிர் பலி இடுதல் பைபிளில் கூறும் ஆதாம் காலத்தில் இருந்து இன்று வரை எல்லா மதங்களும் பல்வேறு பெயரில் பெரும் வழக்காய் இருந்து வந்தது என்பது உறுதியாகும். பழங்காலத்தில் நமது சமயங்களில் இருந்த மூதாதையர்கள் ஆடுமாடு குதிரை ஒட்டகம் கோழி முதலியவற்றை மட்டுமின்றி மனித உயிர்களையும் பலியிட்டு வந்தார்கள். அந்த வழக்கம் இன்று கூட முற்றாக நிறுத்தப்படவில்லை. தாம் உண்ணும் காய்கறிப் பொருளையும் தம் கடவுளுக்குப் படைத்ததுண்டு. இப்படி பலி, வேள்வி செய்யும் பொழுது தாம் வழிபடும் தெய்வத்தைப் போற்றி புகழ்ந்து தம் குறைகளைக் கூறுவதுண்டு. உண்மையை உரைப்பதானால் இன்று கோயிலில் இருக்கும் பலிபீடம் கேரளத்தில் பலிக்கல் என்ற பெயரில் இருப்பவைகள் அனைத்தும் ஆதிகாலத்தில் உயிர்களைப் பலியிட்ட இடமேயாகும். இன்று உயிர்ப்பலி சைவர்கள் கோயிலில் மட்டுமல்ல கத்தோலிக்க கிறித்தவர்கள் கோயில்களிலும் பலிப்பீடங்கள் உள்ளன. ஆனால் உயிர்ப்பலி செய்வதில்லை. ஆனால் சைவ சமய அறிவர்கள் பலிப்பீடங்கள், மனிதன் இறைவன் சந்நிதிக்குப் போகும் முன் தன் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களை விட்டுவிட்டு (அகற்றி) புனிதமான உள்ளத்தோடு செல்க என்பதை நினைவூட்டுவதற்கு வைத்திருக்கிறது என்று தத்துவக் கருத்துக்கள் கூறுவது போல் கிறிதவர்களும் கூறுகிறார்களாம். ஆனால் ஆதிமனிதனாகிய ஆதாம்-ஏவாள் என்பவர்கள் மக்கள் இருவர் இருந்தார்கள் அவர்களில் ஒருவன் காபயர் காயீன் அவன் விவசாயி, மற்றவன் ஆடுமாடுகளை மேய்ப்பவன். இவ்விருவர்களில் ஆடுமேய்ப்பவன் கடவுளுக்கு (கர்த்தருக்கு) ஆடு மாடுகளைப் பலியிட்டு வந்தான். கடவுள் அவன் மீது பிரியமாக இருந்தார். அவனுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து வந்தார். மூத்தவனாகிய காயீன் வேளாண்மை செய்பவன் அவன் கடவுளுக்கு அப்பம், பழம், காய்கனி கிழங்கு முதலியவைகளைப் படைத்து வழி பட்டு வந்தான். கடவுள் (தேவன்) அவன் மேல் பிரியமாக இல்லை. எனவே அவன் கோபமும் பொறாமையும் கொண்டவனாக ஆபேல் என்னும் தம்பியை வெட்டிக் கொன்று விட்டான். இதனைப் பைபிள் என்னும் கிறித்தவத் திருமறை எடுத்துக் காட்டுகிறது. ஆபிரகாம் தன்மகனைப் பலியிட அழைத்துச் சென்றதும் கடவுள் அதைத் தடுத்ததும் பின் அவன் அண்மையில் நின்ற ஆட்டைப் பலியிட்டதும் தெளிவாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிதவர்கள் இன்று பலிபீடம் வைத்திருக்கிறார்கள். பலி இடுவதில்லை என்றாலும் அவர்களின் கடவுளாகிய எகோவா ஆடு மாடு, முதலிய பலிகளை விரும்பி ஏற்றுக் கொண்டதோடு மனிதப் பலியையும் ஏற்றுக் கொண்டிருக் கிறார் என்று சான்று காட்ட முடியும். இன்று சிவன் கோயில்களிலும் பல தாய்த் தெய்வங்களின் பலிபீடம் உண்டு பலி இடுவதில்லை. அப்பர் சாமி காலத்திற்கு பின் சிவபெருமானுக்கு ஆடுமாடு, எருமை கோழி முதலியவைகள் பலியிட்டதுண்டு சிவபெருமான் தன் பக்தர்களிடம் பிள்ளைக்கறி கேட்ட கதையும் உண்டு. பல கோயில்களிலும் தேர் இழுக்கும் போது கோழிக்குஞ்சியைப் பட்டதுண்டு. வீடுகட்டி முடிந்ததும் தச்சுக் கழித்தல் என்னும் பெயரால் ஆட்டை பலியிட்டு அதன் உதிரத்தை வீட்டில் தெளிப்பதும் உண்டு. இறந்த உயிர்களுக்கு கோழிக்குஞ்சை சப்பரத்தில் (பாடையில்) கட்டிக் கொண்டு போய் பலியிட்டு அதை வண்ணார்கள் எடுத்துக் கொள்வதும் உண்டு. இதனை மறையாது சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை யவர்கள் B.A.B.T முதல் முதல் மனிதன் வழிபட கோவிலா இருந்தது. இப்பணி மேடையே இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் இயற்கை வளம் செறிந்ததோர் பக்கத்தில் செழித்துத் தழைத்து வளர்ந்த மரத்தடியில் பலிப்பீடம் அமைக்கப்பட்டிருந்தது.1 கடவுள் அங்கெழுந்தருளி தன்னை வழிபடுவோர் தரும் பலிகளையும் செய்யும் தோத்திரங்களையும் ஏற்று கொள்கின்றார் என்னும் நம்பிக்கை வலுத்ததும் அப்பாறை இருந்த இடத்திற்கே பெரும் மதிப்பேற்பட்டு விட்டது. குறித்த நாட்களில் அம்மேடைக்கும் சென்று பலியிட்டுப் போற்றி வரம் வேண்டும் போது மட்டுமின்றி அம்மேடையைக் காண நேர்ந்த போதெல்லாம் கடவுளை நினைத்து வணங்கி செல்வதும் இயல்பாயிற்று. நெடுங்காலம் வரையில் இப்பலிமேடையைத் தவிர வேறு கோயில்கள் எவையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பின்பு மனிதன் தன் கருத்துகளைப் பருப் பொருளாக வெளியிடுவதற்கு முயன்றபோது தான் கண்ட பொருள்களின் உருவங்களை வரையத் தலைப்பட்டான் சித்திரம் இவ்வாறு தோன்றியது. பின்பு புறக்கண்ணாற் காணப் பெறாத மனக் கண்ணாற் கண்ட காட்சி களையும் உருவங்களையும் சித்தரிக்கலானான். நாளடைவில் இவ்வடிவங்களை மண்ணிலும் மரத்திலும் கல்லிலும் பன்னாட் களுக்குப் பின் உலோகங்களிலும் செய்யும் திறமையும் வழக்கும் பெருகின. இப்படிக் கடவுளை வழிபடுவதற்கு ஏற்பட்ட பருவுருவங் களைப் பண்டைய மனிதன் பலி மேடைக் கெதிரில் எழுந்தருளப் பண்ணினான். இவற்றுள் மிகவும் பழையது அனற் கொழுந்து வடிவாயுள்ள சிவலிங்கமே என்று கருத இடமுண்டு எங்ஙன மென்று சிறிது காண்பாம். ஞாயிறு, திங்கள் தீ முதலிய இயற்கைப் பெரும் பொருள்களைத் தனித்தனி தேவதைகளாய்க் கொண்டு வணங்கிய மக்கள் நாளடைவில் அறிவு பெருக அவருட் சிறந்தோர் அவற்றிலுள்ள நலமும் வலியுமெல்லாம் ஒரே இறைவனுடைய தென்று கண்டனர். அப்போது அவற்றை இறைவனது மாபெரும்மேனிகளாக விளக்க நிலையங்களாகக் கருதி வழிபடத் தலைப்பட்டார்கள் அவற்றுள் தீயானது மக்கள் கைக்கெட்டுவதாய் அவர்களால் வளர்க்கக் கூடியதான போது அவ்வனற் பிழம்பை சிறப்பு வகையில் ஆண்டவன் திருமேனியாகக் கொண்டு போற்றும் வழக்கம் பெருகிற்று. கொற்கைத் தீயானது நெய்யும் விறகும் கொண்டு ஓம்பப்பட்ட போதன்றித் தோன்றாது. அன்றியும் மனிதன் தன் அன்பின் அறிகுறியாக அவ்வனற் கொழுந்திற்கு நீராடலும் ஆடை சந்த மணிமலர் புனைதலும் இயலாவன்றே? ஆதலின் அவ்வனற் பிழம்புருவத்தை கல்லில் அமைத்து வணங்கும் வழக்கம் தோன்றியது. இவ்விலிங்க வழிபாடு பண்டைய மெக்சிக்கோ, எகிப்து, அராபியா முதலிய வெளிநாடுகளில் இருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. நமது நாட்டில் இப்பண்டைய வழிபாடு இமயம் முதல் குமரி வரையில் இன்றளவும் காணக் கிடக்கின்றது அறிஞர்கள் இவ்விலிங்கத்தின் கண் தத்துவம் கடந்த தனி முதற் பொருளாங் கந்தழியை வழிபடுகின்றனர். மற்றையோரிற் பலர் ஒரு மரத்தின் கீழ் கல்லிலோ மண்ணிலோ இவ்விலிங்க வடிவைச் சமைத்து தம் இஷ்ட தெய்வத்தை அதனில் வருவித்து வணங்குதல் இன்றும் கண் கூடாயுள்ளது. மிகவும் பண்டையதான சிவலிங்க வழிபாட்டுடன் கை கால் முதலிய உறுப்புகள் பொருந்திய பல்வேறு உருவங்களை வைத்துச் செய்யும் வழிபாடுகள் பின்னாற்பல்கின இவற்றை விரிக்கிற் பெருகும். இவ்வாறெல்லாம் உருவ வழிபாடு பெருகி வருகையில் அளப்பரும் பெருமையுடைய ஆண்டவன் வதிதற்குத்தக்க சிறப்பமைந்த கோயில் வேண்டும் என்னும் விருப்பமும் முயற்சியும் தோன்றின. அரசனில்லத்தினும் பார்க்க ஆண்டவன் உறையுள் சீரினும் சிறப்பினும் விஞ்சி விளங்க வேண்டும் என்னும் ஆர்வம் பெருகிற்று. இவ்வாறு கோயில்கள் உலகெங்கும் தோன்றிப் பெரும் பொலிவோடு நிலவலாயின என்று சைவ சித்தாந்த சமயத்தை பிரசுரிக்க எழுந்த செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் ஏட்டில் உண்மையை மறைக்காது வெளியிட்டுள்ளார்.1 கோயில்கள் எப்படித் தோன்றியது. உருவ வழிபாடு எப்படித் தோன்றியது. எக்காலத் தோன்றியது என்ற ஆராய்ச்சி தமிழர்களுக்கு எழுந்ததே இல்லை. அதோடு தாம் அறிந்த உண்மையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணமும் எழுந்ததே இல்லை. சைவ சமயத்தைப் பரப்ப எழுந்த கழகங்களும் நூற்பதிப்புக் கழகங்களும், திங்கள் இதழ்களும் நமது கோயில்களைப் பற்றி நூல் எழுத முன் வந்ததே இல்லை. பெர்சி பிரவுண், சோவியத் துப்ரயல், டெல்லா கிராம்ரிஷ் போன்ற மேனாட்டறிஞர் நூல்களைப் பரப்பவோ அல்லது தமிழாக்கம் செய்து வெளியிடவோ இது வரை முன் வரவில்லை. தேவாரம், திருவாசகம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற நூற்களையும் வெளியிட்டு காசு சம்பாதிப்பதிலே கண்ணும் கருத்தாக இதுவரை இருந்து வந்துள்ளனர். உலகமெங்கணும் தமிழர்கள் சென்று ஆங்காங்கே அகழ் ஆய்வு செய்து தமிழர்களும் அவர்களின் முன்னோர்களான திராவிடர்களும் உபைதியா, எல்லம், அசிரியா, அக்கேடியா, சுமேரியா, எகிப்து, கிரீட் முதலிய இடங்களுக்கும் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, சாவகம், பாலித்தீவு போன்ற இடங்களுக் கெல்லாம் சென்று பலப்பல பெரிய கோயில்களையும் திரு உருவங் களையும் செய்து சிவனெறியைப் பரப்பிய செய்திகளை அயல்நாட்டு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி களையும், நூற்களையும் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சிறிதும் அவர்கள் எண்ணியதில்லை. சிந்து வெளியில் சைவ நன்மக்கள் எழுப்பிய சிறந்த நாகரிகத்தைப் பற்றி எத்தனை நூற்கள் வெளிவந்துள்ளன. சிந்து வெளி மக்கள் எழுதிய எழுத்துக்களைப் படிக்க கோபன் கேகன் அறிஞர்களும் லெனின் கிராட் பல்கலைக் கழகமும் எண்ணற்ற அறிஞர்களைக் கொண்டு லட்சம் லட்சமாக பொற்காசுகளைச் செலவிட்டு ஆய்வு செய்து வெளியிட்டு வருவதில் நமது தமிழ் நாட்டு சைவசித்தாந்தக் கழகமோ சமயப் பிரசாரக் கழகமோ, திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமோ, அகில இந்திய அண்ணா தி.மு.க நிறுவனமோ கடுகளவும் கவலைப்பட்டதுண்டா? இதற்கு ஒரு செலவுக் காசும் செலவிட்ட துண்டா? தமிழ் நாட்டில் தமிழர் பெயரால் எழுந்துள்ள அரசியல் நிறுவனங்களும், சமய நிறுவனங்களும் தம் வயிற்றாத்திறத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தேடுவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறதே ஒழிய தமிழ் இனத்தின் நலனை நாடியதே இல்லை. இன்றல்லாவிடினும் விரைவில் தமிழ் மக்கள் உண்மையை உணர்ந்து இவர்களிடம் கணக்குக் கேட்க முன் வருவார்கள் என்பது உறுதி. அப்பொழுது கா. சு. பிள்ளைக்கு கல்லெடுத்தேன், அண்ணாவிற்குச் சமாதி கட்டி மலர்மாலை சூட்டி தூப தீபங்காட்டினேன், அண்ணா பெயரை அகில இந்தியா முழுவதும் பரப்பி அவர் சிலைக்கு மாலை சூட்டினேன் என்று கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழகத்திலே சைவ சமயத்தைக் காப்பதற்கு எழுந்த மடங்களோ, அல்லது பக்தர்களோ நமது தமிழர்களுக்கு கோயிலைப் பற்றியோ, சிலைகளைப் பற்றியோ செப்பு உருவங் களைப் பற்றியோ நல்ல நூற்கள் ஆங்கிலத்திலோ வெளியிடவில்லை. நமது நாட்டைச் சேர்ந்த காஷ்மீரத்தில் வளர்ந்துள்ள சைவ நெறியைப் பற்றியோ, சாவகம், பாலி, கம்போசகம் முதலிய நாட்டில் சைவ சமயிகள் கட்டிய கோயில்களைப் பற்றியோ ஒரு நூலும் எழுத எண்ணியதே இல்லை. சால்டிய நாட்டில் 5000-ம் ஆண்டுகட்கு முன் ஒரு பெருங்கோயில் எழுந்தது. மெசபொத்தாமியாவில் முகோ என்னும் அகழ் ஆய்வில் நன்னர் என்ற சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் சுடுமண் செங்கற்களாலானது கீழ் இருந்து மேலே ஒவ்வொரு பிரகாரமும் பரப்பிற் குறைந்ததாய் ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றாவது மேடையில் உச்சியில் ஒரு அக நாழிகை உள்ளது அதன் முன் பலிமேடையாக ஒரு கற்பாறை உள்ளது. கோயிலின் சுவர்களில் வெளிப்புறம் பளபளப்பான நீல வண்ணத்தில் எனாமல் ஓடுகள் பதிப்பிக்கப் பெற்றுள்ளது உட்புறம் மரப்பலகைகள் அடிக்கப் பெற்றுள்ளது. இவற்றின் இடை இடையே பளிங்குக் கற்களும் பொன்னும் மணியும் கொண்டு செய்த அரிய சிற்பங்கள் பல உள. இது திராவிடர்கள் கட்டிய பெருங்கோயில் என்று மேனாட்டறிஞர்கள் கூறுகின்றார்கள். அடியிலிருந்து மேலேயுள்ள அக நாழிகை வரை படிகள் உள்ளன. வட அமெரிக்காவில் கொலாடோ என்னும் ஆற்றங்கரையில் உள்ள குன்றின் மீதுள்ள சிவன் கோயில் 1937-ஆம் ஆண்டு அமெரிக்கத் தொல் பொருள் ஆய்வினர் கண்டுபிடித்து இந்தக் கோயில் 10-ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்று முடிவு கட்டினர். இது இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்தது. தமிழனுக்கு தெரியாது. தேவாரம் பாடிக் கொண்டு இருக்கும் சிவ பக்தனோ, பெரிய புராணம் படித்தால் சிவலோகம் கிட்டும்என்று நாடோறும் சிவநேயச் செல்வர்களுக்கே தெரியாது தெரிந்தாலும் அங்கு போய் பார்க்கவோ நமது மக்களுக்கு இதைப் பற்றி விளக்கிக் கூறவோ அவசியம் இல்லாமல் போகிறது. அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர் சிவபெருமான் எங்கள் தெய்வம். அவன் செவ்விந்தியனாக இருப்பதால் இந்தியர்கள் கூட அவனை இன்று வரை மீனாட்சி, உமா தேவி முதலிய சிவன் மனைவியைக் கருப்பி என்று கூறுவதைப் போல் சிவனை கருப்பன் என்று கூறத் தைரியம் பிறக்கவில்லை. இந்தியர்கள் சிவனை தீ வண்ணன், செவ்வண்ணன், செய்யோன், செஞ்சடையோன் என்றெல்லாம் கூறி சிவபெருமான் வட அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியன் என்றும், அவன் இமயமலை மீதுள்ள இந்திய அரசனாகிய தக்கன் மகளாகிய பார்வதியையும், தென் இந்தியாவில் உள்ள பரத்தியாகிய மீனாட்சியையும் மணந்து கொண்டான் என்றும் சிவன் அமெரிக்க செவ்விந்தியர்களிடமிருந்து இரவலாகப் பெற்ற தெய்வம் என்று கூறுகின்றனர்.1 எகிப்து நாட்டின் தலைநகராகிய கெய்ரோவிற்கு அண்மையில் உள்ள கீஜா என்னும் இடத்தில் பிங்க் கோயில் ஒன்றுள்ளது. இது 5000-ம் ஆண்டுகட்கு குறைந்ததன்று. கருங்கல் எளிதில் அகப்படாத சால்டியா நாட்டுக் கோயில் போலன்றி எகிப்தில் எளிதில் கிடைக்கும் இக்கோயில் கருங்கல்லால் கட்டப் பெற்றது. இங்குள்ள மண்டபம் 55 அடி நீளமுள்ளது. சிற்ப வேலைப்பாடு சிறிதுமற்ற சதுரத் தூணாலானது. தூண்கள் இரண்டு வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. கி.மு.1600 ஆண்டிலிருந்து தான் எகிப்தில் பெருங்கோயில்கள் எழுந்தன. அப்பு சிமபல் என்னும் இடத்தில் 150-அடி நீளமும் 100 - அடி உயரமும் உள்ள கோயில் பாறையைக் குடைந்து செய்யப்பட்டுள்ளது. எகிப்திய நாட்டில் முற்காலத்தில் தமிழர்கள் குடியேறி அங்கு கோயில்களை எழுப்பினர். அங்கு தெய்வ உருவத்தை பலரும் எளிதில் காண முடியாத வகையில் வழிபடும் முறைகள் அமைக்கப்பட்டிருந்தனவாம். எகிப்தில் சிவ வழிபாடும் காளை வழிபாடும் இருந்தது. இஃதன்றி காளை முகமும் மனித உடலும் உடைய அதிகார நந்தி (Apis) வழிபாடும் இருந்தது . கிட்டை நாட்டில் உள்ள கோயிலில் நந்தியும் அதன் மீது சிவபெருமான் நின்று கொண்டு கையில் மழுவும் சுத்தியலும் திரிசூலமும் தாங்கி நிற்பது போன்ற உருவங்கள் இருந்தன என்று பல ஆசிரியர்கள் தம் நூற்களில் குறிப்பிட்டுள்ளனர். அந்நாட்டின் கோயில்கள் நமது நாட்டின் திருக்கோயிலோடு ஒப்புவமைகாட்டி ஒரு ஆய்வு நூலை எழுத சைவ சித்தாந்திகளோ அவர்கள் சமயமோ, மடமோ நூல் வெளியீட்டுக் கழகமோ எண்ணியதே இல்லை. தெருவில் கிடக்கும் ஒரு உடைந்த கல்லை எடுத்து வைத்துக் கொண்டு சிவ சிவ என்று தலையில் தட்டுவதும் கன்னத்தில் போட்டுக் கொள்வதும் கோயில் கட்டுவதற்கு தனக்கு வேண்டியவர் செல்வர்கள் மடாதிபதிகள் காலில் வீழ்ந்து கெஞ்சி பொருள் திரட்டுவதும் பெரிய திருப்பணியாக நினைக்கிறார். இருக்கிற எண்ணற்ற கோயில்கள் செப்பனிட வழியற்று சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும் போது உடைந்து தெருவில் கிடக்கும் ஒரு கல்லை சிவலிங்கம் ஒன்று கூறி கும்பிடுவதும் கோயில் கட்ட மக்களிடம் பணம் கேட்பதும் வெட்கமான செயல். முதலில் கும்பிடுவதற்கு ஆட்களைத் திரட்டு அப்பால் ஒரு சிறு கோயிலைக் கட்டு. சைவ நன்மக்கள் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி படிக்க வழியின்றி, படித்தவர்களுக்கு வேலையின்றித் திண்டாடும் பொழுது தெருவில் கிடந்த கல்லுக்கு சிவலிங்கம் என்று பெயர் சொல்லி ஆயிரக்கணக்கான பொருளைப் பொது மக்களிடம் திரட்ட முயற்சிப்பதா? இது அறமா? இந்தக் கோயிலிக்கு சிவன் வருவானா? கோயில்கள் எல்லாம் குச்சுக் காரிகள் வீட்டிற்குச் சமம் என்றார் காந்தி அடிகள். கோயில்கள் கள்ளர்களின் குகைகள் என்றார் ஏசுநாதர். எனவே இக்கால மக்களுக்கு முதலில் கோயில் என்றால் என்ன? சமயம் என்றால் என்ன? நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பவற்றினை விளக்கி நமது இளம் வாலிபர்களை, உனது கைப்பணத்தை வீட்டு கோயிலுக்கு வரச் செய். நமது சமூக மக்கள் ஒன்று சேர, நமது சமய பொருளாதார முன்னேற்றம் பெற கால்துட்டும் செலவழியாது ஏமாற்றி வாழும் ஒருசிலர், கூரையேறி கோழி பிடிக்க இயலாத குருக்கள் வானத்தைக் கீறிவைகுந்தம் காட்டப் போவது போல் இப்பொழுது தன்னலத்திற்காக திருப்பணி செய்ய முன் வந்துள்ளார்கள். இவர்கள் திருப்பணி ஒழிக! ஒழிக! என்று கூறி விட்டு நாம் உலகில் உள்ள நமது கோயில்களையும், நமது நாட்டு கோயில்களைபற்றி ஆராய்வோம்; அழிந்து கொண்டிருக்கும் கோயில்களைப் பாதுகாப்போம் கலைக் கருவூலமாக சிற்ப மணிகளாய் மூலை முடுக்குகளில்அழிந்து வீழ்ந்து கொண்டு இருக்கும் திருக்கோயில்களைப் பழுது பார்க்கவும் நமது கோயில்களையும் சிலைகளையும் செம்புப்படிமங்களையும் பாதுகாக்க முன் வரவேண்டும். தமிழ் மக்களை வணங்கி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் இதன் உண்மையறியாத மக்கள் ஓய்வு பெற்ற காலத்தில் மோட்சம் போக எண்ணி பிறர் பொருளைப் பயனற்ற வழிகளுக்காகப் பயன்படுத்துவதில் முனைய வேண்டாம். தான் மோட்சம் போக வேண்டும் என்றால் தன் சொந்தப் பொருளைச் செலவிட்டுக் கோயில் கட்டட்டும். அல்லது தனது வீட்டையே கோயிலாக மாற்றட்டும். அதை வரவேற்கின்றோம் வாழ்த்துகின்றோம். காந்தி அடிகள், ஒருவனுக்கு 2 வேட்டிகள் தேவை 4,6,18 வேட்டிகள் வைத்துக் கொண்டால் இது திருட்டுத்தனம். 4 வேட்டிகள் வைத்திருப்பவன் திருடன் 6 வேட்டிகள் வைத்திருப்பவன் கொள்ளைக்காரன் 8 வேட்டிகள் வைத்திருப்பவன் தீவட்டிக் கொள்ளைக்காரன் என்றார் என்பதை எனது தமிழ்ச் சகோதரர் களுக்கும் சகோதரிகளுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நிற்க கிரேட்டா (Crete) என்னும் இத்தாலி நாட்டிற்கு அண்மையில் உள்ள தீவு பண்டையத் தமிழர்களுடைய குடியேற்ற நாடு. ஹெரட்டோட்ட என்னும் பழம் பெரும் வரலாற்றாசிரியர் கிரேட்டா மக்கள் தமிழர் (தமிழ்) எனப்பட்டார் என்று கூறியுள்ளார். கிரேட்டா நாகரிகம் சிந்து வெளி நாகரிகத்தோடு மிக நெருங்கிய ஒருமைப்பாடுடையது. கிரேட்டா மக்கள் மீனவர்கள் எனப் பெற்றனர். சிந்து வெளி எழுத்தும் கிரேட்டா எழுத்தும் ஒன்று போலக் காணப்படுகிறது. கிரேட்டா நகரில் உள்ள ஒரு நகரிற்கு சிவன் என்று பெயர். கிரேட்டாவில் சிந்து வெளியில் கட்டெடுத்ததைப் போன்ற பல பழம் பொருளும் அந்நாட்டு மினோன் அரண்மனை யும் (Palace of Minon) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு சிவ வழிபாடும் சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1 இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. History of Architecture - James Fergusson. 2. Architecture - A.L.N. Russel. 3. Architecture - Sir I.G. Jackson 4. Seven Lamps of Architecture - Ruskin 5. The Substance of Architecture - A.S.G. Butter. 6. India and Pacific world - Kaalidas Nay 7. Origin and Spread of Tamïls - V.R. Ramachandra Iyer M.A (Madras) 1971. 8. The Arts and Crafts of Travancore - Dr. Stella Kramrisch (London) 1948 9. Egypt and syria - sir J. William Dawson C.M.G.LL.D FRS (London) 1892 10. தேவாரம் - திருநாவுக்கரசு நாயனார். 11. அகநானூறு 167 (கடியலூர் உருத்திரங் கண்ணனார்) 12. திருவாசகம் - மாணிக்கவாசகர். 13. தொல்காப்பியம் - கழக வெளியிடு. சென்னை 1953 14. செயற்கை நலம் - சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார். 1950. (சென்னை) 15. சிவன் - ந. சி. கந்தையா பிள்ளை (சென்னை) 1907 Ed 1,1947 Reprint 1958,1968. சிந்து வெளி அகழ் ஆய்வு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்திய அறிஞர்களிற் சிலர் இந்தியாவில் தேவர்களும் அரக்கர்களுமே உண்டென்று கூறி வந்தனர். அப்பால் அநாதி காலம் தொட்டு இந்தியாவில் பிராமணர் களும் சூத்திரர்களுமே வாழ்ந்து வருகின்றனர். அப்பால் ஆங்கிலேய வரலாற்றாசிரியர் இந்தியாவில் ஆரியர்களும், திராவிடர்களும் உண்டு. ஆரியர்கள் அழகுவாய்ந்தவர்கள். ஜெர்மன் மக்களும் அவர்கள் மொழியும் ஆரியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாயும் விளம்பரப்படுத்தப்பட்டது. பின்னர் ஆரியர்கள் காண்டிநேவியன் நாட்டிலிருந்து வந்த நாகரி மக்கள். அவர்கள் கருப்பு நிறமும் சப்பை மூக்கையுமுடைய இந்திய நாட்டின் பழங்குடிமக்களை வென்று அவர்களை நாகரிகப் படுத்தியுள்ளனர். அவர்களின் மொழி சமகிருதம், அவர்களின் வேதம் இருக்கு, யசுர், சாமம் அதர்வணம் ஆகியவைகளாகும். சமகிருதத்தினின்றே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் துளு, வங்காளம், மராட்டிரம் அஸாம், பஞ்சாபி முதலிய மொழிகள் அனைத்தும் பிறந்தன. இந்தியாவில் உள்ள எல்லாத் தெய்வங்களையும் கலைகளையும் இந்தியமக்களுக்கு வட மொழி வேதமே வழங்கின என்றெல்லாம் கூறப்பட்டு வந்தன. வேதகாலப் பண்பாட்டிற்கு முன்பு இந்தியாவில் சமயமோ, திருந்திய மொழியோ, எழுத்தோ, பெருந் தெய்வங்களோ, கட்டிடக் கலையோ, சிலையோ, வெண்கலப்படிமங்களோ, இசையோ, இசைக்கருவிகளோ, கோயிலோ, அணிகலன்களோ, இலக்கணங்களோ, இலக்கியங்களோ, ஓவியங்களோ, பிற கலைகளோ, பண்பாடோ எதுவும் கிடையாது. சிவன், பிரம்மா, விஷ்ணு சுப்பிரமணியன், உமாதேவி, சரவதி, லட்சுமி முதலிய தெய்வங்கள் எல்லாம் ஆரியர்களிடமிருந்து திராவிடர்கள் இரவலாகப் பெற்றவைகளே என்று கூறி வந்தனர். இந்தியாவின் வரலாறு கி.மு. 1500-க்கு முற்பட்டதன்று (அதாவது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டதன்று) சில மேனாட்டாசிரியர்கள் கூட எழுதி வந்தனர். 1922-முதல் 1931-ஆம் ஆண்டுவரை சிந்து வெளியில் நடைபெற்ற தொல் பொருள் ஆய்வு இந்திய வரலாற்றின் தொடக்கமும், தொன்மையும், தன்மையும் ஒப்புவமையற்றது என்று உலகிற்கு உணர்த்தியது. சிந்து வெளியில் எழுந்த ஆய்வு இந்திய வரலாற்றில் கவ்விக் கிடந்த இருளை அகற்றும் பேரொளியாய் எழுந்தது. நந்தாப் பெருமை வாய்ந்த சிந்து வெளிப் பண்பாடு உலக வரலாற்றிற்கே ஒரு திருப்பு முனையாக மாறியது. இந்திய வரலாற்றின் இருண்டகாலத்தை ஏற்ற மிகு பொற்காலமாக ஒளிபெறச் செய்துள்ளது. பாரதப் பண்பாட்டின் அடிப்படையாக அமைந்த பண்புகள் அனைத்தும் சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்பியல்புகளே என்றும் வரலாறு கூறும் செய்தி கேட்டு உலகம் வியப்புற்றுள்ளது. சிந்து வெளி வரலாறு இந்தியாவின் தொன்மைக்கு ஓர் அளவுகோல். இந்தியப் பண்பாட்டின் தன்மையை (மாற்றை) உணர்த்தும் உரைகல். திசை தவறிச் செல்லும் மாலுமியை நேர்வழிச் செல்லத் தூண்டும் கலங்கரை விளக்கினைப் போல் தவறான பாதையில் சென்ற வரலாற்றாசிரியர்கள் பழைய இந்தியாவின் மீது வீசும் புதிய ஒளி என்று நேர் வழி செல்லச் செய்துள்ளது. இன்று இந்தியப் பள்ளிச் சிறார்களெல்லாம், சிந்து வெளி நாகரிகம் உலகில் ஒப்பற்ற நாகரிகம். 5000 -ம் ஆண்டிற்கு முன் சிந்து வெளி நாகரிகத்தை சிறந்த நாகரிகம் எங்கும் அரும்பவில்லை. சிந்துவெளி நாகரிகத்தினைப் படைத்தமக்கள் தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்களே. இந்தியாவின் எழுத்தும், சமயமும், மொழியும், கலைகளும், பண்பாடும், நாகரிகமும் சிந்து வெளிப் பண்பாட்டினின்று கிளைத்தவைகளே என்று தெளிவாக உணர்ந்துள்ளார்கள். இப்பொழுது இந்தியாவில் நூல் எழுதுபவர்கள் எவராக இருப்பினும் சிந்துவெளிப் பண்பாட்டை முதல் அத்தியாயமாக வைத்தே நூல் எழுதத் தொடங்கியுள்ளார்கள். சமீபத்தில் வெளிவரும் பல நூல்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். வரலாறு, மொழி, எழுத்து, சமயம், நாட்டியம், இசை, இசைக் கருவி, ஆடை, அணிகலன்கள், நகர் அமைப்பு, மருத்துவம், முதலிய பல துறைகளைப் பற்றி வெளிவந்த நூற்களிலும் சிந்து வெளி முதல் இடம் பெற்றுள்ளது. எனவே திருக்கோயிலைப் பற்றி எழுதப் பெற்ற இந்நூலிலும் உலகக் கட்டிடக் கலையில் தொன்மையான உயர்நிலையைப் பெற்றிருக்கும் சிந்து வெளிக் கட்டிடக் கலையும் இங்கு இடம் பெறுதல் சிறப்புடைத்தாகுமன்றோ? அரப்பாவின் கட்டிடக்கலை அரப்பாவின் கட்டிடக் கலை சிறப்பு மிக்கது. சிந்து வெளி நகரங்களில் மிகத் தொன்மைவாய்ந்த நகர் அரப்பாவாகும். அரப்பாவில் சிறப்பான ஆட்சி கி.மு.3000 -ம் ஆண்டிற்கு முன் எழுந்தது. அது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வேளாண் குடிமக்கள் ஆட்சியாகும். அங்கு அரசர்கள் இருந்தனர். அவர்கள் வேளாளர் மரபில் வந்தவர்கள். அந்த அரசன் கொடி ஏர்க் கொடியாகும். கோயில்களில் உள்ள கொடிகளில் எருது பொறிக்கப் பட்டிருந்தது. சிந்து வெளியில் வேளாளர் (காராளர்) ஆட்சி நிலவியது. அங்கு ஆட்சி புரிந்த வேளாளர் சிவபெருமானை (கயிலை மலையில் வீற்றிருப்பவரை) பசுபதி வடிவிலும், இலிங்க வடிவிலும் வழிபட்டு வந்தனர். அவர்கள் சிவன் கோயிலுக்குத் தென் இந்தியாவைப் போல (தமிழகத்தைப் போல)க் கோயிலுக்கு ஏராளமான வருவாயுள்ள நிலங்களை மானியமாக விட்டிருந்தார்கள். அவர்களில் பகல் வெள்ளாளர் (சூரிய குல வேளாளர், திங்கள் (சந்திர) குல வேளாளர் என்றும் இரு பிரிவினர் இருந்தனர். வேளாளர் குல முடி மன்னர்கள் முடி கொடி, குடை, இணைக் கயல், கட்டில், விளக்கு, முரசு முதலிய அரச சின்னங்களையுடையவர்களாக இருந்தனர். அவர்கள் நடுமலையில் (இமயமலையில்) உள்ள புனித மீனை-அதாவது எண் குணத்தானை (சிவபெருமானையும்) வெள்ளைமலையில் உறைந்த முருகனையும் வழிபட்டு வந்தனர். அங்கு இலிங்கத்தை வழிபடும் வில்லவர்களும், (குறிஞ்சி நில மக்களும் மீனாட்டை ஆண்ட மீனவர்களும் நெய்தல் நில மக்களும்) இருந்தார்கள் என்றும் மீனவர்கள் (பரதவர்கள்) வேளாளர் அரசிற்குத் துணையாக இருந்தார்கள் என்றும் அறிகின்றோம். இதனை ஹிரா அடிகள் தம் கட்டுரைகளில் விளக்கி எழுதியுள்ளார்.1 நகரங்கள் 1920-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் இரவி சட்லெச் ஆறுகளுக்கு இடையில் தோண்டிய பொழுது அரப்பா என்னும் இடம் அகழ்ந்து காணப்பட்டது. இந்த நகரம் சிந்து வெளியில் அகழ்ந்து கண்ட நகரங்களில் மிகத் தொன்மையானது. இது சிந்து வெளியில் நிலவிய ஆட்சியின் தலைநகராக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இந்த நகரம் அகழ்ந்தெடுத்த பொழுது மிகவும் சிதைந்து போன நிலையில் இருந்தது. 1922-ஆம் ஆண்டில் சிந்து மாநிலத்தில் லர்க்கானா மாவட்டத்தில் உள்ள மொகஞ்ச-தாரோ என்னும் நகர் ஆகும். இந்த நகர் 70-அடி உயரமுள்ள மண்மேட்டின் அடியில் புதைந்திருந்தது. இது அரப்பாவை விட சிதைவுறாது நல்ல நிலையிலே உள்ளது. இது சிந்துவெளி ஆட்சியில் அரப்பாவிற்குப் பின் தலை நகராக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது இஃதன்றி சிந்து மாநிலத்திலும், பலுச்சிதான் மாநிலத்திலும் பல ஊர்கள் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகள் குவேட்டா, அமரி, நல் குள்ளிமெகி, சோபு வெளி, சான்கு தாரோ, லொகுஞ்சொ, தாரோ, ரூபார், காளிபங்கன், சக்பூர்பானிசியால், அலிமுராத் பாண்டிவாகி, கோட்சா நிகாங் கான், சுகார், காச்சிசா போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களும் சிற்றூர்களும் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு அகழ்ந்து கண்டெடுத்த வீடுகளும் பொருள்களும் அரப்பா மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் கிடைத்த பொருள்களுக்கும் இடையே சிறு வேறுபாடுகளும் இல்லை. இவை அனைத்தும் சிந்து வெளிப் பண்பாட்டுடன் இணைந்த நகர் அமைப்புகளுடன் இணைந்து காணப்படுகின்றன.1 நகர் அமைப்பு சிந்து வெளியில் அகழ்ந்து கண்ட நகரங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன அரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் எனலாம். இது பண்டையத் திராவிட மக்கள் பெற்றிருந்த நகர் அமைப்புத் திறனை எடுத்துக் காட்டுவதாகும். அரப்பா இரவி ஆற்றங்கரையில் இருந்தது. மொகஞ்சதாரோ சிந்து ஆற்றங்கரையில் இருந்தது. மரக்கலங்களில் விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லவும், மக்களின் போக்குவரத்து வசதிக்குமாக ஆற்றங்கரையில் நகரங்களை அமைத்துள்ளனர். இங்கு வாழ்ந்த உழவர்கள், செம்புக் காலத்தில் அமைத்த இந்தப் பண்பாட்டை ஆற்றங்கரைப் பண்பாடு என்று கூறுகின்றனர். இந்த மாநகர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஒன்றிற்கொன்று வேற்றுமை காணமுடியாதவாறு ஒழுங்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு செம்மையான அடிப்படையில் சீராக அமைக்கப்பட்டுள்ள இம்மாநகர் நேரான தெருக்களையும் வசதியான இல்லங்களையும் பெரிய மாளிகைகளையும், உறுதியான பொதுக் கட்டிடங்களையும் உடையனவாய் எழில் பெற்று விளங்குகின்றன. அரப்பா மொகஞ்சதாரோ உரூபார் முதலிய நகரங்கள் முன் கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு உறுதியான அடிப்படையில் அமைக்கப்பட்ட நகர்களாகக் காணப்படுகின்றன. அரப்பா நல்ல அரணையுடைய பெரும் நகராகக் காணப்படுகின்றது. மொகஞ்சதாரோ அதினும் சிறப்புடைய மாநகராகத் தோன்றுகின்றது. மொகஞ்சதாரோ இன்றைய லங்காசையர் வட்டத்தில் உள்ள பாட்டாளி மக்களின் நகரப்பகுதியினைப் போல காணப்படுகிறது என்று கூறுகிறார் ஒரு ஆங்கில நாட்டு எழுத்தாளர். வீடுகள் அமைப்பு அரப்பாவில் பொதுக் கட்டிடங்கள் ஒருவிதமாகவும் செல்வர்கள் குடியிருக்கும் கட்டிடங்கள் ஒருவிதமாகவும் ஏழை மக்களும், நடுத்தர மக்கள் வாழும் மனைகள் ஒருவிதமாகவும் உள்ளன. செல்வர்கள் வாழும் மாளிகை மாடிகளையுடையனவாயும் பல அறைகள் உள்ளனவாயும் விசாலமானதாயும் உள்ளன. மாளிகையில் விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்குத் தனி அறை உள்ளது. தையலர்கள் இருப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் தனி இடங்கள் இருந்தன. பொதுக் கட்டிடங்களில் வட்ட வடிவமான மேடைகள் உள்ளன. ஏழைகளும், தொழிலாளர்களும் தங்கும் சிறு வீடுகள் ஏழு வீடுகள் இரண்டு வரிசைகளில் ஒன்றாக அமைக்கப் பட்டிருந்தன. இரண்டு வரிசைகட்டும் இடையே குறுகிய பாதை இருந்தது. இரு பாதைகளின் இருபக்கங்களும் பொதுத் தெருக் களில் வந்து கலந்துள்ளன. தொழிலாளர் இல்லங்களில் பெரிய முற்றங்களும் சிறிய அறைகளும் இருந்தன. அரப்பாவில் அமைக்கப்பட்ட இல்லங்கள் கி.மு.3000-க்கும் முற்பட்டன. எகிப்தில் கட்டப்பட்ட இல்லங்கள் கி.மு.2000-க்குப் பிற்பட்டன வாகும். அரப்பாவில் கட்டப்பட்ட சிறு இல்லங்கள் கூட நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாய் சுகாதார நலத்தை எண்ணி அமைக்கப்பட்டன. சுமேரியர், எகிப்தியர் இல்லங்கள் சுகாதார நலன்கள் கவனிக்கப்படாவிடினும் அழகுடையதாய் இருந்தன. இறந்தவர்களுக்காக அங்கு பிரமிட் கோபுரம் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த இல்லங்களும் இருந்தன. அரப்பாவில் சித்திர வேலைப்பாடுகளில் அதிகச் சிரத்தைக் காட்டப்படவில்லை. இறந்தவர்களுக்காகப் பெரிய சமாதிகள் கட்டப்படவில்லை. உயர்ந்த கோயில்கள் கூட கட்டப் பட வில்லை. ஆனால் மக்கள் வாழ்வதற்கேற்ற சுகாதாரமுள்ள வசதியான வீடுகள் பலகணிகள் உள்ளதாய் அமைக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. சிறிய இல்லங்கள் அரப்பாவில் ஏழைகள் வாழும் சிறு இல்லங்களும் செம்மை யாக சுடுமண் செங்கற்களைக் கொண்டு ஒழுங்காகக் கட்டப் பட்டுள்ளது. அவைகள் நன்றாகச் சூளையிலிடப்பட்ட சுடுமண் செங்கற்களால் சிவப்பு நிறமுடையதாக நெடுக்கும் குறுக்குமாய் அடுக்கி உறுதியாகவும் அழகாகவும் இருக்குமாறு கவர்ச்சியாக இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் செல்வர்கள் வீட்டில் மட்டுமின்றி ஏழைகள் வீடுகளிலும் தனிக்கிணறுகள் உள்ளன. பொதுக் கிணறுகள் தெருவிலும் உள்ளன. கிணறுகள் வட்டமாக அமைக்கப்பட்டதால் கிணறுகள் கட்டுவதற்கென்று தனியாக வளைந்த செங்கல்கள் சூளையில் இடப்பட்டு வெந்ததாகப் பார்த்துக் கட்டப்பட்டது. சில இடங்களில் சுண்ணாம்புச் சாந்தினாலும் செங்கல்கள் வைத்துக் கட்டப்பட்ட சுவர்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான வீட்டுச் சுவர்கள் களிமண் சாந்து கொண்டே கட்டப்பட்டிருந்தன. அக்காலத்தில் சிந்து வெளியில் இருந்த குளிர்ந்த தட்ப நிலைக்கு சுடு மண் சுவர்களால் கட்டப்பட்ட வீடுகள் தக்க வெப்பந்தருவனவாய் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரப்பாவில் உள்ள எந்த வீடுகளிலும் மாடிமுன் முகப்பு (Balcony) எங்கும் காணவில்லை. அங்கு வாழ்ந்த செல்வர்களும் வயல்களுக்குப் போய் ஏர் எடுத்து உழுது வந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதற் கேற்ப செல்வர்கள் வீடுகளில் தவறாது ஒரு கலப்பையுள்ளது. மகளிர்கள் கோசா பெண்களாக இல்லை. வட இந்திய இந்துப் பெண்கள் போல் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்படவில்லை. சமூக வாழ்வில் எல்லாத் துறை களிலும் புகுந்து ஆண்களோடு ஒத்துழைத்து சமூகம் உயரப் பாடுபட்டு வந்தனர் என்று தெரிகிறது-ஒவ்வொரு வீட்டிலும் மலங்கழிக்கத் தனியிடம் இருந்தது. மாட மாளிகைகள் அரப்பா பெரிய பரப்பான சம நிலத்தில் அமைக்கப்பட்ட பழம் பெரும் கோநகர். செல்வர்களும், வணிகர்களும், நிலக் கிழார்களும் மன்னர்களும் பெரிய மாட மாளிகைகள் கட்டி சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். மாளிகைகளின் அடிப்படைகள் அகன்றதாய் ஆழம் உள்ளனவாய் நன்கு சூளையிடப்பட்ட சுடுமண் செங்கற்களை மண் சாந்து கலந்து நன்றாக மொங்காள் போட்டு உறுதியான அடையிட்டு அகலமான சுவர்கள் எழுப்பி இரண்டுக்கு மேற்பட்ட மாட மாளிகைகள் உள்ள கட்டிடங்கள் அரப்பாவில் பல காணப்படுகின்றன. ஆனால் சிறிய இல்லங்களில் அடிப்படை இடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அவைகள் உடைந்த ஓடுகள் செங்கற்துண்டுகள் முதலியவற்றை மண் சாந்து கொண்டு கலந்து போட்ட அடிப்படை மீது கட்டப்பட்டுள்ளன. மாளிகைகளின் சுவர்களும், தளங்களும், மூடுசாக்கடைகளும் ஒருவிதக்கல் கொண்டு நன்றாக வழவழப்பாகத் தேய்த்து நீர் அடியில் கசியாவண்ணம் உறுதியாக அமைக்கப்பட்டிருந்தன. தளவரிசையில் இடப்பட்ட கற்கள் தளதளப்பாகவும் உறுதியாகவும் இருந்தன. மாடிப் படிக் கட்டுகள் உறுதியாக அமைக்கப்பட்டிருந்தன. குப்பைத் தொட்டிகள் கழிவு நீர்த் தேக்கங்கள் வாய்க்கால்கள் வடிகால்கள் நல்ல நிலையில் கட்டப்பட்டிருந்தன. இல்லங்கள் தோறும் வட்டவடிவிலான கிணறுகள் உள்ளன. கிணறுகளுக்கு நாற்புறமும் கைபிடிச் சுவரும் கிணற்றினின்று கழிவு நீர் வெளியே செல்வதற்கு சற்றுச் சாய்வான தளமிடப்பட்ட அங்கணமும் உடையதாய் இருந்தன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் மழைநீர் வெளியே சென்று தெருவில் உள்ள மூடுசாக்கடைக்கு செல்லத்தக்கதாய் சிறு கால்வாய் கட்டப்பட்டிருந்தது. கூலக் களஞ்சியம் மொகஞ்சதாரோவை விட அரப்பாவில் அதிகமான கூலக் களஞ்சியங்கள் சாலச் சிறப்புற்றிருந்தன. இவைகள் அணி அணியாய் அடுத்தடுத்து அகலமும் நீளமும் உயரமும் உள்ளதாய் அமைந் திருந்தன. ஒரு கூலக்களஞ்சியம் 168 அடி நீளமும் 13 அடி அகலமும் 58 அடி உயரமும் உடையது. இவற்றின் சுவர் 9 அடி கனம் உள்ளது. இவை இரண்டு வரிசையாய்க் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு வரிசையில் ஒன்றுக் கொன்றுள்ள தொலைவு 23-அடியாகும் இதன் மேலே உறுதியான தளம் - அதாவது மட்டப்பாய் போடப் பட்டிருக்கின்றது. இக்கூலக் களஞ்சியத்தின் இரண்டு வரிசையாக எடுப்பிக்கப் பெற்றிருக்கும் நெடிய சுவர்களுள் ஒவ்வொரு வரிசையிலும் ஆறுமண்டபங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு மண்டபத்தையும் சீராக அமைக்கும் வகையில் ஐந்து இடைகளிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டபங் களிலும் மூன்று நெடுஞ் சுவர்கள் எழுப்பப் பெற்று நான்கு அறை களாகக் பிரிக்கப் பெற்றுள்ளன. அடியில் மரப்பலகைகள் பதிக்கப் பெற்றுள்ளன. இவைகள் கூலப் பொருள்களை (தானிய மணி களை)க் கொட்டி வைப்பதற்கென்றே கட்டி வைக்கப் பெற்றதாய்க் காணப்படுகின்றன. இவைகள் அரசாங்கப் பண்டக சாலைகள் போலக் காணப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு நிலச்சுவான்தார் களும் ஏராளமான நிலங்களை உடையவர்களாய் சிற்றரசர்கள் போல் வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. அரசுக்கு வரியாக இந்த நிலச் சுவான்தார்கள் பணம் கொடாது கூலப் பொருள்களையே அளந்து கொடுத்திருக்க வேண்டும் என்று அறிஞர்களால் கருதப்படுகிறது.1 இவற்றிற்கு ஈடான களஞ்சியம் உலகில் எங்கும் எவரும் கண்டதில்லை என்று கருதப்படுகிறது. மொகஞ்சதாரோ மொகஞ்சதாரோ என்ற பெயர் ஆதிகாலத்தில் சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் இட்ட பெயர் அல்ல, இந்தப் பகுதியில் உள்ள மக்கள், இப்பொழுது இம்மாவட்ட மொழியில் மொகஞ்சதாரோ (mohenjo-daro) - மறைந்தோர் மண்மேடு என்னும் பொருள்படும் முறையில் பெயரிட்டு அழைத்தனர். இந்நகர் 5000- ம் ஆண்டு முன் அடிப்படை இட்டு கட்டப்பட்ட கோ நகர் ஆகும். முதல் கோ நகர் அரப்பா. அரப்பா தலைநகராக இருப்பதில் பல இடையூறு இருக்கிறது என்றோ அல்லது அது அழிபாடுற்ற தென்றோ மொகஞ்சதாரோவை தலைநகர்ஆக எழுப்பி இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. மொகஞ்சதாரோ நகர் கட்டப்பட்ட இடம் மிகப் பரந்த சமவெளி ஆகும். இந்நகர் ஆதியிலே நன்கு திட்டமிட்டுக் கட்டப் பட்ட மாநகர் ஆகும். இது இரண்டாவது கோநகர் ஆக இருக்கலாம் என்றும் எண்ணப்படுகிறது. இது முதலில் ஒரு சதுரக் கல் பரப்புடையது. இதில் பத்தில் ஒரு பகுதியே அகழ்ந்து ஆய்வு செய்யப் பெற்றது. இந்நகர் ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த தலைநகராக திகழ்ந்தது. இங்குள்ள மண்மேட்டினை அகழ்ந்து கண்டெடுத்ததின் பயனாக ஏழடுக்குகளைக் கொண்ட அழிந்த நகரைக் கண்டுள்ளனர். 1950-இல் இந்நகரின் ஏழாவது அடுக்கை இன்றை (பாக்கிதான்) அரசின் தொல் ஆய்வுத்துறை அகழ் ஆய்வுத்துறை இயக்குநர் தளபதி சர் மார்ட்டி மர் உயிலர் தோண்டிப் பார்த்து மொகஞ்சதாரோ நாகரிகத்தில் எத்தகைய வேறுபாடும் காணப்படவில்லை என்று கூறினார். தெரு அமைப்பு மொகஞ்சதாரோவின் தெருக்கள் கிழக்கு மேற்காகவும் தெற்கு வடக்காகவும் அமைக்கப் பெற்றுள்ளன. தென் கிழக்கு, வடகிழக்குப் பருவக் காற்றினை உளத்திற் கொண்டு நல்ல இளங்காற்றை எதிர்பார்த்தே தெருக்கள் நீளமாகவும், அகலமாகவும் அமைக்கப் பட்டுள்ளன. பெரிய தெருக்கள் 6-பர்லாங்கு (முக்கால் கல்) நீளம் உடையன. 9-முதல் 34-அடி வரை அகலம் உடையன. பெரிய தெருக்களில் மூன்று வண்டிகள் ஒரே காலத்தில் செல்லலாம். பெரிய தெருக்களை பல குறுந்தெருக்கள் நேராக வெட்டிச் செல்கின்றன. நான்கடி அகலமுள்ள சிறு சந்துகளும் உள்ளன. பெரிய தெருக் களினின்று குறுந்தெருக்களுக்கு வண்டிகள் செல்லும் பொழுது தெருவின்கடை கோடியில் உள்ள வீட்டின் நேரான மூலையை சேதப்படுத்தாமல் வீட்டின் முனை வளைவாகக் கட்டப்பட்டுள்ளது. எல்லாத் தெருக்கழிவுகளிலும் நீர்ப்பாதை (மூடு சாக்கடைகள்) உள்ளன. சந்து முனையில் உள்ள வளைவான மூலைகளையுடைய வீடுகளின் அருகில் செல்லும் மூடு சாக்கடையும் வளைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறுந்தெருவிலும் கூட கிணறுகள் உள்ளது. தெருக்கள் நல்ல காற்றோட்டம் உள்ளனவாய் இருக்கின்றன. சுகாதாரத்தை நன்கு கவனித்து தெருக்களும் வீடுகளும் அமைக்கப் பட்டுள்ளன. வீடுகள் வரிசையாக தம் எல்லைக்குள்ளாக ஒழுங்காக அமைக்கப் பட்டுள்ளன இந்நகர மக்களின் குடிமைப் பண்பு போற்றற்குரிய தாகும் பெரிய தெருக்களின் கோடியில் காவற் கூடங்களும் சிற்றுண்டிச் சாலையும் உள்ளன. கட்டிடங்கள் அமைப்பு முறை சிந்து வெளி மக்களின் பண்பாடும் அறிவும் நாகரிகமும் அவர்களின் கட்டிட அமைப்பு முறையில் நன்கு அமைந்து விளங்குகிறது. இவர்கள் எழுப்பிய கட்டிடங்களுக்கு சுட்ட செங்கற்களையும், உலர்ந்த மண் செங்கற்களையும் பயன்படுத்தி யுள்ளனர். செங்கற்கள் எல்லாம் ஒரே அளவில் செய்யப்பட்டன வாகும். அதாவது நீளத்திற்பாதி அகலம் அகலத்திற்பாதிகனம். இவைகள் தேவைக்கேற்றவாறு பலவடிவில் செய்யப்பட்டிருந்தன. சில சதுரமாகவும் சில வளைவாகவும், சில மூலைக்கு ஏற்றவாறு முக்கோண வடிவிலும் செய்யப்பட்டிருந்தன. உலர்ந்த மண் செங்கற்களைச் சுடுவதற்கு கால்வாய்கள் பல வட்ட வடிவில் இருந்தன. பொதுவாகச் செங்கற்கள் ஒன்பது அங்குல நீளமும் 4 ½ அங்குல அகலமும் 2 ¼ அங்குலப் பருமனும் உடையனவாய் உள்ளன. செங்கற்கள் மேடுபள்ளங்களின்றி நன்றாக அறுக்கப் பட்டுச் சமன் செய்யப் பட்டிருந்தன. கிணறு கட்ட தனியான ஆப்புச் செங்கல் செய்யப் பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கழிவுநீர்க்கால் வாய்கள் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு மேலே மூடப் பட்டுள்ளன. பெரிய மதிலும் அரணும் அமைப்பதற்கு 29 அங்குல நீளமும் 14 ½ அங்குல அகலமும் 7 அங்குலப் பருமனும் உடைய செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோவில் இரண்டு, நான்கு, ஏழடுக்கு வரையுள்ள உயர்ந்த வீடுகள் கட்டப் பெற்றிருந்தன. மாடிகள் உயரமின்றி இருந்தன. மூன்றடுக்கு வீடுகளே அதிகம் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்கள் நாட்டின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப கட்டிடங் களைக் கட்டியுள்ளனர். கட்டிடங்களின் புறச் சுவர்களை தட்ப வெப்ப நிலைகள் தாக்குவதால் அவைகளைச் சுடுமண் செங்கற்களால் அமைத்துள்ளனர். தட்ப வெப்ப நிலையின் தாக்குதல்களுக்கு உட்படாத உட்புறச் சுவர்களை உலர்ந்த-சூளையிடப் பெறாத செங்கற்களால் கட்டியுள்ளார். சுவர்களை, செங்கற்களை வைத்து மண் சாந்தாற் கட்டி, மேற்பூச்சாகக் களிமண் சாந்தையே பூசி இருக்கின்றனர். சில இடங்களில் களிமண்ணுடன் தவிடுகலந்து நன்றாகக் குழைத்து சாந்தாகச் செய்து மெழுகியுள்ளனர். சுவர்களும், தரையும் கூரையும் களிமண்ணால் பூசப் பெற்றிருந்தது. சுவர் மீது மரத்தினாலான பெரிய உத்திரங்களை வைத்து அவற்றின் மீது கூடைகளைப் பரப்பி அவற்றின் மீது நாணற்பாய்களைப் பரப்பி அப்பாய்கள் மீது களிமண் சாந்தைக் கனமாகப் பூசிக் கூரைமீது அமைத்து இல்லம் அமைத்து வாழ்ந்தனர் கட்டிடம் கட்டும் கொத்தர்கள் சுவர்களை ஒழுங்காகவும் நேராகவும் கட்டுவதற்கு மட்டப் பலகைகளைப் பயன்படுத்தியுள்ளனர். உத்திரங்களை வைப்பதற்கென்றே சுவர்களில் பெரிய சதுரமாக துளைகளை விட்டிருந்தனர். அவைகள் இன்றும் நன்றாகக் காணப்படுகிறது. கொத்தர்கள் சுவர்களையும் தரையையும் மேற்கூரையையும் சிறிதும் பெரிதுமான மட்டப் பலகைகள், கைப்பாணிகள், கரண்டிகள் முதலியவைகளைப் பயன்படுத்தி யுள்ளனர். வீட்டுச் சுவர்கள் சாளரங்கள், வாயிற்படிகள் ஒழுங்காக வும் பெரிதாகவும் அமைத்து கட்டிடம் உறுதியாகவும் வசதியாகவும் அமைத்திருப்பது அக்காலக் கொத்தர்கள் கட்டிட அமைப்பில் நிறைந்த பட்டறிவுடையவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. சுவர்கள் செங்கற்களை வைத்து மண் சாந்து கொண்டு கட்டி எழுப்பப் பெற்றதால் உறுதியாக இருக்க சுவர்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுச் சுவர்கள் மூன்றரை அடிமுதல் ஆறு அடி வரை அகலம் உள்ளதாய் மிகப்பருமனாக இருக்கின்றன. சிந்து ஆற்றின் வெள்ளத்தை எண்ணியே சுவர்கள் பருமனாக அமைக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. ஒன்றிற்கு மேற்பட்ட மாடிகளையுடைய மாளிகைகள் அமைக்கும்போது மேல் உள்ள பாரத்தைத் தாங்குவதற்காக சுவர்களின் அகலம் நீட்டப்பட்டுள்ளது. ஒரு பெரிய கட்டிடத்தின் ஒரு சுவர் அகலம் 5 அடி 9 அங்குல கனமுடையதாயும் பிற சுவர்கள் 3 அடி 6 அங்குலம், 4 அடி 10- அங்குலம், 4 அடி 5 அங்குலம் உள்ளதாய் அமைக்கப்பட்டுள்ளன. 25 அடி அகலத்தில் ஒரு சுடுமண் செங்கல்லால் கட்டப்பட்ட அரணும் உள்ளது. மொகஞ்சதாரோவில் பல திறப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இரண்டு, மூன்று, நான்கு நிலைகளையுடைய வீடுகள் ஏராளமாக உள்ளன. அகன்ற முற்றங்களையுடைய ஒரே அடுக்குடைய மாடமுடைய வீடுகளும் உள்ளன. எல்லா இல்லங்களும் மேற்றளம் உடையவைகளாகவே இருக்கின்றன. நாலு புறமும் மேற்றளத்தில் கைபிடிச்சுவர்கள் உள்ளன. மேற்றளத்தில் விழும் மழை நீர் மேற்றளத்தில் சிறிது நேரமும் தங்க வழியின்றி கீழே இறங்க மேற்றளத்தில் வாட்டம் வைத்துக் கட்டப்பட்டிருப்பதோடு கீழே நீர் வந்து சேர குழாய்களும் வைக்கப்பட்டுள்ளன. குழாய்கள் மண்ணாலும் மரத்தாலும் ஆனவை. சிறிய இல்லம் சிறிய இல்லங்களும் பல உள்ளன. அவை பாட்டாளி மக்களின் இல்லம் என எண்ணப்படுகின்றன. சிறிய இல்லம் 4-அறைகள் உள்ளதாய் 30 அடி நீளமும் 27 அடி அகலமும் உடையது. இவைகள் எல்லாம் செங்கற்கட்டிடங்களேயாகும். இவற்றின் தளம் சாணத்தினால் மெழுகப்பட்டுள்ளன. இஃதன்றி குடில்கள் அமைத்து வாழும் ஏழைகள் இருந்திருப்பாரோ என்ற ஐயமும் உண்டாகிறது. சிந்துவெளிப் பண்பாட்டில் பிச்சைக்காரர்களும் இல்லாதவர்களும் இருந்திருப்பார்களா என்று ஐயம் எழுகிறது. சில பெரிய மாளிகைகளின் நடுவில் அகன்ற முத்தங்கள் காணப்படுகின்றன. அதனைச் சுற்றிப் பல அறைகள் உள்ளன. அறைகள் சிறிதாக நல்ல காற்றோட்டம் உள்ளதாய்க் காணப்படு கின்றன. வாயிற்படியும் கூரையும் உயர்ந்ததாய் இருக்கின்றன. ஆனால் இதன் உபயோகம் நமக்குப் புலப்படவில்லை. இத்தகைய இல்லங்கள் பல தமிழ் நாட்டில் இன்றும் உள்ளன. பேரில்லம் அக்காலத்து வேளாண்மையால் உயர்ந்த வாழ்வைப் பெற்ற பெருங்குடிமக்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் நாடி வாழ்ந்தனர். தாய் தந்தையுடன் ஆண்மக்கள் தங்கள் துணைவியரோடும், பெண்மக்கள் தங்கள் கணவரோடும் ஒரு இல்லத்தில் ஒற்றுமையுட னும் அன்புடனும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அவர்களுடைய பெரிய இல்லமும் அவற்றிலுள்ள பல அறைகளும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. பெரிய வீடுகளில் சகோதரர்கள் வாழ்வதற்கு வீட்டினிடையே நெடுஞ்சுவர்கள் வைத்து வீடு பிரிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் கூலப் பொருள்களை சேகரித்துவைக்கும் குதிர்கள் போன்றவைகள் தரையில் பதிப்பித்து வைக்கப்பட்டுள்ளன. சில இல்லங்களில் மாடங்களும் சுவர் அறைகளும் அமைந்து உள்ளன. சில வீடுகளில் சமையற் பாண்டங்களை வைத்தற்குரிய மரப் பெட்டகங்கள் சுவர்களில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. மாளிகைகள் செல்வர்கள் வாழும் மாடங்கள் உள்ள மாளிகைகள் பல உள்ளன. அவை இரண்டிற்கு மேற்பட்ட அடுக்குகளையுடைய மாளிகைகள் ஆகும். இவை அகன்ற கூடங்கள், நீண்ட தாழ் வாரங்கள் பெரிய முற்றங்கள் இடை கழிகள் சிறிய வாயில்கள் சிறிதும் பெரிதுமான பல அறைகளையும் உடையன. இவற்றில் உள்ள மேனிலை மாடங்கள் செங்கல் தளவரிசைகளை உடையன. சில மேன்மாடங்கள் படுக்கை அறைகள் உள்ளன. சில மாடங்களில் பயிலும் இடம்,நீராடும் அறைகள், மலங்கழிக்கும் சிற்றறைகள் போன்றவைகளும் உள்ளன. மாடங்களுக்குச் செல்ல செங்கற் களால் கட்டப்பட்ட படிக்கட்டுகளும், மரத்தினால் செய்யப்பட்ட படிக்கட்டுகளும் உள்ளன. சில மாடங்களுக்கு ஏணிகள் மூலம் செல்வதும் உண்டென்று தெரிகின்றது. படிக்கட்டுகள் பெரும்பாலான மாளிகைகளில் வெளிப்புறமே அமைந்துள்ளது. சில வீடுகளில் படிக்கட்டுகள் உட்புறம் உள்ளன. ஒரு மாளிகையில் இரண்டு படிக்கட்டுகள் ஒன்றிற் கொன்று அண்மையிலே இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. இது பெரிய தலைவனுடைய இல்லம் போல் காணப்படுகிறது. ஒரு மாளிகையின் முன்புறம் சுமார் 100 அடி முன்புறம் அகன்ற முற்றம் உள்ளது. பின்புறம் 100 அடி அகன்ற தோட்டம் உள்ளது. மாபெரும் மாளிகை இங்குள்ள மாளிகைகள் அனைத்தினும் பெரிய மாளிகை ஒன்று மிகவும் உயரமாகவும் அகன்று நீண்டதாயும் அழகு நிறைந்ததாயும் உள்ளது. இந்த மாளிகை 242 அடி நீளமும் 112 அடி அகலமும் உள்ளது. இதன் அண்மையில் இதை விடச் சற்றுக் குறைந்த அளவில் 177-அடி நீளமும் 117அடி அகலமும் உடைய மாளிகை ஒன்றும் காணப்படுகிறது. இதற்கு அடுத்தாற் போற் மற்றொரு சிறிய மாளிகை ஒன்று உள்ளது. அதன் வடபுறம் 87அடி நீளமும் தென்புறம் 83 அடி நீளமும் உள்ள சுவர்கள் உள்ளன. மேற்குப் புறச் சுவர் 38 அடி நீளமும் கிழக்குப் புறச்சுவர் 48 அடி நீளமும் உள்ளது. இங்கு பல அறைகள் உள்ளன. வீட்டின் பின்புறம் வட்டவடிவான கிணறும் உள்ளது. இங்கு 4 அடி அகலமுள்ள சதுரமான தூண்கள் பல காணப்படுகின்றன. இத் தூண்கள் இந்த மாளிகையின் வளைவுகளைத் தாங்குபவை. இந்த மாளிகைகளின் அண்மையில் 56-அடி நீளமான சிறு விடுதி உள்ளது. இதில் நீண்ட தூண்களைக் கொண்ட மண்டபம், பல கூடங்களும் உள்ள வழிகளுடன் கூடிய பல அறைகள் உள்ளன. இந்த அறைகள் பண்டங்களை வைப்பதற்கும் சமையல் செய்வதற்கும், துயில்வதற்கும் உணவு உண்பதற்கும் ஏற்பட்டன. இது அரசனது அரண்மனையாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அடுத்த மாளிகைகள் அமைச்சர் இளவரசர் போன்றவர்களின் மாளிகைகளும் ஏவலாளர்களின் இல்லங்களுமாக இருக்க வேண்டும் என்று எண்ணப் படுகிறது. இங்குள்ள இல்லங்களில் மகளிர்கள் வசிப்பதற்குத் தனியிடமும், மாளிகை வாயிற்புறத்தை அடுத்து காவலர்க்கு ஒரு சிற்றம் இருந்தது. வீட்டின் பின்புறம் வீட்டுக்காரர்கள் அமர்ந்து பேசுவதற்கேற்ற கூடங்களும் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறைகளும், படுக்கை அறைகளும் தவறாது உள்ளன. தனியே குளிக்கும் அறைகளும் உள்ளன. குளிப்பறைகள் தெருப்பக்கம் உள்ளன. செங்கற்களால் தளவரிசை இடப்பட்டு அறைகள் சுத்தமாக உள்ளன. கழிவு நீர் ஓட வடிகால்கள் உள்ளன. வடிகால் தெருவில் உள்ள மூடு சாக்கடையுடன் பொருந்தியுள்ளது. நீராடும்அறையின் தரைமட்டம் சற்று சரிந்து வெளியே நீர் செல்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. சமையல் அறை ஒவ்வொரு வீட்டிலும் தனியே சமையல் அறை இருந்தது. அங்கு விறகு வைக்கவும் பிற, சமையற் பண்டங்களை வைக்கவும் தனி இடம் இருந்தது என்றாலும் சமையல் முற்றத்தின் அண்மையில் செய்வதும் உண்டு. சமையல் அறையில் பெரியதாழிகள் பதிப்பிக்கப் பட்டிருந்தன. சமையல் அறையில் தாழிகள் பதிப்பிக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளன. இவை நீரைச் சேமித்து வைப்பதற்காக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. சமையலுக்குரிய சாமான்கள் வைக்கப் பலமண் சாடிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த வழக்கம் இன்றும் மொகஞ்சதாரோவைச் சுற்றியுள்ள கிராமத்தா ரிடம் நிலவுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறையில் அடுப்புகள் உள்ளன. சில வீடுகளில் அடுப்புகள் காணப்படாவிடி னும் அடுப்புகள் இருந்ததற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. இந்த அடுப்புகள் மெசபொத்தாமியாவில் உள்ள அடுப்புகளைப் போன்றவைகளாக இருக்கின்றன. கோயில் மொகஞ்சதாரோ சிந்து வெளி அகழ் ஆய்வில் அரப்பாவிற்கு அடுத்த தொன்மையான நகரம். ஆனால் அரப்பாவை விட நல்ல நிலையில் அழிவுறாத நிலையில் இருக்கிறது என்று அகழ் ஆய்வில் ஈடுபட்ட ஆர்.டி. பானர்ச்சி அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். மொகஞ்சதாரோவில் மட்டுமல்ல சிந்து வெளியிலே எண்ணற்ற சிவ லிங்கங்களும், தாய்த் தெய்வ உருவங்களும், சிவபெருமான் திரு உருவம் தீட்டப் பெற்ற முத்திரைகளும், நந்தி(காளை) உருவம் தீட்டப்பட்ட முத்திரைகளும், தாயத்துகளும் கிடைத்துள்ளன. ஒரு நடராசர் உருவம் கூட கிடைத்துள்ளன. இஃதன்றி பல நீர்த் தெய்வம், நிலத் தெய்வம், மரத் தெய்வம், மீன் தெய்வம் போன்ற எண்ணற்ற தெய்வ உருவங்கள் கிடைத்தன. சிவலிங்கங்களும், சிவனார் உருவம், அவரது காளை வாகனமாகிய நந்தி உருவமும் சிந்து வெளிப் பண்பாடு திராவிட மொழிபயின்ற, சைவ நெறியைத் தழுவிய வேளாளர் பண்பாடு என்பதை உறுதிப்படுத்த ஒப்பற்ற முதல் தரச் சான்றாக இருந்தன. சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று வரலாற்றைப் பொய்ப் படுத்த முன்வந்த சில சாதிவெறியும், சமய வெறியும் கொண்ட அறிஞர்கள் முயற்சி முறியடிக்கப்பட்டன. அவர்கள் இறுதியாக சிந்து வெளி முத்திரை களில் பொறிக்கப்பட்ட ஓவிய எழுத்துக்களை வட மொழிச் சார்பானது என்று நிலை நாட்ட முயன்றனர். அந்த இறுதி முயற்சியும் உலாந்தாவின் தலைநகரான கோபன் ஹேகன், காண்டி நேவியன், ஆசியர் ஆராய்ச்சி நிலையம், மாகோ, லெனின் கிராட் பல்கலைக் கழகங்களின் பல்வேறு துறைகளிலுமுள்ள அறிஞர்களின் குழுவும் சேர்ந்து சிந்து வெளி முத்திரைகளிலும், தாயத்துகளிலும் காணப்படும் ஓவிய எழுத்து களுக்கு மறைகுறி எழுத்துப் பொருள் விளக்கம் (Deceipherment) செய்ய முயன்று, தமிழ் அறிஞர், திராவிட மொழிகளின் ஆராய்ச்சி வல்லுநர் துணை கொண்டும் மிக நுண்ணிய கணித மின் அணுக் கருவியின் (Computer) துணை கொண்டும் உறுதியாக சிந்து வெளி ஓவிய எழுத்துக்கள் திராவிட மொழி எழுத்துக்களே என்று உலகிற்கு உணர்த்தியுள்ளனர். சிந்து வெளியின் அகழ் ஆய்வில் கோயில்களே காணப்பட வில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது தவறு சிந்து வெளியில் கோயில்கள் உள்ளன என்று டாக்டர் மெக்கே அவர்கள் திட்ட வட்டமாக எடுத்துக்காட்டியுள்ளார். அதனை சர் சாண்மார்சல், சர் மார்ட்டிமர் உயிலர் போன்றவர்கள் ஆதரித்துள்ளனர். சிந்து வெளியில் கி.மு. 3000 -ம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த பண்பாடு, ஒரு பெரும் நாகரிகத்தைப் படைத்த மக்களுடையது என்பது புலனாயிற்று. அதனை தாமிர நாகரிகக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இங்கு ஆழமாக அகழ்ந்து பார்த்த பொழுது செவ்வையாக அமைக்கப்பெற்ற கோயில்களும் வீடுகளும் காணப்பெற்றன. கோயில்களில் சிறு அறைகள் கனமான சுவர்களை உடையனவாய் இருந்தன. அதனால் அறைகளுக்கு மேல் விமானம் போன்ற கட்டிடங்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்த அறைகளைச் சுற்றி விசாலமான முற்றமும் அம்முற்றத்தின் நான்கு புறங்களிலும் சிறு மாடங்களும் காணப் பட்டன. நடுவில் உள்ள அறை திரு உண்ணாழிகையாக (மூலதானமாக) இருக்கலாம். மலையாளத்துக் கோயில் அமைப்பு அதனை யொத்தது போலும். சங்குத் தட்டுகள், நீல வளையல்கள், தோண்டி யெடுக்கப்பட்டுள்ளன. சில முத்திரைகளில் அரசமரம், மான் கொம்பு, புலி, யானை, காண்டாமிருகம் முதலியவற்றின் வடிவங்கள் காணப்பட்டுள்ளன. குதிரைவடிவம் காணப்பட வில்லை என்று திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் மிக விளக்கமாகத் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். இங்கு கோயில்கள் இருந்தன. கோயில்களின் திரு உண்ணாழிகையின் தமிழகத்தைப் போல இலிங்கங்கள் இருந்தன என்பதை முதலில் கண்டவர் சர்.சாண்மார்சல் அவர்களேயாகும். அவர்தம் நூலில் இதைப் பற்றி விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அங்கு கண்ட இந்த விசாலமானதும், நுட்பமான பெரிய கட்டிடங்கள் சில தனிப்பட்ட செல்வர்களின் சொந்த மாளிகையாக யிருக்கலாம். அல்லது அவைகளிற் சில திருக்கோயில்களாக இருக்கலாம் என்று தெளிவாக ஆய்ந்து முடிவு செய்ய முடிய வில்லை. மெசபொத்தாமியாவில் தெய்வம் உறையும் திருக் கோயில்கள் வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள் உள்ளதாயும், விளக்கமான குறிக்கோளைக் கொண்டதாயுமுள்ள மன்னர்களின் மாளிகையாகவும் இருக்கும்-அதாவது உணவை உண்டு நீரை அருந்தும் கடவுளின் குடியிருப்பு இடங்களாகவும், மரணம் அடையக் கூடிய ஏதாவது ஓர் இளவரசன் களிகொள்ளச் செய் விக்கப்பட்டதாகவும் இருக்கும். தன்னுடைய சமயச் சடங்கள் செய்யும் பெண் பூசாரியின் திருமண வைபவங்களுக்காகவும் இருக்கலாம். அதே நோக்கத்தோடு மொகஞ்சதாரோவில் அமைக்கப் பட்ட பேரில்லமாகவும் இருக்கலாம் என்று எண்ணலாம். இவை களில் சில விதிவிலக்காக பெரிய விசாலமான கட்டிடங்கள் சில கடவுள்களுக்காக கட்டப்பட்ட இல்லங்களாக இருக்கலாம். முதலாவது, இரண்டாவது ஐந்தாவது ஆறாவது எண்ணுள்ள மேலே கண்ட கட்டிடங்கள் சிறப்பாக வழிபாட்டிற்குரிய திருக்கோயிலுக்கு என்று ஒதுக்கிவைக்கப்பட்ட இடமாக இருக்கும் என்று கருதலாம். இன்னும் பல இடங்களில் கிடைத்துள்ள தனிச்சிறப்புமிக்க ஆவுடையார் வடிவங்கள் (ringstones) போன்ற பொருள் சமயக் கோட்பாட்டு முறையில் வழிபடுபவைகளாக இருக்கலாம் என்று நம்புவதற்குப் போதிய காரணங்கள் உள்ளன. இவைகளை யெல்லாம் ஆய்ந்து பார்க்கும் பொழுது சிந்து வெளிமக்கள் கிரீட்தீவிலுள்ள மினோவர்கள் போன்று பொதுவான வழிபடு இடங்கள் அமைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. அப்படியே அவர்கள் கோயில் அமைத்திருந்தாலும் இன்றைய இந்தியக் கோயில் போலன்றி சாதாரணமாக மக்கள் வாழும் இல்லங்கள் போன்று கோயில்கள் அமைத்திருக்கலாம் என்று கருத முடியும்.1 ஏனைய கோயில் அமைப்புகள் மொகஞ்சதாரோவில் உள்ள கட்டிடங்கள் பலவற்றில் பல வற்றின் உபயோகம் நம்மால் திட்ட வட்டமாக நிர்ணயிக்கப் படவில்லை. அவைகளில் சில திருக்கோயில்களாக இருக்கலாம்; அல்லது வேறாகவும் இருக்கலாம். சில பகுதிகளில் உள்ள சிறிய கட்டிடங்கள் சில இரண்டு அறை வீடுகளில் ஒன்று பெரிதாகவும் மற்றொன்று பக்கத்தே பிரகாரம் போல் சிறிதாகவும் உள்ளன. அதே இடத்தில் 5-ஆவது பிளாக் ஒரு பெரிய அமைப்பு பெரிய மைய அரையை உள் கூறாகக் கொண்டிருக்கிறது. இரண்டு அறை களுக்கும் இடையேயுள்ள நடைக் கூடம் அதன் மேற்குப் புறத்திலும் தெற்குப் புறத்திலும் ஒரு சுவரும் இரண்டு சிறு அறைகளும் அதன் தெற்குப் பகுதியில் சில பெரிய அறைகளும் உள்ளன. அதன் வடக்கு புறத்தில் கட்டிடத்தின் மூலப்பகுதி தெளிவற்றதாய் அடிப்பகுதி பின்னர் எழுந்ததாகக் காணப்படுகிறது. இடது பகுதி அழிவுற்றுள்ளது; அடிப்படை மட்டும் உள்ளது. இது வழக்கத்திற்கு மாறாகத் திண்மையாக 10-அடி ஆழத்தில் கரடுமுரடான செங்கல்லால் அடிப்படையிடப்பட்டுள்ளது இது அழகாக மேல்கட்டுமானம் உள்ளதாய் மிகுந்த அக்கறையோடு மையப்பகுதியில் மேலே ஒரு சிகர அமைப்பை உண்டுபண்ணி இருக்கிறது. அதே போன்று மற்றொரு கட்டிடம் நீண்ட சதுரம் உள்ளதாக இருக்கிறது. தென்புறம் ஒரு சிறிய ஒடுக்கமான அறையும் மேற்குப்புறம் இரண்டு வேறு சிறு அறைகளும் உள்ளன. இவை எண் 1-இல் பிளாக் 4, செக்சன் வி.எ பரப்பில் உள்ளது. இதில் உள்ள மூன்றாவது அறை ஒன்றில் கணிசமான அளவு மனித எலும்புகளும், சாம்பலும், மட்பாண்டங்களும் பாத்திரங்களும் ஏனைய பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் ஒரு தனிப் பட்ட மனிதனுடைய குடி இருப்பு இடமாக எண்ணுவதற்கில்லை. இது ஒரு பொது இடமாகவோ, புனித இல்லமாகவோ, வழிபடும் இடமாகவோ கருதத்தக்கதாகும். இறுதியாய் ஒரு குன்றுப் பகுதியின் ஒரு சிறிய அழிபாடு காணப்பட்டது. அது டிகே பரப்பில் 2-வது பிளாக்கில் ஏ.செக்சனில் காணப்படும் இந்த அழிபாடுகள் திரு தீக்சிதர் அவர்களால் அகழ் ஆய்வு செய்து ஓர் உறுதியான ஒரு புனித கோயிலாக இருக்கிறது என்று முடிவிற்கு வந்தார். இங்கு கோயில்கள் போல் பல கட்டிடங்கள் அகழ் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவைகளில் தெய்வ உருவங்களோ பூசைக்குரிய பொருள்களோ கிடைக்கவில்லை. ஆனால் உறுதியாக சிந்து வெளி மக்கள் சிவன், சக்தி முதலிய தெய்வ வழிபாட்டுக் காரர்கள். உருவங்களை வைத்து வழிபட்டுவந்தனர் என்பதற்கும் ஐயம் இல்லை. இன்றைய தென் இந்தியத் திராவிடர்களைப் போல் திருக்கோயில் கட்டி சிலைகள் அமைத்து வழிபடவில்லை. Ändht®(Minoar) போன்று மக்கள் வாழும் இல்லத்திலும் அரண்மனையிலும் தெய்வ உருவங்களை வைத்து வழிபட் டிருக்கலாம் என்றே சிலர் கருதுகிறார்கள். கால்களைக் குறுக்காக வைத்துக் கொண்டிருக்கும் (ஆடவல்லான்) தெய்வ வடிவம், பாம்பு, தேவி, லிங்கம் முதலியன கோயில்களில் காணப்பட்டன. சிவலிங்கங்கள் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டன. காலத்தாற் பிற்பட்ட இடங்களில் பிரேதங்களைப் புதைப்பது மாத்திர மல்லாமல் அவற்றைச் சுட்டெரித்த சாம்பலையும் எலும்பையும் பெரிய மண்பாண்டத்தில் வைத்து புதைப்பதும் அவற்றின் மேல் செங்கல்லினால் சமாதி போன்ற கட்டிடங்கள் அமைப்பதும் புலனாயின. புதையல், நிலங்களில் காணப்பட்ட முத்திரையில் உள்ள எழுத்துக்கள் முதலில் பட எழுத்தாயிருந்து பின் ஒலிகளைக் குறிப்பனலாயின அவற்றை ஆய்ந்த ஹீரா அடிகள் அவை தமிழ் எழுத்துக்களின் மூலவடிவுகளாய் இருத்தல் கூடும் என்றார். சிந்து நாகரிகம் எகிப்திய நாகரிகத்தினின்றும், சுமேரியா நாகரிகத்தி னின்றும் வந்தது என்று சிலர் கூறினர். ஆனால் கர்னல் ஆல்காட் எகிப்திய நாகரிகமே பாண்டிய நாட்டினின்று (பண்டு நாட்டி னின்று) வந்தது என்றும் இந்திய நாகரிகத்தோடு ஒப்புவமை காட்டி யுள்ளார்.1 சிறப்பு வாய்ந்த செய்குளம் சிந்து வெளியின் கட்டிடக் கலையைப் பற்றி நூல் எழுதும் எவரும் மொகஞ்சதாரோவில் உள்ள சிறப்புமிக்க செய்குளம் (Great Bath) பற்றி எழுதாமல் விட்டுவிடுவாராயின் அது ஒரு நிறைவான நுலாக எண்ணப்படத்தக்க தன்று. அந்நூல் அறிஞர்களால் சிறப்பானது என்று அறிஞர்கள் மதிக்க மாட்டார்கள். குளத்தில் நீர் நிற்கும் இடம் 39 அடி நீளமும் 23 அடி அகலமும் 8 அடி ஆழமும் உள்ளது. இதன் வெளிப்புறச்சுவர் 7 அல்லது 8 அடி அகலமுள்ளது. இன்றையப் பெரும் நகரில் உள்ள நீச்சல் குளங்களைப் போல் வசதியும், சொகுசும் எழிலும் ஏற்றமும் உடையது. குளத்தில் அண்மையில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங் களையெல்லாம் சேர்த்துக் கணக்கிட்டால் 180-அடி நீளமும் 108-அடியும் உள்ள ஒரு போதிய நிலப் பரப்பில் இக்குளம் கட்டப்பட்டுள்ளது.1 இக்குளத்தின் நீர் நிற்கும் பகுதியைச் சுற்றி நாற்புறமும் நடைபாதைகள் உள்ளன. நடைபாதை உட்புறம் உயர்ந்து வெளிப்புறம் சாய்ந்து மட்டம் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. மழை பெய்தால் நடையில் விழும் நீர் ஒரு சொட்டும் உள்ளேயுள்ள குளத்து நீரில் கலக்காது வெளியே சென்று விடும் குளத்திற்கு அடுத்த நடை பாதையின் விளிம்பில் நாற்புறமும் கைபிடிச்சுவர்கள் எழுப்பப் பெற்றுள்ளன. நடைபாதையின் ஒவ்வொரு முனையிலும் உயரமான மேடை ஒன்று உள்ளது. அம்மேடைக்குச் செல்ல பல படிக்கட்டுகள் உள்ளன. இப்பாதையை அடுத்துப் பெரிய சுவர் உள்ளது. அதன் மீதும் நடைபாதை உண்டு. இப்பெருங்குளத்தின் அடிப்பகுதி-நீர் நிற்கும் இடம் நல்ல வழவழப்பான செங்கற்களால் மண்ணும் சுண்ணமும் கலந்த சாந்தும் கொண்டு கட்டப்பட்டது. அதன் மீது ஒரு விதத் தார் (கீல்) பூசப்பட்டுள்ளது. குளத்தின் அடிப்பாகம் வரை செல்வதற்கு வடபுறமும் தென்புறமும் வரிசையாகப் படிக்கட்டுகள் உள்ளன. 6 ½ அடி உயரத்தில் கழிவு நீரை வெளியே அகற்றி விட்டு புதிய நீரை உள்ளே கொண்டுவர நல்ல மதகும் உண்டு. இக்குளத்தில் மூன்று புறங்களிலும் தாழ்வாரங்கள் உள்ளன. தாழ்வாரங்களில் சுரங்கப் பாதையும் முடியில் எட்டு மாடியுள்ள அறைகளும் உள்ளன. அறைகள் இக்குளத்தில் குளிக்கும் சமய குருக்கள் எவரும் அறியாவண்ணம் வந்து குளித்து விட்டு அறைகளுக்குச் சென்று உடைமாற்றம் செய்வதற்காக அமைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிவன் கோயிலில் பூசை செய்யும் சமய குருமார்கள் ஆறுகாலப் பூசைக்கும் ஆறுமுறை குளிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பூசாரிகளின் வழியில் இவர்களும் ஆறுகால் குளிப்பை (நானத்தை) விடாது பின்பற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குளத்திற்கு நீரை நிரப்புவதற்குக் குளத்தின் சிறிது தொலைவில் மூன்று பெரிய கிணறுகள் உள்ளன. அவைகளினின்றே நீரை இறைத்து சிறு கால்வாய் மூலம் நீரை வார்த்து நிரப்புகிறார்கள். இக்குளத்தின் அடிப்பகுதியில் உள்ள தளத்தில் பூசப்பட்டிருக் கும் நிலக்கீல் இந்தியாவில் கிடைப்பதில்லை. இது அயல் நாட்டிலிருந்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலக்கீல் சுமேரியாவில் உண்டு. சுமேரியர் தம் கட்டிடங்களை இந்த நிலக்கீல் மூலமே அழகும் உறுதியும் செய்து வந்தனர். எனவே சிந்து வெளி வணிகர்கள் இந்தக் கீலை சுமேரியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும். சிந்து வெளி நாகரிகமும் தமிழகமும் 1922-இல் சிந்து வெளி அகழ் ஆய்வு செய்யப்பட்டு, அகழ் ஆய்வுத்துறையின் தலைவரும் இந்திய மைய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநர் தலைவர் சர் சாண் மார்சல் சிந்து வெளிப் பண்பாட்டின் மூலகர்த்தர்கள் திராவிடர்கள் என்று உறுதியாக 1931-இல் உலகிற்கு உணர்த்தியுள்ளார். அவருக்குப் பின்னர் இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வு இயக்குநர் களின் தளபதியாக வந்த சர் மார்ட்டிமர் உயிலரும் மொகஞ்சதாரோ அகழ் ஆய்வை பொருப்புடன் நடத்திய பேராசிரியர் ஆர்.டி. பானர்ச்சியும், பேராசிரியர் டாக்டர் கோர்டன் சைல்டு டாக்டர் ஜி.ஆர்.ஹண்டர், டாக்டர் எய்ச்.ஆர். ஹால் - பேராசிரியர் லாங்டன், எ-ஏ-வாடல் அறிஞர் எய்ச்.ஹிரா அடிகள், டாக்டர் அகோபார்போலா, டாக்டர் கொனரசோவ் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் சிந்து வெளிப்பண்பாடு திராவிடப் பண்பாடு என்று எண்ணற்ற நூற்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். என்றாலும் ஆரியப் பண்டிதர்கள் சிலரும் ஆச்சாரிகளும் பைராகிகளும், பண்டாரங்களும் லம்பாடிகளும் சிந்து வெளிப் பண்பாடு ஆரியப்பண்பாடு என்று அதற்றிப்பிதற்றித் திரிவதை இன்னும் நிறுத்தவில்லை. சிந்துவெளிப் பண்பாடு ஆரியப்பண்பாடு என்றால் சிந்து வெளியின் வீழ்ச்சிக்குப் பின் ஆரியர்கள் சிந்து வெளி நகரங்களைப் போன்ற நகரங்களை கட்டிடங்களை நிறுவினர் என்று ஒரு சிறு சான்று காட்ட முடியுமா? முடியாது. ஆனால் சிந்து வெளிப் பண்பாட்டை விட சீரிய பண்பாடு இலங்கையில் இருந்ததாக வான்மீகி கூறியுள்ளார். சிந்து வெளிப் பண்பாட்டை விட சீரிய பண்பாட்டை சிறந்த நகரை, வான் அளாவிய மாட மாளிகைகளை, திருக்கோயில்களை எடுப்பித்தனர் என்றுதமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன இன்று கூட தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வட நாட்டில் காண முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூல்கள் 1. The Velalas in Mohenjo - Daro- H.Heras. Indian Historical Quarterly Vol IX 1938 calcutta 2. Annual Reports of the Archaeological survey of India (1929-1930) 3. Cambridge History of India-The Indian Civilization-Martimer wheeler 4. Mohenjo- Daro and the Indus Civilization vol I sir John Marshall (London) 1931 5. Pre historic Civilization of the Hindus valley - K.N- Dikshit. 6. 5000 years of India Architecture-The Publication Division Govt of India New Delhi1951 7. மொகஞ்சதாரோ அல்லது சிந்து வெளி நாகரிகம்-டாக்டர் மா. இராசமாணிக்கம் பிள்ளை M.A.M.O.L (சென்னை)1952 8. சிந்து வெளி தரும் ஒளி - க.த. திருநாவுக்கரசு, M.A வரலாறு (M.A) தமிழ் 9. Mohenjo - Daro - Dr. R.E. Mohenjo Daro. தமிழ் நாட்டுக் கட்டிடக்கலை - இலக்கியச் சான்றுகள் தமிழ் நாட்டில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நன்கு வாழ முற்பட்டுவிட்டனர். நாடும் நகரும் பேர் ஊரும் சிற்றூரும் எழத் தொடங்கிவிட்டன. அரசும் முரசும், படையும் குடையும், அரணும், திறனும், அகமும், புகழும், கோயிலும், கோட்டமும், மாளிகைகளும், மனைகளும், மாடங்களும் கூடங்களும், மண்டபங்களும் எழுந்து விட்டன. அன்று, இன்று போல் கற்றளிகளோ, செங்கற்களும், சுண்ணச்சாந்தும் வைத்துக் கட்டப்பட்ட கட்டிடங்களோ கட்டப் பெறாததால் அவை நீண்ட நாள் அழியாது நிலைத்து நிற்க முடியவில்லை. மேலும் அடுத்தடுத்துத் தமிழகத்தில் எழுந்த பல கடற் கோள்கள், அனைத்தையும் கொள்ளை கொண்டு போய் விட்டன. பெரும்பாலான ஏடுகள் கூட அழிந்து போய் விட்டன. என்றாலும் எஞ்சிய ஒரு சில ஏடுகள் இன்றும் பீடுதரும் சான்றுகளாக உள்ளன. அதோடு இன்று எழுந்துள்ள அறிவியல் ஆய்வு முறைகளும் அரிய துறைகளும் கி.மு 1000 -ம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து 10,000 -ம் ஆண்டுகள் வரை தென்னிந்தியாவைப்பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களின் மொழி, வாழ்க்கை, கலை, பண்பாடு, நாகரிகம், வீடு, மாளிகை, கோயில் முதலியவற்றை அறியத்துணை செய்கின்றன. கி.மு. 3000 -ம் ஆண்டிற்கு முன் சிந்து வெளியில் எழுந்த திராவிட நாகரிகத்தின் சிறப்பை M§»nya®-r®.ஜh‹ மார்சல் அவர்கள் தலைமையில் நிறுவப் பெற்ற இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறை, சிந்து வெளியில் 5000 -ம் ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட பண்பாடும், நகரங்களும் திராவிட மக்களுக்கு உரியது என்று உலகிற்கு உரைத்தார். பண்டைக்கால மக்களின் வரலாற்றையும் மொழிகளையும், ஓவிய எழுத்துக்களையும் அறிவியல் முறையில் ஆய்வதற்குப் பயின்ற பண்பாளரும் கத்தோலிக்க சமயகுருவும் பெயின் தேச நாட்டிற் பிறந்தவரும் மேதகு புலவரும் பம்பாய் சவேரியார் கல்லூரி வரலாற்றாசிரியரும் புதிய அறிவியல் பாங்கில் பண்டைக் கால மக்கள் எழுதிய ஓவிய எழுத்துக் கலைகளுக்கு மறைகுறியெழுத்து மூலத்தின் பொருள் விளக்கம் (Decpher) காணும் துறையினைப் பழுதறப் பயின்ற பாவாணருமான ஹெண்டிரி ஹிரா அடிகள் சிந்து வெளி முத்திரைகளிலும், தாயத்துகளிலும் காணப்பெற்ற எழுத்துக்களைப் படித்து அது திராவிடர்களின் முன்னோர்களால் எழுதப்பட்ட எழுத்து என்றும் சிந்து வெளி நாகரிகம் தமிழர்களின் முன்னோர்கள் உருவாக்கிய நாகரிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பித்தார். உலாந்தா நாட்டின் தலைநகரான கோபன் ஹேகனிலுள்ள ஆசிய ஆராய்ச்சியின் காண்டி நேவியன் நிலையம் என்னும் அறிவியல் கழகத்தின் குழுஒன்று டாக்டர் அகோபார்போலா அவர்கள் தலைமையில் ஆய்ந்து அறிஞர் ஹிரா அடிகள் வழியில் ஆய்ந்து வடமொழி, தமிழ் மொழிப் புலவர் ஒத்துழைப்போடும் கணித நுண் பொறி (computer)Æ‹ துணையோடும் மீண்டும் மீண்டும் நன்கு ஆய்ந்து சிந்து வெளி எழுத்து திராவிடப் பண்பாட்டினின்று எழுந்த எழுத்தே என்பதை ஆமோதித்தனர். இறுதியாக சோவியத் ரசியாவில் உள்ள லெனின் கிராட் பல்கலைக் கழகத்திலும் மாகோ பல்கலைக் கழகத்திலுமுள்ள மனித இனப்பரப்புப் பற்றிய அறிவியல் விளக்க ஆய்வியல் அறிஞர்கள் பன் மொழிப்புலவர் தோழர் யூ.கொனரசோவ் அவர்கள் தலைமையில் காலஞ்சென்ற எமது அன்பிற்குரிய தோழர் தமிழறிஞர் சைமன் ருடின் துணை கொண்டும் உயர்ந்த கணித நுண் பொறி இயந்திரத் துணை கொண்டும் ஆய்ந்து சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை எஃகுப் போன்ற அசைக்க முடியாத சான்றுகளின் துணை கொண்டு அரண் செய்துள்ளனர். அதோடு சிந்து வெளிப் பண்பாடும் திராவிட மக்களும் அயல் நாட்டிலிருந்து வரப்பட்டன என்பதை மறுத்து தென் இந்தியாவில்-சிறப்பாக மறைந்து போன ஒளி (குமரி) நாட்டிலிருந்து (லெமூரியாவிலிருந்து) சுமேரியா, எகிப்து, காகஸ, சிந்து வெளி முதலிய நாடுகளுக்குப் பரவின என்ற உண்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்த இந்து மாக்கடலின் அடித்தளம் எல்லாம் அறிவியல் முறையில் ஆராயப்பட்டு வருகின்றன. ஸோவியத் உருசியப் பேரறிஞரும் திராவிட இன மக்களின், வரலாற்றுக் காலத்திற்கு முந்திய வாழ்க்கையைப் பற்றியும் தென் இந்தியாவினின்று திராவிட மக்கள் எகிப்து, எல்லம் உபைதியா, சுமேரியா, காகஸ பகுதிகளில் எல்லாம் குடியேறியவர்கள் என்பதைப் பற்றியும் அறிய அவர்கள் மொழி இனம் பண்பாடு முதலியவைகளைப் பற்றியெல்லாம் நன்காய்ந்த அறிஞர் ஏ.கொந்ராத் தோவ் அவர்கள், தொன்மை மிகுந்த பண்பாட்டைக் கொண்ட தமிழ் மக்கள் பேசும் மொழி ஒரே திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய சகோதர மொழிகளுடன் தொடர்புடைய மொழியாகும். திராவிடர்கள், இந்தியாவின் தொன்மைமிக்க மனித இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருக்கு வேதத்தில் கூறப்பெற்றுள்ள போர் வெறிகொண்ட ஆரியர்கள் இந்த வியத்தகும் அரிய நாட்டிற்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே இங்கு வாழ்ந்து வருபவர்கள் ஆவர். இப்பொழுது திராவிட மொழி தென் இந்தியாவில் பரவி யுள்ளன. ஆனால் ஒரு காலத்தில் மைய இந்தியாவிலும்-ஏன்? வட இந்தியாவிலும் கூடப் பரவி இருந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், பலுச்சிதானத்திலும், ஈரானின் தென் பகுதியிலும் கூட திராவிட மொழிகளைப் பேசி வரும் மக்கள் வாழ்ந்து வந்தனர். மெசபொத்தாமியாவில் முதன் முதலாக நிலையான வாழ்க்கையைப் பெற்று தலையாக வாழ்ந்த மக்கள் அவர்களாகவே இருக்கக் கூடும். அவர்களே நமது உலகில் மிகத் தொன்மையான நாகரிகத்தைப் பெற்றிருந்த சுமேரியர்களின் (Sumerians) முன்னோர்களாகவும் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன.1 என்று சோவியத் நாடு என்று சோவியத் அரசின் இந்தியத் தூதரின் நிலையத்தினின்று வெளிவரும் திங்களுக்கு இருமுறை வரும் வெளியீட்டில் எழுதியுள்ளார். மேலும் திராவிடர்கள், உபைதியா, எல்லம் (குஜிதான்- தெற்கு ஈரான்), சுமேரியா, மெசபொத்தாமிய நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள் திராவிடர்களே என்று தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். திராவிடர்கள் எல்லம் நாட்டின் தந்தையர்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளார். எல்லம் நாட்டின் தலை நகர் ஊர். இங்குதான் கிறிதுநாதர் குடும்பத்தின் ஆதி பிதா ஈசாக்கும், இலாமிய சமய தூதர் முகம்மத் நபியின் முன்னோனுமான இமாயிலும் பிறந்தனர். இற்றைக்கு 5000-ம் ஆண்டுகட்கு முன் எல்லம் எகிப்து, மெசபொத்தாமியா, கிரீட், தென் அமெரிக்காவில் உள்ள பெரு, மெக்சிக்கோ, ஈடா தீவு அசீரியா, சால்டியா போன்ற பல்வேறு நாடுகளில் தென் இந்தியாவிலிருந்து சென்ற திராவிட மக்கள் துளிர்க்கச் செய்த சீரிய பண்பாடேயாகும் என்று அறிஞர் மக்களின், சர் தாம ஹோல்டிச், பேராசிரியர் லாங்டன், டாக்டர் சி.ஆர்.ஹண்டர் டாக்டர் எய்ச்.