ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் சாத்தன்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் (1902 - 1981) எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கது ஆதித்தநல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் என்னும் நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதித்தநல்லூர் அகழ்வாய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வகழ்வாய்வு மூலம் பெறக் கூடிய பல்வேறு தகவல்களையும் இந்நூல் ஆய்வு செய்துள்ளது. தமிழக தொல்பொருள் ஆய்வு வரலாற்றில் ஆதித்த நல்லூரின் இடம் பற்றி அறிய முடிகிறது. ஆதித்த நல்லூரில் அகழ் வாய்வு மூலம் கிடைத்த ஈமத்தாழிகள் தென் னிந்திய பண்பாட்டு வரலாற்றை அறிவற்கு எவ்வகையில் உதவுகின்றன என்பதை இந் நூலாசிரியர் சிறப்பாக வெளிப்படுத்தியுள் ளார். இரும்புக் காலம் மற்றும் வெண்கலம் பயன்படுத்தும் காலம் ஆகியவற்றை ஆதித்த நல்லூர் அகழ்வாய்வு மூலம் எவ்விதம் அறிய லாம் என்பதை இந்நூல் விரிவாக விவாதித் துள்ளது. இவ்வகழ்வாய்வில் கிடைத்த மட் பாண்டங்கள் மூலம் தமிழர்களின் தொல் பழங்கால புழங்குபொருள் பண்பாட்டை அறிய முடிகிறது. மானிடவியல் வரலாற்றில் மண்டையோடுகள் குறித்த ஆய்வு முக்கிய இடம் பெறும் ஆதித்தநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளைக் கொண்டு தென்னிந்தி யாவில் வாழ்ந்த மனிதயினம் பற்றிய வரலாற் றையும் இந்நூலில் விரிவாக விவாதித்திருப் பதைக் காண்கிறோம். தொல்பொருள் ஆய்வு நூற்களஞ்சியம் - தொகுதி பதிமூன்று ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் - தொகுதி பதிமூன்று ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 1967 | மறு பதிப்பு : 2005 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 16+176 = 192 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 180 | படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும், வளமும் வலிமையும் சேர்க்கின்ற நூல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு எம் பதிப்பகம் தொடங்கப் பட்டது. தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர், மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையா, செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார், பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், முனைவர் இரா. இளவரசு போன்ற அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல் களையும், ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தையும் ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனிமுத்திரைப் பதித்ததைத் தமிழுலகம் அறியும். அந்த அடிச்சுவட்டில் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கின்ற நூல்களை மீள்பதிப்பு செய்வதற்கு எம் பணியைத் தொடர்ந்த நேரத்தில் நுண்கலைச்செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் எம் பதிப்பகம் வெளியிட்டால் மொழிக்கும் இனத்திற்கும் யாம் இதுவரையிலும் செய்த பணிக்கு அது மேலும் வலிமை சேர்க்கும் என்றும் அவருடைய நூல்கள் வெளிவருவது மிகமிக இன்றி யமையாதது என்றும் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தெரிவித்தார். அவரின் வழிகாட்டுதலின் பேரில் இந்நூல்கள் வெளிவருகின்றன. நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் நூல்களாக வெளிவந்தவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து நூற்களஞ்சியமாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். இவை மட்டுமன்றி குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ் களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து விரைவில் வெளியிடவிருக்கிறோம். இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப் போடும் வருவதற்கு உரிய வழிகாட்டுதல் தந்து பல்லாற் றானும் துணை இருந்து உதவியவர் பேரா. வீ. அரசு ஆவார். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள் ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணை யிருந்த பெருமைக்குரியவர். அவர் இந் நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாண னிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளி வருவதற்குப் பெரிதும் துணை இருந்தார். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதி களைக் கணினி ஆக்கம் செய்து உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், செல்வி பிருந்தாவதி, செல்வி கலையரசி, செல்வி கோகிலா ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த குமரேசன், இராமன், சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் சரவணன், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வெங்கடேசன், தனசேகரன், சுப்ரமணியன் ஆகி யோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் உறுதியாகப் பணியாற்றுவோம். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற ஐயத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இ. இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) 30.12.2005 கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) பொருளடக்கம் மதிப்புரை - வீ. அரசு x 1. தோற்றுவாய் 3 2. தொல்பொருள் ஆய்வியல் 18 3. ஆதித்தநல்லூர்ப் பறம்பின் அகழாய்வு 41 4. பொன் பட்டங்கள் 58 5. இரும்புப் பொருள்கள் 76 6. வெண்கலப் பொருள்கள் 105 7. மட்பாண்டங்கள் 118 8. தாழிகள் 133 9. மக்களின் மண்டையோடுகள் 151 10. இறுவாய் 165 மதிப்புரை தொல்பழம் வரலாறு - ஆதித்தநல்லூர் - பழம், புதுக்கண்டுபிடிப்புகள் இந்தியாவிலே நடைபெற்ற அகழாய்வுகளில் ஆதித்தநல்லூர்ப் பறம்பில் நடைபெற்ற அகழாய்வு, முதல் அகழாய்வாகும். இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்தாம் உலகிலே மிகத்தொன்மை வாய்ந்த பொருளாகக் கருதப்படுகின்றன. இன்றைக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பிய புதுக்கல்லூழியின் தொடக்க காலத்தில் எழுந்த இரும்பு ஊழியில், தமிழ்மக்கள் ஆதித்த நல்லூர் இரும்புப் பண்பாட்டைக் கண்டனர் என்று தொல்பொருள் ஆய்வுத்துறை வல்லுநர் போற்றுகின்றனர். அறிஞர் இராகவன், மேற்குறித்தவாறு இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இதன்மூலம், இவ்வகழ் வாய்வின் முக்கியத்துவத்தை உணர முடியும். 1861இல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை உருவாக்கப் பட்டது. இத்துறை மூலம் கோயில் கணக்கெடுப்புத் திட்டம் (Temple Survey Project) ஒன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. 1883இல் மேற்குறித்தத் திட்டத்தின் மூலம், கல்வெட்டுக்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. 1876இல் தான் முதன்முதல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழ்வாய்வு ஆதித்த நல்லூர் அகழ்வாய்வாகும். சகோர் (Jagore) என்பவர் மேற்கொண்ட இவ்வகழ்வாய்வின் மூலம், தமிழகத்தின் தொல்வரலாறு குறித்தப் பல புதிய செய்திகள் வெளிவந்தன. இந்தப் பின்புலத்தில் இந்நூலின் சிறப்புக் கூறுகளை பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ள இயலும். - பிரித்தானியர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா என்ற நிலப்பரப்பில், தென்னிந்தியா என்ற நிலப்பரப்பின் குறிப்பாகத் தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் தொல்பழம் வரலாறு குறித்தப் பல தரவுகளை இவ்வகழ்வாய்வுதான் முதன்முதல் வெளிப்படுத்தியது. இத்தன்மையால், தமிழகத்தின் தொல்வரலாறு குறித்து அறிய முடிகிறது. - இந்தியாவில் வாழ்ந்த மக்கள் பிரிவினர் குறித்தப் பிற்காலத்திய கண்டுபிடிப்புகளோடு, ஆதித்த நல்லூர் கண்டுபிடிப்புகள் கொண்டுள்ள உறவு குறித்த ஆய்விற்கு வழிகண்டது. அண்மையில் (2004இல்) மேற்கொண்ட ஆதித்த நல்லூர் அகழ்வாய்வு, 1876-1905வரை நடந்த அகழ் வாய்வுக் கண்டுபிடிப்புகளின் மூலம் அறியப்பட்ட தரவுகளின் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தி யிருப்பதைக் காண முடிகிறது. ஆதித்தநல்லூர் அகழ்வாய்வில் இரும்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், மட்பாண் டங்கள், தாழிகள், மனிதர்களின் மண்டையோடுகள், ஆகியவை கிடைத்தன. புதிய கற்காலம், பெருங் கற்காலம் இவற்றோடு தொடர்புடைய இரும்புக்காலம் என்று கூறப்படும் தொல்வரலாறு குறித்தத் தரவுகள் இவ்வகழ்வாயில் கிடைத்தன. இதன்முலம், அழிந்து போன லெமூரியா என்ற நிலப்பகுதி குறித்த தொன் மங்களை எளிதில் புறக்கணிக்க இயலாத நிலை உரு வானது. தாமிரபரணிப் பள்ளத்தாக்கில் கிடைத்துள்ள இத்தரவுகள், தமிழகத்தின் பிற பகுதிகளில், பின்னர் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட் களோடு நெருங்கிய தொடர்புடையதாக அறிய முடிகிறது. குறிப்பாகத் தமிழகத்தின் பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள தாழிகளில் கிடைக்கும் பொருட்களுக்கும் ஆதித்தநல்லூர் தாழியில் கிடைக்கும் பொருட்களும் நெருங்கிய தொடர்புள்ளதை அறிய முடிகிறது. மேற்குறித்தப் பின்புலத்தில், இரும்புப் பயன்பாடு இந்நிலப்பகுதிகளில் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களிலும் இரும்பு குறித்த செய்திகள் பேசப்படுகின்றன. அகழ்வாய்வு மற்றும் இலக்கியம் மூலம் பெறப்படும் தரவுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் மூலம், இந்நிலப்பகுதியின் தொல்பழம் வரலாற்றைத் தெளிவாக அறிய முடிகிறது. இவ்வகையான பல்நிலைத் தரவுகள் கிட்டும் பகுதியாக இன்றைய தென்னிந்தியப் பகுதி இருப்பதின் மூலம், இந்நிலப்பகுதியின் பழமை உறுதிப்படுகிறது. மேற்குறித்தக் கருதுகோளை இந்நூல் மிக விரி வாக விவாதிக்கிறது. உலகில் இதுவரை அறியப்பட்ட தொல்பழம் நாகரிகங்கள் குறித்தத் தரவுகளோடு, இத் தரவுகளை ஒப்பிட்டுக் காணும்போது, இந்நிலப்பகுதி யின் பழமை குறித்தக் கருத்தாக்கம் உறுதிப்படுகிறது. இவ்வகையில் ஆதித்தநல்லூர் அகழ்வாய்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகிறது. இந்நிகழ்வை முதன்முதல் தமிழில் விரிவாகப் பதிவு செய்த சிறப்பு இந்நூலுக்கு உண்டு. தமிழர்களின் புழங்கு பொருட்கள் வழி அறியப்படும் பண்பாடு குறித்த ஆய்வில், பல நூல்களை உருவாக்கியவர், அத்துறையின் தொல்பழம் வரலாற்றை அறியும் நோக்கில் இந்நூலை உருவாக்கி யுள்ளார் என்று கூறமுடியும். 1920களில், சிந்துவெளி அகழ்வாய்வு குறித்த தகவல்கள் வெளிவரத்தொடங்கின. 1930களில், ஹரப்பா மற்றும் மொகஞ்சதரோ பகுதிகளில் கிடைத்த தரவுகளைக் கொண்டு, அங்கு வாழ்ந்த மக்கள் பற்றிய விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஹிரா பாதிரியார், சிந்துசமவெளிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் என்பதற்கானத் தரவுகளை, சுமார் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்து வெளிப் படுத்தினார். உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், சிந்துசமவெளியில் கிடைக்கும் பல்வேறு முத்திரை களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுசெய்து வருகின்றனர். அகோ பர்ப்பொல (Asko Parpola) ஆகிய பிற அறிஞர்கள், சிந்துசமவெளிக் குறியீடுகளை, திராவிட மொழியின் முன் எழுத்து வடிவம் என்று கூறுகிறார். பின்னர் 1960களில் ஐராவதம் மகாதேவன் அவர்களும் இக்கருத்தினை உறுதிப்படுத்துகிறார். இவ்வகையில் சிந்துவெளி அகழ்வாய்வு புலப் படுத்தும் பல்வேறு செய்திகளுக்கும் ஆதித்தநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த செய்திகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இராகவன் இந்நூலில் விரிவாக விவாதிக்கிறார். திராவிட மொழிகள் பற்றிய ஆய்வு இருபதாம் நூற்றாண்டில் விரிவாக முன்னெடுக்கப் பட்டது. இந்தியாவில், சமசுகிருதம் உள்ளிட்ட வட மொழிகளுக்கு இணையான மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்பட்டது. தமிழ் திராவிட மொழிகளில் பழமையானது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு, தமிழ் குறித்தப் பிற நாட்டவர்களின் கருதுகோள் வேறாக இருந்தது. இந்நிலை 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம்நூற்றாண்டில் மாறத்தொடங்கியது. எல்லீ, கால்டுவெல், எமனோ ஆகிய பிற அறிஞர்களின் ஆய்வுகள் திராவிடமொழிகளை அடையாளப்படுத்தின. இம்மொழிக் குடும்பத்தின் பல்வேறு புதிய மொழிகள் தொடர்ந்து அறியப்பட்டு வருவதைக் காண்கிறோம். மேற்குறித்தப் பின்புலத்தில் ஆதித்தநல்லூர் மற்றும் சிந்துசமவெளி ஆய்வுகள் புதிய வெளிச்சங் களைக் கொண்டு வருவதைக் காணமுடிகிறது. மொழியைப் பேசிய மக்கள் குறித்த தரவுகளாகவே இவை அமைகின்றன. திராவிடமொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்ட, தனித்த மொழிக்குடும்பம் என்பது உறுதிப் படுத்தப்படுகிறது. திராவிடமொழி பேசிய மக்களின் எழுத்துவடிவம், நாகரிக வளர்ச்சி, பண்பாட்டுக் கூறுகள் ஆகிய பிற பற்றிய அறிதல் தேவைப்படுகிறது. இத்தேவையை சார்ந்த கண்ணோட்டத்தில் ஆதித்த நல்லூர் அகழ்வாய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதைக் காண்கிறோம். 1876-1905 ஆண்டுகளில் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் ஆதித்தநல்லூர் அகழ் வாய்வு நிகழ்த்தப்பட்டது. அகழ்வாய்வில் கண் டெடுக்கப்பட்ட பொருட்கள் பெர்லின் அருங்காட்சி யகத்தில் இப்போது இடம் பெற்றுள்ளது. ஆதித்த நல்லூர் அகழ்வாய்வுப் பொருட்களைப் பார்க்க நாம் ஜெர்மன் நாட்டுக்குச் செல்ல வேண்டும். அவைகளை மீண்டும் இங்கு கொண்டு வரும் சூழல் எதிர்காலத்தி லாவது ஏற்படவேண்டும். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் தொல் பொருள் துறைமூலம் ஆதித்த நல்லூரில் அண்மையில் (2004) அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழ் வாய்வு மூலம் 157 தாழிகள் தோண்டியெடுக்கப்பட்டன. ஒரு தாழிக்குள் இன்னொரு தாழியை வைத்திருந்த முறையும் கண்டெடுக்கப்பட்டது. தாழிகளுக்குள் மனித எலும்புக்கூடுகள், மிகச் சிறிய பாத்திரங்கள், அரிசி, நெல், உமி ஆகியவையும் கிடைத்தன. மண் பாத்திரங்கள் வழுவழுப்புடன் கிடைத்துள்ளன. சுடப்பட்ட மண்பாத்திரங்கள் கருப்பு வண்ணத்தில் கிடைத்துள்ளன. சிவப்பு வண்ணத்திலும் கிடைத் துள்ளன. வெண்கல வளையல்கள் கிடைத்துள்ளன. பல்வேறு இரும்புக் கத்திகள் கிடைத்துள்ளன. அண்மையில் கிடைத்துள்ள, இவ்வகழ்வாய்வுப் பொருட்களுக்கும் நூறு ஆண்டுகட்குமுன்பு கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களுக்கும் நிறைய ஒற்றுமை இருந்தாலும், இப்போது புதிதாகக் கிடைத்துள்ள மட்பாண்டப் பொருள்கள் புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக் கொணருவதாக அமைகின்றன. இவ் வகையான மட்பாண்டங்கள் மற்றும் பிற பொருட்கள் புதிய கற்காலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை காட்டுகின்றன. பெருங்கற்காலம் மற்றும் இரும்புக் காலம் குறித்த தரவுகளாக இவை அமைகின்றன. கி.மு. 1000 - கி.மு. 300 இடைப்பட்ட காலம், தென்னிந்தியா வில் நிலவிய இரும்புக் காலமாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனை உறுதிப் படுத்தும் வகையில், அண்மையில் நிகழ்ந்த ஆதித்த நல்லூர் அகழ்வாய்வுத் தரவுகள் அமைகின்றன. சிந்துசமவெளியின் காலம் கி.மு. 1900 என்று அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். ஆதித்தநல்லூர் அகழ்வாய்வு கி.மு. 1000 என்ற காலப் பிரிவில் அமைந் துள்ளது. சங்க இலக்கியங்கள் கி.மு. 100 கால அளவில் அமைந்தவை. ஐராவதம் கூறும் பிராமி எழுத்துகள் கி.மு. 200 அளவில் அமைகின்றன. எனவே சிந்துவெளி, ஆதித்தநல்லூர், பிராமி எழுத்து, சங்க இலக்கியம் ஆகிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்றுக்கு முந்தைய தமிழ் நிலப்பகுதி பற்றியப் புரிதலுக்கு நாம் செல்ல முடிகிறது. அவ்வகையில் கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த அகழ்வாய்வுகள் தமிழ்நிலப்பகுதி பற்றிய, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நிலைமைகளை காட்டும் தரவுகளாக அமை கின்றன. அண்மையில் நிகழ்ந்த ஆதித்தநல்லூர் அகழ் வாய்வு குறித்த செய்திகள், இராகவன் அவர்களின் நூலில் காணக்கிடக்கும் ஆதித்தநல்லூர் குறித்தப் பழைய தரவுகள் ஆகிய இரண்டையும் இணைந்துப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இவ் வகையில் இராகவன் அவர்களது நூல் சமகால முக்கியத்துவம் உடையதாக அமைந்துள்ளது. 2004இல் நிகழ்ந்த ஆதித்தநல்லூர் அகழ்வாய்வில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இவ்வெழுத்துகள் தமிழ் - பிராமி எழுத்துகள் என்று அறியப்பட்டுள்ளன. இத்தரவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சுமார் 89 இடங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் கிடைத்த பிராமி மற்றும் வட்டெழுத்துக்களை ஐராவதம் மகாதேவன், அண்மையில் நூலாகக் கொண்டு வந்துள்ளார். கி.மு. 200 - கி.பி. 600 இடைப்பட்ட காலத்தில், தமிழ் நிலப்பகுதியில் அமைந்த எழுத்து வடிவங்களாக அவற்றை அவர் உறுதிப்படுத்துகிறார். அசோகன் காலத்திய பிராமி எழுத்து வடிவங்களி லிருந்து மாறுபட்ட தென்னிந்திய எழுத்து வடிவங் களைத் தமிழ் - பிராமி என்று மகாதேவன் குறிப்பிடு கிறார். இவ்வெழுத்து வடிவத்தைப் போன்றதே கி.மு. 1000-300 இடைப்பட்ட காலத்தில் எழுத்து வடிவமாக ஆதித்தநல்லூர் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தமிழ்பிராமி எழுத்து வடிவத்தின் காலத்தை இன்னும் முன்னுக்கு எடுத்துச் செல்லும் தேவை இருப்பதை அண்மைக்கால ஆதித்தநல்லூர் அகழ்வாய்வு உறுதிப்படுத்துகிறது. இவ்வகையில், தமிழ்நிலப்பரப்பின் தொல்பழம் வரலாற்றுக்கு அரிய பங்களிப்பாக இராகவன் அவர்களின் இந்நூல் அமைகிறது. இவருக்குத் தமிழ்ச் சமூகம் கடமைப் பட்டுள்ளது. இந்நூலை வெளியிடும் அமிழ்தம் பதிப்பகத்தார் முயற்சியை விதந்து போற்றுவது நமது கடமை. பேராசிரியர், தலைவர் வீ. அரசு தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம். ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் (Adhithanallur and Porunai valley Civilization) 1. தோற்றுவாய் ஆதித்தநல்லூர்ப் பறம்பு தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல் வேலி - திருச்செந்தூர் சாலையில் ஆதித்த நல்லூர்ப் பறம்பு உள்ளது. இப் பறம்பில் 112 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக அகழாய்வு தொடங்கப் பெற்றது. இந்த அகழாய்வில் பல தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பொன் பட்டங்களும் வெண்கல ஏனங்களும் ஏராளமான இரும்புப் பொருள்களும், மட்பாண்டங் களும் எலும்புகளும் குறிப்பாகச் சில மண்டையோடுகளும் கண்டு எடுக்கப் பெற்றுள்ளன. இந்த அகழாய்வைப் பற்றிய ஆய்வுநூல் ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லை. ஆதித்த நல்லூர்ப் பறம்பில் செய்யப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் பல சென்னைப் பழம் பொருள் காட்சிச் சாலையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆதித்த நல்லூர்ப் பறம்பை நான், எனது பிள்ளைப் பருவமான பத்தாவது அகவையிலே பார்த்திருக்கின்றேன். அங்கு அகழ்ந்து கண்டெடுக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகளை (மத மத்தன் தாழி களை)ப் பற்றித் தொடக்க முதல் அறிவேன். 1912 ஆம் ஆண்டு என் தந்தையோடு, திருநெல்வேலிக்கு வரும்பொழுது பறம்பின் குறுக் காகச் செல்லும் பாதையை அடைந்ததும் என் தந்தையார், ஆதித்த நல்லூர்ப் பறம்பைப் பற்றியும் அதில் புதைக்கப்பட்டுள்ள தாழி களைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். அவை இன்றும் என் நினைவில் உள்ளன. நான், நான்கு தலைமுறைகளாகத் தமிழ் வளர்த்து வரும் புலவர் (கவிராயர்) குடும்பத்தில் தோன்றியவன். 1920ஆம் ஆண்டிலே முதன் முதலாக எழுத்துலகில் புகுந்தேன். அன்று முதல் இன்று வரை ஆதித்தநல்லூர் அகழாய்வு என் உள்ளத்தில் நன்கு இடம் பெற்றுள்ளது. என்றாலும், ஆதித்தநல்லூர்ப் பறம்பில் நடைபெற்ற அகழாய்வைப் பற்றி ஒரு கட்டுரைகூட எழுதவேண்டும் என்ற உணர்வு நீண்ட நாளாக என் உள்ளத்தில் உந்தி எழுந்ததில்லை. 1920ஆம் ஆண்டில், அரப்பா அகழாய்வு தொடங்கப் பெற்றது. 1922ஆம் ஆண்டு மொகஞ்சதாரோ நகர் அகழாய்வு செய்யப்பட்டது. இவற்றைப் பற்றிச் செய்தி இதழ்களில் வரும் செய்திகளை உன்னிப் பாக உற்றுநோக்கி வந்தேன். திராவிட நாகரிகம் 1927 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்களில் வெளிவந்த மாடர்ன் ரெவியூ (Modern Review) என்ற திங்கள் இதழைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவ்வரிய வெளியீட்டில், மொகஞ்சதாரோ அகழாய்வை முன்னின்று நடத்தும் பேராசிரியர் ஆர்.டி.பானர்ச்சி அவர்கள் திராவிட நாகரிகம் (Dravidian Civilization) என்ற தலைப்பில் ஓர் அரிய கட்டுரை எழுதி இருந்தார். அக் கட்டுரையில் அவர் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருந்தார். அதில் அவர் குறிப்பாக, அண்மையில் சிந்து வெளியிலும் பலுசித்தானிலும் நடைபெற்ற கண்டுபிடிப்புகள், இந்தியாவில் மிகத் தென்கோடியிலுள்ள திருநெல்வேலி மாவட்டத் திலிருந்து (ஆதித்தநல்லூரிலிருந்து) அறுந்து போகாத ஒரு சங்கிலித் தொடர்போல் திராவிடர்களின் பண்பாட்டுத் தொடர்பு உள்ளது என்று விளக்கிக் காட்டியுள்ளார். மேலும் அவர் அக் கட்டுரையில் ஆதித்த நல்லூர்த் தாழி, செங்கற்பட்டுத் தாழி, சிந்துவெளித் தாழி ஆகியவற்றைப் படம்பிடித்து நன்கு பொறித்துள்ளார். இவரது கட்டுரை என் உள்ளத்தைக் கவர்ந்தது. சிந்துவெளி அகழாய்வைப் பற்றி மேலும் அறிய வேண்டுமென்ற ஓர் அவாவை எழுப்பியது. சிந்துவெளி நாகரிகம் 1931ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் தளபதி (Director General) சர் சாண்மார்சல் அவர்கள் எழுதி வெளியிட்ட மொகஞ்சதாரோவும் சிந்துவெளி நாகரிகமும் என்ற நூலின் மூன்று தொகுதிகளையும் படித்தேன். சிந்துவெளியில் அகழ்ந்து கண்ட சிவலிங்கங்களும் சிவன், அம்பல வாணர், உமையம்மை திருவுருவங்களும் சிந்து வெளிப்பண்பாடு திராவிடப் பண்பாடே என்று அவர் முடிபிற்குவர மூலகாரணமாக இருந்துள்ளன என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. சிந்துவெளி, வேளாளர் கண்ட சிவநெறி மிகத் தொன்மை வாய்ந்த நெறி; அஃது இன்றும் பொன்றாது உயிருடன் நிலவுகிறது என்று அவரது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது எனது உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்தது. அப்பால் சிந்துவெளி அகழாய்வைத் தொடர்ந்து நடத்தி நூல்கள் யாத்த எச்.எ.வாட்சு எழுதிய அரப்பாவின் அகழாய்வு முனைவர் இ.சே.எய்ச் மெக்கே எழுதிய, மொகஞ்சதாரோவில் மீண்டும் நடத்திய அகழாய்வு என்ற நூல்களையும் வயவர் மார்ட்டிமர் உயிலர் எழுதிய, சிந்துவெளி நாகரிகம் போன்ற பல நூல்களையும் படித்துள்ளேன். சிந்துவெளி அகழாய்வுப் பொருட் களின் நிழற் படங்கள் பலவற்றைச் சேகரிக்கவும் தொடங்கி யுள்ளேன். திராவிட இயக்கத்தின் போக்கு 1932 ஆம் ஆண்டில் ஈரோட்டில் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் (The Rational Books Publishing Company Limited) என்ற நிறுவனத்தை அமைத்து 3 ஆண்டிற்குள் 25க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை வெளி யிட்டேன்; பகுத்தறிவு என்ற திங்கள் வெளியீட்டையும் வெளி யிட்டேன்; நாடெங்கும் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி வந்தேன். அப்பொழுது திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களுடன் பலமுறை சிந்துவெளித் திராவிடப் பண்பாட்டைப்பற்றியும் ஆதித்தநல்லூர்த் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியும் விரிவாக உரையாற்றியுள்ளேன். அப்பொழுதுகூட ஆதித்த நல்லூர் அகழாய்வைப் பற்றி நூலாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் எள்ளளவும் எழவில்லை. அப்பால் 1936 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் அறிவு என்ற திங்கள் வெளியீட்டை யான் பிறந்த சாத்தன்குளத்திலிருந்து வெளியிட்டு வந்தேன். அப் பொழுது ஆதித்தநல்லூர் அகழாய்வைப் பற்றித் தொடர் கட்டுரைகள் எழுதி வெளியிடும் வாய்ப்பும் நூல் எழுதி வெளியிடும் வசதியும் இருந்தன; அகழாய்வைப் பற்றி எழுதும் அறிவும் ஆற்றலும், ஏற் பட்டன; ஆனால் உள்ளத்தில் நூல் எழுதி வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அரும்பவில்லை. 1948ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியைத் தவிர்க்கும் பொருட்டு, தொழில் செய்ய இலங்கைக்குச் சென்றேன். அங்கு ஓர் அச்சகம் தொடங்கி, பொருள் தேட முயன் றேன். அங்குச் சென்றபின் நான், அரசியலைத் துறந்து கலை ஆய்வில் ஈடுபட்டேன். அப்போது தமிழர், சிங்களவர், ஐரோப்பியர்களான கலைஞர்களின் தொடர்பும் நட்பும் கிட்டின. 1888ஆம் ஆண்டு வேலூர், கிறித்தவச் சமயகுரு இ. உலோவந்தால் அவர்கள் கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட பழங்காசுகளைப் பற்றி, திருநெல் வேலிக் காசுகள் என்ற பெயரால் வெளியிட்ட ஒருசிறு நூலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்நூல் எனக்குக் கலை பயிலும் ஆர்வத்தை எழுப்பியது. பழங்காசுகள் சேகரிக்கும் உணர்ச்சியை ஊட்டியது. தொல்பொருள் ஆய்வுத் துறையைப் பயில வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது. எனவே, நான் இலங்கை அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை உதவி ஆணையாளர் சு. சண்முகநாதன் அவர்களோடு நட்புக் கொண்டேன் அவரது நட்பால் எனக்குத் தமிழ்க் கலைகள் பலவற்றைப் பயிலும் ஆர்வம் எழுந்தது. அதன் விளைவாக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நூல்களைச் சேகரித்து எனக்கு என்று ஒரு சொந்த நூல் நிலையம் அமைத்தேன். கொழும்பு நகரிலுள்ள பெரிய நூலகங்களுக்குச் சென்று அரும்பெரும் நூல்களையெல்லாம் பயிலத் தொடங்கினேன். தொல் பொருள் ஆய்வுத்துறை உதவி ஆணையாளர் திரு.சு. சண்முகநாத னிடம், ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வைப் பற்றி நூல்கள் எவை யேனும் வெளி வந்துள்ளனவா? என்று வினவினேன். அதற்கு, அவர் மிகப்பரிவுடன் ஆதித்தநல்லூர் அகழாய்வைப்பற்றி 1915 ஆம் ஆண்டு ஒரு நூல் வெளி வந்துள்ளது; அஃது என்னிடம் இல்லை; சென்னையில் உள்ள பழம் பொருள் காட்சிச் சாலையில் (Museum) உசாவுங்கள் என்றார். நான், 1950 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்றிருந்தபொழுது அந்நூலுக்காகப் பல இடங்களிலும் தேடி அலைந்து, இறுதியாகச் சென்னை அரசின் அச்சகத்தில் ஒரு நூலை விலை கொடுத்து வாங்கினேன். அந்நூல், பெரும்பாயூர், ஆதித்தநல்லூர் ஆகியவற்றிலிருந்து கண்ட வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பழம் பொருள்களின் பட்டியல் (Catalogue of the Pre-historic Antiquities from Adichanallur and Perumbai by Alexandar Rea F.S.A. (scott) என்ற நூலாகும். அதன் பிறகு ஆதித்தநல்லூர் தலையோடுகள் (The Adichanallur Skulls) என்று திரு.எ. சக்கர்மேன் (Zuckerman M.A., M.R.C.S., L.R.C.P.) எழுதிய நூலையும் வாங்கிக் கருத்தூன்றிப் பயின்றுள்ளேன். அப்பொழுதும் ஆதித்தநல்லூரைப் பற்றி நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததில்லை. கலைப்பணி 1955 ஆம் ஆண்டு இலங்கையில் நான் நடத்திய தொழில்களை நிறுத்திவிட்டு இந்தியாவிற்கு வந்து, நான் சேகரித்து வைத்திருந்த நூல்களைப் பயிலத் தொடங்கினேன். 1962 ஆம் ஆண்டு செப் டெம்பர்த் திங்களிலிருந்து தொடர் கட்டுரைகளாகச் சிங்கப்பூர் தமிழ்முரசு என்ற நல்ல நாள்வெளியீட்டின் ஞாயிறு மலரில் திருவிளக்கு, தாமரை, சாவகக்கலை, கப்பற்கலை, ஓவியம், காசு போன்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் என்ற என்னுடைய தொடர் கட்டுரைகளைத் தொகுத்து 1.1.1964 இல் என் நண்பர் மறைந்த மாமேதை சண்முக நாதன் நினைவாக ஒரு நூலை வெளியிட்டேன். அந்நூல் அந்த ஆண்டில் வெளிவந்த கலை நூல்களில் சிறந்தது என்று தமிழக அரசின் முதற் பரிசைப் பெற்றது. அதன் பின் வெளிவந்த தமிழர் பண்பாட்டில் தாமரை தமிழகச் சாவகக் கலைத் தொடர்புகள் என்ற நூல்கள் தமிழக அரசின் பரிசுகளைப் பெற்றன. jÄH® g©gh£oš jhkiu v‹w üiy kJiu¥ gšfiy¡ fHf« 1971 ïš ã.V., ã.vÞ.á., வகுப்புகளுக்குப் பாடநூலாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து கப்பல், அணிகலன்கள், யாழ், கொற்கை போன்றவற்றைப் பற்றி ஆய்ந்து ஆராய்ச்சி நூல்கள் எழுத முற்பட்டேன். அவை நூலாக்கம் பெற்று வெளிவந்துள்ளன. இஃதன்றி இறைவனின் எண்வகை வடிவங்கள், தமிழ் நாட்டு ஓவியம், தமிழர் பண்பாட்டில் யானை, தமிழர் பண்பாட்டில் பாம்பு, சிந்து வெளித் திராவிட நாகரிகம், தமிழர் நாட்டியம், தமிழர் தாண்டவம், தமிழ்நாட்டுக் காசுகள், தமிழ்நாட்டு ஆடைகள், தமிழ்நாட்டு மருத்துவம், தமிழ்நாட்டுப் பறவைகள், தமிழ்நாட்டு மூலிகைகள், தமிழ்நாட்டு இசைக்கருவிகள், தமிழ்நாட்டுக் கட்டிடக்கலை, தமிழ் நாட்டுப் படைக்கலன்கள், தமிழ்நாட்டு மலர்கள், தமிழ்நாட்டுப் படிமங்கள் போன்ற நூல்களை எழுதத் திட்டமிட்டு எழுதி முடித் துள்ளேன். தமிழுக்குத் தொண்டாற்றிய அயல் நாட்டறிஞர்கள், மேற்காசியாவில் தமிழர் நாகரிகம் என்ற பெயர்களில் பல நூல்கள் எழுதியுள்ளேன். இந்நூல்களை எழுதப் பல நூல்களைப் படிக்க வேண்டிய முதன்மை எழுந்தது. உலகளாவிய தமிழர் பண்பாடு அவ்வாறு படித்த நூல்களில், சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை, தொல்பொருள் ஆய்வுத்துறைப் பேராசிரியர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய, தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன? என்று 1937 இல் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த தி நியூ ரெவியூ என்ற திங்கள் வெளியீட்டில் வெளிவந்த அரிய கட்டுரையும் தமிழர்களின் தோற்றமும் பரவுதலும் என்று 1971இல் வெளி வந்த அவரது நூலும் (Origin and Spread of the Tamils) என்ற நூலும் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அவற்றில், ஆசிரியர், ஆதித்த நல்லூரிலும் சிந்துவெளியிலும் அகழ்ந்து கண்ட பொருள்களுள் வரலாற்றுக் காலத்திற்கு முன் உள்ள தலையோடுகளைப் பற்றியும் ஆதித்தநல்லூரிலும் வயல் நாட்டிலும் கண்டெடுக்கப்பட்ட தாழி களிலும் சாடிகளிலுமுள்ள புதையல்களையும் மட்பாண்டங்களை யும் பற்றி நன்கு ஆய்ந்து எடுத்துக் காட்டியுள்ளார். பண்டைத் தமிழர்கள் பிணங்களைப் புதைக்கும் முறைகளையும் ஆதித்த நல்லூர்ப் பிணக்குழிகளில் அகழ்ந்து கண்டபொருள்கள் தென் இந்தியாவில் புதிய கல் ஊழியை அடுத்து அரும்பிய பழைய இரும்பு ஊழியின் காலத்திற்கு வரலாற்றை நீட்டச் செய்துள்ளது என்பதை யும் ஆதித்தநல்லூர்ப் பண்பாடு, பண்பாட்டின் நிலைத் திரிபுப் பருவத்தின் திட்டமாக இருந்தது என்பதையும் விளக்கியுள்ளார். அது பயிர்த் தொழில் அறிவை உள்ளடக்கி இரும்பு மண்வெட்டியி லிருந்து பன்னரிவாள், நெல்உமி, தினை ஆகியவற்றைப்பற்றிய அறிவையும் உள்ளடக்கி இருந்தது. அது அம்மக்கள் பெற்றிருந்த இரும்புப் பண்பாட்டிற்கு ஏற்ற எடுத்துக் காட்டாகும். அங்குள்ள உமியும், மட்பாண்டங்களும் பழைய இற்றுப்போன பஞ்சாடையும் அவர்கள் பெற்றிருந்த பயிர்த் தொழில், பருத்திச் சாகுபடி, மட் பாண்டம் செய்தல், பருத்தி ஆடைகளை நெய்தல் முதலிய தொழில் வளத்தையும் காட்டியது. அங்குக் கிடைத்த தாதுப் பொருள்கள் அவர்கள் உயரிய உழவுக் கருவிகள், மட்பாண்டம் வனையும் திகிரிகள், நெய்தல் தொழிலுக்கு வேண்டிய கருவிகள், வெண்கல ஏனங்கள் படைக்கலன்கள் செய்யும் திறன் முதலியவற்றிற்கு ஏற்ற எடுத்துக் காட்டாக உள்ளன. அங்குக் கிடைத்த பொற்பட்டங்கள் அவர்களின் செல்வச் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. சிந்து வெளி யில் உள்ள சிலைகளில் காணும் பட்டம் ஆதித்தநல்லூர் தமிழர் மரபு வழக்கத்தை யொட்டியதாக மதிக்கப்படுகிறது. இந்த மரபு வழக்கம் மைசீனா (Mycena), எகிப்து (மிசிரம்) முதலிய நாடுகளிலும் காணப்படுகிறது. கிரீட் தீவில் உள்ள நோசாசு (Knossos) நாட்டின் சுவர் ஓவியங்களிலும் பட்டங்கள் கட்டப் பட்டிருப்பது தெளி வாகக் காணப்படுகின்றது. இவை தமிழர் பண்பாடு எங்கெல்லாம் பரவியிருந்தன என்பதற்கு நல்ல சான்றாகக் காணப்படுகின்றன. தமிழர் ஒரு தனி இனம் 1951ஆம் ஆண்டில் அறிஞர் வி.ஆர். ïuhk¢rªâu Ô£rj® v«.V., ஆற்றிய, சர் உல்லியம் மெய்யர் விரிவுரைகள் என்ற பேச்சுக் களை (Sir William Meyer Lectures) வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தென் இந்தியா (Pre-Historic South India) என்ற பெயரில் சென்னைப் பல்கலைக் கழகம் நூல் வடிவமாக்கி நமக்குத் தந்துள்ளது. அந்நூலில் ஆசிரியர் தம் வரலாற்று ஆய்வுத் திறனையும் தொல்பொருள் ஆய்வு நுணுக்கத்தையும் நன்கு பயன்படுத்தித் தமிழர் ஒரு தனி இனம் அவர்களின் பண்பாடு, நாகரிகம், சமயம், தொழில் திறம் ஆகியவை உலகில் தொன்மை வாய்ந்தன, ஒப்புயர் வற்றன என்பதை ஆய்ந்து தெளிந்து ஆதாரம் காட்டி மெய்ப்பித்துள்ளார். அவரது நூல், தமிழர் நாகரிகத்தை நிலைநாட்டும் எஃகு அரணாக அமைந்துள்ளது. அவரது நூலில் தென் இந்தியாவின் நில இயல், வரலாறு பழங் கற்காலம் தொட்டு இரும்புக் காலம், இன்றைய வரலாற்றுக் காலம் வரை தமிழர்கள் ஆற்றிய தொழில்கள், வணிகம், கடல் வணிகம், நாகரிகம் முதலியவை நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பாகப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மலர்ந்த இரும்புப் பண்பாட்டின் ஏற்றம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டு மருதநில மக்கள் கண்ட இரும்புப் பண்பாட்டால் தொழில் வளம் பெருகியதையும் தொழில் பெருக்கால் எழுந்த விளைபொருள் களையும் செய்பொருள்களையும் விற்பனை செய்து தமிழர்களின் நாடு சிறக்கவும் வளர்ந்து வரும் தமிழர் குமுகாயம் உலகமெங்கும் சென்று குடியேறவும் நெய்தல் நிலப்பரதவர்கள் ஆழ்கடல் கடந்து சென்று மிகப் பாதுகாப்பாகத் திரும்ப வரும் கப்பல்களைத் திறம்பட ஓட்டி என்றும் அழியா வரலாற்றுப் புகழை ஈட்டியுள்ளனர் என்பது புலனாயிற்று. எகிப்து, எல்லம், மெசபொத்தாமியா, கிரீட், வட அமெரிக்காவில் உள்ள கொலரடோவ், மெக்சிக்கோ, பெரு முதல் தமிழர் வணிகம் வளரவும், குடியேற்றம் பெறவும் சிவநெறி பரவவும் மூலகாரணமாய் நின்றவர்கள் பரதவர்கள் என்பது தெளிவாக எடுத்து உரைக்கப் பெற்றுள்ளது. மனித குலத்தின் மூதாதையர் களான தமிழர்கள் தென் இந்தியாவில் தோன்றி இந்தியா முழுவதும் பரவி எல்லம், சுமேரியா முதலிய நாடுகளுக்கு நிலவழியாகவும் நீர் வழியாகவும் சென்று வணிகம் வளர்த்தவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் காட்டி மெய்ப்பித்துள்ளார். சிந்து வெளியில் மட்டு மின்றி எகிப்து, எல்லம், சுமேரியா, கிரீட், அமெரிக்கா முதலிய நாடு களிலெல்லாம் குடியேறி, நாகரிகத்தின் வித்துக்களைத் தூவியவர்கள் என்று விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சிறப்பாகத் தமிழர்கள் தென்னிந்தியாவில் தோன்றி வட இந்தியாவிலும் கடல் கடந்து பல தீவுகளிலும் பல கண்டங்களிலும் குடியேறியவர்கள் என்று ஆணித் தரமாக மெய்ப்பித்துள்ளார். தமிழர்களோ திராவிடர்களோ அயல் நாடுகளினின்று இந்தியாவில் குடியேறியவர்கள் அல்லர் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இரும்பு ஊழி வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தென்னிந்தியா என்ற நூலில் ஆதித்தநல்லூரில் அரும்பிய இரும்புப் பண்பாட்டிற்குச் சிறப் பான இடம் அளித்துள்ளார். இரும்புப் பண்பாடே தமிழர்களின் பயிர்த்தொழிலுக்கும் ஏனைய தொழில்வளத்துக்கும், வணிக வளர்ச்சிக்கும் ஆக்கம் அளித்தது, அஃதின்றி அவர்களின் நுண்ணறி விற்கும் சமயச் சிறப்பிற்கும் தெய்வங்களின் உயரிய தன்மைக்கும் மொழி வளர்ச்சிக்கும் எழுத்துக்களின் ஏற்றத்திற்கும் வலிவிற்கும் வாழ்விற்கும் இரும்புப் பண்பாடே காரணம் என்று அவர் மேலும் எடுத்துக் காட்டியுள்ளார். இரும்புப் பண்பாட்டை மருதநில மக்கள் நன்கு பயன்படுத்தித் தாங்கள் நன்கு வாழ்ந்ததோடு ஏனைய நான்கு நிலமும் அந்நில மக்களின் வாழ்வும் வளம்பெறத் தங்கள் அறிவையும் உழைப்பையும் போதிய அளவு அளித்து, தமிழ்நாட்டில் மலைவளம், காட்டுவளம், கடல்வளம் சிறக்க அவர்கள் ஆற்றிய தொண்டு என்றும் போற்றத் தக்கது என்பது அவர்தம் நூலின்கண் நன்கு விளக்கிக் காட்டப் பெற்றுள்ளது. கைமாறு கருதாத தமிழ்த்தொண்டு ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டிற்குச் சிறப்பான இடம் அளித்துள்ள ஒரேநூல் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தென் இந்தியா என்ற நூலேயாகும். அந் நூலை எனக்குத் தந்து உதவியவர் என் உடன்பிறப்பனையராய் விளங்கும் நண்பர் இலங்கையில் உள்ள கண்டிநகருக்கு அண்மையில் உள்ள தலத்துயர் தமிழறிஞர் கே. கணேசு அவர்களேயாவர். அவர் கைமாறு கருதாது பல அரிய நூல்களை வாங்கி எனக்கு அளித்து, யான் பயின்று கலை நூல்கள் யாக்கக் கருதித் தொண்டாற்றி வந்துள்ளார். அவர் அளித்த நூல்களில் இந் நூல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். 1968 ஆம் ஆண்டு இலங்கை மக்கள் அன்புடன் எனக்கு அளித்த ஒரு பெரிய பாராட்டு விழாவிற்கு நான் போயிருந்த பொழுது இந்நூலை அவர் தந்துதவினார். 10 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பப் படித்துப் பல குறிப்புக்களும் எடுத்துள்ளேன். அந்நூல் எனக்குத் தேனினும் மிக்க இனிதாகத் தித்திக்கிறது என்று பலமுறை நண்பர் பலரிடம் கூறிவந்துள்ளேன்; என்றாலும் ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வைப்பற்றி ஓர் ஆராய்ச்சி நூல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் ஏனோ எழுப்பவில்லை என்பது தான் வியப்பு. திருப்புமுனை 1974 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் சோவியத்து சோசலிச நாட்டின் அரசு வெளியிடும் சோவியத் நாடு என்பது திங்கள் இரு முறை வெளிவரும் ஓர் அழகிய தாளிகையாகும். அதில் உருசிய அறிஞர் அலெக்சாந்தர் கொந்தரத்தோவ் என்பவரால் இலெமூரியா கண்டத்தின் மருமம் என்று ஏழு தொடர் கட்டுரைகள் எழுதப் பெற்று வெளிவந்தன. அவை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம் முதலிய பதினான்கு மொழிகளில் வெளிவந்தன. அவற்றைப் படித்து மகிழ்ந்தேன். அப்பால் அக் கட்டுரை ஆசிரியரால், அக்கட்டுரைகளைத் தழுவி, மூன்றுமாக் கடல்களின் புதிர் என்று உருசிய மொழியில் எழுதப்பெற்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பெற்று 1974 இல் வெளிவந்த அரிய நூலையும் பயின்றேன். அதனைப் படிக்குமாறு சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரும் அருமை நண்பருமான முனைவர் கோ. இராமச்சந்திரன் தூண்டினார். அதை உடனே புத்தகக் கடையில் வாங்கி நன்கு சுவைத்துப் படித்தேன். அயல் நாட்டறிஞர்கள் தமிழ் இனத்தைப் பற்றி எழுதிய நூல்களில் இவரது நூல் தலையாய இடத்தைப் பெறத்தக்கது என்று கண்டேன். அவர் தமது நூலில் தமிழர்கள் திராவிட இனத்தின் முன்னோடிகள் என்றும் அவர்கள் மறைந்துபோன இலெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியான நாவலந்தீவில் தோன்றி, தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் பரவிய தொன்முதுக் குடிமக்கள் என்றும், இவர்கள் அயல் நாடுகளினின்று தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றும், தமிழ்நாட்டில் தோன்றி எல், உபைதியா, எல்லம், சுமேரியா நாடுகளில் குடியேறி, அங்குப் பயிர்த் தொழிலை வளர்த்துப் பல்வேறு கைத் தொழில்களைப் பெருக்கிச் சமயத்தையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் வளர்த்தவர்கள் என்றும் தெளிந்து விளக்கிக் காட்டியுள்ளனர். மேலும் அவர் தமிழ்மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான மொழி, தமிழர்கள் தென்னிந் தியாவில் தோன்றிய தொல்பழங்குடி மக்களாவர் என்றும் இவர்கள் இருக்கு மறை கூறும் ஆரியர்கள் இந்த வியத்தகு இந்திய நாட்டிற்கு வருவதற்கு முன்பே இந்திய நாடு முழுவதும் பரவி வாழ்ந்து வருபவர் களாவர் என்றும் கூறியுள்ளார். திராவிட மொழி தென்னிந்தியாவில் மட்டுமன்று, நடு இந்தியாவிலும் வட இந்தியாவிலும் பரவி இருந்தது. ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்னர்த் திராவிட மொழி பலுசித்தானிலும் ஈரானின் தென் பகுதியிலும் - எல்லம் நாட்டிலும் கூடப்பரவி இருந்தது. மெசபொத்தாமியாவில் (ஈராக் நாட்டில்) முதன்முதலாகக் குடியேறி உறுதியான வாழ்க்கையை நடத்திய மக்கள் இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் ஆவர்; மிகத்தொன்மை வாய்ந்த சுமேரியர், எல்லமியர், உபைதியர் ஆகியவர்களின் முன்னோர்க ளாகவும் இருக்கலாம் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள என்றெல்லாம் எடுத்துக்காட்டியுள்ளார். எல்லம், மெசபொத்தாமியா நாடுகளில், 5000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தமக்கே உரிய ஆரிய மொழியையும் எழுத்துக்களையும் கொண்டு மிகத் தொன்மையான திராவிடப் பண்பாடு பல நாடுகளில் பரவியது என்றும் விளக்கியுள்ளார். உருசிய அறிஞர் உணர்த்திய உண்மை மூன்று மாக் கடல்களின் புதிர்கள் (The Riddles of Three Oceans) என்ற நூலின் நடுவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து ஆற்றங்கரைகளிலும், பலுசித்தானிலும் தெற்கு ஈரானிலும் ஈராக்கிலும் தைக்கிரீசு இயூப்பிரட்டீசு ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்த மக்கள் பயின்ற மொழி திராவிட மொழியேயாகும். அங்கு வாழ்ந்த திராவிடர்கள். தங்களின் உயர்ந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் சமயத்தையும் நிலை நாட்டினர். இவர்களது நாகரிகம் உலகில் பழம் பெரும் நாகரிகமாக மதிக்கப்படுகிறது. இவர்கள் தாம் கலம் ஓட்டும் கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இவர்கள் தாம் பாம்பே பக்கத்திலுள்ள கத்தியவாரில் நடத்திய அகழ் ஆய்வில் உலோதல் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் கட்டும் தளத்தை (Ship Yard) உலகில் மிகப் பழைமையான துறைமுகத்தின் அருகிலே நிறுவினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு நல்ல விளக்கமும் அளித்துள்ளார். இஃது ஆரியர்கள் வருவதற்கு முன்பே கட்டப்பட்டுள்ளது. கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன் திரா விடர்கள் பயிர்த் தொழிலைப் பாங்குற வளர்த்தனர். மட்பாண்டம் வனைதல், துணி நெய்தல், மாடுகளைப் பழக்கி உழுதல், பொதி சுமத்தல், வண்டிகளை இழுத்தல், செக்கிழுத்தல் முதலிய தொழில் களுக்குப் பயன்படுத்தினர். கால்வாய்களைக் குளங்களை வெட்டி னர்; அணைகளைக் கட்டினர். நகர் அமைப்பு முறை, வடி நீர்க் கால்வாய் அமைப்பு முறை, மூடுசாக்கடைகள் கட்டும்முறை முதலிய வற்றை நன்கறிந்திருந்தனர். யானைகளைப் பழக்கினர். பேசும் மொழிக்கு, உயரிய ஓவிய எழுத்துக்களைக் கண்டனர். உயிரோம்பும் உழவுத் தொழிலின் பாதுகாவலனான சிவன் கையில் மூவிலைவேல் தாங்கிப் புலித்தோலாடை புனைந்து யானை உரிபோர்த்தியவனாய் எருது ஊர்தியனாகக் கண்டனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பின்னர் இருக்கு வேதத்தை எழுதப் பயின்றனர். திராவிடர்களின் மெய்ப் பொருள்களையும் சமயத்தையும் பண்பாட்டையும் கலை களையும் தழுவிக் கொண்டனர். மேலும் அவர்கள் அதைத் தமதாக்க வும் வெட்கப்படவில்லை (பக். 179-181) என்பவற்றையெல்லாம் விளக்கமாக எடுத்துக்காட்டியுள்ளார். திராவிட நாகரிகம் இந்தியாவிற்கு வடக்கிலிருந்து வரவில்லை இலெமூரியாக் கண்டத்தின் மூலமாக எழுந்த திராவிட நாகரிகம் உலகில் மேற்கிலும், வடக்கிலும், கிழக்கிலும் பரவியது; இலெமூரி யாவே மனிதகுல நாகரிகத்தின் தொட்டில்; உலகில் பழம் பெரும் நாகரிகம் மூன்றில் இரண்டு நாகரிகங்கள் திராவிட மொழி பயின்றவர்களின் தொடர்புடையதாய் இருப்பது வியக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார் (பக்.132). திராவிட நாகரிகம் தென் இந்தியாவில் தோன்றி, சிந்துவெளியில் கிளைத்துத் தளிர்த்து மொக்குவிட்டு மலர்ந்து, அதன் விதைகள் அல், உபைத், எல்லம், சுமேரியா, எகிப்து முதலிய நாடுகளிலெல்லாம் பரவி மணம் வீசச் செய்துள்ளது. திராவிட நாகரிகம் இந்தியாவிற்கு வெளியிலிருந்தோ, அல்லது வட இந்தியாவிலிருந்தோ தென் இந்தியாவிற்கு வந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை; திராவிட நாகரிகம் தென் இந்தியாவில் தோன்றி வட இந்தியா முழுவதும் பரவி, உபைதியா வழியாக எல்லம், சுமேரியா, எகிப்து, கிரீட், ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் புகுந்து வாழ்வும் வளமும் அளித்துள்ளது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் எடுத்துக் காட்டியுள்ளார். (பக். 148-150). பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் திராவிடர்களின் மூலத்தாயகமாக இருந்த இலெமூரியாக் கண்டமும், அதன் அழிவிற்குப்பின் நிலவிய எச்ச மிச்சங்களான தமிழகமும் (நாவலந் தீவும்) பிற தீவுகளும் திராவிட நாகரிகத்திற்கு அடிப்படையாக இருந்தன என்று வெகு அழகாக எடுத்துக்காட்டி யுள்ளார். ஆனால், இலெமூரியாக் கண்டம் என்பது ஒன்று நிலவி இருந்தது என்பதற்கு உறுதியான அறிவியல் பாங்கான, அல்லது வரலாற்றுத் தொடர்பான அல்லது நில நூல் - மண்ணூல் பாங்கான சான்றுகள் எதையும் காட்டவில்லை. அவரது நூலை இறுதி வரை படித்தேன். அவரது கொள்கைக்கு அரண் செய்யும் சான்று எதையும் காட்டவில்லை. 1971ஆம் ஆண்டில் சோவியத் அரசு இந்துமாக் கடலின் அடித்தளத்தை ஆய்வு செய்யக் கருதிக் கடல் ஆய்வு செய்வதற்கேற்ற எல்லா நுட்பமான கருவிகளும் இடம் பெற்ற வித்யாசு என்னும் கப்பல் மூலம் ஆய்வு செய்தது. சோவியத் கடல் ஆய்வு வல்லுநர் (Soviet Oceanographers) கண்ட முடிவுகளை அவர் எடுத்துக் காட்டுவார் என்று எதிர் பார்த்தேன். முடிவு ஒன்றும் அவரது நூலில் இடம்பெறவில்லை. மேலும் அவர் இலெமூரியா தொடர்பான சிக்கல்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் எவரது கூற்று சரியானது என்று கூறவில்லை. நமக்குத் தெரியாது என்ற விடையைத் தான் நாம் மீண்டும் கூறவேண்டியுள்ளது. தொல்பொருள் ஆய்வு, மனித இன இயல், மனித வரலாறு முதலியவற்றின் இப்போதைய நிலையையும் பிற துறைகளிலான இப் போதைய அறிவாற்றலையும் வைத்துக் கொண்டு எந்தக் கருத்து சரியானது என்று மெய்ப்பித்து விடமுடியாது; இந்துமாக் கடலில் இலெமூரியாக் கண்டம் இருந்த பகுதி எனக் கருதப்படும் இடத்தின் அடிப்பரப்பை உன்னிப்பாக ஆய்வு செய்த பிறகுதான் இலெமூரியாவைப் பற்றிய கருத்து சரியா தவறா என்பதைச் சொல்லுவதும் அதன் உதவியுடன் தொன்மை யான இந்திய நாகரிகம், மக்களின் தோற்றம் இவை சம்பந்தமான பிரச்சினைகளையும் மற்றும் இதுவரை தீர்வு காணப்படாதுள்ள பிரச்சினைகளையும் அணுக முயல்வது சாத்தியமாகும் (இலெமூரிய கண்டத்தின் மர்மம் என்ற கட்டுரையின் இறுதியில்) என்று எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் இதை மூன்று மாக்கடல்களின் புதிர் என்ற விலை மதிக்கவொண்ணாத அரிய நூலிலும் எடுத்துக் காட்டியுள்ளார். என்றாலும் ஆசிரியர் தம் கருத்துக்களுக்கு நல்ல ஆதாரமாக அமைந்த இலெமூரியாவின் உறுதியான நிலையை எடுத்துக் காட்டாது விட்டுவிட்டது ஒருபெருங் குறையாக நேயர்களுக்குப் புலப்படும் என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இலெமூரியாவின் எச்சமிச்சங்கள் ஆனால் இலெமூரியாவின் உறுதியான நிலையை அவர் எடுத்துக்காட்ட முடியாவிட்டாலும் இலெமூரியா நீரில் மூழ்கிவிட்ட பின், அதன் ஒரு பகுதியாக விளங்கிய தமிழகம் என்னும் நாவலந் தீவு (ஒளிநாடு) நிலவி இருந்ததையும் அதன் அழிவிற்குப் பின் அதன் எச்சமிச்சமாக இருந்துவரும் இலங்கை, முல்லைத் தீவு, தென் இந்தியா முதலியவற்றையும் தென் இந்தியாவில் உள்ள ஆதித்த நல்லூரில் அரும்பிய இரும்புப் பண்பாட்டையும் தமது நூலுக்கு உரிய பெரிய நல்ல சான்றாக எடுத்துக் காட்டாக விரிவாகக் காட்டி யிருக்கலாம். அது தமிழரது சீரிய பழம்பெரும் நாகரிகத்திற்கு ஆணித்தரமான சான்றாக அமைந்திருக்கும். 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ஆதித்த நல்லூர் இரும்புப் பண்பாடு உலகிலே ஒப்பற்ற உயரிய பண்பாடாக இருந்தது அவரது கொள்கைக்கு உறுதியான அடிப்படையாய் இருப்பதோடு அவரது நூலுக்கு ஆக்கம் அளிப்ப தாகவும், நல்ல அரணாகவும் அமைந்திருக்கும். ஆனால் அவருக்கு ஆதித்தநல்லுர்ப் பண்பாட்டைப் பற்றி அணுவளவும் தெரியாது என்று அவருடைய நூல்கள் மூலம் நன்கு அறிகிறோம். ஆதித்த நல்லூர் பண்பாட்டைப் பற்றி அதிகமாக நமது இந்திய நாட்டில் உள்ள தொல்பொருள்துறை வல்லுநர்களுக்கோ, அகழாய்வு வல்லுநர்களுக்கோ நன்கு தெரியாதென்றால் அயல் நாட்டிலுள்ள இன்றைய அறிஞர்களுக்கு அஃது எப்படித் தெரிந்திருக்க முடியும்? காரணம் ஆதித்த நல்லூர் அகழாய்வுப் பொருள்களைப் பற்றி 1915 ஆம் ஆண்டில் வெளிவந்த அறிஞர் அலெக்சாந்தர் - இரீயா அவர்களின் பட்டியலைத் தவிர வேறு நூல் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பட்டியல்கூட சுமார் 1000 படிகள் அச்சிடப்பட்டு 1925-க்குள் விற்பனையாகி இருக்கும். அதனால் ஆதித்தநல்லூர் அகழாய்வைப் பற்றிய உண்மைகள் கொந்தரோத் தோவ் போன்ற அறிஞர்களுக்கு எட்டியிருக்க முடியாது. தமிழர்கள் ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வைப் பற்றி அறிய ஆய்வு நூல்களை எழுதி அயல் நாட்டறிஞர்கள் கைக்கு எட்டுமாறு செய்திருக்க வேண்டும். அதில் நாம் தவறிழைத்துள்ளோம். எனவே, கொந்திராத் தோவ் அவர்களின் மூன்றுமாக் கடல்களின் புதிர்கள் என்ற நூலைப் படித்ததும், அது ஆதித்த நல்லூர் அகழாய்வைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற உறுதியான ஆர்வத்தை என் உள்ளத்தில் உந்தி எழச்செய்து விட்டது. அஃது எனக்கு ஒரு திருப்பு முனையாய் விட்டது. ஆதித்த நல்லூர் அகழாய்வைப் பற்றிய உண்மைகளை அயல் நாட்டு அறிஞர்கள் அறியுமாறு செய்யவேண்டியது தமிழ்நாட்டின் உயரிய பணியாகும்; தமிழர்களின் அரிய தொண்டும் ஆகும். தமிழ் எழுத்தாளரின் இன்றியமையாத கடமையுமாகும் என்று கருதினேன். உடனடியாக ஆதித்த நல்லூர் அகழாய்வு என்ற அரும் பெரும் ஆய்வு நூலை எழுதி வெளியிடக் கங்கணம் கட்டிக் கொண்டேன். எனது முதுமைப் பருவத்தையும் உடல் நலம் குன்றியிருப்பதை யும் பொருட்படுத்தாது 1978 ஆம் ஆண்டின் தொடக்கத்திலே எழுதத் திட்டமிட்டு எழுதத் தொடங்கினேன். பல்வேறு இன்னல் களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே பன்னிரண்டு திங்களில் ஒரு நல்ல நிறைவான நூலாக எழுதி முடித்துள்ளேன். அயல்நாட்டு அறிஞர்கள் அறிவதற்கு ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் என்ற இந்நூல் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர வேண்டும் என்று எண்ணியுள்ளேன். சிந்துவெளி நாகரிகந்தான், ஆரியர்கள் இந்திய நாட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் முன்னர் உலகில் ஒப்பற்ற நாடு, நகரம், அரண், அரசு, தொழில், பண்பாடு முதலியவற்றை உருவாக்கிய வர்கள் திராவிடர்கள் என்னும் உயரிய உண்மைகளை உலகறியச் செய்தது. இதனை அறிஞர்கள் ஆர்.டி.பானர்ச்சி, சர் சாண்மார்சல், டாக்டர், இ.சே.எய்ச், மெக்கே, எம்.எ. வாட்சு, கே.என்.தீட்சித், வயவர் மார்ட்டிமர் உயிலர், எண்டிரி இராசு அடிகள் போன்றோர் உலகிற்கு உணர்த்தினர். ஆனால், சிந்துவெளி அகழாய்வுத் துறையில் ஈடுபட்டவர் பலர், சிந்துவெளிப் பண்பாட்டைப் படைத்தவர்கள் சுமேரிய மக்களேயாவர் என்றும், அவர்கள் இந்தியாவிற்கு வந்த பின்னர்த் திராவிடர்கள் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம் என்றும் கருதினர். மேலும் சிந்துவெளி நாகரிக காலம் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். சிந்துவெளி பண்பாடு செம்பும் மண்ணும் கலந்த சால்கோலிதிக் பண்பாடு என்றும் இந்த மக்களின் சின்னம் திமில் பெருத்த காளை என்றும் கூறினர். அஃகி அகன்ற ஆதித்தநல்லூர் பண்பாடு ஆனால், ஆதித்தநல்லூரில் அரும்பிய ஆற்றங்கரைப் பண்பாடு சுமார் பத்தாயிரம் ஆண்டிற்கு முன் அரும்பிய தமிழர் கண்ட இரும்புப் பண்பாடாகும். இந்தப் பாரிய பண்பாடு தமிழர்களின் முன்னோர்கள் (Pre-Tamilians) அல்லது தமிழர்களின் ஆதி முன்னோர்கள் (Proto Tamilians) கண்டவை என்று சொல்வதற்கில்லை. நாகரிகம் பெற்ற தமிழர்களின் பண்பாடு என்று உறுதியாகச் சொல்லலாம். தமிழர்கள் இங்குத் தோன்றி, பழங்கல் ஊழி, புதுக்கல் ஊழி, இரும்பு ஊழி முதலியவற்றைக் கடந்து வரலாற்றுக்காலம் வரை வாழ்ந்து வருபவர்கள். இவர்களே வட இந்தியா வரை பரவிச் சிந்துவெளிப் பண்பாட்டைப் படைத்தவர்கள், தென் இந்தியாவில் தோன்றிய தமிழர்களே உபைதியா, எல்லம், சுமேரியா, எகிப்து, கிரீட் நாகரிகங்களை உருவாக்கியவர்கள், வடஅமெரிக்காவில் மாயா நாகரிகத்திற்கு வித்து இட்டவர்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்துகின்றது. இவர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைக் கண்டுபிடித்து, வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு முதலியவற்றைக் கண்டுபிடித்து, பயிர்த்தொழில், பானை சட்டிகள் வனையும்தொழில், நெசவுத் தொழில், கப்பலோட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்தும் அரசு அமைத்தும், இரும்புக் கருவிகள் மூலம் அதைப் பாதுகாத்தும், கடல் வணிகம் வளர்த்தும் உலகப் புகழ் பெற்றவர்கள். ஆதித்தநல்லூர் பண்பாடு தமிழர்கள் அல்லது திராவிடர்கள், ஆரியர்களைப் போல், மொக லாயர்களைப்போல், ஆங்கிலேயர்களைப்போல் அயல்நாட்டி னின்று வந்து இந்திய நாட்டைக் கைப்பற்றிய அயலவர்கள் என்ற பேச்சுக்கு முடிவு கட்டியது; திராவிடர்கள் இந்திய நாட்டிற்கு உரியவர்கள் என்ற உண்மையை நிலை நாட்டியது. திராவிடப் பண்பாட்டின் மீது புதிய ஒளி சிந்துவெளி அகழ் ஆய்வு தொடங்கு முன் ஆரியர்களே சிறந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் மொழியையும் சமயத்தையும் உடைய இனம் என்றும், அவர்களே அநாகரிகமும், அழகின்மையும் அறிவின்மையும் வாய்ந்த திராவிட மக்களை அறிவுடையவர்களாயும், அறம் உணர்ந்தவர்களாயும், தெய்வ உணர்வு உடையவர்களாயும் மொழி, எழுத்து முதலியவற்றை ஆக்கி அளித்து உயர்த்தியவர்களா யும் பறையடித்து வந்தனர். ஆனால் திருவனந்தபுரம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் நான் அறிந்த அளவில், தமிழர் ஒரு தனி இனம் என்ற உண்மைக்கு அடிகோலினார். திருநெல்வேலி உயர்திரு கா. R¥ãukÂaãŸis, v«.V., எம்.