கவியரசர் முடியரசன் படைப்புகள் 13 சீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 144 = 160 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 100/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக் காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங் களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகை யெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்பு களையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந்தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்பு களை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க் களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்த இப்பரிசிலுக்கு யான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ ................ முற்றிய திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே என்னும் சங்கப் புலவர்களின் வைரவரிகளுக்குச்சான்றாகப்பெருமிதவாழ்வுவாழந்தவர்.சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் fவிஞர்mHF«, இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடு மொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப் பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக் கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்கு களில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல்களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக் கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடி மணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவை களும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந் தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை ix வாழ்க்கைக்குறிப்பு xi இயற்றிய நூல்கள் xii சீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் முன்னுரை 3 நன்றியுரை 5 1 குடிப்பிறப்பு 7 2 மறுமணம் 14 3 பொது வாழ்வு 16 4 யாவருங் கேளிர் 26 5 விருந்தோம்பல் 37 6 பாட்டுப் பறவைகளின் புகலிடம் 43 7 பாரதியின் பாட்டுத்தலைவன் 54 8 இயற்கைப் பண்புகள் 64 9 வாழ்க வயி.சு. சண்முகனார் 77 10 வை. சு. சண்முகம் 79 11 அஞ்சா நெஞ்சர் வை. சு 83 12 போராட்ட வீரர் 86 13 செட்டிநாட்டின் வீரத் திலகம் 89 14 எங்கள் வழிகாட்டி 93 15 வைராக்கியம் படைத்த வை.சு. சண்முகனார் 98 16 எங்கள் குல விளக்கு 101 17 எங்களை ஆளாக்கிய ஐயா 102 18 கலங்காத நெஞ்சம் கலங்கியது 104 19 எங்கள் அருமை ஐயா 110 20 எங்கள் தந்தையார் 115 21 தனவணிகரும் ஹிந்து மதாபிமான சங்கமும் 134 சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் முன்னுரை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, செய்யத் தகுவன செய்து, கையகத்துப் பொருளெல்லாம் கரவாது வழங்கி, எவர் மாட்டும் இன்னருள் சுரந்து மீமிசை மாந்தரெனப் பெயர் கொண்டவர் கானாடுகாத்தான் வயி.சு.சண்முகனார். அவர்தம் திருமகளாரும் எனக்குத் தமக்கையெனும் உறவு கொண்டு ஒழுகுபவருமான திருவாட்டி பார்வதி நடராசன் அவர்கள், தந்தை சண்முகனாரின் நினைவாகச் சில அறப் பணிகள் செய்தல் வேண்டுமெனும் பெருவிருப்பால், அவர்தம் பெயர் விளங்க அறக்கட்டளையொன்று நிறுவிக் கல்வி கற்பார்க்கு உதவி வருகிறார். நூல் நிலையம் ஒன்றும் அமைத்தல் வேண்டும் என்பது அம்மை யாரின் பேராவல். அதனுடன் அமையாது, தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்க வேண்டும் என்பதும் அவருடைய விழைவு. அம்மையாரின் எண்ணங்களையும் செயல்களையும் காணுந்தொறும், மகள் தந்தைக் காற்றும் உதவி இவள் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் - என்று திருக்குறட் பாடலை யே மாற்றிப் பாடும்படி செய்துவிடும்! தம்பி! அப்பாவின் வரலாற்றை நூலாக எழுத வேண்டுமே; அதை நீங்கள்தான் எழுதுதல் வேண்டும் எனத் தம் விழைவை என்னிடம் ஒரு நாள் வெளிப்படுத்தினர் தமக்கையார். என்னால் உடன்படவும் இயலவில்லை; மறுக்கவும் இயலவில்லை, 1949ஆம் ஆண்டிற்குப் பின்னரே சண்முகனாரின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. ஆதலின் முழுமையாக அவர் வரலாறு தெரியாமல், எவ்வாறு எழுத உடன்படுவது? குடும்ப உறவு பூண்டு ஒழுகி வரும் நான் எவ்வாறு மறுப்பது? இருகன்றினுக் கிரங்கும் ஆவின் நிலை பெற்றேன். ஒருவாறு துணிந்தேன், இசைந்தேன், குறிப்புகள் தேடினேன். அறிஞர் பெருமக்கள் எழுதி வைத்த நூல்களிற் சில குறிப்புகள் கிடைத்தன. ஆண்டு மலர்களிற் சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை அடிப்படையாகக் கொண்டும் நானறிந்த செய்திகளைக் கொண்டும் எழுதத் தொடங்கினேன். பார்வதி அம்மையார் வாயிலாகச் சண்முகனாரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கேட்டறிந்து எழுதினால், பயனுடையதாக இருக்குமே யென்று பாவலர்மணி புலவர் ஆ.பழநி ஓர் அறிவுரை கூறினார். இதுவும் நன்றேயென எண்ணித் தமக்கையாரை அணுகினேன். அவரும் இசைந்து, தமது எழுபதாவது அகவையிலும் உடல் நலங்குன்றியிருப்பினும் மெல்ல மெல்ல, நினைந்து நினைந்து, பல குறிப்புகளை வழங்கினார்கள். மேற்குறித்த செய்திகளைக் கருவாகக் கொண்டு, விரிவாக்கி, இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சண்முகனார் காலத்துச் சான்றோர்களை அணுகிக் கட்டுரை பெறலாமென விரும்பி முயன்றோம். ஆனால் அவர் காலத்துப் பெருமக்களில் மிகச் சிலரே இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆதலின் அவர்தம் குடும்பத்தினரை அணுகி வேண்டினோம். சான்றோரும் சண்முகனார் தம் குடும்பத்தினரும் கட்டுரை வழங்கினர். அவரையும் நூலுள் இணைக்கப்பெற்றுள்ளன. ஒருவரைப் பற்றியே பலரும் எழுதிய கட்டுரைகளாதலின் வந்த செய்திகளே மீண்டும் மீண்டும் வந்துள்ளன எனக் கொண்டு, கூறியது கூறலெனக் கருதாது விடுக, ஒரு தனிப்பட்ட மீமிசை மாந்தரின் வாழ்க்கை, அவர்தம் குணநலங்கள் பலருக்கும் படிப்பினையாக அமையும் என்பது நாம் கருத்து. காரைக்குடி அன்புள்ள, 19,3-1989 முடியரசன்  நன்றியுரை எங்கள் தந்தையரவார்கட்கு அறவே பிடிக்காத ஒன்று. இன்னும் சொல்லப் போனால் விளம்பரத்தை வெறுப்பவர்கள். அவர்கள் விரும்பாத ஒன்றை விளம்பரம் கருதிச் செய்ய வில்லை. அக்காலத்துத் தனவணிகர்கள் அதாவது நகரத்தார் சமூகத்தில் ஒரு எடுத்துக் காட்டாக, முன்னோடியாக வாழ்ந்த வர்கள் எங்கள் தந்தையார். இளைய தலைமுறையினர், கடந்த காலப் பெரியவர்களையும், கடந்தகாலச் சம்பவங்களையும் அறிந்து அதன் மூலம் பயனும், எழுச்சியும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த நூலை வெளியிடுகிறோம். தூக்கநிலையிலிருந்த செட்டிநாட்டையும் செட்டியார்கள் சமூகத்தையும் தட்டி எழுப்பி, தேசசேவையிலும், சமூக சீர்திருத்த சேவையிலும் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கை யிலருந்தவர்களை ஒன்று சேர்த்து தனவைசிய ஊழியர்கள் சங்கம் என்ற சங்கத்தை தோற்றுவிக்க முதல் காரணமாக இருந்தவர்கள் திரு.வை.சு.ஷண்முகம் அவர்கள். தந்தையாரவர்கள் 70 ஆண்டுகட்கு முன்பிருந்தே அவர்கள் நோயில் படுக்கும் வரை நாள் குறிப்பு எழுதி வந்தவர்கள். அவைகள் இருந்திருந்தால், காங்கிரசில், சுயமரியாதை இயக்கத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளைச் சான்றுகளுடன் எழுதியிருக்க முடியும். துர் அதிர்ஷ்டவசமாக அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த நூல் வெளியிடுவது சம்பந்தமான எண்ணத்தை எனது பெரும் மதிப்பிற்குரிய அருமைத் தம்பி கவியரசர் முடியரசனிடம் வெளியிட்டேன். நூல் தொகுத்து வெளியிட உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டேன். முன் நிகழ்ச்சிகள் தெரியாத நிலையில் தம்பி முடியரசன் சிறிது தயங்கினார். பின்னர் உதவி புரிவதாக ஒப்புக்கொண்டார். பெரும் முயற்சி எடுத்துச் சான்றுகளைப் பெற்று இந்த நூல் வெளிவரச் செய்த அருமைத் தம்பிக்கு எனது உளமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் எழுத்தோவியம் வழங்கிய முத்தமிழ்க் காவலர் உயர்திரு கி.ஆ.பெ.விசுவாதம் அவர்கள், சொக்கலிங்கம் புதூர் திரு பொன். முத்தழகப்ப செட்டியார் அவர்கள், திரு. ராம.சுப்பையா அண்ணன் அவர்கள், திரு.நீலவாதி ராமசுப்பிர மணிய அண்ணன் அவர்கள், பாவலர்மணி புலவர் திரு.ஆ.பழநி அவர்கள், திரு.முல்லை முத்தையா அவர்கள், திரு.எ.பி. முத்துராமன் அவர்கள், அனை வர்க்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் அண்ணன் மக்களிடமும் என் புதல்விகளிடமும் ஐயா அவர்கள் குறித்து உங்கள் அனுபவத்தை எழுதித் தாருங்கள் என்று கூறினேன். அதன்படி எழுதித் தந்தனர். v‹ m©z‹ k¡fŸ âU.uhrh r©Kf« mt®fS¡F«, âUkâ fkyh K¤J uhkD¡F«, âUkâ rhªjh nrhkRªju« ã.vÞ.É.,¡F«, v‹ òjšÉfŸ âUkâ.RÓyh R¥ãukÂa¤â‰F«, âUkâ lh¡l® kÂnkfiy khjt‹ v«.o.,க்F« எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த நூலை வானதிப் பதிப்பகம் மூலம் வெளியிடக் கருதி அதன் உரிமையாளர் திரு.