பொது நூற்களஞ்சியம் - தொகுதி பதினான்கு அறிவு இதழ்க் கட்டுரைகள் சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி பதினான்கு அறிவு இதழ்க் கட்டுரைகள் | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 2006 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 16+248 = 264 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 245 | படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், மலர் அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல் களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன்குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். உங்கள் கைகளில் தவழும் அறிவு இதழ்க் கட்டுரைகள் எனும் இந்நூல் கையெழுத்துப் படியாக நூலாசிரியர் இராகவன் அவர்களின் மகனார் இரா.மதிவாணன் அவர்களிடம் இருந்தது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று மனமுவந்து கையெழுத்துப்படியினை கொடுத்து உதவினார். இதனை முதன்முதலாக வெளியிடுகின்றோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளிவருகின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப்போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், இந்நூலுக்கு முன்னுரை அளித்துச் சிறப்பு செய்துள்ள பி.இராமநாதன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல்களையும், வெளிவராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங்களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதிகளாக உங்கள் கைகளில் தவழ விட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றியுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்து விட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், செல்வி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன்,இல.தருமராசு ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) நாள் கா. வீரலட்சுமி அம்மையார் 30.12.2005 (அறிஞர் அ. இராகவனின் தங்கை) முன்னுரை 1933 ஆம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கமும், குடிஅரசு இதழும் பொதுவுடைமைக் கொள்கையை முனைந்து பரப்பி வந்தன. அரசு அடக்கு முறையை மேற்கொண்டது. 30.12.33 அன்று பெரியாருக்கு 9மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. 1934இல் இந்திய கம்பூனிடு கட்சியை இந்திய அரசு தடை செய்தது. அன்றையக் காலக் கட்டத்தில் இயக்கத்தை அரசு முற்றாக அழித்து விடாமல் காத்திட வேண்டுமானால் பொது வுடைமைக் கொள்கைப் பரப்புதலில் வேகத்தைக் குறைப்பது இன்றியமையாததாயிற்று. பெரியாரும் அவ்வாறே செய்தார். (காண்க. பி.எ.பாலிகா: Madras District Gazetteers: Coimbatore பக்.126; அரசாணை 470 Pub (General) 22.3.1935; சாமி சிதம்பரனார் (1938) தமிழர் தலைவர் பக்.153-154). அத்தோடு நீதிக்கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கினார். 2. மேற்கண்ட கால கட்டத்தில் சாத்தன்குளம் அ.இராகவன், ப.ஜீவானந்தம்,புதுக்கோட்டை முத்துசாமி வல்லத்தரசு முதலியவர்கள் பெரியார் வழிமுறை பிடிக்காமல் பொதுவுடைமைக் கொள்கையை முதன்மையாகத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 13.4.36 அன்று திருச்சி தென்னூரில் ஒரு மாநாடு நடத்திய விவரங்களை இந்நூற் கட்டுரை 5இல் காணலாம். அம்மா நாட்டுக்குச் சற்று முன்னர் 1936 சனவரியிலேயே அறிவு என்னும் மாத இதழை இராகவன் நாகர் கோயிலில் தொடங்கி நடத்தினார். ஓராண்டுதான் அவ்விதழ் வந்தது எனத் தெரிகிறது. அவ்விதழ்க் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது. பக்கம் நிரப்பிகளாக (fillers) வெளிவந்த துணுக்குச் செய்திகள் தவிர ஏனைய கட்டுரைகள் உரைகள் அனைத்தும் இயன்றவரைப் பொருள்வாரியாகப் பிரித்து அச்சிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் வரலாற்றுப் பதிவுகளாக (Historical documents) நோக்கப்பட வேண்டியவை; இன்றைய நிலைமை களை வைத்துக் கொண்டு குறை சொல்வது, வரலாற்றுணர்வுடைய அறிஞர் செயலன்று. 1936இல் தமிழகத்தில் சுயமரியாதை, பொதுவுடைமை இயக்கத்தில் முன்னணியில் இருந்த சில தலைவர் களுடைய அன்றைய கருத்து என்ன என்பதை அறிந்து கொள்வதும் இன்றியமையாததே. 3. இங்கர்சால், மக்காபி முதலியோர் கட்டுரைகளையும் உருசியா, கார்க்கி, டார்வின் போன்ற கட்டுரைகளையும் நீக்கியிருக்கலாம் - அவற்றில் இன்றையநிலையில் பெரும்பயன் தரக்கூடிய மூலக்கருத்துக்கள் இல்லையென்பதால். ஆனாலும் நீக்க வில்லை. அறிவு இதழை முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்து அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளன. பி. இராமநாதன் பொருளடக்கம் பதிப்புரை iii உரிமையுரை v 1. நமது பத்திரிகை 3 2. அறிவு விளக்கம் 5 3. ஆசிரியர் குறிப்புகள் 8 4. சுயமரியாதையும் மதங்களும் 15 5. சு.ம. சமதர்மக்கட்சி ஆரம்பக் கூட்டம் 29 6. சு.ம. சமதர்மக் கட்சி 33 7. ஆசிரியர் குறிப்புகள் 55 8. சு.ம. இயக்கத்தின் வீழ்ச்சி 59 9. ஈ.வே.ராவின் முரணான வாதங்கள் 71 10. இந்தியாவும் பெண்மக்களும் 79 11. விபசாரம் 84 12. இந்திய திரிகளின் உரிமைகள் 88 13. ருஷ்யப் பெண்கள் எழுச்சி 91 14. காந்தி பெண்களை அறிவாரா? 94 15. கொள்கையும் செய்கையும் 99 16. விஞ்ஞான வளர்ச்சி 105 17. பழமையும் புதுமையும் 108 18. ஜயபிரகாஷ் நாராயணன் 110 19. அன்வர் பாஷாவின் இறுதிக் கடிதம் 113 20. மாக்ஸிம் கார்க்கி 116 21. ஹிந்து மதம் 123 22. ஆராய்ச்சி முரசு 132 23. பள்ளிக் கூடத்தில் புராணபாடம் 138 24. மதம் 140 25. எனது தியாகமும் தேசத் தொண்டும் 143 26. அறிவும் - அதன் வளர்ச்சியும் 149 27. மாறு அல்லது மாண்டுபோ 154 28. கடவுளின் சகிப்புத்தன்மை 159 29. வைதீகத்தின் நிலை 163 30. இங்கர்சால் 169 31. நான் கண்ட உண்மை 177 32. டார்வின் சித்தாந்தம் 184 33. பகுத்தறிவு வாதியின் லட்சியம் 191 34. விஞ்ஞான விளக்கம் 194 35. சோவியத்ரஷ்யாவின் சினிமா அபிவிருத்தி 201 36. ருஷியாவின் முன்னேற்றம் 207 37. ரஷியா- பத்து வருடத்திற்குப் பின் 220 38. பெண் விஞ்ஞானிகள் 225 39. பொன்மணம் 230 40. Phd ãufhr« 237 சாத்தான்குளம் அ.இராகவனாரின் வாழ்க்கைச் சுவடுகள் நெல்லையின் எல்லையில் ஏலே! அண்ணாட்சி வந்தாகளா? என்ன சொன்னாக? எனக்குத்தான் அயித்துப் போச்சு? - எங்காவது இந்தத் தமிழைக் கேட்டால் அது நெல்லை மாவட்டத்தார் குரல் என்று தெரிய வேண்டும். இந்த மாவட்டத்தில்தான் குற்றால அருவியின் கொஞ்சும் இசை! கிருட்டினாபுரத்து சிலைகளின் பேரழகு! ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்! தன் பொருநையே நாகரிகத்தின் தலைவாயில் என்று போற்றப்படும் ஆதித்தநல்லூர்! சிவஞான முனிவர், குமரகுருபரர், திருமங்கையாழ்வார், குலசேகரஆழ்வார், நம்மாழ்வார், அதிவீரராமபாண்டியர், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், என்றி ஆல்பர்ட்டு கிருட்டினார், திருகூடராசப்பக் கவிராயர் .. இன்னும் இன்னும்.. புதுமைப்பித்தன், மாதவையா, கா.சுப்பிரமணியனார், வையாபுரியார், பூரணலிங்கனார், சோமசுந்தர பாரதியார், பாரதியார், உமறுப்புலவர்.. இன்னும் இன்னும் தமிழ் மீட்பர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்- போன்ற அறிஞர்களின் அணிவகுப்பு இம்மாவட்டத்தின் சிறப்பேயாகும். ஓ! நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவனாரும் பிறந்து பெருமை சேர்த்தது இம்மாவட்டமே! நாகசுரமும், வில்லுப்பாட்டும் இங்கு புகழ் சேர்க்கும் கலைகளாகும். சாத்தான்குளம் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள ஊராகும். வடிவேற்கவிராயர், கனகசபாபதிக் கவிராயர், குழந்தை வேல்சாமி போன்ற கவிஞர்கள் பிறந்து புகழ்பெற்ற ஊராகும். நுண்கலைச் செல்வர் அ.இராகவனார் அவர்கள் 22.04.1902 ஆம் ஆண்டு தோன்றினார். இவர்தம் பெற்றோர் திருவாளர் அருணாசலக் கவிராயர், திருவாட்டி ஆவுடையம்மாள் ஆவர். இவரது பாட்டனார் வடிவேற்கவிராயர் சிறந்த முத்தமிழ்ப்புலவர். இவரது முப்பாட்டனார் வீரபாகு ஓதுவார் மிகச்சிறந்த கவிஞர்; அதோடு வழக்கறிஞரும் கூட! இவரது முப்பாட்டனாரின் தம்பி அருணாசலக் கவிராயர் திருவனந்தபுரம் அரண்மனைப் புலவராக ஒளி வீசினார் என்பது மட்டுமின்றி குட்டிக் கவிராயர் என்ற அடைமொழியோடும் வாழ்ந்தவர். நுண்கலைச் செல்வரின் பிள்ளைத் திருப்பெயர் இரத்ன இராகவ உதய மார்த்தாண்டன் கவிராயர் என்பதாகும். பின்னர்தான் இராகவன் என்று மட்டுமே அழைக்கப்பட்டார். இளந்தைப் பருவத்தில் பிறந்த சாத்தான்குளத்திலேயே தொடக்கக்கல்வி பயின்றார். நெல்லை அரசினர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியம் பயின்று ஆசிரியரானார். சுப்பிரமணியக் கவிராயரிடம் தமிழ் முடுதறக் கற்றும், தொண்டைமான் பிரம்ம முத்தையனிடம் ஓவியமும் கற்று சிறந்த ஓவியராக விளங்கினார். ஆசிரியத்தின் செழுமையில் 1924-1930 முடிய சமாலியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியப் பணியாற்றினார். ஆழ்வார் அம்மாள் பெண்கள் பள்ளி, இபுராகிம் முசுலீம் பெண்கள் பள்ளி, சமாலியா முசுலீம் பள்ளி, திருநாவுக்கரசு படிப்பகம், புலமாடன் செட்டியார் மேனிலைப்பள்ளி போன்ற பல்வேறு நிறுவனங்களைச் சொந்த ஊரிலேயே தொடங்கிப் பெருமை சேர்த்தார். இயக்கங்களின் வளமையில் சுயமரியாதை இயக்கம் நிகரமைய (சோசலிச) இயக்கம் பேராய இயக்கம் (காங்கிரசு) ஆகிய இயக்கங்களில் பொறுப்பு வகித்தார். நெல்லை மாவட்டப் பேராய உறுப்பினர், திருச்செந்தூர் வட்டப் பேராயச் செயலாளர், தமிழ்நாடு பேராயக் கட்சி உறுப்பினர் என இவர் அரசியலிலும் காலுன்றியிருந்தார்.பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நட்பு கிடைத்த பின்னர் ஈரோடு பகுத்தறிவுக் கழக அமைச்சரானார். ஏராளமான பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார். இவரெழுதிய, கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்? “bg©QÇikí« kjK«” v‹w üšfŸ gšyhÆu« gofŸ ɉW ‘ïuhft‹ ah®? என்பதைத் தமிழுலகம் அறியச் செய்தது. குடும்பத்தின் விளைவில் சாத்தான்குளம் அருணாசலக்கவிராயருக்கும் ஆவுடையம்மாளுக்கும் மக்கள் அறுவர். இவரே முதல் மகன். குடும்பத்திற்கும் .. கொஞ்சு தமிழுக்கும் இவரே முதல்வர். 2. குமார வடிவம்மாள் 3. வடிவேல் (இளந்தையிலே மறைந்தார்) 4. குமாரசாமி 5. காந்திமதி ம.பரமசிவன் .. ஒரே ஒரு பெண்மகள். அவர்தாம் ச. வீரலட்சுமி அம்மையார். இராகவனார் தாய்மாமன் மகளையே திருவாட்டி சுந்தரத்தம்மையாரை மணந்து இனிய இல்லறத்தின் நன்கொடை யாக மல்லிகா, சுதந்திரா,தமிழரசி, இரா.மதிவாணன் என மூன்று பெண்மக்களையும், ஒரு ஆண்மகனையும் வழங்கினார். தன் மக்களை பலர் மறுத்தபோதும் தமிழ வழிக் கல்வியிலேயே சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். தன் தங்கையார் திருமணம் நீங்கலாக எல்லாத் திருமணங்களையும் சீர்திருத்தத்திருமணமாகவே நடத்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை என்று அடிக்கடி சொல்லியும் தாயும் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். சீவானந்தம், சாந்தம் சுந்தரவடிவேலு- போன்ற இவரோடு நட்புக் கொண்டு தமிழில் கொண்டுள்ள ஐயப்பாடுகளை அறிந்து கொள்வார்களாம். குறள் ஒப்புவித்தால் - காசு கொடுத்து ஊக்கப்படுத்திப் பாராட்டுவது இவரது இனிய வாழ்வியலாகும். அது இளஞ்சிறார்களாயிருத்தல் வேண்டுமாம்! அயலகக் களிப்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயலகங்களுக்குச் சென்று மீண்ட நுண்கலைச் செல்வர் தமிழறிஞர்களான எங்கும் செல்லும் காசு.. கா.சுப்பிரமணியனார், தீந்தமிழ்ப்புலவர் திரு.வி.கலியாணசுந்தரனார், தந்தை பெரியார், தாரூல் இசுலம் ஆசிரியர் பா.தாவூத்சா, இலங்கை முதலமைச்சர் பண்டாரநாயக, கண்டி மேயர் சார்ச்-டி-செல்வா, அமைச்சர் பெரி.சுந்தரம் , மேயர் சரவணமுத்து, தமிழக சமன்மைச் சிந்தனையாளர் ப.சீவானந்தம் போன்றோரோடு நெருங்கிய தொடர்பு அவர்களால் பன்முறை பாராட்டப் பெற்றார். 1935 ஆம் ஆண்டு பெரியாரிடமிருந்து விலகி தோழர் ப.சீவானந்தத்தோடு சேர்ந்து சுயமரியாதை சமதர்மக் கட்சி என்றொரு கட்சியை நிறுவி அறிவு என்னும் திங்களேட்டிற்கம் ஆசிரியரானார். 1932இல் இலண்டன் பகுத்தறிவு சங்கம், விடுதலைச் சிந்தனையாளர் மன்றம், அமெரிக்காவிலுள்ள உண்மை நாடுவோர் கழகம்,போன்ற அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு உறுப்பினராகி பல்வேறு நூல்களை மொழியாக்கம் செய்து தந்தார். இலங்கையில் மனிதருள் மாணிக்கம் நேரு பெருமகனுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் நினைவு மலர் வெளியிடப் பெரிதும் உதவினார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு என்ற இதழில் தொடர்கட்டுரை எழுதி வர அதன் ஆசிரியா கோ.சாரங்கபாணி வேண்டினார். தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற இவரது நூல் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடநூலாக மதுரைப் பல்கலைக்கழகம் ஏற்றுப் புகழ் கொண்டது. ஆய்வின் கூர்மையில் அவரது ஊருக்கு அண்மையிலுள்ள ஆதித்தநல்லூருக்குச் சென்றும், பல்வேறு பொருள்களைப் பார்வையிட்டும், சென்னை அருங்காட்சியகம் சென்றும் ஆய்வு செய்துதான் ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் என்ற நூலை எழுதியுள்ளார். சிந்து வெளி நாகரிகத்திற்கு ஒப்பிட்டுப் பார்த்து ஏராளமான கருவிகள், பொருள்கள் ஆகியவற்றின் படங்களை, அணிகலன்கள், விளக்குகள் ஆகியவற்றின் படங்களைத் தொகுத்து வெளியிட்டிருப்பது .. இவரது பனிமலை முயற்சிப் பாங்கினை- நமக்கு உணர்த்துகிறது. யாருமே செய்யாத புதுமையாக நுண்கலைச் செல்வர் அவர்கள் தன் மனைவியார் திருவாட்டி சுந்தரத்தம்மையாரைக் கொண்டு கலைநூற் பதிப்பகம் நிறுவி பல நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பணி செய்தார் என்பது உலக வரலாற்றில் புதுமையாகும். தம்மிடமிருந்த ஏராளமான காசுகள், நூல்கள், அரிய பொருள்கள் - ஆகியவற்றைத் திருச்சியிலுள்ள ஈபர் கண்காணியர் கல்வி நிறுவனத்திற்கு வழங்கினர் என்று அறிகிறோம். அவை அரிய கலைப் பொருள்களாகத் துலங்குகின்றன. இலங்கையில் ஒரு சின்ன நூல் அந்தக் காலத்தில் நூறு உரூபா கொடுத்து வாங்கி யுள்ளார் எனில் அவரது அறிவுத் தாகம் நமக்குப் புலப்படும். பாராட்டுத் தேன்மழையில் 1966 ஆம் ஆண்டு தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சட்டப் பேரவைத் தலைவர் மாண்பதை செல்லப்பாண்டியனார் தலைமையில் தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்குப் பொன்னாடை போர்த்தி நுண்கலைச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியது. 1937ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முகம்மது நபி உலக சமாதானத்திற்குச் செய்த தொண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றார். 1966-உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்ற போது தமிழ்நாட்டுக் காசுகள் என்ற கட்டுரை மிகச் சிறந்த கட்டுரையாகப் போற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பழங்கால மரக்கலங்கள் 46 வடிவங்களை நெய்மவண்ணத்தில் (டீடை யீயவே) வரையப் பெற்றுக் காட்சிக்காக்கி பேரறிஞர் அண்ணாவே பெரிதும் போற்றியும், பாராட்டியும் மகிழ்ந்தார். தமிழ்வளர்ச்சி மன்ற உறுப்பினராகி தமிழ்நாட்டு வரலாறு தொல்பழங்காலம் நூல் வெளியிடும் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது நினைந்த போற்றத்தக்கது. தமிழர் நாகரிகத்தை - பண்பாட்டை விளக்கும் .. ஏராளமான கலை நூல்கள் .. கலைப்பொருள்கள்..நாணயங்கள்,புதிய..ahU« கண்டுபிடிக்காத பழந்தமிழ்ப் பொருள்கள்.. இவர் தேடித் தேடிச் சென்று பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். முடிவின் மடியில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் .. தமிழ்ச் செம்மல்கள் பேரவை நடத்தும் ஐந்தமிழ் விழா.. 7.3.1981 காலை 10.00 மணியளவில் பழந்தமிழர் அணிகலன்கள் .. அரிய பேச்சு .. நூலாக வந்துள்ளது.. ஐயோ.. 8.3.1981 காலை.. 10.00 பழந்தமிழர் சிற்பக்கலை - இது தலைப்பு. நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.இராகவன் என்ற தமிழ்ப் பேரறிஞர்.. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.. உணர்ச்சியுரை.. ஐயோ! மயக்கமாக வருகிறதே என்கிறார். .. மருத்துவமனைக்குச் கொண்டு செல்கின்றனர்..11 மணிக்கு தம் எழுபத்தொன்பதாம் அகவையில் பேரா இயற்கை எய்துகிறார்.. 22.4.1902லே தோன்றியதமிழொளி..08.03.1981 .. மறைகிறது! சாவிலும் தமிழ்ப்படித்தே சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்தே வேக வேண்டும் - என்ற கவிதை வரிகள் இவர்தம் புகழைப் பேசிக்கொண்டே இருக்கிறது ஆ.முத்துராமலிங்கம் தச்சநல்லூர் நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன் தொகுதிகள் சமூகச் சீர்திருத்தம் 1. குடியரசுக் கட்டுரைகள் பண்பாட்டு வரலாறு 2. தமிழர் பண்பாட்டில் தாமரை 3. தமிழ்நாட்டு திருவிளக்குகள் 4. தமிழக சாவகக் கலைத்தொடர்புகள் 5. இறைவனின் எண்வகை வடிவங்கள் 6. வேளாளர் வரலாறு தொழில்நுட்ப வரலாறு 7. நம்நாட்டுக் கப்பற்கலை 8. தமிழ்நாட்டு அணிகலன்கள் 9. தமிழ்நாட்டு படைகலன்கள் 10. தமிழ்நாட்டுக் கோயில் கட்டிடகலை - 1 தமிழ்நாட்டுக் கோயில் கட்டிடகலை - 2 11. இசையும் யாழும் தொல்பொருள் ஆய்வு 12. கோநகர் கொற்கை 13. ஆதிச்ச நல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் தமிழியல் ஆய்வு 14. அறிவு இதழ்க் கட்டுரைகள் 15. ஆய்வுக் கட்டுரைகள் (இதுவரை தொகுக்கப்படாதவை) அறிவு இதழ்க் கட்டுரைகள் நமது பத்திரிகை அறிவு என்னும்நமதுமாதவெளியீடு1936-ம்வருஷம்ஜனவரிமாதம்முதல்,இந்தியாவின்தென்கோடியினின்றுவெளிவருகிறது.அறிவுஇயக்கத்தின் ஒளி பத்து ஆண்டுகட்டு முன்னரே தமிழ்நாட்டில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆனால் சாதி,சமயம்,கட்சிபேதங்கள்என்னும்கார்முகில்கள்அவ்வொளியைமறைத்துநின்றன. இன்று அத்தகைய இருட்படலங்கள் எல்லாவற்றையும் நீக்கிக்கொண்டு நமது அறிவு என்னும் Nரியன்cjயமாகிஇUக்கிறது. நkJ அறிவு பூதபௌதிகநூல், வானநூல், உயிர்நூல், மக்கட்டோற்ற நூல் முதலிய விஞ்ஞான நூற்களில் காணக்கிடக்கும் அரிய பெரிய உண்மைகளையெல்லாம் தெள்ளிதில் விளக்கிக்கூறும். மேனாட்டு அறிவியல்வாதிகள் மக்களின் முன்னேற்றத்தின் பொருட்டும், அறிவு வளர்ச்சியின் பொருட்டும் செய்த உயரிய சொற்பொழிவுகளையும், குருட்டுப் பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் அடியுடன் அழிக்க அவர்கள் கையாண்ட முறைகளையும், வைதீகப் பித்தர்களிடம் அவர்கள் செய்த தர்க்க முறைகளையும், அவ்வறிவியக்க நிபுணர்களின் சரித்திரங்களையும் எளிய தமிழில் யாவரும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக்காட்டும். சமதர்மி, சுயமரியாதைக்காரர், காங்கிரகாரர், சமூகசீர் திருத்தவாதி, மிதவாதி, ஜடிகாரர், பிராமணர், பிராமண ரல்லாதார், ஹிந்து, முலிம், கிறிதவர் முதலிய அனைவருக்கும் அறிவு பொதுவே. அறிவியல் உண்மைகளை வெளியிட கட்சிபேதம், மதபேதம், ஜாதி பேதமின்றி அறிவு யாவருக்கும் இடமளிக்கும். எடுத்துக்காட்டாகவே நமது முதல் மணியில் பல்வேறு கட்சி யையும், ஜாதியையும், மதத்தையும் சேர்ந்த அறிவியல் வாதிகளின் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அறிவு பொதுவாக மனிதசமூகம், மூட நம்பிக்கைகளையும், குருட்டுப்பழக்கவழக்கங்களையும் ஒழித்து அறிவு வளர்ச்சிபெற்று இன்புற்று வாழ்வதற்கே பெரிதும் பாடுபடும். என்றாலும் தாழ்த்தப் பட்டோர், பெண்கள் முதலியோர்களின் உரிமைக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தன்னாலியன்ற தொண்டினைத் தவறாது செய்துவரும். அறிவு தனது லட்சியம் சித்திபெற எதற்கும் அஞ்சாது எவரது விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது தாம் கண்ட உண்மைகளைத் தைரியமாய் வெளியிட்டுவரும். நமது தோழர்கள் யாவரும் அறிவை வரவேற்று ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் அறிவு இடம் பெறுமாறு செய்து, தமிழர் யாவரும் அறிவின் பயனை யெய்தி இன்புறுமாறு செய்யப் பெரிதும் வேண்டுகின்றோம்.  அறிவு விளக்கம் (தோழர் அ . இராகவன்) அறிவு என்பதற்கு அறிதல், உணர்தல், கல்வி, புத்தி, போதனை என்பதே பொருளாகும். சுருங்கக் கூறின் உணர்ந்து கொள்ளுந் தன்மையைத்தான் அறிவு என்று கூறப்படுகிறது. பார்வை கண்ணின்செயல், கேள்வி காதின்செயல், அறிவு மூளையின் செயல். மூளை தன்செயலை ஆற்றுவதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளே காரணமாய் மிளிர்கின்றன. ஐம்பொறி களின் உதவியின்றி மூளை தன்கடனாற்ற முடியாது என்பது நமது அனுபவத்தில் காணக்கிடக்கும் உண்மை. அறிவைப் பல மததர்களும் தத்துவஞானிகளும் கடவுள் மனிதனுக்கு அளித்த ஒரு விசேஷசக்தியென்றும் ஏனைய ஜீவப்பிராணிகளுக்கு அச்சக்தி கிடையாதென்றும் கூறுகின்றார்கள். ஆனால் இந்திய தத்துவ சாதிரிகளிற் பலர் ஜீவப்பிராணிகள் எல்லாவற்றிற்கும் அறிவுண்டு; ஆனால் புல், மரம், செடி முதலியன பரிசத்தை அறிவும் ஓரறிவுயிர்கள். சிப்பி சங்கு முதலியவை அதனோடு சுவையும் அறியும் ஈரறிவுயிர்கள். கறையான், எறும்பு முதலியவைகள் அவ்விரண்டினோடு வாசனையையும் அறியும் மூவறி உயிர்கள். தும்பி வண்டு முதலியவைகள் அம்மூன்றினோடு உருவத் தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கி னோடு சப்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். மனிதர்கள் அவ்வைந்தி னோடு சித்தத்தால் அறியும் அறிவுடைய ஆறறிவுயிர்கள் என்று கூறியுள்ளார்கள். உலகத்திலே ஒப்பற்ற தாவரவர்க்க நிபுணராகிய ஜே.சி. போ என்னும் வங்க நாட்டறிஞர் தாவரங்களும் ஆறறிவுடைய பிராணியே என்று நிரூபித்துள்ளார். அவர், தாவரங்களை நகராப்பிராணிகள் என்று அழைத்து வருகின்றார். ïªâa¥ gF¤j¿î ïa¡f ÞjhgfU«, ÉŠPhd rhÞâÇí«, y£RkzòÇ r®tfyhrhiy cg rh‹[yUkhd lh¡l® R.P. guhŠáig M.A.D. ளஉ அவர்கள் மனிதன் ஆகாரத்தைச் சமைத்துச் சாப்பிடும் பிராணி, ஏனையவைகள் ஆகாரத்தைச் சமையாது சாப்பிடும் பிராணிகள் என்று கூறியுள்ளார். அறிவில் மனிதனுக்கும் ஏனைய பிராணிகளுக்கும் இவ்வளவுதான் வேற்றுமை காணக்கூடும் என்பதே அவரது முடிபு. மூளையுள்ள பிராணிகளுக்குகெல்லாம் அறிவுண்டென்றால் சிலபிராணிகள் அறிவில் சிறந்து விளங்குகின்றன. ஏன் எனில் அறிவானது மூளையின் அமைப்பிற்கும் அனுபவத்திற்கும் தக்கவாறு விசாலமடைந்திருக்கிறது. (நுண்ணுணர்வு பெற்றிருக்கிறது) ஐம்பொறிகளாலும் உணர்ந்த அனுபவக்காட்சிகளை வகுப்பதே மூளையின் செயல். அவ்வனுபவ உண்மைகளை ஒப்புக்கொண்டு நடக்க வேண்டுமென்று போதிக்க வந்ததே அறிவியக்கம். ஐம்பொறிகளாலும் உணர முடியாதவைகளை உண்மையென்று நம்புவதே மூடநம்பிக்கை. அம்மூட நம்பிக்கையாலே மனித சமூகம் பல வித இன்னலுக்கும் ஆட்பட்டு வருகிறது. மூடநம்பிக்கையிலாழ்ந்த சமூகமோ-நாடோ முன்னேற்ற மடைந்தது என்று உலகசரித்திரத்தில் எங்கும் காணமுடியவில்லை. நமது அனுபவத்திலும் அதன் உண்மையை உணர்ந்து வருகின்றோம். மனித சமூகத்தைப் பீடித்துள்ள மூட நம்பிக்கை எனும் பீடையை ஒழிக்க ஐரோப்பா ஒரு நூற் றாண்டிற்கு முன்னரே முன்வந்துள்ளது. அதன்பயனாய் பல அறிவியல் வாதிகள் உயிர்த்தியாகங்களும் செய்ய நேர்ந்தன. நாடெங்கும் பகுத்தறிவுச் சங்கங்களும் ( Rationalist associations) சுதந்தரச் சிந்தனையாளர் சங்கங்களும் (Free thinker’s associations) உண்மை நாடுவோர் சங்கங்களும் (Truth seekers associations) நாதிக சங்கங்களும் (Athiest associations) தோன்றி மனித சமூகத்தின் அறிவு அபிவிருத்தியடைய அரும்பாடு பட்டதோடு மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்தெரிய முன்வந்தன. அதனால் ஐரோப்பா, உலகம் பிரமிக்கத்தக்க உன்னத - ஒப்பற்ற நிலையில் ஒளிவிட்டோங்கி நிற்பதை சரித்திரத்தில்-இல்லை-அனுபவத்தில் அறிந்து வருகின்றோம். இந்த இருபதாம் நூற்றாண்டை அறிவின் காலம் என்று பல மேதாவிகள் கூறுகின்றார்கள். அறிவின்பயனை இந்த நூற்றாண்டில் தான் மக்கள் பெரிதும் அடைந்து வருகின்றார்கள். விஞ்ஞான உண்மைகள் பல வெளிப்படுத்தப்பட்டன. மூட நம்பிக்கை களுக்கும், குருட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் செல்வாக்கு குன்றி வருகின்றன. அறிவியல் வாதிகள், பேய்பிடித்தவர்கள், மாந்திரீகர் பிசாசுக்களின் பிரதிநிதிகள்; கடவுளின் விரோதிகள் என்று கூறிய காலம் மறைந்து, அறிவே கடவுள் என்ற வாதம் தலைசிறந்து விளங்க ஆரம்பித்தன. அறிவியல் வாதிகள் அரசாங்கத்தினராலும், மதகுருக்களாலும் இழிவுபடுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கழுவேற்றப்பட்ட காலம் ஒழிந்து அறிவியல்வாதி உலகத்தால் போற்றிப் புகழ்ந்து கொண்டாடப் பட்டு வருகின்றான். அறிவியல் வாதிகளின் கரத்தில் உலகம் சுழன்று வருகிறது. அவனால் உலகை ஆக்கவும் அழிக்கவும் கூடும் என்று மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். கடவுளால் கூறப்பட்டதாகச் சொல்லும் வேதங்களை விட அறிவியல் வாதிகளின் வார்த்தை ஒருபடி உயர்ந்ததாகக் கொள்ளப்பட்டு வர ஆரம்பித்திருக்கிறது. இந்தியா அறிவு வளர்ச்சியில் மிகமிகப் பின்அணியில் இருக்கிறது. என்றாலும் இப்பொழுது கல்கத்தாவிலும், பம்பாயிலும் அறிவியக்கந்தோன்றி செம்மையான முறையில் தொண்டாற்றி அறிவின் பயனை மக்களுக்கு உணர்த்தி மூடநம்பிக்கைகளை ஒழித்து வருகிறது. ஆனால் தமிழ் நாட்டில் அவ்வுணர்ச்சி சுமார் பத்து ஆண்டுகளாகத் தோன்றிவந்த போதிலும் தகுந்த தாபனத்தை நிறுவி கட்டுப்பாடாக வேலை ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ் நாட்டிலும் அறிவியக்கம் செழிப்புற்றோங்கி மக்கள் நலம்பெற அறிவியக்கத்தை ரிஜிடர் செய்தோ, அல்லது ரிஜிடர் செய்யப்பட்ட பம்பாயில் இருக்கும் இந்தியப் பகுத்தறிவுச் சங்கத்தோடு சேர்ந்தோ ஜில்லாக்கள் தோறுமாவது சங்கங்கள் நிறுவி, போதிய அங்கத்தினர்களைச் சேர்த்து அறிவியல் கொள்கைகளைப் பரப்ப தமிழ்நாட்டறிஞர்கள் முன்வரவேண்டும். தமிழ்நாட்டில் அறிவியல் புரட்சியை ஆரம்பிக்க .இதுவே ஏற்றகாலம். காலத்தை இழந்துவிடாது அறிஞர்கள் முன்வந்து தீவிரமாய் உழைக்க முன் வருவார்களென்று பெரிதும் நம்புகிறோம்.  ஆசிரியர் குறிப்புகள் ஜவஹரின் வருகை இந்தியக்காங்கிர மகா சபையின் ஒப்பற்ற தலைவரும், சமதர்மத் தோழரும், வாலிபர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மாபெரும் வீரருமாகிய தோழர் ஜவஹரிலால் நேரு அவர்கள் சமீபத்தில் நம் மாகாணத்திற்கு விஜயஞ்செய்யப் போகின்றார் என்பதைக் கேட்டுக் களிபேருவகை அடைகின்றோம். தோழர் நேருவை பொதுவாய் தமிழர்களும் சிறப்பாய் சுயமரியாதை இளைஞர்களும், சுயமரியாதைச் சமதர்மிகளும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்பார்களென்று நம்புகின்றோம். இந்தியாவில் முதன்முதல் ஜனசமூகத்தில் சமதர்ம வித்தை விதைத்தவர்கள் சுயமரியாதைக்காரர்கள். அதை இப்பொழுது நேருவின் மூலம் காங்கிரகாரர்கள் வளர்த்துவருகின்றனர். சுயமரியாதைக்காரர்கள் முதன்முதல் சமதர்மக் கிளர்ச்சியை ஆரம்பித்தபோதிலும் சு. ம. இயக்கம் விஞ்ஞான ரீதியாய் அமைக்கப் படாமையாலும், சட்டதிட்டங்களோடு இயக்கத்தைப் பிரசாரஞ் செய்யாமையாலும், தலைவர்களென்று முன் வந்தோர் துரோகஞ் செய்துவிட்டு ஓடிப்போய் எதிரிகளின் காலடிகளில் சரணாகதி அடைந்து விட்டதனாலும் தங்கமான சு. ம. இயக்கம் வீழ்ச்சியுற்று தாழ்ச்சியடைந்தது. ஆனாலும் சு. ம. இளைஞர்களின் உள்ளத்தினின்று சமதர்ம உணர்ச்சி மறைந்து விடவில்லை. இந்நிலையில் பண்டிதநேரு காங்கிர மகாசபைக்குத் தலைவ ராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவக் கோஷ்டியின் முன்னே ஆண்ஏறு போன்று சமதர்மச் சங்கநாதஞ் செய்தார். இந்திய முதலாளிகளெல்லாம் உள்ளம்பதறினர். சர்க்கார் மிரண்டனர். வைதீகர் பயந்தனர். எங்கும் எதிர்ப்புகள் தோன்றின. என்றாலும் எதிர்பாராவண்ணம் இந்தியாவெங்கும் ஆதரவு பொங்கின. எதிர்ப் பெல்லாம் தளர்ந்தன. இந்தியா மட்டுமல்ல-உலகமே ஜவஹரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. மீண்டும் ஜவஹரே காங்கிர மகாசபைக்கு தலைமை தாங்க வேண்டுமென்ற பேரொலி யாண்டு ஒலித்து வருகின்றது. எங்கும் சமதர்மச்சங்கமும் விவசாயி தொழிலாளி கிளர்ச்சிகளும் வலுத்துவருகின்றன. தலைவர்களின் துரோகத்தாலும், சுயநலத்தாலும், கோழைத்தனத்தாலும் சு. ம. இயக்கம் வீழ்ச்சியடைந்துவிட்டதால் சு. ம. வாலிபர்கள் உள்ளம் உடைந்து போயிருந்தது. இன்று நேருவின் கிளர்ச்சியால் அவர்கள் உள்ளம் புத்துணர்ச்சிபெற்று அவரது கிளர்ச்சிக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பக்கபலமாய் இருந்து தமிழ்நாட்டு காங்கிரசை சமதர்ம விரோதிகளாகிய பிற்போக்காளர் கைகளினின்று பிடுங்கி சமதர்மிகளின் ஆட்சிக்குள் கொண்டுவர சு. ம. சமதர்மிகள் தவறாது செய்வார்களென்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம். தமிழ்நாட்டு காங்கிர பிற்போக்காளர்களின் யோக்கியதைகளையும், சமதர்மிகளின் நிலையையும் நேருவிற்கு எடுத்துக்காட்டி தோழர் நேருவின் விஜயத்தை, சமதர்மிகள் காங்கிரசைக் கைப்பற்றவும், நாடெங்கும் சமதர்மச் சங்கங்கள் பெருகவும் சமதர்மக் கிளர்ச்சி வலுக்கவும் உபயோகப்படுத்தத் தவறிவிடமாட்டார்கள் என்று நம்புகிறோம். பஹிகாரம் மூளையில் சுயமரியாதை, ஹிருதயத்தில் ஜனநாயகம், இரத்தத்தில் ஜடி, வாயில் சமதர்மம் என்று கூறிக்கொண்டு காலையில் சுயமரியாதைப்பற்றிச் சிந்திப்பது, நடுப்பகலில் சமதர்மத்தைப்பற்றி வர்ணிப்பது மாலையில் ஜடிசைப்பற்றிப் பேசுவது இரவில் ஜனநாயகத்தைப்பற்றி எழுதும் தமிழ் நாட்டில் சில பெரிய மனுஷர்களின் செயலாயிருக்கிறது. இத்தகைய பெரிய மனுஷர்களின் கோஷ்டியினர் சிலர் நேருவைப்பஹிகரியுங்கள் என்று சில பத்திரிகைகளில் எழுதியிருப்பதோடு சந்து பொந்து களிலும் பேசி வருவதாய் அறிகின்றோம். பஹிகாரக் கூச்சலிடு பவர்கள் பைத்தியக்காரர்களாய் இருக்கவேண்டும், இன்றேல் அறிவற்ற மூடர்களாய் இருக்கவேண்டும் என்பது நமது முடிந்த முடிபு. இவர்களது பஹிகாரக்கூச்சல் பயனற்றது, அர்த்தமற்றது, இனி இத்தகைய வெறும் ஜம்பப்பேச்சு செல்லாது என்பதை நாம் நன்கறிவோம். என்றாலும் நமது மாஜித் தோழர்கள் என்ற முறையில் அவர்களது தவறான போக்கை எடுத்துக்காட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம். பஹிகார வீரர்களே! காந்திஜீயையும் ராஜேந்திரப் பிரசாதையும் சு. ம. சமதர்மிகள் பஹிகாரம் செய்தனர். - ஏன் - அவர்களை சமதர்மக் கண்ணோடு நோக்கினர். அன்னோர் வர்ணாச்சிரம தர்மிகளாயும், முதலாளிகளின் ஏஜெண்டுகளாயும், சமதர்ம விரோதிகளாயும் தோன்றினர். எனவே அவர்களைப் பஹிகரிக்க முன்வந்தனர். அப்பொழுது செய்த பஹிகாரத்திற்கு ஏதாவது அர்த்தமுண்டு. ஆனால் இன்று பச்சோந்தித் தலைவர்களாகிய ஜடி ஜனநாயகக் கண்ணோடு சமதர்மச் சூரியனாம் நேருவைப்பார்க்க யோக்கியதை ஏது? பஹிகாரப் பேச்செடுக்க வாயேது? இதன்முன்னர் நேரு அவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்திருந்திருக்கும்பொழுது அவர் இத்துணை தூரம் சமதர்மப் பிரசாரத்திலீடுபடவில்லை. என்றாலும் திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை இளைஞர் சங்கமும், வேறு பல விடங்களிலுள்ள சு. ம. தோழர்களும் வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்து உபசரித்து அனுப்பினர். அத்தகைய மாஜி சு.ம.தோழர்கள் இன்று இரவு பகல் இடைவிடாது அஞ்சாது அபேதவாதப்பிரசாரம் புரிந்துவரும் தோழர் நேருவை அன்புடன் வரவேற்று உபசரிப்பார்களேயொழிய சமதர்மத்துரோகிகளாகிய உங்கள் வார்த்தைக்கு எவரே செவிகொடுப்பர். வீண் கூச்சலினால் பயன் இல்லை. பத்திரிகைகளின் பயனற்ற கிளர்ச்சியால் எதையும் சாதிக்கமுடியாது என்பதை உங்கட்கு அழுத்தம் திருத்தமாய் அறிவித்துக்கொள்கிறோம். பஹிகாரம்! பஹிகாரம்!! என்று கத்தும் மாஜித் தோழர்களே! உங்களுக்கு நியாய புத்தியிருந்தால் - பகுத்தறிவு இருந்தால் பொதுஉடமை பேசி, மார்க்ஸைப் போற்றி, ரஷியாவைப் புகழ்ந்தவாயால் இன்று ஜடிஷம் பேசி பொப்ளியைப்போற்றி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் புகழ்ந்து, ஜடி கட்சியே சமதர்மப்பொது உடமைக்கட்சி என்று சமதர்மத்திற்கு இழிவான பாஷ்யம் கூறி அலையும் சமதர்மத்துரோகிகளைக் கண்டு உங்கள் உள்ளம் குமுறவில்லையா? உதிரம் கொதிக்கவில்லையா? அவர்களுக்கு கருப்புக் கொடிபிடிக்கவேண்டுமென்று எழுத உங்கள் பேனா முனை செல்லவில்லையா? காந்தியைப் பஹிகரிக்கவேண்டுமென்று ஈரோட்டில், சிவகங்கையில் தீர்மானஞ் செய்துவிட்டு குடிஅரசில் பக்கம் பக்கமாய் எழுதிவிட்டு ஈரோடு முனிசிபால்டியில் காந்திக்கு வரவேற்பு அளிக்கவேண்டுமென்று தீர்மானித்த உங்களின் மாஜி சு. ம. தலைவர்களை, ஈரோட்டில் காந்தியைப் பஹிகரிக்க ஏராள மான சு. ம. ஆண்களும் - பெண்களும் குழந்தைகளும் நடுப்பகலில் சூரிய உஷ்ணம் உச்சியைப் பிளக்க பகிகாரக் கூச்சல் போட்டுக் கொண்டு தெருத்தெருவாய் கதறித்திரியும்பொழுது மூன்றடுக்கு மாடியில் உல்லாசமாய் உண்டுடுத்திக்களித்திருந்த தலைவர்களை - ராஜேந்திரரைப் பஹிகரியுங்கள் என்று கூறப் பலவிடங்களில் பஹிகாரஞ்செய்ய தம்மூரில் பஹிகாரப் பேச்சே எடுக்காமலும், பஹிகாரம் நடைபெறும் ஊருக்குப் போய் தான் முன்னின்று கருப்புக்கொடி பிடித்து பஹிகரியாது உங்களைத் தூண்டிவிட்டு நீங்கள் அடிதடி முதலிய அவதைகளுக்குட்படச் செய்து விட்டு வீட்டில் சுகமாய் அல்வாவை விழுங்கிவிட்டு தம்மூர் பெரிய மனிதர்களிடம் நல்ல பிள்ளை மாதிரி பேசிய உங்கள் பெரிய தலைவர்களை - சுயமரியாதை இயக்கத்தால் பெரிய மனிதர்களாகி பின் சத்யாக்ரகம் என்ற வார்த்தையைக்கேட்டு பின்வாங்கி, சமதர்மம் என்ற வார்த்தையைக்கண்டு ஓடி ஒழித்து, மறைமுகமாய் உங்கள் இயக்கத்தை உடைத்து சு. ம. இயக்கத்தால் மக்கள் பெற்ற உணர்ச்சியை தங்களுக்கு பட்டம் பதவிகள் பெற உபயோகப்படுத்த முயற்சிசெய்யும் தலைவர்களைப் பஹிகரியுங்கள். கருப்புக்கொடி பிடியுங்கள் அப்பொழுது உலகம் உங்களைப்போற்றும். உங்கட்கு அறிவுண்டு, ஆண்மை உண்டு உணர்ச்சியுண்டு என்று உங்களை ஏமாற்றிய தலைவர்கள் உணர்வார்கள். உலக சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெறும். தோழர் நேருவைப் பஹிகரிப்பதற்கு ஆதரவளிக்கும் ஜடி தலைவர்களே! இந்தப்பஹிகாரப்பேச்சு உங்கள் தலையிலே நீங்கள் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதற் கொப்பாகும். இன்று நேருவைப் பஹிகரிக்கவேண்டு மென்பார்கள் சிலர். ஆனால் பஹிகாரம் நடைபெறாது. ஆனால் நாளைக்கு நீங்கள் போகும் இடங்களிலெல்லாம் காங்கிரகாரர்கள் உங்களைப் பஹிகரிக்க வேண்டுமென்று தக்க காரணங்கள் சொல்வார்கள், செய்வார்கள். அன்று நீங்கள் இது காங்கிர காரர்களின் காலித்தனம் என்றால், உங்களை உலகம் முட்டாள்கள் என்றே எண்ணும். நீங்கள் வீட்டைவிட்டு வெளிவரமுடியாது. மூலையில் பதுங்கவேண்டியது நேரிடும். எனவே பஹிஷ்காரத்திற்கு ஆதரவளித்து அவதிப்படவேண்டாம் என்று உங்களை எச்சரிக் கின்றோம். காங்கிர சமதர்மிகள் சிறிது முன் ஜாக்கிரதையுடன் நடந்துகொள்வார்களென்று நம்புகிறேன். தோழர் பட்டவர்த்தன் விஜயத்தின்போது தங்கள் அற்பப்புத்தியைக் காட்டிக் கொண்ட காங்கிர பிற்போக்காளர்கள் நேருவின் விஜயத்தின் போதும் தங்களின் குட்டிக்குறும்பைக் காட்டலாம். எனவே முன்னரே தோழர் நேரு அவர்களுடன் கலந்து அவரது சுற்றுப்பிரயாண நோக்கம் வெற்றிபெறச் செய்யும்படி கேட்டுக்கொள்வதோடு, மீண்டும், மீண்டும் நேருவின் விஜயத்தை தங்களுக்குச் சாதகமாய் உபயோகித்துக்கொள்ளும்படி ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம். தமிழர் யாவரும் ஒற்றுமையோடும் அன்போடும் நேருவை வரவேற்று உபசரித்து அனுப்புமாறு அன்போடு கேட்டுக்கொள் கின்றோம். தோழர் நேருவின் வரவு நல்வரவாகுக!  சுயமரியாதை இயக்கம் தொடர்பான கட்டுரைகள் சுயமரியாதையும் - மதங்களும் (இ. உ. மார்த்தாண்டன்) மதம் மக்களுக்கு அபின் என்னும் அமிர்தமொழி சமதர்ம இயக்க தாபகராகிய தோழர் காரல் மார்க் என்பவர் கூறியதாகும். மனித சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மத நம்பிக்கையால் அடைந்த அனுபவங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் மதம் மக்களுக்கு அபின் என்று கூறுவதை விட மதம் மக்களின் தொழுநோய் என்று கூறிவிடலாம். மதம் மனித சமூகத்தை ஆயிரக்கணக்கான பிரிவினைகளாகச் செய்து ஒரு மததர்கள் மற்றொரு மததரோடு போரிடச் செய்தது. இயற்கை முடிவால் உயிர்துறந்தோர்களைவிட மதவெறியால் கொல்லப் பட்டோர் கோடிக்கணக்கானவர்கள் என்று உலக சரித்திரம் கூறுகின்றது. மதத்தால்தான் லட்சக்கணக்கான ஐதி பேதங்கள் தோன்றி மனித சமூகத்தில் ஒருவரையொருவர் மிருகங்களை விடக் கேவலமான முறையில் அடித்தும், வதைத்தும், சித்ரவதை செய்தும் வருகின்றனர். பெண் அடிமைத்தனம் நீண்ட நாளாய் உலகில் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் மதமே என்பதை எவரும் மறுத்துக்கூறார். தொழிலாளிகளை வஞ்சித்து அவர்களின் உழைப்பின் பயனை முதலாளிகள் நீண்டகாலமாய் ஆண்டனுப வித்ததோடு மட்டுமல்ல அவர்களை வாட்டிவதைத்து ஹிம்சித்து வருவதும் மதத்தால்தான். மனித சமூகத்தின் ஒரு பகுதியாரை அடிமைகள், தீண்டத்தகாதவர்கள், பார்க்கத் தகாதவர்கள், சண்டாளர்கள் என்று இழித்துக்கூறி சுதந்தரமாய் வாழவும், பொது ரதாக்களில் நடக்கவும், எதிரில் நிற்கவும், நல்ல சுத்தமான ஆடை, நகை அணியவும், பள்ளிகளுக்குச் சென்று கல்விகற்கவும் விடாது தடுத்து நிற்பதும் மதந்தான். மனித சமூகத்தை அறிவு அபிவிருத்தி யடையவிடாது மூடநம்பிக்கையில் ஆழ்த்திவைத்துக் கொண் டிருப்பதும் மதமே. பெண்மக்களில் ஒரு கூட்டத்தாரை தாசி என்றும், வேசி என்றும் கூறி ஒழுக்கயீனத்தை பெருக்குவது மதந்தான். மதுபானத்தை நாட்டில் பெருக்கி மக்களின் அறிவைக் கொள்ளை கொண்டு வருவதும் மதந்தான். ஆயிரக்கணக்கான ஏன்- லட்சக்கணக்கான மனமொத்த காதலர்கள் தாங்கள் விரும்பிய காதலர்களை மணந்து இன்பந்துய்க்க விடாது தற்கொலை செய்து கொள்ளும்படி செய்வதும் மதங்கள்தான். மனிதர்களுக்குள் ஒரு சிறு T£l.த்jh® கடவுளென்றும், மோட்சமென்றும், நரகமென்றும் பலகற்பனைப் பெயர்களைக்கூறி, ஏழை மக்கள் இரவு பகல் துஞ்சாது சம்பாதித்த சிறிய தொகைகளையும் ஏமாற்றிப்பிடுங்கிக் கொள்ள மதமே காரணமாய் மிளிர்கின்றது. மனித சமூகத்தின் இன்ப வாழ்க்கைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பயன்படவேண்டிய திரவியங்கள் யாதொரு பயனுமின்றி திருஆபரணங்களாகவும், விக்ரகங்களாகவும், கோவிலாகவும், திருடு, விபசாரங்கள், பொய், குடி, கொலை முதலிய தீமைகளுக்கு மூலகாரணமாயும் இருந்து வருகிறது. ஒரு வயது - இரண்டு வயது குழந்தைகளைக் கைம் பெண்ணாக்கி அவர்களை ஆயுட்காலமுழுவதும் உலக இன்பத்தை நுகரவிடாது தடை செய்வது மதமே. ஆயிரக்கணக்கான விதவைகள் நம்நாட்டில் கள்ளத்தனமாய் கருவுற்று, மானம் பொறுக்க மாட்டாது ஆயிரக்கணக்காகத் தற்கொலையும் சிசுக் கொலையும் நடந்து வருவதற்கு மதமே ஜவாப்தாரி. இளம் வாலிபர்கள் பருவமடையாப் பெண்களை மணந்து புருஷனின் மிருக இச்சையால் பள்ளியறையிலே மாண்டு கிடக்கும் இளம்பாலகி களின் மரணத்திற்கு மதமே பொறுப்பாளி. மதமே மனித சமூகம் அனுபவித்து வரும் இன்னல்களுக்கெல்லாம் காரணம். இதை மிகத் தெளிவாய் தற்பொழுது உலகிற் ஜீவித்து வரும் ஆங்கிலப்பேராசியர் களுள் ஒருவரும் சமதர்மத் தோழருமான Hon. பெர்ட்டிரண்ட் ரசல் M.A., F.R.C.S. என்பார், பூவுலகிலே மக்கள் என்றும் பொன்றாத இன்பத்தோடு வாழமுடியும். அதனை யெய்தும் வழியும் சுலபமே. ஆனால் அவ்வாறு இன்பத்தை அடையவிடாமல் தடை செய்வது எது? மதமே என்று கூறுவேன். அறிவு விளக்கம் பெறும் உண்மை ஞானத்தை - கல்வியை - நமது குழந்தைகள் பெறமுடியாமல் மறைத்து நிற்பது மதமே, வல்லரசுகள் பெருமிதத்தால் வெம்போர் புரிய மூலகாரணமானவற்றைத் தகர்த்தெரிய மனிதனை விடாது தடை செய்து வருவது மதமே; ஆபாச, பாவ-புண்ணியங்களென்னும் அறக்கோட்பாடுகளுக்குப் பதிலாக சமதர்மத் தத்துவத்தைப் போதிக்க முடியாமல் தடை புரிவதும் மதமே. மண்ணுலகத்தைப் பொன்னுலகமாக்கலாம்; ஆனால் அப்பொன்னுலகத்தின் தலை வாயிலிலே ஒரு மாபெரும் பேய் (Dragon) சதா இருந்து கொண்டு மனிதனை உள்ளே புகவொட்டாமல் தடை செய்கின்றது அதனை நாம் மாய்க்க வேண்டும். அம்மாபெரும் பேய் மதமே. என்று மிக அழகாகக் கூறியிருக்கின்றார். இன்னும் இவரைப்போன்ற அறிஞர்கள் பலரும் மதம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தடையாய் இருப்பதோடு எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடமாய் இருக்கிறது என்றும் அதை ஆழக்குழிதோண்டி புதைத்துவிடவேண்டும் என்றும் கூறிவருகின்றார்கள். கடவுள் நம்பிக்கையுடையவராகக் கருதப்பெறும் இராமலிங்கசுவாமிகள் போன்றவர்களும் மதங்களை ஒழித்துவிட வேண்டுமென்று கூறியிருக்கின்றார்கள். உலகமெங்குமுள்ள அறிவியக்கவாதிகள் மதங்களை அடியோடு அழித்துவிட அரும்பாடுபட்டு வருகின்றார் கள். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மதங்களை புறக்கணித்து அறிவியக்கத்தில் சேர்ந்து வருகின்றார்கள். ரஷியாவில் மதமற்ற பொது உடமைக்காரர்களால் ஆட்சி நடத்தப்பெற்று வருகிறது. அமெரிக்காவில் நூற்றுக்கு அறுபதுபேர் மத நம்பிக்கை யற்றவர்கள் என்று அங்கிருந்து வரும் முலிம் பத்திரிக்கை யொன்று கூறுகிறது. பெயினிலும், மெக்ஸிகோவிலும், பிரான்ஸிலும், ஜர்மனியிலும், இங்கிலாந்திலும் மதத்திற்கு சாவுமணி அடிக்க ஆரம்பித்துவிட்டது. உலகில் மதமொழிப்புப் பிரசாரம் நடவாத நாடே இல்லை யென்று கூறலாம். வடஇந்தியாவிலே கல்கத்தா, பம்பாய் முதலிய பிரதான நகரங்களில் பகுத்தறிவுச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு மதத்தின் ஆணிவேருக்கு வென்னீர் ஊற்றி வருகிறது. தென்னிந்தியாவி லுள்ள சுயமரியாதை இக்கத்தின் 3-வது மாகாண மகாநாட்டிலும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தடையா யிருக்கும் மதங்களையெல்லாம் ஒழித்துவிடவேண்டும் என்று தீர்மானித் திருக்கிறது. அதில் இலாம் மதத்தை நீக்கியோ, அல்லது இலாம் சமதர்ம மதமன்றோ தீர்மானிக்கவில்லை. அதோடு சுயமரியாதை இயக்கப் பத்திக்கைகளெல்லாம் மிகத் தீவிரமாய் மதமொழிப்புப் பிரசாரம் புரிந்து வந்தன. ஆனால் போதிய பலன் கிடையாவிடினும் வைதீகமிகுந்த தமிழ் நாட்டின் ஒவ்வொரு குக்கிராமங்களிலுங் கூட மதமொழிப்புப் பிரசாரஞ் சென்று தனது கொடியைப்பறக்க விட்டிருக்கிறது என்பதற்கோர் ஐயமின்று. கடந்த பத்து ஆண்டுகளாக, சுயமரியாதைக்காரர்களின் சங்கநாதமும், குடிஅரசின் குமுறலும் வைதீகர்களின் உள்ளத்தை ஒரு கலக்குக்கலக்கி விட்டது. உலகிலே தங்கள் மதமே உயர்ந்தது என்று வீண் கர்வம் கொண்டிருந்த மத சீர்திருத்தக்காரர்கள் எல்லோரும் தங்கள் சமயம் அத்துணை உயர்ந்ததா? மனித சமூக விடுதலைக்கு, பொருளாதார விடுதலைக்கு ஏற்றதா? என்று நன்றாய்த் துருவி துருவி ஆராய்ந்து யாதும் கூற வழியற்று தலைகவிழ்ந்து சுயமரியாதைக்காரர்கள் மதத்தை ஒழித்து விடக்கூறும் கூற்றிற்கேற்ற சமாதானம் சொல்ல வழியில்லையே என்று ஏங்கித்தவித்துக் கொண்டிருக்கின்றனர். மதத்தின் பேரால் பல இன்னல்களை நீண்டகாலமாய் அனுபவித்து வந்த மக்களெல்லாம், விழிப்புற்று மதமே எங்களுக்கு வேண்டாம், அதிலும் ஹிந்து மதம் அறவே எங்களுக்கு வேண்டாம் என்று எங்கும் கூறிவருவதோடு மனித சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சமய நூற்களைச் சுட் டெரித்துச் சாம்பலாக்கி மதத்தின் மீது தங்களுக்குள்ள வெறுப்பைத் தாராளமாய்க் காட்டி வருகின்றார்கள். பகுத்தறிவுச் சங்கம், நாதிக சங்கம், சுதந்திரச்சிந்தனையாளர் சங்கம், ஜாதி மறுப்புச் சங்கம், (ஜட்பட் டோரக் மண்டல்) புரோகித மறுப்புச் சங்கம், உண்மை நாடுவோர் சங்கம், சமூக சீர்திருத்த சங்கம், போன்ற பல சங்கங்களும் மதத்தை ஒழித்தாலன்றி மனித சமூகம் முன்னேற்றம் பெற வழியில்லை என்ற முடிவிற்கு வந்து கொண்டிருக்கின்றன. மக்களின் முற்போக்கை நாடும் ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும் இந்த மத சம்மந்தமான பிரச்னை வேரூன்றி என்ன செய்வது என்ற சிந்தனையி லாழ்த்தி வருகின்றன. இப்பொழுது இந்திய தேசீயச் சமதர்ம இயக்கம் ஒன்று நாட்டில் துளிர்த்து வருகிறது. அதன் தலைவர்களில் பலர் மக்களின் பொருளாதார வேற்றுமைக்கு ஆதாரமாக இருப்பது மதந்தான் என்ற முடிவு கொண்டவர்களாய் இருந்து வருகிறார்கள். சுயமரியாதைக்காரர்களால் இந்நாட்டில் விதைக்கப்பட்ட மதம் ஒழிப்புக் கிளர்ச்சி அகில இந்தியப் பிரச்சனையாய் முளைத்து வளர ஆரம்பித்து விட்டது. ஃ ஃ ஃ இந்நிலையில் வட இந்தியாவிலுள்ள நாசிக் ஜில்லாவைச் சேர்ந்த இயலோ என்னுமிடத்தில் 17-10-36இல் தாழ்த்தப்பட்ட மக்களின் மகா நாடொன்று பாரிடர் பீமராவ் ராம்ஜீ அம்பேத்கார் M.A., P.H.D., D.Sc. அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அவரது தலைமையுரையில், நான் பூரணமாகத் தீர்க்காலோசனை செய்தபின் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்டுகொண்டேன். நமக்குச் சம உரிமைகள் கொடுக்க மறுப்பவர்களிடமிருந்து, உரிமைகளைப் பெறுவதற்காக, இனி வீண் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியதில்லை. நம்மை ஹிந்துக்கள் என்று நாம் கருதுவதாலல்லவா கேவலமாக நடத்தப் படுகிறோம்? நாம் வேறு ஏதாவது ஒரு மதத்தைத் தழுவி விட்டால், பிறகு ஒருவரும் நம்மைக் கேவலமாக நடத்தத் துணிய மாட்டார்கள் அல்லவா? நீங்கள் பிறமதத்தை தழுவும் விஷயத்தில், உங்களுக்கு எந்த மதம், மனத்திற்குப் பிடித்தமானதோ, அதைத்தழுவிக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு எந்த மதம் சரியான சமத்துவத்தைக் கொடுக்கத் தயாராய் இருக்கிறதோ அந்த சம உரிமை மதத்தைத் தழுவுங்கள். நாம் செய்த தவற்றைச் சரிப்படுத்திக் கொள்வோம் - துர் அதிருஷ்ட வசமாகத் தீண்டப் படாதவன் என்னும் களங்கத்துடன் பிறந்தேன். அம்மாதிரி பிறந்தது நான் செய்த தவறல்ல; ஆனால் நான் ஒரு ஹிந்துவாகவே இறக்கப்போவதில்லை; தீண்டப்படாதவன் என்னும் களங்கத்துடன் இறக்கப்போவதில்லை இந்த மாறுதல் செய்து கொள்வது என் சக்திக்குட்பட்டதாகும். எனக் கூறினார். இதை அனுசரித்து அம்மகாநாட்டில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பத்திரிகைகளிலெல்லாம் இச்செய்தி பறந்தது. பகுத்தறிவுள்ள ஹிந்துக்களின் உள்ளம் பதறிற்று. தேசீயவாதிகள் திகைப்புற்றனர். கிறிதவர்கள் அம்பேத்காரிடம் சென்று தம் மதத்தைத் தழுவும்படி வேண்டினர். பௌத்தவர்கள் தம் மதத்தின் பெருமையை எடுத்துக் காட்டினர். சீக்கியர்கள் தம் சமயத்தின் சிறப்பைச் செப்பினர். சமதர்மிகள் தம் இயக்கம் ஒன்றினால் பூர்ண சமத்வம் பெறமுடியுமென்று முளக்கினர் ஆரிய சமாஜிகள் தம் மதத்தில் ஜாதி பேதம் கிடையாது சமத்துவம் உண்டு என்று வரவேற்றனர். ஆரிய சமாஜத் தலைவர்களில் ஒருவரான ஒரு பார்ப்பனப் பண்டிதர் அம்பேத்கார் ஆரிய சமாஜத்தைத் தழுவு வதானால் தனது புதல்வியை அம்பேத்கார் புத்திரருக்கு மணம் செய்து கொடுப்பதாகக் கர்ஜித்தார். சங்கராச்சாரியார் சேரியிலே தான் வந்து குடியிருக்கவும் தயார்; தாழ்த்தப்பட்டோர் மதம் மாறவேண்டாம் என்று கூறினார். முலீம்கள் அம்பேத்காரை இலாத்திற்கு அழைத்து ஐம்பது வருட திட்டம் ஒன்று கண்டு ஒரு கோடி ரூபாயும் சேர்க்கத் தீர்மானித்துள்ளனர். பஞ்சாப் மாஜி மந்திரியின் புதல்வரும் சமீபத்தில் இலாத்தைத் தழுவியவருமான கே. எல். கௌபா எம்.எல்.ஏ. அவர்கள் அம்பேத்காரையும் அவர்தம் கூட்டத்தாரையும் இலாத்துக்கு அழைத்ததோடு இலாம், மத - அரசியல் பொருளாதாரத்துறையில் சமத்துவம் அளிக்க வல்லது என்று எடுத்துக்காட்டினார். இந்தியப் பகுத்தறிவுச் சங்க தாப்கரும், பம்பாய் மாஜி மந்திரியும், லக்ஷ்மணபுரி சர்வகலாசாலை உப சான்ஸலருமான Dr. R.P. பாராஞ்சிபை M.A., Ph. D., D.Sc., அவர்கள் அம்பேத்காரை, மதங்களை யெல்லாம் விட்டு விட்டு அறிவியக்கத்தைத் தழுவும் படி அழைத்தார்; சுய மரியாதை இயக்க தாபகர், பொது உடமைத் தலைவர், நாதிகத்தின் தந்தை, கீழ்நாட்டு லெனின் மதவிரோதி, சமூக சீர்திருத்தப் பெரியார், ஜாதி மறுப்புச் சங்க உபதலைவர் மதத்தை ஆழக்குழி தோண்டிப்புதைத்து அதன்மேல் அறிவியக்கதாபனத்தை நிறுவுகிறவர் என்று கூறிக்கொள்ளும் தமிழ் நாட்டுத் தனி பெறும் தலைவர் தோழர், இராமசாமி இலாத்தைத் தழுவும்படி அம்பேத்காருக்குத் தந்தி கொடுத்தார். பத்திரிகையில் எழுதினார். சொற்பொழிவாற்றினார். ஒவ்வொரு மததரும் தத்தம் மதத்துக்கு அம்பேத்காரை அழைத்தனர். ஒவ்வொரு இயக்கத்தாரும் தம் தம் இயக்கத்தைத் தழுவினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்வம் கொடுக்க வல்லது என்று அம்பேத்காரை வரவேற்றனர். இஃது அவர்கள் தம் கொள்கை மீது (மதத்தின் மீது) கொண்ட பற்றும் நம்பிக்கையுமாகும். மதமொழிப்பு இயக்கமாகிய சுய மரியாதை இயக்கத்தின் சர்வாதிகாரியாக நடிக்கும் திரு. ஈ.