தமிழ்நாட்டு அணிகலன்கள் சாத்தன்குளம் அருணாசலக்கவிராயர் இராகவன் (1902-1981) எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டு அணிகலன்கள் என்னும் நூலாகும். தொல் பழங்காலம் முதல் தமிழர்கள் ஒப்பனை செய்து கொள்வதில் அக்கறை காட்டி வந்ததை அறிய முடிகிறது. மலர்களைச் சூடிக் கொண்டனர். ஆண் பெண் இருபாலரும் இவ்வகையில் தொடக்க காலங் களில் மலர்களைச் சூடிக் கொண்டதை அறிகிறோம். மலர்களைச் சூடுவது என்பது கால வளர்ச்சியில் மணிகளிலும் உலோகங் களிலும் செய்யப்பட்ட அணிகலன்களைச் சூடுவதாக மாறியது. தமிழர்களிடம் இவ்வகை யில் இடம்பெற்ற அணிகலன்கள் குறித்த விரிவான ஆய்வை இந்நூலில் காணமுடியும். சிந்து சமவெளிக் காலம் தொடங்கி இன்றைய காலம் வரை தமிழர்கள் பயன்படுத்திய சுமார் 500 அணிகலன்கள் குறித்தத் தகவல்களை இந் நூலில் காணமுடியும். தமிழர்களின் ஒப்பனைக் கலை வரலாற்றை அறிவதற்கான தனித்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இலக் கியங்களில் அணிகலன்கள் பற்றிப் பேசப்பட் டிருக்கும் செய்திகளை விரிவாக இந்நூல் தொகுத்துத் தருகிறது. சிற்பங்களில் காணப் படும் பல்வேறு அணிகலன்களை இந்நூல் வழி அறிகிறோம். கல்வெட்டுக்களில் காணப் படும் அணிகலன்கள் பற்றியக் குறிப்புக்களை யும் அறிய முடிகிறது. தொழில்நுட்ப வரலாறு நூற்களஞ்சியம் - தொகுதி எட்டு தமிழ்நாட்டு அணிகலன்கள் சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி எட்டு தமிழ்நாட்டு அணிகலன்கள் | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 1970 | மறு பதிப்பு : 2005 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 16+288 = 304 | நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 285 | படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும், வளமும் வலிமையும் சேர்க்கின்ற நூல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு எம் பதிப்பகம் தொடங்கப் பட்டது. தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர், மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையா, செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார், பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், முனைவர் இரா. இளவரசு போன்ற அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல் களையும், ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தையும் ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனிமுத்திரைப் பதித்ததைத் தமிழுலகம் அறியும். அந்த அடிச்சுவட்டில் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கின்ற நூல்களை மீள்பதிப்பு செய்வதற்கு எம் பணியைத் தொடர்ந்த நேரத்தில் நுண்கலைச்செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் எம் பதிப்பகம் வெளியிட்டால் மொழிக்கும் இனத்திற்கும் யாம் இதுவரையிலும் செய்த பணிக்கு அது மேலும் வலிமை சேர்க்கும் என்றும் அவருடைய நூல்கள் வெளிவருவது மிகமிக இன்றி யமையாதது என்றும் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தெரிவித்தார். அவரின் வழிகாட்டுதலின் பேரில் இந்நூல்கள் வெளிவருகின்றன. நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் நூல்களாக வெளிவந்தவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து நூற்களஞ்சியமாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். இவை மட்டுமன்றி குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ் களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து விரைவில் வெளியிடவிருக்கிறோம். இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப் போடும் வருவதற்கு உரிய வழிகாட்டுதல் தந்து பல்லாற் றானும் துணை இருந்து உதவியவர் பேரா. வீ. அரசு ஆவார். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள் ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணை யிருந்த பெருமைக்குரியவர். அவர் இந் நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாண னிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளி வருவதற்குப் பெரிதும் துணை இருந்தார். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதி களைக் கணினி ஆக்கம் செய்து உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், செல்வி பிருந்தாவதி, செல்வி கலையரசி, செல்வி கோகிலா ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த குமரேசன், இராமன், சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் சரவணன், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வெங்கடேசன், தனசேகரன், சுப்ரமணியன் ஆகி யோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் உறுதியாகப் பணியாற்றுவோம். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற ஐயத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இ. இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) 30.12.2005 கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) பொருளடக்கம் மதிப்புரை - வீ. அரசு x 1. தோற்றுவாய் 3 2. தமிழகமும் தாதுப் பொருள்களும் 16 3. மக்களும் மலர்களும் 29 4. அணிகலன்களும் அவற்றின் வரலாறும் 52 5. சிந்துவெளி நாகரிகம் 52 6. அணிகளும் பணிகளும் 62 7. ஒன்பது மணிகள் 80 8. பேரணிகலன்கள் 110 9. சிற்றணிகலன்கள் 178 10. சாசனச் சான்றுகள் 192 11. சிற்பநூற் சான்றுகள் 199 12. இலக்கியச் சான்றுகள் 208 இந்நூல் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 235 அகரவரிசையில் அணிகலன்கள் 239 படங்கள் 245 மதிப்புரை சடங்கு - ஒப்பனை - தொழில்நுட்பம் அழகு செய்வதின் உயிர்நிலை, அணி செய்வதின் இன்றியமையாத அமைப்பாக விளங்குகிறது. மனிதவர்க்கம் அனைத்திற்கும் அணிகலன்களை அணியும் ஆசை தவிர்க்க முடியாத குணமாக இருக்கிறது. ஆனால் அணி செய்யும் பொருளும் ஆளும் தன்மையும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபாடுடையனவாய் விளங்கலாம். அழகு செய்யும் விசயம், கேவலம்! ஒரு உண்மையாக மட்டுமன்று, ஒரு விதியாகவும் இருக்கிறது என்று அணிநலம் சார்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றார்கள். இது ஒரு நல்ல சுவை நலம் சார்ந்த தீர்ப்பின் பயனிலையாகவும் மிளிர்கிறது. ஆனால், இது அணிகலன்கள் சம்பந்தப்பட்ட ஒரு கருத்துரையாக மட்டுமின்றித் தமிழர்களின் கலையும் தத்துவமும் இக் கருத்துக்களை மெய்ப்பிப்பனவாகவும் இருக்கின்றன.. அறிஞர் இராகவன் அவர்கள் இந்நூலின் முன்னுரைப் பகுதியில் கூறும் இக்கருத்து அணி கலன்கள் பற்றிய அவரது பார்வையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. உயிரினங்களில் கவர்ச்சி என்பது அடிப்படையில் உயிரின உற்பத்தி நோக்கியதாக அமைந்துள்ளது. பாலின வேறுபாடுகள், என்பது ஒன்றை ஒன்று கவர்வதாகவே அமைந்துள்ளன. இயற்கையில் இயல்பாக அமைந்துள்ள இப்பாலினக் கவர்ச்சியோடு ஒப்பனைகளும் இணைந்து கொள் கின்றன. பிறிதொன்றின் கவனத்தை உடனடியாகப் பெறுவதற்கு ஒப்பனைகளே முதன்மைக் காரணிகளாக அமைகின்றன. இவ்வொப்பனைகள் சார்ந்த செயல் பாடே அணிகலன்கள் ஆகும். ஒப்பனைகள் இயற்கைப் பொருள்களிலிருந்து தொடங்குகின்றன. மனிதர்கள் மலர்களைச் சூடிக்கொண்டனர். இரு பாலினமும் மலர்களைச் சூடிக்கொண்டன. வளர்ச்சியடைந்த பாலின முரண்பாடுகள் குறித்தப் போலியான கருத் தாக்கங்களால் ஆண்கள் மலர் சூடுவதைப் படிப்படி யாகக் குறைத்துக் கொண்டதை அறிகிறோம். இயற்கை யில் கிடைக்கும் மலர்களை மட்டுமின்றி, ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் பல்வேறு பொருட்களை அவ்வப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அணிகலன்களாகப் பயன்படுத்தத் தொடங்கினர். திணை சார்ந்தும் இப் பண்பு செயல்பட்டிருப்பதைக் காணலாம். குறிஞ்சி நில மக்கள் தழைகளையும் பட்டைகளையும் உடையாக அணியத் தொடங்கினர். மருதநில மக்கள் பருத்தியி லிருந்து பஞ்சை எடுத்துத் துணி நெய்யத் தொடங்கி யுள்ளனர். உடை என்பதும் அணிகலன்களைப் போல ஒப்பனைப் பொருளே. இயற்கைப் பொருட்களை அணிகலன்களாக அணிந்து வந்த மக்கள் கால வளர்ச்சியில், இயற்கையில் கிடைக்கும் தாதுப்பொருட்களை அணிகலன்களாக வடிவமைக்கத் தொடங்கினர். மனித சமூகத்தின் உலோகம் பயன்படுத்தும் வளர்ச்சியோடு இச்செயல் தொடர்புடையது. மலர்களின் வடிவங்களைத் தாதுப் பொருட்களில் வடிவமைத்தனர். தாதுப்பொருட்கள் குறித்தப் பல்வேறு நம்பிக்கைகள் காலப்போக்கில் உருவாயின. அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினர். இவ்வகையில், மனிதர்கள் இயற்கையோடு கொள்ளும் உறவின் ஒரு பகுதியாகவே அணிகலன்களை அணிவதும் அவற்றை உற்பத்தி செய்வதும் நிகழத் தொடங்கியது. அணி கலன்கள் குறித்த இச்சமூக வரலாற்றை இந்நூல் மிகச் சிறப்பாகவே பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இயற்கை-மனித சமூக வளர்ச்சி-ஒப்பனை-அணிகலன்கள்-தாதுப்பொருட்கள்-தொழில்நுட்ப வளர்ச்சி என்ற போக்கில் அணிகலன்களை நாம் புரிந்து கொள்ள இந்நூல் அடிப்படையாக அமைந்துள்ளது. மேலும், இத்தன்மை சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை யும் இந்நூல் பதிவு செய்துள்ளது. இதனை அடிப்படை யாகக் கொண்டு சமூக வரலாற்றை நாம் கட்டமைக்க முடியும். அணிகலன்கள் அணியப்படும் உடல் உறுப்புகள் சார்ந்து அவற்றுக்குப் பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன என்று கருத முடியும். அணிகலன்களுக்கும் மனித உடல் உறுப்புகளுக்கும் நெருக்கமான உறவு இருப்பதைக் காண்கிறோம். இயற்கையில் தாவரங்கள், பறவை மற்றும் விலங்கினங்கள், பாலினக் கவர்ச்சியில் வண்ணத்தை முதன்மைப் பண்பாகக் கொண்டுள்ளன. இவ்வண்ண உருவாக்கம் என்பது உயிர் சார்ந்த வேதியியல் செயலாக இயற்கையில் அமைந்துள்ளது. மனிதர்களைப் பொறுத்தவரையில், உடல் உறுப்பு களை அழகுபடுத்துகின்றனர். அது தலையிலிருந்து தொடங்கிக் கால்வரை செல்கிறது. உடல் உறுப்பு களோடு இணைந்தே அணிகலன்கள் அமைந்துவிடு கின்றன. இவற்றைத் தலையணிகள், நுதல் அணிகள், மூக்கணிகள், காதணிகள், கழுத்தணிகள், இடுப்பணிகள், கையணிகள், கைவிரல் அணிகள், கால் அணிகள், கால் விரல் அணிகள் மற்றும் இவை இல்லாதப் பிற அணிகள் என்று நாம் வரையறை செய்ய முடிகின்றது. உடல் உறுப்புகள் குறித்துக் கால வளர்ச்சியில் மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட பல்வேறு கருத்தாக்கங்களுக்கும் அணிகலன் களுக்கும் தொடர்பு இருப்பதைக் காண்கிறோம். இனக்கவர்ச்சி என்பதில் தொடங்கிய அணி கலன்கள் அணிதல் என்பது, கால வளர்ச்சியில் தொழில் நுட்ப வளர்ச்சியாகவே வடிவம் பெற்றுவிட்டது. மனித சமூகத்தில் குறிப்பிட்ட தொழிலைச் செய்து வந்த குறிப்பிட்ட மக்கள் கூட்டம், பின்னர் அத்தொழில் சார்ந்தே அடையாளப் படுத்தப்பட்டனர். அணிகலன் களை உற்பத்தி செய்து வந்த மக்கள் பிரிவினர், தமிழ்ச் சமூகத்தில் மிகப் பழைய காலத்திலேயே தனித்த பெயரில் அழைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தச்சர், கொல்லர், சுன்னார், கல்தச்சர் என்ற பெயர்களை மேற்குறித்தப் பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் குறித்த பல்வேறு தொன்மங்களும் உருவாயின. மனிதர்கள் தம் வாழ்வில் ஏற்படும் பருவ மாற்றங்களைக் கொண் டாடத் தொடங்கினர். ஒவ்வொரு பருவ மாற்றத்திற்கும் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர். இச்சடங்கு களைப் பின்னர் விழாக்களாக மாற்றினர். இச்சடங்குகள் ஆண், பெண் என்ற வேறுபாடுகளை அடிப்படை யாகக் கொண்டும் உருவாயின. இச்சடங்குகளை நிகழ்த்துவது என்பது, அச்சடங்கு செய்யும் போது அணிகலன்களை அணிவது என்பதாக வடிவம் பெற்றது. அவ்விதம் அணியும் அணிகலன்கள் சார்ந்து பல்வேறு நம்பிக்கைகளும் உருவாயின. எனவே, மனித சமூகத்தின், இயற்கை சார் வாழ்முறையின் நீட்சியாக அணிகலன்கள் உருப்பெற்றன. அவை அவர்களது வாழ்வோடு இணைந்து விட்டன. மனித சமூகம், இயற்கையில் கிடைக்கும் தாதுப் பொருட்களை, படிப்படியாக வளர்ந்த நிலவுடமைப் பண்பு சார்ந்த சொத்தாகவும் வரித்துக் கொள்ளத் தொடங்கியது. ஒவ்வொருவரிடமும் இருக்கும் பொருள் வளம் என்பது முதலில் கால்நடைகளில் தொடங்கிப் பின்னர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொள் வதில் முடிந்தது. நிலச்சொத்தைப் போலவே, தாதுப் பொருட்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மையும் பண்ட மாற்றை சார்ந்து மனிதர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். இத்தாதுக்களுக்கு உலகம் தழுவிய அளவில் மதிப்பீட்டை உருவாக்கினார்கள். அதன்மூலம் அணிகலன்களை இத்தாதுப்பொருட் களில் செய்து பாதுகாக்கும் பண்பு மனிதர்களுக்கு உருப்பெற்று விட்டது. சொத் துடைமைச் சமூக அமைப்பில், இத்தன்மை வெறியாகவே வளர்ந்துள்ளது. இதனால் அணிகலன்கள் குறித்த மதிப்பீடு என்பது பல் பரிமாணங்களாக வடிவம் பெற்றுவிட்டது. எனவே மனித சமூக வரலாற்றில் அணிகலன்கள் குறித்த ஆய்வு, பல பரிமாணங்களில் மேலும் மேலும் வளர்ந்து செல்வதைக் காண்கிறோம். இவ்வகையான பார்வையைப் பெறுவதற்கு இந்நூல் அடிப்படைத் தரவாக அமைவதைக் காண்கிறோம். இப்பின்புலத்தில், இந்நூலின் முக்கியத்துவத்தையும் உணர முடிகிறது. மனித சமூகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது, மனித வரலாற்றை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகும். தொழில் நுட்ப வளர்ச்சி என்பது தவிர்க்க இயலாமல் தாதுப் பொருட்களோடு தொடர்புடையதாக அமைந்துவிடுகிறது. இத்தாதுப் பொருட்களை, மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதற்குப் பல்வேறு கருவிகள் தேவைப்படு கின்றன. இக்கருவி உருவாக்கம் தாதுப்பொருட்களி லிருந்து தொடங்குகின்றன. எனவே மனித நாகரிக வளர்ச்சி குறித்த அடையாளங்களில் ஒன்றாக, அணி கலன்கள் உருவாக்கம் அமைவதையும் காண்கிறோம். பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் கருவிகளை இந்நூல் பின்வரும் வகையில் பட்டியலிடுகிறது. பெரிய பற்றுக் கொடிறு, சிறிய பற்றுக் கொடிறு, வாள் சட்டம், ஆடுதமர், பிடித்தராவி, நூல்சட்டம், திண்ணம், பன்றிமுடி, பித்தளைத் தூரிகை, பொடிவெட்டி, வளைந்த குழல், வளைந்த நாகம், மெதுகதிர், வெட் டிரும்பு, அரம், வாள், சாணை ஆகிய பிற. இக்கருவிகள் தொழில் நுட்பத் திறனை உணர்த்துவதாக அமை கின்றன. சடங்கு-நம்பிக்கை-அணிகலன்-அழகு-கவர்ச்சி என்ற தன்மைகள், தாதுப்பொருள் கண்டுபிடிப்பு-பயன்படுத்துதல் - தொழில் நுட்பம் - மனித சமூக நாகரிக வளர்ச்சி என்ற நிலைக்கு வளர்த்துச் செல்வதற்கு அணிகலன்கள் அடிப்படையாக அமைவதை நம்மால் அறியமுடிகிறது. இந்நூல் ஒன்பது மணிகள் குறித்த விரிவான தகவல்களைப் பதிவு செய்துள்ளது. இம்மணிகள் புழக்கத்தில் இருந்தமையை இலக்கியச் சான்றுகள் வழியும் இம்மணிகள் குறித்தப் பல்வேறு நம்பிக்கை களையும் இந்நூல் வழி அறிய முடிகிறது. இம்மணிகள் உலகத்தில் சந்தைப்படுத்தப்படும் முறைகளும் புதிது புதிதாக உருவாக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட பகுதி சார்ந்து இம்மணிகள் மதிக்கப்படுகின்றன. அவற்றை அணிவதில் மனிதர்கள் விருப்பம் கொள்கிறார்கள். இத்தன்மை உருவாக்கம் குறித்தும் நிறைய விவரிக்க வாய்ப்புண்டு. அறிஞர் இராகவன் இந்நூலில், மனிதர்களின் உடல் உறுப்புகளில் அணியப்படும் சுமார் 500 அணிகலன் பற்றிய விரிவான தகவல்களைத் தருகின்றார். அவை வெவ்வேறு சமூக நிலையில் உள்ள மக்களிடம் எவ் வகையில் புழக்கத்தில் உள்ளன என்பதையும் விவாதித் துள்ளார். இந்நூலின் தனித்தன்மைகளாகப் பின்கண்ட கூறுகளை நாம் தொகுத்துக் கொள்ள முடியும். - வளர்ச்சியடைந்துள்ள இன்றையக் கல்விச் சூழலில், பல்வேறு பொருள்சார் அகராதிகள் உருவாக்குவது மிகவும் அவசியமாகும். இந்நூலை அடிப்படையாகக் கொண்டு, அணிகலன் அகராதி ஒன்றை உருவாக்க முடியும். அவ்வகை யில் ஒரு அகராதி உருவாக்கத்திற்கான அடிப் படையான கூறுகளை இந்நூல் கொண்டுள்ளது. - மனித இனம் தமக்குள் உருப்பெற்று வளர்ந் துள்ள பல்வேறு பண்புகளின், தோற்றப் பின்புலத்தை அறிதல் அவசியம். இத்துறை பண் பாட்டு மானிடவியல் சார்ந்தது. இக் கண்ணோட்டத்தில் ஒப்பனை, ஒப்பனைக்கான அடிப்படைகள் மற்றும் நோக்கங்கள் ஆகிய பிறவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ள அணி கலன்கள் பற்றிய இந்த ஆவணம், அடிப்படை யாக அமைந்துள்ளது. அறிஞர் இராகவன் அவர்களின் இப்பணி, தமிழ்ச் சமூக வரலாற்று மாணவனுக்குப் பலவகை யிலும் உதவும் வகையில் அமைந்துள்ளது. மானிட வியல் கண்ணோட்டத்தில், தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அரிய தரவாக இந்நூல் உள்ளது. இந்நூலை உருவாக்கிய அறிஞர் இராகவன் அவர் களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது. இந்நூலை வெளியிடும் அமிழ்தம் பதிப்பகத்தின் முயற்சியை பெரிதும் பாராட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு. பேராசிரியர், தலைவர் வீ. அரசு தமிழ் இலக்கியத் துறை சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்நாட்டு அணிகலன்கள் தோற்றுவாய் உலகிலுள்ள மக்களில் தொன்று தொட்டுத் தமிழர்களே நுண் கலைகளை - சிறப்பாக அழகுக்கலைகளை அதிகம் உணர்ந்தவர்கள், நன்கு சுவைப்பவர்கள் என்பது எனது உள்ளக் கிடக்கையாகும். இதற்கு, அவர்கள் தொன்று தொட்டு அணிந்துவரும் ஆடை வகை களும் அணிகல வகைகளும் நல்ல சான்று தருவனவாகும். உலகில் உள்ள எல்லா மக்களும் அணிகலன்களை அணிந்து வருகின்றார்கள். ஆனால் தமிழர்களைப் போல் விலையுயர்ந்த நவமணிகள் பதித்த, அழகிய நுண்மையான வேலைப்பாடுகள் நிறைந்த நகைகளை யாரும் அணிந்துவந்ததாகத் தெரியவில்லை. மேனாட்டில் இன்று, ஒரு சில கோடீசுவரர்கள் வெண் பொன்னால் (பிளாட்டினத்தால்) அணிகலன்கள் செய்து வைரமோ வைடூரியமோ பதித்து அணிந்து வருகின்றார்கள் என்று சிலர் கூறக்கூடும். ஆனால் அத்தகையவர்கள் விரல் விட்டெண்ணக் கூடியவர்களாகவே இருப்பர். அவர்களும் விலையுயர்ந்த ஒன்றிரண்டு அணிகலன்களையே அணிந்திருப்பார்கள். தமிழர்களைப் போல் உச்சிதொட்டு உள்ளங்கால்வரை நவமணிகள் பதித்த பொன் அணி கலன்களை அணிகிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் இன்று நகைகள் அணியலாம். அவர்களின் முன்னோர்கள் நகை வகைகளைக் கண்டும் கேட்டும் படித்தும் கூட அறியார்கள். தமிழர் களில் நூற்றுக்கு அறுபது பேர் ஒரு காலத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட பல வகையான அணிகலன்களைத் தலை, காது, மூக்கு, கழுத்து, புயம், முன்கை, கைவிரல்கள், இடுப்பு, தொடை, பாதம், கால்விரல், போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றிலும் ஒன்றோ - இரண்டோ, மூன்றோ - ஏன்? அதற்கு மேற்பட்ட பலவகையான அணிகலன்களை அணிந்து வந்துள்ளனர். அரச பெருமாட்டிகளும் செல்வச் சீமாட்டி களும் வணிகத் திருவாட்டிகளும், ஒரு ஆள் சுமக்கத்தக்க மணிகள் இழைத்த பொன் அணிகளைத் தாங்கி வந்தனர். இவ்வுண்மைகள் நம்முடைய இலக்கியங்களிலும் செப்பேடுகளிலும், கல்வெட்டு களிலும் இன்றும் காணக் கிடக்கின்றன. இற்றைக்கு ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் எழுதப்பெற்ற நம் ஓவியங்களும் உருவாக்கப்பெற்ற செம்புப் படிமங்களும் சிலைகளும் நம் கருத்தை மெய்ப்பிப் பனவாய்த் திகழ்கின்றன. நம் திருக் கோயில்களில் உள்ள எண்ணற்ற அணிகலன்கள் நம் கருத்தை அரண் செய்யும் முறையில் நேரடியான எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. அணிகலன்கள் அணிவது வரலாற்றுக் காலத்திற்கு முன்பே நமது சமூகத்தில் எழுந்துள்ள பாரம்பரிய முறை. அது நமது பழம்பெரும் பண்பாடு! நாம் வேட்டுவ நிலையில் இருந்த காலந் தொட்டு நம்மிடையே தோன்றி வளர்ந்து வரும் ஒரு நாகரிகம். தாதுப் பொருள்களையும் மணிகளையும் பிற மக்கள் காண்ப தற்கு முன்னரே தமிழர் அவற்றாலாய அணிகலன்களை அணிந்து வரத் தலைப்பட்டுவிட்டனர். கற்காலத்தில் தோன்றிய தமிழர்களின் பழம்பெரும் தெய்வமாகிய பழையோள் (கொற்றவை) மனிதர்களின் தலைகளினாலான மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டாள். பாம்பினாலான கங்கணத்தைக் கையில் அணிந்துள்ளாள்; காதில் ஓலையை அணிந்துள்ளாள். தமிழர் கண்ட பழம்பெருந் தெய்வ மான சிவபெருமான் உடம்பெல்லாம் எலும்பினாலான மாலையைத் தரித்துக் கொண்டார். தலை, காது, கழுத்து, புயம், முன்கை, இடுப்பு, கால் முதலிய உறுப்புகளிலெல்லாம் பாம்புகளை அணிகலன்களாக அணிந்துள்ளார். அவரது தலையில் எருக்கம்பூ அணிகலனாக ஒளிர்ந்தது. இன்னும் பல தெய்வங்களும் மக்களும் பூக்கள், கொடி, இலை, தளிர், அரும்பு, கொட்டை, பழம், காய், சங்கு, சிப்பி, கல் உருண்டை, மண் உருண்டை முதலியவைகளையெல்லாம் அணி கலன்களாக அணிந்து வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் தாங்கள் பிறந்த நாட்டைத் தந்தை நாடென்று கூறாது தாய்நாடு என்று கூறி வருகின்றனர். தாங்கள் பேசும் மொழியைத் தாய்மொழி என்று சொல்லி வருகின்றனர். தாங்கள் உறையும் நிலத்தை பூமிதேவி என்று புகன்று வருகின்றனர். எல்லாச் சமயத்த வர்களும் தங்கள் தெய்வத்தை ஆண்பாலாக ஆண்டவன், தேவன் என்று கூறும்பொழுது தமிழர்கள் தங்களின் பெருந் தெய்வத்தை கொற்றவை என்று, பெண்ணாக வழிபட்டு வருகின் றனர். அவர்கள் இன்று சிவன், முருகன், திருமால் என்று ஆண்பால் தெய்வத்தை வணங்கினாலும் கொற்றவையாகிய சக்தியே முதலில் தோன்றிய மூல தெய்வம் என்று போற்றி வருகின்றனர். சக்தியாய்ச் சிவமதாகிய தனிப்பர முத்தியான முதலைத் துதி செய்வாம் என்று சிவனடி யார்கள் கூடி சக்திக்கு முதன்மை அளிக்கின்றனர். இஃதன்றி சுதந்திர உணர்ச்சியைக்கூட சுதந்திரதேவி என்றும் தமிழ்மொழியை தமிழ்த் தெய்வம் என்றும் வணங்குகின்றனர். தமிழர்கள் எல்லா வற்றையும் பெண் வடிவிலே கண்டார்கள். ஏனெனில் பெண்ணாக இருந்தால் தான் அதன் அன்பை அருளை, அழகை, அணியை, ஆடையைச் சிறப்பித்துக் கூறமுடியும் என்பதற்காகவேதான். தெய்வம் ஆணாக இருந்தால் அவன் தன்மையை அழகை, அணி கலன்களைச் சிறப் பித்துக் கூறமுடியுமா? புலவர்கள் அணிகளையும் ஆடைகளையும் அவள் அழகிய உறுப்புகளையும் சிறப்பித்துக் கூறுவதற்காகவே தெய்வத்தைப் பெண்ணாகக் கண்டிருப்பார்களோ என்று எண்ணு வதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன். உலகிலுள்ள எந்த நாட்டிலும் புலவர்கள் பேரிலக்கியங்களை அணிகலன்களின் பெயரால் உருவாக்குவதில்லை. தமிழ்ப் புலவர்கள் தான் தங்கள், தேனினும் இனிய தாய் மொழிக்கு சிறப்பளிக்கும் ஐம்பெரும் காப்பியங்களையும் சிந்தாமணி, சிலம்பு, மேகலை, குண்டலம், வளை என்னும் பெயரால் உருவாக்கியுள்ளனர். இவை ஒரே காலத்தில் ஒரு புலவரால் உருவாக்கப்படவில்லை. இதனால் இவை தமிழ்ப் புலவர்கள் அணிகலன்கள் மீது கொண்டிருந்த மதிப்பை எடுத்துக்காட்ட ஏற்ற சான்றாக இருக்கின்றன. பிற்காலத் தமிழ்ப் புலவர்கள் இந்த ஐம்பெருங் காப்பியங்களையும் தமிழ் அன்னைக்குப் பழம் புலவர்கள் சூட்டிய ஐம்பெரும் அணிகலன் களாகவே கண்டனர். உலகிலுள்ள பல நாட்டிலும் தங்கள் தெய்வத்திற்குத் தம் மனைவியை, மக்களை, இளங்காளையரை, கன்னியரை, ஆட்டை, மாட்டை, அர்ப்பணித்த கதைகள் உண்டு. ஆனால் தமிழ்ப் புலவர்கள் தங்கள் தெய்வமாகிய தமிழ்த்தாய் சிறந்த நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த கலைச் சிறப்பு ஒளிரும் அரும்பெரும் மணிகள் பதித்த பொன் ஆபரணங்களை விரும்புவாள் என்று அவளுக்கு அவைகளை அர்ப்பணித்துள்ளனர். காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் கருணை மார்பில் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடிசூ ளாமணியும் பொலியச் சூட்டி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க என்று ஒரு தமிழ்ப் புலவர் பாடிய பாட்டே இதை உறுதிப்படுத்தும். தமிழாகிய தெய்வம் உவந்தணிய விரும்புவது பொன் அணிகலன் என்று புலவர்கள் அறிவார்கள். வறுமை மிகுந்த புலவர்களுக்கு அணிகலன்கள் செய்வதற்குப் பொருள் எங்கிருந்து கிடைக்கும்? எனவே அவர்கள் அணிகலன்கள் பெயரால் காப்பியங்களைச் செய்வித்து தமிழ்த் தெய்வத்திற்குச் சூட்டி அவளது உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர்; அவள் அன்பைப் பெற்றனர். இதினின்று தமிழ்த் தெய்வம் கூட, விரும்பி அணிவது அணிகலன்கள் என்பது தமிழர்களின் உள்ளக்கிடக்கை என்பது நன்கு தெரிகிறது. உலகிலே கலைச் சிறப்பும் சிற்ப நுட்பமும் அழகும் உயர்வும் நிரம்பப் பொன்னில் மணிகள் இழைத்த அணிகளாக இலங்கிவரும் தமிழ்நாட்டு அணிகலன்களை ஆராய்ந்து ஒரு நூல் எழுத வேண்டும் என்று 1950ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து எண்ணினேன். ஆங்கில நாட்டு அணிகலன்களைப் பற்றியும் பிரெஞ்சு நாட்டு அணிகலன்களைப் பற்றியும் இந்திய நாட்டு அணிகலன்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் சில நூற்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழகத்தின் உயர்ந்த அணிகலன்களைப் பற்றி ஒரு சிறு நூலும் இதுவரை வெளிவரவில்லை. அணிகலன்களைப் பற்றித் தமிழில் நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட நான் இதுவரைக் கண்டதே இல்லை. சிலப்பதிகாரத்தில் முதலாவதாக அணிகலன்களைப் பற்றிப் படித்து மகிழ்ந்தேன். அப்பால் தமிழ் அன்னையின் தவப் புதல்வரும் உலகில் ஒப்பற்ற கலைமேதையுமாய் விளங்கிய பேரறிஞர் ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் ஆங்கிலத்தில் அணிகலன்கள் (Ornaments) என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளார். அது ஒரு அமெரிக்கக் கல்லூரியின் கலைக் கழகத்தினரால் 1939ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கலை வெளியீட்டின் 21வது மலராக வெளி வந்துள்ளது.1 அதில் தமிழ்நாட்டு அணிகலன்களைப் பற்றிச் சிறிதும் ஆராயவே இல்லை. அது வட இந்திய அணிகலன்களைப் பற்றி வடமொழி இலக்கியங்களைப் பயின்று அதில் கண்ட கருத்துகளை ஆதரவாகக் கொண்டு எழுதப்பெற்றதாகத் திகழ்கிறது. வடமொழி யில் உள்ள பரத சாதிரத்தில் கூறப்பட்டிருக்கும் அணிகலன் களைப் பற்றிக் கூட அவர் ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லை. தமிழர்களின் அணிகலன்களைப் பற்றிக் கூறும் பரத சாதிரம், சிலப்பதிகாரம், சிவாகமங்கள் சிற்ப நூல்கள் இவற்றின் பக்கம் அவர் திரும்பவே இல்லை. என்றாலும் அவர் அணிகலன்களைப் பற்றி ஆராய்ந்த முறையும் அதில் அவர் கண்ட தத்துவ நுட்பங்களும் என் உள்ளத்தில் உந்தின. இதுவே இந்நூலை எழுதி முடிக்க ஊக்கமும் ஆக்கமும் அளித்தது என்று கூறுவது மிகையாகாது. அழகின்மீது ஆவலும் ஒப்பனையில் ஓர்தலும் மக்களிடம் இயற்கையாய் அமைந்துள்ள பாரம்பரியக் குணமாகும். வரலாற்றில், பௌதீகம், புறப் பண்புகள் ஆகிய கருத்தாற்றல்களோடு மிக நெருங்கிய சம்பந்தமுடையதாக அழகைப் பற்றி ஆன்மீகவாதக் கருத்தோட்டம் அதிகம் உள்ளது. மேலும் அழகின் மெய்மையில் கலையுணர்ச்சியின் சின்னங்கள் ஆழ்ந்து வேர்விட்டுத் துளிர்த் துள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். அழகின் தனிப்பண்பு உடல் சம்பந்தப்பட்ட மட்டில் கவர்ச்சி தரும் பளபளப்பும் வண்ணமும் மென்மையும் தண்மையும் பெற்று விளங்குவதேயாகும். முற்றத் துறந்த முனிவர்கள், இல்லறமே நல்லறம் எனக் கண்ட வள்ளுவர், திருமூலர் ஆகிய அனைவரும் ஒப்பும் உண்மையாகும். அழகு செய்வதின் உயிர்நிலை, அணி செய்வதின் இன்றியமையாத அமைப்பாக விளங்குகிறது. மனித வர்க்கம் அனைத்திற்கும் அணிகலன்களை அணியும் ஆசை தவிர்க்க முடியாத குணமாக இருக்கிறது. ஆனால் அணி செய்யும் பொருளும் ஆளும் தன்மையும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபாடுடையனவாய் விளங்கலாம். அழகு செய்யும் விசயம், கேவலம்! ஒரு உண்மையாக மட்டுமன்று ஒரு விதியாகவும் இருக் கிறது என்று அணி நலம் சார்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றார் கள். இது ஒரு நல்ல சுவை நலம் சார்ந்த தீர்ப்பின் பயனிலையாகவும் மிளிர்கிறது. ஆனால் இது அணிகலன்கள் சம்பந்தப்பட்ட ஒரு கருத்துரையாக மட்டுமன்றித் தமிழர்களின் கலையும் தத்துவமும் இக்கருத்துகளை மெய்ப்பிப்பனவாகவும் இருக்கின்றன. இவைகளை இவ்வுலகிற்கு நன்கு வெளிப்படுத்தவும் அறிவிற்குப் பொருத்த மாகவும் அறிஞர்கள் கருத்தை ஈர்ப்பதாகவும் விளக்கவேண்டும். அணிகலன்கள் அழகை உயர்த்திக்காட்ட உறுதுணையாக இருக்கின்றன. இயற்கை, தன் படைப்பை எழில் நலத்துடன் கூடி விதிப்படி பணியாற்றி வருகிறது. இயற்கையில் பெண்களே எழில் உடையவர்கள்; அவர்களது சூழ்நிலை அவர்களை அதிகக் கவர்ச்சி அழகு ஆகிய நிலையில் அமைத்துவிட்டது. பறவைகளில் கோழி, மயில்களைத் தவிர ஏனையவற்றில் பெண்ணினமே அழகுடையவை. விலங்குகளிலும், பிற உயிரினங்களிலும் பெரிதும் பெண்ணினமே அழகுடையவை. ஆனால் ஆணினம் இயற்கையிலேயே கட்டுவாய்ந்த உடலும் உறுதி வாய்ந்த உள்ளமும் உடையதாய் இருக்கின்றது. மனித இனம் ஆதியில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் இயற்கையிடமிருந்து பல உண்மைகளை உணர்ந்துகொண்டது. சிவப்பு இந்தியர்களிலும் வேறு சில இனத்தவர்களிலும் ஆண் கள் தங்களைப் பன்னிற இறகுகளாலும் பல வண்ணங்களாலும் பல்வேறு அணிகலன்களாலும் அழகுபடுத்திக் கொள்கின்றார்கள். அவர்களிற் சிலர் மிக முற்போக்கான நாகரிகம் பெற்றவர்களாய்க் காணப்படுகின்றார்கள். இப்பொழுது அவர்கள் வாழ்வும் சிந்தனை யும் சமூக அமைப்பும் நாகரிகமும் மாறுபட்டு வருகின்றன. பெண்கள் இன்றைய சமூக சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தங்கள் பழைய வாழ்க்கையை மாற்றி அமைக்க முன்வந்துள்ளனர். தங்கள் ஆடைகள், அணிகலன்கள், பேச்சு, மொழி, எழுத்து முதலியவற்றி லெல்லாம் மாற்றஞ் செய்து வருகிறார்கள். உலகமெங்கும் முதலில் செம்பு, இரும்பு, தந்தம், மண், கல் முதலியவைகளால் அணிகலன்கள் ஆக்கப்பெற்று அணியப் பட்டன. பிற்காலத்தில் வெள்ளியும் பொன்னும் மணிகளும் எழுந்ததும் அவை அழகுப் பொருள்களாய்ப் பயன்பட்டு வந்தன. தமிழகத்தில் தொன்மையான காலத்திலேயே பொன் அணிகலன்கள் அணியும் வழக்கம் எழுந்து விட்டது. சமயமும் சாத்திரமும் கோத்திர மும் மூட நம்பிக்கைகளும் இந்தக் காரியத்திற்கு மேலதிகமான குணங்களாக முக்கிய பங்காற்றியுள்ளன. தாதுப் பொருள்களும் மணிகளும் பழைய நம்பிக்கைகளின் சின்னமாகவும் மந்திரசக்தி வாய்ந்தனவாகவும் கருதப்பெற்றன. புராணங்களில் சிறப்பித்துக் கூறப்படும், நாடியவைகளை நல்கும் நன்மணிகள் அமரத்துவத்தை யும் நீண்ட வாணாளையும் செல்வப் பெருக்கையும் ஈட்டும் சாதனங் களாகக் கருதப்பட்டன. இரத்தினங்கள் வேதக் காலத்தில் (கி.மு. 1500 கி.மு. 500 வரை) சிறந்த கருவூலமாகக் கருதப்பட்டன என்று வட நாட்டறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் வேதக் காலத்திற்கு வெகு நாட்களுக்கு முன்னரே பாரத நாட்டில் திராவிடர் நவமணிகளைக் கண்டதோடு அவற்றுக்கு இலக்கணங்களும் கலைகளும் வகுத்து விட்டனர். கொற்கை முத்து குவலயமெங்கும் புகழ் பரப்பியுள்ளது. இருக்கு வேதத்தின் இரு ஆரம்ப சுலோகங்களில் வலுவாய்ந்த தெய்வங்கள் உருவாகிவிட்டன. அக்கினியும் உருத்திரனும் ஏழு உயர்ந்த (திராவிடர்களின்) கருவூலங்களை உடையவர்களாகக் கூறப்பட்டுள்ளது. இருக்கு வேதமும் அதை இயற்றிய இருடிகளும் இந்தியாவில் காலடி வைக்கு முன்பே திராவிடர் அளப்பரிய அணிகலன்களையும் அரிய மணிகளையும் பொன்னாற் செய்து மணிகள் பதிக்கப்பெற்ற அணிகலன்களையும் உருவாக்கி அணிய முற்பட்டுவிட்டனர். அதற்கு, இன்று அரப்பாவில் அகழ்ந்து கண்ட அரிய அணிகலன் களும் பொம்மைகளும் நல்ல சான்றாக மிளிர்கின்றன. ஆரியம் இயற்கை அன்னையின் கருவில் உருப்பெறும் முன்பே தமிழன் பொன், வெள்ளி முதலிய தாதுப் பொருள்களையும் ஒன்பது விதமான மணிகளையும் எண்ணற்ற அணிகலன்களையும் கண்டு அணிந்து நாகரிக உலகில் சிறப்பாக வாழ்ந்தான். ஆரியர்கள் இந்திய நாட்டிற்குள் வரும்பொழுது ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டு நாடோடிகளாய் வந்தனர். அவர் களின் மொழி, வளர்ச்சி பெறவில்லை. வேதங்கள் உருவாகவில்லை. அவர்களுக்கு எழுத்து என்றால் இன்னதென்று தெரியாது. இந்த பவித்திரமான பாரத நாட்டிற்கு வந்த பின்னரே அவர்கள் மொகஞ்சதாரோ நகரங்களைக் கண்டனர் - அரண்களை அறிந்தனர். அவர்களின் மொழி, எழுத்து, வேதம் முதலியன பாரத நாட்டில் தான் உருப்பெற்று எழுந்தன. வீடு, மாளிகை அரண்மனை, கோட்டை முதலியவைகளையெல்லாம் பாரதநாட்டிலேதான் கண்டனர். கி.மு. 1500க்குப் பின் எழுந்ததாகக் கூறப்படும் இருக்குவேதத்தில் சொல்லப் படும் அணிகலன்களையும் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் அரப்பா வில் அகழ்ந்தெடுக்கப்பெற்ற மணிகள் பதிக்கப்பெற்ற பல்வேறு அணிகலன்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும். சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள், சுண்ணாம்புப் படிமங்கள், வெண்கல நடனமாதர் உருவங்கள் எல்லாம் நாம் கூறும் உண்மையை உறுதிப்படுத்தும். திராவிடர், கிரேக்கர், உரோமர் முதலியவர்களின் பொற்காலத்தையும் தாண்டி உன்னத நிலையில் இருந்தனர். ஆரியர், திராவிடர் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உணர்ந்து தங்களைச் செம்மைப்படுத்திக் கொண்ட னர். புதிய முறையில் தங்கள் மொழியையும் ஏனைய கலைகளையும் அணிகலன்களையும் அமைத்துக் கொண்டனர். இவைகள் அனைத்தையும் அரப்பா நாகரிகம் அறிவுறுத்துகின்றது. தமிழ்நாட்டு அணிகலன்களைப் பற்றிப் படிப்பதும் ஆராய்ச்சி செய்வதும் ஒரு சுவையான விசயமாகும். அணிகலன்களின் ஆரம்ப மும் அதன் அபிவிருத்தியும் அரிய வேலைப்பாடுகளும் ஆராய்ச்சி செய்வதற்கு உரிய அரிய பொருளாகும். நம் ஒண்டொடிகள்மீது ஒளிரும் உயர்ந்த அணிகலன்கள் பாரத நாட்டிலும் சிறப்பாகத் தமிழகத்திலும் எளிதாக நமது கண்களுக்குப் புலப்படுகின்றன. அவற்றின் உற்பத்தி மூலம் புதையுண்ட பழமையான பண்பு முறை யாக இருக்கிறது. அது எவ்வளவு காலத்திற்கு முன்னர் இருந்தாலும் பரவாயில்லை. அணிகலன்கள் அரும்பிய ஆதி காலத்தினின்று அதே அமைப்பில் நிலவும் இன்றையக் காலம் வரை நாம் ஆராய்ந்து காண விரும்புகின்றோம். நமது ஆய்வில் தொன்மையான முதிராப் பண்புடைய காலத்தில் அரும்பிய அணிமணிகள் உட்பட இடம் பெற வேண்டும். பாரதநாட்டில் பல பகுதிகளிலும் வாழும் நாகரிக முதிர்ச்சிபெறாத பழங்காலக் குடிமக்களின் வாழ்க்கை முறைகளை யும் அணிகலன்களையும் ஆராய வேண்டும். இந்த மக்களிடையே பழமையான பண்புமுறை மாறாத முற்கால மக்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதை ஒருவாறு ஊகிக்க முடியும். அவர்களின் அணிகலன்களை ஆராய்ந்தால் அவை பழைய முறையி னின்று எவ்வாறு அபிவிருத்தியடைந்து இன்றைய அமைப்பு முறையை எய்தின என்று எளிதில் கண்டுபிடிக்கலாம். எடுத்துக் காட்டாக ஆந்திர, கேரள, தமிழக அணிகலன்கள் ஆரியர்கள், மொகலாயர்கள், ஐரோப்பியர்களின் செல்வாக்கால் சிறிதும் மாற்றம் பெறாத கலப்பற்ற தூய திராவிட அமைப்புடையனவாய் இருக் கின்றன என்பது அணிகலன்களை நன்கு ஆராய்ந்த அனைவ ருடைய அபிப்பிராயங்களுமாகும். பண்டைக்கால மனிதனுடைய உள்ளம் தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கை அழகோடுமட்டும் நிறைவெய்தவில்லை. அவன் தன்னைச் சூழ்ந்துள்ள பொருள்களையெல்லாம் கண்டு அவற்றின் அழகு அனைத்தையும் சுவைக்க முற்பட்டிருக்கின்றான். அவற்றைக் கொண்டு அவன் தன்னை அழகுபடுத்திக் கொள்ள முயன்றுள்ளான். காய்ந்த புற்கள் செடி கொடிகளின் தண்டுகள், மலர்கள், விதைகள், பழங்கள், எலும்புத் துண்டுகள், பற்கள், யானைத் தந்தம், பளிங்குக் கற்கள், மணிகள், கற்கள் போன்றவைகளையெல்லாம் அணிகளாக அணிந்து வந்திருக்கின்றான். அப்பால் மரங்களைச் சிறிதாகச் செதுக்கியும் மாக்கற்களைத் தேய்த்துச் சிறிதாக்கியும் வெண்கலம், ஈயம் போன்றவைகளை உருண்டையாகச் செய்தும் அணியும் வழக்கத்தைப் பெற்றான். பிற்காலத்தில் புற்களால் பின்னப்பட்ட அணிகளைப்போல் தாதுப் பொருள்களில் அணிகள் செய்தான். பழங்கள், விதைகள் போன்றன போல் கனிப் பொருள்களில் அணிகள் அமைத்தான். பின்னர் நீண்ட காலம், பழங்களைப் போலவும் விதைகளைப் போலவும் பொன் வெள்ளி அணிகளைச் சமைக்கவில்லை. பல புதிய அணிகலன்களை உருவாக்க உளங் கொண்டான். இந்தப் புதிய அணிகலன்களை உருவாக்குவதற்குக் காலமும் சூழ்நிலையும் மட்டுமல்ல சமய தத்துவங்களும் துணையாக நின்றன. ஆனால் அரசியல் அறிஞர்கள், ஆதிகால மக்கள் அவர்களுக்கு இன்றியமையாத உணவு உற்பத்தியில் ஈடுபட்ட காலத்தில், அவர்கள் உணர்வில் உந்தியதே ஆரம்பக்கால அணிகலன்கள்; பிற்காலத்தில் சமயக் கருத்துக்கள் இதில் புகுந்து மாற்றம் விளைவித்திருக்கலாம் என்று எண்ணுகின்றார்கள். ஆனால், தமிழர்கள் ஆதியில் மலர்களின் அழகைச் சுவைத்து அவற்றையே அணிகலன்களாக அணியவிழைந்து அப்பால், காய், பழம், கொட்டை, இலை, தழை, தளிர் முதலியவைகளையும் அணிய முற்பட்டு, அதன்பின் சிப்பி, சங்கு, மண் உருண்டை, கல், நெல், புல் போன்றவைகளையும் அணிந்திருக்கலாம் என்று நான் எண்ணுகின்றேன். உணவு உற்பத்தியின் வெற்றியில் பழம், காய், இலை, பூ அணியாக அமைந்திருக்கலாம் என்பதில் நமக்குப் பெரும் ஆட்சேபனை எதுவும் இல்லை. உலோக காலத்தில் கனிப் பொருள் களால் கவின்பெறும் அணிகலன்கள் செய்து பூண முற்பட்டிருக் கலாம். தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை ஆணும் பெண்ணும் அணிகலன்களைத் தாதுப் பொருள்களில் ஆக்கி அணிந்து வந்துள்ளனர். அதோடு அவர்கள் தாம் வணங்கும் ஆண் பெண் தெய்வங்களுக்கும் அணிகலன்களைச் செய்து அணிந்து வந்தனர். இது தமிழர்களின் அணிகலன்களின் வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். அன்று தெய்வத் திருஉருவங்கள் மீது அணி கலன்களைப் பூட்டியிராவிட்டால் இன்று நாம் பழங்கால அணி கலன்களைக் காணமுடியாது போயிருக்கும் என்பது நிச்சயம். கேரளம், ஆந்திரம் தமிழகம் போன்ற திராவிடநாடுகளில் இந்த அணிகலன்களின் வளர்ச்சி முறையின் செயற்பாங்கின் செம்மையான அடிச்சுவடுகளை நாம் காண முடியும். நாகரிக முதிர்ச்சி பெறாத திராவிடப் பழங்குடி மக்கள் புற்களால் பின்னப்பட்ட அரைப்பட்டிகை, கைக்காப்பு, கழுத்துமாலை, பவளவடம், சங்கு மாலை, விதைகள் கோக்கப்பட்ட மாலைகள், நூலால் கட்டப்பட்ட அணிகள், முடிகள், எலும்புகள், உலோகத் துண்டு துணுக்குகளால் கரடுமுரடாக செய்யப்பட்ட அணிகலன்களை யெல்லாம் அணிந்து வருகின்றார்கள். உழவர்களிடையே புராதன முறையில் செய்யப் பட்ட பொன் வெள்ளி அணிகலன்கள் காணப்படுகின்றன. உயர்ந்த வேலைப்பாடுகள் உள்ள மணிகள் பதித்த பொன் அணிகள் மருதநில நாகரிகம் வாய்ந்த சைவர்களிடம் காணப்படுகின்றன. வைணவர் களில் தென்கலையைச் சார்ந்தவர் களிடமும் உயர்ந்த திராவிட அணிகலன்கள் காணப்படுகின்றன. சுமார்த்தர்களிடம் திராவிடப் பாணியினாலான அணிகலன்கள் அதிகம் காணமுடியவில்லை. ஆனால் சுமார்த்தர்களிற் சில பணக்காரர்களிடம் வைரம் பதித்த இன்றையப் பொன் அணிகள் பலவற்றைக் காணலாம். அவை களைப் பணக்காரச் சைவர்களிட மும் வைணவர்களிடமும் கூடத் தாராளமாகக் காணலாம். ஆனால் இன்றைய அணிகலன்கள் சைவர், சுமார்த்தர், வைணவர் முதலியவர்களிடம் பிரித்துணர முடியாதவாறு ஒரேவிதமாக உருவாக்கப் பெற்றுள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய ஐரோப்பாவிலும் தென் இந்தியாவிலும் உள்ள பொன் அணிகலன்களுக்கிடையே அதிகமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அமைப்பு, செய்முறை ஆகிய இரண்டிலும் பல விதமான ஒருமைப்பாடுகள் உள்ளன. தமிழகத்தில் இப்பொழுது அணிந்து வரும் காதணிகளைப் போன்ற அமைப்பில் ஐரோப்பாவிலுள்ள லோவர் (Louvre) என்ற தொல் பொருள் பிரிவில் காணப்படும் பெரும்பாலான காதணிகள் எல்லாம் எத்துருகன் (Etruscan) இனத்தவர்களுடையனவாகும். கேரள நாட்டிலுள்ள பொற்கொல்லர்கள் நாயர், தீயர் குல மகளிர் அழகு செய்ய அணியும் கழுத்து மாலைகளைப் போல் ஐரோப்பிய பழங்கால அணிகலன்கள் சித்திர வேலைப்பாடுள்ளனவாய்த் திகழ்கின்றன என்று அறிஞர் ஜமிலா பிரிஜ் புசன், இந்திய அணிமணிகளும் அணிகலன்களும் ஒப்பனைவகைகளும் என்ற ஆங்கில நூலில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். இது சிந்தனைக்குரியதாகும். திராவிட இனத்தவர்களாகக் கருதப்படும் கோண்டு என்ற இனத்தவர்களும் நீலகிரி மலையில் வாழும் தோடர்களும், இருளர் களும், ஆனைமலையில் வாழும் காடர்களும் ஆகிய மலை வாழும் மக்களின் அணிகலன்கள் மிகப் பழமை வாய்ந்தவைகளாகும். இலாடக் பெண்கள் அணியும் புரோச் என்ற அணிகலன் அயர்லாந் தில் உள்ள செல்டிக் மக்களிடையே இன்றும் காணப்படுகிறது. இது தமிழர்களின் அணிகலன்களை ஒப்ப அமைந்துள்ளது. இவ்வணி கலன்களின் அமைப்பு பாம்பு, இலிங்க வணக்கச் சின்னங்களின்று துளிர்த்ததாக நன்கு தெரிகிறது. குசரத்து மக்களின் ஆணித் தலைப்புப் போன்ற சிற்ப ஒப்பனைக் கூறுள்ள காதணிகள் அசீரியர் களின் சிலைகளில் காணப்படும் காதணிகளைப் போன்றனவாகத் திகழ்கின்றன. தமிழக அணிகலன்களில் ஞாயிறு திங்கள் பாம்பு உருவங்கள் பெரிதும் இடம் பெற்றுள்ளன. தலை, காது, அணிகலன்களில் தான் இவை பெரிதும் இடம் பெற்றிருக்கும். ஞாயிறும் திங்களும் தமிழர்கள் ஆதியில் கண்ட தெய்வ உருவங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளன. பாம்பு, சிவபெருமான், காளி முதலிய தெய்வங்களின் அணிகல னாகும். மேலும் பாம்பு தமிழர்கள் நாகர்களோடு கொண்ட கலப்பாலும் சமயப் பிணைப்பாலும் எழுந்துள்ள அணிகலனாகும். இந்தச் சமயங்களில் மேற்கூறிய மூன்றிற்கும் முதலிடம் இருப்பது கவனிக்கத் தக்கது. காப்பு, தடையம், தாலி, இயந்திரக் குழல் போன்ற அணிகலன்கள் மக்களைப் பேய் பிசாசு அணுகாது தடுக்கும் சமயச் சார்ப்பான அணிகலன்களாகும். தாலி, இலிங்கம், பிள்ளையார் போன்ற வடிவம் பெற்றிருக்கிறது. கருடன் யாழி போன்ற உருவ முள்ள அணிகலன்களும் உண்டு. மீன், நட்சத்திரம் போன்ற அணி கலன்களும் உண்டு. இவை எல்லாம் சமய சம்பந்தம் உள்ளனவே யாகும். அணிகலன் பூண்பது அழகுக்கும் மதிப்பிற்கும் மட்டுமன்றிச் சில சமயங்களையும் சில குருட்டு நம்பிக்கைகளையும் பொறுத்து அணியப்பட்டு வருகின்றன. இதில் பரம்பரைப் பழக்கமும் பண் பாடும் நாகரிகமும் இணைந்திருப்பதாக எண்ணப்படுகிறது. மணப் பெண்ணாக இருக்கும் பொழுது எல்லாவிதமான அணிகலன்களும் அணிவிக்கப்படும். கைம்மை அடைந்தால் அணிகலன்கள் அனைத் தும் அகற்றப்படும். இது சமய வழக்கமாகவே நீண்ட காலமாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திராவிடப் பெண்கள் குறிப்பாக ஆந்திரர்கள் திருமணத்தில் கழுத்தில் இடும் மாலை களாகக் கறுப்புப் பாசியும் தங்கமணிகளும் கோத்து அணிகின் றார்கள். கூர்க்கப் பெண்களும் இராசபுதன மகளிர்களும் கூட இவ்வணிகலன்களை அணிகின்றார்கள் இவை மொகஞ்சதாரோ அரப்பா அணிகலன்களோடு ஒப்புமையுடையன. அரப்பா மக்கள் அணிந்த தலையாளிகள் இராசபுதனத்தில் இன்றும் உள்ளன. மூக்கணிகள் அரப்பாவில் இல்லை. தமிழர்களுக்கும் மூக்கணிகள் இல்லை. அது இடையில் வந்த நாகரிகம். அது இடையிலே போய் விட்டது என்று சிலர் கூறுகிறார்கள். பழைய நாகரிகமான தலை யணிகள் கூட இன்று மெல்ல மெல்ல அகன்று வருகின்றன. யாழ்ப்பாணத் தமிழர்கள் திருமணத்தில் தலை அணிகள், அணிந்து வருகின்றார்கள். இன்றும் தமிழகத்தில் நாட்டியமாடும் பெண்கள் சில தலையணிகளை அணிந்து வருகின்றார்கள். காது அணிகளில் தோடும் குண்டலங்கமும் தவிர மற்ற அணிகள் காலாவதியாய் விட்டன. கழுத்தணிகளிலும் முன்கை அணிகளிலும் பெரிய மாற்றம் எழுந்துள்ளன. தோளணி, புயவணி, தொடையணி, காலணி, கை விரல் அணிகளில் நெளி, மோதிரம் இரண்டும் இன்னும் வழக்கத்தில் உள்ளன. தாலி இன்னும் மாற்றம் பெறவில்லை. ஆனால் அது தன்னோடு இணைந்துள்ள பல மணிகளையும் உதறித் தள்ளி விட்டுத் தனியாக ஒரு சங்கிலியில் இடம் பெற்றுள்ளது. முன்னர் தமிழகத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏன்? பாண்டிய நாட்டில், வட பாண்டிய நாட்டிற்கும் தென் பாண்டிய நாட்டிற்கும் அணிகலன்களில் வேற்றுமைகள் இருந்து வந்தன. ஒவ்வொரு இனத்தவர்களும் ஒவ்வொரு விதமான அணிகலன்களை அணிந்து வந்தனர். ஒரு இனத்திலே ஏழைகள் அணிகலன்களுக்கும் பணக் காரர்களின் அணிகளுக்கும் வேற்றுமையுண்டு. சைவர், வைணவர், சுமார்த்தர் கிறிதவர் இலாமிய அணிகலன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருந்து வந்தன. இன்று கிட்டத்தட்ட அனை வரும் ஒரே விதமான அணிகலன்களை அணிய முற்பட்டு வந்துள்ள னர். பெண்களின் கல்வி வளர்ச்சி அணிகலன்களில் ஒருமைப் பாட்டை உருவாக்கி வருகிறது. தமிழ் மக்கள் இலாமியராக இருந்தாலும், கிறிதவராக இருந்தாலும் சைவராக இருந்தாலும் வைணவராக இருந்தாலும் நாம் தமிழர் என்னும் எண்ணம் பரவி வருகிறது. முலிம், கிறிதவ மாதர்கள், தாங்கள் சமயத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் அனைவரும் தமிழர்களே என்பதை உணர்ந்துவிட்டார்கள். அவர்கள் பேச்சில், உடையில் நாகரிகத்தில் அணிகலன்களில் ஒற்றுமையை எழுப்பி விட்டார்கள். தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் பேசிவரும் மக்கள் எந்த சமயத்தவரா யிருந்தாலும் எந்த இனத்தவராய் இருந்தாலும் ஒருதாய்மக்களே என்ற எண்ணம் உருப் பெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் பொதுமை உணர்ச்சி பெரிதும் பொங்கிவருகிறது. தமிழ்ப் பெண்கள் காதைக் கிழித்து பழக்குலை போல் பல காதணிகளான பாம்படம், முடிச்சு, தண்டட்டி, இட்டடிக்கை போன்றவைகளை அகற்றிக், காதில் ஒரு சிறுதோடு மட்டும் அணிய முன் வந்துவிட்டார்கள். முலிம் பெண், காதில் 10க்கு மேற்பட்ட தொலைகளை இட்டு அதில் அணிந்துள்ள அலுக்குத்து என்னும் காதணியை அகற்றிக் காதில் ஒரு சிறு தோட்டை அணிய முன்வந்துவிட்டாள். இன்று காதைப் பார்த்து இவள் முலிமா, இவள் சைவப்பெண்ணா என்று காண முடியாது. கல்வி, உடையிலும் அணியிலும் பேச்சிலும் ஒருமைப்பாட்டை உருவாக்கி விட்டது. சகோதர நட்பைத் வளர்த்து வருகிறது. முலிம் ஆண்கள் காதுகளில் தொளையிடுவதில்லை அதுபோல் இன்றைய சைவசமயச் சிறார்களும் காது குத்திக் கொள்வதில்லை. இன்று தலையணிகள் மறைந்து விட்டன. காதில் ஒரு சிறு தோடு, கழுத்தில் ஒன்றிரண்டு சங்கிலிகள் கையில் சில வளைகள், கடிகாரம் விரலில் மோதிரம், ஆகியனவே தமிழ்நாட்டுப் பெண் களின் அணிகலன்களாய்த் திகழ்கின்றன. மூக்கணி, புயவணி, தோளணி, இடுப்பணி, துடையணி, காலணி, கால் விரலணி போன்ற அணிகலன்கள் எல்லாம் மறைந்துவிட்டன. மேலும் அரசாங்கத்தின் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தால் அணிகலன்கள் குறைந்துவிட்டன. மாற்றுக் குறைந்த சில போலிப் பொன் அணிகலன்கள் தலைதூக்கி வருகின்றன. அதோடு இன்றைய கல்வியும் பொருளாதார நிலையும் பெண்களுக்கு அணிகலன்கள் மீதுள்ள ஆர்வத்தைக் குறைத்து வருகின்றன. தமிழகத்தில் முன்பிருந்த சங்கு வளைகளும் பவழ வடங்களும் முத்துமாலைகளும் பார்ப்பதற்கு அரிதாய்ப் போய்விட்டன. நவமணிகள் என்ற பேச்சுக் கூடக் குறைந்து விட்டது. ஆனால் வங்கம், குசரத்து, பம்பாய் முதலிய மாநிலங்களில் சங்கு வளைகளும் நவமணிகளும் வழக்கில் உள்ளன. அணிகளின் மாற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது; தமிழகத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் ஆடைகளிலும் மாற்றம் விரும்புகிறார்கள். ஆனால் பெண்கள் சேலைகளின் நீளத்தைக் குறைக்க விரும்புகிறார்களேயொழிய அகலத்தைக் குறைக்க விரும்ப வில்லை. அதைப்போல் அணிகலன்களிலும் பெண்கள் அளவைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறார்களே யொழிய உருவத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. போலி நகைகளை அதிகம் நாடவில்லை. தமிழகத்தில் ஆண்கள் ஆதிகாலத்தில் அணிந்திருந்த அணி கலன்கள் அனைத்தையும் அகற்றிவிட்டார்கள். குழந்தை களின் அணிகலன்களைக்கூட குறைத்துவிட்டார்கள். பெண்கள் குறைத்து விட்டாலும் வெறுத்துவிடவில்லை என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டு மகளிர் ஆங்கிலம் படித்தாலும் அமெரிக்காவில் வாழ்ந் தாலும் ஆடைகள் அணியும் வழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தயா ரில்லை. அதுபோல் அணிகள் அணியும் வழக்கத்தையும் அவர்கள் விட்டுவிடத் தயாரில்லை. அவர்கள் தங்கள் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கலைகளையும் அழியவிடமாட்டார்கள். பிறர் அழிக்க இணங்கவும் மாட்டார்கள். மீண்டும் அவர்கள் அணிகலன்கள் அணியும் நாகரிகத்திற்கு மறுமலர்ச்சி அளிப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் இன்று தமிழகத்தில் வாழும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கிறித்தவராக இருந்தாலும் முலிம்களாயிருந்தாலும் நமது பண்பாட்டின்மீதும், கலைகளின்மீது மொழியின் மீதும் நாகரிகத்தின் மீதும் அடங்கா வேட்கை அதிகரித்து வருவது எனக்குப் பெரிதும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. எனவே, பணம் படைத்தவர்கள், இன்று கிடைக்கும் பழங்கால அணிகலன்கள் அனைத்தையும் பேணிப் பாதுகாத்து வைக்க வேண்டும். நமது தொல்பொருள் காட்சிச் சாலைகளில் நமது அணிகலன்கள் அனைத்தும் இடம்பெறச் செய்ய வேண்டும். நூல்கள் பல எழுதப்படவேண்டும். நமது நாடகங்களிலும் பேசும் படக் காட்சியிலும் பழங்கால மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பொழுது நம் அணிகலன்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். நம் வீடுகளில் நடைபெறும் திருமணத்தில் மணப்பெண்களிடம் பழங்கால அணிகலன்கள் அனைத்தும் காட்சிதர வேண்டும் என்பது எனது ஆசை. நமது ஆதிகால அணிகலன்களைப் பற்றிய ஆய்வு நமது நாட்டின் வரலாற்றை அறிவதாகும். நாட்டுப்பற்றை வளர்ப்பதாகும். மேலும் அவ்வக்கால அரசியல் பொருளாதார நிலைகளை உணர்வ தாகும். அஃதன்றி பண்டைக்காலத் தமிழனின் தொழில் நுட்பத்தை யும் நாகரிகச் சிறப்பையும் அறிவதாகும். வரலாற்றில் நாம் செய்த தவறுகளைத் திருத்தி மீண்டும் நாம் தவறிழைக்காது சுதந்திரமாய் வாழ இதைப்போன்ற ஆராய்ச்சிகள் துணை செய்யும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும். 2. தமிழகமும் தாதுப் பொருள்களும் நாடும் மக்களும் தமிழர்கள் வாழும் நாடு தமிழகம் என்று கூறப்படும். தமிழகம் ஒரு தொன்மை வாய்ந்த நாடு. தமிழ் மக்கள் ஆதி முதல் இந் நாட்டிலே தோன்றி இந்நாட்டிலே வாழ்ந்து வருபவர்கள். ஆனால் இன்றைய ஆராய்ச்சியின் மூலம் இவர்கள் வேறு நாட்டினின்று சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழ்நாட்டறிஞர்கள் மக்களினமே ஆதியில் தமிழ் நாட்டில் தான் தோன்றியது. தமிழகத்தில் தோன்றிய மக்களிற் சிலர் காலக் கோளாறுகளால் வேறு நாடுகளில் போய்க் குடியேறி இருக்கலாம். அப்பால் அவர்கள் பல காரணங்களால் தாயகம் திரும்பியும் வந்திருக்கலாம். தாயகம் நோக்கி வந்த மக்களிற் சிலர் சிந்து வெளியிற் குடியேறி இருந்திருக்கலாம். வெளிநாடுகளில் இருந்து வந்த மிலேச்சர்கள் பண்பாடு மிக்க தமிழர்களின் முன்னோர்களோடு அறநெறிக்கு மாறாகப் போராடி அவர்களை அடித்து மீண்டும் தமிழகத்திற்கு விரட்டியிருக்கலாம் என்று கூறுகின்றார்கள். இதற்குச்சில மேனாட்டறிஞர்கள் கண்ட சான்றுகளையும் எடுத்துக் காட்டுகின்றார்கள். என்றாலும் இந்தக் கோட்பாட்டிற்கு பெரும்பாலான அறிஞர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. அதோடு இத்தமிழறிஞர்கள் தங்கள் முடிபிற்கு விஞ்ஞான பூர்வமான சான்றுகள் காட்டித் தங்களின் முடிவை நிலைநாட்டவுமில்லை. இவர்களுடைய ஆராய்ச்சிக்குப் போதிய புதைபொருள் சான்று களோ நில நூல் சான்றுகளோ வரலாற்றுச் சான்றுகளோ கிடைக்க வில்லை. பேரறிஞர்கள் திரு. கா. R¥ãukÂa ãŸis v«.V.,v«.vš., அவர்களும் திரு. மறைமலை அடிகளும் இன்னும் சிலரும், திரா விடர்கள் தமிழகத்திலே தோன்றி, எகிப்து, சுமேரியா, அசிரியா, சால்டியா முதலிய நாடுகளில் குடியேறி நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தாயகம் நோக்கிப் புறப்பட்டு வந்து சிந்து வெளியில் தங்கி அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்களைத் தோற்றுவித்து அப்பால் ஆரியப் படையெடுப்பால் தென்னாட்டிற்குத் தள்ளப்பட்டிருக் கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதற்கு மாறாக இந்திய அரசாங்கப் புதை ஆராய்ச்சி இயக்குநராக இருந்த சர். சாண் மார்சல், சர். மார்ட்டிமர் உய்லர் போன்ற ஐரோப்பிய புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர்களும் வங்கநாட்டு, இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித் துறை வல்லுநர், ஆர்.டி. பானர்ஜி போன்றவர்களும் திராவிடர்கள் பபிலோனில் தோன்றி சிந்து வெளியில் குடியேறி அப்பால் ஆரியர்கள் படையெடுப்பால் தென் இந்தியாவிற்கு விரட்டப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞான முறையான விளக்கங்காட்டி ஒரு முடிவுகட்டினர். இதற்கு உலகப் பேரறிஞர்கள் ஆதரவுகளும் உண்டு. மாறுபட்ட இரு முடிபுகளைப் பற்றியும், இங்கு நாம் தீர்ப்புக்கூற விரும்பவில்லை. இருவேறு அபிப்பிராயங்களினின்றும் நமக்கு இன்றியமையாத ஒரு நற்சான்று கிடைக்கிறது. தென் இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படும் மக்களும் பபிலோனில் தோன்றியதாகக் கூறப்படும் மக்களும் மிகத் தொன்மை வாய்ந்த மக்கள், பழம்பெரும் பண்பாட்டைக் கட்டி வளர்த்தவர்கள்; திராவிடர்களின் முனனோர்கள் என்பதில் இருவர்க்கும் முரண் பாடுகள் இல்லை என்பதேயாகும். காலப் பிரிவுகள் பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பெற்ற கல் செம்பு, இரும்பு வெண்கலம் முதலிய பொருள்களைக் கொண்டு வரலாற்றறிஞர்கள் காலத்தைப் பிரித்துள்ளார்கள். மிகத் தொன்மையான காலத்தை, தொல்பழங் கற்காலம் என்றும் அதற்கு அப்பால் அரும்பிய காலத்தை, பழங்கற்காலம் என்றும் அதற்கும் அடுத்தக் காலத்தை, புதுக் கற்காலம் என்றும் புகல்வர். இவைகளில் இரண்டாம் பிரிவான கற்காலம் கி.மு. 30,000ஆம் ஆண்டில் ஆரம்பித்து கி.மு. 10000 வரை என்றும் புதுக் கற்காலம் சுமார் கி.மு. 10,000ஆம் முதல் கி.மு. 5,000 வரை என்றும் கூறுவர். பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே யுள்ள காலத்தை மெசாலிதிக் காலம் என்றும் கூறுவர். புதிய கற் காலத்திற்குப் பிற்பட்ட காலங்களைச் செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்றும் கூறுவர். தொல்பழங் கற்காலச் சான்றுகள் நமக்குப் பெரிய அளவில் கிடைக்கவில்லை. புதிய கற்காலம் மக்கள் வாழ்ந்ததற்கு சேலம் கடப்பை கர்நூல் மாவட்டங்களிலும் பல்லாவரம் ஆர்க்காடு முதலிய இடங்களிலும் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆதித்த நல்லூரில் பல முதுமக்கள் தாழிகளும் பல விதமான கருவிகளும் கிடைத்துள்ளன. இவைகளுள் பல இரும்பு ஆயுதங்களும் உள்ளன. தென்னிந்தியாவில் கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலமும் இரும்புக் காலமும் நிலவின. இக்காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள் முண்டர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் கூறப் பட்டனர். புதுக்கற்காலக் கருவிகள் மழமழப்பாக இருக்கின்றன. இக்கால மக்கள் ஒரு இடத்தில் நிலைத்துவாழ முற்பட்டனர். உழுது பயிரிட்டனர். மட்பாண்டங்களை வனைந்தனர். நூல் நூற்க முற் பட்டனர். இவர்கள் ஆடு, மாடு, எருமை முதலிய விலங்கினங் களைப் பழக்கினர். இறந்தவர்களைத் தாழியில் வைத்துப் புதைத்து வந்தனர். இவர்கள் நூற்கவும் நெய்யவும் அறிந்திருந்தனர். நாட்டியம் ஓவியம் முதலியவைகளையும் அறிந்திருந்தனர். வேட்டைக் காட்சி களை குகைச் சுவர்களில் தீட்டியுள்ளனர். áijî¥ bghUŸfËš fhQ« Ó¥ò« jiyaizí« ahid¡ bfh«ò« á¥ã, k KjÈa bghUŸfS« mÂfy‹fS« Míj§fS« mt®fŸ g©gh£ilí« fiyíz®¢áiaí« òy¥gL¤J»‹wd v‹W m¿P®fŸ TW»‹wh®fŸ.* தமிழர்கள் வாழ்வு புதுக் காற்காலத்திலே நன்கு மலர்ந் திருந்தது. என்றாலும் அவர்களுடைய உழவுத் தொழில், நெசவுத் தொழில், தச்சுத்தொழில், கன்னார் தொழில் முதலியனவெல்லாம் வளம் பெற்றெழுந்தும் நனிசிறந்த நாகரிகத்திற்கு அடிப்படை இட்டதும் உலோக காலத்திலேயாகும். வெண்கலக் காலம் புதுக் கற்காலம் மறைந்து தமிழகத்தில் உலோககாலம் எழுந்தது. நம்நாட்டில் முதன் முதலாக இரும்புக்காலம் அரும்பியது. சில இடங்களில் முதன்முதலாக வெண்கலக்காலம் அரும்பியுள்ளது. ஈயத்தையும் செம்பையும் கலந்து வெண்கலம் செய்யப்பட்டது. பல தென் இந்திய சமாதிகளிலும் ஆதித்தநல்லூரிலும் இரும்பாலும் பிற தாதுப்பொருள்கள்களாலும் செய்யப்பட்ட ஆயுதங்களும் அணி கலன்களும் கிடைத்துள்ளன. மத்திய இந்தியாவில் பல செம்பு ஆயுதங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை கி.மு. 2000ஆம் ஆண்டளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படு கிறது. அங்கு பல வெள்ளித் தகடுகளும் காணப்பட்டன. சில வட்ட வடிவாக உள்ளன. சில தகடுகளின்மீது கொம்புள்ள மாட்டுத் தலைகள் தீட்டப்பட்டுள்ளன. இஃதன்றிச் செம்பினால் செய்யப்பட்ட உளி, எறிஉளி, வாள், ஈட்டித்தலை முதலியனவும் கிடைத்துள்ளன. அறிஞர்கள், தென்னிந்தியர்கள் வடக்கே இமயம் வரைச் சென்று குடியேறி இருக்கலாம் என்று கூறுகின்றனர். உலகில் பலவிடங்களில் புதுக் கற்காலம் மறைந்து இரும்புக் காலம் தோன்றியது. இந்தியாவில் முதன்முதலாக வெண்கலக் காலம் அரும்பியது. அரப்பா அகழ்வாராய்ச்சியால் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் வெண்கலக் காலம் அரும்பியது என்றறியலாம். தமிழகத்தில் ஆதித்தநல்லூர் அகழ்வாராய்ச்சியின் மூலம் கி.மு. முதல் நூற்றாண்டிற்குமுன் இருந்து கி.மு. 2000ஆம் ஆண்டிற்குள் வெண்கலக்காலம் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. மக்களின் தொழில் வளர்ச்சியும் நாகரிகமும் அரும்பியது இந்த வெண்கலக் காலத்திலேதான். நமக்கு முதன் முதலாக இரும்புக் காலம் எழுந்திருந்தால் நாம் இதைவிடத் துரிதமான முன்னேற்றம் பெற்றிருப்போம். நமது நாட்டில் ஆதியில் வெண்கலம் கிடைத்தது. அதன் பின்னர்தான் செம்பு, ஈயம் முதலிய தாதுப் பொருள்கள் கிடைத்தன. இரண்டு தாதுப் பொருள்களையும் சேர்த்து உறுதியான வெண் கலத்தில் கோடரி, சம்மட்டி, அரிவாள் கூந்தாலி, கலப்பைக் கொழு, ஈட்டி, சுத்தியல் உளி போன்ற பொருள்கள் செய்யப்பட்டன. அதனால் நமது நாட்டில் பல்வேறு கைத்தொழில்கள் துளிர்த்தன. இந்த வெண்கலக் கருவிகளே நமது நாட்டில் ஆரம்பக் காலத்தில் வெண்கலப் பாத்திரங்களையும் செம்புக் குடங்களையும் செம்பு, வட்டில் முதலிய பொருட்களையும் செய்யத் துணையாய் இருந்தன. தமிழகத்தில் முதன் முதலாகச் சிறிது பொன் கிடைத்தது. வெண்கலம், செம்பு, ஈயம் போன்று பெரும் அளவில் கிடைக்க வில்லை. அதற்கு அப்பால் வெண்பொன் (வெள்ளி) செம்பொன் (செம்பு) கரும்பொன் (இரும்பு) முதலிய பொருள்கள் கிடைத்தன. பொன்னிற்குப் பசும்பொன் என்றும் மற்றத் தாதுப்பொருளுக்கு அதன் வண்ணத்தை வைத்துச் செம்பொன் வெண்பொன் கரும் பொன் என்றும் பெயரிட்டனர். நமது நாட்டில் பிற்காலத்தில்தான் இரும்பு கிடைத்ததாகத் தெரிகிறது. முற்காலத்தில் ஈயம் கிடைத் திருக்கிறது. சமீபத்தில் கிடைத்த சங்கக்காலக் காசு ஈயத்தில் இருப்பதே நமது நாட்டில் ஈயம் ஏராளமாகக் கிடைத்திருக்கலாம் என்பதற்குச் சான்றாகும். இங்கு அதிகமான விழுப்பொன்னோ (பிளாட்டினமோ) வெள்ளியோ கிடைத்ததாகத் தெரியவில்லை. தாதுப் பொருள்கள் தமிழகத்தில் பிற்காலத்தில் பொன் அதிகம் கிடைத்தது. தமிழர்கள் வட இந்தியாவினின்றும் ஈழம், சாவகம், காழகம் முதலிய நாடுகளிலிருந்தும் போரிட்டு வெற்றி பெற்று ஏராளமான பொன்னைத் திறையாக ஆண்டுதோறும் பெற்று வந்தனர். வணிகத்தின்மூலம் அண்டை நாடுகளில் மட்டுமின்றி உரோமை, கிரேக்கம் சாவகம், காழகம், மலைநாடு முதலியவைகளிலிருந்தும் மலைமலையாகப் பொன்னைக் கொண்டுவந்து குவித்து வந்தனர். கொற்கை, புகார், வஞ்சி, போன்ற பழைய தமிழகத் துறை முகங்கள் தமிழகத்தின் பொற்கேணிகளாக விளங்கின. வெளிநாட்டு வணிகர்கள் தங்கள் கலங்களில் கடல் கடந்து வந்து நமது துறை முகங்களில் நங்கூரம் பாய்ச்சிவிட்டுக் கீழ் இறங்கித் தமிழ்நாட்டு முத்து, மிளகு, ஏலம், கிறாம்பு, சாதிக்காய் இலவங்கப் பட்டை மசுலின் துணிகள், பட்டாடைகள் முதலியவற்றைப் பொற்கட்டி களையும் பொற்காசுகளையும் கொடுத்து வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் பொன் ஏராளமாக வந்து குவிந்து கிடந்ததால் மக்கள் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை மணிகள் இழைத்த அணிகள் செய்து அணிந்து அகமகிழ்ந்து வந்தனர். அதேபோல் தங்கள் தெய்வ உருவங்களைப் பொன்னால் வார்த்தனர். பொன்னாலான கலங்களை அவைகளுக்குப் பூண்பித்தனர். விமானங்கள்மீது பொன் கலயங்கள் இடம்பெறச் செய்தனர். சிதம்பரத்தில் உள்ள ஆடவல்லான் அமர்ந் திருக்கும் மண்டபத்திற்குப் பொன்னோடுகள் வேய்ந்தனர். மதுரை யில் உள்ள ஆடவல்லான் அமர்ந்திருக்கும் அம்பல முகட்டிற்கு வெள்ளி ஓடு வேய்ந்தனர். நெல்லையில் அமர்ந்திருக்கும் ஆட வல்லான் மண்டபத்திற்கு செப்போடுகள் வேய்ந்தனர். பல கோயில் களுக்கு வெள்ளிச்சப்பரங்களும், வெள்ளித் தேரும் வெள்ளிக் குடங் களும் அளித்தனர். இன்னும் ஆடவல்லானுக்கு இரத்தின சபையும் நிறுவினர். மன்னர்களின் மாளிகைகளும், வணிகர்களின் இல்லமும், நிலக்கிழார்களின் வீடும் பொன் அணிகளாலும் பொற்குடங்களா லும் பொன்விளக்குகளாலும் பொன் வட்டில்களாலும் நிரம்பி யிருந்தன. அரசிகளும் செல்வச் சீமாட்டிகளும் பொன் இழையால் நெய்யப் பெற்ற பட்டாடைகள் அணிந்து வந்தனர். தமிழகத்தில் பொன்னைப்பற்றிப் பெரிய ஆராய்ச்சிகள் செய்யப் பெற்றன. பொன்னைப் பொடியாக்கி உண்டால் உடல் உரம்பெறும் என்று கண்டு தமிழக மருத்துவர்கள் பொற்சுண்ணம் முதலியவைகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் பொற்கொல்லர்கள் பெருகினர். பொன் அணி கலன்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. செல்வர்கள் மட்டுமன்றி ஏழைகளும் பொன் அணிகளை விரும்பினர். பொன் அணிகள் பூண்டிராதவர்களைத் தமிழகத்திலே காணமுடியாது. மன்னர்களை யும் வள்ளல்களையும் நாடிச்செல்லும் புலவர்களுக்கும், பாணர் களுக்கும், பாடினிகளுக்கும், விறலியர்களுக்கும் கலைஞர்களுக்கும் பொற்றாமரைப் பூக்களும் பொன் அணிகளும் பொற்காசுகளும் பரிசளிக்கப் பெற்றன. தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்கள் ஒவ்வொன்றிலும் யானைகள் வளர்க்கப்பட்டன. இஃதன்றி மன்னர்கள் பவனி வருவ தற்கு என்று பல யானைகள் இருந்தன. ஒவ்வொரு மன்னனிடமும் பட்டத்து யானை என்ற பவிசு பெற்ற யானையுண்டு. அதற்கென்று தனியாக மாவுத்தர்களும் இருந்தனர். யானைகள் நெற்றியில் ஓடை என்னும் பொன் அணியும் பொன் முகப்படாமும் அணிவிக்கப்பட்டு வந்தன. யானையின் கொம்புகளில் கிம்புரி என்னும் பொன் பூண் கட்டப்பட்டிருந்தன. பாண்டி நாட்டில் வாழ்ந்த பைந்தமிழ்ப் பாவலர் பிசிராந் தையார் என்பவர், ஒரு அன்னச் சேவலை நோக்கி, ஏ அன்னமே! நீ குமரியினின்று வடக்கே செல்கையில் இடையேயுள்ள உறையூரில் இறங்கிக் கோப்பெருஞ் சோழனைக் கண்டு, நீ என்னுடைய அடிப்பணி புரிபவன் என்று கூறினால் அவன் உன்னால் அன்பு செய்யப்படும் பேடைக்கு வேண்டிய பொன் அணிகலன்களை அளிப்பான் என்று ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். இப் புற நானூற்றுச் செய்யுள் அக்காலத்தில் சோழநாட்டுச் செல்வச் செழிப்பை எடுத்துக்காட்டுவதாக மிளிர்கிறது. மேலும் இச்செய்யுள் மூலம் மன்னர்கள் புலவர்களுக்கும் அவர்களுடைய அகமுடை யார்க்கும் பொன் அணிகலன்களைப் பரிசாக அளித்து வந்தனர் என்பதையும் அறிகின்றோம். முற்காலத்தில் தமிழகத்திலுள்ள தலைநகரங்களிலும் பட்டினங்களிலும் பல்வேறு வணிக வீதிகள் இருந்தன அவைகளில் முதலில் நிற்பன பொன்கடையும் மணிக்கடையும் அணிகலன்களின் கடையுமாகும். இங்குப் பொன் மட்டுமன்றி வைரம், மரகதம், முத்து, பவளம் போன்ற மணிகளும் அவற்றின் வகையும் தரமும் தெரிந்த மக்களும் பல்வேறு அணிகலன்களும் அணியணியாய் நிறைந்திருந்த தாக அறிகின்றோம். நவமணிக் கடைத்தெருவை அடுத்து அம்மணிகளை அழகுற அழுத்தி அணிகலன்கள் ஆக்கி விற்கத் துணைபுரியும் பொன் வணிகர்களின் கடைவீதி அமைந்திருந்தது. அங்கு சாதரூபம், கிளிச்சிறை என்ற மாற்றுக்குறைந்த இளம் பொன் வகைகளும் ஆடகம், சாமபூநதம் என்ற மாற்றுயர்ந்த செம்பொன் வகைகளும் விற்கப்பெற்றன. இதனால் பண்டைத் தமிழர்கள் பொன்னை நான்கு வகையாகப் பிரித்துள்ளார்கள் என்று தெரிகிறது. நிறையும் மாற்றும் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொன்னின் மாற்றை அறிய வழிகண்டிருந்தனர். நல்ல தூய பொன்னையும் கலப்புப் பொன்னையும் உரைத்துக் காண்பதற்கு உரைகல்லும், தண்டவாணி என்னும் உரையாணியும் உருவாக்கி இருந்தனர். காய்ச்சினும் உருக்கினும் மாற்றும் நிறையும் குறையாது என்பதைக் காட்டுவதற்கு அறிகுறியாக அன்றைய அரசாங்க அதிகாரிகளால் துளையிடப்பெற்ற துளைப்பொன் என்ற பொற்கட்டிகள் உரு வாக்கப்பட்டிருந்தன. பல கழஞ்சு மதிப்புள்ள ஊர்க்கற் செம் பொன், துளை நிறைப்பொன் என்னும் இருவகைப் பொன்னும் அக்காலத்தில் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். உரைகல் சங்கக் காலத்தில் பொன்னை உரைத்துப் பார்த்து அதன் மாற்றை அறுதியிட்டுக் கூறும் ஆற்றல் உள்ளவர்களாய் பொற் கொல்லர்கள் இருந்தனர். மாற்றுப்பார்க்க உரைகல் அக்காலத்தில் இருந்தது. அது கறுப்பாக இருக்கும். அதற்குக் கட்டளைக் கல் என்று பெயர். சங்க நூல்களில் அரசர்களும் அரசிகளும் வணிகர்களும் மக்களும் அணியும் அணிகலன்களையும் பொன் மணிகளையும் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன.11 அணிசெய்யும் ஆயுதங்கள் பொற்கொல்லர்களின் ஆயுதங்களைப்பற்றியும் இலக்கியங் களில் பல குறிப்புகள் உள்ளன. ஆயுதங்களுக்குப் பல இடங்களில் உவமானம் காட்டப்பட்டுள்ளன. ஆயுதங்கள் அனைத்தும் இரும்பா லானவை. எனவே இரும்புக் காலத்திலே எண்ணிலாத கருவிகள் எழுந்தன என்று எண்ணலாம். ஆனால் தமிழர்கள் இரும்புக் காலத் திற்கு முன் எழுந்த வெண்கலக் காலத்தில் ஆயுதங்களையும் அணி கலன்களையும் அமைத்துக் கொண்டனர்.12 பொன் சுத்தமான பசும் பொன்னைத் தமிழர்கள் பத்தரை மாற்றுப் பைம்பொன் என்று பகர்வார்கள். இது சிறப்பாக அணிகலன்களில் மணிகளைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பசும்பொன் குழைவானது. அது குழையாமலும் வளையாமலும் இருக்கச் சிறிது செம்பு சேர்த்தே அணிகலன்கள் செய்வார்கள். வைரமணிகள் பதித்த அணிகலன்களைச் செய்ய விழுப்பொன் (பிளாட்டினம்) மிகச் சிறந்த உலோகமாகும். மஞ்சள் நிறமான செம்பொன்னில் வைரமணியைப் பதிப்பித்தால் அது வெண் ஒளி தராது. மஞ்சள் ஒளியே தரும். உண்மையான வைரத்தின் ஒளி நிலவ அதை விழுப்பொன்னிலே பதிப்பிக்கிறார்கள். மேனாட்டார் விழுப்பொன்னைப் பெரிதும் விரும்புகிறார்கள். தமிழர்கள் செம்பொன்னையே பெரிதும் நாடு கிறார்கள். விழுப்பொன் தங்கத்தைப் போன்றது. களிம்பற்றது. தங்கத்தைவிட விழுப்பொன்னிற்கு விலை அதிகம். பத்தரைமாற்றுப் பசும்பொன் நன்கு புடமிடப்பட்டு மஞ்சள் நிறம் பெற்று இலை வடிவில் முன்னர் செய்யப்பட்டது.13 வெள்ளி வெள்ளி, பொன்னிற்கு அடுத்தபடியாக வெண்மையும் அடித்து நீட்டத்தக்க தன்மையுமுடைய கனிப்பொருள் ஆகும். ஆனால் அதன் குணமும் ஒளியும் பொன்னைவிட சற்றுக் குறைவு. எனவே அதன் விலையும் தங்கத்தைவிடச் சற்றுக் குறைவாகவே இருக்கிறது. வெள்ளியினால் காலில் தண்டை, சிலம்பு, கால் விரல் அணி முதலியவை செய்யப்படுகின்றன. ஏழைகள் கால்களில் மட்டுமின்றிக் கைகளிலும் கழுத்திலும் காதுகளிலும் இடுப்பிலும் வெள்ளி அணி கலன்கள் செய்து அணிந்துகொண்டு வருகிறார்கள். வெள்ளியால், கும்பா, வட்டில், செம்பு, கிண்ணம், போணி, குடம் போன்ற பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா விலும் அதிகமான வெள்ளி கிடைத்ததாகத் தெரியவில்லை. வெளி நாடுகளிலிருந்தே அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. தமிழகத்தில் முற்காலத்தில் வெள்ளிச்சரிகை நூலால் செய்யப் பட்ட கரைகளும் பூ வேலைப்பாடுள்ள விளிம்புகளும் முந்தானை களும் உடைய ஆடைகள் செய்யப்பட்டு அணிந்து வரப்பட்டன. முற்காலத்திலே தமிழர்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்தும் முறையை அறிந்திருந்தனர். இது இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது. சுத்தி செய்யப்பெற்ற பொன் சொக்கத்தங்கம் என்று அழைக்கப்பட்டது. அதுபோல் சுத்தி செய்யப்பட்ட வெள்ளி சொக்க வெள்ளி என்று அழைக்கப்பட்டது. போரிற் கிடைத்த பொன் தமிழ்நாட்டு மன்னர்கள் பிற நாட்டின்மீது படையெடுத்து வெற்றிபெற்றால் அந்நாட்டில் உள்ள பொன்னைக் கவர்ந்து வருவர்.14 தோல்வியுற்ற மன்னனிடம் ஆண்டுதோறும் திறையாகப் பொன் பெறுவதும் உண்டு. பகைவர்களைக் கொன்று அவர்களது பொன்னாலும் மணியாலும் செய்யப்பெற்ற முடியை அடிபொலிய வீரக்கழல் செய்து காலில் புனைந்து வருவதும் உண்டு. 15 அரசன் பகைவரின் காவல் மதில்களை அழித்து அப்பகை அரசனின் மகுடம், செங்கோல், மாலை, கழல் போன்றவைகளைப் பறித்துக்கொண்டும் பகைவர்களின் மனைவி மக்களைச் சிறைபிடித்துக் கொண்டும் மணிமுடி தரித்து வீராபிசேகம், விசயாபிசேகம் செய்து கொள்வதும் உண்டு. பகைவர்களின் யானைப்பட்டத்தில் உள்ள பொன்னைக் கொண்டு பாணரது தலை பொலியும்படி வாடாத பொற்றாமரை மலர் செய்து சூட்டுவர். 