திருநாவுக்கரசு அவர்களை அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன். நான் கூறிய விவரங்களைக் கேட்டவுடன் இதை வெளியிடு வதில் அவர்கட்கும் ஓர் கடமை இருப்பது போலக் கருதி தயங்காது உடனேயே ஒப்புக் கொண்டார்கள். அவர்கட்கு எனது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மாற்றும் பலவகைகளிலும் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் எனது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். காரைக்குடி பார்வதி நடராசன் 20.4.1989  1 குடிப்பிறப்பு செட்டிநாடு கலைக்கோவில் பல எழுப்பிக் கல்வியறிவு செழித்தோங்கச் செய்துவரும் நாடு. கடவுட் கோவில்களும் கணக்கின்றிக் கட்டுவித்துப் பக்தியுணர்வைப் பரப்பிவரும் நாடு. இலக்கியங்களிற் பேசப்படும் பண்டைத் தமிழ் நாகரிகம் பட்டுப்போகாது, இன்றும் தளிர் விட்டு, அரும்பு விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மாண்புடைய நாடு. அயல் நாகரிகங்களையும் ஆவலோடு தமதாக்கிக் கொண்டு, அப்படியே ஆரத் தழுவி அகங்குளிரும் நாடு. பதிப்பகங்கள் பல நிறுவிப் பயனும் நயனும் தரத்தக்க பண்பட்ட நூல்களை வெளியிட்டு, நாடுயரத் தொண்டு செய்யும் நாகரிகப் புதுமை சேரும் நாடு. தொடங்குவது எதுவாகினும் பஞ்சாங்கத்தின் துணை யோடு நாள் பார்த்துக் கோள் பார்த்து நாடித் தொழில் செய்யும் பழைமை கூறும் நாடு. அண்டை மாநிலத்தார் அயர்ந்து, வியந்து பாராட்டும் அளவிற்கு விருந்தோம்பல் பண்பிலே வீறுகொண்டு நிற்கும் நாடு. அறப்பணிகளா? பிற பொதுப்பணிகளா? எதுவாகினும் அளந்து பார்க்காது, அள்ளியள்ளி வழங்கி, ஆராப்புகழ் கொண்ட நாடு. கணக்கும் வழக்கும், இரு கண்களாகக் கருதிக் கடைப்பிடித் தொழுகும் நாடு. ஆம்; அதன் பெயர்தான் செட்டிநாடு. நகரத்தார் (செட்டி யார்) மிகுதியாக வாழ்வதால் அப்பெயர் பெற்றுச் சிறப்புற்று விளங்குகிறது அது. இந்தியாவில் மாநிலங்கள் பலவிருப்பினும், தமிழ் மாநிலம் ஒன்றுதான் தமிழ்நாடு எனச் சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ்கிறது. அது போலவே தமிழ் நாட்டிற் பல்வேறினத்தார் மிக்கு வாழும் மாவட்டங்கள் பலவிருப்பினும், நகரத்தார் மிக்கு வாழும் பகுதி மட்டுமே செட்டிநாடு எனச் சிறப்பித்துப் பேசப்படுகிறது. பல்வேறு சிறப்புகளுடன் நாடு என்றழைக்கப்படும் சிறப்புங் கொண்டு மிளிர்கிறது இப்பகுதி. இத்தகு சிறப்பு வாய்ந்த செட்டிநாட்டில் கானாடு காத்தான் என்ற பெயர் கொண்ட சிற்றூர் ஒன்றுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு வருவோர், கானாடு காத்தான் என்ற இவ்வூரைக் கடந்துதான் வருதல் வேண்டும். இது சிற்றூராகினும், இந்தியா முழுமையும் தம் பெயர் விளங்கச் செய்த, வெள்ளையரசிடம் செல்வாக்குப் பெற்றிருந்த செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரை ஈன்றெடுத்த பேரூரும் ஆகும். அவ்வூரில் வயி. சுப்பிரமணியன் செட்டியார் என்ற பெருமகனார் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பர்மாவிலும் மலேசியாவிலும் கடைகள் இருந்தன. செல்வச் செழிப்பு மிக்கவர். அவர், தம் இல்லக்கிழத்தியாகிய அழகம்மையாச்சி யுடன் ஊரார் போற்றும் வண்ணம் இல்லறம் நடத்தி வந்தார். இருவரும் அறவோர்ப் பேணல், விருந்தெதிர் கோடல் முதலிய இல்லறப் பாங்குகள் பொருந்தப் பத்தி நெறியறிந்து, அதனைக் கடைப்பிடித்து ஒழுகி வரும் நாளில் முதலில் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தனர். அடுத்து ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றனர். பின்னர் பெண்மக்கள் இருவரைப் பெற்றெடுத்தனர். இரண்டாவதாகப் பிறந்த அந்த ஆண் மகவுக்குச் சண்முகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மக்களைச் செல்வச் செழிப்புடன் வளர்த்து வந்தனர். அக்கால வழக்கப்படி திண்ணைப் பள்ளிக்கூடத்திற் சண்முகம் சேர்க்கப்பட்டார். தமிழ், நெடுங்கணக்கு, பிறைவாய் சுவடி, எண்சுவடி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி முதலியன கற்றுத் தேர்ந்தார். தமிழ் நெடுங்கணக்கை மணலிலேதான் முறை வைத்து எழுதிப் பழகுதல் வேண்டும். பின்னர் பனை யோலையில் எழுத்தாணியால் எழுதப் பழகுதல் வேண்டும். எழுத்துகள் முத்து முத்தாக இருக்கும். எண்சுவடி முதலானவற்றை மனப்பாடம் செய்தல் வேண்டும். மனப்பாடம் செய்யும் பழக்கத்தால் அக்கால மாணவர்கள் நல்ல நினைவாற்றல் பெற்று விளங்கினர். இத்திண்ணைப் பள்ளியிற் சேர்க்கப்பட்ட நம் சண்முகம் எழுது வதிலும் மனப்பாடம் செய்வதிலும் சிறந்து விளங்கினார். ஆசிரியரால் பாராட்டப் பெறும் நன்மாணாக்கராகத் திகழ்ந்தார். குல வழக்கம் அக்காலச் செட்டி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. படிப்பதற்கென்று ஒரு சாதியிருக்கிறது. நம்குலத் தொழிலாகிய வட்டித் தொழில் செய்வது தான் நம் குல வழக்கம் என்று கருதித் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப் போடு நிறுத்திவிடுவர். சிறு பருவத்திலேயே இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளிலுள்ள வட்டிக் கடைகளுக்கு அனுப்பி வைப்பர். அக்குல வழக்கத்தின்படி நம் சண்முகத்தையும் திண்ணைப் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டனர். திண்ணைப் பள்ளியளவில் சண்முகம் நிறுத்தப் பட்டாலும் சண்முகம் செட்டியார் என்றான பின்னர் ஆங்கிலத்தில் நன்கு பேசுமளவிற்கு ஆற்றல் பெற்றார். தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார். தன் முயற்சியாலும், சிங்கப்பூர் மலேசியா பகுதிகளில் வாழ்ந்து வந்தமையாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் திறமை பெற்று விளங்கினார். திருமணமும் குடும்பப் பொறுப்பும் செட்டிநாட்டு வழக்கப்படி சண்முகத்துக்குப் பத்தாம் வயதி லேயே இலக்குமி (லெட்சுமி) என்னும் குலமகளாரைத் திருமணம் செய்து வைத்தனர். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சண்முகம் 17 அல்லது 18 வயதுற்ற நிலையில், இவர் தம் தந்தையார் வயி. சுப்பிரமணியன் செட்டியார் திடீரென இயற்கையெய்தி விட்டார். அதனால் குடும்பப் பொறுப்பு சண்முகனார் கைக்கு வந்தது. ஆயினும் பொறுப்பேற்கத்தக்க பருவம் எய்திலர். இச்சமயத்தில் இவர் இளைஞராயிருந்தமையால் மலேயா முதலிய ஊர்களில் நடந்து வந்த வணிகத்திற் கூட்டு வைத்திருந்த வர்கள் இவரிடம் ஒரு தொகையைக் கொடுத்துப் பங்கைப் பிரித்துக் கொண்டனர். சண்முகத்துக்குப் பதினெட்டு வயதாயிற்று. தக்க பருவம் அடைந்து விட்டார். வெளிநாட்டில் நடத்தி வந்த வணிகத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்குத் தொகை சரியாக வந்து சேர வில்லை; நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து கொண்டார். தமது பதினெட்டாம் வயதில் வழக்குத் தொடர்ந்தார். அன்று தொடங்கிய வழக்கு, அவர்தம் இறுதிக் காலம் வரை தீராமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்தியாவில் தேவகோட்டை சென்னை, தில்லி முதலிய ஊர்களிலும், மலேயாவில் மலாக்காவிலும் சிங்கப்பூரிலும் வழக்குகள் நடைபெற்றுப் பின்னர் இலண்டன் பிரிவிக் கவுன்சில் வரை நீடித்து நடந்தன. ஆறிடங்களில் நடந்த வழக்குகளில் நான்கில் வெற்றித் தீர்ப்பு, ஒரே ஒருமுறை எதிர்த்தரப்புக்கு வெற்றி கிட்டியது. இறுதியாக வழக்கு முடியுமுன் சண்முகனார் இயற்கையெய்தி விட்டார். அவர் வாழ்நாளிற் பெரும் பகுதியை இவ்வழக்கு எடுத்துக் கொண்டு விட்டது. செட்டிநாட்டில் இவ்வழக்குப் பரவலாக (பிரசித்தமாக)ப் பேசப்பட்டது. ஏறக்குறைய நாற்பது நாற்பத்தைந்தாண்டுகள் இவ்வழக்கு நீடித்தது. வழக்கிலும் பொதுத் தொண்டிலும் முழுமையாக ஈடுபட்டமை யால், தம் தொழிலைக் கவனிக்க இயலாது போயிற்று. இவ்வழக்கின் பொருட்டுச் செலவிட்ட தொகை பல இலக்கமிருக்கும். இதனாற் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டு வறுமைக்கு ஆளானார். இல்லறப்பயன் சண்முகனார், இலக்குமி இருவரும் ஒரு மனம் உடையவராகி இல்லறம் நடத்தி வந்தனர். j‰fh¤jY« j‰bfh©lhid¥ ngzY« jif rh‹w brh‰fh¤jY« nrh®É‹ikí« M»a bg©o®¡FÇa ïy¡fz§fŸ Ãu«g¥ bg‰W, e‰Fz e‰brŒiffŸ cilatuhŒ ïy¡FÄ M¢á mt®fŸ âfœª jikahš, ‘ïšybj‹ ïšytŸ kh©ghdhš? என ஊரார் போற்றும் வண்ணம் அவர்கள் இல்லறப் பாங்கு விளங்கியது. சண்முனாரும் பெண்ணுரிமை பேணி, வாழ்க்கைத் துணைவி யார்க்குச் சம வாய்ப்பளித்து, இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் ஆகிய அன்பும் அறனும் உடையராகி வாழ்ந்து வந்தார். கோவலனும் கண்ணகியும் போல் வாழ் கின்றனர் என ஊரார் கூடிப் பேசும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை சிறந்து விளங்கியது. இல்வாழ்க்கையின் பயனாக நன்கலமாகிய நன்மக்கட் பேறு பல பெறினும் அவை குறைப்பேறாக அமைந்து விட்டன. இறுதியில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் எஞ்சினர். மக்களைச் சீருஞ்சிறப்புமாக வளர்த்து வந்தனர். இளமைப் பருவத்திலேயே இயற்கையாகவே முற்போக்கான எண்ண முடைய ராதலின் பிள்ளைகளின் பெயரிலேயே ஒரு புரட்சி செய்தார். பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னர், தந்தையின் பெயரை இடுவதுதானே வழக்கம். அம்முறைப்படி ஆண் மகனுக்கு, ச.