ஆர். ஹால் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர். தென் இந்தியக் கோயில்களின் அமைப்பும் அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரே வகையாக உள்ளன என்று கலோனியல் தாம ஹோல்டிச் கூறியுள்ளார். ஹெரட்டோட்ட என்னும் வரலாற்றாசிரியர் தம் நூலில் கி.மு.4000 - ஆண்டிற்கு முன் தென் இந்தியர்கள் எகிப்தில் இந்து மதத்தை நிலை நாட்டினர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். பாபிலோன் நாட்டிலும், அதை அடுத்த அக்கேடியா, சிரியா முதலிய நாடுகளில் எழுந்த சிக்குராத் என்னும் கோயில்களும் தெய்வங்களும் தென் இந்தியாவில் உள்ள கோயில் அடிப்படையிலிருந்து அரும்பியவைகளேயாகும்.1 உலகில் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் உள்ள கட்டிடக் கலைக்கு வித்திட்ட திராவிட நாட்டில் இன்று கிறித்தவ ஊழிக்கு முன்புள்ள கட்டிடங்கள் காணப்படவில்லை என்பதாலே அகழ் ஆய்வில் இதுவரை கிறித்துவ ஊழிக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தின் அடிப்படை எதுவும் கண்டுபிடிக்கப் படாததால் தமிழர்களுக்கு கிறித்துவ ஊழிக்குமுன் கட்டிடக் கலை தெரியாது என்று கூறுவது பிழையாகும். வரலாற்றுப் புகழ்பெற்ற பாண்டியர்களின் துறைமுகப் பட்டினமும் தலைநகரும், சங்கம் மருவிய மூதூரும் யவன நாடுகளுடனும், கிழக்காசிய நாடுகளுட னும், மையக் கடற்கரை நாடுகளோடும் கடல் வணிகம் வளர்த்த கொற்கையில் கி.மு785-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மட்பாண்டங் களை தமிழக அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் 1970-ஆம் ஆண்டு அகழ்ந்து கண்டனர். ஆனால் கொற்கை எனும் கோ-நகர் இது தான் என்று கூற ஒரு கட்டிடம் கூட அகழ்ந்து காணப்படவில்லை. கொற்கையின் அரணும் அதன் பொற்கதவு களும் வான்மீகி இராமாயணத்தில் இராமன் அனுமானிடம் குறிப்பிட்டுப் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. அதே போல் வான்மீகி இராமாயணம் கி.மு.1000 -ம் ஆண்டிற்கு முன் இராவணன் வான் அளாவிய அரண்மனையில் பவளத்தூண்களும், பொற்கட்டிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கிறித்துவ ஊழிக்கு முன் உள்ள ஒரு சிறு வீட்டையும், கோட்டையும் அகழ்ந்து காணமுடியவில்லை. ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் பானை சட்டிகளும் எஃகு ஆய்தங்களும் மண்டை ஓடுகளும் கிடைத்தன. கட்டிடம் ஒன்றையும் அகழ் ஆய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர். தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய நகர்களும் பட்டினங்களும் அரண்மனைகளும் 8 மாடங்களும் மாளிகைகளும் இருந்தன என்பதற்கு எண்ணற்ற இலக்கியச் சான்றுகள் உள்ளன. அவை அடியில் வருமாறாகும். மதுரையும் மாடங்களும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழர்கள் கட்டிய நகரம் மதுரை. அம்மதுரை உலகிலே ஓர் ஒப்பற்ற நகர் அமைப்பாக இன்றும் மதிக்கப்படுகிறது. நகர் நடுவே, திருக்கோயிலும் கோயிலின் நாற்புறமும் மாடவீதியும் அதை அடுத்து சதுரம் சதுரமாக அமைக்கப்பட்ட மதுரை மாநகர், தாமரை மலரின் நடுவே பொகுட்டும் அதை அடுத்து வரிசை வரிசையாக பூ இதழ்களும் இருப்பது போன்று காணப்படுகிறது என்று தமிழ்ப் புலவர்கள் வியந்து பாடியுள்ளனர். அப்பாடல் அடியில் வருமாறாகும்: மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவம் இதழகத்து அரும் பெர் குட்டனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான் மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே - பரிபாடல் இதன் பொருள், மதுரை மாநகரின் தோற்றம் ஒரு தாமரை மலரைப் போன்றிருந்தது. தாமரை மலரின் அக இதழ்களைப் போன்று தெருக்கள் அடுக்கடுக்காய் அழகுற அமைந்திருந்தன. அவ்விதழ்களின் நடுவே உள்ள பொகுட்டைப் போன்று மதுரை நடுவில் அண்ணல் அகநாழிகை அமைந்துள்ளது மலரின்கண் உள்ள மகரந்தத் தூளைப் போலத் தண்டமிழ்க் குடிகள் வாழ்கின்றனர். அந்தத் தாதுண்ணும் வண்டு கூட்டத்தைப் போன்று இரவலர் கூட்டம் நாடி வருகின்றது. சேரர் கோநகரான வஞ்சியில் வாழ்வோரும் சோழர் தலைநகரான உறந்தையில் வாழ்வோரும் காலையில் கோழியின் கூக்குரல் கேட்டே துயில் எழுவர். ஆனால் மதுரையில் வாழும் மக்கள் கோழிகூவி எழுந்திலர். நாள்தோறும் அதிகாலையில் மறைகளை முழக்குவோரின் இனிய ஒலி கேட்டுத் துயில் எழுவர் என்பதாகும். இந்த மாநகர் மதுரையில் உள்ள மனைகளும், மாளிகைகளும், அரண்மனைகளும் பல மாடங்களையுடையதாய் விளங்கின. அதிகமாக நான்கு மாடங்களையுடைய மாளிகைகள் இருந்ததால் இந்த நகர் மாடக் கூடல் என்றும் நான்மாடக்கூடம் என்றும் பெயர் பெற்றது. மாடமலி மறுகிற் கூடல் - (திருமுருகாற்றுப் படை) என்பது நக்கீரர் திருவாக்கு. நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் - (கலித்தொகை) என்று கலித்தொகை நான்கு மாடியுள்ள மாளிகையில் வாழும் மதுரை மகளிரையும் மக்களையும் போற்றுகின்றது. தென்னவன் நான்மாடக் கூடல் நகர் - (பரிபாடல்) என்று பரிபாடல் பாண்டியனின் நான்குமாடமுள்ள பெருநகர் என்று புகழ்கிறது. இங்கு எழுநிலைமாடங்களுடைய அரண்மனைகளும் இருந்தன என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது. தெருக்கள் சிற்றூர்களும், பேரூர்களும், பட்டினங்களும் கோநகர்களும் படிப்படியாய் வளர்ந்தன. சிற்றூர்களில் மனைமுன்றில், மனைப் புழக்கடை இவற்றை உள்ளடக்கி வேலிகளிடப்பட்டிருந்தன. பேரூரில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருந்தமையால் இடநெருக்கடி எழுந்தது. எனவே மக்கள் தம் மனையில், மாடங்கள் அமைத்து கட்டிடங்களை எழுப்பினர். மாடங்கள் ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஏழு என உயர்ந்து கொண்டே சென்றன. பேரூர்களில் நெடுநிலை மாடங்கள் நிறைந்து உயர்ந்து நின்றன. நகரங்களும் பட்டினங்களும் நீண்டு அகன்ற தெருக்களையும், குறுந்தெருக்களையும் உடையனவாய் இருந்தன. அன்று நீண்ட தெருக்களின் இருமருங்கினும் வான்றோய் மாடங்கள் அணி அணியாய் அழகுற அமைந்திருந்தன. சல் சல் என்று ஒலி எழுப்பி அகன்று ஓடும் ஆற்று வெள்ளம் வெளியே செல்லவொட்டாது நிற்கும் கரைகள் போன்று மாநகரின் தெருக்களின் இருபுறங்களிலும் மாடங்கள் உயர்ந்து காட்சி அளித்தது இதனைச் சங்க இலக்கியங்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன; மாடமோங்கிய மல்லன் மூதூர் ஆறு கிடந்தன்ன வகல் நெடுந் தெருவில் - நெடுநல் 29-30 என்று அழகுற எடுத்துக்காட்டுவது ஆராயத்தக்கதாகும். மாடம் தமிழ் மக்கள் சிற்பக் கலையில் தேர்ந்திருந்தனர். அரசர்களும், அமைச்சர்களும், வணிகர்களும், நிலக்கிழார்களும் சுடு செங்கல்லால் கட்டப்பட்ட உயர்ந்த மாடமாளிகைகளில் மாண்புற வாழ்ந்து வந்தனர். வான் அளாவிய மாளிகையின் மாடங்களில் மேகங்கள் தவழ்ந்தன இதனை, வானமூன்றிய மதலை போல வேணி சாத்திய வேற்றருஞ்சென்னி விண்பொற நிவந்த வேயாமாடத்து - பெரும் 346-8-11 சுடுமண் ணோங்கிய நெடுநகர் வரைப்பின் பெரும் 405- என்று பெரும்பாணாற்றுப் படை வியந்து கூறுகிறது. சோழ அரசனது அரண்மனை புதிதாக அரும்பிய பிறை போன்ற வெண்மை பொருந்திய சுதையால் சமைக்கப்பட்ட மாடத்தையுடையது என்று சங்க நூல் சான்று தருகிறது. நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்து - (புறம் 378-5) என்று புறநானூறு கூறுகின்றது. மேலும், மாடம் மயங்கெரி மண்டி - (புறம் - 373 - 20) மலைக்கணத் தன்ன மாடஞ்சிலம்ப - (புறம்) என்றும் எடுத்துக் காட்டுகிறது. (1) பீடிகைத் தெருவும் பெருங்குடி வணிகர் மாடமறுகு மறையோர் இருக்கையும் - - சிலப் இந்திர 41-42 (2) வேயா மாடமும் வியன்கல விருக்கையும் நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழி - - சிலப், மனையா 13 (3) அணிகிளர் அறவின் அறிதுயில மர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ் செயாக் கழிந்து -சிலப் நாடு 9-8 என்று சிலப்பதிகாரம் தமிழகத்தில் மாடம் நிறைந்த மாளிகை இருந்ததை நன்கு எடுத்துக்காட்டுகிறது. .................................................. நன்னகர் விண்தோய் மாடத்து விளங்கு சுவர்உடுத்த - பெரும். 11: 368-369 முகில் தோய் மாடம் சிலப். XIX : 65 நிரை நிலை மாடத்து அரமியம் தோறும் - மதுரை. 450 மாடம் பிறங்கிய மணிபுகழ்க் கூடல் - மதுரை 429 மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர - மதுரை 406 ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண் சாளரம் பொளித்த கால்போகுபெருவழி வீதிமருங்கியன்ற பூஅனைப்பள்ளி - மணி 4:52-54 மால்வரை சிலம்பின் மகிழ் சிறந்து ஆலும் பீலிமஞ்ஞையின் இயலிக் கால தமனியம் பொற்சிலம்பு ஒலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ - பெரும் 330-335 வானம் கீழே விழாதபடி முட்டுக் காலாக ஊன்றிவைத்த ஒரு பற்றுக் கோல் போல விண்ணைத் தீண்டும்படி உயர்ந்ததும் ஏணி சாத்தியும் ஏறற்கரிய தலையினையுடையதும், கற்றை முதலிய வற்றால் வேயாறு சாந்திட்ட அரமியத்தையுடையதுமாகிய மாடத்து உச்சியிலே இரவின்கண் ஏற்றிய விளக்கு நிவந்து திசை தப்பிப் பெருங்கடல் பரப்பிலே ஓடாநின்ற மரக்கலங்களை அழையா நின்ற நீர்ப்பாய்த்துறைமுகம் பின்னே இருக்கிறது வா என்று கலங்கரைவிளக்கு கலங்களை அழைப்பது போல் நின்றது என்று பெரும்பாணாற்றுப் படை கூறியுள்ளது. வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாற்றிய ஏற்றருஞ் சென்னி விண் பொர நிபந்த வேயா மாடத்து இரவின் மாட்டிய இலங்குசுடர் நெகிழி பெரும் 346-349 சித்திரமாடம் முற்காலத்தில் பலவித மாடங்களையுடைய மாளிகைகளை மன்னர்களும் செல்வர்களும் பெற்றிருந்தனர் மன்னர்கள் சித்திர மாடம் என்னும் மாளிகையைத்தனியே அமைத்திருந்தனர். பாண்டியன் நன்மாறன், அவனது சித்திரமாடத்தில் உயிர் துறந்தான். எனவே, அவன், சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று கூறப்பட்டான். பாண்டியனுடைய சித்திரமாடம் வெண்மையான சுவர்களையுடையதாய் இருந்தது. அதில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. தூண்கள் கருமையாய் பளிங்குபோல் விளங்கின. சில சுவர்கள் செம்புபோல் வண்ணந்தீட்டப் பட்டிருந்தன. சில அரண்மனைச் சுவர்களின் ஆற்றலைச் சீவகசிந்தாமணி என்னும் காப்பியம் அடியில் வருமாறு அழகுற எடுத்துகாட்டுகிறது1 பெருங்கதை மாளிகையின் சுவர்களில் கண்டமான்மறி செடி கொடிகளைப் பாங்குறச் சித்தரித்துள்ளது.2 மதுரைப் பாண்டியர்களின் கோநகர். அதுபாண்டிய மன்னர் களின் இறுதிக் காலம் வரை தலைநகராய் விளங்கியது. இன்றும் அந்நகர் மாண்புடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. அந்த நகரின் அமைப்பும், மாளிகைகளின் உயரமும் அழகும் உறுதியும் தமிழர்களின் நகர் அமைப்புத்திறனுக்கும் கட்டிடக் கலையின் சிறப்பிற்கும் ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகிறது. அம்மா நகரின் மாளிகையின் மாடங்கள் விண்முட்ட எழுந்து நின்றன. மாளிகையின் மேற்றளத்தில் மேகங்கள் தவழ்ந்தன; மாடங்கள் மலையென உயர்ந்து நின்றன என்றெல்லாம் தமிழ் இலக்கியங்களில் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. மேன்மாடிகள், ஆயிரம்பேர் அமைந்து விருந் துண்ணக் கூடியதாக இருந்தது. இவைகளை யெல்லாம் எடுத்துக் கூறும் தமிழ் இலக்கியங்களை நன்கு பயின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர், பழங்கால யாழ்ப்பாணம் என்னும் நூலில் அடியில் வருமாறு எடுத்துக்காட்டி யுள்ளார்.1 சாளரங்கள் (சன்னல்கள்) மாநகரங்களில் மாளிகைகளும், அரண்மனைகளும், இல்லங்களும் நல்லகாற்றும் ஒளியும் புகுமாறு பெரிய அழகிய சாளரங்கள் (பலகணிகள்) அமைக்கப் பெற்றிருந்தன. இதனை, மதுரைக் காஞ்சி, வகைபெறு எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல்புழை நல்இல் - மதுரை 357-358 என்று எடுத்துக் காட்டுகிறது. சோழ நாட்டு இளவரசன் உதயகுமாரனின் நண்பன் எட்டியின் மகன் புகார் பட்டினத்திலுள்ள பரத்தையர் தெருவில், பொற்றகடு போர்த்திய மாளிகையின் உயர்ந்த மாடத்தில், கட்டிலில் படுத்துக் கொண்டு சாளரங்களின் வழியாக வரும் தென்றற் காற்றின் பொன்றா இன்பத்தை நன்றாக நுகர்ந்தவாறே தெருவில் நிகழும் காட்சியைக் கண்டுகளித்தான் என்று தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டு கின்றன. ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண் சாளரப் பொளித்த கால்போரு பெருவழி வீதிமருங்கியன்ற பூஅணைப் பள்ளி - மணி 4 : 52 - 54 மான்கட் காதலர் மாளிகை - சிலப் - காண் V : 1-8 மான்கண் போன்ற சாளரம் மான் கண்கள் போன்ற சாளரங்கள் மாளிகையில் அழகுறப் பொலிந்தன. அவற்றில் காற்று வரும் புழைகள் மான்களின் கண்கள் போன்று கவின் பெறத் திகழ்ந்தன. வண்டுகள் நுழையும் அளவு சிறிய புழைகளையுடைய அழகிய சாளரங்களில் அழகிய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மாலைத் தாமத்து மணி நிறைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - சிலப் II: 22 -24 மாடங்களில் உள்ள பலகணிகள் மூலம், மக்கள் நல்ல காற்றையும் ஞாயிற்றின் ஒளியையும் நுகர்ந்து இன்புற்றனர். உடல் நலமும் உள நலமும் எய்தினர் இதனைச் சிலப்பதிகாரம், வேயாமாடமும் வியன்கல இருக்கையும் மான்கண் காதலர் மாளிகை இடங்கள் சிலப் 5 : 7-8 மலையென உயர்ந்த மாளிகை தமிழ் வேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்களின் தலைநகர்களான, வஞ்சி, புகார், கொற்கை மதுரை, உறையூர் முதலிய நகரங்களில் மாளிகைகள் மலையென உயர்ந்து நின்றன. மக்கள் மாடத்தில் மேனிலையில் கூதிர் காலத்தே சிறிது பொழுது செலவிடுவர். பெரும் பொழுதை இடைநிலைகளில் கழிப்பர். இரவு காலங்களில் துயில மாடங்கள் ஏற்ற இடமாக இருந்தது. பகற்பொழுதில் மாடங்களில் நெருப்புச் சட்டியைவைத்து அதில் நெருப்பையிட்டு அதில் கட்டைகளை அதன் மேலிட்டு நறுமணப் புகை எழுப்பி அதை நுகர்ந்து மகிழ்வர்; கூதிர் காய்வர் முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்காலை வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர - சிலப் XII 98-103. அரண்மனைகள் மக்கள் வாழும் இடம் இல்லம், வீடு அகம் எனப்பட்டது. அரசர் வாழும் அழகிய மனை அரண்மனை என அழைக்கப்பட்டது. அரசன் வாழும் இடம் கோயில் என்றும் அழைக்கப்படும். மன்னர்கள் வாழ்ந்த மாளிகைகள் சுற்று மதில்களையுடையதாயும், உயர்ந்த வாயிலையும், வாயிலில் உயர்ந்த கோபுரம் வாய்ந்ததாயும், வண்ணங்கள் தீட்டப்பட்ட சுவர் ஓவியங்கள் நிறைந்ததாயும் திகழ்ந்தது. மன்னன் மாளிகைகள் பல மாடங்களையுடையதாயும் அழகு நிறைந்ததாயும் அமைந்திருந்தன. இதனை அடியில் வரும் பைந்தமிழ் நூற்கள் பாங்குற எடுத்துக் காட்டுகின்றன: நல்வழி யெழுதிய நலங்கிளர் வாயிலும் வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத் துள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கிற் றொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலு நாற்பெரு வாயிலும் - மணி - சக் 42-48 குறியவு நெடியவுங் குன்று கண்டன்ன சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் - மணி - சக் 58-59 விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத் தொல்வலி நிலைஇய வணங்குடை நெடுநிலை நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் மழையாடு மலையி னிவந்த மாடமொடு - மதுரை - 352-355 இரும்புக் கதவுகள் வான் அளாவிய வண்ண மாடங்களைச் சுற்றி அமைக்கப் பெற்ற மதில்களும், வாயில்கள் மீதுள்ள கோபுரங்களும், வாயிற் கதவுகளும் பாங்குறத் திகழ்ந்தன. அவ்வாயில் கதவுள் இரும்புத் தகடுகள் பொருத்தப் பெற்றதாய் எஃகு ஆணிகளால் தரையப் பட்டதாய்க் காணப் பெற்றது. இரும்புக் கதவுகளும் எஃகு ஆணிகளும் துரு ஏறா வண்ணம் சிவந்த நெய் வண்ணம் தீட்டப் பெற்றிருந்தது. இதனைச் சங்கமருவிய தங்க ஏடான நெடுநல் வாடை, ஒருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற் பருவிரும்பு பிணைத்துச் செல்வரக் குரீஇத் துணை மாண் கதவம் பொருந்தி யிணைமாண்டு நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப் போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத் தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந் தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை வென்றெழு கொடியொடு வேழஞ் சென்று புகக் குன்று குயின் றன்ன வோங்குநிலை வாயில் -நெடுநல் 79-88 மாளிகையின் மாண்பு அரசன் வாழும் அரண்மனை தலைநகரின் நடுவே தலை நிமிர்ந்து நின்றது. அது, மக்கள் வாழும் மனைகளும், வணிகர் வாழும் மாளிகைகளும், நிலக்கிழார்கள் வாழும் நெடிய மாடத் தெருக்களும், அமைச்சர்கள், படைத் தலைவர்கள் வாழும் அரண்போன்ற தெருக்களும் நாற்புறமும் நிலவ நடுவே உயர்ந்து நின்றது. படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவின் கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய தமனிய மாளிகை - சிலப் நடுநற் 47-50 அரண்மனைகள், மக்கள் உறையும் மனைகளைப் போல் அடுத்து வீடுகள் கட்டி வாழ்வது காணப்படுவதில்லை. நகரின் நடுவே நாற்புறமும் உயர்ந்த மதில் சூழ அமைந்த அகன்ற நிலத்தில் நறுமணம் வீசும் பொழிலுக்கு நடுவே பல மேனிலைகளையுடைய பாங்கான வண்ண மாளிகையாய் எழில் பெற்றிலங்கும். அரண்மனையைச் சுற்றி அழகுற அமைக்கப் பெற்ற இனிய பொழிலில், வேண்டும் பொழுது வேண்டும் அளவு நீரை இறைக்கவும், நீரைப் போக்கவும் வல்ல, இயந்திரப் பொறிகள் அமைந்த பொய்கைக் கரையில் அமைக்கப் பெற்றிருந்தது. இதனால் அரசன் வாழும் அரண்மனை இலவந்திகை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்தக் குளிர்தரு மாடத்தின் மருங்கே காற்று வசதியும் நீர்வசதியும் பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ள மண்டபம் ஒன்று இருந்தது. அது நீராளி மண்டபம் என அழைக்கப்பட்டது. அரண்மனையில் மகளிர் தங்கும் அந்தப்புரம் தனியே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஆண்கள் உட் செல்ல முடியாது. மன்னர் வாழும் இடம் அகன்று நீண்ட அழகிய அறைகள் பல உள்ளதாய் அமைக்கப்பட்டிருக்கும். அரண்மனை யில் அரசன் துயிலுமிடம் தனியே அமைக்க பெற்றிருக்கும். அவற்றில் அழகிய கட்டிலும், சிற்றுண்டிகளும், நல்ல நறுமணப் பொருள்களும் நிறைந்திருக்கும். மாநீர் வேலிக் கடம் பெறந்து இமயத்து வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவர் தோன்றல் வாய்வாட் கோதை விளங்கு இல வந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மா ளுடனிருந்தருளி -சிலப் காட்சி - 25:1-5 சோழ அரசனுக்கு காமன அழகிய வேனிலொடு பொதியிற் தென்றலையும் தியிடுகின்ற பல மலர்களை நிரைத்த நல்ல மர நிழலையுடைய இலவந்திகை என்னும் மன்னன் மாளிகையினின்று மதிற் புறத்தே செலவர் என்பதைச் சிலப்பதிகாரம் கலையிலான் காமர் வெனிலொடு மலயமாருதம் மன்னவற்கிருக்கும் பன்மலரடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகையின் எயிற்புறம் போகி - சிலப் 10 நாடுகள் 28-31 நீராழி மண்டபம் நீராழி மண்டபம் நீராவி மண்டபம் என்றும் கூறப்படும். குளங்களின் நடுவே அமைந்துள்ள மண்டபம் நீராழி மண்டபம் எனப்படும் தாமரை சூழ்ந்த நீராவி மண்டபம் என்று சீவக சிந்தாமணி 2800-ன் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரண்மனையின் அமைப்பு அரண்மனை, உறுதியாய், உயரமாய் உப்பரிக்கைகளை யுடையதாய் ஒளிர்ந்தது. அரண்மனை சுடுமண் செங்கல்லால் கட்டப் பெற்று மேலே கல் சுண்ணச் சாந்தும், சிப்பிச் சுண்ணச் சாந்தும் பூசப்பெற்று நன்றாகப் பளபளப்பான கல்லால் தேய்க்கப் பெற்றுப் பளிங்குச் சுவர் போல் விளங்க மேலே ஓடுகள் வேயப் பெற்றிருந்தன. பல மாளிகைகளில் வெள்ளித் தகடுகள் பொதியப் பெற்றிருந்தன. சில மாளிகைகள் செம்பொன்னாற் செய்த ஓடுகள் வேயப் பெற்றிருந்தது. பவளத் தூண்களும், பைம்பொன் தூண்களும் அரண்மனையை அழகு பெறச் செய்தது. அரண்மனை தமிழ் நாட்டுச் சிற்பிகளால் மட்டும் கட்டப் படுவதில்லை. யவன நாட்டுத் தச்சரும்; அவந்தி நாட்டுக் கொல்லரும்; மராட்டிர நாட்டுக் கம்மியர்; மகத நாட்டு கொத்தர்களும், கூடிக் கட்டப்பட்டது. பல்வேறு நாட்டிலுள்ள பொன், மணி, பவளம், முத்து, பட்டு, தந்தம் முதலிய பொருள்களால் அரண்மனை அணி செய்யப் பெற்றிருந்தது. முக்காலிகள் நாற்காலிகள், கட்டில்கள், விசுப்பலகைகள் நிறைந் திருக்கும். மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர்-தம்மொடு கூடிக் கொண்டினி தியற்றி கண்கவர் செய்வினைப் பவளத் திரள்கால் பன்மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச் சந்தி மாண்வினை விதானத்துத் தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபம் -மணி. 19:107-115 மாடத்தில் பந்தாட்டம் மன்னர்களும், நிலக்கிழார்களும், வணிகர்களும் பல நிலைகளையுடைய மாட மாளிகைகளைக் கட்டியிருந்தனர். மன்னர்களின் பெண்மக்களும் நிலக்கிழார்களின் இளம் பெண்களும் வணிகர்களின் பெண்மக்களும் மாலை வேளைகளில் தத்தம் மாடத்தின் மேற்றளத்தில், காற்சிலம்புகள் கணீர் கணீர் என்று ஒலிக்கக் களிகொண்டு பந்தாடினர். இது மாமலையில் மயில்கள் தம் அழகிய தோகைகளை விரித்து ஆடி மகிழ்வது போல் மாடங்கள் மீது மதி முக மங்கையர்கள் பந்தாடிய காட்சி இருந்தது. இதனை சங்க மருவிய தங்க ஏடுகளில் பீடுற எங்கள் பெரும் புலவர்கள் எழில் திகழ எடுத்துக் காட்டியுள்ளனர். மால்வரை சிலம்பின் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனியப் பொற் சிலம்பு ஒலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ பெரும் 330-333 மதுரை, புகார் நகர்களில், பண்டைக்கால மாளிகைகளிலும், மாடங்களிலும் நில முற்றம்அமைத்திருந்தனர். நிலா முற்றம் வேனிற்காலத்தும் குளிர்காலத்தும் இரவு நிலாக் காலத்தும், காலையிலும் மகளிரும் மைந்தர்களும் ஒருங்குகூடி, ஆடிப்பாடிப் பொழுது போக்கும் இடமாக இருந்தது. இதனைச் சிலப்பதிகாரம், எடுத்துக் காட்டுகிறது. நிலா முற்றம் மாளிகைகளில் வாழ்ந்த மக்கள் இரவில்-நிலாக் காலத்தில் திங்களின் பயனை நன்கு பயன்படுத்தி வந்தனர். மாளிகைகளில் தண்ணொளி தரும் வெண்மதியின் பயனை நுகர்வதற் கென்றே நெடு நிலா முற்றம் அமைக்கப்பட்டதுபோல் கருதப்பட்டது. நிலவு தரும் இன்னொளி இன்பம் எழுப்பும்; தென்றலின் இனிமை களியூட்டும்; காதல் வளர்க்கும். இன்பம் எழுப்பும் வேனிற் பள்ளியும் கூதிர் காலத்து வாடை புகாத கூதிர் பள்ளியும் நன்கு அமைத்து பருவ நிலைகளுக்கேற்ற உறையுளும் உணவும் உடையும் பிறவும் அமைத்து இல்லத்தை இன்பலோகமாக்கி வாழ்ந்து வந்தனர். வெப்பம் மிகுதியாக இருக்கும் வேனிற்காலத்தில் நிலா முற்றத்தை அடுத்துக் கீழே இருக்கும் மனையில் பவழ இல்லத்தில் கதிரவனின் வெப்பம் புகாது இனிது வாழ்ந்தனர் அவர்கள் வெளியே புகாது வீட்டினுள்ளே இருப்பர். அவ்விடம் மேன் மாடியைப் போலின்றி நாற்புறமும் சுற்றுச் சுவர்களும் மேற்றளமும் பெற்றிருப்பதால் அங்கு வெப்பம் தாக்காது; வெப்பக் காற்றுப் புகாது. வேனிற் காலத்து வீசும் தென்றல் தவழ்ந்து வரும் வண்ணம் சுவரில் பலகணிகள் அமைந்திருந்தன. வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம் நேர்வாய்க் கட்டளைத் திரியாது திண்ணிலை -நெடுநல் 62-64 நிலா முற்றம் வேனிற் காலத்தும் கூதிர்காலத்தும் பயன்படும். குளிர் காலத்து காலைக் குளிர் போகவும் உடலுக்கு ஊக்கமும் உரமும் ஊட்டும். ஞாயிற்றின் ஒளியினைப் பெறவும் எதிர் நோக்கி, கூதிர் காலத்தில் அதிகாலையில் மக்களொடு மாந்தரும் நிலா முற்றத்தில் சிறிது நேரம் இருப்பதுண்டு. இதனை, வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றில் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலம் தெற்கேற்பு வெண்மழை அரிதில் தோன்றும் அச்சிரக் காலை - சிலப் - 14:102-105 என்னும் செய்யுளால் சிலப்பதிகார ஆசிரியர் நிலா முற்றத்தின் சிறப்பை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். கூதிர் காலத்து மேன்மாடியில் சிறு பொழுதைக் கழிப்பர். பெரும்பாலும் அவர்கள் இடை நிலை மாடத்திலே அதிகப் பொழுதைக் கழிப்பர். இடைநிலை மாடத்தில் குளிர் காற்றுப் புகாது. எனவே இரவு காலத்தில் அங்கேயே துயில்வர். குளிர் மிகுந்திருந்தால் நெருப்புச் சட்டியில் தீ மூட்டி குளிர் அகற்றுவர். பனிக் காற்று நெருப்பின் வெப்பத்தைத் தணித்து குளிர் அதிகரிக்க குளிர் காற்று உட்புகா வண்ணம் சாளரங்களை மூடுவர் வேனிற் பள்ளி மேவாது கழிந்து கூதிர் பள்ளிக் குறுங்கண் அடைத்து -சிலப் 4:60-61 முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து நருஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலை -சிலப் 14:98-101. சங்க காலக் கோயில்கள் சங்க காலத்தில் அரண்மனைகளும் கோயில்களும் மண்டபங் களும் சிற்ப நூல் உணர்ந்த அறிஞர்களால் நாள் கணித்து நாளிகை பார்த்து நேரறி கயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன. இதைப்பற்றி அடியில் வரும் நெடுநல் வாடைச் செய்யுளும், சிலப்பதிகாரச் செய்யுளும் இனிது விளக்கும்: ஒரு திறம் சாரா வரைநா ளாமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேயங் கொண்டு தெய்வ நோக்கிப் பெரும் பெயர் மன்னர்க் கொப்பமனை வகுத்து நெடுநல் 75-78 அறங்களத் தந்தண ராசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று மேலோர் விழையு நூனெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டம் சிலப். நடு. 28: 222-25 சங்க காலத்தில் மதுரை மாநகரில் சிவபெருமான் திருமால் புத்தன் முருகன் முதலிய தெய்வங்கள் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கோயில்கள் இருந்து வந்தன. அதைப்பற்றி ஐம்பெருங் காப்பியங்களில் சிறந்த சிலப்பதிகாரத் திலும் புறநானூற்றிலும் நன்கெடுத்துக் கூறப் பெற்றுள்ளன. அவை அடியில் வருமாறாகும்: பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னன் கோயிலும் -சிலப்-இந் 169-172 அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து சிலப்பதி. நாடு.9-10 பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே - புறம் 6:17-18 தமிழ் நாட்டின் கோயில்களிலும் பொது மண்டபங்களிலும் நிறுத்தப்பட்ட தூண்களில் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அது அழகுறப் பொலிந்தது என்பதை மணிமேகலையில், நெடுநிலைக் கந்தி னிடவயின் விளங்கக் கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும் - மணி 20 உதயகுமாரனை வாளால். 110-111 மயனெனக் கொப்பா வகுத்த பாவையி னீங்கேன் யானென் னிலையது கேளாய் மணி 21: கந்திற் 132-139 என்று கூறப் பெற்றுள்ளது. வாயில்களிலும் தூண்களிலும் உருவங்கள் சுதையினாற் செய்யப்பட்டிருந்ததுடன் கோயில்களிலும் தெய்வ உருவங்கள் மண்ணினாலும் கல்லினாலும் மரத்தாலும் செய்யப்பட்டிருந்தன. மண்ணினும் கல்லினு மரத்தினுஞ் சுவரினும் கண்ணிய தெய்வங் காட்டுநர் வகுக்க வாங்கத் தெய்வ அவ்விட நீங்கா -மணி.21:கந்திற் 125-127 வித்தக ரியற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கல முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புடை நிறுத்தி வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்கென வேவினன் சிலப் 28 நடுகற் 239-242. கோ(அரசன்) வாழும் இல்-கோயில் என்னப் பெற்றது. தெய்வம் (கோ) உறையும் இல்லும் கோயில் எனப்பட்டது. மன்னர்கள் கோயிலை இறைவனுக்காக அமைத்தனர். இறைவனுக்காக அமைக்கப்பட்ட கோயிலை அரண்மனை போல் அழகாக அமைத்தனர். கோயிலுக்கு வெளி அரண்களும் உள் அரண்களும் அகழும் அமைத்தனர். அவசியம் எழுந்தால் அரசன் கோயிலுக்குள் அமர்ந்து பகைவர் களோடு போர் ஆற்றியதும் உண்டு. இதனை நமது சங்க இலக்கிய மாகிய நெடுநல்வாடை ஒருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற் பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத் துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத் தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரை தீர்ந்து ஐயவி யப்பிய நெய்யணி நெடு நிலை வென்றெழு கொடியொடு வேழஞ் சென்று புகக் குன்று குயின் றன்ன வோங்குநிலை வாயில் -நெடுநல் 79-85 அரண்மனையில் பாவை விளக்கு தமிழ் நாட்டு மன்னர்களின் அரண்மனையில் மகளிர் வாழும் அந்தப்புரம் தனியே இருந்தது. அங்கு அரசனுடைய மனைவியும்-அதாவது பட்டத்தரசியும் மறுமனையாட்டிகளும் அவர்களின் பணிப் பெண்களும் இருப்பர். அங்கு அரசன் அல்லது அயலார் எவரும் அணுக முடியாது. பலமான காவல் உண்டு. பாண்டிய மன்னர்களும் சோழர், சிங்களவர், சேரர், கன்னடர், ஆந்திரர் முதலிய நாட்டு மன்னர்களோடு பெண் எடுத்தும் கொடுத்தும் உள்ளனர். உரோம் நாட்டுப் பெண்கள் மெய்க்காவலர்களைப் பாண்டியர்கள் அந்தப்புரத்தில் இடம் பெற்றிருந்தனர். சோழர் பாண்டியர், சாளுக்கியர், ஆந்திரர், கலிங்கர், கடார நாட்டினர், (மலேசியர்) முதலிய நாட்டிலுள்ள அரசிளங்குமரிகளை மணந்தும் பெண் கொடுத்தும் உள்ளனர். அரண்மனை அயல்நாட்டு பொருள்களால் அலங்கரிக்கப் பெற்றிருந்தது. பாண்டியர் அரண்மனையில் யவனநாட்டுப் பாவை விளக்கு அணிபெறத் திகழ்ந்தது. இதனை நெடுநல்வாடை யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந்து அகல நிறை நெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி -நெடுநல் 101-104 கூறுவதன் மூலம் நன்கறியலாம். அன்னம் வைத்த விளக்கு இஃதன்றி அன்னம் போன்ற பாவைகள் உருவில் செய்யப்பட்டு வந்த விளக்கும் பாண்டியர்கள் அரண்மனையில் பயன்படுத்தப்பட்டு வந்தனவென்று பெரும்பாணாற்றுப் படை என்னும் பழைய தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம்: ---------------------- யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசை கொண்ட வைகுறு மனீற் பையகத் தோன்று நீர்ப் பெயற் றெல்லை -பெரும்பாண் 11:316-19 தமிழகம் போந்த யவனர்களின் மரக்கலங்களில் உள்ள கூம்புகளில் அன்னம் உருவமுள்ள சிற்பவேலைப்பாடமைந்த அழகிய விளக்குகள் இருந்தன. அவைகள் தமிழக அரசர்களின் கோயில்களிலும் சிவனார், திருமால் கோயில்களிலும் நந்தா விளக்கு என்னும் பெயரில் இடம் பெற்றன என்று தெரிகிறது. அன்னம் தமிழ் நாட்டுப் பறவையல்ல. அந்த அன்ன விளக்குகளை ஆதியில் உரோமர்கள் தமிழ் நாட்டிற்கு அளித்தனர் என்பது வரலாற்றுப் பாங்கான உண்மை. அரண்மனையில் எழிற் பூங்கா இயற்கை இன்பத்தை இனிதுணர்ந்த தமிழ் நாட்டு மன்னர்கள் தம் அரண்மனையில் செயற்கைக் குன்றுகள், இயந்திர வாவிகள் கால்வாய் அமைத்து உயர்ந்த மரங்களையும், பூஞ்செடிகளையும், பூமரங்களையும், பழ மரங்களையும் அமைத்து எழில் பெறச் செய்திருந்தனர். அங்கு மயில்கள் ஆடின. குயில்கள் பாடின. கிள்ளைகளும் பூவையும் மழலை மிழற்றின. மான்கள் துள்ளிக் குதித்து விளையாடின. இங்கு அரசிளங் காளைகளும், அரசிளங் குமரிகளும் ஆடிப்பாடி இன்புற்று வந்தனர். இதனை நெடுநல் வாடை, நன்கு எடுத்துக் காட்டுகிறது. நெருமயிர் எகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை நெடுநல் 91-92 அரசன் வாழும் கோயிலில் நிலா முற்றத்தில் ஒருபகுதியில் மீன் வடிவம் போற் செய்யப்பட்ட அகன்றை வாயையுடைய நீர்த் தூம்பினின்று எப்பொழுதும் நீர் பொங்கி எழுந்து கொண்டே இருந்தது. மற்றொரு பக்கம் அந்த அருவி நீர் கண்டும் அதன் ஒலி கேட்கும் மாமயில் மகிழ்ந்து தோகையை விரித்து ஆடி அகவும். மயிலும் அருவியும் அமைந்தயிடம் மலைக் காட்சியைக் காட்டிலும் இனிதே திகழ்ந்தது. இதனை நெடுநல்வாடையில் மிக அழகான ஓவியமாகத் தீட்டப் பெற்றுள்ளது. அது அடியில் வருமாறாகும்: நிலவும் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறையக் கலுழ்ந்து வீழ் அருவிப் பாடுவிறந் தயல ஒலி நெடும் பீலி ஒல்க மெல் லியல் களிமயல் அகவும் வயிர் மருள் இன்னிசை நளிமலைச் சிலமயில் சிலம்புங் கோயில் -நெடுநல் 95-100 வீடுகள் முற்காலத்தில் தமிழகத்தில் வீடுகளின் அமைப்புகள் பரந்த தாயும் நான்கு புறமும் காலியான நிலப்பரப்புகள் உள்ளதாயும் வீட்டின் பின்புறத்தில் கிணறும் பூமரங்களும் காய்கனிகள் தரும் மரங்கள் உள்ளதாயும் இருந்தன. வீடுகள் பல அறைகள்உள்ளதாயும் அழகுள்ளதாயும் அமைந்திருந்தது. இறையனார் அகப்பொருள் என்னும் நூலின் உரை பண்டைக் காலத் தமிழ்மக்களின் மனை அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது.1 அது அடியில் வருமாறு: அட்டில் (அடுக்களை), கொட்டகாரம்(பண்டங்கள் வைக்குமிடம்), பண்ட சாலை (அணிகள் முதலியன வைக்கும் இடம்) கூட காரங்கள் (மேன்மாடம்) பள்ளியம்பலம் (துயிலும் இடம்) கூத்தப் பள்ளி (நாடக மன்றம்) என இவற்றுள் நீக்கி செய்குன்றும் இளமரக்காவும், பூம்பந்தரும் விளையாடும் இடமும் இவற்றைச் சார்ந்தனவற்றுள்ளும் பிறவற்றுள்ளுமாக என்றவாறு. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மன்னன் மனையா, பெரிய நிலக் கிழார் மனையா என்று ஐயப்படும் அளவில் அமைந்துள்ளது. இதுகாறு எடுத்துக் காட்டிய சான்றுகள் சங்க காலத்திலும்-கிறித்தவ ஊழிக்கு முன்னர் தமிழ்நாட்டில் எழுந்துள்ள கட்டிடக் கலையின் ஏற்றத்தை ஒருவாறு உணர முடியும். அதற்கு முன்னுள்ள கட்டிடங்களைப் பற்றி நாம் அறிவதற்கு தமிழ் இலக்கியங்கள் ஒன்றும் கிட்டவில்லை. கட்டிடங்கள் எதுவும் இதுவரைக் கண்டு பிடிக்கப்படவில்லை. அகழ் ஆய்வில் சிந்து வெளியில் கிடைத்தது போல் நகரங்களோ, கட்டிடங்களோ கிடைக்கவில்லை, அதோடு தமிழ் நாட்டில் அக்கரையோடு அகழ் ஆய்வில் இறங்கச் செய்ய அரசு முயற்சி எதுவும் செய்யவில்லை. சிறிது காலத்திற்கு முன் இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் செய்த அகழ் ஆய்வில் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள கோத்தலையாற்றுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இஃதன்றி அதிராம் பாக்கம் பூண்டி முதலிய இடங்களிலும் சில பழங்கற்கால மக்களின் கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்திய அகழ் ஆய்வில் பல புதிய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1867-லும் 1904-லும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகழ் ஆய்வில் பலவிதமான மண்சட்டிகள் பானைகள் கலயங்களோடு, இரும்பினால் செய்த ஈட்டித்தலை, உளி, மூவிலை வேல், ஈட்டி, இருபுறமும் கூரானவாள், குத்துவாள், வேல், வாச்சி கத்தி, மண் வெட்டி, கோடரி, எறி வேல் போன்ற ஆயுதங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல வெண்கல பாத்திரங்களும் சிறுவர்களின் விளையாட்டுப் பொருள்களும் பொன் அணிகலன் களும் கிடைத்துள்ளன. 1970-ஆம் ஆண்டையொட்டி சென்னைத் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் கொற்கையில் நடத்திய அகழ் ஆய்வில் பல அரிய பானை சட்டிகளும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. இவைகள் கி.மு.785 ஆண்டில் உள்ளவை என்று கூறப்பெற்றுள்ளது. 1965-ஆம் ஆண்டையொட்டி இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினர் நடத்திய அகழ் ஆய்வில் பல பானை சட்டிகள், ஆயுதங்கள் உடைந்த சிலைகள் போன்ற பல அரிய பொருள்களும் வீடுகளின் அடிப்படைகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அங்கு பல பழைய கோயில்களின் அழிபாடுகளும் கிடைத்தன. இவற்றிற்கு முன் 1945-ஆம் ஆண்டில் புதுச் சேரியைச் சேர்ந்த அரிக்கன் மேடு என்னும் பகுதியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயற்சியால் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறையின் முயற்சியால் அறிஞர் மார்ட்டிமார்ட்டிமா உயிலர் (Director general) தலைமையில் ஆய்ந்து அங்கு கி.மு200-ஆம் ஆண்டில் நிலவிய துறைமுகம், யவனச் சேரி, சுடுமண் செங்கல்லால் கட்டப்பட்ட பண்டகச் சாலைகளும் அகழ்ந்து கண்டுபிடிக்கப் பட்டன. கண்ணாடி, பளிங்கு, NJgts«(Carnelian) முதலியவை களில் கடைந்த மணிகளும், பல பதக்கங்களும் பொன்மணிகளும் கிடைத்துள்ளன. இங்கு தான் யவனர் விரும்பிய மிக மெல்லிய மலின் துணிகளுக்குச் சாயம் ஏற்றப்பட்டது. இங்கு உரோமர் இத்தாலியர் நகரத்துக் குயவர்கள் செய்த பல அழகிய உயர்ந்தவகை அரிட்டைகளும் (Arretine) மட்கலன்களும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் பல கண்ணாடிக் கோப்பைகளும், மதுச்சாடிகளும், கிறித்துவ ஊழிக்கு முன் நாம் யவன நாடுகளுடன் செய்த கடல் வணிகத்தை உறுதிப்படுத்துவதாய் உள்ளன. கி.மு.1400-ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கருதப்படும் இராமன் வரலாற்றில் (வான்மீகி இராமாயணத்தில்) கூறும் இராவணனுடைய பல மாடிகளையுடைய உபரிக்கைகளையுடைய அரண் மனையும், பாண்டியனின் தலைநகரான கபாட புரத்தில் பாண்டியப் பேரரசின் கோட்டை வாயிலின் பொற்றகடு போர்த்த கதவுகளின் சிறப்பையும் இந்த அகழ் ஆய்வு மெய்ப்பிக்கிறது. இந்த அகழ் ஆய்விற் கண்ட பொருள்களும், தமிழ் இலக்கியங்கள் கூறும் அரண்மனைகளும், மாளிகைகளும், கோயில் களும் சங்க காலத்தில் திடீரென்று முளைத்து விட்டது என்று எவரும் கூற முடியாது. தமிழ் இலக்கியங்கள் கூறும் கட்டிடக் கலையின் ஏற்றத்தை எய்துவதற்கு தமிழ் மக்களும் தமிழ் நாட்டுச் சிற்பிகளும், கொத்தர்களும் 5000 - ஆண்டுகளாகப் பண்பட்டிருக்க வேண்டும் என்பது அறிவுடையார் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். எனவே சிந்து வெளி நாகரிகம் எழுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு சிந்து வெளி நாகரிகத்தை விடச் சிறப்புற்று விளங்கியது என்ற உண்மை உணரப்படுகிறது. தமிழ் நாட்டில் 8000 -ம்ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த கட்டிடங்களை எழுப்பிப் பண்பட்ட கரங்களே உபைதியா, எல்லம், சுமேரியா, கிரீட் சிந்து வெளிப் பண்பாட்டை எழுப்பி உலகிலே ஒப்பற்ற நாகரிகம் என்று உலகம் வியக்குமாறு செய்தன. சிந்து வெளி நாகரிகம் மக்களின் வரலாற்றிற்கும் புத்தொளி தந்து புதியதொரு பொலிவினை அளித்திருக்கிறது இந்திய வரலாற்றின் இருண்ட காலத்தை எழில் மிக்க பொற்காலமென இயம்புகிறது. இந்திய நாகரிகத்தின் அடிப் பண்புகளாக விளங்குவன யாவும் சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்பியல்புகளே என்னும் வரலாற்றின் குரலைக் கேட்டு உலகம் வியக்கும் வண்ணம் செய்துள்ளது. சிந்து வெளி நாகரிகம் இந்தியாவின் ஒரு அளவு கோல்; இந்தியப் பண்பாட்டிற்குள் சிறப்பிற்கு ஓர் உரைகல் என்னும் அரிய உண்மையை உணர்த்துகிறது என்று பேரறிஞர் பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் கூறியது மிகப் பொருள் செறிந்த பொன் மொழியாகும்.1 கட்டிடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் கி.மு.4000-ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலும் விசுவகர்மா மயன் போன்ற தெய்வ கம்மியர்கள் வாழ்ந்து வந்தனர். விண்முட்டும் வீடுகளையும் முகில் தவழும் மாடங்களையும் எஃகுக் கோட்டை களையும் எடுப்பித்து தமிழகத்திற்குப் பேரும் பெருமையும் அளித்தனர். இறைவனை இமைப்பொழுதும் மறவாத இராவணன், மாதேவர் மலரடியைத் தொழும் மண்டோதரி உலகில் திருநீறு அணிந்தவர்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவராகிய இராவணன் மனைவியும் பாருலகில் உள்ள பத்துக் கற்பரசிகளில் ஒரு சிறு மாசும் கூற முடியாத இராவணன் மனைவி மண்டோதரியின் தந்தை விசுவகர்மாவாக இருந்தான் எனவே தன் மருமகன் இராவணனுக்கு எழுநிலை மாடங் களையும் எஃகு போன்ற அரண்களையும் சிறந்த ஆயுதங்களையும் செய்து கொடுத்தான். இராவணன் அரண்மனை ஒரு யோசனை நீளம் உள்ளதாய் முகிழ் தவழும் மாடம் உள்ளதாய் உயர்ந்து விளங்கியது. பவளத் துண்களும் பளிங்குப் படிகளும், பொற்கட்டிலும் மணிகள் இழைத்த அரச கட்டிலும் அங்கு இருந்தன. நவமணிகள் இழைத்த பொன் அணிகலன்கள் எண்ணிலாது காணப்பட்டன. தரை சந்தனக் குழம்பால் மெழுகப்பட்டு அழகுறப் பொலிந்தன. எங்கும் விலையுயர்ந்த விரிப்புகள் காணப்பட்டன. நறுமண வாசனை இன்பமூட்டின. இரவில் எண்ணிலா விளக்குகள் அரண்மனையில் பட்டப் பகலென ஒளிவீசச் செய்தன. அங்குள்ள பூங்காக்களும், அங்கு வாழும் மயிலும், குயிலும், கிளியும், கின்னரப்பறவைகளும், பரதீசுப் பறவைகளும், மான்கள், குதிரைகள், ஆடு மாடுகள் முதலியவைகளெல்லாம் அரண்மனையை அழகு செய்வது போல் பொலிவுற்றிருந்தன என்று எழில் பெற எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இது ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தென் இந்தியாவில் இருந்த கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டினின்று இருபதாம் நுற்றாண்டு வரை நிலவியதாகக் கருதப்படும் ஆதித்த நல்லூர் நாகரிகத்தில் இருந்த இரும்பு ஆயுதங்களும் வெங்கல பாத்திரங்களும் மட்பாண்டங் களும், விளையாட்டுப் பொருள்களும் தமிழகத்தில் உயர்ந்த கட்டிடக் கலை நிலவி இருந்தது என்பதை ஊகிக்க இடம் தருகிறது. ஆனால் ஆதித்த நல்லூர் நாகரிகம் பரவிய நகரம் இது வரை நமக்குக் கிடைக்கவில்லை. ஆதித்த நல்லூர் நாகரிகம் அரப்பா நாகரி கத்தோடு சங்கிலித் தொடர் போல பிணைந்துள்ளது. என்றார் ஆர்.டி.பானர்ஜி. கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் பாண்டியர்களின் தலை நகராயும், துறைமுகப் பட்டினமாயும் விளங்கிய கொற்கை சமீபத்தில் அகழ் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் நகரமோ, வீடுகளையோ அகழ்ந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கி.மு.800 ஆண்டில் பல உடைந்து போன பானை சட்டிகளும் உடைந்த சாடிகளும் பிறவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் கொற்கையில் நிறைவான அகழ் ஆய்வு செய்யப் பெற்றால் கி.மு.2000 -ம் ஆண்டளவில் தமிழகம் பெற்றிருந்த கட்டிடக்கலையின் சிறப்பை மெய்ப்பிக்க முதல் தரமான சான்றுகள் கிடைக்கக் கூடும். கி.மு. இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னுள்ள தமிழ் நாட்டு மன்னர்களின் தலை நகரங்களும், அரண்களும் அரண்மனைகளும் அழிந்து பட்டன. பிற்காலத் தமிழ் அரசர்கள் வாழ்ந்த கொற்கையும், வஞ்சியும், பூம்புகாரும் கூட நிறைவான அகழ் ஆய்வு செய்யப்படவில்லை. ஆய்வு செய்யப் பெற்றால் நமது பழம்பெரும் கட்டிடக் கலையின் சீரும் சிறப்பும் வெளிவரும். பிற்காலப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது இன்றைய மதுரை. இது ஆலவாய் என்றும் நான்மாடக்கூடல் என்றும் கூறப்படும். கிறித்துவ ஊழி கிளர்ந்தெழுவதற்கு முன் மதுரை நான்கு மாடி களையுடைய பல அரண்மனைகளையும், அரண்களையும், மாளிகைகளையும் வீடுகளையும் கோயில்களை யும் பெற்றிருந்தன. இந்தக் கட்டிடக் கலையின் சிறப்பை ஆய்ந்தோர் தமிழர்கள், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீரான கட்டிடக்கலையின் அறிவையும், நகர் அமைப்பின் திறனையும் பெற்றிருந்தால்தான் இந்த மதுரையை நிர்மாணித்திருக்க முடியும் என்று நவில்கின்றனர். தமிழர் கட்டிடக் கலை தனிச் சிறப்பு வாய்ந்தவை. பிற இனத்தவரினின்று கடன் வாங்கியவை அல்லது-மதுரை மாநகரின் நகர் அமைப்பு திறன் பாண்டிய நாட்டு சிற்பிகளின் பட்டறிவிற்கும், கைவண்ணத்திற்கும் சிற்ப அறிவிற்கும் நல்ல எடுத்துக் காட்டாகும். மதுரை நகர் அமைப்புத் திறன் உலகிற்கோர் புதுமை. வியத்தகு பெற்றி வாய்ந்தது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பின் கி.மு.4-ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த சந்திர குப்தரின் அரசவையில் கிரேக்க தூதனாக இருந்த மெகதனி கூற்றிலும் கி.மு.300 -ம் ஆண்டின் அசோகன் கல்வெட்டிலும் கி.பி.77-ஆம் ஆண்டில் இந்தியா போந்த பிளினி என்னும் அயல் நாட்டறிஞரும் கி.பி.77-இல் மதுரை மாநகர் உலகிற்பெரிய பண்டக சாலை என்று கூறிப் போந்தார். வரலாற்றுப் புகழ் பெற்ற தாலமி என்ற அறிஞர் கி.பி.140-ஆம் ஆண்டில் மதுரைப் பாண்டியரின் மாண்பை எடுத்துக் காட்டியதிலிருந்தும் பாண்டியப் பேரரசர்கள் உரோம சக்கரவர்த்தி அகடர் அரசவைக்கு அமைச்சர்களை அனுப்பி அரச தூதுவர் களைப் பரிமாற்றம் செய்து கொண்டதும், பின்னர் பாரசீகப் பயணியும், சீனவழிப் போக்கனும், மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகன் எழுதி வைத்த குறிப்புகளும் மதுரை நகரின் பண்பாட்டையும் கட்டிடக் கலையின் சிறப்பையும் நன்கு புலப் படுத்துகின்றன. மிகத் தொன்மையான காலத்திலேயே நமது தமிழ்நாட்டில் கட்டிடக் கலை எழுந்துள்ளது. ஆனால் அன்று மண்ணாலும் மரத்தாலும் அமைக்கப்பட்டன. அப்பால் செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் சுவர்கள் எழுப்பியும் கூரைகள் வேய்ந்தும் கட்டப்பட்டுள்ளன. வீடுகள், அரண்மனைகள், அரண்கள் மண்டபங்கள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டன. தமிழ் நாட்டில் மண்ணாலே அமைக்கப்பட்ட அரண்களும் வீடுகளும் இன்றும் உள்ளன. சிற்றூர்களில் காளி,கூளி,மாரி, மாடத்தி, இசக்கி பிடாரி வண்டி மலைச்சி போன்ற தாய்த் தெய்வங்களின் கோயில்கள் நாற்புறமும் மண்சுவர் எழுப்பி மேலே பனை ஓலை வேய்ந்தும் மரக்கதவுகள் போட்டும் இருந்து வருகின்றன. கோயிலின்றி காற்றையும், வெய்யிலையும், மழையையும் பொருட்படுத்தாது வெறும் பீடத்தின் மீது நிற்கும் மண்ணாலான தெய்வ உருவங்களும் உள்ளன. இன்று பெரும்பாலான தாய்த் தெய்வங்களில் நாற்புறம் செங்கல்லும் சுண்ணாம்பும் வைத்துக் கட்டி மேலே மட்டப்பாய் இட்டு சுண்ணாம்பு அல்லது சிமிண்டால் மேற்பூச்சுப் பூசப் பெற்று இரும்புக் கம்பிகளாலான கதவிட்டு பூட்டப் பெற்றிருக்கும் கோயில்களே அதிகம் உள்ளன. மக்களின் பொருளாதார நிலை உயர உயர கோயில்களும் சிறப்புற்று எழுந்துள்ளன. கி.பி.ஆறாம் நுற்றாண்டிற்குப் பின் தமிழகத்தில் குகைக் கோயில்களும், குடை வரைக் கோயிலும் கற்றளிகளுமாகப் பலகோயில்கள் எழுந்தன. கல்லும் சுண்ணாம்பும் கலந்து அடிப்படையிட்டு கருங்கற் பாளங்களை ஒன்றின் மீது ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து கட்டும் கோயிலே கற்றளிகள் எனப்படும். சங்க காலக் கோயில்கள் சங்க காலத்திலே-அதாவது இரண்டாம் சங்கம் நிலவிய காலத்திலே அதாவது கி.மு.300-முதல் கி.மு.100-வரையுள்ள காலத்திலே தமிழகத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. கோயில்கள் பல கட்டப் பெற்றன. ஆனால் அவைகள் மண்ணாலும் செங்கல்லாலும் மரத்தாலும் கட்டப் பெற்றிருந்ததால் நாட்டில் எழுந்த கொடிய தட்ப வெப்ப நிலைகளைத் தாங்க முடியாமல் அழிந்து விட்டன. பழங்கற்காலந் தொட்டு, புதிய கற்காலம்-உலோக காலம் வரலாற்றுக் காலம் வரை தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். 1 சங்கம் நிறுவியுள்ளார்கள். இலக்கியங்கள் இயற்றியுள்ளனர். எண்ணற் கரிய கலைகளைப் படைத்துள்ளனர். ஆழ்கடல் கடக்கும் கலங்களைக் கட்டி இலங்கை, சிங்கப்பூர், கடாரம், மலையம் சாவகம் முதலிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்கள். அங்கு தங்கள் சமயத்தை நிலை நாட்டியுள்ளார்கள். எகிப்து, எல்லம், சுமேரியா, கிரீட் முதலிய நாடுகளுக்கும் போய்க் குடியேறி அங்கு தங்கள் சமயத்தையும் பண்பாட்டையும் நிலை நாட்டியுள்ளார்கள். சிந்து வெளியிற் குடியேறி கி.மு.3000 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒப்பற்ற உயரிய கலைகளை உருவாக்கியுள்ளார்கள். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் எந்த இனமும் கண்டும் கேட்டும் இராத சாதனைகளைச் சாதித்துள்ளார்கள். அரப்பா மொகஞ்சதாரோ, சங்குதாரோ நகர் அமைப்பும் உயரிய கட்டிட அமைப்பும் உலகம் கண்டும் வியக்கும் பெற்றியை உடையன அல்லவா? இத்தகைய நனிசிறந்த நாகரிக மக்கள் சங்க காலத்தில் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கி இருந்தனரா என்பதில் சிறிதும் ஐயப்பட வேண்டிய தில்லை. சிலர் கி.மு.3000 ஆம்ஆண்டில் சிந்து வெளியில் சிறந்த நாகரிகத்தைப் படைத்த மக்கள் சுமேரிய நாட்டினின்று குடியேறியவர்கள். அவர்கள் ஆரியர்களால் தென் இந்தியாவிற்குத் தள்ளப்பட்டு கிறித்தவ ஊழியை ஒட்டி அங்கு குடியேறி இருக்கலாம். எனவே அங்கு அவர்களால் பெரிய கட்டிடக்கலையை உருவாக்கி இருக்க முடியாது என்று எண்ணுகிறார்கள். இது தவறான முடிபாகும். கி.மு.10000 ஆம் ஆண்டிற்கு முன்பே தமிழர்கள் தென் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் பழங்கற்காலம் புதுக் கற்காலம், உலோக காலம் அனைத்தையும் படைத்தவர்கள். அவர்களிற் சிலர் சுமேரியாவிற்குடியேறி, அப்பால் சிந்து வெளிக்கு வந்து ஆரியர்களால் வெருட்டப்பட்டுப் பின் தெற்கு நோக்கி வந்து தங்கள் தாய் இனத்தோடு வந்து கலந்து இருக்கலாம் என்று கருதுகிறேன். தென் இந்தியத் திராவிட மக்கள் வட இந்தியாவில் குடியேறி இருக்கலாம். இது வரலாற்று ஆசிரியர் வி.ஆர் இராமச் சந்திர ஐயர் பேராசிரியர் லாங்டன், டாக்டர் ஹண்டர் டாக்டர் எய்ச்.ஆர்.ஹால் போன்றவர்கள் கருத்துமாகும். சங்க காலத்திலே தமிழர் கட்டிய கட்டிடங்களைக் காட்ட முடியாவிட்டாலும் எண்ணற்ற இலக்கியச் சான்றுகளைக் காட்ட முடியும். கிறித்தவ ஊழிக்கு முன்பே முதற்சங்கமும், தமிழரும், தமிழ் மொழியும் தமிழ்நாடும், தமிழ் நாகரிகமும் நிலவி இருந்த பகுதி கடற்கோளால் மறைந்து போனதை இந்நாட்டில் வாழும் சில புல்லுருவி வர்க்கம் போதிய சான்று இல்லை என்று ஒதுக்கித் தள்ளி விடுகின்றனர். மூவாயிரம் ஆண்டுகட்கு இவர்கள் வேதங்களும் தெய்வங்களும், தேவர்களின் சண்டையும் கிளியும், கழுதையும், குதிரையும், சிங்கமும், புலியும், யானையும் மக்களைப் பெற்ற மாக்கதைகளும் புராணப் பொய்மூட்டைகட்கும் சான்று காட்ட முடிகிறது என்று வருத்தத்துடன் கூற வேண்டியவனாக இருக் கின்றேன். குமரி முனைக்கு தெற்கே, தமிழ்நாடு, குமரி நாடு, ஒளி நாடு என்னும் பெயரால் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அங்கு பாண்டிய மன்னர் ஆட்சிபுரிந்தனர் என்றும் அவர்கள் நிறுவிய முதற்சங்கமும் சங்கத்தில் உறுப் பெற்ற உறுப்பினர்கள் பெயர்களும் அங்கு அரங்கேற்றிய நூற்களும் அக்காலத்தில் உள்ள நாடுகளின் பெயர்களும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வீடுகளும், அரண்மனைகளும், அரண்களும் கோயில்களும் உள்ளன என்பது மறுக்கற் பாலதன்று. நடுகல்லின் தோற்றம் ஆதிகாலத்தில் தமிழ் நாட்டில் தாய் இறந்ததும் அவளின் நினைவாகவும், அவளது வழிபாட்டிற்காகவும் நடுகல் நடப்பட்டது. அப்பால் சிறந்த வீரர்களுக்கும் நடுகல் நாட்டுவதும் அவர்களுக்கு வழிபாடு செய்வதும் எழுந்தது. கற்புடைய மகளிர்க்கும் சதிக்கல் நடுவதும் பத்தினிப் படிமம் நாட்டுவதும் வழிபடுவதும் உண்டு காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபிற் பெரும்படை வாழ்தல் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர -(தொல்.பொருள் 60) என்பதாகும். கோயிலும் வாழ்கையும் தமிழர்கள் கோயிலைத் தம் உயிராக எண்ணுபவர்கள். கோயிலை உடல் அமைப்பிலே உருவாக்கியுள்ளனர். உடம்பில் உயிரும், கோயிலில் இறைவனும் இருப்பதாக மக்கள் எண்ணுவர். மக்கள் எங்கு குடியேறினும் அங்கு முதலில் அமைப்பது கோயிலாக இருந்தது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவர்கள் கண்ட முதுமொழி. இது அவர்கள் கண்ட மந்திரமும் ஆகும். தமிழ் மக்கள் கோயில் இல்லாத ஊர் திருவுடைய ஊர் ஆகா என்று எண்ணினர். ஒரு ஊர் அமைப்பிற்குக் கோயிலை மையமாக (கேந்திரமாக)த் தமிழர் கொண்டனர். கோயிலை ஊர் நடுவில் அமைத்து அதன் நான்கு புறமும் சதுரமாக நான்கு தெருக்களை அமைத்து அவைகளை மாட வீதி என்று அழைத்தனர். அதற்கு அப்பால் நான்கு பெரிய தெருக்களை அமைத்து தேரோடும் தெரு (ஏதவீதி) என்று அழைத்தனர். இவ்வாறு கோயிலை மையமாக அமைத்து சதுரம் சதுரமாக தெருக்களை அமைப்பது பண்டைக் கால மக்களின் நல்ல நகரின் அமைப்பு முறையாக இருந்தது. மதுரை மாநகர் இந்த அமைப்பு முறையை அடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. கோயில் இல்லாத ஊர்கள் நல்ல நகர் ஆகா. அது கொடிய விலங்குகள் வாழும் காட்டிற்குச் சமம் ஆகும். கோயில் இல்லா ஊர்களில் வாழும் மக்கள் நற்பண்புகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் பெற முடியாது என்று நம்பினர். திருக் கோயில் இல்லாத திருவிலூரும் திருவெண்ணீ ரணியாத திருவிலூரும் பருக் கோடிப் பத்திமையாற் பாடா வூரும் பாங்கினொடு பலதுளிகள் இல்லாவூரும் விருப் போடு வெண் சங்கம் ஊதா வூரும் விமானமும் வெண்கொடியும் இல்லா வூரும் அருப்போடு மலர்பறித் திட்டுண்ணா வூரும் அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே என்று கூறும் திருத்தாண்டகம் நமது கருத்தை வலியுறுத்துவதாக மிளிர்கின்றது. தமிழ் மக்கள் திருக்கோயில்களை, மிகத் தொன்மையான காலத்திலே இயற்கை எழில் இயைந்த குன்றுகளிலும் குன்றின் அடி வாரத்திலும், குளக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும், சோலை களின் நடுவிலும், அமைத்தனர். கோயில் மக்கள் அனைவரும் ஒன்று கூடும் இடமாக அமைக்கப்பட்டது. கோயில்களில் ஆறுகாலப் பூசை நடைபெற்றது. மக்கள் தவறாது பூசைக்குச் செல்வர். மக்கள் காலை மாலை உடற்றூய்மை செய்யவும் கோயில்களின் உட்புகும் பொழுது கைகால், முகம் முதலிய உறுப்புகளை கழுவிச் செல்லவும் கோயில்களோடு குளமும் அமைத்திருந்தனர். கோயில்களில் மக்களுக்குப் பிரசாதம் என்னும் பெயரால் உணவு வழங்கப்பட்டது. குறைந்த செலவில் அதிக அளவு சோறும் விற்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்ச் சாதம், தோசை, வடை, அதிரசம் போன்றவைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இன்றும் விற்கப்பட்டு வருகிறது. சுக்கு வெந்நீர், பானக்காரம் போன்ற குடிநீர்களும் பாலும் வழங்கப்பட்டன. தீர்த்தம் என்னும் பெயரால் தண்ணீரும் அளிக்கப்பட்டது. சந்தனம், பன்னீர் வழங்கப்பட்டன. சாம்பிராணி, கற்பூரம் முதலிய நறுமணப் புகைகளும் காட்டப்பட்டன. கோயில்கள் கட்டிடக் கலைக்கும், சிலை, படிமம், ஓவியம் ஆகிய கலைகளுக்கும் நல்ல ஊற்றாக இருந்தது. ஆடைகள் அணிகள், மணிகள் முதலியவைகளைப் பேணிப் பாதுகாக்கும் தாயகமாய் அமைந்தன. இசையும் நாட்டியமும் வளர்க்கும் மாமன்றமாகக் காட்சி நல்கியது. அங்கு யாழ், வீணை, முழவு, நாதசுரம், வீணை, தவில், உடுக்கை பாணி, தக்கை முதலிய கருவிகள் மீட்டப்பட்டு வந்தன. பொதுமக்களுக்கு கோயில்கள் கலைக் கருவூலமாக எழுந்தன. அரண்மனையை விட கோயில்கள் உள்ளத்தில் அன்பும், அருளும், அமைதியும், இன்பமும், எழுச்சியும் அளிக்கும் இன்ப புரியாய் விளங்கின. தமிழகத்திலே கற்காலத்திற்கு முன்பே தெய்வ வழிபாடு துளிர்த்துள்ளது. ஆதியில் மக்கள் தாயை வழிபடத் தொடங்கினர். தாய் இறந்த பின் அவள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மரத்துண்டையோ கல்லையோ நட்டு வழிபடத் தொடங்கினர். கற்காலம் தொடங்கு முன்பே, மக்கள் முதிராப் பண்புடைய முதுமக்களாய் வாழும் பொழுதே இடி,மின்னல், காற்று, நெருப்பு முதலியவற்றைக் கண்டஞ்சினர். அவற்றைத் தொழுதனர். அப்பால் ஞாயிறு, திங்கள், செவ்வாய் முதலிய கோள்களை வழிபட்டனர். பின் இரவிலும், இருட்டிலும், கார்காலங்களிலும் தீ, விளக்கு ஞாயிறு போன்ற முச்சுடர் வழிபாட்டைத் தொடங்கினர். முத்தீ வழிபாட்டிலிருந்துதான் கந்து வழிபாடும் இலிங்க வழிபாடும் தோற்றம் பெற்றன. மக்கள் நாகரிக வளர்ச்சியில் வீடுகளும் அரண்மனைகளும் அமைத்த காலத்தில் இறைவன் உறைவிடம் என்று கோயில்கள் அமைக்க முற்பட்டனர் (மாணிக்க வாசகர் காலமும் வரலாறும்-மறைமலை அடிகள்) விண்ணில் உள்ள கோள்களை மண்ணில் வழிபட மக்கள் முதலில் நெருப்பு, விளக்கு முதலியவைகளைப் பயன்படுத்தினர். அப்பால் அவற்றிற்கு திருஉருவம் அமைத்து வழிபடலாயினர். தமிழர் கண்ட ஒளி வழிபாடு உலக மெங்கும் பரவியது. எல்லா சமயத்திற்கும் ஒளி வழிபாடு மூலவழிபாடாய் உயர்ந்தது. மக்களின் அறிவு வளர்ச்சியில் அதற்குப் பெரிய தத்துவப் பொருள்கள் கூறப்பட்டன. மக்களின் அறிவு வளர வளர தெய்வங்களின் தன்மையும் சிறப்பும் உயர்ந்தன. சங்க காலத்திலே தமிழகத்தில் கற்கோயில்களே இல்லை. செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட கூரைக் கோயில்களே இருந்தன. அந்தச் செங்கற் கட்டிடக் கோயில்கள் கூடி அப்பொழுது எழுந்த தட்ப வெப்ப நிலைகளைத் தாங்க முடியாது சரிந்தன. மக்களால் செப்பனிட முடியவில்லை. அவைகளைக் கண்ணுற்ற சங்க காலப் புலவர் உருத்திரங் கண்ணார் இடிந்து சிதைந்து வீழ்ந்து கிடக்கும் திருக்கோயிலைக் கண்டு மனம் பொறாது, இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து, எழுதணி கடவுள் போக விற் புல்லென்று ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன்றிணை என்று பாடிப் புலம்பியுள்ளார். இதற்கப்பாலும் கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரை கோச் செங்கெட் சோழன் போன்ற பக்தர்கள் சிவ பெருமானுக்கும் திருமாலுக்கும் எழுபது கோயில்களைக் கட்டியுள்ளான். அப்பால் சிலர் சிவபெருமானுக்குச் சில வகை கோயில்களைக் கட்டி உள்ளனர். இவைகள் எல்லாம் செங்கற்களால் சுண்ணச் சாந்து கொண்டு பூசிக் கட்டப்பட்ட கோயில்களேயாகும். தமிழ் நாட்டில் இன்று பெரிதும் கற் கோயில்களாகவே மாறி வருகின்றன. ஆனால் கல்கள் ஏராளமாக கிடைக்கும் கேரளத்தில், அந்நாட்டு மக்கள் இதை மரபு வழக்காகக் கொண்டு கூரைக் கோயில்களையும் கற்களால் மட்டப் பாய் போட்ட சதுரம்,வட்டம், அரைவட்டம் போன்ற வடிவில் கட்டியுள்ளனர். கூரைக் கோயில்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் கட்டப் பெற்ற கோயில்கள் ஒன்றைக் கூடப் பார்ப்பது அரிதாய் விட்டது. ஆனால் கேரளத்தில் சங்க காலக்கோயில்கள் சிலவற்றைக் காண முடியும் என்று சிலர் கூறுகின்றனர். கேரளத்தில பல கூரைக் கோயில்கள் இன்றும் உள்ளன. அவைகளை சங்க காலக் கோயில் என்று நீங்கள் ஏற்காவிடினும் சங்க காலத்தில் நிலவிய கோயில்களின் மாதிரிக் கோயில்கள் என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளலாம். சங்க காலத்தில் தமிழ் நாட்டில் கற்கோயில்களே கிடையாது. பெரும்பாலும் கூரைக் கோயில்களே உள்ளன. சங்க காலத்தில் கோயில்கள் நாற் புறமும் மண்சுவர் எழுப்பி, மேலே மரக் கட்டைகளும் சட்டங்களும் வைத்துக் கட்டி மட்டைகளால் கட்டைகள் மீது பட்டியல் போல் பனை நார்களால் கட்டப்பட்டு மேலே பனை யோலை, தென்னை ஓலை, தட்டை சுக்கு நாரி புல் முதலியவைகள் வேயப் பெற்ற கூரைக் கோயிலே எங்கும் இடம் பெற்றிருந்தன. அப்பால் நாற்புறமும் மரக்கால்களை நாட்டி, மேலே பலகைகள் வைத்து ஆணி அடித்துட்டு மேலே பலகைகளைக் கொண்டு கூரையாக வேய்ந்த கோயில்கள் எடுப்பிக்கப்பட்டன. சங்க காலத்திலே நல்ல நாகரிகம் எழுந்த பின் நாற்புறமும் செங்கற்கள் வைத்து சுண்ணச் சாந்து இடை இடையே வைத்துக் கட்டி மேலே மரச் சட்டங்களும், விட்டங்களும், மல்கைகளும் பட்டியல்களும், பலகைகளும் அடிக்கப்பட்ட கோயில்கள் எழுந்தன. சுவர்கள் மீது சுண்ணச் சாந்து பூசப் பட்டது. மேலே பல கோயில்களில் பலகைகள் மீது செங்கற்துண்டுகளும் சுண்ணச் சாந்துகளும் விரவி விரிக்கப்பட்டு மேலே கனமான சுண்ணச் சாந்து கொண்டு மெழுகி வெய்யிலுக்கும் மழைக்கும் தாங்கும்வண்ணம் செய்யப்பட்டது. இறுதியாக, சட்டமும், விட்டமும் பல கைகளும் வைத்து இரும்பு ஆணி அடித்து பட்டியல்கள் இணைத்து மேலே ஓடு போடும் நிலை எழுந்தது. இன்றும் பல குக்கிராமங்களில் ஓடு போடப்பட்ட கோயில்கள் உள்ளன. கெட்டுப் போனாலும் அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சங்ககாலத்தில் நிலவிய கோயில்களைப் போன்ற கூரைக் கோயில்கள் இன்றும் கேரள நாட்டில் பல உள்ளன. சிற்சில அமைப்புகள் வேறுபட்டதாக இருந்தாலும் பொதுவாக ஒரு அமைப்புடையதாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணப் படுகிறது. இன்று தமிழ் நாட்டுக் கோயில்களை இது பாண்டிய நாட்டுப் பாணி, இது சோழ நாட்டுப் பாணி, இது பல்லவர் நாட்டுப் பாணி, இது நாயக்கர் நாட்டுப் பாணி, என்று கூறுவது போல் பண்டைக் காலத்தில் சேரர் நாட்டுப் பாணி என்று சில புதிய அமைப்புகளையும் அலங்காரங்களையும் சேர நாட்டுக் கோயில்கள் பெற்றிருக்கலாம். மேலும், மக்களின் பெருக்கமும், சூழ்நிலைகளும் பொருளாதாரச் செழிப்பும் சோழ, பாண்டிய, தொண்டை நாட்டுக் கோயில்களில் சேர நாட்டுக் கோயில்களை விட பல புதிய அமைப்புகளை எழுப்பியுள்ளன. உயர்ந்த மதில்கள், வான் அளாவிய கோபுரங்கள், கார் முகில்கள் தவழும் உயரிய விமானங்கள் மணி மண்டபம், மகா மண்டபம், மண மண்டபம், வசந்த மண்டபம், 108 கால் மண்டபம், 1008 கால் மண்டபங்கள், தெப்பக் குளங்கள், போன்ற பல மாற்றங் களை எழுப்பியுள்ளன. இங்கு காட்டப்பட்ட திருச்சூர் கோயில் போன்ற ஒன்றிரண்டு கோயில்கள் தான் பண்டையச் சங்க காலக் கோயில்களோடு ஒப்பிட்டு நோக்கலாம். இஃதன்றி விழிஞம் என்னும் இடத்திலுள்ள 9-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட கோயில் சோழர் பாணியில் திரு உண்ணாழிகையும் முக மண்டபமும் உடையதாய் உள்ளது. 10-ஆம் நுற்றாண்டில் கன்னியாகுமரியில் எடுப்பிக்கப்பட்ட குகநாத சுவாமி கோயிலும் 9-ஆம் நூற்றாண்டில் எழுப்பப் பெற்ற பார்த்திவ சேகரபுரம் கோயிலும், 16 -ஆம் நூற்றாண்டில் உருப்படுத்தப்பட்ட சுசீந்திரம் கோயிலும் 13 -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருவல்லம் அரை வட்டக் கோயிலாகிய பரசுராமர் கோயிலும், 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிர்மங்கராவில் உள்ள வட்ட வடிவிலான கோயிலும் 16- ஆம் நூற்றாண்டில் வலிய உதையாதிச்ச புரம் கோயிலும் இவைகள் போன்று சிலவும் தமிழ் நாட்டிலும், மைசூர் மாநிலத்திலும் உள்ள இன்றையக் கோயில்களின் பாணியில் உள்ளன. கேரளாவில் கட்டப்பட்ட கோயில்கள் எல்லாம் திராவிடப் பாணியில் கட்டப்பட்ட கோயில்களேயாகும். அங்கு திரு உண்ணாழிகை (கருவறை) சிரிகோயில் என்று கூறப்படும். அங்குள்ள கோயில்களின் கருவறை பெரும்பாலும் சதுர வடிவிலே உள்ளன. அரை வட்டம், வட்டம், சதுரம் நீண்ட சதுர வடிவில் இருந்தாலும் மரக்கட்டைகளால் கட்டப்பட்டு இருமல் கட்டைகள் கூம்பிய வடிவில் அடுக்கடுக்காய் வைத்து பட்டியல்கள் வைத்து அடித்து மேலே ஓடுகள் வேயப் பெற்றிருக்கும் கூரைகள் முக்கோண வடிவில் இருக்கும். சிரிகோயிலின் (திரு உண்ணாழிகையின்) மேற் கூரையின் தோற்றம் அகன்ற கூம்பிய வடிவில் இருக்கும். அதன் அண்மையில் உள்ள இடங்களின் (Halls) கூரைகள் முக்கோண வடிவில் நீள் சதுர வடிவில் இருக்கும். மழைத் தண்ணீர் உட்புகாது எளிதில் வெளியே செல்வதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கூரைக்கோயில் சில தமிழ் நாட்டில் உள்ள சாதாரண வீடுகள் போல் உள்ளன. சில-அதாவது எட்டமனூர் கோயில் முன்புறம் ஓடு போட்ட தாழ்வாரமும் அப்பால் உயரமான ஒரு தட்டுள்ள கூரையும் உள்ளன. இதை விமானம் என்று கூறுகிறார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு கோப்புள்ள கோயிலை இரண்டு விமானம் அல்லது இரண்டு மாடிக் கோயில் என்கின்றனர். திரு உண்ணாழிகையின் முன் உள்ள படிக் கட்டுகள் சோபானம் எனப்படும். கேரளக் கோயிலின் முன், நமகார மண்டபமும் அதை அடுத்து நாலம்பலம் என்னும் உறுப்பும் அதனை அடுத்து பலிக்கல் (பலிபீடம்) கொடி மரம் ஆகிய பாகங்கள் அமைந்திருக்கும். கொடி மரத்தின் அருகே யானைக் கொட்டில்கள் இடம் பெற்றிருக்கும். கோயில்கள் அனைத்தும் திராவிட சிற்ப முறையில் கட்டப் பட்டதேயாகும்.1 மரக்கோயில்கள் முற்காலத்தில் தமிழ் நாட்டில் எங்கும் மரத்தினால் கோயில்கள் கட்டப்பட்டன. மண்கோயிலை விட மரக்கோயில் சிறப்புடையதாய் இருந்தன. மண்ணை விட ஓலையை விட மரம் உறுதி வாய்ந்ததாயும் மழை வெய்யில் காற்று முதலியவைகளை நீண்டகாலம் தாங்கும் சக்தி வாய்ந்ததாயும் இருந்தது. அதோடு மண்ணை விட அதிக உறுதியான அழகிய நுண்ணிய சிற்ப வடிவங்களை மரத்தினால் செய்வது எளிதாக இருந்தது. கல்லைப் போன்ற கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட திரு உருவங்களும் தேக்கினால் செய்யப் பட்ட திரு உருவங்களும் நீண்ட நாள் கெடாதிருந்து வந்தன. 5000 ஆம் ஆண்டிற்கு முன் மண்ணில் புதைந்துள்ள இந்திய தேக்கு மரத்துண்டு சுமேரிய நாட்டில் கண்டெடுக்கப்பட்டு இன்றும் பொன்றாது இருந்து வருவது கண்டு உலகம் வியப்பில் ஆழ்ந்துள்ளது. இன்றையக் கேரள நாட்டில் முற்காலத்தில் மரத்தால் கட்டப் பெற்ற கோயில்களை எங்கும் காணலாம். சிதம்பரத்தில் உள்ளஆட வல்லான் சபாநாதர் மண்டபம் மரத்தினாலே செய்யப்பட்டது. இன்றும் அப்படியே காட்சி அளிக்கிறது. சிதம்பரத்திலே உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் கோயில் ஆதியிலே மரத்தினாலே கட்டப் பெற்றிருந்தது. அப்பால் அது கருங்கல்லால் கட்டப்பட்டது என்றாலும் அதன் தூண்களும், கூரை முதலிய அமைப்புகள் மரத்தினாலே அமைக்கப்பட்டதாய் இருப்பது அது பழைய மரக்கோயில் என்பதை மெய்ப்பிப்பதாய்க் காணப்படுகிறது. சிதம்பரம் ஆடவல்லான் கோயிலின் பழைய கட்டிடங்கள் அனைத்தும் ஆதியில் மரத்தினாலும் அமைக்கப் பட்டிருந்தது என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை. முற்காலத்தில் எங்கும் மரக்கோயில்களே நிலவின என்பதற்கு இது ஏற்ற எடுத்துக் காட்டாகும். பிற்காலத்தில் கோயில்கள் கருங்கல்லில் அமைக்கப் பட்டன என்றாலும், மரத்தைச் செதுக்கி அமைக்கப்பட்டது போன்ற அமைப்புகளை கற்கோயிலிலே காணப்படுவது நமது கருத்தை அரண் செய்வதாக அமைந்துள்ளது. மரக் கட்டிடங்கள் தட்ப வெப்ப நிலையினால் தாக்குண்டு விரைவில் பழுதுண்டு அழிந்து விடும். இந்தத் தாக்குதலால் முக்கியமாக மரத்தினாலான மேற்கூரையே பெரிதும் தாங்கி அழியும். ஆகவே மரக் கூரை எளிதில் பழுதுறாத வண்ணம் கூரையின் மீது முற்கால மக்கள் செம்புத் தகடுகளை வேய்ந்து வந்தனர். செம்புத் தகடு மரத்தை விட நீண்ட காலம் மழை வெய்யில் காற்று முதலியவைகளைத் தாங்கி பழுதுறாது இருந்து வந்தன. ஆட வல்லான் கோயிலில் மிகப் பழமையானது திரு நெல்வேலியில் உள்ள முனிதாண்டவ மூர்த்தியின் அம்பலமேயாகும். இத்தாண்டவ மூர்த்தி படைப்புத் தொழிலைக் காட்டும் காளி காதாண்டவ மூர்த்தி என்றும் கூறுவர். இந்தத் தாண்டவ மூர்த்தி ஆடிய நிருத்த சபை செம்பு அம்பலம் அல்லது செப்பறை என்று கூறப்படும். ஆதியில் மக்கள் பொருளாதார நிலை குன்றிய காலத்தில் எழுந்த அம்பலமாக இருப்பதால் இந்த சபை தூண்களும், உத்தரங் களும், சட்டங்களும், விட்டங்களும், மல்கைகளும் பட்டியல்களும் மரத்தினால் செய்து மேற் கூரை மரத்தினால் அமைத்து மேலே செம்புத் தகட்டை வேய்ந்தனர். அதனால் இந்த நிருத்த சபை தாம்பிர சபை என்று அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆடவல்லான் ஆடிய சபைகள் ஐந்து தோன்றியது. (1) நெல்லையில் உள்ள தாம்பிர சபை, (2) மதுரையில் உள்ள இரசித சபை (வெள்ளியம்பலம்) (3) திருக்குற்றாலத்தில் உள்ள சித்திர சபை (4)திருவாலங்காட்டில் உள்ள இரத்தின சபை (5) தில்லையில் உள்ள பொன்னம்பலம் என்பர். நெல்லையை அடுத்து எல்லா அம்பலங்களும் ஆதியில் மரத்தினாலே அமைக்கப்பட்டு அப்பால் அரசர்களால் கூரைகள் வெள்ளித் தகடுகளும், பொன் தகடுகளும் வேயப்பட்டன. செங்கல் கட்டிடம் மரங்கள் ஒரு சில ஆண்டுகளிலும் மழையாலும் வெய்யிலா லும் காற்றாலும் பழுதடைவதை எண்ணியும் எளிதில் தீப்பிடித்துக் கொள்வதை உணர்ந்தும் இறைவன் உறையும் இல்லம் உறுதி உடையதாய் இருக்க வேண்டும் என்பதைக் கருதி செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கோயில்கள் கட்டத் தொடங்கினர். செங்கற் கோயில்கள் மண்கோயில்களை விட, மரக் கோயில்களே நெடுநாள் உறுதியாக இருந்தன. ஆனாலும் செங்கற் கோயில்கள் தட்ப வெப்பங்களை ஒரு நூற்றாண்டிற்கு மேல் தாங்கக் கூடியதாக இல்லை. செங்கல்லால் கட்டிய கோயில்கள் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு மேல் எங்கும் நீடித்து நிற்கவில்லை. கி.பி.600-க்கு மேல் தமிழ் நாட்டில் எடுப்பிக்கப்பட்ட கோயில்கள் அனைத்தும் செங்கற்கட்டிடங்களேயாகும். அவைகள் அடிக்கடி பழுது பார்க்க வேண்டிவைகளாக இருந்தன. பழுது பார்த்து வந்தாலும் ஆறு நூற்றாண்டிற்கு மேல் அவற்றால் நிலைத்து நிற்க முடிய வில்லை. கல்லைப் போல் சுடுமண் செங்கல்கள் தட்ப வெப்ப நிலைகளை எதிர்த்து நிற்க முடியவில்லை. கடற்கரைகளில் உள்ள கோயில் சுவரின் உப்புக் காற்றினால் பொடிப்படியாகி உதிர்ந்து விழுந்து கட்டிடங்கள் சாய்ந்துள்ளன. இன்று திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் என்று கூறப்படுவது ஆதியில் சிவன் கோயிலாக இருந்தது. திருச்செந்தூர் சாசனங்கள் இக்கோயிலை உடையவர் (சிவன்) கோயில் என்றே கூறுகின்றன. சிவன் கோயிலில் இருந்த இலிங்கத்தை ஒரு புறம் (இன்றைய முருகன் கோயில் திரு உண்ணாழிகைக்குப் பின்புறம், ஒதுக்கி வைத்து விட்டு இந்த முருகன் கோயிலைப் புதிதாய் எழுப்பியுள்ளனர். கடல் அருகே இருப்பதால் கடலின் உப்புக் காற்றால் பழைய கோயிலின் கற்கள் கூட உவர் பட்டு கல் தூள் தூளாக உதிர்ந்து தேய்ந்து போனதைக் காண முடியும். கோயில் அமைப்பும் உறுப்பும் நமது கட்டிடக் கலை இன்று, நேற்று ஏற்பட்ட ஒரு கலை அல்ல. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி பட்டறிவால் உறுதியும் உயர்வும் அழகும், வசதியும் உள்ளதாய் அமைக்கப் பெற்றுள்ளது. நமது கோயில் கட்டிடக் கலை ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. சிவாகமங்கள் இருபத்தெட்டு. இவை முறையே (1) காமி (2) யோகசம் (3) சிந்தியம் (4) காரணம் (5) அசிதம் (6) தீபத்தம் (7) சூக்குமம் (8) சத்திரம் (9) அஞ்சுமான் (10) சுப்பிரபேதகம் (11) விசயம் (12) விசுவாசம் (13) சுவாயம் புவம் (14) அனலம் (15) வீரம் (16) இரௌபரம் (17) மகுடம் (18) விமலம் (19) சந்திர ஞானம் (20) விமபம் (21) புரோற் கீதம் (22) இலளிதம் (23) சித்தம் (24) சந்தான சருவோத்தம் (25) பாரமேச்சுரம் (26) கீரணம் (27) பேதம் (28) வாதுளம் எனப்படும். இஃதன்றி பஞ்சராத்ரா ஆகமங்களும், சாக்த ஆகமங்களும் உள்ளன. நமது திருக்கோயில்கள் ஆகமங்களின் அடிப்படையிலே, அமைக்கப் பெற்றுள்ளன. பூசை முறைகளும், மந்திரங்களும், ஆகம விதிப்படியே செய்யப் பெற்று வருகின்றன. சிவ நெறிக்கும் சைவர்களுக்கும் ஆகமமே முடிவான சட்ட நூல். அதற்கு முரணாக எதுவும் நடை பெறுவது முறை கேடானது. உறுப்புகள் நமது சிவாகமங்களும் சிற்ப நூற்களும் கோயில் கட்டுவதற்கு நிலம் எப்படி இருக்க வேண்டும், எப்படிக் கட்ட வேண்டும் என்று விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவைகளைப் பற்றி இங்கு விரிவாக விளக்க இந்நூல் இடந்தராததால் சுருக்கமாக ஆனால் தெளிவாக இங்கு ஆய்வோம். கோயில் கட்டிடங்களை ஆகமங்கள் ஆறு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை 1 அதிர்ஷ்டானம் 2 பாதம் 3 மஞ்சம் 4 கண்டம் 5 பண்டிகை 6 தூபி எனப்படும். இவைகளைத் தமிழில், 1 அடி, 2 உடல் 3 தோள் 4 கழுத்து 5 தலை என்று கூறப்படும். 1. அதிர்ஷ்டானம் இதற்கு அடி, நிலம், தலம், பூமி ஆதாரம், மசூகம் போன்ற பெயர்கள் உண்டு. 2. பாதம் இதற்கு உடல், உண்ணாழிகை (அக நாளிகை) கால், பாதம், கம்பம் தம்பம் என்ற பெயர்கள் உண்டு. இப்பெயர்கள் உண்ணாழிகையினைச் சூழ்ந்திருக்கும் சுவர்களை குறிக்கின்றன. 3. மஞ்சம் இது தோள், தளவரிசை பிரதாரம், கபோதம் போன்ற பெயர்களை உடையது. 4. கண்டம் இது கழுத்து, கர்ணம், முதலிய பெயர்களைப் பெற்றுள்ளது. 5. பண்டிகை இது தலை, கூரை, சிரம், சிகரம், பண்டிகை, மதகம் போன்ற பெயர்களால் அழைக்கப் பெறும். 6. தூபி இது முடி, தூபி, கலசம்(கலயம்), சிகை, சூளம், உச்சி முதலிய பெயர்களால் அழைக்கப்படும். திருக்கோயில் கட்டிடத்தில் இருக்கவேண்டிய இந்த ஆறு உறுப்புகளும் மக்கள் உடலில் காணப்படும் அடி(பாதம்) உடல், தோள், கழுத்து, தலை, முடி (உச்சி) என்னும் உறுப்புகளை அடிப்படையாக வைத்தே பெயர்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மனிதன், மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பதைக் காட்டுவது நமது திருக்கோயிலின் திரு உண்ணாழிகை (மூலதானம்) முதல் வாயில் கோபுரம் வரையுள்ள பகுதி. (படம் 1 பார்க்க) எட்டுச் சாண் அளவுள்ள எழில் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பது போன்று நமது திருக்கோயில்களுக்கு திரு உண்ணாழிகை (கருவறை) முகம். அர்த்த மண்டபம் கழுத்து; துவார பாலகர்கள் (வாயிற் காவலர்கள் நிற்கும் இடங்கள் மக்கள் உடலினைக் காவல் புரியும் இரு தோள்கள்; கொடி மரம் (துவஜதம்பம்) வரையுள்ள பகுதி இடுப்பிற்கும் தோளுக்கும் இடையேயுள்ள உடம்பாகும்; இனி கொடி மர நிலை குதானமாகவும், கொடி மரம் முதுகுத் தண்டாகவும், குடைவரை வாயிற் கோபுரம் உயர்ந்து நிற்கும் பாதங்கள்; என்று சிவாகமங்கள் உருவகப்படுத்திக் காட்டுகின்றன. உடலை உடம்பு அன்னத்தை உண்டு வளர்ந்து நிலை பெற்றிருப்பதால் அன்னமய கோசம் அனை உடம்பு எனப்படும். உடல் ஐம்பொருள்களைக் கொண்டு இயங்குவதால் தூல உடம்பு என்றும் கூறப்படும். சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியே இருக்கும். அதற்கு, நான்கு திசைகளிலும் மதில் வாயில்கள் இருப்பினும் கோயில் புகுந்து வழிபடச் செல்பவர் கிழக்கு வாயில் வழியே செல்வது முறை. கிழக்கிலிருந்து வருபவன் முதலாவது காண்பது படுத்திருப் பவனுடைய பாதங்களேயாம். அவையே படுத்திருப்பவன் உடம்பில் கூடுதலாக உயர்ந்திருக்கும் உறுப்புகள். அதனால் முன் கோபுரங்கள் கோவில் சற்று உயரமாகக் கட்டப்படுகின்றன. கோபுரத்தை நடுவில் கட்டாது முகப்பில் கட்டியிருப்பது இந்தக் கருத்தைக் கொண்டேயாகும். மூலதானத்திற்கு மேல் உள்ள விமானம் மனிதனுடைய பிரம்மரந்திரம் என்ற சகராரச் சக்கரத்தின் அறிகுறியாக இருக்கிறது. அச்சக்கரம் ஆயிரம் இதழ்களையுடைய இரண்டடுக்குத் தாமரை மலர் போன்றது. இந்த அடிப்படையிலே விமானங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. அதிக உயரமின்றி தாமரை மலர் வடிவில் பெரிய கோயில்கள் பொற்ற கட்டால் கூரை வேயப்பட்டு ஒளி வீசுவது, சிவன் முத்தனுடைய சகராரம் போன்று ஒளி வீசும். திருமூலர் தமிழகத்தின் தலை சிறந்த சித்தர். அவர் எழுதிய திருமந்திரம் தமிழ் ஆகமம் ஆகும். அதில் உடலில் உயிர் வாழ்வதும் உயிரினுக்குயிராய் உடையவன் இருப்பதையும் உணர்த்த உடம்பின் அமைப்பில் இறை இல்லம்-திருக்கோயில் அமைக்கப் பெற்றது என்று உலகிற்கு உணர்த்து கின்றார். உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக் குள்ளே உறு பொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே - திருமந்திரம் உள்ளம் பெருங்கோயில் ஊண் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே - திருமந்திரம் 1792 உடம்பில் உள்ள உறுப்புகள் ஒரு அளவிற்கு உட்பட்டிருப்பது போல் கோயிலில் உள்ள உறுப்புகளுக்கும் அளவுகள் அளிக்கப் பட்டுள்ளன. அந்த அளவுகள் நமது சமயச் சான்றோர்களால் மிக உயரிய தத்துவ முறைப்படி தேர்ந்து தெளிந்து தரப் பெற்றுள்ளது. அவைகள் அடியில் வருமாறாகும்; 1. அதிர்ஷ்டானம் (அடி) உயரம் 1-பங்கு 2. பாதம் (உடல்) உயரம் 2 பங்கு 3. மஞ்சம் (தோள்) உயரம் 1 பங்கு 4. கண்டம் (கழுத்து) உயரம் 1 பங்கு 5. பண்டிகை (தலை) உயரம் 2 பங்கு 6. தூபி (முடி) உயரம் 1 பங்கு இந்த அளவுகள் ஒரு நிலையை உடைய கோயில்களுக்கு உரியன. இஃதன்றி வேறு அளவைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நிலைக் கோயில் அமைப்பதும் உண்டு. சில சிற்ப நூற்களில் பல நிலைகளையுடைய கோயில்களும் பலவித அளவைகளும் தரப் பெற்றுள்ளன. அமைப்பு 1. இரண்டு நிலைக் கோயில்கள் பின்வரும் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெறுவதாகும் 1) தரை 2) சுவர் 3) தளவரிசை 4) சுவர் 5) தளவரிசை 6) கழுத்து 7) கூரை 8) கலயம் 2. மூன்று நிலைக் கோயில்கள், அடியில் வரும் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெறுவதாகும்: 1) தரை 2) சுவர் 3) தளவரிசை 4) சுவர் 5) தளவரிசை 6) சுவர் 7) தளவரிசை 8) கழுத்து 9) கூரை 10) கலசம். இஃதன்றி இன்னும் பல அமைப்புகளும் சிற்ப நூற்களில் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. கோயில்கள் 1) சுத்தம் 2) மிசுரம் 3) சங்கீரணம் என்று மூன்று வகையாக கட்டப் பெறுகின்றன. 1) சுத்தம் முழுவதும் மரத்தினாலோ செங்கல்லினாலோ, கல்லினாலோ கட்டப்படுவது. 