எல். அவர்கள் தமிழர்களின் சிவநெறி வேறு ஆரியர்களின் சுமார்த்த மதம் என்ற இந்துமதம் வேறு என்று முதன்முதலாக எடுத்துக்காட்டி ஆரிய உலகிற்கு அறை கூவினார். மாப் பேரறிஞர் மறைமலை அடிகள் தமிழ், உலகிலே ஒரு தனித்தியங்கவல்ல உயரிய செம்மொழி. இஃது ஆரிய மொழியோடு எவ்வகைத் தொடர்பும் இன்றி, எழுந்த தனிமொழி என்ற கருத்தைக் கூறித் தனித்தமிழில் எழுதவும், பேசவும் ஆக்கமூட்டினார். அறிஞர் இராபர்ட் கால்டுவெல் கூறிய கருத்துக்களை அரண் செய்தார். சிந்து வெளி அகழ் ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின் - அஃதாவது 1927 ஆம் ஆண்டிற்குப்பின், தமிழர் ஒரு தனி இனம் அவர்கள் உடல் அமைப்பால், வண்ணத்தால், மொழியால், சமயத்தால், கடவுள் நம்பிக்கையால், உடையால், உணவால், பண்பாட்டால், நாகரிகத் தால், மகளிரை மதிக்கும் பாங்கால், குலத்தை நேசிக்கும் முறையால் அணிகலன்கள் அணியும் முறையால், ஆரியர்களினின்று முற்றிலும் மாறுபட்டவர்கள். ஆரியர்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக் குதிரை, ஆடு முதலியவற்றை மக்கள் தெய்வத்திற்கு வேள்விசெய்து சோமச் சாறு பருகி, அடிக்கடி, புலம் பெயர்ந்து செல்லும் மக்களாய் இந்தியா விற்குள் புகுந்து திராவிடர்களை வென்று திராவிட இந்தியாவை இரண்டாகப் பிளந்து ஆரியாவர்த்தம், தெக்காணம் என்ற பிரிவினையை வளர்த்தவர்கள் என்ற உண்மை புலனாயிற்று. அரப்பன் பண்பாடு ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டிற்கு அளித்த ஆக்கம் திராவிடர்கள், சிந்துவெளியில் பயிர்த் தொழிலுக்கு அடிகோலி அதைப் பாங்குற வளர்த்து, மட்பாண்டம் வனைதல், துணி நெய்தல், வெண்கல ஏனங்களைச் சமைத்தல், நாடு, நகரம், வீடு, தெருக்கள், குளங்கள், மூடுசாக்கடைகள் அமைத்தல் போன்ற நனி சிறந்த நாகரிகங்களைக் கி.மு. 4000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டவர்கள். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மொழி, எழுத்துக்களை அமைத்தவர்கள். சைவ சமயத்தையும், சிவன், சத்தி, ஆடவல்லான், கணபதி முதலிய தெய்வ உருவங்களையும் கண்டவர்கள் - கப்பல் கட்டும் தளத்தை உலகில் முதன்முதலாக உருவாக்கியவர்கள். ஆழ்கடல்களைக் கடந்து அயல் நாட்டினரோடு வணிகம் வளர்க்கத் தெரிந்தவர்கள். இவர்களே உலகிலே முதன் முதலாக ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்ற உண்மையைச் சிந்துவெளி அகழாய்வும் ஆதித்தநல்லூர் அகழாய்வும் எடுத்துக் காட்டின. சிந்துவெளிப் பண்பாடு, திராவிடப் பண்பாடு என்ற முடிபு, ஆதித்தநல்லூர்த் தமிழர் பண்பாட்டை ஆய்வதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தன என்பது உணர்தற்பாலது. இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibliography) 1. Modern Review - (Calcutta) 1927. (Monthly Magazine). 2. Catalogue of Pre-historic Antiquties from Adichanallur and Perumbair by Alexandar Rea F.S.R. (Scott) Madras 1915. 3. Adichanallur Skulls by Zucker Man (Madras) 1930. 4. Pre-historic South India by Prof. V.R. Ramachandra Dikshitar M.A. (Madras) 1951. 5. The Riddles of Three Oceans by Alexandar Kondratov (Moscow) 1974. 6. Light from the Ancient Past by Jack Finegan (London) 5th Printing 1951. 7. The Mystery of Lemuria by Alexandar Kondratov (Sovient Land). INDIA (Jan. 1974). 2. தொல்பொருள் ஆய்வியல் ARCHAEOLOGY ஆய்வியலில் புதிய ஒளி தொல்பொருள் ஆய்வியல் என்பது மக்களின் பழைமைச் செய்திகளைப்பற்றிய அறிவியல் ஆய்வுசார்ந்த அரியதுறை எனப் பொருள்தரும். முற்காலத்தில் வாழ்ந்த முதுமக்களின் வாழ்க்கை முறைகளையும், உணவு விளைத்தலின் தன்மைகளையும், ஆடை அணிகலன்கள் ஆக்கும் வழிகளையும், வீடு, அரண்மனை மாளிகை, அரண் களஞ்சியம் கட்டும் முறைகளையும், நாடு நகரம் அமைக்கும் திறனையும், உயிர்துறந்தாரின் உடல்களை அடக்கம் செய்யும் வழிமுறைகளையும் தொல்பொருள் ஆய்வுத்துறை விரிவாக ஆய்வு செய்து வருகிறது. இன்று தொல்பொருள் ஆய்வுத்துறை உலக மெங்கும் பரவி விரிவடைந்துள்ளது. மேலும் அஃது அறிவியல் பாங்காக ஆழ்ந்து ஆய்வு செய்து வருகின்றது. இத்துறை, ஆதியில் நிலத்தை அகழ்ந்து ஆய்வு செய்யும் முறையை (Excavation) அடிப்படையாய்க் கொண்டிருந்தது என்பது தெளிவு. அப்பால், அத்துறையில் அதிகத் தொலைவில் உள்ள நாடுகளி லும் காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் பழம்பொருள்கள் புதைந்து கிடக்கின்றனவா? என்பதைக் காண ஆய்வுப்பயணம் (Exploration) நடத்துதல் என்னும் விரிவான முறை எழுந்தது. இப் பொழுது நீண்ட நெடுநீர்ப்பயணம் செய்து, ஆய்வுக்கப்பல் (Research ship), நீர்மூழ்கி (Submarine) முதலியவற்றின் மூலம் மாக்கடல்களின் அடித்தளம் வரை சென்று அங்குள்ள மலை, செடி, கொடி, பாசி, பவளம், விலங்கு முதலியவற்றையும் பழங்காலத்தில் கடலால் விழுங்கப்பட்ட நாடு, நகரம், வீடு, அரண், கருவிகள், அம்மி, உரல் திரிகை போன்றவற்றையும் கண்டுபிடித்து ஆயும் கடல் ஆய்வு (Oceanography) என்னும் புதிய ஆய்வு முறையும் அரும்பி வளர்ந்துள்ளது. வரலாற்றறிஞர்கள் (Historians) செவிவழி மரபுரைச் செய்தி களையும், ஏடு, செம்புப்பட்டயம், கல்வெட்டு முதலியவற்றையும் ஆய்ந்து முற்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் ஆய்ந்து நூலாக்கம் செய்துள்ளனர். மானிட இயல் அறிஞர்கள் (Anthropologist) பண்டைக் கால மக்களின் உடல் அமைப்பு, எலும்புகளின் அமைப்பு, வண்ணப்பொலிவு, தோற்றம், வாழ்க்கைமுறை, பண் பாட்டு இயல், பழக்க வழக்கங்கள், சமுதாய அமைப்பு (Social Structure) உணவு, உடை, அணிகலன், தொழில், ஏனங்கள் முதலியவை எப்படிப்பட்டன என்று ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு பண்டைக்கால மக்களின் கைவினைப் பொருள்கள் (Handicrafts) எப்படிப்பட்டன? அவற்றை அவர்கள் எப்படி உருவாக்கினர்? எவ்வாறு பயன்படுத்தினர்? அவற்றால் நாம் அறியக்கூடியதென்ன? என்பவற்றையெல்லாம் தெளிவாய் ஆய்ந்து உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றனர். 1. தொல்பொருள் ஆய்வு, 2. வரலாற்றியல், 3. மானிட இயல் (மனித உடல், உளம் இரண்டும் சார்ந்த முழு வரலாற்று ஆய்வுத் துறை) ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர் புடையனவாய்த் திகழ்கின்றன; இவை ஒன்றுக்கொன்று உறுதுணை யாய் நிலவுகின்றன. இன்று பண்டைக்கால மக்களின் பாங்கான வரலாற்றைத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் நேரான துணை யின்றிச் சீராகக் காணமுடியாது என்று எண்ணப்படுகிறது. முற்கால இலக்கியம், பண்டைக்கால நாடு, நகரம், சிற்றூர், இனம், விலங்கு, பறவை, மக்கள், கருவி தட்டுமுட்டுப் பொருள்கள் முதலியவற்றை அறிய வேண்டுமானால் தொல்பொருள் ஆய்வு அறிஞர்களை நாடுதலே முறையாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று தொல்பொருள் ஆய்வு இயல் அறிஞர்கள், வரலாற் றியல் வல்லுநர்கள் பயன்படுத்தும் அல்லது பயிலும் நூல்களை நுணுகியறியப் புதிய முறையில் ஒளிகாட்டி வருகின்றனர். அதனால் அவை புதிய பொலிவும், பொன்றாச் சான்றும் பெற்றுப் புகழுடன் நிலவுகின்றன. அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் பொறிக் கப்பட்டு, புதைக்கப்பட்ட கல்வெட்டுக்களையும், செப்பேடுகளை யும் படைக்கலன்களையும் அணிகலன்களையும், தட்டுமுட்டுப் பொருள்களையும் பிற பண்டங்களையும் நகரங்களையும் வீடுகளை யும் அரண்களையும் அகழ்ந்து ஆய்ந்து அறிந்து வரலாற்றறிஞர் களுக்குப் பல புதிய செய்திகளை வழங்குகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லில் அல்லது செம்புத்தகட்டில் அல்லது களிமண் தகட்டில் எழுதப்பட்ட பட்டயங்களிலும் ஏடுகளிலும் வரையப்பட்ட காணற்கரிதாய்க் கருதப்பெறும் கருவூலங்களையும் அகழ்ந்து எடுத்துத் துப்புரவு செய்து அவற்றில் பொறிக்கப்பட்ட புரியாப் புதிராகத் திகழும் பொன்றா எழுத்துக்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் (Epigraphist) மூலம் படித்தறிந்து வரலாற்றாசிரியர் களுக்கு உண்மையான செய்திகளை உரைக்கின்றனர். எழுத்துக்கள் உருவாக்கப்பட்ட தொடக்க காலத்தில் மக்கள் கண்ட வரிவடிவம் ஓவிய எழுத்து எனப்பட்டது. இந்தப் பட எழுத்துப் பல வகைப்படும். (1) பாபிலோனிய சுமேரிய அசிரிய மக்கள் எழுதிய ஆப்பு எழுத்துக்கள் (Cuneiform writings) (2) எகிப்தில் உள்ள மக்கள் கண்டசொல் எழுத்திற்கு ஈடாக எழுந்த, பொருள் வடிவப் பட எழுத்துக்கள் (Hieroglyphs) (3) சிந்துவெளித் திராவிடப் பழங்குடி மக்கள் பயின்ற பட எழுத்துக்கள் (Logograph, Logosyllophic or pictographic writings) எனப்படும். இந்த ஓவிய எழுத்துக்கள், விளங்காப் புதிராக இருந்தன. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் (Archaeologist) பட எழுத்துக்களைப் படிக்கும் பன்மொழிப் புலவர்களிடம் இந்த எழுத்துக்களை ஒப்புவித்துப் பொருள் விளக்கம் கேட்டனர். அவர்கள் அவற்றை அலசி ஆய்ந்து கணக்கிடும் நுண்பொறியின் (Computer) துணைகொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடிமக்கள் பயின்ற, பட எழுத்துக்களை, பன்னாள் பயின்று ஆய்ந்து, மறைகுறி எழுத்துமூலத்தின் பொருள்விளக்கம் (Decipher) கண்டனர். இதனால், அகழ் ஆய்வில் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கண்ட பொருள்களின் விளக்கங்கள் உறுதிப் படுத்தப் பெற்றுள்ளன. பழங்குடிமக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய பண்பாடு, நாகரிகம், கலை, சமயம், கடவுட் பற்று, ஆடை அணிகலன், கைவினைப் பொருள் முதலியவற்றைப் பற்றிய கருத்துக்கள் தெளிவாக வெளியிடப்பட்டன. இதனால் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கருத்துக்கள் அரண் செய்யப்பட்டன. வரலாற்றறிஞர் களுக்குத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் அறிவியல் வழிகாட்டி யாக விளங்கினர். இந்திய வரலாறு முழுமை பெற்று விளங்க, சிந்து வெளி அகழ் ஆய்வும் ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வும் பெருந்துணை யாக இருந்தன. இருள்சூழ்ந்த பண்டைய இந்திய வரலாற்றிற்கு இவ்விரு வரலாறுகளும் நல்ல ஒளிவிளக்காக விளங்கின. உலகில் இதுவரை எங்கும் சிந்துவெளியைப் போன்று கி.மு. 4000 ஆண்டிற்கு முன்னர் எழுந்த பல நகரங்களை அகழ்ந்து கண்டதே இல்லை. விரிவான ஆக்கப்பணி உலகில் உள்ள எல்லா நாடுகளும், தத்தம் நாடுகளில் தொல் பொருள் ஆய்வுத் துறையை நிறுவிச் செயலாற்றி வரும்படி செய் துள்ளன. தொல்பொருள் ஆய்வுத் துறை முதலில் ஐரோப்பாவிலே அரும்பியது. அப்பால் ஆசியாவிலும், அமெரிக்காவிலும் ஏனைய கண்டங்களிலும் மலர்ந்துள்ளது. இன்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பல்வேறு நாடு களிலும் பல்வேறு இடங்களிலும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை, தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நடத்திய சிறப்பான அகழாய்வுகள் என்று எண்ணப்படுவன எகிப்து, எல்லம், உபைதியா, சுமேரியா, கிரீட், பெரு, மெக்சிகோ, சிந்துவெளி, ஆதித்தநல்லூர் முதலிய இடங்களில் செய்யப்பட்ட அகழ் ஆய்வுகளே யாகும். இவற்றில் வட இந்தியாவில் உள்ள சிந்துவெளி யிலும் தென் இந்தியா விலும் நடைபெற்ற அகழாய்வுகள் மிக வெற்றி வாய்ந்த - பெருமைக் குரிய அகழாய்வுகளாகும். இவை, உலகிலே மிகத் தொன்மையான தொல் குடி மக்களின் உயரிய நாகரிகத்தை உணர்த்துவதாக எண்ணப் படுகின்றன. ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட பண்பாடு சிந்துவெளி, உபைதியா, எல்லம், சுமேரியா, எகிப்து, கிரீட், மெக்சிகோ, பெரு முதலிய நாடுகளில் துளிர்த்தெழுந்த ஆரிய நாகரிகங்களுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்துள்ளது. ஏன்? - மூலக்கருவாக அமைந் திருக்கிறது என்று கூடக் கூறலாம். இது மிகத் தொன்மையான மக்கள் இரும்பு ஊழியில் (Iron age) அரும்பிய இரும்புப் பண்பாடு (Iron Culture) ஆகும். இந்த ஆதித்த நல்லூர்ப் பண்பாட்டைக் கண்ட மக்களின் இனத்தவர்கள் சிந்து வெளி சுமேரியா எகிப்து கிரீட் முதலான இடங்களில் குடியேறி அரிய பெரிய பண்பாடுகளுக்கு அடிகோலியவர்கள் என்று எண்ணப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையினர், முற்காலத்தில் தம் ஆய்வுக்குரிய இடம் ஈதெனக் கண்டனர். ஆனால், மிகுந்த இடர்ப் பட்டுக் கண்டனர். அவர்கள் செவிவழி மரபுரைச் செய்திகளையும் இலக்கியச் சான்றுகளையும் வைத்து ஆய்வுக்குரிய இடம் ஈதென முடிவுசெய்து வந்தனர். இதில் அவர்கள் பல ஏமாற்றங்களை அடைந்தனர்; எண்ணற்ற தோல்விகளையும் எய்தினர். இவையன்றி வீடுகள் கட்டுவதற்கு அடிப்படையிட, நிலத்தைத் தோண்டும் பொழுதும் பயிர் செய்ய நிலத்தை உழும் பொழுதும், குளம் குட்டை, கால்வாய் முதலியவற்றைத் தோண்டும்பொழுதும் நிலத்தின் அடியில் பழங்காசுகள், சிலைகள், தாதுப் படிமங்கள், சாடிகள், தாழிகள், அணிகலன்கள் முதலியவற்றைக் கண்டெடுத்தனர். மலைக்குகை களில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடி மக்கள் தீட்டிய ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றையெல்லாம் வைத்துத் தொல்பொருள் ஆய்விற்குரிய இடம் ஈதெனக் கண்டனர். முற்காலங்களில் இலக்கியங்களில் கூறப் பட்ட இடங்களை அறிந்து அங்குச் சென்று அகழ் ஆய்வு செய்வதற் குரிய இடங்களை அறிந்து, அங்கு அகழ்ந்து நிலத்தினுள் பழம் பொருள்கள் இருக்கின்றனவா, இல்லையா? என்று ஆய்வுகள் செய்துவருவர். அங்குப் பழம்பொருள் இருப்பதும் உண்டு; இல்லா மல் ஏமாறித் திரும்புவதும் உண்டு. இன்று, அப்படிச் செய்வதில்லை. அறிவியல் முறை வளர்ச்சி எய்தியுள்ளது. இன்று மின் சாதனங்கள் மூலம் நிலத்தின் மேற்பகுதியின் மீது நின்று கொண்டே, உள்ளே பழம்பொருள்கள் இருக்கின்றனவா, இல்லையா? என்று எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர். கடல்களில்கூடக் கப்பல்கள் மீது இருந்து கொண்டு நீரின் அடியில் ஆழமான இடத்தில் இருக்கும் பழம் பொருள்களையும், பாறைகள் உயிரினங்கள், செடி கொடிகள் முதலியவற்றையும் படம்பிடித்து வருகின்றனர். மாகடலில் நீரினுள்ளிருக்கும் நிலத்தைப் படம் எடுத்து ஆயும் இயல் (Oceanography) போன்ற பல அரிய நுண்ணியல் வளர்ந்துள்ளன. மேலும் இன்று மனிதன் தன் ஆற்றலை வீணாகச் செலவு செய்யாமல் பயன்தரும் முறையில் மனித ஆற்றலைச் செலவிட வழிகோலப் பெற்றுள்ளது. அகழ் ஆய்வுத் துறையில் ஈடுபட்டோர், நிலத்தைத் தோண்டும் பொழுது நிலத்தின் அடியில் இருக்கும் பொருள்களோ வீடோ, சிலையோ, மட்பாண்டங்களோ, கூலப்பொருள்களோ எவையாக இருப்பினும் அவை சிறிதும் சேதமுறாது தோண்டி எடுப்பர். மண்ணுள்ளிருக்கும் துணியோ மணியோ, தாதுப் பொருளோ (Metals) சாம்பலோ, பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் புதையுண்டு உள்ளிருந்து மக்கிப் போயிருந்தாலும் அவற்றை அணுவளவும் சேதமுறாமல் உன்னிப்பாக உற்றுணர்ந்து அகழ்ந்து எடுக்கின்றனர். செயற்கருவி (Artifact) தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் அகழ்ந்து கண்டவை, நகரம் வெளிப்புறக் கோட்டை (Fort), நகரத்திற்கு அண்மையில் உள்ள அரண் (Citadel), அரண்மனை, மாளிகை வீடு, கூலக்களஞ்சியம், நினைவுச்சின்னம், கோயில், தொழிற்சாலை, கல்லறை, புதைகுழி, பிணப்பானை (தாழி), மட்பாண்டங்கள், தாது பொருள்கள் - உலோகப் பொருள்கள் போன்றனவாக இருக்கலாம்; அவை சிறியன வாகவும் பெரியனவாகவும் இருக்கலாம். அல்லது அணிகலன்கள், விளக்கு, கிண்ணம், கெண்டி, கத்தி, அரிவாள், மண்வெட்டி, தூண்டில், சுரண்டி, கரண்டி, ஊசி, முள்வாங்கி, காது குடைவான், இடுக்கி, பழங்காசு, துணி, கூலப்பொருள், உமி போன்றனவாகவும் இருக்கலாம். மக்கிப்போன நெல்லும், இற்றுப்போன புல்லும், கரடு முரடான கற் கருவியும் தொல்பொருள் ஆய்வுத் துறையினருக்கு இன்றியமையாத கருவூலமாகக் கருதப்படும். இவற்றை அவர்கள் செயற்கருவிகள் (Artifacts) என்று கூறுகின்றனர். தொல்பொருள் ஆய்வுவல்லுநர்கள் செயற் கருவிகள் மூலம், இவற்றைப் படைத்துப் பயன்படுத்திய முற்கால முதுமக்களின் கைத்திறன், அறிவுத்திறன், போர்த்திறன், ஆண்மை, ஆற்றல், வாழ்க்கை முறை, வழிபடு தெய்வம், சமயம், சமூக உறவு, சடங்கு முறை, ஊண், உடை, பண்பு, நாகரிகம் முதலியவற்றை யெல்லாம் அறிகின்றார்கள். புவி அடுக்கியல் (Stratigraphy) தொல்பொருள் ஆய்வியலார் நிலத்தை அகழ்ந்து ஆய்வு செய்யத் தொடங்கும் பொழுது, சதுர வடிவில் செங்குத்தாக நிலத்தைத் தோண்டி உள்ளிருக்கும் எளிய பொருளையும் விட்டுவிடாமல் கைப்பற்றிக் குழியில் கிடைக்கும் பொருள் எந்த அடுக்கு வரிசையில் எத்தனை யடியிலிருந்து எடுக்கப்பட்டது என்று குறித்து வைத்துக் கொள்கின்றனர். சில இடங்களைத் தோண்டும்பொழுது மனித வரலாற்றைக் குறிப்பிடும் ஊழிக் காலத்திற்குரிய பலவகைக் கற்கருவி களும், தாதுப் பொருள்களும், ஏடுகளும், எழுத்துக்களும் கிடைக் கின்றன. எனவே, அவற்றை வரிசைப்படுத்தித் தொகுத்துவைக் கின்றனர். நிலத்தைத் தோண்டும்பொழுது உட்புறம், நிலத்திலுள்ள மண் அடுக்கடுக்காய் (Layers) காணப்படும். தோண்டும் பொழுது ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு சிறு குச்சியை அடித்து அதன் அடுக்கு எண்களையும், ஆழத்தின் அடியை அல்லது முழத்தையும் காட்டும் ஒரு வாசகத்தை ஓர் அட்டையில் எழுதித் தொங்க விடுகின்றார்கள். அப்படி அடிவரை தோண்டி எடுத்த பின், ஒவ்வோர் அடுக்கிலும் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களையும், அதன் ஆழத்தையும் பதிவு செய்துகொள்ளுகிறார்கள். பின்னர் ஒவ்வோர் அடுக்கிலும் கண்டு பிடிக்கப்பட்ட பொருள்களையும் பிரித்து வகைப்படுத்தி மட் பாண்டத் துண்டுகள், தாதுப்பொருள்கள், சாடிகள், எலும்புகள், பாசி பவளங்கள், தட்டுமுட்டுப் பொருள்கள் என்று வகுத்துத் தொகுத்து வகைப்படுத்தி வைக்கின்றார்கள். அப்பால் ஒவ்வோர் அடுக்கிலும் கண்டெடுத்த பொருள்களுக்குக் காலம் கணிக்கின் றார்கள். இதன் மூலம் புவி அடுக்கியல் என்னும் ஆய்வு முறை உருப் பெற்றுள்ளது. அகழ்ந்து கண்டெடுக்கப் பெற்ற பொருள்களை அறிவியல் ஆராய்ச்சி மூலம் (Carbon 14 test), பொருள்கள் தோன்றிய காலத்தை அளவிடுகின்றார்கள். மட்பாண்டங்களின் வடிவம் அமைப்பு அழகு நிலை சாயம் முதலியவற்றின் மூலம் காலம் கணிப்பதும் உண்டு. புதிய ஆய்வு முறை அமெரிக்க அறிஞர் ஆண்ட்ரூ-இடக்லசு மரவளைய முறை என்ற ஒரு புதிய ஆய்வு முறையைக் கண்டுபிடித்துள்ளார். ஒரு கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மரத்தில் காணப்படும் வளையங்களை வைத்து அக்கட்டிடம் கட்டப்பெற்றுள்ள காலத்தைக் கணிப்பதாகும். இது கட்டிடத்தின் காலத்தைத் திட்டவட்டமாகக் கண்டு பிடிக்கும் புது முறையாகக் கருதப்படுகிறது. மற்றொரு முறை பண்டைக் காலத்திலுள்ள கல்லறைகளிலும் வீடுகளிலுமிருந்து அகழ்ந்து கண்ட கூலப் பொருள்கள், காய்கறிகள், கிழங்குகள் முதலியவற்றிலிருந்து பல செய்திகளைச் சேகரிக்கும் முறையாகும். பிறிதொருமுறை, பண்டைக் காலத்துத் தாதுப் பொருள்களை இரசாயன முறையில் பகுத்து, அஃது எவ்வாறு தோன்றியது என்று அறிதலாகும். இன்னொரு முறை உயிர் நூல் அறிஞர்கள் பண்டைக் காலச் சிதைவுகளினின்று கிடைக்கும் எலும்புகள் தலையோடுகள் முதலியவற்றின்மூலம், காலம், இனம், பிரிவு போன்றவற்றை அறிவியல் முறையில் கண்டுபிடித்தலாகும்.1 ஆழ்ந்த ஆய்வியல் இன்றைய மக்கள் பண்டைய மக்களைவிடப் பல துறைகளில் ஆர்வங்காட்டுகின்றார்கள் என்பது மெய். சிறப்பாக நம்முடைய முன்னோர்களின் தோற்றம், மொழி, உணவு, உடை, அணிகலன்கள், கருவிகள், கைப்பணிகள், வாழ்க்கை முறை, பண்புப்பாங்கு, நாகரிக நயம் முதலியவற்றை அறியப் பெரிதும் நாடுகின்றனர். பண்டைக் கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களுடைய கருவிகள் போன்றவற்றையும் அறிய இன்றைய அறிவியல், நல்ல வழி வகுத்துள்ளது. அவர்கள் செய்த கைப்பணிகளைக் காண அரிய பணியாற்றி வருகிறது. இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் தொல்பொருள் ஆய்வுத் துறைகள் நிறுவப் பெற்றுள்ளன. இந்த ஆய்வுத்துறை முன்னர் நாம் வாழும் நிலத்தை மட்டும் அகழ்ந்து ஆய்ந்து வந்தது. அப்பால் மாக்கடல்களின் அடியில் மூழ்கிக் கிடக்கும் கோண்ட் வானா, லெமூரிய கண்டங்களையும், நாவலந் தீவு போன்றவற்றையும் அவற்றில் உள்ள பாறைகள் உயிரினங்கள், பண்டங்கள் போன்றவற்றையும் ஆய்ந்தது. கப்பல்கள், நீர்மூழ்கிக் கலங்கள் இவற்றின் துணையுடன் ஆழ்கடலின் அடித் தளங்களையெல்லாம் கண்டு ஆய்ந்து வருகின்றது. என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய சோவியத் நாட்டு அறிஞர் அ. கோந்த்ரொத்தோவ் மூன்று மாக்கடல்களின் புதிர்கள் என்ற நூலின் மூலம் பாண்டிய நாட்டுத் தமிழர்களின் மூதாதைகள் முன்னாளில் நாடு நகரங்கள் அமைத்துத் தென் மதுரையில் முதற் சங்கம் நிறுவி முடி புனைந்து, அரசு கட்டிலில் அமர்ந்து செங்கோல் தாங்கி, எருதுக் கொடி ஏற்றிய கதைகளை யெல்லாம் மெய் என்று உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சி செய்துள்ளார் என்று தெரிகிறது. ஆழ்கடல் அறிவா ராய்ச்சி தொடக்க நிலையில் இருந்து வருகிறது. ஆனால், அது விரைவில் அந்த அரிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தும் என்று தம் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.2 இந்த இந்துமாக் கடலின் அடித்தள ஆய்வுத்துறை விச்ராந்தி என்னும் சிறப்பான கப்பல் மூலம் உருசிய நாட்டினின்று 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன் 6 லட்சம் கல் தொலைவுப் பயணம் செய்து ஆய்வு நடத்தி உருசிய மொழியில் 11க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. இதனை மூன்று மாக் கடலின் புதிர்கள் என்ற நூலில் 1974 இல் குறிப்பிட்டுள் ளார். அதற்குப் பின் இந்த ஆழ்கடல் ஆய்வு முறை எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. அவற்றின் விவரம் நமக்கு இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆய்வு முறை இந்தியாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் வளரவில்லை. அரச பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் வரலாற்றாய்வின், முதன்மையை உணர்ந்தவர்களாக இல்லை. தலைவர்களில் சிலர் நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண் டாட்டம், வேலை நிறுத்தம், மாணவர்கள் கிளர்ச்சி முதலியவற்றைக் கூறி வரலாற்று ஆய்விற்குப் பணம் செலவிடக் கூடாது என்று கூறுகிறார்கள். இத்தகைய மர மண்டைகள் பெருகி வரும் போகூழ் (துரதிருஷ்ட) நிலையில் பழங்கால நாட்டின் பாங்கை அறிந்து அதன் வீழ்ச்சியை உணர்ந்து புதிய நாட்டை வளமார்ந்த இளமைப் பொலிவு செறியும் இந்தியாவை உருவாக்க நாடும் இளைஞர் உலகம் தொல்பொருள் ஆய்வுத் துறை சீர்பெற இலங்க நமது நாட்டைத் தூண்ட வேண்டும். பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் பல்கலைப் பட்டம் பெற்ற பண்பாளர்களை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறிவு படைத்த புதிய நாகரிக இந்தியாவை உருவாக்க முயல வேண்டும். நிற்க, பண்டைக்கால மக்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் நன்கறிய வேண்டும் என்ற ஆவல் பாபிலோனியாவில் ஓர் அரசனுக்குக் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் அரும்பியதாம். உடனே தன் நாட்டில் அகழ் ஆய்வு நடத்த ஆணை அளித்தான் என்று அந் நாட்டின் வரலாறு கூறுகிறது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் கிறித்துவின் கல்லறையைக் கண்டுபிடிக்க அந் நாட்டு மக்கள் நாடினர். உரோமன் நாட்டு மன்னர் மன்னன் மா கான்சுடாண்டின் (Constantine the Great) என்பவருக்கும் இதில் அக்கறை அரும்பியது. உடனே அவர் ஒரு தூதுக்குழுவை, பாலத்தீனத்திற்கு அனுப்பிக் கல்லறை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்தான் என்று ஒரு வரலாறு கூறுகிறது. 1801ஆம் ஆண்டு எல்ச்சின் பிரபு ஏதென்சு நகரில் உள்ள ஒரு கிரேக்க கிறித்தவக் கோயிலில் இருந்த பழைய சிற்பங்களைத் தேடிக் கண்டுபிடித்து இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றார். இவையெல்லாம் பழங்காலத்திலே பாபிலோனியர்களுக்கும், உரோமர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பழம் பொருள்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்; பழம் சிற்பங்களைக் கண்டு பிடித்து அவற்றைப் பாதுகாத்து வைக்கவேண்டும்; வரலாற்று அறிவை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததைக் காட்டு கின்றன என்று கூறலாம். அஃதின்றிப் பழங்காலத்திலே அங்குத் தொல்பொருள் ஆய்வுத்துறை தோன்றியது என்று கூறமுடியாது. ஆனால், தொல்பொருள் ஆய்வுத்துறை முளைத்து எழக் காரணமாக இருந்தன என்று எண்ணலாம்; இயம்பலாம்; எழுதலாம். இந்தியாவில் தொல்பொருள் ஆய்வு இந்தியா பழம்பெரும் நாடு. தென்இந்தியாவிலே மக்களினம் தோன்றி வளர்ந்து வளம்பெற்று உயர்ந்தது என்று உலகில் அறிஞர் பலர் கூறுகின்றனர். இதனைப் பேராசிரியர் எர்னசுட் எக்கல் (Ernest Heaecrel) எடுத்துக்காட்டினார்.3 அதை மக்லின் என்னும் அறிஞரும் ஆதரித்துள்ளார்.4 கிராம் உல்லியம் போன்ற எண்ணற்ற அறிவியல் புலவர்கள் அரண் செய்துள்ளனர்.5 தமிழ்நாட்டில் தொல்பழங்கல் ஊழிதொட்டு (Eolithic age) பழங்கல் ஊழி (Paleolithic age), இடைக்கல் ஊழி (Mesolithic age), புதுக்கல் ஊழி (Neolithic age), தாதுப்பொருள் ஊழி (Metal age), வரலாற்று ஊழி (Historic age) போன்ற எல்லா ஊழிகளும் மனித இனம் தோன்றி, கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்த பண்டைக் காலந்தொட்டு இன்றுவரை எல்லாக் காலங்களும் தமிழ்நாட்டில் நிகழ்ந்து வந்துள்ளன. இதை மிகத் தெளிவாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரும் தொல்பொருள் ஆய்வுத்துறைப் பேராசிரி யருமாக இருந்த அறிஞர் திரு. வி.எம். இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஏ. அவர்கள் தம் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.6 அதை அறிஞர்கள் பலரும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழ்மக்கள் - ஏன் திராவிட இனம், விளக்கமாகக் கூறுவத னால் - மனித குலத்தின் மூதாதையர்கள் தமிழகத்தில் தோன்றி, தமிழ்நாட்டைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், எனப் பிரித்து வாழ்ந்துள்ளார்கள் என்று தமிழ்ப்பெரும் இலக்கணநூலாக விளங்கும் தொல்காப்பியம் போன்ற பழம்பெரும் நூல்கள் நவில் கின்றன. குறிஞ்சி நிலமக்கள் (வில்லர்கள்) மலையில் வாழ்ந்து வேட்டுவத் தொழிலைக் கண்டனர். வில்லைப் படைக்கலமாகக் கொண்டனர். முல்லை நிலமக்கள் (ஆயர்கள்) தினை, கேழ்வரகு முதலிய புன்செய்த் தானியங்களைப் பயிரிடப்பயின்றனர். ஆடு மாடுகளைப் பழக்கிப் பால்கறக்கவும் தயிர், மோர், வெண்ணெய் போன்றன செய்யவும் பழகிக்கொண்டனர். மருதநிலமக்கள் நீர் நிறைந்த குளக்கரைகளிலும் ஆற்றங்கரை களிலும் அவற்றை அடுத்துள்ள சமவெளிகளிலும் குடியேறி எருதுகளைப் பழக்கினர். களிமண் நிலங்களைக் கற்களால் கிண்டிக் கிளறி நன்செய் நிலமாக்கிப் பயிரிடத் தொடங்கினர். பின்னர் ஏரைக் கண்டு உழுதுபயிரிட்டு நெல்லையும் எள்ளையும் ஏனைய கூலப் பொருள்களையும் பயிரிடத் தொடங்கினர். இந் நிலத்திலே மக்களின் நன்முயற்சியால் பல தொழில்கள் தோன்றின. மட்பாண்டங்களை வனைதல், நூல்நூற்றல், துணிநெய்தல், இரும்புக்கருவிகளையும் மரப்பொருள்களையும் செய்தல், வெண்கல ஏனங்களை வார்த்தல், கல்லை, மரவை, சட்டி, தூண் முதலியவற்றை உருவாக்கல், எள்வித்து, தேங்காய்க் கொப்பரை, ஆமணக்கு வித்துக்கள் முதலியவற்றினின்று நெய் வடித்தல், பொன் வெள்ளி முதலிய தாதுப் பொருள்களை எடுத்துப் புடமிட்டுப் பசும் பொன்னாக்கி அணிகலன்களைச் சமைத்தல், தாதுப் பொருள்களைத் தகடுகளாக்கி அவற்றில் எழுத் தாணி கொண்டு எழுதுதல், வீடுகள் கட்டுதல், கூலக் களஞ்சியங்கள் அமைத்தல், கோயில்கள் கட்டுதல் கோபுரங்கள், கோட்டைகள் எழுப்புதல் முதலிய தொழில்கள் வளர்க்கப்பெற்றன. ஆடுதல், பாடுதல், ஓவியந் தீட்டுதல், பல வண்ணச் சாயங்களை உருவாக்குதல், கவிதைகள் இயற்றல், கற்பனைக் கதைகள் எழுதுதல், சமய அறிவைப் பெருக்குதல் போன்ற எண்ணற்ற செயல்களை ஆற்றிவந்தனர். உழவுத் தொழிலை வளர்த்தனர்; வணிகம் நடத்தினர். மற்றும் பற்பல கைத்தொழில்களைப் பேணி வளர்த்தனர். இந்நில மக்கள் காடு கடந்து, கடல் கடந்து, நாடு விட்டு நாடு புகுந்து குடியேற முற்பட்டனர். கடல் வணிகத்தில் ஈடுபட்டு வெற்றியீட்டினர். பிற நாடுகளில் குடியேறி அவ்வந் நாடுகளைத் தாயகமாகக் கொண்டனர். ஆங்காங்குள்ள மலைகளிலே தங்களின் தெய்வமாகிய மந்திரமலைவாசலைக் கண்டனர். சிவநெறியை நிலை நாட்டினர். தங்களின் உயரிய பண்பாட்டையும் அறநெறியையும் ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் பரப்பினர். இந் நிலத்திற்குரிய உழுகுலத்தோர் தாங்கள் குடியேறிய நிலங்களிலெல்லாம் பயிர்த் தொழிலை வளர்த்தனர். மருதநிலம் தொழில் வளர்ச்சிக்கு ஒரு மையமாக அமைந்தது. செல்வப் பெருக்கிற்கு உயர்ந்த ஊற்றாக உயர்ந்தெழுந்தது. இந்த வளமார்ந்த நிலத்தில் முதன்முதலாகப் பரத்தையர் (Concubine) தோன்றும் வாய்ப்பு உண்டாயிற்று என்று குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. நெய்தல்நிலப் பரதவர்கள் தமிழர்களின் கடல் வணிகம் வளரத் துணைநின்றனர்; மீன்பிடித்தனர்; உப்பு விளைத்தனர்; சங்கு அறுத்த னர்; தோணி சமைத்தனர்; கப்பல் கட்டினர்; ஆழ்கடல் கடந்து கப்பல்களைச் செலுத்தும் அரிய கலையைத் தமக்கே உரியதெனக் கொண்டு பேணி வளர்த்தனர். கடல் ஆழத்தையும் நீரோட்டங்களை யும் அலைகளின் போக்குகளையும் அறிந்தனர்; கடலில் வாழும் பெரிய திமிங்கிலங்களையும், கொடிய சுறாமீன்களையும், பிடிக்க வழிவகுத்தனர்; கடலில் சிப்பிகளையும் முத்துக்களையும் பவளங் களையும், சங்குகளையும் கண்டு எடுத்தனர்; வானநூற் புலமை பெற்றனர். தமிழர் திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பொன்மொழியை நன்மொழியாகக் கொண்டு வளரத் தமிழ்நாட்டு நெய்தல் நிலப் பரதவர்கள் துணைநின்றனர் என்றால் அஃது ஒரு சிறிதும் மிகையாகாது. தமிழகத்து நெய்தல்நில மக்களின் துணையின்றித் தமிழர் அல்லது திராவிடர் என்போர் எகிப்து, உபைதியா, எல்லம், சுமேரியா, கிரீட், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா முதலிய நாடு களுக்குச் சென்று குடியேறி இருக்கமுடியாது என்பது எளிதில் விட்டுவிடக்கூடிய செய்தி அன்று. இந்தியாவில் சிறப்பாகத் தமிழ்நாட்டிலும் பிற திராவிட நாடுகளிலும் பழங்காலத்திய திராவிட மக்களின் மூதாதையர் விட்டுச்சென்ற எச்சமிச்சங்கள் ஏராளமாகக் காணக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இந்நாட்டைக் கவர எண்ணிச் சில அன்னிய நாட்டு அரசுகளால் பொன்னையும் பொருளையும் கொடுத்து அனுப்பப்பட்ட கிறித்தவ சமயக் குருமார்கள் சிலர் சென்ற நூற் றாண்டிலே உணர்ந்தனர். இந்திய நாட்டின் பழம்பெரும் நாகரிகங் களையும் சமயச் சிறப்பையும் இறைவழிபாட்டையும் மொழிச் சிறப்பையும் நன்காய்ந்து அடிக்கடி அயல்நாட்டிலுள்ள அரசுகளுக் கும், மக்களுக்கும் உணர்த்திவந்தனர். எனவே ஐரோப்பாவில் தொடக்கநிலையில் இருந்த தொல்பொருள் ஆய்வுத்துறை மாணவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் அரும்பி அப்பால் அழிந்து போன இந்தியநாட்டின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் நகர் அமைப்புத் திறனையும், கட்டிடங்கள் கட்டும் முறையையும், கப்பல் கட்டும் கலையையும், மருத்துவம் செய்யும் மாண்பையும், மொழி அமைக்கும் நுணுக்கத்தையும், எழுத்தாக்கும் பாங்கையும் அகழ்ந்து ஆய ஆர்வமுற்றனர். இஃதன்றி மேனாட்டிலுள்ள தொல் பொருள் ஆய்வு வல்லுநர்கள் மட்டுமன்றிப் பழங்காசு சேகரிப்பவர் களும், பழைய சிலைகள் செம்புப்படிமங்கள், பழைய ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் சேகரிப் போர்களுமாக அறிஞர்கள் பலர் மேலைநாடு களினின்று இந்தியாவிற்குள் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலே புகுந்து பல அரிய பழம்பொருள்களைச் சேகரித்துத் தம் நாட்டிற்குக் கொண்டு போய் ஆய்ந்தனர். அப் பொருள்களைத் தங்கள் பழம்பொருள் காட்சிச் சாலையில் இடம்பெறச்செய்தனர். இன்றும் அவை பாரிசு, பெர்லின், மாசுகோ, இலண்டன், இலெய்டன், நியூயார்க், போசுடன் போன்ற இடங்களில் உள்ள பழம்பொருள் காட்சிச்சாலைகளில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். தொல்பொருள் ஆய்வு இயலின் தொடக்கம் இந்தியாவில் தொல்பொருள் ஆய்வு இயலைக் கிழக்கிந்தியக் கும்பினி ஆட்சி கி.பி. 1860ஆம் ஆண்டிற்குச் சற்றுமுன் தொடங்கு வித்தது. ஆனால் 1850ஆம் ஆண்டிற்கு முன்பே திருநெல்வேலி மாவட்டக் கிறித்துவ சபையில் நல்லாயர் (Bishop) ஆகப் பணி யாற்றிய முனைவர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் (The Rt. Rev. Dr. Robert Caldwel, D.D., LL.D. Bishop of Tinnevelly) இடையன்குடியிலிருந்து கொண்டு தமிழ்ப்புலவர்களிடம் தமிழ்கற்றுப் புலமை எய்தினார். அவர் பழம் பாண்டியர்களின் தலைநகராயும் இடைச்சங்கம் நிலவிய மூதூராயும் வரலாற்றுப் புகழ்பெற்ற துறைமுகப் பட்டின மாயும் விளங்கிய கொற்கைக்கும் காயலுக்கும் சென்று தொல் பொருள் ஆய்வுசெய்துள்ளார். அவர் அங்கு ஆய்வு செய்யும் பொழுது மக்கள் அவரைத் தடுத்தனர். பழங்காலப் பாண்டிய மன்னர்களும் பழங்கால வணிகர்களும் ஏராளமான செல்வங்களை மண்ணில் புதைத்து வைத்துள்ளனர். அவற்றை இன்றும் பல பூதங்கள் காத்து வருகின்றன. நீங்கள் நிலத்தை அகழ்ந்தால் அச் செல்வங்களைக் கவர வருவதாக எண்ணிப் பூதங்கள் உங்களைக் கொன்று விடும். முன்னர் மாவட்ட அதிகாரியின் இசைவுபெற்று இங்கு வந்த அதிகாரி ஒருவர் கொற்கையில் அகழ் ஆய்வு செய்ய வந்து இரவில் தம் கூடாரத்தில் படுத்திருந்தார். திடீரென்று தம் உடம்பில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கண்டு விழித்துப் பார்க்க, அவர் உடல் பாளையங்கோட்டையிலுள்ள தம் இல்லத்தில் கட்டிலின் மேல் இருப்பதை அறிந்து திகிலுற்றார். அதற்குப்பின் கொற்கையில் அகழ் ஆய்வு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார் என்று புனைகதை போன்ற செய்தியைக் கூறினர். நீங்கள் இங்கு அகழ்ந்து பார்க்க முற்பட்டால் பூதங்கள் உங்களை மட்டுமன்று, எங்களையும், எங்கள் ஊரையும் அழித்துவிடும்! என்று எச்சரித்தனர். அவர்களின் பரிவுரைகளைக் கேட்டு வியந்து, ஐயா, நான் பொன்னையோ, மணியையோ அணிகலன்களையோ அகழ்ந்து எடுத்துச் செல்ல நாடி இங்கு வரவில்லை என்று அவர்களுக்கு அமைதி கூறி மாவட்ட அதிகாரியின் ஆணையோடும் அவருடைய பணியாளோடும் வந்திருக்கிறேன் என்றுரைத்து அகழ்ந்து ஆய்வுகள் செய்துள்ளார். இது பற்றிய செய்திகள் அவர் எழுதிய திருநெல்வேலி அரசியல் பொதுவரலாறு7 என்ற நூலிலும், கொற்கையிலும் காயலிலும் நடத்திய ஆய்வுப் பயணம்8 என்ற கட்டுரையிலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. 1861ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கும்பினி ஆட்சியாளரின் (Rulers of the East India company) பொறி வல்லுநரான அலெக்சாந்தர் கன்னிங்காம் (Alexander Cunningham) அவர்களை ஒரு மேற்பார்வை யாளராக அமர்த்தி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையைத் தொடங்குமாறு ஆணையிட்டது. கும்பினி அரசு அவர் அதைத் தொடங்கி வைக்குமாறும் செய்தது. அப்பால் 1870ஆம் ஆண்டில் அவரே இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநராக அமர்த்தப் பெற்றார்.9 1861ஆம் ஆண்டில் தான் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கும் நன்கு அடிகோலப் பெற்றது. முதலாவது இயக்குநர் தளபதி (Director General) ஆகத் திரு. அலெக்சாந்தர் கன்னிங்காம் 1870ஆம் ஆண்டில் அமர்த்தப் பெற்றார் என்று அதன் வரலாறு கூறு கிறது. அலெக்சாந்தர் கன்னிங்காம் நாட்டின் நாலாபக்கங்களுக்கும் சென்று தொல்பொருள் ஆய்வு செய்ய முற்பட்டார். அவர் வங்கம், பஞ்சாப், சிந்து மாநிலங்களுக் கெல்லாம் சென்று ஆங்காங்கே கிடைத்த பழம் பொருள்களைச் சேகரித்து வந்தார். ஆங்காங்குக் கூறப்பட்ட மரபுவழிச் செய்திகளையும் இலக்கியச் செய்திகளையும் திரட்டி அறிக்கைகள் பல வெளியிட்டு வந்தார். இவருக்கு வட மொழிப் பயிற்சியுமுண்டு. 1881ஆம் ஆண்டில் தென்னிந்தியத் தொல்பொருள் ஆய்வுப் பொறுப்பு (Archaeological Servey of South India) இவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பொழுது சேம்சு பர்கெசு (James Burgess) என்பவர் தென்னிந்தியாவிலும் மேற்கு இந்தியாவிலும் இவ் வாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆண்டிலே எய்ச்.எய்ச். கோல் (H.H. Cole) பழம்பொருள்களின் பாதுகாப்பாளராக அமர்த்தப் பெற்றார். 1883ஆம் ஆண்டில் இப் பதவி முடிவு எய்தியதால் தொல் ஆய்வுப் பணி மாநில அரசுகளிடம் மீண்டும் ஒப்படைக்கப் பட்டது.10 இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடுவண் அரசு தொல்பொருள் பாதுகாப்பு முதலியவற்றை மீண்டும் தன் பொறுப்பில் கொண்டுவந்தது. நடுவண் அரசு அனைத்து இந்தியத் தொல்பொருள் துறையைச் செம்மைப்படுத்தி, விரிவாக்கியது. வயவர் சாண் மார்சல் (Sir John Marshall) 1876-1958 என்னும் பேரறிஞரை 1902 ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் தளபதி (Director General of Archaeologic Department) ஆக அமர்த்தியது. அவர் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி 1928ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்; ஓய்வு பெற்று, மொகஞ்சதாரோவும் சிந்துவெளி நாகரிகமும் (Mohenjo Daro and Indus civilization) என்ற உலகப்புகழ்பெற்ற நூலை எழுதி மூன்று தொகுதிகளாக வெளி யிட்டார்; தட்சசீலம், சாஞ்சி முதலிய பௌத்தர்களின் புனித இடங்களை அகழ்ந்தாய்ந்து ஒரு சிறு நூல் வெளியிட்டுள்ளார்; 1931 ஆம் ஆண்டு அவர் எல்லாப் பதவிகளினின்றும் விலகி ஓய்வு பெற்று அவரது தாய் நாடாகிய இங்கிலாந்து சென்று 1958ஆம் ஆண்டு உயிர் துறந்தார். மார்சல் முன்னின்று நடத்திய சிந்துவெளி அகழ் ஆய்வு உலகிலே ஒப்பற்ற பெரிய அகழ் ஆய்வு என்று பாராட்டப்பெற்று, இவருக்கு ஈடில்லாப் பெருமையை ஈட்டியது. இவர்தம் மொகஞ்ச தாரோவும் சிந்துவெளி நாகரிகமும் என்ற நூலில் சிந்துவெளி நாகரிகம், சிவனை வழிபட்டு வந்த திராவிடப் பெருங்குடிமக்களின் உழவுத் தொழிலாளர்களின் ஆற்றங்கரைப் பண்பாடு என்று ஆய்ந்து முடிவு கட்டியுள்ளார். இந்நூல் மாநிலம் அழியும் வரை அவருக்கு மங்காப் புகழை ஈட்டித் தரவல்லது. சிந்துவெளி அகழ் ஆய்வு சிந்துவெளி அகழ் ஆய்வு வெற்றி ஈட்டியது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் மீது மக்களின் நாட்டம் ஈர்க்கப்பெற்றது. இந்திய நடுவண் அரசு சிந்துவெளி நாகரிகத்தைப் பெற்ற அரசு என்று பெரு மிதம் கொண்டது. அரசு தாராளமாகப் பணம் நல்கித் திங்கள் வெளி யீடுகளும், தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டு அறிக்கைகளும், நூல்களும் வெளியிடத் தூண்டியது. மீண்டும் பல இடங்களில் அகழ் ஆய்வு நடத்த ஆணையிட்டது. ஆங்கில ஆட்சி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலே பண்டைய நாகரிகச் சின்னங்களின் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நிறுவியுள்ளது. அதன் பயனாகப் பல சிறப்பு வாய்ந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அயல் நாடுகளுக்குக் கடத்திக் கொண்டு போகவிடாது தடுக்கப் பட்டன. என்றாலும் கெட்ட நெஞ்சத்தினர் சிலர்மூலம் நம்முடைய ஐம்பொன் படிமங்கள் சிலைகள், தூண்கள், மண்டபங்கள், காசுகள், கல்வெட்டுகள், செப் பேடுகள் முதலியன கவர்ந்து போகப்பட்டதை நாம் மறைக்கவோ மறக்கவோ முடியாது. இதற்கு நம் அரசினரும் கோயில் பூசாரிகளும் பொறுப்பாளர் ஆவர். நிற்க, 1926 ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வுப் பயணம் (Exploration) நடத்துவதற்கென்றும், அகழ் ஆய்வுக்கு (Excavation) செய்வதற்கென்றும் ஒரு தனிப்பிரிவு உருவாக்கப் பெற்றுள்ளது. 1935 ஆம் ஆண்டில்தான் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ்த்தொல் பொருள் ஆய்வு, நடுவண் அரசின் பொறுப்பில் கொண்டு வரப் பெற்றுள்ளது. 1944ஆம் ஆண்டில் முனைவர் ஆர்.இ. மார்டிமர் உயிலர் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநர் தளபதியாய் வந்ததும், தேங்கிக் கிடந்த தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் புத் துணர்ச்சி அளிக்கப்பட்டது. சிந்துவெளி அகழ் ஆய்வு, ஆரியர் அல்லாத மக்கள் கட்டி எழுப்பிய நாகரிகம் என்பதை உயிலர் அரண் செய்தார். அரப்பா, மொகஞ்சதாரோ நகர்களின் காவற் கோட்டை களை (citadels) அகழ்ந்து கண்டு ஆரியர்களின் இருக்குவேதம் கூறும் தாசர், தசயூக்களின் அரண்கள் இவையேஎன்று உலகறிய உரைத்தார்; மொகஞ்சதாரோ என்று அவர் எழுதிய சிறு நூலில் அந்த நகர் அரணின் (citadel) படத்தையும் இருக்குவேத சுலோகங்களையும் எடுத்துக்காட்டிச் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் அன்று என்னும் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவரே அரிக்கன் மேடு அகழ் ஆய்வை நடத்தித், தமிழர் 2000 ஆண்டுகட்கு முன் நடத்திய கடல் வணிகத்திற்குச் சான்றுகள் காட்டி, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை நடத்தும் பண்டைய இந்தியா (Ancient India) என்று இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் வெளியிட்டு வரும் திங்கள் இதழில் ஒரு பெரிய கட்டுரை வரைந்து தமிழ் இலக்கியங்கள் கூறும் யவன நாட்டு வணிகத்திற்கு மெய்ச்சான்று ஈதென எடுத்தக் காட்டினார். மேலும் உயிலர், இந்தியத்தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நல்ல மறுவாழ்வு அளித்தார். ஆங்காங்கே பழம் பொருள் காட்சிச் சாலைகள் எழச் செய்தார். புதிய முறையில் அகழ் ஆய்வு செய்ய அரசின் அலுவலர்களையும் தனியார்களையும் பயிற்றுவித்துத் தொல்பொருள் ஆய்வு விரிவடைய வழிகோலினார். முன்னர் அரசின் பொதுப் பணித்துறையே பண்டைய நினைவுச் சின்னங்களைப் பழுது பார்த்தல், காப்பாற்றுதல் போன்றவற்றைச் செய்து வந்தது. அதை அவர் தொல்பொருள் ஆய்வுத்துறையே நேரடியாகச் செய்யுமாறு தூண்டினார். இந்தியா உரிமை எய்தியதும் 1950ஆம் ஆண்டில் தொல் பொருள் ஆய்வுத்துறை புதிய அரசியல் அமைப்பின் படி நடுவண் அரசின் பொறுப்பிலும், மாநில அரசின் பொறுப்பிலும் ஒருங்கே வரக்கூடிய துறைகளில் ஒன்றாக அமைந்தது. இந்தப் புதிய நெறி முறைகளின்படி மாநில அரசு ஒவ்வொன்றும் தனக்கென்று தனித் தனியே தொல்பொருள் ஆய்வுத்துறையினை நிறுவிக் கொண்டது. 1958ஆம் ஆண்டில் பழைய நினைவுச் சின்னங்கள், தொல் பொருள் களங்கள் முதலியவற்றின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய சட்டம் எழுந்தது. நாட்டின் பழம் பொருள்கள் (Antiquities) வரலாற் றிற்கும் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் நெருங்கிய தொடர்புடை யனவாய் இருப்பதால் அவற்றை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் ஒப்படைத்தது. தொல்பொருள் ஆய்வுத் துறை யினரே இன்று தொல் பொருள் களங்களை ஆய்தல், அகழ்தல், பழம் பொருள்கள் பழுதுபடா வண்ணம் வேதியல் முறைகளைக் கையாண்டு பாதுகாத்தல், ஆய்வு முடிவுகளைத் தொகுத்து அழகு பொலிய அச்சிட்டு வெளியிடுதல் போன்றவற்றைச் செய்து வரு கின்றனர். தொல்பொருள் ஆய்வுத்துறை தன் செயல்முறை எளிமைக் காக இந்தியாவை 9 தொல்பொருள் வட்டங் களாகப் பிரித்துள்ளது. அதன் தலைமை அலுவலகம் புதுதில்லியில் உள்ளது. அங்குத் தொல்பொருள் ஆய்வுத் தேர்ச்சிக்கென்று தொல்பொருளியல் ஆய்வுப்பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. மேலும் தொல் பொருள் ஆய்வுத் துறையில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் ஊக்க முடன் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றன. காளிபங்கன் இந்தியா உரிமை பெற்று எழுந்தபின் நடந்த ஆய்வுகளில் ஒன்று இராசத்தானில் பிக்கானிர் மாவட்டத்தில் உள்ள காளிபங்கன் என்னும் இடத்தில் நடைபெற்ற அகழாய்வாகும். இஃது அரப்பா மொகஞ்சதாரோ போன்ற நகரமாகும். இது சிந்து வெளிப் பண் பாட்டிற்கு அடுத்தபடியாக கி.மு. 2045 முதல் கி.மு. 2075ஆம் ஆண்டு களுக்குள் எழுந்த நகரமாகக் கூறப்படுகிறது. அரப்பாவைப் போன்று கட்டிடங்களும், கழிவு நீரோடைகளும், கிணறுகளும் அகழ்ந்து கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. அரப்பாவைப் போல் குடியிருப்பு இடங்களும் பொன் செம்பு மணிக்கோவைகளும் மட்பாண்டங் களும் கிடைத்துள்ளன. சிந்து வெளியில் கிடைத்த முத்திரைகள்போல் இங்கும் பல முத்திரைகள் அதே எழுத்துக்களையுடையனவாய்க் கண்டெடுக்கப் பட்டுள்ளன. சிலர் இதன் காலம் கி.மு. 1500ஆக மதிப்பிடுகின் றார்கள். இங்குள்ள மக்கள் நெருப்பைத் தெய்வமாக வழிபட்டிருக்க லாம் என்று எண்ணப்படுகிறது. இங்குச் சுடுமண்ணால் செய்யப் பட்ட சிவலிங்கங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அகழ் ஆய்வில் கிடைத்த உடைந்த மட்பாண்டங்களில் ஓவியங்கள் பல உள. காவிரிப்பூம்பட்டினம் இது சோழர்களின் துறைமுகப்பட்டினம். இதனைப் பூம்புகார் என்றும் கூறுவர். இது சீர்காழிக்கு அண்மையில் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இங்கு இந்திய நடுவண் அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த திரு. ஏ.வி. இராமன் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன் அகழ் ஆய்வு நடத்தி னார். இங்குப் பல பழைய மட்பாண்டங்களும், சோழர் காசுகளும், உரோம நாணயங்களும், சங்குகளும், விலை உயர்ந்த மணிகளும் கிடைத்தன. இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாக மதிக்கப் படுகிறது. இங்கு ஒரு கட்டிடமும் அகழ்ந்து கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. இங்கு ஓர் அழகிய புத்தர் கோயிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் செங்கற்சுவர்கள் மீது அழகிய ஓவியங்கள் தீட்டப்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவையன்றி வேறு பல கட்டிடச் சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு இராசராசன் காலத்திய காசுகளும் கறுப்பு சிவப்பு வண்ணந் தீட்டப்பட்ட உடைந்த மண்பாண்டத் துண்டுகள் பலவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இங்குக் கிடைத்த மண் பொம்மைகள் சதுரக் காசுகள் முதலியவற்றைக் கொண்டு இங்குச் சிதைந்துள்ள கட்டி டங்கள் 9 அல்லது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையெனச் சிலரால் எண்ணப்படுகின்றது. செங்கற்பட்டு அகழ் ஆய்வு செங்கற்பட்டுக்கு அண்மையில் உள்ள பாலாற்றின் கரையை அடுத்துள்ள கோர்த்தலையாற்றுப் படுகை இந்திய நடுவண் அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வல்லுநர் திரு. வி.டி. கிருட்டிணமூர்த்தி அவர்கள் தலைமையில் அகழ் ஆய்வு செய்யப்பட்டது. அங்குப் பழங்கல் ஊழியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கற்காலக் கருவிகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன; அவற்றில் குறிப்பிடத் தக்கன கல்லாலான கைக்கோடாரி, கத்திகள், குழவிகள் போன்றவை யாகும். இவையன்றி உரித்தெடுக்கும் கைத்தொழில்களும், திண்ணிய முதுகுள்ள வாள்கள் செய்யும் கைத்தொழில்களும், சிறுகற்களால் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செங்கற்பட்டுக்கு அண்மையில் உள்ள குன்றுகளில் பழங்கல் ஊழியில் வாழ்ந்த முதுமக்கள் உணவு சமைத்த அடுப்புகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்குப் பல உடைந்த மட்பாண்டங் களும் சாம்பல்களும் அரைகுறை யாய் எரிந்து மிஞ்சிய மரக்கட்டை களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை அறிவியல் முறையில் ஆய்வு செய்யப்பட்டு (Carbon 14 Test) இவை பழங்கல் ஊழியைச் சார்ந்த மக்கள் (Palaeolithicmen) விட்டுச் சென்ற பொருள்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் அகழாய்வு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் போன்ற நகர்களுக்கு அண்மையில் புதிய கல் ஊழியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் பல கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி, மெய்ஞ்ஞானபுரம், நாசரத்து, சாயர்புரம், புதூர் போன்ற இடங்களில் புதிய கல் ஊழி யில் வாழ்ந்த முதுமக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் பலவற்றை நடுவண் அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்று நன்கு தெரிகிறது. தமிழ்மக்கள் பழங்கல் ஊழியிலிருந்து மாழை (உலோக) ஊழிமூலம் வரலாற்றுக் காலத்தையும் கண்ட தொல்குடியைச் சேர்ந்த முது மக்கள் என்பது ஐயந்திரிபறக் கண்டுபிடிக்கப்பட்டு அறிவியல் அறிஞர்களாலும் வரலாற்றுத்துறை வல்லுநர்களாலும் தொல் பொருள் ஆய்வுத்துறை வல்லுநர்களாலும் உறுதி செய்யப் பெற்றுள்ளது. கொற்கை அகழ் ஆய்வு கொற்கை, பாண்டியநாட்டின் தலைநகர், துறைமுகப் பட்டினம், இடைச்சங்கம் நிலவிய மூதூர், இத் துறை முகத்தின் மூலமே தமிழர்கள் யவனர், சோனகர், எகிப்தியர், சுமேரியர் போன்ற வெளிநாட்டினருடன் கடல் வணிகத்தை நடத்தினர். அயல்நாட்டு வணிகர்கள் பொற்காசுகளையும், பொற்பாளங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்துவிட்டுக் கொற்கை முத்துக்களையும் சந்தனக் கட்டைகள், ஏலம், கிராம்பு, எஃகு ஆயுதங்கள், மட்பாண்டங்கள், மணிகள் பதித்த அணிகலன்கள் முதலியவற்றையும் பெற்றுத் தம் கப்பலில் ஏற்றிச் சென்றனர். நம் கப்பல்களும் அயல்நாடுகளுக்கச் சென்று மீண்டன. இன்று கொற்கையிலிருந்த கடல் சுமார் 4 கல் தொலைவிற்குப் பின்வாங்கிப் போய்விட்டது. எனவே, பாண்டியர்கள் தம் தலை நகரை மதுரைக்கு மாற்றினர். ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்குமுன் கொற்கை நிலைகுலைந்து அழிந்து போயிற்று. அதனால் அவ்வூர் இன்று ஏதுமற்ற சிற்றூராய்க் காட்சி அளிக்கிறது. அதனை நமது தமிழ் அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் முனைவர் நாகசாமி அவர்களும் அவருடைய உதவியாளர் திரு. மசீது அவர்களும் அகழ்ந்து சில மட்பாண்டத் துண்டுகளை யும், சில தாதுப்பொருள்களையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொற்கைப் பண்பாடு கி.மு. 785-க்கு முற்பட்டது என்று அறிவியல் பாங்காக ஆய்ந்து முடிவுகட்டப் பெற்றுள்ளது. கொற்கையை மீண்டும் விரிவாக ஆய்வதற்கு நமது அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையை முடுக்கிவிடுமாறு நம்மக்கள் அரசினை வற்புறுத்த வேண்டும். திருக்கோயில் கட்டிடக் கண்காணிப்பு நிறுவனம் திருக்கோயில் திருப்பணி, கட்டிடக்கலை நுணுக்கம் இவற்றின் ஆய்வுக்கென இந்திய நடுவண்அரசு கோயில் கண் காணிப்பு நிறுவனம் (Temple Survey Project) என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒன்று, வட இந்திய ஆய்வுக்கென்று போபாலில் அமைந்துள்ளது. மற்றொன்று சென்னையில் தென் னிந்தியக்கோயில் கட்டிடத்துறைச் சிற்ப நுட்பங்களின் ஆய்வுக் கென்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கென்று இயக்குநர் ஒருவரும் நிழற்படம் எடுப்பவர்களும், எழுத்தர்களும் பணியாட்களும் இயங்கி வருகின்றனர். இந்த நிறுவனம் சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு அண்மையில் இருந்து வருகிறது. அங்குச் சென்று அவர்களை ஓரளவு நான் பயன்படுத்தியுள்ளேன். கல்வெட்டு ஆய்வுத்துறை தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு உதவியாக 1883 ஆம் ஆண்டு பழைய பட்டயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற வற்றைக் கண்டுபிடித்துப்படிசெய்து விளக்கி இன்றைய வரிவடிவில் எழுதி நூல்வடிவில் ஆக்கம் செய்து வெளியிடுவதற்கென்று கல் வெட்டு ஆய்வுத்துறை ஒன்று (Epigraphic Department) தொடங்கப் பெற்றது. கல்வெட்டு, பட்டயங்கள் ஆய்வுத்துறைத் தலைவராகச் சாண் பெயித்புல் பிளீட் என்னும் ஆங்கிலேயரை அரசு அமர்த்தி யது. அவர் நாடெங்கும் தேடி கிடைக்கும் கல்வெட்டுகளையும், செம்புப்பட்டயங்களையும் திரட்டினார்; பலவற்றைப் படியெடுத் தார்; அவற்றை நூல்வடிவமாக்கி வரலாற்றுக் கால வரிசையில் தொகுப்பதற்குத் திட்டமிட்டுப் பணிசெய்தார். கல்வெட்டு, செம்புப்பட்டய ஆய்வை ஒரு தனி அலுவலகம் கவனித்து வருகிறது. இஃது ஆங்கில ஆட்சியின் காலத்தில் உதக மண்டலத்தில் இயங்கி வந்தது. இந்தத் துறையின் தலைவராக ஆங்கிலேயர்களே இருந்து வந்தனர். இப்பொழுது இத்துறை இந்தியர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. இப்பொழுது இதன் அலுவலகம் மைசூருக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இவர்களால் செய்யப்பட்டுவரும் பணிகளை எம்போன்ற வர்களே அறியமுடிய வில்லை. இவர்கள் படித்த பட்டயங்கள் நூல் வடிவம் பெற்று வெளிவந்ததாகத் தெரியவில்லை. நமது அரசு அதற்கு ஆவன செய்ய வேண்டும். தொல்பொருள் வேதியியல் ஆராய்ச்சித் தலைமை அலுவலகம் தேராடூனிலும், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஆய்வு அலுவலகம் நாகபுரியிலும் பழம் பொருள் காட்சித்துறை ஆளுமை கல்கத்தாவிலும் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டின் நல்ல வரலாற்றை அறிய இன்னும் விரைவாகக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் படிக்கப்பட்டு நூல் வடிவம் பெற்று வெளிவரவேண்டும். கிட்டத் தட்ட நூறாயிரம் கல்வெட்டு களும் செப்பேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சொல்லப் படுகிறது. கல்வெட்டு ஆய்வுத்துறை இன்று ஆமை வேகத்தில் இயங்கிவருகிறது. இந்த வேகத்தில் அஃது இயங்கிவந்தால் தமிழர் களின் நிறைவான வரலாற்றைக் காண இன்னும் 100 ஆண்டுகளாவது செல்லும் என்று நம்புகிறேன். நமது அரசு இத்தகைய ஒரு துறையை மைசூரில் நடத்தி வருகிறது என்பது அறிஞர் பலருக்குக்கூட தெரியாது. குறிப்புகள் - NOTES II 1. கலைக் களஞ்சியம், தொகுதி VI, முதற்பதிப்பு, 1959 (சென்னை) தொல்பொருள் இயல், பக்கம் 224. 