சோலை எனப் பெயர் வைத்தார். பெண் மகளாகிய பார்வதிக்கு, ச. பார்வதி எனப் பெயர் சூட்டவில்லை. ஆண்மகனுக்குத் தந்தை பெயரின் முதலெழுத்தை இடுவது போலப் பெண் மகளுக்குத் தாயின் பெயரில் வரும் முதலெழுத்தைத் தான் இடுதல் வேண்டுமென்று லெட்சுமி என்ற தாயின் பெயரி லுள்ள முதலெழுத்தைக் கொண்டு லெ. பார்வதி என்றே எழுதி வைத்தார். ஆவணச்சான்றுகளில் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கும் உரிமை வேண்டும். மதிப்பு வேண்டும் என்ற புரட்சி மனப்பான்மை அப்பொழுதே அவரிடம் குடி கொண்டிருந் தமை இதனாற் புலனாகிறதன்றோ? எதிர்ச்சிந்தனை எது செயினும் அச்செயலில் ஒரு புதுமை காணப்பெறும். ஏதேனும் ஒன்று செய்ய நினைத்தால் நன்கு எண்ணித் துணிவது தான் அவர்தம் இயல்பு. அவ்வகையில் தாமே எண்ணி ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் மக்களை அழைத்து, இது செய்ய எண்ணு கிறேன்; இவ்வாறு செய்ய எண்ணுகிறேன். c§fŸ fU¤bj‹d? என வினவுவார். மூத்தவராய சோலை, தமது எண்ணங்களைச் சொல்வதும் உண்டு. இளையவராகிய பார்வதி, தந்தையார் செய்வதில் தவறா இருக்க முடியும் என்று கருதி, நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி விடுவார். உடனே இவருக்குச் சினந்தோன்றிவிடும் நான் சொல்வதற்குத் தலையாட்டவா உங்களிடம் கேட்டேன்? நானென்ன முற்றும் உணர்ந்தவனா? நானும் தவறு செய்து விடலாமல்லவா? நீங்கள் அதையெதிர்த்துச் சொல்லும் துணிவு பெற வேண்டும். எடுத்ததற் கெல்லாம் ஆமாம் சாமி போடாமல் எதிர்ச்சிந்தனை செய்ய வேண்டும். அதுதான் நல்லது என்று கடிந்து கொள் வார். மனைவியார் பிரிவு இலக்குமி ஆச்சியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதுண்டு. மேற்கூறிய வழக்கின் பொருட்டு நம் சண்முகனார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார். இவர் ஒரு முறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பொழுது, இலக்குமி ஆச்சி அவர்கள் நோய்வாய்ப் பட்டார். குடும்ப மருத்துவர் வந்து பார்த்து விட்டு, உடனிருந்த மகள் பார்வதியிடம் அம்மாவின் உடல் நிலை மோசமாகி வருகிறது. இருபது அல்லது முப்பது நாளுக்கு மேல் ஓடாது. இந்த விவரத்தை அப்பாவுக்கு உடனே எழுதி விடுங்கள் என்று கூறிச் சென்றார். அவ்வாறே மகள் பார்வதியும் தந்தையார்க்கு விவரமாக எழுதி விட்டார். சிங்கப்பூரிலிருந்து வீடு வந்து சேர அப்பொழுது பத்து நாளாவது ஆகும். கப்பற் பயணம் மட்டும் எட்டு நாளாகும். இந்நிலையில், தாம் வந்து சேருமுன் மனைவி காலமாகி விட்டால் வைதிக முறைப்படி எதுவும் செய்தல் கூடாதென்றும், எவ்வாறு இறுதிச்சடங்கு நடைபெற வேண்டு மென்றும், இலக்குமி ஆச்சியின் தங்கை கணவர்க்கும் திரு. இராம. சுப்பையா அவர்களுக்கும் திரு. சொ. முருகப்பனார்க்கும் மகன் சோலைக்கும் மகள் பார்வதிக்கும் ஒரே மாதிரி ஐந்து மடல் எழுதி, அவ்வாறே நடைபெற வேண்டு மென்று தெரிவித்து விட்டார் சண்முகனார். மனைவியார் உடல் அடக்கம் செய்யப்படுமுன் அவ்வுடல் மிகுதியான மலர்களால் அணி செய்யப்பட்ட ஊர்தியில் வைக்கப் பட்டு, இன்னஇன்ன வீதிகள் வழியாகக் கொணர்ந்து, அடக்கஞ் செய்யப்பட வேண்டும். பிற சடங்குகள் செய்தல் கூடாது - என அம் மடலிற் குறிப்பிட்டிருந்தார். உடனே முருகப்பனார், இராம. சுப்பையா, கோனாபட்டுப் பழ. பழநியப்பச் செட்டியார், மகன் சோலை, மகள் பார்வதி முதலி யோர்க்குத் தெரிவித்து விட்டார். இராம. சுப்பையா அவர்கள், திருவரங்கம், உறையூர் முதலிய ஊர்களிலிருந்து தோழர்களை வரவழைத்தார். சில வீதிகளில் ஊர்வலமாக வருவதாலும் சடங்கு முறைகள் செய்யாமையாலும் குழப்பங்கள் நிகழினும் நிகழலா மென்று கருதியே தோழர்கள் வரவழைக்கப் பட்டனர். சண்முகனார் கட்டளை நிறைவேற்றப்பட்டது. சடங்கு முறைகள் நிகழாமையால் உறவினர்கள் உணவருந்தாது சென்றுவிட்டனர். சமைத்து வைத்த உணவெல்லாம் வீணாயிற்று.  2 மறுமணம் கானாடுகாத்தானில், அரண்மனை போன்ற ஒரு பெரிய வள மனைக்கு உரியவராக, அரசவாழ்வு வாழ்ந்து கொண்டிருந் தார் சண்முகனார். அம்மாளிகைக்கு இன்ப மாளிகை என்று பெயர். பெயருக் கேற்ப இன்பந்தரும் மாளிகையாக மட்டுமின்றி, அன்பு தவழும் மாளிகையாகவும் அது நிலை பெற்றிருந்தது. அதன் நடுவே நீண்டு, உயர்ந்த பெரிய கூடமொன்று உண்டு. அக்கூடத்தின் சுவரில் எதிர் எதிராக மிகப்பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். அக்கண்ணாடிக் கெதிரில் விரிந்து நீண்ட, பெரிய ஊஞ்ச லொன்று தொங்கும். கூடத்தின் மேற்பரப்பு, அருமையான வருண வேலைப்பாடுகளால் ஒப்பனை செய்யப்பட்டிருக்கும். வழுவழுப்பும் பளபளப்பும் நிறைந்த பத்திகள், பளிங்குக் கற்களா லான தரைகள், ஒளி விடும் கருங்கற்றூண்கள் அம்மாளிகையின் எழிலை மிகுதியாக்கிக் காட்டும், சுருங்கக் கூறின், அஃது ஒரு கொலு மண்டபம் போலக் காட்சி நல்கும். இதற்குக் கலியாண மண்டபம் எனப் பெயர் வைத்திருந்தனர். இது பொதுத் தொண்டர் பலர்க்கும் புகலிடமாக விளங்கியது. தஞ்சை மராட்டியர் குடும்பத்தினரைச் சேர்ந்த மஞ்சுளா பாய் என்னும் அம்மையார், சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுத் தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராகி விட்டார். தனித்து உழன்று கொண்டிருந்த அம்மையாருக்கு இப்பொதுத் தொண்டு ஆறுதலாக இருந்தது. பெரியார் செல்லுமிடங்களுக்கெல்லாம் அம்மையாரும் உடன் செல்வது வழக்கம். பெரியார் தென்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், கானாடுகாத்தான் இன்ப மாளிகையில் தங்குவது வழக்கம். அவருடன் வருவோரும் இங்கேயே தங்குவர். இவ்வாறு அடிக்கடி வந்து போனமை யால் அம்மையாருக்கும் சண்முக னார்க்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஒருவர் கருத்து மற்றவர்க்குப் பரிமாறப் பட்டது. இருவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்ட கருத்து, நீண்ட நாள் சிந்தனைக்குப் பின்னரே முளைவிடத் தொடங்கியது. கலப்பு மணத்தையும், மாதர் மறுமணத்தையும் ஆதரித்து வந்தவரல்லவா சண்முகனார். சொல்லிக் காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே சிறந்தது என்று எண்ணினார். சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு, பெரியாருடன் சேர்ந்து தொண்டு செய்துவரும் அம்மை யாரும், இளமையில் தனித்திருந்து தொண்டு செய்வதைவிடத் துணையுடன் இருந்து தொண்டாற்றுவதே மேல் எனக் கருதினார். இருவர் உள்ளங்களும் ஒரு வழிப்பட்டன. தந்தை பெரியாரின் ஒப்புதலும் கிடைத்தது. திருமணம் செய்து கொண்டனர். உரிமை வாழ்வு இருவர் வாழ்விலும் புதிய தென்றல் வீசத் தொடங்கியது. தாராள மனங்கொண்ட சண்முகனார்க்கேற்ற துணையாக மஞ்சுளா அம்மை யார் நடந்து கொண்டார். முற்போக்குச் சிந்தனை கொண்ட அம்மையாருக்கேற்ற துணையாகச் சண்முகனார் நடந்து கொண்டார். துணை என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக அவ்விருவரும் வாழ்ந்து வந்தனர். பொதுப் பணி எவ்வளவு ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் அம்மையார் செய்து வந்தாரோ, அதே ஆர்வமும் ஈடுபாடும் எள்ளளவுங் குன்றாமல், சண்முகனாரைப் பேணிக் காப்பதிலுங் காட்டி வந்தார். சண்முகனாரும் அம்மா! th§f! என்று தான் அழைப்பார். மேடையிலே பெண்ணுரிமை பேசி விட்டு, வீட்டிலே பெண்ணடி மையை வளர்த்து வரும் ஏனைய சொல் வீரர் களைப் போல் நடவாமல் வீட்டிலும் செய்து காட்டிய செயல் வீரர் நம் சண்முகனார். அவ்விருவர்தம் அன்பும், பண்பும், செயலும் நடத்தையும் இக்கால இளைஞர்க்கு, ஒரு பாடமாக வழி காட்டியாக அமைவது நலம்.  3 பொது வாழ்வு பொதுவாக மனித வாழ்வை இரண்டு பகுதியாகப் பகுக் கலாம். ஒன்று தனக்காகவே வாழும் வாழ்க்கை. மற்றொன்று, பிறருக் காகவும் வாழும் வாழ்க்கை. தனக்காகவே வாழ்ந்து, அதிலே இன்பங்கண்டு திளைப்பது சுருங்கியவுள்ளம் எனப்படும். இவ்வாழ்க்கை சிறப்புடைய தென்று சான்றோராற் பாராட்டப் படுவதில்லை. ஐயறிவுடைய உயிரினங் களும் இவ்வாறுதானே வாழ்கின்றன? பிறருக்காகவும் வாழ்ந்து, அத்தொண்டிலே இன்பங் கண்டு, அகம் மகிழ்வது விரிந்தவுள்ளம் எனப்படும். இவ் வாழ்க்கைதான் சிறப்புடைத்தென்று புலமை சான்ற பெரு மக்களாற் புகழ்ந்து பேசப்படுகிறது. மனிதன் ஆறறிவு படைத்தவன் என்பது எவ்வாறு புலப்படுகிறது? பிறருக்காகவும் வாழும் வாழ்க்கையாலன்றோ? இவ்வகையால் நோக்கும் பொழுது வயி. சு. சண்முகனாரின் வாழ்க்கை, தமக்கென வாழாது, பிறர்க்குரியாளராகவும் வாழ்ந்த வாழ்க்கையாகவே விளங்கக் காண்கிறோம். பேராயக்கட்சித் தொண்டு தொடக்கத்தில் சண்முகனார், பேராயக் கட்சி (காங்கிரசுக் கட்சி)யில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தவர். கட்சியைத் தம் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வாயிலாகக் கருதாது, அதற்காகக் கைப்பொருளை மிகுதியாகச் செலவு செய்தவர். எதிர்ப்புகள் வரினும் அஞ்சாது எதிர்நின்று, கொள்கையிற் பிடிப்புடையவராக நிமிர்ந்து நின்றவர். காந்தியடிகள் 1927 இல் தென்னாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது, புதுக்கோட்டை வழியாகச் செட்டி நாட்டுக்கு வருகை புரிந்தார். வெள்ளையர் ஆட்சிக்கு அஞ்சிய செட்டிநாட்டுச் செல்வர் சிலர், காந்தியடிகள் வருகைக்குத் தடையாக இருந்தனர். அடிகளை வரவேற்கவும் கூடாது என்று ஆணைகளையும் அறிவித்து விட்டனர். சண்முகனார், அந்த ஆணைகட்கு மருளாது, அஞ்சாது நின்று, தடைகளை உடைத்தெறிந்து, செட்டி நாட்டில் வரவேற் பளித்தார். கானாடுகாத்தானில் தமது இன்ப மாளிகைக்குக் காந்தியடிகளை அழைத்து வந்து தங்க வைத்து, வேண்டியன செய்து மகிழ்ந்தார். செட்டிநாட்டில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஒரு கெஜம் அளவுள்ள, தாமே நூற்ற கதர்த்துணியை காந்தியடிகள் ஏலம் விட்டார். வயி.சு. சண்முகனார் உரூபா ஆயிரத்தொன்று கொடுத்து, அத்துணியை வாங்கினார். ... தேவகோட்டைக்குக் காந்தியடிகள் வருகை தந்த போது, அவருக்களிக்கப்பட்ட மிகவும் சிறந்த கதர்த்துணியை ஏலத்தில் விட்டாராம். அதைக் கானாடுகாத்தான் திரு. வை.