வெ. இராமசாமி அம்பேத்காரை அவர்தம் சகாக்களான தாழ்த்தப்பட்ட மக்கள்என்போர்களுடன்மதங்களைமறந்துசமூகப்பொருளாதாரசமத்துவத்தைநல்கவல்லசுயமரியாதைஇயக்கத்தைத்தழுவும்படிஅழையாதுஇலாத்தைத்தழுவும்படிஅம்பேத்காருக்குத்தந்தியடித்தும்,பத்திரிகையில்தாழ்த்தப்பட்டமக்களுக்குஇலாமேஏற்றமதம்என்றும்எழுதியதும்அவரது கோணல்பேச்சிற்குஅட்வக்கேட்ஒருவர்பாஷ்யம்கூறுவதும்மிகவேடிக்கையாகஇருப்பதோடுசுயமரியாதைஇயக்கத்தின்மீதுஇவர்கள்கொண்டபற்றையும்,நம்பிக்கையையும்வெளிப்படுத்துவதோடுசு..k. காரர்கள் என்போர் அதற்குத் தலையை ஆட்டிக்கொண்டிருப்பது சு.ம. கொள்ளையின் மீது மக்களின் பற்றின்மையும், இயக்கத்தின் பலவீனத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் எடுத்துக்காட்டுகின்றது. அம்பேத்கார் என்னும் ஓர் அழகிய நங்கை வைதீகனும், பெண் உரிமையை மறுக்கும் கிழவனுமான இந்து (இந்து மதத்தை) என்னும் ஒரு புருஷனிடமிருந்து விவாஹ விடுதலைபெற்று தனக்கு சமத்துவத்தை நல்கும் ஓர் ஆடவனை மணக்குமாறு ஒரு பூங்காவில் வந்து நிற்கின்றாள். அப்பூங்காவில் இலாம், சீக்கியம், பௌத்தம் கிறிதவம், பகுத்தறிவு, சோஷியலிஷம், சுயமரியாதை என்னும் பல ஆடவர்கள் நிற்கின்றார்கள். ஒவ்வொருவரும் அம்பேத்கார் என்னும் அவ்வழகிய நங்கையைக் கண்டு காதலுற்று தன்னைக் காதலித்தால் சமத்வம் அளித்து இன்பந்துய்க்கலாம் என்று அழைக்கின்றனர். அவ்வழகி இறுதியாக சுயமரியாதையைக் கடைக்கண்ணால் நோக்குகின்றாள். ஆனால் சுயமரியாதை என்னும் ஆண்மகனோ? அழகிய நங்கையே! நீ அதோ நிற்கும் இலாமியனைத் தழுவிக் கொள். அவனே உனக்கு சகல உரிமையும் தருவான் என்கின்றான். சுயமரியாதைக்கு ஆண் தன்மையிருந்தால் நானே உனக்கு எல்லா உரிமையும் நல்க வல்லவீரன். நீ என்னைக் காதலித்தால் உனக்கு சமூக-பொருளாதார உரிமையெல்லாம் கொடுக்க முடியும். வேறு இங்குள்ள (இவ்வுலகிலுள்ள) எவராலும் கொடுக்க முடியாது. நீ எவரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார் என்று கூறுவானன்றோ? சுயமரியாதை பேடியாய் இருத்தலினாலன்றோ அம்மங்கையை இலாமியனுக்கு கூட்டிவிட முயல்கின்றான். இச்சித்திரந்தான்அம்பேத்காரைஇலாத்தைத்தழுவச்சொல்லும்கூற்றின்பொருளைநன்குவிளக்குவதாகும்.திரு. ஈ.வெ. ராவின் இந்த வாதந்தான் சுயமரியாதை இயக்கத்திற்கு பெருந்துரோகம் என்பது மட்டுமல்ல mவ்வியக்கைFழிதோண்டிòதைக்கத்தக்கfருவியுமாகும்.jh‹ இலாத்தை தழுவுமாறு கூறியது பொது உடமைக் காரர்களுக்கும் நாதிகர்களுக்குமல்ல மதம் nவண்டும்vன்றுTறும்jழ்த்தப்பட்டவர்களுக்கேvன்றுãன்னால்xருòதியÉaக்யானத்தைதிUஈ.வெ.ரh. தம் குடி அரசில் தீட்டிவிட்டிருக் கிறார். இது எத்துணை பொறுப்பற்ற - நியாயமற்ற - அறிவிற் கொவ்வாத - ஊத்துக்கு நிற்காத வாதம் என்பதை வாசகர்களை யோஜித்துப் பார்க்குமாறு வேண்டுகின்றேன். நாதிகப் பொது உடமைக்காரர்களுக்கா இவர் இதுவரை பிரசாரஞ் செய்கிறார்? நாதிகப் பொது உடமைக்காரர்களாகிய என்போன்றோர்களுக்கு இவரது பிரசங்கம் எதற்கு? நான் இதுவரை மதத்தை விரும்பும் கடவுளைக் கட்டியழும் பாமர மக்களுக்கே சுயமரியாதைப் பிரசாரம் என்றிருந்தேன். தற்பொதைய ஈ.வெ. ரா - வின் கூற்றைக் கண்டு பெரிதும் ஏமாற்றமடைந்தேன். நோயாளிகளுக்கன்றோ வைத்தியம் வேண்டும். சுகசரீரிகளுக்கு வைத்யம் எதற்கு? என்பது கூடவா திரு. ஈ.வெ. ரா விற்குத் தெரியாமல் போய்விட்டது. அறிவியக்க வாதிகள் என்று கூறி திரு ஈ.வெ. ரா. விற்கு அடிமையாய் விடவேண்டாம் என்று எனது சுயமரியாதைத் தோழர்களை எச்சரிக்கை செய்கின்றேன். நமக்கு அறிவிருந்தால் சுயமரியாதை இருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலாத்தை சிபாரிஷ் செய்யும் ஈ.வெ. ரா. வின் இச்செயலை ஒவ்வொரு சு. ம. காரனும் சு.ம. சங்கங்களும் கண்டிப்பாய் கண்டனம் புரியும் என்பது நிக்ஷயம். நமது தலைவராச்சே அவரை நாம் கண்டிக்கலாமா? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டாலும் நாம் அவரை எதிர்க்கலாமா? என்று எனது செவிகளில் விழும்படியே பேசுகின்றனர். சிலசு..k. காரர்கள் ஜாதிக்கட்டை மீறாதே என்று பத்து மாதம் சுமந்து பெற்றதாயின் கண்ணீரைப் பொருட்படுத்தாதிருந்து விட்டோம், சமயக்குறியை விடாதே என்று பயமுறுத்திய நமது அருமைத் தந்தையின் வார்த்தையை புறக்கணித்து விட்டோம் சமயத்தைக் கண்டிக்காதே என்று மொழிந்த நமது உற்றார், நண்பர் அனைவரின் பேச்சையும் தள்ளியெறிந்து விட்டோம் அதனால் ஏராளமான கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மகிழ்ச்சியோட ஏற்றுக்கொண்டோம். எதற்காக? - கொள்கைக்காக. ஆனால் கொள்கைக்கு மாறாக கடவுளை, நாயன்மார்களை அவர்களின் அரிய பாக்களையெல்லாம் குப்பைக் குழியில் தள்ளிவிட்டு அவ்விடத்தில் கொள்கையை விற்கும் திரு. இராமசாமியை வைத்து பூஜை நைவேத்யம் செய்து அவரது அறிவிற்கொவ்வா வாதங்களை வேதவாக்காகக் கொண்டு நடக்கவேண்டும் என்று கூறினால் இந்த சுயமரியாதை மதத்தையும் அடியோடு ஒழிக்கவேண்டியது அறிவுடையோர்களின் முதற் கடமையாகுமன்றோ. திரு. இராமசாமி mவர்களிடத்தில்vdக்குஅ‹புண்டுமâப்புண்டு.Mdhš அது எந்த அளவில்? வைதீக இருள் சூழ்ந்த தமிழ் நாட்டில் இப்புனிதச் சு - ம. இயக்கத்தை ஆரம்பிக்கத் துணைநின்று அதன் வளர்ச்சிக்கு தன்னாலியன்றதை செய்த அளவிற்கே. ஆனால் இப்பொழுது அவ்வியக்க வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாய் நின்றால் ஐயா! நீங்கள் இதுவரைச் செய்த தொண்டிற்கு எங்களின் மனப்பூர்வமான நன்றி, வயது காலத்தில் தாங்கள் சௌகரியமாய் ஊட்டிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எங்களிடம் சமதர்ம ஆட்சி வரும் காலத்தில் உங்களுக்கு ஓர் உயர்ந்த சிலை செய்வித்து உங்கள் நன்றியை என்றும் போற்றிக் கொண்டிருப்போம். அஃதன்றி எங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாய் எங்கள் இயக்கத்திலிருந்து கொண்டே நல்ல மரத்தில் புல்லுருவி வீழ்ந்தாற்போன்று எங்கள் இயக்கத்திற்கு விரோதமாய் நடப்பதோடு மட்டுமன்றி தவறான வழியில் அவ்வியக்கத்தின் போக்கையே மாற்றி அதற்குத் துரோகஞ் செய்தால் நாங்கள் உங்களின் போக்கிற்குச் செவிசாய்க்க முடியாது என்று அவரை நமது வழியில் முட்டுக்கட்டையாய் இருக்கவிடாது செய்யவேண்டியதே அறிவுள்ள சு.ம. காரனின் கடமையாகும். சு.ம. இயக்கத்திற்கு பாதகம் புரிவோர் தலைவராயினும் நண்பராயினும் கண்டிப்பதே சு.ம. காரனின் முடிந்த முடிபு; உயரிய லக்ஷணம். நமக்குத் தனிப்பட்ட எந்த நபரினும் கொள்கையே பிரதானம். நமக்கு அறிவும், ஆண்மையும், சுயமரியாதையும், நியாயத்திற்காகப் போராடும் மனோ சக்தியும் உண்டு என்று காட்ட காட்ட சுயமரியாதைக் காரர்கள் எப்பொழுதும் தயாராய் இருக்கவேண்டும். அம்பேத்காருக்கும் அவரது சகாக்களான தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சமத்துவமளிக்க சுயமரியாதை இயக்கத்தால் முடியாதென்றால் சுயமரியாதை இயக்கத்தை நாமேன் கட்டியழ வேண்டும். இன்றே சுயமரியாதை இயக்கத்தை கலைத்துவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்வத்தை நல்கும் இயக்கத்தில் நாம் சேர்ந்துவிடலாம். ஆனால் நாம் அவ்வாறு கருதவில்லை. சு.ம. இயக்கம் உலகிலுள்ள தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட, சுரண்டப்பட்ட எல்லா மக்களுக்கும் பரிபூரண விடுதலையை அளிக்க வல்லது என்று கருதுகின்றோம். எனவே அவ்வியக்கத்தில் இருந்து வருகின்றோம். திரு ஈ.வெ. ராவிற்கு சு. ம. இயக்கத்தில் நம்பிக்கையில்லாவிடில் அதினின்று நீங்கி இலாத்திற் புகுந்து அப்துல்காதராகி ஏன்? இராமசாமி ராவுத்தராகி தாழ்த்தப்பட்ட மக்களை இலாத்திற்கு அழைப்பதே நேர்மையும் நியாயமுமாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலாத்தை சிபாரி செய்யும் திரு. ஈ.வெ. இராமசாமி இலாத்தையும் அதன் பிரிவுகளையும் முலிம்களின் பழக்க வழக்கங்களையும் நன்குணர்ந்து ஏதாவது கூறியிருந்தால் நாம் சிறிது ஆறுதல் அடைய வழியுண்டு. இலாத்தில் சுன்னிகள், ஷீயாக்கள், காதியானிகள், லாகூரிகள் (அஹமதிகள்) வஹாபிகள், நேச்சரிகள், போன்ற பல பிரிவினைகளுண்டு. சுன்னிகளின் பள்ளிவாசலுக்குள் அஹமதிகளை அனுமதிக்க மாட்டார்கள். (இஃது எமது சொந்த ஊராகிய சாத்தன்குளத்திலே நடக்கும் சம்பவமாகும்.) அஹமதிகள் சுன்னிகளின் பள்ளி வாயிலுக்குப் போனதினால் அடிதடியும் ஆயிரக்கணக்காய்ப் பணச்செலவும் ஏற்பட்டும் இன்னும் ஒரு முடிவும் ஏற்படவில்லை. பலவிடங்களில் இத்தகைய தகரார்கள் ஏற்பட்டு பதினாயிரக் கணக்காய் பொருள் செலவாகி சில கோர்ட்டுகளில் அஹமதிகள் பள்ளிவாயிலுக்கு செல்ல உரிமையுண்டென்றும் சில கோர்ட்டு களில் சுன்னிகள் பள்ளியிலுக்குள் அஹமதிகள் செல்வதற்கு உரிமை கிடையாதென்று தீர்ப்பாயிருக்கிறது. ஷீயாக்கள் பிறபிரிவைச் சேர்ந்த முலிம்களை தம்மோடு தொழுதுகொள்ள விட மாட்டார்கள். பிறபிரிவார்கள் கால் வைத்துவிட்டால் தண்ணீர் விட்டு சுத்தம் செய்த பின்னரே அதில் தாங்கள் தொழுகின்றார்கள். நேச்சரி கூட்டத்தாரின் நிழல் தம்மேல் பட்டாலே பாபம் என்று வஹாபிகளும் பிற பிரிவாரும் எண்ணுகின்றார்கள். இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் இலாத்தின் எந்த பிரிவில் சேரவேண்டும்? என்று âU.ஈ. வெ. இராமசாமி சிபாரி செய்கிறார்? என்பதை நம்மால் உணரவில்லை. எப்பிரிவில் சேர்ந்தாலும் ஒரு பிரிவார் மற்றொரு பிரிவாரை காபிர் என்று இழித்துக்கூறி தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் நடத்துவதைப்போல் நடத்துவதோடு மட்டுமல்லாது பெரும் கலகமும் விளைத்து வருகின்றார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் பார்ப்பனர் வீட்டில் கொள்வினை கொடுப்பினை செய்வதைவிட ஒரு பரம்பரையான முலிம் வீட்டில் சம்பந்தம் செய்வது கடினம். ஜாதிக்கர்வம் இந்து மதத்தில் இருப்பதைவிட ஒரு சிறிதும் குறைந்ததென்று எவரும் கூறிவிடமுடியாது. வடஇந்தியாவில் சிலவிடங்களில் மீன் பிடிக்கும் சில கூட்டத்தார் சிலரை தீண்டத் தகாதவர்களைவிட மிகக் கேவலமாக உயர்தர முலிம்கள் நடத்துகிறார்கள் என்று தமிழ் நாட்டு முலிம் பத்திரிக்கைகள்கூட கூக்குரலிட்டு வருகின்றன. பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி வாய்கிழியக்கத்தும் இராமசாமியார் உலகிலுள்ள எந்த மதத்திலுமில்லாத சுதந்திரத் தோடு, தானே சம்பாதிக்கவும், தாம் நினைத்த இடங்களுக்குத் தாராளமாய்ச் சென்றுவரவும் நல்ல காற்றை சுவாசித்து வரவுமான சுதந்தரத்தோடு விவாஹரத்து, விதவை மணம் போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றிருக்கும் தாழ்த்தப்பட்ட பெண்மணிகளை இலாத்திற் சேர்ந்து முக்காடிட்டு, வீட்டின் ஒரு முலையில் இருட்டரையில் பதுங்கி, கல்விகற்க வழியற்று காசநோய்க்கு ஆளாகி, உலகக்காட்சிகளைக் காணஇயலாது, கோஷா திரிக ளாகச் செய்ய விரும்புகிறாரா? அல்லது 3 கோடி தாழ்த்தப்பட்ட ஆண்களுக்கே இலாத்தை சிபாரிஷ் செய்கிறேனே யொழிய 3 கோடி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கல்ல என்கிறாரா? 3 கோடிப் பெண்களுக்கும் இலாத்தை சிபாரிஷ் செய்கிறேன் என்றால் வருங்கால சரித்திரத்தில் ஈ.வே.ரா. பெண்ணுலகின் துரோகி என்று கண்டிப்பாய் எழுதப்படும் என்பது நிக்ஷயம். இந்துமதப் புரோகிதர்கள் வாயில் மண்ணடிக்கவே ஈ.வெ.ரா. தாழ்த்தப் பட்டார்க்கு இலாத்தை சிபாரிஷ் செய்கிறார் என்கிறார் அவரது சிஷ்யரில் ஒருவர் (தாழ்த்தப்பட்டார்களுக்கு புரோகிதக் கொடுமை உண்டென்பது முழுப்பொய்யாகும். ப-ர்). இது முழுப் பூசணிக் காயைச் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும். வேண்டுமானால் சீர்திருத்த வாதிகளான விரல் விட்டெண்ணத்தக்க முலிம்கள் எங்கள் ஏட்டில் புரோகிதமில்லை என்று கூறலாம். ஆனால் அனுஷ்டானத்தில் பார்த்தால் இந்து மதத்தைவிட இலாத்தில் புரோகிதக்கொடுமை அதிகம். இலாத்திலுள்ள புரோகிதக் கொடுமையை ஒழிக்கவே கல்கத்தாவில் மௌல்வி அப்துல்ரஷாக் மாலிஹாபாதி என்பவர் முல்லா ஒழிப்புச் சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்பதை ஈ.வெ.ரா. ய்ட்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம். 22 கோடி மக்களைக் கொண்ட ஹிந்து மதத்தையும் உலகிலுள்ள நவீன ஆயுதப்பலங்களை யெல்லாமுடைய பிரிட்டீஷ் ஏகாதிபத்யத்தின் குறைபாடுகளையும் மணிக்கணக்காகப் பேசியும், பக்கம் பக்கமாய் எழுதிவந்த திரு. ஈ. வெ. ரா. இலாத்தைப் பற்றி வாய்திறக்க அஞ்சுவானேன்? குடி அரசில் சமதர்மக் கர்ஜனை புரிந்து வந்த தோழர், I.M. இப்ராஹீம் வைதீக முலீம்களிடம் பட்ட பாட்டை ஈ. வெ. ரா அறிவார். சிரத்தானந்தர், ராஜபால் போன பாதையை யுணர்வார். எனவே புத்திசாலித்தனமாக இலாத்தின் பக்கம் செல்வதில்லை. இலாமியர் பிறமததர்களுக்கு, கொள்கைக் காரர்களுக்கு எவ்வளவு பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அளிப்பர் என்பதை ஈ.வெ. ரா. உணர்ந்து பார்ப்பாராக. சு.ம. இயக்கத் தோழர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மக்களாகும். அவர்கள் தம் உற்றார் உறவினரோடு இலாம் புகுந்து விட்டால் ஈ. வெ. ரா. அவர்கள் வீட்டினருகேயாவது செல்ல முடியுமா என்று அவரை வினய பூர்வமாய் வினவுகின்றோம். பொருளாதார சுதந்திரம் பெற்றாலன்றி மனிதன் சௌக்கிய மாய் வாழமுடியாது என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் பூரண விடுதலை பெற வேண்டுமானால் பொருளாதாரச் சமத்துவம் வேண்டும் என்றும், சுயமரியாதை இயக்கந்தான் சமூகப் பொருளாதாரச் சமத்துவமளிக்க வல்லது என்றும் கூறியது சு. ம. காரர்களின் பழைய பாலபாடம். ஆனால் இலாத்தினால் பொருளாதார சமத்துவம் அளிக்க முடியாதென்று முலிம் பத்திரிகைகளே கூறிவருகின்றன. உதாரண மாக:- நவ் முலிம்களுக்குப் பொருளாதாரச் சுவர்க்கம் கிடைத்து விடும் என்று ஹரிஜனங்கள் எண்ணலாகாது; முலிம்கள் இம்மாதிரியான வாக்குறுதியையளிக்கலாகாது; ஜனாப் கே. எ. கௌபா, எம்.எல். V., அவர்கள் தம் அறிக்கையில் மத, அரசியல், பொருளாதாரத்துறையில் சமத்வம் அளிப்பதாக கூறியிருக்கிறார். இலாம் மத சமத்துவத்தைத் தடையின்றி அளிக்கின்றது; அரசியல் சுதந்திரத்தையும் கட்டாயம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. ஆயினும் பொருளாதாரச் சமத்துவத்தை யளிப்பதென்பது யாராலும் செய்ய முடியாத காரியமாகும். தற்காலத்தில் முலீம் சமூகத்திலுள்ள ஏழை மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை முலீம் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுது முலீம் சமூகம் ஏற்காத பொறுப்பை மதமாறும் ஹரிஜனங்களுக்கு அளிப்பதாக யாரோ கூறி அப்பொறுப்பை நிறைவேற்ற முடியும்? இந்த அம்சத்தை முலீம் தலைவர்கள் தீர்க்காலோசனை செய்து, முடிபு கூறுவார்களாக. என்று ஒரு முலீம் பத்திரிகையே கூறுகிறது. பொருளாதாரப் புரட்சி தோன்றும் வரை தாழ்த்தப்பட்ட மக்கள் பிறமதம் புகுவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதாகும். மதங்கள் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது தோல்வியுற்று விட்டன. மதத்திற்குத் தாயகமாய் நின்ற ரஷியா மதத்தை நிர்மூலம் செய்து அரசாங்க சட்டங்களில் மூலமாக மக்களுக்கு சமத்துவமும் சுதந்தரமும் இன்பமும் அளித்து வருகிறது. சட்டங்கள் மூலமாகவே நாம் நன்மையடைய முடியும். சட்டங்கள் செய்ய நாம் அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று சுயமரியாதை காரர்களுக்கு கற்பித்த பால பாடத்தை நமது ஆசிரியர் இராமசாமி மறந்து இலாமியப் பிரசாரம் பண்ண முனைந்தது பெரும் வேடிக்கையேயாகும். சட்டத்தாலன்றி மதத்தால் ஒன்றும் சாதிக்க இயலாது என்பதை நன்குணர்ந்த தாருல் இலாம் என்னும் ஒரு முலீம் பத்திரிகை சென்ற ஆகட் மாதம் 14 ஆம் தேதியில், சட்டம் சர்வ வியாபகம் பெற்றிருக்கிறது; ஒரு காலத்தில் சர்வாதிக்கம் செய்து வந்த மதம் இப்பொழுது சட்டத்திற்குக் கீழ்ப்பட்டதாகி விட்டது. மதத்தில் சட்டம் தலையிடக்கூடாது என்று வைதீகர்கள் முறையிடுவதெல்லாம் வீண் கூச்சலேயாகும் இக்கூக்குரல் அம்பலமேறாது. சட்டத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த மதத்தலைவர்கள் உலகமெங்கணும் தோல்வியுண்டனர். மதம் பிறரையாட்டிவைத்தகாலம் போக மதம் இப்பொழுது பிறரிடம் உயிர்ப்பிச்சை கேட்கவேண்டியதாக இருக்கிறது. உதாரணமாக-ருஷியாவில் மதம் அனுமதிக்கப்படவில்லை; ஜெர்மனியில் ஸர்க்கார் அங்கீகரிக்கும் நாஜியர்களின் மதமே மக்கள் மதமாக இருக்கிறது. ரோமன் கத்தோலிக் கிறிதவர்கள் ஜெர்மனியில் படும்பாடு வர்ணிக்க முடியாததாக இருக்கிறது. காரணம் என்னை எனின், ஜனநாயகத்தில் மதம் ஒரு நாளும் சர்வாதிகாரம் பெறாது. சட்டத்திற்கு மதம் விட்டுக் கொடுத்தால்தான் மதம் ஆபத்தின்றி அதன் கடமைகளைச் செய்ய முடியும். ஜனநாயகம் வளர்ந்தோங்கும் எல்லா நாடுகளிலும் அரசாங்கங்களிலும் மதம் சட்டத்திற்கு அடங்கியே இருக்கிறது. சட்டமாவது பிரஜைகளின் லௌகீகத் தேவைகளையொட்டி இயற்றப்படுவதாகும். சட்டத்திற்கும், மதக் கோட்பாடுகளுக்கும் தக்ரார் ஏற்படுமாயின் மதந்தான் தோல்வி யடையும். என்பவைகளை திரு. ஈ. வெ. ரா. நன்கு ஆராய்ந்து பார்க்கட்டும். இந்து மகா சபைத்தலைவர் திரு. N. C. கேல்கார் கிறிதவர்கள் பள்ளிக்கூடம் கைத்தொழிற்சாலை, ஆபத்திரி முதலிய ரோபகாரச் சேவைகளைச் செய்து, மதம் மாற்றம் செய்யும் ஆசாமிகளை உண்மையில் கைதூக்கி விடுகின்றனர். ஆனால் முலீம்கள் மதம் மாற்றம் செய்ததும், நவ் முலிம்களை நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்கள். ஜீவனோ பாயத்தைக் காட்டுவதில்லை. நவ்முலிம்கள் பிச்சைக்காரர்களாகத் தெருவில் அலைகிறார்கள். என்று கூறிய கூற்றுகளை சுயமரியாதை இயக்கத்தின் மாஜித் தலைவர்களின் ஒருவரான M.R. ஜெயகர் ஆதரிப்பதையும் தோழர். ராமசாமியும் சுயமரியாதைத் தோழர் களும் சிறிது யோஜித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எத் தலைவரும் ஒரு பெரும் இயக்கத்தின் சார்பாகக் கூறும் ஒரு சிறு வார்த்தையும் பின்னால் எவ்வளவு தீமையை நல்கும் என்பதை ஆலோசித்து அவ்வார்த்தையைக் கூறவேண்டும். தோழர் இராமசாமி சுயமரியாதை இயக்கத்தலைவர் பேச்சு வன்மை படைத்தவர். எழுத்து வன்மையுடையவர். தம்மை எதிர்த்தவர் களுக்கு பதில் கூறுவதில் ஒப்பாரும் மிக்காருமற்றவர். மாபெறும் தர்க்கவாதி. ஆனால் அவரது தவறான கூற்றை தாபிக்க இப்பொழுது தமது பேனா முனையின் திறமையை காட்டலாம். ஆனால் அறிவியல் வாதிகள் ஏமாந்து விடமாட்டார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து மனம் சகிக்க முடியாது. தற்கால சாந்தியாக இலாத்தில் சேரும்படி தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மனித ஜீவ அபிமானியாகிய நான் யோஜனை கூறினேன். அதில் தவறொன்றுமில்லை என்று இராமசாமியார் கூறலாம். ஆனால் அவ்விடைகளினால் சமதர்மி ஒருவன் திருப்தி யடையமாட்டான். தொழிலாளர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கஷ்டப்பட்டு பட்டினியால் நைந்து, மெலிந்து, வாடி, வதங்கி அல்லற் படும்பொழுது உண்மையான சமதர்மிகள் அக்கோரக் காட்சியைக் கண்டு மனமிளகுவதில்லை. தொழிலாளர்கள் அக்கஷ்டத்தோடே சாவதாயினும் சமதர்மத்தலைவர் எவரும் பொருட்படுத்தார். ஆனால் சமதர்மிகள் அவர்களின் கஷ்டத்தைத் தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். கஷ்டப்படும் தொழிலாளர்களிடமும் ஏனைய தொழிலாளர்களிடமும் கஷ்டத்துக் கெல்லாம் காரணம் முதலாளித்துவமே என்பதை விளக்கிக்கூறி அக்கொடிய இன்னலை விளைவிக்கும் முதலாளிதத்துவத்தை ஒழிக்க தங்களோடு வந்து சேர்ந்து முதலாளித்துவத்தை முறியடிக்க அழைக் கின்றார்கள். கஷ்டமுறும் தொழிலாளிகள் உடனே உண்மை கண்டெழுந்து முதலாளித்துவத்தை ஒழித்து விட்டே மறுஜோலி பார்ப்பேன் என்று சபதம் செய்து சமதர்மக் கூட்டத்தில் சேர்ந்து போர்வீரனைப்போன்று உழைக்கின்றான். ராஜ தந்திரமுள்ள முதலாளிகளோ கஷ்டப்படும் தொழிலாளிகள் தங்கள் கஷ்டத் துக்கு காரணமாயிருப்பது முதலாளித்துவம் என்பதை உணர்ந்து தங்களுக்கு விரோதமாய் கிளர்ச்சி செய்யாதிருக்க கால்வயிறு அரைக்கால் வயிறு கஞ்சியோ ஒன்றிரண்டு ரூபாய் பென்ஷினோ கொடுத்து தொழிலாளர்கள் சமதர்ம வழியில் செல்லாது தடுக்கிறார்கள். அஃது அவர்களின் சமயோஜித தந்திரம். பச்சைத் தண்ணீருக்கும் திண்டாடும் தொழிலாளி இரண்டு பருக்கையைக் கண்டதும் பரமானந்தம் எய்தி முதலாளி மோசக்காருண்யத்தை எண்ணி மகிழ்ந்து இன்னலுற்று இறந்து மடிகிறான். இதுவே மேனாட்டில் நிகழும் முதலாளியின் ராஜ தந்திரம். பஞ்சத்தால் மக்கள் வாடி வதங்கி சாகுகின்றனர். கஷ்டப்படும் மக்களுக்கு சிறிது உணவளிக்க பஞ்ச நிவார்ண கமிட்டி கூடிற்று. அக்கூட்டத்தில் 17-வயதுடைய ஓர் இளைஞன் பஞ்சத்தால் பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்க முயற்சிப்பது கொடுங்கோலனாகிய சார் அரசனின் ஆட்சியை நிலைநிறுத்த துணைபுரிவதாகும் என்று ஒரு காலத்தில் வீரகர்ஜனை புரிந்தான். அவன்தான் ரஷியாவில் சமதர்ம ஆட்சியை நிறுவிய தோழர். லெனின், அம்மாபெரும் ராஜதந்திரியின் பொன்னுரையை அர்த்த புஷ்டியுள்ள அமிர்தமொழிகளை ஆராய்ந்து பார்க்குமாறு கஷ்டப்படும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற்கால சாந்தியாக இலாமிய மதத்தை சிபார் செய்யும் சுயமரியாதைக்காரர்களை கேட்டுக் கொள்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக விடுதலை அளிக்கவல்லது பொருளாதார விடுதலையை உண்டுபண்ணக் கூடியது சுயமரியாதை இயக்கமாகிய அறிவியக்க மென்றும் அதில் பூரணமாய் வந்து கலக்குமாறு தாழ்த்தப்பட்ட மக்களை அழைப்பதோடு எந்த மதபக்தர்களின் ஏமாற்றுப்பேச்சிலும் மதங்களுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு பேசும் எந்த தலைவர்களின் வலையிலும் சிக்கிவிடாதீர்கள் என்று தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சு-ம. தோழர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். அம்பேத்காரும், அவரது சகாக்கும் சுயமரியாதை சமதர்ம இயக்கத்தில் வந்து சேருமாறு அவர்களுக்கு நல்வரவு கூறுகிறேன். சமதர்ம இயக்கம் ஒன்றே தாழ்த்தப்பட்டார்க்கு சமூகப் பொருளாதார சமத்வம் அளிக்க முடியுமென்று யாம் ஒரு சு.ம.சமதர்மி யென்ற முறையில் அன்புடன் அறிவித்துக் கொள் கிறோம்.  சு-ம சமதர்மக்கட்சி ஆரம்பக்கூட்டம் 13-4-36இல் திருச்சி தென்னூர் சோஷியல் ஹோமில் சமதர்மக் கட்சியின் ஆரம்பக்கூட்டம் புதுக்கோட்டை தோழர், முத்துச்சாமி வல்லத்தரசு B.A.B.L., M.L.C., அவர்கள் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு கூடியது. தலைவரும் சென்னை தோழர், T.N. இராமன் அவர்களும் கூட்ட நோக்கங்களையும், அதன் அவசியத்தையும் எடுத்துக் கூறியபின், தோழர், திருப்பூர் T.P. இராமசாமி அவர்கள் கூட்டத்திற்கு வர வியலாமையை அறிவித்து வெற்றியுடன் நடைபெற வேண்டுமென எழுதியிருந்த கடிதங்களையும், தந்தி களையும் படித்தார். (தூத்துக்குடி K.K.A. பெரியசாமி அவர்கள் தந்தி குறிப்பிடத்தக்கது.) பின்னர் தோழர்கள் R. கிஸன், பூவாளுர் N.S.M. செல்வக்கணபதி, ஈரோடு டாக்டர் எம். கிருஷ்ணமூர்த்தி, நீலாவதி, குளித்தலை தமிழ்வாலிபன் ஆசிரியர் எம். கணபதி, பொன்மலை T.கிUZzrhÄ, மன்னார்குடி K.R.G.ghY, அறிவு ஆசிரியர், அ. இராகவன், பட்டுக்கோட்டை P.S. தெண்டபாணி, திண்டிவனம் T.M. சுப்பிரமணியம், திருத்துரைப்பூண்டி M.m¥Jšyh, ப. ஜீவானந்தம், சாரி முதலானவர்கள் கட்சியின் இன்றியமையாத ஏதுக்களையும், நியாயங்களையும், விளக்கமாகக் கூறி எழும் கேள்விகளுக்கெல்லாம் விடைகளையும் விளக்கிப் பேசிய பிறகு தோழர், சாரி அவர்கள் தமது ஆலோசனைகளை தெளிவாகப் பேசினார்கள். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் பற்பல விவாதங்களுக்குப் பிறகு ஏகமனதாக நிறை வேறியது. 1. சமதர்ம லட்சியங் கொண்டு திகழ்ந்த சுயமரியாதை இயக்கம், உருக்குலைந்து நிற்பதால் சமதர்ம லட்சியத்தைக் கட்டுபாட்டோடு மும்முரமாகப் பரப்புவதற்காக சுயமரியாதைச் சமதர்மக்கட்சி என்ற பெயரோடு இயக்கத்தின் தீவிரப்பகுதியாக ஒரு கட்சியை இக்கூட்டம் தாபிக்கிறது. 2. சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்திய ஆட்சிமுறையையும், முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும், ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 3. அறிவிற்கும், மனித உணர்ச்சிக்கும், வாழ்க்கைச் சௌகரியங் களுக்கும் மாறுபட்ட சமூக அமைப்பையும், ஜாதி மதக்கொடுமை களையும், பொருளாதாரத் துறையில் நிலவும் கொடிய பேதத்தையும், எதிர்த்து அறிவுக்கேற்ற மாறுதலான சீரிய முறையில் அனைவரும் பங்கெடுத்துக்கொள்வதற்கான பிரசாரத்தை வலுக்கச் செய்து பூரண விடுதலைக்குழைக்க வேண்டுமென்று, இக்கூட்டம் வற்புறுத்துகிறது. 4. கீழ்க்கண்டவர்களை மகாணக்கமிட்டி அங்கத்தினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கற்பட்டு 1. எம்.கே.அழகப்பா அவர்கள், 2. டி.என். ராமச்சந்திரன் அவர்கள், 3. டி.என். இராமன். தென்னாற்காடு 1. லக்காஷ் அவர்கள், 2. T.N. சுப்பிரமணியம் அவர்கள் 3. தயானந்த பாரதி அவர்கள். 4. தாத்தாச்சாமி அவர்கள் வட ஆற்காடு 1. பச்சையப்பன் அவர்கள் 2. K. சுப்பிரமணியம் அவர்கள் கோயமுத்தூர் 1. டாக்டர் எம். கிருஷ்ணசாமி அவர்கள். 2. R. கிஸன் அவர்கள், 3. ராயப்பன் அவர்கள். திருச்சி. 1. நீலாவதி அவர்கள், 2. N.S.M. செல்வக்கணபதி அவர்கள், 3. N. சாம்பசிவம் அவர்கள். 4. எம் கணபதி அவர்கள் (குளித்தலை) 5. டி. கிருஷ்ணசாமி அவர்கள் (பொன்மலை). தஞ்சை 1. K. முருகேசன் அவர்கள் 2. KR.C. பாலு மன்னார்குடி. 3. P.K.M. ஷேக் அப்துல்காதர் திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை 1. K. முத்துச்சாமி வல்லத்தரசு அவர்கள். ராமநாதபுரம் 1. சாது குருசாமி அவர்கள். 2. P.R.N. லட்சுமணன் அவர்கள். மதுரை 1. G. கருணாநிதி அவர்கள். திருநெல்வேலி 1. A. இராகவன் அவர்கள் சாத்தான் குளம், 2. K.K.A. பெரியசாமி அவர்கள் தூத்துக்குடி. நாகர்கோயில் ப. ஜீவானந்தம் அவர்கள். வேண்டிய இடங்களில் அங்கத்தினர்களை காரியக் கமிட்டியார் சேர்த்துக் கொள்ளலாம். 5. கீழேகண்ட தோழர்கள் காரியக்கமிட்டி அங்கத்தினர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 1. டாக்டர் எம். கிருஷ்ணசாமி, 2. K.M. வல்லத்தரசு, 3. A. இராகவன் அவர்கள் கூட்டுக்காரியதரிசி. 4. நீலாவதி அவர்கள் கூட்டுக்காரியதரிசி. 5. P. ஜீவானந்தம் அவர்கள் பொதுக்காரியதரிசி. காரியக்கமிட்டியார் சங்கத்திற்கு நாடெங்கும் அங்கத்தினர் சேர்க்கவும், நிதி திரட்டவும், மறுதேர்தல் வரை பிரசாரம் செய்யவும், பிற ஆக்கவேலைகளைச் செய்விக்கவும் உரியவர்களாவார்கள். 6. கீழ்க்கண்டவர்கள் இக்கட்சியின் கொள்கைகளையும், விதிகளையும், வேலை திட்டங்களையும் தயாரித்து ஜுன் 7ஆம் தேதிக்குள் காரியக்கமிட்டி மூலம், மகாணக்கமிட்டிகளுக்கு அனுப்பி வைக்க ஒரு கமிட்டியாக நியமிக்கிறது. 1. A. இராகவன் அவர்கள், 2. P. ஜீவானந்தம் அவர்கள் 3. K.M. வல்லத்தரசு அவர்கள், 4. P.S. தண்டபாணி அவர்கள். 7. பகுத்தறிவு இயக்கமெனப்படும், சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தங்கள் அபிப்பிராயத்தை மறைக்காமல் கூறியதற்காக தோழர். ஈ.வெ.ராமசாமி அவர்கள் திருத்துறைப்பூண்டி மகா நாட்டிலும், பிறகு விளக்கமென்ற பெயரால் தமது குடியரசிலும், தோழர்கள் பேரில் கொள்கைக்குப் புறம்பாக அனாவசியமாகக் குறைகளைக்கூறி மனம்போன போக்கில் எழுதியிருப்பதை இக் கூட்டம் கண்டிக்கிறது. பகலிலும், இரவிலும் நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்க ளால் எல்லாத் தோழர்கட்கும், விருந்தளிக்கப்பெற்றது. காலை முதலே பற்பலர் வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் வந்திருந்த தோழர்கள் கட்சியைப் பற்றியும், இயக்கத்தின் முற்கால, தற்கால, போக்குகளைப்பற்றியும் தோழர் ஈ.வெ.ரா. அவர்களின் போக்குகளைக் குறித்தும், விவரித்துக்கொண்டிருந்தார்கள். இரவு 9 1/2 மணிக்கு ஜீவானந்தம் அவர்களால் உபசாரங் கூறப்பட்டு கூட்டம் கலைந்தது. வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஈரோடு டாக்டர் எம். கிருஷ்ணசாமி, புதுச்சேரி லக்காஷ், புதுக்கோட்டை வல்லத்தரசு, அ. ராகவன் கோயம்புத்தூர், R. கிஸன், நீலாவதி, இராமசுப்பிரமணியம், செல்வக்கணபதி திண்டிவனம், தயானந்த பாரதி, T.N. சுப்பிரமணியம் திருத்துறைப்பூண்டி, S. வெங்கடாஜலம், S. சுந்தரேசன், P.K.M. ஷேக் அப்துல்காதர், (சு.ம. மகாநாட்டு வரவேற்பு கமிட்டித் தலைவர்) N. அப்துல்லா, மதுரை கருணாநிதி குளித்தலை, மு. கணபதி சேலம், P. ரெங்கசாமி, (அனுப்பபாளையம்) கரூர் கே. செங்கோடன் திருச்சி A.A. கிரி, N. சங்கரன், N. சாம்பசிவம் T.P. நடராஜன் பட்டுக்கோட்டை, P.S. தெண்டபாணி, கோவை இராமதா திருப்பூர், டி.பி. இராமசாமி அனுப்பபாளையம், நஞ்சப்பன் பொன்மலை, டி. கிருஷ்ணசாமி கோயமுத்தூர், சோதிநாதர், எம், கிருபாபுரி பொன்மலை, ஷண்முகவேல், எ. v«. மணி சென்னை, T.N. இராமன் முதலானவர்கள்.  சு.ம. சமதர்மக்கட்சி ப. ஜீவானந்தம் 12ஆம் உ-ஆம் சென்ற ஏப்ரல் மாதம் 12ஆம் உ தான் திருச்சி தென்னூர் சோஷியல்ஹோம் காலையிலிருந்து இரவு 9 மணி வரையில் கலகலத்துக் கொண்டிருந்தது. V‹?- தமிழ் நாட்டின் பல ஜில்லாக்களிலுமிருந்து வந்திருந்த சுயமரியாதை இயக்கத்தின் தீவிர வாதிகளாகிய (Radicals) பல வாலிபத் தோழர்கள் கலந்தாலோசித்துக் கொண்டும் தர்க்கித்துக்கொண்டுமிருந்தனர். எதற்காக? சுயமரியாதை சமதர்மக் கட்சியை ஆரம்பிப்பதற்காக. முடிவு என்னவாயிற்று? விஜயஞ்செய்திருந்த தோழர்கள் தீர்க்கமாக ஆலோசனை செய்தபின்னர், சு-ம. சமதர்மக் கட்சி அவசியமென்று தீர்மானித்த துடன், ஜில்லா வாரியாகப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு மத்திய கமிட்டியையும் அமைத்தார்கள். என்னென்ன செய்வதென்றும், எப்படியெப்படிச் செய்வதென்றும் பொதுவாக ஒரு முடிவுக்கும் வந்தார்கள். இந்த சு.ம. சமதர்மக்கட்சியின் பொதுக்காரியதரிசி என்கின்ற தோரணையில், கட்சியின் அர்த்தம் (Significance) அவசியம் ஆகியவைகளைப் பற்றியும் திட்டத்தைப் பற்றியும், கட்சியைப்பற்றி எழும் ஆட்சேபனைகளுக்குச் சமாதானம் சொல்லவேண்டியும், பொதுவாய் விளக்கவேண்டிய கடமைப் பொறுப்புடன் இக் கட்டுரையை எழுதுகிறேன். முதன் முதலில் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றிப் பொதுப் படையாகச் சில வார்த்தைகள் கூறுவது, சமதர்மக் கட்சியின் அவசியத்தைப் பின்னால் விளக்குவதற்குச் சௌகரியமாயிருக்கும். சுயமரியாதை இயக்கம் சுயமரியாதை என்றால் மனித அந்தது, ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சமூகவாழ்வில் தனது அந்ததை (மரியாதையை), துல்லியமாக அல்லவாயினும் மொத்தமாகவாவது, நிர்ணயித்துக் கொள்ளும் சக்தி, சுற்றுச்சார்புகளாலும் (environments), பழக்க வாசனையாலும் இவை இரண்டின் பயனாகவும் அமைந்து கிடக்கிறது. பொது வாழ்வின் அனாவசியமான கட்டுப்பாடுக ளாலும், அடக்குமுறைகளாலும், தனிவாழ்வின் நிர்பந்தத்தாலும், மனித அந்தது அமுக்கப்படுகிறபொழுது, சுயமரியாதை உணர்ச்சி விழிப்புற்று ஓட்டமெடுத்து, இயக்கமாக மாறுகிறது. மனித சமூகத்தில் இவ்வுணர்ச்சி, சிலரிடம் விழிப்புடன் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது; பலரிடம் பாதித் தூக்கமும் பாதி விழிப்புமாய் மந்தமாக வேலைசெய்கிறது; கோடானுகோடி மக்களிடம் அயர்ந்த நித்திரையில் அமிழ்ந்து கிடக்கிறது. மனித சமூகவாழ்வில், எங்கு, எத்துறையில், எவ்வாறு, சுயமரியாதை அமுக்கப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்டாலும், தனியாகவும் கூட்டமாகவும் (group) சமூகரீதியாகவும், போராடி, மனித அந்ததை நிலைநிறுத்த வேண்டியது அவசியமாகும். சுயமரியாதை உணர்ச்சி, வளர்ச்சியை நாடும் ஆரோக்கியமான வாழ்வின் ஞாயமான மூச்சு. ஆகவே, தனி மனிதனையும் கூட்டங்களையும் தன்னுள் அடக்கி நிற்கும் சமூகத்தில் காணப்படும் குறைகளால் (social evil) மிதிபடும் மனித அந்ததை ஜாக்கிரதையுடன் மீட்பதற்குப் போராடும் இயக்கமே சுயமரியாதை இயக்கம். இதுவே, சு-ம. இயக்கத்தைப் பற்றிய எனது அளவை. ஆனால் இன்று சு-ம இயக்கமென அழைக்கப்படுகிற இயக்கத்தின் அளவையும் இது தானா? அல்ல. அப்படியாயின் அதன் கொள்கை என்ன? சூரியனுக்குத் தான் வெளிச்சம். புது உலகத்தின் நவீனக் கொள்கைகளையெல்லாம் ஒன்றுவிட்டு ஒன்றுபற்றும். ஆனால் தனக்கெனக்குறிப்பிட்டுக்கூற ஒரு கொள்கையு மில்லை. கங்கையையும் சாக்கடையையும் கடல் ஏற்றுக் கொள்ளு மென்பார்கள். அதுபோல்தான், யதா பூர்வீகத்துக்கும் (conservatism) புரட்சிக்கும் சு-ம. இயக்கம் இடங்கொடுக்கிறதோ, என்னவோ? மதங்களில் இந்து மதம்போல், கட்சிகளில் சு-ம. கட்சி என்று சொன்னால்கூடத் தப்பில்லை. சுயமரியாதை இயக்கத்தைப்பற்றிப் பொதுஜனங்கள் ஒரு மாதிரியாகக் கூறுகிறார்கள். எதிரிகள் வேறு விதமாகப் பேசுகிறார்கள்; சு-ம காரர்களோ ஆளுக்கு ஒவ்வொரு தினுசாக வியாக்யானம் செய்கிறார்கள். சு-ம இயக்கம் பார்ப்பனீயம், புரோகிதம், ஜாதி, மதம், ஆடவராதிக்கம், ஆதிகம், தேசியம், ஏகாதிபத்தியம் முதலியவைகளை தனது வளர்ச்சியின் தொடர்ச்சி யில் தாக்கியும், சுதந்திரம், சகோதரத்வம், சமத்துவம், நாதிகம், சமதர்மம் ஆகியவைகளை வரவர வானளாவப் போற்றிப் புகழ்ந்து ஆதரித்தும் வந்திருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பிலாவது ஏற்பி லாவது நிர்ணயமுண்டா? அதுதான் பூச்சியம். இந்த ஏக வழவழா கொழகொழா நிலைமையில், எல்லாக் கொள்கைகளையும் கூட்டு மேளமாக ப்பிளந்து தள்ளுகிற குழறுபடைப் போக்குக்குக் காரணமென்ன? இயக்கம் விஞ்ஞான ரீதியாக வளர்க்கப்படவில்லை. கட்சி விஞ்ஞான ரீதியாக அமைக்கப்படவில்லை. திட்டம் விஞ்ஞான ரீதியாக வகுக்கப் படவில்லை. அதுபோல், கட்சியின் தலைமையும் (leadership) விஞ்ஞான ரீதியாக அளிக்கப்படவில்லை. அதே பொழுதில், சு-ம. இயக்கம் விஞ்ஞான அறிவையும், அறிவியல் வாதத்தையும் பற்றித்தலைகால் தெரியாமல் பெருமையடிப்பது தான் விந்தை யினும் விந்தை! சு-ம. இயக்கத்தின் சரித்திரத்தைச் சிறிது மேலெழுந்த வாரியாக நோக்கினும், ஏறல் இறங்கல், எடுத்தல் படுத்தல் (evolution & involution) சீர்திருத்தம் (Reformism) புரட்சி (revolution) செக்குமாடு சுற்றல் (Cyclic symettry) அரைத்தமாவை அரைத்தல், இந்த மாதிரியான, காணக்கிடையாத, திருவிளையாடல்கள் நடை பெற்றிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். தொடக்கத்தில் சு-ம. இயக்கம் பிராமணீயத்தையும், வருணாசிரமத்தையும் வேரோடு பிடுங்கி எறியத்தகுந்த புரட்சி மனோபாவத்தோடு கிளர்ச்சி செய்தது. அந்தக்காலத்தில் சமூகச் சீர்திருத்த விஷயத்திலும், பெண் ஆண் சமத்துவ விஷயத்திலும் மிகுந்த அக்கரை கொண்டு நின்றது. எதிரிகளும் ஏற்போரும் இதனை பிராமணரல்லாதாரியக்க மென்றும், சமூகச் சீர்திருத்த இயக்கமென்றும் கூறினர். ஜடி கட்சியானது பிற்போக்காளர்கள் (Reactionaries) நிறைந்ததாயிருந்த போதிலும் சீர்திருத்த மனோபாவம் (Reformistattitude) கொண்டதாய் இருந்தபோதிலும் அவசியத்தைக் கருதி நிற்பந்தமாய் சுயமரியாதை இயக்கத்தை ஆதரிக்கவும் சுயமரியாதை இயக்கமானது புரட்சிமனப்பான்மை (Revolutionary attitude) யுடையதாயிருந்த போதிலும் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாய் உபயோகப்படுத்திக் கொள்ள ஜடி கட்சியை ஆதரிக்கவுமான நிலையுமேற்பட்டது. இந்த, புலிக்குப் புதர்துணை, புதருக்குப் புலிதுணை என்ற நிலமைக்கு, அடுத்தாற்போல் சு-ம இயக்கம் பகுத்தறிவு இயக்கமாக பரிணமித்தது. மனிதனின் சுயமரியாதைக்கு மதங்கள் சனியன் என்றது. கடவுள் கொள்கையால் எழுந்துள்ள மதங்களும், புரோகிதமும் பூண்டற்றுப் போனாலன்றி மனித வர்க்கத்தின் சுயமரியாதை வாழ்வு உருப்படையாது என்று வீறிட்டு முழங்கிற்று. அதுவரையில் பார்ப்பனீய எதிர்ப்பையும் சமூக சீர்திருத்தத்தையும் (சுயமரியாதைக்காரர்களைப் போல் அல்ல - அரைகுறையாக) ஆதரித்த பிற்போக்காளர்கள் இந்த ஒரு படி முன்னேற்ற (one step forward) மான மதமெதிர்ப்பு முறைக்குப் பயந்து மாயமாக மறைந்தனர். அதோடு சு-ம காரர்களை எதிர்க்கவும் செய்தனர். கடைசியோ கடைசியாக அரசியல் போர்வையில் சமதர்மத் திட்டத்தோடு பணக்காரத் தன்மையையும் ஏகாதிபத்ய முறையையும் எதிர்க்கப் புத்துருக் கொண்டது. மிச்ச சொச்சமாயிருந்த, பிற்போக்காளர்களும், பயந்தாரி களும், பணக்காரமனப்பான்மை கொண்டவர்களும் ஓடி ஒழிந்து கொண்டார்கள். ஒரு காலத்தில் (பார்ப்பனீயத்தை மாத்திரம் எதிர்க்கையில்)ஆதரவளித்த ஜடிஸார், பார்ப்பனீயத்தை ஒழிக்கவேண்டுமானால், மதஈயத்தையும் பணக்காரனீயத்தையும் ஒழித்துத்தான் ஆகவேண்டுமென்ற தீர்மானத்தில் மதர்ந்து கிளர்ந்து கொண்டிருந்த சு-ம, இயக்கத்தை அடக்கி ஒடுக்குவதற்காக அரசாங்கத்தைத் தூண்டினர். அதே பொழுதில்தான் புரட்சிமனப் பான்மை கொண்ட சு-ம. இயக்கத்தின் தீவிர வாதிகள் சென்னை மாகாண நாதீக மகாநாடு, சென்னை மாகாண சமதர்ம மகாநாடு முதலியவைகள் கூட்டத்தகுந்த அளவுக்குக் கொள்கையில் அபி விருத்தி (idealogical development) யடைந்தனர். இதற்கிடையில், இந்திய அரசாங்கம்கம்யூனிஸம் சட்ட விரோதமென்று பிரகடனஞ் செய்யவும், விஞ்ஞான ரீதியாகக் கொள்கை நிர்ணயம் பெறாத அநேகரைக் கொண்ட சு-ம. இயக்கத்தார், சமதர்ம மென்றும், பொது உடைமை யென்றும் சொல்வதை நிறுத்தி, மனித ஜீவாபிமானப் பிரசார மென்றும், மனித சமூகச் சீர்திருத்தப்பிரசார மென்றும், வழவழக்க ஆரம்பித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா சட்ட சபைத் தேர்தலும் வந்தது. காங்கிரஸும் ஜடிஸும் அந்தந்தக் கட்சியார்களை தேர்தலில் போட்டிபோட நிறுத்தின. சு-ம. காரர்களும், தங்களுடைய ஈரோட்டு சமதர்மத்திட்டப்படி, தங்கள் கட்சியின் சார்பாக ஆட்களை நிறுத்தி எலெக்ஷனில் போட்டி போடக் கடமைப்பட்டிருந்தார்கள். ஆனால் நடந்ததென்ன! குடி அரசும் ஈ.வெ.ரா. வும் ஆரம்பத்தில், சமதர்மக்கொள்கையினரை தேர்தலுக்கு நிறுத்தவேண்டியதை வலியுறுத்தாமல், இங்கும் படாமல் அங்கும் படாமல், காங்கிர ஜடி இரண்டிலும் கலந்து கொள்ளாத மாதிரியில் ஒரு மழுப்பு மழிப்பினார்கள். இருந்தாலும் சீக்கிரம் சமதர்மப்போர்வையின் சாயம் வெழுத்துப் போயிற்று. ஈ.வெ.ரா. பகிரங்கமாக, ஜடி கட்சியின் அங்கத்தினர் களையும், ஒரு கட்சியுமற்ற ஸ்ரீவரதராஜுலுவையும் ஆதரிக்கத் தொடங்கினார். சில, சு-ம. காரர்கள் (ஈ.வெ.ராவின் ஆணைப்படியோ என்னமோ) சமதர்மப் பரமவிரோதி கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தனர். நாம் அன்றே, சமர்தர்மிகளைத் தேர்தலில் நிறுத்தாதது தவறு என்றும் சமதர்ம விரோதிகளை ஆதரிப்பது பெருந்தவறு என்றும் ,பாழாய்ப்போன பணக்காரர்களின் எலக்ஷன் போட்டிக்கு சமதர்மிகள் இறையாகக் கூடாதென்றும் சமதர்மம் பத்திரிகையில் எழுதினோம். ஈ.வெ.ராவும் அவரது அபிமானிகளும் பழைய பெத்தான் பெத்தான் என்ற கதையாய், சமதர்மத்தின் ஜீவநாடியாகிய முதலாளி-தொழிலாளி என்ற வகுப்புப்போர் உணர்ச்சிக்கு ரஜாக்கொடுத்துவிட்டு, பழைய பிராமணர் - அல்லாதார் என்கிற ஜாதிப்போர் உணர்ச்சியை, போட்டுக்கொண்ட ஜடி வேஷத்திற்குத் தக்கவாறு கிளப்பிவிட்டு, மூன்று வருஷகாலமாக தமிழ்நாட்டுப் பொதுமக்களிடம் பரவிவந்த சமதர்ம உணர்ச்சியை மறைக்கவும், மறக்கவும், மறுக்கவும் ஆனநிலை மையை உண்டு பண்ணி, நாட்டில் பிற்போக்குணர்ச்சி (Reactionary Spirit) தலைவிரித்தாட உதவினர். இந்நிலைமை வலுக்க வலுக்க, ஏகோபித்த அபிப்பிராயக்காரரென்று பொதுவாகக்கருதப் பட்டு வந்த சு.ம. காரரிடையில், பலதிற அபிப்பிராய பேதங்கள் தலை காட்ட ஆரம்பித்தன. ஒரு கூட்டத்தார் சமதர்மத்தை வலி யுறுத்தினர்; மற்றொரு கூட்டத்தார் ஜடி கட்சியை ஆதரித்தே தீரவேண்டுமென்றனர்; வேறொரு கூட்டத்தார், நமக்கு ஜடிஸும் வேண்டாம், சமதர்மமும் வேண்டாம், பழைய சுயமரியாதையே போதுமென்றனர்; இன்னுமொரு சிறு கூட்டத்தார், எலக்ஷனில் காங்கிரஸை ஆதரித்துவந்த போக்கை ஊர்ஜிதம் செய்ய, காங்கிரஸையும் ஆதரிக்கலாமென்றனர். முன்னர் பொது ஜனங்க ளிடம், சுயமரியாதை சமதர்மக் கொள்கைகளைப் பரப்புவதில் ஏகோபித்து ஒத்துழைத்த சு-ம. காரர்கள், எலக்ஷனின் பின்னால், பொதுஜனக் கூட்டத்தை, தங்கள் தங்களுடைய அபிப்பிராயமே சரியென்று நிர்த்தாரணம் செய்வதற்குரிய வாதப்பிரதிவாத சபையாக மாற்றினர். இந்த சந்தர்ப்பத்தில் ஈ.வெ.ரா. வின் புறமுதுகு காட்டிய அறிக்கையும் சுயமரியாதைக் கட்சியாருடைய விருப்பமென்று ஈ.வெ.ரா. thš ö©l¥g£L, ehD« <.bt.கி. யும் அளித்த அசிங்கிய மன்னிப்பும், நாட்டின் பலபாகத்திலுமுள்ள சு-ம. தீவிர வாலிபர்களுக்கு லேசாக இயக்கத்தினிடத்திலும், பலமாக தலைவரிடத்திலும் அதிருப்தியை உண்டுபண்ணின. அப்பால் நடந்த மகாநாடுகளும் கூட்டங்களும் அபிப்பிராயப் போர்க்களமாய் மாறின. தீவிரவாதம் தாண்டவமாடிய காலத்தில், வீட்டினுள் ஒதுங்கிப் பதுங்கித் தூங்கிக் கொண்டிருந்த முற்போக்கில் பிற்போக்காளர்கள் இயக்கத்தின் இந்தப் பிற்போக்கையும் குழறு படையையும் கண்டு, சந்தடி சாக்கில் நுழைந்து, இயக்கத்தை தங்களுக்கு அனுகூலமாக உபயோகித்துக் கொள்ளும் அந்தரங்கத் துடன் தங்கள் அபிப்பிராயத்தையும் வலியுறுத்த மீசைகளை முறுக்கினர். இந்த நிலைமையில் சுயமரியாதை இயக்கமென்றால், அவியல், கதம்பம், பலசரக்கு மண்டி, நவக்கிரககோஷ்டி என்றும் இன்னும் பலவாறாகவும் கூறத்தக்க வண்ணம் உருக்குலைந்த நிலைமையில் உழன்று கொண்டிருப்பதாயிற்று. மாகாண சுயமரியாதைச் சங்கம் செத்தவிடம் புல் முளைத்துப் போயிற்று. மாகாண மகாநாடு கூட்டி கிட்டத்தட்ட அரைடஜன் வருடங்களாயின. மாகாண மகாநாடு கூட்டவேண்டுமென்ற அக்கரையும் அவசியமும் ஆசையும் மனப்பூர்வமாக சில வாலிபத் தோழர்களுக்கு இருந்து வருகின்றது. உண்மையாயினும், தலைவர்க ளென்பவர்களுக்கு உமியளவுகூட இல்லையென்பன மட்டும் உறுதி. தலைவர்களென்று சுயமரியாதைப் பொது ஜனங்களால் கருதப்படு கிறவர்களில் சிலர், கோழைகள், சிலர் சுயநலமிகள்; சிலர் பொறுப்பில்லாதவர்கள்; சிலர் இயக்கத்தை ஏணியாக உபயோகிக் கிறவர்கள்; சிலர் தங்களுடைய தலைமைக்கும் செல்வாக்கிற்கும் ஒரு கட்சி வேண்டுமென்ற அந்தரங்க நோக்கமும் கஷ்டப்படுவதாகக் காட்டும் பகிரங்க நோக்கமும் உடையவர்கள். இவர்களில், கட்சி பொது ஜனங்களுக்காகவே யென்று உள்ளும்புறமும் ஒப்ப ஒழுகுகிறவர் ஒருவராவதுண்டாவென்பது சந்தேகமே. (இங்கு தலைவர்களென்று கூறும்பொழுது சு-ம. இயக்கம் இவ்வளவு தூரம் பரவுவதற்குக் காரணமாயிருந்த எம்போன்ற தோழர்களையும் (Workers) கொள்கை வெறிபிடித்து இதுவரை கஷ்ட நஷ்டப்பட்டுள்ள வாலிபர்களையும் சேர்க்கவில்லை, அவர்கள் என்றும் தோழரே (Comrades) யன்றி தலைவர்கள் (கட்சியைச் சுரண்டுவோர்) அல்ல. தவிர கட்டுப்பாடோ கொள்கை நிர்ணயமுமோ கொஞ்சங்கூடக் கிடையாது. சு-ம. இயக்கத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம். (உதாரணம் தேர்தலில் ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரிக்குத் துணை நின்றது, மாகாணச்சங்கத்தின் தலைவரென்பவர் தன் வீட்டில் (பிராமண) புரோகிதனை வைத்துக் கல்யாணம் நடத்தியது, சு-ம. இயக்கத்தின் தலைவரென்பவர் இலாம் மார்க்கத்திற்கு ஆள் திரட்டுவது இன்னபிற) மேலும் சு-ம. இயக்கத்தில் யாரையாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது யாருமறிந்த உண்மையாகும். போதாக்குறைக்கு, சு-ம. கட்சியின் தலைவரென்பவர் குடி அரசின் ஒரு தலையங் கத்தில் (எனது ஞாபகம் சரியானால் மதம் மாறுதல் என்ற தலையங்கத்தில்) சுயமரியாதை இயக்கம் சில கொள்கைகளை சிபார்சு செய்கிறதென்றும், அவற்றின்படி நடக்கா விட்டாலும் அவர்களைச் சுயமரியாதைக் காரர்களல்லவென்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாதென்றும் எழுதத்தக்க நிலைமைக்கு இயக்கம் வந்துவிட்டது. இதைவிட உருக்குலைவுக்கு உதாரணமும் வேண்டுமோ.) யாரையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு கட்சிக்கு, சந்தைக் கூட்டத்தைவிட என்ன சிறப்பு? நிலைமையிதுவாக, நமது புனித சுயமரியாதை இயக்கம் கொஞ்சஞ்கூட உருக்குலைய (demoralisation) வில்லையென்றும் முன்போல் சு-ம. இயக்கமில்லை யென்பது விசமப் பிரசாரமென்றும் சில பெரிய மனிசர்கள் சண்டப் பிரசண்ட மடித்து முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கத் துணிவது தான் வேடிக்கை. சு-ம. சமதர்மக் கட்சி ஏன்? மேலே சு-ம. இயக்கத்தின் பொதுப்படையான ஒரு சித்திரம் வரைந்திருக்கிறேன். அதில் சமதர்ம அங்கமும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பொதுவாக சமதர்மம் வரையில் சு-ம. இயக்கம் வளர்ந்து வந்திருந்தாலும், விஞ்ஞான ரீதியான சமதர்மத்தின் அளவையும், சக்தியையும், சிரேஷ்டத்தையும் சு-ம. காரர்களில 100 ரூ 99 பேர் நன்றாக இன்னும் அறியவில்லை. சமதர்மத்தைப் பொறுத்த வரையில், சாதிரீய விஷயஞானத்தில் (scientific knowledge) சு-ம. காரர்கள் அபக்குவிகளே. சமூகக் குறைகளைக் கண்டு, படித்த கூட்டத்தாரின் ஒரு வகையான அதிருப்தியும், பாமர ஜனங்களின் (பொது மக்களின்) ஒரு விதமான அதிருப்தியும் கலந்து, மொத்தமாக (நுட்பமாகவும் நிர்ணயமாகவும் சாதிர ரீதியாகவும் அல்லாமல்) வளர்ந்துவந்த ஓர் இயக்கமே சுயமரியாதை இயக்கமென்பதையும், ஆனால் விஞ்ஞான நிதியான சமதர்மமோ (scientific socialism) சுயமரியாதை இயக்கம் கண்ட சமூக அவசியமான (social necessity) கொள்கைகளையெல்லாம் ஒன்று விடாமல் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதோடு, சமூகக் கொடுமைகளின் (social evils) மூலகாரணங்களை விஞ்ஞான ரீதியாகத் தெளிவுறக்கண்டு, அவற்றை வேரொடு மாற்றத்தகுந்த திட்டங்களையும் உபாயங்களையும் ஒழுங்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும் வகுத்து சர்வதேச அறிஞர்களுடையவும் வீரர்களுடையவும் மூளைகளையும் உள்ளங் களையும் கொள்ளைகொண்டு, உலகப் பொதுக் கொள்கை யாகி, சு-ம. வினும் மீசுரமாய் நிற்பதென்பதையும், ரொம்பத் தெரிந்த சு-ம. காரர்கள் கூட அறிய மாட்டாதவராயிருக்கிறார்கள். விஞ்ஞான ரீதியான சமதர்மமானது, இன்று தனிவுடைமையா யிருக்கும் பெரும் பொருள்களெல்லாம் சமூகத்தின் ஆதிகத்தில் மாற்றப்பட வேண்டுமென்றும், அதற்கு முதலில் ஏகாதிபத்ய ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு, தொழிலாளர் சர்வாதிகாரம் நிறுவப்பட வேண்டுமென்றும், அந்தத் தொழில் ஜனநாயக ஆட்சியில், விஞ்ஞான வளர்ச்சி, யந்திர அபிவிருத்தி ஆகியவைகளை பொதுஜன நன்மைக்கான லட்சியத்தோடு கையாடி, பொருளாதாரத் திட்டத்தில், சக்திக்குத் தக்கவாறு உழைப்பும், உழைப்புக்குத் தக்கவாறு ஊதியமும் (From each according to his ability & to each according to his ability) என்ற அபேதவாதத் திட்டத்தை ஆரம்பத்தில் கையாடி சௌகரிய உற்பத்தியை அமோகமாகப் பெருக்கிய பின்னர் பொருளாதாரத் திட்டத்தில், சக்திக்குத் தக்கவாறு உழைப்பும் தேவைக்குத் தக்கவாறு ஊதியமும் (each Contributes according to his Capacity & each receives according to his needs) என்ற பொது உடைமைத் திட்டத்தை அனுஷ்டித்து, முதலாளி-தொழிலாளி யென்ற வகுப்பு பேதமற்ற சமூகத்தை (Classless society) சிருஷ்டித்து, வறுமை, அடிமை, யுத்தம் என்கின்ற முதலாளி திட்டத்தின் தொல் வியாதிகளை - தொழு நோய்களை - மனித வர்க்கம் கனவிலும் காணாதபடி செய்து, மனுக்குலத்தை - மன்பதையை - இன்ப சாகரத்தில் திளைக்கச் செய்வதுதான் தனது லட்சியமென்று ரத்னச் சுருக்கமாக உலக திரப் பறை சாற்றுகின்றது. ஜாதியால் தாழ்த்தப்பட்டவர்களும், மதத்தால் ஏமாற்றப் பட்டவர்களும், முதலாளித்துவத்தால் சுரண்டப்பட்டவர்களும், ஏகாதிபத்திய ஆட்சிமுறையால் அமுக்கப் பட்டவர்களும் உழைப்பாளிகளே. ஆகவே, என்று தொழிலாளர் சர்வாதிகாரம் ஏற்படுகிறேதோ அன்றே அக்கிரம ஆதிக்கங்களுக் கெல்லாம் சாவுமணி அடிக்கப்பட்டு விடுமென்று சு-ம. தோழர்கட்கு இந்த சந்தர்ப்பத்தில் ஞாபக மூட்டுகிறேன். சுயமரியாதையோரின் ஆசைக்கும் மேலாக, சமதர்ம லட்சியம் தாவிச் செல்வதை நோக்குக. மேலே கூறியதுதான், விளக்கமானதும் தெளிவானதும் விஞ்ஞான ரீதியானதும் அமுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட (oppressed & exploited) வகுப்புணர்ச்சி கொண்ட பாட்டாளி மக்களால் உலக முழுவதும் அங்கீகரிக்கப் பட்டதுமான சமதர்மம். மற்றவை யெல்லாம், தில்லுமுல்லும், திருகுதாளமும், திகடு தத்தமும், திகல் பாஜ்ஜித்தனமும் கலந்த போலி சமதர்மங்களென அறிக. சமதர்மம், பட்டப்பகல் வெட்ட வெளிச்சம் போல் தெளிவா யிருக்கவும், சு-ம. இயக்கம், கொழ கொழ கொட்டப்பாக்கு ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பதால் கால சக்தியாகிய மார்க்ஸீய சமதர்மத்தை (Marxian Socialism) மும்முரமாகப் பரப்பவும், கடந்த 3,4 வருஷங்களாக சுயமரியாதை இயக்கம், சரியான லட்சியத்தை நோக்கி வளர்ந்துவந்த லட்சிய அபிவிருத்தியை (idealogical development) தமிழகம் வியத்த மாக்காதவாறு காக்கவும், சுயமரியாதை இயக்கத்திலுள்ள, சமதர்மத்தில் ஆர்வமும் அக்கரையும் கொண்டவர்க ளாயினும் அபக்குவ முடையோர்களாயிருக்கும் தோழர்களை ஒன்று திரட்டிப் பக்குவப்படுத்தவும், வகை தெரியாது, தீவிர உணர்ச்சி கொண்ட வாலிபர்கள் பிற்போக்கான கட்சிகளுக்கு இரையாவதைத் தடுத்து சரியான பாதை காட்டவும் ஆன உத்தேசங்களோடு, சு-ம. சமதர்மக் கட்சி தோன்றியுள்ளது. இவ்வாறு தோன்றியுள்ள சு-ம. சமதர்மக்கட்சி, சென்ற காலங்களிலெல்லாம் சு-ம. கட்சி செய்துவந்த தவறுகளை அறியு மாதலால், அதே தவறுகளுக்கு, இது இடங்கொடாது. முன்னால் செல்வோன் இடறி விழுந்தால், அது பின்னால் செல்வோனுக்கு மின்சார வெளிச்சம்போலல்லவா? குருடன் குருடனுக்கு வழி காட்டி, குருட்டாட்டம் ஆடி குளிவிழுந்த தாய்க் கட்சியின் கதையை இது நன்கு உணருமாதலால், இப்பொழுது அமைத்துக் கொண்டிருக்கும் சு-ம. சமதர்மக்கட்சியை விஞ்ஞான ரீதியாக அமைத்துக்கொண்டிருக்கிறது. முதலில் ஒரு கட்சிக்கு வேண்டியது திட்ட நிர்ணயமாகும். ஒரு கட்சி எந்த வகுப்பாரின் கோரிக்கைகளுக்கும் லாபங்களுக்கும் போராடுகிறதோ, எந்த வகுப்பார் அவைகளை அடையும் வழிகளின் அமைப்பே கட்சித் திட்டமாகும். ஒவ்வொரு கட்சிக்கும் திட்டம் மிகவும் முக்கியமான விஷயமாகும். ஒவ்வொரு திட்டத்திலும் அந்த வகுப்பார் எவ்வாறு முயலவேண்டுமென்பது குறிக்கப்பட்டிருக்கும். திட்டநிர்ணயம் எந்தக் கட்சிக்கும் திட்டவட்டமான கொள்கை வேண்டும். திட்ட நிர்ணயமற்ற கட்சி, கட்சியல்ல. முதலாளிக்கட்சி, தொழிலாளிக் கட்சி, அரசியல் கட்சி, அறிவியல் கட்சி ஒவ் வொன்றுக்கும் ஒவ்வொரு திட்டமும், லட்சிய நோக்கங்களில் வரையறையும் உண்டு. கட்சியென்பது சேற்றில் நட்ட கம்பமுமல்ல; குறியற்ற அம்புமல்ல. எந்த இனத்தாரின் பிரதிநிதித்துவம் கொண்டதாய் விளங்குகிறதோ, அந்த இனத்தாரின் கோரிக்கை களைப் பூர்த்தி செய்யத்தக்க திட்டத்தை ஒவ்வொரு கட்சியும் அங்கீகரித்தே நிற்கும். முதலாளித் திட்டங்கொண்ட கட்சியை முதலாளிகள் தழுவுவதும், மத சித்தாந்தங்கொண்ட கட்சியை மதாபிமானிகள் ஏற்று நிற்பதும் இயல்பு. கஷ்டப்படுவோர் ஒன்று திரண்டு, க்ஷேமலாபத்தை நாடுவதும், அடிமையில் வீழ்ந்து தவிப்போர் விடுதலையைக்கோரி கட்சி கூட்டுவதும் ஸகஜமான காரியங்கள். ஏனென்றால், இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே மற்றொரு உண்மை; அதாவது ஓநாய்க்கூட்டம் வேறு; ஆட்டு மந்தை வேறு; ஓநாய்க் கூட்டத்தின் விருந்து வைபவம், ஆட்டு மந்தையின் இறுதிச் சடங்கு; ஆட்டுமந்தையின் சுகஜீவிதம், ஓநாய்க்கூட்டத்தின் பட்டினி விரதம். தமிழிலே ஒரு பழமொழி சொல்வார்கள், நரிக்குக் கொண்டாட்டம், நண்டுக்குத் திண்டாட்டம், என்று, அதுபோல், ஒரு கட்சிக்கு ஒரு கட்சி வேறாகவும், கோரிக்கையில் எதிர்மாறாகவும் இருக்கின்றது. முதலாளிகளின் கோரிக்கைக்குத் தொழிலாளிகளின் கோரிக்கை நேர்மாறு. ஆண்டைகளின் இச்சைக்கு அடிமைகளின் இச்சை முழுதும் விரோதம். ஜாதி ஆதிக்கத்தாரின் (பார்ப்பனர், சைவர், இன்னபிறர்) எண்ணத்திற்கு, ஒடுக்கப்பட்டவர் களின் எண்ணம் முற்றும் முரண். ஆகவே சு-ம. சமதர்மக்கட்சி தங்களுடைய வகுப்பாராகிய, அமுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட பாட்டாளி மக்களின் (oppressed & exploited toiling masses) திட்டத்தைக் கொண்டே நிற்கிறது. சுயமரியாதைக் கட்சியைப்போல், சமரஸ சன்மார்க்கம் பேசி (ஜடிஷையும் சமதர்மத்தையும் ஆதரிப்பது போல் கூறி) சீரழிந்தது போல், சர்வகட்சி மகாநாடு கூட்டும் பிசகைச் செய்யாது. எமது திட்டம், மார்க்ஸின் போதனைக்கிணங்க, பிரத்தியட்ச ஜீவிதத்திலிருந்து - நடைமுதல் சமூக வாழ்விலிருந்து - தயாரிக்கப் பட்டிருக்கிறதேயன்றி, அந்தராத்மாவின் சிருஷ்டியோ, பெரியாரின் மனோ ராஜ்யமோ அல்ல. 2. கட்டுப்பாடு இரண்டாவதாக சு-ம. சமதர்மக் கட்சி பிரதானப் படுத்துவது கட்சியின் கட்டுப் பாடேயாகும். ஒற்றுமையில்லாத குடி ஒருமிக்கக் கெடும் என்ற நல்லுரையை நாம் மறப்போமா? தங்கமான சு-ம. இயக்கம் கட்டுப்பாடு இல்லாத காரணத்தாலல்லவா, தாறுமாறாகி வாய்நோய்ப்பட்ட கிழப்புலிமாதிரி, முங்கிக் கிடக்க நேர்ந்தது. ஓராயிரம் பேரைக் கொண்ட, கட்டுப்பாடு நிறைந்த போல்ஷவிக் கட்சி, ஜாரின் ஏதேச்சாதிகாரத்தை முறியடித்து, 15 1/2 கோடி மக்களுக்குப் புதுவாழ்வு அளித்த செய்தி, எங்களுக்கு என்றும் நற்போதனையாகவே இருக்கும். ஆகவே தனிநபர் எவரேயானாலும் அவரை மதித்து, கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்க நாங்கள் ஒருநாளும் ஒப்போம். 