2. The Riddles of Three Oceans : “Oceanographers may be right when they say that this portion of the Indian Ocean is an ancient area in transition and has not yet completed its development. That is, the Seychelles micro Continent is not a region which has subsided but, on the contrary a portion of the ocean floor which has not yet risen to the surface. Neither a positive nor negative answer can yet be given to this question. We shall have to wait and see what is revealed by further geophysical and Oceanographic studies of the Indian Ocean; now only in their initial stage. Oceanographers, geologist and geophysicists are devoting their closest attention to the north western section of Indian Ocean, which has the most complex relief and where the earth’s crust is still in motion, as evidenced by volcanic eruptions and earthquakes. Many of them believe that this part of the Ocean has developed differently from all the other sections. The granite massifs of East Africa, the Arabian Peninsula and the Indian subcontinnt continue out into the Indian Ocean” (The Riddles of Three Oceans - Alexander Kondratov (Moscow) 1974, pp. 174-175. 3. “Indian Ocean founded a continent which extended from Sunda Island along the coast of the Asia to the east coast of Asia to the east coast of Africa. This large continent is of great importance from being the possible cradle of the human race” - “Anthropology”. “These are a number of circumstances (specially chronological facts) which suggest that the primeval home of man was a continent now sunk below the surface of the Indian Ocean which extended along the South of Asia as it is at present (and probably in direct connection with it) towards the east as far as further India and the Sunda Islands towards the west as far as the Madagascar and the south shores of Africa. This large continent of former times Selater an English man has called Lemuria from the monkey like animals which inhabited it and it is at the same time of great importance from being the probable cradle of the human race which in all likelihood here that developed out of anthropoid apes” - Prof. Ernest Haeckel. 4. Investigations in relation to race show it is by no means impossible that Southern India was once the passage ground by which the ancient progenitors of Northern and Mediteranean races proceeded to the globe which they now inhabit. Human remains and traces have been found on the east coast of an age which is indeterminate but quite beyond the ordinary calculations of History. Antiquarian research is only now beginning to find means of supplementing the deficiency caused by the absence of materials constructed or collected by usual historical methods. These results are specially to be regarded as without doubt, the people who have many ages occupied this portion of the Penisula are a people influencing the whole world not perhaps by moral and intellectual attributes to a great extent by a superior physical qualities” - Dr.E.Maclean. 5. “India was an amazing breeding ground for the evolution of life forms. Man himself may have struggled upwards out of the anthropoid within the limits of India” - The World We Live In - Graham Williams Vol.1. p. 1114. 6. Origin and Spread of the Tamils. (a) “Bruce Foote examined, among others the most important Prehistoric burial places covering over hundred and fourteen acres of land at Adichanallur on the South Bank of the Tambraparni. (Thennporunai river) in the Tinnevelly District. These graves at Adichanallur are to be dated in te early Iron Age which succeeded the Neolithic Age in South India” - Origin And Spread of the Tamils by V.R.Ramachandra Dikshitar, M.A. (Madras) 1971, p. 21. (b) “We have a continuity of culture from Paleolithic to Neolithic, from Neolithic to Megalithic and Megalithic to Iron age in South India. It cannot be that the Primitive indigenous culture was buried by the invading Dravidian. To escape out of the difficulty, an ingenious theory of Proto - Dravidian has been propounded. The Proto-Dravidian is as unsound as the theory of a Dravidian invasion. My firm conviction is that the ancient Tamils were inheritors of the Lithic Cultures of South India” - Ibid. p. 15. (c) “The late Professor P.T. Srinivasa Aiyangar was a warm champion of the theory of cultural and even racial continuity of the people of South India from the earliest times. He sought to explain” that the Old Stone Age in South India ended very gradually and shaded off very imperceptibly into the neolithic culture and that throughout South India, there was no geological or other indication of catastrophic phenomena when the Palaeolithic Age ended and the next age began. The substitution of traprock for quartzite, the acquisition of the skill to polish the tools made with trap-rock till they became extra-ordinarily smooth to the touch, the domestication of the wild dog, and the cultivation of the wild rice led to the peaceful evolution of the epoch of new stone tools from that of the older rough implements, the settled life of the neolithians from the nomad life of the palaeolithians” - Journal of the Bihar and Orissa Research Society Vol. xxiv. pp. 39-40. (d) Thus according to this view, the Dravidian race was indigenous to the Country; and the Tamil and other allied peoples were indigenous; and their languages were evolved where they are now spoken. A careful study of South Indian Pre-historic antiquities in Situ cannot lead to any other conclusion than that the passage of culture from stage to stage in ancient times was not a catastrophic change such as indicates the struggle or alien intruders with the pre-existing population but a peaceful course of evolution. An inspection of the map of neollthic India is enough to prove that the Country was thickly populated by people of one homogenous from of culture and that the people ought to have been autochthonous, as the Tamil people have always claimed to be in the tradition recorded in their ancient literature. In the most ancient layers of the Tamil language can be discovered not only ample traces of neolithic culture, but also the birth of the Iron age culture that succeeded it” - Journal of th Bihar and Orissa Research Society vol. xxiv. pp. 41-42. 7. A Political and General History of Tinnevelly - Dr. R. Caldwell (Bishop of Tinnevelly) Published by the Madras Govt. 1881. 8. Exploration at Korkai and Kayal by the Rt. Rev. Robert Caldwell. D.D., LLD. (Bishop of Tinnevelly) 1877. 9. Catalogue of the Prehistoric Antiquities from Adicha-nallur and Perumbair - by Alexander Rea F.S.A. (Scot) Madras, 1915. 10. Vide Reports of th Archaeological Survey of Southern Circle for 1890-1900 to 1903-1904 and of the Archaeological Survey of India for 1902 -1903 and 1903-1904. இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (BIBLIOGRAPHY) 1. Commemoration Essays Presented to Sir R.G.Bhandargar. 2. An Ancient History of the Near East - H.R. Hall. 3. Origin and Spread of the Tamils - Prof. V.R.Ramachandra Dikshitar M.A., (Madras) 1971. 4. Social Studies Vol. I Edited by Prof. Gajnig and others (New Delhi) 1969. 5. The Discovery of India - Pundit Jawaharlal Nehru (London) 1960 - New Impression. 6. A History of Indian Culture - M.I. Sudarsanam, M.A. (Vellore) 1959. 7. Dravidian Civilization - Prof. R.D. Banerji (Modern Rivew) Calcutta 1937 p. 304-314; 553-559. 8. Mohenja - Daro and Indus Culture Vol. 1-3 London 1930. 9. The Vellalas in Mohenjo Daro - Rev. Fr. Henry Heras S.J., M.A. (History) Bombay. 10 “A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Language” by Rt. Rev. Dr. Robert Caldwell DD. LL. D. Bishop of Tinnevelly, First Edition 1886. 11. A Political and General History of Tinnevelly by The Rt. Rev. Dr. R. Caldwell, D.D., LL. D. Published by the Madras Government 1881. 12. Exploration at Korkai and Kayal by The Rt. Rev. Dr.R.Caldwell, Bishop of Tinnevelly 1971. 13. தொல்காப்பியம் - தொல்காப்பியனார், கழக வெளியீடு. 3. ஆதித்தநல்லூர்ப் பறம்பின் அகழாய்வு இந்தியாவிலே நடைபெற்ற அகழாய்வுகளில் ஆதித்த நல்லூர்ப் பறம்பில் நடைபெற்ற அகழாய்வு, முதல் அகழாய்வாகும். இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் தாம் உலகிலே மிகத் தொன்மை வாய்ந்த பொருளாகக் கருதப்படுகின்றன. இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழும்பிய புதுக் கல்லூழியின் தொடக்க காலத்தில் எழுந்த இரும்பு ஊழியில், தமிழ்மக்கள் ஆதித்த நல்லூர் இரும்புப் பண்பாட்டைக் கண்டனர் என்று தொல்பொருள் ஆய்வுத்துறை வல்லுநர் போற்றுகின்றனர். ஆதித்தநல்லூர் ஆதித்த நல்லூர்ப் பறம்பு, இந்தியாவின் தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலிச் சந்திப்புப் புகைவண்டி நிலையத்தினின்று பாளையங்கோட்டை வழியாய்த் திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையிலிருந்து கிழக்கே 11.6 கிலோ மீட்டர் தொலைவில் தண்பொருநை ஆற்றின் (தாம்பிரவருணி ஆற்றின்) தென்கரையில் உள்ளது. இந்தப் பறம்பின் வரம்பு 114 குறுக்கத்துக்கு (ஏக்கருக்கு) மேற்பட்டிருக்கலாம். இந்த அளவு இதன் அண்மையில் உள்ள ஆதிச்சநல்லூர் என்று அங்குள்ள மக்களால் அழைக்கப்பட்டு வரும் சிற்றூரை உள்ளடக்கியே கூறப் பெற்றுள்ளது. ஆதித்த நல்லூர்ப் பறம்பு என்று கூறப்படும் ஒரு மண்மேடு தண்பொருநை ஆற்றின் தென் கரையினின்று தொடங்கித் தென்வடலாக நீண்டு கிடக்கின்றது. இதன் வடபகுதி உயர்ந்தும், தென்பகுதி தாழ்ந்தும் உள்ளது. இன்றும்,குன்றென நிமிர்ந்து நிற்கும் இம் மேட்டு நிலம் (பறம்பு) கள்ளியும், முள்ளியும், கல்லும், முள்ளும், சரலும், பரலும், வெள்ளுடையும் கருவுடையும் (கருவேலும்), புதரும் பதரும் அடர்ந்து காணப்படுகிறது. இது பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத பாங்கற்ற நிலமாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தைப் பண்டைய தமிழர்கள் இறந்துபோன மக்களின் உடலைப் புதைக்கும் ஈமக்காடாகப் பயன்படுத்தி வந்தனர் என்று தெரிகிறது. (படம் 1ஐப் பார்க்க). சிந்துவெளியில் அகழ்ந்து கண்ட பெருநகர் ஒன்றிற்கு மொகஞ்சதாரோ என்று பெயர். மொகஞ்சதாரோ என்பது இந்திச் சொல். அதன் பொருள் இறந்தவர்களின் நகரம் என்பதாகும். இந்தப் பெயர் அந்நகருக்கு ஏற்றதாக என்னால் கருத முடியவில்லை. ஆனால், அதற்கு ஞாயிற்று நல்லூர் (ஆதித்த நல்லூர்) என்ற பெயரளித்துவிட்டு, ஆதித்த நல்லூரில் அகழாய்வு செய்யப்பட்ட இடத்திற்கு மொகஞ்சதாரோ என்று பெயரிட்டு அழைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது முற்றிலும் ஈமக்காடே. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் சவக் குழிகள் உள்ளன. மொகஞ்சதாரோ அப்படிப்பட்ட ஈமக்காடன்று. மக்கள் வாழ்ந்த மாநகரமாகும். மறைந்துபோன மாபெரும் நாகரிகமான சிந்து வெளி நாகரிகம், உபைதிய நாகரிகம், எல்லம் நாகரிகம், சுமேரிய நாகரிகம் போன்ற பழம்பெரும் நாகரிகங்களுக்கு அடிப்படையாய் அமைந் திருந்து அழிந்துபோனது ஆதித்த நல்லூர் நாகரிகம். முதல் அகழாய்வு தொல்பொருள் ஆய்வுத்துறை பிள்ளைப் பருவத்தில் இருக்கும் பொழுதே - அஃதாவது 1876 ஆம் ஆண்டிலே செர்மன் நாட்டில் உள்ள பெர்லின் நகரில் வாழ்ந்த முனைவர் சாகோர் அவர்கள் (Dr. Jagore) ஆதித்தநல்லூர்க்கு வந்து இந்தப் பறம்பில் உள்ள புதர் களைக் களைந்து நிலத்தை அகழ்ந்து அங்குப் புதையுண்டு கிடந்த பழம் பொருள்களை எடுக்கத் திட்டமிட்டார். அவரது திட்டத்தை நிறைவேற்ற முனைந்து அவர் பெர்லின் நகரைவிட்டுப் புறப்பட்டுக் கப்பலில் ஏறி இந்தியாவிற்கு வந்து புகை வண்டியிலும், மாட்டு வண்டியிலும் நீண்டநாள் பயணம் செய்து, இந்தியாவின் தென்கோடியில் உள்ள குமரிமுனைக்கு வடக்கில் ஏறத்தாழ 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆதித்த நல்லூரை அடைந்தார். அவர் நேராக ஆதித்தநல்லூருக்கு வரவில்லை. அவர் திருநெல்வேலி மாவட்ட அதிகாரி திரு. இசுட்டு வர்ட்டு (Mr. Stuart the acting collector of Tinnevelly District) மாவட்டப் பொறியியல் வல்லுநர் (District engineer) ஆகியவர்கள் பின்தொடர, ஆதித்த நல்லூர்ப் பறம்பை அடைந்து அங்குள்ள கல்லும் மண்ணும் கலந்த களர் நிலத்தை அகழ முற்பட்டார். இஃது இந்தியாவில் துளிர்த்துக் கிளைத்துள்ள அகழ் ஆய்வின் தொடக்க விழாவாக எண்ணப்படு கிறது. ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் எதிர்பார்த்திராத வெற்றி யினை முனைவர் சாகோர் எய்தினார். அங்குப் பல தாழிகளும், எலும்புகளும், பொற்பட்டங்களும், வெண்கல ஏனங்களம், இரும்புப் பொருள்களும், மட்பாண்டங்களும் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. அங்குக் கிடைத்த பழம்பொருள்களைக் கண்டு முனைவர் சாகோர் களிப்புற்றார். காணற்கரிய கருவூலங்களைக் கண்டெடுத்ததாகக் கருதி அனைத்தையும் மிகப் பாதுகாப்பாகப் பெட்டியில் அடைத்துப் பெர்லின் நகருக்கக் கொண்டு போனார். அப்பால் அவ்வரிய பழம் பொருள்கள் அனைத்தையும் அங்குள்ள பழம்பொருள் காட்சிச் சாலையில் (Berlin Museum for Volkrkunde) இடம் பெறச் செய்தார்.1 இதற்குமேல் இந்தப் பொருள்களைப் பற்றிய செய்தி எதுவும் நமக்கு எட்டவில்லை. இரண்டாவது அகழாய்வு இதைத் தொடர்ந்து 1903-1904 ஆம் ஆண்டுகளின் குளிர் காலத்தில் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த பாரீசு நகரில் உள்ள எம். உலூயிசு இலாப்பிக்யூ (M. Louis Lapicque) அவர்களால் ஆதித்த நல்லூர்ப் பறம்பில் மீண்டும் அகழாய்வு செய்யப்பட்டு முன்பால் பழம்பொருள்கள் பல அகழ்ந்தெடுக்கப்பட்டு அனைத்தும் பாரிசு, பழம்பொருள் காட்சிச் சாலையில் இடம்பெறச் செய்யப் பெற்றன. அறிஞர் இலாப்பிக்யூ அவர்கள் இங்குக் கண்ட பழம்பொருள்கள் அனைத்தையும் ஆய்ந்ததின் விளைவாக அப்பொருள்கள் அனைத் தையும் திராவிடர்கள் ஆதி முன்னோர்களுக்குச் சொந்தமான பழம் பொருள்களின் எச்சமிச்சங்களாக இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார். தமிழ்நாட்டிற்கு எவ்வகைத் தொடர்பும் அற்ற செர்மன்காரர் தமிழகத்தில் நுழைந்து ஆதித்தநல்லூர்ப் பறம்பில் அகழாய்வு நடத்தி விலை மதிக்க முடியாத கருவூலமான பழம்பொருள்களைப் பகற் கொள்ளை அடிப்பதைப்போல் கவர்ந்து சென்றார். இதைக் கண்டு உலகம் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை (East India company Rule) ஏளனமாகச் சிரித்தது. அதைக் கண்டு பிரிட்டீசுக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்குச் சொரணை ஏற்பட்டது. 1899 முதல் 1906 ஆம் ஆண்டுவரை ஆதித்த நல்லூர்ப் பறம்பில் மீண்டும்அகழாய்வு நடத்துமாறு அறிஞர் அ.இரீயா அவர்களுக்கு ஆணை பிறப்பித்தது. அவர் அப் பகுதிகளை உன்னிப்பாக உற்று உணர்ந்து அகழ்ந்து ஏராளமான பழம் பொருள்களை எடுத்தார். முன்னர் அகழ்ந்து கண்ட பொருள்களையொத்த படிகள் பல கண்டெடுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. இங்குள்ள புதைகுழிகள் (Burial grounds) மாபெரும் பழைமை வாய்ந்தவை என்று முடிபு செய்யப்பட் டுள்ளன. இங்குக் கிடைத்த பொருள்கள் கிறித்தவ ஊழியின் தொடக்கத்திற்குப் பின்னர்ப் பயன்படுத்தப்பட்டவையாய் இருக்க வேண்டும். இவை பாண்டியர்களின் தோற்ற மூலத்தை உடையன என்றும் இரீயா எண்ணினார். ï‹W m¿P® mby¡rhªj® ïßah mt®fŸ mfœªJ f©l Mâ¤ješÿ®¥ gH«bghUŸfŸ mid¤J« br‹id¥ gH«bghUŸ fh£á¢ rhiyÆš xU gh§fhd ïl¤âš tF¤J¤ bjhF¤J¢ Óuhf it¡f¥ bg‰ WŸsd.* முனைவர் சாகோரும், அறிஞர் எம். உலூயிசு இலாப்பிக்யூ அவர்களும் ஆதித்தநல்லூர்ப்பறம்பில் அகழ்ந்து எடுத்துச் சென்ற பொருள்கள் என்னென்ன என்று எவரும் அறியார். அவர்களில் எவரும் தங்கள் பழம் பொருட்காட்சிச்சாலையில் இடம் பெறச் செய்திருக்கும் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வுப் பொருள்களுக்கு விளக்கமான பட்டியல் எதுவும் வெளியிட்டிருப்பதாக நமக்கு எவ்வகைச் செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், இந்திய நாட்டின் அன்றைய அறங்காவலர்களாக (trustees) இருந்த பிரிட்டீசுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராளராக இருந்தவர், திருநெல்வேலி மாவட்ட அதிகாரி திரு. இசுட்டூவர்ட் என்பவர் ஆவர். அவர் 1876 ஆம் ஆண்டில், முனைவர் சாகோர் அகழ்ந்து கண்டெடுத்த செய்தி களைப் பற்றிக் கும்பினியின் மேலதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அந்தக் கடிதத்துடன் அன்றைய பிரிட்டீசுக்கும்பினி ஆட்சி யின் தொல்பொருள் ஆய்வுத் துறையில் 1902-03, 1903-1905 ஆம் ஆண்டு களின் இந்தியாவில் தொல்பொருள் ஆய்வுத்துறை அளவாய்வு செய்தவர்களும் 1899-1900ஆம் ஆண்டுகள் முதல் 1903-1904 ஆண்டுகள் வரை தொல்பொருள் ஆய்வுத்துறையின், தெற்கு வட்டாரச் சுற்றாய்வு செய்தவர்களும் அளித்த அறிக்கைகள் உள்ளன. அவை கூறும் செய்திகள் : நாங்கள் 25 அல்லது 30 சதுரக்கெசம் (1 - சதுரக்கெசம் 3 அடி நீளமும் 3 அடி அகலமும் அடங்கியது) பரப்பளவுள்ள மேலெழுந்த வாரியாகக் கல்லும் சரளும் நிறைந்த பாறைமீதுள்ள ஒரு பகுதியை யும் அதே மூலக்கூறுகளையும் கல் பாளங்களையும் படிகக்கல் நிறைந்த பறம்பின் மற்றும் ஒரு பகுதியையும், அகழ் ஆய்வு செய்யத் தொடங்கினோம். அங்கு, நாங்கள் 25க்கு மேல் 30 எண் வரையுள்ள மட்பாண்டங்களை (தாழிகளை)க் கண்டுபிடித்தோம். அவற்றின் உருவ அளவு 3-9 அடி முதல் 3-6 அடிவரை உயரமும் ஏறத்தாழ பத்து அங்குலம் வாயகலமும் அளவுள்ளனவாக இருந்தன. பல இன்று கடைகளில் விற்கும் மட்பாண்டங்களைவிட உறுதியும் நாகரிகமும் உடையனவாயிருந்தன. இந்த மட்பாண்டங்களில் மண்கட்டியும் சரள்களும் அடங்கியிருந்தன. அவற்றோடு பழம்பொருள் ஆர்வலர் (Antiquarian) மனிதவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும், பண்பாடுகளையும் பற்றி ஆய்வு செய்பவர், பழம் பொருள்கள் திரட்டிச்சேர்ப்பவர் (antiquarians, the ethrologist and collectors of Antiquities) முதல் அறிவியல் வல்லுநர் வரையுள்ளவர்க்கு மிகக் கவர்ச்சி யூட்டும் பல்வேறு வகையான பொருள்கள் அதில் அடங்கியிருந்தன. அங்குக் கிடைத்த பல்வேறு வகையான பருமனில் உள்ள அடுக்களைப் பாண்டங்களும் மண்ணால் ஆக்கப்பட்டவையாக இருந்தன. அவை ஐம்பது வகைக்கு மேற்பட்டவையாகும். மேலும் அங்கு இரும்புப்படைக் கலன்கள் (Iron weapons) துணைக் கருவிகள் (Implements) சிறப்பாகக் கத்திகள் அல்லது குட்டையான வெட்டு வாய்ப் பகுதியையுடைய வாள்கள் (Short sword-blades) கைக் கோடரிகள் (Hatches) ஆகியவையும் பெரிய அளவில் எலும்புகளும், தலையோடுகளும் (மண்டையோடுகளும்) கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இவற்றுள் ஒன்று இன்று மிக முதன்மையான செய்தி யாகும். அஃதாவது, இரண்டு சிறுமட்பாண்டங்கள் ஒரு பெரிய மட்பாண்டத்தினுள் வைக்கப்பட்டிருந்தன என்பதாகும். பெரிய மட்பாண்டத்துள் கிட்டத்தட்ட எல்லா எலும்புகளும் அடங்கி யிருந்தன, (இவற்றில் என்ன பொருள்கள் அடங்கியிருந்தன) என்று கூறுவதில் பிழை எதுவும் எழ முடியாது. ஆனால், திருநெல்வேலிச் சாமை என்று கூறப்படும் உலர்ந்த கூலப்பொருளும் அரிசி எனப் படும் கூலப்பொருளும் மேலே உள்ள வெளிப் பகுதியில் இருந்தன. இந்தக் கூலப் பொருள்கள் தாமாகவே உக்கி மறைந்துபோயின. ஆனால் மேலே தூவப்பட்ட - பெரும்பாலும் மணல் சத்துள்ளவை - எஞ்சி இருந்தன. எங்களுடைய முதன்மையான அகழ் ஆய்வு தொடங்கப் பட்ட இடத்தினின்று குறைந்தது 270 அல்லது 360 மீட்டர் தொலை வில் உள்ள பலவிடங்களில் மேலே குறிப்பிட்ட சாவு வினைக்குரிய புதைகலன்கள் (தாழிகள் urns) பறம்பிலுள்ள சரளைக் கற்களின் மேற்பாகத்தில் உடைந்த ஓட்டுத் துண்டுகளாகப் பல சிதறுண்டு கிடந்தன. அவை எல்லா வழிகளிலும் அகழாய்வை மெய்ப்பிக்கக் கூடியனவாக இருந்தன. ஆனால், ஒரு செய்தியில் மட்டும் அவை பிணங்களைப் புதைக்கும் பழைய இடுகாட்டினைப் பற்றிக் குறிப்பாக எடுத்துக்காட்டும் இடமாக இருந்தது. அல்லது அடிநிலக் கல்லறையில் (cata comb) அந்தக் காலத்தில் பிணத்தைப் புதைத்து வைக்கும் பெரும் வழக்கு நிலவியது என்பது இன்றைய இந்தியா விற்குப் பெரும்பாலும் தெரியாது என்று கூறலாம். மக்களின் எலும்புக் கூட்டைப் பெரிய குவளை அல்லது மட்பாண்டத் தினுள்ளே வைத்து அதனுள் இரண்டு மூன்று அல்லது நான்கு சிறிய மட்பாண்டங்களை இறந்து போனவர்கள் மற்றோர் உலகை அடையும்பொழுது பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு வெளிப் படையாய்த் தெரியுமாறு ஏற்பான உணவும், இரும்பாலான படைக் கலன்களுடன் தட்டுமுட்டுப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது. இந்தப் பொருள்கள் அனைத்தையும் அகழ்ந்து எடுத்துச் சென்ற முனைவர் சாகோர் அவற்றைப் பெர்லின் பழம் பொருட்காட்சிச்சாலையில் (Museum) இடம்பெறச் செய்துள்ளார். இந்தப் பொருள்களில் ஒன்றும் சென்னைப் பழம்பொருள் காட்சிச் சாலையில் இடம் பெறவில்லை. இவற்றையெல்லாம் மாவட்ட ஆட்சியாளர் திரு. இசுட்டுவர்ட் அரசுக்கு எழுதிய அந்த மடலில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார் என்பது சென்னை அரசின் பொதுப் பணித்துறை நடவடிக்கைகள் (27-3-1876 இன் 329 ஆம் எண்ணுள்ள சான்று) எடுத்துக் காட்டுகின்றன. அங்கு அகழாய்வு நடைபெற்றபின்னர் நிலம் பள்ளமும் மேடுமாய்க் கிடந்தது. சரளைகள் அங்கும் இங்கும் குவிந்து கிடந்தன. மண் எங்கும் சிதறுண்டு கிடந்தது. எலும்புகள் அடங்கியிருந்த முது மக்கள் தாழிகள் என்று கூறப்பட்ட மட்கலங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் நேராகவும், சாய்ந்தும், உடைந்தும் கிடந்தன. அகழ்வதற்கு என்று வந்த வேலையாட்கள் குருட்டுநம்பிக்கை கொண்டு பேய் பிசாசு என்று கூறி நடுங்கி அங்குப் புகுந்து பணி செய்ய அஞ்சி நின்றனர். மேற்கொண்டு அகழ்ந்து ஆய முடியவில்லை. மேற்பாகத்தில் கிடக்கும் சில தாழிகளை ஆய்வு செய்யவோ, செர்மன் அறிஞர் விட்டுச்சென்ற பழம்பொருள்களை எடுத்துக்கொண்டு வரவோ வெளிப்படுத்தவோ முடியாதிருந்தது. ஏராளமான பழைய இன்றியமையாத பொருள்கள் அதிக உழைப்பின்றி எடுத்துக் கொண்டு வரும் நிலையில் கிடந்தும் அவற்றின் அருகே எவரும் துணிந்து செல்லவில்லை. மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த வேலை யாட்களின் கண்களில் எலும்புகளும் குறிப்பாகத் தலையோடுகளும் கொடிய பேய்களாகத் தோன்றின. இறுதி ஆய்வு ஆதித்தநல்லூர்ப் பறம்பின் மேல்தளத்தில் கிடந்த அரிய பொருள்களை எடுத்தக்கொண்டு வரவும், தொடர்ந்து அகழ்ந்து ஆய்வு நடத்தவும், அரசு எண்ணியது. ஆனால், அன்றுள்ள சூழ்நிலை யில் அந்த எண்ணம் கைவிடப் பட்டது. அப்பால் அகழ் ஆய்வு செய்யவேண்டா என்று அரசு ஆணைவந்தது. பறம்பு எவ்வகைக் கலையும் அகழ்வும் செய்யப்படாது விடப்பட்டது. அகழ் ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு உதவி எதுவும் கிடைக்காத நிலையில் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. மேலும் தொடர்ந்து ஆய்வு செய்யப் படவில்லை. இதன் பயனாய் ஏராளமான விலை உயர்ந்த பழம் பொருள்கள் தேடுவாரற்ற நிலையில் கிடந்து அழிந்தொழிந்தன. 1899 முதல் 1900 ஆண்டு வரை சென்னை மாநில அரசின் பழம் பொருள் காட்சிச் சாலையின் மதிப்புக்குரிய துணைக் கண்காணிப் பாளராக இருந்த திரு.அ.இரீயா அவர்கள் முதன் முதலாகப் பறம்பின் மேற்றளத்தைப் பார்வையிட்டார். அப்பொழுது அங்குள்ள சில பகுதிகள் அகழாய்வு செய்யப்பட்டிருந்தன என்பதை உணர்ந்தார். 1903 முதல் 1904 வரை ஒவ்வோர் ஆண்டும் சில திங்கள் அவரால் மேற்கொண்டு அகழாய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. ஆதித்த நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் திரட்டப் பட்டவை சென்னை அரசின் பழம் பொருள் காட்சிச் சாலையில் வகுத்துத் தொகுத்து இடம்பெறச் செய்யப்பட்டன. இரீயா அவர் களின் பெரும் முயற்சியால் கிட்டத்தட்ட அவருக்கு முன்னர் அகழ் ஆய்வு செய்த அறிஞர்கள் கண்டெடுத்த பொருள்களுக்கு ஒப்பாக ஏராளமான பொருள்களின் மறுபடிவம் (duplicate) கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை ஆதித்த நல்லூர் அகழாய்வுப் பொருள்களுக்குத் தரப்பட்ட பட்டியலில் காணப்படுகின்றன என்று சென்னை அரசின் பழம் பொருள் காட்சிச் சாலையின் கண்காணிப்பாளர் திரு.சே.ஆர். எண்டர்சன் 1914 ஆம் ஆண்டு ஆதித்த நல்லூர்ப் பெரும்பாயூர்களி னின்று கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பழம் பொருள்களின் பட்டியல் என்ற நூலின் முன்னுரையில் எடுத்துக் காட்டியுள்ளார். 1899ஆம் ஆண்டு முதல் 1905ஆம் ஆண்டு வரை தெற்கு வட்டாரத் தொல்பொருள் ஆய்வுத்துறைக் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவரும், சென்னை அரசின் பழம்பொருட் காட்சிச் சாலையின் மதிப்புக்குரிய துணைக் கண்காணிப்பாளரு மான திரு. அலெக்சாந்தர் இரீயா எவ்.எ.ஏ. (காட்) அவர்கள் சென்னை மாநிலக் கிழக்கிந்தியக்கும்பினி ஆட்சியின் ஆணைப்படி ஆண்டுதோறும் ஓரிரு திங்கள் ஆதித்த நல்லூர்ப் பறம்பைச் சிறிது சிறிதாக அகழாய்வு நடத்தி, ஏராளமான அரிய பழம் பொருள் களைக் கண்டெடுத்து அவற்றை வகுத்துத் தொகுத்து, சென்னைப் பழம்பொருள் காட்சிச் சாலையின் ஒரு பெரிய மண்டபத்தில் இடம்பெறச் செய்தார். 1913ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் அவர் தம் பணியினின்று ஓய்வு பெறுமுன் அகழாய்வுப் பொருள் களுக்கு ஒரு நல்ல பட்டியலும் உருவாக்கிக் கொடுத்துள்ளார். அப் பட்டியல் அழகிய 13 படங்களுடனும் சென்னைப் பழம்பொருட் காட்சிச் சாலையின் கண்காணிப்பாளராக இருந்த திரு.சே.ஆர் எண்டர்சன் அவர்களின் முன்னுரையுடனும் ஆதித்த நல்லூரிலும் பெரும்பாயூரிலுமுள்ள வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழம்பொருள்களின் பட்டியல் (Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair) என்ற பெயருடன் 1915 ஆம் ஆண்டு சென்னை அரசு பழம்பொருள் காட்சிச்சாலை ஒருசிறு வெளியீட் டினை3 வெளியிட்டது. அதற்காக நானும் தமிழகமும் அறிஞர் அ.இரீயா அவர்களுக்கும் திரு.சே.ஆர். எண்டர்சன் அவர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் என்றும் செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அவரது நூலின் படி ஒன்று என்னிடம் கிடைத்திரா விடில் இப்பொழுது உங்கள் கையிலிருக்கும் இந்நூல் வெளி வந்திருக்க முடியாது. உலகம் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வுப் பொருள்களைப் பற்றியோ தமிழர்களின் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அரும்பிய இரும்பு ஊழியில் நிலவிய இரும்புப் பண்பாட்டில் எழுந்த நாகரிகச் சிறப்பையோ அறிந்திருக்க வாய்ப்பு எழாமல் போயிருக்கும். அறிஞர் இரீயா அளித்த ஆதித்த நல்லூரில் அகழ்ந்து கண்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழம் பொருள்களின் பட்டியல் 1902-03, 1903-04 ஆண்டுகளுக்குரிய இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆண்டறிக்கையாகவும் 1908-09 ஆண்டில் பெரும்பாயூரில் அகழ்ந்து கண்ட பொருள்களின் அறிக்கையாகவும் வெளிவந்துள்ளது. அறுபத் தைந்து ஆண்டுகளுக்கு முன் அறிக்கையாகவும், நூல் வடிவமாகவும் ஆக்கப் பெற்ற இவ்வேடு 50 ஆண்டுகளுக்கு முன்பே விற்பனையாகி விட்டது. மக்கள் கைக்கு வந்த நூல்கள் பல, கால வெள்ளத்தால் பழையனவாகி இற்றுக்கெட்டு மறைந்து போய்விட்டன. எனவே இன்றைய வரலாற்றாசிரியர்களுக்கும், தொல் பொருள் ஆய்வுத் துறையினருக்கும் மனித இனநூல் அறிஞர்களுக்கும் (Anthropologists) ஆதித்த நல்லூர் தமிழர் நாகரிகத்தை அறியும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. தமிழ்நாட்டு வரலாற்றாசிரியர்களுக்கு ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வும், சிந்துவெளி அகழாய்வும் இந்துமாக் கடலின் அடித்தளம் வரை சோவியத் மாக்கடல் ஆய்வாளர்கள் (Oceanographers) கடலில் 75,000,000 சதுரக் கிலோ மீட்டர் பரப்பு அல்லது உலகமாக் கடல் களில் ஐந்தில் ஒரு பாகங்கொண்ட இந்துமாக்கடலை வித்யார்சு (Vitiyarz) என்ற உயரிய அறிவியல் பாங்கான அரிய கடலாய்வுக் கப்பல் மூலம் பல்லாண்டு தொடர்ந்து பல இலட்சக்கணக்கான கல் தொலைவு 1. சுற்றுலாச் சென்று பெரும் பொருள் செலவிட்டு நடத்திய சுற்றுச் செலவின் (expedition) முடிபுகளும், தமிழ்மக்களுக்கு இன்றியமை யாதனவாகும். சோவியத் கடலாய்வு முடிபுகள் நமக்கு இன்னும் கிடைக்க வில்லை. ஆதித்தநல்லூர் அகழாய்வின் சிறப்பை அறிந்திராத சிலர் வாய்க் கொழுப்புக் கொண்டு தமிழர்களுக்கு 2000-ம் ஆண்டுகளுக்கு முந்திய வாழ்வு இல்லை என்றும் ஆரிய குலப்பிரிவில் இவர்கள் சூத்திரர் என்று கருதப்படுவர் என்றும் கூறி வந்தனர். தமிழர்கள் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து அதாவது பழங்கல்லூழிக்கு முன் இருந்து வாழ்ந்து, புதிய கல்லூழி இரும்பு ஊழி ஆகியவற்றைக் கடந்து, இன்றைய வரலாற்றுக் காலம் வரை வாழ்ந்து வருபவர்கள் என்ற உண்மை, அறிவியல் முறையில் நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூதாதையர்கள் இலெமூரியாக் கண்டத்தில் தோன்றித் தமிழகம், நாவலந்தீவு ஒளிநாடு, மூநாடு என்றெல்லாம் கூறும் மறைந்து போன நாடுகளில் வாழ்ந்தவர்கள் என்று கருதி அந்நாடு களைப் பற்றியும் சோவியத் அறிஞர்களும், பின்லாந்துப் பேரறிஞர் களும், பிரிட்டிசு மொழியியல் வல்லுநர்களும் பிறரும் முதல் இடை, கடைச் சங்கங்களைப் பற்றியும் அவற்றில் வெளி வந்த நூல்களைப் பற்றியும் அந்த நிலத்தைப் பற்றியும் இன்று ஆய முற்பட்டுள் ளார்கள். சிந்துவெளி அகழாய்வு திராவிட நாகரிகம் கி.மு. 4000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தியது என்ற உண்மையை நிலைநாட்டியது. திராவிடர்கள் எகிப்து சுமேரியா எல்லம், கிரீட், மெச்சிக்கோ பெரு நாட்டினர்களோடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர் புடைய மக்கள் என்ற உண்மையை நிலைநாட்டியது. ஆதித்த நல்லூர் அகழாய்வு மனித இனத்தின் மூதாதையர்களான தமிழர் களின் (திராவிடர்களின்) ஆதி முன்னோர்களின் தொட்டில் தென்னிந்தியா என்பதை உறுதிப்படுத்துகிறது. சிந்துவெளி நாகரிகம் இருளார்ந்த இந்திய வரலாற்றிற்கு ஒரு விடிவெள்ளியாகத் திகழ்ந்தது. ஆனால், இந்திய வரலாற்றிற்கு ஆதித்தநல்லூர் நாகரிகம் கருமேகங்கள் அடர்ந்த கார் இருளின் நடுவே ஆதித்தன் தன் பொற்கதிர்களை வீசி இருளினை அகற்றி ஒளிதரும் இளம் ஞாயிறு ஆகத் திகழ்கின்றது என்று இன்று வாழும் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த அறிஞர்களால் கூறப்பட்டு வருகின்றது. பறம்பு அமைப்பு இப் பறம்பில் அகழ் ஆய்வு செய்வதற்குரிய இடம் ஈண்டுள்ள சிற்றூரையும் உள்ளடக்கி, 114 ஏக்கர் மேற்பரப்புள்ள தரிசு நிலமாகும். இந்தப் பறம்பு நிலம் திருநெல்வேலிச் சந்திப்பினின்று ஏறத்தாழ 20 கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலிச் சந்திப்பு திருச்செந்தூர் அரச பாட்டையில் உள்ளது. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இப் பறம்பின் மேற்றளம் பயிர்த் தொழில் செய்வதற்குத் தகுதியற்ற, பயனற்ற களர் நிலம். இந்நிலம் பண்டுதொட்டு இடு காடாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த இடுகாட்டிற்கு அண்மையில் ஒரு சிற்றூரும் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் தென்புறமாகச் சில பிணக்குழிகளும் உள. இது நினைவுக் கெட்டாத காலந்தொட்டு நிலவி வந்துள்ளது. தென் திசையானது மரணத்தின் தெய்வமான எமன் திசையென எண்ணப்படுகிறது. ஊருக்குத் தெற்கே எங்கும் இடுகாடுகளும் சுடுகாடுகளும் இடம் பெற்றிருப்பது இயல்பு. பறம்பின் நடுவில் மூன்றடி மேற்பரப்பில் சரளைக் கற்கள் ஏராளமாக உள்ளன. அதன் அடிப்பகுதியில் தனிக்கூறாகச் சிதைந்த படிகக்கல் பாறை இருக்கிறது. பிணங்களைத் தாழிகளில் வைத்துப் புதைப்பதற்காக அகழ்ந்து ஒவ்வொரு பிணத்திற்கும் தனித்தனியாக உட்குடைவு செய்யப்பட்டிருக்கும் புழைவு பாறைகளில் உள. இந்த இடுகாட்டில் வாய்சிறுத்தும் உடல் பெருத்தும் நீண்ட வடிவம் வாய்ந்த பெரிய தாழிகள் பல அகழ்ந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்தத் தாழிகள் ஏறத்தாழ 6 அடி ஆழத்தில் புதைக்கப் பட்டுள்ளன. சில மேல் மட்டத்திலிருந்து 3 அடி முதல் 12 அடிவரை ஆழமும் உள்ளன. சில இடங்களில் ஒன்றின்மீது ஒன்றாகவும் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணவும் இடந்தருகிறது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய புதை குழிகளில் இதுதான் மிகப் பரந்த இடுகாடாகும். பண்டைய சென்னை மாநிலத்தில் (இன்றைய தமிழ்நாட்டில்) பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எங்கும் ஆதித்தநல்லூர் போன்ற பெரிய பரப்புள்ள இடுகாடுகளும், அதிக எண்ணிக்கையுள்ள தாழிகளும் (புதை கலன்களும்) காணப் படவில்லை. ஈமத்தாழிகளும் அவற்றிலுள்ள பொருள்களும் ஈமத்தாழிகளும் அவற்றினுள்ளே எலும்புகளும், மட்பாண்டங் களும் பொன், வெண்கலம், இரும்பு போன்ற தாதுப்பொருள்களா லான ஏனங்களும், கூலப்பொருள்களும் துணிமணிகளும் வைத்துப் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றைப்பற்றி விரிவாகப் பின்வரும் பகுதிகளில் விளக்கம் தரப்பெற்றுள்ளன. தாழிகளில் வைத்துப் புதைக்கப்பட்ட பொருள்கள் இறந்துபோன மக்கள் பயன்படுத்திய பொருள் என்றும் அவை அவர்களுக்கு விருப்பமானவையென்றும் இறந்துபோன மக்கள் மறு உலக வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுடன் வைத்துப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் எண்ணப்படுகிறது. தாழிகளில் உள்ள பொருள்களில், வெண்கல ஏனங்களும், பூக்கிண்ணங்களும் வீட்டு விலங்குகளான எருமை, ஆடு, மாடு போன்றவற்றின் வெண்கல உருவங்களும் காட்டு விலங்குகளான புலி, யானை, மறி, மான் போன்ற உருவங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அணியும் வளை, மோதிரம், காப்பு, கடகம், கடுக்கன் போன்றவையும் உள. பறவை உருவங்களும், வெண்கல அரிதட்டு (sieves) கிண்ண வடிவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிண்ணங்களின் மேற்புறமுள்ள பகுதி மென்மையான அடியில் பொருத்தப்பட்ட தகடு கனத்தது. கிண்ணத் தில் துளையிடுதல் (perforation) பல்வேறு வகையில் உள. பாண்டங் களின் மீது இரும்புக் கருவியால் அழுத்தப்பட்ட புள்ளி வடிவங்கள் அணிஅணியாய் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பாக அடிப் பாகத்தைச் சுற்றி ஒரே நடுவிடமுள்ள வட்டங்களும், அரை வட்டங் களும் தீட்டப்பெற்றுள்ளன. சில இடங்களில் சட்டத்தைச் சுற்றி ஒன்றோடொன்று பொருந்துமாறும் பொறிக்கப் பட்டுள்ளன. மேலும் பல மனித எலும்புகளும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு தலையோடு சிறப்பாக நிலத்தினின்று முழுவதும் நீங்கிய தாழியின் அடிப்பகுதியினின்று அதன் அடிப்படை உருவம் சிறிதும் குன்றாது சீரழியாது நல்லநிலை யில் எடுக்கப்பட்டது. இத் தாழியில் பெரிய அளவில் எலும்புகள் அடங்கி இருந்தன. சிறிய எலும்புகள் சிதைந்தும் சீர்கெட்டும் போயிருந்தன. கை எலும்புகள் தலையோட்டிற்குக் கீழே கூடுதலாக இருந்தன. முதுகெலும்பும், விலாவெலும்பும் ஏனைய சிறிய எலும்பு களும் உடம்பிற்குப் பின்னால் இருக்கும் என்று எவரும் எதிர் பார்ப்பர். ஆனால், தாழியில் எலும்புக்கூடு உட்கார்ந்திருக்கும் நிலையில், கெஞ்சிப் பிறர் ஆதரவைத் தேடும் நிலையில் வைக்கப்பட் டிருந்தது. தாழிகளில் உள்ள எலும்புக் கூடுகளில் முழு எலும்புகளும் அடங்கி இருப்பது சிலவற்றில்தான் காணப்பெற்றன. இவை கிட்டத்தட்ட மூன்றடிக் குறுக்களவுள்ள பெரிய தாழிகளில்தாம் பெரிதும் காணப்பட்டன. முனைவர் தர்சுட்டன் (Dr. Thurston) ஆதித்தநல்லூர் தலை யோடுகளில் சென்னைப் பழம்பொருள் காட்சிச்சாலையின் சேகரிப்பில் உள்ள, அஃதாவது நல்ல நிலையில் உள்ள - ஆறு தலை யோடுகளின் அளவுகளை நமக்கு அளித்துள்ளார். அவற்றின் அளவுகள் அடியில் வருவனவாகும் : தலையோட்டின் நீளத் தலையோட்டின் தலையோட்டின் திற்கும் அகலத்திற்கும் நீளம்(செ.மீ.) அகலம்(செ.மீ.) இடையேயுள்ள நூற்று விழுக்காLதகவுஅsî 1. 18.812.466 2. 19.1 12.7 66.5 3. 18.8 12.4 67.8 4. 18 12.2 67.8 5. 18 12.8 71.1 6. 16.8 13.1 78 இந்தத் தலையோடுகளில் இரண்டு தாடை எலும்புகள் நீண்டனவாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பழம்பொருள் காட்சிச் சாலையில் உள்ளவற்றில் ஆந்திரர் தலையோடுகளிலும் தமிழர் jலையோடுகளிலும்mவரவர்களுடையkரபுக்TWகள்ந‹குபுyப்படுகின்றன.kY« திரு. தர்சுட்டன் இன்றைய தமிழகத்தில் வாழும் நீண்ட தலையோட்டையுடையவர்களில் (Dolichocephalic) வகுப்பில் எஞ்சியிருக்கும் மிக நீண்ட தலையோட்டையுடையவர்கள் (Hyper dolichocephalic) வகுப்பு இனங்களுக்கும் இடையேயுள்ள அளவு வேற்றுமைகள் அடியில் வருமாறு உள்ளனவென்று எடுத்துக்காட்டி யுள்ளார் : தலையோடுகளின் நீளத் ஆய்வு செய்யப் திற்கும் அகலத்திற்கும் வகுப்பு பட்ட எண் இடையேயுள்ள நூற்று விழுக்காடு தகவு அளவு 70க்குக் கீழ் உள்ள அட்டவணை 1. பள்ளி 40 64.4, 66.9, 67, 68.9, 69.6 2. பறையன் 40 64.8, 69.2, 69.8, 69.5 3. வேளாளன் 40 67.9, 69.6 இறந்துபோன மக்களின் உடம்பைச் சுடுகாட்டிலிட்டுச் சுட்டபின் அந்த எலும்புகளைத் தேர்ந்தெடுக்கும் இந்திய முறையை அடிப்படையாகக் கொண்டு ஆதித்தநல்லூரில் சாவு வினைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதலாம். என்றாலும் அங்குப் பிணங்கள் சுடப்பட்டன என்பதற்குச் சான்றுகள் இல்லை. všyh Éjkhd f©L ão¥òfS« m§F vY«òfŸ òij¡f¥ g£ld v‹w c©ikia¤jh‹ cz®¤âíŸsd.* சில எலும்புகளில் பஞ்சாடையின் பதிவடையாளம் காணப்படுகிறது. தாதுப்பொருள்களின் துருவோடு இணைந்து நீண்ட நாளாக ஒருப்பட்டிருந்ததின் சாயல் நன்கு தெரிகிறது. பல பாண்டங்களில் அரிசி, தினை, சாமை போன்ற கூலப் பொருள்கள் தாழிகளில் காணப்படுகின்றன. சில துணியைப் போலன்றி அதற்கு மாறாக ஓர் அங்குல நீளத்தில் துண்டுதுண்டாக அப்ரேகத்தின் உடைந்த துண்டுகளாகக் காணப்படுகின்றன. சில பொருள்கள் கல்லாலான தட்டுமுட்டுப் பொருள்களாகக் காணப்படுகின்றன. சில மங்கிய செந்நிறம் வாய்ந்த மணிப்பாசிகளும் வெண்கலப்பாசிகளும் கழுத்து மாலைகளுமாகக் காணப்பட்டன. புதைகுழிகளுக்கு வெளியே சந்தனக்கட்டையின் அரவைக்கல்லும் காணப்பட்டன. பெரும்பாலும் மட்பாண்டங்கள் நன்றாக வெந்து உறுதியாகவும் அழகாகவும் காணப்பெற்றுள்ளன. தாழிகளுள்ளே கல்லால் செய்யப்பெற்ற சில பாத்திரங்களும் உள்ளன. களிமண்ணை மெல்லியதாகத் தட்டி அழகிய மட்பாண்டங்களாக வனைந்து சூளையில் இட்டு வேகவைக்கப் பட்டுள்ளன. அவை சிவப்பு, கறுப்பு வண்ணங்களில் கவினுறக் காணப்படுகின்றன. இரண்டு வண்ணங் களும் ஒன்று சேர்ந்து ஒருமித்து ஒளிர்கின்றன. ஒருசில எடுத்துக் காட்டுகள் வண்ணம் வாய்ந்தனவாயும், சுண்ணம் தீட்டப்பட்டன வாயும் பொலிவுற்றிருந்தன. இவை சிறிய அளவில் அழகு செய்யப் பட்டிருந்தன. அடுத்தடுத்துள்ள சில புள்ளிகள் சட்டத்தைச் சுற்றி மூலைவிட்டத்தோடு நிரல்படத் தீட்டப்பட்டிருந்தன. தாழிகள் கனம் வாய்ந்தனவாயும் செவ்வண்ணம் வாய்ந்தனவாயும் கரடு முரடாகவும் செய்யப்பட்டிருந்தன. ஆதித்தநல்லூர்ப் பறம்பு தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு ஒரு வற்றாத கருவூல ஊற்றாக நிலவுகிறது. அஃது எடுக்க எடுக்கக் குறையாத விலையுயர்ந்த பழம்பொருள்களைத் தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் களஞ்சியமாகக் கருதப்படு கிறது. இங்கு ஈமக்காட்டில் நமது மூதாதையர்களால் சேமித்து வைக்கப்பட்டுள்ள பழம் பொருள்கள் பல உள. அவற்றுள் சில மட்டுமே அகழ்ந்து எடுக்கப்பட்டு அயல்நாடுகளிலும் இந்தியாவிலு முள்ள பழம் பொருள் காட்சிச்சாலைகளில் கவர்ச்சியான காரணப் பொருளாகப் பண்புருவம் வாய்ந்த பால் பொருளாக மதிக்கப்பெற்றுக் கவர்ச்சி யான உயரிய இடங்களில் வைக்கப்பெற்றுள்ளன. இங்குப் பெரிய அளவில் மூன்று அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையிலும் சிலர் அகழாய்வு நடத்திப் பல அரிய பொருள்களை எடுத்துத் திரட்டி வைத்துள்ளார்கள். இங்கு நடைபெற்ற ஒவ்வோர் அகழாய்வும் புதிய ஒளியினை வழங்கி எவையேனும் சில புதிய பொருள்களை அளித்து உள்ளன. ஆய்வு நடத்திய அறிஞர்களிடையே பல புதிய கருத்துக்களை அரும்பச் செய்துள்ளன. அதோடு இதைப் போன்ற பயனுள்ள அகழாய்வு இதுவரை தோன்றவில்லை. இந்தியா வில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சின்னங்களை அடக்கி யிருந்த பல பாங்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எதையும் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வுப் பொருள்களுக்கு ஒப்புக் கூற முடியாது. இஃதன்றி ஆதித்தநல்லூர்ப் பறம்பின் அகன்ற பெரிய நிலப்பரப்பு வெளியில் மிகுதியான அளவு இன்னும் தொடப் படாமலே இருந்து வருகிறது. கிழக்கிலுள்ள மேட்டுநிலம் அஃதா வது ஆதித்தநல்லூர் கிராம எல்லைக்குட்பட்ட இடம் பெரிய அளவில் கன்னி நிலமாக இன்னும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தை ஓர் அடி ஆழம் அகழ்ந்து பார்த்தால் மேட்டு நிலத்திலிருந்து மேற்பரப்பில் மழை நீரால் அரித்துக் கொண்டு போகப்பட்ட சரள் தளம் காணப்படு கிறது. அதன்கீழ் ஆறு அடி ஆழத்திற்குச் சாம்பல், எலும்புகள், விலங் கின் கொம்புகள், உடைந்த ஓட்டுத் துண்டுகள் முதலியவற்றோடு கலந்த மண் காணப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால் கிராமத்தில் உள்ள பழங்காலக் கழிவுப் பொருள்கள் காணப்படுகின்றன என்று சொல்லலாம். அகழாய்விற் கண்ட அரிய பொருள்கள் அகழாய்வுப் பொருள்களில் தாழிகளில் உள்ள எலும்புகள் தலையோடுகள் மட்பாண்டங்கள் ஆகியவற்றைவிடச் சிறப்பான பொருள்கள் தாதுப் பொருள்கள் எனலாம். தாதுப் பொருள்களில் பொன், வெண்கலம், இரும்பு முதலியவை சிறப்பானவை. பொன் இறந்துபோன மக்களின் தலையில் கட்டப்படும் பட்டத்திற்குப் பயன்பட்டது. வெண்கலம் பாத்திரங்கள் விளையாட்டுப் பொருள்கள் போன்றவை செய்யப் பயன்பட்டது. இரும்பு பொன்னாலான பட்டங்களையும் வேறுவகையான அணிகலன்களையும் செய்வதற்கு உரிய கருவிகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்டது. தச்சுவேலை, கொல்லு வேலை, கன்னார் வேலை, கல்வேலை, பொற்கொல்லர் வேலை முதலியவற்றுக்கு இன்றியமையாத உளி, சுத்தியல், பற்றுக் கொரடு, பிடித்து அராவும் அரம், இழைப்புளி முதலிய கருவிகள் செய்யப் பயன்பட்டது. உழவர்களுக்குப் பயன்படும் கொழு, அரிவாள், பன்னரிவாள், கடப்பாறை, மண்வெட்டி முதலிய கருவிகள் செய்யவும், வீட்டு வேலைக்கு உரிய அரிவாள்மணை தேங்காய்த் திருகி, கத்தி, வெட்டரிவாள், கரண்டி, சுரண்டி, அகப்பை போன்றவை செய்யவும் பயன்பட்டது. பல்வேறு வகையான படைக் கலன்களும் இரும்பினால் செய்யப்பட்டவை கண்டெடுக்கப்பட் டுள்ளன. இங்குக் கிடைக்கப்பெற்ற ஏனங்களுக்கும் பலகை மூடிகள் போடப்பட்டுள்ளன. இரும்புக் கருவிகளுக்கு மரத்தினால் செய்யப் பட்ட கைப்பிடிகள் பொருத்தப்பட்டுள்ளன. தாழிகளின் உள்ளே யும், வெளியேயும் ஏராளமான எண்ணிக்கையுள்ள பொருள்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் செம்போ வெண்கலமோ கிடையாது. வேறு இடங்களிலிருந்து செம்பும், வெண்கலமும் கொண்டுவரப்பட்டு இங்குப் பாண்டங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொன் அணிகலன்களை நாட்டின் உயர்ந்த இனத்தார்கள் பெரிதும் பயன்படுத்தி வந்துள்ளனர். அது தமிழ் நாட்டில் கிடைத்த தாதுப்பொருளாகும். தமிழ் நாட்டில் மிகத் தொன்மையான காலத்திலே ஆரியர்கள் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே, பொன் செய்யும் தட்டார்களும், மரவேலை செய்யும் தச்சர்களும் மட்பாண்டங்கள் வனையும் மட்கோவர்களும், நூலாடைகள் நெய்யும் கைக்கோளர்களும், வித்துக்களைச் செக்கிலிட்டு ஆட்டி நெய் எடுக்கும் எண்ணெய் வணிகர்களும், மக்களுடைய உடலுக்கு உறும் பிணிகளை அகற்றும் மருத்துவர்களுமாகப் பல்வேறு தொழிலாளர்கள் இருந்து வந்தனர். பல்வேறு தொழிலாளர்களால் செய்யப்பெற்ற பொருள்கள் ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் கிடைக்கப் பெற்றமையினைக் கொண்டு தொன்மையான காலத்திலே தமிழ்நாட்டில் பல தொழிலாளர்கள் இருந்து வந்தனர் என்பதை அறியலாம்.5 குறிப்புகள் - NOTES III 1. Proceedings of the Madras Government No. 329 of 27th March 1876. 2. Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur by A. Rea (Madras) 1915. Preface p. iii-v. (a) “We commenced excavation in the side of a hill consisting chiefly of quarts gravel with holders of the same material and resting on gneiss rock and within a superficial area of twenty five or thirty square yards, we discovered from twenty to thirty baked ear thern pots varying in size from three feet nine by three feet six down to ten inches either way, of very various shapes and of shapes in most cases more elegant and of a better manufacture than any one sees at the present day in the bazaars. “These pots when examined, were found to contain besides earth, gravel and stones a variety of objects of great interest” to the antiquarian the ethnologist and to Science generally. “Upwards of fifty kind of baked earthernware utensil of all sizes and shapes, a considerable number of iron weapons and implements chiefly knives or short sword-blades and hatchets, and a great quantity of bones and skulls were discovered. In one very interesting case two small pots were found within a large one, together with the bones as in most cases of a nearly complete skeleton, containing what it was impossible to mistake for anything else but the outer coats of grains itself had disappeared, but outer coating-probably of silica-had remained. “Several places at considerable distances, one at least 300 or 400 yards a from out principal excavation, were found to contain similar sepulchral urns, and the surface of the quarts hill above was strewn over with broken pieces of pottery of a similar character. Our excavation in all probability only touched one point of an extensive ancient cemetery or catacomb in which the dead of an age, the habits of which are probably quite unknown in India at the present day, are disposed of in this singular manner, that is to say, by placing the skeleton or the body inside a large earthenware vase or pot together with two, three or four small pots together with two, three or four small pots apparently containing food for the dead and weapons and implements of iron ready for use when he reached another world”. Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair - by Alexander Rea F.S.A. (Scot) Madras. 1915 - Introduction. 3. Ibid. Preface 1. 4. Ibid. Introduction p. 1-5. 5. A History of India by James H. Gense S.J. (Madras) 1965. pp. 16-17. “Aryans were the first invaders of India. They came originally from the treeless grass lands or stepps of South Russia. They were peaceful farmers, the word” “Aryan” meaning “tiller of the earth”. (1) The Punjab. In the hymns of the Rig Veda the names of about twenty-five rivers are mentioned and these many rivers all belong to the system of Indus. They include the five great eastern branches of the Indus and a number of its north-western tributaries. We may therefore conclude that the earliest Aryan invaders made their homes partly to the west and parttl to the east of the Indus. (2) Hindustan Proper. As years went on the decendants of the first immigrants probably increased by fresh arrivals travelled gradually eastwards and occupied the basins of the Jamuna and the Ganges or Hindustan proper .... (3) TheVindhya Range line. In the Course of time the Aryans spread both southwards and eastwards conquered the whole country lying between the Himalayas and the Vindhya Range and reduced the Dasyus to slavery. The fresh advance is mentioned in the Laws of Manu. According to these the wide territories contained between the Himalayas and the Vindhyas Range are called Aryavarta or the country of the Aryans. In the land of Aryavarta there was one part spot or rather province, that was privileged above all the others. This was Brahmavarta, the Holy land, situated due north of modern Delhi and to the south of the upper course of the Sutlej between the river Saraswathi and Drishadvati. It was in this region that the Rig Veda is believed to have been completed. Tehre is a couplet in the Mahabharata to the following effect : ‘Those who dwell in the Kurukshetra to the south of the Saraswathi and the north of the Drishadvati dwell in Heaven!’ (4) Aryan Penetration of the Deccan. The last stage in the Aryan conquest was a movement southwards. To the south lay the country which they called Dakshina of which the English world Deccan is said to be a corruption. The Aryan penetration of the Deccan was chiefly confined to the spread of Aryan ideas and institutions among the Dravidians of the South. But this peaceful penetration of theSouth, does not belong to the Vedic Period, it took place many centuries afterwards. இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibliography) 1. Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair - Alexander Rea F.S.A. (Scot) Madras 1915). 2. Proceedings of the Madras Government Public Department (No.329 of 27th March 1876). 3. Report of the Archaeological Survey Southern circle for 1899-1990 to 1903-04, and of the Archaeological Survey of India for 1902-03 and 1903-04. 4. “Some Prehistorical Burial Places in Southern India”. 5. Annual Report of the Madras Government Museum 1905-06. 6. The Adichanallur Skulls - Zuckerman M.A., M.R.C.S., L.R.C.P. (London) 1930. 7. A History of India - James H. Gense - S.J. (Madras) 1965. 8. Origin and Spread of the Tamils - Prof. V.R. Ramachandra Dekshitar, M.A. (Madras) 1971. 9. Castes and Tribes of Southern India Vol. I - Thurston I Madras. 1909. 10. Ancient History of the Near East - H.R. Hall - 5th ed. (London) 1922. 