பண்பாட்டு வரலாறு நூற்களஞ்சியம் - தொகுதி ஆறு வேளாளர் வரலாறு சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி ஆறு வேளாளர் வரலாறு | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 2006 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 14 + 98 = 112 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 105| படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், மலர் அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல் களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன்குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். உங்கள் கைகளில் தவழும் வேளாளர் வரலாறு எனும் இந்நூல் கையெழுத்துப் படியாக நூலாசிரியர் இராகவன் அவர்களின் மகனார் இரா.மதிவாணன் அவர்களிடம் இருந்தது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று மனமுவந்து கையெழுத்துப்படியினை கொடுத்து உதவினார். இதனை முதன்முதலாக வெளியிடுகின்றோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளிவருகின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப்போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், இந்நூலுக்கு முன்னுரை அளித்துச் சிறப்பு செய்துள்ள பி.இராமநாதன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல்களையும், வெளிவராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங்களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதிகளாக உங்கள் கைகளில் தவழ விட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்து விட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், திருமதி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன்,இல.தருமராசு ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) நாள் கா. வீரலட்சுமி அம்மையார் 30.12.2005 (அறிஞர் அ. இராகவனின் தங்கை) முன்னுரை வேளாளர் வரலாறு என்ற பெயரில் அறிஞர் சாத்தன்குளம் அ.இராகவன் எழுதி கையெழுத்துப் பிரதியாக விட்டு விட்டுச் சென்ற இந்நூலை அமிழ்தம் பதிபபகம் வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. அதில் உள்ள பல செய்திகள் இன்றும் பயன்தருவன. வேளாளர் பற்றி மட்டும அன்றி மாந்தக் குமுகாயத் தோற்றம், சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம், தமிழர் மெய்யியல் பற்றிய செய்திகளும் இந்நூலில் உள்ளன. இப்புலங்களில் கடந்த நாற்பது ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள ஆய்வு வளர்ச்சியினால் இன்று அறிவுலகம் ஏற்றுள்ள செய்திகள் எவையென்பதை வாசகர்கள் உணருதல் நலம். அவை சுருக்கமாகச் சில தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. க. மாந்த இனத் தோற்றமும் பரவலும்; அப்பரவலில் தொல் தமிழ்மொழி பேசியோர் பங்கும். 2. இப்பொழுதுள்ள மனிதர்களாகிய (Anatomically Modern Humans) வகையைச் சார்ந்த நம் மனித இனம் ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது; அதாவது- சைபீரியாவுக்கு இன்றைக்கு 30,000ஆண்டுகளுக்கு முன்னரும் ஐரோப்பாவுக்கு 40,000 வட/தென் அமெரிக்காவுக்கு 30,000-12,000 ஆதிரேலியாவுக்கு 60,000 ஜப்பானுக்கு 30,000 நியூகினி தீவுக்கு 32,000 பசிபிக் தீவுகளுக்கு 4000-1000 (மைக்ரோனிசியா, பாலினீசியா) பரவினர் என்பது இன்றைய அறிவியல் திட்டவட்டமாக ஏற்றுள்ள முடிவு ஆகும். [M¥ãÇ¡fhÉÈUªJ மனிதன் சுமார் 60,000 ஆண்டுகட்கு முன்னர் ஆதிரேலியா போன்ற பகுதிகளுக்குச் சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம் என்றும் இந்தியக்கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் (Continental Shelf) ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்றும் கூறுகிறார் பிளெமிங் (2004)] 3. திராவிட மொழிகளுக்கும் ஆதிரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையிலுள்ள மிக நெருங்கிய ஒப்புமையை பி.இராமநாதன் (குப்பம்) திராவிடப் பல்கலைக் கழகத்தின் திராவிடியன் டடீ 1-3; ஏப்ரல் - சூன் 2003 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை விரிவாக நிறுவுகிறது. தொல் திராவிட மொழி பேசுநர் தென்இந்தியாவில் கண்டிப்பாக 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இருக்க வேண்டும் என்பதையும் இங்கிருந்து அதற்கு முன்னரே ஆதிரேலியப் பழங்குடி மக்கள் தொல் தமிழ் மக்களிடமிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும் என்பதையும் அக்கட்டுரை நிறுவுகிறது. காலின்பி .மாசிகா 1999இல் கூறியதும் குறிப்பிடத்தக்கதாகும். தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (ஏறத்தாழ ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல் திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம் ( It may be a question of a very ancient common substratum in south Asia, Pre-Dravidian going back even to the original peopling of the world; The year Book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi) 4. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தற்கால மாந்த இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது; முதல் தாய்மொழி ஏறத்தாழ 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது; இன்றைக்கு ஓர் இலட்சம் - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தென்னிந்தியா வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் தற்கால மாந்த இனம் பரவியது. இவ்வாறு வடக்கு, வடகிழக்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் திராவிட மொழி பேசுநருக்கு முகாமையான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இந்தக் கோட்பாட்டை ஞானப்பிரகாசர்-தேவநேயன் கோட்பாடு என அழைக்கலாம். (திராவிட மொழிகளுக்கு ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் (மொழிக் குடும்பங்கள் பிறவற்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும்) விளக்க வல்லது இக்கோட்பாடேயாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிகமாகும். (ஹீரா 1953; மதிவாணன் 1995; இராமநாதன் 1999; பூரண சந்திரஜீவா 2004) அவர்களுக்கு எலாம், சுமேரியா, எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கிய திலும் பங்கு இருந்திருக்க வேண்டும். 5. பன்னாட்டு திராவிட மொழியியல் ஆய்விதழ் சூன் 2007 கட்டுரையில் டெபான் லெவிட் பின்வருமாறு திராவிடர் ஏற்றம் கொள்கையை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்: கடல் மட்டம் இப்பொழுதுள்ளதைவிட மிகக்குறைவாக இருந்த பனியூழிக் காலத்தில் ஆப்பிரிக்கா-தென்னிந்தியாவை இணைத்த விரல் போன்ற நில இணைப்புகள் (Land Bridges) தீவுகள் வழியாக ஆப்பிரிக்காவிலிருந்து தென் ஆசியாவிற்கு திராவிட மொழி பேசுநர் வந்திருக்கலாமென்னும் கோட்பாட்டை பி.இராமநாதன் வலியுறுத்துகிறார். அக்கோட்பாட்டை நானும் ஆதரிக்கிறேன். ஆதிரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளவை எனக் கண்டுள்ளனர். உறவுமுறை (Kinship), பூமராங் (வளைதடி) பயன்பாடு ஆகியவையும் அம்மக்களுக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு.6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப் பட்டனர் ஆதிரேலியப் பழங்குடிமக்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆதிரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 40,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்றனர் ஆதிரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 40,000 ஆண்டுகட்கு முன்னரே திராவிடர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்த (திராவிடர் ஏற்றம்) கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவி லிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத்திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உராலிக் , அல்தாயிக் ,இந்தோ-ஐரோப்பியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக் கூற இயலாது. உ) சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகமும் வேளிரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் அந் நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே என்றும் தகுதி வாய்ந்த பன்னாட்டு அறிஞர் அனைவரும் இன்று ஏற்கின்றனர். தமது Indus Script Dravidian (1995) நூலில் இரா.மதிவாணன், சிந்து வெளியில் முந்து தமிழ் (2004) நூலில் பூர்ண சந்திர ஜீவா ஆகியோர் அவ்வெழுத்துக்களைத் தொல்தமிழாகப் படிக்கும் பொழுது தொல்காப்பியத்திலிருந்து கிட்டும் மொழியியல் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். புறநானூறு 201,202இல் குறிப்பிடப்படும் இருங்கோவேளின் முன்னோர் சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடையவர்களாகக் கபிலரால் கருதப் பட்டனர். புறநானூறு 202 குறிப்பிடும் அரையம் ரிக்வேதம் 6.27.5இல் சுட்டப்படும் ஹரியூபியா தான் என்பது பி.எல்.சாமி கருத்து (செந்தமிழ்ச் செல்வி சனவரி 1994). அரையம் = அரசமரம். அரைய+அகப்பா = அரையகப்பா = ஹரப்பா என்று பெயர் மாறியது என்கிறார் அவர். இருங்கோவேளின் முன்னோர் 49 தலைமுறைகளுக்கு முன்னர் (அதாவது தொல்பழங்காலத்தில்) புகழ்பெற்ற துவரை என்னும் கோட்டை நகரை ஆண்டு வந்தனர் என்று புறம் 201 கூறுகிறது. தமது தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் வேளிர் துவாரபதி (துவாரகை)யிலிருந்து வந்தவர்கள் என்கின்றார். அரையம் ஹரப்பாவைத்தான் குறிப்பதாகக் கொண்டால் ஹரப்பா பற்றியும் துவாரகை பற்றியும் கபிலர் காலத்தில் வழங்கிய (ஓரு நகருக்குரியதை மற்றதற்குரியதாக மாற்றி வழங்கிய) தொன்மக் கருத்தைப் புறம் 201,202 பாடல்கள் கூறுகின்றன என்க. இதனை ஜீவா மேலும் ஆய்வு செய்கிறார். வேள்-வேட்-பேட் (bet) - பேட் துவாரகா என்று துவாரகையின் பெயர் வரலாற்றை அவர் தருகிறார். 7. சுமேரிய நாகரிக முத்திரைகளில் சிங்கங்கள் இரண்டைக் கொல்லும் கில்காமெஷ் உருவம் காணப்படுகிறது. கில்காமெஷ் பற்றிய தொன்மக் கதையும் சுமேரியப் பொறிப்புகளில் தரப்படுகிறது. சிந்துவெளி முத்திரைகள் இரண்டில் (கில்காமெஷ் சிங்கங்களைத் தாக்குவது போலவே) இந்திய வீரன் ஒருவன் புலிகள் இரண்டை கைக்கு ஒன்றாகக் கொல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளான். புறம் 201 இருங்கோவேளைப் புலி கடிமால் என்று அழைக்கிறது. இருங்கோவேளின் முன்னோர் காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என ஐ.மகாதேவன் Journal of Tamil Studies மே 1970 இதழில் உன்னித்திருந்தார். ஆயினும் 2002 சனவரியில் அவர் கருத்து அந்த உன்னிப்பிற்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதாகும். 8. ரிக்வேதம் I.133,1 & 3 இன் ஆங்கில வடிவம் வருமாறு; ஓ மகவான்! அழிந்துபட்ட வைலதானக நகரத்திலும், அழிந்து பட்ட மகாவைலத நகரத்திலும் உள்ள சூனியக் காரிகள் கும்பல்களை அழித்து ஒழிப்பாயாக நான் மேலுலகத்தையும் பூமியையும் சத்தியத்தினால் தூய்மைப்படுத்துகிறேன். வைலதான நகரில் இந்திரனால் தோற்கடிக்கப்பட்டு கொலையுண்டு கிடக்கும் (இந்திரனை எரித்த) ஆற்றல் மிக்க துஷ்டப் பிசாசுகளை நான் எரித்து ஒழிக்கிறேன் ஆரியர்களால் நாகமாக்கப்பட்ட நகரத்தின் பெயரான வைலதானம் என்பது ஆரிய மொழியல்லாத பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பது டாக்டர் பரோ கருத்து ஆகும். (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிடரி XII - 1 ஏப்ரல் 1963, ஒருக்கால் வைலதானம் என்பது வேளிருடைய ஊர்/நகரைக் குறித்திருக்கலாம். 9. சிந்து முதலிய ஆறுகளில் சிந்துவெளித் திராவிடர்கள் கட்டியிருந்த அணைகளை ஆரியர் உடைத்து நாட்டை வெள்ளக் காடாக்கி அழித்திருக்கலாம் என்பர் தாமோதர் தர்மானந்த் கோசம்பி (The Culture and civilisation of Ancient India in historical outline 1974) மதுரைக் காஞ்சி 725ஆம் அடியிலும் அகநானூறு 346ஆம் பாடலிலும் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளைக் குறிக்க கற்சிறை என்னும் சொல் பயன்படுகிறது. ரிக்வேதத்தில் அணையைக் குறிப்பிடும் சிரா (Sira) என்னும் சொல் கற்சிறையின் சிதைவே என்பர் பி.எல்.சாமி (செந்தமிழ்ச் செல்வி:1994 நவம்பர்). 10. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் தமிழிய மொழியாகப் படிக்கத்தக்கவையே என்பதும் தமிழ் வரி வடிவம் சிந்துவெளி வரிவடித்திலிருந்தே உருவாகியிருக்கலாம் என்பதும் இன்று அறிஞர்கள் பலரும் ஏற்றுள்ளவையாகும். (காண்க.பி.இராமநாதன் (1999) சிந்துவெளித் தொல்தமிழ நாகரிகம்) 11.சிந்து வெளி மொழியும் எழுத்தும் திராவிட/தமிழத் தொடர்புடையவை என்ற ஹீரா கருத்தை இன்று தகுதி சான்ற நடுநிலை அறிஞர் பலரும் ஏற்றுள்ளனர் எனினும் அவர் அவ்வெழுத்துக்களை கருத்தெழுத்தாக (Logographic) ஆகப் படித்ததை இன்று அத்துறை அறிஞர் ஏற்றிலர். அவற்றை Logo-Syllabic ஆகவே இன்று பர்போலா; மகாதேவன், மதிவாணன், ஜீவா முதலியோர் படிக்கின்றனர். எனவே ஹீரா உடைய 1938ஆம் ஆண்டு The Velalas in Mohoenjodaro கட்டுரையில் அவர் படித்த வாசகங்கள் இன்று ஏற்கப்படுவன அல்ல. எனினும் அக்கட்டுரையில் அறிஞர் ஹீரா கூறும் சில கருத்துக்கள் இன்றும் கருதத் தக்கனவையேயாம். ஆகவே அக்கட்டுரையைத் தமிழாக்கி இராகவன் எழுதியது இந்நூலின் இறுதியில் அச்சிடப் பட்டுள்ளது. 12. சிந்து நாகரிகத்துக்கும் தமிழருக்கும், குறிப்பாக வேளிருக்கும் கி.மு.1500க்கு முன்னரே நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்பது உறுதியேயினும் அக்கால வேளிரே இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு வேளாளச் சாதியினர் ஆயினர் என்று உறுதியாகக் கூறுத்தக்க சான்றுகள் இல்லை. 13. இன்று உலகில் உள்ள 640 கோடி மக்களுமே ஆப்பிரிக்காவில் ஒன்றரை லட்சம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த ஓரிணையர் அல்லது சிறு குழுவினரின் பிறங் கடைகளான ஒரு தாய் மக்களே என அறிவியல் இன்று திட்டவட்டமாக நிறுவிவிட்டது. ஆகவே இனம் (Race), சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் எல்லாம் பொருளற்றவை என்பதை அறிவுடையோர் உணர்வர். 14. இந்தியாவில் சாதி பற்றிய தமது (1999) நூலில் சூசன்பேலி எழுதியுள்ள பின்வரும் கருத்துக்களும் மனதிற் கொள்ளத் தக்கன: இந்தியாவில் சாதி பற்றி வெளிவந்துள்ள பல்லாயிரக் கணக்கான நூல்களையும் கட்டுரைகளையும் முழுமையாகப் படிப்பது இயலாத செயல். அதன் தோற்றம், நீண்ட ஆயுள், இன்றும் அதற்குள்ள வன்மை ஆகியவை பற்றி வெவ்வேறு காரண காரிய விளக்கங்களை ஆய்வறிஞர்கள் பலர் கடந்த இருநூறு ஆண்டுகளாக அளித்து வந்துள்ளனர். அவற்றுள் எதுவும் சாதி பற்றி முழுமையாக (இந்தியாவின் எல்லாப்பகுதிகளுக்கும், எல்லாச் சாதியினருக்கும், பல்வேறு காலகட்டங்கள் அனைத்துக்கும்) பொருந்தக் கூடியது அல்ல. எனினும் அவ்வறிஞர்கள் பலரின் கோட்பாடுகளில் சிற்சில அம்சங்கள் சில கால கட்டங்களுக்கு சில பகுதிகளில் சில சாதிகளைப் பொறுத்தவரைப் பொருந்துவனவாகும். கடந்த இருநூறு ஆண்டுகளாக இருந்து வருவதும் இன்றைக்கும் நாம் இந்தியாவில் காண்பதும் ஆன சாதிக்குச் சாதி வன்மம் மிகுந்த சாதிமுறை ஆங்கில ஆட்சி தொடங்குவ தற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது: “In these new post - Mughal realms parvenu ruling elites took bold initiatives in the attempt to assert their power and legitimacy, turning to the symbols and language of caste as a prop of their statecraft, and especially to versions of these which emphasize power and beneficence” “Far then from reflecting continuities from an ancient Hindu past, the caste-centered India that we see presented anthropologically in the work of Louis Dumont and other social scientists was largely a creation of this period(1700-1830 AD) though many of its features were further consolidated under British rule” 15. சூசன்பேலியின் முடிவுரை வருமாறு: சாதிச் சமுதாயம் என்று மட்டுமே விவரிக்கத்தக்க சமுதாயமாக (Monolithic “Caste society”) இந்தியா என்றுமே இருந்ததில்லை. இன்றும் இல்லை. இந்தியர்கள் சாதி, வர்ணக் கோட்பாடுகளையும் ஆசாரங் களையும் பொருட்படுத்தாத காலம் ஒன்று கூட இனி வரலாம். எனினும் இந்தியாவின் கடந்த கால வரலாறு, இன்றைய பண்பாடு, அரசியல் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது சாதி கண்டு கொள்ளாமல் விடக்கூடியது அல்ல. அதன் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் இதுவரை அது பேராற்றலுடன் நெடுங்காலம் நிலவி வந்துள்ளது 16. இறுதியாக இப்பொருண்மை குறித்து மேலும் ஆய்வு செய்வோர் நன்மை கருதிப் பின்வரும் (சுருக்கமான) ஆதார நூற்பட்டியல் தரப்படுகிறது. வேலாயுத முதலியார், தொழுவூர்(1880):வேளாண் மரபியல் தர்டன்,எட்கார்(1909): Castes Tribes of Southern India ஏழாம் மடலத்தில் வேளாளர் பற்றிய பதிவுகள் உள்ளன. (முனைவர் க.ரத்னம் தமிழாக்கம் செய்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் 2005இல் வெளிட்டுள்ள 7ஆம் மடலத் தமிழ் வடிவின் பக்கங்கள் 374-399ஐக் காண்க.) தேசிகவிநாயகம் பிள்ளை(1909): The Nanchinad Vellalas . The Malabar quarterly Review III -3 pp 259-278 இராகவையங்கார் மு. (II 1916) வேளிர் வரலாறு மறைமலையடிகள் (1923;II 1927) :வேளாளர் நாகரிகம் பாலசுப்ரமணியன்(1927): வேளாளரது தோற்றமும அவர் தம் வரலாறும் தேவநேயப் பாவாணர் (1937) வேளாளர் பெயர்கள் செந்தமிழ்ச் செல்வி நளி 1937 குலசேகரராஜ், BJM(1925) திருநெல்வேலி தளவாய் முதலியார் குடும்ப வரலாறு ïuhfita§fh® ïuh.(1930fŸ;1994 மறுபதிப்பு) தமிழகக் குறுநில வேந்தர்கள் (வேளிர்பற்றி பக்.11-49 பார்க்க) Heras, Father HJ Studies in Proto Indo-Mediterranean Culture; Bombay Arokiaswamy M(1957) The early history of the Vellar Basin Subrahmanian,N(1964) The Poysalas; Journal of Indian History 42.2;Aug 1964 (On Indus civilisation-Irungovel, Hoysalas etc) Guha, Uma(1969) The fort dwellers; MAN IN INDIA 45:228-232 Ramanathan P (1969) Irunkovel and Kottai Velalar the possible origins of a closed community at pp 323-343 BSO AS XXXII Barnett,Stephen A(1970) The structural position of a South Indian Caste: Kondaikatti Velalars in Tamilnadu Ph.D.Dissertation; University of Chicago Beck, Brenda E.F.(1972) Peasant society in Kongu Vancouver;; University of British,Columbia Press நாகசாமி,இரா (1973) யாவரும் கேளிர் (காண்க இயல் 7: வேளிருள் வேளே விரற்போரண்ணல்; இயல் 10:உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே) Pillay, K.K.(1973) The traditions and history of the Nanchinad Vellalas; BITC:July-Dec 1973 Arunachalam M (1975) A study of the culture and history of the Karkattar at pp 1-72 of Bulletin of the Institute of Traditional cultures Jan-June 1975 Ganesh, Kamala (1979) : Vellalas: A socio-historical perspective at pp 47-58 of South Indian Studies II K.K.Pillay (1977) The caste system in Tamilnadu Journal of the Madras University; Section A: Humanities Vol. XLiX-2 see pp 43-131 Irunkovel Ilakiya Kalai Manram (1980):Nangudi; Sivagalai Madhivanan R (1995 Indus script Dravidian) Parpola,Asko (1994) Deceiphering the Indus script Susan Bayly(1999) Caste, Society and Politics in India from the 18th Century to the Modern Age ( The New Cambridge History of India Vol IV-3) pp 421 இராமநாதன் பி (1999) சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம் தேவ ஆசீர்வாதம் (1981: II 2002) வேளாளர் யார்? பூர்ண சந்திர ஜீவா (2004) சிந்துவெளியில் முந்து தமிழ் பொருளடக்கம் பதிப்புரை iii உரிமையுரை v 1. குமுகாயத்தோற்றம் 1 2. வளர்ச்சியும் வாழ்வும் 25 3. வேளாளர்- அந்தணர் 57 4. வேளாள வேந்தர்கள் 59 வேளாளர் வரலாறு 1. குமுகாயத் தோற்றம் மக்களினம் ஆதியில் மலைகளில் வாழ்ந்து கொண்டிருந்தது. அங்கு எழுந்த தட்பவெப்ப நிலைகளின் கோளாற்றினால் உணவுப் பொருள்களின் பற்றாக்குறை தோன்றியது. அதன் பயனாய் ஒரு சிலர் இடம் பெயர விளைந்தனர். அவர்கள் மலைமுகட்டினின்று கீழே இழிந்து வரும் ஆற்றின் இருகரை மருங்கின் வழியாய் மலை அடிவாரத்தை அடைந்தனர். அங்கு மக்கள் வாழ்வதற்கேற்ற வசதிகள் உண்டு என்று கருதி அங்கு வதிய ஒரு சிறு குழுவினர் முற்பட்டனர். ஒரு சிலர் அங்கு உறைய விரும்பாது ஆற்றங்கரைகளின் வழியாய் மீண்டும் தம் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினர். நீண்டதூரம் போந்து சமதளத்தைக் கண்டனர். அங்கு பள்ளங்களில் நீர் தேங்கிக் கிடப்பதையும், பயிர்கள் வளர்வதற்கேற்ற கன்னி நிலம் ஏராளமாகக் கிடப்பதையும் நீர் வளமும் நில வளமும் சேர்ந்திருப்பதால் மரம், செடி கொடிகள் பல இடங்களில் அடர்ந்து கிடப்பதையும் கண்டனர். மலர்கள் கொத்துக் கொத்தாய் மரம் செடி கொடிகளில் தொங்கின. எங்கும் நறுமண வாசனை பரவி மகிழ்ச்சியை ஊட்டின. மா, பலா முதலிய மரங்கள் காய்த்து பழுத்துக் கிடந்தன. இவற்றைக் கண்டு பலர் கண்டுகளித்து உண்டு உயிர்த்து ஆற்றங்கரையிலும், குளக்கரை களிலும் குடியேறினர். ஒரு சிலர் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து ஆறு கடலோடு கலக்கும் இடம் வரை சென்று கடற்கரையில் குடியேறி வாழத் தலைப்பட்டனர். அங்கு ஆற்றிலும், கடலிலும் வாழும் மீன்களையும் சிப்பி, ஆமை முதலியவைகளையும் உண்டு உயிர் வாழ முற்பட்டனர். நானிலம் மக்கள் தங்கள் வாழ்விற்கு இன்றியமையாத கற்கருவிகளை கண்டெடுக்கவும், உணவுப் பொருள்களை எளிதில் பெறவும் மலையில் மட்டுமின்றி மலை அடிவாரத்திலும், சமவெளிகளிலும் கடற்கரைகளிலும் பல்லாயிரம் ஆண்டு அலைந்து திரிந்துள்ளனர். அவர்களிற் பலர் நிலையான இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அங்கு நிரந்தரமாகக் குடியேறி வாழ முற்பட்டனர். இவர்கள் ஆதியில் குடியேறிய இடம் நானிலம் என்று நவிலப் படும். அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்படும். இங்கு குடியேறி வாழ்ந்த மக்கள் குறிஞ்சி நில மக்கள், முல்லை நில மக்கள், மருத நில மக்கள், நெய்தல் நில மக்கள் என அழைக்கப் பட்டனர். மலைகளில் உள்ள குறிஞ்சிப் பூக்கள் நிறைந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் குறிஞ்சி நில மாக்கள் என்றும் மலையடிவாரத்தில் முல்லைப் பூக்கள் நிறைந்து கிடந்த இடத்தில் குடியேறிய மக்கள் முல்லை நில மாக்கள் என்றும் சமவெளியில் கழனிகள் மலிந்துள்ள மருத மரத்தின் பூக்கள் நிறைந்து கிடந்த இடத்தில் குடியேறிய மக்கள் மருத நில மாக்கள் என்றும் கடற்கரையில் நெய்தற் பூக்கள் நிறைந்த இடத்தில் குடியேறி வாழ்ந்த மக்கள் நெய்தல் நில மாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் முறை குரவர், இடையர், உழவர், பரவர் என்றும் கூறப் பெறுவர். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் காய்கனிகளையும், வேட்டையாடி அதில் கிடைக்கும் விலங்கு பறவை முதலியவற்றின் ஊனையும் உண்டு உயிர் வாழ்ந்து வந்தனர். முல்லை நில மக்கள் ஆடு மாடுகளைப் பழக்கி பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் முதலியவற்றைச் செய்து உண்டும் கேழ்வரகு, புல், சாமை, தினை முதலிய புஞ்சையில் விளையும் கூலப்பொருள்களைச் சமைத்து உணவாக உண்டும் வாழ்ந்தனர். மருத நில மக்கள் நிலத்தை உழுது, வித்திட்டு நீர் பாய்ச்சி, விளைவித்து, அறுத்து, அறுவடையில் கிடைத்தவைகளைக் குவித்து போர் அடித்து நெல்மணிகளையும், எள், பயறு, உளுந்து, சோளம், புல், ஆமணக்கு போன்ற கூலப் பொருள்களை விளைவித்து உண்டு உவகையோடு வாழ்ந்து வந்தனர். நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆற்றிலும் கடலிலும் வாழும் மீன், நண்டு, ஆமை முதலியவைகளைப் பிடித்து அவற்றின் ஊனை உண்டு உயிர் வாழ்ந்து வந்தனர். ஆதி காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகைப்பட்டதாய் இருந்தன என்பதற்குப் பண்டையத் தமிழ் நூற்கள் சான்று தருகின்றன. பழம் பெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே - (தொல் - பொருள் - 931) என்று கூறப்பட்டுள்ளது. அப்பால் இந்த நான்கு நிலங்களுக்கும் உரிய தெய்வம், உணவு, விலங்கு, மரம், புல், பறை, தொழில், யாழ் முதலியன அவ்வத் திணைக்குரிய பாடல்களில் கூறப்படுகின்றன. மருத நிலத்திற்குத் தெய்வம், வேந்தன்; உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்; மா, எருமையும் நீர் நாயும், மரம் வஞ்சியும் காஞ்சியும் மருதமும்; புள் - நீர்க் கோழியும் தாராவும்; பறை மணமுழவும் நெல்லரிகிணையும், செய்தி நெல்லரிதலும் அவை கடாவிடுதலும் பயிர்க்குக் களைகட்டலும்; யாழ் மருத யாழ்; தலைமகன் பெயர் - ஊரண், மகிழ்நன்; தலைமகள் பெயர் - கிழத்தி மனைவி; பூ தாமரைப்பூவும் செங்கழுநீர்ப் பூவும்; நீர் மனைக் கிணறும், பொய்கையும் யாறும்; ஊர் பேரூர் எனவும் கூறப்படும். மக்கள் பெயர் கடையர் கடைச்சியர் உழவர், உழத்தியர் எனப்படுவர். மருதநில மக்கள் தமிழகத்தில் மக்கள் புதிய கற்காலத்திற்கு முன் எழுந்த பழங் கற்காலத்திலே (Paleolithic age) - அதாவது சுமார் 15000 ஆண்டு களுக்கு முன்பே உழவுத் தொழிலை வளர்த்து, கைத்தொழிலைத் திறம்பட வளர்த்து மொழி, நெறி, தத்துவம் முதலியவைகளில் சிறப்புற்று நாகரிக வாழ்க்கைக்கு அடிகோலி விட்டனர். மருத நிலத்தில் வாழை, நெல், கரும்பு முதலிய பயிர்கள் உண்டாக்கப் பெற்றன. மக்கள் நிலத்தை உழுது பண்படுத்தி கூலப் பொருள்களை உற்பத்தி செய்யவும் அவைகளை அறுவடை செய்து களஞ்சியங்களிலும் பெரிய குதில்களிலும் இட்டுப் பாதுகாக்கவும் தெரிந்திருந்தனர். ஆறு, கால்வாய், குளம், கிணறு முதலிய நீர்நிலைகளி னின்று வயல்களுக்கு நீர் பாய்ச்சவும் உணர்ந்து கொண்டனர். இவர்கள் வெள்ளத்தை ஆளத் தெரிந்ததால் வேளாளர் என்னும் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் பயிர்களை ஆடுமாடு, புலி, யானை முதலிய விலங்குகள் வந்து அழித்து விடாது கையில் வேல் தாங்கிப் பயிர்களைப் பாதுகாத்து வந்தமையால் வேல் ஆள் என்னும் பெயர் பெற்று அப்பால் அப்பதம் வேலாளன் என்று திரிபுற்றது என்று கூறுவதும் உண்டு. சிவன் கையில் வேலை (மூவிலை வேலை)த் தாங்கி இருந்ததால் அவைரை வேலன் (சூலபாணி) என்று அழைக்கப்பட்டு, அப்பால் அவரை வழிபட்டு வந்த மக்களுக்கும் வேலான் என்று கூறப்பட்டு வேல் ஆளன், வேலாளன் என்ற பெயர் எழுந்தது என்றும் கூறப்படுகிறது. ஆறுகளுக்குத் தொலைவில் வாழ்ந்த மக்கள் மழை நீரைக் குளங்களில் தேக்கி வாய்க்கால் வழியாகப் பயிர்களுக்குப் பாய்ச்சவும் கிணறுகள் நீரூற்றுகளிலிருந்து நீரை உபயோகிக்கவும் பழகிக் கொண்டதால் காராளர் என்று பெயர் பெற்றனர். காரை ஆண்டவர் காராளர் என அழைக்கப்பட்டனர். இம் மருத நிலத்தில் எழுந்த ஆற்றங்கரைப் பண்பாடு சுமார் 5000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக எண்ணப்படுகிறது. ஆதித்த நல்லூர் அகழ்ஆய்வில் அகழ்ந்து கண்ட பொருள்கள் கி.மு.2000ஆம் ஆண்டிற்கு உட்பட்டதாக இருக்கலாம் என்றும் கொற்கையில் சமீபத்தில் அகழ்ந்து கண்ட பொருள்களை ஆய்ந்து அவைகள் கி.மு.875-க்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுவதி னின்று மருத நிலத்தில் எழுந்த உழவர் நாகரிகம் கி. மு. 300-க்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. கி.மு.1000ஆம் ஆண்டிற்கு முன் தமிழகத்தில் ஒரு பெரும் நாகரிகம் நிலவியது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆனால் இதுவரை கல்வெட்டுகளோ அறிவியல் பாங்கான எடுத்துக் காட்டுகளோ கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் பழங்கற்கால மக்களும், புதுக் கற்கால மக்களும் வாழ்ந்துள்ளனர் என்று புதை பொருள் ஆய்வாளர்கள் சான்று காட்டி உறுதி கூறியுள்ளனர். செங்கற்பட்டிற்கு அண்மையில் உள்ள மலைக் குகைகளில் பழங்கற் கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்று மைய அரசின் புதை பொருள் ஆய்வுதுறை ஆய்வாளர் வி.