3. தழுவும் மனப்பான்மை கொள்கையை யாரும் தனக்கு உபயோகப்படுத்திக் கொள்ள விடாது, யாரையும் எக்கூட்டத்தையும், எந்த தாபனத்தையும் தனக்கு உபயோகப்படுத்திக் கொள்ள சு-ம. சமதர்மக்கட்சி ஒரு நாளும் தயங்காது, தனக்கு உபயோகமானவரை காங்கிரகாரர் என்பதற்காக வெறுத்தும், தனக்குப் பாதகமானவரை ஜடி கட்சியாரென்பதற்காகத் தழுவியும், சு-ம. இயக்கம் பலவீனமுற்று நிற்பதைப் போன்ற, தற்கொலை பாலிஸி (Policy) யை சு-ம. சமதர்மக் கட்சி அனுஷ்டிக்காது. எங்கே குற்றமிருந்தாலும் கண்டிப்பதும், குணமிருந்தால் தழுவுவதும், சமதர்மிகளின் போக்காயிருக்கும். கண்டனத்தில், பூனை, குட்டியைக் கடிக்கும் மாதிரியை என்றைக்கும் எங்களோடு சேர்ந்து தீரவேண்டியவர்களாகிய பாமர்களிடமும் தீவிரவாதம் கொண்ட வாலிபர்களிடமும் காட்டுவோம். கொள்கை விரோதிகளிடம், பூனை எலியைக் கடிக்கும் மாதிரியான கண்டனத்தையே செலுத்துவோம். 4. எங்கள் வேலை. சு-ம. சமதர்மிகளாகிய எங்கள் வேலை, இதற்கு முன் சு-ம. fhu® brŒj khâÇahf., மனம்போன போக்கில் கத்துவதும் எழுதுவதுமாக இல்லாமல் தொழிலாளி விவசாயி, சங்கங்கள் காண்பதிலும், இருக்கும் சங்கங்களில் ஒத்துழைப்பதிலும், கட்சித் தோழர்கள் விஷய ஞானம்பெறும் பயிற்சிக் கூடங்களைக் காண்பதிலும் (study circles) வாலிபர் கழகங்கள் நிறுவுவதிலும், சமதர்மத்தை விஞ்ஞான ரீதியாக விளக்கும் துண்டுப் பிரசுரங் களையும் புதகங்களையும், தமிழில் வெளியிடுவதிலும், விவசாயிகள், தொழிலாளிகள், வாலிபர்கள், பெண்கள் ஒடுக்கப் பட்டவர்கள் இவர்களிடையே பேசும்பொழுது (சு-ம. காரர்களைப் போல் எல்லா விஷயத்தையும் ஒரே குழப்பமாகக் குழப்பாமல்) விஞ்ஞான ரீதியாக அவர்களுக்கு அறிவுறுத்துமாறு, பொரு ளாதாரத்தை அதிவாரமாகக் கொண்டு திறம்படப் பேசத் தகுந்த பிரசங்கிகள் ஆண்களிலும் பெண்களிலும் பலரைத் தயார் செய்வதிலும் எங்களுடைய பெருங் கவனத்தையும் காலத்தையும் செலவிடுவோம். இத்தகைய முயற்சிகளுக்கு, ஒத்துழைப்பும் உறுதுணையும் கொடுக்கும் யாரையும் சு-ம. சமதர்மிகள் நல்வர வேற்பார்கள். வரட்டுப் பிடிவாதத்தால் (dogmatism) முற்போக் காளர்கள், தங்கள் கட்சிக் காரரல்ல வென்ற ஒரே காரணத்துக்காக, அவர்களோடு ஒத்துழைத்து, சமதர்மமடைவதற்குவேண்டிய பொது ஜனசக்தியைப் பெருக்குவதைத் தடைப் படுத்தமாட்டார்கள். சு-ம. சமதர்மிகள், மத்தியதர வகுப்பு புத்திசாலிகளிடம் (middle class intellectuals) சமதர்மத்தைப் பரப்புவதற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்கும் காங்கிர அபேதவாதக் கட்சியாரோடு தோளோடு தோள் நின்று தொண்டாற்றுவார்கள். தொழிலாளர் விஷயத்தில், அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸோடு (A.I.T.U.C.) இணங்கி நிற்பார்கள். விவசாயி சங்கங்களை நாடு முழுதும் நிறுவுவதற்கும் சிறப்பாக முயற்சி எடுத்துக் கொள்வார்கள். இளந் தமிழர்கள் இந்தக் கட்சியில் கலந்து உழைக்கவேண்டிய, பொறுப்பை உணர்ந்து பார்ப்பார்களாக. இக்கட்சி அவசியம் எனக் கருதுவோர், ஒரு நிமிஷமும் தாமதியாது எம்மோடு, கலந்து தொண்டாற்றுவாராக. நேரடியாகக் கலந்துகொள்ள அசந்தர்ப்ப முடையோர், சொல்லாலும், பொருளாலும், பிற சௌகரியங்கள் செய்வதாலும் இக்கட்சியை வளர்ப்பாராக. மேற்கூறிய அர்த்தத்திலும் அவசியத்திலும் ஆரம்பிக்கப் பட்டிருக்கும் சு-ம. சமதர்மக் கட்சியைப் பற்றியும், சமதர்மத்தைப் பற்றியும் பற்பல ஆட்சேபனைகள் கிளப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சில ஆட்சேபனைகளுக்கு மாத்திரம் கீழே பதில் தருகிறேன். ஆட்சேப சமாதானங்கள் இக்கட்சி தோன்றியிருப்பதற்குச் சில தனிமனிதர்களிட முள்ள விரோதந்தானே காரணம்? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் கூறும் பதில் இதுதான்:- சமதர்மமென்பது நடைமுதல் சமூக அமைப்பை மாற்றி, புதியதொரு சமூக அமைப்பைக் காண்பதேயொழிய சில தனிமனிதத்துவேஷக்கிளர்ச்சி யல்ல- ஆகவே, சமதர்மிகளுக்கும் தனிமனிதத்துவேஷத்திற்கும் சம்பந்தமில்லை. 1. தலைவரபிமானம் அவசியமன்றோ? என்கிறார் சிலர். பகுத்தறிவுக்காரர்களென்று பெருமையடித்துக்கொள்ளும் சு-ம. காரர்களிடமிருந்து இத்தகைய அபிப்பிராயம் வெளிவருவதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது. தலைவரபிமானம் காட்டவேண்டுவது (லட்சியத்தையும் திட்டத்தையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு) அவசியமென்று கூறவருவார்களானால், காந்தி பக்தர்களைப்பற்றிக் குறைகூற சு-ம. காரர்களுக்கு நாவேது? ஈரோட்டில் நடந்த இரண்டாவது மகாண சு-ம. மகாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட, கடவுள் வாழ்த்து, அரசர்வாழ்த்து ஆகியவைகளோடு தலைவர் வாழ்த்தும் ஒழிந்து போகவேண்டும் என்ற தீர்மானத்தை, கொள்கையை விட்டும் தலைவர்க்கு மதிப்பளிக்க வேண்டுமென்று சொல்லுகிற தோழர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும். கடவுளானாலும், அவதார புருஷர்களானாலும் தீர்க்க தரிசிகளானாலும், மகாத்மாக்களானாலும், இன்னோர் அன்னார் யார்கூறினாலும், பகுத்தறிவுக்குப் பொருந்தாவிட்டால் தள்ளிவிடவேண்டுமென்ற உண்மை. சு-ம. தலைவர் விஷயத்தில் மட்டும் பொருந்தாதாவென்று கேட்கின்றோம்? தலைவரபிமானி களிடம் ஒரு கேள்வி, அதாவது தலைவர் யார்? கொள்கையின் வழியில் நின்று, கட்சியின் வழிகாட்டியாகவும் சேனாதிபதியாகவும் (leader & genereal) நிற்பவரா, அல்லது சுயேச்சையாய் மனம் போன போக்கெல்லாம் போகிறவரா யார் தலைவர்? என்பதே. அபார ஞானமும், ஒப்பற்ற சொல்வன்மையும், சீரிய எழுத்துத்திறனும், சிறந்த நிர்வாக சக்தியும், மகத்தான யுத்த சாகஸமும் படைத்த டிராட்கிகளையும்கூட சமதர்மிகள், கொள்கையின் பொருட்டும், கட்சியின் பொருட்டும் உதறியெறிவார்களென்பதை, தலைவர் தாட்சணியத் தோழர்கட்குச் சமர்ப்பிக்கின்றோம். 3. ஈ.வெ.ரா வை எதிர்ப்பதற்காகவா, சு-ம.சமதர்மக் கட்சி? என்று வினவுகிறார்கள் விஷயமறியாத சிலர். சு-ம. சமதர்மக் கட்சியின் அர்த்தத்தையும் அவசியத்தையும் மேலே படித்தவர்கள் இந்தக் கேள்வியிலுள்ள அறிவுச் சூனியத்தை நன்றாக அறிந்து கொள்வார்கள். இருந்தாலும் ஒன்றுமட்டும் கூறுவோம். ஏகாதி பத்தியக் கொள்கையையும், முதலாளித்துவத் திட்டத்தையும் எதிர்த்து நிற்கும் சமதர்மிகள் தனி மனிதராகிய ஈ.வெ.ராவை எதிர்க்கத்தக்க அவ்வளவு கீழான நிலைமைக்கு வரமாட்டார்கள். ஆனால், ஏகாதிபத்தியத்தையும், பிற்போக்குக் கட்சியையும் ஆதரிக்கும் ஈ.வெ. ராயிஸம் (ஈ.வெ.ரா. கொள்கைகள்) சமதர்மக் கிளர்ச்சிக்கு இடறு கட்டையாக வருவதால், அவற்றை எதிர்த்துத் தீரவேண்டியது சமதர்மிகளின் கடமையாகிறது என்பதை யாம் மறைக்க விரும்பவில்லை. 4. ஜடி கட்சியின் சார்பு அவசியமிருக்கவேண்டிய தல்லவா? அது தாய்க்கட்சியல்லவா? கொஞ்ச நாளைக்குப் பொறுத்துப் பார்க்கக் கூடாதா? ஜடி கட்சியில்லை யானால், தமிழன் செத்தவிடம் புல் முளைத்துப்போகுமன்றோ? என்றெல்லாரும் ஆட்சேபனைகள் செய்கிறார்கள். ஜடி கட்சி என்றால் என்ன? ஜடி கட்சி உடையவர் கட்சி; தற்கால சமூகத்தை (Present day society) ஒத்துக்கொள்ளும் கட்சி; முதலாளித் திட்டங் கொண்ட கட்சி; பிற்போக்காளர் கட்சி; ஒரு கூட்டம் சௌகரியக்காரர்களி (Vested class) டமிருந்து வேறொரு கூட்டம் சௌகரியக்காரர்கள் பிராமணரல்லாதார் போர்வையில், ஆதிக்கக்கர்த்தாக்கள் கொடுக்கும் சிற்சில உரிமைகளையும் லாபங்களையும் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் கட்சி; ஏகாதி பத்தியக் கொள்கையை பூரணமாக அங்கீகரிப்பதோடு, ஏகாதி பத்யத்தை அண்டிப் பிழைக்கும் கட்சி. ஜாதி வாரிப்பிரிதிநிதித்துவத் திற்காக, சட்டபூர்வமாக ஜாதிக்குச் சலுகை காட்டச் செய்து ஜாதி பேதத்தைக் காக்கும் கட்சி. இது தான் எமது சமதர்மக் கண்ணாடியில் காணும் ஜடி கட்சியின் சித்திரம். பொருளாதார அடிமைத்தனத்தில் கோடிக்கணக்கான மக்கள் வீழ்ந்து கிடக்கிற பொழுது, எப்படி ஜனநாயகத்துவம் (democracy) என்பது வார்த்தையின் அர்த்தப்படி, விரிந்த நோக்கங் கொண்டதாய் ஜனசமூகம் முழுவதையும் தழுவுவதாய் காணப் பட்டாலும் ஒரு சில உடையவர்களின் (Haves) ஆதிக்கக் கோட்டையாகத் திகழ்கிறதோ அதுபோலவே ஜடி என்பது வார்த்தை அர்த்தப்படி மக்க ளெல்லோருக்கும் நீதி வழங்குவது என்பதாய்த்தோன்றினாலும் அனுபவத்தில் பணக்காரர் பக்ஷமாக, அவர்களுடைய கோட்டை யாகத்தானிருக்கிறது. முதலாளித்தவ சமூகத்தில் ஜன நாயகத்துவம், ஜடி (நீதி) என்றால் பணக்காரர் நாயகத்துவம், பணக்காரநீதி என்று தான் அனுஷ்டானத்தில் அர்த்தப்படும். ஆகவே சமதர்மிகள் ஒரு நாளும் இவ்வார்த்தை களைக் கேட்டு ஏமாந்துவிட மாட்டார்கள். தவிர, ஜடி கட்சியானது, ராஜ்யத்தினுள், எதையும் சாதிக்கும் அளவு பலாத்காரத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் சர்க்காரே யல்ல, அல்லது சர்க்காரை ஆட்டி அசைக்கத் தகுந்த அளவுக்கு பொதுஜனச் செல்வாக்கைப் பெறுவதற் குரிய புரட்சிலட்சியத் தோடு, போர்க்குணம் (militant spirit) நிறைந்த கட்சியுமல்ல. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் போடு தோப்புக்கரணம் என்றால், எண்ணிக்குங்கோ ஆயிரம் என்று கூறத்தக்க ராஜ விவாசமும் அரசாங்கம் கொடுப்பது எவ்வளவு அற்பமாயினும் தட்டாமல் வாங்கித் திருப்தியடையத் தகுந்த பலவீனமும் (impotence) கொண்ட, பூர்ஷுவாக் (ஜமீன்தார்கள் - முதலாளிகள் - உயர்தர மத்திய வகுப்பார் ஆகியவர்களின் ) கட்சியே ஜடி கட்சியாகும். ஜடி கட்சியின் அவசியத்தை வலியுறுத்துவான் வேண்டி ஜடி கட்சிப் பாதுகாவலர்கள் காட்டும் ஒரு தனி மாபெருங் காரணம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமாகும். வகுப்பு (ஜாதி) வாரிப்பிரதிநிதித்வம் பிராமணரல்லாத மக்களுக்கு சர்வரோக நிவாரணியாம். சமதர்மத்தின்மேல் ஜாதிவாரிப் பிரதி நிதித்துவ மானது, கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்து மாதிரி அழியாத வாறு பொறிக்கப்படுமாம். இதற்கு மிஞ்சின பொய்யும் மோசடியும் சரித்திரம் கண்டதில்லை. காணப்போவதுமில்லை என்றுகூடச் சொல்லலாம். 100க்கு 3 பேர் பிராமணர்; 97 பேர் அல்லாதார். பிராமணர் எல்லோரும் படித்திருக்கிறார்கள். ஆகையால் பிராமணல்லாதாரில் 100 க்கு 4 அல்லது 5 பேர்தான் படித்திருக்க முடியும். பிரமணரல்லாதாரில் தற்குறி 100க்கு 93. உத்தியோகமும், தலதாபன சட்டசபைகளில் அங்கமும், படித்தவர்களுக்கும் (உயர்தர கலாசாலைப் படிப்பு, கல்லூரிப்படிப்பு) பணக்காரர் களுக்கும்தான் கிடைக்கும். எனவே, பிராமணரல்லாதாரில் 100க்கு இரண்டொருவர்தான், உத்தியோகத்திற்கு லாயக்குடையவரா யிருப்பர். இவ்வாறு படித்தவர்க்கெல்லாம் உத்யோகம் கொடுக்க எந்த அரசாங்கத்திலும் இடமிராது. ஆகவே, பிராமணரல்லாதவரை யெல்லாம், வகுப்புவாரி பிரதி நிதித்துவமூலம் கரையேற்றுவ தென்பது வெறும் கற்பனை. 100க்கு 98 பார்ப்பனரல்லாதாரைப் பிரதானப்படுத்தாது, வகுப்பு வாரிப்பிரதி நிதித்துவத்தைப் பிரமாதப் படுத்திக் கொண்டிருக்கும் கட்சி, பணக்காரர் படித்தவரின் கட்சி யாகுமேயொழிய, பார்ப்பனரல்லாத பெரும்பாலான பொது ஜனங்களின் கட்சியாக மாட்டாது. பார்ப்பனரல்லாதாரில் 100க்கு ஒன்றிரண்டு பேருக்காக சர்க்கார் வீசியெறியும் பொட்டுப் பொடிகளைப்பெறும்பொருட்டு, பிராமணர் - அல்லாதார் என்று ஜாதிப்போர் தொடுக்கும் கட்சி, பிராமணரல்லாதார்க்கு நன்மை பயக்கும் கட்சியா? அல்லது பிராமணரல்லாதாரில் 100க்கு 98 மக்களாகிய தற்குறிகளும் தரித்திரர்களும் பாட்டாளிகளும், சமூக, பொருளாதார, ராஜீய விடுதலைபெறும் பொருட்டு, முதலாளி- தொழிலாளி என்று வகுப்புப்போர் தொடுக்கும் சமதர்மக்கட்சி பிராமணரல்லாதார்க்கு நன்மை செய்யும் கட்சியா? பொது மக்கள் யோசித்துப் பார்ப்பார்களாக. இன்னுமொரு ஆட்சேபனை யென்னவென்றால், சு-ம. கட்சி ஜடி கட்சியிலிருந்து தோன்றிற்றென்றும், ஆகவே தாய்க்கட்சியாகிய ஜடி கட்சிக்குச் சலுகை காட்டி நாம் அதை ஆதரிக்க வேண்டுமென்றும் கூறுவதாகும். எப்படி 1916-17 வருஷக் காங்கிரஸின் நிலைமை டாக்டர் நாயர், தியாகராயர் போன்றோரை ஜடி கட்சியைக் காணக் காரணபூதமாக விருந்ததோ அதுபோல், 1924-259-296 வருஷக் காங்கிரஸின் நிலைமை ஈ. வெ. uh., இராமநாதன் போன்றோரை, புரட்சி மனப்பான்மை கொண்ட பிராமணீய எதிர்ப்போடு கூடிய சுயமரியாதைக் கட்சியை உருப்படுத்தும் பொறுப்புக்குக்கொண்டு வந்துவிட்டது. ஆகவே, ஜடி கட்சிக்குத் தாய்க்கட்சி காங்கிர கட்சிபோல், சு-ம. கட்சிக்கும் காங்கிரேஸே தாய்க்கட்சி. ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சி முளைக்க வேண்டுமானால், முதல் கட்சியில் புதிய கட்சியினர் அதிருப்திப் படுவதற்குரிய நிலைமைகள் இருந்துதான் தீரவேண்டுமென்பது சரித்திர உண்மை. ஜடி கட்சியிலிருந்து சு-ம. கட்சி முளைத்ததென்றால், சுயமரியாதைக் கட்சியின் மூலபுருஷர்கள் ஜடி கட்சியில் எந்த வகையில் அதிருப்திப்பட்டு சு-ம. கட்சியைத் தோற்றுவித்தனர். ஜடி கொள்கைதான் சு-ம. கொள்கையென்றால், சு-ம. கட்சி ஆரம்பிக்கப்பட்டது அனாவசிய மாக அல்லவா இருந்திருக்கவேண்டும்? அல்லது காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்கள் ஜடிஸில் சேர்ந்து அதையல்லவா வலுப்படுத்தி யிருக்கவேண்டும்? தவிர அன்றிருந்து இன்றுவரை, ஜடி கட்சியின்கொள்கை, திட்டம், தலைமைப்பதவிகளும் (idealogy programe, leadership) சு-ம. கட்சியின், கொள்கை திட்டம், தலைமைப்பதவிகளும் வேறு வேறாத்தானிருந்து வந்திருக்கின்றன. ஜடி கட்சியாரை R-k.க்fhu® கட்டுப்படுத்தத்தகுந்த நிலைமை யிலும், சு-ம. கட்சியாரை ஜடி கட்சியார் கட்டுப்படுத்தத்தகுந்த நிலைமையிலும் பூரணமாக என்றும் இருந்ததில்லை. ஒருவருக் கொருவர் ஒரு எல்லை வரையில் ஒத்தாசை செய்து வலுப்பெற முயன்றதும், முரண்பாடு வந்த பொழுதெல்லாம், மறைமுகமாகவும் பகிர்முகமாகவும் ஒருவர்க்கொருவர் தாக்க ஆரம்பித்ததும் ஒத்துழை யாமை அனுஷ்டித்ததும் ஆகிய நிகழ்ச்சிகள்தான் உண்மையேயொழிய, ஜடி கட்சி சு-ம. கட்சியின் தாய்க்கட்சியல்ல என்பதே எமது அபிப்பிராயம். இன்னும் விவகாரத்திற்காக; தாய்க்கட்சியென்றே வைத்துக் கொண்டாலுங்கூட, கொள்கைக்குஎதிராகச் சென்றும், கொள்கையை விட்டுக்கொடுத்தும் தாய்மை அபிமானத்தைக் காட்ட வேண்டு மென்பது அறிவுடைமையாகாது. தாய்க்கட்சி அபிமானம் அல்லது மதிப்புப் பெரிதென்றால், சு-ம. இயக்கம் இருப்பதற்கு அர்த்தமே யில்லை. ஜடி கட்சியில்லையானால், தமிழரின் மரியாதை மண்ணாய்ப் போயிருக்குமென்று கூறுவது, தமிழரின் புரட்சி மனோபாவத்தையும், முற்போக்கு உணர்ச்சியையும், தன்னம்பிக் கையையும், சுயமரியாதை இயக்கத்தின் வலிமையையும் குறை கூறத்துணியும் அசட்டுக் கூற்றேயாகும். சுயமரியாதை இயக்கத்தை விட ஜடி கட்சிதான் தமிழ் நாட்டில் வலிவுடையதென்று தீர்மானிக்க வேண்டிய அவ்வளவு கையாலாகாத் தன்மையும், சுயநலமும் அல்லது பொது மக்களை ஏமாற்றும் விஷமமும், வௌவாலைப்போல் மற்றொன்றைப்பிடித்துத் தொங்கவேண்டிய அவசியமும் சுத்த சுயமரியாதைக் காரர்களாகிய அதாவது சமதர்மிக ளாகிய எங்களுக்கு இன்னமும் ஏற்படவில்லை; ஏற்படவேண்டிய அவசியமும் ஒரு நாளும் நேராது. இறுதியாக, ஜடி கட்சியின் பொருட்டு கொஞ்ச நாளைக்குப் பொருத்திருக்கச் சொல்கிறார்கள். யார்? சு-ம. க்காரர்களில் சிலர்தான். இந்தப் பொறுமைசாலிகளிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். காங்கிரகாரருக்காகவோ, வைதீகர்களுக் காகவோ, பிற்போக்காளர்களுக்காகவோ, மதவாதிகளுக்காகவோ, கடந்த பத்து வருடங்களில் நீங்கள் என்றேனும் அவர்கள் பேச்சைக் கேட்டு, பொறுத்தவர் பூமியாள்வார் என்றிருந்ததுண்டா? கோடானுகோடி மக்களின் சுயமரியாதை, பார்ப்பனீயத்தாலும், புரோகிதத்தாலும், ஆதிகத்தாலும், முதலாளித்துவத்தாலும், ஏகாதிபத்தியக் கொள்கையாலும், கணந்தோறும் சீரழிகிறபொழுது, சில பெரிய மனிசர் நிறைந்த ஜடி கட்சிக்காக - ஜடி கட்சி வருகிற எலெக்ஷனில் வெற்றிபெற்று விடுமென்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் சிலர் எலக்ஷனுக்கு உழைக்கும் சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக - நாங்கள் பொறுத் திருக்க வேண்டுமென்பது; சுயமரியாதைக்கு அழகல்ல வென்பதே எமது அழுத்தந் திருத்தமான அபிப்பிராயம். 5. பொதுஎதிரி பார்ப்பனர்களல்லவா? அவர்களை எதிர்ப்பதில், சு-ம. காரர்களும் ஜடி கட்சியாரும் ஒன்றா யிருப்பதால், சு-ம. காரர்கள் ஜடி கட்சியை ஆதரிக்க வேண்டாமா? என்றும் விவகாரம் பேசப்படுகிறது. இந்த விவகாரம் விஞ்ஞானம் கலவாத ஒரு பக்கா மருள். பார்ப்பனீயம் ஒழிந்தால்தான், வேறு எல்லா ஆதிக்கமும் ஒழிந்து சுயமரியாதை தழைக்குமென்பது, சமதர்மத்திற்கு (Socialism) முற்றும் முரண்பாடானது. இந்த நமது அபிப்பிராயம், தாங்களும் சமதர்மிகள் தாமென்று கூறிக்கொண்டே ஜடி கட்சியை ஆதரிப்பவர்களுக்கு கசக்கலாம். ஆனால், உண்மை என்னமோ உண்மைதான். பார்ப்பனீயம் மட்டுமல்ல, புரோகிதம், மதாச்சாரித்வம், பிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்யம் ஆகியவைகளும் இன்றைய ஜனசமூகத்தின் கொடுமைகள் (எதிர்கள்) என்பதை சு-ம. காரர்களெல்லோரும் ஒத்துக்கொண்டே தீருவார்கள். ஆனால் ஜடி மனப்பான்மைகொண்ட சு-ம. காரர்களில் சிலர் பலர் பார்ப்பனீயம் தான் நமது பொது எதிரி என்று சொல்லி வருகிறார்கள். காரணம் அவர்கள் பொது என்று கூறுகிற பொழுது ஜடி கட்சி, சுயமரியாதைக் கட்சி இரண்டும் மாத்ரமே அவர்களின் கண்களில் படுகின்றன. அவர்களுக்கு அப்படித்தான் படமுடியும். ஆனால், பூரண சுயமரியாதைக்காரன் (சமதர்மி) இந்தத் தினுஸில் பொதுக் காணமுயன்றால், பெண்கள் இயக்கத்திற்கும் Rk.க்F« பொதுஎதிரி ஆடவராதிக்கமாகும்; தொழிலாளர் கட்சிக்கும் சு-ம. க்கும் பொது எதிரி முதலாளித்துவமாகும்; சமூகச் சீர்திருத்தக் கூட்டத்திற்கும் சு-ம. க்கும் பொதுஎதிரி வைதீகமாகும்; பகுத்தறிவு வாதிகளுக்கும் (Rationalists & Free thinkers); சு-ம. க்கும் பொது எதிரி புரோகிதமும் மதாச்சாரித்வமும் ஆகும்; காங்கிர தீவிரவாதி களுக்கும் (Rank file & of the Congress) சு-ம. க்கும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும்; ஆகவே, இதனால்; பூரணத்வம் கொண்ட சும. கட்சியை (சு-ம. சமதர்மிகளே) பார்ப்பனீயம் பொது எதிரி என்று பொழிந்து, ஒரு பக்கமாகத் திருப்ப முயல்வது, ஜடி மனப்பான்மையோர், தங்களுக்கு வலுத்தேடும் முதல்தர சூழ்ச்சி யென்றே நாம் கருதுகிறோம். இதுவன்றி, மற்றவர் கூறுவதுபோல், பார்ப்பனீயம் எங்களுக்குப் பொது எதிரியல்ல; ஒரு எதிரியே. பின் எங்களுக்குப் பொது எதிரி யார்? ஆதிக்கங்களையும் கொடுமைகளையும் ஊட்டி வளர்க்கும் தனிஉரிமை-சமூக அமைப்பும் அதனை வலுவுடன் காத்துவரும் ஏகாதிபத்ய ஆட்சி முறையுமே. எப்படி? அரசாங்கமென்பது, ராணுவம், போலீ, சட்டம், ஜெயில் முதலியவைகளின் மூலம் எதையும் சுயேச்சையாகச் சாதிக்கத்தக்க தாபனமாக இன்று காணக்கிடக்கிறது. (Government) (aselfacting armed organisation) மனிதன் இரண்டு விதமான அடிமைப்படுகிறான், ஒன்று, மூடத்தனத்தால் தானாகவே அடிமைப் படுகிறான். தானாக அடிமையாயிருப்பதை, விஞ்ஞானத்தைப் பெருக்கி மூடத்தனத்தை மாற்றி, அகற்றிவிடலாம். ஆனால், அறிவு விரிவடைந்தாலும், பலாத்காரத்தால் பிறரால் ஏற்பட்டுள்ள அடிமையை, போதிய வலுப் பெற்றாலன்றி மாற்ற முடியாது. சர்க்காரிடம் தான், சமூகத்தை அடக்கவும், வளர்க்கவும், ஆளவும் தகுந்த வலுவிருக்கிறது. அதுபோலவே, சர்க்கார் நினைத்தால், குறிப்பிட்ட காலத்துக்குள் விஞ்ஞானப் பேரொளியை சமூகம் முற்றும் பரப்பி, அஞ்ஞானக் காரிருளைக்கிழித்தெறிந்துவிடவும் இயலும். பார்ப்பனீயமோ, மதாச்சாரித்வமோ, முதலாளித்வமோ தங்களுடைய சொந்த யோக்யதையினால் இன்று உலகத்தில் நிலைத்திருக்கவில்லை. இன்று ஏகாதிபத்யத்தை (சர்க்காரை) முதலாளித்துவம் தன் கைவசப்படுத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பனீயமும், மதாச்சாரித்வமும் ஏகாதிபத்திய நிழலில் ஒண்டிக் குடியிருக்கின்றன. ஏகாதிபத்ய ஆட்சிமுறை மாறுகிறபொழுது, சுயேச்சையாக நிற்கமுடியாத, பார்ப்பனியமும், மதாச்சாரித் தன்மையும், முதலாளித்வமும் ஒழிந்து தீரவேண்டியதுதான். இன்று நாம் உதட்டளவிலில்லாமல் காரியார்த்தமாக, பார்ப்பனீயத்தை எதிர்த்தாலும் மதாச்சாரித்வத்தை விரோதித்தாலும், முதலாளித்வத் தோடு சண்டை போட்டாலும், நமக்கு வலுவான எதிரியாக, வந்து நிற்பது - வருகிறது - வரப்போவது (பார்ப்பனீய - மதாச்சாரித்வ - முதலாளித்வப் பாதுகாப்பு அரசியல் முறையாகிய) ஏகாதிபத்ய ஆட்சி முறையேயாகும். ஆகவே, சமதர்ம நோக்குள்ள சு-ம. காரர்களுக்குப் பொது எதிரி ஏகாதிபத்யக் கொள்கை என்று கூறினால் பொருந்துமேயொழிய, பார்ப்பனீயம்தான் பொதுஎதிரி என்று பசப்ப முயல்வது பிரத்யட்ச உண்மையை மறைக்கவோ அல்லது மறுக்கவோ முயல்வதற்கொப்பாகும். 6. பார்ப்பனீயம் ஒழிந்தாலன்றி சமதர்மம் வருமா? பார்ப்பனீயம் ஏகாதிபத்யத்தை எதிர்க்காத வரையில் - ஏகாதிபத்யத்திற்கு வாழ்த்துக் கூறிக்கொண்டிருக்கும் வரையில் - ஏகாதிபத்யம், பார்ப்பனீயத்தை அனுமதிக்கும், காக்கும். இன்னும் அவ்வாறே செய்து கொண்டேயிருக்கிறது. ஏகாதிபத்யம் ஒழிந்தா லன்றி, சமதர்மம் இல்லை. சமதர்ம உணர்ச்சி வளர்ந்து பெருக் கெடுத்தாலல்லது, ஏகாதிபத்யம் குறையாது. ஏகாதிபத்யம் அனுசரனை பெற்றுள்ள பார்ப்பனீயம், ஏகாதிபத்யம் ஒழிக்கப் படாத வரையில், ஒழியாது. ஏகாதிபத்ய வீழ்ச்சியில் பார்ப்பனீய வீழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. பார்ப்பனீயம் இல்லாத இடத்தில் ஏகாதிபத்யம் உண்டு. ஆனால், ஏகாதிபத்ய ஆட்சியில்லாத இடத்தில் பார்ப்பனீயம் இல்லை. ஆகவே, பார்ப்பனீயம் ஒழிந்தாலன்றி சமதர்மமில்லை யென்பது அசம்பாவிதம். 7. உலகிலேயே பெருங்கொடுமை பார்ப்பனக் கொடுமை; ஆகவே அதை ஒழித்துவிட்டுச் சமதர்மம் பேசுவதன்றோ சால்புடைத்து? என்றும் சிலர் ஆக்ஷேபிக்கிறார்கள். உலகிலேயே பெரிய கொடுமை வயிற்றுக்கொடுமை என்பதுதான் அனுபவ உண்மை. லௌகீக சௌகரியங்கள் (materia necessities) பூர்த்தி செய்யப்பட்டு விட்டால் அப்பால் மனித வர்க்கத்தின் பொது வாழ்விலே கொடுமைக்குக் காரணமெங்கிருந்து வரும்? பிரத்தியட்ச வாழ்வில் அவசியங்களாகிய உரிமைகளையும் சௌகரியங்களையும் ஓரளவுக்கும் பறிமுதல் செய்வதால்தான், அறிவியல் வாதிகளும் சமதர்மிகளும் பார்ப்பனீயத்தைக் கொடுமை யென்றார்கள். ஆகவே, இல்லாமை தான் பெருங்கொடுமை. சம தர்மந்தான் சர்வரோக நிவாரணி. 8. சோற்றுக்கில்லாதவர்களுக்குக் கொள்கையேது? பணக்காரர் தயவில்லாமல் என்ன செய்யமுடியும்? என்று, சில ராக்பெல்லர்களும் ஹெர்க்குலிகளும் (சர்வ சக்தர்களும்) சு-ம. சமதர்மிகளின் போக்கை தர்க்க ரீதியாக மறுக்கமுடியாமல், கேவல மனோபாவத்தோடு, மேற்குறிய மொட்டை கேள்விகளைக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அன்னக்காவடிகளால் ஒன்றும் முடியாது என்று வாய்க்கொழுப்போடு பேசும் இந்த கோடீ வரர்களும் லட்சாதிப் பிரபுக்களும் தயவுசெய்து, பிரஞ்சுப் புரட்சியின் சரித்திரத்தையும், ரஷ்யப் புரட்சியின் வரலாற்றையும் ஒருமுறை திருப்பிப் பார்க்கட்டும். சோற்றுக் கில்லாதவனுக்கு கொள்கையில்லையென்றும் இந்த மகா மேதைகள் கடுமையான கொள்கைப் பிடிப்புள்ள கட்சியென்று எதிரிகளாலும் ஏற்போர் களாலும் உலக முழுவதிலும் அங்கீகரிக்கப்படுகிற பொது உடைமைக்கட்சியில் எத்தனை பேர் ஜமீன்தாரர்கள், எத்தனை பேர் லேவாதேவிக்காரர்கள் எத்தனை பேர் பணக்கொழுப்பர்களென்று கூறமுடியுமா? அல்லது உலகச் சரித்திரத்தில், எங்கு ,என்று, உடையவர் கட்சியால் (Bourgeois Party) பொது ஜனக் கஷ்ட நிவாரணம் ஏற்பட்டதென்றாவது சொல்லமுடியுமா? 9. சு-ம. சமதர்மிகளை சில பெரியார்களும் சுயஞானிகளும் காரியவீரர்களும் (பொதுக் காரியமோ தங்கள் காரியமோ) புத்தகப் பூச்சிகளென்று குறை கூறுகிறார்கள். தங்களைப் போல் மற்றவர்களும் சுயஞானி களாய் இராதது குறையென்று இவர்கள் மனப்பூர்வமாகக் கருதினால், மற்றவர்கள் தங்களுடைய அபிப் பிராயங்களை உபயோகப்படுத்த வேண்டுமென்று விரும்புகிற மாதிரியில், இவர்கள் ஏன் பத்திரிகைகளும் புதகங்களும் வெளியிடுகிறார்கள்? பிரசங்கள் செய்கிறார்கள்? தவிர நேற்று வரையில், லெனின் படத்திறப்பு விழாவும், குழந்தைகளுக்கு மார்க்க, இங்கர்சால், டார்வின் ஆகியவர்களின் பெயர் சூட்டுதலும் ஏன் நடத்தினார்கள்? உண்மையில் காரணம் என்ன தெரியுமா? சு-ம. சமதர்மிகள் கொள்கைப் பிடிப்பிலும், தொண்டு செய்வதிலும், கட்டுப்பாட்டிலும் இந்த சுயஞானிகளுக்கு இளக்க மில்லாமலிருந்து, இவர்கள் வழுக்கி விழுந்த தவறை பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டி வலியுறுத்தும் உத்தேசத்தோடு உலகப் பிரசித்திபெற்ற சமதர்மியாகிய லெனினுடைய அபிப்பிராயத்தையும் சாதகமாக உபயோகிக்கும் பொழுது, இந்த குற்றவாளிகளுக்கு பாதகமாக லெனினுடைய அபிப்பிராயம் பொது ஜனங்கள் கண்ணில் படுவதால், இதிலிருந்து பொது மக்களைத் தங்கள் வழிக்குத்திருப்ப வேண்டுமென்ற சுயநலநோக்கோடு, சமதர்மிகளை புத்தகப்பூச்சி களென்றும் ஏட்டுச்சுரைக்காய் களென்றும் கூறத் தலைப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் சு-ம. சமதர்மிகள் புத்தகப் பூச்சிகளா அல்லது எங்களைப் புத்தகப் பூச்சிகளென்போர், தவறுதலை மறைக்கத் தனிவியாக்கியானம் செய்யும் ஏமாற்று வீரர்களா என்பதை பொதுஜனங்கள் உணரும் காலம் ரொம்பத் தூரத்திலில்லை. 10. ரஷ்யா-சாம்ராஜ்யங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதுபோல், சமதர்மக் கொள்கை கொண்ட சுயமரியாதையோரும் ஜடி கட்சியோடு கூடிக்குலாவுவது தப்பா? என்று சிலர், ஜடிஸோடு சுயமரியாதைக் கட்சி கலந்து உறவாடுவதை ஆக்ஷேபிக்கும் சமதர்மிகளைக் கேட்கிறார்கள். ரஷ்யா செய்தது ராஜதந்திரம். சமதர்மம் பேசிவந்த சு-ம. காரர்கள் ஜடிஸை ஆதரிப்பது, பலவீனத்தாலும் சுயநலத்தாலும் கொள்கைத்துரோகம் செய்வது; மற்றப்படி, ஜடிஸை ஆதரிப்பது ராஜ தந்திரமென்பது, சமதர்மத்திலும் ரஷ்யாவிலும் பற்றுக் கொண்ட சுயமரியாதைக் காரர்களாகிய பொது ஜனங்களை ஏமாற்றும் சூழ்ச்சி. ஜடி கட்சிக்குத் தோள் கொடுப்பது அவமானத்திலும் அவமானம். (ஜடி கட்சியை ஆதரிக்கும் சு-ம. காரர்களில் மலைபோன்ற தவறைப் பற்றியும், ரஷ்யா சர்வதேச சங்கத்தோடும் சாம்ராஜ்யங்களோடும் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் ராஜதந்திரத்தைப் பற்றியும் எம்மால் எழுதப்பட்டு கூடிய சீக்கிரம் வெளிவரயிருக்கும் சுயமரியாதை - சமதர்மம் ஈ.வெ. ராயிஸம் என்கின்ற புதகங்களில் விரிவாகக் காண்க.) 11. சமதர்மம் பேசுவதற்கு தகுந்த காலமா? என்கிறார்கள் சிலர். முன்னே பிற்போக்காளர்களும் வைதீகர் களும் இவ்வாறு கேட்டார்கள். இன்று, தீவிரவாதிகளென்று கருதப்படுகிற சு-ம. காரர்களிலேயே சிலர் கேட்கிறார்கள். அதுதான் வேடிக்கை. நேற்று தோழர் காவன்னா என்பவர் சமதர்மம் அவசியம் என்றார். அவரிடம் அபிமானம் கொண்ட இவர்களும் ஆம் அவசியம் என்றார்கள். இன்று தோழர் காவன்னா அந்தரங்கத்தில் சமதர்ம விரோதியாக மாறி வெளிப்பூச்சாக இது காலமல்லவென்று வக்கீல்வாதம் பேசி மழுப்புகிறார். இவர்களும் ஒத்துப் பாடுகி றார்கள். இந்த மனோபாவம் எப்பொழுது வெளுக்குமோ? துணி வெளுக்க மண்ணுண்டு தோல் வெளுக்கச் சாம்பருண்டு மணி வெளுக்கச் சாணையுண்டு மனம் வெளுக்க வழியில்லை பிணிகளுக்கு மாற்றுண்டு பேதமைக்கு மாற்றில்லை (பாரதி) ஜாதி அபிமானம், மத அபிமானம் கடவுளபிமான மெல்லாம் பழமையான பேதமை, தலைவரபிமானமோ நவீனப்பேதமை. 12. சமதர்மம் இந்தியாவுக்கு ஒத்துவருமா? அச்சா! Gold flake cigrattees, Roles Roys’ car. cosmopolitan club, communal representation, New constitution இன்னபிற இறக்குமதிச் சரக்குகளெல்லாம் இந்தியாவுக்கு ஒத்துவரும் என்று அனுஷ்டானத்தில் இவர்கள் காட்டுகிறார்கள். இவைகளை அந்நியச்சரக்கு என்று எவனேனும் ஆட்சேபிக்க வாய்திறந்தாலும் போதும். அவன் பாடு பஞ்சுபடாப்பாடுதான். அப்படியிருக்க, சர்வ தேசங்களிலும் (ரஷ்யாநீங்கலாக) தனிவுடைமைத் தத்துவத்தால் தரித்திரம் பெருகி மனித வர்க்கத்தைச் சீர்குலைப்பதுபோல், இந்தியாவிலும் முதலாளித்திட்டமும், தனிவுடைமைத் தத்துவமும், தரித்திரமும் இருக்கின்றன வென்றும், மற்ற தேசங்களிலெல்லாம் தனி உடைமைத் தத்துவத்தை ஒழிக்க நடைபெறும் சமதர்மக் கிளர்ச்சி, இந்தியாவிலும் நடைபெற வேண்டுமென்பது அவசியமும் பொருத்தமுமாகுமென்றும் கூறினால், சமதர்மம், அந்நியச் சரக் கென்று (அர்த்தமில்லாமல்) கூறவேண்டிய அளவு சிலர்க்கு தேசாபிமானம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. தோழர்களே! இந்தப் பேச்சில், கொள்ளை கொள்ளையான மனப் பான்மைதான் தொனிக்கிறதேயொழிய, வேறு தேசாபிமானமும் இல்லை கால தேசவர்த்தமானம் கருதும் பகுத்தறிவு வாதமும் இல்லை. ஒரு புடலங்காயுமில்லை. 13. பொது ஜனங்கள் சமதர்மத்துக்குத் தயாராயில்லாததால் சமதர்மத்தை கைவிட்டு விட்டதாக அல்லது நிறுத்தி வைத்திருப்ப தாகச் சிலர் நொண்டிச்சமாதானம் சொல்கிறார்கள். பொதுஜனங்கள், தாங்கள் முடிவுவரையில் கலந்து போராடுவ தாக இவர்களிடம் என்றேனும் வாக்குறுதி கொடுத்தார்களா? அல்லது, பொது ஜனங்களை சமதர்மப் போருக்கு, (சமதர்மத்தை விட்டு ஜடி பிரசாரம் செய்யும்) இந்த வீரர்கள், விஞ்ஞான ரீதியாகத் தயார்செய்ய என்றேனும் முயற்சித்தார்களா? வெற்றி பெற்ற நாட்டார் எப்படி சமதர்மக் கிளர்ச்சி செய்தார்களென்று அறிந்து அவ்வழியிலேனும் சென்று பார்த்தார்களா? பொது ஜன ஆதரவு எவ்வளவு ஏற்படுமோ அதிலிருந்து எந்நாளாவது சமதர்மப் பிரசாரத்துக்குப் பொதுஜன ஆதரவு குறைந்ததென்றாவது இவர்கள் நிரூபிக்க முடியுமா? பொதுஜனங்கள் தூக்குமேடைக்குப் போவார்க ளென்றோ, அல்லது அந்த ஏழை எளிய மக்கள் ஆயிரம் ஆயிரமாகக் கொடுப்பார்கள் என்றோ எந்த சமதர்மியாவது எதிர்பார்த்தால் அது, எதிர்பார்த்தவனுக்கு பொது ஜனங்களின் உண்மையான யோக்கி யதையை அளந்து கொள்ளத் தெரியவில்லை யென்பதாகுமேயன்றி, பொது ஜனங்கள் பேரில் தப்பிதமாகுமா? தாங்கள் செய்த தப்பிதத்தை, நிரபராதிகளான பொதுஜனங்களின் தலையில் போட்டுவிட்டு, தமது குற்றத்தை-பொறுப்பீனத்தை-மறைக்கப் பார்ப்போர், கட்சிக்காரர்களாகவோ, தலைவர்களாகவோ இருக்க யோக்யதையுடையவர்களா? குதிரை கீழே தள்ளினதோடு நில்லாமல் குழியும் பறித்தது என்ற கதைபோல் தங்களால் பொது ஜனங்களை சமதர்மத்துக்குத் தயார் செய்ய முடியாது போன கையாலாகாத் தன்மையோடு மட்டுமன்றி, சமதர்மத்துக்கு விரோத மான பணக்காரர் கட்சியிலும் போய்ச் சேர்ந்துகொண்டு, பொது ஜனங்கள் சமதர்மப் போருக்கு லாயக்கில்லையென்று கூறினால், இந்த வாதத்தை, பொறுப்பும் நாணயமும் உண்மையும் நேர்மையும் சேர்ந்த, காரணகாரியம் நிறைந்த சரியான நீதி வாதமென்பதா? அல்லது பக்கவாதமென்பதா? அன்றிபக்கா அபவாத மென்பதா? 14 சர்க்கார் பிடித்து ஜெயிலில் போட்டுவிட மாட்டார்களா? சுயமரியாதை வேண்டுமென்றால், சுயமரியாதையைப் பறி முதல் செய்வதிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப் போருடைய எதிர்ப்புக்கு ஆளாகித்தான் தீரவேண்டும். மற்ற ஆதிக்கங்களுக்கும் சர்க்காருக்கும் என்ன சம்பந்தம் என்பதை முன்னமேயே கூறியிருக்கிறோம். ஆகவே நமது சுயமரியாதை நிலை நிறுத்தப்பட வேண்டுமானால், இன்றைய சர்க்காரின் எதிர்ப்புக்கும் ஆளாக வேண்டியது வந்தே தீரும். பயந்தவர்க்கு சுயமரியாதை இருக்கமுடியாது. எந்தப் பொருளும் போதியவிலை கொடுத்தால் தான் பெறமுடியும். சுயமரியாதை சும்மாகிடைக்கும் வதுவா? இவ்வளவு காலம் சு-ம. இயக்கம் வளர்ந்து வகித்திருப்பது சு-ம. காரரின் தியாகத்தாலன்றோ? சுயமரியாதைக்காரரின் சர்க்கார் தான் சமூக ரீதியாக சுயமரியாதையைக் காப்பாற்றும். இன்றுள்ள சர்க்கார் வைதீகரின், பிற்போக்காளரின், ஜாதிமதவாதிகளின், பணக்காரரின், ஆதிகரின் சர்க்கார், சுயமரியாதைக் காரருடையதல்ல. ஆகவே, சு-ம. காரர் வேஷத்தனமாகவும், காரியார்த்தமாகவும் கொள்கைப் படி எந்தக் காரியத்தைச் செய்யநேரினும், அரசாங்க எதிர்ப்பு வந்தே முடியும். அதற்குப் பயந்தால், சுயமரியாதைக்கு கோவிந்தாதான்.  ஆசிரியர் குறிப்புகள் சுயமரியாதைச் சமதர்மக்கட்சி தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஜனசமூக ஆதரவைப்பெற்ற ஜீவசக்தியுள்ள இயக்கங்கள் என்று ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள் காங்கிர சுயமரியாதை என்னும் இருபெரும் இயக்கங்களே யாகும். காங்கிர, இந்தியாவில் ஜரோப்பியர்கள் பெரிய உத்தி யோகங்களிலிருந்துகொண்டு ஏராளமான சம்பளம் பெற்று இந்திய மக்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைத்து வருவதையொழித்து இந்திய அரசாங்க உத்யோகங்களையெல்லாம் இந்திய மயமாக்க எழுந்த ஒரு தாபனம். அந்த தாபனம் பின்னர் சுதேச கைத் தொழில் அபிவிருத்திக்கும் சுதேச வர்த்தக வளர்ச்சிக்கும், இந்தியா குடியேற்ற நாட்டந்தது பெறவும் கிளர்ச்சி செய்து பின் பூரணசுயராஜ்யக் கிளர்ச்சியிலும் ஈடுபட்டது. இப்பொழுது சமதர்மம் ஒன்றே மனித சமூக முன்னேற்றத்திற்கு ஏற்ற வழியென்ற முடிவுற்கும் வந்து கொண்டிருக்கிறது. சுயமரியாதை இயக்கமோ காங்கிரஸில் சம்பளம் பெறும் எல்லா உத்யோகங்களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் இருந்துகொண்டு தங்கள் ஜாதி, தங்கள் சமயம், தங்கள் ஆச்சாரங்களை வளர்த்து வருவதோடு பார்ப்பனரல்லாதார்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைத்து வரும் கொடுஞ்செயலை ஒழிக்க ஆரம்பித்து, பின் இந்திய அரசாங்க உத்யோகத்திலும் பார்ப்பனரல்லாதார் தமது நியாயமான உரிமையை அடையச் செய்ய எழுந்த ஒரு தாபனமாகும். அது நாளடைவில் பிராமணீயத்தை ஒழிக்க முயற்சித்துப் பின்னர் புரோகிதத்தை ஒழிக்க முனைந்து பின் ஜாதியை ஒழிக்க ஆரம்பித்து அதனாலும் பயனில்லை யென்றுகண்டு ஜாதியையும் சாத்திரங்களையும், சமயங்களையும், சாமிகளையும் ஒழிக்க முயன்று இறுதியாக இவைகளையெல்லாம் ஒழித்தாலும் மக்கள் சுபீட்சமடைய முடியாதென்று கண்ட பின்னர் ஏகாதிபத்ய முறைகளை ஒழித்து சமதர்ம கொள்கைகளை ஏற்றால்தான் மனித சமூகத்தின் எல்லாக் குறைபாடுகளும் ஒழிந்து யாவரும் சமத்வமும் சந்தோஷமும் பெறமுடியும் என்ற முடிவிற்கு வந்தது. காங்கிர இந்தியா சுயராஜ்யமடைய வேண்டுமென்ற லட்சியத்தையுடையதாயினும், ஜாதி, சமயம், சாத்திரம், கடவுள், பழக்கவழக்கங்களுக்கெல்லாம் ஆதரவளிக்கிறது. ஆனாலும் சமதர்மத்தின் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. காங்கிர சமதர்ம லட்சியத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய தோழர் ஜவஹர்லால் போன்ற தலைவர்கள் பெறும் முயற்சி செய்கிறார்கள். சுயமரியாதை இயக்கமே புரோகிதம், சாதி, சமயம், சாத்திரம் குருட்டு பழக்கவழக்கங்கள் முதலிய அனைத்தையும் ஒழிக்க முனைந்து இறுதியில் சமதர்ம லட்சியத்தை சு-ம. தொண்டர்களும் எல்லா ஜில்லா மகாநாடுகளும் ஏற்று 3 ஆண்டுகளாக அதே பிரசாரத்தை தொடர்ந்து நடத்திவந்தது. ஆனால் சில தான்றோன்றித் தலைவர்க ளால் அது வகுப்பு வாதத்தையும் ஏகாதிபத்யத்தையும் ஆதரிக்கும் ஜடி கட்சிக்கு துணைநிற்கும்படி செய்யப் பட்டுவருகிறது. தேசீயக்காங்கிரஸின் வளர்ச்சியினும் சுயமரியாதை இயக்க வளர்ச்சி யானது மிகுந்த நேர்மையான அரசியல் வளர்ச்சியடைந் துள்ளது சும. இயக்கமோ காங்கிரஸினும் பூரணமாய் சமதர்ம லட்சியத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கபக்குவமான வளர்ச்சியடைந்துள்ளது சர்வே தேச சமதர்ம அரசியல் நிபுணர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். சு-ம. இயக்கம் தனது தீவிரமான கொள்கையின் காரணமாக ஜனசமூகத்தின் பூரணமான ஆதரவைத் திடீரென்று பெற்றுவிட முடியாதாயினும் காங்கிர போன்ற பெரிய தாபனங்களை சமதர்ம லட்சியத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்யவல்ல உயரிய சமதர்மத் தலைவர்களை உற்பத்தி செய்யவல்ல ஒரு சிறந்த நல் லியக்கம் என்பதை எவரும் மறுக்கமுடியாது. நல்ல மரத்தில் புல்லுருவி வீழ்ந்தது போல் சில சு-ம. தலை வர்கள் என்போர் சிலர் உயரிய லட்சியத்தைக் கொண்டுள்ள சுயமரியாதை இயக்கத்தின் போக்கைமாற்றி மிகப்பிற்போக்கான ஜடி கட்சியின் கூலியாகவும், எகாதிபத்தியத்தை தாங்கும் தூண்களுக்கு அதிபாரமாகவும், சு-ம. இயக்கத்தை ஆக்கிவருவ தோடு சு-ம. இயக்கத்தை அது தற்போதடைந்திருக்கும் உன்னத தானத்தினின்று கீழ்ப்படிக்குத் தள்ளவும் முனைந்திருக்கின் றார்கள். இதற்குக் காரணம் தலைவர்களென்போர்களின் அறியா மையோ, பயங்கொள்ளித்தனமோ சுயநலமோ எதாஇருப்பினும் சு-ம. இயக்கத்தார்கள் அவ்வியக்கத்தை அதன் உன்னதானத்தினின்று கீழே தள்ள, தம் அனுபவத்தின் பயனாய் அவ்வியக்கம் கண்ட முடிந்த முடிபாகிய சமதர்ம லட்சியத்தினின்று மாற்ற எவரும் இடங் கொடுத்தல் கூடாது. சு-ம. இயக்கத்தை அதன் லட்சியத்தினின்று மாற்ற முனையும் தலைவர்கள் தங்கள் பத்திரிகைகள் பணம், வாக்குசாதுரியம், தலைமைப்பதவி முதிர்ந்தவயது, பழைய தியாகம், சு-ம. இயக்கத்தால் தாங்கள் பெற்ற செல்வாக்கு, தந்திரம், ஜடி ஆட்சியின் ஆதரவு முதலியன கொண்டு சு-ம. காரர்களை மிரட்டலாம், ஏமாற்றலாம், எதிர்க்கலாம் சமதர்ம லட்சியத்தை உணர்ந்த சுயமரியாதைக்காரனை - அறிவியல் வாதியாகிய சு-ம. காரனை ஒரு இம்மியளவும் அசைத்து விடமுடியாது என்பதே எமது நம்பிக்கை. ஆனபோதிலும் இப்பொழுது சு-ம. இயக்கத்தை எவ்வழி யாலும் பிற்போக்குடையதாகச் செய்துவிடாமல் அதை கட்டுப் பாடுடனும் சட்ட திட்டங்களுடன் வளர்ப்பதற்காக சு-ம. சமதர்மக் கட்சி வெளித்தோன்றியுள்ளது என்பதை சென்ற மாதம் நம் அறிவின் மணியில் வாசகர்கள் வாசித்திருப்பார்கள் என்று நம்புகிறோம். இம்மாத மணியில் சென்னை மாகாண டிரேட்யூனியன் காங்கிர தலைவரும் சு-ம. இயக்கத்தின் பொதுக்காரியதரிசியு மாகிய தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மிகத் தெளிவாய் சு-ம. இயக்கத்தின் கொள்கைகள், அதன் வளர்ச்சி, சு-ம. சமதர்மக்கட்சி தோன்றியதன் காரணம் அதன் எதிரிகளின் ஆக்ஷேபனைகளுக்கு தக்க சமாதானங்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார்கள். வாசகர்கள் சற்றுப்பொறுமையாய் வாசித்துணர்ந்து அது சரியென்று கண்டால் சு-ம. சமதர்மக் கட்சியில் சேர்ந்து இந்தியாவின் பரிபூரண விடுதலைக்கு உழைக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். நமது அனுதாபம். 24 -6-36இல் சுயமரியாதை இயக்கத் தலைவர் தோழர். சௌந்திரபாண்டியன் அவர்களின் புதல்வன் ராஜசேகரன் 14ஆம் வயதில் அகால மரணமடைந்து விட்டமைக்காக மிக வருந்துகின்றோம். இச்சிறுவயதில் புதல்வனை பறிகொடுத்த தோழர். சௌந்தரபாண்டியன் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்கொடை சு-ம. இயக்கப்பிரமுகர்களில் ஒருவரான தோழர்கள் குஞ்சிதம் குருசாமி அவர்களின் புதல்வி ரஷியாவுக்கு 5-6-36இல் நடை பெறும் முதலாவதாண்டு பூர்த்தியை முன்னிட்டு நமது அறிவிற்கு நன்கொடையாக ரூ 1. அனுப்பியுள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு நமது நன்றியைச் செலுத்துவதோடு ரஷியா ஜடி ரஷியாவாக மாறிவிடாது சோவியத் ரஷியாவாக விளங்கவேண்டும் என்று பெரிதும் ஆசைப்படுகின்றோம். விதவைகள் விடுதி கெத்வெல்ஜி ஹெம்ராஜ் டிரடின் டிரடிகள் நாசிக்க லாவது பம்பாயிலாவது நிர்க்கதியான ஹிந்து விதவைகளுக்கான விடுதியையும் கைத்தொழிற் பள்ளிக்கூடத்தையும் ஏற்படுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் இத்திட்டத்திற்கு பம்பாய் ஹைக்கோர்ட்டின் சம்மதத்தைப் பெறுவதற்காக அட்வகேட் ஜனரலின் சம்மதத்துடன் மனுச் செய்யப்போகின்றனர். தற்சமயம் கைத்தொழிற் பள்ளிக்கூட சிப்பந்திகளுக்கும் 12 விதவைகளுக்கும் இடவசதியுள்ள அளவே ஏற்பாடு செய்யப்படும். இலவசமாக உணவும், உடையும், இடமும் அளிக்க வேண்டுமென்பது டிரடி கள் விருப்பம். விதவைகளை ஆயுட்காலம் முழுவதும் இவ்விடுதியில் வைக்க அவர்கள் விரும்பவில்லை. நல்ல கைத்தொழில்களைக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பொருளாதார நிலையில் கைதூக்கி விடுவதே இச்சங்கத்தின் முக்கிய நோக்கம்.  சு-ம. இயக்கத்தின் விழ்ச்சி இ. உ. மார்த்தாண்டன் சு-ம. இயக்கத்தோற்றம் இந்தியாவின் ஒரு மஹத்தான அரசியல் தாபனம் காங்கிரசேயாகும். காங்கிரஸின் மூலமாகவே இந்திய மக்கள் அரசியல் உணர்ச்சி பெற்றார்கள். காங்கிர கிளர்ச்சியின் பயனாகவே மக்கள் உள்ளத்தின் சமூக சீர்திருத்த எண்ணம் உதித்தது. ஆனால் நாளடைவில் மக்களுள்ளத்தில் தோன்றிய தீவிர உணர்ச்சியை காங்கிர தலைவர்களிற் சிலர் தங்களின் சுயநலத்திற்கும் தங்கள் உற்றார், உறவினர் வாழ்விற்கும் பயன் படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். இது உலகிலுள்ள ஒவ்வொரு இயக்கத்திலும் தோன்றும் சாதாரணச் சம்பவமாகும். ஆனால் எவ்வியக்கத்திலும் சுயநலமற்றவர்கள் இயக்கப் புல்லுருவிகளான சுயநலமிகளை அவ்வியக்கத்தினின்று வெருட்டி இயக்கத்தைத் தூய்மைப் படுத்துவது இயற்கையாகும். சில இயக்கங்களில் சுயநலமிகளை வெருட்ட முடியாது அவ்வியக்கத்தினின்று பிரிந்து வேறு புதிய இயக்கங்கண்டு, சுயநலமிகளை ஒழித்துப் பணிபுரிவர். அதேபோன்று தமிழ் நாட்டுக் காங்கிரஸில் பார்ப்பனர்களின் சுயநல ஆதிக்க வேட்டை மிகுந்திருந்தது கண்டு, காங்கிரஸில் இருந்து அவ்வாதிக்கத்தை வீழ்த்த முடியாதென்று உணர்ந்து டாக்டர் நாயர், தியாகராயர் போன்றவர்கள் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்னும் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். கொள்கையில் அக்கட்சி சரியோ-தப்போ எவ்வாறாயினும் வளர்ச்சியுற்று பார்ப்பன ரல்லாத மக்களில் விரல் விட்டெண்ணக்கூடிய சிலருக்கு ஒரு சில அரசாங்க உத்யோகங்களை வாங்கிக் கொடுத்ததோடு காங்கிரஸில் ஜாதி ஆணவங்கொண்ட ஒரு சிறு ஜாதியார் புரிந்துவரும் அட்டூழியங்களையும் எடுத்துக்காட்டி வந்தது. சமூக சீர்திருத்த விஷயங்களிலும் சிறிது அக்கரை கொண்டதுபோல் நடித்தது. ஆனால் ஏனைய இயக்கங்களைப்போல் ஒரு சிறிய கூட்டத்தாராகிய ஜமீன்தார்கள் ராஜாக்கள் லேவாதேவிக் காரர்களாகிய முதலாளிவர்க்கத்தாரின் பதவி வேட்டைக்கும் சுயநலத்திற்கும் பார்ப்பனரல்லாத மக்கள் குழுவில் தோன்றிய சீரிய உணர்ச்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. தன்னலமற்று பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கும் உரிமைக்கும் போராடவும் அதற்காக எத்தகைய தியாகமும் செய்யவும் தக்க தலைவர்கள் அருகினர். சர்க்கார் செய்தது சரியோ தப்போ எதனாலும் தலையை ஆட்டும் பொம்மைத் தலைவர்கள், செக்கு மாடுகள் பெருகினர். வைதீக உள்ளம் படைத்தோர் மிகுந்தனர். பணத்திமிர் படைத்தோர் மலிந்தனர். கட்சியில் கட்டுப் பாடும் உயர்ந்த கொள்கைகளும் மறைந்தது. நாளடைவில் பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் இழந்து வந்தது. இந்நிலையில் காங்கிரஸில் இருந்துகொண்டு பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தை ஒழித்துவிட அதி தீவிரமாய் வேலை செய்துவந்த பார்ப்பனர்களின் கையாள்களான ஸ்ரீமான்கள் S. இராமநாதன், ஈ.வெ. இராமசாமி; கார்குடி சின்னையாபிள்ளை போன்றோர்கள் சிறுகச் சிறுகப் பார்ப்பனர்களின் சுயநல வேட்டை யையும், பித்தலாட்டங்களையும் அறிந்து அதை ஒழிக்க காங்கிரஸி லிருந்துகொண்டே முயன்றனர். .