4. பொன் பட்டங்கள் (GOLD DIADEMS) ஆதித்தநல்லூர்ப் பறம்பில் இறுதியாக அறிஞர் அலெக்சாந்தர் இரீயா அவர்கள் நடத்திய தொல்பொருள் ஆய்வில் கண்ட பொருள்கள் பல. ஆனால், இங்கு முதன்முதலாகக் குறிப்பிடத் தக்க பொருள்கள் பொற்பட்டங்களேயாகும். இந்தப் பொற்பட்டங்கள் ஆதித்த நல்லூர்ப் பறம்பில் அகழ்ந்து கண்ட தாழிகளுள் எலும்பு களுக்கும் மண்ணிற்கும் ஊடே ஒளி குன்றாது மின்னெனத் திகழ் வதை அறிந்து எடுக்கப்பெற்றுள்ளன. அறிஞர் இரீயா அகழ்ந்து கண்ட தாழிகளுள் மொத்தம் இருபத்து மூன்று பொற்பட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பட்டம் கட்டல் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் அரும் பிய அரிய பொருள் களைப் பற்றி அறிஞர் இரீயா அவர்கள் கூறும் பொழுது தாழிகளுள் பொன்னாலான பட்டங்களும் வெண் கலத்தாலான சட்டிகளும் விளையாட்டுப் பொருள்களும் இரும்பா லான படைக்கலங்களும் தட்டுமுட்டுப் பொருள்களும் மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்களும் சிறு தாழிகளும் பிறவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். பொன்னா லான பொருள் பட்டங்கள் மட்டுமேயாகும். அவை இறந்தார்க்கு இயற்றும் இறுதிச் சடங்குகளில் ஒன்றான பட்டம் கட்டும் செய் முறையில் பயன்படுத்தப்பட்டன. உயிர் நீத்தார் நெற்றியில் இப் பட்டத்தைக் கட்டுவது தமிழர் மரபு. இப்பட்டம் பெரிதும் முட்டை வடிவிலே உள்ளன. நீண்ட சதுரவடிவினாலான ஒருசில பட்டங் களும் ஓரோர் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பட்டத்தின் இறுதியில் இருபுறமும் கயிறு அல்லது கம்பி கட்டுவதற்குச் சிறிய அளவில் துளையிடப்பட்டுள்ளன. பட்டம் மெல்லிய பொன் தகட்டில் அழகு பொலிய முக்கோண வடிவில் கடுகு போன்ற புள்ளிகள் பொறிக்கப்பட்டனவாகக் காணப்படுகின்றன. எல்லாம் மடித்துச் சுருக்கி வைக்கக் கூடியனவாக உள்ளன. இவை இறந்தார்க் குரிய சடங்குகளுக்குத் தக்க குறியீடாக அமைந்த பொருள்களாகும் என்று சிலர் கூறுகின்றார்கள் என்று இரீயா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். பட்டங்களின் அமைப்பு பட்டங்கள் பொதுவாக முட்டை வடிவில் இருக்கும். இவை மெல்லிய பொன் தகட்டில் செய்யப்பட்டு இரு நுனிகளிலும் துளையிட்டு நூல் அல்லது மெல்லிய கம்பியால் நெற்றியில் கட்டப் படும். இஃது இறந்தார்க்கு இயற்றும் இறுதிச் சடங்குகளில் ஒன்றாகும். இறந்தார்க்கு நெற்றியில் பொன் பட்டம் கட்டப்படுவது பெரும் பாலும் சைவ வேளாளர் மரபினர் இன்றும் செய்துவரும் இறுதிச் சடங்குகளில் ஒன்றாகும். பொன் பட்டங்கள் சில துளையிடப்படாமல் இருக்கின்றன. பொன் பட்டம் மிக மெல்லியதாக இருப்பதால் சிறிய இரும்புக் கம்பிகளைக் கொண்டு எளிதாகத் துளையிட்டு அப்பால் அந்தக் கம்பிகளைக் கொண்டே பட்டமாகக் கட்டி நெற்றியில் இடம் பெறுமாறு செய்திருக்கிறார்கள். இப்பொற்பட்டம் சில இடங்களில் நீளமானதாகவும், அழகிய முக்கோண வடிவாகவும் இருக்கிறது. ஆனால், முன்புறம் புள்ளிகள் கடுகுவடிவில் அணிஅணியாகத் துருத்திக் கொண்டிருக்கும். முற்காலத்தில் பட்டங்கள் மாற்றுயர்ந்த பொன்னிலே செய்து கட்டப்பட்டு வந்தன. இன்று பொன்விலை பெரிதும் உயர்ந்துபோனதால் பட்டம் மாற்றுக்குறைந்த பொன்னில் கட்டப்படுகின்றது. பலர் பட்டம் கட்டும் வழக்கத்தையே விட்டும் வருகின்றனர். பொதுவாகப் பொன்னின் விலை உயர்வால் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வழக்கில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உறுப்புகள் அனைத்திலும் பொன் அணிகலன்கள் அணிந்து வரும் மரபு வழக்கங்களைக் கூட ஒவ்வொன்றாக விட்டுவருகின் றார்கள். முக்கோண வடிவில் அணிகலன்கள் போல் அழகுடன் தயாரிக்கப்பெற்ற பட்டங்கள் ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பின்புறம் முத்து முத்தாய் அழகிய வட்ட வடிவமான சிறு புள்ளிகள் மேல் எழும்பி நிற்பனபோல் காணப்படுகின்றன (உருவம் 15 முதல் 20 வரை பார்க்க). மூன்று சிறிய பட்டங்கள் தாழ்ந்த உலோகத்தால் செய்யப்பட்டவையாகும் (உருவம் 18 முதல் 20 வரையுள்ளவை பார்க்க) முட்டை வடிவிலான நெட்டையான நெற்றிப் பட்டங்கள் 2.3/1611 7/811 முதல் 6-5/811 2.5/32 வரையுள்ளன. மற்றொரு சிறிய பட்டம் ஒடுக்கமான கோடுகள் தீட்டப்பெற்றதாய் 15/16 நீளமும் 1/411 அகலமும் உள்ளது. எண் 1 அடையாள மிடப்பட்ட நெற்றிப்பட்டத்தில் இரு வரிசையாகத் தீட்டப்பெற்றுள்ள புள்ளிகள் உள்ள இணைவான கோடுகள் இரண்டு நுனிகளிலும் தொடர்ந்து செல்லுகின்றன. கோடுகள் நடுவே ஊடுருவிச் செங்குத்தாகச் செல்லுகின்றன. இவை போன்ற இணைவான கோடுகள் இரு பக்கங்களின் மீதும் சாய்வான கிளை யாக எதிர்ப்புறம் உள்ளன. அவை தகட்டின் இடைவரி மேட்டை ஒத்துள்ளனவாகக் காணப்படுகின்றன. எண்கள் 2-10 பட்டங்களி லுள்ள புள்ளிகள் இரு இணைவான வரிகள் உள்ள அமைப்பு இறுதிவரை வட்ட வடிவமாகவே சென்றுள்ளது. அதோடு மூன்று இணைவான கோடுகள் நடுவே செங்குத்தாகச் செல்லுகின்றன. எண் 20 உள்ள பட்டத்தில் போயிலிக்காய் வடிவில் கல் நீர்த்துளி போன்று தங்கத் தகட்டில் தகதகவென்று மின்னும்படி செதுக்கப்பெற்றுள்ளது. இதனை அறிஞர் இரீயா அழகுபெற விளக்கிக்காட்டியுள்ளார். இரீயா அவர்கள் கண்டெடுத்த தங்கத் தகடுகள் இறந்தவர்களின் நெற்றியில் கட்டும் பட்டம் என்பதை ஜே.ஆர். ஹெண்டர்சன். ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பழம் பொருள்களின் பட்டியல் என்ற நூலின் முன்னுரையில் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். சிந்துவெளிப் பொன்பட்டம் சிந்துவெளிப் பண்பாட்டிலும் இறந்துபோனவர்களின் சவச் சடங்கில் பட்டங்கட்டுவதும் பெருவழக்காக இருந்தது என்று நம்பப்படுகிறது. சிந்துவெளியில் நடைபெற்ற அகழ் ஆய்வில் கண்டெடுக்கப்பெற்ற சுண்ணாம்புச் சிலை நமது கவனத்தை ஈர்ப்பதாயுள்ளது. அது திராவிட இனத்தவர்களின் சாயலில் உள்ளது. அஃது ஓர் அரசர் அல்லது புரோகிதர் உருவம்போல் உள்ளது. அந்தச் சிலை மார்பிற்குக் கீழே உடைந்துபோன தாகத் தெரிகிறது. அதன் மேல் சட்டைகள் இல்லை. ஓர்அழகான பூவேலைப்பாடு உள்ள போர்வை வலப் புறமுள்ள இடுப்பி லிருந்து இடப்புறத்தோள்மீது போர்த்தப் பட்டு முதுகுப்புறமாகத் தொங்கவிடப் பட்டுள்ளது. முகத்தில் தாடி மயிர் ஒட்ட வெட்டப்பட்டிருக்கிறது. அகன்ற முகமும் தட்டையான தடித்த மூக்கும் பெரிய உதடும் பரந்த நெற்றியும் காணப்படு கின்றன. நெற்றியில் ஒரு மெல்லிய நாடா வில் பட்டத்தைக் கோத்துப் பின்புறம் முடிச்சுப்போடப்பட்டுள்ளது. எஞ்சிய நாடாவின் சிறுசிறு பகுதிகள் பின்புறம் அழகுறத் தொங்குகின்றன. இதனைச் சிந்துவெளியில் அகழ் ஆய்வு நடத்திய பேரறிஞர்கள் சர். சாண் மார்சல், சர். மார்ட்டியர் உயிலர், ஆர்.டி. பானர்ஜி, முனைவர் இ. சே. எய்ச். எம். எசு. மெக்கே.வாட்சு போன்ற அறிஞர்க ளெல்லாரும் எடுத்துக்காட்டித் திராவிடர்கள் பட்டம் கட்டும் மரபு வழக்கம் உடையவர்கள் என்பதற்கும் சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடு என்பதற்கும் சிலையின் நெற்றியில் உள்ள பட்டமும், சிலையின் முக அமைப்பும் நல்ல எடுத்துக்காட்டு களாகும் என்று விளக்கியுள்ளனர்.3 சிந்துவெளியினின்று ஆதித்த நல்லூர்வரை திராவிடப் பண்பாடு நிலவியுள்ளது என்பதற்கு ஆதித்த நல்லூரில் அகழ்ந்துகண்ட பொன் பட்டங்களும் சிந்துவெளியில் கிடைத்த திராவிட அரசனின் நெற்றி நடுவில் காணும் பட்டமும் அழியாச் சான்றுகளாகத் திகழ்கின்றன எனலாம். அறிஞர் கில்பர்ட் சிலேட்டர் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற சீரிய நூலில் ஆதித்த நல்லூரின் அகழ் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட நெற்றிப் பொன் பட்டம் திராவிட மக்கள் குடியேறிய எகிப்து நடுநிலக் கடற்பகுதி யில் கிரீட்டு, பினிசியா போன்ற நாடுகளிலெல்லாம் வழக்கில் இருந்தது என்பதை விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார். அது வருமாறு : மேலும் ஆதித்தநல்லூர்ச் சின்னங்களும் மிக மெல்லியதாக அடித்துத் துவைக்கப்பட்ட பொன் நெற்றிப் பட்டங்கள் பல காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் குருமார்களின் நெற்றிப் பட்டங்களாக அமைந்திருந்தன என்பது தெளிவு. அவை முற்றிலும் மைசேனாவிலும் கிரீட்டிலும் கண்டெடுக்கப்பட்டவற்றைப் போன் றிருக்கின்றன. இவை தவிர ஒரு வெண்கல உருவம் எகிமோ இனத்தவருக்கு உரிய ஆடை அணிந்த ஓர் அரம்பையின் அழகுருவி லும் காணப்படுகின்றது. இந்தத் தங்க நெற்றிப் பட்டம் ஒரு புறமும் ஐதராபாத்துக் கற்குவியல்களில் உள்ள மட்பாண்டங்களின் உள்வெட்டுக் கீற்றுக்கள் மற்றொரு புறமுமாக நின்று ஆரியருக்கு முற்பட்ட திராவிடர் களுக்கும், நோசாசுவைத் (Knossus) தலைநகராகக் கொண்டு வாழ்ந்த கிரீட்டின் கடலோடி நாகரிகத்தினருக்கும் தொடர்பிருந்திருக்க வழி யுண்டு என்பதைக் காட்டுகின்றன. பீனிசியர்களுக்கும் முற்பட்டே மினோவர்கள் நடுநிலக்கடல் தீரங்களிலும் ஒருகால் அட்லாண்டித் தீரங்களிலும் சென்று பரந்த தொடர்பு கொண்டிருந்தார்கள். அதேபோலச் செங்கடல், பாரசீக வளைகுடா, இந்துமாக்கடல் ஆகியவற்றையும் முனைந்துகாண்பதில் முன்னோடிகளாயிருந் தார்கள் என்று கூறச் சான்றுகள் இல்லை. இதற்கு மாறாக மீனோ வர்கள் மேற்கு நோக்கியும் பீனிசியர் கிழக்கு மேற்கு நோக்கியும் கிட்டத்தட்ட ஒரேகாலத்திலேயே பரவத் தொடங்கி இருந்தனர் என்று நினைக்க இடமுண்டு. எனவே, சரியொத்த இவ்விரு நாகரிகங்களின் பரப்புகளுக்கும் காரணமான கப்பல் கட்டும் தொழிலும் கடல் போக்குவரத்துப் பழக்கமும், மினோவர்களின் புதுவது புனைவிற்கோ, பீனிசியரின் புதுவது புனைவிற்கோ உரியது என்று கொள்வதைவிட எகிப்தி யருக்கு உரியதென்று எண்ணுவரு ஏற்றமுடையதாகும். ஐதராபாத்து கற்குகைப் பாண்டங்களின் சின்னங்கள், பெரும்பாலும் பீனிசியத் தொடர்பு, மினோவத் தொடர்பு ஆகிய இரண்டின் விளைவுகளாக வும் இருக்கலாம். அத்துடன் பீனிசியக் குருமாரும் இதுபோன்ற நெற்றிப் பட்டம் அணிந்திருந்தனர். திராவிடர்கள் நேரடியாகவோ, சுற்றுமுறையாகவோ நோசாசு (Knossus) நாகரிகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறலாம். தெய்வங்கள் சிவனைப்போல் ஆண்பாலாயினும் சரி, காளியைப் போல் பெண்பாலாயினும் சரி, இரு பால்களுமே மிகைப்படுத்தப் பட்டு நுண்ணிடை உடையவராக அதுவும் இடையே ஒடுக்குவதற் கேற்ற கருவி எதுவும் இல்லாதபடி இடை ஒடுங்கியவராகவே அமைக்கப்பட்டுள்ளனர். மினோவகக் கலையில் இடை இன்னும் சிறிது. ஆண்களும், பெண்களும் இடையில் ஒட்டியாணம் அணிப வர்களாய்க் காட்டப்பட்டுள்ளனர். இது குழந்தைப் பருவ முதல் தொடர்ந்து வழக்கில் இருந்து வந்தது. இடையைச் சிறுக்க வைக்கும் வழக்கம் இந்தியாவில் பரவாவிடினும் அப் பழக்கத்தை அடிப் படையாகக் கொண்ட கலைமரபு மட்டும் இந்தியா வரை வந்து பரவிற்று என்று தோற்றுகிறது. தமிழர் பண்பாடான பொன்பட்டம் கட்டும் பழக்கமும், ஒட்டியாணம் அணியும் வழக்கமும், பெண்களுக்கு இடை சுருங்கி இருத்தல் அழகு என்ற தமிழர் கண்ட அழகுச் சிறப்பும் கிரீட்டு, எகிப்து, பீனிசியா போன்ற நாடுகளி லெல்லாம் பரவியுள்ளது என்று நன்கு எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது.4 தென் இந்திய மக்கள் மிகத் தொன்மையான காலத்தினின்று - சிறப்பாக உலோகத்தினால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பெரிய அளவில் அணிந்துவரும் வழக்கம் உடையவர் என்பது நமது கவனத்திற்கு வருகின்றது. இரும்புக்காலத்தில் உள்ள இடுகாடுகளில் பொற்பட்டங்களோடு பல படைக்கருவிகளும் தட்டுமுட்டுப் பொருள் களும் புதைக்கப்பட்டு வந்ததுள்ளன. அறிவிற் கெட்டாத பழங்காலத்திலிருந்து பல்வேறு பண்டங்களையும் பல்வேறு அளவில் பொன்அணிகலன்களையும் மணிகள் இழைத்த பொன் அணிகலன்களையும் செய்வதில் தமிழ்நாட்டுப் பொற்கொல்லர்கள் கைவண்ணம் வாய்ந்தவர்கள் என்பதற்கு இப்பொருள் சான்றாகக் காணப்படுகின்றன. முதலில் பொன்னைக் கண்ட நாடு இந்தியாவிலே, முதன்முதலாகத் தோண்டி எடுக்கப்பட்ட உலோகப் பொருள் பொன் ஆகும். அது வணிக முறையில் பல ஊழிக்காலங்களில் எங்கும் பரவியுள்ளது. இன்று இந்திய அரசின் கடுமையான சட்டங்களால் பொன் கிடைப்பது அரிதாகிவிட்டது. விலையோ நச்சுப்போல் ஏறிவிட்டது என்றாலும், தமிழக மகளிரின் பொன் அணிகலன்கள் அணியும் மரபுவழக்கம் கைவிட முடியாத தாய் இருக்கிறது. காரணம் அவர்களிடையே பண்டு தொட்டு நிலவி வரும் இந்தப் பழக்கம், சமயத்தோடும், குலத்தோடும் இணைக்கப் பட்டதாக இருப்பதேயாகும். இதனை அறிஞர் வி.ஆர். இராமசந்திர தீட்சிதர் அவர்கள் தம் நூலில் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இந்தியாவில் - சிறப்பாகத் தமிழ்நாட்டில் திருமணத்தில் பெண் கழுத்தில் தாலி கட்டப்படுவதும் பிள்ளைப் பருவத்திலே காது குத்திக் கடுக்கன் அணிவிப்பதும் திருமணத்தின் போது ஆணும் பெண்ணும் அணிகலன்கள் பூண்டு அழகுற இருப்பதும் சிறுவர் சிறுமிகள் கூட பல்வேறு உறுப்புகளில் அணிகலன்கள் பூண்டிருப்ப தும், தெய்வ உருவங்களுக்குத் தலையிலிருந்து கால்கள் வரை பொன் அணிகலன்கள் பூட்டியிருப்பதும், தெய்வங்களும் அரசர்களும் பொற்றேர்களிலும் பொன் பல்லக்குகளிலும் உலாவருவதும் மன்னர்கள் பொற்காசுகள் வெளியிட்டு வருவதும் நாம் அறியும் பொழுது பண்டைய இந்தியாவில் ஏராளமாகப் பொன் இருந்தது நன்கு புலனாகின்றது. இந்தியாவினின்று பொன் எகிப்து, மெசபொத் தாமியா, எல்லம், பாலத்தீனம் முதலியநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கூடத் தெரிகிறது.5 பொன்விளையும் பூமி பண்டைத் தமிழகத்தில் ஏராளமாகப் பொன் விளைந்தது. பண்டைத் தமிழகத்தில் பொன்விளைந்த களத்தூர், பொன்னேரி, பொன்னாணி, பொன்னூர், பொன் அமராவதி, பொன்வயல், பொன் முகநல்லூர் என்னும் இடங்களிலெல்லாம் பொன் கிடைத்துள்ளது என்று எண்ணப்படுகிறது. தமிழகத்தில் முதன்முதலாகக் கிடைக்கப் பெற்ற மஞ்சள்வண்ணத்தில் தகதகவென ஒளியூட்டிய தாதுப்பொரு ளுக்குப் பொன் என்று பெயர் வழங்கப் பெற்றது. அவர்கள் அன்று பொன்னை மாழை (உலோகம்) என்ற பொருளில்தான் பெயர் சூட்டினர். பின்னர்க் கிடைத்த கருப்பு வண்ணம் வாய்ந்த தாதுப் பொருளுக்குக் கரும்பொன் என்று பெயர் அளித்தனர். அது பின்னர், இரும்பாயிற்று, வெண்மை நிறமான தாதுப்பொருளைக் கண்டதும் அதை வெண்பொன் என்றனர். அது இன்று வெள்ளியாய்த் திரிபுற்றது. சிவப்பு நிறமான தாதுப் பொருளைச் செம்பொன் என்று அழைத்தனர். அது பிற்காலத்தில் செம்பு என்றும் செப்பு என்றும் அழைக்கப்பட்டது.6 தமிழகத்தில் பொன் ஏராளமாகக் கிடைத்தது. வணிக முறை யில் யவன நாட்டினர் பொன்னைக் காசுகளாகவும் பொற்பாளங் களாகவும், பொற்கட்டிகளாகவும் ஏராளமாகப் பெற்றனர். தமிழகத் தில் ஆங்கில ஆட்சி அரும்பு முன் மக்கள் உச்சியிலிருந்து உள்ளங் கால்வரை பொன் அணிகளையும் மணிகளையும் பூண்டிருந்தனர். பொன்னிழை கொண்ட பட்டாடைகளைப் புனைந்து வந்தனர். பொன்வட்டிலிலும், பொன்கும்பாவிலும் உணவு உண்டும் பொற் கிண்ணங்களிலும், பொன் கலயங்களிலும் நீர் அருந்தியும் வந்தனர். உடல் உரமுற, மேனி சிவக்க, பிணி அகலப் பொன்னிற் செய்த மருந்தினை (பொன்பசுபம்) அருந்தி வந்தனர். திருக்கோயில் விமானங்களின் மீதுள்ள குடங்களும், வாயில் கோபுரங்களின் மீதுள்ள குடங்களும் பொன்னாற் செய்யப் பெற்றிருந்தன. தில்லை யில் உள்ள ஆடவல்லானின் உருவம் பொன்னால் வார்க்கப்பெற்ற தாய் இருந்தது. அந்த ஆடவல்லான் ஆடும் திருச்சிற்றம்பலம் பொன் ஓடுகள் வேயப்பெற்று பொன்னம்பலம் என்று இன்றும் புகழ்ந் தேத்தப் பெற்று வருகிறது. பல்வேறு கோயில்களில் திருவுலாப் படிமைகள் பொன்னால் செய்யப் பெற்றவைகளாய்த் திகழ்கின்றன. திருக்கோயில்களின் பொன் விளக்கு வைத்து நெய் வார்த்து ஏற்றிப் பேறு பெற்றவர் நம் நாட்டில் பலர் உண்டு. இறைவன் திருவுருவைப் பொற்றேரில் ஏற்றி உலா வரச்செய்தனர். தெய்வத் திருவுருவங்களை முழுக்காட்ட, பொற்குடங்களும் தெய்வங்களுக்கு உணவு படைக்கப் பொற்றட்டும் பொற்கலங்களும் பலர் நேர்த்திக்கடனாக அளித்த தற்குக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சான்று தருகின்றன. தமிழ்நாட்டு மன்னர்களும், வள்ளல்களும், புலவர்களுக்கும் பாணர்களுக்கும், பாடினிகளுக்கும், விறலியர்களுக்கும் பொற் றாமரைப்பூவும் பொற்கிழியும், பொற் காசுகளும், பொன் அணி கலன்களும் வரையாதளித்துப் பேரும் பெருமையும் ஈட்டினர் என்ப தற்குத் தமிழ் இலக்கியங்கள் சான்று அளிக்கின்றன. அரண்மனை களிலும், கோயில்களிலுமுள்ள யானைகள் விழாநாட்களில் (பொன் முகபடாமும்), பொன் ஓடையும், கொம்புகளில் கிம்புரி என்னும் பொன் பூண்களும், பொன் அம்பாரிகளும் தாங்கி இருந்தன. தமிழ் நாட்டிலுள்ள கோநகரங்களில் பொன் வணிகர்களின் கடைத் தெருக்கள் இருந்தன. அங்கு, சாதரூபம், கிளிச்சிறை என்ற மாற்றுக் குறைந்த இளம் பொன்வகைகளும் ஆடகம், சாம்பூநதம் என்ற மாற்றுயர்ந்த செம்பொன் வகைகளும் விற்கப்பட்டன. மாற்றுயர்ந்த பசும்பொன்னைத் தமிழர் பத்தரை மாற்றுப் பைம்பொன் என்பர். இது அணிகலன்கள் செய்வதற்கும், மணிகள் பதித்த அணிகலன் சமைப்பதற்கும் பயன்படுத்தப் பெற்றது. பசும் பொன் குழைவானது; அது குழையாமல் இருக்கவும், வளையாமல் இருக்கவும் அதனோடு, சிறிது செம்பு கலந்து அணிகலன்கள் செய்தனர். தமிழர்கள் தொன்றுதொட்டு வணிகம் நடத்திப் பேரும் பெருமையும் பெற்றவர்கள். மிகத் தொன்மையான காலத்திலே மரக்கலன்கள் கட்டி எகிப்து, பாபிலோன், இலங்கை, மலையம், சாவகம் போன்ற நாடுகளுடன் வணிகம் வளர்த்தவர்கள், யவன நாட்டிற்கு மிளகு, சந்தனம், முத்து, ஏலம், கிராம்பு, மெல்லிய துணி முதலியவற்றை ஏற்றுமதி செய்து அதற்கு ஈடாகப் பொற்கட்டிகளை யும் பொற்காசுகளையும் பெற்றுப் பொன்னை மலையெனக் குவித்தவர்கள்.7 அழகிய பெண்ணைப் பொற்பாவை என்று புகழ்ந்து போற்றினர். எண்ணற்ற அணிகள் அணிந்த அரம்பையரைப் பொன் காய்த்த பூங்கொடி எனப் புகழ்ந்தனர். சிவபெருமானைப் பொன்னார் மேனியனே என்று ஏற்றிப் போற்றினர். புதிய கற்காலத்தின் நடுவிலே தமிழ்நாடு பொன்னையும் அதனைத் தோண்டியெடுப்பதற்கு ஏற்ற இரும்புக் கருவிகளையும் பெரிய அளவில் பெற்றிருந்தது. கல்தேயர்களின் (Chaldean) கல்வெட்டுகளில் ஊர் நகரில் பொன் பயன்படுத்தப்பட்டதாக அறிகின்றோம். அந்தப் பொன் அந்த நாட்டிலுள்ளதன்று. அயல் நாடுகளினின்று கொண்டுவரப்பட்டதாகக் காணப்படுகிறது. அந்த அயல் நாடுகள் இந்தியாவும் ஆப்பிரிக்காவுமேயாகும். தென் இந்தியப் பொன், ஆப்பிரிக்காவில் விற்கப்பட்டது. ஆப்பிரிக்கா அந்தப் பொன்னில் தேவையான அளவு வைத்துக்கொண்டு எஞ்சிய பகுதியை கல்தேயாவிற்கு விற்றுவிட்டது. அதனால் ஆப்பிரிக்காவைப் பொன் விளையும் நாடாகக் கருதுவது தவறு, என்று கூறுகிறோம். 1927ஆம் ஆண்டு, அறிஞர் லியோனாடு உல்லி (Leonard Willey), ஊர் நகரில் நடத்திய அகழ் ஆய்வில் சுபாத்து அரசி (Queen Subath) புதைக்கப்பட்ட கல்லறையைக் கண்டுபிடித்து அங்குப் பல பொன் அணிகலன்களையும் பொன் தலையணிகள், பொன் நாடா, பொன் மோதிரம் பொற்றகட்டால் போர்த்தப்பெற்ற யாழ் (Harp) போன்ற பொருள்கள் பலவற்றையும் கண்டுபிடித்தார். சால்டியாவை அடுத்த மெசபொத்தாமியாவில் முற்காலத்தில் பொன் அதிகம் காணப் பட்டது. அதனால் அந்த நாடு இந்தியாவிற்குப் பெரிதும் கடமைப் பட்ட நாடாகும் என்று கூறவேண்டும்.8 பொன்னை அதிகமாகப் பயன்படுத்திய பழம் பெருநாடு எகிப்து. அங்கு இறந்தபின் மன்னர் உடலுக்குப் பொன் அங்கி சாத்தப்பட்டது. பாரோ மன்னர்கள் பொன்னாற் செய்யப்பட்ட அரசு கட்டிலைப் பெற்றிருந்தனர். அந்நாடு இந்தியாவினின்றும், மெசபொத்தாமியா முதலிய நாடுகளினின்றும் பொன்னைப் பெற்றது. எகிப்தில் மனிதப் பண்பு பரவுவதற்கு இந்தியா ஆற்றிய பெரும் பங்கே காரணமாகும். பொன்னைப் பீனிசியா, கிரீ முதலிய பிற ஐரோப்பிய நாடுகள் பல்வேறு செயல்களுக்குப் பயன்படுத்தி வந்தன. சிந்துவெளியில் உள்ள நாடுகளுக்குப் பொன் தேவைப் பட்டது. எனவே, சிந்துவெளி தென் இந்தியாவோடு உறவு கொண்டது. தென் இந்தியா, தன் இன உறவுள்ள சிந்துவெளி நாடுகளுக்கு ஏராளமான அளவு பொன்னை ஏற்றுமதி செய்தது. தென் இந்தியா வில்தான் முதல் முதலாகப் பொன் கண்டுபிடிக்கப்பட்டது. தென் இந்தியாவில் ஏராளமான இரும்புக் கருவிகள் இருந்ததால் விரைவில் பெரிய அளவில் பொன் அகழ்ந்து குவிக்கப் பெற்றது.9 அதனால், என் நண்பர் ஒருவர், ஆங்கில ஆட்சியின்போது, பொன்விளைந்த பூமிஎன்னும் இந்தியாவே - இங்குப் புசிக்கஉண வற்றதென்ன இந்தியாவே என்று முகாரிப் பண்ணில் ஒரு பாட்டுப் பாடினார். இன்று உலகிலுள்ள இசுலாமியர்களும் யூதர்களும் கிறித்தவர் களும் புனிதமான மலைக்கோயிலான எருசலேம் திருக்கோயிலைப் பற்றி நன்கு அறிவர். அது சாலமோன் அரசர் அவர்களால் இற்றைக்கு 2,978 ஆண்டுகளுக்கு முன் கட்டியெழுப்பப் பெற்றது. அப்புனித மான திருக்கோயிலை நடுவாகக்கொண்டு (கிப்லாவாகக் கொண்டு) ஒரு காலத்தில் உலகமெங்குமுள்ள இறைப்பற்றாளர்கள் வழிபட்டு வந்தனர் என்று முசுலிம் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.10 அக்கோயிலைக் கட்டிய சாலமோன் அரசர் (சாலமோன்ஞானி) இந்தியாவிற்குப் பீனிசியக் கப்பல்களை அனுப்பி, சந்தனக்கட்டை, யானைக்கொம்பு, மயிலிறகு, குரங்கு, பொன் போன்றவற்றை வாங்கிவரச்செய்து அந்தத் திருக்கோயிலைச் சிறப்புறச் செய்தார். பீனிசியக் கப்பல் இந்தியாவில் உள்ள உவரித் துறைமுகத்திற்கு வந்து அப்பொருள்களை வாங்கிச் சென்றுள்ளது. அந்தத் துறைமுகத்தின் பெயர் ஒபிர் (Ophir) என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. சிலர் ஒபிர் ஆப்பிரிக்காவில் உள்ளது என்றும், சிலர் சோமாலிலாந்தில் உள்ளது என்றும் கூறியுள்ளனர். ஒபிர் என்று பைபிள் குறிப்பிடும் இடம் உவரிதான்; இந்த உவரிப் பட்டினம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டாரத் தின் கடற்கரையில் உள்ள ஊரேயாகும். இதனை நல்லாயர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் முதலாவது கிறித்தவக் கண்காணியர் (Bishop) ஆக வந்த நல்லாயர் வி.எசு. அசரியா அவர்களும் ஆதரித்துள்ளார். அவர்களுடைய உடன் பிறந்தாரான வி.எசு. jhkR v«.V., அவர்கள் சென்னைக் கிறித்தவக் கல்லூரி இதழ் ஒன்றில் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன் ஒபிர் என்பது உவரிப்பட்டினந்தான் என்று உறுதிசெய்து ஒரு முத்திரை அடித்துள்ளார். ஆப்பிரிக்காவில் மயிலிறகும், சந்தனமும் இல்லை என்பதை அறியாத சிலர் ஒபிர் ஆப்பிரிக்காவில் உள்ளது என்று சொல்லிவிட்டனர் என அரிய ஆப்புக் கடாவியுள்ளார். ஆதித்த நல்லூர் இடுகாட்டில்கூட, பொன் கிடைத்திருப்பதைக் கொண்டு பொன் மிகுதியாகத் தென் இந்தியாவில் உள்ளது என்பதை அறியலாம். இரும்பும் பொன்னும் இரும்பு ஊழியில் இருந்த மக்களால், தென்இந்தியாவில் மிகப்பழங்காலத்தில் இரும்பிற்கு அடுத்தபடியாகப் பொன் கண்டு பிடிக்கப்பட்டது. பாபிலோனியாவில் - சிறப்பாக ஊர் நகரில் பொன் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டதாக கல்தேயாவில் (Chaldean) கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. பொன்னைப், பழங்காலக் கல்தேய மக்கள் வேற்று நாட்டிலிருந்து கொண்டுவந்த பொருளாகக் கொண்டனர் என்பதற்கு அது சான்று தருகிறது. மிகத்தொலைவில் உள்ள நாடுகளிலிருந்து ஊருக்கு (UR¡F)¢ சொந்தமான பழங்காலக் கப்பல்கள் பொன்னைக் கொண்டுவந்தன என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொலைவில் உள்ள நாடுகள் இந்தியாவும், ஆப்பிரிக்காவுமேயாகும். மெசபொத்தாமியாவில் இந்தப் பைம்பொன் உலோகம், மிகப் பழங்காலத்தில் பரவலாக மிகுந்த அளவில் பயன்படுத்தப்பட்டிருந்த தற்கு அந்நாடு இந்தியாவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. இந்தியப் பசும் பொன்னைப் பழங்காலத்தில் பெரிதும் பயன்படுத்திய மற்றொரு நாடு பழம் பெரும் எகிப்து ஆகும். பொன்னை நாட்டின் ஒரு பகுதியினின்று மற்றொரு பகுதிக்கும் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டுக்கும் கொண்டு செல்வது எளிதாக இருந்தது. எகிப்தில் இந்தியப் பொன் பாய்ந்து சென்றது பற்றி யாரும் வியப் படைவதற்கில்லை; அந்த நாட்டில் புனிதமான மனித நாகரிகம் பரவுவதற்கு இந்தியர்களே பெரிதும் காரணமாக இருந்தனர். பிற்காலத்தில் பீனிசியர்களும், கிரேக்கர்களும் ஏனைய ஐரோப்பிய நாட்டினர்களும் இந்தத் தாதுப் பொருளைப் பல்வேறு காரியங் களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். சிந்து வெளியில் கூடப் பொன்னிற்கு மிகுதியாகத் தேவை இருந்தது என்று நாம் கூறினால் அது பெரும் தவறு என்று எவரும் எண்ணார். சிந்துவெளிக்கும் தென் இந்தியாவிற்கும் இடையே அடிக்கடி நடந்த வணிகப் போக்கு வரத்துத் தொடர்பில் தென் இந்தியா அந்தப் பகுதிக்குப் பெரிதும் பொன்னை எற்றுமதி செய்து இருக்க வேண்டும். பொன்னைப் பற்றிய ஆய்வில் புகுந்த ஆசிரியர்கள் பலரும் தென் இந்தியாவில் பொன் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தாதுப்பொருள் என்று முடிவுகட்டி யுள்ளார்கள். இந்தியா ஒரு காலத்தில் பொன்னின் நிலம் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. தென் இந்தியாவில் ஒரு சில மாவட்டங்கள் மட்டுந்தான் பொன்னைத் தாங்கும் தனித்தன்மை வாய்ந்த தளமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்மையாகும். இந்தியாவில் சில பகுதிகளில் மட்டும் கிடைத்ததாலும் அது கிடைப்பதற்கு அரிதாக இருந்த தாலும் பொன் விலையுயர்ந்த தாதுப்பொருளாக மதிக்கப்பட்டது. இதை நடுவுநிலையில் நின்று ஆராய்ந்தால், பழங்காலத்தி லிருந்து இந்தியத் தீவகத்தில் பொன்னை நீர்மைத் தோய்ப்பு (Washing Gold) செய்யும் வழக்கம் இருந்தது என்பது புலனாகும். ஆற்று மணலினும், பொன் உட்கொண்ட பாறை அடுக்குகளிலும் (Gravels), வண்டல் சார்ந்த படுகையமைவிலும் பொன்னை அலசி எடுக்கும் முறை இருந்து வந்தது. இந்தத் தாதுப் பொருளை நீரில் அலசும் வழக்கம், முற்காலத்தில் சில வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பொன் சேகரிக்கப்பட்டதைக் கொண்டு அறியலாம். ஆனால், இதற்கு அப்பால் தென் இந்தியத் தீவகத்தில் ஏராளமாகக் கொடு வரிப்பாறை (Schist) கன்ம ஈருயிரகையுடன் பொன்னும் கலந்த கனிமப் பொருளும் உள்ள பாறை என்னும் இரண்டும் ஏராளமாகக் கலந்த பொருள்களின் தனிப் பண்புடையதாய் அமைந்திருப்பதை நாம் நன்கறிவோம் என்றாலும், பழங்கல் ஊழியிலிருந்து இன்று வரை இந்தப் பொன் என்னும் தாதுப்பொருளின் பயனை நன்கு அறியப் பட்டிருந்தாலும் பண்டைக் கால மக்கள் வாழ்ந்த மலைகளிலும் குன்றுகளிலும் பறம்புகளிலும் உள்ள பொன்னின் உலோகக் கரு (Gold Ores)it¡ கண்டுபிடிப்பதற்குப் போதிய முன்னேற்றம் மனிதன் இன்றுவரை பெறவில்லை. மக்கள் பிற்காலத்தில் அதனுடைய தனிச்சிறப்பில் உயிர்த் துடிப்புடன் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. பொன்னைப் பெறுவதற்கும், பொன்னின் கருவைக் காணவும், செயற்கை முறையில் பொன்னைச் செய்யவும் மனிதன் தன் காலத்தையும் ஆற்றலையும், பொருளையும் அதிகமாகச் செலவிட்டுள்ளான். நீல மலையில் நம்வோலுக் கொடி அம்சாவில் (Namvolukodi Amsham) உள்ள தேவாலம் என்னும் இடத்தில் ஏராளமான மிகப் பழமையான பொற்சுரங்க வாயிற் குழிகள் (Mining Shafts) ஆகியவற்றைக் காட்டுவதற்குச் சான்றாகப் பல உள்ளன. அவற்றுக்கு அப்பால் பெரிய காட்டு மரங்கள் 70-80 அடி உயரத்தில் நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன. தேவால (Devala) என்னும் இடத்தைச் சுற்றிப் பல்வேறு வகையில் பொன்னைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடை பெற்றுள்ளன என்னும் சான்றை மேற்போந்த வாறாகப் பார்க்கக் கூடாது. ஒரு காலத்தில் தமிழ் மக்கள் இங்குப் பொன்னைக் கண்டு பிடிப்பதில் பெரும் பணியாற்றி யுள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள. இப்பொழுதும் கூட பொன்னை எடுக்கும் பணியாற்றுபவர்கள் வியக்கத்தக்க முறைகளில் தகவல் தேடுபவர்களாய் இருந்து வருகிறார்கள். என்றாலும் இன்றைய மக்கள் வண்டல் சார்ந்த நீர்மைத் தோய்வில் தம் நடவடிக்கைகளில் கட்டுப்படுத்தப்பட்டுக் கிடந்து வருகின்றார்கள். பழைய பொற் சுரங்கங்கள் பழமைச் சின்னங்களாகப் போற்றப்பெறும் நிலையில் உள்ளன என்று சான்றுறுதி அளிக்கும் மேம்பட்ட நிலை எய்தி யுள்ளது. என்றாலும் திட்டவட்டமான காலக் கணிப்பு முறை சார்ந்த முறையில் வரையறுத்து நிலைநாட்டுவதற்கு முடியாதிருக்கிறது. முற்காலத்தில் சுரங்கம் உள்ள சிற்றூர்கள் பொன்னை அகழ்ந் தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தன. இந்த ஊர்கள் பண்டு தனிச் சிறப்பைப் பெற்றிருந்தன. அதாவது ஊர்களைச் சுற்றி அரண்கள் எழுப்பப் பெற்றிருந்தன என்பதாகும். இந்த விலையுயர்ந்த தாதுப் பொருளை அகழ்ந்து எடுக்க எவ்வாறு பண்டைக் கால மனிதன் பொறுப்போடு பணியாற்றினான் என்ற செய்தியை நாம் பழைய அழிபாடுகளிலிருந்து தொகுக்க முடியும். ஆனால், இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு, தொழிற் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொது மக்களிடையே பரவத் தொடங்கிய பின்னரே பொற் சுரங்கங்களைக் கண்டு பொன்னை எடுக்கும் பணி பெரும் அளவில் நடந்திருக்கலாம் என்று கூறுவது நல்ல பொருத்தமாகும். மாபெரும் மரங்கள் தோன்றி வானுற வளர்ந்து நிற்கும் காடுகளில் உள்ள பழைய சுரங்கங்களை நாம் ஆய்வு செய்து காணும்போது, பழங்கால மக்கள் சுரங்கங்களைத் தோண்டி, பொன்னை எடுப்பதில் எவ்வளவு விருப்பம் உடையவர் களாய் இருந்தனர் என்பதை அறியலாம். அச் சுரங்கங்களைப் பாது காத்து வந்த அவர்கள் அறியலாம். அச் சுரங்கங்களைப் பாதுகாத்து வந்த அவர்கள் செயல் பொருளாதாரநிலை மேன்மை யடைவதற்கு உதவியாக இருந்தது.10 பழைய தமிழ் இலக்கியங்கள் தென் இந்தியா பொன்னின் தாயகமாகப் போற்றுவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக ஏன் நாம் பதிவு செய்துள்ளோம் என்பதை உணர்த்துகின்றன. இலக்கியச் சான்றுகள் மிகப் பிற்காலத்தவை ஆகும். நம் இலக்கியங்களில் கொள்கைக் கோட்பாடுகளைச் செயலுருப்படுத்துகிறது போல இலக்கியப் பண்பின் மரபின் மதிப்பு ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. இலக்கியப் பண்புடைய சான்றுகள் தென் இந்தியாவின் தேசீய மாழையாகப் பொன் பயன்படுவது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது எனச் சுட்டிக் காட்டப்பட்டிருக் கிறது. பிற்காலத்தில் செம்பும் வெள்ளியும் பிற மாழைகளும் பொது மக்களிடையே தாராளமாக வழங்கப்பட்டிருந்த நிலையின் போதும் மாழைத் தொழில் பெரும் அளவில் வளர்ச்சியுற்று பொன்னின் பிற்கூறு ஒரு மாழை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காண்ப தற்குப் பயன்படுத்தப்பட்டது. துப்புரவான பொன் புடத்தங்கம் அல்லது சொக்கத் தங்கம் என்றும், செம்பு கலந்த பொன் நகைத் தங்கம் அல்லது சவரன் தங்கம் என்றும் கூறப்படுகிறது. பொன் என்பது ஒரு காலத்தில் பொதுவாக மாழை என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. என்றாலும் புனிதமான பொன் எல்லாத் தாதுக்களுக்கும் மேலாக மதிப்பிலும், ஒளியிலும், வண்ணத் திலும், தன்மையிலும் உயர்ந்ததாய் இப்பொழுது விளங்குகிறது. பொன் செய்யும் வித்தை தமிழகத்தில், பொன் செய்யும் ஓர் அரிய தொழிலைப் பலர் அறிந்திருந்தனர். செம்பிலிருந்தும் துருசுகள் அகற்றப் பட்டால் அது பொன்னாகும் என்று சிலர் கூறிவந்தனர். பாதரசத்தைப் பயன்படுத்திச் சிலர் பொன் செய்து வந்தனர். செம்பு அல்லது பாதரசத்தைப் பொன்னாக மாற்றும் வித்தை இரசவாதத் தொழில் என்று கூறப் பெற்றது. கன்ம ஈருயிரகையுடன் சில சமயம் பொன் கலந்த கனிமப் பொருள் சார்ந்த படிக்கக் கல்லில் (Quartz) இருந்து தெரிந்தெடுத்த துண்டுகளை நன்றாகக் கழுவிப் பெரிய குழி அம்மியில் இட்டு அரைத்துப் பொடியாக்கி, அந்தப் பொடியை மீண்டும் கழுவி, ஒரு சட்டியில் போட்டு வறுத்து அதிலுள்ள கந்தகச் சத்து அகற்றப் பட்டது. பாதரசத்தினின்று செய்யப்பட்ட சிறுபொடிகள் பொன்னாக மாறும். ஒருங்கிணைந்த பாதரசமும் பொன்னும் சூடாக்கப்பட்ட ஒரு இரும்புச் சட்டியில் போடப்படுகிறது. முன் கூறியது ஆவியாக மாறிப் போகிறது. பின்னுள்ளது அதன் புனிதநிலையில் எஞ்சி நிற்கிறது. அறிஞர் கிரிக் (Grig) உதகமண்டலத்தைப் பற்றிப் பேசும் பொழுது குறிப்பிடுகிறார்; பிஷப் டவுண் (Bishop Down), பெர்ம் ஹில் (Ferm hill) என்ற இடங்களுக்குப் பின்னுள்ள பள்ளத்தாக்கில் பொன் தோண்டி எடுக்கப்பட்டது. இன்றும் அதன் எச்சமிச்சங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பகுதியிலும் நஞ்சன்கூடு பள்ளத்தாக்கிலும் அதன் அண்மையிலும் பொன் துகள்கள் மண்ணோடு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுத் தண்ணீரில் அலசிப் பொன் துகள்கள் வேறாகவும் மண் வேறாகவும் பிரித்து எடுக்கப்பட்டன. அதன் தடங்கள் ஆற்றங்கரைகளின் நெடுகிலும் உள்ள மண்மேடுகளில் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகளின் அருகில் உள்ள நீர் ஓடைகளில் கன்ம ஈருயிரகையுடன் சிலசமயம் பொன்னும் கலந்துள்ள கனிமப்பொருள் (Quartz) குவியல்கள் காணப்படுகின்றன. அவை பொன் செய்யும் பணி பண்டைக் காலத்தில் குன்றுகளில் மட்டும் நடைபெறவில்லை. வேய் நாட்டிலும் மேற்கத்திய கடற்கரைப் பகுதிகளிலும் நடைபெற்று வந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவனவாக உள்ளன. பொன்னும் அணிகலன்களும் மிகத் தொன்மையான காலத்தினின்று தென் இந்திய மக்கள் சிறப்பாகத் தமிழர்கள் இத்தாதுப்பொருளை அணிகலன்கள் செய்து பூண்டுகொண்டது பெரிய அளவில் இதனோடு கொண்ட தொடர்பு எனக் காணப்படுகிறது. இரும்பு ஊழியில் அரும்பிய புதைகுழிகளில் கூட, பல தட்டுமுட்டுப் பொருள்களோடு பொன்னும் மின்னிக் கொண்டிருந்தது தெரிகிறது. நினைவிற் கெட்டாத காலத்தினின்று பலவகையான உருவில் பொற்கொல்லர்கள் பொன்னை உருக்கித் தட்டி, அதைக் கொத்தியும், அறுத்தும் எண்ணற்ற எழில் வடிவில் அணிகலன்களைத் தம் கைவண்ணமும் உளப்பாங்கும் ஒளிர உருவாக்கி வந்தனர். இப்பொழுதும் செய்து வருகின்றனர். தென் இந்தியாவில் பழங்கால மக்கள் கண்ட தாதுப்பொருள்களில் பொன் முதன்முதலாகக் கண்ட பொருளாய் மிளிர்கின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தமிழ்மக்கள் கண்ட கடல் வணிகத்தின் பயனாய்க் கால வளர்ச்சியில் பொன் உலகமெங்கும் பரந்து நிலவியுள்ளது. இன்று பொன் கிடைப்பதற்கரியதாய் நாளுக்குநாள் விலை ஏறிக்கொண் டிருக்கும் நிலைமைக்குத் தமிழ்நாட்டுமகளிர், பொன்மீது கொண்ட விருப்பம் குன்றாது வளர்ந்து கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பொன் அணியும் இனத்தவர்கள் தமிழர்கள் தொன்றுதொட்டுப் பொன் அணிகலன்களைச் செய்துவந்தனர். தமிழர்களைப் பார்த்து இந்தோ ஆரியர்கள் பொன் அணிகலன்களைப் பூணத் தலைப்பட்டனர். ஆனால் தமிழர்கள் காதின் கீழ்ப்பகுதியில் தொளையிட்டுப் பல பொன் அணிகலன்களை அணிந்து வந்தனர். போர்னியோவில் உள்ள பழங்குடி மக்கள் தமிழர்களைப்போல் காதுவடித்து அதில் குண்டலங்கள் போன்ற வளையங்களை அணிந்து வருவதை அறிந்தேன். ஆனால் ஏறத்தாழ 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே யூதப் பெண்கள் காதில் தொளை யிட்டுப் பொன் அணி கலன்களைப் பூண்டு வந்ததுடன் கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் பொன் அணிகலன்களை அணிந்து வந்தனர் என்று தெரிகிறது. யூதர்கள் அணிகலன்களை அணிந்த தோடு, மலைத்தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டிருந்தனர். திருக்கோயிலில் சிவன் காளைமீது அமர்ந்திருக்கும் முறையில் கருவறையில் திருஉருவம் அமைத்து வழிபட்டும் வந்தனர். தெய்வத் திற்கு மனைவி மக்கள் உண்டு என்று நம்பினர். தெய்வத்திற்குப் பால் பழம் அப்பம் படைத்து நறும்புகை காட்டி வழிபட்டனர். அவர்கள் கோயில், தமிழர் கோயில் அமைப்பைப் போலக் கொடிமரம், பலிபீடம், கருவறை முதலியவற்றைக் கொண்டிருந்தது. குறிப்புகள் - NOTES IV 1. They are locally known as Pattams and the system of putting gold in some shape or other over the dead body is prevalent in orthodox Hindu Homes even nowadays. Dr. Sir. John Marshall makes the following note on these objects (Annual Report of the Archaeological Survey of India 1902-03 foot note on page 105). The gold frontlets are of thin gold left so flimsy that they could not possibly have been used as jewellery in real life. They are mere imitations of the genuine articles substituted by the relation of the dead who no doubt kept the more substantial jewellery for themselves. For similar instances of this economical piety towards the dead. See Frazer Pausanias Vol.III. p. 107. Schliemanu Mycenal p. 156, etc., : E. Gardner new chaplers in Greek History E.P. Tyler Primitive Culture Vol. I. p. 439. 2. Catalogue of the Pre-Historic Antiquities from Adichanallur and Perumbair by Alexander Rea F.S.A. (Scot) Madras, 1915, (Introdution) pp. III-IV. 3. Mohenjo Daro and Indus valley Civilization - Dr. Sir. John Marshall Vol. I (London) 1930. Excavation at Harappa - M.S. Watts Vol.I. p. 14. 4. Dravidian Elements in Indian Civilizaiton - Dr. Gilbert Slater. M.A., D.Sc., 1920 (Madras). 5. Pre-Historic South India by Prof. V.R. Ramachandra Dikshitar M.A., (Madras) 1951. History and Monuments of Ur. of - C.J. Gad (London) 1929. 6. தமிழர் முதன்முதல் பயன்படுத்திய தாது பொன்னாயிருந்ததி னாலேயே பொன் என்ற சொல்லிற்கு உலோகம் என்னும் பொரு ளும், பிற்காலத்தில் கிடைத்த வெள்ளி, செம்பு, இரும்பிற்கு முறையே வெண்பொன், செம்பொன், கரும்பொன் என்ற பெயர் களும் தோன்றின - பழந்தமிழாட்சி - ஞா. தேவநேயன். v«.V., (சென்னை) முதற்பதிப்பு. 1952. பக். 93. 7. “Tamils traded with the Chaldeans and teak found in the ruins of Ur, the sea port and capital of Babylonia “grows”, says Ragozin in Vedic India p. 806, in Southern India close to the Malabar coast and no where-else”. They took Indigo and muslin to Egypt. King Solomon had Sandal wood apes and peacocks (thokai) from Ophir, “The navy of Tarshish brought gold, silver, ivory, apes and peacocks from India. Nineveh had gold from Tamil Country and Assyria tin. The Greeks took rice and pepper. Pearls were exported from Korkai” - Tamil India - M.S.Purnalingam Pillai, B.A., L.I. (Madras) 1927. p.76. (a) “If there was intercourse between the Indusvalley and Sumerla there must have been greater intercourse between these two districts and South India. Evidence of this is found in two facts mentioned by sayce. One is that Indian teak was found in the ruins of Ur (Mugheir) which was the capital of the sumerian kings in the iv millennium B. C. and the other is that the word Sindhu or muslin is mentioned in an ancient Babylonlan list of clothing.” -Sayce Hibbert Lectures pp. 136-138. (b) “Not only was there Commercial intercourse between the Tamil Country and the Mesopotamian valley, but there is some evidence that the trade of South India extended to Egypt in the iii millennium B.C. Says W.H. Schoff,” thousands of years before the emergence of the Greeks from savagery ... Egypt and nations of Ancient India came into being and a Commercial System was developed for the interchange of products within those limits having its centre of exchange near the head of the Persian gulf. The people of that region the various Arab tribes and more especially those ancestors of the Phoenicians, the mysterious Red Men were the active carriers or intermediaries. The growth of civilization in India created an active merchant marine trading to the Euphrates and Africa and eastwards we know not whither.” Periplus. p.3. 8. Pre-Historic South India - Prof. V.R.Ramachandra Diksitar M.A. (Madras) 1951. p. 114. The Sumerians - C. Leonard Willy (Oxford) 4th impression May 1930. 9. We need not enter into the discussion whether gold was a material of the sanskirt speaking people known as the Aryans or whether it was bequeathed by the old inhabitants of South India. Examining the various points of view both in favour and against, we are almost driven to the conclusion that gold was first discovered in south India though India as a whole had once been regarded as a land of gold. It is true even in the South there are only a few districts which can exclusively be said to be gold - bearing districts. It became a precious metal simply be-cause gold was scarce and available only in a few parts of the land.” Pre-Historic south India - Prof.V.R.Ramachandra Dikshitar M.A. (Madras) 1951. p. 114. 10. Ibid. pp. 115-117. இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibliography) 1. Light from the ancient Past - James Finecan London (Vth Printing) 1951. 2. Holy Bible ii. Chronicle; 1. king. 3. First letter book of the East India Company 1600-1619 Edited by Birdwood and Foster 1893. 4. Intercourse between India and the Western World, 1924. 5. Mr.Kennedy in the Royal Asiatic Society, No. III. 6. A History of British India - Sir. W.W.Hunter, (Longmans Green and Co., (Madras) 1919. 7. The Sumerians - C. Leonard Willey (Oxford) (4th impression) May, 1930. 8. List of Antiquities - Swell Vol.1. 9. Pre-Historic South India - V.R.Ramachandra Dikshitar M.A. (Madras) 1951. 10. Schoof’s Periplus. 11. Light from the Ancient Past - Jack Finecan (London) Vth Printing 1951. 12. Holy Bible (Old Testament) II Chronicle. 13. First letter book of the East India Company - 1600-1619. Edited by Birdwood and Foster 1893 (London). 14. Intercourse between India and the Western World 1924. 15. A History of British India - Sir. W.W. Hunter (Longmans Green and Co.,) 1919. 5. இரும்புப் பொருள்கள் (IRON OBJECTS) புதிய கல் ஊழியில் உலோகப் பொருள்கள் ஆதித்தநல்லூர் பறம்பிலுள்ள இடுகாட்டில் அறிஞர் அ.இரீயா அவர்களால் அகழ்ந்து கண்ட பொருள்களில் குறிப்பிடத்தக்க தாதுப் பொருள்கள் மூன்று. அவை, முறையே (1) பொன் (2) இரும்பு (3) வெண்கலம் எனப்படும். இம் மூன்றில் பொன், தமிழகத்தில் முதன் முதலாகக் கிடைத்த தாதுப் பொருளானதால், இங்கு முதலில் வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பொன் நிலத்தில் பெரிய அளவில் கிடைக்கப்பட்டதாலும், மக்கள் தங்கள் உடலை அழகு செய்யும் அணிகலன்களைச் செய்வதற்கேற்ற தன்மையும் மென்மையும் வண்ணமும் வாய்ந்த பொருளாக இருந்ததாலும் அது உலகில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் பொருளாய் உயர்ந்தது. மக்கள், பொருள் பரிமாற்றுக் கருவியாக, பொன்னைக் கட்டி நாணய மாகவும், காசு நாணயமாகவும் பயன் படுத்தியதால் பொன்னிற்கு மதிப்பு எழுந்தது. ஆனால் இரும்பைப் போல், மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளாகப் பொன்னோ, பிற தாதுப் பொருள் களோ இருந்தன என்று எண்ணுவதற்கில்லை. உலகில் முதன் முதலாக இரும்பைக் கண்ட மக்களே மனித நாகரிகத்திற்கு வித்திட்ட மக்களாக மதிக்கப்படுகின்றனர். உலகில் முதன் முதலாக இரும்பை நன்கு பயன்படுத்தத் தெரிந்த மக்களே உலகில் அரிய பெரிய கருவி களைப் படைத்து உலகை ஆளும் ஆற்றல் பெற்றவர்களாயும், சிறந்த பொறிகளையும் நீராவிக் கப்பல்களையும் உருவாக்கி வணிகத் துறை யில் வளர்ந்தும், பொருளாதாரத் துறையில் உயர்ந்தும் வாழ்ந் துள்ளார்கள். அதனைப் பின்னர் விரிவாய் ஆராய்வோம். இந்நிலையில் 100 ஆண்டிற்கு முன் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் இரும்புப் பொருள்கள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இன்றைய அணு ஊழியில் கூட இரும்பின் ஏற்றம் எள் அளவில் கூடக் குன்றவில்லை. விளக்கமாகக் கூறுவதானால் இன்று இரும்பின் இன்றியமையாத நிலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இரும்பே இன்றைய இந்தியாவின் பெருமைக்கும் பேற்றிற்கும் அடிப்படையாய் அமைந்துள்ளது. அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருள்கள் ஆதித்தநல்லூர்ப் பறம்பில் அறிஞர் அலெக்சாந்தர் இரீயா அவர்கள் ஆண்டுதோறும் அடுத்தடுத்துச் செய்த அகழாய்வில் பல இரும்புக் கருவிகளும் சில இரும்புத் தட்டுமுட்டுப் பொருள்களும் கிடைத்துள்ளன. இவரது அகழாய்வில் கிடைத்திராத ஒரு சில இரும்புப் பொருள்கள் பெர்லின் முனைவர் சாகோர் அவர்களிட மும் பாரிசு அறிஞர் எம். உலுயிசு இலாப்பிக்யூ அவர்களிடமும் கிடைத்திருக்கலாம் என்று அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். இவர்கள் இருவருடைய அகழாய்வுகளிலும் எத்தனை பொருள்கள், என்னென்ன பொருள்கள் உள என்று யாரே கூற வல்லார். nkY« mt®fŸ f©blL¤j bghUŸfŸ x›bth‹¿‰F«, ïÇah f©blL¤j bghUŸfËš Ãfbuh¤j gofŸ.(Duplicates) உள என்று எவ்வாறு துணிந்து கூற முடியும்? ஆதித்தநல்லூரில் அகழாய்வு நடத்திய மூவர்களின் சேகரிப்பி லும், தமிழர்கள் பயன்படுத்திய எல்லா வகையான படைக்கலன் களும் (Armours) தொழிலாளர்களுக்கு இன்றி யமையாத கருவிகளும், (Tools), வீட்டுப்பயன்பாட்டுக்கு உரிய தட்டுமுட்டுப் பொருள்களும் (Implements) கிடைத்துள்ளன என்று சொல்ல முடியாது. மேலும் தமிழகத்தின் ஒரு பகுதியில் உள்ள ஈமக் காட்டில் எல்லா வகையான போர்க் கருவிகளும், தொழிற் கருவிகளும், தட்டுமுட்டுப் பொருள் களும் இருக்கும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. அவற்றைப் பண்டைக்கால அரசனின் அரண்மனையிலும், படைக்கலக் கிடங்கு களிலும் கூட இருக்கலாம் என்று எண்ணுவதற்கில்லை. அறிஞர் இரீயா அகழ்ந்து கண்ட இரும்புப் பொருள்கள் மொத்தம் 391 என்று அவர் நமக்குத் தந்துள்ள வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஆதித்தநல்லூர், பெரும்பாயூர் ஆகியவற்றி னின்று கிடைத்த பழம் பொருள்களின் பட்டியல் என்ற நூலில் காணக் கிடக்கின்றன. ஆனால், என்னுடைய மதிப்பில் தமிழர்கள் பயன்படுத்திய பழங்கால இரும்புப் படைக் கலன்களும், தொழிற் கருவிகளும், வீட்டுப் பயன்பாட்டிற்குரிய தட்டுமுட்டுப் பொருள் களுமாக ஏறத்தாழ 1000 வகைகள் இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், இரீயா கண்டெடுத்த இரும்புப் பொருள்கள் 66 என்று தெரிகிறது. 1இதுவே நாம் வியக்கத்தக்க செய்தியாகும். உலகில் பெரும்பாலான மக்கள் ஆடை கட்டத் தெரியாது விலங்குகள் போல் வாழ்ந்த புதுக் கல்லூழியின் தொடக்க காலத்தில் தமிழர்கள் இத்துணை இரும்புப் பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்தி வந்தனர் என்ற செய்தி, தமிழுலகம் இன்றும் என்றும் பெருமை அடைவதற்குரிய செய்தியாகும். இரும்புக் கருவிகள் வகைகள் ஆதித்த நல்லூர் பறம்பின் அகழாய்வில் கிடைத்த பொருள் களில் சிலவற்றின் பெயர்கள் : 1. எறிவேல் (Spear). 2. ஈட்டி (Lance). 3. குத்துவாள் அல்லது பட்டாக்கத்தி (Dagger). 4. அம்புமுனை போன்ற வேல் (Barbed javeline). 5. இரு புறமும் கூர்மையான வாள் (Double edged Sword). 6. மூவிலை வேல் (திரிசூலம்) (Trident). 7. கூரிய அம்புத்தலை (Barbed arrow head). 8. கைக்கோடரி (Hatchets). 9. வாள் (Sword). 10. வளைந்த கத்தி (Curved knife). 11. இரு வளைவான கொக்கித்தடி (Hooks with two curved rods). 12. பலி வாள் (Sacrificed sword). 13. அம்புத்தலை (Arrow head). 14. வேலாயுதம் (Javeline). 15. கோடரிகள் (Axes). 16. சூலாயுதம் (Sulams). 17. கேடயம் (Shield). 18. அரிய ஆயுதம் (A Curious Weapon). 19. சிறிய உடைவாள் (Small Dagger). 20. சிறிய ஈட்டி (Small Lance). 21. செங்கோணவாயுள்ள ஈட்டி (Lance with blade rectangular in section). 22. கூம்புவாய் ஈட்டி (Lance with narrow blade). 23. கூரிய வாயுள்ள ஈட்டி (Lance with lapering blade and hollow butt). 24. ஈட்டிப் பிடியுள்ள குழிவான குழாய் (Hallow tube handle of lance). 25. குழிவான விளிம்புள்ள குத்துவாள் (Dagger with tapering point). 26. அகன்ற வாய்ப் பரசு (Hatch broadest at the cutting edge). 27. நீண்ட வட்டக் குழிவான ஈட்டி (lance with long round hollow shaft). 28. குழிவான இரும்புக் கைப்பிடி ஈட்டி (Hollow iron handles with rods through the centre). 29. வளைவுகளுள்ள வாள் (Swords with various curved blades tapering with points). 30. சிறிய நுனியுள்ள வாயுடைய ஈட்டி (Lance with lapering blades and hollow handles). 31. கத்தி (Knife). 32. வளைந்த பலவகைக் கத்திகள் (Reaping hook or curved knives of various forms. அறிஞர் அலெக்சாந்தர் இரியா (Alexander Rea) ஆதித்த நல்லூர்ப் பறம்பில் உள்ள ஈமக்காட்டை அகழ்ந்து, பல்வேறு பழம் பொருள்களைக் கண்டெடுத்தது ஒரு பெரிய வியப்பிற்குரிய செய்தி அன்று. ஆனால், அப்பொருள்களை வகுத்துத் தொகுத்துப் பெயர் கண்டுபிடித்தது வியப்பினும் வியப்பு என்று கூறினால் அஃது ஒரு பொழுதும் மிகையான செய்தி என்று எவரும் கூற முடியாது. அதிலும் ஆங்கில நாட்டைச் சார்ந்த ஒருவர், தென் இந்தியாவிற்கு வந்து ஒருசில ஆண்டுகள் தங்கி, மிகப்பழமையான காலத்தில் தமிழர்கள் இரும்பினாற் செய்யப்பட்ட தட்டு முட்டுப் பொருள் களுக்கும் இரும்புப் படைக்கலன்களுக்கும் பெயர்கள் கண்டு பிடித்தனர் என்பது எளிதான காரியம் அன்று. இங்கே பிறந்து வளர்ந்து தமிழ் நன்கு பயின்ற தமிழ்ப்புலவர்களாற்கூட அவற்றின் பெயர்களை எளிதில் கூறமுடியாது. அறிஞர் இரீயா பெரு முயற்சி செய்து பழங்கால இரும்புப் பொருள்களுக்குப் பெயர்கள் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அவர் எல்லா இரும்புப் பொருள்களுக்கும் உரிய பெயர்களைக் கண்டு பிடித்துள்ளார் என்று சொல்லிவிடமுடியாது. என்றாலும் பெரிதும் முயன்று பலவற்றிற்குப் பெயர் காண முயற்சி செய்திருக்கின்றார். சிலவற்றிற்குப் பெயர் காணமுடியவில்லை. சில இரும்பு ஆயுதங் களின் பெயர்களை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்த மக்கள் கண்டதும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை என்றாலும் இரியா அவர்கள் அந்த இரும்புப் பொருள்களைத் திரும்பத் திரும்பத் துருவி ஆய்ந்து அப்பொருள்களை நாம் உணரு மாறு ஆங்கிலத்தில் நன்கு விளக்கம் தந்துள்ளார். என்றாலும் இன்றும் நம்மால் அந்தப் பொருள்களுக்கு உரிய, சரியான பெயர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் முனைவர் சாகோரும், பிரான்சு நாட்டறிஞர் உலூயிசு இலாப்பிக்யூ அவர்களும் கண் டெடுத்த பொருள்களில் நாம் பெயர் கூற முடியாத பொருள்கள் எவ்வளவு இருக்கும் என்று நம்மால் சிந்திக்கக்கூட முடியவில்லை. இனவேறுபாடு உலகிலேயுள்ள பல்வேறு வண்ணமும், பல்வேறு முகத்தோற்ற மும் பல்வேறு பண்பாடும் பல்வேறு மொழி அமைப்பும் பெற்றுப் பல்வேறு நாடுகளிலும் தீவுகளிலும் வாழும் மக்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்து பல்வேறு நாடுகளில் குடியேறிப் பல்வேறு வண்ணமும் பல்வேறு மொழி அமைப்பும் பல்வேறு பண்பாடும் பெற்றார்களா? கிறித்தவ சமயக் கற்பனைப்படி ஒருதாய் வயிற்றில் காயீன், ஆபொல், சேத் என்னும் மூன்று ஆண்மக்கள் தோன்றி உலகில் மனைவியை எங்கிருந்தோ பெற்று மக்களைப் பெற்றுப் பல்கிப் பெருகினார்களா, அல்லது பல்வேறு நாடுகளிலும் ஒரே காலத்திலோ அல்லது முன்பின்னாகவோ சில ஆண் பெண்கள் தோன்றிக் கலந்து ஆண் பெண் மக்களைப் பெற்று நாளடைவில் உலகமெங்கும் பரவினார்களா என்று நம்மால் கூற முடியவில்லை. மனித இனத்தின் ஒருமைப் பாட்டிற்கு உலகமக்கள் அனைவரும் ஒருதாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்று அறவோர்களும் அறிவோர்களும் கூறிவருவதையும் நாம் அறிவோம். ஆனால் அமெரிக்காவில் வாழும் அந்நாட்டுக் குடிமக்களான செவ்விந்தியர் களும், அங்குக் குடியேறிய ஆங்கிலேய வெள்ளையர்களும், ஆப்பிரிக்க நாட்டில் தோன்றிய நீக்ரோவர்களும், அங்குக் குடியேறி அந் நாட்டினரை வென்று கொன்று அடிமைப்படுத்திச் சுரண்டி வாழும் ஐரோப்பிய பிரஞ்சு, பிரிட்டிசு நாடுகளின் வெள்ளையர் களும், மஞ்சள் நிற மங்கோலியர்களான சீனர்களும் சப்பானியர் களும், வெள்ளை நிற உருசியர்களும், இந்தியாவில் தோன்றி அங்குவாழும் திராவிடர்களும் இடைக்காலத்தில் அந்நாட்டில் புகுந்து அவர்களை வென்று கொன்று அடிமைப்படுத்திய ஆரியர் களும், செர்மன் நாட்டு ஆரியர்களும், சுபெய்ன் (Spain) நாட்டு மூர் களும் சோர்டான் நாட்டு அரபிகளும் இசரேயல் நாட்டு யூதர்களும் ஒரே தாய் தந்தையர்கள் வயிற்றில் பிறந்த மக்களா என்ற ஐயப் பாடுகளுக்கு அறிவியல் வல்லுநர்களுக்குள் இன்று திட்ட வட்ட மான முடிவு காண முடியவில்லை. ஆனால், உலகில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தீவுகளிலும் மக்களினம் தட்ப வெப்பநிலை களுக்கேற்பப் பல்வேறு வண்ணமும் உடல் அமைப்பும் தோற்றமும் பெற்றுக் கற்கால மக்களாயும் உலோக கால மக்களாயும் வரலாற்றுக் கால மக்களாயும் வாழ்ந்துவந்துள்ளனர். சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நாடுவிட்டு நாடு புகுந்தும், கண்டம் விட்டுக் கண்டம் புகுந்தும் ஆங்காங்குள்ள மக்களோடு கலந்தும் இருக்கலாம் என்றம் கருதுகின்றனர். உலேகிலே பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்த மக்கள் ஒரே காலத்திலே ஒரே வகையான நாகரிகத்தைப் பெற்றனர் என்று கூறமுடியவில்லை. உலகிலே பல்வேறு நாடுகளிலும் முன் பின்னாகக் கல்லூழிகளும் உலோக ஊழிகளும் வரலாற்றுக் காலமும் அரும்பி யுள்ளன. கல் ஊழியில், தொல் பழங்கல் ஊழியும், பழங்கல்லூழியும், புதுக் கல்லூழியும் தோன்றியுள்ளன. அவைபோல மனித நாகரிகத் திற்கு அடிப்படையான உலோக ஊழியிலே செம்பும் மண்ணும் கலந்த, கலப்புச் செம்பு ஊழி (Chalcolithic age) வெண்கல ஊழி, இரும்பு ஊழி என்று பலவகை உலோக ஊழிகள் மலர்ந்துள்ளன. இந்த உலோக ஊழியும் கல் ஊழியும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே காலத்தில் தோன்றவில்லை; சற்று முன் பின்னாகவும் தோன்ற வில்லை. ஒரே காலத்தில் ஒரு நாட்டில் பழம் கல் ஊழியும், மற்றொரு நாட்டில் புதுக்கல்லூழியும், இன்னொரு நாட்டில் உலோக ஊழியும் தோன்றியுள்ளன. ஒரே நாட்டில் வட பகுதியில் செம்பு ஊழியும் நடுப் பகுதியில் புதுக் கல் ஊழியும் தென் பகுதியில் இரும்பு ஊழியும் எழுந்துள்ளன. உலகிலே உலோக ஊழியிலே மக்கள் நாகரிகத்திற்கு அடிகோலத் தொடங்கியுள்ளனர் என்று அறிகின்றோம். செம்பு ஊழியைவிட, வெண்கல ஊழியைவிட இரும்பு ஊழியில்தான் மக்கள் நனி சிறந்த நாகரிகத்தை அடைந்துள்ளனர். செம்பு ஊழியில் பெரிய நாடுகளையும், நகரங்களையும் அகன்ற தெருக்களையும், மாடிகளையுடைய வீடுகளையும், நெற் களஞ்சியங்களையும் ஆடை களையும், அணிகலன்களையும், மரக்கலன்களையும் கப்பல் கட்டும் தளங்களையும், வில்படை, வேல் படை, காலாள் படை, தேர்ப்படை முதலியவற்றைப் பெற்றுப் பேரரசையும் நிறுவிய மக்கள் இரும்பு ஆயுதங்களைப் பெற்ற ஆடுமாடு மேய்க்கும் நாடோடி மக்களிடம் தோல்வியுற்றது வரலாறு கண்ட உண்மையாகும். உலகில் முதன் முதலாக இரும்பு ஊழியை அடைந்த மக்கள் நனி சிறந்த நாகரிகம் பெற்ற மக்களாயும் வல்லமை வாய்ந்த மக்களாயும் வாழ்ந்துள்ளனர். இரும்பின் தோற்றமும் ஏற்றமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்பு ஊழி மலர்ந்துள்ளது - திராவிட இனத்தின் முன்னோடி களான தமிழர்கள் இரும்பை நன்கு பயன்படுத்த முன் வந்தனர். இரும்பு ஓர் உயர்ந்த தாதுத் தனிமம். அதன் குறியீடு பெ (Fe) அதன் அணு நிறை 55.84; இது தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன் படுத்தி வரும் தனிமங்களில் ஒன்று. இதைத் தமிழர்கள் மிகத் தொன்மையான காலத்திலே நன்கு பயன்படுத்தத் தெரிந்துள்ளனர். கி.