2) மிசிரம், இரண்டு பொருள்களைச் சேர்த்து கட்டப்படுவது. 3) இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைச் சேர்த்துக் கட்டப்படுவது சங்கீரணம் கோயில், விமானம் 1) அதிர்ஷ்டானம், 2) பாதம், 3) மஞ்சம், 4) கண்டம் 5) பண்டிகை 6) தூபி என்ற ஆறு உறுப்புகள் இருப்பது பற்றி மேலே கூறியுள்ளோம். இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றும் பல துணை உறுப்புகளை உடையதாக இருக்கின்றன. அவை அடியில் வருமாறு; 1. அதிர்ஷ்டானம் (அடி) 1) துணை உறுப்புகளாவன: 1) பிரத்தானம் 2) உபானம் 3) மகாபத்மம் 4) பலகை 5) அதோபத்மம் 6) குமுதம் 7) கவோந்த பத்மம் 8) துக்கோடு 9) வேதிகை 10) கண்டப் பரப்பு 11) கண்டம் 12) கண்ட வேதிகை 13) செகதி 2. தம்பம் (திருஉண்ணாழிகை) 1. வேதிகை 2. நாக பந்தம், 3. கால், 4. கலசம், 5. குடம், 6. பலகை - போதிகை (இவை தூணின் உறுப்புகள்) 3. பிரதாரம் (தோள்) 1. உத்திரம் 2. எழுதகம் 3. கபோதகம் 4. யாளம் எனப்படும். 4. கண்டம் (கழுத்து) 1. வேதிகை 2. கால் 3. போதிகை 4. பண்டிகை 5. கலசம் இதில் பஞ்சரக் கூடு மையசாலை, பஞ்சரம் கர்ணக் கூடு ஆகியவைகளு முண்டு. 5. பண்டிகை (தலை); 1. உத்திரம் 2. எழுதகம் 3. தூக்கோடு 4. மாலைத் தட்டு 5. பத்மம் 6. மாலைக்கட்டு 7. இடைக்கட்டு 8. பண்டிகை 9. மாலைக்கட்டு 10. கண்ணாடிக் கட்டம் 11. மாலைக் கட்டு 12. மகாபத்மம் எனப்படும். 6. தூபி (முடி): 1. மகாபத்மம் 2. மகாபத்ரம் 3. கண்டம் 4. அரடா 5. கண்டம் 6. கண்டா 7. அரடா 8. அலா 9. கிரீவா 10. கால் முதலிய உறுப்புகளை உடையது. 9. கண்டம் 10. நகதலிப்பூ குறிப்பு:- அதிர்ஷ்டானத்திற்கு அடியில் உபபீடம் உள்ளது. அதுவும் கபோதம் காந்தம் குமுதம் உபானம் போன்ற உட்பிரிவுகளை உடையது. முழு நிறைவான விமானத்தின் அதிர்ஷ்டானம் ஐந்து வரிகளை (பஞ்ச வரிகளை)ப் பெற்றிருக்கும் இங்கு குறிப்பிட்ட விமானம் கோயில் அமைப்பு முறை தமிழர்களின் கோயில் அமைப்பு முறைகள் அனைத்தும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப் பட்டுள்ளது. தமிழில் ஆகமங்கள் இயற்ற வந்த திருமூலர் தாம் பெற்ற ஒன்பது ஆகமங்களின் பெயர்களைக் குறிப்பிடும் தருமத்துப் பாலில் முதலாவதாகக் காரணம் என்ற ஆகமத்தின் பெயரைக் குறிப்பிடு கின்றார். திருக்கோயிலின் அமைப்புகளைப் பற்றி காரணம் என்னும் ஆகமம் பல அரிய விளக்கங்களை நமக்கு அளிக்கிறது. இடம் ஆண்டவன் அமர்ந்து அருள்புரியும் இல்லமான கோயில்கள் தூய்மையான இடத்தில் இருக்க வேண்டும். நல்ல மனநிறைவு அளிக்கும் நிலத்தில் விரிவான அடிப்படையிட்டுக் கட்ட வேண்டும். புனிதமான சிவாலயங்களை எழுப்பும் இடத்தின் கீழ் எலும்புகள், நகங்கள், மயிர் முதலிய பொருள் இருக்கக் கூடாது. திருக்கோயில்கள் எடுப்பிக்கும் இடத்தின் கீழே ஆழமாக அகழ்ந்து அருவருப்பான பொருள்களை அகற்றிவிட வேண்டும் என்று கர்சணவிதி என்ற பகுதி கூறுகிறது. அமைப்பு முறை திருக் கோயிலின் முக்கியமான பகுதி திரு உண்ணாழிகையும் (கர்ப்பக் கிருஹமும்) மேலுள்ள விமானமுமேயாகும். திரு உண்ணாழிகையை மூலதான என்றும் மொழிவார்கள். இதனுள்ளே மூலவரான இறைவனின் சின்னமாக இலிங்கம் அமைக்கப் பெற்றது. உண்ணாழிகையின் மேல் அமைக்கப்பட்ட விமானத்தின் அமைப்பைக் கொண்டே கோயில்களின் வகைகள் பிரிக்கப்பட்டன. திரு உண்ணாழிகையை முதலாவதாக வைத்தே அர்த்த மண்டபம், மகா மண்டபம், குளிப்பு மண்டபம், அலங்கார மண்டபம், திருமண மண்டபம், வசந்த மண்டபம், நூற்றெட்டுக் கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், ஆடல் மண்டபம், நாடக மண்டபம் போன்றவைகள் அமைக்கப்பட்டன. அப்பால் இராய கோபுரங்களும் வலம் வருவதற்கேற்ற சுற்றுப் பிரகாரங்கள் ஒன்று இரண்டு மூன்று ஏழு என்று விரிவடைந்தும் திருக்கோயில்களின் தோற்றம் விரிடைந்து வந்தது. மூவகை அமைப்பு திருக் கோயில்களுக்கு உயிர் போன்றது இலிங்க வடிவம் இடம் பெற்றிருக்கும் திரு உண்ணாழிகை. இந்த உண்ணாழிகையின் தோற்ற அமைப்பை ஆகமங்கள் மூன்று வகையாகக் கண்டுள்ளன. அதாவது 1. திராவிடம், 2. நாகரம் 3. வேசரம் எனப்படும். காரணம் என்றும் ஆகமம், திராவிடம் நாகரம், வேசரம் என மூன்று கோயில்கள் உண்டு என்று உரைக்கிறது. 1. நிலத்தின் மட்டத்திலிருந்து தூபி வரை நான்கு பட்டமுள்ள சதுரக் கோயில் நாகரம் எனப்படும். 2. வேதி (மேடை) யிலிருந்து எண் கோண வடிவமாக அமைக்கப்படும் கோயிலுக்கு திராவிடம் எனப்படும். கர்ண கூடத்திலிருந்து வட்டவடிவமாக அமைக்கப்படும் கோயிலுக்கு வேசரம் என்று கூறப்படும். சதுரம், எண்கோணம், வட்டம் ஆகிய மூவகைத் தோற்றமுள்ள கோயில்கள் கூறப் பட்டுள்ளன. இந்த மூவகைத் தோற்றங்களையும் முறையே கோயிலின் அடித்தலத் தினின்று சிகரம் வரைக் காண வேண்டும். தமிழ் நாட்டில் பூமி மட்டத்திலிருந்து சிகரம் வரை நான்கு மூலை பட்டையுள்ள நாகரம் என்ற கோயில் அமைப்பு முறையைப் பெரிதும் காணலாம் விமானத்தில் உள்ள கர்ண கூடத்திற்கு மேல் சிகரம் முடிய வட்ட வடிவமுள்ள வேசம் என்ற கோயில் அமைப்பையும் எளிதாகக் காணலாம். மேடைக்கு மேல் எண் கோண வடிவமாக விமான உச்சி வரை அமைந்துள்ள திராவிடம் என்ற கோயில் அமைப்பைக் காண்பது மிக அரிது. இந்த அத்தியாயம் எழுதுவதற்குத் துணையாய் இருந்த நூற்கள் 1. Encyclopaedia of Britanica - 9th edition. 2. The Indus Civilization - Sir Mortimer Wheeler 3rd ed. 1968 (LONDON) 3. Mohenjo - Daro and Indian Civilization - Sir John Marshall. 4. Dravidian - Civilization - R.D. Banerji (modern Raview calcutta sep. 1927) 5. Epigraphica India - Vol 6. Pallava Architecture Part I - A.H. Lonchurst.(Simla) 1924 7. Dravidian Civilization - R.D. Banerji (Modern Review (1932) 8. Indian and Pacific world. - Kal Das Nag 9. தொல்காப்பியம் - கழக வெளியீடு 10. தேவாரம் - அப்பர் அடிகள் (திரு அடைவு திருத்தாண்டகம் 5) 11. அகநானூறு - கடியலூர் உருத்திரங்கண்ணனார். 12. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்- மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1969 13. Arts and crafts of Travancore - Stella Kramrisch & others (London) 1948 அக நாழிகை (கர்ப்பக் கிரகம்) அக நாழிகை (கர்ப்பக் கிரகம்), திருக்கோயிலின் இன்றியமை யாத பகுதி. முற்காலத் தமிழ் மக்கள் அக நாழிகையைத்தான் கோயில் என்று அழைத்தனர். இந்த அகநாழிகையை மூலத்தானம் (மூலதானம்) என்றும் கூறுவர். இங்குதான் மூலவர் இருப்பர். அதாவது சிவலிங்கம் இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் உயர் நிலையாய் இருப்பது மூலதான மூர்த்தியாகிய அக நாழிகைத் திரு உருவம் வாயில் கோபுரம் பாதமாகவும் அக நாழிகையைச் சிரசாகவும் மதிக்கப்படும். அக நாழிகை, உண்ணாழிகை, கருவறை, (கர்ப்பக் கிருகம்) திருவறை, புனித உறையுள், புனித இடம், தெய்வமனை வழிபாட்டிடம் என்றெல்லாம் தமிழர் அழைப்பர். வட மொழியாளர் கர்பக்கிரகம் என்று கூறுவர். ஆங்கிலத்தில், சாங்டம் சாங்டம் (sanctum sanctum) என்று அழைக்கப்படும் திருக்கோயிலின் உறுப்புகளை மகாங்கம், அங்கம், உபாங்கம் பிரத்தியாங்கம் என்றும் நான்கு வகையாகப் பிரிக்கப்படும். அகநாழிகை மகாங்கம் என்றும் அர்த்த மண்டபம் அங்க மென்றும், மகாமண்டபம் முதலானவை உபாங்கம் என்றும் பிரகாரங்கள் பிரத்தியாங்கம் எனவும் பொதுவான அங்கம் சொல்லப்படுகிறது. அக நாழிகை (கர்ப்பக் கிரகம்) தலையாகவும், அந்தராளம் முகமாகவும் கண்டமாகவும் அர்த்த மண்டபம் மார்பாகவும், மகா மண்டபம் வயிராகவும் பிரகாரங்கள் முழங்கால் கணுக்காலாகவும் கோபுரத்துவாரம் பாதமாகவும் சிற்ப நூற்களில் கூறப்படுகின்றன.1 உண்ணாழிகை (அக நாழிகை) யின் - கருவறையின் விமானத்தை தூலலிங்கம் என்றும் அதன் உள்ளிருக்கும் திரு உரு சூட்சம லிங்கம் என்றும் கூறப்படும். விசுவகர்மீயம் என்ற சிற்ப நூல், விமானத்தை சிவனுரு என்றும் சிவன் உடல் என்றும் சிவ பெருமானின் நின்ற கோலத்திற்கு விளக்கம் தருகிறது. உண்ணாழிகையின் மேலுள்ள எழிலார்ந்த வடிவத்தின் வேலைப் பாடுகளும் உறுப்புகளும் அடுக்குகளும் சிற்ப நூற்களில் சிறப்பித்துப் பாராட்டப்பட்டுள்ளன. அவற்றை அடியிலிருந்து 1. உபானம். 2. செகதி 3. குமுதம் 4. கந்தரம் 5. பட்டிகை 6. வேதிகை 7. தூண் (தம்பம்) 8. உத்தரம் 9. கபோதம், 10. பிரதரம் 11. ஹதி வேதிகை 12. கிரீவம் 13. மஞ்சம் 14. மகா நாசி 15. பார் சுவ நாசி 16. சந்திர மண்டலம் 17. பாலிகை 18. பத்மம் 19. மகா பத்மம் 20. தூபி (சிகரம்) வரை 20- உறுப்புகள் ஆக வகுத்து கூறப் பெற்றுள்ளன. இவற்றை சிவ வடிவத்தின் பாதம், கெண்டைக் கால், முழங்கால் தொடை, அரை(மேட்ரம்), நாபி, உதரம், மார்பு, தோள், புஷ்டிதம், கழுத்து, ரேகை, உதடு, மூக்கு, காது, கண், நெற்றி, தலை, சிரசு, சிகை முதலிய உறுப்புகளாகப் பாவிக்கப் பெறுகின்றது. இஃதன்றி, உண்ணாழிகையையும் (கருவறையையும்) விமானத்தையும் பெண் வடிவம் என்றும், அதன் உள்ளிருக்கும் திரு உருவை, உதரத்திலுள்ள கர்ப்பம் என்றும் விளக்கம் தரப்படுகிறது. உதரத்தில் கர்ப்பமாகிய மூர்த்தி அமைக்கப் பெற்றிருப்பதாலேயே உண்ணாழிகைக் கட்டிடத்தை கர்ப்பக் கிரகம் (கருவறை) என்று அழைக்கப்படுகிறது. இக்கருத்தினை உளத்தில் கொண்டு மூல மூர்த்தி வீற்றிருக்கும் கட்டிடத்தைச் சிற்ப நூல் வல்லுநர்கள் குக்குடாண்டம்- கோழி முட்டை வடிவமாகவும் அமைக்கலாம் என்று கூறுகின்றார்கள். இத்தகைய, குக்குடாண்ட வடிவத்தில் கோயில்கள் அமைப்பதும் உண்டு. சிவபெருமானின் நின்ற கோலத்தையும் நன்றாகத் தீட்டப்பட்ட திரு உருவத்தை ஒரு நிறைவாக உருவாக்கப்பெற்ற விமானத்தையும் அருகருகே வைத்து ஒப்புநோக்கினால் உண்மை புலனாகும். மக்கள் உடம்பின் உறுப்புகளை அங்கம் (உறுப்பு), மகாங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் என்று பிரித்துள்ளது போல் இறைவனின் திரு வடிவமாகக் கற்பிக்கப் பெற்ற விமானத்தின் அதிர்ஷ்டானம் (Basement) என்ற உறுப்பை மகாங்கம் என்றும் தம்பம் அல்லது சுவர்ப்பகுதியை (Superstructure) அங்கம் என்றும், பிரதாரத்தை (Entablature) உபாங்கம் என்றும் சிகரத்தை (Doom or roof) பிரத்தியாங்கம் என்றும் சிற்ப நூற்களில் கூறுகின்றன கோயில் என்று கூறப்படுவது குறிப்பாக - ஏன்? சிறப்பாக உண்ணாழிகையையும் அதன்மீதுள்ள விமானத்தையுமே குறிப்பிடப்பட்டுள்ளது.1 விமானம் விமானம் என்றால் அகநாழிகை மீதுள்ள தூபி என்று அகராதிகளில் பொருள் கூறப் பெற்றுள்ளது. சிற்ப நூற்களில் விமானம் என்பதற்கு, நன்றாக அளக்கப்பட்டது என்று விளக்கந்தரப் பெற்றுள்ளது. விமானங்களைப் பற்றி அதிகார பூர்வமாக விளக்கந் தரும் நூற்கள் ஆகமங்கள் ஆகும். தமிழ் ஆகமமாகப் போற்றப் பெறும் நூல் திரு மந்திரம் ஆகும். அதில் தூய விமானமும் தூலம தாகும் - 1689என்று கூறப் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம், அக நாழிகை மீது அமைக்கப் பெற்றுள்ள மேன் மூடி- உச்சியாகிய விமானம் தூய்மையும் பருமையும் வாய்ந்த சிவக் குறியாகும். (சிவக் குறி - சிவலிங்கம்) விமானத்தின் கீழ் அகத்தே அக நாழிகையில் (கருவறையில்) விளங்கும் அருளோன் ஆகிய சதாசிவன் நுண்ணிய சிவக் குறியாவன் என்று கூறப்படுகிறது. பொதுவாக விமானம் என்பது உயர்ந்த மாடி என்று பொருள் தந்தாலும், சிறப்பாக திருக்கோயிலில் கருவறையின் மீதுள்ள உயர்ந்த அமைப்பையே குறிப்பிடுகிறது என்பதை எவரும் மறுக்கார். மாடம், என்பது மாளிகைகளின் மீதுள்ள மாடிகளைக் குறிப்பிடும் பதமாகும். என்றாலும் திருக்கோயிலில் உள்ள உயர்ந்த அமைப்புகளே மாடம் என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. கோயில்களின் வகைகளைக் குறிப்பிடும் பொழுது மாடக் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. மாடம், உப்பரிகை, உபரிகை என்றும் கூறப் படுகின்றன. இருக்கிலங்கு திரு மொழிவாய் எண்டோழீசற்கு எழில் மாடம் எழுபதுசெய் துலக மாண்ட திருக்குலத்து வளச் சோழன் என்று சோழன் செங்கணான் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் ஆக எழுபதுக்கு மேற்பட்ட விமானங்களை கட்டினான் என்று திருமங்கையாழ்வார் கூறுகின்றார். மேலும் அவர், திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே என்றும் கூறுகின்றார். என்றாலும், கருவறையின் மீதுள்ள உயர்ந்த கட்டிட அமைப்பிற்கு விமானம் என்ற பெயரே பொருத்தமானதாகும். மாடம் என்பது வீடு, மாளிகை, அரண்மனை போன்றவைகளின் உபரிக்கைகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்வது சாலப் பொருத்தமானதாகும். கருவறையின் மீதுள்ள மேல் அடுக்குகளை, சைவ சமய நாயன்மார்கள் பல இடங்களில் விமானம் என்றே குறிப்பிடுகின்றார்கள். கருப்ப மிகு முடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலை என்னும் பொருப் பெடுக்க லுறு மரக்கன் பொன் முடிதோ ணெறித்த விரற் புனிதர் கோயில் றருப்பமிகு சலந்தரன்ற னுடறடிந்த சக்கரத்தை வேண்டி யீண்டு விருப்பொடுமால் வழிபாடு செய்ய விழி விமானஞ் சேர் மிழலை யாமே என்று சம்பந்தப் பிள்ளையார் தம் தேவாரப் பதிகத்தில் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. விமானம் விமானம் என்றால் நன்றாக அளக்கப்பட்டது என்பது பொருளாகும். கோயில்களில் திரு உண்ணாழிகையினுள் திரு உருவம் இடம் பெற்றிருக்கும். அதன் மீது உயரமாக விமானம் அமைக்கப்படும். அயல் ஊர்களிலிருந்து வரும் மக்கள் தொலைவில் வரும் பொழுதே விமானத்தைக் கண்டதும் இறைவன் திருமுடியைக் கண்டதாக எண்ணி வழிபடுவர். முற்காலத்தில் கோயிலின் உயர்ந்த பகுதியாக விமானம் இருக்கும். வாயில் கோபுரங்கள் உயரமாக அமைப்பதில்லை. கோபுரத்தைக் கண்டு இறைவன் திரு முடியாக எண்ணி வழிபடுவது தமிழர் மரபன்று. அது முறையும் அன்று. விமானம் ஒரு நிலையினின்று பதினான் நிலை வரை தமிழ் நாட்டில் இருந்தது என்று கூறப்படும். தமிழ்நாட்டில் அரண்மனைகளும் ஏழு நிலைகளை உடையதாய் இருந்தன என்று சங்க நூல்கள் சான்று தருகின்றன. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங் களில் தட்சணாமூர்த்தி, இலிங்கோற்ப மூர்த்தி, காளி திருமால் முதலியவர்களின் திரு உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சிவ பெருமானுக்கு திராவிட முறையிலும், உமாதேவிக்கு நாகர முறையிலும், முருகனுக்கு திராவிட முறையிலும், பிள்ளையார்க்கு வேசர முறையிலும் பிற்காலத்தில் கட்டப்பட்டன என்று சில சிற்ப நூல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இது வட மொழியில் உள்ள சிற்பப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தன என்று எண்ணப்படுகிறது. தமிழ் நாட்டில் வேறு சில சிற்பப் பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. சதுர வடிவிலான திரு உண்ணாழிகை, நீண்ட சதுர வடிவிலான திரு உண்ணாழிகை வட்ட வடிவிலான திரு உண்ணாழிகை அரை வட்டவடிவிலான திருஉண்ணாழிகை போன்ற பல்வேறு அமைப்புள்ள திரு உண்ணாழிகைகள் கூறப்பட்டாலும் எங்கும் சதுரத் திரு உண்ணாழிகைகள் தான் காணப்படுகின்றன. ஆனால் தொண்டை நாட்டில் அரை வட்டத்திரு உண்ணாழிகைகள் மிகுதியாக உள்ளன. திரு நின்ற ஊர், பனங்காட்டூர், மழீசை, மாடம் பாக்கம் முதலான இடங்களிலுள்ள கோயில்களின் விமானங்கள் அரை வட்டக் கருவறைகளைக் கொண்டதாகும். கருவறைகளுக்கு மேல் விமானம் சதுரம், நெல்லிக் கனி, வட்டம் முதலிய உருவங்களில் உள்ளன. அரை வட்டக் கருவறையின் மீது யானை முதுகும் போல் செய்யப் பட்டிருக்கும். திருநின்றஊர் முதலிய கோயில்களில் காணப்படுவது இது போன்றதேயாகும். திருத்தணி நந்தியாற்றங் கரையில் யானை முதுகும் அரைவட்ட முகமும் உடைய விமானம் உண்டு. பெருமாள் கோயில்களில் மூன்று அடுக்குள்ள அஷ்டாங்க விமானம் உண்டு. காஞ்சி வைகுண்ட நாதர் கோயிலிலும் திருக் கோட்டியூர்க் கோயிலிலும் இந்த அஷ்டாங்க விமானம் காட்சி அளிக்கிறது. திரு அதிகையில் கர்ப்பகிரகத்தின் மீது எழுப்பப் பெற்றிருக்கும் விமானத்தை திரிபுரத் தகனத்தேராகக் கட்டிய சிற்பிகளின் திறமை போற்றத்தக்கது. விருப்பொடுமால் வழிபாடு செய்ய விழி விமானஞ் சேர் மிழலை யாமே என்ற தேவாரப் பாடல் விமானத்தின் ஏற்றத்தைக் குறிக்கின்றது. கருவறைகளின் மேல். உள்ளே இருக்கும் தெய்வ உருவங்களுக்கு மகுடம் சூட்டினாற் போன்று உயர்ந்த ஒற்றைக் கோபுரங்கள் அமைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது என்று கூறப் படுவதற்குச் சான்றாக இன்று தஞ்சாவூரில் இராசராசன் கட்டிய திருக்கோயிலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் இரா சேந்திரன் கட்டிய கோயிலும் சிறந்த எடுத்துக் காட்டாய் இலங்குகிறது. சிற்ப நூற்களில் விமானங்கள் அமைப்பதைப் பற்றி விரிவான விளக்கம் தரப் பெற்றுள்ளது. விமானத்தின் வகைகள், பெயர்கள், உருவங்கள் மாடிகள், வாயில்கள் பலகணிகள் அகலம், நீளம், உயரம் முதலியன அனைத்தும் தெளிவாகக் காணப்படுகின்றன. அவை அடியில் வருமாறாகும்: 1. மேரு: அறு கோண உருவத்தில் பன்னிரண்டு மாடிகளை யுடையதாய் நான்கு வாயில்களும் பன்னிறப் பலகணிகளும் பாங்குற அமைக்கப் பெற்றதாய் இருக்கும் இது முப்பத்திரண்டு முழ அகலம் உடையது. 2. மந்தாரம்: இது முப்பது முழம் அகலம் உடையது. பத்து மாடிகளும் சிகரங்களும் உடையது. 3. கைலாசம்: இது எட்டு மாடங்களையும் 28 முழம் அகலமும் உடையது. 4. விமானம்: இது இருபத்தொரு முழம் அகலமும் கிராதிகளையும் பல கணிகளையும் 10 மாடிகளையும் உடையது. 5. நந்தனம்: இது ஆறு மாடங்களையும் பதினாறு கபாலங் களையும் உடையது. 32 முழம் அகலம் உடையது. 6. சமுக்கம்: இது வட்டமான பெட்டி வடிவில் இருக்கும். 7. பத்மம்: இது தாமரை வடிவில் எட்டு முழ உயரமான ஒரு தூபியையும் ஒரு மாடத்தையும் உடையது. 8-9. கருடன், நதனம்: இவை சூரியக் கழுகு போன்ற அமைப்பில் 24 முழ அகலமும் ஏழு மாடங்களையும் உடையது. இதில் இருபது கபாலங்கள் உள்ளன. 10. வர்த்தனா: .......................................................... 11. குஞ்சரம்: இது யானையின் முதுகு போன்றதாக இருக்கும் 16 முழ நீளம் உடையதாய் அடி அகன்றதாயும் இருக்கும். 12. குக ராஜன்: இதுவும் குஞ்சரம் போன்று 16 அடி முழம் அகலமும் அதே போன்ற மேற் கூறையும் மூன்று செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பல கணியும் பெற்றிருக்கும். 13. இடபம்: இது காளை மாட்டின் வடிவில் ஒரு மாடமும் ஒரு தூபியும் வட்ட வடிவில் 12 முழ அகலம் உள்ளது. 14. அம்சம்: அன்னப் பறவையின் வடிவில் அழகாக அமைந்திருக்க வேண்டும். 15. கடம்: இது குடத்தின் வடிவத்தினைப் பெற்றிருக்கும் 8 - முழ அகலம் இருக்கும். 16. சர்வதோபத்திரம்: இது நான்கு வாயில்களை உடையது. பல, செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பலகணிகளையும் உடையது. ஐந்து மாடங்கள் அமைந்தது 25 முழம் அகலம் வாய்ந்தது. 17. சின்ஹ: இது சிங்கத்தின் தோற்றம் வாய்ந்த பன்னிரண்டு பட்டங்களையுடையது. 25 முழம் அகலம் உடையது. 18-20. எஞ்சி நிற்கும் ரோட்டுண்ட, சதுர்ப்புயம் எண்டோள் ஆகிய மூன்று மாடங்களும் பதினாறுபட்டைகளையுமுடையன. சதுர்ப்புயம் ஐந்து கபோலங்களையுடையது மற்றவை ஒரே கபோலத்தை உடையன. சிந்து வெளி அகழ் ஆய்விற் கண்ட கட்டிடங்களின் மூலம் 5000 - ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் கட்டிடக் கலை அமைப்பில் வல்லுநராய் விளங்கினர் என்பது நன்கு பெறப்படும். தமிழர்களுக்கு சிந்து வெளி மக்களின் பாரம்பரியத்துவம் உண்டு என்று சர். சாண் மார்சல், சோவியோ துப்ரயல் ஹிரா அடிகள் போன்ற பேரறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கிறித்துவ ஊழி அரும்புவதற்கு முன்பே தமிழ் நாட்டில் பெரிய கோயில்களும், அழகிய அரண்மனைகளும், மாபெரும் மாளிகைகளும், அளப்பரிய மலையென்ன உயர்ந்த மாபெரும் அரண்களும் இருந்தன. விண்முட்டும் எழுநிலை மாடங்களும் முகில் தவழும் நான் மாடக் கூடங்களும், பத்துக்கு மேற்பட்ட பல அடுக்குகளை விமானக் கோயில்களும், பொற் கோட்டைகளும், கற்கோட்டைகளும், செம்புக் கோட்டைகளும் இருந்தன என்று நமது இலக்கியங்களும், சிற்ப நூல்களும், புராணக் கதைகளும் சான்று தருகின்றன. ஆரியர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழித்த அரப்பாவின் அன்று உயர்ந்து நின்று வீழ்ந்த அரணை இன்று பாக்கிதான் அகழ் ஆய்வுத்துறை இயக்குநர்களின் தளபதி சர். kh®£ok® cÆy® mfœªJ f©L gl« ão¤J¡ fh£o., இது தான் ஆரியர்கள் தெய்வமாகிய இந்திரன் அளித்ததாக இருக்கு வேதம் கூறும் ஆரியர் அல்லாதாரின் (திராவிடர்களின்) கோட்டை என்று உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார். கிறித்துவ ஊழி அரும்புமுன் திராவிட மக்கள் தமிழகத்தில் கட்டிய கோயில்களும், கோபுரங்களும், கோட்டைகளும், மாளிகை களும், மண்டபங்களும், செங்கல்லாலும், மண்ணாலும் கட்டப் பட்டதால் இயற்கையின் சீற்றத்தாலும், பகைவர்களின் தாக்குதல் களினாலும் அழிக்கப்பட்டு விட்டன. இன்று நமக்கு சான்று காட்ட முடியவில்லை. ஆனால் இலக்கியச் சான்றுகள் பல உண்டு. இங்கு நாம் சிறப்பாகச் சிந்திக்கக் கூடிய செய்திகள் சில உள. புத்தர் காலத்திற்குப் பின்னரே வட நாட்டிலும் நடு நாட்டிலும் கோயில்கள் தோன்றின. அக்கோயில்களில் கோபுரங்களோ, விமானங்களோ அமைக்கப் பெறவில்லை. குப்தர்களின் இறுதிக் காலத்திலே தான் விமானங்கள் தோன்றின. கி.மு. 1000-ஆண்டிற்கு முன் நடைபெற்றதாகக் கூறப்படும் இராம காதையில், இராமன் பாண்டிய நாட்டின் தலைநகரான கபாடபுரத்தில் உள்ள பாண்டியன் தலைநகரையும், அரணையும் அதன் பொன்னாலான கோட்டை வாயிற் கதவுகளையும் பற்றிக் கூறுவது வான்மீகி இராமாயணத்தில் கூறப் பெற்றுள்ளது. அதில் இராவணனின் வானளாவிய அரண் களையும், மாபெரும் அழகிய மாளிகை களையும் பற்றி விரிவான விளக்கம் தரப் பெற்றுள்ளது. கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் நூற்களானவை தமிழ் நாட்டில் மாளிகைகளும், மாடங்களும், கோயில்களும் கோபுரங்களும், விமானங்களும் இருந்தன என்பதற்குச் சான்று தருகின்றன. கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் செங்கற் களாலும், சுதைச் சாந்தாலும் கட்டப் பெற்ற கோயில்கள், கோபுரங்கள், விமானங்களிருந்தவையாயின் கி.மு. நாலாம், ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த வட நாட்டினர் விமானங்கள் அமைக்கும் முறையைத் தமிழர்களிடமிருந்து அறிந்து கொண்டிருந்தனர் என்று எண்ணுவதில் தவறில்லை என்க. தமிழ் நாட்டில் விமானங்கள். பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630-660) மாமல்லபுரத்தில் ஒற்றைக் கல்லில் சமைத்த மாதிரிக் கோயில்களே தமிழ் நாட்டில் விமானங்களுடன் முதன் முதலாக அமைத்த கற்கோயில் என்பது சிற்ப வல்லுநர்கள் கருத்து. இந்தக் கோயில் களை முன் மாதிரியாகக் கொண்டே தமிழகத்தில் கோயில்கள், விமானங்களுடன் அமைக்கப்பட்டன என்று சிலர் கருதுகின்றனர். இக்கருத்து நாம் முன்னர், எடுத்துக்காட்டிய பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரும்பாணாற்றுப் படை, நெடுநல் வாடை முதலிய நூற்களில் உள்ள நற்சான்றுக்கு மாறானதாகும். இஃதன்றி கி.பி.6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அப்பர் அடிகளும், திருஞான சம்பந்தப் பிள்ளையாரும், அவர்கள் காலத்திற்கு முற்பட்ட சிதம்பரம், சீர்காழி, பெண்ணாடகம், மதுரை, திருநெல்வேலி, வைகல், திருப்பாதிரிப் புலியூர் முதலிய ஊர்களில் உள்ள பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், தூங்கானை மாடக் கோயில், இளங்கோயில், மணிக் கோயில், மாடக் கோயில் போன்ற கோயில்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபட்டது உள்ளங்கை நெல்லிக் கனி போல் நன்கறியப்படுகின்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்த கோச்செங்கண்ணான் என்னும் சோழ வேந்தன் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியதை சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் பாடிய பாக்கள் மறுக்கற்பாலதன்றாம். மகேந்தர வர்மனும், பரமேசுவரவர்மனும், இவர்களுக்குப் பின் வந்த மன்னர்களும், மாமல்லபுரத்திலும், காஞ்சிபுரத்திலும் கட்டிய கோயில்களும், கோபுரங்களும், விமானங்களும் பண்டையத் தமிழர்கள் கண்ட வழியில் எடுப்பித்த கோயில்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.1 கோயில்கள் கோபுரங்கள் விமானங்கள் அமைக்கும் வழக்குத் தமிழ் நாட்டில் கிறித்தவ ஊழி எழுவதற்கு முன்பே இருந்ததாகும். பல்லவர்கள் தமிழர் நெறியாகிய சிவநெறியைத் தழுவிய பின் தமிழர் வழக்கினையொட்டி கருங்கற் கோயில்களைத் தமிழகத்தில் அமைக்கத் தொடங்கினர். அவர்களுக்கு தமிழர் கண்ட ஆகமங்களும், சிற்பநூற்களும் தமிழ் நாட்டுச் சிற்பிகளின் பட்டறிவும் வழி காட்டியாக இருந்தன. தமிழர்கள் சங்க காலத்தில் செங்கற்களாலும், சாந்தினாலும் அமைத்த அதிக கோயில்கள் அப்பால் கருங்கற் கோபுரமாக கோயிலாக விமானமாகப் பரிணமித்தன என்று நமது கட்டிடக் கலை வரலாறு கூறுகின்றது. இக்காலத்திலும் பல வண்ணங்கள் தீட்டப் பெற்ற சுதை உருவங்களையுடைய கோபுரங்களும் விமானங்களும் தமிழ் நாட்டில் தான் உண்டு. கோபுரங் களை மாடங்களைப் போல் அடுக்கடுக்காய் அழகுபெற, அணிதிகழ, ஒளியுற அமைக்கும் வழக்கு திராவிடர்கள் கைக் கொண்ட உயரிய முறையாகும்.1 இதனை பெர்கூசன், சோவியோ துப்ரயல், டெல்லாகிரெமரிஷ் போன்ற மேனாட்டுக் கட்டிடக் கலை வல்லுநர்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றனர். திருக்கோயிலில் சிறப்பான பகுதி அக நாழிகை (உண்ணாழிகை) என்று கூறும் கருவறையும் அதன் மேல் எழுப்பப் பெற்ற விமானமும் ஆகும். திருமதிலில் உட்புறம் செல்லும் வாயிலின் மேல் எழுப்பப்பெற்ற மேல் தளம் கோபுரம் எனப்படும். இதன் பொருள் யாதா யிருப்பினும் கருவறையின் மீது எழுப்பப் பெற்ற விமானத்தை உண்ணாழிகையின் உள்ளே உருப் பெற்றிருக்கும் தெய்வ உருவின் மணி முடியாக எண்ணி மக்கள் தொலைவில் வரும் பொழுதே விமானத்தைக் கண்டதும் இறைவன் திரு உருவைக் கண்டாற் போன்று பக்தியுடன் கைகுவித்து வழிபடுவர். வாயிற் கோபுரத்தைக் கண்டு எவரும் வழிபடுவதில்லை. அது ஆகம விதியும் இல்லை தமிழர் மரபும் அன்று. ஆனால் சிலர் விமானத்தைக், கோபுரம் என்றும் கோபுரத்தை விமானம் என்றும் கூறி இடர்ப்படுகின்றனர். அது சமய அறிவிலார் கூற்று என்று கூறிவிடலாம். ஆனால் நமது நாட்டுத் திருக்கோயில்களை சிற்ப நூற்களின் விதிப்படியும் சிவாகம முறைக்கு மாறுபாடின்றியும் அமைத்துத்தரும் தபதிகள் தம் நூற்களில் விமானத்தைக் கோபுரம் என்று கூறுவதோடு கோபுரக் கட்டிட அமைப்பும் அதன் பெயரும் என்ற தலைப்பின் கீழ் ஒரு தபதி I- வட்டமாய் இருக்கும் கோபுரங்களுக்கு விருத்த விமானம் II- சதுரமாய் இருக்கும் கோபுரங்களுக்கு சதுர விமானம் என்றும் கூறி விமானங்களுக்கு விளக்கம் தந்து கொண்டு போகிறார். இது சிற்ப நூற்பயிற்சி இல்லாத பொது மக்களுக்குக் குழப்பந்தருவதாய் இருக்கிறது. இத்தவறுகள் திருத்தப் பெற வேண்டும். விமானக் கட்டிட அளவும் பெயரும். 1. ஏகபூம விமானம்: அகலம் இருக்கும் அளவு உயரம் வைத்துக் கட்டிய விமானத் திற்கு ஏக தள விமானம் அல்லது ஏகபூம விமானம் என்று பெயர். 2. சாந்தீக விமானம்: அகலம் ஏழு பங்கு செய்து உயரம் பத்துப் பங்கு செய்துக் கட்டப்பட்ட விமானம் சாந்தீக விமானம் என்று அழைக்கப்படும். 3. பவுஷ்டீக விமானம்: அகலம் ஒரு பங்கு உயரம் 1 1/2 பங்கு வைத்துக் கட்டிய விமானத்திற்கு பவுஷ்டீக விமானம் என்று பெயர். 4. செய்ங்கள விமானம்: அகலம் ஒரு பங்கு உயரம் 1 3/4 பங்கு வைத்துக் கட்டப்பட்ட விமானத்திற்கு செய்ங்கள விமானம் என்று பெயர். 5. அற்புத விமானம்: அகலம் ஒரு பங்கு உயரம் இரண்டு பங்கு வைத்துக் கட்டிய விமானத்துக்கு அற்புத விமானம் என்று பெயர். என்று ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம் என்ற நூல் ஐந்து வித விமானங்களுக்கு அளவு தருகிறது. இதன் மூலம் நமது முன்னோர்கள் கண்ட விமானங்களின் வகைகளும் அதன் அளவுகளும் நன்கு புலனாகின்றன. விமான அமைப்பும் அதன் பெயரும் ஏக தள விமானம் அல்லது விமானத்தின் மேல் நிலை கழுத்தடியில் இருந்து பண்டி மகாபத்மம் வரையில் உள்ளதாகும். 1. விருத்த விமானம். வட்டமாக இருக்கும் விமானத்திற்கு விருத்த விமானம் என்று பெயர். 2. சதுர விமானம்: சதுர வடிவில் அமைக்கப்படும் விமானம் சதுர விமானம் என்று சாற்றப்படும். 3. சட் கோண விமானம்: ஆறு பட்டையாய் இருக்கும் விமானம் ஷட்கோண விமானம் என்று சொல்லப்படும். 4. அஷ்ட கோண விமானம்: எட்டுப் பட்டையாய் அமைக்கப்பட்டிருக்கும் விமானம் அஷ்ட கோண விமானம் எனப்படும். 5. தூங்கானை மாட விமானம்: எதிர்ப்புறம் மர மாடி போலும் இரண்டு மூலையாய் பின்னால் யானை முதுகு போல் அமைக்கப்படும் விமானங்களுக்கு கஜப் பிருஷ்ட விமானம், அத்தி புஷ்ட விமானம், தூங்கானை மாடம் என்றெல்லாம் அழைக்கப்படும். 6. சக்தி நிள விமானம்: இரண்டு பக்கம் மரமாடியும் ஒன்றுக்கு மேற்பட்ட கலயங்களும் இருக்கும் விமானங்களுக்கு சக்தி நிளம், மகா துவார கோபுரம், இராச கோபுரம்1 என்றெல்லாம் அழைக்கப்படும்.2 அக நாழிகை அக நாழிகை கோயிலின் கேந்திர நிலையமாக உயிர் நிலை (ஜீவ நாடி) யாக விளங்குகிறது. கோயிலின் சிறப்பெல்லாம் உண்ணாழிகையிலும், அதன் மேலுள்ள விமானத்திலும் அடங்கி யுள்ளது. அக நாழிகையின் முன்புறம் உள்ள சிறு மண்டபத்தை இடை நாழிகை (அர்த்த மண்டபம்) என்று கூறுவர். அக நாழிகை பெரும்பாலும் சதுர வடிவாக இருக்கும். சில இடங்களில் நீண்ட சதுர வடிவாகவும் அமைக்கப் பெற்றிருக்கிறது. சில அக நாழிகைகள் வட்ட வடிவிலும் சில அரை வட்ட வடிவிலும் சில முட்டை வடிவிலும் - அதாவது நீள் உருண்டை வடிவிலும் (Coval) உள்ளன. இஃதன்றி முக்கோண வடிவிலோ, ஐங்கோண வடிவிலோ, அறு கோண வடிவிலோ, ஐங் கோண வடிவிலோ, அறுகோண வடிவிலோ எண் கோண வடிவிலோ அக நாழிகைகள் கட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விமானங்களில் ஆறு பட்டை வடிவங் களும் எட்டுப் பட்டை வடிவங்களும் உள்ளன. அவைகளுக்கு தனித்தனி பெயர்களும் உள்ளன. உண்ணாழிகை ஆனால் வட இந்தியாவில் அறு கோண வடிவிலும் எண் கோண வடிவிலும் கர்ப்பக் கிரகங்கள் உள்ளனவென்று சிலர் கூறுகிறார்கள். நான் அறிந்த அளவில் எங்கும் அத்தகைய அமைப்புடைய கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நமது நாட்டில் பல்வேறு இடங்களிலும் உள்ள கோயில்களை நேரிற் சென்று பார்த்து உண்ணாழிகையின் தரையின் வரைபடங்களை நன்கு வெளியிட்ட பெர்கூசன், ஹேவல், டெல்லா கிரெமரிஷ், லாங்கர்ட், சோவியோதுப்ரயல், கிரேவ்லி போன்ற எந்த மேனாட்டாசிரியரும் இந்த உண்ணாழிகைகளைப்பற்றி எதுவும் கூறவில்லை. தமிழ் நாட்டுக் கோயில் அமைப்புகளை ஆய்ந்தால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவியல் சார்ந்த கணிதத்தில் (Geometrical) நுணுக்கமான கணிதப் புலமை பெற்றிருந்தது நன்கு புலனாகிறது. நீண்ட சதுர வடிவ அக நாழிகை தமிழ் நாட்டில் உள்ள சில பெரிய கோயில்கள் எல்லாம் நீண்ட சதுர அக நாழிகையை உடைய கோயிலாகவே காணப்படுகின்றன. சதுரக் கோயில்களை விட நீண்ட சதுர அக நாழிகையையுடைய கோயில்களே தமிழகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. நீண்ட சதுர வடிவான கோயில்கள், அக நாழிகையில் உள்ள திரு உருவ அமைப்பிற்கும் பூசை செய்யும் சிவாச்சாரியார்களின் வசதிக்கும் ஏற்பவே அமைக்கப் பெற்றுள்ளன. படுத்திருக்கும் நிலையில் உள்ள திருமாலின் கோயில் உண்ணாழிகைகள் சில நீண்ட சதுரமாக இருக்கின்றன. திருக்கழுக்குன்றத்திற்கு அண்மையில் உள்ள உத்தரன் கோயில் என்னும் ஊரில் உள்ள கோயிலானது நீண்ட சதுர அக நாழிகையை (கருப்பகிருகத்தை) உடைய அழகான அமைப்பையுடைய கோயி லாகும். (படம் பார்க்க) இந்தக் கோயிலில் இடை நாழிகையை (அர்த்த மண்டபத்தை) தவிர வேறு மகா மண்டபமோ மணி மண்டபமோ பிரகாரங்களோ அமைக்கப்படவில்லை. இவ்வாறு அகநாழிகையைச் சூழ்ந்து மண்டபங்களும் பிரகாரங்களும் இருந்தால் மண்டபங்களின் நடுவில் அகநாழிகை இடம் பெற்று கோயிலில் அழகையும் பார்வையையும் சிற்பச் சிறப்பையும் மறைத்து விடும். பல கோயில்களில் மண்டபங்களும் பிரகாரங்களும் பெரிதாக எழுந்து மூலவர் அமர்ந்திருக்கும் அக நாழிகையின் மீதுள்ள விமானமே தெரியா வண்ணம் மறைத்து விட்டிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் கோயிலுக்குள் காற்றும் வெளிச்சமும் புகாத படி மறைத்துப் பட்டப் பகலில் இருள் சூழ்ந்து வௌவால்கள் உறையும் பாழும் இடம் போலாகி விட்டன. நமது புனிதமான திருக்கோயில்களில் இருள் சூழ்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் சுற்று மண்டபங்களேயாகும். ஆதியில் தமிழர் கண்ட கோயில்கள் அக நாழியை மட்டும் உடையாது அப்பால் இடை நாழிகை எழுந்தது. அதை அடுத்தே எண்ணிலா மண்டபங்களும் பிற்காலத்தில் எழுந்து அக நாழிகையின் அழகையும், சிற்பச் சிறப்பையும் கண்டு களிக்க முடியாமலும் தூய்மையை உணர முடியாமலும் சுகாதாரக் குறைவு உண்டாகும்படி செய்து விட்டது. சதுர வடிவ அக நாழிகை மிகத் தொன்மையான காலத்தில், அக நாழிகை (கருப்பக் கிரகம்) பெரும்பாலும் சதுர வடிவிலே அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அகலமும், நீளமும் சமமாக அளவில் வைத்து அமைத்த அக நாழிகை அழகும் வசதியும் உடையதாக இருந்தது. துரோபதை இரதம் சதுர அமைப்புடைய அக நாழிகையைக் கொண்ட ஒரு கோயிலுக்கு எடுத்துக்காட்டாக மாமல்லபுரத்தில் உள்ள துரோபதை இரதத்தை ஏற்ற எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். இது துரோபதைக்காக எடுப்பிக்கப்பட்ட கோயில் அல்ல. துர்க்கை என்னும் கொற்றவைக்காக எடுப்பிக்கப்பட்ட கோயில் ஆகும். இது ஒரே பாறையில் சீர் பெறச் செதுக்கி, மிகக் கச்சிதமாகக் கவின் பெறக், காட்சிக் கினியதாகக் கட்டப் பெற்ற கருங்கற் கோயிலாகும். இது 1300- ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மாதிரிக் கோயில் என்றாலும் இது புத்தம் புதிய கோயில் போல் காணப்படுகிறது. இக்கோயிலின் முன் மூன்று படிகள் நன்கு அமைந்துள்ளன. இந்தக் கோயிலுக்கு இடை நாழிகையும் (அர்த்த மண்டபமும்) முக மண்டபமும் இல்லை. அக நாழிகை மட்டும் அழகுறப் பொலிகின்றது. அக நாழிகை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலுக்கு மேலே இரண்டு வளைவுள்ள மகர தோரணங்களும் இருக்கிறது. வாயிலின் இரு மருங்கினும் துவார பாலிகையர் (பெண் வாயிற் காப்பாளர்கள்) உருவங்கள் உள்ளன. இந்தக் கருவறையின் உள்ளே தெய்வத் திரு உருவம் இல்லை. ஆனால் உள் சுவரில் கொற்றவையின் வடிவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. சுவரின் வெளிப்புறத்தில் மூன்று பக்கங்களிலும் கொற்றவையின் உருவம் செதுக்கப் பெற்றுள்ளன. நமது வரலாற்றறிவோ, சமய அறிவோ, சிற்ப நுணக்குமோ அதிகம் பெறாத ஆங்கில அறிஞர்கள் இக்கோயிலை துரோபதை இரதம் என்றும் உள்ளே இருக்கும் உருவம் திருமகள் வடிவம் என்றும், வாயில் காக்கும் மகளிர் பௌத்தர்களின் தலைப் பாகைகளை உடையவர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.1 தமிழ்க் கலை அறிவும், மொழி அறிவும் மிக்க எனது மதிப்பிற்குரிய நண்பர் உயர்திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் இதற்கு, தம் நூற்களில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்.2 இந்தக் கோயில் அக நாழிகையின் மீது அமைக்கப்பட்ட விமானம் நான்கு பட்டையாக காணப்படுகிறது அதன் நான்கு மூலைகளிலும் சுருள் கொடி அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏனைய கோயில் விமானம் போல் கர்ணக் கூடு பஞ்சரம் சாலை போன்ற உறுப்புகள் இல்லை. மேலே உச்சியில் உள்ள கும்பக் கலசமும் காணப்பட வில்லை. அக நாழிகை முன், இடை நாழிகையும் (அர்த்த மண்டபமும்) இல்லை. இக்கோயில் எளிய வடிவில் எழில் பெற அமைக்கப் பட்டுள்ளது. இது இளங்கோயில் அமைப்பையுடையது. இங்கு இந்த இளங்கோயிலின் உருவப்படமும் அதன் சதுர வடிவான தரைப்படமும் அமைக்கப் பெற்றுள்ளன. இதே போன்ற சதுர வடிவிலான திருவறைகள் (கருவறைகள்) பனமலைக் கோயிலிலும், காஞ்சிபுரம் கயிலாச நாதர் கோயிலிலும் நாகார்ச்சுன கொண்டாவில் குடியேறிய பௌத்த துறவிகளுக்காக பௌத்த சமய பக்தி மிக்க பெண் சீமாட்டியால் கட்டப்பட்ட இரு விகாரைகளும், திருக்கழுக்குன்றம் குகைக் கோயிலிலும் சிற்றன்னல் வாயில் அறிவன் கோயிலிலும், மேலைச் சேரி சிவ செஞ்சிக்குடைவரைக் கோயிலிலும் திருப்பாப்புலியூர் கோயிலிலும் உள்ளன. இங்கு எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் உத்தரன் கோயில் காளி குடி கொண்டிருக்கும் அக நாழிகை சுமார் 15 அடி அகலமும் 20- அடி அகலமும் உள்ள அழகான அக நாழிகையுடையது. முன்புறம் ஒரு சிறு இடை நாழிகையும் பெற்று மாமல்லபுரத்தில் உருவாக்கப் பெற்ற மாதிரிக் கோயிலைப் போல் கச்சிதமாக விளங்குகிறது. நமது நாட்டிலே நீண்ட சதுர அமைப்புள்ள கருவறைகளைக் கொண்ட கோயில்கள் பல. மாமல்லபுரத்தில் மாதிரிக் கோயிலாக உருவாக்கப் பெற்ற கணேசரதம் - நீண்ட சதுர அக நாழிகையைக் கொண்டது. - தமிழ் நாட்டில் மட்டுமல்ல கேரளம், ஆந்திரம், கன்னடம் போன்ற நாட்டிலும் வட இந்தியாவிலும் பல சதுர வடிவான அக நாழிகையையுடைய கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவைகள் அனைத்தும் உண்மையில் சதுர வடிவான அமைப் புடையதல்ல. நீண்ட சதுர வடிவமைப்பை உடையவைகளேயாகும். ஆனால் அகலத்தை விட நீளம் இரட்டிப்பு மடங்கு கொண்டவைகள் அல்ல. ஆனால் அகலம் 10 அடியும் நீளம் 11 அடியும் இருக்கும். இவற்றை யெல்லாம் நீண்ட சதுர வடிவக் கோயிலாகக் கருதலாம். எடுத்துக் காட்டாக தளவானூர்க் கோயில் கருவறையின் நீளம் 8 அடி 6 அங்குலம் அகலம் 7 அடி 10 அங்குலம்; உயரம் 6 அடி 10 அங்குலம் 1இவற்றைப் பெரும்பாலோர் சதுர வடிவக் கருவறை என்று கூறுகின்றனர். இது தவறு; நீண்ட சதுர வடிவ அக நாழிகையேயாகும். முட்டை வடிவ அக நாழிகை முட்டை வடிவில் தமிழ் நாட்டில் அக நாழிகை அமைக்கப் பட்டிருக்கிறது. முட்டை வடிவான அக நாழிகை (கர்ப்பக் கிரகம்) அதிகம் இல்லை. ஒன்றே யொன்று தான் உண்டு. அது காஞ்சிபுரத்தில் உள்ள சுரஹரேசுவரர் கோயில் ஆகும். சுரஹரேசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் (பெரிய காஞ்சிபுரத்தில்) காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயிலின் தெற்குத் தெருவில் ஜ்வர ஹரேவரம் என்ற பெயரில் ஒரு கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் இன்று பூசை நடை பெறுவதாகத் தெரியவில்லை. இது தில்லி மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறையினரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பல கோயில்களில் அக நாழிகையின் (மூலதானத்தின்) மேல் உள்ள விமானத்தையும் மண்டபங்களையும், கோபுரங்களையும் ஆய்ந்தால் அக நாழிகையின் மேல் விமானம் சிறிதாகவும் ஏக தளத்தை உடையதாகவும், தாழ்ந்தும் அமைக்கப்பட்டிருக்கும். பிரகாரங்களும், கோபுரங்களும், திருமதில்களும் அடுக்கடுக்காகப் பரந்தும் விரிந்தும் உயர்ந்தும் காணப்படும். இவை, விரிந்து பரந்து வியாபித்துள்ள பிரபஞ்சத்தையும் அதனுள் சூட்சமமாக இறைவன் உள்ளான் என்பதையும் காட்டுகிறது என்று சிற்ப நூற் புலவர்கள் கூறுகின்றார்கள். நமது திருக் கோயிலின் அமைப்பை பிரபஞ்சத்தின் மாதிரி உருவம் (Universe in Miniature) என்று அறிஞர்கள் கூறுவர். காஞ்சி சுரஹரேசுவரர் கோயில் (சிவன் கோயில்) விமானம் வட்ட வடிவிலே அமைக்கப் பெற்றிருக்கிறது. எனவே அக நாழிகையும் வட்ட வடிவமாக அமைந்துள்ளது என்று கூறிவிடுகின்றார்கள். கோயில்களைப் பற்றி நூல் எழுதுகிறவர்கள் கோயிலின் உயிர் நாடியாக இலங்கும் அக நாழிகையைப் பற்றி நன்கு ஆய்ந்து நூல் எழுதுவதில்லை. அகலம் நீளம், உயரம், ஆகியவைகளை அளந்து விளக்கம் கூறுவதில்லை. கருவறை சதுரமா நீண்ட சதுரமா, வட்டமா நீள் உருண்டை வடிவமா (Oval) என்று ஆய்ந்து பார்த்து எழுதுவதில்லை. பல அறிஞர்கள் சுரகரேசுவரர் கோயில் விமானம் வட்ட வடிவம் என்று எழுதி முடித்து விட்டார்களே யொழிய அக நாழிகை எத்தகைய அமைப்புடையது என்று எழுதத் தவறிவிட்டனர். எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரியவராய் விளங்கிய மறைந்த (மார்ச் 1940) மாமேதை டாக்டர் சி. மீனாட்சி எம். ஏ. பி. எய்ச். டி. அவர்கள் கூட வட்ட வடிவமான அக நாழிகை என்று தான் குறிப்பிட்டிருந் தார்களே அல்லது இது முட்டை வடிவமானது என்று குறிப்பிடத் தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.1 ஆனால் நமது தமிழ் நாட்டு தபதிகளின் பரம்பரையில் உதித்தவரும், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி முதல்வருமான உயர் திரு. வை. கணபதி ஆச்சாரி. பீ.ஏ. அவர்கள் ஜ்சுரகரேசுவரர் கோயிலின் கருவறையை (அக நாழிகையை) நேரில் பார்த்து ஆய்ந்து இது நீள் உருண்டை வடிவானது - அதாவது முட்டை tothdJ(Oval) என்று ஐயமற எடுத்துக் காட்டியுள்ளார். அது அடியில் வருமாறாகும்: கருவறை என்று சொல்லப்படும் விமானத்தைப் பெண் வடிவம் என்றும் அதனுள்ளிருக்கும் மூர்த்தியை உதரத்தில் உள்ள கர்ப்பம் என்றும் வருணிக்கப்படுகிறது. உதரத்தில் கர்ப்பமாக மூர்த்தி அமையப் பெற்றிருப்பதாலேயே இக் கட்டிடத்தைக் கர்ப்பக் கிருஹம் என்னும் கருவறை என்றும் அழைக்கின்றோம் இக்கருத்தினை வலியுறுத்தும் பொருட்டே மூலமூர்த்தி வீற்றிருந்தருளும் கட்டிடத்தைக் குக்கிடாண்ட (கோழி முட்டை) வடிவமாகவும் அமைக்கலாம் என்று சிற்ப நூல்கள் கூறுகின்றன. இத்தகைய குக்கிடாண்ட வடிவத்தில் ஒரு கோயில் காஞ்சிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது இக்கோயில் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயில் தெற்கு வீதியில் ஜ்வர ஹரேவரம் என்ற பெயரில் அமைக்கப் பெற்றிருக்கிறது. என்று குக்கிடாண்டக் கருவறை அமைப்பிற்கு விளக்கம் கூறி சான்றும் எடுத்துக் காட்டியுள்ளனர்.2 நீள் உருண்டை வடிவில், காஞ்சி சுரகரீரசுவரர் கோயிலைத் தவிர வேறு கோயில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. சுரகரேசுவரர் கோயில் அதிர்ஷ்டானமும், கருவறையின் வெளிப்புறப் பகுதியும் விமானமும் அழகிய சிற்ப நுட்பம் செறி வதாகத் திகழ்கின்றது. வட்ட வடிவான அக நாழிகை வட்ட வடிவமான கோயில் இந்தியாவில் இல்லை. தமிழர் களுக்கு ஏன்? இந்தியர்களுக்கும் வட்டமான வடிவில் கட்டிடங்கள் அமைக்கத் தெரியாது என்று கூறி வந்துள்ளனர். இவர்களின் பேச்சு அறியாமையால் எழுந்த பேச்சாகும். ஏன்? எனில் தமிழர்களில் பலருக்கு, தமிழ் நாட்டில் வட்ட வடிவில் கோயில் இருப்பது தெரியாது. vdJ cwÉd® xUt®; fšÿÇ MáÇa®, v«.V., பி.டி. பட்டதாரி அவர் ஒரு நாள் என்னிடம், முற்காலத்தில் தமிழர்களுக்கு வடிவியல் கணித அறிவு உண்டா? (Geometrical knowledge) என்று வினாவினார். அவருக்கு விடையாக தம்பீ! நீர் என்றைக்காவது நமது திருக்கோயிலுக்குச் சென்ற துண்டா? இதற்கு முன் போகா திருந்தாலும் இன்றாவது கோயிலுக்குப் போங்கள். இறைவன், தமிழர்களின் நுண்ணிய வடிவியல் கணித நுட்பம் எத்துணை சிறப்புவாய்ந்தது என்பதை உணர்த்துவான்: நமது கோயிலில் உள்ள சதுரம், நீண்ட சதுரம், வட்டம், அரை வட்டம் ஆறு பட்டம், எட்டுப் பட்டம் முக்கோணம், அறு கோணம் ஆகிய வடிவில் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் அமைக்கப்பட்ட தூண்களும், உண்ணாழிகைகளும் விமானங்களும் ஓம குண்டங்களும், குளங் களும் மண்டபங்களும், போதிகைகளும், கோயிலில் தீட்டப்பட்ட கோலங்களும் மலர்களின் சிற்பங்களும் கோயில்களும் தெளிவாக உணர்த்தும் என்றேன். கணிதப் புலமையில் பண்டும், இன்றும் என்றும், ஆங்கிலேயர், அமெரிக்கர் மட்டுமல்ல உருசியர்களும் தமிழர்களை மிஞ்ச முடியாது என்று பதில் விடுத்தேன். அவர் வாய் அடைபட்டுப் போய் விட்டது. பண்டையத் தமிழர் உலகிலே கணிதத் துறையில் மிக நுட்பமான புலமை வாய்ந்தவர்கள் என்பதற்குச் சான்றாக ஈண்டு இரண்டோர் அளவை வாய்ப்பாடுகளை எடுத்துக் காட்டு கின்றோம். கீழ் வாய் இலக்க வாய்ப்பாடு1 1/2 323 8245, 302272000,00,000 - தேர்த்துகள் 61/2=1 நுண்மணல் 1/3575114 661 8880,0000,000 - நுண்மணல் 100 = 1 வெள்ளம் 1/35751 1466188, 80 00,000 - வெள்ளம் 60 = 1 குரல் வளைப்பிடி 1/595 8524 436 480 0,000 - குரல் வளைப் பிடி 40 = 1 கதிர்முனை 1/1489 63110 9120000 - கதிர் முனை 20 = 1 சிந்தை 1/74 481 55 545 6000 - சிந்தை 14 = 1 நாக விந்தம் 1/532011, 11,04,000 - நாக விந்தம் 17 = 1 விந்தம் 1/31294, 77,12,000 - விந்தம் 7 = 1 பாகம் 1/4470, 68,16,000 - பாகம் 6 = 1 பந்தம் 1/745,11,36,000 - பந்தம் 5 = 1 குணம் 1/149,0027,200 - குணம் 9 = 1 அணு 1/16 5580,800 - அணு 7 = 1 மும்மி 1/23654,400 - மும்மி 11 = 1 இம்மி 1/21,50,400 - இம்மி 21 = 1 கீழ் முந்திரி 1/1,02,400 - கீழ் முந்திரி 320 = 1 மேல் முந்திரி 1/320 - மேல் முந்திரி 320 = 1 (ஒன்று) கீழ்வாய் இலக்கம் அடையாளம் அளவு பெயர் வித 1/ 320 முந்திரி, முந்திரை ங 1/ 160 2/320 அரைக்காணி ? 1/80 4/320 காணி சபு 1/40 8/320 அரைமா க்ஷ 3/80 12/320 முக்காணி ப 1/20 16/320 ஒருமா ஐ 1/10 32/320 இருமா நூ 3/10 48/320 மும்மா சப 1/5 64/320 நான்மா ? வித 1/64 5/320 கால்மாகாணி, ¼ வீசம் சபு ங 1/32 10/320 அரைமாகாணி, ½ வீசம் க்ஷஙவித 3/64 15/320 முக்கால் மாகாணி 3/4 வீசம் g?ய 1/16 20/320 மாகாணி, வீசம் ஹ லு 1/8 40/320 அரைக்கால் ஙா, ஙா 8/16 60/320 மும்மாகாணி 3 வீசம் வ ¼ 80/320 கால் இ ? ½ 160/320 அரை ளு, தெ 3/4 240/320 முக்கால் க 1 320/320 ஒன்று மேற்கூறிய கீழ்வாய் இலக்கத்தைச் சேர்ந்த அளவுகளும் தொல்காப்பியர் காலத்திலே வழங்கினதாகத் தெரிகிறது. நான் இற்றைக்கு 65-ஆண்டுகளுக்கு முன் சாத்தன்குளத்தில் சூசை முத்து வாத்தியாரிடம் இந்த வாய்ப்பாடுகள் பயின்றிருந்ததோடு பெருக்கல், பகுத்தல், கழித்தல், கூட்டல் முதலிய தமிழ்க் கணக்கும் செய்யப் பயின்றிருந்தேன். 20-ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப் பள்ளிக் கூடங்கள் எண் சுவடி, தானப் பெருக்கம் போன்ற கணிதம் ஏடுகள் எழுதி நாள் தோறும் படித்து ஆசிரியரிடம் ஒப்புவித்துள்ளேன். நீட்டலளவை வாய்ப்பாடு 8 அணு = 1 தேர்த்துகள் 8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை 8 பஞ்சிழை = 1 மயிர் 8 மயிர் = 1 நுண்மணல் 8 நுண்மணல் = 1 கடுகு 8 கடுகு = 1 நெல் 8 நெல் = 1 பெருவிரல் 12 பெருவிரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 கோல் அல்லது பாகம் 500 கோல் = 1 கூப்பிடு தூரம் (கூப்பிடு தொலைவு) 4 கூப்பிடு தொலைவு = 1 காதம் இலக்கியச் செறிவு மிக்க சிலப்பதிகாரத்தில் பஃறுளி யாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையிலிருந்த சேய்மை எழு நூற்றுக் காதம் என்று அடியார்க்கு நல்லார் கூறியது இவ்வளவு பற்றியதாயின் அது ஏறத்தாழ 1600 மைல்களாகும். பஃறுளியாற்றிற்கு தெற்கும் குமரியாற்றிற்கு வடக்கும் இருந்த நிலத்தையுஞ் சேர்த்துக் கணிப்பின் அழிந்து போன தமிழ் நாடு எவ்வகையினும் 2000 மைலுக்குக் குறையா தெனலாம். அங்ஙனமாயின் இற்றை இந்தியா அளவு ஒரு பெரு நிலம் தென் கடலில் மூழ்கியதாகும்.1 இதனால், அக்கால மக்கள் விண்மீன்களை எண்ணவும் உலகை அளந்து கணக்கிடவும் கண்ணிற்கு தெரியாத நுண் பொருள் களை அளவிடவும் கணிதம் கண்டிருந்தனர் என்பது நன்கு புலனாகிறது. விசயால சோழீச்சுவரம் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள புதுக் கோட்டைக்கு அடுத்து நகரத்தார் மலை (நாரத்தா மலை) என்னும் மேல மலையி விசயால சோழீச்சுவரம் என்னும் ஒரு பிரதான கோயில் உள்ளது. இது வட்டமான அக நாழிகையை (கர்ப்ப கிருகத்தை) உடையது. இந்த வட்டமான கருவறையைச் சுற்றிய சுவர்கள் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அக நாழிகைக்கு முன் நீண்ட சதுரமான ஒரு அழகிய முக மண்டபமும் உண்டு இந்தக் கோயிலின் தரைப்படத்தைப் பார்த்தால் ஒரு சுவர்க் கடிகாரம் போல் காணப் படுகிறது. பல வட்டமான திரு உண்ணாழிகைகள் நமது நாட்டில் உள்ளன. இந்த உண்ணாழிகை அமைப்பு ஒரு சிறப்பானதாகக் காணப்படுகிறது. இதைப் போன்ற அமைப்பு வேறு எங்கும் காணப்படவில்லை. வெளித் தோற்றத்தில் சதுரமான கோயில் போல் காணப்படுகிறது. உள்ளே போய்ப் பார்த்தால் திரு உருவம் இருக்கும் இடம் - அதாவது உண்ணாழிகை மட்டும் வட்ட வடிவிலும் பிரகாரம் என்னும் திருச்சுற்று சதுர வடிவிலும் உள்ளது. இந்தக் கோயிலின் திருச்சுற்று அதாவது திரு உண்ணாழிகை அமைந்திருக்கும் சதுரம் 22 அடி நீளமும 22 அடி அகலமும் உள்ளது. அதன் நடுவில் திரு உண்ணாழிகையின் விட்டம் 8 ½ அடியுள்ளது. இதன் சுவர்களில் வெளிப்புறம் அகலம் 29 அடி நீளமும் 29 அடி அகலமும் உள்ளது. இத் திருக்கோயில் கி.பி. 8-ஆவது நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப் பெற்றுள்ளது. இந்தத் திரு உண்ணாழிகையின் முன் நான்கு தூண்களும் நான்கு மூலையிலும் நான்கு தூண்களும் உள்ளன. இந்தத் திருக்கோயிலைப் பற்றி படத்துடன் விளக்கமாக இந்நூலில் வட்டக் கோயில்கள் என்னும் அதிகாரத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளதோடு அதன் நிழற்படமும் இணைக்கப் பட்டுள்ளதால் இங்கு அதிகமாக எழுதவில்லை. தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும் காணப்படுவது போல் அதிகமான வட்டம், அரை வட்டம், வாய்ந்த அக நாழிகை களை (கருவறைகளை) யுடைய கோயில்களை பாண்டிய நாட்டில் அதிகம் காண முடியவில்லை. சேர நாட்டில் கூட, சில வட்ட வடிவமான கோயில்கள் எனக்குத் தெரிந்த அளவில் மதுரைக்கு அண்மையில் உள்ள அழகர் கோயில் ஒன்று தான் வட்டமான அக நாழிகையையும் விமானத்தையும் பெற்றிருக்கிறது. இந்த இடம் மதுரைக்கு வட கிழக்கே 15 கல் தொலைவில் உள்ளது. இதனைத் திருமாலிருஞ் சோலை என்றும் கூறுவர். இந்த அழகர் கோயில், சோலை மலையை யொட்டி அதன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூன்று கோட்டைச் சுவர்களுக்கு அப்பால் கோயில் இடம் பெற்றிருக்கிறது. கோயிலின் அமைப்பும் சுற்றுப்புறமும் இனிதாக இருக்கின்றன. இத்திருக் கோயிலின் அகநாழிகையின் உபபீடமும், அதிர்ஷ்டானமும் அழகுற அமைந்துள்ளது. அக நாழிகை வட்ட வடிவில் வனப்புடன் காணப்படுகிறது. கருவறைமீது சோம சுந்தர விமானம் என்று கூறப்படும் வட்டமான பொன் வடிவமானப் பொலியும் தக தகவென்று ஒளிவிட்டு கண்ணையும் கருத்தையும் கவர்வனவாய் அமைந்துள்ளது. மூலத்தானத்தில் இருக்கும் இறைவனுக்கு பரம சுவாமி என்றும் உற்சவ மூர்த்திக்கு சுந்தரராசன் என்றும் பெயர். வலது புறம் தாயார் சந்நிதியும் இடது புறம் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன. முன் மண்டபத்தில் 4 சுரங்களுடன் அமைக்கப் பெற்ற கல் தூண் உள்ளது. இரண்டாவது திருச்சுற்றில் திருப்பள்ளியறை அமைந்துள்ளது. முற்றிலும் தந்த வேலைப்பாடுடைய சிறு விமானமும் இங்கு இடம் பெற்றுள்ளது. கோயிலில் அருகே அடியிலிருந்து நுனிவரை வட்ட வடிவிலான ஒரு நெற் களஞ்சியம் அழகுறத் திகழ்கிறது. பாண்டிய நாட்டில் ஒரே ஒரு வட்ட வடிவக்கோயில்தான் உண்டு. ஆனால் அது பிற பகுதிகளில் உள்ள எல்லா வட்ட வடிவக் கோயிலையும் விட அழகுறப் பொலியும் பொற்கோயில் என்று போற்றிப் புகழும் பாங்கினையுடையது. தஞ்சை மாவட்டம் பாபனாசத்தில், கும்பகோணம் - தஞ்சை கற்சாலையில் பாலைவனநாத சுவாமி கோயில் ஒரு பெரிய வட்ட வடிவமான நெற் களஞ்சியம் கைலோ இருக்கிறது. இது அழகர் கோயில் நெற்களஞ்சியம் போல் அழகுறக் காணப்படாவிடினும் சுமார் 50- அடிக்கு மேற்பட்ட உயரமுடைய பெரிய களஞ்சியமாகும். இது முற்காலத்தில் வட்ட வடிவமான கருவறையை உடைய கோயிலாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். காஞ்சிபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரிலுள்ள வர்த்தமானர் ஆலயம் வட்டக் கோயிலாகும். இது சமணர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இது பல்லவர்கள் சமண சமயத்தைத் தழுவிய காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்பிகளால் 5-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற கோயிலாகும். மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த சிக்மாகலூர் மாவட்டம், கோப்பா வட்டத்தில் உள்ள சிருங்கேரி சிரி வித்தியா சங்கர் சிவன் கோயில் வட்ட வடிவமான கருவறையும் வட்ட வடிவமான விமானமும் வட்ட வடிவமான அர்த்த மண்டபத்தையும் உடைய அழகிய கோயிலாகும். இந்தக் கோயிலின் மண்டபத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் நீண்ட சிறு சிறு மாடங்கள் செய்யப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தெய்வத் திரு உருவம் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது இது அழகிய சிற்ப வேலைப்பாடுகளையுடையது. திராவிட நாட்டிலுள்ள வட்டக் கோயில்களில் இதைப் போன்ற அமைப்பை எங்கும் காண முடிவதில்லை. இத்திருக்கோயில் கி.பி. 1338-ல் கட்டப்பட்ட கவின் பெரு கோயிலாகும். மற்றொரு வட்டக் கோயில் மைசூர் மாநிலத்தில் பெங்களூர்க் கண்மையில் உள்ள கான்புரம் கவி கங்காதீசுவரர் கோயிலாகும். இக் கோயிலுக்கு அர்த்த மண்டபம் கிடையாது. வட்டமான கருவறையும் அதன் மீது வட்டமான ஒரு பத்தியும் அதன் மேலே நல்ல சிற்ப வேலைப்பாடுகளையுமுடையது. மேலே அழகிய எழுதகமும் சிகரமும் உடையது. உச்சியில் கலசம் அணி பெறத் திகழ்கிறது. இது 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதைப் பார்ப்போர் இத்தகைய சிவன் கோயிலும் உண்டா? என்று வியப்புறுவர். திருவாங்கூர் வட்டக் கோயில்கள் திருவாங்கூரில் உள்ள பெரும் பழுத்தூர் என்னும் ஊரில் உள்ள சிரி கோயில் மையப்பகுதிகள் அழிந்து அதன் அடிப்பகுதி மட்டும் இன்று காணப்படுகிறது. அடித்தானத்தின் வரிகளும் முன்புறமுள்ள படிகளும் காணப்படுகின்றன. இந்த வட்ட வடிவமான கோயில் பண்டையத் திராவிட மக்களின் சிற்ப முறைப்படி அக நாழிகையையும், விமானமும் உடைய கோயிலாக இருந்தது என்பதை யூகிக்க முடிகிறது. இது பெரிய கோயிலாக குறுக்களவு சுமார் 40 அடிக்கு மேல் உள்ளது போல் திகழ்கிறது. இது கி. பி. 9 - ஆம் நூற்றாண்டில் இருந்த கோயிலாகும். திருவல்லம் பரசுர ராமர் கோயில் வட்டமான அகநாழிகையும் வட்டமான விமானமும் உடையது. அர்த்த மண்டபம் நீண்ட சதுரமானது. இது காஞ்சி சுரஹரேசுவரர் கோயிலைப் போல் காணப்படுகிறது. விமானத்தில் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இது 13-ஆம் நூற்றாண்டில் எழுந்த கோயிலாகும். மற்றொன்று நிர மாங்காராவில் உள்ள வட்டக் கோயிலாகும் இதன் அக நாழிகை அமைப்பும், விமானத்தின் அமைப்பும் மைசூர் மாநிலத்தில் உள்ள சிருங்கேரி வித்தியாசங்கர் சிவன் கோவிலைப் போல் உள்ளது. கருவறையும் விமானமும் வட்டமானவை. 14-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்றது. வலிய உலையாதிச்சபுரம் வட்டமான அக நாழிகையும் வட்டமான விமானமும் உடைய கோயில். இது தமிழ் நாட்டுக் கோயில்களைப் போல் உயர்ந்த விமானத்தையும் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் உடையது. இது 16-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற அழகிய கோயிலாகும். திரிக்கேட்டித்தனம் என்ற ஊரில் உள்ள கோயிலும் வட்டக் கோயிலேயாகும். இது திருவாங்கூர் தனக்கே உரிய தனிப்பண்பு என்று கூறும் கூரை அமைப்பில் எடுப்பிக்கப் பெற்றுள்ளது. 10-11-ஆம் ஆண்டில் கட்டப் பெற்றது. இதே அடிப்படையில் வைக்கம் கோயிலும் (கி.பி 1539) பிற வட்டக் கோயிலும் பல திருவாங்கூரில் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. கி.பி. ஆறாவது நூற்றாண்டில், வாது சாதிர விதிப்படி இந்தியக் கட்டிடக் கலையின் விஞ்ஞானம் பல்வேறு அமைப்புகளையுடையதாய் பதினாறாம் நூற்றாண்டுவரை இந்தியா முழுவதிலும் எழுந்தது. மிகத் தொன்மையான காலத்திலே பௌத்தர்கள் வட்டமான தூபிகளைக் கட்டினர். சாஞ்சியில் எழுப்பப்பெற்ற வட்டமான தூபி இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஜெய்ப்பூர் இராசபுதனம் பைரத் ஆகிய இடங்களில் கி.மு. மூன்றாவது இரண்டாவது நூற்றாண்டிலே வட்டமான அமைப்புகள் எழுந்துள்ளன என்ற உண்மையை மெய்ப்பிப்பதாக உள்ளன. சிற்பக் கலை வல்லுநரும் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறைப் பேராசிரியையுமான திருமதி டெல்லா, கிராமரிஷ் அவர்கள், 10-ஆம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை எழுந்த திராவிடக் கட்டிடக் கலையில் வட்டமான கோயில் அமைப்பு மிகவும் சுவைத்தற்குரியது; வாது சாத்திரத்தில் கண்ட வட்டக் கோயிலுக்கு இந்தியாவில் போதிய இடம் அளிக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலே வட்டக் கோயில்கள் மிகக் குறைவு என்றாலும் பைரட் (Bairat) வட்டக் கோயில் அனைத்திலும் பழமையானது. திருவாங்கூரில் ஏராளமான எண்ணிக்கையுள்ள வட்ட வகைக் கோயில்கள் உள்ளன. ஆனால் திருவலம் கோயிலைத் தவிர மற்றவை வரைபடங்களுடன் மட்டும் வெளியிடப்படவில்லை. வட்ட வடிவமுள்ள அமைப்பு முறைகள் திராவிட கோயில்களின் குழுவில் உள்ளது என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. திராவிட நாட்டுக் கோயில்கள் எந்த நாட்டு கோயில் அமைப்பு முறையையும் பார்த்தோ தழுவியோ அமைக்கவில்லை தனக்கே உரிய சொந்தப் பாணியில் தம் அரிய புத்தி நுணுக்கத்தால் பலவகையான கோயில் களை உருவாக்கி யுள்ளனர்1 என்று கூறியுள்ளார். அரைவட்ட வடிமான அக நாழிகை தமிழ் நாட்டில் வட்டக் கோயில்கள் அதிகம் இல்லை. ஆனால் அரை வட்டக் கோயில்கள் பல உண்டு. அரைவட்டக் கோயில்களிலே பல வகைகள் உள்ளன. குட்டையான அரைவட்டக் கோயில் ஒரு வகை. நீண்ட அரை வட்டமுள்ள அக நாழிகை அமைப்புள்ள கோயில் மற்றொரு வகை. பெரும்பாலான அரை வட்டக் கோயில்கள் மாடம் இல்லாத ஆலக் கோயிலாகவும், மாடமுள்ள தூங்கானை மாடக் கோயிலாகவும் காணப்படுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற ஐகோல் (Aihole) காளி கோயில் விமானம், கஜபிருஷ்ட விமானமாகக் காணப்பட வில்லை. இது குட்டையான அரைவட்டக் கோயிலாகக் காணப் படுகின்றது. இதே போன்று கி.மு முதல் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற கார்லி (karle) சைத்தியக் குகைக் கோயிலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த பாஜா (Bhaja) பௌத்த சைத்தியமும் குகை விகாரையும் நீண்ட அரைவட்டக் கோயில் அமைப்புடையதாகக் காணப்படினும் விமானம் தூங்கானை மாடம் என்று கூறத்தக்கதாக இல்லை. ஆனால் விமானத்தின் பின்புறம் சிறிது வளைவு மட்டும் காணப்படுகிறது. அதை வைத்து இது படுத்திருக்கும் யானை முதுகு போன்று கூறுவதற்கில்லை. இஃதன்றி வட இந்தியாவில் சில கஜபிருஷ்டக் கோயில்கள் உள்ளன. ஐதராபாத்தில் உள்ள நாள்துர்க் (Naldurg) மாவட்டத்தில் உள்ள டர் (Tur) நகரில் உள்ள பழங்கால பௌத்த சைத்தியம் கஜபிருஷ்ட விமானம் உடையதாக இருக்கிறது. இது மகாபலிபுரம் சகாதேவ இரதம் போன்று காணப்படுகிறது. தமிழ் நாட்டில் தூங்கானை மாடக் கோயில்களே அரை வட்டக் கோயில்களாக உள்ளன. நாம் இந்த அத்தியாயத்தில் விமான அமைப்புகளை ஆராயவில்லை. கருவறைகளை (அக நாழிகை) மட்டும் ஆராய்வதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். சில தூங்கானை மாடக் கோயில்களின் கருவறை கிட்டத்தட்ட அரைவட்டவடிவிலே அமைந்துள்ளன. செங்கற்பட்டுக்கு அண்மையில் உள்ள ஒரகடம் என்னும் ஊரில் உள்ள வடமலேசுவரர் கோயில் அக நாழிகை அரை வட்ட அமைப்பையுடையது என்று கூறலாம். பொதுவாக எல்லா தூங்கானை மாடக் கோயிலும் அரை வட்டக் கோயில் என்று கூறிவிடலாம் ஆயினும் சில கருவறைகள் குறுகிய அரை வட்டக் கோயிலாகவும் சில நீண்ட அரைவட்டக் கோயிலாகவும் காணப் படுகின்றன. இந்தக் கோயிலுக்கு நீளமற்ற அக நாழியும் ஒரு சிறிய இடை நாழிகையும் மற்றும் ஒரு மண்டபமும் உள்ளன. இது கி.பி.10-ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல அரை வட்டக் கோயில்கள் உள. என்றாலும் இந்தக் கோயிலின் அமைப்பை வியந்து இந்தியக் கட்டிடக் கலை ஆய்வில் ஈடுபட்ட வங்கப் பேரறிஞர் திரு. ஓ.சி கங்கோலி அவர்கள் இதைப் பற்றி தனது சிறப்பு மிக்க ரூபம் (Rupam) என்னும் திங்கள் இதழில் 30-ஆண்டு களுக்கு முன் ஒரு தரையின் வரைபடமும், ஒரு நிழல் உருவப்படமும் தீட்டி ஒரு அரிய கட்டுரை தீட்டியுள்ளார். அப்பால் இந்தியக் கட்டிடக் கலை (Indian Architecture) என்னும் நூலிலிலும் இந்த ஒரகடம் வட மலேசுவரர் கோயில் இடம் பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட அரை வட்டக் கோயில் தமிழ் நாட்டில் உள்ள தூங்கானை மாடக் கோயில்களில் பல நீண்ட அரை வட்ட அமைப்புடையதாகவே உள்ளன. பல கோயில்கள் நீண்ட அரை வட்ட அக நாழிகையை மட்டும் உடையனவாகவே உள்ளன. வட இந்தியாவில் உள்ள பௌத்தர் களின் பாஜா குகை விகாரைகளும் (Bhaja Vihara Cave) சைத்தியங்களும் கார்லி (Karle) குகைச் சைத்தியங்களும் நீண்ட சதுர அரைவட்ட அக நாழிகைகளையுடையனவாய் உள்ளன. இங்கு நாம் நீண்ட அரை வட்ட அக நாழிகை என்பது அரைவட்டத்தோடு ஒரு நீண்ட சதுரமும் இணைத்து அமைக்கப்பட்ட கருவறையையுடைய கோயிலையே குறிக்கும். திருக்கச்சூர் ஆலக்கோயிலும், திருவேற்காடு ஆலக் கோயிலும், பெண்ணாடகம் தூங்கானை மாடக் கோயிலும், திருக்கழுக்குன்றம் பக்தவசலேசுவரர் தூங்கானை மாடக் கோயிலும் கோவூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இராசராசன் தந்தை சுந்தர சோழன் கட்டிய சுந்தரேசுவரர் - சௌந்திர நாயகி கோயிலும் திரு மீயச்சூர் தூங்கானை மாடக் கோயிலும், திருவொற்றியூர் தூங்கானை மாடக் கோயிலும் திருமாகறல், அகத்திசுவரர் - புவன நாயகி தூங்கானை மாடக் கோயிலும் பிற எண்ணற்ற தூங்கானை மாடக் கோயிலும் நீண்ட சதுர அரை வட்டக் கோயில்களேயாகும். இங்கு இரு அரை வட்ட நீண்ட சதுர தூங்கானை மாடக் கோயில்களின் வரை படங்கள் இணைக்கப் பட்டுள்ளன. கண்டு தெளிக. இவை களை மிக விரிவாக பின்வரும் அத்தியாயத்தில் விளக்கிக் கூறுவோம். சுவரின் அணி உறுப்புகள் தமிழர்களின் நினைவு மண்டபங்களில் பொதுவாகச் சாளரங்கள் அமைக்கப்படுவதில்லை. என்றாலும் சுவர்கள் கோலஞ் செய்யப் பெறாது வெறிச்சோடி இருப்பதில்லை. அக நாழிகை வெளிப்புறத்தில் உள்ள இடை நாழிகையின் (அர்த்த மண்டபத்தில்) வாயில் சுவர்களின் இருபுறமும் வாயிற் காவலர்கள் (துவார பாலகர்கள்) உருவம் இடம் பெற்றிருக்கும். அக நாழிகையின் (கர்ப்பக்கிரகத்தின்) வெளிப்புறத்திலும், இடை நாழிகையின் (அர்த்த மண்டபச்) சுவரிலும் அணிகள் செய்யப்படுவது சிற்ப மரபாகும். (உருவம் 6) கோயிலின் சுவர் மாடச் சட்டத்தின் அணி நிலைகளைக் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மாடத்தின் ஏதேனும் ஒரு புறத்தில் சுண்ணச் சாந்து பூசப் பெற்றிருக்கும். அதற்கு மேலே பஞ்சரம் என்னும் சுவர் அணி அமைக்கப்படும். இது சாலை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மாடங்கள் பொதுவாகச் சுவர்களின் பகுதிகளை அணி செய்கின்றன. அவை சுவரின் முன்னே துருத்திக் கொண்டு புடை சிற்பம் போன்றிலங்கும் கோயிற் சுவரில் காணப்படும் பின் அணியை கோஷ்ட பஞ்சரம் கும்ப பஞ்ச ஆகியவைகளால் அழகு செய்யப் பெற்றுள்ளன. அக நாழிகையின் பின்புறச் சுவர்களில் பின்புறம் ஒன்றும் வலது புறம் இடது புறமுள்ள சுவர்களில் ஒவ்வொன்றுமாக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், இடை நாழிகையின் வலப் புறச் சுவர்களில் ஒவ்வொன்றுமாக இரண்டு கோஷ்ட பஞ்சரங்களுமாக ஐந்து பஞ்சரங்கள் அழகிற்காக அமைக்கப் பெறுகின்றன. கோஷ்ட பஞ்சரம் சிற்ப வேலைப் பாடுகள் செறிந்துள்ள ஒரு வில்மச்சு மாடம் (Pavilan) ஆகும். கோஷ்ட பஞ்சர மாடத்திலே பிள்ளையார், நான்முகன், கொற்றவை (நாராயணி) போன்ற தெய்வ உருவங்கள் இடம் பெற்றிருக்கும். பல்லவர்கள் காலத்தில் எடுப்பிக்கப் பெற்ற திருக் கோயில்களில் உள்ள வில் மச்சு மாடங்களில் தெய்வத் திரு உருவங்கள் அமைக்கப் பெறவில்லை. மைசூர் மாநிலத்தில் எடுப்பிக்கப் பெற்ற சிருங்கேரி வித்தியாசங்கரர் கோயிலின் வட்ட வடிவமான இடை நாழிகை மண்டபத்தில் - அதிர்ஷ்டானத்திற்கு மேலே உள்ள சுவர் முழுவதும் மாடங்கள் அமைத்து அணி பெறப் பல தெய்வத் திரு உருவங்கள் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்தில் - அதாவது 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின் கோஷ்ட பஞ்சர மாடங்களிலே தெய்வத் திரு உருவங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. கோஷ்ட பஞ்சர மாடங்களுக்கு இடை இடையே கும்ப பஞ்சரம் என்ற சுவர் சிற்ப அணி உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. கும்ப பஞ்சரம் என்பது சுவர் மீது சுண்ணச் சாந்தால் அழகுக்காக மட்டும் அமைக்கப்படும் ஒரு அணி உறுப்பாகும். இந்தப் பூச்சு, இரண்டு சிறப்புக் கூறுகளின் பெயர்களையுடையது. கீழ்ப்பகுதி ஒரு விதக் கிண்ணம் போன்றிருக்கும். இதனை கும்பம் என்று கூறுவர். மேற்பகுதி சிறுமாடம் போன்றிருக்கும் அதனை பஞ்சரம் என்று கூறுவர். நாலாவது அமைப்பு முறையானது ஐந்தாவது அமைப்பு முறையினின்று வேறுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் ஐந்தாவது அமைப்பு முறையில் தாமரை மலர் (புஷ்பம்) முழுமையாக எஞ்சியகல்லினின்று தொடர்பற்று உள்ளது. இறுதியில் ஒருவகைப் பூமுனையைப் பெற்றுள்ளது. பதினாறாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஐந்தாவது அமைப்பு முறை என்பது நிலவி இருந்ததாகத் தெரியவில்லை. திராவிடப் போதிகையின் வரலாறு (உருவம் 28,29) திராவிட கலை வளர்ச்சியில் உயர்ந்த பொருள் தரும் வழியில் மிக நன்றாக உருவறைகளால் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. பழைய முறைகள் கல் தச்சர்களின் கலையினின்று அழகாகத் துளிர்த்தெழுந்துள்ளன. போதிகைகள் கைக் கோடரின் அடிகளோடு வெட்டுண்ட துண்டுக் கட்டையை விட வேறல்ல. போதிகையின் தற்கால அமைப்பு முறை மிகக் கவனமாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சிற்பிகள் மாளிகைகளின் பகுதியை கற்பனையை இணைத்து சுவை பெருக்க ஒப்பனை செய்வதற்குக் கல்லின் மீது கையை வைத்துள்ளார் என்றே விளக்கந்தரப் பெற்றுள்ளது. திராவிடப் போதிகைகள் பல்வேறு ஊழிகளிலும் அதே அமைப்பு முறையில் நிலைத்துள்ளது. அது மண்டபத்தின் காலத்தைச் சுட்டிக் காட்டுவதற்குப் போதுமானதாக இருக்க வில்லை. போதிகைக்கும், போதிகையின் வளர்ச்சிக்கும் அதன் அணிதிகழும் சிற்ப வேலைப்பாட்டிற்கும் அடிப்படையிட்டு சிறப்புறச் செய்தவர்கள் பல்லவர்கள் என்பதில்லை. சோழர்களின் முயற்சியும் போதிகை வளர்ச்சிக்குப் போதிய உதவி அளித்துள்ளது. இந்த அத்தியாயம் எழுதத் துணையாயிருந்த நூற்கள் 1. Memoirs of the Archaeological Survey of India No.54 Buddhist Antiquities of Madras Nagarjuna kondo Presidency Delhi 1938. 2. The Arts and Crafts of Travancore - Prof Dr. Stella Kramrish (London) 1948 3. Kanchi Prof. Dr. C. Meenakshi M.A. Ph. D. Madras Delhi 1965. 1922.Delhi 4. South Indian Shrines P.V. Jegadisa Iyer 5. Mahabalipuram - D.R. Tyson. Madras. 1949 6. Seven pagodas - J.W. Coombes B.A., A.M.S.T. (LONDON) 1914. 7. Studies in Pallava History - H. Heras 8. Indian Architecture - O.C. Gangoly (Calcutta) 1940 9. The pallavas - Jouveaw. Dubreuil 10. Principles of Indian Silpasastra - Prof. Panidra Nath Bose M.A (Lohore) 1926. 11. The Art of Indian Asia zimmer Heiurica 12. காஞ்சிக் கோயில்கள் டாக்டர் எம். கே. சீனிவாசன் (மலர்) 13. மதுரைக் கும்பாபிசேக மலர் - திருக்கோயில் - கட்டுரை தபதி. வை. கணபதி. பீ.ஏ மதுரை 1963. 14. தெய்வக் கலைமலர் எம். செல்லக்கண்ணு தபதி (பழனி) - காஞ்சி 1964. 15. தேவாரம் - திருஞான சம்பந்தர் 16. தென் இந்திய சிற்ப வடிவங்கள் - க. நவரத்தினம், யாழ்ப் பாணம் 1941. 17. ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம்- தபதி டி.பி. கணேசமூர்த்தி (சென்னை) 1959. 18. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கட சாமி (3-ஆம் பதிப்பு) சென்னை.1969. 19. நரசிம்மவர்மன்- மயிலை சீனி வேங்கடசாமி (முதற் பதிப்பு) (சென்னை) 1957. 20. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1955. குடைவரைக் கோயில் கி.பி ஏழாவது நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மன் சமணம் துறந்து சைவந் தழுவினான். அவன் முதன் முதலாகச் சிவபெருமான் அழிவற்றவராக இருப்பதால் அவரது கோயிலும் அழிவற்றதாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே முதன் முதலாக, அழியா மலைக் குகைகளில் சிவ பெருமானை வைத்து வழிபட ஏற்பாடு செய்தான். அப்பால் மலைகளைக் குடைந்து உள்ளே திரு உண்ணாழிகையும், முக மண்டபமும் பிரகாரமும் (சுற்றும்) உருவாக்கிக் குடைவரைக் கோயில்களை உருவாக்கினான். இம்மன்னன் மகேந்திரன் வட மொழி பயின்றவன். இசைக் கலையில் ஈடுபட்டவன், சிற்பக் கலையில் சிறந்தவன். இவன் பல கலையும் பயின்ற பாவேந்தனு ஆகம சைவத் தோன்றலும் தெய்வத் தூதனுமாகிய திருநாவுக்கரசு அடிகளைக் குருவாகக் கொண்டவன். அவன் தமிழகத்திலே குடைவரைக் கோயில்கள் பலவற்றை நிறுவினான். கற்றளிகள் எடுப்பிக்க வழிகாட்டினான் அவற்றிற்கு அடிப்படையும் அமைத்தான். குடை வரைக் கோயில் அமைப்பு மகேந்திரவர்மன் அமைத்த என்றும் அழியாக் குடைவரைக் கோயில்கள் மலையின் நடுவே குடைந்து உள்ளே உயர்ந்த தூண் களும் சுவர்களும் அறைகளையும் மண்டபங்களும் மூர்த்தங்களும் இடம் பெறுமாறு செய்யப் பெற்றிருந்தன. தூண்கள் சதுரமாக இருந்தன. அதில் அழகாகத் தாமரைச் சிற்பம் இடம் பெற்றிருந்தன. அவைகளில் குணபரன் பெயரும் தீட்டப் பெற்றிருந்தன. சுவர்களில் சுண்ணம் பூசப் பெற்று வண்ண ஓவியம் வகை வகையாக இலங்கும் படி செய்யப்பெற்றிருந்தது. போதிகைச் சதுரப் பலகையாக இருக்கும் சுவர்களில் மண்கலந்த சுண்ணச் சாந்து பூசப் பெற்று அதன் மீது சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா வண்ணம் பூசப் பெற்ற எழில் ஓவியங்கள் பல தீட்டப்பட்டிருந்தன. நடுவே திரு உண்ணாழிகை (கருவறை) திகழும். வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர்கள் (துவார பாலகர்கள்)இடம் பெற்றிருந்தனர். கோயில்களில் உள்ள நீண்ட சுவர்களில் புராணக்கதைகளை விளக்கும் புடை சிற்பங்கள் திகழ்ந்தன. கோயில்களில் வட மொழியிலும் தென் மொழியிலும் பல கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டிருந்தன. கோயில்கள் புனித இடமாக மதிக்கப் பெற்றன. சிவனை வழிபடும் அடியவர்களான ஆண்களும் பெண்களும் குளிர்ந்த நீரில் குளித்து நல்லாடை புனைந்து திருக்கோயிலை பெருக்கி, மெழுகி, சுத்தமாக வைத்தனர். கோயிலை புனித இடமாக எண்ணி எவரும் அசுத்தம் செய்யவோ அசுத்தமானவர்கள் உள்ளே புகவோ அஞ்சுவர். கோயிலில் இரவு எங்கும் திருவிளக்குகள் ஒளி செய்யும் மணி ஓசை எழும். இன்னிசை முழங்கும். சாம்பிராணி, சந்தனம், கற்பூர வாசனை கமகம என எழும். தமிழகத்தில் முதன் முதலாக எழுந்த குடை வரைக் கோயில்களில் சில அடியில் வருமாறாகும்: 1. தளவானூர் குடை வரைக் கோயில் தளவானூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டாரத்தில் உள்ளது. இது செஞ்சிக்குத் தென்கிழக்கில் 10-கல் தொலைவில் உள்ளது. பேரணிப் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே 5-கல் தொலைவில் உள்ளது. தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பல்லவர்களின் குடைவரைக் கோயில்களில் தளவானூர்க் குடை வரைக் கோயில் ஒரு சிறந்த கோயிலாகக் கருதப்படுகிறது. ஊருக்கு வடக்கேயுள்ள குன்றில் இக் கோயில் தெற்குப் பக்கத்தில் குடைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இது ஒரு சிவன் கோயில் ஆகும். இது சத்துரு மல்லேசுவராலயம் என்று அழைக்கப்படும். இந்தக் கோயிலைப் பஞ்ச பாண்டவர் மலை என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இக்கோயிலில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இங்கு இப்பொழுது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. கோயில் சிறிதாக இருக்கிறது. இலிங்கம் கிழக்கு நோக்கி இருக்கிறது. திரு உண்ணாழிகை 7 அடி 10 அங்குல நீளமும் 8 அடி 6 அங்குல அகலமும் 6 அடி 10 அங்குல உயரமும் உள்ளது. பின்னர் சேர்க்கப்பட்ட முன் மண்டபமும் 21-அடி 10 அங்குல நீளமும் 19 அடி அகலமும் 8 அடி 10 அங்குல உயரமும் உள்ளது. சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. இலிங்கம் 2 அடி 5 அங்குல உயரமும் 4 அடி 6 அங்குலச் சுற்றளவும் உள்ளது. இலிங்கத்தின் அடிப்பகுதி-ஆவிடையார் வழக்கமான வடிவில் 6 அடி 2 அங்குல நீளம் உள்ளது. இலிங்கத்தின் மீது முன்புறமாகக் கீழ் நோக்கி நெருக்கமான கோடுகள் காணப் படுகின்றன. திருக்கோயிலின் முன் உட்புகும் மண்டபம் தெற்கு நோக்கி இருக்கிறது. (படம் 1 (அ) ) இலிங்கம் கிழக்குமுகமாக இருக்கிறது. மண்டபத்தின் வாயிலின் இரு மருங்கினும் வெளிப் புறம் இரு வாயிற் காப்போர் (துவார பாலகர்) உருவங்கள் காணப்படுகின்றன. அவர்கள் வழக்கம் போல் தலைப்பாகை அணிந்து கெம்பீரமாக நிற்கின்றனர். கோயிலில் உள்ள இரு தூண்கள் 2 சதுர அடி அளவுள்ளதாய் தலை உறுப்புகளோடு 7 அடி உயரம் உள்ளதாய் உண்ணாழிகை முன் உள்ள மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. மண்டபத்தின் மேற்கூரை இயற்கையாக அமைந்த பாறையாக இருக்கிறது. மண்டபத்தில் உள்ள தூண்கள் மூன்று இடைவெளிகள் உள்ளதாய் அமைக்கப் பட்டுள்ளன. மண்டபத்தின் வெளிப்புறத்து நடுத் தூண்களில் மகர தோரணம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தரை பூமி மட்டத்திற்கு மேல் 4 அடி உயரமாக இருக்கிறது. மண்டபத்தின் இரு கோடியிலும் தெற்கு நோக்கி இரு வாயில் காப்போர்கள் 6 அடி உயரத்தில் நிற்பது போல் செதுக்கப்பட்டு மண்டபத்தில் மேற்குக் கோடியில் உள்ள உருவம் வணக்கம் செய்யும் முறையில் இடது கையை உயர்த்தி நிற்பது போல் காணப்படுகிறது. கிழக்குப் பக்கமுள்ள உருவம் வழக்கம் போல் வலது கையில் கதை (கம்பு) தாங்கி நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் இடது கோடியில் வட மொழியில் பல்லவகிரந்த எழுத்தில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இதில் இக் கோயில் மகேந்திரவர்மன் ஆணைப்படி கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.1 இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தமிழ் வரி வடிவில் செய்யுள் வடிவமாகச் செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்ட இடம் வெண்பட்டு என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமராவதி புத்தர் கோயிலின் வேலிப்பட்டிகை போல் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய தாமரைப் பூச் சிற்பங்கள் தூண்களில் காணப்படுகின்றன. பிரதான வாயிலில் இருபக்கங் களிலும் இரு தூண்கள் உள்ளன. தூண்களின் மேற்குப் பக்கம் மகர தோரணம் மாண்புறக் காணப்படுகிறது. இது திருவாசி என்றும் கூறப்படுகிறது. இரு கோடிகளிலும் மகர மீன்கள் உள்ளன. அதன் வாய்களிலிருந்து தோரணம் எழுந்து வருவது போல் செதுக்கப் பட்டுள்ளது. மேலே இசை வாணர்கள் (கந்தர்வர்கள்) காணப்படு கின்றனர். தோரணத்திற்கு மேலே மண்டபம் முழுவதும் பௌத்த முறையில் பலகணிக்குரிய மஞ்சடைப்பு அணிகள் அலங்கரித் துள்ளன. இலிங்கத்தைத் தவிர காவலர் உருவமும் அணி செய்துள்ள முறைகளும் பௌத்த பண்பைக் காட்டுவதாகத் திகழ்கின்றன. திருவாசியில் இரு வளைவுகள் உள்ளன. எனவே இது இரட்டைத் திருவாசி எனப்படும். மகேந்திரவர்மன் பகைவரை வென்று இக்கோயிலை அமைத்ததால் இம் மலை மீது சத்துரு மல்லேசுவராலயம் என்று எழுதப்பட்டுள்ளது. 2. திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயில் திருச்சிராப்பள்ளி நகரின் நடுவே உள்ள குன்றின் மீது இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ஒன்று மேலே இருப்பது; இது பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அமைத்த திருக்கோயிலாகும். இது மகேந்திர பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கீழே இருப்பது மன்னன் மகேந்திரவர்மன் மகன் மாமல்லன் உருவாக்கிய கோயில் ஆகும். மகேந்திரவர்மன் அமைத்த இந்த குடை தழி தெற்கு நோக்கி இருக்கிறது. இது பல்லவர்களின் நல்ல திருப்பணிக்கு ஏற்ற எடுத்துக் காட்டாக இலங்குகிறது. இங்கு சிறந்த கல்வெட்டுகள் உள்ளன. இக்குடை வரைக் கோயில் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி மகேந்திரவர்மன் ஆணையின் மீது அமைக்கப் பெற்ற கோயில் என்று மெய்ப்பிக்கப் பெறுகிறது. மண்டபத்தில் உள்ள சாசனங் களில் ஒன்று நான்கு வட மொழிச் செய்யுட்களாக அமைந்துள்ளன. இக்கோயில் தெற்கு நோக்கி இருக்கிறது. இதில் திரு உண்ணாழிகையும் (கருவறையும்) முக மண்டபமும் உள்ளன. உண்ணாழிகையின் வலது பக்கத்தில் மேற்பூச்சின் மீது கல்வெட்டு காணப்படுகிறது. இதில் குணபரன், சத்துருமல்லன், புருடோத்தமன் லலிதாங்குரன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவைகள் மன்னன் மகேந்திரன் பெயர்களாகும். கோயிலிலும் சுவர்களிலும் மகேந்திரவர்மனுடைய விருதுப் பெயர்களான, சிரி மகேந்திர விக்ரமன், குண பரன் பிண பிணக்கு, சித்திரகாரப்புலி முதலிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல் வெட்டுகள் திட்ட வட்டமாகப் பல்லவர்கள் கல்வெட்டுகளில் காணப்படுவதைப் போல் இருக்கிறது. இதில் குணபரன் ஆணைப்படி இக்கோயில் அமைக்கப்பட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இங்கு சிவலிங்கமும் குணபரன் உருவமும் இருக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெளிவாக முன்னர் மன்னர் மகேந்திரவர்ப் பல்லவனால் துன்புறுத்தப்பட்ட அப்பர் அடிகள் அன்பால் அரசனை இலிங்கத்திற்கு வழிபடும்படி செய்து அவனைச் சைவ நெறியின் காவலனாகச் செய்தது நன்கெடுத்துக் காட்டப்படுகிறது.2 இந்தக் குடைவரைக் கோயில் அமைப்பு மிக எளிதாகவும் கரடு முரடாகவும் உள்ளது. இந்தக் கோயிலின் மண்டபம் 30 அடி நீளமும் 15 அடி அகலமும், 9-அடி உயரமும் உள்ளது. கிழக்குப் புறமுள்ள சுவரில் திரு உண்ணாழிகை மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 7 அடி 10 அங்குல நீளமும் 7-அடி 10-அங்குல அகலமும் உள்ள சதுரமாயும் 7-அடி உயரம் உள்ளதாயும் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு, நான்கு கனசதுரம் வடிவமுள்ள கல் தூண்கள் மண்டபத்தை ஐந்து சம அளவாகப் பிரித்து நிற்கும் படி செய்திருக்கின்றனர். இத்தூண்கள் தளவானூர் அமைப்பிலும் காணப்படுகின்றன. இங்கு தோரணங்களோ ஏனைய சிற்ப வேலைப்பாடுகளோ இல்லை. ஆனால் அமராவதி பௌத்த கோயில் தூண்கள் மீதுள்ள உத்தரங்களின் மீது காணப்படுவது போல், கனசதுரத் தூண்கள் மீது கவின் பெரும் கமல மலர் கண்களையும் கருத்தையும் கவர்வதாய் காட்சி அளிக்கின்றன. கீழ்ப்பகுதியிலும் சில சுருள் வடிவமான அலங்காரங்கள் காணப்படுகின்றன. திரு உண்ணாழிகையின் தரையின் நடுவே 2-சதுர அடியில் ஒரு குழி செய்து அதில் இலிங்கத்தை நிலை நாட்டி இருந்ததாகத் தெரிகிறது. அதன் அருகே இரண்டாவது குழி 1-அடி சதுர வடிவில் உள்ளது. முதற் குழி இலிங்கம் இருந்த அடையாளம் ஆகும். இரண்டாவது குழி மகேந்திரவர்மன் சிலை வடிவம் இருந்த இடமாகும். ஆனால் இப்பொழுது கோயிலில் எவ்வித உருவங்களும் காண முடியவில்லை. இக்கோயில் ஒரு காலத்தில் பிரஞ்சுக்காரர்களால் போர்த் தளவாடங்களையும் துப்பாக்கி மருந்தையும் சேகரித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மண்டபத்தின் தூண்களுக்கு இடையே இருந்த இடைவெளிகள் செங்கற் சுவர்களால் அடைக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது அவைகள் அகற்றப்பட்டு விட்டது. கோயிலுக்கு மேலே வாயிலில் எழுதகங்களும் பலகணிக்குரிய மஞ்சடைப்பும் அணி செய்கின்றன. வாயிலின் ஒவ்வொரு பக்கமும் உயர்ந்த புடை சிற்பம் உள்ளன. திரு உண்ணாழிகை வாயிலின் இரு மருங்கினும் இரு வாயில் காப்போர்களின் உருவங்கள் கையில் தடியுடன் நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளன. வாயில் காப்போர் ஒரு காலைக் கீழே உறுதியாய் ஊன்றி மற்றொரு காலை மடக்கி நின்று கையில் உள்ள கதையை நிலத்தில் ஊன்றி நிற்பது போல் செதுக்கப் பெற்றுள்ளன மண்டபத்தின் மேற்குச் சுவரில் கண்கவர் உருவங்கள் பல தீட்டப்பட்டுள்ளன. கோயிலை நோக்கி ஒரு பெரிய அரங்கம் உள்ளது. அது 7-சதுர அடியுள்ளது அதனுள்ளே கங்காதர மூர்த்தியின் சிலை வடிவம் உள்ளது. அது புடை சிற்பமாக அமைந்திருக்கிறது. அதன் நிலையும் முக அழகும் கண்டு களிக்கத் தக்கதாகும்.1 சிவபெருமானது சடையிலிருந்து விழும் கங்கையை அவர், மேலே உள்ள வலக்கையில் தாங்கி நிற்கிறார். பூணூலாக அணிந்துள்ள அரவத்தின் தலையை அவர் மற்றொரு வலது கையால் பிடித்தும், கீழேயுள்ள இடக்கையை இடுப்பில் வைத்தும் எழில் பெற நிற்பது போல் சிற்பி சிலையைச் சீர் பெறச் செதுக்கியுள்ளார். சிவபெருமானுடைய வலது சீர்பாதம் மேலே தூக்கி முயலகன் மீது வைத்து அழுத்திக் கொண்டு நிற்பது போல் காணப்படுகிறது. சிவபெருமானைச் சுற்றி நான்கு அடியவர்கள் வழிபட்டு நிற்கின்றனர். மேலே விண்ணில் யாழோர் (கந்தருவர்கள்) பறந்து கொண்டு நிற்கின்றனர். சிவபெருமான் தலைக்கு மேலே ஒரு சிறிய மனித உருவம் மேகத்தினின்று வெளியே கிளம்பி வருவது போல் செதுக்கப் பெற்றுள்ளது. அதன் தலையும் இடுப்பிற்கு மேற்பட்ட பகுதியும் நன்றாகத் தெரிகிறது. கைகளை உயர்த்தி வணங்குவது போல் காணப்படுகிறது. மற்றொரு பக்கம் ஒரு சிறிய விலங்கு காணப்படுகிறது. அது மானாக இருக்கலாம். மான் மாடு போல் படுத்திருக்கும் நிலையில் உள்ளது. அரங்கின் அடித்தளம் சென்னை பழம் பொருள் காட்சி சாலையில் உள்ள அமராவதிப் புடைசிற்பம் போல் பௌத்த சமய சிற்ப அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 3. மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் மண்டகப் பட்டு தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டாரத்தில் இருக்கிறது. இது விழுப்புரம் புகை வண்டி நிலையத்திற் வடமேற்கே 12-கல் தொலைவிலும் பாண்டிச்சேரிப் பக்கத்தில் உள்ள சின்னபாடி சமுத்திரம் புகை வண்டி நிலையத்திற்குத் தெற்கே 2-கல் தொலைவிலும் இருக்கிறது. மேலும் இது தளவானூருக்கு தென் மேற்கில் 6-கல் தொலைவிலும் இருக்கிறது என்று கூறலாம். மண்டகப் பட்டு என்னும் சிற்றூருக்கு மேற்கே அரைக்கல் தொலைவில் உள்ள குன்றின் வடக்கு பக்கத்தில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது. இந்தப் பல்லவர் குடைவரைக் கோயில் தளவானூர் கோயிற் பாணியில் உருவாக்கப் பெற்றுள்ளது. இங்கு சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் இல்லை. மண்டபத்தின் வெளிப் பக்கத்தில் இரு வாயில் காப்போர் உருவங்கள் உள்ளன. மண்டபத்தில் வடக்கு நோக்கி இரு சதுரத் தூண்கள் வழக்கம் போல் நடுவில் இருக்கின்றன. மண்டபத்தில் தூண்கள் மூன்று இடை வெளிகள் உள்ளதாக இருக்கின்றன. மண்டபத்தின் இரு கோடிகளிலும் இரண்டு பெரிய அரங்கங்கள் மண்டபத்தின் மூன்று இடைவெளிகளைப் போல் உருவிலும் பரப்பிலும் உள்ளன. கரடு முரடாக செதுக்கப் பெற்ற வாயில் காவலர் உருவங்கள் வாயிலின் இருமருங்கினும் நிற்கின்றன. இவ்வாயில் காப்போர்கள் வலது கையை இடுப்பில் வைத்துக் கொண்டும் இடது கையில் தடியைத் தாங்கிக் கொண்டும் நிற்பது போல் காணப்படுகின்றன. கிழக்குப் பக்கத்தில் நிற்கும் வாயில் காப்போன் தோற்றம் மற்றக் காவலன் உருவத் தோற்றத்தினின்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இயற்கையான பூமியினின்று கோயிலின் தளம் 4 அடி உயரத்தில் உள்ளது. பல பழம் பல்லவர்கள் கோயில்களைப் போல வாயிலை அடைவதற்கு தகுந்த படிகள் இன்றி இக்கோயிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயில் மண்டபம் நீண்ட சதுர அமைப்பில் உள்ளது 24 அடி நீளமும் 22 அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளதாக மண்டபம் திகழ்கிறது. (படம் III (இ) ) நான்கு சதுரத் தூண்கள் மேற் கூரையைத் தாங்கி நிற்கின்றன. பின் புறத்தில் தெற்குச் சுவரில் வடக்கு நோக்கி 4 அடி ஆழமான 3 மாடங்கள் உள்ளன. தரையைப் பிரித்து, ஒவ்வொரு மாடத்தின் பின் சுவருக்கும் எதிராக மூன்று சதுரத் துவாரங்கள் மாடத்தில் நிற்கும் சிலைகளைப் பார்ப்பதற்காகச் செய்யப்பட்டுள்ளன. இது தனித் தன்மை வாய்ந்த கோயில் போல் திகழ்கின்றது. இந்தச் சதுரத் துவாரங்கள் மூலம் தெளிவாகச் சிலைகளைப் பார்க்கலாம். ஆனால் கோயிலில் அமைக்கப் பட்டிருக்கும் சிவலிங்கத்தை அதன் வழியாகப் பார்க்க முடியாது. மேற்கூறிய சதுரத்துவாரங்கள் மூலம் சிவன், திருமால், நான்முகன் உருவங்களைப் பார்க்க மாடங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இப்பொழுது இங்கு திரு உருவங்கள் எதுவும் காணப்படவில்லை. இங்குள்ள கல்வெட்டு இங்கு சிவன் திருமால் நான்முகன் உருவங்கள் இருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்து கின்றன. இக்கோயிலில் உண்ணாழிகை முன் நிற்கும் வாயில் காப்பாளர்கள் பாம்பணிந்துள்ளார்கள். அதனால் நடுவில் உள்ள உண்ணாழிகையில் சிவபெருமான் திரு உருவம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் கோயில் அரசன் ஆணைப்படி கட்டப்பட்டு அவன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் அரசன் பெயர் விசித்திர சித்தன் என்று குறிப்பிடப்படுகிறது இப்பெயர் முதலாம் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயராகும். இந்தக் கல்வெட்டின் எழுத்துக்கள் தளவானூர்க் கல்வெட்டின் எழுத்துக்களைப் போன்று இருக்கின்றன. இவ்விரு கோயில்களும் அருகருகே ஒரு சில கல் தொலைவிற்குள் அமைக்கப் பட்டிருப்ப தோடு ஒரே விதமான பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் மண்டகப்பட்டு குடை வரைக் கோயில் மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூற முடியும். கல்வெட்டின் மூலம் கல், மரம், சுண்ணாம்பு, தாதுப் பொருள்களின் துணையின்றி பல்லவன் கோயில் அமைத்தான் என்று அறிகிறோம். ஆதலால் இக் கோயிலே மகேந்திரவர்மன் சைவந் தழுவிய பின் அமைத்த முதற் கோயில் என்று எண்ணப்படுகிறது. அழியாத ஆண்டவனுக்கு அழிவில்லாத கோயில்களை உருவாக்க வேண்டும் என்று மகேந்திரவர்மன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குகைகளைச் செதுக்கிக் கோயிலாக்கினான். அப்பால் மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கண்டான் என்று கல்வெட்டு ஆராய்ச்சிகளின் மூலம் அறிகின்றோம். 4- பல்லாவரம் குடை வரைக் கோயில் பல்லாவரம், செங்கற்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டையில் உள்ள சிற்றூராகும். பல்லாவரம் தென் இந்திய இருப்புப் பாதையில் உள்ள ஒரு புகைவண்டி நிலையம் ஆகும். இது பழைய பல்லாவரம், புதிய பல்லாவரம் என்னும் ஊருக்கு இரண்டு கல் தெற்கில் இருக்கிறது. எதிரே பல குன்றுகள் அரை வட்ட வடிவில் அமைந்துள்ளன. கீழ்பக்கம் உள்ள குன்று பஞ்ச பாண்டவர் மலை என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் பல்லவர் குடைவரைக் கோயில் உருவாக்கப் பெற்றிருக்கிறது. பல்லவர் புரம் பல்லாவரம் எனத் திரிபுற்றிருக்கிறது என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. பல்லவ அரச குடும்பத்தவர்கள் வாழ்ந்து வந்ததும் குடைவரைக் கோயில்களையுடையதுமான மூன்று பல்லாவரங் களில் இது ஒன்று. மகேந்திரவர்மன் எடுப்பித்த பல்லாவரம் குகைக்கோயிலில் இன்று சைவக் கோயிலின் சின்னங்கள் ஒன்றும் இல்லை. இப்பொழுது முலிம்களின் சமாதியாக மாற்றப்பட்டிருக்கிறது. இது முலிம்களின் ஆதிக்கத்திலே இருந்து வருகிறது. குகையில் சுண்ணாம்பு தீட்டப் பெற்றிருக்கிறது. இந்தக் குடை வரைக் கோயில் மண்டகப் பட்டுக் கோயிலைப் போல் இருக்கிறது. இதில் உள்ள மண்டபம் 32 அடி நீளமும் 12 ½ அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளது. இம்மண்டபத்தில் இரு வரிசையாக நான்கு நான்காக எட்டுத் தூண்கள் உள்ளன. தூண்கள் சதுர வடிவில் உள்ளன. தூண்கள் ஐந்து சம அளவுள்ள இடை வெளியுள்ளதாய் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு ஐந்து திரு உண்ணாழிகைகள் உள்ளன. உள்ளே சிலைகள் எதுவும் இல்லை. வாயில்காப்போர் உருவங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் காண முடியவில்லை. இக்கோயில் அமைப்பு மண்டகப்பட்டுக் கோயில் அமைப்பை ஒத்ததாகத் தெரிகிறது. வாயிலின் வலது பக்கம் உள்ள தூண் ஏனைய தூண்களைப் போல் எட்டுப்பட்டம் நடுவில் இருப்பதற்குப் பதிலாக அடியில் நடுப்பாகத்தில் இருக்கிறது. இது தவறாகச் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. தூணின் மேற்பகுதி பிற்காலத்தில் செதுக்கப்பட்டதாகக் கூற முடியவில்லை. மண்டபத்தில் உள்ள உட்புறத் தூண்களிலும் மேற்குப் பக்கத்தில் உள்ள பாறையிலும் பல்லவர் கல்வெட்டுகள் உள்ளன. இவை பல்லவ கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப் பட்டுள்ளன. அதில் பல்லவ மன்னர்களின் சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அதில் முதன் முதலாகக் காணப்படுவது சிரி மகேந்திர விக்கிரவர்மன் என்பதாகும். இதே பெயர் திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயிலிலும் உள்ளது. இந்தக் கல்வெட்டில் சிரி மகேந்திரவர்மன், விசித்திரசித்தன், மத்தவிலாசன் வலிதாங்குரன் சேத்தகாரி, பகாப்பிடுகு, சித்திரகாரப்புலி என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இந்த விருதுப் பெயர்கள் அனைத்தும் முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனுடையதேயாகும். இந்தக் குடைவரைக் கோயிலின் முன் மண்டபத்தின் பின்புறம் ஐந்து திரு உண்ணாழிகைகள் (கர்ப்பகிருகங்கள்) உள்ளன. அவைகள் 2½ அடிச் சதுரமாக உள்ளமாடங்கள் போல் காணப்படுகின்றன. இந்த அரைகளில் தான் சிலைகள் வைக்க மேடைகள் உள்ளன. முற்காலத்தில் இங்கு ஐந்து தெய்வச் சிலைகள் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. இன்று நடு அறையில் (உண்ணாழிகையில்) முலிம்களின் பீலி வைக்கப் பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள அரைகள் நான்கினும் ஒன்றும் காணப்படவில்லை. கடைசிப் பக்க அறைகளில் இரண்டில் கதவுகள் போட்டு பூட்டப்பட்டுள்ளன. இந்தக் குடைவரைக் கோயிலில் தீட்டப்பட்டுள்ள கல்வெட்டுகள் மீது அடிக்கடி சுண்ணாம்பு தீட்டப்பட்டு சுண்ணாம்பு அடையடையாகப் படிந்து எழுத்துக்களை மறைத்து விட்டது. கல்வெட்டுகள் இன்று படிக்க முடியாத நிலையில் உள்ளன. இந்தப் பழம் பெரும் பல்லவர் குடைவரைக் கோயில்களிலும் உள்ள சிலைகள், முலிம் மன்னர்கள் ஆட்சியின் போது அகற்றப்பட்டு அங்கு ஒரு முலிமைப் புதைத்து இது தர்கா என்று கூறப்பட்டு அது போற்றப்பட்டு வந்திருக்கலாம். ஆனால் அங்கு மகேந்திரவர்மன் காலத்து சிலைகள் இல்லாது இருப்பதை அறிந்த பிற்காலப் பல்லவர் புர மக்கள் உண்மையை உணராது. இக் கோயிலுக்கு பஞ்ச பாண்டவர் கோயில் என்று பெயரிட்டனர். அப்பெயரே இன்றளவும் வழங்கி வருகிறது. கல்வெட்டுகளில் மகேந்திரன் விருதுப் பெயர்கள் வட மொழியிலும் தெலுங்கிலும் உள்ளன. 5. மகேந்திர வாடிக் குடைவரைக் கோயில் இது வட ஆர்க்காடு மாவட்டத்தில் வாலாசாப் பேட்டை வட்டாரத்தில் சோளிங்கூர் (சோழ சிங்கபுரம்) புகைவண்டி நிலையத்திற்கு தென் கிழக்கில் மூன்று கல் தொலைவில் இருக்கிறது. மகேந்திர பாடி என்பதின் திரிபே, மகேந்திர வாடி என்று கருதப்படுகிறது. மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இவ்வூர் அமைக்கப்பட்டதால் மகேந்திர வாடி என்று பெயர் பெற்றது. இங்கு அதிகமாக வைணவப் பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஊருக்கு அருகில் ஒரு நல்ல குளம் உள்ளது. குளத்தின் பக்கத்தில் முற்காலத்தில் பெரிய அரண்கள் அமைக்கப்பட்டிருந்தது என்பதற்கு அடையாளமாக தரை மீது சுவர்கள் காணப்படுகின்றன. இங்குள்ள குன்றில் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் முன் மண்டபமும் திரு உண்ணாழிகையும் உள்ளது. மண்டபத்தின் இறுதியில் வாயில் காவலர் உருவங்கள் உள்ளன. (படம் IV (அ)) மண்டபத்தின் நடுவே சதுரமான நான்கு தூண்கள் இரண்டு வரிசையாக நிலை நாட்டப் பட்டுள்ளன. அவைகளில் ஏனைய பல்லவர்கள் தூண்களைப் போல் தாமரைப் பூ வடிவமுள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன. (படம் V (இ)) நீண்ட சதுரமான இம்மண்டபம் 18 அடி நீளமும் 13 ½ அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளது. நான்கு தூண்களும் மேற்கூரையைத் தாங்கி நிற்கின்றன. கிழக்கு நோக்கி இருக்கும் உண்ணாழிகையின் வாயிலின் இரு மருங்கினும் வாயில் காப்போர்கள் (துவார பாலகர்கள்) உருவங்கள் நின்ற கோலத்தில் உள்ளன. இக்கோயில் திருமால் கோயிலாகும். இதனை மகேந்திர விட்னுக் கிருகம் என்று அழைக்கப் பெறும். இங்கு ஒரு நரசிங்கப் பெருமான் சிலை உள்ளது. வாயில் காவலர்கள் உருவம் நிலையும் கைகளும் தளவானுர் கோயில் வாயில் காவலர்கள் உருவம் போல காணப்படுகின்றன. மண்டபத்தின் இடது பக்கத்தினின்று வடக்கு நோக்கி நிற்கும் முதல் தூணில் பல்லவர் கிரந்த எழுத்தில் ஒரு கல் வெட்டு உள்ளது.1 இதில் இக் கோயில் குணபரனால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில், குளம், ஊர் அனைத்திற்கும் மகேந்திரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 6. வல்லம் குடைவரைக் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற்பட்டுப் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கில் 2-கல் தொலைவில் வல்லம் என்ற ஊர் உள்ளது. இவ்வூர் திருக்கழுக்குன்றம் செல்லும் அரச பாட்டையில் இருக்கிறது. இங்குள்ள குன்றுக்குக் கிழக்குப் பக்கத்தில் மூன்று குகைகள் உள்ளன. இவற்றில் இரண்டு குகைகளில் வேலைப்பாடுகள் முற்றுப் பெறவில்லை. ஒரு கோயில் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிவன் கோயிலாகும். இக் கோயிலுக்கு திருவயந் தீசுவரமுடைய நாயனார் கோயில் என்று பெயர் கூறப்படும். இது தமிழகத்தில் உள்ள பழைய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் பழைய கல்வெட்டுகள் உள்ளன. அதில் கோயிலை உருவாக்கியவர்கள் யார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவத் தமிழ்க் கல்வெட்டாகும். மகேந்திரவர்மன் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ் கல்வெட்டு ஒன்றிரண்டே உள்ளன. அவைகளில் இது ஒன்று. (இந்தப் பல்லவத் தமிழ் எழுத்தின் அமைப்பை வாசகர்கள் அறியும் பொருட்டு அடுத்த பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது) இந்தக் கல்வெட்டு தென் இந்திய சாசனங்கள் தொகுதி II பகுதி II, 340, 341 - ஆம் பக்கங்களில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.1 அதன் வாசகம் அடியில் வருமாறு: பகாப்பிடு லளி தாங்குரன் சத்துரு மல்லன் குணபரன் மயேந்திரப் போத்தரசன் அடியான் வயந்தப்பிரி அரசரு மகன் கந்தசேனன் செய்வித்த தேவகுலம் இந்தக் கல்வெட்டின் கருத்து, பகாப்பிடு, லளிதாங்குரன் சத்துரு மல்லன் குணபரன் என்ற சிறப்புப் பெயர்களையுடைய மகேந்திரப் போத்தரசன் கீழ் குரு நில மன்னனாக இருக்கும் வயந்தப் பிரிய அரசன் மகன் கந்தசேனன் இந்தக் கோயிலை அமைத்தான் என்பதேயாகும். இங்கு குறிப்பிடப்பட்ட மகேந்திரவர்மன் முதலாம் மகேந்திர வர்மனேயாகும். இதனை அறிஞர் வேங்கையர் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார் இந்தக் கல்வெட்டு கி.பி 7-ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாகும்.2 இங்குள்ள இரு சிறு முற்றுப் பெறாத குடைவரைக் கோயில்களும் முக்கியமானவைகளேயாகும். பெரிய கோயில்கள் அதாவது முற்றுப் பெற்ற கோயில்களும் சீரற்றே கிடக்கின்றது. இந்தப் பெரிய கோயில் மேலச்சேரி கோயில் போல காணப்படுகிறது. மண்டபத்தின் தூண்கள் சாதாரணத் தூண்களாகவே இருக்கின்றன. சதுர வடிவமான திரு உண்ணாழிகையில் இலிங்கம் உருண்டை வடிவில் உருவாக்கப் பெற்றுள்ளது. இன்றும் இங்கு வழிபாடுகள் நடை பெற்று வருகின்றன. முன் மண்டபத்தில் பிற்காலத்தில் செங்கற் சுவர் எழுப்பி அடைத்து விட்டதால் கோயில் பெருமை குன்றிவிட்டது. உண்ணாழிகையின் முன் வாயிலில் இரு பக்கங்களிலும் வாயிற் காப்போர் உருவங்கள் காணப்படுகின்றன. தலையில் இரு கொம்புகள் உள்ளவர்களாயும் கையில் தடி தாங்கியவர்களாயும் வாயில் காவலர்கள் நிற்கின்றார்கள். கோயிலின் வெளியே குன்றின் மீது இளங்குழந்தை உட்கார்ந் திருப்பதைப் போல் உள்ள வலம்புரி விநாயகர் (பிள்ளையார்) உருவமும் சுவரில் மூதேவி (சேஷ்டா தேவி) உருவமும் காணப் படுகின்றன. பிள்ளையார் உருவம் பிற்காலத்தில் இடம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மண்டபத் தூண்களின் இடை வெளிகளில் செங்கற் சுவர் எழுப்பி மரக்கதவு இடப் பட்டுள்ளது. இந்தக் குடை வரைக் கோயில் கல்வெட்டு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது. இக் கோயிலுக்கு நுந்தா விளக்குத் தானம் செய்யப் பட்ட செய்தியைக் கூறுகிறது. சலபுவன சக்கரவர்த்திகள் சிரி கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 14-வது களத்தூர்க் கோட்டத்து வல்ல நாட்டு வல்லத்து உடையார் திருவயந்தீசுரமுடைய நாயனார்க்கு என்று இந்தச் சாசனம் தொடங்குகிறது.1 7. மேலைச் சேரி குடைவரைக் கோயில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் செஞ்சி நகருக்கு வட மேற்கில் 3-கல் தொலைவில் மேலச் சேரி என்னும் ஊர் உள்ளது. அது ஒரு சிற்றூராகும். அவ்வூருக்கு வடக்கில் சிறு கருங்கன் மலை மேற்கு நோக்கி இருக்கிறது. அதன் நடுவில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது. அங்குள்ள மக்கள் இதை மத்திலேவரர் கோயில் என்று அழைக்கிறார்கள். இது இன்னும் மக்கள் வழிபடும் கோயிலாக இருந்து வருகிறது. குடைவரைக் கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது. ஆனால் இதன் தோற்றத்தை மறைத்து அதன் முன் பக்கத்தை அடுத்து ஒரு மண்டபம் செங்கல்லால் கட்டி மேற்பூச்சு பூசப்பட்டிருக்கிறது. நடுவே இரு சதுரத் தூண்கள் உள்ளன. மண்டபத்தை மூன்று சம இடைவெளியிட்டுத் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு உட்புகும் மண்டபம் 19 அடி 9 அங்குல உயரமும் 8 அடி 9 அங்குல அகலமும் 6 அடி 8 அங்குல உயரமும் உள்ளதாக இருக்கிறது. பின்னர், குறுக்கிடும் கிழக்குச் சுவரும் மேற்கு நோக்கி இருக்கும் ஒரு சிறு கோயிலும் அதனுள் சிவ லிங்கமும் இருக்கிறது. அந்த சிறு கோயில் 8 X 4 X 8 7 பரப்புள்ளதாயும் அதே உயரம் உள்ளதாயும் உட்புகும் மண்டபம் போல் இருக்கிறது. கல்லில் செதுக்கப் பெற்ற இந்த இலிங்கம் வட்டமாக உருண்டை வடிவில் கீழே ஆவிடையாருடன் தரைக்கு மேல் 4 9 உயரமாக இருக்கிறது. இது பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் எவ்விதமான சிற்ப வேலைப் பாடுகளோ சிலைகளோ படிமங்களோ இல்லை. ஆனால் இங்குள்ள தூணின் மீது ஒரு பல்லவர் கல்வெட்டு உள்ளது. இது 1916-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சு பேராசிரியர் திரு. எச். சோவியோ துப்ரயல் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பல்லவர் பழம் பொருள்கள் என்னும் நூலின் முதல் தொகுதி 66ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு இந்தக் குடை வரைக் கோயில் சந்திராதித்திய அரசனால் கட்டப் பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுகள் எதுவும் காணப்பட வில்லை. சந்திராதித்தியன் என்னும் பெயர் பல்லவ மன்னர்களில் ஒருவருடைய பெயராக இருக்கலாம். ஆனால் இது எந்தப் பல்லவ அரசனின் விருதுப் பெயர் என்று நம்மால் கூற முடியவில்லை. வேறு எந்த கல்வெட்டுத் துறை நிபுணர்களும் இது வரை விளக்கமாகக் கூறவில்லை. இதனை நிழற் படமாக எடுக்க முடியவில்லை. இதன் தோற்றத்தை முன்னர் கட்டப்பட்டுள்ள செங்கற் சுவர் மறைத்து நிற்கிறது. ஆனால் ஒரு வரை படம் மட்டும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது ஆனால் இந்தக் குடைவரைக் கோயில் மகேந்திர பாணியில் உள்ளது. எனவே இது இங்கு வெளியிடப்பட்டுள்ளது. 8. சிங்கவரம் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் மேலச் சேரிக்கு ஒரு கல் தொலைவில் சிங்கவரம் என்னும் ஊர் உள்ளது. இங்கு பல்லவர்களால் எடுப்பிக்கப் பெற்ற குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. இது இரங்கநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது, மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலைப் போல் அனந்தசயனம் காட்சி தரும் பெரிய பாறையில் செதுக்கப் பெற்ற சிலையாக இருக்கிறது. இந்த உருவம் பிற்காலத்தில் செதுக்கப்பட்டது போல் காணப்படுகிறது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கோயில் முன்புள்ள குடை வரை மண்டபத்தில் சதுர வடிவான ஒற்றைக் கல் தூண்கள் உள்ளன. அது வழக்கமான சிற்பவேலைப்பாடுகளும் வழக்கில் உள்ள தாமரை மலர்களாலான வேலைப்பாடுகளுடனும் நிற்கின்றன. வாயிலின் ஒவ்வொரு சுவர் இறுதியிலும் வாயில் காப்போர் உருவம் உள்ளது. இது பெரிதும் தளவானூர் கோயில் மண்டபத்தின் வாயிலில் காணப்படுவதைப் போன்று காணப் படுகிறது. பேராசிரியர் சோவியோ துப்ரயல் அவர்கள், சிங்கவரம் எனப்படும் இவ்வூர்ப் பெயர் சிங்கபுரம் என இருக்கலாம் என்றும் இது சிங்கபுர நாடு என்னும் ஒரு கோட்டத்தின் தலை நகராக இருக்கலாம் என்றும் கருதுகின்றார். எனவே இந்தப் பெயர் பழமையானதும் வாயில் காப்போர் உருவங்கள் முதலாம் மகேந்திரவர்மன் பாணியில் காணப்படுவதும் சிங்கவரம் சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ மன்னனால் அடிப்படையிடப்பட்டு அவனுக்குப் பின் அவனது அரச கட்டிலை அடைந்த அவன் மகன் முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் அவனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு பல்லவர் கல்வெட்டு ஒன்றும் காணப்படவில்லை. அதோடு இங்கு ஏதாவது இருந்திருக்கும் என்ற அடையாளம் எதுவும் இல்லை. ஏனெனில் கோயிலின் மண்டபத்திற்கு எதிராக இப்பொழுது புதிதாகக் கட்டப்பட்ட மண்டபம் தூண்களின் அடிப்பகுதியை மறைத்து நிற்கிறது. கோயில் வழிபடுவதற்காக உள்ளது போல் இருக்கிறது. இக் கோயிலின் ஒரு பகுதியில் புரோகிதர்களின் பண்டங்கள் வைப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள பகுதிகள் அப்புறப்படுத்தப் பட்டது போல் காணப்படுகிறது. எனவே இந்தக் குடைவரைக் கோயிலைத் தோண்டிய மூல அரசன் யார் என்பதைக் கூறுவதில் பல்வேறு ஐயப்பாடுகள் காணப்படுகின்றன. 9. திருக்கழுக் குன்றம் குடைவரைக் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில், செங்கற்பட்டுப் புகைவண்டி நிலையத்தினின்று மகாபலிபுரம் அரச பாட்டையில் தென் கிழக்கில் 9-கல் தொலைவில் திருக்கழுக்குன்றம் என்னும் ஒரு சிற்றூர் உள்ளது. இவ்வூர் வேத கிரீசுவரர் மலை என்னும் அழகிய குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. வேத கிரீசுவரர் மலையின் உச்சியில் மற்றொரு சிறிய சிவன் கோயில் உள்ளது இக் கோயிலுக்குப் போக வேண்டுமானால் மலையின் தெற்குப் பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும். பாதி வழியில் கிழக்கு மேற்காகப் பாதை பிரிந்து செல்கிறது. கிழக்கே சென்றால் குடைவரைக் கோயிலை அடையலாம். இந்தக் கோயில் மலையுச்சியுள் வேத கிரீசுவரர் கோயிலுக்கு 50 அடி கீழே இருக்கிறது. இக் குடைவரைக் கோயிலை இங்குள்ளவர்கள் ஒற்றைக் கல் மண்டபம் என்று கூறுகிறார்கள்1 இக் கோயில் கிழக்கு நோக்கி குன்றின் சரிவிற்கு வெளியே இருக்கும் ஒரு பெரிய பாறையில் இருக்கிறது. மண்டபம் கிழக்கு நோக்கி சிற்ப வேலைப்பாடுகள் அதிகமின்றி எளிய முறையில் இருக்கிறது. இங்கு எழுதகங்கள் எதுவும் புடைத்துக் கொண்டு இருக்கவில்லை. மேலும் இங்கு பெரிய அறைகள் எதுவுமில்லை. மண்டபத்தின் இறுதியில் வாயில் காப்போர்களின் உருவங்கள் உள்ளன. இது தோற்றத்திலும், தரைப்படத்திலும் மகேந்திரவாடியிலுள்ள பல்லவர் கோயிலைப் போன்று காணப்படுகிறது. மண்டபத்தின் நடுவில் இரு சாதாரணத் தூண்கள் வழக்கம் போல் மண்டபத்தைப் பிரித்து சம அளவுள்ள மூன்று இடைவெளிகள் உள்ளதாக அமைக்கப் பட்டுள்ளது. மத்திய இடைவெளி, பூமியினின்று தளவரிசை 5 அடி உயரத்தில் உள்ளது. மேலே ஏறுவதற்குக் கற்படிகள் அமைக்கப் பட்டுள்ளன. மண்டபம் 22½ அடி நீளமும் 17 அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளதாக இருக்கிறது. இரு வரிசையாகத் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மேற்குச் சுவரை ஒட்டி திரு உண்ணாழிகை 8 அடி நீளமும் 7 அடி அகலமும் உள்ளதாக இருக்கிறது. கிழக்கு நோக்கி ஒரு சிறு வாயில் இருக்கிறது. உண்ணாழிகையின் தளம் மண்டபத் தளத்தினின்று 3 அடி உயரத்தில் உள்ளது. உண்ணாழிகையின் நடுவில் சிவலிங்கம் சீர் பெற நிலைநாட்டப் பெற்றுள்ளது. வாயிலில் காவலர் உருவங்கள் உள்ளன. வாயில் காப்போர்கள் இரு கைகளை உடையவர்களாய்க் காணப் படுகின்றனர். ஒரு கையை மடக்கி இடுப்பின் மீது வைத்திருக் கின்றனர். மற்றொரு கையில் பெரிய தண்டாயுதத்தை வைத்திருக் கின்றனர். அவர்களது தலைப்பாகையும், நிற்கும் நிலையும் அமைப்புப் பாணியும் மகேந்திரன் காலத்தில் உள்ளவைகள் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. உண்ணாழிகையின் மேல் வாயிலில் வழக்கம் போல் கார்னி புடைத்துக் கொண்டு இருக்கிறது. பல கணிகளின் அணிகளும் உள்ளன. மாடங்களுக்குக் கீழே படிகளின் ஒவ்வொரு பக்கமும் உண்ணாழிகையின் வெளியே யுள்ள அடித்தளத்தில், திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயிலை யொத்த சிற்ப வேலைப்பாடுகள் இருவரிசைகளாக இலங்குகின்றன. திரு உண்ணாழிகையின் பின் புறத்தில் உள்ள கற் சுவர் மீது இருகோடிகளிலும் புடை சிற்பமாக நான்முகன் திருமால் ஆகிய தெய்வங்கள் நின்று கொண்டு இருக்கும் நிலையில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரு உருவங்களும் தனித் தனியே நான்கு கைகள் உடையதாகச் செய்யப்பட்டுள்ளன. நான் முகன் உருவம் உண்ணாழிகையின் தெற்குப் பக்கத்தில் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு குழிப்பான சிறப்பான தலை அணியோடு காணப்படுகிறது. திருமால் உருவம் மாமல்லன் காலத்தைச் சேர்ந்த மாபலிபுரம் ஏழு பகோடா கோயில்களில் உள்ள பிந்திய கால சிலைகள் சிலவற்றைப் போன்று திகழ்கின்றது. உண்ணாழிகையின் வாயிலைக் காவல் புரிந்து நிற்கும் இரு வாயிற் காப்போர்களின் உருவத்தை விட நான்முகன் திருமால் சிலைகள் காலத்தால் பிந்தியவைகளாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் மூலக் கோயில் சிவ பெருமான் திருக்கோயிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இந்து மத எழுச்சியில் மும்மூர்த்திகள் - நான்முகன் திருமால் சிவன் ஆகிய தெய்வங்களை வழிபடும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. இப்பொழுது இக் கோயிலில் அன்றாடப் பூசை எதுவும் நடைபெறவில்லை. ஆனால் மக்கள் அடிக்கடி வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கு ஒரு தல புராணம் உண்டு. அதில் இரு முனிவர்கள் சாபத்தினால் பறவையாக மாறி தங்கள் சாபம் நீங்க வழிபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பரிசுத்த முனிப் பறவைகள் இன்றும் ஒழுங்காக மாலை தோறும் மலைக்குப் போந்து திருக்கோயிலைத் தெரிசிக்க வருகிறது. பூசாரி கைகளின் மூலம் கொடுக்கும் சோற்றைப் பெற்றுச் செல்லுகிறது. பிரதான மண்டபத்தின் வடக்குத் தெற்குச் சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றை யொன்று பார்த்துக் கொண்டு நிற்கும் நிலையில் சுமார் 5 அடி உயரத்தில் இரு வாயிற் காப்போர் உருவங்கள் நிற்கின்றன. அவைகள் உயர்ந்த புடை சிற்பமாக கண்ணைக் கவரும் முறையில் மூலப்படிமத்தினின்று படியெடுத்த உருவம் போல் செதுக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் இரு கைகளை உடையதாய் ஒரு கை மேலேயுயர்த்தி வழிபடுவது போலவும் மற்றொரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது போலவும் காணப்படுகிறது. அவைகள் வழக்கமான நீண்ட தலை அணியும் அணிகலன்களும் உடையதாய்த் தளவானூர் திரு உண்ணாழிகையின் வாயிலின் இரு பக்கங்களிலும் நிற்கும் இரு வாட்போர்களைப் போல் காணப்படுகின்றனர். இந்தக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுப் படிக்கப்பட்டுள்ளன. 1908-1909-ஆம் ஆண்டைய தெற்குப் பகுதிக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையினர் ஆண்டு அறிக்கையின் 73-76ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கோயிலுக்குச் சென்றதும் முதன் முதலாக நமது கண்களில் காணப்படுவது 17-ஆம் நூற்றாண்டில் உலாந்தாக்காரர்களின் (டச்சுக்காரர்கள்) எண்ணற்ற கையொப்பங்கள் உள்ள கல்வெட்டுகள் மட்டும் காணப்படுகின்றன. உலாந்தா அதிகாரிகள் குழுவொன்று பக்கத்தில் உள்ள சத்ரா துறைமுகத்தினின்று பார்வையிட்டது சம்பந்தமாகக் காணப் படுகிறது. சுவர்களிலும், தூண்களிலும் உள்ள எல்லா இடங் களிலும் இந்தக் கையொப்பங்களால் நிரப்பப்பட்டுள்ளன. பின் பக்கத்திலுள்ள தூண்கள் ஒன்றின் தலைப்புறுப்பில் பழந்தமிழ் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டின் தொடக்கப் பகுதி சீர்குலைந்துள்ளது. அதோடு எக்காரணத்தி னாலோ இறுதிப் பகுதி நிறைவு பெறாதிருக்கிறது. ஆனால் மற்றப் பகுதிகள் நன்றாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப முதல் இறுதி வரை வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரசர் என்ற பெயர் தெளிவாகக் காணப்படுகிறது. இது முதலாம் மகேந்திர வர்மப் பல்லவன் மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வரையப்பட்ட கல்வெட்டு என்று உறுதியாகத் தெரிகிறது. இது, முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 642-இல் மேலைச் சாளுக்கியர்களின் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டியதை நினைவூட்டுவதாக வரையப்பட்டது. வாதாபி பம்பாய் மாநிலத்தில் உள்ளது. வாதாபியை வெற்றி கொண்டதால் முதலாம் நரசிம்ம வர்மன் வாதாபி கொண்டான் என்ற தமிழ்ப் பட்டத்தைச் சூடிக் கொண்டான். ஆனால் இந்தக் குடைவரைக் கோயிலை யார் நிர்மாணித் தார்கள் என்று கூறக் கூடிய அகச் சான்றுகள் ஒன்றும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால் இத்திருக்கோயிலின் பாணியும் அமைப்பு முறைகளும், கட்டிடக் கலையின் தோற்றமும் இது மகேந்திரவர்மன் காலத்தியவை என்று உறுதியாகக் கூறக் கூடியவைகளாய் இருக்கின்றன. இங்குள்ள திருமால் நான்முகன் உருவங்கள் ஒரு வேலை நரசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. ஒரு சிலர் மகேந்திரவர்மன் காலத்தில் இக்கோயில் பணி தொடங்கப் பெற்று நரசிம்மவர்மன் காலத்தில் நிறைவெய்தி இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். நரசிம்மவர்மன் வாதாபியை வெற்றி கொண்டது. கி.பி. 642-ஆம் ஆண்டாகும். அவனுடைய படைத்தலைவர்களில் ஒருவர் சிறுத் தொண்ட நாயனார் என்னும் சைவப் பெரியார் ஆகும். பெரிய புராணத்தில், மன்னவர்க்குத் தண்டு போய் வட புலத்து வாதாபித் தென்னகரைத் துகளாகத் துளைநெடுங்கை வரையு கைத்துப் பன்மணியும் நிதிகுவையும் பட்டினமும் பரித்தொகையும் இன்ன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன் கொணர்ந்தார். (பெருய சிறுத் தொண்டர்: 6) என்று கூறுவதன் மூலம் நரசிம்மன் வாதாபியைக் கொண்டது சிறுத் தொண்டர் மூலம் என்று தெரிகிறது. திருக்கழுக்குன்றம் வேத கிரீசுவரர் கோயிலில் உள்ள அறையின் மேற்குச் சுவரில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அதை காலஞ் சென்ற திரு வெங்கையா அவர்கள், படியெடுத்துப் படித்து புத்தகமாக அளித்துள்ளார். மூலத்தானக் கோயிலுக்கு கந்தசிசிய மன்னன் என்னும் பல்லவ மன்னன் மானியம் அளித்ததையும் முதலாம் நரசிம்மவர்மனால் அது புதுப்பிக்கப்பட்டதையும் பிற்காலத்தில் சோழ அரசன் முதலாம் இராச கேசரிவர்மன் அதனை மீண்டும் புதுப்பித்ததையும், ஆதிக் கல்வெட்டை உறுதிப் படுத்துவதாக இருக்கிறது. ஒற்றைக் கல் மண்டபத்தில் மூலத்தான கோயிலுக்கு நரசிம்மவர்மன் அளித்த தானம் அவனது கல்வெட்டில் காணப்படுவதோடு இராசகேசரிவர்மன் கல்வெட்டில் அது உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒற்றைக் கல் மண்டபத்தின் ஆதி மூலத்தானத்தில் உள்ள இலிங்கம் அகற்றப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. தென் இந்தியாவில் உள்ள திருக்கழுக்குன்றத்து சைவத் திருக்கோயில் களிலெல்லாம் மிகத் தொன்மையான தொன்றாக கந்தவர்மனால் உருவாக்கப் பட்டதாகும். வேதகிரீசுவரர் கோயில் மலை நடுவே குடைந்து உருவாக்கப் பெற்றது. இது மிகத் தொன்மை வாய்ந்த கோயில்களில் ஒன்று இதில் சில பகுதிகள் பிற்காலத்தில் உருவாக்கப் பெற்றது. பிரதான கோயில் மூன்று பெரிய கல்பாளங்களால் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே சுவர்கள் மீது புடைசிற்பங்களால் பல உருவங்கள் ஆக்கப்பட்டன. அது அடியில் வருமாறு; (1) மேற்குச் சுவர் மீது - சிவனும் பார்வதியும் நடுவே இள முருகனோடு வீற்றிருக்கும் சோமகந்த சுகாசனமூர்த்தி உருவம் உள்ளது. தென் பக்கத்தில் நான்முகனும் வட பக்கத்தில் திருமாலும் காணப்படுகிறார்கள். கீழே சிவபெருமான் திருவடிகளின் கீழே மார்க்கண்டன் அமர்ந்துள்ளார். (2) தெற்குச் சுவர் மீது - கையில் ஆயுதத்துடன் சண்டிகேசுவரரும் நந்திக்கேசுவரரும் இருக்கிறார்கள். சோமகந்த அரங்கம் பிரதான கோயிலின் பின்புறச் சுவர் மீது செதுக்கப் பெற்றுள்ளது. இந்தக் கோயில் ஒற்றைக் கல் மண்டபத்தை விடப் பிந்தியது. மலை உச்சியில் சில அடிகளுக்கு அப்பாலிருந்து கோயில் வரை கற்படிகள் செதுக்கப்பட்டுள்ளன. பூமியில் கருங்கல் தூண் இருக்கும் பாதைப் பக்கத்தில் நிலை நாட்டப்பட்டுள்ளது. அதில் இராச சிம்மன் பாணியில் கட்டப்படும் கோயில் வழக்கமாகப் பெரிதும் காணப்படும் சிங்கங்கள் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் தூணின் தோற்றம் இராச சிம்மன் காலத்தைச் சேர்ந்த பல்லவர்கள் குகைக் கோயில் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. எனவே இக்கோயில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்கு முந்திய காலத்தில் உள்ள பல்லவர்களின் அரண் என்பதை மெய்ப்பிப்பதற்கு போதிய சான்றாக இருக்கிறது. (3) வடக்குச் சுவர் மீது - யோக தட்சணாமூர்த்தி காணப் படுகிறார். அவருக்கு அருகில் சிவ பெருமானின் சாபத்தைப் பெற்ற இரு முனிவர்கள் இருக்கின்றார்கள். அவ்விருவர்களும் புனிதப் பறவையாக மாறி மலைக்கு நாடோறும் வந்து கண்டு உணவு பெற்று செல்கிறார்கள். 10. சீய மங்கலம் குடைவரைக் கோயில் சீயமங்கலம் வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் உள்ளது. இது தேசூரில் இருந்து தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ளது. சீயம் என்பதற்குச் சிங்கம் என்று பொருள் கொள்ளப்படும். எனவே இது மகேந்திரவர்மன் தந்தை சிம்ம விட்ணுவின் பெயரால் இவ்வூர் எழுந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இந்தக் கோயில் ஏனைய பல்லவர் குடைவரைக் கோயில் களைப் போல் முன் மண்டபத்தையும் உண்ணாழிகையும் உடையது. உண்ணாழிகையின் உள்ளே சிவலிங்கமும் வாயிலின் இரு மருங்கினும் வாயில் காப்போர் உருவங்களும் உள்ளன. இஃதன்றி மண்டபத்தின் இரு கோடிகளிலும் இரு போர் வீரர் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த உருவங்கள் கையில் கேடயமும் வாளும் தாங்கி நிற்கின்றன. இத்தகைய உருவங்கள் ஏனைய கோயில்களில் காணப்படவில்லை. மண்டபத்தில் உள்ள தூண்களில் சிங்க உருவம் நின்று கொண்டு முன்காலைத் தூக்கி நிற்பது போல் காணப்படுகின்றது. வழக்கம் போல் தாமரைப் பூவும் உள்ளது. இந்தக் குடைவரைக் கோயிலின் முன்புறத்தில் தூண்களின் இடை வெளியில் செங்கல் சுவர் எழுப்பி கோயிலுக்குள் காற்றும் வெளிச்சம் வராதபடி தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் கோயிலுக்குள் எப்பொழுது இருள் சூழ்ந்து இருக்கிறது. இந்தத் தடுப்புச் சுவர் பிற்காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள கல்வெட்டில் கோயிலை அமைத்தவன் லலிதாங்குரன் என்றும் கோயிலின் பெயர் அவனபாசன பல்லவேசுவரம் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது சாசனத்தில் லலிதாங்குரேண ராஜ்ஞாவ ரிபாஜன பல்லவேவரந்நாம் காரிதமே தத் ஸவேதா கரண்ட மிவபுண்ய ரத்நாநம் என்று கூறப்பட்டுள்ளது1. சீயமங்கலம் குடைவரைக் கோயில் தளவானூர்க் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இக்கோயில் சிம்ம விட்னுவின் காலத்தில் தொடங்கப் பெற்று அவன் மகன் மகேந்திரவர்மன் காலத்தில் முற்றுப் பெற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 11. குரங்கணின் முட்டம் குடைவரைக்கோயில் குரங்கணின் முட்டம், வட ஆர்க்காடு மாவட்டத்தில் செய்யாறு வட்டாரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து தென் மேற்கே மூன்றுகல் தொலைவில் இருக்கிறது. இது சைவ சமய நாயன்மாரால் பாடல் பெற்ற கோயில். குரங்கணின் முட்டத்துக்கு அருகில் பல்லாவரம் (பல்லவ புரம்) என்ற ஊர் உள்ளது. அதன் அருகில் ஒரு குடைவரைக் கோயில் உண்டு. இது பஞ்ச பாண்டவர் மலை என்று கூறப்படுகிறது. பல்லவபுரம் என்ற மூன்று ஊர்களில் இது ஒன்று. இது ஏனைய குடைவரைக் கோயிலை விட புதிய முறையில் உள்ளது. மண்டபமும் எதிரில் மூன்று திரு உண்ணாழிகைகளும் மண்டபத்தின் இரு மருங்கினும் இரு திரு உண்ணாழிகைகளுமாக ஏழு திருஉண்ணாழிகைகள் உள்ளன. இங்கு முற்காலத்தில் சிலைகள் இருந்த அடையாளங்கள் உள்ளன. இப்பொழுது எதுவும் இல்லை. இங்கு ஒரு கல்வெட்டு உள்ளது. அது தஞ்சையையும் காஞ்சியையும் வென்ற இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்ணனின் 24 ஆண்டைய சாசனம். அதில், அவனால், ஆழ்வாரின் சிரிபலிக்காக இவ்வூரார் அளித்த நிலதானத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனால் இது பெருமாள் கோயில் என்று கருதப்படுகிறது. ஆனால் இக் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் எல்லாம் சைவ சமய சம்பந்தமானதாகவே காணப்படுகின்றன. உண்மையில் இக்கோயில் சிவன், திருமால் நான்முகன் ஆகியவர்களுக்காக உருவாக்கப்பட்ட கோயிலாகும். மண்டபத்திற்கு முன் உள்ள மூன்று உண்ணாழிகை களில், தெற்கில் உள்ள உண்ணாழிகை வாயிலில் மீசை தாடியுள்ள வாயில் காப்போர்களும், நடுவில் உள்ள உண்ணாழிகையில் கொம்பு போன்ற அணியையுடைய வாயில் காப்போரும் வடக்கிலுள்ள உண்ணாழிகையில் தாடி மீசையில்லாத வாயில் காப்போர்களும் காணப்படுகின்றனர். மண்டபம் 28 அடி 4 அங்குல நீளமும் 14 அடி அகலமும் 8 அடி 4 அங்குல உயரமும் உள்ளது. தூண்டுகள் இரண்டு வரிசையாக நான்கு சதுரத் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது மகேந்திரன் காலத்துத் தூண்கள் போன்றிருக்கின்றன. தூண்கள் அமைப்பு வாயில் காப்போர் உருவ அமைப்பு முதலியவைகள் மகேந்திரன் காலத்தவை என்று எடுத்துக் காட்டுகின்றன. இங்கு கல்வெட்டுகள் காணப்படவில்லை. மண்டபத்து முன் பக்க பல்லவ கிரந்த எழுத்து இருந்து அழிக்கப்பட்ட அடையாளம் காணப்படுகிறது. 12. கீழ் மாவிலங்கைக் குடைவரைக் கோயில் கீழ் மாவிலங்கை தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் இருக்கிறது. இங்குள்ள கோயில் பழம் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப் பெற்ற ஒரு சிறு குடை வரைக் கோயிலாக எண்ணப்படுகிறது. இது திண்டிவனம் புகைவண்டி நிலையத்தினின்று 7-கல் தொலைவில் இருக்கிறது. ஊருக்கு வெளியே கழனிகளின் நடுவே பல பெரிய கருங்கல் பாறைகளுக்கு இடையே இக்குடைவரைக் கோயில் இலங்குகிறது. இக் கோயிலின் உண்ணாழிகை 5 அடி உயரமும் 3 அடி உயரமும் உள்ளதாய் வட கிழக்கு முகமாக அமைந்திருக்கிறது. இங்கு சுவரில் புடை சிற்பமாக திருமால் உருவம் கரடு முரடாகச் செதுக்கப் பெற்றுள்ளது. இந்த சிலை 4 அடி 4 அங்குல உயரம் உள்ளதாய் நான்கு கைகள் உள்ளதாய்க் காணப்படுகிறது. இடது புறமுள்ள மேற்கையில் சங்கும் இடது புறமுள்ள கீழ்க்கை இடுப்பில் வைக்கப்பட்டுள்ளது. இடது புறமுள்ள மேற்கை உயர்ந்து சக்கரம் ஏந்தியதாய்த் திகழ்கிறது. வலது புறமுள்ள கீழ்க்கை அபய முத்திரை அமைந்ததாய் இருக்கிறது. சங்கும் சக்கரமும் அக்கினிச் சுவாலை இன்றி இருப்பதால் பழம் பல்லவர்கள் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சிற்பமாகக் கருதப்படுகிறது. இத் திருஉருவம் வழக்கமான உயர்ந்த மகுடமும் அணிகளும் அருமையான ஆடைகளும் அணிந்து அழகுடன் திகழ்கிறது. தலை, மார்பு கைகளில் எண்ய் பூசி மக்கள் வழி பட்டு வருகிறார்கள். இந்தக் கோயிலைச் சுற்றி வாழும்மக்கள் இந்தச் சிலையை அலங்கோலப்படுத்தி அதை நிழற்படம் எடுக்க முடியாத வாறு செய்துள்ளார்கள். கோயில் வாயில் குறுகியதாய் பாறையின் வெளியே தோண்டப்பட்டு மேடு பள்ளமாய்க் கிடக்கிறது. ஒவ்வொரு வாயிலின் வெளிப்புறமும் கரடு முரடாக நிறைவெய்தாததாக வாயிற் காப்போர்கள் நிற்பது போல் காணப்படுகிறது. கோயிலின் வாயில் முன்புறமாக இல்லை. இதனுடைய தோற்றத்தை ஆராய இங்கு கல்வெட்டுகள் ஒன்றும் இல்லை. ஆனாலும் ஏழாவது நூற்றாண்டில் உருவாக்கப் பெற்ற பல்லவர்கள் கோயில் என்று லாங்கர்ட் போன்ற பல அறிஞர்கள் கருதுகிறார்கள் ஒரு சிலர் தான் இது மன்னன் மகேந்திரவர்மனால் உருவாக்கப்பட்டது என்று கருதுகிறார்கள். 13. சித்தன்ன வாசல் குடைவரைக் கோயில் அண்ணல் வாயில் அறிவன் கோயில் என்று கூறப்படும் பல்லவர் குடைவரைக் கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இது அன்னல் வாசல் என்னும் ஊருக்குக் கிழக்கே அரைக்கல் தொலைவில் உள்ள சிறு குன்றை அடிப்பகுதியில் குடைந்து இக் கோயிலை அமைத்துள்ளார்கள். இது மக்களால் சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் என்று கூறப்படுகின்றன. அறிஞர்கள் அண்ணல் வாயில் அறிவன் கோயில் என்று அழைக்கிறார்கள். இது ஒரு சமணக் குடைவரைக் கோயில். இக் கோயிலில் முன், முக மண்டபமும் அப்பால் உண்ணாழிகையும் இருக்கிறது. முக மண்டபம் 22 அடி 10 அங்குல நீளமும் 11-அடி 6 அங்குல அகலமும் உள்ளது. மண்டபத்தை இரு சதுர வடிவமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. உண்ணாழிகை 10 அடி 6 அங்குல நீளமும் 10 அடி 6 அங்குல அகலமும் உள்ள ஒரு சதுர திருஅறையாக இருக்கிறது. இதன் வாயில் 5 அடி 7 அங்குல உயரமாகவும் 2 அடி 6 அங்குல அகலமுமாக அமைந்திருக்கிறது. உண்ணாழிகையின் உள்ளே மூன்று பக்கமும் உள்ள சுவர்களில் மூன்று அருகக் கடவுளின் புடை சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை நாம் இதுவரை ஒரு ஓவியக் கருவூலமாகவே எண்ணி வந்தோம். ஆனால் இது ஒரு குடை வரைக் கோயிலாகவும் போற்றத்தக்கதாகும். இது சமணர்கள் அமைத்த அற்புதமான பொற்புறும் புனித பள்ளியாகும் இங்குள்ள மூன்று புடை சிற்பங் களும் முக்குடைகளுடன் காணப்படுகிறது. உண்ணாழிகை யின் இரு கோடிகளிலும் எதிர் எதிரே இரு உருவங்கள் உள்ளன. வட புறத்தில் உள்ளது. குடையுடனும் தென்புறத்தில் உள்ளது ஐந்து தலைப் பாம்புடனும் காணப்படுகின்றன. கி.பி.862-ஆம் ஆண்டில் பாண்டியப் பார்வேந்தன் அவனிப சேகரன் சிரிவல்லபன் காலத்தில் எழுதப் பெற்ற கல்வெட்டு ஒன்று இக் கோயிலின் அண்மையில் காணப்படுகின்றது. அதில் மதுரையாசிரியன் இளங்கௌதமனால் இக் கோயில் மண்டபம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணல் வாயில் அறிவன் குடைவரைக் கோயிலுக்கு வட கிழக்கே பாறை மீது பதினேழு கற்படுக்கைகள் அமைந்துள்ளன. அவைகள் நல்ல மழு மழுப்பாகச் செதுக்கப் பெற்றுள்ளன. படுக்கையின் தலைப்பக்கம் தலையணை போல் சற்று உயரமாகச் செய்யப்பட்டுள்ளன. சமண முனிவர்கள் கற்படுக்கையில் படுத்து உறங்குவர். இங்கு பிராமி வரிவடிவத்தில் செதுக்கப்பெற்ற கல்வெட்டுகள் உள்ளன. அவைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பெற்றவை. மகேந்திர காலத்தில் அதாவது ஏழாவது நூற்றாண்டில் வரையப் பெற்ற கல்வெட்டுகளும் உள்ளன. இதில், தொழக் குன்றத்துக் கடவுளன் நீலன், திருப்பூரணன் திட்டைச் சாணன், திருச்சாத்தன், சிரிபூரணச்சந்திரன் நியத் கரன் g£l¡fhÊ............த்ö®¡ கடவுளன் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. முனிவர்களைக் கடவுளன் என்று சமணர்கள் கூறிக் கொள்வார்கள். குன்றின் மீதுள்ள கற்படுக்கைக்கு செல்லும் இக்கட்டான இந்தப் பாதைக்கு ஏழடிப்பாட்டம் என்று கூறப்படுகிறது. இந்தக் குடைவரைக் கோயிலின் முக மண்டபம் இடிந்து விழவே சமண முனிவர்கள் தங்கள் கோயிலை பழுது பார்த்துத் தருமாறு பாண்டியன் அவனிபசேகரன் சிரிவல்லபனை வேண்ட அவனும் சமய வேற்றுமைபாராது கலை அழகைக் காப்பாற்றக் கருதி அறிவன் கோயில் மண்டபத்தைப் பழுது பார்த்துக் கொடுக்குமாறு ஆணையிட்டான். அதனால் மண்டபத்தின் முன்புறத் தூணில் பாண்டியன் அவனிபசேகரன் சிரிவல்லபனையும் அவன் மனைவியையும் அழகிய ஓவியமாக எழுதப்பட்டிருக்கிறது. இது மகேந்திரனும் அவன் மனைவியும் நிற்கும் கோலத்தில் தீட்டப்பட்ட ஓவியம் என்று கூறுவாறும் உண்டு. ஆனால் பாண்டியனும் அவன் மனைவியும் நிற்கும் கோலத்தில் தீட்டப்பட்ட ஓவியம் என்பதற்கே நல்ல சான்றுகள் உள்ளது. அறிவன் கோயிலுக்கு அண்மையில் உள்ள கல்வெட்டு அதற்கு அரும் பெரும் சான்றாகத் திகழ்கின்றது. மேலும் அண்ணல் வாயில் அறிவன் கோயில் மகேந்திரவர்மன் காலத்தது அல்ல என்றும் சிலர் கருதுகிறார்கள்.1 நாமக்கல் குடைவரைக் கோயில் நாமக்கல் சேலம் மாவட்டத்தில், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள ஒரு பேரூர் ஆகும். இவ்வூரில் புகுந்த உடன் பெரிய குன்றும் குடைவரைக் கோயிலும் காட்சி அளிக்கின்றன. இங்குள்ள பள்ளி கொண்ட பெருமானின் திரு உருவம் மிகச் சிறந்த வேலைப்பாடு உடையது. இந்தக் குடைவரைக் கோயில் மிக அற்புதமான அமைப் புடையது. முன் மண்டபத்துக்கு வெளியே, மூங்கிலால் செய்த தாழ்வாரத்தைப் போல் மலையைக் குடைந்து மாண்புற நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கோயில் சுவர்களில் திருமாலின் அவதாரம் அழகுறச் சிற்பவடிவில் சீர் பெறச் செதுக்கப்பட்டுள்ளன.1 இந்த அத்தியாயம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. Epigraphia Indica Part V Vol XII Jan 1914. 2. South Indian Inscriptions Vol I Vol II Nos 33 & 34 PP 28-30 3. Epigraphia, Indica Vol III P 277 4. Pallava Architecture No-17. Part I (Early Period) by A.H. Lonchurst (1924) Simla. 5. Proceedings of the Indian History congress 7th Session Madras. PP 168-176 6. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1955. மாமல்லபுரம் குடைவரைக் கோயில் மாமல்லபுரம் சென்னை பட்டினத்திற்கு தென் புறம் 40-கல் தொலைவில் உள்ளது. இது செங்கற்பட்டு மாவட்டத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. மாமல்லபுரம் செங்கற்பட்டு புகைவண்டி நிலையத்தினின்று 20- கல் தொலைவில் இருக்கிறது. மாமல்லபுரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கப்பெறும். இந்த மாமல்லபுரம் பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியது. இவ்வூர் முன்னர் மல்லை என்று அழைக்கப்பட்டு வந்தது. மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் தனது சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்ற பெயரை இப்பட்டினத்திற்குச் சூட்ட நினைத்து மாமல்லபுரம் என்ற பெயரால் அழைக்கும்படி செய்தான். மாமல்லபுரத்தில் பல குடைவரைக் கோயில்களும் இரதங்கள் என்று அழைக்கப்படும் ஒற்றைக்கல் கோயில்களும் உண்டு. இவைகளில் மகேந்திரவர்மன் கோடிக் கால் குகை பஞ்சமூர்த்தி குடைவரைக் கோயில் தர்மராச மண்டபம் ஆகியவைகளை அமைத்தான் என்று அறிஞர்களால் முடிவு கட்டப்பட்டுள்ளது. கிறிதவ சகாப்தம் அரும்பும் முன்னரே மாமல்லபுரம் உலகப் புகழ் வாய்ந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க மாலுமி ஒருவன் எழுதிய பெரிப்ளூ ஆவ் தி எரித்ரியன் சீ என்ற நூலில் மாமல்லபுரம் இடம் பெற்றுள்ளது. கிரேக்க பூதத்துவ நிபுணர் தாலமி இத்துறைமுகத்தை மலாங்கே என்று குறிப்பிட்டுள்ளார். மார்க்கபோலோ என்ற இத்தாலிய நாட்டு வழிப் போக்கனும் தனது பயணக் குறிப்பில் இந்தக் கோயிலின் சிகரங்களைக் கண்டதாக எழுதியுள்ளான். இப்பட்டினம் முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்த இடம் என்று கூறப்படுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமானை திருமங்கையாழ்வார், புலன்கொள் நிதிக் குவை யொடு புழைக் கை மாகளிற்றினமும் நலங்கொள் நவமணிக் குவையும் சுமந்தெங்கும் நான்றொசிந்து கலங்கள் இயங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம் வலங்கொள் மனத்தார வரை வலங் கொள்ளென் மட நெஞ்சே என்று பாடியுள்ளார். 1. கோடிக்கால் மண்டபம் கோடிக்கால் மண்டபம் என்று கூறப்படும் மாமல்லபுரம் குடைவரைக் கோயில் ஒரு சிறு தனித்த குன்றின் மீது குடையப் பட்டுள்ளது. இது மேற்கு முகமாக இருக்கிறது. இது திரி மூர்த்தி மண்டபத்திற்கு சிறிது தொலைவில் இருக்கிறது. இதனைத் திரௌபதை மண்டபம் என்று கூறுவாறும் உண்டு. இது மகேந்திரவர்மன் அமைத்த மகேந்திரவாடிக் குடைவரைப் போல் காணப்படுகிறது.1 இங்கு கல்வெட்டுகள் ஒன்றும் காணப்படவில்லை. இக் குடைவரைக் கோயிலின் முன் மண்டபம் பல்லவர்களின் ஏனை குடைவரைக் கோயில்களைப் போல் அமைந்திருக்கும். இதில் உண்ணாழிகையும் உள்ளது. முன் உள்ள மண்டபம் 21-அடி 10-அங்குல நீளமும் 8 அடி அகலமும் 8-அடி 3-அங்குல உயரமும் உள்ளதாக இருக்கிறது. மண்டபத்தின் முன்புறம் இரு தூண்கள் உள்ளன. அவைகள் நடுவில் எட்டுப்பட்டையாகவும் மேலும் கீழும் சதுரமாகவும் செய்யப்பட்டுள்ளன. இக் கோயில் கொற்றவைக்காக அமைக்கப்பட்டதாகும். எனவே இந்தக் குடைவரைக் கோயிலின் உண்ணாழிகை வாயிலின் இரு பக்கங்களிலும் பெண் வாயிற் காப்போர்கள் கைகளில் வில்லேந்தியவர்களாயும் தடியேந்தியவர்களாவும் வீரமுடன் நிற்கின்றார்கள். இவர்களின் கழுத்திலும் காலிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. காவற்காரிகளுக்கு ஏற்ற ஆடைகள் அணிந் திருக்கின்றார்கள் இந்த வாயிற் காவலர்கள் (துவார பாலிகைகள்) மகேந்திரவர்மன் உருவாக்கிய ஏனைய கோயில் காவலர்களைப் போன்று எதிர்ப்பார்வையில் நிற்பது குறிப்பிடத்தக்கது. திரு உண்ணாழிகை உயர்ந்ததாகக் காணப்படுகிறது. முன் மண்டபத்தின் தரைமட்டத்தைவிட உண்ணாழிகை 2 அடி உயரத்தில் இருக்கிறது. இரண்டு படிகள் முன்புறம் உள்ளன. முன் இருக்கும் முதற் படி அரைவட்டமாக இருக்கிறது. இக் கோயிலின் உண்ணாழிகையில் கொற்றவை உருவம் காணப்படவில்லை. ஆனால் முற்காலத்தில் கொற்றவை (துர்க்கை) உருவம் இருந்தது என்பதற்குச் சான்றுகள் உள. இவ்வூர்ப் புறத்தில் உள்ள சப்தமாதர்கள் உருவங்களுடன் காணப்படும் சிதைந்திருக்கும் கொற்றவையின் சிலை இக் கோயிலில் முற்காலத்தில் இருந்த மூல உருவம் என்று கருதப்படுகிறது. 2. தர்மராச மண்டபம் தர்மராச மண்டபம் என்று கூறப்படுவது மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க குடைவரைக் கோயிலாகும். இது கலங்கரை விளக்கு நிற்கும் பாறையின் மீது உருவாக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மகேந்திரவர்மன் அமைத்த மண்டகப்பட்டுக் குடைவரை கோயிலைப் போன்று காணப்படு கிறது. இது சிவன் கோயிலாகும். சைவ வைணவப் பிணக்குகள் எழுந்த காலத்தில் வைணவர்கள் இக்கோயிலில் உள்ள சைவப் படிமங்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். உண்ணாழிகை வாயிலில் இரு மருங்கினும் நின்று கொண்டிருந்த வாயிற் காப்போர்களின் வடிவங்களை உடைத்து அவர்கள் நின்ற அடையாளங்களே தெரியாமல் செதுக்கி விட்டார்கள். இங்குள்ள தூண்களில் வைணவச் சின்னங்களைப் பொறிக்க முயன்று சங்கு சக்கரங்களைச் செதுக்கியுள்ளார்கள். அது மட்டுமின்றி இந்தக் குடைவரைக் கோயிலுக்குத் தர்மராச மண்டபம் என்றும் பெயர் சூட்டி விட்டனர். அப்பெயரே இன்று வழங்கி வருகிறது. ஆனால் இதன் பழைய பெயர் நமக்குத் தெரியவில்லை. இந்தக் குடைவரைக் கோயிலின் முக மண்டபம் 21-அடி 2 அங்குல நீளமும் பதினான்கு அடி 6 அங்குல அகலமும் உள்ளது. மண்டபத்துக்குப் பின், மூன்று திரு உண்ணாழிகைகள் உள்ளன. அவைகளில் நடுவே காணப்படும் உண்ணாழிகை ஏனைய இரண்டு உண்ணாழிகையையும் விடச் சற்றுப் பெரியது. உண்ணாழிகையின் தரை மண்டபத்தின் தரையை விட 2-அடி உயர்ந்ததாய் அமைக்கப் பட்டிருக்கிறது. உண்ணாழிகைக்கு ஏறிச் செல்வதற்கு மூன்று படிகள் உள்ளன. இந்தக் குடை வரைக் கோயிலின் அமைப்பும் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகளும் மகேந்திரவர்மன் பாணியில் அமைந்த தாய்க் காணப்படுகிறது. இதை உறுதிப்படுத்தி வரலாற்றறிஞர் இராசு அடிகள் தமது நூலில் நல்லதொரு விளக்கம் அளித்துள்ளார்.1 இந்தக் குடை வரைக் கோயிலில் ஒரு அரிய வடமொழிக் கல்வெட்டு காணப்படுகிறது. அது பல்லவக் கிரந்த வரிவடிவில் எழுதப்பட்டுள்ளது. அதில் இக் கோயிலை அத்தியந்த காம பல்ல வேவரக் கிருகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியந்த காமன் என்ற பெயர் மகேந்திரவர்மன் பேரன் பரமேசுவரனுக்கு உரியது. எனவே இந்தக் கல்வெட்டுப் பிற்காலத்தில் - அதாவது பரமேசுவரவர்மன் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். எழுத்தின் அமைப்பும் பெயரும் பரமேசுவரவர்மன் காலத்தைச் சேர்ந்ததாகக் காணப்படினும் இக் குடைவரைக் கோயிலின் அமைப்பு தூண்கள் முதலியன மகேந்திரவர்மன் காலத்தவைகள் என்று சான்று கூறி நிற்கின்றன. இந்தக் கோயில் தனியாக சிவனுக்கென்று அமைத்த கோயில் அன்று. சிவன் திருமால், நான்முகன் ஆகிய முத்தேவர்களுக்கும் அமைத்ததாகும். இதனால் மூன்று திருஉண்ணாழிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடைவரைக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல் வெட்டில் கூறப்படுவதாவது: 1. ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முச் செயல்களுக்கும் காரணமாயும் ஆதிநாயகராயும் இருக்கிற காமாந்தக மூர்த்தி மானிடரின் அத்தியந்த கர்மங்களை (விருப்பங்களை) நிறை வேற்றி யருள்வாராக. 2. மாயைகளோடு கலந்திருந்தும் மாயை இல்லாதவராயும் பல குணங்களைக் கொண்டிருந்தும் குணங்கள் இல்லாதவராயும் தமக்குத் தாமே காரணராயிருப்பவரும் எல்லாருக்கும் தலைவராக இருப்பவரும் தமக்கோர் இறைவன் இன்றித் தாமே இறைவனாக இருப்பவரும் ஆகிய அவருடைய வெற்றி வாழ்வதாக. 3. கயிலாய மலையையும் அதைத் தூக்கிய தசமுகனையும் (இராவணனையும்) பாதலத்தில் அழுந்தும்படி கால் விரலால் அழுத்திய அத்தகைய ஆற்றலையுடைய பிறப்பிலியாகிய சிவ பெருமானை ஸ்ரீ நிதி தமது தலையில் தாங்கி இருக்கிறார். 4. நில மகளைக் காதலோடு கைகளில் அணைத்துக் கொண்டு, பக்தி நிறைந்த உள்ளத்திலே பவனை (சிவனை) வைத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ உபரன் வெற்றியுடன் நெடுங்காலம் வாழ்வானாக. 5. பகை மன்னரின் நாடுகளைத் தன் அடிமைப்படுத்தி ரணஜயன் என்னும் பெயர் படைத்த அத்யந்த காம அரசன் சம்புவுக்கு (சிவனுக்கு) இந்த இல்லத்தை அமைத்தான். 6. காற்றும் தீயுமாகவும் பீமனும் சிவனுமாகவும் சங்கரனும் காமாந்தகனுமாகவும் உள்ள அவன் வெற்றியுடன் விளங்குவானாக. 7. மகாராஜனுக்கும் (குபேரனுக்கும்) மகாராஜனும் ஆனால் குரூபியாக இல்லாதவனும் மக்களைத் துன்புறுத்தாமல் அருளுடன் காக்கும் சக்கரவர்த்தியும் சந்திரனைப் போன்றவனும் ஆனால் உடம்பில்லாமல் நல்லுடம்பு பெற்றவனும் ஆகிய தருணாங்குரன் வெற்றி பெறுவானாக. 8,9. பகை மன்னரின் ஆற்றலை அழித்தவனும் திருமகள் தங்குவதற்கு இடமாகவுள்ளவனும் காமனைப் போன்று அழகுள்ளவனும் அரனை (சிவனை) எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பவனும் ஆகிய அத்தியந்த காமனுடைய, தாமரை மலர்கள் அலரப் பெற்று நீராடுவதற்கு ஏற்ற நறு நீர்ப் பொய்கை போன்று பட்டாபிஷேக நீரினாலும் இரத்தின மணி முடியினாலும் விளங்குகின்ற திருமுடியில் சங்கரன் எழுந்தருளியிருக்கிறான். 10. தன் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் சங்கரனுடைய அருளைப் பெறுவதற்காகவும் தூர்ஜதி (சிவன்) எழுந்தருளும் பொருட்டு இந்தப் பெரிய தளியை அவன் அமைத்தான். 11. தீய வழியில் ஒழுகாமல் தடுக்கிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனமுடையவர்கள் ஆறு மடங்கு சபிக்கத்தக்கவர் ஆவர்1. குடைவரைக் கோயில்கள் 1. திரிமூர்த்தி குடைவரைக் கோயில் திரி மூர்த்தி குடைவரைக் கோயில் மாமல்லபுரத்தில் ஒரு சிறு குன்றின் மீது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவன், திருமால், நான்முகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கு உரியதாக அமைக்கப்பட்டது. எனவே இது திரிமூர்த்தி கோயில் என்று அழைக்கப்பட்டது. வடபுறம் நான்முகனுக்கும் தென்புறம் திருமாலுக்கும் நடுப்புறம் சிவபெருமானுக்குமாக மூன்று உண்ணாழிகை அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் உண்ணாழிகைகள் தரைமட்டத்திற்கு மேல் மூன்று அடி உயரத்தில் இருக்கின்றன. உட்புக வாயில்களில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடைவரைக் கோயிலுக்கு ஏனைய கோயில்களைப் போல் முன் மண்டபம் இல்லை. கோயிலின் மேலே முகப்பில் பல்லவர் பாணியில் கர்ணக்கூடு, பஞ்சரம் சாலை முதலியவைகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இதன் தென்புறம் கற்பாறையிலே கொற்றவை எருமை எருமையின் தலைமேல் நிற்பது போல் ஒரு புடைசிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. நான்முகன் வீற்றிருக்கும் உண்ணாழிகையின் வாயிற்படியின் மேலே பல்லவ கிரந்த வரிவடிவில் மல்ல என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனால் இக் கோயில் மாமல்லன் நரசிம்ம வர்மன் காலத்தில் குடைந்தெடுக்கப் பட்டது என்று நன்கு தெரிகிறது. உண்ணாழிகையின் வாயிலின் இரு மருங்கினும் இரண்டு வாயிற் காப்போர்கள் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறார்கள். பல்லவர்களுக்குக் கொற்றவை சிவன் திருமால், நான்முகன் ஆகிய தெய்வங்கள் மீது அதிகப் பற்று இருப்பதாகத் தெரிகிறது. திருமாலின் பாதத் தடியில் இருவர்கள் பணிவிடை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் தலை மயிர் முடியப் பெற்றிருப்பது மிக விசித்திரமாக இருக்கிறது. நரசிம்மன் அமைத்த கோயில்களும் தூண்களும் அவனது தந்தை முதலாம் மகேந்திரவர்மன் அமைத்ததை விட அழகும் சிறப்பும் உடையதாய் இருக்கின்றன. 2. வராக மண்டபம் மாமல்லபுரம் வராக மண்டபத்தை வராகப் பெருமாள் குகைக் கோயில் என்றும் சிலர் கூறுவார்கள். இந்தக் குடைவரைக் கோயிலை பிற்காலத்தில் சிலர் வைணவக் கோயிலாக மாற்றி விட்டனர். இக் கோயிலில் இன்றும் வழிபாடு நடந்து வருகிறது. இக் கோயிலில் உள் பக்கம் பாறைச் சுவர் மீது இடது புறமாக வராக அவதார உருவம் சிற்பமாகச் செதுக்கி இருக்கிறது. பூமியைக் கவர்ந்து சென்ற அசுரன் கைகூப்பி நிற்கின்றான். திருமால் பன்றி (வராக) வடிவம் தாங்கி திருமகளைத் தாங்கி நிற்கிறார். மேலே தேவர்கள் நின்று வழிபடுகிறார்கள். எதிர்ப்புறம் சுவரில் மாபலியின் கர்வத்தைக் கருவறுக்க திரிவிக்கிரம அவதாரமாக உலகார்ந்த பெருமாள் (திருமால்) நிற்கிறார். மண்ணினின்று காலால் விண்ணை அளப்பது போல் ஒரு கால் தூக்கி இருக்கிறது. கீழே மாபலி அமர்ந்திருக்கிறான். அவன் உள்ளத்தில் எழும் வியப்பும் அச்சமும் அவன் முகத்தில் பிரதிபலிக்கிறது. இந்தச் சீரிய சிற்பத்தில் சிற்பியின் கலைத்திறனும் கைவண்ணமும் அறிவாற்றலும் நன்கு புலப்படுகிறது. இங்கு புடை சிற்பமாக தென் புறச் சுவரில் முதலாம் மகேந்திரவர்மன் தனது பட்டத்தரசி ஒருவளுடன் காணப்படுகிறான். வட புறச் சுவரில் அவனது தந்தை சிம்ம விட்னு தனது அரசிகள் இருவர்களுடன் காணப்படுகிறார். உண்ணாழிகைக்கு (கருவறைக்கு) தென் புறம் கங்காதர மூர்த்தி, மகிசாசுர மர்த்தினி கொற்றவை உருவங்களோடு இருயானைகளால் குட முழுக்குச் செய்யப்படும் திருமகள் (கச லட்சுமி) நான்முகன் ஆகியவர்களின் உருவங்களும் இருக்கின்றன. அவைகள் அனைத்தும் கண்டுகளிக்கத் தக்கது. இங்கு பெரிய மண்டபமும் பின்புறச் சுவரின் நடுவில் உண்ணாழிகையும் இருக்கிறது. மண்டபத்தில் இரு வரிசையாகத் தூண்கள் நிற்கின்றன. முன் வரிசையில் சிங்கங்கள் உருவத்தின் மீது தூண் வடிவம் காணப்படுகின்றன. பின் வரிசையில் சாதாரணத் தூண்கள் உள்ளன. முன் மண்டபம் 38 அடி நீளமும் 14 அடி அகலமும் 11 அடி 6 அங்குல உயரமும் உள்ள இந்த உண்ணாழிகை மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. முன்னர் முன்புறம் மண்டபம் திறந்த வெளியாக இருந்தது. வைணவர்களான விசய நகர நாயக்க மன்னர்களின் ஆதரவைக் கொண்டு இதை வைணவக் கோயிலாக்கியதோடு முன்புறத்தை மூடிச் சுவர்கட்டி எவரும் எளிதில் உட்புக முடியாதபடி தடுத்து விட்டனர். ஒரு சிறு கதவு போடப்பட்டுள்ளது. எனவே இக்கோயில் உள்ளே இருள் சூழ்ந்து கிடக்கிறது. திரு உண்ணாழிகை மிகச்சிறிது. தரைமட்டத்திற்கு மேல் இரண்டடி உயர்ந்திருக்கிறது. முன்னே சற்று உயர்ந்திருக்கிறது. உள்ளே வராகப் பெருமாள் திரு உருவம் தெள்ளத் தெளியக் காட்சி தருகிறது. இது சுதையினால் செய்யப்பட்டு முக அழகுடன் அமைக்கப்பட்டு இதன் எழில் நலங்கண்டு எல்லோரும் இன்புற்று வருகின்றார்கள். குடைவரைக் கோயில்கள், முன்னர் ஆந்திர நாட்டில் ஆட்சி புரிந்த விஷ்ணு குண்டி என்ற அரச மரபினர்களால் ஆந்திர நாட்டில் உருவாக்கப்பட்டன. முதலாம் மகேந்திரவர்மனின் தந்தை சிம்ம விஷ்ணு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் விஷ்ணு குண்டி அரசு வம்சத்துப் பெண்களை மணந்திருக்கலாம். அதனால் சிம்மவிஷ்ணு தனது ஆந்திரமனைவியின் தந்தையாகிய விக்கிரமேந்திர என்ற பெயரைத் தன் மகனுக்கு மகேந்திரன் என்று மாற்றி இட்டிருக்கலாம். இந்தத் தொடர்பால் ஆந்திர நாட்டுக் குடை வரைக் கோயிலைப் போல் மகேந்திரவர்மன் தமிழகத்திலும் உருவாக்கி இருக்கலாம் என்று புதுச்சேரி கல்லூரி பிரஞ்சுப் பேராசிரியர் சோவியோ துப்ரயல் அபிப்பிராயப்பட்டார்1. அதை அறிஞர் ஆர் கோபாலன் எம்.ஏ.அவர்கள் தனது நூலில் மறுத்துரைத் துள்ளார்.2 3. பஞ்ச மூர்த்தி குடைவரைக் கோயில் பஞ்சமூர்த்தி குடைவரைக் கோயில் மாமல்லபுரம் குடைவரைக் கோயில்களில் ஒரு உயரிய கோயிலாக மதிக்கப் படுகிறது. இங்குள்ள குடைவரைக் கோயிலில் ஐந்து திரு உண்ணாழிகைகள் இருப்பதால் இதற்குப் பஞ்சமூர்த்தி கோயில் என்று பெயர் எழுந்தது. இதன் பழைய பெயர் தெரியவில்லை. இக்குடைவரைக் கோயிலை மகேந்திரவர்மப் பல்லவனே அமைத்தான். இதன் அமைப்பு அதை நன்கு உறுதிப்படுத்துகிறது. இது கோடிக்கால் மண்டபத்திற்கு அதாவது கொற்றவையின் கோயிலுக்கு தெற்கே இருக்கிறது. இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மன் கோயில்களை உருவாக்க வில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். மாமல்லபுரத்தின் கோயில்கள் அனைத்தும் மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மன் அமைத்தவைகளே ஆராய்ச்சியாளர்கள் கூட ஆராயாது கூறி வருகின்றார்கள். பல்லாவரத்தினின்று புதுக்கோட்டை வரை பல்வேறு குடைவரைக் கோயிலை உருவாக்கிய மகேந்திரவர்மன் காஞ்சிக்கு அண்மையில் உள்ள தம் துறைமுகப்பட்டினமாகிய கடல் மல்லையில் குடை வரைக் கோயில் அமைக்க எண்ணற்ற சிறு குன்றுகள் இருப்பதை அறியாமல் இருந்திருக்க முடியுமா? ஒரு பொழுதும் முடியாது. எனவே அறிஞர்கள் தருமராச மண்டபம் கோடிக்கால் மண்டபம் பஞ்ச மூர்த்தி குடைவரைக் கோயில் ஆகியவைகளை மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்கள். கிருஷ்ணையாற்றங்கரையில் காணப்படும் குடைவரைக் கோயிலைப் பார்த்த பிறகு மகேந்திரன் அமைத்த முதற் குடை வரைக் கோயில் - சுண்ணாம்பு மண், செங்கல் முதலியவைகள் இன்றி அமைத்த தமிழ் நாட்டு முதல் குடைவரைக் கோயில், மண்டகப்பட்டுக் கோயிலேயாகும். இவனுக்கு முன்னுள்ள பல்லவ அரசர்கள், கற்கோவிலோ, குடைவரைக் கோயிலோ அமைக்க வில்லை என்பதை இவனது மண்டகப்பட்டுக் குடைவரைக் கோயில் கல்வெட்டு நன்கு எடுத்துக் காட்டுகிறது. சாருதேவி காலத்துத் திருமால் கோயிலும் இரண்டாம் கந்தவர்மன் காலத்துப் திருக்கழுக்குன்றக் கோயிலும் மண்ணாலும் மரத்தாலும் செய்யப் பட்டவைகள். அதனால் அவைகள் அழிந்து போயின. அழிவிலாத ஆண்டவன் உறையும் இல்லம் (கோயில்) அழியாதனவாக இருக்கக் கற்கோயிலைக் கண்ட பெருமை மகேந்திரவர்மனுக்கே உரியதாகும்.1 கிருஷ்ணையாற்றங்கரையில் கி.