டி. கிருஷ்ணசாமி அகழ்ந்து ஆய்ந்து அம்முது மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் அவர்கள் உணவு சமைத்த இடங்களையும் சாம்பல்களையும் கண்டு உலகிற்கு அறிவித்துள்ளார். மருத நில மாக்கள் மரங்களின் அடியில் மனைகள் கட்டி அவற்றுள் தாளிகளில் கூலப் பொருள்களைச் சேமித்து வைத் திருந்தனர். தேவைக்குப் போக எஞ்சிக் கிடக்கும் பொருள்களைக் கடல் மீன், உப்பு, பால், நெய், தேன்அடை, யானைத்தந்தம், புலித் தோல், மான் தோல், காண்டாமிருகத்தின் கொம்பு, புலிப்பல், புலி நகம் முதலியவைகளுக்குப் பண்டமாற்றாக விற்றுவந்தனர். ஆட்டிறைச்சி, மான் இறைச்சி முதலியவற்றைக் குறவர்களிடமிருந்து பெற்றும் வந்தனர். மருத நிலத்தில் விளைந்த பண்டங்களைப் பிற விடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியதிருந்ததால் இந்நில மக்கள் வண்டிகளைச் செய்யப் பழகிக் கொண்டனர். மாடுகளைப் பழக்கி உழவும், மரம் அடிக்கவும், போர் அடிக்கவும், பொதி சுமக்கவும், வண்டி இழுக்கவும் பழக்கினர். ஆதியில் மாடுகளின் மீதேறி பிற ஊர்களுக்குச் செல்வதும் உண்டு. இந்நிலத் தெய்வமான சிவ பெருமான் காளை வாகனன் என்று கூறுவதே இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும். மனித சமூக நாகரிகம் மிக வேகமாக மருத நிலத்தில் துளிர்த்துக் கிளைத்து எழுந்தது. இங்கு உழவுத் தொழில் செய்து வந்த வேளாளர் குலத் தலைவர்கள் நிலக்கிழார் ஆயினர். அவர்கள் பண்ணையார் மிராசுதார் என்ற உயர்ந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்கள். இந்தச் சமூகத்திலே அதிகமான நிலத்தையுடைய பிரபுக்கள் தோன்றினர். இவர்கள் வேந்தர்களாயும், இளம் கோக்களாயும் அமைச்சர்களாயும், சேனைத்தலைவர்களாயும் புலவர்களாயும், அறிவர்களாயும், இசைப்புலவர்களாயும், பாவல ராயும், நாவலராயும், அந்தணராயும், அரசர்களாயும், வணிகர்க ளாயும், உழவர்களாயும், அறவோர்களாயும் வாழ்ந்தனர். இவர்கள் அதிகமாக மாடுகளை வைத்திருந்ததால் செல்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். மாடு என்பதற்குத் தமிழில் செல்வம் என்று பொருள் கொள்ளப்பட்டது. ஒருவருடைய செல்வம் அவர்கள் பெற்றிருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்தே முற்காலத்தில் அளவிடப்பட்டு வந்தது. அதிகமான மாடுடையவர்கள் பல ஏக்கர் நிலங்கள் உழவும், போர் அடிக்கவும், நெல்மணிகளை வண்டியில் கொண்டுவரவும் வசதி பெற்றிருந்தனர். மருத நிலக்காட்சி மருத நிலத்தின் மாண்பையும் அதன் எழிலையும் அதன் வளத்தையும் பற்றி பெருங்கதையில் கொங்குவேல் என்னும் புலவர் வண்ண ஓவியம் தீட்டினாற் போல் அழகுற எடுத்துக்காட்டியுள்ளார். அதன் பொருள் அடியில் வருமாறாகும். பசிய கண்களையுடைய எருமைக் கன்றை நினைந்து பசிய இலையிடத்து இரங்கிச் சொரிந்த பாலின் வண்ணத்தையுடைய அன்னமும் நாரையும் அதன் குஞ்சுகளும் வயலிடத்துள்ள ஆரவாரத்திற்கஞ்சி எழும். கரும்பிடத்திற்றூங்கும் தேன் கூட்டினின்றும் தேன் அலர்ந்த செந்தாமரைப் பூ மீது சொட்டும் இத்தோற்றம், அந்தணர் மூட்டுவதற்கு நெருப்பின் மீது நெய் சொரிவதை யொக்கும். இவ்வகையான சோலைகளில், பாலைகளும் பழுத்த குலைகளை யுடைய தெங்கும் பலாவும், குருந்தும், மாவும் புன்னையும், செருந்தியும் பொன் போன்ற பூங்கொத்துகளையுடைய புலிநகக் கொன்றையும் இவை போன்ற பல மரங்களும் நிறைந்து இடைவெளியின்றி இருந்தமையால் ஞாயிற்றின் கிரணங்கள் உள்ளே நுழைய முடியாமை யினால் பகற்காலத்தும் சோலைகளிடத்தே இருள் மண்டிக் கிடக்கும். வயல்களில் பயிர்களின் தாளில் படிந்த கனத்த கதிரையுடைய நெல் வரப்பிற் சாய்ந்து கிடக்கும். பெரிய எருதுகளைக் கொண்டு உழும் உழவரின் ஒலியும், வயலில் வேலை செய்யும் கூலி ஆட்களின் ஆரவாரமும் வயல்களின் இடை இடையே களைபிடுங்கும் பசிய இலைகளில் கள்ளை வார்த்துப் பருகிய கடையரது பாடலும் கிளிகளின் பாடலும், மத்தளத்தின் ஒலியும், கிணைப்பறையின் ஆரவாரமும், மார்ச்சனையுடைய முழவின் ஆர்ப்பும் மடைகளின் வாய்களைத் திருத்தும் மள்ளரின் ஒலியும் இடையீடின்றி எழும்.1 உழவர் நுகத்திலே எருதுகளைப் பூட்டி, பெண் யானையின் வாயை ஒத்த வளைந்த வாயை உடைய கலப்பையின், உடும்பு முகத்தைப் போன்ற பெரிய கொழு மறையும்படி அமுக்கி உழுது விதைகளை விதைப்பர். பயிர் விளைந்து அறுக்கும் பருவம் உற்றபொழுது அவற்றுட் தங்கும் குறுகிய கால்களையும் கரிய கழுத்தினையுமுடைய காடை பறக்கலாற்றாதனவும், கடம்பின் பூப்போன்ற நிறமுடையனவுமாகிய குஞ்சுகளைக் கூட்டிக்கொண்டு காட்டில் பரந்து சென்று தங்கும். கொல்லனது முறிந்த குறட்டினையொத்த காலையுடைய நண்டின் புற்றுச் சிதையும்படி கோரைப் புல்லைக் குத்தி எடுத்த மண் கிடக்கின்ற கொம்புடைய கரிய காளைகள் பெரிய வயல்களின் கண் நின்று போரிடும். அதனால் சேறாடிய நிலத்தை ஒக்க மிதித்து உழவர் நாற்றுமுடிகளை நடுவர். வயல்களில் களைபறிப்போர், நெய்தற் பூவைச் சூட வெறுப்பாராயின், முள்ளியின் பூவைப்பறித்துக் கோரைப் புல்லின் தண்டைப் பல்லாற் கிழித்து முடிந்த நாரால் கட்டிய மாலையை ஈருடைய கரிய தலை நிறையும்படி சூடுவர். சண்பினது காயிடத்தேயுள்ள பொன் போன்ற தாதை மார்பின் மீது பூசுவர். இரும்புத் தகடு போன்ற திரையாத மெல்லிய தோலினை யுடைய வேலையாட்களின் பிள்ளைகள் பழஞ் சோற்றின் திரளையை வெறுத்து வரம்பிடத்துக்கட்டிய புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடில்களின் முற்றத்தே அவல் இடிப்பர். அவ் வோசையைக் கேட்ட கிளிகள் அஞ்சிப்பறக்கும். இவ்வாறு இடையறாத புது வருவாயினையுடையதும் வளைந்த கதிர்களை யுடையதுமான கழனிகளிடத்துக் குழவிக் கூட்டத்தையொத்த முற்றின நெல்லின் தாள்களை அறுத்துத் தொழிலாளர், பாம்புறை கின்ற மருத மரத்தின் நிழலிற் போர் அடுக்குவர். துணங்கையாடும் பேய்க் கூட்டம் வெள்ளை வண்ணமான ஆடை உடுத்து நின்றது போல் சிலந்தியின் வலைகள் போரைச் சூழ்ந்து கிடக்கும். அப்போர் களைவிட்ட பின்னர், வைக்கோலையும் கூளங்களையும் பிரித்து, ஈரம் புலருமாறு விட்டு மேல் காற்றிலே கையாற்றூவித் தூற்றின பொலி மேருவைப் போல் தோன்றும். மருத நிலம் சூழ்ந்த குடி இருப்புகளில் பசுங் கன்றுகளைப் பிணிக்கும் தாம்புகள் கட்டின தறிகள் நட்ட பக்கத்தினையும் நீண்ட ஏணிக்கும் எட்டாத உயரமும் தலையைத் திறந்து உள்ளே கொட்டப்பட்ட நெல்லினையுமுடைய பழைய குதில்களையு முடைய வீடுகளில் தச்சச் சிறார் செய்த விளையாட்டுத் தேர்களை உருட்டிக் கொண்டு திரிந்த குழந்தைகள் தமது தளர் நடையால் உண்டான வருத்தம் நீங்க செவிலித் தாய் இடத்து பாலையுண்டு அவர்களைத் தழுவிக் கொண்டே உறங்குவர். அங்குள்ளவர் நெல் சோற்றோடு கோழிப் பேட்டின் இறைச்சிப் பொறியலை உண்பர். யானையின் குரல் போன்று ஓலமிடும் ஆலைகளில் கருப்பஞ்சாற்றை கட்டியாகக் காய்ச்சுவர்.1 அகன்ற கழனியிடத்தே பசிய கரும்பின் பாகைக் காய்ச்சுகின்ற கொட்டிலில் நெருப்பின் புகை சுடுதலால் வயல்களில் நெய்தற் பூ வாடிக் கிடக்கும். காய்ந்த நெய்கதிரைத் தின்ற எருமைக் கன்றுகள் உயர்ந்த குதிரைகளின் பக்கத்தே படுத்துறங்கும். குலையுடைய தெங்கும் குலையுடைய வாழையும் காயுடைய கமுகும் மணம் வீசும் மஞ்சளும் மாமரங்களும், நுங்குடைய பனையும், அடி பரந்த சேயும், முளைத்த இஞ்சியும் அக்கழனியிடத்தே செறிந்து தோன்றும். ஒள்ளிய நெற்றியையுடைய மகளிர் உலர்கின்ற நெல்லைத் தின்னும் கோழியை எறிந்த, பொன்னாற் செய்த மகரக்குழை, பூண் அணிந்த சிறார் மனையின் முற்றத்தே கையால் உருட்டும் மூன்று உருளை யுடைய சிறு தேரினது உருளைத் தடுக்கும். 1 நெருப்பு எரிவது போன்ற தாமரையை இடை இடையே சேர்த்து அரிந்து குவித்த செந்நெல் அறுக்கும் வேலையாட்கள் கள்ளைக் குடித்து, வண்டிச்சில்லுச் சேற்றுட் புதைந்த தாயின் சகடம் செல்லுதற்குக் கரும்புகளைத் தெரிந்தெடுக்கும் ஊரன்.2 ஆரவாரமுடைய விடியற்காலத்து ஆட்களை அழைத்து அரவம் செய்யும் உழவரது துற்றாத பொலியினின்று எழுந்த நொய்த கூளங்கள் வானத்தை இருண்ட மேகம் போல் மறைக்க, இருள் புலர்கின்ற விடியற் காலத்து வைக்கோலைப் பெயர்த்து அலைத்துக் கடாவிட்டுத் தொழிற் செருக்கால் நேர்ந்த சோர்வு நீங்கும்படி, காற்றடிக்கப் பூத்தவிளவிய தளிருடைய மாவின் கிளிபோன்ற காய்க்கொத்துக்களைப் பிழிந்து, மாதுளங்காய் முதலியன சேர்த்துப் புளிக்கும் செவ்வி உண்டாகச் செய்து புதுக் குடங்களில் நிறைத்து வைத்த சாரத்தை வெயிலிலே வாடப் போட்ட பனையோலையாற் கோலிய தட்டுப் பிழாவில் வார்த்து மடுவில் மாடு நீர் குடிப்பது போற் களமர் குடிப்பர்; குடித்து கொள்ளும் பயறும் கலந்து பால் விட்டுச் சமைத்து வெள்ளிக் கோல் வரைந்தது போற்றோன்றும் வெள்ளிய கூழை வேண்டிய மட்டும் உண்டபின் நெற்குவியலைச் சூடாகச் சுற்றிப் பொழுது சரிய மருதின் நிழலில் எருதுகளோடு தங்குவர்.3 கடைசியர் காலையில் முடியிடத்தே வைத்து முடிந்த பூக்களைக்களைவர். களைந்த தலையிடத்தே நாற்றுமுடிகளைச் சுமந்து வயல்களுக்குச் செல்வர்; சென்று கள்ளை உண்டு களித்துப் பண்ணோடு பாடுவர். செந்நெற் கதிரோடு அறுகும் குவளையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிற் சூட்டி ஏர் பூட்டி உழுவோர், ஏர் மங்கலம் பாடுவர். நெல்லை அரிந்தோர் சூட்டைக் கடாவிட்டு முகவைப் பாட்டைப் பாடுவர். கிணைப் பொருநர் தெளிந்த ஓசையுடைய கிணைப்பறையைக் கொட்டுவர். உழவர், இரப்பவர் சுற்றத்தையும், புரப்பவர் சுற்றத்தையும் உழவிடத்தே விளைப்பர். (பெரும்பாண்) நிலப்பிரிவுகள் தமிழர்கள் வாழ்ந்த நிலங்கள் அந்த நிலத்தின் தன்மைக்கேற்ப நாலு நிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகள் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்படும். இந்த நிலத்தில் வாழும் மக்கள் முறையே குறிஞ்சி நில மாக்கள், முல்லை நில மாக்கள், மருத நில மாக்கள், நெய்தல் நில மாக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் பிற்காலத்தில் குறவர், இடையர், வேளாளர், பரவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் குறவர்கள் வேட்டையாடுதல் தேன் அடையெடுத்தல், கிழங்குகளைக் கிள்ளியெடுத்தல் முதலிய தொழில்களைச் செய்து வருபவர்கள். இவர்கள் ஆதியில் மரப்பட்டைகளையும் தோல்களையும் ஆடைகளாக அணிந்து வந்தனர். இவர்களின் ஆதித் தெய்வம் பழையோள் - அப்பால் முருகனைத் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இன்று, சில அறிஞர்கள் ஆதாம் முதலில் மலையில் இறக்கப் பட்டதால் அவனே குறிஞ்சி நிலத்திற்கும் குறிஞ்சி நாகரிகத்திற்கும் அடிப்படையிட்டவர் என்றும் இங்கு ஏவாளின் செல்வாக்கு அதிகம் ஏட்பட்டதால் இங்கு தாய் ஆட்சி நிலவியதற்கு எடுத்துக்காட்டாக மிளிர்கிறது என்றும் கூறுகின்றனர். ஆதாம் ஏவாளின் புதல்வர்கள் மூவர்களில் ஆபெல் என்பவன் ஆடுமாடுகளை மேய்ப்பவனாக கடவுளுக்கு ஆட்டைப் பலியிட்டு வந்தான் என்றும் அவனது பலியை ஆண்டவன் ஏற்று வந்தான் என்றும் தெரிகிறது. இவனே முல்லை நிலத்தின் முதல்வனாகக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். ஆதாம் - ஏவாளின் மூத்த மகனாகிய காயீன் பயிர்த்தொழில் செய்பவனாய் இறைவனுக்கு காய்கனி முதலியவற்றைப் படைத்து வணங்கிவந்தான். ஆனால் கடவுள் ஆபெல் படைத்த ஆட்டுப் பலியை ஏற்று அவனுக்கு அருள் செய்ததுபோல காயீனின் தேங்காய் பழங்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை என்று அவன் சுட்டிக் காட்டி இறைவனை விலங்குகளின் ஊனைத் தின்று சுவைப்பவன் என்று கூறியதனால் அவன் மீது கோபங்கொண்டு அவனை வெட்டிக் கொன்றுவிட்டான் என்று பைபிள் கூறுகிறது. ஆனால் காயீன் இறைவனுக்குத் தேங்காய் பழம் படைத்து வழிபடும் மருத நிலப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாழும் மக்களின் முதல்வன் எனக் கூறப்படுகிறது. மருத நிலம் மருத நிலம் நானிலங்களுக்கும் தாய் நிலம். உலகிற்கு உயிரூட்டும் உணவுப் பொருள்களை மலைமலையாய்க் குவித்த மாநிலம். இந்நில மக்கள் நானிலத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே உயர்ந்த பண்பாட்டை, நாகரிகத்தை, சமயத்தை, மொழியை, அரசியல் அமைப்பை வகுத்தவர்கள். தமிழ் நாட்டில் கப்பல் கலையைக் கண்டு தமிழர்களின் வணிகம் எகிப்து, சுமேரியா, தென்அமெரிக்கா, கிரீட் முதலிய எல்லா நாடுகளிலெல்லாம் ஓங்கி வளரத் துணை நின்றவர்கள். இவர்களே சிந்துவெளியில் குடியேறி வேளாளர் அரசை நிறுவி, ஏர்க்கொடியும், ஏற்றுக்கொடியும் இமயத்தின் மீது பறக்கவிட்டவர்கள். தமிழர்களின் அல்லது திராவிடர்களின் ஒப்பற்ற வரலாறு - கி.மு.6000ஆம் ஆண்டு முதல் 1500- வரை பொன் எழுத்தால் எழுதிப்போற்றச் செய்தவர்கள்; இவர்களே சிந்துவெளியிலும் எகிப்து, எல்லம், சுமேரியா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் சிவனெறியைப் பரப்பியவர்கள். சைவ சமயக் காப்பாளர்கள். உலகில் உயிர்க் கொலையைத் தடுக்கவும் புலால் உணவை அகற்றவும் கங்கணம் கட்டியவர்கள். தமிழகத்தில் தோன்றி இரும்பு ஊழியையும் இரும்புப் பண்பாட்டையும் நன்கு பயன்படுத்தி ஞாலமெங்கும் தமிழர் பெருமையை நிலைநாட்டிய வர்கள்; தமிழ் மொழியைக் கண்ணெணப் போற்றுபவர்கள். 1. தலைவர் : ஊரன், கிழவன், மகிழ்நன் என்று அழைக்கப்படுவன். 2. தலைவி : கிழத்தி, நாச்சியார் என அழைக்கப்படுவர். 3. மக்கள் : உழவர், கடையர், களமர், வேளாளர், காராளர் என அழைக்கப்பட்டனர். 4. மகளிர் : நாச்சியார், உழத்தியர், கடைச்சியர் என அழைக்கப் பட்டனர். 5. தொழில் : பயிர்த் தொழில், உழுதல், வணிகம் நடத்தல் அரசோம்பல், அறநெறிகாத்தல் முதலியன. 6. உணவு : வெண்ணெய், செந்நெல்லும் வெண்ணெல்லும் அரிசிச் சோற்றினைச் சமைத்து அறுசுவையோடு உண்ணல். 7. நீர் : ஆற்று நீரும் குளத்து நீரும் கிணற்று நீர் குடித்து மகிழ்வுற்றிருத்தல். 8. மலர் : தாமரை மலர், குவளை, பிச்சி, கழுநீர், இருவாச்சி, மலர்சூடி மகிழ்தல். 9. ஊர் : அகரம், உறையுல், பேரூர், மூதூர், கிராமம் குடம் கோட்டம், சரணம், தண்டை, தாவளம், நகர், நகரம், நிகேதனம், நியமனம், நிலயம், படப்பை, பள்ளி, பாழி புரம், புரி முதலியனவாகும். 10. தெய்வம் : வேந்தன், இந்திரன், சிவன், முக்கண்ணன் எனப் படுவர். உமாதேவியும் முருகனும், திருமாலும் இந்நிலத்தோர் வழிபடும் தெய்வமாகும். 11. விலங்கு : எருமை, ஏறு, நீர் நாய் இந்நிலத்திற்குரிய விலங்குக ளாகும். 12. பறவை : வண்டானம் நாரை கமபுள் குருகு என்பன இந் நிலத்திற்குரிய பறவைகளாகும். 13. மரம் : வஞ்சி, காஞ்சி, மருதம், வேம்பு முதலியனவாகும். 14. பறை : கிணை, முழவு, பணை முதலியவைகளாகும். 15. யாழ் : மருதயாழ் 16. பண் : மருதப்பண் 17. ஆடை : பஞ்சாடை, வண்ணச் சேலைகள் மெல்லிய மேலாடைகள். 18. அணிகலன் : பொன்னால் செய்த தலையணிகலன்கள், கழுத்தணிகலன்கள், காதணிகலன்கள், வெள்ளியாற் செய்த காலணி கலன்கள், விரலணிகலன்கள், ஏழைகள் ஈயத்தினாற் செய்த குணுக்கு, கடுக்கன் என்னும் அணிகலன்களும் பித்தளைக் காப்புகளும், பாசி பவளங்களினாலான கையணிகலன்களும் கழுத்து மாலைகளும், முத்து வடங்களும் அணிவர். 19. தெய்வீக மரம் : வில்வம் : வேம்பு, அரசு ஆகியவைக ளாகும். 20. அரசன் : இந்த நிலத்தில்தான் அரசன் முதன் முதலாக எழுந்தான். அவன் தெய்வமாக எண்ணிப் போற்றப்பட்டான். ஆதித்த நல்லூர் இடுகாடு, திருநெல்வேலியினின்று திருச்செந்தூர் சாலையில், நெடிய மருதமரங்கள் அணி அணியாய் நிற்கும் அரசபாட்டையின் குறுக்கே இருக்கிறது. இதன் வடபுரம் தண்பொருநையாறும் ஏனை மூன்று பக்கங்களிலும் பசுமையான வயல்களும் உள்ளன. எனவே ஆதித்தநல்லூர் பண்பாடு ஆற்றங்கரைப் பண்பாடு என்று கூறுகிறோம். மேலும் ஆதித்த நல்லூர் இடம் பெற்றிருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் நடுவே மருத நிலமும் கிழக்கே நெய்தல் நிலமும் மேற்கே முல்லை, குறிஞ்சி நிலமும் உள்ளன. ஒரு மாவட்டத்தில் நான்கு நிலமும் அமைந்த இத்தகைய வாய்ப்பு பிற மாவட்டங்களில் காண்பதரிது. குறிஞ்சி நிலத்தினின்று குடிபெயர்ந்த சில மக்கள் முல்லை நிலத்தை அடைந்து அங்கும் உணவுப் பொருள்கள் போதாதிருந்ததால் ஆற்றின் கரைகள் மூலம் மருதமரங்கள் அடர்ந்த பகுதிகளில் சமவெளிகளும் கழனிகளும் குளம் குட்டைகளும் நீர்த் தேக்கங்களும் இருப்பதைக் கண்டு அங்குக் குடியேறினர். நிலங்களைக் கிள்ளி நஞ்செய்ப் பயிர் செய்தனர். உளுந்து, பயிறு, எள் முதலிய கூலப் பொருள்களைப் பயிரிட்டு வந்தனர். மாடுகளைப் பழக்கி உழவும், போர் அடிக்கவும், சூடடிக்கவும், பொதி சுமக்கவும், வண்டி இழுக்கவும் பழக்கினர். ஆதியில் மாடுகள் மீது ஏறிச் சவாரி செய்வதும் உண்டு. இந்த நிலத் தெய்வம் காளையை வாகனமாகக் கொண்டிருப்பது அதை வலியுறுத்தும். நாட்டில் இரும்பு ஊழி எழுந்தது முதல் நன்கு பயன்படுத்த முன்வந்த மக்கள் மருத நில மக்களேயாகும். முதன் முதலாக உழும் கலப்பைக்கு இரும்பினால் கொழு செய்து ஆழ உழவு செய்து நெல்லை ஏராளமாக விளைவித்து வந்தனர். இரும்பு மண்வெட்டி யும், கடப்பாரையும் இவர்கள் நெற்பயிர்களுக்கு கால் வெட்டவும் குழிதோண்டவும் பெரிதும் பயன்பட்டன. இவர்கள் இரும்புக் கருவிகளால் வாய்க்கால்கள் தோண்டினர். குளங்களை வெட்டினர். இந்த நிலத்தில் நெல்மணிகளையும் கூலப்பொருள்களையும் மலைமலை யாய்க் குவித்தனர். இவர்கள் இரும்பினால் வாள்களும், கத்திகளும், வேற் கம்புகளும், திரிசூலமும் செய்து பயிர்களை அழிக்க வரும் பன்றி, புலி, யானை முதலிய பிராணிகளைக் கொன்றும் விரட்டி யடித்தும் பயிர்த் தொழிலைப் பாதுகாத்து வந்தனர். இங்கு விளைந்த கூலப்பொருள்களைப் பாதுகாத்து வைக்கவும், சோறு சமைக்கவும், நீர் மொண்டு வரவும் குதில்களும், பானைசட்டிகளும், குடங்களும் கலையங்களும் தேவைப்படவே இந்நிலத்தின் மண்ணைப் பயன் படுத்தி மட்பாண்டம் வனையும் தொழில் வளர்ந்தது. அவர்களுக்கு மருத நில வேளாளர்கள் வேளாரிடத்தில் நெல்லைக் கொடுத்து மட்பாண்டங்களை வாங்கி அவர்களை ஆதரித்து வந்தனர். அதே போன்று, இந்த நிலத்தில் பயிர்த்தொழில் நடத்தி வந்த வேளாண் குடிமக்களுக்கு இன்றியமையாத கலப்பை மரம், வண்டி, தோணி, ஓடம் முதலியவைகள் செய்யத் தச்சர்களும் எல்லா மக்களுக்கும் வேண்டிய இரும்புக் கருவிகளையும் தட்டு முட்டுச் சாமான்களைச் செய்யும் கொல்லர்களும், மட்பாண்டங்களை விட உறுதியான வெண்கலப் பாத்திரங்களையும் கல்சட்டிகளையும் கல் மரவைகளையும், கல் விளக்குகளையும் செய்யும் கன்னார், கல்தச்சர் போன்றவர்களும் இந்த மருத நிலத்தில் தோன்றினர். இந்த நிலத்தில் வீடு கட்டும் கொத்தர்கள் முதலியவர்களும் தோன்றினர். மருத நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டது. அதில் விளையும் பஞ்சை நூலாக்கி ஆடைகள் செய்தனர். பருத்திக்கொட்டைகளை மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தினர். இந்த நிலத்தில் ஆடைவெளுக்கும் வண்ணார்களும் முடி களையும் அம்பட்டர்களும், மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் தோன்றினர். அணிகள் செய்யும் பொற்கொல்லர்கள் தோன்றினர். எண்ணையை நெய்யாக்கும் எண்ணெய் வாணியர்களும் தோன்றினர். இந்த நில மக்களுக்கு மாடு மிகுதியாகத் தேவைப்பட்டதால் ஒவ்வொரு விவசாயியும் 100, 200 மாடுகள் வைத்திருந்தனர். மாடுகள் வைத்திருப்பவர்களே அதிகமான நிலங்களைப் பயிரிட்டு நெல்லை யும் கூலப்பொருளையும் விளைவித்து வந்தனர். யார் அதிக எண்ணிக்கையுள்ள மாடுகளை வைத்திருக்கிறார்களோ அவர்களே செல்வர்கள், நிலச்சுவான்தார், பண்ணையார் என அழைக்கப் பட்டனர். நாளடைவில் உழுதுண்டு வாழ்ந்த உழவர் சமுதாயம் இரண்டாகப் பிரிந்தது. உழுபவர்களையும், பிறரைக் கொண்டு உழுவித்துண்பவர்களையும் கொண்ட சமுதாயமாக மாறியது. அதாவது உழுதல் செய்யும் வேளாளர்களையும், உழாது பிறரைக் கொண்டு உழுவித்து வாழும் பண்ணையார்களையும் கொண்டதாக மாறியது. இந் நிலத்திலேதான் திருமணம் என்னும் சமூகக் கட்டுப்பாடு எழுந்தது. கணவன் மனைவி, தாய் தந்தை, அண்ணன், தமயன், அக்காள் தங்கை, மாமன் மாமி, சித்தப்பன் சித்தி அண்ணி, கொழுந்தி முதலிய உறவு முறைகள் எழுந்தன. நானிலங்களிலும் இந்த நிலத்தில்தான் பரத்தையர் என்ற ஒரு சமூகம் எழுந்தது. இந்த நிலத்தவர்களான வேளாளர்கள் உணவுப் பற்றாக்குறை என்னும் பேச்சை ஒழித்தனர். எல்லோரும் பட்டினி இன்றி வாழ வழிவகுத்தனர். இந்த நிலத்தில் குடும்பத்தலைவன் சமூகத்தலைவன் ஆனான். அவனது தலைமையில் வீடுகள் கட்டப்பட்டன. நாடு நகரம் அமைக்கப்பட்டது. உள்நாட்டு வணிகமும் அயல்நாட்டு வணிகமும் கடல் வணிகமும் எழுந்தது. சமூகத் தலைவன் அரசனானான். அவனே நீதிபதியாகவும் தெய்வமாகவும் போற்றப்பட்டான். சமயமும் வழிபாடும். மருத நிலத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் தந்தைத் தெய்வ வழிபாடும் இணைந்து அம்மையப்பர் வழிபாடாக மலர்ந்தது. இந்த நில மக்கள் சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்டாலும் சக்தியும் அவரோடிணைத்து வழிபடப்பட்டது. குறிஞ்சித் தெய்வமாகிய முருகனும் முல்லைத் தெய்வமாகிய மாயோனும் வாரணனும் போற்றப்பட்டனர். இங்கு கோயில்கள் கட்டப் பட்டன. சிலைகள் நிறுவப்பட்டன. பொன், வெள்ளி, செம்பு படிமங்கள் வார்க்கப்பட்டு அவைகள் திருகோயில்களில் வைத்து வழிபடப்பட்டன. தேர்களில், சப்பரங்களில், பல்லக்குகளில் வைத்து வழிபடப்பட்டன. தெய்வ உருவங்களுக்கு அணிகலன்கள் செய்து பூட்டப்பட்டன. திருவிளக்குகள் செய்து வைக்கப்பட்டன. நெய் விளக்கேற்ற நிலங்களையும் ஆடுமாடுகளையும் செல்வர்கம் மன்னர் களும் மானியமாக அளித்து வந்தனர். கோயில்களுக்கு வருபவர் களுக்கு உணவு அளிக்கப்பட்டது. கோயில்களில் ஆடுபவர், பாடுபவர், ஓதுவர், பட்டர், உணவு சமைப்பவர், பல்லக்கு சுமப்பவர், குழல் ஊதுபவர், மேளம் அடிப்பவர் போன்றவர்களுக்கெல்லாம் உணவு அளிக்கப்பட்டது. வீடுகள் அளிக்கப்பட்டன. வயல்கள் அளிக்கப்பட்டன. பொற்காசுகளும் பொன்அணிகளும், பொன் ஆடைகளும் வழங்கப்பட்டன. கேட்பவர்களுக்கு இல்லை யென்னாது கொடுக்கப்பட்டது. கோயில்களில் மருத்துவ சாலைகளும் நாடகசாலைகளும் பள்ளிகளும் ஏற்படுத்தி ஆதரிக்கப்பட்டு வந்தன. சிவமடங்களை நிறுவி தமிழ்க்கல்வியும் சமயக்கல்வியும் பரப்பப்பெற்று வந்தன. தமிழ் இலக்கணம், இலக்கியம், மறை நூல்கள், கலை நூல்கள் மக்கள் எல்லோர்க்கும் பயில வசதி அளிக்கப்பட்டு வந்தது. மருதநில வேளாளர்கள்தான் சிவநெறியைப் பேணிவளர்த்தனர். சிவநெறியை உலகெங்கும் பரப்பினர். உலகிலே முதன் முதலாக சைவ நெறிதான் பிரச்சார சமயமாய் கி.மு.5000-ம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, எல்லம், சுமேரியா, தென் அமெரிக்கா, கிரீட் முதலிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. புதிய கற்காலத்திலே சிவநெறி உருப்பெற்றெழுந்துவிட்டது. சிவலிங்கமும், சிவன் உருவமும் கி.மு.4000 ஆம் ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளியில் நிலவியதாகக் கூறப்படுகிறது. ஆந்திர நாட்டைச் சேர்ந்த பெல்லாரி மாவட்டத்தில் உள்ள காப் கல்லுக் குன்றில் காணப்பட்ட சிவலிங்கமும் நந்தியும் பத்தாயிரம் ஆண்டு பழமை யுடையன. தென் அமெரிக்காவிலும் சிவன் கோயிலும் சிவலிங்கங் களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிமு. 4000-ம் ஆண்டையொட்டி எகிப்து, சுமேரியா, எல்லம்,கிரீட் முதலிய நாடுகளில் சிவ வழிபாடு நிலவி இருந்தது என்று கூறப்படுகிறது. புதிய கற்கால மக்கள் இலிங்க வழிபாட்டு மரபும் படைப் பாற்றல் சின்னமாக வழிபடப்படும் குறிவடிவத் தெய்வத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாய்த் திகழ்ந்தனர். இதினின்று சைவ சமயத்தின் மூலக்கூறு இலிங்க வழிபாடுடையது என்று தெளிவாக அறிந்து கொள்ளலாம். புதிய கற்கால மக்களின் தொடக்கம் இலிங்க வழிபாடும் சைவ சமய நியதியையும் கொண்டது என்று ஊகித்தறிய லாம். மக்கள் இனத்தின் தந்தையை இலிங்கத்தின் சின்னமாகக் கொண்டனர். அது இனப் பெருக்கத்தின் துணையாகப் பிரதி பலிக்கப்படுகிறது. புதிய கற்கால மக்கள் வேறிடத்து புதிதானதாய் உருவை இடம் பெறச் செய்து பழங்கல் ஊழியில் எழுந்த தெய்வத்திற்கு ஒரு சக்தியாக மாற்றிக் கொண்டனர். எனவே சிவனும் சிவலிங்கமும் எங்கெங்கு காணப்பட்டாலும் அவை தமிழ்நாட்டு மருதநில மக்கள் உலகிற்கு வழங்கிய அருட் கொடையாகக் கருத இடம் உண்டு. தாய்த் தெய்வ வழிபாடு பண்டைக் காலத் தமிழர் குமுகாயத்தில் தாய் ஆட்சியும், தாய்த் தெய்வ வழிபாடும் நிலவி இருந்தது. உலகில் எங்கும் எந்நாட்டிலும், எச்சமூகத்திலும் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வ வழிபாடும் நிலவி யுள்ளனவென்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழ் நாட்டில் பழங்கற்காலத்திலே தாய் குடும்பத் தலைவியாயும், அப்பால் அவள் இறந்துபட்டபின் அவள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு முக்கோண வடிவிலான கல்லையோ, வட்ட வடிவாய் அமைந்த கல்லையோ வைத்து ஆதித் தமிழர் தாய் வழிபாடு இயற்றி வந்தனர். பண்டையத் தமிழர் குமுகாயத்தில் திருமண வாழ்வு அரும்பவில்லை. மக்கள் விலங்குகள் போல் வாழ்ந்தனர். பெண் தான் விரும்பிய எந்த ஆணுடனும் உடலுறவு கொண்டு மக்களைப் பெற்று வந்தாள். ஆண் எந்தப் பெண்ணையும் மனைவியென்றும் மக்கள் என்றும் உரிமை கொண்டாடும் வழக்கில்லை. ஒரு பெண் தான் விரும்பிய எந்த ஒரு ஆணுடனும் கூடிக் கருவுறுவாள். ஆண் அதற்கப்புறம் அந்தப் பெண்ணிருக்கும் இடம் தேடி வருவதில்லை. அவனுடைய பிள்ளை என்று எவர் மீதும் உரிமை கொண்டாடுவதும் இல்லை. தாயே கருவுற்று, மக்களைப் பெற்று, பாலூட்டி, வளர்த்து அவர்களைக் காப்பாற்றி வந்தாள். தாயோடே பிள்ளைகள் இருக்கும். தாய் தனியாகவும் மக்களோடு சேர்ந்தும் உணவுதேடிச் சென்று கிடைத்ததையுண்டு மண்ணிலும், மரத்தடியிலும், கல்லிலும், கட்டாந்தரையிலும், பனியிலும், மழையிலும், வெய்யிலிலும், காற்றிலும் கிடந்து உயிர் வாழ்ந்து வந்தனர். தாயே முன்னின்று புலியோடும், பன்றியோடும், நாயோடும் கரடியோடும் பிற விலங்குகளோடும் போராடி அவைகளைக் கொன்று அதன் உதிரத்தைக் குடித்தும் ஊனைத் தின்றும் தம்மக்களுக்கு ஊட்டியும் குடும்பபாரத்தை நடத்தி வந்தாள். விலங்கு போரில் தாய் கை இழப்பதும், கால் இழப்பதும், கண் இழப்பதும், உயிர் இழப்பதுமுண்டு. தாய் மக்களுக்கு பாலூட்டியும், தேனூட்டியும் காய், கனி, கிழங்கு, ஊன் முதலியவைகளைக் கொடுத்தும் வளர்த்து வந்தாள். அவள் மக்களுக்காகவே வாழ்ந்தாள். மக்களுக்காகவே இறந்து வந்தாள். மக்களுக்கு எந்த விலங்கு தீங்கு செய்ய வந்தாலும் அஞ்சாது அவற்றின் மீது பாய்ந்து அதன் குரல்வளையைப் பிடித்துக் கடித்து அதன் உதிரத்தைக் குடித்து அதன் உயிரைப் பறித்து ஊனை மக்களுக்கு அளித்து தானும் உண்டு வந்தாள். அவள் மக்களிடம் அன்பும் அருளும் உடையவளாக இருந்தாலும் மிகுந்த எதேச்சதிகாரம் உடையவளாக இருந்தாள். அவள், தம் மக்களுக்கு தாயாய், தெய்வமாகக் காணப்பட்டாள். அவள் ஒரு எதேச்சதிகாரியாக விளங்கினாள். அவள் இட்டதே சட்டம் அவள் சொன்னதே மந்திரம். யாராக இருந்தாலும் அவள் சொன்ன சொல்லைத் தட்டினால் உடனே அவள் எமனுலகுக்கு அனுப்பி விடுவாள். தமிழர் சமூகத்தில் தலைமுறையாய் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வமும் தாய் வழிபாடும் நடைபெற்று வந்தது. இன்றும் அதன் எச்சமிச்சங்கள் கேரளாவில் உள்ளன. தாய் ஆட்சியும் தாய்த் தெய்வ வழிபாடும் தமிழர்களினிடையே நிலப்பாகுபாடுகள் எழுந்தபின்னரும் இருந்தது. ஆனால் தாய் ஆட்சி பெருங் கொடுங்கோலாட்சியாய் இருப்பதை அறிந்து மக்கள் அதை மாற்றி அமைத்தனர். குறிஞ்சி நிலத்தில் மகன் ஆட்சியாக முருகன் ஆட்சியையும் அவன் வழிபாட்டையும் செய்தனர். முல்லை நிலத்தில் மாயோள் ஆட்சிக்குப் பதிலாக . . . . ஆட்சியை நிறுவினர். மருத நிலத்தில் தாய் தந்தை ஆட்சி நிறுவி அம்மையப்பர் வழிபாட்டை கண்டனர். தாய் ஆட்சிக்குப் பதிலாக வாரணன் ஆட்சியை அமைத்தனர். ஆனால் புதிதாக எழுந்த பாலை நிலத்தில் நீண்ட நாளாக தாய் ஆட்சியும் தாய்த் தெய்வ வழிபாடும் நிலவியது. தாய், பழையோள், கொற்றவை, கிழாஅள், காளி, கூளி, செல்வி, சூலி, நீலி என்னும் பல பெயர்களால் வழிபடப்பட்டு வந்தாள். இன்றும் ஆட்சிப்பீடத்தில் மகளிர் ஏற்றப்பெற்றால் அவளது பாரம்பரியத்துவ மரபு வழியில் நின்று இது ஜனநாயக சகாப்தம் என்பதை மறந்து நீலி என்னும் பெயருக்கு ஏற்ப இந்தியாவிலும், இரேல் நாட்டிலும் நமது அண்டை நாடான இலங்கையிலும் தாய் ஆட்சியின் எதேச்சதிகாரம் எழுந்து மறைந்தது நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் மருத நிலத்திலே தாய் ஆட்சிக்கு பதிலாக அம்மை யப்பன் ஆட்சியும், அம்மையப்பன் வழிபாடு எழுந்து வாழ்வும், வளமும், அமைதியும், இன்பமும் பெருகி பொருளாதாரச் சிறப்பு மலர்ந்து, கடல் வணிகம் துளிர்த்து, நாடு நகரங்களில் வளர்ந்து மக்கள் உணவும் உடையும் பெற்று வாழ்ந்தனர் என்பதற்குச் சிந்து வெளி உழவர் ஆட்சி நல்ல எடுத்துக்காட்டாகும். கடல் வணிகம் திராவிடர்கள் - சிறப்பாகத் தமிழர்கள் உலகிலே பெரிய அளவில் கடல் வணிகம் நடத்துவதற்குத் துணையாக இருந்தவர்கள் பரதவர்களேயாகும். இவர்கள் கிறித்தவ சகாப்தம் எழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வணிகத்திற்குக் கால் கோலிவிட்டனர். தொடக்கத்தில் அண்மையில் உள்ள நாடுகளுடன்தான் வணிகம் நடத்தி வந்தனர். அப்பால் கவம் ஓட்டும் தொழிலில் நல்ல திறனும் பட்டறிவும் பெற்று மிகத் தொலைவி லுள்ள நாடுகளுக்கெல்லாம் சென்று மீண்டனர். தமிழ் நாட்டுக் கடலோடிகளின் வெற்றிகரமான செயல் கண்ட மக்கள் வியந்து போற்றினர். துணிந்த மக்கள் கடற்பயணம் செய்து அயல் நாட்டு மக்களோடு வணிகத் தொடர்பு கொண்டனர். எகிப்து, அல்உபைத், அல்ஹலாய், எல்லம், சுமேர், சால்டியா, கிரீட், தென் அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று