16 பகைவர்கள் நாட்டின்மீது போர் தொடுத்து வெற்றியீட்டியதும் பகை அரசனையும் அவனது மனைவி மக்கள் முதலியவர்களையும் சிறைசெய்து தன் நாட்டிற்குக் கொண்டு வருவதும் பகை அரசனின் மணி முடியை அவன் தலையினின்று காலால் தள்ளி வீழ்த்துவதும், அரசனின் அணிகலன்களையும் அவன் நாட்டிலுள்ள அணிகலன்களையும் பறித்து அவன் நாட்டையும் வீட்டையும் கோட்டையையும் தீயிட்டுப் பொசுக்கி வருவதும் உண்டு. இதனால் வெற்றி பெற்ற மன்னனிடம் ஏராளமான பொன்னும் மணியும் குவிந்திருந்தன; நாட்டில் செல்வம் பெருகி வந்தது. தமிழ் மன்னர்கள் வடக்கே இமயம் வரை சென்று போரிட்டு வாகை மாலை சூடி ஏராளமான செல்வங்களைப் பறித்துக் கொண்டு வந்தனர். ஈழம், சாவகம், காழகம் முதலிய நாடுகளையெல்லாம் வென்று அங்கிருந்தும் ஏராளமான பொன், வெள்ளி, மணிகள் எல்லாம் கொண்டு வந்தனர். இன்று தமிழில் பொன்னுக்கு வழங்கப் படும் தங்கம் என்ற பதம் தமிழ்ப் பதம் அன்று; மலேசியநாட்டுப் பதம் என்று கூறப்படுகிறது. இதினின்று மலேசியா நாட்டினின்றும் தங்கம் தமிழகம் வந்திருக்கலாம் என்று எண்ணலாம். வணிகத்தால் வந்த தாதுப்பொருள் சிந்துவெளி நாகரிகத்தைக் கண்ட திராவிடர்களின் முன் னோர்கள் ஆப்கானிசுத்தான், சுமேரியா, எகிப்து, திபேத்து முதலிய நாடுகளுடன் வணிகம் நடத்தி ஏராளமான பொன் வெள்ளி செம்பு, தகரம் முதலிய தாதுப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். உரோமர்கள், கிரேக்கர்கள் முதலியவர்களிடம் அகில், சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களை விற்று ஏராளமான பொற்காசு களையும் பொற்கட்டிகளையும் பெற்றிருந்தார்கள் என்றும் தெரிகிறது. யவனர்களோடு தமிழர்கள் பெரும் அளவில் வணிகம் நடத்தினர்.18 முத்து, மிளகு, வாசனைப் பொருளாகியவைகளைக் கொடுத்து அவர்களிடம் பொற் கட்டிகளையும் பொற்காசுகளையும் பெற்றனர். இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் அகழ்ந்து பார்க்கும்பொழுது ஏராளமான உரோமர்களின் பொற்காசுகள் கிடைத்து வருவதே இதற்கு ஏற்ற சான்றாக இருந்து வருகின்றது.19 யவனர்களின் கப்பல்கள் பொன்னைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு மிளகை ஏற்றுமதி செய்ததற்கு நமது இலக்கியங்கள் நல்ல சான்று தருகின்றன.20 வெளிநாட்டுப் பண்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கிவிட்டு தமிழகத்தின் விலையுயர்ந்த பண்டங்களைத் தம் மரக் கலங்களில் ஏற்ற எண்ணற்ற யவனர்களின் கலங்கள் தமிழகத் துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்சி நின்றன. ஏராளமான மிளகுப் பொதிகளும் வெளிநாட்டார் கொண்டு வந்த பொன்னாலாகிய பொருள்களும் தமிழகத் துறைமுகங்களில் குவிந்து கிடந்தன.21 சேரநாட்டுத் துறைமுகமாகிய முசிரியில் பொன்னும் மணியும் மெல்லிய ஆடைகளும் பவழம், ஈயம், செம்பு, கோதுமை முதலிய பொருள்களும் இறக்குமதியாயின. இங்கிருந்து மிளகு, ஆரம், அகில் முத்து ஆகிய பிறவும் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கு நமது சங்க இலக்கியம் சான்று தருகிறது. சேரநாட்டு மிளகும் பாண்டிய நாட்டு முத்தும் உரோம், கிரீசு, எகிப்து நாட்டு மக்களையும் அரசிகளையும் மிகக் கவர்ந்தன. அதனால் ஏராளமான பொன் தமிழகத்தில் வந்து குவிந்தது.22 கிரேக்கர்கள் தமிழகம் முத்துக் கொழிக்கும் முது பெரும் பூமி என்று கருதினர். உரோமர்கள் கொற்கை முத்திற்கு என்ன விலையும் கொடுக்கத்தயாராய் இருந்தனர். கைய்சு என்ற பேரரசன் மனைவி பௌலினா 40,000,000 பொன் பெறுமதியான மணிகளாலும் முத்துக்களாலும் செய்யப்பட்ட அணிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் என்று பிளினி என்னும் ஆசிரியர் குறிப்பிட் டுள்ளார். 1800 ஆண்டுகளுக்கு முன்னரே மேனாடுகளிலிருந்து மிகுதி யாகப் பொன் வந்து தமிழகத்தில் குவிந்தது என்று மேனாட்டு ஆசிரியர்களான பிளினி, தாலமி, டிராபோ போன்ற ஆசிரியர் களும் பெரிப்ளு நூலின் ஆசிரியரும் பிற வரலாற்றுப் புலவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி. 117ஆம் நூற்றாண்டில் உயிர் நீத்த கிரிடாட்டம் என்னும் ஆசிரியர் தம் நாட்டாரை நோக்கி, நீங்கள் இந்தியாவில் உள்ள விளைபொருள்களை வாங்கிக் கொண்டு அதற்கு விலையாக நமது நாட்டிலுள்ள பொற்கட்டிகளையும் பொற் காசுகளையும் கொடுத்துவிட்டு வருகிறீர்கள். இதனால் இந்தியாவில் ஏராளமாகப் பொன் குவிந்து கொண்டே போகிறது. நமது நாட்டில் பொன் குறைந்து கொண்டே வருகிறதுஎன்று எச்சரித்துள்ளார். உரோமர்கள் மட்டும் 5 கோடி (உரோம) வெண் பொற்காசு களுக்கு (37,50,000 ரூபாய்க்கு) நேரான தங்கப் பாளங்களையும் வெள்ளிப் பாளங்களையும் இந்தியாவில் இறக்குமதி செய்தனர் என்று பிளினி கூறினார். பிருய்த்தி என்பானின் தாயார் செர்விலி என்பவளுக்கு லூய்ல் ரெஜர் பரிசாக அளித்த முத்து விலை 48,457 சவரன் ஆகும். கிளியோபத்ரா அரசியின் காதில் அணிந்திருந்த முத்துக்கள் மட்டும் 1,61,458 சவரன்கள் ஆகும். ஒரு மேலை நாட்டாசிரியர் ஆண்டு தோறும் 9,86,979 பவுண் பொன் உரோமர் நாட்டிலிருந்து தமிழகத் திற்கு வந்ததாகக் கூறுகிறார். உரோமர் நாட்டிலிருந்து கோடானு கோடிப் பொன் நாணயங்களும் பொற் கட்டிகளும் ஆடம்பரப் பொருளுக்காகச் செலவிடப்பட்டு அவை தமிழகத்தில் போய்க் குவிகின்றன. இப்படியே விட்டுக் கொண்டிருந்தால் உரோமர் நாட்டில் தங்கமே இல்லாமல் போய்விடும். எனவே, உரோமர் நாட்டிலிருந்து தங்கம் வெளிநாடு களுக்குச் செல்வதை உடனே தடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அறிஞர்கள் எல்லோரும் கூக்குரல் எழுப்பி வந்தனர். கி.பி. 1310 - 11ஆம் ஆண்டுகளில் தில்லியில் மொகலாயர் ஆட்சி நன்றாக வேரூன்றி இருந்தது. மொகலாயர் படையின் தலைவன் மாலிக் கபூர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தான். தென்னாட்டி லுள்ள மன்னர்கள் ஒற்றுமை குன்றி ஒருவரோடொருவர் போரிட்டு பலங்குன்றி நின்றனர். இந்நிலையில் மாலிக்கபூர் தலைமையில் மொகலாயர் படை தமிழகத்தை எளிதில் வெற்றி கொண்டது. மொகலாயர் படை தென்னாட்டைக் கொள்ளையடித்து இங்குச் சூறையாடப் பெற்ற பொருள்களைத் தில்லி சுல்தானிடம் கொண்டு சமர்ப்பித்தது. பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (கி.பி. 1311இல்) பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியனிடம் ரூ. 1200 கோடிப் பெறுமதியுள்ள பொன்னும் மணிகளும் இருந்தன.23 இஃதன்றி மதுரை சொக்க நாதர் கோயிலிலும் பிற கோயிலிலும் ஏராளமான பொன் இருந்தது. மேலும் வணிகர்களிடமும் மக்களிட மும் பொற் கட்டிகளும், பொற்காசுகளும் பொன் அணிகளும், மணிகள் பதித்த அணிகளும் இருந்தன என்று சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியரும் புதை பொருள் ஆராய்ச்சித் துறை நிபுணருமான எ. »UZzRthÄ Ia§fh® v«.V., அவர்கள் கூறியுள்ளார். மேலும் பாண்டிய நாட்டிலிருந்து மட்டும் மாலிக்கபூர் என்ற தளபதி 500 மணங்கு எடையுள்ள மணிகள் பதித்த பொன் அணிகளையும் வெள்ளி, செம்பு போன்ற வைகளையும் யானைகளின் மீதும் குதிரைகளின் மீதுமேற்றி தில்லி சுல்தானுக்கு அனுப்புவித்தான் என்று தெரிகிறது.24 தமிழ்நாட்டில் பொன் மலிந்திருந்தது. அதனால் பெண்கள் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பொன் அணிகளைப் பூண்டிருந் தனர். தமிழ்நாட்டுத் தெய்வத்திரு உருவங்கள் எல்லாம் பொன்னால் வார்க்கப்பட்டிருந்தன. மன்னர்களின் அரண்மனைகளிலும் அமைச்சர், வணிகர், நிலக்கிழார் இல்லங்களிலும் பொன் வட்டில் களில் உணவருந்தி வரப்பட்டது. கோயில்களின் விமானங்களில் பொற்கலயங்கள் இருந்து வந்தன என்று அறிஞர் காரல்மார்க் கூறுகிறார்.25 குறிப்புகள் 1. India was an amazing breeding ground for the evolution of life form. Man himself may have struggled upwards out of the anthropoid within the limits of India” - The world we live in - Greme Williams Vol. I. P. 104. “But was Java therefore the region of the human origin; may this not more probably have occurred in India where we know there were postanthropoid apes once existing that seem to have been the common stock from which gorilla Chimpanzi and Orang utan were derived”- Ibid. P. 134 2. Mohenjo - Daro and the Indus Civilization Vol. Sir. John Marghall I P. 12 The wonder that was India - A.L. Bashan. P. 24-25 Bhandarkar’s Lectures On the Ancient History of India (1918) P. 25-28 Grierson’s Linguistic Survey of India Vol. IV PP. 278-279 R.D. Banerji’s Pre - historic Ancient and Hindus India. P. 10 3. J.C. Brown, quoted in Stone age in India P.T.S. Ayengar. Dr. De Terra tries to fix an approximate date of the early ‘Indian Palaeolithic Culture’ assigning to Java man and to Pee - king man 500,000 to 400,000 B.C He Places the Indian early Palaeolithic Culture in the second interglacial (300,000 - 200,000 B.C.) and solo man in circa 10,000 B.C. “India & Pacific world” - Kalidas Nag. P. 280 4. நாமிருக்கும் நாடு - டாக்டர் மு. ஆரோக்கியசாமி பக். 4-5 தென் இந்திய வரலாறு. டாக்டர். கே. கே. பிள்ளை பக். 14-15 5. முருகன் - திரு.வி. கலியாணசுந்தர முதலியார் சென்னை. 1925. பக்.27-28 ஆராய்ச்சிக்காரர்கள் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முருகன் என்ற சொல் ஆட்சியில் இருந்தது என்று கூறுப. மலை நிலக் கடவுளாகிய முருகனையே அவர்கள் தங்களைக் காக்கும் குலதெய்வமாகப் போற்றுவாராயினர். 6. The earliest Stone age culture of India is represented by the hand axe technique of Madras and the Old Stone age people may have migrated from South India into Central India wherein the Narbad a valley have been found middle pleistocens tools and a fauna gradually extented through the Ganges and Jamuna valleys to North Western India right up to Himalayan Hills.” - India and Pacific world - Kalidas Nag. P. 279 7. இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே - (புறம் 67) 8. சொல்லிய சாதரூபங் கிளிச்சிறை துலங்குகின்ற நல்ல ஆடகமே சாம்பூந்தமிவை நால்வகைப் பொன் (சூடாமணி நிகண்டு.) 9. South Indian Coins - Sir T. Desikachari, Trichinapooly - (1930) P.151 10. மின்னின் றூவி யிருங்குயில் பொன்னின் உரைதிகழ் கட்டளை கடுப்ப - குறுந். 192 : 3-4 11. பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம் வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வர (மதுரை 719 - 720.) 12. அரம்போழ்ந் தறுத்தே கண்ணேர் இலங்குவளை (மதுரை. 316) தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை (மதுரை. 704) செம்பொ னிட்டிகைத் திண்சுவ ரமைத்து (பெருங் 2.6 : 43) சீப்பிடு சிக்கமுஞ் செம்பொற் கலசமும் (பெருங் 1. 38 : 166.) பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்த (ஐங்குறு. 316) பொன்வார்ந்தன்ன வைவால் எயிற்று (அகம். 219 : 12) கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி (மதுரை 436) அணிகிளர் மார்பி னாரமொ டளைஇக் (மதுரை 439) 13. முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழறைஇய (அறம் 40 : 3 : 4) 14. கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் - பெரும். 451 15. ஒன்னார் யானையோடைப் பொன்கொண்டு பாணர் சென்னி பொலியத் இதை வாடாத் தாமரை சூட்டிய (புறம் 126 : 1-3) 16. நறையு நரந்தமு மகிலு மாரமும் துறை துறை தோறும் பொறையுயிர்த் தொழுகி (பொருநர் 238. 239) 17. யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் (அகம் 149 - 9-10) 18. பொன்மலிந்த விழுப்பண்டம் நாடார நன்கிழி தரும் ஆடியற் பெருநாவாய் (மதுரை 81 - 83) 19. கலந்தந்த பொற்பரிசம் (புறம் 343 : 5) 20. மீனொடுகுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து மனைக்குவைஇய கறியமுடையாற் கவிச் சும்மைய கரைகலக்குறுந்து கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமும் கடற்றாரமும் தலைப்பெய்து வருநர்க்கீயும் (புறம் 343 : 1-8) 21. நீரின்வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய வீண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் (பட்டினப் 185 - 198) 22. தமிழர் சமயம் - திரு. கா. R¥ãukÂa ãŸis v«.V., v«.vš., பக். 26, 27. 24. “He (Kulasekhara Deva, King of Pandyan Country) had accumulated much wealth during this long reign so that he had in the treasury of the city of Mardi (Mathurai 1200 crores of gold not counting the accumulation of precious stones such as pearls rubies, turquoises and emeralds”- South India and her Muhammadan Invaders. K. Krishnaswami Iyengar M.A. (1921) Madras - P. 96 25. Letters on India - Karl Marx. 3. மக்களும் மலர்களும் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் இந்தியாவில் ஒரு தனி இனம். அவர்களுக் கென்று ஒரு தனி மொழியும் தனிப் பண்பாடும் தனி நெறியும் தனிக் கலைகளும் தனி நாகரிகமும் உண்டு. அவர்கள் பிற இனத்தவர்களி னின்று உடையாலும் உணவாலும் பிறவற்றாலும் வேறுபட்ட வர்கள். அவர்கள் மிகத் தொன்மையானவர்கள். இந்த நாட்டுக்கு உரித் தானவர்கள். இங்கு நான் தமிழர்கள் என்று குறிப்பிடும் பொழுது திராவிடர்களான மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் துளுவர்கள் போன்ற அனைவரையும் உள்ளடக்கிப் பேசுகிறேன். தமிழர்கள் பல்லாண்டாக இந்நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டில் ஒரு பண்பாட்டையும் கலையையும் நாகரிகத்தையும் வளர்த்து வருகின்றார்கள். மலர்கள் தமிழ் மக்கள் வாழ்வில் நீண்ட காலமாக, மலர்கள் தொடர்பு பெற்று வருகின்றன. அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் மலர் இணைந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் வாழ்வு அரும்பிய குறிஞ்சி நிலத்திலிருந்தே அவர் களோடு மலரும் தொடர்ந்து வருகிறது. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டே தமிழர்கள் செடி, கொடி மரங்களோடும் மலர்களோடும் இலைகளோடும் நெருங்கித் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் ஆதியில் குறிஞ்சி நிலத்திலே வேட்டுவ வாழ்க்கையில் ஈடுபட்ட நிலையிலிருந்து மர வணக்கத்தையும் மலர் வணக்கத்தையும் செய்து வருகின்றனர். செடிகளிலும் கொடிகளிலும் மரங்களிலும் கிண்ணம் போன்ற வடிவில் சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா வண்ணங்களில் எண்ணிலாத மலர்கள் எங்கும் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கின. அவைகளினின்று நறுமணம் எங்கும் வீசியது. மலர்களின் மணமும் வண்ணங்களின் அழகும், மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தன. வழிபாடு தமிழ் மக்கள் வாழ்ந்த எல்லா நிலத்திலும் ஆரம்பத்தில் தாய் ஆட்சியே நிலவியது. அதன் பலனாகத் தாய் வணக்கமும் எழுந்தது. தாய் ஆட்சியில், தாய் இறந்ததும் மரத்தடியில் அவளுக்கு நடுகல் நாட்டி மக்கள் வணங்க முற்பட்டனர். இதனால் மிகப் பழைய காலத்திலே தமிழகத்தில் தாய் வணக்கம், ஆவுடையார் உருவ வணக்கம் மரவணக்கம் முதலியவை எழுந்தன. அப்பால் தாய் ஆட்சி குன்றிச் சேய் ஆட்சி எழுந்தது. சேய் ஆட்சியிலே சேய் வழிபாடு முருக வழிபாடு முளைத்தது. சேய்க் கடவுளுக்கும் சேய் இறந்தபின் மரத்தினடியில் கல்நட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இதனைத் தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் மிக அழகாக எடுத்துக்காட்டி யுள்ளார்கள். அது அடியில் வருமாறாகும். பண்டைத் தமிழ் மக்கள் இயற்கை வழி வாழ்வைச் செலுத்தி அதற்கு அடிப்படையாக உள்ள இறைவனுண்மை கண்டு, அவன், அழகால் இயற்கை அழகு பெறுவது நோக்கி அவ்விறைவனை அழகன் என்னும் பொருள்பட முருகன் என்னும் பெயரால் அழைத் தார்கள். இவர்கள் இயற்கை வாயிலாக முருகைக் கண்டு நுகர்ந்த இன்பத்தைக் கலித்தொகை பத்துப்பாட்டு திருக்கோவையார் முதலிய நூற்களில் காணலாம்.5 பூக்களும் புனித நிலமும் தமிழர் வாழ்வு மலர்ந்த இடம் மலையேயாகும் அதாவது குறிஞ்சி நிலமாகும். அங்கே தான் அவர்களின் பழம் பெரும் பண் பாடு பிறந்தது. அங்கேதான் அவர்களின் கலைகளும் நாகரிகமும் துளிர்த்தன. அங்கேதான் அவர்களின் தெய்வங்கள் தோன்றின. அவர்களின் அணிகலன்கள் அரும்பின. அவர்கள் அங்கிருந்தே பிற நிலங்களுக்குச் சென்று குடியேறினர். அவர்கள் ஆதியில் வாழ்ந்த நிலம் குறிஞ்சி என அழைக்கப் பெற்றது. தமிழ் இலக்கியங்களில் புலவர்கள் ஒவ்வொரு திணையின் கருப்பொருளையும் நன்கு ஆராய்ந்து அரும்பெரும் உவமங்களை யும் உரைத்திருக்கின்றனர். அவர்களால் ஐந்திணைக்கும் இடப் பெற்ற பெயர்கள், அவர்களது அறிவுத் திறனையும் இயற்கையின் மீது அவர்கள் கொண்ட அன்பையும் வெளிப்படுத்துவதாகும். தமிழர்கள் மலைக்கும் மலைசார்ந்த இடத்திற்கும் குறிஞ்சி என்று பெயர் கூறினர். குறிஞ்சி மலைநாட்டில் நிற்கும் ஒரு செடி. அது பன்னிரண்டு ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும். அது பூத்துக் குலுங்கி நிற்கும் காலத்து மலைச்சாரல் முழுவதும் ஒரே நீலநிறமாக உள்ளங்கவரும் எழிலுடன் ஒளிரும். தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தை அங்குள்ள அகில், ஆரம், வேங்கை முதலிய மரங்களின் பெயரால் அழையாது குறிஞ்சி மலரின் பெயரால் குறிஞ்சி நிலம் எனக் குறிப்பிட்டது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. இஃது மட்டுமின்றி அவர்கள் பின்னர் குடியேறிய ஒவ்வொரு இடத்திற்கும் ஆண்டுள்ள மரஞ்செடி கொடிகளின் மலரின் பெயராலே முல்லை நிலம், பாலை நிலம், மருதநிலம், நெய்தல் நிலம் எனப் பெயரிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. பூக்கள் மிகத் தொன்று தொட்டே தமிழர்களுக்கு ஒரு இன்றியமையாத முக்கி யத்துவம் வாய்ந்த பொருளாக இருந்து வந்துள்ளன. எனவேதான் அவர்கள் வாழ்வு அரும்பிய மிகப் பழைய காலத்திலே தாங்கள் வாழ்ந்த புனித நிலத்திற்கு பூக்களின் பெயர்களை வைத்துள்ளனர். வாழ்வும் மலரும் தமிழர்கள் குறிஞ்சி நிலத்திலே தம் வாழ்வை ஆரம்பித்தனர். அக்காலத்தில் அவர்களின் குடும்பத் தலைவி தாயாக இருந்தாள். முதன் முதலாக அப் பழம் பெரும் சமூகத்தில் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வமும் எழுந்தன. தமிழர்கள் குறிஞ்சி நிலத்திலே இயற்கை வாழ்வைக் கண்டனர். அதிலே இன்புற்றுத் திளைத்து நின்றனர். அவர்கள் மலைகளில் மலர்களின் மணத்தை நுகர்ந்து மகிழ்ந்து வந்தனர். இந்த மணம் - அதாவது முருகு (வாசனை) எங்கிருந்து எவ்வாறு தங்களிடம் போந்து தங்களுக்கு இன்பம் ஊட்டுகிறது என்பதை அன்று அவர் களால் அறிய முடியவில்லை. ஏதோ ஒரு கட் புலனுக்கு எட்டாத ஒரு சக்திதான் நமக்கு இந்த இன்பத்தை அளிக்கிறது என்று நம்பினர். முருகை (மணத்தை) உண்டாக்கும் அந்த சக்திக்கு முருகன் என்று பெயரிட்டனர். அதை வழிபடவும் ஆரம்பித்தனர். இது நமது பழம் பெரும் நூலாகிய தொல்காப்பியம் தோன்றுவதற்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தாகும். தமிழ் அறிஞர்கள் 5000 ஆண்டு களுக்கு முன்பே தமிழ் மக்கள் குறிஞ்சி வாழ்க்கைக்கு அடிகோலிய ஆரம்பக் காலத்திலே முருகன் எழுந்து விட்டான் என்று கூறுகி றார்கள். அதாவது புதுக்கற்காலத்தின் இறுதியில் என்று கூறுகி றார்கள். தமிழர்கள் தொன்று தொட்டே மரங்களோடும் மலர்க ளோடும் மாநிலத்தோடும் மிக நெருங்கித் தொடர்பு கொண்டவர் களாய் இருந்தவர்கள் ஆவார்கள். ஆதிகாலத்தில் மரங்களும் செடி கொடிகளும் அவர்களுக்கு உறையுளாக - மனையாக மலர்ந்திருந்தன. அவைகளே அவர்களுக்கு உயிரூட்டும் கற்பகத் தருவாக (காய், கனி, கிழங்கு, இலை, மலர்களைத் தருவனவாக) இருந்தன. அவைகளே அவர்களின் யாக்கைக்கு உறும்பிணிகளை அகற்றும் மாமருந்தாகத் திகழ்ந்தன. அவைகளே, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் மணத்தை யும், அழகு செய்யும் அணிகளையும் (பூக்களையும்) அரையிற் பிணைக்கும் ஆடைகளையும் (மரப்பட்டைகளையும்) உயிர்காக்கும் ஆயுதத்தையும் (வில்லையும்) உள்ளங்களிக்கும் இசைக்கருவி களையும் (வில்யாழையும்) தோற்றுவித்தது. அவர்கள் கிண்ணம் போன்ற வண்ணமலர்களைக் கண்டும், உள்ளங்கவர்ந்து உவகை ஊட்டும் மணத்தை நுகர்ந்தும் கழிபேருவகை எய்தினர். அதனால் அவர்களிடையே மலர் வணக்கமும் மரவணக்கமும் துளிர்த்தன. பூவும் பூவையாரும் தமிழ் மக்கள் மலர்கள் மீது கொண்ட அளவு கடந்த அன்பால், பிரிக்க முடியாத பிணைப்பால் தங்களின் உயிரனைய மகளிரைக் கொடி என்றனர். அப்பால் பெண்பாலர்க்குப் பெண் கொடி என்று பெயர் சூட்டினர். பூங்கொடி என்று அழைத்தனர். மேலும் அவர்களைப் பூவையர், பூவியலார், மெல்லியலார் என்றெல் லாம் கூறி மகிழ்ந்தனர். பெண் மக்களுக்குப் பிச்சி, கமலம் மல்லிகை முதலிய மலர்களின் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தனர். பூங்கொடியும் கொழு கொம்பும் பூங்கொடி சிறிதாக இருக்கும்பொழுது யாதொரு சார்புமின்றி துளிர்த்து எழும். அது நன்றாக வளர்ந்து படரும் பருவம் வந்ததும் அது ஒரு கொழு கொம்பை நாடும். அது அணித்தே நிற்கும் ஒரு வலுவான மரக்கொம்பைப் பற்றிப் படரும். அது போன்று பருவம் அடைந்த பாவையர்கள் பூப்பெய்தியதும் ஒரு வலிமைமிக்க இள வீரன் தோள் சேர்தலை எண்ணி ஆய்ந்து தெளிந்து பெண்ணிற்குப் பூங்கொடி என்று பெயர் சூட்டியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பெண்ணிற்குப் பூங்கொடி என்று இட்டப்பெயர் எத்துணை சிறப்பு வாய்ந்தது என்பது நன்கறியக் கிடக்கின்றதல்லவா? மங்கையும் மலரும் பூங்கொடி பருவம் வந்துற்ற பொழுது கொடி வீசி ஒரு கொழு கொம்பைப் பற்றிப் படர்ந்து களித்துச் செழித்து வளர்ந்து பூத்து மணப்பதைப் போன்று மகளிரும் பருவம் வந்ததும் ஆடவன் தோள் சேர்வதை மணத்தல் என்று கூறினர். பெண்கள் பருவம் அடை தலைப் பூத்தல் என்றனர். பெண்ணைப் பூங்கொடி என்ற தமிழர், அவள் பருவம் எய்துவதைப் பூத்தல் என்றும் அவள் ஒரு ஆடவனோடு கூடி வாழப் போவதை மணத்தல் என்றும் கூறியது எத்துணை பொருத்தமானது? ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எத்துணை பொருள் தரும் முறையில் தங்கள் மொழியை அமைத்துள்ளனர் என்று இதன்மூலம் நன்கறியலாம். மேலும் திருமணச் சடங்கில், பெண் கழுத்தில் ஆண் ஒரு பூமாலையைச் சூட்டுவதும் பின் பெண் தன் கழுத்தில் உள்ள ஒரு பூமாலையை ஆண் கழுத்தில் சூட்டுவதும் முக்கிய சடங்காகும். இதற்குத் தமிழர் மாலையிடல், மாலை மாற்றல் என்றெல்லாம் கூறுவர். மணம் நிகழும் பொழுது மணமக்கள் மீது அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் பூக்களைத் தூவி வாழ்த்துவர். தமிழர்கள் தங்கள் வீட்டிற்கோ நாட்டிற்கோ வரும் விருந்தினர் களைப் பூமாலை சூட்டி வரவேற்பர். தெய்வ உருவங்களுக்குப் பூமாலை சூட்டி வழிபடுவர். பூக்கள் தூவி புகழ்ந்து பாடுவர். திருமணத்தில் மட்டுமன்றி வீட்டில் நிகழும் எல்லாச் சடங்குகளிலும் விழாக்களிலும் எங்கும் மலர்களால் அலங்கரிப்பர். முற்காலத்தில் பாவலரும் பாணனும், பாடினியும் விறலியும் கூத்தரும் பார்வேந்தர் பால் சென்று தம் கலைத்திறனைக் காட்டினால் பூவேந்தர்கள் புளகாங்கிதமுற்று அவர்களுக்குப் பூமாலைகளை அணிவிப்பர். பிற்காலத்தில் பொன்னாற் செய்த தாமரைப் பூவை அளித்தும் பரிசிலாக ஊரும் வீடும் களிறும் பொன் வட்டிலும் பொன் அணி களும் பிறவும் அளித்தும் சிறப்புச் செய்தனர் என்று தமிழ் இலக்கியங்கள் சான்று தருகின்றன. பூவும் இயற்கையும் பூங்கொடியில் பருவம் வந்தபொழுது முகை அரும்பும்; சிறிய முகைகளில் மணம் எழாது; அழகும் அரும்பாது, பருவம் எய்தின பின்னரே முகைகள் முதிர்ந்து மலராக மாறும். பூ மலர்ந்த பின்னரே அதில் அழகு ஒளிரும், மணம் பொங்கி எழும், அதன் அடியில் தேன் ஊறும். பூவின் வண்ணங்களையும் அழகையும் மணத்தையும் கண்டு வண்டுகள் வந்து மலர் மீது அமர்ந்து அதனை மணந்து அதன் தேனையுண்டு சுவைக்க நாடிவரும். வண்டுகள் ஒரு பூவில் அமர்ந்து அதன் தேனையுண்டதும் அடுத்த பூவை நாடிச் செல்லும். அதன் காலில் படிந்துள்ள மகரந்தப் பொடிகள் அடுத்து அமரும் மலரில் படிந்து அதன் கருப்பைக்குள் சென்று அம்மலரைச் சூலுறச் செய் கிறது. இந்த வண்டு மூலம் செடி கொடி மரம் முதலியவை கருவுற்றுக் காய்த்துப் பழுக்கின்றன. பகலில் மலரும் மலர்கள் எல்லாம் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால், இருள் நிறைந்த இரவில் மலரும் மலர்கள் பெரிதும் வெண்மையாக இருக்கும். இரவில் வெண்மை நிறமலர்கள் விரிவதால் எந்த இருட்டிலும் வண்டுகள் எளிதில் மணத்தையும் நிறத்தையும் அறிந்து அதன் மீது அமர்ந்து மணந்து இன்பத்தேனையுண்டு சூலுறச் செய்து விடுகின்றன. இயற்கை காட்டும் இந்த உண்மையை அறிந்தே அக்கால மகளிர் இரவில் வெண்மை நிறமான ஆடையை அணிந்து வந்தனர். வெள்ளைச் சேலை மாலை ஆடை என்ற பெயரைப் பெற்றது. பருவம் வாய்ந்த பாவையர்களும் இளைஞர்களும் பண்டைக் காலத்தில் இரவில் வெண்மையான ஆடைகளை அணிந்து வந்தனர். வண்டுகளைப் போல் பண்டைக்காலப் பருவப் பெண்களுக்குத் தோழியர் துணையாக இருந்தனர். இரவு நேரங்களில் பெண் கொடி களும் அவர்களின் காதலர்களான காளைகளும் இரவில் காதல் மணம் புரிய விழைந்து நிற்பார்களாம். இரவில் அவர்கள் சந்திக்க வேண்டிய இடத்திற்குக் குறியாக மலர்களை வைப்பார்கள் என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது. முகத்திலும் (முத்தமிடுதலும்) மணத்தலும் (திருமணம் புரிதலும்) மக்கள் வண்டுகளினின்று கண்ட இயற்கை நெறி; இன்பநெறி என்று தெரிகிறது. வண்டுகள் பூவி லுள்ள தேனையுண்பதைப்போல் ஆண்கள் பெண்களின் முத்தத்தால் இன்புற்று அவர் உமிழ் நீரை உறிஞ்சி இன்பந்துய்க்கக் கற்றனர் என்று அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். நமது வள்ளுவப் பெருந் தகையும் இதனை அறிந்தே. பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். தமிழர்களின் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையும் அதன் பலனாக எழும் இன்பமும் இயற்கையிலிருந்து தமிழன் கற்ற பாடமேயாகும். தமிழ் மக்கள் பெண்களைப் பூங்கொடியாக, பூவையாகக் கண்டனர். சில புலவர்கள் பெண்களின் உறுப்புகள் அனைத்தும் தாமரை மலராகக் கண்டார்கள் எடுத்துக்காட்டாக, செங்கமலம் நாட்டம் செழுந் தாமரை வதனம் பங்கயம் செவ்வாய் பதுமம் போல் செங்கரங்கள் அம்போருகந்தான் அரவிந்தம் மாரனார் தம்போருகந் தான் தனம் என்றும், திருமுகங் கமலம் இணைவிழி கமலம் செய்யவாய் கமலம் நித்திலம் கமலம் வருமுலை கமலம் துணைக்கரம் கமலம் வலம்புரி உந்தி பொற்கமலம் பெருகிய அல்குல் மணித்தடம் கமலம் பிடித் தடைத் தாள்களும் கமலம் உரு அவட் கவ்வாறு ஆதலி னன்றே உயர்ந்த பூவினுட் கமலம் என்ற பாட்டுக்களை எடுத்தியம்பலாம். இவை தமிழர்கள் பூவினுக்கு அளித்த முக்கியத்துவத்தையும் பூவைப்பற்றி நடத்திய ஆய்வையும் காட்டுவனவாகும்.7 ஆனால் காரிகையின் கண்களைக் கருங்குவளைப் பூவிற்கும் கமல இதழுக்கும் காகண மலருக்கும் ஒப்பாகவும் மூக்கை எள்ளின் பூவிற்கும், குமிழம் பூவிற்கும், வாயை குமுத மலருக்கும், பல்லை முல்லை அரும்பிற்கும், காதை வள்ளை மலருக்கும், கையைக் காந்தள் பூவிற்கும், கொங்கையை பங்கய முகைக்கும், உதரத்தை மகிழ மலருக்கும் கால்களை அனிச்ச மலருக்கும், மேனியைச் செண்பக மலருக்கும் முகத்தை முண்டகப் பூவிற்கும், உவமானமாக ஒரு புலவன் எடுத்துக்காட்டித் தனது கற்பனைத் திறனை எல்லாப் புலவரினின்றும் வேறுபடுத்தி உயர்த்திக்காட்டியுள்ளான். கம்பன் காரிகையின் அழகை எடுத்துக்காட்டுவதில் அதிக ஆற்றல் பெற்ற வன். அவன் அரிவையின் அங்கங்களை மட்டுமன்றி ஒரு சிறு மயிரை யும் அதன் இயல்புக்கேற்ற எழில் குன்றாது எடுத்துக்காட்டுபவன். அப்பெருங்கவிஞன், கை காந்தள் வாய் குமுதம் கண் நெய்தல், காரிகையீர் மெய் வார் தளிர் கொங்கை மென் கோங்கம் - இவ்வனைத்தும் வன்மை சோர்ந்து ஆவி வருந்துவது மாதவம் ஒன்று இன்மையோ அன்றோ எமக்கு என மங்கையின் உறுப்புகள் அனைத்தையும் ஒவ்வொரு மலருக்கு உவமானமாக ஒப்பிட்டு உரைத்திருப்பது நமது தமிழ் இலக்கியங் களில் படிக்கப் படிக்கத் திகட்டாத இன்பத்தைப் பெருக்கும். தமிழர்கள், மலைகளில் தோன்றிய மரம் செடி கொடிகள் அடர்ந்த வனங்களில் வாழ்ந்து, மலர்களின் மணங்களை நுகர்ந்து, அவற்றின் அழகிய அமைப்பைக் கண்டு களித்து, வண்ணங்களை உணர்ந்து உவகையுற்று, மலர்களிலுள்ள தேனையுண்டு இன்புற்று வந்த ஒரு தொன்மையான இனம். எனவே அவர்களுக்கு மங்கை (பூவை) மட்டும், மலராகக் காட்சியளிக்கவில்லை. அவர்களின் கண்ணும், முகமும், மூக்கும் உதடும் கைகளும் கால்களும் பிற மெல்லிய உறுப்புகளும் ஒவ்வொரு மலராகக் காட்சி அளித்தமை கண்டு உலகம் என்றும் உவந்து போற்றும். தமிழர்களும் நிலமும் தமிழர்கள் ஆதியில் உலகத்தை நானிலம் என்றனர். அப்பால் அதை பூ, பூதலம், பூதியம், பூவலயம் பூவுலகம், பூமாதேவி, பூமகள் என்றெல்லாம் அழைத்து வந்தனர். தமிழர்கள் பூவின் பெயரில் கொண்ட அன்பின் மூலமாகவே தாங்கள் வாழும் பெரிய நிலவுல கிற்குக் கூட அப் பெயரை அளித்துள்ளனர் என்று அறிகின்றோம். மங்கையர்களுக்கு மலர்கள் மீது மட்டிலாத மதிப்புண்டு, கவர்ச்சியுண்டு. மர வணக்கமும் மலர் வணக்கமும் மலர் அணியும் மாண்பும் தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழர்களின் முன்னோர் களான திராவிடர்கள் வாழ்ந்த உலகில் ஒப்பற்ற நாகரிகத்தை நிறுவிய அரப்பா மொகஞ்சதாரோ முதலிய இடங்களிலும் நிலவியது என்று சர். சாண் மார்சல் போன்ற அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். தமிழகத்தில் மங்கையர்கள் தங்கள் கூந்தல்களில் நறுமணம் நாறும் நன் மலர்களைச் சூடி வருவது பழம்பெரும் பண்பு. காரிகையர்கள் கழுநீர், மல்லிகை செவ்வந்தி பிச்சி முதலிய மலர்களைத் தங்களது பின்னிவிடப் பெற்ற பனிச்சையில் பாங்குற அணிந்ததை; ஒரு பாட்டில் புலவர் ஒருவர் அழகுற எடுத்துக்காட் டியுள்ளார். 8 மகளிர் மலர்களைப் புகழ்ந்து வந்தனர்; போற்றி வந்தனர்; புனிதமாக எண்ணி வழிபாட்டிற்குப் பயன்படுத்தி வந்தனர். அழகுப் பொருளாக நினைத்து அங்கங்களில் அணிந்து அகமகிழ்ந்து ஆடிப் பாடி வந்தனர். மலர்களை மங்கலம் மல்கும் மாநிதியாக மதித்து வந்தனர். தமிழ் மக்கள் அகவொழுக்கத்தில் மலர்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அவர்கள் புற ஒழுக்கத்திலும் பூக்களைப் பயன்படுத்தி வந்ததை அறியப் பெரிதும் வியப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பண்டைக்காலத் தில் போர்களில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பூ அடை யாளமாக இருக்க வேண்டும் என்று அவர்களின் போர் இலக்கணம் கூறுகிறது. போர் ஆரம்பித்ததும் ஒவ்வொரு அரசனும் தன் படை வீரர்களுக்கு, பூக்களை அளிப்பான். வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி தும்பை வாகை முதலிய பூக்கள் அடையாளப் பூக்களாகும். இப் பூக்கள் போர்வீரர்கள் செய்யும் போர்த் தொழி லின் பொது வகையினை உணர்த்துவனவாகும். போரில் முதல்நிலை, பகைவர்களின் பசுக்களைக் கவர்தல்; இது வெட்சி எனப்படும். கவர்ந்து சென்ற பசுக்களை மீட்கப் போரிடுவது கரந்தை எனப்படும். பகைவர் நாட்டின்மீது படையெடுத்துச் செல்லுவது வஞ்சியாகும். வந்தவர்களை மாற்றரசன் எதிர்த்துத் தாக்குவது காஞ்சி எனப்படும். பகைவர் நாட்டின் அரண் அருகே படைகள் போந்து நகரை முற்றுகையிட்டுத் தாக்குதல் உழிஞை எனப்படும். அரணிற்கு உள்ளே இருக்கும் அரசன் அரணைக் காத்துப் போரிடுதல் நொச்சி எனப்படும். தாக்க வந்த அரசனை மாற்று மன்னன் எதிர் சென்று கடும் போர் ஆற்றல் தும்பை எனப்படும். வெற்றிபெறுதல் வாகை எனப்படும். இங்குக் கூறிய வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை நொச்சி, தும்பை, வாகை என்பன அடையாளப் பூக்களாகும். ஒவ்வொரு படையும் ஒவ்வொரு நிலையிலும் தங்கள் நிலைக்குரிய பூக்களை அணிந்து கொள்ளும். எடுத்துக்காட்டாக முதன்முதலாக போரில் பகைவர்களின் ஆநிரைகளைக் கவரும் நிலையில் போர் வீரர்கள், வெட்சி மலரை அணிந்து கொள்வர்; வெற்றியின்போது வாகை மலரைச் சூடிக்கொள்வர். இலக்கியங்களில் வெற்றி, வாகை சூடினான் என்று குறிப்பிடப்படும்.9 பூக்களின் பருவங்கள் தமிழ் மக்கள் பூக்களின் மீது அதிகப் பற்றுடையவர்களாய் விளங்கினர். அவர்கள் வாழ்வு பூவில் அரும்பி, பூவில் மலர்ந்து பூவோடு நெருங்கித் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. பூக்கள் மக்களின் பிறப்பு முதல் இறப்புவரை ஏன்? - இறப்பிற்குப் பின் நடைபெறும் காடாற்று. கல்லெடுப்பு நீத்தார் நினைவு நாள் முதலிய அனைத்திலும் இடம் பெற்று வருகின்றன. பூக்கள் தமிழர்களின் சமயங்களில் தனியிடம் பெற்றுள்ளன. பிற இனத்தவர்களைவிடத் தமிழர்கள் தங்கள் சமயங்களில் பூவிற்கு முதலிடம் அளித்துள்ளார்கள். அவர்களின் தெய்வங்கள் எல்லாம் பூவின் மீதே திகழ்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மலர் உரித்தானதாக இருக்கின்றன. அவர்கள் தெய்வம் ஆணாயினும் பெண்ணாயினும் அவைகளின் கழுத்திலும் தலையிலும் பூக்கள் இடம் பெற்றிருக்கும். அவர்களின் கோயில்கள் எங்கும் பூவே அலங்காரப் பொருளாக இருக்கும். அவர்களின் மறைகளிலும் புராணங்களிலும், தோத்திரப் பாடல்களிலும் ஆகமங்களிலும் மலர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றன. தமிழர்களின் இலக்கியங்களிலெல்லாம் பூக்கள் சிறப்பித்துப் பாடப்பெற்றுள்ளன. தமிழர்கள் பூவிற்கு அதன் பல்வேறு நிலை களுக்கும் பருவத்திற்கேற்ப பல்வேறு பெயர்கள் சூட்டி பாங்குடன் அழைத்து வருகின்றார்கள். அரும்பு, முகை, போது, அலர், மலர் ஆகிய ஐந்து சொற்களும் பூவின் பல்வேறு பருவங்களை உணர்த்து கின்றன என்பது தமிழ் இலக்கியங்களைப் பயின்றார் நன்கறிவர். நறுமணம் கமழும் நந்தவனத்திற்குச் சென்றால் அங்குப் பலதிறப் பட்ட பருவம் அமைந்த மலர்களைக் காணமுடியும். அங்கு அரும் பாகவும் முகையாகவும் போதாகவும் அலராகவும் மலராகவும் திகழு வதைக் கண்ணால் கண்டுகளிக்கலாம். பூவின் முதற் பருவம் அரும்பு; அரும்பு முதிரும் நிலையை முகை அல்லது மொட்டு என்று கூறப் படும். முகை அவிழும் பருவம், போது எனப்படும். போது, மலரும் நிலையில் அலர் எனப்படும், போது நன்றாக மலர்ந்த நிலையை மலர் என்று சுட்டிக் காட்டப்பெறுகிறது. மலரும் நிலமும் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பிரிவுகள் இடம்பற்றி எழுந்தாலும் காரணப் பெயராகவே தோன்றின. ஒவ்வொரு நிலத் திலும் பெருவாரியாகக் காணப்பட்ட மலர்களின் காட்சியைக் கண்டே இப்பெயர் சூட்டப்பெற்றதாகத் தெரிகிறது. குறிஞ்சி மலர்கள் நிறைந்த இடம் குறிஞ்சிநிலம் என்றும், முல்லை மலர்கள் நிறைந்த இடம் முல்லைநிலம் என்றும், மருத மலர்கள் நிறைந்த இடம் மருதநிலம் என்றும், நெய்தல் மலர்கள் நிறைந்த இடம் நெய்தல் நிலம் என்றும், பாலை மலர்கள் நிறைந்த இடம் பாலை நிலம் என்றும் அழைக்கப்பட்டன. இந்த நிலங்களில் வாழும் மக்களை நிலத்தின் பெயர்களையிட்டே அழைத்தனர். ஒவ்வொரு நில மக்களுக்கும் தனித்தனியே தெய்வங்களும், தலைவர்களும் யாழும், பண்ணும், பறையும் புள்ளும் பொழுதும் விலங்கும் பறவைகளும் பிறவும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலங் களுக்கும் உரிய மலர்களும் தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ளன. குறிஞ்சி நிலத்திற்குக் குறிஞ்சி காந்தள், வேங்கை, சுனைக்குவளை, போன்றவை உரித்தான மலர்களாகும். நெய்தல் நிலத்திற்கு வெள்ளி தட்கைதையும், நெய்தலும் பாலை நிலத்திற்குக் குரவு, பாதிரி முதலியனவும் முல்லை நிலத்திற்கு முல்லை, தோன்றி முதலியனவும் மருத நிலத்திற்கு மருதம், தாமரை, கழுநீர் முதலியனவும் உரித்தான மலர்களாகும். இந்த நிலத்தில் வாழும் மக்கள் நிலபேதம் குலபேதம் எதுவும் இன்றி விரும்பிய நிலத்தவர்களைக் காதலித்து மணந்து கொள்வர். நமது பழைய தமிழ் இலக்கியங்கள், உருவிலும், திருவிலும், குலத்தி லும், நலத்திலும், அறிவிலும், பரிவிலும் ஒத்த தன்மை வாய்ந்த தலைவனும் தலைவியும் தனியிடத்தே சந்தித்து காதல் கொண்டு வந்தார்கள் என்று கூறுகின்றன. அவர்கள் இரவு அல்லது பகல் சந்திக்கும் இடத்தை உணர்த்த, குறிப்பது வழக்கம். அதனை இரவுக் குறி11 ஆ அல்லது பகற்குறி 11அ என்பர். இந்தக் குறியைத் தலைவி தன் தோழி மூலம் தலைவனுக்குக் கூறி அனுப்புவாள். அந்தத் தோழியின் வார்த்தைப்படியே இரவிலோ அல்லது பகலிலோ தலைவன் குறிப்பிட்ட பொழிலுக்கு வருவான். அங்குத் தலைவி குறிப்பிட்ட குறியிடத்தை அறிந்து தலைவியின் வருகைக்காக அந்தக் குறி யிடத்தில் காத்து நிற்பான். அந்தக் குறி பூவாக இருக்கும். ஒரு தலைவி பகற்காலத்தில் தலைவனைச் சந்திக்கப் போந்தாள். குறியிடத்தில் தலைவன் நிற்பது கண்டு களித்தாள். அப்பால் அவன் அருகில் சென்று காதல் உரையாடி கழிபேருவகை கொண்டாள். இதனை அழகுற வாழ்த்திச் சங்கக்காலப் புலவர் ஒருவர் ஒரு ஒப்பற்ற ஓவியம் தீட்டியுள்ளார். அதில் குறியீட்டுமலர் பேசப்படுவது குறிப்பிடத் தக்கது. அது அடியில் வருமாறாகும். நீண்டு பருத்த தோள்களையுடைய தலைவியும் யானும் தினைப்புனங் காக்க நாளைச் செல்வோம். அங்கே குரங்குகளும் ஏற முடியாதவாறு அடர்ந்த மரங்களுள்ள இளஞ்சோலையில் குன்றி னின்று விழும் அருவிகள் பலவற்றின் குளிர்ச்சியும் இனிமையும் பொருந்திய விருப்பந்தரும் நீர் நிலையின் அருகில் ஒளி மிக்க செங்காந்தள் பூக்கள் மலர்ந்திருக்கும் இடத்தில் பாம்பின் மாணிக்க மணியின் ஒளி விளக்கத்தில் கரிய கூந்தலையுடைய காரிகையின் களிப்புப் பொருந்திய கலவி இன்பத்தை அடைவாயாக என்று அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது.11 இவ்வாறு மலர்களைக் குறியாகவும் அணியாகவும் மருந் தாகவும் மங்கலப் பொருளாகவும்12 காதலரைக் காண்பதற்குரிய குறி மலராகவும் சுவையாகவும், மணமாகவும் எண்ணி அனுபவித்து வந்தது பழம் பெரும் தமிழ் நாகரிகம். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டளவில் - அதாவது கடைச்சங்கக் காலத்தில் தமிழர்கள் கொடி, இலை, தளிர், அரும்பு முதலியவைகளையும் மலர், காய், பழம், கொட்டை முதலியவைகளையும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்த்துக் கட்டித் தலையிலும் கழுத்திலும் கைகளிலும் அணிந்து வந்தனர். இன்றும் அதன் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன. இன்று தமிழ்நாட்டு மகளிர் அணிந்துள்ள பொன் அணிகளின் பெயர்களே அதற்கு நல்ல சான்றாக மிளிர்கின்றன. இன்றும் தமிழ்ப் பெண்கள் தங்கள் பொன் அணிகளை மலர் வடிவாகவும், தளிர் வடிவாகவும், தழை வடிவாகவும் அரும்பு வடிவாகவும் மலர் வடிவாகவும், காய் வடிவாகவும் பழ வடிவாகவும் கொடி வடிவாகவும் செய்து அணிந்து வருகின்றனர். தமிழர்கள் தலையில் அணியும் மாலையைக் கண்ணி எனவும், கழுத்தில் ஆடவர் அணியும் மாலையைத் தார் எனவும் மகளிர் கழுத்தில் அணியும் மாலையைக் கோதை எனவும் கூறிவந்தனர். பெண்கள் பூவினால் தொடுத்த பூவாடைகளையும் தழைகளால் தொடுத்த தழை உடைகளையும் அணிந்து வந்தனர். தொன்று தொட்டு தமிழ் மக்கள் பூக்களோடு கொண்ட தொடர்பால் பூக்களைப் பல்வேறு விதமாகக் கோக்கவும் பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தவும் வழி கண்டனர். இதன் பயனாக அவர்கள் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் பூத்தொடுப்பது ஒரு கலையாக இடம் பெற்றது. குறிப்புகள் 6. Tree Snake Worship, Frgusson P. 20 இந்தியாவில் இந்துக்களுக்குப் புனிதமான மரம் அரசமரம் ஆகும். அரசு சிவபெருமான், திருமால், நான் முருகன் அம்சமானது என்று போற்றப்படுகிறது. பெண் மக்கள், மக்கள் செல்வம் வேண்டி அரசமரத்தை வலம் வருகின்றனர். ஊர்தோறும் அரசமரமும் வேப்பமரமும் வைத்து வளர்த்து அதன் அடியில் சிலை நாட்டி மகளிர் குளித்து மலர்சூட்டி வலம் வந்து வணங்குகின்றார்கள். வில்வ மரம் சிவபெருமானுக்கு உகந்த மரமாக எண்ணி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் இலை தெய்வத்தின் ஆயுதமாகிய சூலாயுதம் போன்றது. வேம்பு சக்தியின் வடிவம். அதை வணங்கினால் அனேக நோய்கள் அகலும் என்று நம்பப்படுகிறது. வேம்பு தெய்வீக மரம் என்று கூறப்படுகிறது. துளசி திருமகள் அம்சம் என்றும் திருமாலுக்கு உகந்தது என்றும் வழிபடப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் சிவபெருமான் உறைந்தார். அவர் ஆலமர் செல்வன் என்றழைக்கப் பெற்றார். தமிழர்களின் தெய்வங்கள் எல்லாம் மரத்தின் கீழே இடம் பெற்றுள்ளன. இம் மரங்கள் தலவிருட்சம் எனப்படும். 7. கம்ப ராமாயணம் (சண்முகம் பிள்ளை) 1924 கலைமகள் அந்தாதி - கம்பன். சரோருக மேதிருக் கோயிலுங் கைகளும் தாளிணையு முரோருக முந்திரு வல்குலு நாபியு மோங்கிருள் போன் முரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழு மொரேருக மீரரை மாத்திரை யானைவுரை மகட்கே 8. இரத்தினச் சுருக்கம் - புகழேந்தி மாலை கழுநீர் முல்லை மல்லிகைச் செவ்வந்தி பிச்சி யேலம் வகுளமிலைத் தொடை தேன் - சால நறும் புன்னை பசும்பாளை பொலிந்து பிடித்தடக்கை பின்னிவிட்ட கூந்தலெனப் பேசு. 9. (அ) தொல்காப்பியம் - புறத்திணையியல் (ஆ) புற நானூறு (இ) புறப்பொருள் வெண்பாமாலை 10. அக நானூறு - மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் நெருமன் பணைத்தோள் இவளும் யானும் காவல் கண்ணினம் தினையே நாளை மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின் ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் தண்பல அருவித் தாழ்நீர் ஒரு சிறை உருமுச் சிவந்து எறிந்த உரனழி பாம்பின் திருமணி விளக்கில் பெறுகுவை இருமென் கூந்தல் ஏம் உறு துயிலே (அகம் 92) 11. (அ) இறையனார் அகப்பொருள் உரை. பக். 18 இறந்துபாட்டு அச்சத்தினால் இரவுக்குறி நேரும். நேர்ந்தாள் தலைமகற்கு நின்னாட்டார் என்ன பூவினர், என்ன சாந்தினர், என்ன மரத்தின் கீழ் விளையாடுவர் என்னும். அது கேட்டுத் தலைமகள் முன்னெல்லாம் எனக்கு மறுத்தாளன்றே, மறுத்தாள் இது சொல்லிற்று, ஒரு காரணம் நோக்கி என உணர்ந்து, தானும் நின்னாட்டார் என்ன பூவினர், என்ன சாந்தினர், என்ன மரத்தின்கீழ் விளையாடுவது என்னும், என்றக்கால் தோழி, யாம் காந்தளும் வேங்கையும் சூடுதும்; சந்தனச் சாந்து பூசுதும்; பிண்டி மரத்தின் கீழ் விளையாடுவது என்னும். குறிஞ்சி நிலமாகலின் இவ்வகைச் சொல்லும் அல்லா நிலத்துக்கும் அவற்றுக்குத் தக்கவாறு சொல்லும். (ஆ) பகற்குறி தானே இகப்பினும் வரையார் (இறையனார் 20) (இ) இரவுக் குறியே இல்வரை யிகவாது (இறையனார் 21) 12. Tree Worship and Ophiolatry - G. Subramania Pillai, M.A., B.L., P. 2-3. 13. “Extensive researches pursued after the excavation made at Mohenjo - Daro and Harappa having firmly established this fact that the Tamil race was occupying the whole of India from the Himalayas down to Cape Co morin in Pre - Aryan days. Sir. John Marshall has observed that tree worship was essensially a characteristic of the Pre - Aryan, not of the Aryan population and so the tree spirit has loomed far more important in pre - historic days among the people who originated this worship that it did later in an Aryanized India where Tree - worship inevitably became subordinated to other cults alien or seme - alien.” 4. அணிகலன்களும் அவற்றின் வரலாறும் அணிகலன்களின் பெயர்த் தோற்றம் அணிகலன் என்பதற்கு ஆபரணம். நகை, தடையம், பணி, அலங்காரம் என்று பல பொருள்கள் கூறப்படுகின்றன. ஆதித் தமிழர்கள் மிகத் தொன்மையான காலத்தில் வேட்டுவ வாழ்க்கையில் பாம்பைக் கழுத்திலும் கையிலும் தலைமீதும் சுற்றிக்கொண்டு ஆடிப்பாடி வந்துள்ளார்கள். இதை அவர்கள் அணிகலன்கள் போலவும் மதித்திருக்கலாம். அதனால் தமிழர்களின் ஆதிப் பெற்றோர்களாயும் தெய்வங்களாகவும் போற்றப் பெறும் கொற்ற வையும் சிவபெருமானும் பாம்பை அணிகலன்களாகப் பூண்டிருக் கிறார்கள் போலும். கொற்றவையும் அவள் கணவனாகிய சிவபெரு மானும் பண்டைக் காலத்தைப் பிரதிபலிக்கும் பழம் பெரும் தெய்வ மாகப் பாம்பு அணிகலன்களுடன் இன்று காட்சி அளித்து வருகின் றார்கள். பிற்காலத்தில் மக்கள் தாதுப் பொருள்களைக் கண்டு பிடித்துப் பொன் வெள்ளி அணிகலன்களைச் செய்து அணிந்திருந்த காலத்தில்கூட அணிகலன்கட்குப் பணி என்று பெயர் கூறப்பட்டு வந்துள்ளது. பணி என்னும் பதத்திற்கு பாம்பு என்பது ஒரு பொருள். இன்றும் தமிழர்கள் தங்கள் தெய்வமாகிய கொற்றவைக்கும் சிவபெருமானுக்கும் சர்ப்பகுண்டலம் சர்ப்பகங்கணம் போன்ற பாம்பு வடிவ அணிகள் செய்து பூட்டி மகிழ்ந்து வருகின்றார்கள். அணியப் படுவதால் அதற்கு அணிகலன் என்ற பெயர் எழுந்தது. பாம்பு, நகையாக எழுந்ததால் அணிகலன்களுக்கு பணி (பாம்பு) என்று பெயர் வந்தது. பூவரும்பு அணியப் பெற்றதால் பூவரும்பின் பெயராகிய நகையும் அணிகலன்களின் பெயராக அமைந்தது. தடையினின்று தடையம் என்ற பெயர் அணிகலனுக்கு வந்தது. முற்காலத்தில் தமிழ் மக்களுக்கு பேய், பிசாசு, நோய் நொடிகள் முதலியவைகளுக்கு அதிக அச்சம். அதைத் தடை செய்ய கையிலும் காலிலும் இடுப்பிலும் ஒரு நூல் கட்டுவர். இதைக் கட்டி னால் நோய் அணுகாது, பேய் நெருங்காது என்று பெரியோர்கள் கூறி வந்தனர். அவ்வாறே பெரியோர்கள் அளித்த நூற்களைக் கட்டி மக்கள் அச்சம் அற்றிருந்தனர். இன்று நமது நாட்டில் நடைபெறும் திருமணத்தின் போது கையில் குருக்கள் ஒரு நூலைக் கட்டுவார். அது காப்புக் கட்டுதல் என்று கூறப்படும். திருமணக் காலத்தில் நோய் அணுகாமலும் பேய் பிசாசுகள் நெருங்காமலும் இருப்பதற்கே இந்த நூல் காப்பாகக் கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த நூல் பொன்னால் செய்யப் பெற்றுக் கையில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் காப்பு ஒரு அணி கலனாக மாறியது. வெள்ளி பொன் முதலிய உலோகங்களில் பல்வேறு வடிவில் காப்பு செய்யப் பெற்று மக்களால் அணிந்து வரப்பெற்றது. அதே போல் முற்காலத்தில் கட்டப் பெற்ற தடை என்ற நூலும் தடையம் என்ற பெயரில் நகைகளைப் பற்றிக் கொண்டது. வேறு மாவட்டங்களில் இல்லாவிட்டாலும் நெல்லை, குமரி மாவட்டங்களில் பேச்சு வழக்கில் தடையம் இருந்தே வருகின்றது. பொற் கொல்லர்களும் நகைகளைத் தடையம் என்று அழைத்து வருகின்றனர். கையில் காப்புக் கட்டியது போல் காலிலும் முற்கால மக்கள் தடை கட்டி வந்தனர். அத்தடை பிற்காலத்தில் வெள்ளி அணியாக மாறித் தண்டையாயிற்று. ஐம் பொன்னால் காலில் தண்டைகள் செய்து அணிந்தால் பேய் பிணிகள் அணுகா என்று முற்கால மக்கள் நம்பித் தண்டைகள் செய்து அணிந்து வந்தனர். அதேபோல் கழுத் தில் தடையாய்க் கட்டப்பட்ட நூலே பிற்காலத்தில் தாலியாயிற்று. இலக்கியங்களில் நூல் இழந்தாள் என்று கூறப்பட்டால் தாலி இழந்தாள் - அதாவது கைம்பெண்ணானாள் என்பது பொருள். குழந்தைகளுக்கு ஐம்படைத் தாலி - அதாவது திருமாலின் ஐந்து படைக் கலன்களை ஒரு தாள் அல்லது தகட்டில் எழுதி நூலில் கோத்து கழுத்தில் அணிந்தால் பீடைகள் அணுகா என்று முற்காலத் தமிழர்கள் ஐம்படைத் தாலியை அணிவித்து வந்தனர். இதனால் ஐம்படைத்தாலிக்கும் நூல் என்று பெயர் எழுந்தது. ஆதியில் அணிகலன்கள் மலராகத் தோன்றி அப்பால் நூல் வடிவில் காப்பாகவும் தடையாகவும் தாலியாகவும் ஐம்படைத் தாலியாகவும் பின்னர் வெண்மையான சங்குகளும் சோவிகளும் கல் உருண்டைகளும் பல்வேறு வண்ண மண் உருண்டைகளும் அணி கலன்களாக உருப்பெற்றன. வெண்மையான சங்கு வளையல்களும் சங்குத் தோடுகளும் சங்கு மோதிரங்களும் முத்துமாலைகளும் பவளமாலைகளும் அணிகலன்களாக உருப்பெற்றன. மலர் அணியும் வழக்கம் குறிஞ்சி நிலத்திலும், ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் முல்லை நிலத்திலும் வளை, சோவி, முத்து, பவளம் அணியும் வழக்கம் நெய்தல் நிலத்திலும் மருதங்காய் மாலை, மிளகுமாலை, கொத்தமல்லி மாலை, மண்ணாற் செய்த உருண்டை மணிகள் போன்றவைகளும் பளிங்குபோன்ற பல வண்ணக் கற்கள் கோத்த மாலைகளும் காப்பு, தடை, தாலி போன்ற நூல் அணிகள் வழக்கம் மருத நிலத்திலும் அரும்பியிருக்கலாம் என்று எண்ணப்படு கிறது. ஒரு நிலத்தில் அரும்பிய ஒரு பழக்கம் பிற நிலத்திற்கும் பரவுவதுண்டு. திருஞானசம்பந்தர், வெள்ளை வளை சோர என் உள்ளம் கவர் கள்வன், என்று கூறுவதன்மூலம் 6ஆம் நூற்றாண் டிற்கு முன்பே தமிழகத்தில் சங்குவளை அணியும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது. சங்ககாலப் புலவராகிய நக்கீரனார் தம்மைச் சங்கறுப்ப தெங்கள் குலம் என்று கூறுவதன் மூலம் கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் சங்கு வளைகளும் சங்கு மோதிரங்கள் போன்றவைகளும் அணியப்பட்டு வந்தன என்று தெரிகிறது. அதோடு சங்குகள் அறுக்கும் தொழில் இயற்றிவரும் ஒரு இனத்தவர் தமிழகத்தில் இருந்து வந்தனர் என்றும் தெரிகிறது. பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமாய் விளங்கிய கொற்கையில் சங்கறுக்கும் தொழில் பெரிதாக நடைபெற்று வந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். இன்றும் கொற்கையில் அகழ்ந்து பார்த்தால் அறுக்கப்பட்ட சங்குகளின் துண்டு துணுக்குகள் ஏராளமாகக் கிடைக்கின்றன என்றும், முற்காலத்தில் செய்யப்பட்ட சங்கு அணிகள் சில கிடைத்தன என்றும் இந்திய அரசாங்க மீன் தொழில் துறை இயக்குநராயிருந்த டாக்டர் கோர்னல் என்பவர் இந்தியாவின் புனிதச் சங்குகள் என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த எல்லா நில மக்களும் சங்கினால் செய்யப்பட்ட வளை, மோதிரம் காதணி முதலியவைகளை அணிந்து வந்துள்ளனர் என்று நன்கு தெரிகிறது. வட இந்தியாவில் பெரிய செல்வ மகளிரும் சங்கு வளைகளையும் மோதிரங்களையும் இன்றும் அணிந்து வருகின்றார்கள். வங்கம், குசரத் மாநிலங்களிலிருந்து வரும் பெண்களிற் பலர், கை நிறையச் சங்கு வலையல்களும் விரலில் சங்கு மோதிரங்களும் அணிந்து வருகிறார்கள். அவர்கள் சங்கு வளை அணிவது ஒரு மதச் சடங்கு போல் எண்ணி வருகின்றார்கள். ஆதிகால அணிகலன்கள் ஆதிகாலத்தில் முதன் முதலாக அணிகலன்களைக் கண்ட வர்கள் குறிஞ்சி நில மக்களேயாவர். விளக்கமாகக் கூறுவதானால் அணி செய்யும் வழக்கம் முதன் முதலாக குறிஞ்சி நிலப் பெண்க ளிடையே தான் மலர்ந்தது. பழங் காலத்திலே அவர்கள் அழகுக் கலையில் ஆர்வங் கொண்டு விட்டனர். மலர்களைத் தலையிலும் கழுத்திலும் அணியத் தலைப்பட்டனர். நாரிற் கோத்து மாலையாகக் கட்டியும் அணிந்து வந்தனர். அரும்புகளையும் இளந்தளிர்களையும் இலைகளையும் கொடிகளையும் தலை, கழுத்து, காது, கைகள் இடுப்புப் போன்ற உறுப்புக்களிலெல்லாம் அணிந்து வந்தனர். நாளடைவில் பூக்களைப் பல்வேறு விதமாக சரமாகவும் மாலையாக வும் செண்டாகவும் பூவாடையாகவும் இலைகளைத் தளிராடை யாகவும் கட்டும் கலையில் கைதேர்ந்து விளங்கினர். பூத்தொடுக்கும் கலை வளர்ச்சியடைந்ததுடன் நில்லாது அவர்கள் சிறு காய், கொட்டை, பழம்களையும் கோத்து ஆகியவை அணிய முற்பட்டனர். அவர்கள் அழகுக் கலையை நன்கு உணர்ந்து அதைச் சுவைக்க முற்பட்டதும் வெள்ளை சிவப்பாகிய வண்ணக் குன்றி மணிகளைக் கோத்து மலையாக அணிந்து வந்தனர். சிவப்புக் குன்றிமணியில் நல்ல கறுப்பு வண்ணம் நடுவே ஒளிர்வது மிக அழகாக இருந்தது. அப்பால் அவர்கள் கழற்சிக்கொட்டை, நெல்லிக்காய், மிளகுக்காய் கொத்தமல்லி போன்றவைகளைக் கோத்து மாலைகளாகவும் காதணியாகவும் புய அணிகளாகவும் கையணியாகவும் இடுப்பணியாகவும் கால் அணியாகவும் அணிந்து வந்தனர். இவ்வழக்கம் எல்லா நிலங்களிலும் பரவியது. மருதம், நெய்தல் முதலிய நிலங்களில் வாழ்பவர்கள் ஆங்காங்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அணிகளாகச் செய்து அணிந்து வந்தா லும் மலர் அணிகளும் குன்றிமணி, நெல்லிக்காய் போன்ற அணி களும் மிகவும் கவர்ச்சியளித்து வந்தன. அணிகலன்களின் வரலாற்றில் உலோக உற்பத்தியானது ஒரு புதிய சகாப்தம் எழுவதற்கு ஒரு ஆரம்ப நிலையாக இருந்தது. வேட்டைப் பொருள்களால் அணி செய்யப்பட்ட உடம்பை, உலோகப் பொருள்கள் எழுந்ததும் அவற்றுள் ஒப்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. ஆணும் பெண்ணும் தங்கள் கை, கால் பகுதிகளையும் கழுத்தையும், உலோகங்களால் உருவாக்கப் பெற்ற கழுத்தணிகளாலும் (மாலைகளாலும்) காதணிகளாலும் அரையை அரைப்பட்டியாலும் ஒப்பனை செய்ய முன் வந்தனர். முன்னர் இறக்கைகளும் சிறு குச்சுகளும் வைக்கோலும் இடம் பெற்றிருந்த மூக்கு, காது, உதடு முதலிய இடங்களிலுள்ள துவாரங்கள் உலோகத்தாலான அணிகலன்களால் நிரம்பின. ஆப்பிரிக்க நாட்டு போங்கோ என்னும் பகுதியில் வாழ்ந்த அழகிய காட்டு இனக் காரிகையர்கள், மூக்கில் முதன் முதலாக இரும்பு வளையத்தை அணிந்து வந்தனர். அந்நாட்டிலுள்ள செனி காம்பி இனப்பெண்கள் கூட இந்த இரும்பு வளையங்களையே விரும்பியணிந்தனர். போங்கோ நாட்டு ஆப்பிரிக்கப் பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் காதுகளில் கிட்டத்தட்ட பன்னிரண்டு துளைகள் இட்டிருப்பர். அதில் இரும்பு வளையங்களை மாட்டிக் கொள்வார்கள். இவ்வாறு அவ்வினப் பெண்கள் ஒவ்வொருவரும் உடம்பில் நகை அணிவதற்கென்று செய்து கொண்ட துவாரங்கள் நூற்றுக்கு மேற்பட்டனவாகும். இது அவர்கள் உயிர் வாழ்வதற்கு வேட்டையாட முற்பட்ட ஆரம்பகால வழக்கமாகும். உற்பத்தி சாதனங்கள் வளர்ச்சி பெற்று உணவுப் பொருள்கள் மலிந்த புதிய சகாப்தத்தில்கூட அவர்களின் இந்த நிலை மாறவில்லை. மாற்ற வேண்டும் என்று அவர்கள் எண்ணியதுமில்லை. மேலும் இது தங்கள் பழம்பெரும் பண்பாடாக இருக்கிறது என்றும் இதில் பல தத்துவங்கள் இருக்கின்றன என்றும் இதனால் பல நோய் அகல்கிறது என்றும் கூறி தங்கள் அறிவின் திறத்தைக் காட்டுகின்றார்கள். மகளிர் ஆதிகாலத்தில் அணிந்திருந்த நகைகளினின்று மாறுதல் செய்ய வேண்டிய இன்றியமையாத சூழ்நிலை எழுந்தது. இந்தச் சூழ்நிலை அடிக்கடி எழுந்து மாறுதலை உண்டாக்கியது. ஆனால் ஆண்கள் அதை விரும்பவில்லை. பூவையர்கள் புதிய சகாப்தத்திற் கேற்ப மாறுதல்களை நாடும்பொழுது ஆண்களால் அது அடாது என்று அதிக நாள் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆண் மக்கள் ஆதியில் அணிந்திருந்த அணிகலன்களான இறகுகளும் எலும்புகளும் நகங்களும் காதிலும் மூக்கிலும் உதட்டிலும் இடம் பெற்றிருந்தன அல்லவா? அந்த அணிகலன்கள் ஆண் மக்களின் வேட்டையாடிய திறனின் நினைவுக் குறியாக அவர்களின் அவயவங்களில் இடம் பெற்றன. பெண்கள் அக்காலத்தில் வேட்டையாடுந் தொழிலில் ஈடுபடவில்லை. என்றாலும் அவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற் காக ஆண்மகன் அவர்களின் அங்கங்களில் அணிகலன்களை இடம் பெறச் செய்தான். ஆனால் பெண்கள் அணிந்த உலோகத்தாலான அணிகலன்கள் ஆணின் வேட்டையாடுந் திறனை விளக்குவனவாக இல்லை. அது ஆண்களின் செல்வச் சிறப்பைக் காட்டுவனவாக இருந்தன. அதற்காக ஆண், பெண்களின் அங்கங்களில் எண்ணற்ற நகைகளைப் பூட்ட முன்வந்தான். நாளடைவில் ஒருவனுடைய மனைவி அவனுடைய கருவூலங்களை வைக்கும் பெட்டியாக எண்ணப்பட்டாள். இறுதியாகப் பெண்கள், ஆண்களின் உடைமை யாக மாற்றப் பட்டனர். காடுகளில் வாழ்ந்த முற்கால மக்கள் தங்களுக்குக் கிடைத்த செம்பு, வெண்கலத் தாதுப்பொருள்களையெல்லாம் உருக்கித் தம் மனைவிமார்களுக்கு அணிகலன்களாகச் செய்து அவைகளை அவர்களுக்கு அணிவித்து அகமகிழ்ந்து வந்தனர். பழங்காலக் காட்டு மனிதன் 10, 20, 30, 40 ஏன் நூற்றுக்கணக்கான மனைவிகளைக் கூட வைத்திருந்தான். இதற்குமேல் மறு மனையாட்டிகளையும் வைத் திருந்தான். தசரதன் 60,000 மனைவிகளைப் பெற்றிருந்தான். கிறிதவ மறை கூறும் சாலமோன் ஞானி 700 மனையாட்டிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் பெற்றிருந்தார். பல முலிம் மன்னர்கள் 4 மனைவிகளையும் 400 மறுமனையாட்டிகளை (சுரியத்களையும்) வைத்திருந்தனர். இதே போல் ஆப்பிரிக்கர்கள் பல மனைவிகளை வைத்திருப்பது சர்வ சாதாரண சம்பவமாகும். ஒரு ஆப்பிரிக்கக் காட்டுப் பழங்கால மனிதன் ஒருவன் நாற்பதுக்கு மேற்பட்ட மனைவிகளைப் பெற்றிருந்தான். அதைப் பற்றி அவன் அடிக்கடி பெருமையாகவும் பேசிக் கொள்வான். அவன் ஒவ்வொரு மனை விக்கும் தனித்தனியாகப் பல பித்தளை நகைகள் செய்து அவர்களுக்கு அணிவித்திருந்தான். ஓர் ஆப்பிரிக்க நீகிரோவர்களின் தலைவ னுடைய மனைவிமார்கள் சாகும்வரை குறைந்தது 800 இராத்தல் பித்தளைக் கழுத்தணிகளைச் சுமந்து வருவார்களாம். அவனுடைய ஆறு பெண் மக்கள் 120 இராத்தல் பித்தளை நகைகளையும் அவனுடைய பிரியமான அடிமைப் பெண் 200 இராத்தல் பித்தளை நகைகளையும் அவனுடைய மனைவிகளும் பெண் மக்களும் ஒவ்வொருவர் 6 இராத்தல் கையணிகளையும் அணிந்திருந்தார்கள். ஆக மொத்தம் அவனிடம் 1396 இராத்தல் பித்தளை அணிகலன்கள் இருந்து வந்ததாம். அவனியில் அரும்பிய சில ஆக்கக் கூறுகளின் செல்வாக்கின் பயனாக அரிவையர்களின் அணிகலன்களில் அபிவிருத்தியும் மாற்றமும் எழுந்தன. நாம் இதைத் தொன்மையான காலத்திலுள்ள பொருள் உற்பத்தி சாதனங்களில் எழுந்த சிறு மாற்றங்களின் பயனாகத் துளிர்த்த செயல்களின் ஒரு பகுதி என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஒரு பகுதி, மனித இயற்கையின் நிலையான சாயல்களும் பொருளாதாரத்தின் நேரடியான சாயல்களும் பொருளாதாரத்தின் நேரடியான செல்வாக்கிற்கு வழிவிடுகின்றன என்றும் கூறலாம். எடுத்துக்காட்டாக ஆண்கள் தங்களுடைய பெண்களின் மூலம் செல்வச் சிறப்பைக் காட்டுதல் தங்களுடைய பணப் பெருமையை அறிவிக்கும் அகங்காரச் செயலாக இருந்தது. இன்னும் அவர்கள் தமது ஆன்ம தத்துவத் தன்மைகளையும் பிறவழி களில் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொண்டனர் என்றும் எண்ணப்படுகிறது. உலோகப் பொருள்களால் உருவாக்கப்பட்ட அணிகலன்கள் மீது பெண் மக்களுக்குப் பேரவா, மனிதன் உலோகப் பொருள்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்த பின்னர்தான் எழுந்துள்ளது என்று நாம் இங்கு மெய்ப்பிக்க வேண்டியது அவசியம் இன்று. முற்காலத்தில் மனிதனுடைய ஆசை, பெரிதும், தன்னுடைய செல்வப் பெருக்கை உலகிற்கு காட்டிக் கொள்ள வேண்டும் என்று இருந்ததாகத் தெரி கிறது. செல்வம் தன்னைச் சிறப்பித்துக் காட்டும் வழியில் மக்களை இழுத்துச் சென்றது அது செல்வவான், தன்னுடைய மனைவிமார் களும் மறுமனையாட்டிகளும் உலோகப் பொருள்களால் அணி செய்யப்பட்டிருப்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று தூண்டியது. இதனை விளக்க நாம் பல எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும். இவ்வளவு நகைகளைப் பெண்களைப்போல் ஆண்களும் அணிந்திருந்தார்கள் என்று மெய்ப்பிக்க மனிதன் பல சான்றுகளைக் காட்ட முடியும்; நீங்கள் சிந்தனை செய்ய வேண்டாம். முதன் முதலாக கைகளிலும் கால்களிலும் உலோக அணிகள் அணியப் பட்டன என்று மேலே கூறியவைகளை மறுத்து நீங்கள் எழுதலாம். எங்காவது காணப்படும் ஒன்றிரண்டு விதிவிலக்குகளை எடுத்துக் காட்டி விவாதிக்கலாம். அதைச் சிறப்பாக எடுத்துக் கொண்டு எவரும் தங்கள் மூளையைக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். ஆரம்பத் தில் எழுந்த நோக்கம் பிற்காலத்தில் மாறிக் கைகளும் கால்களும் அழகாக இருப்பதாகத் தோன்றியபின் அதை மேலும் அழகுறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அணிகள் பூணப்பட்டிருக்க லாம். இது, ஒரு சில இடங்களில் எழுந்திருக்கலாம் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். நாட்டியம் தமிழ் மக்களோடு மிகத் தொன்மையான காலத்திலே தோன்றி அபிவிருத்தி அடைந்துள்ளது. மக்கள் தம் உணவு உற்பத்திக்காக மிகுந்த சிரமப்பட்டு, தம் முயற்சியில் பெரும் வெற்றியீட்டியதும் எழும் நிறைவான மகிழ்ச்சிப் பெருக்கால் அரும்பும் ஆட்டமே நாட்டியமாக மலர்ந்தது என்று நாம் முன்னர் விளக்கியுள்ளோம். நாட்டியத்தில் இலயப் பிரமாணம் மிக முக்கியம் என்பதும் நமக்குத் தெரியும். ஆட்டத்தில் கைகளும் (அதங்களும்) பாதக் கிரமங்களும் மிக முக்கியமானவைகளாகும். மிகப் பழங்கால நாட்டியங்களில் பூக்களும் மாலைகளும்கூட முக்கியத்துவம் பெற்றிருந்தன. நாட்டியத்தில், மிகப் பிற்காலத்தில் உலோகங்கள் ஒன்றோடொன்று உரசுவதால் எழும் ஒலி முக்கியமானதாக இருந் தது. கைகளிலும் கால்களிலும் அணியப்பட்டுள்ள அணிகலன்கள் ஒன்றோடொன்று மோதி அல்லது குலுங்கி எழும் அணிகளின் ஓசை களும் மணிகளின் ஒலிகளும் நாட்டியத்தைச் சிறப்பிப்பதாக எண்ணப்பட்டது. தமிழர் நாட்டியத்தில் அணிகளுக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டிருக்கிறது இதனால் தான் என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை. காலில் கட்டிய சதங்கைகளின் ஓசையும் கால் விரல்களில் அணிந்துள்ள மெட்டி, மிஞ்சி முதலியவைகளில் எழும் ஓசையும் இன்பம் பயப்பனவாய் இருக்கின்றன. இதற்காகவே இவ்வணிகள் ஏற்பட்டுள்ளன. உலோக அணிகள் தோன்றிய பின்னரே முற்காலத்தில் பெண்கள் அணிந்து வந்த தோலாடைகளும் எலும்பு அணிகளும் சங்கு அணிகளும் மறையத் தொடங்கின. முன் னுள்ள தோலாடைகளும் நகம், பல், கொம்பு, மலர், கொட்டை, எலும்பு, சங்கு அணிகள் அனைத்தையும்விட உலோகத்தால் செய்யப் பட்ட அணிகலன்கள் நிறத்தாலும் ஒலியாலும் கவர்ச்சியை நல்கின. கவின்பெற விளங்கின. கண்களுக்கும் செவிகளுக்கும் கருத்திற்கும் விருந்தாக இருந்தன. ஆனால் முற்காலத்திலிருந்த இரும்பு மோதிரங் களும் வளைகளும் ஒரு சில இடங்களில் இந்த இருபதாம் நூற்றாண் டின் பிற்பகுதிவரை காட்சி அளித்து வருகின்றன. தமிழகத்தில் சில தாழ்த்தப்பட்ட மக்களிடம் இன்றும் இரும்பு ஈயம் பித்தளை வெள்ளி செம்பு அணிகள் இருந்து வருகின்றன. தமிழகத்தின் நாடோடி மக்களின் நாட்டியத்திலன்றி, நனி சிறந்த நாகரிகம் பெற்ற மக்களின் நாட்டியமாக நவிலப்பெறும் பரத நாட்டியத்திலும் பலவித அபிநயக் கைகள் கூறப்பட்டுள்ளன. அவைகளில் பாம்புப் படக்கை (சர்ப்பசீர்ஷ அதம்), மான்தலைக்கு (மிருகசீர்ஷ அதம்), புலிக்கை (வியாக்கிரம அதம்), அரிமுகக்கை (சிம்மமுக அதம்), தேனீக் கை (பிரமர அதம்), கோழிக் கொண்டைக் கை (தாம்பிரசூட அதம்), அன்னமுகக் கை (அம்சாசிய அதம்), அன்னத்தின் இறக்கைக் கை (அம்சபட்ச அதம்), கரிமுகக்கை (கஜமுக அதம்) ஆமைக் கை (கூர்ம அதம்), தவளைக் கை (மண்டூக அதம்) இடம்புரி சங்குக்கை (சங்க அதம்) புறாக்கை (கபோத அதம்), நண்டுக் கை (கற்கடக அதம்), மீன் கை (மத்ஸய அதம்), பன்றிக்கை (வராக அதம்), யானைக் கொம்புக் கை (கஜதந்த அதம்), மயில் கை (மயூர அதம்), கத்திரிக் கோல் அலகுக் கை (கத்திரிமுக அதம்), விளாம்பழக் கை (கபித்த அதம்), ஊசிக் கை (சூசி அதம்), மூவிலைச் சூலக்கை (திரிசூல அதம்), அம்புக் கை (பாண அதம்), அம்புமுகக் கை (சிலிமுக அதம்), கயிறுக் கை (பாச அதம்), கலயக்கை (கலச அதம்), அரும்புக் கை (முகுள அதம்), மலர்ந்த தாமரைக் கை (அலர்பதும அதம்), பூக் கொய்யும் கை (காங்குல அதம்), பூக்கூடைக் கை (புஷ்பபுட அதம்), கங்கணக்கை (கடகாமுக அதம்) போன்றக் கைகள் முக்கியமான கைகள் ஆகும். அபிநயக் கைகளில் பெரும்பாலான கைகள் பண்டையத் தமிழ் மக்களின் உணவுப் பொருட்களாக இருந்த பறவைகளையும், விலங்குகளின் உறுப்புகளையும், விலங்கு களை வேட்டையாடுவதற்குரிய கொம்பு, அம்பு, கயிறு முதலியவை களையும் குறிப்பதாக இருக்கின்றன. ஒரு சில கைகள் பழங்களையும் மலர்களையும் குறிப்பிடுவதாக இருக்கின்றன. பண்டையத் தமிழர்கள் தங்களின் இன்றியமையாத உணவுப் பொருட்களைப் பெற்றதும் மகிழ்ச்சியால் ஆடினர். அந்த மகிழ்ச்சிக்குரிய ஆட்டத்தில் பழங் களையும், கொட்டைகளையும் தங்களின் வெற்றிச் சின்னமாக உடலில் அணிந்து கொண்டனர். மயிலிறகுகளைத் தலையிற் சூடியும் பூக்களைத் தலையிலும் கழுத்திலும் அணிந்தும் கொடிகளை கைகளில் கங்கணமாகக் கட்டியும் ஆடியும் பாடியும் வந்தனர். மக்களின் நாட்டியம் அவர்கள் தம் உணவுப் பொருட்களை நிறை வாகப் பெற்றதின் பயனாக எழுந்த எக்களிப்பில் அரும்பியது. இசை யும் இந்த இன்ப ஆட்டத்தோடு துளிர்த்ததுதான். உணவுப் பொருள் களாகிய பழங்களும் கொட்டைகளும் காய்களும் ஆதியில் நாட்டி யத்தைச் சிறப்பிக்கும் அணிகளாய் அரும்பின. உணவுப் பொருட் களான இலைகளும் தளிர்களும் அவர்களின் ஆடைகளாய் அமைந்தன. கண்ணையும் மூக்கையும் கருத்தையும் ஈர்த்த, வண்ணம் வாய்ந்த கிண்ணம் போன்ற நறுமண மலர் அணிகளும் கொடியணி களும் இதற்கு முன்னரே தோன்றியவை என்றாலும் அவை மறை யாது இவற்றோடு காட்சி அளித்தே வந்தன. நமது நாட்டில் எழுந்த நாட்டிய அணிகளும் ஆடைகளும் நமது முன்னோர்கள் போதிய உணவைச் சேகரித்து உண்டு மகிழ்ந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் எழுந்தவைகளே என்று மனித நாகரிக ஆராய்ச்சியில் தலைசிறந்த மேனாட்டறிஞர்கள் கூறுகின்றார்கள். அதை நாம் எளிதில் தள்ளி விடுவதற்கில்லை. அதில் உண்மை உள்ளது. உணவு உற்பத்தி குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு உயிர் நாடியாக இருந்தது. அவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் உழவுத் தொழிலை உணரார்கள். உழுது பயிரிட்டு உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வே அவர்கள் உள்ளத்தில் உந்தவில்லை. இயற்கையாய் மலைகளில் உள்ள மரங்களில் கிடைக்கும் காய்கனிகளையும், வேட்டையில் கிடைக்கும் விலங்கு பறவை முதலியவைகளின் ஊனையும் புசித்து அவர்கள் காலங்கழித்து வந்தனர். அவர்கள் காய்கனிகளை கல்லால் வீழ்த்தவும் கல்லெடுத்து வீசி விலங்குகளை யும் பறவைகளையும் கொன்று தின்ன வேண்டும் என்று கூட அவர்கள் பிற்காலத்தில்தான் அறிந்தார்கள். அதற்கும் பின்னர்தான் வில்லைக்கண்டார்கள். அவர்கள் நெருப்பைப் பயன்படுத்தவும் அறியார்கள். அவர்கள் பிற்காலத்திலே ஊனையும் காய் கனிகளை யும் வேகவைத்துச் சாப்பிடத் தெரிந்தனர். கற்காலம் மாறி உலோக காலம் எழும் பொழுதே அவர்கள் அரிவாள் மணையையும் வாளை யும் கத்தியையும் கண்டார்கள். அவர்கள் காய்கனிகள் நிறைந்த குறிஞ்சி நிலத்தில், விலங்குகளும் பறவைகளும் நிறைந்த மலைகளில் தான் வாழ்ந்தார்கள். அங்கு தனி உடைமை இல்லை; எல்லாம் பொது உடைமைதான். என்றாலும் சில காலங்களில் அவர்கள் உண்ணு வதற்குக் காய்கனியும் ஊனும் கிடையாது பல நாட்கள் தவித்தனர் இந்நிலையிலும் அவர்களுக்குத் திடீரென்று வேட்டைப் பொருள் களும் காய்கனிகளும் கொட்டைகளும் கிடைத்துவிடும். அப்பொழுது இன்பம் பொங்கிப் பெருக்கெடுத்தோடும். காய் கனிகளை வேண்டிய மட்டும் தின்று பசியைத் தணிப்பார்கள். எஞ்சிய காய்கனிகளையும் கொட்டைகளையும் தளிர்களையும் இலைகளையும் அணிந்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். இதுவே நமது ஆரம்பக் கால அணிவகை களின் பிறப்பு வரலாறாகும். குறிப்புகள் 1. ‘The sacred chank of India - James Hornell. F.L.S. (Madras) 1914 : P. 3 2. “This fishery is the only one that is carried on systematically and with a definite organization. As detailed else where (P. 43) references in Tamil classics make it clear that this fishery was being prosecuted with vigour under Pandyan rule as long as 1,800 years ago; in those days the head - quarters was at Korkai, an important city of traders, Jewerllers, Pearl - fishers and Chank - divers.” Ibid . 1. The Antiquity of the Industry P. 42 “Reference to ancient Tamil classics furnishes evidence scanty but conclusive of the existence of an important chank cutting industry in the ancient Pandyan kingdom in the early centuries of the christian era. Similar evidence is also extant of a widespread use of carved and ornamenented chank bangles in formor days by the women of Pandyan Country.”. 2. “The Tamil name kulai and todu now applied for ear ornaments made of gold or even stones sugest the very ancient and pre - historic times when leaves and flower were worn. The habit of small girls wearing a leaf shaped pendent made of silver and gold and of women wearing an ornament called mekalai round their waist is reminiscent of the times when they wore only leaves to cover their nakednes” - Ancient Jaffna. C. Rasanaygan. P. 169 3. Marg. (Bombay) Vol XIII No. 1 dated dece. 1959 P. 56 4. முழவிமுழு மகலாங்கண் விழவுநின்ற வியன்மறுகின் துணங்கையந் தழூஉவின் மதுரைக் காஞ்சி : 327 - 329 5. Holy Bible (Old Testament) I Kings. 