பி.450-620வரை ஆண்ட விஷ்ணுகுண்டி என்னும் மரபினர் பெசவடா, மொகல் ராசபுரம் உண்டவல்லி முதலிய இடங்களில் அமைத்த குடைவரைக் கோயில்களைக் கண்டுகளித்த மகேந்திரவர்மன் தனது நாட்டிலும் பல குடைவரைக் கோயில்களை உருவாக்கினான்.2 இக்கோயிலின் முன் மண்டபம் 35 அடி 2-அங்குல நீளமும் 12 அடி 6-அங்குல அகலமும் உடையது. மண்டபத்தில் இரண்டு வரிசையில் நான்கு தூண்கள் காணப்படுகின்றன. அடியிலும் நுனியிலும் சதுரமாகவும் நடுவில் 8-பட்டையாகவும் தூண்கள் இருக்கின்றன. உள்வரிசையில் நிற்கும் தூண்கள் அடி முதல் முடி வரை உருண்டும் குழைவான பட்டைகள் உடையனவாயும் இடையே கொடி பட்டைகளால் பிணைக்கப்பட்டும் உள்ளன. இந்தக் குகைக் கோயில் முற்காலத்தில் சிவன் கோயிலாகவே இருந்தது. பிற்காலத்தில் எழுந்த சைவ - வைணவச் சச்சரவில் இந்தக் கோயிலின் உண்ணாழிகையில் இருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு விட்டது. மண்டபத்திற்கு வெளியே கற்சுவரில் பொறிக்கப்பட்ட வைணவர்களின் சமயச் சின்னமான சங்கு சக்கரங்களின் உருவங்கள் இன்று பொன்றாது ஒளிர்கின்றன. இந்தக் கோயில் பல்லாவரம் குடைவரைக் கோயிலைப் போல் காணப்படுகிறது. உண்ணாழிகைகள் ஐந்திற்கும் உள் புகப் படிகள் உள்ளன. அவைகள் செம்மையாக அமைக்கப்படவில்லை. கரடு முரடாக இருக்கின்றன. உண்ணாழிகையில் சிவலிங்கங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக தளத்தின் மீது 3 அங்குல ஆழமுள்ள சிறு குழிகள் காணப்படுகின்றன. வாயிலின் இரு மருங்கினும் வாயிற்காப்போர் உருவங்கள் மகேந்திர பாணியில் உள்ளன. மகிசாசுர மண்டபம் மாமல்லபுரம் மகிசாசுர மண்டபம், கலங்கரை விளக்குக்கு அருகில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். இதை இங்குள்ள மக்கள் கயிலாச நாதர் கோயில் என்று கூறுகின்றனர். இங்கு மண்டபம் என்று கூறப்படுபவைகள் எல்லாம் மண்டபங்கள் அல்ல, கோயில்களேயாகும். இக் குடைவரைக் கோயில் எழில் மிக வாய்ந்ததாயும் நல்ல தோற்றந் தருவதாயும் இருக்கிறது. இக் கோயில் களின் சில பகுதிகளில் வேலைகள் முற்றுப் பெறவில்லை. முற்றுப் பெறாத பகுதிகள் கூட கவின் பெறக் கண்ணுக்கினிதாய்க் காட்சி அளிக்கிறது. இந்த அழகிய குடைவரைக் கோயில் முன் மண்டம் 32-அடி நீளமும் 15 அடி அகலமும் 12 அடி 6 அங்குல உயரமும் உள்ளது. மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் உருண்டு திரண்டு 16-பட்டைகள் உள்ளதாய் திகழ்கின்றன. இத் தூண்களில் ஒன்றை வராகப் பெருமாள் குடைவரைக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தூணையும் அப்புறப்படுத்த முயன்றுள்ளார்கள் அவர்கள் முயற்சி முற்றுப் பெறவில்லை. உச்சியில் உளியினால் செதுக்கப்பட்ட அடையாளம் உள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட தூணுக்குப் பதிலாக இப்பொழுது புதை பொருள் ஆராய்ச்சித் துறையினர் ஒரு ஆபாசமான தூணை நிறுத்திவைத்திருக்கின்றனர். மண்டபத்திற்குப் பின்புறம் மூன்று உண்ணாழிகைகள் உள்ளன. நடுவில் உள்ள உண்ணாழிகைக்கு முன் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு இரண்டு தூண்கள் உள்ளன. அதை இரு சிங்கங்கள் தாங்கி நிற்பது போல் செதுக்கப் பெற்றுள்ளது. இத்தூண்கள் அழகாய் அமைந்திருக்கின்றன. இங்கு சிவலிங்கம் ஒன்றும் காணப்படவில்லை. பின்புறச் சுவரில் சோமகந்தர் உருவம் புடை சிற்பமாகச் செதுக்கப்பெற்றுள்ளது. மண்டபச் சுவரில் செதுக்கப் பெற்ற பாம்பணைப்பள்ளி (அநந்த சயனம்) அழகு மிக்கது. உண்ட வல்லி குடைவரைக் கோயிற் சுவரில் உள்ளதைப் போல் இருக்கிறது. மகிடாசுரனை வெல்வதைக் குறிக்கும் சிற்பம் தனிச்சிறப்புடையதாகும். இது எங்கும் அக்காலத்தில் காணமுடியாத அரிய சிற்பமாக இருந்தது. கொற்றவை (துர்க்கை) தன் வாகனமாகிய சிங்கத்தின் மீதமர்ந்து எருமைத் தலை கொண்ட அசுரன் மீது1 அம்புகளைப் பொழிகிறார். அசுரனைச் சுற்றியிருக்கும் பெரும் படைகள் அனைத்தையும் அவள் அழிக்கின்றார். இக் காட்சியை அமைத்த சிற்பிகளின் கை வண்ணம் மெச்சத்தக்கது. அறிஞர்கள் இதற்குப் புகழ் மாலை சூட்டியுள்ளனர். முன் மண்டபத்தில் தென்புறம், சுவரில் செதுக்கப் பெற்ற அநந்த சயனமூர்த்தி, வட புறத்தில் செதுக்கப்பெற்ற கொற்றவையின் மகிசாசுரப் போர் ஆகியவைகளின் அரும் பெரும் சிற்பக் காட்சி அற்புதமானவை. கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத் தக்கன. இங்கு மொத்தம் 17-உருவங்கள் உள்ளன. இதற்கு எதிராக அமைதியாய் ஐந்து தலை பாம்பின் மீது நித்திரை செய்கிறார் திருமால். அவர் பாதி மூடிய கண்களும் அகன்ற மார்பும் நீண்ட கால்களும் பாம்பின் மீது வைத்த தலையும் கொண்டு அவர் திகழ்கிறார். திருமாலுக்கு எதிரே அடிபட்ட இருவரைக் காணலாம். அவர்கள் தான் மதுகைடபர்கள். இவ்வாறு ஒரு மண்டபத்திலே கோபாவேசத்தைக் காட்டும் அரும் பெரும் தோற்றத்திற்கு எதிரே சாந்தமே உருவாக அமைந்த திருமாலின் பாம்பணைப் பள்ளியின் கோலத்தைக் காண முடிகிறது. இராமாநுச மண்டபம் மாமல்லபுரம் இராமாநுச மண்டபம் ஒரு அழகிய குடைவரைக் கோயிலாகும். இது இராமாநுசர் காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இது பரமேசுவர வர்மன் காலத்தில் (கி.பி 670-688) உருவாக்கப்பட்டது. இதனால் பிற்காலத்தில் இராமாநுச மண்டபம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்று நன்கு தெரிகிறது. இதன் பக்கத்தில் உள்ள குன்றுகளில் ஏறினால் பல்லவர்கள் காலத்தில் இருந்த பழைய கலங்கரை விளக்கைக் காணலாம். இன்று அது இடிந்து கிடக்கிறது. இக் கோயிலில் இருந்த நல்ல சிற்பங்கள் உளியால் செதுக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள தூண்களைச் சிங்கங்கள் தாங்கி நிற்கின்றன. இங்குள்ள சீரிய சிற்பங்கள் வன் கண்ணாளர்களால் சிதைத்து மறைத்து விடப்பட்டிருப்பது கண்டு கலை மேதைகள் வருந்தாதிருக்க முடியாது. இங்குள்ள இராவண அனுக்கிர மூர்த்தியின் சிற்ப வடிவம் சிறப்பானது. இதை வைணவர்களும் சைவர்களும் போற்றுகிறார்கள். மேலும் இங்கு அடுத்தாற் போல் ஒரு அழகிய முற்றுப் பெறாத இராய கோபுரம் உள்ளது. கணேசன் இரதத்திற்கு தெற்கே மறைவான இடத்தில் இராமாநுசர் மண்டபம் உள்ளது. தூண்களின் அடியில் நான்கு சிங்கங்களும் அழகாக இருக்கின்றன. உள்ளே உருவங்கள் இல்லை தென் பக்கம் 13 படிகள் வெட்டப்பட்டுள்ளன. தரையில் ஒரு சிறிய கல்வெட்டு உள்ளது. மாமல்லபுரத்தில் கலைக் கோயில்களை உருவாக்கியவர்களில் முதலாம் பரமேசுவரவர்மன் மூன்றாவதாக எண்ணப்படுகிறான். கணேசரதமும், இராமாநுச மண்டபமும் நரசிம்ம வர்மன் பாணியில் உள்ளன. ஆனால் உள்ளே இருக்கும் கல்வெட்டுகளில் அத்யந்த காம என்ற பெயர் காணப்படுகிறது. அது முதலாம் பரமேசுவர்மனுக்கு உரியது. இதனால் சில அறிஞர்கள் இதுவும் நரசிம்ம வர்மனால் தொடங்கப்பட்டு பரமேசுவரவர்மனால் முடிக்கப் பெற்றிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.1 சிலர் இது பரமேசுவரவர்மன் கட்டியதே என்று உறுதியாகக் கூறுகிறார்கள். புலிக் குகை மாமல்லபுரத்தின் வடக்கே மூன்றுகல் தொலைவில் சால்வன் குப்பம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது. இது பழைய மாமல்லபுரத்தின் ஒரு குக்கிராமம். இங்கு புலிக்குகை என்று கூறப்படும் குடைவரைக் கோயிலும் ஆதிர நாச்சாண்ட மண்டபமும் உள்ளது. இவைகளின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆதிர நாச்சண்ட மண்டபமும் முதலாம் மகேந்திரவர்மன் பாணியில் உள்ள குகைக் கோயிலாக இருக்கிறது. இதன் பெரும் பகுதி சிவபெருமானுக்காக அளிக்கப்பட்டுள்ளது. புலிக்குகை யானது ஒரு நூதனமான தனி அமைப்புடையதாய் இருக்கிறது. அது கடல் மீதுள்ள ஒரு பெரிய தொங்கற் பாறை மீது குடையப்பட்ட ஒரு சிறு கோயிலாகும். அது சதுரமான வாயிலையுடையது. சுற்றிலும் வழக்கமான பல்லவர்கள் சிங்கங்கள் மாதிரி அல்லது புலி மாதிரி ஒன்பது உருப்படிகள் பெரிய தலையுடன் வாயைப் பிளந்து கொண்டு வாயிலைச் சுற்றி அமைந்திருக்கிறது. இப்பொழுது இந்தக் குகைக் கோயிலில் ஒன்றும் இல்லை. ஒரு வேளை ஆதிகாலத்தில் கொற்றவை உருவம் இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இதற்கு அண்மையில் இதே காலத்தில் எழுப்பப் பெற்ற இரு பெரும் பாறைக் கோயில்கள் உள்ளன. இரு குகைகளும் மண்டபமும் அடுத்தடுத்துள்ளன. ஒரே மன்னன் இவைகளையெல்லாம் உருவாக்கி இருப்பான் என்று எண்ண இடந் தருகிறது. ஆனால் இந்தக் குடைவரைக் கோயிலில் எவ்விதக் கல்வெட்டும் இதுவரை எவரும் கண்டதில்லை. மண்டபத்தைப் பற்றி இருகல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அறிஞர் கல்ட்ச் (Hultsch ) என்பவர் இந்தப் பட்டயங்களை படித்துள்ளார். இந்த இரு கோயில்களும் நந்திவர்மன் பல்லவமன்னன் அமைத்ததற்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளார். இது நந்திவர்மனுடைய காசக்குடிப்பட்டயத்தின் எழுத்துகளைப் போன்று காணப்படுகிறது என்று கூறுகின்றார். செம்புப்பட்டயங்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் சில வேற்றுமைகள் காணப்பட்டாலும் இது நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆதிரநாச்சண்டன் என்னும் பட்டத்தை பல்லவ மல்லன் ஒரு பொழுதும் உபயோகித்ததில்லை. அது இரண்டாம் நரசிம்மனுக்கு உரியது. என்றாலும் நந்திவர்மப் பல்லவனும் அவனுக்குப் பின் வந்தவர்களும் இக்கடற்கரைப் பட்டயத்தில் ஒரு பொழுதும் அக்கறை காட்டியதில்லை. கற்றளிகள் கற்றளி என்றால் கல்லால் கட்டப்பட்ட கோயில் என்று பொருள்படும் ஆதியில் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோயில் கட்டினர். முதலில் இரண்டு கற்களுக்கு இடையில் சிறிது சுண்ணம் வைத்துக் கட்டினர். அப்பால் சுண்ணம் இன்றி கற்களை அடுக்கிக் கோயில் கட்டினர். இந்தக் கற்றளி அமைக்கும் முறை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை நாட்டில் இருந்த பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராச சிம்மன் காலத்தில் எழுந்த முறையாகும். தொடக்கத்தில் மகாபலிபுரம் கடற்கரைக் கற்றளியும் காஞ்சி கயிலாச நாதர் கோயிலும், பனை மலைக் கோயிலும் முதன் முதலாக அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். கற்கோயில் அழியாது என்றும் நிலைத்து நிற்பவை. இவற்றிற்குப் பல்லவ மன்னர்கள் அடிகோலினர். அப்பால் 8 ஆம் நூற்றாண்டில் பல மன்னர்கள் கற்றளிகளை எழுப்பினர். 10-ஆம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்கள் பல்லவரைவிட கற்றளிகள் எடுப்பிப்பதில் சிறப்புப் பெற்றனர். இவர்கள் புதிதாகத் தம் நாட்டில் பல கற்றளிகளை எடுப்பித்தனர். முன் எழுந்த செங்கற் கோயிலை இடித்து கற்றளிகளாக மாற்றினார்கள். இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் தஞ்சையிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் கட்டிய கோயில் உலகப்புகழ் பெற்றவைகள். கயிலாச நாதர் கோயில் காஞ்சிபுரத்தில் உலகப் புகழ் பெற்ற கயிலாச நாதர் கோயில் ஊருக்கு மேற்கே நாற்புறமும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போன்று எங்கும் பசுமையான காட்சி தரும் கன்னிகளுக்கிடையே இருக்கிறது. இக்கோயில் கட்டப்படும் பொழுது நாற்புறமும் நகரத் தெருக்கள் இருந்தன. கோயிலைச் சுற்றி அழகிய மாட வீதிகள் இருந்தன வென்று தெரிகிறது. இக் கோயிலைச் சுற்றி சிறிய கற்கோயில்கள் எட்டு உள்ளன. எதிரே நந்தியும் குளமும் உள்ளன. நந்தியின் பக்கத்தில் நிற்கும் சிங்கத் தூண்களை நோக்கும் பொழுது முற்காலத்தில் மேலே கற்கள் பாவப்பட்ட கூரை இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இக் கோயில் நீண்ட சதுர வடிவில் அமைந்திருக்கிறது. சிறிது தொலைவு சென்று வாயிலைக் கடந்து உட்புகுந்தால் எதிரே தனியாக நிற்கும் சிறு கோயில் ஒன்று காணப்படும். அதற்கு இருபுறங்களிலும் வழிகள் உள்ளன. உள்ளே புகுந்து சென்றால் சதுரமான கோயிலும் அதைச் சுற்றித் திருச்சுற்றும் காணப்படுகிறது. திருச்சுற்றில் உள்ள சுவர்களில் சிறு மாடங்கள் கோயில்கள் போல் காணப்படுகின்றன. உண்ணாழிகை முன்மண்டபம் ஆகிய இரண்டும் சுவர்களை யுடையவை. உண்ணாழிகையின் உட்புறமும் வெளிப்புறமும் சுவர்களில் சிற்ப உருவங்கள் காணப்படுகின்றன. வெளிச் சுவரில் சிறு சிறு மாடங்களும் உள்ளன. மேலே விமானத்தில் அழகிய கலயம் (கும்பம்) ஒளிர்கின்றது.1 வாயிலுக்கு எதிரில் இலங்கும் சிறிய கோயிலில் பெரிய இலிங்கம் உள்ளது. அது 16 பட்டைகளை உடையதாய் 4 அடி 6 அங்குல உயரத்தில் உள்ளது. இலிங்கத்திற்குப் பின்புறம் சுவரில் அம்மை அப்பர் அரியணையில் அமர்ந்துள்ள அருங்கோலம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியே மண்டபத்தின் சுவர்களில் சிவபெருமானைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஆடவல்லானின் அரிய நிலைகள் மிக அற்புதமானது; மிகத் தொன்மையானது. இந்த அரிய ஆடல் நிலைகள் வேறு எங்கும் காண முடியாது. சைவ சித்தாந்த தத்துவக் கொள்கைகளுக்கு பல்லவர்கள் கண்ட சிறந்த கருத்துக்களை இங்கு காணமுடியும். கயிலாசநாதர் உண்ணாழிகையில் உள்ள இலிங்கம் பதினாறு பட்டைகள் உள்ளது. எட்டு அடி உயரம் உள்ளது. இதன் பின் சுவரில் சோமாகந்த சுகாசனமூர்த்தியின் படிமம் உள்ளது. உண்ணாழிகையின் வெளிப்புறம் உள்ள திருச்சுற்று இரண்டடி அகலம் உள்ளது. உண்ணாழிகையின் அடுத்து இருக்கும் வலப் புறமுள்ள அறையில் அழகிய ஆடற் சிற்பம் சுவரில் செதுக்கப் பெற்றுள்ளது. அம்மையப்பர் சிற்பங்களும் உள்ள இடப்புற அறையிலும் சில ஆடற் சிற்பங்கள் இருக்கின்றன. எதிரில் உள்ள மண்டபம் அழகிய தூண்களையுடைய அற்புதமான மண்டபம் தரையிலும் கூரையிலும் கல்வெட்டுகள் உள்ளன. வெளியில் உள்ள மண்டபத்தில் பதினாறு தூண்கள் உள்ளன. அவைகள் ஐந்தில் கல்வெட்டுகள் உள்ளன. மூன்று பழுதுற்றிருக்கின்றன. உண்ணாழிகையைச் சுற்றி நாற்புறமும் சுவரில் சிறு மாடங்கள் உள்ளன. தாண்டவ சிற்பங்களும் சிவபெருமானை நான்முகன் திருமால் முதலிய தெய்வங்கள் தங்கள் மனைவிகளுடன் வழிபடும் கோலங்களும் சிற்ப வடிவில் உள்ளன. கொற்றவை பதினாறு கைகளுடன் சிங்கத்தின் மீது காணப்படும் சிற்பம் அழகானது. இங்கு இராச சிம்மப் பல்லவ மன்னன் குடும்பத்துடன் நிற்பது போல சிற்ப வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுப் பாதையை அடுத்துள்ள கோயில் மதிலில் உட்புறம் சிறு மாடங்கள் 58 உள்ளன. அதில் உள்ள அற்புதமான சிற்பங்கள் ஆராயத்தக்கன. எல்லா இடங்களிலும் சிங்கத்தூண்கள் சிறப்பாக நிற்கின்றன. இங்குள்ள வாயில் காப்போர்கள் இரு கரங்களுடன் இமை கொட்டாது காத்து நிற்பவர்கள்போல் காணப்படும் சிற்பக் காட்சி காணத்தக்கது.1 கைலாசநாதர் கோயிலில் எண்ணற்ற கல்வெட்டுகள் உள்ளன. அவைகள் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டுவரை செங்கோலோச்சிய பல்லவர்கள், சோழர்கள் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகளாகக் காணப்படுகின்றன. இவைகளில் இராசசிம்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் அவன் மனைவி இரங்க பதாகை முதலியவர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவரை வென்று தொண்டை நாட்டை ஆண்ட சோழ மன்னர்களான பராந்தகன் இராச இராசேந்திரன் குலோத்துங்கன் முதலியவர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. இக் கோயிற் கல்வெட்டுகள் கருங்கல்லில் செதுக்கப் பெற்றனவாகும். கல்வெட்டினின்று முதற் கோயிலுக்கு நித்திய விநீத ஈசுவர கிருகம் என்ற பெயர் உண்டு என்று தெரிகிறது. நித்திய விநீன் என்பது முதல் மகேந்திரவர்மன் விருதுப் பெயர்களில் ஒன்று. கோயிலுள் புகுந்ததும் குதிரை லாடம் போன்ற விமானத்தைக் காணலாம். இதற்குப் பின்புறம் பிரதான கோயில் இருக்கிறது. அதற்கு மகேந்திர வர்மேசுவர கிருகம் என்று பெயர். இது மூன்றாம் மகேந்திர வர்மன் நினைவுக் குறியாக எடுப்பிக்கப்பட்டது. கயிலாச நாதர் கோயில் காமுறு விமானம் 50-அடி உயரம் உள்ளது. இது பலபுஜ கோபுரமாகும். இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்தில் உள்ளன. கி.பி. 1882-ஆம் ஆண்டில் சர் வாலடர் எலிபட் என்னும் பேராசிரியர் கல்வெட்டுகளை தேடிப்பிடித்து இந்நகரில் 283 கல்வெட்டுகளைக் கண்டு ஆராய்ந்துள்ளார். கி.பி. 640-இல் சீன வழிப்போக்கன் யுவான் சுவாங் இங்கு வந்து காஞ்சி பௌத்த பல்கலைக் கழகத்தில் பயின்றுள்ளான். இவன் கல்விக் கரையிலாத காஞ்சி நகரின் பெருமையை வியந்துள்ளான். பல்லவர் ஆட்சியில் மாட்சியையும், தெரு வீதிகளின் அழகையும் பாண்டிய நாடு சோழ நாடு ஆகியவைகளின் பௌத்த நெறி இருந்த நிலையையும் விளக்கியுள்ளான். இராச சிம்மன் காஞ்சிபுரத்தில் எடுப்பிடித்த கயிலாச நாதர் கோயில் வரலாற்றுப் புகழ் மிக்கது.1 கலை நுட்பம் வாய்ந்த இந்த கற்றளி தமிழகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த முதல்கலைக் குன்று என்று அறிஞர்கள் புகழ் மாலை சூட்டுகின்றார்கள். இக்கோயில் எழுப்பப் பெற்றகாலம் 8-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.2 இராச சிம்மன் மாமல்லபுரத்தின் கலைக்கோயில்களை உருவாக்கிய பல்லவ மன்னர்களில் நான்காவது மன்னனாவான். பனமலைக் கோயில் அபராசிதவர்மன் (கி.பி. 872-890) அபராசித வர்மன், பல்லவர் மன்னர்களில் இறுதியானவன். இவன் பல்லவ அரசன் நிருபதுங்கன் (கி.பி. 850-882) மகன். தந்தையின் முதுமைப் பருவத்திலே தனயன் அபராசிதவர்மன் நாட்டை ஆண்டுவர முற்பட்டான். நிருபதுங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சியவன் சீமாறன் சீயல்லபன். அவனுக்குப்பின் இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 862 முதல் 880 வரை அரசாண்டான் பல்லவர்கள் இந்த இரு பாண்டியர்கள் காலத்திலும் போர் நடத்தினர். முதற் போரில் பாண்டியன் பல்லவ மன்னன் நிருபதுங்கனை குட மூக்கில் வென்றான். மீண்டும் நிருபதுங்கன் அரிஇலாற்றங்கரைப் போரில் பாண்டியனை வென்றான். இறுதியாக இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் நிருபதுங்கப் பல்லவனுக்கும் போர் மூண்டது. பல்லவர் படைக்கு நிருபதுங்கன் மகன் அபராசிதவர்மன் தலைமை தாங்கினான். அவனுக்குத் துணையாக அவனது பாட்டனும் (தாயின் தகப்பன்) கங்க அரசனுமான முதலாம் பிருதிவீபதி படையுடன் சென்றான். பல்லவர்க்குத்துணையாக ஆதித்த சோழன் (கி.பி. 870-907) சேர்ந்து கொண்டான். இம்மூவரும் கூடி திருப்புறம்பியம் (கும்பகோணத் திற்குப் பக்கத்தில் உள்ளது) போரில் பாண்டியனைத் தோல்வி பெறும்படி செய்தனர். அபராசிதன் போரில் வெற்றி பெற்றான். ஆனால் இப் போரில் ஆதித்த சோழனே ஊதியம் பெற்றான். அவன் சோழநாடும் முழுவதையும் தனதுடைமை ஆக்கிக் கொண்டான். கி.பி. 882-ம் ஆண்டில் நிருபதுங்கன் இறந்ததும் ஆதித்த சோழன் செங்கற்பட்டு வரையுள்ள தொண்டை நாட்டைச் சொந்தமாக்கிக் கொண்டான். கி.பி. 890-ம் ஆண்டில் தொண்டை நாடு சோழ ஆட்சிக்குட்பட்டது. கி.பி. 890-ஆம் ஆண்டில் அபராசிதவர்மன் ஆட்சியும் முடிவுற்றது. அபராசிதவர்மன் ஆட்சியோடு பல்லவப் பேரரசும் முடிவுற்றது. அபராசித வர்மன் கால முழுவதும் போரில் ஈடு பட்டிருந்ததால் அவனால் அதிகமான திருப்பணிகள் செய்ய முடியவில்லை. அபராசித வர்மன் கலை ஆர்வம் உள்ளவன். பல்லவர்களின் கட்டிடக் கலையில் அபராசிதவர்மன் பாணி என்ற ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தினான். அபராசிதவர்மன் 18-ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் அவன் திருத்தணிகைக் கோயிலை எடுப்பித்தான் என்று தெரிகிறது. திருத்தணிகைக் கோயில் (கி.பி 890) திருத்தணிகைக் கோயில் ஆலக் கோயிலாகும். இது அபராசித வர்மன் காலத்தில் கிட்டத்தட்ட கி.பி. 890 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இக் கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம் வீரட்டானேசுவரர் எனப்படும். இத் திருக்கோயில் அபராசிதவர்மன் பாணியில் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயில் மிக அற்புதமான அமைப்புடையது என்று சோவியோ துப்ரயல் போன்ற அறிஞர்கள் புகழ்ந்துள்ளார்கள். இங்கு அபராசிதவர்மன் 18-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது.1 அபராசித பாணி பழஞ் சோழர்களுக்கும் பிற்காலப் பல்லவ மன்னன் இராச சிம்மனுக்கும் இடையே எழுந்துள்ள ஒரு அழகிய இடைக்காலப் பாணியாகும். இது 9-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியில் அரும்பியது. திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோயில் ஆலக் கோயிலாகும். இதனைச் சிற்பநூற்களில் கஜப்பிருஷ்ட விமானக் கோயில் என்று கூறப்படும். தமிழில் தூங்கானைமாடக் கோயில் என்றும் கூறப்படும். இது மாமல்லபுரம் சகாதேவ இரதத்தின் அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது குதிரை லாடம் போல் பழைய பல்லவர்களின் ஆலக் கோயில் அமைப்பில் எழுப்பப் பெற்றது என்றாலும் விமான அமைப்பில் வேற்றுமை உள்ளது. கூடுகளின் மீது சிங்க வடிவம் காணப்படுகிறது. இந்தக் கோயிலின் அமைப்பை தொண்டை மண்டலத்தில் எங்கும் காணமுடியாது. எந்த விதமான ஆராய்ச்சிக்கண்ணோடு திருத்தணிக் கோயிலை நோக்கினாலும் இந்த சகாப்தத்திற்கு உரியதான கோயிலாக எண்ணப்படுகிறது. கற்றளிகள் கிறித்துவிற்குப் பின்னர் எழுந்த 7-ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் கட்டிடக் கலையில் ஒரு மலர்ச்சி தோன்றியது. தமிழகத்தில் அரசோச்சிய அருக மதம் அருகத் தொடங்கியது. தமிழகத்தின் தேசிய மதமாகிய சிவனெறியை வன்செயலால் அடக்கத் தொடங்கியது. இந்த நாடு தமிழ் நாடு. தமிழகத்தில் தமிழர்களால் வளர்க்கப்பட்ட நெறி சிவநெறி என்பதைக் கூட மறந்தது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியைத் துரத்த முயன்று, உள்ளதையும் இழந்து ஓடியது போல் அருக மதம் சிவமதம் தமிழகத்தில் தலை தூக்கா வண்ணம் தடுத்து ஒழிக்க முனைந்தது. அப்பர் அடிகள் ஆதியில் சைவனாகப் பிறந்து தம் வாலிபப் பருவத்தில் அருகமதத்தைத் தழுவி சமண சமயத்தை நன்கு பயின்று சமண குருவாகப் பட்டம் பெற்று, தரும சேனர் என்னும் பட்டமும் பெற்றார். அவரது முதுமைப் பருவத்தில் பின்னர், அந்தச் சமயத்தில் கசப்புற்று சைவந்தழுவி சிவனது மெய்அடியாராக, துறவியாய் சிவத்தொண்டு செய்து வந்தார். அது சமணர்களுக்குப் பிடிக்க வில்லை. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலே உயரிய நெறி என்று வாழும் சமணர்கள் அப்பர் அடிகளுக்கு அளவிலாத் துன்பம் உண்டாக்கினர். அவரது உயிரைக் குடிக்கத் துடி துடித்தனர். அவர் உறைந்த இடத்தைத் தீயிட்டுப் பொசுக்கினர். அவரை நெருப்பி லிட்டனர். அவரைக் கல்லிற் பிணைத்து கடலில் ஆழ்த்தினர். அவர் அஞ்சவில்லை, சாகவில்லை. அப்பர் அடிகளின் அஞ்சாநெஞ்சமும், உறுதியும், வெற்றியும் இக்கொடுஞ் செயலுக்கு ஆக்கம் அளித்த சமண மன்னன் மகேந்திர மன்னன் உள்ளத்தை மாற்றியது. அசோகனைப் போல் அவன் சமயம் துறந்து பௌத்தம் தழுவாது சைவம் தழுவினான். அப்பரைக் குருவாகக் கொண்டு சிவத் தொண்டாற்ற முன் வந்தான். கி.பி. 620-ஆம் ஆண்டில் அவன் சிவதீட்சை பெற்று குணபரன் என்று பெயர் சூட்டிக் கொண்டு சைவம் வளர்க்க முற்பட்டான். சிவன் பிறவாதவன் இறவாதவன். அவன் முழுமுதற் கடவுள் என்பதையும் சைவ சமய தத்துவமாகிய பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையையும், அதன் தொன்மையும் அப்பர் வாயிலாக உணர்ந்தான். அப்பர் அடிகளின் பேச்சும், தொண்டும் தோற்றமும் ஏற்றமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது.1 அன்பே சிவம், அன்பு வேறு சிவம் வேறு என்று கூறுவது அறிவிலாச் செயல் என்று சைவ நெறி கூறுவதை உளமாற உணர்ந்து சிவபணி செய்ய முற்பட்டான். மகேந்திரவர்மன் வடமொழியை நன்கு பயின்றவன். சிற்பக் கலையை நன்கு உணர்ந்தவன். இசையை இழுக்கிலாது கற்றவன். வீணை வாசிப்பதில் இணையற்றவன். அவனது கல்வியும், கலையும் சிவநெறி ஓம்புவதற்குப் பெரிதும் துணையாக நின்றது. சமண நெறி நாட்டிற்கொவ்வாதது; காலத்திற்கேற்காதது என்று கண்டான். அன்பு நெறியாம் சிவநெறியை அழிக்க வன் செயலாற்றும் வம்பர்களான சமணர்களை நாட்டை விட்டு ஓட்டினான். பல சமணக் கோயிலை சிவன் கோயிலாக மாற்றினான். பல குகைக் கோயிலையும் குடைவரைக் கோயிலையும், கற்றளிகளையும் எழுப்பினான்.2 மகேந்திரவர்மன் சைவனாக மாறியதுடன் தமிழ் வளர்க்க முற்பட்டான். தமிழ்க்கலையை ஓம்பத் தலைப்பட்டான். வேளாண்மை உயரத்திட்டமிட்டான். அவனது அருந்தொண்டால் தமிழகம் மீண்டும் ஒளி பெற்றுயர்ந்தது. திருப்பாதிரிப் புலியூரிலிருந்த சமணப் பள்ளிகளையும் பாளிகளையும் மகேந்திரவர்மன் கருவறுத்தான். அதிலுள்ள கற்களை எடுத்து திருவதிகையில் சிவபெருமானுக்கு ஒரு திருக் கோயிலை எடுப்பித்து அதற்குத் தன் பெயரால் குணபர ஈச்சுரம் என்று அழைத்தான். மகேந்திரன் தமிழகத்தில் சிவபெருமானுக்குச் சில கற்கோயில்கள் எழுப்பத் திட்டமிட்டான். கோயில்களில் சிறந்த சிலைகளையும் பண்புமிக்கபடிமங்களையும் உயர்ந்த ஓவியங்களையும் அமைக்க உறுதி கொண்டான். கோயிலில் இசை முழங்க பண்பாட ஏற்பாடு செய்தான். சிற்பிகள் சிற்ப இலக்கணங்களைப் பயிலவும், சமய ஓதுவார்கள் கோயிலில் பண்ணோடு சிவன் புகழ் பாடவும் ஆகமங்கள் ஓதவும் வழி செய்தான். அவன் வடமொழியில் எழுதிய சிறிப்பு நாடக நூல் (மத்த விலாசப் பிரகடனம்) இன்று சிறந்த நாடக நூலாகப் போற்றப் பெற்று வருகிறது. செங்கற் கோயில் மகேந்திரவர்மன் காலத் தொடக்கத்தில் எங்கும் பல வகையான எழில் சார்ந்த செங்கற் கோயில்களே இருந்தன. அவைகள் தமிழகத்தில் எழுந்த வெயில் புயல், மழை முதலியவைகளைத் தாங்கச் சக்தியற்றனவாய் இருந்தன. அவைகளில் பல அடிக்கடி பழுதுற்று வந்தன. பல சிற்றூர்களில் கவனிப்பாரற்று அழிந்தும் விழுந்தும் மறைந்தும் போயின. அவற்றைக் கண்டு மன்னன் மனம் வருந்தினான். சிவபெருமான் அழிவற்றவன் என்றால் அவன் உறையும் உறையுள்ளும் அழிவற்றதாக இருக்க வேண்டுமே என்று எண்ணினான். மலைக் குகைகளில் சிவலிங்கத்தை வைத்து வழிபடச் செய்தான். இது குகைக் கோயில் என்று கூறப்பட்டது. அப்பால் ஆகம விதிப்படி கோயிலை அமைக்க எண்ணி குகைகளைப் பெரிதாகக் குடைந்து நடுவே திருவுண்ணாழிகையையும், அதன் முன் தூண்களையும் முக மண்டபத்தையும் அமைக்கச் செய்தான். தமிழகக் கோயில் வரலாற்றில் ஒரு புதிய முறையில் கோயில்கள் அமைத்து மக்கள் பக்தியுடனும் ஊக்கமுடனும் உற்சாகத்துடனும் இறை வழிபாடு இயற்ற வழி செய்தான். இவனுக்கு குணபதீசுரன், விசித்திர சித்தன் என்று பலர் பெயர்கள் உண்டு. குடைவரைக் கோயில் மகேந்திரவர்மனின் பெரும் முயற்சியால் தமிழகத்தில் கற்பாறைகளைக் குடைந்து பலகுடைவரைக் கோயில்கள் எழுப்பப் பெற்றன. அவன் தளவானூர், திருச்சி, மண்டகப்பட்டு, பல்லாவரம், மகேந்திரவாடி, வல்லம், மேலச்சேரி, சிங்கவரம், திருக்கழுக்குன்றம், கீழமாவிலங்கம் சீயமங்கலம், மாமண்டூர் முதலிய இடங்களில் உள்ள குன்றுகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை எடுப்பித்தான். அவைகளில் மகேந்திரவாடி, மாமண்டூர், நாமக்கல், சிங்கவரம் ஆகிய ஊர்களில் எடுப்பித்த கோயில்கள் திருமாலுக்கும், பல்லாவரம் சீயமங்கலம் திருக்கழுக்குன்றம் திருச்சிராப்பள்ளி வல்லம் தளவானூர் ஆகிய இடங்களில் உள்ள குன்றுகளில் குடைந்த கோயில் சிவபெருமானுக்கும் உரியதாக சமைக்க ஏற்பாடு செய்தான். மண்டகப் பட்டு குகையில் எடுப்பித்த கோயிலை மும்மூர்த்திகளுக்கு உரியதாக்கினான். இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள். 1. The seven pagodas - J.W. Coombes, London 1914. 2. Mahabalipuram - Miss. Padma Trivekrama Narayanan B.A,B.T. Madras.1957 3. Mahabalipuram or seven pagodas - D.R. Tyson Madras - 1931. 4. A History of India - K.V. Rengaswamy Iyenkar M.A., London 1910. 5. Studies in pallava History - Rev. H. Heras S.J. 1913 (Bombay) 6. A guide to mahabalipuram Miss. P.T. Narayana 7. Indian Architecture - V.R. Iyer. 8. History and institutions of the pallavas - C. SrinivasaChary (Madras). 9. Pallavas - P.T. Srinivasa Ayangar Part II 10. Epigraphic India vol.X 11. History of the pallavas of kanchi R. Gopalan (Madras). 1928 12. Kanchi Dr. Miss C. Meenakshi M.A. Ph.D. (Delhi).1941 13. Pallava Architecture Part I - A.H. Lonchirst (Simla) 1923. 14. நரசிம்மவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி சென்னை 1957. 15. பல்லவர்கள் வரலாறு - டாக்டர் மா. ïuhrkh¡f« ãŸis M.A., M.o.c., Ph.D. மண்டபங்கள் மண்டபங்கள் கோயில்களின் உட்புறத்தில் விழாக்காலத்தில் தெய்வங்களுக்கு திருமணவிழா திரு ஊஞ்சல் ஆடல், (மாலை வேளைகளில் உல்லாசப் பொழுது போக்குதல்), தாண்டவம் நடனம் ஆடுதல் போன்றவைகளுக்காக அமைக்கப்பட்ட அகன்று நீண்ட பொது அறை (Big hall) எனலாம். கோயில்களுக்கு வெளியே தெய்வத்திரு உருவங்கள் ஊர்வலம் வரும்பொழுது பெரிய வீதிகளில் ஆங்காங்கே தங்கிச் செல்வதற்காக மக்களும் மன்னர் களும் வணிகர்களும் மண்டபங்கள் கட்டி வைத்துள்ளார்கள். பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டு மன்னர்களின் அரண்மனையில் பல மண்டபங்கள் இருந்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கோயில்களில் அமைக்கப்பட்ட மண்டபங்களில் திரு உருவங்கள் பிரதிட்டை செய்து நாடோறும் வழிபாடு செய்யப் படுவதில்லை. இங்கு தெய்வ உருவங்கள் சப்பரங்களில் ஊர்வலம் வரும்பொழுது சில மணிநேரம் தங்கும். அப்பொழுது மக்கள் அங்கு சௌகரியமாய் நின்று வழிபடுவார்கள். மற்றையக் காலங்களில் மண்டபங்களில் இசைக் கச்சேரிகளும், நாட்டியக் கச்சேரிகளும் சொற் பொழிவுகளும் நடைபெறும். கோயிலுக்கு வெளியே தெருக்களில் தனிப்பட்ட நபர்களும், இனத்தவர்களும் அமைத்த மண்டபங்களில் மக்கள் தங்குவார்கள். திருச்செந்தூர் மதுரை போன்ற இடங்களில் பல இனத்தவர்கள் தங்கள் இனத்தின் பெயரால் மண்டபங்கள் அமைத்திருக்கின்றார்கள். இந்த மண்டபங்கள் இரு வகைப்படும். ஒன்று பயனைக் கருதி எழுதி எழுந்தவை; மற்றொன்று கால்களை (தூண்களை)ப்பற்றி எழுந்தவை என்று அறிஞர்கள் பிரித்துள்ளார்கள். பயனை யொட்டி எழுந்த மண்டபங்களாவன: 1 திரு உண்ணாழிகைக்கு (கர்ப்பக்கிருகத்திற்கு) முன்னர் காணப்படும் மண்டபம் இது (1) அர்த்த மண்டபம் எனப்படும்; இது நான்கு கால்களைக் (தூண்களைக்) கொண்டது. கருவறைக்கும் இம்மண்டபத்திற்கு இடையிலுள்ள வெளி அந்தராளம் எனப்படும். மற்றொன்று (2) மகாமண்டபம், ஆறு கால்களைக் கொண்டது. இன்னொன்று (3)நபன மண்டபம்; எட்டுக் கால்களை உடையது. பிறிதொன்று (4) நிருத்தமண்டபம்; பன்னிரண்டு அல்லது இருபது கால்களைக் கொண்டது. வேறொன்று (4) விருச மண்டபம்: பதினாறு அல்லது முப்பத்திரண்டு கால்களை யுடையது. திருக்கோயிலில் உள்ள திருஉண்ணாழிகையும் அம்பலமும் மண்டபங்களாகவே கருதப்படும். திருஉண்ணாழிகை தலை; அர்த்த மண்டபம் நெற்றி; மகா மண்டபம் கண்கள்; நபன மண்டபம் மூக்கு; நிருத்த மண்டபம் வாய்; விருசப மண்டபம் கழுத்து என்று அறிஞர்களால் விளக்கம் அளிக்கப் பெற்றுள்ளது. இந்த ஐந்து மண்டபங்களைத் தவிர வேறு பல மண்டபங்களும் உண்டு. அவை (1) திரு உண்ணாழிகை, (2) அந்த ராளம், (3) அர்த்த மண்டபம் (4) மணிமண்டபம், (5) மாமண்டபம், (6) முன்மண்டபம் எனப்படும். இந்த மண்டபங்கள் எல்லாம் எல்லாக் கோயில்களிலும் இராது முற்றுப் பெற்ற கோயில்களில் தான் இருக்கும். முற்றுப்பெறாத கோயில்களில் ஒன்றிரண்டு மண்டபங்கள்தான் இருக்கும். இம்மண்டபங்களில் வழிபட வருபவர்கள் தங்கள் பக்குவத்திற்கு ஏற்ப நின்று வழிபடுவார்கள். கோபுரத் தோற்றம் வெகு தொலைவில் தெரியும். அதை தூல லிங்கம் என்பர். (விமானந்தான் தூலலிங்கம் எனப்படும். ஆசிரியர். அ. இராகவன்) முதலில் அதையே (விமானத்தையே) தரிசிக்க வேண்டும். இங்கு ஆசிரியர் தவறாக விமானத்தை இறைவனது திரு முடியாக வழிபடவேண்டும் என்பதை கோபுரத்தைத் தூல லிங்கமாக வழிபடவேண்டும் என்பது தவறு. கல்லையும், குல்லையும், நெல்லையும் புல்லையும், சிலுவைதாங்கிய மணி முடிதரித்த எட்வர்ட் உருவம் தாங்கிய வெள்ளிப் பணத்தையும் அரபி எழுத்துள்ள பொற்பணத்தையும் வடமொழி ஏட்டையும் கருடன் உறைந்த கூட்டையும் கண்டதும் தொட்டு கண்ணில் ஒற்றில் இறைவனாக எண்ணி வழிபடும் மக்கள் கோபுரத்தையும் தூல லிங்கமாக வழிபடலாம்1 என்று இந்து அற நிலையப் பாதுகாவல் கழகத்தின் ஆணையாளர் திரு. சி. இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் கூறி இருக்கிறார் என்பதை அறிந்தால் இனிக்கோயில் சுவரையும், தூண்களையும், படிக்கற்களையும் கதவுகளையும் குழவிக்கல்லையும் இறைவனாக எண்ணி வழிபட ஆரம்பித்து விடுவர். மண்டபம் பற்றியவை சில கோயில்களில் நந்தி மண்டபம், கலியாண மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், கொலு மண்டபம், அலங்கார மண்டபம், காட்சி மண்டபம் என்று சில மண்டபங்களும் உள்ளன. திருமால் கோயில்களில் கருடன், அனுமான், ஆழ்வாராதி போன்றவர்களுக்கும் மண்டபம் உண்டு. திரு உண்ணாழிகை பற்றியவை கோயில்கள் என்று பழந்தமிழர்கள் கண்டது திருஉண்ணாழிகை ஒன்றைத்தான். ஆதியில் திரு உண்ணாழிகையை எழுப்பி அதன் மீது பெரிய விமானத்தை எடுப்பிப்பார்கள். திரு உண்ணாழிகையின் நடுவில் சிவலிங்கம் இருக்கும். இதனை மூலவர் என்பவர். மூலவர் சிவன் ஆகும். சிவனுடைய திருமுடி விமானமாக மதிக்கப் பெற்றது. தொலைவில் வருபவர்கள் விமானத்தைக் கண்டே இறைவனை வழிபடுவர். திருஉண்ணாழிகையைச் சுற்றி நாற்புறமும் உயர்ந்த மதில்கள் எழுப்பப்பெற்றிருக்கும் மதில்களில் இருபுறத்திலும் அல்லது நான்கு புறத்திலும் வாயில்கள் இருக்கும். இத்திருக் கோயில்கள் பெரிய நிலப்புரப்புள்ள இடத்தில் நடுவே திரு உண்ணாழிகை இருக்கும். புத்தவிகாரை பற்றியது திருஉண்ணாழிகையின் நாற்புறமும் உள்ள அகன்ற வெளியில் மக்கள் நின்று நடுவேயுள்ள சிவலிங்கத்தை நோக்கி வழிபடுவார்கள். இந்த அமைப்பில்தான் ஆதியில் தமிழர்கள் கோயிலை அமைத்தனர். அனைத்துலகப் பௌத்த சமயங்களும் புனிதக் கோயிலாக எண்ணி லட்சோப லட்சம் மக்கள் கூடி நின்று வழி பாடியியற்றும் போபாலுக்கு அருகில் உள்ள சாஞ்சி பௌத்த விகாரை மேற்கூறிய அடிப் படையிலே அமைக்கப் பெற்றுள்ளது. நான்கு வாயில்களிலும் அளியில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த தோரண வாயிலில் மூன்று தோரணங்களை இருபெரும் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்களிலும் போதிகைகளிலும் தோரணங் களிலும் புத்தரின் வாழ்க்கை வரலாறும் சாதக கதை நிகழ்ச்சிகளும் தூபி, சக்கரம், மரம் முதலிய சின்னங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த வாயில்களைக் கடந்து உள்ளே புகுந்ததும் பெரிய மதில்கள் அதனுள் பெரிய மைதானத்தின் நடுவில் பெரியதூபி உள்ளது. இவை அரைக்கோளாகும் வட்டவடிவில் உள்ளது. இதில் புத்தரின் புனித அதி அடக்கம் செய்யப் பெற்றுள்ளது. சாஞ்சியில் ஒப்பற்ற சின்னங்களை அகழ்ந்தெடுத்துப் புதுப்பித்த பெருமை சர் சாண் மார்சலுக்கு உரியதாகும். இவரே சிந்துவெளி அகழ் ஆய்வை நடத்தியவர். இவர் சாஞ்சியைப்பற்றி சாஞ்சியின் நினைவுச் சின்னம் என்று ஒரு சிறு அரிய நூலை எழுதியுள்ளார். அதில் விளக்கம் தரப்பெற்றுள்ளது.1 மசூதி பற்றியது இதே போன்ற அமைப்பில் இலாமியர்களின் புனிதக் கோயிலாகத் திகழும் அரேபியா நாட்டிலுள்ள மக்கா மாநகரில் உள்ள கஃபா என்னும் தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் உலகின் நானாதிசைகளினின்றும் லட்சோபலட்சம் மக்கள் நின்று இறைவழிபாடு நடத்துகிறார்கள். பிரகாரங்கள் பற்றியது இந்த அடிப்படையிலே தமிழகத்தின் திருக்கோயில்கள் துளிர்த்தெழுந்தன. திருஉண்ணாழிகையின் உறுப்புகள் அனைத்தும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. விமானமும் உயர்ந்து அழகிய சிற்பச் சிறப்புடையதாய்த் திகழ்ந்தன. மக்கள் அவற்றைக் கண்டுகளித்துத் தொழுது வந்தனர். இன்று அவைகள் மறைக்கப்பட்டு நாற்புறமும் பிரகாரங்களும் மண்டபங்களும் எழுப்பப் பெற்றுள்ளன. மக்கள் மழை வெய்யில் முதலிய இயற்கையின் கோபத்திற்கு ஆளாகாது நிம்மதியாக நின்று வழிபாடுச் செய்வதற்கென்பதற்கேயாம். இவைகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களால் நிறுவப் பெற்றது. இந்தப் பிரகாரங்கள் சிறப்பாக மதுரை, திருநெல்வேலி இராமேசுவரம், சுசீந்திரம் முதலிய இடங்களில் உள்ளன. இதைப் பற்றிப் பின்னர் விரிவாய் ஆராய்வோம். இந்தப் பிரகாரங்களை இடைக்காலத்தில் இங்கு வந்த நாயக்க மன்னர்கள் மக்களின் நாகரிக வளர்ச்சிகேற்ப்ப பிரகாரங்களை அமைத்துள்ளனர் என்றாலும் ஆதியில் தமிழர்கள் அழகிய உண்ணாழிகையை அமைத்த மூலக் கருத்தை மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த ஒரு மரபு மாற்றப் பட்டுள்ளது. நிற்க, கோயில் பிரகாரங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்பிகள் கூறுகின்றார்கள். அதாவது, (1) காப்பாவரணம், (2) அந்தராக்கம் (3) மத்தியார்க்கம் (4) மரியாதை (5) மகாமரியாதை என்று கூறப்படும். மண்டபங்கள் பற்றியது கால்கள் பற்றி எழுந்த மண்டபங்களாவன: (1) நாலு கால் மண்டபம் (2) எட்டுக்கால் மண்டபம் (3) பதினாறு கால் மண்டபம் (4) முப்பத்திரண்டு கால் மண்டபம் (5) அறுபத்து நான்கு கால் மண்டபம் (6) நூற்றெட்டுக் கால் மண்டபம் (7) ஆயிரத் தெட்டுக்கால் மண்டபம். இவைகளில் பெரும்பாலும் பெரிய மண்டபங்கள் வெளிப் பிரகாரங்களில் தான் இருக்கும். இவைகள் விழாக்காலங்களில் பெரிதும் பயன்படும். மற்றையக் காலங்களில் உபயோகமற்றவைகளாய் இருந்தன. இன்று ஆயிரக்கால் மண்டபம், நூற்றெட்டுக் கால் மண்டபங்கள் கலைக் கூடங்களாக மாற்றப் பட்டு வருகின்றன. மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள மண்டபத்தில் ஒரு கலைக் கூடம் நிறுவப்பெற்றுள்ளது. திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் திருக்கோயிலில் உள்ள மண்டபத்தை கலைக்கூடமாக மாற்றத் திட்டமிட்டு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா செய்யப் பெற்று அடிப்படை வேலைகள் அனைத்தும் செய்யப்பெற்றுள்ளன. தமிழகத்தில் பல கோயில்களில் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்து நான்கு கால்கள் கொண்ட மண்டபங்கள் உள்ளன. ஆனால் 108, 1008 கால் மண்டபங்கள் ஒரு சிலவே உள்ளன. அவற்றின் விவரம் அடியில் வருமாறாகும்: மண்டபங்கள் முற்காலத்தில் நமது கோயிலினுள் கருவறையும் முகமண்டப மும் மட்டும் இருந்தன. அப்பால் மக்கள் தொகை அதிகப்படவே நின்று வழிபடவும் வேறுகாரியங்களுக்காகவும் மண்டபங்கள் பல எழுந்தன. இந்த மண்டபங்கள் இரு விதப்படும். ஒன்று பயனை அனுசரித்தவை. மற்றொன்று கால்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பெயர் பெற்றவை. 1. பயனை அனுசரித்து எழுந்த மண்டபங்கள் 1. திரு அகநாழிகை முன்னிருக்கும் இடை நாழிகை (அர்த்தமண்டபம்) - 4 கால் 2. மகாமண்டபம் (அடுத்திருப்பவை) - 6 கால் 3. நபன மண்டபம் - 8 கால் 4. நிருத்த மண்டபம் - 12 அல்லது 20 - கால் 5. விருசபமண்டபம் - 16 அல்லது 32 கால் (2) கால்களின் எண்ணிக்கைகளை கொண்டு பெயர் பெற்றவை. 1. நான்கு கால் மண்டபம் 2. எட்டுக் கால் மண்டபம் 3. பதினாறு கால் மண்டபம் 4. முப்பத்திரண்டு கால் மண்டபம் 5. அறுபத்து நான்கு கால் மண்டபம் 6. நூற்றுக்கால் மண்டபம் (இது 108 கால்களையுடையது) 7. ஆயிரக்கால் மண்டபம் (இது 1008 கால்களையுடையது) பிற்காலத்தில் தான் தமிழ்நாட்டுத் திருக்கோயிலின் பிரகாரங்களில் மண்டபங்கள் சேர்க்கப்பட்டன. சிற்ப நூற்களின் விதிப்படி ஏறக்குறைய 108-பெயர்கள் உள்ள பெரிதும் சிறிதுமான மண்டபங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; இவைகளின் பெயர்களை எல்லாம் இங்கு குறிப்பதற்கு இடமில்லை. இவற்றுள் சில நூற்றுக்கால் மண்டபம் ஆயிரக்கால் மண்டபம் என்பதை மாத்திரம் குறிக்கின்றேன். கடைசியாக உற்சவமூர்த்திகள் அமைக்கப்பட்ட பிறகு பெரிய கோபுரங்களுக்கு எதிரில் நான்கு அல்லது பதினாறு கால் மண்டபங்கள் கட்டப்பட்டன. பதினாறுகால் மண்டபத்தருகில் இரதோற்சவ காலத்தில் தெய்வத் திருஉருவங்கள் தேரில் ஆரோ கணிப்பதற்காகத் தேர்முட்டிகள் என்று சொல்லப்பட்ட தேர் நிலையங்கள் அமைக்கப்பட்டன என்று சிவாலய சிற்பங்கள் என்ற நூலில் இராவ் பகதூர் பி. r«gªj KjÈah® ã.V., பி. எல் அவர்கள் கூறுகிறார்கள்.1 இம்மண்டபங்களின் தோற்றங்களின் தோற்றத்தை யும் அதன் அவசியத்தையும், விளக்கிக் கூறிவிட்டு எங்கெல்லாம் எவ்வெவ்விதமான மண்டபங்கள் இருக்கின்றன என்பதையும் முன்னாள் இந்து அறநிலையப் பாதுகாப்பான காவற் கழகத்தின் ஆணையாளர் இராவ் பகதூர் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் அடியில் வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்: பிரகாரம் பற்றி 1. கோயில்களிலே பிரகாரங்கள் (திருச்சுற்றுக்கள்) ஐந்து வகைப்படும். 1. கர்ப்பாவரணம், 2 அந்தராக்கம், 3 மத்தியார்க்கம், 4 மரியாதை, 5 மகாமரியாதை எனப்படும் இவ்விதமான பிரிவினைகள் காமிக ஆகமத்தில் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மண்டபத்திலும் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்று அது கூறுகின்றது. மண்டபங்கள் பற்றி 2 எண்ணிக்கை மண்டபங்கள்:- இவைகளின் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்து நான்கு, நூற்றெட்டு, ஆயிரத் தெட்டுக் கால்களைக் கொண்ட மண்டபங்கள் உண்டு. இவைகளில் பெரியவைகள் பெரும்பாலும் வெளிப்பிரகாரங்களில் உண்டு. அவை பெருந்திருவிழாக்களில் பயன்படுபவை 100-கால்களும் 1000 - கால்களும் கொண்டவை. இந்த மாபெரும் மண்டபங்கள் விசயநகர மன்னர்கள் காலத்தில் தமிழகத்தில் எடுப்பிக்கப் பெற்றவைகளாகும். (அ) 1008 கால்கொண்டவை - 1 சிதம்பரம் இராசசபை சேக்கிழார் காலத்திலே இருந்தது. 2 திருவண்ணாமலை-1505-ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயன் கட்டினது, முடிவு பெறவில்லை. 3 மதுரை 1561-ஆம் ஆண்டில் அரிய நாயக முதலிய கட்டினது. அருமையான வேலைப்பாடு உள்ளவை. 4 திருநெல்வேலி நாயக்க மன்னர் காலத்தில் எடுப்பிக்கப் பெற்றது. சிறு சிற்பங்கள் மிகுதி. 5. திருவரங்கம் - 952 கால்கள் உள்ளன. விழாக்காலத்தில் 56-கால்கள் சேர்ப்பார்கள். இதன் தூண்கள் சிறந்த சிற்ப பணிகள் வாய்ந்தன. 6 காஞ்சிபுரம் ஏகாம்பரர் - மூன்றாம் திருச்சுற்றில் கால்களில் உருவங்கள் உண்டு. 7 திருப்பதித் திருமலை - 1464-இல் சாளுவமல்லையன் கட்டினது. 8 திருவக்கரை - சந்திர மௌலீசர் கோயில் கட்டினது சம்புவராயன், 13 - ஆம் நூற்றாண்டு. 9 திருவாரூர் - தேவாசிரிய மண்டபம். காவணமாயிருந்தது கற்றூணாக்கப்பட்டது. 10. திருவானைக்கா - முன்னால் உள்ளது, பூவேலை, கொடி மிகுதியும் உள்ளது. 1. 108-கால் கொண்டவை: - 1. சிதம்பரம், நரலோக வீரன் கட்டியது. 12-ஆம் நூற்றாண்டு. 2. திருச்சிராப்பள்ளி - தாயுமானவர் மலைமேல் இடதுபுறமாக உள்ளது. 3. திருவதிகை - வலதுபுறம், மணலிக் கூத்தன் நரலோக வீரன் கட்டியது. 12 - ஆம் நூற்றாண்டு. 4. காளையார் கோயில் - 1038-ஆம் ஆண்டு மாறவர்மன் குலசேகரவர்மன் 1-ன் ஆட்சிகாலம். 5. காளத்தி-இரண்டாம் பிரகாரம், 1517-இல் கிருஷ்ண தேவராயன் கட்டியது. 6. முட்டம் - (தென்ஆர்க்காடு) குறுநிலமன்னர்கள் ஆற்றிய திருப்பணி. 7. மதுரை - புது மண்டபம் - 1625 திருமலை நாயக்கன் கட்டியது. நாயக்க மன்னர்கள் தூண்களில் உள்ளன. 8. காஞ்சி வரதராசர், அனந்தசரசின் தென்கரை 1515-இல் கிருஷ்ணதேவராயன் கட்டியது. சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை. யாளிகள், சிங்கங்கள், சங்கிலிகள், தாமரைகள் போல சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. 9. காஞ்சி ஏகாம்பரம் - இதில் கச்சிமயானர் தளி உண்டு. 10. திருவானைக்கா - மூன்றாம் பிரகாரம் - சாதாரண வேலைப்பாடுகள். 11. திருக்கடவூர் - முதல் பிரகாரம், இடதுபக்கம் மேலே வளைவு கொண்டது. 108- ம், 1008-ம் கால்கள் கொண்ட பெரிய மண்டபங்கள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்கள் சிற்ப வேலைப்பாட்டில் ஒரு பெரும் ஆக்க வேலைக்காரர்களாகக் கொள்ளவேண்டும். திருவிழாக்கள் சொற்பொழிவுகள் முதலியன நிகழ்வதற்கே இவை இயற்றப்பட்டன. சிதம்பரத்தில் ஆயிரக்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் அடிகள் திருத்தொண்டர் புராணத்தை எடுத்துரைத்தார் என்பது வரலாறு. காஞ்சிக் கோபுரத்தில் அதிகாரிகள் விருந்தும் விளையாட்டும் வைத்திருந்தார்கள். அத்தனை பெரியது என்க. முற்காலத்தில் திருமதில்களுக்குள்ளே சட்டங்களும் விட்டங்களும், பட்டியல்களும், பலகைகளும் கொடுங்கைகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாய் அமைத்தனர். முற்காலத்தில் தஞ்சை ஆவுடையார் கோயிலில் உள்ள மண்டபத்தில் உள்ள கொடுங்கை மிக வியத்தகு வேலைப்பாடுகளை உடையது. இன்றுள்ள சிற்பிகள் செய்வதற்கு அரியது என்று மதிப்பிடுகின்றார்கள். அதுபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு வீழி மிழலை வௌவால் நத்து மண்டபமும் அருமையான சிற்பநுட்பம் வாய்ந்ததாகும். இன்று கோயில்கள் நிர்மாணிக்கும் சிற்பிகள் கோயில்கள் அமைக்கும் செல்வர்களிடம், ஆவுடையார் கோயில் கொடுங்கையையும் வௌவால் நத்து மண்டபத்துத் தூண்களையும் தவிர்த்து வேறு எந்த வேலையையும் சிறப்பாக, நிறைவாக முடித்துத் தருகிறோம் என்று ஒப்பந்தம் எழுதி வருகின்றார்கள். இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. செயற்கை நலம் - சி. எம். இராமச்சந்திரன் செட்டியார். சென்னை 1950. 2. கோயிற்கலையும் சிற்பங்களும் - பி. ஆர். ஸ்ரீனிவாசன் M.A. சென்னை 1965. 3. Principles of indian silpa sastiras. Prof Phanmidra.Nath Bose M.A. (Lahore)1926. 4. South Indian Shrines P.V. Jegadisa Iyer Madras 1922. 5. Siva temple Architecture ete in tamil S. Sambanthan. B.A. B.L. Madras 1948. 6. The Mouments of sanchi - Sir John Marshal - K.T. C.I.E Lit., D.F.S.A. (Bombay) 1927. 7. An outline of Indian Temple Architecture - F.H. Gravely F.R.A.S. (Madras) 1950. 8. Kanchi - Dr. C. Meenakshi M.A. Ph. D., New Delhi. 19 . . . published by . .. .of India. 9. History of India - K.V. Rangasamy Ayangar M.A. (London) 1910. தூண்கள் - கால்கள் முற்காலத்தில் தமிழ்நாட்டுக் கோயில்களிலும் வீடுகளிலும், அரண்மனைகளிலும் மாளிகைகளிலும், மண்டபங்களிலும் மரங்களால் தூண்கள் விடப்பட்டன. அப்பால் சுடுமண் செங்கற் களைக் கொண்டு தூண்கள் கட்டப்பட்டன. பின்னர் கருங்கல்லால் வட்டவடிவிலும் சதுரவடிவிலும் நீண்ட வடிவிலும் அறுகோண வடிவிலும் தூண்கள் விடப்பட்டன. தூணில் யாழி, புலி, சிங்கம், யானை பக்தர்கள் உருவம், தாமரை மலர் போன்றவைகள் செதுக்கி விடப்பட்டன. இத்தூண்கள் சேரர்பாணி, பாண்டியர் பாணி, சோழர்பாணி, பல்லவர்பாணி என பலவகைப் பட்டதாய் செய்யப் பட்டன. நமது நாட்டில் அணி வெட்டிக்கால் என்னும் பெருந்தூண் களும் செய்யப்பட்டுள்ளன. அழகாகவும் உறுதியாகவும் அடுத்து அடுத்து இருதூண்கள் நிற்பது போல் பெரிய தூண்களும் செய்து விடப்பட்டன. தூண்களுக்கு உறுதியான அடிப்படையிட்டு மேலே உள்ள பெரும்பாரத்தைத் தாங்குவதற் கேற்றதாய்ச் செய்யப்பட்டது. தூண்களை அடியில் சதுர வடிவாக அமைத்து சுமார் 2 ½ அல்லது 3 அடி உயரத்தில் நாகபந்தம் என்று அணிதிகழச் செய்வார்கள் அதன் மேலே தூண்கள் 6 அல்லது 8 பட்டைகள் இருக்குமாறு செய்வார்கள். கல்லால் அடித்தளம் அமைத்து அதன் மீது தூண்கள் நிறுத்தி தூண்கள் மேல் உத்திரம் அதன்மேல் பாவுகற்களை வரிசையாக அடுக்கி வைத்து மண்டபமோ கருவறையோ (உண்ணாழிகையோ) விமானமோ அமைப்பது திராவிடக் கட்டிடமுறையாகும். தூண்கள் தான் மேற்கூரையையோ அல்லது உயரமான கோபுரங்களையோ தாங்கி நிற்பனவாகும். இத்தூண்கள் பெரிதும் கல்லால் அமைக்கப் படும். தூண்கள் பெரிதாகவும் உறுதியாகவும் இருக்கும். திராவிட சிற்பத்தில் தூண்கள் சதுரமாயும், நீண்ட சதுரமாயும் வட்டவடிவமாயும், ஆறுபட்டம் அல்லது எட்டுப்பட்டங்கள் கொண்டதாயும் இருக்கும். தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் காணப்படும் தூண்கள் அழகுமிக்கவைகள். பல்லவர்கள் எடுப்பித்த கோயில்களிலும் மண்டபங்களிலும், கோபுரங்களிலும் உள்ள தூண்களின் அடியில் சிங்கம் உட்கார்ந்திருப்பது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. பாண்டிய நாட்டுக் கோயில்களில் யானை முதுகின் மீது தூண்கள் நிற்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. சில தூண்களில் யாழிகளும் குதிரைகளும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுத் தூண்கள் பல்வேறு உறுப்புகளை உடையன வாய்க் காணப்படுகின்றன. அவை அடியில் வருமாறாகும்: (1) வேதிகை (2) நாகபந்தம் (3) கால் (4) கலயம் (5) குடம் (6) பலகை (7) போதி எனப்படும். சில தூண்கள் (1) கால், (2) பதுமபந்தம், (3) கலயம், (4) தாடி, (5) குடம், (6) இதழ், (7) முனை, (8) பலகை (9) கண்டம். சில தூண்கள், 1 அசுவபாதம், 2 சதுரம், 3 நாகபந்தம், 4 கட்டு, 5 சதுரம், 6 பட்டம், 7 கட்டு, 8 சதுரம் போன்ற உறுப்புகளை யுடையது. பல்லவர் காலக் கோயில் தூண்கள் பலவகைப்பட்டனவாய் உள்ளன. நாற்புறமும் ஒரே அளவுடைய சதுரத் தூண்கள் ஒரு வகையின. அடியிலும் மேலும் பருத்து இடையில் சிறிதளவு சிறுத்து நிற்கும் சிங்க வடிவின் மீது எழுந்த தூண்கள் வேறு ஒருவகையின. முன் காலை ஊன்றி குன்றி உட்கார்ந்துள்ள சிங்க வடிவில் அமைந்துள்ள தூண்கள் மற்றொரு வகையின. சதுரத் தூண்களுள் நீள்சதுர அமைப்புடைய தூண்கள், சிம்ம விஷ்ணு மகேந்திரவர்மன் காலத்தவை. உட்கார்ந்துள்ள சிங்கத்தூண்கள் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை. சிங்க உரு அமைப்பைப் பெற்ற தூண்கள் இராசசிம்மன் காலத்தவை என்று கருதப்படுகின்றன. சதுரத் தூண்களின் கீழ் காணப்படும் தாமரை மலர்களும் வட்டங்களும் பல்வேறு அழகிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்கள் நிற்கும் மண்டபம் அல்லது வாயில் அடிப்பகுதியில் இரட்டைத் திருவாசி காணப்படும். அதனில் வளைவுக் கோடுகள் மகர மீன்கள் யாழி குதிரை முதலியன எழிலுறச் செதுக்கப்பட்ட அமைப்புப் பார்க்கத் தக்கதாகும். தூண்கள் பல்வேறு வடிவில் பல்வேறு பொருளில் அமைக்கப் பெற்றுள்ளன. (1) சதுரத்தூண்கள் (2) நீண்ட சதுரத் தூண்கள் (3) உருண்டைத் தூண்கள் (4) கனசதுரத் தூண்கள் (5) (6) ஆறு பட்டமுள்ள தூண்கள் (7) எட்டு பட்டமுள்ள தூண்கள் (8) அடியில் சதுரமாயும் அதன் மேல் ஆறுபட்டமாயும் உள்ள தூண்கள் (9) அணி வெட்டிக் கால் தூண்கள் (10) குமிழ்ப் போதிகைத் தூண்கள் எனப்பலவகைத் தூண்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் இன்றும் காணலாம். இத்தூண்கள் நாட்டுக்கு நாடு வேறுவிதமாயும் காலத்திற்குக் காலம் மாறியும், வளர்ந்தும் பரிணமித்துள்ளன. குமிழ்ப் போதிகைத் தூண்கள் பல்லவர்கள் நாட்டில் கி.பி. 600-இல் எப்படி இருந்தது. சோழ நாட்டில் கி.பி. 1000-ல் எப்படி இருந்தன பாண்டிய நாட்டில் கி.பி. 1300இல் எப்படி இருந்தது. பாண்டிய நாட்டில் நாயக்கமன்னர் ஆட்சியில் கி.பி. 1650இல் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் இலகு இணைக்கப் பெற்றுள்ளது காண்க. முற்காலத்தில் தமிழ்நாட்டில் பல்வடிவில் செங்கல்லால் சுண்ணச் சாந்து வைத்து மேலே சுண்ணச் சாந்து தீட்டிய சுதைத் தூண்களும், மணற் கல் தூண்களும் கருங்கல் தூண்களும் மரத் தூண்களும், பவளத் தூண்களும் மரத்தூண்கள் மீது வெள்ளித் தகடுகளும், பொற்றகடுகளும் பொதியப் பெற்ற தூண்களும் உள்ளன. இத்தூண்கள் பல வடிவில் சோழர் பாணி, சேரர் பாணி, பாண்டியர் பாணி, பல்லவர் பாணி, விசயநகர நாயக்கர் பாணி என்று இருந்தன. என்றாலும் அனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்த தாக இருந்தன. தமிழ்நாட்டுத் தூண்கள் ஏனைய நாட்டுத் தூண் களை விட எழிலும் ஏற்றமும் பெற்றதாய் விளங்கின. பெரியகோயில் களில் ஒரு தூணும் அருகருகே சிறுதூணும் அடுக்கடுக்காய் மூன்று விண் களும் அமைக்கப்பட்ட பெரிதும் நெடிதுமான தூண்கள் உள்ளன. அவைகளையொட்டி ஒரு குதிரை மீது ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பது போலவும் குதிரை முன் உள்ள காலைத்தூக்கிக் கொண்டு பாய்வது போலவும் கீழே ஒரு மனிதன் நிற்பது போலவும் காணப்பெறும். பெருந்தூண்கள் சிரிரெங்கம், மதுரை, திருநெல்வேலிக் கோயில்களில் காணப்படுகின்றன. சில பெருந்தூண்களில் ஒரே கல்லின் ஒரு மனிதன் வருவோர்களையும் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டிருப்பது போலவும் காணப்படுகின்றன. இது சிவபக்தர்கள் தங்கள் திருஉருவம் திகழத் தூண்கள் செய்வித்து கோயில் கட்டும்பொழுது காணிக்கையாக அளித்த தூண்கள் என்று எண்ணப்படுகிறது. தூண்கள் அசுவ பாதத்தின் மீது அமைந்திருக்கும். அதன்மீது சதுரவடிவாகவோ அல்லது வேறு வடிவாகவோ தூணை அமைத்து அதன்மேல் நாகபந்தம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய அலங்கார வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த அலங்கார வடிவம் பாம்பின் படம் போன்று இருப்பதால் இதற்கு நாகபந்தம் என்ற பெயர் எழுந்தது. நாகபந்தத்திற்கு மேல் தூண் சதுர வடிவம் பெற்றிருக்கும். அதனைப் பட்டை என்று கூறுவர். அதற்கு மேல் மூன்று கனப்பகுதியாக அமைந்திருப்பதைச் சதுரம் எனப்படும். இது சிற்ப நூல் வழக்கில் எழுந்துள்ள பெயர்களாகும். திரண்ட முதன்மையான தூண் மண்டபங்களின் வில் வளைவைத் தாங்கி நிற்பதற்காக மட்டும் மிக அபூர்வமாகச் செய்யப்படுகிறது. ஆனால் பெரிய கோயில்களில் பொதுவாக திரண்ட முதன்மையான தூண்களின் கூட்டுக் காணப்படுகின்றன. அதே கல்லிலும் ஒரு முதன்மையான கன வடிவம் உள்ளதை அணிவேட்டிடக்கால் என்று அழைக்கப்படும். உருவம் ஒரு வில்வலைவைத் தாங்கி நிற்கும் அணிவெட்டிக் காலின் உருவப்படமாகும். அடிக்கடி அணிவெட்டிக்காலின் பிரதான திரண்ட தூண் களுக்குப் பதிலாக ஒரு கற்பனை மிருகம் - அதாவது ஒரு குதிரை அல்லது ஒரு சிங்கம் அல்லது ஒரு யானையின் துதிக்கையோடுள்ள சிங்கம் (யாழி) அமைக்கப்பட்டிருக்கும். உருவம் 25 பொறிக்கப்பட்ட ஒருவகைத்தூண் மிகவும் நுணுக்கமான பகுதிகளைக் கொண்டதாகும். தற்காலத் தூண்களினின்று (உருவம் 14) முற்றிலும் வேறுபட்டுத் திகழ்கிறது. பல்லவர்களின் தூணில் முக்கியமான நுணுக்கங்கள் அதனுடைய விழிம்புகளை உடையதாய் நடுவில் மட்டும் வளைந்து காணப்படுகிறது. அது இருகன வடிவம் பகுதிகளை உடையதாயும் உருவம் 14-ல் காணப்படுவதைப் போல் மூன்றுகன வடிவம் காணப்படவில்லை. கனவடிவப்பகுதிகள் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பௌத்த சின்னங் களிலுள்ள திராவிடச் சட்டங்களை அலங்கரிக்கும் தாமரைப் பூக்களுக்கு கிட்டத்தட்ட ஒப்பானதாக இருக்கிறது. தூணின் அமைப்பு பல்லவ சகாப்தத்தின் முதன்மையான கனவடிவத்தோடு அதனுடைய உற்பத்தியைத் தெளிவாய் எடுத்துக் காட்டி நிற்கிறது. அது சாதாரணமான ஒரு சதுர உத்திரமாக அதனுடைய உயரத்தில் நடுவில் அதன்பக்கங்கள் வளைவுள்ளதாக இருக்கிறது. பௌத்த தூபிகளின் மர உத்தரங்களின் தோற்றத்தை இது எடுத்துக் காட்டி நிற்கிறது. இவைகளில் மகேந்திரவர்மப் பல்லவ மன்னன் காலத்தில் முதன்முதலாக எழுந்த கற்றூண்கள் நீள்சதுரமாகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் இல்லாமல் காணப்படும். பின்னர் எழுந்த தூண்கள் வேலைப்பாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது. முதலாம் நரசிம்மன் காலம் எழுந்த தூண்களை கொண்டதாகும். தூண்கள் இருக்கும் சிங்கங்கள் மீது அரும்பிய தூண்களாக இருக்கும் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் உருவான தூண்கள் நிற்கும் நிலையிலுள்ள சிங்கத்தின் முதுகின்மீது எழுந்த இவ்வகைத் தூண்கள் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் வைகுந்தப் பெருமாள் கோயிலிலும், மாமல்லபுரத்திலும் காணலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முன்மண்டபம் நாயக்கர்காலத்தில் கட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு யானையின் முதுகின் மீது தூண்கள் எழுப்பி அதன்மீது மரத்தினால் கொட்டகை போடப்பட்டிருக்கிறது. இசைத் தூண்கள் பாண்டிய நாடு தமிழ் வளர்த்த பழம்பெரும் நாடு என்று நமது சமயச் சான்றோர்கள் புகழ்ந்து கூறுவர். ஆனால், நமது புலவர்கள் பாண்டிய நாடு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வளர்த்த முதுபெரும் நாடு என்று சிறப்பித்துக் கூறுவர். பாண்டிய நாட்டில் முற்காலத்தில் முத்தமிழ் வளர்க்க முப்பெரும் சங்கங்கள் இருந்தன. சிவபெருமான் முதன்முதலாகத் தென் பாண்டி நாட்டிலேதான் முத்தொழிலைக் காட்டும் முப்பெரும் தாண்டவத்தை ஆடி, ஆடவல்லான் என்ற பெயரைப் பெற்றான். சிவபெருமான் நெல்லையில், செப்பறையில் ஆதியில் ஆடிய முனிதாண்டவம் காளிகா தாண்டவம் என்று கூறப்பெறும். இங்குதான் ஆடற்கு உரிய இசைகளும், இசைக் கருவிகளும் எழுந்தன. ஒப்புவமை இல்லாத குழல் தூண்களும், கல் நாதசுரமும் இசைப் படிமங்களும் இசைத் தூண்களும் இப் பழம்பெரும் பாண்டிய நாட்டில் உள்ளன. கருங்கல்லில் கண்ட கவின் பெறும் இசைக் கருவிகள் கால வேற்றுமையாலும் தட்பவெட்ப மாற்றத் தினாலும் அரும்பும் அழிவுகளையெல்லாம் எதிர்த்து நின்று இசைப் புலவர்களால் வரையறுக்கப்பட்ட தமிழ் இசை நுட்பங்களை இன்றும் நமக்கு எடுத்துக் காட்டும் நந்தா விளக்காய் ஒளிர்கின்றன. இந்தியாவில் எப்பகுதியிலும் ஏன்? உலகிலே எங்கும் இத்துணை அற்புதமான பாடும் - சிறந்த கற்றூண்களைக் காணவே முடியாது. எங்காவது ஒன்றிரண்டு தூண்கள் தென்பட்டாலும் அவைகள் எதுவும் பாண்டிய நாட்டுப் பாடும் கற்களுக்கு ஒலி நிறையிலோ எழில் நிறையிலோ ஒப்புவமை கூறக் கூடியதாக இருக்கவே முடியாது. கைவண்ணம் வாய்ந்த - கற்றுணர்ந்த தமிழ் நாட்டுச் சிற்பிகள், எதிரொலி கிளர்த்தும் கருங்கல் வகைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவைகளை நன்கு பரிசோதித்து அதனின்றே இசைப் படிமங்களையும், இசைத் தூண்களையும் உருவாக்கி யுள்ளார்கள். இந்த இனிய ஒலியைக் கிளர்த்தும் கற்களினின்று ஒரு மெல்லிய துண்டை எடுத்து அதைப் பூதக் கண்ணாடியால் பரிசோதித்துப் பார்த்தபொழுது அதில் சில அபூர்வமான குறிகள் காணப்படுகின்றன; இதன் மூலம் எத்தகைய கற்கள்தான் இசைத் தூண்களை உருவாக்குவதற்கு உபயோகப் படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அறிய முடிந்தது என்று அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். தட்டினால் பல்வேறு சுர ஒலிகளை எழுப்பும் தூண்களையோ, படிமங்களையோ அமைக்கச் சாதாரணமான கற்களை உபயோகப்படுத்தவில்லை என்றும் அதற்கு உரிய கற்கள் வேறு உள என்றும் இதனால் அறியப்படுகின்றன. இசைத் தூண்கள் பலவிதமான அழகு தரும் பலப்பல வடிவங்களில் பல வரிகளையும், பல உருட்டுக் கம்பிகளையும் உடையதாய்ப் பெரிய அளவில் காணப்பட்டாலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் இணையிலாத எடுத்துக் காட்டாக இலங்குவன நமது பாண்டிய நாட்டிலுள்ள மதுரை, திருநெல்வேலி, ஆழ்வாழ் திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பக ராமநல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம் முதலிய இடங்களில் உள்ளனவாகும். இஃதன்றி திருவானைக்காவு, தாடிக் கொம்பு, தாராசுரம், திருவனந்தபுரம், திருப்பதி, தாட்பத்திரி, லேபாக்சி, ஹம்பி, விஜயநகர், பெங்களூர், சாமராஜன் பேட்டை முதலிய இடங்களிலும் இசைத் தூண்களும் இசைப் படிமங்களும் உண்டு. அவைகள் பாண்டிய நாட்டின் பாடும் கற்தூண்களுக்கு ஒப்பாகா. இசைத் தூண்கள் எல்லாம் உயர்ந்த இன்னிசையை ஒன்று போல ஒலிக்கும் தன்மையுடையன என்று சொல்வதற்கில்லை ஒரு சில தூண்களின் ஒலிகள் மந்தமானதாக இருக்கின்றன; ஒரு சில தூண்கள் மூன்று அல்லது நான்கு சுரங்கள் மட்டிலும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன. சில தூண்கள்தான் தெளிவாகவும் சுத்தமாக வும் சிறப்பாகவும் கணீர் என்று ஒலி எழுப்புவனவாய் விளங்குகின்றன. இந்தக் கல்லிசைத் தூண்களின் நிறம் கறுப்பாகவோ வெள்ளையாகவோ, சாம்பல் நிறமாகவோ இருக்கும்; சில சந்தன நிறம்போலவும் இருக்கின்றன. இவை அனைத்தும் வடிவில் சதுரமாகவும் புரிகள் உள்ளதாகவும் வட்டமானதாகவும் அறுகோணம் எண்கோணம் போன்ற உருவம் உள்ளனவாகவும் காணப்படுகின்றன. பொதுவாக இத்தூண்கள் மூன்று அடிக்குமேல் ஆறு அடிவரை உயரம் உள்ளனவாய் இருக்கின்றன. இசைத் தூணிற்குக் கல் தேர்ந்தெடுக்கும் சிற்பி மிகக் கவனமாக நுணுகி ஆராய்ந்து ஏற்ற கல்லை மீண்டும் உளியால் தட்டியும், கொட்டியும் பார்த்துக் கல்லின் தரம் ஒலியின் தன்மை முதலியவைகளை ஆய்ந்து சிற்ப நூல் விதிப்படி தேவையற்ற பகுதிகளை உளியால் உடைத்து எறிந்துவிட்டு, அழகு பொலியும் பல்வேறு சுர ஒலிகள் எழத்தக்கதாக தூணை உருவாக்குகிறான். இத் தூணில் ஒரு சிறிய பகுதியும் உடைந்துவிடாமல் மிகக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து உருவாக்கிவிடுகின்றான். கரடுமுரடான கற்களையும் சிற்பி தன் கைவண்ணத்தால் செதுக்கி மெருகுதீட்டிய உலோகப்படிமம்போல தொட்டுப் பார்த்தால் பளிங்கு போல மழமழவென்றிருக்கும்படி செய்துவிடுகின்றான். இசைத் தூண்களைத் தட்டினால் ஓசை எழும். ஆனால் சில இசைத் தூண்களில் எழும் நாத ஒலி, எதிரே இருக்கும் இசைத் தூண்களையும் தாக்கி அவைகளை அதிர வைக்கின்றன. அதிரும் அத்தூண்களை விரல்களால் தொட்டுப் பார்த்தால் தூண்களின் ஒலி அசைவை நாம் உணர முடியும். ஆனால் தூணின் நடுப்பாகத்தில் இந்த ஒலி அசைவு எழுவதில்லை. அது தூணின் அமைப்பு முழுவதையும் தாங்கிக்கொள்வதற்கும், உறுதியைக் கொடுப்பதற்கும் உறு துணையாய் மட்டும் உதவுகிறது. அது இசைச் சுரங்களை எழுப்ப முடியாதவாறு கனமானதாகச் செய்யப்பட்டிருக்கிறது. சில இசைத் தூண்கள் எப்பகுதிகளை (அடி முதல் நுனிவரை)த் தட்டினாலும் வெவ்வேறு சுரங்களைத் தருகின்றன இந்த இசைத் தூண்கள் ஒலிகளை, தூண்களின் விளிம்புகளில் அல்லது சுற்று வட்டத்தில் நெடுகப் பகிர்ந்து கொடுக்கின்றன. மதுரை சுசீந்திரம் கோயில்களில் உள்பக்கம் சுற்று வரிசையில் இசைத் தூண்களின் இரண்டாவது வரிசையும் உள்ளன. இசைத் தூண்களைச் செய்யத் தொடங்குமுன் சிற்பி, தூண் களின் நீளம் அகலம் ஆகியவைகளை அளந்து, ஆய்ந்து இசையை எழுப்புவதற்கு ஏற்ற உருவ அமைப்பைத் தீர்மானித்துக் கொள்வர். அப்பால் சிற்பி கல்லைத் தேர்ந்தெடுத்து அதனைச் செதுக்க ஆரம்பிப்பார். அவர் அக் கல்லினின்று சரியான சுர ஒலியை எழும்பும் நிலை வரும்வரை அக் கல்லைத் துண்டுதுண்டாகப் பேர்த்துத் தூணின் எழில் உருவைக் காண்பார். சில சமயம் தூணின் சில பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்பொழுது அதில் (தூணில்) நல்ல சுர ஒலி எழுந்துவிட்டால் மேற்கொண்டும் தூணில் உளியை உபயோகித்து ஒலியின் ஓசையைக் குறைத்துவிடாமல் அப்படியே தூணை வைத்து விடுவதும் உண்டு. இவ்வாறு எழும் நிலை பெரிதும் ஏற்படுவதில்லை ஏற்பட்டால் சிற்பியின் கணிதத்தில் உள்ள குறைபாடு என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இசைத் தூண்களின் நடுவிட்டம் எல்லாத் தூண்களிலும் ஒரே அளவுடையனவாகவே இருக்கின்றன. இவைகள் தட்பவெப்ப நிலைகள் தாக்கவொண்ணாதவாறு நன்கு ஆய்ந்து அமைக்கப் படுகின்றன. இவைகளுக்கு எளிதில் எவ்விதமான பழுதும் ஏற்படுவது இல்லை. பழுதுபார்ப்பதும் தேவைப்படுவதில்லை இவைகள் எக்காலத்தும் தொடர்ந்து ஒரே அளவில் இனிய ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. எனவே யாழ், வீணை, தம்புரு, மத்தளம், உடுக்கை, குழல் போன்ற இசைக் கருவிகளைப்போல் அடிக்கடி தந்திகளை முறுக்கவோ, திருகவோ, வார்களை இறுக்கவோ, பட்டைகளைச் சுருக்கவோ, மாவு போன்ற பொருள்களை ஒட்டவோ, துவாரங்களைப் பெருக்கவோ குறுக்கவோ வேண்டிய அவசியம் எழுவதில்லை. மழை காலத்து மத்தளம் போல் இதன் ஓசை என்றும் குன்றுவதில்லை. என்றும் எக்காலத்தும் கணீர் கணீர் என்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது. செண்பகராம நல்லூர்த் தூண்குழல்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டத்தில் செண்பக ராம நல்லூர் (நாங்குநேரியிலிருந்து 5 கல் தொலைவில் உள்ளது) என்று ஒரு சிற்றூர் இருக்கிறது. இங்கு ஒரு சிறு பெருமாள் கோயில் உண்டு. இதன் சிற்பச் சிறப்பு மிகப் பெரியது; போற்றுதற் குரியது. இக் கோயிலில் உள்ள கருங்கல் தூணில் குடைந்துள்ள ஒரு இசைக்குழல் அதிசயமான ஒரு சீரிய சிற்பப் படைப்பாகச் சிறந்து இலங்குகிறது. இத் தூண்குழல் கோயிலின் திருவறையின் தென் மேற்கு மூலையில் இருக்கிறது. இத் தூணில் குடைந்திருக்கும் துவாரம் அடிபெருத்தும் நுனி சிறுத்தும் குவிந்தவண்ணமாக தூணின் நடுப்பாகத்தில் காணப்படுகிறது. இதனால் இக் குழலை நின்றுகொண்டு எளிதில் ஊதமுடிகிறது! ஆழ்வார் திருநகரியிலுள்ள தூணில் தோண்டப்பட்டிருக்கும் குழல் துவாரம் அடியில் இருப்பதால் எவரும் அதை நின்றுகொண்டு ஊதமுடியாது; தரையில் படுத்துக்கொண்டுதான் ஊதமுடியும். அதோடு அக் குழலில் உட்பக்கத்தை உற்றுப் பார்க்கவும் முடியாது. ஆனால் இக் கோவிலிலுள்ள தூணில் காணப்படும் குழலின் உட்பக்கத்தில் மின்விளக்கின் ஒளியைப் பாய்ச்சி நன்றாகப் பார்க்க முடிகிறது. இத் தூண் குழல் துவாரம் கீழிருந்து மேல்நோக்கும் வண்ணம் சற்றுச் சாய்வாகச் செய்யப்பட்டிருக்கிறது. குழலின் உட்பக்கம் மென்மையாகவும் வழவழப்பாகவும் சுத்தமாகவும் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் இந்த வட்டவடிவமான துவாரத்தின் குறுக்களவு முக்கால் அங்குலமும் மற்றொரு பக்கத்தில் துவாரத்தின் குறுக்களவு ஒரு அங்குலத்தில் இருக்கிறது. குழலின் இரு நுனிகளும் வட்ட வடிவமாக இருக்கின்றன. இத் தூணில் ஒரு பக்கம் ஊதினால் சங்கொலியும் மற்றொரு பக்கம் ஊதினால் எக்காள ஒலியும் பொங்கி எழுகிறது. இது இந்தியாவிலே ஒரு அரிய - அற்புதமான ஒரு உற்பவமாகும். இத் தூண் குழலின் நீளம் ஒரு அடி. இக் குழல், தூணில் கீழ் - மேலாக கீழிருந்து சற்றுச் சாய்வாகச் - செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கிறது. இக் குழலின் உட்பகுதியில் சங்கின் உள்ளே அடுக்கடுக்காய் இருக்கும் புரிகள் போல் இரு மடிப்புகள் காணப்படுகின்றன. இந்த மடிப்புகள் குழலின் ஒருபக்கம் நின்று ஊதும்பொழுது பலவிதமான கரஒலிகளை ஒலிப்பதற்கு உகந்தவண்ணம் உருவாக்கப்பட்டிருக் கிறது என்று கருதப்படுகிறது. ஒத்துணர்வு ஓசையுடைய இரு நுனிகளிலிருந்தும் ஊதும்பொழுது பலவிதமான சுரங்கள் பிறக்கின்றன. இரு நுனிகளிலும் இருவர் நின்றுகொண்டு மாறி-மாறி ஊதினால் அதன் விளைவு மிகப் பிரமாதமானதாக இருக்கிறது. இந்த அற்புதமான தூண்கள் ஆழ்வார் திருநகரீ, செண்பகராம நல்லூர் ஆகிய இரு ஊர்களைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. இவ்வரிய சிற்பக் கருவூலங் களைப் படைத்த பழம்பெரும் பாண்டியநாட்டுச் சிற்பிகளின் பெருமை இன்று மட்டுமல்ல, பல்லாயிரம் ஆண்டுகள் வரை - பாரதநாடு மட்டுமல்ல - பார் முழுதும் ஏற்றிப் போற்றுதற் குரியது. ஆழ்வார் திருநகரி இசைத்தூண்! திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி ஒரு உயர்ந்த வைணவத்தலமாகும். இங்குள்ள ஆதிபிரான் கோயில் பிரசித்திபெற்ற ஒரு திருக்கோயிலாகும். இக் கோயிலின் வாயிலைக் கடந்ததும் உள்ளே கண்ணாடி மண்டபம் வாகன மண்டபம், வசந்த மண்டபம் - முதலியவைகள் காணப்படுகின்றன. இங்குள்ள வசந்த மண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள இவ்விசைத் தூண் களை ஒரு சிறு மூங்கிற் குச்சைக் கொண்டோ அல்லது சிறிய கல் துண்டைக் கொண்டோ தட்டினால் இன்னொலிகள் எழுகின்றன. இசை வல்லுநர்கள் இதனைத் தட்டிப் பார்த்து 3 சுரங்களும் பிறக்கின்றன என்று கண்டுள்ளார்கள். இதில் எழும் சுரஒலிகள் மணி ஒலிபோல் கணீரென்று ஒலிக்கின்றன. இத் தூண்களில் எழும் சுரங்களைக் கொண்டு தமிழ்மறையைப் பாடமுடியும் என்று முடிவு கட்டப் பட்டுள்ளது. மேலும் இங்குள்ள ஒரு தூணில் இரு துவாரங்கள் இடப் பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் இருவர் நின்று கொண்டு மாறிமாறி ஊதினால் செண்பகராமநல்லூர் குழல் தூணைப்போல் ஒரு பக்கம் எக்காளத் தொனியும், மற்றொருபக்கம் சங்கு ஒலியும் எழுகின்றன. எனவே, இத் தூண்கள் இசைத்தூண்கள் வரிசையில் மட்டுமல்ல, குழல்தூண்கள் வரிசையிலும் சேர்ப்பதற்கு உரியதாகச் சமைக்கப்பட்டுள்ளன. இக் கோயிலில், கல்லால் செய்யப்பட்ட ஒரு நாதசுரமும் இருக்கிறது. இது இன்றும் ஊதப்பட்டு வருகிறது. நமது நாட்டிலுள்ள மூன்று - நான்கு கல் நாதசுரத்தில் இதுதான் சிறப்புடையது. திருநெல்வேலி இசைத்தூண்கள்! திருநெல்வேலி, தென்பாண்டிநாட்டின் தலைநகர், பாண்டிய மன்னர்கள் இதனை இரண்டாவது தலைநகரமாகக் கொண்டிருந்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களுக்கு இது தலைநகரமாகவும் இருந்தது. இந்த மாவட்டத்திலுள்ள கொற்கை, பாண்டிய நாட்டின் துறைமுகமாக விளங்கியது. இங்கு பாண்டிய மன்னர்களின் சகோதரர்களோ, மக்களோ இளவரசராய் (கொற்கையில்) இருந்து வந்தனர். திருநெல்வேலி நகரின் நடுப்பகுதியில் மதுரையைப் போன்று அழகிய - பெரிய கோயிலும், இரத வீதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நகர் தண்பொருனை ஆற்றின் மேல்கரைக்கு அண்மையில் சிறப்புற்று விளங்குகிறது. இங்குள்ள கோயிலில் நெல்லையப்பரும் - காந்திமதி அம்மையும் பிரதான தெய்வங்களாய் விளங்குகின்றனர். இங்குதான் பஞ்சசபையில் ஒன்றான செப்பறை (தாம்பிரசபை) இருக்கிறது. அதில் சிவபெருமான் படைப்புத் தொழிலைக் காட்டும் முனிதாண்டவத்தை முதன் முதலாக உலகில் ஆடிக் காட்டியதாக ஐதீகம் உண்டு. இதனால் தில்லைத் தாண்டவமூர்த்தியை தென்பாண்டிய நாட்டான் என்று மணிவாசகப் பெருமான் பாடி மகிழ்ந்துள்ளார். எனவே, நெல்லைக் கூத்தன்தான் தில்லையில் ஆடினான் என்பதை நமக்கு நினைவூட்ட, தில்லையுட்கூத்தனே! தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறப்பறுப்பானே என்று தமிழ்மறையிலே மணிவாசகப் பெருமான் உள்ளம் உருகப்பாடி இருப்பதை இப்பொழுது நம்மால் நினையாதிருக்க முடியவில்லை. தென்பாண்டி நாட்டை சிவலோகம் என்று தேவாரம் புகழ்வதற்கு திருநெல்வேலி முக்கிய காரணமாய் மிளிர்கிறது. இங்குள்ள ஆலயம் மிகத் தொன்மையானது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பெருமையை உடையது. இதன் நீளம் 850 அடி, அகலம் 756 அடி அம்மன் கோயிலும் அருகே இதே அளவில் அழகுடன் பொலிகிறது. இங்கு மணிமண்டபம், மகாமண்டபம் அர்த்த மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், யாக சாலை மண்டபம் கிளிக்கூடு மண்டபம், சங்கிலி மண்டபம், தெப்ப மண்டபம் போன்ற பல மண்டபங்கள் உண்டு. நெல்லையப்பர், காந்திமதி, கோவிந்தன், சந்திரசேகரன் தட்சணாமூர்த்தி, ஆடவல்லான் முருகன், சிவலிங்கம், அஷ்டலட்சுமி போன்ற பல தெய்வ உருவங்களும் உண்டு! இங்குள்ள நெல்லையப்பர் கோயிலின் மணி மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில்தான் மாநிலம் போற்றும் பாண்டிய நாட்டின் பண்ணிசைக்கும் தூண்கள் கெம்பீரமாக உயர்ந்து எழிலுடன் நிற்கின்றன. இங்கு கொல்லம் 721-ஆம் ஆண்டில் பாண்டிய நாட்டையாண்ட ஜயதுங்க நாட்டை வென்று மண்கொண்ட பூதல வீரசங்கிலி வீரமார்த்தாண்ட வர்மன் திருப்பணியாக அறுபத்து நான்கு கால்கள் கொண்டதாய் ஒரு அழகிய மண்டபத்தை அமைத்துள்ளான். திருவறையின் முன்பக்கம் இரு இசைத் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இத் தூண்கள் இம்மண்டபத்தையும் இக் கோயிலையும் அணி செய்பவைகளாய் இலங்குகின்றன. இந்த இசைத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே பெருங்கல்லால் செய்யப்பட்டதாகும். நடுவில் பெரிதாக ஒரு தூணும் அதைச் சுற்றிலும் உருவிலும் திருவிலும் உயரத்திலும் வித்தியாச மான 48 சிறு தூண்கள் போன்ற உருட்டுக் கம்பிகள் இணைக்கப் பட்டாற் போன்று செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் முன்பக்கம் இவ்விதமான இரு பண்ணிசைக்கும் பணித் தூண்கள் பாரிய மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த அற்புதமான அழகிய இசைத் தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிறிய உருட்டிலும் ஒரு சிறு குச்சைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு சுரம் எழுமாறு இத்தூண்களை அமைத்திருப்பது வியப்பையும் மகிழ்ச்சியையும் எழுப்புகிறது. ஆனால், இம்மண்டபத்தை அமைத்தவர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சிய கூன்பாண்டியன் என்று இவ்வூர்த்தலப்புராணம் கூறுகிறது. இக்கோயிலின் மணி மண்டபத்தை அலங்கரிக்கும் இசைத் தூண்கள் ஆழ்வார் திருநகரி இசைத் தூண்களை விட அழகாகவும் கெம்பீரமாகவும் காணப்படுகின்றன. இதே போன்று இரு இசைத் தூண்கள் அம்பாள் சந்நிதியிலும் உள்ளன. இவைகள் நான்கும் சிறந்த இசைத்தூண்களாய் அற்புத நாதத்தை அள்ளிச் சொரி கின்றன. தூணில் உள்ள சிறு உருட்டுக் கம்பிகளில் வெவ்வேறு சுரம் எழுவதற்கு நமது சிற்பிகள் இங்கு கையாண்டிருக்கும் முறை எங்கும் காணமுடியாத ஒரு அலாதியான அரிய முறையாகும். உருட்டுக் கம்பிகள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய அணில் ஏறிப் பாய்வது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தூணில் இருக்கும் அணிலை அடுத்த தூணில் உள்ள அணில் எட்டிப்பிடிக்க முயல்வது போல் செய்யப் பட்டிருக்கிறது. இது சுரங்களின் தொடர்பைக் காட்டச் சிற்பிகள் கையாண்ட ஒரு அரும்பெரும் குழூஉக் குறியாகும் என்னே! இந்தப் பாண்டிய நாட்டு சிற்பிகள் கண்ட கல்லைக் கனிவிக்கும் கவினுறும் கைவண்ணம். இத் தூண்கள் ஏனைய தூண்களைப் போன்று மேற்கூரையை மட்டும் தாங்கி நிற்கும் தூணாக நிற்கவில்லை. ஏழு சுரங்களை எழுப்பும் பண்ணிசைக்கும் பாட்டுத் தூண்களாக மட்டும் இலங்கவில்லை; எழில்மிக்க சிற்பச் செல்வங்களையுடைய சீரிய தூண்களாகவும் மிளிர்கின்றன. இவை நல்ல அகலமும் உயரமும் உடையதாய் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் இசையொலிகளை எழுப்பும் உருட்டுக் கம்பிகள் தூண்களை அணிபெறச் செய்கின்றன. தூண்களின் உச்சியில் காணப்படும் பதுமபந்தம், கலசம், தாடி, குடம், இதழ்முனை, பலகை, கண்டம் போதிகை அதில் உள்ள மதனை, பூமுனை, நாணுதல் போன்ற உறுப்புகளும் உச்சி அலங்காரங் களும் பல்வேறு பூக்களும் யாழிகளும் பிறவும் சிற்பச் சிறப்பை மேலும் உயர்த்துகின்றன. இவ்விசைத் தூண்கள் கோயிலின் கவினுறு கலைத் தோற்றத்தைப் பூர்த்தி செய்யும் அணியில் தனது பங்கைக் குறைவற நிறைவேற்றும் குன்றா விளக்காய் ஜொலிக்கின்றன. சுசீந்திரம் இசைத் தூண்கள் பண்டும் இன்றும் பாண்டிய நாட்டில் ஒரு பகுதியாகக் கருதப் பெற்றது சுசீந்திரம். இங்குள்ள தாணுமாயன் கோயிலிலும் இசைத் தூண்கள் உள்ளன. இக்கோயிலின் முன்னுள்ள பெரிய மண்டபத்தை உருவாக்கியவர்கள் தேரூர் முத்துச்சாமிப்பிள்ளை வகையினர் ஆவார்கள். இம் மண்டபம் கி.பி. 1548ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப் பட்டதாக இக் கோயில் சாசனங்கள் கூறுகின்றன. இங்கு வடக்குப் பிரகாரத்தில் காலபைரவர் சந்நிதிக்கு எதிரே இசைத் தூண்கள் நான்கு காணப்படுகின்றன. வடபக்கத்துத் தூண்கள் ஒவ்வொன்றி லும் 24 சிறு உருட்டுக் கம்பிகள் உள்ளன. தென்பக்கத்துத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 35 உருட்டுக் கம்பிகள் உள்ளன. இந்த உருட்டுக் கம்பிகள் அடியில் சதுரமாகவும் மேலே எட்டுப் பட்டைகள் உள்ளன. வாயும் புரிகள் உள்ளனவாயும் இருக்கின்றன. இந்தத் தூண்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன், மிகக் கெம்பீரமாகக் காணப்படுகின்றன. இக் கோயிலில் உள்ள ஏட்டுச் சுவடிகளில் இம் மண்டபமும் இசைத் தூண்களும் கி.