சு.சண்முகம் செட்டியார் 1001 ரூபாய்க்கு எடுத்தார். அதனைப் பொன்னெனப் போற்றி வந்து, இப்பொழுது மக்கள் காண, மியூசியத்திற்கு அளித்துள்ளார். - சி.என். கிருஷ்ண பாரதி ஆனந்த விகடன் 5.10.69 (கதர்த்துணி காந்தியடிகள் தாமே நூற்றதென்றும், ஏலம் விடப் பட்ட இடம் காரைக்குடியில் மகார்நோன்பு பொட்டல், (தற்பொழுது காந்தி சதுக்கம் என்ற இடம்) என்றும் வயி.சு.ச. மகளார் பார்வதி நடராசன் அவர் வீட்டார் மூலம் அறிந்த தாகக் கூறுகிறார்) சுயமரியாதை இயக்கப் பொருளாளர் தந்தை பெரியார் பேராயக் கட்சியிலிருந்து விலகிப் புயல் வேகத்திற் சுற்றுப் பயணம் செய்து, சுயமரியாதைக் கொள்கை களைத் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார். அக்கொள்கைகளில் செவியேற்ற சண்முகனார்க்கு அவற்றில் நம்பிக்கை பிறந்தது. அக்கொள்கைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அக்கொள்கைகள் செட்டிநாட்டிற் பரவப் பெரிதும் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் பொருளாளராகவும் செயற்பட்டு வந்தார். அக்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள், கொள்கை பரப்பும் செயற்பாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, ஊர் தோறும் சென்று, கூட்டம் போட்டுப் பேசி வருவார்கள். வெளியூர்க்குச் சென்று தொண்டர்கள் திரும்பி வருவார்களா என்ற ஐயப்பாட்டுடன்தான் மனைவி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். அக்காலத்தில் அவ்வளவு எதிர்ப்பு! தொண்டர்கள், அத்தகைய எதிர்ப்புகளிலேதான் உறுதிப் பாட்டுடன் நீந்தி வருவார்கள். சுயமரியாதை இயக்கக் கூட்டங்களுக்கு அக்காலத்தில் எப்படிப் பட்ட எதிர்ப்பிருந்தது என்பதை, அண்ணன் இராம. சுப்பையா அவர்கள், நானும் என் திராவிட இயக்க நினைவு களும் என்ற நூலில் எழுதியிருப்பதை அப்படியே தருகிறோம். படித்துப் பாருங்கள். அந்தக் காலத்துலே, (55 ஆண்டுகளுக்கு முன் காரைக்குடியிலே ஆதி திராவிடர் மாநாடு ஒன்று கூட்ட ஏற்பாடு செஞ்சேன். அப்போ டெல்லி சட்டசபையிலே தலைவராயிருந்த சர்.ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) தலைமையில் அந்த மாநாட்டை நடத்துறதாத் திட்டம் போட்டிருந் தோம். இந்த மாநாட்டுக்கு ஊரு முழுதும் எதிர்ப்பு. ஊர்ப் பெரிய மனுசனுங்க. சாதிக் காரங்க எல்லாம் ஒன்னாச் சேர்ந்துக் கிட்டு, இந்த மாநாட்டை நடத்த விடக்கூடாதுன்னு முடிவு செஞ்சாங்க. மாநாடு நடத்த எங்கயுமே எங்களுக்கு இடம் கொடுக்கலே. சினிமா தியேட்டர்லே எல்லாம் முயற்சி பண்ணினோம். ஒருத்தரும் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கடைசியிலே, எரோப்பளேன் ஆவுடையப்பச் செட்டியாரோட அண்ணன் சொக்கலிங்கம் என்பவரு தான் (புதுச்) சந்தைப் பேட்டைக்குப் பக்கத்தில் இருக்கிற அவரோட காலியிடத்திலே கொட்டகை போட்டு மாநாடு நடத்திக்கச் சொன்னாரு. அது அந்த நேரத்திலே ரொம்பப் பெரிய உதவி. தடபுடலா கொட்டகை போட்டோம். எதிர்ப் பாயிருந்த வங்களுக் கெல்லாம் ஒரே வயித்தெரிச்சல் மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. அப்போ காரைக்குடிச் சேர்மனாயிருந்த ஏவீ.பிஎல். áj«guŠ br£oah®, ‘khehlh el¤JwhD§f khehL; bfh£lif ia¤ Ô it¢R¡ bfhS¤â£lh v‹d brŒthD§f? என்று பேசினார். எதிர்ப்பாளர்கள் இவ்வாறு பேச்சளவோடு நிற்கவில்லை. சுயமரியாதை மாநாட்டுக் கொட்டகைகள் பலவற்றுக்கு நெருப்பு வைத்துக் கொளுத்திய செய்திகளை நாடறியும். எரியும் நெருப்புக்கும் எறியும் கல்லுக்கும் அரிவாள் வெட்டுக்கும் சுழற்றுங் கம்புக்கும் அஞ்சாது, சுழன்று சுழன்று கருத்துப் போர் புரிந்து வந்த சுயமரியாதை வீரர்களுக்குப் பாசறையாக, ஊர்தோறும் ஓரிருவர் தம் இல்லங்களைத் தந்து உதவிய பெருமக்களும் இருக்கத் தான் செய்தனர். இவ்வாறு தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு, போராடி வரும் வீரர்களுக்கு, களைப்பாறும் இடங்களாகக் கானாடுகாத்தானில் வயி.ச.சண்முகனாரின் இன்ப மாளிகையும் காரைக்குடியில் அண்ணன் இராம. சுப்பையா அவர்களின் சமதர்ம இல்லமும் விளங்கி வந்தன. சுருங்கக் கூறின், தென் மாவட்டங்களைப் பொறுத்த வரை, செட்டி நாட்டிலுள்ள இன்ப மாளிகையும் சமதர்ம இல்லமும் சுயமரியாதைத் தோழர்களுக்குத் தெற்குக் கேந்திரங்களாக விளங்கின என்று கூறலாம். எல்லாத் தலைவர்களும் தொண்டர் களும் வந்து தங்கிய பெருமை இவ்விரண்டு மனைகளுக்கும் உண்டு. இன்ப மாளிகையின் வாயிலில் எப்பொழுதும் இரண்டு மகிழுந்துகள் (கார்கள்) நின்று கொண்டிருக்கும். அவற்றுள் ஒன்றைத் (டுடி பேக்கர்) தந்தை பெரியாருக்கு அன்பளிப் பாக வழங்கி விட்டார். சண்முகனார் வழங்கிய அம் மகிழுந்துதான், இந்தி எதிர்ப்பின் போது, தந்தை பெரியாரிடமிருந்து அரசாங்கத் தால் பறிமுதல் செய்யப்பட்டது. குருகுலப் போராட்டம் வ.வே.சு.ஐயர் என்று எல்லாராலும் அழைக்கப் பெற்ற சிறந்த தேசிய வாதியாகிய வ.வே. சுப்பிரமணிய ஐயர் சேரன்மாதேவி என்னும் ஊரில் குருகுலம் என்ற பெயரில் ஒரு தேசிய நிறுவனத் தைத் தொடங்க முயன்றார். அந்நிறுவனத்துக்காக நம் வயி.சு.சண்முகனார் வழங்கிய ஆறாயிரம் உரூவாவுக்குச் சேரன்மாதேவியில் ஐயர் நிலம் வாங்கினார். மேலும் அதன் வளர்ச்சிக்குப் பொருள் சேர்க்க மலேயாவுக்குப் புறப்பட்டார். குமரன், ஊழியன் என்னும் இதழ்களின் விளம்பரத் தால் பெருந்தொகை சேர்ந்தது. அதனைக் கொணர்ந்து, குருகுலம் தொடங்கி, நடத்தி வந்தார். தந்தை பெரியார், பேராயக் கட்சியின் செயலாளராக இருந்த காலம். அப்பொழுதுதான் வ.வே. சுப்பிரமணிய ஐயர் குருகுலம் தொடங்கி நடத்தினார். அதன் வளர்ச்சிக்காகப் பெரியார் ஈ.வெ.ரா. டாக்டர் வரதராசுலு நாயுடு, திரு. வி. கலியாண சுந்தரனார், வயி.சு. சண்முகனார் முதலிய பெருமக்கள் அரும்பாடுபட்டனர். இந்நிறுவனத்துக்குத் தமிழர்கள் பெரும் பொருள் உதவி செய்தனர், குறிப்பாகச் செட்டிநாட்டு மக்கள் நன்கொடையே மிகுதி என்னலாம். நம் சண்முகனாரின் நன்கொடையும் உண்டு. பேராயக் கட்சியின் சார்பில் குருகுலத்துக்குப் பத்தாயிரம் உரூபா தருவதாக இசைந்து, அதன் செயலாளராக இருந்த பெரியார், முதலில் ஐயாயிரம் கொடுத்து விட்டு, மீதி ஐயாயிரம் பின்னர்த் தருவதாகக் கூறியிருந்தார். குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி உணவு. தமிழ்ப் பிள்ளைகளுக்கு வேறு உணவு, உணவு வேறு வேறாக இருந்தது மட்டுமின்றி இருந்துண்ணும் இடங்களும் வேறு வேறு. வழி பாட்டிடங்களும் வேறு வேறாக இருந்தன. சாதி வேற்றுமைகள் குருகுலத்தில் வளர்க்கப்பட்டன. இச்செய்தி பெரியாருக்குத் தெரிந்தமையால் குருகுலத்தில் சாதிபேதம் இருப்பதால் மீதி ஐயாயிரம் தர இயலாது என மறுத்து விட்டார். வ.வே.சு. ஐயர் தமது சூழ்ச்சித் திறத்தால் ஐயாயிரத்தை வேறு வகையிற் பெற்றுக் கொண்டார். இதையறிந்து பெரியார், குருகுலத்தின் மீது போர் தொடுக்கத் தொடங்கினார். இவ்வாறு சாதிப் பிரிவினையை வளர்ப்பது தவறு. குருகுல நோக்கத்துக்கும் மாறுபாடானது. தேசிய ஒற்றுமைக்கும் ஏற்றதன்று. எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே உணவு அளிக்க வேண்டும். ஒரே இடத்தில் உண்ண வேண்டும் என்று கூறிப் பார்த்தார். வ.வே.சு.ஐயர் ஒத்துவர வில்லை. காந்தியடிகள் தலையிட்டும் ஐயர் இசையவில்லை. பார்ப்பனப் பிள்ளைகளும் அல்லாத பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதற்கு நான் ஒருப்பட முடியாது. அப்படிச் செய்தால் குருகுலம் கெட்டுவிடும் என்று ஐயர் கூறிவிட்டார். பெரியாருக்கு வேகம் வந்துவிட்டது. குருகுலத்தை ஒழித்துக் கட்ட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது அமைச்சராக இருந்த எ. இராமநாதன் அவர்கள் இல்லத்தில் முதன்முதலில் ஒரு கூட்டம் கூட்டினார். பெரியார், டாக்டர் வரதராசுலுநாயுடு, எ. இராமநாதன், திரு.வி.க. என். தண்டபாணிப் பிள்ளை முதலியோர் கூடி, டாக்டர், வரதராசுலு அவர்களைத் தலைவராகக் கொண்டு, குருகுலத்தை எதிர்த்துப் போராட்டம் தொடங்கினர். தமிழகமெங்கும் சுற்றுப்பயணஞ் செய்து குருகுலத்துக் கொடுமை களையெல்லாம் எடுத்துச் சொல்லி வந்தனர். இப்போராட்டத்தில் செட்டி நாட்டின் சார்பாக வயி.சு. சண்முகனார், அறிஞர் சொ. முருகப்பனார், தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் போன்ற பெரு மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். குருகுலத்தைத் தாமே ஏற்று நடத்தவும் அணியமாக (தயாராக) இருந்தார் வயி.சு. சண்முகனார் என்பதை அறியும் போது, போராட் டத்தில் கொண்டிருந்த ஈடுபாடும் அதன் பொருட்டு ஏற்கவிருந்த ஈகமும் (தியாகம்) நன்கு விளங்கு கின்றன. இறுதியில் தேசியப் போர்வையில் வளர்ப்பதற்கென்றே தோன்றிய வ.வே.சு. ஐயரின் குருகுலம் ஒழிந்தது. சண்முகனாரைப் பற்றிக் கவிஞர் மன்னர் மன்னன், தாம் எழுதிய கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் என்னும் நூலில் குறிப்பிட்டிருப் பதைக் கீழே தருகிறோம். செட்டிநாட்டைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கப் பெரியார் வை.