5. சிந்துவெளி நாகரிகம் மொகஞ்சதாரோ அணிகலன்கள் மொகஞ்சதாரோவில் பல முத்திரைகளும் சுண்ணாம்பு, வெண்கலம் ஆகிவைகளால் செய்யப்பட்ட படிமங்களும் பானை சட்டிகளும் ஆயுதங்களும் சுடுமண் செங்கல்லால் கட்டப்பெற்ற பல மாடிகளையுடைய கட்டிடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 5000ஆம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முன் னோர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் என்று கூறும் பழம் பெருமக்கள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம் வெள்ளைக் களி மண், தந்தம், எலும்பு, கல், நவமணிகள், சங்கு, களிமண் முதலியவை களைக் கொண்டு செய்த எண்ணற்ற விதமான ஏராளமான எழிலொழுகும் அணிகளைச் செய்து அணிந்து வந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஏழைகள் கறுப்புக் களிமண், சிவப்புக் களிமண், வெள்ளைக் களிமண் ஆகியவைகளைக் கொண்டு சிறு மணிகள் போல் செய்து அதன் நடுவே துளையிட்டு நூலால் கோத்து அணிந்து வந்துள்ளனர். சிலர் சுட்டகளிமண் மணிகளை அணிந்து வந்துள்ளனர். சிலர் உயர்ந்த விலை மதிப்புள்ள மரகதம், மாணிக்கம், நீலம் போன்ற மணிகளைப் பலவிதமாகத் தேய்த்து மெருகிட்டு துளையிட்டு நூலில் கோத்து அணிந்துள்ளனர். சிலர் பொன்னாலும் வெள்ளியாலும் பொதிந்து துளையிட்டு நூலில் கோத்து அணிந்து வந்துள்ளனர். சங்குகளாலான வளையல்களும் அங்குக் கிடைத்துள்ளன. பன்னிறச் சலவைக் கற்கள், எலும்பு, களிமண் முதலியவைகளால் செய்துள்ள வளைகளும் கிடைத்துள்ளன. இவைகள் இன்றைய ஆந்திர மகளிர் கால்களில் அணிந்துள்ள வெள்ளிக் கால் அணிகள் போல் காணப் படுகின்றன. இங்குள்ள மாலைகளில் காணப்படும் மணிகள் சுண்டைக் காய் முதல் கொட்டைப்பாக்குவரையுள்ள பருமனில் இருக்கின்றன. இவை தட்டையாயும் வட்டமாயும் நீளமாயும் உள்ளன. இங்குப் பல பொன் கொண்டை ஊசிகள் கிடைத்துள்ளன. வெள்ளிக் காதணிகளும் கிடைத்துள்ளன. இங்கு ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் பல கழுத்தணிகளும் பளபளப்பாக ஒளி வீசும் உயர்ந்த மணிகளும் பொன்னாற் செய்த தலை நாடாக்களும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தலையணிகள் மொகஞ்சதாரோவில் கிடைத்த பதுமைகள் மூலம் அங்குள்ள மக்கள் பண்டையத் தமிழ் மக்களைப் போல் தலையில் ஒரு நாடாவை சுற்றிக் கட்டி வந்தனர் என்று தெரிகிறது. இது சுமேரியரிடமும் இருந்து வந்த பழக்கமாகும். இவை பொன் தகட்டால் அரை அங்குல அகலமும் பதினாறு அங்குல நீளமும் உள்ளன. நுனி இழுத்துக் கட்டுவதற்கேற்றதாய் நுனியில் துளைகள் இடப்பட்டுள்ளன. இந்தத் துளையில் வேறு அணிகளைக் கட்டித் தொங்கவிட்டும் இருக்க லாம். இவ்வணிகளை ஆண்களும் பெண்களும் அணிந்து வந்ததாக அறிகிறோம். இங்கு ஆண்களும் பெண்களும் தலைமயிரை வாரிக் கொண்டை இடுவதும் சுருட்டிக் கொள்வதும் உண்டென்று தெரிகிறது. தலைமீது தமிழ் மக்களைப்போல் தலையணிகள் சில அணிவதும் உண்டு. தலை மயிர்களைச் சுற்றி கட்டிக் கொண்டாலும் அவை நெகிழ்ந்து வீழ்ந்துவிடாதிருக்க இன்றையத் தமிழகப் பெண்கள் போன்று 5000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மொகஞ்சதாரோ மகளிரும் கொண்டை ஊசிகளைப் பயன்படுத்தி வந்ததாக அறிகி றோம். கொண்டை ஊசிகள், பொன், வெள்ளி, வெண்கலம், தந்தம், எலும்பு முதலிய பல பொருள்களால் செய்யப்பட்டனவாய் இருக் கின்றன. இக் கொண்டை ஊசிகள் பல்வேறு வகைகளாகவும் இருக் கின்றன. ஒரு வெண்கலக் கொண்டை ஊசி சுமார் 4¼ அங்குல நீளம் உள்ளது. அதன் கொண்டைகளில் தமிழ்நாட்டுக் கொண்டை ஊசி களைப் போல் ஆடு, மாடு, மான், புறா போன்ற உருவங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு கொண்டை ஊசியில் இரு மான் தலைகள் காணப்படுகின்றன. அம்மான்கள் வெவ்வேறு திசையை நோக்குவ தாக அமைந்துள்ளன. அதன் கொம்புகள் அழகாக முறுக்கிக் கொண்டிருப்பது போலத் திகழ்கின்றன. ஒரு ஊசியின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. அந்த ஊசியின் தலைபக்கம் மூன்று குரங்குகள் தோள்களில் கையை வைத்துக்கொண்டு குந்தியிருப்பது போல் காணப்படுகின்றன. இதன் ஊசி மரத்தாலானதுபோல் காணப்படுகின்றது. வேறு சில ஊசிகள் தலைப்புறம் வெண்கல்லால் செய்யப்பட்டது போலவும் காணப்படுகின்றன. நுதல் அணிகள் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் இருந்து பல நுதல் அணிகள் - அதாவது நெற்றிச் சுட்டிகள் கிடைத்துள்ளன. இவை தலையணிகளினின்று நெற்றியில் தொங்கும் ஒரு வகைப் பதக்கமே யாகும். இவை வட்டவடிவில் முக்கோணம்போல் கூம்பியனவாகச் செய்யப்பட்டவை. இந்த நெற்றிச் சுட்டிகள் இரண்டு அங்குலச் சுற்றளவு உடையன. இவை பொன், வெள்ளி, செம்பு, பீங்கான் முதலிய பொருள்களால் செய்யப்பட்டுள்ளன. இவை தலை முடியில் கோத்துக் கட்டுவதற்கு ஏற்றவாறு செய்யப்பட்டுத் தலை நாடாவில் கோப்பதற்கு ஏற்றவாறு துளையிடப்பட்டுள்ளன. இந்த நெற்றிச் சுட்டிகள் மூன்று நான்கு சிப்பிகளை இணைத்துச் செய்யப் பட்டுள்ளன. இங்கு ஏராளமான களிமண் பதுமைகள் கிடைத் துள்ளன. அதன் நுதல் அணிகளைப் போன்று இவை காணப்படு வதைக் கொண்டே இவை நெற்றிச் சுட்டிகள் என்பது தீர்மானிக்கப் பட்டுள்ளது. இந்த நெற்றிச் சுட்டிகள் நெற்றியிலிருந்து தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாக வைத்து உச்சந்தலைவரை கூந்தலை அழகு படுத்துகின்றன. இவை மேற்புறம் பொன்னாலும் அடிப்புறம் வெள்ளி யாலும் செய்யப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் 1¼ அங்குலம் நீளம் உள்ளனவாகக் காணப்படுகின்றன. இஃதன்றி பட்டையாகக் காணப்படும் சில பொற்றகடுகள் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் கிடைத்துள்ளன. இவை நெற்றியில் அணியப்படுவனவேயாகும்; நெற்றிப்பட்டம் என்று கூறப்படும். இந்த அணிகளைப் போன்று நெற்றியில் பட்டம் கட்டிய சில பதுமைகள் இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெற்றியில் பட்டம் கட்டும் வழக்கம் தமிழகத்தில் இன்று இல்லை. முன்னர் இருந்து வந்தது. நெல்லை மாவட்டத்திலுள்ள ஆதித்தநல்லூர்ப் புகை குழிகளில் உள்ள முதுமக்கள் தாழியில் உள்ள எலும்புக் கூடு களுடன் பொன்னால், செய்த இந்த நெற்றிப் பட்டங்கள் பல கண் டெடுக்கப்பட்டுச் சென்னை அரசாங்கப் பழம் பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன. நெற்றிச் சுட்டி அணியும் வழக்கம் இன்றும் தமிழகத்தில் உண்டு. நாட்டியமாடுபவர்கள் இந்த அணியை விட்டுவிடுவதே இல்லை. மூக்கணிகள் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் கிடைத்த எண்ணி லாப்பதுமைகள் ஒன்றில்கூட மூக்கணிகள் காணப்படவில்லை. மேலும் மூக்கணிகள் அணியும் வழக்கம் திராவிடர்களிடம் இல்லை. தமிழகத்தில் உள்ள சிலைகளிலும் செம்பு, வெண்கலப் படிமங்களி லும் மூக்கணிகள் காணப்படவில்லை. எனவே முற்காலத் தமிழர் களிடம் மூக்கணிகள் பூணும் வழக்கம் கிடையாது என்று அறிஞர் களால் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் மூக்கின் இரு புறங்களிலும் துளையிட்டு மூக்குத்திகள் என்னும் அணிகள் பொன்னால் மட்டு மின்றி மணிகள் பதித்தும் அணிவதும், பல போலி மணிகள் பதித்த மூக்குத்திகள் அணிவதும் மூக்கின் நடுத்தண்டின் நடுவில் துவார மிட்டு மூக்கின் கீழே அதாவது மேல் உதட்டின்மீது தொங்கும் புல்லாக்கு என்ற ஒரு வகை நகை அணியும் வழக்கும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலம் வரை இருந்தது. அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் விளிம்பில் பற்கள் போன்ற அமைப்புடைய சக்கரம் போன்ற பொற்றகட்டில் செய்யப் பட்ட மூக்குத்தி போன்ற அணிகள் கிடைத்துள்ளன. கே. என். தீக்சித் போன்ற அறிஞர்கள் மொகஞ்சதாரோ மக்களும் அரப்பா மக்களும் மூக்கணிகள் அணிந்ததற்கு உறுதியான சான்றுகள் கிட்டவில்லை என்றும் கி.பி. 1200க்குப் பின் மூக்கணி அணியும் வழக்க முசுலிம் களால் இந்தியாவில் புகுத்தப்பட்ட பழக்கம் என்றும் கூறிய பின்னரும்கூட, பேரறிஞர் சி. ஆர். இராய் போன்ற அறிஞர்கள் சிந்து வெளியில் வாழ்ந்த முந்திய கால மகளிர் மூக்கணிகள் பூண்டிருந் தனர்; அவை காதில் அணிந்த தோடுகளுடன் பொற்சங்கிலியால் இரு புறமும் இணைக்கப்பட்டிருந்தன என்று கூறியுள்ளார். சிந்துவெளிப் பகுதியைச் சிறப்பாக ஆராய இந்திய அரசாங்கம் நியமித்த அறிஞர் டாக்டர் மெக்கேய் அவர்கள் சிந்துவெளியில் வாழ்ந்த பழங்கால மக்கள் நீலக்கல் பதித்த மூக்கணிகளை உபயோகித்து வந்தனர் என்று கூறுகிறார். இவரை ஆதரித்து பாட்ரிக் கார்லிடன் அவர்களும் எழுதியுள்ளார். அறிஞர் எம்.எ. வாட் என்பவரும் அரப்பாவில் அகழ்ந்து ஆராய்ந்த அறிஞருள் ஒருவரேயாவர். அவரும் அரப்பா வில் வாழ்ந்த அணங்குகள் அழகிய மூக்குத்திகளைப் பயன்படுத்தி யுள்ளனர் என்று கூறியுள்ளனர். காதணிகள் சிந்து வெளியில் கிடைத்த சில களிமண் பதுமைகள் காதணி களுடன் காணப்படுகின்றன. எனவே அக்கால மகளிர்கள் பலவித மான காதணிகள் அணிந்திருக்கலாம் என எண்ணப்படுகின்றது. சில காதணிகள் சிறு குழாய்களையுடைய குமிழ் போன்றனவாகவும், சில தங்கச்சுருள் போலவும் காணப்படுகின்றன. சில தமிழ்நாட்டு மகளிர் சுமார் 30 ஆண்டுகளுக்குமுன் காதுகளில் அணியும் வட்டமான வளையங்கள் போன்ற கடுக்கன் மாதிரி பொன்னாற் செய்யப் பட்டவைகளாய்க் காணப்படுகின்றன. சில காதணிகள் திருகாணி வைத்துச் செய்யப்பட்டனவென்று தெரிகின்றன. இந்தக் கூம்பிய பகுதியில் குழாய் போன்ற உருவம் வைத்து பற்றவைக்கப்பட் டுள்ளது. இதுவும் பொன்னாற் செய்யப்பட்டதேயாகும். அறிஞர் வாட் அவர்கள் அரப்பாவில் நடத்திய ஆராய்ச்சியில் சில வெள்ளிக் காதணிகளையும் கண்டெடுத்துள்ளார். கழுத்தணிகள் 1. மொகஞ்சதாரோவில், ஒரு வெள்ளிக் கலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அணிகலன்கள் சிலவற்றை டாக்டர் இ.சே.எம். மெக்கேய் அவர்கள் கண்டெடுத்துள்ளார். இவற்றை கண்டெடுத் ததில் அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். மாலையொன்று பொன் னாலும் பச்சை நிறமான உயர்ந்த மணிகளால் கோக்கப்பட்டதாய் அழகுடன் விளங்குகிறது. பொன்மணிகள் தட்டையாகச் செய்யப் பெற்று அவற்றின் மீது அழகுறக் குமிழ்கள் வைக்கப்பெற்றுள்ளன. பீப்பாய் வடிவமாக கண்ணாடி போன்ற பச்சைக் கற்கள் காணப் படுகின்றன. ஒரு பொன்மணியும் அடுத்தாற்போற் பச்சைக் கல்லும் அதை அடுத்துப் பொன் மணியுமாக முறையாகக் கோக்கப்பட்ட அழகிய மாலையாகத் திகழ்கிறது. இம்மாலையின் நடுவில் ஏழு அழகிய பதக்கங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு வைடூரியமும், சூரிய காந்தக் கல்லும் வைத்துச் செய்யப்பட்டதாக தெரிகிறது. இம்மாலையில் ஒளிரும் பச்சைக்கல் வடபர்மாவிலும் திபேத்திலும் கிடைக்கும் கற்களைப் போன்றதாகக் கவின் பெறக் காட்சி அளிக்கின்றது. 2. இஃதன்றி மற்றும் இரு கழுத்தணிகளான மாலைகள் மொகஞ்சதாரோவில் அகழ்ந்து கண்டெடுக்கப் பெற்றுள்ளன. அவைகளில் ஒரு மாலையில் குழவி வடிவத்திலும், மிளகு போன்ற உருண்டை வடிவத்திலும், செய்யப்பட்ட பொன்மணிகள் கோக்கப் பட்டுள்ளன. இடை இடையே நீலப்பளிங்குக் கல்லால் செய்யப் பட்ட மணிகளும் கோக்கப்பட்டு எழிலுடன் திகழ்கின்றது. நீலப் பளிங்குக் கல்மணிகள் புத்தம் புதியனபோல் பொன்றாப் பொலி வுடன் பளபளென மின்னிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு மாலை பொன்னால் ஆனது. அது தட்டையாகச் செய்யப் பெற்ற இரண்டு மணிகளை இணைத்துப் பொருத்தப் பட்டதாகக் காணப்படுகின்றது. இந்த அழகு மிக்க அணிவடங் களின் அரிய பணியின் வேலை நுட்பம் போற்றத்தக்கதாகும். அரப்பாவின் அழகிய மாலைகள் மொகஞ்சதாரோ பண்பாட்டிற்கு முந்திய பண்பாடு அரப்பன் பண்பாடு. அரப்பாவில் அரும்பிய அணிகலன்களே மொகஞ்ச தாரோ அணிகலன்களைவிடத் தொன்மையானவை. என்றாலும் நுட்பமான வேலைப்பாடுகளில் அரப்பா வேலைப்பாடு மொகஞ்ச தாரோவினதைவிட எவ்விதத்திலும் குறைந்தனவல்ல. அரப்பாவில் உள்ள ஒருமாலை நான்கு சரங்களையுடையதாய் 240 மணிகள் கோக்கப்பட்டதாய் எழில் மிக்கதாய் இலங்குகின்றது. மற்றொரு மாலை 27 பொன்மணிகளை உடையதாய்ப் பற்பல அழகிய வடிவங் களை உடையதாய்க் காணப்படுகின்றது. இவ்விரண்டைத் தவிர்த்து 50 அல்லது 60 மணிகள் கோத்த ஒரு அழகிய மாலையும் கண்டெடுக் கப்பட்டுள்ளது. இந்த மாலை பொன்மணிகளாலும் நவமணிக ளாலும் கோக்கப்பட்டது. இதன் வேலைப்பாடு மிக அற்புதமாக இருக்கிறது. இம்மாலைகளில் அழகிய பதக்கங்களும் சேர்க்கப் பட்டுள்ளன. இவை ஒன்று முதல் 13 பதக்கங்கள் வரை கோக்கப் பட்டுள்ளனவாய்க் காணப்படுகின்றன. பொன்மணிகள் அன்றி, முழுவதும் நவமணிகளாலான, மாலைகளும் உள. மொகஞ்ச தாரோவில் கண்டெடுக்கப்பட்ட மாலைகளைவிட அரப்பாவில் அதிகமான மாலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரப்பாவில் கண்டெடுக்கப்பட பல கழுத்தணிகள் வியத்தகு வேலைப்பாடுகள் கொண்டவைகளாய்த் திகழ்கின்றன. சில மாலை களில் சிவப்பு, மஞ்சள், நீலம், வைடூரியம், வைரம், மாணிக்கம், அமெசான் என்ற ஒரு வகைப் பச்சைக் கற்களுடன் சூரியகாந்தக் கற்கள் படிகக் கற்கள் பதித்தவைகளாயும் திகழ்கின்றன. இந்த மணிகள் ஆப்கானிசுத்தான், காசுமீர், திபேத், பர்மா பிற இந்திய நாடு களிலிருந்து கொண்டுவரப்பட்டவைகளாய்க் காணப்படுகின்றன. இங்குள்ள மணிகள் நல்ல வழவழப்பாகத் தேய்க்கப்பெற்று மெருகிடப்பட்டிருப்பதும் இவைகளைத் துவாரமிட்டிருப்பதும் அரிய செயலென அறிஞர்களால் மதிக்கப்படுகிறது. இடுப்பணி தமிழர்கள் தொன்று தொட்டுப் பல்வேறு வகையான இடுப் பணிகளை (நுசுப்பணிகளை) அணிந்து வந்துள்ளனர். இப்பொழுது இடையில் அணிவது ஒட்டியாணம் எனப்படும். முற்காலத்தில் மேகலை, கலாபம், விரிசிகை போன்ற பலவகை அணிகள் அணியப் பட்டு வந்தன. இத்தகைய அணிகள் அரப்பாவிலும் மொகஞ்ச தாரோவிலும் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அரைப்பட்டிகை நல்ல வேலைப்பாடுடையவை. சில 4 சரங்களையும் சில 6 சரங்களையும் உடையன. ஒவ்வொரு சரத்திலும் பீப்பாய் போன்ற சிவப்புக் கல்மணிகள் காணப்படுகின்றன. இவைகளில் சில மலர்களின் அரும்புகள் போன்றும் சில ஒட்டியாணம் போன்றும் சதங்கைகள் கோக்கப்பட்டுள்ளன. இங்கு முத்துக்கள் கோத்த நுசுப்பணிகள் சிலவும் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. இவைகளில் சிலவற்றில் நுண்ணிய வேலைப்பாடுகள் உள்ள அழகிய முகப்புகளும் காணப் படுகின்றன. இந்த நுசுப்பணிகள் சிலவற்றில் பல்வேறு உயர்ந்த நவமணிகள் கோக்கப் பெற்றிருக்கின்றன. இந்த மணிகளிற் பல வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவாய்க் காணப்படுகின்றன. தமிழகத்திலுள்ள கொற்கை முத்துகளும் இங்கு இடம் பெற் றுள்ளன. சிந்து வெளி நாகரிகத்தைக் கட்டி வளர்த்த திராவிடப் பெருங்குடி மக்களின் முதுபெருங் குரவர்கள் நனிசிறந்த நாகரிகத்தை யுடைய மக்கள் என்று கூற அவர்களின் நவமணிகள் இலங்கும் நுசுப்பணி ஒன்றே நல்ல எடுத்துக்காட்டாக மிளிர்கின்றன. மணி களை நன்றாகச் சோதித்து அவைகளில் குற்றமற்ற மணிகளைப் பொறுக்கி எடுத்துத் தேய்த்து மெருகிட்டு, துளையிட்டு இருப்பது ஆச்சரியப்படத்தக்கதாகும். அவர்களிடம் இந்த அரிய வேலை களைச் செய்ய உயர்ந்த கருவிகள் இருக்க வேண்டும் என்று நன்கு தெரிகிறது. பலமணிகளை ஒட்டவைத்து இணைத்துத் தேய்த்து அழகிய பூப்போலச் செய்துள்ளனர். கையணி தமிழர்கள் உலோக காலத்திற்கு முன்பே அதாவது புதிய கற்காலத்திலே காப்பு என்னும் நூலை அணிய முற்பட்டுவிட்டனர். அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கையணி பலாப்பழத்தின் மேல் தோலைப் போன்று மேலே முள் முள்ளாக சூரிய கதிர்களைப் போல் கூரிய முனைகளையுடையதாக இருக்கிறது. இத்தகைய கைக் காப்புகள் தமிழ் நாட்டில் மலைப்பகுதியில் உள்ள பழம் குடி மக்களிடமும் உள்ளன. இஃதன்றி பலவிதக் காப்புகளும் வளைகளும் இங்குக் கிடைத்துள்ளன. மேலும் பல செம்பு, வெள்ளி, பொன் காப்புகளும் கிடைத்துள்ளன. சில மெல்லிய தகடுகளால் குழாய் போன்று செய்யப்பட்டு உள்ளே மெழுகு அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு இப்பி, களிமண், மாக்கல், சங்கு, பளிங்கு முதலியவை களால் செய்யப் பெற்ற கை அணிகளும் உண்டு. மொகஞ்சதாரோவில் பலவிதமான மாலைகளும் காப்புகளும் கடகங்களும் வளைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை போற்றத் தக்கவையாகும். உருண்டையான பொன்மணிகளைக் கோத்து அழகிய முகப்புகள் இணைத்துச் செய்யப்பெற்ற கொலுசு களும் உண்டு. அன்றியும் சிவப்பு, கறுப்புக் கற்களால் செய்யப்பட்ட சிறிய காப்புகளும் உள்ளன. இங்குக் கிடைத்த மண் காப்புகள் அற்புத மான வேலைப்பாடுடையனவாய்த் திகழ்கின்றன. மண்ணால் செய்யப்பெற்ற இக்காப்புகளுக்கு பல்வேறு வண்ணங்கள் தீட்டப் பட்டுள்ளன. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட வெண்கல நாட்டிய மங்கையின் கையில் அடுக்கடுக்காய்ப் பல வளைகள் காணப்படுவது பார்க்கத் தக்கதாகும். பண்டுதொட்டுத் தமிழ் மகளிர் தங்கள் கைகளில் பொன், வெள்ளி, கண்ணாடி, மெழுகு, சங்கு, வளைகள் அணிவதைப் போன்று சிந்துவெளி மகளிரும் பல்வேறு விதமான காப்புகளும் கொலுக்களும் வளைகளும் அணிந்து வந்தது ஆராயத்தக்கதாகும். கைவிரல் அணிகள் அரப்பாவில் பொன், வெள்ளி முதலியவைகளால் செய்யப் பெற்ற கைவிரல் அணிகள் - மோதிரங்கள் பல கண்டெடுக்கப் பட்டுள்ளன. மொகஞ்சதாரோவில் செம்பு, வெண்கலம், சங்கு மோதிரங்கள் கிடைத்துள்ளன. அரப்பாவில் அழகிய பீங்கான் மோதிரங்கள் கூடக் கிடைத்துள்ளன. இங்குச் சில மோதிரங்கள் மெல்லிய உருண்டைக் கம்பிகளாலான வளையங்களாகக் கிடைத் துள்ளன. இவை மோதிரங்களாகவே கருதப்படுகின்றன. இஃதன்றித் தட்டையாகக் கம்பிகளால் தட்டப்பெற்ற உலோகத்தாலான மோதிரங்களும் உள்ளன. அரப்பாவில் கிடைத்த அழகிய மோதிரம் ஒன்று சதுர முகப்பு உடையதாய்க் காணப்படுகிறது. முகப்பின் மீது குறுக்கும் நெடுக்கு மாகப் பல கோடுகள் தீட்டப் பெற்றுள்ளன. மேலும் இங்குள்ள சங்குச் சிப்பி மோதிரங்கள் நல்ல எழிலுடன் திகழ்கின்றன. இங்கு அறிஞர்கள் மணிகள் பதித்த மோதிரங்களை எவரும் கண்டதாகக் கூறவில்லை. கால் அணிகள் கால் அணிகள், தண்டை, சிலம்பு, கால் காப்பு என்றெல்லாம் கூறப்படும். மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப் பெற்ற பொம்மை களில் வளைந்த கால் காப்புகள் - அதாவது தண்டைகள் காணப்படு கின்றன. இதன் மூலம் இங்குள்ள மக்கள் உறுதியாகக் கால் அணிகள் அணிந்திருக்கலாம் என்று கருத முடியும். இத்தகைய கால் காப்புகள் திராவிட நாகரிகம் பரவியிருப்பதாக அறிஞர்கள் கூறும் கிரீட் தீவிலும் காணப்படுகின்றன. மொஞ்சதாரோவில் கண்ட காலணிகள் கிரீட் தீவில் மட்டுமன்றி ஆந்திர நாட்டிலும் காணப்படுகின்றன. வடஇந்தியாவில் சிம்லா பகுதிகளில் வாழும் மலை இன மக்களிற் பலர் இன்னும் இந்தக் கால்காப்புகளை விடாமல் அணிந்து வருகின்றார்கள். தமிழர்களின் வரலாற்றுப் புகழ்பெற்ற அணியாகப் புலப்படும் சிலம்புகளும் இங்குக் கிடைத்துள்ளன. மொகஞ்ச தாரோவில் வெள்ளியால் செய்யப் பெற்ற கால் காப்புகள் போன்ற வடிவில் பல பொருள்கள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. கால்விரல் அணி மக்கள் கைவிரல்களில் அணியும் அணிகலனை மோதிரம் என்பர். சிலர் விரலாழி, கணையாழி என்றும் கூறுவர். தமிழர்கள் கை விரல்களில் அணியும் மோதிரம் போன்று கால் விரல்களிலும் பலவித அணிகள் அணிவர். அவை பெரும்பாலும் வெள்ளியாக இருக்கும். ஆனால் மொகஞ்சதாரோவில் தமிழ் நாட்டு மகளிர்களைப் போல் பெண்கள் கால்விரல் மோதிரங்களில் ஒன்றான மெட்டியை அணிந்து வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தைப் போன்று அரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் பலவிதக் கால் விரலணிகள் கிடைக்கவில்லை. ஆனால் நிச்சயமாகக் கால் விரல் அணிகள் அணிந்துள்ளார்கள் என்று கூற முடியும். ஆர். டி. பானர்ஜி போன்ற அறிஞர்கள் மொகஞ்சதாரோவில் பீலி போன்ற வடிவுள்ள வெள்ளிக் கால்விரல் மோதிரங்களும் கிடைத்திருப்பதாகக் கூறுகின் றார்கள். இதர அணிகள் இவையன்றி அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் பொன்; வெள்ளி, வெண்கலம், செம்பு, மாக்கல், சங்கு, பீங்கான், படிகம், பவளம், மணிக்கல், மண் போன்றவைகளால் செய்யப்பட்ட எண்ணற்ற அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவைகளிற் பலவற்றை இன்ன அணி என்று கூறுவதற்கில்லை. அங்குக் கிடைத்த பொம்மைகளில் தீட்டப்பட்ட உருவங்களை வைத்தே இன்ன அணி என்று தீர்மானிக்க வேண்டியதிருக்கிறது. இங்குப் பல தோடுகள் கிடைத்துள்ளன. அவை பொத்தான்களாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த அணியில் அழகிய இளம் பிறை வடிவம் கூடக் காணப்படுகிறது. இதன் நடுவில் ஒளிதரும் மணிகளும் சிப்பிகளும் பதிக்கப்பட்டுள்ளன. இங்குக் கிடைத்துள்ள சுமார் 2-6 அங்குல நீளமும், 2-3 அங்குல அகலமும் உள்ள பதக்கங்கள் தனிச் சிறப்புகள் வாய்ந்தன. அவை மாக்கல்லில் ஆக்கப்பெற்றன. இவற்றின் மீது இளம் பிறைவடிவம் ஒளிர்கிறது. எருது உருவமும் உள்ளது. இது சமய சம்மந்தமானதாகக் கருதப்படுகிறது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.5 குறிப்புகள் : 1. (A) The Civilization of Babylonia & Assyria - Jastrowe (B) The Excavation Babylon - Rebert Koldway. 2. Mohenjo - Daro and the Indus Civilization - Sir. John Marshall Vol. I & II. 3. Dravidian Civilisation - Prof. Rakhal Das Benerji, Modern Review Sep. 1927. “There are two different theories about the Dravidian invation or migration into India. One class of writers believe that the Dravidian migrated from India into Babylonia through Afganistan and Beluchistan. The similarity of Dravidian and Sumarian ethnic type was recongised by H.R. Hall long before the discoveries of Mohenja - daro and Harappa. It is of opinion that” It is by no means improbable that the Sumarians were an Indian race which passed certainly by land perhaps also by sea through Persia to the Valley of two Rivers? 4. The wonders that was India - A.L. Basham New York - 1954. P. 24 “The modern South Indian is usually a blend of Mediterranian and Proto - Australoid, the two Chief ethnic factors in the Harappa culture moreover the Harappa religion seems to show many similarities with these elements of Hinduism which are specially popular in the Dravidian Country.” 5. (அ) சிந்து வெளி மக்கள் கற்களைச் சோதித்து அவற்றின் தன்மைக் கேற்ற முறையில் உருவாக்கி வழவழப்பாகத் தேய்த்து மெருகிட் டுள்ளனர். இவ்வேலைப்பாட்டிற்குத் தேவைப்பட்ட கடைசல் எந்திரங்கள் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். - மொகஞ்சதாரோ டாக்டர். மா. ïuhrkh¡f«, v«.V., ãv¢o., (ஆ) பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம் யானைத்தந்தம், கண்ணாடி, ஓடுகள் முதலியவைகளால் சிந்துவெளியில் ஆபரணங்கள் செய்யப்பட்டன தமிழ் இந்தியா. ந. சி. கந்தையா பிள்ளை, சென்னை 1949. பக். 27. 6. அணிகளும் பணிகளும் ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட பொருள்களில் பல இரும்பு ஆயுதங்களும் வெண்கலப் பாத்திரங்களும் பொன் அணிகலன்களும் மட்கலங்களும் உள்ளன. ஆதித்த நல்லூர் நாகரிகம் சுமார் கி.மு. 1000ஆம் ஆண்டுகளுக்கு முன்னும் கி.மு. 2000ஆம் ஆண்டுகளுக்குப் பின்னும் எழுந்த நாகரிகமாக இருக்கலாம் என்று புதை பொருள் ஆராய்ச்சி அறிஞர்கள் முடிபு கட்டியுள்ளார்கள். இதன் மூலம் தமிழகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன என்று தைரியமாகக் கூறலாம். அதோடு அணிகலன்களை ஆக்கும் பொற்கொல்லர்களும் அவர்களின் நெருங்கிய உறவினர்களான தச்சர், கொல்லர், கன்னார், கல்தச்சர் போன்றவர்களும் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்தே தமிழகத்தில் நிலைத்த குடிகளாய் வாழ்ந்து வருகிறார்கள் என்று உறுதியாய்க் கூறமுடியும். அரப்பா நாகரிகத்தின் மூலம் திராவிடர்களின் முன்னோர்களான சிந்து வெளிக் கம்மாளர்கள் கி.மு. 3000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே அரும்பெரும் ஆயுதங்களை யும் அழகிய பொன் அணிகளையும் அரிய மணிகள் பதித்த அணி கலன்களையும் நாலிற்கு மேற்பட்ட மாடிகளையுடைய ஒப்பற்ற உறையுள்களையும் அரிய வேலைப்பாடுகளையுடைய வெண்கலப் படிமங்களையும் சுண்ணாம்பினாலும் நுரைகல்லினாலும் செய்யப் பட்ட எண்ணற்ற படிமங்களையும் முத்திரைகளையும் படைத்திருக் கிறார்கள் என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தெய்வ கம்மியர் தட்டார், தச்சர், கன்னார், கொல்லர், கல்தச்சர் ஆகிய ஐந்து பிரிவினரும் விசுவப்பிரம்மனின் திருக்கண்ணில் உதயமானவர்கள் என்றும், இவர்கள் விசுவகர்மா, மயன் ஆகிய தெய்வக்கம்மியர் வழியில் வந்தவர்கள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. பொற்கொல்லர்கள் தமிழகத்தில் கம்மியர், கம்மாளர், தட்டார், ஆசாரியார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அகராதிகளிலும் நிகண்டுகளிலும் இவர்களுக்கு, அஃகசாலையர், அறிவர் அற்புதர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர் கொல்லர், சிற்பியர், தபதியர், துவட்டர், புலவர், புனைவர், யவனர், வித்தகர், வித்தியர், வினைஞர் என்று பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தமிழர்களேயாவர். இவர்கள் பண்டைத் தமிழர் தொல்குடியில் உதித்தவர்கள் ஆவார்கள். இவர்களில் சிலர் தங்களை விசுவப்பிராமணர் என்று கூறி ஆரியர்களோடு இணைந்து கொள்ள முனைந்து இடர்ப்படுகின்றனர். இவர்களை நாகர் என்பாரும் உளர். இவர்கள் தமிழகத்தின் உயிர் நாடி என்றும் நாம் எண்ணுகிறோம். இந்த ஐந்து தொழிலாளர்களும் தமிழர்களின் சமூக வாழ் விற்கு இன்றியமையாதவர்கள். தச்சர்களும் கொல்லர்களும் வீடு களையும் வீட்டிலுள்ள இன்றியமையாத தட்டு முட்டுச் சாமான் களையும் செய்து உதவுபவர்கள். இஃதன்றி உழுதல், விதைத்தல், அறுத்தல் முதலிய மக்களின் உயிரோம்பும் தொழிலுக்கு இன்றியமை யாத கலப்பை, கொழு, அரிவாள் முதலியவைகளைச் செய்து கொடுப்பவர்கள். அன்றியும் பானைசட்டி, நெசவு முதலியன செய்யும் தொழிலாளர்களுக்கு இன்றியமையாத பொருள்களைச் செய்து கொடுப்பவர்கள். கன்னார்கள் செம்பு, பித்தளை, வெண் கலம், வெள்ளி, ஈயம், பொன் முதலிய உலோகங்களில் செம்பு, கிண்ணம், தாம்பளம், குடம், சருவம், கும்பா, வட்டில், கொட்டுக் கடவை, அண்டா, போணிச்சட்டி, தவலை, நெய்ச்சட்டி, வெண் ணெய்ச்சட்டி போன்றவைகளையும் கைபிடிகள், மணிகள், வண்டி களுக்கு வேண்டிய பல அலங்காரப் பொருள் போன்றவைகளையும் செய்பவர்கள். கல் தச்சர்கள், தபதிகள் போன்றவர்கள் கல் மரவைகள், கீரைச்சட்டி, அம்மி, உரல், குந்தாணி போன்றவைகளை யும் கோயில்கள், சிலைகள், செம்புப் படிமம் போன்றவைகளையும் செய்பவர்கள். பொற்கொல்லர்கள் தாம் ஆடம்பரப் பொருள் களாகிய அணிகலன்களை வெள்ளி, பொன் முதலிய தாதுப் பொருள்களிலும் மணிகள் இழைத்தும் செய்பவர்கள்.2 இவர்கள் மக்களுக்கும் தெய்வங்களுக்கும் மன்னர்களுக்கும் அணிகலன்களைச் செய்பவர்கள். இவர்கள் அதிக விலையுயர்ந்த பொன்னில் அணிகலன் களைச் செய்வதாலும் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைச்செய்து வருவதாலும் அதிகமான கூலி பெறுபவர்கள். பிற நான்கு விதமான தொழிலாளர்களையும் விட நல்ல நிலையில் இருப்பவர்கள். பொற்கொல்லர்கள் தமிழகத்தில் சிறு குழந்தைகளுக்கு, பிறந்து ஒரு ஆண்டு நிறைவு பெறும்பொழுதும், ஏன் அதற்கு முன்பும் காது குத்துகிறார்கள். காதில் கடுக்கன் அல்லது சிறு குச்சுகள் செய்து போடுகிறார்கள். அன்றியும் குழந்தைகளுக்கு மூக்குக் குத்து வதும் உண்டு. கழுத்தில் உருத்திராக்கம் பதித்த கவுடு, பொன் மலை, இடுப்பில் பொற் கொடி, பொற்சதங்கை, காலில் தண்டை, கொலுசு கையில் சிறு காப்பு முதலியவைகளும் செய்து அணிவிப்பார்கள். தமிழர்களின் வீடுகளில் காது குத்துவது ஒரு விழாவாகவே நடத்தப் பெறுகிறது. இதற்குப் பொற் கொல்லர்களுக்கு தட்சணைகளும் கொடுக்கப்படும். அப்பால் நடைபெறும் திருமண விழாவில் முதற்கட்டம் தாலிக்கு பொன்னுருக்கி விடுவதாகும். இது ஒரு நல்ல நாளில் உற்றார் உறவினர் நண்பருடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் சூழ இருந்து நடக்கும் விழாவாகும். இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தமிழகப் பொற்கொல்லர்களேயாவர். திருமண விழாவில் அதாவது திருநாண் பூட்டல் என்று கூறப்படும் மங்கலநாளில் தாலி செய்து கொடுக்கும் ஆசாரிக்கு தட்சணைகள் கொடுத்துத் தாலியைப் பெற்றுப் பெண் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. இந்த சமூகத்தில், இரும்பு வேலை செய்யும் கொல்லர்களே எல்லாத் தொழிலாளர்களுக்கும் தாய் போன்று இருப்பவர்கள். அவர்கள் செய்து கொடுக்கும் உளிகளும் சுத்தியல்களும், கொடிறு (குறடு)களும் பிறவும் இல்லாவிட்டால் ஏனைய தொழிலாளர்கள் தொழில் இயற்ற இயலாது. ஆனால் இவர்கள் தாம் இந்த ஐந்து விதமான தொழிலாளர்களிலும் பொருளாதார நிலையில் கீழே இருப்பவர்கள். எல்லோரிலும் கஷ்டமான தொழில் புரிபவர்கள். இவர்களிலும் கொஞ்சம் குறைந்திருப்பவர்கள் கல்தச்சர்களும், கன்னார்களும் ஆவர். மரவேலை செய்யும் தச்சர்களும், வெண்கலப் படிமங்கள் செய்யும் தபதிகளும் பொருளாதார நிலையில் சற்று உயர்ந்திருப்பவர்கள்.2 ஆனால் பொன் வேலை செய்யும் தட்டார் களே இந்த சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள். இவர்கள் மற்றத் தொழிலாளர்களைவிடப் பொருளாதார நிலையில் உயர்ந்திருப்பவர்கள். அதிகக் கஷ்டமில்லாத ஆனால் நுண்மையான தொழில் செய்து வாழ்பவர்கள். தமிழகத்தின் சமூக வாழ்விலும் பண்பாட்டிலும் இந்த ஐந்து விதமான தொழிலாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு.3 இவர்களில் தெய்வத் திருவுருவங்களை வடிக்கும் தபதிகள் உருவ வார்ப்புத் துறையிலும், அவைகளில் உயர்ந்த பாவங்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் சிற்ப சாத்திரங் களையும், கட்டிடக் கலை நூல்களையும் (வாத்து சாத்திரங்களை யும், சிவாகமங்களையும்) பயின்றவர்களாய் இருக்கிறார்கள். சமய முறைப்படி ஆச்சார அனுட்டானங்களைச் செய்பவர்களாய்த் திகழ்கிறார்கள். தமிழ் மக்களின் போற்றுதலுக்கும் மதிப்பிற்கும் உரியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் பழம்பெரும் நாகரிகங்கள் அனைத்திலும் பொற் கொல்லர்களின் மாபெரும் கைத்திறம் போற்றக் கூடியதாக மிளிர் கிறது. அது பழங்காலப் பண்பை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்கிறது. அவர்களின் கைவண்ணம் மெய்வந்த அணிகலக் கலையின் உயர்ந்த - ஒப்பற்ற அபிவிருத்திக்கு நற்சான்றாகத் திகழ் கின்றது. தமிழர்களின் அணிகலக்கலை, அரப்பாவின் திராவிட நாகரிகத்தின் மூலம் 5000ஆம் ஆண்டு1 பழமையுடையதாக மதிக்கப் படுகிறது; ஆதித்தநல்லூர் தமிழர் நாகரிகத்தின் மூலம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமை வாய்ந்ததாய் மதிக்கப்படுகிறது. இவைகள் தான் தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிகம் படைத்த பேரினம் என்று பெருமையோடு பேசுவதற்குச் சான்றாகும். திராவிடப் பெருங்குடியின் வழிவந்த கொல்லர்கள் சமைத்த அழகிய மணிகள் பதித்த அணிகலன்களும் பல அடுக்குகளையுடைய வான்றோய் மாடங்களும், முகில் தவழும் கோபுரங்களும் விமானங்களும் ஆயுதங்களும், வெண்கல பாத்திரங் களும் படிமங்களும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட கழுத்தணி களும், கையணிகளும், நுசுப்பணிகளும், தலையணிகளும், பிற வணிகளும் இன்றைய நாகரிகம் படைத்த அணிகளைவிடச் சிறப்புடையனவாய் விளங்குகின்றன. இவற்றைக் கண்டு நமது இந்திய அரசாங்கமும் அதன் அமைச்சரும் உலகில் ஒப்பற்ற பல அறிஞர்களும் போற்றியுள்ளார்கள். பாரதநாடு பழம் பெரும் பண் பாட்டைப் பெற்ற நாடு எனப் பாரிலுள்ள பலரும் பாராட்டுகின் றனர். இதன் மூலம் பாரத தேவிக்குப் பார்புகழும் பெரும் பேற்றைத் தேடிக்கொடுத்தவர்கள் தமிழகக் கம்மியர்களின் முன்னோர்களான திராவிடப் பெருங்குடியில் வந்த அரப்பன் மக்களாய் இருக்கின் றார்கள் என்று நாம் பெருமையுறுகின்றோம்; திராவிடக் கம்மியர்கள் பண்டு சமைத்த பழம் பெரும் அணிகலன்களும் மணிகலன்களும் வெளித் தோற்றத்தில் அழகு வாய்ந்தனவாயும், உறுதி வாய்ந்தன வாயும் நுண்ணிய வேலைப் பாட்டில் ஒப்பற்றனவாயும் விளங்கு கின்றன. நமது பொற் கொல்லர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொன்னை மயிரிழை போன்ற கம்பியாக இழுப்பதிலும் பொற்கட்டியை வெங்காயச்சருகு போன்று மெல்லிய தகடுகளாகத் தட்டுவதிலும் அணிகலன்களைக் கொத்துவதிலும் அறுப்பு வேலைகள் செய்வதிலும் தகடுகளை ஒட்டிப் பொடி வைத்து ஊதுவதிலும் சங்கிலிகளாகச் சமைப்பதிலும் கொடிகளாகப் பின்னி அப்பால் அதை இறுக்குவதிலும் இறுதியாக மெருகிடுவதிலும், சிறு சிறு வளையங்களாகச் செய்து ஒன்றாக இணைத்து ஊசி மாலை களாகவும் அணி வடங்களாகவும் செய்வதிலும் திறமை வாய்ந்த வர்கள். தகடுகளைச் சுருட்டுவதிலும் தங்கத் தகடுகளைச் செய்து அப்பால் அதை அச்சில் வைத்து அடித்து - இறுக்கிக் கொத்துமான வேலை(நகா வேலை)யின் மூலம் புடைப்பு உருவங்களைச் செய்வதிலும் அறுப்புமான வேலைப்பாட்டின் மூலம், செடி, கொடி, மலர், அரும்பு, காய், பறவை, விலங்கு தெய்வ உருவங்கள் போன்றவைகளைப் பெரிதாகவோ அல்லது ஒரு சிறு எறும்புக் கண்போன்ற அளவில் சிறிதாகவோ செய்து சித்திரப் பூவேலைகள் மிளிர எழிலுறப் பணிபுரிய வல்லவர்கள். மஞ்சள், சிவப்பு நிறங்களில் அணிகளுக்குத் திறம்படப் பழுப்புப் போடுகி றார்கள். பொன்னில் கலந்த வெள்ளி, செம்பு போன்றவைகளைப் புடம் போட்டு உயர்ந்த பைம் பொன்னாய்ப் பழங்காலத்திலே செய்து அதன் மாற்றும் உரையும் குன்றாதிருக்கச் செய்தார்கள். நவமணிகளைப் பொன் அணிகலன்களில் எளிதில் கீழே விழுந்துவிடாமல் பூண்பித்து வண்ண மலர்கள் போன்றும் அழகிய பழங்கள் போன்றும் வடிவான செடி கொடிகள் போன்றும் செய்வதில் பிறநாட்டார்களைவிடத் தமிழகப் பத்தர்கள் (கம்மியர்கள்) கைவண்ணம் வாய்ந்தவர்களாய் இன்றும் சிறப்புற்று விளங்குகின்றார்கள்.4 பணிகள் அணிகலன்களுக்கு, நிறத்திலும், தரத்திலும் பசுமையிலும் ஏற்ற தாதுப்பொருள் பொன்னேயாகும். சுடினும் செம்பொன் தன்னொளி குன்றாது என்பது தமிழர் கண்ட பொன்மொழி. பொன் எங்குக் கிடந்தாலும் மாசேறாது; வெள்ளியில் கறையேறும், செம்பில் களிம்பேறும், இரும்பில் துருப்பிடிக்கும். பசும்பொன் எக்காலத்தும் துருவேறாது; ஒளி குன்றாது; மாற்றுக் குறையாது; அதன் நிறம் உள்ளத்தைக் கவர்கிறது. பொன் வாழ்வை வளம்பெறச் செய்கிறது. பொன் அணிகள் செய்வதற்கு ஏற்ற, உயர்ந்த தன்மை வாய்ந்த கனிப்பொருளாக இருக்கிறது. ஒரு சிறு தானிய எடை நிறையுள்ள பொன்னை 500 அடி நீளம் உள்ள பொன் இழையாய் நீட்டி விடலாம். அது மாபெரும் கருவூலத்தின் சர்வ வியாபகமான சின்னமாக இலங்குகிறது. முற்காலத் தமிழக மகளிர் ஆயிரம் பொன்பெற்ற பொன் இழைகளாலான பொற்சரிகைப் பட்டாடை களைப் புனைந்து வந்துள்ளனர். பொன் இழை வேய்ந்த துகில்கள் மிகுதியாக முற்காலத் துணிச் சந்தையில் விற்கப் பெற்றன. பொன், வெள்ளி இழைகளைத் தூய்மையாகப் பார்த்து இணைத்து விலை யுயர்ந்த சரிகைச் சேலையாக மாற்றப்பட்டன; உயராடையாகப் போற்றப் பெற்றன. தெய்வத் திருவுருவங்கள் பொன்னால் வார்க்கப் பெற்றன. பொற்றகட்டால் சப்பரங்களும், கூரைகளும் செய்யப் பட்டன. சிதம்பரத்திலுள்ள ஆடவல்லான் ஆடிய பொன்னம்பலம் (கனகசபை) உலகப் புகழ் பெற்றதாய்த் திகழ்கிறது. விமான முகடு களில் பொற் கலயங்கள் ஏற்றப் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராள மாகப் பொன் கிடைத்தது. தமிழர்களில் ஏழை முதல் பணக்காரர் வரை பொன் அணிகள் பூண்பதில் பேரார்வம் கொண்டனர். பொன்னைத் தெய்வமாகப் போற்றினர். பொன்னின் மீது கொண்ட உயர்வான எண்ணத்தினாலே இறைவனைப் பொன் போன்ற நிறம் வாய்ந்தவனாகக் கருதிப் போற்றினர். தேவாரத்தில் பொன்னார் மேனியனே என்றும் பொன்னே என்றும் போற்றிப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளன. தமிழக வணிகர்கள் வெளிநாடுகளுக்கு, உள்நாட்டுப் பொருள் களை ஏற்றுமதி செய்து தமிழ்நாட்டில் வெளிநாட்டிலிருந்து ஏராளமாகப் பொன்வந்து குவியுமாறு செய்து வந்தனர். வணிகர்கள் வெளிநாடு சென்று வணிகம் புரிந்து ஏராளமான பொன்னைத் திரட்டி வந்தனர். தமிழக மன்னர்கள் வெளிநாடுகளை வென்று அங்கிருந்த பொன்னைச் சூறையாடி வந்தனர். வெளிநாட்டு மன்னர் களை வென்று அவர்களிடமிருந்து ஆண்டுதோறும் ஏராளமான பொன்னைத் திறையாகப் பெற்று வந்தனர். யவனர்கள் தமிழக முத்துக்கள், மசுலின் துணிகள் மிளகு போன்றவைமீது மோகங் கொண்டு கோடிகோடியாய்ப் பொற்காசுகளையும் பொற்கட்டி களையும் கொண்டுவந்து கொட்டிவிட்டுத் தமிழக முத்துக்களையும் துணிகளையும் பிறபண்டங்களையும் வாங்கிச் சென்றனர். தமிழகத் திலும் அதைச் சூழ்ந்த நாடுகளிலும் ஏராளமான பொன் தோண்டி எடுக்கப்பட்டது. பல மணிகள் சுரங்கங்களிலிருந்தும் கடலினின்றும் கிடைத்தன. அதனால் தமிழகம் பொன் கொழிக்கும் நன்னாடாய் விளங்கியது. தமிழக மகளிர்கள் பொன்காய்க்கும் மரமோ என்று பிறநாட்டார் ஐயுறும் வண்ணம் உச்சிதொட்டு உள்ளங்கால் வரை பொன் அணிகளைப் பூண்டிருந்தனர். ஏழை மக்கள் கூட ஏராள மான பொன் அணிகலன்களைப் பூண்டிருந்தனர். அணிகலன்கள் ஆக்குந் தொழில் சங்க காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பொன் வெள்ளி முதலிய தாதுப் பொருள்களில் அணிகலன்கள் செய்து அணியப் பட்டு வந்தன. அதற்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்களும் செப் பேடுகளும் தெய்வத் திரு உருவங்களும் சான்று தருகின்றன. சங்கக் கால மன்னர்களும் - ஏன்? தெய்வங்களும் தலையில் முடிகளைத் (பொன்னாலும் மணியாலும் செய்யப்பெற்ற மகுடங்களைத்) தரித்திருந்தனர். அவர்கள் மெய்யில் பல்வேறு அணிகலன்களையும் கையில் மணிகள் பதித்த பொன்னாலான செங்கோலையும் பூண் டிருந்தனர். அவை மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உடையனவாய் இருந்தன. சிலப்பதிகாரத்தில் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப் போன் யானென வரும் செய்யுள் மூலம் அக்காலத்திலும் அதற்கு முன்னும் மன்னர்கள் பொன்முடி புனைந்திருந்தனர் என்றும் அவைகளைத் தமிழகத்தின் பொற்கொல்லர்களே சமைத்தார்கள் என்றும் அறிகின்றோம். உருக்குத் தட்டார் சங்கக்கால மன்னர்கள் பல பொன் அணிகளைப் பூண்டிருந் தனர். அரசிகள் முடியினின்று அடிவரைப் பல பொன் அணிகளை அணிந்திருந்தனர். காவலர்கள், பாவலர்க்கும், பாணர்களுக்கும் பாடினிகளுக்கும் பிறர்க்கும் பொன் அணிகலன்களைப் பரிசாக அளித்து வந்தனர். பொற்காசுகளை வாரிவாரி வழங்கினர். இதற் கெல்லாம் காரணம் தமிழகம் பெற்ற பொருளாதாரச் செழுமையே யாகும். ஏராளமான அணிகலன்கள் செய்யப் பெற்றதால் எங்கும் பொற்கொல்லர்கள் பெருகினர். அக்காலப் பொற்கொல்லர்கள் தெய்வக்கம்மியர் என்று போற்றப் பெற்றனர். இவர்களில், அன்று உருக்குத் தட்டார், பணித் தட்டார் என்ற இரு பிரிவினர் இருந்தனர். உருக்குத் தட்டார் பெரிதும் பொன்னாலான அணிகலன்களைச் செய்வோராய் இருந்தனர். இன்னும் நாகாசு வேலைக்காரர், அறுப்பு வேலைக்காரர் என இரு பிரிவினர் தோன்றி நுணுக்கமான வேலை களைச் செய்து வந்தனர். தமிழகத்தில் தொழில்கள் பல எழுந்தமையால் தொழில் களுக்கு வேண்டிய கருவிகள் பலவும் எழுந்தன. இவைகளில் பலவற்றின் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. யானைக்குத் தொடி (வளை)யிடும் கொல்லரைப்பற்றி பெரும் பாணாற்றுப் படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.5 தொழிலாளர் களின் முக்கிய கருவியாகிய துருத்தி6 கொடிறு7 உலை8 சம்மட்டி9 முதலிய கருவிகளைப் பற்றியும் தொழிலாளிகள் செய்யும் வேலை களைப் பற்றியும் தமிழ் நூற்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பணித்தட்டார் பணிகள், அதாவது அணிகலன்கள் செய்யும் பொற் கொல்லர் களுக்குப் பணித்தட்டார் என்ற பெயர் உண்டு. இவர்களில் மட்ட வேலைக்காரர், கொத்துமான வேலைக்காரர், (நகாசு வேலைக்காரர்) அறுப்பு வேலைக்காரர் போன்ற பிரிவுகள் உண்டு. இவர்கள் அனை வரும் பொன் அல்லது வெள்ளிக் கட்டிகளை தங்களுக்கு வேண்டிய அளவு வெட்டி உருக்கி அப்பால் அதை அடித்தும் தட்டியும் அறுத்தும் பணிகள் செய்தார்கள். இவர்களிற் பலர் காற்றோட்ட மில்லாத சிறு அறைகளில் தங்கள் கைகளைக் கொண்டே அடித்துத் தகடுகளாகச் செய்தும் கம்பிகளாக இழுத்தும் வெட்டியும் ஒட்டியும் பொடி வைத்துப் பற்றவைத்தும் அராவியும் வாளால் அறுத்தும் தமர் ஊசியால் துளையிட்டும், உளியால் கொத்தியும் அணி கலன்களை ஆக்கினார்கள். இவர்களிடம் இயந்திரங்கள் எதுவும் கிடையாது. மேலும் இவர்களிடம் சில கருவிகளே உள்ளன. ஆனா லும் அவை இவர்களுடைய பணிகளை நிறைவாகச் செய்வதற்குப் போதுமானதாக இருந்த இவர்களுடைய தளவாடங்களில் சூடு உண்டாக்கவும் உருக்கவும் செய்வதற்கு உரிய ஒரு சிறு ஊது குழலும் ஒன்றாகும். இவர்களது உலைக்களம் ஒரு சாதாரண மண்குடத்தின் உடைக்கப்பட்ட மேற்பாகமேயாகும். மட்குடத்தை நடுவில் இரண் டாக உடைத்து வாய்ப்பக்கத்தைக் கீழே வைத்து, அடிப்பகுதியுள்ள உட்புறத்தை அகன்ற ஓட்டுச் சில்லால் மூடி அதன்மீது நெல்உமியை நிரப்பி மேலே மரக்கரிகளைப் பரப்பி நெருப்பு மூட்டி அதன்மீது மரக்கரியில் சிறிது பள்ளமாகத் தோண்டி வைத்து அதில் தங்கம் வைத்து உருக்கி அப்பால் அதை எடுத்து நீரில் போட்டு குளிர்ந்ததும் சுத்தியலால் அடிப்பார்கள். சிலவற்றை கொதிக்கவைத்தும் அடிப் பார்கள். சிலவற்றைக் குழலால் ஊதி உருக்குவார்கள் சிலவற்றைத் துருத்தியால் ஊதி உருகியதும் அதை எடுத்து நீரில் போட்டு எடுத்து அடிப்பார்கள். இவர்கள் ஆயிரக்கணக்கான கிராம் எடையுள்ள பொற்கட்டிகளையும் உருக்கி எண்ணற்ற நகைகளைச் செய்து விடுகின்றனர். அதிகமான பொன் துண்டுகள் இருந்தால் அவைகளை யெல்லாம் குகை என்னும் உறுதியாகச் செய்யப்பட்ட ஒரு கலவை மண்பாத்திரத்தில் போட்டு உருக்கிவிடுவார்கள். இவர்கள் பெரிதும் ஊது குழலின் தூண்டுதலாலே பொன்னை உருக்குகின்றனர். பெரிய அளவில் பொன் இருந்தால்தான் துருத்தியை உபயோகிப்பர். துருத்தியை உபயோகிக்கும் பொற்கொல்லர்கள் அதிகமாக அணி கலன்கள் செய்பவர்களாயிருப்பார்கள். ஆயுதங்கள் பொற்கொல்லர்கள் உலோகங்களை உருக்கும்பொழுது பெரிதும் கொடிறை உபயோகிப்பார்கள். இக்கொடிறு குகைகளை எளிதில் எடுத்து உலையில் வைக்கவும் எடுக்கவும் உபயோகப்படும். கொடிறு நீண்ட கைப்பிடியும் முன்பக்கம் வளைந்தும் இருக்கும் இரும்பாலான ஒரு கருவியாகும். உலோகங்களை உருக்கி உலை முகத்தினின்று எடுத்ததும் நீரில் போட்டு குளிரச்செய்து தேவைக் கேற்றாற் போல வெட்டிரும்பு என்னும் ஆயுதத்தால் வெட்டிச் சுத்தியால் தட்டியும் வளைத்தும் அடித்தும் கம்பியாகவோ, தகடாகவோ இழுத்தும் தட்டியும் அணிகலன்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். உலைமுகத்திலிருந்து எடுத்த பொற்கட்டியை வெட்டுவதற்கு முதலில் நீண்ட, கனத்த மரக்கட்டை மீது சதுரமான மேற்பக்கம் உள்ள ஒரு இரும்புக் கட்டியால் செய்த ஒரு பட்டறையைப் பயன்படுத்துவார்கள். இப்பட்டறை சதுரமாயும் மேற்பக்கம் 10 அங்குலச் சுற்றளவும் கீழ்ப்பக்கம் 7 அங்குலச் சுற்றளவும் உள்ள ஒரு இரும்புக் கட்டியேயாகும். இது எப்பொழுதும் பொற்கொல்லர்கள் முன்னர் இருக்கும். இவர்கள் ஒரு சிறு தாதுப் பொருளைக் கொதிக்க வைக்கவும் கொதிக்க வைத்தபின் எடுக்கவும் நீண்டு வளைந்த மெல்லிய தகட்டினாலான உலைக்கதிரைப் பயன்படுத்துகிறார்கள். உலோகப் பொருளை உலைக்கதிரால் எடுத்துப் பட்டறை மீது வைத்துச் சுத்தியால் தட்டுவார்கள். இவர்கள் அருகே எப்பொழுதும் உலைக்கதிரும் ஊது குழலும் இருக்கும். இஃதன்றி பெரிதும் சிறிது மான சாமணங்களும் பொடிவெட்டியும் அரங்களும் பல்வேறு வகையான முனைக்கதிர், பற்றுக் கொடிறு, திண்ணங்கள் போன்றவை களும் இருக்கும். பொற்கொல்லர்களுக்கு ஒரு முக்கியமான கருவி கம்பி இழுக்கும் நூல் சட்டமாகும். இது ஒரு தகட்டுவடிவான கருவியாகும். இத்தகடு பெரும்பாலும் உருக்குத் தகட்டினால் அல்லது பழைய அரங்களினால் செய்யப்பட்டதாக இருக்கும். இத் தகட்டின்மீது சிறிதும் பெரிதுமாக வரிசை வரிசையாக துளை செய்யப்பட்டிருக்கும். துளைகள் பெரிதினின்று வரிசைக் கிரமமாகச் சிறுத்துக் கொண்டே போகும். பொற்கொல்லர்கள் உலோகக் கம்பியை பெரிய துவாரத்திற் போட்டு பற்றுக் கொடிறினால் முதல் முதலாக இழுப்பார்கள். அப்படி வரிசைக் கிரமமாக இழுப்பதால் கம்பி சிறுத்து நீண்டு கொண்டே போகும். தங்களுக்கு வேண்டிய நீளமோ அல்லது பருமனோ வந்ததும் கம்பி இழுப்பதை நிறுத்திக் கொள்வார்கள். இதன் மூலம் மிக நுண்ணிய மயிரிழை போன்ற கம்பிகளைக் கூட எளிதில் செய்துவிடுகிறார்கள். எளிதாக 3 அங்குல முள்ள ஒரு பொன் அல்லது வெள்ளிக் கட்டியை 300 அடி நீளமுள்ள கம்பிகளாக இழுத்து விடுகிறார்கள். இஃதன்றி மெல்லிய கம்பிகள் செய்ய, வைரச் சட்டத்தையும் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ரூபாய் அல்லது அரை ரூபாய் வடிவில் இருக்கும். பொற்கொல்லர்களிடம் பல தரமான அச்சுகள் இருக்கும். அவை உறுதியான கலவைப் பொருள்களினால் செய்யப் பெற்றன வாகும். அவைகளில் மேற்பகுதி கீழ்ப்பகுதியென இருவகை அச்சுகள் இருக்கும். இந்த அச்சுகள் ஒரு கனத்த தகட்டில் பள்ளமாகத் தோண்டப்பட்டிருக்கும். அப்பள்ளத்தில் தங்களுக்கு வேண்டிய உருவ வடிவங்கள் தோண்டப்பட்டிருக்கும். அந்த அச்சின்மீது மெல்லிய பொன் அல்லது வெள்ளித் தகடுகளை வைத்து அதன்மேல் ஒரு இரும்புத் தகட்டை வைத்துப் பிடித்துச் சுத்தியலால் மெது வாகத் தட்டுவார்கள். தகட்டில் அவர்கள் விரும்பும் உருவம், புடை சிற்பம்போல் உருப்பெறும். புகலாகச் செய்ய வேண்டிய அணிகல னுக்கு மெல்லிய தகட்டை அச்சின்மீது வைத்து, அதன்மீது செம்பால் செய்யப்பட்ட உருவத்தால் அழுத்துவார்கள். உருவம் தகட்டில் பதிந்து விடும். ஒரு பாதி உருவானதும் அதே போன்று மற்றுமொரு பாதியையும் அச்சில் வைத்து முன்போல் அழுத்தியும் அடித்தும் மறு பாதியையும் உருவாக்குவர். அப்பால் இரண்டையும் இணைத்தோ அல்லது இணையாமலோ மெழுகடைத்துத் திண்ணம் போட்டு நகா பண்ணி மெருகிட்டு வைப்பார்கள். அச்சுகளில் மெழுகு அச்சுகள் என்றும், வெண்கல அச்சுகள் என்றும், உருக்கு அச்சுகள் என்றும், பல வகைகள் உண்டு. அணிகலன்களின் தன்மைக்கு ஏற்றவாறு பலவிதமான உருவமுள்ள அச்சுகளுண்டு. தகடுகளை அச்சின்மீது வைத்து அழுத்தி ஒழுங்குபெறத் தட்டும் திண்ணங் களும் இருக்கும். அணிகலன்கள் செய்வதற்குரிய படிவ அச்சுகளை முன்பு வைத்துக் கொண்டு உலோகத் தகடுகளையோ கட்டி களையோ நெருப்பிலிட்டு செந்நிறம் வரும்வரை பழுக்கக் காய்ச்சி உலைக் கருதினால் எடுத்து அச்சின்மீது வைத்துச் சுத்தியால் அடித்து அணிகலன்களை உருவாக்குவார்கள். நகா போட வெண்கலம் அல்லது உருக்கு அச்சும் உபயோகப்படுத்தப்படும். நிற்க, சூடுண்டான தாதுப் பொருள்கள் அச்சிற் பதிப்பிக்க எளிதான குழைவு உடைய தாக இருக்கும். அணிகலன்களை உருவாக்கும் படிவ அச்சுகள் அனேகம் உண்டு. அவற்றின் பெயர்கள் எல்லாம் அது உருவாக்கும் அணிகலன் களினின்று பிறந்தவைகளாகவே இருக்கும். எடுத்துக் காட்டாக நாகர் அச்சு, முருகு அச்சு, விசிறி முருகு அச்சு போன்றவை களாகும். பொதுவாகத் தமிழ்நாட்டுப் பொற்கொல்லர்கள் *(பத்தர் அல்லது ஆசாரி) பயன்படுத்திவரும் முக்கியமான ஆயுதங்களின் விவரம் அடியில் வருமாறு. 1. பெரிய பற்றுக் கொடிறு (பற்றுக்குறடு - கம்பி இழுக்கும் பெரிய பற்றுக்குறடு) 2. சிறிய பற்றுக் கொடிறு (பத்துக்குறடு - கம்பி இழுக்கும் சிறிய பத்துக்குறடு) 3. வாள் சட்டம் 4. ஆடு தமர் (சுழல் தமர்) 5. பிடித்தராவி (புடுச்சுராவி - அராவுவதற்கு உரிய பொருளைப் பிடித்துக் கொள்ளும்) 6. நூல் சட்டம் (கம்பி இழுக்கும் துவாரமுள்ள தகடு) 7. திண்ணம் (பூவேலைப்பாடு செய்யும் இரும்பு உளி) 8. பன்றி முடி (பன்றி முடியால் செய்த கைத் தூரிகை) 9. பித்தளைத் தூரிகை (பிரஷ் - நுணுக்கமான மினுக்கு வேலைப்பாட்டிற்காக மைக்காத் தகட்டின் மீது கம்பிகள் பொருத்திச் செய்யப்பட்ட தூரிகை) 10. பொடிவெட்டி (சிறு பொன் வெள்ளிக் கம்பிகளை வெட்டும் இரும்பு கத்திரிக்கோல்) 11. வளைந்த குழல் (இது பெரும்பாலும் சங்கிலிகளைப் பற்ற வைக்கப்பயன்படுவது) 12. வளைந்த நாகம் (துருத்தி வைத்து ஊதுதல்) 13. மெதுகதிர் (மெருகு கதிர்) 14. வெட்டிரும்பு (இரும்பினாலான உளி. இது வெள்ளி, தங்கம் முதலியவைகளை வெட்ட உபயோகப்படும்) 15. அரம் (உலோகங்களை அராவப் பயன்படும்) 16. வாள் (உலோகங்களை அறுக்கும் கருவி) 17. சாணை (திண்ணங்களைத் தீட்டும் கல்) இந்த ஆயுதங்கள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழர்கள் குடியேறியுள்ள ஈழகம், காழகம், சாவகம் போன்ற பகுதி களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவைகளின் உருவங்கள் ஒன்றுபோல் காணப்பட்டாலும் சில இடங்களில் பெயர்கள் மாறுபட்டுள்ளன. வேதியல் பொருள்கள் தமிழகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த பொற்கொல்லர்கள், அணிகலன்களைச் சமைப்பதற்கு ஒரு சில அயல்நாட்டு இராசயனப் பொருள்களை உபயோகித்து வருகின்றார்கள். ஆனால், முற்காலத் தில் இவற்றிற்குப் பதிலாக உள்நாட்டில் தயாரித்த பொருட்களைப் பயன்படுத்தி வந்தார்கள். எல்லா இடங்களிலும் இன்று பொன்னை உருக்கக் கட்டிக்காரத்தைப் பயன்படுத்தி (Borax) வருகிறார்கள். அணிகலன்களைச் செய்து முடித்தபின், அவைகளைத் துப்புரவு செய்யவும் ஒளியுண்டாக்கவும் மாங்காய் பேரிங் என்று கூறப்படும், ஒரு கருவியைப் பெரும்பாலும் உபயோகப்படுத்துகிறார்கள். அதன்பின் உப்பையும் உபயோகப்படுத்துகிறார்கள். பின், சால்ட் அம்மோனியா (உப்பு நவச்சார ஆவிக்குரியது), படிகாரம் முதலியவை களை மேலே தடவி அதன்மீது சிவப்புத் தூளைத் தூவி மெருகிடு கிறார்கள். கனிப் பொருள்களின் களிம்பைப் போக்கவும் துருவை அகற்றவும் கந்தகக்காடியை (சல்ப்ரிக் ஆசிடை)ப் பயன்படுத்து கிறார்கள். பொன் போன்ற தாதுப் பொருள்களில் கலந்துள்ள வேறு தாதுப் பொருள்களை அகற்றிப் பொன்னைத் தூய்மைப்படுத்து வதற்கு வெடியக்காடியை (நைட்ரிக் ஆசிட்டை) உபயோகப்படுத்து கிறார்கள். முற்காலத்தில் பொன்னைச் சுத்தப்படுத்த அதைப் புடம்மிட்டு வந்தனர். புடமிடல் மாற்றுக் குறைந்த பொன்னைச் சுத்திகரிக்க முதலில் அதைத் தகடாக அடித்து அப்பால் அதை 3/8 x 2 அங்குலத் தகடுகளாக அனைத்தையும் ஒன்றுபோல் வெட்ட வேண்டும். வீட்டுக் கூறை மேலே போடும் ஓட்டைத் தூள் செய்து அதில் உப்புத் தூளைக் கலக்க வேண்டும். பின் புளியைக் கரைத்து அதில் தகடுகளை நன்றாக நனைத்து எடுத்து ஓட்டுத் தூளில் புரட்டி வரிசையாக ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிப் பானை ஓட்டில் 2½ x 4 அங்குல நீளமுள்ள இரு ஓட்டை மேலும் கீழும் வைத்துக் கவசம் செய்து (பொதிந்து) பெரிய பானையில் எருவை (வரட்டியை) அடுக்கிப் புடம் இட வேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நாலு புடம் போட்டால் பொன் தூயதாகி விடும். அப்பொழுது அதனைச் சொக்கப் பொன் அல்லது சொக்கத் தங்கம் என்பார்கள். பழுப்பிடல் வேலை முடிந்த அணிகலன்களை, பழுப்பிட, துருசு, உப்பு, வெடியுப்பு ஆகியவைகளை அரைத்து அதில் அணிகலன்களைப் போட்டுப் புரட்டி நெருப்பில் வைத்துச் சிறிது சூடேற்றி தண்ணீரில் நனைத்தெடுப்பர். அணிகலன்கள் எல்லாம் நல்ல மஞ்சள் நிறமாக இலங்கும். இஃதன்றிப் பலவிதப் பழுப்புகளும் போடுவார்கள். பழுப்புப் போட்ட பின்னரே நகைகளுக்கு மெருகிடுவார்கள். மெருகிடல் மெருகிடுவதற்குப் பழுப்புப் போட்ட நகைகள் மீது ஒருவிதச் சிவப்புத் தூளைத் தடவி அப்பால் நாய்த்தோலால் துடைப்பார்கள். அதனால் அணிகலன்களுக்கு நல்ல மினுமினுப்பு எழும். மெருகிட மெருகுக் கம்பியால் நன்றாகத் தேய்ப்பது உண்டு. காரம் அணிகலன்களைச் செய்ய ஆரம்பிக்கும்பொழுது முதலில் பொன் தகட்டையோ கம்பியையோ நகையின் அளவிற்கேற்ப வெட்டி ஒன்றோடொன்றைப் பொருத்தி அதை இலேசாக ஒட்டுவார்கள். ஒட்டுவதற்கு உபயோகிக்கப்படும் பசையைக் காரம் என்பார்கள். காரம், கட்டிக்காரம் என்பன தோல் நீக்கிய குன்றின் மணித்தூள் முதலியவை சேர்த்துச் செய்யப்பட்டதாகும். இதனைச் செம்பு டப்பியில் வைத்திருப்பார்கள். பொன்னால் அணிகள் செய்யும்பொழுது இருதகடுகளை அல்லது கம்பிகளைக் காரத்தினால் மட்டும் ஒட்டிவிட முடியாது. அது உலையில் வைப்பதற்குச் சரியான முறையில் அமைத்துப் பார்ப்பதற்கே பயன்படும். ஆனால், பலமாக ஏதேனும் ஒரு பொரு ளால் தாக்கப்பட்டால் இணைப்புப் பிரிந்துவிடும். அசையாமல் இருதகடுகள் அல்லது கம்பிகள் ஒட்டுவதற்குப் பொடி வைத்தல் என்பார்கள். இரண்டு தகடுகளுக்கும் இடையே காரம் தடவி பொடி வைத்து ஊதிவிட்டால் இரண்டு தகடுகளும் ஒன்றாக இணைந்து விடும். இந்தப் பொடிக்குச் சுத்தமான வெள்ளி 1 பங்கும் அதே எடை செம்பும் சேர்த்து உருக்கி வைத்துக் கொள்வார்கள். இதனை மட்டம் என்பார்கள். தங்கம் 3 பங்கும் மட்டும் 1 பங்கும் சேர்த்து உருக்கப் பட்டதற்குப் பொடி அல்லது சன்னம் என்பார்கள். சிலவற்றிற்குக் கூடுதலாகவும் குறைதலாகவும் சேர்ப்பதுமுண்டு. இரண்டு பொன் தகடுகளையோ பொன் கம்பிகளையோ பொன் தூள்களைக் கொண்டு ஒட்டிவிட முடியாது. ஒட்டுவதற்கு மேலே சொன்ன பொடி அல்லது சன்னங்களே வேண்டும். ஓட்ட வேண்டிய இரண்டு பொன் தகடுகள் மீதும் பொருத்தில் சன்னத்தை வைத்து உலையிலிட்டு ஊதினால் சன்னம் உருகி இரண்டு தகடுகளை யும் ஒன்றாக இணைத்துவிடுகிறது. அப்பால் சன்னத்தை அராவியோ அல்லது சீவியோ வைத்துவிட்டால் இந்த ஒட்டு சிறிதும் தெரியாது. அணிகலன்கள் வார்ப்புப்போல் அழகாய் விளங்கும். இதற்குப் பொடி வைத்தல் அல்லது சன்னம் வைத்தல் என்று கூறப்படும். தமிழ்நாட்டுப் பொற்கொல்லர்கள் எங்கும் ஒரே விதமான ஆயுதங்களையே பயன்படுத்தி வருகின்றார்கள். 30 ஆண்டுகளாக ஒரு சிலர் தகடுகளை அரைப்பது கம்பிகளை இழுப்பது போன்ற காரியங் களுக்கு எந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள். இமயந்தொட்டுக் குமரிவரை நிறுப்பதற்கு முழு ரூபாயும் ஏனைய வெள்ளிக் காசுகளையும் படிக்கல்லாக உபயோகப்படுத்து கிறார்கள். நமது நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு படிக் கற்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள். தமிழகம், பம்பாய், ஆக்கிரா போன்ற இடங்களில் ஒரு ரூபாய் ஒரு தோலாவாகப் பயன் படுத்தி வந்தார்கள். இன்னும் பலவிடங்களில் களஞ்சிக்கொட்டை, மஞ்சாடி, குன்றிமணி அரிசி போன்றவைகளை உபயோகித்துப் பொன், எடையைப் பார்க்கின்றார்கள். சில இடங்கில் ஒரு மஞ் சாடிக்கு எட்டு அரிசி எடையாகக் கணக்கிடப்படுகிறது. இப் பொழுது எங்கும் ஒரே விதமான எடை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிப்பொற்கொல்லர்கள் பொன்னின் மாற்றுக் காண்ப தற்குப் பொன்னை உரைத்துப் பார்க்கப் பெரும்பாலும் எங்கும் உபயோகப்படுத்துவது உரைகல்லேயாகும். இது ஒரு சிறிய மெது வான கறுப்புக் கல்லாக இருக்கிறது. இதில் பொன் அல்லது வெள்ளியை உரைத்தால் அதில் அதன் நிறம்படியும். அதை வைத்துப் பொன் அல்லது வெள்ளியின் மாற்றுத் தீர்மானிக்கப்பெறுகிறது. பொன்னில் அதிகமான செம்போ வெள்ளியோ கலந்திருந்தால் அளவிற்கு ஏற்பப் பொன் வெண்மையான நிறங்காட்டும். இதன் மாற்றைத் திட்டவட்டமாகக் கணக்கிட மச்சம் அல்லது மாதிரிப் பொன்குச்சும் வைத்திருப்பார்கள். அதை அருகில் உரைத்துப் பார்த்து மாற்றை உறுதிப் படுத்துவார்கள். பொன் அணிகள் செய்வதற்குச் சுத்தமான தனிப் பொன் பயன்படாது. எனவே அதோடு செம்பு அல்லது வெள்ளி, அல்லது நாகம் கலப்பார்கள். எவ்வளவு கலப்பது என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஏன்? - ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அளவில் வேற்றுமை உண்டு. சில நாடுகளில் செய்யும் அணிகலன்களுக்கு மாதிரி வைத் திருப்பார்கள். சில இடங்களில் வேறு தாதுப் பொருள்களில் மாதிரி நகை செய்து காட்டி, அது அங்கீகரிக்கப்பட்ட பின்னரே பொன் அணி செய்வார்கள். தமிழ்நாட்டுப் பொற்கொல்லர்களிடம் மாதிரி நகைகளோ, மாதிரிப்படங்களோ கிடையா; நினைவிலே வைத்துக் கொண்டே அழகாக அணிகலன்களைச் செய்து விடுகிறார்கள். பல நகைகள் கட்டியாகச் செய்யப்படுவதில்லை. புகலாக அதாவது தகடாகச் செய்து அதை அச்சில் வைத்து அழுத்தி அப்பால் கொத்துமான வேலைகள் செய்கிறார்கள். இதன் உள்ளே மெழுகு இருக்கும். பின்பக்கம் பெரும்பாலும் பொற்றகடு பொதியமாட் டார்கள்; வெள்ளித் தகடே பொதிகின்றார்கள். பல பொன் அணி கலன்களைச் செய்து முடித்துக் கொண்டு ஒரு சிறு துவாரத்தின் மூலம் உட்பக்கம் மெழுகைச் செலுத்தி விடுகிறார்கள். வட இந்தியாவிலும் இலங்கையிலும் பொன் முலாம் பூசிய அணிகலன்களை அணிந்து வருகிறார்கள். தமிழர்கள் எங்கிருந் தாலும் பொன் முலாம் பூசிய அணிகலன்களை அணிய விரும்புவதே இல்லை. ஆனால் இருபது ஆண்டுகளாய்ப் பொன் அணிகலன் மீது அழகிய சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு, ஊதா வண்ணங் களில் மேல் பூச்சு (எனாமல்) வேலை நடைபெறுகிறது. அதை மக்களிற் பலர் விரும்புகின்றார்கள். பெரும்பாலும் இந்த எனாமல் பூச்சு அதிகமாக மோதிரங்களுக்கே பயன்படுகிறது. தமிழகப் பொற் கொல்லர்கள் அணிகலன்கள் செய்வதற்கு மிகப் பழமையான, செப்பமுறாத கருவிகளையே இன்று வரைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களின் கை வண்ணத்தால் உலகில் எந்த நாட்டுத் தொழிலாளர்கள் செய்யும் அணிகலன் களையும்விட மிகச் சிறந்த அணிகலன்களைச் செய்து விடுகிறார்கள். தமிழகப் பொற்கொல்லர்க்கொப்ப, ஏன்? அவர்களுக்கு அடுத்த படியில் நிற்பதற்குக்கூட உலகில் எவரும் இல்லை. அவர்கள் எந்திர உதவியின்றியே வெங்காயச் சருகுபோன்ற பொன் தகடுகளாலும், சிலந்தி வலையின் நூல்போன்ற பொன் கம்பிகளாலும் அணிகலன்கள் சமைத்து வருகின்றார்கள். இந்த பண்பட்ட நய நாகரிகமுடைய முற்பட்ட கால முறையில் செய்யப்பட்ட நகைகளின் தினுசுகள் நடை நயத்தில் அதனுடைய உச்ச நிலையை எட்டியுள்ளது. இன்றையத் தமிழகப் பொற் கொல்லர்கள், நினைவுக் கெட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த மரபின் நேரடியான வழித்தோன்றல்கள். தங்களின் முன்னோர்கள் கண்ட முறைகளையும், தனித் திறத்தையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கிறார்கள் என்று மேனாட்டறிஞர்கள் கூறுகின்றார்கள்.12 பொற்கொல்லர்கள் உழைப்பாளர் இனத்தவர்களேயாவர். ஆனால் சமூகத்தில் ஒரு கௌரவமான உறுப்பினராக இருந்து வருகிறார்கள். அவர்கள் தோளில் பூணூல் போட்டு இருக்கிறார்கள். தட்டார் (பொற்கொல்லர்) என்ற ஒரு இனம் பல்லாண்டாகத் தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில் வேறு இனத்தவர்கள் இத்தொழிலில் அதிகம் ஈடுபட்டிருப்ப தாகத் தெரியவில்லை. வேறு மாநிலங்களில் பிற இனத்தவர்கள் இதை ஒரு மதிப்பான தொழிலாக எண்ணி இதில் ஈடுபட்டிருக் கின்றனர். பொற்கொல்லர்கள் வழக்கமாகப் பண்டுதொட்டு இத்தொழி லில் நாணயமாக நடப்பதில்லை என்று கூறப்பட்டு வருகிறது. நம்நாட்டில் இதைப்பற்றிப் பல பழமொழிகளும் உண்டு. தட்டானுக் கஞ்சியன்றோ அணிந்தான் சிவன் சர்ப்பத்தையே என்ற புலவர் வாக்கும் எழுந்துள்ளது. தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப் பொன் எடுப்பான் என்றும் கம்மாளன் கடாவைக் காதறுத்துப் பார்த்தாலும் செவ்வரக்குப் பாய்ந்திருக்கும், என்றெல்லாம் பழ மொழிகள் உண்டு. இதைப் போன்ற பழமொழிகள் வட இந்தியா விலும் ஆங்கில நாட்டிலும் உண்டு. இன்று இந்த நிலை மாறி வருகிறது என்ற கூறலாம். பொற் கொல்லர்கள் குறித்த காலத்தில் அணிகலன் களைச் செய்து கொடுக்காது நாள்கடத்திப் புகல் சொல்லி வருவதும் பொன்னோடு அளவிற்கதிகமாகச் செம்பைக் கலந்து மக்களை ஏமாற்றுவதும், சேதாரத்தின் பேரால், நிறுத்தல் அளவையின் பேரால் மக்களை ஏய்ப்பதும் பற்றிப் பல கதைகள் நாடெங்கும் கூறப்படுவ துண்டு. இவைகள் காலப் போக்கில் மாறி வருகின்றன. இத்தொழி லாளிகள் மீது பல குற்றஞ்சாட்டப் பட்டிருப்பது மெய்தான். ஆனால் அவர்கள் இன்றும் வறுமையிலேயே வாடி வதங்குகிறார்கள்; அவர்கள் நிலை உயரவில்லை. தட்டினால் தட்டான் தட்டாவிடில் கெட்டான் என்பது பழமொழி. பொற்கொல்லர்களின் வினைநுட்பம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது கிறித்தவ ஊழி அரும்புவதற்கு முன்பே தமிழ்நாட்டுப் பொற் கொல்லர்கள் மிகுந்த நுட்பமான தொழில் திறன் வாய்ந்தவர்களாய் விளங்கினர். தமிழ் நாட்டுப் பொற்கொல்லர்கள் பசும் பொன்னைத் தமது கூரிய உளியாலும், கதிராலும் கொடி, இலை, பூ, நண்டு, மகரம், தவளை போன்ற நேரிய பல்வேறு வடிவம் பெற்றிலங்குமாறு செய்தனர். அவர்கள் அணிகளை அடித்தும் அராவியும் அறுத்தும் கொத்து மானங்கள் செய்தும் அழகுறச் செய்து முடித்தனர். முத்துகளையும், மணிகளையும் துளையிட்டனர். வைரம் போன்ற உறுதி வாய்ந்த மணியிலும் சிறிய துளைகளையிட்டனர். சாணைபிடித்தனர். பல்வேறு வண்ணம் பெறப்பட்டை தீட்டினர். மணிகளின் மாசு நீக்கினர். முத்துகளும் மணிகளும் துளையிடப் பெற்றதையும், சாணைக்கல் பயன்படுத்தப்பட்டதையும், தோளா மணிகுவித்தாற் போன்றிலங்கு தொல்குலத்து என்ற சிந்தாமணிச் செய்யுள் நன்கு விளக்குகின்றது. அதோடு மணிகள் சிறந்த உருவத்தையும் வண்ணத்தையும் பெறச் சாணை பிடிக்கப்பட்டது. தொன்மையான காலத்திலே தமிழகத்தில் சாணை பிடிக்கும் கல் இருந்தது என்பதை சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கல்போல் பிரியலம் (அகம் : 1 : 5-6; 356 : 9- 10) என்ற அகநானூற்று அடிகள் மெய்ப்பிக்கின்றன. அணிகலன்களை மாசு நீக்கக் கொல்லி என்ற கருவி பயன்படுத்தப் பெற்றது. இதனைப் பெருங்கதை, மதிமாசு கழீஇய வண்ணம் போலக் கதிர்மேல் இலங்கக் கைவினை முடித்தபின் அடிவினைக் கம்மியர் வெடிபட அடுக்கிய உயர்நலக் கோலத்து ஒள்ளொளி திகழ வகையமை கொல்லியின் வசையறத் துடைத்து (பெருங். 2:4:181-185) பழந்தமிழகத்துப் பொற்கொல்லர்கள் ஒரு அரிசிப் பரும னுள்ள பொன்னில் சிவபெருமானின் திரு உருவத்தைச் செம்மையுறச் செதுக்கி எழில் பெறச் செய்துள்ளனர். அவர்கள் தொழில் நுட்பம் மன்னர்களும் அறிஞர்களும் மக்களும் கண்டு வியந்து பாராட்டற் குரியதாய் இருந்தது. பொற் கட்டியை மெல்லிய சிலந்தி வலையின் இழை போல் - மயிரினும் மெல்லியதாய்ச் செய்து அணிகள் செய்தனர். பொற்ற கட்டை அடித்து ஈருள்ளிச் சருகினும் மெல்லியதாகச் செய்து அதில் அணிகலன்கள் ஆக்கினர். ஒரு சிறு இராக்குடியில் சிவபெருமான் திரிபுரம் எரிந்த கதையை சிறிதும் பின்னமின்றித் தீட்டினர். மாசில்லாத மணிகளைக் கண்டெடுத்து அவற்றைப் பொன் அணியில் பதிப்பித்து பல்வேறு இலைகளும் பூக்களும், காய்களும் இலங்கும்படி செய்து வந்தனர். இவைகளில் நன்கு அவர்கள் தொழில் நுட்பம் விளங்குகின்றது. ஆனால், இவர்கள் ஓரளவுதான் பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத முறையில் செய்ய முடிகிறது. இவர்களிடம் புதிய மாதிரிகளை உருவாக்கிக்காட்டும் எந்தக் கலைஞர்களும் இருப்ப தாகத் தெரியவில்லை. ஐரோப்பாவைப்போல் கலைஞர்கள் இவர்கள் மாதிரிகளையும் எடுத்துக் காட்டுகளையும் வரைந்தோ உருவம் அமைத்தோ கொடுப்பதில்லை. ஐரோப்பாவில் பொன் அணியில் செய்ய வேண்டிய அணிகலன்களுக்கு, கலைஞர்கள், படம், உருவம், எடை, மாற்று, விலைகள் முதலியவைகளையெல்லாம் பல நூற்றாண்டுகளாக அமைத்துக் கொடுத்து வருகின்றார்கள். ஐரோப்பாவில் கலைஞர்களே புதிய புதிய பாணியில் எல்லா நகை களையும் உருவாக்கி வருகின்றார்கள். அங்குள்ள பொற்கொல்லர்கள் அவர்களின் திட்டப்படி எந்திரம்போல் அணிகலன்களைச் செய்து கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் அணிகலன்களையும், படிமங் களையும் உருவாக்கத் திட்டமிடும் கலைஞர்களும் உருவாக்கும் தொழிலாளிகளும் ஒருவரேயாகும். தமிழகப் பொன் அணிகல வேலை எந்த நாட்டையும் விட, சரி எதிர்ப்புக் கூறினின்று மாறுபட்டதாய் பிறர் கண்களால் கவனிக்கும் பொழுது உள்ளத்தின் நினைவினின்று வெளிவரச் செய்யும் கலையுணர்ச்சியுடைய பட்டறி வாக மிளிர்கிறது. தமிழ்க் கலையின் உட்கருத்தும் குறிக்கோளும் தனிப்பட்டனவாகும். முறையும் வேறானதாகும். நோக்கமும் தமிழகக் கலையும், பாணியும் அழகு உணர்ச்சி சார்ந்த அனுபவத்தோடு கருத்துக் கொண்டிருக்கவில்லை. மிகச் சிறந்த உட்கருத்து கொண்ட தாக எண்ணப்பட்ட மொகலாய பாணியைக்கூட தமிழகப் பணி தழுவ மறுத்துவிட்டது. ஆரியப் பாணியைக்கூட உதரிவிட்டது. குறிப்புகள் 1. “The objects found comprised gold, bronze, and iron articles and pottery. The gold articls which were probably used as diadems, vary in size and are oval in shape; some have a stripe extending beyond the two extremities with a small hole for a wire or string at each end. They are thin plates ornamented with triangular and linear dotted designs and all were found folded up in a manner which suggest that some symbolical meaning may have been attached to the practice” - Catalogue of Prehistoric Antiquities, Adichanallur and Prumbair by Alexander Rea. F.S.A. (Scot) P. 3-4 2. அருமைப்பாடுடைய வினைத்திறம் அமையப் பொன்னினால் பலவகை அணிகலங்களைச் செய்பவர் பொற்கொல்லர் எனப்படுவர். பொன்னிலே நல்ல மணிகளைப் பதிக்கும் இயல்பறிந்து அணிகலன்களமைக்கும் இரத்தினப் பணித்தட்டார்களும் தமிழ்நாட்டிற் பெருக வாழ்ந்தார்கள். திருமணி குயிற்றுநர் என்பார் முத்துக்கோப்பவராவர் சங்க காலத் தமிழ் மக்கள் - திரு. க. வெள்ளைவாரணன் (1950) ப. 133 3. The five classes of artisans are :- 1. Manu, Kollar ........... (கொல்லர்) Black - smiths. 2. Maya, Taher (தச்சர்) ............................ Carpentars. 3. Tuvashta, Kannar (கன்னார்) Brass - founders. 4. Silpa Sirpi (á‰ã)...................... Mason, Stonecutters, sculptors, Architects, Immage makers and Painters. 5. Visvanna, Tattar (j£lh®)...................... Goldsmiths. These firve artisans were born out of the five faces of Visvakarma - (Foot Note:) Ancient Jaffna. P. 15 4. (அ) பூங்குழை ஊசற்பொறைசால் காது (பொருநர் 1 : 30) (ஆ) நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய (பொருநர் II : 161 - 162.) (இ) தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை (மதுரை 1: 704.) (ஈ) முன் கை வலம்புரி வளையொடு (நெடுநல்வாடை 1: 142) (உ) செவ்விரற் கொளீஇய செங்கேழ்விளக்கம் (நெடுநல்வாடை 1: 144.) (ஊ) நெடுநீர் வார்குழை களைந் தெனக் குறுங்கண் வாயுறை யழுத்திய வறிதுவீழ் காது (நெடுநல்வாடை II : 139 - 140.) 5. பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்லன் இரும்புவிசைந் தெறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ மாடத் திறையுறை புறவின் செங்காற் சேவல் இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர் (பெரும்பாண் 436 : 440.) 6. வன்புல மிறந்த பின்றை மென்றோல் மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன கவைத்தா ளலவ னளற்றளை சிதைய (பெரும்பாண். 206 :9) 7. கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரல் (குறுந். 198 :4.) 8. .................................................................... கொல்ல னெறிபொரற் பிரிதிற் சிறுபல் காய வேங்கை வீயுகும் (நற். 13 : 5-7.) 9. உலைக்க லன்ன பாறை யேறி (குறுந் 12 : 1.) 10. சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும் (மதுரை 512.) 11. உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம் புறநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல் பொருகா சேய்க்கும் (குறுந். 67 : 1- 4) 12. This elegant primitive form of ornament probably reached its limits for delicacy and design at a very arehaic period. The Hindu artisan of our day inherits the methods and skill he uses by direct descent of immemorial tradition” - Report on jewellery and precious stones in the French Exhibition of 1866.” - by Mr. Maskelyne. 7. ஒன்பதுமணிகள் (நவரத்தினங்கள்) அணிகலன்களும் மணிகளும் தமிழ் மக்கள் ஆதியில் மலர் அணிகளை அணிந்து வந்தார்கள். அப்பால் குன்றிமணி, மஞ்சாடி, களங்சிக் கொட்டை, மிளகு, கொத்தமல்லி, நெல்லிக்காய், மருதங்காய், களிமண் உருண்டை, மாக்கல்மணி, செங்கல்மணி, சிப்பிமாலை, சங்குமாலை போன்றவை களை அணிந்து வந்தனர். அவர்கள் தாதுப்பொருள்களைக் கண்ட தும் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம் போன்ற தாதுப் பொருள் களில் அணிகலன்களை அமைத்து வந்தனர் - அப்பால் மணிகள் இழைத்த பொன் அணிகளை அணிந்து வந்தனர். தமிழர்களின் முன்னோர்களான அரப்பா மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொன் அணிகளையும் மணிகள் பதித்த பொன், வெள்ளி அணிகளையும் பூண்டிருந்தனர் என்பது இந்திய வரலாறு கூறும் உண்மை. ஆனால் தமிழக மக்கள் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மணிகள் இழைத்த பொன் அணிகளைப் பூண் டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. கடைச் சங்கக் காலத்திற்கு முன்னர் தமிழகத்தில் ஏராளமான பொன் அணிகள் நிலவியிருக் கலாம் என்று கூறுவதற்கு இல்லை. கிறித்தவ ஊழி அரும்பிய காலத்திலிருந்து தமிழகத்தில் பொன், வெள்ளி அணிகலன்களும் மணிகள் பதித்த அணிகலன்களும் அரும்பி விட்டன என்று சொல்லலாம். இதற்கு நாம் கல்வெட்டுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் காட்டமுடியும். கிறித்தவ ஊழியில் நிலவிய பொன் அணிகளின் உருவங்களை நம்மால் எடுத்துக் காட்ட முடியாது. ஏனெனில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்த நகரங்கள் எதுவும் புதை பொருள் ஆராய்ச்சித் துறையின ரால் அகழ்ந்து ஆராயப்பட்டு அவைகளில் அணிகலன்களோ பொம்மைகளோ கண்டெடுக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டிருப்ப தாக நாம் அறியவில்லை; கேள்விப்படவும் இல்லை. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அதிகமான அணிகலன்கள் கிடைக்கவில்லை. கிறித்தவ ஊழிக்குப் பின் எழுந்த இலக்கியங்களில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. பொன் அணிகலன்கள் அணியப் பெற்று வந்தன. அதனால் பொன்னைப் பற்றி ஆராயப் பெற்றது. மணிகள் பயன்படுத்தப்பட்டன. மணிகளின் உயர்வும் குற்றமும் அதை மெருகிடும் முறையும் பட்டந் தீர்க்கும் வழிகளும் எழுந்தன. மணி வகைகளும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் இலக்கணங் களும் அரும்பின. பொன்னைவிட மணிகளுக்கு மதிப்பு உயர்ந்தது. மணிகள் எங்கெல்லாம் கிடைக்கும் என்பது ஆராயப் பெற்றது. பெரிய மணிகள் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கொண்டு வரப் பெற்றன. விலை மதிக்க வொண்ணாத மணிகள் பல, உலகில் கிடைத்தன. மணிகள் அணிகளில் மட்டும் இடம் பெறவில்லை. வேறு பல காரியங்களுக்கும் பயன்பட்டன. மணிகளின் தெய்வ உருவங்கள் கூட செய்யப்பட்டன. உயர்ந்த மணிகளை அடைவதற் காக மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டதும் உண்டு. மன்னர்களும் வணிகர்களும் உயர்ந்த மணிகளுக்கு அதிக விலை கொடுத்து வந்தனர். மன்னர்களும் பெரும் வணிகர்களும் விலையுயர்ந்த மணிகள் இழைத்த பொன் அணிகளை தெய்வங் களுக்குக் காணிக்கையாக அளித்து வந்தனர். நமது இலக்கியங்களில் (1) வச்சிரம் (2) இந்திர நீலம் (3) மரகதம் (4) கர்கேதனம் (5) பதுமராகம் (6) உருத்திராக்கம் (7) வைடூரியம் (8) விபுலம் (9) விமலகம் (10) இராசமணி (11) படிகம் (12) சந்திர காந்தம் (13) சௌகந்திகம் (14) கோமேதகம் (15) சங்கம் (16) மகாநீலம் (17) புட்பராகம் (18) பிரமமணி (19) சோதிரசம் (20) சீவயகம் (21) முத்து (22) பவளம் என்று பலவகை மணிகள் கூறப்பட்டுள்ளன. இன்று மேனாட்டில் நூற்றுக்கணக்கான மணிவகைகள் உள்ளன. அதில் தமிழ் நாட்டார் மணிகளில் சிறந்தவற்றைப் பொறுக்கி எடுத்து அவைகளை மட்டும் பயன்படுத்தி வந்தனர். அவை நவரத்தினம் - ஒன்பது மணிகள் ஆகும். நவமணிகளில் இரண்டு நீரில் விளைவன; ஏழு நிலத்தில் விளைவன. நீரில் விளைவன முத்து, பவளம் ஆகிய இரண்டே ஆகும். நிலத்தில் விளைவன வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமேதகம் எனும் ஏழும் ஆகும். இலக்கியங்களில் மணிகள் மிகத் தொன்மையான காலத்திலே, மணி இலக்கணங்கள் பல, தமிழில் இருந்தன. இன்று அவைகளில் ஒன்றைக் கூடக் காண முடிய வில்லை. தமிழர் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் மணிச் சோதனை (இரத்னப் பரீட்சை)யும் ஒன்று. இன்று வடமொழியில் இரத்தினப் பரீட்சை என்று ஒரு நூல் இருக்கிறது. அதன் தமிழாக்கம் நமக்கு இன்று கிடைத்துள்ளது. திருவிளையாடற் புராணத்தில் மணிகளின் இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்திலும் அதன் சிறப்புரைகளிலும் மணிகளைப் பற்றிய விளக்கங்கள் காணப் படுகின்றன. கல்லாடம், பிள்ளைத் தமிழ் போன்ற நூற்களிலும் நவமணிகளைப் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன. மணிகளின் நலன்கள் நமது மருத்துவ நூற்களிலும் சோதிட நூற்களிலும் மணி களின் பெருமையையும் இன்ன இலக்கனத்தில் பிறந்தோர்க்கு இன்ன மணி அணிந்தால் நலம் விளையும் என்று கூறப்படுகின்றன. மருத்துவ நூற்களில் மணிகளால் செய்யப்பட்ட பமங்கள் பிணிகளை நீக்கும் விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன. பொன் அணிகலன்கள் அணிவதும், பொற்கலங்களில் புசிப்பதும் இன்னின்ன நோய்களை அகற்றும் என்று கூறப்படுகின்றன. மணிகள் இழைத்த பொன் அணி கலன்களை அணிவதால் பல நோய்கள் அகல்வதோடு பொன்னும் மணிகளும் கூடி இரட்டிப்பான நலன்களைச் செய்கின்றன; நோய் அகல்கிறது; உடல் பலம் பெறுகிறது என்பது விளக்கப்படுகின்றன. மேனாட்டு விஞ்ஞான விற்பன்னர்கள் மணிகளைப் பற்றி ஆராய்ந்து பல மொழிகளில் நூற்கள் எழுதியுள்ளார்கள். மணி களைப் பற்றிய ஆய்வுத் துறையை மேனாட்டார் ஜெம்மாலேஜி (Gemology) என்று கூறுகின்றனர். மேனாட்டார் மணிகள் ஏன் கனமாகவும் உறுதியாகவும் இருக்கின்றன? மணிகளினூடே புகும் ஒளிக்கதிர் ஏன் வேறுபாடுடையதாய் விளங்குகிறது? என்பதையும் இன்று மிக நுணுக்கமாக ஆய்ந்துள்ளார்கள். ஒளி ஆராய்ச்சித் துறையில் உலகப் பெரும்புகழ் ஈட்டிய தமிழ்நாட்டு விஞ்ஞான விற்பன்னர் சர்.சி.வி. இராமன் மணிகளின் ஒளிகளைப் பற்றி ஒப்பற்ற ஆராய்ச்சி செய்துள்ளார். மணிகளின் இலக்கணம் நவமணிகள் அறிஞர்கள் மணிகளை, தலை, இடை, கடை, என்று மூன்று தரமாகப் பிரிப்பர். தலைமணிகள் வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்னும் நான்கும் ஆகும். இடைமணிகள் நீலம், புட்பராகம், வைடூரியம் எனும் மூன்றும் ஆகும். கடை மணிகள் கோமேதகம், பவளம் என்னும் இரண்டும் ஆகும். இவ்வகையன்றி நவமணிகளை, மகாரத்தினம் உபரத்தினம் என்றும் பிரிப்பர். நவமணிகளில் தமிழ்நாட்டு முத்துக்களும் இந்திய நாட்டு வைரமும் உலகப் புகழ் பெற்றவை. இன்று ஆங்கில நாட்டு அரசியின் மணிமுடியிலிருந்து அணி செய்வது இந்திய நாட்டில் விளைந்த கோகினூர் என்னும் உலகப் பிரசித்தி பெற்ற வைரமணியாகும். கிறித்தவ ஊழி எழும் காலத்திலே பாண்டிய நாட்டு முத்துக்கள் உரோம் நாட்டு அரசிகளின் மணிமுடியிலும் பட்டாடையிலும், ஒளி வீசியதோடு அவர்களின் மெல்லிய உடலையும் அணி செய்து நின்றன. கிளியோபத்திரா என்ற எகிப்திய அரசியின் உள்ளத்தைக் கவர்ந்து நின்றது கொற்கை முத்தேயாகும். அவ்வரசி கொற்கை முத்தை, ஆடையில் பிணைத்தும் அணிகளில் இணைத்தும் கரைத்துக் குடித்தும் வந்தாள். இன்றும் செயப்பூர் மரகதம் செகமெங்கும் புகழ் பரப்பி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் நாட்டுப் பவளம் வெளி நாட்டிற்கெல்லாம் சென்று நமது நாட்டிற்குப் பெருமை விளைவித்து வந்தது. தலைமணிகள் வைரம் (Diamond) உலகம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. முற்காலத்தில், காலக்கோளால் பூமியின் மீதுள்ள மரங்கள் வீழ்ந்து அதன் அடியில் புதையுண்டு போயின. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பூமியினுள் புதைந்து கிடந்த இந்த மரங்கள் செறிவுற்று நிலக்கரியாய் மாறியது. இதனோடு மேலும் மேலும் மண்ணும் கல்லும் சேர்ந்து புதையுண்ட நிலக்கரியைப் பலவித மாறுதல்களுக்கு ஆளாக்கியது. மேலே இருந்த பொருள்கள் அதை அழுத்தி வந்தன. உள்ளிருக்கும் வெப்பம் அதை அதிகமாகத் தாக்கியது. கரிய நிறம் வாய்ந்த நிலக்கரி வெண்மை நிறம் பெற்றது. கரிக்குன்று வைரக் குன்றாய் மிளிர்ந்தது. விஞ்ஞான விளக்கம் வைரத்தை விஞ்ஞானிகள் பரிசோதித்துப் பார்த்தனர். அது கரிப்பொருளால் ஆனதே என்று அவர்களின் சோதனையில் கண்டுபிடிக்கப் பெற்றது. கரிப்பொருளை உருக்கிப் பார்த்தனர். அது வைரமாக ஒளி வீசியது. உடனே உலகிற்கு தங்களது கண்டுபிடிப்பை வெளியிட்டனர். வைரம் அமிலங்களில் (திராவகங்களில்) கரையாது; சாதாரணச் சூட்டினால் நெகிழாது; அதிகமான சூடேற்றினாலும் அது இளகாது. ஆனால் தன்னந்தனியான பிராணவாயுவின் சுவாலையைக் கொண்டு அதைத் தாக்கினால் எரிந்து போகிறது. அப்பொழுது வைரத்தினின்று கரியமில வாயு ஒன்று தான் கிடைக்கும். இதனால் வைரமானது தனிக் கரிப்பொருளே தவிர வேறன்று எனத் திட்ட வட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுப்புக் கரி, நிலக்கரி ஆகியவைகளை விட நல்ல கலப்பற்ற கரிப் பொருளைக் குறுக்கினது தான் வைரம் என்பது. மரக்கரி, நிலக்கரி, காரீயகம் (Graphite) வைரம் ஆகியவை அனைத்தும் கரிப்பொருளின் உருவமாறுபாடுகளேயன்றி வேறல்ல. இப்பொருள்களின் பௌதீகக் குணங்கள் மாறுபட்டனவாய்க் காணப்பட்டாலும் அனைத்தும் கரிப்பொருளாகிய இராசாயனப் பொருளேயாகும். எனவே இவற்றின் இராசாயன குணங்களும் அமைப்பும் ஒன்றாக அமைந்துள்ளன. கரிப்பொருளின் திண்மை யானது நாளடைவில் இவற்றுள் ஒன்றைவிட மற்றொன்றில் அதிக மாகிக் கொண்டே வந்து இறுதியில் உறுதியானதும் வெண்மை வாய்ந்ததும் ஒளிமிக்கதுமான வைரம் மிகுந்து காணப்படுகிறது.2 இரத்தினக் கற்களின் (மணிகளின்) அமைப்பு முறை பலவகை யாகக் காணப்படுகிறது. ஒரு இரத்தினக் கல்லுக்கும் மற்றொரு இரத்தினக் கல்லுக்கும் அதிகமான வேறுபாடு காணப்படுகிறது. வைரத்தின் இராசயன அமைப்போ சாதாரணமானது. சுத்தமான வெறுங்கரிப் பொருள் ஒன்றைக் கொண்டே வைரம் அமைந்திருக் கிறது. மாணிக்கத்தில் இரண்டு மூலங்கள் உள்ளன. சில இரத்தினக் கற்கள் பல மூலங்கள் உள்ளனவாய் அமைந்திருக்கின்றன. வைரத்தின் தரம் வைரம் உயர்ந்ததா, குற்றமற்றதா? என்று பார்க்கச் சில சோதனைகள் உண்டு. வைரத்தின்மீது புளி, உப்பு இவைகளை அரைத்துப் பூசி, பாதரசத்தில் போட்டு எடுத்தால் நல்ல வைரம் நிறம் மாறாது இருக்கும். செயற்கை வைரம் நிறம் மாறிவிடும். வைரக் கற்களின் சிறப்பு அதன் ஒளியினைக் கோடச் செய்யும் சக்தியேயாகும். அதாவது வைரத்தின்வழி ஊடுருவிச் செல்லும் ஒளி இரேகையானது ஏனைய பொருள்களின் மூலம் ஊடுருவிச் செல்லும் பொழுது சாதாரணமாகக் கோடுவதைக் காட்டிலும் அதிகமாகக் கோடுகிறது. அதாவது ஒளிக் கிரணம் வைரத்தின் மேற் படுவதன் முன் எந்தப் பக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததோ அந்தப் பக்கத்தை விட்டு அதிகம் விலகி அது, வைரத்தினின்று வெளியே வரும் பொழுது காணப்படுகிறது. இவ்வாறு அமைந்த ஒளிக்கோடும் சக்தியானது ஒவ்வொரு பொருளிலும் அதன் திண்மைக் கேற்பக் குறைந்தும் நிறைந்தும் காணப்படும். திண்மை நிறைந்த வைரத்தில் இது நிறைவாகத் திகழ்கிறது. இந்த ஒளிகோடும் திறமையின் நிறைவினால்தான் வைரத்திற்கு ஒப்பற்ற ஒளியும் அரிய சோபையும் உயரிய காந்தியும் உண்டாகிறது. இதனால் வைரம் தனியாக ஒளிர்ந்து சிறந்து விளங்குகிறது. குற்றமற்ற வைரத்தின் மீது அதிலும் நன்றாகப் பட்டந் தீர்த்துப் பளபளவென்று மின்னும் வைரத்தின் மீது ஒளிக் கிரணம் ஒன்றுபட்டுக் கோடும்பொழுது வைரம் தகதகவென்று கண்ணைப் பறிப்பதுபோல் ஒளி வீசுகிறது. சோதிட முறைப்படி பார்த்தால், வைரம் சுக்கிரன், ஆதிக்கத் திற்கு உட்பட்டது. இடப லக்கனத்தில் அல்லது துலாலக்கனத்தில் பிறந்தவர்களுக்கு வைரம் அதிர்ஷ்டம் தரும் மணியாகும். சாதகத்தில் சுக்கிரன் பலம் உள்ளவனாக இருந்தாலும் வைரத்தை அணியலாம். கௌரவ உயர்வு, அகன்ற அறிவு, தனது தேவை நிறைவு ஆகியவை வைரம் அளிக்கும் தெய்வீகத் தன்மை, நல்ல வைரத்திற்கு உண்டு. அது ஆயுளை நீடிக்கத் துணை செய்யும். பைத்தியம் தீரவும் பாம்பு கடி முதலியவைகளுக்கு ஆளாகாமல் காக்கும் தன்மையும் வைரத் திற்கு உண்டு என்று கூறப்படுகிறது. குற்றமற்ற வைரமணி கிடைப்பது அரிது. உலகப் புகழ்பெற்ற வைரங்களிலும் குற்றங்கள் உண்டு. புகழ் பெற்ற வைரமாகிய கோகினூரிலும் கூட குற்றங்கள் உண்டு. வெண்மை, மஞ்சள், பொடி நிற நீலம், வெளிறிய சிவப்பு நிற வைரங்கள் கிடைப்பது அரிது. இந்திய வைரமணிகள் பாரத நாட்டிலுள்ள கோல்கொண்டா, பன்னா, வச்ரகுரம் போன்ற இடங்களில் வைரங்கள் முற்காலத்தில் கிடைத்தன. விந்திய மலைச்சாரலில் வைரப்படிகங்கள் வளம் பெற்றிருந்தன. 3 தட்சண பீட பூமியின் கிழக்குப் பக்கத்திலும் வைரச் சுரங்கங்கள் இருந்தன. கிருட்னா ஆற்றுப் பிராந்தியங்களில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த வைரக் கற்கள் கிடைத்தன. பழைய காலத்தில் கன்னட நாட்டைச் சார்ந்த கோலார் என்னும் இடத்தில் உயர்ந்த வைரங்கள் கிடைத்து வந்தன. இப்பொழுது இந்தியாவில் அதிகமான வைரங்கள் கிடைக்க வில்லை. பூமிக்கடியிலுள்ள வைரச் சுரங்கங்களை கண்டுபிடிக்க இந்திய அரசாங்கம் சோவியத் நிபுணர்களின் துணை கொண்டு பெரும் முயற்சி செய்து வருகிறது. வெளி நாடுகளில் வைரம் பிரேசில் நாட்டில் மினாசுகிரைசுடை மெண்டினாரியோ அபேட் என்ற பகுதிகளில் வைரச் சுரங்கங்கள் பெரும் அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பாகியா என்ற பகுதியில் 54 ஆயிரம் காரட் வைரம் கிடைத்தது. இன்று ஆப்பிரிக்கா வைர உற்பத்தியில் பிரேசில் நாட்டைத் தாண்டி விட்டது. 1906ஆம் ஆண்டில் உலக வைர உற்பத்தி 90 சதவிகிதம் தென்னாப்பிரிக்காவில் இருந்தது என்று கூறப்பட்டது. கிம்பர்லி, டீபிர்சு, ரோடேசியா, லூடரிசு விரிகுடா போன்ற பகுதி களில் நல்ல வைரச் சுரங்கங்கள் உள்ளன. அங்கு ஏராளமான வைரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. இன்று அமெரிக்கா விலும் சோவியத் யூனியனிலும் வைரங்கள் கிடைக்கின்றன. உலகப் புகழ் வாய்ந்த வைரங்கள் ஒரு காலத்தில் இந்திய வைரங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை களாய், வரலாற்றில் இடம் பெற்றவைகளாய் மிளிர்ந்தன. 1726-ஆம் ஆண்டுவரை உலகில் உள்ள வைரச் சுரங்கங்களில் கோல்கொண்டா சுரங்கங்களே சீரும் சிறப்பும் பெற்று விளங்கின. இந்திய வைரங்கள் வெளுறிய நீல நிறத்துடன் உறுதி மிக்கனவாய் ஒளிர்ந்தன. இந்திய வைரங்கள் விலை மதிக்கப் பெற்றவைகளாய் விளங்கின. 1. கோகினூர் வைரமணி இந்திய மொகல் அரசர், சாஜகானிடம் ஏராளமான வைர மணிகள் இருந்தன. துருவ நட்சத்திரத்தைவிட ஒளிதரும் ஒப்பற்ற வைரங்கள் அவரிடம் உள்ளன. அதை அவர் பொன்னால் செய்த ஒரு குத்து விளக்கில் பதித்து அந்த விளக்கை மக்கமா நகரிலுள்ள புனிதப் பள்ளிக்குக் காணிக்கையாக அளித்தார். அக்காலத்தில் இதன் விலை ஒரு கோடி ரூபாய்க்கு மதிப்பிடப் பட்டது. இவ்வரசரிடமிருந்த வைரம், மாணிக்கம் போன்ற மணிகள் பதித்த தங்கத்தினாலான மயிலாசனம் அன்று 53 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப் பெற்றது. இவ்வரசருடைய கருவூலத் தில் 1663ஆம் ஆண்டில் மகா மொகல் என்ற வைரமணி ஒன்று இருந்ததாம். அது 787½ காரட் எடையுள்ளது. கி.பி. 1526ஆம் ஆண்டில் பேபர் என்ற மொகலாய மன்னரிடம் அந்த மணி இருந்தது. இந்த அரிய பெரிய வைரமணி 1739ஆம் ஆண்டு வரை தில்லி மொகலாய சுல்தான்களின் கருவூலத்தில் இடம் பெற்றிருந்தது. அப்பால் இதை பாரசீக வீரனானநாதர் என்ற மன்னன் கவர்ந்து கொண்டு போனான். அப்பால் அது மீண்டும் இந்தியாவில் இரஞ்சித் சிங் என்ற மன்னரிடம் வந்தது. அவரிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனியார் பறித்துக் கொண்டார்கள். பின் பிரிட்டீசு அரசி விக்டோரியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரிட்டீசு மன்னர்களின் மணிமுடியில் இடம் பெற்று இன்றளவும் இருந்து வருகிறது. அன்று 186 மெட்ரிக் காரட் எடையாக இருந்த இம்மாமணி பல்வேறு காரணங்களால் குறைக்கப்பட்டு 1862ஆம் ஆண்டு 108-9 மெட்ரிக் காரட் எடையுள்ளதாய் பட்டந் தீட்டப்பெற்றது. இன்று பிரிட்டீசு அரசி எலிசபெத் அம்மையார் அவர்களின் மணிமுடியில் இலங்கி வருகிறது6 இதன் விலை பத்தாண்டுகளுக்குமுன் 60,00,000 ரூபாயாக மதிப்பிடப்பட்டது. இந்த வைரம் ஆண்கள் அணிந்தால் துரதிர்ஷ்ட மும் பெண்கள் அணிந்தால் நல்ல விளைவும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த வைரம் பிரிட்டிசு மக்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி அதை நீண்ட காலமாகச் சுரண்டி வந்ததின் நினைவாகப் பிரிட்டிசு மணிமகுடத்தில் இடம் பெற்றிருக்கிறது. இது இந்தியாவின் சொத்து. இன்றல்ல என்றாகிலும் நாம் அல்லது நமது வருங்கால மக்கள் மீண்டும் அதைப்பெற வேண்டும் என்பது எனது ஆசை. இந்திய மாதாவின் விருப்பமும் அதுதான். கோகினூர் என்றால் மலையின் ஒளி என்று பொருள் கூறப்படும். 2. மொகல் வைரம் இந்தியாவில் ஆட்சி புரிந்த மொகலாய மன்னர் சாஜகான் கோகினூர் என்னும் வைரமணியுடன் வைத்துப் போற்றி வந்த சிறந்த வைர மணிகளில் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்த பெரும் மணி களில் மொகல் வைரமணியும் ஒன்றாகும். சாஜகான் காலத்திற்குப் பின் இம்மா மணி ஆலங்கீர் என்னும் ஔரங்கசீப் அரசரிடம் போய்விட்டது. இது உயரமாகவும் வட்ட வடிவமாகவும் நுனி சிறுத்தும் அடி அகன்றும் அழகிய விமானம் போல் விளங்கியது. இது கோகினூர் வைரத்தினின்று வெட்டி எடுக்கப்பட்டது என்று எண்ணுவாரும் உண்டு. இதன் எடை 280 - காரட் இறுதி யில் இவ்வைர மணி உருசிய நாட்டிற்குப் போய்விட்டது. உருசியாவின் முன்னாள் ஆட்சி புரிந்த ஜார் சக்கரவர்த்தியினால் மிக அருமையான மணி என்று போற்றப்பட்டு வந்தது. இம்மணி இப்பொழுது இன்றுள்ள சோவியத் அரசாங்கத் திடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 3. ஆர்லாப் வைரமணி ஆர்லாப் அல்லது டாரியா நூர் மணி (Derya Noor) ஆற்றின் ஒளி என்று புகழ்பெற்று விளங்கியது. இந்த அழகிய வைரமணி மொகலாய மன்னர் பேபரிடம் இருந்தது. அப்பால் அது மைசூரில் உள்ள சிரிரெங்க பட்டினத்தில் உள்ள தெய்வ உருவின் கண்ணில் பதிப்பிக்கப்பட்டதாம். பின்னர் அதை 18ஆம் நூற்றாண்டில் எவரோ திருடிக் கொண்டு போய்விட்டனர். பிறகு அது எப்படியோ ஒரு ஆங்கிலக் கப்பலில் உள்ள கப்பித்தான் கைக்குப் போயிற்று. அவன் அதை ஆர்லாஃப் என்னும் உருசிய இளவரசனுக்கு 90,000ம் பவுணுக்கு விற்று விட்டான். அவ்விளவரசன் உருசிய அரசி காதரைனுக்குப் பரிசாக அளித்து அகமகிழ்ந்தான். அந்த வைரமணி இப் பொழுது சோவியத் உருசியாவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதன் எடை 199.6 மெட்ரிக் காரட் இந்த மணி மஞ்சள் நிறத்துடன் சோவியத் உருசிய மகுடக் கற்களின் நடுவே ஒளி வீசிக் கொண்டிருந்தது. இதன் விலை மதிப்பு ரூ. 50,00,000-க்கு மேல் இருக்கும். இதற்கு ஆம்சுடர் டேம், லாசுரெவ் என்ற பெயர்களும் உண்டு. இக்கல் மாண்புற ஒளிவீசப் பட்டந்தீர்க்கப்பெற்றுள்ளது. 4. பிட்வைரமணி பிட் அல்லது ரீசண்ட் என்று அழைக்கப் பெறும் அழகிய வைரமணி 1701ஆம் ஆண்டு ஆந்திர நாட்டில் கிருட்ணா ஆற்றங் கரையில் கிடைத்தது. அன்று அது 410 மெட்ரிக் காரட் எடை யுள்ளதாய் இருந்தது. அப்பொழுது சென்னைக் கவர்னராக இருந்த வில்லியம் பிட் என்பவர் அதை விலைக்கு வாங்கினார். அப்பொழுது அதன் மதிப்பு ரூ. 13,00,000ம் ஆகும். அப்பால் அவர் பிரெஞ்சு நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த ஆர்லியன் டியூக் என்பவருக்கு ரூ. 15,00,000-க்கு விற்று விட்டார். அதன்பின் அம் மணி பிரஞ்சு நாட்டு மன்னர் களின் மணிமுடியில் இடம் பெற்று அதை அலங்கரித்து வந்தது. இப்பொழுது அது 140.5 மெட்ரிக் காரட் எடை இருக்கும். இதன் பெறுமதி 60,00,000 ஆகும். இது இன்றும் பிரஞ்சு நாட்டிலுள்ள லோவரில் தேசீய சேகரிப்பு என்று கூறப்பட்டு வருகிறது. 5. நாசக் வைரக்கல் நாசக் என்ற நலமிக்க வைரமணி மைசூர் நாட்டினைச் சேர்ந்த கோலாரில் கிடைத்தாகக் கூறப்படுகிறது. இது எடை குறைந்த தாயினும் எழில்மிக்கது; ஒளி சிறந்தது; குற்றமற்ற நன்மணியாகப் போற்றப் பெறுகிறது. இது முக்கோண வடிவில் கவினுறப் பட்டந் தீட்டப் பெற்றுள்ளது. இதனை இந்தியாவில் ஆங்கில அரசாங்கத்தின் பிரதிநிதி யாக இருந்த மார்க் விசு, ஏடிங்சு என்பவர் தமது தக்காணப் படை எடுப்பின் போது கைப்பற்றிக் கொண்டார். இதன் எடை 80.3 மெட்ரிக் காரட் ஆகும்; விலை மதிப்பு ரூ. 40,00,000 ஆகும். 6. சான்சி வைரமணி பாரத நாட்டில் உள்ள புகழ்பெற்ற வைரமணிகளில் சான்சி வைரக்கல்லும் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க எழிலும் ஒளியும் வாய்ந்தது. 1489-ஆம் ஆண்டில் இந்த மாமணி சார்லசு-டி சானி என்பவர் கைக்குப் போனது. அப்பால் அது எலிசபெத் அரசி, எண்டிரி எட்டாமேரியா, கார்டினல் பெசாரின், பதினான்காம் லூயி ஆகியவர்களிடம் மாறி மாறிச் சென்றது. பின்னர் பிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் காணாமல் போய்விட்டது. அதன் பின் பெயன் அரசர் டெமி டோவ் இடமும் இந்திய இளவரசர் ஒருவரிடமும் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இதன் எடை 55 மெட்ரிக் காரட். இதை ஒரு இந்தியர் 60,00,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கினாராம். இன்று இது இருக்குமிடத்தைத் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. 7. நம்பிக்கை நீல வைரமணி வண்ணம் வாய்ந்த கிண்ணம் போன்ற மணிகளில் மிகச் சிறந்து ஒளிர்வது நம்பிக்கை நீல வைர மணியாகும். இதனை ஆங்கிலத்தில் ஹோப் புளூ என்று கூறுவர். இது, வண்ண முள்ள வைரமணிகளில் மிக மிகப் பெரிய தும் உறுதி வாய்ந்ததுமாகும். என்றாலும் இந்த அரும்பெரும் நீலநிற வைரமணி இப்பொழுது காணப்படும் அமைப்பை 1839- ஆம் ஆண்டிலே பெற்றுவிட்டது என்று அதன் வரலாற்றை நன்குணர்ந்த அறிஞர்கள் கூறியுள்ளார்கள். கி.பி. 1642-ஆம் ஆண்டில் டேவர்னியர் என்பவர் ஆரம்பக் காலத்தில் இந்தியாவினின்று திரும்பி வந்தபொழுது இதன் எடை 67 மெட்ரிக் காரட் எடையுள்ள இந்த வடிவான வைர மணியைத் தம்மோடு கொண்டு வந்தார் என்று சில மேனாட் டறிஞர்கள் கூறுகிறார்கள். இம்மணி 1668-ஆம் ஆண்டில் 14ஆம் லூயி மன்னருக்கு விற்கப்பட்டது. அப்பால் அதை 1830ஆம் ஆண்டில் 44 மெட்ரிக் காரட் எடையாகக் குறைத்து இலண்டனில் உள்ள தாம ஹோப்புக்கு 90,000 பவுனுக்கு விற்கப்பட்டது. 1911இல் ஏலம் விடப்பட்டு வாசிங்டனிலுள்ள எட்வர்ட் மெக்ளின் 30,00,000 பவுணுக்கு வாங்கினார். 8. சந்திர வைரமணி சந்திர வைரமணி என்னும் இவ்வழகிய மணி பாரசீக வீரன் நாதர்சா என்பவரால் இந்தியாவினின்று சூறையாடப்பட்ட கொள்ளைப் பொருள்களில் ஒன்று என்று இன்றும் கூறப்படுகிறது. இதனை மறுத்துரைப் பாரும் உண்டு. இது நாதர்சா பகைவர்களால் கொலையுண்டு முடிந்தபின் ஒரு ஆப்கானியப் போர் வீரனால் அவரிடமிருந்து கைப்பற்றப் பட்டு சப்ரா என்பவருக்கு விற்கப்பட்டது. அப்பால் அம்மணி உருசியாவிற்கு விற்கப்பட்டது. அதன் எடை அப்பொழுது 120 மெட்டிரிக் காரட் ஆக இருந்தது; விலை அன்று 7,00,000 ரூபாயாக மதிக்கப் பெற்றது. இவ்வழகிய வைரமணி இன்று ஐக்கிய சோவியத் சோசலிட் குடி அரசின் கருவூலத்தில் இடம் பெற்று ஒளிர்கின்றது. 9. சூப்ஸி வைரமணி சூப்ஸி வைரமணி என்று அழைக்கப்படும் சோகர வைரக்கல் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கத்தில் 1895ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இது 239 மெட்ரிக் காரட் எடையுள்ளதாய் இருந்தது. இதைப் பட்டந் தீட்டி 60,00,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நீக்கி ரோவர்தான் இந்த வைரமணியைக் கண்டெடுத்தார். அவரிட மிருந்து ஒரு இந்திய நாட்டு சமதான இளவரசி 10,00,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொண்டார். 10. நைசாம் வைரமணி நைசாம் வைரக்கல் கோல்கொண்டாவில் விலைக்கு கிடைத்த தாம். அதை ஐதராபாத் நைசாம் அரசர் விலைக்கு வாங்கினார். அதை அவரிடமே இருந்து வருகிறது. அந்த வைரமணியை அலங்காரப் பொருளாக அவர் தம் மேஜை மீது வைத்திருந்தார். அதன் எடை 340 மெட்டிரிக்காரட்; விலை 25,00,000 ரூபாய்க்கு மேல் மதிக்கப் பட்டது. 11. அக்பர்சா வைரக்கல் அக்பர்சா என்னும் மொகல் அரசர் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பதுபோல் அவரது பெயரைப் பெற்ற இந்த வைரமணியும் இந்திய வரலாற்றில் ஒரு சிறந்த இடத்தைப் பெற் றுள்ளது. இது முதன் முதலாக 119 மெட்டிரிக் காரட் எடையுள்ள தாக இருந்தது. இதில் சில அராபி எழுத்துக்கள் செதுக்கப்பட் டுள்ளன. இம்மணி 1886 ஆண்டில் ஒரு துனி வடிவில் (Drop - Shope) பட்டை வெட்டியதில் 75 மெட்டிரிக் காரட்டாக எடை குறைந்து விட்டது. இந்த மணியை பரோடா மன்னர் கெய்க்வார் 3,50,000 பவுணுக்கு விலைக்கு வாங்கினார். இன்று இதன் விலை 26,000 பவுண் என்றும் கூறப்படுகிறது.8 12. கல்லினன் வைர மாமணி கல்லினன் என்ற வைர மாமணிக் கல் தென் ஆப்பிரிக்காவில் 1905ஆம் ஆண்டில் பெரடரிக்வெல்சு என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இது உலகில் ஒப் பற்ற பெரிய மாமணியாக மதிக்கப்பட்டது. இந்த மாமணியை கண்டெடுத்ததும் 3106 மெட்ரிக் காரட் எடையுள்ளதாய் இருந் தது. இதனை தென் ஆப்பிரிக்க அர சாங்கம் விலைக்கு வாங்கி 1907ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் அரசர் ஏழாம் எட்வர்ட் என்பவருக்குப் பரிசாக அளித்தது. இதன் விலை அன்று 70,10,00,000 ஆக மதிக்கப் பெற்றது. 1908ஆம் ஆண்டில் இந்தப் பெரிய வைரக்கல்லை 9 பெருந்துண்டுகளாகவும் 87 சிறு துண்டு களாகவும் வெட்டினார்கள். வெட்டப்பட்ட அம்மாமணியின் சிறு பகுதி பிரிட்டி மன்னரின் செங்கோலில் இடம் பெற்றது என்று கூறுகிறார்கள். இந்த மாமணியின் பெருந்துண்டின் எடை 517 மெட்ரிக் காரட் ஆகும். இதன் பெரும் பகுதிகள் கிரேட் பிரிட்டனி லுள்ள மாமன்னரின் மகுடத்தில் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் ஜியார்ஜ் அரசர் பட்டத்திற்கு வந்ததும் கல்லினன் எண் 1-என்ற வைரமணிக்கு ஆப்பிரிக்காவின் விண்மீன் என்று பெயர் சூட்டப் பெற்றது. ஆப்பிரிக்கா பிரிட்டி அரசாங்கத்தின் உறுப்பாக இருப்பதை எண்ணி அந்த ஆப்பிரிக்காவின் விண்மீன் என்ற பெரிய வைரமணிக்குப் பிரிட்டனின் மணிமுடியில் இடம் அளிக்கப் பட்டது. இதனைத் துண்டாக்குமுன் இதன் விலை மதிப்பு வெள்ளி (டாலர்) 45,23,400 என்று மதிப்பிடப்பட்டது. (II) முத்து (Pearl) பண்டையத் தமிழர் கண்ட ஒன்பது மணிகளில் தலையானது வைரம். அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுவது முத்து. முற்கால முதுமக்கள் முத்துக்களை பெரிதும் விரும்பி, காதணியாகவும் மாலைகளாகவும், பல்வேறு விதமாகவும் அணிந்து வந்தனர். அரசிகள் முத்துக்களை, சேலைகளின் விளிம்பில் இணைத்து அணிந்து வந்தனர். தமிழர்களன்றி உரோமர், கிரேக்கர், அராபியர், எகிப்தியர், சுமேரியர், இத்தாலியர் போன்றவர்களும் ஏராளமாக முத்துக்களை வாங்கி அணிந்து வந்தனர். உலகிலேயுள்ள முத்துக் களில் பாண்டிய நாட்டிலுள்ள கொற்கை முத்தே உயர்ந்தது. இம்முத்திற்கு உலகம் முழுவதிலும் கிராக்கி உண்டு. யவனவர்கள் கப்பல்களில் வந்து பாண்டிய நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கையில் நங்கூரம் பாய்ச்சிப் பட்டினத்திற்குள் வந்து பொற் காசுகளையும், பொற்கட்டிகளையும் கொட்டிக் கொற்கை முத்துக் களை கொள் முதல் செய்து கொண்டு போனதை அவர்களின் வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. சிந்து வெளிப் பண்பாட்டில் கொற்கை முத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதை ஆய்ந்த வர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்களின் வணிக வளர்ச்சியைக் கண்டு வியப்புறுகின்றார்கள். மிகத் தொன்மையான காலத்திலே தமிழர்கள் தங்களின் இனத்தவர்களாகிய சிந்துவெளி மக்களோடு - நிலவழியாய் 2000 கல் தொலைவிற்கு மேற்சென்று வணிகத்தொடர்பு கொண்டிருந்தது இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. முத்து வகைகள் முற்காலத்திலே முத்துக்கள் பலவகைப்பட்டவைகளாய் இருந்தன. (1) வட்டமுத்து (2) ஒப்புமுத்து (3) குறுமுத்து (4) நிம்போளம் (5) பயிட்டம் (6) அம்பு (7) கரடு (8) இரட்டை (9) சப்பாத்தி (10) சக்கத்து (11) குளிர்ந்த நீர் (12) சிவந்த நீர் என்று பல வகைப்பட்டவைகளாய் இருந்தன எனத் தென் இந்திய சாசனங் களில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இவைகளில் வட்டமுத்து என்பது, உருண்டையான முத்து. அனுவட்டம் என்பது கிட்டத்தட்ட வட்டவடிவமானது. ஒப்புமுத்து ஒளிவிடும் உயர்முத்து. குறுமுத்து சிறுமுத்தாகும். கரடு என்பது முரடான முத்து. இரட்டை என்பது இருமுத்துக்கள் இயற்கை யாகவே இணைந்து காணப்படுவது. ஏனைய முத்துக்களுக்கு நல்ல விளக்கம் தெரியவில்லை. தோற்றம் முத்துக்கள் கடற்சிப்பிகளின் உடலினின்று எடுக்கப்படு கின்றன. எனவே இவைகளைக் கடல் முத்து, சிப்பி முத்து என்று கூறுவர். ஏனெனில் குன்றிமுத்து, புளிய முத்து, ஆமணக்கு முத்து, ஆகியவைகளுக்கும் இதற்கும் வேற்றுமை தெரிவதற்கேயாம். ஆனால் முத்து என்று சிறப்பாக சொல்லப்படுவது இந்தக் கடல் முத்துதான். சிப்பி முத்துக்கள் கடலில் விளைந்து கிடந்தால் மீனவர்கள் முத்து எடுக்க முனைவர். இது மிகக் கஷ்டமான தொழில். கடலின் அடியில் பாறைகளில் முத்துச் சிப்பிகள் குவியல் குவியலாக விளைந்து கிடக்கும். அவற்றை முத்துக்குளிக்கும் மீனவர்கள் தோணியிற் சென்று கடலில் மூழ்கித் தங்களோடு கொண்டு போயிருக்கும் கூடையில் வாரி வைப்பார்கள். கூடை நிறைந்ததும், தங்களைப் பிணைத்திருக்கும் கயிற்றை அசைப்பார்கள். தோணியில் இருப்பவர்கள் கயிற்றை இழுத்துக் கூடையை வெளியே கொண்டு வந்து அதிலுள்ள முத்துச் சிப்பிகளைத் தோணியில் கொட்டு வார்கள். முத்து எடுத்ததும் முத்துக் குளிப்பவர்கள் மேலே வரு வார்கள். கடலின் அடித்தளத்திலிருந்து சிப்பிகளை வாரும் மீன வர்கள் கடலில் வாழும் பயங்கரமான சுறா மீன்களுக்குச் சில சமயங் களில் ஆளாவதும் உண்டு. சுறா மீன்களின் அபாயங்களுக்குத் தப்ப மீனவர்கள் பல மந்திரங்களும் தந்திரங்களும் கையாண்டு வருகி றார்கள். முத்துக்களின் பிறப்பு முத்துக்களில் அடங்கி இருக்கும் மூலப்பொருள் சுண்ணாம்புச் சத்துதான் என்று விஞ்ஞானிகள் முடிபு கட்டியுள்ளார்கள். முத்துச் சிப்பிகள் தங்கள் மீதுள்ள இரு ஓடுகளையும் திறந்து கொண்டு வெளியே சஞ்சரிக்கும் பொழுது அதனுள் சிறுமண், கல் போன்ற பொருள்கள் சில சமயங்களில் சென்றுவிடும். மெல்லிய தசை களுள்ள சிப்பிக்கு இது ஒரு பெரும் வேதனையாய் இருக்கும். எனவே அதைத் தணிக்க விரும்பித் தன் உடலில் இருந்து ஒருவகைத் திராவகத்தை வெளிப்படுத்தும். சிப்பியின் உடம்பில் உள்ள கல் அல்லது மண் மீது அத்திராவகம் ஒட்டிக் கொள்ளும். அதனால் அதன் வேதனை நீங்குகிறது. அப்பால் அதைச் சுற்றிக் கடினமான தசை வளரும். நாளடைவில் உள்ளிருக்கும் கல் அல்லதுமண் முத்தாக மாறுகிறது. முத்துக் கிடைக்குமிடங்கள் முத்துக்கள் இந்தியா, சீனா, சப்பான், அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. பண்டு தொட்டு இந்தியாவில் சிறப்பாகத் தென் பாண்டி நாட்டில் முத்துக் குளிக்குந் தொழில் நடைபெற்று வருகிறது. மன்னார் குடாக்கடலில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தை அடுத்துள்ள கடலில் நல்ல முத்துக்கள் விளைகின்றன. இந்த முத்துக்களுக்கு உலகமெங்கும் மதிப்பு இருந்து வருகின்றது. கொற்கை முத்து குவலயம் அனைத்திலுமுள்ள எல்லா மணிச் சந்தைகளையும் எட்டிப்பார்த்தவை. பாரசீக வளைகுடாவில் விளையும் முத்துக்களைவிட மன்னார் வளைகுடாவில் விளையும் முத்துக்கள் மதிப்புடையனவாகும். கொற்கை முத்துக்கள் வெண்மை யும் திண்மையும் ஒளியும் அழகும் வாய்ந்தனவாகும். வான்மீகி இராமாயணத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரத்தை முத்தூர் என்னும் பொருள்தரும் கவாடபுரம் எனக் கூறப்பட்டுள்ளது. நன் முத்து பெரிதாகவும் உருண்டையாகவும் தெளிந்த நீர் போன்றும் திகழும் முத்துக்களே நன்முத்துக்கள் என்று நவிலப்படும். தூயதாயும் வழவழப்பாயும் விண் போன்ற ஒளியுள்ளதாயும் நீரொளியுள்ள தாயும் இருக்கும். முத்துக்கள் சிறந்த முத்துக்கள் என்றும், அவை களை அணிந்தால் எல்லா நலன்களும் பெருகும் என்றும் கூறப்படு கிறது. குற்றங்கள் முத்துக்கள் விகாரமாகவும் அழுக்குப் படிந்தும் கரடு முரடாகவும் உப்புப் போலவும் முடிச்சு விழுந்தும் ஆமை உரு பிறை வடிவம், தேன்மெழுகு போன்ற புள்ளி, நீல நிறம், கறுப்பும் மஞ்சளும் கலந்த வண்ணம் வாய்ந்தும் வேற்றிடத் துளையுள்ளவையாயும் இருந்தால் குற்றம் உள்ளனவாக மதிக்கப்படும். மருத்துவத்துறை விளக்கம் முத்து குளிர்ச்சியும் தித்திப்பும் உள்ளது. கண் நோய், வாத நோய், இரத்த பித்தம், காய்ச்சல், மயக்கம் முதலிய நோய்களை அகற்றும். நீண்ட ஆயுளையும், மேனி மினு மினுப்பையும் நல்கும். முத்துப் பபம் பித்தம் காசம் கபம் முதலிய எல்லா, பொல்லாப் பிணிகளையும் போக்கும். வீரிய விருத்தியை அளிக்கும். முத்துச் சுண்ணம் கபதோசத்தைக் கருவறுக்கும். இஃதன்றி விக்கல், அக்கினி மந்தம் போன்ற அனேக நோய் அகலும். சோதனை உப்பும் எண்ணெயும் கலந்த வெந்நீரில், ஓர்இரவு முழுவதும் முத்தை ஊறவைத்து அப்பால் அதை நெல்லோடு சேர்த்துத் தேய்த்துப் பார்க்கவும் நல்ல ஒளியோடு இருந்தால் நன் முத்து என்றும் ஒளி குன்றி நின்றால் செயற்கை முத்து என்றும் தெளிக. இப்பொழுது உலகில் ஏராளமான செயற்கை முத்துக்களும், செயற்கை முறையில் கடலில் விளைவிக்கும் முத்துக்களும் மலிவான விலையில் எங்கும் விற்கப்படுகின்றன. சப்பான் போன்ற நாடுகளில் மேற்கண்ட இருவகை முத்துகளும் கிடைக்கின்றன. முத்து மாலைகள் முத்து அணிகலன்களை முற்காலத் தமிழ் மக்கள் விரும்பி அணிந்து வந்தனர். மேனாட்டு மாதர்கள் கூட மலட்டுத் தன்மை நீங்கவும், கண்பார்வை தெளிவுறவும் முத்துக் கொலுசையும் முத்து மணிவடங்களையும் அணிந்து வந்தனர். தமிழ் நாட்டு மகளிர் களுக்கு முத்துமாலைகளில் மோகம் அதிகம். அவர்கள் தங்கள் மக்களுக்கு முத்து மாலை, முத்து மணி, முத்தையா, முத்தம் பெருமாள், முத்துக் கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் சூட்டி வந்தனர். பண்டையத் தமிழகத்தில் முத்துமாலை 5 வகைப்பட்டதாய் இருந்தது. (1) தலைமணியுடையது (2) துணைத் தலை மணியுடையது (3) கணு நிலையுடையது (4) தரளக் கட்டுடையது (5) செறி நிலையுடையது. 1. தலைமணிவடம் வடத்தின் நடுவே பெரிய மணியை இடம் பெற செய்து, கோத்து இரு பக்கங்களிலும் ஒத்த அளவுள்ள சிறிய முத்துமணி களை எடுத்துக் கோத்தவடம் தலைமணி வடம் என்று கூறப்படும். 2. துணைத் தலைமணிவடம் நடுவில் ஒரு பரு முத்தும் இரு புறங்களிலும் ஒத்த அளவினை யுடைய சிறுமுத்து மணியும் அப்பால் பெரும் மணியும் இடம் பெறுமாறு மாறி மாறிக் கோத்த முத்து மாலை, துணைத் தலைமணி வடம் எனப்படும். 3. கணு நிலைமணிவடம் நடுவில் ஒரு பெரும் முத்தும் இருபுறமும் ஒத்த பருமனுள்ள இரண்டிரண்டு சிறு முத்துகளுமாக மாறி மாறிக் கோத்த வடம் கணு நிலைமணிவடம் எனப்படும். 4. தரளக் கட்டுவடம் ஒத்த அளவுடைய நித்திலங்கள் (முத்துக்கள்) கோத்த வடம் தரளக் கட்டு வடம் எனப்படும். முத்துக்குத் தரளம், நித்திலம் என்ற பெயர்கள் உண்டு. 5. செறி நிலை வடம் நடுவில் பெரிய முத்து மணிகளைக் கோத்து இருபுறமும் முறையே சிறுத்து வருமாறு கோத்தவடம் செறி நிலை வடம் எனப்படும். மேற்கூறிய ஐந்து வகையான தரள வடங்களும் அவற்றில் கோக்கப்பட்ட மணிவகைகளைப் பொறுத்தே வெவ்வேறு பெயர் களைப் பெறுகிறது. எடுத்துக்காட்டாக தலைமணிவடம் முதல் ஐந்து வடங்களும் இந்திரச் சந்தம் என்னும் பெயரோடு இணைந்து தலைமணி இந்திரச் சந்தம் துணைத் தலைமணி இந்திரச் சந்தம் என்பன போல் வெவ்வேறு பெயர்களைப் பெறும். இவ்வாறு ஐம்பது பெயர்களையுடைய மாலைகள் உள. (1) இந்திரச் சந்தம் 1008, (2) வியச் சந்தம் 500, (3) தேவச்சந்தம் 100, (4) அருத்த மாலை 64, (5) கதிர்க் கலாபம் 54, (6) குச்சம் 32, (7) நட்சத்திரமாலை 27, (8) அர்த்த குச்சம் 24, (9) மாணவகம் 20, (10) அர்த்த மாணவகம் 10 - முத்துக் களையும் உடையன. இங்கிலாந்தில் சௌத் கென்சிங்டன் பொருட்காட்சி நிலையத் தில், உலகத்தில் உள்ள எல்லா முத்துக்களையும் விட பெரிய ஆணி முத்து உளது. அது 3 அவுண்சுக் கனமும் 4 அங்குலச் சுற்றளவும் உள்ள ஒரு பெரும் முத்து ஆகும். ஆனால் அதைவிடப் பெரிய மாமுத்து சோவியத் யூனியனில் உள்ள சொசிமா (Zosima) என்ற காட்சி சாலையில் இருக்கிறது. இதன் பெயர் வாபெல் விகரினா எனப்படும். இதன் எடை 28 காரட். இது அழகும் ஒளியும் வாய்ந்தது. இதுதான் உலகிலே பெரிய ஒப்புமை இல்லாத ஒளி முத்தாகும். இது கொற்கை முத்து என்று எண்ணப்படுகிறது. சோதிட நூற்கள் சோதிட நூற்களில் செம்மை, வெண்மை, பொன்மை, கருமை ஆகிய நிறங்கள் வாய்ந்த நன்முத்துக்கள் திங்களுக்குக் களிப்பை உண்டாக்குவனவாகும். எனவே திங்களுக்கு உரிய வீடாகிய நண்டு ஓரையில் (கடக லக்கனத்தில்) பிறந்தவர்கள் கடல் முத்துக்களை அணிவது நலம் தரும் என்று தமிழ் நாட்டுச் சோதிட நூற்களில் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் கூடப் பிறந்த திங்களை வைத்து அதற்குரிய மணிகள் இவையென்று அறிந்து அந்த மணிகளை அணிந்து வருகிறார்கள். இது ஆங்கிலமணி ஆய்வு நூற்களில் நன்கு காணப்படும். மரகதம் (Emerald) ஒன்பது மணிகளுள் பச்சை நிறம் வாய்ந்தது மரகத மணி யாகும். தலைமணிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள கண் கவர் மணியாகும். பச்சைப் பசுமை வாய்ந்தது என்று பண்டு முதல் தமிழர்கள் போற்றி வரும் வண்ணமாகும். பச்சை பராசத்தியின் நிறம் என்று போற்றப்படுவதாகும். பச்சை நிறமான பொருள்களினின்று உயிர்களுக்கு உயிரூட்டும் உணவுப் பொருள் கிடைக்கின்றது. அன்னை பராசக்தி தன் மக்களாகிய உயிர்களுக்கு பால் சுரந்து ஊட்டி அவர்களைக் களிப்பில் ஆழ்த்தித் தானும் களிப்புறுகின்றாள் என்பது முற்காலத் தமிழர்களின் எண்ணம். மரகதத்தின் தன்மை மரகதம் வைரம் போன்று கடினமானது. என்றாலும் பசுமை யான ஒளிக்கதிர்களுடன் மென்மையானது போல் காணப்படுகிறது. ஞாயிற்றின் ஒளி மரகதக் கல்லின் மீது பட்டால் அதின் பச்சை வண்ண ஒளி அதன் சுற்றுப்புறமெல்லாம் பரவி அருகிலுள்ள எல்லாப் பொருள்களையும் பச்சை நிறமாக ஒளிரச் செய்கின்றது. எனவே அணிகலன்களில் மரகத மணியை நடுநாயமாக அமைத்து ஏனைய மணியைச் சுற்றிலும் வைத்து அணிகள் சமைக்கப்படு கின்றன. மரகதத்தின் பசுமையான ஒளி ஏனைய மணிகளில் பிரதி பலிப்பது ஒரு அரும் பெரும் அழகாகும். கிடைக்கும் இடம் மரகதம் கோமேதகத்தின் இயல்புகளை உடையது என்று கூறப்படுகிறது. இக்கற்கள் செயப்பூர், காசுமீர் பகுதிகளிலும் பர்மா, இலங்கை, சோவியத் யூனியன், எகிப்து, கலிபோர்னியா, மடகாசுக்கர், ஆதிரேலியா போன்ற இடங்களிலும் பூமியினின்று தோண்டி எடுக்கப்படுகின்றன. இந்தியாவில் கிடைக்கும் மரகத மணிகள் மிகப் பசுமை வாய்ந்த உயரிய மணிகளாக மதிக்கப்படுகின்றன. இன்று, இந்திய மணி வணிகர்கள் செயப்பூரில் கிடைக்கும் மரகதமணி களையே பெரிதும் விரும்பி அவற்றுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். மரகதக் கற்கள் அணிகள் அமைப்பதற்கு மட்டு மன்றி இலிங்கங்கள் செய்வதற்கும் வாங்கப்படுகின்றன. மரகத மணிகளால் செய்யப்பட்ட இலிங்கங்கள் சிறப்புடையனவாகும். நமது நாட்டில் சில கோயில்களில் மரகத இலிங்கங்கள் இடம் பெற்றுள்ளன. மணிச்சோதனை (இரத்தினப் பரீட்சை) என்ற நூலில் உயர்ந்த பச்சைக் கற்கள், மரகதம் காருத் மதம் அச்ம கர்ப்பம், அரின்மணி என்றெல்லாம் அழைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நிகண்டுகளில் மரகதம், காடம், உல்லசிதம், பேசலம், பித்தகம், முக்தம், பிருதுகம்; எனும் அறுவகைக் குணங்கள் உடையது எனக் கூறப்படுகிறது. குணங்களும் குற்றங்களும் மரகதத்திற்குக் கருகல், வெள்ளை, கல், மணல் கீற்று, குழி யுடைமை, தார் ஓடி இருத்தல் போன்றவை குற்றங்கள் ஆகும். அறு வகைக் குணங்கள் : அதாவது கார்டம் அப்பொழுதுதான் முளைத்த அறுகம் புல்லின் நிறம், உல்லளிதம் - வழவழப்பு, பேசலம் - நெற்பயிர் போன்ற நிறம், பித்தம் - பசுங்கிளியின் இறகு போன்ற வண்ணம். முக்தம் - துளிசி இலை போன்ற நிறம். பிருதுகம் - தாமரை இலை போன்ற தன்மைகள் இம்மணியின் சிறந்த குணங்கள் ஆகும். இம் மணியை அணிபவர்களுக்கு எல்லா நலமும் பெருகும். இஃதன்றி குற்றமுள்ள மணிகளை அணிந்தால் கேடுகள் விளையும் என்று மணி நூற்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியும் (சிலப். ஊர். வரி. 184 - 185) என்ற சிலப்பதிகாரச் செய்யுளுக்கு உரைகண்ட ஆசிரியர் அடியார்க்கு நல்லார் மேற்கண்ட கருத்துக்களை அரண் செய்யும் வழியில் விளக்க உரை கூறியுள்ளார். மருத்துவ நூற்களில் மரகதமணி மரகத மணி வயிற்றுக் கடுப்பை நீக்கும்; மேக நோயைப் போக்கும்; எளிதாகப் மகப்பேறு பெறப் பெரிதும் துணைசெய்யும். மரகத பபம், மரகதமணி போன்றவை, திரிதோசங்களைப் போக்கும்; உடற் பலமும் நீண்ட ஆயுளும் தரும் என்று மருத்துவ நூற்கள் கூறுகின்றன. சோதனை நல்ல சாதி மரகதத்தைக் கண்டறிய வேண்டும் என்றால், ஒரு கிண்ணத்தில் பாலை வைத்து அதில் மரகத மணியைப் போட்டால் அதன் ஒளி, பால் முழுவதும் பரவி பால், பச்சை நிறம் போன்று தோன்றும். செயற்கை மரகதம் அவ்வாறு ஒளி விடாது. இயற்கை யான மரகத மணியைக் கல்லில் தேய்த்தால் மணி தேயாது. செயற்கை மரகதம் தேயும், உடையும். மரகத மாமணி இதுவரை மாநிலத்தில் கிடைத்த மரகத மணிகளில் திவான்சயர் இளவரசரிடம் இருக்கும் 1350 காரட் எடையுள்ள மரகத மணியே மிகப் பெரியதாகும். இஃதன்றிப் பிரிட்டீசுத் தொல் பொருள் காட்சிச் சாலையிலும் ஒரு பெரிய மரகத மாமணி இருக்கிறது. இவை குற்றம் அற்றவை; விலையுயர்ந்தவை. பிரிவும் கிரகங்களும் மரகதம் வேளாளர் இனம். சாத்வீககுணம் உடையது. மயில், காடை போன்ற பறவை இறகு நிறம் வாய்ந்த மரகதம் புதனுக்கு மகிழ்ச்சி தரும். புதனுக்குரிய இராசியில் பிறந்தவர்கள் குற்றமற்ற மரகதத்தை அணிவதால் அறிவு வளரும்; கிரகதோசம் அகலும்; அழகும் ஆயுளும் பெருகும். மாணிக்கம் (Ruby) மாணிக்கம், சிவப்பு, பதுமராகம் என்று கூறிப் போற்றப் பெறும் மணியாகும்; வைரமணிக்கு அடுத்த படியாக வைத்துப் போற்றக்கூடிய உயர்ந்த கல்லாகும். மாணிக்கம் நல்ல அழகு வாய்ந்த செந்நிறத்தையுடையது. இது முதலில் வெளுப்பாகத் தோன்றிப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் செந்நிறம் பெறுகிறது. நல்ல செந்நிறம் வாய்ந்த மாணிக்கத்திற்குச் சிறப்பு அதிகம்; மாணிக்கம் மணிகளின் மன்னன் என்று மணி நிபுணர்கள் கூறுவார்கள். வகைகள் மணிகளில் மாண்பு வாய்ந்ததாக மதிக்கப்படும் மாணிக்கம் 4 வகைப்படும். (1) சவுந்திகம் (2) நீலகந்தி (3) பத்மராகம் (4) குருவிந்தம். (1) சவுந்திகம் : இது ஆந்திர நாட்டில் அதிகமாகக் கிடைக் கிறது. அசோகத் தளிர் போன்ற வண்ணம் வாய்ந்தது. (2) நீலகந்தி : இது தும்புரத்தில் அதிகம் கிடைக்கிறது; நீல நிறம் வாய்ந்தது; கவர்ச்சிமிக்கது. (3) பத்மராகம் : இம்மணி இரத்தின தீபம் என்று கூறப்படும்; ஈழ நாட்டில் (இலங்கையில்) ஏராளமாகக் கிடைக்கிறது; நல்ல சிவப்பு நிறம் வாய்ந்தது. (4) குருவிந்தம் : கலாபுரத்தில் அதிகம் அகப்படுகிறது; மஞ்சள் நிறம் வாய்ந்தது. இவைகளில், இலங்கையில் செந்தாமரை மலர் வண்ணத்தில் கிடைக்கும் பத்மராகம் என்னும் மணி சிறந்தது. கிடைக்கும் இடங்கள் : இன்று பல மாணிக்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பர்மா, சயாம், இந்தோசீனம், ரொடை சியா, சாசுமீர் (இந்தியா) ஆப்கானிசுத்தான், இலங்கை போன்ற இடங்களில் எல்லாம் மாணிக்க மணிகள் கிடைக்கின்றன. ஆனால் பர்மாவில் மோகாக் என்றும் இடத்திலும் காத்தே மாவட்டத்திலும் உயர்ந்த மாணிக்க மணிகள் அதிகம் கிடைக்கின்றன. இனப்பிரிவுகள் மாணிக்கத்தில் பதுமராகம் அந்தணர் இனம் என்றும் சவுந் திகம் வணிகசாதி என்றும் நீலகந்தி வேளாளர் இனம் என்றும் கூறப்படுகிறது. குணங்கள் கனமாக இருத்தல், அழகான வண்ணமாக இருத்தல், மாசில்லாததாய் விளங்கல், நல்ல செந்தாமரை மலர் போன்ற சிவப்பு நிறமாகப் பொலிதல், நல்ல மாணிக்க மணியின் குணங்களாகும். இதை அணிபவர்களுக்கு நீண்ட வாணாள், நோயற்ற வாழ்க்கை, உடற்பலம் முதலியவை வளரும்; மனநோய்கள் இருந்தால் மாறும்; எழில் பெருகும். குற்றங்கள் : சிவப்பு நிறமற்றமணி, வேறும் வண்ணம் வாய்ந் தது, புள்ளி, தராசம் (ஒளி சலித்தல்), கீற்று, காகபதம், ஆகியவை இருத்தல் மாணிக்கக் கற்களின் மாபெரும் குற்றங்களாகும். இவை களை அணிந்தாலும் வைத்திருந்தாலும் கெடுதி உண்டாகும். பகைவர்களால் இடையூறு உண்டாகும். விலங்குகளாலும் நோய் களாலும் துன்பமும் துயரமும் விளையும் என்பர். உயர்ந்த மணி : உலகில் உயர்ந்த மாணிக்க மாமணி 167 காரட் எடையுள்ளது. இது பட்டை தீர்க்கப்படாதது என்று கூறப் படுகிறது. ஆனால் இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர் சாசகான் அவர்களின் மயிலாசனத்தில் பதிப்பிக்கப்பெற்ற திமூர் என்னும் மாணிக்கக் கல் நல்ல பட்டை தீர்க்கப்பெற்ற கல்லாகும். இது 361 காரட் எடையுள்ளது. உருசியாவில் இருந்த காதரைன் அரசியிடம் 50 காரட் எடையுள்ள மாணிக்கம் இருந்தது. அது இன்றைய சோவியத் யூனியனில் உள்ள அரசாங்கத் தொல்பொருள் காட்சிச் சாலையில் உள்ளது. மருத்துவ நூற்களில் மாணிக்கம் மாணிக்க பபம், சளி, சுரம், தாகம், மேகம், கண்ணோய் போன்றவைகளை அகற்றும்; ஆயுள் விருத்தியை உண்டாக்கும்; மேனியில் பளபளப்பையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். சோதனை : மாணிக்கக் கற்களில் நல்ல இனக்கற்களைக் கண்டுபிடிக்க, கல்லில் தேய்த்துப் பார்க்கலாம்; நீரில் போட்டுக் கொதிக்க வைத்துப் பார்க்கலாம். நல்ல மாணிக்கமணி தேயாது; நிறம் மாறாது. செயற்கை மாணிக்கம் உடையும் தேயும், நிறம் மாறும். சோதிட நூலில் மாணிக்கம் : சோதிட நூற்களில் ஞாயிற்றுக்கு நல்ல சிவப்பு நிறம் வாய்ந்த மாணிக்கக் கற்களில் அதிகப்பிரியம் உண்டென்று கூறப்பட்டுள்ளது. மாணிக்கம் ஞாயிற்றின் வீடாகிய சிங்க இலக்கனத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையை நல்கும். ஞாயிற்றின் தோசங்களைத் துடைக்கும். மணிகளில் மாணிக்கம் மன்னர் மரபைச் சேர்ந்தது. இரஜத குணம் உடையது என்று கூறப்படுகிறது. இரத்தின தீபம் என்று கூறப்படும் இலங்கையில் இரத்தினபுரி என்னும் ஊரில் இன்றும் இணையிலாத மாணிக்கக் கற்கள் கிடைத்து வருகின்றன. இங்குள்ள மணிகளை - சிறப்பாக, காயல் பட்டினம், கீழக்கரை முதலிய ஊரிலுள்ள இசுலாமிய வணிகர்கள் வாங்கி இலங்கையிலும் பிறவிடங்களிலும் பெரிய மணி வணிகர் களாய் விளங்குகின்றார்கள். இவர்கள் இத்தொழிலில் நல்ல நிபுணத்துவம் பெற்றிருக்கின்றார்கள். இடை மணிகள் I நீலம் (Sapphire) நீலமணிக்கு அதன் நிறத்தை வைத்தே நீலம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வைரம்-வெள்ளை, மரகதம் - பச்சை, மாணிக்கம் - சிவப்பு, புட்பராகம் - மஞ்சள், கோமேதகம் - மஞ்சளும் சிவப்பும் கலந்த சிவப்பு, வைடூரியம் - வெளுறிய நீலநிறம், நீலம் - நல்ல நீல நிறமும் உடையன. இவைகளில் மாணிக்கம், மரகதம், புட்பராகம், வைரம், நீலம் ஆகிய மணிகளை அறிஞர்கள் ஐந்து மணிகள் (பஞ்சரத்தினம்) என்பார்கள். மரகதம், மாணிக்கம், இந்திர நீலம், முத்து, வைரம், ஆகியவைகளை மாமணிகள் (மஹா ரத்தினங்கள்) என்பார்கள். இனம் பொதுவாக வைரமும் முத்தும் அந்தணர் இனம் என்றும் மாணிக்கமும் பவளமும் அரசர் இனம் என்றும் புட்பராகம், வைடூரியம், கோமேதகம் ஆகியவை வணிகர் இனம் என்றும், நீலம், மரகதம் ஆகியவை வேளாளர் இனமென்றும் கூறப்படும். இஃதன்றி வெளுறிய நீலம் அந்தணர் சாதி என்றும், சிவப்பு நீலம் அரசர் சாதி என்றும், மஞ்சள் நீலம் வணிகர் சாதி என்றும், கறுப்பு நீலம் உழவர் சாதி என்றும் கூறுவர். நீலத்தில் நான்கு இனம் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது வேளாளர் இனமாகிய நீலத்திலே நான்கு இனப்பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. மேலும் நீலமணியை இந்திர நீலம், மகா நீலம் என்று இருவகையாய்ப் பிரிப்பதும் உண்டு. இந்திர நீலம் கருமையானது; கனமானது; சிறந்தது. சலநீலம் இலேசானது, வெளுறியது. மணியின் நடுவில் வானவில் போன்ற ஒளி இருந்தால் அது சுத்தமான இந்திர நீலம் என்று கூறப்படும். இது கிடைப்பது அரிது. விலையும் உயர்ந்தது. இந்த நீலத்தைப் பாலில் போட்டால் பால் முழுவதும் நீலமாகக் காணப்படும். இதனை மகா நீலம் என்பர். இந்த மகா நீலத்தையும் அதன் நிறத்தையும் தரத்தையும் கொண்டு அறிஞர்கள் இதனுள் நான்கு இனப்பிரிவுகள் காண்பர். குணம் மணிச்சோதனை என்ற வடமொழி நூலில் கனம், கவர்ச்சியான ஒளி, நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, புல்லைப்பிடிக்குந் தன்மை என்ற ஐந்து குணங்களும் நீலமணிக்கு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குற்றம் அப்ரகம், சசர்கரம், திராசம், பின்னம், மிருத்திகா கர்பம், அச்ம கர்பம் ஆகியவை நீலமணியின் குற்றங்களாகும்: 1. அப்ரகத்தைப் போன்ற வண்ணம் நீலத்தின் மீது படர்ந்திருந்தால் அது அப்ரகம் எனப்படும். இதை அணிந்தால் செல்வம் அழியும்; ஆயுள் குன்றும். (2) மணியில் மணல் சேர்ந்திருந்தால் சசர்கரம் எனப்படும். இதைப் பூண்டால் வறுமை வாட்டும்; சிறுமையூட்டும்; நாட்டைவிட்டு ஓட்டும். (3) பொரிசல் இருந்தால் திராசம் என்பார்கள். இதைப் பூண்டால் நச்சுள்ள உயிரினங்களால் தீமை விளையும். (4) உடைந்த மணியைப் பின்னப்பட்ட மணி என்பார்கள். இதை அணிந்தால் மனைவியை இழக்க நேரிடும் என்பர். (5) நீலக்கல்லில் நடுவே உட்புற மாக மண் இருப்பின் அதை மிருத்திகாகர்பம் என்பார்கள். இதை அணிந்தால் அவமதிப்பு, உடம்பில் தோலைப்பற்றிய நோய்கள் தோன்றும் என்பர். (6) நீலமணியில் உள்ளே கல் காணப்பட்டால் அதை அச்மகர்பம் என்பர். அதை அணிபவர்கள் அவமதிப்புக்கு ஆளாவார்கள். நீலம் கிடைக்கும் இடம் நீலமணிகள், இந்தியாவில் காசுமீர்ப் பகுதியிலும் இலங்கை யில் இரத்தினபுரியிலும் சயாமில் பாட்டம் பாங்கிலும் பர்மாவில் மோகாக்கிலும் கிடைக்கின்றன; அன்றியும் கலிபோர்னியா மட காசுக்கர், குவின்சுலாந்து போன்ற காடுகளிலும் கிடைக்கின்றன. மருத்துவ நூற்களில் நீலம் : நீல மணியைப் பொடி (பபம்) செய்து உண்டால் சீதளம், சடம், சினிக்கம், பித்தம் முதலிய பிணிகள் அகலும். பாண்டு, மதி மயக்கம் போன்ற பல நோய்களும் அகலும். இதை அணிந்தால் அறிவு ஒளிரும்; இன்பம் பெருகும். குதிவலிமே கம்பித்தம் கூறரிய பாண்டு மதிமயக்க மெல்லா மருளும் - மதிநுதலே புத்தியொடு மேன்மேலும் போக சுகமுண்டாம் சுத்தநறு நீலத்தால் சொல் என்று பதார்த்தகுண சிந்தாமணி என்ற மருத்துவ நூல் நீல பட்பத்தின் குணத்தைக் கூறுகிறது.12 உலகில் உயர்ந்த மணி உலகில் உயர்ந்த நீலமணி 916 காரட் எடையுள்ளது. இது 3½ அங்குல நீளமும் 2 அங்குல அகலமும் 1 அங்குல கனமும் உள்ளது. இம்மணி ஐதராபாத்தில் உள்ளது. இதன் விலை மதிப்பு 5,00,000 ரூபாய் ஆகும். முன்னர் இதுதான் உலகிற் பெரிய நீலமணியாய் இருந்தது. இப்பொழுது பர்மாவில் 1029 காரட் எடையுள்ள நீலமணி ஒன்று கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. சோதிட நூற்களில் நீலம் சோதிட நூற்களில் மணிகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இந்திர நீலக்கல் சனிக்கு உரியது. மகரம், கும்பம் ஆகிய சனிக்குரிய இராசிகளில் பிறந்தவர்கள் குற்றமற்ற இந்திர நீலக்கல்லை அணிந் தால் சனி தோசம் நீங்கும். மேலும் சனி பகவானின் கருணை பெருகும். ஆயுளும், செல்வமும் உடல் நலனும் பெருகும் என்று கூறப்படு கின்றது. II புட்பராகம் (Topaz) புட்பராகம் வைரம் போன்று மஞ்சள் கலந்த வெண்மையான மணி. மேல் பாகம் வட்டமாகவும் மழமழப்பாகவும் இருந்தால் சிறந்த மணியாக மதிக்கப்படும். இது பொதுவாகப் பாறைகளின் நடுவிலே உண்டாகிறது. புட்பராகம் பூசநட்சத்திரம்போல் பொலி யும். பொன்னைத் தெளிய வைத்தாற்போன்று இலங்கும். இதனைச் சிலப்பதிகாரம் பூச உருவிற் பொலந்தெளித்தனைய 13 என்று கூறுகிறது. இம்மணியை அணிபவர்களுக்கு பல நலம் விளையும். வேந்தராயின் வெற்றிமாலை சூடுவர் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. கிடைக்கும் இடங்கள் புட்பராகம் பிரேசில் நாட்டில் ஊடா, கொலராடா, ஒரோ பிரிட்டா, வில்லாரீகா, மினாசு நோவாசு, மினாசு செராயசு போன்ற பகுதிகளில் கிடைக்கின்றது. ஓரோ பிரிட்டாவில் சிறந்த ஆரஞ்சு வண்ணப் புட்பராகங்கள் கிடைக்கின்றன. இலங்கையில் லேசான மஞ்சள் நிற மணிகள் கிடைக்கின்றன. சோவியத் யூனியனில் உள்ள இயூரல் மலையிலும் சைபீரியாவிலும் லேசான பச்சை வெளுறிய நீலம் வாய்ந்த புட்பராகங்கள் கிடைக்கின்றன. வடக்கு நைசீரியாவில் உள்ள தகரக் கனிகளையுடைய வண்டல் பிரதேசங்களில் இதனை ஒத்த, நீரால் அறுக்கப்பட்ட படிகங்களும் கூழாங்கற்களும் காணப் படுகின்றன. குணங்கள் அழகிய தோற்றம், பருமன், தெளிவு, கனம், மென்மை கோங்கிலவ மலர் போன்ற நிறம், நல்ல வெண்மை ஆகிய ஏழு விதமான குணங்கள் நல்ல புட்பராகத்தின் குணங்களாக வாகடம் என்ற நூல் கூறுகிறது. குற்றங்கள் ஒளியின்மை, நாசனை (மாணிக்கத்தில் உண்டாகும் வெண்ணீர்) கருமை, மஞ்சள், மேடுபள்ளம், கலங்கல், கரு வெண்மை, வெண்மை ஆகிய தன்மைகள் புட்பராகத்தின் குற்றங்களாகும். புட்பராகம் உருவில் பெரியதாயும் வழவழப்பாயும் தாமரை யின் கர்ணிகை போன்ற நிறம் உடையதாயும் இருந்தால் அதை அணியலாம். அதை அணிந்தார்க்கு எல்லாச் செல்வங்களும் நலமும் பொங்கும். உயர்ந்த மணி பிரிட்டிஷ் தொல்பொருள் காட்சிச்சாலையில் நார்வேயி லிருந்து கொண்டுவந்த 137 - பவுண்டு நிறையுள்ள புட்பராகம் ஒன்றுண்டு. இந்திய மொகலாய மன்னன் அவுரங்கசீப்பிடம் 157- காரட் எடையுள்ள 8 பட்டையான புட்பராக மணி ஒன்று இருந்தது. மருத்துவ நூலில் புட்பராகம் புட்பராக பசுப்பம் கபத்தை நீக்கும்; உடல் வளத்தைப் பெருக்கும்; வீரிய விருத்தியும் புத்திக் கூர்மையும் உண்டாக்கும் என்பர். சோதிட நூலில் புட்பராகம் புட்பராகம் வியாழனுக்குரியது. மீன லக்கினத்தில் பிறந்த வர்கள் இதை அணிந்தால் வியாழதோசம் நீங்கும்; நோய் அகலும்; பலம் உண்டாகும் என்பர். III வைடூரியம் (cat - eyes) வைடூரியம் பழுப்பு நிற ஒளியும் வெண்மையான ஒளியும் கொண்டு ஒளிரும். இதைச் சிலப்பதிகார உரையாசிரியர் கதிரவன் ஒளியைப் போன்று இலங்கும்; தேன் துளியின் உருவம் போன்று திகழும் என்று கூறியுள்ளார். குணம் மூங்கில் இலை, பூனைக்கண், மயிற்கழுத்து இவை போன்ற ஒளியுள்ள வைடூரிய மணிகளே உயர்ந்தன. இம்மணி எங்கு இருப்பினும் அதனுள் நூல் இழை போன்ற ஒளி வீசும். இதனை நூலோட்டம் என்பர். குற்றம் கறுப்பும் சம உருவமும் உள்ளது; கரடு முரடானது; நீர் நிறம் உள்ளது. இலேசானது, குற்றமுள்ள மணியாகும். இது அணியத்தக்க தன்று; விலக்கத்தக்கது. இதை அணிந்தால் கேடு சூழும். வறுமை மிகும். நோய் பெருகும். சோதனை வைடூரியத்தை உரைகல்லில் உரைத்தால் ஒளி பெருகும். இதுவே உயர்ந்த வைடூரியத்தின் தன்மையாகும். கிடைக்கும் இடம் வைடூரியம் இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைக்கிறது. இஃதன்றி பிரேசில், உருகுவே, இங்கிலாந்து, காட்லாந்து, வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா பாரசீகம் போன்ற நாடுகளிலும் கிடைக்கும். மருத்துவ நூலில் வைடூரியம் வைடூரிய பசுப்பம் சீவதாதம், சிலேத்துமம், புளியேப்பம், காது சூலை, குன்மம், பித்தம் போன்ற நோய்களை அகற்றும். சோதிட நூற்களில் வைடூரியம் வைடூரியம் கேதுவிற்கு உரியது. கேது தோசம் உள்ளவர்கள் இதை அணிந்தால் அத்தோசம் நீங்கும் என்பர். இனம் கோமேதகம், வைடூரியம், புட்பராகம் போன்ற மணிகளும் சந்திரகாந்தம், சூரியகாந்தம் போன்ற கற்களும் படிக இனத்தைச் சேர்ந்தவை என்று மணிச்சோதனையில் தேர்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். கடை மணிகள் I கோமேகதம் (zircon) கோமேதகம் பசுவின் சிறுநீர் நிறத்தை ஒத்த வண்ணமாக இருப்பதால் கோமேதகம் என்று பெயர் வந்தது என்று சிலர் கூறுவர். ஐரோப்பியர் கோமேதகம் குதிரையின் மூத்திர வண்ணத்தில் இருக்கும் என்பர். இம்மணி மஞ்சளும் சிவப்பும் கலந்தது. சிலப் பதிகார ஆசிரியர் இம்மணியை இரு வேறு ருவ என்று கூறி யுள்ளார். இது கற்பாறைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. குணங்கள் (1) நல்ல, தெளிந்த பசுவின் சிறுநீர் நிறமுடையது. (2) மாசில் லாதது, சுத்தமானது. (3) பளபளப்புடையது. (4) அழுத்தம் உள்ளது. (5) கனம் உடையது (6) மேடுபள்ளம் இல்லாதது, (7) கொழுப்பானது, (8) ஒளி நிறைந்தது ஆகிய எட்டுக் குணங்கள் கொண்டது, நல்ல கோமேதக மணியாக மதிக்கப்பெறும். குற்றங்கள் (1) மங்கலானது, (2) மாசுள்ளது (பாசி படர்ந்திருப்பது) (3) லேசானது (4) மேடுபள்ளம் உள்ளது (5) உப்புக் கசிவுள்ளது (6) தகடு வடிவம் வாய்ந்தது (7) ஒளியற்றிருப்பது, (8) உருக்குக் கல் போலிருப்பது ஆகிய எட்டும் குற்றங்கள் ஆகும். இயல்பு : கோமேதகத்தைத் தணலில் காட்டினால் ஆச்சரியப் படத்தக்க மாறுதல் எழும். மிகச் சூடாக்கினால் நிறங்குன்றும்; பளபளப்பு மிகும். மருத்துவ நூலில் கோமேதகம் : கோமேதகப் பசுப்பம் சாப்பிட்டால் கபம் நீங்கும்; வாதபித்த தோசம்போம், சீரணசக்தி பெருகும்; மலக்கட்டை அகற்றும், வலிமைதரும்; உடம்பிற்கு நல்ல ஒளி ஊட்டும். சோதிட நூலில் கோமேதகம் இராகுக்கு உகந்த மணி என்று கூறப்பட்டுள்ளது. இதை அணிந்தால் இராகுதோசம் அகலும். இம்மணி அணிவதால் நல்ல உடல் வலிமை தரும். உடல் நலம் பெருகும். உடலில் நல்ல மினுமினுப்பு உண்டாகும் என்று சுக்கிர நீதி என்ற சிற்பநூல் கூறுகிறது பவளம் (Coral) பவளப் பூச்சிகள் கடலில் உள்ள பிற உயிரினங்களால் தங்களுக்கு நேரிடும் ஆபத்தை அகற்ற ஒன்று கூடி உண்டாக்கும் ஒரு பாதுகாப்பு அரணே பவளமாகும். ஆழ் கடல்களில் பவளங்கள் செடிகள் போல் காணப்படும். பவளக் காடுகள் கடலில் - சிறப்பாக இந்துமாக் கடலில் உண்டு. இஃதன்றி இந்து மத்திய தரைக் கடலிலும் செந்நிறப் பவளக் காடுகள் உள்ளன. ஆசுத்திரேலியாவிற்கு வடகிழக்கிலும் மத்தியதரைக் கடற்பகுதிகளாகிய மொரோக்கோ, அல்சீரியா, தூனிசியா, சப்பான், அயர்லாந்து, இத்தாலி முதலிய நாடுகளிலும் பவளங்கள் கிடைக்கின்றன. நிறங்கள் பவளங்கள் பல்வேறு வண்ணங்கள் உள்ளவை. சிவப்பு, வெண்மை கலந்த சிவப்பு, வெண்மை, கறுப்பு, நீலம் போன்ற நிறங்களில் பவளங்கள் உள்ளன. தமிழர்கள் சிவப்பு நிறம் வாய்ந்த பவளத்தை விரும்புவர். குணம் கோவைக் கனி போன்ற நிறம், விருத்தம் (வட்டம்) நீளம், மேடு பள்ளமின்மை, மழமழப்பு, வடுவின்மை, பெரியவை - பவளத்தின் சிறந்த குணங்களாகும். குற்றம் உள்ளே துளை, வளைவு, கல் உடையவை குற்றம் உடைய பவளமாகும். வெண்மை, சாம்பல் நிறம், குரூரத் தோற்றம், சிதைவு பட்டிருத்தல், துளையாய் இருத்தல், கனமின்மை, தூய வெண்மை, சொர சொரப்பு, வெளுப்பு கோணல் இவை குற்றமாகும். மருத்துவ நூலில் பவளம் பவள பசுப்பம் சுரதோசம், காசம், இரத்த பித்தம், இரத்த சூலை, இரத்த பிசாரம், பிரதரநோய், மலபந்தம் முதலிய பிணிகளைப் போக்கும். இதைப் பல அனுபான மாற்றத்தோடு சாப்பிட்டால் எண்ணிறந்த நோய்கள் நீங்கும். சோதிட நூலில் பவளம் செவ்வாய்க்குப் பவளம் உரியது. செவ்வாய் உச்சமானவர்களும் செவ்வாய் தோசம் உள்ளவர்களும் பவளம் அணிந்தால் நலமுறு வார்கள் என்பர் சோதிட வல்லுநர். குறிப்புகள் வைரமணி வணிகத்தில் நல்ல வல்லுநர் எனப் புகழ் பெற்ற சிங்கப்பூர் நிபுணர் கென்னத் புல்லர்ட்டன் வைரங்களின் தரங்கள் பற்றிக் கூறும்பொழுது, பொதுவாக வைரம் அதன் நிறம், தெளிவு (தூய்மை), வெட்டு ஆகியவைகளே அதன் தரத்தைக் காட்டும் என்று கூறுவர். உயர்ந்த வைரம் நேர்த்தியான இளஞ்சிவப்பு நிறம் உள்ளது விலை உயர்ந்தது. அது கிடைப்பது அரிதினும் அரிது. பெரிதும் இயல்பான நீல வெள்ளை நிற வைரங்களும் விலை உயர்ந்தவைதாம். தூய வெள்ளை வைரங்கள் அடுத்தவை. மட்ட வைரம் சிறிது மஞ்சள் வண்ணம் வாய்ந்த வைரமணிகள் தரங் குறைந்தனவாகும். ஆனால் சில உண்மையான மஞ்சள் வண்ணம் வாய்ந்த வைரங்கள் விலை மிகுந்தன. தூய்மையைக் கண்டுபிடிப்பது பூதக் கண்ணாடி மூலம் வைரத்தில் உள்ள வெடிப்புகளும் மினுக்கமும் காணமுடியும். வைரத்தின் வெட்டு மூலம் மினுக்கத்தை அளவிட முடியும். பட்டங்கள் (பட்டைகள்) பொதுவாக ஒரு வைரமணியில் 58 பட்டங்கள் தீட்டப்பட் டிருக்கும். மேலே 33 கீழே 25. அந்தப் பட்டைகள் சரியான கோணங் களில் இல்லாவிட்டால் ஒளி சரியாக விரிந்து பரவாது. அதனால் ஒளி குன்றும் - அதாவது பளபளப்பு இல்லாமற் போகும். வைரத்தில் தூய்மையைவிட நிறந்தான் முக்கியம், தூய மஞ்சள் வண்ணம் வாய்ந்த வைரமணியைவிட இலேசான கோடுகள் உள்ள ஒரு வெள்ளை வைரத்தை நான் பெரிதும் விரும்புவேன் என்று எடுத்துக்காட்டுகின்றார்.1 1. (அ) உத்பலபரிமளம் 2. The Diamand - W. R. Catelle. New York. 1911 3. The Story of the Gems - Herbert. P. White lock. London. P. 68 “Like almost every other activity this ministers to the comfort of man and gratifies his taste for the beautiful; the search for and retrieving of diamonds from the earth has had a history in this an ancient interesting and romantic one - As far as we knew diamonds were first found in central India, thus carrying out the tradition that very many of the precious and semiprecious stones Originate in the Orient.” 4. வைரமும் அதன் குணா குணங்களும் - எய்ச். நாராயணராவ், பி.என். அப்புசாமி ஐயர் (கட்டுரை - கல்கி) 5. Diamond and Precious Stones - E. Jean (Paris - 1865) P. 67 “The ancient diamond workings or India were scattered over quite a wide area but the distributing centre or mart was the town of Golconda, a name which has always been highly suggestive of opulence. As far back as that ancient epic, the Mahabharata, diamonds have figured largely in the life and history of the Hindoos and it was from India that they were introduced into Europe.” 6. The Gemmologists compendium - Robert. Webster. F.G.A. London. 1937 P. 67 “Koh - I - Nur Diamond; a historical diamond, said to be an Indian stone. Originally said to weigh 1911 metric carates, it now weighs 108.9 metric carats, the stone having been recut in 1862. The Koh - i - Nur is now set in the centre of the front cross pate of the crown of the Queen of England” 7. World’s most famous Gems have link with India - K. Neelkant (Sunday Standard, The,. 11-4-65) 8. திங்கள் - (திங்கள் வெளியீடு) நவரத்தினங்கள் சி. ராஜப்பா, சென்னை, ஏ - 57) 9. நவரத்தினங்கள் - சேவியர் டேவிட் (தமிழ் மலர் 21-11-65 சிங்கப்பூர்) Diamond Ruapsody (Illustrated weekly of India) Bombay 7-2-54. 10. நவமணிகள் - டி.எ. வைத்தியநாதன். 1959. 11. இரத்தின பரீட்சை - சரவதிமகால் வெளியீடு, 1958 12. பதார்த்தகுணசிந்தாமணி. 13. சிலப்பதிகாரம் - ஊர்சூழ் வரி, 188 திருவிளையாடற்புராணம் 14. பதார்த்த குண சிந்தாமணி வாதபித்த தோடத்தை மாற்றுமலக் கட்டறுக்கும் ஓதுமந் தாக்கினியை ஓட்டுங்காண் - மீதில் அழல்தரு காரம் அகற்றும் ஒளி செய்யும் கழறுகின்ற கோமே தகம் 8. பேரணிகலன்கள் தலை, காது, கழுத்து அணிகள் தமிழ் மக்கள், உலோகக் காலத்தை அடைந்த பொழுது தான், அவர்கள் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற தாதுப் பொருள்களைக் கண்டனர். அவர்கள் தாதுப் பொருள்களால் உணவுப் பொருள்களைப் பெருக்குவதற்குரிய கொழு, அரிவாள், மண்வெட்டி, கோடாரி, கூந்தாலம், உளி, வாள் போன்ற கருவிகளை முதலில் உருவாக்கினர். அப்பால் பிற தொழில் செய்வதற்குரிய சுத்தியல், குறடு, பற்றுக்குறடு, சாமணம், பொடி வெட்டி அரம், கைவாள், குழல், ஆடுதமர், நூல் சட்டம் முதலியவைகளை உருவாக் கினர். அதன் பின்னர்தான் பொன், வெள்ளி முதலிய தாதுப் பொருள்களில் அணிகலன்களைச் செய்ய முற்பட்டனர். மக்கள், வயிறார உண்டு களித்த பின்னர்தான், தங்களை அழகு செய்து கொள்ள நாடிப் பொன் அணிகலன்களைச் செய்து அணிய முற்பட்டனர். அந்தப் பொன் அணிகலன்களும் தமிழ் மக்கள் ஆதியில் கண்ட மலர் அணியாகவும் அரும்பு அணியாகவும் காய் அணியாகவுமே பரிணமித்தன. இதைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள், தமிழர்கள் குறிஞ்சி நில வாழ்க்கையில் மலர் அணிகளையும் அரும்பு அணிகளையும் கண்டனர். முல்லை நில வாழ்க்கையிலே இலை, தழை, ஓலை, கொடி முதலியவைகளை அணியாக அணிந்துவந்தனர். மருத நில வாழ்க்கையிலே மலர், அரும்பு, இலை, ஓலை, கொடி, பிஞ்சு, காய், பழம், கொட்டை போன்றவைகளை அணிகளாக அணிந்து வந்தனர். பின், மருத நிலமாக்களே நெல் மாலை, மிளகு மாலை, கொத்தமல்லி மாலை, குன்றிமணி மாலை, மருதங்காய் மாலை, நெல்லிக்காய் மாலை, மாம்பிஞ்சுக் கொலுசு, பிச்சி அரும்பு மாலை, கன்னப் பூ, சுண்டைக்காய் மாலை, உருத்திராக்க மாலை, தாமரைக் காய் மாலை போன்றவைகளை அணிந்து வந்தனர். நெய்தல் நிலவாழ்க்கையிலே சிப்பி சோவி, சங்கு கோவஞ்சி, முத்து, பவளம் முதலியவைகளைக் காதணியாகவும், கையணி யாகவும் கழுத்தணியாகவும் தலையணியாகவும் அணிந்து வந்தனர். மக்கள் மண்ணாலும், மரத்தாலும், கல்லாலும் அணிகலன்கள் செய்யமுற்பட்டனர். மருந்துப் பொருள்களால் கூட உருண்டை யான மணிகள் செய்து மாலைகளாகக் கோத்துத் கழுத்தில் அணிந் தனர். எலும்புகளாலும் கண்ணாடி போன்ற கல்லுகளாலும் மாலைகள் செய்து அணிந்து வந்தனர். செம்மண்ணாலும், கல்லா லும், மருந்தாலும், பளிங்கு போன்ற கல்லாலும் செய்யப்பட்ட அணிகள் சில என்னிடம் உள்ளன. அவை சுமார் 3000 ஆண்டு களுக்கு முன்னுள்ளனவாக மதிக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் உலோக காலத்திலேதான் உயர்ந்த நாகரிகம் உந்தியது; அரிய கலைகள் அரும்பின. ஓலை, இலை, குழை, கொம்பு, கொடி, அரும்பு, பூ, காய், பழம், கொட்டை, சங்கு, சிப்பி வடிவாகவே உலோகங்களில் அணிகலன்கள் செய்து அணிந்து வந்தனர். அவைகளின் வண்ணங்கள் தங்களின் பொன் அணிகளில் திகழுமாறு மரகதம் (பச்சை) நீலம் (நீலம்) வைரம் (வெள்ளை) மாணிக்கம் (வெளுரிய சிவப்பு) புட்பராகம் (மஞ்சள்) பவளம் (கருஞ்சிவப்பு) முதலிய மணிகளைப் பதித்து இலை, மலர், காய், பழம், கொட்டை முதலியவைகளின் வண்ணம் ஒளிரும்படி அணி கலன்கள் செய்து அணிந்தனர். எல்லாவற்றையும்விடச் சிறப்பு அந்த அணிகளுக்கு இலை, பூ, காய் என்ற அந்த ஆதிப்பெயரை மறவாது சூட்டி விட்டதாகும். இது தமிழர்களின் கலைவளர்ச்சியையும் கலைப்பண்பையும் காட்டுவதாகும். இன்று தமிழகத்தில் எத்தனையோ நாகரிகங்கள் வந்து முட்டி மோதி வந்துள்ளன. என்றாலும் தமிழக மகளிர் அணிந்து வந்த நனிசிறந்த அணிகலன்களின் பெயரை அசைக்க முடியவில்லை. பண்டைத் தமிழர் கண்ட அணிகலன்களின் பெயரும் உருவும் திருவும் மாறா வண்ணம் இருந்து வருகின்றன. தமிழர்கள் அணிந்து வந்த ஆதிகால அணிகளின் பெயர்கள், அடியில் வருமாறாகும் : 1. தலையணி தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்கு மல்லிகைப்பூ, இலை, அரசிலை, பதுமம், சரம் பூரப்பாளை, கோதை, வலம்புரி. 2. காதணி தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திள வோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல். 3. கழுத்தணிகள் கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லி மாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை போன்றன. 4. புய அணிகலன்கள் கொந்திக்காய் 5.கை அணிகலன்கள். காப்பூ, கொந்திக்காய்க் கொலுசு 6. கைவிரல் அணிகலன்கள் சிவந்திப்பூ மோதிரம், அரும்பு, வட்டப்பூ. 7. கால் அணிகலன்கள் மாம்பிஞ்சுக் கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய்க் கொலுசு போன்றன. இவற்றில் நவமணிகளும் பதிக்கப்பெற்றன. நாகரிகம் வளர, வளர ஒவ்வொரு உறுப்பிலும் பல்வேறு அணிகள் பல்வேறு முறை யில் அபிவிருத்தியுற்றும் வளர்ச்சிபெற்றும் வந்துள்ளன. இஃதன்றி சங்குவளை, புலிப்பல்தாலி, புலிநகத்தாலி போன்றவைகளும் உண்டு. இன்றையத் தமிழக மகளிரைவிட முற்கால மகளிர் அழகிய அணிகலன்களை மட்டுமன்றி விளையுயர்ந்த மணிகள் பதித்த, அரிய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களையெல்லாம் அணிந்து வந்தனர். எனவே பண்டைக்காலத் தமிழ்நாட்டுப் பூவையர் நமது பழந்தமிழ் இலக்கியங்களில் ஆயிழையார் என்று கூறப் பெற் றுள்ளனர். இதனால் பெண்கள் அணிகலன் பெயரால் அழைக்கப் பட்டனர் என்று தெரிகிறது. தமிழ் மகளிர் முற்றுப்பெற்ற வேலைப் பாடுகளையுடைய அணிகலன்களை அணிந்து வந்தனர். அதனால் அவர்கள் அணிந்த அணிகலன்கள் முற்றிழை என்று அழைக்கப் பெற்றன. கோத்து அணிந்து கொள்வதை கோவை என்றனர் (மணிக் கோவை). தொடுத்து அணிவதைத் தொடை என்று மொழிந்தனர். அசைந்து ஆடத்தக்கதை மாலை (ஆரம்) என்றனர் (நெல்லிக்காய் மாலை). ஒரு தரமாய் ஒழுங்குற அமைந்து கொண்டதை சரம் என்றனர் (முத்துச்சரம், வன்னசரம்). கொடிகளை முறுக்கி அணிவதைக் கொடி என்றனர் (பூங்கொடிப் பொற்கலம்). வடிவம் பற்றி இலை, குழை என்றனர் (அரசிலை, பொற்குழை). ஓலை போன்றவற்றை ஓலை என்றனர் (பொன்னோலை). காப்பாக அணி வதைக் காப்பு என்றனர். (பொற்காப்பு). தடையாக அணிவதைத் தடையம் என்றும் கூறினர். கிண்கிண் என்று ஒலிப்பதைக் கிண்கிணி என்றனர். கண்ணியாகத் தொடுத்து அணிவதைக் கண்ணி என்றனர் (பொற்கண்ணி). ஆதிகாலத்தில் சங்குகளால் மோதிரங்களும் வளைகளும் (காப்புகளும்) குழைகளும் (காதணிகளும்) அணிந்து வந்தனர். பிற்காலத்தில் உலோகங்கள் தோன்றியதும் உலோக அணிகளுக்கும் அவ்வடிவம் பற்றி வலம்புரிச்சங்கு, பொன்வளை, பொற்குழை, பொற்றொடி எனப் பெயர் வைத்துள்ளனர். தலை அணிகலன்கள் 1. மகுடங்கள் 1. கிரீட மகுடம் 2. கரண்ட மகுடம் 3. மணி மகுடம் (இரத்தின மகுடம்) 4. சடா மகுடம் தலைமீது அணியப்படும் அணிகலன்கள் தலையணி எனப் படும். மக்கள் உடம்பில், தலைமிக முக்கிய உறுப்பாகையினால் தலைமீது அணியப்படும் அணிகலன்களும் சிறப்புடையனவாக மதிக்கப்பெற்றன. தலையில் விலையுயர்ந்த அணிகளையே அணிவர். பொன்னும் மணியும் இடம் பெறுவதற்குரிய சிறப்பான இடம் - முதல் இடம் தலையேயாகும். தமிழர்களில், ஆண் மக்கள் தலையின் மகுடத்தைத் தவிர வேறு தலையணி எதுவும் அணிந்ததாகத் தெரியவில்லை. மகுடம் மன்னர்கள்தாம் அணிவார்களேயன்றி பிறர் அணியமாட்டார்கள். பண்டைக் காலத் தமிழ் ஆண் மக்கள் தலையில் சடாமகுடத்தையும் தலைப்பாகை போன்றவைகளையும் தவிர வேறு பொன் அணிகள் எதுவும் அணிந்ததாக நமக்குத் தெரியவில்லை. ஆனால் பண்டைக் காலத்தில் ஆண் மக்கள் பெண் மக்களைப்போல் தலையில் முடி வைத்திருந்தார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. ஆனால், ஆண் மக்கள் தலையணி மட்டுந்தான் அணிய வில்லையேயொழிய கழுத்தில் மாலைகளும் காதில் குண்டலங்களும் புயம், கை, இடுப்பு, தொடை, கால் பாதம் முதலிய உறுப்புகளில் பல அணிகலன்களும் அணிந்து வந்துள்ளார்கள் என்று நன்கு தெரி கிறது. ஆனால் ஆண் மக்கள் தலையணி மட்டுந்தான் அணிய வில்லையேயொழிய கழுத்தில் மாலைகளும் காதில் குண்டலங்களும் புயம், கை, இடுப்பு, தொடை, கால் பாதம் முதலிய உறுப்புகளில் பல அணிகலன்களும் அணிந்து வந்துள்ளார்கள் என்று நன்கு தெரி கிறது. மகுடம் வரலாற்றுக் காலத்திற்கு முன்னிருந்து தமிழர்கள் தலையில் ஏதாவது அணிந்து வருவது மரபாக இருந்து வருகிறது. ஆதியில் தட்பவெட்ப நிலை, மூளையைப் பாதிக்காமல் இருப்பதற்காகத் தலையை, இலை, துணி முதலியவற்றால் மறைத்திருக்கலாம். மூளை இருக்கும் பகுதியாகிய தலை பாதுகாப்பாக இருக்கும்படி அதைச் சுற்றி வலுவான மண்டையோடு இயற்கையிலே அமைந்திருக்கிறது. அந்த மண்டை ஓடும் எளிதில் தாக்குறாமல் இருக்கவே மேல் தோலும் அதன் மேல் அடர்த்தியான மயிர்களும் இருக்கின்றன. மக்கள் அதற்கு இன்னும் பாதுகாப்பு அளிப்பதற்காகக் கொண்டை, சடாமகுடம், சடாபாரம், சடா மண்டலம் முதலியவைகளை அமைத்தனர். அவைகளும் ஞாயிறு வெப்பத்தை ஈர்ப்பதை எண்ணி தலைப்பாகை (சிரதரகம்) கண்டனர். ஏன்? அளகசூடம், தம்மில்லம் முதலியவைகளையும் கண்டனர். மக்கள் நாகரிகம் எய்திய பின், மன்னர்கள் மகுடம் அமைத்தனர். அந்த மகுடங்களை, கலைப்புலமை வாய்ந்த சிற்பிகள் பொன்னாலும் மணிகளாலும் செய்து நாலுவகையாக அமைத்தனர். அவைகளாவன : (1) கிரீட மகுடம் (2) கரண்ட மகுடம் (3) இரத்தின மகுடம் (4) சடாமகுடம் எனப்படும். மகுடம் ஆதியில் தலையைப் பாதுகாக்கும் கவசமாக எழுந்து, அப்பால் அழகு செய்யும் அணிகலன்களில் ஒன்றாக மலர்ந்துள்ளது. பின் அது தெய்வங்களுக்கும் மன்னர்களுக்கும் உரிய சிறப்பான சின்னங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. நமது தமிழ் நிகண்டில் இறைவனுக்குரிய இன்றியமையாத பொருள்கள் பலவற்றில், மகுடம் (முடியும்) ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.2 முடி - அதாவது மகுடம் தலையணியாய்த் தோன்றி அப்பால் தெய்வங்களுக்கும் பேரரசர்களுக்கும் உரிய பொருளாய்ப் பரிணமித் துள்ளது. முடியைப் பெரிதும் சிற்றரசர்கள் அணியார்கள். பேரரசர் களே அணிவார்கள். அரசர்களின் பெருமையைக் குறிப்பிடும் பொழுது முடியுடையமன்னர்கள் என்று குறிப்பிடப்படும். முடி - அதாவது மகுடம் ஒவ்வொரு மன்னரும் ஒவ்வொரு விதமாக அணிந்து வந்தனர். இது நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபட்டு விளங்கியது. இது கிரீடம், மணி மகுடம், முடி, மௌலி, சிரோன்மணி என்றெல்லாம் கூறப்படும். நால்வகை மகுடங்களில் கிரீட மகுடமும் இரத்தின மகுடமும் திருமால் முதலிய போக மூர்த்திகளுக்கும், கரண்ட மகுடம் பிள்ளையார் முதலிய கணங்களின் தலைமைத் தெய்வங்களுக்கும் சடாமகுடம் சிவன், நான்முகன் முதலிய தெய்வங்களுக்கும் உரியன. வீரவல்லவர் எழுதிய பரத சாத்திரம் மூன்றுவித மகுடங் களைப் பற்றிக் கூறுகிறது. அவை (1) பார்சவாகதம் (பார்சவ மகுடம்) (2) மதகி (3) கிரித்தி எனப்படும். பொதுவாகத் தெய்வங்களும் கந்தர்வர்கள், யாகர்கள், நாகர்கள் (பன்னகர்கள்) அரக்கர்கள் ஆகியவர்களும் பார்சவமகுடம் தரிப்பார்கள். எனவே நாடகத்தில் அவ்வேடம் பூண்டு நடிப்பவர் களும் பார்சவ மகுடத்தை அணிய வேண்டும். கிருத்திக் என்னும் கிரீடத்தை உயர்ந்த தெய்வங்களும், மதகி என்னும் மகுடத்தை நடுத்தரத் தெய்வங்களும் அணியும். எனவே இந்த தெய்வங்களின் வேடம்புனைபவர்கள் இவ்விரண்டு மகுடத் தையும் அணிய வேண்டும். சாதாரணத் தெய்வ வேடம் புனைவர்கள் பார்சவ மகுடத்தை அணியலாம். மன்னர்கள் மதகி மாதிரியான மகுடங்களை அணிதல் வேண்டும். வித்தியாதரர்கள் சித்தர்கள், காரணர்கள் தலைமயிரால் கட்டப்பட்ட கேச மகுடம் அணியலாம். அமைச்சர், தளபதி, வணிகக் குழுவின் தலைவர்கள் குருக்கள் போன்றோர் தலைப்பாகை அணிவதால் அவ்வேடம் புனைபவர் களும் தலைப்பாகை அணியலாம். தளபதிகளும் இளவரசர்களும் சிறுமகுடம் (அர்த்த மகுடம்) அணிவர்; முனிவர்கள் சடா மகுடம் அணிவர். இவ்வேடம் புனைபவர்களும் இம்மகுடங்கள் அணிய வேண்டும். மணிமகுடங்களும், மாமகுடங்களும் மன்னர்களாலும் தெய்வங்களாலும் கிறித்தவ ஊழிக்கு முன்பே தமிழகத்தில் அணியப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தெய்வங்களுக்குரிய அணியில் மகுடம் இன்றியமையாதது. இந்த மகுடம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய் அவர்களின் அறிவு, ஆற்றல், செல்வம், கலை முதலியவைகளுக்கேற்ப அமைந்திருக்கிறது. தமிழகத்தில் சேரர்கள், சோழர்கள் பல்லவர்கள் முதலிய மன்னர்கள் வெவ்வேறு விதமான முடிகளைப் புனைந்துள்ளார்கள். அவர்கள் நாட்டில் எழுந்த தெய்வங் களும் வெவ்வேறு விதமான அழகிய மகுடங்களோடு விளங்கு கின்றன. சிற்றண்ணல் வாயில், அசந்தா, சிகிரியா பார்கூத் முதலிய இடங்களிலுள்ள ஓவியங்களிலும் மதுரை, தஞ்சை, காஞ்சி, மாமல்ல புரம், அமராபதி, காஞ்சி முதலிய இடங்களில் உள்ள சிற்பங்களி லும் பல்வேறு வகையான மகுடங்களையும் தலையணிகளையும் காண்கின்றோம். திருமால் இந்திரன் முதலிய தெய்வங்களும் வேறு பல சிறு தெய்வங்களும் அடிபருத்து நுனிசிறுத்த அழகிய வேலைப்பாடுள்ள முடிகளைப் புனைந்துள்ளனர் என்று அறிகின்றோம். பிற்காலத்தில் எல்லாத் தெய்வங்களும் ஒரு நியதிக்குட்பட்டுச் சிற்சில விதமான மகுடங்களை அணிந்திருப்பதாக அறிகின்றோம். தமிழகத்தின் மகுடங்கள் பல அரியவேலைப்பாடமைந்தன வாய் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. நாம் பல்லவர்கள் காலத்திலிருந்து இன்றுவரை, அதாவது கி.