மு. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வழக்கில் இருந்து வந்தது. மிகத் தொன்மை யான காலத்திலேயே இரும்பைப் பிரித்தெடுத்து அதைப் பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்த வர்களாய் விட்டனர். கிடைக்கும் இடம் இரும்பு தனி நிலையில் மிக அரிதாகக் கிடைத்தது. இஃது இயற்கையன்னை மக்களுக்கு அளித்த அரிய நன்கொடையாகும். இது விண்ணினின்று விழும் கற்களிலும் எரிமலைப் பாறைகளிலும் சிறுசிறு துணுக்குகளாகக் கிடைக்கிறது. இரும்புக் கூட்டுக்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. மண்ணிலும் அதிகமாக நீர்நிலைகளி லுள்ள நீரிலும் தாவரங்களிலும் உதிரத்திலும் இரும்புக் கூட்டுக்கள் உள்ளன. பெரும்பாலும் எல்லாக் கனிமங்களிலும் இரும்பு சிறிது உள்ளது. முக்கியமாக இரும்புத் தாதுக்கள் ஆக்ஸைடுகளும் கார்பனேட்டுகளுமாகும். மாக்னடைட் (Fe3 O4) கெ (ஹ) மடைட்டு (Fe2 O3) இலியோனைட்டு (2 Fe2 O3 3H2, O), சிடரைட்டு, சாலிபைட் போன்றவை முக்கியமான இரும்புத் தாதுக்கள் என்று கூறப்படு கின்றன. இரும்பு ஆக்ஸைடு தாதுக்களைக் கரியுடன் கலந்து உருக்கி உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் இரும்பில் கரி சிறிதளவு கலந்திருக்கும். கரியின் விகிதமும் அது கலந்துள்ள வகையும் இரும்பின் பண்புகளை நிருணயிக்கிறது. இவற்றிற்கேற்ப (1) வார்ப்பு இரும்பு (Cast iron) (2) எஃகு (Steel) (3) தேனிரும்பு (Wrought Iron) என மூன்று வகையான இரும்புகள் உள்ளன. இரும்பு வகைகள் இரும்பு இன்றி நாகரிகம் வளர்ந்திருக்க முடியாது. புகை வண்டி, பேருந்து வண்டிகள், கப்பல்கள், பாலங்கள், பத்து இருபது மாடிக் கட்டிடங்கள் போன்றவை எஃகு இன்றி அமைக்க முடியாது. சுத்தமான இரும்பு கிடைத்தற்கரிய பொருளாகும். இரும்பு எப்பொழுதும் சிறிதளவு கரிப் பொருள்களுடன் கலந்தேயிருக்கும். இந்தக் கரிதான் இரும்பின் குணங்களை மாற்றி விடுகிறது. கரியே இரும்பின் வலிமைக்குக் காரணமாக இருக்கிறது. கரியின் கலப்பு அளவே வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு என்று மாற்றி விடுகிறது. வார்ப்பிரும்பில் 4 சதவிகிதம் கரி கலந்துள்ளது. இது கடின மானதாக இருக்காது. எளிதில் உடைக்கக் கூடியது. சூடேற்றிச் சம்மட்டியால் அடித்து நீட்ட முடியாது. உருக்கி அச்சுக்களில் வார்க்கலாம். இதன் பயன் சிறிதேயாகும். தேனிரும்பில் கரி மிகக் குறைவாக உள்ளது. பண்டைய தமிழகத்தில் தேனிரும்பே அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது பல்வேறு உருவங்களில் காய்ச்சித் தட்ட ஏற்றது. சிறிது கூடக் கரி இல்லாத சுத்தமான இரும்பு உறுதியானதாக இருக்க முடியாது. இஃது எளிதில் துருப்பிடிக்காது. தேன் இரும்புத் துண்டுகள் சூடேற்றினால் ஒன்றொடொன்று இணையும்; எனவே இது நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. எஃகு இரும்பும் கரியும் ஒரு கலவைப் பொருள். இதில் கரியின் அளவு 1-7% வரை இருக்கும். இன்னும் மாங்கனிசு கந்தகம், பாசுவரம், சிலிக்கன் ஆகியவையும் இதில் உள்ளன. இதைச் சிவந்த சூட்டில் காய்ச்சித் தட்டலாம். சாதாரண சூட்டில் ஓரளவு உருவாக்கலாம். நன்றாகக் கடினமாவது இதன் முக்கியமான பண்பு. கரிப்பொருளே இதன் கடினத் தன்மைக்கு முக்கிய காரணமாகும். வலிமை இதன் மற்றச் சிறப்பியல்களின் ஒன்றாகும்.2 இரும்பின் வரலாறு இரும்பு தமிழ்நாட்டில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அரிய தாதுப் பொருளாகும் இது. பொன்னைவிட அதிகப்பயனுள்ளதாயும் அருமையானதாயும் மதிக்கப்பெற்றிருந்தது. மிகத் தொன்மையான காலத்திலே தமிழர்கள், எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீசு முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் தமிழர்களிட மிருந்தே இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர். 1837ஆம் ஆண்டில் இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி (Royal Asiatic Society) யில் வாசிக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் அறிஞர் கீத் (Heath) என்பவர் தென்னிந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்திற்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப் பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பழங்காலத்தில் உலைகளில் வெப்பம் குறைவாக இருந்ததால் இரும்பு தொடக்க நிலையில் சிறிய அளவில் உருக்கப் பட்டது. அப்பால் தோலினாலான துருத்தியைக் கண்டுபிடித்து, பெரிய அளவில் இரும்பை உருக்கி பல்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்தி வர முற்பட்டனர். பண்டைக் காலத்தில் கல்லாலும் மண்ணாலும் கட்டப்பெற்ற சிறிய உலைகளில் இரும்புக் கனிமங் களின் பொடியை மரக்கரியுடன் சேர்த்து உருக்கிச் சுமார் 70,80 இறாத்தல் எடையுள்ள இரும்புக் கட்டிகளை உற்பத்தி செய்து வந்தனர். மூங்கில் குழாயினாலும், தோலினாலும் மரப் பலகையினா லும் செய்யப்பட்ட துருத்திகளால் ஊதப்பட்ட காற்றினால் உலை முகத்தில் கரியை எரித்து 10, 12 மணி நேரத்திற்குப் பிற்கு உலையை உடைத்து இரும்புக் கட்டியை எடுப்பர். அக்கட்டி உருகின கரிச் சாம்பலோடும் பிற அசுத்தப் பொருள்களோடும் கலந்திருந்தது. அப்பால் அதைக் கரி அடுப்பில் காய்ச்சி சம்மட்டியால் அடித்து இரும்புப் பாளங்களாகச் செய்தார்கள். தில்லியின் (Delhi) அண்மையில் உள்ள குத்துப்மினாருக்கு அருகில் உள்ள இரும்புத் தூண் இந்தியாவிலே செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அது கி.பி. 300இல் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இத்துணை ஆண்டுகளாக அந்த இரும்புத் தூண் காற்றிலும் மழையிலும் வெயிலிலும் அடிபட்டும் துருப்பிடிக்காது இருந்து வருவது கண்டு அறிஞர்கள் வியப்படைகின்றார்கள். இந்தூருக்கு 30 கல் தொலைவில் உள்ள தார் என்னும் இரும்புத் தூண் குப்தர்கள் காலத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. இரும்பு களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கரித்தூளைப் பக்கங்களில் நிரப்பிச் சிறுகளிமண் பாத்திரங்களில் வைத்து அதன் வாயைக் களி மண் சாந்தினால் பூசி, அடைத்துக் கரியடுப்புகளில் வெண்சூடாகும் வரையில் வைத்துக் காய்ச்சிச் சில மணி நேரம் சென்றதும் பாத்திரங் களை எடுத்து ஆற வைத்து உறுதியானதும், கடினமானதுமான எஃகைத் தயாரிக்கும் முறையைத் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே அறிந்திருந்தனர். இதனால் தமிழகத்தில் ஏராளமான போர்க் கருவிகளும், வீட்டு உபயோகத்திற்கு உரிய அரிவாள்மணை, தேங்காய்த் துருவி, வெட்டரிவாள், தேங்காய்க் கீறி, கரண்டி, சட்டி, அகப்பை போன்றவையும் செய்யப்பட்டன. இந்தியாவில் கி.பி. 400ஆம் ஆண்டில் முதன்முதலாக உட்சு (wootz) என்ற பெயரில் எஃகு செய்யப்பட்டது. ஏராளமாக ஐரோப்பா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உட்சு என்னும் எஃகு மூலம் உலகப் புகழ் பெற்ற டமாசின் என்னும் கத்திகள் செய்யப்பட்டன. எஃகைக் காய்ச்சித் தண்ணீரில் அவித்து எஃகைக் கடின மாக்கும் முறையைப் பிற நாட்டினர் இந்தியரிடமிருந்தே அறிந்தனர். சென்ற நூற்றாண்டில் இரும்பையும் எஃகையும் தயாரிக்கச் சில முயற்சிகள் செய்யப்பட்டுப் பின் கைநழுவ விடப் பட்டன. பிரிட்டிசு இந்தியாவில் வடஇந்தியப் பகுதிகளில் இரு இரும்புத் தொழிற்சாலைகள் நிறுவப் பெற்றன. சுதந்திர இந்தியாவில் பிலாய், ரூர்கேலா, துர்க்காபூர் முதலிய இடங்களில் அயல்நாட்டார் ஆதரவுடன் பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் நிறுவப்பட் டுள்ளன. சேலத்திலும் ஒரு சிறு இரும்புத் தொழிற்சாலை அரும்பி யுள்ளது. சில ஆண்டுகளுக்குள் பெங்களூர் விசாகப்பட்டினம் பரகீப் முதலிய இடங்களில் புது உருக்காலைகள் நிறுவத் திட்டம் தீட்டப்பட்டுள்ளன. இரும்புக் கனிமங்கள் (Iron Ores) இரும்பு, தனியாக நிலத்தில் வெட்டி எடுக்கப்படும் பொரு ளன்று. இரும்புக் கனிமங்களில் முக்கியமானவை கெமடைட் (Hematite) (Fe2O), மாக்னடைட் (Magnettite Fe3 O4), நீருடைய கார்பனேட்டான சிடரைட்டு (Fe CO3 x H2O) ஆகியவையாகும். இக்கனிமங்கள், அமெரிக்கா, கனடா, சோவியத் உருசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பேரளவிலும் ஐரோப்பாவிலும் ஆத்திரேயா முதலிய இடங்களில் மிகச் சிறிய அளவிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் இரும்புக் கனிமங்கள் பெரும் அளவில் உள்ளன. பீகார், ஒரிசாப் பகுதிகளில் 8,000 மிலியன் டன்களுக்குக் குறைவில்லாமல் குறைந்தது 60 சதவிகிதம் இரும்பையுடைய கனிமங்கள் உள்ளன. காஷ்மீரிலும் தமிழ்நாடு, ஆந்திரா, கன்னடம் முதலிய மாநிலங்களிலும் இரும்புக் கனிமங்கள் உள்ளன. இந்தியா வில் 9647 டன் உயர்தரக் கனிமங்கள் உள என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இன்னும் மட்டவகைக் கனிமங்கள் ஏராளமாக உள்ளன. இந்தியாவில் இரும்புக் கனிமங்கள் நிலத்தின் மேற்பரப்பில் மலைக்குன்றுகளாக உள்ளன. மலைகளில் சிறு தொளைகளிட்டுக் குடைந்து அவற்றினுள் வெடிமருந்தைச் செலுத்தி வெடிக்கச் செய்து அதில் கிடைக்கும் கனிமங்களைச் சேகரித்துப் புகைவண்டிகளில் ஏற்றி இரும்புத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பு கிறார்கள். நிலத்தின் அடியில் இரும்புக் கனிமங்கள் காணும் இடங்களில் சுரங்க வேலைகள் நடைபெறுகின்றன. அகழ்ந்து எடுக்கப்படும் கனிமத்தில் கலந்திருக்கும் கல்லையும் மணலையும் அகற்ற அதை நீரில் அலசியோ வலிவான காந்தங்களைப் பயன் படுத்தியோ துப்புரவு செய்கிறார்கள். கனிமத்தைக் கரியுடன் சுட்டுப் பஞ்சு போன்ற பொருளாகவோ சிறிய உருண்டைகளாகவோ செய்து அவற்றினின்று இரும்பைப் பிரித்தெடுப்பதில் சில வசதிகள் உண்டு. கனிமத்தைக் கரியுடன் கலந்து சூடேற்றினால் இரும்பு பிரிகிறது. கனிமத்துடன் சுண்ணாம்பைக் கலப்பதால் அதில் உள்ள சிலிகா அலுமினா முதலிய அசுத்தங்கள் அதனுடன் கூடி மூலக் கசடாகப் பிரிகின்றன. அறிவியல் வளர்ச்சி பெறாத தொன்மையான காலத்தில் தமிழர்கள் இரும்புக் கனிமங்களைக் கண்டுபிடித்துச் சிறிய களிமண் உலைகளில் தோல் துருத்திகளின் மூலம் இரும்பை உருக்கி வந்தனர். மரக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்கினர். இன்றுள்ள மாபெரும் இயந்திரங்களும், நிலக்கரியும் காற்றூதும் இயந்திரங் களும் மின் உலைகளும் இல்லாத காலத்தில் தமிழர்கள் முக்கியமான இரும்புக் கனிமங்களான மாகனடைப் கனிமங்கள் (Ores) கெமடைட் முதலியவைகளைக் கண்டுபிடித்து வார்ப்பிரும்பு, தேனிரும்பு, உருக்கு முதலியவைகளை உருவாக்கும் முறைகளைத் தம் பட்டறி வால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்து ஆயிரம் ஆயிரமாகப் படைக்கருவிகளையும், வீட்டுக்குரிய தட்டுமுட்டுப் பொருள்களை யும், பயிர்த் தொழில், தச்சுத்தொழில், வெண்கலப் பாத்திரம் செய்யும் தொழில், கொல்லர் தொழில் முதலியவற்றிற்கு இன்றியமையாத உளி, சுத்தியல், வாள், குறடு, இடுக்கி, அரம் முதலிய பொருள்களை எல்லாம் செய்து குவித்துள்ளதைக் கண்டு உலகம் பெரும் வியப்படைந்துள்ளது. தென்னிந்தியா புதிய கல்லூழியின் தொடக்க காலத்திலே இரும்பு ஊழியில் அடியெடுத்து வைத்து விட்டது ஒரு வியத்தகு செய்தியாகும். அது புதுக் கல்லூழியினின்று வெண்கல ஊழியை அடையவில்லை. அது புதுக் கல்லூழியின் தொடக்க காலத்திலே இரும்பு ஊழியை அடைந்து விட்டது என்பதற்குரிய சான்றுகள் அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் மாவட்டங்களிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வராயன் குன்றுகளிலும் அங்குமிங்கும் சிதறுண்டு கிடக்கின்றன. இஃதன்றித் தென்னிந்தியாவின் ஏனைய பல பகுதி களிலும்கூடப் புதிய கல்லூழியின் கலப்புள்ள சான்றடையாளங் களும் இரும்புப் பொருள்களும் கிடைத்துள்ளன. எங்கு இரும்பு உலகில் முதன்முதலாகக் கிடைத்துள்ளது என்று உறுதியான முடிபு காணப்படவில்லை. வடஇந்தியாவில் முதன் முதலில் இரும்பின் மூலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு உருக்கப்பெற்றுப் பின் தென் இந்தியாவிற்கு வந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அதில் அணுவளவும் உண்மையில்லை. தென் இந்தியாவில் வாழ்ந்த புதிய கல்லூழி மக்கள் தற்செயலாக இரும்பைக் கண்டு அது படிககற் பாறையைவிட நீடித்து உழைக்கக் கூடியது என்று கண்டனர். தென் னிந்தியாவில் இரும்பை உருக்கி அதைப் பல்வேறு கருவிகளாகச் செய்து பயன்படுத்தும் பாங்கு ஐரோப்பாவைவிட மிகத் தொன்மை யான காலத்திலிருந்து நிலவி வந்துள்ளது. அது பின்னர் அயல்நாடு களிலும் - சிறப்பாகக் கிரீட், கிரீசுவரை பரவியுள்ளது - தென் னிந்தியாவைப்போல் அங்கும் பல கட்டிடங்களாகவும், நினைவுச் சின்னங்களாகவும் எழுந்துள்ளன.3 இரும்பு கிடைத்த இடம் ஆதித்தநல்லூரில் இரும்புப் பொருள்கள் கிடைத்தன. ஆனால், அங்கு இரும்பு கிடைக்கவில்லை. தென் இந்தியாவில் இரும்புப் பொருள்கள் கிடைத்ததால் அங்கு இரும்புத் தாதுக்கள் கிடைத்திருக்கலாம் என்று எண்ணுவதில் தவறிருக்கமுடியாது. தென் இந்தியாவில் இரும்பு ஊழி அரும்புவதற்கு, அதன் புவியியல் அமைப்பே முக்கிய காரணமாகும். அங்குள்ள பாறைகள் கருங்கற் பாறைகளாக அமைந்திருக்கின்றன. எனவே அப்பாறைகளில் இரும்புக் கனிமங்கள் (Iron ores), மாங்கனீசு (Manganese), பொன் வண்டல் (Gold Deposits) ஈயம் போன்ற பொருள்கள் அடங்கி இருக் கின்றன. சேலம் மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் குன்றுகளிலும் நீலகிரி, பழனி, ஆனைமலை, ஏலக்காய் குன்று (Cardaman Hills) முதலியவற்றிலும் நெல்லூரினின்று மகாநதி (Mahanadhi) வரை கிழக்கு மலைத் தொடர்களிலும் இரும்புக் கனிமங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கார் னோக்கைட்ச் (Charnockites) என்று இன்றும் அழைக்கப்பட்டுவரும் கருங்கல் (Granite) பெரிதும் காணப்படுகிறது. இப்பாறைகளில் உள்ள காடிப்பொருள் (Acid) களிலிருந்து கடும் குனைப்பான இரும்புச் சிட்டங்கள் (Altra baeik) வரையும் அடங்கியுள்ளன வென்று மண்ணூல்கள் சான்று தருகின்றன. ஆந்திர நாட்டில் மயில்குன்றில் உள்ள கடிகாநூர்ப் பகுதியில் வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த முதுமக்கள் பயன்படுத்திய கோடரி போன்ற கருவிகள் இப்பொழுது கிடைத்துள்ளன. இஃது அந்தப் பகுதிக்கு மிகப்பெருமை அளிப்பதாகும் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். அதோடு, அங்கு நீராவித் துளைகளுள்ள எரிமலைக் குழம்புத்துண்டுகள் நிறைந்த மண்மேடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பெல்லாரியின் குன்றுமுகம் என்று குறிப்பிடப் படுகிறது. இது புதிய கற்காலம் நிலவிய இடமாக எண்ணப்படுகிறது. மேலும் இங்குக் காணப்படும் இரும்பு உருக்கிய உலோகக் கசடுகளின் உள்ளார்ந்த தன்மை யிலிருந்து இஃது இரும்பு ஊழி நிலவிய இடம் என்று எளிதில் முடிவிற்கு வரமுடியும். மேலும் இங்குள்ள கறுத்த அல்லது சிவந்த இரும்பு உயிரகைக் கனிப் பொருள்களின் எச்சமிச்சங்கள் அதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், ஒருவேளை புதிய கல் ஊழியினின்று பின் தொடர்ந்து வந்த இரும்பு ஊழியில் மனிதனுடைய மேம்பாட்டின் வளர்ச்சி படிப் படியாய் வளர்ந்து வருகிறது. புதிய கல்லூழி இரும்பு ஊழிக்கு மிக அமைதியான முறையில் கடந்து சென்றுள்ளது என்று தெளிவாய்க் குறிப்பிடலாம். பெல்லாரியன் குன்றுமுகம், இதற்குப் போதிய சான்று அளிக்கிறது. சப்பானிய இரும்பு ஆய்வுத்துறை வல்லுநர், தென்னிந்தியாவில் இரும்புக் கனிகள் இருந்தன; ஒரு காலத்தில் அங்கிருந்து இரும்பு அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாயிற்று என்று கூறுவது நமக்கு ஆக்கம் அளிப்பதாகும்.4 தென் இந்தியாவில், செம்பு ஊழியோ வெண்கல ஊழியோ தோன்றியதில்லை; புதிய கல்லூழியைத் தொடர்ந்து அதன் தொடக்க காலத்திலே இரும்பு ஊழி அரும்பிவிட்டது. முந்துற எழுந்த இரும்பு ஊழியின் எஞ்சிய கூறுகளுடன் புதிய கல்லூழியின் எஞ்சிய பொருள்களை அருகருகே வைத்து ஆய்ந்தால், அனந்தப்பூர், கடப்பை, கர்நூல், நீலகிரி மாவட்டங்களில் பெரிய அளவில் இரும்புக்கனிமங்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடப்பது தெரிய வரும். திருநெல்வேலி மாவட்டத்தில உள்ள சேர்வராயன் குன்றுகளி லும் (Shevroy Hills) தென் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இரும்புக் கருவிகளும் புதிய கற்காலக் கலவையின் தடங்களும் அடங்கியுள்ளன. இரும்பு எங்கு முதலில் கண்டுபிடிக்கப்பட்டு உருக்கப்பட்டது என்பது இன்னும் முடிவாகத் தீர்மானிக்கப்பட வில்லை. இரும்பு வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து தென் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது என்று கூறுவதில் உண்மை யில்லை. தென் இந்தியாவில் உள்ள புதிய கல்லூழியைச் சேர்ந்த மக்கள் தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்துள்ளனர். அது படிகப் பாறையைவிட வலிவுள்ளதாய் நீண்ட காலமாயினும் கெட்டுப் போகாததாய்க் காணப்பட்டது. ஐரோப்பாவை விட மிகத் தொன்மையான காலத்தில் தென் இந்தியாவில் இரும்புத் தொழில் அரும்பி ஏற்றம் பெற்றுள்ளது என்றுகூடக் கூறலாம். அது தென் இந்தியாவில் தோன்றிக் கிரீட், கிரீசு முதலிய பிற நாடுகளுக் கெல்லாம் பரவத் தொடங்கியது. அங்குத் தென் இந்தியாவைப்போல் பல வழிகளிலும் இரும்புப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு அந் நாட்டிலுள்ள அரண்மனைகளும் அரண்களும் நினைவுச் சின்னங் களும், கோயில்களும் அழகும் உறுதியும் நல்ல அமைப்பும் உடையன வாய் விளங்கின என்று திரு. வி.ஆர். இராமச்சந்திர தீட்சதர் அவர்கள் தம் சீரிய நூலான வரலாற்றிற்கு முந்திய தென் இந்தியா என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.5 ஆதித்தநல்லூர் அகழாய்வில் 32 வகையான இரும்புப் படைக் கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் முயன்று அகழ்ந்து பார்த்தால் 50க்குக் குறையாத எண்ணிக்கையுள்ள படைக்கல வகைகளைக் கண்டுபிடிக்கலாம் - தமிழர்கள் கிறித்தவ ஊழி அரும்புவதற்குமுன் 30க்கு மேற்பட்ட வகையான இரும்புப் படைக் கலங்களைப் பெற்றிருந்தார்கள் என்பதே தமிழ் உலகம் பெருமைப் படுவதற்குரிய செய்தியாகும். இந்த வியத்தகு செய்தியை அறிந்து நானே பெருமிதம் அடைகின்றேன்; என் உள்ளம் என்றுமில்லாப் பூரிப்பெய்தியுள்ளது. தமிழன் உலக அரங்கில், தன் மார்பில் கையை வைத்துக்கொண்டு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இரும்பு ஊழியைக் கண்டு உலகிலே ஒப்பற்ற எஃகுப் பண்பாட்டை வளர்த்த, நனி சிறந்த நாகரிகம் வாய்ந்த பழம்பெரும் மக்களின் வழிவந்தவன் நான் என்று தைரியமாகக் கூறமுடியும். இரும்பின் பயன்கண்ட மக்கள் தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த பண்பாட்டை வளர்த்து நூறாயிரக்கணக்கான போர்க்கருவிகளை யும் தொழிற் கருவிகளையும் தட்டுமுட்டுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர். என்றாலும் அயல்நாட்டு மக்களையோ, தம் அண்டை நாட்டு உறவினர்களையோவென்று கொன்று அவர்களின் உழைப்பைக் கவர்ந்து, உண்டு கொழுக்க எண்ணியதும் இல்லை; செயற்படவும் இல்லை. தமிழர் தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை என்னும் அறநெறியை மறைமொழியாக மதித்து வாழ்ந்தவர்கள். நிற்க, தமிழர்கள் ஆட்சி, காலக்கொடுமையால் வீழ்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டைக் கவர வந்த, போர்ச்சுகீசியர்களோ பிரஞ்சு, ஆங்கிலேய வெள்ளைக்காரக் கொள்ளையர்களோ, பிறரோ (ஆரியர்களோ மொகலாயர்களோ) தமிழர் கண்ட இரும்புக் கருவி களைச் சேகரித்துப் பழம்பொருள் காட்சிச்சாலையில் வைக்க வில்லை தமிழர்கள் படைக்கலன்களைப்பற்றி எவ்வித நூலும் எழுதி வைக்கவில்லை. நான் என் இளமைப் பருவ முதல் தமிழர்களின் படைக்கலன் களைச் சேகரிக்கவும் அவர்களின் போர் முறைகள் போர்க்கருவிகள் போன்றவற்றைப் பற்றிய நூல்களைப் படிக்கவும் முயன்றுள்ளேன். நான் 1960ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலே வரலாற்றில் காணும் போர்முறைகளும் போர்க்கருவிகளும் என்ற நூலை எழுதத்தொடங்கிப் பல்லாண்டு கழித்து முடித்துள்ளேன். அந்நூல் இன்னும் அச்சேறவில்லை. 1962 ஆம் ஆண்டு ஆண்டகை எகர்ட்டன் (Lord Egerton) 1896இல் எழுதிய இந்தியாவிலும் கீழை நாடுகளிலுமுள்ள படைக்கலன் களின் விளக்கம் என்ற நூலின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில அரசோ, தொல்பொருள் ஆராய்ச்சித்துறையோ, பழம் பொருள் காட்சிச் சாலையோ, தனிப்பட்ட தொல்பொருள் சேகரிப்பாளர் களோ, பழங்காலப் படைக்கலன்மீது அக்கரை செலுத்தவில்லை என்பது நன்கு தெரிகிறது. இந்தியப் படைக்கலன்களின் சேகரிப்பும் புறக்கணிக்கப்பெற்றுள்ளது என்பது தெளிவாகக் காட்டப்பட் டுள்ளது. சென்னை, தஞ்சை முதலிய இடங்களில் உள்ள பழங் காலப் படைக்கலன்கள், பாமரமக்களாலும், போர்க் கருவிகளைப் பற்றிய ஆராய்ச்சி வல்லுநர்களாலும் அறிவியல் நிபுணர்களாலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டதால் அவை பழைய உலோகப் பொருள் களுக்கு விற்கப்பட்டு உடைக்கப்பட்டும் உலை. முகத்திலிட்டு உருக்கப்பட்டும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்று முற்கால மக்கள் எவ்விதமான படைக்கலன்களைப் பயன்படுத்தினர் என்பதற்கு நம்மிடம் எவ்விதச் சான்றும் இல்லை. இதைப்பற்றி 1896 ஆம் ஆண்டில் அண்ணல் எகர்ட்டன் நமக்கு அறிவுறுத்தினார். ஆனால் 1978ஆம் ஆண்டு வரை தமிழ் அறிஞர்களோ, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களோ இம்மி அளவும் அக்கரை காட்டவில்லை.6 நமது நாட்டில் பல்வேறு வகையான வாள்களும், வேல்களும், கைக்கோடரிகளும், கத்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நமது நாட்டிலுள்ள சிலைகள், வெண்கலப் படிமங்கள், அசெந்தா ஓவியம், அண்ணல் வாயில் ஓவியம், மற்றும் பல குகை ஓவியங்கள் மூலமும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதை குழிகளில் கண் டெடுக்கப்பட்ட இரும்புப் பொருள்கள் மூலமாயும் நன்கறியலாம் என்று பண்டைக்கால இந்தியாவும் போர்க்கலையும் என்ற நூலில் முனைவர் பி.சி. சக்கரவர்த்தி எடுத்துக் காட்டியுள்ளார்.7 (அ) பண்டைக் காலத்துத் திராவிட இந்தியாவில் பயன் படுத்திய இரும்பாலான ஈட்டி, எறிவேல், குத்துவாள், உடைவாள் இருபுறமும் கூர்மையுள்ள வளைந்த கத்தி (கிரீசு) முதலியவற்றைப் பற்றி ஆரியர்களுக்குத் தெரியாது. மாபாரதப் போரில் ஈட்டியும் வேலும் முக்கிய போர்க் கருவிகளாய் விளங்கின. அவை பல்வேறு பெயர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. மூவிலை வேல் தென்னிந் தியர்கள் பயன்படுத்திய தனிப்பெரும் படைக்கருவி. அது சிவ பெருமான் கரத்தில் ஏந்தப்பெற்ற சீரிய கருவியாகும். இந்தக் கருவி, எங்களுடையது என்று ஆரியரோ, சீரியரோ, மொகலாயர்களோ உரிமை கொண்டாட முடியாது என்று திரு.எ.பி. சந்திர சேகரன் பம்பாய் பவானி திங்கள் இதழில் விரிவாக பண்டைக் கால இந்தியப் போர்க் கருவிகள் என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார். தமிழர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள் நான் பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய போர்க் கருவி களைப் பற்றி எழுதிய வரலாற்றில் காணும் போர் முறைகளும் போர்க் கருவிகளும் என்ற நூலில் விரிவாகப் பல போர்க் கருவிகளைப்பற்றி விளக்கந் தந்துள்ளேன். நமது வருங்கால இளம் தலைமுறையாளர்கள் பண்டைக் காலப் படைக் கலன்களைப் பார்க்க முடியாமல் போனாலும் பெயர்களையாவது அறிந்திருக் கட்டும் என்று அவற்றை வகைப்படுத்தி ஒரு பட்டியல் அளித் துள்ளேன். எனது பட்டியலில் தமிழ்நாட்டில் நிலவிய எல்லா இரும்புப் படைக்கருவிகளும் அடங்கியுள்ளன என்று என்னால் உறுதியாகக் கூறமுடியாது. எத்தனையோ போர்க்கருவிகள் விடுபட் டிருக்கலாம் என்று துணிந்து கூறலாம். சிந்து வெளியைப் போல் புதையுண்ட நகரங்கள் ஒன்றைக்கூட அகழ்ந்து ஆயும் வாய்ப்புத் தமிழ்நாட்டிற்கு இதுவரை கிட்டவில்லை. அத்தகைய வாய்ப்பு எழுந்தாலன்றிப் பண்டைத் தமிழர் பயன்படுத்திய ஒரு நிறைவான படைக்கலன்களின் பட்டியலை நாம் பார்க்க முடியாது. இன்று நமக்குக் கிடைத்துள்ள தமிழர்களின் போர்க் கருவி களை மனத்திற்கொண்டு நாம் உலகில் ஒப்பற்ற நாகரிகத்தைப் பெற்று - வாழைபடி வாழையாகத் தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த வீரர்களின் மரபு வழியில் வந்த மக்கள் என்று பெருமிதத்தோடு நிமிர்ந்து நின்று உலகில் எவரிடமும் பேசமுடியும். உலக வரலாற்றில் எந் நாட்டிலும், தமிழகத்தைப்போல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்துணை வகை வகையான நூற்றுக்கணக்கான இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று எவரும் மெய்ப்பிக்க முடியுமா? முடியாது. காரணம், தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலே இரும்பு ஊழியும் இரும்புப் பண்பாடும் நிலவியது ஒன்று. மற்றொன்று தமிழர்கள் இறந்து போன மக்களோடு புதை கலன்களில் அவர்கள் பயன்படுத்திய படைக்கலன்களையும் பிற கருவிகளையும் வைத்துப் புதைக்கும் மரபு வழக்கம் ஆகும். ஆதித்த நல்லூர் ஈமக் காட்டை அகழ்ந்து ஆயும் வாய்ப்பு எழாமல் இருந்தால் நாம் இந்தப் பேற்றை எய்தி இருக்க முடியாது. நாம் நம் தமிழ் மக்களின் நலனைக் கருதி ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் கண்ட கருவிகளின் பெயர்களையும் பிற இலக்கியங் களில் கண்ட பெயர்களையும் வகுத்துத் தொகுத்து இதன் அடியில் தந்துள்ளோம். அதனைக் கண்டு தெளிக. தமிழர்களின் படைக்கலன்களும் அவற்றின் வகைகளும் (1) வாள் வகைகள் 1. உவணி 2. ஏதி 3. கடுத்தலை 4. துவட்டி 5. நவிர் 6. நாட்டம் 7. வஞ்சம் 8. வாள் (கட்கம், கரவாளம், நாந்தகம், வசி, மட்டாயுதம், தூவத்தி) 9. அரிவாள் (அரிகதிர், கத்தி, குனிக்குயம்) 10. கூன்வாள் (முகண்டி, சிறு வாள்) 11. கொடுவாள் (குயம், புள்ளம்) 12. ஈர்வாள் (வேதினம், கரபத்திரம்) 13. உடைவாள் (சுரிகை, பத்திரம்) 14. குத்துவாள் 15. புல்லரிவாள் (பன்னரிவாள்) 16. பாளை அரிவாள் 17. வெட்டரிவாள் 18. அங்குசம் (வளைந்த வாள்) 19. கண்டம் (குறும்பிடி) 20. கொடுக்கரிவாள் (2) குறுவாள் வகைகள் 1. குறும்பிடி 2. கைவாள் 3. கத்தி (சூரி) (3) வளைந்த வாள் வகைகள் 1. கோணம் (சரணம், கணச்சி) 2. இட்டி 3. ஈட்டி 4. கழுக்கடை (4) வேல் வகைகள் 1. அயில் (கைவேல், தோமரம், கப்பணம்) 2. அரணம் 3. எஃகம் (எறி ஆயுதம், பீலித்தண்டு, பிண்டிபாலம்) 4. எஃகு 5. குந்தம் (கைவேல்) 6. ஞாங்கர் (கைவேல்) 7. உடம்பிடி 8. விட்டேறு (5) மூவிலைவேல் (சூலம்) 1. கழு (காளம், நல்வசி, கழுமுள், மூவிலைவேல், முத்தலை வேல் கழுக்கண்) 2. காழ் 3. இரும்பு முள் (6) கோடரி வகைகள் 1. மழு (பாசு, பாலம்) 2. கணிச்சி (கண்ட கோடரி) 3. நவியம் (கோடரி, குடாரம்) 4. குந்தாலி 5. குளிர் 6. தண்ணம் (7) வில்வகைகள் 1. கார்முகம் 2. கோதண்டம் 3. துரோணா 4. சராசனம் (8) அம்பு வகைகள் 1. அம்பு 2. கணை 3. கதிரம் 4. கதிர் 5. கோ 6. கோல் 7. தொடை 8. தோணி 9. பகழி 10. பள்ளம் 11. புடை 12. வண்டு 13. வாளி 14. நெருப்புக்கணை 15. நச்சுக்கணை 16. மயக்குகணை 17. பூக்கணை (9) தண்ட வகைகள் 1. தடி (தண்டம், சீர், வயிரம், மழை, எறுழ், தண்டாயுதம்) 2. கதை 3. உலக்கை 4. கோல் 6. குறுந்தடி (10) கேடயம் 1. கிடுகு (தோலால் செய்தது) 2. பலகை (வட்டம், தட்டி) 3. வேதிகை (உலோகத்தாலானது) 4. குதிரைக் கேடயம் (11) பாசம் வகைகள் 1. பாசக் கயிறு (கச்சை, நாண்வடம், பழுதை, தாமம்) 2. வலைக்கயிறு (12) வச்சிராயுதம் 1. வச்சிரம் (முதுகெலும்பு) 2. வயிரப்படை (குலிசம், சம்பம், அசனி, சதகோடி) (13) சக்கர வகைகள் திகிரி (சக்கரம், நேமி, ஆழி, எஃகம், வளை, பாதி, ஒளி வட்டம், சுதரிசனம்) நிற்க, மேலே எடுத்துக்காட்டப் பெற்றவை தவிர, நமது சிற்ப நூல்கள், இலக்கிய நூல்கள், ஓவிய நூல்கள், புராண நூல்கள் போன்றவற்றினின்று 500க்கு மேற்பட்ட படைக்கலன்களின் பெயர் களைச் சேகரித்து அகர வரிசைப்படுத்தி என்னால் எழுதி வெளியிட இருக்கும் வரலாற்றில் காணும் போர் முறைகளும், போர்க் கருவி களும் என்ற நூலில் ஒரு பட்டியல் இணைத்துள்ளேன். விரிவஞ்சி அவை அனைத்தையும் இங்குக் குறிப்பிடாது விடுத்துள்ளேன். வில், உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் உள்ள மலைவாழ் மக்களிடம் இன்றும் காணப்பட்டு வருகின்றது. அஃது இன்று பல நாகரிகம் பெற்ற நாட்டு மக்களிடம் காணப்படுகின்றது. பண்டைய தமிழ்நாட்டுக் குன்றக் குறவர்களிடமும் போர் மறவர்களிடமும் பல்வேறு வகையான வில்கள் இருந்தன. தமிழ்நாட்டுத் தெய்வங்கள் சில வில்லேந்தி இருந்தன என்று பழங்கதைகள் சொல்லுகின்றன. வில்லைப் பயன்படுத்துவதில் பண்டைய தமிழர்கள் தனித்திறன் வாய்ந்தவர்களாய் இருந்து வந்தனர். போர்க் களத்தில் மிக்க சக்தி வாய்ந்த படைக்கலன்களில் ஒன்றாகத் தமிழர்கள் வில்லைப் பயன் படுத்தி வந்தனர் பழங்காலத்தில் தமிழர்கள் அம்புகளின் நுனியில் எஃகுக் கவசம் பூட்டி அதை நன்கு பயன்படுத்தி வந்தனர். அவை மனித உடல்களை மட்டும் அன்றி விலக்குகளின் உடல்களையும், மரங்களையும் துளைத்துச் செல்லத்தக்கனவாய் இருந்தன என்று கூறப்பட்டுள்ளன. ஆந்திர நாட்டில் அசந்தா ஓவியங்களிலும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிற் சிற்பங்களிலும் வில் ஒப்பற்ற படைக் கருவியாய் விளங்கியது என்று திரு சந்திரசேகரர் பவாணி என்னும் திங்கள் இதழில் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார்.7 (அ) ஆதித்தநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட படைக்கலன் களில் (Arms) பகைவர்கள்மீது பாய்ச்சுவதற்கு ஏற்ற எடை குறைந்தவை ஏறிவேல் (Javelin) ஈட்டி (Spear) போன்றவையாகும். இவை திராவிடமக்கள் போர்க்களங்களில் பயன்படுத்தும் முக்கிய மான கருவிகளாகும். இத்தகைய படைக்கலன்களைச் சில வேதகால ஆரியர்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் இந்தியா விற்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன் இத்தகைய கருவிகளைப் பயன்படுத்தி வந்தனர் என்று கூறுதற்கு எள்ளளவும் சான்று இல்லை. பாரதப் போரில் ஆரியர்கள் திராவிட அரசனான கிருட்டிணன் துணையைப் பெற்றனர். திராவிடர்கள் கண்ட சிறந்த படைக்கலன் களான வாள், வேல், ஈட்டி, குத்துவாள் போன்ற போர்க்கருவிகளைத் தாங்கிப் போர் நடத்தினர். பல, திராவிடர்களின் போர்க்கருவிகள் சக்தி, குண்டா, குணபா, சாலியம் போன்ற வட மொழிப்பெயர்கள் தாங்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மூவிலைவேல், திரிசூலம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. இந்த மூவிலைவேல் முத்தலைவேல் என்னும் ஒருவகை ஈட்டி. இது தமிழர்களின் தனிப்பெரும் கடவு ளான சிவனார் கரத்தில் உள்ளது என்று பழங்கதைகள் கூறுகின்றன. சிவபெருமான் திருக்கரத்தில் உள்ள போர்க் கருவியாக அவர் வீற்றிருக்கும் கயிலைமலையில் உள்ள மூன்று சிகரங்களான நந்தாகுன்றி, நந்தகோடு, நந்தாதேவி என்பவை (மூவிலை வேலாகக்) கற்பனை செய்யப் பெற்றுள்ளன. சிவபெருமான் ஐந்து தலைகளை யும் பத்துக் கரங்களையுமுடைய மாதேவன் (மகேசுவரன்) ஆக ஏற்றப்பட்டுள்ளார். அவருடைய பத்துக் கைகளிலும் பாசம், பரசு, முத்தலை வேல், சூலம், ஈட்டி முதலிய பல கருவிகள் இருப்பதாகக் கூறப் பெற்றுள்ளன. தமிழர்களின் மறையான ஆகமங்களிலும் மறை நூலான திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருவாசகம் போன்றவற்றிலும் பல போர்க்கருவிகளின் பெயர்கள் தரப்பெற் றுள்ளன. இதனை முன்னாள் பம்பாய் மாநில அரசின் அமைச்சரும் சிறந்த சிவபக்தருமான காலஞ்சென்ற திரு. கே.எம். முன்சி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பவானி என்னும் திங்கள் ஏட்டில் அறிஞர் சந்திரசேகரன் அவர்கள் மீண்டும் திறம்பட நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். இந்தியாவின் தாதுப்பொருட் செல்வம் இரும்புக் கனிச் செல்வம் சிறப்புமிக்க முக்கியத்துவம் வாய்ந்ததுவாம். இந்தியாவின் இரும்புக்கனிச் செல்வம் 300 கோடி டன்கள் இருக்கும் என்பது குறைந்த அளவுக் கணிப்பு. பிரிட்டனில் 225 கோடி 40 லட்சம் டன்கள், செர்மனியில் 137 கோடி 40 லட்சம் டன்கள். அமெரிக்காவிலும் பிரான்சிலும் மாத்திரம் இந்தியாவை விட அதிகமான இரும்புக்கனிகள் உள்ளன என்று மதிப்பிடப் பட்டன. இந்திய பூ வேதியல் பரிசீலனைத் துறை சீசில் சோன் மூலதனம் (Capital) என்ற இதழில் 1929ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை. இந்தியா உரிமை பெறுமுன் 1933ஆம் ஆண்டில் இராயல் எம்பயர் சொசைட்டி (Royal empire society)Æ‹ ஆதரவில் சர் அல்பிரட்வாட்சன் என்பவர் அடியில் வரும் உண்மைகளை உலகிற்கு உணர்த்தியுள்ளார். தொழில் துறையில் இந்தியா பல வாய்ப்புகளை இழந்து விட்டது. இதற்கு (அன்று) ஆட்சிப்பீடத்தைக் கவர்ந்து அதில் அமர்ந்திருந்த ஆங்கில ஆட்சியே பொறுப்பாகும் ... ஒரு பெரிய இயந்திரத்தொழில் நாடாக ஒளிர்வதற்கேற்ற சூழ்நிலைகள் அனைத்தும் மிகுதியாக இருந்தும் பொருளாதாரத் துறையிலும், தொழில் துறையிலும் இந்தியா இன்று உலகின் பிற்போக்கான நாடு களில் ஒன்றாய் இருக்கிறது ... இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் பிற்போக்கினை நாம் ஒரு பொழுதும் அக்கறையுடன் தீர்க்க முன் வரவில்லை.8 இந்தியா, தன் நாட்டுமக்களின் தேவைகள் பெருகுவதின் அடிப்படையில் அடுத்துவரும் ஆண்டுகளில் இதுவரை கண்டிராத வேகத்தில் இயந்திரத் தொழில் வளர்ச்சி அடையாவிட்டால் இன்றே அஞ்சத்தக்க அளவுக்குத் தாழ்ந்திருக்கும். நாட்டின் வாழ்க்கைத்தரம் பட்டினிகிடக்கும் நிலையைத் தாண்டிவிடும் -(என்று இலண்டன் டைம்சு பத்திரிகை 4-1-1933இல் எடுத்துக்காட்டியுள்ளது. இன்னும் இந்திய மண்ணின் அடியில் புதைந்து கிடக்கும் கனி வளங்களையும் எடுத்தக்காட்டியதோடு இந்திய உணவு உற்பத்தியிலும், இயந்திர நெசவிலும் நாம் செய்ய வேண்டிய துணி உற்பத்தியும், புள்ளி விவரங்களையும் இந்தியாவைத் தந்தை நாடாகவும், இங்கிலாந்தைத் தாய் நாடாகவும் எண்ணிப் பணியாற்றிய அனைத்துலகப் பொது வுடைமை இயக்க மாபெருந் தலைவர் தோழர் இரசினி பாமிபத்ததர் இன்றைய இந்தியா என்ற நூலில் (4-11-1947இல்) தமிழில் மொழி யாக்கம் பெற்ற நூலில் எடுத்துக்காட்டினார். அவர் இரும்பைப் பற்றி மட்டுமன்றி, இந்தியாவின் கனிப்பொருள், விளைபொருள், செய் பொருள் அனைத்தையும் பற்றிய புள்ளி விவரங்களையும் எடுத்துக் காட்டி இந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். பிரிட்டிசு அரசு ஆற்றிய கொடுமைகளை ஒவ்வொன்றாய்த் தம் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார்.5 சப்பான் நாட்டில் வாழ்ந்த தாதுப்பொருள் ஆராய்ச்சி வல்லுநர் களில் (Metallurgist) பேரும் பெருமையும் பெற்றவர் பேராசிரியர் கோவலாந்து என்பவராவர். இவர் சப்பான் தீவுகளில் பல்வேறு பகுதிகளில் இரும்பு கிடைக்கும் இடங்களை அறியச் சுற்றுப்பயணம் செய்து பல இரும்புச் சுரங்கங்களைக் கண்டுபிடித்துச் சப்பான் நாட்டின் இரும்பு வளத்திற்கு ஆக்கம் அளித்த அறிஞர் ஆவர். அவர், இரும்பைக் கண்டு பிடித்ததும் அதை உருக்கும் முறைகளைக் கண்டுபிடித்ததும் எதிர்பாராத ஒருநிகழ்ச்சியாக இருந்திருக்கலாம். ஆனால், ஐரோப்பாவைவிட மிக மிகத் தொன்மையான காலத்தில் இந்தியத் தீவகத்தில் தொழில் நுட்பம் உணர்ந்த பேரறிஞர் உள்ளத் தில் இரும்புத் தொழில்துறை எதிர்பாராத நற்பேறாக அரும்பி யிருக்க வேண்டும். இரும்பைப் பயன்படுத்தியபின் தென் இந்தியாவில் தாராளமாக எங்கும் கிடைக்கும் நிலை எழுந்தபின் அயல்நாடு களுக்கும் சிறப்பாக கிரீட், கிரீசு நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்திருக் கலாம். கிரீட், கிரீசு முதலிய நாடுகளிலுள்ள நினைவுச் சின்னங்களாய் எழுந்த கட்டிடங்களிலும் கோயில்களிலும் இரும்பு பயன்படுத்தப் பட்டு தென் இந்தியாவைப்போல் பல்வேறு வகைகளில் சிறப்புற்று ஆரம்பித்துள்ளது. கிரேக்க நாடும் கிரீட் தீவும் ஏனைய மேற்கத்திய நாடுகளும் தங்களுடைய புதிய கல் ஊழியைக் கடந்து இரும்புப் பண்பாட்டினைக் கூட அடையத் தொடங்கிவிட்டன. கல் ஊழி மனிதன் முதன்முதலாக மலைகளில் வாழ்ந்துவந்தான். அவன் உணவின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்த நிலைமையும் அடர்ந்த காடுகளின் புற எல்லையைக் கடக்க எண்ணும் ஆர்வமும் அவன் வாழ்க்கையில் ஒரு புதுமையைக் காணச்செய்தது. இரும்பு உலோகக் fU(Iron ore)it¡ கண்டுபிடித்த பின்னர்தான், பழங்கால, குன்றில் வாழ்ந்த முதிராப் பண்புடைய மனிதன் மலையினின்று இழிந்துவரும் ஆற்றின் கரைகள் வழியாக மலை அடிவாரத்திற்கு இறங்கிவந்து அடர்ந்த காடுகளை அடைய முற்பட்டான். அவன் காடுகளின் வாழும் முறையைப் பயின்றான். ஆகையால் இரும்புப் பண்பாடு தான் குன்றுகளில் வாழ்ந்த குறிஞ்சி நில மக்களை மலை அடிவாரத் தில் அமைந்துள்ள காடார்ந்த முல்லை நில வாழ்க்கைக்கு மேவ வழி காட்டியது. இதுதான் முதிராப் பண்புடைய முதுமக்களான கல்லூழி மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய நிலையாகும். இதுவே பழங்கால மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான முதற்படி யாகும்.8 சிந்துவெளிப் பண்பாடும் - ஆதித்தநல்லூர்ப் பண்பாடும் சிந்துவெளியில் மொகஞ்சதாரோவை முதன்முதலாக 1922 ஆம் ஆண்டு வங்கப் பேராசிரியர் ஆர்.டி. பானர்ச்சி. முன்னின்று அகழாய்வு நடத்தினார். அகழ்ந்து ஆய்ந்து ஒரு பெரிய நகர் 70 அடி ஆழத்தின் கீழ் இருப்பதைக் கண்டு பிடித்து அதற்கு இறந்தார்களின் நகரம் என்னும் பொருள் பட மொகஞ்சதாரோ என்னும் பெயரை அளித்தார். அவர்தாம் முதன்முதலில் சிந்துவெளிப் பண்பாடு, செம்பும் மண்ணும் கலந்த சால்கோலிதிக் (Chalcolithic age) காலம் என்னும் ஊழியில் எழுந்த திராவிடப் பண்பாடு என்று உலகிற்கு உணர்த்தினார். இவர் ஏற்கெனவே ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வைப் பற்றி நுணுகி உணர்ந்திருந்தார். எனவே திராவிடப் பண்பாடு தென் இந்தியாவின் தென்கோடியினின்று வடஇந்தியா முழுவதிலும் பரவிப் பலுச்சிசுத்தான் வழியாகப் பாரசீகம் ஈரான் பக்ரைன்தீவு முதலியவைகளிலெல்லாம் பரவி கிரீட்தீவு வரை பரவியுள்ளது என்று கூறினார். திராவிடப் பண்பாடு ஆதித்தநல்லூரில் அரும்பி அரப்பா வரை அறுந்து போகாத சங்கிலித் தொடர்போல் திகழ்கிறது என்று சர் ஜான் மார்சல் அவர்களுக்குத் திராவிடப் பண்பாட்டின் தொன்மையை எடுத்துக்காட்டினார். 1927ஆம் ஆண்டு கல்கத்தாவி னின்று வந்த மாடர்ன் ரெவியூ என்ற திங்கள் வெளியீட்டில் திராவிடப் பண்பாடு என்னும் தலைப்பில் மூன்று தொடர் கட்டுரைகள் எழுதித் தமிழர்களின் தொன்மையான நாகரிகச் சிறப் பிற்கு ஆக்கந் தேடினார். ஆதித்தநல்லூரில் அரும்பியது இரும்பு ஊழியில் கண்ட இரும்புப் பண்பாடு என்று உலகதிர மொழிந்தார்.9 அதன் பின்னர்ச் சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியரும் தொல்பொருள் ஆய்வுத்துறைப் பேராசிரியருமான திரு. வி.ஆர். இராமச்சந்திர தீட்சதர் ஆதித்தநல்லூரில் அரும்பியது உலகில் ஒப்பற்ற இரும்புப் பண்பாடு என்றும், அது கி.மு. எட்டா யிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றும், தமிழர்களின் தொழில்கள் உயரவும் வாணிகம் வளரவும் வாழ்வு மலரவும் ஆழ் கடல் கடந்து கடல் வணிகம் பெருகவும் மூலகாரணமாக இருந்தது அவர்கள் கண்ட இரும்புப் பண்பாடே என்று 1951ஆம் ஆண்டில் அவர் ஆற்றிய உல்லியம் மெய்யர் சொற்பொழிவில் மிக விரிவாகத் திறம்பட எடுத்துக்காட்டினார். ஆதித்தநல்லூர் அகழ்வாய்வில் ஆழ்ந்த புலமைவாய்ந்த திரு. இராமச்சந்திர தீட்சிதர் தம் சொற் பொழிவின் மூலம் ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டிற்கு ஆக்கம் அளித்த நல்லாராக மதிக்கப்பட்டுள்ளார்.10 குறிப்புகள் - NOTES V 1. Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair - by Alexander Rea F.S.A. (Scot) (Madras) 1915. 2. கலைக் களஞ்சியம் தொகுதி இரண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை. முதற்பதிப்பு இரும்பு (சென்னை) 1955. பக்கம்: 82-84. 3. “According to a mighty authority the civilization of the Indus valley was one that had become already age old and stereotyped on the Indian soil. How old it is we cannot definitely say that this stretch of time but we can certainly say that it was in the later stage of the iron culture of South India; for in our opinion the iron culture of the South India may be dated from eight to Ten Thousand B.C. Therefore it is not strange that the Indian Culture had many millions of human endeavour behind it” -Pre-historic South India by V.R. Ramachandra Dikshitar M.A. (Madras) 1951. p. 243. (a) The period of the Indus Valley Civilization is regarded as to be from 3250-2750 B.C. by Dr.R.K. Mukerji on the basis of the remains traced, in the excavation of the only one of the seven layers. Below these layers also there are other layers. These excavations would give the Indus Valley Civilization a much earlier date than 3270 B.C. Anyway since the existing remains of the Indus Valley gave to the period of 3250 and since its information is available in the literature of the Aryan the Rigveda of 3250 to 2500 is regarded as Proto-Historic period in theAnalysis of the history of Ancient India. Due to this Consideration the Indus Valley Civilization is placed in the Proto-Historic period of the Ancient Indian History” - Ancient Indian History Civilization and Culture by P.S.Joseph M.A. & others. 4. Pre-historic South India-by Prof. V.R.Ramachandra Dikshitar M.A. (Madras) 1951. p. 75. 5. In South India there was no Bronze age or Copper age as such but it was the Iron age that succeeded the Neolithic age. If we study the Neolithic remains side by side with the relics of the early Iron age, a large quantity seems to be scattered as is found in the districts of Anantapur Cudappa and Kurnool also. The shevroy hills, the district of Tinnevelly and other parts of South India contain vestiges of the mixture of Neolithic and iron implements. It is not yet settled where iron was first found and smelted. There is no truth in the saying that it was introduced from North India to the South. Our belief is that the Neolithic people of South India should have come across iron accidentally and found it more durable and together than the trappoid rock. It may also be said that the iron industry in South India is more ancient than that of Europe. It began to speread to other countries especially to Crete and Greece where architectural monuments and shrines resemble in several respects the South Indian one” - Pre-historic South India - Prof. V.Ramachandra Dikshitar M.A. (Madras) 1951. pp. 95-96. 6. “Neither Collection is rich in the South Indian arms and it is a matter of regret that the Government in India while professing to watch over the preservation of archaeological remains has neglected to take advantage of the opportunity of acquiring old weapons from the armouries at Tanjore and Madras and allowed them to be broken up and the contents sold as old metal” - A Description of Indian and oriental Armour Rt. Hon. Lord Egerton of Tatton, M.A. (London 1896). 7. It is noteworthy that all these three types of Sword, are represented in the Frescoes and Sculpture, at Ajanta while kirich and pattisa blades have been found in the Tinnevelly urn burials” - Art of war in ancient India - Dr.P.C. Chakravarti, M.A., Ph.D. 1941. p. 14. 8. “The Knowledge and practices of this mighty weapon was not confined to North India. South India knew this weapon well from the beginning of its written History. The huge figure of warriors particularly that the Arjuna carved out in the Meenakshi Temple of Madura well might prove its existence in South India as an efficient instrument of fighting” - Apparatus of war in ancient India - A.P. Chandrasegaran (an article in Bhavans Journal) Bombay. 1959. (a) Javelin and spear which came next in importance were seldom used by Vedic Aryans although these weapons were not known to them. It was during the Mahabarata war that Javelin and spear attained importance and they were known by different names Sakti, Kunta, Kunapa, Salyan Sanka etc. The trident which was a kind of spear was popular in South India and its was believed that it was the weapon of Lord Siva who of all the three gods Creation, preservation, destruction commands the highest veneration and popularity among the South Indians. Thirukkural, the Tamil Bible mentions the lance in two places. Apparatus of war in ancient India - A.P. Chandrasegaran (Bhavans Journal. 27.12.1959) Bombay p.60. (b) It was Prof. Gowland the well-known metallurgist and explorer of the Japanese islands who expressed the opinion that the smelting of iron may have been hit upon by sheeraccident. The accident might have happened in peninsular India were according to the best minds the iron Industry is much more ancient than in Europe. After the use of iron became familiar in South India it began to spread in other countries specially Crete and Greece whose architectural monuments and shrines resemble in several respects those of South India. This is how Crete, Greece and other Western countries passed on also to iron culture from their Neolithic age. The stone age men were primarily living on hills and mountain fastnesses and also on the frings of rich forests ... Only after the discovery of iron ore it is resonable to suppose that primeval man took to the forest and made it his habits. Therefore it is only iron Culture that permitted the people of the hills to pass on to forest life” - Pre-Historic South India by V.R.Ramachandra Dikshitar M.A. Madras. 1951. p. 97. 9. Dravidian in South India such tombs vaults and cemetrles belong exclusively to the age of Iron. Iron implements, weapons and other objects are to be found in large numbers in the tombs vaults, coffins and urns. But this Iron age is not far distant from the end of the copper age, as along with Iron implements are to be found beautiful pots and other objects made of Bronze. Copper Age burials discovered in Northern India are very few in number but they prove the Iron age burials of South India to be a continuation and extension of the copper age methods of disposal of the Dead. It is perhaps well known that in India the remains of the copper age have not been discovered South of the Godavari but in that country copper and bronze were used for the manufacture of Art-ware, in discovered Iron age coffins. The Similarity of methods for disposae of the dead prove that the Iron age culture of Southern India is the lineal descendant of the Copper Age Culture of Northern India” - Dravidian Civilization by R.D. Banerji (Modern Review Calcutta) 1927, pp. 305, 553. 10. These graves at Adichanallur are to be dated in the early Iron Age which succeeded the Neolithic Age in South India” - Origin and Spread of the Tamils - Prof. V.R. Ramachandra Dikshitar M.A. (Madras) 1947. p. 21. “We can certainly say that it was in the later stage of the iron Culture of South India for in our opinion the iron Culture of South India may be dated from eight to 10,000 B.C. Therefore it is not strange that the Indian Culture had many millienia of human endeavour behind it” - Pre-historic South India by, Prof.V.R.Ramachandra Dikshitar M.A. (Madras) 1951, p. 243. இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibliography) 1. Catalogue of the Pre-Historic Antiquities from Adichanallur and Perumbair (Madras) 1915. 2. Ancient Indian History Civilization and Culture - P.S.Joseph and others (New Delhi). 3. Pre-Historic South India -V.R.Ramachandra Diksitar M.A. (Madras) 1951. 4. The Hindu Civilization - R.K. Mukerji. 5. The Indus Civilization - Dr.E.Mackay (2nd Edition). 6. A Description of Indian and Oriental Armour - Rt. Hon. Lord Egerton of Tatton M.A. (London) 1896. 7. Ancient Indian History Civilization and Culture - P.S.Josph and others (New Delhi). 8. Mohenjo Daro and the Indus Civilization - Sir John Marshall - Vo.1 (London) 1930. 9. Ancient History of the Near East - H.R.Hall. 10. Catalogue of the Pre-histories (Madras) - 1961 (Govt. Press, Madras). 11. Pre-Historic Pottery from Tinnevelly - Archaeological Survey of India 1903 and 1904. 12. Indian Pre-Historic and Proto Historic Antiquities Notes on ages and distribution (Govt. Press Madras) - R. Bruce Foote. 13. India legacy and worlds Heritage - Dravidian - Rao Saheb. P.R. Rangantha Punja Vol. 1-1948. 14. India Today - R.P. Dutt. (London). Trans. (ï‹iwa இந்தியா - இரசனிபாமி தத்தர் - 1949 - br‹id). 6. வெண்கலப் பொருள்கள் (BRONZE OBJECTS) இரும்பு ஊழியில் வெண்கலம் ஆதித்தநல்லூர்ப் பறம்பில் அகழ்ந்து ஏராளமான பழம் பொருள்கள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் வெண்கலப் பொருள்களும் ஒருவகை. வெண்கலப் பொருள்களில், பூம்படிக்கங் களும் சட்டிகளும் வளைகளும் சிறப்பானவையாகும். மக்கள் ஆதியில் நீர் அருந்தும் பாத்திரங்களாகச் சுரைக் குடுக்கைகளையும், தேங்காய்ச் சிரட்டைகளையும், ஓலைப்பட்டைகளையும், இலை களால் செய்யப்பட்ட தொன்னைகளையும் பயன்படுத்தி வந்தனர். பல்லாண்டுகள் சென்ற பின்னர்தான் மட்பாண்டங்களையும் பின்னர்ச் சுடுமண்பாண்டங்களையும் செய்தனர். நீர் அருந்தவும் சோறு சமைக்கவும், கறிவைக்கவும் கிண்ணங்களையும் கலயங்களையும் சட்டிகளையும் பானைகளையும் குடங்களையும் உருவாக்கினர். அப்பால் அவை எளிதில் உடைந்து போவதை அறிந்து வெண்கலத் தாலும், செம்பாலும் இரும்பாலும் கிண்ணம், சட்டி, பானை, குடம், அகப்பை, குவளை, பூக்கிண்ணம் போன்றவற்றைச் செய்ய முற் பட்டனர். மட்பாண்டங்களைப் போல் அல்லது கற்சட்டியைப் போல் செம்புக் குடங்களும், பித்தளைச் சட்டிகளும் வெண்கலப் பானை களும் எளிதில் செய்யக் கூடியவை அல்ல. பாடுபட்டுச் செய்தால் நீண்ட காலம் உடையாது. அழியாது பயன்படும். தமிழகத்தில் புதுக் கல்ஊழியின் தொடக்கத்தில் இரும்பு ஊழி எழுந்ததின் பயனாக இரும்புச் சட்டிகளும் இரும்பு உளி, சுத்தியல், குறடு, சம்மட்டி, வெட்டிரும்பு, இடுக்கி போன்றவையும் செய்யும் வாய்ப்பு எழுந்தது. எனவே, தமிழகத்தில் கொல்லர், கன்னார் போன்ற தொழிலாளர்கள் தோன்றி இரும்புக் கருவிகளால் வெண்கலம் ஏனங்களைச் செய்ய முற்பட்டனர். கன்னார்களின் பட்டறிவாலும் தொழில் திறமை யாலும் ஏராளமான வெண்கல ஏனங்கள் செய்து குவிக்கப்பட்டன. வெண்கல ஏனங்கள் ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட வெண்கல ஏனங்களில் இங்குப் படமிட்டுக் காட்டப்பெற்றவை குவளை, சாடி, தோசைக்கல், கிண்ணம், குடம், கெண்டி, சல்லடைக் குடிகலம், சிறு குவளைகள் போன்றவையும் பிறவுமாம். குவளைகள் பெரும்பாலும் கொறுவாய்களை யுடையனவாயும், உடைந்தனவாயும் இருக் கின்றன. முற்காலத்தில், வெண்கல ஏனங்கள் விலையேறப் பெற்றன வாயும் கிடைத்தற்கரிய பொருள்களாயும் இருந்தன. எனவே, வீட்டில் பயன்படுத்துதற்குரிய அரிய பொருள்களையெல்லாம் இறந்தவர்களோடு புதைக்காமல் இருந்திருக்கலாம். இறந்தவர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களை மட்டும் அவர்களோடு புதைத்திருக்கலாம். அதோடு பெரிய அண்டா, குத்துப் போணி, தவலை, வார்ப்பு, போணிச்சட்டி, குண்டாச்சட்டி போன்ற பொருள் களைச் சுடுமண்ணாற் செய்த தாழிக்குள் வைக்க முடியாது. எடை மிகுந்த அந்த வெண்கலச் சட்டிகளின் சுமையைத் தாழிகள் தாங்க முடியாது. அது மட்டுமன்றிப் பெரிய வெண்கலச் சாடிகள், பெரிய வெண்கலக் குடங்கள், செம்புப் பானைகள், செம்புச் சட்டிகள், பித்தளைச் சட்டிகள், வெண்கலப் பாவை விளக்குகள், வெண்கலக் குத்து விளக்குகள், தூக்கு விளக்குகள், நந்தா விளக்குகள் போன்றவை யும் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் கிடைக்கவில்லை என்பது நினைக்கத்தக்கதாகும். இங்குக் காட்டப்பட்ட படம் 11ல் எண் 1 முதல் 15 வரையுள்ள பாத்திரங்கள் எல்லாம் வெண்கலத்தால் செய்யப்பட்டவையாகம். 