இறுதியில் தங்களின் முயற்சியில் ஒன்றும் முடியாதென்று கண்டு காங்கிரசை விட்டு ஒருவர் பின் ஒருவராய் வெளியே வந்தனர். சோர்வுற்று நிற்கும் ஜடி கட்சிக்குப் புத்துயிரளித்து பார்ப்பனர்களின் அட்டூழியங்களை அழித்து விடலாம் என்று கருதி சிறிது காலம் முயன்றனர். வீழ்ச்சியுற்ற ஜடி கட்சி சிறிது வலுவுற்றது. ஆனால் பார்ப்பனர்களையோ பார்ப்பனர்கள் ஆதிக்கம் மலிந்த காங்கிர சையோ எதிர்க்க இந்த நொண்டிக் குதிரை பயன்படாது என்று அதை விட்டு (ஜடி கட்சியைத் துறந்து) சுயமரியாதை இயக்கம் என்ற நவீனப்புரட்சி இயக்கம் ஒன்றைக் கண்டனர். இயக்க கர்த்தாக்களில் ஒருவரான ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு பார்ப்பனர்கள் பேரிலும் அவர்களுக்கு அரண் போன்ற காங்கிர பேரிலும் தனிப்பட்ட முறையிலுள்ள துவேஷமானது சு-ம. இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் ஆதரவாய் இருந்தது. சு-ம. இயக்க வளர்ச்சி காங்கிரஸில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க எழுந்த சுய மரியாதை இயக்கம், பின்னர் பார்ப்பன ஜாதியையே எதிர்க்க முன் வந்தது. சமூக இயலில் மட்டுமல்ல அரசியலிலும் பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டுமென்று வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்திற்குப் போராடின. சிறிது காலத்திற்குள் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத் தால் பார்ப்பனர் கொட்டம் ஒடுங்காதென்றும் பார்ப்பனரல்லா தாரில் ஒரு சிலர் தான் உத்தியோகம் பெறமுடியுமே ஒழிய பார்ப்பனரல்லாத சமூக முழுதும் நலன்பெற முடியாதென்றும் கண்டு பார்ப்பனரல்லாதார் பார்ப்பனப் புரோகிதர்களையும், பார்ப்பன வக்கீல்களையும், பார்ப்பன ஹோட்டல்களையும் பகிஷ்கரித்து பார்ப்பனரல்லாத - புரோகிதர்களுக்கும் வக்கீல் களுக்கும், ஹோட்டல்களுக்கும் பார்ப்பனரல்லாதார்கள் ஆதர வளிக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்தது. பார்ப்பன ஆதிக்கத்தை வேருடன் கல்லிவிட வீறு கொண்டெழுந்தது. தன் கிளர்ச்சியில் ஒரு சிறிது வெற்றிபெற்றது என்றாலும் முற்றாய் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாதென்று உணர்ந்து ஜாதிகளையெல்லாம் தகர்த்து விடத் தீர்மானித்தது. ஜாதிப்பட்டங்களைத் துறக்கவும், சமபந்தி போஜனஞ்செய்யவும், கலப்பு மணஞ்செய்யவும் முன்வந்தது. இந்தத் தீவிரமான முடிவைக் கண்டு இதுவரை அவ்வியக்கத்திற்கு ஆதரவளித்தோர் பல்லோர் இயக்கத்தை விட்டுப்பிரிந்து போயினர். ஆனால் பூற்றீசல்கள் போல் வாலிபர்கள் பலர் இயக்கத்தில் வந்து குழுமினர். கிளர்ச்சி வலுத்தது. இயக்கப் பிரசாரத்தை குடி அரசு பத்திரிகை இடைவிடாது தொடர்ந்து செய்து வந்தது. திராவிடனும் சுயமரியாதைத் தொண்டனும் நாடார் குலமித்திரனும் முன்னேற்றமும் ரிவோல்ட்டும் (ஆங்கிலப் பத்திரிகை) மிகத் தீவிரமாய்த் தோன்றி துணை நின்றன. பேச்சு வன்மைபடைத்த பல ஆண் பெண் தொண்டர்கள் நாடெங்கும் தோன்றி சுயமரியாதைக் கொள்கைகளைப்பற்றி சொன்மாரி பொழிந்தனர் என்றாலும் பார்ப்பன ஆதிக்கம் அசையவில்லை, ஜாதிகள் ஒழியவில்லை. எனவே பார்ப்பனர்களுக்கும் ஜாதிக்கும் புகலிடமாயிருப்பது புராணங்களும், மிருதிகளும், வேதங்களும் என்று உணர்ந்து அவைகளின் பித்தலாட்டங்களையும், புரட்டுகளையும் அலசி அலசி மக்களுக்கு எடுத்துக்காட்டினர். மனுமிருதி போன்ற பார்ப்பனீயத்திற்கு ஆதரவளித்த நூல்களை பொது மக்கள் முன் சுட்டெரிந்தனர். கைவல்யசாமி, சந்திரசேகரப் பாவலர், சித்ர புத்ரன் குருசாமி போன்றவர்களின் கட்டுரைகள் பார்ப்பனீய அநீதிகளையும், கொடுமைகளையும், புரட்டுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கின. ஆயினும் பார்ப்பன ஆதிக்கஞ்சாயவில்லை. முடிவாக இவைகளை ஒழித்தாலும் பார்ப்பன ஆதிக்கம் ஒழியாது பார்ப்பனர்களுக்குப் புகலிடமாயிருக்கும் மதம், கடவுள், காங்கிர, கதர் போர்டு, மூடநம்பிக்கைகள் போன்றவைகளை ஒழித்தால் பார்ப்பனீயம் ஒழிந்துபோகும் என்று தீர்மானித்து எங்கும் தீவிரமாகக் கிளர்ச்சி செய்தன. இதனால் சு-ம. இயக்கம் காங்கிர, ஜடி, ஹிந்து, முலிம், கிறிதவர் போன்ற பலருடைய எதிர்ப்புக்கும் ஆளாயிற்று. காங்கிர காரர்கள் பிரிட்டி காரர்களைவிட சு-ம. காரர்களை தம் கொடிய விரோதியாய்க் கருதினர். ஜடி கட்சிக்காரர்கள் பார்ப்பனர்களைவிட சு-ம. காரர்களை கொடிய பகைவராய்ப் பாவித்தனர். இவ்விருகட்சிக் காரர்களும் தம்மால் இயன்ற அளவு முயன்று சு-ம. இயக்கத்தை ஒழித்துவிட முயன்றனர். ஆனால் சு-ம. இயக்கம் கட்டுத் திட்டத்துடன் விஞ்ஞான ரீதியாய் வளர்க்கா விட்டாலும் தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமங்களுக்குங் கூட அவ்வியக்கத்தின் பேரொலி எட்டிவிட்டது. ஆங்காங்குள்ள வாலிபர்கள் கட்டுக்கடங்கா வீரர்கள், சுயமரியாதை இயக்கத்தைத் தீவிரமாய் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். இயக்கம் தாழ்த்தப் பட்டோர்கள், பெண்கள் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கரை காட்டியதால் தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் ஏராளமாய் பங்கு கொண்டனர். இதன் பலனாய் பல கலப்பு மணங்கள், விதவை மணங்கள் நடந்தன. பார்ப்பனரன்றி பல மணங்கள் சிக்கின முறையில் நடைபெற்றன. இத்தகைய நல்ல காரியங்களை தீவிரமாய்ச் செய்ய ஒரு நல்ல தாபனமோ, மூலதனமோ, சட்டதிட்டமோ ஒன்றுமில்லாது போயினும் பொது ஜனங்களுக் குள்ள தீவிர உணர்ச்சி இவைகளுக்கு நாட்டில் பெருஞ்செல்வாக்கை கொண்டு வந்து விட்டது. இதனிடையில் சுயமரியாதைத் தினசரி யாகிய சண்டமாருதமும், புதுவை முரசு, குமரன், சமதர்மம் போன்ற வாரப்பத்திரிகைகளும், மாதப்பத்திரிகைகளும் மலிந்தன. மூன்று மாகாண மகா நாடுகள் ரூ 10000க்கு மேல் செலவு செய்யப்பட்டு வெகு ஆடம்பரத்துடன் நடைபெற்றன. எனவே எதிரிகளால் இவ் வியக்கத்தை எதுவும் செய்ய முடியாமற் போய்விட்டது. பார்ப்பனர்கள் மேல் பகைமை கொண்டுள்ள சு-ம. தலைவர்கள் உள்ளம் நாளடைவில் பார்ப்பனீயத்தின் மேலும், பார்ப்பன ரல்லாதார் முன்னேற்றத்தில் அக்கரை கொண்ட தலைவர்கள் மனப்பான்மை ஏழை எளிய, பாட்டாளி, சுரண்டப் பட்ட, தீண்டப்படாத, மக்கள் மீதும் சென்றது. பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடத்தில் மட்டுமல்ல பார்ப்பனர்களல்லாதார்களிடத்திலுமிருக்கின்றது என்ற உண்மை யைத் தலைவர்கள் உணர்ந்தனர். பார்ப்பனீய மட்டுமல்ல. பார்ப்ப னர்கள் ஒழிந்தாலும் மனித சமூகம் நன்மையடையாது. சமூக - பொருளாதாரப் புரட்சி ஒன்றினால் தான் பார்ப்பனச் சாதிச் செருக்கும், பார்ப்பனப் பித்தலாட்டமும் முதலாளி, ஜமீன்தார்கள் முதலியவர்களின் ஆதிக்கமும் ஒழிந்து பார்ப்பனரல்லாதார் - ஏன் - மனிதவர்க்கமும் முழுமையும் சுபீட்சமடைய முடியுமென்ற எண்ணம் சிவகங்கை இராமச்சந்திரன், எ இராமநாதன் போன்ற பலரின் உள்ளத்தில் தோன்றின. காங்கிரசின் மீதும், பார்ப்பனர்கள் மீதும், இந்து மதத்தின் மீதும் அளவு கடந்த துவேஷம் பூண்ட ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி சமதர்மத்தைப் பற்றியறியாவிடினும் சமதர்மம் வந்தால் பார்ப்பனீயமும், காங்கிரஸும் இந்து மதமும் ஒழிந்து விடுமென்றும், காங்கிரசை எதிர்க்க அதைவிடத் தீவிரமான கொள்கையாகிய சோஷியலிஷத்தை நாம் ஆதரித்தால் தான் பொது ஜனங்களின் ஆதரவும் கிடைக்கும். காங்கிரசையும் ஒழித்துவிட முடியும் என்று சோஷியலிஷத்தை ஒப்பிட்டு எ. இராமநாதனுடைய வேண்டுகோளின் மீது சமதர்மக் கொள்கையை சரிவர உணர்ந்துவர ரஷியா சென்றும் வந்தனர். இந்தியாவிலே பிரபலமான சமதர்ம வாதியாகிய தோழர் ம. சிங்காரவேலின் நட்பு சு-ம. இயக்கத்திற்கு வலிய வந்தது. தீவிர உணர்ச்சியுள்ள வாலிபர் பலர் முன்வந்து சமதர்ம முழக்கஞ்செய்தனர். சு-ம. இயக்கம் பச்சை நாதிக இயக்கமாய்- தீவிரப்பொது உடமை இயக்கமாய் மிளர்ந்தது. எங்கும் மஹா நாடுகள், எங்கும் பிரசங்கங்கள், எங்கும் புத்தகங்கள் - ஏன் - எங்கும் சமதர்ம மயமாய் இரண்டாண்டுகள் ஜொலித்தன. சுயமரியாதைப் பிரமுகர்கள் கூடி ஈரோட்டில் சமதர்மக் கட்சி ஒன்று நிறுவி சில திட்டங்களும் வகுத்தனர். சு-ம. இயக்கப் பிரமுகர்களில் சமதர்ம கிளர்ச்சி வருமென்று பயந்து இருந்தவர்கள் போக எஞ்சிநின்ற ஒன்றிரண்டு கோழைகளும் விலகினர். என்றாலும் ஒன்றிற்குப் பத்தாக யுவர்கள் வந்து கூடினர். காங்கிர சுயமரியாதை இயக்கத்தின் முன்நிற்க நாணமடைந்தது. போப்புகளும் பாதிரிகளும் பதறினர். முலிம்கள் முணுமுணுத்தனர். சர்க்கார் காங்கிர மீது செலுத்திய தம் கண் ணோட்டத்தை சு-ம. இயக்கத்தின் மீது செலுத்தினர். ஜடி கட்சியின் கூட்டுறவால் சு-ம. இயக்கத்தார்கள் சர்க்காரின் அடிமைகள் என்று கூறிய காங்கிர காரர்கள் சுயமரியாதை இயக்கம் ஒன்றால்தான் இந்தியாவை விடுதலையடைய முடியும் என்ற முடிபுக்கு வந்தனர். சு-ம. இயக்கத்திற்கு எங்கும் செல்வாக்கு மிகுந்தது. அகில இந்திய இயக்கமாய் 50 ஆண்டிற்கு மேலாய் இந்நாட்டில் செல்வாக்கும் கௌரவமு முடைய காங்கிரசின் சர்வாதிகாரியாய், உயிராய், உலகின் ஒப்பற்ற புருஷராய் மதிக்கும் ஸ்ரீமான் காந்தியவர்களை சு-ம. காரர்கள் ஜடி கட்சியின் பேரால் - இல்லை - சமதர்மத்தின் பேரால் பஹிகரிக்கவும், கருப்புக்கொடி பிடிக்கவும் தைரியங்கொண்டனர். காங்கிர வீரர்கள் தங்களினும் கொள்கையில் மீறிய சு-ம. காரர்களை அஞ்சி தலைகுனிந்து மௌனஞ்சாதித்தனர். சுயமரியாதைக் காரர்களின் கொள்கை (சமதர்மம்) தைரியம், பேச்சு வன்மை, ஒற்றுமை, மக்கள் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. தமிழ் நாடு சம்பந்தப்பட்ட வரையில் எந்த இயக்கமும், எந்தச் சங்கமும், எந்தப்பட்டம் பெற்றவரும், பண்டிதரும் இயக்கத்தைக் கண்டு அஞ்சி நடுங்கவேண்டிய நிலை வந்துவிட்டது. சு-ம. இயக்கத்தை விஞ்ஞான ரீதியாய் அமைத்து அகில இந்திய இயக்கமாக்க வேண்டிய நிலையில் தகுந்த பக்குவத்தையடைந்திருந்தது. தென்னாட்டில் பொது உடைமைக் கொள்கை பரவிவருகிறது. உடனே அவைகளை அடக்க முன்வர வேண்டுமென்று சர்க்காரைத் தூண்டி சு-ம. இயக்கத்தை ஒழிக்க முனைந்த ஜடி கட்சியும் சுயமரியாதை இயக்கமும் ஒரு இயக்கமா? என்று ஏளனம் புரிந்த காங்கிர தலைவர்களும் சுயமரியாதை இயக்கத்தின் உதவியை நாடி ஒப்பந்தம் புரிய முன்வந்தனர். சுயமரியாதை இயக்கத்தின் மீது சர்க்கார் கண் வைத்திருந்த போதினும் சுயமரியாதைக் காரர்களின் பேச்சு எழுத்து சர்க்கார் சு-ம. காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க இடங்கொடுக்க வில்லை. ஆனால் சு-ம. இயக்கத் தோழர்களான சிங்காரவேலு, சி.நடராஜன் போன்றவர்கள் எவ்வளவோ கூறியும் எழுதியும் சு-ம. இயக்கப் பிரமுகர்களில் ஒருவரான ஸ்ரீமான் ஈ. வெ. இராமசாமி என்ன காரணத்தாலோ அடிக்கடி தம் பத்திரிகையாகிய குடி அரசில் சர்க்காரை அனாவசியமாய்த் திட்டி (வைது) எழுதிக் கொண்டு வந்தார். அதனால் அரசாங்கம் அவர் மீதும் குடிஅரசு பதிப் பாசிரியராகிய அவர் சகோதரி மீதும் நடவடிக்கை எடுத்தது. சு-ம. .இயக்கத்திற்கு சரியான நிர்வாக அமைப்பு இல்லாததால் அக்கேசை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்யவில்லை. இயக்கத் தலைவராகிய ஸ்ரீமான் R. K. சண்முகம் அவர்கள் சிறைக்கு சென்று எதிர்வழக்காடக் கூறியும் ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி மறுத்து தண்டனை பெற்று அப்பீலில் சிறை இருந்த காலத்தை தண்டனையாக்கி விடுதலை செய்யப்பட்டார். குடி அரசு பத்திரிகை ஆசிரியர் பெயர் போடாது வெளியிட்டதற்கு ஸ்ரீமதி கண்ணம்மாளுக்கு 300 ரூபாய் அபராதமும், குடி அரசுப் பத்திரிகையில் தோழர் அ. இராகவன் கத்தோலிக்கர்களைத் தாக்கி எழுதியதற்காகவும், புரட்சிப் பத்திரிகையில் தோழர் ஜீவானந்தம் செவிட்டுச் சர்க்காரும் குருட்டு முதலாளிகளும் என்று எழுதியதற் காகவும் தோழர் தமீம் மதம் மதம் இலாம் மதம் என்று எழுதியதற்காகவும் ஜாமீன் 3 முறை கேட்கப்பட்டது. ஜாமீன் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜாமீன் எதற்கும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தார் - கண்டித்து பாதிரியும் பெண்களும் பாவமன்னிப்பும் பாதிரிகளின் பிரமச்சரிய லக்ஷணம், என்ற புத்தகத்தையும் பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டித்து எழுதியதாக குடி அரசுக் கலம்பகம், நான் நாதிகன் ஏன் என்ற புத்தகங்களையும் சர்க்கார் பறிமுதல் செய்தார்கள். நான் நாதிகன் - ஏன்? என்ற புதகம் வெளியிட்டதற்காக அச்சிட்டவ ரான ஸ்ரீமான் E. V. கிருஷ்ணசாமி அவர்களையும் மொழி பெயர்த்த தோழர் ஜீவானந்தம் அவர்களையும் சர்க்கார் கைதுசெய்து அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். இயக்கப் பிரமுகர்களில் ஒருவரான ஸ்ரீமான் E. V. ராமசாமி இவர்களையும் மன்னிப்பு எழுதிக்கொடுத்து விடுதலையடைச் செய்ததோடு, சமதர்மக் கொள்கைகளை இனிப்பிரசாரஞ் செய்வதில்லை என்று சு-ம. இயக்கத்தின் பேரால் சு-ம. இயக்கத்திலுள்ள எவர்களிடமும் கலவாது ஒரு பகிரங்க மன்னிப்பு வெளியிட்டார். அன்று முதல் இயக்கம் தளர்வுற்றது - ஏன் அடியுடன் வீழ்ச்சியுற்றது. அபிப்பிராய பேதம் புலப்பட்டது. தீவிர உணர்ச்சியுள்ள வாலிபர்கள் இயக்கத்தில் பங்குகொள்ள மறுத்தனர். ஈ. வெ. ராமசாமியும் அவரது சஹாக்கள் சிலரும் ஜடி கட்சிக்கு உழைப்பதே சு-ம. இயக்கத்தின் வக்ஷியம் என்று பஹிரங்கமாகக் கூறி ஜடி கட்சியின் கையாளாய்த் தொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டனர். தீவிர உணர்ச்சிகொண்ட சிலர் இன்று சுயமரியாதை சமதர்மக்கட்சி ஒன்று நிறுவி சமதர்மக் கொள்கைகளை நாடெங்கும் பரப்ப முனைந்து நின்றனர். இதனிடையே பொது ஜனங்களினிடையே, அரசாங்கம் சமதர்மப் பிரசாரம் செய்துவந்ததற்காக தன்னையும் தன் சகோதரியையும் தண்டித்ததோடு தன் பத்திரிகைக்கு பலமுறை ஜாமீன் கேட்டது என்றும் தன் புதகங்களை பறிமுதல் செய்துவிட்டது என்றும், தன் சகோதரரை நாடு கடத்தக்கூடிய கே போட்டதென்றும், எனவே, தான் சிறிது காலம் அப்பிரசாரத்தை நிறுத்தி வேறு வகையாய் சமதர்மப் பிரசாரம் செய்துவருவதாகவும் சிறிது காலம் இவ்வாறு இருந்துவிட்ட பின் சமதர்மப் பிரசாரஞ் செய்ய வந்துவிடுவதாயும், ஜடி கட்சியே உண்மையான நாதிகப் பொது உடமைக் கட்சி என்றும் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி புகன்று பொது ஜனங்களின் கண்களில் மண்ணைத்தூவி வருகிறார். (சமதர்ம இயக்கத்தை ஒழித்துவிட வேண்டுமென ஜடி கட்சிப்பிரமுகர்களான P. T. ராஜனும், பாத்ரோவும் கூறிவருவதை ஈ. வெ. ரா. உணரட்டும் ) அரசாங்கம் சமதர்மம் பேசியதற்கோ எழுதியதற்கோ இதுவரை இராமசாமியையோ அவரது சகோதரியையோ தண்டித்தோ ஜாமீன் கேட்டதோ அபராதம் விதித்ததோ கிடையாது. சமதர்மக் கொள்கையுடைய அவரது புத்தகம் ஒன்றுகூட இதுவரைப் பறிமுதல் செய்யப்படவில்லை. சமதர்மக் கொள்கை யுடைய புத்தகம் வெளியிட்டதற்காக அவரது அண்ணன் கிருஷ்ணசாமி நாயக்கர் மீது கே தொடரப்படவில்லையென்று மிகத்தைரியமாய்க் கூறுகிறேன். சமதர்மக் கொள்கைக்காக அவர்மீது இதுவரை சர்க்கார் நடவடிக்கை எடுத்தது என்று ராமசாமி ரூபிப்பாரா? ரூபிக்கும்படி அவரை நான் பஹிரங்கமாக சேலஞ்சு செய்கிறேன். எனது சேலஞ்சுக்குப் பதிலளிக்க முன் வருவாரா? வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணங்கள் (1) சுயமரியாதை இயக்கத்தை ரிஜிடர் செய்து தலைமைச் சங்கம், ஜில்லாச் சங்கம், தாலுகாச் சங்கம், கிராமச் சங்கமாகப் பிரித்து ஏராளமான அங்கத்தினர்கள் சேர்த்தும், நன்கொடைகள் சேர்த்தும் கட்டு திட்டத்துடனும், செல்வச் செழிப்புடனும் ஆக்கத் தவறியது. (2) போதியஅளவு தொண்டர்கள் ஏற்படுத்தி அவர்களுக்கு ஊண் உடை அளித்து தக்க பயிற்சி அளித்து பிரசாரஞ் செய்யத் தவறி விட்டது. (3) தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாள பாஷைகளில் தினசரி, வார பத்திரிகைகள் ஆரம்பிக்கத் தவறிவிட்டது. (4) இயக்க வளர்ச்சிக்கென்று ஆரம்பிக்கப்பட்ட பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட்டை வளர்க்காது அதை ஒழித்து அதனால் ஊதியம் பெற முயல்வது. (5) இயக்கக் கொள்கைகளை தெளிவுபடுத்தாமல் பொது உடமை, நாதிகம், மதமறுப்பு, ஜாதி மறுப்பு, நிர்வாணம் முதலிய எல்லாவற்றையும் கலந்து வழ வழா, கொழ கொழா கொட்டைப் பாக்கு மாதிரி பொது ஜனங்களை குழப்பிவருவது. (6) மதத்தை மறுத்தல் - மதத்தை (இலாத்தை) ஆதரித்தல்; ஜாதி மறுத்தல் - ஜாதியைச் சட்ட பூர்வமாய் (வகுப்புவாரிப் பிரதி நிதித்வ மூலம்) நிலை நிறுத்தல்; புரோகிதத்தை மறுத்தல் - புரோகிதத்தை ஆதரித்தல்; (இயக்கத்தலைவர் ஸர். சண்முகம் அவர்கள் புரோகிதர்களை வைத்து வைதீக முறைப்படி சடங்குகள் செய்து திருமணம் நடத்துதல்) பொது உடமையை ஆதரித்தல் - முதலாளித்துவத்தை போற்றல் (முதலாளித்துவக் கட்சியாகிய ஜடி கட்சியை ஆதரித்தல்) போன்ற பல முன்பின் முரணான செயல்கள். (7) காந்தியைப் பஹிஷ்கரிக்க வேண்டுமென்று ஈரோட்டிலே சு-ம மகா நாட்டிலே தீர்மானம் செய்தல், குடி அரசின் அப்போதைய பிரசுரக்கர்த்தா திரு கண்ணம்மாள் அவர்களும் தற்போதைய ஆசிரியர் திரு ஈ. வெ. கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களும் காந்தியை வரவேற்கவேண்டுமென்று ஈரோட்டு முனிசிபால்டியில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தல். பஹிகார ஊர்வலத்தில் ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் ஆக பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை தெருவெல்லாம் கருப்புக்கொடிகளுடன் கதரித்திரிய குடி அரசு ஆசிரியர் மனைவியுடன் வீட்டில் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது. (8) குடி அரசு ஆபீசிலே மாதம் இரண்டு ரூபாய்க்கு காலை 6 மணி முதல் இரவு 12 மணிவரை வேலைசெய்யும் ஊழியர்கூட கோர்ட்டில் தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை என்று வாக்குமூலம் கொடுக்கும் பொழுது சாதி சமயங்களை எல்லாம் நிர்மூலம் செய்துவிட்டு, சென்னை மாகாண நாதிக சங்க உபத் தலைவராகிய குடி அரசு ஆசிரியர் தனது ஜாதி பலிஜா நாயக்கர் என்றும் இந்து மதம் என்றும் வாக்குமூலம் கொடுத்தது. (9) இராஜேந்திர பிரசாத் வரும்பொழுது சு-ம. காரர்களே! எங்கும் பஹிகரியுங்கள் என்று பத்திரிகையில் எழுதிவிட்டு குடி அரசு ஆசிரியர் மன்மதசிந்தாமணி லேகியஞ் செய்துகொண் டிருப்பது மறைமுக ஆசிரியர் கீழ்நாட்டு லெனின் பிரயாணியைத் தின்று தொந்தி வயிற்றை தடவிக் கொண்டிருப்பது, ஒரு சில சு-ம. தோழர்கள் பஹிகரித்து அடியும் மிதியும் பட்டு அவதைப் படுவது. தலைவர்களென்போர்கள் அடிபட்டு அவதையுறு பவர்களை ஏறிட்டும் பாராமல் இருந்துவந்தது. (10) தனது வாழ்க்கையை நமது இயக்கத்திற்கு அர்ப்பணம் செய்த தோழர் ஓர் அர்ப்ப விஷயத்தில் தனது கூற்றிற்கு மாறுபட்ட விஷயத்தை எழுதினாலும் தம் பத்திரிகையில் பிரசுரிக்க மறுத்துவிட்டு வெங்காயத்தின் விசேஷமும் மூர்த்தின் படத்தையுடைய விளம்பரமும் குடிஅரசில் பக்கம் பக்கமாகப் பிரசுரிப்பது. (11) அனாவசியமாக பிரிட்டிஷ் சர்க்காரை, அயோக்கிய சர்க்கார் கொள்ளைக்கார ஆட்சி என்றும் எவர் கூறினாலும் கேளாது திட்டுவது, வக்கீல் வைத்து வழக்காட மறுப்பது இறுதியாக சமதர்மப் பிரசாரஞ் செய்வதற்காக சர்க்கார் என்னை சிறையிட்டு விட்டது. எனவே சமதர்மம் பேசாதீர் என்று ஜனங்களை மிரட்டுவது. (12) ஜடி கட்சி வீரராகிய கத்தோலிக் கிறிதவ சட்ட மந்திரியார் ஆட்சியிலே பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடுகள் பறிமுதலாவது அதைக் கண்டிக்கவோ, எதிர்த்துக் கே போடவோ முயற்சியாதிருப்பது குடி அரசு பதிப்பக வெளியீடுகள் 4 பறிமுதல் செய்ததாக தம் பத்திரிகைக்கு (குடி அரசுக்கு) விளம்பரஞ் செய்து கொள்வது, வெளியில் சமதர்மப் பிரசாரஞ் செய்ததற்கு எங்கள் புதகங்களை அரசாங்கத்தார் பறிமுதல் செய்து விட்டார்கள் என்றுகூறிக் கொள்வது. (13) சுயமரியாதை இயக்கத் தோழர்களையெல்லாம் அழைத்து கூட்டம் போட்டு சமதர்மக்கட்சி ஏற்படுத்துவது. பின்னர் ஈ. வெ. ரா. எவரிடமும் கேளாது சமதர்மக் கொள்கையை நிறுத்திவிடுவது. எவரிடமும் கேளாது தன் இஷ்டம் போல் ஜடி கட்சியை ஆதரித்தது. (14) 4,5 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண மகாநாட்டைக் கூட்ட முடியாமல் போனது. தென்னிந்திய நல உரிமைச்சங்கம், சுயமரியாதைக்கட்சி, சு-ம. சமதர்மக்கட்சி, முதலியவைகள் போதா தென்று இப்பொழுது பார்ப்பனர் அல்லாதார் கட்சி ஒன்று ஏற் படுத்தியது. (15) இயக்கத்திற்கு பெருந்தொண்டு புரிந்த தோழர்களான எ. குருசாமி, குஞ்சிதம், ஐயாமுத்து, தண்டபாணி, கண்ணப்பர், இராவணதா, S. ராமநாதன், ப. ஜீவானந்தம், நீலாவதி, போன்றவர் களிடம் ஈ. வெ. ரா. பொறுப்பற்றதனமாய் நடந்து கொண்டது. (16) சுயமரியாதை மகா நாட்டிலே ஆலயப்பிரவேசம், தெருப்பிரவேசம் முதலியவைகளுக்காக சத்யாக்ரகம் செய்ய வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டு அதை ஆதரித்துவிட்டு பின் எந்த தலைவரும் முன்வராதது கண்டு பேடித்தனமாய் சத்தியாக் கிரகம் சண்டித்தனம் என்று கூறியது. (17) எந்த ஒரு சிறு காரியத்தையும் செய்யாது; தியாகம் என்பது முட்டாள்தனம், பொதுநலம் என்பது புரட்டு என்று கூறி சு-ம. இயக்கத் தோழர்களுக்கு அவ்வியக்கத்தின் மீது பற்றில்லாது செய்துவிட்டதோடு பார்ப்பனர்கள் கோழை என்று அடிக்கடி கூறும் சு-ம. காரர்கள் பார்ப்பனப் பெண்களெல்லாம் தைரியமாய் சிறை செல்லும்பொழுது தாங்கள் (சு-ம. காரர்களெல்லாம்) சர்க்கார் புடுச்சிக்கிடுவான், புடுச்சிக்கிடுவான் என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு அப்படிப் பேசிடாதே, இப்படிப் பேசிடாதே என்று மக்களைக் கோழைகளாக்கியது. (18) நான் நாதிகன் - ஏன்? என்ற புதகப் பிரசுரத்தின் மீது எழுந்த கேஸில் எவரிடமும் கேளாது சு-ம. இயக்கத்தின் பேரால் பகிரங்க மன்னிப்புக் கொடுத்தது. (19) ராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரபல காங்கிர வாதிகள் வலியவந்து சு-ம. இயக்கத்தோடு சமாதானஞ்செய்து, ஒத்து நாட்டில் வேலைசெய்ய முன்வந்தும் அதை லச்சியம் செய்யாது வகுப்புவாத லக்ஷியமுடைய, வீழ்ச்சியடைந்த ஜடி கட்சியோடு யாரிடமும் ஆலோசியாது இரண்டறக் கலந்தது. இன்னோரன்ன பல காரணங்களினால் உன்னத ஒப்பற்ற நம் புனித சு-ம. இயக்கம் விஞ்ஞான ரீதியாய் வளர்க்கப்படாது தான் தோன்றித் தலைவர்களின் தகாத செயலினால் வீழ்ச்சியடைந்து விட்டது. அது இருந்த இடம் புல் முளைத்துப்போய் விட்டது. பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரச மரத்தையும் பிடித்த கதைபோல் ஜடி கட்சிக்கு எலெக்ஷனில் துணை செய்யப்போய் ஜடி கட்சிக்கு வந்த எலெக்ஷன் நோய் பலவித காரணத்தால் பலவீனமுற்ற சு-ம. இயக்கத்தையும் பிடித்து இறுதியில் இரண்டு இயக்கமும் வீழ்ச்சியுற்றது. வீழ்ச்சியுற்ற நம் இயக்கத்திற்கு இனி புத்துயிர் அளித்தல் வேண்டும். இயக்கம் வீழ்ச்சியடைந்து விட்டாலும் சு-ம. கொள்கைகள் பலருள்ளத்திலும் இன்னும் கொழுந்து விட்டெரிந்து கொண்டே யிருக்கிறது. சு-ம. கொள்கைகள் மங்கிப் போகவிடாது, நாம் இதுவரை ஆற்றிய தொண்டுகள் வீண்போககூடாது ஒழுங்கான முறையில் சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகளுடனும் விஞ்ஞான ரீதியாய் சு-ம. சமதர்ம இயக்கம் நிறுவப்பெற்றிருக்கிறது. சு-ம. சமதர்மக்கட்சி எவரையும் குறை சொல்ல வந்ததன்று. எந்த இயக்கத்தையும் தாக்க வந்ததன்று. ஆனால் முதலாளித்துவ ஆட்சி முறையைத் தகர்த்து இந்நாட்டில் சமதர்ம ஆட்சியை நிறுவி மக்கள் யாவருக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட வீடும் அறிவு வளரக்கல்வியும் கொடுக்க வல்ல நல்லியக்கம். சு-ம. சமதர்மக்கட்சி காங்கிர கட்சியையோ ஜடி கட்சியையோ தனக்குச் சாதகமாய் உபயோகித்துக் கொள்ளப் பின்தாங்காது. ஆனால் எந்த இயக்கத்திற்கும் தான் கையாளாய் வேலை செய்ய எப்பொழுதும் இணங்காது. சர்வதேச இயக்கமான - மனிதாபிமான இயக்கமான - பொது உடமை இயக்கமான சுயமரியாதைச் சம தர்மக்கட்சி தன் தாய்க்கட்சியாகிய சு-ம. இயக்கம்போல், அற்ப, சொற்ப இயக்கமாகிய காங்கிர ஜடி போன்ற கட்சிகளின் கையாளாகவும், கூலியாளாகவுமிருப்பதும் பேடித்தனமும் மானங் கெட்ட செயலும் ஆனதென்று தெள்ளத் தெரிய உணர்ந்து எழுந்த கட்சி. சு-ம. காரனுக்கு சுயஅறிவு இல்லை. நிரந்தரமான கொள்கை கிடையாது. இராமசாமிப் பெரியார் எது கூறினாலும் ஆமாம் சாமி என்று தலையை ஆட்டுவர். சர்க்காரைக் கண்டால் சரணம் சரணம் என்பர். போலிகாரனை கண்டால் தொடை நடுங்குவர். தியாகம் அவனுக்கு வேப்பங்காய். அவன் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். அதிகப்பிரசங்கித் தனத்தையன்றி ஆக்க வேலையை அறியான் என்றெல்லாம் பேசப்படுவதை அறிந்து தன் மீது அப்பழிசாற்ற இடங்கொடுக்கவிடாது மனித சமூகத் தொண்டு செய்ய சு-ம. சமதர்மக்கட்சி முன்வந்துள்ளது. தோழர்களே வருகிற சென்னை சட்டசபை எலெக்ஷன் வரை காத்திருந்து சு-ம. இயக்கத்திற்கு எல்லா இறுதிச்சடங்கும் முடித்து விட்டு வருகிறேன் என்றிராது இன்றே சு-ம. சமதர்மக்கட்சியில் அங்கத்தினராகி சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமாகிய சமதர்ம கொள்கைகள் வெற்றிபெற முன்வந்து உழைப்பீர்களாக. (சுயமரியாதை இயக்கம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று கூறுவது பொய் என்று மாஜி சு-ம. இயக்கப்பிரமுகர்கள் கூறுவர். சு-ம. இயக்கம் எங்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறது என்று அறிய விரும்பி அதை எங்கும் தேடினேன். ஓரிடமும் காணமுடியவில்லை. குடி அரசைப் புரட்டிப் புரட்டி பார்த்து வருகிறேன் சுயமரியாதை இயக்கம் - இல்லை - அவ்வார்த்தையே அதில் காணவில்லை. இராமசாமியார் பிரசங்கம் நடக்குஞ் சிலவிடங்களுக்கும் சென்று வருகின்றேன். சுயமரியாதை என்ற தொனியே கேட்கவில்லை. எங்கும் ஜடி பார்ப்பனரல்லாதார் கட்சி என்ற சப்தமே கேட்கிறது. சு-ம. சங்கங்கள் எங்காவது இருக்கிறதா என்று பார்த்தேன். சு-ம. சங்கப் போர்டுகளில் எல்லாம் பார்ப்பனரல் லாதார் சங்கம் என்று பொறிக்கப் பட்டிருக்கிறது. சுயமரியாதை சமதர்மக் கட்சி கூட்டத்திலும் சுயமரியாதை என்பதற்கு சு-ம. என்ற பதமே தான் உச்சரிக்கப்பட்டு வருகிறது. சு-ம. இயக்கம் இவ்வாறு மறைந்து போனதற்கு யார் காரணதர் என்பவைகளையும் காரணம் இன்னவைகள் என்பவைகளையும் சு-ம. கொள்கைகள் வரை இனி நாம் செய்யவேண்டிய கடமைகளையும் கட்டுரையாளர் மிகத்தெளிவாய் உள்ளதை உள்ளபடி - ஏன் - சிறிது கடுமையாய்க் கூட இக்கட்டுரையில் சிலரைக் கடுமையாய் கண்டித்தும் - தாக்கியும் எழுதியுள்ளார். வாசகர்கள் சிறிது ஆரஅமர ஆலோசித்துப்பார்த்து அவன் கூற்றின் உண்மையை உணர்ந்து நடக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். ப-ர்)  ஈ. வெ. ரா. வின் முரணான வாதங்கள் மதம் ஏழை மக்களை - பாமரமக்களை வஞ்சிக்க - மோசஞ் செய்ய ஏற்பட்டது. (ஈ. வெ. ரா. ) மதம் என்பதில் இலாமிய - மதம் மட்டும் சேராது என்பது ஈ. வெ. ரா. வின் தற்போதைய வியாக்கியானம் போலும் இன்றேல், ஏழை தாழ்த்தப்பட்ட சோதர்களுக்கு எவ்வாறு இலாமிய மதத்தைச் சிபாரி செய்வார். * * * நீங்கள் கீழ் ஜாதி என்பதும் தொடக் கூடாதவர்கள் என்பதும் சமத்வம் அளிக்காமல் தனியாய் வைக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் ஆகிய காரியங்களுக்கு வெறும் மதமோ பழக்க வழக்கமோ சாதிரமோ கடவுள் செயலோ என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும். உங்களுடைய கீழ் ஜாதித் தன்மைக்கும் மேற்கண்ட காரியங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. (ஈ. வெ. ரா. ) இந்து மதமே தீண்டாமைக்கு தாயகம் என்றும் இலாமிய மதத்தில் தீண்டத்தகாதவர்கள் புகுந்தால் அந்த க்ஷணமே தீண்டாமை மறைந்துவிடும் என்றும் கூறும் ஈ. வெ. ரா. வின் கூற்று வெறும் பித்தலாட்டமா அன்றிப் பைத்தியக்காரத்தனமா? என்று வாசகர்களை ஆலோசிக்கும்படி விட்டுவிடுகிறேன். * * * சிலர் எங்கள் மதத்தில் தீண்டாமை பார்க்காமை முதலியவை இல்லை என்று சொல்லக் கூடும். தீண்டாமை பார்க்காமை என்பது ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதே எனது அபிப்பிராயம் தீண்டாமை என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதென்னவென்றால் ஒருவன் பாடுபடவேண்டும் ஒருவன் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது (ஈ.வெ. ரா. ) முதலாளித்துவ இராமசாமியாய் மாறியபின் தீண்டாமை இந்து மதத்தையே அடிப்படையாகக் கொண்டது. மத மாற்றமே தீண்டாமை ஒழிக்கும் மருந்து என்று கூறிவரும் முரணான வாதத்தை அறிவியல் வாதிகள் ஆராய்ந்து பார்ப்பார்களாக. * * * பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும். ஒரு சமூகத்திற்கு பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதல்லவா? இந்த இரண்டையும் விட்டுவிட்டுச் செய்யும் முற்போக்கிற்காக நமது சு ம. இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக - வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும் பார்ப்பன சூழ்ச்சியையும் பேசிக்காலங்கழிப்பது மாத்திரமே சு-ம. இயக்கத்தின் வேலையானால் சு-ம. இயக்கம் அழிந்து போவதே மேலான காரியம். (ஈ. வெ. ரா. ) பொருளாதார வேற்றுமையை ஒழிக்கப் பாடுபடாமல் ஹாயமாக பார்ப்பன சூழ்ச்சியைப் பற்றி பேசி சு-ம. இயக்கத்தை ஒழித்த ஈ. வெ. ரா. வின் சொல்லும் செயலும் ஒத்திருப்பதை யாரே மறுக்க வல்லார்? * * * பணக்கார ஆதிக்கத்தை நாம் சரியான படி கண்டிக்காததால் பணக்கார ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுது, அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு உதவி புரிகிறது. (ஈ. வெ. ரா. ) பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க பணக்கார -ஜடி ஜமீன்தார்கள் ஆட்சியை தாபிக்க முயற்சி செய்யும் ஈ. வெ. ரா. வின் புத்தியே புத்தி. * * * இப்படிக்கருதுவதால் (ஏழைகளுக்குக் காப்பு அளிக்கக்கூடிய சமதர்ம ஆட்சிவேண்டும் என்று கோறுவதால்) ஆபத்துவந்துவிடும் என்று கருதுகிறவர்கள் எங்களையே இந்த ஆபத்துக்குள்ளாக்கி விட்டு மரியாதையாக விலகித் தப்பித்துக்கொள்ளட்டும் அதைப் பற்றி எங்களுக்கு பயமில்லை. ஆனால் எங்களுக்கு முட்டுக்கட்டை போடவேண்டாம். உள்ளே இருந்து துரோகம் செய்ய வேண்டாம். (ஈ. வெ. ரா. ) இதைத்தான் சு-ம. சமதர்மிகளும் ஈ. வெ. ரா. வுக்குக் கூறுகிறார்கள் சமதர்மம் பேசினால் ஆபத்து வந்துவிடும் என்று கூறும் ஈ. வெ. ரா. சு-ம. இயக்கத்தைவிட்டு விலகித் தப்பித்துக் கொள்ளட்டும். சு-ம. தலைவர் என்றுகூறி சு-ம. இயக்கத்திற்கு துரோகம் செய்யவேண்டாம் என்று நாமும் கூறுகிறோம்.. * * * இந்து மதத்தை ஒழித்து இலாம், கிறிதுமதத்தைப் பரப்ப புரட்சி (சு-ம. இயக்கத்தின் தலைமைப்பத்திரிகை) தோன்றியதல்ல (ஈ. வெ. ரா. ) இந்து மதத்தை ஒழித்து இலாத்தை பரப்புவதற்கு வந்ததல்ல என்று புரட்சியை (நமது பத்திரிகையை) குறிப்பிட்டிருந்தோமே யொழிய குடிஅரசை குறிப்பிடவில்லை என்பது தற்போதைய ஈ. வெ. ரா. வின் கூற்றுப்போலும். * * * ஏழைமக்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு காங்கிர என்னும் பெயரால் ஒரு கூட்டம் (பார்ப்பனர்கள்) மக்களை ஏய்ப்பதை ஒழிக்க வேண்டியதையும், பார்ப்பனரல்லாதார்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பார்ப்பனரல்லாதார் கட்சி என்னும் பெயரால் ஒரு கூட்டம் (பணக்காரர்கள், முதலாளிகள், ஜமீன் தார்கள் ஆகிய ஈ. வெ. ராய்ட்கள் ப-ர்) மக்களை ஏய்ப்பதையும் ஒழிக்கவேண்டியது நமக்கு எவ்வளவு அவசியமோ அதுபோலவே தொழிலாளிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு தொழிலாளர் சங்கம், டிரேட் யூனியன் என்னும் பெயரால் ஒரு கூட்டம் (சிவராவ், கிரி முதலியவர்கள்) மக்களை ஏய்ப்பதையும் ஒழிக்கவேண்டியதும் இப்போது மிகவும் அவசியமாகும். (ஈ. வெ. ரா. ) இப்பொன் மொழிகளை கடைப்பிடித்து வேலை செய்ய சு-ம. சமதர்மிகள் முன்வந்துள்ளனர். மூர்த்திகோஷ்டிகளும், ஈ. வெ. ரா. ய்ட்களும், ராவ் கூட்டங்களும் ஒழிக்கப்படவேண்டியவர்கள் என்பது சமதர்ம ஈ. வெ. ரா. கூறிய பொன்மொழிகள் என்றறிந்து நாம் களிப்படைகின்றோம். * * * மாகாண பரிபாலன சபைகளை எடுத்துக்கொள்ளுங்கள் அவைகளில் ஜமீன்பேரால் மக்கள் இரத்தத்தை உறிஞ்சும் கொள்ளைக்காரர்கள், லேவாதேவியின் பேரால் மக்கள் உதிரத்தையும் எலும்பிலுள்ள ஊன்களையும் உறிஞ்சும் கொள்ளைக் காரர்கள், மிராசுதார்கள் பெயரால் விவசாயக் கூலிகளின் உதிரத்தையும், எலும்பையும், ஊனையும் உறிஞ்சும் மனிதத் தன்மையைக் கொள்ளை கொண்ட துஷ்ட மிருகங்களுக்கு ஒப்பான வர்கள், வன்னெஞ்ச வியாபாரிகள், படித்தவர்கள் என்னும் ஈவிரக்க மற்ற சோம்பேறிக் கூட்டங்கள் ஆகியவைகளே நிறையப் பெற்றிருக்கின்றன. இவர்களது எண்ணமென்ன? என்பவைகளை நான்விவரிக்க வேண்டுமா? பிரத்தி யட்சத்தில் நீங்கள் அறியாதது எதை நான் சொல்லவேண்டும்? (ஈ. வெ. ரா. ) மேற்கண்ட அரிய நற்சாட்சி பத்திரம் ஜடி கட்சிக்கு ஈ. வெ. ரா. அளித்ததாகும். இவ்வாறு கூறிய ஈ. வெ. ரா. திரும்ப அக்கொள்ளைக்கார பணக்கார ஜடி ஆட்சியை நிலைநாட்ட பாடுபடுவது பைத்தியக்காரத்தனமல்ல என்று எம்மால் - ஏன் - யாரால் சொல்லாதிருக்கக்கூடும்? * * * கிதுவாங்குவது (ஜமீன்தார்கள்) லஞ்சம் வாங்குவது, லேவாதேவி கொள்ளையடிப்பது, முதலாளிகள் அட்டைகள் இம்மூன்று கூட்டமும் மனித சமூகப் புல்லுருவிகள். இம்மூன்று கூட்டமும் நாட்டில் இருக்குமானால் எந்த ஜனநாயக ஆட்சியும் நிலைக்காது . . . . . . . . இவர்கள் பதவிகளை அடைந்ததுக்குக் காரணம் அவர்கள் பணக்கொழுப்பு விசேஷமேயொழிய புத்திவிசேஷமல்ல .. . . . . . . . இந்தக் கூட்டங்கள் தான் மனிதசமூக நீதிக்கும் சமத்துவத் திற்கும் சகோதரத்துவ உரிமைக்கும் கரையான் போன்றவர்கள். (ஈ. வெ. ரா. ) மனித சமூகத்திற்கு விரோதிகள் கரையான்யென்றால் கரையான் போன்ற ஜடி கட்சியைக்காப்பாற்ற இரவுபகல் இடைவிடாது பாடுபடுபவர்களை என்ன பெயரால் அழைப்பது என்று ஈ. வெ. ரா. விடம் அன்புடன் வினவுகின்றோம். * * * நமது இயக்கமும் (சு -ம. இயக்கமும்) பல பார்ப்பனரல்லாதார் தாபனங்களும் மஹாநாடுகளும் வாலிப சங்கங்களும் புதிய முறையில் தோற்றுவித்தும் கூட்டுவித்தும் பார்ப்பனக் கொடுமை களையும் மோசங்களையும் ஒருவாறு பாமரமக்களுக்கு விளக்கு வதில் முனைந்து நின்று வேலை செய்ததின்பயனாய் ஒரு அளவிற்கு பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கிற சந்தோஷத்தை அடைவதற் குள் அதற்குப்பதிலாக அதுபோன்ற கொடுமையும் மோசமமுமான ஜமீன்தார் ஆதிக்கம் தலைதூக்கி தாண்டவமாட ஏற்பட்டுவிட்டது. முன்னிருந்த கெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல் ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்துவருகின்றன. (ஈ. வெ. ரா. ) தற்போதைய ஈ. வெ. ரா. வின் தொண்டு - அதாவது பொப்புலி பாண்டியன் - ராஜன் ஆட்சியை தாபிக்கச் செய்யும் தொண்டின் உட்பொருளை ஈ. வெ. ரா. மறந்து விட்டாலும் நாம் மறந்துவிட முடியாதன்றோ? * * * பார்ப்பனர்களைப்போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுவர்கள். பார்ப்பனர்களைப்போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சிமுறைக்கு தூண்போலவும் இருந்துவருகின்றவர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்திற்கு வேண்டாதவர்களுக்கும் உலக மக்கள் கஷ்டங்களுக் கெல்லாம் காரணமாய் இருப்பவர்களுமாவார்கள். (ஈ. வெ. ரா.) இன்று ஜமீன்தார்கள் உலகத்திற்கு வேண்டியவர்களாகவும், உலகமக்கள் கஷ்டங்களைப் போக்குகிறவர்களாகவும் ஈ. வெ. ரா. வின் கண்ணிற்கு தோன்றும் ரகசியம் என்ன? * * * பார்ப்பனீயத்தை ஒழிக்கவும் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்தவும் இன்னமும் எவ்வளவுதான் பாடுபட்டாலும் இன்றைய நிலையில் இருந்த பலன்தான் ஏற்படுமேயொழிய வேறு ஒன்றையும் நாம் கனவு கூட காணமுடியாத நிலைமையில்தான் இருக்கின் றோம். (ஈ. வெ. ரா. ) ஈ. வெ. ரா. இப்பொழுது செய்துவரும் பிரசாரம் கனவா - நனவா என்பது நமக்குப்புரியவில்லை. * * * சமதர்மத்தையும் பொதுஉடமைக் கொள்கையையும் விட பார்ப்பனீய ஒழிப்பும் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பும் பிரதானம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றோம். (ஈ. வெ. ரா. ) இன்று பொதுஉடமைக் கொள்கையைவிட பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு பிரதானம் என்று ஒப்புக்கொண்டதற்கு ஈ. வெ. ரா. மகிழுகிறாரா வருந்துகிறாரா என்று அறிய ஆசைப்படுகின்றோம். * * * ஜடி கொள்கையைப் பற்றி யாருக்கும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை, ஜடி கொள்கை உலகமே ஒப்புக்கொண்ட கொள்கை. உண்மையான சமதர்மக் கொள்கை. (ஈ. வெ. ரா.) உலகம் என்பது தமது குடி அரசு ஆபீ என்பது ஈ. வெ. ரா. வின் எண்ணம்போலும். சமதர்மக்கொள்கையைப் பரவவிடாமல் தடுத்து அக்கொள்கையை ஒழிக்க மந்திரி ராஜனும், பாத்ரோவும் முயற்சிப்பது ஜடி கட்சியை ஒழிக்கும் பிரசாரம் அல்லவா என்று சமதர்ம பாஷ்யக்காரராகிய ஈ. வெ. ரா. வை வினவுகின்றோம். * * * அரசியலின் மூலம் பெருமை பெற்று பணம், கீர்த்தி, பதவி முதலியன சம்பாதிக்கக் கருதும் ஒரு கூட்டம் மனித சமூகத்திற்கு க்ஷயரோகம் போன்றவர்கள். (ஈ. வெ. ரா. ) மனித சமூகத்திற்கு க்ஷயரோகம் போன்ற குழுவில் சேர்ந்த ஈ. வெ. ரா. விற்கு இன்னும் அந்தத் தொத்துநோய் பீடிக்காமலா இருக்கிறது?  பெண் உரிமை தொடர்பான கட்டுரைகள் இந்தியாவும் பெண்மக்களும் நீலாவதி தோழர் நீலாவதி அம்மையார் திருச்சிப் புரோகித மறுப்புச் சங்க அமைச்சர். சமதர்ம இயக்கத்தலைவர். சுயமரியாதையை இயக்கப் பிரமுகர்களில் ஒருவர். தமிழ்நாட்டிலுள்ள வாக்கு வன்மை படைத்த பிரசங்கிகளில் ஒருவர். இந்திய நாட்டில் பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொரு பிறவியும் அடையும் துன்பம் அளவிடமுடியாது. பொதுவாக எல்லா நாட்டி லும், ஒரு காலத்தில் பெண்ணடிமைத்தனம் மிகுந்திருந்த தென் றாலும், காலப்போக்கையறிந்து, அவ்வந்தநாடுகள் பெண் ணுலகத்தில் பெரும்மாறுதல் புரிந்து, பேரானந்த மெய்தி வரு கின்றது. சில்லாண்டுகளுக்கு முன்னே சீனதேசத்தில் பெண் குழந்தை பிறந்த உடனே அதன் கால்களை இரும்பு பூட் கொண்டு இறுக்கிப்பிணித்து விடுவார்களாம். கால்கள் நன்றாக வளர்ச்சியுற் றிருந்தால், அப்பெண்கள் வெளியில் ஓடி விடுவார்களென்று கருதியே அவ்வாறு செய்யப்பட்டு வந்தது. அப்பேர்க்கொத்த - நாட்டிலும், எழுத்திலும், புரட்டிலும், மட்டுமில்லாது, அங்க அவயவத்திலேயே பெண் இனத்தை சித்திரவதை செய்துவந்த சீனதேசம் இன்றுதான் தேசப் பெண்மக்களைப் போலீ படைக்கு ஆளாக்கி, ரசகியப் போலீஸு க்கும் தயாராக்கி வருகின்ற தென்றால், பெண் சமூகத்தின் விஷயத்தில், அத்தேசம் போய்க்கொண்டிருக்கும் ஒரு வேகமான மனமாற்றம் விளங்காமற்போகாது. இவ்வாறே ஒவ்வொரு தேசங்களும், உண்மையை உணர்ந்து முன்னுக்கு வரும் மார்க்கத்தில் இறங்கி வேலைசெய்து வருகின்றது. ஆனால், நமது இந்தியாமட்டில் அந்நிலைவர எந்நாள் ஆகுமோவென்று தான் எண்ணவேண்டியிருக்கிறது. சில நாடுகளில், சில காலத்திற்கு முன், பெண் குழந்தை பிறந்த உடன் கொன்றுவிடுவார்களாம். ஆனால் அக்குழந்தையை ஈன்ற தாயாரான பெண்மட்டும் எவ்வாறு உயிர்வாழ முடிந்ததோ தெரியவில்லை. ஒருக்கால் இருக்கும்பெரிய பெண்கள் மட்டும் இருக்கட்டும். இனிமேல் அந்நாற்றமே வேண்டாமென்ற எண்ணத்தோடு அம்முறையைக் கைக்கொண் டிருக்கலாம் என்றுதான் ஏற்படுகின்றது. எடுத்த விஷயம் விட்டு இவ்விருத்தாந்தத்தை இங்கேன் எடுத்துக்காட்டுகின்றேனென்றால் கொடுமை நிறைந்த நாட்டில் பெண் பிறவியெடுத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்திற்கே ஆளாகி, துயரத்திலே மடிவதைவிட, பிறந்தது பெண்ணென்று தெரிந்த உடனே, கொன்று குழியில் போட்டு விடுவது மகா உத்தமமான - சித்திரவதை அனுபவிக்க வழியில்லாத சிறந்த செயலாகும். என்பதை எடுத்துக்காட்டவே யாகும். எப்படி மக்கள் சமூக விடுதலைக்கு முட்டுக்கட்டையாக, மதமும், கடவுளும், ஆணிவேராக அமைந்திருக்கின்றதோ, எப்படி அவ்வாணிவேர் தகர்க்கப்படாதவரையில், மக்கள் சமுதாயம் முன்னேற்ற மடைய மார்க்கமில்லையோ, அதுபோலவே, இன்று பெண்ணடிமைத்தனத்திற்கு முக்கிய முதல் காரணம் பிறவிப்பழியும், அப்பழியைப் பெண்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வதும் ஆகும். எனவே, பெண்ணடிமைத்தனத்திற்கு மூலகாரணமாயுள்ள பெண்கள் பாவ ஜென்மங்கள் என்ற பழியும், பெண்களுக்கு நாம் பாவ ஜென்மங்கள், நமக்கு யாதொரு வித உரிமையும் கிடையாது என்ற மனமும், மாற்றமடைந்தாலொழிய பெண் சமூகம் முன்னேற்றமடைய மார்க்கமில்லை. குழந்தை உண்டாகவேண்டு மென்று ஒருபக்கம் பிராத்தனை செய்வதைவிட அது ஆண் குழந்தையாக இருக்கவேண்டுமென்ற பிராத்தனைதான் பெண்க ளிடத்தில் மிகுதியாகக் காணலாம். பெறற்கரிய பேறாகிய இம்மானிட சமுதாயத்தைத்தவிர மற்ற ஜீவராசிகளிடத்தில் இத்தகைய அநீதியான வேற்றுமை அணுவளவும் கிடையாதென்பது உறுதி. பெண் சமூகத்தை ஆண்மக்கள் சட்டங்களாலும் சாதிரங்களாலும், கொடுமைப் படுத்தி வருவதைப் பின்னால் வைத்துக்கொண்டு, பெண் குழந்தை களை, பெண்ணினமான தாய்மார்களே, பழக்கவழக்கங்களால் படுத்தும் கொடுமையை சிறிது சுட்டிக்காட்ட ஆசைப்படு கின்றேன். ஆண்கள் தற்காலத்தில், ஐயாயிரம், ஐம்பதினாயிரம் செலவழித்துப் பட்டங்கள் பெறப் பாடபடுகின்றார்கள். ஆனால் பெண் மக்களுக்கு அத்தகைய பாடு ஒன்றும் தேவையில்லாமல் வரும் பட்டங்கள் பூமியில் பிறந்த நிமிடமே ஆரம்பமாகின்றது. பொட்டைச்சிறுக்கி, பொட்டைக் கழுதை என்ன அழகு எத்தகைய பட்டங்கள், எவ்வளவு பணம் செலவழித் தாலும், இவ்வளவு அருமையான பட்டங்கள் பெற முடியுமா? வென்பதை வாசகர்களே ஆராய்ந்து கொள்ளட்டும். மனிதப் பிறவியில் அமைந்துள்ள அவயவங்களிலே இரு கண்களே இன்றியமையாததா கின்றது. அப்பேர்க்கொத்த அவயவத்தை அழகாகப்பெற்ற பெண்குழந்தை, பெண்ணாகப் பிறந்த ஒரு குற்றத்திற்காக பொட்டை என்றும் குருடி என்றும் அவயவமிழந்த அவதூறுக்கு ஆளாவது எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிப் பாராமல், அதைப் பெண்மக்கள் தாராளமாய் ஏற்றுத்தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவதுதான் வேடிக்கையாகவும், பெரும், வயிற்றெரிச்சலாகவும் இருக்கின்றது. இனி இப்பிறவித் தன்மைக்கு அடுத்தபடியாயுள்ளதோ, ரொம்பவும் மோசம். ஐந்து வயதானதும் பெண்குழந்தையை உடன் பிறந்த அண்ணனோடும் விளையாட விடுவதில்லை. அதிலிருந்து ஆரம்பக்கல்வி, (அடக்கு முறை போதனை) தாய்மார்களால் போதிக்கப்பட்டு நிமிர விடாது, குனியக்குனியக் குட்டி, முடிவில் கூன்விழுந்த உருவமாகப் பிரகாசிக் கின்றது இன்று இந்திய நாட்டில் பெண்ணுலகம். எனவே பெண்சமூகம் விடுதலை பெறவேண்டு மானால், முதலில் பெண்களிட முள்ள, குருட்டுத்தனமான எண்ணங்கள் மாற்றமடைய வேண்டும். சில சுயநலக்கூட்டத்தாரால் அடக்கப்பட்ட கொடுமையைவிட, பெண்கள் தங்கள் சமூகத்தைத் தாங்களே, அடக்கிக்கொண்டு வருவதுதான் மகா கொடுமையாகவும், சமீபத்தில் விடுதலைக்கு மார்க்கமில்லாத நிலையிலும் இருக்கின்றதென்பதை ஈன்டெடுத்துக் காட்டாதிருக்க முடியவில்லை. எனவே இனி சகோதரிகள், இதுவரை கொண்டிருந்த, பிற்போக்கான மனப் போக்கை மாற்றித் தம்சமூகம் முற்போக்கடைய வேண்டிய உள்ளத்தை உடையவர்களாய் விளங்க வேண்டும். பெண்பிறவி, இழிந்தது, தாழ்ந்தது, என்பதற் காதாரமாக எடுத்துக்காட்டப்படும் கதைகள். பழமொழிகள், பாட்டுகள், அனைத்தும் வெறும்கற்பனை வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட பொய்க்கோட்டை பெண்ணினத் துரோகிகளால் பேசப்பட்ட பழிப்பு என உணர்ந்து எந்த இடத்தில் அவை தலைகாட்டினாலும், அதை ஆயிரம் சுக்கலாக உடைத் தெறிந்து, பெண்ணினத்தின் பெருமையை பேதை உலகம், வஞ்சக உலகம், உணர்ந்து, உண்மைநிலையைக் கைக்கொள்ளுமாறு .உறுதியுடன் போராடவேண்டும். எங்கும் சமதர்மச் சண்ட மாருதம், மிகவேக மாக வீசப்பட்டு வரும் இச் சந்தர்ப்பத்தில் சகோதரிகள் நீண்டதுயில் கொண்டிருத்தல் அழகல்லவென்பதே எனது வேண்டுகோள். ஒருபாலுக் கொருநீதி பெண்ணினத்தை சித்திரவதைப்படுத்தும் தன்மையில் நமது நாட்டில் நடைபெற்றுவரும் செயல்கள் கோடானு கோடியாகும். வாழ்க்கையில் சகல துறைகளிலும், ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியே கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பொதுவாக இல்லறவாழ்க்கைக்கு - குறிப்பாக சமுதாயத்தில் ஆண், பெண் இருவர்களின் கூட்டுறவு, ஒத்துழைப்பு இன்றியமையாத தாகின்ற தென்பதை எந்தமந்தமதியினரும் ஒத்துக்கொண்டே தீரவேண்டும். நமது லட்சியம் பொருளில் உயர்வு தாழ்வில்லை. தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. மக்கள் சமூகத்தில் ஏற்றத்தாழ் வில்லை. எல்லாம் ஏகசமம் என்பதை ஒரு பக்கம் வைத்து விட்டுப் பேசுவோம். வாழ்க்கையில் நடைமுறையில் நேருக்கு நேராகக் காண்பது கடையர்தம் கண்களுக்குப் புலனாகவில்லையா வென்று தான் கேட்கவேண்டியிருக்கிறது. ஆண், பெண், சமஉரிமை பற்றிப் பேசினால் சிலருக்குக் கண்களில் தீப்பொறி பறக்கின்றது. பெண்ணினத்தை வெறுத்து பெண் சமூகத்தைப் பழித்துவரும் பேதைகள் சாகும்வரை எந்த விதத்திலும் அப்பெண்ணின் கூட்டுறவே யில்லாது காலங்கழிப்பார்களானால் அவர்களைப்பற்றி நமக்குக் கவலையில்லை. நமது நாட்டின் தொழில் காரணமாகவே ஜாதிகளைப் பிரித்து இழிவுபடுத்தப் பட்டிருக்கின்றது. ஆனால், அத்தொழில்களை ஊன்றி நோக்குங்கால் மனிதவாழ்வில் மிக இன்றியமையாது வேண்டப் படுபவைகளாகவேயிருக்கின்றன. காலுக்கு மிதியடியின்றி (இவ் வுரிமையில் பெண்கள் விலக்கப்பட்டிருக்கின்றார்கள்) கடும் வெய்யிலில் நடக்க முடிவதில்லை; அவ்வளவு அவசியமானதொரு வேலை செய்யும் தொழிலாளியை சக்கிலியன் என்று இழிவுபடுத்தி யாய் விட்டது. அதேபோல் கக்கூ சுத்தம் செய்யாவிட்டால் அந்த இடத்தில் அரைநிமிடமும் இருக்கமுடியாது. அப்பேர்க்கொத்த தொழிலாள சமூகத்தைப்படுத்தும்பாடு, பேசும்பழிச்சொல், அழைக்கும் அலங்காரச்சொல், அம்மம்ம! வாய்விட்டு சொல்லுந்தர மன்று. இன்னும் இம்மாதிரி வேண்டியன எடுத்துக்காட்டலாம். இருக்கட்டும், இம்மாதிரியே பெண் சமூகமும் இழிவு படுத்தப்பட்டது என்பது எனது அபிப்பிராயம். எவ்வாறெனில், இன்று எடுக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு சமூகமும், எப்படி ஒரு தொழிலால் தாழ்த்தப்பட்டதோ, அவ்வாறே பெண்சமூகமும் சமையல் என்ற தொழிலால் தாழ்த்தப் பட்டது. எடுத்ததற்கெல்லாம், அடுப்பூதும் பெண்கள், அடுப்பூதும் பெண்கள் என்று இழிவாகப் பேசப்படுகின்றார்களே தவிர, வேறில்லை. யோசித்துப்பார்த்தால், அடுப்பூதும், அதாவது சமையல் தொழிலானது அவ்வளவு இழிவான தாகவோ, கேவலமானதாகவோ, மனித சமூகத்திற்குத் தேவையில்லாததாகவோ, இருக்கவில்லை யென்பதையாரும் மறுக்கமுடியாது. இன்று நடக்கும் எண்ணற்ற பொய், பித்தலாட்ட சூழ்ச்சிகள், சண்டைச்சச்சரவு, மாச்சரியங்கள், அனைத்தும் வயிற்றை மூலகாரணமாக வைத்தேயென்பதில் ஆட்சேபமில்லை. எனவே, இவ்வளவு புனிதமான, அத்தியாவசிய மான ஒரு தொழிலைப்பெண் சமூகம் ஏற்றுக்கொண்ட ஒரு காரணத்திற்காக, பழிக்கப்பட்டு, இழிவு படுத்தப்பட்டு, நீதி செலுத்துவதிலும், வேற்றுமை காட்டி வதைக்கப்படுவதென்றால், இக்கொடுமையை இன்னும் எத்தனை நாள் பொருத்துக் கொண்டிருப்பது? இன்னும் எவ்வளவு காலம் வளரவிட்டு வைப்பது? என்று எம்சகோதரிகளையே தாழ்வாய்க் கேட்கின்றேன். அவ்வாறு பெண் சமூகம் ஆரம்பத்திலிருந்து, அதாவது, பிறந்ததி லிருந்து, இறக்கும்வரை, சகல துறையிலும், அடிமையாகவேயிருந்து காலந்தள்ள நமது நாட்டில் சட்டங்கள் நிறைய உள்ளன. இதில் முதலாவது எடுத்துக்கொள்ள வேண்டியது விதவைத்தன்மையாகும். பிறப்பிலும், வளர்ப்பிலும், கல்வியிலும், சொத்துரிமை விஷயத் திலும், ஆக எல்லாவற்றிலும், ஒரு பாலுக்கொருநீதி கற்பித்து இருப்பதையாவது ஒரு வகையில் சகித்துக்கொள்ளலாம். இந்த விதவைத் தன்மையில் இருக்கும் அநீதியைமட்டும், ஒருக்காலும் சகிக்க முடியாததாகும். வஞ்சக நெஞ்சம் படைத்த வைதீக வெறியர்தம் கூட்டம் வகுத்த சட்டங்கள், சமதர்ம இயக்கத்தால் தூள் தூளாக்கப்பட்டு வருவது கண்டு பெண்ணுலகம் மகிழ்ச்சி யடையாமலிருக்க முடியாது. ஆதியில் இச்சண்டாளர்கள் செய்த கொடுஞ்செயலை, கொலைத்தனத்தை நினைத்தால், நெஞ்சம் பதறுகின்றது. அவ்வளவு கொடியதான - ஈவிரக்கமற்ற பாவிகள் செய்து வந்த கொலையை (சதியை) மதமும் கடவுள் என்று சொல்லப்பட்ட பொருளும் ஆதரித்தே வந்தன. இயற்கையில் எல்லா அவயவங்களும், தன் தன் சக்தியை யிழந்து, இறுதியில் உயிரான காற்று உடலை விட்டுப்பிரிந்து, உணர்ச்சியற்ற ஒரு சவத்தோடு ஐம்புல உணர்ச்சிகளும் குன்றாது அவயவங்களில் யாதும் பழுதடையாது சுத்தமான இளமைரத்த ஓட்டமுள்ள ஒரு பெண்ணை, தொட்டுத்தாலி கட்டிய ஒரு காரணத்திற்காக, பத்துநாள் இருபதுநாள், சாடையில், சந்தடியில், சுவரோடு தூணோடு பேசுவது போல் பேசிய ஒரு பாவத்திற்காக, அல்லது ஆறுமாதம், ஒரு வருஷம் ஐம்பத்திரண்டு வாழ்த்துகளோடு வாழ்ந்த ஒரு வாழ்விற்காக, உயிரோடு துள்ளத்துடிக்க வைத்துக் கொளுத்துவ தென்றால், பெண் சமூகத்தைக் கொடுமையே உருவெடுத்தன்ன வைதீகக்கூட்டம் எவ்வளவு அற்பமாக, எவ்வளவு கிள்ளுக்கீரையாக மதித்துவந்திருக்கின்ற தென்பது தெள்ளிதிற்புலனாகும். இவ்வாறு ஒரு பாலுக் கொருநீதி - அதிலும், நினைத்தால் நெஞ்சு திடுக்கிடக் கூடிய இக்கொடுஞ்செயலைப் பெண்கள் மேல் பிரயோகித்த வைதீகக் கூட்டத்தை வரிசையாக நிறுத்தி சுட்டுக்கொன்றாலும், குற்றமில்லை யென்றுதான் பெண்சமூகம் நினைக்க ஏதுவாகும். ஏன்எனில், பெண்ணினத்தை ஒரு சாரார் இவ்வளவு துச்சமாக நினைத்து, வீட்டில் வளர்க்கும், மற்ற மிருக இனங்களிடம் காட்டும் ஒரு கருணைகூடக் காட்டவில்லை யென்றால், காட்டமுடியாது கடுமையான சட்டங்களைப் பிரயோகித்தார்களென்றால், அவர் களைப்பற்றி, நல்லபிப்பிராயம், கொள்ள நற்சாட்சிப் பத்திரம் கொடுக்க எவ்விதத்தில் மனம் ஒருப்படுமென்பது யோசிக்கத்தக்கது.  