பி. 6வது நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை மகுடங்களின் அபிவிருத்தியை ஆராய்ந்தால் பல விசயங்களை அறியலாம். ஒவ்வொரு காலமும் அதன் அபிவிருத்தியைச் சுட்டிக் காட்டுவதாய் அமைந்துள்ளது. அதனுடைய அழகிய வேலைப்பாடுகளின் எளிமை அதனுடைய பழைய பண்பாட்டிற்கு ஒரு சோதனையாகக் காணப்படுகிறது. இவ்விதத் தோற்றம் அதன் காலத்தை நிர்ணயிக்கத்தக்க கருவியாய் விளங்குகிறது. மக்களின் நாகரிக வளர்ச்சியின் அம்சங்கள் அனைத்தும் அம்மகுடங்களில் நன்கு பிரதிபலிக்கின்றன. 1. கி)ரீட மகுடம் இக் கிரீட மகுடம் மூங்கில் இலைபோன்று திகழும். இஃதின்றி சிற்பரத்தினம் என்னும் நூலின் இலக்கண விதியை அனுசரித்து முட்டை வடிவமாகவும் இருக்கும். தாமரை முகை, குடை, ஆமை, வடிவமாகச் செய்யப்படுவதும் உண்டு. இம்மகுடம் பொன்னால் செய்யப்பெற்று விலையுயர்ந்த மணிகள் பதிக்கப்பெற்றிருக்கும். நாலு பக்கங்களிலும் மகர உருவத்தோடு கொடிகளும் இலைகளும் தளிர் களும் பூக்களும் அரும்புகளும் அணி செய்யும். முத்துக் கோவை களும் விலையுயர்ந்த மணிகளும் இடம் பெற்றிலங்கும். நெற்றிக்கு மேல் உடனடியாய் மகுடத்தைச் சுற்றி அகன்ற ஒரு பட்டபந்தம் இருக்கும். மகுடத்தின் மற்றப் பகுதிகள் மௌலி பந்தங்களாலும் செடி கொடிகளாலும் எழில் பெற்றிலங்கும். மகுடத்தின் அடிப் பாகம் இளம் பிறையைப் போன்று வளைந்திருக்கும் முதல் வகை திருமாலின் படிமங்களிலும் சக்கிரவர்த்திகளிடத்திலும் காணப் படும். இம்மகுடம் 16, 18, 24 அங்குலம் என்று மூன்று வகையில் அமையும். இவ்வாறாக அமைக்கப்படும் அழகிய கிரீட மகுடத்தில் உச்சி (சிகரம்) மிக அழகாக இலங்கும். இவை 3, 5, 7, எண்ணிக்கை யுள்ள குமிழ்கள் போன்ற உறுப்புகளுடன் திகழும். படிமங்களின் அமைப்புக்கு ஏற்றவாறு எண்ணிக்கைகள் குறைந்தும் கூடியும் இருக்கும். இந்த கிரீட மகுடம், முட்டை (அண்டம்) வடிவமாகவோ, தாமரை மலர், குடை, ஆமை போன்ற வடிவமாகவோ அமைய வேண்டும் என்று சிற்ப விதிகள் கூறுகின்றன. இந்த மகுடங்களின் சிறப்பை வைத்து அதை அணிந்திருக்கும் தெய்வம் அல்லது அரசனின் ஆற்றல், பெருமை முதலியன தெரியக் கூடும். இந்தக் கிரீட மகுடத்தில் உலகில் உயர்ந்த வைரம், மாணிக்கம், முத்து மரகதம் போன்ற மணிகள் இடம் பெற்றிருக்கும். மன்னனின் மரியாதை, மானம், கௌரவம் எல்லாம் இந்த மகுடத்திலே அடங்கி இருக்கும். 2. கரண்ட மகுடம் கரண்ட மகுடம் அடியினின்று முடிவரை படிப்படியாக சுற்றளவு குறைந்து கொண்டே போய் மகுடத்தின் நுனி, மொக்கு (அரும்பு) போன்று குவிந்து காணப்படும் இது 3, 4, 5 கரண்டங்கள் உள்ளதாக இருக்கும். மற்றவை கிரீடமகுடம் போன்று இருக்கும். தெளிவாகக் கூறுவதானால் கரண்ட மகுடம் ஒரு கரண்டக வடிவாகச் செய்யப்பட்ட ஒரு முடி என்று கூறலாம். இது ஒரு கிண்ணம் போன்ற வடிவுள்ளதாக இருக்கும். இது நெட்டை யாகவோ அல்லது குட்டையாகவோ அல்லது ஒரு பக்கம் குவிந் திருக்காமலோ அழகாக இருக்கும். இது தோற்றத்தில் மிகச் சிறி தாகவே காணப்படும். பல கரண்டங்கள் அடியும் நுனியும் ஒன்றாகக் காணப்படும். பாத்திர அடுக்குகளைப் போல் ஒன்றின் மீது ஒன்றாக 3,5,7 வரிசைகளாகப் பொறித்திருப்பது அதன் உருவத்தை சிறிதாக எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கரண்ட மகுடங்கள் பெரும்பாலும் தேவிகள், பிள்ளையார், இளமுருகன், அனுமான் முதலிய தெய்வங் களிடத்திலும் பேரரசர்களுக்குக் கீழ்பட்ட குறு நில மன்னர்களிடத் திலும் காணப்படும். இந்தக் கரண்ட மகுட வகைகளை வேறு எங்கும் காணமுடியாது. இது தமிழகத்திற்கே ஒரு சிறப்பாக அமைந்த மகுடமாக எண்ணப்பட்டு வருகிறது. இந்தக் கரண்ட மகுடமும் பொன்னால் செய்யப்பட்டதே யாகும். இதிலும் விலையுயர்ந்த வைரம் மரகதம் மாணிக்கம் மரகத நீலம் போன்ற பல்வேறு வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். இது பார்வைக்குச் சிறிதாகக் காணப்பட்டாலும் எழிலுடன் திகழும். இதன் சிற்ப வேலைப்பாடுகள் பிறமகுடங்களைவிட எள்ளளவும் குறைந்தனவல்ல. 3. இரத்தின மகுடம் இரத்தின மகுடம் என்றால் மணிகள் பதித்த அணி மகுடம் என்றே பொருள்படும். இது கரண்ட மகுடத்தை விட உயரமாகவும் அழகாகவும் இருக்கும். இம்மகுடம் பொன்னால் செய்யப்பட்டு ஒன்பது விதமான மணிகள் அழுத்தப்பெற்றுள்ளன. இது அதிக மான மணிகள் இழைத்துச் செய்யப்பட்டதால் இரத்தின மகுடம் என்னும் பெயர் பெற்றது. இரத்தின மகுடம் சிவபெருமான் போன்ற யோக முறையைத் தழுவி நிற்கும் தெய்வத்திற்குரியதன்று. போக முறையை நாடும் திருமால், தேவிகள் போன்ற தெய்வங்கள் அணிய லாம். மன்னர்களுக்கு இரத்தின மகுடம் ஏற்றது. மகுடத்தின் நடுவில் முன்பக்கம் பெரிய வைரம் அல்லது மாணிக்கம் அல்லது மரகதம் வைத்து இருக்கலாம். அது எல்லா வற்றையும்விட பெரியதாய் ஞாயிறு போன்று திகழும். இதைச் சுற்றிச் செடி கொடிகளும் மலர்களும் காய்கனிகளும் பொன்னாற் செய்யப்பெற்று இடை இடையே மணிகள் பதிப்பிக்கப்பெற் றிருக்கும். இந்த மகுடங்கள் மன்னர்களின் செல்வத்தையும் வலிமையை யும் பெருமையையும் எடுத்துக்காட்டுவனவாக இருக்கும். மகுடங் களுக்காகப் பல போர்கள் நிகழ்ந்ததுண்டு. எண்ணற்ற உயிர்களை ஒரு மகுடத்திற்காகப் பலியிட்டதுமுண்டு. தமிழகத்திற்கு உரித்தான சேர சோழ பாண்டியர்கள் மட்டு மன்றிப் பல்லவர்களின் மணிமகுடங்களும் எங்கு சென்றன என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவைகளில் எதுவும் நம்மை இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர்களின் தொல் பொருட் காட்சி சாலையிலோ அல்லது பிரஞ்சு, உலாந்தாக்காரர்களின் தொல் பொருள் காட்சிசாலையிலோ இருப்பதாகத் தெரியவில்லை. அவை களைக் காணவேண்டும் என்று அக்கரை நம்மிடம் இல்லை. ஆனால் நமது வருங்கால சந்ததிகளுக்காவது அவ்வாசை வரவேண்டும் என்பது எமது எண்ணம். 4. சடாமகுடம் சடா மகுடம் உலோக காலத்திற்கு முந்திய மக்களின் நாகரிகத்தில் எழுந்த ஒரு தலையணியாகும். இந்தச் சடா மகுடம் சடைமுடியால் தொப்பி அல்லது ஒரு முடிச்சைப் போன்று கொண்டை பின்னப்பட்டுக் கட்டப்பட்டிருக்கும். சடை முற்காலத் தில் குடிமல்லம் இலிங்க உருவில் காணப்பட்டது போல் முறுக்கப் பட்ட முடியாக அல்லாமல் பின்னப்பட்ட முடியாகக் காணப்படும்; இது பிற்காலத்தில் முறுக்கிய முடியாகிவிட்டது. ஆகமங்கள் அனைத் திலும் குறிப்பாக உத்தர காமிகாகமத்திலும் இதன் விளக்கம் காணப் படுகின்றது. இவ்விதமான மகுடங்கள் பல சக்கரங்கள் போன்ற உருவங்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். அவ்வணிகள் மகர குடம், பத்திரகுடம், இரத்தினகுடம், புரிதங்கள் என்று கூறப்படும். மகரகுடம் என்பது முன்பக்கத்தில் அணி செய்யப்படவேண்டும். எஞ்சிய ஏனைய பகுதிகளில் அல்லது நான்கு பக்கங்களிலும் புரிதங்கள் மட்டுமே இடம் பெறலாம், புரிதங்களும் அல்லது மகர வடிவங்களும் செடி, கொடி, இலை, பூ, காய், உருவங்களும் இடது பக்கத்தில் அல்லது வலது பக்கத்தில் மட்டும் இருக்கலாம்; மேலே இருக்கக்கூடாது. மகரகுடம் முன் பக்கத்திலும் பத்திரகுடம் அல்லது இரத்தினகுடம் பின் பக்கத்திலும் இடம் பெற்றிருக்கலாம்.5 சடாமகுடம் சிவபெருமானுக்கே உரியது. சடா மகுடத்தின் வலது பக்கத்தில் வெள் எருக்கம் பூ, பாம்பு, கங்காதேவி உருவங் களும் இடது பக்கத்தில் இளம் பிறை உருவமும் காணப்பட வேண்டும். இதன் மூலம் சிவபெருமான் ஆதிகாலத்தில் அதாவது உலோக காலம் அரும்பும்முன் அதாவது கற்காலத்தில் எழுந்த பழம் பெரும் தெய்வம் என்பதை உறுதிப்படுத்துகிறது. அரப்பா நாகரிக மும் சிவபெருமான் 5000 ஆண்டுகளுக்கு முன்பே - ஆரியரல்லாதார் கண்ட பெருந்தெய்வம் என்பதை உறுதிப்படுத்து கிறது. தலை அணிகலங்கள் (ஆ) 2 1. அரசிலை, 2. இராக்குடி, 3. இலம்பகம், 4. இலை, 5. கடிகை, 6. கன்னசரம் 7. குச்சம் 8. குஞ்சம் 9. கொண்டைத் திருகு 10. கோதை 11. சடாங்கம் 12. சடைநாகர் 13. சடைத்திருகு 14. சந்திரப்பிரபை 15. சுடிகை 16. சுட்டி 17. சுரிதம் 18. சூடிகை 19. சூடாமணி 20. சூடை 21. சூட்டு 22. சூரியப்பிரபை 23. சூழி 24. சூளாமணி 25. சேகரம் 26. சொருகுப்பூ 27. தலைப்பாளை (தொய்யகம்) 28. தாளம்பூ 29. தெய்வ உத்தி 30. பட்டம் 31. பிறை 32. புல்லகம் 33. பொலம் பூந்தும்பை 34. பொற்பூ 35. பொற்றாமரைப்பூ 36. பொன்வாகை 37. பொன்னரிமாலை 38. மாராட்டம் 39. முகசரம் 40. முஞ்சம் 41. வயந்தகம் 32. வலம்புரி. 1. தலையணி வகைகள் (ஆ) (மகளிர் அணிகலன்கள்) 1. அரசிலை அரசிலை வடிவாகப் பொற்றகட்டால் செய்து தலையில் அணியும் ஒரு அணிகலன். இது பழங்காலத் தமிழர் அணிபோல் திகழ்கிறது. 2. இராக்குடி தலையின் உச்சியில் பின்புறம் நோக்கி அணியப்படும் தலை அணிகலன்களில் ஒன்று. இது பொன்னால் தகடு வடிவாகச் செய்யப் பட்டு அடியில் வெள்ளித்தகடு பொருத்தப்பட்டுக் கீழே மடையும் வைக்கப்பட்டிருக்கும். இதன் உட்புறம் புகலாகச் செய்யப்பட்டு மெழுகு வைக்கப்பட்டிருக்கும். பொன் தகட்டின் மீது அரிய சித்திர வேலைப்பாடுகள் எழில்பெற்றிலங்கும். இதனைக் கொத்துமான வேலையிற் சிறந்த பொற்கொல்லர்களே செய்வர். இராக்குடியுடன் பிறை என்னும் அணியும் இணைத்தே அணிவர். அதுவும் இதைப் போன்ற வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். இராக்குடியும், பிறையும் ஞாயிறும் திங்களும் போல் திகழும். இது சடாங்கத்திற்கு மேல் அணியப்படுவது மிகப் பொருத்தமானதாக இருக்கிறது. 3. இலம்பகம் இலம்பகம் தலையில் அணியப் பெற்று நுதலில் தொங்கும் ஒரு அணி. அதனால் இது நுதலணியாகவும் எண்ணப்படும். இதனை ஆடல் மகளிர் விரும்பி அணிவர். அவர்கள் அணிந்துள்ள தலை அணிகளினின்று இலம்பகம் நெற்றிக்கு நேராகத் தொங்கும். இது பதக்கம் போன்று அழகுற விளங்குவதோடு அடியில் சிறு பொற் சதங்கைகளும் கோக்கப்பட்டிருக்கும். 4. இலை இலை என்னும் அணிகலனும் பொன்னால் செய்யப் பெற்றுச் சிவப்பு வெள்ளை பச்சை மணிகள் பதிக்கப் பெறும் ஒரு சிறு தலை அணியாகும். 5. கடிகை பவளத்தால் செய்யப்பட்ட தலை அணிகளில் ஒன்று. கழுத்தில் அணியும் கடிகையாரம் வேறு; தலையில் அணியும் கடிகை வேறு. 6. கன்னசரம் கன்னசரம் தலை அணிகலன் என்றும் தலைச்சாமான் என்றும் கூறப்பெறும். இவ்வணிகள் நெற்றியைச் சுற்றியும் இரு காதுகளினின்று நெற்றிக்கு மேல் அரை வட்டமாகத் தலை முடியின்மீது அணிவதற் கெனப் பொன்னால் செய்யப் பெற்று மணிகள் பதிக்கப்பெற்ற அணிகலனாகும். முற்காலத்தில் இதில் விலையுயர்ந்த மணிகள் அழுத்தப் பெற்றிருந்தன. இன்று போலிக் கற்களே பெரும்பாலும் இடம் பெற்றிருக்கின்றன. கன்னசரத்தின் ஒரு நுனி வலது காதின் மேலுள்ள முடியில் பிணைக்கப்பட்டிருக்கும். மற்றொரு நுனி இடது காதின் மேலுள்ள முடியில் பிணைக்கப்பட்டிருக்கும். இவை சிறுசிறு சதுரப் பெட்டிகள் போல் செய்யப்பெற்று வரிசையாகச் சங்கிலித் தொடர் போல் பிணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சதுரத்திலும் கற்கள் பதிக்கப்பெற்றிருக்கும். அடியில் சிறு கற்களும் மேலே சிறிதும் பெரிதுமான குண்டுகளும் பொருத்தப் பெற் றிருக்கும். கீழே ஒவ்வொரு சதுரக் கட்டத்தின் கீழும் பொன்னால் இலை போன்ற ஒரு வடிவமும் நடுவே ஒரு மணியும் இடையிடையே உருண்டை வடிவமான குண்டுகளும் நுனியில் சதங்கை போன்ற சிறு பொன் மணிகளும் காணப்படுகின்றன. தலை நடுவில் சங்கிலி போல், உச்சியிலிருந்து நெற்றி வரை ஒரு பொன்சங்கிலி பட்டைபோல் இணைக்கப்பட்டிருக்கும். இதை வகுப்புச்சரம் என்பர். இதிலும் கற்கள் பதிக்கப் பெற்றிருக்கும். முன்னர் கற்களின்றிப் பொன்னாலே செய்யப்பட்டிருக்கும். சிலவற்றில் முத்துக்களும் பதிக்கப் பெற்றிருக்கும் இவ் வணியின் நடுவில் நெற்றியின் மையத்தில் மூக்கிற்கு நேராக மேலே ஒரு பதக்கம் தொங்கும். இது பிறை வடிவில் இருக்கும். இதில் கற்கள் பதிக்கப்பெற்றிருக்கும். நடுவே ஒரு பெரிய கல் இடம் பெற்றிருக்கும். கீழே சுற்றிலும் பொற் சதங்கைகள் தொங்கும். இதைச் சிந்தாமணி என்பாருமுளர். இவ்வணிகலன்களுக்கு மேல் தலையில் வலது பக்கத்தில் வட்டமான ஒரு கல் வில்லை அணியப்படும். அதைச் சூரியப்பிறை என்பர். இடது பக்கம் பிறை வடிவமான கல்லணி அணியப்படும். அதைச் சந்திரப்பிறை என்பர். இவை இரண் டிலும் சிவப்பு வெள்ளை பச்சை நிற மணிகள் பல அழுத்தப் பெற்றிருக்கும். இந்த அணிகள் ஞாயிறு, திங்கள் ஆகிய கோள்களின் தோசங் களை அகற்றும் என்பது பண்டைக்காலத் தமிழ் மக்களின் நம்பிக்கை. இஃதன்றி இரு பறவைகள் அதாவது - அன்னங்களின் வடிவில் உள்ள தலைச்சாமான்களும் உண்டு. தலைச்சாமான்களில் இடது பக்கமும் வலது பக்கமும் செருகப்படுவது சம்பு என்றும் கூறப்படும். இது ஒருவகைச் சாலர் அமைந்த அணிகலனாகும். இந்த அணிகலன்களை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெண்கள் மணக்கோலத்தின்போது அணிந்து வந்தனர். ஆனால் ஆடற்கலையில் ஈடுபட்ட பெண்கள் இவ்வணிகளை வேத விதி போல் எண்ணி நேற்று வரை அணிந்து வந்தனர். இப்பொழுது இவ் வணியை நாட்டியக் கலையில் ஈடுபட்ட பெண்களிற் பலர் அணிவ தில்லை. சென்னை கலாச்சேத்திரத்தின் நிறுவியார் திருமதி உருக்கு மணி அருண்டேல் தமிழ் நாட்டின் பண்பை மறவாது இந்த அணி கலனை அணிந்து ஆடி வந்தனர். சமீபகாலம் வரை ஈழ நாட்டுத் தமிழ் மக்கள் தங்கள் திருமணச் சடங்குகளில் இதை எழில்பெற அணிந்து வந்தனர். இது அந்நாட்டு மகளிரின் அழகை மேலும் உயர்த்திக் காட்டியது. சிங்கள மாதர்களி னின்றும் அவர்கள் தனிச் சிறப்புடையவர்கள் என்று உயர்த்திக் காட்டியது. இன்று அவர்க ளிடமிருந்து இவ்வணி நழுவ ஆரம்பித்து வருகிறது. 7. குச்சம் பல பொன் மணிகள் கோவையாய் இணைத்த ஒரு தலையணி பொன்னாற் செய்யப்பட்டது. இது இடைக் காலத்தில் எழுந்தது. இன்று வழக்கில் இல்லை. 8. குஞ்சம் சடையின் மீது சடாங்கம் வைத்துக் கட்டப் பெற்று சடையின் நுனியில் குஞ்சம் வைத்துக் கட்டப்படும். இது மூன்று பந்துகள் போல் செய்யப்பெற்று அடியில் குஞ்சந் தொங்கும். மேலே பொன் பூண்பொதியப் பெற்றிருக்கும். 9. கொண்டைத் திருகு கொண்டைத் திருகுக்கு மேலே அழகிய பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பொற்றகட்டின் அடியில் வெள்ளித் தகடு பொருத்தப் பட்டிருக்கும். உள்ளே மெழுகு அடைக்கப்பட்டிருக்கும். அடியில் திருகுகள் இருக்கும். இதன் முடிமீது வைத்துச் சுற்றுவதால் முடியை இறுகப் பற்றிக் கொள்ளும். இது கொண்டையில் வைத்துத் திருகுவ தால் கொண்டைத் திருகு என்னும் பெயர் பெற்றது. 10. கோதை கோதை என்பது மகளிரின் தலைக் கோலத்தில் உள்ள ஒரு தலை அணியாகும். இது பொன்னால் செய்யப் பெற்ற ஒரு பூமாலை யாகும். இதன் வேலைப்பாடு மிக அற்புதமானது. முத்துவடம் கோக்கப்பெற்று அழகுறும் அணி. 11. சடாங்கம் சடாங்கம் என்பது சடையின்மீது அணியப்படும் ஒரு பொன் அணிகலன்; பாம்பு போன்ற ஒரு தலையணி. சடாங்கத்தின் மேலே அதாவது சடையின் மேல் பிடரிப்பக்கம் ஐந்து தலை நாகம் அல்லது பாம்பு அரசன் (நாகராசன்) தலை இருக்கும். கீழே சடைமீது அதனுடைய வால் தொங்குவதுபோல் சடை மீதிருக்கும். இது பொன்னால் மிக்க கை தேர்ந்த பொற்கொல்லர்களால் செய்யப் பெறும். பெண்களின் நீண்ட தலை மயிரை சடையாகப் பின்னி அதன்மீது சடாங்கம் என்னும் அணிகலனைச் சொருகி சடையின் நுனியில் குஞ்சத்தை வைத்துக் கட்டுவார்கள் குஞ்சத்தின் மேலுள்ள பகுதியைச் சடாங்கத்தின் கீழே இணைத்து விடுவார்கள். கிருஷ்ணன் நாகராசனை அடக்கி அவன் தலைமீது காலை வைத்துக் கொண்டும் வாலைப் பிடித்துக் கொண்டும் ஆடும் செயலை இது பிரதிபலிப்பது என்று சிலர் கூறுகிறார்கள். கிருஷ்ணன் சின்னஞ் சிறு பருவம் உள்ளவனாய்ப் பாம்பின் படத்தின் மீது காலை ஊன்றிக் கொண்டு களி நடம் புரியும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகத் திகழும். ஆனால் இங்குக் காணப்படும் உருவம் திருமால் கிருஷ்ணனாகத் தோன்றுவது போல் தீட்டப்பெற்றிருக்கிறது. திருமாலின் வாகனத்தின் இறக்கைகள் நன்றாகக் காணப்படும். அவை ஒரு யாழியின் தலையோடு இணைந்திருக்கும். இரு பக்கமும் திருமாலின் வாகனமாகிய கருடன் தாங்கி நிற்கிறது. இந்த அணிகலன்களின் திருமாலின் சின்னம் இடம் பெற்றிருந் தாலும் தொன்று தொட்டு சிவன்மீது பக்தி கொண்டுள்ள சைவர்கள் வேற்றுமை உணர்ச்சியின்றி தாராளமாகத் தங்கள் இல்லத்தில் பயன்படுத்தி வந்தார்கள் என்று தெரிகிறது. பாம்பு சிவபெருமா னுடைய அணிகலன்கள் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது போலும் ஏன்? திருமாலே சிவபெருமானுடைய மைத்துனர் தாமே. சிவபெருமானுக்கு அவசியம் நேரும் பொழுதெல்லாம் அவர் கூட இருந்து வருவதாகப் புராணங்கள் எல்லாம் கூறி வருகின்றன வாம். 12. சடை நாகர் இது இராக்குடி வைத்து அணி செய்யப்படும் இடத்தில் உச்சியில் வைத்து அணி செய்யப்படும். இது இராக்குடி, சொருகுப் பூ, திருகுப் பூ, சுட்டி போன்று உள்ளே மெழுகு அடைத்துச் செய்யப் பெற்ற பொன் அணியாகும். இந்த அணியில் ஏழு தலையுள்ள பாம்பு தனது படத்தை அகல விரித்து அழகுடன் இருப்பதுபோல் செய்யப் பெற்றிருக்கும். இதை இன்றும் தமிழகத்துப் பெண்கள் விரும்பி அணிவர். இவ்வணி இன்றும் நெல்லை மாவட்டத்தில் வழக்கில் உள்ளது. 13. சடைத் திருகு சடையில் வைத்துத் திருகிக் கொள்ளும் ஒரு பொன் அணியாகும். இது திருகுப் பூ, சொருகுப் பூ போன்ற பொன் அணி. மேலே பொற்றகட்டால் செய்யப்பெற்று கீழே வெள்ளித்தகடு பொருத்தப் பெற்று உள்ளே மெழுகு வைக்கப்பெற்றிருக்கும். மேலே உள்ள பொற்றகட்டில் நல்ல கொத்துமான வேலைகள் செய்யப் பெற்றிருக்கும். இது கிட்டத்தட்ட ஒரு ரூபாய் வடிவில் இருக்கும். 14. சந்திரப் பிரபை இது திங்கள் வடிவில் செய்யப் பெற்று மணிகள் பதிக்கப் பெற்றது. தலையின் வலப் புறத்தில் சூரியப் பிரபையும் இடப் பக்கம் சந்திரப் பிரபையும் வைத்து அணி செய்யப்படும். இது சந்திரக் கலை என்றும் கூறப்படும். சந்திரக் கலையா மேகக் கருங்குழலை என்று பிரமோத்திரகாண்டம் கூறுகிறது.5 15. சுடிகை சுடிகை என்பது மகளிர் தலைக் கோலத்தில் ஒன்று. இது பொன் அணிகலனாகும். இதனை நெற்றிச் சுட்டி என்பர். 16. சுரிதகம் சுரிதகம் சடையில் அணியப்படும் திருகுப் பூப்போன்ற வட்டமான மணிகள் பதித்த பொன் அணியாகும். (நற். 86 : 5-8) 17. சூடிகை தலையைச் சுற்றி அணியும் ஒரு அழகிய அணிகலனாகும். 18. சூடாமணி சூடாமணி அழகிய தலையணிகலன்களில் ஒன்று. 19. சூடை சூடையின் மணி. 20. சூட்டு சூட்டு மகளிர் தலையில் அணியும் அணிகலன்களில் ஒன்று. மகளிர் தலையைச் சீவி கொண்டையைக் கட்டி அதில் அணியும் சுட்டி போன்ற பொன் அணியாக இருக்கலாம் என்று தெரிகிறது. 6 21. சூரியப்பிரபை மகளிர் தலையின் முன்புறம், இடது பக்கத்தில் சந்திரப் பிரபையும், வலது பக்கம் சூரியப் பிரபையும் அணிவர். இது பொன்னாற் செய்து மணிகள் பதிக்கப் பெற்றிருக்கும்; இன்றும் வழக்கில் உள்ளது. 22. சூழி சூழி, மகளிர் அணியும் தலை அணிகளில் ஒன்றாகக் கூறப்படு கிறது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அகநானூற்றில் சூழி என்பது யானைக்கு அணிவிக்கப்படும் முகப்படாம் எனக் கூறப்பட்டுள்ளது.7 23. சூளாமணி ஒன்பது மணிகள் இழைத்து வில்லையாகச் செய்யப் பெற்ற ஒரு தலை அணிகலனாகும். இப்பொழுது இவ்வணி இரத்தினச் சுட்டி என அழைக்கப்படுகிறது. 24. சேகரம் சேகரம் பொன்னாற் செய்யப்பட்டு மணிகள் பதிக்கப் பெற்ற தலையில் அணியும் ஒரு சிறு அணிகலன். இது பிற்காலத்தது என்று எண்ணப்படுகிறது. 25. சொருகுப் பூ சொருகுப் பூ பொன்னால் செய்யப் பெற்று அழகிய பூ வேலைப்பாடுகள் செய்யப் பெற்றது. தலையில் சொருகும் பூ வடிவ மான அணியாதலால் சொருகுப் பூ எனப்பட்டது. இது இராக்குடி, நாகர் போன்ற அணி. 26. தலைப்பாளை (தொய்யகம்) தலைப்பாளை, தொய்யகம் என்று கூறப்படும் இது ஒன்பது விதமான மணிகள் அழுத்திச் செய்யப் பெற்ற ஒரு பொன் அணியாகும். இந்த அணிகலன் தலை மயிர்ப் பிரிவின் நடுவில் அணியப்படுவதால் இது தலைப்பாளை எனப்படும். முற்காலத்தில் இதனைப் பூரப் பாளை என்றும் புகல்வர். பிற்காலத்தில் வாகு சுட்டி என்று வழங்கப்பட்டது. 27. தாளம்பூ தலை நாகர் போன்று மேலே பொற்றகட்டில் அரிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டுக் கீழே வெள்ளித்தகடு பொருத்தப் பட்ட ஒரு சிறு அணியாகும். உள்ளே மெழுகு அடைக்கப்பட் டிருக்கும். கீழே தலையில் பிணைக்க மடல் வைக்கப்பட்டிருக்கும். நடுவே அகன்றும் இரு புறமும் நுனிகள் சிறுத்துக் கூராகவும் இருக்கும். இது கிட்டத்தட்ட இலை வடிவிலே இருக்கும். 28. தெய்வ உத்தி தெய்வ உத்தி சீதேவி என்றும் கூறப்பெறும். இது வட்ட மானது; இராக்குடி போன்றது. இது பொன்னால் செய்யப் பெற்று அழகிய சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். இதனால் இது சித்திர உத்தி எனப்பட்டது. 29. பட்டம் இது தலையணி என்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. (பெருங் 1 : 40, 149-150) நெற்றிப் பட்டம் என்பது வேறு அணிகல னாகும். இது ஒரு பொன் தகடாகும். 30 பிறை இது பிறை வடிவமாக பொன்னால் செய்யப் பெற்றுச் சிறார்க்கு அணிவிக்கும் ஒரு தலை அணி. இது பழங்கால அணி.9 31. புல்லகம் புல்லகம் தலையின் பின்புறம் பிடரியில் பல்லி வடிவமாகப் பொன்னால் செய்து அணியப்படும் ஒரு பொன் அணியாகும். வலது புறம் வைத்து அணியப்படும் புல்லகத்தை வட பல்லி என்றும் இடது புறம் வைத்து அணியும் புல்லகத்தைத் தென் பல்லி என்றும் அணிவர். இது மிகப் பழங்கால அணி. இன்று வழக்கில் இல்லை. 32. பொலம் பூந்தும்பை தமிழ் நாட்டு வேந்தர்கள் தம் படையில் சேவை புரியும் சிறந்த வீரர்களுக்கு பொன்னால் செய்த தும்பைப் பூவைப் பரிசாக அளிப்பார்கள். அவர்கள் அதைத் தலையில் சூடிக் கொள்வார்கள். தும்பை மலர், வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது. 33. பொற்பூ முற்காலத்து, மன்னர்கள் அறிஞர்கள் பொன்னாற் செய்யப் பட்ட பூக்களை அறிஞர்களுக்குத் தானமாக வழங்கி வந்தனர். அவர்கள் தனியாகவோ கம்பிகளில் கோத்தோ தலையில் அணிந்து வந்தனர்.11 34. பொற்றாமரைப்பூ பாணர்கள், பாடினிகள் விறலியர் ஆகியவர்களின் பாடல் களைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் இவர்களுக்குப் பொற்றாமரைப் பூவைப் பரிசிலாக வழங்கும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் உண்டு. அவர்கள் அதைத் தலையில் சூடுவர். இவை அதிகமாக இருந்தால் வெள்ளி நாரால் தொடுத்தணிவர்.12 35. பொன் வாகை பண்டைய தமிழ்நாட்டு வீரர்கள் வெற்றிக்கு அடையாளமாக பொன்னால் செய்த வாகை மலரைத் தலையில் அணிந்து வந்தனர். வாகை வெற்றியின் சின்னம். வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றான் என்று பொருள் படும். 36. பொன்னரிமாலை தமிழ் நாட்டு மன்னர் பாடினிகளுக்கும் விறலியர்களுக்கும் அவர்களின் ஆடல் பாடல் கேட்டுக் களித்து பொன்னரி மாலையைப் பரிசளிப்பார். அதை அவர்கள் தலையில் சூடுவர். மின்னிருங் கூந்தல் மேதகப் புனைந்த பொன்னரிபாலையை13 எனக் கூறப்படுவதால் இது தலையணி எனப் பெறப்படும். இக்காலத்தில் மாணிக்கம் இழைத்துச் செய்யப்படுவது. நெற்றிப் பட்டம் என வழங்கப்படு கிறது. 37. மாராட்டம் மாராட்டம் முற்காலத் தலையணியாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரத்திலோ சிந்தாமணியிலோ பிற நூல்களிலோ காணப்படவில்லை. இது மராட்ட நாட்டினின்று போந்த அணியாக இருக்கலாம். அம்புகை கழுமியஅணி மாராட்டம்14 என்று பெருங் கதை கூறுகிறது. 38. முகசரம் முகசரம், என்பதைச் சிலர் தலைச் சாமான் என்றும் கூறுவர். இது பொன்னாற் செய்யப்பட்டு மணிகள் பதிக்கப் பெற்றிருக்கும். இது மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒன்று - அதாவது ஒரு சரம் உச்சியினின்று நெற்றி வரை இருக்கும். மற்றிரு பிரிவுகளும் நடு நெற்றியினின்று காது வரை நீண்டு கட்டப் பெற்றிருக்கும். இது பரத நாட்டியமாடும் ஆடல் மகளிர் ஆவலோடு அணியும் அழகிய அணி. இதனை ஆடற் கலையைப் பயின்ற ஐரோப்பிய மாதர்களும் அணிந்து பரத நாட்டியம் ஆடி வருகின்றனர். இவ்வணி நடு நெற்றியி னின்று காதுவரை தலை மயிர் நெற்றியிலோ கண்களிலோ விழாத படி காப்பது போல் காணப்படுகிறது. மேலும் தலை மயிருக்கு ஒரு வரம்பு காட்டுவது போலவும் திகழ்கிறது. மணப்பெண்கள் நீண்ட காலமாக இதனை அணிந்து வந்துள்ளனர்; இப்பொழுது அணிவ தில்லை. இவ்வணியின் நடுவிலிருந்து ஒரு பதக்கம் நெற்றியில் தொங்கும். அதை நெற்றிச் சுட்டி என்பர். இதை அணிந்து தலையின் முன்பக்கம் இரு பதிகளில் சூரியப் பிறையும் சந்திரப் பிறையும் அணிவர். 39. முஞ்சம் பண்டைத் தமிழகத்தில் தாய்மார்கள் தம் அருமைச் சிறார் களுக்குத் தலையில் வைத்து முடிக்கும் ஒரு தலையணி. இது பொன் னாற் செய்யப்பட்டு உச்சியில் வைத்து முடிக்கப்படும் ஒரு அணி கலனாகும்.15 40. வயந்தகம் இது தலையணி. இது தலையினின்று நெற்றியில் தொங்குவ தால் நுதல் அணி என்பாரும் உளர். இது ஆடும் மகளிர் விரும்பி தலைக் கோலத்தினின்று நெற்றியில் தாழும்படி ஒரு வடமாகச் செருகி வைக்கப்படும் பொன் அணிகலமாகும். இது மிகுந்த வேலைப்பாடுள்ளதாய் இருக்கும்.16 41. வலம்புரி வலம்புரி என்பது பொன்னால் வலம்புரிச் சங்கு வடிவில் செய்யப்பட்ட ஒரு தலை அணியாகும். இது தெய்வ உத்திக்கு அடுத்துத் தலையில் அணியப்படும். ஒரு தலைக் கோல அணி. இது மிகத் தொன்மையான காலத்தில் இருந்து தமிழகத்தில் அணியப்பட்டு வந்த ஒரு பொன் அணிகலனாகும். இந்நகை இன்றைய வழக்கில் இல்லை. சிலப்பதிகாரத்திலே, மாதவி தெய்வ உத்தியோடு வலம் புரியும் தொய்யகமும், புல்லகம் ஆகிய பெரிய கூந்தலில் அணிகலன் களையும் தொடர்ந்து அணிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.17 வலம்புரி என்னும் இந்த அணிகலனை நந்த வட்டப் பூ என்றும் அழைப்பர். இஃது இடது புறத்தில் ஏந்திழையர் அணியும் எழில் அணிகலன்களில் ஒன்று.18 II நுதல் அணிகலன்கள் 1. திரு உறுப்பு 2. திலகம் 3. நெற்றிச் சுட்டி 4. நெற்றிப் பட்டம் 5. பத்திக் கச்சு 6. பத்திரச் சுரிகை 7. மகரப் பகுவாய் 8. மகர வலயம். நுதல் (நெற்றி) மக்களின் உறுப்புகளில் தலை சிறந்தது; உயர்ந்து விளங்குகிறது. நுதல் சிறந்த இடமாக இருப்பதால் சிவ பெருமான் அதில் ஒரு கண்ணைத் தோன்றப் பண்ணினார். மக்கள் அதில் கண்ணைத் தோன்றும்படி செய்ய முடியாததால் அதில் திலகம் இட்டனர். திலகம் மக்களின் அழகை மிகுத்துக் காட்டு வதாய் உள்ளது. அது போல் மகளிர் நுதல் அணிகளைப் பூண்டு தம் இயற்கையழகை சிறப்புற்று விளங்குமாறு செய்துள்ளனர். நுதல் அணிகள் காதணிகள் கழுத்தணிகள், கையணிகள் போன்ற அணிகள் போல் தனித்த அணிகளல்ல. பெரும்பாலும் நுதல் அணிகள் தலையணிகளின் இணைந்த அணிகலன்களாகவே இருக்கின்றன. நுதல் அணிகள் தலை அணிகளினின்று நுதலில் தொங்குவனவாகவே இருக்கும். நுதலில் தொங்குவதால் நுதல் அணிகலன்கள் எனப் பெயர் பெற்றன; நுதலணிகள் சிலவாக இருப்பினும் சிறப்பானவைகளாகும். இவை பன்னிற மணிகள் பதிப்பிக்கப் பெற்று அழகுற விளங்கும். இவ்வணிகள் முகத்தின் மேற்பகுதியில் முன் பகுதியில் இடம் பெற்றுள்ளதால் முகத்திற்கு அழகூட்டுகின்றன. அவ்வணிகள் அடியில் வருமாறு: 1. திரு உறுப்பு திரு உறுப்பு பொன்னும் மணியும் இழைத்துச் செய்யப் பெற்ற தலைக் கோலத்தினின்று தொங்கும் ஒரு அழகிய நுதல் அணி. இது மிக அழகு தரும் நுதலணியாகப் போற்றப் பெற்று வந்தது. 2. திலகம் திலகம் என்னும் ஒரு பொன் அணி முற்காலத்தில் நெற்றியில் தொங்குமாறு அணியப்பட்டிருந்தது. திலகம் சுட்டி வடிவமாய் நுதலில் தொங்கும் தலையணியின் உறுப்பேயாகும். திலகம் கலித் தொகை போன்ற பழைய இலக்கியங்களிலும் இடம் பெற் றுள்ளது.19 3. நெற்றிச் சுட்டி நெற்றிச் சுட்டி முற்காலத்துத் தொய்யகம் போன்ற ஒரு நுதல் அணிகலனாகும். இது சுறாமீனின் வாய் போன்ற வடிவில் அமைக்கப் பெற்று நெற்றியில் தொங்குமாறு அணியப் பெற்றது என்றும் கூறுவர். வாசவதத்தை நெற்றிச் சுட்டியை அணிந்து அழகு பொலியத் திகழ்ந்ததை பெருங்கதை எடுத்துக்காட்டுகிறது. 20 4. நெற்றிப்பட்டம் நெற்றியில் அணியும் ஒரு பொன் தகட்டாலான நுதலணி. இது மிகப் பழமையான தமிழக நகை. வாணுதற் பட்டம் மின்னி என்று சிந்தாமணி சிறப்பித்துக் கூறும் அணிகலன் இதுவாகும். 21 5. பத்திக் கச்சு இது நுதலில் தொங்கும் ஒரு பொன் அணி. இது பழைய இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆனால் பெருங்கதையில் பத்திக் கச்சினோ டொத்தவை பிறவும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. (பெருங் 2; 5-144) இதைத் தவிர இவ்வணியைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. 6. பத்திரச் சுரிகை பத்திரச் சுரிகையும் பழங்கால தமிழக அணியாகத் தெரிய வில்லை. அது பிற்காலத்தில் பொன்னால் செய்யப் பெற்று நுதலில் இடம் பெற்ற பேரணிகலன் என்று தெரிகிறது. சித்திரப் பிணை யலும் பத்திரச் சுரிகையும் என்று பெருங் கதை கூறுகிறது. 7. மகரப் பகுவாய் இது சுறா மீன் வடிவமாகப் பொன்னாற் செய்யப்பெற்ற ஒரு நுதலணி. இதுவும் தமிழகத்து பழங்காலத்து அணிகலன்களின் ஒன்று. எறிமகர வயல மணிதிகழ் நுதலியர் என்று பரிபாடல் குறிப்பிடுகிறது. (பரி. 10; 77). 8. மகர வலயம் மகர வலயம் பொன்னாற் செய்யப் பெற்றுப் பலவித மணிகள் இழைத்து அழகுறச் செய்யப் பெற்ற பொன் அணி. இது சுறா வடிவம் வாய்ந்தது. இதைவிட இந்த அணிகலனைப் பற்றி அதிகம் சொல் வதற்கில்லை. பரிபாடலில் சுறாமீன் வடிவமாகச் செய்யப் பெற்ற மகர வலயம் என்னும் நுதலணி அணியப் பெற்ற அழகு பொலியும் நெற்றியையுடைய மகளிர் என்று குறிப்பிடப்படுகிறது.22 III காதணிகலன்கள் மிகத் தொன்மையான காலத்திலிருந்தே தமிழர்கள் காதணி களை அணிந்து வந்துள்ளனர். இந்தக் காது அணிகலன்கள் ஆதியில் குழையாகவும் இலையாகவும் ஓலையாகவும் பூந்தோடாகவும் இருந்து பின்னர் பல்வேறு விதமாகப் பரிணமித்தன. எனவே பிற் காலத்தில் பொன் அணிகள், குழை வடிவமாகவும் இலை வடிவமாக வும், ஓலை வடிவமாகவும், தோடு வடிவமாகவும் எழுந்தன. அதோடு பெயரில் கூட மாற்றம் பெறாது குழை என்றும் ஓலை என்றும் தோடு என்றும் பொன் அணிகள் பெயர் தாங்கின. காதணிகள் ஆண் களுக்கும் பெண்களுக்கும் உரிய அணியாக எழுந்தன. இன்று ஆண்கள் காதணி, அணியும் வழக்கம் நின்று விட்டது. மகளிர் கூட, காதில் தோடு தவிர பிற அணிகளைக் கைவிட்டு விட்டனர். தோடு அணியும் வழக்கம் கூட இப்பொழுது மறையத் தொடங்கிவிட்டது. ஆதியில் தோடணிந்த தமிழக மகளிர் பிற்காலத்தில் காது வடித்து, காது, தோள்வரை தொங்குமாறு பெரிதாக்கி அதில் 4,5 பெரிய காதணிகளை அணிந்து வந்தனர். இந்த வழக்கம் போர்னியோ நாட்டுப் பழங்குடி மக்களிடம் கூட இருந்து வந்ததாகத் தெரிகிறது. காது வடிக்கும் வழக்கம் தமிழகத்தில் எப்பொழுது எழுந்தது என்று கூறுவதற்கில்லை. சிலர் இந்தியாவில் மொகலாயர் ஆட்சி எழுந்த பின் காது வடிக்கும் வழக்கம் எழுந்தது என்று கூறுகின்றனர். பிற எந்த மாவட்டங்களையும் விட நெல்லை மாவட்டத்திலே பெண்கள் மிக நீளமாகக் காதுகளை வடித்திருந்ததோடு அதற்கென்று பல புதிய நகைகளையும் உருவாக்கி இருந்தனர். தமிழ்நாட்டில் வேளாளர்கள், பரதவர்கள், நாடார்கள், கம்மாளர்கள், வாணியச் செட்டியார்கள், மறவர்கள், இடையர்கள் போன்ற இனத்தவர்களின் பெண்கள் நீண்ட காதுகளைப் பெற்று அதில் பாம்படம், தண்டட்டி, முடிச்சு, இட்டடிக்கை, (சிலுவணி), மேலீடு போன்ற பெரிய நகைகளை அணிந்திருந்தனர். அதை அயல் நாட்டார்கண்டு ஆச்சரியப்பட்டு வந்தனர். இன்று இவ்வழக்கம் பெரிதும் மறைந்துவிட்டது. குழை, குண்டலம், கடுக்கன் முதலிய அணிகலன்களை ஆண் களும் அணிந்து வந்தனர். குழை அணிந்ததனால் சிவபெருமானுக்குக் குழைக் காதர் என்ற பெயர் எழுந்தது. நேற்று வரை, தமிழகத்து முதலியார் பெண்கள் நீண்ட குவளைக் கடுக்கன்களை அணிந்து வந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சைவக் குருக்கள் வட்டவடிவமான பெரியகுவளைக் கடுக்கன்களை அணிந்து வரு கின்றனர். இந்த நூற்றாண்டின் பாதிக் காலம்வரை தமிழர்கள் வீடுகளில் காது அணிகள் அணிவது ஒரு சிறப்பாகக் கருதப்பெற்றது. ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் காது குத்துவது - அதாவது குழந்தைகளுக்கு முதன் முதலாக காதில் துவாரமிட்டு அணிகள் அணிவது ஒரு விழாவாகக் கருதப்பெற்றது. குழந்தையைக் கோயிலுக்குக் கொண்டு போய்க் காது குத்துவதாகத் தெய்வப் பெயரில் பொருத்தம் பண்ணிக் கொள்வதும் உண்டு. முற்காலத்தில் பெண் குழந்தைகளுக்குக் காதைக் குத்தி அதில் பஞ்சை வைத்தும் தக்கை வைத்தும் காதுத் தொளையைப் பெரிது பண்ணினார்கள். அப்பொழுது அத்தொழிலில் தேர்ந்தவர்களைக் கொண்டு மிகக் கவனமாகக் காதைக் குத்தித் துளையைப் பெரிதாக்கிக் காதணிகள் பூண்டு வந்தனர். அப்பால் அவ்வழக்கம் மாறிப் பெண் குழந்தைகளுக்குத் தோடு போடும் வழக்கம் வரவே, கம்மாளர்களை (ஆசாரிமார்களை) அழைத்துக் காது குத்தி வந்தனர். அவர்களுக்குத் தட்சணையும் தேங்காய், பழம், சர்க்கரை கலந்த பச்சரிசி முதலியவை செலவு செய்ய வேண்டியதிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு வயதில் காது குத்துவது என்பது கைவிடப்பட்டு 4, 5 10 வயதுகளில் காது குத்த முற்பட்டனர். தோட்டிற்குப் பதிலாக சிறு குச்சிகளைக் காதில் அணிவதே நாகரிகமாக எழுந்தது. காதில் பல துவாரங்கள் இடுவ தற்குப் பதிலாக ஒரு துவாரமே இடப்பட்டது. அதுவும் சிறு ஊசியையோ முள்ளையோ கொண்டு தாய்மார்களே துவாரங் களைச் செய்து கொண்டனர். 1. அட்டிகை, 2. இட்டடிக்கை 3. ஓலை : (1) பொன் ஓலை (2) மாணிக்க ஓலை 4. கடிப்பிணை (சந்திரபாணி அல்லது வைர ஓலை) 5. கடுக்கன் (1) மணிக்கடுக்கன் (2) குவளைக் கடுக்கன் (3) சிவந்திப்பூக் கடுக்கன் 6. கம்பி 7. கன்னப்பூ 8. குண்டலம் :- (1) இரத்தினக் குண்டலம் (மணிக் குண்டலம்) (2) சர்ப்பக் குண்டலம் (பாம்புக் குண்டலம்) (3) சிம்மக் குண்டலம் (சிங்கக் குண்டலம்) (4) பத்திரக் குண்டலம் (5) மகரக் குண்டலம் (6) யானைக் குண்டலம் 9. குணுக்கு 10. குதம்பை : (1) நீலமணிக் குதம்பை (2) மாணிக்க மணிக் குதம்பை 11. குறடு காதின் வெளிப் புறமுள்ள குறடு என்னும் உறுப்பில் அணியும் அணிகலனாகும் 12. குழை : (1) ஒண்குழை (2) கனங்குழை (3) பூங்குழை (4) பொற்குழை (5) மகரக் குழை 13. குவளை : (1) பொற் குவளை (2) மணிக்குவளை (3) வட்டக் குவளை 14. கொப்பு 15. சன்னாவ தஞ்சம் 16. சின்னப்பூ 17. செவிப்பூ 18. தடுப்பு 19. தண்டட்டி 20. தாளுருவி 21. திரிசரி 22. தோடு : (1) பூந்தோடு (2) பொற்றோடு (3) மணித் தோடு 23. நவசரி 24. நவகண்டிகை 25. நாகபடம் 26. பஞ்சசரி 27. பாம்படம் 28. பாம்பணி 29. புகடி 30. பூடி 31. மகரி 32. மஞ்சிகை 33. மடல் 34. மாத்திரை 35. முடிச்சு 36. முருகு : (1) பொன் முருகு (2) விசிறி முருகு (3) மணிமுருகு 37. மேலீடு 38. வல்லிகை 39. வாளி 1. அட்டிகை அட்டிகை என்று ஒரு காதணி இருந்ததாகச் சொல்லப்படு கிறது. இலக்கியங்களில் அதற்கு ஆதாரம் காணப்படவில்லை. ஆனால் அட்டிகை என்றொரு கழுத்தணியுண்டு. அவ்வணி இந்த நூற்றாண்டின் நடுவில் வழக்கில் இருந்தது. இப்பொழுது மறைந்து வருகிறது. 2. இட்டடிக்கை காது வளர்த்த பெண்கள் நீண்டு தொங்கும் காது மடல்களில் அணியும் பாம்படம். தண்டட்டி, முடிச்சு, மேலீடு ஆகிய நகையோடு சேர்ந்த அணிகலனாகும் இது. இதனை மெல்லிய பொற்றகட்டால் புகலாகச் செய்து மெழுகடைத் திருப்பர். இன்றும் வயது முதிர்ந்த பணக்காரப் பெண்களின் காதுகளில் 5 நகைகள் பழக் குலைகள் போன்று தொங்குகின்றன. 3. ஓலை : (1) பொன் ஓலை ஓலை வடிவமாகச் செய்யப் பெற்ற காதணி. முற்காலத்தில் மகளிர் காதுகளில் இளவோலையை அணிந்து வந்தனர். உலோக காலத்தில் பொன்னால் ஓலை வடிவமாகச் செய்து அதைச் சுருட்டி வட்டமாகச் செய்து அணிந்து வந்தனர். (2) மாணிக்க ஓலை பொன் ஓலை அணிந்த மகளிர் பிற்காலத்தில் மணிகள் கிடைத்த பொழுது, அதில் மாணிக்கங்களைப் பதித்து அணிந்து வந்தனர். அதனால் மாணிக்க ஓலை என அழைக்கப் பெற்றது. 4. கடிப்பிணை (சந்திரபாணி) முற்கால மக்கள் முதலில் காதுகளில் கடிப்பு என்னும் அணியையிட்டுக் காதுத் தொளையைப் பெரிதாக்கியபின் பிற அணி களை அணிவர். வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி என்றார் ஆழ்வார் (நா. திவ். பிர. 142 : 1) கடிப் பிணை என்னும் அணிக்குச் சந்திரபாணி என்ற பெயரும் உண்டு. இக் கடிப்பு இந்திர நீலத்தையும் இடை இடையே வைர மணிகளையும் அழுத்திச் செய்யப் பெற்றது. இதனைத் தலைக்கணி என்பாரும் உண்டு. இந்திர நீலத்து இடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை அங்காது அகவயின் அழகுற வணிந்து23 என்ற சிலப்பதிகாரச் செய்யுளுக்கு உரை செய்து உரையாசிரியர் நீலக் குதம்பை, வயிரக் குதம்பை ஆகிய இரண்டையும் இரு காதிலும் அணிந்தாள் என்றார். 5. கடுக்கன் : (1) மணிக் கடுக்கன் கடுக்கன் காதின் கீழ்ப்பகுதியில் உள்ள துளையில் அணியும் ஒரு வாளியாகும். இதில் மணிகள் பதிக்கப் பெற்றால் மணிக்கடுக்கன் எனப்படும். கடுக்கன் ஆண்களும் பெண்களும் அணியும் அணிகல னாகும். (2) குவளைக் கடுக்கன் குவளைப் பூ வடிவமாகச் செய்யப் பெற்றது குவளைக் கடுக்கன் என அழைக்கப்படும். இந்தக் குவளைக் கடுக்கன் இந்த நூற்றாண்டின் ஆரம்பக் காலம் வரை வழக்கில் இருந்து வந்தது. (3) சிவந்திப் பூக் கடுக்கன் சுற்றிலும் சிவப்புக் கற்கள் வைத்து நடுவில் வெள்ளைக் கல் வைத்துச் செய்யப் பெற்ற பொன்னால் செய்த கடுக்கன் சிவந்திப் பூக்கடுக்கன் என அழைக்கப் பெற்றது. முற்காலத்தில் வகை வகை யாக எண்ணற்ற கடுக்கன்கள் இருந்து வந்தன. 7. கன்னப்பூ இது தோட்டிற்கு மேலே காதின் விளிம்பில் அணியும் ஒரு அணிகலனாகும். இது பொன்னால் செய்யப் பெற்று மேலே இருந்து வரிசையாக ஒன்று மூன்று நாலு என முறையாக சிவப்புக் கற்கள் பதித்து அடியில் சிறு பொன் சதங்கை தொங்க விடப்பட்டிருக்கும். இந்த அணிகலன்களை காது வடித்தவர்களும், தோடு புனைந்தவர் களும் அணிவர். இந்த அணியும் இந்த இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை இருந்து மறைந்து விட்டது. 8. குண்டலம் (i) இரத்தினக் குண்டலம் இரத்தினக் குண்டலம் மணிகள் வைத்து இழைத்த பொன்னா லான காதணி. இது மகளிர் அணியும் காதணியாகக் கருதப்படும். சிற்ப நூற்களில் இது பார்வதி தேவிக்குரிய அணியாகக் கூறப்படு கிறது. இஃதன்றி தேவி கர்னிகா பரணம் அல்லது மகர குண்டலமும் அணிந்திருப்பார். (ii) சர்ப்பக் குண்டலம் சர்ப்பக் குண்டலம், பாம்பு வடிவாகச் செய்யப்பட்ட பொற் குண்டலமாகும். இது ஒரு அழகிய காதணி. சிவபெருமானுக்கு உகந்தது. (iii) சிம்ம குண்டலம் சிம்ம குண்டலம் என்பது சிங்க முகம் போன்று பொன்னால் செய்யப்பட்ட ஒரு காதணியாகும். இதைச் சிம்ம பத்திரம் அல்லது வியாழ குண்டலம் (பாம்புக் குண்டலம்) என்பார்கள். இது வலது காதிற்குரிய வட்டமான காதணி இதுவும் சிவபெருமானுக் குரியதேயாம். (iv) பத்திரக் குண்டலம் பத்திரக் குண்டலம் காதணிகளில் ஒன்று. இதன் அகலம் 3, 4 அல்லது 5 அங்குலம் இருக்கலாம். இதன் கனம் ஒரு யவை. இது வெண்மையல்லது சிவப்பு நிறமாக இருக்கும். இடது காதில் கர்ணிகை அல்லது சங்கபத்திரம் அணிவதும் உண்டு. கர்ணிகை தாமரை மொக்குப் போன்ற வடிவம் வாய்ந்திருக்கும். சங்கபத்திரம் சங்கினால் செய்த காது வளையமாகும். (v) மகரக் குண்டலம் மகரக் குண்டலம் மகர மீன் வடிவாய்ச் செய்யப்பட்ட குண்டலம், இக் குண்டலமானது விழித்த கண்களையுடைய சுறாமீன் போன்று இருக்கும். சிந்தாமணியில் மகர குண்டலம் பல இடங் களில் காணப்படுகிறது.24 (vi) யானைக் குண்டலம் யானைக் குண்டலம் யானை முகம் போன்று அமைக்கப் பட்டது. இரு காதிலும் அணியப்படும். 2, 4, 5 அங்குல நீளமிருக்கும். வட்ட வடிவமானது. 18 யவம் இருக்கும். உயரம் 4 அங்குலம். வாழைப்பூ, தாமரை போன்று திகழும். 9. குணுக்கு இது காதின் கீழ்ப்பகுதியில் அணியப்படும் ஒரு வளையமே யாகும். முற்காலத்தில் பொன்னால் செய்த குணுக்கு அணியப் பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன் காது வடித்த ஏழைச் சிறு பெண்கள் ஈயக் குணுக்குகளை அணிந்து வந்தனர். 10. குதம்பை : (1) நீல மணிக் குதம்பை நீல மணிகள் பதித்த பொன்னாலான குதம்பை நீல மணிக் குதம்பை எனப்படும். கோவலன் நீல மணிக் குதம்பையையும் சந்திர பாணி எனும் கடிப்பிணையும் அணிந்திருந்தான் என்று சிலப் பதிகாரம் கூறுகிறது.25 (2) மாணிக்கக் குதம்பை முகப்பிற் கட்டின மாணிக்க மணியின் இடையிடையே வயிரங் கட்டின மாணிக்கக் குதம்பையும் அக்கால மக்கள் அணிவர். சிலப்பதிகாரத்தில் வைரக் குதம்பை ஒரு காதிலும் நீலக் குதம்பை ஒரு காதிலும் கோவலன் அணிந்தான் என்று கூறப்பட்டுள்ளது. 11. குருடு காதின் அடிப்புறம் - அதாவது கன்னத்தை ஒட்டிச் சிறிது நீண்டு இருக்கும் சதைப் பகுதியில் அணியப்படும் ஒரு பொன் அணி குருடு எனப்படும். 12. குழை : (1) ஒண்குழை குழை வடிவமாகச் செய்யப்பட்ட குண்டலத்திற்கும் குழை என்ற பெயர் எழுந்தது. சங்கக் கால மகளிர் ஒண்குழைகள் அணிந்திருந்தனர். (2) கனங்குழை : முற்கால மகளிர் கடிப்பு என்னும் அணியை இட்டுக் காதைப் பெரிதாக்கி அப்பால் கனங் குழையணிந்தனர். கடிப்பிகு காதிற் கனங்குழை பெயரஎன்று பரிபாடல் கூறுகிறது26 (3) பூங்குழை : சங்கக் கால மகளிர் அணிந்த குழைகளில் பூங்குழையும் ஒன்று. இவை பொன் அணி; பூந் தொழில் நிறைந்திருந்தன. பொன் குழைகளோடு அசோகந் தளிரையும் குவளை மலரையும் அணியும் வழக்கம் பழங்கால மகளிரிடமுண்டு.27 (4) பொற் குழை : முற்காலத்தில் ஆடவர்களும் மகளிரும் இலை வடிவமான பொன் குழை என்னும் அணியை அணிந்து வந்தனர். 28 (5) மகரக் குழை : மகர மீன் (சுறாமீன்) வடிவமாகச் செய்யப்பட்ட குழைக்கு மகரக் குழை என்று பெயர். இது பொன்னால் செய்யப் பெற்று மணிகள் இழைக்கப்பட்டிருக்கும். (6) பொற் குழை : பொற் குழை என்பது இலை வடிவமான பொன்னால் செய்த காதணி யாகும். கடிப் பணிந்து காதைப் பெரிதாக்கிப் பின் பொற் குழையைப் பூண்பர். 13. குவளை : (1) பொற் குவளை குவளை ஒரு வகை நீர்ப் பூ. குவளைப் பூ வடிவமாகப் பொன்னால் செய்யப் பெற்ற காதணிக்குப் பொற் குவளை என்று பெயர். ஆண்கள் காதில் 2 அல்லது 3 குவளைக் கடுக்கன்கள் அணிவர். (2) மணிக் குவளை : குவளைப் பூ வடிவமாகப் பொன்னாற் செய்து அதன் இடையே மணிகள் மதிக்கப் பெற்ற குவளைக் கடுக்கனுக்கு மணிக் குவளை என்று பெயர். (3) வட்டக் குவளை : வட்டமாகச் செய்யப் பெற்ற குவளைக் கடுக்கனுக்கு வட்டக் குவளை என்று பெயர். இதனை இன்றுவரை நெல்லை மாவட்ட சைவக் குருக்கள் அணிந்து வருகின்றனர். 14. கொப்பு இது காதின் மேற் பகுதியில் துளையிட்டு அணியப்படும் ஒரு பொன் அணிகலன். இவ்வணி நடுவே தண்டும் மேலேயும் கீழேயும் சுண்டைக்காய் போன்ற இரு மணிகளும் பொருத்தப் பெற்றிருக்கும். அந்த மணியின் மேலே சிறு குமிழ் இருக்கும். மணியின் மீது குறுக்கும் நெடுக்குமாக அணி அணியாக கோடுகள் தீர்க்கப் பட்டிருக்கும். மேலே இருக்கும் குமிழில் மணிகள் பதித்திருப்பதும் உண்டு. 15. சன்னாவ தஞ்சம் இது பிற்காலக் காதணி கலன்களில் ஒன்றாகும். இலக்கியங் களில் இது காணப்படவில்லை. 16. சின்னப்பூ சிறு பூ வடிவமாகச் செய்யப்பெற்ற காதணி சின்னப் பூ என்று கூறப் பெற்றது. இது பொன்னாற் செய்யப் பெற்றது. 29 17. செவிப்பூ காதில் அணியும் மற்றொரு வடிவமான அணிகலன் செவிப்பூ எனப்பட்டது. இதுவும் பொன்னாற் செய்யப்பட்டதாகும். (நாலா. திவ். பிர. 500 : 4) 18. தடுப்பு காதில் அணியும் இரு அணிகள் ஒன்றோடொன்று உரசாமல் தடுப்பாக அணியும் ஒரு வளையம் தடுப்பு என்று கூறப்படும் என்று கருதுகிறேன். 19. தண்டட்டி தண்டட்டி காது வடித்த பெண்கள் அணியும் பிற்காலத்துப் பொன் அணியாகும். இது மெல்லிய பொன் தகட்டால் புகலாகச் செய்து உள்ளே அரக்கு அடைக்கப்பட்டிருக்கும். 20. தாளுருவி பொன்னாற் செய்த காதணிகளில் ஒன்று தாளுருவி. கடிப்பைக் காதிலிட்டு அதைப் பெரிதாக்கிப் பின் தாளுருவி அணிவர். இது சங்கக் கால அணிகலன்களுள் ஒன்று.30 21. திரிசரி மூன்று வடங்களையுடைய ஒரு அழகிய காதணி. இது தெய்வங்களுக்கு அணியும் பொன் அணியாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இதன் வேலைப்பாடு மிக அற்புதமானது. இதன் முகப்பில் உயர்ந்த மணிகள் பதிக்கப் பெற்றிருக்கும். 22. தோடு : (அ) பூந்தோடு தோடு பூவின் அடிப்பகுதி. பூவரசுப் பூவின் அடிப் பகுதியைப் பார்த்தால் பொன்னாற் செய்து செம்மணி பதித்த பொற்றோடு போல் இருக்கும். பூ வடிவில் செய்யப் பெற்றமையால் பூந்தோடு எனப் பெயர் பெற்றது. (ஆ) பொற்றோடு : தோடு மணிகள் பதிக்காமல் பொன்னிலே செய்து அணிவதும் உண்டு. இதைப் பொற்றோடு என்று கூறுவர். (இ) மணித்தோடு : மணிகள் பதித்து அழகுறச் செய்த தோட்டிற்கு மணித்தோடு என்று பெயர். மாணிக்கங்கள் சுற்றிலும் பதித்து நடுவில் வைரம் பதிப்பதும் உண்டு. முழுவதும் வைரம் பதித்து வைரத்தோடு என்று கூறி அணிவதும் உண்டு. 23. நவசரி ஒன்பது வடங்களால் செய்யப் பெற்ற ஒரு காதணிகலனாகும். இது பொன்னால் செய்யப் பெற்றது. அழகிய மணிகள் பதிக்கப் பெற்றது. 24. நவ கண்டிகை பொன்னாற் செய்து பன்னிற மணிகள் பதித்து அழகுறச் செய்த மாலை. முகப்புச் சிறுத்தும் வரவர நடுப்பாகம் வரை பெருத்தும் நடுவில் வரிசையாக பெருமணிகளும் விளிம்பில் சிறிய மணிகளும் நடுவில் பதக்கமும் அதன் கீழே பொன் சதங்கைகளும் தொங்கும். இந்த அணி இன்றும் மதுரை மீனாட்சி அம்மனை அழகுபடுத்துகிறது. 25. நாகப்படம் பாம்பின் படம் போன்று செய்யப்பட்ட ஒரு காதணி இது பொன்னாற் செய்யப்பட்டது; யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் இன்றும் அணிந்து வருகின்றனர். 26. பஞ்ச சரி பஞ்ச சரி ஐந்து வடங்களாலான ஒரு பொன் அணி. இது தெய்வங்களுக்குச் சிறப்பாக அணியப்படும் ஒரு அழகிய காதணி. 31 27. பாம்படம் காது வடித்த பெண்கள் தண்டட்டி, முடிச்சு என்னும் அணி களோடு சேர்த்து அணியும் பாம்பு போன்ற ஒரு பொன் அணியாகும். இது மெல்லிய தகட்டால் செய்து உள்ளே மெழுகு அடைக்கப் பட்டிருக்கிறது. 32 28. பாம்பணி பாம்பு வடிவிலான ஒரு காதணி. 29. புகிடி புகிடி பெண்கள் புறச் செவி இதழில் அணியும் காதணிகளில் ஒன்று; புகிடி என்று கூறப்படும். 30. பூடி இது காதின் மேற் புறத்தில் அணியும் ஒரு சிறு அணி நடுவே ஒரு சிறு குழல் வடிவமான சுரை, அதற்குத் திருகும் உண்டு. மேலே யும் கீழேயும் நான்கு சிறு பெரிய கடுகு போன்ற மணிகள் பொருத்தி அதன் மேலே சதுரவடிவும் உயரே ஒரு முனை இருக்கும் படியாகப் பொருத்தப் பெற்றிருக்கும் பொன் அணி. இது வழக்கில் உள்ளது. 31. மகரி மகரி சுறாமீன் வடிவமாகச் செய்யப்பட்ட அழகிய காதணி கலங்களில் ஒன்று. மகரிகை வயிரக் குண்டலம் அலம்பும் - தோள் புடை வயங்க என்று இராமாயணம் கூறுகிறது. 32. மஞ்சிகை மஞ்சிகை ஒரு பொன் காதணி என்று கூறப்படுகிறது. பெருங் கதையில் மஞ்சிகை அணிகலன்கள் வைக்கும் பெட்டி என்று கூறப் படுகிறது. ஆனால் சிந்தாமணி இது ஒரு அணிகலனாக எடுத்துக் காட்டுகிறது.33 33. மடல் இது காதில் அணியும் காதணிகலன்களில் ஒன்று; பொன்னால் செய்யப் பெற்றது. மடலணி பெண்ணை யீன்ற மணி மருள் குரும்பை மான் - என்று சிந்தாமணி கூறுகிறது. (சிந். 2053) 34. மாத்திரை மாத்திரை ஒரு வகை பொன் அணிகலன். காதில் அணிந்து கொள்ளும் அணிகலன். குழையணி காதினின் மாத்திரையும் என்று திருவிசைப்பா கூறுகிறது. செம்பொன் மாத்திரை என்று பெருங் கதை கூறுகிறது.34 35. முடிச்சு இது காது வடித்தவர்கள், தங்கள் நீண்ட காதில் அடிப் பகுதி யில் பாம்படம், தண்டட்டி, இட்டடிக்கை மேலீடு முதலிய காதணி களோடு அணியும் ஒரு பொன் அணி. பொன் கம்பிகளை உருண்டை யான வட்ட வடிவில் பின்னி முகப்பு வைத்து காதில் அணிவர். ஏனைய பாம்படம், தண்டட்டி முதலிய அணிகளுக்கு மெழுகு அடைத்திருப்பது போல் இதற்கு மெழுகு அடைப்பதில்லை. 36. முருகு (1) பொன் முருகு: பொன் முருகு வில் போன்று வளைந்து அரை வட்ட வடிவமான பிறை போன்ற ஒரு பொன் அணி. நடுவே பெருத்தும் இரு நுனியும் சிறுத்தும் இருக்கும். இது காதில் மேற் புறத்தில் அணியப்படும். (2) விசிறி முருகு : காதின் மேற் பகுதியில் இடப் பெற்ற துளையில் விசிறி போல் செய்து அணியப்படும் ஒரு பொன் அணி. இது பூடிக்குப் பக்கத்தில் அணியப்படும் பதக்கம் போல் இருக்கும். (3) மணி விசிறி முருகு : காதில் மேற் புறம் விசிறி போல் செய்த பொன் அணியில் மணிகள் பதிக்கப் பெற்றால் அதனை மணி விசிறி முருகு என்று அழைப்பர். இது இந்த நூற்றாண் டின் ஆரம்பக் காலத்திலே வழக்கில் இருந்து மறைந்தது. 37. வல்லிகை வல்லிகை கொடி போன்று பொன் இழையால் பின்னப்பட்ட ஒரு சிறு பழைய காதணி; பிங்கல நிகண்டு, காதணி வகைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறது. இஃதன்றி இந்த அணிகலனைப் பற்றி அதிகம் தெரிவதற்கில்லை. 38. வாளி கம்பி வடிவமாகச் செய்யப்பட்ட காது அணியாகும். முதன் முதலாகக் காதணி அணியும் பொழுது கம்பி வடிவமாகச் செய்யப் பெற்ற வாளியோ அல்லது பொன் கம்பி வடிவமாகச் செய்யப்பட்ட வாளியோ அணியப்பட்டிருக்கலாம்.35 IV கழுத் தணிகலன்கள் அணிகலன்களில் கழுத்தணிகலன்கள் சிறப்புடையனவாகும். பேரணிகலன்களில் பெரும்பாலானவை கழுத்தணிகளாகவே இருக்கும். மகளிர்க்கு மணமகன் அணியும் மங்கல அணி கழுத்தில் அணியும் அணிகலனாக இருக்கிறது. விலையுயர்ந்த மணிகளைக் கொண்ட அணிகள் அனைத்தும் கழுத்திலே இடம் பெற்றிருக்கும். மேலும் அதிக எடையுள்ள பெருத்த அணிகலன்களைத் தலை முடிகளோ, காதுகளோ, மூக்கோ, கையோ, விரலோ தாங்க முடியாது. எனவே கழுத்திலே கனமான அணிகலன்கள் மட்டுமல்ல அதிகமான அணிகலன்களும் அணியப் பெற்று வருகின்றன. ஆதி காலத் தமிழ் மக்கள் நன்றாக உண்டபின் உவகை கொண்டு ஆடும் பொழுது அவர்கள் பூ, இலை, காய், பழம் கொட்டை முதலியவைகளை அதிகமாகக் கழுத்திலே கோத்துப் போட்டுக் கொண்டே ஆடினர். அந்தப் பரம்பரை வழக்கம் இன்று வரை தமிழர் சமூகத்தில் நீடித்து இருந்து வருகிறது. இன்றும் ஒருவரை வரவேற்க மாலை அணிவது கழுத்திலேயே அறிஞர் ஒருவர்க்குப் பொன்னாடை போத்துவதும் கழுத்திலே தான். பண்டைக் காலத் தமிழ் மன்னர்கள் திறமை மிக்க இசை வல்லுநர்க்கும் ஆடல் வல்லுநர்க்கும் புலவர்களுக்கும் விலையுயர்ந்த பொன்னரி மாலை, மணிவடம், முத்துமலை முதலியவற்றைக் கழுத்திலே தான் அணிவிப்பது வழக்கம். எனவே கழுத்து அதிகமான வடங்களையும் மாலையையும், கோவைகளையும், சங்கிலிகளையும் தாங்கிக் கொண்டது. இங்கு நாம் கண்ட அணிகலன்களில் அதிகமான எண்ணிக்கைகளையுடைய அணிகலன்கள் கழுத்தணிகலன்களேயாம். கழுத்தணி வகைகள் 100க்கு மேற்பட்டனவாக இருக்கின்றன. இங்கு நாம் 59 அணிகலன் களை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளோம் அவை வருமாறு : கழுத்தணிகலன்கள் 1. அட்டிகை 2. அரும்புச்சரம் 3. ஆமைத்தாலி 4. உட்கட்டு 5. ஏகவடம் 6. ஏகவல்லி 7. கண்டமாலை 8. கண்டசரம் 9. கண்டிகை 10. கழற்சிக்காய்மாலை 11. களிகை 12. காசுமாலை 13. காறை (பொன் காறை) 14. கிறி 15. கொத்தமல்லிமாலை 16. கோதை 17. கோவை 18. சங்கிலி 19. சந்திரப்பிறை 20. சவடி 21. சரப்பளி 22. சன்னவீரம் 23. சூலம் 24. சுத்துமணி 25. தாலி (அணிகலன்) (அ) ஐம்படைத் தாலி (ஆ) தாலிக்கொழுந்து (இ) சிறு நெற்றாலி (ஈ) பன்னிறைத்தாலி (உ) பன்மணித்தாலி (ஊ) புலிப்பல்தாலி (எ) புலிநகத்தாலி (ஐ) பின்றாலி (ஒ) மணித் தாலி (ஓ) பொன்றாலி 26. தாழ்வடம் 27. திரு 28. தும்பு 29. தொடர் 30. தொடையல் 31. நாண் 32. நுண்தொடர் 33. நெல்லிக்காய் மாலை 34. நேர்ஞ்சங்கிலி 35. பதக்கம் 36. பவளமாலை 37. பன்மணிமாலை 38. பூங்கொடிப் பொற்கலம் 39. பொன்னரி மாலை 40. பொட்டு 41. பொற்சரடு 42. பொன்ஞாண் 43. பொன் மணிமாலை 44. மங்கல அணி 45. மணிவடம் 46. மணி யாரம் 47. மணிமிடை பவளம் 48. மதாணி 49. மருதங்காய் மாலை 50. மலர்ச்சரம் 51. மாங்காய் மாலை 52. மிளகுமாலை 53. முத்து வடம் 54. முத்துமாலை 55. முத்துவள்ளி 56. மும்மணிக்காசு 57. மோகன மாலை 58. வன்னசரம் 59. வீரச்சங்கிலி. கழுத்தணிகலன்களின் விளக்கம் 1. அட்டிகை கழுத்தை ஒட்டி அணியப்படும் ஒரு பொன் அணி. இது தகட்டுவடிவிலும் சங்கிலி வடிவிலும் உண்டு. நடுவே பதக்கம் தொங்கும். கல் பதித்த அட்டிகை கல் அட்டிகை எனப்படும். 2. அரும்புச்சரம் பொன்னால் அரும்பு வடிவில் செய்து பொன் நாணில் கோக்கப்பட்ட ஒரு கழுத்தணிகலன். 3. ஆமைத்தாலி இது ஆமை வடிவமான அணி. இதை வைணவர்கள் அணிவர். இந்த அணி திருமாலுக்குகந்தது ஆமைத்தாலி பூண்ட அனந்த சயன் என்று நாலாயிரத் திவ்விய பிரபந்தம் கூறுகிறது. 36 4. உட்கட்டு உட்கட்டை சாதாரண மக்கள் இக்கட்டு என்றனர். இது உட்கழுத்தில் அணியப்படும் ஒரு பொன்னணி. இது ஒரு பக்கம் நேராகவும் மற்றொரு பக்கம் முக்கோணம் போலவும் உள்ள பல துண்டுகள் கோக்கப்பட்ட அணிகலனாகும். இது இருபதாம் நூற் றாண்டின் நடுப்பகுதிவரை இருந்து வழக்கொழிந்து போயிற்று. 5. ஏகவடம் நவமணிகள் இழைத்த ஒற்றைச் சரத்தாலான ஒருவகைக் கழுத்தணியாகும். இது பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணிகலனாகும். இன்று வழக்கில் இல்லை. 6. ஏகவல்லி முத்துக்களாலான ஒரு கழுத்தணி இது பெருங்கதையில் சிறப்பித்துக் கூறப்படுவதுடன் பல இடங்களில் இந்நகை பேசப்படு கிறது. இது சங்கக்கால இலக்கியங்களில் எங்கும் காணப்பட வில்லை. 7. கண்டமாலை கழுத்தில் அணியும் பொன்னாலான ஒரு மாலை. இதைவிட நமக்கு வேறு ஒரு தகவலும் கிடைக்கவில்லை. 8. கண்டசரம் (கண்டசரம் என்பதும் கண்டிகை என்பதும் ஒரே அணி) பல பூக்கள் வடிவமான பொன் மணிகள் ஒன்றாகக் கோக்கப்பட் டுள்ளன. 9. கண்டிகை கண்டிகை ஒரு பொன்னாற் செய்த கழுத்து அணி. இதைக் கண்டசரம் என்றும் கூறுவர். அழகிய கண்டிகையோடு முத்துத் தோள்வளை சேர்த்துக் கட்டுவது வழக்கம்.37 10. கழற்சிக்காய் மாலை இது கழற்சிக்காய் வடிவில் செய்யப் பெற்ற பொன் அணி. இது மிகத் தொன்மையான தமிழ் மக்கள் கண்ட நாகரிகத்தில் எழுந்த அணிகலனாகும்.38 11. களிகை இது சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. இலைப் பெருங்களிகையும் என்று பெருங்கதை கூறுகிறது. 12. காசுமாலை இது கழுத்தினின்று உந்திவரை தொங்கும் ஒரு பேரணி கலனாகும். அடுக்கடுக்காய் பொற்காசுகளுக்கு மடை வைத்துப் பொன் அல்லது வெள்ளிச் சரட்டில் கோத்து அணிவார்கள். காசு கிடைக்காவிடில் காசுகள் போன்று அச்சிட்டுக் கோத்து அணி வார்கள். பவுண்களைக் கோத்து அணிந்து கொள்வது பவுண்மாலை என்று கூறப்பட்டது. இது இன்றும் வழக்கில் உள்ளது. கோயில் களில் திரு உருவங்களுக்கு பவுண்மாலை அணிந்து வருகிறார்கள். 13. காறை இது பொன்னாற் செய்யப் பெற்ற கழுத்தணி. இது வட்டவடிவ மாகக் கம்பிபோல் செய்யப்பட்டது. முன்புறம் இடை இடையே பூக்கள் போன்ற அணிகள் இருக்கும்.39 14. கிறி இது, முற்கால அணிகலன் பட்டியல்களில் காணப்பட வில்லை. ஆனால் இது வைணவர்களின் கழுத்து அணியாகக் காணப் படுகிறது. 15. கொத்தமல்லிமாலை கொத்தமல்லி வடிவில் செய்யப் பெற்ற ஒரு மாலை. 100க்கு மேற்பட்ட கொத்த மல்லிகள் இடம் பெற்றிருக்கும். இது அழகிய பொன் அணி. 16. கோதை பூவடிவமாகச் செய்யப்பட்ட ஒரு பொன் அணி. இது முற் காலத்திலேயுள்ள அணியாகக் கருதப்படுகிறது. கோதை மார்பிற் கோதையானும் என்று புறநானூறு கூறுகிறது.41 17. கோவை ஐந்து அல்லது ஆறுவடங்களாகச் செய்யப்பட்டு பின்புறம் படுகண் நோக்கு வாயோடு கூடிய முகப்பையுடைய கழுத்தணி; பொன்னாற் செய்யப்பட்டது (சிலப் 6 : 102) 18. சங்கிலி மூன்று அல்லது 4 சங்கிலிகள் உள்ள கழுத்தணி; பொன்னாற் செய்யப்பெற்றது; அழகிய முகப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பில் கற்கள் பதிக்கப் பெற்றிருக்கும். 19. சந்திரப் பிறை சந்திரப்பிறை என்பது பிறை வடிவில் செய்த கழுத்தணி. சந்திரப் பிறையும் சந்திரகாரமும் ஒரே விதமான அணிகலன் என்று கூறப்படுகிறது. 20. சரப்பளி இது சிறு சிறு குண்டுகளாகச் செய்யப்பட்டு பொன் சரட்டில் கோக்கப்பட்டிருக்கும், இரண்டு அல்லது மூன்று வடங்களாக இருக்கும் - சரப்பளி அணிந்து வந்த பெண் என்று முற்காலத்தில் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். 21. சவடி கனமான பொன் தகடுகளை பிறை போல் செய்து ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டிருப்பது. சந்திரகாரம், சரப்பளி சவடி அணிவது பெருங் குடும்பத்திற்குரிய மரபு என்று கூறப்படும். இன்று இந்த நகை வழக்கில் இல்லை. 22. சன்னவீரம் சன்னவீரம் பிரலம்பம் என்று அழைக்கப்படும். இது பூணுல் மாலை, கிரைவேயகம், நாகயஞ்ஞசூத்திரம், இரத்தினபந்தம், உபக் கிரீவம், நிதலாவலி இவைகளால் அலங்கரிக்கப்படுவது. இவை ஒன்றோடொன்று இணைந்து தொங்கும். இது இன்று தெய்வ உருவங்களுக்கு அணியப்பட்டு வருகிறது. 23. சூலம் முற்காலத்தில் இவ்வித அணி ஒன்றிருந்தது. ஆனால் இதைப் பற்றி நமக்கு விளக்கமான இலக்கியச் சான்றோ பிற சான்றுகளோ கிடைக்கவில்லை. 24. சுத்துமணி சுத்துமணி பொற்றகட்டால் புகலாகச் செய்யப்பட்டு உள்ளே மெழுகடைக்கப்பட்ட பல மணிகளையுடைய ஒரு நல்ல வேலைப் பாடமைந்த கழுத்தணி. இந்த சுத்துமணி நெல்லை மாவட்டத்தில் இன்றும் வழக்கில் உள்ளது. ஒவ்வொரு மணிக்கும் பெயர் உண்டு. இது வட்டமாகவும் நீண்ட சதுரமாகவும் உருண்டையாகவும் சதுர மாகவும் பட்டமாகவும் செய்யப்பட்ட பலவிதமான மணிகள் கோக்கப்பட்ட அணிகலன். இதன் நடுவே மங்கல அணியாகிய தாலியைக் கோத்து அணிந்து வந்தனர். கைம் பெண்கள் இந்த அணி கலனை அணிவதில்லை. இந்தச் சுத்து மணிகள் நாட்டுக்கு நாடு வேறு பட்டிருக்கும். 25. தாலி இன்று அணிந்து வரும் திருமண அணியன்று. இதில் பலவகை யுண்டு. (அ) ஐம்படைத் தாலி : இது, சிறுவர்கள் அணி. திருமாலின் ஐம்படைகளான சங்கு சக்கரம், கதை, கடகம், சார்ங்கம் என்னும் ஆயுத வடிவில் அணி செய்து சிறுவர்களுக்கு பழங்காலத் தமிழர் அணிந்து வந்தனர். இது ஐம்படைத்தாலி எனப்பெறும். 42 (ஆ) தாலிக் கொழுந்து : தாலிக் கொழுந்து பழங்கால அணியாகத் தெரியவில்லை. ஆனால் தாலிக் கொழுந்தைத் தடங் கழுத்தில் பூண்டு, என்று நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கூறுகிறது.43 (இ) சிறுநெற்றாலி : சில அரும்புகளைத் தொழில் வன்மை காண நச்சுப் பாம்பின் பல் வரிசைபோல் நிரல்பட அமைத்தது சிறு நெற்றாலி. இது ஒரு கழுத்தணி.44 (ஈ) பன்னிரைத்தாலி : பாம்பின் பல்போன்று பசும் பொன் னால் செய்யப் பெற்ற, பற்களை நிரலாகக் கோத்த பன்னிரைத்தாலி என்று கூறப்படுகிறது பாம்பெயிற்றன்ன பன்னிரைத் தாலி என்று பெருங்கதை கூறுகிறது.45 (உ) பன்மணித்தாலி : பன்மணித்தாலியும் பழங்கால அணிகலன்கள் வரிசையில் காணப்படவில்லை. மும்மணிக்காசும் பன்மணித்தாலியும் என்று பெருங்கதை கூறுகிறது.46 (ஊ) புலிப்பல்தாலி : புலிப்பல்லைப் பொன்னால் பொதிந்து கழுத்தில் அணியும் அணிகலனைப் புலிப்பல் தாலி என்பர். முற்காலத்தில் புலியோடு போராடி, வென்றவீரன் தன் மனைவிக்குப் பரிசாக இந்த அணியை அணிவித்து வந்தான்.47 (எ) புலிநகத்தாலி : புலியை வென்ற வீரன் அதன் நகங்களை எடுத்துக் கொண்டு வந்து தன் துணைவிக்குப் பரிசாக அளித்தான். அவள் அதைப் பொற்றகட்டால் பொதிந்து தன் கழுத்தணியாக அணிந்து வந்தாள். அதற்குப் புலி நகத்தாலி எனப் பெயரிடப் பட்டது. (ஏ) பொன்றாலி : பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணி; இது மங்கல அணி அன்று. (ஐ) பின்றாலி : பின்றாலி, பூட்டவும் கழற்றவும் வல்லதாய் இருபுறங்களிலும் துளையுடன் கூடிய சிறுகுண்டுகள் வைக்கப்பட் டிருக்கும். இவற்றைப் பிணைக்கக் கொக்கி ஒன்றும் உண்டு. இதைக் கொக்குவாய் என்று கூறுவர். இது கொக்கின்வாய்போல் இருப்ப தால் கொக்குவாய் என்று கூறப்பட்டது. கோப்பதற்கு எளிதாக இருப்பதால் கோக்குவாய் என்று திரிபுற்று; அப்பால் கொக்கு வாயாக மாறியது. இது மணிகள் பதித்த பேரணி. இதனை பெரிய முகப்புடைய முத்தாரமாகச் செய்து இதில் நவமணிகள் பதித்துப் பின்புறம் தொங்கவிடப்படுவதால் பின்றாலி எனப் பட்டது. இது திருமணத்தில் கட்டப்படும் தாலியன்று. (ஒ) மணித்தாலி : மணிகளால் செய்யப் பெற்ற ஒரு கழுத்தணி. இதைவிட அதிகமான சான்றுகள் இல்லை. 26. தாழ்வடம் கழுத்தின் அடியில் அணிகலன்களின் கீழ் அணியப்படும் சரடு போன்ற ஒரு பொன் அணிகலனாகும். 27. திரு இது பழங்காலத் தமிழ்நாட்டு அணிகலன்களில் ஒன்று. பொன்னால் செய்யப்பெற்ற கழுத்தணிகளில் ஒன்று என்று தெரிகிறது. இது பிங்கலந்தை நிகண்டில் குறிக்கப் பெற்றுள்ளது. 28. தும்பு தும்பு என்பது நாட்டுக் கோட்டைச் செட்டிப் பெண்கள் அணியும் ஒருவகைத் தாலி உரு. இது பொன்னாற் செய்யப் பெற்றது. 29. தொடர் இதைப் பற்றி அதிகம் தெரியவில்லை. 30. தொடையல் தொடையல் என்பது பொன்னால் செய்யப்பெற்ற கழுத்தணி. ஆனால் பிங்கலந்தை நிகண்டில் தொடையல் ஒரு தோள் அணி மாலை என்று கூறப்பட்டுள்ளது. இது தோள்வரை பரந்து கிடப்ப தால் தோளணியாகக் குறிப்பிட்டிருக்கலாம் என்று சிலர் கூறுகின் றனர். 31. நாண் ஞாண், நாண் என்று கூறப்படுகிறது. இதனை முற்காலத்தில் பொன்னால் செய்து அணிந்து வந்தனர் என்று தெரிகிறது. பொன் கம்பியால் திரட்சியாகப் பின்னப்பட்ட ஒரு கழுத்தணி. இதைச்சரடு என்றும் கூறுவர். இது வழக்கில் உள்ள அணி. 32. நுண் தொடர் இது தமிழர் கண்ட பழங்கால அணிகலன்களில் ஒன்று. சங்கிலி நுண்தொடர் என்று இந்த அணிகலன் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இது பழங்கால அணிகலன் என்பதற்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (சிலப். 6 : 99) 33. நெல்லிக்காய் மாலை இது பண்டைக் காலத் தமிழர் கண்ட ஒரு தொன்மையான அணிகலனாகும். இது பொன்னாற் செய்யப்பட்டுள்ளது. இவ்வணி இன்று தமிழர்களிடம் வழக்கற்றுப் போய்விட்டது என்று எண்ணப் படுகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்திலுள்ள தமிழ் முசுலிம் களிடம் வழக்கில் இருந்து வரும் ஒரு நல்லணியாகும். இதை முசுலிம் பெண்மணிகள் விருப்புடன் அணிவர். 34. நேர்ஞ்சங்கிலி நேர்ஞ்சங்கிலி பொன்னால் செய்யப்பெற்ற ஒரு சிறிய அணி கலனாகும். இது கழுத்தணி. 35. பதக்கம் பதக்கம், சரடு முதலியவற்றில் கோக்கப்பட்டு கழுத்தில் அணியப்படும் ஒரு அணி. இது கல்லிழைத்துக் கழுத்தில் முன்புறம் தொங்கும் ஒரு வட்டமான அணிகலனாகும்.48 36. பவளமாலை பவளங்கள் கோத்தமாலை பவள மாலை எனப்பட்டது. இதில் இடைஇடையே பொன்மணிகள் கோக்கப்படுவதும் உண்டு. பவளம் சிவப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கும். சிவப்புப் பவளம் சிறப்புமிக்கது. 37. பன்மணி மாலை பல மணிகளையும் முத்துக்களையும் பவளங்களையும் பொன்னையும் தொகுத்துப் பன்மணிமாலை என ஒருவகை மாலை செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பன்மணிமாலை எனப் பெயர்.49 38. பூங்கொடி பொற்கலம் இது பூங்கொடி வடிவான பொன்னணி ஆகும். இவ்வணி பெருங்கதையில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.50 39. பொன்னரிமாலை தமிழ் மன்னர்கள் விறலியர்க்கும் பாடினியர்க்கும் அவர்களது திறனுக்காகப் பொன்னரி மாலையைப் பரிசாக அளித்துவந்தனர்.51 40. பொட்டு பொன்னால் செய்த ஒருவகைத்தாலி. இது பழைய அணி கலன்களில் ஒன்று. இது இராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது. 41. பொற்சரடு பொற்கம்பியால் பின்னப்பட்டுக் கொடியாகச் செய்யப்பட்ட ஒரு சரடு. இதற்கு அழகிய முகப்பு உண்டு. 42. பொன்ஞாண் பொன் கம்பியால் செய்யப் பெற்ற ஒரு பொன் கொடியாகும். இது ஒரு கழுத்தணி. 43. பொன்மணிமாலை பொன்மணிகள் பல கோக்கப் பெற்ற ஒரு அழகிய கழுத்தணி. 44. மங்கல அணி மங்கல அணி என்பது மணமகன் கட்டும் திருமணச் சின்னம்.59 45. மணிவடம் இரத்தினமணிகள் கோக்கப்பட்ட ஒரு வடம். இந்த அணி கலனில் மூன்று வடங்கள் கோக்கப்பட்டு இருப்பதும் உண்டு. 46. மணியாரம் இதுவும் பொன் மணிகள் கோத்துப் பெரிதாகச் செய்யப்பட்ட ஒரு அழகிய அணிகலனாகும். இது முற்காலத் தமிழ் மக்களால் விரும்பி அணியப்படுவது. 47. மணிமிடைபவளம் இவ்வணிகலன் பொன்மணியும் பவளமும் கலந்து அணியப் படும் ஒரு அணிகலனாகும்.52 48. மதாணி கழுத்தணிகலனின் தொங்கலுக்கு மதாணி என்று பெயர் திண்கதிர் மதாணி என்று மதுரைக் காண்டத்தில் குறிப்பிடப் படுகிறது. 49. மருதங்காய் மாலை இது மிகத் தொன்மையான காலத்துப் பொன் அணி. இன்றும் தமிழக முசுலிம்கள் மருதங்காய் வடிவிலான இந்த அணியை அணிந்து வருகின்றனர். 50. மலர்ச்சரம் இது பொன்னால் தனித்தனிப் பூவடிவில் செய்யப் பெற்றுப் பொன் அல்லது வெள்ளிக் கம்பியால் இணைக்கப் பெற்ற ஒரு சரம். 51. மாங்காய் மாலை இது சிறு மாம்பிஞ்சு வடிவில் செய்யப்பட்ட ஒரு கழுத்தணி; பொன்னால் செய்யப்பட்டது. இதன் அடிப்பகுதி மட்டமாக இருக்கும். இது புடைச் சிற்பம்போல் முன்பக்கம் துறுத்திக் கொண் டிருக்கும். இது மிகத் தொன்மையான அணிகலன்களில் ஒன்று. 52. மிளகு மாலை மிளகு வடிவமாகச் செய்யப்பட்ட பொன் அணி. இது இரண்டு மூன்று வடங்கள் உள்ளதாய் இருக்கும். இது கொத்தமல்லி மாலையைப் போல் மேலே வரி வரியான கோடுகள் இல்லாததால் அழுக்குப் பிடியாது என்று பெண்கள் பிரியப்படுகிறார்கள். உள்ளே புகலாக இருக்கும். இது வழக்கில் உள்ள அணி. 53. முத்துவடம் இது நடுவே பெரிய முத்தும் இரு புறமும் வர வர சிறிய முத்தாகச் சிறுத்துக் கொண்டே போய் இறுதியில் மிகச் சிறு முத்துக்கள் கோக்கப்பட்டிருக்கும். 54. முத்துமாலை இது முத்துக்களாலான மாலை. ஒரு காலத்தில் நெல்லை மாவட்டத்துப் பெண்கள் பிரியமாக இம்மாலையை அணிந்து வந்தனர். முத்துமாலை என்று தங்கள் தெய்வத்திற்குப் பெயர் இட்டனர். முத்துமாலை என்று பிள்ளைகளுக்குப் பெயர் வைப்ப தும் உண்டு. 55. முத்து வள்ளி முத்துவள்ளி யென்னும் பொன்னணி சங்கக் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.55 56. மும்மணிக்காசு மும்மணிக்காசும் பன்மணித் தாலியும் என்று பெருங் கதையில் இவ்வணி குறிப்பிடப்பட்டுள்ளது.56 57. மோகனமாலை இது அழகி பொன் கழுத்தணி; பிற்காலத்தில் எழுந்தது என்றாலும் இன்று வழக்கில் இல்லை. 58. வன்னசரம் போர் வீரர்கள் அணியும் அணி. வீரர்கள் பகைவர்களின் கண்களைப் பிடுங்கி கண்மணிகளையும் யானைகளின் தந்தங்களி லிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களையும் நரம்புகளில் கோத்துப் போர்க்களத்தில் பூணும் ஒரு கழுத்தணியாகும். 59. வீரச் சங்கிலி பொன்னால் பெரிதாகச் செய்யப்பட்டிருக்கும் ஒரு கழுத்தணி. முற்காலத்தில் மன்னர்கள். போர் மறவர்களுக்கு அவர்கள் ஆற்றிய வீரச் செயலுக்குப் பரிசாக வீரச்சங்கிலி அளிப்பர். குறிப்புகள் 1. Articles on India - Karl Marx (Bombay) 1945. 