16 முதல் 30 வரை எண்ணுள்ள வெண்கலப் பொருள் பூக்கிண்ணம், பரல்கள், பாதச் சிலம்பு, காற் சதங்கை, வளையல், நாய், சேவல், மறிமான், ஆடு புலி போன்ற விலங்குகளையுடைய பூந்தட்டுகளும், பூக்கிண்ணங்களும், கண்கவர் வனப்புடையன. மெய்யாகவே செய்வினைத் திறம் வாய்ந்தவை என எவரும் ஒப்புவர். பூக்கிண்ணங்கள் பூக் கிண்ணங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத் தில் நிலவிய ஒப்பற்ற - உயரிய அரிய வியத்தகும் நாகரிகத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இலங்குகின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உலகிலேயுள்ள எந்த நாட்டு வரலாற்றுசிரியர்களும், தொல்பொருள் ஆய்வு வல்லுநர்களும் கி.மு. பத்தாயிரம் ஆண்டிற்கு பின்னன்றி ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கூட ஆதித்த நல்லூர்ப் பண்பாட்டில் எழுந்த பாங்கான பூக்கிண்ணங்களுக்கு ஒப்பான எதையும் எடுத்துக்காட்டாகக் கூறமுடியாது என்றும் இதன் மூலம், தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலவிய நனிசிறந்த நாகரிகத்தில் எழுந்த வெண்கலப் பானை சட்டிகளையும் பூக் கிண்ணங்களையும் உருவாக்கும் கன்னார்களைப் போன்று தொழில் நுட்பம் வாய்ந்த தொழிலாளர்களை எங்கும் கண்டிருக்க முடியாது என்றும் உறுதியுடன் கூறியுள்ளனர். வெண்கல ஊழி தென் இந்தியாவில், இரும்பு ஊழி எழுந்ததன் பின்னர் அதை அடுத்து, செம்பும் வெண்கலமும் பயன்படுத்தும் வழக்கம் வந்துள்ளது. ஒரு சில தொல்பொருள் ஆய்வு அறிஞர்கள். செம்பு ஊழியும் வெண்கல ஊழியும், இரும்பு ஊழிக்கு முன் வந்துள்ளன என்று கூறி யுள்ளனர். மைசூர் ஐதராபாத்து ஆகிய இடங்களில் ஒன்று அல்லது இரண்டு கனிப் பொருள்களின் அடி நிலத்தடக் காட்சிளைச் சான்றாக எடுத்துக் காட்டுகிறார்கள். அதில் செம்பு, வெண்கலப் பாத்திரங்களும் மற்றும் தட்டு முட்டுப் பொருள்களும் அடங்கி இருந்தன என்றும் கூறுகின்றார்கள். இந்தச் செம்பு, வெண்கலப் பாத்திரங்களைப்பற்றிய செய்திகளை நாம் கவனமாகப் படித்துப் பரிசோதனை செய்ய வேண்டும். இரும்பு என்னும் தாதுப் பொரு ளுக்கு முன்னோடியாகச் செம்பும் வெண்கலமும் இருந்தன என்ற கொள்கையைப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது. சான்றுகள் சில காட்டலாம்; அவை புறக்கணிக்கக் கூடியவையே. ஆனால், தென் இந்தியாவில் புதிய கற்கால மக்கள் தொடர்ந்து இரும்பு ஊழியைக் கண்டனர் என்ற கொள்கையை உறுதிப்படுத்து வதற்கு எண்ணற்ற உறுதியான சான்றுகள் உள்ளன.1 தென் இந்தியமக்கள் செம்பு, வெண்கலம் போன்ற தாதுப் பொருள்களைப் பற்றிய அறிவை அடைந்ததற்கு வடஇந்தியாவிற்குச் சிறிதாகவோ அல்லது பெரி தாகவோ கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கூறலாம். இஃது ஒரு சிறிதும் மிகப்படுத்திக் கூறப்பட்டதன்று. வடஇந்தியாவில் வெண்கல ஊழி வடஇந்தியாவின் பண்பாட்டைப்பற்றிய முறையான ஆய்வு நடத்தியவர்கள் அங்கு முதலில் இரும்பின் உபயோகம் பற்றி மக்கள் அறியாதவர்களாய் இருந்தனர் என்று கூறுகின்றனர். வட இந்தியாவில் வாழ்ந்த மக்கள் செம்பு, வெண்கலம் போன்ற தாதுப் பொருள்களைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் எய்தி இருந்தனர். அதன் பின்னர்தான் அவர்கள் இரும்பைப் பற்றிய அறிவைப் பெற்று, அதைப் பயன்படுத்த முன்வந்தனர் என்பது உலகறிந்த உண்மையாக இருக்கிறது. தென்இந்தியாவில் இருந்ததைப் போன்று வட இந்தியாவில் இரும்புப் பண்பாடு இருந்ததே இல்லை என்பது திட்ட வட்டமான உண்மை யாகும். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மிக நொய்ம்மை யான தொடர்பு இருந்தது; அதன் விளைவாக அடுத் தடுத்து நடைபெற்று வந்த குடியேற்றத்தினாலும் வெளியேற்றத் தினாலும், செம்பு, வெண்கலம் ஆகிய தாதுப் பொருள்களைக் கொண்டு ஏனங்களும், வீட்டுக்குப் பயன்படும் தட்டுமுட்டுப் பொருள்களும் எப்படிச் செய்வது என்ற அறிவை விரிவாகத் தென் இந்தியா பெற்றது. சிறிது காலஞ் சென்ற பின்னரே, இரும்பு எதற்குப் பயன்படும்? அதை எவ்வாறு பயன்படுத்தவது? என்பதை வட இந்தியா அறிய முன் வந்தது. கிட்டத்தட்ட ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளிப் பண்பாட்டின் பரிசோதனையால் இந்த நிலைமை நன்கு விளக்கப் பட்டது. சிந்து வெளியில் உள்ள சிறப்பான பகுதிகளான அரப்பா விலும், மொகஞ்சதாரோவிலும் லொகுஞ்சுதாரோவிலுமுள்ள நினைவுச் சின்னங்களும் கட்டிடங்களின் அழிவுபடாக் கூறுகளும் அகழ்வாய்வு செய்யப்பட்டன. அங்குக் கண்டுபிடிக்கப்பட்டவற்றின் சிறப்பியல்பு, உள்ளார்ந்த பண்பு, காலக்கணிப்பு, எழுத்துப் போன்ற விவரங்களை இன்னும் தெள்ளத் தெளிய ஆயவேண்டும் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கிய முதல்மக்களைப் பற்றிப் பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டன. எய்ச். ஆர். ஹால் சிந்துவெளி அகழ் ஆய்விற்குப் பல்லாண்டிற்கு முன் சிந்துவெளி மக்கள் சுமேரியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று தமது அண்மைக் கிழக்கின் பழைமையான வரலாறு என்ற நூலில் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.2 சிந்துவெளியில் செய்த அகழ்வாய்வுத்துறை இயக்குநர் தளபதி (Director general of Archaelogy) சர் சான் மார்சல் அவர்கள் அங்கு அகழ்ந்து கண்ட நகரம், தெருக்கள், கிணறுகள், குளங்கள், கட்டிடங்கள், மாடிவீடுகள், நடனமாடும் நங்கையின் வெண்கலப் படிமம், அரசன் அல்லது குருவெனக் காட்சி அளிக்கும் நெற்றிப்பட்டம் கட்டிய சுண்ணச்சிலைகள், நடனமாடும் தெய்வச் சிலை, தாய்த் தெய்வச்சுடுமண்சிலை முத்திரையில் காணப்படும் பசுபதி உருவம். சிவலிங்கங்கள், முத்திரையில் காணப்படும் தெய்வ உருவமான யானை, மீன், காளை, வியன்சினைமா, அணிகலன்கள், பாசிபவழங்கள், மட்பாண்டங்கள், வெண்கலப்பாத்திரங்கள், வெண்கலத்தில் செய்யப்பட்ட தட்டுமுட்டுப் பொருள்கள், வெண் கலத்திற் செய்யப்பட்ட படைக்கலங்கள், தந்தத்தினால் செய்யப் பட்ட பொருள்கள், படகுகள் போன்ற எண்ணிலாப் பொருள்கள் ஒவ்வொன்றையும் எடுத்து உன்னிப்பாக உற்றுநோக்கி விஞ்ஞானப் பாங்காக அலசி, ஆய்ந்து சிந்துவெளிப் பண்பாட்டைப் படைத்த வர்கள் திராவிட மக்கள் என்ற முடிவிற்கு வந்தார்.3 அவரை அடுத்து அகழ்வாய்வு செய்த மெக்கே, சர்-மார்ட்டிமர் உயிலர், ஆர்.டி. பானர்ஜி முதலியவர்களும் மார்சல் முடிபை நல்ல முடிபாக ஏற்றுக் கொண் டனர்.4 இந்த அகழ் ஆய்வுத்துறையில் ஈடுபட்ட அறிஞர்களில் பெரும்பான்மையினர் சிந்துவெளிநாகரிகம் திராவிட நாகரிகம் என்று உறுதிப் படுத்தினர். சிந்துவெளி திராவிட நாகரிகம் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அரும்பிய உலக நாகரிகங்களில் ஒப்புயர்வற்றது; என்றாலும் இங்குள்ளோர் இரும்பு நாகரிகத்தை அறியாதவர்கள்; வெண்கல நாகரிகத்தினால் உயர்வடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள், இரும்புநாகரிகத்தைப் பெற்றிருந்தார்கள்; வடஇந்தியத் திராவிட மக்கள் வெண்கல நாகரிகத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தென்இந்தியாவில் வாழ்ந்த தமிழ் மக்களின் சிவ வழிபாடும், சிவலிங்க வழிபாடும், சக்தி வழிபாடும், காளைவழிபாடும், ஆற்றங் கரைப் பண்பாடும், சைவநெறியும், பயிர்த்தொழில் பயிற்சியும், கடல்நீரில் கலமோட்டும் அறிவும், வானநூல் அறிவும், எழுத்தறிவும், அணிகலன்கள் அணியும் மரபும் பிறவும் சிந்து வெளித் திராவிட மக்கள் பெற்றிருந்தாலும் இரும்பு ஆயுதங்களையோ இரும்பினால் செய்யப்பட்ட தட்டுமுட்டுப் பொருள்களையோ பெற்றிருக்க வில்லையென்பது அகழ் ஆய்வில் கண்ட உயரிய உண்மையாகும். இதில் எவருக்கும் கருத்து வேற்றுமை இல்லை. மேலும் இரும்புப் பண்பாட்டில் எழும் உறுதி ஊக்கம் வெண்கலப் பண்பாட்டில் பெற முடியாது. தென் இந்தியாவில் இரும்பு ஊழி தென்இந்தியாவில் புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் இரும்பு ஊழி அரும்பிவிட்டது. தென்இந்திய மக்கள் அக்காலத்தில் செம்பையோ வெண்கலத்தையோ அறியார்கள். வடஇந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்களிடைத்திலிருந்தே செம்பு, வெண்கலம் போன்ற தாதுப்பொருள்களின் பயனை அறிந்து, அவற்றைப் பானை சட்டிகளாகச் செய்து பயன்படுத்தப் பிற்காலத்தில் அறிந்திருந்தனர் என்பது வரலாற்றறிஞர்கள் கண்ட உண்மை. ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் அதிகமான வெண்கலப் பானைகளோ, வெண்கலச்சட்டிகளோ, வெண்கலக் குடங்களோ, செம்புக் குடங்களோ காணப்படாதிருப்பது வரலாற்றறிஞர்கள் கண்ட உண்மையை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. வட இந்தியாவிடமிருந்து தென் இந்தியா செம்பு வெண்கலம் முதலிய தாதுப்பொருள்களையும் அவற்றைப் பயன்படுத்தும் முறை களையும் அறிந்திருந்தாலும், தென்இந்தியாவில் வாழ்ந்த திராவிட இனத்தவர்களின் முன்னோடிகளான தமிழர் இனத்தவர்கள் வட இந்தியர்களைவிட உலகில் உள்ள பிற எந்த இனத்தவர்களையும் விட செம்பு, வெண்கலம், நாகம், ஈயம் போன்ற தாதுப் பொருக்களை அறிந்து அவற்றைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வரலாற்று உண்மையாகும். தென் இந்தியாவில் வெண்கலம், செம்பு ஆகிய காலங்கள் எழாவிடினும், வட இந்தியாவைவிடப் பிற்காலத்தில் ஏராளமான அளவில் செம்பும் வெண்கலமும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன. இதற்கு எவ்விதமான இலக்கியச்சான்றுகளும் தேவை இல்லை. தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் செம்பு, வெண்கலம் பொருள்களே சான்றாகக் காணப்படுகின்றன. தென் இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று அல்லது நான்கு குடங்கள் தவறாது உள்ளன. வயது முதிர்ந்த பெண்பால் ஒருவர் இருந்தால் அவளுக்கு ஒரு குடமும், அவள் மகளுக்கு ஒரு குடமும் அவள் மருமகளுக்கு ஒரு குடமும் அவளுடைய சிறு பேத்திக்கு ஒரு சிறு குடமும் ஆக நான்கு குடமாவது ஒரு வீட்டில் இருக்கும். அவற்றோடு பித்தளைக் குடமும், செம்புக்குடமும், வெள்ளிக்குடமும் சில வீடுகளில் இருக்கும். மூன்று நான்கு மருமகள் வந்தால் சீதனமாக மேற் கொண்டும் வரும். இவ்வாறே ஒவ்வொரு வீட்டுக்கும் வெண்கல விளக்கும், பித்தளை விளக்கும், கை விளக்கும், குத்து விளக்கும், நந்தா விளக்கும், தொங்கு விளக்குமாகப் பல விளக்குகள் இருக்கும். இவையன்றித் தமிழகத்தில் ஒவ்வோர் இல்லத்திலும் பயன்படுத்தப் பட்டு வரும் செம்பு, வெண்கலப் பாத்திரங்கள் அடியில் வருமாறு உள்ளன : 1. கிண்ணம், 2. அரிதட்டுக் குவளை, 3. பெரிய குவளை, 4. தாம்பாளம், 5. பூச்சட்டி, 6. குத்துப்போணி, 7. குடம், 8. கொப்பரை, 9. சட்டி, 10. பானை, 11. தவலை, 12. போணிச்சட்டி, 13. கெண்டி, 14. கொட்டுக்கடாவு, 15. வட்டில், 16. கும்பா, 17. அகப்பை, 18. சருவச்சட்டி, 19. படிக்கம், 20. நெய்ச்சட்டி, 21. வெண்ணெய்ச்சட்டி, 22. பாக்கு வெட்டி, 23. சுண்ணாம்புக் கரண்டகம், 24. வெற்றிலை இடிக்கும் உரல், 25. கரண்டி, 26. சுரண்டி, 27. பித்தளைச் சிமிழ், 28. பூம்படிக்கம், 29. எச்சில் படிக்கம், 30. கை கழுவும் தட்டுப் போன்ற எண்ணற்ற வகையான செம்பு, வெண்கலப் பொருள்கள் உண்டு. சில வீடுகளில் ஒவ்வொரு பொருளிலும் 4, 5, 10 வரை இருக்கும். இவையன்றிப் பெரிய அளவில் வெண்கலப்பானை, செம்புப்பானை, போணிச் சட்டி, அண்டா, இட்டலிச்சட்டி, வார்ப்பு என்னும் பெயரில் பலவித மான வெண்கலப் பாத்திரங்கள் உள்ளன. செம்பு இவை மட்டுமன்றிப் பழங்காலத்தில் எழுதப்பெற்ற எண்ணற்ற செப்பேடுகளும் நாட்டில் உள. ஒவ்வொரு கோயிலிலும் நூற்றுக் கணக்கான விளக்குகளும் சமைப்பதற்குரிய வெண்கலப் பாத்திரங் களும், குடங்களும், செம்பு அண்டாக்களும் உள்ளன. 3 அடி முதல் 9 அடி வரை உயரமான செம்புப் படிமங்களும், ஐம்பொன் படிமங் களும் எண்ணற்றவை தமிழகத்தில் மட்டுமன்றிக் கேரளம், ஆந்திரம் முதலிய நாடுகளிலும் உள்ளன. இவை புகலாக உள்ளே துளை உள்ளனவாக இருப்பதில்லை; கட்டியாக இருக்கும். கொடி மரங்களும், தூண் விளக்குகளும், கோபுரங்கள் மீதும் விமானங்கள் மீதுமுள்ள கலயங்களும் செம்பாலானவை. பொற்றகடு போர்த்தியோ, பொன் முலாம் பூசியோ இருக்கும். செம்பு, பித்தளை, வெள்ளிச் சப்பரங்களும், தேர்களும், பல்லக்குகளும் பல கோயில்களில் உண்டு. சோடச பூசைக்குரிய பல்வேறு வகையான பூசா விளக்குகளும் பித்தளையிலும் வெண்கலத்திலும் உண்டு. இவையன்றிக் கர்ப்பூர விளக்குகளும், சாம்பிராணி புகைக்கும் தூபத் தட்டுகளும், அடுக்குத் தீபங்களுமாக ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டுக் கோவில்களில் உண்டு. அரசிகளும், செல்வச் சீமாட்டிகளும் செம்பு, பித்தளை ஐம்பொன் போன்ற உலோகங்களில் தங்கள் உருவங்களை, விளக் கேந்தி நிற்கும் பாவனையில் - பாவை விளக்காகச் செய்து தெய்வத் திருவுருவங்களின் முன் வைக்கச் செய்துள்ளார்கள். அவற்றில் நெய்வார்த்து விளக்கெரிப்பதற்கு மானியங்கள் அளித்திருப்பதற்குப் பல செப்பேடுகளும் கல்வெட்டு களும் சான்று தருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோயில்களிருக் கலாம் என்றால் கேரளம், கர்னாடகம், ஆந்திரம் போன்ற திராவிட நாட்டு மாநிலங்களில் உள்ள கோயில்களில் எத்தனை வெண்கலச் செம்புப் பொருள்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிய கற்காலத் தொடக்கத்திலே இரும்பு ஊழி எழுந்துவிட்டதால், பல்வேறு வகையான உலோகத் தொழில்கள் எழுந்துவிட்டன. தொழில் செய்யும்தொழிலாளர்கள், இரும்புக் கொல்லர்கள், பொற்கொல்லர்கள், கல்தச்சர்கள், கன்னார்கள், மரத் தச்சர்கள் போன்றவர்களுக்குரிய வலுவான கூரிய கல் உளி, வாள், சுத்தியல், வாய்ச்சி, இடுக்கி, குறடு, பொடி வெட்டி, மர உளி, இழைப் புளி, மூலச்சட்டம், சம்மட்டி போன்றவைகளைச் செய்து குவித் துள்ளார்கள். நாட்டில் இரும்புவேலை செய்யும் கொல்லர்கள், பொற் கொல்லர்கள், கல்தச்சர்கள், மரத்தச்சர்கள், கன்னார்கள், தபதிகள் போன்ற பல தொழிலாளர்கள் பெருகினார்கள். ஒவ் வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு இனம் ஏற்பட்டதால் தொழில்கள் சிறப்புற்றெழுந்தன. படிமம் வார்க்கும் தபதிகள் தென் இந்தியாவில் உள்ள தபதிகளுக்கு ஈடாகக் கோயில் கட்டுவதிலும், சிலைகள் சமைப்பதிலும், வெண்கலப் படிமங்கள் வார்ப்பதிலும் திறமையானவர்கள் உலகில் எங்குமே இல்லை என்று கூறலாம். தமிழ் நாட்டுப் பாவை விளக்கிற்கு ஈடாக இந்தியாவில் எங்கும் அழகு வாய்ந்த விளக்குகளைப் பார்க்க முடியாது. வங்கந் தந்த துங்கப் பெரியார் ஓ.சி.கங்கூலி, தென் இந்திய விளக்குகள்5 என்று 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட் டிருப்பதை உலகம் என்றும் மறப்பதற்கில்லை. தமிழ்நாட்டில் செய்யப்பட்ட வெண்கலப் படிமம் - சிவபுரம் நடராசர் படிமம் ஒன்று அமெரிக்காவில் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ளதாய்க் கருதப் படுவது தமிழ்நாட்டுச் சிற்பத்தின் பெருமைக்கு நல்ல எடுத்துக் காட்டாகும். ஆதித்த நல்லூரில் அகழ் ஆய்வு செய்யப்பட்ட இடம் இடு காடாய் இருந்தமையால் அதிகமான இரும்புப் பொருள்களையோ வெண்கலப் பொருள்களையோ நாம் காண முடியவில்லை. தமிழகத் தில் உள்ள அரண்மனைகளையும், நகரங்களையும் அகழ்வாய்வு செய்யும் வாய்ப்பு நேர்ந்திருந்தால், பண்டைய தமிழக கம்மியர் களால் செய்யப்பெற்ற கைவண்ணம் வாய்ந்த - சிற்ப நுட்பம் வாய்ந்த செம்பு, வெண்கலப் பொருள்களின் வகைகளையும், எண்ணிக்கை களையும் அழகையும் உறுதியையும் நாம் காண முடியும். பண்டைக்காலத் தென் இந்திய வரலாற்றினை, நமது ஆய்வுக்குப் பொருத்தமான கோணத்தில் மட்டும் நாம் பரிசோதனை செய்து வருகிறோம். பெரும்பாலும் வணிக நோக்கத்தோடு மக்களின் புலம் பெயர்வு காரணமான நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பிக்கொண்டிருப்போர் பலர் உளர். தென் இந்தியர், செம்பு, வெண்கலம், ஈயம் முதலிய தாதுப்பொருள்களோடு தொடர்பு கொள்ள முன்வந்து, வட பகுதியில் பயனுள்ள பணிகளில் அமர்ந் திருந்தனர். அதேவழியில் சிந்து வெளியில் குடியேறிய பலர் தாராள மாகப் பிற்காலத்தில் இரும்புக் கருவிகளையும் தட்டுமுட்டுப் பொருள்களையும் தெற்கினின்று வாங்கி தங்களின் தேவைகளையும் அவசியத்தையும் நிறைவு செய்திருக்கலாம். இதெல்லாம் பிற்காலத் தில் எழுந்தவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. காலம் ஆதித்த நல்லூர் மட்பாண்டங்கள் மிகப் பழமை வாய்ந்தன அழகு வாய்ந்தன. சிந்து வெளியில் செம்பும் மண்னும் கலந்த ஒரு வகை உலோக (சால்கோலிதிகப்) பண்பாட்டில் உருப்பெற்ற மட் பாண்டங்களைவிட இரும்புப் பண்பாட்டில் அரும்பிய மட்பாண்டக் கலை காலத்தால் மிகத்தொன்மை வாய்ந்தது என்பதில் எவருக்கும் ஐயப்பாடு எழமுடியாது. பொது நோக்கோடு இந்திய வரலாற்றை ஆய்ந்த ஆசிரியர்கள் செம்பும் மண்ணும் கலந்த ஒரு வகை உலோக ஊழியின் காலம் கி.மு. 4000 முதல் கி.மு. 2750 வரை இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.3 தென் இந்திய வரலாற்றைப் பொதுவாக ஆய்ந்த ஆசிரியர்கள் தென் இந்தியாவில் இரும்பு ஊழி ஏறத்தாழக் கி.மு. 5000-ம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வுத் துறைப் படிப்பில் ஈடுபட்ட ஒருசிலர் கூறுகின்றார்கள். ஆனால் தென் இந்திய வரலாற்றைப் பல்வேறு உயர்ந்த நோக்கோடு ஆய்ந்த அறிஞர்கள் தென் இந்தியாவில் இரும்பு ஊழி கி.மு.8000 ஆம் ஆண்டிற்கு முன் நிலவி இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். ஆதித்த நல்லூர் இரும்பு ஊழி, அரப்பாவின் செம்பு மண்ணும் கலந்த ஒருவகை உலோக (சால்கோலிதிகப்) பண்பாட்டைவிட எவ்வாற்றானும் பழமை மிக்கது - உயரியது என்பதில் ஐயமில்லை. ஆதித்தநல்லூர் பண்பாட்டில் அரும்பிய மட்பாண்டங்கள் காலத்தால் 3000 ஆம் ஆண்டிற்கு முந்தியவையாயினும் செய் நேர்த்தி யில் அரப்பா பண்பாட்டில் எழுந்த மட்பாண்டங்களைவிடச் சிறப்பாகக் காணப்படுகின்றன. ஆனால், பூவேலைப்பாடுகள் அதிகம் காணப்படவில்லை. கொற்கை மட்பாண்டங்களைவிட அழகு வாய்ந்தன என்றும் கூறப்படுகிறது. எகிப்து, கிரீட், கிரீ முதலிய மேலை நாடுகளில் கிடைத்த மட் பாண்டங்கள் ஏறத்தாழ அரப்பன் பண்பாட்டில் எழுந்த மட்பாண்டங்களை ஒத்தவைகளாகக் காணப் படுகின்றன. வேலைப்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அரப்பன் பண்பாட்டிலும் ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டிலும் அரும்பிய மட்பாண்டங்கள், சுமேரியா, மெசபொத்தாமியா நாடுகளிலும் ஏனைய பிற நாடுகளிலும் நடைபெற்ற அகழ்வு ஆய்வில் கண்டுபிடித்த பல்வேறு மட்பாண்டங்களோடு நல்ல ஒருமைப்பாடுடையவை களாய்க் காணப்படுகின்றன. இதினின்று நாம் ஒரு முடிவிற்கு வர முடிகிறது - அஃதாவது ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டை உருவாக்கி அதை வளர்த்த ஆதித்தமிழ் மக்கள் உருவாக்கிய கலைகளும், கைப் பணிகளும் (Crafts) அயல்நாடுகளுக்கெல்லாம் சென்று பரவிச் செல்வாக்கைப் பெற்றுள்ளன; மேலும் மிகத் தொலைவில் உள்ள பல நாடுகளோடும் நேரடியாகக்கூட வணிகத் தொடர்பும் கொண் டுள்ளன என்பதேயாகும். தமிழ் இலக்கியங்கள் கூறும் நாவாய்களும், மரக்கலங்களும், வங்கங்களும், தமிழ்நாடு கி.மு.4000 ஆம் ஆண்டு களுக்கு முன்பே கடல்மூலம் மேற்கு நாடுகளுடன் கப்பல் வணிகம் நடத்திவந்ததை நன்கு சுட்டிக்காட்டுகின்றன.4 ஆதித்தநல்லூர் இரும்புப் பண்பாட்டைக் கண்ட ஆதித் தமிழர்கள், நிலத்தின் மூலம் பொதி மாடுகளில் விளைபொருள் களையும், செய்பொருள்களையும் ஏற்றிக்கொண்டு சென்று சிந்து வெளியின் வழியாகச் சுமேரியா, எல்லம் எகிப்து முதலிய நாடுகளுடன் வணிகம் நடத்தியதற்குக் கடல் வணிகம் எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை - ஆதித்தநல்லூர் பண்பாட்டில் உருப்பெற்ற பொருள்களுக்கும் ஏனைய பழைய நாடுகளில் செய்யப்பெற்ற பொருள்களுக்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டைக் காண்பதன் மூலம் பண்பாட்டின் காலத்தை உறுதிப்படுத்துவதில் நாம் உன்னிப்பாக இருக்கவேண்டும். இந்த ஒருமைப்பாடுகள் பழமைச் சின்னத்தைச் சுட்டிக்காட்டுவதற்குத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் குறிப் பிடுவதைவிட மிக முந்திய கி.மு. 3200இல் எழுந்த காலத்தைக் குறிப் பிடுவதாகக் காணப்படுகிறது. எகிப்தின் கூர்ங்கோபுரத் தூண்களின் காலத்தைவிடப் பழமையானதாக இல்லா விட்டாலும் அல்லது கூர் கோபுரக் காலத்திற்கு முற்பட்டதாக இருந்தாலும், சிந்துவெளி நாகரிகம் சமகால நிகழ்ச்சி என்று இசைவு கொடுக்கப்படுகிறது. சிந்துவெளி முத்திரைகள் சார்கோனிக் காலத்திற்கு முன் இருந்தன என உறுதியாகக் கூறுவதற்கு விளக்கம் தருகின்றன. தமிழ் நாட்டின் இரும்புப் பண்பாடு நாம் இந்த அத்தியாயத்தை முடிக்குமுன் ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டவேண்டிய நிலையில் இருக்கின்றோம். உலகில் பெரிய நாகரிகமாகப் போற்றப்படும் சிந்துவெளி நாகரிகத்தில் - இரும்பின் உபயோகம் ஒரு சிறிதும் இல்லை என்பதேயாகும். தென் இந்தியா விற்கும் சிந்துவெளிக்கும் இடையே அடிக்கடி போக்குவரத்துகள் இருந்தன என்று முன்னரே கூறப்பட்டிருப்பினும், செம்பு வெண்கல ஊழிக்கு நெடுங்காலத்திற்குப் பின்னரே இரும்பின் உபயோகத்தைச் சிந்துவெளி மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.5 தென் இந்தியாவிலிருந்து இரும்புப் பண்பாடு முன் சென்று, வருகை தெரிவிக்குமுன், இந்தப் பண்பாடு ஒரு சகாப்தமாகக் காட்சி தருவது ஒரு காரணமாக இருக்கிறது; அல்லது இன்னும் சரியாகச் சொல்வ தானால் இந்தப் பண்பாட் டோடு சமகால நிகழ்ச்சியாக இருந்திருக் கிறது என்று கூடக் கூறலாம். எனவே, நாம் ஏன் சிந்து வெளிப் பண்பாட்டினை மிக உயர்ந்த பழமைச் சின்னமாகக் குறிப்பிட முடியாதிருக்கிறது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனவே, ஒரு சிறந்த தொல்பொருள் ஆய்வு வல்லுநரின் அரிய கருத்துக்களை இதன் அடியில் குறிப்பிட்டு இந்த அத்தியாயத்தை முடிக்கின்றோம்! அஃதாவது: ஒரு கருத்து மிகத்தெளிவாகத் தவறின்றியும் காணப் படுகிறது; மொகஞ்சதாரோ அரப்பா ஆகிய இரண்டு இடங்களிலும் இந்த நாகரிகம் முதிர்ச்சியடையாத நாகரிகமாக வெளிப்பட் டுள்ளது. ஆனால் ஒன்று, இந்திய மண்ணில் மாற்ற முடியாததும் ஏற்கெனவே பழமை மிக்கதுமானது. அதன் பின்னணியில் பல நூறாயிரக்கணக்கான, மனிதப் பண்புகளைப் பெற்றிருக்கிற முயற்சிகள் அமைந்திருக்கின்றன. எனவே, இந்தியா இது முதற்கொண்டு பாரசீகம், மெசபொத்தாமியா, எகிப்து ஆகிய நாடுகளில் மனித சமூகம் வளர்ச்சியும் முதல் நிலையும் பெற்ற சமூகத்தின் செயற் பாங்குள்ள - நாகரிகம் வாய்ந்த - மிக முக்கியமான நாடுகளைப் போன்றதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியது இன்றியமையாததாகும் என்பதாகும். குறிப்புகள் - NOTES VI 1. Bruce Foote; Indian Pre-Historic and Proto Historic Antiquities. p. 25. (a) The Neolithic age in South India passed on to the Iron Age without any interval long or short. In fact, the last centuries of the Neolithic age witnessed the making of iron implements which the Neolithic people used on a large scale. The date of this transition or the length of its duration cannot be fixed, with any satisfaction, though one school of archaeologists contends that 5,000 B.C. may be roughly taken as the chronological limit for the beginning of the Iron age in South India” - Pre-Historic South India by V.R.Ramachandra Dikshitar M.A., (Madras) 1951. p. 95. 2. Ancient History of the Near East by H.R. Hall. 3. “Mohenjo-Daro and the Indus valley civilization by Sir John Marshall Vol. 1-3 (London) 1931. 4. On the whole the state of civilization and culture by the finds of Mohenjo-Daro alone prove that from five thousand B.C. to two thousand B.C. the culture and civilization of Mesopotamia was in no way superior to that of India and Baluchistan. I have called this civilization Dravidian. Because the earliest example of its peculiar burial customs were discovered in Dravidian countries, but it is quite possible that the people who brought from another land were quite different from the modern inhabitant of Dravidian” - Dravidian Civilization - R.D.Banerji (an article) Modern Review - Calcutta 1927. p. 559. 5. South Indian Lamps O.C. Gancoly (London) 1916. 6. Pre-Historic South India by V.R.Ramachandra Dikshitar M.A., (Madras) 1951. p. 124. “We have only examined such of the aspects as relavant to our study early the South Indian history. Believing as we do intimate contacts due to migration of people mostly for purposes of trade and commerce, the Indians came to contact with metals like copper and bronze, tin and lead which are usefully employed in the northern area. In the same way the inhabitants of the Indus - region freely borrowed iron tools and implements from the South to supplement their needs and wants” - Pre-historic South India by V.R.Rama-chandra Dikshtar M.A., (Madras) 1951. p. 126. இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibiliography) 1. Indian Pre-Historic and Proto Historic Antiquities. 2. Pre-Historic South India - V.R. Ramachandra Dikshitar M.A., (Madras) 1951. 3. Ancient History of the Near East - H.R.Hall. (London) 1922. 4. Mohenjo - Daro and the Indus Civilization Sir. John Marshall Vol. 1 (London) 1931. 5. Further excavation at Mohenjo - Daro Dr.E.H.Mackay Vo.1 and 2. 6. The Indus Civilization - Sir Mortimer Wheeler (Cambridge) 1968. 7. The most Ancient East - Gorden childe - (London) 1935. 8. Hindu India - R.K. Moorji. 9. Dravidian Civilization - R.D. Banerji (Modern Review) 1927 (Calcutta). 7. மட்பாண்டங்கள் மட்கலங்கள் பண்டைக்கால, முதிராப் பண்புடைய முதுமக்கள் நாகரிக உலகில் முதல் அடியெடுத்து வைத்ததும் அவர்கள் உருவாக்கிய கைவினைப் பொருள்கள் மட்கலன்களேயாம். முதன் முதலாகப் பச்சை மண்ணால் பானை சட்டிகள் செய்யப் பயின்றனர். அப்பால் அந்த மண்ணாற் செய்த பாண்டங்களைச் சூளையிலிட்டு, நான்றாக வேக வைத்துப் பயன்படுத்தினர். சூளையிலிட்ட மட்பாண்டங்கள் மண்ணின் தன்மைக் கேற்ப, சில சிவப்பாகவும் சில கறுப்பாகவும் இருந்தன. இவை எளிதில் உடையாதவைகளாய் வலுவாய்ந்தவை களாய்க் காணப்பட்டன. அகழ் ஆய்வில் கண்ட கலங்கள் ஆதித்த நல்லூர்ப் பறம்பில் அறிஞர் இரியா அவர்கள் அகழ்ந்து கண்ட பொருள்களில் அணிபெறத் திகழும் மட்கலங்கள் 600க்கு மேல் உள்ளன. அவற்றில் சுமார் 100க்கு மேற்பட்டவைகளை அவர் வகுத்துத் தொகுத்துச் சென்னை அரசினரின் தொல்பொருள் காட்சிச் சாலையில் இடம் பெறச் செய்துள்ளார். அவை இன்றும் நாம் கண்டுகளித்து ஆய்வு செய்வதற்கு ஏற்றவைகளாய்த் திகழ்கின்றன. சென்னை மாநில அரசின் அரும்பொருள் காட்சிச் சாலையில் இடம் பெற்றிருக்கும் மட்பாண்டங்களில் 110 கலன்களை நிழற்படம் பிடித்து இரியா அவர்கள் தாம் எழுதிய ஆதித்த நல்லூரிலும் பெரும்பாயூரிலுமிருந்து கண்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழம் பொருள்களின் பட்டியல் என்ற அரிய நூலில் இடம் பெறுமாறு செய்துள்ளார். (படம், 6,7,8, பார்க்க) படம் 6இல் 41 மட்பாண்டங்களும், படம் 7இல் 39 மட்பாண்டங்களும் படம் 8இல் 30 மட்பாண்டங்களுமாக 110 கலன்கள் காணப்படுகின்றன. அவைகளில் குறிப்பிடத்தக்கன அடியில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் உள்ள கலன்களாகும். கலன்களின் பெயர்கள் 1. கிண்ணம் 2. பானை 3. சட்டி 4. குண்டாப்போணி 5. பானைமூடி 6. தாழி 7. குதிர் 8. கலயம் 9. மரவை 10. செம்பு 11. போணி 12. குண்டா 13. குண்டாச்செம்பு 14. சாடி 15. உருளி 16. பள்ளை 17. குடுவை 18. சிதை 19. தம்ளர் வடிவான கிண்ணம் 20. மூக்குக் கிண்ணம் (கெண்டி) 21. தாலம் 22. பாலி 23. சுரைக்காய் லோட்டா 24. குடம் 25. கூசா 26. தோண்டி 27. தவலை 28. சந்தனப்பேழை 29. அகல் 30. குவளை 31. வாணலி 32. மையக் கிண்ணம் 33. முக்காலிக்குதில் 34. கொட்டுக் கடவை 35. எண்ணெய்க் கிண்ணம் 36. தோசைக்கல் 37. பணியாரச்சட்டி 38. முக்குளிச்சட்டி 39. சுரைக்காய்ப் போணி 40. வட்டில் 41. பொரிக்கன் சட்டி 42. வெண்ணெய்ச்சட்டி 43. தயிர்ப்பானை 44. கும்பாச்சட்டி 45. அண்டாச் சட்டி 46. போணிச்சட்டி 47. பொங்கல்படிப்பானை 48. சோற்றுப்பானை 49. குழம்புச்சட்டி 50. தொட்டி இரீயா அவர்கள் படம் பிடித்து நமக்குத் தந்துள்ள 110 மட் கலன்களில் 50க்குத் தான் பெயர் காண முடிந்தது. மற்றவைகளுக்குப் பெயர் காண முடியவில்லை. பல மட்பாண்டங்கள் இன்று வழக் கொழிந்து போனவைகளாகக் காணப்படுகின்றன. நாம் பெயர் குறிப் பிட்ட மட்பாண்டங்கள் இன்று வழக்கில் இல்லாதவைகளாகக் காணப்படுகின்றன. கவினுறும் கலங்கள் புதிய கல்லூழியில், தென் இந்தியாவில் கலன்கள் ஆக்கும் கலை எழுந்துள்ளது. தமிழகத்தில் இரும்புக்கால ஊழியில் கலன்கள் ஆக்கும் கலை, அதன் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. சிந்துவெளி யில் வாழ்ந்த திராவிட மக்கள் உருவாக்கிய கலன்களை விட, தமிழ் நாட்டுக் கலன்கள் தொன்மையானவை, திண்மையானவை, சிறப் பானவை. அவை தமிழர் நாகரிகத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. நாளடைவில் தமிழ் நாட்டு மட்பாண்டக் கலை வளரத் தொடங்கியது. வடிவநிலை, வண்ணப் பொலிவு, எழிற் செறிவு என்ற முப்பெரும் பண்புகளின் உச்சப் பாங்காக உயர்ந்து ஒளிரத் தொடங் கியது. கலன்களுக்குக் கவினுருவம் காண்பதில் இந்தியர்கள் இணை யற்றவர்கள் என்று அரப்பன் பண்பாட்டில் அரும்பிய அழகு வாய்ந்த மண்பாண்டங்கள் சான்று தருகின்றன. அழகும், வண்ணமும் உறுதி யும் வாய்ந்த மட்கலன்கள் என்பதற்கு கொற்கையில் அகழ்ந்துகண்ட மட்கலன்கள் நல்ல எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. ஆதித்த நல்லூர், பெரும்பாயூர், கோவை முதலிய ஊர்களில் கிடைத்த பானை சட்டிகளும், சாடிகளும் வண்ணமும் திண்ணமும், வனப்பும் வாய்ந்தவைகளால் உள்ளத்தைக் கவர்வனவாய்த் திகழ்கின்றன. ஆதித்த நல்லூர், பெரும்பாயூர், கோவை, செங்கற்பட்டு, பல்லாவரம் இன்னோரன்ன எண்ணிலா இடங்களில் அகழ்ந்து கண்ட கலன்களும், தாழிகளும், உடைந்த மட்பாண்ட ஓடுகளும் சிறப்புமிக்கனவாய் மதிக்கப்படுகின்றன. அவற்றின் தொன்மை, திண்மை, வடிவழகு, வண்ணப்பொலிவு, செயற் செறிவு முதலியன போற்றற்குரியனவாகும். இவற்றினை எடுத்துக்காட்டி, இலண்டன் மாநகரினின்று, 1858ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியக் கலை, தொழில்துறை இதழ் என்ற வெளியீட்டில், சென்னை ஓவியக் கல்லூரிக் கண்காணிப்பாளர், திரு. எட்வின் ஹோல்டர், சென்னை (மாநில) மட்பாண்டங்கள் என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.2 அது மேனாட்டு மக்கள் பண்டையத் தமிழ்மக்கள் கண்ட மட்பாண்டக் கலையின் கவினுறும் சிறப்பை நன்கறியுமாறு அமைந்துள்ளது. கலன் செய்யும் தொழில் வளர்ச்சி புதிய கற்கால மக்கள், எங்குள்ளவராயிருந்தாலும் அவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு புதிய தொழிலைக் கண்டுபிடித்தார்கள் என்று எவர் கூறினும் அது கலன் செய்யும் கைப்பணியைத் தவிரப் பிறிதொன்றாக இருக்கமுடியாது. தமிழ்நாட்டில் வாழ்ந்த புதிய கற்கால மக்களே, முதல் வரிசையில், முதல் கைத்தொழிலைக் கண்ட மனித இனமாக மதிக்கப்படுவர். தென் இந்தியாவே, நினைவுக் கெட்டாத காலத்திலிருந்து கைத்தொழில்களிலும் கலை வளர்ப்பி லும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது என்று கூறமுடியும். தென் இந்தியாவில் இன்றும் பொன்றாது உயிருடன் நிலவும் ஒரு பழைய கைத்தொழில் பானை-சட்டி செய்யும் கைத்தொழிலே யாகும். புதிய கற்காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு விதமான வடிவமும் வண்ணமும் வாய்ந்த மட்கலங்கள், அனந்தப்பூர், கர்னூல், செங்கற்பட்டு, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் செய்யப்பட்டவைகளாகக் கருதப்படுகின்றன. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இந்த மாவட்டங்களில் உள்ள தொன்மையான குடியிருப்புகளில் பலவிதமான பழைய மட்பாண் டங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, சாதாரண மானவைகளாயும், சில அழகு வேலைப்பாடுகளையுடையவை களாகவும் காணப்படுகின்றன. அறிஞர் புருஷ் புட் பழங்காலக் குடிமக்கள் வாழ்ந்த இந்தப் பகுதிகளில் ஆய்வு நடத்தி முதன் முதலாகப் பழங்கால இந்தப் பகுதிகளில் ஆய்வு நடத்தி முதன் முதலாகப் பழங்கால மட்பாண்டங்களைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த மட்பாண்டங்கள் சில சூளையில் இடப்படாதவை. அவை அடுப்பிலேற்றிச் சோறு, குழம்பு சமைப்பதற்கு ஏற்றனவாக இல்லை. பச்சை மண்ணாற் செய்யப்பட்ட மட்கலன்களாகும். பல கறுப்பான மட்பாண்டங்கள்; சிறப்பாக மேற்பகுதி வேகாதவை களாகக் காணப்பட்டன. சில பானை சட்டிகள் வெந்தும் வேகாம லும் இருந்தன. அப்பானை சட்டிகளில் சிவப்பான பகுதி வெந்து இருந்தது. புதிய கற்கால மக்கள் தொடக்க காலத்தில் செய்த மட் பாண்டங்கள் கரடு முரடாகவும் வெந்தும் வேகாமலும் இருந்தன. அவற்றின் வண்ணங்களும், வடிவங்களும் முழு நிறைவாகக் காணப் படவில்லை; கவர்ச்சியான தோற்றமும் அளிக்கவில்லை. ஆதித்த நல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுத்த மட்பாண்டங்கள் புதிய கல் ஊழியின் தொடக்கத்தில் செய்யப்பட்டவையாக இருந்த போதிலும் அவை நல்ல அழகுடையனவாகவும் நன்றாக வெந்தனவாகவும், முற்றிலும் சிவப்பு வண்ணம் வாய்ந்தவையாகவும் எண்ணிலா வகைகளையுடையனவாகவும் காணப் பட்டன.3 ஆதித்தநல்லூர் மட்பாண்டங்கள், நன்றாக வெந்து சிவப்பு, கறுப்பு வண்ணங்களில் அழகும் உறுதியும் உடையனவாய் இருந்த தற்குக் காரணம், அவை இரும்பு ஊழியிலே எழுந்தவை என்பதே யாகும். அந்த மட்பாண்டங்களை வனைந்த மண்ணீட்டாளர், நல்ல கருவிகளைப் பெற்றவர்களாயும் பட்டறிவு வாய்ந்தவர்களாகவும் இருந்ததேயாகும். இதனால் தமிழகத்தில் வனையப்பட்ட மட்கலங்கள் சிறப்புமிக்க வைகளாய்க் காணப்பட்டன.4 ஆதித்தநல்லூர் அகழ்வாய்வு 110 ஆண்டுகளுக்கு முன் நடை பெற்றது. அங்குள்ள பொருள்களைப் பற்றிய பட்டியல் வெளி வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அந்தப் பட்டியல் இன்றுள்ள அறிஞர்களுக்குக் கிடைப்பது அரிது. அது தொல்பொருள் ஆய்வு அறிஞர்களுக்கு இன்றியமையாதது. ஆனால், அதைப்பற்றிய ஆய்வு நூல் இதுவரை எவரும் எழுதி வெளியிடாததால், இன்றுள்ள பல அறிஞர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாமற் போய்விட்டது. அண்மையில் வெளிவந்த மாபெரும் கலைக்களஞ்சிய அகராதி (The Readers Digest Great encyclopaedic Dictionary) என்ற சிறப்புமிக்க ஆங்கில நூலைப்படித்தேன். அதில், தொல்பொருள் ஆய்வு (Archaeology) என்ற தலைப்பில் சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதில் 1937இல் சர் மார்ட்டிமர் உயிலர் அவர்களால் அகழ் ஆய்வு செய்யப் பெற்ற, கி.மு. 27இல் நிலவிய நாகரிகத்தைக் காட்டும் அரிக்கமேடு என்னும் இடத்தைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய ஆதித்த நல்லூர் புதைபொருள் அகழ்வுகளைப் பற்றிய விவரம் எதுவும் தரப்பட வில்லை. அதை அறிந்து மிகவும் வருந்தினேன். ஆதித்தநல்லூர் மட்பாண்டங்களைப் பற்றிய ஆய்வு தமிழ் நாட்டுத் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கும் வரலாற்று ஆய்வுத் துறைக்கும் மிகவும் இன்றியமையாது வேண்டப்படுவதாகும். அதனுடைய மெய்ம்மையான, அழிக்க முடியாத நிலைகளையும், பயன்களையும் பண்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், நமது நாட்டிற்கும், பிற நாடுகளுக்குமுள்ள வணிகத் தொடர்புகளைக் காண்பதற்கும், அதன் காலங்களைக் கணிப்பதற்கும் நயத்தகு நாகரிகத்தின் நனியுறு நிலைகளை நிர்ணயிப்பதற்கும் ஓவியச் சிறப்பை உணர்வதற்கும் கைத் தொழில் வளத்தைக் காட்டுவதற்கும் ஏற்ற எடுத்துக்காட்டாக மட்பாண்டங்கள் மிளிர்கின்றன. மேற்கூறிய கருத்துக்கள் பொதுவாகத் தென் இந்தியாவில் துளிர்த்துள்ளன புதிய கல்லூழியைப் பற்றிய கருத்துக்கள் ஆகும். ஆனால், புதுக்கல்லூழியின் தொடக்க காலத்தில் அரும்பிய இரும்பு ஊழியை அடுத்து எழுந்த மட்பாண்டத்தொழில், வளர்ச்சி பெற்றுக் கலைநயந் தழுவியதாய் வளர்ந்தது. அதன் வண்ணங்களும், செய் நேர்த்தியும் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாய்த் திகழ்ந்தன.5 பண்டைக்காலத்தில் வாழ்ந்த பழங்கற்கால மனிதன் விலங்குகள் போல் வாழ்ந்தான். அவனுக்கு அதிகமான தேவைப் பொருள் கிடை யாது. பசிக்கு ஏதாவது உணவும், நீர்வேட்கை தீர்க்கத் தண்ணீரும் வேண்டும். இயற்கையின் கோளாறுகளால் சில காலங்களில் உணவும் நீரும் தட்டுப்படும். அப்பொழுதுதான் அவன் சிந்திக்கத் தலைப்படு வான். உணவைத்தேடி, கிடைத்ததை உண்டு நிறைவு பெற்ற மனிதன் அப்பால் உணவைச் சேகரித்து வைக்கமுற்பட்டான். புதுக்கற்காலத் தில் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவனது சிந்தனை வளரத்தலைப்பட்டது. கல்லாலான கருவிகளையும் வில்லாகிய படைக்கருவியையும் பயன்படுத்த முனைந்தான். நல்ல கல்லாயுதங்களைக் காண, குடி பெயர்ந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கும் - ஏன் அதற்கு அப்பாலும் நடந்து போகத் தலைப்பட்டான். ஆடுமாடுகளைப் பழக்க முற்பட்டான். புன்செய்த்தொழிலை வளர்த்தான். பாலைக்கறக்கவும் நெய்மோர் தயிர் செய்யவும் பயின்றான். அப்பால் காளைமாடுகளைப் பழக்கி உழுவதற்கும், பொதிகள் சுமக்கவும் பயிற்றினான். பயிர்த்தொழிலை வளர்த்தான். நன்செய்ப் பயிர்களை வளர்த்து நலம் பெற்றான். திடீரென்று இரும்பு ஊழியைக் கண்டு அதனால் ஏற்றம் பெற்றான்.6 கலப்பைக் கொழு, மண்வெட்டி, கடப்பாறை, கோடரி, கத்தி அரிவாள், பன்னரிவாள், தொரட்டி ஈட்டி, எறிவேல், சூலம், முத்தலைவேல், பரசு முதலியவற்றைக் கொண்டு வேளாண்மை செய்து தெய்வம்போல் உயர்ந்தான். விளைபொருள்களை மலை யெனக் குவித்தான். வயிறார உண்டான்; பிறமக்களுக்கும் அளித்து அகமகிழ்ந்தான். ஏனைய நிலத்திலுள்ள மக்களுக்கு வாரிவாரி வழங்கி வள்ளலாக உயர்ந்தான். தமிழகத்தில் உணவு இல்லை என்னும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். உணவுக்குரிய நெல், புல், எள், கொள் மட்டுமன்றிப் பருத்தியையும் பயிரிட்டுப் பஞ்சை உற்பத்தி செய்தான். நூல் நூற்கவும், நெசவு நெய்யவும் வழிகண்டான். பருத்தி ஆடையையும், பட்டாடையும் நெய்து அரையில் அணிந் தான்; உடல் மேலே ஆடையைப் போர்த்தினான்; தலையில் தலைப் பாகை அணிந்து பெருமிதம் எய்தினான். காட்டைத் திருத்தி, வீட்டைக் கட்டி சட்டிபானைகளை வைத்து உணவு சமைத்தான். வீடுகளில் குதிர்களில் உணவுக்குரிய கூலப் பொருள்களையும், குடங்களில் தண்ணீரையும் பிடித்து வைக்கத் தெரிந்தான். அவனது வளம்வாய்ந்த வாழ்விற்கு ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட பொருள்கள் துணையாக இருந்தன. சிந்துவெளி மட்பாண்டங்கள் 1920ஆம் ஆண்டில் அரப்பாவும் 1922ஆம் ஆண்டில் மொகஞ்சதாரோவும் அகழ்வாய்வு செய்யப்பட்டன. சிந்து வெளி அகழ்வாய்வு இந்திய மைய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் தளபதி சர். சான் அவர்கள் தலைமையில் தொடங்கப் பெற்றது. அரப்பாவை மாதோ சரூப் வாட் (M.S.Vats) அவர்களும், மொகஞ்சதாரோவை இராகேல் தா பானர்ஜி (R.D. Banerji) அவர்களும் அகழ்வாய்வு நடத்தினர். சிந்து வெளி அகழ்வாய்வில், பஞ்சாபில் உள்ள அரப்பா, சிந்து வெளியில் உள்ள மொகஞ்சதாரோ நகரங்கள் மட்டுமல்ல, இன்னம் 20க்கு மேற்பட்ட நகரங்கள் அகழ்ந்து காணப்பெற்றுள்ளன. இவற்றில் வீழ்ச்சிக்காலம் கி.மு. 3500 ஆண்டு முதல் கி.மு. 2750 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பெற்றுள்ளது. இங்கு நடைபெற்றது, ஆற்றங்கரைப் பண்பாடு. இந்தப் பண் பாட்டில் எழுந்தது உழவர் நாகரிகமாகும். இங்குக் கண்டெடுக்கப் பட்ட உலோகம் செம்பும், வெண்கலமுமேயாகும். இங்குக் கிடைத் துள்ள தலையாய பொருள்கள் மட்பாண்டங்களும் ஓவிய எழுத்துக் களைக் கொண்ட முத்திரைகளுமாம். இங்குக் கிடைத்த மட்பாண்டங் களை நன்கு சோதித்து, அவை பலுச்சிதானத்திலுள்ள மட் பாண்டங்களோடு ஒப்புடையன என்று காணப் பெற்றுள்ளன. 1924ஆம் ஆண்டு மொகஞ்சதாரோவின் மெய்யுரு மெல்ல உலகிற்குத் தெரியத் தொடங்கியது. சிந்துவெளியில் உள்ள மொகஞ்சதாரோ, அரப்பா, குல்லி முதலிய இடங்களில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதித்தநல்லூர் மட்பாண்டங்களோடு தொடர்புடையனவாகக் காணப்பட்டன. அரப்பா, மொகஞ்சதாரோ, சங்குதாரோ, லொகுஞ்சுதாரோ, உரூபார், குல், நால், அம்ரி காளிபங்கன் முதலிய நகரங்கள் அகழ்ந்து காணப்பட்டன. சிந்துவெளி நாகரிகமே உலகில் அகழ்ந்து கண்ட நாகரிகங்களில் பெரிய நாகரிகமாக மதிக்கப்பட்டது. சிந்துவெளி நாகரிகம் திராவிடநாகரிகம் என்று கூறப்பட்டதும் உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியாய் இருந்தது. சிந்துவெளிப் பண்பாட்டை விடச் சிறந்ததாகவும் அதைவிடப் பழமையானதாகவும் உள்ள பண்பாடாக விளங்கிய ஆதித்த நல்லூர்ப் பண்பாடு உலகில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. ஆனால், மொகஞ்சதாரோ நகரை அகழ்ந்துகண்ட வங்கப் பேரறிஞர் அரப்பாவிற்கும் ஆதித்த நல்லூருக்கும் இடையேயுள்ள தொடர்களை எடுத்துக்காட்டி, மக்களின் கவனத்தை ஆதித்த நல்லூர் ஈர்க்கும்படி செய்ய முயன்றுள்ளார். மண்பாண்டங்களின் மாண்பு ஆதித்த நல்லூரில் வாழ்ந்த மக்கள் தமிழர்களேயாவர். அவர்களைத் தமிழர்களின் ஆதிமுன்னோர்களின் இனத்தவர்கள் (Proto Tamils) என்றோ, தமிழர்களுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர்களின் முன்னோர்கள் (Pre-Tamilian) என்றோ, கூற வேண்டிய தில்லை வேண்டுமானால் தமிழர்களைத் திராவிட இனத்தின் முன்னோடிகள் (Pioneers of the dravidian race) என்று கூறலாம். தமிழர்கள், வாழ்விற்கு இன்றியமையாத எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தார்கள் என்று ஆதித்த நல்லூரில் கண்டெடுத்த பொருள்கள் அறிவுறுத்துகின்றன. அங்குக் கிடைத்த வகைவகை யான மட்கலன்களும், தாழிகளும், வெண் கலப்பாத்திரங்களும், பொன்னணிகலன்களும், இரும்புப் பொருள்களும் பழங்காலத் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் கைத்தொழில் சிறப்பையும் நன்கு எடுத்துக் காட்டுவனவாகக் காணப்படுகின்றன. வீட்டு உபயோகத் திற்குரியன மட்பாண்டங்களேயாகும். எனவே, அவற்றைப் பற்றி இங்கு ஆய்வோம். தொல்பொருள் ஆய்வுத் துறையினர், எங்கு ஆய்வைத் தொடங்கினும் அங்குக் கிடைக்கும் பல திறப்பட்ட பொருள் களுக்குள் மட்பாண்டங்களுக்கு ஒரு சிறப்பான இடம் அளித்து வருகின்றனர். மேலும் ஒரு நகரம், அல்லது நாட்டைவிட்டு மக்கள் குடிபெயரும் பொழுது அங்கு விட்டுச் செல்லும் பொருள்கள் மட்பாண்டங்களேயாகும். இன்னும் அதிகமாகக் காணப்படுவன. பல்லாயிரம் ஆண்டுகள் சென்றபின்பும் காணப்படுவன மட்பாண்டங் களின் உடைந்த ஓட்டுச் சில்லுகளேயாகும். அவற்றையே அவர்கள் அவ்விடத்தை, விட்டுச்சென்ற பழங்காலமக்களின் எச்சமிச்சங்கள் என்று கவனமாக எடுத்து ஆய்வு செய்கிறார்கள். மட்பாண்டங் களும், அவற்றின் சிதைவுகளும் தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகத்தை உணர்த்தும் அழியாச்சான்றுகள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மட்பாண்டங்கள் பல்வேறு வகையான மண்களைக் கொண்டு செய்யப்பட்டவைகளாகக் காணப்படு கின்றன. கரிசல் மண்ணைக்கொண்டு கலன்களைச் செய்து சூளையி லிட்டு வேகும்படி செய்தால் கலன்கள் கறுப்பு வண்ணம் உடையவை களாக இருக்கின்றன. மஞ்சள் நிறமான மண்ணும் ஆற்று மணலும் கலந்து செய்யப்பட்ட மட்கலன்கள் சூளையிலிட்டு வெந்ததும் சிவப்பு நிறமாக இருக்கும். இஃதன்றிப் பலவற்றிற்கு வண்ணங்கள் தீட்டப்படுவதும் உண்டு. சில மட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன் அதன் கழுத்துப்பகுதியில் வட்டமாகச் சிறு குச்சுகள் அல்லது கம்பிகள் கொண்டு பூ வேலைப்பாடுகள் செய்து சூளையிலிட்டு வேகவைத்துப் பயன்படுத்துகின்றார்கள். இந்தப் பூ வேலைப்பாடு களில் அழகிய மயிலும் குயிலும், மானும் மாடும், பல்வேறு விதமான இலைகளும் பூக்களும் காய்களும் கனிகளும் காணப்படுகின்றன. சில மட்பாண்டங்களின் மீது மெருகிடப்பட்டிருக்கின்றன. சில, மேலே கறுப்பு, நீலம், ஊதா போன்ற வண்ணங்களும், உட்புறம் வெள்ளை நிறமும் தீட்டப்பட்டவைகளாய்க் காணப்படுகின்றன. முற்காலத்தில் பொங்கல்படி கொடுப்பதற்குப் பெரிய பானைகள் மீது வெள்ளைச் சுண்ணத்தினால் பூங்கொடிகள் தீட்டி அதனுள் பொங்கல் விழாவிற்கு உரிய பொருள்களை வைத்து வழங்குவதும் உண்டு. மட்கலன்கள், அவை செய்யப்பட்டகாலம், மக்களின் அறிவு, கைவண்ணம், செய்வண்ணம் இன்னோரன்ன பலவற்றை உணர்த்து வனவாக உள்ளன. இத்தகைய பல காரணங்களை எண்ணி ஆதித்த நல்லூர் அகழ்வாய்வைச் செய்தவர்கள் அங்குப் பல இடங்களைத் தோண்டி, தாழிகளையும் அவற்றுள் இருந்த கலன்களையும், பிற பொருள்களையும் ஒன்றையும் விடாது சோதித்து, சேகரித்து, இன்றியமையாத பொருள்களைச் சுத்தம் செய்து அரும்பொருள் காட்சிச்சாலையில் இடம் பெறுமாறு செய்துள்ளனர். பலவகைப் பாண்டங்கள் ஆதித்தநல்லூர்ப் பறம்பில் அகழ்ந்து கண்ட மட்பாண்டங்கள் அனைத்தையும் ஆய்ந்தால் அவை பலதிறப்பட்ட வடிவங்கள் வாய்ந்தவைகளாகக் காணப்படும். பல நன்னிலையில் உள்ளன. பல சிதைந்தும் சீர்குலைந்தும் உடைந்தும் போனவையாகக் காணப்படு கின்றன. கொற்கையில் அண்மையில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் உடையாத மட்பாண்டங்கள் கிடைப்பது அரிதாக இருந்தன. ஆனால், அடுக்கடுக்காய்ப் பல்வேறுவகையான மட்பாண்டங்களின் உடைந்துபோன துண்டுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் மண்ணாற் செய்யப்பட்டு வண்ணந் தீட்டிய மட்கலங்கள் வணிக முறையில் அயல் நாடுகளுக்கு அனுப்பப்பட் டுள்ளன. எஞ்சியவை அங்குத் தீண்டுவாரற்றுக் கிடந்து மறைந்தும் உடைந்தும் போயுள்ளன. செம்புக் காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி மக்களுக்குப் புதைக்கும் வழக்கம் புதிதாக இருந்தது. இரும்புக் காலத்தில் வாழ்ந்த தென் இந்திய மக்கள் வகைவகையான வண்ணம் வாய்ந்த மட்பாண்டங்களைச் செய்துள்ளனர். அவைகளை ஏராள மாக அங்குள்ள புதைகுழிகளில் வைத்தும் புதைத்துள்ளனர். சிந்து வெளியில் செம்பு ஊழியில் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் இரும்பு ஊழியில் செய்யப்பட்ட ஏற்றமிகு தென்னிந்திய மட்பாண்டங் களுக்கு ஈடாக இருக்க முடியாது என்று அறிஞர்கள் கூறுவர்.7 அது இங்கு மெய்யாகக் காணப்படுகிறது. இரும்பு ஊழியில் அரும்பிய மட்பாண்டங்களுக்கு இணை யாகப் பிற எந்த ஊழியிலும் அழகிய - நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த மட்பாண்டங்களைக் காணமுடியாது. மட்பாண்டங் களை வனையும் வேட்கோவர்களின் இயந்திரங்களும் திகிரிகளும், ஊசிகளும் பிற சாதனங்களும் இரும்பினால் இருந்ததால், அவர் களால் வனையப்பட்ட மட்பாண்டங்கள் தனிச் சிறப்புடையனவா யிருக்கின்றன என்று அறிஞர் டாக்டர் கோர்டன் சைல்டு சமூகப் பரிணாம வளர்ச்சி என்ற நூலில் விரிவாக எடுத்துக் காட்டி யுள்ளார்.8 இவர் ஆதித்தநல்லூரில் அரும்பிய மட்பாண்டங்களில் திகழும் அரிய, நுண்ணிய வேலைப்பாடுகளைப் பார்த்துத்தான் இவ்வாறு கூறினாரோ என்று எண்ண வேண்டியதிருக்கிறது. ஆனால் அவர் ஆதித்த நல்லூரில் இரும்புப் பண்பாட்டில் எழுந்த மட் பாண்டங்களைப் பார்த்ததே இல்லை. அறிஞர் ஆர்.டி.பானர்ச்சி அவர்கள், திருநெல்வேலி மாவட் டத்தில் உள்ள ஆதித்தநல்லூரில் செய்யப்பட்ட அகழாய்வுகளும் அவற்றில் கிடைத்த மட்பாண்டம், தெய்வ உருவங்கள் போன்ற பொருள்களும், சிந்து, பஞ்சாப், பலுச்சித்தான் போன்ற இடங் களில் கிடைத்த மட்பாண்டங்கள், அணிகலன்கள், போன்ற பொருள் களும் திராவிட மக்களின் உயரிய பண்பாடுகளின் ஒற்றுமையை உணர்த்துகின்றன. அவை வட இந்தியாவினின்று தென் இந்தியா வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து நிலவுகின்றன என்று கூறியுள்ளார்.9 குறிப்புகள் - NOTES VII 1. Catalogue of the Pre-Historic Antiquities from Adichanallur and Perumbair - by A Rea (Madras) 1915 pp. 21-40 Plate VI-IX. 2. Madras pottery-Edwin Holder (The journal of Indian Art and Industry (London) 1858. 3. In the shevaroy hills in the district of Tinnevelly the ceded districts, Hyderabad and Baroda, we meet with plenty of neolithic pottery. Bruce Foot mentions 127 place (Including Adichanalloor) where he discovered Pre-historic pottery 56 places yielded neolithic types, two of the transitional formation between the Neolithic and iron Ages 60 Iron Age types and the rest specimens of the later Iron Age. 4. We came upon another aspect of the ancient culture of the Iron age and this is the development of the Neolithic pottery (at Adicha-nalloor)... “The vessels of this period are not rough but have a better polish. Gradually also potter began to use varieties of colours. Though the necessary pigments for producing the greenish hue and blue and blue varieties are still later, we can credit the potter of the Iron Age with some varieties ranging from yellow brown and grey. This shows that the potter had considerably improved his knowledge of firing the vessels which was rather limited inscope and extend till then. The pottery produced in this age is therefore not dull in colour but lustrous enough. In addition to this the potter of the Iron Age made his ware more and more an object of beauty by artistically decorating some of his vessels. Originally continued to the decoration of the objects with the figures of leaves and flowers now we see more and more of human and animal figures” - Pre-Historic South India - V.R. Ramachandra Dikshitar M.A., (Madras) 1951 pp. 107-108. 5. Pre-Historic South India - V.R.Ramachandra Dikshitar M.A., (Madras) 1951 p. 107. “We come upon another aspect of the ancient culture of the iron age and this is the development of the Neolithic pottery. We must examine this question with some circumspection. No doubt the Neolithians knew the art of pottery and had to some extent a knowledge of the wheel which the potter skillfully used. But speaking generally about pottery it has been concluded that the vessels were more or less crude and presented a rough exterior. The majority of the vessels show that they were black in colour though red varieties were also known. But we come to the age of the iron culture we see a surprising varieties of vessels made of clay”. 6. Ibid p. 97. 7. The absence of painted pottery in the parts of India and in all other periods of Indian History is extormely significant. I probably indicate the first period after the immigration of the people into Baluchistan and Indus vally in which habit, manners and customs were almost the same with faience-using copper age people who had burial customs peculiar to themselves. They with the near approach of the iron age the use of painted pottery suddenly dies out the best forms of South Indian pottery though carefully wheel turned cannot compare with copper age product of the Indus valley and Baluchistan” -Dravidian Civilization Prof R.D. Banerji (Modern Review, Calcutta) Nov. 1927. p. 558 8. Social evolution by Gordon Child (London) 1951. 9. The Recent Discoveries in Sindh and Baluchistan prove that the cultural affinities of the Dravididan extended in an unbroken line from the Tinnevelly district in the extreme South of the Indian peninsula through Sindh and Baluchistan the island Bahrein in the Persian gulf South Persia, Mescpotamia into crete and some of the islands of the Eastern Mediterranean” - Dravidian Civilization by Prof.R.D.Banerji (Modern Review) Sep. 1927 p. 308. இந்தப்பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibliography) 1. Catalogue of Pre-Historic Antiquities from Adichanallur and Perumbair by Alexander Rea (Madras) 1915. 2. Madras pottery - Edwin Holder (London) 1958. 3. Pre-Historic South India - V.R.Ramachandra Dikshitar M.A., (Madras) 1951. 4. R.Bruce Foote;- Catalogue of the pre-historic Antiquities, Madras 1901 (Govt. Press, Madras). 5. R.Bruce Foote :- Pre-historic and proto Historic Antiquities - Notes on ages and distribution (Government Press, Madras). 6. The Readers’ Digest Great Encyclopaedia Dictionary (Arikamedu) Oxford. 1964 Vol.3. 7. Dravidian Civilization R.D. Banerji (Madras Review) Calcutta 1927. 8. Social Evolution - Gordon childe (London) 1951. 