விபசாரம் நீலாவதி மக்கள் சமூகத்தில் சரிபகுதி கொண்ட பெண்மக்கள், வாழ்க்கையில் சமபங்கு கொண்டு வாழ்க்கையென்னும் மரக்கலத்தை ஓட்டி வரும் மாலுமிகளான பெண் மக்கள் இன்று நம் நாட்டில் எய்தும் இன்னல்களுக்கோர் எல்லையில்லை யென்பது அறிவாளிகள் அறிந்த விஷயமேயாகும். பெண் மக்கள் பல விதத்தும் இழி நிலை யடையத்தான் பழக்க, வழக்கங்களும் பாழும் சம்பிரதாயங்களும் நிறைந்துள்ளனவேயொழிய அவர்கள் எவ்விதத்தும் மேன்மை யடையத் தக்க மார்க்கம் ஏதும் இல்லை. இதில் குறிப்பாக, பெண்மக்கள், தங்கள் மானத்தை விற்று வாழ்ந்துவரும் கொடுமை மிகமிகக் கேவலமானதாகும் இத்தொழிலில் ஈடுபட்ட பெண்கள் விபசாரிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். இவ்விபசாரத் தொழில் பல வழிகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. முதலாவது ஆலய வழிபாட்டை எடுத்துக்கொள்ளுவோம். முன் காலத்தில், ஆலயத்தில் திருப்பணிகள் செய்ய பல பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் குறிப்பாக வாழ்க்கையை வெறுத் தவர்களும் சிறுவயதில் துணைவனையிழந்து, அதோடு இன்ப வாழ்வை எண்ணவும் இயலாதவர்களும் பங்குகொண்டிருந்தனர் இன்றும் பல பெண்கள் துன்பமே நிறைந்த தங்கள் வாழ்க்கையி னின்றும் விடுதலைபெற ஆசையுடையவர்களாகி ஆலயங்களிற் சென்று பிச்சையேற்று, காலங்கழிப்பதை நாம் கண்டு வருகிறோம். இவ்வாறு ஆலய ஊழியம் ஒன்றிற்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்யப்பட்ட பெண்கள் தேவதாசிகளென்ற பெயரையும், தேவ ஊழியம் செய்யும் காரணத்தால், ஒரு பெருமையும் பெற்றார்கள். நாளடைவில் அவர் தம் பெருமைக்கு ஹானியேற்பட்டு அதன் மூலம் ஆலயங்களும் வெறுக்கத்தக்க விதத்தில் வந்துவிட்டது. ஆலய ஊழியர்களான தேவதாசிகள் தங்கள் மானத்தைப் பறிகொடுத்து வாழ்வதைப்பற்றி சிறிதும் கவலை கொண்டார்க ளில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் தாசித்தொழிலைப்பற்றி அதை நடத்தும் பெண்கள் ஒருவிதப்பெருமையே கொண்டார்கள். ஆகவே விபசாரம் என்பது முதலில் தேவதாசிகளால் அமுலுக்கு வரப்பட்டது. இந்நிலையில் இதற்காக ஒரு சமூகத்தையே ஒதுக்கி கோவிலின் பெயரால் பொட்டுக்கட்டி விபசாரத்தைப் பகிரங்கமாக அமுலுக்கு கொண்டுவந்து விட்டார்கள். ஆலயத்தின் பெயரால் பொட்டுக்கட்டி விபசாரத்தை விருத்தி செய்து வந்தது குற்றமாகக் கருதப்படவில்லை. இத்தன்மையில் பெண்கள் சமூகம் - இத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் சமூகம் - மேல் பூச்சில் நன்மை யடைந்ததாகக் காணப்பட்டாலும், உண்மையில ஆராயுமிடத்து தீமைக்கே பெரிதும் ஆளாகின்றார்கள். தேவதாசி (ஊழியர்) களாகயிருக்க வேண்டியவர்கள் இன்று தெருக்கள் நிறைய விபசாரக் கர்த்தாக்களாக மிளிர்கின்றார்கள். இதனால் இப்பெண் மக்கள் அடைந்த நன்மை ஏதும் இன்றி இழிவையும், பழிப்பையும் வெறுப்பையும் தான் பெற்றார்கள். விபசாரம் என்பது ஒரு தனிப் பட்ட பெண்ணால் மட்டும் செய்யப்படுவதன்று. மதியீனத்தால் மடமைத் தன்மையால், பெண்கள் விபசாரப்பிரியர்களாயிருக் கின்றார்களென்றால், அதை ஆதரித்து அவ்வாசையை அதிகமாக்கி அபிவிருத்தி செய்பவர்கள் ஆண் மக்களே யென்பதில் யாதொரு ஐயமுமில்லை. சிலர் கூறுகின்றார்கள், விபசாரம் செய்யும் பெண் மக்கள் எப்பேர்க்கொத்தவர்களையும் தங்கள் வசப்படுத்திவிடு கின்றார்களென்றும் அவர்களிடம் ஆயிரத்திலொருவரே தப்புவிக்க முடியுமென்றும் ஆகவே ஆண்கள் மேல் எவ்விதக் குற்றமும் சாட்டுவதற்கில்லை யென்றும் கூறுகின்றார்கள். இக்கூற்றுப்படியே பார்த்தாலுங்கூட நூற்றக்குப் பத்துபேர் இந்நிலையிலிருந்தாலும், பாக்கி தொன்னூற்றொன்பது பேரிடமும் ஆடவர்களே தேடிப் போகின்றார்களென்பது அனுபவத்தில் அறிந்த உண்மையாகும். எது எப்படியாயினும் யார், யாரைத் தேடிப்போயினும், விபசாரம் இருபாலருக்கும் கேடு தருவதன்றி நன்மை தருவதல்ல. விபசாரத்தால் முதலாவது இருவர் தம் உடல் நலனும் பாழடைகின்றது. இரண்டாவது மானமிழந்து, மதியிழந்து தாய்மையிழந்து துன்பக் கடலில் மூழ்க வேண்டியிருக்கிறது. பச்சிளங்குழவிகளை யெல்லாம் பாழும் கற்களுக்கு பலியிடுவது சகிக்க முடியாத கொடுமையாகும். இக்கொடுமையை ஒருவாறு சட்டமூலம் தடுக்க முற்பட்டபோது தேசீயத் தலைவர் ஒருவர் தாசிகள் இருக்கவேண்டியது அவசிய மென்றும் புண்யமான தொழில் என்று கூறியதும், டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் சரியான சவுக்கடிபட்டதும் பத்திரிகை வாசிப்போர் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் அநேக எதிர்ப்புகளுக் கிடையில் விபசாரத் தடைச் சட்டம் நிறைவேறி அமுலுக்கும் வந்துவிட்டது. சட்டத்தைப் பற்றி பின்பு பேசலாம். இவ்வளவு தூரம் மக்கள் உணர்ச்சி மாற்றப்பட்ட பின்னர், இந்த ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தைந் தாம் ஆண்டில் மீண்டும் தாசிகள் வேண்டும் என்று கூறப்படுவது எவ்வளவு கொடுமை என்பதை யோசித்துப்பார்க்க வேண்டுகிறேன். ஆதியில் தாசிகள் இல்லை யென்றால் இந்திய நாட்டுக்கலை தலைகீழாகி மடிந்து மண்ணாகி விடுமென்று கூறப்பட்டது. இப்போதோ, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றகதைபோல் உண்மை வெளிப்பட்டு விட்டது. காமமும் மோகமும் உள்ளவரை தாசிகளும் இருக்க வேண்டுமாம் என்னே! இக்கூற்றின் அழகு; பணமும் பொருளும் இந்நாட்டில் உள்ள வரை திருடர்களும் இருக்கவேண்டும் போலும்! முதலாளிகள் உள்ளவரை தொழிலாளிகள் அநுபவிக்கும் கொடுமையும் நிலைத்திருக்க வேண்டும் போலும்! பாடுபடா சோம்பேறி என்றும்பலனடைவதற்காக, பாட்டாளி மக்கள் சாகும்வரை பட்டினி, பசியோடு, வாழவேண்டும் போலும்! ஆண்களின் எண்ணம் ஈடேறி அவர்கள் விருப்பம் நிறைவேறுவதற் காக பெண்கள் ஜென்மம் மானமிழந்து வாழவேண்டும் போலும்! குறிப்பாக ஒருவர் நலனுக்காகவும், ஒருவர் சுகத்திற்காகவும் ஒருவர் விருப்பம் தவறான வழியேயாயினும் அது நிறைவேறு வதற்காகவும் அடுத்தவர்கள் அடிமைகளாகக் கூலிகளாக மதிப் பற்றவர்களாக மானமிழந்து ஈனநிலையெய்தி வாழவேண்டியது என்ன அவசியமோ தெரியவில்லை. பகுத்தறிவற்ற மிருகங்களிடத்திற் கூட இப்புத்தியை நாம் காணமுடியாது. ஒருவரை ஒருவர் நேசித்து தங்கள் இயற்கை எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுவது, மனிதசமூகத்தில் மட்டுமல்ல, மிருகங்களிடத்திலும், பறவைகளிடத்திலும் சர்வ சாதாரண மாக இருந்துவருகிறது ஆனால் இயற்கை இன்பத்தை இயற்கை ரீதியில் அநுபவிக்க இடமிருந்தும், ஆணவங்கொண்டு அதற்காக ஒரு தனி சமூகத்தை ஒதுக்கி வைக்கவேண்டுமென்ற எண்ணம் இம்மனிதர்களிடத் தன்றி வேறு எங்கும் காண்டலரிதாம். இந்நிலையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் நிலைமையை யோசித்துப் பார்த்தல் வேண்டும். நிற்க பொதுவாக விபசாரம் இன்று தாசிகளென்னப் பட்டவர்களால் மட்டும் அநுஷ்டிக்கப்படவில்லை. பெண்கள் சமுதாயம் உள்ள நிலைமையில் அவர்களுக்கேற்பட்டிருக்கும் அநேக நிர்ப்பந்தங்களில் பல பெண்கள் விபசாரத்திலிறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வந்துவிட்டது. உதாரணமாக நல்ல பாலிய வயதில் நன்மை, தீமை அறியும் சந்தர்ப்பத்தில், விதவைத் தன்மையோடு தான் வீட்டில் அடை பட்டுச்சாக வேண்டுமென்றால் அவர்கள் எப்படி ரகசியமான துறையிலிறங்கி விபசாரம் செய்த குற்றத்திற்காளாகாதிருக்க முடியும்? அதேபோல் இருபது வயது பெண்ணுக்கும் எண்பது வயது ஆணுக்கும் பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்து வைத்தால் எப்படி அவர்கள் வாழ்க்கையில் அதிர்ப்தி யேற்படாமல் இருக்கமுடியும்? இன்றும் வறுமையின் கொடுமை கணவனின் கொடுமை இவைகள் தாங்கமாட்டாமல் எத்தனைபேர் அய லிடத்தில் சரணடைகின்றார்கள்? இன்றும் இந்துமத தர்மப்படி பெண்களுக்கு சொத்துரிமை இல்லாததாலும் விபசாரத்தால் பொருளாதார உரிமை சற்று கிடைப்பதாலும், பணமென்றால் பிணமும் வாய்திறக்கும் என்ற தன்மையில் அதற்காக எத்தனை பேர் அத்தொழிலை வரவேற்கின்றார்கள். விபசாரம் மிக மிகக் கேவலமான தாயிருந்தாலும் பொருளாதார, செழுமையை உத்தேசித்து அவன் மூலம் உண்டாகும் ஒருவித அதிகார வாழ்க்கை யைப் பெருமையாய் எண்ணி ஆதரிப்போர் அநேகம் பேர்களா வார்கள். ஆக விபசாரம் பொருளாதாரத்தின் மீதே கட்டப்பட் டிருப்பதாக நன்கு தெளிவாகின்றது. சாரதாசட்டம் வந்தாலும் வைதீகர்கள் எப்படி சுதேச சமதானங்களுக்குச் சென்று அங்கு பாலிய விவாகங்களை திருட்டுத்தனமாய் வைதீகத்தைக் காப்பாற்ற செய்து வருகின்றார்களோ அதேபோல் விபசாரத் தடைச்சட்டம் வந்திருந்தாலும் பிழைப்பிற்கு யாதொருமார்க்கமுமின்றி வயிற்றின் கொடுமைக்காக பல பெண்கள் இருப்பிடத்தை விட்டு வேறு இடம் ஏகி அத்தொழிலை ஓரளவு நடத்தி வருகின்றார்கள். பகிரங்க விபசாரம் ஆக தெரியாவிட்டாலும் ரகசியத்தில் அது பரிணமித்து நிற்கின்றது. ஆக விபசாரம் என்பது தனிப்பட்ட சொத்துரிமையி னாலேயே ஏற்பட்டது. ஆகவே அதை அழித்து விட்டால் விபசாரமும் நசித்து விடும்என்ற வாக்கியம் மிக மிகச் சரியானதாகும். பொருளாதார அதிவாரத்தின் மீது கட்டப்பட்ட விபசாரக் கோட்டை பொரு ளாதார நிலை செம்மைப்படாதவரை தகர்க்கப் பட முடியாது. இன்று விபசாரம் ஒழியவேண்டும் என்று நாம் வற்புறுத்தினாலும் பல பெண்கள் அதற்கு ஒருப்படவில்லை. காரணம், வருவாய்க்கு அதைத் தவிர வேறு மார்க்கமில்லா திருப்பதேயாம். நம் நாட்டிலுள்ள பல இழிவுகளில் விபசாரம் மிகமிக இழிவானதாகும். விபசாரத்தால் பெண்கள் அடைந்த நிலை அதைவிட இழிவானதாகும். விபசாரக் குற்றம் இந்துமத தர்மப்படி பெண்களையே சேருகின்றது. விபசாரி பட்டமும் பெண்ணுக்கே தவிர ஆணுக்கில்லை. விபசாரத் தன்மையை விட்டு வெளிவர பல பெண்கள் அஞ்சுகின்றார்கள் ஏன்? எங்கும் வேலையில்லை. எங்கும் கூலியில்லை. எங்கும் பசிப்பிணி. எங்கும் வறுமை கொடுமை என்ற இரைச்சல் இடியேறுபோல் கேட்கின்ற தன்றோ? நிலைமை இவ்வளவு சிக்கலில் இருக்கும்போது இச்சந்தர்ப் பத்திலும் தாசிகள் இருந்து தான் தீரவேண்டுமென்ற விரிந்த மனப்பான்மை கொண்டு கூறுவது பற்றி பரிதாபப்படாதிருக்க முடியாது பெண்ணினத்தை நிர்மூலமாக்குவது விபசாரம் ஒன்றே யெனத் துணிந்து கூறலாம். விபசாரம் பொதுவாக எல்லா நாட்டிலும் ஓரளவு இருந்து வருகின்ற தென்றாலும் அதற்கென்று பெண் சமூகத்தில் ஒரு பகுதியை ஒதுக்கித்தான் வைக்கவேண்டு மென்ற கொடுமை எங்கும் கிடையாது, இக்கொடுமைகளை ஒழிக்க தோழர் இராமாமிர்தத்தம்மாள் போன்ற பல தொண்டர்கள் முன்வரல்வேண்டும்.  இந்திய திரிகளின் உரிமைகள் (கமலாதேவி சட்டோபாத்யாயா.) திரீகளின் உரிமைகளைப்பற்றிய பிரச்னை, இந்தியாவை மட்டும் பாதிப்பதன்று. அது மனித சமூகத்தையே பாதிக்கும் பிரச்னையாகும் ஆகவே மனித சமூகமே விசேஷ மாறுதல் அடையவேண்டும். புராதன காலத்தில் திரீகள், கேவலமான நிலையிலிருந்தனரெனக் கூறுவது முற்றிலுந் தவறு. அந்நிலைமை முற்றிலும் நமக்கு மாறானதாகும். வாழ்க்கை எளிதாயிருந்தபோது, ஆடவனும், திரீயும், ஒருவருக்கொருவர் பக்கத்திலிருந்து வேலை செய்துவந்தனர். திரீ பொருளாதார உலகில் தனிப்பட்ட நிலைமை வகித்து வந்தாள். சொத்து உரிமை விஷயம் அமுலுக்கு வந்த பின்னரே திரீகளின் நிலைமை மாற்றமடைந்தது. அதன் பயனாக வகுப்பு சமூகம் ஏற்பட்டது. ஒரு வகுப்பார், அதாவது ஆடவர் சொத்துக்களை நிர்வகித்தனர். இதன் பயனாக, அதிகாரம் யாவும் ஆடவர் வசத்ததாகியது. இச்சமூகத்தினர் ஓய்வெடுத்துக்கொள்ள அறிந்தனர். தனிப்பட்ட சொத்து உரிமை அமலுக்கு வந்ததால், ராஜ்யங்கள் எழுந்தன, படையெடுப்பால் நிலங்கள் கவரப்பட்டன. வர்த்தகம் பரவியது, முடிவில் ஏகாதிபத்திய தாகம் எழுந்தது. கேட்டின் வேர் அதன் பின்னர் ஆடவரின் உரிமை யுணர்ச்சி, திரீகளுக்குள்ள நியாயமான உரிமையை மறுக்கும்படி செய்தது. இதனால் திரீகளின் நிலைமை மெதுவாகக் கீழடைந்து வந்து, அவர்களுக்கு நாட்டில் இருந்து வந்த பொருளாதார நிலையும் மறைந்தது. இச்சோம்பேறி வகுப்பைச் சார்ந்த திரீகளிடமிருந்து சமூக சம்பந்தமான நடவடிக்கைகளும், சமையல் செய்தல், குடும்பத்தைக் கவனித்தல் உள்பட குடும்ப சம்பந்தமான கடமைகளும் பறிக்கப் பட்டன. யாவும் வேலைக்காரர்கள் கையதாகிற்று. இதனால் திரீகள் பிரயோஜன மற்றவர்களாயினர். அவர்களில் ஒரு பகுதியினர் கவலையின்றி உல்லாசமாளிகையில் கைதிகளாக இருக்கும்போது, பெரும்பாலோர், அளவுக்கு மீறி உழைத்துப் போதிய உணவின்றி வருந்துகின்றனர். திரீகள், பெரும்பாலும், விசேஷக் கவலையுடன் பாது காக்கப்பட வேண்டியவர்களாக நடத்தப்பட்டனர். இச்சமூகத்தின் விளைவாகவே, முகமூடியணிதல், குழந்தை மணம் முதலிய இதர கேடுகள் ஏற்பட்டது. முதலாளி, அடிமை முறை சமூகத்திலேற் பட்டதே இந்தியாவில் அநேக சமூகக் கேடுகளின் வித்துக்கள், செழித்து வளர இடந்தந்தது. இக்கேடுதரும் முறையினால் திரீகள் துன்பமெய்தினர். திரீகளைக் கேவலப்படுத்தும் முறையில், சமூக மதச் சட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒழுக்கம் இருதரத்தது ஆடவருக்கெனவும், திரீகளுக்கெனவும் ஒழுக்கம் இருதரத்த தாக்கப்பட்டது. ஆடவன் புதிய போகங்களைத் துய்க்க விரும்பிய போது, திரீகள் மீது தடை விதிக்க விரும்பினான். ஆடவர், தங்களிச்சைப்படி நடப்பதும், திரீகள் சிறைவாசிகளாகி, அவரது காருண்யத்தை எதிர்பார்க்கும்படி ஏற்பட்ட விபரீதப் பழக்கமானது வீட்டை நடத்துவதைத் தவிர ஆடவனுக்கு வேறு ஒழுக்க சம்பந்தமான கடமையில்லையென்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ஆடவனுக்காக திரீ தோற்றுவிக்கப்பட்டாள் என்ற கொள்கை பரிகசிக்கத் தக்கது. ஆடவன் ஒன்றைச் செய்யலாம்; திரீ அதைச் செய்யக்கூடாதென்பது விபரீத தத்துவம். திரீகளின் துயரங்கள் எண்ணில. விபசாரஞ் செய்வதற்குரிய காரணங்களையும், விதவைகளின் பரிதாபகரமான நிலைமை யையும், திரீகள் முகமூடி யணிந்து இதர துன்பங்களுக்காளாக நேர்ந்ததையும் நான் எடுத்துக்காட்டியுள்ளேன். வேலை உரிமை திரீகளின் சொத்துரிமை சம்பந்தப்பட்ட வரையில், தற்சமயமுள்ள சமூகத்தில் இதுபற்றி எவ்வித சட்டம் இயற்றினாலும், பலனேற்படுமென நான் நம்பவில்லை. ஏனெனில் நூற்றிற்கு திரீகளில் ஐம்பது விகிதத்தினருக்கு மேல் விவசாய வகுப்பைச் சேர்ந்தவர்கள், சொந்த நிலம் அற்றவர்கள். அபேதவாத அரசு முறையின் கீழ், நிலத்திற்குச் சொந்தக்காரராகும் உரிமை அவர்களுக் கில்லாத வரையில், சொத்து உரிமையால், பெரும்பாலான திரீ களுக்கு எவ்வித பலனுமேற்படாது. திரீகளுக்கு வேலை செய்ய உரிமை வேண்டும். அதுவே அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் பெற இடந்தரும். மேல் நாட்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியில், திரீகளுக்குப் பொருளாதார சுதந்திரமும், சமூக சமத்துவமும் ஏற்பட்டது. வைதீகத்தின் கடைசி அரணான சிலர் கர்ப்பத்தடையை எதிர்க்கின்றனர். தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற் குள்ள ஒருவரது உரிமையை எந்த மதமும் பறிக்க முடியாது. தங்கள் சுய உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும், தேக வலிமையுடனும் தாங்கள் குழந்தைப் பெறக்கூடுமென்பதை எல்லா திரீகளும் அறிந்துகொள்வது அவர்களது கடமையாகும். லட்சக்கணக்காக திரீகளுக்கு, பொருளாதார விடுதலை பெறுவதற்காக வேலை செய்யும் உரிமை பெறமுயல்வதே எனது வேலைத் திட்டம், பூரண சமூகமும், அறிவையும், பலத்தையும் அடிப்படையாகக் கொண்டு தாபிக்கப் படவேண்டுமென்பதே என் விருப்பம். பெரும்பாலான திரீகள் துன்ப வாழ்க்கை நடத்தும்படி அவர்களுக்கு, ஆடவர்கள் தண்டனை விதிக்கக்கூடா தெனவும் நான் ஆசைப்படுகிறேன்.  ருஷ்யப் பெண்கள் எழுச்சி (சமதர்மி) 1. சமயல் செய்யக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் தனது நாட்டின் ஆட்சிமுறை அலுவல்களைச் செய்யக்கூடிய வல்லமை களையும் கொண்டிருக்கவேண்டும். டிராட்கியின் சகோதரி திருமதி ஓ.டி. காமினீவா, வெளிநாடுகளுடன் கூட்டுறவுச் சபைத் தலைவியாக இருந்தனர். பெண் தொழிற்சாலையில் வேலைசெய்து தனது வாழ்க்கைக்கு ஊதியமும் பெற்றுக்கொண்டிருந்தனர். 2. பெண் உலகு தமது முயற்சியில் தோல்வியுறின், தோல்வி யுறட்டும், சீக்கிரம் இத்தோல்வியின் அநுபவங்களைக் கொண்டு மறுபடியும் தோல்வியுறாதபடி முன்பாடம் கற்றுக்கொள்வார்கள். ஆண் உலகின் உதவியினால் பெண் உலகின் வாழ்க்கையமைத்து வந்தது போதும். மார்ச்சு 8ஆம் ருஷ்யாவின் பெண்ணுலக நாள். இந்நாளில் ருஷ்யப் பெண்கள் ஆங்காங்கு வெளிவந்து யாவரும் ஒரு மைதானத்தில்கூடி ஆரவாரித்து ருஷ்யாவின் சுதந்திர ஆட்சியின் கொடியை வணங்குவார்கள். இதைத்தடுக்க ஆண் உலகு முன்பட்டு, தடுத்த நாட்களில் பெண்கள் தமது தோல்வியைப்பற்றி வருந்தி னார்கள். இவ்வமயம் இத்தீர்மானத்தில் ஆண் உலகு வெளியேறி னால் பெரும் பரிகாசத்திற்கு உட்பட்டுவிடலாகுமோ வெனப்பயந்து வீட்டினுள்ளிருந்து ஜன்னல்கள் வழியாக ஊர்வல ஆரவாரங் களையும் பத்திரிகை வாயிலாக நடவடிக்கை விமரிசைகளையும் அறிந்து கொள்வர். 3. ஒவ்வொரு பெண்ணும் தான் நகரத்தினள் என்ற உரிமை பெறல் வேண்டும். இதிலிருந்து பெண்களை தப்புவிக்கும் பெற்றோர்கள் குற்றவாளியாகுவர். கெஞ்சியோ ஆசைகாட்டியோ பயமுறுத்தியோ பெண்களை படிக்கச்செய்து ஆட்சிமுறை தத்துவப் பக்கபலமாக இருக்கச் செய்யவேண்டும். இதன் காரணமாக ருஷ்யாவின் தொழிற்சாலைக் கமிட்டி களில் நாலில் ஒரு பகுதி பெண்களினால் நடாத்தப்பெறுகின்றது. சமூக சமுதாய விவகார கவனிப்பு கமிட்டியில் ஆறில் ஒருபங்கு பெண்களினால் நடத்தப்பெறுகின்றது. ஸோவியட் யூனியன் மத்திய கமிட்டிகளில் பத்தில் ஒரு பங்கு பெண்களினால் நடத்தப்படு கின்றது. 3. பெண்களின் தொழில் விஷயமுறை, ஊதியம், சீர்திருத்தம் முதலியவைகளை பெண்களே கவனித்து அரசியலிற் களிக்க வேண்டும். இவைகளில் நேரிடும் அரசியல் இடுக்கண்களை பெண்கள் மகாநாடுகள்கூடி தீர்மானிக்கவேண்டும். தினசரி வாழ்க்கை, கல்வி சுகாதாரம், வைத்தியம் பிள்ளைப்பேறு சாவு முதலியவைகளுக்காக பெண்களுக்கு வேண்டிய சௌகரியங்களை இம்மகாநாடுகள் நிர்ணயிக்கவேண்டும். சிக்கனவாழ்க்கை அரசியல்கிளர்ச்சி என்பவை களை பெண்கள் கைக்கொண்டு முன்வர இம்மகாநாடுகள் தூண்டுதல் வேண்டும். பெண்களின் கூட்டுறவு அடுப்புகளை திருமதி, காமிநிவா அமைத்துவிட முன்பட்டு விட்டனர். தொழிற்சாலைப் பெண்கள், கல்விச்சாலைப் பெண்கள் பாதுகாப்புப்படை பயிற்சிப் பெண்கள், அரசியல் அலுவல் பயிற்சிப் பெண்கள், இக்கூட்டுறவு அடுப்புகளை தமது உணவுச்சாலைகளாக்கவும் இசைந்து விட்டனர். இந்த நான்கு லாக்காவிலும் பயிலும் பெண்கள் ஐந்து வருடவிகிதம் பயிலுதல் வேண்டும். ஆகவே ஒவ்வொரு பெண்ணும் நான்குவித பயிற்சிகள் கொண்டிருப்பர். இவ்விலாக்காக்களின் உணவுச்சாலை அடுப்பு பராமரிப்பிற்கென 20 லட்சம் பவுண் ஸோவியட் அரசியல் ஐந்து வருட திட்டத்திற்கென அளித்துள்ளது. 1929ஆம் ஆண்டில் ருஷ்யாவில் 1000 கூட்டுறவு உணவுச் சாலைகள் பெண்களுக்கென அமைத்து 600,000 பேருக்கு உணவு அளித்தது. இவை இரண்டு மாதத்திற்குள் அதிகமாக்கப்பட வேண்டியதாயின. இக்கூட்டுறவு உணவு சாலையின் டைரெக்டர் பெண்களேயாவர். அலுவலாளிகள் உணவு உண்போர் யாவரும் பெண்களேயாவர். இவர்களுக்கு சாமான்கள் அளிக்கவும் பெண்களே காய்கறி, முட்டை, இறைச்சி, வெண்ணை, பால், பிகட், வகையறா வியாபாரிகளாகவும் ஆகிவிட்டனர். 4. ஆண்களைவிட பெண்கள் இரட்டிப்பு கடின வேலை களைச் செய்தும் நாலில் ஒருபகுதி வருவாய்கள் கொள்ளுவதில்லை பெண்கள் வேலைக்கு ஊதிய மதிப்பில்லாது அடிமை மதிப்பு அமைக்கப்பட்டுவருவது வெட்க கரமான விஷயம். வீட்டு வேலைகள் செய்யும் குழந்தைகளின் ஊதியம் உண்டா? சகோதரிகள், மனைவிகள் முதலிய பெண் இனத்திற்கு ஊதியம் உண்டா? ஆண்மக்களின் அடக்கு முறைகள் அன்றோ அதிகரித்து வருகின்றது? அரசியலின் ரோட்டுகளைக் கூட்டுபவனிற்கு ஊதியம் உண்டல்லவோ? அரசியலின் நகர சாக்கடை கழுவுகின்றவனுக்கு ஊதியம் உண்டல்லவோ? சம்பள உயர்வு, தாழ்வு ஊதியம் உண்டல்லவோ? இவர்களுக்கு உடை உணவு, அளித்து நோய் முதலிய சிகிச்சை செய்து விட்டால் இவ்வேலைகளை நடாத்துவிக்கலாமா? ஊதியத் துடன் இவ்வாண்களுக்கு உடை, நோய்கிசிக்சை முதலியன இலவச மாகவும் அரசியல் அளிக்கின்றதன்றோ? நம் வீட்டுப்பெண்ணுல கிற்கு நாம் அளிக்கும் பலன்கள் அவர்களின் வேலைகளுக்கு எவ்விதம் கொண்டுள்ளது. ருஷ்யாநாடு சுதந்திர நாடாகியும் ஆண்களின் இவ்வட்டூழியம் நிலைகொள்ளலாகாது. துரியோமான்களும் ஊ பெக்கர்களும் பெண் இன சமத்துவத்தை அங்கீகரித்துவிட்டனர். அட்ஜர் பெய்ஜானிய பெண்களும் தமது சாதர்களையும் முகமூடிகளையும் களைந்து தம் இனப் பாதுகாப்பிற்கு வேண்டிய அலுவல்களைச் செய்ய முற்பட்டுவிட்டனர். தினப்பிரதிகளையும் மார்ச்சு மீ 8-ஆம் நாளாகிய ருஷ்யா பெண்ணுலகின் நன்னாள் என்ற விழாவில் தலைவியினால் நெருப்பிற்கு இறையாக்கிவிடுகின்றனர். ருஷ்யா பெண்கள் ருஷ்யா ஆண்களுக்கு பின்னிடக்கூடாத சமத்துவநிலை கொண்டுவருகின்றனர். போலீ, டிராம், ப, லாரி, டிரெயின், ஏரோப்பிளேன், கப்பல் முதலியவைகளின் பயிற்சி கொண்டுள்ள பெண்கள் ஈடுபட்டு அரசியல் அலுவலாளிகளாகி விட்டனர். தச்சு, கொல்லு வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். சுரங்கம், மின்சாரம் முதலியவைகளிலும் பெண்கள் உள்ளனர். ருஷ்யாவை ஜார் சக்கரவர்த்தியார் ஆண்டகால சரிதைகளில் உழவிற்கு எருதுகள், குதிரைகள் கிடைக்காவிட்டால் பெண்கள் கலப்பை இழுத்து உழவு தொழிலை ஆண்கள் நடாத்திய காலத்தையும் காணலாம். இந்நாட்களில் நிலங்களை ஆழமாக உழும் கலப்பை இயந்திரத்தை பெண்கள் ஓட்டுகின்றனர். வேளாண்மை வேலைகளை இயந்திர உதவிகளினால், தமது திரேக பலத்தினால் தமது பயிற்சி யுக்தி யூகங்களினாலும் ஆண் உலகின் அடிமைகளாகாது பெண் உலகின் பிரதிநிதிகளாகவே ஆண் உலகின் பயிற்சியாளர்களுக்குச் சமத்துவமாகவும் அவர்களை விட துரித மாகவும் சீராகவும் நடாத்துகின்றனர். இவர்களுக்குக்காரணம் யார்யென இப்பெண்களை வினவப்பெறின் லெனின்! லெனின்! byÅ‹!லெனின்! என்பவர்.  காந்தி பெண்களை அறிவாரா? (ஸ்ரீமதி மார்கரெட் சர்ங்கர்) நான் பெண்களை அறிவேன் என்று காந்திஜி கூறுகிறார். இது உண்மையா? பொய்யா? அல்லது உண்மையை நம்பி மயங்கிக்கூறுகின்றாரா என்பதே கேள்வி. சில நாட்களுக்கு முன் நான் (Mrs. Margaret Sanger) காந்தியோடு பேசிக்கொண்டிருந்த பொழுது எனக்கு இந்தியாவில் ஆயிரக்கணக்கான பெண்களைத் தெரியும். அவர்கள் அனுபவத்தையும் அவாவையும் நான் நன்கு அறிவேன். நன்றாய்ப்படித்த சில சகோதரிகளுடன் அவர்கள் குடும்ப வாழ்க்கையைப்பற்றியும் படிப்பில்லாத மற்றச் சகோதரிகளின் வாழ்க்கையைப் பற்றியும் இவர்கள் என்னை ஒரு மனிதன் என்று விகற்பம் பாராமல் அவர்களை சேர்ந்த ஒருவனாகவே கருதியிருக் கிறார்கள். நான் இவர்களோடு சேர்ந்து உழைத்தும் அடிக்கடி பழகியும் இருப்பதால் இவர்களைப்பற்றி நன்றாக அறிவேன் என்று கூறினார். இவ்வாறு காந்தியைத்தவிர வேறு யாராவது கூறியிருந்தால் அது வீண் தற்பெருமையென்று உடனே கூறிவிடலாம். ஆனால் காந்தி சொல்கின்றாரே உண்மையென்ன என்று பார்ப்போம். குடும்பம் பெருகாமல் இருக்கவேண்டும், மக்களைப் பெறாமலிருக்கவேண்டும். பெண்கள் கர்ப்ப ஆட்சி முறைகளை அனுஷ்டிப்பதைவிட, தங்கள் கணவரை, தங்களிடம் அண்ட விடாமலும் அல்லது புருஷரை விட்டுப் பிரிந்து வாழவும் வேண்டும் என்று காந்தி கூறுகின்றார். புருஷர்களைத் தங்களிடம் அண்டவிடாமல் செய்யப் பெண்களால் முடியுமா? அதற்குப் புருஷர்கள் இணங்க வேண்டாமா? அவ்வாறு இணங்கும் புருஷர்கள் நாட்டில் எத்தனை பேர் இருப்பர். காந்தி சொல்லுகின்ற கர்ப்ப ஆட்சி புருஷரைப் பெண்கள் தங்களிடம் நெருங்கவிடாமல் செய்யுமுறை - எளிதல்ல வென்பதை அவர் உணரவில்லை. ஒரு பெண் தன் கணவனைத் தன்னிடம் ஒரு வருஷத்திய 365 நாட்கள் வரை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறாள். ஆனால் வருடத்தில் ஒரேயொருநாள் - அதாவது 365-ஆம் நாளில் மட்டும் புருஷன் விருப்பதிற்கு இணங்கிவிடுகிறாள். அதன் பலன் என்ன? அதிலிருந்து சரியாய் பத்தாவது மாதம் ஒரு குழந்தை. காந்தி கூறிய கர்ப்ப ஆட்சி முறையை அனுஷ்டித்துக் கொண்டே வருஷத்திற்கொரு பிள்ளையும் பெற்றுக்கொண்டிருக்க லாம். என்பது வெட்ட வெளிச்சம். இனி இந்நாட்டில் ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டு நம் ஆராய்ச்சியை ஆரம்பிப்போம். ஒரு நல்ல வாலிப - இளம் தம்பதிகளுக்கு மூன்று நான்கு குழந்தைகளிருக்கின்றன. இனிமேல் குழந்தைகள் பெற்றால் மற்றக்குழந்தைகளுக்கு தகுந்த போஷணை அளிக்க முடியாது - அல்லது குழந்தை பெறவேண்டியதாயின் உடல் நலத்திற்கே கேடு உண்டாகலாம். இந்தக் குடும்பத்தில் கர்ப்ப ஆட்சி அவசியமா? இல்லையா? அவசியம் என்றே வைத்துக்கொள்வோம். இந்தத் தம்பதிகளுக்கிடையில் காந்தியின் அண்டாமை எனும் முறை எவ்வளவு தூரம் பயனளிக்கும்? காதற் பார்வையும், கனிந்த முத்தங்களும், அன்பாய் அணைத்தலும் - இல்லாத - ஹிந்துக் குடும்பத்தின் வாழ்க்கையைச் சித்தரித்துப் பாருங்கள். அந்தோ! என்ன பரிதாபமான காட்சி!! இந்துக்குடும்பத்தில் காந்தியின் அண்டாமைமுறை அனுஷ் டிக்கப்பட்டால் அது அத்தம்பதிகளின் குற்றமல்ல. எனக்கும் பெண்களைத் தெரியும் என்று கூறிக்கொண்டு இவ்விளந்தம் பதிகளுக்கிடையே - இந்த அண்டாமை முறையை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொன்னது காந்தியின் குற்றமேயாகும். மக்கள் மனதில் எழும் அன்பையும், உணர்ச்சியையும் உள்ளவாறு உணராது சொன்னதேயாகும். இயற்கையில் பெண்கள் காம உணர்ச்சி யுள்ளவர்களல்ல என்று காந்தி எண்ணியிருக்கிறார். அதுவே பெரிய தவறு. அதுவே அவர் பெண்களை நன்றாய் அறியவில்லை என்பதற்கு அத்தாட்சி. தன்னிடம் அண்டக்கூடாது என்று அடிக்கடி கூறும் மனைவியை அவள் கணவன் வெறுக்காமல் இருப்பானா? நிச்சயமாய் அவளுடன் ஒத்துவாழ இசையான் - ஏன் - விவாகப்பிரிவினைக்குக்கூட முயற்சிப்பான். எனவே காந்தியின் அண்டாமை முறையால் விவாகப்பிரிவினையைப் பற்றி அதிகம் தெரியாத இந்தியாவில் ஒன்றும் பாதகம் விளைவிக்காது என்று கூறுவீர்கள் - இல்லையா? இந்த இந்திய நாட்டில் இத்தகைய தம்பதிகளிடையில் என்ன ஒற்றுமையிருக்கும்? இந்த மனைவியைவிட்டுப் புருஷன் வெளியேறி தேசாந்திரியாய் விட்டானானால் அவளைப் பாதுகாப்பது யார்? அவள் தானே சம்பாதிக்க அவளுக்கப் போதிய கல்வி அளித் திருக்கின்றீர்களா? என்பதையும் ஆலோசியுங்கள். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே புருஷனை அண்டி அவன் சம்பாதிக்க அவள் சாப்பிட - என்ற முறையில் வாழ்ந்தவர்களாயிற்றே. இவர்கள் கணவனைப் பிரிந்து வாழ்வதெப்படி? தன்னை அண்டும்போ தெல்லாம் வெறுக்கும் மனைவியிடம் அன்புகாட்ட எப்படிப்பட்ட புருஷனுக்கும் முடியாது. ஆகவே அண்டாமை முறையை அனுஷ்டித்தால் அனுஷ்டிப்பவர்களுக்குப் பல இன்னல்களை யுண்டாக்கும். காதலர்களுக்கும் பிளவை ஏற்படுத்தும். மனிதனை மிருகத்தனமாய் நடக்கத் தூண்டும். vdnt fhªâTW« “m©lhik Kiwia” mDZo¤J ï¤jifa ï‹dšfS¡F Mshtjh?- அல்லது நடந்தபடி நடக்கட்டும் - என்று பத்து மாதத்திற்கு ஒரு குழந்தையைப் பெற்று உடல் நலிவதா? அல்லது சாதிரியமாய் தயார் செய்யப்பட்ட கர்ப்ப ஆட்சிமுறைக் கருவிகளை உபயோகப்படுத்துவதா? என்பதுதான் என் கேள்வி. காந்திஜீ! உமது வார்த்தைகளை இந்திய நாட்டின் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வேதவாக்காகக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரும் உம்மைப்போல் மன அடக்க முள்ளவர்களா? அவ்வாறு மன அடக்கமில்லாதவர்களை, இயற்கையில் எழும் உணர்ச்சிகளைத் தடுக்கும் வலியற்றவர்களை உமது அண்டாமை முறையை அனுஷ்டிக்கச் சொல்வது சரியா? என்று நான் கூறியதற்கு காந்தி பதில் கூறாமல் தமது பொக்கை வாய்ச்சிரிப்பைத் தான் காட்டுகிறார்.  பொதுக் கட்டுரைகள் 1. பாரதி 2. சோவியத் மருத்துவர்கள் 3. ராதாகிருஷ்ணன் 4. ஜயப்பிரகாஷ் நாராயணன் 5. கன்வர் பாஷா 6. கார்க்கி கொள்கையும் செய்கையும் இக்கட்டுரை தேசீயக் கவிஞர் சி. சுப்ரமணிய பாரதியாரால் புதுச்சேரியில் வைத்து 7-11-1908இல் எழுதப் பெற்றதாகும். இதில் கொள்கையொன்றும் செய்கையொன்றுமாய் வாழும் தலைவர்களால் நாட்டிற்கு விளையும் தீமைகளைச் செவ்வனே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை உடையவரா யிருக்கலாம். அதாவது மற்றெல்லாரையும் விட ஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம் இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப்பற்றுடையவனா யிருக்கலாம். இவை ஒவ்வொன்றும் சர்வ ஜனசம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டு மென்று அவசியமில்லை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும், நன்மையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படி கருமங்களைச் செய்யும் பொழுது அது தனக்காவது பிறருக்காவது நன்மை தருமென்றே செய்வார். ஒருவன் கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றிற்குச் சோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மான மிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது; குடியானவனா யிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேக தடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மழை பெய்யவில்லை; அப்படி மழைபெய்தாலும் உழ எருதுகள் இல்லை; உழுதாலும் விதைக்க வித்துக்களில்லை; விதைத்தாலும் களைகளைச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்து காவல் காத்து மகசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து சுகிக்க ஐவேஜியில்லை; அப்படி வீடுவந்து சேர்ந்த பலனை அனுபவிக்கவும் இடமில்லை; ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்காகவே தானிய தவசங்களை களத்தில் விற்றுவிட வேண்டியிருக்கிறது. ஆகையால் உழுது உண்ணுவதைவிட வேறு என்ன தொழில் செய்தாயினும் பிழைக்கலா மென்று கொள்கைக் கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத் திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிறான். அவன் செய்யும் தொழில் ஒரு கொள்கையி னடியாய் உண்டானதாலும் அது அவனுக்குத்தான் நன்மை தருமே யல்லாது இதரர்களுக்கு தீமையே செய்யும். இருந்தாலும் ஆபத்தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரித்தான். மனைவி மக்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி பார்த்தவரெல்லாம் பரிதாபங் கொள்ளும் படியாய் ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷணை செய்வதால் அவன் மானம் அழிந்து போகிறது. பயிர்த்தொழிலில் ஒன்றும் கிடைக்காது என்ற நிச்சயம் ஏற்பட்டுவிட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியாற உண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோ ஆங்கிலேயர் ஆசிர்வாதத்தால் நிராயுத பாணிகளாய் இருக்கிறார்கள். போலீ என்ற உள்நாட்டுக் காவற் காரரோ சம்பளம் சொற்பமானதாலும், அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத் தயாராயிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு எக்கிரி மெண்டு (உடன்படிக்கை) செய்துகொண்டு அவர் கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி சவுகரியத்தால் திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன் அதைக் கைக்கொள்ளுகிறான். ஆனால், அந்தத் தொழிலிற் ஜீவ ஹிம்சை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்வது பாவமாகும், அந்தப் பாபத்தால் பரத்திற்குறிய மோட்சத்தை இழக்க நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோ அவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறி செய்யுங் காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிறான். அதாவது சில வகுப்பார்களை அவன் தொடுவ தில்லை;- ஏழைகள், துணையின்றிச் செல்லும் திரீகள், நோயாளிகள், தூரமான தலங்களிலிருந்து வரும் யாத்திரைக் காரர்கள், ஆகிய இவர்களையும் இவர்களைப் போன்ற மற்றவர் களையும் ஹிம்சிப்பதில்லை. அதோடு நில்லாமல் தான் கொள்ளை யடித்து ஈட்டியப் பொருளின் ஒரு பாகத்தைக்கொண்டு தான தருமங்களும் செய்கிறான். தன்னைப்பகலில் கொள்ளையடித்த சாவுகாரனையும், லேவா தேவி செய்யும் நிஷ்கண்டகனையும், ஏன் இரவிற்கொள்ளையடிக்கக் கூடாதென்று தன்னைத்தானே கேட்கலா கிறான். குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டுவரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, தோல்கேட்டு வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டு வரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி இன்னும் எண்ண முடியாத வரிகளைப் போட்டு வீடு வாசல், நிலம் கரை, ஆடு மாடு சட்டி பொட்டி, இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறிக் கொள்ளையடித்துப்போகும் சர்க்கார் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப்படாது? என்ற கேள்வியும் அவனுக்குண்டாகிறது. இவ்விதமாக ஆட்சேபனை சமாதானங்க ளால் தன் மனதில் கொள்ளையடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்துகொள்ளுகிறான். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்கு விரோதமாய் இருப்பினும் தர்ம சாதிரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், கால சுபாவம் என்ற அவசியத் தால் ஆபத்தர்மமாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு அவன் காரியங்களை ஆரம்பிக்கிறான். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள். சிலர் இதைக் கெட்டதென்று சொல்லுவார்கள். எவர் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும், தான் கொண்டதே கொள்கை யென்று அவன் காலத்தைக் கழித்து வருகிறான். அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமையிருக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று அடுத்துத் தொடர்ந்தே வருகிறது. அவன் மனோதிடம் வாய்ந்த புருஷனென்றே சொல்லலாம். ஒரு கொள்கை யென்பதென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில் கொள்கை யின்றி காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்களிருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தியில்லாத எவனுக்கும் கொள்கை யென்று ஒன்றிருக்காது. ஒரு கொள்கையையுடையவன் பகுத்தறியும் சக்தியுடையவனாகவே யிருக்க வேண்டும். ஒரு கிராமமிருக்கிறது. அதில் வசிப்பவர்கள் ஒரே ஜாதி அல்லது வகுப்பைச் சேர்ந்தவர்களா யிருக்கிறார்கள். எல்லாரும் கள்ளர்கள். தலைமுறை தலைமுறையாக அவர்களுக்குக் கொள்ளையே ஜீவனோபாயம். அந்த ஊரில் ஒருவனை எடுத்துக் கொள்ளுவோம். அவன் அப்பன் திருடன், gh£l.ன் திருடன், முப்பாட்டன், திருடன், அண்டை வீட்டுக்காரன் திருடன், மாமன் திருடன், மைத்துனன் திருடன், ஆகையால் அவனும் திருடன். அம்மாதிரியாக ஒருவன் தன்னுடைய கருமங்களை ஒரு கொள்கை வசமாய்ச் சென்றான் என்று சொல்லக் கூடாது. அவனுக்குப் பகுத்தறிவு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால், அவ்வறிவின் துணையால் ஒரு கொள்கையை ஒப்புக்கொண்டு அதில் சாயலாகவே தன் கருமங்களைச் செய்து வருபவனல்ல. எத்தனையோ ஜீவப் பிரேதங்கள் ஜீவியத்தின் நோக்கம் இன்னதென்றே அறியாமல் கேவலம் இந்திரிய பாதைகளைக் கழித்துக்கொண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து இறந்துபோகின்றனர். அவர்களையெல்லாம் ஏதோ நல்லதோ கெட்டதோ கொள்கைகளைக் கடைப்பிடித்த கருமங் களை அவற்றவற்றிற்குரிய படி செய்து ஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்கை யென்பதென்ன? ஒரு கொள்கையாவது பகுத்தறிவின் துணையால் செய்யத் தக்கது இது செய்யத்தகாதது இது, என்று ஒருவன்அறிந்து முன்பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத் தொடரின் அதிவாரமாகிய ஒரு கருத்தாம். நம் நாட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் சக்திவாய்ந்த மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், கொள்கைகளை அவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு அவற்றின்படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக்கொண்டு அதன்படி நடக்க முடியாதவனாய் இருந்தால் அவனும் ஜீவப் பிரேதந்தான். இதிலிருந்து கொள்கையற்ற மானிடப் பதர்கள், கொள்கை யிருந்தும் அதன்படி நடக்க வியலாத மானிடப் பதர்கள் என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படுகிறது. இவ்விரண்டு வகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது. அவர்கள் இருக்கும்வரை சோற்றிற்குக் கேடாகவும் நிலத்திற்குப் பளுவாகவும் இருந்து போவார்கள். ஆனால், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத் தின்னும் அரிபூச்சுகள்போல ஒரு வகுப்பார் தலையெடுத் திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைநிறைய திவ்யமான கொள்கைகளை அடைத்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொதுப் பீடங்களில் நின்றும் உலகறிய அவற்றைச் சாங்கோ பாங்கமாகப் போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக்கொள்கைகளைக் கேட்டுப் பிரமித்து இவ்வறிய கருத்துக்களுக்கு ஆலையமாக விருக்கும் இவர்கள் மனமே மனம். இம்மகான்கள் அவதார புருஷர்களேஎன்று தம்மைப் போற்றும் பொழுது, அப் பூஜிதயையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து வெறியடைகி றார்கள். ஆனால், அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும், சகலவிதமான அழுக்குகளும், நிறைந்து கிடக்கின்றன. இம்மகான் களின் செய்கைகள் அவர்கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. தட்டிச் சொல்ல ஆள் இல்லா விட்டால் தம்பி சண்டப்பிரசண்டம் என்றபடி பேசிவிட்டு ஆபத்து வந்தகாலத்தில் நான் சொன்னபடி நீங்கள் செய்யவேண்டும், நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது என்று ஜனங்களை ஏமாற்று கிறார்கள். அதிலும் கேடாய் தங்களுடைய கொள்கைகளை ஜால வித்தைக்காரன்போல் மாற்றிவிடுகிறார்கள். இம்மகா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கிலடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக்கூடாத மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள். நமக்குக் கொள்கை வேண்டுமே யல்லாது ஆள் வேண்டியதவசியமுல்லை. ஒருவன் தான் பரையறையும் நல்லதோர்க் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானானால் அப்பொழுதும் நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம். அவனை எவ்வகை யாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்தவேண்டும். தான் குடிக்கும் காப்பிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும், ஒருவன் தன்னுடைய அருமையான கொள்கை களைக் கைவிடுவானானால் அவனை மானிடரில் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனிலும் பதரான மனிதன் ஒருவனும் இருக்க முடியாது. அவன் சம்பந்தப்பட்ட மட்டில் கொள்கைக்கும் செய் கைக்கும் வெகுதூரம் உண்டு. பாரத தேசத்தாராகிய நாம் சகலவிதமான சுதந்திரங்களையும் இழந்து எங்கேயோயிருந்துவந்த ஒரு வெள்ளைநிற ஜாதியாருக்கு அடிமைப் பட்டிருக்கிறோம். நாம் முப்பது கோடி ஜனங்கள், அவர்கள் இரண்டு லக்ஷம் கூடயில்லை. உலகத்தோர் எல்லோரும் இதை எங்கும் எக்காலத்திலுமில்லாத அற்புதம் என்று நினைக்கிறார்கள். இதனால் உலகத்திலுள்ள மற்ற ஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லக்ஷம் ஜனங்களையும்) அடக்கி ஆளும் ஆங்கிலேயர்களை மகா வீரசூரர்களென்றும், ஒப்பற்ற பலிஷ்டர்களென்றும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால், அதற்குப் பதிலாய் நம்மிடத்தில் அவர்களுக்கு அவ்வளவுக் கவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டுவிடுகிறது. இந்தியன் எங்கே போனாலும் நிந்திக்கப் படுகிறான். யாரும் நம்மீது காரித் துப்புகிறார்கள். உலகத்தோர் இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர் மட்டுமல்ல வேறு எந்த ஜாதியாரும் இலேசாக ஆளலாம் என்று நம்பியிருக்கிறார்கள். அப்படியிருக்க நாம் மிகுந்த அந்ததுகளைப் பாராட்டினால் அது ஒவ்வா ஒழுக்கம். நாம் சுயாதீனம் அடைந்த பிறகு மீசை முறுக்கலாம். இப்பொழுது வீண் டம்பங்கள் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள். நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு திரீயும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கொள்கை ஒன்றேதான் உண்டு. அதாவது, நம்முடைய அருமை நாட்டில் சுயாதீனத்தை நாட்டி பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்க வேண்டியது. இந்தக் கொள்கைப்படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் அவற்றை நாம் விலக்கிக் கொண்டு போகவேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து நடப்பதில் எவ்விதமான சுகத்தையும், மரியாதையையும், அந்த தையும் இச்சிக்கப்படாது. வீடு வாசல், மனைவி மக்கள், எல்லோ ரையும் இழக்கும்படி நேர்ந்தாலும், இழந்தே தீரவேண்டும். மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார் செவ்வி எவ்வவர் தீமையு மேற்கொள்ளார் அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்! என்ற மூதுரைக்கிணங்கியே நாம் நடக்கவேண்டும். இவ்வாறு நடக்கமுடியாதவன் தான் பேடியென்று ஒப்புக்கொண்டு பின் னடையவேண்டும். நானும் சுயராஜ்யக் கொள்கையுள்ளவன் என்று முன் வந்து நிற்கவேண்டாம். சுதந்திரக் கொள்கையை உடையவன் தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச் சித்தமாயிருக்கவேண்டும். ஹே, பரதா! சோம்பலுள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது. மழையென்றும், வெயிலென்றும், காற்றென்றும், பசியென்றும், தாகமென்றும், நித்திரையென்றும் பாராட்டாதே. இந்த சரீரமே அநித்தியம், என்றால், அதையொட்டிய அவதைகள் நித்தியமாகுமா? இந்திரிய அவதைகளுக்கு அஞ்சியாவது இந்திரிய சுகங்களைக் கோரியாவது தேசீய தர்மத்தைக் கைவிடாதே. பிரம்மமே நித்தியம் சத்தியமே ஜெயம். நீயும் அடிமைத் தனத்திலிருந்து நீங்கவேண்டும், உன்னுடைய ஜய பேரிகையை அடித்துக்கொண்டு உலகத்தில் எந்தெந்த பாகத்தில் யார் யார் அடிமைப் பட்டிருக்கிறார்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரதமாதா முன்போல் உலகத்திற்குத் திலகமாய் ஜூவாலிக்கவேண்டும். இந்தக் கொள்கைகளைக் கைவிடாதே, கைவிடாதே, கைவிடாதே, முக்காலும் சொன்னோம்.  விஞ்ஞான வளர்ச்சி உயிர்ப்பிக்க முயற்சி சோவியத் டாக்டர்கள் இரத்தத்தை இறந்துபோன பிராணி களின் உடலில் இன்செக்ஷன் செய்வதன் மூலம் உயிர்ப்பிக்கலாம் என்பதற்கான பரிட்சை பல நாட்களாக நடத்திவந்தார்கள் சமீபத்தில் அப்பரீட்சை இறந்துபோன ஒரு மனித சரீரத்தில் நடத்தப்பட்டது. அதாவது ஒரு செயற்கை ஹிருதயத்தை (ஆட்டோ ஜெக்டர் என்பது அதன் பெயர்) இணைத்து இரத்தத்தை ஏற்றினார்கள் அந்த ஹிருதயம் வேலை செய்ய ஆரம்பித்தது. உயிரற்ற அவ்வுடல் அசைவுற்றது. கண் திறந்தது. பேச ஆரம்பித்தது. 3 மணிநேரம், நல்ல அறிவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு திரும்பவும் உயிர் பிரிந்தது. இப்பரீட்சை பிரான்சு, ஜர்மன் முதலிய பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களின் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. சோவியத் டாக்டர்கள் இப்பரீட்சையில் பூரணவெற்றி பெறா விடினும் இந்த நூற்றாண்டிற் குள் இவ்விஷயத்தில் முழு வெற்றி பெறமுடியுமென்று சந்தோஷ மடைகின்றார்கள். தேஜ இத்தாலிய ஆபத்திரி ஒன்றில் காச நோயால் பீடிக்கப்பட்ட ஒரு வியாதிதன் மார்பில் தோன்றிய ஒளிக்கிரணங்களைப்பற்றி நன்றாய் ஆராய்ந்து அதைப்பற்றி ஒரு முடிவு கட்டிவிட்டார்கள். தேகத்திலிருக்கும் பரமாணுக்கள் மறுபடியும் அதிகமாக உற்பத்தியாகும் பொழுது இம்மாதிரியுண்டாகிறதாம். குர்விட் (Gurwitsh) என்ற ரஷ்யவிஞ்ஞான நிபுணர் பின்வருமாறு கூறுகிறார். உடலிலுள்ள பரமாணுக்களின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒளி வருகிறதாம். அது பரமாணுக்கள் மாறிமாறிப் பிறக்கிறதால் வருகிறது. இதுதான் மனிதனுடைய தேஜ மனிதன் உடலைச் சூழ்ந்து இம்மாதிரி ஒரு ஒளி பிரகாசிக்கிறது. ட்யூமர் வகையைச் சேர்ந்த வியாதிகளால் பீடிக்கப்படுகிறவர்களுக்கு இது அதிகமாக இருக்குமாம். இதை விஞ்ஞானசாதிர முறைப்படி போதிய ஆதாரங்க ளுடன் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். சாதாரணக்கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் பிரகாசமான ஒளியை டைஸியாலின் என்ற திரவபதார்த்தத்தின் வழியாகப் பார்த்து உடலை நோக்கினால் தெரியுமாம். அது தீபஒளியைப்போல் எப்பொழுதும் அசைந்தாடிக் கொண்டிருக்குமாம். தேகவலிமைக்கும் மனோ வலிமைக்கும் தகுந்த படி அது அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமாம். பெய்யெனப் பெய்யுமழை சோவியத் நாட்டைச்சேர்ந்த துருக்கிதானத்தில் ஒருமலை யின் மீது பெரிய மின்சாரக்கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. .இதன் உதவியால் அங்குள்ள பருத்திக்காடுகளுக்கு வேண்டும் பொழுது மழையை வருஷித்துக்கொள்ளச் செய்கிறார்கள். இதற்கு ஏராளமான பணச்செலவு ஆகிறதாம். அதிசய விமானம் சோவியத் ரஸாயன நிபுணர்கள் வானமண்டலத்தினுள்ளே ஊடுருவ அதிகவேகமாய்ச் செல்லும் பொருட்டு ஓர் அதிசய விமானத் தைச் செய்திருக்கின்றார்கள். இவ்விமானம் நீராவியினுதவியினால் செலுத்தப்படும். மணிக்கு 500 முதல் 600 மைல் வேகத்தில் செல்லும். பெட்ரோல் எண்ணெயில் செலுத்தப்படும் என்ஜின்களுக்கு காற்றும் தேவை யாயிருக்கிறது. வானமண்டலத்தினூடே செல்லச்செல்ல காற்றின் கனதிகுறையுமாதலால் பெட்ரோல் மூலம் ஓடும் விமானங்களுக்கு எளிதில் பழுது ஏற்படும். ஆதலால் நீராவி என்ஜின்களே மேலான தென்று அந்நிபுணர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். நீராவியினால் ஓடப்படும் விமானங்கள் வானமண்டல ஆராய்ச்சிக்குமட்டும் பயன்படும் என்பதல்ல - அதிக நிலப்பரப்புள்ள சோவியத்ருஷி யாவின் ஒரு கோடி முதல் மறுகோடி வரை விரைவில் பிரயாணஞ் செய்ய சாத்தியமாயிருக்கும். வானமண்டல முழுமையும் ஆராய்ந்தறிய சோவியத் சர்க்கார் முடிவு கட்டியுள்ளார்கள். வெந்நீர்க் கிணர் 3900 அடி ஆழம் கொண்ட கிணர் ஒன்றைத் தோண்டி அதிலிருந்து தண்ணீரை எடுக்கும்படி சோவியத் ரஷ்ய அறிஞர்கள் செய்துவிட்டனர். இக்கிணற்றிலிருந்து வரும் தண்ணீர் எப்பொழு தும் வெந்நீராகவே இருக்கிறதாம். இவ்வெந்நீர் வீடுகளின் எப்பாகத்திலும் உபயோகித்துக்கொள்ளுமாறு ஒரு இயந்திரமும் பூட்டி இருக்கின்றார்களாம். உலகிற் பெரிய தொழிற்சாலை உலகிலே பெரிய இரும்புத் தொழிற்சாலை சோவியத் ரஷ்யா விலே இருக்கிறது. அத்தொழிற்சாலையின் உயர்ந்த உத்யோகதர் ஓர் இந்தியரே. ஆனால் இப்பொழுது சோவியத் கட்சிக் காங்கிர தீர்மானப் படி இதைவிடப் பெரிய உருக்கு உற்பத்திசாலையொன்று கட்ட ஆரம்பித்திருக்கின்றனர். இத்தொழிற்சாலையின் மூலம் வருஷம் ஒன்றிற்கு 1,778,000 டன் உருக்குகளை உற்பத்திசெய்ய முடியுமாம். 2,000 க்கு மேற்பட்ட என்ஜினீர்களும் 27 ஆயிரத்திற்கு மேற் பட்ட தொழிலாளிகளும் அத்தொழிற்சாலையில் வேலைசெய் வார்கள். இத்திட்டப்படி தொழிற்சாலைக்குமட்டும் 130 கோடி ரூபிள் செலவழிக்கப்படப் போவதாகத் தெரிகிறது. 4 கோடி ரூபிள் செலவு செய்து லட்சத்தி இருபதினாயிரம் ஜனங்கள் வசிக்கத்தக்க சமதர்மநகர் ஒன்றும் புதிதாய் இத்தொழிற்சாலையுடன் நிர்மாணிக்க அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.  பழமையும்- புதுமையும் (இந்திய தத்துவ ஞானிகளில் ஒருவரும், ஆக்போர்டு சர்வ கலாசாலைதத்துவ சாதிரப் பேராசிரியரும், ஆந்திர சர்வ கலாசாலை வை சான்லராய் இருந்தவருமான ஸர் ராதா கிருஷ்ணன் அவர்கள் ஆந்திர சர்வகலா சங்கக் கல்லூரி மாணவர் சங்க ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற் பொழிவு) ஊக்கம் பண்டைக் காலத்து நமது பாரதநாடு பெருமை பெற்று விளங்கியதற்கு நமது முன்னோர்களின் பால்ய ஊக்கமும் உற்சாகமுமே காரணமாகும். இன்று இந்தியா வீழ்ச்சியும் தாழ்ச்சியு மடைந்திருப்பதற்கு நம்மவர்களின் சோம்பேறித்தனமே காரணம். நம்மிடம் ஊக்கமில்லை. உற்சாகமில்லை. பல துறைகளிற்புகுந்து உழைத்து வெற்றிபெற வீரமில்லை. நமது முன்னோர்கள் உள்ளத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த முன்னேற்ற உணர்ச்சியும் உயர்ந்த லட்சியங்களும் நம்மிடமில்லை. நாம் மன வலியற்று, உடல் வலியற்று சோம்பேறிகளாய் விட்டோம். சர்வகலா சங்கக் கடமை இந்தக் குறைபாடுகளைப் பரிகரிக்க சர்வகலா சங்கங்களுக்குச் சக்தியுண்டு என்பது எனது நம்பிக்கை. சர்வகலா சங்கங்களுக்குப் பல அற்புதங்களைச் செய்யமுடியும். வீர உணர்ச்சியுடைய இளை ஞர்களைப் பக்குவப்படுத்தி தேசத்தொண்டு செய்யுமாறு நாடு முழுதும் அனுப்ப சர்வகலா சங்கங்களுக்குச் சக்தியுண்டு. கிரேக்கர்களைப் பின்பற்றுங்கள் கிரேக்கர்கள் பழங்காலப் பெருமை பேசி வாழவில்லை. ஐதீகங்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டு இருக்கவில்லை. அவர்கள் சுதந்திரப் பிரியர்கள். வீர உணர்ச்சியுடையவர்கள். அற்புதங்கள் செய்யப் பேராவலுடையவர்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை முடிவுசெய்யத் தேவையுண்டானபோது அவர்கள் ஐதீகங்களை ஆதாரமாகக் கொள்ளவில்லை. சுதந்தரமாக ஆராய்ச்சி நடத்தி பகுத்தறிவின் துணைகொண்டு பிரச்சனைகளை அவர்கள் முடிவு செய்தனர். ஆத்ம சக்தியில் அவர்கள் பூரண நம்பிக்கையுடைவர்களா யிருந்தனர். இளைஞர்களுக்குரிய ஊக்கமும் ஆராய்ச்சி வன்மையும், சிந்தனா சக்தியும் உலகத்திலே கிரேக்கர்களுக்கு உயரிய தானத்தை அளித்தன. எதிர்கால வேலை நாம் தற்காலத்தில் வீழ்ச்சியடைந்தவர்களாயிருக்கிறோம். ஒரு தேசத்தை உருப்படுத்தவும் சரித்திரம் நிர்மாணம் செய்யவும் பல நூற்றாண்டுகள் பிடிக்கும். வெகுகால உழைப்பினாலேயே ஐதீகத்தையும் உண்டுபண்ண முடியும். நாம் இப்பொழுது புதுச்சரிதம் நிர்மாணம் செய்து புது ஐதீகங்களை உண்டுபண்ண முயலவேண்டும். நமக்கு இப்பொழுது இன்றியமையாத தேவையா யிருப்பது பால்ய ஊக்கமே யாகும். வாலிபர்கள் ஊக்கத்துக்குப் புத்துயிரளித்து அதனை மென்மேலும் விருத்திசெய்ய முதலில் நாம் எந்நாளும் இளமையோ டிருக்க முயலவேண்டும். பழமையே நம்மை சூழ்ந்து கொண்டிருக் கிறது. பழமையிலேயே நாம் மூழ்கிக் கிடக்கிறோம். எனினும் புத்துணர்ச்சியுடன் இளமை மனப்பான்மையை விருத்திசெய்ய சதா முயலவேண்டும். பழைய ஐதீகங்கள் நம்மை இப்பொழுது அழுத்தி வைக்கவே முயன்று கொண் டிருக்கும். ஆனாலும் இளைஞர்க்குரிய ஊக்கத்துடன் எப்பொழு தும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்க நாம் முயலவேண்டும். கடவுள் கட்டளை நாம் எப்பொழுதும் புரட்சிக் காரர்களாய் இருக்கவேண்டு மென்பதே கடவுள் கட்டளை. முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்! என்ற பிரபஞ்ச சக்தி நம்மை சதா தூண்டிக் கொண்டிருக்கிறது. நமது பழைய வேதங்களும் இவ்வாறே கட்டளை யிடுகின்றன. வேதக் கட்டளைகளை ஏட்டுச்சுரைக்காய் என்று அலக்ஷ்யம் செய்யவும் முடியாது நாம் எதிர்காலத்தில் புகழுடன் வாழவேண்டுமானால் பழைய ஐதீகங்களையெல்லாம் தகர்த்தெறிய வேண்டும் பழைய ஐதீகங்கள் நமது அகக்கண்ணைக் குருடாக்கு கின்றன. வீர உணர்ச்சிகளை நசுக்குகின்றன. நாம் முன்னேற வேண்டு மானால் நமது சமய சமூக ஆத்மீக வாழ்வில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டே தீரவேண்டும். நம் தாய் நாடு பெருமை யடைய வேண்டு மானால் சர்வகலா சங்கங்கள் தத்தம் கடமைகளைச் செவ்வனே, ஆற்ற முற்படவேண்டும். புரட்சி உணர்ச்சியை உலக முழுதும் பரப்ப சர்வகலா சங்கங்கள் உதவி புரியவேண்டும் நமது சக்தியை ஒடுக்கி அடிமைப்படுத்தும் பழைய நம்பிக்கைகளையும் குருட்டு ஐதீகங்களையும் அடியோடு ஒழிக்க சர்வகலா சங்கங்கள் முயற்சி செய்யவேண்டும்.  