அங்குக் குடியேறி யுள்ளனர். தமிழ் மக்கள் இலங்கை, கடாரம், மலையம், சிங்கபுரம், சாவகம், பாலித் தீவு போன்ற நாடுகளிலெல்லாம் குடியேற்றம் பெற்றதற்கும் அங்கெல்லாம் தமிழர் சமயமும், கோயில்களும், கலைகளும், பண்பாடும், நாகரிகமும் பரவியதற்கும் நாம் பெற்றிருந்த உயரிய கப்பற்கலையே காரணமாகும். தமிழர் 1000 ஆண்டுகளுக்கு முன் கடற்படையை நிறுவி கிழக்காசியா முழுவதும் சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்ததற்கு இராசராச சோழன் அவன் மகன் இராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற சோழர் கடற்படை எழுச்சி வரலாற்றில் என்றும் அழியாச் சான்றுகளாய் மிளிர்கின்றன. தூரகிழக்கு (Fiar east) பண்பாடு, தென் இந்தியாவிற்கு பெரிதும் கடப்பாடுடையது என்று அறிஞர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். தமிழர் நாகரிகம், இந்தோனேசியா, கம்போடியா, தென்அமெரிக்கா முதலிய நாடுகளில் நன்கு பரவியுள்ளது. நாம் பெருவியன், மாயர்கள் ஏன்? - அடக் (Astecs) உள்பட பல இன மக்களின் பழைய பழக்க வழக்கம் நாகரிகம் முதலியவற்றில் தமிழர் சமயமும், கலைகளும் சடங்குகளும், வரிசை முறைகளும், மரபு தழுவிய முறைகளும் செல்வாக்கு எய்தியுள்ளன. பழைய அமெரிக்காவை அகழ்ந்துகண்ட அறிஞர்கள் ஆதி காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் தென் இந்தியர்களாக இருக்கலாம் என்று முடிவுகட்டியுள்ளனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் தேடிப்பிடித்துள்ளனர். தென் அமெரிக்க மக்கள் செவ்விந்தியர்கள் என்பதே ஒரு உயரிய சான்றாகும். அங்கு ஆற்றங்கரையில் எடுப்பிக்கப் பட்ட திருக்கோயிலும் சிவபெருமான் திருஉருவமும், பிள்ளையார் சிலைகளும், யானை வடிவங்களும் 10-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குடியேறி தங்கள் சமயத்தையும் பண்பாட்டையும் நிலவச் செய்துள்ளனர் என்பதற்கு அழியாச் சான்றுகளாய்க் காணப்படுகின்றன. உலகமும் மக்களும் அந்தகாரத்தில் மூழ்கிநின்ற காலத்தில் தமிழர்கள் கண்டம் விட்டுக் கண்டம் சென்று ஆங்காங்கே குடியேறி அங்கு தங்கள் சமயத்தையும் பண்பாட்டையும் பரப்பி வந்ததற்கு மூலகாரணமாக இருந்தது அவர்களின் இரும்பு ஊழி என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை. தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் தமிழ் நாட்டின் தட்பவெப்பம் ஒரு காரணமாக இருக்கிறது. அது மக்களுடன் இணைந்து பல அரிய செயல்களை விளைவிக்கிறது. சுற்றுச் சார்புகள் மக்களின் அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரிய கருவியாகும். தட்பவெப்பநிலைகளாலே மக்களின் தோற்ற உருவாக்கம், திறமை, முயற்சி, ஊக்கம் முதலியவைகள் எழுகின்றன. மனிதனுடைய வெளித்தோற்றம் உள்ளத்தின் வளர்ச்சியோடு கூடி நன்கு செயல்படுகிறது. தென் இந்தியர் வலுவிழக்கச் செய்யும் சில தட்பவெப்ப நிலைகளைக் கடந்து செல்வதில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். தென் இந்தியா தட்ப வெப்பநிலை சத்துள்ள உணவு களையும் அழகிய உறுதியான ஆடைகளையும் எளிதில் பெற வழி செய்கிறது. சமய அறிவை வளர்க்க உதவுகிறது. நமது அறிவாற்றலை தத்துவஞான நடவடிக்கைகளை வளர்க்கிறது. வரலாற்றுக் காலங்களைப் பரிசோதனை செய்தால் இந்தியா பல ஞானிகளை உருவாக்கியும் தத்துவஞான விற்பன்னர்களைப் பெருக்கியும் மக்கள் நலனுக்கு தொண்டாற்றும் மனிதப் பண்புள்ளவர்களைப் பெற்றெடுத்தும் உலகிற்கு பெரும் நன்மை விளைவித்துள்ளது. உலகிலே அன்பின் சக்தியை நன்குணரச் செய்துள்ளது. மக்களின் அமைதியான வாழ்விற்கு அடிகோலி யுள்ளது. அன்பு (அஹிம்சை) முறையில் ஒரு எளிய மனிதன் பெரிய ஏகாதிபத்தியத்தைப் பணியச் செய்விக்க முடியும் என்று உலகிற்கு உணர்த்தியது. ஆதித்த நல்லூர், நெய்தல் நிலவிய திருச்செந்தூர் கடற்கரையி னின்று மேற்கே சுமார் 18 கல் தொலைவில் உள்ளது. ஆதித்த நல்லூர் வரை ஒரு காலத்தில் கடல் நீர் பரவி இருந்தது. இதில் தோணி, வள்ளம்போன்ற நீரைக் கடக்கும் சாதனங்கள் இருந்தன. ஆதித்த நல்லூர் பரம்பையும் அதன் அண்மையில் உள்ள பாலத்தையும் பார்க்கும் பொழுது இது ஒரு துறைமுகமாக இருக்கலாம் என்று சென்னை மாநிலக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் மதுரைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பழம் பாண்டிய வரலாற்று ஆய்வுக் கூட்டத்தில் படித்த கொற்கையின் தொன்மை என்ற கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் கொற்கையில் இரும்புத் தூண்டில்கள் காணப்படுவதன் மூலம் ஆதித்த நல்லூர் பண்பாட்டிற்கும் நெல்லை நிலப்பரதவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. மேலும் ஆதித்தநல் லூரில் அகழ்ந்து கண்ட பொருள்கள் திராவிட இனத்தின் ஆதித் தாயக்மாக விளங்கும் தமிழ் நாட்டின் நிறைவான வரலாற்றை வரைவதற்குரிய பலவிதச் சான்றுகளுடையனவாக இருக்கின்றன. தக்கணம் (தென் இந்தியா) தனி நிலையில் உலகில் மிகத் தொன்மையான ஒரு நாட்டுப்பிரிவிற்குரிய மண்ணியல் கூறுகளின் அமைப்புகளை உடையதாக இருக்கிறது. இன்னும், அது இந்திய இனங்களின் மிகப்பழமையான நாட்டினையுடைய திராவிட மக்களின் தாயக வரலாற்றின் விடிவெள்ளியாக இருக்கிறது - மக்கள் - எ. எய்ச். ரைலி. பக்.2 இலக்கியத்தில் வேளாளர் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் வேளாளர் சிறப்புகள் கூறப்பெற்றுள்ளன. தமிழ்ப் புலவர்கள் பலரும் வேளாளர் தாளாளர் என்று புகழ்ந்து பாடியுள்ளனர். மேலும் பண்டைக்கால அரசர்கள் புலவர்களை ஆதரித்து அவர்களுக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அணிந்தனர். யானையும் பல்லக்கும் பரிசளித் தனர். இவைகளில் எதுவும் அவர்கள் வறுமை நோயைப் போக்க முடியவில்லை. அவர்களின் மனைவி மக்களின் உள்ளத்தில் உவகை யூட்டவில்லை. ஆனால் தமிழ் மொழிக்கே தொண்டாற்ற தம் வாழ்க்கையை அர்ப்பணித்து வறுமையால், பசியால் வாடி நிற்கும் தமிழ்ப்புலவர்களை முகமலர்ந்து இன்முகங்காட்டி வருக! வருக!! என்று வரவேற்று, உடனடியாக மோர், பால், நீர் அளித்தும் அப்பால் அறுசுவையுடன் உணவூட்டும் வேளான் குடிமக்களே அரணாகவும், அந்தணனாகவும், அரசனாகவும் காட்சி அளித்தனர். (1813 விசாரணையில்) கூறப்பட்டது. ஆகவே பிரிட்டனின் உற்பத்தியைப் பாதுகாக்க இந்தியாவிலிருந்து வரும் துணிகளுக்கு அவற்றின் மதிப்பில் 73 அல்லது 80 சதவிகிதம் இறக்குமதி வரி விதிப்பதும் அல்லது அந்த இறக்குமதிகளைத் தடை செய்வதும் அவசியமாயிற்று. பிரிட்டனின் துணி உற்பத்தித் தொழிலைக் கட்டுவதற்கு 19-ம் நூற்றாண்டின் பாதியில் இந்தியக் கைத் தொழில் துணிகளுக்கு விரோதமான வரிகள் விதிக்கப்பட்டன. 1840-ல் இந்தியாவில் இறக்குமதியாகும் பிரிட்டன் பஞ்சாடைகளுக்கும் பட்டாடைகளுக்கும் இந்திய அரசுக்கு 3½ சதவிகித இறக்குமதி வரி கொடுத்தது. ஆனால் பிரிட்டனில் இறக்குமதியாகும் பஞ்சாடை களுக்கு 10 சதவீதமும் பட்டாடைகளுக்கு 20 சதவீதமும் கம்பளி ஆடைகளுக்கு 30 சதவிகிதமும் வரி செலுத்தப்பட்டது. பிரிட்டன், இயந்திர உற்பத்தி மூலம் இந்திய கைநெசவுத்துணி உற்பத்தியை வீழ்த்திவிடவில்லை. ஒருதலைப்பட்சமாக வரிவிதித்து பிரிட்டீசு அரசு அளித்த உதவியினால் இந்தியக் கைத்தொழிலால் உருவான துணிகளை வீழ்த்தியது. இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு இங்கிலாந்தில் சுங்கவரி, இறக்குமதித் தடைகள், கப்பல் போக்குவரத்து சட்டங்களின்படி இந்தியா வேறு ஐரோப்பிய நாடுகளுடன் நேரடி யாக வணிகம் நடத்தத் தடைசெய்யப்பட்டது. இந்திய சந்தையில் (மார்கெட்டில்) பிரிட்டீசு உற்பத்திப் பொருள்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இந்தியத் தொழில்கள் நாசமாக்கப் பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனின் இயந்திரத் துணிகளின் உற்பத்தி அதிக முன்னேற்றத்தை அடைந்தது. இந்தியத் துணி உற்பத்தி வீழ்ந்தது. ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்தது. கைத் தொழில்கள் ஒழிந்தன. இந்தியாவின் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து பிரிட்டீசு ஆட்சியில் 18 பஞ்சங்கள் எழுந்தன. 2 கோடியே 14 இலட்ச மக்கள் பட்டினியால் வாடினர். ஆளவந் தார்கள் இந்தியாவில் பிரிட்டன் எந்தத் தொழிலையும் உருப்படியாக வளரவிடாது தடுத்து இந்தியாவை எடு சந்தையாக்கி இந்தியாவைச் சுரண்டிக் கொடுத்து வாழ நினைத்தது. மாண்ட் கோமரி என்ற அறிஞர், 1840-ல் இந்தியா ஒரு விவசாய நாடு என்று கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது விவசாய நாடாக இருக்கும் அளவில் கைத்தொழில் நாடாகவும் இருக்கிறது. இந்தியா விவசாயி நாடு என்று கூறுபவன் இந்திய நாகரிகத்தைத் தாழ்த்த விரும்புகிறான். இந்தியா இங்கிலாந்தின் விவசாய பண்ணை யாவதை நான் விரும்பவில்லை. அது ஒரு கைத்தொழில் நாடாக வாழையடி வாழையாகப் பலவிதப் பொருள்களை உற்பத்தி செய்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கு நியாயம் வழங்கப்படும் பொழுது அதன் உற்பத்தியுடன் எந்த நாடும் இதுவரை போட்டி போட முடிந்ததில்லை... இந்தியாவை விவசாய நாடாக்குவது அதற்கு அநியாயம் வழங்குவதாகும் என்றார். இந்தியாவில் நெசவு நெய்யும் தறிகாரர்களையும் ஏமாற்றி ஆங்கிலக் கும்பினி ஆட்சியாளர் நிர்ணயிக்கும் விலைக்கே கைத்தறி நெசவாளர்கள் கொடுக்க வேண்டிய நிலை எழுந்தது. அனேக பண்டங்களுக்கு கடைத்தெருவிலோ, சந்தைகளிலோ விற்கும் விலைகளை விட பத்துச் சதவிகிதம் கம்மியாகக் கொடுக்கும்படி செய்யப்பட்டது. சில இடங்களில் 40 சதவிகிதம் கம்மியாக இருந்தன. வணிகம் என்றபெயரால் கும்பினி ஆட்சி நடத்திய கொள்ளையாக இருந்தது என்று 1762இல் வெளியிடப்பட்ட இந்திய விவகாரங் களைப் பற்றிய ஆலோசனைகள் என்ற நூலில் வில்லியம் போல்ட்சு என்ற ஆங்கில வணிகர் குறிப்பிட்டுள்ளார். கிளைவ் நாடு திரும்பும் போது 2½ லட்சம் பவுன்கள் பெறுமான செல்வத்துடன் சென்றான். தவிர ஆண்டிற்கு 27 ஆயிரம் பவுன் வருமானம் தரக்கூடிய தோட்டம் ஒன்று அவனுக்கு சொந்த மாக இருந்தது. ஒரு இலட்சம் பவுன்கள் பெறுமதிப்புள்ள செல்வங்கள் இரண்டு ஆண்டில் அவனுக்குக் கிடைத்தன என்று அவனே கூறி னான். மொத்தக் கம்பளத்தை இறக்குமதி ஏற்றுமதிக் கணக்கிலிருந்து ஒருவாறு அறியலாம். 1768 முடிய மூன்று ஆண்டுகளில் 6 இலட்சத்து 24 ஆயிரத்து 375 பவுன்கள்தான் இறக்குமதியாயிற்று. ஒரு நாட்டை ஆண்ட இந்தப் புது மாதிரிக் கும்பினியின் நல்லாட்சியில் அந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டதை விட 16 மடங்கு அதிகமாக அந்த நாட்டிலிருந்து கொண்டு போகப்பட்டது என்று எல்சிக்ராப்டன் - இந்துசுத்தான் அரசைப் பற்றிய சிந்தனைகள் என்று 1763ஆம் ஆண்டில் எழுதிய நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். வரிகளின் பேரால் கும்பினி ஆட்சியாளர்கள் வங்கத்தில் 1765 முதல் 1793 வரை ஒரு கோடி இரண்டு இலட்சத்து முப்பத்தெட்டு ஆயிரம் பவுன்கள் கொள்ளை அடித்து அதிகாரிகள் விழுங்கி வந்தனர் என்று கும்பினி அதிகாரி அரசுக்கு அறிக்கைவிடுத்தார். 1823 - ல் நடந்த பாராளுமன்றம் விசாரணை செய்ததில் அரசு இந்தியாவை ஒரு கொள்முதல் சந்தையாகப் பாவித்தது புலனாகியது. இந்தியாவில் காலிகோக்களின் என்ற பஞ்சாடை இறக்குமதிவரி இங்கிலாந்தில் 78 சதவிகிதமாக இருந்தது. இத்தகைய வரியின்றி பிரிட்டனின் பஞ்சாடைத் தொழில் வளர்ந்திருக்க முடியாது. இந்தியாவிலிருந்து வரும் பஞ்சாடைகளையும் பட்டாடைகளையும் பிரிட்டனில் உற்பத்தியாவதின் விலையை விட 50 முதல் 60 சத வீதம் குறைத்து விற்று ஊதியம் பெறமுடியும் என்று சாட்சி கிண்ணத்தில் நீர் அருந்தினர். மாட்டின் கொம்புகளில் பொன் பூணை மாட்டினர். கோபுரங்களில் பொற்கலங்களை ஏற்றினர். பொற்சரிகை இழையால் இழைத்த ஆடைகளை அணிந்தனர். 19ஆம் நூற்றாண்டிலே பொன்னைப் பார்ப்பது இந்தியாவில் அரிதாய் விட்டது. மக்கள் காதில் ஈயக்குணுக்களை மாட்டினர்; கையில் பித்தளைக் காப்பை அணிந்தனர். கழுத்தில் வெள்ளி, பாசி மாலைகளை அணியத்தொடங்கினர் என்பனவெல்லாம் மார்க்சின் மாணவர்கள் மக்களுக்கு எடுத்தோதினர். இந்திய வரலாற்றாசிரியர் ரோமேசு சந்திரதத்தர் மகனும், முன்னாள் இந்திய முதல் அமைச்சர் நேருவின் நண்பருமான பாமி தத்தர் இன்றைய இந்தியா என்ற மாபெரும் நூலில், 18ஆம் நூற்றாண்டின் நடுவில் கும்பினி ஆட்சி தன் சுரண்டுதலைக் காப்பாற்றிக் கொண்டு விலகியது. அந்த நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் இயந்திர ஆலை முதலாளித்துவ முறை தளிர்விட்டுத் துளிர்க்கத் தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில பணக்கார ஆட்சி உலகில் புதிய முறையில் இந்தியாவைச் சுரண்டத் தொடங்கியது. ஆட்சியாளர்கள் இந்தியாவில் கிடைக்கும் பொருள்களை - குறிப்பாக பருத்தி ஆடைகள் பட்டு ஆடைகள் நறுமணப் பொருள்கள் முதலியவைகள் முழுவதையும் தங்களுக்கே உரிமையுடையதாய்ப் பெறுவதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது. இப்பொருள்களுக்கு ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் நல்ல சந்தை (மார்கெட்) இருந்தது. அங்கு கொண்டுபோய் விற்றால் நல்ல ஊதியம் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் வாங்கும் பொருள் களுக்கு பதிலாக, பரிவர்த்தனையாக இந்தியாவிற்கு ஏதாவது மதிப்புள்ள பொருள்களைக் கொடுக்கவேண்டும். அன்று இந்தியா விற்கு, இங்கிலாந்து கொடுக்கத்தக்க மதிப்புள்ள பொருள்கள் எதுவும் அது உற்பத்தி செய்யவில்லை. அன்று இங்கிலாந்து பெற்றிருந்த வளர்ச்சி அவ்வளவுதான். ஆனால் அதனிடம் கம்பளி ஆடைகளை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய தொழில்தானிருந்தது. இந்தியாவிற்கு கம்பளி தேவை இல்லை. எனவே இங்கிலாந்திடம் இந்தியா விரும்பும் பொன், வெள்ளி, செம்பு, பவளம், தகரம், தந்தம், பாதரசம் முதலியவைகளைக் கொடுக்கமுடியாதிருந்தது, என்பதை எல்.சி.ஏ நௌல்சு எழுதிய கடல் கடந்த வல்லரசின் பொருளாதார வளர்ச்சி மூலம் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சில அடிமைகளை விற்று அதனால் கிடைக்கும் வெள்ளியை இந்தியாவிற்கு அளித்து முதலில் ஊதியம் பெற்றனர். அப்பால் 18ஆம் நூற்றாண்டின் நடுவில் பிரிட்டனின் ஆதிக்கம் வலுப்பெற்றது. முல்லைத்திணை விளக்கம் 1. இத் திணை நிலத் தலைவன் : குறும்பொறை நாடன் தோன்றல் கோன் என அழைக்கப்பட்டான். 2. தலைவி: கிழத்தி என அழைக்கப் பெற்றனள். 3. பொது மக்கள் : ஆண் மக்கள் இடையர், ஆயர் என அழைக்கப்பட்டனர். 4. பெண் மகள் : இடைச்சியர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர் என அழைக்கப்பட்டனர். 5. தொழில் : ஆடு மாடு மேய்த்தல், பால் கறத்தல், புண் செய் தானியங்கள் பயிர் செய்தல். 6. தெய்வம் : மாயோன் ஆவன். மாயோள் வழிபாடு மாயவன் வழிபாடாகத் திரியுற்றது. திருமால், கிருட்டிணன் ஆகிய தெய்வங்கள் இந்நில மக்கள் விரும்பி வழிபடு தெய்வங்களாகும். 7. ஊர் : பாடி, பள்ளி, சேரி என்று இடையர் குடியிருப்புகள் அழைக்கப்படும். 8. நீர் : கானாற்று நீரு குறுஞ்சுனை நீரும் சிறந்தது. 9. உணவு : பால், மோர், தயிர், நெய், வரகுச் சோறு, சாமைச் சோறு ஆகியவை முக்கியமான உணவுப் பொருளாகக் கொள்ளப் பட்டது. 10. மலர் : முல்லைப் பூ இந் நிலத்திற்குரிய சிறந்த மலராகக் கொள்ளப்படும். 11. பறை : ஏறு கோட்பறை. 12. யாழ் : முல்லையாழ் 13.. பண் : முல்லைப் பண் (சாதாரிப்பண்) 14. விலங்கு : மானும் முயலும் நரியும் இந்த நிலத்தின் விலங்குகளாகும் 15. பறவை : கழுகு, காட்டுக் கோழிகளும் பிறவுமாகும். 16. மரம் : கொன்றை, காயா, குருந்தம் முதலிய மரங்கள் குறிப்பிடத்தக்கன. 17. அணிகலன் : பாசி, பவளம், மண் உருண்டை மாலை முதலியன. 18. ஆடை : மரப்பட்டை, தோல் போன்றன. 19. விளைபொருள் : வரகு, சாமை. 20. குழல் : கொன்றையங்குழல் 21. விளையாட்டு : ஏறு தழுவுதல், குரவைக் கூத்தாடுதல் முதலியன. இவை ஆண் பெண் விளையாட்டாகும். இந் நில மக்கள் ஆணும் பெண்ணும் பண்டு தொட்டு மிக நல்லவர்கள். அற வழியில் நிற்பவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள். இவர்கள் கிருட்டிணன் என்னும் அரசனைத் தெய்வமாகப் போற்றி வருகிறார்கள். தென் இந்தியாவினின்று சிந்துவெளியில் நடைபெற்ற வேளாளர் ஆட்சிக்கு, வில்லர்கள், ஆயர்கள், பரதவர்கள் முதலிய மக்கள் பெருந்துணையாக இருந்தனர் என்று சாசனங்களைப் பயின்ற இராசு அடிகள் மொகஞ்சதாரோவில் வேளாளர் நாகரிகம் என்னும் கட்டுரையில் எடுத்துக்காட்டி யுள்ளார். மேற்கு ஆசியாவில் தமிழர் மேற்கு ஆசியா தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. பல மேனாட்டறிஞர்கள் தமிழர்களின் முன்னோர்கள் மைய ஆசியாவில் எங்கேயோ ஓர் இடத்தில் தோன்றி, மைய நிலக் கடற்கரை நாடுகளில் குடியேறி அங்கே அவர்களின் அமுத வாழ்வு அரும்பிக் கிளைத்தெழுந்து அரப்பாவில் அழகு ஒளிர மலர்ந்து மணம் வீசியது என்று கூறுகின்றனர். சில நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த பேரறிஞர்கள், தமிழர்கள் ஏன்? மனித குலத்தின் முன்னோர்களே தென் இந்தியாவில் தோன்றி இமயம் வரைப் பரவி, அப்பால் மைய நிலக்கடற்கரைப் பகுதிகளிலும் எகிப்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கிரீ முதலிய நாடுகளிலெல்லாம் குடியேறி இருக்கலாம். அவர்களிற் சிலர் இயற்கையின் கொடுமை களுக்கு அஞ்சியோ அரசியல் கொந்தளிப்பினாலோ மீண்டும் தாயகம் நோக்கி திரும்பி வந்து சிந்து வெளியிலோ அல்லது தென் இந்தியாவிலோ வந்து குடியேறியிருக்கலாம் என்று கூறுகின்றனர். யார் என்ன கூறினும், மைய நிலப்பகுதியில் வாழ்ந்த நனிசிறந்த நாகரிகத்தைப் பெற்ற நன்மக்கள் தமிழ் மக்களின் குருதித் தொடர் புடைய உறவினர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தென் இந்தியாவிற்கும் மைய நிலக் கடற்கரைப் பகுதி மக்களுக்கும் இடையே இன, மொழி, சமய, நாகரிக ஒருமைப் பாடுகள் நன்கு அமைந்துள்ளன. இந்த அடிப்படையின் மூலம் ஆய்வு நடத்திய அறிஞர்கள் தென் இந்தியாவில் ஒரு காலத்தில் வடக்கிலும் மைய நிலக் கடற்கரைப் பகுதிகளிலும் உள்ள மக்களின் பழைய மூதாதையர்கள் இந்த நில உருண்டையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று குடியேறி வாழ்ந்து வருகிறார்கள் என்று அறிஞர் டாக்டர் இ. மக்லீன் கூறியுள்ளார்.1 இதன் மூலம் தமிழர்களுக்கு, மேற்காசியா - சிறப்பாக மெசபொத்தாமி, எகிப்து முதலிய நாடுகள் வரலாற்றுச் சிறப்புடைய நாடுகளாகவும் வணிகக் கேந்திர நிலையமாகவும், சமயம், பண்பாடு, நாகரிகம், கலை முதலியவைகள் நன்கு பிரதிபலிக்கும் என்பதற்கு அழியாச் சான்றுகள் உள்ளவைகளாகத் திகழ்கின்றன. 2. வளர்ச்சியும் வாழ்வும் உலகில் முதன் முதலாக எழுந்த உழவர் பண்பாடு உலகம் எங்கும் ஆதியில் மக்கள் மலைகளில் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்தனர். அப்பால் விலங்குகளோடு போரிட்டு அதை வெல்ல முற்பட்டனர். அவர்கள் முதன் முதலாக கல்லைக் கண்டனர்; அப்பால் வில்லைக் கண்டனர். வில்லாலும், கல்லாலும் விலங்குகளை அடித்து வெற்றியீட்டினர். மக்கள் சமூகத்தின் கொடிய பகைவர்களான புலி, யானை, கரடி, காண்டாமிருகம், ஓநாய் போன்றவைகளைக் கொன்று அதன் ஊனை உண்டனர்; அதன் தோலை ஆடையாகவும், போர்வையாகவும், விரிப்பாகவும், பையாகவும் செய்து பயன்படுத்தினர். அவற்றின் பல், கொம்பு, எலும்பு முதலியவைகளை ஆயுதமாகப் பயன்படுத்தினர். இங்கு முதன் முதலாகத் தாய் ஆட்சி அரும்பியது; தாய்த் தெய்வம் தோன்றினாள். கொற்றவை, காடுகிழாள், பழையோள், காளி, கூளி, மாயோள் என்னும் பல பெயருடன் வழிபடப்பட்டாள். அப்பால் தந்தைத் தெய்வமும் மகன் தெய்வமும் இந்த நிலத்தில் எழுந்தது என்றாலும் தாய் ஆட்சியும், தாய்த்தெய்வமும், சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. இந்தச் சமூக நாகரிகம் குறவர் நாகரிகம் அல்லது வில்லவர் நாகரிகம் எனப்படும். அப்பால் அரும்பியது மலை அடிவாரத்திலும் காடுகளிலும் அரும்பிய ஆயர் நாகரிகம். இங்கு வாழ்ந்த மக்கள் முதன் முதலில் உணவுப் பிரச்னையைத் தீர்க்க வழிகண்டனர். புஞ்சைத்தானியங் களைப் பயிரிட வழிகண்டனர். ஆடுமாடுகளைப் பழக்கினர். பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் முதலிய கைத்தொழிலை உருவாக்கினர். இந்த மக்கள் உலகிலே உயர்ந்த பண்பாட்டிற்கு வித்திட்ட நன்மக்கள் எனப்பட்டனர். இந்தச் சமூகத்திலே பல அறிஞர்களும் அறவோர்களும் தோன்றினர். இவர்கள் ஆடுமாடு களின் தோல்களைப் பயன்படுத்த வழிகண்டனர். குள்ளக் குடிசை களை உருவாக்கினர். இவர்கள் குழல் ஊத முற்பட்டனர். இந்த நிலத்தில் ஆதியில் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வமும் அரும்பியது என்றாலும் பின்னர் உடன் பிறந்தான் - அண்ணன் ஆட்சியும் அண்ணன் வழிபாடும் அதாவது மாயோன் வழிபாடும் தோன்றியது. அப்பால் எழுந்தது உழவர் நாகரிகம் ஆகும். இது வேளாளர் நாகரிகம் என்றும் நவிலப்படும். இந்த மக்கள் சமவெளிகளில் பள்ளங்கள் நீர் தேங்கி நிற்கும் இடங்களிலும் ஆற்றங்கரைகளிலும் குடியேறி எருதுகளைப் பழக்கினர். அதை வாகனமாகவும், பொதி சுமக்கவும், உழவும், வண்டி இழுக்கவும் பழக்கினர். இவர்கள் நிலங்களைக் கிள்ளி அதில் நெல், கோதுமை, உளுந்து, மொச்சை, எள், கொள் முதலிய கூலப்பொருள்களை விதைத்து அறுவடை செய்ய முற்பட்டனர். நிலங்களை உழவும் உரம் இடவும், நீர் பாய்ச்சவும், அறுவடை செய்யவும் கூலப்பொருள்களை பத்திரமாகச் சேமித்து வைக்கவும் வழிகண்டனர். எனவே இங்கு உழவுத் தொழில் உந்தி எழுந்தது. கலப்பைகள் செய்யவும், கொமுச் செய்யவும் முயன்றதால் தச்சுத் தொழில், இரும்பால் கொழு செய்யும் கொல்லர் தொழிலும் தோன்றியது. கூலப்பொருளைச் சேமித்து வைக்கவும் நீரை மொண்டு பத்திரப்படுத்தி வைக்கவும் பானை சட்டி களை வனையும் குயவர் சமூகமும், பானைசட்டி செய்யும் தொழிலும் தோன்றியது. இந்த நிலத்தில் ஏராளமான உணவுப் பொருள்கள் விளைந்தது. காய்கனி பழம் கிழங்கு, முதலியவைகள் ஏராளமாகக் கிடைத்தது. மக்களை வாட்டி வந்த உணவுப் பிரச்சனை தீர்ந்தது. மக்கள் பருத்தியைப் பயிரிட்டனர். நூல் நூற்கவும் பஞ்சாடைகள், கம்பளி ஆடைகள் செய்யவும் முற்பட்டனர்.. இதன் பலனாக பல கைத்தொழில்கள் தோன்றின. தாய்த் தெய்வ வழிபாடும், தந்தைத் தெய்வ வழிபாடும் தாய் ஆட்சியும் தந்தை ஆட்சியும் அரும்பியது. சிவபெருமான் இந்த நிலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றார். அவர் காளையை வாகனமாய்க் கொண்டார். புலித்தோலை ஆடையாய் அணிந்தார். யானைத் தோலைப் போர்வையாகப் பூண்டு கொண்டார். மானை அன்புடன் வளர்த்தார். கையில் வேலும், பரசும், நெருப்பும், தமருகமும் தாங்கினார். இவர் சடைமுடிகளைப் பெற்றிருந்தார். தலையில் கொம்பை அணிகலனாக அணிந்தார். இந்தக் கொம்பு பின்னால் இளம்பிறையாகத் திரிபுற்றது. தலையில் கங்கையைத் தாங்கியுள்ளார். கழுத்திலும், காதிலும், கையிலும், இடுப்பிலும் பாம்புகளை அணிகலனாக அணிந்துள்ளார். இவரது ஆடை, அணிகலன் ஆயுதம், வாகனம் முடி, பிறை, கொம்பு, கங்கை முதலிய ஒவ்வொரு பொருளிலும் பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. இந்த உழவர் நாகரிகம் அரும்பியது இன்றல்ல - நேற்றல்ல. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னமே அரும்பியுள்ளது. இந்த நாகரிகத்திற்கு வித்திட்ட வேளாளர்கள் உணவு உற்பத்திப் பெருக்கால் உயர்ந்த உளப்பாங்கைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஆதியில் மாடுகளைப் பழக்கி உழவும், பொதி சுமக்கவும், முதுகின் மீது மக்கள் ஏறிச்செல்லவும், வண்டி இழுக்கவும் செய்தனர். இவர்கள் நிலத்தில் இரும்பைக் கண்டனர். அப்பால் இரும்பை உருக்கி ஆயுதங்களும் உழு கருவிகளும் செய்தனர். தச்சுத் தொழில், எஃகுத் தொழிலுக்கு அவசியமான உளி, சுத்தியல், இடுக்கி முதலிய கருவிகளை உருவாக்கினர். இந்த நிலத்தில் உணவுப் பிரச்னை தீர்ந்து மக்கள் நல் வாழ்வு நடத்தினர். தொழில்கள் பெருகின. கால்நடை செல்வம் பெருகின. பண்டமாற்று வணிகத்தில் பொருள்கள் குவிந்தன. வீடுகள் கட்டப் பட்டன. ஊர், நாடு, நகரம் முதலியன தோன்றின. சாதித் தலைவன் நிலக்கிழார் ஆனான். அப்பால் வேந்தனாகவும் தெய்வமாகவும் உயர்ந்தான். இந்த நிலம்தான் பண்பாட்டுக்குத் தாயகம். தொழிலுக்கு உறைவிடம். அறிவிற்கு ஊற்று. அறத்திற்கு ஊருண்ணி. இந்த நிலத் திலே சமயம், சாத்திரம், சான்றாண்மை முதலிய பலவும் எழுந்தது.1 சிந்து வெளியில் வேளாளர்கள் நந்தாப் புகழுடன் வாழ்ந்து வந்தனர். இற்றைக்கு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன் அயல் நாட்டினின்று ஆடு மாடுகளை மேய்த்து வந்த ஒரு வெண்ணிற மாக்கள் தங்கள் ஆடுமாடுகளுக்கு உணவு தேடி கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகுந்தனர். அவர்கள் வேளாண் ஆட்சி நிலவிய வளமார்ந்த சிந்து ஆற்றிற்கு அண்மையில் உள்ள சமவெளியில் குடியேறி வாழ முற்பட்டனர். வந்தாரை வரவேற்று வாழ்விக்கும் பெருந்தன்மைபூண்ட வேளாளர்கள் அயல் நாட்டி னின்று போந்த ஆரிய நாடோடி மக்களைக் கண்டு அஞ்சவில்லை; வெறுக்கவில்லை; அடித்து விரட்டவும் இல்லை. அவர்கள் வெண்மை நிறத்தார் என்பதைத் தவிர வேறு விரும்பத் தக்க குணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் ஆடு, மாடு, குதிரை முதலியவை மேய்த்து இன்றோர் இடமும் நாளையோர் இடமுமாய் குடிபெயர்ந்தலையும் நாடோடி மக்கள். அவர்கள் நாடோறும் குளிப்பதில்லை மது உண்பவர்கள். ஆடு, மாடு, குதிரை, மான், காடை, கௌதாரி, கோழி முதலியவற்றைக் கொன்று அதன் ஊனை உண்பவர்கள். இவர்கள் 4, 5 பேர்கள் - ஏன்? அவர்களுக்கு அதிகமான பேர்கள் கூட ஒரு பெண்ணை மனைவி யாகக் கொண்டு கூட்டுக்குடும்பம் நடத்துபவர்கள். ஒருவன், ஒரு பெண்ணை மணந்து சில ஆண்டுகள் அவளோடு வாழ்ந்து ஒரு சில பிள்ளைகளை அவள் வாயிலாகப் பெற்றுக் கொண்டு, பின்னர் அவளை வேறொருவனுக்கு, பிள்ளைகளைப் பெற்றுக்கொடுப் பதற்கு அளிப்பர். இவ்வாறு ஒரு பெண் 4-5 கணவர்களுக்கு ஆளாவதும் உண்டு. இவர்களது தெய்வமாகக் கருதப்படும் இந்திரன் மனைவி, இந்திரப் பதவியை அடையும் எல்லோர்க்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்ற நியதியுண்டு. இதுதான் ஆரிய மரபு. ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்குள் முதலில் வந்த ஒரு சிறு கூட்டம் அப்பால் அலையலையாய் தங்கள் ஆடு மாடு குதிரைகளுடன் சிந்து சமவெளிக்குள் வந்து குடியேறி அங்கு வாழ்ந்த வேளாளர்களின் வயல்களை அழிக்கவும், கூலப்பொருள்களைக் கொள்ளைஅடிக்கவும் முற்பட்டனர். இறுதியாக ஒரே இனத்தவர் களுக்குள் போர் முண்டது. திராவிடவேளாளர்கள் அறவழியில் போரிட்டனர். ஆரியர்கள் விலங்குத் தன்மையராய் மறவழியில் போரிட்டனர். வேளாளர் கையில் உள்ள நகரங்கள் 100க்கு மேல் அழிக்கப்பட்டன. பெண்களும் முதியவர்களும் குழந்தைகளும் வீடுகளிலும் தெருக்களிலும் வைத்துக் கொல்லப்பட்டனர். சிந்து வெளி வேளாளர் தோற்றனர். அவர்கள் தோற்றதற்குக் காரணம் அவர்கள் கடைப்பிடித்து வந்த நல்ல பண்பே யாகும். அறம் மறத்தின் முன் மண்டியிட்டது. அதோடு ஆரியர்களிடம் குதிரைப்படை இருந்தது. எஃகு ஆயுதம் இருந்தது. வேளாளரிடம் குதிரைகள் இல்லை; எருதுபூட்டிய தேர்களும் வெங்கல, செம்பு முதலிய உலோகத்தாலான படைக்கலன்கள் இருந்தன. ஆரியர்கள் - திராவிட இனத்தவரின் முன்னோடிகளான வேளாளர்களை அவர்கள் தலைமுறையாக வாழ்ந்து வந்த பன்னூறு சிற்றூர்களின்றும் விரட்டியடித்தனர்; கொன்றழித்தனர். ஆனால் வேளாளர் வாழ்ந்த நகரங்களிலோ, சிற்றூர்களிலோ ஆரியர்கள் குடிபுகவில்லை. காரணம் நகரங்களிலும் ஊர்களிலும் உள்ள மக்களையும் குழந்தைகளையும் கண்டகண்ட இடங்களில் வெட்டி வீழ்த்தியுள்ளதால் எங்கும் பிணக்காடாய் விட்டது. இறந்து போனவர்களின் உடல்களை எடுத்துப் புதைக்காததால் எங்கும் பிணங்கள் அழுகி துர்நாற்றம் எழுந்தது. ஆரியர்கள் வேளாளர்க ளால் கைவிடப்பட்ட நகரங்களில் பேய்கள் வாழ்வதாக ஆஞ்சி குடியேறவில்லை. அவைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெய்யில் காற்று மழை, பனி முதலிய இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி மண் மூடிப் புதைந்து மறைந்தன. இன்று அரப்பா, மொகஞ்சதாரோ உலொகுஞ்சுதாரோ, சங்குதாரோ, உரூபார், அம்ரி, நால், குல்லி, சோப் சாகித்தம்பு, குவட்டா, பாண்டுவாகினி காளிபங்கன் போன்ற நகரங்கள் இன்று அகழ்ந்து காணப்பெற்றுள்ளன. இவைகள் பகைவர்களால் அழித்துப் பாழாக்கப்பட்டதா? அல்லது வெள்ளம், பூகம்பம், தொற்றுநோய் முதலியவற்றால் அழிக்கப்பட்டதா? என்று சிலருக்குச் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. ஆனால் நுண்மான் நுழைபுலம் வாய்ந்த அறிஞர் பலரும் பகைவர்களால் பாழாக்கப் பட்டவைகள் என்று உறுதியாக நம்புகின்றனர். இதனை வெகு நுணுக்கமாகவும் அழகாகவும் இன்றையச் சிந்துவெளி அகழ் ஆய்வு துறை அறிஞராக இருக்கும் சர். மார்ட்டிமர் உயிலர் தம்நூற்களில் திறம்பட எடுத்துக் காட்டியுள்ளார்.1 இன்று இந்த நகரங்கள் அழிக்கப்பட்டதற்கும் மக்கள் கொலை செய்யப்பட்டதற்கும் திராவிட வேளாளகுல மக்களின் தலைவர்கள் அழிக்கப்பட்டதற்கும் நகரைச் சுற்றிக் கட்டப்பெற்ற மாபெரும் கோட்டைகள் பல அழிக்கப்பட்டதற்கும் வரலாற்றுப் பாங்கான சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்தச் சான்றுகள் கி. மு. 