சு. சண்முகனாரின் மடல் வந்தது. இவர் பாரதியைப் புரந்த வள்ளல்; சேரன் மாதேவி குருகுலத்தை ஏற்று நடத்திய தீரம் படைத்தவர். கானாடுகாத்தானில் இன்ப மாளிகை எனும் மாபெரும் வளமனையே செட்டிநாட்டுச் சீர்திருத்த இயக்கப் பாசறையாக விளங்கியது. பெருமை கொண்டது. சுயமரியாதை இயக்கத்தின் ஆழமான கருத்துகளை வலியுறுத்த ஞானசூரியன் எனும் நூலினை வெளியிட்ட பெருமை இவரைச் சேர்ந்தது. இது மனுதர்மத்தின் தமிழாக்கமாகும். இனி, உலகம் சுற்றிய தமிழர் சோமலெ அவர்கள் தமது செட்டிநாடும் தமிழும் என்ற நூலில் சண்முகனாரைப் பற்றிக் குறிப்பிடுவதைக் காண்போம்; “FUFy¤âš jÄHiu¢ rk¤Jtkhf el¤j kfh¤khîl‹ ngáí« xU Koî« V‰glhik ahš, knyah eh£oš âu£l¥ g£l bghUis e‹bfhilahsÇlnk âU¥ã¡ bfhL¤J Él nt©Lbk‹W it.R.r©Kf« br£oah®, âU.É.f., டாக்டர் ப. வரதராசுலு நாயுடு, சொ. முருகப்பா, ராய. சொ. சுரேந்திரநாத் ஆர்யா, கே.எ. சுந்தரம் பிள்ளை முதலியோர் 24.3.1925-இல் சென்னையில் கூடி முடிவு செய்தனர். நீலாவதி வாழ்க்கை வரலாறு என்னும் நூலில், ஆசிரியர் எ.ஏ.கே.கே. இராசு அவர்கள் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார். நீலாவதி இராம. சுப்பிரமணியன் திருச்செந்தூரிலிருந்து நேரே சேரன்மாதேவி சென்று குருகுலம் பார்க்கச் சென்றார்கள். மேற்படி குருகுலத்துக்கு மலேயா அன்பர்கள் முக்கியமாக வயி.சு. சண்முகம் ஆகியோர் உதவி பெற்று வீ.வீ.எ. ஐயரால் நிறுவப்பட்டு, மகாதேவ ஐயரால் நிர்வாகம் செய்யப்பட்டு, வந்தது. காந்திய முறையில் ஆரம்பிக்கப்பட்ட அங்கு, மாணவர் களை இரண்டாகப் பிரித்துப் பிராமண மாணவர்களுக்குத் தனியறையிலும் மற்றவர் களுக்குத் தனியறையிலும் உணவு பரிமாறப்பட்டது கண்டு, சகோதரியார் மனம் வெதும்பிப் போனார். வ.வே.சு. ஐயரின் சாதிப்பித்தையறிந்த பாரதியார் மனம் நொந்து, தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சைக் கலந்தபின் அது தெள்ளிய தேனாமோ? நன்னெஞ்சே என்ற பாடலைப் பாடினார் என வை.சு.ச. அடிக்கடி கூறுவார் என அவர்தம் மகள் பார்வதி நடராசன் சொல்கிறார். முத்தமிழ் நிலையம் முகிழ்த்தது பாவேந்தர் பாரதிதாசன் மூத்தமகள் சரசுவதிக்குத் திருமண ஏற்பாடாகி விட்டது. திருமணச் செலவுக்குப் பணம் வேண்டுமே! பாவேந்தர் பணத்தையா தேடி வைத்திருந்தார்? மஞ்சுளாபாய் அம்மையாரிடம் தம் குடும்பச் சூழ்நிலையை விளக்கிக் கூறினார். அம்மையார், தம் கணவர் வயி.சு. சண்முகனாரிடம் கூறி, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி வந்தார். திரும்பி வந்த அம்மையார், தம் கணவரிடம் பாவேந்தர் நிலைமையை விளக்கிக் கூறினார். சிந்தித்து ஒரு முடிவெடுத் தார். காரைக்குடி இராம. சுப்பையா, முருகு, சுப்பிரமணியம், அரு. பெரியண்ணன், கோனாபட்டு இராமசாமி, திருப்புத் தூரைச் சேர்ந்த இமயவரம்பன், மு. நூர்முகமது (இராவணன்) முதலானோர், இன்ப மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர். 27.7.1943, 28.7.1943 ஆகிய இருநாளும் கூடிப் பேசினர். பேச்சின் முடிவில் முத்தமிழ் நிலையம் என்னும் பெயரில் ஒரு நிறுவனம் உருவாகியது. 1944 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் முத்தமிழ் நிலையம், பாவேந்தரின் இசையமுது என்னும் நூலைப் புதிய பதிப்பாக வெளியிட்டது. இருண்டவீடு என்னும் நூலின் முதற் பதிப்பும் இங்கிருந்துதான் வெளியாகியது. கற்கண்டு என்னும் நூலையும் வெளிக் கொணர்ந்தது. பின்னர் பாவேந்தரின் நீண்ட நாளைய எண்ணத்தை உருவாக்கும் முயற்சியில் முத்தமிழ் நிலையம் முயலத் தொடங்கியது. ஒரே இரவில் ஒரே மேடையில் சொற்பொழிவு, இசை, நாடகம், நாட்டியம் ஆகியவை கலந்து, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் படைத்துக் காட்ட வேண்டும் என்பது கவிஞரின் ஆவல். அவ்வாவலை நிறைவேற்றும் வகையில் இன்ப இரவு என்னும் பெயர் சூட்டிப் பல ஊர்களில் முத்தமிழ் நிலையம் நடத்திக் காட்டியது. மன்னர் மன்னன் எழுதிய கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல் என்னும் நூலில் இச்செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு முத்தமிழ் நிலையத்தின் வாயிலாகப் பாவேந்தர் பாரதிதாசன் புகழ் பரவத் துணை நின்றவர் நம் சண்முகனார். வானொலி கேட்போர் கழகம் தமிழ்நாட்டு வானொலியில் தமிழ்ப்பாடல்கள் குறை வாகவும் பிறமொழிப் பாடல்களே மிகுதியாகவும் கேட்டு மகிழும் வாய்ப்பைத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர். ஆம்; அதனை மகிழ்ச்சியாகத்தான் உணர்ச்சியற்ற நிலையில் தமிழர்கள் கேட்டு வந்தனர். எனினும் இளைஞர் சிலர்க்கு எப்படியோ மானவுணர்ச்சி ஏற்பட்டு, இதற்கொரு வழிகாண முயன்றனர். வானொலிப் பெட்டி வைத்திருக்கும் செட்டி நாட்டு இளைஞர்கள் கூடி, திருச்சி, சென்னை, வானொலி நிலையங்களுக்கு மடல்கள் எழுத முற்பட்டனர். தமிழ்ப் பாடல்களே பாடப்பட வேண்டு மென்றுகூட எழுத வில்லை. தமிழ்ப் பாடல்கள் மிகுதியாகப் பாடப்பட வேண்டு மென்றுதான் எழுதிக் கொண்டே இருந்தனர். தமிழ் நாட்டில், தமிழ் நாட்டு வானொலி நிலையங்களுக்கு, தமிழ் மக்களே தமிழ்ப் பாடல்கள் மிகுதியாக வேண்டு மென்று எழுதலாமா? v›tsî bgÇa ‘njr¤ Jnuhf«? இவ்வாறு தமிழர்கள் வேண்டுமென விழைவது குறுகிய மனப் பான்மையெனவும் பாஷைத் துவேஷம் எனவும் கருதப்பட்டமை யால் இவர்தம் வேண்டுகோள் மடல்கள் குப்பைக் கூடையை நிறைத்துக் கொண்டிருந்தன. இந்நிலைமையை உணர்ந்த வயி.ச. சண்முகனார் வேதனைப் பட்டார். வேதனை சிந்தனையாக மாறியது. சிந்தனை ஒரு வடிவம் பெற்றது. சண்முகனாரும் அவர் தம் துணைவியார் மஞ்சுளாபாய் அம்மையாரும் சேர்ந்து, செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரின் துணையோடு, வானொலி கேட்போர் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தைக் கானாடு காத்தானில் நிறுவிக் கிளர்ச்சி செய்து வந்தனர். கிளர்ச்சிகளால் மட்டும் தமிழ்நாடு திருந்தி விடுமா என்ன? அப்படியேதான் இன்றும் இருந்து வருகிறது. அயலவர் ஆட்சிய கன்றது. நம்மை நாமே ஆளும் நாள் வந்தது. உரிமை பெற்று விட்டோம். உரிமைக்குப் பின்னரேனும் உருப்பட்டதா தமிழ் நாடு? மேலும் சில அயன்மொழிப் பாடல்கள் புகுந்து கொண்டதுதான் கண்ட பலன்! தமிழ் நாட்டு வானொலி நிலையங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் அதுவும் கால் மணிநேரம் தமிழிசைக்கு ஒதுக்கப்பட்டிருக் கிறதென்றால் இதைவிடத் தமிழ் மொழிக்கு வேறென்ன இழிவு வேண்டும்? பெரியதொரு மொழிப்புரட்சி ஏற்பட்டாலன்றித் தமிழ் மொழிக்கு விடிவு காலமேயில்லை. fhªâaofŸ, jhT®, kiwkiyaofŸ, âU.É.f., தேவநேயப் பாவாணர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பெருமக்கள் எல்லாம் தாய்மொழிப்பற்று வேண்டுமென எவ்வளவு வலியுறுத்திக் கூறியும் தாய்மொழிப்பற்று வளராப் பாறைகளாகத் தமிழர் நெஞ்சங்கள் ஆகினவே! இவ்வாறு நாட்டு விடுதலைக்காக, தன்மான உணர்ச்சி பரவுதற் காக, சாதிவேற்றுமைகள் அகற்றப்படுவதற்காக, தமிழ்மொழி வளர்ச்சிக்காக, தமிழிசை கேட்பதற்காகப் பல்வேறு நிலைகளிற் பங்கு கொண்டு பாடுபட்டு வந்த பெருமை படைத்தவர் நம் சண்முகனார். அதுவும் தம் வாழ்க்கைத் துணைவியாருடன் பொது நலம் பேணித் தொண்டு செய்தவர்.  4 யாவருங் கேளிர் விரிந்த மனம் பொதுவாக நகரத்தார், சாதிக் கட்டுப்பாடு மிகுதியாகக் கொண்ட வர்கள். அக்காலம் சாதிக் கட்டுப்பாடு தலைதூக்கி நின்ற காலம். அவர்களுக்குள் கூடிப் பேசிச் சில கட்டுப்பாடு களை வகுத்துக் கொள்வர். அக்கட்டுப்பாடுகளிலிருந்து அணுவளவும் பிறழ மாட்டார்கள். ஒரு வேளை பிறழ நேரிட்டால் விலக்கி வைத்து விடுவர். அவ்வளவு கட்டுக் கோப்பாக வாழும் இயல்பினர் நகரத்தார் எனப்படுவோர். மு.சின்னையா செட்டியார், சொ. முருகப்பனார், இராம. சுப்பையா, வயி.சு.சண்முகனார் போன்றவர்கள் முற்போக் கெண்ண முடையவர்கள் ஆதலின் சில கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டுத் தலைநிமிர்ந்திருப்பர். அதனால் அவர்கள் பெருந் தொல்லை களுக்கெல்லாம் ஆட்பட்டதும் உண்டு. அவற்றைக் கண்டு அவர்கள் அஞ்சாது நின்று, சமுதாயச் சீர்திருத்தப் பணியில் தொடர்ந்து, பணியாற்றி வந்தனர். இவ்வாறு சீர்திருத்தப் பணியில் பேரீடுபாடு கொண்டிருந் தமையால் நம் சண்முகனார் சாதி வேறுபாடு கருதார்; செல்வத்தால் உயர்வு தாழ்வு கருதார். கல்வி அறிவால் மேம்பட்டவன், தாழ்ந்தவன் என்றும் பாரார். யாவரேயாகினும் சரிநிகர் சமமாகக் கருதி, அனைவரும் கேளிர் எனக் கருதும் மனப்பாங்கு பெற்றிருந்தார். வ.வே.சு. ஐயரும் கேளிர், வடக்குப் பக்கமிகுந்த ஆதி திராவிடரும் கேளிர். செட்டி நாட்டரசரும் கேளிர்; பெட்டிக் கடையாரும் கேளிர். சர். ஆர்.கே. சண்முகனாரும் கேளிர்; சாதாரண சண்முகம் கேளிர். அப்துல்லாவும் கேளிர்; ஆனந்தராசும் கேளிர். இவ்வாறு அனைவரையும் கேளிராகக் கருதியமையால் அவர்கள் வாழ்க்கையையும் தம் வாழ்க்கையோடு இணைத்து, அனைத்திலும் பங்கு கொண்டு வாழ்ந்தார். தீபாவளி முதல் நாள் மாலையில் அரிசனங்களை வீட்டுக்கு வரச்செய்து ஆளுக்கு ஒரு வேட்டியும், துண்டும் கொடுத்து வந்தார். நீலாவதி திருமணம் அக்காலத்தில், திருச்சியைச் சேர்ந்த எ.ஏ.கே. கலிய பெருமாள் என்பவரின் மகள் செல்வி நீலாவதி என்பவர் திராவிடன் குடியரசு, குமரன், ஊழியன் போன்ற இதழ்களில் சீர்திருத்தக் கட்டுரைகள் எழுதி வந்தார். இக்கட்டுரை வாயிலாக நீலாவதியின் அறிவாற்றலை, முற்போக்குக் கருத்துக்களை, பண்பாட்டை உணர்ந்து கொண்ட சொ. முருகப் பனார், இப்பெண்ணைச் செட்டி நாட்டுத் தனவணிக இளைஞர் ஒருவருக்கு மணஞ் செய்து வைக்க வேண்டுமென்று கருதினார். இத்திருமணத்துக்கு இராம. சுப்பிரமணியம் என்னும் இளைஞர் உடன்பட்டார். உடனே இவ்வெண்ணம் பெரியார் ஈ.வே.