ஜயபிரகாஷ் நாராயணன் நாசிக் சிறையிலிருந்து ஒரு வாலிபர் 1933ஆம் வருஷம் ஒரு நாள் நாசிக் சிறைக்கதவுகள் திறக்கப் பட்டன. உயரமான மதிப்பிற்குரிய தோற்றமுடைய ஒரு வாலிபர் வெளிவந்தார். இந்திய சுதந்திரப் போரில் கலந்து சிறைப்பட்ட இவ்வாலிபர், ஒரு புதிய திடமான தீர்மானத்தோடு வந்தார். அத்திடமான தீர்மானந்தான் இன்று காங்கிரஸில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வளர்ந்தோங்கிவரும் அகில இந்திய காங்கிர சம தர்மக்கட்சியை தோற்றுவித்தது. அத்திடமான தீர்மானந்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வேருக்கு வெடி வைத்திருக்கிறது. அத்தீர்மானந்தான், இந்தியாவின் தற்காலம் அதிகமாக சலசலப்பு செய்யப்படும் காந்தீயத்தின் பொட்டல் தன்மையைத் தேசமக்க ளுக்குப் பகிரங்கபடுத்துகின்றது. அத்திடமான தீர்மானந்தான் நம் நாட்டிலுள்ள வறுமைப்பிணியையும், பட்டினித் தொல்லையையும் ஒழித்து மாய்க்க படையெடுத்திருக்கின்றது. அத்தகைய தீர்மானத்தைக் கொண்ட இவ்வாலிபர் யார்? தன் கட்சி வேலை நிமித்தம் சமீபத்தில் காங்கிர கமிட்டி அங்கத்தினர் பதவியை ராஜிநாமாச் செய்த தோழர் ஜயப்பிரகாஷ் நாராயணனே! அமெரிக்காவில் ஜயப்பிரகாஷ் இவர் 1920-21இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் சிறுமாணவராயிருக்கும் பொழுதே கலந்தார். இவருக்கு அளித் திருந்த உபகாரச் சம்பளத்தையும் நிராகரித்தார். 1922இல் அமெரிக் காவுக்குச் சென்றார்; காலிபோர்னியாவை அடைந்தார். அங்கு பலத்திறப்பட்ட அனுபவங்களைப் பெற்றார். அமெரிக்காவுக்கு கல்வி பயில வந்த அவர் தன்னிடத்திலுள்ள காசு அனைத்தும் செலவழித்து விட்டார். பழத் தோட்டங்களிலும், விவசாய பண்ணைக ளிலும், தொழிற்சாலைகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும் கூலிக்கு வேலை செய்தார். தன் கூலியில் பாதி தன் சாப்பாட்டுச் செலவுக்கு வைத்துக்கொண்டு, மீதிபாகத்தை தன் கல்விக்குச் செலவழித்தார். இம்மாதிரி எட்டாண்டுகள் அமெரிக்காவில் காலங்கழித்தார். இந்த எட்டாண்டுகளுக்கு உலகிலுள்ள பல விஷயங்களைப் பற்றி அறிந்து கொண்டார். உயிர் நூல், உள நூல், பொருளாதார நூல், சமூக சாதிரம் முதலிய பல துறைகளிலும் தன் விஷய ஞானத்தைப் பெருக்கிக் கொண்டார். அமெரிக்காவில்தான் இவர் ஒரு துணிந்த சமதர்மியானார். அங்குள்ள பெரும் நகரங்களில் ஒரு பக்கம் செல்வத்தின் சீமான்கள் செழித்திருப்பதையும், இன்னொரு பக்கம் பசியாலும் வறுமை யாலும் ஆயிரக்கணக்கான வேலை யற்றோர் தவிப்பதையும் பார்த்த இந்த இந்திய வாலிபர் இவ்விநோத நிலைக்கு காரணம் என்ன வென்று ஆராயப் புறப்பட்டார். தன் ஆராய்ச்சி முடிவில் முதலாளித்வத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம், அரசாங்கம், முதலியவைகள் இருக்கும் வரையில் மக்கள் வறுமை ஒழியாது என்று கூறும் மார்க் தத்வத்தை உறுதியாய் நம்பலானார். இந்நம்பிக்கையிலிருந்து மார்கிஸி ஸமாகிய சமதர்மத்தை தன் வறுமை இந்தியாவிலும் பரப்பவேண்டு மென்று ஆசை கொண்டார். ஜயப்பிரகாஷ் மீண்டும் இந்தியாவில் இந்த நிலையில், சட்டமறுப்பு இயக்கம் 1930-ம் வருஷத்தில் இந்தியாவில் காந்திஜீ தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. நமது ஜயப்பிரகாஷ் இந்திய சுதந்திரப் போரில் கலந்து கொள்ள 1931-ம் ஆண்டில் மீண்டும் தாய்நாடு அடைந்தார். சட்டமறுப்பு இயக்கத்தில் பொறுப்பான அநேக தா னங்கள் வகித்தார் சிறைக்கும் சென்றார். நாசிக்சிறையில் இவருடன் தோழர்கள், அச்சுதபட்டவர்த்தன், மஸானி முதலிய வாலிபர்களும் இருந்தனர். அச்சிறையில்தான் அகில இந்திய காங்கிர சமதர்மக் கட்சியின் விதை போடப்பட்டது. சிறைத் தண்டனை முடிந்தவுடன் பாட்னாவில் ஜயப்பிரகாஷ் முதலாவது அகில இந்திய காங்கிர சமதர்ம மகா நாட்டை கூட்டுவித்தார். பம்பாயில் அகில இந்திய காங்கிர சமதர்மக் கட்சியை நிறுவினார். அக்கட்சி உருப்பெறுவதற்கு ஜயப்பிரகாஷ் மாகாணம், மாகாணமாக அலைந்து திரிந்தார். அக்கட்சியின் பொதுக் காரியதரிசியாக விருந்து அக்கட்சிக்கு பல ஊழியங்கள் செய்துள்ளார். இன்று அகில இந்திய காங்கிர சமதர்மக் கட்சி தலைவர்க ளுள் இவர் ஒரு முக்கியதராவர். இவர் சமதர்மத்தை நன்கு பயின்றவர் சமதர்மத்தைப்பற்றி ஆதாரத்துடன் பேச இவருக்கு அருகதையுண்டு. இவர் நல்ல எழுத்தாளர். ït® ‘rkj®k« vj‰F? என்ற அரிய நூலை மெச்சாத விஷயம் தெரிந்தவர்கள் இல்லை. இந்திய விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப் படுகின்றவர்கள் இந்நூலை அவசியம் படிக்கவேண்டும். இவர் ஒரு பெரும் பேச்சாளர் என்று கூறமுடியாது. ஆனால் இவர் பேச்சுக்கு யாரும் செவி சாய்த்துத்தான் தீரவேண்டும். பெரும் பேச்சாளர்களைக் காட்டிலும் தன்னைக் கேட்பவர்களின் மனதில் தான் கூறியதைப் பதியும்படி செய்து விடுவார். காரணம் தான் பேசும் விஷயத்தை நன்கறிந்தவர். அதை உண்மையில் நம்புகின்றார். இவருக்கு இரண்டு குறைபாடுகள் உண்டு. ஒன்று என்னவென்றால், தான் எப்பொழுதும் ஒரு அழகான முகக்ஷவரம் செய்யும் செட் ஒன்று வைத்திருப்பார். அதைப்போல் உலகத்தில் வேறொன்றும் கிடையாது என்று கூறுவார். இரண்டாவது குறைபாடு என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு இடத்திற்கு வருகின்றதாகச் சொல்லிவிட்டு யாரிடத்திலாவது வெகு நாழிகை தர்க்கம் செய்துகொண்டு இருந்து விட்டு ஓடி வருவார்; அப்புறம் தன் கால தாமதத்திற்காக மன்னிப்பு கேட்பார். இம்மாதிரி ஒரு நாளில் அநேக தடவைகள் இவர் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிருக்கும். இவருக்கு வயது சுமார் 35 தானிருக்கும். இவர் எதிர்காலம் மிக்க சுவையுடையதாயிருக்கும். இந்தியாவின் எதிர்கால சரித்திரக் காரர்கள் இவருக்கு இந்தியசரித்திரத்தில் இடமளிப்பார்களென்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  அன்வர் பாக்ஷாவின் இறுதிக்கடிதம் (துருக்கி தேசீயவீரர் காஜி அன்வர் பாக்ஷாவை உலகம் நன்கறியும். ஐரோப்பிய மகா யுத்தத்தில் வெள்ளையர்களை விரட்டியடித்தவர். மாபெரும் யுத்தவீரர். அவர் தம் மரணத்திற்கு முன் தன் மனைவி நஜிய்யா கல்தானாவிற்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் சாரம் இங்கு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் தேச பக்தியும் தியாக புத்தியும் ஜீவலட்சியம் பொதிந்திருக்கிறது. படிப்போர் உள்ளத்தை உருக்க வல்லதும் இந்தியர் போற்றத்தக்கது மாகும். என் ஆருயிர்க் காதலி! என் வாழ்வின் விளக்கே! என் ஆசை நஜிய்யா! உன் இறுதிக்கடிதம் இதோ என் கண்முன் இருக்கிறது. அதில் பொறிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பசு மரத்தாணி போல் என் உள்ளத்தில் பதிந்திருக்கிறது. அன்பே! இனி, உன்னை காண முடியாதென்றே கருதுகின்றேன். உன் கடிதத்தின் எழுத்துக் களைக் காணுந்தோறும் என் முகரோமத்துடன் விளையாடிய உன் மெல்லிய - மிருதுவான விரல்கள் என் கண்முன் காட்சியளிக்கின்றன - உன் அழகிய முகாரவிந்தம் என் உள்ளத்தை பூரிக்கச்செய்கின்றது. என் அருமைக்கண்மணி! நான் உன்னை மறந்துவிட்டதாக எழுதியிருக்கின்றாய். நான் உன்னை ஒருபொழுதும் மறவேன் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் நான் எப்பொழுது போர் புரிந்து கொண்டிருந்தாலும் என் உள்ளம் உன்னை என்றும் மறந்ததில்லை. இவ்வுலகில் என் மனத்தைக் கவர்ந்தவை இரண்டு. ஒன்று என் தாய் நாடு. மற்றொன்று என் பிரிய நஜிய்யா. இரண்டையும் பெறுவேன். இழந்தால் இரண்டையும் இழப்பேன். என் ஜீவியகாலத்தில் இவ் விரண்டையும் ஒரு வினாடியும் மறவேன். என் பிரிய நாயகி! நான் உன்னை விட்டு அடிக்கடி பிரிந்து விடுவதற்காக வருந்துவதாய் எழுதுகின்றாய். ஆம்! தாய்நாட்டின் விடுதலைக்காக உன்னை விட்டு அடிக்கடி பிரியவேண்டியதேற் படுகின்றது. நமது தாய்நாட்டின் விடுதலைக்காக நான் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணஞ் செய்திருக்கிறேன். என் துணைவியாகிய நீ உன் கணவனின் கூட்டுறவைத் தியாகஞ் செய்யக்கூடாதா? என் பிரிய தோழி! செல்வம், அரசு, அரசபதவி பெற யான் போரில் ஈடுபடவில்லை. என் தாய்நாட்டின் அழைப்பே என்னை போர்க்களத்திற்கு ஈர்க்கின்றது. என் தாய்நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்ததில் யான் பெறும் இன்பம் உன் கூட்டுறவில்கூட பெறுவதில்லை. உன் காதல் அடிக்கடி அச்சீரிய தொண்டிலிருந்து என்னைப் பிரழவைக்கப்பார்க்கிறது. அஃது ஒரு சோதனை. அச்சோதனையில் கடமைதான் வெற்றி பெறுகிறது. அதன் பொருட்டு அளவிலா ஆனந்தமுறுகின்றேன். என் ஆசைத்தோழி! என் வெற்றிக்காக பிராத்தனை செய்! அப்பிராத்தனை மீண்டும் என்னையடைய வேண்டும் என்ற சுயநலத்தோடிருத்தல் கூடாது. தேசமும், மக்களும் கடைத்தேற வேண்டும் என்ற புனித நோக்கமுடையதாக இருக்கட்டும். உனது அவ்வரிய பிராத்தனை நான் வெற்றிக்கொடியுடன் வாகைமாலை சூடித்திரும்ப வேண்டுமென்று பிரார்த்தி. இன்றேல் போர்க்களத்தில் நாட்டிற்காக வீரமரணம் அடைய வேண்டுமென்று பிரார்த்தி. இதுதான் நீ எனக்காற்றும் கைமாறு. யான் போரில் காயமுற்று மரிப்பேனானால் அதற்காக நீ வருந்தவேண்டாம். தன் அருஞ் செல்வத்தை நல்வழியில் தியாகம் செய்தவனைப்போல் களிப்புற்றிரு. வாழ்வதும் இறப்பதும் உலக இயற்கை. வாழ்வதில் மகிழ் வதைப்போல் மரிப்பதிலும் மகிழ்வுறவேண்டும். என்னை என் கடமை சாவின் பக்கம் அழைத்துக் கொள்ளுமாயின் அதற்காக நீ துக்கிக்கக்கூடாது நான் பண்டைய ஸஹாபாக்கள் (முஹம்மத் நபியின் தோழர்கள்) போலும் இமாம்கள் (முலிம்களின் தலை வர்கள்) போலும் நற்பதவி அடைந்துவிட்டேன் என்பதற்காக நீ களிப்படையவேண்டும். என் நேசப்புறாவே! யான் உனக்கு இறுதி உபதேசங்கள் (வஸிய்யத்) செய்ய விரும்புகிறேன். நான் யுத்தத்தில் இறந்து போனால் உன் வாழ்நாளைத் துக்கத்தில் கழியாதே. இஷ்டமானால் என் இளைய சகோதரனான நூரிபாக்ஷாவை மணந்து வாழு. உனக்குப்பிறகு நூரியைத்தான் அதிகம் நேசிக்கிறேன். அவன் மிக உத்தமன். என் வாழ்க்கைத் துணைவியே! மற்றோர் உபதேசம் யாதெனில் உன் வாழ்க்கையை நாட்டின் நலத்திற்காக செலவுசெய்ய வேண்டும். உன் வருங்காலக்கணவன், பிள்ளைகள் யாவரையும் நாட்டிற்காக அர்ப்பணம் செய்யவேண்டும். என் வாழ்வின் முறையை நீங்கள் முன்மாதிரியாய்க்கொண்டு நடக்கவேண்டும். மேலும் நீயும் உன்னைச் சார்ந்தோர்களும் முதபா கமால் பாக்ஷாவிற்கு நன்றியாளராய் இருந்துகொள்ளவேண்டும். எவ்வாற் றானும் அவருக்குத் துணைபுரியவேண்டும் நாட்டின் வருங்காலம் அவரிடம் தானிருக்கிறது. அவர் தான் உங்கட்கும் நாட்டிற்கும் தலைவர். அன்பே! .இவற்றோடு யான் உன்னிடம் பிரியா விடை பெற்றுக் கொள்கிறேன். என் இறுதி உபதேசப்படி நடந்துகொள். ஆண்டவன் நாடுவானானால் நாம் சுவனலோகத்தில் மீண்டும் சந்திப்போம். உன் ஆசை நேசன் அன்பர் பாக்ஷா  மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorki) மாக்ஸிம் கார்க்கி ரஷ்ய சோவியத் ஆட்சியின் தாபகர் லெனின் அவர்களின் உயிர்த்தோழர். ரஷ்யக் கலைஞானமந்திரி. தொழிலாளர்களின் ஒப்பற்ற கலைச்சக்ரவர்த்தி. சோவியத் ரஷ்யாவில் மிகுந்த செல்வாக்குள்ள மனிதர் தோழர் டாலின் தான் என்று உலகம் நம்பிக்கொண்டிருந்தது. சோவியத் ரஷ்யாவை உள்ளுற உணர்ந்த அறிஞர் எய்ச்.ஜி.உவெல் போன்றார் ரஷ்யாவில் கலைவாணராகிய கார்க்கிக்கும் பௌதீக சாதிர நிபுணரான பாவ்லாவிற்கும் டாலினைவிட அதிகமான செல்வாக்கும் சுதந்திரமும் உண்டு என்று கூறுகின்றார்கள். ரஷ்யாவில் கார்க்கிக்கு ஏற்பட்டிருந்த பேரும் புகழும், பெருமையும் உலகில் எந்தப் பேரறிஞர்களுக்கும் ஏற்படவில்லை. ஏழைமக்கள் படும் துன்பங் களை எடுத்துக்காட்டுவதில் இணையற்ற எழுத்தாளர். அவர் சதாகாலமும் தொழிலாளர்களை அன்புடன் நேசித்து வந்தார். அவருடைய நூற்களெல்லாம் தொழிலாளர்களுக்கு அனுகூல மாகவும் அவர்கள் எளிதில் படித்துணர்ந்து கொள்ளத்தக்க எளி நடையையுடையதாயுமிருக்கும். சோவியத் ரஷ்யா கல்வி வளர்ச்சியில் உலகிலே முதன்மை தானத்தை எய்தியிருப்பதற்கு மாக்ஸிம் கார்க்கியின் இடைவிடாத உழைப்பே காரணமாகும். 1934-ல் மாகோவில் அகில ரஷ்ய நூலாசியர்கள் மஹாநாடு நடைபெற்றது. அம்மஹாநாட்டிற்கு தோழர் மாக்ஸிம் கார்க்கி தலைமை வகித்தார். ரஷ்யாவிலுள்ள நூலாசிரியர்கள் மட்டுமல்ல உலகிலுள்ள பல்வேறு நாட்டு நூலாசியர்களும் சென்றிருந்தார்கள். இங்கிலாந்து தேசத்திலிருந்து பிரபல நூலாசிரியராகிய வில்லியம் எல்லி என்பவரும் சென்றிருந்தார். அவர் அம்மஹாநாட்டைப்பற்றி பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். அதில், மஹாநாட்டின் தலைவர் மாக்ஸிம் கார்க்கி அவர் வயதில் முதிர்ந்தவர். ஆனால் இளைஞர்போல் சுறுசுறுப்புள்ளவர். அவரது தோற்றம் என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து விட்டது. அவர் தோற்றத்தில் கிழவர். தொனியில் சிங்கம். அவரது நீலநிற விழிகள் எப்படி ஜொலித்துக்கொண்டிருந்தன தெரியுமா? நட்சத்திரங்கள் போல் மின்னிக்கொண்டிருந்தன. ரஷ்யக் குழந்தைகளுக்கு அவர்மீது அளவற்ற அன்பு. வாலிபர்களுக்கு அவரிடம் அதிகமான மதிப்பு. முதியோர்களுக்கு அவர் கடவுளையொப்ப ஓர் மனிதனாகத் தோன்றினார். தொழிலாளர்களுக்கு அவர் ஒப்பற்ற தோழனாய்த் துலங்கினார்!! என்று குறிப்பிட்டுள்ளார். கார்க்கியின் உண்மைப் பெயர் அலெக்ஸி மாக்ஸிவிட்ச் பெஷ்கோவ் (Alexy Maximovitch Peshkov.) ஆனால் அவர் பத்திரிகைகளில் மாக்ஸிம் கார்க்கி என்ற புனைப்பெயருடன் கட்டுரைகள் எழுதிவந்தார். எனவே அவரது புனைப்பெயரால் அவர் பிரபல்யமடையவே அதே பெயர்தான் அவருக்கு இறுதிக்காலம்வரை நிலைபெற்றுவிட்டது. கார்க்கி மிகுந்த தைரியமும் துணிச்சலும் உடையவர். ரஷ்யர்கள் தங்கள் தெய்வம் போல் கருதும் லெனினைக்கூட தாக்கும் தைரியம் அவருக்குண்டு. கார்க்கி 1868-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17ஆம் தேதி பிறந்தார். அவர் பிறந்தது ரஷ்யாவிலுள்ள நிழனி-நோவ் கோரட் என்னும் ஊராகும். 1917ஆம் ஆண்டு நிகழ்ந்த ரஷ்யப்புரட்சிக்குப் பின் அவ்வூரின் பெயர் கார்க்கி என்று மாற்றப்பட்டு விட்டது. கார்க்கியின் தந்தை சோபா, நாற்காலி, படுக்கைகளை ரிப்பேர் செய்தும் சவப்பெட்டிகளை வாடகைக்கு விட்டும் ஜீவித்து வந்தார். கார்க்கி ஐந்து வயதாயிருக்கும் பொழுதே அவரது தந்தை மரணமாய்விட்டார். அவரது தாயார் வேறு ஒருவரை மறுமணம் புரிந்து கொண்டார். எனவே அவரது பேரனார் வீட்டில் வளர்ந்து வந்தார். அவர் பாட்டானருக்கு சாயவேலை. நாளுக்கு நாள் சாயத்தொழிலில் வரும்படி குறைந்துபோய்விட்டது. எனவே 9ம் வயதில் சாப்பாட்டிற்காகச் சம்பாதிக்க வீட்டைவிட்டு வெளியேறி னார். 10வது வயதில் அதாவது 1878இல் ஒரு ஜோடு தைப்பவனிடம் வேலை கற்றுக்கொண்டார். பின்னர் 1879இல் ஒரு ஓவியக்காரனிடம் சித்திரம் எழுதப் பயின்றார். 1880இல் ஒரு சிறிய கப்பலில் சமையலறை சிற்றாளாகக் காலங்கழித்தார். 1883இல் ஒரு ரொட்டிக் கிடங்கில் கையாளாக வேலை செய்து வந்தார். 1884இல் போர்ட்ட ராக இருந்து வந்தார். 1885இல் ஒரு ரொட்டிவியாபாரியாகத் தொழில் புரிந்தார். 1886இல் தெருக்கூத்தாடிகளோடு சேர்ந்து கூத்துக்களில் பாடிக்கொண்டு திரிந்தார். 1887இல் தெருக்கள் தோரும் ஆப்பிள்பழம் விற்று வந்தார். 1888இல் தற்கொலை செய்ய முயன்று தப்பினார். 1889இல் ஒரு வக்கீலிடம் குமாதாவாக இருந்தார். 1891இல் ரஷ்யா முழுதும் கால்நடையாய் நடந்து சுற்றுப்பிரயாணஞ் செய்தார். 1892இல் ரயில்வே ஒர்க்ஷாப்பில் ஒரு தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அவ்வருஷந்தான் அவரது முதல் கதை பிரசுரிக்கப்பட்டது. எழுத்தாளர் இவ்வாறு 15 ஆண்டுகளாய் நாடோடியாய் அலைந்து திரிந்த பொழுது கார்க்கி நன்றாய் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். அனேக அரிய பெரிய கிரந்தங்களை படிக்கவும் சந்தர்ப்பம் பெற்றார். 1892 இல் டிப்ஸி (Tiflis) என்னும் ஊரில் ரயில்வே தொழி லாளியாயிருந்தபொழுது அவ்வூரில் காவ்கா என்ற தினசரிப் பத்திரிகை ஒன்று நடைபெற்றது. அப்பத்திரிகையில் தம் அலங் கோலமான வாழ்க்கையை ஒரு கதையாக எழுதலாம் என்று கருதி மாக்ஸிம் கார்க்கி (Maxim gorki) என்ற புனைப்பெயருடன் தொடர்ச்சியாய் எழுத ஆரம்பித்தார். அக்கதையே மகார்சட்ரா என்ற அவரது முதலாவது நூலாக பிரசுரிக்கப்பட்டது. அக்காலத் தில் கதைகள் எழுதுவதில் பெரிய நிபுணராயிருந்த கெளலெங்கோ என்பவர் நட்பும் கிடைத்தது. பொதுஜனங்களெல்லாரும் கார்க்கியின் கதைகளை மிகவும் ஆவலோடு வாங்கிப்படித்து வந்தனர். 1895ஆம் ஆண்டிற்குள் அவரது புகழ் ரஷ்யாவெங்கும் பரவிற்று. பிரபலமான பத்திரிகைகள் எல்லாம் அவரது கதை களைப் பிரசுரித்தன. செல்கா (chelkash) என்ற கதையை செயிண்ட் பீட்டர்பர்க் பத்திரிகை (St. Petersburg Review) பிரசுரித்தது. இரண்டாண்டிற்குப்பின் அதாவது 1897இல் அவருடைய கதைகளெல்லாம் புதகரூபமாய் வெளிவந்தன. அதினால் அவருக்கு அதிகமான பேரும் புகழும் உண்டாயிற்று. கார்க்கி ரஷியாவில் கலைஞானப் பொக்கிஷமாகப் போற்றப்பெற்ற டால்டாய்க்கு சமமான பெரியராக மதிக்கப்பட்டார். சிறிது காலத்தில் அவர் உலகம் போற்றும் ஓர் அறிய கலைவாணராய் மதிக்கப்பெற்றார். அவரது கதைகள் பெரும்பாலும் ஏழைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அரிய சித்திரங்களாகவே இருக்கும். கதைகளெங்கும் வறுமைக் காட்சிகளே மலிந்திருக்கும் அவரது வாழ்க்கையில் கண்ட அனுபவங்களை உள்ளத்தை உருக்கும் உயர்ந்த கதையாக அவர் சித்தரித்துக்காட்டியிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. தாழ்வான் உயரம் (The lower depths) என்று அவரால் எழுதப்பெற்ற நாடகம் 1903இல் பெர்லின் நகரில் சேர்ந்தாற்போல் 500 நாட்கள் நடித்துக் காண்பிக்கப்பெற்றது. கார்க்கி பெண்களைப்பற்றியும் ஏழைகளைப்பற்றியும் சமூகப் பிரஷ்டர்களைப் பற்றியும் பரிந்து பல நூற்களில் குறிப்பிட்டு அவரது நிலையை மாற்ற அரும்பாடு பட்டுள்ளார். அதனால் அவரது நூற்கள் மக்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. அவருக்கு பேரும் பெருமையும் பெருகிற்று. அவரது நூற்களில் எத்துணைப்பிரயாணி (My fellow traveller) இருபத்தாறு ஆண்களும் ஓர் பெண்ணும் (Twenty sixmen & a girl) என்ற கதைகள் உலகப்பிரசித்தி பெற்றன. 1899-லிருந்து அவர் ரஷ்ய அரசியல் கட்சியாரோடு கலந்து உழைக்க ஆரம்பித்தார். அதனால் அவர் ரஷ்ய சர்க்காரால் கைது செய்யப்பட்டார். அவரது சிறைவாசம் அவரது புகழை மேலும் மேலும் பரவச் செய்தது. 1905இல் அவர் ரஷ்யப்புரட்சிக் காரர்களோடு சேர்ந்து பெருங்கிளர்ச்சி புரிந்தார். அதனாலும் அவர் சிலகாலம் சிறைக்கோட்டம் வதிந்தார். 1906இல் அமெரிக்காசென்று ஜாரின் கொடுங்கோன்மையைக் கண்டித்துப் பிரசாரம் புரிந்தார். 1907இல் அவர் கேபிரி என்னும் ஊரில் இருந்த பொழுது தோழர் லெனின் அவர்களின் நட்பைப்பெற்றார். 1913இல் செயிண்ட் பீட்டர் பர்க் என்னுமிடத்திற்கு வந்து லெடோபிக் (LETOPIC) என்னும் பத்திரிகையை ஆரம்பித்தார். மகா யுத்தகாலத்தில் தன் நாட்டிற்காகப் போரிட்டு காயமடைந்தார். உலகிலுள்ள பெரும் பாலான புலவர்களெல்லோரின் தோழனாகிய க்ஷயரோகம் இவரையும் பற்ற ஆரம்பித்தது. இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாது 1917இல் நடந்து புரட்சிக்கு தன்னால் இயன்ற எல்லா உதவியையும் செய்து வந்தார். போல்ஷ்விக் புரட்சியின் வெற்றிற்குப்பின் புதுசர்க்காருக்கு கார்க்கி ஒரு கலைஞான மந்திரியாகத் திகழ்ந்தார். அவர் ரஷ்யாவில் செய்துள்ள கலாபிவிருத்தியைக் கண்டால் எந்த முதலாளித்வ நாடும் திடுக்கிட்டுவிடும். முதலாளித்வ வல்லரசுகள் கனவிலும் நினைக்க முடியாத அளவு ரஷ்யாவில் கலைகளை வளர்த்து விட்டார். 1922இல் அவரது உடல் மிகத் தளர்ச்சியுற்றது. சிலகாலம் ஜெர்மானிக்குப்போய் திரும்பி ரஷ்யாவிற்கு 1928இல் வந்தார். ரஷ்யா அவரை அன்புடனும் அளவற்ற அகழ்சகியுடனும் அவரை வரவேற்றது. அவர் ஏழைத்தொழிலாளர்க்காக எழுதிய நூல் தாய் (Mother) என்ற உயரிய புத்தகமாகும். இந்நூல் 1907இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டது. அக்கதை சோவியத் ரஷ்யாவில் பிரபல சினிமாப்பட உற்பத்தியாள ரான ஈய்சென்டின் என்பவரால் பேசும் படமாக பிடிக்கப்பட் டிருக்கிறது. இந்நூல் உலகிலுள்ள முக்கியமான பாஷைகளில் எல்லாம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. நமது நாட்டிலும் ஹிந்து பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் மொழி பெயர்க்கப்பட் டிருந்தது. (இப்பொழுது சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன) இந்நூல் ரஷ்யாவில் புரட்சிக்காரர்களின் ஆரம்பத் தோற்றத்தைப் பற்றி எடுத்துக் காட்டுகிறது. 1933இல் ஜெர்மனிக்குள் கார்க்கியின் நூற்கள் வரக்கூடாதென்று ஹிட்லரால் தடைசெய்யப் பட்டிருக்கிறது. கார்க்கி எழுதிய நூற்கள் பல. அவைகளிற் பெரும்பாலான வைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. முக்கிய மாகக் குறிப்பிடத்தக்கன. (1) “Childhood”(2) “In the world” (3) “My universities” (4) “Recollections” (5) “Fragments from my diary” (6) “The Artamonoo’s Business” (7) “Bystander” (8) “The Magnet” (9) “Other fires” (10) “On guard of sovret union” என்பவைகளேயாகும். அவரது கதைகள் ரஷ்யா அக்காலத்தில் இருந்த உண்மை யான நிலையை கண்ணாடிபோல் எடுத்துக்காட்டும். அக்காலத்தி லுள்ள கஷ்டங்களையும், சிக்கல்களையும் போக்கக்கூடிய யோஜ னைகள் பல அவரது கதைகளில் மிளிரும். ஆனால் அவரது கதை களிலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் முதலாளித்வ முறைகளை வேருடன் வீழ்த்தும் பாணங்கள் என்று கூறலாம். எனவே கார்க்கியின் நாவல்கள் முதலாளித்வ நாட்டிலுள்ள புலவர்களுக்கு பிடிக்கவில்லை. கார்க்கியின் நாவல்களில் சம்பாஷணைகள் மிகுதி. அணிகளும், தொடருமில்லை என்று குறை கூறினார்கள். ஆனால் கார்க்கியின் நூற்கள் இன்று உலகமக்களெல்லாம் போற்றக்கூடிய வைகளாய் பிரக்யாதி பெற்றுவிட்டன. உலகத்தொழிலாளர் உள்ளத்தைக்கொள்ளைகொண்ட பேரறிஞர், ரஷ்யக்கலைஞானச்சக்கரவர்த்தி கார்க்கி தம் 68ஆம் வயதில் அதாவது 18-6-1936இல் பலவீனத்தினாலும் சளிஜுரத்தி னாலும் மாகோவில் மரணமானார்.  சமயச் சீர்திருத்தக் கட்டுரைகள் 1. திராவிடன் 2. நாரதர் 3. சித்ரபுத்திரன் 4. அ.ப. ஆதித்தர் 5. ஏய ஹிந்து மதம் (திராவிடன்) உள்ளதை உள்ளபடி உரைக்காமலிருப்பதும் இல்லாததையும் கற்பித்துரைப்பதும் உலகில் சகஜமே. எனவே உண்மைக்கு முரணுறா வண்ணம் எனது சிற்றறிவிற்கு எட்டியவரை ஹிந்து மதத்தைப் பற்றிச் சிற்சில முக்கிய விஷயங்களை வெளியிடுகின்றேன். ஏனெனில் நாம் நாட்டு மக்களின் முதற்பகுதியினர் இந்து மதத்தைத் தழுவி யொழுகியவர்களே யாயினும் சுயநலமும், குறுகிய நோக்கமு முடைய புரோகிதர் ஆட்சியின் பயனாக இம்மத உண்மையை அநேகர் அறியாமலிருப்பது மன்னியில் அவ்வறியாமையின் பயனாகவும், அறிந்தோர்களெனக் கொள்ளும் வகுப்பினர் களின் அகந்தையினாலும் மதத்தின் பெயரால் மக்களை மாக்களைவிட கேவலமாக நடத்திவருவதின் பயனாகவும் உண்டாகும் தீமை களையும் ஊன்றிப்பார்க்கும் பொழுது மானிட இயற்கை யுடைய மக்களின் உள்ளம் குழம்பாமல் இருக்கமுடியாதென்பதற்கு ஐயமில்லை. எனவே ஊக்கமுடன் மதத்தின் பெயரால் நடத்தி வருகின்ற இயற்கைக்கு முரணுற்ற அக்கிரமங்களுக்கு இடம் கொடுக்கும் இம்மத உண்மையை நன்குணர்தலும் ஏனையோரை உணரச்செய்தலும் உண்மை மக்களது கடமையெனக் கருதுகிறேன். இவ்வார்த்தையானது இந்து மதம் என இருபதங்களின் புணர்ச்சியாகும். இவ்விரண்டு பதங்களின் முற்பகுதியாகிய ஹிந்து என்ற பதமானது மகா யுத்தகாலத்தில் மேல் நாட்டில் பிறந்த யுத்தக்குழந்தை (War Babies) களைப்போன்று விலாசமற்ற நிலையில் எப்பாஷையைச் சார்ந்ததெனக் கூறுதல் முடியாதென அகராதி ஆராய்ச்சிப் பயனாகக் கிடைக்கின்றன. எனினும் இம்மதமானது ஹிந்து எனப் பாரசீகமொழியின் பரிணாமமெனக் கொள்ளல் மிகையாகா. அப்பாரசீகமொழியான ஹிந்துஎன்பதின் கருத்தும், அப்பதமெவ்வாறு ஹிந்து என்று மாறிற்றென்றும் அவ்வாறு மாறிய பரிணாமப்பதமான ஹிந்து என்பதின் கருத்தும் காரியகாரணப் பொருத்தமுறைகளையும் பின்னர் காண்போமாக, பிற்பகுதியாகிய மதம் என்ற பதத்தின் இலக்கணம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமேயாகையால் முதலில் அப்பதத்தின் இலக்கணத்தை ஆராய்வோம். மதம் ஏது? மதமென்பதன் பொருள் கொள்கை. அதாவது மனம், வாக்குகாயமென்னும் முக்காரணங்களையுமோர் நியமவரையறைக் குட்படுத்தி மனித இயற்கையாகிய சன்மார்க்க நெறிவழுவாமல் ஒழுகி மக்களது வாழ்க்கையின் நோக்கமாகிய வீட்டைச் செய்யும் ஆதிக முறை எதுவோ அதுவே மதமாகும். விரித்துரைக்கின் சிறு விளக்கினின்றும் கொளுத்திய பெரும் தீபத்தைப் போல் பெரும் பரப்புடைய தெனக்காணலாம். அதாவது ஜீவாத்மா சுதந்தரமா, அன்றி அடிமையா? ஜீவிதானுபவங்கள் தாமாகவே ஏற்படுவதா, அன்றி பிறரால் ஏற்படுவதா? இப்பிரபஞ்சமானது ஆத்ம சிருஷ்டியா அல்லது அன்னிய சிருஷ்டியா? பிரபஞ்சம், பிரகிருதி, மூலப்பிரகிருதி இவைகளின் சம்பந்தமென்ன? என்பன போன்ற வாதிக்கக்கூடிய விஷயங்களினின்று சித்தாந்தங்களை ஆராய்ந்து காரிய காரணப் பொருத்த சித்தாந்த கொள்கைகளிடையே ஊடுருவிப் பாய்கின்ற தத்துவசாதிரீக புத்தியையடையக்கூடிய பரம்பொருளாகிய இறைவனை அப்பரம்பொருளின் தர்மங்களை இயற்கை சம்பவங்களி னின்றும் அறுமானம் செய்து அந்த அந்த தர்மங்களுக்கு அனுகூல மான முறையில் ஆனந்தசித்திக்கெனமுயலல் வேண்டுமென்கின்ற உணர்ச்சிதான் (முற்றிலும் பயபக்திகள் வைத்தொழுகும் மனோதர்மம்) மதமென்பது மக்களால் அறிந்து கொள்ள முடியாத ஒரு திவ்விய தேசமானது எக்காலும் அம்மனோதர்மத்தை உலக முறைக்கு முரணுமாறு விளக்கிக் கொண்டிருக்கின்றன. சுருங்கக்கூறுமிடத்து மதத்தின் தத்துவ சித்தாந்தங்களானது மனோவாக்கு காயங்களுக்கு எட்டாத தன்மையுற்ற சின்மயமாகிய அதீதபரம்பொருளில் பக்திலயித்து சகோதரத்துவம், சமயத்துவம், சுதந்தரமென ஈவரசை தன்ய விசேட தன்மைகளின் மீது ஆதாரமாகக்கொண்டு மக்கள் நிலைமைக்கப்புறப்பட்ட சன்மார்க்க அறநெறியுறுமாறு செய்யும் முறை எதுவோ அதை மதமெனக்கொள்ளத்தகும். என்ற பரந்தநோக்கமுடைய ஆதிகப்பெரியோர்கள் பலர் கூறுகின் றார்கள். கெதாறு தெதிலோ லோகோ நலொகப் பார்ததிகா என்ற பிராமணப்படி உண்மைத்தத்துவங்களை ஆராய்ந்தறியாமல் கற்றோரையாயினும் அன்றிமற்றோரையாயினும் கண்மூடித்தன மாய் பின்பற்றி யொழுகும் முறையாகிய நம்பிக்கைமதம் என்றும், மக்களது இயற்கைக் குணமாகிய வீடய விவேக முறைவழுவா வண்ணம் ஆராய்ச்சி செய்து உண்மையை உணர்ந்து பரப்புவது ஆராய்ச்சிமத மென்றும் இருவகைப் படும். இவற்றுள் நம்பிக்கை மதத்தைவிட ஆராய்ச்சி மதமே சாலச்சிறந்தது. இவ்வாராய்ச்சி மதத்தில் இருவகை மதங்கள் காணலாம். ஒன்று யுக்திப்பிராமண வாதிகளாகிய சார்வாகர்களின் நாதிக மதமும் மற்றொன்று பிரபஞ்சம், பிரகிருதி, மூலப்பிரகிருதி என்ற மூன்றுக்கும் ஏற்ற காரிய காரணம் பொருந்திய, சுருதி, யுக்திபருவங்களுக்கேற்ற, இயற்கையனுபவங்களிசைந்தது ஆதிக மதம்? இவ்வாதிக மதத்தில் இந்து மதமொன்றே யெனக்கூறுகின் றார்கள்; ஆயினும் நாதிக மதமும் இவ்ஹிந்து மதத்தில் ஒருபகுதி யெனக்காணலாம். எனவே இம்மதமானது முற்றிலும் ஆதிகமத மல்ல. ஆனால் ஆதிகநாதிகக் கலப்பு மதமெனக் கொள்ளல் வேண்டும். இதைப்பற்றி பின்னர் எழுதுவோம். இந்துவின் இலக்கணம் இனி தலையங்கமாகிய இந்துமதம் என்ற சொல்லின் முற்பகுதியாகிய ஹிந்து என்ற பதத்தின் இலக்கணம் காண் போமாக. ஹிந்து என்ற பதமானது ஹிந்து மதத்தின் ஆகமங்க ளாகிய இருக்கு, யஜூர், சாமம், அதர்வணமென்று சொல்லப்படும் நான்கு வேதங்களிலும் அவ்வேதங்களை யொட்டின சிட்சை, கல்பம், சந்த, ரிருதம், ஜோதிடம் வியாக்ரணம் என்ற ஆறுசாதிரங்க ளிலும், ஏனைய புராண இதிகாசங்களிலும், அந்நூற்களை இயற்றிய பாஷையாகிய சமகிருத (வடமொழி) அகராதியிலும் காணக் கிடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இது ஒருவாறு உண்மையேயாகும். பிங்கதிரியாமலை நாட்டில் குடியிருந்தவர்களாகிய இம் மதகர்த்தாக்களான ஆரியர்கள் (பயிர்த்தொழில் புரிவோர்) பாரசீகதேசத்தில் தலைநகராகிய மாழந்திராணி தேசம் புகுந்து குடியேறினார்கள். சுமார் 5000 வருடங்களுக்குப்பின் ஜலப்பிரளயத் தால் கழிந்ததும், தலைச்சங்கம் ஓங்கி விளங்கியதுமாகிய கபாட தேசம் எவ்வாறு கல்விப்பெருக்குடையதாயிருக்கிறதோ அவ்வாறே மாழந்திராணி தேசமானது மாழந்திராணி பாஷை கல்வியில் தேர்ந்தபண்டிதர்களைக் கொண்டு வடநாட்டில் ஏனைய தேசங் களைவிட சிறப்புற்றோங்கி நின்றது. எனவே ஏனைய வடநாட்டு மக்கள் இம்மாழந்திராணி நகரை தேவநகராக அழைத்து வந்தனர். இந்நகர் மொழியாகிய மாழந்திராணி பாஷைக்கு தேவநகரியென ஆகுபெயர் வழங்கலாயிற்று. அப்பாஷையிலிருந்து தான் இம்மத ஆகம பாஷையாகிய சமஷ்கிருதமுண்டானதெனக் காணலாம். நிற்க; இவ்வாரியர்கள் மாழந்திராணி தேயம்புகுந்து குடியிருந்த காலையில் இவர்கள் (ஆசிரியர்கள்) அந்நகரில் செய்த அக்ரமச் செயல்களினால் இவர்களை அந்நகர மக்கள் ஹிந்துக்கள் என அழைத்தது. மன்னியில் இப்பெரும் அக்ரமதர்களின் நெற்றியில் ஹிந்து என பச்சை குத்தி அத்தேசத்து மன்னரின் கட்டளைக் கிணங்கத்துரத்தி விட்டனர். (பரசுராமர் காத்த வீர்யார்ஜுன ராஜவம்சத்தைக் கருவறுத்தபின்னர் ஆரிய மக்களில் குமாரர்களைக் கொலை செய்த பின்னர் அநேகவயோதிகர்களையும் பெண் களையும் நெற்றியில் நாயின் உருவத்தைப்பச்சைகுத்தினது பரசுராமர் கதை. கேரள சரிதை முதலியன நமக்கு சான்று பகருகிறதை தற்போது ஞாபகத்தில் வைக்கவேண்டும்) எனச்சில அறிஞர் கூறுகின்றனர். சிலர் பங்கதிரியாமலை நாட்டு வாசிகளும் (பங்கதிரியாமலை நாடானது பசிபிக் கடலுக்கும் ஹிந்துகு மலைக்கும் நடுவிலுள்ள காட்டுப்பிரதேசம்) கிருஷிகம், ஆடுமாடு களை மேய்த்தல் முதலிய தொழிலுடையோரும், கோதுமை, பால், தயிர், மாமிசம் குறிப்பாக கோமாமிசம் முதலிய உணவும், மரவுரி, மான்தோல் முதலியவற்றை உடையுமாகக்கொண்ட ஆரியர்களில் ஒரு கோடியினர் ருமேனியா , ஜெர்மனி முதலிய தேசங்கட்கும், மற்றொரு கோடியினர் பாரசீகதேசத்துக்கும், மற்றொரு கோஷ்டியினர் நமது தேசத்திற்கும் குடிபுகுந்தார்களெனக் கூறுகின்றனர். எவ்வாற்றாயினும் நம் தேசத்தில் மூன்றாவது ஜாதியாக ஆட்சிநடத்தின தயுகள் காலத்தில் அதாவது சுமார் 3000 வருஷத்துக்கும் 4000 வருஷத்துக்குமிடையில் (சோமேசந்திரதத்தர் முதலியோரின் அபிப் ராயம்.) நம்நாட்டையடைந்த ஆரியர்கள் (கிருஷிகர்கள்) பெரிய ஒரு நதியைக் காணவே அதைத்தாண்ட முடியாது. அந்நதியின் கரையோரத்தில் வசித்துவந்தனர். அவர்களின் பெயரால் அந்நதிக்கும் ஹிந்து என்ற பெயர் வந்ததென்றும் அவர்கள் கையாண்ட முறையை அன்னவர்களின் பெயரால் ஒரு மதமெனவும் பெயர் வந்ததென்றும் கூறுகின்றனர். எது எப்படியிருந்தாலும் அன்னவர்கள் ஹிந்து நதிக்கரையில் குடியேறியது உண்மையென இன்றைக்கும் அவ் வகுப்பினர்க்கிடையே குடியிருக்குமிடத்தை ஆறு. என பரிபாசையி னாலழைப்பதிலிருந்து நன்கு புலனாயிற்று. உதாரணமாய் ! அடி! அப்பா ஆத்தில் இல்லை என்றால் அப்பா வீட்டில் இல்லை யெனப்பொருள் கொள்வது வழக்கம். இப்படி ஹிந்து நதிக்கரையில் குடியேறிய அவர்களை நம்நாட்டில் இரண்டாவது ஜாதியாக ஆட்சி நடத்திய திராவிட மக்களால் அக்கரையோரத்தினர் என்றழைக்கப் பட்டது. அவ்வாறு அழைக்கப் பெற்ற பரிபாஷையானது தான் அக்ரஹாரம். இப்படி வசித்துவந்த ஹிந்துக்களால் சுயநலங்கருதி வரையப்பெற்ற மதக்கோட்பாடுகளுக்கு அன்னவர்களின் பெயர் காரணப்பெயராக வந்தெனக் கூறுகிறார்கள். ஹிந்து என்ற பதமானது பாரசீகபாஷையேயாகும். இப்பதத்திற்கு அப்பாஷையின் அகராதியில் ஹராம் ஜதா (அதாவது) சோரபுத்திரன் துன்மார்க்கன், துஷ்டன், இழிவாக்கப்பட்டவன், வழிப்பறிசெய்வோன், வேசிமகன், (அடிமை என்று பொருள்) என்று பொருளுள்ளது. ஆரியமததாபகரான காலஞ்சென்ற தயானந்த சரவதியின் நண்பரான லேக்ராம் என்பவர் எல்லைப்புறங்களில் இவர்கள் சாதாரணமாக கொள்ளை, கொலை முதலியன புரிந்து வந்தமையால் இவர்களுக்கு ஹிந்து எனப் பெயர் வழங்கலாயிற்று என்று கூறுகி றார்கள். ஹிந்து என்ற பதத்தின் முதல் எழுத்தாகிய ஹி என்பது ஹீ என மாறிவிட்டதென்று சாமி தயானந்த சரவதி ஒப்புக்கொண் டிருக்கிறார். எனவே ஹிந்து என்ற பதமானது ஹிந்து என்று மாறின காலை அதன் மூலப்பதப்பொருள் எதுவோ அதுவே இப்பதத்திற்கும் பொருள் என்பது கீழ்க்காணும் உதாரணங்களால் நன்கு விளங்கும். 1. ஹிந்து:- கருப்பு நிறமுடையோன் 2. ஹிந்து:- திருடன், வேசிமகன் முதலியன. 3. ஹிந்துப்பெண்:- சூன்யவித்தையில் சிறந்த பெண். 4. ஹிந்து அல்லது தவாத:- கருப்பு நிறமானவை. 5. ஹிந்து யேசர்க், ஹப்தம்:- ஜுஹல் என்கிறசனி நட்சத் திரத்தை அல்லது ஒரு இருண்டதுற்குறி. 6. ஹிந்து யேது:- அடிமையாளாகவும், நீ இருக்கிறாய். 7. ஹிந்து :- பணியாளன், அடிமை கடுமையான வழி கெட்ட வன் என்பனவாம். இப்பொழுது ஆரியர்களின் குருவாகிய காலஞ்சென்ற தயானந்த சரவதி முதலியவர்கள் தாங்கள் ஹிந்துக்களல்ல வென்றும், தங்கள் மதமானது ஹிந்துமதமல்லவென்றும் சாதிக்க முயல்கின்றனர். ஆனாலிது பயனற்ற வீண்முயற்சி யென உள்ளங்கை நெல்லிக்கனிபோன்று நன்கு விளங்கிவிடுகின்றது. எனினும் ஹிந்து என்ற பெயராலிம்மதத்தை யழைப்பதற்கு இம்மதப்புரோகிதர்க ளாகிய ஆரியர்களுடைய அடாச்செயல்களே அன்னவர்களா லியற்றப்பெற்றதும், இந்துமத ஆகமங்களெனக் கொள்ளுகின்றவை களுமான வேத, சாதிர, புராண, இதிகாசங்களில் காணப்படுகின்ற ஆபாசமான பிரமாணங்களே இங்கு சான்று பகருகின்றன. விதவைகள் ஸ்ரீபோகம் வைத்து பல ஆண்டுகளுடன் பல்லாண்டு சிற்றின்ப சுகமடையவும், தாய் மகனென முறையின்றி விபசாரம் செய்யவும், மதுபானம் முதலிய மாபெரும் தீங்குறும் செயல்களை எளிதில் செய்யவும் மற்றும் மாக்கள் நெறிபோன்று மக்கள் ஜீவிக்க இம்மத ஆகமங்களான வேதங்களே யிடமளிப்பின் ஏன் இம்மதத்தை ஹிந்து மதமென்றழைக்கக்கூடாதென வினாயெழும் பாமலிருக்க முடியாது. இம்மதக்கோட்பாட்டின் படியுள்ள ஈவரர்களே, - தேவர்களே - அவதார மூர்த்திகளே, - கற்பழித்தல், களவாடல், பொய் முதலிய பாதச் செயல்களுக்குக் களஞ்சியங்களா யிருப்பின் இப்பெயராலன்றி, மற்றெப்பெயராற்றான் அழைக்கக் கூடுமென நேயர்கள் கேட்கக்கூடும். வேதசாதிரபுராணாகிகளைப் பற்றி பின்னர் வரையவேண்டியதிருப்பதால் தற்போது விரிக்காமல் விடுகின்றோம். இந்து மதத்தைத் தழுவின சாதாரண ஜனங்களும் கூட இம்மதத்தின் பெயரான ஹிந்து என்பதன் இலக்கணத்துக்கிணங்கி ஜீவித்தனரே யாதலால் இப்பெயரானது இந்து மதத்துக்கு தகுந்த காரணப் பெயரேயாமெனக் கொள்ளல் மிகையாது. ஏனெனில் இம்மத சித்தாந்தப்படி ஆதியுகமெனக் கொள்ளும் கிரேதாயுகத்தில் மனுவென்றவராலியற்றப்பெற்ற தர்மசாதிரமான மனுதர்ம சாதிரத்தை ஆராய்ச்சி செய்வோமாயின் ஹிந்து எனும்பெயர் இம்மதத்திற்குச் சாலத்தகுந்த காரணப் பெயராய் அமைந்ததெனவும் காணலாம். உதாரணம்:- 1. வர்ணத்தைக்களவாடின பிராமணன் சிலந்திப் பூச்சி யாகவும், ஸர்ப்பமாகவும் ஓணானாகவும், நீரில்வதியும் ஜந்துக்க ளாகவும் பிசாசுகள் ஆகியவற்றின் ஜன்மங்களை ஆயிரக்கணக்கான தலை முறைகள் ஜென்ம மெடுப்பான் (மனு 12-57) 2. மாணிக்கம் வைடூரியம், முத்து, பவளம், முதலிய உயர்ந்த வதுக்களைத் திருடுகிறவனும், கொள்ளையடிப்பவனும், தட்டா னாகப் பிறப்பான். (மனு 12-61) 3. தானியத்தைத்திருடுகிறவன், எலியாகவும், வெங்கலத்தைத் திருடுகிறவனும் ஹம்ஸமாகவும், தண்ணீரைத்திருடுகிறவன் தவளை யாகவும், நீர்க்காக்கையாகவும், தேனைத்திருடுகிறவன் நாயாகவும், பாலைத் திருடுகிறவன் காக்கையாகவும், நெய்யைத்திருடுகிறவன் கீரியாகவும் பிறப்பான் . (மனு 12-62) 4. மாமிஸத்தைத் திருடுகிறவன் கழுகாகவும், கொழுப்பைத் திருடுபவன் பருந்தாகவும், எண்ணையைத் திருடுபவன் வெளாவா லாகவும், உப்பைத்திருடுபவன் சுவர்க்கோழியாகவும், தயிரைத்திருடு பவன் துர்க்குறிப்பெயரையுடைய ஓர் உயிர்ப்பிராணியாகவும் பிறப்பான். (மனு 12-63) 5. பட்டாடையைத்திருடுபவன் ஊர்க்குருவி, கௌதாரி யாகவும், நார்த்துணியைத் திருடுபவன் தவளையாகவும், பருத்திநூல் துணிகளைத் திருடுபவன் கிரௌங்குசப் பக்ஷியாகவும், பசுவைத் திருடுபவன் கழுதையாக அல்லது உடும்பாகவும், வெல்லத்தைத் திருடுபவன் வாகுதப் பக்ஷியாகவும் பிறப்பான். (மனு-12-64) 6. கதூரி முதலியவைகளைத் திருடுகிறவன் சுண்டெலி யாகவும், பசும் கீரையைத் திருடுபவன் மயிலாகவும், தான்யவகை களைத் திருடுபவன் முள்ளம்பன்றியாகவும், பச்சைத் தானியங்களை கொள்ளையடிப்பவன் சல்லிய மிருகமாகவும் பிறப்பான். (மனு 12-65) 7. நெருப்பைத் திருடுபவன் நாரையாகவும், இந்திரம், அம்மி முறம், துடப்பம் முதலியவைகளைத் திருடுபவன் சிலந்திப்பூச்சி யாகவும், வர்ணத்துணிகளைத் திருடுகிறவன் சகோதரப்பக்ஷியாகவும் பிறப்பான். (மனு12-66) 8. பிரேதத்தையும், யானையையும் திருடுகிறவன் செந்நா யாகவும், குதிரையைத்திருடுகிறவன் கரடி, அல்லது புலியாகவும், பழம் கிழங்கு இவைகளைத் திருடுகிறவன் குரங்காகவும், திரீயைத் திருடுகிறவன் கரடியாகவும், தாகசாந்திக்காக வைத்திருக்கும் தண்ணீரைத்திருடுகிறவன் சாதகபக்ஷியாகவும், வண்டிமுதலிய ஏறுவாகனங்களைத் திருடுகிறவன் ஒட்டகமாகவும், பசுக்களைத் திருடுகிறவன் செம்மறியாடாகவும் பிறப்பான். (மனு 21-67) 9. மேல் கூறப்பட்ட பாபங்களைப் பெண்ணானவள் செய்வா ளாயின் மேலே கூறினபடி அந்தந்த இனத்தின் பெண்ணாகப் பிறப்பாள் (மனு 12-69) ஆதலின் ஹிந்துமத சித்தாந்தப்படியுள்ள நான்கு யுகங்களின் கண் முதன்மையானதும், சிறந்ததும், ஒழுக்கமுடைய மக்களைக் கொண்டதெனவும் கொள்கின்ற கிரேதாயுக தர்ம நூலாகிய மனுதர்ம சாதிரத்தின் கண் மேற்கூறினவாறுள்ள தண்டனைகளை விதிப்பதிலிருந்து இம்மதத்தினர்களின் ஜீவியம் ஆதிகாலத்திலேயே மனித இயற்கைக்கு முரண்பட்ட முறையில், களவு, வழிப்பறி, கொள்ளை முதலியவைகளில் தலைசிறந்தோங்கினோர் எனவும் அதிலும் குறிப்பாக மாணிக்கம், முத்து, வைடூரியம், பவளம் முதலிய விலையுயர்ந்த பொருட்களையும் தண்ணீர், தேன், பால், தயிர், மோர், நெய், மாமிசம், கொழுப்பு, எண்ணை, உப்பு, கீரை, தான்யம் முதலிய ஆகாரபதார்த்தங்களையும், பட்டுப்புடவை, நாருடைகள், பருத்தி யாடைகள் முதலிய உடைகளையும் கதூரி முதலிய வாசனைப் பொருட்களையும் கன்று காலிகளின் உணவாகிய புற்பூண்டு களையும் இந்திரக்கல், அம்மிமுதலிய தட்டுமுட்டுச் சாமான் களையும், முறம், துடப்பக்கட்டை முதலிய கேவலப்பொருட் களையும், யானை, குதிரை முதலிய ஏறுவாகன மிருகங்களையும், பெண்களையும் உயிரற்ற பிணங்களையும் கூடத்திருடுவதும் கொள்ளையடிப்பதும் இவர்களிடையே சர்வ சாதாரணமாக நடைபெற்றிருந்ததென நன்கு புலனாகிறது. ஆனால் துடப்பம், முறம், உயிரில்லாப் பிணம் முதலியவைகளைக்கூட திருடுவார்க ளாயின் இவர்களது திருட்டுத்தொழிலானது எவ்வாறு தலைசிறந்தோங்கியிருந்ததென நன்கு புலனாகும். இதுமட்டுமல்ல. உயிரற்ற பிணங்களைத் திருடுவதென்றால் நேயன்மீர்! நீங்கள் விந்தையுறலாம். ஆனால் மனுதர்ம சாதிரசான்றுக்கு மனுதான் பொருப்பாளியெனக் கூறல் அனாவசியமெனக் கருதுகிறேன். ஆயினும், வேதியரும், பிரம்மமுக நாதரும், இறைவனுக்குச் சமமென நடிப்போருமான ஆரிய மக்களுக்கிடையே கலியாணமாகாமல் பெண்கள் இறந்துவிடின் அவ்வமங்கிலியை சுமங்கிலியாக்கி மோட்சம் சேர்ப்பான் வேண்டி வேத சாதிரவிதிப்படி அப் பிரேதத்தை முறைவரனைக் கொண்டு விவாகமுறைப்படி புரோகி தர்கள் சடங்குகளுடன் விவாகம் செய்வித்துஅப்பிணங்களைப் புணரச்செய்யவேண்டுமென இம்மதம் கட்டளையிடுகின்றது. ஆனாலிக்காலமது நடைபெறுகிறதோ அன்றி நாகரீகப் பெருக்கால் நின்று விட்டதோ யாமறியோம். உடன் கட்டை யேறுதல் நின்றது போன்று நில்லாவிடினும் தாங்களாக நிறுத்தியிருக்கலாம். அன்றி இரகயமாகவும் நடைபெற்று வரலாம். எவ்வாற்றாயினுமிக் கொள்கை யனுஷ்டானமானது மக்கள் நெறியை விடவும் மிக்க கேவலமேயாம். மாக்கள் உயிரில்லாப் பிணப்புணர்ச்சியை வெறுக்கின்றன. இவ்வாற்றாயின் சாதாரண மக்கள் பிணங்களைத் திருடுவதாயின் நாம் விந்தையுறயிடமில்லை யென்பது திண்ணம். இப்படி விரிவுரைகள் இம்மத விஷயமாக பின்னர் எழுதும் விஷயங்களால் விளக்கலாமெனக் கருதுகின்றமையால் விடு கின்றேன். இத்துடன் இம்மதத்தின், வேத, சாதிர, புராண, இதிகாச, சாத்திரநூல்களின் உபதேசங்களும் அவ்வுபதேசங்களின் படியொழுகும் மக்கள் அறநெறிவிடுத்து அநித்திய வாழ்க்கைக் குறியதும் முற்றிலும் மக்களை விட மிகக்கேவலமான நிலைமையில் மாபெறும் பாதகங்களான கள், காமம், பொய், கொலை, கொள்ளை, வஞ்சனை, குருத்துரோகம், மாதர் புணர்ச்சி, பிதுர்த்து ரோகம், விதவைவேட்டை முதலியவைகட்கு இடமளிக்கின்றன. ஆனது பற்றி இம்மதத்தை ஹிந்து மதமென்ற பெயராலழைப்பது தகுமெனக்கொள்ளலாமெனக் கருதுகிறேன். இம்மதத்தின் பெயருக்கு இசைந்தவாறு இதன் நிலைமையிருக்கின்றனவாவென ஆகம இலக்கண ஆராய்ச்சிக்குப்பின் முடிவு காட்டல் வேண்டும். ஏனெனில் தர்க்க சாதிரமுறைப்படி ஒன்றை மற்றொன்றினின்றும் பிரித்தறிவான் வேண்டித்தான் பெயர் அவசியமெனவும் ஆனாலப் பெயரால் மட்டும் பொருளை நிரூபணம் செய்யக் கூடாதெனவும் அப்பெயருக்களை சந்தப்பொருளின் குணம், இலக்ஷணம் இவைகளாற்றுன் பொருளை நிரூபணம் செய்யவேண்டுமெனவும் காணுகின்றன. திருஷ்டாந்தமாக எலுமிச்சம் பழமென்ற பெய ரானது அவ்வகுப்பைச் சார்ந்த ஏனைய பழங்களான கிசை, கிச்சலி, ஆரஞ்சு முதலியவைகளிலிருந்து அதைப்பிரிக்கிறது. ஆனாலவ் வெலுமிச்சம் பழமானது அதனுடைய குணப்படி புளிப்பாகவும், குளிர்மையாகவும், இலக்கணப்படி உருண்டதாகவும் மஞ்சள் -நிறமுடையதாகவும் இருத்தல் வேண்டும். ஆனாலொரு பெரியாரே தாமோர் எலுமிச்சம் பழத்தைப் பெற்றதாயும், அது சிகப்பு வர்ணமும் நீண்டதாயும், வாழைப்பழம் போன்ற உறுவமுடையதாயும், சுவை இனிப்பாயிருக்கிறதென்றும் கூறுவாராயின் அப்பெரியோரின் பேரனாகிய 10 வயதுச்சிறுவன் கூட தாத்தா தாங்கள் சாப்பிட்ட அப்பழமானது எலுமிச்சபழமன்று அது கொடைக்கானல் செவ்வாழைப் பழமேயாம் என்று கூறி அப்பெரியாரின் சொல்லை யெள்ளிநகையாடுவான் என்பது திண்ணம். இந்த தர்க்கசாதிர முறைப்படி ஹிந்து மதமெனப் பெயரின் இலக்கணவாராய்ச்சியுடன் மாத்திரம் நில்லாமல் இம்மதத்தின் குண இலக்கணவாராய்ச்சி செய்து முடிவு காண்பதவசியமாதலின் வள்ளுவனார் கூறினபடி நடுநிலைமையாக நின்று பொதுவான ஆராய்ச்சியின் வரை கோல்படி ஆகமம், மூலக்கொள்கை, அனுஷ்டானம், சித்தி முதலியவைகளை ஆராய்ச்சி செய்து முடிவுபண்ணல் வேண்டும். ஆதலின் இம்மதத்தின் ஆகமங்களான வேதசாதிர புராண இதிகாசங்களையும், மூலக்கொள்கை, அனுஷ்டான முறைகளான வர்ணதர்மம், ஆசிரதர்மம் முதலியவைகளையும், சித்தியென முக்தி மார்க்கம் முதலியவைகளைப்பற்றி தொடர்ச்சியாக அடியேனது சிற்றறிவுக்கெட்டினவாறு நியாயவரம்பை மீறாமல் சுருதியுக்தி அனுபவப்படி சுருங்கவரைந்து விளங்கச் செய்யலாமென்றெண்ணு கின்றேன்.  