பி 1798 ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பட்டதாகக் காணப்படுகின்றன. இந்த இசைத் தூண்கள் சுத்தமான சுர ஒலிகளைத் தருகின்றன. இதில் சுர ஒலிகளைச் செவிமடுத்த இசைப் புலவர்கள் இத்தூண்களில் பிறக்கும் நாதம் சுத்தமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன என்று இயம்பு கின்றார்கள். நமது சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுப் பகுதித் துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் திரு. கே.கே. பிள்ளை அவர்கள் சுசீந்திரம் கோயில் என்ற ஆங்கில நூலில், இசையின் இனிமையிலும் சிற்ப நுட்பங்களிலும் இந்த இசைத் தூண்களுக்கு நிகரான தூண்கள் வேறு எங்கும் பார்ப்பது அரிது என்று புகழ் மாலை சூட்டியுள்ளார்கள். நான் அறிந்த மட்டில் இது திருநெல்வேலி இசைத் தூண்களுக்கு ஒப்பானவை. பாண்டிய நாட்டின் இசைக் கருவூலங்களில் இணையற்ற மணிகள் பதித்த அணிகளாக இந்த இசைத் தூண்களும் மதிக்கத்தக்கனவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மதுரை இசைத் தூண்கள் மதுரை, பாண்டிய மன்னர்களுக்கு இறுதியாய் விளங்கிய கோநகர் - பாண்டிய நாட்டின் அகநகர் - தலைநகர், மதுரை. (கூடல்) பாண்டிய நாட்டின் புறநகர்-துறைமுகப்பட்டினம் கொற்கை, மதுரை மாநகர், ஆலவாய் என்றும் நான்மாடக் கூடல் என்றும் போற்றும் பெருமை வாய்ந்தது! தேனுறை தமிழும் திருவுறை கூடலும் என்று தமிழையும் மதுரையையும் சேர்த்துக் கல்லாடம் புகழ் மாலை சூட்டுகிறது. மதுரை நகரின் நடுவே மாண்புற நிற்கும் திருக்கோயில் தாமரையின் பொருட்டுப் போலவும் சுற்றிலும் அடுக்கடுக்காய் அமைந்துள்ள தெருக்கள் தாமரையின் இதழ்கள் போலவும் அமைந்துள்ளது என்று தமிழ் இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றது. மதுரையின் நகர், அமைப்புத் திறன் இன்றைய மேனாட்டு விற்பன்னர்களால் வியந்து பாராட்டப் பெறுகிறது. உலகிலே மதுரை மாநகரின் அற்புத அமைப்பிற்கு ஒப்பான நகர் எங்கும் காணமுடியவில்லை என்று சிற்ப நூல் வல்லவர்கள் பலரும் சிறப்பித்துக் கூறிவருகின்றார்கள். இந் நன்னகர் வரலாற்றுப் புகழ்பெற்ற பொன்னகர் ஆகும். மதுரைதான் தெய்வத் திருவிளையாடல்கள் பலவும் நிகழ்ந்த சீரிய இடமாக மதிக்கப்படுகிறது. இந்நகரின் நடுவே நனி சிறந்திலங்கும் மீனாட்சி சுந்தரேவரர் கோயிலுக்கு ஒப்பான அழகிய பெருங்கோயிலைப் போல் நாம் எங்கும் காண முடியாது. இது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு அப்பால் இந்நாட்டை ஆக்கிரமித்த நாயக்க மன்னர்களால் பேணி வளர்க்கப்பட்டது. இத் திருக்கோயிலுக்கு நான்கு பக்கமும் உயர்ந்த நான்கு மதில்களும் நான்கு பெரிய வாயில்களும் அதன்மேல் நான்கு பெரிய இராஜகோபுரங்களும் அணிபெறத் திகழ்கின்றன. மதிலுக்கு உள்ளே இருக்கும் திருக்கோயில் 830 அடி நீளமும் 730 அடி அகலமும் உள்ளது. இதற்குள்ளே மணிமண்டபம், மகாமண்டபமும் ஆயிரக்கால் மண்டபம் முதலிய பல மண்டபங்கள் அடங்கியுள்ளன. இங்குள்ள சிற்ப வடிவங்கள் சிறப்பு மிக்கவைகளாகும். ஓங்கி உயர்ந்து நிற்கும் ஒற்றைக் கல் தூண்களில் செதுக்கப்பட்ட சிவ நடனம், பத்திரகாளி வீரபத்திரர் போன்ற சிற்பச் செல்வங்கள் கண்கொள்ளாக் காட்சியாக இலங்குகின்றன. இங்குள்ள எண்ணற்ற திருவிளக்குகள் சிற்பக் கலைஞர்களுக்கு நல்ல கலை விருந்தளிப்பனவாய்த் திகழ்கின்றன. இக் கோயிலை எழில் பெறச் செய்யும் பொற்றாமரைக் குளம் தமிழ் மொழியின் வரலாற்றோடுப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. மதுரைக்குப் பெருமைதரும் வைகை நதி தமிழர் வரலாற்றோடு இணைந்து கிடக்கின்றது. இங்குள்ள மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலே இசைப் புலவர்கள் அனைவராலும் போற்றப்படும் ஐந்து அறிய இசைத் தூண்கள் மிகக் கெம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றன. எனது ஆராய்ச்சியில் இங்கு இதைப் போன்ற பல இசைத் தூண்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவைகள் நமது கவனக் குறைவால் பழுதுபட்டுப் போயிருக்கலாம், அல்லது நமது பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்த கலைக்கண்ணற்ற மிலேச்ச மன்னர்களால் நிர்மூலஞ் செய்யப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று இங்கு காட்சி அளிக்கும் இசைத் தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரிய கல்லினின்றே செதுக்கப்பட்டிருக் கின்றது. இத் தூணின் நடுப்பாகம் பெருத்து இருக்கிறது. சுற்றிலும் சிறு தூண்கள் போல் 22 உருட்டுக் கம்பிகள் இணைந்து அணிபெறத் திகழ்கின்றன. தூண் முழுவதும் ஒரே கல்லில் ஆக்கப் பட்டிருக்கிறது என்பது பலருக்கும் பேராச்சரியம் விளைவிக்கிறது. இதன் நடுவே ஒரு பெரிய தூண் நிற்பதுபோலவும் அதைச் சுற்றிப் பல சிறிய தூண்கள் இணைந்து நிற்பதுபோலவும் செதுக்கப் பட்டுள்ளது. சிறிய தூண்கள் மூன்று அங்குல கனத்தில் வட்டம், முக்கோணம் சதுரம், வளைவு, எட்டுப் பட்டை முதலிய பற்பல வடிவங்களில் காணப்படு கின்றன. நடுவில் உள்ள பெரிய தூணின் அடிப்பாகம் சுமார் 5 அடி சதுரமும் 9 அடி உயரமும் இருக்கலாம். இந்த இசைத் தூணை ஒரு சிறிய குச்சைக் கொண்டோ கல்துண்டைக் கொண்டோ தட்டினால் அது மெல்லிய நாதத்தை எழுப்புகிறது. இதில் எழும் சுரத்தின் கிளைச்சுரங்கள் பக்கத்தில் நிற்கும் இசைத் தூண்களிலிருந்தும் தாமாகவே ஒலிக்கின்றது. இத் தூண்களில் துணைக் கருவிகளி லிருந்து தோன்றும் நாத ஒலியைப் போல் சுரங்களைத் தரக்கூடிய தந்திரமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தூணின் உள்ளே சுருள் சுருளான காலி இடம் உள்ளன. இத் தூண்களில் மிகச் சுத்தமாக 4 வகைச் சுரங்களும் அமுதம்போல் பிறக்கின்றன. இதனை மேனாட்டு இசை விற்பன்னர்கள் பியோனாக் கம்பங்கள் என்று புகழ்ந்து போற்று கின்றார்கள். வடநாட்டு இசை வல்லுநர்கள் ஜகம் ஏற்றும் ஜலதரங்க தம்பங்கள் (அலை எறி நீரியம்) என்று கூறுகிறார்கள். தமிழ் நாட்டு இசை மேதைகள் கல்லில் செய்யப் பெற்ற வில்யாழ் என்று புகழ்மாலை சூட்டுகின்றார்கள். தமிழ் நாட்டுத் தெய்வக் கலைஞனாகப் போற்றப் பெறும் சிற்பியின் அற்புதக் கைவண்ணத்தால் தூண்களிலே அன்றி சிற்ப வடிவங்களிலும் இன்னிசை எழுப்பப்பட்டன. மதுரைக் கோயிலில் உள்ள காதல் தெய்வமான இரதிதேவியின் சிலையில் விரல், கை முதலிய உறுப்புகளைத் தட்டினால் ச, ரி, க என்ற மூன்று சுரங்கள் எழுகின்றன. இதேபோன்ற திருவானைக் கோவில் உள்ள ஆடவல்லானின் செம்புப் படிமத்தில் கூட சில சுரங்கள் அரும்பு கின்றன. சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்ட மலர்களில் இதைப்பற்றி சில அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அப்பால் நமது தமிழ்நாட்டு இசை வல்லுநர்கள் குறிப்பாக நமது மதிப்பிற்குரிய இசைமேதை பி. சாம்பமூர்த்தி அவர்கள் இசைத் தூண்கள் அனைத்தையும் நேரிற் போய்ப் பார்த்துத் தனது கட்டுரைகளிலும் நூலிலும் இவைகளை விளக்கி இதற்கு மகோன்னதமான நிலையை அளித்துள்ளார்கள். இக் கற்களில் 4 சுரங்களும் எழுவதை, கண்டும் கேட்டும் பரிசித்தும் இக் கலை உயிர்க்கலை என்று உறுதிப் படுத்தியுள்ளார்கள். போதிகைகள் கட்டிடத்தின் அடித்தளத்தின் மேல் தூண்கள் நிறுத்தப் பெற்றிருக்கும். தூண்களுக்கு மேல் உள்ள ஒரு சிறு பகுதி போதிகை (Capital) எனப்படும். தூணின் விட்டத்தைவிட போதிகையின் விட்டம் பெரிதாக இருக்கும். போதிகை அகலமாக அமைந் திருப்பதால், அதன் மீதுள்ள உத்திரத்தின் பளுவையும், மேற்கூரையின் பளுவையும் தாங்க முடிகிறது. மேலும் இது பார்வைக்கு எழிலுறச் செய்யப் பெற்றுள்ளது. விளக்கமாகக் கூறுவதனால் தூணின் மேல் - உத்திரத்தின் கீழ் கட்டிடத்தின் பளுவைத்தாங்கி நிற்கும் ஒரு உறுப்பு - போதிகை கட்டிடச் சிற்பத்தின் வழங்கும் ஒரு சொல்லாகும். தாமரை மொக்கு, மணி, பனை ஓலை போன்ற வேலைப் பாடுகள் பொதிந்த போதிகைகள் கி.மு. 2000-ஆம் ஆண்டளவில் எகிப்தில் எழுந்துள்ளன. மலர்ந்த தாமரை, சிக்கலான மடல்கள் (Lobes) நீர்த்தாவரங்கள் தேவதைகளின் திருமுகங்கள் முதலியன திகழும் போதிகைகள் எகிப்தில் கி.மு. 500-இல் அமைந்துள்ளன. திராவிட மக்கள் கி.மு. 4000 -ம் ஆண்டிற்கு முன்பே எகிப்தில் குடியேறி அங்கு பயிர்த் தொழிலை நிலைநாட்டினார்கள். அதோடு அங்கு இந்து மதத்தையும் இந்தியக் கலையையும் நிலைநாட்டி உள்ளனர். இதனை உலகப் புகழ்பெற்ற பழம்பெரும் வரலாற்று ஆசிரியர் தம் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 அதனால் தூண்கள் மீது போதிகைகள் வைக்கும் பாணி திராவிடப் பாணி, இந்திய நாகரிகம் என்று கூறுவது பொருந்தும். சிந்து வெளியில் கி.மு. 1500 -ம் ஆண்டிற்கு முன் உந்தி எழுந்த திராவிட நாகரிகத்திலும் போதிகைகள் வைக்கும் வழக்கம் உள்ளது. இந்தியக் கட்டிடக் கலைக்கு முன்னோடியாக இருப்பது சிந்து வெளி நாகரிகம் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை. போதிகைகள் கிரேக்க கட்டிடக் கலையிலும் பைசாண்டிய கட்டிடச் சிற்ப வேலையில் உரோமன் அயோனிய (Roman Ionic) கொரிந்திய கூட்டு வகைகளில் சில சமயங்களில் போதிகைகள் இடம் பெற்றுள்ளன. ஆரிய நெறியையும் ஆரிய நாகரிகத்தையும் எதிர்க்க எழுந்த பௌத்தக் கட்டிடக் கலையில் போதிகைகளில் விருதுகளையாவது விலங்குகளையாவது அமைத்து எழில் பெறச் செய்துள்ளது இன்றும் காணப்படுகிறது. பம்பாய் மாநிலத்தில் உள்ள பெட்சா பெருங்குகையில் முன் தூண்களில் உள்ள போதிகைகளில் ஆண் பெண் ஆகிய மனித உயிர்களைத் தாங்கி நிற்கும் அசுவம், யானை ஆகிய சிற்ப உருவங்கள் உள்ளன. கார்லே குகைகளில் உள்ள கவின் பெரும் சிற்பங்களில் போதிகைகளில் யானைகள் மண்டியிட்டுப் படுத்திருப்பதுபோல் செய்துள்ளார்கள். காந்தார விகாரையில் காணப்படும் தூண்களில் கொரிந்தியப் பாணியில் இலை, சுருள், பூவேலைப்பாடுகள் செய்யப் பெற்றுள்ளது. அஜந்தாவில் 16-ஆம் எண்ணுள்ள பௌத்த விகாரையில் காணப்படும் போதிகை கண்ணைக் கவரும் கவின் பெறும் வனப்பு வாய்ந்தவை. இவைகள் பாஜாவில் உள்ள போதிகையை விட, நாசிக்கில் உள்ள கௌதம புத்தர் குகையில் உள்ள போதிகையைவிட எளிமையும், எழிலும், உறுதியும் உள்ளது. அசோகன் காலத்து (கி.மு. 250-232) காலத்து எழுந்த போதிகைகளும் நல்ல சிறப்புடையனவாகவே காணப்படு கின்றன. தூண்களைப் போன்று போதிகைகள் ஒரே கல்லில் உருப்பெற்றுள்ளன. ஒவ்வொரு போதிகையிலும் பலகை, மணி, முடி போன்ற உறுப்புகள் மூன்றும் உள்ளன. தூணையும் பலகையையும் இணைக்கும் பகுதி கழுத்துப் போன்று காணப்படுகிறது. போதிகையின் சிகரத்தில் முடிவைத்தாற் போன்றுள்ள பகுதியில் சக்கரம், சிங்கம், எருது, கரி, பரி போன்ற சிற்ப உருவங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. பலகையில் விளிம்புகளில் புடைப்புச் செதுக்கு சிற்பம் காணப்படுகிறது. சாரநாத் என்னும் இடத்தில் சிங்கப் போதிகையும் சாஞ்சியில் புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாறு செதுக்கப்பெற்ற போதிகையும் காணப்படுகின்றன. காஷ்மீரில் உள்ள சைவ சமயஞ் சார்பான கோயில் கட்டிடங் களில் தாமரை மலரின் பொகுட்டுகள் பொலிகின்றன. போதிகைகளின் அடிப்பகுதிகள் நீர்க்குடம் போன்றுள்ளன. அதன்மேல் குவிந்த திண்டுபோன்ற பகுதியும் உச்சியில் தாமரை மலர்ப் பொகுட்டும் உள்ளது. இந்திய இலாமியக் கட்டிடக் கலைகளிலும் போதிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போதிகைகள் வைக்கும் பழக்கம் அராபிய நாகரிகத்தில் அரும்பியதாகத் தெரியவில்லை. திராவிட நாகரிகத்தில் சிறப்பாக தமிழர் நாகரிகத்தில் போதிகைகள் தொன்மையான காலத்திலிருந்து தோன்றி வளர்ந்துள்ளன. அதன் பரிணாம வளர்ச்சியைக் கட்டிடக் கலை வல்லுநர்கள் நன்கெடுத்துக் காட்டியுள்ளனர். தமிழர்கள் தங்கள் கட்டிடக் கலையில் போதிகைக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள வீடுகளிலும் கோயில்களிலும் பலவிதமான சிற்ப நயம் செறிந்து மரச்சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த போதிகைகளும், கல் சிற்பவேலைப்பாடுகள் மிகுந்த போதிகைகளும் உள்ளன. திராவிடச் சிற்ப போதிகைகளில் கால், பதும பந்தம், கலசம், தாடி, குடம், இதழ், முனைப் பலகை கண்டம் முதலிய பல அழகிய உறுப்புகள் உருப்பெற்றுள்ளன. குமிழ்ப் போதிகை மதலை, நாணுதல், பூமுனை முதலிய பகுதிகளையுடைய மலர்ப் போதிகை (புஷ்ப போதிகை), சாதாப் போதிகை, தாங்கு போதிகை போன்ற பல்வேறு அழகுப் போதிகைகளைத் திராவிடச் சிற்ப வேலையில் காணலாம். சாதாப் போதிகை பல்லவர் காலத்தில் (கி.பி. 600-800) முற்காலச் சோழர்காலத்திலும் (கி.பி. 800-1100) தாங்கு போதிகை பிற்காலச் சோழர் காலத்திலும் (கி.பி. 1100-1350) மலர்ப் போதிகை விசய நகர மன்னர் ஆட்சி காலத்திலும் (கி.பி. 1350-1600) அதற்குப் பிற்பட்ட காலத்திலும் அரும்பியுள்ளன. பல்லவர் காலத்திலும் முற்காலச் சோழர் காலத்திலும் போதிகையில் இடம் பெற்றிருக்கும் இதழ் என்னும் உறுப்புகள் காணப்படவில்லை. பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகர மன்னர் காலத்திலும் எழுந்த போதிகைகளிலும் பலகை என்னும் போதிகை உறுப்பிற்குக் கீழே இதழ் எனப்படும் பகுதியின் முனைகள் பல் பல்லாகக் காணப்படும். பல் போன்ற பகுதியே முனை என்று கூறப்படும். எனவே முனையுள்ள போதிகை முனையில்லாப் போதிகை என இருவகைப் போதிகைகள் தமிழ் நாட்டில் உள்ள கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் பிரகாரத்தில் இடம் பெற்றிருக்கும் முருகன் கோயிலில் உள்ள போதிகை அழகு மிகுந்தது. இது இராசராசன் எடுப்பித்த கோயில் இல்லை. அவன் காலத்திற்குப் பின் வந்த நாயக்க மன்னர்களால் எடுப்பிக்கப் பெற்றது.1 போதிகைகள் வட்டமாயும், சதுரமாயும் நீண்ட சதுரமாயும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளனவாயுள்ளன. திராவிட நாட்டிலே பல்லவர்கள் நாட்டு போதிகைகள் ஒருவிதமாகவும் சோழநாட்டுப் போதிகைகள் வேறு ஒரு விதமாகவும் பாண்டிய நாட்டுப் போதிகைகள் மற்றோர் விதமாகவும் அமைந்துள்ளன. இதன்றிக் கால வளர்ச்சியில் ஒரு நாட்டிலே உள்ள போதிகைகள் பல்வேறு விதமாக எழில் பெறப் பரிணமித்துள்ளன. இங்குப் பல்வேறு காலங்களில் போதிகைகள் பெற்றுள்ள வளர்ச்சியை உருவப்படங்கள் மூலம் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. (1) பல்லவர்கள் கி.பி. 600 முதல் 800- வரையுள்ள காலங்களில் அமைத்த போதிகை. (2) முற்காலச் சோழர்கள் கி.பி. 850- முதல் 1100 வரை உருவாக்கிய போதிகை. (3) பிற்காலச் சோழர்கள் கி.பி. 1100 முதல் 1350 வரை அமைத்துள்ள போதிகை (4) விசய நகர நாயக்கர் மன்னர்கள் கி.பி 1350-1600 வரையுள்ள காலத்தில் அமைத்த போதிகை (5) பிற்காலத்தில் அதாவது கி.பி. 1600 முதல் 1976 வரை தமிழ்நாட்டில் பரிணமித்துள்ள அழகிய பூபோதிகை போதிகைகள் நாட்டிற்கு நாடு வேறுபட்டவைகளாய் இருந்தன. தமிழ்நாட்டிலே போதிகைகள் பல்லவர் பாணி, பாண்டியர்பாணி, சோழர் பாணி விசய நகரப் பாணி என்று மாற்றம் பெற்றவைகளாய் விளங்கின அது மட்டுமன்று ஒவ்வொரு ஊழியிலும் அவை வளர்ச்சி பெற்று வெவ்வேறு விதமாய் விளங்கின. சில போதிகை இடத்திற்கேற்பவும் மாறுபட்டவைகளாய் இருந்தன. எடுத்துக்காட்டாக, கோயில் பிரகாரங்களின் திரும்புமுனையிலும் மண்டபங்களின் நடுவிலும் போதிகைகள் + இந்த வடிவில் அமைக்கப் பட்டன. பல்லவர்கள் சகாயத்தில் இந்தப் போதிகைகள் அதிகமாகப் பல்வேறு வடிவில் துளித்தெழுந்தன. பல்லவர்கள் போதிகைகள் மிக எளிதாகவும் அழகாக அதிக நுணுக்கமான வேலைப்பாடு களின்றியும் இருந்தன. இங்கு காட்டப்பெற்றுள்ள தூணும் போதிகையும், லாகூரில் பல்லவர்களால் செதுக்கப் பெற்ற உறுதியான வேலைப்பாடுள்ள ஒரு கல்தூணாகும். பல்லவர்கள் தூண்களையும் போதிகைகளையும் விட மிக அழகாகச் சோழர்களின் சகாப்தத்தில் எழுந்தன. சோழர்கள் பல்லவர்களை விட மிக அழகான தூண்களையும் போதிகை களையும் உருவாக்கிச் சிற்ப உலகில் என்றும் அழியாப் புகழை ஈட்டியுள்ளார்கள். இங்கு நாம் பல்வேறு சகாப்தங்களில் எழுந்த தூண்களையும், போதிகை களையும், கோயில்களையும் எடுத்துக் காட்டியுள்ளோம். அதோடு போதிகைகளின் சிற்பங்களுக்குத் தனிச்சிறப்பு அளித்து போதிகைகள் பல்வேறு காலங்களிலும் பெற்றெழுந்த வளர்ச்சியையும் தனிச் சிறப்பையும் எடுத்துக்காட்டி யுள்ளோம். இங்கு நாம் எடுத்துக்காட்டியிருப்பது சிலுவை வடிவமுள்ள சோழர்களின் அழகான போதிகையின் உருவமாகும். அதைப் பல்வேறு கோணத்தினின்று பார்த்து படம் தீட்டி காட்டியிருக்கிறது. இவ்வாறு மிக அழகாகவும் தெளிவாகவும் பாண்டிச்சேரியில் இருந்த பிரஞ்சுப் பேரறிஞர் சோவியோதுப்ரயல் 1914-ஆம் ஆண்டில் பிரஞ்சு மொழியில் எழுதிய கட்டிடக் கலை என்ற நூலில் இருந்து பெறப் பட்டவைகளாகும். அவர் பல்லவர் களின் ஓவியம் பல்லவர்களின் படிமம் முதலியவற்றை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்காய்ந்து உலகிற்கு உணர்த்திய பேரறிஞராவார். அவருக்குத் தமிழ் உலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் எழுதத்துணையாக இருந்த நூற்கள் 1. History of herodotus - george Rawlinson M.A (London) 1862. 2. Dravidian Architecture - G. Jouvean Dubreui Madras - 1917. 3. The great Temple at Tanjore J.M.Somasundaram B.A.B.L. (Madras) 1935. 4. The Chola Temples - C. Sivaramamurthi New Delhi (1960) 5. Temples of India - publication Division goot of India New Delhi 1968. 6. கலைக் களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக் கழகம் (சென்னை) 1960. 7. தமிழகக் கோயிற் கலைகள் - இரா - நாகசாமி; மந்திர மூர்த்தி. 8. தமிழ் இந்தியா ந.சி. கந்தையா பிள்ளை (சென்னை) 1949 9. பாண்டிய நாட்டின் பாடும் கற்றூண்கள் - அ. இராகவன் (மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிசேக மலர்) 10. கோயிற் கலையும் சிற்பங்களும் பி. ஆர். ஸ்ரீனிவாசன் எம்.ஏ சென்னை. 1965. ஒருமைப்பாடுடைய கட்டிடக் கலை இந்தியாவில் ஆரியர்கள் தம் கால் அடிகளை எடுத்து வைப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் முன்னோர்கள் என்று கூறப்படும் திராவிடர்களும் (Dravidians) திராவிடர்களின் ஆதி முன்னோர்களைச் சேர்ந்தவர்களும் (proto dravidians) திராவிடர்கள் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படுகின்ற மக்களும் (pre - dravidians) 10000-ம்ஆண்டுகளுக்கு முன்னரே மாபெரும் மாடமாளிகைகளையும் அளப்பரிய அரண்களையும் கட்டத் தொடங்கிவிட்டனர். கி.மு. 3000-ம் ஆண்டுகளுக்கு முன் மேற்காசிய மக்களுக்கும் நாகரிகத்தின் முன்னோடிகள் என்று கி.மு. 1500 வரை வரலாற்றாசிரியர்களால் கருதப்பட்ட எகிப்தியர்களும், ஐரோப்பியர்களும் சுடுமண் செங்கல்களை (bricks) கண்டும் கேட்டும் அறியார்கள்; அதை எந்த ஏட்டிலும் பார்த்தும் அறியார்கள். ஆனால் கி.மு. 4000-ம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் 1 ½ அடிநீளமும், அடி அகலம் 3/8 அடி உயரமும் உள்ள செங்கற்களையும் சிறிய ஆப்புச் செங்கற்களையும் தளத்திற்கு இடும் சதுரச் செங்கற்களையும் செய்து மலை மலையாய்க் குவித்துள்ளார்கள். அரண்கள், வீடுகள், மதில்கள் கோபுரவாயில்கள் தூண்கள், கோயில்கள், விமானங்கள் மண்டபங்கள், அரண்மனைகள், மாளிகைகள், கலங்கரை விளக்குகள், அம்பலங்கள், நாடக அரங்குகள் பள்ளிகள் போன்ற எண்ணிலாக் கட்டடங்களை எழுப்பியுள்ளனர். ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்ததும் செம்பு கோட்டைகளும் வெள்ளி அரண்களும் எஃகுக் கோட்டைகளும் திராவிட மக்கள் கட்டியிருப்பதால் அவைகளை கண்டு பயந்தனர். அவைகளைக் கடந்து செல்லவும் அவைகளை தாண்டவும் அரண்களைக் கடக்கவும் திராவிடர்களின் மதில்களைக் கண்டு கதி கலங்கினர் என்று இருக்குவேதமும் பல புராணங்களும் கூறுகின்றன. உலகிலே பழம் பெரும் நாகரிகத்தைப் பெற்ற நாடு திராவிட இந்தியா. உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை முதன்முதலாக உருவாக்கிய மக்கள் திராவிடர்களின் முன்னோர்கள். உலகிலே முதன்முதலாக உருவாக்கப் பெற்ற தெய்வப் பெயர் சிவன். உலகிலே முதன்முதலாகத் தெய்வத்திற்கு உறைவிடம் கண்டவர்கள் தமிழ் மக்களேயாவர். இதற்கு தமிழர் ஆதியில் வாழ்ந்த இடமும் சூழ் நிலை களும் முக்கியகாரணமாகும். ஆதிகாலத் தமிழர்களில் முன்னோடிகளான மக்கள் மருத நில மக்கள் - அதாவது வேளாண்குல மக்கள் - அவர்கள் ஆற்றங்கரை களிலும், குளக்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும், நல்ல நீர்ப் பிடிப்புள்ள நிலங்களிலும் அதன் அண்மையிலும் தம் வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்கள் முதல் முதலாகத் தொடங்கிய தொழில் பயிர்த்தொழில். அங்கு நஞ்செய்ப் பயிர்களும் புஞ் செய்ப் பயிர் களும் நல்ல விளைவைத் தந்தன. ஏனைய நானில மக்களும் தங்கள் நிலத்தில் கிடைத்த பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் பண்டமாற்றாக, இந்நிலத்தில் கிடைக்கும் பொருள்களைப் பெற்றுச் சென்றனர். இந்த மருத நிலத்தில் பல்வேறு கூலப் பொருள்கள் பெருகின. பலவிதமான உணவுப் பொருள்கள் செய்யப் பெற்றன. இவைகளையெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து வைக்க தாழிகளும், குடங்களும், குதில்களும், வீடுகளும் களஞ்சியங்களும் இன்றியமையாததாக எழுந்தது. எனவே 10-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வீடுகள் பீடுற்று எழுந்தன. வீடுகள் ஆதியில் மண்சுவர்கள் எழுப்பி மேலே கூரைகள் பனை ஓலைகளாலும், தட்டைகளாலும் சுக்கு நாரிப்புற்களாலும் வேயப் பெற்றன. அப்பால் மண்சாந்தால் நீண்ட சதுர வடிவில் செய்யப் பெற்ற சுடாத செங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் சுடுமண் செங்கலைச் செம்மண் கொண்டு சுவர் கட்டி மேலே கூரைவேயப் பெற்றது. இறுதியாக சுடுமண் செங்கலைச் சுண்ணச் சாந்து கொண்டு கட்டி மேலே உத்தரமும் கட்டைகளும் பாவி உறுதியான வீடு கட்டினர். பனம் கட்டைகளும் சட்டங்களும் விட்டங்களும் மல் கட்டை களும் கொண்டு மல்லைக் கூட்டி வைத்து கூரைகள் அமைத்து ஓடுகள் வேய்ந்தனர். சுடுமண் செங்கல்கள் தமிழகத்தில் கி.மு. 4000 -ம் ஆண்டு களுக்கு முன்பே செய்யப்பட்டு விட்டன என்பதற்கு அரப்பா நாகரிகம் சிறப்பான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. உலகில் பழம்பெரும் நாகரிகம் துளிர்த்த எகிப்தில் கூட சுடுமண் செங்கல் கண்டுபிடிக்கப் பட்டது கி.மு. 1460 -ம் ஆண்டுகள் பின்னர் தான்.1 அதோடு உலகிலே 10-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சைவ நெறியும் சிவபெருமானும் பல தெய்வங்களும் தோன்றியதால் திராவிடர்கள் சுடுமண் செங்கற்களைக் கொண்டு ஏராளமான கோயில்கள் எழுப்பினர். உலகிலே - அதுவும் சிறப்பாக 4000 -ம் ஆண்டுகளுக்குமுன் உபைதியாவிலும், எல்லத்திலும், பாலதீனத்திலும் அசீரியாவிலும் அக்கேடியாவிலும் சால்டியாவிலும், சீரியாவிலும் பிறவிடங் களிலும் சிக்குராத் என்னும் பெருங்கோயிலும், பிற தெய்வத் திருக்கோயிலும் பெரிதாக எடுப்பிக்கப் பெற்றதாக ஏட்டில் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. ஆனால் எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட வெறுங்கோயிலாக இருக்குமேயொழிய சிந்து வெளியில் அல்லது சிறப்பாக அரப்பாவில் உள்ள ஒரு வீட்டிற்கோ அல்லது ஒரு கூலக் களஞ்சியத்திற்கு ஈடாக எதையும் ஒப்புவமை கூறமுடியாது. நாட்டிலோ ஏட்டிலோ பாட்டிலோ இலங்கையி லுள்ள இராவணன் அரண்மனையை ஒப்ப விளங்கிய ஒரு திருமனையை எவரும் எங்கும் கண்டதே இல்லை. இந்திரன் அரண்மனையையோ, சந்திரன் கோயிலையோ எந்தக் கவிஞனும் இதுவரை, நான் மாடக் கூடல் என்றோ எழுநிலை மாடம் என்றோ. விண்தோய் மாடம் என்றோ, கார் முகில் தவழும் உயர்ந்த உபரிக்கையுடைய உயரிய அரண்மனையென்றோ வருணித்ததில்லை. ஆனால், இன்று கற்பனையால் அல்ல. உண்மையிலே மேனாட்டு கிறித்தவ அறிஞர்கள் அகழ்ந்து கண்டு அரப்பாவிலும், மொகஞ்ச தாரோவிலும் உரூபாரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மூன்று, ஐந்து ஏழு, நிலைகளையுடைய மாடங்களையும் 200 அடி நீளமும் 100 அடிக்கு மேற்பட்ட அகலமும் உள்ள செங்கற்களைக் கொண்ட சீரான மாளிகைகள் பலவற்றையும் நேராகக் கண்டு வியந்து இன்றைய லங்காசயர் நகருக் கொப்பாக விளங்குகிறது என்றுமே நாட்டறிஞர்கள் வியந்து பாராட்டும் பேற்றை எய்தியது. 3000 -ம் ஆண்டிற்கு முன்பே தமிழர்கள் விண்முட்டும் விமானங்களை யுடைய மாளிகைகளையும் பவளத் தூண்களையும், பொற்றகடு போர்த்திய தூண்களையும் கனக சபைகளையும், வெள்ளி அம்பலத்தையும் தாம்பிர சபையையும் இரத்தின மன்றத்தையும் செப்பறைகளையும் 200 அடிக்கு மேற்பட்ட 10,15 நிலைகளையுடைய கோயிலில் உள்ள விமானங்களையும், கோபுரங்களையும், கோட்டைகளையும் கட்டி தமிழர்கள் கட்டிடக் கலையில் கைதேர்ந்த நிபுணர்கள் என்ற பேற்றை எய்தியுள்ளனர். இரும்புக் காலப் பண்பாடு உலகில் எங்கு முதன்முதலாக உலோக காலம் - அதிலும் சிறப்பாக எஃகு காலம் அரும்புகிறதோ அங்குதான் சிறப்பான நாகரிகம் எழும். சிந்துவெளி 6000-ம் ஆண்டுகளுக்கு முன் எஃகு காலத்தில் அல்ல செம்புக் காலத்தில் தான் உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தைப் பெற்றுள்ளது என்றாலும் மிக மிகப் பிற்காலத்திலே எஃகு நாகரிகத்தைப் பெற்ற ஆரிய மக்களே செம்புக்காலத் திராவிட மக்கள் போர் புரிந்து வெற்றியீட்ட முடியவில்லை. ஐரோப்பாவிலே முதன் முதலாக இரும்புக் காலத்தை (Iron age)¡ கண்ட மக்கள் உலகிலே உயர்ந்த எஃகுவினால் கட்டப்பட்ட கப்பல்களையும், போர்க்கருவிகளையும் பிற எண்ணற்ற இரும்பு கருவிகளையும் செய்து உலகில் பெரிய வல்லரசாக விளங்கினார்கள் என்பது வரலாறுகண்ட உண்மை. ஆங்கில ஆட்சியில் ஆதித்தன் அதமிப்பதே இல்லை என்ற பெரும்பேற்றைப் பெற்றது. 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு பிரான்சு நாட்டின் சிறையில் ஒரு பிரஞ்சுக்காரனும் ஆங்கிலேயனும் குற்றம் செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்களாம். ஒரு நாள் அவர்கள் சம்பாசனை யில் பிரிட்டிஷ்காரன் சந்திரனில் மக்கள் வசிக்கிறார்கள். அங்கு மக்கள் வசிக்கத் தக்க சூழ்நிலைகள் உண்டு என்று பற்பல ஆதாரங்கள் காட்டி வாதித்தானாம் ஆனால் அவனோடு பேசிக் கொண்டிருந்த பிரெஞ்சு கைதிகள் இதை என்னால் நம்பவே முடியாது. உலகிலே ஆங்கிலேயர்கள் எஃகையும் நிலக்கரியையை யும் கண்டவர்கள். உலகிலே ஒப்பற்ற எஃகு கருவியை உருவாக்கியவர்கள். உலகில் வடதுருவம் தொட்டு தென் துருவம் வரை எங்கெங்கு சென்றாலும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த தீவிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் ஆங்கிலேயர் கொடி (யூனியன் ஜேக்) பறக்கிறது. ஆழ் கடலின் நடுவிலெல்லாம் உங்கள் கப்பலில் உங்கள் கொடிகள் பறக்கின்றன. 100 மக்கள் வாழும் சின்னம் சிறு தீவுகளிலும் திட்டுகளிலும் மனிதர்கள் இருந்தால் அங்கு ஆங்கிலேயர் கொடி பறக்கும். சந்திரனில் மக்கள் இருப்பது மெய்யானால் இன்றல்ல ஐம்பது ஆண்டுகட்கு முன்பே சந்திரனில் உங்கள் கொடி பறந்திருக்கும். அங்கு உங்கள் கொடி இல்லாததால் மக்கள் அங்கு இல்லை என்று அந்தப் பிரஞ்சுக்காரன் ஆங்கிலேயன் வாயை அடைத்தான். திங்களில் முதன் முதலாக ஸோவியத் இராக்கெட் இறங்கியதும் ஆங்கிலேயர்களோ அமெரிக்கர்களோ சந்திரனில் (திங்களில்) தங்கள் கொடியை நாட்டுமுன் முதன்முதலாக சுத்தியலும் பன்னரி வாளும் மேலே ஐந்து முனையுள் பொன்மீன் (நட்சத்திரம்) பொறித்த செங்கொடியை நிலை நாட்டிவிட்டார்கள். இங்கிலாந்து உலகில் எண்ணிலா நாடுகளை அடிமைப்படுத்தி கோடானு கோடிக் குடிமக்களைச் சுரண்டிக் கொழுத்து வந்ததற்கும் கடல் அரசி என்ற பெரும்பேற்றைப் பெற்றதற்கும் முக்கிய காரணம் அரசுகள் முதன்முதலில் இரும்புக் காலத்தை எய்தியதே யாகும். வட இந்தியாவில் சிந்துவெளி மக்கள் செம்புக் காலத்தைக் கி.மு. 3000-ம் ஆண்டிற்கு முன்னர் பெற்றிருந்ததால் அவர்கள் கப்பல் கட்டுவதிலும் பயிர்த் தொழில் செய்வதிலும் ஆடை அணிகள் செய்வதிலும் பிற துறைகளிலும் முன்னேறி இருந்தனர். ஆனால் அவர்கள் எஃகு நாகரிகத்தை பெற்றிருந்தால், இந்தோ ஆரியர்கள் படையெடுப்பையும், அப்பால் எழுந்த கிரேக்கப்படை யெடுப்பையும், ஈரானிய, ஆரியர் படைஎடுப்பையும், மொகலாயர், படை எடுப்பையும், தார்த்தாரியர் படை எடுப்பையும் எளிதில் முறியடித்து அவர்கள் ஊனையும் உதிரத்தையும் எலும்பையும் சிந்துவெளி மண்ணில் புதைத்து நல்ல உரமாக்கி சாலச் சிறந்த கூலப் பொருள்களை விளைவித்திருப்பார்கள். உலக வரலாறே வேறு விதமாக எழுதப் பெற்றிருக்கும். வடதுருவத்திலும் தென்துருவத் திலும் மட்டுமல்ல சந்திரனிலும் புதனிலும், வெள்ளியிலும் சிந்துவெளி வேளாளரின் ஏர்கொடி பறந்து கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் கி.மு. 2000 -ம் ஆண்டிலே எஃகு நாகரிகம் பிறந்துவிட்டது. இன்றைக்கு 2000 -ம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதித்த நல்லூரில் நடத்திய அகழ் ஆய்வில் பல எஃகு ஆயுதங்கள் கிடைத்துள்ளன. தமிழர்கள் கி.மு. 8000 -ம் ஆண்டுகளுக்கு முன்பே உழவுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் இரும்பைக் கண்டுபிடித்து கலப்பைக் கொழு, பன்னரிவாள், வெட்டரிவாள், ஈட்டி, வேல் கம்பு, எஃகு அம்புத்தலை, கொடு, வீச்சரிவாள், வாச்சி, உளி, இளைப்புளி மண் வெட்டி கோடரி, சுத்தியல், சம்மட்டி கடப்பாரை முதலிய எண்ணற்ற கருவிகளைச் செய்து குவித்தனர். கி.மு. 1500-இல் இராமன் தென் இந்தியாவிற்கு வரும்பொழுது பாண்டிய அரசனின் அரண் வாயிலின் கதவுகள் பொன்னால் செய்யப்பட்டது என்று இராமன் அனுமானுக்குச் சொன்னதன் மூலம் தமிழ்நாடு எஃகு காலத்தைக் கடந்து பொற்காலத்தில் அடி வைத்து விட்டது என்று கூறலாம். கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பொற்காலத்தில் வாழ்ந்ததால் தமிழ் நாட்டு மகளிர்கள் உச்சி தொட்டு உள்ளங்கால் வரை மணிகள் பதித்த பொன் அணிகள் அணிந்து வந்தனர். தலையில் பொன்னாற் செய்த இராக்குடி, தாழம்பூ, சடாரங்கம், நெற்றிச் சுட்டி, நிலவுபிறை சிந்தாமணி, தோடு, பூடி, கர்னப்பூ, சிமிக்கி மூக்குத்தி, புல்லாக்கு கழுத்தில் உட்கட்டு கண்டசரம், காரை, மருதங்காய் மாலை நெல்லிக்காய்மாலை பிச்சி அரும்பு மாலை போன்ற எண்ணற்ற பொன் கழுத்தணிகளும் கொந்திக் காய்கொலுசு, காப்பு, சூடகம், மோதிரங்கள் மேகலை, கலாபம், விரிசிகை, காஞ்சி, தாமம், ஒட்டியாணம், குறங்கு செறி (தொடையணி) பாதசரம், கொலுசு தண்டை கால் சரிகை, கைச்சரிகை போன்ற எண்ணற்ற வைரம், மரகதம், மாணிக்கம், புஷ்பராகம், வைடூரியம், நீலம், கோமேதகம் போன்ற ஏழு மணிகள் இழைத்த பல்வேறு பொன் அணிகள் பூண்டிருந்தன. திருக் கோயிலில் உள்ள திருஉருவமும், பொன்னாற் செய்யப்பட்டது. பொன்னாற் செய்யப்பட்ட வாகனங்களும், பொற்றேர்களும், பொற் கலயங்களும் திருக் கோயிலை அணி செய்தன. மன்னர்கள் வீட்டில் பொன் அணிகளும் பொன்வட்டில்களும், பொற்கிண்ணங் களும் மட்டுமல்ல அரசிகள் ஏராளமான பொன் அணிகளைப் பூண்டிருந்தனர். அரண்மனையின் தூண்கள் பொற்றகடுகள் போர்த்தப்பட்டிருந்தன. பவளத்தூண்கள் அரண்மனையை எழில் பெறச் செய்தன. மன்னர்கள் தங்கபஷ்மம் சாப்பிட்டு உடம்பைப் பொன்னிறமாக்கச் செய்து போக போக்கியங்களை அனுபவித்து வந்தனர். ஆதித்த நல்லூரில் எண்ணற்ற எஃகு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது ஒன்றே தமிழர்கள் எஃகுகாலத்தில் எஃகு சுத்தியலும், உளிகளும், இழைப்புளிகளும் வாள்களும் வாச்சிகளும், கல் உளிகளும் பெற்றிருந்தார்கள் என்பதற்கு நல்ல சான்றாக விளங்குகின்றன.1 சிந்து வெளியில் எழுந்த செம்பு ஊழியில் (Chalcolithic age) கற் கோயில்களைக் கட்டவில்லை. ஆனாலும் கல்லில் ஓவிய எழுத்துக் களைச் செதுக்கியுள்ளனர் ஆனால், சிந்துவெளியில் வாழ்ந்த திராவிட இனத்தவர்களின் ஆதி முன்னோரைச் சார்ந்தவர்கள் (Proto dravidian race) செம்புக் காலத்தவர்களாக இருந்தும், செம்புக் கருவிகளைக் கொண்டு மரங்களை வெட்டியும், அறுத்தும், கொத்தியும், செதுக்கியும் இழைத்தும் அழகான வீடுகளைக் கட்டியுள்ளார்கள்; வெண்கலப் படிமங்களைச் செதுக்கியுள்ளார்கள். கல்லில் எழுத்துக் களைச் செதுக்கி யுள்ளார்கள். எழுநிலை மாடங்களை எழுப்பி உள்ளனர். ஆழ்கடல் களையெல்லாம் கடந்து செல்லும் கலங்களைக் கட்டியுள்ளனர். ஆனால் புதிய கற்காலத்திலேயே எஃகு ஆயுதங் களைக்2 கண்டுபிடித்த ஆதித்த நல்லூர் பண்பாட்டைப் பண்டைத் திராவிட இனத்தவர்களின் ஆதிமுன்னோரைச் சார்ந்தவர்கள் (proto-dravidian race) ஆவர். இவர்கள் எண்ணற்ற கல் உளிகளையும் சிலைகளுக்கு மெருகேற்றும் அரங்களையும், கற்களில் நகாஷ் வேலைகளைச் செய்து மெருகேற்றும் சிற்றுளிகளைக் கண்டவர்கள் தமிழகத்தில் நாவுக்கரசர் காலத்திற்கு முன்பே (கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே) எண்ணற்ற தெய்வச் சிலைகளையும் கற்படிகளையும், அம்மிகளையும், உரல்களையும், குந்தாணி களையும் எண்ணற்ற எஃகு ஆயுதங்களையும் படைத்தவர்கள். கற்கோயிலைப் படைக்கத் தெரியாதவர்கள். மகேந்திரவர்மன் காலத்தில் தான் தமிழ்நாட்டுச் சிற்பிகளுக்குக் கற்கோயிலை உருவாக்கத் தெரியும் என்று தமிழகம் கூறிவருகிறது; நானும் எழுதி வருகிறேன். ஆனால் எனக்கு இதில் பெரும் ஐயப்பாடுண்டு. பாடல் பெற்ற கோயில்களில் கூட பல கற் கோயிலாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்பர் அடிகளின் அருள்வாக்கால் தென் கடம்பைத் திருக்கடம்பைத் திருக்கரக் கோயிலான் என்று புகழ்ந்து பாடிய திருக்கடம்பந்துறை (குழித்தலை புகை வண்டிநிலையத்தி லிருந்து 2-கல் தொலைவில் உள்ளது) கடம்பவன நாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். தேர் வடிவாக அமைக்கப்பட்ட கவின்பெறு கோயிலாகும். ஆகமங்கள் சிறப்பித்துக்கூறும் எழுவகைக் கோயிலாகும். இதை அப்பர் அடிகள் தமிழ்ப் பெயரால் கரக் கோயில் என்று புகழ்ந்தேத்திப் பாடியுள்ளார். இது மகேந்திரவர்மன் காலத்திற்கு முன்னரே எழுந்த கற்கோயில் என்பது சிலரது கருத்தாகும். இதை அறிஞர்கள் நன்கு ஆய்ந்து முடிவு கட்டவேண்டிய விசயமாகும். தமிழர்கள் வரலாற்றுக் காலத்திற்குமுன்பே இரும்பு நாகரிகத்தைப் பெற்றிருந்தமையால் பாலும் தேனும் ஓடும் பொன்னான தென் மதுரை நன்னகர் என நாவலரும் பாவலரும் போற்றும் நாகரிகத்தையும், கற்பகம் என்றும் கவிஞர்கள் பாடும் கொற்கை நாகரிகத்தையும் திருமகள் வாழும் செந்தாமரை வடிவார்ந்த மாட மாளிகை நிறைந்த மாநகர் என்றும் மதுரை நாகரிகத்தையும் பெற்றிருந்தனர். தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இரும்பு நாகரிகத்தைப் பெற்றிருந்தமையால் உலகில் ஒப்பற்ற உயரிய மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் இசைத் தூண்களையும் குழல் தூண்களையும் பெற்றிருந்தனர். நிலைபெற்ற கலை தமிழர்கள் முதன்முதலாக எஃகின் உபயோகத்தை உலகிலே உணர்ந்தவர்களாக இருந்தமையால் கல்லை ஆயுதமாக முதலில் கண்டனர். கல்லைக் குறிதவறாது வீசக்கற்றனர். கல்லை கவணில் வைத்து பழத்தை வீழ்த்தவோ, குருவிகளை அடித்து வீழ்த்தவோ கற்றனர். கல்லை தாயின் நினைவுச் சின்னமாகக் கண்டனர். கல்லைக் குழலாகக் கண்டனர். கல்லை இசைத்தூணாகச் சமைத்தனர். கல்லைக் கோயிலாக, விமானமாக, கோபுரமாக, மண்டபமாக, தூணாக, படியாக, தெய்வமாக, அழகு என்றும் பொன்றா சிலை வடிவான ஆரணங்காக, நிறையாக (படிக்கல்லாக) எல்லையைக் குறிப்பிடுவதாக (எல்லைக்கல்லாக) தொலைவின் அளவாக (மைல் கல்லாக) படிப்பாக அறிவாக (கல்+வி=கல்வி=மேலான அறிவாக) பல உயர்ந்த தன்மைகளையெல்லாம் கல்லுக்குத் தமிழர்கள் நல்கினர். உலகில் தமிழர்களைப் போல் கல்லுக்கு பெருமை அளித்தமக்கள் எவரும் இல்லை. உயர்ந்த மணிகளுக்கே (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம் கோமேதகம்) ஆகியவைகளைக் கூடத் தமிழர் கல் என்றே அழைப்பர். நிற்க 10-ஆயிரம் ஆண்டுகட்கு முன் தமிழகத்தில் விண்தோய் மாடங்கள் கட்டப்பட்டன. 5-ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் மஞ்சு தவழும் மாட மாளிகைகள் கட்டப் பெற்றன. கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ் மன்னர்கள் சேரர், சோழர் பாண்டியர் என்று பிரிந்தும், அடிக்கடி போரிட்டும் பலங்குன்றிய காலத்தும் தஞ்சாவூரில் 220- அடி உயரமுள்ள விண்முட்டும் பெருமை உடைய கோயில் விமானத்தை, கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் வென்றதோடு குமரி முதல் இமயம் வரை வென்று இமயத்தின்மீது மீன், புலி, வில் சின்னம் பொறித்த வெற்றிக் கொடியை நாட்டி தமிழர் புகழை நாட்டினான் மாமன்னன் இராசேந்திரன். கட்டிடக்கலை நிற்க, இந்தியாவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழகான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் எண்ணற்ற எழிலார்ந்த கட்டிடங்கள் எடுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில், நினைவுச் சின்னங்கள் எழுவதற்கு முன்பே இந்தியாவில் எண்ணற்ற எழிலார்ந்த மாளிகைகளும், அரண்மனை களும் அரண்களும் கோயில்களும், கோபுரங்களும் கட்டத் தொடங்கி விட்டனர். இந்திய சிற்பிகள் அயல் நாட்டு சிற்பிகளின் வழிகளையோ, அமைப்பு முறைகளையோ பாணிகளையோ கலைப் பண்புக் கூற்றினையோ பின்பற்றித் தங்கள் கட்டிடக் கலைக்கு உயிர்ப்பூட்டப்பட்டவர்களாக இல்லை. தனக்கென்று ஒரு தனிப் பெரும் பண்பை உருவாக்கி கொண்டவர்கள் ஆவர். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுடைய முன்னோர்களிட மிருந்து பெற்ற கட்டிடக்கலையின் பழைய மரபு வழியினின்று பிறழாது மறுமலர்ச்சி பெற்று வளர்ச்சி பெற்று வந்துள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் புதுக் கற்காலத்தைக் கடந்து இரும்புக் காலத்தை அடைந்ததே ஆகும். கிரேக்கர்களால் சமீப காலத்தில் கட்டப்பெற்ற முக்கோண முகப்பு முகடு (வில் முகப்பு முகடும்) உடைய பகோடா கட்டப் பட்டதும் அல்லது உரோமர்களின் கவிகை விளவு அல்லது பிரஞ்சுக்காரர்களின் மேல் கவிகை மாடம் சமீபத்தில் கட்டியது புதுமைப் பொலிவுடன் அழகு பெற்றிலங்குகிறது. ஆனால் இவை முன்பின் முரணானதாக இருக்கிறது. இந்தியர், அவர்களுக்கு மாறான வேறு தட்ப வெப்ப நிலையிலும், வேறு, வேறு நிலங்களுக்கு ஏற்ப புதிய முறையில் திராவிடக் கட்டிடக் கலை நாளுக்கு நாள் வண்ணமும், திண்ணமும் பெற்று எழிலும் பொழிலும் பெற எடுப்பித்து வருகின்றனர்.1 வெப்பம் நிறைந்த நாட்டில் கூர்மையான கூரையையுடைய வீட்டைக் கட்டவேண்டும். ஏன் பெரிய கல்வீட்டைக் கட்ட வேண்டும். இந்து நாகரிகப்படி தூண்கள் விட்டு அசைக்க முடியாத அரும்பெரும் கற்கோயிலைக் கட்டி, ஏனைய எந்த நாகரிகம் எழுந்தாலும் மாற்றமுடியாத மகோன்னதமான குன்றெனப் பொன்றாது நின்றிலங்கும் கோயில்களை எடுப்பிக்க வேண்டும். சூழ்நிலைகளுக்குரியவாறு மாற்றியமைக்கும் விதிகளுக்கு ஏற்ப மக்கள் கட்டிடக் கலையின் புறஉருவ அமைப்பும் தட்ப வெப்ப நிலைக்கும், சமூகத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருள்களுக்கும் ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது இன்றியாமையாதது. சமகால கட்டிடக் கலையின் மாண்பை அறிவதன் பொருட்டு, கோயில்களைப் பழுதுபார்க்க வேண்டும். அவர்களுடைய வேலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் பொழுது உழைப்பாளிகளே அவர்களுக் குள்ளே இதை முடிவு செய்து ஆலோசனை செய்து கொள்ளுவார்கள். கல் தச்சர்கள் எந்தக் கற்பணியாய் இருப்பினும் - சாரம் (தண்டையக் கட்டு) அல்லது தூண் தலை உறுப்பை கல் உளியால் செதுக்குதற்கு ஏற்றதாய் அவைகளை தக்க இடத்தில் வைத்துக் கொள்ளுவார்கள். அனைத்திற்கும் பணி தொடங்குமுன் திட்டமிட்டு சுவரில் வரைந்து கொண்டே செதுக்கு வேலையை ஆரம்பிப்பர். இறுதியாக சிற்பிகளைக் கேட்க, ஒவ்வொரு வார்ப்பட உருவத்தின் கலைப் பண்புக் கூற்றின் பெயரை சொல்லாலோ எழுத்தாலோ சிற்பிகள் விளக்கிக் காட்டுவார்கள். அவர்கள் தொழில் நுட்பத் தகவல் நிறைந்ததால் அதை நாம் இங்கு தலைப்புகளை வரிசையாகப் படித்துக் கொண்டு போகக்கூடியதாய் இருக்கும். இந்தத் தகவல்களில் பல கரிவலம் வந்த நல்லூரிலும் கோயில் பணியாற்றும் தபதிகளிடமிருந்தும் பெரும்பகுதிகள் விளக்கம் பெற்றவைகளாகும். திராவிடக் கட்டிட ஒழுங்குமுறை கட்டிடக் கலையின் அடிவானம் சார்ந்த பிரிவை ஒருவர் குறிப்பிடும் பொழுது கட்டிடத்தை அழகுபடுத்தும் அமைப்பு முறையைப் பற்றி ஆலோசிக்கத் தொடங்குவர். மற்றொரு வார்த்தையில் கூறுவதானால் ஒருவர் ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கத் தொடங்கும் பொழுது அதே ஒழுங்கு முறைதான் உள்ளத்தில் தோன்றும். அதே அமைப்பு முறையின் வடிவமும் அதே அழகும் தூண் தலைப்பு அமைவின் அடிப்படைத் தூணின் மேல் வைப்பு நிலையும் அதே வரிசை நிலையில் அமைத்து அது இப்பொழுது அமைக்கப்பட்டது போல் உருவாக்குகின்றனர். கிரேக்கர் கலையில், முக்கியமான மூன்று ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். அதாவது டோரிக், ஐயோனியன், கொரிந்தியன் என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற முறைகளாகும். திராவிடக் கட்டிடக் கலையில் ஒரே ஒரு ஒழுங்கு வரிசை முறைதான் பயன்படுத்தப்படுகிறது அது திராவிட ஒழுங்குமுறை என்று அழைக்கப்படும். உருவம் 17 (A) ஒவ்வொரு சித்திர வேலைப்பாட்டின் பெயர் களையும் காட்டுவதாக இருக்கிறது. எப்படியிருந்தாலும் சில விளக்கங்களைச் சேர்த்து தருவதாக உள்ளது. (1) உபபீடம் (அடிப்பகுதி) மிக எளிதாக சிலசமயம் அணிகள் செய்யப்பட்டதாய் இங்கு நாம் எடுத்துக் காட்டியிருப்பவைகளோடு எழில் மிக்கதாய்ச் செய்யப்பட்டுள்ளது. (2) அடிப்படையில் - அதாவது அதிர்ஷ்டானத்தில் கட்டிடத்தின் கற்பணி அல்லது மரவேலையின் அடிப்படை அதிர்ஷ்டானம் பத்மம் என்று அழைக்கப்படும். அது ஒருவகை மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவுமுள்ள பிழம்புருவாகப் பிரதிபலிக்கும் தாமரையின் இதழ்களால் எழில் பெற்றிலங்கும். அது இன்றியமை யாதது. ஏனென்றால் பெருஞ் செயற் கட்டமைவில் சில பகுதிகளாய் கவின் பெற விளங்குகிறது. சில சமயங்களில் வலிந்து கட்டுப் படுத்தப்பட்டதாய் விளங்குகிறது. மூடிமழுப்பாத சில சித்திர வேலைப்பாடுகள் இங்கு குமுதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவை சில வேளைகளில் சிதைந்து கிடக்கிறது. சில பகுதிகளின் சித்திர வேலைப்பாடுகள் அக்கரப்பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. கபோதம் அடிக்கடி திரும்ப அமைக்கப்படுகிறது. உச்சியில் அவையாளத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டிட வேலையின் சித்திர வேலைப்பாடுகள் முழு மொத்த நிலையைக் காட்டுகிறது. அதை நாம் விளக்கும்பொழுது பிரதாரம் என்று விளக்கிக் காட்டுகிறோம். தம்பம் அல்லது தூணின் மேற்பூச்சு சில வேளைகளில் சதுரப் பிரிவாகவும், சில வேளைகளில் எண்கோண வடிவிலும் உள்ளது. தூணின் அடிப்பகுதியில் உள்ள அணி செய்யப்பட்டபகுதி நாகபந்தம் என்று கூறப்படும். முதல் உருவம் பெரிய அளவில் தூண்தலைப்புறுப்பின் மீது மிகப் பெரிதாக இருக்கும் தூண்தலைப்புறுப்பின் மீதுள்ள பெயரை குமிழ் என்று பெயரிட்டு அழைக்கிறோம். குமிழ் அமைப்பு முறை தூணின் மேல் தட்டு மீது அமைந்திருக்கும். கல் மண்டபங்களின்மீது மேல் நோக்கி விரிந்துள்ள தாமரை மலர் பதுமம் என்று அழைக்கப்படும். கீழ்நோக்கி விரிந்து மலர்ந்துள்ள தாமரை கமலம் என்று அழைக்கப்படும். கமலம் பதுமம் என்ற பெயர்கள் பொதுவாகத் தாமரைக்கு வழங்கப்பட்ட பெயராக இருந்தாலும் மேல் நோக்கி மலர்ந்து நிற்கும் சிற்பத் தாமரைக்குப் பதுமம் என்றும் கீழ் நோக்கி விரிந்து கவிந்து தொங்கும் சிற்பத்தாமரைக்கு கமலம் என்றும் அழைப்பது சிற்பிகளின் மரபு வழக்காக இருந்து வருகிறது. அதிர்ஷ்டானத்தில் சிற்பிகள் கல்லால் ஐந்து வரிகள் அமைப்பது வழக்கம். அவைகள் பஞ்சவரிகள் எனப்படும். அவை முறையே பதுமம், கமலம், தாமரை, நளினம் எனப்படும். இவை அதிர்ஷ்டானத்திலும் இருப்பதில்லை. சிலவற்றில் மூன்றும் உள்ளன. பலகை மணிச் சட்டத்திற்கு (abacus)V‰òila¡fhŒ இருக்கும். உருவம், ஒரு மலர் அமைப்பில் மிக நுணுக்கமான வேலைப் பாடமைந்த தண்டையக் கட்டையின் தூண்மீதுள்ள போதிகை - புஷ்ப போதிகை எனப்படும். சில தாங்கு பட்டிகையில் அடங்கிய நான்கு உறுப்புகளான (1) உத்தரம் (2) ஏராதகம் (3) கபேதம் (4) யாளம் என அழைக்கப்படும். அழகிய கபோதம் கூடு என்னும் உறுப்பால் எப்பொழுதும் எழில் செய்யப்பட்டிருக்கும். யாழம் என்று அழைக்கப்பட்ட உருவ அமைப்பு படம் 4-ஐப் பார்க்க. இது சிங்கம் முகத்தோடு இணைக்கப்பட்டிருப்பதாலும் யானையின் துதிக்கையோடு இணைக்கப்பட்டிருப்பதாலும் இது யாளி என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேன்மாடச் சிறு அறைகள் பல்வேறு வகையான சிறிய அணி மாடல்களாய் (pavilion) அமைத்திருக்கின்றன. அணிமாடங்களின் அமைப்பு முறைகள் அவர்கள் தாங்கள் பெற்ற பெருஞ்செயற் கட்டமைவிற்கு ஏற்ப அமைத்துள்ளார்கள். அவர்கள் அமைத்த கட்டமைவு படம் 4-இல் உள்ளது. அவை கர்ணக் கூடு என்று அழைக்கப்படும். அவற்றின் கூரை சதுரமாகவோ வட்டமாகவோ அமைப்பர். அதை ஒரு தனி தூபி ஒன்றினாலேதான் அமைப்பர். அவைகள் சாலையின் மேல் நடுவில் அமைக்கப்படும். அவைகள் கூரையின் மீது எவரும் எளிதில் அறியுமாறு அமைந்திருக்கும். அவைகள் தூபங்கள் என்று அழைக்கப்படும் மேலே மூன்று தூபங்கள் (கலயங்கள்) திகழ்வதை நன்கு காணலாம். கர்ணக் கூட்டிற்கும் சாலைக்கும் இடையே சில வகையான சிறு சன்னல்கள் காணப்படும். அவைகள் பஞ்சரம் என்று கூறப்படும். நமது ஆகமங்களும், சிற்பநூற்களும் வடமொழியில் இருப்பதால் திருக்கோயிலின் உறுப்புகள் பலவும் வட மொழியிலே அமைந்துள்ளது. இப்பொழுதுதான் நமது கோயில்கள் பற்றி ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் என்ன கூறப்பட்டுள்ளது என்று தமிழ் அறிஞர்களால் ஆய்வு செய்யத் தொடங்கப்பட்டுள்ளது. நமது தெய்வத் திரு உருவம் நிலை பெற்றிருக்கும் இடம் கர்ப்பக்கிரகம் என்ற வடமொழிச் சொல்லாலே அழைக்கப் பட்டது. அப்பால் அதன் மொழியாக்கமாக கருவறை திருவறை என்றெல்லாம் கூறப்பட்டு வந்தன. இப்பொழுது நமது மன்னர்கள் எழுதி வைத்த பழைய கல்வெட்டுகள் மூலம் திருஉருவம் இருக்குமிடம் அகநாழிகை, உண்ணாழிகை என்னும் பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. அடியில் கண்ட லெப்சிய குறிப்புரைகளின்படி இந்த மரபொழுங்கின் வயப்பட்ட உன்னிப்பான உற்று நோக்கும் பார்வை மிகப் பயன் தருவதாகும். முன் அறிவிப்புக் கலைப் பணியின் படிப்பிற்காகவும் அதனுடைய இயல்பு கண்டறிந்த இடம் இன்னும் வழக்காற்றுத் தொடர்புள்ளதாகவே இருக்கின்றது. ஆனால் அது ஒரு நாகரிகமற்றதாக அல்லது அறிவற்றதாகவோ இல்லை என்று எவரும் தனது இஷ்டம் போல் மறுதலிக்க முடியாது. உண்மையான கலைஞன் கூட இந்த முறையை அதனுடைய தகுதியான இடத்தில் வையாது புறக்கணித்துவிட முடியாது. ஆனால் அவனுடைய சொந்த அடையாளத்தை நுட்பமாகக் கூறுவதானால் தனிச் சிறப்பான ஒரு அடையாளம் இலங்கும். அது உண்மையான கலைப்பண்பாடு - சுவை முதலியவற்றின் திறனாய்பவராக ஏற்றுக் கொள்ளப்படும். தனிமுறைச் சிறப்புப் பேரவை எப்பொழுதும் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லாவிட்டாலும் இதைப் போன்று எப்பொழுதும் போல் இல்லாவிடினும் கலை ஆக்கக்கூறு ஒரு இன்றியமையாத மெய்பாடுள்ளதாக இருக்கும்.1 இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. South Indian Temple - V. G. Ramakrishna Iyer B.A. (Madras) 1946 2. A Survey of Indian Histroy - K. M. Panikkar (Bombay) 1956 3. The Dravidian Culture and its diffusion (Cochien) 1936 4. Architecture du sud de L’s India - G. Jouvean Dubreuil (Paris) 1914 5. Th e Interprcters Dictinary of the Bible vol. III 6. Catalogue of the Prchistoric Ambguities from Adichanallur and Perambain - J. R. Hendason (Preface) Madras 1914. 7. Dravidian Architeclivre - C. Jouvdau Dubre nine Madras 1917. 8. Bells Egyplion Archutcture 9. ஆலயங்களின் உட் பொருள் விளக்கம் - ஏ. சொக்கலிங்கம் (சென்னை) 1952. மாமல்லபுரம் மாதிரிக் கோயில்களும் கற்றளிகளும் மாமல்லபுரம் இன்று மகாபலிபுரம் என்று அழைக்கப்படு கிறது. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னன் நரமசிம்மவர்மன் தன் தந்தை மகேந்திரவர்மன் ஆற்றிய கோயில் திருப்பணிகளைத் தொடர்ந்து பல மாதிரிக் கோயில்களை (Model temples) எடுப்பித்தான். அவன் எடுப்பித்த கோயில்கள் மக்கள் வழிபாடு பெற்றவைகள். அவற்றில் வழிபடும் தெய்வ உருவங்கள் இல்லை. அவைகளில் சிலவற்றை மக்கள் அறியாமையால் பஞ்சபாண்டவர் இரதங்கள் என்று அழைத்துவந்தனர். சமண சமயத்தைத் துறந்து சைவம் தழுவிய மகேந்திரவர்மன் (600-630 A.D) தமிழ்நாட்டுக் கட்டிடக் கலை வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கியவன் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். இவன்தான் முதன் முதலாகக் குகைக் கோயிலைக் கண்டவன். குடைவரைக் கோயிலை உருவாக்கியவன் என்று கூறப்படுகிறது. இவன் மகன் மாமல்லன் நரசிம்மவர்மனும் (630-668 A.D) அவனுக்குப்பின் பரமேசுவரப் பல்லவனும் (670-690 A.D) அரச கட்டிலில் அமர்ந்து மகேந்திரவர்மன் வழியில் பல கற்றளிகளை எழுப்பி இப்பார் உலகம் அழியும் வரை பல்லவர் பெயர் அழியாது நிலவச் செய்தனர் என்ற பெயரை நிலைநாட்டினர். மாமல்லபுரம் என்ற பெயரே நரசிம்மவர்மன் பெயரால் எழுந்த பல்லவர்களின் துறை முகப்பட்டினமாகும். மாமல்லபுரத்திலும் சாளுவன்குப்பத் திலும் பிறஇடங்களிலும் அவன் பல குடைவரைக் கோயில் களையும் ஒன்றைக் கல் தேர்களையும் (இரதங்களையும்) உருவாக்கி உலகில் பெரும் புகழை எய்தியுள்ளான். கல்லில் செய்யப்பட்ட தேர்களும் கோயில்களும் மரத்தில் செதுக்கப்பட்டவைகளைப் போல் சிற்பச் சிறப்பு வாய்ந்ததாய் அணிபெறத் திகழ்கின்றன. இந்தக் கற்கோயில்களுக்கு முன் தமிழ கத்தில் பெரிதும் மரக் கோயில்களே சிறப்புற்றதாய் விளங்கின. மாமல்லன் நரசிம்மவர்மன் எடுப்பித்த மாமல்லபுரத்து சிற்பச் செல்வங்கள் இந்திய நாட்டிற்கும் சிறப்பாகத் தமிழ்நாட்டிற்கும் பெரும் புகழை ஈட்டி என்றும் அழியாக் கலைகளாய்த் திகழ்கின்றன. நரசிம்மவர்மனின் கி.பி. 630-668) திருப்பணி முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின் பல்லவர்களின் அரச கட்டிலை அடைந்தவன் அவன் மகன் மாமல்லன் நரசிம்மவர்மன் ஆகும். இவனை வரலாற்றாசிரியர்கள் வாதாபி கொண்ட முதலாம் நரசிம்மவர்மன் என்று கூறுவார்கள். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் தொண்டை நாட்டைக் காஞ்சியில் இருந்து ஆட்சி புரிந்து வந்தான். கவின்மகன் நரசிம்மவர்மன், பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கடல் மல்லையில் (மாமல்லபுரத்தில்) இருந்து ஆட்சி நடத்தி வந்தான். இங்கிலாந்து நாட்டில் அரசர் இலண்டன் மாநகரில் இருப்பார். இளவரசர்கள் உவேல் நாட்டில் வாழ்ந்து வருவார்கள். அவர்கள் உவேல் நாட்டு இளவரசர் (prince of wales) என்று அழைக்கப்படுவார்கள். அதே போல் மல்லையில் வாழ்ந்து வந்த நரசிம்மவர்மனை இளவரசன் மாமல்லன் என்று அழைத்தனர் போலும். இலங்கை அரசுக்குரிய மானவர்மன் என்பவன் அரசு இழந்து தொண்டை நாடு போந்து நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் சாளுக்கிய மன்னன் புலிகேசியுடன் போரிட்டு வாதாபியை வென்றான். அப்போரில் மானவர்மன் பல்லவர்கள் படையோடு சேர்ந்து போரிட்டு நரசிம்மவர்மனுடைய வெற்றிக்குத் துணை நின்றான். அதனால் நரசிம்மவர்மன் தன் படைகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்று மானவர் மனுக்கு முடிசூட்டினான். இதன் நினைவாக நரசிம்மவர்மன் ஒரு காசு வெளியிட்டுள்ளான் என்று சில அறிஞர்கள் கருதுகின்றான் (அக்காசு ஒன்று என்னிடம் உள்ளது) நரசிம்ம வர்மனுடைய படைத்தலைவராக இருந்த பரஞ்சோதியார் (சிறுத்தொண்டர்) பல்லவர்களின் யானைப் படைக்குத் தலைமை தாங்கி வாதாபியை வென்றார். அங்கு இருந்த யானை முகத்தையுடைய பிள்ளையாரைக் கொண்டு வந்து தமிழகத்தில் பிள்ளையார் பேரும் புகழும் பெறச் செய்தார். மாமல்லன் நரசிம்ம வர்மன் பல்லவர்கள் ஆட்சியை விரிவு படுத்தினான். வடக்கே வட பெண்ணை ஆறுமுதல் தெற்கே வெள்ளாறு வரை பல்லவர்களின் கொடி பறந்து வந்தது. இவன் கி.பி. 640-இல் சீனநாட்டு பௌத்த வழிப்போக்கன் காலத்தில்தான் ஹியூங்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வந்து அங்கு சிலகாலம் தங்கியிருந்தான் இவனது காலத்தில் அப்பர், சம்பந்தர், மங்கையர்க் கரசியார், திருநீல கண்டப் பெரும் திரு நீலநக்கர், முருக நாயனார் முதலியவர்களும் முதல் ஆழ்வார்கள் மூவரும் திருமழிசை ஆழ்வார் களும் வாழ்ந்திருந்தார்கள். நரசிம்மவர்மனுடைய சிலை இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவன் நீண்ட மகுடம் புனைந்துள்ளான். காதுகளில் குண்டலங்கள் கழுத்தில் மணிமாலைகள் மார்பில் பூணூல் அணிந்து மிகக் கெம்பீரமாய் நிற்கின்றான். இடக் கையை இடுப்பில் ஊன்றி வலக்கையைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டு நிற்கிறான். அரையில் அழகிய பட்டாடை அணிந்திருக்கிறான். மேலே சட்டையோ, போர்வையோ காணப்படவில்லை. முகத்தில் அமைதியும், கண்களில் உறுதியும் ஆழ்ந்த சிந்தனையும் காட்சி அளிக்கிறது. பல்லவப் பார்வேந்தர்களின் சிலைகள் பலவும் அரசனும் அரசியும் அண்மையில் நெருங்கி நிற்பது போல அமைக்கப் பட்டிருக்கும். மாமல்லபுரம் வராகப் பெருமாள் குடைவரைக் கோயிலில் மன்னன் மகேந்திரவர்மன் பட்டத்தரசியோடு நிற்கும் சிலை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. அங்கு மற்றொரு சிற்பம் மகேந்திரவர்மன் தந்தை சிம்மவிஷ்ணு அவனுடைய அரசியோடு நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத் தில் உள்ள அர்ச்சுன இரதம் என்னும் ஒற்றைக் கற்கோயிலில் இருக்கிற பல்லவ மன்னர் சிலையும் உத்திரமேரூர் மாடக் கோயிலில் காணப்படும் மற்றொரு பல்லவ மன்னர் சிலையும் பட்டத்தரசி யோடு நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நரசிம்மவர்மனின் சிலை மட்டும் தனியாக பட்டத்தரசியின்றிக் காணப்படுவது வியப்பாக இருக்கிறது. நரசிம்ம வர்மன் பிறப்பாலே சைவன். அவன் காலமுழுதும் சைவனாகவே வாழ்ந்தான். அவன் தனது தந்தையைப் போலவே சிவபக்தியுடையவனாகவே வாழ்ந்தான். தந்தையின் வழியைப் பின்பற்றி அவன்பல கற்றளிகளை எடுப்பித்தான். தந்தையைப் போலவே சிவபெருமானுக்கு மட்டுமின்றித் திருமாலுக்கும் கோயில்கள் எடுப்பித்தான். அதோடு கடல் மல்லையில் தந்தை மகேந்திரவர்மன் ஆரம்பித்த திருப்பணியைத் தொடர்ந்து செய்வித்து வந்தான். இன்று நரசிம்மவர்மன் எழுப்பிய ஒற்றைக் கல் கோயில் பல இன்றும் மாமல்லபுரத்தில் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றன. கட்டிடக் கலை (630-668) மாமல்லன் நரசிம்ம வர்மன் காலத்தில் தொண்டை நாட்டில் கட்டிடக் கலை மறுமலர்ச்சி பெற்றெழுந்தது. கி.பி. 600-க்கு முன்பே கட்டிடங்கள் செங்கல் சுண்ணாம்பு மரம் முதலியவற்றால் செய்யப்பட்டு வந்தன. கி.பி. 600க்குப்பின் தமிழகக் கட்டிடக் கலையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது. மகேந்திரவர்மன் மலைகள் அல்லது சிறு குன்றுகள் இருக்கும் இடத்தில் குன்று களைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்கினான். ஆனால் நரசிம்ம வர்மன் குடைவரைக்கோயில் களையும் இரதங்கள் என்று கூறப்படும் ஒற்றைக் கல் கோயில்களையும் உருவாக்கிப் பேரும் புகழும் பெற்றான். நரசிம்ம வர்மன் சிவபக்தன் சைவத்தைக் கண்ணின் கருமணி எனப் போற்றி வந்தான். என்றாலும் வைணவத்தையும் பேணி வந்தான். பல்லவர்கள் சமணத்தை இகழ்ந்து அவர்கள் கோயில் களை இடித்து வந்ததுபோல் வைணவத்திற்குக் கேடு செய்யவில்லை. சிவபெருமானுக்கு திருக்கோயில்கள் எடுப்பித்ததோடு திருமாலுக்கும் கோயில் எடுப்பித்து வந்தது ஆழ்ந்து ஆராயத்தக்கது. சைவமும் வைணமும் தமிழகத்திலே பிறந்த தேசீய சமயமாகையி னாலே இரண்டையும் இரு கண்கள் போல மகேந்திரவர்மனும் நரசிம்மவர்மனும் போற்றிவந்தார்கள். மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் எழுதப் பெற்ற கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பல உண்டு. ஆனால் அவைகள் இன்னும் நமக்குக் கிட்டவில்லை. சமீபத்தில் நரசிம்மவர்மன் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ்க் கல்வெட்டு ஒன்று நமக்குக் கிடைத்துள்ளது. அது திருக்கழுக்குன்றத்து மலைமேல் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்று கூறப்படும். குடைவரைக் கோயிலில் எழுதப்பட்ட சாசனமாகும். இதில் சில எழுத்துக்கள் மறைந்தும் சில எழுத்துக்கள் மழுங்கியும் காணப்படுகின்றன. நிற்க இங்கு நரசிம்மவர்மன் அமைத்த குடைவரைக் கோயில்களையும் ஒன்றைக்கல் இரதங்களையும் பாறைப்படிமங் களையும் இங்கு ஆராய்வோம். ஒற்றைக்கல் கோயில்கள் (இரதம்) முதலாம் மகேந்திரவர்மன் தமிழகத்தில் முதன்முதலாகக் குடைவரைக் கோயிலை அமைத்தான். அவன் மகன் முதலாம் நரசிம்மவர்மன் அவனைப் போல் குடைவரைக் கோயில்களை அமைத்ததோடு பல தேர் போன்ற வடிவில் ஒற்றைக் கற்கோயில் களை அமைத்தான். ஆண்டவன் அழியாதவன்; அவன் உறையும் கோயிலும் அழியாதிருப்பதே சரி என்ற எண்ணத்தில் மகேந்திர வர்மன் குன்றுகளைக் குடைந்து கோயிலாக ஆக்கினான். இந்தக் கோயில்களை உட்புற மட்டும் தோண்டி திருஉருவம் இருக்க உண்ணாழிகையும் மக்கள் நின்று வழிபட மண்டபமும் ஆக்க முடிந்தது. ஆனால் மேற்புறமாக அழகிய விமானங்களை ஆக்க முடியவில்லை. அதனை முதலாம் மகேந்திரவர்மனே செய்து முடித்தான். மகேந்திரவர்மன் காலத்திலே இந்த ஒற்றைக் கல் தேர்க் கோயில் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் நரசிம்ம வர்மன் காலத்திலே நன்கு நிறைவேற்றப்பட்டது. சிற்ப நூற்களின் விதிப்படி இளங்கோயில், தூங்கானை மாடக் கோயில், மாடக் கோயில் போன்றவைகளை உருவாக்கி தமிழகத்திற்கு நல்ல மாதிரிக் கோயில்களாக அமைக்கப்பட்டன. இந்தக் குடைவரை ஒற்றைக்கல் கோயில்கள் முற்காலத்தில் செங்கல்லாலும் சுண்ணாம்பினாலும் செய்யப்பட்ட விமானங் களைப் போன்று நுணுக்கமான அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தாய் இருந்தன. இந்தக் கற்கோயில் விமானங்கள் மரத்தால் கடையப் பெற்றதைப் போல் கற்கள் நன்கு செதுக்கப் பெற்று மெருகிடப்பட்டதாக விளங்கின. இந்த ஒற்றைக் கல்கோயில் தோற்றத்தில் சோழர்களின் கட்டிடக் கலையின் சிறந்த அம்சங்கள் ஒளிர்வதாகக் காணப்படுகிறது என்று அறிஞர்களால் எண்ணப்படுகிறது.1 இந்த ஒற்றைக்கல் கோயிலைப் பாமர மக்கள் தேர் என்றனர். ஐந்து கோயில்கள் வரிசையாக இருந்ததால் பாண்டவர்கள் இரதம் (தேர்) என்று கூறினர். பாமரமக்கள் இட்டபெயர்களையே இன்று அறிஞர்களும் வழங்கி வருகின்றனர். இந்த ஒற்றைக்கல் தேர்களாக தருமராசன் ரதம், வீமசேனன் இரதம், அர்ச்சுனன் இரதம், திரௌபதி இரதம் சகாதேவன் இரதம் ஆகிய ஐந்து சிற்பக்கலை குன்றுகளை நரசிம்மவர்மன் உருவாக்கினான். வீம இரதம் வீம இரதம், அர்ச்சுனன் இரதத்திற்கு தெற்கில் அமைக்கப் பட்டு இருக்கும் ஒரு இருநிலைமாடக் கோயிலின் மாதிரிக் கோயில். இது நீண்ட சதுர வடிவில் குன்றைக் குடைந்து செய்யப்பட்ட ஒரு குடைவரைக் கோயிலாகும். இது சிதம்பரம் ஆடவல்லான் கோயில் அமைப்பில் மண்டபத்தையும் மேற்கூரையையும் (விமானத்தையும்) நான்குபுறமும் தாழ்வாரமும் உள்ளது. இதன் அடிப்பகுதியின் வேலைகள் முற்றுப் பெறவில்லை. மேற்பகு - கர்ணக்கூடு கோஷ்ட பஞ்சரங்கள் ஆகியவைகளின் சிற்ப வேலைகள் சீர்பெற நிறைவு பெற்றிருக்கின்றன. இந்தக் குடைவரைக் கோயில் 42 அடி நீளமும் 25 அடி அகலமும் 25 அடி உயரமும் உள்ளது. மேற்குப்புறம் நோக்கி இருக்கும் தாழ்வாரத்தை நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்கள் சிங்கத்தின் மீது நிற்பது போல் செய்யப்பட்டுள்ளன. இதைப் பார்த்த உடனே பல்லவர் பாணியில் செய்யப்பட்டவைகள் என்பதை எடுத்துக்காட்டும். இதன் நடுவே வெடிப்பு ஏற்பட்டதால் வடக்குப் பகுதியின் வேலை நிறைவடையாமல் இருக்கிறது முதலில் இத்தகைய கட்டிடங்களின் மேற்கூரை மரத்தினால் அமைக்கப் பட்டது. (சிதம்பரத்தில் கூட மரத்தினால்தான் அமைக்கப் பட்டுள்ளது) ஆனால் இங்கு மேற்கூரைக் கருங்கல்லில் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் வெடிப்பேற்பட்டதினால் இதைக் கட்டியவர்கள் தம் பணியை நிறைவுசெய்யாமல் நிறுத்திவிட்டனர் என்று அறிஞர் சே. டப்ளியூ கூமப பீ.ஏ.ஏ.எம்.எ.டி ஆவர்கள் அபிப்பிராயப் படுகின்றார்.1 ஒற்றைக் கல் தேர் வடிவில் அமைக்கப்பட்ட இக் கோயில் நீலகிரிக் குரும்பர்கள் குடிசையைப் போல் வண்டிக் கூண்டு அமைப்பில் காணப்படுகிறது. இந்தக் குரும்பர்கள் இன்று உண்மையான பல்லவர்கள் பிரதிநிதிகளாய் காணப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது. மேலும் இக்குருமார்கள் கைதேர்ந்த சாளுக்கிய சிற்பிகளோடு தொடர்பு கொண்டிருந்த தொழிலாளர் களாகும், என்பதை நமது தேசீய கண்ணோட்டத்தோடு ஆராய்ந்த பல ஐரோப்பிய அறிஞர்கள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆனால் வடஇந்திய நாகரிகமயக்கில் வீழ்ந்து கிடக்கும் சிலர், வீம இரதம் பௌத்த விகாரைகள் (மடங்கள்) போன்று காணப்படுகின்றது என்று கூறுகின்றார்கள்.2 இந்த ஒற்றைக் கல் கோயில் அமைப்பு, சிற்ப நூற்களில் வேசரம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் சிலர், சிற்ப நூற்களில் குறிப்பிடப்படும் திராவிடம், நாகரம், வேசரம் என்ற மூன்று பிரிவுகளில் தமிழ்நாட்டினர் அமைக்கும் கட்டிடம் திராவிட முறையைத் தழுவியது. வட நாட்டில் அமைக்கும் கட்டிடம் மூன்று வேசரத்தைத் தழுவியது என்று எண்ணுகிறார்கள். சிலர் பௌத்த விகாரைகள் (அம்பலங்கள்) வேசர அமைப்பை உடையது என்று கூறுகிறார்கள். இது மிகத் தவறான எண்ணம் சிற்ப நூற்களில் கூறும் திராவிடம், நாகரம், வேசரம் என்ற மூன்று அமைப்புகளும் தமிழர்களுக்கு உரியவைகளேயாகும். தமிழ்நாட்டிலே இந்த மூன்று முறைகளில் தங்களுக்கு விருப்பமான முறையில் பண்டு தொட்டுக் கோயில்கள் அமைத்து வருகிறார்கள். ஆனால் பௌத்தர்கள் இந்த வேசர அமைப்பு முறையைத் தழுவி அதிகமான கோயில்கள் அமைத்து வரலாம். அதே போல் தமிழர்கள் திராவிட அமைப்பு முறையைத் தழுவி அதிகமான கோயில்களை அமைத்து வரலாம். அதோடு தமிழகத்தில், ஏன்? ஆந்திரா, கன்னடம் கேரளம் முதலிய திராவிட நாடுகளிலும் மேற்கூறிய மூன்று அமைப்பு முறைகளையும் தழுவிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் விமானத்திலும் ஆலயங்கள் இல்லை. ஆனால் அவைகள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. விமானத்தின் முக சாலையில் சிற்ப உருவங்கள் செதுக்கப்பெற்றுள்ளன. 4. சகாதேவ இரதம் மாமல்லபுரம் முற்காலப் பௌத்தர்களின் கோயிலைப் போல் இருக்கிறது.1 இது போன்ற துர்க்கை கோயில் சாளுக்கிய நாட்டில் உள்ள அய்கோல் என்னும் இடத்தில் உள்ளது. இது தூங்கானை மாடக் கோயிலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயிலாகும். இத்தகைய கோயில்கள் தமிழகத்தில் பிற்காலத்தில் எழுப்பப் பட்டன. தொண்டை நாட்டில் பல்வேறு விதமான தூங்கானை மாடக் கோயில்கள் உண்டு. இதன் பின்புறம் அரைவட்ட அமைப்பிலும் - அதாவது உண்ணாழிகை அரைவட்டமாகவும் முன்புறம் மண்டபம் நீண்ட சதுரமாகவும் இருக்கும். இத்தகைய பல்லவர்கள் கோயில் ஒன்று திருத்தணிகையில் உண்டு.2 இக்கோயிலுக்கும் இதை அடுத்து நிற்கும் நான்கு கோயிலுக்கும் முன்னர் வெளிப்புறத்தில் சிற்ப உருவங்களே இல்லை. ஆனால் இந்திரன் இங்கிருந்து மும்மூர்த்திகளை வழிபட அமைந்த கோயிலாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்திரனது வாகனம் ஐராவதம் என்ற வெள்ளையானை. அது பின்னால் இருக்கிறது. இக் கோயிலின் அருகில் தெய்வங்களுக்குரிய வாகனங்கள் பல கல்லில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவை நந்தி (எருது) சிங்கம், யானை ஆகியவைகளேயாகும். இவைகள் மூன்றும் அமைதியாக ஓரிடத்தில் வாழ முடியாது. இதை அறிந்தும் வடக்கு நோக்கி சிங்கத்தையும் அதன்பின் தெற்கே பார்க்கும்படி யானையையும் கோயிலுக்குக் கிழக்கில் எருதையும் (நந்தியையும்) செதுக்கி வைத்த பல்லவ நாட்டு சிற்பியின் திறமையை அறிஞர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். இந்த இரதம் தூங்கானை மாடக் கோயில் அமைப்பிற்கு ஏற்ற மாதிரிக் கோயிலாகத் திகழ்கிறது. இந்தச் சகாதேவ இரதம் 18 அடி நீளமும் 11 அடி அகலமும் 16 அடி உயரமும் உள்ளது. முன்புறம் ஒரு சிறு மண்டபமும் பின்புறம் உண்ணாழிகையும் இருக்கிறது. முன் மண்டபத்தை இரு சிங்கத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்தக் கோயில் விமானத்தில் கூடு என்னும் உறுப்புகள் உள்ளன. மஞ்சத்திற்கு மேலே கர்ணக் கூடு, கூடம் கோஷ்டம் பஞ்சரம் போன்ற உறுப்புகள் பல்லவர்கள் பாணியில் பாங்குற அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் உச்சியில் ஐந்து கலயங்கள் இருந்த அடையாளங்கள் உள்ளன. இன்று ஒன்று கூடக் காணமுடிய வில்லை. விமானத்தின் முன்புறம் நெற்றி, அரசிலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மேலே கொம்புள்ள மனிதத் தலை உருவம் இருந்தது. இப்பொழுது அத்தலை உடைந்துவிட்டது. நெற்றியில் புடை சிற்பம் கணேச ரதத்தில் இருப்பது போல் காணப்படுகிறது. இந்தப் புடை சிற்பம் கொம்புள்ள மனிதமுகமே யாகும். இக் கோயில் இந்திரனுக்காக அமைக்கப்பட்டது என்று அறிஞர் லாங்கர் போன்றவர்கள் கருதுகின்றார்கள். எமது நண்பர் மயிலை சீனி வேங்கட சாமி அவர்கள் யானையின் உருவத்தை அமைத்து இந்திரனை வழிபடும் வழக்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து வந்த வழக்கம். அது மாமல்லன் நரசிம்மன் காலத்திற்கு முன் அழிந்துவிட்டது. எனவே இது இந்திரனுக்காக அமைக்கப்பட்டதல்ல. இந்த யானைக் கோயில் யானையின் உருவம் போன்று அமைக்கப்பட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கு இவ்வானையில் உருவம் அமைக்கப்பட்டது போலும் என்று நரசிம்மவர்மன் என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 திரௌபதை இரதம் திரௌபதை என்று அழைக்கப்படும் கொற்றவை கோயில் மிகச் சிறிதாய் எழில் ஒழுக அமைக்கப் பெற்றிருக்கிறது. இது மாமல்லபுரத்தில் ஒற்றைக் கல் கோயிலாகும். இது சிற்ப நூற்களிலும் ஆகமங்களிலும் கூறப்படும் சிரிகரம் என்று கூறப்படும் கோயில் அமைப்புக்கு ஒரு நல்ல மாதிரிக் கோயிலாகும். இதனையே அப்பர் அடிகள் இளங் கோயில் என்று தமிழ்ப் பெயரிட்டு அழைத்துள்ளார் என்று கருதப்படுகிறது. இந்தக் குடைவரைக் கோயிலுக்குத் திருஉண்ணாழிகை மட்டும் இருக்கிறது. மண்டபங்கள் எதுவும் இல்லை. உண்ணாழிகை 11-அடி சதுரத்திலும் 18-அடி உயரத்திலும் அமைந்துள்ளது. வாயில் 6-அடி 7-அங்குல உயரமும் 2-அடி 10 அங்குல அகலமும் உள்ளது வாயிலுக்கு மேலே இரு வளைவுள்ள மகர தோரணங்கள் உள்ளன. இது கொற்றவை கோயிலாக இருப்பதால் வாயிலின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெண் வாயில் காப்போர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கையில் வில் காணப்படுகின்றன. ஆனால் இன்று உண்ணாழிகையின் உள்ளே கொற்றவை உருவம் இல்லை. உண்ணாழிகைச் சுவரில் புடை சிற்பமாகக் கொற்றவை யின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. சுவரின் வெளிப்புறம் மூன்று பக்கங்களிலும் கொற்றவை உருவம் தீட்டப்பட்டுள்ளன. இத் திருக் கோயிலின் விமானம் நான்கு பட்டையாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ்ப்புறம் நான்கு மூலைகளிலும் சுருள் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் விமானத்தில் கர்ணக்கூடு, பஞ்சாரம் முதலிய அமைப்புகள் ஒன்றும் இல்லை. உச்சியில் இருக்க வேண்டிய கலயம் இக்கோயிலின் பக்கத்தில் உள்ள மேடையில் இருக்கிறது. இக் கோயிலுக்கு, உச்சியில் இருக்க வேண்டிய கலயத்தைத் தனிக்கல்லில் செதுக்கி வைக்க எண்ணியிருக்கிறார் இதை அமைத்த சிற்பி. ஆனால் அந்தச் சிற்பிக்கு அதை நிறைவேற்றும் வாய்ப்புக்கிட்டாது போய்விட்டது. இந்தக் கோயிலின் அடிப்புறத்து மேடையை யானைகளும் சிங்கங்களும் எருதுகளும் தாங்குவது போல் கீழே கல்லின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோயில் உள்ளே புகுவதற்கு மூன்று படிக்கட்டுகள் உள்ளன. பரந்த இரண்டாவது மேடையின் மீது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் மேற்கு முகமாக இருக்கிறது. இதைச் சில மேனாட்டறிஞர்கள் பௌத்த நெறியினைத் தழுவிய தலைமைத் துறவிகள் உறைவதற்காக ஒரு முழுப்பாறையி லிருந்து குடைந்தெடுக்கப்பட்ட ஒரு மடம் (பன்சால்) அல்லது அறை என்கிறார்கள். இங்கு துறவிகள் கீழே படுப்பதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. இரவை இங்கு உட்கார்ந்திருக்கும் நிலையிலே கழிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். வேறு சில அறிஞர்கள், துர்க் கொற்றவை (துர்க்கை) வழிபாடு சிறப்பாக நடக்கும் இடம் வங்காளம், வங்காளத்தில் கொற்றவைக்கு அமைத்திருக்கும் கோயிலின் அடிப்படையிலே மாமல்லபுரத்திலும் கொற்றவைக்குக் கோயில் அமைத்திருக்கின்றார்கள். ஆனால் மாமல்லபுரத்தில் வங்கத்தை விட சிறப்பான முறையில் ஒற்றைக் கல்லைக் குடைந்து கோயிலாக அமைத்திருக்கிறார்கள். இத்தகைய கோயில் வங்கத்திலும் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்று தைரியமாகக் கூறமுடியும். இது பண்டையத் தமிழகத்தின் சிறு கோயிலை நினைப்பூட்டுவதாக இருக்கிறது.1 இக்கோயில் எந்த நாட்டுக் கோயிலைப் பார்த்தும் அமைக்கப்பட்டதில்லை. பழந்தமிழர் கண்ட கோயில் அமைப்பேயாகும். சிவாகமங்களிலும் சிற்பநூற்களிலும் காணும் எழுவகைக் கோயில்களில் ஒருவகைக் கோயிலாகும். இத் திருக்கோயில் மிகவும் அற்புதமான அமைப்புடையது. எல்லா இரதங்களுக்கு மூலமான ஒரு இரதம் என்று கூட சொல்லலாம். தென் இந்தியாவில் இதைப்போன்ற கோயிலை நான் கண்டதே இல்லை. துர்க்கைக்கு உருவாக்கப்பட்ட இக்கோயில் பல்லவர்கலையின் ஒரு சிறந்த படைப்பேயாகும் என்று இராசு அடிகள் போன்றோர்கள் கூறியுள்ளனர்.1 இதைப் போன்ற கோயில் தென் இந்தியாவில் இல்லை என்று கூறுவது தவறு. சோழர்கள் கட்டிய இளங்கோயில்கள் தஞ்சை மாவட்டத்தில் இன்றும் காணமுடியும். அவைகள் இதே அமைப்பில் உள்ளது. வலயன்குட்டை இரதம் மாமல்லபுரத்திற்கு அருகே பக்கிங்காம் கால்வாய்க்கு கிழக்கே குட்டைக்கு அருகில் வலயன் குட்டை இரதம் என்ற சிறு கோயில் இருக்கிறது. இது ஊருக்கு வெளியே ஒருபுறம் ஒதுங்கி இருப்பதால் மாமல்லபுரத்திற்கு வருபவர்களும் மாமல்லபுரத்து சிற்பச் சிறப்பு களைக் கண்டுச் சுவைக்க வருபவர்களும் ஆராய வருபவர் களும் வலயன் குட்டை இரதத்தையும் பிடாரி இரதங்களையும் கவனியாமலே போய்விடுகிறார்கள். இது ஏனைய இரதங்களைப் போலவே ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலேயாகும். இக் குடைவரைக் கோயிலின் அடிப்பாகமும் உண்ணாழிகை யும் நன்கு அமைக்கப்படாமல் இயற்கைப் பாறையைப் போல் காணப்படுகிறது. ஆனால் மேற்பகுதி மட்டும் சிற்பியின் உளிக்கு இலக்காகி கோயிலின் மேற்புற அமைப்பைப் பெற்று சீரும் சிறப்பும் பெற்று விளங்குகிறது. இக் குடைவரைக் கோயில் அர்த்த மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அர்த்த மண்டபமும் உண்ணாழிகையும் செம்மையாக அமைக்கப்படவில்லை. மேற்பகுதி - அதாவது விமானம் நன்கு செதுக்கப் பெற்று கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நன்கு அமைந்துள்ளது. ஆனால் இக் கோயில் இளங்கோயில் அமைப்பில் நான்கு பட்டையாக விமானம் இருக்கிறது. ஆனால் திரௌபதை இரதத்தைவிட சிறப்புடன் விளங்குகிறது. திரௌபதை இரதத்தில் மஞ்சம், கழுத்து கூடுகோஷ்ட பஞ்சரம் முதலியன ஒன்றும் கிடையாது. ஆனால் வலயன் குட்டை இரதம் மூன்று நிலையுள்ள இளங்கோயிலாக விமான உறுப்புகள் எல்லாம் பெற்று எழில்பெற்று இலங்குகிறது. இந்த விமானத்தில் கலயம் காணப்படவில்லை. இளங்கோயிலை எவ்வளவு சிறப்புடையதாய்க் காட்ட முடியும் என்பதை இந்தக் கோயிலை அமைத்த சிற்பி நன்கு எடுத்துக்காட்டிப் பெரும்பு கழுக்குரியவராய்த் தன்னை ஆக்கிக் கொண்டுள்ளார் என்பதை நாம் மறப்பதற்கில்லை. பிடாரி இரதங்கள் பிடாரி இரதங்கள் வலயன் குட்டை இரதத்திற்கு வடக்கே சிறிது தூரத்தில் பிடாரி இரதங்கள் என்று கூறப்படும் இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. மாமல்லபுரத்தின் கிராம தேவதையாகிய பிடாரிக்கு அமைக்கப்பட்ட கோயிலாக இது கருதப்படுகிறது. பிடாரி இரதங்களில் வடக்கு நோக்கிய இரதம் (கோயில்) வலயங்குட்டைப் பாறைக் கோயிலைப் போன்று மூன்று நிலையுள்ளதாய் விளங்குகிறது. இது ஒரு இளங்கோயில் அமைப்பை போன்று இருக்கிறது. இக் கோயிலில் அடிப்பகுதியும் உண்ணாழிகையும் அமைக்கப்படாமல் மேல்பகுதிகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிலைகளும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளது. விமானத்தில் உறுப்புகள் எல்லாம் காணப்படுகின்றன. மற்றொரு இரதம் கிழக்குநோக்கி இருக்கிறது இதுவும் உண்ணாழிகை செம்மையாக அமைக்கப்படாது விமானப் பகுதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் அர்ச்சுனன் இரதம் தருமராசன் இரதம் போன்ற எட்டுப்பட்டையுள்ள மணிக்கோயில் (கந்தகாந்த) அமைப்பில் காணப்படுகிறது. இன்று இக் கோயில்களில் சிலைகள் எதுவும் இல்லை. இன்று மாமல்லபுரத்தைக் காவல் செய்யும் கிராம தேவதையாகிய பிடாரி அங்கு காணப்படவில்லை. ஊருக்குள் போவோரை ஊரின் புறத்தே இவ்விரு இரதங்களே வரவேற்பது போல் நிற்கின்றன. மாமல்லபுரத்தைப் பற்றிப் பல்வேறு அறிஞர்கள் நூல்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பிடாரி இரதங்களைப் பற்றி ஒருவார்த்தையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்கள். ஆனால் பிடாரி இரதங்கள் அலட்சியமாய் விடப் படுவதற்கு உரியதல்ல. இந்தக் குடைவரைக் கோயில்களின் விமானங்களில் கூட கோஷ்ட பஞ்சரங்களும் அதற்கு மேல் கழுத்தும் அதற்கு மேல் எண்கோண அமைப்பையும் செதுக்கி சிற்பி தன் கைவண்ணத்தை மக்களுக்குக் காட்ட பெரிய முயற்சி செய்திருக்கிறார் என்பது இக் கோயிலைப் பார்த்து நுணுகி ஆராய்பவர்களுக்கு நன்கு புலனாகும். பரமேசுவர வர்மன் (கி.