1500 - ஆண்டுகளுக்கு முன்னுள்ளதாக மதிக்கப்படுகிறது. இச்சான்று ஆரியர்களால் மறுக்க முடியாத அவர்களின் வேதமாக விளங்கும் இருக்கு வேயாகும். அதில் ஆரியரல்லாத மக்களின் கோட்டைகளையும், நகரங்களையும், இல்லங்களையும், மாளிகை களையும் இந்திரன் அழித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதோடு ஆரியரல்லாத மக்களான தசுயுக்கள் தாசரிகள் முடையார் தூனியர் சம்பரர், ஷிமயூனர் கிக்காதர், பிரமகண்டமாகவர், னகராசர் போன்ற வர்களை அழித்ததற்கு அவனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.2 ஆரியர்களின் ஆதிவேதமாகக் கருதப்பெறும் இருக்கு வேதத் தில் கூறப்படுவதாவது. இந்திரனே! ஆரியர்களையும் தாசர்களையும் பகுத்தறியும்படி வித்தியாசம் செய்தருளும் வைதீக கருமங்கள் செய்யாதவர்களைத் தண்டித்து யாகத்திற்கு உடன்படச் செய்தருளும். யாகம் செய்பவர் களுக்கு ஊக்கத்தை அளிப்பவரே! வல்லவராய் இரும். உமது பகைவர்களை எளிதில் வெற்றி கொள்ளும். உதாரம் உள்ள வீரேந்திரனே! போரில் தாசர்களை நீர் ஓட விரட்டடித்தீர் எல்லோராலும் வழிபடப்பட்ட இந்திரனே! தாம் மருத்துக்கள் சூழத் தாசர்களையும் சிம்யூனர்களையும் எதிர்த்துத் தமது இடியி னால் அவர்களை அழித்தருளினீர். இடிக்கரசே! பின்பு புலங்களை வெண்ணிறமுள்ள நண்பர்களுக்குப் பகுத்தருளினீர். கால் நடைகளுக்கும், மூச்சை உட்கொள்ளும் உயிரினங் களுக்கும் கடவுளும் வேதத்தை ஓதும் பிராமணர்களுக்காகப் பசுக்களை மீட்டவரும் தாழ்ந்துள்ள தாசர்களைக் கொன்றவருமான இந்திரனே! உம்மை வணங்குகிறேன். இடியினை ஆயுதமாகக்கொண்டு தமது வல்லபத்தில் நம்பிக்கை உடைய இந்திரன் தாசர்களின் பட்டணங்களை அழித்துக் கொண்டு போனார் அறிவிற் சிறந்த இந்திரனே! இடிக்கரசே! தாசர்களின் மீது உமது அம்புகளைச் செலுத்தும். ஆரியர்களின் வீரத்தையும் புகழையும் விருத்தியாக்கும். இடியைக் கொண்டு தாசர்களை ஒழித்துவிட்டு அசுவினி தேவர்களாகிய நீவீர் ஆரியர்களின் மீது பிரகாசத்தைத் தந்தருளினீர். வானத்தில் யுத்தஞ்செய்தவரும் சண்டையில் நூறுவிதத்திலுங் காப்பாற்றின வருமாகிய இந்திரனே! யாகஞ் செய்யும் ஆரியரை யுத்தத்தில் காத்தருளினீர். இந்திரனே! பயங்கரமாயிரைச்சலிடும் பிங்கலவர்ணமான பிசாசுகளை நாசமாக்கும். இராட்சசர்களை நிர்மூலமாக்கும். (ஈண்டு கூறும் பிசாசு, இராட்சசர் என்பவர்கள் சிந்துவெளியில் வாழ்ந்த வேளாளர், பரதவர், வில்லவர், ஆயர் முதலிய திராவிடர்களே யாவர்) போர்க்குதிரைகளுக்குக் கர்த்தனாகிய இந்திரனே! உற்சாகத்தை விளைவிக்கும் எங்களது புகழ்ச்சியினால் பராக்கிரமங் கொண்டு, உமக்குப் பலியிடாதவரையும் உம்மை வணங்குகிறவர்களை வருத்து வோரையும் நீர் கொன்றருளினீர். பராக்கிரமமுள்ளவரே! மரக்கலத்தை அக்கினி எரித்து விடுவது போல, வைதிகமில்லாத தாசர்களைக் கொளுத்திவிடும். நீர் ஆரியருக்கு வெளிச்சத்தை யுண்டாக்கினீர். தாசர்கள் உமது இடது பாரிசத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆரியர் தாசர்களை வெற்றி கொண்டது போல, உமது கிருபையைப் பெற்றுச் சத்துருக் களை வெற்றி கொள்வோரை, நாங்கள் கொண்டாடுகிறோம். இந்திரன் அசுரர்களையெதிர்த்துத் தாபிதியர்களைக் கொண்டு போய் விட்டதுமன்றி, அவர்கள் ஆயுதங்களையெல்லாம் நெருப்பிற் கிரையாக்கி, அவர்கள் ஆனிரையாலும் அசுவங்களாலும் இரதங்க ளாலும், அரசகுமாரனைச் செல்வந்தனாக்கினார். தாசர்கள், சூமுரியர், தூனியர் இவர்களுக்குத் தூக்கத்தை விளைவித்துக் கொன்றீர். தாபிதியரைக் காப்பாற்றினீர். இந்திரனாகிய அவர் தாசியரைக் கொன்று அவர்களின் இரும்பு பட்டணங்களை நாசமாக்கினார் இந்த கொடியவர்களிருக்கும் வானத்தையும் பூமியையும் காற்றினையும் அனலாக்கும் மேகாதிபதியே! பிராமணர்களைத் துவேஷிக்கும் கொடியவர்கள் வசிக்கும் வானம் பூமி காற்று இவற்றினை நமது கிரணங்களால் கொளுத்தும் தாசர்களேனும் ஆரியர்களேனும் மானிட சத்துருக்களைச் செயங்கொள்ள எளிதாக்கினீர். தாசர்களாகிய ஷம்பரர்களது நுழைதற்கரிய பட்டினங்களை நீர் அழித்தீர். தாசர்களுக்கும் ஆரியர்களுக்குமுள்ள பகையை ஒழித்து விடும். நீர் ஆரியர் பொருட்டாகத் தாசர்களை ஓட்டினார். நூறு கிருஷ்ணர்களைக் கொன்று அவர்களின் அரண்களை எல்லாம் அழித்த தேவர்களின் அரசே உமது பலம் என்றும் நிலவட்டும். தாசர்களின் பயங்கரமான செம்பு, இரும்பு, வெள்ளி கோட்டைகளை உடைத்து அடியுடன் அழித்த தேவர்கோவே உனக்கே எல்லா புகழும் உண்டாவதாக. என இந்திரன் வழிபடப்பட்டுள்ளான். ஆரியர்களின் பகைவர் களுடைய இருப்பிடங்கள் அரண்கள் பிடிப்பிடம் (Strong hold) என்று குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரியர்களின் போர்க்கடவுள் இந்திரன் அரண்களை அழிப்பவன் (Fort destroyers) என்று புகழப் பட்டுள்ளன. அவன் திராவிடத் தொல்குடி மக்களின் தலைவர் களுடைய நூறு பழம்பெரும் காவற் கோட்டைகளைச் சிதற அடித்தவன் என்று அழைக்கப்பட்டுள்ளான். அவன் காலங்கடந்த பழைய ஆடைகளை சுட்டெரிப்பதைப் போல் கோட்டைகளை அழிப்பவன் என்று ஏற்றப் படுகிறான். இருக்குவேதத்தில் ஆரியர்களின் பகைவர்களை தாசர்கள், தயூக்கள், பாணியர், சம்பரர், சூரியர் என்று பல பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆரியர்களின் பகைவர்கள்யார்? அவர்களின் நகர் அரண் எங்குள்ளது? முற்காலத்தில், இவைகள் கற்பனைக்கதையாக இருக்கும் அல்லது வெறும் அதிசதிகளின் காப்பிடமாக்கிருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்தப் புகலுரைகள், ஏமாற்று வார்த்தைகள் 1944ஆம் ஆண்டில் அரப்பாவிலும் மொகஞ்சதாரோ விலும் அரண்கள் அகழ்ந்து காணப்படுவதற்குமுன் கூறப்பட்ட வார்த்தைகள். அங்கு சிவப்பு நிறமுள்ள செங்கல்லால் கட்டப்பட்ட அரண்கள் செம்பு அரண்கள், கருப்புச் செங்கல்லால் கட்டப்பெற்ற கோட்டைகள் இரும்பு அரண்களை, சுண்ணம் பூசப்பெற்ற செங்கல் அரண்கள் வெள்ளி அரண்கள் என்று திரித்துக் கூறப்பெற்றுள்ளது என்று தெரிகிறது. இந்த மாபெரும் நகரங்கள் வேளாளராகிய ஆட்சியாளர்கள் எஃகுபோல் உறுதியாக அரண் செய்துள்ளனர் என்று நாம் உணர்கின்றோம். இந்த அசைக்கமுடியாத பலம் வாய்ந்த நிலை பெற்ற நாகரிகத்தை எது அழித்தது? அரசியல், பொருளாதார தட்பவெப்ப நிலைகள் இதைப் பலக்குறைவாக்கி அழித்திருக்கலாம் என்று சிலர் எண்ணினர். அது தவறு. ஆரியப் பெருங்கூட்டத்தால் திராவிட வேளாளர் நாடுகள் முரட்டுத்தனமாக மோதித் துணிகர மாக பெரியஅளவில் நாச வேலைகள் செய்யப் பட்டுள்ளன என்று தெரிகிறது. ஆனால் எண்ணற்றச் சந்தர்ப்பச் சான்றுகள், இந்திரனும் அவனுடைய ஆட்களான ஆரியர்களின் நிலையும் குற்றம் கூறக் கூடியதாக இருக்கிறது. பொதுவாக நடுநிலையில் ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் அனைவராலும் இருக்குவேதத்தில் சிந்து வெளி நகரங்கள்தான் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். அம்மாபெரும் நகரங்களும் ஒப்பற்ற நாகரிகமும் கி.மு. 15ஆம் நூற்றாண்டில் ஆரியப் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன.1 ஆரிய மறையான இருக்குவேதத்தில் குறிப்பிடப்படும் பகைவர்கள் வேளாளரும், பரவர்களும், ஆயர்களும், வில்லர்களுமான திராவிட மக்களின் முன்னோடிகளான தமிழர்களேயாகும். வேளாளர் ஆட்சி உலகில் பெரும்பகுதியில் வேளாளர்களே ஆட்சியை அமைத்து செங்கோல் மாறாது ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் வடஇந்தியாவில் வேளாளர் ஆட்சி நிலவியது. ஐரோப்பிய அகழ் ஆய்வு நிபுணர்களும் வடஇந்திய வரலாற்றாசிரியர்களும் தமிழ் நாட்டு பார்ப்பன வரலாற்றாசிரிர் களும் சிந்து வெளியில் எழுந்த வேளாளர் ஆட்சியை முடி மறைத்து வைத்துள்ளனர். சிந்து வெளியில் உந்தி எழுந்தது இந்தியநாகரிகம் என்று சில வேளாளர் இனப் பகைவர்கள் பொது நிலையில் பேசுகின்றனர். சில மேனாட்டறிஞர்கள் திராவிடநாகரிகம் என்றனர் சிலர் ஆரியர் அல்லாதார் நாகரிகம் என்றும் உண்மையை மறைத் துள்ளனர். சிந்து வெளியில் உந்தி எழுந்தது நந்தாப் பெருமை வாய்ந்த நனிசிறந்த நாகரிகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மிகத் தொன்மைவாய்ந்த உலகிலே ஒப்பற்ற சிந்து வெளி நாகரிகத்தைப் படைத்தவர்கள் இந்திய மக்களின் முன்னோர்கள் என்று ஒவ்வொரு இந்தியனும் தம் நெஞ்சில் கையைவைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து உலக மக்கள் முன் பெருமையுடன் பேசமுடியும். சிந்து வெளி நாகரிகம் கிரேக்கர்கள், உரோமர்கள் கண்ட பொற்காலத்தையும் தாண்டிவிட்டது என்று நமது முன்னாள்முதல் அமைச்சர் பண்டிட் ஜவஹர்லால் கூறியுள்ளார். இவர் கூறியது போற்றத்தக்கதே என்றாலும் இவர் கூறிய வாசகத்தில் இந்தியர் என்று குறிப்பிடுவது தென் இந்திய சைவ வேளாளர் என்று குறிப்பிட்டால் அது சிறப்பாக இருந்திருக்கும். அதில் உண்மை அப்பட்டமாக நிறைந்திருக்கும். சிந்து வெளி நாகரிகம் வேளாளர் நாகரிகம்; அங்கு நிலவியது தமிழர் பண்பாடு; சிந்து வெளி மக்கள் கண்ட அறநெறி சைவ அறநெறி; சிந்து வெளி மக்களின் தெய்வம் சிவனும் சக்தியும் விநாயகனும் நிலமகளும் பூமகளும் பிற தமிழ்த் தெய்வங்களுமாம். ஆங்குமக்கள் பேசியபாசை தொன்மைத் தமிழாகும். அவர்கள் எழுதிய ஓவிய எழுத்து இன்றையத் தமிழ் எழுத்தின் மூல எழுத்தாகும். அங்கு வாழ்ந்த மக்கள் வேளாளரும், செட்டியார்களும், குறவர்களும், பரவர்களும் ஆவர். சிந்து வெளியின் தலை நகரங்களான அரப்பா மொகஞ்ச தாரோவுடன் சங்குதாரே, உலோகுஞ்சுதாரே, உரூபள், நால், குல்லி, முதலிய நகரங்களும் அதன் சீரிய அமைப்பும் உலகிலேயே ஒப்பற்றவை. அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் உள்ள தெருக்கள் அகன்றவை நீளமானவை. தெருக்களில் மூடுசாக் கடைகள் உள்ளன. தெருக்கள் இருவண்டிகள் தாராளமாக எதிர் எதிராக வந்தால் எளிதில் கடந்து செல்லத்தக்கவை. வீடுகள் தாழ்வாரம், வரவேற்பு அறை, படுக்கை அறை, பண்டங்கள் வைக்கும் அறை, அணிகலன்கள் ஆடைகள் வைக்கும் அறை, சமையல் அறை, அந்தப்புரம் எனப் பல பிரிவுகள் உள்ளதாய் உள்ளன. சில வீடுகள் இரண்டடுக்கு மூன்றடுக்கு மாடிகள்உடையனவாய் உள்ளன. வீட்டின் பின்புறம் தோட்டமும் கிணறும் உண்டு. அங்கு பொன்னாற்செய்து மணிகள் இழைத்த அணிகளும் பாசி பவளங்களும் தட்டு முட்டுச் சாமான்களும் வெங்கலத்தாலான ஈட்டி, அரிவாள், கோடரி, பரசு போன்ற ஆயுதங்களும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் பலவிதச் செடி கொடி, பூ காய் மயில் மான் முதலிய வடிவங்கள் தீட்டப்பெற்ற மட்பாண்டங்களும் செம்பு, வெண்கலம், பித்தளையால் செய்யப் பட்ட குடம் கொப்பரை, போணி, சட்டி செம்பு கிண்ணம் கெண்டி போன்ற பாத்திரங்களும் உள்ளன. அங்கு வெங்கலப்படிமமும், சுண்ணாம்புச் சிலையும் சுடுமண்ணால் செய்த தெய்வ உருவங்களும் உள்ளன. இங்கு கல்லில் ஒவிய எழுத்துகள் செதுக்கப்பட்ட முத்திரை களும் காசுகளும் செம்புத்தகடுகளில் எழுதப் பெற்ற தாயத்துகளும் உள்ளன. இங்குள்ள அழகிய பெருங்குளம் (Great Bath) உலகிலுள்ள நூண்ணறிவாளர்கள் அனைவராலும் வியந்து பாராட்டப் பெற்றுள்ளன. இவர்கள் கோட்டை கட்டி அதனுள்வாழ்ந்திருக் கின்றார்கள் - இவர்கள் கோதுமை, பார்லி பூல், பயறு, மொச்சை முதலியவைகளை ஏராளமாக விளைவித்துள்ளார்கள். தங்கள் நாட்டிற்குத் தேவையானது போக எஞ்சிய ஏராளமான பண்டங் களை பொதிமாட்டின்மீது ஏற்றி தரை வழியாகவும் கப்பலில் ஏற்றி நீர் வழியாகவும் சுமேரியா எகிப்து முதலிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்கள். இங்குக்கட்டப்பட்ட கூலக்களஞ்சியங்கள் வியத்தகு பெற்றிவாய்ந்தவை. 5000ஆம் ஆண்டுகட்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தார்கள். இவர்கள் வான நூற்புலமை வாய்ந்தவர்கள் இங்கிருந்த வான நூற்புலமை எகிப்திற்குப் போய் அங்கிருந்து பிற நாடுகளுக்குப் போயுள்ளது. இந்த மாபெரும் நாகரிகம் சுமேரிய நாகரிகத்தோடு தொடர் புடையது. இங்கு நிலவியது வேளாளர் ஆட்சி. வேளாளர்களே அரசர்க ளாயும் அமைச்சர்களாயும் படைத்தலைவர்களாயும் வணிகர்க ளாயும் இருந்து வந்தனர். இவர்களின் சின்னம் காளைமாடு இங்குள்ள முத்திரைகள் பாண்டிய நாட்டில் வெளியிடப்பட்ட பழம்பாண்டியர்கள் காசுகளை யொத்தன. பொதுவாக இந்நாட்டில் வாழ்ந்த பெரும்பாலானமக்கள் வேளாண்மைத் தொழில் செய்தவர்கள் என்று சிந்து வெளி அகழ் ஆய்வு செய்தவர்களும் வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளார்களே யொழிய இந்தநாகரிகத்தைக் கட்டி வளர்த்தவர்கள் இன்று தென்இந்தியாவில் வாழும் சிவனெறி யோம்பும் வேளாளர்களின் முன்னோர்கள் என்று கூறியதே இல்லை. ஆனால் கத்தோலிக்க சமய குருவும், பம்பாய் சவேரியார் கல்லூரி வரலாற்றுப்புலவருமான பேராசிரியர் ஹிரா கல்கத்தாவினின்று வெளிவந்த மெ. ஏ. 1938ஆம் ஆண்டில் இந்திய வரலாற்று முத்திங்கள் வெளியீட்டில் X1VM« தொகுதியில் மொகஞ்சதாரோவில் வேளாளர் என்று ஒரு கட்டுரையாத்துள்ளார்.1 அவர் அங்குக்கிடைத்த முத்திரைகளிலுள்ள ஓவிய எழுத்துகளின்படி அதற்கு மறை குறியெழுத்துப் பொருள் விளக்கந்தந்துள்ளார். அதில் மொகஞ்சதாரோவில் வேளாளர் ஆட்சி நிலவியது என்றும் அந்த வேளாளர்கள் சிவனை வழிபட்டு வந்தனர் என்றும் அங்கு ஆட்சி செய்த வேளாளர்கள் கொடி, குடை, முடி, செங்கோல் முதலிய அரசர்க்குரிய எல்லாச்சின்னங்களையும் பெற்றிருந்தார்கள் என்றும் அவர்களுக்கு மலை இமயமலை என்றும் ஆறு சிந்து ஆறு என்றும் இமயமலை மீது சிவபெருமான் இருப்ப தாக அவர்கள் எண்ணியிருந்தார்கள் என்றும் அவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவனையும் ஆண் என்னும் தாய்த் தெய்வத்தை யும் வழிபட்டு வந்ததோடு சிவலிங்க வழிபாடு செய்து வந்ததாகவும் அவர்களுக்கு காராளர் என்று பெயர் வழங்கப்பட்டது என்னும் வேளாளரில் இருபிரிவினர் - அதாவது பகல் வேளாளர், நிலா வேளாளர் (அதன் பொருள் வேளாளருள் சூரிய குலம் சந்திரகுலம்) எனும் பிரிவுகள் இருந்தன வென்றும் இவர்கள் அயல் நாட்டினருடன் நீர் வழியாயும் நிலவழியாயும் பெரும் அளவில் வணிகம் புரிந் துள்ளனர் என்றும் எடுத்துக் காட்டியுள்ளனர். ஏறத்தாழ கி. மு. 1500 - ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் அயல் நாடுகளிலிருந்து சிந்து வெளியில் போரிட்டு வென்று வேளாளரை பின்னே தள்ளிக் கொண்டே வந்துள்ளனர். சிந்து வெளியினின்று பின்னே தள்ளப்பட்ட வேளாளர்கள் கங்கைச் சமவெளியில் குடியேறி அங்கு நாடு நகர் அமைத்து நாகரிகம் வளர்த்து வந்தனர். காசியில் சிவலிங்கம் நிறுவி அதைப் புனிதமாக எண்ணிப் பூசித்து வந்தனர். அங்கிருந்தும் வேளாளர்கள் படிப்படியாய் நாளடைவில் தென்னிந்தியக் காட்டிற்குள் விரட்டப்பட்டனர் என்பது இன்றைய வரலாற்றறிஞர்கள் அறிந்த உண்மை. சிந்து வெளியில் 5000 ஆண்டுகட்குமுன் ஒரு நாகரிகம் பரவி இருந்தது. நாடு நகரம் இருந்தது என்பது எவருக்கும் 1920ஆம் ஆண்டிற்கு முன் தெரியாது. ஆனால் 1901ஆம் ஆண்டிலே கூடலூர் கனக சபைப்பிள்ளை என்னும் அறிஞர் வேளாளர் வடஇந்தியா முழுவதும் பரவி இருந்தனர். அப்பால் அவர்களால் ஆரியர்கள் தென்இந்தியாவிற்குள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெளிவாய்த் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்: பூலோகத்தில் சம்புத்தீவின் நடுவில் இருக்கும் மகமேருவிற்குத் தென்பாரிசத்திலுள்ள இமயமலைக்குத் தென் புறமாக இருக்கும் கண்டம் திராவிட கண்டம் என்பது பிரசித்தமாயிருக்கிறது. அங்குள்ள சிந்து நதிப்பள்ளத்தாக்கிலிருந்து கங்கைச் சமவெளி தொட்டு கசாம்வரை ஒரு காலத்தில் வேளாளர் குடி இருந்தனர். அவர்களின் முடியுடைய மன்னர் வட இந்தியா முழுவதும் ஒருகுடையின் கீழ் ஆண்டுவந்தனர். அவர்கள் அங்குவாழ்ந்த காலத்திலே சிவபெருமான் கயிலாச மலையில் மலைமகள் கணவராய் வீற்றிருந்தார் என்று எண்ணப்பட்டது. அப்பால் கங்கை சிவபெருமான் முடிமீதிருந்து வரும் ஒரு பெண் தெய்வம் என்றும் வேளாளர்களின் தாய் என்றும் கருதப்பட்டது. காசி வேளார்களின் புனித பூமியாக எண்ணப் பட்டது. காசியில் சிவலிங்கம் வைத்து வழிபடப்பட்டது. கங்கை புனித ஆறாக மதிக்கப்பட்டது. கயிலைமலை சிவன் உரையும் புனித மலையாகப் போற்றப்பட்டது. அங்கு அன்றுவளர்த்த சைவநெறி யின் எச்சங்கள் இன்றும் காசுமீரிலும் நேப்பாளத்திலும் உள்ளன. காசுமீரில் இருந்த இந்து மன்னர் சிவாகமங்களைப் பேணி ஆகமம் பயிற்றும் கல்லூரியைக் கூட அமைத்துள்ளார். வேளாளர்கள் முற்காலத்தில் கங்கை நாட்டில் வாழுங் காலத்தில் ஆரியர்கள் பாரசீக நாட்டினின்று இந்தியாவிற்குள் குடிபுகத் தொடங்கினார்கள். அதன் முன்னர் சிந்து ஆற்றின் மேலைக்கரையில் வந்து சேர்ந்து அங்குள்ள நாட்டை வசப்படுத்திக் கொண்டு பின்னர் சிந்துவைக் கடந்து கீழைக் கரையிற் சேர்ந்து அங்குள்ள பழங் குடிகளுடன் பல போர்கள் ஆற்றி அவர்கள் நாட்டை கைக் கொண்டார்கள். ஆங்கு சில நாள் வசித்து கிழக்கே திரும்பி சரசுவதி திருவதி என்னும் இரு ஆறுகளுக்கும் நடுவில் உள்ள நாடுகளை போர் செய்து கைப்பற்றிக் கொண்டனர். இவ்வாறு இந்தியாவில் இவர்கள் நிலைத்தபின் கங்கை நாட்டின் மீது படையெடுத்தார்கள். அங்குள்ள வேளாள அரசர்கள் ஆரியர்களை அடித்துத் துரத்தினார்கள். ஆரியர்களுக்குப் படைகள் மேலும் மேலும் வந்து சேர்ந்தன. வேளாளர் அரசை நல்ல ஆயுதங்களுடனும் போதிய ஆட்பலத் துடனும் ஆரியர் எதிர்த்துப் பின் தள்ளினர். வேளாளர் ஆரியர்க ளுடன் போரிட முடியாது. விந்திய மலைக்குத் தென்பாகத்திலுள்ள தண்டகாரண்ணியத்தில் உள்ள சோழநாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அங்கு சில நாள் வாழ்ந்து சோழ அரசிடம் ஆரியர்களால் தங்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை அறிவித்து நட்பைப்பெற்று அவன் ஆதரவுடன் மீண்டும் கங்கை நாட்டின் மீது படையெடுத்துச் சென்று ஆரியருடன் போரிட்டு ஆரிய அரசனைப் புறங்காட்டி ஓடும்படி அடித்து விரட்டி அடித்தார்கள். வேளாளர் தங்கள் மேழிக் கொடியையும் சோழ அரசனின் புலிக் கொடியையும் இமயமலை மீது பறக்க விட்டனர். யுகமேழு கோடி இருபதிலக்கம் உள்ள மட்டும் சகமேழும் ஏழும் புகழே நிறுத்தி தமிழ் புனைந்து புகழ்மேழிப் பதாகையும் வீரப் புலிக் கொடியும் மகமேருவிற் சென்று தீட்டியதால் தொண்டைமண்டலமே என்று தொண்டைமண்டலச் சதகம் கூறுவது நல்ல சான்றாக உள்ளது. வெற்றிபெற்ற வேளாளர் சிலகாலம் கங்கைநாட்டிலிருந் தார்கள். அப்பால் அங்கு மிலேச்சர்கள் ஆதிக்கம் மேலிட்ட படியால் மீண்டும் சோழ நாடு திரும்பிவிட்டனர். இந்த வேளாளர்கள் சைவர் என்பவர்கள்.1 வேளாளர் என்றால் யார்? வேளாளர் என்றால் வேளாண்மையர், வேள்வியாளர், வெள்ளாளர், வேலாளர் என்று பலகாரணத்தால் திரிந்து வழங்கும். வேளாளர் வேளாளர் என்பதற்குப் பொருள் கூறிய அறிஞர்கள் வேள் = நன்னிலம், ஆளர் = ஆள்பவர் என்று கூறியுள்ளனர். ஐந்திணைகளில் சிறந்தது மருதநிலம். அதனை உழுது பண்படுத்தி வளப்படுத்தி உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து உயிர்களைக் காப்பவர் வேளாளர் என்பதாகும். வேள் = நன்றி. ஆளர் = ஆள்பவர். எனவே வேளாளர் நன்றியுடையவர் என்றும் பொருள் கொள்ளப்படும். வேள் = விருப்பம், ஆளர் = ஆள்பவர். எல்லோரும் தம்மை விரும்பச் செய்வர் என்றும் பொருள் தரும். வேள்= ஆண்மகன், ஆளர்= ஆள்பவர். எனவே இளங்கோக்க ளாய் அரசாண்டவரும், முடிமன்னராய் நாடுகாத்தவர்களும் அமைச்சர்களாய் அரசருக்கு ஆலோசனை கூறியவர்களும் பிரதானி, சேனாதிபதி தானாதிபதியாய்இருந்தவர்களும் குடிஅரசு காலத்து முதன்மை பெற்றிருந்தவர்களும் காணியாளராய் இருந்தவரும் நாட்டாண்மை பெற்று பதிணென் குடிகளையும் வசப்படுத்தி யாண்டவரும் இவர்களே யாவர். வேள்= ஈகை, ஆளர் = ஆள்பவர். எனவே ஈகையாளர் கொடையாளர் என்றும் பொருள்கொள்ளலாம் வேள்= வாய்மை, ஆளர்=ஆள்பவர். எனவே வாய்மையாளர் என்றும் கருதலாம். மெய்மையும் கொடையும் வேளாண்மையாகும் என்று பிங்கலந்தை நிகண்டு கூறும் வினைவாளர் என்பது வேளாளர் என்று மருவியது என்றும் கூறப்படும். வேளாண்மையர் வேளாண்மையர் = பயிர்த்தொழிலாகிய முத்தொழிலை யுடையார். வேள் = வேந்தர்களால் விரும்பப் படுந்தன்மையும் ஆண்மையர் வீரத்தையும் உடையவர். எனவே அமைச்சர், படைத் தலைவர் என்னும் ஆண்மை பூண்டொழுகுபவர் எனவும் கருதப்படும். வேளாண்மை உபகாரம் அதைச் செய்பவர் வேளாண்மையர். தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற தமிழ் மறை இதனை உறுதிப்படுத்துகிறது. வேள்வியாளர் களத்தில் நெற்கதிரைத் தேவர், அந்தணர், தொழிலாளர் போன்ற மக்கள் இனத்திற்கு வழங்கி உயிரோம்புவதால் களவேள்வி யையும் மறை ஓதுவதால், நான்முகன் (பிரம்மன்) வேள்வியையும், அக்கினி காரியாதி செய்வதால் தெய்வ வேள்வியையும் பிதுர்க்கடன் செய்வதால் பிதுர் வேள்வியையும் அதிதி அப்பியாசிகளுக்கு உணவும் இடுவதால் மானிட வேள்வியையும் ஆக ஐம்பெரும் வேள்விகளையும் செய்வதால் வேளாளர்களுக்கு வேள்வியாளர் என்ற பெயர் எழுந்தது. (பார்ப்பனர் செய்து வந்த உயிர்ப்பலியாற்றும் யாகத்திற்கும் இந்த வேள்விக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை) வேளாளரும் அவர்கள் கொண்ட சைவ நன்னெறியும், அவர்களின் மறையாக்கம் செய்த வள்ளுவரும் ஆகமம் அருளிய திருமூலரும் பிறரும் உயிர்ப்பலி செய்யும் யாகத்தை எதிர்த்து வந்தனர்; கடுமையாகக் கண்டித்தும் வந்தனர். வேள்வி = அருச்சனை, ஆளர் = செய்பவர், அருச்சனையாகிய சிவபூசை செய்பவர் எனவும் பொருள் கொள்ளப்படும். வேளாண்குடி உயர் நிலைக் காப்பிய வழக்குச் சொனடைச் சிறப்பு முன்னிலைக் காரணம் பின்னிலை, யிடுகுறிச் சாதிக் கூற்றுத் தொடர் நிலை, கருத்துப் பொருட்புறத் துயர்திணைக் காட்சிப் பொருட் டன்மைத் தோற்றத் தன்மொழித் தொகைச் சொற்றொடர் ஆதலின் இதனை வேளாண்மைக் குரிய குடிப்பிறப்பினர் என்று வரித்துக் கொள்க. வெள்ளாளர் இது வெள்அம் - ஆளர் என்ற மூவகை ஆகிய ஓர்பதம். இதில் அம் என்ற இடைகுறைந்து வெள்ளாளர் எனத்திரிந்ததாம். இனி, வெள்ளம் ஆள ரென்பதில் வெள்ளம் நீரின் பெருக்கினை ஆளர்; கடலிற் செல்லாது மறுத்து வயலிற் செலுத்தி நிலத்தினைப் பண் படுத்தி வளப்படுத்திப் பயன் கொள்பவர் என்றும் கூறலாம். வேலாளர் வேல் - கூரிய ஆயுதம், ஆளர் - தாங்கியவர். இதன் பொருள் வேல் தாங்கியவர் என்பதாகும். வேளாளர் தெய்வமாகிய சிவபெருமான் திரிசூலம் தாங்கி நிற்பதால் அவர் வேலாளன், வேலன் என அழைக்கப்பட்டார். சிவன் தமிழகத்திலும், எகிப்திலும், சால்டியா விலும் அசிரியாவிலும், அக்கேடியாவிலும் சிந்து வெளியிலும் தமிழகத்திலும் காளை மீதேறி, மூவிலை வேல் தாங்கியவனாகவே காணப் பட்டார். மேலும் சிவபெருமான் வேளாளர் இடும் பயிர்களை அழிக்கும் புலியைக் கொன்று அதன் தோலை அரையில் உடுத்தியும் பயிர்களை அழிக்கும் யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திமுயுள்ளான். இவைகளைக் கொல்லும் ஆயுதமாகிய மூவிலை வேலை தம்கையில் எப்பொழுதும் தாங்கி நிற்பதோடு வேளாண்மைத் தொழிலுக்கு உறுதுணையான மாட்டை வாகன மாகவும், மாட்டு முகம் உள்ள நந்தியை வாயில் காக்கும் தெய்வமாகவும் கொண் டுள்ளான். எனவே வேளாளர் எங்கிருந்தாலும் எங்குக் குடியேறி னாலும் சிவனைத் தங்கள் குல தெய்வமாகக் கொண்டிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே சிவன் பெற்ற வேலான் , வேலன், வேலாள், வேலாளன் என்றபதம் படிப்படியாய் அவனை வழிபடும் உழவர்களுக்கும் வேலாளன் என்றபதம் உரிய தாகி அப்பால் அது வேளாளன் என்று திரிபுற்றது. இக்கருத்து சிந்து வெளிநாகரிகத்தைப் பற்றி சிறப்புடன் நூல்யாத்த ஹிரா அடிகளின் கருத்துமாகும்.1 மேலும் வேளாளர் கங்கா புதல்வர் என அழைக்கப்படுவர். வேளாளர் செய்யும் பயிர்த் தொழிலுக்குத் தண்ணீர் தாய் போல் இருந்ததால் வேளாளர் கங்கையின் மக்கள் என அழைக்கப் பட்டனர். அதோடு 5000ஆம் ஆண்டுகட்டு முன் வேளாளர் கங்கைச் சமவெளியில் வாழ்ந்து வந்தனர். கங்கை நதி அவர்களுக்குத் தாய்போல் உதவியது அதனால் கங்கையைத் தாயாகக் கொண்டனர். மேலும் கங்கை யாறு உலகில் உயர்ந்த மலையாகிய இமயமலையில் இருந்து வருவதாலும் சிவ பெருமான் இமயமலை மீது வீற்றிருப் பவன் கங்கையைத் தம் சடை மீது தாங்கி இருப்பவன் என்றும் கண்டனர். வேளாளர் சிவனைத் தந்தைத் தெய்வமாகவும் கங்கையை (கங்கையாற்றை)த் தாய்த் தெய்வமாகவும் கொண்டனர். வேளாளர் தங்கள் தெய்வமாகிய சிவபெருமான் கையில் வேல் தாங்கி பயிர்த் தொழிலை கண்ணின் கருமணிபோல் காத்துவந்தது போல் தாங்களும் கையில் வேலை தாங்கி கண்ணீரும் செந்நீரும் பாய்ச்சி வளர்த்துவரும் பயிர்களை விலங்குகள் அழித்து விடாது கையில் வேல் தாங்கியும், விலங்குப் போரில் வெற்றியீட்டும் மரபுரிமை பெற்றுவந்ததால் சேர சோழ பாண்டிய மன்னர்களின் படையில் போர்வீரர்களாகியும் படைத்தலைவராயும் அமைந்து நாடுகாப்போராய் இருந்து வந்தனர். வேளாளர் ஒழுக்கத்தால் அந்தணராயும் வீரத்தால் அரசராயும் அறிவாற்றலால் வணிகராயும் உழைப்புத் திறனால் உழவராயும், மொழி வளர்ச்சியால் கவிஞர்க ளாயும் வாழ்ந்துவந்தனர். காணி ஆட்சியாளர் நம்புவதற்குரிய நல்ல வரலாறு எழுந்தது சோழர்களின் சகாப்தத்திலேயாகும். காணி ஆட்சி அக்காலம் தொடங்கி வேளாளர் வகுப்பினர்க்கே உரியதாக இருக்கிறது. இக்காலத்தில் அவர்களைச் சூத்திர வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பிற்காலத்தில் எழுந்த பார்ப்பனர் செல்வாக்கேயாகும். முன்னர் ஆதொண்டைச் சக்கரவர்த்தி வேளாளர்களைத் தொண்டை மண்டலத்தில் குடியேற்றிய பொழுது இவர்கள்தான் எல்லாக் குலத்தினரினும் மேம்பட்டவர்களாய் இருந்தனர். அக்காலத்தில் பிராமணர் என்ற பெயரே தெரியாதிருந்தது. எனவே மதிப்பிற்குரிய எல்லாப் பெருமையும் உரிமையும் இவ்வேளாளர் களே அனுபவித்து வந்தனர். அன்றியும் காணியாட்சி வகுப்பினராக உயர்ந்திருந்தனர். இந்நாட்டில் இவர்களைச் சிற்சில வகுப்பாகப் பிரித்ததும் இவர் களிருக்கும் நிலத்தை நகரங்களாகவும் சிற்றூர் களாகவும் பிரித்ததும் இவர்கள் அந்த நாட்டை நடத்தி வந்ததும் மேலே குறிக்கப் பட்டிருக்கின்றன. காணியாட்சி என்பது தமிழில், காணி = நிலம், ஆட்சி ஆளுதல் எனப்படும். எனவே நிலத்திற் குரியவர்கள், உடைமையாளர், சொந்தக்காரர்கள் என்னும் பொருளில் இப்பதம் உள்ளது. மனுவின் காலத்திற்கு முன்னோ அல்லது வடமொழிக்கு முன்னோ அல்லது (பார்ப்பனர்கள்) பிராமணர்கள் என்போர் தமிழகத்திற்கு அறிமுகம் ஆவதற்கு முன்போ இப்பெயர் இவர்களுக்கு வழங்கப் பட்டிருக்க வேண்டும். பிராமணர்கள் இங்கு வந்த பின்னரும் சில சாதியார்கள் காணியாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் தொண்மையான பெயரினால் காணி யாளர் என்று கூறிக்கொண்ட போதிலும் முலிம் அரசு நிலவிய காலத்தில் உரிமைப் பாத்தியதை பற்றிவரும் மிராசுதார் என்று வழங்கப்பட்டு வருகிறார்கள். இந்த வாசகம் செங்கற்பட்டு வரலாற்றில் (Chengelpet Manual of 1879 P. 211) காணியாட்சிக் காரர் என்ற தலைப்பில் விளக்கப் பட்டுள்ளது. சோழியர் மேற்குறித்த பிரிவுகளில் சோழியரும் கொண்டைகளும் தொன்மையானவர்கள் - சோழ நாடானது வேளாளர்களுக்கு உற்பத்தி தானமாக இருக்கிறது. தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியவர்களும் இந்நாட்டைத் தங்களின் தொன்மையான தாயகமாகக் கூறுவதால் மேற்கூறியகூற்று உண்மையாக இருக்கிறது. 1. வேளாளர் அனைவரும் தமிழ்நாட்டாரே 2. சமயப் பற்றில் பார்ப்பனர்களைவிட அதிக நெறியுள்ளவர்க ளாக இருக்கிறார்கள். 