2. சூடாமணி நிகண்டு : முடிகுடை கவரி தோட்டி முரசுசக் கரமே நால்வாய் கொடிமதில் தோரணம் நீர்க்குட மலர்மாலை சங்கு கடலொடு மகரம் ஆமை கயலிணை யரிமாத் தீபம் இடமாசன மூவேழும் இறைதிருப் பொறிக ளாமே 3. மானசாரம் (சிற்பநூல்) தஞ்சை சரசுவதிமகால் வெளியீடு. பக். 125 கோதை சூடிப் பூண் சுமந்து - 4. பதிற்றுப் பத்து. 88 : 31 5. சந்திரக் கலையா மேகக் கருங்குழலை - பிரமோத்திர காண்டம் (பிரமோத் பிரதோசம் 8) 6. சீவகசிந்தாமணி 485 ; 4 7. அகம் 15 : 10 8. பெருங் 2: 19-20 9. கலி. 81 : 2- 4 10. பதிற்று. 45 : 1 11. பெருங் 39 : 1, 15, 18 12. புறம் 11 : 17- 18 13. பெருங். 1 : 40 : 149 - 150 14. பெருங். 2 : 19 69 - 72 15. பரிபாடல் 16 : 7 - 9 16. கலி. 79 : 46 17. சிலப் 6 : 106 - 108 தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையி ரோதிக்கு மாண்புற வணிந்து 18. திருமுரு. 23 19. கலி. 97 : 11 20. பெருங். 1 : 34. 195 திருநுதற் சுட்டி திகழச் சூட்டி முத்தக் கலனணி மொய்ப்புறச் சேர்த்துப் பொன்செ யோலையொடு பூங்குழை நீக்கி மணிச்செய் கடிப்பிணை மட்டஞ் செய்து 21. சீவகசிந்தாமணி 1257 : 1 22. பரி. 10 : 77 - 78 எறிமகர வலயம் அணதிகழ் நுதலியர் மதியுணர மகளென ஆம்பல் வாய்மடுப்ப 23. சிலப் 6 : 103 - 5 24. சீவகசிந்தாமணி 2696 : 4 25. சிலப் 6 : 104 26. பரி. திரட்டு 1 : 34 27. பரி. 11 : 95 - 96 சாயிழை பிண்டித் தளிர்காதிற் றையினாள் பாய்குழை நீலம் பகலாகத் தையினாள். 28. சீவகசிந்தாமணி. 1658 : 3 மின்னும் குழையும் பொற்றோடு மிளிர 29. சீவகசிந்தாமணி. 2051. சின்னப்பூ அணிந்த குஞ்சி 30. பெரும்பாண். 161 31. S.I.III. 181 32. “A Similar Ornament, but smaller in size called “nagapadam” is still worn by Tamil women along the west coast -” “Ancient saffra C.S. Rasanayagam B.A.C.C.S. (Ceylon) P. 170 33. சீவகசிந்தாமணி. 34. பெருங் 3 : 17 . 157 35. நாலாயிரத் திவ்விய பிரபந்தம் 73 : 3 36. பெருங் 2 : 7. 22 - 23 87 : 2 இடை படீஇப் பிறழும் ஏகவல்லி அணிக்கலைப் புனைந்த அரசிலைப் பொன்னடர் 37. சிலப். 6 : 89 - 90 38. பெருங். 1 : 46. 211 - 212 39. நா. திவ். 38 : 3 கழுத்தினில் காறை யொடும் 40. நா. திவ். 73 : 2 41. புறம் 48 42. மணிமேகலை. 3 : 137 - 138 43. நா. திவ். 172 : 2 44. பெருங் 416 : 25 - 30 45. பெருங் 2 : 7 : 97 46. பெருங் 5 : 9 49 47. புறம் 374 : 19 48. S.I; III. 429 49. சீவகசிந்தா. 1652 : 2 - 3 நன்பொன் விரலினுதிலினாற் பன்மணி முத்தும் பவளமும் பைம் பொன்னும் கோத்தா லொப்ப- 50. பெருங் 2 : 19. 10 -11 வீங்குபு செறிந்த வெங்கண் வனமுலை பூங்கொடிப் பொற்கலம் போழ்ந்து வடுப்பொறிப்ப 51. பொருநர். 161 ; 162 நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய 52. சிலப். 2 : 63 - 64 மறுவின் மங்கல அணி 53. அகநானூறு (2-ஆம் பிரிவின் பெயர்) மணிமிடை பவளம் 54. மதுரைக் காண்டம் 461 55. பெருங் 1: 34. 203 முத்தவள்ளியொடு மும்மணிச் சுடர் 56. பெருங் 5 : 9. 49 பேரணிகலன்கள் II தோள், கை, கால் அணிகலன்கள் தலை, காது, கழுத்து முதலிய உறுப்புகளில் அணியப்படும் அணிகலன்கள் அழகிய வேலைப்பாடுகள் உள்ளவை. விலையுயர்ந்த மணிகள் பதிப்பிக்கப் பெற்றவை. இவை தலையாய அணிகள் எனலாம். தோள், கை, கைவிரல், இடுப்பு முதலிய இடங்களில் இடம் பெறுவன இடைத்தர அணிகள் எனலாம். கால், கால்விரல் முதலிய உறுப்புகளில் அணியும் அணிகள் கடைத்தர அணிகள் எனலாம். தோள் அணி இந்த அணி முழங்கைக்கு மேல் அணியப்படும். இது வெவ்வேறு பெயர்களுடன் வெவ்வேறு நாடுகளில் உள்ளது. சமீப காலத்தில் வங்கி என்ற அணியைப் புயத்தின் கீழே பெண்கள் அணிந்துவந்தனர். இந்த அணியைச் சிற்ப நூற்கள் கேயூரம் என்று கூறுகின்றன. இதைப் பெரிதும் நாட்டியமாடும் பெண்கள் அணிந்து வந்தனர். இன்று பல ஐரோப்பியப் பெண்கள் கூட அணிந்து வருகின்றனர். சில மேனாட்டுப் பெண்கள் முழங்கைக்கு மேலே ஒரு பொன் வளையை அணிந்து அதை ஆர்மலெட் (Armlet) என்று கூறிக்கொண்டு அதில் ஒரு சிறு கைக்குட்டையையும் செருகிக் கொள் கின்றனர். அது இன்றைய நாகரிக அணிகலன்களில் ஒன்றாகும். தோளணிகள் பிற அணிகலன்களைப் போல் அதிகமாக வளரவில்லை. நாம் அறிந்த அளவில் தோளணி வகைகள் சுமார் 10-க்கு உட்பட்டவைகளே இருக்கின்றன. தோள் அணிகலன்கள் 1. கேயூரம் (வங்கி): (அ) இரத்தினவங்கி (ஆ) பாசிப் பந்து (இ) அங்கதம் (ஈ) கடத்திரயம் 2. கொந்திக் காய் 3. சுத்தி 4. தோள் பதக்கம் 5. தொடி : (1) கழல் தொடி (2) கோல் தொடி (3) தோள் வலயம் (சலாகை) 6. வாகு வலயம் (தோள் வளை) 1. கோயூரம் : கேயூரம் என்பது வங்கியேயாகும். இவ்வணிகலன் முழங்கைக்கு மேலே அணியப்படும். இது அமைப்பில் நெளிவு (முடக்கு) மோதிரம் போன்று இருக்கும்; ஆனால் பெரிதாக இருக்கும். இதன் அமைப்பு ஒரே விதந்தான். இதில் எட்டு இதழ் தாமரைப் பூவை அமைக்கலாம். இதன் முன்புறம் கம்பிகள் மீது இன்றைய 50 காசு வடிவில் பூக்கள் போன்று அமைக்கப்பட்டிருக்கும். இதன் நடுவில் அழகாகச் சதங்கைகள் கோத்துத் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த அணியில் முத்துக்களோ மணிகளோ கிடையா. இது மகளிர்க்கு அழகு செய்யும் அணிகலனாக முன்னர் மதிக்கப்பட்டு வந்தது. இது சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் காணப்படவில்லை. முன்னர் கேயூரத்தைப் போன்ற பல வகை அணிகலன்கள் இருந்தன. அவை இதினின்று சிற் சில வேறுபாடுகளையுடையன. (அ) இரத்தின வங்கி : இது பொன்னால் செய்யப்பட்ட அணிகலன். இரத்தினங்கள் பதித்து கேயூர அமைப்பில் செய்யப்பட்ட புய அணிக்கு இரத்தின வங்கி என்பார்கள். இன்றும் கோயில்களில் தெய்வங்களுக்கு அணிவிக்கப் பெறுகிறது. (ஆ) பாசிப்பந்து : பாசிப் பந்தும் கேயூர வடிவில் பாசிக் கொத்துப் போன்ற அமைப்புடையது. இதில் இலைகளும் வேறு பல உருவங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்டதைப் பத்திர பூரிதம் என்பர். பத்திர பூரிதத்தின் கீழ் புறமுள்ள காம்பு புயம் முழுவதும் பரவியிருக்கும். இதன் அகலம் 3, 4 அங்குலம் இருக்கும். அகலம் உயரத்தில் பாதி இருக்கும். (இ) அங்கதம் : கேயூரம் போன்ற அணிகலனேயாகும். பெரிதும் நமது தெய்வங்களுக்கு உகந்தது. சிற்ப நூற்களில் இந்த அணிகலன்கள் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளன. கேயூரம் புய மூலத்தில் அணியும் அணிகலன். அங்கதம் (புயவலயம்) தோள் மத்தியில் அணியப்படும் அணிகலன். (ஈ) கடத்திரயம்: கேயூரம் போன்றதெனினும் சிற் சில வேறுபாடுகள் இருக்கும். கணுக் கைக்கு மேல் அணியப்படும் அழகிய அணி. பொன்னால் எழிலுறச் செய்யப் பெற்றது. சிலவற்றில் இடை இடையே ஒரு சில மணிகளும் பதிப்பிக்கப் பெற்றிருக்கும். இது அதிகம் வழக்கில் இல்லை. நூறாண்டுகளுக்கு முன்பே வழக்கிழந்து போயிற்று. ஆனால் கோயில்களில் அல்லது சிற்பங்களில் காண லாம். 2. கொந்திக்காய் இது முற்கால அணிகலன்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழகத்தில் வழக்கில் இருந்து வந்தது. பவள மணிகளும் பொன் மணிகளும் நூலில் கோத்து முழங்கைக்கு மேலே புயத்திற்குக் கீழே அணியப்படும். இது அதிகமான விலை மதிப்பு இல்லாத அணியாய் இருந்ததால் ஏழை மக்களிடமும் இடம் பெற்றிருந்தது. 3. சுத்து சுத்தும் இந்த இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தமிழகத்தில் வழக்கில் இருந்து, இன்று மறைந்துபோன அணிகலன் களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. மூன்று பொற்கம்பிகளை ஒன்றாக இணைத்து முன் புறம் முகப்பு வைத்துக் கீழே மூன்று சதங்கைகள் தொங்கும்படி செய்து, அழகு பொலிய அணிந்து வந்த பொன் அணி. முகப்பில் ஒன்றிரண்டு மணிகளும் இடம் பெற்றிருக்கும். 4. தோள் பதக்கம் தோள் அணிகலன்களின், பதக்கம் ஒரு அழகிய அணிகல னாகும். இது பொற்றகட்டில் மாணிக்கங்கள் அழுத்தி முத்துக்கள் பதித்து அழகுறச் செய்யப் பெற்றிருக்கும். முற்காலத்தில் அரசிகள் ஆவலுடன் இதை அணிந்து வந்தனர். இது அழகாக இருக்கும். 5. தொடி : (1) கழல் தொடி முற்காலத் தமிழகத்தில் வீரர்கள் தோள்களில் தொடியணிவது வழக்கம். அது நுண்ணிய வேலைப்பாடுகள் உடையதாக ஒளிரும். அழகு வாய்ந்ததாக இருக்கும்.1 (2) கோல் தொடி இதன் அரிய வேலைப்பாடுகளையுன்னிக் கோல் தொடி என அழைக்கப்பட்டது. இது பழங்காலத் தமிழ் மறவர்கள் அணிந்த சீரிய அணிகலன்களில் ஒன்று.2 (3) தோள் வலயம் (சலாகை) தோள் வலயம், சலாகை என்றும் அழைக்கப்படும். தோள் வலயம் மகளிர் அணிவது. தலைவனைப் பிரிந்த தலைவி தோள் வளைகளைக் களைவது இலக்கியங்களில் எடுத்துக்காட்டப்படு கிறது.3 இந்தத் தோள் வளை யானை மருப்பினாலும், சங்கினாலும், வெள்ளியினாலும் கூடச் செய்யப் பெற்று மகளிர் அணிந்து வந்தனர். மாதவி மாணிக்க வளையொடு, முத்துத் தோள்வளையும் அணிந் திருந்தாள்4 என்று சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது. அழகிய கண்டிகையொடு தோளுக்கு முத்து வளையும் அணிந்திருந்தாள் என்று உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். மேலும் கழுத்து வடத்தில் பின் தாலிக்கு இரண்டு பக்கமும் பகுத்துப் போந்து வாகு வலயத்தோடு தொடக்கிக் கிடப்பதோர் அணிகலன். காமர்கண்டிகை யுடனினமணி நெருங்கின தோள் வளையைத் தோளுக்கு அணிந்து என்று விளக்கிக் கூறியுள்ளனர் உரை நூற் புலவர்கள். 6. வாகுவலயம் இன்று மக்களிடம் இது வழக்கில் இல்லை. தெய்வங்களுக்கு அணிவிக்கப்படுகிறது. இது அகலத்தின் அளவை இரு மடங்காக்கி அதில் கால் பங்கு குறைத்து, அல்லது அகலத்தைப் போல் இரு மடங்கு உயரம் உள்ளதாய் அமைக்கப்பட்ட பொன் அணிகலனாகும். இதில் மணிகளும் பதிக்கப் பெற்றிருக்கும். இதை மிகத் தொன்மையான காலத்திலிருந்தே பெரும்பாலும் மன்னர்களும் தெய்வங்களும் அணிந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் வாகு வலயமும் தோள் வளையும் ஒரே விதமான அணிகலனாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. வைகையாற்றில் புதுப்புனல் பொங்கி எழுந்தது. ஆண்களும் பெண்களும் புனல் நீராட்டு விழா கொண்டாடினர். வெள்ளம், பெண்கள் அணிந்திருந்த நகைகள் சிலவற்றைப் பறித்துச் சென்றது. அதனைச் சங்கக் காலப் புலவர் மையோடக் கோலனார், நீராடிய வர்களிடமிருந்து புனல் பறித்துச் சென்ற அணிகலன்களைக் குறிப் பிடுகின்றார். அதில் வாகுவலயம் குறிப்பிடப்படுகிறது.5 இதன் மூலம் இது பழங்காலத் தமிழர் அணிகலன்களில் ஒன்று என்று நன்கு தெரிகிறது. தோள் வளையமும், வாகு வலையமும் ஒன்றாக இருக்கலாம். VI. மார்பணிகலன்கள் மார்பில் அணியும் அணிகலன்கள் மார்பணிகலன்கள் எனப்படும். இந்த மார்பணிகலன்களைப் பற்றிப் பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடாது விட்டுள்ளனர். சிற்பங்களில் மார்பணிகள் காணப்படுகின்றன. எனது நண்பரும் சிற்பக்கலை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவருமான காலஞ் சென்ற திரு. தொ. மு. பாகரத் தொண்டைமான் அவர்கள் கிருஷ்ணாபுரம் சிற்பக் கருவூலத்தைக் கண்டு களித்த பொழுது ஒரு மங்கையின் மார்பில் அணிந்திருந்த அழகிய வேலைப்பாடுள்ள ஒரு மார்பணியை நான் குறிப்பிட்டு வியந்து பாராட்டினேன். அவர் அது மார்பணி அன்று, மார்புக் கச்சு; பின்னல் வேலையால் எழில்பெறச் செய்யப்பெற்ற கவினுறுங்கச்சு என்று கூறினார். அவரது கூற்றைப் பல அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இலக்கியங்களில் மங்கையர்கள் மார்பணி கலன்களைப் பற்றி மட்டுமன்றி மன்னர்களின் மார்பணிகலன் களைப் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. என்றாலும் பல அறிஞர்கள் அறிந்தோ அறியாமலோ மார்பணிகலன்களைப் பற்றிக் குறிப்பிடுவதே இல்லை. சிலர் முற்காலத்தில் தமிழர்கள் மார்பில் அணிகலன் அணிந்து வந்தனர் என்று கூறுவது தமிழர் நாகரிகத் துக்கு இழுக்கென்று கருதி அதைக் குறிப்பிடாமல் விட்டு விட்டனர் என்று கூறுகிறார்கள். பண்டைக்காலத் தமிழக மகளிர் சிலர் தொடையணி அணிந்து வந்தனர்; இடையணி பூண்டு வந்தனர். நுண்ணிய இடையில் எழில் ஒழுகும் பூங்துகிலின் மீது அணிந்துள்ள அணிகலன்களை மட்டுமன்றி ஆடையினுள் இடுப்பில் அல்குல் மறையுமாறு அணிந்த பவளமேகலையைக் குறிப்பிடும் ஆசிரியர், மார்பணியைக் குறிப்பிட ஏன் பின்தங்க வேண்டும்? மார்பில் ஆடை யணியாத காலத்தில் மார்பணி பூண்டதும், கச்சணிந்ததும் தொய்யில் எழுதியதும் சிறந்த நாகரீகமாகக் கருதப்படுமேயொழிய நாகரிகக் குறைவாகக் கருதப்படமாட்டாது. மேலும் உண்மையை உரைப்பது நாகரிகமேயொழிய அதை மறைப்பது நாகரிகம் அன்று. சமீபத்தில் தமிழ் இலக்கியத்தில் அணிகலன்கள் என்று திருவனந்தபுரம் திருநிறை செல்வி இரா. nty«khŸ, v«.V., தமது நூலில் மார்பணிகலன்கள் பலவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றார் அவருக்கு எனது பாராட்டு உரித்தாகுக. மார்பணிகலன்களும் விளக்கமும் வருமாறு :- (1) இதயவாசனை (2) நாமரவளி (3) நித்தில மதாணி (4) பூங்கொடிப் பொற்கலம் (5) பூண் (6) பொற்கச்சு மார்பணிகலன்களின் விளக்கம் 1. இதய வாசனை சங்கக்கால மன்னர்கள் மார்பில் மணிப்பூண் அணிந்திருந்த னர் என்று தெரிகிறது. கல்லார் மணிப்பூண் மார்பு என்று சிந்தாமணி கூறுகிறது.6 இலைப் பெரும்பூணும் இதயவாசனையும் என்று பெருங்கதை கூறுகிறது. இதயவாசனை ஓர் மார்பணி என்று உரையாசிரியர்கள் உரைக்கின்றனர்.7 2. நாமரவளி நாமரவளி என்னும் மார்பணி பழங்கால இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆனால் பெருங்கதை நாமரவளியும் காமர் கைவினை என்று கூறுகிறது.8 இதனால் நாமரவளி பிற்கால மகளிர் அணிந்த மார்பணி என்று தெரிகிறது. 3. நித்திலமதாணி ஆண்கள் மார்பில் அணியும் ஒரு அணிகலமாகும். திருமால் மார்பில் அழகுவாய்ந்த முத்துக்களாலான அழகிய பதக்கம் வெண் ணிறத்தாலும் வட்ட வடிவாலும் முழுமதியை ஒத்திருந்தது என்று பரிபாடல் சிறப்பித்துக் கூறுகிறது.9 4. பூங்கொடிப் பொற்கலம் இது மகளிர் மார்பிற் பூணும் ஒரு அழகிய நகை என்று திட்ட வட்டமாகத் தெரிகிறது.10 5. பூண் மங்கையர் தங்கள் கொங்கை மறைய மார்பில் பூண் என்ற அணிகலன்களைப் பூண்டு வந்தனர். இது இலை வடிவில் செய்யப் பெற்றிருந்தது. சீவக சிந்தாமணி இலைப்பூண் என்று குறிப்பிடு கிறது. முற்காலத்தில் பூண்கள் பூண்ட பூவையர் தம் காதலரை முயங்கியதால் அவர்கள் மார்பில் உள்ள சந்தனத்தில் பூண் உருவம் பதிந்தது, என்று அறிகிறோம்.11 6. பொற்கச்சு பொற்கம்பியால் செய்து மார்பில் பூணும் கச்சு வடிவமான ஒரு பொன் அணியாகும். அது பூங்கொடி வடிவமாக அழகுற அமைந் திருக்கும். இது பல சிற்பங்களில் அழகுறத் திகழ்கிறது.12 VII. கை அணிகலன்கள் கை அணிகலன்கள் உறுப்புகளில் அணியும் அணிகலன்களில் ஒரு வகைச் சிறப்புடையன. ஏனைய உறுப்பு அணிகலன்களைப் போலன்றி இவை யாவரும் காணும் இயல்புடையன. கைகளில் மகளிர் பலவகை வளைகளை அணிந்துக் கொண்டு நடக்கும் பொழுது ஆடும் பொழுது குதிக்கும் பொழுது வளைகள் கலகல வென்று ஒலிக்கும். அதனால் மகளிரைப் புலவர்கள் ஒண்டொடி மகளிர் என்று உரைப்பர். மிகத் தொன்மையான காலத்தில் தமிழர்கள் குறிஞ்சி நில வாழ்க்கை நடத்திய பொழுது மகளிர் கைகளில் கொடிகளையும் மலர்களையும் காய்ப்பூக்களையும் முன் கையிலும் - மணிக் கட்டின்மீதும் கட்டி வந்தனர். அப்பால் முதியவர் கள் தம் மக்களைப் பேய் பிசாசு விலங்கு முதலியவைகளினின்று காப்பதற்கு மந்திரம் ஓதிய நூல்களைக் கையில் கட்டி வந்தனர். அந்நூல் காப்பு எனப்பட்டது. அப்பால் அந்த நூலில் பொன் தகட்டில் மந்திரங்கள் எழுதி அதை மடக்கிக் கட்டி வந்தனர். பின் மந்திரம் எழுதிய தகட்டை ஒரு பொற் குழாயில் அடைத்து அணிந்து வந்தனர். இந்தக் காப்பு என்னும் நூல் பிற்காலத்தில் காப்பு என்னும் ஒரு பொன் அணியாகத் திரிபுற்று எழுந்தது. முற்காலத்தில் முன்கையில் சங்கு வளையல்களை அணிந்து வந்தனர். பழங்காலத் தில் கொற்கையில் சங்கறுக்கும் தொழில் பெரிதும் நடைபெற்று வந்துள்ளது. அங்குப் பூமியின் கீழ் இருந்து அகழ்ந்து எடுக்கப்படும் அறுக்கப்பட்ட சங்குத் துண்டுகளே இதற்கு நல்ல சான்றாகும். ஆதிச்சநல்லூர் பழம் பெரும் நாகரிகத்தில் தமிழர் சங்கு வளைகள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.13 பொன்வளைகளும், பொற்றொடிகளும், பொற்கடகங்களும், பொற்காப்பும், பொற் கங்கணங்களுமாகப் பிற்காலத்தில் எண்ணற்ற முன்கை அணிகள் பெருகின. இறுதியில் நவமணிகள் பதித்த பல வளைகளும் காப்புகளும் எழுந்தன. 1. ஆடகம் 2. ஆளிக்காப்பு 3. இடைச்சரி 4. கங்கணம் 5. கடகம் 6. காப்பு 7. குருடு சரி 8. கைக் கட்டு 9. கைச் சரி 10. கைவளை 11. கொலுசு 12. சங்குவளை 13. சூடகம் 14. தந்தவளை 15. தொடி 16. தோடா 17. நவரத்தின வளை 18. நீலக்கடைச் செறி 19. பரியகம் 20. பவளவளை 21. பாசித்தா மணி 22. பாட்லா 23. பைந்தொடி 24. பொன் வளை 25. மகரவாய்ப் புரிவளை 26. முறுக்கு 27. முத்துக் கொலுசு 28. வால்வளை 29. வண்டு 30. வலம்புரி வளை. 1. ஆடகம் ஆடகம் அழகிய முன்கைப் பொன் வளையாகும். இதில் பல்வேறு மணிகள் பதிக்கப் பெற்றிருக்கும். முகப்பில் மாணிக்கமும் பத்திகளில் வைரமும் அழுத்தப் பெற்றிருக்கும். இதன் விளிம்புகளில் அழகிய பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இது பிற்காலத் தில் பாட்டில் அல்லது பாட்டிலா என்று கூறப்பட்டது. இன்று இந்த அணிகலனும் வழக்கில் இல்லை. ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் பாட்டிலா என்னும் பெயருடன் நெல்லை மாவட்டத்தில் கூட வழக்கில் இருந்து வந்தது. 2. ஆளிக் காப்பு பொன்னால் வட்ட வடிவமாகச் செய்யப்பட்ட காப்பு ஆகும். இதன் முகப்பு அழகுறச் செய்யப்பட்டுள்ளது. இதில் அழகிய மணிகள் பதிக்கப்பட்டிருக்கும். இது இன்று வழக்கில் இல்லை. 3. இடைச் சரி கையில் அணியப்படும் ஒரு அகன்ற கைச் சரியாகும். இது காப்பு, கொலுசு ஆகிய அணிகளுக்கு இடையே அணியப்பட்டு வந்தது. 4. கங்கணம் கங்கணம் கடகம் போன்ற ஒரு அணி. இது நீண்ட காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்து மறைந்துவிட்டது. ஆனால் பொன் கங்கண அணிக்குப் பதிலாக கங்கணம் என்று மெழுகால் செய்யப் பெற்ற அணியை இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை மக்கள் அணிந்து வந்தனர்.14 5. கடகம் கடகம், என்னும் அணி கைகளில் ஆண்களும் பெண்களும் அணிந்து வரும் ஒரு கையணியாகும். இது மகர மீன் கவ்விய கொடி வடிவம் உடையதாக இருந்தது. இக் கடகம் இலை வடிவமும் பெற்றிருந்தது. சூடகமும் கடகமும் ஒன்றென்று சிலர் கூறுகின் றனர்.15 6. காப்பு பொன்னால் செய்யப்பட்ட ஒரு கையணி. இது பொற்ற கட்டால் புகலாகச் செய்து உள்ளே மெழுகடைத்து நீண்ட கால மாக வழக்கில் இருந்து வந்தது. இன்று இல்லை. 7. குருடு சரி குருடு போன்ற பொன் அணி ஆகும். இது சிறு வடங்கள் தொங்கும்படியாகச் செய்து கையில் அணிந்துக் கொள்ளப்படும் ஒரு கையணியாகும். 8. கைக் கட்டு மகளிர், பொன் மணியும் பவளமும் கோத்துக் கையில் கட்டிக் கொள்ளும் ஒரு பழங் காலக் கை அணி, கைக் கட்டு எனப்படும். கையில் கட்டப்படுவதால் கைக் கட்டு எனப்பட்டது. 9. கைச்சரி கைச் சரிகை என்பது காப்புக்கு மேற் பகுதியில் கையில் அணியப்படும் சரிகை என்னும் அணிகலனேயாகும். இது மேலே பருத்தும் கீழே சிறுத்தும் சிறு குழாய் வடிவில் இருக்கும். இது பொன்னால் செய்யப் பெற்ற அணிகலனாகும். இருபதாம் நூற்றாண் டின் முற்பகுதியில் வெள்ளியால் செய்து அணிந்து வந்தனர். 10. கைவளை கைவளை பல வகைப்படும். அது வால் வளை, சில் வளை, நிரை வளை, பொன் வளை, வலம்புரி வளை, தந்த வளை என்று கூறப்பட்டது. சில்வளை விறலியர்க்கு அடையாளமாக அணியப் பட்டது.16 11. கொலுசு இது காப்புப் போன்ற ஒரு பொன் அணிகலன். ஆனால் இதன் மேலே நடுவில் உயர்ந்தும், இரு புறமும் தாழ்ந்தும் கொடிக் கயிறுகள் அடுக்கடுக்காய் சுற்றப்பட்டது போல செய்யப்பட்டு இருக்கும். பிற்காலத்தில் மெழுகால் செய்த கொலுசுகளை வளையல் காரர்கள் செய்து விற்று வந்தனர். 12. சங்கு வளை முற்காலத் தமிழர் ஏராளமாகச் சங்கு வளைகளை அணிந்து வந்தனர். கொற்கை என்னும் பாண்டியர்களின் துறைமுகப் பட்டினம் பழங்காலத்தில் சங்குத் தொழிலுக்குப் பெயர் பெற்றதாய் இருந்தது. நக்கீரனார் சங்கறுக்கும் குலத்தைச் சேர்ந்தவர். 17 13. சூடகம் சூடகம் ஒரு பொன் அணி. இது வைரம் பதிக்கப் பெற்று அழகுறத் திகழும் கையணியாகும். சூடகமும் பாட்டிலாவும் ஒன்றென்று கூறுவாரும் உண்டு. மாதவி வைரங்கள் பதித்த விலை யுயர்ந்த அணியாகிய சூடகத்தோடு பரியகம் பொன் வளை, சங்கு வளை, பவள வளை முதலியவைகளை அணிந்து அழகு பொலியத் திகழ்ந்தாள், என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 14. தந்தவளை முற்காலத் தமிழக மகளிர் சங்கு வளை, பவள வளையோடு யானை மருப்பினால் செய்யப் பெற்ற தந்த வளையையும் அணிந்து வந்தனர். தந்த வளை சங்கு வளையைவிட மிகப் பளபளப்பாகத் திகழ்ந்தது; விலையிலுமுயர்ந்தது. 15. தொடி பண்டைய தமிழகத்து மாதர்கள் பல்வகைத் தொடிகளை அணிந்து வந்தனர். நண்டின் கண் போன்ற அறுப்பு வேலைகள் செய்த அழகிய தொடிகளைத் தம் சிறு குழந்தைகளுக்கு அணிந்து வந்தனர்.20 16. தோடா இது கையில் அணியும் ஒருவகைக் காப்பு. பிற்காலத்தில் புலவர்களுக்கும் வீரர்களுக்கும் மன்னர்கள் பரிசாகப் பொன்னால் செய்த தோடாவை அளித்து வந்தனர். 17. நவரத்தின வளை ஒன்பது வகை மணிகளும் அழுத்திச் செய்யப்பெற்ற பொன்வளை நவரத்தினவளை என்று கூறப்படும். இதனை முற்கால அரச மகளிர் ஆர்வமுடன் அணிந்து வந்தனர். இன்று இவ்வணி வழக்கில் இல்லை. பிற்காலத்தில் பெரிய வணிக மகளிர் அணியத் தலைப்பட்டனர். 18. நீலக்கடைச் செறி நீலக் கடைச் செறி என்பது பண்டைக் காலத் தமிழக மகளிர் கையில் செறிவாக அணியும் ஒரு கையணி. கை அன்னப் பூத்திருக்கும் காந்தள் மலர்மீது வண்டுகள் இருப்பது நீலக்கடை அணிந்திருப்பது போல் காணப்படும். இதனைக் கலித்தொகை அழகுற எடுத்துக் காட்டுகிறது.21 19. பரியகம் பரியகம் பொன்னாற் செய்யப் பெற்ற ஒரு கைக்காப்பு ஆகும். இதனைக் கைச்சரி என்று கூறுவார். இக்காலத்தில் வழக்கில் இருந்த வெள்ளிச் சரிகை வகைகளில் இதுவும் ஒன்றா அல்லது வேறா என்று தெரியவில்லை. சீவக சிந்தாமணியில் பரியகம் இடம் பெற்றுள்ளது. 20. பவளவளை பழங்காலத்துப் பாவையர் சங்குவளைகளை மட்டுமன்றிப் பவளவளைகளையும் பாங்குடன் அணிந்தனர். பவளவளைகளோடு குவளைப் பசுத்தண்டினையும் ஆம்பல் தண்டினையும் அணிந்து வந்தனர் என்று சங்கக் காலப் புலவர் பலர் எடுத்துக் காட்டி யுள்ளனர். 21. பாசித்தாமம் இது உயர்ந்த மரகதமணிகள் பதித்துச் செய்யப் பெற்ற பொன் வளையாகும். இக் காலத்தில் கூட இவ்வணியைக் குழந்தைகளுக்குச் செல்வர்கள் அணிந்து வருகின்றனர். 22. பாட்லா காப்புப் போன்ற ஒரு பொன்கை அணி. இதன் முகப்பு நடுவில் உயர்ந்து உருண்டும் இரு புறமும் டயமண்ட் வடிவில் இரு தகடுகள் இணைக்கப்பட்டுமிருக்கும். 23. பைந்தொடி பொன்வளையின் முகப்பில் மரகத மணிகள் பதித்துச் செய்யப் பெற்றது பைந்தொடி எனப்பட்டது. இதனைப் பழங்கால மக்கள் விரும்பி அணிந்து வந்தனர். 24. பொன்வளை பொன்வளை, பொற்றொடி எனப்படும். சிறு குழந்தை களுக்குப் பொற்றொடி அணிந்து வந்தனர். இன்றும் இவ்வழக்கம் இருந்து வருகிறது. முற்காலத்தில் மக்கள் பொற்றொடி அணிந்து வந்தனர்.24 25. மகரப்பகுவாய் மகரமீன் கவ்விய கொடி உருவத்தில் செய்யப்பெற்ற வளை மகரப் பகுவாய் எனப்படும். மரியிலைக் கம்மமொடு மகரங்கவ்வி என்று பெருங்கதை கூறுகிறது.25 26. முறுக்கு பொற்கம்பிகளை முறுக்கி ஒன்றின் மீது ஒன்று பொருந்த இணைத்துச் செய்யப் பெற்றவளையே முறுக்கு எனப்பட்டது. 27. முத்துக் கொலுசு பொற்கொலுசின் மேலே வரிசையாக சுமார் 70 முத்துக்கலாக ஒவ்வொரு கொலுசிலும் பதிப்பிக்கப்பெற்ற அழகிய கொலுசு முத்துக் கொலுசு எனப்படும். 28. வால்வளை இது வெள்ளியால் செய்யப் பெற்ற ஒரு கைவளை. கைகளில் மஞ்சள், சிவப்பு, பச்சை வண்ணங்கள் கூடிய கையணியோடு வெள்ளிநிறக் கையணியும் சேர்ந்திலங்க வெள்ளியால் செய்த வால் வளையும் சங்கினாற் செய்த வால்வளையும் அணியப்பட்டு வந்தன. 29. வண்டு இதுவும் பொன்னால் செய்யப் பெற்ற ஒரு கையணியாகும். இதைப் பற்றி வேறு ஒன்றும் நமக்குத் தெரியவில்லை. 30. வலம்புரிவளை வலம்புரிச் சங்கினாற் செய்தவளை வலம்புரிவளை என அழைக்கப்பெறும். வலம்புரி வளையை முற்காலத் தமிழ் மக்கள் மிக ஆவலோடு அணிவர். இன்று தமிழகத்தில் சங்குவளை அணியும் வழக்கம் மறைந்துபோய்விட்டது. வட இந்தியாவில் இன்றும் வழக்கில் இருக்கிறது. பணம் படைத்த பெண்கள் வைரவளையோடு சங்குவளையும் அணிவர்.26 வலம்புரிவளை அழகு அணியாக மட்டுமன்றி ஒரு சமயச் சார்புள்ள அணியாகவும் கருதப்படுகிறது. இதனால் பல பிணிகள் அகலும்; பில்லிசூனியம் போன்றவை அணுகா என்று நம்பப் படுகிறது. VIII. கைவிரல் அணிகலன்கள் மிகப் பழமையான காலத்திலிருந்தே தமிழர்கள் கை விரல் களில் பலவிதமான அணிகளைப் பூண்டு வந்தனர். கைவிரல் அணி மோதிரம்விரல் அணி, விரலாழி, கணையாழி என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த இவ்வணி பொன்னால் செய்யப் பெற்றது. அப்பால் பலவித மணிகள் வைத்து அழகுறச் செய்யப் பெற்று அணிந்து வரப்பெற்றது. இந்த மோதிரம் ஆதியில் அதிகமாக பூ வடி வாகவும் இலை வடிவாகவும் இருந்து பின்னர் பாம்பு வடிவமாகவும், சுறாமீன் வாய் வடிவமாகவும் செய்யப் பெற்றது. ஆதியில் மக்கள் சங்கு மோதிரங்களைச் செய்து அணிந்து வந்தனர். இந்த இருபதாம் நூற்றாண்டு வரை அவ்வழக்கம் இருந்து வருகிறது. மன்னர்கள் தம் போர் மறவர்களுக்கு ஏனாதி என்ற பட்டமும் ஏனாதி என்னும் பொன் மோதிரமும் பரிசளித்து வந்தனர். அரசர்கள் மோதிரங்களில் தமது அரச சின்னத்தை (இலாஞ்சனத்தை) அமைத்து வந்தனர். அதை மக்கள் மதித்து நடந்து வந்தனர். ஐரோப்பியர்கள் மோதிரத்தை மண அணியாகப் பயன்படுத்தி வந்தனர். இன்று தமிழர்கள் இல்லத்திலும் கூட மணவிழாவில் தாலிகட்டல், மாலை மாற்றல், மோதிரம் மாற்றல் முதலிய சடங்குகள் நடை பெற்று வருகின்றன. மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவதும், மணமகள் மணமகனுக்கு மோதிரம் அணிவதும் மணமகன் மணமகளின் அண்ணன் அல்லது தம்பிக்கு மோதிரம் பரிசளிப்பதும் தமிழர்கள் வீட்டில் நடைபெறும் மணங்களில் இன்றும் நடைபெற்று வருகின்றன. 1. ஏனாதி மோதிரம் 2. சங்கு மோதிரம் 3. சிவந்திப் பூ மோதிரம் 4. சிறுதாள் 5. செங்கேள் கிளர்மணி 6. மரகதத் தாள்செறி 7. மணி மோதிரம் 8. மாணிக்கத்தாள் செறி 9. முடக்கு மோதிரம் 10. முத்திரை மோதிரம் 11. மோசை 12. பகுவாய் மோதிரம் 13. பொன் மோதிரம், இவை மோதிர வகைகள். 1. ஏனாதி மோதிரம் மன்னர்கள், தம் போர் மறவர்களுக்கு ஏனாதி என்னும் பட்டமும், ஏனாதி என்னும் மோதிரமும் பரிசளித்து வந்தனர். இறையனார் அகப்பொருள் நூற்பா உரையில் நக்கீரர் ஏனாதி மோதிரம் பற்றிக் கூறுகிறார்.27 2. சங்கு மோதிரம் சங்கினால் செய்யப் பெற்ற மோதிரம் சங்கு மோதிரம். இந்த மோதிரம் பண்டுதொட்டே தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இன்று வட இந்தியாவில் அதிகமாக வழக்கில் இருக்கிறது. 3. சிவந்திப்பூ மோதிரம் சிவந்திப்பூ வடிவில் மணிகள் பதிக்கப் பெற்ற மோதிரம் சிவந்திப்பூ மோதிரம் எனப்படும். இம்மோதிரம் இன்றும் தமிழகத் தில் வழக்கில் உள்ளது. இது பொன்னால் செய்யப் பெற்று மணிகள் அழுத்தப் பெற்றிருக்கும். 4. சிறுதாள் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரலில் அவ்விரல், மறையும்படி அணியும் சிறுமணிகள் பதித்த அழகிய மோதிரத்தைச் சிறுதாள் என்று கூறுவர். இது இன்றும் வழக்கில் உள்ளது. 5. செங்கேள் கிளர்மணி கிளர்மணி மோதிரம் பொன்னாற் செய்யப் பெற்றுச் செந்நிற மாணிக்க மணிகள் பதிக்கப் பெற்றுள்ளது. செந்நிறக் கற்கள் பதிக்கப் பெற்றதால் செங்கேள் கிளர்மணி மோதிரம் எனப் பெயர் பெற்றது. செம்மலர் போன்ற விரல்களை அணிசெய்து நிற்கும். இம்மோதிரம் இன்று வழக்கில் உள்ளது. இது தொன்மையான காலத்தில் உள்ளது. இரத்தினம் கட்டியது அடுக்காளி.28 6. மரகதத் தாள் செறி சிறு வயிரங்கள் சூழ நடுவே ஒரு பெரிய மரகதமணி பதித்துச் செய்யப் பெற்ற மோதிரம் மரகத் தாள் செறி எனப்பட்டது. இந்த மோதிரம் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வழக்கில் உள்ளது. வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி என்று சிலப் பதிகாரம் கூறுகிறது. இதனைச் சுட்டு விரலில் அணிவர். இது வட்டப் பூ, மரகதக் கடைசெறி, மரகதநாயகம் என்றெல்லாம் கூறப்படும். 7. மணி மோதிரம் மணிகள் பதித்து அழகுறப் பொன்னால் செய்யப் பெற்ற மோதிரம் மணிமோதிரம் எனப்படும். 29 8. மாணிக்கத்தாள் மாணிக்கங்கள் சுற்றிலும் பதித்து நடுவில் வைரம் செறித்த மோதிரத்தை மாணிக்கத் தாள்செறி என்று கூறுவர். இது மிகப் பழங்காலத்திலிருந்து அணிந்து வரப்படும் மோதிரம். 9. முடக்கு மோதிரம் சுறாமீன் வாய் திறந்தாற் போன்ற வடிவில் செய்யப் பெற்ற மோதிரத்தை முடக்கு மோதிரம் என்றனர் நம்முன்னோர். பின்னோர் நெளி மோதிரம் என்று நெடுநெல்வாடையிலும், சிலப்பதிகாரத் திலும் கூறப்படுகின்றது. இது இன்றும் நெளிவு என்னும் பெயரில் வழக்கில் உள்ளது. 10. முத்திரை மோதிரம் மன்னர்கள் தங்கள் முத்திரை (இலாஞ்சனம்) பொறித்த மோதிரத்தைக் கைவிரல்களில் அணிந்து வந்தனர். முக்கிய சாசனங்களில் இந்த முத்திரை மோதிரம் பதிப்பிக்கப்பெறுமாம். பாண்டியர்கள் இரண்டு மீன் செங்குத்தாய் நிற்கும் வடிவில் உள்ள முத்திரை மோதிரத்தை அணிந்து வந்தனர். 11. மோசை மோசை முன் வளையோடு சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தது.31 12. பகுவாய் இம் மோதிரம் விரிந்த வாயையுடைய மீன், பாம்பு வடிவில் செய்யப் பெற்ற பொன் மோதிரம். இந்த மீன் வடிவமுள்ள உருவின் கண்களில் மணிகள் பதித்திருப்பதும் உண்டு. 13. பொன் மோதிரம் பொன்னால் செய்யப்பட்ட மோதிரம். பொன்மோதிரம் எனப்படும். இதில் பெயர் பொறித்தலும் உண்டு. சீவகன் தன் பெயர் பொறித்த மோதிரத்தைக் குணமாலைக்கு அளித்தான் என்று சிந்தாமணி கூறுகிறது.32 IX. நுசுப்பணிகலன்கள் முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த மகளிர் இடுப்பில் பல விதமான இடை அணிகள் அணிந்து வந்தனர். ஆண்கள் அரையில் அரைஞான் பூண்டு வந்தனர். பெண்களும் அரையில் ஞாண் பூண்ப துண்டு. இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சில பெண்கள் அரையில் வெள்ளி ஞாண் பூண்டிருக்கிறார்கள். அரையில் கட்டிய சேலை எளிதில் நெகிழ்ந்து விடாதிருக்க சேலையை அந்த வெள்ளி ஞாணால் இறுகப் பிணைத்துள்ளனர். சிறிது காலத்திற்கு முன்னர் இளம் பெண்கள் ஒட்டியாணம் என்னும் பொன் பட்டிகையை அரையில் பூட்டி வந்தனர். அப்பால் அவர்களும் அதை நழுவ விட்டு விட்டனர். ஆடல் மகளிர் நீண்டகாலமாக அரையில் ஒட்டியாணம் அணிந்து வந்தனர். இப்பொழுது அதுவும் மறைந்து வருகிறது. முற்கால மாதர் அரையில் பொன் பட்டிகைகளையும் சங்கிலி களையும் அணிந்து வந்தனர். அரைப்பட்டிகைகளில் 2 முதல் 32 வரை ஏன் 62 வடங்கள் தொங்கும். பலவகை இடையணிகளை (நுசுப் பணிகளை) அணிந்து வந்தனர். இந்தப் பட்டிகையில் தொங்கும் வடங்கள் பவள வடங்களாகவும் முத்து வடங்களாகவும் பொன் மணி வடங்களாகவும், மாணிக்கம், மரகதம், வைரம் பதித்த மணி வடங்களாகவும் இருந்தன. சிறுமிகள் அரையில் அரைமூடி என்னும் அணிகலனும் சிறுவர்கள் அரைச் சதங்கை என்னும் அணிகலனும், அரைவடம் என்னும் அணிகலனும் அணிந்து வந்தனர். தெய்வங்கள் கூட கடிசூத்திரம் என்னும் நுசுப்பணி அணிந்து வந்ததாகத் தெரிகிறது. பல அழகிய சிற்பவடிவங்களில் இந்த அணிகலன்கள் காணப்படு கின்றன. இங்கு இடையணிகளின் பெயர்களும் விளக்கமும் கொடுக் கப்பட்டுள்ளன் அவை அடியில் வருமாறு : நுசுப்பணிகலன்கள் (இடையணிகலன்கள்) 1. அரசிலைப் பொன் அடர், 2. அரைஞாண் 3. அரைமூடி 4. அரைச்சதங்கை 5. ஏணிப்படுகால் 6. கோவை 7. கடி சூத்திரம் 8. கொடி (அரைக்கொடி) 9. சதங்கை (அரைச்சதங்கை) 10. பாண்டில் 11. பொற்றோரை 12. பொற்பட்டி 13. அரையணி (I) தாமம் (18 வடங்கள் கொண்டது) (II) பருமம் (16 வடங்கொண்டது) (III) மேகலை (8 வடங் கொண்டது (அ) பவளமேகலை (ஆ) மாணிக்க மேகலை) (IV) காஞ்சி (16 வடங்கொண்டது (V) கலாபம் (18 வடங் கொண்டது (VI) விரிசிகை (32 வடங்கொண்டது) (VII) மணியணி (7 வடங் கொண்டது) இஃதன்றி, அத்து, அரைப்பட்டிகை, இரதனம், உதர பந்தனம், கீர்த்திமுகம், மணிக்கோவை, ஐம்படைக் கோவை, கச்சி போன்ற அணிகலன்களும் இருந்ததாகத் தெரிகிறது. மேகலை வகைகளில் காணப்படும் வடங்களின் எண்ணங்களில் கூடுதல் குறைதல் கூறுவாறும் உண்டு. 1. அரசிலைப் பொன் சுடர் இது அரசிலை வடிவாகப் பொற்றகட்டால் செய்யப்பட்ட ஒரு அரையணி. இது மகளிரின் அழகிய வயிற்றில் எழில் தருவதா யுள்ள நீர்ச்சுழி போன்ற கொப்பூழின் கண், பயத்தால் நுழைய வரும் பாம்பு போன்று காணப்படும் என்று பெருங்கதை கூறுகிறது. (பெருங் 2 : 7 22-2A) 2. அரை ஞாண் ஆண்கள் அரையில் அணியும் ஒரு பொற்கொடி. ஏழைகள் வெள்ளிக்கொடியும் அணிவர். சில இடங்களில் மகளிரும் அரையில் வெள்ளிக்கொடி இன்று அணிந்துள்ளனர். இது மூன்று நூலால் ஆனது. இதன் முகப்பில் சிங்கம் அல்லது யாழி உருவம் இருக்கும். இது கட்டுவார் அல்லது கீர்த்திமானம் எனப்படும். 3. அரை மூடி இதை அரசிலை வடிவில் பொன்னால் செய்து அரையில் உள்ள கொடியில் தொங்கவிட்டிருப்பர். இது அல்குலை மறைப்ப தற்கு என்று செய்யப்பட்ட அணி. வெள்ளியிலும் கண்ணாடியிலும் செய்து அணிவது முண்டு. 4. அரைச் சதங்கை சிறு குழந்தைகளில் ஆணிற்கும் பெண்ணிற்கும் இந்த அணியை பொன்னாலும் வெள்ளியாலும் செய்து அணிவதுண்டு. இன்றும் இந்த அணி வழக்கில் உள்ளது. ஆண் குழந்தைகளுக்கு அணிவது குறைந்து வருகிறது. 5. ஏணிப்படுகால் ஏணிப்படுகால் மேகலை இனத்தைச் சேர்ந்த ஒரு நுசுப்பணி. புனல் விளையாட்டின் போது ஏணிப்படுகாலை இடையில் இறுகப் பூட்டிக்கொண்டனர் என்று பரிபாடல் கூறுகிறது. (பரி. 10-11-12) 6. கோவை கோவை பொன்னாற் செய்த அணியாகும் இது ஒரு பழமை வாய்ந்த அணிகலனாகும். இக்கோவையைச் சிலப்பதிகார உரை யாசிரியர் பின்றாலி என்று கூறுகின்றனர். காமன் தூமணி செயத்தகு கோவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 7. கடி சூத்திரம் கடி சூத்திரம் ஒட்டியாணம் போன்ற நுசுப்பணி. ஒட்டி யாணம் போன்று கடி சூத்திரத்தின் பொன் பட்டிகையில் முன்புறம் சிறு சிறு சதங்கைகள் தொங்கும். கடிசூத்திரத்தின் முன்பக்கம் சிங்கத்தலை போன்ற முகப்பு இருக்கும். தஞ்சைக் கல்வெட்டு இதைப் பட்டிகை என்று கூறுகிறது. இதினின்று தொங்கும் பல வளைவு களைக் கொண்ட முத்துச் சரங்களை ஊருதாமம் என்பர். இச் சரங்கள் இடுப்பினின்று தொடை வரை 3 அங்குல நீளந்தொங்கும். பல்லவர், பழங்காலச் சோழர் சிற்பங்களில் ஒரே முத்துச்சரந்தான் உள்ளது. கல் சிற்பங்களில் ஒவ்வொரு தொடை மீதும் இரு முத்துச் சரங்களும் நடுவில் ஒரு சரமுமாக ஐந்து முத்துச்சரங்கள் தொங்கும். இதனைக் கிருதரிமாசியம் என்பர். 8. கொடி பொன் இழைகளால் பின்னப்பட்டுப் பின்னர் சிறிய அச்சில் உள்ளே புகுத்தி இழுத்துக் கம்பி வடிவாகச் செய்த ஒரு இடுப்பணி. இது வெள்ளியிலும் உண்டு. 9. சதங்கை பொன்னால் புகலாய்ச் செய்து நுனியில் சிறு அரும்புகள் வைத்து மேலே மடை வைத்துள்ள சிறு அணியாகும். இதை 40 அல்லது 50 சதங்கைகள் கயிற்றிலோ அல்லது பொன் வெள்ளிக் கொடியிலோ கோர்த்து இடுப்பில் அணிவர். இது சிறுவர் சிறுமியர் அணியும் அணி. 10. பாண்டில் மேகலையைப் போன்ற நுசுப்பணி பாண்டில். இது மேகலை யோடு சேர்த்து அணியப்படும் அணிகலனாகும். இது வட்டமாகப் பொன்னால் செய்யப்பட்டது. இதனைச் சுற்றி பொன்மணிகள் கோக்கப்பட்டிருக்கும்.34 11. பொற்றோரை இது பொன்னால் மெல்லிய இழை போன்று செய்யப் பெற்ற வடமாகும். இது ஒரு நுசுப்பணி. சீவகசிந்தாமணி, அல்குற் பொற்றோரை மின்ன என்று கூறுகிறது. (சிந் : 213. 2 : 1) 12. பொற்பட்டி இது அரையில் அணியும் ஒரு பொற்றகடாகும். நீண்ட பொன் தகடுவடிவானது. இது ஆடை நெகிழவிடாது அரையில் பிணிக்கும். 13. அரைமணி (I) தாமம் இது பதினெட்டு முத்துக் கோவைகள் தொங்கும் இடை அணி. ஆடையின் மீது அழகுறப் பழந்தமிழ் நாட்டு மகளிர் இதை அணிந்து வந்தனர். இதை முத்துத் தாமமும் முடிவில்லாதோரெழில் நிலைமேனி என்று ஒரு வைணவப் பாசுரம் திருமாலின் அணியாகப் போற்றுகிறது. (II) பருமம் : இது பதினாறு கோவை கொண்ட அரைப் பட்டிகை. ஆனால் இது என்ன மணிவடங்களைக் கொண்ட கோவைகளையுடையது என்று தெரியவில்லை. (III) மேகலை : இந்த நுசுப்பணி; எட்டு பவளக் கோவைகளால் ஆனது. இரு பவளக்கோவை கொண்ட மேகலை என்றும் ஏழு பவளக்கோவை மேகலை என்றும் இருவகைகள் உண்டு.33 (அ) பவளமேகலை (ஆ) மாணிக்க மேகலை : மேகலை வகைகளில் ஒன்று. இது மாணிக்க வடங்களால் செய்யப்பட்டதாகும். மேகலை முத்து, பவளம் முதலியவைகளில் செய்யப்பட்டிருப்பது போல் மாணிக்கக் கற்கள் பதித்தும் செய்யப்பட்டிருக்கிறது. மேகலையை அழகிற்காக பவள வடங்களைக் கோத்துச் செய்வர். ஆனால் பவளத்தைவிட மாணிக்கம் சிறந்த மணியாக இருப்பதாலும் இது பளபளவென ஒளிர்விட்டோங்குவதாலும் மாணிக்க மேகலை மிக அழகுடையதாக மதிக்கப் பட்டது. (IV) காஞ்சி : மேகலை இனத்தைச் சேர்ந்தது. இது எட்டு முத்து வடங்கள் கோத்த நுசுப்பணி. மதுரையில் நடைபெற்ற புதுப்புனல் நீராட்டுவிழாவில் மகளிர் தம் இடுப்பில் காஞ்சி அணிந்திருந்ததாகப் பரிபாடல் கூறுகிறது. இந்த அணி இன்று வழக்கில் இல்லை. நமது நாட்டுச் சிற்பங்களில் இந்த அணிகலனின் உருவத்தைக் காண முடியும். காஞ்சி 16 வடங்கள் கோத்த அணி என்றும் கூறப்படும். சிற்பிகள் சிற்ப விதிப்படி, நூற்களின் விதிகளுக்கு முரணின்றிச் சிற்பங்களைப் படைத்திருப்பதால் இந்த அணிகலனின் தோற்றத்தை யும் அதில் உள்ள முத்துக்கோவைகனின் எண்ணத்தையும் நாம் திட்டவட்டமாக அறிய முடியும். இஃதன்றி இதன் வடிவத்தை நாம் நன்கறிய வேறு வழியில்லை. (V) கலாபம் : இது ஒட்டியாணம்போல் இடுப்பை இறுக்கிப் பிணைக்கத் தக்கதாய், பட்டிகையாகவோ சங்கிலியாகவோ இருக் கும். அதினின்று கீழே பதினாறு கோவைகளாலான சங்கிலிகள் தொங்கும். பண்கொள் கலாபம் பதினாறு என்று சிலப்பதிகார உரையாசிரியர் இதை உறுதிப்படுத்துகின்றார். இது 16 முத்து வடங்கள் கோக்கப்பட்ட இடையணியாகும். இது பொன்னாற் செய்யப்பட்டு அரைப்பட்டிகையும் அழகிய முகப்பும் கீழே அழகுறத் தொங்கும் 16 முத்து வடங்களும் உடையதாய் எழில் பெற்றிலங்கும் இடையணியாகும். வட்டுடை பொலிந்த வண்ணக் கலாபமொடு பட்டுச் சுமந் தசைந்த பாவை யல்குல் (பெருங் 2; 4 - 122 - 123) சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கலாபம் பவளக்கோவை எட்டினாற் செய்யப்பட்டது என்று குறிப்பிட் டுள்ளார். இத்தகைய மேகலைகளை மகளிரன்றி தாய்மார் தம் சிறு குழந்தைகளுக்கும் அணிந்து வந்தனர். (VI) விரிசிகை : இந்த நுசுப்பணி பெரியது; அரியது; அழகு மிக்கது. அந்துகில் மேகலை அசைந்தன என்ற சிலப்பதிகாரச் செய்யுளடிக்கு உரை கண்ட உரை ஆசிரியர் எண்கோவை காஞ்சி எழுகோவை மேகலை பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள் பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு விரிசிகை என்ற நிகண்டை எடுத்துக் காட்டியுள்ளார். இதன் மூலம் விரிசிகை முப்பத்திரண்டு மணிக் கோவைகளையுடைய ஒரு மாதர் நுசுப்பணி என்று தெரிகிறது. பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையி னுடீஇக் (சிலப் 6 : 88) என்ற சிலப்பதிகாரச் செய்யுளடிக்கு உரையாசிரியர் பருமுத்துக் கோவை முப்பத்திரண்டாற் செய்த விரிசிகை என்னும் கலையை நீல நிறங்கிளரும் பூத்தொழிலையுடைய நீலச் சாதர் உடையின் மீது அணிந்தாள் என்று எடுத்துக்காட்டுகிறார். இதனால் இது ஆடை யின் மீது அழகுற அணியும் அணிகலன் என்றும் நன்கு தெரிகிறது. மேகலையும் அந்த இனத்தைச் சேர்ந்த விரிசிகையும் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல், திருமுரு காற்றுப்படை, மணிமேகலை முதலிய நூற்களிலெல்லாம் இடம் பெற்றிருப்பதால் இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்து, தமிழகத்தில் இருந்து வரும் அணிகலம் என்றும் இந்த மேகலை வகைகள் இரண்டு கோவைகளிலிருந்து முப்பத்திரண்டு கோவைகள் வரையும் பல்வேறு பெயருடன் பவளம், முத்து, மணிகள் போன்ற வடக்கோவைகளை யுடையனவாய் இருந்தன என்றும் தெரிகிறது. (VII) மணியணி : மணியணி 7 வடங்கள் கொண்டது. X. தொடையணிகலன்கள் இந்த அணிகலன் இதர அணிகலன்களைப் போல் அத்துணைச் சிறப்பானதன்று. தொடை அணிகலன் பெரும்பாலும் ஆடைக்குள் இருப்பதாலும் காது, கை, இடுப்பு போன்ற உறுப்புகளைப் போல் அணிகள் அணிவதற்கு தொடை வசதியான இடமாக இல்லாத தாலும் இந்த அணிகலன் அதிகம் ஏற்றம் வாய்ந்தனவாக இல்லை. தமிழர்களின் பொற் காலமாகிய சங்கக் காலத்தில் இவ்வணி இடம் பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சிலப்பதிகாரக் காலத்தில் இவ்வணி தோன்றிவிட்டதாகத் தெரிகிறது. தொடை அணிகலங்களாவன : (1) குறங்குச் செறி (2) கவான் செறி. 1. குறங்குச் செறி என்பது தொடையில் அணியப்படும் ஒரு பொன் அணிகலனாகும். குறங்கணி கிம்புரி வடிவமாக இருந்தது என்று சிந்தாமணி மூலம் அறிகிறோம்.36 இஃதன்றி மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட குறங்கணியும் அக்காலத்தில் இருந்தது. தொடையைக் கௌவி இருக்குமாறு இவ்வணி செய்யப்பட் டிருந்தது. இவ்வணி உடையின் மேல் தொடையில் அணியப் பட்டதாகக் கூறுவாரும் உண்டு. 2. கவான் செறி : இதைப் பற்றிய விளக்கம் ஒன்றும் தெரிய வில்லை. குறங்கு என்பதற்கு கவான் என்று பொருள் கூறப்படுகிறது. எனவே குறங்குச் செறியும் கவான் செறியும் ஒரே வித அணிகலன் என்றும் கூறப்படுகிறது. XI. காலணிகலன்கள் காலணிகலன்கள் என்று குறிப்பிடுவது காலின் அடியில் அதாவது பாதத்தின் மீது பொருந்துமாறு அணியும் அணிகலன்கள் ஆகும். இந்தக் கால் அணிகலன்கள் தொடை அணிகலன்கள் போன்றன வல்ல. மிகச் சிறப்பானவை. காலணிகலன்கள் வரலாற்றுச் சிறப்புடையவை. இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் காலணி காப்பியச் சிறப்புடைய அணிகலனாகவும் எழுந்துள்ளது. இலக்கியச் செறிவு மிக்க சிலப்பதிகாரத்தைக் கால் அணியாகிய சிலம்பு பெற்றது. இஃதன்றி சிலம்பு வெள்ளியால் செய்யப்பட்டது. மன்னர் களும் மாபெரும் வணிகர்களும் பொன்னால் சிலம்பைச் செய்து அதனுள்ளே மாணிக்கக் கற்களும் முத்துகளும் இட்டு நடக்கும் பொழுது அது கணீர்! கணீர் என்று ஓசை எழும்புவதைக் கேட்டு மகிழ்ந்து வந்தனர். இன்று காற்சிலம்பு வழக்கற்றுப் போய்விட்டது. ஆனால் கைச் சிலம்பு ஒன்று சில கோயில்களில் உள்ளது. அது வெள்ளியால் செய்யப் பெற்றது. சில சாமி ஆடிகள் கைகளில் அணிந்து ஊர்வலங்களில் வருகின்றனர். முற்காலத்தில் காற் சிலம்பு களில் பரலாக இடப்பட்ட மணிகளுக்குப் பதிலாக இப்பொழுது கைச் சிலம்பிற்குள் கற்கள் பரலாக இடப்பட்டுள்ளன. ஆடவர்கள் வீரத்தின் சின்னமாகக் காலில் கழல் அணிந்து வந்தனர். பொன்னால் செய்யப்பட்ட கழல் பொன் கழல் எனப் பட்டது. மன்னர்கள் பகை அரசர்களை வென்று அவர்கள் பொன் முடியால் (மகுடத்தால்) வீரக் கழல் செய்து காலில் அணிந்து வந்தனர். இஃதன்றிக் கால் சரிகை, கிண்கிணி, கொலுசு, சவடி, கடகம், தண்டை போன்ற பல விதமான காலணிகள் அணிந்து வந்தனர். காலணி தமிழகத்திற்கே ஒர சிறப்பாக அமைந்த அணிகலனாக மதிக்கப்பட்டு வருகிறது. காலணிகளின் பெயர் 1. அரியகம் (பாதசாலம் அல்லது பாதசரம்) 2. அரவம் 3. கழல் : (1) வீரக் கழல் (2) கொடைக் கழல் (3) பொலன் கழல் (4) கண்டை 5. காற்சரிகை 6. காற்கொலுசு 7. கால்வளை 8. கிண்கிணி 9. சாலகம் (பட்டைக் கொலுசு) 10. சிலம்பு (குடைச்சூல்) 11. கிறுமணி 12. ஞெகிழம் 13. பரியகம் (காற்சவடி) 14. பரிவடிம்பு 15. பாடகம் 16. புசங்கக் கடகம் 17. புனையாரம் 18. தண்டை 19. நூபுரம் 20. வெள்ளித்தளை. காலணிகலன்களின் விளக்கம் 1. அரியகம் மிகப் பழமையான காலந் தொட்டு தமிழகத்தில் அணியப் பட்டு வரும் ஒரு காலணி. இதனைப் பாதசாலம் என்றும் கூறுவர். சிலப்பதிகாரத்திலே, அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து என்று கூறப்பட்டுள்ளது. இது பொன்னால் செய்யப்பட்டது. 2. அரவம் பாம்பு வடிவமாகச் செய்யப் பெற்ற ஒரு காலணி ஆகும். இது பொன்னால் செய்யப் பெற்றது. இன்று இது வழக்கில் இல்லை. இதன் அழகும் அமைப்பும் நன்கு தெரியவில்லை. 3. கழல் : (அ) வீரக் கழல் ஆடவர்களின் கால் அணியாகும். மன்னர்கள் பகை அரசர் களை வென்று அவ்வரசர்களின் பொன் முடிகளால் கழல் செய்து காலில் அணிவர். (ஆ) கொடைக் கழல் : மன்னர்கள் வீரர்களுக்கும் புலவர் களுக்கும் நல்கும் கொடையின் சின்னமாகும். வீரர்களும் புலவர் களும் கால்களில் கொடைக் கழல்களை அணிந்துக் கொள்வது தமிழ் நாட்டுப் பழைய மரபாகும். (இ) பொலன் கழல் : பொன்னால் கழல்கள் செய்து காலில் அணிவதும் உண்டு. இது பொலன் கழல் எனப்படும். சிந்தாமணியில் படிய னல்காய் பசு மணிகள் வேய்த் தோங்கும் பைம்பொற் செறிகழலினாய் என்று கூறப்பட்டுள்ளது.38 4. கண்டை கண்டை போர் மறவர்கள், காலில் அணியும் பெரிய மணிகள் கோத்த ஒரு காலணி. யானை மணியும் கண்டை மணி எனப்படும். வீரர்கள் அணிந்த அணிகலன் வீரக் கண்டை எனப்படும். 5. காற்சரி இது குழாய் போன்ற வடிவில் தகட்டால் செய்யப்பட்டு காலில் தண்டைக்கு மேலே அணியும் காலணியாகும். இதன் மேற்புறம் பெரிதாகவும் கீழ்ப் புறம் சிறிது சிறுத்தும் காலுக்கு ஏற்ற விதமாய்ச் நாழி போல் செய்யப்பட்டிருக்கும். இதே போன்று சிறிதாகச் செய்யப்பட்ட அணிகலன் கைச் சரியாகும். 6. காற்கொலுசு காலில் அணியப்படும் கொலுசு காற்கொலுசு என்று கூறப் படும். சதங்கையும் காற் கொலுசும் ஒரே அணிகலன் என்று கூறப்படு கின்றன. இது வெள்ளியினால் செய்யப்பட்டுத் தமிழகத்தில் நேற்று வரை வழக்கில் இருந்த காலணியாகும். இக் கொலுசின் கீழ்ப் பக்கம் சதங்கைகள் தொங்கும். இது அரியகம் போன்ற அணிகலனாகும். 7. கால் வளை கால் வளை என்பது தண்டையேயாகும். தண்டையும் கால் வளையும் ஒரே வித அணி என்று கூறுவாரும் உண்டு. ஆனால் தண்டை வேறு கால்வளை வேறு என்று சொல்லப்படுகிறது. 8. கிண்கிணி கிண்கிணி காலணிகளில் ஒன்று. இது தவளையின் வாய் வடிவில் இருக்கும். எனவே தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப என்று கலித்தொகை கூறுகிறது. தவளைவாய் பொலஞ்செய் கிண்கிணி என்று குறுந்தொகை கூறுகிறது. கிண்கிணி என்று ஒலிப்பதால் கிண்கிணி என்ற பெயர் எழுந்தது. 9. சாலகம் : (பட்டைக் கொலுசு) இது பாதங்களின் மீது கணைக் காலுக்குக் கீழே அணியப் படும். இதனைப் பட்டைச் சரம் என்றும், பட்டைக் கொலுசு என்றும் பகர்வர். முத்துக்கள் போல் தனித் தனியே செய்து சாலகத் திலே கோக்கப்பட்டு வலை போன்று இணைத்து நிற்கும் சிறு பட்டைகள் இதில் உண்டு. இவ்வணி இப்பொழுது படிப்படியாய் மறைந்து வருகிறது. 10. சிலம்பு (குடைச் சூல்) சிலம்பைக் குடைச்சூல் என்றும் அழைப்பர். சிலம்பு நீண்ட வட்டமான ஒரு காலணி. இது புகலாகச் செய்யப் பெற்று உள்ளே பரல்கள் போடப்பட்டிருக்கும். சிலம்பினுள் முத்துகளும் மாணிக்கங் களும் முற்காலத்தில் பரல்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த அணிகலன் பேராலே சிலப்பதிகாரம் என்னும் பெருங்காப்பியம் எழுதப் பெற்றது. முத்தரி பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று என்று நற்றிணை நவில்கிறது. நீடாழ்பு தோக்கை நித்தில வரிச் சிலம்பு என்று பரிபாடல் பகர்கிறது. சிலம்பணிந்து நடந்தால் பரல்கள் கணீர் கணீர் என்று ஒலி எழுப்பும். 11. சிறுமணி சிறுமணி என்பது சதங்கைகள் கோத்துச் செய்யப்பட்ட ஒரு காலணி. இது வெள்ளியினால் செய்யப்பட்டது. இது இன்றைய வழக்கில் இல்லை. இவ்வணி மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 12. ஞெகிழம் ஞெகிழம் என்பது ஒரு வகைச் சிலம்பு. இது பொன்னால் செய்யப்பட்டது. ஞெகிழமும் நூபுரமும் ஒருவித அணி என்று கூறப் படுகிறது. 13. பரியகம் (காற்சவடி) பரியகம் பொன்னாற் செய்த சிறு வடங்களைச் சேர்த்து முறுக்கி ஒரு புறத்தைக் கால் பெருவிரல் மோதிரத்தில் பொருத்தி மற்றொரு புறத்தைச் சிலம்பின் கீழ் அணிவர். இதனைப் பாதசாலம் என்றும் கூறுவர். பரியகமும் அரியகமும் ஒன்றென்று சிலர் கூறுவர். சிலப்பதிகாரத்தில் இவை வெவ்வேறு அணிகளாகக் கூறப்பட் டுள்ளன.39 14. பரிவடிம்பு பரிவடிம்பு பழங்காலத் தமிழர் கண்ட கால் அணிகலன்களில் ஒன்று. இது போர் மறவர்கள் குதிரை மீதேறி அதை விரைந்து செலுத்துவதற்கென்று காலில் இடப் பெற்ற ஒரு வெள்ளிக் காலணி யாகும். இதை புறநானூறு கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் என்று கூறுகிறது. இது பழங்காலந் தொட்டு தமிழர்கள் அணிந்து வந்த ஒரு காலணியாகும். 15. பாடகம் பாடகம் சிலம்பின் மேலே அணியப்படும் ஒரு காலணி. இது அகலமாகக் கனமாகச் செய்யப்பட்டிருக்கும். பரியகம் நூபுரம் பாடகம் என்று சிலப்பதிகாரத்தில் இவ்வணி சிறப்பித்துக் கூறப்படு கிறது. 16. புசங்கக் கடகம் பாம்பு வடிவமாகப் பொன்னாற் செய்யப்பட்ட தண்டை புசங்கக் கடகம் என்று கூறப்படும். இது பழங்கால அணியாகத் தெரியவில்லை. சிவபெருமானுக்குகந்த அணியாக எண்ணிப் பிற்காலத்துச் சைவர்கள் இதை அணிந்திருக்கலாம். 17. புனையாரம் புனையாரம் ஒரு அழகிய வெள்ளிக் காலணியாகும். இந்த அணியும் பிற்காலத்தில் எழுந்ததாகவே கருதப்படுகிறது. பழைய தமிழ் இலக்கியங்களில் இந்த அணிகலன் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. 18. தண்டை தண்டை, கட்டியாகவும், புகலாகவும் செய்து அணியப்படும். முற்காலத்தில் இது பொன்னாற் செய்யப்பட்டது. பிற்காலத்தில் வெள்ளியாற் செய்யப்பட்டது. இது வட்டமான வளையம் போன் றிருக்கும். இரு நுனிகளும் சதுரமாகச் செய்யப்பட்டிருக்கும். இது பழங்கால அணி. 19. நூபுரம் நூபுரமும் சிலம்பும் ஒரே வித அணிகலன்கள் என்றும் கூறப்படுகிறது. பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை என்று சிலப் பதிகாரம் நூபுரத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது. பெருங்கதை, நூபுரம் பாடகத்தோடு சேர்த்து அணியும் காலணி என்று கூறுகிறது.41 20. வெள்ளித் தளை வெள்ளியினால் செய்யப்பட்ட ஒரு காலணியாகும். இது சிறு வெள்ளிக் கம்பியினால் பின்னப்பட்ட சவடி போன்ற அணியாகும். இந்த அணி திருமாலுக்கு உகந்தது. இவ்வணி வைணவ சமய நூற்களில் காணப்படுகிறது.42 XII. கால் விரல் அணிகலன்கள் கால் விரல்களில் அணியப்படும் மோதிரம் கால் விரல் அணி எனப்படும். கால் விரல்களில் அணியப்படும் காலாழிகளைப் பெண் களே அணிவர். ஆண்கள் கால் விரல்களில் எவ்வித அணிகலன்களும் அணிவதில்லை. அதோடு கை விரல்களில் அணியும் மோதிரங் களைப் போல் கால் விரல்களில் பொன் அணிகளோ, மணிகள் பதித்த அணிகளோ அணிவதில்லை. பெரும்பாலும் காலணிகள் தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான காலத்திலிருந்தே மகளிரால் அணிந்து வரப்படுகின்றன. பொதுவாக ஆதிகாலத்தில் இருந்தே தமிழர்கள் கால் அணிகலன்களை அணிந்து வந்துள்ளார்கள். அவர்கள் மலைகளில் குறிஞ்சி நிலமாக்களாய் வேட்டுவ வாழ்க்கை நடாத்திய பொழுதே அவர்களிடம் அணிகலன்கள் தோன்றிவிட்டன. அணிகலன்கள் இலை, பூ, காய், கொட்டை, மீன் முதலிய பெயரால் இருப்பதை முன்னர் எடுத்துக்காட்டினோம். இப்பொழுது காலணியிலும் காய், மீன் வாய் போன்ற உருவங்கள் காணப்படுதலினால் அக் கருத்து முற்றிலும் மெய் என்று கொள்ளலாம். 1. கால் மோதிரம் 2. காலாழி 3. தாழ் செறி 4. நல்லணி 5. பாம்பாழி 6. பில்லணை 7. பீலி 8. மகரவாய் மோதிரம் 9. முஞ்சி 10. மெட்டி. XIII. கால் விரல் அணிகளின் விளக்கம் 1. கால் மோதிரம் கால் பெருவிரலில் அணியப்படும் ஒரு வளையமே கால் மோதிரமாகும். இதைப் பெருவிரல் சுற்று என்று கூறுவார்கள். பீலி, காலாழி இன்றிக் கலியாணமா என்பது பழமொழி. பிற்காலத்தில் கால் மோதிரம் வேறு வேறு வடிவந்தாங்கி தமிழ்நாட்டு மகளிர் கால் விரலில் இடம் பெற்றுள்ளது. இன்று வழக்கில் இல்லை. 2. காலாழி காலாழி என்பதும் கால் மோதிரம் என்பதும் ஒன்றே என்று கூறப்படுகிறது. சிலப்பதிகார உரையாசிரியர் மகரவாய் மோதிரம், பீலி, காலாழி முதலியவை கால் விரல் மோதிரம் என்று கூறியுள்ளனர். 3. தாழ் செறி தாழ் செறி ஒரு கால் விரல் அணி. சிலப்பதிகாரத்தில் மரகதத் தாள் செறி என்று கூறப்பட்டிருப்பதால் மரகதம் பதிக்கப் பெற்ற கைவிரல் அணி என்று கூறுவாரும் உண்டு. அதோடு இது கைவிரல் அணிகளோடு சேர்த்துக் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. 4. நல்லணி நல்லணி ஒரு கால் விரல் அணி. சிலப்பதிகாரம் நலத்தகு மெல்விரல் நல்லணி செறி என்று கூறுவது மூலம் இது கால் விரல் அணி என்று நன்கு தெரிகிறது. உரையாசிரியர்களும் இது கால் விரல் அணி என்றே கருதுகின்றனர். 5. பாம்பாழி பாம்பு வட்டமாகத் தன் வாலைச் சுற்றி வைத்துக் கொண் டிருப்பதைப் போல் செய்யப்பட்ட ஒரு கால் விரல் அணியாகும். இது வெள்ளியால் செய்யப்பட்டது. தலை உடலோடு ஒட்டி யிருக்கும். 6. பில்லணை பில்லணை இணைந்த இரு வட்ட வடிவத்தின் மீது மற்றொரு இணைந்த இரு வட்ட வடிவத்தை வைத்தாற் போன்று ஆங்கில எண்ணாகிய எட்டைப் போன்று இருக்கும். இந்த வட்டங்கள் வரிசையாகக் கொடிகள் சுற்றி வைக்கப்பட்டது போல் இருக்கும். நடுவில் சொக்கட்டான் கட்டம் போல் ஒரு சதுரம் இருக்கும். இந்த உருவமும் வழக்கில் இல்லை. 7. பீலி பீலி, கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப்படும் ஒரு அணிகலனாகும். இதன் அடியில் எல்லாக் கால் விரல் அணிகளுக்கும் இருப்பது போல், விரலைச் சுற்றும்படியாக ஒரு செம்பு அல்லது வெள்ளி வளையம் பொருத்தப்பட்டிருக்கும். வளையத்தின் மீது ஒரு தகடு வைக்கப்பட்டு அதன் மேல் பழத் தட்டில் பழங்கள் வைத் திருப்பது போல் அணியணியாய் உருண்டை முத்துக்கள் வைக்கப் பட்டிருக்கும். பீலியில் அடுக்குப் பீலி, வெங்காய பீலி என்று இரு வகையுண்டு. தாலிக்குப் பீலி துணை என்பது பழங் காலப் பழமொழி. மகரவாய் மோதிரம், மகர மீனின் திறந்த வாய் போல் இருக்கும். இது இன்று வெள்ளியால் செய்யப்படுகிறது. இது நெளி மோதிரம் போன்றதே யாகும். மகரவாய்க் கால் விரல் அணி, கால் விரலில் அணியப்படும் அணிகலனாகும். இன்று இந்த மகரவாய்க் கால் விரல் அணியைப் பார்ப்பது அரிது. பெரும்பாலும் கால் விரல் அணிகள் மறைந்து வருகின்றன. 9. முஞ்சி முஞ்சி என்பதைப் பெண்கள் மிஞ்சி என்று கூறுவர். இவ்வணி மேலே இரு வட்டமான தகடுகள் பொருத்தி அதன் மீது நடுவே டயமண்ட் வடிவமுள்ள ஒரு வெள்ளித் தகடு பொருத்தப் பட்டிருக்கும். சுற்றிலும் மிளகு போன்ற உருண்டை வடிவமான காய்களும் இடை இடையே கடுகு போன்ற சிறு மணிகளும் வரிசையாக இடம் பெற்றிருக்கும். 10. மெட்டி இது ஆதியில் வெள்ளியால் செய்யப்பட்டது. பின் கலப்பு உலோகத்தாலும் செய்யப்பட்டது. இது ஒரு கனத்த கம்பியை வளையச் செய்யப்பட்டது போல் இருக்கும். இது விரல்களுக்கு இரண்டு மூன்று இடம் பெற்றிருக்கும். நடக்கும் பொழுது, இவ் வணிகள் ஒன்றோடொன்று மோதி, கணீர் கணீர் என்று ஒலிக்கும். இந்த ஒலி சில சமயப் பக்தர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் மெட்டி குடும்பப் பெண்கள் அணியக் கூடாது என்று கூறி வந்தனர். ஆனால் இந்த அணிகளைப் பரத்தையர்கள் (தாசிகள்) விருப்பமுடன் அணிந்து வந்தனர். இந்தக் கால் விரல் அணியும் இன்று வழக்கில் இல்லை. காண்பதற்கே மிக அரிதாய்ப் போய்விட்டது. குறிப்புகள் 1. (அ) மணிமேகலை - 4 : 4 தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் (ஆ) அகம். 209 : 12 முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி 2. நற்றிணை 48 ; 6 கிடினென இடிக்கும் கோற்றொடி மறவர் 3. சீவகசிந்தாமணி 1370:4 சூட கத்திரள் தோளணி வாட்டினாள் 4. சிலப்பதிகாரம் 89 : 90 காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து 5. பரிபாடல் 7 : 46 - 48 கைவளை ஆழி தொய்யகம் புனைதுகில் மேகலை காஞ்சி வாகு வலயம் எல்லாம் கவரும் இயல்பிற்றாய் 6. சீவகசிந்தாமணி 296 : 1 7. பெருங் 2 : 19. 117 8. பெருங் 2 : 5. 142 9. பரிபாடல் 2 : 30 10. பெருங் 2 : 19 . 110 - 111 வீங்குபு செறிந்த வெங்கண் வனமலை பூங்கொடிப் பொற்கலம் போழ்ந்து வடுப்பொறிப்பு 11. பெருங்கதை 11 : 40. 14 - 15 12. பெருங்கதை 2 : 6 . 142 பசும்பொற் கச்சை பத்தியிற் குயின்ற 13. Sacred Chank of India - James Hornel FLq 1914 (Madras) PP. 3-4 14. நாலா. திவ். 109 : 2 15. முல்லைப் பாட்டு 76 ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி. 16. புறம் 60 : 5 சில்வளை விறலி 17. நற்றிணை 77 : 9 வானரம் பொருத கோணேர் எல்வளை 18. சிலப்பதிகாரம். 91- 94 மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை பரியம் வாள்வளை பவளப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து 19. பெருங். 3 : 6 - 91 சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிர் 20. கலி. 35 : 6 - 7 கையதை ஆலவன் கண்பெற அடங்கச் சுற்றிய பலவுறு கண்ணுள் சிலகோல அவர்தொடவு 21. கலி. 43 : 9 - 10 தகையவர் கைச்செறித்த தாள்போலக் காந்தள் முகையின் மேல் தும்பியிருக்கும் பகையெனின் 22. சீவகசிந்தாமணி 674 : 3 23. பரி. 11 : 101 - 102 பவளவளை செறிந்தாட் கண்டணிந்தாள் பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு 24. அகம் 16 : 5 25. பெருங் 219 : 135 - 137 26. நெடுநல்வாடை 141 : 42 பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து 27. சீ. சிந்தாமணி 2569 : 2 28. சிலப். 6 : 66 29. கலி. 85 : 16 30. நெடுநல் 143 - 144 வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச் செவ்விரற் கொளீஇய செங்கேள் விளக்கத்து 31. நற்றிணை 188 : 2 - 3 மெலவிரல் மோசை போலக் காந்தள் வள்ளிதழ் தோயும் 32. சீவகசிந். 1040 : 9 தாம்பான் மணிநாம மோதிரத் தொட்டையென்ன 33. (அ) பரிபாடல் 10 : 10 - 11 தாளித நொய்ந்நூற் சரணத்தார் மேகலை ஏணிப் படுகால் இறுகத் தாளிட (ஆ) சிலப் 4 : 29 - 30 செந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல் அந்துகின் மேகலை யசைந்தன வருந்த 34. ஐங்குறு நூறு 316 : 1 பொன்செய் பாண்டிற் பொலங்கலம் நந்த 35. பரிபாடல் 7 : 46 - 47 கைவளை ஆழி தொய்யகம் புனைதுகில் மேகலை காஞ்சி வாகுவலயம் 36 (அ) சீவக சிந். 2445 : 1 இடைச்செறி குறங்கு கிம்புரி இளக மின்னும் (ஆ) சீவக. சிந். 2695 : 12 கடித்துக் கிடந்து கவின் வளரும் காய் பொன் மகரம் 37. புறநானூறு முடிபுனைந்த பசும் பொன்னின் அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை 38. சீவக சிந். 258 : 7 : 8 39. சிலப். 6 : 84 - 85 40. சிலப். 6 : 84 41. பெருங் 3 : 2. 232 நூபுரம் கலந்த பாடகக் கம்பலும் 42. நாலா. திவ். 25 : 3 9. சிற்றணிகலன்கள் அரப்பாவும் ஆதித்த நல்லூரும் அரப்பாவும் ஆதித்த நல்லூரும் தமிழர் நாகரிகத்திற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும். அரப்பாவைப் போல் ஆதித்தநல்லூரிலும் அகழ்ந்து கண்ட பொம்மைகளின் மீது, நமது பழங்கால அணிகலன் களின் உருவங்கள் காணப்படுகின்றன. அங்கு அணிகலன்களும் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. முன் அத்தியாயங்களில் அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட அணிகலன்களை விளக்கிக் காட்டியுள்ளோம். அரப்பாவில் கண்ட அணிகலன்கள் ஆதித்தநல்லூர் அணிகலன் களை ஒத்திருக்கின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். வேதக்கால நாகரிகம் வேதக்கால நாகரிகத்திற்கு அரப்பா - ஆதித்த நல்லூர் நாகரிகங்களுக்கும் அணுவளவும் சம்பந்தமில்லை. ஆனால் கலைக் களஞ்சியத்தில் வேதகால நாகரிகம் (கி.மு. 1500 - கி.மு. 500 வரை) என்ற தலைப்பில் ஆதித்த நல்லூர் நாகரிகத்திற்குப் பிறகு கி.மு. 3,000 முதல் கி.மு. 1500 வரை அதாவது வேதகாலம் வரை இருந்த அணிகளைப் பற்றி அறிய எவ்விதச் சான்றுகளும் கிட்டவில்லை. அக்கால அணிகளை வேத இலக்கியங்களில் இருந்துதான் ஒருவாறு ஊகிக்க முடியும். அக்காலச் சிற்பங்களோ அணிகளோ அகப்பட வில்லை. அக்காலத்துப் பெண்கள் தலைக்கு கும்பா அல்லது குரிரா என்ற அணியும் காதுகளில் வட்டமான கம்மலையும் கால், கைகளில் காப்புகளையும் விரல்களில் மோதிரங்களையும் தோள்களில் கடகங்களையும் அணிந்தனர். ஆனால் இவைகள் எல்லாவற்றையும் விடக் கழுத்தில் அணியும் காசுமாலை போன்ற அணியையும் மதித்தார்கள். மிக முக்கியமானதாகவும் கருதினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.1 தமிழக ஆடை அணிகளைப் பற்றி எழுத முன் வந்த அறிஞர் வேதக்கால நாகரிகத்தைப் பற்றி எழுத என்ன அவசியம் எழுந்தது என்று நமக்குத் தெரியவில்லை. வேதக் கால ஆரியர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்குள் புகுந்தவர்கள் என்பதை நண்பர் மறந்துவிட்டார் போலும். மேலும் அவர்கள் வீடுகள் கோட்டைகள் கட்டவும் எழுதவும் அணிகலன்கள் சமைக்கவும் அறியார்கள் என்பதை நண்பருக்கு நினைப்பூட்டிக் கொள்ளு கிறோம். அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் எழுந்த பண்பாட்டி னின்றும் நாகரிகத்தினின்றும் படியெடுத்துக் கொண்டவை களைத் தான் வேத நாகரிகம், ஆரிய நாகரிகம் என்று கூறுகின்றனர், என்பதையும் நினைவூட்டிக் கொள்கிறோம். திராவிட நாகரிகம் திராவிட மக்களின் அணிகலன்களின் வரலாற்றில் கி.மு. 500 முதல் கி.மு. 200 இருள் அடைந்த காலமாக இருக்கிறது என்று அறிஞர்கள் கவலையுறுகின்றார்கள். மிக வளர்ச்சி அடைந்த அரப்பாவின் அரும் பெரும் பண்பாட்டை அழித்த ஆரியர்கள் மீண்டும் மீண்டும் துளிர்த்த திராவிட நாகரிகத்தை அழித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். ஆரிய நாகரிகத்தை எதிர்த்தும் திராவிட நாகரிகத்தைத் தழுவியும் புத்தர் பெருமான் ஒரு பெரும் கிளர்ச்சியை எழுப்பி வைத்தார். அதன் பின்னரே திராவிட நாகரிகம் ஓரளவு பாதுகாக்கப்பட்டது. கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை அரும்பிய அமராவதி நாகரிகத்தில் திராவிடக் கட்டிடக் கலை, திராவிட ஓவியம், திராவிட இசைக்கருவிகள், திராவிட சிற்பம், திராவிட அணிகலன்கள் முதலியவைகளை நன்கு காண முடிகிறது. அமராவதி சிற்பங்களினின்றே தமிழர்களின் யாழ் உருவத்தை, முதன் முதலாக அறிஞர் ஆனந்தக் குமாரசுவாமி கண்டார்.2 அவரது கட்டுரைகளி னின்றே விபுலானந்த அடிகள் யாழ் நூலை எழுதித் தமிழ் உலகத்திற்கு ஒரு பெரும் நன்கொடையாக உவந்தளித்தார். அமராவதி நாகரிகத்தில் காணப்படும் திராவிட அணிகலன்கள் தமிழ் இலக்கியங்களிலும் தமிழகச் சிற்பங்களிலும் இன்றும் காணக் கிடைக்கின்றன. அமராவதி நாகரிகம் இடைச்சங்கக் காலத்தின் இறுதிக் கட்டமாக இருக்கலாம், என்று சிலர் கூறுகிறார்கள். அமராவதிக் காலத்திற்குப் பின்னர் கூட அதாவது கி.பி. 400ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கி.பி. 700 வரை நம் அணிகளின் வரலாற்றை அறிய முடியவில்லை, என்று அறிஞர்கள் அங்கலாய்க்கிறார்கள். ஆங்காங்கே ஒரு சில சிற்பங்களில் சில அணிகலன்கள் காணக்கிடக்கின்றன. கி.பி. 700ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1600 வரை தமிழக சிற்பங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள அணிகலன்களை முற்கால அணிகலன்கள் என்று ஒருவாறு முந்திய அத்தியாயங்களில் விளக்கிக் கூறிவிட்டோம். இனி 17ஆம் நூற்றாண்டினின்று இன்று வரை எழுந்துள்ள அணிகலன்களை ஒருவாறு ஆராய்வோம். 17-ஆம் நூற்றாண்டில் தான் கிட்டத்தட்ட விசய நகர சாம்ராச்சியம் வீழ்ந்தது. அதன் வீழ்ச்சி திராவிட நாகரிகத்தின் வீழ்ச்சி என்று கூடக் கூறலாம். அப்பால் தமிழகத்தில் அரும்பிய முசுலிம் ஆட்சியும் அதன் பின்னர் அரும்பி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நிலவிய திராவிட நாகரிகத்தை உயிரற்றதாய் வீழ்த்திய ஆங்கில ஆட்சியின் ஆதிக்கமும் நிலவியது. கி.பி. 