ரா. அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெரியார் இசைவுடன் பெண்ணின் தந்தை யாருக்கும் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சில நாள் சிந்தித்து அவரும் ஒப்புதல் அளித்து விட்டார். இக் கலப்பு மணத்தால் மணமகன் இராம. சுப்பிரமணியத்துக்குப் பல தாங்க முடியாத இடஞ்சல்களும் எதிர்ப்புகளும் சுற்றத் தார்களாலும் சாதிப் பற்றுடையோர்களாலும் பெரும் அளவில் ஏற்படும் என்பதை முன் கூட்டியே நன்கு தெரிந்த தனால் திரு. சொ. முருகப்பாவும் மற்ற சீர்திருத்த இளைஞர்களும் ஆலோசித்து, ஒரு பாதுகாப்புக் குழு ஏற்படுத்தினார்கள். அவர்கள் தீவிரவாதி களாகவும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களாகவும் உணர்ச்சி மிக்கவர்களாகவும் இருந்தனர் - எ.ஏ.கே.கே.ராஜு (நீலாவதி இராம. சுப்பிரமணியன் வாழ்க்கை வரலாறு) அப்பாதுகாப்புக் குழுவில் கானாடுகாத்தான் வயி.சு. சண்முகம் ஒருவர். யாரோ நடத்தும் கலப்பு மணத்துக்கு இவர் ஏன் பாதுகாப்புக் குழுவில் பங்கு கொள்ள வேண்டும்? முற்போக்கு முயற்சிகளில் - கலப்பு மணம் பரவ வேண்டு மென்ற ஆர்வத்தில் எவர் ஈடுபடினும் அவரெல்லாம் கேளிரே எனக் கொண்டு வாழ்ந்தவராதலின், பாதுகாப்புக் குழுவில் போர் மறவராக அவர் விளங்கினார். மறுமணம் ஒரு செட்டியார் வீட்டுப் பெண், இளமையில் கணவனை இழந்து விட்டாள். கைம்மைக் கொடுமையை எவ்வளவு நாள்தான் தாங்கிக் கொள்ள முடியும்? இளமையுணர்வுகளை - இயற்கை உணர்ச்சிகளை எத்தனை நாள் கட்டுப்படுத்தி வைக்க முடியும்? மனித உணர்ச்சிக்கு ஆட்பட்ட அப்பெண் ஒருவரை விரும்பினார். மனைவியை இழந்த அவரும் இப்பெண்ணை விரும்பினார். இருவரும் நம் சண்முகனாரிடம் வந்து உண்மையை உரைத்தனர். ‘ïUtU« cŸs‹nghL xUtiubahUt® ÉU«ò»Ö® fsh? என வினாவினார். ஆம் - என்றனர். அப்படியானால் திருமணம் செய்து கொள்ளுங்கள். பிறரறியாமல் திருட்டுத்தனமாக நடப்பது அயோக்கியத் தனம். பழிச் சொல்லுக்கும் இடமாகும். அதனால் துணிந்து திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது என்று கூறினார். அப்பெண்ணுக்கு உறவினர் ஒருவர் இவரிடம் வந்தார். சினந்த முகமும் சீறிய பார்வையும் உடையவராகி உள்ளே வந்தார். சண்முகனாரிடம் அப்பொழுது நான் உரையாடிக் கொண்டிருந்தேன். சண்முகனார் வந்தவரை நோக்கி, முறைப்படி வாங்க! ïU§f! என்றார். வந்தவர் அமரவில்லை; வரவேற்புக்கும் மறுமொழி தரவில்லை. நான் இங்கே உட்கார வரவில்லை; நீ செய்த அக்கிரமத்தைக் கேட்டுட்டுப் போகத்தான் வந்தேன் என்றார் வந்தவர். அக்கிரமமா? v‹d m¡»uk«? என்று வினவினார் சண்முகனார். ஒன்றுந் தெரியாதது போல் பேசுகிறாயே! எங்க குடும்ப கௌரவத்தையே கெடுத்து விட்டாயே! எங்க வீட்டுப் பெண் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டாயே! Ú cU¥gLthah? என்று பொரிந்து தள்ளிவிட்டார். அடே! mij¢ brhš»Öuh? என்று கூறிவிட்டு அமைதியாக நிலைமைகளை விளக்கினார் சண்முகனார். வந்தவர் செவிசாய்ப்பதாக இல்லை. உன் சமாதானத்தைக் கேட்க வரவில்லை. நீ உருப்படுவாயா? všyh¤ijí§ bfL¤J É£lhna! என்று குதிக்கிறார். சரி, நீங்கள் ஆத்திரத்தோடு வந்திருக்கிறீர்கள்; எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் உங்களுக்கு ஏறாது; நான் செய்ய வேண்டி யதைச் செய்தேன். உங்கள் ஆத்திரம் தீரத் திட்டிவிட்டுப் போங்கள், என்று சொல்லி விட்டு அமைதியானார். வந்தவர் எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவும் பேசித் தீர்த்துவிட்டு வெளியேறி விட்டார். சண்முகனார் சிரித்துக் கொண் டிருந்தாரே தவிர, வாயைத் திறக்கவே இல்லை. அவ்வளவு வசவுகளையும் கேட்டு அமைதியாகத் தாங்கிக் கொண்டிருந்த நெஞ்சுரத்தை, பேராண்மையை - தம்மையிகழ் வார்ப் பொறுக்கும் திண்மையை நான் நினைந்து நினைந்து வியந்தேன். பின்னர், முன்னிகழ்ந்தவற்றையெல்லாம் என்னிடம் விளக்கிக் கூறினார். இவ்வளவு இழிமொழிகளையும் ஏன் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்? மறுமணம் செய்து கொண்ட அவ்விரு வரையும் தங்கேளிராக்கிக் கொண்டமையால், அதனால் வரும் இடுக்கண்களையும் தாங்கிக் கொண்டார். சரசுவதி, பாவேந்தர் பாரதிதாசன் பேரன்பிற்குரிய மூத்த மகள்; குடும்ப விளக்கு என்னும் நூல் உருக்கொள்ள அடிப்படைக் காரணமாக விளங்கியவர். பெண்மைக்குரிய அனைத்திலக்கணங் களும் ஒருங்கே அமையப் பெற்றவர். இம்மகட்கு மணமகனைத் தேர்ந்தெடுத்தது, மணமகள் இசைவு பெற்றது, மணமகனைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றது, மணமகள் வீட்டை அழகுபடுத்தியது, பேசி முடித்தது, திருமணச் செலவுக்கு ஏற்பாடு செய்தது, திருமணத்தை நடத்தி வைத்தது எல்லாமே வயி. சு. சண்முகனாரும் அவர்தம் துணைவியார் மஞ்சுளா அம்மையாரும் சேர்ந்து செய்த ஏற்பாடு களே. பாவேந்தர் குடும்பத்துடன் இவர் குடும்பம் எத்தகைய கேண்மை கொண்டிருந்தது என்பதை அவர்கள் வாயிலாகவும் பிறர் வாயிலாகவும் அறிவோம். மணமகன் கண்ணப்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட நான், நேராகப் புதுவை சென்று பாவேந்தரைக் கலந்து கொண்டு சிதம்பரம் சென்றேன். அன்பழகன் அப்போது மாணவர் என்று எண்ணுகிறேன். அன்பழகன் வீட்டுக்குக் கண்ணப் பரை வரச் சொல்லி நேரில் பார்த்தேன். அழகும் அடக்கமும் மிக்க இளைஞராக அவர் விளங்கினார். பார்த்தவுடன் அவரை எனக்குப் பிடித்து விட்டது. அவருடைய இசைவைக் கேட்டுக் கொண்டு பெண் பார்க்கும் அடுத்த கட்டத்துககு ஏற்பாடு செய்தேன். புதுவையில் பெண் பார்க்க நாளும் குறிக்கப்பட்டது. என் சுமையை (நகைகள்) சரசுவதியின் உடம்பில் ஏற்றி அவளை அலங்கரித்தேன். கண்ணப்பர் வந்தார். பெண்ணுக்கும் பிடித்தது. பெண்ணும் கண்ணப்பர் கண்ணுக்குப் பிடித்தது. திருமணம் உறுதி செய்யப் பட்டது. இவ்வாறு முருகு சுந்தரம் எழுதிய குயில் கூவிக் கொண்டிருக்கும் என்னும் நூலில் மஞ்சுளாபாய் அம்மையார் குறிப்பிடுகிறார். இனி மணமகள் சரசுவதி என்ன கூறுகிறார் என்று அவர் வாயி லாகவே கேட்போம். 21-1-44இல் எனக்கும் புலவர் கண்ணப்பனாருக்கும் திருச்சிராப் பள்ளியில் பதிவுத் திருமணம் நடைபெற்றது... என் திருமணம் நடைபெறப் பெரிதும் முயற்சியெடுத்துக் கொண்டு உறுதுணையாக இருந்தவர்கள், கானாடுகாத்தான் தனவணிகர் திரு. வை.சு. சண்முகம் செட்டியாரும், அவரது துணைவியாரான மஞ்சுளாபாய் அம்மை யாரும் ஆவர். அம்மையார் எங்கள் குடும்பத்தின் பால் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரை அத்தை என்று அன்போடு அழைப்பது வழக்கம். திருமதி மஞ்சுளா பாய் அம்மையார் அவர்களே மாப்பிள்ளை பார்த்து விட்டுத் திடீரென்று ஒருநாள் புதுச்சேரி வந்தார். அவரே ஒட்டடை அடித்து வீட்டைத் தூய்மை செய்தார். பால் வாங்கிக் கொண்டு வந்தார். பெண் பார்க்கும் படலத்தை உடனிருந்து நடத்தினார். திருச்சியில் திருமணம் பதிவு செய்யப்படும் பொழுது பதிவாள ருக்கும் பாவேந்தருக்கும் சொற்போர் நடக்க விருந்த வேளையில் நம் சண்முகனார் தலையிட்டு, அதை நிறுத்தித் திருமணம் பதிவா வதற்கு உறுதுணையாக இருந்தார் என்பதைப் பாவேந்தர் மகன் மன்னர்மன்னன் தாம் எழுதிய கருப்புக் குயிலின் நெருப்புக் குரலில் எழுதியிருப்பதைக் காண்போம். 21-1-1944 இல் திருச்சி துணைப்பதிவாளரும் திருமணங் களுக்கான பதிவாளருமான கே. சுப்பிரமணிய ராவ் முன்னி லையில், மணமக்களும் பெற்றோரும் உற்றாரும் நண்பர் களும் போய் நின்றோம். kzkfË‹ jªijahiu, (ghntª jiu) bga®, KftÇbašyh« nf£L¡ bfh©nl tªj gâths®, ‘kj«? என்று வினவினார். kzkfË‹ jªij ‘mbjšyh« vJ¡F? என்று மறுவினாத் தொடுத்தார். திருமணப் பதிவு நடைபெறாமல் விவாதம் நீளும் போலி ருந்தது. திரு. டி.பி. வேதாசலமும், வயி. சு. சண்முகனாரும் பதிவாளரைச் சந்தித்து நிலைமையைச் சரிக்கட்டித் திருமணம் பதிவானது. வயி. சு. சண்முகனார், சண்முகவேலாயுதம், கி.ஆ.பெ. விசுவநாதர் ஆகியோர் சான்றாளர் கையொப்ப மிட்டனர். இனி, இத்திருமணம் பற்றி, மணமகள் தந்தை பாவேந்தர் பாரதிதாசனிடம் கேட்டுப் பார்ப்போம். அவர், நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாருக்குக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். புதுச்சேரி 8-1-44 அன்புள்ள திரு. ரெட்டியார் அவர்களுக்கு, வணக்கம், நானும் வை.சு.வும் கோனாபட்டார்களும் திருமண விஷயமாகப் பேசி முடிவு செய்த திட்டப்படி, இன்று வை.சு.வுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தின் நகலை இதில் வைத்திருக்கிறேன். இதை மனத்தில் வைத்துக் கொண்டு தயவு செய்து தாங்கள் கரூருக்கு நேரில் மாப்பிள்ளை இருக்கும் இடந்தேடிச் சென்று, நான் தங்களை அனுப்பிய தாகச் சொல்லிப் பேசவும், அதில் சொல்லியுள்ள திட்டங்களை அவர்களிடம் (கண்ணப்பரிடம்) கூறிப் பதில் தெரிந்து எழுதவும். ஏன் தங்களை அனுப்புகிறேன் என்றால் வை.சு. மூலமாகத் தான் மணமகனுடைய கருத்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நேரில் என்னிடம் திருமணப் பேச்சு நடக்கவில்லை. ஆதலால் ஒருவருக்கிருவராகக் கலந்து பேச வேண்டுமென்று நான் கருதுகின்றேன். பாரதிதாசன். இம்மடல் வாயிலாக, சரசுவதியின் திருமணத்தில் பாரதி தாசனுக்கு எவ்வளவு தொடர்பிருந்தது; வயி.