3. வேளாளர் மதுவும் புலாலும் உண்ணாதவர்கள் 4. கைம்மை மணம் அல்லது பலதாரமணம் செய்யாதவர்கள் 5. அவர்கள் பிசாசுகளையாவது சிறு தெய்வங்களையாவது வழிபடுவதில்லை. இதில் எந்த வகுப்பாராவது சிறு தெய்வங்களை வழிபட்டார் என்றால் அவர்கள் உயர்குடி வேளாளர் ஆகார். அவர்கள் பெரும்பான்மையும் சிவ நெறியையே கொண்டாடுகி றார்கள். ஆனால் சிலர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு இராமாநுசர் வழியில் புகுந்துள்ளார்கள். வேளாளர்களின் குலத் தொழில் பயிர்த் தொழிலே யாகும். இத்தொழிலில் மற்றவர்களை விட இவர்கள் மிஞ்சி இருப்பார்கள். அனேகர் அரசு ஊழியர்களாய் இருப்பார்கள். முக்கியமாக கணக்கராய் இருப்பார்கள். இழிவானதொழில் செய்ய உடன் படார்கள். பயிர்த் தொழிலைப் பண்ணையாட்களை கொண்டே செய்து வருவர் இது தஞ்சாவூர் வரலாறு (Tanjore Manual) என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. வேளாளர் பரம்பரையாய் சைவசமயத்தவராயும் புலால் புசியாதவர்களாயும், மது அருந்தாதவர்களாயும் அவற்றினின்றும் அதிகக் கவனமாய் அகன்று இருப்பவர்களாயும் வாழ்ந்து வருகி றார்கள். அவர்களின் ஒழுக்கத்தையும், பண்பையும் சமயத்தையும் சிறப்பித்துக் கூறவேண்டிய தொன்றும் இல்லை. இவர்கள் இறந்து போனவர்களின் உடலைச் சுடுகிறார்கள். கைம்பெண்களுக்கு மறுமணம் செய்வதில்லை. ஆண்கள் பலதார மணங்கள் செய்வ தில்லை. பெண்கள் கற்பு நிலையை வெகு சாக்கிரதையாக காப்பற்றி வருகின்றார்கள் என்று மதுரை மாவட்ட வரலாறு எடுத்துக் காட்டுகிறது. வேளாளர் அரசு தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் என நான்கு நிலங்கள் உள்ளன இவற்றில் முறையே குறவர், ஆயர் உழவர், பரவர் என நான்கு இனத்தவர்கள் வாழ்ந்தவர்கள். நானிலங்களுள் வேளாளர்கள் வாழ்ந்த மருத நிலப்பகுதியே வாழ்விற்கு ஏற்ற இடமாக இருந்தது. உழுது பயிரிடுவதற்கு உகந்த நிலமாக இருந்தது. இந்நிலத்தில வாழ்ந்த வேளாண் மக்கள் அறிவிற் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இந்நிலத்தில் உள்ள வளமான மண்ணும், குளங்களும், ஆறும், வாய்க்காலும், ஓடைகளும், செந்நெல்லும், புல்லும், சோளமும், எள்ளும், கொள்ளும், உழுந்தும், பயறும், வாழையும், தெங்கும் செழிப்புற்று வளர்வதற்கு ஏற்ற நஞ்செய் நிலமும் புஞ்செய் நிலமும் நிறைந்திருந்தன வேளாளர் நிலத்தை உழுவதிலும் பண்படுத்து வதிலும் உரமிடுவதிலும் நீர்பாய்ச்சுவதிலும் நிபுணர்களாய் இருந்தார்கள். காலத்தில் களனிகளில் பயிரிட்டு விளைந்ததும் அறுவடைசெய்து களஞ்சியங்களில் சேர்த்து அவைகள் கெட்டுப் போகாது காத்துவந்தனர். இவர்கள் ஏராளமான நிலங்களைத் திருத்திப்பண்படுத்தி விளைநிலமாக்கி கூலப்பொருள்களை விளைவித்து மலை மலை யாய்க் குவித்து வந்தார்கள். எல்லா நிலங்களிலும் மருத நிலமே செழிப்பான நிலமாக இருந்தது. பயிர்த் தொழில் வளர்ச்சியால், தச்சுத் தொழில், கொல்லர் தொழில், பொன் கொல்லர் தொழில் கன்னார் தொழில், கல்தச்சர் தொழில், கொத்து வேலை, மட்பாண்டம் வனையும் தொழில், நூற்றல் தொழில், நெய்தல் தொழில்,உணவு சமைக்குந்தொழில் போன்றவைகள் பெருகின. இந்த நிலத்தில்தான் வளமான பொருளாதாரநிலை எழுந்தது. இந்தப் பொருளாதார நிலையில் வேளாளர்களே உயர்ந்திருந்தனர். வேளாளர்களின் பொருளாதாரச் செழுமையால் அவர்கள் மாடமாளிகைள், கோயில்கள், அரண்கள் அமைத்தனர். சமயம் உருவாக்கினர். கல்லிலும், செம்பிலும் மரத்திலும் பொன்னிலும் தெய்வஉருவங்களை அமைத்தனர். ஏராளமான அணிகலன்களை உருவாக்கினர். எல்லா நிலத்தவர்களும் தங்கள் நிலத்தில் உள்ள விளைபொருள்களையும் செய்பொருளையும் கொடுத்துவிட்டு நெல், கொள், பயறு, உளுந்து, எள், தேய்காய் வாழைப்பழம் முதலியவற்றை பண்டமாற்றாக வாங்கிச் சென்றார். இந்நிலத்தில்தான் சிவன் தோன்றினார் சைவநெறிஎழுந்தது தத்துவம் உருவாயிற்று. மனிதன் நாடொறும் குளித்து உடற்றூய்மை செய்வதும் ஆடைகள் அணிவதும் நறுமணப் பொருட்களைப் பூசிக் கொள்வதும் நன்மலர்களைச் சூடிக் கொள்வதும் தலையில் நெய் தடவி கொண்டை, சடைமுதலிய பலவித முறைகளில் தலை முடியைக் கட்டுவதும் இந்நிலமக்களே கண்டனர். இந்நிலத்திலே இசையும் இசைக் கருவிகளும் எழுந்தது தமிழ் மொழி ஆக்கம் பெற்றன. இலக்கியம் வளர்க்கப்பட்டது. நாடகம் பிறந்தது. கலைகள் அனைத்தும் பொருளாதாரச் செழுமை பெற்ற இந்த நிலத்திலே கால்கோளப் பெற்றது. இந்த மாநிலத்தில்தான் சிவனும் சக்தியும் தோன்றினர். உழவர்களின் சாதித்தலைவர்கள் படிப்படியாய் பண்ணையார் களாய் (பிரபுக்களாய்) குறுநில மன்னனாய், முடிபுனையும் வேந்தனாய் எழுந்தனர். எனவே முதன்முதலாக வேளாளர்களே அரசர்களாய் நாட்டை ஆண்டனர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இதனை ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் தங்கள் நூலில் விளக்கி எடுத்துக் கூறியுள்ளார்கள். இந்துதான வரலாறு என்ற ஆங்கில நூலை எழுதிய சிங்கிளையர் என்ற ஆங்கில ஆசிரியர் தம் நூலில், மிகவும் தொன்மையான பாண்டிய சோழ மன்னர்கள் பயிரிடும் குடிமக்க ளான வேளாளர் குலத்தில் இருந்தே தோன்றினர் என்றார்.1 நாடோடியாய்த் திரிந்தலைந்த பார்ப்பனர்களைப் பார்க்கிலும் உழவுத் தொழிலைச் செய்த வேளாளர்களே மிகவும் உயர்ந்தவர்க ளாயும் அறிவாளர்களாயும் மேன்மக்களாயும் கொள்ளப் பட்டனர். ஆதிசைவர்கள் ஆதிசைவர்கள் என்பவர்கள் முதன் முதலாக சைவந்தழுவிய வர்கள் என்று கொள்ளவேண்டும். சுமார் 10- ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் மகேந்திர மலையில் சிவபெருமான் தென்முகக் கடவுளாய்க் கல்லாலின் நிழற் கீழ் அமர்ந்து சனகர் சநந்தர் சனற்குமாரர் சனாதனர் எனும் நான்கு முனிவர்களுக்கு நான் மறைகளை உணர்த்தினார். அதனை தேவாரம் திருவாசகம் போன்ற மறை நூற்கள் தெளிவாய் எடுத்துக் காட்டுகின்றன. 1. அன்றாலின் கீழ் நால்வர்க்கருள் புரிந்து கச்சூர் வதுபாலை 2. ஆலின் கீழ் அறநால்வர்க்கு அருள் செய்தான் 3. ஆலமார் நீழலிருந் தறஞ் சொன்னாரும் 4. ஆலின் கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய் 5. கல்லானிழன் மேலிக் காமுறுசீர் நால்வர்க்கன் றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான் 6. கல்லாலின் நிழற்கீழ் நான் மறையும் வகுத்தானை நற்கீரர் பாடிய திருவெழுக் கூற்றிருக்கையில் 7. ஆல நிழலன் றிருந்தறநெறி நால்வர் கேட்டு நன்கினிதருளினை இஃதன்றித் தமிழர் சமய நூற்களில் 8. அறங்கிளரும் நால்வேத மாலின் கீழிருந்தருளி 9. அன்றாலின் நிழற்கீ ழருமறைக டானருளி 10. வேதம் நான்குங் கல்லானிழற்கீ ழறங்கண்டானை 11. மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன ஆகமங்கள் இவர்கள் நால்வரும் சிவபெருமானிடம் முதன் முதலாக தீட்சை பெற்று முதன் முதலாக சைவ நெறியைத் தழுவியவர்கள். இவர்கள் வழிவந்தவர்கள் ஆதி சைவர்கள் எனப்பட்டனர். இவர் களுக்குப் பின் இவர்களால் தீக்கை பெற்றவர்கள் அப்பால் அவர் களின் வழியினரால் தீட்கை பெற்றவர்களும் சைவர்கள் என அழைக்கப்பட்டனர். ஆதிசைவர்கள் சைவர்களால் மதிக்கப்பெற்றவர்கள். இவர்கள் பார்ப்பனர் அல்ல. ஆதிசைவர்களைப் போல் ஓதுவார்களும் குருக்களும் தீக்கை பெற்றவர்கள். சைவப் பெருமக்களால் மதிக்கப் பெற்றவர்கள். இவர்கள் அனைவரும் வேளாளரேயாகும். தெளிவாகக் கூறினால் இவர்கள் சைவ வேளாளர் எனப்படுவர். சைவன் என்றால் சிவனுக்கு ஆட்பட்டவன் எனப் பொருள் தரும். சிவபெருமானுக்கு சைவன் என்ற பட்டம் உண்டு. அப்பர் அடிகள், செய்யறுன் கமலபாதம் சேரும் மாதேவர் தேவே மையணிகண்டத்தானே மான்மறி மழுவொன்றேந்துஞ் சைவனே சாலஞானங் கற்றறிவிலாத நாயே னையனே யால வாயி லப்பனே யருள் செய்யாயே என்றார். திருஞான சம்பந்தப் பிள்ளயார், வானவர் மதியொடு மத்தஞ்சூடித் தானவர் புரமெய்த சைவனிடங் கானமட மயில் பெடைபயிலுந் தேனமர் பொழிலணி சிரபுரமே என்று பாடியுள்ளார். மணிவாசகப் பெருமான், பாழ்ச் செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச் செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் தாட் செய்யதாமரைச் சைவனுக்கெபுன் புறலையால் வாட் செய்குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே என்று கூறியுள்ளதும் சிவபெருமானுக்குச் சைவன் என்ற பெயர் உள்ளது காண்க. மேலும், ஆதிசைவர்கள் மக்களுக்குத் தீட்கை அளிக்கவும் திருக்கோயில் உள்ள திருவுண்ணாழிகையில் புகுந்து திருஉருவங் களைத் தொட்டு பூசை செய்யவும் தீப ஆராதனைகள் செய்யவும் ஆகமங்களை ஓதவும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இஃதின்றி திருக்கோயிலின் திருவுண்ணாழிகையின் உட்புகவும் திருஉருவங் களைத் தொட்டு பூசை செய்யவும் சிவதீக்கைபெறாத சங்கராச் சாரிக்கும் ஏனைய பார்ப்பனர்க்கும் உரிமை இல்லை. தமிழகத்திலே தோன்றிய ஆதிசைவர்கள் வேளாளர்கள் வட இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் அங்கு குடியேறி வாழ்ந்து வந்தனர். இவர்கள் கங்கை யாறு பாயும் நாடுகளிலும் சிறப்பாக காசிக்கு அண்மையிலும் வசித்து வந்தனர். குலசேகரபாண்டியன் காசி யாத்திரை போன காலத்தில் இவர்களைக் கண்டு தம்முடைய நாட்டிற்கு அழைத்து வந்தான் என்று தெரிகிறது. சிவபெருமான் - யோகி சிவபெருமான் மக்கள் இனத்தின் அன்பன், தோழன், தந்தை, தாய், வழிகாட்டி என்று தமிழர்கள் கருதினர். உயிர்கள் ஐம்பொறிகளின் வழியே சென்று பாசத்தில் மூழ்கி இருள் உலகில் அல்லற்பட்டுத் துன்புறாது தன்னை வந்தடைந்து அழிவிலாத இன்பந்துய்க்க உயிர்கள் ஐம்புலன்களை அடக்கி யோக நிலை எய்து மாறு கூறினான். தானே யோகியாய் இருந்து வழிகாட்டினான். ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தைத் தோற்றுவித்துள்ளனர். அந்த மாபெரும் பண்பாடும் மறைந்துபோயிற்று. ஐம்பது ஆண்டுகட்கு முன்பு அந்த நிலப் பரப்பு அகழ்ந்து ஆராயப் பெற்றது. உலக வரலாறு கண்டிராத பல உண்மைகள் வெளிவந்தன. அரப்பா, மொகஞ்சதாரோ, சங்குதாரோ, உலொகுஞ்சுதாரோ, உரூபார், குல்லி, நால்காளிபங்கன் போன்ற பல நகரங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அகன்ற தெருக்களும், வான் அளாவிய மனைகளும் , மாளிகைகளும் கூலக்களஞ்சியங்களும், குளங்களும் கோட்டைகளும், நவமணிகள் இணைத்த பொன்அணிகளும், ஆயுதங்களும், பானைசட்டிகளும், காசுகள், முத்திரைகள், தாயத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளிலும் காசுகளிலும், தாயத்துக்களிலும் ஓவிய எழுத்துக்களும் பல உருவங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உள்ள சில முத்திரைகளில் சிவ பெருமான் பத்மாசனத்தில் யோகியாய் வீற்றிருப்பது போலவும் அவர் அருகே மான், புலி, யானை, காண்டாமிருகம் போன்ற விலங்குகள் நிற்பது போலவும் காணப்பட்டது. இவ்வுருவம் பசுபதி என்னும் விலங்குகளின் இறைவனாகிய சிவபெருமான் உருவமே என்று முதன் முதலாக சிந்து வெளி அகழ் ஆய்வை நடத்திய இந்திய அரசின், தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் தளபதிசர். சாண்மார்சல் அவர்கள் உலகிற்கு உணர்த்தினார். அதற்குப்பின் எர்ஸைட் மெக்கே, ஆர். டி. பான்ஜி, வாட், மார்ட்டிமர் உயிலர், ஆர். ஜி ஹண்டா, ஹால், லாங்டன், உரோகினி, பண்டர்கார், கோர்டன் சைல்டு போன்ற பல்வேறு அறிஞர்கள் இவ்வுருவம் யோகநிலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் உருவமே என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள். இதில் கருத்து வேற்றுமையே இல்லை. மேலும் இங்கு சிவயோக நிலையில் இருக்கும் பசுபதி ஐந்து முகம் உள்ளவராக - சதாசிவனாக அமர்ந்திருக்கிறார் என்று எண்ணப்படுகிறது. இஃதன்றி ஒரு முகத்துடன் யோகாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவன் உருவமும் யோகா ஆசனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் இடது புறம் ஒரு மங்கையும் ஒரு நாகமும், வலது புறம் ஒரு மங்கையும் நாகமும் நின்று வணங்குவது போலவும் பல உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு பலவிதமான சிவலிங்கங்களும், சக்திஉருவங்களும் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. சிந்து வெளியை அகழ்ந்து கண்ட அறிஞர்கள் அனைவரும் இது ஆற்றங்கரைப் பண்பாடு. இங்கு நிலவியது வேளாளர் நாகரிகம் என்று சான்று காட்டிவிளக்கியுள்ளனர். சிந்து வெளியில் வாழ்ந்த வேளாளகுல மக்கள் உழவுத் தொழிலை வளர்த்து பெரும் பொருள் ஈட்டிநாடு நகரம் அமைத்து நாகரிகத்தை நிறுவியதோடு கயிலை மலையைச் சிவபெருமானின் உறைவிடமாகவும் கண்டனர். அவரது மனைவியை மலைகளாகவும் கொண்டனர். தொன்று தொட்டு சிவபெருமானை யோக நிலையில் இருக்கும் தோற்றத்தில் வேளாளர் வழிபட்டு வந்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதனைச் சைவசமய மறைகளும் ஆகமங்களும், தோத்திரப்பாக்களும் நன்கு எடுத்துக்காட்டுகின்றனர். பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வர் - குறள் இதன் பொருள், மெய் , வாய், கண், மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது அதாவது சிவபெருமானது மெய்யான ஒழுக்கநெறியின் கண்வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வர் என்று தமிழ் மறையாகிய திருக்குறளில் வள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார். ஐந்தவித்தான் என்று வள்ளுவர் கூறுவது ஐம்பொறிகளையும் அடக்கி யோக நிலையில் காட்சி அளிக்கும் சதாசிவனையே குறிப்பதாகும். மேலும், காலிண்றாகி நடந்து முதுகையின்ருகிக் கவர்ந்த மலர் போலும் விழியின்றாகியரும் பொருள் கலிளைத் துங்கண்டு மிக வேறு செவியின்றாய்க் கேட்கும் வாயின்றாகியியம்பு சீர் சாலவுரையுந் தனிச் சுடரே தலைவர் நின்னைத் தொழுதோமே - இலிங்க புராணம் - திரிபுரம் எரித்த அத்தியாயம் இவ்வாறு மாயாதது இல்லாதிருக்கவும் ஆன்மாக்கள் திருவடி வந்தடையவும் சிவபெருமான் தென்முகக் கடவுளாய் (தட்சணா மூர்த்தியாய்) சனகாதி முனிவர் நால்வருக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு முக்திவழிகளைக் காட்டி அருளினார். அவர்களுக்கு உணர்த்தும் முறையில் நாம் பொறிவாயில் ஐந்தவித்தானாகி இருக்கிறோம் நீங்களும் மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் ஐம்பொறிகளை வழிகளாக உடைய ஓசை , ஊறு, ஒளி, நாற்றம், சுவை என்னும் ஐந்தாசைகளையும் அடக்கினால் சிவானுபவம் வெளியாகும் என அனுக்கிரகித் தருளினார். அதனால் சிவபெருமானுக்கு யோகி என்றும் ஞானி என்றும் ஐந்தவித்தான் என்றும் பெயர்கள் எழுந்தன. ஐம்பொருளையும் அடக்கியாண்டால் சிவானுபவம் வெளிப்படும். இதனை, வென்றுளே புலன்களைந்தார் மெய்யுணருள்ளந்தோறும் சென்றுளே வமுதமுற்றுந் திருவருள் போற்றியேற்றுக் குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி மன்றுளே மாறியாடு மறைச் சிலம்படிகள் போற்றி. என்று திருவிளையாடற் புராணம் எடுத்துக் காட்டுவதைக் காண்க. மேலும் அப்பர் அடிகள் சிவபிரானை யோகி என்றே அழைப்பதும் காண்க. பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி யெத்தினாற் பத்தி செய்வே னென்னை நீ யிகழ வேண்டா முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடுகின்ற வத்தாவுன்னாடல் காண்பா னடியனேன் வந்தவாறே (தேவாரம் - கோயிற்றிரு நேரிசை) எனச் சிவபெருமானை பரமயோகி என்று கூறுவது ஆராயத் தக்கது. திருஞான சம்பந்தப் பிள்ளை, அகனமர்ந்த வன்பின தாயது பகை செற்றைம்புலனு மடக்கிஞானப் புகலுடை மேலார்ந்த முள்ளப் புண்டரி கத்துள்ளிருக்கும் புராணர் கோயில் தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குள வர்க்கழந்திகழ்ச்சலசத்தியுண் மிகவுடைய புன்கு மலர்ப் பொரியட்ட மணஞ் செய்யு மிழலை யாமே என்று ஐம்புலன் அடக்கி அறிவூட்டிய (அரனாரின்) அறநெறியை எடுத்து இயம்பும்கின்றார். மணிவாசகப் பெருமான், நன்றாக நால்வர்க்கு நான் மறையி னுட்பொருளை யன்றாலின் கீழிருந்தங் கறமுறைத்தான் காணேடி யன்றாலின் கீழிருந்தங் கறமுறைத்தானாயிடினுங் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலே - திருவாசகம் என்று திருவாசகத்தில் பொய்தீர் ஒழுக்கநெறி என்பது சிவபெருமான் அருளிச் செய்த அறநெறியே என்று அறிவுறுத்தி யுள்ளார். அரனார், என் அப்பர் என்று புகழ்ந்தேத்திய திருநாவுக்கரசுப் பிள்ளை (அப்பர் அடிகள்) ஆதியானை யமரர் தொழப்படு நீதியானை நியம நெறிதனை யோதியானை யுணர்தற் கரியதோர் சோதியானைக் கண்டீர் தொழப் பாலதே - தேவாரம் வேளாளர் சூத்திரரா? வேளாளர் தமிழர் இன மரபில் வந்தவர்கள். திராவிட இனத்தின் முன்னோடிகள். சைவநெறியைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வாழ்பவர்கள் தமிழர் குமுகாயத்தில் என்றும் குலவேற்றுமை இனவேற்றுமை கிடையாது. தொல்காப்பியம் எனும் பழம்பெரும் நூலில் திணை வேற்றுமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைப்பிரிவு (நிலப்பிரிவு) இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் முறையே குறவர், இடையர், வேளாளர், பரவர், எயினர் என அழைக்கப்பட்டனர். இவர்களில் குரவர் வேட்டையும், இடையர் ஆடுமாடுமேய்த்தும், வேளாளர் உழுது பயிரிட்டும், பரவர் மீன்பிடித்தும், எயினர் தொழில் இல்லாது பிறரை அடித்துப் பறித்தும் உயிர்வாழ்ந்து வந்தனர். தமிழர் குமுகாயத்தில் வேளாளர் உழுதுபயிரிட்டு கூலப்பொருளைப் பெருக்கியும் கைத்தொழிலை வளர்த்தும் வந்தனர். அவர்கள் வாழ்ந்த மருதத்திணை தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாய் அமைந்தது. எனவே இந்நிலத்தில் பயிர்த் தொழில் மட்டுமின்றி, மட்பாண்டம் செய்தல், நெசவு நெய்தல் வீடு கட்டுதல், கலப்பை செய்தல், வீட்டிற்கு வேண்டிய நிலை, சாளரம், மல்கை, விட்டம், உத்தரம், நிங்காவிட்டம், பட்டியல் முதலிய தச்சுவேலைகள் செய்தல், ஆணி, கொண்டி, கொழு, அரிவாள், மண்வெட்டி செய்யும் இரும்புத் தொழில் போன்ற எண்ணற்ற தொழில்கள் பெருகின. இதனால் உழுதல் தொழில் செய்த மருத நில வேளாளர் செல்வத்தால் உயர்ந்தனர். நாடு நகரம் அமைத்தனர். குமுகாயத் தலைவனை நாட்டாண்மைக் காரனாகவும் பண்ணையா ராகவும் மிராசுதாராகவும் வேந்தனாகவும் உயர்த்தினர். அதனால் அவர்கள் சமூகமும் நாடு காக்கும் சமூகம் ஆகவும், எல்லோருக்கும் கூலப்பொருளை அளித்து உலகோம்பும் சமூகமாகவும் எழுந்தது. கூலப்பொருளை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கடல் கடந்து சென்று வணிகம் வளர்த்தும் பொருள் தேடும் சமூகமாக மலர்ந்தது. கல்வி பெற்று மொழி வளர்த்து, சமயம் தழுவி தெய்வம் பெற்று வழிபாடு இயற்றி அறம்பேணி, ஒழுக்கம் கடைப்பிடித்து உயிர் களைப் பேணி செந்தண்மை பூண்டு அந்தணர் என்னும் பேற்றையும் பெற்றது. வேளாளராகிய உழவர்கள் முயற்சியால் வணிகராயும், செயலால் அரசராயும், ஒழுக்கத்தால் அந்தணராயும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த வேளாளருக்கும் அவர்களின் உதிரசம்பந்தமான குறவர், இடையர், பரவர், மறவர் முதலியவர் களுக்கும் எவ்வித உயர்வுதாழ்வும் வேற்றுமையும் இல்லை. சமய வேற்றுமையும் சாதிவேற்றுமையும் இல்லை. ஆனால் அயல்நாட்டி னின்று இந்திய நாட்டில் குடியேறிய வேளாளர்களுக்கும் அவர்களின் இனத்தவர்களான ஆரியர்களுக்கும் வேற்றுமை உண்டு. அவர்கள் நிறத்தால், சமயத்தால், தெய்வத்தால் பண்பாட்டால், மொழியால், உடையால், உணவால், பழக்க வழக்கத்தால் மாறுபட்டவர்கள். அவர்கள் தங்களுக்குள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பிரிவை வைத்திருந்தனர். அந்தப் பிரிவை திராவிடர்கள் மீதும் தமிழர் மீதும் திணிக்க முயன்றதுண்டு. அது முடியவில்லை. இறுதியாக எல்லோரையும் இந்துக்கள் என்றும் இந்து மதத்தில் உள்ள நான்கு வருணத்தில் சத்திரியர்களும் வைசியர்களும் அழிந்து போய்விட்டனர். எஞ்சியவர்கள் பிராமணர்களும் சூத்திரர்களுமே என்றும் பிராமணர்களைத் தவிர மற்றையோரெல்லாம் சூத்திரர்கள் என்று சொல்லிவந்தனர். தமிழ்நாட்டில் ஒழுக்கத்தால் உயர்ந்த அந்தணர்களைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு அத் தமிழ் நாட்டில் அரசர்களையும் அவர்கள் இனத்தவர்களையும் தங்களுக்கு அடுத்தபடியிலும் வணிகம் நடத்தியவர்களை அதற்கடுத்தபடியும் தொழிலாளர்களை நான்காவது இனத்தவர்களாகிய சூத்திரர் என்றும் கூறி தமிழர்களில் அந்தணர் அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவு இருந்தது. தங்களின் வருணப்பிரிவையும் சமயத்தையும், சமயச்சடங்குகளையும் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தமிழர் மீது திணிக்க முயன்று வந்தனர்; இன்னும் முயன்று வருகின்றனர். ஆரியர்கள் மதம் இந்து (சுமார்தம்) தெய்வம், பிரமம், இந்திரன், பிரமன், விஷ்ணு முதலானவர்கள். வேதம் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். தெய்வ வழிபாடு யாகம் செய்தல். சமயக் கொள்கை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் வருணாச்சிரமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர் சமயம் சைவம். தெய்வம் சிவன், திருமால், கொற்றவை, முருகன் முதலியவை களாகும். ஆரியர்களின் முன்னோடிமக்கள் பிராமணர்கள். திராவிடர்களின் முன்னோடி மக்கள் வேளாளர்கள். பிராமணர்கள் என்றும் திராவிடமக்களில் வேளாளர்கள் தங்களின் கொடிய பகைவர்கள் என்று எண்ணி அவர்களைப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அழித்து விடப் பார்க்கின்றனர். மேலும் இந்திய நாட்டுக்கு அன்னியர்களான ஆரியர்கள் திராவிடர்களைச் சிறிதும் அச்சமின்றி சூத்திரர்கள் என்றனர். சூத்திரர் என்றால் அடிமைகள், வேசிமக்கள், ஆசாரமற்றவர்கள், ஒழுக்கமற்றவர்கள், பிராமணர்களுக்குத் தொண்டுசெய்ய இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றெல் லாம் கூறிவந்துள்ளனர். இவர்களின் சமயம் திராவிடர்களிடம் பரவி தீண்டாமை பார்க்காமை என்னும் கொடிய நச்சுவிதைகளை நட்டு அது முளைத்துக் கிளைத்து மலர்ந்துள்ளது. தமிழ் நாட்டில், அறிவால், அன்பால், ஒழுக்கத்தால் உயர்ந்த சான்றோர்களை அந்தணர் என்றும், கொடையால், வீரத்தால், தியாகத்தால், செல்வத்தால், நேர்மையால் சிறந்தவர்களைத் தலைவன், மிராசுதார், நாட்டாண்மைக்காரர், அரசன் என்றும், அறிவால் முயற்சியால், வணிக உணர்ச்சியால் மிக்குடையவர்களை வணிகர் என்றும் வேளாண்மையால் தாளாண்மையால் சலியாது உழைக்கும் உழவர்களை வேளாளர் என்றும் அழைத்துவந்தனர். ஆனால் வேளாண்மைத் தொழில் இயற்றும் தம் குண நலத்தால், ஒழுக்கத்தால் அந்தணராயும் அரசராயும் வணிகராயும் விளங்கினர். உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர ஓதி யழல் வழிப்பட் டோம்பாத வீகையா னாதி வணிகர்க் கரசு என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளை நோக்குக. முழுதுணரவோதி அழல் வழிபட்ட வேளாளர், உயர்நலன்களைத் துறந்து பிற்காலத்தில் வீழ்ந்தனர். வருணவேறுபாட்டுக் காலத்தில் வேளாளருள் அந்தணர் எனப்போற்றும் தக்கார் பலர் இருந்தனர். பிற்காலத்தில் தமிழரல்லாத ஆரியர் தங்களை அந்தணர் என்று அஞ்சாது கூற முன்வந்தனர். வேளாளர்களிற் சிலர் செல்வத்தால், அறிவால், ஆண்மையால், வீரத்தால் குமுகாயத் தலைவராயும், நாட்டாண்மைக்காரராயும் அரசராயும் உயர்ந்தனர். மன்னர் குடும்பத்தினுள் முதன்மையாக அக்காலத்தில் தெற்கிலாண்டமுடி யுடைய மன்னர், தனித்த பிரிவினராய் ஒதுங்கிவாழாது தம் குலத்தையும், உதிரத் தொடர்பையும் கொண்ட குறுநிலமன்னராய் விளங்கிய வேளிர் எனப்பெறும் வேளாளர்களோடு கொள்வினை கொடுப்பினை செய்து வந்தனர். இதனைத், தொல்காப்பியர், மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ண நுழை நாபதியருடன் கொணர்ந்த பதிணெண்வகைக் குடிப்பிறந்த வேளிர் (பொருள் சூத் 32) மன்னர்க்கு வேளாளர் மகட்கொடை கொடுத்துவந்ததை நிகர்த்துமேல்வந்த வேந்த ரொடு முதுகுடி, மகட்பாடஞ்சிய மகட் பாலானும் (பொருள் சூத் 79) உணர்த்துகின்றன. மேலும் வேளாளரும் மன்னரும் ஒருவரே என்னும் உண்மையைத் தொல்காப்பியர், மன்னர் பின்னோரென்ற பன்மையான முடியுடையோரும் முடியில்லாதோரும் . . . . இருவகையரென்ப (பொருள் சூத் 30) உரையாலும் அறிக. வேளாளருள் வணிகத்தாலும் எண்வகைக் கூலப்பொருள்களைப் பயிரிட்டு வாழ்ந்து வந்தோரை வணிகர் என்று, நெற்பயிர் ஒன்றையே பயிரிட்டு வாழ்ந்து வந்தோரை வேளாளர் என்றும் கூறப் பெற்று வந்தது. இதனை வைசிகன் பெறுமே வாணிகன் வாழ்க்கை வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்ல, தில்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி (பொருள் சூத் 633,634) என்ற தொல்காப்பியர் உரையாலும் கண்டு தெளிக. எனவே, வேளாளர் களுக்கும் வணிகர்க்கும் வேறுபாடுகள் எதுவும் இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை செய்து வருபவர்களை வேளாளர் என்றும், வணிகம் செய்யும் வேளாளரை செட்டியார் என்றும் கூறப்பட்டு வருகின்றது. நிறை காவலும் உழவு தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்குந் தடுமாறும். வாணிக வாழ்க்கை வேளாண்மாந்தர்க்குச் சிறுவரவிற்று... உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்று என்றவாற்றானும், வணிகரையும் வேளாளரையும் வேறு கூறாது இருமூன்று மரபினோ ரெனக்கூடவோபறப்புதினார் வழிபாடும் வேள்வியுமொழிந்த தொழில் இருவர்க்கும் ஒத்தலின் என்ற தொல்காப்பிய 75ஆம் பொருளதிகார சூத்திர உரையாலும் விளங்கும். மேலும் பிங்கல முனிவர் தம் நிகண்டில் வேளாளர் என்னும் பதத்தை வைசியர் என்னும் பெயருள்ளும் சூத்திரர் பொதுப் பெயருள்ளும் வைத்துக்காட்டியிருப்பது ஆராயத் தக்கது. இளங்கோக்கள், மன்னர் பின்னர் இப்பர் எட்டியர்காராளர் வளம்பெறு வாழ்வேளாளர் வைசியர் தன் பொதுப் பெயராம் என்று நிகண்டு கூறுவது வேளாளர், வணிகர் என்பதை உறுதிப் படுத்துகிறது. அதோடு அவர்கள்அரசர் பதவிக்கும் அமைச்சர் பதவிக்கும் உரியவர் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. நானிலத்தில் சிறந்த மருத நிலத்தில் வாழ்ந்த வேளாண் குடிமக்களிடையே செல்வமும் நாகரிகமும் சிறந்து விளங்கிய பொழுது குமுகாயம் இருபிரிவுகளாகப் பிரிந்தது. இதனை உழுவித் துண்போரும் உழுதுண்போருமென ...... வேளாளர் இருவகையர் என்ப.... அவருள் உழுவித்துண்போர் மண்டில மாக்களும் தண்டத் தலைவருமாய்..... வேள் எனவும் அரசு எனவும்உரிமை எய்தினோரும், பாண்டிய நாட்டுக் காவிதிப் பட்டம் எய்தினோரும் குறுமுடிகுடிப் பிறந்தோர் முதலியோருமாய் முடிவுடைவேந்தர்க்கு மகட்கொடைக் குரிய வேளாளராம் என்று தொல் காப்பியம் 30ஆம் பொரு ளதிகாரச் சூத்திர உரையிற்கூறி இவரை உயர்ந்த வேளாளர் என்பர் நச்சினார்க்கினியர். உழுதுண்போர் அவரினும் ஒருபடி குறைந்த நிலையில் உள்ள வேளாளர் எனக்கொள்ளப்பட்டார். சமூக வளர்ச்சி யில் உடன் பிறந்தார்களிடையே ஏற்றத் தாழ்ச்சியை உருவாக்கியது. வேளாளருள் நான்காவது நிலையில் உள்ள உயர்ந்த வேளாளரே மன்னரில் இரண்டாம் வகையினராகிய வேளிர் ஆவர் என்று சிலர் கூறுகின்றனர். மன்னர் வகையினரான வேளிர்க்கு உரிய இலக்கணமான தன் பகைவரின்தானே சேறலும், தான் திறை பெற்ற (கப்பம் பெற்ற) நாடு காக்கப் பிரிதலும், மன்னர் மரபிற்பின்னோர் எனப்பட்ட வேளாளரை ஏவிக் கொள்ளும் சிறப்புமாம் (தொல்-பொருள்-சூத் 32 - உரை.) பின்னோரெனப் பட்டவேளாளர் என்று விதந்து கூறினமையின் பின்னர் கூறப்பட்ட இருவகை வேளாளரும் வேளரினின்று வேறுபட்டவர் ஆவர். அன்றியும் வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும் மன்பெறு மரபினோர்க்கும் உரிய என்னும் தொல்காப்பியர் பொருளதிகாரம் 639ஆம் சூத்திரத்தால் வேளிர்க்கு உரியன இவை என்பதும் வேந்து விடுதொழி படையும் கண்ணியும் என்னும் 637ஆம் சூத்திரத்தால் வேளாளரில் உயர்ந்தார்க்கு உரியன இவை என்பதும் அவ்வச் சூத்திர உரையால் பெறப்படும். பசைபடு பச்சை நெய்தோய்த்து என்று அகப்பாட்டிலும் விலங்குகிருஞ்சிமயக் குன்றத்தும்பர் என்னும் பழைய பாட்டிலும் குறிக்கப் பெற்றவர் இரண்படியில் உள்ள வேளிர் ஆவர். இருங்கோவேண்மான், அழுந்தூர்வேள், நாங்கூர்வேள் இவர் நான்காம் வருணத்து உயர்ந்த வேளாளர் ஆவர். முன்னவர் வேள் குலத்தவராக ஏற்றுக் கொள்ளப்படா விடினும் வேள் பட்டமும் அது போன்று அரசு அளித்த காவிதிப் பட்டமும் பெற்றவர் ஆவர். (இக்காலத்துச் செட்டிமரபிலும் காசுக்கடைச் செட்டி, செக்கான் செட்டி, தேவாங்கச் செட்டி முதலியவற்றிற் காணும் செட்டிப்பட்டத்திலுள்ள வேறுபாட் டினைச் சிந்திக்கவும்). குலப்பெயராகிய வேள்பெயருக்கு முன்வரும்; வேள் ஆய் வேள் எவ்வி, வேள்பாரி முதலியன இதற்கு ஏற்ற எடுத்துக் காட்டு ஆகும். பட்டப் பெயராகிய வேள் பெயரின் பின்னரேவரும், முன்னர்வராது; அழும்பில் வேள் இருங்கோவேள் முதலியன இதற்கு உரிய எடுத்துக் காட்டு ஆகும். வேள்பட்டம் எய்தினோராகிய நான்காம் வருணத்து உயர்ந்த வேளாளரும் குறுநில மன்னர்போல் நாடாண்டு இருந்து வந்தவர்ஆவர். பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மா, வில் ஆண்டநன்னன் வேண்மான் இதற்கு எடுத்துக் காட்டாகும். மன்னவர் போலும் செல்வம் பெற்று தாழ்ந்தவராக எண்ணப் பட்டோர் நாடாண்டாராயினும் என்னும் தொல்காப்பிய 640ஆம் பொருளதிகாரச் சூத்திர உரையால் இது பெறப்படுகிறது. வேள் என்னும் பட்டம் வேள் என்னும் குலப்பெயரினின்று வந்ததென அறிஞர்கள் கொள்கின்றனர். வேள் என்னும் பதத்திற்கு ஆண்மகன், குமரன், காமன், என்று பொருள்படும். மேலும் வேள் என்னும் சொல் வெள்ளாளர் என்னும் மூலச்சொல்லினின்று பிறந்தது. வெள்ளாளர் என்பது வெள்ளத்தை ஆள்பவர் (Rulers of trood) என்ற சொல்லினின்று தோன்றியது எனக் கருதப்படுகிறது. வேளாளர் என்ற பதத்திற்கு நிகண்டில் புரவலன், ஈகையான் போற்று வேளாளன் தியாகி, உரைகெழு வேள்வியாளன் உபகாரி கொடை யுளனாம் என்று கூறப்பெற்றுள்ளது. அகராதியில் வேளாளர் என்பதற்கு ஈகையாளர், மெய்யர், பூவைசியர் என்றும் வேளிர் குறு நிலத்தரசர் என்றும் விளக்கம் தரப் பெற்றுள்ளது. தமிழருள் வேளாளர் அந்தணர் அரசர் வணிகர் உழவர் என்னும் நான்கு பிரிவினர்களின் செயலையும் இயற்றிவந்தனர். தமிழ் நிலத்தில் உள்ள எந்தப்பிரிவினரும் அந்தணராயும் அரசராயும் வணிகராயும், உழவராயும் வரும் வாய்ப்பு இருந்தது. பல்வேறு இனத்தவர்களும் தமிழ்பயின்று சங்கப்புலவராய் வாழ்ந்துவந்தனர் என்று வரலாறு கூறுகின்றது. ஆரியர்கள் தமிழ் நாட்டிற் புகுந்து தமிழ் அரசர்களிடம் செல்வாக்கைப் பெருக்கி சைவசமயத்தைப் பின்தள்ளி, முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை, உருத்திரனாக்கி - அதாவது பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் (சிவன்) என்ற முத்தேவரில் ஒருவராக்கித் தங்களின் ஏகான்ம வாத நெறிக்கு முதலிடம் தேடினர். வருணாச்சிரம தர்மம் என்னும் குல வெறியை இந்துமதம் என்னும் ஒரு அர்த்தமற்ற சமயத்தின் மூலம் நிலை நாட்டினர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அறநெறியைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தால் உயர்ந்த வர்கள் அந்தணர் என்ற விதியை அடிப்படையாய் வைத்து வேளாளர் அந்தணராய் விளங்கியதை அடியோடு மாற்றினர். தானே கடவுள் என்று நாத்திகம் பேசி, யாகத்தின் பெயரால் ஆடு, குதிரைகளைக் கொன்று புலால் உணவு உண்டு, சோமபானம் என்னும் மதுவையுண்டு ஐந்து பேர் ஒரு பெண்ணை மனைவியாய்க் கொண்டும், ஒரு ஆண் பல்வேறு பெண்களை மணந்தும், ஒழுக்கம் திறம்பிய பார்ப்பனர் அந்தணர் என்னும் பெயரைத் தாங்கி தமிழ் நாட்டில் தலைத் தூக்கியதைத் தமிழ் அந்தணராகிய வள்ளுவர் தம்பொதுமறையில், அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்- என்றும், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று என்று பார்ப்பனர் அந்தணர் என்று கூறித் தமிழ் உலகில் முதலிடம் பெறுவதை வன்மையாகக் கண்டித்தார். தமிழில் ஆகமம் அளித்த திருமூலர் தம் ஆகமம் ஆகிய திருமந்திரத்தில், சத்திய மின்றித் தனிஞானம் தானின்றி ஒத்த விடயம் விட்டு ஓரும் உணர்வின்றி பத்தியு மின்றி பரனுண்மையின்றி ஊண் பித்தேறும் மூடர் பிராமணர்தாம் என்றும், பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றன்னை அர்ச்சிக்கில் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லாவியா தியாம் பார் கொண்ட நாட்டில் பஞ்சமுமாம் என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து ரைத்தனனே v‹W« jÄœ eh£L mªjz®fS« ., அறவோர்களும் சான்றோர் களும், சித்தர்களும், முனிவர்களும் நாயன்மார்களும் எதிர்த்து வந்தனர். எதிர்ப்புப் பயன் பெறவில்லை. வேளாளர்கள் அந்தணர் பதவியினின்று வீழ்த்தப்பட்டணர். பிராமணர் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டனர். 