1600க்குப் பின் எழுந்த தமிழக அணிகலன்களைப் பிற்கால அணிகலன்களாகக் கொண்டு இங்கு ஆராய்வோம். அணிகளின் பிரிவுகள் அணிகலன்கள் அவனி முழுவதும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் உற்பத்தி நாட்டுக்கு நாடு வேற்றுமையுள்ளதாக இருக்கின்றது. அது அந்நாட்டு மக்களின் அறிவு, அந்நாட்டில் கிடைக்கும் பண்டங்கள், அந்நாட்டின் தட்ப வெப்ப நிலைகளையும் பொறுத்ததாய் அமைந்திருக்கின்றது. இவைகளையெல்லாம் வைத்துச் சிலர் அணிகலன்களைப் பேரணிகலன்கள் என்றும் சிற்றணிகலன்கள் என்றும் பிரித்திருக் கின்றார்கள். நமது தமிழகம் சம்பந்தப்பட்ட மட்டில் பேரணிகலன்க ளெல்லாம் பெண்களின் அணிகலன்களாயும் சிற்றணிகலன்கள் எல்லாம் பெரிதும் ஆண்களின் அணிகலன்களாயும் சிறு குழந்தை களின் அணிகலன்களாயும் காணப்படுகின்றன. நாம் இங்கு இதன் முன்னர் பெண்களின் பேரணிகலன் களாகிய விலையுயர்ந்த நகைகளைப் பற்றி ஆராய்ந்துள்ளோம். இனி இங்கு ஆண்களின் அணிகலன்களையும் சிறுவர்களின் அணிகலன் களையும் பற்றி ஆராய்வோம். மேலும் கால வெள்ளத்தால் இந்த இருபதாம் நூற்றாண்டில் பேரணிகலன்களிற் பல மறைந்து சிற்றணிகலன்கள் போல் ஆகிவிட்டன. சிற்றணிகலன்கள் பல இருந்த இடம் தெரியாது மறைந்து போய்விட்டன. அணிகலன்களின் மாற்றம் நமது நாட்டின் பேரணிகலன்களில் பெரிய மாற்றம் எழுந் துள்ளது. அதற்குக் காரணம் தமிழகத்தில் ஐரோப்பிய நாகரிகத்தின் மோதலும் மக்களின் பொருளாதார நிலையுமேயாகும். இதனால் இன்று பேரணிகலன்கள் மறைந்து வருகின்றன. ஐம்பது ஆண்டு களுக்கு முன் பெண்கள் காதுகளில் பொற்றகடுகளால் செய்யப் பெற்று உள்ளே மெழுகு அடைக்கப் பெற்ற பாம்படம், தண்டட்டி, இட்டடிக்கை, முடிச்சு போன்ற பெரிய காதணிகள் பலவற்றைக் காதுகளில் மாட்டி வந்தனர். அவை காதுகளில் பழக்குலை சாத்தினாற் போல் தொங்கிக் கொண்டிருந்தன. அதனால் பெண்கள் ஓடவோ விரைவாக நடக்கவோ அஞ்சிக் கிடந்தனர். ஓடினால் காதில் கிடக்கும் அணிகலன்கள் காதை அறுத்துக் கொண்டு கீழே வீழ்ந்து விடும் என்ற பயம் இருந்தது. அதே போன்று கழுத்தில் மெழுகு அல்லது செம்புக் கட்டை வைத்துப் பொன்னால் செய்த சுத்து மணி, அட்டிகை, காப்பு, கொலுசு, மோதிரம், முருகு, விசிறிமுருகு முதலியவைகளை அணிந்து வந்தனர். கழுத்தில் மெழுகு அடைக்காத உட்கட்டு (ஒக்கட்டு) அட்டிகை, காரை, நெல்லிக்காய் மாலை, மிளகு மாலை, கொத்துமல்லி மாலை போன்ற நகைகளை எடை குறைவாகப் புகல் நகைகளாகச் செய்து அணிந்து வந்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இனத்தவர்கள் பலரும் காதில் ஒரு பாம்படமும் ஒரு சிறு புகடி, போலியாகச் செய்த விசிறிமுருகு போன்ற நகைகளையும் கழுத்தில் சுத்து மணியும் தவிர கைகளில் காப்பு, கொலுசு, கடகம், சரிகை முதலியவைகளையும் காலில் தண்டை, காற் கொலுசு, காற் சரிகை, பாதசரம் போன்றவைகளையும் விரலில் மிஞ்சி, பீலி, பில்லணை, மெட்டி முதலியவைகளையும் வெள்ளியி னால் செய்து அணிந்து வந்தனர். சிறு பிள்ளைகள் ஈயத்தினால் செய்த குணுக்குகளை நீளமாக வடிக்கப் பெற்ற காதுகளில் அணிந்து வந்தனர். கைகளில் மோதிரங்கள் கூட வெள்ளி, செம்பு முதலிய விலை குறைந்த தாதுப் பொருட்களில் செய்து அணிந்து வந்தனர். இது, நமது நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலை தூக்கிய ஆங்கில ஆட்சியில் அரும்பிய அவல நிலையாகும். பெண்களும் - நாகரிகமும் தமிழகம் சம்பந்தப்பட்ட மட்டில் ஆண்கள் எளிதில் தங்களை மாற்றிக் கொள்வார்கள். பழைய பண்பாடு, நாகரிகம், கலை, உடை, அணிகலன்கள் முதலியவைகளை எளிதில் விட்டு விட்டு புதியனவற்றை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். இதில் நன்மையும் எழலாம் தீமையும் எழலாம். ஆனால் பொதுவாக அந்நிய நாகரிகத்தால் தீமை தான் விளையும் என்று நமது அனுபவத்தில் கண்டுள்ளோம். ஐரோப்பிய நாகரிகத்தின் விளைவால் ஆண்கள் தங்கள் முன்னோர்கள் அணிந்து வந்த அணிகலன்கள் அனைத்தை யும் துறந்து விட்டார்கள். ஒரு சில கிராமங்களில் இன்னும் தங்களை உயர்ந்த இனத்தவர்கள் என்று எண்ணிக் கொண்டு மேனாட்டுப் படிப்பை வெறுத்து வரும் சில சமயப் பற்றுள்ள குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் காதில் கடுக்கனும் கையில் காப்பும் நெற்றியில் திருநீறும் கழுத்தில் கவுடும் அணிந்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் நாகரிகமற்றவர்களாக மதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இன்று பெண்கள் கிடைப்பது கூட அரிதாகி விட்டது. இந்நிலையில் ஆண்கள் அடியோடு பழைய அணிகலன்களைத் துறந்து ஆங்கிலம் படித்து, மேலே சட்டையும் மெய்ப்பையும் கையில் கடிகாரமும் விரலில் ஒரு மோதிரமும் அணிந்து வருவதே நாகரிகக் கோலமாக இருந்து வருகிறது. அரையில் காற்சட்டை போடுவது உயர்ந்த நாகரிகத்தின் சீரிய சின்னமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த மாற்றம் பெண்களிடம் அதிகம் எழவே இல்லை. தமிழகம் சம்பந்தப்பட்ட மட்டில் தமிழ் மக்கள் இன்னும் உடம்பில் கவுண் என்னும் தொடைவரை தொங்கும் ஆடையை அணிய விரும்பவில்லை. தமிழ் நாட்டில் காற்சட்டை அணியும் ஆண்கள்கூட தங்கள் மனைவியோ, மகளோ அந்த அரை நிர்வாண ஆடையணிய விடுவதே இல்லை. ஆனால் பெண்கள் இன்று காதுகள் வடிப்பதை நிறுத்திவிட்டுக் காதில் ஒரு சிறு தோடு அல்லது குச்சு மட்டும் அணிந்து வருகிறார்கள். இன்று தொங்கட்டம் சிமிக்கி போடுவதைக் கூட விட்டு விட்டார்கள். தலையில் அணிகள் அணிவதே இல்லை. இன்றைய தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு முற்காலத் தலையணிகளின் பெயர்கள்கூட தெரியாது. காலணிகள், கால்விரல் அணிகள் பலவும் காடேறி விட்டன. கையில் ஒரு சில மெல்லிய வளைகள், கைவிரலில் ஒன்று அல்லது இரண்டு மோதிரம் கழுத்தில் ஒரு தாலிச் சங்கிலி அல்லது இரண்டு அல்லது மூன்று வடத்தில் ஒரு பொற்சங்கிலி மட்டுந்தான் இன்றைய தமிழ் நாட்டுப் பெண்கள் அணிகளாக இருக்கின்றன. இடைக் காலத்தில் தமிழ்ப் பெண்கள் கழுத்தில் அணிந்து வந்த நெக்லே என்ற கழுத்தணி கூட இப்பொழுது காணப்படவில்லை. மூக்கணி தமிழ் நாட்டில் முற்காலத்தில் மூக்கைத் துளைத்து அதில் நகைகள் அணியும் வழக்கம் இருந்ததில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். நாகரிகக் குறைவான ஆப்பிரிக்க மக்கள் தான் மூக்கின் இரு பக்கங்களில் அல்லது மூக்கின் நடுத் தண்டிலும் துவார மிட்டு எலும்புத் துண்டையோ அல்லது எதாவது விலங்குகளின் நகங்களையோ அல்லது இறகுகள், குச்சுகள் முதலியவற்றையோ அணிவார்கள். தமிழ்நாட்டு மகளிர்கள் முற்காலத்தில் மூக்கணிகள் அணிவது வழக்கமில்லை. முற்கால ஓவியங்களிலோ படிமங் களிலோ சிலைகளிலோ மூக்கணிகள் காணப்பட வில்லை என்று எடுத்துக் காட்டுகிறார்கள். ஆனாலும், பிற்காலத்தில் தமிழர்கள் மூக்கணி அணிந்து வந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை யாகும். அவர்கள் மூக்கின் நடுத் தண்டில் துவாரமிட்டு அதில் அணியும் அணிகலனுக்கு புல்லாக்கு என்று பெயர். இது சிறு பதக்கம் போல் மூக்கின் நடுவில் - மேல் உதட்டின்மீது தொங்கும். இது அழகாக இருக்கிறது என்று அன்றைய மகளிர் கூறிவந்தனர். சமீபத்தில் மேனாட்டில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணியைச் சந்தித்தேன்; அவர் புல்லாக்கு அணிந்திருந்தார். ஆனால் மூக்கின் நடுத் தண்டில் துவாரம் இடாது மூக்குத் தண்டை இறுகப் பிடித்துக் கொள்ளுமாறு செய்த புல்லாக்காக இருந்தது. இந்த நகை எல்லாப் பெண்களுக்கும் அழகாக இருக்கும் என்று என்னால் கூறமுடியாது. ஆனால் நான் பார்த்த சில பெண்மணி களுக்கு அழகு தருவதாகவே அமைந்திருந்தது என்று என்னால் தைரியமாக கூறமுடியும். மூக்கின் இடது பக்கம் துவாரமிட்டு அதில் ஒரு சிறு தங்கக் குச்சோ அல்லது ஒரு கல் பதித்த குச்சோ மூன்று கல் பதித்த குச்சோ பண்டு அணிவார்கள். இது மூக்குத்தி, முக்கட்டு, நத்து, பேசரி என்றெல்லாம் கூறப்படும். சிலர் இடது நாசிப் பக்கம் அணிவதும் உண்டு. இந்த அணிகள் பெரும்பாலும் தமிழ் நாட்டிலுள்ள பார்ப்ப னர்கள், வேளாளர் போன்ற இனத்தவர்களே அணிந்து வந்தனர். பார்ப்பனர் அல்லாத தமிழ் நாட்டிலுள்ள சில இனத்தவர்கள் பேசரி என்ற ஒரு வகை நத்தை சிறப்பாக அணிந்து வந்தனர். இதுவும் பொன்னால் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். இந்த நகைகள் வட இந்தியாவிலும் உண்டு. ஆனால் அவர்கள் மூக்கில் ஒரு பெரிய வளையம் போன்ற நகையையும் அணிகிறார்கள். அது அத்துணை அழகுடையதாகக் காணப்படவில்லை. தமிழ்நாட்டு மூக்கணிகள் அழகுடையனவாயும் சிறந்த வேலைப்பாடுகளை யுடையனவாயும் விளங்கின. இந்த மூக்கணிகளின் சிறப்பைப் பற்றியும் வேலைத் திறனைப் பற்றியும் வியந்து மேனாட்டறிஞர்கள் கூடப் பாராட்டியுள்ளார்கள். இந்த மூக்கணி ஒரு சிற்றணிகலனாக மதிக்கப்படும். முற்காலத் தில் தமிழர்கள் அவ்வணிகலனை அணியவில்லை என்று அறிஞர் சிலர் அழுத்தமாகக் கூறுகிறார்கள். முற்காலத் தமிழ் இலக்கியங் களிலும் சிற்பங்களிலும் அயல்நாடுகளிலிருந்து வந்த மூக்கணிகள் இல்லை. மொகஞ்சதாரோ, அரப்பா முதலிய நாகரிகங்களிலும் திராவிடர்களின் முன்னோர்கள் மூக்கணிகலன்களை அணிந்து வந்திருக்கின்றார்கள் என்று கூறுவதற்கில்லை. மூக்கணிகள் முசுலிம்கள் மூலம் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றார்கள். பண்டைய பேரணிகலன்களையெல்லாம் அகற்றிவிட்டு ஒரு சில சிற்றணிகளை அணிய முற்பட்ட தமிழர்கள் பிற்காலத்தில் இந்தப் புதிய அந்நிய நாகரிகத்தில் வந்த மூக்கணிகளை எப்படி அணிய முற்பட்டார்கள் என்பது நமக்குப் பேராச்சரியமாக இருக்கிறது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் அரைப் பகுதியைக் கடந்து 10 ஆண்டுகள் முடிந்ததும் தமிழக மகளிர் படிப் படியாக மூக்குத்தி, நத்து பேசரி, புல்லாக்குப் போன்ற மூக்கணிகள் அனைத்தையும் வழக்கினின்று ஒழித்துக்கட்டி விட்டார்கள். இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பணக்காரர் வீட்டில் திருமணப் பேச்சு ஆரம்பித்தால் வைரத்தோடு வைரமூக்குத்தி மாணிக்கம் அல்லது நீலக்கற்கள் பதித்த பேசரிகள் என்ற பேச்சே கேட்கும். இன்று அப்பேச்சு அடியோடு மறைந்து விட்டது.4 தமிழகத்தில் முதன்முதலாகப் பெண்கள் இருபதாம் நூற் றாண்டின் தொடக்கத்தில் பேரணிகலன்கள் அணிவதை அகற்றி விட்டனர். பெரும்பாலும் சிற்றணிகலன்களையே இந்த நூற்றாண்டின் நடுவில் ஆரம்பித்தனர். ஆண்கள் இந்த நூற்றாண்டின் முதற் கால் பகுதியிலே தங்களின் அணிகலன்களின் பெரும் பகுதியை அகற்றி விட்டனர். இந்த நூற்றாண்டின் மத்தியிலிருந்து குழந்தைகளின் அணிகலன்களும் கூட மறையத் தொடங்கிவிட்டன. நமது தமிழகத்தில் ஆண்களும் பெண்களும் ஆங்கில நாகரிக மயக்கில் நம் நாட்டு அணிகலன்களை விலக்க முற்பட்டுள்ளனரே என்று தமிழக நாகரிகத்தைப் பாதுகாக்க விரும்பும் நாட்டுப் பற்றுள்ள அறிஞர்கள் வருந்துகின்றனர். இந்நிலையில் நமது இந்திய அரசாங்கம் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வந்து மக்கள் பொன் அணிகள் அணிவதற்குத் துணியும் வழியில்லாமல் செய்து விட்டது. இதன் பலனாக எண்ணற்ற பொற் கொல்லர்கள் வேலை யின்றித் தவித்து வருகின்றார்கள். நல்ல கைவண்ணம் வாய்ந்த பொற்கொல்லர்கள் இத்தொழிலை மறந்து வேறு தொழிலோ அல்லது வேறு வணிகமோ செய்து வயிற்றைக் கழுவி வருகின்றனர். இத்தொழில் இன்று படிப்படியாய் மறைந்து வருகிறது. நமது அரசாங்கம், பெண்கள், பொன் அணிகலன்கள் அணிவதை விரும்பவில்லை. பெண்கள் பொன் அணிகலன்கள் அணியும் வழக் கத்தைக் கைவிட்டு விட்டால் ஏராளமாகப் பொன் அரசாங்கத் திற்குக் கிடைக்கும். அதைக் கொண்டு பிற நாட்டினரிடம் தான் பெற்றிருக்கும் கோடானு கோடி ரூபாய் மதிப்புள்ள கடனைத் தீர்க்கலாம் என்று பகற்கனவு கண்டு ஏமாந்து நிற்கிறது. இதோடு மேனாட்டுப் பெண்களைப் போல் நமது பெண்களும் அணி கலன்கள் அணியாதிருப்பதே நாகரிகம் என்றும் நமக்குப் போதித்து வருகிறது. இதனால் நமது அணிகலன்கள் அனைத்தும் மறைந்து வருகின்றன. எனவே வசதி வாய்ந்தவர்கள் நமது அணிகலன்கள் அனைத்தையும் இயன்ற அளவில் சேகரிப்பதோடு எல்லா அணி கலன்களும் நமது தொல்பொருள் காட்சிசாலையில் இடம்பெறச் செய்ய வேண்டியதும் இன்றியமையாத நற்பணியாகும். என்றாவது ஒரு நாள் இந்த அணிகலன்கள் மீண்டும் தலை தூக்கலாம். குழந்தைகளின் அணிகலன்கள் தொன்று தொட்டு தமிழகத்தில் குழந்தைகளுக்கு அவர்களின் அன்னையர்கள் ஆர்வமோடு அணிசெய்து அகமகிழ்ந்து அணி கலன்கள் பூட்டி வருகின்றனர். நாகரிகம் பெற்று அணிகலன்களை விரும்பாத பெண்களும் தம் குழந்தைக்கு அணிகலன்கள் செய்வித்து அணிவித்து அழகு பார்த்து அகமகிழ்கின்றனர். குழந்தைக்கு காது குத்துதலை ஒரு விழாவாக நடத்துகின்றனர். இன்றும் ஒரு வீட்டில் குழந்தை பிறந்து விட்டால் அதன் உற்றாரும் உறவினரும் கைவிரலில் மோதிரங்கள், கழுத்தில், சங்கிலி, கையில் காப்பு, இடுப்பில் பொற்கொடி, பொற்சதங்கை செய்து போடுவது வழக்கில் இருந்து வருகின்றது. இந்த நூற்றாண்டின் அரைப்பகுதிக்கு அப்பால் தமிழர்கள் வீட்டில் ஆண்பிள்ளைகளுக்குக் காது குத்துவதை நிறுத்தி விட்டார்கள். ஒன்றிரண்டு பேர்கள் பெண் குழந்தைகளுக்குக் காது குத்துவதை நிறுத்தினாலும் திருமணச் சமயத்தில் காதைக் குத்திக் காதணியை அணிந்து கொள்கின்றார்கள். நான் அறிந்த மட்டில் எனக்குத் தமிழ் கற்க ஆர்வமூட்டிய தனித் தமிழ்ப் புலவர் உயர்திரு சீர்வைகுண்டம் வட்டத்திலுள்ள கூட்டுடன் காடு சங்கரசுப்புபிள்ளை அவர்கள் தம் பெண் மக்களுக்குக் காது குத்தவே இல்லை. அவர்களது அருந்தவப் புதல்வி திருமணம் ஆன பின்னரும் காது குத்தவேயில்லை. இன்று இந்த அம்மையாருக்கு சுமார் 60 வயது இருக்கலாம். காது குத்தாமலே பெரும்பாலான காலத்தைக் கழித்து விட்டனர். நிற்கத் தமிழர்கள் சங்கக்காலம் முதல் தங்கள் மக்களுக்குப் பொன் அணிகளைப் பூட்டிக் கண் குளிரக் கண்டு களிப்புற்று வந்தனர். அதற்குத் தமிழ் இலக்கியங்கள் சான்றுகள் தருகின்றன. காவிரிப் பூம்பட்டினத்தில், நல்ல முருகனுக்கு விழா நடந்தது. அதைக் கண்டுகளிக்கும் பொருட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏராளமாகக் குழுமி நின்றனர். சின்னஞ் சிறு குழந்தை களின் கழுத்தில் அணிந்திருந்த ஐம்படைத்தாலி என்னும் அணி கலனை அவர்கள் வாயினின்று சிந்தும் உமிழ்நீர் நனைத்தது. இதனைச் சீத்தலைச் சாத்தனார் என்னும் பெரும்புலவர் மணிமேகலை என்னும் காப்பியத்தில் அழகுற எடுத்துக் காட்டியுள்ளார்.5 தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் தன் இளம் பிராயத்தில் ஏறு போன்று போர்க்களம் புகுந்தான். அவன் கழுத்தில் ஐம்படைத்தாலி இருந்தது. அது புறப் பாட்டில் தாலி களைந்தன்றும் இலனே என்று எடுத்துக் கூறப்பட்டுள்ளது6 ஆராயத்தக்கது. முற்காலத்தில் புலிப்பல் தாலி என்னும் நகையும் பூண்டி ருந்தனர். இன்று குழந்தைகளுக்குப் புலி நகத்தைப் பொற்றகட்டில் பொதிந்து சங்கிலியில் கோத்து அணிகின்றனர், மகளிரும் அணி கின்றனர்.7 மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி என்று கூறப்படுகிறது.8 இன்னும் பல நூற்களில் புலிப்பல், புலி நகம் போன்ற அணிகலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சதங்கை போன்ற கால் அணிகளைச் சிறுவர்கள் அணிந்து வந்ததாகத் தெரிகிறது. நல்லிசைப் புலவராகிய உருத்திரங் கண்ண னார் பட்டினப்பாலையில் பொற்கால் புதல்வர் என்று விளக்கிக் கூறுகிறார்.9 பொதுவாகக் குழந்தைகளுக்குத் தலையில் சிறு சுட்டியும் காதில் சிறு குண்டலமும் கழுத்தில் ஐம்படைத் தாலியும் கையில் காப்பு, விரலில் மோதிரம் போன்ற அணிகலன்களும் இடுப்பில் பொன்ஞானும் அரைச் சதங்கையும் காலில் தண்டை சதங்கை போன்ற அணிகளும் அணிவிப்பார்கள். பெண் குழந்தையானால் அரையில் அரை மூடி என்னும் பொன் அணியும் அணிவிப்பார்கள். காப்பைப் போல் குழந்தைகளுக்கு ஐம்படைத் தாலி பாதுகாப்பிற்காக எழுந்த அணிகலனாகும். ஐம்படைத் தாலி காத்தற் கடவுளாகிய திருமாலின் சங்கு, சக்கரம், வில், வாள், கதை இன்னோ ரன்ன ஐந்து படைக் கலன்களையும் சிறிய வடிவில் செய்து கோத்துக் கழுத்தில் அணியப்படும் ஒரு பழங்கால அணி. இது குழந்தைகளுக்கு நோய் வராதிருப்பதற்காக கட்டப்பட்டது. ஆண்கள் ஆதி காலத்தில் பெண்களைப் போல் பேரணிகளை அதிகமாக அணிவதில்லை. காதில் கடுக்கன் அல்லது குண்டலம் கடுக்கன் போன்ற ஏதாவது ஒரு அணிகலனையும் கழுத்தில் ஒன்றிரண்டு மாலைகளையும் கையில் காப்பு, கொலுசு, வீரச் சங்கிலி, கை விரல்களில் மோதிரம், புயத்தில் வாகுவலயம் காலில் தண்டை, வீரச் சங்கிலி போன்ற ஒன்றிரண்டு அணிகலன்களையும் அணிந்து வந்தனர். அதுவும் பெரும்பாலும் அரசர்களே அணிந்து வந்தனர். அரசர்களின் சகாப்தம் தமிழகத்தில் முடியவும் அந்த அணிகலன் களும் அடியோடு மறைந்து விட்டன. பெரும்பாலும் ஆண்கள் காதில் ஒரு சிறு கடுக்கன் மட்டும் அணியத் தலைப்பட்டனர். கழுத்தில் ஒரு சில பணக்கார வாலிபர்கள் ஒரு சிறு பொற் சங்கிலி அல்லது பொற்றகட்டால் பொதிந்த உருத்தி ராக்கம் (கவுடு) அல்லது பொன் மணிகள் இடை இடையே கோத்த துளசி மணி, கைகளில் இரு பொற் காப்பு, அல்லது ஒரு கையில் ஒரு சங்கிலி, விரல்களில் 4 அல்லது 5 மோதிரங்கள் இடுப்பில் பொன் கொடி (அரைஞாண்) மட்டும் அணிந்து வந்தனர். முற்காலந் தொட்டு ஆண்கள் அதிகமான அணிகலன்களை அணிய விரும்பவில்லை. ஆனால் இல்லத்தை அலங்கரிக்க அகமுடை யாளே அணிகலன்களை அணிந்து பொன் காய்க்கும் மரம் என விளங்க வேண்டுமென ஆண்கள் ஆசைப்பட்டனர். பண்டு ஆண்கள் குறிஞ்சி நில வாழ்க்கையிலும் முல்லை நில வாழ்க்கையிலும் புலியோடு போராடி வெற்றி பெற்றதும் அதன் பல் அதன் நகம் முதலியவை களைக் கொண்டு வந்து தம் காதலிக்கோ மனைவிக்கோ அளித்து அதை அவர்கள் அணிந்திருப்பதைக் கண்டுகளித்து வந்தனர் என்று அறிகிறோம். ஆண்கள் பொருள் தேட வெளியூருக்கும், வெளி நாடு களுக்கும் செல்ல நேர்ந்தது. அவர்கள் கல் உடைக்கவும் மண் சுமக்கவும் வேண்டிய நிலை எழுந்தது. வீரர்கள் பகைவர்களோடு போரிடுவது அவசியமாகத் தோன்றியது. இந் நிலையில் அவர்கள் விலையுயர்ந்த கற்கள் பதித்த பொன் அணிகளையெல்லாம் அணிந்துக் கொள்ள முடியாதிருந்தது. பெண்கள் வீட்டிலே இருந்து வந்ததால் அவர்கள் அணிகலன்களை அணியும் வாய்ப்பு அதிகம் எழுந்தது. ஆண்களின் அணிகலன்கள் ஆதிகாலத்தில் அரசர்களே அதிகமான அணிகலன்களை அணிந்து வந்தனர். அதையொட்டி அமைச்சர்களும் பெரிய நிலக் கிழார்களும், பெரிய வணிகர்களும் தங்கள் உயர்நிலையை உலகிற்குக் காட்ட அணிகலன்களை அணிந்து வந்தனர். ஆதி காலத்தினின்று தமிழர்களின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் ஆண்கள் அதிகமான அணிகலன்களை - பேரணிகலன்களைப் பூண்டிருந் தார்கள் என்று கூறவதற்கில்லை. அவர்கள் விலையுயர்ந்த பல்வேறு வண்ணப்பட்டாடைகளை அணிந்து வந்தார்கள் என்றும் சொல் வதற்கில்லை. பண்டுதொட்டுப் பருத்தி ஆடைகளை - அதுவும் நான்குமுழ ஆடையை அரையில் கட்டியும் தோளில் இரண்டு முழத் துண்டையுமே அணிந்து வந்துள்ளார்கள். ஆண்கள் எப்பொழுதும் ஆடம்பரம் அற்ற ஆடைகளையே அணிந்து வந்திருக்கின்றார்கள். பண்டுதொட்டு இன்றுவரை தமிழர்கள் குறைந்த அளவுள்ள ஆடைகளையே அணிந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் காட்டமுடியும். உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் என்ற பாட்டே தமிழனின் ஆடம்பரமற்ற வாழ்விற்கு எடுத்துக் காட்டாகும். முற்கால அரசர்கள்கூட அரையில் நான்கு முழ ஆடை யும் மேலே ஒரு நீளமான சால்வையும் அணிந்திருந்தார்கள் என்றே அறிகிறோம். அவர்கள் கிரேக்கர்களோடும், உரோமர்களோடும் நெருங்கிப் பழகி வணிக உறவு கொண்டிருந்த காலத்திலும் பிறரைப் போல சட்டைகள் அணிந்து கொள்வதை விரும்பவில்லை. குளிரான நாட்டுக்கே இறுக்கமான உடைகளும் நீண்ட சட்டைகளும் தேவை. வெப்பநாட்டிற்கு அவை தேவையில்லை என்றும் எண்ணி வந்தனர். அதோடு சட்டைகள் அணிவதை இழிவாகவும் கருதிவந்தனர். சட்டைகள் அணிபவர்களை கஞ்சுக மாக்கள், சட்டைக் காரர்கள் என்று கூறி அவர்களைக் குறைவாகவே மதித்து வந்தனர். மகுடம் முற்கால மன்னர்கள் அணிகலன்களை அணிந்து வந்தாலும் பெண்களைப் போல் பேரணிகளை அணியவில்லை. மன்னர்கள் தலையில் மகுடம் அணிந்து வந்தனர். மறவர்கள் தலைப்பாகை அணிந்து வந்தனர். முனிவர்கள் சடாபாரந் தாங்கி வந்தனர். மன்னர்கள் அவர்களின் பதவிக்காக மகுடம் தாங்குவது இன்றி யமையாததாக இருந்தது. மகுடங்களின் வகைகளும் அவற்றின் தோற்றமும் அளவும் பொன்னின் எடையும் மணிகளின் பெயர் களும் எடையும் அணிசெய்ய வேண்டிய முறையும் முடிசூட வேண்டிய தன்மையும் சிற்ப நூற்களில் கூறப்பட்டுள்ளன. 1. வீரக்கழல் மன்னர்கள் காலில் தம் வீரத்திற்கு அறிகுறியாகவே கழல் பூண்டிருப்பார்கள். இதைப் போருக்குப் போகும் பொழுது கண்டிப்பாக அணிந்து செல்வர். பகைவர்களை வென்ற வேந்தன் தோல்வியுற்ற அரசனின் மகுடத்திலுள்ள பொன்னை உருக்கிக் கழல் என்னும் அணிசெய்து தாம் அவர்களை வென்றதற்கு அறிகுறியாக காலில் அணிந்துகொள்வான். இதற்கு வீரக்கழல் என்று பெயர். 2. வீரக் கண்டை இதுகாலில் அணிந்து கொள்ளும் ஒரு பொன் அணிகல னாகும். இக்கண்டை பெரிய மணிகள் கோத்த அணிகலனாகும். வீரர்கள் போரில் பகைவர்களை விரட்டியடித்து வெற்றி கொண்ட தற்காக அணிவிக்கப்படும் அணி. 3. சதங்கை இதுகாலில் அணிந்து கொள்ளும் ஒரு அணியாகும். இது முற்காலத்தில் பொன்னால் செய்யப் பெற்றது. பிற்காலத்தில் வெள்ளி, பித்தளை முதலிய உலோகங்களால் செய்யப் பெற்றது. 4. அரையணி அரைஞாண் அரைஞாண் அரசர்களும் அமைச்சர்களும் செல்வர்களும் அரையில் தரிக்கும் பொன்னாலான திரட்சியான ஒரு கொடியாகும். இந்தப் பொற்கொடி பூணும் வழக்கம் இன்றும் பல பணக்காரர் களிடம் இருந்து வருகிறது. இதன் முகப்பில் சிங்கத் தலைவைப்பது சிறப்பு. இதனைக் கடி சூத்திரம் என்பார்கள் சிற்பிகள். 5. பவள வடம் பவள வடமும் ஆண்கள் அரையில் அணியும் அணிகளில் ஒன் றாகும். இடை இடையே பொன் மணிகளும் கோக்கப் பட்டிருக்கும். இதை மன்னர்கள் விருப்பமுடன் அணிவர். 6. தொடி தொடியணி என்பது கரு முத்துக்களால் கோக்கப்பட்டு அரை யில் அணியும் அரிய இடையணியாகும். இதை ஆண்கள் அணிவர். 7. கங்கணம் கங்கணம் கையில் அணிந்து கொள்ளும் கொலுசு போன்ற ஒரு விதப் பொன் அணியாகும். இது ஆதியில் மக்கள் பூணும் உறுதிக்குச் சான்றாக எழுந்தது. 8. வீரவளை இது கையில் அணிந்து கொள்ளும் ஒரு பொன் அணியாகும். வீரர்கள் வெற்றி பெற நடத்தியப் போருக்காக அவர்களுக்கு அணி விக்கப்படும் ஒரு வளை. 9. கடகம் காப்பை யொத்த ஒரு அணிகலன் மகரவாய் உடையது; மாணிக்கம் போன்ற மணிகள் அழுத்திச் செய்யப் பெற்றது; இது இக் கால வழக்கில் உள்ளது. கவின் பெற இதைச் செய்த கைக்கு கடகம் போட வேண்டும் என்பது பழமொழி. 10. மோதிரம் கை விரல்களில் நடுவிரல் நீங்கலாக ஏனைய நான்கு விரல் களிலும் பொன்னால் செய்த மோதிரங்கள் அணிவர். அதில் பல வேறு மணிகளும் பதிக்கப் பெற்றிருக்கும். 11. கொலுசு கொலுசு காப்பு போன்று கையில் அணியும் ஒரு பொன் அணிகலனாகும். இதுவும் இன்றும் வழக்கில் உள்ளது. 12. காப்பு இது பொன்னால் செய்யப்பட்ட ஒரு கை அணியாகும். இது ஆதியில் கட்டியாகச் செய்யப்பட்டது. அப்பால் புகலாகச் செய்யப் பட்டது. முகப்பில் கற்கள் பதிக்கப் பெறும். 13. பதக்கம் இதுவும் தோளணிகளில் ஒன்றாகும். இது பொன்னால் செய்யப்பட்டது. வாகுவலயமும் பதக்கம் என்று கூறப்படும். ஆனால் இரண்டும் வெவ்வேறான பொன் அணிகலன்கள். 14. வாகுவலயம் அரசர்கள் தங்கள் வீரத்திற்கு அறிகுறியாக புயத்தில் வாகு வலயம் என்னும் பொன் அணியைப் புனைந்து போருக்குப் போவார்கள். இதனை அங்கதம் என்பர். தோள் வளையை கேயூரம் (வங்கி) என்பர். 15. கழுத்தணி வன்னசரம் வீரர்கள் போரில் பகைவர்களின் கண்களைப் பறித்து யானை யின் தந்தங்களினின்று எடுக்கும் முத்துக்களோடு நரம்பில் கோத்து கழுத்தில் அணிந்து போருக்குச் செல்வர். 16. பொன் மாலை பொன்னால் செய்த முத்து வடம். இதை அரசர்கள் எப்பொழுதும் கழுத்தில் பூண்டு கொண்டிருப்பது வழக்கம். 17. முத்து வடம் முத்து வடம் என்பது உயர்ந்த முத்துக்களைத் துளையிட்டு நூலில் அல்லது கம்பியில் கோத்து மாலையாகக் கழுத்தில் செல்வர்களும் அரசர்களும் அணிவதாகும். 18. கடுக்கன் இது காதில் போடும் ஒரு பொன் வாளியாகும். இது வட்ட மாகவோ அல்லது நீண்டு வளைந்தோ இருக்கும். இதன் இடையில் கற்கள் பதிக்கப் பெற்றிருக்கும். இது முற்காலத்தில் பெண்களும் ஆண்களும் அணியும் அணிகலனாக இருந்தது. 19. குண்டலம் இது ஒரு காதணி. காதணி பல வகைப்படும். மீன் வடிவாகச் செய்யப்பட்ட ஒரு பொன் அணி மகரக் குண்டலம் எனப்படும். வாழைப்பூ, தாமரை மொக்கு, பாம்பு வடிவமாக எல்லாம் குண்டலம் இருக்கும். பெண்கள் பேரணிகள் பலவற்றை அணிந்திருந்தனர். இன்று பேரணிகள் அனைத்தும் மறைந்து மகளிர் சிற்றணிகள் சிறப்புடன் அணிந்து கொள்ளும் நிலை எழுந்துள்ளது. இப்பொழுது பல சிற்றணிகளும் மறைந்து சில சிற்றணிகள் பெயர் அளவிலேயே காணப்படுகின்றன. அணிகள் அணிவதிலே பெண்களுக்கு ஓரளவு வெறுப்பு எழுமாறு சூழ்நிலையும் நாகரிகமும் அவர்களை நெருங்கி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு வெளி நாடுகளுக்குச் சென்று ஆங்கிலம் படித்து உயர்ந்த பட்டம் பெற்ற பெண்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் மூக்கில் புல்லாக்கும் காதில் சிறு வைரத் தோடும் அணிந்திருந்தார். அவரது புல்லாக்குப் பெண்கள் பலரைக் கவர்ந்தது. பலரும் புல்லாக்குப் போட முனைந்தனர். மற்றொரு மங்கை கழுத்தில் பட்டந் தீட்டிய அழகிய பவளத்தை மேலும் கீழும் பொற் பூவில் பொதிந்திருப்பது போல் செய்து பொன் சங்கிலிகள் கோத்து கழுத்தில் சுமார் 10 பெரிய பவளங்களை அணிந்திருந்தார். அவரது பவள வடம் பல பெண்களுக்குக் கவர்ச்சியளித்தது. இதன் மூலம் பழந் தமிழர் பண்பாட்டில் பற்றுள்ள என்னைப் போன்றவர்களுக்குப் படித்த பெண்கள் நினைத்தால் நமது பழைய பண்பாடும் அணிகலன்களும் மீண்டும் நமது நாட்டில் துளிர்க்கச் செய்து விட முடியும் என்று உறுதியான நம்பிக்கை எழுந்துள்ளது. குறிப்பு 1. கலைக்களஞ்சியம் தொகுதி 1. பக். 358 2. Ornament - Annadacoomaraswamy. (Bulletin) 3. யாழ்நூல் - விபுலானந்தர் 4 The bands of lattice - work and the edges of the jewel are formed of the finest filaments and globules of gold, soldered together with marvellous skill and accuracy. The Drawing is the full size of Pecharf, but the work is so minute that I have added enlarged sections of the inner and outer edges to explain the construction. The outer edges, where it meets the fastening is finished by a parrot minutely ohased, and four rubies emblish this wonderful nose ring. The goldsmiths who do this fine built up work are a special class; they are found only in villages as their customers are generally agriculturists, their fellow workmen in the large towns look upon them as low castes.” - The Journal of Indian Art and Industry. Vol. V. “The Art industries of the Madras Presidency - by E.B. Havel. P. 5 5. மணிமேகலை 3 : 137 செவ்வாய்க் குதலை மெய்பெறா மதலை சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப வற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் 6. புறப்பாட்டு 7. சிலப்பதிகாரம் 17 : 27 - 28 மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண் பற்றாலி நிரைபூட்டி 8. பட்டினப்பாலை 10. சாசனச் சான்றுகள் நமது தமிழகத்தில் தொன்று தொட்டு, வரலாறு வரையும் வழக்கு இல்லை. பழம் பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் பண்பு குன்றிவிட்டது. எனவே இன்று நமது சமயம், வரலாறு, மொழி, கலை, எழுத்து, படிமம், ஓவியம், அணிகள், மணிகள், ஆடை, இசை, கூத்து, மருத்துவம், வானநூல், கலை, பண்பாடு போன்றவைகளைப் பற்றி ஆராய முன்வருபவர்கள் பெரும் அல்லலுக்கு ஆட்பட்டு வருகின்றார்கள். இன்றைய தமிழர்கள் செய்த தவப் பயனாக அழியாது நிற்கும் கோயில்களும் அவைகளில் உள்ள சிலைகளும் செம்புப் படிமங்களும் ஓவியங்களும் அணிகலன் களும் இசைக் கருவிகளும் கல்வெட்டு, செப் பேடுகளும் அழியாது இருந்து வருகின்றன. அவைகளை ஆய்ந்து நூல் வடிவ மாக்குவதில் நாம் இன்று அதிகமான அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. அவை அனைத்தும் ஆராயப்படுமாயின் நமது வரலாறு, மொழி, கலை, எழுத்து, நாகரிகம், தொன்மை முதலியவைகளைப் பற்றிய புதிய உண்மைகள் வெளிவரும். இன்று, அணிகலன்களைப் பற்றி ஆராய முன்வருபவர் பண்டைய அணிகலன்களைக் கண்ணால் பார்க்கவே முடிவதில்லை. ஒரு சில அணிகலன்கள் நமது திருக்கோயில்களில் இருக்கின்றன. பெரும்பாலான அணிகலன்களைக் காணவே முடியவில்லை. ஆனால் முற்காலத்தில் இருந்த அணிகலன்களின் பெயர்களும் அவை எந்த உறுப்புகளில் அணியத் தக்கன என்றும், என்ன பொருளால் செய்யப்பட்டன? எவ்வித மணிகள் அழுத்தப் பெற்றன? என்றும் நமது சங்கக் கால இலக்கியங்களும் உரையாசிரியர்களும் விளக்கம் தந்துள்ளார்கள். நமது கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும், கோயில்களுக்கு அணிகலன்களைக் காணிக்கையாக அளித்த மன்னர் பெயரும் அணிகளின் பெயர்களும் அதன் எடை முதலிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. அதனால் அந்த அணிகள் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டன? எந்த நாட்டின் அமைப்பை யுடையன? எந்த பாணியில் செய்யப்பட்டன? என்பதை நாம் எளிதில் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதோடு கோயிலில் உள்ள சிற்ப வடிவங்களில் காணப்படும், அணிகலன்களின் பெயர்கள் கல் வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படுகின்றன. மேலும் படிமங்களில் காணப்படும் அணிகலன் களில் பல படிமங்கள் செய்யப்படும் காலங்களில் உள்ள அணி கலன்களாக இல்லை, சிற்ப நூற்களில் காணப்படும் பழங்கால நகை களாகும். மேலும் அவை விலையுயர்ந்த பசும் பொன்னால் நல்ல குற்ற மற்ற மணிகள் இழைத்துச் செய்யப் பெற்ற அணிகலன்களாகும். அக்கால மக்கள் கிடைத்தற்கரிய பெரிய மணிகளை விலைக்கு வாங்கித் தெய்வத் திருமேனிகளிற் பூட்டி மகிழ்ந்தனர் என்பதற்கு நமது இலக்கியங்கள் சான்று தருகின்றன. எனவே நமது கல் வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணக் கிடைக்கும் அணிகலன் களை இங்கு ஆராய்வோம். இந்த இருபதாம் நூற்றாண்டு, மனித நாகரிகத்தின் பொற்கால மாக இருக்கிறது - ஏன் நாகரிகத்தின் உச்சக் கட்டமாக இருக்கிறது என்று கூறலாம். மக்களின் அறிவும் ஆய்வும் நாகரிகமும் விண் முட்ட உயர்ந்து நிற்கின்றன. மக்களின் வரலாறு, மொழி, எழுத்து பண்பாடு, கலை, நாகரிகம் முதலியவை ஆழ்ந்து அறிவுப் பாங்காக ஆராயப்படுகின்றன. அறிஞர்கள் அறிவியல் ஆய்வு முறையில் கூர்ந்து நோக்கிச் சிந்தித்துப் பார்த்துப் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தமிழர்கள், தொல் குடிமக்கள்; அவர்கள் மொழி, கலை, வரலாறு, பண்பாடு, நாகரிகம் மிகப் பழமை வாய்ந்துள்ளன என்று கூறப்பட்டாலும் அறிவியல் பாங்காக அவைகளைப் பற்றி ஆய்ந்து இன்னும் முடிவு கட்டவில்லை. சிந்து வெளி நாகரிகம் திராவிடப் பெருங் குடிமக்களின் தொன்மைக்கும் திண்மைக்கும் பண்பிற்கும் அன்பிற்கும் நாகரிகத்திற்கும் அடிப்படையாய், ஒரு பெருங்கருவூலமாய் இருப்பினும் அச்சீரிய கருவூலம் அறிவியல் ஆய்வு என்னும் ஒளியின் வழியில் தமிழர்கள் சென்று போதிய ஆய்வுகள் நடத்த முன்வரவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் திராவிடப் பெருங் குடிமக்களின் தலையான மக்களான தமிழர்களின் மொழி, எழுத்து, பண்பாடு, நாகரிகம், வரலாறு முதலியவைகளில், எதைக் கூற முற்பட்டாலும் தமிழ் நாட்டிலே தமிழர்கள் போல் வாழும் ஒரு சிலர் எடுத்ததற்கெல்லாம் மறுப்புக் கூறியும் தாழ்த்தியும் இழித்தும் கூறுவதையே தங்கள் ஆய்வாகத் தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழர்கள் பிற இனத்தவர்களின் பண்பாடுகளால் நாகரிகத்தால் சிறப்புற்று வாழ்பவர்கள் என்ற தங்கள் கூற்றை நிலைநாட்ட முயல்கின்றனர். நமது நாகரிகம் எப்படி பழமை யானது? எவ்வாறு ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது? என்பதற்கு ஆண்டும், ஆதாரமும் கேட்டு வருகின்றனர். உண்மையிலே நமது பண்பாட்டின் சிறப்பான காலத்தை நிலைநாட்ட ஆதாரம் உண்டு; ஆனால் போதிய ஆதாரம் இதுவரை தேடப்படவில்லை; இன்னும் கிடைக்கவில்லை. அதோடு கிடைத்துள்ள ஆதாரங்கள் பற்றி நம்மவர்கள் இன்னும் சரியாக அறிந்து கொள்ளவும் இல்லை. எனவே தமிழ்ப் பகைவர்கள் தமிழ் மண்ணிலே தலை நிமிர்ந்து நின்று கொண்டு நடக்க இடம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே தமிழ் அறிஞர்கள் எதையும் ஆய்ந்து தக்க சான்று காட்டி நிலைநாட்ட வேண்டிய இன்றியமையாத காலத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இங்குக் கோடிட்டுக்காட்டி நினைப்பூட்டிக் கொள் கின்றேன். தமிழ் நாட்டு அணிகலன்களுக்கு இன்னும் போதிய புதை பொருள் ஆராய்ச்சிச் சான்றுகள் கிட்டவில்லை. அரப்பா, மொகஞ்ச தாரோ, அரிக்கன் மேடு, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் ஒரு சில பழங்கால அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை போதுமானவையல்ல என்பது நமது உறுதியான கருத்தாகும். நமக்குப் போதிய இலக்கியச் சான்றுகள் உள. எல்லாவற்றையும் விட நம் திருக்கோயில்களில் திகழும் சிலைகளும் செம்புப் படிமங்களும் அவற்றின்மீது அணிவித்து வரும் பல அணிகலன்களும் சிறந்த சான்றுகளாகும். இவையன்றி இந்தத் திரு உருவங்கள் மீது அணிவிக்க மன்னர்களும் அரசிகளும் வள்ளல்களும் பிறரும் வழங்கிய அணி கலன்களும் உள. இவைகளை அவர்கள் கோயில்களுக்கு அளித்த விபரங்கள் அடங்கிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும், அணிகலன் களின் பெயர்களையும் வழங்கிய மன்னர்களின் பெயர்களையும், வழங்கிய காலங்களையும் வழங்கியதற்குரிய அவசியம் முதலியவை களையும் உணர்த்துகின்றன. இந்த சாசனங்களில் நமது நாட்டு வரலாறுகளும் பிற நாட்டு வரலாறுகளும் மக்களின் வரலாறுகளும் கோயில்களின் வரலாறுகளும் உள்ளன. இந்தச் சாசனங்கள், காட்டிலும் மேட்டிலும் கிணறு, குளம் போன்ற நீர் நிலைகளிலும் ஏன்? - பூமிக் குள்ளும் புதைந்து கிடக்கின்றன. அவைகளை யெல்லாம் சேகரிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட சாசனங்கள் பல படிக்கப்படாமலும் ஆராயப்படாமலும் இருக்கின்றன. அவை அனைத்தும் படித்து நூல் வடிவில் வெளிவரச் செய்ய வேண்டும். இன்று நூல் வடிவம் பெற்ற சாசனங்கள் சிலவற்றில் நமது அணி கலன்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அந்தப் பகுதி களில் சிலவற்றை மட்டும் இங்கு எடுத்துக் காட்டுகின்றோம். சோழர்களின் அணிகலன்கள் தஞ்சாவூரில் கோயில் கொண்டிருக்கும் பெரிய நாயகிக்கும் பெரு உடையாருக்கும் மா-இராசராச சோழன் (Raja Raja the Great) என்ற சிவ பாத சேகரன் என்னும் மாமன்னன் நவ மணிகளாலான பொன் அணிகலன்களையும் பொன் வெள்ளி போன்ற உயர்ந்த தாதுப் பொருள்களில் செய்யப்பட்ட பாத்திரங்களையும் விளக்குகள் போன்ற பொருள்களையும் செய்வித்து சிவபாத சேகரன் என்ற தன் பெயரைப் பொறித்து, காளங்கள், திருப்பள்ளித் தொங்கல், தவளச் சத்திரம், திருக்கொற்றக்குடை, ஈச்சோப்பிகை, வெண்சாமரக்கை, காளஞ்சி முதலியவைகளையும் அளித்துள்ளான். மேலும் நல் அணி கலன்களான சிரிமுடி, வீரப்பட்டம், திரு உதரப் பந்தனம், திருவடிக் காரை, திருப்பட்டிகை, சப்த சரி, பஞ்ச சரி, திருக்குதம்பை, தோடு, இராச வர்த்தம், திரள் மணிவடம், தாலி மணிவடம், சிரிசந்தம் முதலிய உயரிய பொன் அணிகலன்களும் வடுகவாளி, ஏகவலி, முத்தின் சூடகம், திருக்கால்வடம் முதலிய முத்து அணிகலன்களும் கண்டநாண், புல்லிகைக் கண்ட நாண், பாச மாலை, மாணிக்கத்தின் தாலி, சிரி வாகுவலயம், பதக்கம், இரத்தின வளையம், இரத்தின கடகம், இரத்தின மோதிரம், நவரத்தின மோதிரம், பிருஷ்ட கண்டிகை முதலிய மணிகளாலான அணிகலன்களும் பொன்னா லும், வெள்ளியாலும் செய்த ஒட்டு வட்டில், கலசம், குடம், தட்டம், குறுமடல், கிடாரம் முதலிய பரிகலங்களும் நிபந்தமாக அளிக்கப் பட்டுள்ளன.1 இராசராச சோழன் திருமகள் மாதேவடிகளார் திருவையாற்று ஒலோக மாதேவீசுர முடையார்க்கு அளித்த நிவந்தங்களைப் பற்றித் திருவையாற்றுக் கல்வெட்டுக் கூறுவதாவது :- சிரி இராசராச தேவர்க்கு ஆடியருளப் பன்மாநம் பெற்ற பொன்னில் யாண்டு 25-வது நாள் 164இல் சாத்தி அருளக் குடுத்த பட்டம் ஒன்று நிறை குடிஞை கல்லால் பொன் நாற்பத் தெண் கழஞ்சே முக்கால் மஞ்சாடி யும் மேற்படி பட்டம் ஒன்று மேற்படியில் நிறை நாற்பத் தெண் கழஞ்சே முக்காலே மஞ்சாடியும் இத் தேவர்க்கு யாண்டு 27-வது.... செய்திட்ட அழகிய தேவர் திருமுடி ஒன்று, பொன் எழுபத்து முக் கழஞ்சே முக்காலும் இதில் ஏறின முத்து நானூற்றுத் தொண்ணூற்று இரண்டு சவர் யோகம் நூற்று ஒரு பத்தாறும் பொத்திப் பதினாலும், தருப்பு நூற்றெண்பத்து இரண்டும் உள்பட நிறை எண்பத்து எண் கழஞ்சரை. மேற்படி சாத்தியருளும் திருமாலை ஒன்றினுள் பொன் பத்தொன்பதின் கழஞ்சேய் மஞ்சாடியும் குன்றியும் இதனுள் கட்டின முத்து அய்ம்பத்து ஏழும் பொத்தி ஒன்பதும் தருப்பு இருபத்தைந்தும் சவரு யோகம் அறுபத்து மூன்று உள்படத் திருமாலை ஒன்றும் மேற்படியார் சாத்தியருளும் செல்வ விடங்கன் சிடுக்கு இரண்டினால் முத்துப் பதினெட்டினால் நிறை கழஞ்சேய் மஞ்சாடியும் இவை கோத்த நூலினால் எண் கழஞ்சே மஞ்சாடியும் குன்றின் முத்து உழுத்து நாலினால் நின்ற நாலு மஞ்சாடியும் கழைஞ்சும் சவரு யோகம் ஏழும் தருப்பு எட்டும் உள்பட நின்ற மூ...... ய் ஏழு மஞ்சாடி மேற்படியார் சாத்தியருளும் வடம் ஒன்றினுள் முத்து முப்பத்து நாலிலும் நிறை நாற் கழைஞ்சேய் மஞ்சாடியும் தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் உள்பட பொன் எட்டும் மஞ்சாடி மேற்படியார் சாத்தி அருளும் வடம் ஒன்றினுள் மு..... இரண்டினால் பவளம் இரண்டும் இராசாத்துவம் ஒன்றும் நீலம் - மேற்படியார் சார்த்தியருளும் வடம் ஒன்றினுள் முத்து இருபத் தாறினால் நிறைமுக் கழஞ்சேய் அரைக்காலும் தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் உட்பட பொன் முக்காலே குன்றியும், பவளம் இரண்டும் இராசாவத்துவம் இரண்டும் உள்பட வடம் ஒன்றும் மேற்படியார் சார்த்தி அருளும் திரிசரம் ஒன்றினுள் முத்து நூற்றிருப்பத் தேழினால் நிறை ஏழு கழஞ்சேய் மஞ்சாடியும் மூன் றொன்றாக அடுக்கி விளக்கின தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் நிறை முக் கழஞ்சரையே நாலு மஞ்சாடியும் குன்றி பவழம் ஆறும் இராசவத்தம் ஆறும் உள்பட திரிசரம் ஒன்று மேற்படியார் சாத்தி அருளும் பஞ்ச சரி ஒன்றினுள் முத்து இருநூற்றெண்பத் திரண்டினால் நிறை பத்தொன்பதின் கழைஞ்சும் அஞ்சொன்றாக அடுக்கி விளக்கின தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் இடைக் கட்டு இரண்டும் உட்படப் பொன் அரைக் கழைஞ்சேய் முக்காலேய் மஞ்சாடியும் இதனில் கோத்த பவளம் பத்தும் நீலம் பத்தும் சவரு யோகம் பத்தும் உள்பட பஞ்ச சரி ஒன்றும் மேற்படியார் சாத்தியருளும் களாபம் ஒன்றினுள் முத்து நூற்றிருபத்திரண்டினால் நிறை எண் கழைஞ் சேய் ஒன்பது மஞ்சாடியும் குன்றியும் நாலென்றாக அடுக்கி விளக்கின தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் இடைக் கட்டு இரண்டும் உள்படப் பொன் முக் கழஞ்சேய் காலும் பவளம் எட்டும் உள்படக் களாபம் ஒன்றும் மேற்படியார் சார்த்தி யருளும் முத்தின் வளையல் நாலும் முத்தின் கால் காறை இரண்டும் உள்படப் பொன் முப்பத்து முக்கழஞ் சரையே மூன்று மஞ்சாடியும் குன்றியும் இவற்றுள் வளையல் ஒன்றுள் முத்து இருநூற் றெழுபதும் மேற்படி ஒன்றினுள் முத்து இருநூற்றுப் பத்தொன்பதும் மேற்படி ஒன்றினுள் முத்து இருநூற்றறுபதும் திருக்கால் காறை ஒன்றினுள் முத்து நூற்று நாற்பத்தேழும் ஆக உரு ஆறினுள் முத்து ஆயிரத்து முந்நூற்றுப் பதின்மூன்று பிள்ளையார் கணபதியார் திருவாபரணம் திருமுடி ஒன்றும் பட்டம் ஒன்றும் பொற் பூ நாலும்........ ஒன்றும் ஆக நிறை முக்கழஞ்சேய் முக்காலே...... என்று கூறப்பட் டுள்ளது.2 இதில் மாதேவடிகளார் ஒலோக மாதேவீச் சரத்துப் பட்டம் குதம்பை, நீலத்தின் உழுத்தோரணை, திருச்சன்னி வடம் கட்டி, திருமுடி, திருமாலை, செல்வ விடங்கன், சிடுக்கு, வடம், இடுக்கு, வளையல், திரிசரம், களாபம், தாளின்பம் முத்தின் வளையல், முத்தின் கால் காறை, முத்தின் பட்டிகை, கோளகை, தாள், கூட்டுக் கம்பி, ஓரணை, பஞ்ச சரி, சிரிசந்தம் முதலிய அணிகலன்கள் மானியமாக அளித்துள்ள விபரம் நன்கு தரப்பட்டுள்ளது. இஃதன்றி மற்றோர் திருவாவடு துறைக் கல்வெட்டில் பல அணிகலன்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவை அடியில் வருமாறாகும் : உடையார், சிரி இராசேந்திர சோழ தேவர் நம் பிராட்டியார் திரை லோக்கிய மாதேவியார் தங்கள் ஆச்சியார் இராமன் அபிமான தொங்கியார் திருவா வடு துறை உடையார்க்கு அமுது செய்தருள வெள்ளித் தளிகை ஒன்று நிறை குடிஞைக் கல்லால் எழுபதின் கழஞ்சும் மேற்படியாரே உடையார்க்குக் கொடுத்த பொற் கொள்கை ஒன்று குடிஞைக் கல்லால் நிறை செம் பொன் நானூற்று ஒரு பத்து முக் களஞ்சரையும் இராசாதிராச தேவர் கொடுத்த பொன் இருபத்தறு களஞ்சும் பெரிய வேளத்து அலோயன் அணுக்கி யிட்ட பொன் நூற்று முப்பத்து எண் கழஞ்சும், எண் கழஞ்சும் மேற்படி வேளத்து..... இட்ட பொன் முப்பத்தறு கழஞ்சே முக்காலும் உள்பட செய்த பொற் பூ இருபத் தேழும் செங்கழு நீர்ப் பூ முப்பத்தாறும் மாந்தளிர் ஒன்றும் பிச்ச தேவர் கண்ட காறை ஒன்றும் பொற்கை ஈச்சோப்பி ஒன்றும் முன்பு கல் வெட்டின கொள்கையிலும் ஆக இத்தேவர் அடியான் திரு நாவுக்கரையன் பிச்சையால் வந்த குடிஞைக் கல்லால் மானப் பொன் அறு நூற்று எழுபதின் கழஞ்சே முக்காலே மூன்று மஞ்சாடியும், முன்புள்ள பொன் உடையார் சாத்தும்.......பட்டம் ஒன்றும் பொற் பூ இருபத் தொன்றும் இவன் சாத்தும் முத்துச் சரி நாலினால் பொன்னும் சந்திரசேகரதேவர்திருபஹிவேகம்ஒன்றும்திருவடிநிலைஇரண்டினால்போந்தபொன்னும்உள்ளிட்டதிருமேனிகள்சாத்தும்திருவாபரணங்களாலும்பொற்கைஈச்சோப்பியாலும்ஆகக்குடிஞைக்கல்லால்இராசராசன்மாடைக்கீழ்ஒன்பதுமாறிபொன்நானூற்றுஅறுபத்தொருகழஞ்சேஒன்பதுமஞ்சாடியும்ஆகப்பொன்ஆயிரத்துஒருநூற்றுநாற்பத்திருகளஞ்சேஏழுமஞ்சாடி.....3எ‹றுகூWம்கல்வெட்Lப்பகுதியாYம்இவைகiளஅறியலா«. நமது மன்னர்கள் மகிழ்ந்து மாதேவர்க்கு அளித்த மானியங் களில் அணிகலன்களைக் குறிப்பிடும் பொழுது அரக்கு, செப்பாணி, சரடு முதலியவைகளை நீக்கிப் பொன்னை மட்டும் தனியாக நிறையெடுத்தும்; அவைகளில் மணிகள் அழுத்தப் பெற்றிருந்தால் அவை இவ்வளவு எடையுடையன இன்னின்ன தன்மையுடையன என்று உரைத்து, இதன்விyஇத்தdகாRஎன்று«குறிப்பிட¥பெற்றிருக்கிறது. மணிகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது பொரிவு, முறிவு, காகபிந்து இரத்த பிந்துஎன்wஇத‹குற்றங்களு«குண§களு«கூறப்பெற்றுள்ளd. அக்காலத்தில் ஒருவித அணிகலனுக்கு சோனகச் சிடுக்கின் கூடு என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சோனகன் என்ற பதம் முற்காலத்தில் கிரேக்கர், அரேபியர் போன்ற வர்களைக் குறிப்பிடுவதாகும். எனவே 13ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் சோனகர்த் தொடர்பு அதிகம் இருந்ததாகத் தெரிகிறது. குறிப்புகள் 1. S.I.I.Vo. II, ii PP. 203-217 also on 69 of 1888. 2. இது திருவையாற்றுக் கல்வெட்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலுள்ள வித்துவான் திரு. வை. சுந்தரேசவாண்டையார் அவர்களால் திருவையாறு ஒரு லோக மா தேவீச் சுரத்தின் அர்த்த மண்டபச் சுவரில் இராசராச சோழன் மகள் மாதேவடிகளார் அளித்த நிபந்தங்களைப் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு இன்றுவரை தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் வெளியிடப் பெறாததாகும். 3. திருவாவடுதுறைக் கல்வெட்டு வித்துவான் வை. சுந்தரேச வாண்டையார் (திருவையாறு) அவர்கள் படிஎடுத்துதிருக்கோயில்என்னும்திங்கள்வெளியீட்டில்மாலை4,மலர்8இல்(1962மேâங்களில்)âUவாவடுதுறைக்கšவெட்டுவuலாறுஎ‹னும்தiலப்பில்tளியிட்டக£டுரையாகும்.m) fல்வெட்டுகளில்fசு,fணம்,bபான்Mகியeணயங்களைப்gற்றிeச்சினார்க்கினியர்Óவகசிந்தாமணிcரையில்Fறிப்பிட்Lள்ளார்.fhz« என்பது ஒரு பொற்காசு என்று குறிப்பிடப் பட்டுள்ளது. காணம் பொன் இவைகளுக்குச் சமமான மதிப்புள்ள பொருள்கள் திருச்செந்தூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக் கின்றன. காணம் பொன் இவை ஒரு காசில் பத்தில் ஒரு பங்காகும். (1/10) 10 பொன் அல்லது 10 காணம் = 1 காசு ஆகும். 10 காணம் = 1 கழஞ்சாகும் (திருக்கோயில் மாலை 4, மணி 5. பிப்ரவரி 1962. திருச்செந்தூர் கல்வெட்டுக்கள் பக். 241) 11. சிற்ப நூற் சான்றுகள் நமது முற்கால அணிகலன்களில் மிகத் தொன்மையானவை களை இப்பொழுது காண்பதே அரிது. மக்கள் இன்று பழங்காலப் பாணிகளில் செய்யப்பட்ட அணிகலன்களை அணிய விரும்புவதே இல்லை. அணிய விரும்பாவிட்டாலும், அவைகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூடச் சொல்வதற்கில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் உலகில் அதிகமாகப் புதுமையை விரும்புபவர்கள். அவர்கள் ஆடைகளும் அணிகலன்களும் இல்லங்களும் தட்டு முட்டுச் சாமான்களும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் புதுப் புது மாற்றம் அடைந்து வந்துள்ளன. நாம் ஆண்டாண்டு தோறும் பெற்று வந்த ஐரோப்பிய நாகரிகம் இப்பொழுது நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வருகின்றது. என்றாலும் மேனாட்டார் பழமை யான பண்டங்களையோ, ஆடைகளையோ அணிகலன்களையோ, கோப்பைகளையோ, தட்டுமுட்டுப் பொருள்களையோ அழித்து விடுவதில்லை; பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அம்மக்கள் தங்கள் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு, இது எங்கள் கொள்ளுப் பேரனார் உபயோகித்த நாற்காலி, இது எங்கள் பாட்டி அணிந்த அணிகலன், அது எங்கள் அன்னை எழுதிய பென்சில், இது எனது மாமியார் எழுதிய ஊற்றுப்பேனா என்றெல்லாம் எடுத்துக் காட்டி மகிழ்கின்றார்கள். தமிழர்கள் வீட்டில் அத்தகைய பழம் பொருள்களைப் பாதுகாத்து வைப்பதே கிடையாது. எடுத்துக் காட்டாக எனது வீட்டில் என் மனைவி எனது தாயார் உபயோகித்த அணிகலன்களையோ, ஆடைகளையோ, வெண்கலப் பாத்திரங் களையோ பாதுகாத்து வைக்கவில்லை, வைக்க விரும்புவதுமில்லை. அவைகளை விற்றுவிட்டுப் புதிய பண்டங்களை வாங்குவதே வழக்கமாய்விட்டது. அதனால் நமதுநாட்டில் பழைய பாத்திரங் களையோ அணிகலன்களையோ பழைய இசைக்கருவிகளையோ பழைய விளக்குகளையோ அல்லது பழைய பண்டங்களையோ காணமுடிவதில்லை. நமது வரலாற்றுப் பழம் பெருமையைக் கூற முன்வரும் எழுத்தாளர்கள் எவ்வித ஆதாரமும் இன்றி அல்லற்படு கின்றார்கள். பாண்டிய நாட்டில் பாண்டிய மன்னர்கள் உபயோகித்த பொற்காசுகளில் ஒன்று கூட இன்று எவரும் பத்திரப்படுத்தி வைக்க வில்லை. ஏன், மதுரையில் ஆண்ட முசுலிம் மன்னர் காசுகளையும், நாயக்கமன்னர் காசுகளையும், ஆங்கிலக் கம்பெனி ஆட்சி வெளி யிட்ட பொற்காசுகளையும் நாம் பாதுகாத்து வைக்கத் தவறி விட்டோம். நமது அடிமைச் சகாப்தத்தில், சமூகம் பெற்ற இழி நிலையும், பொருளாதார வீழ்ச்சியுமே இதற்கு முக்கிய காரணங் களாகும். இன்று நமது நாட்டில் ஒரு சில பழமையான அணிகலன்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவைகளும் பழமையான காலத்தில் செய்யப்பட்ட அணிகலன்களாகத் தெரியவில்லை. அவை பழைய பெயர்களைப் பெற்றிருக்கின்றன; ஆனால் உருவத்தில் பெரும் மாறுதல் பெற்றிருக்கின்றன. எனவே பழைய பெயர்களுடன் இப்பொழுது புதிதாகச் செய்யப்பட்ட அணிகலன்கள் என்று திட்டமாக சொல்ல முடியும். நமது இலக்கியங்களில் பல பழைய அணிகலன்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவை நாம் கண்டும் கேட்டும் அறியாத புதுப் பெயர்களாயும், உருவங்களாயும் உள்ளன. இந் நிலையில் நமது பழைய அணிகலன்களின் உண்மையான உருவத்தை எப்படிப் பார்ப்பது? ஆனால் நமது சிற்பங்களில் பழம்பெரும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அவை உறுதியாகத் தமிழ் நாட்டுப் பழைய அணி கலன்களின் உருவமேயாகும். ஆனால் அவைகளின் பெயர்களை அறிவது மிகவும் அரிது. சிற்ப நூற்களில் வடமொழியில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் இவை தமிழக அணிகள் அல்ல என்று கூறுவோரும் உண்டு. நமது காளியை வடமொழியில் கௌரி தேவி என்றும், முருகனை கந்தன் என்றும் திருமாலை மஹா விஷ்ணு என்றும் சிவபெருமானை சங்கரன் என்றும் கூறியிருப்பதைக் கொண்டு இவை ஆரியர்களின் தெய்வமாகி விடுமா? நமது கைக் காப்பை அத கடகம் என்று கூறிவிட்டால் அது ஆரியர்கள் அணி கலனாகிவிட முடியுமா? நமது நாட்டு அணிகலன்களுக்கு வட மொழிப் பெயர் சூட்டியதால் அவை தமிழக அணிகலன்கள் அல்ல வென்று கூறிவிடமுடியாது. நமது தெய்வ உருவங்களில் காணப் படும் அணிகலன்கள் அனைத்தும் தமிழக அணிகலன்களேயாகும். ஒன்றிரண்டு அயலக அணிகலன்கள் காணப்படினும் அவைகளை நாம் எளிதில் அறிய முடியும். நமது இலக்கிய அணிகலன்களைப் போலன்றி நமது சிற்ப நூற்களில் காணும் அணிகலன்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதை அறிந்து சிலர் ஐயம் உறுகின்றனர், உண்மையில் சிற்ப நூற்களில் காணும் தெய்வங்கள் தமிழர் கண்ட தெய்வங்களாகும். அந்த சிற்ப நூற்களில் காணும் முறைகளும் தமிழர் முறைகளேயாகும். இந்தப் படிமங்களை உருவாக்கும் சிற்பி களும் தமிழர்களேயாவர். ஆனால் நம் முன்னோர்கள் எக்காரணத்தி னாலோ தமிழ் நாட்டுச் சிற்பக் கலையை வடமொழியில் எழுதி வைத்துள்ளார்கள். அதை வைத்து இந்தச் சிற்ப நூற்கள் நம் நூல்கள் அல்லவென்றோ அங்குக் காணும் அணிகலன்கள் நம் அணிகலன்கள் அல்லவென்றோ கருதுவது தவறு. நம் சிற்ப நூற்களில் பலவிதமான மாலைகளும் பல விதமான வளைகளும் காப்புகளும் இடையணிகளும் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கடகம், காப்பு, கொலுசு, ஆடகம், பரியகம், பாசித்தாமணி, பவளம், பலவளை, சூடகம் என்று கூறப்பட் டுள்ளன. இவைகளெல்லாம் ஒருவர் ஒரே சமயத்தில் கையில் அணியும் அணிகலன்களா? படிமங்களில் பல அணிகள் உள்ளன. அவைகளில் கடகம் எது? ஆடகம் எது? சூடகம் எது? பரியகம் எது? பாசித்தாமணி எது என்று அறிவது? என வினவுகின்றார்கள். இது நல்ல கேள்வியேயாகும். சிற்ப நூற்களில் காணும் பெயர்களைப் படித்து வைத்துக் கொண்டு சிலைகளின் மீதுள்ள அணிகலன்களைக் கண்டுபிடிப்பது சிரமந்தான். இதை விரும்புபவர்கள் தபதிகளின் துணை கொண்டு எளிதில் அறிய முடியும். நான் சில தபதிகளிடம் சில அணிகளின் பெயர்களைக் கூறி அந்த அணிகலன் எப்படி இருக்கும் என்று வினவினேன். உடனே அவர்கள் சுவர்களிலும் தாள் களிலும் பென்சிலைக் கொண்டு அழகாக வரைந்து காட்டிவிட் டார்கள். அணிகலன்களை அறிய அணிகலன்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் ஒத்துழைப்பும் சிற்பிகளின் ஆதரவும் இருந்தால் எளிதில் எல்லா அணிகலன்களையும் அறிந்து விட முடியும். ஆராய முன்வந்துள்ள அறிஞர்களின் அறிவுக் குறைவால் சில தவறுகளும் எழும் என்பதை நான் இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இந் நிலையில் நமது தமிழகத்தின் கருவூலமாகக் கருதப் பெறும் சிற்ப நூற்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அணிகலன் விளக்கம் நமது ஆராய்ச்சிக்கு மிக இன்றியமையாததாகும். அவை அடியில் வருமாறு: சில்பரத்தினம் என்னும் சீரிய நூலின் பதினாறாம் அத்தி யாயத்தில் அணிகலன்களின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு : தலைமீது மேல் நோக்கி கூர்மையாகக் காணப்படும் அணிகலனே கிரீடம் (மகுடம்) ஆகும். நமது நாட்டுப் படிமங்களில் எல்லாம் சர்வ சாதாரணமாக இதைப் பார்க்கலாம். மகுடங்களில் பல விதம் உண்டு. கிரீட மகுடம் என்பது ஒரு வகை. திருமால் உருவங்களில் தலையில் கேசாந்தத்தில் உஷ்ணீச பட்டம் ஒன்று தலையைச் சுற்றினவாறாக ஒரு அங்குல அளவில் அமைக்கப்பட வேண்டும். கிரீடத்தில் அடிப்புறத்தில் தலையைச் சுற்றித் தலைப் பாகை போல் அங்குல அகலம் உள்ளதாய் பட்டையாக இருக்கும் பாகமே உஷ்ணீச பட்டம் எனப்படும். இதன் மேல் மகுடத்துடன் ஒளி வீசும் கோடீரத்தை அமைக்க வேண்டும். கோடீரம், மகுடம் என்னும் சொற்கள் முடியின் (கிரீடத்தின்) உட் பகுதியைக் குறிப்பன வாம். மகுடம் என்பது கிரீடத்தின் அடிப்பீடத்தையும் கோடீரம் என்பது மகுடத்தின் மேற் பகுதியையும் உணர்த்துவனவாகும்.1 இந்தக் கோடீரத்தின் அளவு எல்லா பக்கங்களிலும் எட்டங்குலமே அமையும். திருமாலுக்கு அமைக்கப்படும் கிரீடம் உஷ்ணீசத்தின் மேல் விளங்கும் மகுடத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். அதன் அளவு பதினாறங்குலம், பதினெட்டங்குலம், இருபத்து நான்கு அங்குலம் என்று மூன்று வகையில் அமையும். இவ்வாறு அமைக்கப்படும் கிரீடத்தின் சிகரங்களை (உச்சி நுனி) அழகுற அமைக்க வேண்டும். மூன்று, ஐந்து அல்லது ஏழு எண்ணிக்கையுடையதாக இருக்க வேண்டும். உருவங்களின் அமைப் புக்கு ஏற்றவாறு இவ்வெண்ணிக்கை இடம் பெறும். இந்தக் கீரிடம் அண்டம் (முட்டை) போன்றதாகவோ தாமரை மலர் போன்ற தாகவோ குடை போன்றதாகவோ ஆமை போன்றதாகவோ அவரவர் விருப்பம்போல் அமைக்கப்படலாம். கேசாந்தத்திலிருந்து மகுடாந்தம் வரை நெற்றியில் பட்டம் அமைக்கப்பட வேண்டும். முகத்தின் அகலம் எவ்வளவோ, அவ்வளவே மகுடத்தின் அகலமும் இருக்க வேண்டும். மகுடத்தின் அடிப்புறத்தின் அகலத்தில் ஏழு எட்டு அல்லது ஒன்பதில் ஒரு பங்கு குறைந்ததாக அதன் நுனியின் அகலம் இருக்கும். அதில் நான்கு பூரிமங்கள் இருக்க வேண்டும். பூரிமங்களின் உயரம் பன்னிரண்டு அங்குலம். கிரீட மகுடம் அல்லது கரண்ட மகுடம் சமைக்கலாம். கரண்ட மகுடத்தில் அடியினின்று முடிவரை படிப்படியாக அகலம் குறைந்து கொண்டே போகும். மகுடத்தின் முடி முண்டக மொக்குப் போன்றதாக அமைக்க வேண்டும். கரண்ட மகுடம் மூன்று, நான்கு அல்லது ஐந்து கரண்டங்கள் உள்ளதாக இருக்க வேண்டும். பத்திர குண்டலங்கள் 3, 4 அல்லது 5 அங்குலம் இருக்கலாம். இவற்றின் சுருள்களின் கனம் ஒரு யவம் இருக்க வேண்டும். அவை வெண்மை அல்லது செந்நிறமாக இருக்கலாம். மகரக் குழை - மகரமீன் வடிவம் போல் உள்ளது. சிங்க கர்னம் எனும் குழை சிங்கமுகம் போன்ற வடிவமுள்ளது. யானைக் குழை யானை முக வடிவில் உள்ளது. குழைகள் பல வகையாய் இருப்பது போல் குண்டலத்திலும் பலவகைகளுண்டு. குண்டலம், வட்டம், தாமரைப் பூ, தாமரை அரும்பு போன்ற வடிவிலும் இருக்கலாம். உபக்ரீவம் என்னும் உள்கழுத்தணியும் அட்டிகையும் மேற்கழுத்தை அணிசெய்யும் பலவிதமான அணிகலன்களும் அணிவிக்கலாம். உருத்திராக்கமணிமாலை, துளசி மணிமாலை, தாமரைக்காய் மணி மாலை பொன்மணிமாலை பல அழகிய சித்திர வேலைப்பாடு களுடன் விளங்கும். உருத்திராக்கமணி, துளசி மணிமாலை பொற் றகடுகளால் பொதியப் பெற்று வெள்ளிக் கம்பியில் கோக்கப் பெற் றிருக்கும். இதோடு பொன் அட்டிகையும் தக்கவாறு அணிவிக்க வேண்டும். முன் கையில் கடகம் வலயம் இவற்றை அணிவிக்க வேண்டும். (முன் கையில் அணியும் வளைகள் கடயம் வலயம் என இருவகைப் படும். இதன் சுற்றளவு சிறு விரலின் சுற்றளவு இருக்கலாம். இவ்வளை உருண்டையாகவோ தட்டையாகவோ இருக்கலாம். வளை பல வகை மணிகள் பதித்துச் சித்திர வேலைப்பாடுகள் உள்ளதாக இருக்க வேண்டும். கையின் மேற்புறத்தில் - அதாவது புயத்தில் கேயூரம் (வங்கி) எனும் தோள்வளையை அணிவிக்க வேண்டும். எட்டிதழ்த் தாமரைப் பூவை இதில் எழிலுற அமைக்கலாம். பலவகை மணிகளை ஒளி திகழுமாறு இதில் பொருத்த வேண்டும். தாமரை மலருக்குப் பதில் பாசிக் கொத்துப் போன்ற அமைப்பையும் உண்டாக்கலாம். எழிலொழுகும் இலைகள் போன்ற உருவங்கள் இதில் இடம் பெற வேண்டும். இதைப் பத்திர பூரிதம் என்பர். இவ்வாறான கேயூரத்தை புயத்தின் மத்தியில் அணிவிக்க வேண்டும். இப்பத்திர பூரிதத்தின் கனம் கேயூரத்தின் கனம் போன்றதாம். இதுவே பாகுவலயம் (புயத்தில் அணியும் வளை) எனப்படும். கைவிரல்களின் நடுவிரலைத் தவிர ஏனைய நான்கு விரல் களிலும் மோதிரம் அணிவிக்க வேண்டும். மோதிரம் வட்ட வடிவ மாகப் பலவகையான மணிகள் அழுத்தி விசித்திரமான வேலைப் பாடுகள் செய்து அழகு நிறைந்ததாய் திரு உருவங்களுக்குத் தக்கதாய் அமைக்க வேண்டும். மார்பில் கொங்கைகளுக்கு எட்டு அங்குலத் தொலைவில் உரசு சூத்திரத்தினின்று தொங்கியவாறாக சன்னவீரம் என்னும் அணி திகழ வேண்டும். இது பூணூல் போல் அமையும். ஆனால் இரு தோள்களி னின்றும் தொங்கும். (இது கைகளின் மேல் செல்லாமல் உடம்புக்கு மட்டும் அளவுடன் நிருமிக்கப்பட்டு அணியும் பொன்மயமான சட்டையாகும். உடம்பின் மேற்பகுதியில் அணியப்படும் அணிகள் யாவற்றையும் ஒன்று சேர்த்துக் கட்டினாற் போலத் தோன்றுவதும் வலது புறம் பூணூல் தொங்குகிற வகையில் வயிற்றில் இடது புறம் தொங்கும் முத்துச்சரம் போன்றதுமான ஒரு அணியே சன்ன வீரமாகும்.) கழுத்தினின்று கொங்கைகளின் நடுவில் தொங்குமாறு கிரைவேயகாரம் என்ற அட்டிகை வடிவமான மாலையை அணி விக்க வேண்டும். இது பலவகை மணிகள் அழுத்திப் பொன்னால் பளபளவென ஒளிவீசுமாறு செய்யப்பட வேண்டும். கழுத்திலிருந்து உதரபந்தம் வரை தொங்குமாறு அக்கமாலை (உருத்திராக்கமாலை) அணிவிக்கப்படவேண்டும். அல்லது தாமரை மணிமாலை அல்லது துளசிமணிமாலை முதலியவைகளை அணிவிக்கலாம். இதை ஹ்ருன்மாலை என்றும் கூறுவர். இனி கந்தமாலை என்ற மற்றொரு வகையான அணியையும் அணிவிக்க வேண்டும். பலவகை மலர்களாலான இம்மாலை தோளின் மேற்புறம் தொடங்கிப் புயத்தின் மேலேயே இருபுறமும் தொங்கியவாறு இருக்க வேண்டும்.) அரையில் (கடிசூத்திரம்) அரைஞாண் மூன்று நூல்கள் உள்ளதாய் இருக்க வேண்டும். கிருத்ருமாசியம் என்னும் அணி கடிசந்திக்கு மேற்புறத்தில் மேடரத்தின் கீழ் அணிவிக்கப்படவேண்டும். முன்புறம் மத்தியில் சிங்கம் முதலியவற்றின் முகம் போன்ற பட்டம் இடையில் சுற்றிய வாறு அமைக்கப்படும் மத்தியில் முகம் போன்ற பகுதிதான் கிருத்ரு மாசியம். இதிலிருந்து தொடையில் முத்துசரங்கள் தொங்கவிட வேண்டும். பாதங்கள் இரண்டிலும் கணுக்காலுக்குக் கீழே சாலகம் (பட்டைசரம்) அணிவிக்கவேண்டும். இது பாதசரம் என்றும் கூறப் படும் சில இடங்களில் பட்டைக் கொலுசு என்று கூறுவர். இதில் சாலகங்களை ஒரு சூத்திரத்தில் கோத்துக் கட்ட வேண்டும். முத்துக்கள் போல் தனித் தனியாகப் பண்ணப்பெற்று சாலகசூத்திரத்தில் கோக்கப்பட்டு வலைபோல் இணைந்து நிற்கும் சிறு பட்டைகள் கூடியது பாதசரம். சகளாதிகாரம் : சகளாதிகாரம் என்னும் சிற்ப நூல் ஆண் களின் அணிகலன்கள் என்ற தலைப்பில் கூறுவதாவது :- சோம கந்த சுகாசன மூர்த்தியின் இடது கையில் கடகம் அணிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இடது காதில் சங்கபத்திரம் (சங்கு வளையும்) வலது காதில் மகரக் குண்டலம் அல்லது சிம்மக் குண்டலம் அணிய வேண்டும். இடுப்பில் முகம் போன்ற வேலைப் பாடுள்ள அரைஞாணும் கையில் மூன்று கங்கணங்களும் கொடிப் பூ வேலை செய்த கேயூரமும் தோள் வளையும் அங்கதம் (வாகு வலயம்) உதர பந்தனம் (வயிற்றுப் பக்கம் அணியும் அணிகலனும்) அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஊருதாமம் என்னும் அணிகலனும் மாலை போன்ற பாதசரமும் துடை வரை யில் தொங்கும். கன்ன பூரம் என்னும் காதணியும் ஆரம், ஆரசிரி வத்சம் (மாலையில் தொங்கும் மாணிக்கமணி) மணி அட்டிகை நிதலாஞ்சலமும் அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. ஆட வல்லானுக்குக் கழுத்தை ஒட்டி இருக்கும் உபக்கிரீவம் என்னும் அட்டிகை அணிந்திருக்க வேண்டும். கங்காதர மூர்த்திக்கு உள்ளங் கையில் அடிப்பாகத்தில் கங்கணம் (வீர சங்கிலியும்) நெற்றியில் பட்டமும் அணிவிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.2 மானசாரம் : மானசாரம் என்னும் சிற்ப நூலில், தலையில் கிரீடமகுடம், மணி மகுடம், கரண்ட மகுடம், சிரத்தார மகுடம் முதலியவைகளும் சிரச் சூளம் என்னும் உச்சந் தலையில் அணியும் அகள சூடமும் அணிய வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆபரணங்கள் பத்திர கல்பம், சித்திர கல்பம், இரத்தின கல்பம், மிச்சிர கல்பம் என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தேவர்களுக்கு எல்லாக் கல்பமும் உரியன. மன்னர்களுக்கு சித்திர கல்பம், இரத்தின கல்பம், மிச்சிர கல்பம் ஆகிய மூன்றும் உரியன. அதிராசன், நரேந்திரன் ஆகிய அரசர்களுக்கு இரத்தின கல்பம், மிச்சிர கல்பம் ஆகிய இரண்டும் ஏனைய மன்னர்களுக்கு மிச்சிர கல்பமும் உரியன என்று கூறப்படுகிறது. பத்திர கல்பம் : இலைகளுடன் கூடிய கொடிகளைப் போல் அலங்கரித்துச் செய்யப்பட்ட அணிகலன். சித்திர கல்பம் : விசித்திரமான எல்லா மணிகளாலும் தாமரை மலர்களாலும் அலங்கரிக்கப் பெற்ற அணிகலனாகும். இரத்தின கல்பம் : மலர்களாலும் மணிகளாலும் எழில் பெற அழகு செய்யப் பெற்ற அணிகலன். மிச்சிர கல்பம் : இலைகளாலும் தளிர்களாலும் மணிகளா லும் அழகு செய்யப் பெற்று ஒளிரும் அணிகலன். மாலைகள், உபக்கிரீவம், கேயூர கடகங்கள், சுபூரிமம், மிச்சிர கல்பம் என்று கூறப்படும். வாகு வலயம் (தோள் வலயம்), தாமம் (மாலை) என்ற அணிகளும் கூறப்பட்டுள்ளன. பிரகோஷ்டத்தில் (மணிக்கட்டுக்கும் முழங் கைக்கும் நடுவில்) வலயம் என்ற அணியும் மணி பந்தத்தில் (மணிக் கட்டில்) கலாபம் என்ற அணியும், உதரபந்தம், தன சூத்திரகம் (இது உதர பந்தத்தின் மேலிருந்து குறுக்கு நெடுக்காக மேலே சென்று கொங்கைகளை மறைப்பது), கேயூர கடகத்தோடு இணைந்த பாகு மாலா வலம்பம் (கந்த மாலா வலம்பம்) என்ற தோளினின்று தொங்கும் அணியும், பூரிமமும் (தழை, குழை போன்ற அணியும்) காதில் மகரக் குண்டலம் (மீன் வடிவமான காதணியும்), திருமாலுக்கு வன மாலையும் (கழுத்தினின்று நுனிக்கால் வரை தொங்கும் அணிகலனும்) இடுப்பில் பட்டிகை, கழுத்தில் மாலைகள், மணிகள் பதித்த கங்கணங்கள், தலையணிகள், பட்டிகையில் உள்ள கிண்கிணி வளையங்கள், சுவரண தாடகம் என்ற காதணிகள், தலையின் உச்சியில் உள்ள சூடாமணி, நெற்றியில் அணியும் பால பட்டம், இருபத்தேழு மணிகள் கொண்ட உபக்கிரீவமான நட்சத்திர மாலை, பாதி அளவு தொங்கும் அர்த்த ஆரம், உபகண்டம் எனும் கழுத்தை யொட்டிய மாலை, கேயூரம் (தோள்வளை), மணி பந்தனம் (மணிகட்டின் அணி) அரைஞாண், நீவி (இடையில் அணியும் சலனம் என்ற அசைந்தாடும் முகப்புடன் கூடிய இடைப் பட்டிகையும்) மோதிரங்கள், பாதசரங்கள் முதலிய அணிகலன்களும் இடம் பெற வேண்டும்.3 சிரிசாரசுவதீய சித்திரகர்மசாத்திரம் : இந்நூலில் சோம கந்த சுகாசன மூர்த்தியின் இலக்கணம் கூறும் பொழுது அவரது இடது காதில் கர்ணி (தாமரை நடுவில் இருக்கும் காய் போன்ற வடிவமுள்ள தோடுபோன்ற நகை) அல்லது சங்கபத்திரம் (சங்கினா லான காதணி) வலது காதில் மகரக் குண்டலம் (சுறாமீன் வடிவமுள்ள குண்டலம்) கேசரி குண்டலம் (சிங்கக் குண்டலம்) வியாழக் குண்டலம் (பாம்பு போன்ற குண்டலம்) கூறப்பட்டுள்ளன. இடுப்பில் அரைஞாண் அல்லது கட்டுவார் இருக்க வேண்டும் என்றும் அரைஞாண் முகப்பில் சிங்கம் அல்லது யாளி போன்று அமைக்கப்படவேண்டும் என்றும் கூறப்படுகிறது. இஃதன்றி கேயூரம் (தோள்வளை), அங்கதம், வாகு வலயம் (தோளனி), கடகத்திரயம் (மூன்று வளையல்), முந்திரிகை (மோதிரம்), உதரபந்தம் (இடுப்பில் கட்டும் வார்) கூறப்பட்டுள்ளன. கேயூரம் தோள் மூலத்தில் அணியும் அணிகலன்; அங்கதம் தோள் மத்தியில் பூணும் அணிகலன். கடகத்திரயம், தோள்வளை, பிரகோஷ்டவளையம், மணிபந்த கடகம் ஆகியவைகளாகும். உதர பந்தம் வயிற்றில் இழுத்துக்கட்டும் வார். பத்திரம் இலைகளின் வடிவ முள்ள அணி; இது வாரில் தொங்கவிடப்படும். ஊருதாமம் - துடை யில் தொங்கவிடப்படும் கயிறு, அல்லது குஞ்சம்; பாதசாலம் - பாதசரம் ஆகும். கிரைவேயாம் - கழுத்திலிருந்து மார்புவரை தொங்கும் காசுமாலை, காரை, அட்டிகை போன்ற உள்கழுத்தணிகள். இரத்தின பந்த முபகீரிவம் - மணிகள் இழைத்த உள்கழுத்தணி முதலியவை இடம் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.4 சகளாதிகாரம் : சகளாதிகாரம் என்னும் நூலில் பெண்களின் அணிகலன்களைப் பற்றிக் கூறியிருப்பதாவது : தேவியின் காதில் மகரக்குண்டலமும் தோளில் சன்ன வீரமும் (குறுக்குமாலையும்) கழுத்தில் பலவிதமான மாலைகளும், புயத்தில் தோள்வளையும் திகழவேண்டும். தேவிக்குப் பாம்பு முகத்தோடு கூடிய அரைஞாணும் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. 5 சிரி சாரசுவதீய சித்திரகர்ம சாத்திரம் : சிரி சாரசு வதீய சித்திர கர்ம சாத்திரம் என்னும் நூல் சோமகந்த மூர்த்த வடிவில் இருக்கும் உமாதேவிக்குக் கல் இழைத்த ஓலை அல்லது பொன் ஓலையும் சல்லரி (ஒலிக்கும் வளை), அதவலயம் (கைவளை), பூரிமம் (தோளிற்கு மேலே அணியும் அணி), அங்குலியகம் (மோதிரம்) முதலிய அணிகள் அணியப் பெற வேண்டும் என்று கூறுகிறது. கொற்றவைக்கு (மகிசாசுரமர்த்தனிக்கு) கன்னதாமா வலம்பனம் - காதில் கயிறு போலத் தொங்கும் மாட்டி, சிமிக்கி, டோலக் போன்ற அணிகலன்கள் அணிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.6 குறிப்பு 1. சில்பரத்தினம் - கத். 11 பக். 245-271. சிரிகாசியபசில்பசாத்திரம் 56. பக். 212-215. 2. சகளாதிகாரம் (அகத்தியர்) பக். 64-65. 3. மானசாரம் பாகம் II அத் 50. பக். 34-40. 4. சிரிசாரசுவதீய சித்திரகர்மசாத்திரம் அத். 14 பக். 154-157. 5. சகளாதிகாரம் - (அகத்தியர்) பக். 67-68. 6. அ) சிரிசாரசுவதீய சித்திரகர்மசாத்திரம் அத். 14 பக். 153-155. ஆ) Indian Images Part I B. C. Battacharya M.A., F.R.S.S.G.S. இ) Elements of Hindu Iconography - Gopinatha Rao ஈ) Principles of Indian Silpa Sastra - Prof. Phanindra Nath Bose, M.A. (Lohore) 12. இலக்கியச் சான்றுகள் திராவிடர்கள் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணிகலன்கள் பலவற்றைச் செய்து அணியத் தொடங்கிவிட்டார் கள். அரப்பா நாகரிகத்தில் அரும்பிய பொன் அணிகளும், மணிகள் பதித்த கல் அணிகளும் நமக்கு நல்ல எடுத்துக்காட்டாய்த் திகழ் கின்றன. திராவிடர்களின் மூத்த - முதுபெரும் நாகரிகத்தைக் கண்ட முதுபெருங்குடி மக்களின் நாகரிகத்தை எடுத்துக் காட்ட ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுத்த அணிகளும், அங்குக் கண்ட பொம்மை களில் காணப்படும் அணிகலன்களும் அரிய எடுத்துக்காட்டுகளாய் அறிஞர்களால் மதிக்கப்படுகின்றன. ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை விளக்கிக் கூறும் எடுத்துக் காட்டுகள் போல், நமது இலக்கியங்களில் அணிகலன்களுக்குரிய எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன. 1. தொல்காப்பியம் தொல்காப்பியம் இன்று காணக்கிடக்கும் தமிழ் நூற்களில் பழமையானது. அதில் தமிழர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த அணிலன்களைப் பற்றிச் சில குறிப்புகள், உள்ளன. அதிகமான குறிப்புகள் இல்லாவிடினும் முக்கியமான ஒன்றிரண்டு குறிப்புகள் உள்ளன. அதாவது, காதொன்று களைதல் (தொல். பொருள் 1205) என்று ஒரு சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காதில் அணிந்த குழையை நீக்குதல் என்பதே பொருளாகும். எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் குழை அரும்பிவிட்டது. சிவபெரு மான் குழை அணிபவராதலின் அவருக்கு குழைக்காதர் என்ற பெயர் எழுந்தது என்று நாம் எல்லோரும் நன்கறிவோம். மற்றோர் சூத்திரத்தில் அணிந்தவை திருத்தல் - (தொல் - பொருள் - 1206) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் கண்ட உரையாசிரியர் கள் அணிந்திருக்கும் அணிகலன்களின் அலங்கோலத்தைச் சரிப் படுத்திக் கொள்ளுதல் என்றே பொருள் கூறியுள்ளனர். இஃதன்றி இன்னும், இழையணிந்து, இழையே - (தொல். பொருள். 1096, 1038) என்று மற்றீரிடத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அழகிய நல்ல வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட அணிகலன் என்று உரை கூறப்பெற்றுள்ளது. இலக்கண நூலாதலின் தொல்காப்பியத்தில் மிக விளக்கமாகப் பல அணிகலன்களின் பெயர்கள் காணப்படவில்லை. 2. சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் சேரநாட்டு இளவரசர் ஒருவரால் இயற்றப் பெற்றது. இந்த இளவரசர் இளங்கோ அடிகள் என்னும் துறவி; என்றாலும் அரசர், வணிகர் முதலியவர்களின் வாழ்க்கைச் சிறப்பை நன்கறிந்தவர். இது ஒரு நாடகக் காப்பியம் என்று மதிக்கப்படுகிறது. இது சமணச் சார்புடைய நூலாகும். அணிகலன்கள் சிலம்பு என்பது பெண்கள் காலில் அணியும் ஒரு அணிகல னாகும். தமிழ் அன்னைக்கு ஆசிரியர் சமர்ப்பிக்கும் ஒரு சிறந்த கால் அணிகலன் போன்று இப்பெரும் காப்பியத்தை எழுதியுள்ளார். தமிழ் நூலில் அதிகமான அணிகலன்களை எடுத்துக்காட்டுவது இந் நூல் ஒன்றேயாகும். மேலும் ஆசிரியர் அரசகுமாரராய் இருந்தமை யால் அரச குடும்பத்தார் அணியும் அணிகலன்களையெல்லாம் நன்கறிந்திருக்கிறார் என்று நன்கறிகிறோம். கண்ணகியின் காற்சிலம் பினுள் விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும், பாண்டியன் மனைவி யின் காற்சிலம்பினுள் விலை குறைந்த முத்துக்களும் போடப்பட் டிருந்ததே நல்ல எடுத்துக் காட்டாகும். காலம் இப்பெருங்காப்பியம் திட்டவட்டமாக கி.பி. 2ஆம் நூற்றாண் டில் அரும்பியது என்று அறிஞர் வி.ஆர். ஆர். தீட்சிதர் கூறுகின்றார். நூல் இந்நூலில் சோழநாடு, பாண்டியநாடு, சேர நாடு என்ற மூன்று தமிழ்நாடுகளும் பிணைக்கப்பட்டுள்ளன. சோழநாட்டின் வணிக வளர்ச்சியும் வணிகர்களின் வாழ்க்கை முறையும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. பாண்டிய நாட்டில் நியாயம் வழங்கும் முறையும், பாண்டியர்கள் நீதி பேணும் திறனும் நன்கு எடுத்துக்காட்டப்பட் டுள்ளன. சேர மன்னன் துறவியாய் இருந்தும் அந்நாட்டில் பத்தினித் தெய்வம் வைத்து வழிபட வேண்டிய அவசியமும் நன்கு எடுத்துக் காட்டப்படுகிறது. ஏன்? சிங்கள நாட்டில் கூட பத்தினித் தெய்வ வழிபாடு எழும் அவசியம் எடுத்துக்காட்டப்படுகிறது. மூன்று தமிழ்நாடுகளிலும், சைவம், சமணம், பௌத்தம் என்ற மூன்று சமயங் களும் இருந்தநிலை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சோழ நாட்டின் செல்வச் செருக்கும் அதனால் எழுந்த பரத்தையர் வாழ்வு, ஆடற்கலை, இசைக்கலை, அணிகலக்கலை முதலியவை எல்லாம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்நூல் சமண காப்பியம் என்றாலும் இதில் வணிகர் வாழ்வு, பரத்தையர் வாழ்வு நாட்டியம், இசை, அணிகலன் முதலியவை களைப் போற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மகளிர் உடலை அழகுபடுத்தும் கலை, நாட்டு மக்களின் நனி சிறந்த வாழ்க்கைநிலை எல்லாம் திறம்பட எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. சங்கம் மருவிய நூற்களில் பெரும் நூலோ, பழம் பெரும் காப்பியமோ நமக்குக் கிடைக்கவில்லை. எனவே சங்கக் காலத்திற்கு முந்திய அணிகலன்களைப் பற்றி அதிகமாக அறிய முடியவில்லை. என்றாலும் கடைச் சங்கக் காலத்தில் பாண்டியநாடு பொன்னும் மணியும் பெற்றுச் சிறந்து விளங்கியதாகத் தெரிகிறது. இராமாயணக் காலத்திலே - பாண்டியர்கள் தம் தலைநகராகிய கபாடபுரத்தி லிருந்து ஆட்சி செலுத்தி வந்தனர். தலைநகரின் கோட்டைவாயில் பொன்னும் மணியும் முத்தும் பதிக்கப் பெற்றிருந்தது என்று வான்மீகி வடமொழி இராமாயணத்தில் குறிப்பிடுவது நமது சங்கக் கால வாழ்விற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சிலப்பதிகாரமும் அணிகலன்களும் சிலப்பதிகாரத்தில் நம் அணிகலன்களைப் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது. மதிமுக மங்கை நல்லாள் மாமலர்க்கண்ணி மாதவி, இந்திர விழாவின் இறுதியில் தன் இல்லத்தை எய்தினாள். உடனே தன் மாந்தளிர் மேனியை மெருகிட்ட பொற்பாவை என்று எண்ணும்படி ஒப்பனை செய்து கொண்டு ஊடல் கொண்ட கோவலன் முன் வந்தாள். அவள் அழகினைக் கண்டு அவன் மகிழ்ந்தான். அவள் எவ்வாறு தன்னை அணி செய்வித்து எழிலோவியமாக - அற்புதமான பொற்பாவையாகக் காட்சி அளித்தாள் என்பதை இளங்கோவடிகள் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். அது அடியில் வருமாறு : மாதவி மணந்தரும் நெய்யை தலைமயிருக்கு ஊட்டி பத்துத் துவரினாலும் ஐந்து விரையினாலும் முப்பத்திரண்டு வகை ஓமாலிகையினாலும் ஊறிக் காய்ச்சப்பெற்ற நன்னீரிலே கார்மேகம் போன்று கறுத்துக் கவின்பெற நீண்டு வளர்ந்திருக்கும் கூந்தலைக் கழுவினாள். நறுமணம் நல்கும் புகையூட்டி ஈரம் உலர்த்தினாள். கூந்தலை அழகு பெற வாரிப் பின்னிக் கட்டினாள். வாசனைக் குழம்பை மெய்க்கு ஊட்டினாள்; கொங்கையில் செங்கையினால் தொய்யில் எழுதினாள். இடையில் பொற்சரிகை புனையப்பட்ட பட்டாடையைப் புனைந்தாள். செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய சிவந்த பாதங்களின் மெல்லிய விரல்களுக்கு மகரவாய் மோதிரம், பீலி, கால் விரல் மோதிரம் முதலிய கால்விரல் அணிகலன்களைப் பூட்டினாள். பின் தன் கால்களில் பாதசாலம், பாடகம், சிலம்பு (குடைச்சூல்) சதங்கை, கிண்கிணி, காறசரி ஆகியவைகளைப் பூட்டினாள். மெல்லிய இடை யில் அணிந்த நீலவண்ணப்பட்டாடை மீது முப்பத்து இரண்டு பருமுத்துக் கோவைகளாலான விரிசிகை என்னும் நுசுப்பணியை மாட்டினாள். மாணிக்கவளையுடன் நீங்காமல் பொற்றொடரால் பிணைத்த முத்துவளையைத் தோளில் பூண்டு முகப்பில் கட்டிய மாணிக்கத்தோடு பத்திகளில் வைரங்கள் அழுத்தப்பெற்ற ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த சூடகம், செம்பொன்வளை நவரத்தின வளை சங்குவளை, பவளவளை என்னும் முன் கைவளைகளை பொருத்தமுறப் பூட்டினாள். வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் (நெளிவு), செங்கேழ் கிளர்மணி மோதிரம் (மாணிக்க மணிமோதிரம்) வைரமரகத் தாள்செறி மோதிரம் (வைரம் சூழ்ந்த மரகதம் பதிக்க மோதிரம் ஆகிய கைவிரல் அணிகளை காந்தள் மலர் போல் நீண்டு சிவந்த அழகிய விரல்கள் மறையும்படி பூண்டாள். வீரச்சங்கிலி, நேர்ஞ்சங்கிலி, ஞாண், சரப்பளி முத்துமாலை, பின்றாலி முதலிய கழுத்தணிகளைக் கவினுறக் கழுத்தில் அணிந்து கொண் டாள். இந்திர நீலத்திடையே எழிலுறப் பதித்த வைரத்தாலான நீலக் குதம்பை, சந்திரபாணி முதலிய காதணிகளை, காதில் அணிந்தாள். சீதேவி வலம்புரி, தொய்யகம், புல்லகம், சூளாமணி, பொன்னரி மாலை கோதை முதலிய தலையணிகளை அழகிய கூந்தலில் பொருத்தினாள். தொடையில் குறங்குச்செறி எனும் அணிகலனைப் பூட்டினாள். இவ்வாறு மாதவி தான் கற்ற எழிற்கலையின் இலக்கணம் எள்ளளவும் வழுவாது அணிகலன் அனைத்தையும் அணிந்து ஆடையைப் புனைந்து அழகு செய்து கொண்டாள். ஊடல் கொண்ட கோவலன் உள்ளத்தில் உவகை ஊட்டி இன்ப மூட்டிப் பள்ளியறை யில் பாங்குடன் இருந்தாள்.2 இஃதன்றி மற்றோர் இடத்தும் மாதவி எனும் பூங்கொடி முல்லையும் மல்லிகையும் ஒழிந்த தாளிக் குவளை முதலிய பல பூக்கள் விரித்த தன் பள்ளியறையில் அழகிய அல்குல் தன்னிடத்தில் துயில் செய்யப்பட்டு அதன்மீது பவளக் கோவைகளால் அணி செய்யும் மேகலையை அணிந்தாள் என்று கூறப்பட்டுள்ளது.3 வேனிற் காதையில் கோவலன் கடற்கரையினின்று கோபத் தோடு போய்விட்டதால் மாதவி தன் வீடு போந்து ஏழாவது மாடி யின் நிலாமுற்றத்தில் சந்தனமும் இளவேனிற் காலத்திற்குப் பொருத்தமான வெண்முத்தாரத்தையும் பூண்டாள் என்று கூறப் படுகிறது.4 சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையில் கண்ணகியின் சிலம்பும் பாண்டிமாதேவியின் சிலம்பும் எடுத்துக் காட்டப்பட் டுள்ளன. கண்ணகியின் சிலம்பினுள் மாணிக்க மணிகளும் (மாணிக்கப்பரல்களும்) கோப்பெருந்தேவியின் கால்சிலம்பினுள் முத்துக்களும் போடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. சிலம்பினுள் முத்துப் பரல்களோ அல்லது மாணிக்கப் பரல்களோ போடுவது நடக்கும்பொழுது அவை கணீர் ! கணீர்! என்ற இன்னொலியைக் கிளம்புவதற்கேயாம். மாணிக்க மணி ஓர்விதமான இன்னொலியை யும் முத்துக்கள் வேறுவிதமான இன்னொலியையும் கிளப்பும்.5 கழுத்தில் தாலியும்6 மங்கல அணியும் (தாலி) இடம் பெற்றுள்ளது.7 3. மணிமேகலை இது ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரத்திற்கு அடுத்த படியாக மதிக்கப்படும் அரிய நூல். மதுரைக் கூலவணிகன் சாத்தனார் எழுதியது. பௌத்த சமயச் சார்புடையது. இது கி.