8. தாழிகள் (Earthernware Sarcophagi) முதுமக்கள் தாழிகள் ஆதித்த நல்லூர்ப் பறம்பில் உள்ள இடுகாட்டில் அகழ்ந்து கண்ட பொருள்களில் குறிப்பிடத்தக்கன பிணங்களை வைத்துப் புதைக்கும் தாழிகள் (Sarcophagi) ஆகும். இத்தாழியை, உலக வழக்கில் நாட்டு மக்கள் மதமத்தன் தாழி என்பர். அறிஞர்கள் அதை முது மக்கள் தாழி என்பர். முதுமக்கள் தாழி என்னும் சொற்றொடர் திரிபுற்று மதமத்தன் தாழி ஆயிற்று. இதைச் சிலர், பிணஞ் சுடு சாம்பற் கொள்கலம் (Urn) என்ற பெயரால் அழைத்து வருகின்றனர். இஃதன்றிச் சாடி, குடுவை, மண்சவப் பெட்டி என்றெல்லாம் அழைப்பதும் உண்டு. இன்று இத் தாழி எங்குக் காணப்பட்டாலும் ஆதித்த நல்லூர்த்தாழி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத் தாழி ஆதித்த நல்லூரின் சின்னமாக அமைந்துள்ளது. தாழியின் சிறப்பு தொல்பொருள்ஆய்வுத்துறையினர் தமிழ்நாட்டில் ஐம்பது இடங்களில் அகழ்ந்து பலதாழிகளைக் கண்டெடுத்துள்ளனர். ஆனால், ஆதித்த நல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளே சிறப்பிற்குரியவைகளாகக் கருதப்படுகின்றன. ஆதித்த நல்லூர் இடுகாட்டில் உள்ள புதைகுழிகள் 4 அடிமுதல் 9 அடி வரை அகலமும், 6 அடி முதல் 15 அடி வரை ஆழமும் உள்ளன. அவற்றை அகழ்ந்து நடுவே 4 முதல் 11 அடிவரை உயரமுள்ள தாழிகளில் இறந்து போன மக்களின் உடலை வைத்துப் புதைத்துள்ளார்கள். இக் குழிகளில் நாற்புறமும் பெருங்கற்களை வைத்துச் சுவர்போல் உயரமாக எழுப்பி நடுவே சுடு மண்ணால் செய்யப்பெற்ற தாழியில் சவத்தினை வைத்துப் புதைத்துள்ளனர். இவ் வழக்கம் தொல் பழங்காலத்தில் நிலவியது. ஆதித்தநல்லூரில் அகழ்ந்தெடுத்த தாழி களில் மனித எலும்புகளே காணப்படுகின்றன. சிலவற்றில் ஒரு சில எலும்புகள் மட்டுமே உள்ளன. சில தாழிகளில் பிணங்கள் உட்கார்ந் திருக்கும் நிலையில் வைத்து அடக்கம் செய்யப்பெற்றுள்ளன. தாழி களில் (புதை கலன்களில்), உயிர் நீத்த மக்களின் உடல்கள் வைக்கப் படுவதற்கு முன்பாக உடலில் ஒருவகை மருந்தைப் பூசி உடல் அழியாது இருக்கச் செய்யும் முறைகளை முடித்த பின்னரே, தாழியை மூடி, அவற்றை எடுத்துச் சென்று கல்லறைகளில் அடக்கம் செய்வர். ஆனால், அவ்வாறு அழியாதிருக்கும் உடல் எதுவும் தமிழகத்தில் இல்லை. எகிப்தில் 4000 ஆண்டுகளாகியும் அழியா திருக்கும் பிணங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. கற்களை வரிசையாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி நடுவில் பிணங்களை வைத்து மூடும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அந்த ஊழியைப் பெருங்கல்லறைப் பண்பாட்டு ஊழி (Magalithic age) என்பர். தென் இந்தியாவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிணக்குழிகளைச் சுற்றிப் பெருங் கற்களால் கட்டடங்கள் அமைப்பதைச் சிறந்த வழக்க மாகக் கொண்டிருந்தனர். இந்தக் கற்கட்டுப் பண்பாடு, பலவகைப் படும். ஆனால், தென் இந்தியப் பிணக்குழிகளில் இரும்புப் பொருள்கள் காணப்படுகின்றன. வட இந்தியப் பிணக் குழிகளிலும் மைய நிலக் கடற்கரைப் பகுதிகளிலுமுள்ள நாடுகளிலும் இரும்பு காணப்படவில்லை. ஐதராபாத்திலும் மைசூர் மாநிலத்திலும் சிலவகைப் பெருங்கல்லறைப் பண்பாடுகள் காணப்படுகின்றன. எகிப்துநாட்டில் தமிழ்நாட்டைப் போல், இறந்து போன மக்களின் உடல்களுக்கு மருந்து பூசி வைத்து உள்ளனர். அவை கெடாதிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவர் களின் குருதித் தொடர்புடைய தமிழர்கள் பிணங்கள் அழியாது இருக்கக் கையாண்ட முறைகள் வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை. ஆதித்த நல்லூரில் கண்டெடுத்த தாழிகளின் வாய்கள் அகன் றுள்ளன. சில தாழிகள்மீது நுண்ணிய வேலைப்பாடுகள் உள்ளன. தாழிகள்மீது மூடிகள் உள்ளன. தாழிகளின் உள்ளே இறந்துபோன மக்கள் பயன்படுத்திய படைக்கலங்களும் வெண்கலப் பாத்திரங் களும், மட்பாண்டங்களும் அவர்களுடன் புதைக்கப்பட்டுள்ளன. சில தாழிகளில் பொற்பட்டங்களும் உள்ளன. சிலவற்றில் வேல், ஈட்டி, வாள், மூவிலைவேல் போன்ற இரும்புப் படைக்கலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பிணங்களை நன்னீரில் குளிப்பாட்டிப் புத்தாடை புனைந்து பன்னீர் தெளித்துச் சந்தனம் பூசி, நறுமண மாலைகள் சூட்டி, நல்ல சாம்பிராணிப் புகையூட்டி, பாடையில் ஏற்றிச்சென்று இடுகாட்டில் புதைப்பது இன்றுவரை இருந்துவரும் வழக்கம் ஆகும். ஆனால், இந்த மரபு வழக்கம் சில தமிழ் இனத்தவர்களிடம் மட்டுமேயுள்ளது. பல இனத்தவர்களிடம் இல்லை; காரணம் எதுவும் நமக்குத் தெரியவில்லை. தாழி வகைகள் இறந்து போன மக்களின் உடல்களை வைத்துப் புதைத்த தாழிகள் பல இன்று தமிழகத்தில் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. அறிஞர் இரியா அவர்கள் ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட தாழிகள் பல உள. அவற்றில் இரு வேற் றுமையான அமைப்புகள் உள. ஒன்று வாயகன்று அடி குவிந்து, நுனி மட்டும் தட்டையாய் உள்ளது. (படம் எண் 1). இவை ஆதித்த நல்லூரில் அகழ்ந்து கண்ட ஏனைய மட்கலன்களோடு ஒப்பிட முடியாதன. அதன் செய்நேர்த்தி இவற் றில் புலப்படவில்லை. இவை கரடுமுர டாகக் கோர வடிவில் உள்ளன. இவை இறந்தாரைப் புதைப்பதற்கென்றே தனி முறையில் செய்யப்பட்டவைகளாய்க் காணப்படுகின்றன. அன்றியும் இத் தாழிகள் ஏனைய கலன்களைவிட மிகக் கனத்தவையாகவும் குதிர்கள் போலவும் காணப்படுகின்றன. (படம் 2) இது ஆதித்த நல்லூரில் அகழ்ந்து கண்ட தாழிகளுள் ஒன்று. இதனுடைய தோற்றம் முன் எடுத்துக் காட்டப் பெற்ற எண் 1இல் உள்ள தாழியினின்று சிறிது மாறு பட்டது. ஆனால், இதன் தோற்றமும் வேலைப்பாடும் சிறப்பாகக் காணப்படு கின்றன. ஒரு வேளை உயர் நிலையில் உள்ள அறிவர்கள், சமய குருக்கள், சான்றோர், அரசர், அதிகாரிகள் போன்றவர்கள் உடல் களை வைத்துப் புதைக்கும் சாடியாக இருந்தாலும் இருக்கும். வாய் சிறிது, உடல் நீளமானது, கழுத்து நீண்டது. புயம் கச்சிதமானது, அடி சிறுத்துப் புயம் வரை அகன்றுள்ளது. எண் ஒன்றும், எண் இரண்டும் அடிப்பகுதி சிறிது மண்ணிற் குள் வைத்துச் செங்குத்தாக நிற்கும்படி புதைக்கத்தக்கனவாகச் செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடம்பிலுள்ள எலும்புகளை வைத்துப் புதைக்கும் புதைகலன் வட்டமான சிறிய தட்டையான நுனியை யுடையது. அடிப்பாகம் வட்டமான நிலைச்சட்டத்தோடு அமைந் துள்ளது. கழுத்து சிறுத்து, தோள் பாகம் அகன்று வாய் சிறுத்துக் காணப்படுகிறது. இதன் அடிப்பகுதி வட்டவடிவமான நிலைச் சட்டத்தின் மீது, தாழி சாய்ந்து விடாதவாறு பொருத்தப் பெற் றுள்ளது. (படம் 3) இது ஒரு பெரிய கூசா வடிவில் அழகுறச் சமைக் கப்பட்டிருக்கிறது. மேற்பகுதி, கரடு முரடாக அன்றி வழுவழுப்பாக மெருகூட்டப் பெற்றுள்ளது. இது, செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரத்தில் அகழ்ந்து கண் டெடுக்கப்பெற்றது. இதன் அமைப்பு, ஆதித்தநல்லூரில் அகழ்ந்து, எடுக்கப் பட்ட முதுமக்கள் தாழிகளினின்று முற்றி லும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாயூர்ப் பகுதியில் பல புதை குழிகளினின்று அறிஞர் இரியா அவர்கள் சில புதை கலன்களை எடுத்து, ஆய்ந்துள்ளார். (படம் 4) அவை பல்லா வரத்திலுள்ள புதைகலன்களின் வடி வத்தை ஓரளவு ஒத்திருப்பினும் அடியில் அமைந்துள்ள பகுதியும் மூன்று கால் களும் உடலும் ஆதித்த நல்லூர்த் தாழி களினின்று வேறுபட்டனவாக விளங்கு கின்றன. கழுத்தும் வாயும் பல்லாவரம் புதைகுழிக்கலனை ஒத்திருப்பினும் அதைப்போன்று நீண்டிராமல் குட்டையாக உள்ளன. இவை ஆதித்த நல்லூரில் அகழ்ந்து கண்ட முதுமக்களின் தாழிகள் தோன்றிய காலத்திற்குப் பின் எழுந்தவையாக எண்ணப்படுகின்றன. வட இந்தியாவில் செம்பு ஊழியில் எழுந்த புதை குழிகளில் கண்டெடுத்த தாழிகள் ஒருவிதமாக உள்ளன. தென் இந்தியாவில் இரும்பு ஊழியில் அகழ்ந்து கண்ட தாழிகள் வேறு வித மாக உள்ளன என்று சிலர் கூறுகின் றார்கள் : இது தவறு. திராவிட நாக ரிகம் எங்கு நிலவி இருப்பினும் ஒரே அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை யாகும். பெரும்பாயூரில் அறிஞர் அலெக் சாந்தர் இரீயா அவர்கள் அகழ்ந்து கண்ட புதைகலன்களில் (தாழிகளில்) சில, ஆதித்த நல்லூரில் அகழ்ந்து கண்ட தாழிகளினின்று சில வேறுபாடுகளை உடையன. (படம் 5 ஐப் பார்க்க). அடிப்படை ஒன்றுதான் என்றாலும் இது. படம் 2ஐப் போன்று வாயும் கழுத்தும், தோளும் அழகாக அமைந்துள்ளது. ஆனால், அடிப் பாகம் மட்டும் மாறுபட்டதாகக் காணப்படுகிறது. இவை, நிலத்தில் தாழி செங்குத்தாக நிற்கத்தக்கதாக அடி அகன்று சிறிய மூன்று குட்டையான கால் களையுடையனவாகத் திறமையுடன் செய்யப்பட்டுள்ளன. விளக்கமாகக் கூறுவ தானால் ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட முதுமக்கள் தாழிகள்தாம் இவற்றைவிட அமைவுடையனவாகக் காணப்படுகின்றன என்று கூறப்படுகிறது. இந்தப் பெரும்பாயூர் தாழி செங்குத்தாக, நிற்க வைத்து இறுதிச் சடங்குகள் செய்வதற்கு ஏற்றவாறு அமைந் துள்ளது என்று கூறலாம். மேலும் பெரும் பாயூரில் இதைவிட அகன்று நீண்ட பெரிய கால்களையுடைய தாழியும் (புதைகலனும்) ஒரு காலையுடைய நிலைப் பேழைமீது, உருளை வடிவமான பானை போன்று வைக்கப்பெற்றுள்ளது. ஆனால், அதன் வாய் ஏனைய புதைகலன்களின் வாய்களை விட மிகச் சிறியதாகச் செய்யப்பட்டுள்ளது. முன்னாளில் உள்ள சென்னை மாநிலத்தின் மலபார் மாவட்டத்தில் கறுப்புவண்ணம் வாய்ந்த ஒருவகைத் தாழிகள் அகழ்ந்து கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இவை ஆதித்த நல்லூர்த் தாழிகளினின்று அதிக வேற்றுமை யுடையனவல்ல. ஆனால், சிறிய கழுத்தும் அகலமான அடிப்பகுதியும் உள்ளன. வண்ணமும் கறுப் பாக அமைந்துள்ளது. கழுத்து செங்கற்பட்டுத் தாழிகளைப் போன்று காணப்பட்டாலும் அடிப்பகுதி அகன்று நிலத்தில் வைத்தால் செங்குத்தாய் நன்கு நிற்பதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. உடல் அரப்பாவில் அகழ்ந்து கண்ட தாழிகளைப்போல் அகன்று காணப்படுகிறது. இத் தாழிகள் மிக உறுதியாகச் செய்யப்பட் டுள்ளன. ஆதித்தநல்லூர்த் தாழிகளைப் போன்று பல்லாவரம், பெரும்பாயூர், பழையகாயல், அரப்பா முதலிய இடங்களில் கிடைத்த தாழிகள் அனைத்தும் கருஞ்சிவப்பு வடிவத்தில் காணப் படும் பொழுது இந்த மலபார் மாவட்டத்தில் உள்ள தாழிகள் மட்டும் கறுப்புவண்ணம் வாய்ந்தனவாய்க் காணப்படுகின்றன. ஆதித்தநல்லூரிலே கருமைவாய்ந்த மட்பாண்டங்கள் காணப்படு கின்றன என்றாலும், தாழிகள் கறுப்பு வண்ணத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆதித்தநல்லூரில் காணப்பட்ட பல மட்பாண் டங்கள் நன்றாகக் கறுத்த நல்ல பளபளப்புடன் காணப்படும் நிலைப்பேழை மீது அமைக்கப்பட்டுள்ளன; பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. அறிஞர் நல்லாயர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் பழையகாயல் பக்கத்தில் அகழ்ந்துகண்ட சாடி என்று சொல்லப் படும் புதைகலன் ஒன்று 11 அடி நீளம் இருந்தது. இதனை ஏற்கனவே விளக்கிக் காட்டியுள் ளோம். இதன் உருவம் திருநெல்வேலி மாவட்டத் திலுள்ள முற்காலப் பயிர்த் தொழிலாளர் இல்லங் களில் நெல், புல், எள், கொள், சிறுபயறு, பெரும் பயறு போன்ற கூலப்பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கப்படும் சுடுமண்ணாற் செய்யப்பட்ட பெரிய குதிர்களின் வடிவில் உள்ளது. வாய் சற்று அகலமாயும் உடல் நீளமாயும் உள்ளது. கழுத்து கட்டையாய்க் காணப்படுகிறது. இது இறந்துபோன மக்களின் பிணங்களை நின்ற நிலையில் வைத்துப் புதைக்கக்கூடியது. இது படுக்கும் நிலையில் உடலை வைத்துச் சாடி வாயிலில் மூடியிட்டுப் புதைக்கும் நல்ல கல்லறைப் பெட்டி (Sarcopagi) என்று கூறப்பட்டு வந்தது எனத் தெரிகிறது. இதனால், இரும்பு ஊழியில், தமிழகத்தில் பல்வேறு வகையான புதைகலன்களில் வைத்துப் பிணங்களைப் புதைத்ததாகத் தெரிகிறது. சிந்துவெளியில் செம்பு ஊழியில் எழுந்த அரப்பன் பண்பாடும் தமிழகத் தில் இரும்பு ஊழியில் தளிர்த்த ஆதித்த நல்லூர்ப் பண்பாடும் ஏறத்தாழச் சம காலத்தில் அரும்பியதாகச் சிலரால் கருதப்படுகின்றது. இரு நாகரிகங் களும் தமிழர்களின் ஆதிமுன்னோர் களைச் சேர்ந்த ஆற்றங்கரை நாகரிகங் களேயாகும். இன்னும் தெளிவாகக் கூறுவதானால் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு, பண்டுதொட்டு வழிபட்டு வாழும் வேளாளர் பண்பா டாகும். இந்த அரப்பன் பண்பாடும் ஆதித்தநல்லூர் ஆற்றங்கரைப் பண் பாடும் மிகத் தொலைவில் வெவ்வேறு ஊழிகளில் எழுந்த பண்பாடாக இருப்பினும் காலத்தால் இனத் தால் பண்பால், சமயத்தால் நாகரிகத்தால் மிக நெருங்கிய ஒருமைப்பாடு உடையனவாகும். ஆதித்த நல்லூருக்கும், சிந்து வெளியில் உள்ள அரப்பா (Hara-ppa)ɉF« சுமார் 2400 கி.மீ. இடைவெளியிருப்பினும், போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் அஃதாவது 4000 ஆம் ஆண்டிற்கு முன்பே நாட்டுத் தொடர்பும் இனத்தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் சமயத்தொடர்பும் எழுந் துள்ளது; நெருங்கிய ஒருமைப்பாடு மலர்ந்துள்ளது. அரப்பன் பண்பாடும் ஆதித்த நல்லூர் திராவிடப்பண்பாடும் சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ளது என்று உலகறிய உரைத்தார் மொகஞ்சதாரோ அகழ் ஆய்வை முன்னின்று நடத்திய நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த பேராசிரியர் திரு. ஆர்.டி. பானர்சி அவர்கள் ஆதித்தநல்லூர் திராவிட நாகரிகத்தைப் பற்றி, சர். சான் மார்சல், முனைவர் இ.சே.எய்ச். மெக்கே, எம்.எ.எம். வாட்சு, முனைவர் எம்.உயிலர் போன்ற பேரறிஞர்கள் தங்கள் நூல்களில் எங்கும் குறிப்பிடாதிருக்கும் பொழுது திரு.ஆர்.டி.பானர்சி மிகத்துணிவாக ஆதித்த நல்லூர்ப் பண்பாட்டையும் நன்கறிந்து திராவிட இந்தியா வின் தலைநகரான அரப்பா நாகரிகத்தையும் தென்இந்தியாவின் தமிழர் நாகரிகத்திற்குச் சிறந்த எடுத்தக்காட்டாக இலங்கும் முது பெரும் பண்பாடாகிய ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டை இணைக்கும் நாகரிகத்தையும் அறிந்து எடுத்தக்காட்டியதற்கு நாம் வியப்படை யாதிருக்க முடியவில்லை.1 தமிழர்கள் எந்த நாட்டிலும், கண்காணாத் தீவுகளில் குடியேறி இருந்தாலும், எத்துணை ஆண்டிற்கு முன் குடிபெயர்ந்திருந்தாலும், அன்னிய இனத்தவர்களோடு கலந்து போயிருந்தாலும் எவரும் தமிழர்களை எளிதில் தடம் கண்டுபிடித்து விட முடியும். அவர்களின் சமயம், தெய்வம், உடை, நடை, பண்பு, நாகரிகம், மொழி, மரபு வழக்கம் ஆகியவை மாறாது இருந்து வருவது அவர்களை எளிதில் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. ஆதித்தநல்லூர்த் தாழிகளும் அரப்பன் பண்பாட்டில் எழுந்த தாழிகளும் ஒத்தனவாய்க் காணப்படுகின்றன. அரப்பாவில் கண்ட தாழிகள் 4 அடி உயரம் உள்ளனவாகக் கழுத்தின்றி வாய் அகன்று நுனி கூம்பியதாகக் காணப்படுவது வியப்பாகக் காணப்படுகிறது. இவை ஆதித்த நல்லூர்த் தாழிகளின் பிரதிபலிப்பு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இதனை விளக்க ஆர்.டி. பானர்சி மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளார்.2 ஒருமைப்பாடு செம்பு ஊழிமக்கள் வெண்கல ஊழிமக்களின் எச்சமிச்சங் களை இங்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளோம். அதோடு மெசபொத்தாமியா, மைய ஆசியா, சின்ன ஆசியா (Asia Minor) கிழக்கு மையநிலக் கடற்கரை நாடுகளின் தீவுக் கூட்டங்களிலும் சிறப்பாகக் கிரிட் தீவுகளிலும் உள்ள வெண்கல ஊழிப் பண்பாட் டோடு மிகத் தெளிவாக இணைந்திருப்பதை மிக விரிவாக விவரித்துச் செம்பு ஊழி, வெண்கலஊழி மக்களின் எச்சமிச்சங்கள் அங்கு நிலவியன என்று காட்டியுள்ளோம். மொகஞ்சதாரோ, அரப்பா முதலிய இடங்களிலுள்ள மூடப்பட்ட கல்லறைப் புதையல்களும் (Cist burials) சாடிப்புதையல்களும் (Jar burials), கல்லறைகளிலும், புதைகலன்களிலும் தாழிகளிலும் வைத்துப் புதைக்கும் வழக்கத்தை ஒத்திருந்தது. தென் இந்தியா, தென் கிழக்குப் பகுதிகளோடும் மெக்ரான் (Mekran) தெற்குப் பாரசீகம் மெசபொத்தாமிய, மையநிலக்கடற்கரைப் பகுதிகளில் உள்ள நாடுகளின் மக்களுடைய புதைக்கும் பழக்க வழக்கங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையனவாக இருந்தன. பஃரைன் தீவிலும் பாரசீகத்திலுள்ள புஹைர் (Buhire) அருகிலும் மாதிரிப் புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர். உல்லியம் ஔலி (Sir William Ouseley) என்னும் அறிஞரால் புஹைர் அண்மையில் உள்ள வரலாற்றுக் காலத்திற்கு முன்னுள்ள இருகாடுகளில் உள்ள புதைகுழிகளில் மனித எலும்புகள் சாடிகளி லும் மண்பாண்டங்களிலும் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.3 மண்ணாற் செய்யப்பட்ட தாழிகளில் வைத்தோ, அல்லது அதைவிடச் சிறப்பாகச் செய்யப்பட்ட சாடிகளில் வைத்தோ சவங் களைப் புதைக்கும் வழக்கமானது மிக நாகரிகமானது. இந்த நாகரிக மான செயல் எகிப்து, மெசபொத்தாமியா, பாரசீகம் முதலிய நாடு களிலும், சிந்துவெளிப்பகுதிகளிலும் பரவியுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் சமகாலத்தில் அல்ல இதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே வகைவகையான தாழிகளில் பிணங்களை வைத்துப் புதைக்கும் வழக்கம் நிலவியுள்ளது என்பது நன்கு தெரிகிறது. வெளிநாட்டுத் தாழிகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற புதை கலன்கள் அனைத்தும் வட்டவடிவிலான அடிப்பகுதியை உடையவை. அரப்பா வில் அகழ்ந்து கண்ட புதைகலன்களாகிய சாடிகளில் ஒன்று நுனி கூரியதாக உள்ளது. புஹைரில் கூட அத்தகைய சாடிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பிராமணபாத்திலும் இத்தகைய சாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று இந்தியாவில் உள்ள அரும்பொருட் காட்சிச் சாலையில் இடம் பெற்றுள்ளது.4 ஆனால், இங்கு 1882 ஆம் ஆண்டில் எதுவும் காணப்படவில்லை.5 சிறிது காலத்திற்கு முன்னர் பஹ்ரைன் தீவில் செய்யப்பெற்ற அகழ் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட கல்லறைகளில் காணப்பட்ட சாடி களும், தாழிகளும் கூரிய அடிப்பகுதியை உடையனவாய் உள்ளன.6 டிராய் (Troy) நகரில் சிலைமான் (Schleman) அவர்கள் இதே போன்ற தாழிகள் பலவற்றை அகழ்ந்து கண்டுபிடித்துள்ளார். புதைகலன்கள் (larnakes) மெசபொத்தாமியாவிலும், மொகஞ்சதாரோவிலும் பிராமணபாத்திலும் தென்னிந்தியாவில் பலவிடங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. களிமண்ணால் செய்யப்பெற்ற பிணப்பேழை யில் (Coffin-š) மிக நுட்பமாகச் செய்யப்பெற்ற புதை வினையில் பாயிலிட்டு மூடப்பட்ட எலும்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.7 குளிப்பு-குழாய்வடிவான (Bath-tube-shape) புதைகலன் களும் (Larnakes) நிப்பூர் சாடிப்புதைவினையும் நீங்கள் அறிந்திருப் பீர்கள். ஆனால், கிரீட் தீவில், சாடிப் புதைவினைகளில் மிக நுட்ப மான, புதைகலன்களும், சிறிதும் பெரிதுமான கல்லறைப் புதைகுழி களும் (Cist graves), சமாதி மண்டபங்களும், நிறைவுடையனவாக, காலவரிசை முறைப்படியான நியதியில் இருக்கின்றன.8 அங்குப் புதைவினைகள், பூச்சாடிகள், செம்பு அல்லது பித்தளைத்தட்டு முட்டுப் பொருள்கள், கத்தி கண்ணாடி முதலியன அடங்கியுள்ளன வாய் இருந்தன. நடுமின்கண் (Middle mincan) காலத்தில், கிரீட்தீவில் தாழிப்புதை வினைகள் நிறைவான பழக்கமாய் நிலவியிருந்தன. அவைகளை நாம் ஆதித்தநல்லூரில் காண்கிறோம் என்ற வரலாற் றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.9 தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் பிணங்களைப் புதைக்கும் முறைகளை இங்கு விரிவாக எடுத்தக்காட்டியுள்ளோம். வட இந்தியா, பாரசீகம், மெசபொத்தாமியா, சின்ன ஆசியா, கிரீட் தீவு போன்றவைகளில் காணும் முறைகள், ஒரே கால வெளியீட்டுத் தொகுதியில் காணப்படுபவைகளாய் உள்ளன. அஃது உச்ச நிலையில் விடாத் தொடர்புள்ளது. இஃதன்றி இந்திய வரலாற்றறிஞர் சுனிதி குமார் சட்டர்ஜியின் இந்தியப் பதங்களான. தமிழ், தம்மில், (Damil) திராவிட என்பவைகளும் உலகின் முதல் வரலாற்றாசிரியரான ஹெரட்டோட்ட என்பவர் தெர்மிலாய் (Termilai) என்று குறிப்பிட்ட அதே பொருளிலும், திரிமமிலை (Drimmilai) என்று பழைய இலைசியன் சாசனங்களிலும் காணப்படுபவை என்று ஓர் அறிஞர் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் மார்டன் ரெவியூ என்ற திங்கள் இதழில் குறிப்பிட்டுள்ளது இங்குக் கவனிக்கத்தக்கதாகும்.10 தமிழர்கள்மொழியாலும், பண்பாட்டாலும், நாகரிகத் தாலும், பழக்க வழக்கங்களாலும் மிகவும் தொன்மையும், சிறப்பும், உடையவர்கள் என்றும் அவர்கள் கிறித்தவ ஊழி எழுவதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே, உலகில் பல்வேறு இடங்களிலும் குடியேறி அரிய தொழில்களையும் உயரிய சமயத்தையும் நல்ல பழக்க வழக்கங்களையும் பரப்பியவர்கள் என்றும் இங்கு நன்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. புதை குழிகள் மனிதன் ஆதி காலத்தில் விலங்குகளோடு விலங்காய் வாழ்ந் தான். அவன் விலங்கினும் கொடிய உயிரினமாய் இழி செயல்கள் அனைத்தும் பெற்றவனாய் மாறியதும் உண்டு. அவன் ஆதியில் காய்கனி, கிழங்கு கீரை முதலியவைகளைத் தின்று உயிர் வாழும் பிராணியாய்த் தோன்றினான். அப்பால் விலங்குகளையும் பறவை களையும் கொன்று தின்று வாழும் வேடர் நிலையை எய்தினான். அப்பால் அவன் தன்னைப் போன்ற மனித இனத்தவர்களைக் கொன்று, உதிரத்தைக் குடித்து ஊனைத் தின்று உளம் மகிழ்ந்த கதையும் உலகில் உண்டு. இத்தகைய கொடிய பேய் மனிதர்கள் இன்றும் சில தீவுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் என்று அறிகிறோம். இத்தகைய குருதி வெறி கொண்ட ஊன் சுவை கண்ட விலங்கு மனிதர்களை மேனாட்டு இலக்கியங்கள் கனிபால் (Cannibals) என்று அழைக்கின்றன. இத்தகைய கொடிய மனிதப் பேய்களுக்கு அறிவூட்டி அவர்களை மனிதர்களாக்கக் கருதி அவர்கள் வாழும் தீவுகளுக்குச் சென்று சமய அறிவுரை கூற முயன்ற வெள்ளைக் கிறித்தவப் பாதிரிமார் பலர் அவர்களுக்கு நல்ல உணவானதாகச் சில கிறித்தவர்கள் பேசியதைக் கேட்டிருக்கின்றோம்; எழுதியுள்ளதைப் படித்திருக்கின்றோம். இந்திய நாட்டில் கூட, சில மலைகளில் வாழும் நாகரிகம் அற்ற மக்கள், மலை அடிவாரத்தில் உள்ள சிற்றூர் களில் வாழும் மக்களின் பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகளைக் கொன்று தின்றுள்ள நிகழ்ச்சிகளை நாம் செய்தித்தாள்களில் படித்ததும் உண்டு. இந்த மனித விலங்குகளின் வயிறே, மக்களின் புதை குழியாய் இருந்தது என்று வரலாற்றாசிரியர்களும் புதை குழிகளின் வரலாற்றை எழுதும் ஆசிரியர்களும் வேடிக்கையாய்க் குறிப்பிடும் நிலையில் ஒரு காலத்தில் நமது சமூகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. பண்டைக்கால மனித இனம் தம்மோடொத்த மனிதர்கள் இறந்துவிட்டால், அந்த உடலை நாயும் நரியும், கழுகும் தின்னுமாறு அங்கேயே போட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் சென்ற காலமும் உண்டு. நீண்ட காலத்திற்குப் பின்பே இறந்துபோன மக்களின் உடலை, மண்ணிற் குழிதோண்டிப் புதைக்கும் வழக்கத்தை மனித சமூகம் பெற்றது என்று அறிகின்றோம். மக்கள் நாகரிகம் பெற்ற காலத்தில் பிணங்களை மண்ணால் செய்த புதை கலன்களில் வைத்துப் புதைக்கும் வழக்கத்தையும் சுட்டெரிக்கும் பழக்கத்தையும் பெற்றார்கள் என்று அறிகின்றோம். மிகப் பிற்காலத்திலேதான் பிணங்களைப் பெட்டிகளில் வைத்து மண்ணில் புதைக்கும் வழக் கத்தையும் கல்லறை கட்டி அதில் பிணப் பெட்டிகளை வைத்து அடக்கம் செய்யும் முறைகளையும் மனித சமூகம் அடைந்தது என்று தெரிகிறது. இன்றும் பாரசீக இனத்தைச் சேர்ந்த சொராடர் சமய மக்கள் இறந்தவர்களின் உடல்களை ஓர் இடத்தில் வைத்து, அவை அழுகி நாற்றம் எடுத்துக் கழுகு போன்ற பறவைகள் தின்னும் படி செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாழிப்புதையலில் தமிழர் நாகரிகம் பண்டைக்காலத் தமிழ் இனமும், அவர்களின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படும் திராவிட இனமும் பதினாயிரம் ஆண்டு களுக்கு முன்பே, கல் ஊழியில் வாழ்ந்திருக்கும்பொழுதே பிணங் களைக் குளிப்பாட்டி நல்லாடை புனைந்து, நறுமணம் ஊட்டி, அழுது தொழுது, நெய்ப்பந்தம் காட்டி, ஒப்பாரி பாடி, மாரடித்து, மலர் மாலைகள் சூட்டி, மலர்மாலைகள் தொங்கும் சப்பரத்தில் வைத்துத் தூக்கிச்சென்று புதைத்தும், தாழிகளில் வைத்துப் புதைத்தும், கல்லறைகட்டி அவற்றில் வைத்து மூடியும், வாழ்ந்தனர். தமிழினத்தார், புதிய கற்காலத்திலே இறந்துபோன மக்களின் உடல்களைத் தாழிகளில் வைத்துப் புதைத்து வந்தனர் என்பதற்குத் தென் இந்தியாவில் உள்ள புதை குழிகளில் கண்டெடுத்த புதைகலன் களே அசைக்க முடியாத உறுதியான சான்றுகளாகக் காணப்படு கின்றன. அனைத்தினும் புதிய கற்காலத்தின் தொடக்ககால இரும்புப் பண்பாட்டில் எழுந்த ஆதித்தநல்லூர்த் தாழிகள் சிறந்த சான்று களாகக் காணப்படுகின்றன. தென் இந்தியாவில் உள்ள மக்கள் இறந்துபோன மக்களின் உடல்களைப் புதைப்பதில் நல்ல நாகரிக முறைகளைப் பெற்றிருந்தனர். இதற்குத் தென்இந்தியா பெற்றிருந்த ஐந்து விதமான புதைக்கும் முறைகள் அறிஞர்களால் பாராட்டத் தக்கனவாய் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. 1. தாழியிலிட்டுப் புதைக்கும் தகைமை பிணங்களைத் தாழியிலிட்டுப் புதைக்கும் சீரிய முறை தமிழகத்தில் பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்து வந்த முறையாகும். இதனை ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட தாழி களும், அதன் உள்ளிருக்கும் எலும்புகளும், பொன்பட்டங்களும், இரும்புக் கருவிகளும், வெண்கலப் பொருள்களும், பிறவும் உறுதிப் படுத்துகின்றன. இந்தப் புதைகலன்கள் உடல் முழுவதும் உள்ளடங் கும் முறையில் பெரியனவாகவும் உள்ளன. ஆதி காலத்தில் பிணங்கள் சுடப்பட்டன என்பதற்குச் சான்றுகள் காணப்படவில்லை. ஆதித்த நல்லூரில் அகழ்ந்து கண்ட தாழிகளில் ஒரு மனிதனுடைய எல்லா எலும்புகளும் இருந்தன என்றும் எவரும் குறிப்பிடவில்லை. சில தாழிகளில் மண்டையோடுகளே காணப்படவில்லை. நிற்க, தாழிகளில் பிணங்களை வைத்துப் புதைக்கும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்துவந்தது. கிள்ளிவளவன் குளமுற்றத்தில் துஞ்சியதை அறிந்து ஐயூர்முடவனார் பாடிய பாடலே இதற்குச் சான்றாகும். கிள்ளிவளவன் உயிர் நீத்தது ஐயூர்முடவனார்க்குப் பெரும் வருத்தத்தைத் தந்தது. அக்காலத்தில் இறந்தவர்களை ஒரு பெரிய தாழியில் வைத்துப் புதைப்பது வழக்கம். எனவே புலவர் ஐயூர்முடவனார் மனக்கண்ணிற்குக் கிள்ளிவளவன் பூத உடம்பு புலனாகாது, புகழுடம்பு புலனாயிற்று. தாழியாற் கவிப்பதாயின் அப் புகழுடம்பைத்தான் கவிக்கவேண்டும் என்று எண்ணினார். அவ் வுடம்பு நிலஉலகு முழுதும் பரந்து வானளாவ உயர்ந்து தோன்றிற்று. அதற்கேற்ற தாழி வேண்டின் குயவன் இந்த நில உலகை ஆழியாக வும் மேருமலையை மண்திரளாகவும் கொண்டு பெரியதொரு தாழி செய்யவேண்டும் என்று எண்ணினார். குயவனை நோக்கி, இவ்வாறு ஒருதாழி செய்ய இயலுமோ என ஒரு பாட்டைப் பாடியுள்ளார்.11 நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன் கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் தேவ ருலக மெய்தின னாதலின் அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம் இருநிலந் திகிரியாப் பெருமலை மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே (புறம் 228. 4-15.) புறநானூற்றில் உள்ள மற்றொரு பாட்டில் சுரம்பல வந்த எமக்கும் அருளி வியன்மல ரகன்பொழில் ஈமத் தாழி அகலிதாக வனைமோ (புறம் 256-4-6) என்று கூறப்பட்டுள்ளது. 238, 364 ஆம் பாடல்கள் தாழியைப் பற்றிக் கூறுவதன் மூலம் சங்ககாலத்திலும் அதற்கு முன்னுள்ள காலத்திலும் தாழியில் வைத்துப் பிணங்களைப் புதைத்து வருவது தமிழர் மரபு என்பது நன்கு புலனாகின்றது.13 2. கால்கள் உள்ள புதைகலன்கள் கால்களையுடைய தாழிகள் சென்னையிலே பல கண்டெடுக் கப்பட்டுள்ளன. அவற்றுள் பல எலும்புகளுடனும் பிற பொருள் களுடனும் காணப்பெற்றன. இவற்றில் பெரிதும் சிறிதும் உள்ளன. மிகப்பெரியது ஆறுஅடி அல்லது அதற்கு மேலும் உள்ளதாய் நீள வட்டவடிவில் உள்ளது. மிகச் சிறியது நான்கு கால்களோடு நாற் கோண வடிவில் உள்ளது. இவைகளெல்லாம் மூடிகளையுடையன. நாம் மீண்டும், முக்காலும், நாற்காலும் உடைய புதைகலன்களும் உள என்று இங்குக் குறிப்பிட்டதாக வேண்டியதிருக்கிறது. இவை வட ஆற்காடு மாவட்டத்திற்கே சிறப்பாக உரியனவாகும். 3. அகழ்ந்தெடுத்த குகைச் சமாதி குடக்கல்லு அல்லது குடைகல், கல்லறைகள் நமது நாட்டில் சில உள. இவை வட்டவடிமான அறையாக உள்ளன. ஒன்று நாலு அடி ஆழமும் ஆறுமுதல் 8 அடி குறுக்களவும் உள்ளதாய்ப் பாறை யில் செங்குத்தாய்த் தோண்டப்பட்டுள்ளது. இதன் மீது மூடிபோல் மறைக்கும் பாவுகற்களுமுள. இந்தக் கல்லறைப் புதையல்கள், தாழிப்புதையல்கள் ஆகியவைகளுக்கும் கல்மேடை (Dolmens) களுக்கும் இடையே தொடர்புகள் காணமுடியும். 4. அகழ்ந்து கண்ட அரிய சமாதி அறை இந்தச் சமாதிகள் மலபாரில் உள்ள துளை (Tholai) என்பதோடு தொடர்புடையன. இந்தச் செங்கோண வடிவில் வெட்டப்பட்ட பாறையில் உள்ள சமாதிகள், மேலே திறந்த கூரையையுடையன. மேற்பகுதி கதவுகள் போல் மூடக் கூடியது. இந்தச் சமாதிகள் பண்டைய கிரீட்டில் கூட இருந்தன. கிரீட்தீவில் கற்களை அடிப் படையாக வைத்துச் செங்கல்லினால் கட்டப்பட்ட சுவர்களை யுடைய நாகரிகமான சமாதிக்கட்டிடங்கள் பல இருந்தன. கேரள நாட்டிலுள்ள திராவிடமக்கள் தொளை (துவாரம்) எனப்படும் புதை குழியில் இறந்துபோன மக்களின் உடல்களையிட்டுப் புதைக்கி றார்கள். இவை திராவிட மக்களின் இனத்தவர்கள் என்று இன்று அகழ் ஆய்வு அறிஞர்கள் கூறும் கிரேத்தர் (cret) மக்களின் மினோன் காலத்துச் சமாதிகளைப்போல் உள்ளன. அவற்றில் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் கண்ட இரும்பு வாள்கள், பூக்கிண்ணங்கள், முத்தி ரைகள் போன்ற பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிரேத்தர் மக்கள் தலைப் பகுதியில் இறந்து போனவர்களால் விரும்பப் பெற்ற பொருள்களை வைத்துப் புதைத்து வந்தனர். 5. கல்லறைப் பிணக்குழி கல்லறைப் புதையல்கள் : நிலத்தை அகழ்ந்து, அடியில் வட்ட மாகக் கற்களை அடுக்கி வைத்து நடுவில் பிணங்களை வைத்துப் பல சமயச் சடங்குகளைச் செய்து புதைப்பது தமிழ் மரபு வழக்கம். இந்த மரபு வழக்கம் தென் இந்தியாவைவிட தக்காணத்தில் பெரிதும் பரவியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள மௌலா அலி என்னும் இடத்தில் உள்ள புதைகுழியில் எழில் பெற்றுத் திகழ்கின்றன. இந்தப் பிணக்குழியில் மிகப்பெரியது ஒரே நேரத்தில் இருபது பேர் நேராக நிற்கக் கூடியதாய் உயர்ந்ததாய்க் காணப்படுகிறது. இங்கு ஆந்திர நாட்டிலுள்ள கச்சலகொண்டாவில் உள்ள ஒரு புதைகுழியின் வரைபடம் தரப்பெற்றுள்ளது. காண்க. பிணங்களைப் புதைக் கும் முறையில் இந்தியா எங்கும் ஒருமைப்பாடு நிலவியதாகக் காணமுடியவில்லை. ஆனால், சுடுமுறை பல இடங்களில் காணப்படுகிறது. கி.பி. இரண் டாம் நூற்றாண்டிற்குப் பிற் பட்டதாகக் கூறப்படும் ஐம் பெருங் காப்பியங்களுள் ஒன் றான மணிமேகலையில் பிணச் சடங்கு முறை ஐந்து கூறப்பட் டுள்ளன. அந்த ஐந்தில் ஒன்று சுடுதல் மற்றொன்று பிணங் களைக் கழிவு நிலங்களில் வீசி விடுவதாகும். இது புதைப்பதி லும் சுடுவதிலும் அடங்காத ஒரு தனிமுறையாகும். இதனை இடுவோர்முறை யென்று சிலர் கூறுகின்றனர். இந்த இரண்டு முறைகளும் திராவிடர்களுக்குப் புதிய முறையென்று தெரிகிறது. ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்தபின் இந்நாட்டில் கண்ட புதிய முறை சுடுதல் என்பதாகும். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்தபின் எழுந்த முறைகள் எஞ்சிய மூன்று முறைகளும் ஆகும். இவை தென் இந்தியத் திராவிடப் பண்பாட்டில் அரும்பிய முறையாகும். ஆழக் குழியில் புதைப்போர், தொடுகுழியில் இடுவோர் சாதாரணமாக கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறைகளில் புதைப்போர், கல்லறைக்குள் தாழிகளில் உடலைவைத்துப் புதைப்போர், தாழியிற் கவிப்போர் என்று தமிழ் இலக்கியங்களில் துலக்கமாகக் கூறப்பெற் றுள்ளன. இது பழங்காலப் புதையல் முறையைத் தொடர்ந்து கிறித்தவ ஊழியின் தொடக்ககால நூற்றாண்டில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள புதிய முறைகள் நிலவும் வரை தொடர்ந்து வந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.13 இன்று பிணங்களைச் சுடுகாட்டில் கொண்டுபோய் விறகு களை அடியில் அடுக்கிவைத்து, மேலே சாண எருமூட்டைகளை அடுக்கி அதன்மீது பிணத்தை வைத்து வைக்கோலைப் போட்டு மண்சாந்தை அதன்மேற் போட்டு மெழுகி, மேலும் வைக்கோலைப் போட்டு மண்சாந்தால் பூசித் தலைப்புறம் கால்புறம் இரு விலாப்புறம் மேற்புறம் ஆகியவற்றில் துளையிட்டு நெருப்பை (கொள்ளிக் கட்டையை) வைப்பர். இப்படிச் செய்வதால் உள்ளே இருக்கும் பிணமும் கட்டைகளும் எரிந்து சாம்பலாய் விடுகின்றன. எலும்புகள் மட்டுமே எஞ்சிக்கிடக்கும். மறுநாள் காடாற்ற என்ற சடங்கும், பதினாறாம் நாள் கல் எடுப்பு என்ற சடங்கும் நடை பெறும். இஃது இன்றும் தமிழர்களில் மருத நிலத்தவர்களான வேளாளர்களிடமும் அந் நிலத்தில் தோன்றிய தொழிலாளர்களான தட்டார் (பொற் கொல்லர்) கொல்லர், கல்தச்சர், மரத்தச்சர், கன்னார், எண்ணெய் வணிகர், பாலை நிலமறவர், முல்லைநில ஆயர் போன்ற இனத்தவர்களிடமும் வழக்கில் இருந்து வருகிறது.14 குறிப்புகள் - NOTES VIII 1. “The recent discoveries in Sindhu and Baluchistan prove that he cutural affinities of the Dravidians extend in an unbroken line from the Tinnevelly District (Adiththanalloor) in the extreme of Indian Peninsula through Sindhu and Baluchistan the island Bahrein in the persian gulf, South Persia, Mesopotamia and crete and some of the islands of the Eastern Mediterranean” -Dra vidian Civilization - R.D. Banerji, Calcutta, 1927. (Modern Review) p 308. 2. These Lanarkes were found just above what Myres calls the Double-urn interments, what Rea called Pyriform tombs and Evans calls jar Burials in Crete are the same as the kettle burials of Mesopotamia. In Southern India these jars covered with a terra -cottah lid and in some cases with a stone - In the Northern India two of them were found with stone covers at Mohenjodaro in 1922-23 and in the chotta Nagpur Districts they are invariably placed under larger or small stone covers. “They therefore form a distinct part of the system of jar burial of the copper age and along with them were found some beautiful bronze chariot wheels similar to the pottery wheels discovered at Harappa and Mohenjodaro” Dravidian Civilization by Prof. Ragal Doss Banerji M.A., (2 articles in Modern Review Calcutta) 1927, p.555. 3. The remains of the people of the copper and bronze Ages described above are very definitely connected with the bronze Age culture of Mesopotamia, central Asia, Asia Minor and the lands of the Eastern mediterranean archipelago specially that of crete. The cist Burial and Jar Burials of Mohenjo-daro, Nal and Harappa connected as they are with the cists, Larnakes jars etc., of South India, towards the South - east, are also intimately connected with the Burial customs of Mekran South Persia, Mesopotamin and the Mediterraneen people. The nearest specimens are to be found in the Isand of Bahrain and neer Bushire, in Persia, Sir William Ousely discovered a prehistoric cemetery of this type near Bashire consisting of jars with pointed ends containing human bones and covered with a shallow earthern vessel - Indian Antiquary Vol. VIII p.166 (Modern Review Nov. 1927 - p. 556). 4. Indian Antiquary Vol. IV 1930. (London) 1930 - p.13. 5. Anderson catalogue and Hand Book; p. 393-462. 6. Annual Report of the Archaelogical survey 1908-09 pp.60-78. 7. Cambridge Ancient History (London) 1948-Vol.I p.377. 8. Ibid p. 592. 9. Ibid pp. 596-597. 10. “Thus the Burial custom which we have found in all its different forms in Southern India and in isolated cases in Northern India, Persia, Mesopotamia, Asia Minor are to be found in a complete series in Crete. It is the continuety and final culmination which led me to accept the very brilliant suggestion of Dr.Suniti kumar Chatterji that the brilliant terms “Tamil, Damil, Dravida” were really the same as the Termlai of Herodotus and the ”Trimili” of old Lycian inscriptions. Now the Archacological evidence is much stronger” - “Modern Review” (Calcutta) December 1924 Vol.XLII. 11. புறம். 228 : 4-15. 12. புறம். 256 : 4-6. 13. Attention should consentrated on a view that the cremation was primarily a vedic rite but even after it was introduced into Southern India, the other methods were also practised. Another method of exposure of the body has thus been commended upon Atharvana Samhitha XVIII, 2-34 mentions among the pitrs invoked in the Pindapitry Ajina (offering of balls of rice to the Manes) the paroptas those abandened in distant places and the liddhaitas (those exposed on elevated localities) Exposure of the dead persist to-day in a modified form among the Tebateans and parsis-Yuan Chwang, the chinese Pilgrime mentions this as one of the three recognizied methods of disposal of the dead in India. The Editor of Puducottah Manual says that the period to which any of the burials under consideration belongs can only be determined by the nature of the associated finds. In cases where only Neoliteic implements are found without any iron or bronze belong the prehistoric Age. Where urn and megalithic burials contain an abundance of iron implements and vessels and no neoliths, these may be said to belong at the earliest to the Iron Age that succeeded the Neolithic Age and continued into historic times. See my paper on the disposal of the dead in S. India in the proceedings of Tenth All India Oriental Conference pp. 530-533 (Origin and spread of the Tamils - Prof. V.R. Ramachandra Dikshitar, M.A., (Madras) 1971, (Notes to lecture I p. 86 : 31). இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibliography) 1. Catalogue of the Pre-Historic Antiquities from Adichanallur and Perumbair by Alexander Rea F.S.A {Scot} Madras 1915. 2. Pre-Histroic South India - by Prof. V. R. Ramachandra Dikshitar M A. [Madras] 1951. 3. Dravidian Civilization - Prof. Rakal Doss Banerji [Modern Review] Calcutta. 1927. 4. Indian Antiquary—[Magazine] - London Vol. VIII 1933. 5. Puram Nanooru [Tamil] - Saiva Siddanta Kazhagam [Madras] 6. Origin and Spread of the Tamils- By Prof. V. R. Ramachandra Dikshiar M.A., [Madras] 1971. 7. Stone Age of India - Ancient India V. D. Krishnamoorthi No 3p 11-58. 1947. 8. Pre-Historic India to 1000 B.C (pelican series) Stuart Piggot (London) 1962. 9. Catalogue of the Pre-Historic Antiquities - & Bruce Foot (Madras) 1962.(Govt. Press Madras). 10. Indian Pre-historic and Proto Historic Antiquities, Notes on Ages and distibution - Bruce Foote (Government Press, Madras). 11. Indus Valley Culture - V. R. Ramachandra Dikshitar, M.A, (Madras University Journal) 1933. 9. மக்களின் மண்டையோடுகள் ஆய்வுத் தொடக்கம் 1876ஆம் ஆண்டும் அதை அடுத்து, 1903 ஆம் ஆண்டும் இறுதி யாக 1905ஆம் ஆண்டு ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் டாக்டர் சாகோர், லாப்பிக்யூ, இரியா போன்ற அறிஞர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழ்மக்களின் தலையோடுகள் பலவற்றை கண்டெடுத்துள்ளனர். அப்பால் அவை தலையோட்டு ஆய்வுத்துறை வல்லுநர்களின் ஆய்விற்கு அனுப்பப்பட்டன. அவைகளிற் பல திராவிடர்களின் மண்டையோடுகள் எனக் கூறப்பட்டுள்ளன. ஒன்று ஆதிரேலியப் பழங்குடி மக்களின் மண்டையோட்டைப் போன் றிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 1962ஆம் ஆண்டில் வரலாற்றின் தொடக்ககால மனிதனின், மக்கிப்போன மண்டையோடுகளும் எலும்புகளும் பிலிப்பைனைச் சேர்ந்த பாலவான் தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டு பிலிப்பைன் தேசீயத் தொல்பொருள் காட்சிச் சாலையில் (Museum) சேர்க்கப் பெற்றுள்ளன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள பழங்காலத்தில் போர்னியோ அல்லது மலேசியத் தீவுகளிலிருந்து வந்த மக்களின் மண்டையோடுகள் சில பிலிப்பைனில் கண்டு பிடிக்கப்பட்டதாகப் பிலிப்பைன் அரும்பொருட்காட்சிச்சாலைத் தலைவர் டாக்டர் இராபர்டபாக் கூறியுள்ளார். பண்டைக் காலத்தில் வாழ்ந்து வந்த மக்களின் எலும்புக் கூடுகள் சில சீனா, இந்தோனேசியா போன்ற ஆசியாக் கண்டத்தில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது சப்பானி லும் சில பழங்கால மக்களின் தலையோடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல நாடுகளில் பழங்காலத்தில் வாழ்ந் திறந்த மக்களின் மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தலை யோட்டாராய்ச்சி வல்லுநர்களால் (Craniologists) தொடர்ந்து ஆய்வு செய்யப்பெற்று வருகின்றன.1 இன்று பல நாடுகளிலும் அகழ் ஆய்வு செய்யப்பெற்று மண்டையோடுகள் எடுக்கப்பட்டு தலையோட் டாய்வு வல்லுநர்களால் ஆய்ந்து பல வியக்கத்தகு உண்மைகள் கண்டுபிடிக்கப் பெற்று உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகளிலும் பல தீவுகளிலும் மிகத் தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் தலையோடுகள் கண்டுபிடிக்கப் பட்டதாகப் படங்களுடன் பல நாள் இதழ்களில் செய்திகள் வெளி வந்துள்ளன. அடிக்கடி நூல்களிலும் பத்திரிகைகளிலும் தலையோடு களும் அதைப் பற்றிய செய்திகளும் வெளி வருவதை அறிந்த அறிஞர் ஒருவர் இது தலையோட்டுக் காலம் (age of craniology) என்றார். அது பொருத்தமான செய்தியேயாகும். ஆதித்தநல்லூரில் அகழ்ந்து எடுத்த தலையோடுகள் சில சென்னை அரும்பொருள் காட்சிச் சாலையில் (musuem) நன்றாகப் பாதுகாத்து வைக்கப்பெற்றுள்ளன. V‹?- அவைகளில் சில இங்கிலாந்திற்காக ஆய்வின் பொருட்டுச் சென்று மீண்டும் திரும்பி வந்து சேர்ந்துள்ளன. அரும் பொருள் காட்சிச் சாலையில் இடம் பெற்றுள்ள தலையோடுகள் அளவு அடியில் வருமாறாகும்: தலையோட்டின் நீளம் அகலம் பெருக்க செ.மீ. செ.மீ அடுக்குக் குறி 1. 18.8 12.4 66.0 2. 19.1 12.7 66.5 3. 18.3 12.4 67.8 4. 18 12.2 67.8 5. 18 12.8 77.1 6. 16.8 12.1 78.0 இவை திரு. அ. இரியா அவர்கள் எழுதிய ஆதித்தநல்லூரிலும் பெரும்பாயூரிலுமிருந்து கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கு முக்கிய பழம் பொருள்களின் பட்டியல் என்ற நூலின் முன்னுரையில் விளக்கந்தரப் பெற்றுள்ளன. தலையோட்டு ஆய்வு 1900ஆம் ஆண்டு அலெக்சாந்தர் இரியா அவர்கள், சென்னை மாநிலத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் ஆதரவில் ஆதித்த நல்லூர்ப் பறம்பில் ஆய்வு நடத்தினார். அவரது ஆய்வில் கிடைத்த பொருள்களில் குறிப்பிடத்தக்கன தலையோடுகள் ஆகும். 1909ஆம் ஆண்டு சென்னைத் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த அறிஞர் தர்டனிடம் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் கிடைத்த தலையோடுகள் ஒப்புவிக்கப்பட்டன. அவர் ஆய்ந்து வெளியிட்ட தென் இந்தியக் குலங்களும் நாகரிக மற்ற இனக் குழுக்களும் (Castes and tribes of Southern India) என்ற நூலின் முதல் தொகுதியில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், இரண்டு தலையோடுகள் எனது கருத்தை ஈர்த்துள்ளன. ஒன்று மையநிலக் கடற்பகுதிகளில் (Mediterranean) உள்ள மக்களின் மண்டையோடுகள் போன்றது - அது திராவிடர்களின் மண்டை யோடு, மற்றது ஆதிரேலியப் பழங்குடி மக்களின் மண்டையோடுகள் போன்றது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சிறப்புமிக்க ஆதித்த நல்லூர் இடுகாட்டு ஆய்வில் கண்டெடுத்த தலையோடுகள் பற்றி, அவரது தனி நூல்கள் வரலாம் என்று உலகம் எதிர்பார்த்தது; வர வில்லை. 1903-1904ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேரறிஞர், எம். லூயி லாப்பிக்யூ, மீண்டும் ஓர் அகழ் ஆய்வு நடத்தி னார் அல்லவா? அதன் பயனாக மேலும் பல அரிய பொருள்கள் அகப்பட்டன. அவற்றை அவர் நன்கு ஆய்ந்து ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் அகப்பட்ட அனைத்துப் பொருள்களும் திராவிடர்களின் ஆதிமுன்னோர்க்கு உரியன என்று ஓர் உறுதியான முடிபு கொண்டார். 1899ஆம் ஆண்டு முதல் 1905ஆம் ஆண்டுவரை இப்பகுதி களை அலெக்சாந்தர் இரியா அவர்கள் அகழ்ந்து சுமார் 2000க்கு மேற்பட்ட பொருள்களை எடுத்து மிக நுணுக்கமாகத் துருவித் துருவி ஆய்வு நடத்தினார். அவரது ஆய்வில் இந்த இடுகாடு ஓர் அரும்பெரும் பழங்காலச் சின்னங்கள் அடங்கிய உயரிய கருவூலம் என்பதை நன்கு கண்டார். இங்குக் கிடைத்த பழம் பொருள்கள் முழுவதும் கிறித்தவ ஊழி தொடங்குவதற்கு முன் பயன்படுத்தப் பட்டவைகளாய் இருக்கவேண்டும். அவை பாண்டியன் காலத் தொடக்கத்தை உடையவைகளாய் காணப்படுகின்றன என்றும் கருதினார். டாக்டர் சி. மக்லீன் (Dr.C.Maclean), ஆதித்தநல்லூர், இடுகாட்டில் அகழ்ந்து கண்ட தாழிகளும் அதனுள் இருந்த பொருள் களும் பழந்திராவிடர்கள் காலத்தில் உள்ள பொருள்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் காலத்திற்கும் முன்னுள்ள மக்களின் பொருள்களாக இருக்கலாம் என்று கருதினார். பேராசிரியர். ஜி.எலியட் மித் (Prof. G. Elliot smith) என்பவர், அலெக்சாந்தர் இரியா இந்தப் பழம்பொருள்களைப் பற்றிக் கூறியது, அவரது சொந்தக் கருத்துக்கள் என்றும் அது நன்றாக அலசி ஆய்வு செய்யாது கொண்ட முடிவு என்றும் கருதிப் பின்வரும் கருத்துக் களைக் கூறினார். நம்மிடம் மறுக்க முடியாத சான்றுகள் இல்லை; ஆனால், காலத்தைப் பற்றி சூழ்நிலைக்கேற்ற பொருத்தங்காட்டும் சான்றுகள் தாம் உள. அவைகளைப் பல்வேறு வகையாகச் செயல் படுத்திக் காட்டமுடியும். உத்தேசமாக ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட பொருள்களின் காலம் 400 ஆண்டு முதல் 4000-ம் ஆண்டு வரை இருக்கலாம். எவரும் இதைத் தவறு என்று எண்பிக்கவோ அல்லது வற்புறுத்தவோ முடியாது. ஆனால், இந்த இடம் பழம் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படத்தக்க சாத்தியக்கூறு களை உடையதாகக் காணப்படுகிறது. அது குறைந்தது, கிறித்தவ ஊழி தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ளதாக இருக்கலாம் என்று கருதினார்.2 பேராசிரியர் ஜி. எலியட் மித் அவர்களுக்கு அனுப்பப் பெற்ற இரண்டு தலையோடுகளையும் அவர் நன்கு ஆய்ந்து அவரது சிறப்புமிக்க, மனிதனுடைய பரிணாமத்தைப் பற்றிய கட்டுரைகள் (1927) என்ற நூலின் இரண்டாவது பதிப்பில் ஒரு விளக்கம் தந்துள் ளார்.3 அதில் ஆதித்தநல்லூரில் கண்டெடுத்த தலையோடுகள் இரண்டும், வெவ்வேறு மனித இனத்தைச் சேர்ந்த தலையோடுகளை ஒத்திருக்கின்றன. ஒன்று, ஆதிரேலியப் பழங்குடி மக்களின் ஆதிமுன்னோர்களின் தலையோட்டை யொத்திருக்கிறது. மற்றது கிட்டத்தட்ட மைய நிலக்கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த பழைய இனத்தவர்களின் தலையோட்டை யொத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். அடிக்குறிப்பில் மையநிலக் கடற்கரைப் பகுதி (Mediterranean) மக்கள் இனம் என்பதற்குத் திராவிட இனம் என்று விளக்கம் அளித்துள்ளார்.4 இந்த இருமண்டையோடுகளும் வெவ்வேறு இனத்திற்குரிய தலையோடுகளாக இருந்தாலும் அவை இரண்டும் ஒரே குலத்தில் தோன்றியவர்களின் தலையோடுகள் அல்லவென்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்கு முன்னுள்ள வேதகால நூல்களில் நிஷாதர், கிராதர் போன்ற ஆரியர்களல்லாத மக்கள் இந்தியாவில் வாழ்ந்தனர் என்று குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இனப்பிரிவு இந்திய மக்களிடம் இன்றும் பழங்குடி மக்களின் பண்புகள் பல காணப்படுகின்றன. இவை இம் மக்களினம் ஆறு பெரிய இனத்தொகுதிகளினின்றும் அவற்றின் உட்பிரிவுகளினின்றும் வந்தவைகளாகும். ஆறு பெரிய இனத்தொகுதிகள் என்பது அடியில் வருமாறு : (1) நெக்கிரிட்டோ (2) ஆதி ஆதிராலாய்டு (3) மங்கோலாய்டு (4) மைய நிலக்கடற்கரை இனம் (அதன் உட்பிரிவான ஆதிமைய நிலக்கடற்கரைப் பகுதிகளிலுள்ள இனமும் கீழ்நாட்டு இனமும்) (5) அகன்ற மண்டையோட்டு இனமும் (அதன் உட்பிரிவுகளான தினாரிக் கர்மினாய்டுப் பிரிவுகளும் நார்டிக் இனமும்) ஆகும். நெக்ரிட்டோ ஆதி ஆதிராலாய்டு, மங்கோலாய்டு முதலிய இனங்களும் அவற்றின் உட்பிரிவுகளும் இந்திய நாட்டின் ஆதிக் குடிமக்களேயாவர். நெக்ரிட்டோக்கள் குள்ள வடிவமும் சிறிய தலையும், வெளிப்புறம் தள்ளிய நெற்றியும் வளர்ச்சியுறாத முகவாயும் பம்மென்ற தலை மயிரும் உடையவர்கள். இந்தத் தோற்றம் இந்தியாவிலுள்ள காடர்கள், இருளர்களிடையே இன்றும் காணப் படுகின்றது. ஆதிராலாய்டு இனவகை மேற்கூறிய நெக்ரிட்டோக் களைப் பெரிதும் ஒத்திருக்கிறது. இவர்களுடைய உடல் உறுப்புக்கள் நன்கு வளர்ச்சியுற்றிருக்கும். தலைமயிர் பம்மென்று சுருண்டிராமல் வளைந்து சுருண்டுள்ளது. தென் இந்தியாவிலும் மைய இந்தியாவி லும் உள்ள ஆதிக் குடிமக்களுள் பெரும்பான்மையோர் இவ்வகை யினரேயாவர். மிகத்தொன்மையான காலத்திலே, ஆதிராலாய்டு மக்களும், மைய நிலக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களும் ஒன்றித்து வாழ்ந்து உதிரக் கலப்பு உடையவர்களாய்விட்டனர். இவ்வாறு ஆதிராலாய்டு மக்களும் திராவிட மக்களும் கலந் துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் தரப்பட்டுள்ளன. அறிஞர், அக்லி (Huxly) என்பார் முற்காலத்திலேயே ஆதி ரேலியப் பழங்குடி மக்கள் திராவிடர்களோடு உறவு கொண்டிருந் தனர் என்று எண்ணுவதற்குரிய சாத்தியக் கூறுகள் உளவென்று கூறியுள்ளார். அவர் மனித இனவகை வேறுபாடுகளையும், தொடர்பு களையும், பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல் முறைகளும் பயன்களும் (The Methods and Results of Ethnology) என்று 1865 ஆம் ஆண்டு வெளியிட்ட கட்டுரை ஒன்றில், மனித இனங்களின் மிகச் சிறந்த - அவரது வகைப்படுத்தும் முறை, அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது. அதில் அவர், ஆதிரேலியர்கள் ஒரு கலப்பற்ற இனம் போன்றதாகக் கூறுவது, தெற்கு இந்துதானின் (Hindustan) திராவிட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, அவர்கள் ஆத்திரேலி யர்களிடத்தில் உடல் சார்ந்த நிலையிலும் குறையா அளவில், நில இயல் சார்ந்த நிலையிலும் நம்மைப் பின்னோக்கிச் செல்ல வழி காட்டி விட்டார்கள் என்பதை விளக்கிக் காட்டியுள்ளார். அவர் பின்னர் 1869 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், இந்தியப் புதிர்களை மிக விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளார். அதில் தக்காணத்து மக்களைப் பற்றி விளக்கிக் காட்டும் பொழுது, அவர்கள் நீண்ட தலையும் கருமையான தோலும் கன்னங்கரிய விழி களும், கறுத்து நெளிவான தலை மயிரும் உள்ளவர்கள். எவ்விதமான விருப்பமும் இன்றித் தலைமயிரை மழித்துக் கொள்வார்கள். அவர்கள், திராவிடர்கள், முதிராப் பண்புடைய முதுமக்களாய் வாழ்ந்த காலத்தில் பேசப்பெற்ற மொழியைப் பேசி வந்தனர். இவர்கள் இன்னும் இந்துதானத்தின் வடமேற்கு, வட கிழக்குப் பகுதிகளில் பழந்திராவிட இனத்தவர்கள் என்று சொல்லத் தக்க முறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் 1870 ஆம் ஆண்டில், நில இயலின் பிரிப்பேட்டில் மனித இனத்தின் முக்கியமான திருந்திய வடிவம் (The Geographical Distribution of the chief Modification of mankind) என்ற கட்டுரையில் எந்தப் புதிய சான்றுகளும் எடுத்துக் காட்டாது தம்முடைய பழைய கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதோடு அவரது கட்டுரையில், பண்டைக்கால எகிப்தியர்கள் கூட ஆதிரலாய்டு இனத்தவர்களின் கலப்புடையவர்களே யாகும் என்று மெலனோ கொரய் (Melonochroi) என்ற கறுப்பு ஐரோப்ய இனமும், ஆசுத்திர லாய்டு, சாந்தோகுரோட் (Australoid - xanthochrod) நோர்டி (Nordi) கலப்பில் தோன்றியவர்களே என்றும் எடுத்துக் காட்டியுள்ளார். அறிஞர் அக்லியின் கூற்றுப்படி ஆத்திரேலியப் பழங்குடிமக்க ளும், திராவிடர்களும் மிகப் பழமை வாய்ந்த புனிதமான மக்களின் சந்ததிகளேயாவர். அவர்களின் மயில் வண்ண நிறத்தையும், உடல் உயர்வளவு போன்றவைகளில் மேலெழுந்த வாரியான ஒப்புடைமை களையும் கவனிக்கும்படி கூறியுள்ளார். ஆத்திரலாய்டுகளுக்கும் திராவிடர்களுக்கும் இடையேயுள்ள தோற்ற ஒருமைப்பாடுகள் பற்றி அக்லியின் கருத்துக்கள் நல்ல பொருள் பொதிந்த நன்னோக்கு ஏற்புடையனவாக இருக்கின்றன என்று தெரிகிறது. அறிஞர் டோப்பினார்டு (Topinard) 1894 ஆம் ஆண்டில் ஆத்திரேலியப் பழங்குடி மக்கள், நீக்கிரோவர்களும் மெல்லிய மயிர்களுடைய, ஆட்டோச்னோவா (Autochtonoes) இனமும் கலந்த ஓர் இனம் என்று கூறுகிறார். அக்லி, ஆத்திரேலியப் பழங்குடி மக்களான நீக்ரோவர்களுடன் தென்னிந்தியர்களான காக்கேசிய மெலனோகுரா (Caucasian Melanochro) மையநிலக் கடற்பகுதி மக்கள் இனமும் கலந்துள்ளது என்று கூறுகிறார். அறிஞர் ஆட்டன் (Hotton) தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிடர் களின் முன்னோர்களில் ஆத்திரேலிய இனமும் பிற இனமும் கலந்துள்ளன என்று கூறுகிறார். இதைப் பற்றி அறிஞர்கள் பலப்பல சான்றுகள் காட்டி மக்களைக் குழப்பிவிட்டாலும் உறுதியாக ஆதித்தநல்லூரில் கிடைத்த இரண்டு மண்டையோடுகளும் திராவிட மக்களின் மண்டையோடுகள் என்பதில் ஐயம் எழக் காரணம் எதுவும் இல்லை. அறிஞர் சக்கர்மேன் ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட தலையோடுகளில் எண் 1. தென்னிந்தியாவில் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் பழங்குடிமக்கள் இன்றைய ஆதிரேலியத் திணைப் பிறப்புரிமை யாளர்களின் பண்பொத்தவர்கள். எனவே அறிஞர் அக்லி ஆசுத்திரேலியர் - திராவிடர் இன உறவைப் பற்றி அளித்த பொருள் விளக்கம் ஏற்புடையதாகும். என்பது அறிஞர் பலரின் முடிபாக இருக்கிறது. அது இன்று தென் இந்தியாவில் உள்ள காடுகளில் வாழும் வேடர் சக்காய் (Sakai) போன்றவர்களையும், ஆத்திரேலியப் பழங்குடி மக்களையும் உள்ளடக்கிக் கொண் டிருக்கும் திராவிடர்களுக்கு முன்னிருந்ததாகக் கருதப்படும் ஓர் இனத்தவர் இருந்தனர் என்பது ஒரு கோட்பாடு; அந்தக் கோட்பாட்டை இது உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. தலையோட்டின் சான்று மாற்றுவகையான கருத்துக்கள் எதையும் ஆதரிக்கவில்லை. இப்பொழுதுள்ள ஆத்திரேலியக் குடிமக்கள் ஆக்கிரமிப்பாளர்க ளான இந்தியர்களுக்கும் ஆசுத்திரேலியப் பழங்குடி மக்களுக்கும் இடையே எழுந்த கலப்பின் விளைவாகவே இருக்கிறார்கள் என்று முடிவாக எடுத்துக்காட்டுகின்றார்.5 மீண்டும் மீண்டும் பல சான்றுகள் காட்டி அவரது கருத்து வலியுறுத்தப்பெற்றுள்ளது. தமிழர்களின் தொட்டில் தென் இந்தியாவே தலையோடுகளை மட்டும் வைத்து இனவேறுபாடுகளைப் பற்றி இறுதியான முடிபு காண்பது அரிது. தலையோட்டு ஆய்வு வல்லுநர்கள், தலையோடுகளை மூன்று பிரிவாகப் பிரித்து ஆய்ந் துள்ளார்கள். ஒன்று நீண்ட தலையோடுகளுள்ள இயற்கூறுகளை யுடையது. மற்றொன்று மட்டமான உடல் உயர்வுள்ளது. இன் னொன்று நெட்டையான உடல் உயர்வுள்ளதோடு இயற்கூறு முள்ளது. அதுமட்டுமின்றி உயர்ந்த மண்டையோட்டிற்குரிய கவிகை மோடுபோன்ற எடுப்பான தோற்றமுள்ள மூக்கும் உடையது. இவை சார்கோனிக்கு, மெசபொத்தாமியா காலத்திற்கு முன் இருந்த தாகக் கருதப்படுகிற அல் உபைத் (Al-ubaid) கிஷ் (Kish) முதலிய பகுதி களில் உள்ள இனத்தொடர்பான மரபுக் கூறுகளுடன் நெருங்கிய ஒப்புடையன. இதுமட்டுமின்றி வரலாற்றிற்கு முந்திய தலையோட்டு ஆய்வுத்துறை (Craniology)Æ‹ நுண் ஆய்வு, மொகஞ்சதாரோ (சிந்துவெளி) ஆத்திரேலிய இனத்தவர்களின் ஆதி முன்னோர் களைச் சார்ந்த மக்களின் மண்டையோடுகள் மாதிரியாக ஆதித்த நல்லூரிலிருந்து கண்டெடுத்த மண்டை யோடுகள் போன்றும் இன்றைய வேடர்களின் மண்டை யோடுகள் போன்றும் காணப் படுகின்றது என்று முடிபு கூறுகின்றது. எலியட் மித் (Elliot Smith) கூற்றுப்படி, ஆதித்த நல்லூரில் கண்ட மண்டையோடுகள், பண்டைய எகிப்திய மக்களின் மண்டை யோடுகளினின்று வேறுபாடுகள் காணமுடியாததாகும். தென் இந்தியக் காடுகளில் வாழும் ஊராளிகள், காடர் போன்ற இனத்த வர்கள் தென் இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களான கருப்புநிற இனத்தவர்களுடன் மிகவும் நெருங்கிய குருதித் தொடர்பு கொண்ட வர்கள் என்பது இன்றைய அறிவியல் கோட்பாடாகும் அவர்கள் ஆத்திரேலிய மக்களின் ஆதி முன்னோர்களாகத் தோன்றிப் பல தலைமுறைகள் ஆகிவிட்டன. அப்பால் அவர்கள் மைய நிலக் கடல் சார்ந்த மக்களாய்த் தோன்றித் திராவிடர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர் என்று முடிபு கூறப் பெற்றுள்ளது. இதைப்பற்றி நமது உளமார்ந்த கொள்கை, வேறு வகையாக இருக்கிறது. பொதுவாக இந்தியாவினுள் - சிறப்பாகத் தென் இந்தியாவினுள் - ஏன்? மைய நிலக் கடல் சார்ந்த இனத்தவர்கள் உட்புகுந்ததாக ஆராயப் புகாமலே முன்னதாகவே மெய்யென ஏற்றுக்கொள்ள வேண்டும்? மண்ணியல் காலங்களிலிருந்து தென்னிந்தியாவில் மக்கள் இனம் வாழ்ந்திருந்தால், பழங்கல் ஊழி மக்களும் புதுக் கல் ஊழி மக்களும் நீக்ரோ மாதிரி உருவில் வாழ்ந்துள்ளனர் என்று சுட்டிக் காட்டியிருக்க வேண்டும் இந்த இனத்தவர்கள் புதுக் கல் ஊழியில் ஆசுத்திரேலிய மக்களின் ஆதி முன்னோர்களுடன் கலப்புற்றிருக்கலாம் என்று விவாதம் செய்யலாம். ஆத்திரேலிய இனத்தவர்களின் ஆதி முன்னோர்களின் மண்டையோடுகள் கண்டு பிடிக்கப்பட்டதற்காக ஒரு வேளை இந்தக் கலப்பே பொறுப்புடைய தாக இருக்கலாம் என்று கூறலாம். இவ்வாறாக மக்களின் ஒருங்கு கலத்தல் ஊழி ஊழியாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரவியிருக்க வேண்டும். தமிழர்கள், தமிழகத்தில் குடியேறிய மக்களல்லர் ஆதிகாலத்தில், தென் இந்தியாவில் தோன்றி அங்கு வாழ்ந்து வரும் மக்களைப் பற்றிய கொள்கை தெளிவானது; உறுதியானது. தமிழர்களும் அவர்களின் முன்னோர்களும் தென்னிந்தியாவில் தோன்றி, ஊழி ஊழிகாலம் அங்கேயே உறைந்து வருபவர்கள். அவர்கள் பழங் கல் ஊழி தொட்டு, புதிய கல் ஊழி, உலோக ஊழி போன்ற ஊழிக் காலங்களைக் கடந்து வரலாற்றுக் காலம்வரை - இன்றுவரை வாழையடி வாழையாக, பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்கள், அவர்களிற் சிலர், தமிழகத்தில் பழங்காலத்தில் எழுந்த கடற்கோள்களுக்கு அஞ்சியோ பிற காரணங்களினாலோ மையநிலக் கடற்பகுதிகளுக்கோ, எகிப்து நாட்டிற்கோ, அமெரிக்கா, கிரீட் போன்ற நாடுகளுக்கோ சென்று குடியேறி இருக்கலாம். மீண்டும், நில நடுக்கத்தாலோ ஆட்சிக் கொடுமையாலோ சிந்துவெளிக்கு வந்திருக் கலாம். தாய்நாடு திரும்பிய தமிழ்மக்கள், சிந்துவெளிக்கு வந்து திராவிடர்கள் என்ற பெயரைச் சூட்டியிருக்கலாம் என்பது அறிஞர் பலர் கருத்து. நமது முடிபும் அதுவே. தொல்பொருள் ஆய்வுத் துறை நிபுணரும் வரலாற்றுத்துறை வல்லுநருமான திரு வி.