பி. 640-685) கி.பி. 668 முதல் 670 வரையுள்ள இரண்டு ஆண்டுகள் பல்லவர்கள் நாட்டில் சிற்பக்கலை எதுவும் துளிர்த்ததாக நமக்குத் தெரியவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளிலும் நரசிம்மவர்மன் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் ஆட்சி நடத்தியகாலம். இவன் அரச கட்டிலேறிய இரண்டு ஆண்டிற்குள் இவனிடமிருந்து பெரிய கலைப்பணியை எதிர்பார்ப்பதில்லை. மேலும் இவன் வரலாறு கூறும் பட்டயங்கள் எதுவும் இதுகாறும் நமக்குக் கிடைக்கவில்லை. இவனுக்குப் பின் பல்லவர்களின் அரச கட்டிலை அடைந்தவன் பரமேசுவரவர்மன். இவன் கி.பி. 670-இல் அரச கட்டிலில் அமர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து வந்துள்ளான். இவன் தன் ஆட்சி காலத்தின் பெரும் பகுதியைப் போரிலே கழித்துள்ளான். எனவே இவன் கலைத்துறையில் பெரும்பணி புரியவில்லை. இவனுடைய பட்டயங்கள் பல நமக்குக் கிடைத்துள்ளன. அதன் மூலம் இவன் ஆற்றிய கலைப்பணிகள் நன்கு தெரிகின்றன. இவனது கூரம் பட்டயம் இவனது கலைப் பணியை விளக்குகிறது. இப்பொழுது தொண்டை நாட்டிலுள்ள பல பெரிய கோயில் களில் நடக்கும் வழிபாடுகள் எல்லாம் இவன் காலத்தில் எழுந்தன என்பதைக் கூரம்பட்டயம் அறிவுறுத்துகின்றது. இவன், பல்லவர்கள் நாட்டிலுள்ள கோயில்களில் முதலாகப் பாரதம் படிக்க ஏற்பாடு செய்தான். முதன் முதலாக தமிழகத்தில் வடநாட்டுப் போர்க் கதைகளை மக்களுக்கு உணர்த்தியவன் இவனேயாகும். ஒருவேளை போர்க்கதைகளை அறிவதால் மக்களுக்கு வீர உணர்ச்சியும், போர்வெறியும் எழும் என்று பாரதம் படிக்கச் சொன்னான் போலும். இவனது கூரம்பட்டயத்தில் முதல் மூன்று சுலோகங்கள் கடவுளை (பரமேசுவரனை) வாழ்த்தியுள்ளன. அதாவது, (1) காமனை அழித்த சிவன், படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் காரணன்; இவன் அகாரணனான அத்யந்தகாமனுக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பானாக. (2) கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம் வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீநிதி (தலைமேல்) வைத்துள்ளான். (3) பக்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும் கைமீது அழகிய நகைபோல நிலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக என்பதாகும். கூரம் கோயில் முதற் கற்கோயில் பரமேசுவர்மன் சிறந்த சிவபக்தன். இவன் காலத்தில் பல சிவன் கோயில்களைப் புதுப்பித்தான். சில சிவன் கோயில்களை கட்டு வித்தான். இவன் கட்டிய கற்கோயில்களில் குறிப்பிடத்தக்கது கூரம் என்ற சிற்றூரில் எடுப்பித்த சிவன் கோயிலேயாகும். இது கல்லால் கட்டப் பெற்றதாகும். இதனை அரசன் பரமேசுவர மங்கலம் எனத் தனது விருதுப் பெயரைப் பெற்ற சிற்றூரை மானியமாக அளித்தான். இக் கோயிலுக்கு வித்யா விநீத பல்லவ - பரமேசுவர க்ருகம் எனப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.1 இதுதான் தமிழகத்தில் துளிர்த்த முதல் கற் கோயில் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். மாமல்லபுரம் இரதங்கள் இவன் தனது முன்னோர்களால் தொடங்கப் பெற்று முற்றுப் பெறாதிருந்த தர்மராசர் தேரின் மூன்றாம் நிலையை முடிவு பெறச் செய்தான். அந்த அடுக்கில் ரணசயன் (ரணரசிகனான விக்கிர மாதித்தனை வென்றவன்) அத்யந்தகாம பல்லவேசுவர க்ருகம் என்பவற்றை வெட்டுவித்தான். இதனால் இவன் ரணசயன் அத்யந்தகாமன் என்ற பெயர்களைப் பூண்டவன் என்று தெரிகிறது. இவனே மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I ஆகிய தம் முன்னோர்கள் வழியில் கணேசர் கோயிலையும் இராமானுசர் மண்டபத்தையும் உருப்படுத்தியவன் என்று அறிகிறோம். மேலும் இவன் சிறந்த சிவபக்தியுடையவனாக இருந்ததாலே தருமராசர் மண்டபம், கணேசர் கோயில், இராமானுசர் மண்டபம் முதலியவை களை உருவாக்கினான் என்று தெரிகிறது இதை இங்குள்ள கல்வெட்டுகள் நன்கு எடுத்துக்காட்டுகிறது. பரமேசுவரப் பல்லவ மன்னனுக்கு, சித்திரமாயன், குணபாசனன், அத்தியந்த காமன், வதன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்று அவனது கல்வெட்டுகளால் அறிகின்றோம். இவனது கல்வெட்டுகள் மூலம் இவனுடைய சிவபக்தியும் சைவ சமயப் பற்றும் நன்கு தெரிகிறது. இவன் நவமணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவமாகச் செய்யப் பெற்ற முடியைத் தலையில் தரித்திருந்தான் என்று தெரிகிறது.2 மேலும் இவனது கல்வெட்டுகள் இவனுக்குள்ள வடமொழிப் புலமையை நன்கு எடுத்துக் காட்டு வதாக இருக்கிறது. இவன் எடுப்பித்த கணேசர் கோயிலில் வெட்டிய 11 வடமொழிக் கல்வெட்டுகளும் படித்துப் பயன்பெறத் தக்கவைகள் கண்டுகளிக்கத் தக்கவைகள். அதில் அரசனுக்கும் சிவபெருமானுக்கும் பொருந்தும்படியாக சிலேடையாக செய்திகள் அமைந்துள்ளன.3 5. கணேச இரதம் கணேச இரதம் என்று கூறப்படும் மாமல்லபுரத்தில் உள்ள மாதிரிக் கோயில் கணேசருக்காகக் கட்டப்பட்ட கோயில் அல்ல. இது சிவபெருமானுக்காகச் செய்த ஒற்றைக் கல் கோயிலாகும். ஒரு சிறு பாறையைச் செதுக்கியும் குடைந்தும் செய்யப்பட்டுள்ளது. இக் கோயிலில் இருந்த சிவலிங்கம் பிற்காலத்தில் அகற்றப் பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இவ்வூர் மக்கள் இக்கோயிலில் ஒரு பிள்ளையார் உருவத்தை வைத்துள்ளார்கள். அதன் பின்னர் இக் கோயிலுக்கு கணேசர் இரதம் என்று பெயர் எழுந்தது. இது ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட குடைவரைக் கோயில். இங்கு பல்லவகிரந்த எழுத்தில் எழுதப் பெற்றச் சாசனத்தின் மூலம் அத்யந்த காம பல்லவேச்சுரகிருகம் என்ற பெயரையுடையதாகத் தெரிகிறது.1 இப்பெயர் மூலம் இது சிவபெருமானுக்காக அத்தியந்த காமன் என்ற சிறப்புப் பெயர் வாய்ந்த பரமேசுரவர்மன் கட்டிமுடித்த கோயில் என்று தெரிகிறது. இவன் நரசிம்மவர்மன் பேரன் என்று தெரிகிறது. இக் கோயில் நரசிம்மன் காலத்தில் தொடங்கப் பெற்று பேரன் காலத்தில் முற்றுப் பெற்றது என்று கூறுவாரும் உண்டு. இக் கோயிலுக்கு பேரன் பரமேசுவர்மன் சிறப்புப் பெயர் இடம் பெற்றுள்ளது. இத் திருக்கோயில் 20 அடி நீளமும் 11 அடி 6 அங்குல அகலமும் 25 அடி உயரமும் உள்ளது. மேற்கு நோக்கி அமைந் திருக்கும் இக் கோயிலின் முன்னர் 20-அடி நீளமுள்ள அர்த்த மண்டபம் உள்ளது. இக் கோயில் ஒரு எழில்மிக்க சின்னஞ்சிறு கோயிலாகும். இதன் மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. வண்டிக் கூண்டின் வடிவில் அமைந்த இக் கோயிலின் விமானம் பிற்கால இராயர் கோபுரம் போன்று பெரிதான நீண்ட தோற்றத்தை அளிக்கிறது. இன்று இது தமிழகத்தில் மிக உயர்ந்த கலைக் கோயில்களில் ஒன்றாக ஒளிர்கிறது. இக் கோயிலில் மேற்கு நோக்கி இருக்கும் தாழ்வாரத்தில் சிங்கத் தூண்களும் சிங்க மேற்பூச்சும் (அதாவது சுவரருகே பாதித் தூண்கள் இருபுறமும் சுவர்களின் ஒரு பகுதியாக இணைந்திருக் கிறது. வெளிச்சுவர்களின் மேற்பூச்சு மரத்தூண்களைப் போல் காணப் படுகிறது. தூண்களின் மேலே உச்சியில் வெளியே துருத்துக் கொண்டிருக்கும் எழுதகம் (கார்னி) சிறு அரைவட்டப் பலகணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கார்னிக்கு மேலே விமானத்தின் சிற்ப உருவங்கள் சுற்றிலும் அணி செய்கிறது. இதற்கு மேலே இரண்டாவது கார்னி விமானத்தின் சிற்ப வேலைப் பாடுகளின் மேல் வரிசையில் காணப்படுகிறது. இரண்டாவது நிலை வண்டிக் கூண்டின் வடிவமான சாய் கூரையில் செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பலகணிகள் இருக்கிறது. இதைப் போலவே பீம இரதம் என்னும் கோயிலும் அமைந்துள்ளது. இக் கோயில் இரு நிலைகள் உடையதாய் மேலே ஒன்பது கலயங்களுடன் ஒரே கல்லில் செதுக்கப் பெற்ற ஒற்றைக் கற்கோயில் ஆகும். இக் கோயிலின் அர்த்த மண்டபத்தின் இரண்டு கோடியிலும் புடை சிற்பங்களாக இரு மனித உருவங்கள் உள்ளன. இது மன்னர் உருவங்களாக மதிக்கப்படுகிறது. மண்டபத்தின் நடுவே திருஉண்ணாழிகை 6 அடி 11 அங்குல நீளமும் 3 அடி 9 அங்குல அகலமும் 6 அடி 8 அங்குல உயரமும் உடையதாய்ச் செதுக்கப் பெற்றுள்ளது. இக் கோயிலுக்கு மேலே மஞ்சமும் (பிரதாரமும்) கூட கோஷ்ட பஞ்சரமும் கர்ணக்கூடும் பிற உறுப்புகளும் உள்ளன மஞ்சத்திற்கு மேலே இரண்டாவது நிலை உள்ளது. இரண்டாவது நிலைக்கு மேலே மஞ்சம் கூட கோஷ்ட பஞ்சரம் கர்ணக் கூடு போன்ற உறுப்புகள் உள்ளன. இந்த நிலைக்கு மேல் கழுத்தும் மேலே சால்கார விமானமும் உள்ளது. இவ்விமானம் பீம இரத விமானம் போல் இருக்கிறது. இதன் முகசாலைகள் நெற்றி முகமும் பீம இரதத்தை ஒத்ததாகவே காணப்படுகிறது. இக்கோயில் வேசர அமைப்பு உடையது. இந்த சாலாகால விமானக் கோயில் மாதிரி யாகக் கொண்டே பிற்காலத்தில் காஞ்சியில் கயிலாசநாதர் கோயில் முற்றத்தில் உள்ள மகேந்திரவர்மேசுவரக் கிருகம் என்னும் கோயில் மூன்றாம் மகேந்திரவர்மப் பல்லவனால் கற்றளியாக கவின் பெறச் செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது. இராச சிம்மன் (கி.பி. 665-705) இராச சிம்மன் ஆட்சி கி.பி. 665-ஆம் ஆண்டில் 40-ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. இவனது ஆட்சி காலத்தில் எந்தப் போரும் நடைபெறவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் பலரும் கூறுகின்றார்கள். ஆனால் சிலர் இக்காலத்தில் இராசசிம்மன் சாளுக்கியரோடு மட்டும் போரிட்டு வெற்றி பெற்றான் என்று கூறுகிறார்கள். இராச சிம்மன் போர்த்திறம் மிக்கவன். அவனது நாட்டைச் சூழ்ந்திருந்த பிற அரசர்கள் அனைவரும் அவனோடு போரிட அஞ்சிக் கிடந்தனர். இவன் சிறந்த சிவபக்தனாகவும் மிளிர்ந்தான். காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலை எடுப்பித்தவன் இவனேயாகும். அதன் பின்னர் அங்கு ஐராவச்தேச்சுவரர் கோயிலை எடுப்பித்தான். மாமல்லபுரத்தில் தனது முன்னோர்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றித் தானும் சில குடைவரைக் கோயிலை உருவாக்கிப் பேரும் புகழும் பெற்றான். வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பன்மலைக் கோயிலை எடுப்பித்துப் பேரும்புகழும் பெற்றான். ஒவ்வொரு கோயிலிலும் தனது விருதுப் பெயர்களை எழுதுவித்தான். கயிலாச நாதர் கோயிலில் மட்டும் கிட்டத்தட்ட இவனது விருதுப் பெயர்கள் 250 காணப்படுகின்றன. இவைகளில், சங்கரபக்தன், சிவசூடாமணி, ரிஷபலாஞ்சனன், ஆகமப்பிரியன் போன்ற பெயர்கள் இவனது சமயப்பற்றையும் சிவபக்தியையும் காட்டுவதாக இருக்கின்றன. இவனது விருதுப் பெயர்களில் ஸ்ரீவாத்ய வித்யாதரன் என்பது இதன் மூலம் இவனுக்குள்ள இசைப்பற்று நன்கு புலனாகும். இவன் இசைக் கருவிகளை இயக்குவதில் இணையற்ற புலவனாக இருந்தான் என்று அறிகிறோம். இவன் மும்மலங்களையும் ஒழித்தவன், தேவரைக் கண்டவன்; வான் ஒலிகேட்டவன் இவன் மகாதேவனுக்கு அடியான்; சைவசித்தாந்த தூநெறிப்படி ஒழுகுபவன்; மக்களுக்காக எல்லாத் தியாகத்தையும் செய்யவல்ல அமர அரசன் என்று அக்காலத்தில் உள்ள சைவ சமய பக்தர்களும் அறவோர்களும் குடிமக்களும் இவனைப் போற்றி வந்தனர். இவன் பரமேசுவரவர்மனைப் பின்பற்றி நல்ல திருப்பணிகள் இயற்றிவந்தான். இவன் இயற்றிய திருப்பணி களாவன. கடற்கரைக் கோயில்(பள்ளி கொண்டருளிய தேவர் கோயில்) மாமல்லபுரத்தில் இராச சிம்மன் மூன்று கடற்கரைக் கோயிலை எடுப்பித்தான். அவைகளில் சத்திரிசிகாமணி பல்லவேச்சுரம், இராச சிம்ம பல்லவேச்சுரம் என்னும் இரு கோயில்களையும் கடல் கொண்டுவிட்டன. ஆனால் அவைகளில் உள்ள சில பகுதிகள் இன்று எஞ்சி நிற்கின்றன. இரண்டு பலி பீடங்களும் ஒரு கற்கொடிமரமும் இன்றும் இருக்கின்றன. கடலை நோக்கியவாறே ஒரு சிவலிங்கம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இது கடல் கொண்ட சத்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரத்தில் இருந்ததாம். இது போலவே கடல் கொண்ட இராச சிம்ம பல்லவேச்சுரமும் சிவன் கோயில் என்று கூறப்படுகிறது. இப்பொழுது அதன் பலிப்பீடம் எஞ்சிநிற்கிறது. சுற்றிலும் இராசசிம்மன் விருதுகள் காணப்படு கின்றன.1 இப்பொழுது காணப்படும் பள்ளி கொண்டருளிய தேவர் கோயில் திருமாலுக்குரியது. பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்தெம் பெருமானார்க்கிடம் விசும்பில் கணங்க ளியங்கு மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் வணங்கு மனத் தாரவரை வணங்கென்றன் மட நெஞ்சே என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இதனால் இக் கோயில் பாடல் பெற்ற சலசயனம் ஆகும். சலசயனப் பெருமாள் என்பதற்கு நீர் அருகில் பள்ளி கொண்ட திருமால் என்பது பொருளாகும். தரையில் பள்ளி கொண்ட பெருமாளை தலசயனம் ஆகும் என்பர் இக் கோயிலை திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இக்கோயில் பிற்காலத்தில் விசயநகர நாயக்க மன்னர்களால் புதுப்பிக்கப் பெற்றுள்ளது. இராச சிம்மன் காலத்துப் புலவரான தண்டி என்பான் இக் கோயிலைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பள்ளி கொண்ட தேவர் கோயில் மாமல்லபுரத்தில் உள்ள ஏனைய கோயில்களைப் போல் ஒற்றைக் கல் கோயில் அல்ல பல்வேறு பெரிய கற்களால் செதுக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப் பட்ட கோயிலாகும் இரு கோபுரங்களையுடைய இக்கோயில் சைவ வைணவச் சமய ஒற்றுமைக்கு அடிகோலுகிறது. பிணங்களிடு காட்டில் விளங்கும் சிவனும் திருச்சக்கரத்துத் திருமாலும் ஒன்றாக இருக்கின்றனர். கலைவளர்த்த இடத்தில் சமய ஒற்றுமையும் வளர்க்கப்பட்டது. இந்தக் கடற்கரையில் தலை தூக்கி நிற்கும் கோயிலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் சிவன் கோயில் ஒரு பிரிவு; நடுவே பள்ளி கொண்டிருக்கும் திருமால் கோயில் கொண்டிருப்பது மற்றொரு பிரிவு. மேற்கு நோக்கி இருக்கும் சோமா கந்தருள்ள இடம் இன்னொரு பிரிவு கிழக்கு நோக்கி இருக்கும் உண்ணாழிகையின் உள்ளே இருக்கும் சிவலிங்கம் கலைகளையும் அடிவானத்தின் அற்புதத்தையும் கண்டுகளித்து கவினுற நிற்கிறது. இந்த இலிங்கம் கருங்கல்லில் ஆனது. இந்த இலிங்கம் தலைப்பாகம் சாதாரண இலிங்கம் போன்றது. அடிப்பாகம் பட்டை வடிவமானது. சலசயனப் பெருமாள், எட்டடி நீளம் உள்ள பெரிய உருவம். ஆழ்த்துயிலில் அமர்ந்திருக்கும் அரங்களின் முகத்தில் ஒளிரும் அமைதியை அறிஞர்கள் கண்டு அகமகிழ்கின்றனர். இந்தக் கடற்கரைக் கோயில் ஆறு அடுக்குக் கும்ப விமானத்தை உடையது. உள்ளறை ஒன்றேயொன்றுதான். அதைச் சுற்றி திருச் சுற்று உள்ளது. அதில் ஒன்பது சிறு கோயில்கள் உள்ளன. இக்கோயிலைத் தொலைவினின்று நோக்கினால் தருமராசன் தேர்போல் திகழும். இவைகளின் விமானம் மேல் நோக்கிச் செல்லச் சிறுத்து உயரும் தட்டுகளை (நிலைகளை)க் கொண்டது. உள்ளறை வேறு கோபுரம் வேறு என்று பிரித்துக் காண முடியாது. உள்ளிருக்கும் இலிங்கங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்தவை சிலபக்கங்களில் காடிவெட்டப்பட்டிருக்கிறது. சிவலிங்கத்திற்குப் பின்னர் சுவர் மீது சோமா கந்தர் சிலை உள்ளது திருவாகி ஒற்றை வளைவு உடையது. இங்கும் தூண்களுக்கடியில் பின்கால்கள் மீது எழுந்து நிற்கும் சிங்கங்கள் இருப்பதேயாகும் சில சிங்கங்கள் சுதையினால் ஆக்கப்பட்டன. கலைப் பண்புக் கூற்றின் வளர்ச்சி மிகத் தொன்மையான காலந் தொட்டு தமிழகத்தில் கோயில் அமைப்பிற்கு அழித்து வரும் சிறப்பான மரபு வழக்கை இதன் முன் எழுதியுள்ள அதிகாரங்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளோம். பழைய அமைப்புகளுக்கும் புதிய அமைப்புகளுக்கும் வேறுபாடுகள் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் இங்கு காணப்படும் வேற்றுமைகள் எல்லாம் அடிப்படையில் எழுந்த வேற்றுமைகள் அல்ல. சிறிய வேலைப் பாடுகளில் எழுந்த வேற்றுமை களேயாகும். திராவிடக் கட்டிடக் கலையில் கால மாற்றங்களில் பல்வேறு சூழ்நிலையில் பல்வேறு பண்பு வேறுபாட்டின் தன்மையால் சிற்சில மாற்றங்கள் எழுந்துள்ளன. இது இயற்கையேயாகும். இவற்றை உன்னிப்பாக உற்றுணர வேண்டியது கலை வரலாற்றை ஆராயும் அறிஞர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டியது இன்றியமையாததாகும். கலைப் பண்புக் கூற்றின் நிலையான வரலாற்றில் பல்வேறு நூற்றாண்டிலும் பல்வேறு சூழ்நிலையிலும் பல்வேறு நாட்டிலும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு கலைப் பணிக்குறிய பொருள்களின் தன்மைக்கு ஏற்ப, கலை சிற் சில மாற்றங்களைப் பெறுகிறது. இது தவிர்க்க முடியாத தன்மையில் எழும் இயற்கை மரபு என்பர் அறிவர்கள். இதனை கலை நூற்புலவர்கள் இந்த உண்மையை கலை வரலாறும் பண்பு வரலாறும் என்று எடுத்துக் காட்டுகின்றனர். கலைஞர்கள் இதனைக் கலை மாற்றம் என்று கூற மாட்டார்கள். எழுத மாட்டார்கள். ஆனால் உள்ளது சிறத்தல் (பரிணாம வளர்ச்சி) என்று கூறுவார்கள். அழகு செய்யும் சிறப்புக் கூறுகள் அனைத்தும் உறுதியாக ஒன்று போல் எங்கும் வளர்வதில்லை. ஒரே கால கட்டத்தில் நன்கு ஒரு பகுதியில் பெரிய வளர்ச்சி எழும். சில இடத்தில் சில கால கட்டத்தில் வளர்ச்சியின் அறிகுறி கூட எழுவ தில்லை. சில இடங்களில் கட்டிடங்கள் பெரும் வளர்ச்சியை எய்தியுள்ளது. சில இடங்களில் வளர்ச்சியின் தொடக்க நிலை கூட காண முடிவதில்லை. இவ்வாறாக சின்னங்களின் காலங்களை ஆய்ந்து இவற்றின் காரணங்களை நன்குணர்ந்து விடை காண வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. அதற்காக வேறு பட்டுள்ள பண்புருவங்களையுடைய பல்வேறு பாணிகளின் சிறப்புக் கூறுகளை உற்று ஆய்ந்து முடிவு காண வேண்டியது இன்றிமை யாதது. உரு நிலை மாற்ற ஆய்வில்தான் நாம் முதன் முதலாக இறங்க வேண்டும். இரண்டாவதாக தென் ஆர்க்காடு வட ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள நினைவுச் சின்னங்களை (Momuments) சிறப்பாக ஆய்வது இன்றியமையாத தாகும். திராவிடக் கட்டிடக் கலையைப் பற்றிய திறனாய்வு நமது நாட்டில் இன்னும் சிறப்பாக நிகழவில்லை. என்றாலும் நமது நாட்டில் சிறப்பாய், செவ்வியதாய், திறனாய் செய்யப் பெறுவது இன்றியமையாதது. ஒரு இடத்திலாவது நமது திராவிடற் கலை முறைகளை நன்கு ஆராய முற்பட்டுவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஊழியில் நன்கு ஆராயப்பட்டு எங்கும் ஒரு சீராக கலை ஒழுங்கு பெற்று ஒரு நிலையில் எழுந்து விடும். ஒருவர் ஒரு ஒழுங்கு முறையை அறிவியல் பாங்காக ஆய்ந்து உண்மையை வெளிப்படுத்திவிட்டால் அதே முறை விரைவில் நாடெங்கும் எளிதில் பரவி விடும். பிற பகுதியில் உள்ளவர்கள் மேலும் ஆய்வது எளிதாகி விடும்.1 இறுதியாக இந்தியா முழுவதும் ஏன் வெளிநாடுகளிலும் பரவி நிற்கும். திராவிடக் கலைகளை ஒப்பிட்டு ஆய்வதற்கு பெரிய கட்டிடத்தில் ஒவ்வொரு சிறுசிறு பகுதிகளையும் ஆராய்ந்து எல்லாக் கோயில்களையும் அதிலுள்ள போதிகைகளையும் பூமுனையையும் அங்குள்ள கல்வெட்டுக்களையும் பற்றித் தெள்ளத் தெளிய ஆராய வேண்டும் என்று நான் சொல்ல முன் வரவில்லை. நமது நல் ஆய்விற்கு ஒரு ஊழியில் ஒரு பகுதியில் ஒரு விதப் பாணியில் அமைக்கப்பட்ட கோயில்களை நன்கு ஆய்ந்து விட்டால் மற்றவைகளை யெல்லாம் எளிதில் ஆய்ந்து விடலாம் என்பதே எனது பட்டறிவில் காணும் உண்மை. இன்று தீர்க்க முடியாத அகில உலகப் பிரச்சினைகளையெல்லாம் 10 பேர்கள் மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்து சில மணி நேரங்களில் முடிவு கட்டி விடும் அறிவியல் ஊழியில் நமது கலைகளை ஆய்ந்து முடிவு கட்டுவது பெரிய காரியம் அல்ல. எல்லாக் கலையும் மனம் போனவாறு அமைக்கப்பட்டதல்ல. சிற்ப விதிப்படி, ஆகமச்சட்டங்களுக்கு அணுவளவும் மாற்றமின்றி அமைக்கப்பட்டதாகும். எனவே அவற்றிற்கு முடிவு காண்பது எளிது. இங்கு நமது முன்னுள்ள முக்கியமான வினாவிற்குரிய பிரச்சினையாவது: தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் தலைநகரங்களுக்கும் பேரூர்களுக்கும் சிற்றூர்களுக்கும் பலமுறை பயணம் செய்து வர வேண்டும். கோயில் அமைப்புகளில் சில விதிகளும் கொள்கைகளும் எப்பொழுதும் நிரந்தரமாக இருந்து வருவதை நாம் நன்கு உணர வேண்டும். இங்கு இவைகளைப் பற்றி நான் தெளிவாக விவரிக்க விரும்பு கிறேன். அவை தவறு என்று மெய்ப்பிக்கப்படும் வரை நமது கருத்து செயல் விளக்கம் உள்ளதாகத் தாராளமாக ஒப்புக் கொள்ள வேண்டும். நமது சமயம் பாண்டிய நாட்டிற்கு உரியது என்றோ சோழ நாட்டிற்கு உரியது என்றோ எண்ணுபவன் சிவத் துரோகியாவான். இல்லை காசியிலும் சைவம் உண்டு இமய மலையிலும் சிவ பெருமான் உமா தேவி யோடு வீற்றிருக்கின்றார் என்று இந்திய நாட்டுச் சைவர்கள் கருதுகிறார்கள். என் போன்றவர்கள் எமது தந்தை உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியன் என்று பாடியதைக் கேட்டறிந்தவர்கள். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போன்றி என்று இளமையில் கை கூப்பி நின்று பாடியதை இன்றும் மறவாதவர்கள். அதோடு நமது நாட்டு அறிஞர்கள் சிலர் சர்சாண் மார்சல் போன்றவர்கள் சைவம் உலகம் முழுவதும் பரவி இன்றும் துஞ்சாது உயிருடன் நிலவும் தூநெறி என்றியம்பியதை மறவாதவர்கள். சிவ பெருமான் தென் அமெரிக்காவிலும் எகிப்திலும், மெச பொத்தாமியாவிலும், அசீரியா, அக்கேடியா, சால்டியா, சீரியா, எத்தோப்பியா மலையம் கடாரம், சாவகம் புட்பகம், பாலித் தீவு, போனியோ முதலிய நாடுகளிலெல்லாம் பரவி இன்றும் நிலவும் ஒரு உலகளாவிய தெய்வம் என்பதை உணர்ந்தவர்கள். எனவே எதையும் திட்டவட்டமாக ஆய்ந்து உண்மையை உணர்வதற்கு நாம் முன் கூட்டியே என்ன செய்ய வேண்டும். தொல் பொருள் ஆய்வுத் துறையினரும் கல்வெட்டு ஆய்வுத் துறையினரும் கூடி ஆய்ந்து முக்கியமாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்ந்து செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். நமது முடிவான வாய்மைத் தேர்வு நாம் என்ன முடிவு செய் திருக்கிறோம் என்பதை மட்டும் உறுதி செய்கிறது என்று நம்பலாம். நமது கட்டிடக் கலை வளர்ச்சியை நன்கு உணர்வதற்கு நாம் பல நூற்றாண்டுகளாக உள்ள நமது நினைவுச் சின்னங்களை மிக நெருங்கி அணுக வேண்டும். வேறு துறைகளைப் போன்று இது எளிதில் முடிக்கும் சிறு பணி அன்று கட்டிடக் கலை வரலாற்றை முதலில் பல காலப் பகுதி களாகப் பகுத்துக் கொள்ள வேண்டும். அறிஞர்கள் நமது கட்டிடக் கலை வரலாற்றை ஐந்து பகுதிகளாகப் பகுத்துள்ளதாகத் தெரிகிறது. அவைகளை கிட்டத்தட்ட சமமான காலங்களாக - அதாவது ஒவ்வொன்றையும் 250 ஆண்டுகளாகப் பிரித்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரிவுகள் களங்கமற்ற - கட்டுப்பாடுகளுக்கு உட்படாததாக இருக்கிறது. மேலும் கலை, மிக நுட்பமான உள்ளது சிறத்தல் என்னும் இயற்கை நியதியான வளர்ச்சியால் (பரிணாம வளர்ச்சியால்) மாறுதல் அடைந்திருக்கிறது. அந்த வளர்ச்சி, தொடர்பு அற்றுப் போகாத வழியில் நிலவியுள்ளது. எனினும், இந்த ஐந்து காலப் பிரிவுகளும் கலந்து ஆயும் வாய்ப்பை நமக்கு அளிப்பதாக இருக்கிறது. இந்த ஐந்த காலப் பிரிவுகளும் அடியில் வருமாறாகும்: 1. பல்லவர் ஊழி (சகாப்தம்) - கி.பி. 600 முதல் 850 வரை 2. முற்காலச் சோழர் ஊழி - கி.பி. 850-முதல் 1100 வரை 3. பாண்டியர் ஊழி - கி.பி. 1100 முதல் 1350 வரை 4. விசயநகர ஊழி - கி.பி. 1350-முதல் 1600 வரை 5. மதுரை ஊழி - கி.பி. 1600 முதல் இன்று வரை முதல் நான்கு ஊழிகளின் பெயர்கள், தமிழ் நாட்டில் நல்ல முறையில் வெற்றிகரமாக ஆட்சி நடாத்திய சிறந்த அரச மரபுகளின் வழிகளாகும். இந்த மன்னர் மரபுகளின் பெயர்கள் கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களிலும், எழுதப் பெற்றிருக்கும் செப்பேடுகளின் மூலமும் அறியப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுடைய தனிச்சிறப்பான பண்புகளின் விருப்ப மேம்பாட்டின் நாகரிகப் பாங்கு தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது. சிலர் வேறு விதமாகவும் பிரிக்கலாம் அதைப் பற்றி நாம் அதில் கவலைப் பட வேண்டாம். எடுத்துக்காட்டாக பல்வேறு ஊழிகளில் உள்ள நினைவுச் சின்னங்களை ஆய்ந்து ஆராய்வோமாக (1) பல்லவர்கள் ஊழியில், மாமல்லபுரம் குகைக் கோயில்களும் ஒற்றைக் கல் தேர்களும், காஞ்சி, கயிலாச நாதர் கற்றளிகளும் வைகுந்தப் பெருமாள் கற்கோயிலும் தோன்றியதாகும். அதோடு திருச்சிராப்பள்ளிக் குடைவரைக் கோயிலும், பாகூர் கோபுரங்களும் எழுந்ததாகவும் கொள்ளலாம். (2) முற்காலச் சோழர் ஊழியில், தாதாபுரம் (திண்டிவனம் வட்டாரம், தென் ஆர்க்காடு மாவட்டம்), சீனிவாச நல்லூர் குரங்க நாதர் கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில், திருவானைக்கா சிம்புக்கேசுவரர் கோயிலும் அடங்கும். (3) பாண்டியர் ஊழியில் சிதம்பரம் ஆடவல்லான் கோயில் கோபுர மும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கோபுரமும், திருவானைக்கா சுந்தர பாண்டியன் கோபுரமும் பிறவு அடங்கும். (4) விசயநகர் ஊழியில், கும்பகோணம் இராமசாமி கோயில், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில், வெல்லூர் திருமண மண்டபம் திருவரங்கம் கோயில் பிரகாரங்கள் போன்றவைகளும் அடங்கும். (5) மதுரை ஊழியில் மதுரைப் புது மண்டபம், தஞ்சாவூர் சுப்பிரமணியர் கோயில், திருப்பாதிரிப் புலியூர் பாடலேசுவரர் கோயில் இன்னோரன்ன பிறவும் அடகும். வளர்ச்சி துளிர்க்கும் பொழுது பரிணாம வழியால் சில சிறப்பான மாதிரி வடிவங்களால் ஒவ்வொரு ஊழியும் குறிப்பிடத் தக்க தனிப் பண்பு மூலம் உணர்ந்திருப்பதை நாம் நன்கு உணரலாம். முந்திய காலங்களில், சில அமைப்புகள் முதிரா நிலையில் உள்ளதாகக் காணப்படுகின்றன. அப்பால் திடீரென்று அவைகள் போதிய அளவு வளர்ச்சி பெற்றுள்ளதாகக் காணப் படுகின்றன. சில காலத்திற்கு அப்புறம் அவைகள் தேய்ந்தும், மாய்ந்தும் சில சமயங்களில் மறைந்தும் போயுள்ளன. இவற்றின் மூலம் திராவிடர்களின் திறம், மாறாத் திருக் கலைகளின் நல்ல பரிணாம வளர்ச்சியை எளிதில் உணர முடிகிறது. எடுத்துக் காட்டாக கட்டிடங்களின் பொதுவான அமைப்பு முறைகளை ஆய்வோமாக: தமிழகத்தில் மலைகளைக் குடைந்து மாதேவனுக்கு குடைவரைக் கோயிலையும், பாறைகளை உடைத்து பாளம் பாளமாகச் செதுக்கி பட்டினங்களின் நடுவில் பரமனுக்குக் கற்றளிகள் எடுப்பிக்கு முறையும் பல்லவர்கள் ஊழியில்தான் எழுந்தது என்று இன்று வரைப் பலரும் கருதுகின்றார்கள். நாமும் அதை ஏற்றுக் கொள்வோம். அறிவியல் பாங்காக இது தவறு என்று, என்றாவது மெய்ப்பிக்கப்படுமானால் நாமும் நமது கருத்தை மாற்றிக் கொள்வதில் இழுக்கு எதுவும் இல்லை. சோழர் ஊழியில் கருவறை (அகநாழிகை)யின் விமானத்தின் மீது கார் மேகங்கள் கவிந்து நிற்கும் காட்சியைக் காணத்தக்க விண் தோய் விமானங்களை பெரிய அளவில் எடுப்பிக்கும் முறை எழுந்தது. அது மிக உயரமான கட்டிடத்தின் பகுதியாக சிற்பிகளின் எல்லாக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் எழுந்த மகோன்னதமான மாபெரும் விமான ஊழியாக மலர்ந்துள்ளது. அவைகள் முழு நிறைவுடன் அணி செய்யப்பட்ட அழகிய அளப்பரிய உயரம் உள்ளவை என்று கூறும் வண்ணம் சுமார் 220-அடி உயரம் உள்ளதாய் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. பின் எழுந்த ஊழிகளில் விமானங்கள் சிறுத்துப் போயின. ஒரு சில அடி உயரத்தில் கோபுர நிலையில் அதாவது தூபி நிலையில் குறைக்கப்பட்டது. பிற்காலச் சோழர் காலங்களுக்கு முந்திய நினைவுச் சின்னங்கள் கோபுரங்களின் முதிரா நிலையில் இருப்பது போல் காணப்பட்டது. காஞ்சிக் கயிலாச நாதர் கோயில் நுண்ணளவில் உள்ள கோபுரத்தை உடையதாக மட்டும் உள்ளது. சோழர்காலத்தில் உள்ள தஞ்சாவூர்க் கோயில் மிகப் பெரிய உருவில் உயர்ந்து நிற்கவில்லை. பிற்காலச் சோழர்காலத்தில் உள்ளது போல் அழகிய கோபுரங்கள் அமைக்க பெற்றுள்ளன. பாண்டியர் ஊழியில் கட்டிடக் கலையில் மாபெரும் மாற்றங்கள் துளிர்க்காவிடினும் சீரும் சிறப்புமிக்க சிதம்பரம் கோபுரமும், திருக்சூனைக்கா சம்புக் கேசுவரர் கோபுரமும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் எழிலார்ந்த திருக்கோயில் கோபுரமும் எழுந்தன. எழில் பெற்றனவாய் ஏற்றமுற்றனவாய் இலங்குகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. விசய நகர ஊழியில் மிகப் பெரிய விண் முட்டும் கோபுரங்கள் நிர்மாணம் செய்யப் பெற்றன. ஆனால் பெரிய கட்டிடங்களின் இந்தப் பகுதிகளின் அமைப்பில் மிகக் கவனம் செலுத்தப்பட்டது என்று கூறுவதற்கில்லை. இதை ஆய்வுத்துறையில் ஈடுபட்ட எவரும் எளிதில் காண முடியும். இதில் சிற்பி, தனது பணியில் சரியான கவனம் செலுத்தவில்லை என்று கூறிவிட முடியாது. சிறந்த திருக் கோயிலை ஆகம விதிகளுக்கு உட்பட்டு எடுப்பிக்க வேண்டும். அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் சிற்ப நூற் சட்டங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று பல்லவ மன்னர்களும், சோழ மாமன்னர் களும் கருதியது போல் விசய நகர மன்னர்கள் கருதியதில்லை. அதோடு அவர்களுக்கு சிவ நெறியின் பற்றும், பக்தியும் சிறிது குறைவு என்று குறிப்பிடாதிருக்க முடியவில்லை. ஆனால் விஜயநகர ஊழியில் ஒரு புதிய அமைப்பு முறை எழுந்தது என்பதை எவரும் நன்கு உணர முடியும். முந்திய ஊழியில் உள்ளவர்கள் இதை உணர்ந் திருக்கவில்லை. அது ஓய்வாக மக்கள் அமரும் இடமான மண்டபங் களேயாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தெய்வங்கள் ஊர்வலம் வரும் பொழுது சிறிது நேரம் தங்கிச் செல்கின்றன. இந்த மண்டபங்கள் நமது சிந்தனையை ஈர்ப்பனவாக அமைந்துள்ளன. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் சிறந்து விளங்கும் பெரிய தூண்களும், முன்கால் களைத் தூக்கிக் கொண்டு மிக வேகமாகப் பாய்ந்து செல்லும் குதிரைகளையும், நிமிர்ந்து அமர்ந்து நிற்கும் சிங்கங்களையும், தெய்வ உருவங்களையும் காணலாம். விசய நகர ஊழியின் வீறார்ந்த பெருமை நிறைந்த கலைக் காலத்தின் தன்மையை வெல்லூர், காஞ்சிபுரம், கலியாண மண்டபங்களில் நன்கு காண முடியும். தற்கால ஊழி எல்லாவற்றையும் விட குறிப்பிடத்தக்க முறையில் திருச்சுற்றுகளை (பிரகாரங்களை)ப் பெற்றுள்ளது. மதுரைப் புது மண்டபம் திருக்கோயிலின் மிகவும் முக்கியமான பகுதியாகும். இது மிகப் பெரிதாக பேர் பெற்று விளங்குகின்றது. திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் திருச்சுற்றுகளும், மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் திருச்சுற்றுகளும் சிறப்புமிக்க பிரகாரங்களாகும். ஆனால் இராமேசுவரம் கோயில் திருச்சுற்றுகள் நமது நாட்டு திருச்சுற்று களில் பெரும் பெருமையும் வாய்ந்தன. திருச்சுற்றுகளுக்கு அடிப்படையிட்ட பெருமை நாயக்கமன்னர்களுக்கே உரியது. தமிழகத்தில் எழுந்துள்ள ஐந்து ஊழிகளில் ஒவ்வொன்றும் கட்டிடக் கலை வரலாற்றில் ஐந்து எல்லைக் கற்களை அமைத் துள்ளன என்று கூறலாம். பல்லவர் காலம் என்றும் அழியா கற்கோயில் எழுந்த ஊழி என்றும், சோழர்காலம் விண்முட்டும் விமானங்கள் எழுந்த ஊழி என்றும், பாண்டியர் காலம் கோல மார்ந்த கோபுரங்கள் துளிர்த்த ஊழி என்றும் விசய நகர மன்னர்கள் காலம் மாபெரும் மண்டபங்களும் திருச்சுற்றுகளும் மலர்ந்த காலம் என்றும் தற்காலம் பீடுயர் பிரகாரங்கள் பிறந்த காலம் என்றும் கூறலாம். கலைப் பண்புக் கூறு (Motive)fis, அணிகளைப்பற்றிய வரலாற்றின் ஆய்வு அடியில் வருமாறாகும்: கட்டிடக் கலை வரலாற்றின் இடை விடாவரிசை முறையான சகாப்தத்தின் நாகரிகப் பாங்குகளுக்கிடையே முக்கியமான அடிப்படை வேற்றுமைகள் இல்லை என்று நாம் தெளிவாகக் கூறுகின்றோம். ஒரு திராவிட நினைவு மண்டபத்தின் தோற்ற அமைதியை தானே தனக்குள் காணும் பொழுது நினைவு மண்டபத்தின் காலத்தை அறியத் திகைப் புற்று ஏறத்தாழ ஒரு காலத்தைத் தீர்மானிக்கின்றான். உண்மையில் திராவிடப் பாணியிலுள்ள ஒரு கட்டிடத்தின் தொன்மையை உணர்வதற்கு கிட்டத்தட்ட கட்டிடக் கலையின், எல்லா நுணுக்கங்களையும் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும். தீர்மானம் செய்வதற்கு முன் சில விதிகளை அறிந்திருப்பது இன்றியமையாதது, குறைந்த அளவு அதனை மதிப்பீடு செய்வதற் காகவாவது அறிந்திருப்பது பயன்தரும். சிற்ப நூல் அறிவு ஆகம நூல் அறிவு ஓரளவாவது இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். 1. போதிகை (Corbel) ஒரு மாளிகை அல்லது மண்டபத்தின் எல்லாப் பகுதியிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பது போதிகையே யாகும். இப்போதிகை தூணின் மீது உத்தரத்தின் அடியில் எல்லாப் பொறுப்பையும் தாங்கியதாக எழில் பெற்றிருக்கும். உருவம் 27 பல்வேறு ஊழிகளில் உள்ள போதிகைகளின் அமைப்பு முறைகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தப் பொருள் பற்றி பல கூர் நோக்கு அவசியம் இருக்க வேண்டும். போதிகை வளைவான பக்கத் தோற்றத்தை உடையது (1) உருவம் 27 சில சமயங்களில் எளிதாக இருக்கிறது. சில சமயம் பல்லவர்களால் தோற்றுவிக்கப்பட்ட போதிகைகளில் உள்ள கலைச் சிறப்பை காட்டப் பெற்று அணி செய்யப்பட்ட உருளை களைப் பற்றியும் முந்திய அத்தியாயங்களில் எடுத்துக்காட்டி யுள்ளோம். பல்லவர்களின் போதிகைகளில் (2) எண்ணுள்ள அமைப்பு முறையை எவரும் அதிகமாகப் பார்த்திருக்க முடியாது. இந்தப் போதிகை அமைப்பு முறைகள் பொதுவாகப் பெரிதும் பல்லவர்கள் ஊழியில் பயன்படுத்தப்பட்டவைகள் என்று கூறுவது இன்றியமையாததாகும். ஒரு பொழுதும் பல்லவர்களின் நினைவு மண்டபங்களில் (3) (4) (5) எண்ணிடப்பட்ட அமைப்பு முறைகளை ஒருவர் கண்டிருக்க முடியாது. எடுத்துக் காட்டாக பழைய கோயில்களில் ஒருவர் புஷ்பபோதிகைகளை ஒரு பொழுதும் பார்த்திருக்க முடியாது. அதைப் போல புஷ்ப போதிகை சில வழிகளில் இது எந்த ஊழிக்கு (சகாப்தத்திற்கு) உரியது என்று கண்டுபிடித்தால் நாம் உறுதிப் படுத்த முடியும். திராவிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் எழுந்த எல்லாக் கருத்துகளையும் நாம் உடனடியாக கைவிட்டு விடலாம். ஆனால் புஷ்ப போதிகை சமீபகாலத்தில் இன்றியமையாத அணி களைப் பெற்றெழுந்த தாகும் என்பதை எண்ணாதிருக்க முடியாது. (2) இந்த அமைப்பு முறை சில வேளைகளில் பல்லவர் ஊழியில் காணப்பட்டாலும், பொதுவாக முற்காலச் சோழர் ஊழியிலும் காணப்படுகின்றது. ஆனால் அது நிறைவாக ஏனைய ஊழியிலும் காணப்படுகின்றது என்று தெரிகிறது. (3) இந்த அமைப்பு முறை முற்காலச் சோழர் கால இறுதியில் காணப்படுகிறது. அது பொதுவாக பிற்காலச் சோழர்காலத்திலும் காணப்பட்டாலும் பிற ஊழியிலும் நிலவி நின்றுள்ளது. அது விசய நகர ஊழியிலும் நிலைத்து விழாது இன்று வரை தொடர்ந்து வருகிறது. பல நினைவு மண்டபங்களின் போதிகைகள் புதிய உருவம் பெற்று அழியாது சிறந்து விளங்குகின்றன. சிறிது சிறிதாக அதில் உள்ள முறைகள் மாற்றம் பெற்றுள்ளன (3) வது அமைப்பு (4) வது அமைப்பாக மாற்றம் அதில் உள்ள மலர்கள் கீழே விழுந்து விட்டன. (கைவிடப்பட்டுள்ளன). (4) பாண்டியர்கள் ஊழியைச் சில ஆசிரியர் பிற்காலச் சோழர் ஊழி என்றும் கூறுவர். அதில் நினைவு மண்டபங்கள் அடிக்கடி ஒரு சிறப்பான நிலையை எய்தி மாற்றம் பெற்றுள்ளன. போதிகைகள் முற்றிலும் மாற்றம் எய்தி (4)-வது முறையை அடுத்து (3)-வது முறையான போதிகை போன்று உருப் பெற்றது. (2) இதழும் நாக பந்தமும் போதிகை வளர்ச்சியின் எட்டுப் பெரும் பிரிவுகளை உடைய தூணின் தலை உறுப்பின் (Capital) பாகமாகிய பலகையைத் தாங்கி நிற்கும் பகுதி இதழ் என்று நாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டியுள்ளோம். இதழ் தாமரை மலரின் புற இதழ் வட்டத்தின் (Calyx) அமைப்பாக குடத்தின் மேல் இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறாக பல்லவர், சோழர் ஊழிகளில் மலரின் பூவிதழ்கள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக பிற்காலத்தில் சோழர், விசயநகர், மதுரை ஊழிகளில் பூவிதழ்கள் இறுதி முனை பலகைக்கு மேலே சிறப்பான முறையில் பல முனைகளை உடையதாய் இடம் பெற்றுள்ளது. தமிழில் அதனை முனை என்ற பெயரால் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. நாம் ஏற்கெனவே நமது தூண்களில் எல்லாம் அழகு படுத்துவதற்கு நாக பந்தம் என்ற அணி இடம் பெற்றிருப்பதையும் அது நல்ல பாம்பின் படத்தை ஒத்திருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம். இவைகள் தற்கால ஊழியில் கிட்டத்தட்ட எல்லாத் தூண்களிலும் அணியாக இடம் பெற்றுள்ளன. ஆனால் பல்லவர் ஊழியில் இந்த அணி காணப் பெறவில்லை. அதே ஊழியில் இதழின் விளிம்பு போல அதனுடைய தோற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பிற்காலச் சோழர் சகாப்தத்தின் இறுதியில் எழுந்ததாகக் கூறலாம். பன்னிரண்டாவது நூற்றாண்டிற்கு முந்தி எழுந்த தூண்கள் ஒவ்வொன்றிலும் நாகபந்தமும் இதழும் இருப்பதை எவரும் அறிய முடியும். (உருவம் 31) தூண்கள் எய்திய பரிணாம வளர்ச்சியில் தூணின் தலையுறுப்பில் உள்ள குமிழ் வடிவை, மூன்று தூண் வகை களைக் கூறும் வரலாற்று ஏடுகளில் காணலாம். அம்மூன்று வகைத் தூணிலும் நாகபந்தம், இதழ் போதிகை ஆகியவைகளைக் காணலாம். (3) கூடு பல்லவர் கூடு மண் வாரி (மண் வெட்டி) யின் தலையைப் போன்றிருக்கும் என்று ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளோம். கூட்டின் பகுதி எப்பொழுதும் சிங்கத்தின் தலையோடு (சிம்ம முகத்தோடு) அணி செய்யப் பெற்றதாய் இருக்கும். என்றாலும் சிலைகள் கூட்டின் வட்டமான பகுதியை அணி செய்கின்றன. இவை ஒவ்வொரு ஊழியிலும் மாற்றம் எய்தியதாய்க் காணப்படுகின்றன. இவ்வாறு அணி செய்யப் பெற்றுள்ள கூட்டின் ஒப்பனை முறையை வைத்து அதன் காலத்தை அளவிட்டுரைக்க முடியும். உருவம் 32, தமிழ் நாட்டின் கட்டிடக் கலையின் வரலாற்றில் பல்வேறு ஊழியிலும் எழுந்துள்ள கூடுகளின் இடைவிடா வரிசை முறையான வினைவடிவ நுட்ப வேறுபாடுகளை அறிய முடியும். (4) சுவர் மாடம் (பஞ்சரம்) சுவர் மாடங்களின் அமைப்பின் நடுவே பல்வேறு ஊழிகளுக் கேற்பத் தெய்வத்திரு உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சுவர் மாடம் (Nich) சிற்பிகளால் கோஷ்டம் என்று கூறப் பெறுகின்றன. இங்கு காணப்படும் 33. அ. எண்ணுள்ள வரை படம் மாமல்லபுரத்தின் தேர்வடிவங்களில் காணப்படும் சுவர் மாடமாகும். உருவம் 33. (ஆ) முற்காலச் சோழர் ஊழியில் அணி செய்யப் பெற்ற அழகிய சுவர் மாடமாகும். உருவம் 33 (இ) பிற்காலச் சோழர் ஊழியினை பிரதிபலிக்கும் பாங்கில் கட்டப் பெற்ற சிதம்பரம் கிழக்குக் கோபுரத்தில் உள்ள சுவர் மாடமாகும். இந்த விதமாக அணி செய்யும் முறை பொதுவாக நமது காலம் வரை நிலை பெற்று வரும் பண்பாடாகும். இதை மேற் கூறிய ஏனைய இரண்டு சாலைகளினின்று பிரித்துணர முடியும். நாம் அடியிற் கண்ட கொள்கைகளை உங்கள் முன் வைக்க முடியும். பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் உள்ள நினைவு மண்டபங்களில் உருவம் 33 (இ) தீட்டப்பட்ட சாலையோடு அணி செய்யப் பெற்ற எந்த சுவர் மாடமும் நிலைத்து இருக்கவில்லை. பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் நிலவிய ஒரு சாலையால் சமாளித்து நின்ற சுவர் மாடங்களையுடைய நினைவு மண்டபங்கள் இதென்று வலியுறுத்திக் கூறுவதற்கு இந்தத் தனிச் சிறப்புப் பண்பு நமக்கு இடம் அளிக்கிறது. (5) கும்ப பஞ்சரம் தற்காலக் கட்டிடக் கலை ஆய்வில் அணி செய்வதைப் பற்றி நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். உருவம் 7-இல் நாம் அதைத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கின்றோம். பல்லவர்கள் ஊழியில் இந்தக் கலைப் பண்புக் கூறுகள் நிலை பெற்றிருக்கவில்லை. அணி செய்யும் கலைப்பண்புக் கூறுகளின் மூலத் தோற்றத்தை ஆராய்வதின் பொருட்டு தாதாபுரத்திலுள்ள சிவன் கோயிலில் உள்ள கும்ப பஞ்சரங்களை (உருவம் 26) -ஐ நன்கு பரிசோதிக்கும் அவசியம் எழுந்தது. அந்த கும்ப பஞ்சரத்தின் பொதுத் தோற்றம் பெரும்பாலும், இத்தகைய மாடத்தில் ஒருவரும் பார்த்திருக்க முடியாது. உருவம் 34. பிற்காலத்தில் கும்ப பஞ்சரமாகக் காணப்படுகிறது. ஆனால் இது தற்கால அமைப்பு முறையினின்று மாறுபட்டுள்ளது. 6. அணி மாடம் (Pavilion) அணி மாடங்களின் தோற்றம், அதன் காலத்தைக் குறைவாக மதிப்பிடுவதற்கு இடம் தருவதாக உள்ளது. மேலும், இந்தப் பகுதி அடிக்கடி புதுப்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. எனவே இந்த நினைவு மண்டபத்தின் மேல் பகுதி, அதன் அடித்தளத்தின் அதே கட்டுமானப் பண்பில் எப்பொழுதும் இருக்கவில்லை. நாம் உருவம் 35-இல் உள்ள அணிமாடத்தின் தோற்றம் மூன்று வெவ்வேறு ஊழிகளிலும் ஒருப் போல இருந்தது என்று காட்ட முன் வரவில்லை. திராவிடக் கட்டிடக் கலை, திராவிடர்களால் திராவிட நாட்டில் உருவாக்கப் பெற்று வளர்க்கப் பெற்ற உயரிய கலை என்பது ஒரு தெளிவான உண்மையாகும். இது இந்தியக் கட்டிடக் கலையும், தென் இந்தியக் கட்டிடக் கலையையும் பற்றி ஆய்ந்துணர்ந்த பெர்சி பிரவுண், ஹேவல், கிரேவ்லி துப்ரயல் போன்ற அறிஞர்கள் அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. திராவிடக் கட்டிடக் கலை அதன் பரிணாம வளர்ச்சியால் முன்னேற்றம் எய்தியுள்ளது. அதனுடைய அமைப்பு முறை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூற முடியாது. ஆனால் அதன் அழகுபடுத்தும் முறைகள் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. இறுதி அத்தியாயத்தில் விளக்கமுற எடுத்துக் காட்டியுள்ள உடற் கூறுகள் பரிணாம வளர்ச்சியில் எய்தியுள்ள உயர் நிலைகள் ஆய்வதற்கு உரியன. திராவிடக் கட்டிடக் கலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அதன் அணியுறுப்புகள் பெற்றிருக்கும் அழகையும் அதன் திண்மையையும் வண்மையும் எடுத்துக் காட்ட இங்கு இணைத்துள்ள படங்கள் போதியதாகும் என்று நம்புகிறேன். இச்சிறு நூல் தமிழ் மக்களுக்கு தம் கட்டிடக் கலையில் ஊக்கத்தை ஊட்டி உணர்வை எழுப்பி, ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் என்ற எண்ணம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். கும்ப பஞ்சரங்களும், அணிமாடங்களும் முற்காலத்தில் வகுக்கப்பட்டவைகள். இவைகளை இப்பொழுது புதுமைப் பொலிவுடன் சிறிது மாற்றஞ் செய்துள்ளார்கள். இந்த மாற்றங்கள் கால நிலைக் கேற்பவும் சூழ்நிலைக்குத் தக்கவும் அறிவுவளர்ச்சி நிலைக்கு உகந்தவாறும் மாறுதல் உறும். இதனை அறிஞர் சி. சிவராம மூர்த்தி சோழர் கோயில்கள் என்ற தம் ஆங்கில நூலில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.1 இந்த அத்தியாயத்தில் மேற்கோளாக உதவிய நூற்கள் 1. Dravidian Architecture - Prof. G. Jouveau Dubreal Madras - 1917 2. The Ecomy of a South Indian temple- V. G. RamaKrishnalyer (Annamalai Nagar) 1946. 3. The Archeohogie Du Sud De L. Inds - G. Jouveau Dubreal. Paris 1914. 4. The Chola Temples - C.Sivaramarmurthi. New Delhi 1960 5. Siva Temple Architecture etc. in Tamil Rao Bahdir Sambanda B.A.B.L Madras 1986. 6. The Dravidian and its diffusion (Cochin) 1932 7. இறைவனின் உறைவிடங்கள் - காளத்தி நடேச முதலியார் 1953. வரலாறும் கோயில்களின் ஒழுங்கும் நமது கோயில்களின் ஒழுங்கு முறையைப் பற்றி நாம் அறிவது மிக இன்றியமையாததாகும். கோயில்களையும் அதன் அமைப்பு முறையைப் பற்றி நாம் அறிவதை விட இன்றியமையாதது எதுவும் இல்லை என்பது உண்மையே யாயினும், நமது வரலாற்றைப் பற்றி நாம் அறியாவிடில் நாமும் நமது சமூகமும் நமது சமயமும் நமது கோயில்களும் அழிந்து போய் விடுவோமோ என்ற கட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். எனக்கு எனது நாட்டின் மீதும், எனது சமயத்தின் மீது எனது மொழி மீது எனது பண்பாட்டின் மீதும் நம்பிக்கையுண்டு. உரத்த குரலில் எனது சமயத்தை, எனது தெய்வத்தை, எனது மொழியை எனது பண்பாட்டை எந்தத் தெய்வத்தாலும், எந்த அரசினாலும் எந்த அணுகுண்டாலும் ஜலவாயுவுக் குண்டாலும் காஷ்மிக் கிரகணத்தாலும் அசைத்து விட முடியாது என்று வீராப்புடன் பேசத் தெரியும். இந்த வீராப்புப் பேச்சுக் காரர்களெல்லாம் இன்று வாயைப் பொத்திக் கொண்டு மூலையில் பதுங்கி கிடக்கின்றார்கள். ஒரு சுண்டைக் காய் அளவுள்ள இரயேல் நாட்டின் முன் இமயமலை போன்ற முலிம் நாடு என்னபாடு பட்டது என்பது நமக்குத் தெரியும். உலகிலே நாங்கள் 100 கோடி முலிம்கள் இருக்கிறோம். நாங்கள் ஒன்று கூடி காரியுமிழ்ந்தால் இரயேல் நாடு இருக்கும் இடம் தெரியாது நீரில் மூழ்கி அமிந்து விடும் என்று கூறிய எனது உழுவலளர் கொழும்பு முஹமத் சாலி சாகிப் இறந்து ஒரு ஆண்டு ஆகிறது. இரயேல் நாடு இன்னும் பலத்தோடும் வீராப்புடனும் இருந்து வருகிறது. எனது நண்பர்கள், சிலர் இரயேல் நாட்டின் நல்லதிர்ஷ்டம் முஹமத் சாலிசாகிப் இறந்து விட்டார். இருந்தால் கண்டிப்பா அது நடந்தே தீரும் என்று சொல்லுவார்கள். எனவே இந்த வீண் சமயப் பேச்சை விட்டு நமது வரலாற்றை ஆராய முன் வருவோமாக. நாம் முன் எந்நிலையில் இருந்தோம். இடைக்காலத்தில் நமது நிலை உணர்வதற்கோ அல்லது தாழ்வதற்கோ காரணம் என்ன? இன்று நாம் எந்நிலையில் இருக்கின்றோம். வருங்காலத்தில் பிற நாட்டு மக்களைப் போல் நல் வாழ்வு வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும். நமது நல் வாழ்விற்கு ஆவனவற்றைச் செய்ய உடனே இறங்க வேண்டும். வரலாற்றில் விசய நகர நாயக்கர் பாண்டிய அரசன் குலசேகரன் காலத்திற்குப்பின் ஆட்சிக்குப் பின் (1268-1310-க்குப் பின்) அவனுடைய பட்டத்தரசியின் மகன் அரச கட்டிலில் அமரவில்லை. அவனது மறுமனையாட்டி மகன் வீரபாண்டியன் அரசாற்றினார். பட்டத்தரசியின் மகன் சுந்தர பாண்டியன் தில்லிச் சுல்தான் உதவியை வேண்டினான். குல சேகரனின் மறுமனையாட்டி மகன் வீரபாண்டியனை அரச கட்டிலினின்று இறக்கி, தன்னை அரச கட்டிலில் அமர்த்தும் படி வேண்டிக் கொண்டான். சுல்தான் ஆணைப்படி அவனது தளபதி மாலிக்கபூர் பட்டத்தரசனையும் விரட்டி விட்டு, சுந்தர பாண்டியனையும் பயமுறுத்திவிட்டு தான் பழம் பாண்டியர்அரச கட்டிலி ஏறி அரண்மனையில் இருந்த அணிகலன்களையும், பொன்னையும் மணிகளையும் வாரிக் கொண்டு பின் இராமேசுவரம் கோயிலிலும் மதுரைக் கோயிலும் உள்ள பொன்னையும் மணி களையும், பாண்டியர்களின் துறைமுகப் பட்டினமாக இருந்த பழைய காயலையும் கொள்ளையடித்து யானைகளிலும் குதிரை களிலும் செல்வங்கள் அனைத்தையும் தில்லிக்கு அனுப்பிவிட்டு தன்னை மதுரைச் சுல்தான் என்று பிரகடனம் செய்து கொண்டான் அவனது கொடுங்கோல் ஆட்சியில் பாண்டியர்களின் இனத்தவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமங்களில் பதுங்கி கிடந்தனர். இறுதியாக பேர் சொல்லப் பயந்து மறைந்து விட்டனர். மதுரையில் முலிம் ஆட்சி 44 ஆண்டுகள் நடை பெற்றது. திராவிட நாட்டில் முலிம் ஆட்சி கால் கோலி விட்டது. திராவிட மக்களுக்கே பெரிய அவமானம் என்று விசய நகர நாயக்கர்கள் வெகுண்டெழுந்து வந்து முலிம் ஆட்சியை 1377-இல் குழி வெட்டிப் புதைத்து விட்டு பாண்டிய அரச குடும்பத்தினரை அரச கட்டிலில் ஏற்றாது தாங்களே (நாயக்கர்களே) அரச கட்டிலில் அமர்ந்து முடி சூடிக் கொண்டு மதுரையைத் தலைநகராக்கிக் கொண்டதோடமையாது நாயக்கத் தளபதிகளே ஆங்காங்கே வரிவசூல் செய்ய ஜமீன்தார்களாக்கிக் கொண்டனர். நாயக்கர் ஆட்சி நாயக்கர் அரசன் குமார கம்பண்ணன் காலம் முதற் கொண்டு கி.பி. 1736-ஆம் ஆண்டில் மீனாட்சி காலம் வரை மதுரையில் நாயக்கர் ஆட்சி நிலைத்திருந்தது. இதற்கிடையில் 1546-இல் பாண்டிய குல இளவரசன் தென் காசியில் ஒரு குறு நில மன்னன் போல் ஆட்சி புரிந்து வந்தான் 1610-இல் அவனது ஆட்சி முடிவுற்று அவனுக்குப் பின் சுந்தர பாண்டியன் என்பவன் ஆட்சி பீடத்தில் இருந்து வந்தான். 1736-இல் மீண்டும் மதுரை அரசி மீனாட்சியை வஞ்சித்து ஆர்க்காட்டு நவாப் சந்தா சாகிப் மதுரையைக் கைப் பற்றினார். இதனிடையில் மதுரையில் மதுரைப் பாண்டியர்குல இளவரசன் ஒருவன் பெயரளவில் அரசனானான். அவனை 16-ஆம் நூற்றாண்டில் தஞ்சை மன்னன் வீர சேகர சோழன் படை யெடுத்து வந்து பாண்டியனை வென்று தானே பாண்டிய நாட்டு மன்னன் என்று கூறி வந்தான். உடனே பாண்டிய இளவரசன் ஒருவன் தப்பி ஓடி விசய நகரம் போய் தன்னை அரச கட்டிலேற்றும்படி கேட்டுக் கொண்டான். விசய நகர மன்னன் கிருஷ்ண தேவராயன் ஒரு படையை நாகம நாயக்கன் தலைமையில் அனுப்பி வைத்தான். அந்த நாகம நாயக்கன் தஞ்சைச் சோழ அரசனை வென்று பாண்டியன் சந்திர சேகரனுக்கோ அவன் மகனுக்கோ பட்டம் சூட்டாது தானே அரச கட்டிலில் அமர்ந்து கொண்டான். அப்பான் கிருஷ்ண தேவராயர் நாகம நாயக்கனை விரட்டி விட்டு அவன் மகன் விசுவநாதநாயக்கனை மதுரையை ஆளும்படி செய்தான். அவனால் மதுரை பெற்ற நன்மைகள் பல. மதுரையின் நற்காலமாக நாயக்க மன்னரின் ஆட்சிக்கு உறுதுணையாய் அமைச்சராய், படைத் தலைவராய் தளவாய் அரிய நாயக முதலியார் நியமிக்கப் பெற்றார். மதுரை அரசை 72 பாளையப் பட்டுகளாய்ப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் நாயக்கர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெற்றனர். இவர்கள் தத்தம் பாளையப்பட்டை ஆண்டு நாயக்க மன்னர்கட்கு ஆண்டு தோறும் திறை செலுத்தி வந்தனர். பாண்டியநாடு தமிழ்நாடுதான் என்றாலும் பாண்டியர்களின் மைத்துனர் உறவுடைய சேர அரச குமாரனோ, மைத்துனன் உறவுடைய சோழர்களோ பாண்டிய அரச கட்டிலில் அமர்ந்து ஆட்சி செலுத்துதற்கு உரிமையில்லை. அப்படியிருக்க திராவிட அரசனாகிய ஆந்திரஅரசர்கள் பாண்டிய நாட்டின் அரச கட்டிலில் அமர்ந்து மணி முடி தரித்து ஆளுதல் அறமன்று. ஆனால் அவர்கள் செய்த தீவினையின் பயனை அவர்கள் அனுபவித்து விட்டனர். பாண்டிய அரசை அழித்து நாயக்கர் அரசை நிலை நாட்ட தளவாய் அரிய நாயக்க முதலியார் செய்தபலனை அவரும் அவரது சுற்றமும் அனுபவித்துள்ளார்கள். நாயக்க அரசிகள் மங்கம்மாள் சிறையிலிடப்பட்டுக் கொல்லப்பட்டாள். அரசி மீனாட்சி நஞ்சூட்டப்பட்டு மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே என்று முதுமொழிப்படி நாயக்க மன்னர்கள் திராவிட ராயிருந்தும் பெண் கொள்வினை கொடுத்து வந்தும் பாண்டிய மன்னர்களை வஞ்சித்து தமிழினத்தை அடிமைப்படுத்தி வாழ நினைத்த தீவினை அவர்களுக்கு ஒரு சாப கேடாய் முடிந்தது. நாயக்கர் ஆட்சிக்குப் பின் பாண்டிய நாட்டில் போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர்கள் ஆட்சி அரும்பியது. 1917- ஆகட் திங்களில் இந்தியாவில் ஆங்கில ஆட்சி மறைந்து சுதந்திர இந்தியா பிறந்தது. இந்தியா 21-மாநிலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர மைய அரசின் நேரிடையான நிர்வாகத்தின் கீழ் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. தமிழ் நாடு ஆதியில் ஒரு தனி அரசாக இராது சேர, சோழ, பாண்டிய நாடாகப் பிரிந்திருந்தமையால் இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் போரிட்டு பலம் குன்றி தமிழ் நாடு சேர சோழ, பாண்டிய, பல்லவ நாடாகப் பிரிந்தது. இவர்கள் நால்வரும் அடிக்கடி சண்டையிட்டு பலங்குன்றிய நிலையில் தமிழகம், ஆரியர்க்கும், மொகலாயர்க்கும், ஆங்கிலேயர்க்கும் அடிமைப்பட்டு தன் பெருமையை இழந்தது. தனது மொழி, சமயம், பண்பாடு, நாகரிகம், பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளிலும் தாழ்வுற்றது. இமயந் தொட்டு குமரி வரை திராவிட இந்தியாவாக விளங்கிய ஒரு புனித பூமியில் ஆரியா வர்த்தம் என்ற பிளவை நோய் முதலில் எழுந்தது. அப்பால் பாக்கிதான் என்ற அங்கப் பழுதேற்பட்டது. கி.பி 1310-ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்ய வந்த டில்லி சுல்தானின் தளபதி பாண்டிய அரசை வீழ்த்தி தமிழகத்தைக் கொள்ளை அடித்து இந்நாட்டின் செல்வம் அனைத்தையும் வட இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். மாபாதகன் மாலிக்கபூர் மதுரையில் சுந்தர பாண்டியன் அரண்மனையில் இருந்தும் பழைய காயலில் இருந்தும் கொற்கையிலிருந்தும் சூறையாடப்பட்ட மணிகள் இழைத்த அணிகலன்களும் பொன்னும் மணிகளும் பொன் வட்டிலும் பொற் கட்டிலும் பிறவும் 96000 மணங்கு (10 கோடிப் பவுண்கள்) பெறுமதி என்று அக்காலத்தில் மதிப்பிடப்பட்டது. இவைகள் 312 யானைகள் மீதும், 1200 குதிரைகள் மீதும் ஏற்றி டில்லி சுல்தான் அரண்மனைக்கு அனுப்பப்பட்டன.1 திராவிட இந்தியா ஆரியர் படை எடுப்பால் அடிமைப் படுத்தப்பட்டது. அவர்களது செல்வம் சுரண்டப்பட்டது. ஆரியர்கள், தேவர்களாக உயர்த்தப் பெற்றனர். திராவிடர்கள் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டனர். திராவிடர்கள் சமயத்திற்குள் புகுந்து அதற்குப் பெரும் கேடு விளைவித்தனர். சிவ தீட்சை பெறாத அன்னிய சமயத்தைத் சார்ந்த ஆரியர்கள் சிவ வேடம் பூண்டு சிவ நெறியாளர்களின் குருக்கள் போல நடித்து மக்களைச் சுரண்டி வாழ்ந்தனர். அவர்களுக்குப் பின் இந்தியாவின் மீது படை யெடுத்து வந்த மொகலாயர் திராவிடர்களின் கோயில்களை இடித்தும் திரு உருவங்களை உடைத்தும் கோயிலில் உள்ள அணிகலன்களைக் கொள்ளை அடித்தும் இலாமிய சமயத்திற்கு ஆள் திரட்டியும் பல கொடுமைகளை ஆற்றிவந்தனர். வட இந்தியாவில் கஜினி முகம்மதுவின் கொள்ளை உலகப் பிரசித்தி பெற்றது. மைசூரில் ஹைதர் அலி, ஸ்ரீரங்கப்பட்டினத்திலுள்ள பொன் திருஉருவங் களைக் கொள்ளையடித்ததும் மாலிக்கபூர் பல பொன்திரு உருவங்களை உடைத்ததும் வரலாறு அறிந்த உண்மை. மாலிக் கபூர் சோழ பாண்டிய நாடுகளை வென்று கோயில் களில் உள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்தான். தனது முலிம் படைகளை ஆங்காங்கு நிறுத்தி பாண்டிய அரச குடும்பங்களை வதைத்தான். எனவே பல பாண்டிய இளவரசர்கள் கொற்கைக்கும் தென்காசிக்கும் கரிவலம் வந்த நல்லூருக்கும் போய்ப் பதுங்கி கிடத்தனர். 44 ஆண்டுகள் முலிம் சுல்தான்கள் பாண்டியர் களின் அரச கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்தனர். அப்பொழுது மதுரையைச் சுற்றி அரண்கள் இருந்தன. அவைகள் இடிக்கப் பட்டன. சிவன் திருமால் கோயில்கள் அடைக்கப்பட்டன. மாலிக் கபூர் படை எடுப்பால் மதுரை மாநகரில் வானளாவ நின்ற பதினான்கு கோபுரங்களும் அவற்றைச் சூழ இருந்த பெரும் பெரும் மதிற் சுவர்களும் தரைமட்டமாக்கப்பட்டன. கோயில் இடிக்கப் படாமல் இருந்த பகுதிகள் இரண்டேயாம். அவை மீனாட்சி - சொக்கநாதர் அக நாழிகைகளாகும். மதுரைக் கோயில் பூசை வழிபாடு முதலியன இன்றி அடைபட்டுக் கிடந்தன. மாலிக் கபூரும் அவனுக்குப் பின்வந்தவர்களும் பலரை வலுக்கட்டாயமாய் இலாமிய மதத்தைத் தழுவச் செய்தனர். பரதவர்கள் மீன் பிடிக்கும் தொழிலுக்கு இடையூறு செய்ததைப் பொறுக்க முடியாமல் போர்ச்சுக்கீசியர் துணையை நாடினர். போர்ச்சுக்கீசியர் இந்து பரதவர்களைக் கத்தோலிக்க கிறித்தவர்களாக்கி, முலிம்களின் வாள்களுக்கு எதிராகத் தமது துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் காட்டி மாலிக் கபூர் வழிவந்த சுல்தான்களின் துடுக்கை அடுக்கினர். இதனிடையே விசய நகர நாயக்கர்கள் மதுரைக்கு படை எடுத்து வந்தனர் கம்பண்ண உடையார் முயற்சியால் அடைபட்டுக் கிடந்த கோயில்கள் திறக்கப்பட்டன. முலிம் ஆட்சி மூழ்கடிக்கப்பட்டது. நல்ல நாளில் லட்சோப லட்சம் மக்கள் கூடி நின்றனர். 48-ஆண்டுகளாய் அடைக்கப்பட்டிருந்த கோயில் திறக்கப்பட்டது. அங்கு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பூமாலைகள் வாடா திருந்தன அவற்றைக் கண்டு கம்பண்ண உடையார் பெரும் வியப்புற்றார் என்று கூறப்படுகிறது.1 நாயக்க மன்னர்கள் ஆட்சியில் மதுரையை வலிவுபடுத்தவும் விரிவு படுத்தவும் திட்டமிட்டார் இடிக்கப்பட்ட கோயில்கள் கட்டப்பட்டன. பழுதுற்ற கோயில்கள் பழுது பார்த்து குட முழுக்குச் செய்யப்பட்டன. பாண்டியரின் பழைய மதிலையும் குழிகளையும் இடித்துத் தள்ளி விட்டு, அவற்றிற்கு மாற்றாக எழுபத்திரண்டு அரண்களைப் பாதுகாக்கக் கூடிய இரு பெரிய சுவர் அரண்களை விரிவாகக் கட்டினார் மதுரை நகர் விரிவு படுத்தப் பட்டது. உடைந்து கிடந்த பகுதிகள் செப்பனிடப்பட்டது. பழைய கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டது. புதிய கோபுரங்கள் புத்துருப் பெற்று எழுந்தன. இவர் காலத்தில் புதிய கோயில்கள் பொல பொல என எழுந்தன. புது ஊர்கள், கண்டம நாயக்கனூர், போடி நாயக்கனூர் எரசப்ப நாயக்கனூர் முதலியனவாகும். மதுரைக் கேவாலி கொண்டபுரத்திலிருந்து குமரி வரை பல நாயக்க சமீன்தார்கள் தோன்றினர். கி.பி.1600-வரை வாழ்ந்த தளவாய் அரிய நாயத் முதலியார் நாயக்கர் தலை விதியை நிர்ணயித்தவர் என்று கூறப்பட்டது. திருமலை நாயக்கர் 1625-இல் ஆட்சிக்கு வந்தார் அவர் 1659-வரை அரசோட்சினார். இவர் திருச்சியிலிருந்து மதுரை வந்து மதுரையில் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் அமைத்தார். மீனாட்சி கோயிலையும் அதன் சுற்றுத் தெருக்களையும் புதுப்பித்தார். பல அணிகலன்களையும் பரிவட்டங்களையும் வாகனங்களையும் தேர்களையும் செய்தளித்தார் இவரது ஆண்டு வருமானம் 12,00,000 பவுண்கள். அதில் ஆண்டொன்றுக்கு 41,000 பவுண்கள் வருமானம் வரக் கூடிய நிலங்களை மீனாட்சி கோயிலுக்கு எழுதி வைத்தார் என்று கூறப்படுகிறது.2 மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையும் வண்டியூர் தெப்பக் குளமும் புது மண்டபமும் இராயர் கோபுரமும் தமுக்கம் அரண்மனையும் இம்மன்னனின் பெயரை என்றும் சொல்லிக் கொண்டிருக்குமாறு இம்மன்னன் தோற்றுவித்தான். மேலும் திருநெல்வேலிக் காந்திமதி கோயிலில் சில பகுதி களிலும் திரு வில்லிப் புத்தூர் ஆண்டாள் கோயிலில் சில பகுதியும் இவரால் கட்டப்பட்டவை. இவரது காலத்தில் தான் சீர் வைகுந்தம் குமரகுருபர அடிகள் மதுரை வந்து மீனாட்சி பிள்ளைத் தமிழைப்பாடி திருமலை நாயக்கர் முன் அரங்கேற்றினார். திருமலை நாயக்கருக்குப் பின் வந்த அரசி மங்கம்மாள் ஆவள். திருமலை நாயக்கர் காலத்திலே இராபர்ட்-டி-நோபிலியினி வந்தார். நாயக்கர் இவரிடம் அன்பு செலுத்திவந்தார். இவரது சொற்படி மீனாட்சி கோயிலுக்குக் கொடுத்து வரும் மானியத்தைக் குறைக்கலானார் என்றும் கூறப் படுகிறது. பாண்டியர் ஆட்சிக்குத் துரோகம் விளைவித்த முலிம் ஆட்சி அரை நூற்றாண்டு கூட நிலைத்து நிற்க முடியாது. வீழ்ந்தது. அப்பால் எழுந்த உட்பகைவர்களான நாயக்கர் ஆட்சி இறுதியாக ஆண்ட மங்கம்மாள் பட்டினியால் துடிதுடித்தும் மீனாட்சி நஞ்சுண்டு கொல்லப்பட்டும் நாயக்கர் ஆட்சி 1377-இல் தோன்றி 1706-வரை 430-ஆண்டு கோயிலில் திருப்பணி செய்து காட்டி இறுதியில் ஆங்கில ஆட்சியால் அடியுண்டு வீழ்ந்தது. ஆங்கில ஆட்சியும் சமய நடு நிலைமையைப் பேசிக் கொண்டே கிறிதவ புரோட்டடாண்டு மதத்தைப் பரப்பி அரசாங்கப் பணத்தை செலவிட்டு கிறித்தவ சமயத்தைப் பரப்பி பிற சமயத்தை தூற்றி இறுதியாக 1947-ஆம் ஆண்டு ஆகட்டு 15-ஆம் தேதியுடன் ஆங்கில புரோட்டடாண்டு ஆட்சி சுமார் 150 காலமாக ஆட்சி புரிந்து இந்தியாவை விட்டு மறைந்தது. ஆங்கில ஆட்சி கிறித்தவ ஆட்சியாய் இருந்ததும் சுமார் 150 காலம் ஆண்டும் ஆரியர் ஆட்சியை விட மொகலாய ஆட்சியை விட கொடுமையாக ஆண்டது என்று சொல்வதற்கில்லை. இந்தியாவை அடிமைப்படுத்தி இந்தியாவைச் சுரண்டி வாழ்ந்தனர் என்பதில் எவருக்கும் அவர்கள் குறைந்தவர் களில்லை. என்றாலும் அடிமை இந்தியாவை ஆரியர்களைப் போல மொகலாயர்களைப் போல் விலங்குகளாக மதித்து நடக்கவில்லை. அவர்கள் கண்ணியமுடன் இந்த நாட்டை நம்மிடம் ஒப்புவித்து சென்றனர். என்றாலும் உலகம் உள்ளளவும் அவர்கள் மீது வரலாற்று அறிஞர்கள் கூறும் தீராப்பழிச் சொல்லாக இந்திய நாட்டை இந்த நாட்டின் ஆக்கிரமிப்பாளர்களான மொகலாயர் களில் இந்திய நாட்டின் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்து ஆண்டுதோறும் இரு நாட்டு மக்களும் லட்சசோப லட்சம் மக்கள் சாகவும் லட்சோப லட்சம் மக்களின் உதிரம் தெருவில் வாய்க்கால் போலவும் ஓடச் செய்த அரசியல் வஞ்சக சூழ்ச்சியாகும். அதை உலகம் இன்று அறிந்து கொண்டது. இந்தத் தீவினையின் பயனை இங்கிலாந்து ஓரளவு அனுபவித்து வருகிறது. அது முழுவதும் அரியும் காலம் வந்தே தீரும். என்றாலும் ஆங்கிலேய ஆட்சி எங்களை விட்டு அகன்று 30 ஆண்டு ஆகிறது. அதற்குள் இந்தியா உலகில் சோவியத் யூனியன், அமெரிக்கா போன்ற வல்லரசுகளில் ஒன்று என்று உலகம் மதிக்கும் நிலைக்கு இந்தியா வந்தது இந்தியாவில் இங்கிலாந்து இட்ட அரசியல், தொழில் கல்வி முதலிய அடிப்படை என்பதை நாங்கள் மறப்பதற்கில்லை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிலவிய காலத்தில் ஆரியர்களைத் தம்மக்களைப்போல் அவர்கள் வாழ்விற்கும் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் உயர் பதவிகளுக்கும் செய்த உதவிகளையும் திராவிட மக்களை மாற்றாந்தாய்ப் பிள்ளைகளைப் போல் கவனியாமல் இருந்ததையும் நாம் அறிவோம். என்றாலும் 1930-ஆம் ஆண்டிலே பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலே திராவிட மக்கள் 5000-ம் ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த நாகரிகம் பெற்ற மக்கள் என்றும் அவர்கள் மதிப்பிற்கும் மாண்புடைய இனத்தவர்கள் என்றும் ஆங்கிலேயர்களும் பெயின் நாட்டவர்களும் பிறரும் கூறும் நிலை எழுந்தது என்பதையும் எண்ணி நாம் பெருமிதம் அடைகின்றோம். திராவிட மக்களின் வருங்காலம் ஒளிமயமாய் இலங்கப் போகிறது எங்கள் அன்பிற்குரிய பெரியார் ஹிரா அடிகள் கூறிய வார்த்தைகளை நாங்கள் தெய்வ வாக்காக எண்ணி முன்னேற முயற்சி செய்து வருகின்றோம். அவரது வார்த்தை திராவிட மக்களுக்குப் பெரிதும் தன்னம்பிக்கையை யூட்டியுள்ளது. அவரது வார்த்தையும் அறிஞர் சர் சாண் மார்சல், சர் மார்ட்டிமர் உயிலர், ஆர்.டி பானர்ச்சி, எனட மெக்கே. கார்டன் சைல்டு போன்ற அறிஞர்களின் ஆய்வுரைகள் என் போன்றவர்கள் ஒரு பெரிய நூலை எழுதி முடிக்கும் தன்னம்பிக்கையை யுண்டாக்கி யுள்ளது. என் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் எழ ஆக்கம் அளித்தது. ஏன்? தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி எழுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது. எத்துணை சூழ்ச்சியும் வஞ்சமும் எதேச்சாதிகார மும் எழுந்தாலும் அனைத்தையும் தகர்த்து வெற்றி நடை போட சக்தியூட்டியுள்ளது. நிற்க, தமிழர்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அங்கெல்லாம் கோயில் எடுப்பிக்கத் தவறாதவர்கள். அதோடு மட்டும் அவர்கள் இருக்கக் கூடாது கோயில்களோடு ஒரு நூல் நிலையம், கழகம், மருத்துவ நிலையம், கல்லூரி முதலியவைகளும் அமைப்பது இன்றியமையாதது. இது இக்காலத்தில் வாழும் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய தெய்வீகத் திருப்பணி என்று நினைப்பூட்டிக் கொள் கின்றேன். நமது கடந்த கால வரலாறும் வீழ்ச்சியும் இப்பணி இன்றியமையாத இறைப்பணி என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொள்கின்றேன். நாம் கோயிலுக்குப் போக எண்ணிச் சென்றால் முதலில் நாற்புறமும் திருமதில்களையும் வாயில்களையும் வாயிற் கோபுரங் களையுமே முதலில் காண்போம். கோபுரத்தை இன்று இராயர் கோபுரம் என்று கூறுகிறோம். முற்காலத்தில், மூவேந்தர் தலைநகர்களிலும் கோநகர் களிலும் மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களும் மணி மண்டபங்களும் மிகுந்திருந்தன. கோ -அரசு, தலைமை, புரம்- உயர்வு, உயர்ந்த கட்டிடம். புரை-உயர்ச்சி, புரை உயர்பாகும் (தொல். உரி 4) வேந்தன் இருந்த உயர்ந்த எழு நிலைக் கட்டிடம் முதலில் கோபுரம் எனப் பட்டது. பின்பு பொற்கோயில் அமைந்த எழு நிலை வானளாவி அப்பெயர் பெற்றது. அதன் அமைப்பு தேரை ஒத்ததாகும். கோபுரம் உள்ள நகர்களின் பெயர்களே முதலில் புரம் என்னும் ஈறு பெற்றன. எ-டு காஞ்சிபுரம், கங்கை கொண்ட சோழபுரம் சாயர்புரம், சிவத்தையாபுரம், சீருடையார்புரம், மெஞ்ஞானபுரம். வேந்தன் தன் தலைநகரை நாற்புறமும் நோக்கவும் தொலைவிற் பகைவர் வரவைக் காணவும், பகைவர் முற்றுகையிட்டு உழிஞைப் போரை நடத்துங்கால் நொச்சிப் போரைக் கண் காணிக்கவும் அவன் அரண்மனை மேல் எழு நிலை கொண்ட ஒரு உயர்ந்த தேர் போன்ற கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அது புரம் போன்று கட்டப் பட்டிருந்தது. அது புரம் எனப்பட்டது. புரம் - உயர்ந்த கட்டிட மான மேன்மாடம் புரவி - உயர்ந்த சுவரைத் தாண்டும் குதிரை. புரம் என்பது, பின்பு புரத்தைக் கொண்ட அரண்மனையையும் அதன் சூழலையும் குறித்து அதன் பின் நகர் என்றும் சொற்போல் தலை நகர் முழுவதையும் குறித்து நாளடைவில் நகரப் பொதுப் பெயராயிற்று. அரண்மனையில் உள்ள புரம் அரசன் இருக்கையாதலால் கோபுரம் எனப்பட்டது. கோ - அரசன் கோ இருந்த இல் கோயில் எனப்பட்டதை நோக்குக. பகைவர் வரவு கண்டற்குக் கோபுரம் சிறந்த அமைப்பு என்று கண்ட பின் நகரைச் சூழ்ந்த கோட்டை மதிலிலும் வாயிலிலும் பெரிதாகவும் மற்ற இடங்களிற் சிறியனவாகவும் கோபுரங்கள் கட்டப்பட்டன. சிறியன கொத்தளம் எனப்பட்டது. மதுரை நகரைச் சூழ்ந்து மதிலின் நாற் புறத்திலும் வாயிலும் மாடமும் வானளாவிய கோபுரமும் இருந்தன. நான்கு வாயில் மாடங்கள் இருந்ததினால் மதுரை நான்மாடக் கூடல் எனப்பட்டது. கூடல் என்பது தமிழ் கழகம் அது பின்பு இடனாகு பெயராய் மதுரையைக் குறித்தது. இதை அறியாது தொல் கதைஞர் (புராணிகர்) ஒரு கதையைக் கட்டி விட்டனர். தமிழ் கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறம் 58:13 தமிழ் நிலை பெற்ற தாங்கருமரபின்- மகிழ நனை மறுகின் மதுரை - சிறுபாண் 66:7 இனி, கூடல் நகர் என்பது நாளடைவில் கூடல் எனக்குறுகிற்று எனினுமாம். மதுரை நகர்வாயில், இடைவிடாது ஒழுகிய வைகையாறு போல் அகன்றும் இடையறாத மக்கள் போக்கு வரத்து மிகுந்தும் இருந்தது. மழையாடு மலையின் நிவந்த மாட மொடு வையை யன்ன வழக்குடை வாயில் என்று மதுரைக் காஞ்சி (355-6) கூறுதல் காண்க. கோபுர மன்றி வாசல் மாடமாகவுஞ் சமைத்தலின், மாட மென்றார். என்னும் நச்சினார்க்கினியர் சிறப்புரை இங்குக் கவனிக்கத் தக்கது. அரசனுக்குரிய சிறப்புகளெல்லாம் இறைவனுக்கும் செய்யப் பெற்றதினால், கோயில் தேர் மிகப் பெரியதாய்ச் செய்யப் பெற்றது போல், கோயில் மதிற் கோபுரமும் மிகப்பெரிய எழு நிலை வானளாவியாகக் கட்டப் பெற்றது. அதன் அமைப்பும் தேரை ஒத்ததாகும். அதன் எழுநிலைகளும் தேரின் எழுதட்டுக்களைப் போன்றவை. எழுநிலை அல்லது எழுதட்டுக் கருத்து ஏழுலகம் என்னும் கருத்தினின்று தோன்றியது. ஏழுலகக் கருத்தும் எழு தீவுக் கருத்தினின்றும் தோன்றிய தாகும். ஏழுடையான் பொழில் (திருக்கோவை ; 7) தச்சுக் கலையில் கோயில் தேர் போல், கட்டிடக் கலையில் கோயிற் கோபுரம் பண்டை தமிழரின் அறிவையும் ஆற்றலையும் சிறப்பையுங் காட்டும். தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரத்திற்கு, நகல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்னும் இடத்திலிருந்து சாரம் காட்டியதாகவும், கடைகாலில் ஒழுகிய நீர்த்துளைகள் அடைத்தற்குக் குறைவை மீன்களைப் பிடித்து விட்டதாகவும் கூறுவர்.1 தமிழர்கள் கோயில்களில் நடுவே திரு உண்ணாழிகையும் அதன் மேலே விமானமும் திரு உண்ணாழிகையின் உள்ளே திரு உருவமும் இடம் பெறச் செய்வது மரபு. ஆகமவிதி சிற்ப நூல் சட்டம். வழிபடச் செல்பவர்கள் முதலில் நாற்புறமும் அரண் போன்ற திருமதில்களையும் வாயிற் கோபுரங்களையும் முதலில் காண்பர் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே புகுந்ததும் முதலில் பலி பீடத்தையும் அப்பால் கொடி மரத்தையும் பின்னர் திரு உருவின் முன்னர் கால்களை மடக்கிப் படுத்திருக்கும் நந்தியையும் (காளையையும்) காண்பர் இவைகளை யெல்லாம் கடந்து சென்ற பின்னரே உண்ணாழிகையை (கருவறையை) அடைவர். அதன் பின்னரே அக நாழிகையில் அமர்ந்திருக்கும் திரு உருவைக் கண்டு வழிபட முடியும். திரு உண்ணாழிகையில் பல கணிகள் இராது. திரு விளக்குகள் இருக்கும். வாயில் திரைச் சிலை இருக்கும். திரைச் சீலையை அகற்றி கோயிற்பூசாரி திரு உருவிற்கு தூப தீபம் காட்டுவார். அப்பொழுது தான் பக்தர்கள் திரு உருவை கண்டு களித்து வழிபடுவர். தமிழ் நாட்டுத் திருக் கோயில்களில் திருமதில்களில் நான்கு புறமும் நான்கு வாயில்கள் உண்டு. கோயிலில் முன் புறம் சாமி சந்நிதிக்கு நேரே ஒரு வாயிலும் அம்மன் சந்நிதிக்கு முன் ஒரு வாயிலுமாக முன்புறம் இரண்டு வாயிலும் ஏனைய மூன்று திசைகளில் மூன்று வாயிலுமாக 5 வாயில்களும் 4 பெரிய கோபுரங்களும் உண்டு. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஐந்து வாயில்களே உள்ளன. திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் கோயிலில் முன்புறம் சாமி சந்நிதியில் ஒரு வாயிலும் ஒரு சிறு கோபுரமும் உண்டு. அம்மன் சந்நிதியில் ஒரு வாயிலும் ஒரு சிறு கோபுரமும் உண்டு. மேல்புறம் ஒரு வாயிலும் ஒரு பெரிய கோபுரமும் வடபுறம் ஒரு வாயிலும் ஒரு பெரிய கோபுரமும் உண்டு. வடக்கு வாயிலைப் பயன்படுத்துவதில்லை. திருச்செந்தூரில் தெற்கு வாயில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வாயில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஒரு பெரிய கோபுரம் உண்டு. மதுரை, திருவாரூர் போன்ற பெரிய கோயிலில் வெளியே 4 மதிலும் 4 கோபுரமும் இருப்பது போல் உள்ளே உள் மதிலும் உள்ளே 4 கோபுரங்களும் உள்ளன. கோபுர வாயில் அகலமாயும் உயரமாயும் இருக்கும். வாயிற் கதவுகள் கனமான உறுதி வாய்ந்த கட்டுகளால் செய்யப் பெற்று பித்தளை குமிழ்களாலும் எஃகு ஆணிகளாலும் மிக உறுதியாகச் செய்யப்பட்டிக்கும் கதவுகள் சிறந்த சிற்பவேலைப்பாடுகள் நிறைந்ததாய் சீர் பெற்றிருக்கும். வாயில்கள் யானைகள் புகக் கூடியதாயும் பெரிய சப்பரங்களில் திரு உருவங்களை வாகனங்களின் மீதேற்றி மக்கள் தோள் மீது சுமந்து செல்லத்தக்கதாய் இருக்கும். சிய தங்கத்தேர்களும் வௌத் தேர்களும் கூட வாயிலில் செல்ல முடியும். சில கோயில்களில் இரண்டு வாயில்களும் இரண்டு கோபுரங்களும் சில கோயில்களில் ஒரு வாயிலும் உள்ளன. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் பழைய தமிழ் நாட்டு அரண்மனையைப் போல வெளியே நாற்புறமும் அகழ்களும் அரணும் சிறு வாயிற் கோபுரமும் இருப்பது போல உள் புறம் ஒரு அரணும் உட்புரக் கோபுரமும் 220அடி உயரமான கல்லால் கட்டப்பட்ட சிற்பவேலைப்பாடுகள் சீர்பெற அமைந்த உலகப் புகழ் பெற்ற விமானமும் உள்ளது. இக் கோயிலுக்கு முன்புறம் மட்டுந்தான் வாயில்கள் உண்டு பின்புறமோ வலப்புறமோ இடப்புறமோ வாயில் இல்லை. தமிழ் நாட்டு சிற்ப மரபு உண்ணாழிகையும் விமானமும் எழுப்புவதுதான். கோபுரங்கள் எழுப்புவதில்லை. பிற்காலத்தில் கோயிலைச் சுற்றி அரண்கள் போல் பெரிய மதில் எழுப்பிய சமயம் பெரிய கோபுரங்களும் எழுப்பும் முறை தோன்றியது. கோயிலில் கோபுரங்கள் வட இந்தியாவிலும் எழுப்புவதுண்டு ஆனால் தமிழ் நாட்டுக் கோபுரங்களில் செய்யப் பெற்றிருக்கும் சிற்ப வேலைப் பாடுகள் எங்கும் செய்யப்படுவதில்லை. கோயிலில் செய்யப்படும் சிற்ப வேலைப்பாடுகள் சுதையினாலே செய்யப்படும். சுதையினால் செய்யப்பட்டாலும் அவைகள் ஆயிரம் ஆண்டானாலும் கெட்டுப் போகாது புத்தம் புதிது போல் பொலியும் படி சுண்ணத் தோடும், பதனீர் அல்லது கருப்புக் கட்டி போன்ற பல பொருள்களைச் சேர்த்து அழகிய சிற்பம் செய்து அதற்கு வண்ணமும் தீட்டி அழகுற அமைப்பார்கள். தமிழ் நாட்டில் வாயிற் கோபுரங்களை உயரமாக அமைப்பது விசயநகர்ப் பாணி என்று கூறப்படும் தமிழ் நாட்டின் புதிய கோபுர வாயில்கள் தமிழர்களின் பழைய தோரண வாயிலினின்று வேறு பட்டதாகும். கோபுரம் வேறு விமானம் வேறு. கோபுரம் பெற்று வாயில் தோரண வாயிலின்று வேறுபட்டதாகும். ஆந்திர நாட்டில் உள் அமராவதியிலும் நாகார்ச்சுன கொண்டாவிலும் வாயில் கோபுரங்கள் பெரிதாக எடுப்பிக்கப் பெற வில்லை. இது கி.மு.முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் கட்டப் பெற்றவைகள். பாண்டியர் களைப் போல் நாகார்ச்சுன கொண்டாவில் எடுப்பிக்கப் பெற்ற பௌத்தர் கோயிலில் சுவர் முகப்பில் உள்ள சிற்ப வேலைகளில் மேல் பகுதியில் இரு மீன்கள் ஒரு வட்ட வடிவினுள் அழகு பொலியத் தீட்டப் பெற்றள்ளது. (L. A Hrieze slab showing Hestoon ornament Hrom slupa 2) 1 இந்தப் பௌத்த விஹாரைகள் திராவிடப் பாணியில் அமைக்கப் பெற்றுள்ளன. வாயில் அமைப்புகள் இரண்டு சுவர்களுக்கு மேல் வண்டிக் கூட்டினைப் போன்று வளைவானதாக அமைக்கப் பெற்றுள்ளன. வட இந்தியாவில் கோபுரம் எழுமுன் நாகார்ச்சுன கொண்டாவில் கோயிலும் கோபுரமும் எழுந்துள்ளன. இன்றுள்ள தமிழ் நாட்டுக் கோயில்களில் கோபுரங் கொண்ட முதல் கற்றளி காஞ்சி கைலாச நாதர் கோயிலேயாகும். ஆனால் அதற்கு சிறிது காலத்திற்கு முன் மாமல்லபுரத்தில் எடுப்பிக்கப் பட்டவைகள் உண்மையான கோயில்கள் அல்ல மாதிரிக் கோயில் (பூசைகள் செய்வதற்கு உரியதல்ல) மாமல்ல புரம் பீமரதம் என்னும் கோயில் உண்மையான கோபுர அமைப்பைப் போல் எடுப்பிக்கப் பெற்ற மாதிரிக் கற்றளியாகும் தொண்டை நாட்டுக் காஞ்சிக் கைலாச நாதர் கோயில் கோபுரம் சிறியது; அணி செய்யப் பெறாதது. 6-ஆம் நூற்றாண்டில் எழுந்த கோபுர அமைப்பைத் தழுவியே பல கோபுரங்கள் அணிகள் செய்யப் பெறாது எளிய அமைப்பை யுடையதாய் இருந்து வந்தன. ஆனால் அக்காலத்திலே விமானம் முக்கியத்துவம் பெற்றதாய் இருந்தது. வட்டிகம் என்ற சோழ நாட்டுக் கோபுரம் கூட எளிய அமைப்பிலே இருந்தது. 11-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமன்னன் இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒன்றன் பின் ஒன்றாக அரண்கள் போல அடுக்கடுக்காய் மதில்களும் வாயில்களும் சிறு வாயிற் கோபுரங்களும் அகழும்உடையதாய் விளங்கின. சாலைகளும் கோஷ்டங்களும் சுதைச் சிற்பங்களும் வாயிற் கோபுரங்களை வண்ணம் உறச் செய்து எழில் பெற்றிலங்கின. 12-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தாரா சுரம் கோயில் கோபுரமும் சிறிது உயரமானதாய் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதாய்த் திகழ்கிறது. 13-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் எடுப்பிக்கப் பெற்ற சிவன் கோயில் கோபுரம் சிறிதாக இருப்பினும் சிறப்புமிக்கது. எழில் மிக வாய்ந்தது. இந்தக் கோயில் சிறிதாகவும் விமானம் பெரிதாகவும் அமைக்கப் பெற்றுள்ளது. கி.