சு. சண்முகனாருக்கு எவ்வளவு தொடர்பிருந்தது? என்பதை நாம் தெரிந்து கொள்கி றோம். (இம்மடல் முருகு சுந்தரம் தொகுத்த அரும்புகள், மொட்டுகள், மலர்கள், என்னும் நூலில் உள்ளது.) பாவேந்தரிடம் இடையறாப் பற்றுடைய நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாரிடம் உசாவிப் பார்ப்போம். இத்திருமணங் குறித்து என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்வதும் நல்லது தானே? நான் சென்ற முறை கானாடுகாத்தான் சென்றிருந்த போது, பாவேந்தரின் மூத்த மகளான சரசுவதியின் திருமணம் பற்றிப்பேச்சு நடந்தது. திரு.வை.சு. சண்முகம் செட்டியாரும் அவர் மனைவி மஞ்சுளாபாய் அம்மையாரும் சரசுவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் தீவிரமாக இருந்தனர். வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த புலவர். கண்ணப்பன் அவர்களே அந்த வரன். திருப்பூர் திராவிடர் கழகத் தோழரும் புரவலருமான திரு. எ.ஆர். சுப்பிரமணியம் வீட்டில் புலவர். கண்ணப்பனும் மஞ்சுளாபாயும் எதிர்பாராமல் சந்தித்துப் பேசியபோது இந்தத் திருமணப் பேச்சுத் துவங்கியது. பிறகு வை. சு. சண்முகம் தம்பதியர் இத்திருமண முயற்சியில் முன்னின்று எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். இவ்வாறு செல்லப்ப ரெட்டியார், அரும்புகள், மொட்டுகள், மலர்கள் என்ற நூலிற் குறிப்பிடுகின்றார். இறுதியாக, சரசுவதி, கண்ணப்பர் திருமண அழைப் பிதழை நோக்கினால் பாவேந்தர் குடும்பத்துக்கும் வயி. சு. சண்முகனாரின் குடும்பத்துக்கும் எவ்வளவு நெருங்கிய உறவு இருந்தது என்பது புலனாகும். இதோ அழைப்பிதழ்: திருமணம் நிகழ் 1944-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 23-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 9-மணிக்குச் சேலம் உயர்நிலைப் பள்ளி பிரின்ஸிபால் உயர்திரு. அ. ஹிராமசாலீக்கஷிண்டர் எம்.ஏ., எல்.,டி., அவர்கள் தலைமையில் புதுவை கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) மகள் சரசுவதியும் கரூர் தாலுக்கா, கட்டிப்பாளையம், தி.க. ஆறுமுக முதலியார் மகன் வித்துவான் கண்ணப்பனும் கட்டிப்பாளையம் மணமகன் இல்லத்தில் திருமணம் புரிந்து கொள்வதில் தாங்கள் சுற்றம் சூழ வந்திருந்து சிறப்புறு விக்க வேண்டுகின்றோம். ஈ.வே. ராமசாமி, மஞ்சுளாபாய் வை. சு. தங்கள் வருகையை எதிர்நோக்கும் வை.சு. சண்முகம், கானாடுகாத்தான், அ.பழ பழனியப்ப செட்டியார், ஆவினிப்பட்டி, மு. இராமசாமி செட்டியார் கோனாபட்டு, கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்) e.கிUZzuh#&, போடிநாயக்கன் பட்டி, முத்துசாமி முதலியார், கட்டிப்பாளையம், பி. சண்முகவேலாயுதன், ஈரோடு, தி.க. சின்னுமுதலியார், கட்டிப்பாளையம் (இவ்வழைப்பு, கறுப்புக் குயிலின் நெருப்புக் குரலில் வெளி யாகியுள்ளது - ஆ-ர்.) தோழர் சீவானந்தம் தொடர்பு பொதுவுடைமைக் கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவராக விளங்கிய தோழர். ப. சீவானந்தம் மேடை தோறும் அரியே றென முழங்கிவிட்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள அடிக்கடி இன்பமாளி கைக்கு வருவதுண்டு. அவர் வரும்பொழுது, அயலவர் போலவோ விருந்தினர் போலவோ வரவேற்கப்படுவதில்லை. அவ்வீட்டிற்கு உரியவர் போலவே வரவேற்கப்படுவார். அவர் இன்பமாளிகையில் தங்கியிருக்கும் பொழுது வேண்டிய அனைத்தும் செய்து தரப்படும். அவர் ஆடம்பர வாழ்வு வாழ்பவரல்லர். எனினும் நாட்டிற்காகத் தம்மையே ஈடுபடுத்திக் கொண்ட தலைவ ராயிற்றே, அவரை நன்கு பேணிக்காக்க வேண்டி, அவரைக் கண்ணுங்கருத்துமாகக் கவனித்து வருவார் சண்முகனார். இங்கே சீவா தங்கியிருக்கும் பொழுது கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தாக வேண்டும். இல்லை யென்றால் சண்முகனார் விடமாட்டார். வற்புறுத்தி எண்ணெய் நீராடும் படி செய்து விடுவார். உணவு வகைகளும் ஏற்ற வகையில் ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துச் சமைக்கச் சொல்லுவார். சீவாவுக்கு அறிவுரைகளும் கூறுவார். நீங்கள் நெடுநாள் உயிர் வாழ வேண்டும்; தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும். அதனால் உரத்துப் பேசுவதைச் சற்றே குறைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பும் கண்டிப்பும் கலந்த குரலில் கூறுவார். கிடைத்தற்கரிய உயரிய நூல்கள் சண்முகனாரிடம் இருக்கும். சீவா வரும்பொழுதெல்லாம் தமக்கு வேண்டிய நூல்களை எடுத்துச் செல்வார். ஒரு தடையும் இராது. அந்த அளவிற்கு உறவு வளர்ந்திருந்தது. அண்ணல் சுப்பிரமணியனார் புதுக்கோட்டையில் அண்ணல் சுப்பிரமணியனார் என்னும் பெருமகனார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருக்குறள் கழகத்தலைவர். குறள் நெறி வாழும் கொள்கையர், அடக்கம் முதலிய பண்புநிறை சான்றோர். கல்வித் தொண்டே கடவுள் தொண்டென ஆற்றி வரும் தொண்டர். 1959 ஆம் ஆண்டு அவருக்கு மணிவிழா வந்தது. நாங்கள் சிலர் கூடி விழாக் கொண்டாட முனைந்தோம். ஆர்ப்பாட்டங்களையோ ஆரவாரங்களையோ விளம்பரங் களையோ விரும்பாத இயல்பினராதலின் மறுத்து விட்டார். அப்பொழுது தற்செயலாகச் சண்முகனார் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். எங்கள் பேச்சில் கலந்து கொண்டார். அண்ணலார் மறுத்துரைப்பதையும் அறிந்து கொண்டார். நீங்கள் விழா நடத்துங்கள்! வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நேரே அண்ணலாரிடம் சென்றார். என்ன நீங்கள் மணிவிழாக் கொண்டாடக் கூடாதென்று சொன்னீர்களாமே? பிள்ளைகள் ஆசைப் படுகிறார்கள். நீங்கள் தடை சொல்லக் கூடாது என்று சண்முகனார் கூறினார். அதெல்லாம் பெரியவர்களுக்காகச் செய்ய வேண்டியது. நான் சிறியவன்; எனக்கெதற்கு? என்று அடக்கமாக மறுமொழி தந்தார் அண்ணலார். பெரியவங்களாவது? சின்னவங்களாவது? உங்களைவிடப் பெரியவன் எவனிருக்கிறான்? விழா நடந்து தான் தீரும். நீங்கள் பிள்ளைகள் முயற்சியில் தலையிடக் கூடாது என்று ஆணை யிட்டது போல் கூறிவிட்டு எழுந்து வந்து விட்டார். எங்களிடம் வந்தார். நீங்கள் விழாவிற்கு முயற்சி செய்யுங்கள்; நான் சொல்லி விட்டேன் என்றார். நாங்கள் வெற்றிக் களிப்புடன் விழாக் குழு அமைத்து மிக்க சிறப்புடன் மணி விழா நடத்தி முடித்தோம். அக்குழுவில் சண்முகனாரும் ஒருவராவார். மேரி சுப்பிரமணியம் திருமணம் ஈரோட்டிலுள்ள என் நண்பர் சீ.ப. சுப்பிரமணியன் என்பவர் மேரியென்ற பெண்ணை விரும்ப, அப்பெண்ணும் இவரை விரும்ப இருவரும் மனமொத்தவராகி, உடன் போக்காகப் புறப்பட்டுக் காரைக்குடிக்கு என்னிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் வீட்டில் எவரும் எதிர்ப்புரை கூறார். எனினும் அச்சம் மீதூரப் புறப்பட்டு வந்து விட்டனர். வந்து. எங்கள் வீட்டார் தேடி வருவது உறுதி. அதனால் சில நாள் தலை மறைவாக இருக்க வேண்டும். எங்காவது பாதுகாப்பான இடத்திற் கொண்டு போய் வைத்து விடுங்கள் என்று வேண்டினர். யாது செய்வதென எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. எண்ணிப் பார்த்தேன். சண்முகனார் என் கண்முன் தோன்றினார். 20-4-1956 அன்று விரைந்து அவரிடம் அழைத்துச் சென்றேன். நடந்தவற்றை விளக்கிக் கூறிவிட்டுச் சில நாள் இவர்களை இங்கே தங்க வைக்கலா மென்று கருதுகிறேன் என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். இதற்கென்ன இவ்வளவு தயக்கம்? பிள்ளைகளை விட்டு விட்டுப் போ; நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உரிமை யுடன் கூறிவிட்டு, மேசைமேலிருந்த மணியை அழுத்தினார். அவர்தம் பேத்திகள் வந்தனர். அவர்களை நோக்கி, பிள்ளையை உள்ளே அழைத்துக் கொண்டு போய் வேண்டியவற்றைக் கவனி என ஆணையிட்டு விட்டுச் சுப்பிரமணியத்திடம் உரையாடினார். மண மக்களுக்குப் புதிய வீடாகத் தோன்றவில்லை. பழகிய வீடாகவே தோன்றியது. அந்த அளவிற்கு அனைவரும் இவர்களுடன் பழகினர். ஒரு வாரம் கழித்து அவர்களை அழைத்து வரச் சென்றேன். என்ன அவசரம்? mj‰FŸ V‹ miH¤J¢ bršy nt©L«? என்று கடிந்து கொண்டார். திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும், அதற்காக அழைத்துச் செல்கிறேன் - என்று கூறினேன். சரி, அப்படியானால் அழைத்துச் செல். ஏதேனும் உதவி தேவையென்றால் உடனே இங்கே வா என்று கூறினார் 30-4-1956 காரைக்குடியில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. இவ்வளவு நாள் வைத்திருந்தமைக்காகவும் இன்னும் உதவி தேவையென்றால் செய்வதாக மொழிந்தமைக்காகவும் மகிழ்ந்து முறைப்படி நன்றி கூறினேன். உடனே அவர்க்குச் சினம் தோன்றி விட்டது. யார் யாருக்கு நன்றி சொல்வது? என் பிள்ளைகள் இங்கிருந்ததற்கா நன்றி? இந்த மாதிரியெல்லாம் பேசாதே என்று உரத்த குரலில் கூறினார். என் உள்ளம் நெகிழ்ந்து விட்டது. இன்பமாளிகையில் இருக்கும் பொழுது இப்படிக் கூறியிருந்தால் நெகிழ்ந்திருக்க மாட்டேன். இன்ப மாளிகை கைவிட்டுப் போன பின்னர்- ஓட்டுக்குடிலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது - செல்வ வளம் சுருங்கிவிட்ட பிறகும் இவ்வளவு உரிமையுணர்வுடன் உதவும் மனப்பாங்குடன் மொழிந்த மொழிகள் தாம் என்னை உருக வைத்து விட்டன. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஆறு போலச் செல்வப் பெருக்கற்ற நிலையிலும் உதவ வேண்டும் என்ற வள்ளன்மையை என்னென்பது?  5 விருந்தோம்பல் உண்மைத் தணிகாசலம் பல ஆண்டுகளுக்கு முன் திரைப்படம் ஒன்று வெளி வந்தது. அப்படத்தில் எ.