ஆர். இராமச் சந்திர தீட்சிதர் கருத்தும் அதுவே.6 இங்கு அதை மீண்டும் வலி யுறுத்தி எடுத்துக்காட்டியுள்ளோம். இந்தக் கருத்துக்களைப் பேராசிரியர் இலாங்டன் (Prof. Langdon), முனைவர் ஜி.ஆர். அண்டர், (Dr. G.R. Hunter) எச்.ஆர்.ஹால் (H.R. Hall) முதலியவர்கள் தம் நூல்களில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள். சிந்துவெளி நாகரிகம் வெளிவந்தபின் அதைப் போன்ற நாகரிகம் சுமேரிய நாட்டிலும் நிலவியதை அறிந்து சுமேரியர்களே சிந்துவெளியில் குடியேறி நாடு நகரங்கள் அமைத்து உலகில் ஓர் உயரிய பண்பாட்டை உருவாக்கியுள்ளார்கள் என்று கூறிவிட்டார்கள். அது அவசரப்பட்டுச் செய்த முடிபாகும். தமிழர் தென் இந்தியாவில் தோன்றி, தமுளர், திமிலர், திராவிடர் என்ற பெயர்களுடனோ அல்லது வேறு பெயர்களுடனோ எகிப்து எல்லம், அல்உபைத், சுமேரியா, கிரேத்தா முதலிய இடங்களில் குடி யேறி பயிர்த்தொழில் செய்து, பொருள் ஈட்டி, கைத்தொழில் களுக்குக் கால்கோலி, நாட்டை வளம்பெறச் செய்து, பண்பாட்டைப் படைத்து, சமயம்வளர்த்து வாழ்விற்கு வழிகாட்டினர். நாட்டிற்குப் பொன்றாய் பொலிவூட்டினர். தமிழர்களும் மையநிலக் கடற்கரைப்பகுதி மக்களும் மக்கள் இனத்தைக் குறித்து எழுந்த ஆழ்ந்த ஆய்வின் பயனாக வடக்கே வாழ்ந்த இனத்தவர்களும் மையநிலக் கடற்கரைப் பகுதி களில் உறைந்த மக்களும் தென் இந்தியா விலிருந்து நீர் வழியாகவும் நிலவழியாகவும் அல்உபைதியா, எல்லம், சுமேரியா, எகிப்து முதலிய நாடுகளுக்குச் சென்று குடியேறிய மக்களேயாவர். கிழக்குக் கரை களில் பழங்கால மக்களின் எலும்புகளும் பிற பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை எத்துணை ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன் தோன்றியவை என்று சொல்லமுடியாத பழமை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. தென் இந்தியாவில் வாழ்ந்த பெரிய இனத்தவர் தமது உயர்ந்த அறிவையும் சிறந்த குணங்களையும் சீரிய தோற்றத்தையும் வச்சிர வடிவத்தையும் உலக முழுவதிலும் பரப்பியவர்களாகக் காணப்படுகின்றனர் என்று உருசிய அறிஞர் கொந்தரெத் தோவ் தெளிவாக எடுத்தக்காட்டியுள்ளார்.7 சுமேரியர்கள் தோற்றத்திலும் அறிவிலும் பண் பாட்டிலும் நாகரிகத்திலும் திராவிடர்களை ஒத்தவர்கள். தமிழர்கள் அல்லது திராவிடர்கள் கடல் வழியாகவும் நிலவழியாகவும் உபைதியாவில் குடியேறி மெல்ல மெல்ல எல்லத்திற்குச் சென்று அங்குத் தொழில் வளர்த்து நாகரிகத்திற்கு அடிப்படையிட்டு, அப்பால் சுமேரிய நாட்டிற் புகுந்து டைக்கிரிசு யூப்பிரட்டிசு ஆற்றங்கரைகளில் குடி யேறி, தென் இந்தியாவில் தண்பொருநை ஆற்றங்கரையில் அடிப் படையிட்ட ஆக்கந்தரும் அரிய பண்பாட்டை, யூப்பிரட்டிசு, டைக் கிரிசு ஆற்றங்கரைகளிலும் நீல ஆற்றங்கரையிலும் கட்டிவளர்த்து வரலாற்றுப் புகழ்பெற்ற மக்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களே அங்கிருந்து மீண்டும் தங்களின் தந்தை நாடான இந்தியாவிற்கு வந்து வளஞ்செறிந்த சிந்து ஆற்றல் கரையில் குடியேறியுள்ளனர். அயல்நாடுகளில் தமிழர் குடியேற்றம் வரலாற்று அறிஞர்களும் மானிடஇயல் வல்லுநர்களும் தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களும் தென் இந்தியாவில் வாழ்ந்த பழங்குடிமக்களே. பழங்கல்லூழி தொட்டு வரலாற்றுக் காலம் நிகழும் இன்றுவரை இந்தியா யமுனை சிந்து ஆற்றிற்கு அப்பால்வரை, வடமேற்கு இந்தியா முழுவதும் இமயமலை அடிவாரம் வரை சென்று பயிர்த் தொழில் வளர்த்த பழங்குடிமக்கள் என்று முடிபுகட்டி யுள்ளனர். தமிழர்கள் தெற்கிலிருந்து வடக்கே குடியேறிய மக்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உண்டு. அந்நாட்டினின்று சிந்துவெளியில் குடியேறித் தென் இந்தியாவில் குடியேறினர் என்பதற்கு அடிப்படையான சான்றுகள் அணுவளவும் இல்லை. அது சில மேனாட்டாசிரியர்கள் கண்ட கற்பனைக் கதை யாகும். தென்இந்தியாவிலும் வடஇந்தியாவிலும் வாழ்ந்த திராவிட மக்கள் பாரசீகம், ஈராக்கு, எகிப்து, கிரேத்தா, சைப்பிரசு போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறி நாகரிகத்தை வளர்த்துள்ள னர் என்று அறிஞர் காளிதாசு நாக் கூறியுள்ளார்.8 சிந்துவெளியில் மலர்ந்த மாபெரும் நாகரிகத்தில் வீடுகளின் அமைப்புகளையும் முத்திரைகளின் செய்நேர்த்தியையும் மண்பாண் டங்களின் வனைவுச் சிறப்பையும் நாட்டியமாடும் நங்கையின் வெண் கலப் படிமத்தின் வார்ப்பு வனப்பையும் நோக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளித் திராவிட மக்கள் பாபிலோனி யர்களை விட உயர்ந்த நிலை அடைந்திருந்தார்கள் என்பது நன்கு புலனாகும். இந்திய நாகரிகத்தின் இறுதியில் பாபிலோனிய நாகரிகம் தோன்றியிருக்கக்கூடாதா? இந்திய நாகரிகமே சுமேரிய நாகரிகமாக மலர்ந்துள்ளது என்று எண்ணுவதும் எள்ளளவும் இழுக்கில்லை என்று பேரறிஞர் கோர்டன் சைல்டு என்பார் வினாவி சிந்துவெளி நாகரிகமே உலகில் உள்ள நாகரிகங்களுக்கெல்லாம் முந்திய நாகரிகம். உலகின் எழுந்த எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம்; ஒப்பற்ற உயர்ந்த நாகரிகம் என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். அதனை விளக்கித் தம்நூலில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்.2 குறிப்புகள் - NOTES IX 1. Catalogue of the Pre-Historic Antiquities from Adichanallore and Perumbair by Alexandar Rea F.S.A. Scott (Madras 1915). 2. The Adichanallur skulls (Bulletin of the Madras Govt. Museum) by Zuckerman, M.R.C.S., L.R.C. 3. Essays on the evolution of Man by Prof. G. Elliot Smith (London) 1927. These two skulls conform to different racial types. One pe. i figs 1, 2 iii 7 of the present paper of them is clearly and unmistakably proto-Australian in type and the second one (pe ii figs 4,5 : iii 6) conforms more nearly to the racial type that is known as Mediterranean. 4. “F.N.” It is not pure Mediterraneantype the breadth of the cranium and the flattening of the occiput suggesting the possibility that it may be an example of the type. I have called “Maritime Armenold” a branch of the Alphine Race that is found as one of the ingredients of the racial mixture known as Dravidian” - G. Elliot Smith. 5. The Adichanallur skulls by S. Zuckerman M.A., M.R.C.S., L.R.C.P. London (Madras) 1930 p.19. “Regarded on its face value however Adichanallur No.1 provides support for the view that the oboriginal inhabitant of Southern India was similar to the present day Australian Native. It therefore upholds Huxleys’ interpretation on the Australian-Dravidian relationship which if embodied to-day in the conception of a Proto-Dravidian racial stock comprising the Australians the Sakai, the veddahs and the jungle tribes of Southern India. The evidence of the skull does not support the alternative interpretation (see p.12) that the present Australian native is the result of a cross between an oboriginal Australian and invading indians, if anything it is against such an interpretation.” 6. Animated by a love of adventure the ancient Southern Indian left his shore by Sea to the Mediterranian regions and the Far East and colonised these regions feeling the necessity for new homes. Those who left for making the Mediterranian race, perhaps some of them might have come back to India and stayed in their original homes. We must not forget that there was also a land route which led them to the Indus velley, Baluchistan, Mesopotamia and Egypt. Thus there was contact perhaps intimate contact of people and culture. These we may call tentatively the makers of and the people responsible for the Dravidian culture and Civilization” Pre-historic South India-Prof.V.R.Ramachandra Dikshistar M.A., (Madras) 1951 p. 134. 7. (a) “The Tamils who have an ancient culture speak a language allied to the language of India that from the Dravidian family spoken to-day by more than 100 million people. The Dravidian belong to one of the oldest ethnic groups in India. They lived there long before the belligerent nomad tribes of aryans mentioned in the Rig-Veda the sacred book of the Hindus came to the “land of marvels”. Today the Dravidian languages are spoken in Southern India upto 18’-20’s, but they once covered central and Northern India as well. Moreover facts show that several thousand years ago the Dravidian languages were also spoken in Baluchistan and Southern Iran. The Dravidians may have been the first settle in the Tigris and Euphrataies area preceding the sumerians whose civilization is regarded as the oldest in the world” - The riddles of three oceans A Kondratov (Moscow) 1974. P. 132. (b) The features which the proto Indian culture and the Mesopotamian culture have in common may quite possibly be explained by the fact that the people who created the oldest Indian civilization and the first men to develop the valley of the Tigris and Euphrates were cognate peoples speaking Dravidian languages. Or perhaps they were simply one and the same people. It is also possible that the Dravidian languages may have been common to other peoples besides the ubaids and the Proto-Indians. (c) The regions east of the Tigris in Iran called Khuzistan was once known as Elam. A civilization flourished there 5,000 years ago with citystates a distinctive culture and a written language scholars find that the culture of the Elamites had many features in common with that of Mesopotamia and even more so with the proto-Indian culture”. Ibid p. 143. (d) It is fully possible that Elamite and the ubaid languages branched off from the common Dravidian stock at an early date, and this explains the similarities and the differences between them. There might be another explanation. The Dravidian languages, the language of the ubaids who preceded the sumerians, and Elamite might all go back to a more remote common language Ibid - 145. (e) “... Dravidian ethnic type of India that the Sumerians bear most resemblance, so far as we can judge from his monuments. He was very like a Southern Hindu of the Dekkan (who still speaks Dravidian languages) and it is by no means impossible that the sumerians were an Indian race which passed certainly by land, perhaps also by sea through Persia to the valley of the two rivers. It was in the Indian Home (perhaps the Indus valley) that their writing may have been invented and progressed from a purely pictorial to a simplified and abbrevated form which afterwards in Babylonia took on its peculiar uniform appearance owing to its being written with in a square ended stilus on soft clay. On the way they left the seeds of culture in Elam ..... there is little doubt that India must have been one of the earliest centres of civilization and it seems natural to suppose that the strange unsemitic, unaryan people who came from the east to civillse the west were of Indian origin specially when we see with our eyes how very Indian the Sumerian were in type. “F.N.” The Civilization was not Aryan. The culture of India is pre Aryan in origin as in Greece the conquered civilized conqerors. The Aryan India owed its civilization and its degeneration to the Dravidians as the Aryan Greek did to Mycenaeans” - An Ancient History of the Near East - R.H.Hall. 8. The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras and the old stone age people may have migrated from South India into Central India where in the Narbada valley, have been found middle pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North Western India right upto Himalayan Hills” - India and the Pacific world - Kalidas Nag p. 279. 9. (a) The Ethnic and other affinities between South India and the Mediterranean basin must be due to the fact that Southern India was once the passage ground by which the ancient progenitors of northern and Mediterranean nations proceeded to the different parts of the globe which they now inhabit (Dr.E.Maclean) it is interesting that the Indians of North America and ancient Egyptians had a tradilon that they were immigrants and Herran was inclined to postulate the Indian orgin of Egiptions basing his theory on the form of the skull of the Egyptians. There is also a theory that the land of the Punt the original home of the Egyptians was perhaps the Pandian land including the Malabar coast. But more evidence, it is said, is needed to confirm this”, - origin and Spread of the Tamils - Prof - V.R.Ramachandra Dikshitar M.A.. (Madras) 1947 pp.3-4. (b) Hindu America-chaman Lal (Bombay) 10.94. இந்தப் பகுதி ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (Bibiliography) 1. Catalogue of the Pre-historic Antiquties from Adichanallur and perumbair - Alexander Rea F.S.A. (Scot) Madras 1915. 2. The Adichanallur skkulls (Bulletin of the Madras Government Museium) by S.Zuckerman M.A., M.R.C.S., L.R.C.P. 3. Essays on the evolution of man by Prof.G.Elliot Smith (London) 1927. 4. Pre-historic South India by Prof.V.R.Ramachandra Dikshetar M.A. (Madras) 1951. 5. The Mystries of Lemuria by A. Kondratov (Moscow) Soviet Land 1974. 6. Greater India Revisited by Kalidas Nag - (Calcutta) 1927. 7. The Riddles of three oceans by A. Kondratov (Moscow) 1976. 8. An ancient History of the Near East by R.H.Hall. 9. India and the Pacific world by Kalidas Nag (Calcutta). 10. Origin and Spread of the Tamils Prof.V.R.Ramachandra Dikshitar M.A. (Madras) 1947. 11. The classifications and prehistoric ages by M.D.Raghavan (Madras) 1966. 10. இறுவாய் வரலாற்றுத் தொடக்கம் இந்தியாவின் வரலாறு, இந்தியர்களால் எழுதப்பெற வில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்திய வரலாற்றை ஐரோப்பியர் சிலர் எழுத முற்பட்டனர். ஆனால், அவர் களில் எவராலும் இந்திய வரலாற்றின் தொடக்ககாலத்தை அறுதி யிட்டுரைக்க முடியவில்லை. சிலர் கிரேக்கவீரன் அலெக்சாந்தர் இந்தியாவின்மீது படையெடுத்து வந்து இந்திய மண்ணில் காலடி யெடுத்த வைத்த கி.மு.330 ஆம் ஆண்டு முதல் இந்திய வரலாறு தொடங்குகிறது என்று கூறினர். வரலாற்றறிஞர் தாராசிங் இந்திய மக்களின் வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலில், கி.மு. 6, 7ஆம் நூற்றாண்டுகளின் தொடக்க காலத்திலிருந்து தான் இந்திய வரலாறு துளிர்க்கிறது : இந்தக் காலத்தில்தான், இந்தியாவினுள் எண்ணற்ற புதிய இனத்தவர்கள் நுழைந்து இந்தியப் பழங்குடிமக்களுடன் கலந்து வாழ முற்பட்ட னர்; நாட்டில் புதிய நாகரிகமும் சமயமும் புகுந்து வளரத் தலைப் பட்டன; அவற்றோடு பழைய பண்பாடும், சமயமும் புறக்கணிக்கப் பெற்றன; இந்தியாவில் தலை தூக்கிய முதற்பேரரசு தலைதூக்கிச் சாய்ந்தது; இது நாட்டின் முக்கியமான வரலாறாகும். இந்திய வரலாறு அயல் நாட்டுப் பயணிகள் (வழிப்போக்கர்கள்) எழுதிய எழுத்துச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பெற்றது. அவர்கள் அளித்த சாசனங்களும், மடல்களும் காசுகளும் நினைவுச் சின்னங்களும் இலக்கியங்களும் இந்திய வரலாற்றை உருப்பெறச் செய்ய உதவின என்று எடுத்தக் காட்டினார். வரலாற்றிஞர் சிலர், கி.மு. 1500 ஆம் ஆண்டில், அயல் நாட்டி னின்று ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு வந்த நாடோடி மக்களான ஆரியர்கள் திராவிட மக்களின் புனித பூமியாகிய இந்தியாவிற்குள் புகுந்து இந்திய நாட்டின் உரிமையாளர்களான திராவிடர்களை வென்று அவர்களின் நாடு நகரங்களை அழித்து, அவர்களிற் பெரும்பாலோரைத் தென்னிந்தியாவிற்குள் நெருக்கித் தள்ளிவிட்டு, விந்திய மலைக்கு வடபகுதியில் ஆரியா வர்த்தம், பிரம்மவர்த்தம் என்னும் பெயரில் தனி நாடுகளை அமைத்து இந்தியாவைப் பிளந்தனர். புனிதமான திராவிட இந்தியாவில் பிரிவினை என்னும் நச்சு வித்தை ஊன்றினர். ஆரியர்கள் இந்தியாவில் புகுந்து ஆரியா வர்த்தத்திற்கு அடிகோலிய அவல நாளே இந்திய வரலாற்றின் தொடக்க நாள் என்று கூறுகின்றார்கள்; என்ற பொருள்பட எழுதி யுள்ளார்கள். சிந்து வெளியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ் ஆய்வு அரும்பியது. 1930ஆம் ஆண்டு வரை ஓரளவு முடி வுற்றது. 1932ஆம் ஆண்டு சர். சாண் மார்சல் மொகஞ்சதாரோவும் சிந்துவெளி நாகரிகமும் என்ற மூன்று தொகுதிகளைக் கொண்ட அரும் பெரும் நூலைத் திறம்பெற வெளியிட்டார். அந்நூலின் மூலம் சிந்துவெளியில் திராவிடப் பேரரசு சீருடனும் சிறப்புடனும் ஒளி விட்டோங்கியது. கி.மு. 1500க்கும் கி.மு. 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் அயல் நாட்டினின்று போந்த ஆரியர்களால் திராவிட இந்தியப் பேரரசு தாக்கப்பட்டு வீழ்த்தப்பெற்றது. பழைய தலை நகரமான அரப்பாவும், புதிய தலைநகரமான மொகஞ்சதாரோவும் அழிக்கப் பெற்றன. அங்கு வாழ்ந்த மக்களில் பலர் தென் இந்தியா விற்குத் தள்ளப்பட்டனர். சிந்துவெளியில் ஒரு வகைச் செம்பு ஊழியில் (Chalcolishic age) ஆற்றங்கரைப் பண்பாடு நிலவியது. அங்கு வாழ்ந்த திராவிடமக்கள் உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக் கினர். அங்கு நிலவியது வேளாண்குடி மக்களின் அரசு. அவ்வரசு உழவுத் தொழிலில் உயரிய வெற்றியை ஈட்டியது. அந்நாட்டினர் களின் சமயம் சைவம்; தெய்வம் சிவபெருமான். உமாதேவி, முருகன், ஆடவல்லான் போன்ற தெய்வங்களும் பல சிறு தெய்வங்களும் உள்ளன. அந்நாட்டினர் தம் மொழியைப் பேணிவந்தனர். ஓவிய எழுத்தைக் கண்டு ஏடுகள் பல எழுதியுள்ளனர். அயல்நாடுகளுடன் நெருங்கி வணிகம் வளர்த்து வந்தனர். சிந்துவெளியில், நந்தாப் பேரொளி யாய் நிலவிய திராவிடப் பேரரசை வீழ்த்த, ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த காலமே, இந்திய வரலாற்றின் தொடக்க காலம் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் அவர்களுக்கு எழுதத் தெரியாது. ஆனால், அவர்கள் இந்தியாவில் நுழைவதற்கு முன்பே சிந்துவெளித் திராவிடப் பெருங்குடி மக்கள் எழுதப் பயின்றிருந் தனர். ஆரியர்கள் திராவிடர்களிடமிருந்தே எழுதக் கற்றனர். அவர்கள் மொழி திருத்தப்பெற்றது. எனவே அது செம்மை பெற்ற மொழி (சமக்கிருதம்) என்ற பெயரைப் பெற்றது. சமக்கிருதம் என்ற சொல்லுக்குத் திருத்தி அமைக்கப்பட்டது என்பது பொருள். எழுத்து அரும்பியபின் வரலாறு அரும்புகிறது என்று கூறிய அறிஞர்களின் கருத்துக்கேற்ப ஆரியர்கள் வந்து திராவிட இந்தியாவைச் சீர் குலைத்த காலமாகிய கி.மு. 4000ஆம் ஆண்டே இந்திய வரலாற்றின் தொடக்க காலம் என்று வரலாற்று அறிஞர் சிலர் கண்டனர். பண்டைய இந்திய வரலாறும் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் (பக். 54) திரு.பி.எசு.சோகி. எம்.ஏ. அவர்களும் ஏனைய மூன்று கூட்டு ஆசிரியர்களும் எழுதிய சிறந்த நூலில் ஆரியர்கள் இந்தியா வின் குடியேற்றம் பெற்ற காலத்திலிருந்து இந்திய வரலாறு தொடங்கு கிறது என்று கூறி, மேற்கண்ட கூற்றை வலியுறுத்தியுள்ளனர். உலகிலே எழுத்துத் தோன்றி வளர்ச்சி பெற்ற பின்னரே வர லாற்றை வரைய முடியும். சிந்துவெளியில் ஆரியர் புகுந்த காலத்தில் எழுத்துகள் இருந்தன. ஆனால், அவை வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. வரலாறு வரையத்தக்க நிலையை அடையவில்லை. எனவே அறிஞர்கள் அக்காலத்தை வரலாற்றுக்காலம் என்று கூறாது வரலாற்றின் தொடக்ககாலம் (Proto Historie Period) என்று கூறுகிறார்கள். மேலும் சிந்துவெளியில் ஒரு வகை மண்ணும் செம்பும் கலந்த ஊழி (Chal-colithic age) எழுதுவதற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தென் இந்தியாவில் உள்ள ஆதித்த நல்லூரில் கி.மு.8000-10,000 ஆம் ஆண்டளவில் இரும்பு ஊழி துளிர்த்து உயரிய எஃகுப் பண்பாடு மலர்ந்திருந்தது. அங்கு, சிந்துவெளித் திராவிடர்களின் மூதாதையர் தோன்றி உருவெழுத்து ஒலியெழுத்து முதலிய பலவகைகளைக் கண்டு, ஏடும் எழுத்தாணியும் கைகளில் தாங்கி, எழுதும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். எனவே இந்திய வரலாற்றின் மூலம் தண் பொருநை யாற்றின் பண்பாட்டில், தென் இந்தியாவில் உள்ள ஆதித்தநல்லூரிலிருந்து தொடங்குகிறது எனலாம். விளக்கமாகக் கூறுவதானால் இந்திய வரலாற்று, கி.மு. 8000ஆம் ஆண்டிற்கு முன் ஆதித்தநல்லூர் இரும்புப் பண் பாட்டில் - அதாவது தென்னிந்தியா வில் தோன்றியுள்ளது என்று கூற முடியும். சிந்துவெளித் திராவிடர்கள் பொதுவாக ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் திராவிடர்கள், ஆரியர்களைப்போல் அயல் நாட்டினின்று இந்தியாவில், ஆரியர் களுக்குமுன் சிந்துவெளியில் குடியேறிப் பின், ஆரியர்களால் தென் னிந்தியாவிற்கு விரட்டப்பட்ட மக்களே என்று எண்ணி வந்தனர். சிந்துவெளியினை அகழ்ந்து அங்குள்ள பொருள்களை நன்கு அலசி ஆராய்ந்த சர்-சாண் மார்சல் அவர்கள் கூட நாகரிக முதிர்ச்சி பெற்ற சுமேரியர்கள் சிந்துவெளியில் குடியேறித் திராவிடர்கள் என்ற பெயரைப் பெற்றனர் என்று கூறினர். இக் கருத்தை வேறு சில ஆசிரியர்களும் ஆதரித்து வந்துள்ளனர். திராவிடர்கள் தென்னிந்தியாவில் தோன்றியவர்களே உலகம் தோன்றிய காலம் முதல் தமிழர்கள் தென்னிந் தியாவில் தோன்றிப் பரவி வளர்ந்து படிப்படியாக நாகரிகம் பெற்று வருபவர் களாவர். எனவே தான் செர்மன் நாட்டு நில நூற் புலவர் எர்னசுட் எக்கல் தென் இந்தியா மனிதவர்க்கத்தின் தொட்டில் என்று கூறினார். அறிஞர் காளிதாசு நேக் இந்தியாவும் பசிபிக் உலகமும் என்ற நூலில், தென்னிந்தியாவில் பழங்கல் ஊழியைச் சேர்ந்த மக்கள் நாகரிக வளர்ச்சி பெற்றுத் தெற்கினின்று வடக்கு நோக்கி வந்து மைய இந்தியா வரை - ஏன்? கங்கை யமுனை வெளி - வடமேற்கு இந்தியா வரை சென்று இமய மலையின் அடிவாரத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் குடியேறியுள்ளனர். கி.மு. 4000ஆம் ஆண்டில் திராவிடர்கள் பாரசீகம் (ஈரான்), ஈராக், எகிப்து, கிரீட், சைப்பிரசு நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேற்றம் பெற்றுள்ளார்கள் என்று கூறியுள்ளார். உருசிய நாட்டு அறிஞர் அலெக்சாந்தர் கொந்தாரத் தோள் மூன்று மாக்கடல்களின் புதிர்கள் என்ற நூலில், தமிழர்கள் பழம் பெரும் பண்பாட்டைப் படைத்தவர்கள்; இன்றும் அவர்கள் பழம் பெரும் திராவிட மொழியைப் பேசி வருகின்றார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் தென்னிந்தியாவினின்று புறப்பட்டு நடுவண் இந்தியாவிலும் வடஇந்தியாவிலும் குடியேறியுள்ளனர். வடஇந்தியாவில் திராவிட மொழி பயிலப்பெற்று வந்துள்ளது. திராவிட மொழி பலுச்சிசுத்தானம் ஈரான் ஈராக் நாடுகளிலெல்லாம் பரவி இருந்தது. திராவிடர்கள் ஈராக்கில் குடியேறி, கன்னி நிலங்களை உழுது பயிரிட்டு நனிசிறந்த நாகரிகங்களை வளர்த்துள்ளனர். தமிழர்கள், ஈராக்கில் (சுமேரியாவில்) வித்திட்டு வளர்த்த தமிழ் நாகரிகமே உலகிலுள்ள நாகரிகங்களுள் மிகத் தொன்மை வாய்ந்த நாகரிகமாகவும் உயரிய நாகரிகமாவும் ஒப்பற்ற நாகரிகமாகவும் பதிவு செய்யப் பெற்றுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளார். முனைவர் எய்ச் ஆர். ஆல் (Dr. H.R. Hall) என்னும் பேரறிஞர், சிந்துவெளி அகழாய்வு தொடங்கு முன்பே திராவிட மக்களின் பல்வகைப் பண்புகள் நிறைந்த மெய்ம்மைச் செய்திகளை உலகிற்கு உவந்தளித்தனர்; சிந்துவெளித் திராவிட மக்களே ஈராக்கில் குடியேறி சுமேரியர் என்ற பெயரைப் பெற்றனர். தென் இந்தியாவில் இருந்து தமிழர் சிந்துவெளியில் குடியேறித் திராவிடர் ஆயினர் என்று கண் டார். திராவிடர்கள் நீர்வழியாலும் நிலவழியாலும் பாரசீகத்தின் வழியாக தைக்கிரீசு, இயூப் பிரட்டீசு ஆறுகளின் பள்ளத்தாக்குகளை அடைந்தனர். அவர்கள் சென்ற வழியில் எல்லா, நாட்டில் இந்தியப் பண்பாட்டின் வித்துக்களை விட்டுவிட்டுப் போயிருக்கலாம். சுமேரியர்களின் தோற்றமும் தென் இந்திய மக்களின் தோற்றமும் சிந்துவெளி மக்களின் தோற்றமும் ஒன்றுபோலவே காணப்படு கின்றன. சுமேரியர்கள் சிந்துவெளித் திராவிட மக்களாயும் சிந்துவெளி மக்கள் தென் இந்தியத் தமிழர்களாகவும் காணப்படுகின்றனர் என்ற கருத்துக்களை பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தென்னிந்தியா என்ற நூலில் திறம்பட விளக்கிக் காட்டியுள்ளார். முனைவர் மோர்கன் பிரஞ்சு மொழியில் எகிப்து நாட்டின் ஏற்றமும் வரலாற்றுக் காலத்திற்கு முக்கிய ஆசியாவும் என்று வரைந்த நூலில், மைய நிலக் கடற் பகுதிகளில் வாழும் மக்களின் மூலத் தாயகமாகவும், கலையூற்றாகவும் விளங்குவது தென் இந்தி யாவே என்று நான் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் கூற முடியும் என்று சிறப்புடன் எடுத்துக் காட்டியுள்ளார். இவற்றின் மூலம், திராவிடர்கள் வடக்கினின்று தெற்கு வந்தனர் என்பது தவறான கொள்கையாகும் என்பதை அறியலாம். தென் இந்தியாவினின்று தமிழர்கள் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தரை வழியாகவும் கடல் வழியாகவும் சிந்துவெளி, எல்லம், (ஈரான்) சுமேரியா (ஈரான்) எகிப்து (மிசிர்) கிரீட், அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலெல்லாம் குடியேறிப் பயிர்த்தொழில் வளர்த்து, கைத்தொழில்களைப் பெருக்கி, மொழி, எழுத்துப் பண் பாடு, நாகரிகம் முதலியவற்றை உருவாக்கி வளர்த்துப் புகழீட்டிய தாய் இனம் என்று எண்ணற்ற அறிஞர்கள் எடுத்துக் காட்டு கின்றனர். ஆரியர்கள் சுமார் கி.மு. 2003ஆம் ஆண்டளவில் இந்தியாவிற் குள் வந்தவராகக் கருதப்படுகின்றனர். இராமாயணப் போர் கி.மு.1500 ஆம் ஆண்டையொட்டி நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. நமது இந்திய நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் வரலாற்று நூற் புலவருமான பண்டிதர் சவகர்லால் நேரு அவர்கள் தம் மகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இராமாயணம் போர் ஆரிய - திராவிடப் போர் என்று விளக்கம் அளித்துள்ளார். இராமன் தென்னாட்டிற்கு வரும் பொழுது பாண்டியர்கள் கொற்கையில் கபாடபுரத்தில் கோட்டை எழுப்பிப் பொற்கதவுகள் பூட்டியும் இடைச் சங்கம் நிறுவியும் தமிழ் வளர்த்து வந்தனர். குரங்குக் குடும்பத்தைச் சேர்ந்த வாலியும் அவன் உறவினர்களும் அரசு நிறுவி அரண்மனை கட்டிச் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். சிவபெருமானைக் கடவுளாகக் கொண்டு அறவழிகளில் போர் ஆற்றி வந்தனர். இராவணன் புட்பக விமானத்தின் மூலம் போக்குவரத்து நடத்தி வந்தான். அவனது அரண்மனை எழுநிலை மாடமாய் எழில் பெற்றிலங்கியது. அரண் மனை பவளத் தூண்களும் படிகக் கல்படிகளும் உடையதாய் எழில் பெற்று இலங்கியது. இராவணன் சிவபக்தனாக இருந்து பொன்னால் செய்த இலிங்கங்களை வைத்து வழிபட்டு வந்தான்; மாற்றான் மனைவியைத் தென்னிந்திய மன்னர்கள் மரபு முறைப்படி சிறை பிடித்து வந்தாலும், அவளை அரச கைதியாய் அசோக வனத்தில் ஓர் அரண்மனையில் வைத்து, தன் தம்பி விபீடணன் மகள் திரிசடையைத் துணையாக இருக்கச் செய்து, தென்னாட்டுப் பண்பு திறம்பா வண்ணம் நடந்து கொண்டான் - இராவணன் இசை வல்லோன் - யாழ் என்னும் தெய்வீக இசைக் கருவியை மீட்டுவதில் இணையற்றவ னாய்த் திகழ்ந்தான். இராவணன் மனைவி மண்டோதரி, மணிவாசகப் பெருமானால் சிவபெருமானின் நல்லருளைப் பெற்ற கற்புக்கரசி என்று போற்றப்படுபவள். மேலும் தமிழகத்தில் நிலவிய உயர் நலங்களெல்லாம் சிந்துவெளியினின்று ஆரியர்களால் விரட்டப் பட்ட திராவிடர்கள் தென் இந்தியா போந்து ஒரு சில நூற்றாண்டு களில் பெரிய நாடுகள் நகரங்கள் கட்டி, மொழி வளர்த்து உயர்ந்த பண்புகளை நிலவச்செய்ய முடியுமா? முடியவே முடியாது. திராவிடர்கள் பழங்கற்காலம் முதல் தமிழகத்தில் வாழ்ந்து புதியகற் காலத்தைத் தாண்டி உலோக காலத்தை அடைந்து உலகிலே முதன் முதலாகப் பொன்னைக் கண்டு அதைத் திறம்படப் பயன்படுத்தி வந்ததோடு இரும்பைக் கண்டு அதை நன்கு பயன்படுத்தி ஏற்றம் அடைந்துள்ளனர். அதனோடு தமிழர்கள் புதிய கற்காலத்திலே மலை தொடுத்துக் கடல்வரை பரவிய நானிலம் அமைத்து மேனிலை எய்தியும், இரும்புப் பண்பாட்டை நன்கு பயன்படுத்திப் பயிர் வளர்த்தும் தொழில் வளர்த்தும் கப்பல் கட்டிக் கடல் வணிகம் வளர்த்தும் வந்துள்ளனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. இதுகாறும் எடுத்துக் காட்டப்பெற்ற ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வுப் பொருள்களான பொன், வெண்கலம், இரும்பு முதலிய வற்றைப் பற்றியும் மட்கலம், தாழிகள், தலையோடுகள் ஆகியவை களோடு கூலப் பொருள்கள், பஞ்சாடைகள் முதலியவற்றைப் பற்றியும் நம்முடைய விளக்கங்கள் மூலம் ஒருவாறு நன்கறிந்திருப் பீர்கள். இஃதிவ்வாறிருக்க ஆதித்தநல்லூரைப் பற்றித் தமிழ்நாட்டு வரலாற்றாசிரியர்கள் சிறப்பாக இதுவரை எடுத்துக் கூறவில்லை. தமிழ்நாட்டிலுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி யாற்றி வந்த நீலகண்ட சாத்திரியார் கூட மக்களைத் திசை திருப்பி விடும் முறையில் இருந்தாலும் ஆதித்த நல்லூர் என்ற பெயரை 3,4 இடங்களில் தென் இந்தியாவின் வரலாறு (A History of South India) என்ற தம் நூலில் ஏறத்தாழ 6 பக்கங்களுக்குமேல் செலவிட்டுத் தமிழ் நாட்டு வரலாற்று ஆய்விற்கு இடர் விளைத்திருக்கிறார். அதிலிருந்து சாத்திரியார் ஆதித்தநல்லூர் அகழாய்வில் பழம்பொருள்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லாமல் விட்டுவிட்டாரே என்று வியப்படைகின்றேன். ஆனால், ஒரு சில ஆசிரியர் ஆதித்தநல்லூர் அகழாய்வில் கிடைத்த ஒரு மண்டையோடு ஆசுத்திரேலிய நீக்ரோ யிட் மண்டையோடு போல் இருக்கிறது என்று கூறிய கருத்தை உட்கொண்டு மீண்டும் அதை எடுத்துக் கூறியுள்ளார். (See A. History of South India. pp. 53, 55, 57) ஆதித்த நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடு ஆசுத்திரேலியப் பழங்குடி மக்களின் மண்டை யோடாக இருக்க முடியாது. திராவிட மக்களின் மண்டையோட்டில் ஒன்றாகவே இருக்க வேண்டும். பேரறிஞர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தென் இந்தியா என்ற நூலில் மிக விரிவாக ஆய்ந்து வெளியிட்டுள்ளார். இவரது கருத்துக்களை சோவியத் நாட்டின் உயிரியல் துறை வல்லுநர் முனைவர் பேராசிரியர் மிகயில் நெசுத்துர்க் மனித இனங்கள் என்ற நூலில், மண்டையோட்டை வைத்து மனித இனங்களைத் திராவிடர், ஆரியர், நீக்ரோவர் என்று பிரித்தறிவது முடியாத காரியம் என்று விளக்கிக் காட்டுவதோடு, இனப் பிரிவு என்ற தத்துவத்தின் அடிப் படையே தவறு என்று விளக்கியுள்ளார். சாத்திரியார் வெளியிட்ட தவறான வரலாற்றுச் செய்திகள் வரலாற்று ஆசிரியர் ஒரு நாட்டைப்பற்றியோ, ஓர் இனத்தைப் பற்றியோ எழுதும்பொழுது அந்நாட்டிற்குப் போய் அங்குள்ள நகரம், வீடு, இனம், இடிபாடுகள், அகழாய்வுகள், மட்பாண்டங்கள், கருவிகள் காசுகள் இலக்கியங்கள் செவிவழி மரபுச் செய்திகள் முதலியவற்றை நேரில் பார்த்தும், செவிபடுத்தும் நன்கு ஆய்ந்தும் முடிபிற்கு வரவேண்டும். இதற்குத் திரு.கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் விதிவிலக்கு. இவர் வரலாற்றிற்குரிய இடத்தைப் பார்ப்பதோ, அகழ் ஆய்வுப்பொருள்களை நோக்குவதோ கிடையாது. எடுத்துக்காட் டாகத் தமிழ்க் கலைக் களஞ்சியம் ஆறாவது தொகுதியின் முதற் பதிப்பில் திருநெல்வேலி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி யுள்ளார். ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வைப் பற்றிச் சில வரிகள் எழுதி விட்டு, இதன் காலம் கி.மு.முதலாயிரம் ஆண்டு என்றும் இவை கிறித்தவ ஊழியின் தொடக்க நூற்றாண்டுவரை நீடித்திருந்தன வென்றும் ஒரு தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். இதற்கு அவர் எவ்விதச் சான்றும் காட்டவில்லை. மேலும் ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட பொருள்களை அவர் பார்த்ததும் இல்லை. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொல் ஆய்வு வல்லுநர்கள் கருத்தை அவர் என்றும் நோக்கியதும் இல்லை. அதோடு அவர் பிற அறிஞர்களின் கருத்திற்க மதிப்புக் கொடுப்பவராகவும் தெரியவில்லை. அத்துடன் ஆதித்தநல்லூர்ப் பண்பாடு இரும்பு ஊழியில் அரும்பிய எஃகுப் பண்பாடு என்பதைக் கூடக் கருத்துட் கொண்ட தாகத் தெரிய வில்லை. மொகஞ்சதாரோவை அகழ்ந்து ஆய்ந்தவர் வங்கப் பேரா சிரியர் இராகேல் தாசுப் பானர்ச்சி (R.D. Banerji) என்ற நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த வரலாற்றுப் புலவர் ஆவர். அவருக்கு நல்ல அகழாய்வுத் துறைப் படிப்பும், பட்டறிவும் உண்டு. அவர், ஆதித்த நல்லூர்ப் பண்பாடு இரும்பு ஊழியில் எழுந்த இரும்புப் பண்பாடு; அது தென் இந்தியாவிலுள்ள குமரிமுனையினின்று தொடர்ந்து, அறுபடாத சங்கிலித் தொடர்போல் அரப்பாவரை நீண்டு, பலுச் சிசுத்தான் வழியாய் பக்ரைன் தீவகத்தை ஊடுருவி, தெற்கு ஈரான், சுமேரியா முதலிய நாடுகளையெல்லாம் கடந்து கிரீட் தீவு வரை சென்றுள்ளது என்று 1927இல் திராவிட நாகரிகம் என்ற தொடர் கட்டுரையில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை தொல் பொருள் ஆய்வுத்துறை மனித இன ஆய்வுத்துறை ஆகியவைகளின் பேரா சிரியர், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் 1950-51இல் நிகழ்த்திய சர் உல்லியம் மெய்யர் சொற்பொழிவுகளில் (Sir. William Meyer Lectures, 1950-1951) ஆதித்த நல்லூர் இரும்புப் பண்பாடு தென் இந்தியாவில் தோன்றிப் பரவி வடஇந்தியா முழுவதையும் கவர்ந்த ஏற்றமிகும் திராவிடப் பண்பாடு ஆகும். இது உலகில் உதித்த உயரிய ஒப்பற்ற பண்பாடு ஆகும். இதன் காலம் கி.மு.8,000 முதல் 10,000 வரை இருக்கலாம் என்று அழுத்தம் திருத்தமாக அறைந்துள்ளார். அதற்குப்பின் ஆதித்த நல்லூரைப் பற்றி எழுத முன்வந்த கயவர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார், தக்க ஆதாரம் காட்டி அதை மறுத் திருக்க வேண்டும். அல்லது அதை ஏற்றிருக்க வேண்டும். அஃதின்றி ஆதித்த நல்லூர்ப் பண்பாடு கி.மு. முதலாயிரம் ஆண்டிலிருந்து கிறித்தவ சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுவரை நிலவி இருக்க லாம் என்று ஆதாரமற்ற கயவாளிக் கருத்துக்களைத் தெரிவித்தது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இவருக்குமுன் ஆதித்தநல்லூர்ப் பண்பாடு மிக மிகத் தொன்மையானது என்ற கருத்தை வெளியிட்ட பேராசிரியர் ஆர்.டி.பானர்ச்சியும், பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதரும் இவரைவிட எவ்விதத்திலும் குறைந்தவர்களல்லரே!. இவரது பொய்க் கூற்றினைக் கலைக்களஞ்சியத்தில் இடம் பெறச் செய்தது தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் குற்றமேயாகும். அடுத்த பதிப்பில் இக்கருத்துக்கள் அகற்றப்பட்டு உறுதியான நல்ல கருத் துக்கள் இடம் பெறவேண்டும் என்று தமிழ் வளர்ச்சிக் கழகத்தைப் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். மேலும் நீலகண்டசாத்திரியார் இன்னும் தமிழர் வரலாற்றுத் துறையில் புகுந்து பல தவறுகளை இழைத்துள்ளார். எடுத்துக் காட்டாக அடியில் வரும் ஒரு செய்தியை மட்டும் இங்கு கூறி இதை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். நீலகண்ட சாத்திரியார் கலைக்களஞ்சியத்தில் திருநெல்வேலி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் பாளையங் கோட்டை என்னும் ஊரைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில் சில தவறான தகவல்களை அளித்திருக்கின்றார். அதாவது, நெல்லை மாவட்டத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில், பாளையங்கோட்டை யில், ஒரு அரண் இருந்தது. அதுவே மதுரைக்குத் தெற்கே மிகுந்த வன்மையுடையது என்று பெயர்பெற்றிருந்தது. ஆனால் அதை நிரூபிக்கக்கூடிய சிதைவுகள் (சான்றுகள்) எதுவும் காண்பதற் கில்லை என்ற கருத்துப் பெற எழுதியுள்ளார். திரு. சாத்திரியார் நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. அதை வைத்தே நெல்லை மாவட்டத்தின் சிறந்த ஊராக விளங்கும் பாளையங்கோட்டையைப்பற்றி இவரை எழுது மாறு கலைக்களஞ்சியத்தின் பதிப்பு ஆசிரியர் குழு இவரைக் கேட் டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தமிழ் நாட்டின் முதற் பெரும் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பாளையங்கோட்டைக்கு வராமலே, அல்லது பாளையங்கோட்டை யில் வாழும் மக்களை விசாரிக்காமலே இங்கு கோட்டையின் சிதைவுகள் எதுவும் காண்பதற்கில்லை என்று எழுதியிருப்பதை அறிந்து நெல்லைமாவட்ட மக்களும், வரலாற்றாசிரியர்களும் - ஏன்? பள்ளிச் சிறார்களும் பாமரமக்களும் நகைக்கின்றார்கள். நமது நாட்டு வரலாற்றாசிரியர்களின் புலமைக்கு இஃது ஓர் எடுத்துக் காட்டாக இருக்கிறது என்று எண்ணப்படுகிறது. இத்தகைய வரலாற்றாசிரியர்கள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் இருந்தால் மக்களுக்கு வரலாற்றில் நம்பிக்கை உண்டாகுமா? பாளையங் கோட்டையில் இருந்த மாபெரும் அரணை இடித்தபின் அதன் நினைவாக, (1) பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் அண்மையில் திருவனந்தபுரம் சாலையில் ஒரு சிதைவுண்ட பகுதி உள்ளது. அதன்மீது கட்டபொம்மன் சிலை நிறுவப்பெற்றுள்ளது. மற்றோர் அரணின் பெரிய பகுதி, நகர் மன்றத்தின் பின்புறம் உள்ளது. அதனுள் பிள்ளையார் கோயில் உள்ளது. மேலே காவல் நிலையம் உள்ளது. இது கோட்டைப்பிள்ளையார் கோயில் எனப்படும். மற்றொரு பகுதி, கோட்டைப் பிள்ளையார் கோயிலில் இருந்து நேராகக் கிழக்குநோக்கிச் செல்லும் சாலையில் ஏறக்குறைய 200 மீட்டர் தொலைவில் நகர்மன்ற நீர்த்தொட்டிக்கு (Water tank) அண்மையில் ஒரு பெரிய சிதைவு இருக்கிறது. இதன் அடியிலும் மேற்பகுதியிலும் நமது அரசின் காட்டுத் துறை (Forest Department) இருந்து வருகிறது. இதன் வடக்கே ஏறத்தாழ 120 மீட்டர் தொலை வில் மற்றொரு சிதைவு இருந்து வருகிறது. நான்கிற்கு மேற்பட்ட பகுதிகள் குன்றென விளங்குகின்றன. இவற்றைப் பாளையங் கோட்டையில் உள்ள பள்ளிச்சிறார்களும் அறிவர். இங்குச் சிதைவு களே இல்லை என்று எழுதும் ஆசிரியரைப் பற்றி எம்மிடம் ஒரு பள்ளி ஆசிரியை பின்வருமாறு கூறினார். ஐயருக்கு யானை பார்க்க வெள்ளெழுத்தா? என்று கூறும் பழமொழிக்கு நீலகண்டர் இலக் காகியுள்ளார் என்று பண்போடு இவரது தவறை எடுத்துக் காட்டி யுள்ளனர். பழுதுற்ற கண்களால், வயது முதிர்ச்சி யால் ஒரு விடயத்தை எழுதுமுன் அதைப்பற்றி ஆய்ந்தோ விசாரித்தோ எழுதாது விட்ட, மாறுபட்ட கருத்துடைய வரலாற்றாசிரியர்களிடமிருந்து எப்படித் தமிழர் உண்மையான வரலாற்றுச் செய்தியை எதிர்பார்க்க முடியும்? மேலும் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் கண்ட வரலாற்றையோ, பண்பாட்டையோ, நாகரிகத்தையோ நீலகண்டசாத்திரி போன்ற கயவர்களிடம் தமிழர்கள் எதிர்பார்ப்பதே தவறாகும் என்பது நமது உறுதியான முடிபாகும். தமிழர் வரலாறு, தமிழர் நெறி, தமிழர் பண்பாடு, தமிழ்மொழி ஆகியவற்றை விரும்பாதவர்களாலும் காழ்ப்புக் கொண்டவர்களா லும் எழுதப்பெற்றுள்ளது. குறிப்பாக, திரு.நீலகண்டசாத்திரியார் போன்றவர்கள்தமிழர்களுக்குப் பெருந் தெய்வமே கிடையாது; முருகன்கூட ஆரியர்களிடமிருந்து கடனாகப்பெற்ற தெய்வம் என்று பேசிய பகுதி தமிழ்நாட்டுத் தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடுகளில் இடம் பெற்றுள்ளது. தமிழர்கள், மொழியையோ, பண்பாட்டையோ, தெய்வத்தையோ, சமயத்தையோ எவர்களிட மிருந்தும் கடனாகவோ இரவலாகவோ என்றும் பெற்றதில்லை. தமிழர்கள் தாம் தங்கள் மொழி, பண்பாடு, தெய்வம், நாகரிகம் முதலியவற்றை உலகிற்கு வழங்கியுள்ளார்கள் என்று பேரறிஞர்கள் முடிவு கட்டியுள்ளார்கள். இதையறியாது திரு. சாத்திரியார் இந்தியாவின் ஒருமைப்பாடு, கருத்து சுதந்திரம் என்ற பெயரால் தமிழர்களுக்கு இழைத்துள்ள தீமைகளை காலம் கிட்டும்போது விளக்கிக் காட்டவோம். புதிய அறிவு ஒளி முடிபாக ஆதித்தநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருள்கள் எண்ணில என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அங்குக் கிடைத்த பொருள்கள் மதிப்பிடற்கரிய விலையுயர்ந்த கருவூலங்கள். அங்குக் கிடைத்த பொன் பட்டங்களும் வெண்கலப் பொருள்களும் இரும்புப் பொருள்களும், மட்பாண்டங்களும் தாழிகளும் தமிழர் களுக்கும், ஏன்? இந்தியாவிற்கும் பெருமை அளிப்பன வாகும். தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த நாகரிகத்தைத் தண்பொருநையாற்றுப் பண்பாட்டை உலகிற்கு நன்கொடையாக அளித்த பெருமக்கள் என்பதற்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. ஆதித்தநல்லூரில் எழுந்த வியத்தகும் ஒப்பற்ற பண்பாட்டை நூறாண்டுகளுக்கு மேலாக உலகமும், உலகப் பேரறிஞர்களும் அறியவிடாது செய்ததுபோல் மீண்டும் மீண்டும் ஒரு புல்லுருவிக் கூட்டம், ஈனத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆதித்த நல்லூர்ப் பண்பாடு மீண்டும் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ளது என்பது ஈண்டு நினைவு கூறத்தக்கது. ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டின்மீது கவிந்துள்ள இருள் படலங்கள் அனைத்தும் அகன்றுவிட்டன. அதன்மீது புதிய அறிவொளி வீசத் தொடங்கியுள்ளது. அதற்கு எடுத்துக் காட்டாக உலகம் எதிர்பாரா வண்ணம் ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் (Adhitha Nallur and Porunai Valley Civilization) என்ற இந்நூல் வெளிவந்துள்ளது. சிந்துவெளிச் செம்பு நாகரிகம் கி.மு.6000 ஆம் ஆண்டிற்கு முன் நிலவிய திராவிடப் பண்பாட்டிற்கு அளவிடற்கரிய மதிப்பை அளித் துள்ளது. அது திராவிட நாகரிகந்தான் உலகில் ஒப்பற்ற பழம்பெரும் நாகரிகம் என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளச் செய்தது. ஆனால் தவறாகச் சில அறிஞர்களால் சிந்துவெளி நாகரிகம் மையநிலக் கடற்பகுதி மக்கள் இந்தியாவிற்கு வந்து திராவிட நாகரிகம் என்ற பெயரால் உருவாக்கப்பெற்ற நாகரிகம் என்று காணப்பெற்றது. சிந்து வெளியினின்று ஆரியர்களால் விரட்டப்பட்ட மக்களே தென்னிந் தியாவில் இன்று வாழும் மக்கள் என்று கருத இடம் அளித்தது. ஆதித்தநல்லூர் இரும்பு நாகரிகம் கி.மு.8000 ஆம் ஆண்டு களுக்கு முன் உலகில் நிலவிய ஒப்பற்ற நாகரிகமாகும். இந்த இரும்புப் பண்பாட்டில் உலகில் பொருநைவெளி நாகரிகத்தின் முகம் தோன் றியது. இதன் பயனாகப் பயிர்த்தொழிலில் பெரிய முன்னேற்றம் எழுந்தது. கைத் தொழில்கள் எண்ணற்றவை விரைந்து கிளைத்து முளைத்தெழுந்தன. நாட்டில் மக்களின் தேவைக்கு மிஞ்சிய விளை பொருள்களும், செய்பொருள்களும் மலை மலையாக எங்கும் குவிந்து கிடந்தன. தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் நாவாய்களும், கலன்களும், வங்கமும் எண்ணிலாது மலிந்து கிடந்தன. இவற்றின் பலனாகக் கடல் வணிகம் பிறந்தது. தமிழ்நாட்டுக் கடல் வணிகர் தம் கப்பல்களில் தம் நாட்டுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு தொலை வில் உள்ள எல், உபைத், எல்லம், சுமேரியா, அக்கேடியா, எகிப்து, கிரீட், அமெரிக்கா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று வணிகம் வளர்த்தனர். குடியேற்றம் பெற்றனர். தமிழர்கள் உலகமெங் கும் தங்கள் வணிகம், கணிதம், சமயம், மொழி, தெய்வம், நாகரிகம், எழுத்து முதலியவற்றை வளர்த்தனர். பண்டையத் தமிழர்கள் உலகம் எங்கும் பரவினர். இந்திய ஒருமைப்பாட்டுக்கு அரண்செய்யும் நாகரிகம் தென் இந்தியாவில் தோன்றிய தமிழர்கள் பழங்கல் ஊழி, புதுக்கல் ஊழி, இரும்பு ஊழியில் வாழ்ந்து நாகரிகம் பெற்று, வட இந்தியா முழுவதிலும் பரவியதோடு நில வழியாகவும், நீர் வழியாகவும் உலகமெங்கும் பரவினார்கள் என்று தெரிகிறது. ஆதித்த நல்லூர் நாகரிகத்தினின்று தமிழர்கள் வடஇந்தியா ஈரான், ஈராக்கு, எகிப்து, கிரீட் போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறியவர்கள் என்ற உண்மை நிலைநாட்டப் பெறுகின்றது. இது இந்திய நாட்டிற்குப் பெருமை அளிப்பதோடு இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதித்தநல்லூர் நாகரிகம் ஓர் அரணாக அமைந்துள்ளது என்பது தெரியவருகின்றது. இந்தியர் மட்டுமல்ல உலக மக்கள் யாவரும் தாங்கள் அனைவரும் ஓரினம், ஓர் கிறை என்ற உயரிய கொள்கை வலுப்படுத்தப்படுகின்றது. விளக்கப் படங்கள் பற்றிய குறிப்புகள் இப் பகுதியில் ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்டெடுக்கப் பட்ட பொன், இரும்பு, வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்டப் பொருள்களும், மட்பாண்டங்கள்; தாழிகள், மண்டையோடுகள் ஆகியனவும் பற்றிய செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குரிய படங்கள் நூலுள் ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளன. 1. பொன் பட்டங்கள் (Diadems)1 இவை பொதுவாக நீள் உருண்டை வடிவம் உள்ளவை. ஒவ் வொன்றின் இறுதிவரை நீண்ட வரிக்கோடுகள் காணப்படுகின்றன. இந்த வரிகளின் முடிவில் துளைகள் இடப்பெற்றுள்ளன. இத் துளைகள் பட்டத்தைக் கயிறு அல்லது கம்பியில் கோத்து நெற்றி யில் கட்டுவதற்காக இடப்பட்டவை என்று கூறப்படுகின்றன. பெரும் பாலான பட்டங்களில் வரிக்கோடுகள் இறுதியில் காணப்பட வில்லை. இந்தப் பொற்படங்கள் மிக மெல்லியனவாய் இருப்பதால் நீள் உருண்டை வடிவில் வலப்புறமும் இடப்புறமும் எளிதில் கம்பியினால் குத்தித் துளையிடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. சிலவற்றில் கோடுகள் உள்ளன. முக்கோணவடிவில் பின்புறமாகப் புள்ளிபுள்ளியாக அழுத்தி அணிசெய்யப் பெற்றுள்ளன. ஆனால், இவற்றுள் ஆறு பட்டங்கள் அணிகள் செய்யப்படாதவையாய்க் காணப்படுகின்றன. இப் பொன் பட்டங்கள் பற்றிய முழுவிளக்கமும் பண்டைத் தமிழ்நாட்டில் பொன் எப்படியெல்லாம் தமிழர்களால் பயன் படுத்தப்பட்டு வந்தது என்ற வரலாறும் இந்நூலுள் 76ஆம் பக்கம் முதல் 94ஆம் பக்கம் முடியக் காணலாம். பிற புதை பொருள்கள் மற்றும் ஆதித்தநல்லூர் அகழ் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட வகை வகையான 33 வெண்கலப் பொருள்கள், ஈட்டி, கொடுவாள், கத்தி போன்ற பல்வேறு இரும்புக் கருவிகள் 97 வகையான மட் பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், மண்டையோடுகள் ஆகியன பற்றிய விளக்கப்படங்கள் நூலுள் ஆங்காங்கே இணைக்கப்பட் டுள்ளன.  1. These are locally known as Pattam and the system of putting gold in some shapes or other over the dead body is prevalent in orthodox Hindu homes even now a days. Dr. Sir John Marshall makes the following note on these objects (Annual Report of the Archaelogical Survey of India, 1902-3 Footnote on page 105):- “The gold frontlets are of thin gold leaf so flimsy that they could not possibly have been used as jewellery in real life. They are mere imitations of the genuine article subsituted by the relations of the dead who no doubt kept the more substancial jewellery for themselves. For similar instances of this economical piety towards the dead, see Frazer Pausanias, vol III page 107. Schleimann Myvenarl page 156. E. Gardner, New Chantere