பி. 2ஆம் நுற் றாண்டின் இறுதியில் எழுதப்பெற்றது என்பர். இதில் அணி கலன்கள் சிலப்பதிகாரம் போல் அதிகம் காணப்படாவிடினும் ஒருசில முக்கிய அணிகலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் கையில் கடகம்8 காப்பு முதலியவைகளும், சிறைக்கோட்டம் அறக் கோட்ட மாக்கிய காதையில் கையில் கொடியும் அணிந்தது குறிப்பிடப் பட்டுள்ளது.9 கச்சிநகர் புக்ககாதையில் உருக்குத் தட்டாரும், பொற் பணிகள் செய்வோரும் பிறரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.10 மலர் வனம் புகுந்த காதையில் சங்கினாற் செய்த காதணிகள் காட்டப்பட் டுள்ளன. இன்னும் பொற்றோடும்,11 விழாவறை காதையில் முத்து மாலையும் குறிப்பிடப்பட்டுள்ளன.12 அன்றி ஐம்படைத் தாலியும் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவி அணிந்த அணிகலன்கள் அனைத்தும் காட்டப்பட்டிருப்பது போல் மணிமேகலையில் கதைப்போக்கு அவள் ஆடம்பரமான அணிகலன்களை அணிந்தாள் என்பதைக் காட்டுவதற்கு ஏற்றதாக இல்லை. மேலும் ஆசிரியர் கூலவணிகன் சாத்தனாரும் தமது காப்பியம் தமிழ் அன்னைக்கு ஒரு அணிகலனாக விளங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இதனை மேகலை என்னும் பெயரில் இயற்றியது தமிழ் மக்களுக்குக் கலையின் மீதுள்ள ஆர்வத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. 4. சீவகசிந்தாமணி சீவகசிந்தாமணி ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. காப்பிய நூற்களில் முதலில் சிலப்பதிகாரமும், இரண்டாவது மணிமேகலை யும், மூன்றாவது சீவகசிந்தாமணியும் பிறந்தன. இது நந்தாப் பெருமை வாய்ந்த சிந்தாமணி என்று புலவர்களால் போற்றப்பெறும் நூல். இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர். இவர் அரச மரபினர். கி.பி. 1200ஆம் ஆண்டிற்கு முன் வாழ்ந்தவராக மதிக்கப்படுகிறார். பண்டைய புலவர்கள் தமிழ் அன்னைக்கு ஆறு உயர்ந்த அணிகளை சமர்ப்பித்துள்ளனர். அவைகளில் இது மூன்றாவதாக வைத்து எண்ணப்பெறும். ஆறு அணிகலன்கள் முறையே சிலம்பு, மேகலை, சிந்தாமணி, வளை, குண்டலம், செங்கோல் எனும் ஆறாகும். இவ்வாறு அணிகளையும் புலவர்கள் ஆறு நூலாக ஆக்கித் தமிழ் அன்னையிடம் சமர்ப்பித்துள்ளனர். அதனை ஒரு பிற்காலப் புலவர். காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் கருணை மார்பில் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடிசூ டாமணியும் பொலியச்சூட்டி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க. என்று கூறியிருப்பது ஐம்பெருங்காப்பியத்தின் பெருமையை எடுத்துக் காட்டுகிறது. தமிழன்னைக்கு அணிகலன்கள் மீதுள்ள ஆர்வம் புலனாகிறது. தமிழ்ப் புலவர்கள் அன்னையை மகிழ்விக்க அணி செய்து பூட்டி வணங்கும் மரபு இதனால் வெளியாகிறது. சிந்தாமணியில் சச்சந்தன் மனைவி விசையை கணவன் காடேறியதை அறிந்து பொன்னணிகளைக் கழற்றினாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரைகண்ட உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பொன்னரிமாலையை13யையும் நெற்றி மாலையை யும் தலைக்கோலமாகிய முத்தும் புலம்பம் முதலியவைகளைக் குழலி னின்று அகற்றினாள் என்று கூறியுள்ளார். தோளின் முத்தைத் துறந்து வளையை உடைத்து விரலாழியை விலக்கினாள் என்று ஆசிரியர் மற்றொரு பாட்டில் கூறியுள்ளார். இந்நூலில் கேமசரியாரிலம் பகத்தில் ஆசிரியர் கேமசரி குண்டலம் அசைந்து ஒளிவீச இடையில் துகிலினுள்ளே மேகலை ஒளிர்ந்தது என்று எடுத்துக் காட்டுகிறார்.14 கந்தருவத்தையார் இலம்பகத்தில் கந்தருவத்தைக்கு அவள் தந்தை அரிய மணிகள் பதித்த அழகிய அணிகலன்கள் வைப்பதற்கு வைர மணிகள் இழைத்துச் செய்த வண்ணப் பெட்டிகள் ஐநூறும் பொன்னும்மணியும் ஆர்ந்த யவனநாட்டில் செய்த பெட்டிகள் இரண்டாயிரமும் அளித்தான் என்று கூறப்பட்டுள்ளது.15 இலக்கணை யாரிலம்பகத்தில் கிண்கிணி உடை (மேகலை) பொற்சிலம்பு ஆகிய அணிகலன்களும்16 மற்றோரிடத்தில் பொற்றோடு கடிப்பு (அ) குழை, (ஆ) சுறவுக்குழை முதலிய அணிகளும் கூறப்பெற்றுள்ளன. மேலும் பலவிடங்களில் நுதல் பட்டம்17 மகரமீன் முத்தை உமிழ்வது போன்று செய்யப் பெற்ற தோளணி18 மங்கையர் கொங்கை மீது மற்றொரு அணியும் இலைவடிவாகிய பூண் என்னும் அணியும் முன் கையில் ஒரு அணியும் மணிக்கடகம் இலைக் கடகம் போன்ற அணி கலன்களும்19 தலையணியாகிய முத்துத்தாமமும்20, நுதல் அணி யாகிய இலம்பகமும்21, காதணிகளாகிய மகர குண்டலம், தோடு, குழை, பொற்றோடு, மருப்பினாலாயதோடு, குண்டலம், கடிப்பு முதலியவைகளைப் பெண்களும் ஆண்களும் அணிந்து வந்தனர்.22 தோளில் சலாகை என்னும் தோள் அணியும்23 ஏனாதி போன்ற மோதிரங்களும்24 பொற்றோரை என்னும் இடையணியும், குறங்குச் செறி என்னும் தொடையணியும், காலில் அணியும் கழல்கள் ஆகியவைகளும் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. சிந்தாமணி, சிலப்பதிகார காலத்திற்கு 800 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட நூல். இதில் சிலப்பதிகார அணிகளையன்றி பிற அணிகள் காணப்படவில்லை. அதனால் இக்காலத்தில் புதிய அணிகள் தோன்றவில்லை என்று தெரிகிறது. சிந்தாமணி எழும் காலத்தில் தமிழர்கள் யவனர்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். அவர் களிடமிருந்து அணிகள் வைக்கும் மணிகள் பதித்த பெட்டிகள் பல வாங்கினர் என்று தெரிகிறது. பெட்டிகளின் மதிப்பும், எண்ணிக்கை யும் பார்க்கும்பொழுது அக்காலத்தில் அதிகமான அணிகலன்கள் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்நூலில் தொய்யகம் (பூரப்பாளை), இலம்பகம், பட்டம், மகரக்குண்டலம், தோடு (பொற்றோடு), மருப்பினால் செய்ததோடு, குழை, சுறவுக்குழை, வளைந்த குழை, செம்பொன்னோலை, செந் நிறக்குழை, கடிப்பு, சலாகை, குறங்குச் செறி, அரைஞாண், ஏனாதி மோதிரம், சடகம், கடிப்பு, கழல், காஞ்சி, சிலம்பு, சூட்டு, சூடகம், சூளாமணி, தலைப்பாளை, தொடி, தோள்வளை, நெற்றிப்பட்டம், பரியகம், பவளமாலை, பிறை, பூண், பொற்கண்ணி, பொற்றோரை, பொன்ஞாண், பொன்னரி மாலை, பொன்னிரைத் தாலி, பொன் னோடை, மகரக்குண்டலம், மஞ்சிகை, மணி மோதிரம், மணிவடம், முத்துமாலை, மேகலை, மோதிரம், வளை போன்ற பல அணி கலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிந்தாமணி சிலப்பதிகாரத்திற்குப் பிந்திய காலத்தில் பிறந்த இலக்கியம். இதில் பிற்கால அணிகலங்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. மணிமேகலையைவிட அதிகமான அணிகலன்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 5. திருமுருகாற்றுப்படை திருமுருகாற்றுப்படை கடைச்சங்க நூற்களில் ஒன்று. பத்துப் பாட்டில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது. இது முருகக் கடவுள் மீது பாடப்பெற்ற ஒரு அரிய நூல். இதனைப் பாடியவர் சங்கக் காலப் பெரும்புலவர் நக்கீரர். இந்நூல் கி.பி. இரண்டாம் நூற் றாண்டில் அல்லது அதற்குச் சிறிது முன்பின் பாடப்பெற்றிருக்க வேண்டும் என் எண்ணப்படுகிறது. இந்நூலில் மக்களின் ஆடை, அணிகலன் ஆகியவைகளும் முருகன் ஆடும் வேலன் அல்லது படிமத்தான் என்ற குறிஞ்சித் தெய்வத்தின் தோற்றமும் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி நிலக் குன்றக் கடவுளை, குறமகளிர் எடுத்த விழாக் கொண்டாடும் முறையும் முருகனை ஏத்தி வழிபடும் நெறியும் அந்நெறியால் வழிபாட்டால் பெறும் பேறும் விவரமாக விளக்கப்பட்டுள்ளன. குறமகளிர் தலைமயிரைக் கோதி எண்ணெய் தடவி அதன் மீது வெட்சிப்பூக்களை, விடுபூவாகத் தூவி அதற்கு நடுவே குவளைப் பூவின் வெள்ளிதழ்களைக் கிள்ளிவிட்டு அப்பால் தலையின்மீது அணிகலன்களைச் சூடுவர். தலையில் மகரவடிவான நெற்றிச் சுட்டியும், சீதேவி, வலம்புரிச் சங்கு போன்ற அணிகலன்களையும் அணிந்து முற்ற முடிந்த கொண்டையில் பெரிய செண்முகப் பூவைச் செருகி மேலே மருதம் பூவையிட்டுக் கழுத்திலே கழுமலப் பூவை மாலையாகக் கட்டி அணிந்து காதுகளில் பிண்டித் தளிர்களை மாட்டி மார்பில் அழகிய அணிகலன்களை அணிந்து சந்தனம் பூசி அதன் ஈரம் உலருமுன் வேங்கைப் பூவின் தாதினைப் பரப்பி விளா மரத்தின் தளிரை ஒருவர் மீது ஒருவர் தெறித்துக் கொள்வர் என இந் நூலில் கூறப்பட்டுள்ளது.29 இஃதன்றி காஞ்சி30 மேகலை சதங்கை (கிண்கிணி)31 வீர கண்டை32 முடி (மகுடம்)33, பொன்மகரக் குண்டலம்34, பொன்னரி மாலை35, நெற்றிப்பட்டம், வீரமணி, வீரகண்டை, தொடி (வாகு வலயம்)36 கழல், குழை, பொன் அணி, மாற்றுயர்ந்த மணிகள் போன்ற அணிகலன்களும் கூறப்பெற்றுள்ளன. 6. பொருநர் ஆற்றுப்படை பொருநராற்றுப்படை பத்துப்பாட்டில் இரண்டாவது வைத்து எண்ணப்படும் அரிய நூலாகும். இது கடைச் சங்கப்பாட்டு களில் ஒன்று. சோழப் பேரரசன் கரிகாற்சோழனை முடத்தாமக் கண்ணியார் என்பவர் புகழ்ந்து பாடிய நூல். இது 248 அடிகளை யுடையது. இந்நூலில் காதணியாகிய குழை37 பல்வேறு முத்து வடங்கள், மணி மாலைகள், இடையில் இலங்கும் நுசுப் பணிகள், கழுத்தில் இலங்கும் பொன்னரிமாலைகள்38 முதலியவை குறிப்பிடப்பட் டுள்ளன. அதன்றியும் மக்கள் தலையிலும் காதிலும் கழுத்திலும் கையிலும் இடுப்பிலும் கால்களிலும் அணியும் பொன் அணிகளும் பவள மாலைகளும் முத்து வடங்களும் பிற மணிகள் பதித்து ஒளிவிடும் பொன்மணி அணிகளும் இலைகள் போன்றும் குலைகள் போன்றும் குழைகள் போன்றும் மலர்கள் போன்றும் மீன்கள் போன்றும் பாம்புகள் போன்றும் நண்டுகள் போன்றும் செய்யப் பெற்ற அழகிய அணிகலன்களும் வளைகளும் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. 7. பெரும்பாணாற்றுப்படை இந்நூல் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், தொண்டை மான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடியது. இது பத்துப்பாட்டில் 4-வதாக இடம் பெற்றுள்ளது. 500 அடிகளையுடையது. இந்நூலில், உணவு நிறைந்த நல்ல வீடுகளிலே வளைந்த பொன் அணிகளைப் பூண்ட மகளிர் வாழ்கின்றனர். அவர்கள் முத்துவடம் பூண்ட தம் இடையிலே மிக நுண்மையான துகிலை அணிந்திருந் தனர். அத்துகில் கொன்றை மலர் மலர்ந்த மெல்லிய கொம்பிலே பனித்துளி தவழ்வது போல் அசைகின்றது. மகளிர் மலையிலே களி கொண்டு கலாபம் விரித்தாடும் பொன்மயிலைப் போல் காணப்படு கின்றனர். அவர்களுடைய கால்களிலே பொற் சிலம்புகள் ஒலிக் கின்றன. அவர்கள் உயர்ந்த மாளிகையிலே பந்தாடி இளைத்தனர். முத்துப் போன்ற வெண்மணல் பரப்பிய இடத்திலே கையில் புனைந்த சிறிய வளைகள் ஒலிக்கும்படி கழங்குகளை ஏந்தி ஆடுகின்றனர் என்று பட்டினத்தின் பெருமை எடுத்துக்காட்டப் படுகிறது.39 காது களில் குழைகள் ஊசலாடியதாகக் கூறப்படுகிறது.40 எனவே அன்று தமிழர்கள் வாழ்ந்த நகர் பல அடுக்குகளை யுடைய மாடி வீடு நிறைந்த பட்டினம். பொன் கழங்குகள் வைத்து ஆடும் அளவில் செல்வப் பெருக்குடையது என்றெல்லாம் தெரிகிறது. 8. மதுரைக்காஞ்சி மதுரைக்காஞ்சி கடைச் சங்க நூற்களில் ஒன்று. பத்துப்பாட்டு என்னும் நூற்றொகுதியில் ஆறாவதாக அமைக்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் இதுவே கூடுதலான அடிகளை (782) உடையது. இதன் ஆசிரியர் மாங்குடி மருதனார். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவன். நூலின் அடக்கம் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்களுக்கு முன் தமிழகப் பண்பும், மதுரை மாமன்னன் மாண்பும் மக்களின் அறிவு, ஆற்றல், ஆக்கம், ஆடை, அணிகலன் முதலியவைகள் பலவும் அழகாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இந்நூல் போர் புரிவதில் ஒப்புயர்வற்றவனாகத் திகழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஆற்றிய போரைப் புகழ்ந்து பாடுவதால் இங்கு அவனுடைய அல்லது அரசி யுடைய அல்லது மக்களுடைய அணிகலன்களின் சிறப்புக் கூறப் படவில்லை. என்றாலும் ஓரளவு அக்கால மகளிர் அணிந்த தலை யணிகள்41 மார்பணிகள்42 சிலம்புகள் எடுத்துக்காட்டப் பெற் றுள்ளன. பொற்றாமரைப் பூவைப் பூண்டு நன்மை நல்கும் நானாவித நகைகளை அள்ளிக் கொடுக்கும் அரசனே! குட்ட நாட்டினர் பலரையும் வென்று நிற்கும் கோவே என்று இப்பாட்டு அரசன் அணிந்துள்ள வளைகளையும்43 மாலைகளையும் சிறப்பித்துக் கூறுகிறது. இஃதன்றிப் பல பேரணிகலன்களையும் 44, பொன்னால் செய்த தும்பைப் பூக்களைப் போர்மறவர்களுக்குப் பாண்டியன் வழங்கிய பெற்றியையும்45 மகரக் குழையையும் வீரக்கழல்களையும் எடுத்துக் காட்டுகிறது.46, 47. 9. நெடுநல் வாடை இது பத்துப் பாட்டினுள் 7வது இடத்தைப் பெற்றுள்ள தாகும். மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து பாடியது. இந்நூலில் நீண்ட மகரக்குழை தாங்கி நின்ற காதுகளும் சிறிய இடத்தையுடைய தாளுருவி அழுத்திய காதுகளும் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன.48 ஓரிடத்து மகளிர் இன்றும் அணிந்துவரும் நெளிவு என்னும் முடக்கு மோதிரமும்49, வலம்புரிவளை50 நெடிய தாலி நாண், கடுக்கன், கழுத்தணிகள், கால்விரல் அணிகள் போன்றவை குறிப்பிடப் பட்டுள்ளன. மற்றோரிடத்துப் பனித்துளி என ஒளி சிறந்த மணிகள் ஒளிரும் மேகலையை அழகிய இளமங்கையர் தம் நுண்ணிய இடையில் அணிந்திருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. 10. பட்டினப்பாலை பட்டினப்பாலை பத்துப்பாட்டில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது. பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இவர் கரிகாற்சோழன் மீது 301 அடிகள் கொண்ட பட்டினப்பாலை என்னும் சிறந்த பாமாலையைச் சூட்டியுள்ளார். இந்நூலில் வீரக்கழல் 51, 52 சிறுவர்கள் அணிந்த தொடி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இஃதன்றி செல்வமிக்க இல்லங்களிலே அகன்ற முன்றில், ஒளி நுதலும் மடநோக்கும் பொருந்திய அரம்மை யன்ன அழகிய அணங்குகள் அணிகலன்கள் அணிந்து நெல்லைத் தின்ன வரும் கோழிகளை வெருட்டதற்கு எறிந்த மகரக்குழை (மகரமீன் வடிவாய்ச் செய்யப்பட்ட காதணிகள்) குறிப்பிடப்பட் டுள்ளன.53 பவளம், முத்து (கொற்கை முத்து) மரகதமணி, பொற்கால் புதல்வர், பொற்றொடி சாம்பூநதம் போன்ற பதங்கள் பல காணக் கிடக்கின்றன. 11. மலைபடுகடாம் மலைபடுகடாம் என்னும் கூத்தர் ஆற்றுப்படை, பாட்டுத் தொகுதியில் பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதனைப் பாடிய புலவர் கௌசிகனார் ஆகும். பாடல் பெற்றவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் மகன் நன்னன் ஆவான். பரிசு வேண்டில் நன்னன்பால் செல்ல, கூத்தரை தூண்டியதனால் இதற்குக் கூத்தராற்றுப்படை என்னும் பெயர் வந்தது. இந்நூலில் அதிகமான அணிகலன்கள் குறிக்கப்படவில்லை. எனினும் பேரணிகலன்கள் மணி, பொன்வளை பொற்றாமரைப்பூ போன்ற ஒரு சில அணிகலன்களின் பெயர்களும் வளை, பொன்மணி போன்ற பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவன் மலைநாடுடைய தலைவனானதால் இங்கு அதிகமான அணிகலன்கள் குறிக்கப்படவில்லை என்று கருதுகின்றேன்.53 12. பரிபாடல் பரிபாடல் எட்டுத் தொகைகளில் ஒன்று. இது கடைச்சங்க நூல். எழுபது பாடல்களில் கால வெள்ளத்தால் அழிந்தது போக எஞ்சியுள்ளன 22 பாடல்களாகும். இவை நல்லந்துவனார், நல்வழுதி யார் நல்லெழிநியார், நல்லழிசியார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், கீரந்தையார், கடுவன் இளவெயினனார், குன்றம் பூதனார் போன்ற பல புலவர்கள் பாடிய பாடல் தொகுப்பேயாகும். மேலும் இந்நூல் திருமால், முருகவேள், காடுகிழாள், வைகை, மதுரை முதலிய தெய்வங்களின் பெயரும் ஆறு, நகர்ப் போன்றவைகளின் பெருமை யும் கூறப்பெற்றுள்ளன. இது அகச்சுவைப் பொருளைப் பற்றியே பெரிதும் கூறும் நூல். என்றாலும் ஆங்காங்கே அணிகலன்களைப் பற்றிய குறிப்பு களும் காணப் படுகின்றன. இந்நூலில் மகளிர் தம் தலையில் தலைக்கோலம் என்ற அணி கலன்களை அழகுற அணிந்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வளை, ஆழி, வாகுவலயம், மேகலை, காஞ்சி, தொய்யகம் போன்ற அணிகலன்களின் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. தலைக்கோலத்தில் பல்வேறு அணிகள் குறிப்பிடப்பட் டிருப்பதுடன் சிறார்க்கணியும் முஞ்சகம் என்னும் தலையணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.54 மகரமீன் வடிவில் செய்யப் பெற்ற நுதலணி55, காதில் பூணும் குழைகள், குண்டலங்கள், கடிப்பு56, பவளவளை57, மேகலை, காஞ்சி ஆகிய இடையணிகள், கைவளை, மோதிரம், தொய்யகம், வாகுவலயம் முதலிய அணிகளும் மேலாடையை இறுகப் பிணிக்கும் மேகலையும் குறிப்பிடப்பட்டுள்ளன. தோளில் தோள்வளையும் தொடியும் பூண்டிருந்தனர். தோள் அணிகலனாகத் தொடி குறிப்பிடப்படுகிறது. இளம் மங்கைக்கு இன்ப உணர்ச்சி பொங்கி எழுகிறது. அவளது தோள் பூரித்துத் தொடியை அழுந்தப் பண்ணுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கைகளில் அணியும் அணிகலன்களாக விளங்கும் பலவகைக் கடகம், வளைகாப்பு, கொலுசு கூறப்பட்டுள்ளன. கைவிரல்களில் பூணும் மணிகள் பதித்த மோதிரங்களும் இடுப்பின் புறத்தே அணியும் எட்டு வடங்களையுடைய காஞ்சி என்ற நுசுப்பணி, பவளமணிகள் கோத்த ஏழு வடங்களையுடைய மேகலை என்னும் நுசுப்பணியும் பூண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. நீராடும் பொழுது மகளிர் மேகலையை ஆடையின் மீது இறுகப் பிணித்துக் கொள்வது உண்டென்றும் தெரிகிறது. அழகிய பூங்கொடிகள் ஓடைப்பொன் னால் செய்யப்பெற்ற சிலம்பின் பரல்களுள் முத்துக்கள் போட்டுச் செய்யப்பெற்றிருந்தன. இது நித்தில வரிச்சிலம்பு எனப்படும். மேலும் காதிலும் குவளை குண்டலம், கடிப்பு, ஓலை என்னும் பலவகைக் காதணிகள் அணிந்திருந்ததாகத் தெரிகிறது. இப்பரிபாடல் மூலம் பாண்டிய நாட்டுப் பாவை நல்லார் கிறித்தவ ஊழி அரும்புமுன்னரே எண்ணிலா வகைப்பட்ட பொன் அணிகளையும் மணிகள் பதிக்கப் பெற்ற அணிகளையும் பேரணி களையும் சிற்றணிகளையும் அணிந்து இன்பமுடன் வாழ்ந்தார்கள் என்று அறிகிறோம். 13. கலித்தொகை கலித்தொகை, கற்றார் ஏத்தும் கலி என்று சிறப்பித்துக் கூறப்படும் தொகை நூல். கடைச்சங்கக் காலத்தின் இறுதியில் தமிழக மகளிர் அதிக மான பொன் அணிகலன்களைப் பூண்டிருந்தனர் என்பதற்கு இந் நூல் நல்ல சான்றாக உள்ளது. மன்னர்களும் வணிகர்களும் நிலக் கிழாரும் வீரரும் பல அணிகலன்களைப் பூண்டுவந்துள்ளனர் என்று இந்நூலின் மூலம் நன்கறிகின்றோம். காலில் பொன்னால் செய்யப்பெற்ற வாய்பிளந்த பொற் சதங்கையும் அரையில் பொன்மணிகளையுடைய வடமும் அதன் மேல் பவளவடமும் கையில் நண்டின்கண் போல் அரும்பு வேலைகள் செய்த கோற்றொழில் அவிர்கின்ற தொடியும், இடையில், வெட்டாத வாளும் மழுவும் தொங்கவிடப்பட்ட இடத்தையுடைய பூணும், மார்பில் கருமுத்து மணியும் சேர்ந்த முத்துவடமும் அதன் மேல் நீல மணிகளால் செய்யப் பெற்ற கண்டார் மருளும் மணிமாலைகளும் வேறு பல அணிகலன்களும் அணிபெற அணிந்திருந்தார்கள் என்று தெரிகிறது. பலவிதப் பொன்னணி60 தலையணி61 சிறார் அணியும் பிறை62, வயந்தகம்63, தோளணி - பதக்கம் சிறுவர் அணிகளும்64, வாகு வலயம் காதணி - குண்டலம், கையணி - கங்கணம் பிறவளைகளும்65 மோதிரங் களும்66 கிண்கிணியும்67 வீரவளை, அரையணி - அரைஞாண, கால அணி - வீரக்கழல் வீரக்கண்டை, கால்விரல் அணி முதலிய பலவித அணிகலன்களும் பூண்டிருந்ததாக இந்நூலினின்று அறியலாம். ஒவ்வொரு உறுப்பிலும் அணிகள் பல்வேறு விதங்களாய் இருந்தன. எடுத்துக்காட்டாக காதணியில் மகரக் குண்டலம் சர்ப்பக் குண்டலம், தோடு, ஓலை என்றும் கழுத்தணியில் காரை, மாலை, வடம் போன்ற பலவித அணிகலன்களும் இருந்தன என்று கலித் தொகையில் காண்கின்றோம்.68 14. நற்றிணை நற்றிணை, கடைச் சங்கக் காலத்து எட்டுத்தொகை நூல் களான புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித் தொகை, பரிபாடல், அகநானூறு, குறுந்தொகை ஆகியவற்றோடு சேர்த்து எண்ணப்படுவது. நற்றிணையிலும் தமிழ் மக்கள் அணிந்த அணிகலன்களின் சில பெயர்கள் காணக் கிடக்கின்றன. தலைக்கோலத்தில் ஒன்றான சுரிதம் குறிப்பிடப்படுகிறது. இது பொன்னால் ஆகிய திருகுப்பூப் போன்றது. இவ்வணி சுரிதகம் எனப்படும்.69 காதுகளில் அணியப்படும் பல்வேறு வகையான குழைகளில் கனங்குழையும் இங்குக் காணப்படுகிறது.70 இஃதன்றி சிமிக்கி போன்று குழையில் ஊசல் கொளுவப்பட்ட ஒண் குழையும் காணப் படுகிறது.71 வீரத்தின் அறிகுறியாக வீர மறவர்கள் அணியும் தோள் தொடியாகிய கோல்கொடியும் காணப்படுகிறது.72 கைகளில் சங்கு வளையல்களும்73 பிற வளைகளும்74 மகளிர் தம் மெல்லிய விரல் களில் மோசை என்னும் மோதிரமும்75 அணிந்து வந்தனர். மகளிர் புதல்வர்க்கு மணிகள் கோத்த குரும்பை போன்ற கிண்கிணி என்னும் கால் அணியை இட்டு அழகு பார்த்ததும் அறியக் கிடக்கின்றது. 76 15. அகநானூறு அகச்சுவைப் பொருளைப் பற்றி சங்கப் புலவர்கள் பாடிய செய்யுள்களில் அகவற்பாக்களால் ஆனவைகளைப் பிரித்தெடுத்துப் பன்னிரண்டு அடிகளுக்கு மேற்பட்ட பாக்களை நெடுந்தொகை என்ற பெயரால் தொகுத்தனர். இதுவே அகநானூறு எனப்படும். இந்நூலில் சில இடங்களில் அணிகலன்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சிலம்பு76, வீரவளை, வீரக்கழல்77, பொன்வளை, சங்குவளை, கிண்கிணி (சதங்கை)78, குடச்சூல் (ஒரு வகைச் சிலம்பு)79, செஞ்சூட்டுக்குழை, கோற்றாடி (அழகிய வளை), கோல்வளை80, சுழல்கொடி81, பொலந்தார் (பொன்னரி மாலை), பொலங்கலம் (பொன்னணி), மணிசெய்மண்டை (மணிகள் இழைத்த பொற்கலன்) போன்ற அணிகலன்கள் பல கூறப் பெற்றுள்ளன.82. சங்கக் காலத்திலே தமிழகத்தில் பொன்னும் மணிகளும் அணிகளும் பொற்கட்டிலும் பொன் வட்டிலும் பிறவும் ஏராளமாக இருந்துவந்தன என்பதற்கு இந்நூல் நல்ல எடுத்துக்காட்டுத் தருகின்றது. 16. புறநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். இந்நூல் தொல்காப் பியத்திற்கு முன்தோன்றிய செய்யுட்களையும், பின்னர் தோன்றிய செய்யுட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தமிழர் நாகரிகத்தையுணர்த்தும் பெரும் நூலாகும். தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன் கையில் வளைகளை அணிந்திருந்தனர் என்று தெரிகிறது.83 வேந்தர்கள் காலில் வீரக்கழல் அணிந்திருந்தனர் என்று கூறப்பட் டுள்ளது.84 மகளிர் இடையில் பொன்னால் செய்யப்பட்ட பல காசுகள் கோத்த மேகலையும்85 தலையில் பொன்னாற் செய்யப் பெற்ற கண்ணியும் பூண்டிருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வளைந்த குழைகளை மங்கையர் காதிற் பூட்டியிருந்தனர் என்பது நன்கறியக் கிடக்கின்றது.86 நாஞ்சில் மலைத்தலைவன் ஒருவன் முத்து வடங்களைப் பூண்டிருந்ததோடு பொன்மாலையும், பொற்பூவும் சூடியிருந்தான் என்றும் அறிகின்றோம்.87, 88 இஃதன்றிப் பல விடங் களில் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் பூண் முதலியவை களைப் பூண்டிருந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. சில மன்னர்கள் அல்லது வீரர்கள் அணிந்த அணிகலன்கள், அவர்கள் பரிசாக அளித்த அணிகலன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 17. பெருங்கதை பெருங்கதை பிற்காலத்தில் எழுந்தது. என்றாலும் சங்க நூல் போல் போற்றப் பெறுவது. இது கொங்குவேளிர் என்ற புலவரால் இயற்றப் பெற்றது. இவ்வாசிரியர் சமண சமயத்தவர் என்று கூறப்படு கிறது. இந்நூலில் பதுமாவதி மணக்கோலம் பூண்டாள் என்பதை ஆசிரியர் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். அவள் வைரமணி களால் செய்யப் பெற்ற யவன நாட்டு அணிகலப் பேழையில்89 அழகிய பொன்கொடி, களிகை என்னும் கழுத்தணி, பொன்னாற் செய்த பொட்டு, பொன்பட்டம், பொன்னோலை (காதணி) ஐவகை வண்ணம் ஒளிருமாறு செய்த மணிகள் பதித்த மேகலை (இடை யணி)90, பொன்வளை, பொற்கடகம், சூடகம், பாடகம், நூபுரம் முதலிய அணிகலன்களை எழிலுறப் பூண்டாள் என்று எடுத்துக் காட்டப்படுகிறது.91 உதயணன், காதலியின் பிரிவாற்றாமையினால் உயிர் துறக்க எத்தனித்தான். அவனது தோழர்கள் அவனது காதலியின் அணி கலன்களைக் காட்டி அவன் செயலைத் தடுத்தனர். ஆசிரியர் அவளது அணிகலன்களான பொன்னரிமாலை, பொன்பட்டம்92, திலகம், குழை93, முத்துமாலை, களிகை, சீதேவி, தோளணியாகிய மகரம், கையணியாகிய கடகம், முப்பத்திரண்டு வட்டக் காசுகள் கோத்தமாலைகள் தொங்கும் அழகிய நுசுப்பணியாகிய விரி சிகை94, தவளைவாய்க் கிண்கிணி முதலியவைகளை எழில்பெற எடுத்துக் காட்டியுள்ளார்.95 இஃதன்றி தொய்யகம், புல்லகம் (தென்பல்லி, வட பல்லி என்னும் தலையணி) கடிகையாரம் (நாழிகை காட்டும் கருவிகள் போல் செய்யப்பெற்ற மாலை) பொன் மாலைகள், மேகலை, காஞ்சி, இரதப் பல்காழ், மகரக் குண்டலம், பவளவடம்96, முத்துமாலை, பொன்கழங்கு வடிவாய்ச் செய்யப்பெற்ற மாலை, நெல்லிக்காய் மாலை, காவிதி, ஏனாதி, எட்டி முதலிய பட்டங்களுக்குரிய அறிகுறி யாக அரசன் அளித்த பொற்பட்டம், ஏகாவலி முதலிய அணிகள் பல எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன.97 மேலும் அரசிலைப் பொன் அடர்98, இதயவாசனை99, ஏக வல்லி100, கழற்சிக்காய்மாலை101, களிகை102, சிறுநெற்றாலி103, திலகம்104, தொடி105, நெற்றிக்கட்டி106, பன்னிரைத்தாலி107, பண் மணித்தாலி108, பாண்டில்109, பூங்கொடிப் பொற்கலம்110, பூண்111, மணிவடம்112, மாத்திரை113, மாராட்டம்114, முத்தவள்ளி115, முத்து மாலை116, மும்மணிக்காசு117-118 போன்ற பல அணிகலன்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. குறிப்புகள் 1. தொல்காப்பியம் 1. தொல் : (அ) காதொன்று களைதல் தொல்-பொருள் 1215 (ஆ) அணிந்தவை திருத்தல் தொல் - பொருள் 1206 (இ) இழையே தொல் - பொருள் 1096 & 1038 2. சிலப்பதிகாரம் 2. சிலப் : புகார் - கடலாடு 82 - 108 அலத்தக மூட்டிய வஞ்செஞ் சீறடி நலத்தகு மெல்விர னல்லணி செறீஇப் பரியக நூபுரம் பாடகம் சதங்கை அரியகங் காலுக் கமைவுற அணிந்து குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறங்கிளர் பூந்துகி னீர்மையி னுழீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகஞ் செம்பொற் கைவளை பரியகம் வால்வளை பவளப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற வணிந்து வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி காந்தண் மெல்விரல் கரப்ப வணிந்து சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினை அங்கழுத் தகவயி னாரமோ டணிந்து கயிற்கடை யொழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங் கிந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை அங்கா தகவயி னழகுற வணிந்து தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையீ ரோதிக்கு மாண்புற வணிந்து 3. சிலப். புகார் வேனிற். 19 தென்கடல் முத்தும் 4. சிலப். புகார் - அந்தி. 29 -30 செந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல் அந்துகின் மேகலை யசைந்தன வருந்த 5. சிலப். மதுரை - வழக். 67 - 69 என்காற் பொற்சிலம்பு மணிஉடை அரியே என தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே 6. சிலப். 12 : 27 - 28 மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி 7. சிலப். 4 : 50 மங்கல அணியின் பிறிதணி மகிழாள் 3. மணிமேகலை 8. மணிமேகலை : 6 : 114 கடகஞ் செறிந்த கை 9. மணிமே. 19 : 78 தொடிசேர் செங்கையிற் றொழுதுநின் றேத்தியும் 10. மணிமே. 28 : 36 பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் 11. மணிமே. 5 : 21 வெள்ளி வெண்டோட்டு பொற்றோ டாக 12. மணிமே. 1 : 49 முத்துத் தாம முறையொடு நாற்றுமின் 13. மணிமே. 3 : 137 - 138 செவ்வாய்க் குதலை மெய்பெரு மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப 4. சீவகசிந்தாமணி 14. சீ. சிந். - 349 : 1 அரும்பொன்மாலை யலங்கலோ டாரம் புலம்ப வகற்றினாள் 15. சீ. சிந். - 530 : 1 திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி 16. சீ. சிந். - 557 : 3 அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூறு எரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப்பேழை 17. சீ. சிந் - 2407 : 1 - 2 கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்ணி யுடைமணி பொற்சிலம்பு ஒலிக்குங் கோயில் 18. சீ. சிந் - 488 : 1 - 2 (அ) நெய்விலைப் பசும்பொற்றோடு நிழன்மணிக் குழையு நீவி மைவிரி குழவினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்தி (ஆ) சீ. சிந் - 2440 : 1 நாகம் மருப்பி னியன்ற தோடுந் நலங் கொள் சுறவுக்குழையும் 19. சீ. சிந். - 2182 : 2 சுடர்நுதற் பட்ட மின்ன 20. சிந். - 351 : 1 - 2 பஞ்சியனைய வேய்மென்றோட் பகுவாய் மகரங் கான்றிட்ட துஞ்சாக் கதிர்கொ டுணைமுத்தம் 20. சீ. சிந் - 732 : 1 இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையும் 22. சீ. சிந். - 1282 : 1, - 197 : 4 பன்மணிக் கடகம் சிந்த இலையார் கடகத் தடக்கை 23. சீ. சிந். - 2731 : 1 நடுச்சிகை முத்துத் தாமம் வாணுதனான்று நக்க 24. சீ. சிந் - 1442 : 1, 4 அரங்கணி நாடக மகளி ராய்நுதற் சுரும்புசூழ் இலம்பகத் தோற்றம் ஒத்ததே 25. சீ. சி. (அ) 2696 : 4 (ஆ) - 1658 : 3 (இ) - 2. 89 : 3 (அ) விழிகண் மகரகுண்டலமுந் தோடுங் காதின் மிளிர்ந்தனவே (ஆ) மின்னுங் குழையும் பொற்றோடும் மிளிர (இ) நாக மரும்பி னியன்றதோடும் நலங்கொள் சுறவுக் குழையும் உற்றவர் கோழிமேல் எறிந்த ஒண்குழை சீ. சிந். - 2445 : 1. - 2695 : 2 இடைச்செறி குறங்கு கௌவிக் கிம்புரி யிளக மின்னும் கடித்துக் கிடந்து கவின் வளரும் காய்பொன் மகரம் சீ. சிந். - 2731 : 1 நடுச்சிகை முத்துத் தாமம் வாணுத னான்று நக்க சீ. சிந். - 1442 கரும்பணி வளவயற் காமர் தாமரை வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செநெல் அரங்கணி நாடக மகளி ராய்நுதற் சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே சீ. சிந். - 1257 : 1 வாணுதற் பட்டம் மின்னி சீ. சிந். - 2696 : 4 ; 1658 : 3 ; - 2440 : 1 விழிகண் மகர குண்டலமுந் தோடுங்காதின் மிளிர்ந்தனவே மின்னுங் குழையும் பொற்றோடும் மிளிர நாக மரும்பி னீயன்ற தோடும்- நலங்கொள் சுறவுக் குழையும் சீ.சிந். 696 : 3 - , 1772 3 - 4 திருநிறமுகத்திற் கேற்பச் செம்பொனோ ரோலைசேர்த்து எரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடரவைத்தான் காண்டகு காதிற்றாழ்ந்த குண்டலம் குவளைப் பைந்தா ராண்டகை யழகன் சீ.சி. 11 - 2276: 4 பத்திரக் கடிப்பு மின்னப் பதுமுகன் பகடு பேர்த்தாள் சீ.சிந். - 2696 : 3 - தழியப் பெரிய தடமென்றோட் சலாகை மின்ன சீ.சிந். 351 : 1-2, 2091 : 2 மஞ்சியனைய வேய்மென்றோட் பகுவாய் மகரங்கான்றிட்ட துஞ்சாக்கதிர் கொ டுணைமுத்தந் தொழுதேனும்மை யெனத் துறந்து தொடுத்தலர் மாலைசூட்டிக் கிம்புரி முத்தமென்றாள் சீ.சிந். 243 : 1 தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடி சீ.சிந். 2587 : 4 படியனல் காய் பசுமணிகள் வேய்ந் - தோங்கும் பைம்பொற் செறி கழலினாய் (ஈ) சீ.சிந். - 703 : 1. (உ) - 696 : 3-4 (ஊ) - 1722 : 3-4. (எ) - 2276 : 4 (ஈ) சுறாநிறக் கொடுங்குழை கழன்றெருத் தலைத்தர (உ) திருநிற முகத்திற் கேற்பச் சொம்பொனோ ரோலை சேர்த்தி எரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடர வைத்தான் (ஊ) காண்டகு காதிற் றாழ்ந்த குண்டலம் குவளைப் பைந்தார் ஆண்டகை யழகன் (எ) பத்திரக் கடிப்பு மின்னப் பதுமுகன் பகடு போத்தான் 26. சீ.சிந். 2696 : 3 தழியப் பெரிய தடமென்றோட் சலாகை மின்ன 27. சீ.சிந். - 2167 : 1 -2 செம்பொ னீண்முடித் தேர்மன்னர் மன்னர்க்குதப் பைம்பொ னாழிதொட் டான்படை காட்டினான் 28. சீ.சிந். - 2132 : 1 அல்குற் பொற்றோரை மின்ன 29. அ) சீ.சிந். - 2445 : 1, (ஆ) - 2695 : 1-2. இடைச் செறி குறங்குகௌவி பிடிக்கை வென்று கடைத்தனபோற் பஞ்சியார்ந்த திறன்குறங்கு கடித்துக் கிடந்த கவின்வளருங் காய்பொன் மகரங்கதிர் முலைமேல் 5. திருமுருகாற்றுப்படை 30. திரு.முரு. 19 : 37 சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளைமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா 31. திரு.முரு. 16, 146 பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல் 32. திரு.முரு. 13 கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி 33. திரு.முரு. 208 கச்சினன் கழலினின் கெச்சைக் கண்ணியன் 34. திரு. முரு. 84 முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 35. திரு. முரு. 86 நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை போலங்குழை 36. திரு. முரு. 79 வாடா மாலை ஓடையொடு துயல்வர 37. திரு. முரு. 114 கீழ்வீழ் தொடியொடு மீமிசை கொட்பஒருகை 6. பொருநராற்றுப்படை 38. பொருநர். 30 பூங்குழை ஊசற் பொறைசால் காது 39. பொருநர். 161 - 162 நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய 7. பெரும்பாணாற்றுப்படை 40. பெரும்பாண். 327 - 328 கூழ்உடை நல்இல் கொடும்பூண் மகளிர் கொன்றை மென்சினை பனிதவழ் பவைபோல் 41. பெரும்பாண். 161 சிறுகுழை துயல்வரும் காதில்.... 8. மதுரைக்காஞ்சி 42. மது. கா. 103 பொலந்தாமரைப் பூச்சூட்டியும் 43. மது. கா. 443 - 446 நாண்மகி ழிருக்கை காண்மார் பூணொடு தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வோள்ளழற் றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை அணங்கு வீழ்வன்ன பூந்தொடி மகளிர் 44. மது. கா. 316, 719 - 720 அரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம் வலிகெழு தடக்கை தொடியொடு சுடர்வர 45. மது. கா. 461 திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை 46. மது. கா. 737 புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை 47. மது. கா. 704 தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை 48. மது. கா. 395 - 397 தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர் பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப் பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் 9. நெடுநல் வாடை 49. நெடுநல். 139 - 140 நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண் வாயுறை அழுத்திய வறிதுவீழ் காது 50. நெடுநல். 143 - 144 வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச் செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கம் 51. நெடுநல். 142 வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து 10. பட்டினப்பாலை 52. பட்டினப். 294 பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்கால் 53. பட்டினப். 22 - 23 நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை 11. மலைபடுகடாம் 54. மலைபடு. 63 - 64 வின்னறவி றடக்கை மேவரும் பெரும்பூண் நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு மலைபடு. 201. செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச மலைபடு. 569 - 570 .................................................................... விறலியர் சீர்கெழு சிறப்பின் விளங்குஇழை அணிய 12. பரிபாடல் 55. பரி. 16 : 7-9 ....................................... திணைபிரி புதல்வர் கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇக் தந்தந் துணையோ டொருங்குட னாடும் 56. பரி. 10 : 77 எழிமகர வலய மணிதிகழ் நுதலியர் 57. பரி. 11 : 95 - 96. பரி. தி. 10 : 1, 1 : 33 சாயிழை பிண்டித் தளிர்காதிற் றையினான் பாய்குழை நீலப் பகலாக தையினான் கார்த்திகை காதிற் கனமகர குண்டலம் போற் கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர 58. பரி. 11 : 101 - 102 பவள வளை செறிந்தாட்கண் டணிந்தான் பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு 59. பரி. 7: 46 - 47 கைவளை யாழி தொம்யகம் புனைதுகில் மேகலை காஞ்சி வாகு வலயம் பரி. 10 : 10 தாளித நொய்ந்நூற் சரணத்தர் மேகலை 60. பரி. 12 : 17 புட்டகம் பொருந்துவ புனைகு வோரும் 13. கலித்தொகை 61. கலி. 32 : 3 - 5 ஐதாக நெறித்தன்ன அறவிர் நீளைம்பால் அணிநகை யிடையிட்ட ஈகையங் கண்ணிபோல் பிணிநெகி ழலர்வேங்கை விரிந்தபூ வெறிகொள 62. கலி. 28 : 6 தொய்யகந் தாழ்ந்த கதுப்புப்போல் 63. கலி. 81 : 2 - 4 மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவிளை யுருள்கலன் நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர 64. கலி. 79 : 4 - 6 அவைபுகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகம் போல் தோன்றும் தகைபெறு கழனியந் தண்டுறை 65. கலி. 85 : 8 -11 பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும் செறியக் கட்டி ஈரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாய் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய ஆனேற் றவிர்பூண் 66. கலி. 14 : 6 சிலநிரை வாய்வளைச் செய்யா யோவென 67. கலி. 84 : 22 - 23 நறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்ப சுறவே றெழுதிய மோதிரந் தொட்டாள் 68. கலி. 86 : 9 தேரைவாய்க் கிண்கிணி ஆர்ப்ப இயலுமென் 14. நற்றிணை 69. நற். 86 : 5-7 கைவல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின வாகிப் பெரிய கோங்கங் குவிமுகை அவிழ 70. நற். 16 : 9 கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண் 71. நற். 286 : 1 - 2 ஊசல் ஒண்குழை உடைவியத்து அன்ன அந்தக் குமிழின் ஆயிதழ் அலரி 72. நற். 48 : 6 கிடினென இடிக்கும் கோற்றொடி மறவர் 73. நற். 77 : 9 - 10 வாளரம் பொருத கோணேர் எல்வளை அகன்தொடி செறித்த முன்கை 74. நற். 90 : 96 நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் 75. நற். 188 : 4 - 5 மெல் விரல் மோசை போல காந்தள் வள்ளிதழ் தோயும் 76. நற். 269 : 1 குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணி 15. அகநானூறு 77. அகம். 321 : 15 அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ 78. அகம். 162 : 18 நசைபிழைப் பறியாக் கழல்தொடி அதிகன் 79. அகம். 254 : 3 பொலன்செய் கிண்கிணி நலம்பெறு சேவடி 80. அகம். 142 : 16 - 17 நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச் சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கை 81. அகம். 238 : 14 கழறொடித் தடக்கை கலிமான் நள்ளி 16. புறநானூறு 82. புறம். 251 : 2 பாவை யன்ன குறுந்தொடி மகளிர் புறம். 229 : 23 ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகி 83. புறம். 281 : 9 பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை 84. புறம். 353 : 2 பொலஞ்செய் பல்கா சணிந்த அல்குல் 85. புறம். 304 : 1 கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி 86. புறம். 291 : 8 ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே 17. பெருங்கதை 87. பெருங். 3. 22 : 213 - 214 (அ) யவனப் பேழையு ளடைந்தோ ரேந்திய தமனியப் பல்கலந் தளிரியன் மாதர் 88. பெருங். 3. 22 : 218 - 226 துணைமலர்ப் பொற்கொடி துளங்கு நுசுப்பினை நிலைபெற விசிப்பது போல் வேர்ப்ப மேற்பாற் பிறையென விளங்க வமைந்த தொருகா ழார மொளிபெற வணிந்து திருக்கேழ்க் களிகை செவ்வனஞ் சேர்த்திப் பைம்பொற் றிலகமொடு பட்ட மணிந்த ஒண்கதிர் மதிமுக மொளியொடு சுடரச் செம்பொ னோலை சேடுபடச் சுருக்கி ஐவகை வண்ணத் தந்துண் மேகலை 89. பெருங். 3. 22 : 232 - 237 சின்மயிர் முன்கைப் பொன்வளை முதலாக் கண்ணார் கடகமொடு கைபுனைந் தியற்றிய சூடகத் தேற்ற சுடரொளிப் பவளமொடு பாடக நூபுரம் பரட்டுமிசை யரற்ற 90. பெருங். 2. 19 : 76 பொன்னரி மாலாய்ப் பொருளிலை யென்றும் பெருங். 2. 19 : 86 பட்டப் பேரணி விட்டெரிந் திரங்கியும் 91. பெருங். 2. 19 : 95 - 96 வார்நலக் காதினுள் வனப்பு வீற்றிருந்த நன்பொற் குழைநீ நன்னுதன் மாதரை 92. பெருங். 2. 19 : 118 - 121 நலப்பெருங் களிகையு நன்முத் தாரமும் பன்மணிப் பூணும் சின்மணித் தாலியும் முத்தணி வடமும் சித்திர வுத்தியும் நாணுந் தொடரும் ஏனைய பிறவும் பெருங். 2. 19 : 136 - 145 மறியிலைக் கம்மலொடு மகரங் கவ்விக் கொடியொடு துளங்கி யடிபெற வகுத்த அருமணிக் கடகமொடு அங்குலி யழியச் செற்றுபு சிறந்த சிறப்பு முள்ளாது கற்றதெ னமர்ந்த கலப்பின வாகியும் பற்றுவிட் டகறல் பண்போ வெனவும் பவளக் காசொடு பன்மணி விரைஇத் திகழக் கோத்த செம்பொற் பாண்டில் கைவினைக் கொளுவில் செய்துநலங் குயின்ற எண்ணாற் காழ்நிறை கண்ணுமிழ்ந் திலங்க 93. பெருங். 1. 40 : 18 அரிப்பொற் கிண்கிணி யார்ப்ப 94. பெருங். 5. 2: 26 ஏக வாரம் இலங்கு கழுத்தினன் 95. பெருங். 1. 42: 170 செம்பொற் பட்டத்துச் சேனா பதிமகள் பெருங். 1. 42 : 174 செண்ண மமைத்த செம்பொற் பட்டத்து (- காவிதிப்பட்டம்) 96. பெருங். 2. 6 : 66- 69 மஞ்சுவை நெல்லித் திரள்காய்த் தாரையுட் கூப்புப் பிணித்த கூடப் பரப்பிற் கட்டளை யமைத்துக் கட்கினி தாகி எட்டுவகைப் பெருஞ்சிறப் பேற்ப வெழுதி 97. பெருங். 2. 3 : 69 - 75 அரம்போ ழவ்வளை யணிந்த முன்கைச் சுருங்காச் சுடரொளிச் செம்பொற் பட்டம் சூளா மணியொடு துளங்குகடை துயல்வரும் புல்லகம் பொருந்திய மெல்லெ னோதிப் பொன்னணி மாலை பொலிந்த பூமுடீஇ வண்ணப் பூமுடி வாசவ தத்தையை 98. பெருங். 2. 5 : 138 - 145 கனமணி முடியும் கதிர் முத்தாரமும் இளமணிப் பூணும் ஏக வட்டமும் வயிரக் குழையும் வல்வினைப் பொலிந்த நெடுந்தோள் வளையும் கடுங்கதிர்க் கடகமும் நாமர வளியுங் காமர் கைவினைச் சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும் பத்திக் கச்சினொ டொத்தவை பிறவும் ஆரணங் காகிய பேரணி கலன்களும். 99. பெருங். 2. 7 : 23 அணிக்கலை புனைந்த அரசிலைப் பொன்னடர் 100. பெருங். 2. 19 : 117 இலைப்பெரும் பூணும் இதயவா சனையும் 101. பெருங். 1. 46 : 211 இடைமுலைக் கிடந்த ஏகவல்லி 102. பெருங் 1. 46 : 212 முற்றுறு கழங்கொடு முதலகடுபொருந்தி (கழங்கு - பொன் கழற்சிக்காய் மாலை) 103. பெருங். 1. 41 : 82 கலங்கவின் பெற்ற கண்ணார் களிகை 104. பெருங். 4. 16 : 29 நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்க (நெற் சிறுதாலி - சிறு நெற்றலி) 105. பெருங். 2 : 19 - 91 திலக நோக்கிப் பலபா ராட்டியும் 106. பெருங். 1 : 32 - 24 பைந்தொடிச் சுற்றமொடு தந்தை தலைத்தாள் 107. பெருங். 1 : 34 - 196 திருநுதற் சுட்டி திகழச் சூட்டி 108. பெருங். 2 : 7 - 97 பாப்பெயிற் றன்ன பன்னிரைத் தாலி 109. பெருங். 5 : 9 - 49 மும்மணிக் காசும் பன்மணித் தாலியும் 110. பெருங். 3 : 1 - 164 பாசப் பாண்டிற் பல்கா ழல்குலென் 111. பெருங். 2 : 19 - 111 பூங்கொடிப் பொற்கலம் போழ்ந்துவடுப் பொறிப்ப 112. பெருங். 2 : 19 - 124 பூணணி யுள்ளு மாணணி புடையவை 113. பெருங். 1 : 46 - 252 இடர்சேர் ஆகத்துச் சுடர்மணி பிறழ 114. பெருங். 3 : 17 - 157 செம்பொன் மாத்திரை செரீஇய காதினர் 115. பெருங். 1 : 57 - 100 மணிமா ராட்டத் தணிபெற வழுத்தி 116. பெருங். 1 : 34 - 203 முத்த வள்ளியொடு மும்மணி சுடர 117. பெருங். 1 : 36 - 69 கதிர் முத்தாரம் கழிவன போல 118. பெருங். 5 : 9 - 49 மும்மணிக் காசும் பன்மணித் தாலியும் இந்நூல் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. The World We Live In - Greme Williams. Vol. I 2. Mohenjadaro and Indus Civilization - Sir John Marshal. Vol. I & II 3. The Wonder that was India - A.L. Basham B.A., Ph.D. 4. Linguistic Survey of India - Grierson 5. Pre - historic Ancient and Hindu India - R.D. Banerji 6. Stone Age in India - J.C. Brown 7. India and Pacific World - Kalidas Nag 8. South Indian Coins - Sir W. Elliot 9. South India and her Muhammeden Invaders - Dr. R. Krishnasamy Iyengar 10. Letters on India - Karl Mark 11. Tree, Snake Worship - Fergussion 12. Tree Worship and Ophiolalotry - G. Subramania Pillai 13. Art and Social Life - G.V. Plekhanov, 1953. 14. The Sacred Chank of India - Hornel 15. Through the Dark Continent - Stanly London Vol. II (1899) 16. Elisee Reclus Nouvlus Geography Universelle Vol. XIII 17. School Craft Op. Cit Vol. III 18. In Darkest Africa - London (1890) Vol. II 19. Among the Primitive Peoples of Brazil - Von don Steinen 20. Primitive Culture - Taylor 21. Introduction to Study of Costume - From Nudity to Raiment - Hilaire Hiler, London, 1929. 22. The Natya Sastra Vol. I - Bharta Muni (Eng. Trans) - Manamohan Ghosh M.A., Ph.D. 1950 23. The Holy Bible 24. Dravidian Civilization - R.D. Banerji (Modern Review - (Nov. 1927) 25. The History of Aryan Rule in India - E.B. Havel 26. Rev. Fr. Heras (The New Review) 1926 Vol. V.P. 1 - 16 27. Pre - Historic Civilization of the Hindus Vally N.K. Dikshit 28. Excavation at Harappa - Madho Swarup Vat Vol. I. Chap. V 29. The Art and Craft of India - A.K. Coomarswamy 30. Industrial Art of India - G.C.M. Birwood - 1880 31. Encyclopaedia Britanika Vol. XII (India & Sinhalese Art & Archaeology) 32. Encyclopaedia Vol. III (Article on Jewellery) 33. Enchclopaedia Vol. XX Article on Silver smith & Goldsmith work 34. Studies in Proto - Indo Meditrarnian Culture Rev. H. Heras 35. The Hindus Civilization - Dr. E.J. H. Mackay 36. Buried Empire - Partric Careleton 37. The Art Bulletin (Ornament) - A.K. Coomaraswamy 1939. 38. The Story of the Gems - Herbert - P. Whitelock London 1936 39. The Gemmologist Compendium - Robert Webster London 1937 40. Gems and Minerals - Karus E. H. and Hoden E.F. New York 1908 41. Book of the Pearl - Kunz - New York 1908 42. Diamonds and Precious Stones - Emanuel - London 1865 43. The precious Stones of the Bible - C.W. Cooper 1924 44. Gem Cutters Craft - Clarmont Leopold - London 1906 45. Great Diamond of the World - Streeter E.W. 1919 46. A Text Book of the Preceious Stones for Jewellers B. Wade Frank - New York 47. Indian Images Part I - B.C. Battacharyh M.A. F.R.S.G.S. 48. Elements of Hindu Iconography - Gopinath Rao. 49. Principles of Indian Silpa Sastra - Prof. Phanindranath Bose M.A., Lahore 50. Ancient Jaffna - Mudaliar C.Rasanayagam C.C.S. 51. Catalogue of Pre. Historic Antiquities of Adichanallor and Prumbair - A. Rea. F.S.A. (Scot) 52. Report on Jewellery and precious Stones in the French Exhibition of 1866 - Maskelyne. 53. The Art Industries of the Madras Presidency - E.B. Havel 54. The Journal of Indian Art & Industry 55. Indian Antiquary Vol. 62 56. Dravidic Studies, University of Madras 57. Vedic India - Ragozine 58. The Civilization of Babylonia & Assyria 59. The Sumerian - Sir Lenord William 60. UR of Chaldeans - Sir Lenord William 61. The Original Inhabitants of India - Monier Williams 62. Pre - historic India - Mitra 63. Ancient India & Indian Civilization - Paul Mason 64. The Art of India, Phileppa 65. Art Manufactures of India - T.N. Mukerji 66. Some Aspects of the Earliest Social History of India - S.C. Sarkar, London, 1928. 67. The parts of Veena - A.K. Coomarswamy 68. புறநானூறு - சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு 1952 69. நற்றிணை - பி. நாராயணசாமி ஐயர் 1952 70. அகநானூறு - கழக வெளியீடு 1955 71. சிலப்பதிகாரம் - உ.வே. சாமிநாத ஐயர் 1957 72. சீவகசிந்தாமணி - உ.வே. சாமிநாத ஐயர் 1907 73. மணிமேகலை - உ.வே. சாமிநாத ஐயர் 1921 74. சிறுபாணாற்றுப்படை - கழக வெளியீடு 1962 75. பெரும்பாணாற்றுப்படை - கழக வெளியீடு 1962 76. பொருநராற்றுப்படை - கழக வெளியீடு 1962 77. திருமுருகாற்றுப்படை - கா. சுப்பிரமணிய பிள்ளை 1946 78. பரிபாடல் - உ.வே. சாமிநாத ஐயர் வெளியீடு 1918 79. குறுந்தொகை - கழக வெளியீடு 1955 80. மதுரைக்காஞ்சி - கழக வெளியீடு 1955 81. இறையனாரகப்பொருள் - கழக வெளியீடு 1953 82. தொல்காப்பியம் - கழக வெளியீடு 1955 83. புறப்பொருள் வெண்பாமாலை - உ.வே. சாமிநாத ஐயர் 1955 84. கலித்தொகை - பாகநேரி தமிழ்ச்சங்கம் 1938 85. பட்டினப்பாலை - கழக வெளியீடு 1952 86. கம்பராமாயணம் - பெரியான் சீனிவாச ஐயங்கார் 1942 87. கலைமகள் அந்தாதி - கம்பன் 88. இரத்தினச் சுருக்கம் - புகழேந்தி 89. தென் இந்திய வரலாறு - டாக்டர் கே. கே. பிள்ளை 90. நாமிருக்கும் நாடு - டாக்டர் மு. ஆரோக்கியசாமி 1956 91. முருகன் அல்லது அழகு - திரு.வி. கலியாண சுந்தர முதலியார் 1930 92. சூடாமணி நிகண்டு - ஆறுமுக நாவலர் 1914 93. பெருங்கதை - உ.வே. சுவாமிநாத ஐயர் 1935 94. குறிஞ்சிப்பாட்டு - கழக வெளியீடு 1955 95. பாரதி நூற்கள் (காவியம்) - பாரதி 1935 96. மொகஞ்சதாரோ அல்லது சிந்து வெளி நாகரிகம் டாக்டர் - மா. இராசமாணிக்கம் பிள்ளை 1952 97. நவமணிகள் - டி. எ. வைத்தியநாதன் 98. திருவிளையாடற் புராணம் - சுவாமிநாத பண்டிதர் 1917 99. கல்லாடம் - (காஞ்சி இராமநாத யோகிகள் 1911) 100. இரத்தின பரீட்சை - தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 1958 101. திங்கள் - திங்கள் வெளியீடு (சென்னை) 102. தென் இந்திய சாசனங்கள் தொகுதி II, பகுதி I 103. பதார்த்தகுண சிந்தாமணி 104. தேவாரம் - தர்மபுர ஆதீன வெளியீடு 105. தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் - நல்லூர் ஞானப்பிரகாச அடிகள் 106. தமிழர் சமயம் - கா. R¥ãukÂa ãŸis, v«.V., எம்.எல். 107. சில்பரத்தினம் - சரசுவதி மகால் வெளியீடு, தஞ்சை 1961. 108. சகளாதிகாரம் - அகதியர் மகால் வெளியீடு, தஞ்சை 1960 109. மானசாரம் - அகதியர் மகால் வெளியீடு, தஞ்சை 1963 110. சிரி சாரவதிய சித்திரகர்ம சாத்திரம் மகால் வெளியீடு, தஞ்சை, 1960 111. காசியப சில்ப சாத்திரம் - சரசுவதி மகால் வெளியீடு 1960 112. திருக்குறள் - கழக வெளியீடு 1955 113. சங்க காலத் தமிழ் மக்கள் - க. வெள்ளைவாரணனார் 114. கலைக்களஞ்சியம் தொகுதி I - சென்னை 115. யாழ் நூல் - விபுலானந்த அடிகள் B.Sc. (London) 116. தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி II 117. திருக்கோயில் (திங்கள் வெளியீடு) சென்னை 1961 118. மலைபடுகடாம் - கழக வெளியீடு 1955 119. தமிழ் இந்தியா - ந.சி. கந்தையா பிள்ளை சென்னை 1949 பிற்சேர்க்கை அகர வரிசையில் அணிகலன்கள் அங்கதம் (வாகுவலயம்) 204, 206 அங்குலியகம் 207 அட்டிகை 131, 140 அதவலயம் 207 அத்திக்காய்க் கொலுசு 112 அரசிலை 164 அரவம் 169 அரியகம் 169 அரும்புச் சரம் 140 அரைச்சதங்கை 165 அரசிலைப்பொன்அடர் 164 அரைஞாண் 164 அரைமூடி 164 அரைஅணி 166 ஆடகம் 156 ஆமைத்தாலி 140 ஆலங்காய்க்கொலுசு 112 ஆழி 218 ஆளிக்காப்பு 156 இட்டடிக்கை 131 இடைச்சரி 157 இதயவாசனை 154 இரத்தினகடகம் 195 இரத்தின கல்பம் 205 இரத்தின குண்டலம் 133 இரத்தின மகுடம் 117 இரத்னபந்த உபக்கிரீவம் 206 இரத்தின மோதிரம் 195 இரத்தினவங்கி 151 இரத்தின வளையம் 165 இரதப்பல்காழ் 222 இராக்குடி 119 இராசவர்த்தம் 195 இலம்பகம் 119 இலை 120 உட்கட்டு 140 உத்தி 125 உதரபந்தனம் 204 உபக்கிரீவம் 204 ஊருதாமம் 204 ஏகவடம் 140 ஏகவல்லி 140, 195 ஏணிப்படுகால் 165 ஏனாதிமோதிரம் 161 ஐம்படைத்தாலி 143 ஓடை 20 ஓரணை 196 ஓலை 131 கங்கணம் 157, 189 கச்சி 164 கடகத்திரயம் 206 கடகம் 157, 189 கடிகை 120, 123 கடிகையாரம் 222 கடிசூத்திரம் 165 கடிப்பிணை 132 கடுக்கன் 132, 190 கடுமணிமாலை 112 கண்டசரம் 140 கண்டநாண் 195 கண்டமாலை 140 கண்டிகை 141 கண்டை 170 கந்தமாலை 204 கம்பி 131 களிகை 141 கரண்டமகுடம் 117 கலாபம் 167 கவான்செறி 168 கழல் 170 கழல்தொடி 152 கழற்சிக்காய் மாலை 141 களாபம் 196 கன்னசரம் 120 கன்னதாம வலம்பனம் 207 கன்னப்பூ 132 கன்னப்பூரம் 204 காசுமாலை 141 காஞ்சி 166 காப்பு 157, 189 கால்சரிகை 169 கால்கொலுசு 170 கால்வளை 170 காலாழி 173 காற்சரி 170 காற்சவடி 171 காறை 141 கால்மோதிரம் 173 கிண்கிணி 170 கிருத்ருமாசியம் 204 கிரீடமகுடம் 116 கிரீவம் 142 கிரைவேயாம் 206 கிறி 141 குச்சம் 121 குஞ்சம் 121 குடைச்சூல் 171 குண்டலம் 133, 190 குணுக்கு 134 குதம்பை 134, 196 குரடு, குருடு 134 குருடுசரி 157 குவளைக் கடுக்கன் 132, 135 குழை 134 குறங்குசெறி 168 கூட்டுக்கம்பி 196 கேயூரம் 151 கைக்கட்டு 157 கைச்சரிகை 157 கைவளை 158 கொக்குவாய் 196 கொடி 165 கொடைக்கழல் 170 கொண்டைத்திருகு 121 கொத்தமல்லிமாலை 141 கொத்து 111 கொந்திக்காய்க்கொலுசு 152 கொப்பு 135 கொலுசு 158, 189 கோதை 141, 122 கோல்தொடி 15 கோல்வளை 221 கோவை 142, 165 கோளகை 196 சங்கபத்திரம் 206 சங்கிலி 142 சங்குமோதிரம் 161 சங்குவளை 158 சடாங்கம் 122 சடாமகுடம் 118 சடைத்திருகு 123 சடைநாகர் 123 சதங்கை (அரை) 165 சதங்கை (கால்) 188 சந்திரகாரம் 142 சந்திரப்பிறை 142 சந்திரப்பிரபை 123 சந்திரபாணி (கடிப்பிணை) 132 சப்தசரி 195 சர்ப்பகுண்டலம் 133 சரப்பளி 142 சல்லரி 207 சவடி 142 சன்னவீரம் 142 சன்னாவதஞ்சம் 135 சாலகம் 171 சிடுக்கு 196 சித்திரக்கல்பம் 205 சிந்தாமணி 213 சிம்மக்குண்டலம் 133 சிரச்சூளம் 205 சிரத்தாரமகுடம் 205 சிரிமுடி 195 சிரிசந்தம் 195 சிரிவாகுவாலயம் 195 சிலம்பு 171 சிவந்திப்பூக் கடுக்கன் 132 சிவந்திப்பூ மோதிரம் 161 சிறுதாள் 162 சிறுநெற்றாலி 43 சிறுமணி 171 சின்னப்பூ 135 சீதேவி 125, 215 சுடிகை 123 சுண்டைக்காய்மாலை 110 சுத்து 152 சுத்துமணி 142 சுபூரிமம் 205 சுரிதகம் 123 சுவரணதாடகம் 205 சுழல்கொடி 221 சூட்டு 124 சூடகம் 158 சூடாமணி 123 சூடிகை 123 சூடை 123 சூரியப்பிரபை 124 சூலம் 142 சூழி 124 சூளாமணி 124 செங்கேழ்கிளர்மணி 162 செஞ்சூட்டுக்குழை 221 செல்வவிடங்கன் 196 செவிப்பூ 135 சேகரம் 124 சொருகுப்பூ 124 சோனகச்சிடுக்கின்கூடு 197 ஞெகிழம் 171 தடுப்பு 131, 135 தண்டட்டி 135 தண்டை 172 தந்தவளை 158 தலைச்சுட்டி 127 தலைப்பாளை 124 தாமம் 166 தாமரைமணிமாலை 204 தாலி 143 தாலிக்கொழுந்து 143 தாலிமணிவடம் 195 தாழ்வடம் 144 தாள் 196 தாள்செறி 174 தாளம்பூ 125 தாளிம்பம் 195 தாளின்பம் 196 தாளுருவி 136 திரள்மணிவடம் 195 திரிசரம் 196 திரிசரி 136 திரு 144 திரு உதரபந்தனம் 195 திரு உறுப்பு 128 திருவடிக்காரை 195 திருப்பட்டிகை 195 திருக்குதம்பை 195 திருக்கால்வடம் 195 திருச்சன்னிவடம் 196 திருமாலை 196 திருமுடி 196 திலகம் 128 தும்பு 144 துளசிமணிமாலை 204 தெய்வ உத்தி 125 தென்பல்லி 125 தொடர் 144 தொடி 158, 189 தொடையல் 144 தொய்யகம் 124 தோடா 158 தோடு 136, 195 தோள் பதக்கம் 152 தோள் வலயம் 153 தோள் வளை 153, 206 நத்து 183 நல்லணி 174 நவகண்டிகை 136 நவசரி 136 நவரத்தின மோதிரம் 195 நவரத்தின வளை 159 நாகப்படம் 136 நாண் 144 நாமரவளி 155 நித்திலமதாணி 155 நீலக்கடைச்செறி 159 நீலக்குதம்பை 211 நீலத்தின் முத்தோரணை 196 நீவி (சலனம்) 206 நுண்தொடர் 145 நூபுரம் 172 நெல்லிக்காய் மாலை 145 நெளிவுமுடக்கு 162 நெற்றிச் சுட்டி 128 நெற்றிப்பட்டம் 128 நேர்ஞ்சங்கிலி 145 பகுவாய் மோதிரம் 163 பஞ்சசரி 137, 195, 196 பட்டம் 125, 196 பட்டைக்கொலுசு 169 படுகண் 195 பத்திக்கச்சு 128 பத்திரக்குண்டலம் 133 பத்திரக்கல்பம் 205 பத்திரச் சுரிகை 129 பத்திரம் 206 பதக்கம் 145, 189 பரியகம் 159, 171 பரிவடிவம்பு 172 பருமம் 166 பவளமேகலை 166 பவளவடம் 188 பவளவளை 159 பன்மணித்தாலி 143 பாகுமாலா வலம்பம் 205 பன்மணிமாலை 145 பன்னிரைத்தாலி 143 பாட்லா 159 பாடகம் 172 பாண்டில் 166 பாசமாலை 195 பாசித்தாமம் 159 பாதசரம் 169 பாதசாலம் 169 பாம்படம் 137 பாம்பணி 137 பாம்பாழி 174 பாலபட்டம் 205 பிச்சியரும்பு மாலை 111 பிரகோட்டவளையம் 206 பிருட்டகண்டிகை 195 பில்லணை 174 பிறை 125 பின்றாலி 144 பீலி 174 புகிடி (பூடி) 137 புசங்கக்கடகம் 172 புரிவளை 156 புல்லகம் 125 புல்லாக்கு 182 புல்லிகை 195 புலிநகத்தாலி 143 புலிப்பல் தாலி 143 புனையாரம் 172 பூங்கொடிப் பொற்கலம் 145, 155 பூண் 155 பூரப்பாளை (தொய்யகம்) 124 பூரிமம் 207 பேசரி 183 பைந்தொடி 159 பொட்டு 146 பொலந்தார் 221 பொலங்கலம் 221 பொலம்பூந்தும்பை 125 பொலன்கழல் 170 பொற்கச்சு 155 பொற்பூ 125 பொற்குவளை 135 பொற்சரடு 146 பொற்பட்டி 166 பொற்றோரை 166 பொற்றாமரைப்பூ 126 பொன்கழங்கு 222 பொன்ஞாண் 146 பொன்தாலி 144 பொன்மணிமாலை 146 பொன்மாலை 190 பொன் மோதிரம் 163 பொன்வளை 160 பொன்வாகை 126 பொன்னரிமாலை 126, 145 பொன்னோலை 112 மகரகுண்டலம் 133 மகரப்பகுவாய் 129, 160 மகரப்பகுவாய் மோதிரம் 174 மகர வலயம் 129 மகரவாய்ப்புரிவளை 156 மகரி 137 மகுடம் 113 மங்கல அணி 146 மஞ்சிகை 137 மடல் 137 மணிக்குவளை 135 மணிசெய்மண்டை 221 மணித்தாலி 144 மணிபந்தனம் 206 மணிமாலை 146 மணிமிடைப்பவளம் 146 மணிமோதிரம் 162 மணியாரம் 146 மணிவடம் 146 மதாணி 146 மரகதக்கடைசெறி 162 மரகதத் தாள்செறி 162 மரகதநாயகம் 162 மருதங்காய்மாலை 146 மலர்ச்சரம் 146 மாங்காய்மாலை 147 மாணிக்க ஓலை 132 மாணிக்கத்தாலி 195 மாணிக்கத்தாள் 162 மாணிக்கமேகலை 166 மாத்திரை 137 மாதுளங்காய்மாலை 112 மாம்பிஞ்சுக்கொலுசு 112 மாராட்டம் 126 மாலை 56 மிச்சிரகல்பம் 205 மிளகுமாலை 147 முக்கட்டு 183 முகசரம் 126 முஞ்சகம் 218 முஞ்சம் 127 முஞ்சி 175 முடக்குமோதிரம் 162 முடிச்சு 138 முத்திரை மோதிரம் 162 முத்தின் சூடகம் 195 முத்தின் வளையல் 196 முத்தின் கால்காரை 196 முத்தின் பட்டிகை 196 முத்துக்கொலுசு 160 முத்துமாலை 147 முத்துவடம் 147, 190 முத்துவள்ளி 147 முந்திரிகை 206 மும்மணிக்காசு 147 முருகு 138 முறுக்கு 160 மூக்குத்தி 183 மெட்டி 175 மேகலை 166 மோகனமாலை 147 மோசை 163 மோதிரம் 18 யானைக்குண்டலம் 133 வங்கி (கேயூரம்) 151 வட்டக்குவளை 135 வட்டப்பூ மோதிரம் 162 வடபல்லி 125 வடம் 196 வடுகவாளி 195 வண்டு 160 வயந்தகம் 127 வல்லிகை 138 வலம்புரி 111, 127 வலம்புரிவளை 160 வலயம் 205 வன்னசரம் 147, 190 வனமாலை 205 வாகுசுட்டி 124 வாகுமாலாவல யம் 189 வாகுவலயம் 153 வால்வளை 160 வாளி 138 விசிறிமுருகு 138 வியாழகுண்டலம் 206 விரிசிகை 167 வீரக்கண்டை 188 வீரக்கழல் 188, 221 வீரச்சங்கிலி 148 வீரப்பட்டம் 195 வீரவளை 189, 221 வெள்ளித்தழை 172 படங்கள் 1. இது, தஞ்சைப் பெருஉடையார் கோயிலில் உள்ள பெரிய நாயகி அம்மையின் வெண்கலப் படிமம். இது 11-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. இவ்வுருவமும் இதன்மீது காணப்படும் ஆடையும் அணிகலன்களும் பண்டைத் தமிழ்நாட்டுப் பெண்களின் ஆடை அணிகலன்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். காதணி, கழுத்தணி, தோளணி, கையணி, காலணி போன்றவைகள் துலாம்பரமாய்க் காணப்படுகின்றன. 2. இந்த உருவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேரநாட்டுப் பெண்களின் வழியில் வந்த நாயர்குல நங்கையின் நிழல் உருவப்படம். இப்படத்தில் இவள் பண்டைய தமிழ்ப் பெண்களின் பாணியில் ஆடை அணிந்து அணிகலன்கள் பூண்டு அழகுடன் காட்சி அளிக்கின்றாள். 3. இந்த நிழற்படம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேளாளர் குலப் பெண்ணின் தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இவள் காதில் அணிந்துள்ள பாம்படம், தண்டட்டி, முடிச்சு, இட்டடிக்கை, மேலிடு ஆகிய அணி களும், மூக்கணியும் கழுத்தணியும் அக்காலத்தில் வேளாளர் குல பெண் மக்கள் அணிந்த அணிகலன்களுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாய் இலங்குகின்றன. 4. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாடார் குல நங்கையின் உருவப்படம். இப்பெண்மணி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுள்ள தமிழ்நாட்டுப் பெண்களுக்குரிய பல அணி களை அணிந்துள்ளாள். இவள் காது வடித்தும் இரவிக்கை அணிந்தும் பூடி, கர்னப்பூ போன்ற பல காதணிகளையும் உட்கட்டு, சுத்துமணி, சுண்டைக்காய் மாலை போன்ற பல கழுத்தணிகளையும் அணிந்தவளாகக் காணப்படுகிறாள். இவளது தோற்றம் ஒரு பணக்காரப் பெண்ணின் தோற்றம் போல் இருக்கிறது. 5. இப்படம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழை நாடார் குல மங்கையின் படம். இப்பெண்மணி 19-ஆம் நூற்றாண் டின் நடுவில் உள்ளவர். இவர் ஒரு சில காதணி, கழுத்தணி, தோளணி, கையணிகளுடன் காணப்படுகிறார். இவரது இடுப்பில் உள்ள சிறு குழந்தை காது வடிக்கப் பெற்று ஈயக்குணுக்கு அணிந்துள்ளது. கழுத்தில் பாசி மாலையும், கையில் வெள்ளிக் காப்புகளும் பூட்டப் பெற்றுள்ளன. 6. இந்த நிழற்படம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ள நாடார் குல மங்கையுடையது. இவரது காதில் விசிறிமுருகும், பாம்படமும், கழுத்தில் சுத்துமணி, காறை போன்ற அணிகளையும் கையில் கைச்சரி, கடகம், காப்பு போன்ற அணிகளையும், கைவிரல்களில் மோதிரங்களும் அணிந் துள்ளார். 7. இப்பெண் மதுரை மாவட்டத்தில் உள்ள அகம்படியர்குல ஆரணங்கு. இவரது காதிலும் கழுத்திலும் பல அணிகலன்கள் காணப்படுகின்றன. தோளின் கீழே வங்கியும், கொந்திக்காய் கொலுசும் காணப்படுகின்றன. 8. (1) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மறவர் குல மங்கை. (2) ஆதித்திராவிட அரிவை (3) கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டர்குலக் காரிகை (4) கோவை மாவட்டத்தில் முன்னேற்றம் பெறாத இனத்தைச் சேர்ந்த இளமங்கை. இவள் கழுத்தணி, காதணிகளுடன் காட்சி அளிக்கிறாள். 9. இந்தப் படம் அசெந்தா ஓவியம். இது திராவிட நாட்டு எழில் ஒழுகும் ஒரு இளமங்கையின் தோற்றத்தை எடுப்புடன் எடுத்துக்காட்டுகிறது. தலையணிகளும் காதணிகளும் கழுத்தணி களும் கையணிகளும் பழங்காலத்தவை என்றாலும் இன்றைய அணிகலன்களைவிட அழகுறப் பொலிகின்றன. இந்த ஓவியம் கி.பி. முதல் நூற்றாண்டில் தீட்டியது. 10. சிந்துவெளியில் கிடைத்த ஒரு வெண்கலப் படிமம். இது கி.மு. 3000 ஆண்டிற்கு முன்னுள்ளது. இப்படிமம் ஒரு நாட்டிய மாடும் நங்கையின் உருவமாகக் கருதப்படுகிறது. இவளது தோளி னின்று மணிக்கட்டு வரை, கையில் பல வளைகள் அடுக்கடுக்காய் அணியப்பட்டு உள்ளன. 11. மொகஞ்சதாரோவில் கிடைத்த அணிகலன்களில் இங்கு கழுத்தில் அணியும் மாலைகள் ஐந்து உள்ளன. இவை சிந்துவெளித் திராவிடப் பெருங்குடி மக்களின் முன்னோர்கள் அணிந்த பொன் அணிகள். இவைகளில் மணிகள் பல பதிக்கப்பெற்றுள்ளன. இவை வியத்தகுவேலைப்பாடுகள் கொண்டவை. இவைகளில் ஒன்று 240 - பொன்மணிகளும் ஒன்று 70. பொன்மணிகளும், ஒன்று 27- பொன்மணிகளும், ஒன்று 6 சரங்களும், ஒன்று மூன்று சரங்களும் உடையன. இவைகளில் இடை இடையே விலையுயர்ந்த கற்களும், மணிகளும், பதக்கங்களும் கோர்க்கப்பட்டுள்ளன. ஒன்று அட்டிகை போன்றுள்ளது. கீழே காணப்படுவது சங்கிலி போன்ற கழுத்தணி. 12. இது, அரப்பாவில் அகழ்ந்து கண்ட அரிய கை அணி. இது, மணிக்கட்டு பக்கம் அணியும் ஒருவகைக்காப்பு. மேலே கூர்மையான முட்கள் போல் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் இருதயவடிவிலும் வெளிப்புறத்தோற்றம் சூரியன் தன் ஒளிக்கிரணங்களுடன் காணப் படுவது போலும் உள்ள இந்தக் கையணி கோவை மாவட்டத்தில் உள்ளன. திருத்தம் பெறாத பழங்குடி மக்களின் கைகளில் இன்றும் உள்ளன. 13. நாகர். 14. (அ) மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப் பெற்ற இரு கழுத்தணிகளும் (மாலைகளும்), அதன் உதிரிப் பாகங்களும் காணப் படுகின்றன. (ஆ) மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள மீனாட்சி தேவிக்குரிய தலையணி. இது முத்துக்களாலான பொன் அணி. (இ) இதுவும் அங்குள்ள மற்றோர் தலையணி. (ஈ) இதுவும் மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஒரு கழுத்தணியும் (நவகண்டிகையும்), பதக்கமுமாகும். 15. இது, மதுரை மீனாட்சி அம்மனின் தலையணிகளில் ஒன்று. இது விலையுயர்ந்த மணிகள் பதித்த பொன் அணி. 16. (1) தலைச் சாமான் 1 (அ) நிலவு பிறை 1 (ஆ) சூரியப் பிறை (2) மாட்டியும் தோடும் சிமிக்கியும் (3) சம்பும் நெற்றிச் சுட்டியும் (4) சம்பும் நெற்றிச் சுட்டியும். (5) சம்பு (6) கிர்த்தா (7) நெற்றிச்சுட்டி (8) சிமிக்கி 17. (1) சடாங்கம் (சடை அணி) (2) குஞ்சம் (3) இராக்குடி (4) சந்திர வில்லை. 18. காதணிகள் (1) குணுக்கு (நேர்ப்பார்வையும், பக்கப்பார்வையும் (2) மகர குண்டலம் (3) குணுக்கு (மதுரை மறவர் மங்கையர்கள் அணிந்து வரும் காதணி (நேர்ப்பார்வையும் பக்கப் பார்வையும்) 19. கிர்த்தா (நேர்ப்பார்வையும், பக்கப் பார்வையும் (2) குணுக்கு (நேர்ப்பார்வையும், பக்கப்பார்வையும்) 20. (1) கொப்பு (2) பூவாளி (3) சூரி (முன் பார்வை) பக்கப்பார்வை, (4) தண்டட்டி (முன்பார்வை) பக்கப்பார்வை (மதுரை மறவர் குலப் பெண்கள் அணிந்து வருவது) (5) தார் குணுக்கு (பக்கத் தோற்றமும், நேர் முகத் தோற்றமும்.) 21. (1) புல்லாக்கு (2) பேசரி (3) நத்து (பல்வேறு தோற்றம்) (4) நாகபாதம் (நேர்ப்பார்வையும், பக்கப்பார்வையும்) 22. (1, 2, 3) மகர குண்டலங்கள் (4,5,6) சர்ப்ப குண்டலங்கள் (7) இரத்தின குண்டலம் (8) பொன் ஓலை (9) வாளி (10) பொற் குண்டலம் (11) தோடு (12, 13) குண்டலங்கள். 23. கழுத்தணிகள் : 1 முதல் 8 வரையுள்ள உருவங்கள் தமிழகத்தில் பல்வேறு இனத்தவர்கள் அணியும் தாலிகள் (9) சுத்து மணியும் தாலியும். 24. (1) காய் வடிவான பொன் மணிகள் கோத்த கழுத்தணி (2) உட்கட்டுப் போன்று இரு அரிசிகளை ஒன்றாக இணைத்துக் கழுத்தைச் சுற்றியணியும் ஒரு அணி. (3) கழுத்தைச் சுற்றியணியும் மூன்று வடங்களாலான சிறு அரிசி கோத்த ஒரு கழுத்தணி. 25. (1) நெல்லிக்காய் மாலை (2) பிச்சியரும்பு மாலை (3) கொத்தமல்லி மாலை. 26. சுத்துமணி. இதில் கோர்க்கப்பட்ட ஒவ்வொரு மணிக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. சுத்துமணியின் நடுவில் தாலி இடம் பெற்றிருக்கிறது. இது சிவலிங்க வடிவில் அமைந்திருக்கிறது. சுத்து மணி நூலில் அல்லது பொன் கொடியில் கோர்க்கப்பட்டிருக்கும். இரு புறமும் இரு தாயித்துக்களின் உள்ளே மந்திரத் தகடுகள் வைக்கப் பெற்றிருக்கும். தாயித்துக்களை அடுத்துப் பல சின்னங்கள் உள்ள மணிகள் காணப்படுகின்றன. (1) பெருஞ்சீரக விதையின் ஒரு கொத்து (2) பொட்டு என்று கூறப்படும் மந்திரத் தன்மைகள் உள்ள வட்டமான 4 மணிகள் (3) காய்கள் (4) பூ அல்லது பழம் (5) துளசி மாடம் (6) சந்தனக் கும்பா அல்லது பாத்திரம் (7) அரக்குக் - குலீசம் - இது கோயிலின் கொடுமுடியின் ஒரு உருவ அமைப்பு (8) வாதுமைக் கொட்டைகள் 6, (9) அன்னாசிப் பழம் (10) முலாம்பழம் (11) சாதிக் காய், (12) கத்தரிக்காய் (13) உணவு உண்ணும் பாத்திரம், (14) பன்னீர்செம்பும் (15) திட்டவட்டமாகக் கூறமுடியாத தீங்கனிக் கொத்து, (16) மிளகாய்கள், (17) சம்பங்கிகள் 2 (18) அடையாளம் காணமுடியாத பழக்குலை, (19) கொத்தமல்லிக்காய்க் கொத்து, (20) வில்வ இலை, (21) மாங்காய்கள் 2, (22) வாழைப்பழங்கள், (23) தேங்காய், (24) தாமரை முகை, (25) பெயர் கூறமுடியாத இலை, (26) பெயர் கூற முடியாத பழம். 27. (1, 2, 3) கழுத்தையொட்டியணியும் அட்டிகை போன்ற பொன் கழுத்தணி (4) வெள்ளிக் காப்புகள். 28. மணிகள் பதித்த பதக்கங்களும், பொன்மணி மாலையும். 29. புய அணி : (1) இரத்தின வங்கி (அ) இரத்தின வங்கியின் பக்கத்தோற்றம் (2) பொன் வங்கி (3) பாசிப்பந்து. இது ஆணும் பெண்ணும் அணியும் அணிகலன். 30. முன்கையணி : (1) கைச்சரி 31. காலணிகள் : (1) கால்சரி - பூ வேலைப்பாடுகள் செய்யப் பட்ட வெள்ளி அணி. 32. (1) வெள்ளிக்காப்பு (நேர்ப்பார்வையும், பக்கப் பார்வையும்) (2, 2 அ) காப்பின் நேர்ப்பார்வையும் பக்கப் பார்வையும் (3) காப்பு (4, ஏ) காப்பின் பலவகைத் தோற்றம். 33. (கீழ் வரிசை) (1) காப்பு (2) கொலுசு (3) கடகம் (மேல் வரிசை) (4) முடக்கு மோதிரம் (நெளிவு) இது வணக்குறு மோதிரம் எனவும் கூறப்படும். (5) முடக்கு மோதிரம் (பக்கப் பார்வை) (6) ஒற்றைக்கல் பதித்த மோதிரம் (7) சிவந்திப்பூ மோதிரம். 34. நுசுப்பணிகள் : (1) மேகலை (2) காஞ்சி (3) கலாபம் (4) தாமம் (5) விரிசிகை ( ஒரு பக்கத் தோற்றம்) 35. (1, 2) தண்டைகள் (வெள்ளியணிகள்) (3, 3 அ) தண்டையின் பக்கப் பார்வையும் நேர்ப்பார்வையும் (விவசாயிகளின் அணி) 36. (1, 2, 3, 4) தண்டையின் பல்வேறு தோற்றங்கள். 37. (1) வேலங்காய்க் கொலுசு (2) அத்திக்காய்க் கொலுசு (3, 4, 4அ, 5) பாதசரங்கள் (சங்கிலி), பிற்காலகால் அணிகள் 38. பாதச் சிலம்பு 39. கால் விரல் அணி (1, 2) முஞ்சி (3) சலங்கை மெட்டி (4) மெட்டி (5) பில்லணை (6) விரலணி (7, 7அ, 7ஆ) மீன் மெட்டியின் பலவகைத் தோற்றம். இவை இடது காலின் 2வது, 3வது விரல்களில் அணிபவை. 3வது விரலில் அணியும் மீன் சின்னம் சிவனின் ஒரு அடையாளம். 40. (1, 1அ) கால் விரலணி (நேர்ப் பார்வையும் பக்கப் பார்வையும் (2) பீலியின் பக்கப்பார்வை (மேலேயுள்ள வளையம் விரலில் மாட்டுவதற்குரியது) (2அ) பீலியின் மேற்புறத் தோற்றம் (3, 3அ) சலங்கை மிஞ்சியின் பக்கப்பார்வையும், மேற்பார்வையும்.  1. Ornament by Dr. Ananda K. Coomaraswamy in the Art bulletin Vol. XXI. P. 375-382. Published by the College art association of America and edited by the Johns Hapkins university. 1. Eolithic age 2. Paleolithic age 3. Neolithic age 1. தமிழ் முரசு - சிங்கப்பூர் 21-7-70