1919ஆம் ஆண்டுவெளியான செந்தமிழ் என்னும் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீட்டில் அந்தணர் தொழி லோம்பிய வேளாளர் ஒழிந்தனர் என்று சித்தூர் சுப்பிரமணியா சாரியார் பி.ஏ, எல்.டி என்ற அறிஞர் உலகறிய உரைத்துள்ளார். ஆனாலும் பார்ப்பனருக்கும் வேளாளருக்கும் இடையே எழுந்த பகைமை உணர்ச்சி இன்னும் அழிந்துவிடவில்லை. பின்கலந்தை நிகண்டில் வேளிர் என்பதும் ஆங்கவர் மேற்றே எனக் குறித்த குறுநிலமன்னராம் தம் வள்ளன்மை யானிகழந்த பொறாமைக் காரணத்தால் பலர் வீழ்ந்தனர். வேள்புல அரசர்களுக்கு வேந்தரும் அடுத்தடுத்து அரும்பிய போர்வெறியாலும் சோழ அரசர்கள் போன்றவர்கள் செய்த மணக் கூட்டுறவானும் தம் பெயர்மாறினர். பார்ப்பனர்கள் சேர, சோழ, பாண்டிய அரசர் களுக்குக் குருவாயும் அமைச்சராயும் அமைந்து யாகங்கள் செய்தும் சோமாஜியார் என்ற பட்டந்தாங்கியும் சைவந்துறந்தும், பிற இனத்தவர்களுடன் பெண் கொண்டும் பெண் எடுத்தும் வாரிசு இல்லாத தமிழ் அரசர்கள் (வேளாள வேந்தர்கள்) பார்ப்பனர் சொற்படி, பௌண்டரியாகம் செய்து அரசியோடு பார்ப்பானை உடலுறவு கொள்ள அனுமதித்தும் தமிழ் அரசர்களின் தனித்தன்மை அழிக்கப்பட்டது. தமிழ் இனம் மாசுற்றது. தமிழ் அரசர்கள் பார்ப்பனர் சொற்படி ஒருவருக் கொருவர் போரிட்டு வலிமை இழந்து பதவிபறிக்கப்பட்டு இருந்தவிடம் தெரியாது மறைந்து விட்டனர். இன்று தமிழ் அரசர்களின் இனத்தவர்கள் என்று கூறித்தலை நீட்ட எவரும் இல்லை. ஆறு கெட நாணலிடு, ஊருகெடநூலையிடு , பாப்பு பெருத்தல்லோ சமதானங்கள் பாழ்பட்டதே என்ற பழமொழிகள் எழுந்தன. பாப்பொடு பழகேல் என்று ஔவையார் தமிழர்க்கு அறவழி காட்டினார். பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வேளாளர் ஆட்சி சரியத் தொடங்கிவிட்டது. வேளாளர், இளங்கோக்கள், மன்னர் பின்னர், இப்பர், எட்டியர், காராளர் என்பது வைசியர்களின் பொதுப் பெயர் என்ற பிங்கலந்தை முனிவர் கூறியவாறு வேளாளரிடமிருந்து வணிகம் கவரப்பட்டு வைசியர் என்ற பட்டமும் பறிக்கப்பட்டது. இன்று வேளாளர் நான்காவது வருணத்தவராகியுள்ளார். அவருள் வேள் வேள் ஆகிய பட்டங்கொண்ட உயர்ந்தவேளாளரும் ஓரிரண்டு இடங்களிலே காணப்படுகின்றனர். சில காலத்தில் இழிந்த வேளாளரினும் வேற்றுமையொழிய மற்றகைய வேளாளரே இக்காலத்து மலிந்து கிடப்பர் என்று ஒரு பார்ப்பன ஆசிரியர் கூறியுள்ளார். உண்மையில் இந்த நிலைமையும் மாறி வேளாளர் வீழ்த்தப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டனர். வேளாளர் என்னும் பதத்தின் அடிச்சொல்லாகிய வேள் என்னும் பதம் வேல், வெல் என்னும் பதங்களாகத் திரிபுற்று வழங்கியது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வெல் என்ற தாது அடியாகப் பிறந்த சொல், படையில் வெல்லும் வீரன், என அதற்கு முதற் பொருள் அமைந்தது. கி.மு. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட மா இராசராசன் (Raja Raja the great) என்ற சோழ மாமன்னர் சாசனங்களில் காணும் வேளக்காரர் என்னும் பதத்தில் இப்பொருள் ஒளிர்வதைக் காணலாம். இதனால் வேளிர் என்பது காரண இடுகுறிப்பெயராயிற்று. இதனடியாக வீரனில் சிறந்த வேலனாகிய முருகவேளுக்கு இரண்டாவது பொருள் அமைந்தது. அடிக்கடி போர் நிகழும் முற்காலத்து வீரராகிய வேளாளர் தன் பெயருக் கேற்ப அரசர்களாலும் ஏனையோர்க ளாலும் உபகாரிகளாகவும் ஈகையாளராகவும் கருதப் பெற்றா ராதலின் இப்பதத்திற்கு உபகாரி ஈகையாளர் என்பது பொருத்தமான பொருளாக அமைந்தன. இதற்கு ஆதி வேளிர்களின் வரைவிலா தளிக்கும் வள்ளல் தன்மையும் இதற்குத் துணையாகப் போந்தது. இவற்றுள் முதலதற்கு வேளாண்மையும் உபகாரமும் ஈகையும் விளம்பும் என்னும் திவாகரத்தையும் பின்னதற்கும் மன்மதனுக்கு காமவேள் என ஒரு பெயர் இருந்ததும் நோக்கற்பாலது. இறுதியாக வேளாளர் தமிழ்ப் பெருங்குடி மக்களின் முன்னோடிகளாய் செந்தண்மை பூண்ட அந்தணராகவும் அரசோத்தும் வேந்தர்க ளாகவும் விளங்கியமையால் அவர்களுக்கு தாரும் கண்ணியும் உண்டென்று தொல்காப்பியத்தில் கூறப்பெற்றது. கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே (தொல்பொருள் 15 7) தமிழக வைசிகருக்குக் (வேளாளருக்கு) கண்ணியும் தாரும் சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல வேளாண்மை செய்யும் வைசிகருக்கும் தாரும் கண்ணியும் கூறப்பெற்றுள்ளது. வேந்து விடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே - (தொல்பொருள்1623) விழுதொழில் உலகிலுள்ள உயிர்கள் உயிரோழ்ந்தொழிலாய் நிற்றலின் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர் - திருக்குறள் தமிழர் கண்ட பொதுமறை உழுதல் தொழில் உலகில் ஒப்பற்றதொழில் - தலையாய தொழில் என்று கூறிற்று. பார்ப்பனர் தங்களின் இந்து சமய வருணாச்சிரம தர்மத்தை வேளாளர் மீதும் பிற தமிழ் இனத்தின்மீதும் நன்கு திணித்து விட்டனர். தமிழ் உலகு அதை ஏற்றுக் கொண்டு விட்டது. தமிழ் இனத்தின் முன்னோடிகளான வேளாளர்கள் தங்களை இந்து என்றும் சூத்திரர் என்றும் சொல்லிக் கொள்ளத் தொடங்கி விட்டனர். பிரிட்டீசு ஆட்சிகாலத்திலே பார்ப்பன சூழ்ச்சியால் சைவம் இந்து மதத்திற்குள் அடக்கப்பட்டு தமிழர் அனைவரும் சூத்திர இனத்தில் இந்து சமய சட்டத்தின் (Hindu law) பெயரால் விலங்கிடப்பட்டவர்கள்போல் மாட்டப்பட்டுள்ளார்கள். வேளாளர் ஆங்கில ஆட்சி காலத்தில் வேளாண்மைத் தொழிலைவிட்டு, கிராம முனிசீப், கர்ணம், ஏட்டு முதலிய அரசுப் பதவிகளைப் பெற்றும் சிறு தொழில்கள் செய்தும், பல அடிமைத் தொழிலைச் செய்தும் வந்தனர். என்றாலும் பெரும்பாலான வேளாள மக்கள் ஒவ்வொருவரும் நாலு மரக்கால் விதைப்பாடாவது உடையவர்களாய் இருந்துவந்தனர். உழுபவனுக்கு நிலம் உரித்தானது என்ற ஆரிய அரசின் குருட்டுச் சட்டத்தால் பதினாயிரக் கணக்கான வேளாண்மைத் தொழில் செய்து வந்த பரம்பரையில் வாழ்ந்த உழவர் பெருங்குடி மக்களிடமிருந்து நஞ்சை நிலம் பறிக்கப்பட்டு விட்டது. சைவ வேளாள மரபில் வந்த பண்ணையார், மிராசுதார், நிலக்கிழார் போன்றவர்களிடமிருந்தும், சைவமடங்களிடமிருந்தும் நிலங்கள் பறிக்கப்பட்டது. இன்று அந்தணராய், அரசர்களாய், வணிகர் களாய், வேளாளர்களாய் வாழ்ந்த பழங்குடிமக்கள் வீடிழந்து, நிலமிழந்து, தொழிலிழந்து கல்விபெற வழியின்றி, கல்விகற்றாலும் அரசில் பதவிபெற வழியின்றி பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நமது அரசு, இந்த மக்களைப் படிப்பில் முன்னேறிய மக்களாய் செல்வச் சிறப்பு வாய்ந்த மக்களைப் படிப்பில் முன்னேறிய மக்களாய் செல்வச் சிறப்பு வாய்ந்த மக்களாய் உயர் குடிமக்களாய் எண்ணிப் பாராமுகமாய் இருந்து வருகிறது. தமிழ்நாட்டு வேளாளர்கள் மானத்தைப் பெரிதென்றெண்ணாது தங்களைப் படிப்பில் பின் தங்கிய மக்களாய் அரசு தீர்மானித்துத் தங்களுக்கு இலவசமாய்க் கல்விகற்கவும், அரசப் பதவிகள் பெறவும் சட்டம் செய்யவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டும் நமது அரசு தம் செவிட்டுக் காதைத் திரும்பி திருப்பிக் காட்டி வருகிறது. யூதர் இனம் தோன்றுவதற்கு முன் தோன்றி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் தம் சமயத்தையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் வணிகத்தையும் பரப்பிய ஒரு பேரினம் இன்று வீழ்ச்சியுற்றது. 3. வேளாளர் - அந்தணர் இந்தியாவில் வேளாளர், பிராமணர் என்ற இரு இனத்தவர்கள் உண்டு. இவ்விரு இனத்தவர்களும் சுமார் 4000 ஆண்டுகளாக இந்திய நாட்டில் இருந்து வருகிறார்கள். இவர்கள் வடதுருவமும் தென்துருவமும் போன்று விளங்குபவர்கள். இவ்விரு இனத்தவர் களிடமும் ஒருமைப்பாடு காண்பது அரிது. பிராமணர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வடதுருவத்திலுள்ள நாடுகளில் தோன்றி ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அடிக்கடி புலம் பெயர்ந்து அலைந்து திரியும் நாடோடி மக்களாய் பல இடங்களில் வாழ்ந்து இறுதியாய் பாரசீக நாட்டில் குடியேறி, அங்கிருந்து இந்திய நாட்டிற்குள் புகுந்து அதில் வாழ்ந்த திராவிட குடிமக்களை வென்று இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட வெள்ளை இனத்த வர்கள். இவர்கள் ஆரிய இனத்தவர்கள் எனப்படுவர். ஆரியர்கள் இனத்தால், மொழியால் வேறுபட்ட வர்கள். அவர்களது மொழி சமகிருதம். அவர்கள் சமயம் மார்த்தம். அவர்கள் இந்திரன், பிரகபதி, மித்திரன், வருணன், சோமன் முதலிய தெய்வங்களை வழிபடுபவர்கள். இருக்கு யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களை நம்புபவர்கள். தெய்வங்களைத் திருப்திப் படுத்த தீ வளர்த்து அதில் குதிரை, ஆடு, மாடு, மான் முதலிய விலங்குகளைக் கொன்று போட்டு சுட்டு நெய் வார்த்து உண்பவர்கள். சோமபானம் என்னும் மதுவை அருந்துபவர்கள். பிராமணன்,. சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வருணப்பாகுபாட்டை உடையவர்கள். வருணாச்சிரமத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். பசுக்களை கோமாதா என்று வழிபடுபவர்கள். பசுவின் பால், சாணி, மூத்திரம், தயிர், நெய் ஆகியவைகளை உண்பதில் - பஞ்ச கௌவியம் உண்டோம் என்று பெருமைப்படுபவர்கள். பெண் உரிமையை மறுப்பவர்கள். ஒருபெண்ணை 4,5 பேர் மணந்து கூட்டுக்குடும்பம் நடத்துபவர்கள். வேளாளர்கள் தமிழர்கள்- திராவிட இனத்தின் முன்னோடி கள். கருப்பு நிறத்தை உடையவர்கள். தமிழ்மொழியைப் பேசி வருபவர்கள். ஆரியர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைக்குமுன் இமயந்தொட்டு குமரிவரைப் பரவி வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் சிவனை வழிபடுவர்கள். சிவனே எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள்; அவன் பிறவாதவன் இறவாதவன் என்று நம்புபவர்கள். பிறந்து இறந்து போகும் இந்திரன், பிரமன், விஷ்ணு முதலியவர்களை நம் போன்ற உயிர்கள் என்று எண்ணுபவர்கள். மகேந்திரமலையில் சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் இருந்து சனற்குமாரார், சனகர், சனாதனர், சனந்தர் ஆகிய நான்கு தமிழ் முனிவர்களுக்கு அளித்த நான்கு வேதங்களை நம்புபவர்கள். பிராமணர், க்ஷத்திரியர், சூத்திரர் என்ற வருணப்பாகுபாட்டை எதிர்ப்பவர்கள் புலால் உணவு உண்பதை வெறுப்பவர்கள். மது அருந்துவதை இழிவு எனக் கூறுப வர்கள். யாகம் புரிவதை எதிர்ப்பவர்கள். இவர்களது நெறி சைவம் அல்லது சிவநெறி எனப்படும். சிவநெறி, பசு பதி பாசம் என்றும் முப்பொருள் உண்மையை அடிப்படையாகக் கொண்ட தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. வேளாளர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள். பிற நாட்டினின்று வந்து இந்தியாவில் குடியேறிய மக்கள் அல்ல. சிவபெருமானை முழுமுதற்கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள். ஆரியர்களாய் இருந்தாலும், அல்லது பிற இனத்தவர்களாய் இருந்தாலும் ஆவுரித்துத் தின்று வாழும் புலையர்களாய் இருந் தாலும் தங்கள் சமயத்தில் சேர்த்து சிவ தீட்சை வழங்கி அவர்களைப் புனிதர்களாக்கி உயர்த்துபவர்கள். மக்கள் சமூகத்தில் எழுந்த இனப்பாகுபாடு, குலப் பாகுபாடு, நிறப் பாகுபாடு, சமய வேறுபாடு முதலியவைகளைப் போக்கி உழைத்து உண்ணும் உயரிய உத்தமர்களாக்குபவர்கள். மக்கள் அறவழியில் வாழ்ந்து ஒழுக்கம் உடையவர்களாய், அன்பு உடையவர் களாய் வாழ்ந்து பசி, பட்டினி, வறுமை முதலியவைகளை அகற்றி உலகில் இல்லாமை என்னும் சொல்லை அகற்றி உலகில் அன்பும் அருளும் அமைதியும் இன்பமும் நிலவச் செய்பவர்கள். நானே கடவுள் என்று கூறும் ஆரிய நெறியை அழிக்க முனைப வர்கள். செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வம் என்று கூறி பக்தி செய்யும் மனப் பாறைகளை உடைத்து இறைவன் பிறவாதவன், இறவாதவன் என்ற உயரிய தெய்வ உண்மையை உலகில் நிலை நாட்டுபவர்கள். 4. வேளாள வேந்தர்கள் தமிழகத்தில் உள்ள நான்கு நிலங்களில் மருத நிலந்தான் வளம் பெற்றெழுந்த நிலமாகும். இந்த நிலத்தில் தான் உழுபவர், உழுவித் துண்பவர்கள் என்ற வர்க்கபேதம் முதன்முதலில் உருவாயிற்று. வேளாளர் குலத் தலைவர்கள் உழுவித்துண்பவர்க ளாய் உயர்ந்தவர் களாகினர். மருத நிலத்திலே உற்பத்தி பெருகின. உணவுப் பொருள்கள் அந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் தேவைக்கு மேலாகப் பெருகின. எஞ்சிய உணவுப் பொருட்களை பிற நிலமக்களுக்குப் பண்டமாற்றாக விற்று அந்நிலத்தில் கிடைக்கும் தேன் அடை, தோல், வரகு, தினை, சாமை, பால், தயிர், நெய், மீன், உப்பு முதலிய பொருள்களைப் பெற்றனர். மருத நிலம் வளமார்ந்த மாநிலமாக உயர்ந்தது. இந்த நிலத்தில் செல்வர்கள் பெருகினர். முதன் முதலாக இந்த நிலத்தில் தான் மன்னர்கள் தோன்றினர். தமிழ் மண்ணில் முதன் முதலாக மருத நிலத்திலே உழவர் ஆட்சி உருப்பெற்றது. அதிகமான செல்வத்தையுடைய வேளாளர் மன்னராக உயர்த்தப்பெற்றார். மன்னர் தெய்வமாக உயர்த்தப் பெற்றார். தொல்காப்பியத்தில் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வம் கூறும் பொழுது மருத நிலத்திற்கு மட்டும் தெய்வப் பெயர் கூறாது வேந்தன் என்று கூறப்படுவது சிந்திக்கத்தக்கது. அது அடியில் வருமாறு. மாயோன் மேய காடுறை உலகமும் சோயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் - (தொல் 951) இதற்குப் பொருள் காட்டிற்குத் தெய்வம் மாயோன், மலைக்குத் தெய்வம் சேயோன், களனிகள் நிறைந்த மருத நிலத்திற்குத் தெய்வம் வேந்தன், மணல் நிறைந்த கடற்பகுதிகளுக்குத் தெய்வம் வருணன் என்றும் பொருள் கொள்ளப்படும். இங்கு மாயோன் என்ற பதம் மாயோள் என்றே இருக்க வேண்டும் பிற்காலத்தார் மாயோன் என்று கூறினும் மாயோனாகிய கருநிறமுடைய அம்மையே சிறப்பாகக் கொள்ள வேண்டும். மாயோள் மேய காடுறை உலகமும் என்ற பாடமே சிறந்தது. காடுகிழாஅள் என்றதுமது. மாயோனும் மாயோளும் உடன் பிறந்தார் எனும் கொள்கையும் உண்டு. இதனை திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து என்ற நூலில் வலியுறுத்தியுள்ளார். மலைத்தெய்வம் சேயோன் என்பதற்கு அறிஞர்கள் முருகன் என்று பொருள் கொண்டுள்ளனர். சேயோன் மகன் என்று பொருள் கொண்டு முருகன் கொற்றவை மைந்தன் என்று விளக்கந் தந்தனர். சேயோன் என்பது செய்யோன் என்பதன் திரிபு. செய்யோன், செவ்வண்ணன், செஞ்சடையன் என்ற பதம் சிவனைக் குறிப்பதால் முதன்முதலாக மலைக்கடவுளாக எண்ணப்பட்டார். அப்பால் சிவன் முக்கண்ணன் என்ற பெயருடன் மருத நிலக்கடவுளாக எழுந்தபின் குறிஞ்சி நிலக்கடவுளாக மகன் கடவுளாகிய சேயோன் - முருகன் குறிஞ்சிக்கடவுளானான். சிவன் மருத நிலக் கடவுளாகக் கருதப்பட்டாலும் அவன் மகேந்திர கிரியில் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து நான்கு முனிவர்களுக்கு நான் மறைகளை அருள்வித்ததும், சிவபெருமான் கயிலை மலைமீது அமர்ந்து மலையரசன் மகளை மணந்து அங்கு உறைவதும் சேயோன் மேய மைவரை உலகம் என்பதற்கு சிவனின் காத்தலைக் கொண்ட உயர்ந்த மலையாகிய இடம் என்பதே உரிய பெருளாகும். வேந்தனின் காத்தலைக் கொண்ட நன்னீர் பொருந்திய வயலாகிய இடமும் என்பதற்கு வேந்தன் இந்திரன் என்பது சரியான பொருளாகாது. வேந்தன் என்பது அரசனையே குறிக்கும் என்பது என் கருத்து. திருவுடைய மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும் திருவாய் மொழிக்கேற்ப வேந்தன் சிவபெருமானின் அம்சமாக மருத நிலத்தவர் கொண்டனர் என்பது எனது உறுதியான கருத்து. எகிப்திலும், சாவகத்திலும் பிறஇடங்களிலும் மன்னர்கள் மாதேவ னாக மதிக்கப் பட்டு வந்தது எனது கருத்தை அரண் செய்வதாகும். வருணன் என்பதும் வாரணம் என்ற பதத்தின் திரிபு என்று பல அறிஞர்கள் பொருள் கொண்டுள்ளனர். பழைய குமுகாயத்தில் தாய் தலைவியாய் இருந்தாள். அப்பால் அவள் தெய்வமாயும் போற்றப்பட்டாள். அதே போல் தந்தை தலைவனாயும் பின்னர் தெய்வமாகவும் உயர்ந்தப்பட்டான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற முதுமொழி தமிழகத்தில் எழுந்தது. அதே போல் செல்வர்கள் கோடீசுவரர்கள் என்று கூறப்படுவது போல் மருத நில மக்கள் தங்கள் குல முதல்வனைத் தலைவனாக்கி அப்பால் அவனைத் தெய்வமாகவும் ஆக்கினர். அவன் புதைக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கம் நாட்டி கோயில் கட்டி வழிபட்டு வந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை. சேர சோழ பாண்டியரும் சிற்றரசர்களும் வேளாண்வமிசத்திற் தோன்றியவர்கள். சிறிய நிலங்களையுடையராயினோர் வீழ்ங்குடி உழவரெனப்பட்டனர். இதனால் மற்றைய வேளாண்மக்கள் செல்வர்களையும் பெரிய நிலங்களையுடையவர்களாயுமிருந்தார்க ளென்றும் விளங்குகின்றது. கரிகாலன் அறுவாளரை வென்று அவர் நாட்டைத் தனது தேசத்தோடு இணைத்த போது, வெற்றி கொண்ட நிலத்தை வேளாண் பிரபுகளுக்குப் பகுத்தளித்தான். அப்பிரபுக்கள் வழியில் வந்தோர் பெரு நிலமுடைய ராய் ஆங்கில அரசன் கீழ் சிறு சமீன்தார்களா யிருக்கின்றனர். அவர்கள் இப்பொழுது முதலி மாரென்றழைக்கப்படுவர். முதலிமா ரென்பதற்கு முதற் சாதி என்பது பொருள். தெலுங்கு நாட்டை வென்ற வேளாண் குடும்பங்கள் வேள்மா என்றழைக்கப்படுகின்றனர். அங்குள்ள பெரிய சமீன்தார்கள் இன்றும் வேள்மா மரபினரே. வேளாளர் கன்னட தேசத்தில் பெல்லால பரம்பரையைத் தாபித்துப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி புரிந்தனர். வேளாளர் கங்கை குலத்தவர், கங்கை வமிசத்தவர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் அதிகமாக வாழ்கின்ற மைசூரின் ஒரு பகுதி பத்தாவது, பதினோராவது நூற்றாண்டில் கங்காவதி என்றழைக்கப் பட்டது. ஒரிசாவை ஆண்ட இன்னொரு பரம்பரை கங்கை வமிச மெனப்பட்டது. (1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்) மன்னர் பின்னோரென்றமையான் முடியுடையோரும் முடியில்லா தோரும், உழுவித்துண் போரும், உழுதுண்போருமென மன்னரும் வேளாளரும், பலரென்றார். வேளாண் மாந்தர்க்கு வேந்து விடுதொழில் என்னும் மரபியற் சூத்திரங்களான் வேளாளர் இருவகை யென்ப. அரசரேவுந் திறமாவன பகைவர் மேலும் நாடு காத்தல், மேலும், சந்து செய்வித்தன் மேலும்,பொருள் வருவாய் மேலுமாம். அவருள் உழுவித்துண்போர் மண்டில மாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை யெய்தினோரும், பாண்டிய நாட்டுக் காவிதிப் பட்டமெய்தினோருங் குறுங்குடிப் பிறந்தோர் முதலியோருமாய முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகும். இருங்கோவேண்மானருங் கடிப்பிடவூர் எனவும், ஆலஞ் சேரி மயிந்தனூருண் கேணி நீரோரொப்போன் எனவுஞ் சான்றோர் செய்யுட் செய்தார். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கோடலும் அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட் கோடலுங் கூறுவர். (நச்சினார்க்கினியர்) வலைஞர் முற்றத்தில் மீன் பிறழும். இறைச்சி விற்பார் முற்றங்களில் விலங்குகள் திரியும். வேளாண் மக்கள் இவ்வாறு மீனும் விலங்கும் தம்மைக் கொல்வார் முற்றங்களில் அஞ்சாது செருக்கித் திரியும்படி அவர்களிடத்தினின்றும் கொலைத் தொழிலைப் போக்குவர்; தேவுக்கள் வழிபடுவர்; யாகங்களைப் பண்ணி அவற்றால் ஆவூதிகளை அவர் நுகரும்படி செய்வர்; நல்ல எருதுகளோடு பசுக்களை ஓம்புவர்; பெரிய புண்ணியங்களைச் செய்வர்; அவற்றைச் செய்ய மாட்டாதாருக்குத் தானஞ் செய்வர்; தாம் விளைவித்த நெல்லை உணவாகக் கொடுப்பர். வளைந்த மேழியுடைய வேளாண்மக்கள் இவ்வாறு தருமங்கள் புரியும் நன்னெஞ் சுடையோர் (பட்டினப்பாலை) வேளாளர் என்பதற்கு உபகாரிகள் என்பது பொருள் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி - வேளாண்மை செய்தற் பொருட்டு என்னும் குறளால் இதனை அறிக. இவர்கள் பெரும்பாலும் ஊன் புசியாதவர்கள் எனத் தெரிகின்றது. மக்கள் வாக்குப் பெற்ற மன்னர்கள் காஞ்சி நாட்டை ஆண்ட காவலன் மதன பூபதி மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் சாபத்தையும் பெற்று அழிந்தான். மக்களிற் பலர் மன்னனின் கொடுமைதாங்காது வேறு நாடு புகுந்தனர். நாடு அழிந்து, மக்கள் நலம் குன்றி கேடு சூழ்ந்து வந்தது. எனவே அங்கு வாழ்ந்த அறவோர்கள் கூடி ஆய்ந்து அங்கு மக்கள் ஆட்சி மலர வேண்டுமென முடிவு கட்டினர். காஞ்சி நாட்டில் குடி ஆட்சி நிறுவ எண்ணி மக்கள் அனைவரையும் அழைத்து ஒரு பெரிய மாநாட்டைக் கூட்டினர். அம்மாநாட்டில் நம்மில் யாரை நாட்டின் காவலராக ஆக்கலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கினர். சான்றோர் ஒருவர் எழுந்து, ஒழுக்கம், வீரம், தயை, சாந்தம், ஈகை பொறை, மானம், குலம், கல்வி,புகழ், சான்றாண்மை, மாண்பு, நாணம்,வாய்மை, இன் சொல், பெருமை ஆகிய அனைத்தும் நிறைந்துள்ள நற்குடிப் பிறந்தானை நம் நாட்டின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கலாம் என்றார். மக்கள் கேட்டு அதை ஆமோதித்தனர். அனைவரும் ஆலோசித்து இத்தன்மை யெல்லாம் அமைந்தவர்கள் வேளாண்குடியினரே என்று ஒப்புக் கொள்ளப்பெற்று அக்குடியி லுள்ள எல்லா நற்குணங்களும் நற் செயல்களும் நிறைந்த ஒரு பெரும் நிலக்கிழாரைத் தேர்ந்தெடுத்து அவருக்குப் பட்டங்கட்டினர். அன்றுமுதல் அவருக்கு முதலியார் எனப் பட்டப் பெயர் வந்தது. இந்த நாடு குடி அரசு நாடாக வாழ்வும் வளமும் பெற்று உயர்ந்தோங்கி வருவதை அறிந்து, குறும்பர்கள் படை எடுத்து வந்து அந்நாட்டைக் கவர்ந்து 24- கோட்டங்களாகப் பிரித்து 24 - கோட்டை கட்டி சில காலம் ஆண்டுவந்தனர். அப்பால் இக் குறும்பரசரை அந்த வேளாண் மக்கள் சோழ அரசன் துணை கொண்டு வென்று சோழ அரச மரபினரான ஆதொண்டையனுக்கு மாமன்னன் பட்டம் சூட்டினர். அவனது ஆட்சியில் நாடு 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டு 24 வேளாளர் குலத் தலைவர்கள் இளங்கோக்கள் என்னும் சிற்றரசுப் பட்டம் பெற்று குறும்பரசர் ஆண்டஇருபத்து நான்கு கோட்டையையும் கைவசப்படுத்தி ஆண்டு வந்தனர். ஏகம்ப வாண முதலியார் என்னும் வேளாளர் பெருங்குடித் தலைவன் மகத நாட்டை ஆண்டுவந்தார். அவரைப் புகழ்ந்து வாணன் புகழெழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழுரையா வாயுண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோவுண்டோ வடிதாங்கி நில்லா வரசு என்ற செய்யுள் வேளாளராகிய ஏகம்பவாணமுதலியார் மகத நாட்டையாண்ட தன்மையையும், உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி வெள்ளங்காலந் திரிந்து விட்டோமே - தெள்ளுதமி ழாமூர் முதலி யரசர்பிரானிங்கிருக்க போமூ ரறியாமற் போய் என்று காளமேகப் புலவர் பாடிய பாட்டால் களப்பாளன் என்னும் ஆரூர் முதலியார் ஆட்சி செலுத்திய பெருமையைக் கூறப்பெறு வதும் காண்க. மேலும் சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று அரசர்களும் தங்கள் நாட்டின் எல்லை வழக்கைத் தீர்த்துக் கொள்ள ஆற்றூரில், எட்டுத் திசையிலும் புகழ்பரவ வாழ்ந்த, ஏகம்பவாணராகிய வேளாள அரசனைப் பார்க்க அவர் அரண்மனைக்குச் சென்றனர். அவர் அரண்மனையில் இல்லை; கழனிகளைப் பார்க்கப் போயிருக் கிறார் என்று அவரது மனைவி கூறினார். அதை அறிந்த மூவேந்தரும் தலைகுனிந்தனர். தங்களை ஏகம்பவாணன் அவனது அரண்மனை யில் இருந்து வரவேற்று உபசரிக்கவில்லையே என்று எண்ணி மனம் வருந்தினர். பாண்டியன் அகங்காரங் கொண்டு மூப்பர் நாற்று முடிபிடுங்கி நடப் போயினரோ? என்று ஏளனமாகச் சொல்ல ஏவலாளர் மூலம் அதனை அறிந்த ஏகம்பவாணன் அகமுடையாள் சேனை தழையாக்கிச் செங்குருதி நீர் தேக்கி யானை மிதித்த வருஞ் சேற்றில் - மானபரன் மாவேந்தன் ஏகம்பவாணன் பறித்து நட்டான் மூவேந்தர் தங்கள் முடி என்னும் பாடலைச் சொல்லி அனுப்ப அதைக் கேட்ட மூவேந்தரும் மனம் புழுங்கிச் சென்றனர். இங்ஙனம் நிகழ்ந்த செய்தியை களனி பார்க்கச் சென்று வந்த ஏகம்பவாண முதலியார் அறிந்து மூவேந்தரை யும் சிறையிலிட்டார். இதனால் ஏகம்பவாண முதலியார் மூவேந்தரிலும் வீரம் வாய்ந்த அரசராய் இருந்தார் என்பதும் அவரது மனைவியாகிய வேளாள அரசி பெரும் தமிழ்ப் புலமை வாய்ந்தவளாய் இருந்ததும் நன்கறியப் படுகின்றது. வேளாள மன்னர்கள் அரச கட்டிலில் அமர்ந்து செங்கோல் ஓச்சியகாலத்தும் தம் குலத்தொழிலாகிய வேளாண்மையைத் தவறாது செய்து வந்ததோடு, அதை இழிவாய்க் கருதாது உயர்வாய்க் கருதினர். அரசர்க்கு உயிர் ஓம்பும் பயிர்த் தொழில் உயர்வுடையதே அன்றி இழிவுடையது அன்று என்பதை எண்ணிப் பெறாமையுற்றுவந்தனர் என்றும் உணர்கின்றோம்.1 பரம்பு நாட்டை ஆண்ட பாரி. பாண்டிய மண்டலத்தில் ஒப்பிலாத பலவளம் செறிந்த பரம்பு நாட்டை ஆண்ட சிற்றரசன் பாரி. அவன் மூவரசரினும் புகழ் பெற்றவன். வள்ளல்கள் எழுவரில் ஏற்றம் பெற்றவன். பாரியின் வள்ளற்றன்மையும் பேராண்மையும், படைவலியும் ஒப்புற்றிருந்தது. சேரன் சோழன் பாண்டியன் மூன்று பேரரசர்களும் பாரியின் புகழ் அறிந்து பொறாமை கொண்டு பலமுறை போர் தொடுத்துத் தோல் வியுற்றனர். ஏந்து கோட்டியானை வேந்த ரோட்டிய கடும் பரிப் புரவி கைவண்பாரி என்ற செய்யுள் மூலம் பாரியின் பேராற்றல் தெரிகிறது. பறம்பு நாடு வேளாளர் குடி அரசாக விளங்கியது நன்கு தெரிகிறது. முடியரசாய் விளங்கிய மூவேந்தரினும் பாரி முதன்மைபெற்றுள்ளார். கொடுக்கிலாதனைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலையே என்று வள்ளற்றன்மையைப் போற்றியுள்ளதைக் காண்கிறோம். வேளாளர் - சேனைத்தலைவர். வேளாளர் ஒழுக்கத்தால் அந்தணர்களாய் வாழ்ந்தனர். அற நெறியால் அரசர்களாய் நாடாண்டு வந்தனர். வீரத்தால் அறிவால் நால்வகைப் படைகளை நடத்திச் செல்லும் தளபதிகளாய் இருந்துவந்தனர். பண்டைக் காலத்தில் உழைத்து உண்ண விரும்பாத நாகரிகமும் பண்பும் அறியாத விலங்குத் தன்மை வாய்ந்த காட்டு மிராண்டிகள் கூடி வேளாளர்களின் கூலப்பொருள்களையும், எருது களையும் ஆநிறைகளையும் கவர வரும் பொழுது வேளாளர்கள் இல்லங்கள் அமைத்தும் தங்களின் ஊர்களைச் சுற்றி அரண்கள் அமைத்தும் வந்ததோடு படைகள் அமைத்தும் படைத் தலைமையை ஏற்றும் இல்லத்தையும் ஊரையும் காத்து வந்தனர். அப்பால் கூற்றமும் நாடும் அரசும் எழுந்தபின் அமைச்சராயும் படைத் தலைவர்களாயும் இருந்து வந்தனர். அமைச்சர் சேக்கிழார் என்னும் சைவ வேளாளர் குலத்து உதித்த தலைமகன் சோழ அரசனின் அமைச்சர்களின் தலைவனாய் இருந்து அரசனுக்கு அறவழிகாட்டி நல்லாட்சி நிலைபெறச் செய்து வந்தார். இதனை உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய திருத் தொண்டர் புராண வரலாறு நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய புகழ்வேளாண் மரபிற் சேக்கிழார்குடியில் வந்த அருண்மொழித் தேவர்க்குத் தத்துபரி வளனுந்தன் செங்கோலோச் சுந்தலைமை யளித்தவர் தமக்குத் தனது பேரு முத்தமச் சோழப் பல்லவன்றானென்று முயர் பட்டங் கொடுத்திட வாங்கவர் நீர்நாட்டு நித்தனுறை திரு நாகே சுரத்திலன்பு நிறைதலினான் மறவாத நிலைமை மிக்கார் என்றும், வேறு என்று சொல்லவர் தமையழைத் தரச னிவர் அமைச்சரிவர் பட்டமு மன்றன் மாலை புனைபுனை தொண்டைமா னென வகுத்த பின்றமதுமண்டல மன்று வற்பம் வர வந்தடைந்தவரை யாற்றல் செய்து தொண்டை மண்டல நின்று காத்த பெருமானெனத் தமது பெயரையெங்கணும் நிறுத்தினார். என்ற செய்யுட்களால் பெரும் நிலக்கிழாராகிய வேளாளர் பெருமகன் தம் குலப்பட்டமாகிய இளங்கோக்கள், மன்னர் பின்னர் என்ற இலக்கணத்திற்கோர் எடுத்துக் காட்டாக இலங் கினார் அவர் அமைச்சராய் அல்ல அமைச்சர்களுக்கு அமைச்சராய் அமைந்து அவனிமெச்சும் நல்லரசாய் ஞாலம்புகழச் செய்து வந்தார். சேனைத்தலைவர் மேழி பிடித்து உழுது விதைத்து, நீர்பாய்ச்சி விளைவித்து கூலப் பொருள்களைக் குவித்து மக்களுக்கு வயிறார உணவளித்து நாடுகாத்த நற்குடியாகியவேளாளர் குலத்தில் ஏயர் கோன் கலிக் காமர் சோழர் நாட்டுப் படையின் தலைவராக இருந்து பகைவர் களை பதறடித்து நாடுகாத்து நல்ல சேனாபதியாய் விளங்கினார். இதனை நமக்குத் திருத் தொண்டர் மாக்கதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. இன்ன வாழ்பதி யதனிடை யேயர் கோக் குடிதான் மன்னி நீடிய வளவர்சே னாபதிக் குடியாந் தொன்மை மேவிய நிகழ்ச்சியால் நிறைவது தூய பொன்னி நாட்டுவே ளாண்மையி லுயர்ந்த பொற்பினதால் தி.