ஆராய்ச்சி முரசு (நாரதர்) தேவர்களுக்குப் புதிய வாகனங்கள் முந்திய யுகங்களில் நமது கடவுள்கள் நினைத்த மாத்திரத்தில், அழைத்த உடனே, வேண்டிய பொழுதில் வந்து காட்சியளித்ததாக நமது வேதங்களும், புராணங்களும் சான்று பகர்கின்றன. ஆனால் இக்காலத்தில் கடவுளின்மேல் எவ்வளவு பக்தியுடையவர்கள் வேண்டினாலும் கடவுளுண்டு என்னும் உண்மையை நிலைநாட்ட அவரது மததர்கள் எல்லோரும் அழைத்தாலும், பூலோகத்தில் அவருடைய பிரதிநீதிகளாய் வீற்றிருக்கும், சங்கராச்சாரியார், பண்டாரச் சந்நிதிகள், ஜீயர்கள் எத்துணை ஆபத்தில் சிக்கிக் கொண்டாலும் கடவுள்கள் வந்து தெரிசனம் ஈய்ந்து அவர்களுக்கு வேண்டும் வரத்தைக் கொடுக்க முன் வரக்காணோம். இவைகளைப்பற்றி யாராவது ஒரு பகுத்தறிவுவாதி வின வினால் இது கலிகாலம், இதில் கடவுள் எளிதில் வரார், என்று கூறி அவ்வச்சமயத்திலுள்ள குயுக்திவாதிகள் கூறித் தப்பித்துக் கொள்ளு கிறார்கள். காலத்தையும் கடவுள்தானே படைத்திருக்கவேண்டும். காலத்திற்கு கடவுள்களைத் தடுக்கும் சக்தியும், புத்தியும் உண்டா? என வினவினால் அவர்கள் என்ன பதில் அளிப்பர்? இவர்க ளெல்லாம் தேவலோக ரகசியத்தை அறியாமல் கூறும் வார்த்தைக ளாகும். கடவுள்களாகிய முத்தேவர்களும் முத்தொழிலாளர்கள். முக்குணங்களை யுடையவர்கள், மூன்றுவித ரூபங்களையுடைய வர்கள், மூன்று விதமான வாகனங்களையுடையவர்கள். சிவனுடைய வாகனம் காளைமாடு. அது பூமியில் மட்டும் நடக்கக்கூடியது. விஷ்ணுவுடைய வாகனம் கருடன். ஆகாயத்தில் மட்டும் பறக்கக் கூடியது. பிரம்மாவுடையவாகனம் அன்னம் இது தண்ணீரில் மட்டும் நீந்தக்கூடியது. நமது மும் மூர்த்திகளும் இவைகளை யெல்லாம் முந்திய மூன்று யுகங்களிலும் வாகனங்களாய் வைத்துக்கொண்டு வேண்டியவர்களுக்கு வேண்டியவாறு சென்று காட்சியளித்து வந்தனர். ஆனால் இக்கலியுக மக்களோ அறியாமை யால் இவ்வாகனங்களை விரட்டிவிட்டு மரத்தினால் காளையும், கருடனும், அன்னமும் செய்து கடவுளுக்கு கொடுத்தனர். பக்தர்கள் அன்பின் பெருக்கால் ஈய்ந்த வாகனங்களை மறுத்ததற்கஞ்சிய கடவுள்கள் அவைகளை ஏற்றுக் கொண்டனர். பக்தர்கள் காட்சிதரும் படி வேண்டும்பொழுது கடவுள்கள் எத்துணை வேகமாய் வரவேண்டும் என்று எண்ணி தனது வாகனங்களை விரட்டினாலும் அவைகளை ஹிம்சித்தாலும் அவைகள் நகர வழியில்லை. தேவர்களும் இது நமது தவறல்ல. மனிதர்களுடைய தவறுதானே, இதற்கு நாம் என் செய்வது, பழைய வாகனமா யிருந்தால் பையப்பையவாவது போய்ச் சேர்ந்துவிடலாம் என்று வாளாயிருந்து விட்டனர். பக்தர்கள் தங்கள் பகுத்தறிவை யுபயோகித்து வாகனங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்திருக்கலாம், ஆனால் பக்தர்களோ கல்லினாலும், செம்பினாலும், வெள்ளியி னாலும், தங்கத்தினாலும் வாகனங்கள் செய்து கொடுத்தார்களே யொழிய, ஒரு உயிருள்ள குதிரை, காக்கை, மீன் போன்றவைகளைக் கொடுத்தார்களில்லை. இதனால் சமயப் பக்தர்களெல்லாம் பெரும் இன்னல்களுக்காட்பட்டனர். நாதிகர்கள் நாட்டில் கோடிக் கணக்காய் மலிந்து விட்டார்கள். எனவே சமயகுருமார்களும், தர்மகர்த்தாக்களும், பக்தர்களும் கூடி ஆலோசனைசெய்து சிவபெரு மானுக்குப் பூமியில் பிரயாணஞ்செய்ய ஓரு மோட்டாரும், பிரம்மாவுக்குத் தண்ணீரில் பிரயாணஞ்செய்ய ஒரு கப்பலும், மகாவிஷ்ணு ஆகாயத்தில் பிரயாணஞ் செய்ய ஓர் ஆகாயக் கப்பலும் வாங்கிக் கொடுத்தால் நினைத்தமாத்திரத்தில் கடவுள்கள் வந்து காட்சியளிப்பார்கள். நீங்கள் எல்லோரும் இஷ்ட சித்திகளை யடையலாம். நாதீகர்களின் கொட்டமும் அடங்கும். மோட்டாருக்கு அமெரிக்காவிற்கும், கப்பலுக்கு இங்கிலாந் திற்கு, ஆகாயக்கப்பலுக்கு ரஷியாவிற்கும் ஆர்டர் கொடுங்கள். விலைசரசமாயிருக்கும். இயந்திரம் அதிககாலம் உழைக்கக்கூடியது. பார்வைக்கு மிக அழகாயிருக்கும். இவைகளை நான் நன்றாய் டெட்பண்ணிப் பார்த்திருக்கிறேன். சரவதியின் தலைவிதி. எனக்கு என்னமோ தலைவிதியில் நம்பிக்கை கிடையாது. என்றாலும், தலைவிதி, தலைவிதி என்று ஜனங்கள் அடிக்கடி கூறுவதால் அவர்கள் பாஷையிலே நானும் தலைவிதி என்றவார்த்தையை உபயோகித்துக்கொள்ளுகிறேன். தேவலோக மெங்கும் சரவதியின் தலைவிதி இதுவா? என்று எங்கும் பேசிக்கொள்ளப்படுகிறது. இதைக் கேட்டு பூலோகத்து மனிதர்க ளெல்லாம் ஆச்சரியப்படுவீர்கள். பூலோகத்தின் அரசாங்கச் சட்டம் வேறு. தேவலோகச்சட்டம் வேறு. இந்திரன், சிவன், பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களின் தானத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அந்த தானத்திற்கு வரவிரும்புகிறவர்கள் கடுமையான தப புரியவேண்டும். தேவர்கள் என்ன சோதனைகள் செய்தாலும் அதற்கு அஞ்சாதிருக்கவேண்டும். அத்தபசை நிறைவேற்றியவர்கள் இந்திரபதவியையோ, பிரம்ம பதவியையோ அல்லது வேறு பதவியையோ பெறலாம். யார் அந்தப்பதவிக்கு வருவதாயிருந்தாலும் இந்திராணி, சரவதி, லட்சுமி, பார்வதி முதலியவர்கள் அவர்க ளுக்கு மனைவியாயிருக்கக்கடமைப்பட்டவர்களே. நகுலன் என்னும் அரசன் இந்திரபதவியைப் பெறக் கடுந்தவம்புரிந்து இந்திரப் பதவியைப் பெற்றதும், உடனே அகதியர் போன்ற பெருந்தேவர்க ளெல்லாம் தேவேந்திரப்பட்டம் நகுலனைப் பல்லக்கிலேற்றிக் கொண்டு தேவலோகத்திற்குக்கொண்டு போனார்கள். மேடையின் மீது மாஜி இந்திரன் மனைவி இந்திராணி புதிதாய் வரப்போகும் புருஷனை எதிர்பார்த்துக்கொண்டு மேடைமீது நிற்பதை இந்திரபதவியை அடையப்போகும் நகுலன் கண்டு அவள் அழகில் மயங்கி விரைவில் அவளிடம் சென்று இன்பந்துய்க்கக்கருதி தன் பல்லக்குச் சுமப்பவர்களெல்லாம் தேவர்களென்று கொஞ்சமும் மதியாமல் விரைவாய் செல்லுங்கள் என்று கூற, தேவ பாஷையில் சர்ப்ப, சர்ப்ப என்று கூறியதும் தேவர்களுக்குக் கோபம் பொங்கி இந்திர பதவியடைந்த நகுலனே! நீ சர்ப்பமாகப் (பாம்பாக) போகக் கடவது என்று சபித்தார்கள். உடனே நகுலன் பாம்பாய் மாறி விட்டான் என்று புராணங்களில் கூறப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பிரம விஷ்ணு, சிவ பதவிகளை யாராவது அடைந்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களென்று நம்புகிறேன். ஆனால் இப்பொழுது ஓர் ஐரோப்பியர் பிரம பதவியைப் பெற்றுவிட்டதோடு பழைய பிரமனைவிட மிக சமர்த்தர். படைப்புத்தொழிலில் பெரும் மாற்றம் செய்து வருகிறார். புதிய உயிர்களெல்லாம் சிருஷ்டித்து வருகிறார். தாயின் கர்ப்பத்தில் பழைய பிரமன் உயிர்களை சிருஷ்டிக்க, புதிய பிரமன் கண்ணாடிக் குழாய்களில் எல்லோரும் பார்க்கும்படி சிருஷ்டித் தொழிலைச் செய்வதோடு எல்லோருக்கும் அத்தொழிலை (உயிர்களை உற்பத்திசெய்யுந்தொழிலை) கற்பித்து வருகிறார். (இவ்விஷயம் நவம்பர் மாதத்திய புதிய உலகம் என்னும் பத்திரிகையின் 8ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது - படித்து உண்மை உணர்க.) இச்செய்தி தேவலோகத்திற்கு எட்டியதும் தேவர்கள் பெருந் திகைப்புற்றனர். புரோபசர் ஹெர்ரிரா என்ற ஒரு கிறிதவ நாதிகனன்றோ பிரமபட்டத்திற்கு வந்துவிட்டான். சரவதி கடைசியாக ஒரு வெள்ளைக்காரனுக்கா பெண்டாக இருப்பது! ஐயகோ! சரவதியின் தலைவிதி இருந்தவாறென்னே! என்று புலம்பித் தவிக்கின்றனர். ஆனால் சரவதி வெளிக்கு அதிகத் துக்கமடைந்தவள் போல் காட்டிக்கொண்ட போதிலும் பழைய பிரம்மாவின் மேல் அதிக வெறுப்பும் புதிதாய் வரப்போகும் பிரம்மாவின்மேல் அதிகக் காதலும் கொண்டிருக்கிறாள் - ஏன் - எனில் பழைய பிரமன் பெரும் வைதீகன். பார்ப்பனன். தற்கால நாகரிகமோ இன்னதென உணராதவன். உச்சிக்குடுமி, மடிசஞ்சி, டவாலி, (பூணூல்காரன்) அன்னவாகனன். எப்பொழுதும் மனைவியை நாவினில் வைத்துக் கொண்டிருப்பதால் சரவதி அம்மாளுக்கு மலஜலம் விஜாசனம் செய்யக்கூட சௌகரியமில்லாது கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாள். புருஷ இன்பத்தை அவனிடம் ஒருநாளும் அடைந்ததே கிடையாது. பிள்ளைகள் பெறுவது கூட அவனது வேலைதான், சரவதி அம்மாள் பெயருக்கும் மட்டுந்தான் பெண்டாட்டி அவனிடம் ஒரு சுகமும் பெற்றாளில்லை. மேலும் பிரமன் வயோதிகன். முறைக்குத்தகப்பன். சரவதி ஏற்கனவே வெள்ளியுடை, வெள்ளி ஆபரணம் வெள்ளைத்தாமரை முதலியவற்றில் பெரும் விருப்புடையவள். வெள்ளையின்பேரில் அவளுக்கு ஒரு தனிப்பிரீதி. கல்வித்தெய்வ மாகிய சரவதி அதனால்தான் வெள்ளைக்காரர்களுக்கு அதிகக் கல்வியைக் கொடுத்தாள். தனது ஜாதி பிரமகுல பெண்ணாகிய ருக்மணி, அருண்டேல் என்னும் வெள்ளைக்காரரை மணந்து கொள்ளும்படி செய்தது இவளது தூண்டுதலே. பழைய பிரமனைப்போல் புதிதாய் வருகிறவன் பெண் உரிமைக் குப் பங்கம் புரிபவனல்ல. பெண்களுக்குமரியாதை செய்பவன். அவன் தனது மனையைச் சமத்துவமாய் நடத்து வதையும், கண்ணாடிக் குழாய்களில் உயிர்களை உற்பத்தி செய்தாலும் அவனது மனைவியின் கர்ப்பத்திலும் சிசுக்களை உற்பத்தி செய்தாலும் தன்னோடு இல்லற வாழ்க்கையைச் செம்மையாய் அனுஷ்டித்து தனது வயிற்றிலும் சில குழந்தைகளை உற்பத்தி செய்வான். குழந்தைகளைப் பெற்று அதோடு கொஞ்சிக்குலவி மகிழ்ச்சியோடிருக்கலாம் என்று கருதி மகிழ்ந்தாள். என்றாலும் புதிதாய் வரப்போகும் பிரமனுக்கு முதல் மனைவி இருக்கிறாள். முதல் மனைவி இருக்கும் பொழுது இரண்டாவது மனைவியாய் சரவதியை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய தேசத்துச் சட்டம் இடங்கொடுக்காது. அதை மீறவும் புதிய பிரமன் இணங்க மாட்டானே என்று சரவதி சிறிது கலங்கிக் கொண்டிருக்கிறாள். ஐரோப்பிய நாகரிகப்படி ஒரு மனைவி இருக்கும்பொழுது அடுத்த பெண்ணை மணப்பதுதான் தவறேயொழிய பிற பெண்களோடு சினேகமாய் இருப்பது, கட்டித்தழுவி டான் ஆடுவதும் ஒன்றாய் வசிப்பதும், முத்தமிடுவதும் பிறவும் தவறல்ல - ஆனால் தன் மனைவியிருக்க வேறு பெண்ணை மணப்பதோ - கர்ப்பமுறப்புணர்ப்பதோ சட்டப்படி தவறு. குழந்தை வேண்டும் என்ற ஆசை ஒருபெண்ணுக்கு உண்டானால் டாக்டர்களிடம் போய்க் கூறவேண்டும் அவர்கள் முன்பின் அறியாத ஆண்களிட மிருந்து இந்திரியத்தை டியூப்களில் பிடித்து வைத்திருக்கிறார்கள். அதை யோனித்துவாரத்தில் கண்ணாடிக்குழாயின் மூலம் செலுத்தி விட்டால் குழந்தை உற்பத்தியாய்விடுகிறது. இதில் பாபமில்லை. விபசாரதோஷமில்லை. சட்டம் ஒன்றும் குறுக்கே வந்து நிற்க முடியாது. இதை சரவதி உணராள். உணர்ந்தால் மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளிக்குதிப்பாள். கர்ப்பத்தடைக்கு கடவுள் வழிகாட்டி விரும்பிய பெண்களுக்கு கர்ப்பத்தடைப் பயிற்சி யளிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கூறியதும் தமிழ் நாடெங்கும் கர்ப்பதடை கூடாது. அது இயற்கைக்கு விரோதம். எங்கள் மதத்திற்கு விரோதம் என்று எங்கும் கூப்பாடு போடப்பட்டது. எங்கும் கண்டனக்கூட்டம் நடந்தது. ஆனால் நமது கலியுகக்கடவுளாகிய சுப்ரமணிய சுவாமிக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் கிடையாது. அவருக்கு ஆண்மையில்லையா? அல்லது கர்ப்பத்தடையை அனுஷ்டிக்கி றாரா? என்பதை ஹிந்துக்கள் கவனிக்கவேண்டும். மனிதர்களுக்கு ஏற்படும் விக்கினங்களை யெல்லாம் நீக்கிக்காக்கும் கடவுளாம், விக்கினேபரராகிய பிள்ளையாருக்குக் குழந்தைக ளுண்டா? முன்னொரு காலத்தில் ஒரு ராட்சத திரி ஏராளமாய்க் குழந்தைகள் பெறுவதை அறிந்து அவள் யோனித்துவாரத்தில் தனது தும்பிக் கையை வைத்து உறிஞ்சி அவள் கற்பத்தைக்கலைத்து மறுபடி குழந்தை உற்பத்தியாகாமல் செய்ததாக நமது புராணங்கள் கூறுவதைப் படித்தும் நாம் கர்ப்பத்தடை முறையை எதிர்க்கலாமா? என்று ஹிந்துக்களிற்சிலர் உணராது கர்ப்பத்தடை முறையை எதிர்க்கிறார்கள். சைவசமய நாயன்மார்கள் மக்களுக்கு வழிகாட்டிக ளன்றோ? அவர்கள் உங்களுக்குக் காட்டிய வழிகளென்ன? பன்றிகள் போன்று பத்து இருபது குழந்தைகளைப் பெற்று உடைக்கும், ஊணிற்கும் வழியின்றிப் பரிதபிக்கும்படி தெருவிலா விடச் செய்தார்? நான்கு நாயன்மார்களும் கர்ப்பத்தடையை ஆதரித்தவர்களே. ஆகையால்தான் அவர்களை நான் ஜீவ காருண்யத்தலைவர்கள் என்று போற்றுகிறேன். அவர்கள் கையாண்ட முறைகள் எதுவாயினும் அவர்கள் நால்வரும் கர்ப்பத்தடைக்கு ஆதரவு காட்டியவர்களே என்பதில் ஐயமில்லை.  பொன் மொழிகள் ஒழுக்கம் நீர் கல்விமான்களுக்கு மரியாதை செய்வதைப்பற்றி அழுந்தப் பேசுகிறீர்; நானும் ஒப்புக் கொள்கிறேன்; ஆனால் கருணையுள்ள மனசும். ஆழ்ந்த கருத்தும், உயர்ந்தோர்பால் மதிப்பு, உலக அனுபவம் நன்மை ஒழுக்கம் சாமர்த்தியம், ஊக்கம், உண்மை விருப்பம், யோக்கியம், இனியகுணம் ஆகிய (நல்லொழுக்கம்) அனைத்தும் ஒரு மனிதனிடம் சூன்யமாகி கல்விமட்டும் சிறப்புற் றிருக்கலாம் என்பதை மறந்துவிடாதீர். பெதர் தர்மம் நீங்கள் செய்யும் தர்மங்கள் புத்திசாலித்தனமாகச் செய்யப்பட வேண்டும். கோயில்கள் கட்டுவதில் நீங்கள் ஏராளமான பணத்தைச் செலவு செய்கிறீர்கள் என அறிகிறேன். கோயில்கள் கட்டுவது நல்ல காரியந்தான்; ஆனால் நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டி அதைக் கோயிலென்று அழைப்பதால் அதற்குள் கடவுள் வந்து விடுவா ரென்று நம்புவது மூட நம்பிக்கையாகும். விபசாரிகளின் வீட்டில் எவ்விதம் கடவுள் இருக்கின்றாரோ அதுபோலவேதான் நம்தேசத்தி லுள்ள பல கோயில்களிலும் கடவுள் இருப்பார் என்பது எனக்குத் தெரியும். (மகாத்மா காந்தி) காதல் இளமைப் பருவத்தில் ஆண் பெண் என்னும் இருபாலர்க்கும் தோன்றுவதாகிய ஓர் இன்ப உணர்ச்சியானது அழகு, அறிவு, நல்லியற்கையினால் உநிதப்பட்டு எழும் அன்பின் வயமாகி ஒருவரையொருவர் இன்றியமையாராய் ஒருங்கு பொருந்தச் செய்யும். ஆண் பெண் மக்களுக்கு இவ்விழுமிய இன்பத்தை யூட்டி அவர்களது வாழ்க்கையைத் தூய்மையடையச் செய்யும் உணர்ச்சியைத்தான் நாம் காதலென்கிறோம். (மறைமலையடிகள்)  பள்ளிக்கூடத்தில் புராணபாடம் (சித்ரபுத்திரன்) உபாத்தியாயர்: அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கிறது? சொல் பார்ப்போம். பையன்: எனக்குத்தெரியவில்லையே சார். உபாத்தியாயர்: ஆதிசேஷன் என்கிற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கிறது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழிகூட நீ கேட்டதில்லையா மடையா? பையன்: நான் கேட்டதில்லை சார். ஆனால், ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும்போது ஒரு சாதிரியார் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதாவது ஆதிசேஷன் விஷ்ணுவின் படுக்கையென்றும், அதாவது விஷ்ணு ராம அவதாரம் எடுத்தபோது இந்த ஆதிசேஷன் லக்ஷ்மண னாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது. உபாத்தியாயர்: ஆமாம் அந்த ஆதிசேஷன் தான் பூமியை தாங்கிக் கொண்டிருக்கிறான் தெரியுமா? பையன்: இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார். உபாத்தியாயர்: என்ன சந்தேகம் சீக்கிரம் சொல். பையன்: பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற ஆதிசேஷன் விஷ்ணுவுக்கு படுக்கையாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார் தாங்குவார்கள்? தவிர லக்ஷ்மணனாக உலகத்திற்கு வந்துவிட்ட போது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்? தயவு செய்து சொல்லுங்க சார். உபாத்தியாயர்: நீ என்ன பகுத்தறிவு படிக்கிறாயோ! அது தான் அதிகப்பிரசங்கமான கேள்விகளைக் கேட்கிறாய். பொறு உன்னை இந்த பரீக்ஷையில் சைபர் போடுகின்றேன். பையன்: இல்லவே இல்லைசார். சத்தியமாய்பகுத்தறிவைப் படிப்பதே இல்லைசார். ராமாயணம்தான் சார் கேட்டேன். தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றிற்று சார். உபாத்தியாயர்: ஆதிசேஷன் தெய்வத்தன்மை பொருந்தி யவன். அவன் ஒரே காலத்தில் பலவேலைசெய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு. அவன் பூமியையும் தாங்குவான். விஷ்ணுவுக்குப் படுக்கையாகவுமிருப்பான். விஷ்ணு ராமனாக உலகத்திற்குப்போகும் போது லக்ஷ்மணனாக கூடவும் போவான் தெரியுமா? பையன்: இப்ப தெரிந்தது சார். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார். அது மாத்திரம் சொல்லிப்போடுங்கள் இனி நான் ஒன்றும் கேட்பதில்லை. உபாத்தியாயர்: என்ன சொல் பார்ப்போம். பையன்: பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான்; சரி அதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அப்புறம் தாங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது சார். உபாத்தியாயர்: என்ன சங்கதி சொல்லு; நான் கோபிக்கிற தில்லை. பையன்: மறுபடியும் பூமியை ஆதிசேஷனை தாங்குகிறான் சார் (தலையை சொரிந்து கொண்டு) ஆதிசேஷனை யார் தாங்க றாங்க சார்? அவர் எதன் மேலிருந்துகொண்டு தாங்கறாங்க சார். அதைமாத்திரம் சொல்லிக்கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப்போதைக்கு இல்லை சார். உபாத்தியாயர்: போக்கிரிப்பயலே நீ பகுத்தறிவை படிக்கி றாய் என்பது இப்போது எனக்கு உறுதியாச்சுது. பொறு பொறு பேசிக் கொள்ளுகிறேன். வாயை மூடிக்கொண்டுபோய் உட்கார் அதிகப்பிரசங்கிப்பயலே.  மதம் (தோழர். அ. ப. ஆதித்தர்) அன்புமிக்க தோழர்களே! பழக்கவழக்கமான சில ஆசார நியமங்களை நீங்கள் அநுஷ்டித்து வருகிறீர்கள். அதனை உங்களது மதமென்றும், மார்க்கமென்றும் கூறிக் கொள்கிறீர்கள். உங்க ளுடைய மதத்தை எவரும் மரியாதை செய்யவேண்டுமென்று விரும்புவீர்களாயின் நீங்கள் பிறமதங்களையும் மரியாதை செய்யவேண்டும். நீங்கள் பிறமதங்களை நிந்தனை செய்வது உங்கள் மதத்தையே அவமானம் செய்வதாகும். உங்கள் மதத்திலிருக்கும் தீமைகளை உடனே உதறித்தள்ளவேண்டும். மக்களுக்குள் மதங்களினால் பகைமையும், சண்டைகளும் வளர்ந்து கொண்டிருக் கின்றன. சமரசநோக்கம் இன்னும் பரவவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதமேசிலாக்யமானதெனக் கூறிக்கொண்டு பிறமதங்களைத் துவேஷிக்கவே செய்கிறார்கள். சாதாரணப்பழக்கவழக்கங்களும் நாளடைவில் மதக் கொள்கைகளாயும், சமயக்கட்டுப்பாடுகளாயும் மாறிவிடுவது சகஜமாயிருக்கிறது. அவைகள் தப்பான பாதையிலும் போய் விடுகின்றன. உதாரணமாக மஞ்சள், பவுடர், மை, திலகம் இட்டுக்கொள் வதைப்போல் விபூதியும் பூசிக்கொண்டால் அதுவும் மதமென்றுதான் சொல்லப்படுகிறது. சுத்தமாக இருப்பதற்காக னானம் பண்ணி னால், தூசி விழாமலிருப்பதற்காக போஜனத்தைச் சுற்றித் தண்ணீர் தெளித்தால், போஜனம் செய்வதற்கு முன்னால் எந்தப்பிராணிக் கேனும் போஜனம் செய்வித்து அதன்பின் தானுண்டால், இன்னும் என்னென்ன காரியங்களைச் செய்தாலும் எல்லாம் மதமென்றே சொல்லப்படுகிறது. மதமென்பது மனதினாலேயே நடைபெற வேண்டிய ஆத் மார்த்தீக விஷயமென்று சிலரும், மக்கள் வாழ்க்கையைச் செந் நெறியில் வகுத்துள்ள மார்க்கமென்று சிலரும் கூறுகின்றனர். இவ்வாறு சில பேரறிவாளர்கள் கூறியபோதிலும் இற்றைநாளில் நடைமுறையிலுள்ள மதமானது மக்கள் முன்னேற்றத்துக்கு ஒரு பெரும் தடையாக இருந்து வருகிறது. அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் ஒத்துவராத பல விஷயங்கள் மதத்தில் புகுத்தப்பட்டு மக்களை மூடர்களாக்கி வருகின்றன. எந்த மதத்தை யெடுத்துக்கொண்ட போதிலும் அந்தமதத்தை ஆரம்பித்த மாதாச்சாரியைக் கடவுள் அவதாரமென்றோ, தூத ரென்றோ நம்பவேண்டியதிருப்பதுடன், நம்மை மிகவும் கீழாக நினைத்துக் கொண்டு இயற்கைக்கு மாறான கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் படியாகச் செய்துவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு மதத்திலும் முடிவான உண்மை ஒன்று இருக்கவே செய்கின்றது. எல்லா மதங்களும் பஞ்ச மகா பாதகங்களை நீக்கும்படியாகவே சொல்கின்றன. ஒவ்வொரு மதத்திலும் கிறிது நாதர் கூறிய பத்துக்கற்பனைகள் பெறப்படவே செய்கின்றன. ஆனால் எல்லா மதங்களும் எழுத்தளவில் காணப்படுகின்றனவேயன்றி செயலளவில் நேர்மாறாகக் காணப்படுகின்றன. சகல மதங்களிலும் இந்து மதக் கொடுமைதான் சொல்ல முடியாததாயிருக்கின்றது. மற்ற மதங்களெல்லாம் ஆறுகள் போலவும், இந்து மதம் கடல் போலவும் பெருமை பேசிக் கொள்ளப்படுகின்றது. இன்று இந்து மதத்தில் ஒருவித பெருமையுமில்லை. இன்றைக்கு புராணசம்பந்தமான பிராமண மதமே இந்து மதமென்று பிரபலமாக விளங்குகின்றது. வேதசாதிர இதிகாசக்கலைகள் யாவும் பிராமண்யத்தையே மதிப்பவையாக இருக்கின்றன. உண்மையான இந்து மதம் மறைந்து விட்டது. அதற்குப் புத்துயிர் கொடுக்கப்பல பெரியார்கள் தோன்றி முயன்றும் இன்னமும் உருப்பெற்றதாகத் தெரியவில்லை. தீண்டாமை, பாராமை, தீட்டு, சடங்கு, யாகம், கருமாதி, கல்லெடுப்பு முதலிய சகல அநாச்சாரங்களுமே இன்றுள்ள இந்து மதத்தில் தலைவிரித்தாடுகின்றன. மதத்தின் முக்கிய தத்துவத்தைக் கை விட்டுவிட்டு மக்கள் வெளிவேஷங்களையே நடத்திக்கொண்டு வருகின்றனர். இதனால் அறிஞர்கள் தங்களை இந்து என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகின்றனர். மதவிஷயங்களில் மூட நம்பிக்கை வைப்பதை நான் ஆதரிப்ப தில்லை. அது வரவரக்குறைந்து வருவதற்கும் நான் சந்தோஷப்படுகி றேன். நான் இந்து மதத்தில் பிறந்தவன்; ஆனால் இந்து என்று சொல்லிக்கொள்ளவாவது, இந்துக்களின் சார்பாகப் பேசவாவது எனக்குப் பாத்தியமிருக்கிறதாவென்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த தேசத்தில் பிறப்புக்கு மதிப்பு இருந்து வருகிறது என்றார் பண்டித ஜவஹரிலால் நேரு. நாமும் பிறப்பின் காரணமாகவே இந்து என்று சொல்லக் கூடிய நிலைமையிலிருக்கிறோமே யன்றி நடைமுறையிலுள்ள மதத்தால் இந்து என்று சொல்லிக் கொள்ளமுடியாது. ஏனெனில் இப்பொழுதுள்ள இந்து மதத்தால் மூடநம்பிக்கைகளும், ஆபாசங் களும் நிறைந்திருக்கின்றன. மக்களால் உண்டாக்கிய இந்து மதம் காலதேச வர்த்தமானங்களுக் கேற்ப மக்களால் மாற்றக்கூடியதாகவே இருக்கவேண்டும். சீர்திருத்தத்துக்கு இணங்கிவராத ஒரு மதமானது இருப்பதைவிட மடிந்து போவது மேலானதேயாகும். எப்பொழுது ஒரு மதம் மக்களைச்சமமாகக் கருதத் தவறியதோ அன்றே அது மனித வாழ்க்கையின் ஒரு பெரும் எதிரி யாய் மாறி விட்டது. நமது மதத்தைச் சீர்திருத்துவதற்கு நாம் ஒருவருடைய தயவையும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. நாம் நமது குருட்டு நம்பிக்கையையும், பழைய துருப்பிடித்த வழக்கங்களையும் தூரத் தள்ளி மதத்தை விட ஜனசமூகமே பெரியது என்று, என்று கருதுகி றோமோ அன்றே நமது மதம் சீர்திருந்திவிட்டது. ஜனசமூகத்தின் கண்ணுள்ள ஒரு சிறிய ஆசாரம் மாறப்போகி ற தால் நீங்கள் உங்கள் மதத்தை இழந்து விடப்போகிறதில்லை என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்காகும்.  எனது தியாகமும், தேசத்தொண்டும் ஏய (எங்களூரில் பிள்ளையார்கள் அதிகம். சந்தனப்பிள்ளையார் சாணிப்பிள்ளையார் மஞ்சள் பிள்ளையார் போன்ற டெம்பரெரிப் பிள்ளையார்கள் தவிர கல்லுப்பிள்ளையார், செம்புப்பிள்ளையார் போன்ற பெர்மனெண்டு பிள்ளையார்கள் பலவுண்டு. ஒரு நாள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள சந்தியிலிருக்கும் கல்லுப்பிள்ளையார் ஒருவர் கனவில் தோன்றி தன் வாழ்க்கை வரலாற்றைக்கூறி கைலாசம் போய்விட்டார். அவர் கூறிய வரலாற்றை உலக க்ஷேமத்தைக் கருதி ஈண்டு வெளியிடுகின்றேன்.) கனவில் கூறிய வரலாறு அன்பனே! நான் முதன் முதல் இப்பூவுலகில் தோன்றியது ஓர் ஆற்றங் கரையாகும். முற்காலத்தில் தேவர்களுக்கு அரசனாகிய தேவேந்திரன் ஒழுக்கயீனமாக நடந்து, சாபம்பெற்று அச்சாபம் நீங்கத் தென் குமரிக்குச் சமீபம் தவச்சாலை ஏற்படுத்தி யாகம் நடத்தியபொழுது அத்தவச்சாலைக்குப் பயன்படுமாறு இந்திரனின் ஐராவதம் என்னும் வெள்ளையானையானது தனது கோட்டால் கீறி மலைமீதிருந்த ஒரு நதியை உற்பத்தி செய்து யாகச்சாலைக்குக் கொண்டுவந்தது. யானைக்கோட்டால் ஏற்பட்ட நதிக்குக் கோட்டாறு என்ற காரணப்பெயரும் ஏற்பட்டது. இப்புண்ணிய நதிக்கரைகளில் பல சிவாலயங்களும் ஏற்பட்டன. யாரோ ஒரு புண்ணியவான் பிள்ளையார் கோவிலும் ஒன்றிருக்கட்டுமென்று அவ்வாற்றங் கரையில் ஒரு சிறு கற்கோவில் கட்டி என்னைப் பிரதிஷ்டை செய்தான். கோவில் கட்டினானேயன்றி சாப்பாட்டிற்கு வழிசெய்ய வில்லை. இரவில் அங்குவந்தடையும் வௌவால் புழுக்கைகளே ஆகாரமாக இருந்துவந்தது. ஆனால் ஆள் நடமாட்டம் அதிக மில்லாது, ஊருக்கு வெகுதூரத்திலே இக்கோவிலிருந்ததால், கள்ளக்காதலர்களும், திருடர்களும் தங்கள் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்வதற்கு எனது கோவிலை நன்கு பயன்படுத்தி வந்தார்கள். நானும் தீராப்பொறியாக இச்செயல்களுக்கு இடங் கொடுத்து வந்தேன். இங்ஙனமிருக்க ஒரு நாள் இரண்டுபேர் கோவிலுக்குள் வந்தனர். என்னைக்கண்டதும் அவர்கள் புன்முறுவல் கொண்டனர். என்னைத் தூக்கிச்செல்ல ஆலோசிப்பதாகத் தெரிந்தது. ஒரு நல்ல இடத்துக்கே கொண்டு போகப்போவதாக அறிந்து அகமகிழ்ந்தேன். ஆற்றங்கரையில் கருமாதிச்சடங்குகள் நடத்த வருபவர்கள்தான் என்னை வழிபட்டு வந்தனர். பூமாலையோ, அபிஷேகமோ, தூபதீபமோ எண்ணெய்நானமோ எப்படியிருக்குமென்று அறிந் திராத எனக்கு ஊர்ப்புரத்தில் தினசரி பூஜையும், அபிஷேகமும், கொட்டு முழக்கும் விசேஷங்களும் - எல்லாவற்றிற்கும் மேலாகக் கொழுக்கட்டையும், அவல்பொரியும், என்றால் யாருக்குத்தான் சந்தோஷம் வராது. ஆகவே அன்று நடுயாமத்தில் என்னைத் தூக்கிச் சாக்கினுள் போட்டு மூட்டையாகக் கட்டிச் சிலர் தூக்கிச் சென்றபொழுது நான் சிறிதளவாவது வருத்தப்படாமல் மேல் வரப்போகிற பவிஷுகளை எண்ணியெண்ணி இறும்பூது எய்தினேன். நல்ல அரசமரத்து நிழலில் அழகாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கோவிலுக்குள் மேளதாளங்கள் முழங்க, பார்ப்பனர்கள் வேத கோஷம்செய்ய என்னைப்பிரதிஷ்டை செய்தார்கள். நாற்பதுநாள் மண்டல பூஜையும், பின் தினசரிப்பூஜையும் நடந்தது. கார்த்திகை முதலிய விசேஷகாலங்களில் என்பாடு கொண்டாட்டந்தான். ஒரே ஒரு குறைமட்டும் உண்டு - எனது இரு காதலிகளும் என் பக்கத்தி லில்லாததுதான் பெருங்குறை. ஆனால் அதற்குப்பதில் ஆயிரங் காதலி கள் என் முன் அடிபணிந்து தங்கள் தங்கள் மனக்குறை களைப் பூர்த்திசெய்யுமாறு வேண்டும்பொழுது அந்தக்குறையும் நிவர்த்தியாயிற்று. தெருக்கோடியில் கோயில் அமைந்திருந்தால், தினமும் இரு வேளையும் பெண்களும் பிள்ளைகளும் என் சந்நிதானத்தில் கூடி அஞ்சலி செய்வர். பிள்ளைகளை வரவழைக்க சுண்டலும் பொறியு மிருந்தன; பெண்கள் சுற்றிவர அரசமரமும் அதைச்சுற்றி நாகர் பிரதிஷ்டையும் இருந்தன. பின்னர் கேட்பானேன்? என்றும் இப்படியே இருத்தலாகாதா? தினமும் இவ்வளவு பவிஷுடன் என் சந்நிதானம் விளங்கவேண்டுமென்பதுதான் என்னைப் பிரதிஷ்டை செய்தவனுடைய எண்ணம். அதற்காகவே அவன் என் பேரில் ஏராளமான சொத்துக்களையும் எழுதிவைத்தான். ஆனால் அவன் காலம் கழிந்ததும் அந்தச்சொத்துக்களுக்கு வினை யேற்பட்டது. அவை ஒவ்வொன்றாகக் கறையத்தொடங்கின. பூசாரி என்னசெய்வான்? பாபம்! வெறுந் தட்டின் மீது வெந்நீரில் அமுக்கிய துணியை விரித்து வைத்து நைவேத்தியஞ் செய்தான். முடிவில் அதற்கும் முடிவு ஏற்பட்டது. கோயில் மூடப்பட்டது; பிள்ளைகளும் பெண்களும் என்னை மறந்தார்கள். சிறைக்குள் அகப்பட்டேன். காலக்கிரமத்தில் சுவர்கள் இடிந்தன. பழுதுபார்க்க வகை யில்லை. இடிந்த கட்டிடத்திற்குள் இருப்பதைவிட வெளியே யிருப்பது மேலென யாரோ ஒரு பக்தன் எண்ணி, ஒரு நாள் என்னைத் தூக்கி வெளியே கொண்டுவந்து அரசமரத்தடியில் வைத்தான். பழயபடி பெண்கள் என்னைச் சுற்றிவரத் தலைப்பட்டனர். பழய வாழ்வு வராவிட்டாலும், சுவரைச்சுற்றிவந்த பெண்கள் இப்பொழுது என்பக்கத்தே - மிக அருகாமையில் சுற்றிவருகின்றார்கள் அல்லவா? இந்த பாக்கியம் கிடைப்பது சுலபமா? இதை நன்கு அனுபவித்தேன். அழகிய மலர்க்கரங்கள் என்னை பரிசித்து, என் தலைமீதிருக்கும் விபூதியையெடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொள்ளும்பொழுது என் உள்ளம் அடைந்த பூரிப்பை நேரில் அனுபவித்தவருக்கே தெரிய முடியும். அரசமரத்துக்கு முன்னடியில் ஒரு கிணறு இருந்தது. அதில் பெண்கள் தண்ணீர் இறைத்துச் செல்வார்கள். அவர்கள் பேசிக் கொள்ளும் இனிய பேச்சுக்களைக்கேட்டு ஆனந்தித்தேன். சிற்சில சமயங்களில் காதற்காட்சிகளும் கிணற்றோரத்தே நடைபெறுவ துண்டு. இந்தப் பெருவாழ்வுக்கும் ஒரு முடிவு எற்படுவதென்றால், மனம் படீரென வெடித்துவிடாதா? பாழாய்ப்போன மனம் வெடித்திருந்தாலும் நலமாயிருக்கும். பெருங்காற்று அடித்தபொழுது அரசமரம் தலைசாய்ந்து, அடிக் கிளம்பிற்று. அத்துடன் நானும் தலைகீழாகக் கிணற் றோரத்தில் தூக்கியெறியப்பட்டேன். மீண்டும் தூக்கிவைக்க இட மில்லை. அரசமரமேடை சுக்கல் சுக்கலாக உடைந்து போயிற்று. ஆனால் இவ்வளவு கோலமான நிலையில் குப்புறவிழுந்து கிடந்து துன்புற்ற எனக்கு இப்பொழுது ஒரேவிதச்சாந்தி யேற்படு கின்றது; அதுதான் எனது தியாக உணர்ச்சி. இதுகாரும் ஊரார் உழைப்பில் உண்டு வேடிக்கை பார்த்து நேரம்போக்கிய எனக்கு, அவ்வூணுக்கேற்ற உழைப்பு ஏற்பட்டது குறித்து அளவற்ற மகிழ்ச்சிதான்; என்னே அவ்வுழைப்பின் மகிமை! குப்புற விழுந்த என்மீது துணி துவைப்பதற்கு மிகச்சவுகரிய மாக இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், சாமி யென்றும் பாராமல், எனது கதியற்ற நிலையில் என்மீது துணி துவைக்கத்துணி வார்களா? எனது உண்மைநிலை அவர்களுக்கு நன்றாக விளங்கி விட்டது. அம்மெல்லிய கரங்கள் என்மீது படும்பொழுது நாம் அடைந்த இன்பத்தை வர்ணிக்க முடியாது எவ்வளவு துவைத்தாலும் என் முதுகு வலிக்குமா? தச்சனுடைய சிற்றுளியையும் மழுங்க வைத்த என்னுடல், கேவலம் மெல்லிய கரங்களுக்கும், பருத்தி நூலுக்கும் பயப்படுமா? நெடுங்காலமாக நான் இத்தியாகத் தொண்டை நடத்துமாறு அவ்வூரார் பணித்துவிட்டார்கள். நான் உண்மையில் ஒரு தியாக மூர்த்தி தான் என்ற நம்பிக்கை திடமாக ஏற்பட்டுவிட்டது. பரம்பரை கள்ளு சாராயக்கடை குத்தகைக்காரர் களும் நாலணாக்காசு கொடுத்தவுடன் தேசீய வீரர்களாகவும், தியாகிகளாகவும், பரிணமித்து, மற்றவர்களெல்லாம் சுயநலமிகள் தேசத் துரோகிகள் என வைதாலும், எனது தியாகத்தை அவர்களும் ஒப்புக்கொள்வார்களென்றே நம்புகின்றேன். எனது தொண்டு முற்றுப்பெற்றது. இனி கைலாசம் செல்லவேண்டியதுதான் - என்று முடித்தார் விநாயக சாதிரிகள். கண்விழித்தேன் யானை முகனைக் காணவில்லை. ஓடோடி யுஞ்சென்று கிணற்றருகே பார்த்தேன். துணிதுவைப்பதற்காகப் போட்டிருந்த கல்லுப்பிள்ளையார் இரண்டு மூன்று துண்டுகளாகச் சிதறிக்கிடக்கக்கண்டேன். அவர் கைலாசம் போனது உண்மை தானெனத்தெளிந்தேன். நீங்கள் என்ன நினைத்தபோதிலும், அவரது தியாகத்தை மெச்ச வேண்டியததுதான்.  பகுத்தறிவு வாதக் கட்டுரைகள் 1. சாமி. சிதம்பரனார் 2. ப. ஜீவானந்தம் 3. ஜி. வி. தேசமுகி 4. இங்கர்சால் 5. வீரலட்சுமி. 6. இர்வின் கீரட்வைசர் 7. பிஷப் பார்ன 8. பராஞ்சி 9. ஜோசப் மெக்கேபி அறிவும் - அதன் வளர்ச்சியும் (தோழர். சாமி சிதம்பரனார்) அறிவு என்பது எல்லோரிடமும் உள்ள ஒரு சிறந்த பொரு ளாகும். அது எண்ணுதற்கரிய வல்லமையுடையது; சொல்லுதற் கரிய சிறப்புடையது; அதன் வல்லமை முழுவதையும் அளந்தறிவது இயலாது. அறிவு என்பது ஐம்புலனிற்காணும் பொருளின் குணத்தை அறிந்து கொள்ளுவது. அறிவின் வளர்ச்சியே சிந்தனை - ஆராய்ச்சி என்பனவாகும். எத்தகைய ஆற்றலுக்கும் அறிவே முதன்மையானது. அறிவு என்னும் அடிப்படையின்மேல் எல்லா அற்புத மாளிகை களும் கட்டப்படுகின்றன. அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் என்றார் வள்ளுவர். மனிதன் எல்லாச்சுகங்களையும், எல்லாச்செல்வங்களையும் அடைவதற்கு அறிவே அடிப்படை என்பது வள்ளுவர் கொள்கை. அறிவான தெய்வமே என்றார் தாயுமானார். அறிவின் வல்லமையை - அளவிடற்கரிய பெருமையை நோக்கி அதைத் தெய்வம் என்பதாக உருவகம் பண்ணினார். அறிவும் சிவமும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்பது பெருவழக்கான பழமொழி. இன்னும் அறிவைப்பற்றி அறிஞர்கள் கூறியிருப்பன பல. எவ்வளவு கூறினும் அறிவின் சிறப்பை முற்றும் மொழிதல் இயலாது. மக்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கச்செய்வதும் அறிவு; அல்லற் கடலில் அமிழச்செய்வதும் அறிவு; மக்களைத் தாழ்த்தி வைப்பதும் அறிவு; மக்களை உயர்த்துவதும் அறிவு; உலகில் நடைபெறும் எல்லாச்செயல்களுக்கும் அறிவே காரணமாகும். முதலில் மனத்தில் அறிகிறோம். பிறகு அதைச் சொல்லுகிறோம்; அதன் பின்பே செயல் செய்யத்தொடங்குகின்றோம். அறிவு இன்றேல் செயல் இல்லை. கண்ணாற்காணமுடியாததை அறிவினாற்காணலாம்; சொல் லாற் சொல்லமுடியாததை அறிவினால் காணலாம்; எழுத்தால் எழுத முடியாததை அறிவினால் அறியலாம். அறிவின்றேல் காவியங்கள் தோன்றியிரா; அறிவின்றேல் ஓவியங்கள் வளர்ச்சியடையா; எல்லாக் கலை வளர்ச்சிக்கும் அறிவே அடிப்படை. ஒரு காலத்தில் நாம் மனதில் கூட நினைத்தறியாத பல அற்புதங்கள் இக்காலத்தில் தோன்றியிருப்பது அறிவின் வல்லமையினாலன்றோ? அறிவினால் ஆகாதது ஒன்றும் இல்லை. இறந்தகாலத்தில் நடைபெற்ற எல்லாச்செயல்களையும் எடுத்துக் காட்டுவது அறிவு; நிகழ்காலத்தில் நடைபெறுஞ் செயல் களை உணர்வது அறிவு; எதிர்காலத்தில் இனின்னவை நடை பெறலாம் என ஊகித்தறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வதும் அறிவு; உறுதியான வினைகளைச்செய்து முடிப்பதும், உயர்வான புகழைச்சேர்ப்பதும் அறிவே. அறிவைக் கட்டுப்படுத்துதல் என்பது அடாத செயல்; அது கட்டுக்குள் அடங்காதது. இதுவே அதன் இயற்கை. இதைமறந்து அதைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வீண்வேலை. அறிவைத்தன் போக்கில் வளர விடவேண்டும். அது தன்போக்கில் சென்று வளர்ச்சி யடைந்தால்தான் அதன் உண்மைத் திறமையைக் காணமுடியும். வளர்ச்சியடைவதற்கு விடப்படாத அறிவு - வளர்ச்சியடை வதற்கு வேண்டிய சாதனங்களை இளம் பருவத்திலேயே பெறாத அறிவு - ஓரளவே நின்று விடுவதும் உண்மைதான். சிலருடைய எண்ணம் - அறிவு - புத்தி, உண்ணுவதிலும், உறங்குவதிலும், தனதேக நன்மை, தீமைகளை உணர்வதிலும் மாத்திரம் நிற்பதைக் காண்கி றோம். அவர்கள் அறிவு அந்த அளவோடு பழக்கத்தின் மூலம் நீண்ட காலம் நின்று விட்டதால் அதை மாற்றுவதும் கொஞ்சம் அரிதுதான். ஆனால் மாற்ற முடியாதது அல்ல; மாற்றி, வேறு சிறந்த விஷயங் களைச் சிந்திக்கும் திறமுடைய அறிவாகச் செய்யலாம். அறிவின் இயல்பு வளர்ச்சித் தன்மையாகும் என்று கூறினோம். ஆனால் அது சிலர் விஷயத்தில் வளர்ந்து அரும்பெரும் செயல் களைச் செய்யும் பெருங்கருவியாக நிற்கின்றது. சிலரிடம் முழு வளர்ச்சியின்றி ஓரளவு வளர்ச்சியை மாத்திரம் பெற்றுதர தங்களுடைய சொந்த வாழ்க்கையைத் துன்பமின்றி மகிழ்ச்சி கரமாக நடத்துவதற்கு மட்டிலும் கருவியாக இருக்கிறது. பலரிடம் அதுகூட இல்லாமல் - அவர்களுடைய உடல் பெருந் துன்பங்களையும், மனக்கவலையையும் நீக்குவதற்குத் துணை செய்யாமல் - அவர்களைப் பிறர் ஆணைக்கு அடங்கிவாழும் படியான தாழ்ந்த நிலையில் வைத்திருக்கிறது. இம்மூன்று நிலைக்கும் காரணம் அவரவர்களின் இளமைப் பருவமுதல், அவர்களுக்கு உண்டான பழக்க வழக்கங்களும், அவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த அறிவுமே காரணமாகும். ஒன்றைப்பற்றி நினைக்கும் ஆற்றல் வரப்பெற்ற ஒருகுழந் தையை எடுத்துக்கொண்டால் அதன் சுறுசுறுப்பும் இயற்கை யறிவும் வியக்கத்தக்கதாகும். புதிதாகக்கண்ட ஒரு பொருளைப்பற்றி உடனே பல கேள்விகள் கேட்கும். ஒரு கேள்விக்குப் பதில் கூறினால் மேலும் மேலும் கிளைக்கேள்விகள் எழும். அக்கேள்விகளுக் கெல்லாம் பதில்கூறி அவைகளைத் திருப்தியடையச் செய்வது மிகவும் துர்லபம். குழந்தைகளை வளர்ப்பவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும், அவர்களுடன் பழகுகின்றவர்களும் குழந்தைகள் கேட்பவைகளுக் கெல்லாம் தக்க விடை கூறும், அறிவு ஆராய்ச்சித் திறமுடையவர்க ளாயிருந்தால்தான் அக்குழந்தைகளின் அறிவும் வளர்ச்சியடைய முடியும். அவ்வாறில்லாமல் குழந்தைகளின் கேள்வி கேட்கும் அறிவைத் தடுப்பவர்களாகவோ, அல்லது அவர்களுடைய கேள்விகளுக்குத் தவறான மறுமொழிகளைக் கூறி அவர்களுடைய அறிவைத் தவறான வழியில் திருப்பக்கூடியவர்களாகவோ இருந்தால் அக்குழந்தைகளின் அறிவு எவ்வாறு முழுவளர்ச்சியை அடையமுடியும். பலகுழந்தைகளுக்கு இவ்வாறு புதிய பொருள்களைப் பார்க்கவும், அவற்றைப் பற்றி நினைக்கவும், பிறரிடம் கேள்விகள் கேட்கவுமே இடம் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் ஏழைக் குழந்தைகள் இந்நிலையிலேயே இருந்துவருகிறார்கள். இக்குழந்தை களில் பெரும்பாலார் வயதேறின பிறகும் அறிவுவளர்ச்சி யற்றவர்களாகக் காணப்படுவதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆகவே பலர் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்கு வறுமையும் ஒரு காரணம் என்று கூறிவிடலாம். அறிவின்மைக்கு உதாரணமாகப் பெண்மக்களையும் எடுத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களைக்கற்பித்து அவை அவர்களுடைய பிறவியிலேயே அமைந்தவை யென்று கூறுகின்றனர். பெண் மக்களுக்கு பிறவியிலேயே இத்தகைய குணங்கள் உண்டென்று கூறுவதைத் தாராளச் சிந்தனையுடையார் ஒப்பார். ஏனெனின், குழந்தைகளின் குணங்கள் ஒன்றாயிருப்பதைக் காணுகின்றோம். ஆகவே குணவேறுபாடுகள் முழுவதும் பழக்கத்தை ஒட்டி வருவனவே. பெண்மக்களை இளம்பருவமுதல் ஆண் மக்களைவிட வேறுபடுத்தி வளர்க்கின்றோம். அவர்கள் பெரும்பாலும் உலகஅறிவு பெறாத பெண்மக்களுடனேயே வளர்கின்றார்கள். ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கற்பிக்கப்படுகிறார்கள். நாணத்துடனும் அச்சத்துடனும் நடந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள் இக்காரணங்களாலேயே பெண்கள் வயதேறியபின்பும் கோழைக ளாகவும், நாணமுடையவர்களாகவும் பேதமைநிறைந்தவர்க ளாகவும் இருக்கின்றனர். இதனால் அவர்கள் நாற்குணத்தோடு பிறந்தவர்கள் என்று தங்கள் அறியாமையை அவர்கள் மீது ஏற்றிவிட்டனர். குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண்மக்களும், பெண் மக்களும், ஒரேவிதமாக - அச்சம் உண்டாவதற்கான மூடக்கொள் கைகள் கற்பிக்கப்படாமல், சமத்துவமாக வளர்க்கப்படுவார்க ளாயின் அவர்களிடம் குணவேறுபாடு காணமுடியாது. இவ்வாறு வளர்க்கப்பட்டுக் கல்விகற்பிக்கப்பட்டு வாழும் பெண்களிடம் சிறந்த அறிவையும், அஞ்சாத வீரத்தன்மையையும் காண்கின்றோம். ஆதலால் அறிவுவளர்ச்சியே - அறிவு வளர்ச்சி பெறும்படியான வழியில் வளர்க்கப்படுவதே - ஆணும் பெண்ணும் அச்சமற்றவர்க ளாக - நாணமற்றவர்களாக - மடமற்றவர்களாக - புதிதாகக் கண்ட ஒன்றை அருவருக்கும் பயிர்ப்பற்றவர்களாக வாழற்கு வழியாகும் என்பதை அறியலாம். மக்களுடைய அறிவுக்கண்ணின் பார்வையைத் தடுப்பதற்குப் பலமறைப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. அம்மறைப்புக்கள் யாவும் குறுகிய நோக்கம் என்னும் அடிப்படையின் மீது கட்டப்பட்டனவே. அவை, தான் சாதி மதம் சடங்குகள் முதலியன. மனிதர்களுடைய பிறப்பு, வளர்ப்பு, இருப்பு, உடலமைப்பு, ஆசை, இன்பதுன்பம் ஆகிய எல்லாம் ஒன்றாயிருப்பதைக் கண்கூடாகக் கண்டும், அவர்களைப் பலப்பல இனத்தினராகப் பிரிப்பது ஒருபேதமை யன்றோ? இவ்வாறு பிரிந்து நிற்போர் உண்மையுணராமல் தாம் தாமே பெரியதென்று தருக்கிக் கலகம் விளைப்பது அதனினும் அறியாமையன்றோ? பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று முன்னோர்கள் மொழிந்துங்கூட அறிவு விளக்கம் உண்டாகவில்லையே. மனிதன் பிறப்பதும், இருப்பதும் தவிர வேறொன்றையும் எவரும் கண்கூடாக - ஒற்றுமையான அபிப்பிராயமுடையவராகக் கண்டவர் இலர். இங்ஙனம் உண்மையிருக்கக் கண்மூடித்தனமாக முன்பின் பிறவிகளையும், அவைகளுக்காக உலகங்களையும், அவைகளைப் பரிபாலிக்கத் தெய்வங்களையும், அவர்கள் செயல் களை விளக்கக் கதைகளையும் கற்பித்து இவைகளும் ஒருவிதமாக இல்லாமல் அவரவர்கள் மனம் போனபடி எழுதிக் கொண்டும் பேசிக்கொண்டும் சண்டையிடும் மூடமதியை என்னென்று கூறுவது? அறிவுவிளக்கம் பெறாததே இதற்குக்காரணம் அன்றோ? மக்களுக்குத் தாராளச்சிந்தனை ஏற்பட்டுவிட்டால் இவைபோன்ற அடிப்படையில்லாத கட்டிடங்கள் நொறுங்கிவீழ்ந்து மண்ணோடு மண்ணாகிவிடும் அல்லவா? சடங்குகள் மக்களின் முதன்மைபெற்ற முட்டாள் தன்மைக்கு அறிகுறி. தன்னலங்கொண்ட சோம்பேறிக் குருக்கள்மார் செய்து வைத்த சூழ்ச்சி. மதத்திற்கு மதம் - சாதிக்கும் சாதி - குடும்பத்திற்குக் குடும்பம் - நாட்டுக்கு நாடு - ஊருக்கு ஊர், சடங்குகளில் வித்தியாசம். இவற்றால் வரும் பலனைச்சிந்திப்பதில்லை. மதத்தினால் ஏற்பட்ட மறுமைப்பயன் என்பதன்மூலம் முளைத்து வேரோடி வளர்ந்து தழைத்திருப்பனவே இந்தச் சடங்குகள். உண்மைநாடும் அறிவு பெற்ற எந்தமக்களும் இந்தச் சடங்குகளை உதறித் தள்ளிவிடுவார்கள். ஆகவே, அறிவுவிளக்கம் பெறாததன்மை - அதாவது அறியாமை மனிதனைப் பல தொல்லைகளுக்கு ஆட்படுத்தி விடுகின்றது. அறியாமையால் மனிதன் அச்சமுடையவனாகின்றான். அறியாமையி லிருந்து முளைத்தெழுந்ததே கடவுள், மதம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மோட்சம், பாவம் ,புண்ணியம் ஆகியவைகள் எல்லாம். அறியாமையாலும் அச்சத்தாலும் தோன்றாத தீமைகள் எவை யேனும் உண்டோ? மக்கள்கூட்டத்தின் இன்ப வாழ்வுக்கு அறிவே சிறந்த கருவி. அறிவே மனிதனைச் சுதந்தர இன்பத்தை அனுபவிக்கும்படிசெய்யும். அறிவுக்கு - எதிரில், கடவுள், மதம், போன்ற நீண்டகாலப்புல்லுருவிகளும் அஞ்சி மறையும். எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. என்னும் குறள் மொழியும் எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் குறள் மொழியும் சிந்திக்கத் தக்க சிறப்புடையனவாகும். ஒரு முடிவை - பெரியோர் என்பவர்கள் சொன்னார்கள் என்பதை - பழயநூல்களில் கூறப்பட்டுள்ளன என்பதை - நீண்ட காலமாக வழங்கிவருகின்றன என்பதை அப்படியே ஒப்புக் கொள்வது என்பது அறிவுடைமையாகாது. ஆராய்ச்சி ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது அறிவு வளர்ச்சியாகாது. எவ்வளவு பெரியதாயினும் - அவற்றில் சந்தேகம் எழுதல் வேண்டும், சந்தேகம் எழுந்தால்தான் கேள்விகள் புறப்படும். கேள்விகள் புறப்பட்டால் தர்க்கஞானம் உண்டாகும். தர்க்கமானாலுஞ்சரி - குதர்க்கமா னாலும் சரி அது உண்மையறிவதற்கு வழிகோலும், உண்மையை நாட ஆராய்வது அறிவுவளர்ச்சி. இத்தகைய அறிவுவளர்ச்சியின் முன்- தாராளச்சிந்தனையின்முன் பொய்மைகள் ஓடிமறையும்; அடிமை யெண்ணங்கள் மாய்ந்துபோகும்; மூட நம்பிக்கைகள் சிதறிக்கெடும்; உண்மையறிந்து ஊக்கமும் உரமும் பெறலாம். ஆதலால் அறிவை அடக்குதல் அடாது. அறிவை வளர்க்க அனைவரும் முந்தவேண்டும்.  மாறு அல்லது மாண்டு போ (ப. ஜீவானந்தம்) I மாறு அல்லது மாண்டுபோ என்பதுவே இயற்கையிற் காணும் கண்டிப்பான சட்டம். மாறிக்கொண்டிருப்பதே பிரபஞ்சத் தின் நியதி. எல்லையற்ற அகண்டாகாரமான இப் பிரபஞ்சத்தில், ஒழுங்கான பரிணாமத்திற்கு (Evolution) உட்பட்டு மாறாதவை, புரட்சிக்கு (Revolution) இரையாகி மாறுவது பிரத்தியட்சம். பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவைமாற்றத்தின் வேறுவேறு முகங்கள். ஆயினும் அவை மாற்றத்தின் தொடர்ச்சியான படிகள்தான். ஒழுங்கானமாற்றமின்றி, வளர்ச்சி தடைப்படுமாயின், அசாதாரண மாகத் திடீரென்று தலைகீழ் மாற்றம் ஏற்படுவது உண்டு. இதற்குத்தான் புரட்சி யென்று பெயர். முறையான தொடர்ச்சியான மாற்றத்தையே பரிணாமமென்பார்கள். பரிணாமத்தில் உருவம், உணர்ச்சி, ஒழுக்கம் முதலியவை சிறுகச்சிறுக வரவரமாறிக் கொண் டிருக்கும்பொழுது, புரட்சியில், முன்னைய உருவம், உணர்ச்சி, ஒழுக்கமெல்லாம் பயங்கரமான வேகத்தில் திடீரென நொடிப் பொழுதில் மாறிப்போம். நட்சத்திரமண்டலத்திலும், சூரிய சந்திராதிகளிடையிலும் மாற்றம் நிகழ்வதாக வானநூல்வல்லுநர் கூறுகின்றார். இவ்விஷயத் தில் நாம் வாழும் பூலோக வரலாற்றையும் வானசாதிரம் சர்ச்சை செய்யாது விட்டுவிடவில்லை. உலகில் பாசிபடரத் தொடங்கிய நாள்முதல் மனிதன் உற்பவித்த காலம் வரையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உலகப் பிரசித்திபெற்ற டார்வின் கொள்கை (பரிணாம வாதம்) இனிக்க இனிக்க நமக்கு எடுத்துக் கூறுகிறது. நிலநூல், உயிர் நூல், தாவரநூல், பிராணிநூல், மனித உற்பவ வரலாற்றுநூல், சமுதாய நூல் இன்னபிற் சாதிரங்கள் யாவற்றிலும் ஊடுருவிச்செல்லும் ஒரே ஒரு கொள்கை, முத்துக்களினூடு செல்லும் பட்டுநூல் மாதிரி, மாற்றம், மாற்றம், மாற்றந்தான். கடல்நிலை, ஆற்றோட்டம், மலைத்தோற்றம் யாவும் மாற்றத்தில் விழுந்து கிடக்கின்றன. புல்பூண்டு, பூனை, யானை, சேதனம் அசேதனம், சரம், அசரம் எல்லாம் முன்மாதிரிப்பின் இல்லை. ஓடும் ரயில்வண்டியில் அகப்பட்டவன்போல், சகலமும் மாற்றமென்னும் வாகனத்தில் பிரயாணம் செய்கின்றன. பாம்பு சட்டை கழற்றி புதுப்பிக்கின்றது; தென்னை மடலவிழ்த்து வளர்கின்றது; பட்டுப்பூச்சி முட்டையிலிருந்து, கம்பளிப்பூச்சியாய் நீண்டு, கூட்டில் யோகம் செய்து, வண்ணச்சிறகு பெற்று விண்ணிற் பறந்து திரிந்து களிக்கின்றது. குரங்கு மனிதன்- காட்டுமிராண்டி- நவீன நாகரீகனான செய்தி, மாற்றத்தின் காதையன்றோ? மாற்றத்திற்கு இடந்தராத பிராணிகள் - காலத்திற்கு இசையாத ஜந்துக்கள்- இறந்தொழிந்த கதையை விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்து பாடம் படிப்போம். பிரத்தியட்சப்பிரமாணம் வேண்டுமென்று பிடிவாதம் செய்வோர், பெரிய மியூசியங்களில் புகுந்து உண்மை உணர்க. II இப்பிரபஞ்சத்தில் மனிதன் ஒண்டிதான் சிந்திக்கும் பிராணி. மற்ற ஜீவவர்க்கங்களில் ஒன்றேனும் மனோரதத்தில் சஞ்சரிக்கும் சக்திபெற்றதாயில்லை. எனினும், இந்த நினைவு அலைகளால் மோதப்படாத உயிர்கள், இயற்கையோடிசைந்து, காலம் செல்லச் செல்ல மாறி வாழ்ந்து, இன்பம் துய்த்து, வளர்கின்றன. மனிதனின் மாற்றமோ, மற்ற ஜீவராசிகளைப் பார்க்கிலும், பஷ்டமாகவும், விரிவாகவும் வேகமாகவும் செல்கிறது. மனிதன் ஒருவனுக்கே செயற்கைமாற்றம் சொந்தம். இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் ஜவஹர்லால் கூறுவதுபோல், மனிதவாழ்வில் நிகழ்ந்து வரும் மாற்றம் எவ்வளவு வாரயமான கதை தெரியுமா? குரங்குமனிதன் 2 லட்சம் வருஷங்களில் அடைந்த அபிவிருத் தியை, தற்காலமக்கள் 20,000 ஆண்டுகளில் அடைந்தார்களாம். ஆதிகாலமனிதர்களின் 20 ஆயிரம் வருடவேகம், மத்தியகால ஜனங்களுக்கு 2,000 வருஷவேகமாயிற்று. சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டிலும் மனிதவர்க்கம் எய்தியுள்ள மாற்றமும் வளர்ச்சியும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப 20 வருஷங்களுள் அடைந்ததை விடக்குறைவே. ஆகவே மனிதன் நாளேற ஏற வாயுவேகம் மனோவேகத்தில் மாறிவருகின்றான். இவ்வுண்மையைத் தெளிவாகவும் இலகுவாகவும் அறிய விரும்புவோர், காட்நீயரிங் என்ற அமெரிக்கநாட்டு மேதாவி எழுதிய நாகரிகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? (where is civilization going?) என்னும் அதிஅற்புத நூலைப்படித்துப் பார்க்குமாறு வேண்டுகிறேன். இளந்தமிழர்கள், இந்நூலை ஒரு முறைக்கு மும்முறை படித்துத் தெளிய வேண்டுமென்பது எனது உளம் நிறைந்த ஆசை. மனிதவாழ்வின் விரிவான வளர்ச்சிக்கு ஒரு சிறிய உதாரணம். சமீபத்தில் மதறா மெயில் பத்திரிகையில், பிரம்மஞான சங்கத்தின் பிரபலதர்களுள் ஒருவர், விநோதமான உலகம் என்றோர் கட்டுரை வரைந்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதியைக்கீழே தருகிறேன். அவர் கூறுகிறார். உடையைப் பொருத்தமட்டில் நான் உலகின் சிறிய தோற்றமாகவே காட்சி கொடுக்கிறேன். உண்மையை உணருமாறு இதோ! இந்த அட்ட வணையைப்பாருங்கள்; எனது ஸூட்டு இங்கிலாந்தில் செய்யப் பட்டது. (ஆனால் அதன்மூலப் பொருள்கள் எங்கிருந்து வந்தவை யென்பது எனக்குத் தெரியாது) எனது ஷர்ட்டு அமெரிக்கர் செய்தது; என்னுடைய காலர் (கழுத்துப்பட்டை) ஆதிரேலியா வின் செயற்கைப்பொருள்; என்னுடைய ட்டையோ அமெரிக்காவில் ஊல்வொர்த்தியில் செய்யப்பட்டது; நான் உள்ளே அணிந்திருப்பது கோயமுத்தூர் (சுதேசி) காற்சட்டை; குறிப்பிட்டுக் கூறாத சில சில்லறை உருப்படிகள் ஒரு மதராஸியால் தைக்கப் பட்டவை; எனது ஸாக்குகள் (Socks) அமெரிக்காவிலும், மீதியடிகள் பிரேஸிலும் தயார் செய்தவை; எனது தொப்பி பம்பாய் தந்தது; நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் பிரான் நாட்டது; எனது மூக்குக் கண்ணாடி சீமையிலும் (இங்கிலாந்து) மையூற்றுப் பேனா அமெரிக்காவிலும் செய்யப்பட்டவை;. III கடந்த 300 வருஷங்களில், காட்டுமிராண்டிகளாயிருந்த ஆங்கிலேயர், உலகத்திலேயே பெரும் வல்லரசை தாபித்துள்ளார். இங்கிலாந்தை விட்டு ஓடிச்சென்ற வெள்ளையர், கடந்த நூறு வருஷங்களுள், அமெரிக்காவில் உலகத்திலேயே பெரிய குபேர நாட்டை சிருஷ்டித்து விட்டார்கள். பசிபிக்மகாசமுத்திரத்தில் சிறிய தீவுகளில் அனாமதேயர்களாக வாழ்ந்துவந்த ஜப்பானியக் குள்ளர் கள், 50 வருஷங்களில் 500 வருஷ அபிவிருத்தியடைந்து, தங்கள் வலிமையினால் இன்று நாகரீக உலகத்தைத் திகில் படுத்துகிறார்கள். நோயாளியாகிச் சிதைந்து, தவித்த துருக்கி, வலிமைபொருந்திய ஜனநாயகத்துவத்தைப் பத்து ஆண்டுகளில் நிர்மாணித்திருக்கிறது. ஐந்து ஆண்டுத்திட்டத்தால் சோவியத்ரஷியா அமோகமாக வளர்ச்சியுற்று ஜெகஜ்ஜோதியாகப் பிரகாசித்து உலகத்தார் கண் களைப் பறிக்கின்றது. இந்தியாவோ, மாமூல் கிழவிகொடுத்த யதாப்பூர்விக அபீன் செய்யும் சேஷ்டையாகிய மதிமயக்கத்திலிருந்து இன்னும் தெளிவடைந்தபாடில்லை. அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம் என்பது போல், கிணற்றுத்தவளைகளின் புராதனப் பெருமைப்பேச்சு சாக்குருவியை அழைத்தவண்ணமிருக்கிறது. பரம்பழாவனக்க மென்னும் இமயமலை பொது ஜனங்களின் மூளைகளை அமுக்குவதால், முற்போக்குப்பாதை தெரியாமல், இருளில் தட்டுத்தடுமாறி, கன்னா பின்னா மன்னார்கோயில் என்று ஏதேதோ உளறுகிறார்கள். படித்த கோழைகளோ உள் வலுவற்று முதுகெலும்பொடிந்து, அடித்தகாற்றுக்காடி சாரமற்ற பழைமைக்குப் புதிய வியாக்யானம் செய்து , அந்தராந்தம், ராஜதந்திரம், காரிய வாதம் என்கின்ற நாமகரணம் சூட்டுகிறார்கள். வறுமை, 3 கோடிப்பேரை பிச்சைக்காரர்களாகத் தெருவில் பிடித்து இழுத்து, சந்தி சிரிக்க அலையவைக்கிறது. மானிகள், இல்லாமையைத் தாளமாட்டாது கசத்தையும் விஷத்தையும் கயிற்றையும் தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். பசிநோய் ஏழை எளியவரை, வத்தலும் தொத்தலுமாக்கி வருகிறது. வேலை இல்லாத்திண்டாட்டம் குடுமியைப்பிடித்திழுத்து, இந்திய சமூகத்தை உச்சிமுதல் உள்ளங்கால்வரையில் உலுக்கு உலுக்கென்று உலுக்குகிறது. கொள்ளைநோய்களோ சதாசர்வகாலமும் விஷயஞ் செய்தவண்ணமாய், தரித்திரரை கணங்கணந்தோன்றிக் கணங் கணம் மறையும் பிணங்களாய்ச் செய்து வருகின்றன. உழைப் பாளரோ, ஊழியம் பற்றாது, உயிருக்கு ஊசலாடுகிறார்கள். விவசாயிகளோ, குற்றுயிரும் குலையுயிருமாய், உழைத்துக்கொடுத்து இளைத்துச்சாகிறார்கள். பெண்களின் கஷ்ட தசையோ, நினைப் பவரின் நெஞ்சை வெடிக்கச்செய்யும் போலிருக்கிறது. பெண்கள் பாவஜென்மம் என்ற சமூகத்தீச்சட்டம் தலைவிரித்தாடுகிறது. விதவைகளின் கண்ணீராறும், பொருந்தா மணத்தால் திக்கற்ற மாதர்கள் அலறிப்புடைக்கும் இடியோசையும், சமூகத்தை கிடு கிடாய்க்க அசைத்து அமுக்கி விடும் போலிருக்கிறது. நாய், பன்றி, கழுதையைவிட மனிதன் தாழ்ந்தவனென்று பாவிக்கப்படும் இழிவு மனிதவர்க்க முழுவதையுமே காட்டுமிராண்டி மிலேச்சக்கூட்டம் என்று குற்றப்பத்திரிகை படிக்கும் போலிருக்கிறது. ஜாதிவெறியரின் ஆர்ப்பாட்டமும், மதவெறியரின் அட்ட காசமும், புரோகிதரின் திகடுதத்தமும், மதாச்சாரிகளின் திகல்பாச் சித்தனமும், சொல்லும் தரத்ததல்ல. பணத்திமிரின் சண்டித்தனம் முகட்டை முட்டி நிற்கிறது. ஆட்சி முறையோ, திக்கற்றவரின் விமோசனத்திற்கு வழி விடக்காணோம். போதாக் குறைக்கு படித்த கூட்டத்தாரின் கோழைத்தனமும் சுயநலமும் சேர்ந்து கொண்டன. கடைசியாக பொது ஜனத்தலைவர்களென்று ஜம்பம் பேசுவோரின் போலித்தனமோ, ரோஷமுள்ள இளைஞர்களின் கண்கள் நெருப்பைக் கக்கும்படியாயிருக்கிறது. இன்னும் இறுதியாக, சக்தியும் சாமர்த்தியமும் உள்ள வாலிபர்களின் - பெரும்பாலான முற்போக்குவிரும்பும் தோழர்களின் - செய்கையோ சாணேற முளம் சறுக்கி, பின்னுவதும் பிரிப்பதுமான வியர்த்தப்பிரயத்தனமாகித் தீர்க்கிறது. இந்நிலைமையில், தெளிந்தஞானம், சிறந்த லட்சியம், துணிந்த வாழ்வு ஆகியவைபடைத்த வீரர்களின் வேலையென்ன? மாறு - முழுவதும் - முச்சூடும் பூரணமாக மாறு - சமூக, பொருளாதார, ராஜீயத் துறைகளாகிய சகல துறைகளிலும் விஞ்ஞான அறிவின் துணைக் கொண்டு மாறு அல்லது இன்பலட்சியத்தை நாடி வாழ்க்கைப்படிகளில் கடுவேகத்துடன் விரைந்தேறும் மனித வர்க்கத்திற்கு இழிவைத் தேடாது மாண்டுபோ இன்றே இன்னே மாண்டுபோ என்று எட்டுத்திசைகளும் பதினாறு கோணங்களும் அதிரமுழக்குங்கள். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.  கடவுளின் சகிப்புத்தன்மை (டாக்டர் ஜி.