பி 1250ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்ட கிழக்குப் பகுதியில் சிதம்பரம் வாயிற் கோபுரம் சிறியதே. ஆனால் அதன் அற்புதமான சிற்ப வேலைப்பாடு போற்றத்தக்கதாகும். இது பிற்காலப் பாண்டியர்களின் அரிய பாணியின் அடிப்படையில் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகும். சிதம்பரம் ஆடவல்லான் கேந்திர நிலையமாகக் கொண்டு 1. படைத்தல் 2. காத்தல் 3. அழித்தல் 4. மறைத்தல் 5. அருளல் என்னும் ஐந்து தொழிலும் 1. நெல்லை 2. மதுரை 3. சுடுகாடு 4. திருக்குற்றாலம் 5. திருவாலங்காடு ஆகிய இடங்களில் முறையே ஆடிவிட்டு இந்த ஐந்து தொழிலும் காட்டும் நாதாந்த நடனத்தைச் சிதம்பரத்திலே முனிவர் களின் வேண்டுகோளுக்காக பொற் சபையில் ஆடிக்காட்டினான் என்பது ஐதீகம். மற்றொரு புகழ் பெற்ற கோபுரம் பாண்டியர் காலத்தில் சிரிரெங்கத்தில் 12-ஆம் நூற்றாண்டில் பழங்காலப் பாண்டியர்களின் பாணிக்கு எடுத்துக் காட்டாகச் சம்புக் கேசுவரர் கோயில் சுவரின் இரண்டாவது சுவர் அணியில் கட்டப்பட்டதாகும். இது பிற்காலப் பாண்டியர் பாணியில் மிக ஆடம்பரமின்றி எளிய அமைப்பு முறையில் உறுதியுடையதாய் கட்டப்பட்டதாகும். இதனுடைய அணி செய்யும் முறைகள் சிறப்பான மரபு வழி மாறாது மிகக் கவனமுடன் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களும் மேற் பூச்சுகளும் கட்டிட அமைப்புத் திறனில் பாண்டியர்களுக்குரிய பண்பு என்று போற்றும் முறையில் மிகக் கவனமுடன் செய்யப்பட்டுள்ளது. ஆதிரங்கம் மையரங்கம் இரண்டும் மைசூர் மாநிலத்தில் உள்ளன. கண்டரங்கம் (அந்தரங்கம்) என்று அழைக்கப்படும் மூன்றாவது அரங்கம் தமிழகத்தில் திருச்சிராப் பள்ளிக்கு அண்மையில் மூன்றாவது கல் தொலைவில் இருக்கிறது. இது இரு ஆறு-காவிரியும் கொள்ளிடமும் பிரியும் இடத்து 20 கல் நீளம் நட்ட நடுவே இரண்டு கல் அகலமுடையது. திருவரங்கம் திருவுக்கு அரங்கமாக இருப்பதினாலும் ஆற்றுக் கிளைகளின் நடுவே இருப்பதினாலும் சிரிரங்கம் (திருவரங்கம்) என்ற பெயரைப் பெற்றது. பொன்னிவள நாட்டிலே இயற்கையின் பேரமைப்பைத் தழுவி எடுப்பிக்கப்பட்டது வைணவர்களின் பெரிய கோயிலாகும். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியப் பேரரசர் செல்வாக்கு எழுந்தது. திருவாரூர் கீழக் கோபுரம், சிதம்பரம் மேலைக் கோபுரம், ஆவுடையார்கோயில் கோபுரம் ஆகியவைகள் பாண்டிய மன்னர்களால் கட்டி முடிக்கப் பெற்றன. இந்தக் கோயில்களில் விமானம் சிறிதாகவும் கோபுரம் பெரிதாகவும் காணப்படுகின்றன. 16-ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு மிகுந்த கிருஷ்ண தேவ ராயன் என்ற நாயக்க மன்னர் சிதம்பரம் வடக்குக் கோபுரத்தையும் திருவண்ணாமலை மேலைக் கோபுரத்தையும் கட்டி, தமிழகத்தில் நாயக்கர்கள் பாணியை நிலை நாட்டியுள்ளார். கோபுரங்களில் சுதைச் சிற்பங்கள் அதிகமாகவும் கோபுரத்தின் உச்சியில் இருபக்கங் களிலும் யாழ் முக வேலைப்பாடுச் சிறந்து விளங்குகின்றது. மதுரை நாயக்க மன்னர்கள் சிற்பச் சிறப்புமிக்கக் கோயில்களைக் கட்டியுள்ளனர். எடுத்துக் காட்டாக 17-ஆம் நூற்றாண்டின் திருமலை நாயக்கர் மரபில் வந்தவர்கள் கட்டிய மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைக் காணலாம். நான்கு மூலைகளும் நேர்கோடு போன்று அமைப்பது ஒரு முறை. இவை உள் வளைவாக வளைந்திருப்பது மற்றொரு முறை. இரண்டாவது எடுத்துக்காட்டு முறைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரமாகும். இக்கோபுரங்களில் எண்ணற்ற சுதைச் சிற்பங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் கட்டிய பின்னர் எழுந்த சிரிவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் அதைப் போல உயரமானது தான். ஆனால் சிற்பவேலைப்பாடுகள் எதுவும் இல்லை. திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி வட்டத்திலுள்ள களக்காடு என்னும் ஊரில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்று எழுந்தது. அதில் சுதை வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் நிறைய உள்ளன. 17 ஆம் 18 - ஆம் நூற்றாண்டுகளில் பல சிறிய கோபுரங்கள் கட்டப் பெற்றுள்ளன. அவற்றில் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் குறைவு. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காளையார் கோயில்புரம் நல்ல எடுத்துக்காட்டாக மிளிர்கின்றது. கோ என்றால் அரசன், இல் என்றால் வீடு, கோயில் என்றால் அரசன் வீடு என்று பொருள் கொள்கின்றனர். அதோடு பௌத்தர் அரச பதவியைத் துறந்து துறவியாய்விட்டதால் அவர் வீடு வழிபடும் கோயிலாற்று. அப்பால் தெய்வம் உறையும் திருவிடத்தே கோயில் என்று பெயர் எழுந்து விட்டது. கோயில் என்ற பதம் எப்படி வந்தாலும் வரட்டும், இன்று தெய்வம் உறையும் இடத்திற்கே கோயில் என்று பொருள் கொள்ளப்படுவது உலக வழக்காயிற்று. அதே போன்று மன்னன் தன் இல்லிற்குப் புகும் வாயில்தான் ஆதியில் கோபுரம் என்றிருந்து இப்பொழுது இறைவன் இல்லிற்குப் புகும் வாயிலும் கோபுர வாயில் என்றாயிற்று என்றும் கூறப்படுகிறது. இக்காலத்தில் கட்டப்பட்டு வரும் கோபுரங்கள் மிகச் சிறியன. அவைகளில் சிற்ப வேலைப்பாடுகளும் குறைவு. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கோபுரம் பெரிது. ஆனால் சிற்ப வேலைப் பாடுகள் மிகக் குறைவு. கோபுரங்களில் பல்வேறு உருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. விரும்பத்தகாத ஆபாச சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் வாயில்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் ஒற்றைப்படை யாகவே அமைந்திருக்கும். வாயில்கள் மூன்றாக இருந்தால் கனவு நனவு சுழுத்தி எனும் மூன்று அவதைகளையும், ஐந்தானால் ஐம்பொறிகளையும் ஏழானால் ஐம்பொறிகளுடன் மலம் புத்தி ஆகிய இரண்டையும் சேர்த்து ஏழாகக் குறிக்கும் என்பர். அத்தனை வாயில்கள் இருந்தாலும் தரைமட்டத்தில் அமைந்துள்ள வாயில் வழியாகத்தான் கோயிலின் உட்புக முடியும். இவ்வாறே கடவுள் நாட்டம் செல்லும் போது நம்மனம் ஒன்றே பயன்படும் என்பர். கோபுர வாயிலைக் கடந்து சென்றால் முதன் முதலாக நாம் காண்பது பலி பீடம். அப்பால் காணப்படுவது கொடி மரம். இறுதியில் காணப்படுவது திரு உண்ணாழிகை. அதன் நடுவே இலிங்கம். இடையில் இருப்பது நந்தி. இந்த முறையில் தமிழர்கள் கோயில் அமைப்பை ஒரு மரபாக வைத்துள்ளார்கள். சிற்ப நூற்களும் ஆகமங்களும் இந்த அமைப்பை - ஒழுங்கை (Order - I) ஆதரிக்கின்றன. முதலில் காண்பது பலி பீடம்; அப்பால் கொடி மரத்தைக் கண்டதும் மக்கள் தம் உள்ளத்தைப் புனிதப் படுத்தி தம் உள்ளத்தில் இறைவன் உவந்து உறைவதற்கு ஏற்ற இடமாகச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்துடன் கொடி மரத்திற்கு அப்பால் அடி எடுத்து வைக்க வேண்டும். இதை நினைப்பூட்டவே கொடி மரம் அங்கு நிற்கிறது. பலி பீடத்தின் அண்மையில் சென்றதும் உள்ளத்தில் உள்ள தீய எண்ணத்தை அங்கு பலியிட்டு - அதாவது தீய எண்ணங்களை உள்ளத்தை விட்டு அகற்றி - உள்ளத்தைப் புனிதப் படுத்தி - தூய்மையானதாய் - பளிங்கு போல் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பலிபீடம் நினைவூட்டுகிறது. அப்பால் மக்கள் இறைவன் திரு உருவைச் சுற்றி வலம் வருதல் பிராணயாம முறையை காட்டுகிறது. பலிப் பீடத்திற்கு அடுத்தாற் போல் தெய்வ உருமுன் காணப்படுவது நந்தி. அது தெய்வத்தின் வாகனம். அது ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மா உள்முகமாக ஆன்மாவை நோக்குகிறது. ஆன்மாவின் குறிக்கோள் இறைவனை அடைவது என்று அது காட்டுகிறது. இறைவனை அடைவதற்கு எப்பொழுதும் உள்ளம் கடவுள் நாட்டத்திலே இருக்க வேண்டும் என்று நந்தி - வாகனம் இறைவனை நோக்கியவாறே அமைந்திருக்கும் நிலை அறிவிக்கிறது. இறைவனை வலமாகச் சுற்றிவரும் மக்கள் வாகனத்தையும் சேர்த்தே சுற்றி வருகிறார்கள். வாகனத்திற்கும் இறைவனுக்கும் குறுக்கே செல்வது வழிபாட்டு முறைக்கு மாறாகும் இடையூறு செய்வதும் ஆகும். திரு உருவை வலம் வந்த பின் மக்கள் கருவறையின் - திரு உண்ணாழிகையின் வாயிலை அடைவர். திருவறையின் வாயிலில் திரையிடப் பட்டிருக்கும். அவ்வறையிலோ சாளரங்கள் கிடையாது. இருளாக இருக்கும். அங்கு காற்றும் வெளிச்சமும் கிடையாது. திரு உண்ணாழிகை காற்றும் வெளிச்சமும் இல்லாத இடமாக இருக்க வேண்டும். அதன் நடுவே இலிங்கம் இருக்கும். ஆனால் பார்க்க முடிவதில்லை. இது இவ்வாறே இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கருவறையின் அருகிற் சென்று இறைவனைக் காண ஒளி வரும் வரை வழிபட நிற்கும் பக்தன் காத்திருக்கின்றான். சிறிது நேரத்தில் மணியொலி கேட்கும். திரை அகலும். கருப்பூர ஆராதனையாலும் விளக்கினாலும் வெளிச்சம் உண்டாகிறது. இறைவனின் திரு உருவம் காட்சி அளிக்கிறது. மனமே கருப்ப கிரகம். அங்கு நிகழ வேண்டிய ஞானக் காட்சியின் புறத் தோற்றமே இது. மனத்தை உள் முகமாக்கிச் செலுத்தும் ஆன்ம சாதகன் முதலில் கார் இருளைத் தன்னுள் காண்கின்றான். மனத்தை உள்முகமாக அமைத்து வைத்திருக்கப் பழக வேண்டும். அப் பழக்கத்தால் உள்ளத்தினுள் இனிய ஓசையும் பின்னர் ஞான ஒளியும் உண்டாகின்றன. ஆகம விதிப்படி கோயில்களும் சுற்றுமதில்களும் பெருங் கோயில் கோபுரமும் வாயிலும் கொடி மரமும் பலிபீடமும் வாகனமும் திரு உண்ணாழிகையும் உடையனவாகி நம் உள்ளக் கோயில் அமைந்திருக்கும் முறையை உணர்த்துகின்றன என்று சமய நூற்கள் எடுத்துக் காட்டுகின்றன. திரு மதில்கள் ஒவ்வொரு கோயிலிலும் புறமதில்களும் அக மதில்களும் உண்டு. இந்த மதில்களே கோயிலுக்குப் பாதுகாப்பாக இருக் கின்றன. பெரிய கோவில்களின் திருமதில்கள் உயரமாகவும் உறுதி யாகவும் கட்டப்பட்டுள்ளன. செங்கல்லாலும், கருங்கல்லாலும் இம்மதில்கள் அழகுறக்கட்டப் பெற்று சிறப்பு வெள்ளைப் பட்டைகள் மேலிருந்து கீழாக வரிசையாகத் தீட்டப் பெற்றிருக்கும். மதில்கள் ஒன்று முதல் பதினொன்று வரை அடுக்கடுக்காய் கட்டப்பட்டிருக்கும். இதனை உடல் அமைப்பிற்கும், அண்ட பிண்டங்களுக்கும் உவமையாகக் கூறுவர். ஊரில் ஒரு பிள்ளை கோயில் இருந்தால், கோயில் நகரத்தில் பதினொன்று இருக்கும். மதில்களின் முன்னால் ஒரு வாயிலும் முன்பின் இரண்டு வாயிலும் நாற்புறங்களில் நான்கு வாயிலும் அமைக்கப்பட்டிருக்கும். மதில்களின் ஒவ்வொரு மூலையிலும் கருடன் நந்தி போன்ற உருவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். திருவண்ணாமலைக் கோயிலின் புற மதிலில் அதைக் கட்டிய விஜய நகர நாயக்கர் மன்னரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சி ஏகாம்பர நாதர் கோவில் புற மதில்களின் மீது புத்த சமய உருவங்கள் காணப் படுகின்றன. சில மதில்களில் உட்புறம் திருச்சுற்று மண்டபங்களும் உண்டு. இம்மண்டபங்கள் மதிலுக்கு ஆதரவாக இருப்பதோடு மக்கள் உட்கார்ந்து இளைப்பாறவும் வசதியாக இருக்கின்றன. மதில்களின் மேல் அழகிய பூ வேலைப்பாடுகளும் காணப்படு கின்றன. இம்மதில்களிலே தான் பெரும்பாலான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில், கோயில் வரலாறும் நாட்டு வரலாறும் உள்ளன. மதில்கள் உள்ளிருக்கும் படிமங்கள், அணிகள், வெள்ளிச் செம்புப் பாத்திரங்கள், அழகு தரும் விலங்குகள், ஆடைகள், வெள்ளி, தங்க வாகனங்கள், சப்பரங்கள் முதலிய கலைக் கருவூலங்களைப் பாதுகாக்கும் அரண்களாகவும் வரலாற்று ஏடுகளாகவும், சிற்பப் பண்டாரங்களாகவும் திகழ்கின்றன. இத் திருமதில்களைக் கட்டியவர்கள் அது என்றும் அழிந்து படாமல் பழுது பார்ப்பதற்காக நில தானஞ் செய்திருக்கின்றார்கள். ஆதியில் அக நாழிகை மட்டும் கட்டப்பட்டு உள்ளே சிவலிங்கம் மட்டும் நிலைபெறச் செய்யப் பெற்றன. எந்த தெய்வத்திற்கும் ஆதியில் தனிக் கோயில் கட்டப்படவில்லை. பின்னால் திருஉண்ணாழிகையை அடுத்து உமா தேவித் தனி அக நாழிகை கட்டப்பட்டது. பின் திருச்சு மதில்கள் தோன்றியதால் ஒவ்வொரு மதிலுக்கும் நான்கு வாயில்கள் எழுந்தன. அந்த உட்சுற்று மதில்கள் ஒவ்வொன்றிற்கும் நான்கு கோபுரங்களை எழுப்பினர். எனவே மதுரை, திருவண்ணாமலை, சிதம்பரம், திருவரங்கம் முதலிய கோயில்களில் பல கோபுரங்கள் எழுந்தன. மிகப் பெரிய கோபுரங்கள் மதுரை, திருவண்ணாமலை, சிதம்பரம், விருத்தாசலம், திருவில்லிப்புத்தூர், திருச்செந்தூர், இராமேச்சுவரம் முதலிய இடங்களில் உண்டு. கோபுரங்கள் ஏழு நிலைகள் உடையதாய் உயரே ஏறப் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் பெரிய அறைகள் இருக்கின்றன. ஒரு நிலையில் 300, 400 பேர்கள் இருக்கத் தக்க அளவுகள் கொண்டது. சிதம்பரம் கோயில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. கீழக் கோபுரத்தைக் கோப்பெருஞ் சிங்கன் கட்டினான். இங்கு தான் நூற்றெட்டு விதமான நடன வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச் சுற்றுகளில் உள்ள மண்டபங்களில் பிற்காலத்தில் பரிவார தேவர்கள் இடம் பெற்றன. நாளடைவில் பிரகாரங்களில் - திருச்சுற்றுகளில் உள்ள மண்டபங்களில் பிள்ளையார், முருகன் திருமால், ஆட வல்லான் போன்ற திரு உருவங்கள் இடம் பெற்றன. பின்னர் பிரகாரத்தில் இவைகளுக்குத் தனித்தனிக் கோயில்கள் எழுந்தன. திருச்சுற்றில் தெய்வத் திரு உருவங்கள் பல இடம் பெற்றதோடு மூலவர் அமர்ந்திருக்கும் அக நாழிகையின் அண்மையில் உமா தேவிக்குத் தனிக் கோயில் இடம் பெற்றது. திருச்சுகளில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் நவக்கிரகங்களும் இடம் பெற்றன. மன்னர்களும், அரசிகளும் மூலவர்கள் இடம் பெற்றுள்ள அக நாழிகையின் வாயிலில் கையில் தீபம் தாங்கி நிற்கும் நிலையில் வெண்கல உருவங்கள் வைக்கவும் அந்த உருவங்களின் கையில் ஏந்தி நிற்கும் அகல் விளக்குகளுக்கு நெய்க்கென ஆடுமாடுகளும் அவைகள் மேய்வதற்கு புஞ்ச நிலங்களும் மானியங்களாக அளிக்கப்பட்டு அதைக் காட்டும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தீட்டப்பட்டன. நமது சாசனங்கள் பல திருவிளக்கு எரிக்க விடப்பட்ட ஆடுமாடுகளும் நஞ்சை புஞ்சைகளும் பொற்காசுகளுமாகவே காணப்படுகின்றன. இந்த அதிகாரம் எழுதத் துணையாய் இருந்த நூற்கள் 1. Dravidian architecture - Prof. Jouveal Dubuel (Madras 1917) 2. Archaelogicdu and de Lirmdef Pt 1 (Paris) 1914 3. The chola Temple - C. Sivaramoorthi. New Delhi 1980. 4. Annual Report of South Indian Epigraphy (Madras 1889-1980) 5. The Colas - K. Neelakanta Sastry Madras 1937 6. The Great Temple of cho Janyose Madras 1935. 7. The Dravidian culture and its diffusion 8. ஆலயங்களின் உட் பொருள் விளக்கம். 9. மதுரை மீனாட்சி கும்பாபிடேக மலர் - மதுரை 1963  சாத்தான்குளம் அ.இராகவனாரின் வாழ்க்கைச் சுவடுகள் நெல்லையின் எல்லையில் ஏலே! அண்ணாட்சி வந்தாகளா? என்ன சொன்னாக? எனக்குத் தான் அயித்துப் போச்சு? - எங்காவது இந்தத் தமிழைக் கேட்டால் அது நெல்லை மாவட்டத்தார் குரல் என்று தெரிய வேண்டும். இந்த மாவட்டத்தில்தான் குற்றால அருவியின் கொஞ்சும் இசை! கிருட்டினாபுரத்து சிலைகளின் பேரழகு! ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்! தன் பொருநையே நாகரிகத்தின் தலைவாயில் என்று போற்றப்படும் ஆதித்தநல்லூர்! சிவஞான முனிவர், குமரகுருபரர், திருமங்கையாழ்வார், குலசேகரஆழ்வார், நம்மாழ்வார், அதிவீரராமபாண்டியர், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், என்றி ஆல்பர்ட்டு கிருட்டினார், திருகூடராசப்பக் கவிராயர் .. இன்னும் இன்னும்.. புதுமைப்பித்தன், மாதவையா, கா.சுப்பிரமணியனார், வையாபுரியார், பூரணலிங்கனார், சோமசுந்தர பாரதியார், பாரதியார், உமறுப்புலவர்.. இன்னும் இன்னும் தமிழ் மீட்பர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்- போன்ற அறிஞர்களின் அணிவகுப்பு இம்மாவட்டத்தின் சிறப்பேயாகும். ஓ! நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவனாரும் பிறந்து பெருமை சேர்த்தது இம்மாவட்டமே! நாகசுரமும், வில்லுப்பாட்டும் இங்கு புகழ் சேர்க்கும் கலைகளாகும். சாத்தான்குளம் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள ஊராகும். வடிவேற்கவிராயர், கனகசபாபதிக் கவிராயர், குழந்தை வேல்சாமி போன்ற கவிஞர்கள் பிறந்து புகழ்பெற்ற ஊராகும். நுண்கலைச் செல்வர் அ.இராகவனார் அவர்கள் 22.04.1902 ஆம் ஆண்டு தோன்றினார். இவர்தம் பெற்றோர் திருவாளர் அருணாசலக் கவிராயர், திருவாட்டி ஆவுடையம்மாள் ஆவர். இவரது பாட்டனார் வடிவேற்கவிராயர் சிறந்த முத்தமிழ்ப்புலவர். இவரது முப்பாட்டனார் வீரபாகு ஓதுவார் மிகச்சிறந்த கவிஞர்; அதோடு வழக்கறிஞரும் கூட! இவரது முப்பாட்டனாரின் தம்பி அருணாசலக் கவிராயர் திருவனந்தபுரம் அரண்மனைப் புலவராக ஒளி வீசினார் என்பது மட்டுமின்றி குட்டிக் கவிராயர் என்ற அடைமொழியோடும் வாழ்ந்தவர். நுண்கலைச் செல்வரின் பிள்ளைத் திருப்பெயர் இரத்ன இராகவ உதய மார்த்தாண்டன் கவிராயர் என்பதாகும். பின்னர்தான் இராகவன் என்று மட்டுமே அழைக்கப்பட்டார். இளந்தைப் பருவத்தில் பிறந்த சாத்தான்குளத்திலேயே தொடக்கக்கல்வி பயின்றார். நெல்லை அரசினர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியம் பயின்று ஆசிரியரானார். சுப்பிரமணியக் கவிராயரிடம் தமிழ் முடுதறக் கற்றும், தொண்டைமான் பிரம்ம முத்தையனிடம் ஓவியமும் கற்று சிறந்த ஓவியராக விளங்கினார். ஆசிரியத்தின் செழுமையில் 1924-1930 முடிய சமாலியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியப் பணியாற்றினார். ஆழ்வார் அம்மாள் பெண்கள் பள்ளி, இபுராகிம் முசுலீம் பெண்கள் பள்ளி, சமாலியா முசுலீம் பள்ளி, திருநாவுக்கரசு படிப்பகம், புலமாடன் செட்டியார் மேனிலைப்பள்ளி போன்ற பல்வேறு நிறுவனங்களைச் சொந்த ஊரிலேயே தொடங்கிப் பெருமை சேர்த்தார். இயக்கங்களின் வளமையில் சுயமரியாதை இயக்கம் நிகரமைய (சோசலிச) இயக்கம் பேராய இயக்கம் (காங்கிரசு) ஆகிய இயக்கங்களில் பொறுப்பு வகித்தார். நெல்லை மாவட்டப் பேராய உறுப்பினர், திருச்செந்தூர் வட்டப் பேராயச் செயலாளர், தமிழ்நாடு பேராயக் கட்சி உறுப்பினர் என இவர் அரசியலிலும் காலுன்றியிருந்தார். பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நட்பு கிடைத்த பின்னர் ஈரோடு பகுத்தறிவுக் கழக அமைச்சரானார். ஏராளமான பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார். இவரெழுதிய, கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்? “bg©QÇikí« kjK«” v‹w üšfŸ gšyhÆu« gofŸ ɉW ‘ïuhft‹ ah®? என்பதைத் தமிழுலகம் அறியச் செய்தது. குடும்பத்தின் விளைவில் சாத்தான்குளம் அருணாசலக்கவிராயருக்கும் ஆவுடையம்மாளுக்கும் மக்கள் அறுவர். இவரே முதல் மகன். குடும்பத்திற்கும் .. கொஞ்சு தமிழுக்கும் இவரே முதல்வர். 2. குமார வடிவம்மாள் 3. வடிவேல் (இளந்தையிலே மறைந்தார்) 4. குமாரசாமி 5. காந்திமதி ம.பரமசிவன் .. ஒரே ஒரு பெண்மகள். அவர்தாம் ச. வீரலட்சுமி அம்மையார். இராகவனார் தாய்மாமன் மகளையே திருவாட்டி சுந்தரத்தம்மையாரை மணந்து இனிய இல்லறத்தின் நன்கொடையாக மல்லிகா, சுதந்திரா,தமிழரசி, இரா.மதிவாணன் என மூன்று பெண்மக்களையும், ஒரு ஆண்மகனையும் வழங்கினார். தன் மக்களை பலர் மறுத்தபோதும் தமிழ வழிக் கல்வியிலேயே சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். தன் தங்கையார் திருமணம் நீங்கலாக எல்லாத் திருமணங்களையும் சீர்திருத்தத் திருமணமாகவே நடத்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை என்று அடிக்கடி சொல்லியும் தாயும் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். சீவானந்தம், சாந்தம் சுந்தரவடிவேலு- போன்ற இவரோடு நட்புக் கொண்டு தமிழில் கொண்டுள்ள ஐயப்பாடுகளை அறிந்து கொள்வார்களாம். குறள் ஒப்புவித்தால் - காசு கொடுத்து ஊக்கப்படுத்திப் பாராட்டுவது இவரது இனிய வாழ்வியலாகும். அது இளஞ்சிறார்களாயிருத்தல் வேண்டுமாம்! அயலகக் களிப்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயலகங்களுக்குச் சென்று மீண்ட நுண்கலைச் செல்வர் தமிழறிஞர்களான எங்கும் செல்லும் காசு.. கா.சுப்பிரமணியனார், தீந்தமிழ்ப்புலவர் திரு.வி.கலியாணசுந்தரனார், தந்தை பெரியார், தாரூல் இசுலம் ஆசிரியர் பா.தாவூத்சா, இலங்கை முதலமைச்சர் பண்டாரநாயக, கண்டி மேயர் சார்ச்-டி-செல்வா, அமைச்சர் பெரி.சுந்தரம் , மேயர் சரவணமுத்து, தமிழக சமன்மைச் சிந்தனையாளர் ப.சீவானந்தம் போன்றோரோடு நெருங்கிய தொடர்பு அவர்களால் பன்முறை பாராட்டப் பெற்றார். 1935 ஆம் ஆண்டு பெரியாரிடமிருந்து விலகி தோழர் ப.சீவானந்தத்தோடு சேர்ந்து சுயமரியாதை சமதர்மக் கட்சி என்றொரு கட்சியை நிறுவி அறிவு என்னும் திங்களேட்டிற்கம் ஆசிரியரானார். 1932இல் இலண்டன் பகுத்தறிவு சங்கம், விடுதலைச் சிந்தனையாளர் மன்றம், அமெரிக்காவிலுள்ள உண்மை நாடுவோர் கழகம், போன்ற அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு உறுப்பினராகி பல்வேறு நூல்களை மொழியாக்கம் செய்து தந்தார். இலங்கையில் மனிதருள் மாணிக்கம் நேரு பெருமகனுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் நினைவு மலர் வெளியிடப் பெரிதும் உதவினார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு என்ற இதழில் தொடர்கட்டுரை எழுதி வர அதன் ஆசிரியா கோ.சாரங்கபாணி வேண்டினார். தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற இவரது நூல் இளங்கலை வகுப்பு களுக்குப் பாடநூலாக மதுரைப் பல்கலைக்கழகம் ஏற்றுப் புகழ் கொண்டது. ஆய்வின் கூர்மையில் அவரது ஊருக்கு அண்மையிலுள்ள ஆதித்தநல்லூருக்குச் சென்றும், பல்வேறு பொருள்களைப் பார்வையிட்டும், சென்னை அருங்காட்சியகம் சென்றும் ஆய்வு செய்துதான் ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் என்ற நூலை எழுதியுள்ளார். சிந்து வெளி நாகரிகத்திற்கு ஒப்பிட்டுப் பார்த்து ஏராளமான கருவிகள், பொருள்கள் ஆகியவற்றின் படங்களை, அணிகலன்கள், விளக்குகள் ஆகியவற்றின் படங்களைத் தொகுத்து வெளியிட்டிருப்பது .. இவரது பனிமலை முயற்சிப் பாங்கினை- நமக்கு உணர்த்துகிறது. யாருமே செய்யாத புதுமையாக நுண்கலைச் செல்வர் அவர்கள் தன் மனைவியார் திருவாட்டி சுந்தரத்தம்மையாரைக் கொண்டு கலைநூற் பதிப்பகம் நிறுவி பல நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பணி செய்தார் என்பது உலக வரலாற்றில் புதுமையாகும். தம்மிடமிருந்த ஏராளமான காசுகள், நூல்கள், அரிய பொருள்கள் - ஆகியவற்றைத் திருச்சியிலுள்ள ஈபர் கண்காணியர் கல்வி நிறுவனத் திற்கு வழங்கினர் என்று அறிகிறோம். அவை அரிய கலைப் பொருள்களாகத் துலங்குகின்றன. இலங்கையில் ஒரு சின்ன நூல் அந்தக் காலத்தில் நூறு உரூபா கொடுத்து வாங்கியுள்ளார் எனில் அவரது அறிவுத் தாகம் நமக்குப் புலப்படும். பாராட்டுத் தேன்மழையில் 1966 ஆம் ஆண்டு தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சட்டப் பேரவைத் தலைவர் மாண்பதை செல்லப்பாண்டியனார் தலைமையில் தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்குப் பொன்னாடை போர்த்தி நுண்கலைச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியது. 1937ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முகம்மது நபி உலக சமாதானத்திற்குச் செய்த தொண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றார். 1966-உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்ற போது தமிழ்நாட்டுக் காசுகள் என்ற கட்டுரை மிகச் சிறந்த கட்டுரையாகப் போற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பழங்கால மரக்கலங்கள் 46 வடிவங்களை நெய்மவண்ணத்தில் (Oil paint) வரையப் பெற்றுக் காட்சிக்காக்கி பேரறிஞர் அண்ணாவே பெரிதும் போற்றியும், பாராட்டியும் மகிழ்ந்தார். தமிழ்வளர்ச்சி மன்ற உறுப்பினராகி தமிழ்நாட்டு வரலாறு தொல் பழங்காலம் நூல் வெளியிடும் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது நினைந்த போற்றத்தக்கது. தமிழர் நாகரிகத்தை - பண்பாட்டை விளக்கும் .. ஏராளமான கலை நூல்கள் .. கலைப்பொருள்கள்.. நாணயங்கள், புதிய..ahU« கண்டுபிடிக்காத பழந்தமிழ்ப் பொருள்கள்.. இவர் தேடித் தேடிச் சென்று பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். முடிவின் மடியில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் .. தமிழ்ச் செம்மல்கள் பேரவை நடத்தும் ஐந்தமிழ் விழா.. 7.3.1981 காலை 10.00 மணியளவில் பழந்தமிழர் அணிகலன்கள் .. அரிய பேச்சு .. நூலாக வந்துள்ளது.. ஐயோ.. 8.3.1981 காலை.. 10.00 ‘பழந்தமிழர்áற்பக்கலை- ïதுjலைப்பு.E©fiy¢ bசல்வர்rத்தான்குளம்m.இராகவன்எ‹றதÄழ்ப்gரறிஞர்..உiuah‰¿¡ கொண்டிருக்கிறார்.. உணர்ச்சியுரை.. ஐயோ! மயக்கமாக வருகிறதே என்கிறார். .. மருத்துவமனைக்குச்கொண்டுசெல்கின்றனர்..11 மணிக்கு தம் எழுபத்தொன்பதாம் அகவையில் பேரா இயற்கை எய்துகிறார்.. 22.4.1902லே தோன்றியதமிழொளி..08.03.1981 .. மறைகிறது! சாவிலும் தமிழ்ப்படித்தே சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்தே வேக வேண்டும் - என்ற கவிதை வரிகள் இவர்தம் புகழைப் பேசிக்கொண்டே இருக்கிறது ஆ.முத்துராமலிங்கம் தச்சநல்லூர் 1. The part played by labour in the transition from age to man - Friderich Engles. 1. The Tamils who have enherited a very ancient culture speak a language forming a single Dravidian language family. The Dravidian belong to a most ancient ethnical group in India. They had inhabited it long before the militant Aryans, described in the Rigveda arrived in this “wonderland”. At present the Dravidian language are spread in South India. but at one time they were spread all over central and even north India; moreover, there are data that testify to the fact, that thousands of years ago peoples speaking the Dravidian language also loved in Baluchistan and the south of Iran and had probably been the first inhabitants leading a settle life in Mesopotamia and were the predecessors of the Sumerian whose civilization is considered to be the oldest on our planer. The large continent of former times sclater an English man has called Lemuria from the monkey like animals which inhabited it and it is at the same time of great importance from being the probable cradle of the human race which in all likelihood here first developed out of anthropoid apes” - Prof. Ernest Haeckel. The Indian ocean formed a continent which extended from Sunda Islands along the coast of Asia to the east coast of Africa. This large continent is of great importance from being the possible crade of human race. There are a number of circumstances (specially chronological facts). Which suggest that the primeval home of man was a continent now sunk below the surface of the Indian Ocean which extended along so with of Asia as it is at present (and probably in direct connection with it.) towards the east as far as further India and the Sunda Island towards the west as far as the Madagascar and the south shores of Africa. 1. Inveslications in relation to race show it is by no means impossible the Southern India was once the passage ground by which the ancient pregenitors of northern and mediterranean races proceded to the parts of the globe which they mow inhabit. Human remains and traces have been found in east coast of an age which is indeterminate beet quite beyond the ordinary Cakulations of history. Antiquarian rescrch is only now beginining to find mean of supplementing the deficiancy Caused by the absewce of materials Constructed or Collected by usual historical methods - These results are specially to be ragarded as without doulet, the people who have for many ages Occuppied this part on of the peninsula are a people influencing the whole world not perhaps by moral and intellectul attributes to a great extent by superior physical qualities - Dr. E. Maclean 2. The vast remains of cities and Temples in Mexico Yucaton also strangely resemble those of Egypt. The very carving and decoration of the temples of America Egypt and India have much in common which some of the mural decorations are absolutely identical. Amongst the Indians of North America there is a very general legend that their fore-fathers came from a land ‘towards the sunrise’ Iowa and Dacola Indians according to Major J. Lind belived that all the tribes of Indians were formerly one and dwelt together on an island towards the sunrise. The story of Allantis. The ethnic type of Sumerians so strongly marked in their statures and reliefs, was so different from those of the races which surrounded them, as was their language from those of the semitics Aryans or others. The face type of the average Indian of to-day is no doubt much the same as that of his Dravidian race ancestors thousands of years ago. Among the modern Indians as amongst the modern Greeks or Italians the ancient Pre-Aryan type of the land has (as the primitive of the land always does) survived, while that of the Aryan conqueror died out long ago, and it is to this Dravidian ethenic type of India that the Sumerians bear most resemblence, so far as we can judge from his momuments. He was very like a Southern Hindu of the Dekkan (who still speaks Dravidian languages) and it is by no means impossible that the Sumerians were an Indian race which passed certainly by land perhaps also by sea through persia to the valley of two rivers. It was in the Indian Home (perhaps the Indian valley) that their writing may have been invented and progressed from a purely pictorial to a simplified and abbreviated form which afterwards in Babylonia took an its peculiar uniform appearance owing to its being written within a square ended stilus on soft clay. On the way they left the seeds of culture in Elam.... there is little doubt that India must have been one of the earliest centres of civilization and it seems natural to suppose that the strange unsemitic unaryan people who came from the east to civilise the west were of Indian origin, specially when we see with our eyes how very Indian the Sumerians were in type “F.N.” The civilization was not Aryan. The culture of India is Pre-Aryan in origin as in Greece the conqured civilization and his degeneration to the Dravidians as the Aryan Greek did to Mysenoeans - An ancient History of the Near East - Dr. R.H. Hall 1. Light from the Ancient past-jack Hinegan London 1941. P. 88 2. Hindu superiority - Har Basus Sarda B.A.F.R.S.L 1931. p. 121. (Madras) Historical Researche Haran, vol II P. 310 1. Links with past ages - E.F. Orion. P.P.215-222. 2. The gate ways of India - colonel Sir Thomas Holdich. P.53. 1. The ethnic type of Sumerians, so strongly marked in their statures and reliefs was so different from those of the races which surrounded them as was their language from those of the semitics Aryans or others. The face type of the average Indian of to-day is no doubt much the same as that of his Dravidian race ancesters thousand years ago.... Dravidian ethnic type of India that the Sumerians bear most, resemblance so far as we can judge from his monuments. He was very like so southern Hindu of the Dekkan (who still speaks Dravidian languages.) and it is by no means impossible that the Sumerians were an Indian race which passed certainly by land perhaps also by sea through Persia to the valley of two rivers. It was in the Indian Home (Perhaps the Indus valley) that their writting may have been invented.....” An Ancient History of the Near East - Dr. R. H. Hall. 1. This is the sort of uniformity illustrated by the relics of Archaic Sumerian civilization from Eridu to kish. But after all the distance between those cities is only half that separtaing Mohenjodaro from Harappa, and these points do not mark the extreme limits. Identically the same civilization has been found a hundred miles downstream from Mohenjo-daro at Amri and upstream it is reported as far as Rupari on the upper sutlej. The area embraced by the Indus civilization must have been twice that of old kingdom Egypt and probably four times that of sumer & Akkad” - NEW LIGHT ON THE MOST ANCIENT EAST _ V. Gordon childe B. Litt. Professor of Prehistoric Archaeology in Edinburg university. (LONDON) 1934 - P.206. 1. The original temple in which the come and its shrine or the alter were pleaced was but a promlech or enclosure squire or round, made by setting up stones. The remains of such enclosures with a dolmen on one side are fou . . . in phoenicia. It was with this sacred ideas of sacred enclosure or gilgal with its pillar or metzebah that hypaethrab temples of Byblusand baal bek developed. . . . . with sacred stone to Hobal was another such temple syrian stone core. C.R. Conder.. “This is the mattters of early buildings India has been influenced by Egypt Phonecia and Chaldea” - Thurstan. 1. The gates which lead to the Sanctuary ought to be turned to the east in such a manner, that it often happens that the sun in rising on certain days in the year throws its light on the lingam which is in the sanctuary” - Dravidian Architecture - G.K. Jouvean Qubreuil. Madras 1917. 1. டேலண்டு = 200 தங்க நாணய நிறையுள்ளது. 2. River of Life on Haith of Man in all Lands. Part II - Major General J.G.R. Hurlong. 1. Pre - historic ancient Hindu India - R.D. Banerji * Mohenjo - Daro and Indus Civilization Sir John Marshall. Vols 1-3. 1931. 1. Mohenjo Daro - Dr. R.E.M. Wheeler (Karachi) 1950. 1. இந்தியக் கட்டிடச் சிற்பம் (கலைக் களஞ்சியம் தொகுதி 3)-மொ.க.தேசாய். பீ. ஏ. டிப்ளமா தொல் பொருள் இயல் (லண்டன்) எவ். ஆர். ஐ. பி. எவ். ஐ. ஐ. ஏ கட்டிட நுண்கலை அறிஞர் மராமத்து இலாக்கா. சென்னை (1956). 1. Robert Bruce Hoot. The Hoot Collection of Indian Prehistoric and Proto historic Antiquities - Notes on their Age and Distributions. P-8 1. We have a continuity of Culture from Paleolithic to Neolithic from Neolithic to Megalithic and Megalithic to Iron Age in South India. It cannot be that this primative indigenous culture was buried by the invading Dravidian. Do escape out of the difficulty, an ingenious theory of Proto - Dravidian is an insound as the theory of a Dravidian invasion. My firm conviction is that the ancient Tamils were inheritors of the lethic cultures of South India” - Origin and spread of the Tamils - U.R. Rama chandra Dikshitar. M.A (Madras) 1971. P. 15. 1. பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து - கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ-எம்.எல் (சேலம்) 1939. 2. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் - சாமி. சிதம்பரனார் (சென்னை) 1961. 1. பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல் காப்பியப் பொருளதிகாரக் கருத்து - கா. சுப்பிர மணிய பிள்ளை M.A., M.L, (சேலம்) 1937- பக் 23. g®£ »ny£l® ngh‹wt®fŸ e‹F És¡»íŸsd®.* 1. If Kali Siva and Vishnu are not Vedic deities and Certainly they are not, they can hardly be Aryan there seems no other possible alternative than to suppose they are Dravidian. The worship of kali of Siva of Vishnu of parvathi the Consort, and of Subramania and Ganesa sons of Siva and of Krishna the last incarnation of Vishnu these things are not more alien and unimportant accertions to an Indian culture of Aryan and Vedic origin they are of the inner must essence of Indian culture - The Dravidian Elements in Indian Culture - Gilbert Slater M.A.D.Sc. 1. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் பாகு. ஞா, தேவநேயன் (சென்னை) 1966. 1. (1). E.B. Havells - The History of Aryan Rule in India. PP.11-13 (2). Babu Govinda Das’s Hinduism P.185 (3). Patric Carletan’s Burried Empire. P.185 (4). Bishop R. Caldwell’s Comparative Grammar of the Dravidian language. 2. Among the many revelations that Mohenjo Daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that saivism has a history going back to the chalcolithic Age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world” Sir John Marshall in his preface to Mohenjo - Daro and the Indus Civilization Vol I. P.VII. 1. “Indira wons the fight, but Siva wons war the fight” 1. செயற்கை நலம் - சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் B.A., B.L. சென்னை. 1950. 1. வெறிகளங் கடுக்கும் வியல் அறைதோறும் ( வெறியாடுகின்ற களத்தை யொக்கும் அகன்ற பாறைகடோறும்) என்னும் மலைபடுகடாத்து 150. அடியைக் கருதுக. * 1. கோயிலும் குறிகளும் (செந்தமிழ்ச் செல்வி. அட்சய ஆண்டு பங்குனி) எ. சத்சிதானந்தம் பிள்ளையவர்கள் B.A.L.T. 1. In september the world was thrilled by the story of the American Scientists who scaled the lost world of sivas temples in the canyon of Arizona. Sivas temple explorers found first arrow head and white headed mice” - covaleade London - Dec.18.1937. In the wild mountainous state of colorado seventh largest in America, scientists of the U.S.Museum of Natural History three months ago announced discovery of a ‘lost world’ The focal point was Siva’s Grand Temple a half square mile of solid rock platean isolated from the mainland by 9000 feet canyons eroded by rivers some 2,00,000 years ago - “New Review” London - Sept.23 1937. Sivas temple is one of the surface points which have been felt high and dry by water on four sides conservative estimates put the date when animal was cut of from the rest of the world as at least 10,000 years ago - “Times of cylon” sunday Illustrated June 17, 1937. 1. A similar object (candle stic) of early Minon ago has Sir Arther Evans points out been formed at siva near Phaestos. Further Excavation at Mohenjo Daro. E.F.H. Mackay. 1. The Velalas in Mohenjo Daro - H. Heras S.J. Indian Historical Quarterly Vol X IV. 1938 Calcutta. 1. Annual report of The Archaeological survey of India (1929 -1930) 1. Cambridge History of India - The Indian Civilization Sir. Martimer Wheeler. 1. Wethere these Spacious and elaboarate edifices were private houses or not has yet to be determined. Quiete Conceivably some of them were temple. In Mesopotamia the temple of the gods were to all intents and Purposes copies of the royal palaces - Dwellings where a god could eat drink and make merry like any mortal Prince and even be wedded on occasion to his priestess. It may be therefore, that the same idea held good at Mohenjo-Daro and that some of this exceptionally large building were erected as homes for the gods. The firts, second, fith and sixth of the buildings enumaraled above would have been spercially appropriate for the Purpose and it may be recalled that in one of them Viz. No. V. of H.R Area Section B, the excavations found a serious of those peculiar ringstones which we have good reasons for believing were subjects of cult were worship. All this however, is sheer Conjecture. Like Menoans the Indus People may have had no public shrines at all, on if they had them, the shrines may have been wholly un like their ordinary residences” - Mohenjo - Daro and the Indus civilization - Vol 1. Sir. John Marshall (London) 1931. Mohenjo - Daro and Indus civilization - Sir John Marshall. (London) 1931. Prehistoric civilization of the Hindus Valley - K.N. Dikshiter 1. The Egyption came according to their own records from a mystrial land. The sacred Punt, to the valley of the Nile led by Amon. The reference made by them to the names of the princes of Punt. Its fuinana and flora, esp the momen clature of various precious woods to be found but in India leave us scarcely room for the smallest doubt that the old civilization of Egypt is the direct out come of that of the still order India most porbably of the Isle of ceylon which was in Prehistoric days part and Parcel of that great continent as the geo logists tells us” Mohenjo - Daro and Indus civilization Vol. I. - Sir John Marshall. London 1931. 1. One of the most important constructions at Mohenjo Daro is the large bath built entirely burnt bricks which could be entired at either and by means of a staircase. The broad walk at the top of the bath rested on cells filled with clay. There were walls with opening which Provided access to a cloistered walk running round the bath.The eight bath rooms to the north of the bath were brovided with stairways probably leading to an upper story. The exact significance of the great bath and smaller baths has not yet been discovered, but it is possible that bathing was a ritual with the people at Mohenjo - Daro” - 5000 years of Indian Architecture. The Publication Division - Government of India New Delhi. 1951. P.5. 1. The Tamils who have inherited a very ancient cultures Peak a language related to the other sister language forming a single Dravidian linguistic family. The Dravidian belong to a most ancient ethnical group in India. They had inhabited it long before militant Aryans, discribed in the Rigveda, arrived in this “Wonderland”. At present the Dravidian languages are spread in South India but at one time they were spread all over central India and even northrn India; more over, there are data that testify to the fact that thousands of years ago people speaking the Dravidian languages also lived in Balu chistan and the south of Iran and had probably before the first inhabitants leading a settled life in Mesopotamia and were the predecessors of the Sumerian whose civilizian is considered to be the oldest on the planet” - The Meystery of Lemuria - M.R KONDRATO (Soviet Land. No. 2 Jan 1974) 1. 1. The Indo - Sumerian Seals deciphered - L.A. Waddell 2. The Hiltitce Empire - Thon Garstang P. 204,304 1. கனியார் மொழியாகுட்கும் மயிற்கும் காமர் பதி நல்கி முனியாது தான்காண மொய் கொள் மாடத் தெழுதுவித்தாள் - சீ. சிந்தா. முத்தி 2. வித்தகர் எழுதிய சித்திரக் கொடியின் மொய்த்தலர் தாரோன் வைத்து நனி நோக்கி கொடியின் வகையும் கொடுத்தான் மறியும் வடிவம் பார்வை வகுத்த வண்ணமும் திருத்தமை யண்ணல் விரித்துநன் குணர்தலின் மெய் பெறு விசேடம் வியந்தனன் இருப்ப - பெருங் 14 நலனாராய்ச்சி 97 - 102. 1. The cities had wide, streets well laid out, there were houses and mansions built of stones and wood and surrounded wells, containing gateways. They were guarded by armed warders and even by foreign soldiers. The palaces and mansions were storeys high containing terraces and balcomies, the superstructure having been of wood no ruins have remained to testity to us of their ancient splendour. The royal palaces had banqueting halls large enough to entertain 500. to 1000 guests state rooms which were supported by pillars covered with gold wide palconies and windows opening upon the public streets” - Ancient gaffna - Mudaliar C. Rasa - nayagam. C.C.S. (Colombo) 1926. 1 . இறையனார் அகப்பொருள் (நக்கீரனார் உரை) - கழக வெளியீடு. (சென்னை) 1969. பக் 115. 1. சிந்து வெளி தரும் ஒளி - க.த. திருநாவுக்கரசு. புதுக்கோட்டை (1959) 1. We have a continuity of culture from paleolithic to Neolithic from Neolithic to Megalithic and Meganlethic to Iron age in South India... My firm conviction is that the ancient Tamils were inheritors of the lithic cultures of South India - “origin and spread of the Tamil - U. R. Ramachandra Dikshitar M.A. Earliest stone age culture of India is represented by the hand are technique of Madras and old stone age people may have migrated from South India into central India where in Narbada Valley have been found midal pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North western India right upto Himalayan Hills - India and the pacific world kalidas Nag. 1. The share of the indigenous tradition of the architecture of Malabar, the ancient kerala, in the temples of Travancore may be gauged by comparing a temple in Dravida style with one built in the kerala manner. The walls of the Niramankara Temple (PI. XII) built in the fourteenth century and those of the Srikoil (Sanctuary) at vaikom belong to the same family. The differeNce lies in their roofs (although the Niramankara temple apparently had a pitched roof of timber, its garbhagriha, the innermost sanCtuary is domed). The indigenous temples are four sided or circulAr, the latter shape is possibly the more ancient, the gardhagraha, however, is always square (Plan on P.14:vertical section on P.15) The ARTS and Craft of Travancore by Dr. Risch as other (London). 1. எம். செல்லக்கண்ணு தபதி - (பழனி) தெய்வக்கலைமலர் காஞ்சி.1964 1. மதுரை கும்பாபிடேக மலர் - திருக்கோயில் - தபதி - வை. கணபதி. பீ. ஏ. (28-6-63) மதுரை - பக். 137. 1. studies in Pallava History P.89. 1. தென் இந்திய சிற்ப வடிவங்கள் - க. நவரத்தினம் (யாழ்ப்பாணம்) 1941. 1. சக்தி நிளம் மகாகோபுரம் இராசகோபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் வாசகம் தவறாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சக்தி நிள விமானம் துவாரகோபுரம், இராசகோபுரம் என்று கூறப்பட்டுள்ளது. விமானம் கோபுரம் ஆகாது. விமானமும் கோபுரம் ஒன்று தான் என்ற எண்ணத்தை ஊட்டுவதாக இருக்கிறது. இது திருத்தப்பெறல் வேண்டும். 2. ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம் - ஆசிரியர் தபதி T.P. கணேசமூர்த்தி (சென்னை.) 1959. பக்.8 1. At the entrance are two female door keepers with Buddhist head dress and emblems. It has no throne or image internally but there is the figure of Lakshimi” - The seven Pagodas by J.W Coombes. B.A., A.M.S.T.London 1914. P.31 2. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி (மூன்றாம் பதிப்பு) சென்னை.1969. நரசிம்மவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி (முதற்பதிப்பு) சென்னை - 1957. பக். 71-73. 1. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேவங்கடசாமி (சென்னை) 1955 1. It is easily distinguished from the other by its circular garbhagraha. Originaly built of cut granite without concent, it has had to be repaired by the Archaeological Survey of India” KANCHI -by Dr. C. Meenakshi M.A.Ph.D (Published by the Publication Division Ministry of Information, govt of India)Delhi P.21 (1954). 2. மதுரைக் கும்பாபிடேகமலர் (28.06.63) திருக்கோயில் தபதி வை. கணபதி B.A (மதுரை) - பக் 136-137. 1. கருணாமிர்தசாகரம் - மு. ஆபிரகாம் பண்டிதர் (தஞ்சாவூர்) 19 - பக் 644. 1. ஒப்பியன் மொழிநூல் முதன்மடலம். திராவிடம் (முதல் பாகம்) - பெரும்புலவர் ஞா. தேவநேயன் (திருச்சி) 1940. 1. The Arts and crafts of Travancore - Dr stella Kramrisch (Prof in India Art in the University of Calcutta) London 1948. 1. Epigraphia Indica. Part. V. Vol. XII. January.1914. 2. Epigraphia Indica. Vol.III. P.277 1. Pallava Architecture. No.17. PartI (Early Period by A.H. Lanchirst (1924) SIMLA. 1. Epigraphia Indica Dr. E.Hultzsch. Vol.IV.P 15 & 153. 1. South Indian Inscription Vo.II Part II P,340-341 2. Epigraphia Indica Vol III P.277 1. மகேந்திரவர்மன் - ஆசிரியர் மயிலை சீனி வேங்கடசாமி - சென்னை 1955. 1. Pallava Architecture Part I (Early Period) by A.H. Lonchurst (1924) SIMLA. P.19 1. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி - சென்னை 1955. 1. Proceedings of the Indian Histroy Congrees, seventh Session Madras. PP-168 -176. 1. Pallavas - P.T. Srinivasa Iyenkar Part II. PP. 9-10. 1. Archaeological survey of India - No.33 Longhursh PP.10-13 1. Moreover if one is to belive the style of these monuments we shall be bound to assign at last two Caves to be reign of Mahendravarman they are the so called Dharmaraja’s Mandapa and the Kotikal Mandaba.As regards the first Longhurst says: ‘ In style and on plan it is similar to Mahendra temple at Mandapattu in the South Arcot District”. - Studies in Pallava History The Rev. Heway Hera S.J (Madras) 1933. P.76. 1. South Indian Inscription Vo.I p.6 மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி - (1955) பக். 95, 96. 1. The Pallavas - Joureaw - Dubreuil P.35. 2. There is no clear evidence that the style of Mahendravarman Cave temples were borrowed from Vishnu Kundir example on the banks of the Krishna” History of the Pallavas of Kanchi - R. Gopalan M.A. (Madras) 1928 P.78. 1. Studies in Pallava History. The Rev. Henry Heras S.J. (1933) P. 81-82. 2. History of the Pallavas of Kanchi. R. Gopalan Madras (1928) P.161. 1. Studies in Pallava History. The Rev. H. Heras S.J. (1933) P. 86-87. 1. Studies in Pallava History. Rev. Heras (1933) P.95. 2. Kanchi - Dr.C. Meenakshi M.A., Ph.D. 1. பல்லவர் வரலாறு. டாக்டர் மா. இராசமாணிக்கம் ஏம்.ஏ. எம். ஏ. எல்.பி.டி. பி.யெச்.டி. 1. History of the Pallavas of Kanchi. R. Gopalan M.A. P.109. 2. The idea of his grandfather of carving out of a rocky mass temple which before were built of brick, mortar and timber was abandoned by Rajasinha. He would substitute bricks and timber for the heur stone and would produce magnificent temle raised in handicraft, the firsh attemÉ of this kind in the Kamb Nad. Studies in Pallava History. Rev. H. Heras S.J., M. A.,(1933) P.96. 1. The monuments belonging to this Peiod are in the Aparajita Style and in the opinion of Jouveaw - Dubeuie, very rare. The virattanesvaran temple at Tiruttani, which contain inscription dated in the eighteenth year of Aparajithavarman is attributable to this king the Tamil verse, which is inscribed in this temple being supposed to have been composed by the king” - History of the Pallavas of Kanchi R. Gopalan M.A. (1928). Madras P.143. 1. “Like the great Asoka Mahendra had occasion to change his religion. He was at first a jaina, but was afterwards converted to the cult of the linga by the saint called Apar or Thirunavukkarasar who was first persecuted and been patromised by king Mahendravarman 1. “Epigraphica Indica Vol III. P. 278. 2. Having once adopted saivaision Mohendra lost no time in giving a new impulse to that religion in the Tamil country by excavating a number of imperishable rock cut siva temple in kanhipuram district. Other inscriptions . . that that he was poet and musician a soldier and good administrater and also consrected several irrication tanks in his kingdom. Mahendravarman I may he regarded as one of the greatest figures in the history of Tamil civilization & founder of Hindu Architecture in southern India.” - pallava Architecture Part I (Early Period) - A.H. Lanchrist (Simla) 1924. 1. செயற்கை நலம் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார். பி. ஏ. பி. எல். சென்னை 1950 பக். 77. 1. The Momuments of Sanchi - Sri John Marshall KT. C.I.E. LITT., D.F.S.A. (Bombay) 1927. 1. Siva Temple Architecture etc in Tamil - Rao Bahadur P. Sambandam B.A.B.L (Madras) 1948 PP 10.11 1. History of Herodotus Vol 11. (New edition (London 1862 - by George Rawlinson M.A.P.128. 1. The great Temple at Tanjore - J.M.Somasundaram B.A.B.L. 1935. (Madras) 1. 51-making of bricks in ancient Egypt in 1460 B.C. from the tombo of Thut mose 111. The interpoeters Dict mary of the Bible. P.466. 1. The iron articles include swords daaggls Spear - heads arrow - heads and other weapons used in warefare or in hunting agricultural implements resemlbing the modern “mammutti” (மண்வெட்டி) thought is by no means certain that they were originally fixed at right angles to the shaft and others more difficult to classify such as bident two or three feet in length and the peculiar “hangers” probable used for the suspension of iron sancer lamps of which several were found. The weapons and implements to have been insert point downwards in the earth by the persons present at the enterment” - catalogu of the prehistorice Antiquities from Adchanallur and perumbair (preface) J.R. Henderson Madras 1914. 2. Further explorations were conducted in the winter of 1903 1904 by M.Louis Lapique of paris, which resulted in additional collections, and as a result of their examinations M Lapique at the conclusion that the remains belonged to a race.” - catalogue of the prehistoric Antiquaties from Adichanallur and Perumbair (Madras) 1915 Preface I 1. Neither does one see in the pagodas constructed in recent times the triangular pediment of the Greeks or the vaulted arch of the Romans or the pointed arches of France. It will be illogical in fact to build in Southerns India according to methods created on another soil and in a different climate why construct vaullt with convergent points when one can comply huge slab of granite; why construct point roof in a sunny country. The pogodas with their immens circuets which contain ponds and Fillad halls are periectly adapted the the Hindu civilization and will be difficult to replace them by the sufficient . . . for other civilization” - Dravidian Architecture Jouveau Dubreuil (Madras) 1917. 1. In regard of these conventional forms the following remarks of Lepsius would be useful - for even the ‘heraldic style” has still its recognized place and is a conventional but not anoignaant or barbarous conception such as any individual may at his pleasure repudiate Even the real artist would not disain this style in its proper place, but rather would the real connoisseur would recognize. Convenrtion if not always a comprehensible as in this case was at all periods as it a still an important, my an indispensable element ’ art (Bells’s Egption Architecture quoted above pp 214 and 15)S.K. 1. The arrangement of abacus and brackets which is seen for the first time at Mahabalipuram has afterwards become a distinctive feature of chola Architecture “studies in pallava is History. Rev H. Heras S. J PP 86-87. 1. The seven pagodas - D.W. Coombes B.A., A.M.S.T. London 1914 P.32 2. THe side of the roof is almost identical with the facade of the Buddhist Chaitya Cut in the sides of rock at Karli, Bhaja, Lomas Rishi Nasik 4 Ajanta (Caves 10 and 12). A guide to Mahabalipuram. Mis. P. Narayanan B.A. B.T. 1. Mahabalipuram - Miss Padma Irivikrama Narayanan B.A.B.T. (1957) P. 51. 2. Studies in Pallava History - Rev. H. Heras PP.89-90 1. நரசிம்ம வர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி (1957) சென்னை. பக் 81-82. 1. Indian Architecture - A.V.T. Iyer BKII P.225 1. Studies in Pallava History. Rev. Heras (1933) P.90. 1. History and Institutions of the Pallavas by C. Srinivasa chari . P -15. 2. Pallavas P.T. Srinivasa Aiyangar Part II P.68 3 பல்லவர்கள் வரலாறு. வித்துவான் டாக்டர் மா. இராச மாணிக்கம் எம்.ஓ.எல்.பி.டி. பக் 145. 1. As the same flowery script is found in the Kanchi inscriptions of Narasimha Varman II Rajasimha (680 - 720) and the name Paramesvara appears in inscription, E. Hultzsch concluded that Atyanta kama was a title of Rajasimha’s father Paramesvara Varman I.” A guide to Mahabalpuram. Miss P. T. Narayanan B.A.B.T. Epigraphia Indica Vol X PP 1.2 1. History of the Pallavas of Kanchi - R. Gopalan (Madras) 1928 P.110. 1. Dravidian Architecture - Prof. G. Jouveal Dubreuils Madras 1917. 1. To understand the architecture of the chola temples it is essential to know something of the pre - and post chola architecture. The pallava temples of the seventh to the ninth centuries,the earliest in South India have certain features which differentiate them from the later ones. As jouveaw Dubreiul has very clearly illustrated.* the niche the Pavilion the Billar and Plaster - corbel and the horse shoe - shaped windows (kudu) among other are the most important factors which hel pin the as certainment of the dates of the monuments. A typical nich (fig 1) in the earlier pallava rock - cut monuments at Mahabalipuram and in the kailasanatha Temple at kanchipuram is rather wide and the makaratorna decoration on the nich top lisfat, but in a chola nich as in the later pallavas caves the pace is narrower and the decoration on the nich top more round, The simulated railing for the parrlions on the monuments at Mamallapuram are quite different from their chola counterparts The kudu (fig 2) which at Mamallapuram monuments has showed headed finiac develops a lion headed in the chola monuments and this continues there after.+ * G. Jouveau - Dubreal Archaelogic du and de L’Inde p.1 (paris 1914) pp 71-145. + The chola Temples - (sivarama murthi New Delhi) 1960 PP-2-8 1. Malik kapur returned to Delhi on October 18, 1311 bringing with him so the Chronicles say 312 elephants laden with spoils 12000 horses 96000 mounds of gold many boxes of pearls and precious stones. When he returned a military garrison was left at Madura The Pandian Chronicle further states that three years after the conquest of Malik kapur. “all things were conducted in Muhammadan manners. Men were in dread of showeng themselves to each other. All things were in striff and disors. SOUTH INDIA AND HER MOHAMMADAN INVADERS - S - KRISHNASA MY IYENGER 1921) pp.91-131. 1. The Madura Country J. H. Nelson 2. Madura the Temple city - Shenoy மாநகர் மதுரை - பண்டித - ச. சாம்பசிவன் மதுரை (1960) 1. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் - பண்டித புலவ கலைத்தலைவன் ஞா. தேவநேயன் எம். V., சென்னை 1966. பக்கம் 159-161. 1. The Memories of the orchaeological survey of India No.54. Buddhist Antiquities of Nagarjuna Konda Madras Presidency - A.H. Longhurst (Delhi) 1988. Plato XIV. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுகளும் - டி.வி.சதாசிவப் பண்டாரத்தார். பக்.83-84(1961). 1. The village Pennadam appears in inscription under the names pennagadam and Mudikonda Chadurvedi mangalam and the diety is called Thiruthoonganai Madamudayar apparently from the fromation of the Garpagraba in the Gajaprista style which resembles the hind portion is popularly deveved from the tradition that the God here was worshipped by a grandarva lady (pen) a cow (AA) & an alephant (kadam). (bg©+M+fl«) South Indian Eigraphy Vol II. Pallava Antiquites by Prof.G.Jouveaw. Dubneub Vol.II Pondicherry (1918) P.22. Inscription No.433. of 1905. Go. No. 492 2nd taly 1906. part II No.8.691 Report for 1906. P.65. The Colas - K.A.N. Sastry P.110-11 Madras.1955. The Great Temple at Tanjore - J. M. Somasundaram Pillai B.A.B.L., (1935) Madras. தென் இந்தியக் கோயிற் சாசனம் 11. பக்கம் 259-359 இராசராசன் 60 - வது சாசனம். Reporting his recovery from the drifh sand in the vicinity of what he called a trisula head of Siva, Longhurst Concluded that this was the object of worship in this pratha in the place of Linga. He also referred to the similar head (with a trident) decorating the Southern end of the roof of Ganesa ratha. He was also of oinion that the worshi of the trident head was probably a contemporary culh. A guide to Mamallapuram - Miss. P. T. Narayanan B.A.B.T (Madras) -1957 P 48.) In spit of this Mr. Longhursh classifies both caves among those carved in reign of Narasimhavarman I. Perhaps he is led to this conculssion by the short inscription found in the Dharmaraja’s Mandapa, viz. Atyantakama Pallavesvaragrha that is “the temple of the Pallava Lord Atyantakama. Thus on the Dhavarajas Rasha which undoubledly belongs to be region of Narasimha Varman Mamallar there are two names Narasimha and Atyantakama the later in feoried stye to tally different from the style of the first stdies in Pallava Histroy - Rev. H. Herus. P.77. KANCHI - An Introduction to its Architecture - Prof D.V.C Meenakshi M.A. Ph.D. New Delhi 1954. EP - Ind. Vol VII PP115 An Re. on 5-1 Epigraphy No.40-45 of 1890 Nos.188-89 of 1901 - No.97-100 of 1923. Non 381-83 of 1927. Jainism in South India and some daina Eigoaphs - P.B. Desai M.A (SholaÇr) 1957. P.53,3A. South Indian Shrines - P.V. Jegadis a Iyer. Madras.1922. “According to the shape of the “dome” of the High temple the Dravida school of Architecture classified its temples as Nagara, Dravida an Vesara the shaps square octagonal and round resÃctively” - The Arts and crafts Iravancore - Dr. Stella Kramrish M.A.Ph.D. Professor of Indian Art in the University of Calcutta (LONDON) 1943. Published by The Roya India Society London and The government of Iravan P.7. One more variety of Dravidian Temples found in Kerala is the Circular type. We do not find specimens of this type elsewhere in the south” - The Temles of South India” - The Publication Division Ministry of Information and Broad casting governement of India” 1960. P.50. Danchi - An Introduction to the Architecture - Publication Dooisa government of India 1953. (New Delhi). Of great significance and beauty than any of the Dravida Óasadas (temples) built on a square plan are the circular shrines (pl.X-XIII) Vastu Sastra the traditional texts on the science of Indian architecture from about the sixth centre A.D. Treat in detail of the circular temple and their narious types which were built through India from that age. To the sixteenth century when Sri Kumar of Kerala Compiled the “Sepasastra” - Out - side Kerala however very few earliest structural temple yet known (at Barat JaiÇr, rajaÇtana of the third second century B.C) are circular”. The arts and crafts of Inavance - Dr. Stella Krishna. (London)1948. P9. The Arts and crafts of Dravancore - Cha II Architecture in Dravancore by R. Vasudeva Podural B.A., (London) 1943. இலங்கையிற் கலை வளர்ச்சி - க. நவரத்தினம் (இலங்கை) 1954. Indian Architecture Peray Brown Vol - II Dravida buildings exist today not only in Dravida - desha (country itself but also in the Kanarese districts of Decan where in fact, the temple are several centuries older than the earlies structural temples of the Pallavas in Mamallapuram and Conjeevaram” - The Arts and Crafts of Iravancore - (Cha 1. Dravida and Kerala) - Dr. Stella Kramrish (London) 1948 Page.20. The tamil races were perhaps the greatest Temle builders in the world..... the great pagoda of Tanjore..... by far the grandest temple in India”.... “Architecture” - Encyclopaedia of Britanica 9th edition 11. P.396. “The great Temple of Tanjore”. This style arose under the chola or Tanjore kings in 11th century A.D when nearly all the great temples to Siva in South India were crist and it continued in use in the 12th and 18th centuries during which the great temles to Vishnu were erected Rep to the begining of the 16th century these temples remained almost unchanged, but at that time all South India became subject to the kings of Vijayanagar and one of these named Krishna Raya (1509-30) re built or added to most of the great temple of the South. The chief feature of the architecture of this later period is the construction of the enormous goÇrams which are so consienos at Kancheepuram Chidambaram and Srirangam. All these were built by Krishna - raya : they do not form part of the original style, but were intended as fortifications to protect the shrines from foreign unvaders and certain plunder and descration, as the Hindu first discovered on the Muhammadan invasion of 1310 A.D also vide, “Three Main styles of Temle Architecture” - Burnell CA Bulletin of the Madras Museum. எ. குமாரசாமி ஆசாரி அவர்கள் குறிப்புகள் (நயினாத் தீவு கிரி நாச பூசணி அம்மன் கோவில் தேர்த்திருப்பாரிச்சபை சுண்ணாகம் (1957). சிவ ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் - சதாவதானம் நாக நட்கதிரை வேற்பிள்ளை - பக்கம் 88-92. சில்பரத்தினம் - சரவதிமகால் வெளியீடு. கும்பகோணம் - 1961. 1. சுக்கிர நீதி அத் 4 பிர 4 சு 2. தென் இந்திய சிற்ப வடிவங்கள் க. நவரத்தினம். யாழ்பானம் 1941. ஸ்ரீ ஸாரவதீய சித்திரகர்ம சாதிரம் சரசுவதி மகால் வெளியீடு. ஸ்ரீரங்கம் - 1960. 1. சில்பரத்னம் - சரவதி மகால் வெளியீடு - கும்கோணம் - 1961. 2. பிராஹ்மீய சித்ரகர்ம சாதிரம் வெளியீடு - ஸ்ரீரங்கம் - 1960. 3. காசியபசில்ப சாதிரம் வெளியீடு - ஸ்ரீரங்கம் - 1960. 4. மானசாரம் வெளியீடு - திருச்சி - 1963. 5. சகளாதிகாரம் வெளியீடு - திருச்சி - 1961. 6. சரவதீய சித்ரகர்ம சாதிரம் வெளியீடு - ஸ்ரீரங்கம் - 1960. Legende Des geux De eiva a Madura - R Dessigane P.z Pattabiramin et & Pilliagat Pondicherry - 1960. மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிசேக மலர் (கோயில் வளர்த்த கலைகள் ஓவியம் - கட்டுரை மே.சு. இராமசுவாமி பீ.ஏ.பி.எல் (மதுரை - 1963 பக் - 101. Ancient Jaffna - Mudaliar C. Rasanayagam C.C.S (cujlon) 1926 Madras. “The Records of the Buddhist religion say In the middle of the a great iron city of this Ratnadivipa (Pao - Chu) was the dwelling of theRacshasi women (Lo - l’sa). On the toweres of this city they erected two high flagstaffs with lucky or unlucky signals which the exhibited (to allow manners) according to circumstances when merchants came to the island (Ratnadvipa) Then they changed themselves into beautiful women holding flowers and scents, and with the sound of Music they went forth to meet theris and caressingly invited them to enter the iron city then having shared with them all sorts pleasures they shut them u in an iron prison and devoured them at their lesisure” Hiouen M.L.R Vol : i p : 148. Hiomen : M.L.R Vol. I.P 148 The iron fort, thich continued to be a great menace to the sea - faring trade of ceylon was distroyed says the chinese traveller Hionen Thsang by vijaya. In all probability, however it was destroyed by karikala chola the greates of the early chola kings who in the first century A.D. ancient jaffna. Mudaliar C. Rasanayagam C.C.S .19. (அ) துன்னாருட்கும் துன்னருங் கடுந்திறற் றாங்கெயிலெறிந்த துன்னாங்கனோர் - புறம் V.39 (ஆ) வீங்கு தொட் செமபியன் சீற்றம் விறல் விசும்பிற் றூங்கு மெயிலுந் தொலைத்தலால் - பழமொழி - ப.49. (இ) தூங்கெயின் மன்றெறிந்த சோழன் காண்ம்மானை சிலப்பதி - வாழ்த்து அம்மானைவரி (ஈ) தூங்கெயிலெறிந்த செம்பியன் - சிறுபாண் 1 : 81 -82. S.I.I Vol. XII. No.23A I.S.I.I Vol IV Epi Report 1911. P.72. South Indian Temple Insaiptions Vol II P.270.