மா. 29. ஏ.பு. 5 சோழ நாட்டின் அரசன் ஆணைப்படி சோழர் பெரும் படைக்குத் தலைமை ஏற்று, பகைவரை வென்று அரசனின் அன்பையும் மக்களின் வாழ்த்தையும் இறைவனின் அருளையும் பெற்றவர் வேளாளர் குல திலகம் கோட்புலியனார். மக்களுக் கெல்லாம் உணவு ஊட்டி நாயனார் என்னும் பெயர் பெற்று அறுபத்தி மூன்று சைவசமய நாயன்மார்களில் ஒருவராய் திகழ்ந்தார். இவரைப் புகழ்ந்து நலம் பெருகுஞ் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண் குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியா ரெனும் பெயரார் தலம் பெருகும் புகழ்வளவர் தந்திரியா ராய் வேற்றுப் புலம் பெருகத் துயர் விளையப் போர்விளைத்துப் புகழ்விளைப்பார் - தி. மா, 57, (கோ.பு. 1) படைத்தலைவர் மற்றொரு வேளாளர் குலச்சிங்கம் மானாக்கஞ்சனார் சோழவள நாட்டின் சிறந்த படைகளுக்குத் தளபதியாய் நாட்டின் பெருமையையும் படையின் வலிமையையும் நிலைநாட்டி பகைகள் குலை நடுங்கச் செய்து சிறந்த படைத்தலைவனாயும் சைவசமயத்தின் 63 - நாயன்மார்களில் ஒருவராயும் விளங்கினார். அவரது வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எடுத்துக்காட்டுகிறது. அப்பதியிற் குலப்பதியா யரசர் சேனாபதியாஞ் செப்பவருங் குடிவிளங்கத் திருவவதா ரஞ் செய்தார் யெப் பொருளை யறிந்துணர்ந்தார் விழுமியவேளாண் குடிமை வைப்பனைய மேன்னையினார் மானற்கஞ் சாறனார் - தி. மா. 12 ; 7 மற்றொரு வேளாண்குல திலகம் கலிப்பகையார். இவர் கி. பி. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமானின் மைத்துனர். சமண சமய இருள் தமிழ் உலகைக் கவிழ்ந்து நின்ற காலத்திலும் அஞ்சாது தன்னந்தனியாக இருந்து சிவநெறியை ஓம்பி அப்பர் அடிகளை சமண சமயத்தினின்று மீட்டி சமண நெறியைத் தமிழகத்தினின்று வெருட்டி சிவனொளி எங்கும் பரவச் செய்வதற்கு அடிகோலிய மாபெரும் மாதர் குல திலகம் புனிதவதியாரின் கணவர். அவர் சோழ நாட்டின் வீரப்படைகளின் தளபதியாய் பகைவர்களின் கொடுந்தாக்குதலுக்கு அஞ்சாது போரின் முன்னின்று மார்பில் பகைவர்களின் அம்புபட்டு நாட்டிற்காக உதிரஞ்சிந்தி போர்க்களத்தில் உயிர்துறந்த தியாகச் செம்மல். இவர் சேனாபதி யாயும் சமயத் தொண்டராயும் இருந்து கலிப்பகைநாயனார் என்னும் பொன்றாப் புகழ் ஈட்டியவர். இவரைப் புகழ்ந்து திருத்தொண்டர் மாக்கதை அடியில் வருமாறு கூறுகிறது. அந்நாளிற் றிலகவதி யாருக்காண் டாயிரண்டின் முன்னாக லொத்தகுல முதல்வேளாண் குடித்தலைவர் மின்னார் செஞ் சடைவண்ணன் மெய்யடிமை விருப்புடையார் பொன்னாரு மணி மவுலிப் புரவலன்பா லருளுடையார் - 36 ஆண்டகைமைத் தொழிலின்க ண்டவரிஇயறெனவுள்ளார் காண்ட கைய பெருவனப்பிற் கலிப்பகையா ரெனும் பெயரார் பூண்ட கொடைப்பு கழனார் பாற்பொருவின் மகட் கொள்ள வேண்டி யொழுங்காதலினான் மேலோரைச் செலவிட்டார். தளவாய் அரியநாயக முதலியார் இன்னும் அரியநாயகமுதலியார் என்பவர் காஞ்சிபுரத்துக் கடுத்த மைப்போடு என்னுங் கிராமத்தில் வேளாளகுலத்திற் பிறந்தவராம். இவர் விஜயநகரத்திலிருந்து விசுவநாத நாயக்கர் மதுரைக்கு வந்தகாலத்தில் அவருடன் கூட வந்தவர். இவர் பாண்டி நாட்டில் பட்டத்துக்கு அரசரையும், அவர்களுக்குள் பாளைய காரர்களையும், ஏற்படுத்துபவராம். இவர் அந்த விசுவநாத நாயக்கரிடத்தில் தளவாயாகவிருந்தவர். தளவாய் என்பது முதன் மந்திரியும் சேனாதிபதியுமாகிய இரண்டு உத்தியோகங்களை உள்ளடக்கிய பெயராம். இராமாராசாவுக்குப் பின் இங்கிலிஷ். (A.D. 1964) ஆண்டில் அரிய நாயக முதலியாருக்கு இராயர்பட்டம் ஆகிறதாயிருந்தது. இவர் ஆரியரின் துற்போதனைக் குள்ளாகி அப்பட்டத்தைத் தாம் வகித்துக் கொள்ளாமல், குமரகிருஷ்ணப்ப நாயக்கருக்குக் கட்டிவைத்துத் தாம் தளவாயாகவே இருந்து விட்டார். இவர் சுத்த வீரர் ஆதலால் இவரது வடிவம் எல்லார் மனத்திலும் ஞாபகத்துக்கும் வரும்படி பெரிய நாயக்கரால் மதுரைக் கோயில் ஆயிரக்கால் மண்டபத்தில் ஒரு தூணிற்ச் செய்து தாபிக்கப் பட்டிருக்கின்றது. இக்காலத்தும் வீரராயுள்ளவர்கள் அவ்வுரு வினுக்கு மாலைசாத்திப் பூசிக்கிறார்கள். மாவைக் குமாரசாமி முதலியார் அரியநாக முதலியார்க்கு பின்னர் அவரது வழியில் வந்த மாவைக் குமாரசாமி முதலியார் தளவாய்ப்பட்டம் பெற்று குருநில மன்னர் போல் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார். மதுரைப் பாண்டியர் ஆட்சியை வஞ்சகத்தால் கவர்ந்து கொடுங் கோல் செலுத்திவந்த துருக்கர் ஆட்சியை விரட்டி மீண்டும் தமிழர் ஆட்சியை எழுப்பத்துணை செய்வதாக வந்த நாயக்கர் ஆட்சியை நிறுவினர் நாயக்கர்கள் ஆட்சியில் - அதாவது மங்கம்மாள் காலத் திற்கும் பின் நாயக்கர்களின் பேராளராய் மாவைக் குமாரசாமி முதலியார் அரசு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார். ஆறை அழகப்பமுதலியார் மாவைக் குமாரசாமி முதலியாருக்குப்பின் அவரது வாரிசாக ஆறையூர் அழகப்பமுதலியார் திருநெல்வேலி மதுரை திருச்சி மாவட்டங்களில் அரசினுடைய அதிகாரத்தைச் செலுத்திவந் துள்ளார். குமாரசாமி முதலியார். ஆறை அழகப்பமுதலியாருக்கு அடுத்த வாரிசாக பத்தைய சிங்கு என்ற மராட்டிய மன்னர் காலத்திலும், நெல்லை மதுரை, திருச்சி மாவட்டங்களில் அரசு அதிகாரத்தை வகித்து வந்தவர் தளவாய் குமாரசாமிமுதலியார். இவருக்கு அக்காலத்து அரசாய்க்.............................. வேளாளர் - வணிகர். வேளாளர் தொன்று தொட்டு வேளாண்மை செய்து வருபவர்கள். வேளாண்மை அவர்களுக்கே உரிய குலத்தொழில். வேளாளர்கள் மிகத் தொன்மையான காலத்திலிருந்து - அதாவது பயிர்த் தொழில் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து வணிகமும் செய்து வருகிறார்கள். அவர்கள் நெற்றிவேர்வை நிலத்தில் சிந்த உழுது பயிரிட்டு இரவு பகல் விழித்திருந்து நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்த்து அப்பால் விளைந்த தானியங்களை புலி, யானை, பன்றி, எலி, குருவி முதலியவை வந்து அழித்து கூலப் பொருள்களைத் தின்றுவிடாது கையில் வில்லும் வேலும் பரசும் வாளும் தாங்கி விரட்டிப் பாதுகாத்து அப்பால் விளைந்தது அறுவடைசெய்து போர் அடித்து கூலப் பொருள்களைக் குவித்து வைப்பர். தங்கள் தேவைக்கு மிஞ்சிய பொருள்களை உள்ளூரில் விற்பர். பொதிமாடு களில் ஏற்றி அயலூருக்குக் கொண்டுபோய்விற்பர். தோணிகளிலும் ஓடங்களிலும் படகுகளிலும் ஏற்றி நகரங்களுக்கு, ஆறு வாய்க்கால், கடல் முதலியவைகளைக் கடந்து பண்டமாற்றாக விற்பனை செய்வர். அப்பால் பண்டமாற்றாக வாங்கிய பொருள்களை தம் நாட்டிற்கும் ஊருக்கும் கொண்டு வந்து விற்பர். எனவே வேளாளர்களுக்கு வேளாண்மையோடு வணிகமும் உடன் பிறந்த தொழிலாய் விட்டது. சமூக வளர்ச்சியில் பல்வேறு பொருள்கள் உற்பத்தியாயிற்று. பானைசட்டிகள், வேல், பரசு, அரிவாள், வாள், கத்தி, சுரண்டி, வெங்கலக் குடம், கொப்பரை, செம்பு கிண்ணம், தேன், பலவகைக் கிழங்குகள், மரத்தினால் செய்யப் பட்ட தட்டுகள் பரவைகள், யானை, வண்டி, மாடுபோன்ற விளையாட்டுப் பொருள்கள், மூங்கிற்குழல்கள், பருத்தி, பருத்திக்கொட்டை, பஞ்சுக் கொட்டை, நூல், பருத்தி ஆடைகள் போன்றவைகளை வாங்கியும் விற்றும் வந்தனர். தொழில் பெருக்கால் வணிகம் வளர்ந்தது. தொடக்கத்தில் தம் வீடுகளில் வைத்து வணிகம் செய்தவர்கள் அப்பால் கடை வைத்து வணிகம் செய்து வந்தனர். இவர்கள் செய்த தொழிலில் செட்டிமை கடைப்பிடித்ததால் செட்டியார் என்னும் பெயர் எழுந்தது. வணிகம் பலவகைப் பட்டதாய் எழுந்தது. அதாவது உள்நாட்டு வணிகம் அயல் நாட்டு வணிகம் என இருவகையாய்ப் பிரிந்தது. அதிலும் ஏற்றுமதி இறக்குமதி என்னும் பிரிவும் எழுந்தது. ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் நீரின் வழியாகவும் நடைபெற்றது. நீரின் வழியாக நெய்தல் நிலப் பரதவர் மூலம் படகு, ஓடம், வள்ளம், தோணி, நாவாய் போன்றவற்றின்முலம் நடைபெற்றது. நிலத்தின் வழியே வண்டி, பொதிமாடு முதலியவற்றின் மூலம் நடைபெற்றது. வணிகம் கொள்ளால், விற்றல் என்னும் இருவகையான பண்டமாற்றலால் எழுந்தது. அப்பால் இவைகளைக் கொள்ளவும் விற்கவும் பண்டமாற்றுக் கருவிக்குப் பதிலாக காசுகள் எழுந்தன. அப்பால் மரக்கால், நாளி முதலிய முகத்தல் அளவைகளும், வெள்ளிக் கோல், துலாக் கோல், படிகள் போன்ற நிறுத்தல் அளவைகளும் எண்ணல் அளவைகளும் பிறந்தன. செட்டியார்கள் தாங்கள் கொள்ளும் பொருள்களைத் தரம் பிரித்து விலை மதிப்பிட வேண்டியவர் களாய் விட்டனர் வேளாளர் நிலவளம், நீர்வளம், கால பேதம், கூல வகை, இவற்றின் உபயோகம், இவற்றின் குணங்கள் வித்துக்களைத் திருத்தல் ஆகியவைகளை அறிந்திருந்தனர். எனவே வாங்கும் பொருள்கள் நன்றாய் விளைந்ததா? பதரா, இது என்னவகையானது என்றெல்லாம் வேளாண் செட்டியார்கள் மதிப்பிட்டு அதற்குத் தக்கவிலை கொடுத்து வந்தனர். வேளாளரில் பொன், மணிகள் போன்றவற்றை விற்கும் காசுக் கடை வைத்துள்ள செட்டியார் சமூகம் ஒன்று முளைத்தது. அவர்கள் பொன், வெள்ளி முதலியவற்றை உரைகல்லில் உரைத்து அதன் மாற்றையும் தரத்தையும் உணர்ந்து அதற்கு விலை மதிப்பிட்டனர். முத்து, பவளம், வயிரம், மரகதம், மாணிக்கம், வைடூரியம், நீலம், கோமேதகம், புட்பராகம் போன்றவைகள் சந்திரகாந்தம் சூரிய காந்த படிகம், அயக்காந்தம் முதலிய துணி மணிகளும் நார்ச்சிலை, நூலாடை, பட்டு, கோசிகம், மயிர்க் கம்பளம், சந்தனம், குங்குமப்பூ, கதூரி, பச்சைக்கற்பூரம், புமுகு, சவ்வாது, விலாமிச்சம் போன்ற அரிய பண்டங்களும் வெல்லம், சர்க்கரை, உப்பு, புளி, மிளகு, நெய், எண்ணெய், தேன், அரக்கு கந்தம் முதலிய இரச வருக்கங்களும் அவற்றின் உயர்வு தாழ்வுகளும் உணர்ந்திருந்தன. ஆக்கப் பண்ட அரியபண்டங்களின் நன்மை தீமை முதலிய நிலைகளும் நிறவண்ணங் களின் ஏற்பாடும் சிற்ப பேதங்களும், நாட்டின் இயற்கைகளும் கொள்ளல் விற்றலின் நயம், நட்டம் முதலியவைகளும் செட்டிமை செய்யும் வேளாளர்கள் உணர்ந்திருந்தனர். வேளாண் செட்டியார்கள் அளத்தல், நிறுத்தல் முதலியவற்றில் பண்டு தொட்டு இன்று வரை நாணயமான முறையில் மரபு வழி மாறாது வணிகம் செய்து வந்துள்ளனர். விற்கும் பண்டங்களில் மண், கல், தூசி போன்றவைகளைக் கலவாது கூலப் பொருள்களை சுளகால் புடைத்து விற்பர். வணிகத்தில் பொய் ஏமாற்று இல்லாது நடத்தி வந்தனர். மக்களை வஞ்சியாது மயக்காது வணிகம் செய்து வந்தனர். கோடி ஊதியம் கிடைப்பினும் நடுவிகந்த வாக்கத்தைச் செய்யக் கூடாது. நடுவிகந்த வாக்கமாவது விற்கத்தக்கவற்றை விற்றுப் பொருளீட்டினர். விற்கத்தகாதன கஞ்சா, அபின், மது, மாமிசம் பெண்கள் முதலியவைகளாம். நன்றே வரினும் நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல் இன்று வணிகம் பிற இனத்தவர்கள் கையிலும் பிற நாட்டவர் ஆதிக்கத்திலும் சென்று விட்டது. பண்டு சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் வணிகம் வேளாண் செட்டியார்களே நடத்திவந்தனர். இவர்கள் தெய்வ பக்தியுள்ளவர்கள். சமயவழி நடப்பவர்கள். அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள். மரபு வழியில் நடப்பவர்கள். மக்களை வஞ்சித்து வாழ்வு நடத்தத் தெரியாத வர்கள். நிறை குறைத்துப் பண்டங்களை விற்றால் இறைவன் தண்டிப்பான் என்ற மறை மொழியை மறவாது மதித்து நடப்பவர்கள். இறைவன் தன் செயலையும் நினைப்பையும் இரவும் பகலும் இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதில் முழு நம்பிக்கை உடையவர்கள் இவர்கள் அரிசியில் பொடிக் கல்லைக் கலந்து விற்பனை செய்ததில்லை. உழுந்தில் களிமண் துண்டுகளைச் சேர்த்து மக்களுக்கு அளித்து அவர்களை வஞ்சித்ததில்லை. நெய்யில் எண்ணெயைக் கலந்து ஏமாற்றி வணிகம் புரிந்ததில்லை. நெல்லில் புல்லைக் கலந்து வியாபாரம் செய்து வாழவில்லை. நிறையில் குறைத்தோ அளவில் குறைத்தோ வணிகம் செய்வதை அறியார்கள். கொள்ளை லாபம், கள்ளச் சந்தையைக் கண்டும் கேட்டும் அறியார்கள். வேளாளர் - உழவர் உழவன் உயர்வு: உணவின்றி உயிர்வாழ்க்கையின்மையின், அவ்வுணவை விளைக்கும் உழவர் மன்னுயிர்த்தேருக்கு அச்சாணி யாகவும், மன்பதை மரத்திற்கு ஆணிவேராகவும் கருதப் பட்டனர். உழுவார் உலகத்திற் காணி யஃதாற்றா தொழுவாரை யெல்லாம் பொறுத்து என்றார் திருவள்ளுவர். சிறப்பாக இரப்பார்க்கொன்றீபவரும் விருந்தினரைப் பேணுபவரும் உழவரேயாவர். இரவா ரிரப்பார்க் கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் என்று வள்ளுவரும், இரப்போர் சுற்றம் என்று இளங்கோவடிகளும், வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான் என்று நல்லாதனாரும், எந்நாளும் - காப்பாரே வேளாளர் காண் என்று கம்பரும் கூறியிருத்தல் காண்க. விருந்தோம்பலும் இரப்போர்க் கீதலுமாகிய வேளாண்மை செய்வதினாலேயே, உழவர் வேளாளர் எனப்பட்டனர். வேளாண்மை யாவது பிறரை விரும்பிப் பேணுதலை யாளுந்தன்மை. வேள் விருப்பம். உழவர் அமைதிக்காலத்தில் உழவுத்தொழிலைச் செய்யவந்த தோடு, போர்க்காலத்தில் போர்ப்பணியும் புரிந்து வந்தனர். வேந்து விடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க (1582). அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற் பெருங்குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத்தில்லறத்தாரையும் தாங்கி வந்ததினால் வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப் பட்டனர்.1 மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலோரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்தவரும் வேளாளரே. வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கன், கைக்கோளன், பூக்காரன், கிணையன், (கிணைப்பறையன்), பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாளரும்; உழவனுக்குப் பக்கத் துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண்குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப்பட்டனர். இங்ஙனம் பல்வகுப்பாரையும் உணவளித்துக் காத்ததினாலேயே, வேளாண்வினையைத் திருக்கை வழக்கம் எனச் சிறப்பித்துக் கூறினார் கம்பர். தெய்வத்திற்குப் படைத்த திருச் சோற்றைப் பலர்க்கும் வழங்குவது திருக்கை வழக்கம் எனப்படும். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை என்று இல்வாழ்க்கை யதிகாரத்தும்(43), இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் என்று விருந்தோம்பலதிகாரத்தும் (81,85), உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் என்று உழவதிகாரத்தும் (1033), வள்ளுவர் கூறியிருப்பதால், உழவனே தலைமைக் குடிவாணன் (Chief Citizen), என்று அவர் கொண்டமைப் புலனாகும். மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊனுடைக் கருவில் பொருள்களும், அரசியற்கின்றியமையாத இறையும், போருக்கு நேர் வகையும் நேரல்வகையுமான பணியும், உழவரால் அமைவதை நோக்கும் போது, பலகுடை நீழலுந் தங்குடைக் கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் என்று வள்ளுவரும் (1034), பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை யூன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் அடிபுறந் தருகுவர் அடங்காதோரே என்று வெள்ளைக் குடி நாகனாரும், (புறம். 35) புரப்போர் கொற்றமும் - உழவிடை விளைப்போர் என்று இளங்கோவடிகளும் (சிலப். 10:149-50), கூறியிருப்பது ஒரு சிறிதும் மிகையாகாது. இருவகை வேளாளர்: வேளாளர், உழுதுண்பாரும் உழுதுவித்துண்பாரும் என இருவகையர். உழுதுண்பாருக்குக் கருங்களமர் காராளர் என்னும் பெயர்களும், உழுவித்துண்பாருக்கு வெண்களமர் வெள்ளாளர் என்னும் பெயர்களும் உரியன. உழவர், களமர், கடையர், வேளாளர் என்பன இருசாராருக்கும் பொது வாகும். ஆயினும்,ஈற்றுப்பெயர் தவிர ஏனைய வெல்லாம் உழுதுண்பார்க்கே சிறப்பாக வழங்கின. அவருக்கு மள்ளர் என்னும் பெயருமுண்டு. அவர் தந்நிலத்தில் உழுவாரும் பிறர் நிலத்தில் உழுவாரும் என இரு நிலைமையர். உழுவித்துண்பார் பலர் வேள் எனவும் அரசு எனவும் பட்ட மெய்தி, அமைச்சரும் படைத்தலைவரும் மண்டலத்தலைவரும் சிற்றரசருமாகி மூவேந்தர்க்கும் மகட் கொடை நேரும் தகுதியரா யிந்தனர். கடையெழுவள்ளல்களுட் பெரும்பாலோர் வேளிரே. நிலவகை: நிலங்கள் இன்றிருப்பது போன்றே, நன்செய் புன்செய் வானாவாரி (வானாங்காணி) என மூவகைப் பட்டிருந்தன. உழுது பயிரிடப்படுவது கொத்துக்காடு என்றும், பெயர் பெற்றிருந்தன. செயற்கை நீர்வளம்: உழவுத் தொழிற்கு இயற்கை நீர்வளம். அமைக்கப்பட்டது. வெள்ளச் சேதம் நேராவாறும், பாய்ச்சலுக்கு வேண்டிய நீர் ஓடுமாறும், ஆற்றிற்குக் கரை கட்டலும்; நீரைத் தேக்க வேண்டுமிடத்தில் ஆற்றிற்குக் குறுக்கே அணை கட்டலும்; பேராற்றினின்று கண்ணாறும், கண்ணாற்றி னின்று கால்வாயும், கால்வாயினின்று வாய்காலும் வெட்டலும்;இவை இயலா விடத்து, ஏரி, குளம் தொடுதலும்; அக்காலத்தரசர் மேற்கொண்ட செயல்களாம். கண்ணுறுங் கால்வாயும் பெரும்பாலும் சோழ நாட்டிலும், ஏரி, குளம் பெரும்பாலும் பாண்டி நாட்டிலும் வெட்டப்பட்டன. கரிகால்வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச் சிறைப்பிடித்துக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டுவித்தான். இராசேந்திரச் சோழன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டினான் முடி கொண்டான் ஆறும் அவனால் வெட்டப்பட்டது போலும்! காவிரிக் கல்லணை கி.பி. 1068இல் வீரராசேந்திரனால் வெட்டப் பட்டதாக தெரிகின்றது. சோழநாட்டில், இன்னின்ன கண்ணாறு இன்னின்ன வள நாட்டிற்கும், இன்னின்ன கால்வாய் இன்னின்ன வூருக்கும், இன்னின்ன வாய்க்கால் இன்னின்ன பாடகவரிசைக்கும், பாயவேண்டும் மென்னும் ஏற்பாடிருந்தது. அதனால், வேலியாயிரம் விளையவும் ஒரு பிடிபடியுஞ் சீறிடம் எழுகளிறுபுரக்கவும், இருபூவும் முப்பூவும் எடுக்கப்படவும் இயல்வதாயிற்று. பூவென்பது வெள்ளாண்மை. அரசரின் ஊக்குவிப்பு: நிலம் சரியாய் விளையாத விடத்தும், கடுந்தண்டலாளரைப் பற்றி முறையிட்ட விடத்தும், அரசர் வரி நீக்கஞ் செய்தனர். அயல் நாடுகளிலுள்ள அரிய விளைபொருட் களைக் கொண்டு வந்தும், தமிழ் நாட்டிற் பயிரிடச் செய்தனர். . . . . . . . . . . . . . . . . . அந்தரத் தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே என்று அதியமான் மகன் பொகுடெழினியை ஔவையார் பாடி யிருப்பதால் (புறம் . 392), அவன் முன்னோருள் ஒருவன் சீனத் திலிருந்தோ சாவகத்திலிருந்தோ கரும்பைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்ததாகத் தெரிகின்றது.1 மருத நிலத் தெய்வமாகிய வேந்தன் என்னும் இந்திரனுக்குப் புகார்ச்சோழர் விழாக் கொண் டாடியதும், அவன் உழவுத் தொழிற்கு வேண்டும் மழை வளந்தருவன் என்னும் குறிக்கோள் பற்றியதே போலும்! மருத நில மக்கள் மருத நிலமக்கள் பெரிய சமவெளிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலம் நீர்வளமும் மண்வளமும் இணைந்தது. இந்நிலமக்கள் உழவர், உழத்தியர், கடையர்,கடைசியர் என அழைக்கப்படுவர். பெரும்பாணாற்றுப்படை 2, மதுரைக் காஞ்சி3 மலைபடுகடாம்4 முதலிய பழந்தமிழ் நூற்களில் மருத நிலத்தின் இயற்கையும், வளமும், மக்களின் வாழ்க்கை முறையும் தொழிற் பண்பும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மருத நிலப் பனையெனப் பல விடங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. பனை என்ற சொல்லிற்கு செழிப்புள்ளநிலம், வளமார்ந்த மண் எனப் பொருள் கூறலாம். உழவர் களமர் எனவும் அழைக்கப்படுவர். களம் என்பதன் பொருள் இடம் என்பது. இடம் இங்கு நெல் வயலைக் குறிக்கும். வேலை செய்து களைத்துச் சேற்றில் வீழ்ந்த எருதுகளைத் தூக்கும் கள்ளார் களமரின் ஆர்ப்பொலியைப் பற்றி மதுரைக் காஞ்சி பாடும்1 இவர் அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை ஆமை இறைச்சி யுடன் தீர உண்பர்.2 மருத நிலத்துப் பெருங்குடியிருப்புகள் ஊர் எனப்படும். பசி அறியாத இல்லங்களையுடைய பேருர்களைப் பற்றிப் பெரும் பாணாற்றுப்படை கூறும்3. வேளாண்மையே அவ்வூர் மக்க ளுடைய முக்கியத் தொழில். அவர் நெல் விளைவிக்கும் முறைமையை பெரும்பாணாற்றுப்படை விரிவாக வருணிக்கும். விதைத்தல், களை பிடுங்குதல், அறுவடை செய்தல் முதலிய நிகழ்ச்சிகளை அந்நூல் குறிக்கும். நெல் விளைவித்தலில் அந்நூல் கூறும் வினை வகை களைப் பின்வருமாறு தொகுத்து உரைக்கலாம்:- (1) மாடுகளினால் நிலத்தை மிதித்தல்4 (2) உழுத நிலத்தை காலால் மட்டப் படுத்துதல்4 (3) நாற்று நடுதல்5 (4) தொடுப்பினாற் களை பறித்தல்6 (5) அறுவடை செய்தல்7 (6) நெற் கட்டுகளைக் களத்திற் சேர்த்தல். இத்துடன் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தலும் நிகழும்7 (எ) சூடு மிதித்தல்7 (அ) காற்றிலே தூற்றுதல்7 பழைய காலத்தில் நிகழ்ந்த நெற் செய்கையின் செல்வாக்கை மேல்கூறியன விளக்கும். நாற்று நடுகை நெற்செய்கைக்கே சிறப்பு வாய்ந்தது. நாற்று நடுதலைப்பற்றி முதன் முதற் கூறும் நூல் பெரும் பாணாற்றுப்படையே. நெல் மிதிக்கும் இடம் களம் எனப்படும். ஏரிகளிலும் கிணறுகளிலுமிருந்து நெல் வயல்களுக்கு நீர் இறைந்தனர். இரண்டாம் கரிகாலன் ஏரிகள் வெட்டி நிலத்தை வளம் படுத்தினா னென்று புலவர் உருத்திரன் கண்ணனார் கூறுவர்.1 வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் மூன்று வழிகள் இருந்தன. சிலர் வரிசையாக நின்று குளங்களிலிருந்து பட்டையினால் இறைத்து நீர் பாய்ச்சுவர். அவ்வாறு இறைக்கும் போது பாட்டுகள் பாடுவர்.2 மாடுகளை கொண்டு ஆம்பி (பன்றிப் பத்தர்) மூலம் இறைக்கும் வழக்கமும் இருந்தது.3 துலா அமைத்துப் பூட்டைப் பொறியிகுலும் நீர் இறைப்பர்.4 செந் நெல்லும் வெண்நெல்லுமே இந்நிலத்து மக்களுடைய முக்கியமான உணவாக இருந்தன. செந்நெல் சிறிது மஞ்சள் நிறமுடைய சிறந்த தானியமாகும். வெண்ணெல் என்பது ஒரு வகையான காட்டரிசி. மருத நிலத்திலே தங்குவீராயின் மடியா வினைஞர் தந்த வெண்நெல்லும் வதக்கப்பட்ட மனைவாழ் கோழி இறைச்சியும் பெறுவீர் எனப் பாணன் ஒருவன் கூறுகின்றான்.5 கரும்பின் தீஞ்சாறும் அங்கு மிசைமின் என்று அவன் மீண்டும் கூறுகின்றான்.6 சைவம் - வேளாளர் சமயம் ஆதியில் தமிழ் மக்கள் அனைவரும் தாய்த் தெய்வ வழிபாட்டுக்காரர்களாக இருந்தனர். தமிழர்கள் வாழும் இடங்களி லெல்லாம் தாய் ஆட்சியே நிலவி வந்தது. குமுகாய வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தாய் ஆட்சி இடையூறாக இருந்தது. எனவே முல்லை நிலத்தில் அண்ணன் ஆட்சி அரும்பியது. குறிஞ்சிநிலத்தில் கணவன் ஆட்சி கால்கோலப்பெற்றது. கணவன் ஆட்சி தலை தூக்கியது. கணவன் ஆட்சி சிவபெருமான் ஆட்சியாகும். அதனைச் சேயோன் ஆட்சி, செய்யோன் ஆட்சி, சிவப்பன் ஆட்சி, செஞ்சடையோன் ஆட்சி, முக்கண்ணன் ஆட்சி, செவ்வண்ணன் ஆட்சி என்றெல்லாம் கூறப்பட்டது. குறிஞ்சி நிலமக்களிற் சிலர் மலையை விட்டு இறங்கி மருத நிலத்திற் குடியேறியபின் சிவன் காரியுண்டிக் கடவுளாகவும் நக்கன் என்றும் நாரிபாகன் அம்மையப்பன், சூலப்படையான், சூலபானி, விடையேறி என்றெல்லாம் அழைக்கப்பட்டார். முக்கண்ணன் மருத நிலத் தெய்வமாகி, மருத நிலத்தில் தந்தை ஆட்சியும் நிலவியபின் குறிஞ்சியில் மகன் ஆட்சியும் மகன் தெய்வமாகிய முருகனின் வழிபாடும் எழுந்தது. இறுதியாக முருக வழியாக மருத நிலத்திலுள்ள குன்றுகளுக்கும் நெய்தல் நிலத்திற்கும் பரவியது. மருத நிலத்தில் எழுந்த வேந்தன் ஆட்சியைச் சிலர் சிவன் ஆட்சி என்றும் சிலர் இந்திர வழிபாடு என்றும் கூறியுள்ளனர். இந்திரனை வேந்தன் என்பதற்குக் காரணம் அவன் மழைத் தெய்வமாதல் பற்றியும் வயலுக்கு நீர் இன்றியமையாதது பற்றியும் என்க. இன்தினன் என்ற சொற்றொடரே இந்திரனை மருவிற் றென்ப மன திறம் மந்திரம் என மருவியது போல். மருத நிலத்திற்குரிய நகரங்களில் முதன்மையாக வழிபடப்பட்டதெய்வம் சிவன் என்பது. நுதல்விழி நாட்டத் திறையோன் கோட்டமுதலாக என்ற சிலப்பதிகார அடியாற் புலனாதலின் வேந்தனென்பானைச் சிவன் என்பாரும் உளர் என்று திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை எம். ஏ, எம். எல் அவர்கள் விளக்கம் தந்துள்ளார்.1 சிவன் - வேளாளன் . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . தமிழ் - வேளாளர் மொழி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பின்னிணைப்பு The Velalas in Mohenjo Daro, (Reprinted from The Indian Historical Quarterly Vol XIV 1938 Calcutta) By. Prof. Rev. Hir H. Heras. M.A.S.J. St., Xavier College, Bombay. மொகஞ்சதாரோவில் வேளாளர். நான், மொகஞ்சதாரோவில் கண்ட கல்வெட்டுகளில் காணப் பெற்ற பரவர்1 கோலியர்2, திரையர்3 போன்ற சில இனத்தவர் களைப் பற்றிய செய்திகளை பல கட்டுரைகளில் எடுத்துக் காட்டி யுள்ளேன். இந்தத் தாளில் நான் அந்தக் கவ்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ள மற்றொரு தொன்மையான இனத்தவர்களைப் பற்றிக் குறிப்பிட விழைகின்றேன். அந்த இனத்தவர்கள் இப்பொழுதும் தென்னிந்தியாவில் பேரும் பெருமையும் பெற்று விளங்குகிறார்கள் - அவர்கள் வேளாளர் எனப்படுபவர். இவர்கள் வேளிர், காராளர், செட்டியார், முதலியார், கார்கார்த்தார் போன்ற பல பெயர்களால் அழைக்கப் பட்டு வருகின்றனர். மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப் பெற்ற கல்வெட்டு களில் காணப்படும் வேலால் (Velal) இணைப்பை உருவாக்குவதற்கு இரண்டு வெவ்வேறு அடையாளங்கள் இருக்கின்றன  வேல் - திரி சூலமும்,  வேல் வேலமரமும் (Acacia) ஆகும். மொகஞ்சதாரோ மக்கள் அவர்களுடைய எழுத்தின் முறைகளில் உயிர் எழுத்தின் அளவினைப் பற்றி கவனம் செலுத்தவில்லை.4 ஆனால் அவர்கள் அறிந்த யாப்பு இயலுக்கேற்ப (Metrics) சந்தர்ப்பத்திற்கு ஏற்ற பொருளில் நெடி லாகவோ குறிலாகவோ உயிர் எழுத்துக்களை வாசித்து வந்தார்கள்1 என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வா றாக ) மூலம், கால் (Quarter) என்று பொருள் தந்தது. கல் (Stone) அளவை (Measure) போன்ற பொருளிலும் வாசிக்கப் பெற்றிருக் கலாம்.2 இந்தத் தொன்மையான வேளாள மக்களைப் பற்றிக் குறிப்பிடப்படும் சில சாசனங்களை இப்பொழுது நம்மால் வாசிக்க முடியும் என்று நாம் முற்கூட்டியே கூறக் கூடும். முதலாவது கல்வெட்டு (Epigrapic) வெள்ளாளரை மட்டும் பேசுகிறது: இல்லில் இர் வேல்ஆல் மெட் (Thil ire Velal met) _ அதாவது இல்லத்தில் இருக்கும் வெள்ளாளனின் அரண். இந்த அரண் மெது வான களிமண் மீது பதியச் செய்யப்பட்டது போல் இந்த முத்திரை இருந்தது. இவ்வாறாக அதனுடைய உடைமையுரிமை நிலை நாட்டப் பெற்றுள்ளது. மற்றொரு சாசனம், பன்மையில் வேளாளரைப் பற்றிப் பேசுகிறது. 3 வேலிரிர் திருமின் நாட் மவ ஆடு (Velirir tiru min nad mala adu) - அதாவது அவை வெள்ளாளர்களின் புனித மீனின் மைய மலை எனப்படும் மற்றோர் இடத்தில் மூன்று வெவ்வேறு வகைகளில் ஆண்பால் பெயர்ச் சொற்களின் பன்மையில் மொகஞ்சதாரோ அமைக்கப்பெற்றுள்ளது என்று நான் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளேன். மிக முதிராப் பண்புடைய முற்காலமொழி அமைப்பில் இர் இரண்டு என்றும் எண்ணைக் குறிப்பதாக இருந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் திராவிட மொழியில் அது ஒன்றிற்கு மேற்பட்ட பன்மையைக் குறிப்பதாக இருந்துள்ளது என்பது உறுதி1 இவ்வாறே வேளிர் என்பது வேலினையுடைய மனிதன் என்று, கடந்த காலத்தில் வேலாள் என்பதற்கு வேலினை யுடைய மனிதன் என்று பொருள் கொண்டதைப் போல் பொருள் கொள்ளலாம். ஆனால் ஒரு அடையாளத்தில் (Sign) இரண்டு பன்மைகள் இருக்கின்றன. இரு வீச்சுக்கோடுகளுக்காக ஒவ்வொருபக்கமும் எல்லா அடையாளமும் (குறியும்) முழுமொத்தமாக பண்டைய உரு எழுத்துமுறையில் பொருள் விளக்கத்திற்கான துணைக் குறியாக இருக்கிறது. இவ்வாறு மரமிர் என்பது மரங்களின் மனிதர் என்று பொருள்தரும். இலிலிர் (ililiv) இல்லத்தில் இருக்கும் மனிதன் என்று பொருள் படும். நமது குறியீடுகள் (அடை யாளங்கள்) இரு முழு மொத்தமான பண்டைய உரு எழுத்து முறையின் பொருள் விளக்கத்திற்கான துணைக்குறியாக இருக்கிறது. ஆகையால் இதை இரண்டு பன்மை விகுதியோடு வேளிரிர் (Velrir) என்று வாசிக்கலாம். இத்தகைய இரு பன்மைகள் திராவிட மொழியில் மிகவும் சாதாரணமாக வரும். மேலும் அது வாக்கியத் திற்கு நல்ல அசையழுத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு மைய மலையைப் (நடு மலையை) பற்றிப் பேசுகிறது. இந்த விளக்கம் இந்தியாவிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே இடம்பெற்றுள்ள சில மலைகளைக் குறிப்பிடுவதாகக் காணப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டால் மைய மலை (நடுமலை) இமயமலையாக இருக்கும். அது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவுவதாக உள்ளது. அந்தஅடையாளம் - இதாக இருப்பதை உணர்வது நல்ல சுவை தருவதாகும். பொருள் நடு என்பது இதைப் போன்றதாக சீனர்களின் ஆதி முன்னோர்கள் கண்ட ஓவிய எழுத்தும் இன்றைய சீனர்களின் எழுத்தும் அமைந்துள்ளன. இரண்டும் பங் (Tsbrung) - நடு என்றே வாசிக்கப்படுகின்றன. இந்த நடுமலைகள் புனித மீனினதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தக் கிழமைப் பொருட் சொல்லின் (Genitibe) வகை ஒரு தெய்வநேர்ச்சிக் குறிய கிழைப் பொருள் சொல்லாக அழைக்க லாம். அந்தமலை புனித மீனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தெய்வத் திருமலையாக இருப்பதால் புனித மீன் என்று அழைக்கப்பட்டது. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சாசனங்களின்படி புனித மீன், கடவுளின் எட்டாவது பண்புருவாக இருக்கிறது. திருக்குறள் இறைவனை எண்குணத்தான் என்று இயம்புகிறது. சாசனங்களில் ஒன்று கூறுவதாவது1 2 அடு தாலி பெர் மின் அரிடா எட் கடவுள் (Adutali permin orida et kadavul) - அதாவது எட்டு அமைப்புள்ள இறைவனின் ஒரு பகுதி மாமீனாகத் தோன்றுகிறது. இப்பொழுது இந்த மலைகள் வேலிலிர் களின் புனித மீனுக்கு அர்ப்பணிக்கப்பெற்ற மலைகளாக விளங்கு கின்றன. - அதாவது இமய மலை வேளாளர்களின் புனித மலையாகத் திகழ்கின்றது. இங்கு வேளாள மக்களின் தனிப் பெருங்கடவுளாகிய சிவன் உறைகின்றான். இன்னும் இம்மலை தென் இந்தியாவில் வாழும் சைவ வேளாளர்களுக்கு புனிதத் தெய்வத் திருமலையாக ஒளிர்கிறது. காரைக்கால் அம்மையார் தமிழ் நாட்டினின்று சிவபெருமானைக் காண இம்மலைக்குச் சென்று,புனித மலைமீது காலால் நடப்பது தவறு என்று தலையால் நடந்து சென்றார். சிவபெருமான் அழைப்பின் மீது சிவனடியார்களான சேரமான் பெருமான் நாயனாரும் சுந்தர மூர்த்தி நாயனாரும் கயிலை மலை மீது ஏறிச் சென்று கயிலை நாதனைக் கண்டு களித்த கதையை பெரியபுராணம் விளக்கி நிற்கின்றது. இப்பொழுது வேளாளர்களின் புனித மீனிற்கு .இந்த மலைகள் அர்ப்பணம் செய்யப்பெற்றுள்ளன. அதாவது வேளாளர்களுடைய தெய்வத்திற்கு இம்மலை உறைவிடமாயிற்று. இது ஒரு உண்மை யான ஆட்சியையுடைய கிழமைப்பொருள் சொல்லாக இருக்கிறது. (This is a real genitibe of possession) இந்த மாமலைகள் வெள்ளாளர் களுக்கு உரியது. எனவே அந்த மலை இமயமலைத் தொடராகக் கொள்ளலாம் வெள்ளாளர்கள் அம்மலையின் அண்மையில் இருந்தனர். இன்று தென் இந்தியாவில் வாழும் சிவனை வணங்கும் வேளாளர் பஞ்சாப்பிலும் ஐக்கிய மாநிலத்திலும் (U.P) உள்ள வடபகுதியில் முற்காலத்தில் வாழ்ந்து வந்தனர் என்பதற்குத் தக்கசான்றுகள்உள. இந்த வேளாளர் பெருமக்களின் ஆதி உறைவிடம் அடியிற் கண்ட சாசனங்கள் மூலம் உறுதி செய்யப் பெற்றுள்ளது. வேலிர் வில்லாள் எட் பட்டி சுனி அறுப் உயரல் (Velir velal et pati cuni arup uyarel) வெள்ளாளர்கள் வில்லவர்கள் எட்டுச் சிற்றூர் களின் இலிங்கத்தின் அறுவடையின் உயர்ந்த ஞாயிறு எனப்படும். இதன் விளக்கம், உயர்ந்த ஞாயிற்றின் கதிர் அறுப்பு எனப்படும் கதிர்களின் அறுவடைமுடியும் பொழுதுள்ள காலத்தைக் குறிப் பிடுவதாகக் காணப்படுகிறது. வில்லவர்களின் இலிங்கங்களுடைய எட்டுக் கிராமங்களில் இங்கு கதிர்களின் அறுவடை சொல்லப் படுகிறது. வில்லவர்களின் இந்த எட்டுச் சிற்றூர்களில் இலிங்க வணக்கம் உடையதாக இருந்தது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. பல்வேறு சாசனங்களிலிருந்து கடவுளின் திரு உருவங் களுக்கு அல்லது கோயில்களுக்கு அல்லது சிற்றூர்களுக்கு நிலங்கள் உரிமையாக்கப் பெற்றிருந்தன என்பதற்குச் சான்று தருகின்றன. இப்பொழுது தென் இந்தியாவில் பெரிய கோயில்கள் அதே முறையில் உருவ வழிபாட்டிற்கு நிலங்களின் வருமானத்தை அர்ப்பணிக்கப் பெற்றுள்ளது நன்கு அறியக் கிடக்கின்றது. நிலா நண்டூர் எடு மீன் அடு ஆன் வால் (Nila nandiu edu min adu Anval ) - அதாவது ஆண் செம்மறி ஆட்டின் ஆண்டவனும், நண்டூர் மீனும் பெற்றிருக்கும் நிலங்கள் செழிப்புடையதாக, களிப்பு உண்டாகுக எனப்படும் அல்லது இது சுணி டென் அடு - (Cuni ten adu) - அதாவது அந்த இலிங்கத்தின் வெற்றி விளைவாகக் கிடைத்த பொருள் எனப்படும் இந்த வில்லர்களின் சிற்றூர்களில் இலிங்கம் வழிபடப் பட்டது. இது நடைபெற்றது இயற்கையாகும். மேலும் அவர்கள் காவல்களோடு இணைந்திருந்ததற்காக இந்தச் சின்னத்தின் மூல வழிபாட்டுக்காரர் களாகக் காணப்படுகிறார்கள் என்று தெரிகிறது. மீனவர்களை இந்தத் தனித் தன்மை வாய்ந்த வழிபாட்டு முறை கடந்து சென்றது. இந்த வில்லவர்கள் வெள்ளாளர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. வில்லவர்களின் எல்லை சிந்துவின் கிழக்குப் பகுதிவரை நிலவி இருந்ததாகக் காணப்படுகிறது. எனவே இந்த இரு இனத்தவர்களும் எளிதாக நாட்டின் அடுத்த எல்லைவரை வசித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. வில்லவர்கள்என்பார் வெள்ளாளர்களால் கழித்து விடப்பட்டவர்கள் என்று சாசனங்கள் மூலம் தெரிகிறது. பின்னால் வில்லவர்களின் நாட்டு எல்லைகள் மீன்வர்களுக்கு உரிமைப்படுத்தி விடப்பட்டுள்ளது. அடியிற்கண்ட சாசனம் வெள்ளாளரின் வேந்தனை அறிமுகப்படுத்தும்: 1 பட்டி நிலா வேல் வேலாள் டால்டெல் முகில் முகன் (pati nila Velvelal taltal mukilmukan) - அதாவது சிற்றூர்களின் நில வினையுடைய வேளாளர்களின் மூவிலை வேலின் மன்னன் (மேகங்களின் வீட்டினை அணுகும் அரசன்) இது ஐயத்திற்கிடமின்றி வேளாளர் அரசின் முத்திரையாக இருந்தது என்று கூறலாம். இந்தக் குறியீடு அரசர்க்காக ஒருமுறை எழுத்தாக வாசிக்கப்படுவது முகில்களின் இல்லத்தை ஆள்பவர்.2 இப்பொழுது உள்ள வேளாளர்கள் மிகத் தொன்மையான காலத்தினின்று இதே முறையில் காராளர் என்று அழைக்கப்பட்டது கருமுகிலின் காவலர் என்னும் பொருளினை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.1 இந்தச் சாசனத்தில் வெள்ளாளர்கள் மூவிலைவேல் (திரிசூலம்) தாங்கியவர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் அவர்கள் பெயர் மேலே காணப்படும் மூவிலைவேலர் என்று பொருள் தரும். இந்தஆயுதத்திற்கு ஒரு சிறப்பான பிணைப்பு ஏற்படக் காரணம் அடியில் காணப்படுவனவாகும். இஃதன்றி வேளாளர்கள் திங்களின் (Moon) பெயரால் சுட்டிக்காட்டப்பட்டும் வந்துள்ளனர். இந்த இடுபெயர்கள், அக்காலத்தில் சிந்து வெளியில் குறைந்த அளவு வேளாளர்களில் இரண்டு பிரிவுகளாவது இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. வெள்ளாளர்களிற் சிலர் நிலவுவேளாளர் என்று அழைக்கப்பட்டனர். சிந்துவெளியில் நிலாப் பரவர், பகல் பரவர் என்று இரு பிரிவுகள் இருந்தது போல் வேளாளரிலும் நிலவு வேளாளர் பகல் வேளாளர் (Pagel Velal) என்று அழைக்கப்பட்டு வந்தனர் (“the Velalar of the sun”?) ஒரு சாசனம் ஒரு சிற்றூரின் வேளாளரைச் சுட்டிக் காட்டுகிறது. அந்தச் சிற்றூரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தச் சாசனத்தில் அரசனுடையபெயர் உள்ளது உள்ளவாறே குறிப்பிடப்பட்டுள்ளது. 2 மூமக குடவேலாளர் கொடி (Mumaga Kude Velalir Kodi) -அதாவது மூமக வேலாளர் ஆட்சியின் கொடி என்று பொருள்படும். மேலே நாம் எடுத்துக் காட்டி இருப்பவைகளுக்கேற்ப வேளாளர்கள் பன்மை விகுதி இங்கு குறியீட்டின் மறுபகர்ப்பினால் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. குட (குடை) அரசுடையவும், அதிகாரக் குழு உடை யவும் உயர்ந்த ஒரு சின்னமாக இருக்கிறது. இது அரசர்கள் மட்டும் பயன்படுத்துதற்குரியது. அதன் காரணமாகவே இங்கு குடஎன்பது ஆட்சி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சாசனத்தின் முதல் குறியீடு (அடையாளம்) ஒலி உருவில் மூமக (Mumaga) என்று வாசிக்கப்படுகிறது. அச்சொல்லின் மூல முதற் பொருள் மூன்று மகன் அதாவது பேரன் என்று கொள்ளலாம். ஆனால் இங்கு மூமக என்ற பெயர் பிழைபடாத இடு குறிப் பெயராக எடுத்துக் கொள்ளவேண்டும். ஆகையால் இந்தப் பெயர் வேளாளர் களின் ஒரு மன்னனின் பெயராக நயம்படத் தோன்றுகிறது. மற்றொரு சாசனம் வேளாளர்களின் கருமுகிலுக்கு ஒரு தனிச் சிறப்புடையதாகக் குறிப்பிடப்படுகிறது. அது அடியில் வருமாறு: 1 வேலாள் முகில் அடு மீனன் மீன் கடவுள் ஆடு (Velal Mukil adu Minan min Kadavul adu) - அதாவது வெள்ளாளர்களின் மேகம் எதுவா யினும் மீனவர்களின் கடவுளாகிய மீனா வேளாளரின் கடவுளாகவும் விளங்கியது. இந்தப் புதிரை நாம் விடுவிக்க முயல்வோமாக. மீனவர்களின் மீனாகடவுளாகக் கூறப்பட்டிருக்கிறது. அவர் மீனவர்களின் அரசியாக இருப்பது நன்கு தெரிகிறது. மற்றொரு சாசனத்தில் அவர் வில்லவர்களுக்கு எதிராக ஒரு போரைத் தொடங்கி அவர்களுடைய அரசனைக் கைது செய்துள்ளார். 2 துக் வில்லாள் வேல் இர் மீனன் மீன் இர் மீன் எடு ஆடு கடகோடி அடு (dug velal vel ire minan min ire min edu adu kadakol adu) - அதாவது இழிவானவர்களாகக் கருதப்பட்ட வில்லவர்களின் வேந்தன், மீனவர்களின் மீனா என்னும் தெய்வமும் நிறைவான மீனம் மேடம் (ஆடு) எனும் மாதமாக இருக்கிறது. மீனா எனும் அரசி அல்லது தெய்வம் தனது கொடியில் செங்குத்தாக நிற்கும் இருகயல்மீன்களைத் தனது சின்னமாகக் கொண்டிருந்தது என்று இந்தச் சாசனத்திலிருந்து புலனாகின்றது. மேலும் அவள் மீனவள் என்ற பட்டமும் பெற்றிருந்ததை மற்றொரு சாசனம் கூறுகிறது. இந்தச் சானத்தின் மற்றொரு பகுதி வேலர்களின் (வெள்ளாளர் களின்) கார் மேகங்களைப் பற்றிச் சுட்டிக் காட்டுகிறது. அதோடு வேளாளர் மேகங்களின் அரசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்பெற்றுள்ளன. மேகம் அவர்களின் வலிமை வல்லற் றன்மை ஆகியவற்றின் சின்னமாக இலங்குகிறது. மேலும் வேளாளர் களின் நம்பிக்கை, வாழ்வு, வலிமை ஆகிய அனைத்தும் அவர்களின் தெய்வமாகிய சிவனிடமிருந்து பெற்றதாகச் சாசனம் தெளிவான விளக்கம் தருகிறது. வேளாளர்கள், மீனவர்களோடும் அவர்களின் அரசி மீனாளோடும் மீனாட்சியோடும் கொண்டுள்ள தோழமையை யும் இந்தச் சாசனம் எடுத்துக் காட்டுவதோடு அவர்களின் ஒப்புவுவமையற்ற வலிமையின் ஏற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது. வில்லர்கள், வேலர்களோடு (வேளாளர்களோடு) நட்புறவு கொண்டது மீனவர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்தநட்பு மீனவர்களால் துண்டிக்கப்பட்டு விட்டதாகச் சாசனம் கூறுகிறது. அது வேளாளர் களின் அழிவிற்கு அடிப்படையானதாக இருந்தது என்று காணப்படு கிறது. மீனவர்களோடுள்ள ஒற்றுமை, ஒருவேளை மேலே குறிப்பட்டபடி வில்லர்கள் வேலர்களோடு கொண்ட ஒருமைப்பாட்டு உணர்வாகவும் கொள்ளலாம். இது சாசனத்தில் அடியிற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அறிதா என் அருப் வேலன் கலக்குரீர் - அதாவது ஒரு பகுதியில், கணக்கிடப்படும் கதிர்அறுப்பில் வேலர்களின் ஒன்றிய நாடுகளில் வாழும் மக்கள் என்பதாகும். வேலர் என்பது வேலை யுடையவர் என்று பொருள்படும். வேலன் என்பது தமிழ் நாட்டில் முருகனைக் குறிக்கும் சொல்லாக ஹிரா அடிகள் எடுத்துக் காட்டியுள்ளார். வேல் என்னும் பதம் ஓரிலை வேலையும் மூவிலைவேலையும் F¿¥gj‰F¥ பழங்கால மக்கள் பயன் படுத்தியிருக்கலாம் என்று எண்ணுகிறேன். மூவிலைவேல் (திரிசூலம்) சிவனுடைய ஆயுதம் - எனவே சிவன் சூலபாணி அதாவது மூவிலைவேலன் என்று அழைக்கப்பட்டுள்ளார். சிவனுடைய மனைவி கொற்றவை சூலம் (வேல்) தாங்கியவளாக இருந்ததால் அவள் சூலி என்று அழைக்கப்பட்டாள் என்பது ஆய்விற்குரியது. திரிசூலம்தாங்கிய ஒரு மனித உருவத்தைத்தான் ஹிரா அடிகள் வேலன் என்று பொருள் கொண்டுள்ளார். எனவே திரிசூலம் ஆதிகாலத்தில் வேல் என்று கூறப்பட்டது என்று திரிசூலமாகிய வேலைத்தாங்கிய சிவன் வேலன் என்று அழைக்கப்பட்டான். சிவனுக்குப்பின்னர் எழுந்த முருகன் என்னும் தெய்வம் ஓரிலை வேலைத் தாங்கியதால் அவனும் வேலன் என்று அழைக்கப்பட்டான் என்று கொள்ளலாம். மேலும் மூவிலைவேல், வேல் வகையைச் சேர்ந்த ஒரு ஆயுதம் என்பதைக் கருத்திற் கொள்வது இன்றியாமை யாதது. மேலும், இந்தச் சாசனம் கூறும் வில்லர், மீனர், வேலர் என்ற தனுசு, மீனம், இடம் எனும் மூன்று வீட்டிற்குரிய, வில் இணைக்கயல், எருது அல்லது இலிங்கம் ஆகியவைகளைப் பெற்றுள்ளார்கள் என்றும் வில்லர் முருகனையும் (மகனையும், மீனர், மீன்கண்ணியை யும், வேலர் சிவனையும் தெய்வமாகக் கொண்டிருந்தவர்கள் என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். வேலன் (சிவன்) கதிர் அறுப்பிலுள்ள தொடர்பினால் எழுந்த தெய்வம். அவன் கதிர் அறுப்பில் தலைமைதாங்குகிறான் அல்லது அறுவடையில் தலைமைதாங்குகிறான் என்பது சாசனத்தின் விளக்க மாகும். ஒரு புறத்தில் கதிர் அறுத்து தாள்கள் குவியலாகக் கிடக் கிறது. சிவனுடைய வாகனம் உழுதல், மரம் அடித்தல் முதலியவை களுக்கு மட்டுமின்றி போர் அடிக்கவும் உதவுகிறது. இந்த இடம் விரிவாக விளக்க முடியாதிருக்கிறதுஎன்று ஹிரா அடிகள் ஒதுங்கி யுள்ளார். இது ஒருபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு புறம் அல்லது அடுத்தபகுதி பொருத்தமானதாகக் காணப்படுகிறது. அவைகளைப்பின்னர் ஆய்வோம் இந்தச் சாசனத்தின் முதல்வரி வழக்கிற்கு மாறாக அமைந் துள்ளது. இதை இடது புறமிருந்து வலது புறமாக முதலில் வாசிக்க வேண்டும். அப்பால் அடுத்த வரியை வலது புறமிருந்து இடது பக்கத்திற்கு வாசித்துச் செல்லவேண்டும். இந்தச் சாசனத்தில் முதல் வரி தவறியுள்ளது. எஞ்சியது அடியில் வருமாறு. ஈருயரலிர் பக இல் சுன்/னி வேலனவன் வெண் /கோ ண்ட / இதன் பொருள், இரு முறை ஞாயிறு தங்கும் இராசிகளின் மீதும், வேளாளர்களின் இலிங்கம் அல்லது கோயில் அல்லது சிற்றூர் ஆகியவைகளின் மீதும் வெள்ளி மலை (வெள்ளைமலை) மீதும் நிலவும் நிலா என்பதாகும். இந்தச் சாசனம் வேளாளர்களின் வெள்ளைமலை மீது நிலவும் திங்களை (நிலவை)ப் பற்றிக்கூறுகிறது. பின்னால் இருப்பது வரலாற்றுக்காலத்தில் உள்ள சிவனுடைய மகனைப் பற்றியதாகும். அவன் கூட வரலாற்று அண்மைக்காலத்தில் உள்ள (Proto- Historic Period) ஆண் என்னும் தெய்வத்தின் மகனாக இருக்கலாம். ஆண், ஆணில் என்ற ஒரே மகனை உடைய தெய்வமாகத் திகழ்கிறது. ------------------- ஆணில் என்பதன் பொருள் ஆணுடைய மகன் என்பதாகும்- எனவே இது அதனுடைய இடுகுறிப் பெயர் அல்ல. இது ஒரு மகவுரிமை சார்ந்த ஒரு சிறப்புப் பெயர் மாத்திரமேயாகும். வேலன் என்பது அவரது நேரான பெயரல்ல. அவரது பெயர் முருகன் இது தொன்மையான திராவிடப் பெயராகும். இவரை சுப்பிரமணியன் கந்தன் கடம்பன், கார்த்திகேயன் என்றெல்லாம் கூறுவர். இந்தச் சாசனம் உயர்ந்த வெள்ளைமலை நிலவும் நிலா என்பதற்கு, சிவன் உயர்ந்த இடத்தில் இருப்பவன் என்றும், அவனுடைய சடை முடியில் நிலா இருப்பது என்பது ஆண், விண்ணிற்கும் தெய்வம் என்றும் அவனுடைய அடியும் முடியும் காண்பதற்கு அரிது என்று விளக்குவதாக இருக்கிறது என்பது ஹிரா அடிகள் கண்டவிளக்கம். இந்தச் சாசனத்தின் முதற் குறியீடு பல் சொற்கூட்டு அடையாளமாகும். அதன்முலப் பொருள் பின்வருமாறாகும். - மூ மூன்று ரு - ரூ இரைச்சல் இது இறுதி நிலைக்கு ஒப்பான ஒரு தனிச்சிறப்பியலாகும். எனவே இந்தக்குறியீட்டைமுரு.........m‹ என்று வாசிக்கலாம். தெளிவாகக் கூறுவதானால் முருகன் என்று வாசிக்கலாம். முருகன் பின்னர் எழுந்த மகன் தெய்வமாகும். இது ஹிரா அடிகளின் கருத்து. இப்பொழுது நாம் மூல சாசனத்தை நோக்குவோம். இதனை சூலபாணி - அதாவது மூவிலைவேலன் என்பதுஆ©என்னு«தெய்வமாக¤தெரிகிறது. முத்தலைவேலன் ஆகிய சிவபெருமான் திருஉருவப் படைப்பே, ஆண் எனப் பெயர் பெற்ற வெள்ளை மலை யாகிய - மைய மலையில் வாழும் தெய்வமாகும். வெள்ளைமலை ஆண் தெய்வத்திற்கு உரித்தானமலையாகும். சிவன் இமயமலை யாகிய வெள்ளை மலையில் உள்ள கயிலை என்னும் சிகரத்தில் இருக்கிறான் என்று தெரிய முடியும். ஆணுக்கு இலிங்கம் உரித்தானது என்றுகூறப்படுகிறது. இது பிற்காலத்தில் எழுந்த சமய உணர்ச்சியோடுள்ள ஒரு இசைவாகும். என்றாலும் இந்தச் சமயக் கோட்பாட்டுமுறை இரண்டு ஞாயிறு களின் சமய வழிபாட்டு முறையின் காரணமாகப் பிரிக்கப்பட்ட இராசிகளோடு (வீடுகளோடு) இணைந்துள்ளது. இந்த இரண்டு ஞாயிறுகள் மற்றும் சாசனங்கள், குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டு அடியில் வருமாறாகும். இதன் பொருள், உயரலிர் அடு என்பதாகும். அதாவது இவை உயர்ந்த ஞாயிறுகள் எனப்படும். இதனால் முற்காலத்தில் இரண்டு ஞாயிறுகளை வழிபடும் இருசமயப் பிரிவுகள் இருந்தன என்று தெரிகிறது. அறுவடை காலமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் ஞாயிறு மேடத்திலும் (செம்மறியாட்டு இராசியிலும்) இடபத்திலும் (காளை மாட்டு இராசியிலும்) இருப்பதை எண்ணி வேளாளர் களும், ஆயர்களும் நினைத்து தனித்தனியாக வழிபட்டு வந்ததை இரு சூரிய வழிபாடு என்று கூறியிருக்கலாம். இவை முறையே மேட ரவி, இடபரவி என்று கூறப்படும். இஃதன்றி இரு ஞாயிறு வழிபாட்டிற்கு எவரும் விளக்கம் கூறியதாகத் தெரியவில்லை. ஹிரா அடிகளும் இந்தப்பிரிவுகள்எப்படித்தோன்றியதுஎன்றுவிளக்கம்தரவில்லைசாசனம் Tறும்Fடும்பம்mல்லதுåட்டின்(இராசியின்ãரிவுvழுந்ததன்fரணத்தையும்mவரால்Éளக்கKடியவில்லை.ïȧftÊghL nty®நாட்oல்எழுந்jதன்காரzமாகமீனர் நாட்oல்பொ§கியபுரட்áயின்காரzமாகஇந்த¥பிரிவுfள்தோ‹றியிருக்கலாம்,என்று«கருத¥gடுகிறது.ஞாயிறு வழிபாடும். திங்கள் வழிபாடும் சிவன் rக்திtழிபாடாகkலர்ந்தது. ஞாயிறு வழிபாடே சிவ வழிபாடாகத் துளிர்த்தது. ஞாயிறு இல்லாத இரவில் ஞாயிற்றின் பிரதிநிதியாக நெருப்பு வழிபாடு நடைபெற்று வந்தது - சிவன் இதனை ïருNரியtழிபாடாகவும்fருதியிருக்கலாம். நாளடைவில் ஞாயிறாகவும், நெருப்பாகவும் கருதப்பட்டார். சிவ வழிபாடு, ஞாயிறு வழிபாடு,நெருப்பு வழிபாடு, விளக்குவழிபாடு என்று முச்சுடர் வழிபாடாக விளங்கியது. ஞாயிறு வழிபாட்டின் உறுதியான நடவடிக்கையின் காரண மாக அரசர்களின் அரண்மனையில் அரும்பிய பிரிவினைக்கூட அடியில் வரும் சாசனம் எடுத்துக் காட்டுவதாக எண்ண இடமுண்டு: கோப்போருட்டிர் தார்த்தாரு தார்முகில் அடுஆள் - கார் முகிலின் ஆண்டவனாகிய உயர்ந்த ஞாயிற்றின் நகரில் இழிவானவர் களின் ஆட்சி மறைந்தது. உயர்ந்த ஞாயிற்றின் நன்னநகரில் சிறந்த ஆட்சியாளர்களின் அழுகை எழுந்தது என்பது பற்றி சாசனம் நன்கு எடுத்தியம்புகிறது. கார்முகிலின் (மழை மேகத்தின்) இறைவன் ஆண்டவன் என்று அழைக்கப்பட்டுள்ளான். ஆண்டவனாகிய உயர்ந்த ஞாயிற்றின் நகரில் இழிவானவர்களின் ஆட்சி மறைந்தது. உயர்ந்த ஞாயிற்றின் நகரில் சிறந்த ஆட்சியாளர் ஆட்சி எழுந்தது பற்றி சாசனம் எடுத்துக் காட்டுகிறது. மழை மேகத்தின் (கார் முகிலின்) ஆண்டவன் இறைவன் என்று அழைக்கப்பட்டான் என்று அறிவிக்கப்பெற்றுள்ளது. இந்த நகரத்திற்கும் வெள்ளாளர்களுக்கும் இடையே சில வகையான தொடர்புகள் இருந்தன. இதை அவர்களின் காராளர் என்ற பட்டம் எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் வரலாற்று அண்மைக் காலத்தில் (Ptoot Historic Period) வெள்ளாளர் பெற்றிருந்த முக்கியத்துவம் பற்றி இந்த ஒரு சில சாசனங்கள் வெளிப்படுத்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. மேலும் சிந்து வெளியில் வாழ்ந்த இந்தமக்கள் தெற்கு நோக்கி விரட்டப்படுவதற்கு முன்னர் வட இந்தியாவில், மூலக் குடியேற்றம் பெற்று வாழ்வு தொடங்கிய காலமும் தரப்பட்டுள்ளது. இறுதியாக அவர்கள் இமயமலைமீதுள்ள இறைவனுடன் ( ஆண், சிவாவுடன்) எப்படித் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். முகில்கள் தவழும் இந்த மூதூர்களுக்கு வேளாளர்களுக்கும் இடையே பல்வேறு வகையான தொடர்புகள் இருந்தன. சிவன் முடிமீது அமர்ந்திருக்கும் கங்கை வேளாளர்களின் தாய் என்று போற்றப் படுகிறாள். வேளாளர்களுக்குரிய காராளர், வேலாளர், வேளிர், சைவர், நிலமகன், பிள்ளை, முதலியார், செட்டியார், இளங்கோக்கள், இப்பர், எட்டியர் என்ற பெயர்கள் அவர்களின் பெருமையை உணர்த்துகின்றன. இந்தியாவின் வரலாற்று அண்மைக் காலம் (Proto- Historic Period ) வேளாளர் பெற்றிருந்த முக்கியத்துவம் பற்றி பல சாசனங்கள் நன்கு எடுத்துக்காட்டுகிறது. இமயமலையின் அடிப்பகுதிகளில் வாழ்ந்திருந்த வேளாளர்களும் பரவர்களும் தெற்கு நோக்கி மகேந்திரகிரி வரை விரட்டப்பட்டதற்கு முன்னர், வட இந்தியாவில் உள்ள கன்னி நிலத்தில்குடியேறி உழுது பயிரிட்டு நெல்மணிகளையும் பொன்மணிகளையும் விளைவித்த மூலக் குடியானவர்களாகிய வேளாளர்கள் அங்கு வாழத் தொடங்கிய காலந்தரப்பட்டுள்ளது. இறுதியாக இவர்கள் இமயத்தின் மீது இறைவனுடனும், சிவன், ஆண், முருகன் முதலிய ஆண் தெய்வத் துடனும் மீனாள் என்னும் (கயற்கண்ணி) தாய்த் தெய்வத்துடனும் பண்டைக் காலத்தில் நனி சிறந்த நாகரிகத்தைப்படைத்த வேளாளப் பெருங்குடிமக்கள் எப்படித் தொடர்பு கொண்டிருந்தனர் என்ப வற்றையெல்லாம் சாசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  1. பெருங்கதை : 1. உஞ்சை 48. மருநிலம் 141-170 1. பெரும்பாணாற்றுப்படை : 242-262 1. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 196 - 256. 2 நெடுநல்வாடை - மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார். 3 அகம் - மருதம். ஆலங்குடிவங்கனார் 106. சிலப்பதிகாரம் புறநானூறு - 13 புறநானூறு - 29 1. Oringin and spread of the Tamil - Page.5 1. The essential still lacking was the discovery of a lichnique of food production over which a large degree of human control could be excercised, and it is this revolutionary concept - the change - over from hunter to farmer and stock breeder - that lay behind the ancient civilization of the world. With the formation of agricultural communities it was possible for man to live with in a tramework of comparative economic security, to accumulate some surplus material resources, and thereby to increase his leisure and stimulate the activites of other craftsmen on his behalf. 1. Mohenjo Daro - Dr. R.E. Monrtimr Wheeler (Karachi) P. 12-13 2. The vedic hymns make it clear that the mobile city less invaders differed at every point from the long - static citizens whom they invaded. The term used for the cities of the aborigines means a “fort” or tronghoed. Indra the Aryan war god is called the “fort destroyer. He shatters a hundred” ancient castles at the of ab original leader. He rends forts as age consumes a garment. Where are - or were the native citadels? It has in the past been supposed that they were mythical or at the best were palisaded refuge. But since the discover of fortification at Harappa and Mohenjo-daro in 1944. We know that at least the administrative mucleus of these great cities was strongly fortified . What destroyed this formly settled civilization? Climatic economic political determination may have weakened if, but its ultimate extinction is more likely to have been completed by deleberate and large-scale destriction. On circumstantial evidence. Indra and his Aryan stand accused. It is now generally accepted that the Indus cities were in fact those refered to in the Rigveda and that they were destroyed by Aryan unvaders in or about the 15th century B.C., Mohenjo-daro R.E.M. Wheeler - 1950 (karachi) P.14. 1. Where are - or were these native citadels? It has in the past been supposed that they were mythical or at the best were palisaded refuges. But since the discover of fortification at Harappa and Mohenjo-daro in 1944. We know that at least the administrative mucleus of these great cities was strongly fortified . What destroyed this formly settled civilization? Climatic economic political determination may have weakened if, but its ultimate extinction is more likely to have been completed by deleberate and large-scale destruction. On circumstancial evidence. Indira and his Aryan stand accused. It is now generally accepted that the Indus cities were in fact those reffered to in the Rigveda and they were destroyed by Aryan invaders in or about the 15th century B.C., Mohenjo-daro R.E.M. Wheeler - 1950 (karachi).P. 14. 1. The Velalas is Mohenjo Daro - Rev. Dr. Heras S. I. M. A. (Calcutta) The Indian Historical quarterly Vob. X1V 1938 1. வருண சிந்தாமணி - கூடலூர் கனகசபைப் பிள்ளை. 1901. (சென்னை.) பக்கம் 328 -329. 1. Stdies is Proto - Indo Mediterraveaw Culture by The Ren . H. Heras S. I. M.A. (Bombay) 1753 1. “The most ancient Kingdoms were pandya and chola both of which were founded by persons belonging to the aggricultinal classes. The word Aryan probably comes from” Ar to “Afterwards it comes to mean noble nations following aggriculture being more civilized then the wadering ralls” History of India by sinclaiv. 1. வருணசிந்தாமணி - கனகசபைப்பிள்ளை 1901. சென்னை, பக்கம் - 352. *1. இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை என்னுங் குறளில் (41), இயல்புடைய மூவர் என்பது அதிகாரவியையால் அந்தணர் அரசர் வணிகர் என்னும் முக்குலத்தில்லறத்தாரையே குறிக்கும். பிரமசாரியன் வானப்பிரத்தன் சந்நியாசி என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் என்னுங் குறளிலுள்ள துறந்தார் என்னுஞ் சொல்லே துறவியரைக் குறிக்கும். *1. கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும் பின்பு சாவகத்திலும் பயிராயது. சீனரை வானவர் என்றும் சீனத்தை வானர் நாடு என்றும் அழைத்தனர் முன்னோர். இனி சாவகம் நாக நாட்டைச் சேர்ந்ததாதலானும், தேவருலகிற்கு நாகநாடு என்னும் பெயருள்ளமையானும், சாவகநாட்டு நாகபுரத்தரசர் இந்திரன் என்ற குடிப்பெயர் கொண்டிருந்தமையானும், சாவகத்தை இந்திர நாடு என்று கூறினர் முன்னோர். 2. பெரும்பாண் - 206 - 246 3. மதுரைக் காஞ்சி 246 - 270 4. மலைபடுகடாம் 100 - 185 மதுரைக் காஞ்சி 270 - பெரும்பாண் 242 1. அள்ளற் றங்கிய பகடுறு விழுமங் கள்ளார் களமற் பெயர்க்கு மார்ப்பே - மதுரை 259 - 260 2. களமர்க் களித்த வினையல் வெங்கள் யாமைப் புழுகிற் காமம் வீட வாரா. - புற நா, 242: 2-3 3. தொல்பசி யறியாத் துளங்கா விருக்கை மல்லற் பேரூர் - பெரும்பாண் - 253-254 4. பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற் காரேறு பொருத கண்ணகன் செறுவி னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர். பெரும்பாண். 209 - 211. 5. முடிநா றழுத்திய நெடு நீர்ச் செறு பெரும்பான் 212. 6. தொடுப் பெறிந் துழுத துளர் படு துடவை யரிபுகு பொழுதின் பெரும்பாண் 201 - 202 7. நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக் கடுப்புடைப் பறவைச் சாதியன்ன 1. குளந் தொட்டு வளம் பெருக்கி பட்டினப் 284 2. நீர்த் தெவ்வு நிரைத் தொழுவார் மதுரை 89 - 90 பாடு சிலம்பு மிசை 3. ஏற்றத் தோடு வழங்கு மகலாம்பி மதுரை 90 - 91 4. மென்றொடை வன் கிழார் - மதுரை 93 5. மடியா வினைஞர் தந்த வெண்நெல் வல்சி மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவீர் பெரும் பாண் 254 - 256. 6. கரும்பின் தீஞ்சாறு விரும்பினீர் மிசைமின் பெரும் பாண் 2 62. 1. பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து. திரு கா. சுப்பிரமணியபிள்ளை M.A, M.L, சேலம் 1939- பக் 22- 23 1. Heras, “The Minavan is Mohenjo Daro” - Dournal of oriental Research X.P 282 - 87 2. Heras. “ The Kolikon in Mohenjo Daro - The New Indian Antiquity VobI. 3. Heras The Hrayars in Mohenjo Daro - paperead at the 1X All India Oriental Conferance Indiandrum JB. B RAs 1938. 4. “ Heras The longest Mohenjo Daro Epigraph of J 1+1 X VI 296. 1. “ Heras Mohenjo Daro the Most Important Archealogical suli in India jH X V1 P. 5-6 2. Pholo, M.D. 1928 - 29 N0. 7040 3. Mohenjo Daro and the Indus 1...1 Civilization. J. Marshall - 111 M.D. No. 130 1. cf Heras Karnataka and Mohenjo Daro, Karnataka Historical Re IV p.4 Numerals in Mohenjo Daro journal of Benares Hindu University... 1. Cf- Heras - The Religion of the Mohenjo Daro people according to the inscrepions journal of the svornierrsity of Bambay (Hist and Eccon Section) V. PP. 8 - 9 2. Sir john Marshall op. Cih. M. D. No. 149. 1. Photo H. Neg 3050 No.15 2. of. Heras the story of Mohenjo- Daro scgn - journal. of Benares Hindu University 11.No1. pp 4-5 1. Pillai - The Tamils eighteen hundred years ago pp 113 - 14 1 H. G fune 1938 2. Cf. Heras, The Minavan is Mohenjo Daro journal of Oriental Research X P. 284. 1. A.S. of 1. Report 1928 - 29 2. Marshall op cit 111. M.D. No 87