வி. தேசமுகி. M.D; M.L.A.) (டாக்டர் தேசமுகி இந்தியாவிலுள்ள பிரபல மருத்துவர்களில் ஒருவர். இந்திய சட்டசபை உறுப்பினர். தேசீய வாதி. சிறந்த அறிவியல் ஞானி. பம்பாயில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியப் பகுத்தறிவு இயக்கத்தின் (Rationalist Association of India) தலைவர் அவர் தெய்வங்களைப் பற்றியும், புரோகிதச் சூழ்ச்சிகளைப்பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேச உரிமைகளைப்பற்றியும் இக்கட்டுரையில் தெள்ளத்தெளிய விளக்கியிருக்கிறார்) இந்திய மக்களில் தீண்டாதவர்களாய்க் கருதப்படும் ஆறுகோடி மக்களுக்கு இப்பொழுது விடுதலையுணர்ச்சியுண்டாகி விட்டது. ஏனைய மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களையெல்லாம் பெற அவர்களும் முயற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். உலகமுழுதும் பரவிப் பெருகிவரும் சுதந்திர உணர்ச்சி, சமதர்மக் கிளர்ச்சி - இந்தியாவில் மட்டும் புகாதிருக்குமா? கல்வி வளர்ச்சி பத்திரிகைகள் தோற்றம், படக்காட்சி, அரசியல் இயக்கங்கள் முதலியவைகளால் பொதுமக்கள் சிந்தனாசக்திபெற்று காரண காரிய ஆராய்ச்சி செய்யப் புகுந்துவிட்டார்கள். எனவே பழைய மதங்களுக்குப் புதிய ஆபத்துக்கள் நேரத்தொடங்கியிருக்கின்றன. விவேகிகளின் காரண காரிய ஆராய்ச்சிக்கு விடையிறுக்கப் பழைய மதங்கள் சக்தியற்றனவாயிருக்கின்றன. இந்த ஆராய்ச்சியில் சத்தானவை அழியமாட்டா. அசத்துக்களெல்லாம் அழிந்தொழிந்து போவது உறுதி. புதிய ஒளி தீண்டாதாரிடையே உதயமாயிருக்கும் புதிய ஒளி, மாமூல் பழக்கவழக்கங்களுக்கு ஆபத்து விளைக்கக் கூடியதானாலும், ஆதரிக்கத்தக்கதே. அந்தப்புதிய ஒளியின் பிரேரணையால் அநாசாரங்களையும் மூடப்பழக்கவழக்கங்களையும் ஒழிக்கத் தீண்டாதார் முயற்சி செய்கிறார்கள். நமது தேசம் க்ஷேமமாக வாழ வேண்டுமானால், சந்தர்ப்பத்துக்கு தக்கபடி நாம் ஆசாரங்களைத் திருத்தித்தான் ஆகவேண்டும். நம்மை ஆளும் பிரிட்டிஷாரை விட ஜனத்தொகையில் மிகுந்த ஒரு பெரிய சமூகத்தின் மனதைப் புண்படுத்துவது நியாயமானதா என்று தேசபக்தர்களும் அரசியல் வாதிகளும் சிந்தனை செய்யவேண்டும். எத்தகைய அநியாயங்க ளுக்கும் நம்மவர்கள் தமது மதத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளை மதச்சார்பாகவே நாம் ஆராய்ந்து பார்ப்போம். மதமானது பிற்காலத்து எத்தகைய மாற்றமும் அடையாது ஆதியில் தோன்றியபடியே இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பதாகக் காணப்பட்டால் மதாசாரங்களை அப்படியே அநுஷ்டிக்க வேண்டுமென்று கூறுவது நியாயமே; ஆனால் மதம் காலத்துக்கேற்ற கோலம் கொண்டிருப்பதாக ஏற்பட்டால், பழய ஆசாரங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் நாமே குற்றவாளிகளாவோம். புறச்சடங்குகள் ஹிந்து மதத்துக்கு ஆதாரம் வேதங்கள். ஒவ்வொரு மதத் துக்கும் சடங்குகளும் ஆசாரங்களும், பூஜைமுறைகளும் வழிபாடு களும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இவையாவும் புறச்சடங்குக ளாகும். பாமர ஜனங்கள் இந்தப் புறச்சடங்குகளையே மதமென நம்பியிருக்கிறார்கள். மதத்தின் உண்மைத்தத்துவத்தையும் நோக்கத் தையும் புறக்கணித்துவிட்டு புறச் சடங்குகளைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டிருக்கும் பாமரர்களின் அறியாமையைப் புரோகி தர்கள் தமக்கு அநுகூலமாக உபயோகப்படுத்திக்கொண்டு வரு கிறார்கள். எனவே தங்களுக்குப் பிரியமுடைய சடங்குகளை நிர்ணயம் செய்யவும் நடத்தி வைக்கவும் தமக்கே உரிமை உண்டென்று புரோகிதர்கள் இறுமாப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புரோகிதர்களே எல்லா மதங்களுக்கும் நாசத்தையுண்டு பண்ணுகிறவர்கள். இந்தப்புரோகிதர்களின் பாழும் ஆதிக்கத்துக்கு உட்படாத மதங்கள் உலகத்தில் கிடையா. யாகம் ,ஹோமம், வழிபாடு, பிராயச்சித்தம், பூசை முதலியவைகளே இந்தப்புரோகிதர் களின் ஆயுதங்கள். தீண்டாமை, அண்டாமை, பாராமை, முதலிய பாதக அநாசாரங்களும் அவர்களால் உற்பத்தி செய்யப்பட்டனவே. இந்தக் கன்னெஞ்சப் புரோகிதர்கள் உலகமுழுவதும் கொடும் கோலாட்சி நடத்திவருகிறார்கள். இந்தக் கொடுமைகளை எல்லாம் அவர்கள் மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் செய்து வருகிறார்கள். இந்த அர்த்தமற்ற மதச்சடங்குகளை நடத்தா விட்டால் கடவுள் திருப்தியடைய மாட்டாராம். அந்தச் சடங்கு களும் புரோகிதர்கள் உபதேசம் செய்கிறபடி நடத்த வேண்டுமாம். மற்றப்படிச்செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வாராம், மக்கள்மீது அருள் சுரக்கவும் மாட்டாராம். எப்படியாது கடவுளை பிரீதி செய்து கொண்டிருக்கவேண்டுமாம். பிரீதிசெய்து அவர் கருணை பெறா விட்டால் வாழ்நாள் வீணாளாய்விடுமாம். இறந்தபிறகு எரிநரகில் விழவேண்டியதாக வருமாம். இனி, தெய்வப் பிரீதிக்காக என்னென்ன சடங்குகள் செய்யவேண்டுமென்று சாதிரங்கள் கூறுகின்றனவென்றும் அவை காலக்கிரமத்தில் எத்தகைய மாற்றங்கள் அடைந்திருக்கின்றன என்றும் ஆராய்ந்து பார்ப்போம். வழிபடுமுறையில் மாற்றங்கள் யாகங்கள் செய்து கடவுளை வழிபடுதலே வேதவழக்கு; மிருகங்களைப் பலிசெய்யும் பாகங்களே தேவர்களுக்கு அதிகம் பிரீதியளிக்கத்தக்கவை. இந்த யாகங்கள் காலக்கிரமத்தில் உருமாறி இப்பொழுது குற்றமற்ற அக்கினி ஹோத்ரி களாய் விட்டன. இந்த அக்கினி ஹோத்ரி யாகத்தில் இரத்தத்தின் தானத்தை சோறு பெற்றுவிட்டது. வேதகாலத்தில் இந்துக்கள் மட்டுமே இம்மாதிரி மிருகபலி நடத்தினார்கள் என்று நான் குறைகூறவரவில்லை. உலகமுழுதுமுள்ள எல்லா மததர்களும் ஒரு காலத்தில் மிருகபலி செய்தே வந்தார்கள். ஹோமர் புகழ்ந்துகூறும் கிரேக்க வீரர்களும் மிருகபலி நடத்தினார்கள். உரோமர்களும் மிருகபலி தாராளமாக நடத்தினார்கள். எகிப்தியர் மிருகபலியை அரிய புனிதச்சடங்காக மதித்து வந்தனர். அசிநியர், பாபிலோனியர் முதலியோரும் மிருகபலி செய்தவர்களே. மிருகபலியிடாத தேசங்களோ, மக்களோ, உலகத்தில் இல்லை. முதல் ஈற்றுக்கன்றுகளை ஆபேல் பலியிட்ட தாகத் தெரிகிறது. அதற்காகக் கடவுள் ஆபேலிடம் பிரத்தியேக அன்பு காட்டினாராம். தேன் பழவர்க்கங்களைக்கொண்டு கடவுளுக்குப் பூஜை செய்தபொழுது கடவுள் அந்தப் பூஜையை ஏற்றுக் கொள்ளவில்லையாம். பல நாடுகளில் நரபலியும் தாராளமாக நடந்து வந்தன. கிரேக்க தேசத்தில் ஆச்சில்ல ஆவிக்கு பாரியம் என்பான் தன்மகள் பாலிக சீனாவை பலியிட்டானாம், பிலி தினியர் யூதர்கள் குழந்தைகளை மலோச்சு என்னும் தேவனுக்கு பலியிட்டு வந்தார்களாம். ஆனால் வேதகாலத்தும் இந்தியாவில் நரபலி கிடையாது. அம்மட்டில் வேதகால இந்துக்கள் மிக்க ஜீவகாருண்ய முடையவர்கள் என்றே சொல்லவேண்டும். வேதகாலத்தில் நடைபெற்ற மிருகயாகங்களைப்பற்றி அக்காலத்தி லேயே விவேகமும் சுதந்திரபுத்தியும் உடையவர்கள் ஆராயத் தொடங்கினர். யாகவழிபாடு பயனற்றதென்று அவர்களுக்குத் தோன்றிற்று. உபநிஷத் காலத்தில் அறிவே தெய்வமென்னும் கொள்கை உறுதிப்பட்டது. சாங்கியர் உபதேசங்கள் இவையாவிற் றிலும் மேலானவை. மிருகயாகத்திலுள்ள வெறுப்பினாலேயே புத்த மதமும் சமண மதமும் தோன்றின. புத்தமதம் தோன்றியதுமுதல் அஹிம்ஸா தருமம் ஆதிக்கம் பெற்றது. இப்பொழுது மாமிஷத்திற்குப் பதில் காய்கனிகள் பூஜா காலங்களில் நாம் தெய்வங்களுக்கு நைவேத்தியம் செய்கிறோம். தெய்வங்கள் கோபம் கொள்ள வில்லை. நம்முடைய பூஜையைத் திருப்தியாக ஏற்றுக்கொள்கின்றன. யாகங்களில் மிருகங்களை பலிசெய்து வணங்கியது போக இப்பொழுது காய்கனிகளை நைவேத்தியம் செய்து கடவுளை வழிபடுவது ஒரு பெரிய மாற்றமல்லவா? இந்த மாற்றத்தைக் கடவுள் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று இக்கால மக்கள் நம்புகிறார்கள். தெய்வங்களுக்கு நியாய உணர்ச்சி இல்லையா? மிருக பலிக்குப் பதிலாக, காய்கனி பூஜை போடுவதைத் தெய்வங்கள் ஏற்றுக் கொள்ள வில்லையானால், தீண்டாதாரை ஆலயத்துக் குள்ளே விடுவதினால் தெய்வங்கள் கோபித்துக் கொள்ளு மென்று எண்ணலாம். காய்கனி பூஜையை ஏற்றுக் கொள்ளும் கடவுள் தீண்டாதார்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டாரா? நானே சிருஷ்டிகர்த்தா, எல்லா ஜீவராசிகளும் என் மக்கள் என்று கிருஷ்ணன் பகவத்கீதையில் சொல்லியிருக்கிறார். கடவுள் சர்வ ஜீவதயாபரர் என்றால் மனித சமூகத்தில் சிலரை வெறுக்க மாட்டார்; அகற்றமாட்டார். இந்தத்தெளிவான உண்மை களை வைதீகர்கள் ஏன் உணர்கிறார்களில்லை. மத நம்பிக்கைகளும், மதாச்சாரங்களும் தினேதினே மாற்றம் அடைந்துகொண்டுவருவதை அவர்கள் அறியார்களா? கடவுள் வழிபாடு முறைமாற்ற மடைந்து விட்டது. சமூக ஆசாரங்கள் மாற்றமடைந்துவிட்டன. ஜாதிக் கோட்டை தகர்ந்துவிட்டது. விவாஹமுறை மாறிவிட்டது. இவைகளை யெல்லாம் வைதீகர் எதிர்த்தும் ஒரு பயனும் உண்டாகவில்லை. ஆகவே தீண்டாதார் ஆலயப்பிரவேசத்திற்கு மட்டும் வைதீகர் ஏன் முட்டுக்கட்டை போடவேண்டும். வைதீகர்களே? கூறுங்கள்!! கூறுங்கள்!!  வைதீகத்தின் தலை இங்கர்சால் நாகரீக உலகினின்றும் வைதீகம் தற்போது இறந்துபட்டு வருகின்றனவெனக் கழிபேருவகையுடன் நானியம்புவேன். வைதீக மானது உலகத்திற்கே தீராப்பிணியை யொத்ததாகும். அது எலும்புருக்கி நோயினாலும், மூளை அழிவுவியாதியினாலும் பீடிக்கப்பட்டதே போன்று நாளுக்கு நாள் குன்றியே வருகின்றது. வைதீகம் நாட்டு மக்களின் அறிவை வளர்க்கத்தக்கதாகவோ, பகுத்தறிவுக்குத்தக்க அறிவாளிகள் திருப்தியடையத்தக்க சமாதானங் களுடையதாகவோ இல்லவேயில்லை. ஆனால் நாகரீகமடைந்த அறிவு பெருக்கமுள்ள ஒவ்வொரு ஆண்பெண்களின் இருதயங்கட்கு நேர்விரோதமான அறியாமை மிகுந்துள்ளதாகவே இருந்து வருகின்றது. இவ்வைதீகம் உலகத்திலேயே வெகு சிலருக்கே நம்பிக்கையை அளிக்கக்கூடியதாயிருக்கின்றது. மக்களின் இளமைப் பருவத்தை நாசமாக்கக்கூடியதாயுள்ளது; மரண காலத்தில், மூடநம்பிக்கையுடனும், ஆன்ம அழிவுடனும், வாழ்க்கைப் போராட்டத்துடனுமே இறக்கும்படி செய்கின்றது. மனித சமூக எதிர்கால வாழ்வை பீதியிலும் பயங்கரத்திலும்தான் ஆழ்த்தி வைக்கின்றது. ஆகையால் என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சாத்தியமோ அவ்வளவு வரை அத்தகைய பயனிலா வைதீகத்தை நான் நாசமுறச் செய்யப்போகின்றேன். அதற்குப்பதிலாக, ஜீவகாருண்யம், ஆன்மவிடுதலை, சுதந்தரப்பேச்சு அறிவாளிகளின் மூலம் உற்பவிக்கும் நூதன அரிய சாதனங்கள், விஞ்ஞான சாதிரம், கவி, காவியங்கள், கலை, ஓவியங்களின் அபிவிருத்தி, நற்சவகாசம், நல்லில்லங்கள், நல்லாடை, வேலையில்லாத் திண்டாட்டத்தையும் வறுமையையுமொழித்தல் ஆகியவைகளையே நான் மனமாற விழைகின்றேன். அவைகளையே இவ்வுலகின் நன்மதங்களென நான் அஞ்சாதியம்புவேன். பழையன கழிதலும்,புதியன புகுதலும். இவ்வுலகு என்றும் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் தன்மையதென்பதையும், இடைவிடாத மாற்றங்களையுடையதும் இறப்பும், பிறப்பும், மாறி மாறி இயங்கிவரும் இயல்புடையதும் ஆகுமென்பதையும் நாமுணர்வோம். துன்பமும், துவண்டோரும் இவ்வுலகினின்று அழிய அவ்விடத்து இன்பமும் இளைஞரும் தோன்றுவதேபோன்று பழைய உதவா மதமொழிய அவ்விடத்து புதியதொரு உதவும் நல்மதம் முளை எழும்ப இடமுண்டாகின்றது. உண்மையென வற்புறுத்திக் காட்டப்பட்ட ஒன்று பொய்யென ருசுப்பிக்கப்படும் போது அவ்விடத்தில் இயற்கையாகவே வாய்மையொளி பரவுகின்றது. எனவே, அவ்வாய்மையின் ஒளியைக் கொண்டு பொய்மையெனும் இருளை அகற்ற நாமஞ்சுவது கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு பொய்மையிருள் அகலுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு வாய்மை ஒளிபரவிப்பரிணமிக்கும். சமூகத்தினுடையவும் மக்களினுடையவும் விதியை நட்சத் திரங்களின் மூலம் கணக்கிட்டுச் சொல்லி மக்களை சோம்பேறித் தனத்திலும், குருட்டு நம்பிக்கையிலும் ஆழ்த்தி வைத்துக் கொண் டிருந்த ஜோதிடர்களின் காலமும் ஒன்றிருந்தது. நாள் ஏற வேறு ஜோதிடர்களும், அவர்களின் சாதிரங்களும் நம்பிக்கையற்றுப் போக, அத்தொழிலை வான் சாதிரிகள் மேற்கொண்டொழுகினர். தம் காலமெல்லாம் தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த தங்கமாக்கு வான் வேண்டி, மூசையில் அவைகளைப்போட்டு, உருக்கி, உருக்கி தம் தேகபலமிழந்து, கூன் வளைந்து, திரைவிழுந்து, கிழவனாகப் போய் இறந்தொழிந்த இரசவாதிகள் புகழுற்றிருந்த காலமும் ஒன்றிருந்தது. அவர்கள் அம்முயற்சியில் வெற்றியடைய முடியாம லேயே இவ்வுலகினின்றும் அழிந்துபோக அவ்விடத்தில் ரசாயன சாதிரிகள் தோன்றி, தங்கள் காலத்தையெல்லாம் வங்கத்தைத் தங்கமாக்க முயற்சித்தனரே யெனினும் பயன்பெற்றார்களில்லை. ஆனால் இவ்வுலகு அளவிடற்கரிய செல்வத்தால் மூடப்பட் டிருக்கின்றதென்பதை மட்டும் அவர்களுணர்ந்தனர். குறிகூறி கொண்டிருந்தோரும், பறவைகளின்மூலம் சகுனம் கூறிக்கொண் டிருந்தோரும் இருந்தகாலமும் ஒன்றில்லாமல் போகவில்லை. அதுவும் நாளடைவில் மக்களின் நம்பிக்கையைப் பெறாமற் போகவே வீழ்ச்சியுற்றது. அவர்களுக்கப்பின்னரே மதக்குருக்களும், மதப்பிரசாரகர்களும், அர்ச்சகர்களும் புரோகிதர்களும் தோன்றினர். இத்தகையவர்களழிய வேண்டுமென்றே நான் கூறுகின்றேன். ஏன் எனில், இயற்கைக்கு மீறியசெயல்களைச் செய்வதாகவும், அற் புதங்கள் செய்வதாகவும், அசாத்தியமானவைகளைச் செய்து முடிப்பதாகவும் கூறிவந்த மேற்கண்ட மதக்குருக்கள், பிரசாரகர், புரோகிதர், அர்ச்சகர், ஆகியவர்களின் வீணுரைகளைக் கேட்டுக் கேட்டுப் பார்த்து மக்களுக்கு தற்போது அவைகளில் சலிப்பேற் பட்டு விட்டது. ஆகவே இவர்கள் ஒழிந்து இவர்களுக்குப் பதிலாக இயற்கையின் உண்மைப்பிரதிநிதிகள், இயற்கையை நன்குணர்த்த வல்ல பல நல்லாசிரியர்களே தோன்ற வேண்டுமென்பது நமது கோரிக்கை. எதிர்காலத்தை யூகித்தறிந்து மக்களுக்குக்கூறி எச்சரிப்பதாக நடித்துவந்த தீர்க்கத்தரிசிகள் இருந்தகாலமும் ஒன்றிருந்தது. ஆனால் அந்த தானம் அவர்களுக்குப்பின், ஒவ்வொரு சம்பவங்களுக்கும் காரணத்தை எடுத்துக்காட்டி ஒவ்வொரு காரியமும் எத்தகைய பயனை விளைக்கும் என்றும், எவ்வெந்த காரியத்தைச் செய்தால் என்னென்ன விளையும் என்பதையும் தெளிவாகக் கூறும் தத்துவ ஞானிகளிடம் வந்துள்ளது. எனவே தீர்க்கதரிசிகள் மறைய தத்துவ ஞானிகள் தோன்றினர். நான் கூறுவதையேற்று பதிலளிக்கவியலாத, செவிட்டு ஆகாயத்தை நோக்கி பிராத்தனை புரிந்து அங் கிருப்பதாகக் கூறிக்கொள்ளப்படும் சுவர்க்கத்திலிருந்து மனிதர்கள் உதவி கோரியகாலமும் ஒன்றிருந்தது. அத்தகைய காலங்களெல்லாம் தற்பொழுது மக்களின் அறிவு பெறும் வேகத்தில் மறைந்து கொண்டேவருகின்றன. நாம் இப்பொழுது பழைய புராண இதிகாசக்குப்பைக் கூளங்களைப்படித்து அவைகளை நம்பி அதன் படி யொழுகும் குருட்டுப்பழக்க வழக்கங்களைக் கொண்டிருப் பவன் மீது நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால், இயற்கைக்கிசைந் தொழுகுபவனை வாய்மையை வலியுறுத்துபவனை, உண் மகளை ஆராய்ந்தறிவிப்பவனையே சார்ந்துள்ளோம். கடைசியாக அழுத்தமான தக்க அதிவாரத்தின் மீது நாம் கட்டடம் கட்ட ஆரம்பித்துவிட்டோம். நம் முன்னேற்ற வேகத்தில் இயற்கையை மீறியகாரியங்களைச் செய்வதாகக் கூறிக்கொள்ளும் வேடதாரிகள் நசித்துப்போவர். பகுத்தறிவுள்ளோர் இயற்கையை மீறிய செய்கைகள் செய்யவியலுமென்பதை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒளிப்பதையே தங்களின் அதிவாரவேலையாகக் கொண்டிருக்கின்றனர். இயற்கைக்கு மீறினதாயுள்ள வைதீகமதங்கள் இவ்வுலகி னின்றும் சிறுகச்சிறுக அழிந்து அவ்விடத்தில் நாம் பகுத்தறிவெனும் நல் மதம் அடையப்பெறுவோம். விக்கிரகங்களையும் மிருகங் களையும் தொழுதுகொண்டே நிற்போமாயின், மனிதன் ஒருவனுக் கொருவன் உதவிசெய்து பரபர உபகாரத்தினால் அடையும் உண்மை இன்பத்தைக் காண நம்மால் இயலவே யியலாது. அடுத்த வீட்டிலொருவன் பசியினாலும், வியாதியினாலும் கஷ்டப்பட்டு சாகுந்தறுவாயில் இருக்கையில், அவனுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று சற்றுங்கருதாமல், தன்வீட்டிலுள்ள சாமிப்படத் திற்கு நூற்றுக்கணக்கில் செலவு செய்து மலர் மாலைகள் சாற்றி, அபிடேகம் செய்து, அருச்சிப்பதில் மோட்சம் இருக்கிறது என்று கருதும் ஒருவனுக்கு பரபர உதவி செய்வதனால் ஏற்படும் இன்பசாகரத்தின் அமிர்தம் எப்படிக் கிடைக்கப் போகின்றது? தவிர வைதீகம் அழியுந்தன்மையது; விஞ்ஞான சாதிரம் என்றும் அழியாது. மூட நம்பிக்கை அழிய வேண்டியவைகளாகும். கோயில்களும் அழிய வேண்டியவைகளாகும். ஆனால் அவைகள் துரிதத்தில் ஆகாதகாரியமே, ஏன் எனில் மானிட வர்க்கத்தின் அறிவு- மனிதர்களின் மூளை இன்னும் தக்கபடி முன்னேற்றமடைந்து பக்குவமடையவில்லை. தேகத்திற்கேற்படும் வியாதிகளே போன்று அறிவை பீடிக்கும் வியாதிகளும், மனதைப் பீடிக்கும் கொள்ளை நோய்களும், பிளேக் போன்ற தொத்துநோய்களும் இல்லாமலில்லை. நவீனமாக இவ்வைதீக உலகில் ஏதேனுமொன்று தோன்றிடில், புராதனமாயுள்ளது. அதை எதிர்த்து தன் தானத்திற்காகக் கடைசி அணுவளவு சக்தி தனக்குள்ளவும் போராடி அதையொழிக்கப் பார்க்கின்றது. அதேபோன்று இன்று விஞ்ஞான அறிவுக்கும் மூட நம்பிக்கைக்கும் போர் நடந்து வருவதை நாம் அனைவரும் காண்கிறோம். வாய்மைநெறி யொன்றினைத்தவிர மற்றெல்லாம் அழிய வேண்டியவைகளே. அதுதான் இயற்கையின் சட்டமாகும். ஒவ்வொரு வார்த்தையும் அழியும். எல்லாப்பாஷைகளுக்கும் மயானம் தயாராக இருந்துகொண்டுதானுள்ளது. இப்பொழுதும் பின்னருங்கூட ஒவ் வொரு வார்த்தையும் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டு கல்லெழுப்பப்பட்டு அக்கல்லில் பயனற்றது பழய காலத்தியது என எழுதப்பட்டொழிகிறது. அவைகளினிடத்தில் நவீனமாக வார்த்தை கள் பிறந்து கொண்டுதானுள்ளன. மனத்திற் றோன்றும் எண்ணங்கள் ஒலிகளுடன் மணமாற்றப்பட்டு, குழந்தை வார்த்தையொன்று பிறந்து அது தொட்டிலிலாடிக்கொண்டிருக்கிறது. அதுவும் வளர்ந்து முதிர்ந்த பருவமெய்தி நடையுடன் கூடி சுருங்கிச் சப்திக்க முடியாததாகி இறந்து பட்டவுடன் சவக்குளிக்குத் துக்கத்துடன் சுமந்துசெல்லப்படுகிறது. அதே போன்றுதான் வைத்தியப்பள்ளிக்கூடங்களிலும் வார்த்தைகள் இறந்தும் பிறந்தும் வருகின்றன. ஒருகாலத்தில் பழைய ஆங்கிலோ அல்லோ பாதிக் வைத்தியர்களும் ரத்தம் எடுத்து வைத்தியம் செய்பவர்களும் ஆதிக்கம் கொண்டிருந்தனரென்பது உங்கள் ஞாபகத்திலிருக்கலாம். ஒரு மனிதனுக்கு ஏதேனும் நோய் கண்டால் உடனே அவர்கள் அம்மனிதனினின்றும் ரத்தம் எடுத்துப் பரீட்சித்தே வைத்தியம் புரிவார்கள். இத்தகைய பழைய வழக்கம் தவறானதெனக்கண்ட வுடன் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் அதை விடுத்து புதிய முறைகளை அங்கீகரித்து அதை மக்களிடை உபயோகிக்க வழியின்றித் திகைக்கின்றனர். ஏன்எனில் அப்புதிய முறையைப் பரீட்சித்துக் கொள்ள அதில் நம்பிக்கைவைக்க பழையவை மக்களின் மூளையை அழுத்திக்கொண்டிருப்பதால் ஒருவராகிலும் முன்வரவேயில்லை. எனவே, வைதீகம் நிறைந்த பள்ளிக்கூடங்களும் அபிப்பிராயங்களும் மதங்களும் இறப்பது இன்னிலையில் சிறிது கடினந்தான், எனினும் மக்கள் அறிவுபெறும் வேகத்தில் அவைகள் திரமாக மக்களிடை இருக்க முடியாது. பயனற்றவழியில் பணச்செலவு மூடநம்பிக்கையின் காரணமாக மக்கள் செலவிட்டு வரும் பணம் எவ்வளவென எவரேனும் சொல்லக்கூடுமா? உதவியற்ற, பயன்படாத வைதீகங்கலந்த கல்வியைப் பரவவைப்பதற்காக ஏராளமான பணம் செலவு செய்து கட்டப்பட்ட பாடசாலைகளின் பெருக்கத்தைத்தான் அளவிடக்கூடுமோ? நம்பிக்கை கொள்வதைத் தவிர, தனியாக, சுதந்திரமாக எவ்வித நாட்டமும், சிந்தனையும் கூடாதெனவும் அவ்விதங்கொள்ளும் சிந்தனை ஆபத்தானதெனவும், முன்னோர்கள் கூறியதை அப்படியே நம்புவதுதான் சிறந்த வழியெனவும் கற்றுக்கொடுக்கும் கலாசாலைகளை ஏராளமான பணச்செலவில் கட்டிவிட்டதனால் ஏற்படும் பலன்களின்னதின்ன வென எவரேனும் கூறவியலுமோ? கோயில்களிலும், குளங்களிலும், கோபுரங்களிலும் லக்ஷக்கணக்கான கோடிக்கணக்கான பணம் செலவுசெய்து தேர்திருவிழா உற்சவாதிகள் செய்வதினாலேற்பட்ட பலன்களைத்தான் எவரேனும் எடுத்துக்கூறுவதற்கு முன்வருவரோ? மனித சமூகத்தின் மீது காணப்படும் பரமாக்களின்மீது தங்களது வாழ்வைச் சுமத்தி வாழும் ஆயிரக்கணக்கான வேடதாரிகளின் (புரோகிதர்களின்) வாழ்க்கையினால் நாட்டிற்கேற்படும் பலன் என்னவென யாரேனும் கூறவியலுமோ? மூடநம்பிக்கைக் கொண்டிருப்பவர்களை ஏமாற்றிவயிர் வளர்த்துக்கொழுக்கும் நய வஞ்சகர்களிடம் நம்பிக்கை வைத்து நாசமடைந்து வறுமைப் பிணியால் பீடித்து துன்புறும் குடும்பங்களின் எண்ணிக்கையை மறந்து விடக்கூடுமோ? அவ்வைதீகர்கள் நமக்கு மோட்சம் கொடுக்க இவ்வளவும் செய்யும் அவர்கள் மரணத்தருவாயில் வாழ்க்கைப் போராட்டமின்றி சுகமாயிருக்கிறார்களென நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லவேயில்லை. தாங்கள் பிறருக்குக்காட்டும் வழியைத் தாங்களே தங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளத் தெரிவதில்லை போலும். வைதீகர்கள் தங்களின் அறிவைமழுங்கச் செய்து கொண்டு நம்பிக்கையற்றதும் உபயோகமற்றதுமான வேறொரு உலகத்திற்கு அவர்கள் ஓடுவதாக நினைத்துக் கொள்வது குறித்து என் ஹிருதயப்பூர்வமாக நான் அவர்கள் பால் அனுதாபப் படுகின்றேன். அத்தகைய வைதீகர்கள் தங்கள் கால மெல்லாம் செய்து கொண்டிருந்த பிரார்த்தனைகள் செவியுற்றேற்றப்பட்டு பதிலளிக்கப்படவில்லையாதலால் அவர்கள் மேலுலகத்திலிருந்து உதவிபெற இயலவில்லை. மனிதன் என்னதான் செய்யவியலும்? அவன் திடீரென எண்ணங்களில் மாறிவிட்டாலோ, அவன் போனவன் போனவனே, அவன்தான் உண்மையில் நம்புவதை பிரசாரம் செய்வானேயானால் அவன் உடனே தன் இருப்பிடத்தை (மதப்பிரஷ்டம்) காலிசெய்துவிட நோட்டீ கொடுக்கப்பெறுவான். இன்னும் அவனும் அவனின் சகாக்களும், அதாவது சபையும் ஒன்றாகச்சேர்ந்து உண்மைநிலையைக்கண்டார்களானால், அதைத் தாங்கள் சிறிது நம்புவதாகவும் மீதியொன்றும் தெரியாதென்றும் கூறிவிடுகின்றனர். அடிக்கடி இந்தச்சபையினர் ஒன்று சேர்ந்து தங்கள் மனதுகளில் தோன்றும் உண்மைகளை அவ்வப்படியே கூறினார்களானால் மக்கட்கு எவ்வளவு நன்மையாக இருக்கும்? இவ்வைதீகர்கள் நாம் உண்மையாளர்களாக விருப்போம். நம் மனதில் தோன்றும் உண்மைகளையும் ஒளியையுமே. பிறருக்குக் கற்பிப்போம்; எனவெளி வந்தார்களானால் மக்கட்கு எவ்வளவு நலமாயிருக்கும்? வைதீகம் இறப்பது கடினந்தான்; அதன் வக்கலாத்துக்காரர்களான ஆத்திகர்களெனப்படுவோர் அது தெய்வீக சம்பந்தமான தென்றும், தெய்வத்தின் மூலமாக உற்பத்திசெய்யப்பட்ட தென்றும், அதனா லேயே அது அழிதல் அசாத்தியமென்றும் கூறு கின்றனர். யூதமதம் கிறீதவமதத்திற்கு முன்னர் அநேகமாயிரம் ஆண்டு களாக நிகழ்ந்துவந்தது அது அழிவது அரிதுதான். இலாமிய மதமும் அழிவது கடினம். புத்தமதமும் அழிவது கடினந்தான். இம்மதங்கள் எல்லாம் அழிவது ஏன் கடினம் எனத் தெரியுமா? மக்களின் அறிவு துரிதமாகவன்றி மெதுவாக வளர்ச்சியுற்று வருகின்றதென்பதே அதற்கேற்ற விடையாகுமே யொழிய தெய்வீக சம்பந்தமென்பதல்ல. வைதீகம் அழிவது கடினமெனில் மக்கள் இன்னும் குருட்டு நம்பிக்கையுடையவர்களாவும் மூடர்களாகவும், குருக்களும் அர்ச்சகர்களும் தந்திரமுள்ள நரிகளாகவும் இருந்து வருக்கின்றார்களென்பதையும் மதப்பிரசாரக முட்டாள்களி னுடையவும் அர்ச்சகர் குருக்களினுடையவும் மோசவலையில் சிக்கி நாசமடையக்கூடியவாறு மக்கள் குறுகிய அறிவு பெற்றுள்ளார்க ளென்பதையும் அது நன்கு காட்டிவிடுகிறது. நிரீசுரவாதம் என்றும் இறக்கப்போவதில்லை; அது வளர்ந்து கொண்டு தான் வருகிறது. நாளுக்கு நாள் அது மெல்ல மெல்ல, வளர்பிறைச்சந்திரனே போன்று வெற்றியுடன் வளர்ந்து நாடெங்கும் பரவி மக்களைத் தன்னகத்தே தாங்கி சீர்திருத்தமுறச்செய்து கொண்டுதான் வருகின்றன என்று நான் உங்களெல்லாரின் செவிக ளிலும் உறக்கக்கூறுகிறேன். ஆனால், அது எதனை நிரூபிக் கின்றது. அது மக்கள் மேலும் மேலும் விஷயங்களைக் கற்றுக் கொண்டே வருகின்றனரென்பதையும், அவர்கள் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டேவருகின்றன ரென்பதையும், அவர்களின் ஆன்மாக்கள் விடுதலைபெற்று வருகின்றதென்பதையும், உலக சந்ததியினர் நாகரீகம் பெற்று நலம் பெருகின்றனரென்பதையுமே நிரூபித்துக் காட்டுகின்றது என்பதை ஆத்திகர்களும் வைதீகப்பித்தர்களும் உணர்வார்களாவென்று கேட்கின்றேன்?  இங்கர்சால் (A. வீரலட்சுமி) மனித வர்க்கத்தின் ஆரம்ப காலத்தில் மதம் நல்லதாயும் அவசியமானதாயும் இருந்திருக்கலாம். ஆனால் தற்காலத்தில் மனித சமூகத்தின் அழிவிற்கு மதமே காரணமாய் இருக்கிறது என்று நியாய புத்தியுள்ள அறிஞர்களெல்லாரும் நன்கறிந்திருக்கின்றார்கள். மனிதவர்க்கம் முழுவதையும் உற்று நோக்கினால் அதுபூரண வளர்ச்சி பெறவில்லை என்பதை நன்றாய் உணரலாம். ஐரோப்பிய மகா யுத்தத்தைப்பற்றி நாம் சிறிது சிந்தித்தால் மனிதவர்க்கம் நல்லது எது? கெட்டது எது? என்றறிந்து நன்மையைக் கடைப்பிடித்து ஒழுகும் நிலைகூடப் பெறவில்லை என்பதை அறியலாம். அதன் அறிவு மிகச்சொற்பமானது. அதன் ஆராயுந்தன்மை முற்றாய் வளர்ச்சியடையாததாயிருக்கிறது. அதன்நோக்கம் வாழ்வுக்கு வேண்டும் பொருளீட்டுதலே. உடல் வளர்ச்சிக்கு உணவு எவ்வளவு அவசியமோ அதைப்போல் அறிவு வளர்ச்சிக்கு எது அவசியம் என்பதைப் பற்றியும் இவ்வுலகில் நாம் - ஏன்? - எதற்காக? - வாழ்கிறோம் என்பதைப்பற்றியும் ஒரு சிறிதும் சிந்திப்பதில்லை. மதம் இவ்விசயங்களைச் சீர்ப்படுத்த ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. மதத்தின்மீது எல்லாப் பாரங்களையும் போட்டுவிட்டால் நீ கவலை யற்றிருந்தால் நீ ஒரு பெரிய முட்டாளாய்விடுவாய். மதங்களிலுள்ள அர்த்தமற்ற - அறிவிற்கு அப்பாற்பட்ட கோட்பாடுகளைப்பற்றி பேரறிஞர்கள் முதல் பாமரர்கள் வரையுள்ள மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதிற்கொடுக்க மதகுருக்கள் சக்தியற்றிருப்பதாலும், மதம் மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து மனிதனைக் கட்டுப்படுத்தி, வாழ்வை அடியோடு கெடுத்து, வாழ்க்கையை துன்பக்கடலாக்கி விட்ட தாலும் பலர் மதத்தைப்பற்றிக் கவலைப்படாதவர்களாயும், மதநம்பிக்கை யற்றவர்களாயும் ஆகிவிடுகின்றார்கள். மதத்தில் சில நல்ல கொள்கைகள் இருக்கலாம். ஆனால் நன்மையை விட தீமை மலிந்திருக்கிறது என்பதை நாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கின் றோம். வைதீகக்கொள்கைகளெல்லாம் கண்டிப்பாய் ஒழிக்கப்பட வேண்டியவைகளே. மதங்களின் கொடூரமான - ஒழுக்கமற்ற கொள்கைகளை நிர்மூலஞ்செய்யப் பகுத்தறிவுள்ள இளைஞர்கள் தீவிரமாகப் புரட்சி செய்யவேண்டும். புத்திசாலித்தனமாய் மதப்புரட்சி செய்வோன் உலகத்திற்குச் சிறந்த தொண்டு செய்தவனா கிறான். அவன் மனிதவர்க்கத்திற்கு சிந்தனா சக்தியை வளர்க்கத் தூண்டுகிறான் மனிதவர்க்கத்தின் ஹிருதயத்திலுள்ள இருட் படலங்களை நீக்கி உண்மை ஒளியைத் தோன்றச் செய்கிறான். அவன்தீவிர முயற்சியெல்லாம் மக்கள் சுதந்திரம் பெறவேயன்றி அடிமை வாழ்க்கை பெறுவதற்கன்று. அவன் எவருடைய செய்கை யையும் பின்பற்றாது தனது ஆராய்ச்சியினால் எதைச் சரியென் றுணர்ந்தானோ அதன் படியே நடக்கின்றான். அமெரிக்காவிலே மிகுந்த நல்ல சந்தர்ப்பத்திலே குடிஆட்சி நிறுவப்பட்டது. அக்காலமுதல் அங்கு அரசனது ஆட்சிகிடையாது. எனவே அமெரிக்க மக்களுக்கு அரசனை ஒழிக்க வேண்டிய அவசியமில்லா திருந்தது. நாகரிகம் மெதுவாக வரவேண்டியதன்று. எல்லாம் இருந்தபடியே இருந்தது. சுதந்தர சிந்தனையாளரால் (Free thinkers) அமெரிக்கக்குடி ஆட்சி நிறுவப்பட்டதால் மக்களுக்குப் பெரிதும் மனச்சுதந்தரம் கொடுக்கப்பட்டது. உலகசரித்திரத்தில் இந்நிகழ்ச்சி மிக முக்கியமானது. மத விரோதிகளுக்குள்ளும் மக்களின் சுதந்திரத்தைப் பாது காத்தவருள்ளும் ராபர்ட் கிரீன் இங்கர்சால் மிகவும் குறிப்பிடத் தக்கவர். அவர் 1833ஆம் வருஷம் ஆகட் மீ 11ஆம் நியூயார்க் மகாணத்திலுள்ள டிரெடன் நகரில் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஜாண் இங்கர்சால் கிறிது மதத்தின் பிரதான குருவாக இருந்தார். அவரது தாயாரின் பெயர் மேரி லிவிங் டோன். இங்கர்சாலுக்கு 2 வயதாயிருக்கும்பொழுது அவரது தாயார் இறந்துபோய் விட்டார். இங்கர்சாலின் குடும்பம் மகிழ்ச்சியற்ற வைதீகத்தன்மையில் பெரிதும் ஆர்வம்கொண்டது. அவரது தந்தை பைபிளில் பூரண நம்பிக்கை யுடையவராயிருந்த போதிலும் நற்குணமும், பரந்த நோக்கமும் கொண்டவராயிருந்தார். உலோ காயத வாழ்க்கையில் பெரிதும் வெறுப்புடையவர். அவரது தகப்பனார் விருப்பப்படி இங்கர்சால் பைபிளை மிகக் கவனமாகப் படித்து வந்தார். இதன்பயனாய் பைபிளில் பல சந்தேகங்கள் தோன்றினவே யொழிய நன்மை எதுவும் உணடாக வில்லை. (புத்தியுள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வாறு சந்தேகம் உதிப்பது இயல்பேயாகும்) ஆனால் இங்கர்சால் அப்பொழுது அவைகளைப்பற்றி விவரமாய் அறிந்து கொள்ளாவிடினும் பைபிளில் பலதவறுகள் இருக்கிறதென்பதை நன்குணர்ந்தார். தன் வாழ்க்கையின் பிற்காலத்திலே தவறுகள் ஈதெனத் திட்டவட்டமாய்க் கண்டார். அவர் பக்திப்பெருக்கம் பெறும் முறையில் வளர்க்கப் பெற்ற போதிலும் பக்தி பெறாது புத்திபெற்றார். அவரது தந்தை தன்புதல்வன் தனது கருத்திற்கு மாறுபட்டிருந்த போதிலும் அவரது (மகனது) அபிப்பிராயத்திற்குப் பெரிதும் மதிப்புக் கொடுத்து வந்தார். ஒருசமயம் தனது மகனை நோக்கி, புதல்வனே! உன் மனசாட்சியின்படி நட. உன் அபிப்பிராயத்தை எவருக்கும் அஞ்சாது கூறு. உனது சொல்லும் செயலும் மாறு பட்டிருக்கும்படி நடவாதே என்றியம்பினார் . பாதிரியார் ஜாண்இங்கர்சால் தனது மகனது தூய உள்ளத்தினின்று வெளிவந்த அருமையான கருத்துக்களை ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்து, தனது இறுதிக் காலத்தில் நித்திய நரகம் என்ற கொள்கைகளைக் கைகழுவ விட்டுவிட்டதோடு அதைவிட்டு விடுவது உலகிற்குப் பெரும்நன்மை என்றும் கூறினார். இளமையில் இங்கர்சால் பள்ளிப்படிப்பில் கவனஞ் செலுத்த வில்லை. ஆனால் விளையாட்டிலும், வீரத்திலும், தர்க்கத்திலும் தலைசிறந்து விளங்கினார். அவரது பேச்சுத்திறனை யுணர்ந்த அறிஞர்களெல்லாம் பிற்காலத்தில் இவர் ஒரு சிறந்த சொற்பொழி வாளராய் விளங்குவார் என்று கூறினர். பள்ளிப் படிப்பில் கவனஞ் செலுத்தாவிடினும் தானாகப் பல நூற்களைப் படிப்பதிலும் அதிலுள்ள அரிய விஷயங்களைச் சிந்திப்பதிலும் தமது ஊக்கத்தைச் செலுத்திவந்தார். அவரது பத்தொன்பதாம் வயதில் அரியபாடல் களை இயற்றுஞ்சக்தி பெற்றார். 20ஆம் வயதில் ஏழைச்சிறுவர் களின் கல்வி அபிவிருத்தியில் அக்கரைகொண்டு தாமாக ஒரு கல்விச்சாலையை நடத்தி வந்தார். ஏழைமாணாக்கர்களிடம் சம்பளம் பெறாது கல்வி கற்பிப்பதோடு அவர்களுக்கு இனாமாக உடையும் ஊணும் அளித்து வந்தார். அப்பொழுது அவரிடம் சிலர் ஞானநானத்தைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? என்று வினவிய பொழுது அவர் விளையாட்டாக என்னுடைய அபிப்பிராயத்திலே சோப்போடு ஞானநானஞ்செய்வது நல்ல காரியம் என்று விடையளித்தார். பாரிடர் அவர் தனது விடாமுயற்சியாலும், ஆற்றலாலும் சட்டப் புத்தகங்களை வாங்கிப்படித்து 1854ஆல் அவர் தன்னை ஓர் வழக்கறிஞர் (Bar - at- law) ஆக ஆக்கிக்கொண்டார். அவர் இல்லினாய் மகாணத்தைச் சேர்ந்த பியோரியா என்னுமிடத்தில் தனது வக்கீல்தொழிலை ஆரம்பித்தார். அவர் தம் வாக்கு வன்மையாலும் சட்டசம்பந்தமான ஆராய்ச்சியினாலும் பெரும் புகழையீட்டினார். அவர் பல வழக்குகளில் தனது அபாரத்திறமை யால் சட்ட சம்பந்தமான சிக்கலான விவகாரங்களை யெல்லாம் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டி நீதிபதிகள் பிரமிக்கும்படி செய்தார். இதனால் அவர் எங்கும் புகழ்பெற்றதோடு ஏராளமாய்ப் பொருளும் ஈட்டிவந்தார். சட்டசபை அபேட்சர் 1860ஆம் ஆண்டு அமெரிக்கா தேசத்து சட்டசபைக்கு ஓர் அபேட்சகராக நின்றார். அதில் வேறு கட்சியை சேர்ந்த கெல்லாக் என்ற நீதிபதி போட்டி அபேட்சகராக நின்றார். கெல்லாக் கட்சி அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது. பிரபுக்கள் பலர் இங்கர்சாலுக்கு எதிராக வேலை செய்தனர். எனவே இங்கர்சால் அந்த எலெக்ஷனில் தோல்வியுற்றார். எனினும் இங்கர்சால் தளர்ச்சியுறவில்லை. அவருடைய தேர்தல் பிரசங்கங்கள் ஆணித்தரமானதும், உணர்ச்சி யுடையதும் மனதையுருக்கத்தக்கதுமாயிருந்ததால் மக்கள்மனதில் ஒரு புத்தம் புதிய எழுச்சியை யுண்டாக்கி விட்டது. இங்கர்சால் அடிமைத்தனம் என்ற விஷயமாய் தன்னோடு பிரசங்கப் போட்டிக்கு வரும்படி கெல்லாக்கை அழைத்தார். கெல்லாக் அடிமைத்தனத்தை ஒழிக்கும் கட்சியைச் சேர்ந்தவர் ஆக இருந்தபோதிலும் தான் சட்டவரம்பிற்கு உட்பட்டவன் என்ற முறையில் அடிமைகளுக்கேற்பட்ட சட்டங்களை அமூலில் கொண்டுவரக் கடமைப்பட்டவன் என்று ஒத்துக்கொண்டு இங்கர் சாலோடு பிரசங்கப் போட்டிக்கு வர மறுத்துவிட்டார். ஆனால் இங்கர்சாலோ அடிமைத்தனத்தைப் பற்றி சொற்பொழி வாற்ற முன்வந்தார். அடிமைத் தனத்தை ஆதரித்துப் பேசுவார் என்று எதிர்பார்த்தனர். ஜனங்கள் எதிர்பார்த்ததற்கு விரோதமாய் அடிமைத் தனத்தைக் கண்டித்துப் பேசியதோடு தான் அச்சட்டங்களை மீறத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதினின்று அமெரிக்க தேசமெங்கும் இங்கர்சால் ஒரு ஒப்பற்ற பிரசங்கி என்ற கீர்த்தி பொங்கியது. 1861இல் அமெரிக்காவில் உள்நாட்டுக்கலகம் ஆரம்பித்தது. அப்பொழுது இங்கர்சால் நாட்டின், நன்மையைக் கோரி அமெரிக்க மக்களுக்குள் ஒற்றுமையை உண்டாக்க அரும்பாடுபட்டார். ஊன் உறக்கமற்று இரவுபகல் இதற்காக அரும்பணியாற்றினார். 1862இல் அறிவியல் இயக்கத்தை ஒப்புக்கொண்ட ஒரு மங்கை நல்லாளைக் காதலித்து மணஞ்செய்து கொண்டார். அவ்வம்மையாரின் பெயர் ஈவா பார்க்கர். ஒத்த குணமும் ஒத்த எழிலும் வாய்ந்த ஈவா பார்க்கர் இங்கர்சாலுக்கு வலது கரம் போன்றிருந்தார். திருமணத்திற்குப்பின் இங்கர்சால் ஊக்கமும் உற்சாகமுடையவராய் மூட நம்பிக்கைகளை ஒழித்து அறிவியக்கத்தைப் பரப்பப் பாடுபட்டு வந்தார். ஒருவன் தனித்து தனது லட்சியத்தையடைய முயல்வதைவிட தனது லட்சியத்தையும் கொள்கையையும் ஆதரிக்கும் பெண்ணை மணந்து பணிபுரிவானாயின் விரைவில் அவன் கோரிய லட்சியத்தை எய்துவான் என்று கூறியது அவரது அனுபவத்தில் கண்டு கூறிய அமிர்த மொழியாகும். கர்னல் மணம்புரிந்த அதே ஆண்டு உள்நாட்டுக்கலகத்தின் போது போர் வீரனாய் இருந்து நாட்டிற்குச் செய்த அருந்தொண்டினையறிந்த அமெரிக்க சர்க்கார் அவருக்குக் கர்னல் என்ற பட்டத்தை அளித்தனர். அது முதல் அவரை கர்னல் இங்கர்சால் என்று உலகம் அழைக்கத்தொடங்கிற்று. 1863ஆம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை அதிக செல்வாக்குடன் நடத்திவந்தார். அட்டர்னி ஜெனரல் 1867ஆம் ஆண்டில் அதாவது இங்கர்சாலின் 34ஆம் வயதில் இல்லினாய்ப் பிரதேசத்திற்கு அட்டர்னி ஜெனரல் என்ற உயர்ந்த உத்தியோகதராக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் அக்காலத்தில் இது மிகக்கௌரவமான பதவியாய் இருந்தது. அவ்வுத்தியோகத்தை மிகத் திறமையுடன் இரண்டு ஆண்டுகள் பார்த்துவந்தார். அவரது திறமை எங்கும் பேசப்பட்டு வந்தது. கவர்னர் இங்கர்சாலின் நிர்வாகத்திறமையும், பேச்சுநுட்பமும், தேச பக்தியும் நாடெங்கும் பேசப்பட்டதோடு மட்டுமல்ல அரசாங்க மும் நன்குணர்ந்திருந்தது. எனவே அரசாங்கம் அவரைக்கவர்னர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டியதோடு, அவரது அறிவியல் கொள்கைகளை விட்டுவிடவேண்டும் என்று கேட்டது. அவர் தனது கொள்கையில் ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்க மனமில்லாதவராய் கவர்னர் பதவியை மறுத்துவிட்டு என்னுடைய நம்பிக்கை என்னைச் சேர்ந்தது. அது இல்லினாய் நாட்டைச்சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கே சக்ரவர்த்தி என்னும் பட்டம் கிடைப்பதானாலும் என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்ட முடியாது என்று கூறினார். பொது ஜனங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட கவர்னர் பதவிக்காக என்னுடைய கொள்கையின் சிறுபாகத்தையும் விட்டுக்கொடுக்க முடியாதென்று கண்டிப்பாய் தெரிவித்துவிட்டார். சுதந்தரம் வழக்கறிஞர்களுக்கு இங்கர்சால் ஒரு சிரோன்மணியாய்த் திகழ்ந்தார். நீதிபதிகளையும் ஜுரர்களையும் தனது வாதத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதில் இணையற்றவர். அவரது தர்க்கவாதமும் ஹாயப்பேச்சும், சட்ட ஆராய்ச்சியும் இன்றளவும் பாமரர்களால் கூடப்பேசப்பட்டு வருகிறது. விஞ்ஞானிகளையும், அறிவியக்க நண்பர்களையும் ஹிம்சிக்க அரசாங்கத்தாராலோ- மதகர்த்தாக்களாலோ கொண்டுவந்த எல்லாக் கேசுகளுக்கும் பீசின்றி ஆஜராகி வெற்றிக் கொடிநாட்டிவருவார். அத்தகைய கே ஒன்றில் நீதிபதியை நோக்கி, உலகத்தில் மனிதனுக்கு சிரேஷ்டமானது சுதந்திரம். அது உணவைவிட, உடையைவிடப் பெரியது; திரவி யத்தை விட மனையைவிட உயர்ந்தது; சிற்பம், ஓவியம், கலை முதலிய எல்லாவற்றிலும் சிறந்தது. எல்லா மதங்களிலும் சுதந்திரம் மிக மேன்மையானது. இத்தகைய விலைமதிக்க முடியா மனித சுதந்தரமெனும், இரத்தினத்தைக் காப்பாற்ற நான் எதையும் இழக்கத் தயார் என்று கூறினார் அவ்வார்த்தைகள் இன்றளவும் உலகில் உள்ள தேசாபிமானிகள் - ஏன் - மனிதாபிமானிகளும் கூட பொன்மொழியெனப்போற்றி புகழ்ந்து வருகின்றனர். ஐரோப்பா பிரயாணம் 1875-லும் 1878-லும் ஐரோப்பாவிற்கு யாத்திரை செய்தார். அவ்வமயம் உலகம் புகழும் சேக்பியர் டிக்கன், பர்ன முதலியோரின் அரிய நூல்களைக் கற்க ஆரம்பித்தார். அதன்பின், சேக்பியரைப்பற்றி ஓர் உபந்நியாசம் செய்தார். அதுவே இங்கர்சாலின் பிரசங்கங்களில் தலைசிறந்தது என்று கூறப்படுகிறது. பின்னர் பிரான்க்குச் சென்று அங்கு நெப்போலியன் சாமாதியைத் தெரிசித்தார். நெப்போலியனிடத்தில் அவருக்கு அதிக மரியாதையுண்டு. பிரான்தேசத்தின்மீதும் அதன் இயற்கை வனப்பின்மீதும் இங்கர்சாலுக்கு அளவற்ற காதலுண்டு. 1877இல் மனிதன், மங்கை, மக்கள் அவர்தம் சுதந்தரம் என்ற பொருள்பற்றி ஒரு விரிவுரை ஆற்றினார். அப்பொழுது, உயர்ந்த குணமுடைய ஒருகன்னியின் காதலைப்பெறுவதற்காக ஒருவன் வாழ்ந்து தனது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவதைவிட மனிதனுக்கு உயர்ந்த நோக்கம் வேறு எதுவும் இருக்கமுடியாது. காதல் மணம் இவையிரண்டுமற்ற வாழ்வும் வெற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை . . . . . . இந்த உலகத்திலே ஒரு நல்ல பெண்ணின் காதலை பெற்ற ஒரு ஆடவனை எடுத்துக் கொள்ளுங்கள் - அவன் பிச்சைக்காரனாய் குப்பை மேட்டில் வீழ்ந்து இறந்தாலுங்கூட அவனே வாழ்க்கையின் வெற்றியைப் பெற்றவன் ஆவான். என்றியம்பியது இன்றும் அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1884-85ஆம் ஆண்டுகளில் வைதீகம் எவ்வழி பொய்யும் அற்புதமும் என்ற விஷயங் களைப்பற்றி சொற்பொழிவாற்றினார். 1894இல் ஆபிரகாம் லிங்கன் வால்ட்டேர் வேதப்புத்தகம் என்பவைகளைப் பற்றிய இவரது பிரசங்கங்கள் பிரசரிக்கப்பட்டன. 1897இல் நான் ஏன் சமசயவாதி? மனிதரைச் சீர்திருத்தும் விதம் என்னும் சொற் பொழிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் இவரது உண்மை கடவுள்கள் போன்ற உபன்னியாசங்கள மதகுருக்களின் மனதை ஆட்டி அலைத்துவிட்டன. இதன் பயனாய் இவருக்கு எண்ணற்ற எதிரிகள் தோன்றினர். நாதிகர் எனத்தூற்றினர். கணக்கற்ற மறுப்புகள் வெளியாயின. ஆனால் இங்கர்சாலின் இணையற்ற சொற்பொழிவிற்கு ஏற்றமறுப்பு இதுவரை வெளிவரவில்லை யென்று அவரது எதிரிகளும் ஒப்புக்கொள்கின்றனர். இவர் ஆண்டொன்றிற்கு 20,000 பவுண்கள் வீதம் பல ஆண்டுகள் சம்பாதித்து வந்தார். அவர்தம் சொத்தின் பெரும்பாகத்தை தர்மத்திற்காகச் செலவழித்து விட்டார். இல்லையென்பாருக்கு இல்லை என்றுரைக்காத கருணைக் கடலாக இறக்கும்வரை வாழ்க்கை நடத்தினார். இறக்கும் பொழுது அவர் தமக்கென்று வைத்திருந்தது ஒரு சிறு மனையே யாகும். இங்கர்சால் யாவருடனும் அன்பொழுகப்பேசுவார். அவரது பேச்சில் விகடச்சுவையும் நகைச்சுவையும் பெரிதும் கலந்திருக்கும். எதிர்காலத்தைப்பற்றிய கவலையே அவர் வைத்துக்கொள்ளுவ தில்லை. இவ்வுலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதே சுவர்க்க வாழ்வு; துன்பமும், கஷ்டமும், சாந்தியற்றமனதும் இவ்வுலகில் பெற் றிருப்பதே நரகம் என்பதே அவருடைய கொள்கை. எவ்விஷயமாயினும் யார்சொல்லுவதாயினும் அதை ஆராய்ந்து பார்த்து அதற்கு மதிப்புக்கொடுக்க வேண்டுமென்பதே அவரது உபதேசம். கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏராளமாகச் செலவு செய்வதை ஒழிக்கவேண்டுமென்று சதாபேசியும் எழுதியும் வந்தார். உலகிலுள்ள முக்கியமான மதங்களை யெல்லாம் ஆராய்ந் தறிந்து எல்லாமதங்களும் மதகுருக்கள் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற் காகத் தொகுத்த வலைகளே என்று ஐயந்திரிபறவிளக்கி எழுதினார். மனிதனுக்கு கடவுளை நேசிப்பதைவிட மனைவியைக் காதலிப்பது சிறந்தது என்று கூறினார். ஒரு சமயம் அமெரிக்க நாட்டுத் தீண்டப்படாத ஜாதியர்க ளான நீக்கிரோவர்களான கிறிதவர்கள் தங்கள் கோவிலின் மேற்கூறை காற்றில் விழுந்து விட்டதைப் பழுதுபார்க்கப் பணவுதவி செய்யும்படி இங்கர்சாலிடம் கேட்டபொழுது அவர்களுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு கடவுளுக்கு மேற்கூரை வேண்டியதில்லை போலும் அப்படியில்லாவிட்டால் பழைய கூரையைக் காற்றில் பறக்கச் செய்திருக்கமாட்டார். புத்திசாலிக ளான நீக்ரோவர்கள் இன்னும் அடிமைத்தனத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு புத்தகத்தை ஏன் விரும்பிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை என்று கூறி அனுப்பிவிட்டனராம். மரணம் 21-7-1899 இல் நியூயார்க் பட்டணத்தில் அமைதியாக இயற்கை முடிவெய்தினார்(இறந்தார்) மரணச்சடங்கு ஒன்றும் நடைபெற வில்லை. அவரது தோழர்கள் அவரது புத்தகங்களிற் சிலபாகங்களை வாசித்தனர். பின்னர் அவரது பூத உடல் அடக்கஞ்செய்யப்பட்டது; அவரது மரணத்தை அறிந்த நண்பர்கள் ஆற்றொணாத்துயருற்றனர். 1911ஆம் ஆண்டு பியோரியா என்ற ஊரில் அவரது உருவச் சிலை ஒன்று திறக்கப்பட்டது. அவர் உலகில் தோன்றி நூறாண்டு கழிந்து விட்டது. நூற்றாண்டு நிறைவு உலகமெங்குமுள்ள பகுத் தறிவுச் சங்கங்களாலும் கொண்டாடப்பட்டது. அடுத்த ஆண்டு ஆகட் மாதம் 11ஆம் தமிழ் நாட்டிலுள்ள எல்லாப் பகுத்தறிவுச் சங்கங்களும் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதோடு அவரது ஆங்கில நூற்கள் முழுவதையும் மொழிபெயர்த்து குறைந்த விலையில் தமிழ் நாடெங்கும் பரப்பவேண்டியது அறிவியக்க வாதிகளின் கடமையாகும்.  நான் கண்ட உண்மை (இர்வின் கிரட்வைசர்) அறிவியலுக்கும் மத இயலுக்கும் நடைபெற்று வந்த போராட்டம் முடிவு பெற்றுவிட்டது. மதப்போக்கில் பரவிய எண்ணம் உடையவர்கள் சிலர் விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்ட உண்மைகளை மதத்திற்கும் ஒத்ததாய் ஏற்றுக் கொள்ளுகின்றனர். விஞ்ஞானத்தில் கண்ட பல வியக்கத்தக்க அதிசயங்களைக் கூட, சிலர் மதத்திற்கு முரண்பட்டவைகளாய்க் கொள்ளுவதில்லை. ஆனால், இது முற்றிலும் மாறுபட்ட இரண்டு தத்துவங்களை வலிந்து பிணைப்பதாகும். சென்ற பரம்பரையில் விஞ்ஞான ஆராய்ச் சியிற் கண்ட உண்மைகளை ஒருவகையாகவும் மதங்களில் கூறப்படும் உண்மைகளை ஒரு வகையாகவும் இருவகை உண்மைகளாகப் பாகுபடுத்தி இருந்தனர். இருந்தாலும் போராட்டம் ஓயவில்லை. ஏனெனில் அறிவியல் (விஞ்ஞான) ஆராய்ச்சிக்காரர்கள் இப்பிர பஞ்சத்தை ஒருவிதமாக நோக்கினார்கள். ஆனால் மதக்காரர்கள் இதே பிரபஞ்சத்தை வேறொருவிதமாக நோக்கினார்கள். இப்பிரபஞ்சமானது ஓர் அழகிய இயந்திரம்! இவ்வியந்திரம் வரையறையாய் உள்ளது. என்றும் நிலவரமான சட்டங்களுக்கு இசைந்து இயங்குகின்றது. இச்சட்டங்களை ஒரு பாகுபாட்டில் அமைத்து, அவைகளை இயற்கைச் சட்டங்கள் என்றும் கூறலாம். இச்சட்டங்கள் தாம் பிரபஞ்சத்தை ஆண்டு வருகின்றன. இவைகள் முக்காலத்தும் உள்ளவையாம். ஆனால் இயற்கைச் சட்டங்களின் பல உண்மைகளை நாம் அறியாமலும், ஒருவாறு அறிந்திருப்பினும் பூரணமாக அறியாமலும் இருக்கக்கூடும். என்றாலும் காலத்தில், அனுபவத்தில், ஆராய்ச்சியில் இவை அனைத்தும் நமக்கு விளங்காமற்போகா; இதன்பின்னர் பிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாம் ஒரே முறையில் அமைத்து அதனைக் கைவல்யம் செய்து கொள்ளவும் கூடும் என்பதாக அறிவியல் ஆராய்ச்சிக் காரர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கொள்கையில் தவறான எதுமுதல் என்ற தர்க்கத்தையும் குடம் செய்யக் குயவன் வேண்டுமென்ற தர்க்கத்தையும் வலியப்புகுத்தி கடவுள், ஒன்றைக் கற்பித்து, இக்கடவுள் நினைத்தபடி யெல்லாம் பிரபஞ்சம் இயங்கு கின்ற தென்றும் இக்கடவுளைக் கண்டு (காணாமல்) பிரபஞ்ச ஜீவர்கள் அஞ்சவேண்டும் என்றும், இக்கடவுளைப் புகழ்ந்து, முகதுதி கூறி, உள்ளங் குளிரவைத்து, ஏமாற்றி, சில விசேட உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மதக்காரர்கள் கூறுகின்றனர். எல்லாச் சட்டங்களையும் இயற்றிய கடவுள் அச் சட்டங்களுக்கு அதீதமாய் இருக்கிறார் என்றும் இவரே பிரபஞ்சத் தலைவராய் விளங்குகின்றார் என்றும், இவர் பிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ளவர் என்றும்; என்றாலும் இவரை மதித்துத் துதித்துத் தன் வசப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் சில மதக் காரர்கள் கூறுகின்றனர். மனிதனுக்கும் எல்லா விஷயங்கட்கும் அப்பால் உள்ள இவ்வுன்னத வதுவாகிய கடவுளுக்கும் உள்ள தொடர்பைப்பற்றிக் கூறுவதற்கு மதம் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. ஒரு மனிதன் பிறப்பிலிருந்தே பாவம் செய்தவனாய்க் கருதப்பெறினும் மனித ஜென்மம் (பாவச்சென்மமாக கருதப்பெறினும்) ஒரு மனிதன் மேலான பதவிக்கு உரியவன் எனக்கருதப் பெறினும் மனித ஜென்மம் புனித ஜென்மமாகக் கருதப்பெறினும் இரு தரத்தாரும் இயற்கைக்கு கட்டுப்படாத இயற்கையைக் கடந்து நிற்கும் கடவுளின் தொடர்பை அவசியம் அடையவேண்டியதாய் இருக்கின்றனர். சாதாரண உலகநலனுக்கு உரித்தான எல்லா விஷயங்களும் ஒரு அறையில் வைத்துப் பூட்டப்பெற்றுள்ளது; மத உண்மைகள்மற்றொரு அறையில் வைத்துப் பூட்டப் பெற்றுள்ளன. மத ஆராய்ச்சியின் முன்னணியில் நிற்கும் சிலர் அறிவிய லுக்கும் மதவியலுக்கும் உள்ள இவ்வடிப் படையான முரண் பாட்டைத்தகர்க்க முயற்சி செய்கின்றனர். இவர்கள் அறிவியலும், மதஇயலும் ஒன்றுக்கொன்று வேறு பட்டாலும் அவை உண்மையில் வாழ்க்கையின் தத்துவங்களே என்றும்; மதவொழுக்கம் அறிவொழுக்கம் போல், வாழ்க்கை ஒழுக்கந்தான் என்றும் ; விஞ்ஞான உண்மையை உலக அநுபவத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுவது போல், மத உண்மைகளையும் கையாடுதல் கூடும் என்றும்; மேல்நிலை, மேற்பதவி, கடந்தநிலை என்பது இல்லை என்றும்; மத அநுபவமும் இயற்கை அநுபவத்தின் ஒரு பகுதிதான்; இப்பகுதியைப் பயிற்சியால் பெறலாம் என்றும்; அறிவியலும், மதவியலும் ஒரே இனத்தவை யென்றும், மதவியலே அறிவியல்; அறிவியலே மதவியல் என்றும் தற்காலத்தில் பரவிய எண்ணம் படைத்த முற்போக்கில் உள்ள மதக்காரர்கள் கூறுகின்றனர். முன்னேற்ற முறையில் இது ஓர் உயர்ந்த படிதான். ஏனெனில் மனித சமூகம் உலகில் படைக்கப்பட்டநாள் முதலாக பல அநாகரீக - பண்டைக்கால மூடக்கற்பனைகளை மறப்பதற்கும், அறிவியலுக் கொவ்வாத கருத்துக்களை ஏற்காமல் இருப்பதற்கும் இது சாதகமாய் இருக்கின்றது. பிரபஞ்ச தத்துவத்தை உண்மையில் அறிந்த எம் மனிதனும், ஏற்கனவே பிடிவாதமான ஒரு கருத்தைக் கொள்ளாமல் இருப்பானாயின், அவன் ஒரு பக்ஷமாகக் கவனிக்காமல் நடுநிலைமை யுடன் சீர்தூக்கிப் பார்ப்பானாயின் துவைத பாவனையில் பிரபஞ்சம் ஒன்றும் பிரபஞ்சத்தைக்கடந்த அறிவுடைக் கடவுள் ஒன்றும் இருப்பதாக அங்கீகரிக்கவே மாட்டான்; எனவே மத ஆராய்ச்சிக் காரர்கள் இத்தகைய குதர்க்கத்தை விடுத்து, வீண் எண்ணத்தை ஒழித்து, அடிப்படையான உண்மையை அங்கீகாரம் செய்ய இதுவே ஏற்ற தருணமாகின்றது. மதம் அவசியமா? ஆனால் முடிவுதான் என்ன? முடிவு - இக்கட்டுரையில் எடுத்துக் காட்ட முற்பட்ட உண்மை இதுவே - முடிவு மதம் அழிந்தது என்பதே. மதங்களின் தத்துவங்களை துருவிப் பார்க்குங் கால், இவ்வுண்மை நம் எதிரில் வந்து நிற்கும்; மதம் என்பது மக்களுக்கு அவசியமேயில்லை. உண்மையைக் கூறுமிடத்து, மதம் என்பதே யில்லை. மதம் அறிவியலால் விழுங்கப் பட்டுவிட்டது. இது எவ்வகையில் என்று பார்ப்போம். இக்காலத்தில் மத தத்துவங்கள் சுருதி வழியிலாவது, வியாக்கியான வழியிலாவது கூறப்படுவதில்லை. மனோதத்துவ வழியிற்றான் விளக்கிக் காண்பிக்கப் படுகின்றன என்று ஹாரி எமர்சன்பாடிக் என்னும் தத்துவ விற்பனர் கூறுகிறார். மதம் என்றால் என்ன? ஓரு தத்துவமான விஷயத்தையாவது உண்மையினையாவது, அழகினையாவது, ஒரு மனிதன் அநுபவத் தில் கண்டு, அதனை அடைய முயற்சிக்காமல், அதில் தானே வலியச்சென்று ஈடுபடுவது உண்மையான மத அனுபவமாகும். டாக்டர் நாகூச்சி என்னும் ஜப்பானிய விஞ்ஞான சாதிர வல்லுநர், ஒரு நோயைச் சிகிச்சை செய்வதிலேயே தன்னை ஈடுபடுத்தி அதனால் மாண்டுபோனார். எனவே விஞ்ஞான ஆராய்ச்சியே டாக்டர் நாகூச்சியின் மதம். இதுபோலவே தனக்கு எவ்விதத்திலும் சுகம் என்பதில்லாமல், எங்குசென்றாலும் கஷ்டப்பட்டு வந்த ஒரு வாலிபன் சட்டென்று ஒரு ஈடுட்டு வேற்றூர் சென்று, அங்கு ஒரு துணையாசிரியர் உத்தியோகமும் பெற்று, அழகின் மிக்க ஒரு மடந்தையையும் மணம்புரிந்து கொள்வானாயின், டாக்டர் நாகூச்சிக்கு விஞ்ஞான ஆராய்ச்சி மதமானதுபோல், இதுவே இவ்வாலிபனின் மத அனுபவமாகும். அவ்வாலிபன் தன் முயற் சியிலும் வாழ்க்கை லட்சியத்திலும் பெண்போக வேட்கையிலும் சிறிதும் வெற்றி கைவரப்பெறாமல் இடர்ப்பட்டே வந்தான். அவனை ஒரு மனோ தத்துவ விற்பன்னர் பரிசீலனை செய்து நடவடிக்கையை இவ்வாறு மாற்றி அமைத்துக் கொண்டால் வெற்றி கைவல்யமாகும் என்று கூறுவதுதான் இவனது முன்னேற்றத் துக்குத்தக்க உபாயம். அந்த உபாயத்தை அவன் சட்டென உணர்ந்தான்; உணர்ந்து இன்பநிலை அடைந்தான். இதில் மதம் புகுந்து கொண்டது; எந்த இடத்தில்? என் அபிப்பிராயத்தில் மதம் என்பது நமக்கு முற்றிலும் பரம்பானதாயும் அநாவசிய மானதாயும் உள்ள ஒரு விஷயமாகும். குணமாற்றம், மதமாற்றம், தோற்றமாற்றம் ஆகிய இவைகள் ஒருவனுக்கு இருந்திருந்தாற் போல், ஏற்படுமாயின், இந்த மாறுபாடுகட்கு மதத்தொடர்பில்லாத வேறு காரணங்களை நாம் கற்பித்தல் கூடும் என்று டாக்டர் பாடிக் கூறுகின்றார். கூடும் என்று மட்டும் கூறுவதோடன்றி, சிலர் மதத்தொடர்பில்லாத வேறு காரணங்களையும் ஆதாரத்துடன் எடுத்தும் காட்டுகின்றனர். இதற்குச்சான்று வேண்டுமெனின், புகழ்சிறந்த ஆங்கில மனோதத்துவ விற்பனப் போதகாசிரியர் ஹாட்பீல்டு வரைந்துள்ள மனோதத்துவமும் ஒழுக்கமும் என்னும் பெரிய நூலைப்படித்துப் பாருங்கள். கடவுள் கடவுளைப்பற்றி யாது கூறுகின்றீர்? என்பர். இது ஒரு பெருங்கேள்வி. வா என்பதற்கு முன்வந்தேன்; என்று அபயம் கொடுத்தருளும் இயற்கையைக் கடந்து நிற்கும் ஒரு கடவுள் இல்லை என்னும் உண்மையை ஒவ்வொரு மனோதத்துவ சாதிரியும் நன்கறிவர். VbdÅš xU kÅj‹ j‹ njhšÉiaí«, Fiw fisí«, gyåd¤ijí«, Rk¤Jtj‰F«, jd¡F ïirªJtuhj xU Éõa¤âš