வீ. ரங்காராவ் என்ற நடிகர் தணிகாசலம் என்ற உறுப்பினராக நடித்தார். அருமையான நடிப்பு! இவர் இல்லத்திற்கோ ஊருக்கோ எவரேனும் வந்து விடின், அவ்வில்லத்திற் கட்டாயம் உண்ணுதல் வேண்டும். உண்ணா விடில் விடார். அத்தகு தாராள மனமுடையவர். பிறர் எவராகினும் அவர்க்கு விருந்து படைப்பதிலே தணிகாசலத் துக்குத் தணியாத இன்பம். ஒரு நாள் புதியரொருவர், இவருடைய இல்லத்திற்கு வந்திருந்தார். அவரை உண்ணுமாறு அழைத்தார். வந்தவரோ மறுத்துரைத்தார். தணிகாசலம் வெகுளத் தொடங்கி விட்டார். எக் ஜில்லா போர்டு மெம்பர், மாஜி பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட், எ.கே. தணிகாசலம் என்றால் இந்த ஊருக்கே தெரியுமே. இங்கே வந்துவிட்டு நம்ம வீட்டிலே சாப்பிடாமற் போறதாவது? (பணி யாளரை நோக்கி) டே! கதவைச் சாத்து, ஐயா சாப்பிட்ட பிறகு வெளியில் விடு என்று ஆணையிட்டார். இது திரைப்பட நிகழ்ச்சி, ஆகினும் இத்தகு மாந்தர் உண்மை வாழ்க்கையிலும் அங்கங்கே இருத்தலையும் காண்கிறோம். திரைப்படத்திலே தணிகாசலம் கானாடு காத்தானிலே சண் முகனார், இன்ப மாளிகைக்குச் சென்று வந்தோர் அறிவர் அங்கு விருந்தோம்பும் முறைகளை. அவர்தம் உளப்பாங்கறிந்து மஞ்சுளா அம்மையாரும் அவ்வாறே அன்பின் சின்னமாக நின்று விருந்து படைப்பார். தாயும் தந்தையும் தம்பிள்ளைகளை எவ்வாறு வற்புறுத்தி வற்புறுத்தி, ஊட்டியூட்டி. உண்ணச் செய்வரோ அவ்வாறே இது உடம்புக்கு நல்லது, இதை உண்ணுங்கள்; இன்னும் உண்ணுங்கள் என்று வற்புறுத்தி, உண்ணச் செய்வார். அவ்வில்லத்திற்குட் புகுந்தோர் உண்ணாமல் வெளி வருதல் இயலாது. கட்டாயம் உண்டு தான் ஆக வேண்டும். அகம் மலர முகம் மலர, இன்சொற்பேசி, உண்ண வருக என்று அழைப்பது தான் இயல்பு. ஆனால் சண்முகனார் அவ்வழக்கத்திற்கு மாறுபட்டவர். சாப்பிடுங்கள் என்று ஆணைதான் இடுவார். ஆனால் அவ்வாணையில் அன்பும் உரிமையும் உறவும் அளவளாவிக் கிடக்கும். வந்தோர், பரிமாறப்பட்ட உணவின் முன்னர் அமர்வதைத் தவிர, மறுமொழி கூறவே இயலாது. பொதுவாக விருந்தோம்பும் பண்பிலே செட்டிநாடு தனிப்புகழ் பெற்றது. இவரோ அதிலும் ஒரு தனித்தன்மை படைத்தவர். உளம் ஒன்றிய முறையையும் கலந்து கொடுப்பார். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் நல்வியல்பு கொண்டவர் சண்முகனார். அதிலே இன்பங் கண்டு திளைப்பவர். வருவோர்க்கெல்லாம் விருந்து காந்தியடிகள் இவ்வில்லத்தில் தங்கியிருந்த பொழுது, அவருடன் வந்த பெருமக்களுக்கும் அண்ணலைக் காண வந்த தொண்டர் களுக்கும் நூற்றுக்கணக்கானோர்க்கும் இங்கே தான் விருந்து! பெரியார் வருங்கால் அவர்தம் படை மறவர்க்கும் தொண்டர் களுக்கும் இங்கேதான் விருந்து! பாரதியார் வந்தார். அவரைக் காண நாமக்கல் கவிஞர் வந்தார். பாரதி அன்பர்கள் வந்தனர். அனைவர்க்கும் இங்கே தான் விருந்து! அவர் (பாரதியார்) தங்கியிருந்த ஜாகைக்குப் போனோம். அங்கே பாரதியாரைப் பார்க்கப் பல பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் அங்கே விருந்து நடந்தது. என்று நாமக்கல் கவிஞர் என் கதை என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார். பாரதிதாசன் வருவார். தோழர் சிலரும் உடன் வருவர். பல நாள் தங்குவர். இங்கேதான் விருந்து. பாவேந்தர் மகள் சரசுவதிக்கும் கண்ணப்பருக்கும் திருமண மான புதிதில், இருவரும் கானாடுகாத்தானுக்கு வந்து, இன்ப மாளிகையில் சில நாள் தங்கியிருந்து விட்டு மகிழ்ச்சியோடு திரும்பினர். பாரதிதாசன் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுக் கானாடு காத்தானுக்கு வருமுன், கானாடுகாத்தானுக்கு வந்து என்னைச் சந்திக்க என்று பலர்க்கும் மடல் எழுதி விடுவார். அனைவரும் வந்து சேர்வர். வந்தோர் அனைவர்க்கும் இங்கேதான் விருந்து! சான்றுகள் குயில் கூவிக்கொண்டிருக்கும் என்ற நூலில் மதுரைத் தனுக் கோடி ராசு என்பார் கீழ்வருமாறு எழுதுகிறார். பாவேந்தர் ஒரு முறை செட்டிநாடு வந்தபோது, கானாடு காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் வீட்டிற்கு வரும்படி எனக்குக் (தனுக்கோடிராசு) கடிதம் எழுதியிருந்தார். வை.சு. சண்முகஞ் செட்டியார் கானாடுகாத்தானின் குறிப்பிடத்தக்க பெருஞ்செல்வர்களில் ஒருவர். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்று பாவேந்தரைப் பார்த்தேன். அதன் பிறகு பாவேந்தர் தெற்கு மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் எனக்குக் கடிதம் எழுதுவார். நான் சென்று அவரோடு இருப்பது வழக்கம். என்னைப் பார்க்காமல் செல்ல மாட்டார். இனி, மஞ்சுளாபாய் அம்மையார், குயில் கூவிக் கொண் டிருக்கும் என்னும் அதே நூலிற் குறிப்பிடும் செய்திகளைக் காண்போம். நீதிக் கட்சித் தேர்தல் பிரசாரம் முடிந்து பெரியார் ஈ.வெ.ரா. கொடைக்கானலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந் தார். நானும் (மஞ்சுளாபாய்) பூவாளுர் பொன்னம் பலனாரும், வேறு சில இயக்கத் தொண்டர்களும் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். (இஃது அம்மையார் திருமணத்துக்கு முன்) வை.சு.ச. சுயமரியாதை இயக்கத்தின் பொருளாளர். சுய மரியாதைத் தொண்டர்கள் தெற்கு மாவட்டங்களுக்குப் பிரசாரத்து க்குப் போனால் கானாடு காத்தான் இன்ப மாளிகையில் தான் பொதுவாகத் தங்குவது வழக்கம். அதுதான் அப்போது எங்கள் தெற்குக் கேந்திரம். (இதுவும் திருமணத்துக்கு முன்) சுயமரியாதை இயக்கத்தின் இதயக்குரலாக, சங்க நாதமாக விளங்கிய பாவேந்தர் தொடர்பு எங்கள் குடும்பத்துக்கு இன்றி யமையாததாகி விட்டது. தென் தமிழ் நாட்டுக்கு வந்தால் இன்ப மாளிகையே அந்தப் புதுவைச் சிறுத்தையின் பாசறையாக விளங்கும். ஆசான் பாரதி அமர்ந்திருந்த எங்கள் கூடத்து ஊஞ்சல் அவர் மாணவரையும் தாலாட்டியது. எப்போது வந்தாலும் சில நாள்கள் இன்ப மாளிகையில் தங்கியிருந்து ஓய்வு பெற்றுச் செல்வார். செட்டிநாட்டு இளைஞர் பட்டாளம் தேனீக்களாக அப்புதுவைத் தேனடை யைச் சூழ்ந்து கொள்ளும் (இது திருமணத்துக்குப் பின் எழுதியது) செல்வச் செழிப்புடன் வாழ்ந்த காலத்தில் சிறந்த முறையில் விருந்தோம்புவது உலகோர் இயல்பு. ஆனால் முட்டுப்பாடுற்ற காலத்தில் முகங்கோணாது, விருந்தோம்புவது தான் தலைசிறந்த பண்பாகும். வருந்தும் நிலையிலும் விருந் தோம்பும் அருளாண்மை இவர்பாலுண்டு. அதனை அம்மையாரே கூறுகின்றார். எங்கள் குடும்பம் கானாடுகாத்தானிலிருந்து, குடிபெயர்ந்து, திருவானைக்காவலில் கொஞ்ச நாள் தங்கியது. அப்போது பாவேந்தர், குடும்பத்தோடு வந்திருந்து, எங்களுடன் தங்கி யிருந்தார். கண்ணப் பரும் சரசுவதியும் வந்திருந்தனர். - குயில் கூவிக் கொண்டிருக்கும் முருகு சுந்தரம் இனி நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியார் என்பவர், முருகு சுந்தரம் தொகுத்த அரும்புகள், மொட்டுகள், மலர்கள் என்னும் நூலிற் குறிப்பிடுவதாவது: கானாடுகாத்தானுக்குப் புறப்பட்டு வரும்படி கவிஞரிட மிருந்து (பாரதிதாசன்) எனக்கோர் அவசரக் கடிதம் வந்தது. கானாடு காத்தான் தனவணிகர் திரு. வை.சு. சண்முகம் அவர் மனைவியார் திருமதி மஞ்சளாபாயும் பாவேந்தருக்கு மிகவும் வேண்டியவர்கள். வை.சு. சண்முகஞ் செட்டியார் அப்போது செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் வீடான இன்ப மாளிகைக்கு நான் சென்றேன். பாவேந்தரும் எனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தார்கள்... ஒரு திங்கள் கழித்து நானும் பாவேந்தரும் மீண்டும் கானாடுகாத்தான் சென்றோம். இவ்வாறு இன்பமாளிகை எப்பொழுது பார்த்தாலும் விருந்து! விருந்து! விருந்து மயமாகவே கலகலப்புடன் காணப்படும். காந்தி, பெரியார், பாரதி, பாரதிதாசன் போன்ற தலைசிறந்த பெருமக்கள் விருந்துண்ட இன்பமாளிகையில் நானும் விருந்தின னாகச் சென்று, அளவளாவும் பேறு பெற்றுள்ளேன் என்பதை எண்ணும் பொழுது உள்ளம் சிலிர்க்கிறது; பூரிக்கிறது! 1950 ஆம் ஆண்டு முதன்முதலாக இன்பமாளிகைக்குக் குடும்பத் துடன் சென்றேன். அம்மாளிகையைக் கண்டு வியந்து, சிறிது அச்சத்துடன் தயங்கித் தயங்கியே நுழைந்தேன். நுழைந்த சில நொடிப் பொழுதில் அச்சமும் தயக்கமும் அகன்றன. செல்வச் செருக்கு அங்கே எள்ளளவுந் தலை காட்ட வில்லை. வாங்க தம்பி! வா செல்வி என்று அன்பொழுக அம்மா வரவேற்றார்கள். வாப்பா! வா ஆத்தா என்று உரிமையுடன் வரவேற்றார் ஐயா. குழந்தையை உடனே வாரி யெடுத்துக் கொண்டு கொஞ்சினார். எழுந்தோடிச் சென்று, அலமாரியைத் திறந்து, ஒரு பொம்மையை எடுத்துக் கொணர்ந்து, குழந்தை கையில் கொடுத்து விளையாடினார். இயல்பாக அவர்க்கிருந்த உரத்த குரலைக் கேட்டு அழுத குழந்தை, சிறிது நேரத்தில் அவருடன் விளையாடத் தொடங்கி விட்டது. அப்பொழுது நொடித்திருந்த நேரம். ‘ïªj¢ rka¤âš FHªij tªâU¡»wnj! என்று சொல்லி இரங்கினார். விலையு யர்ந்த பொருள்களைக் கொடுக்க இயல வில்லையே என்ற ஏக்கத்தை அச்சொற்கள் புலப்படுத்தின. நானும் கலைச்செல்வியும் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். அம் மாளிகையில் இருக்கும் பொழுது உறவினர் வீட்டில் இருப்பது போன்ற உணர் வுடன் - ஏன், சொந்த வீட்டில்இருப்பது போன்ற உணர்வுடன்தான் இருந்தோம். அவர்கள் பாய்ச்சிய அன்புப் புனல், அவ்வாறு எண்ணச் செய்தது. பின்னர், உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்தோம். சரி நிகர் சமானந்தான். நன்கு உண்ணுமாறு வற்புறுத்தப் பட்டோம். அங்கு நான் கண்ட புதுமை! விருந்தினர்க்கு இலை விரித்துப் பரிமாறுவதுதானே இயல்பு. இங்கே இலையே காணப்படவில்லை. எவர்சில்வர் தட்டுகளே வரிசையில் அழகு செய்தன. தாம், அயலார் என்ற வேறுபாடு அகலவே இவ்வேற்பாடாம். பின்னர், உரையாடத் தொடங்கினோம். என் பாடல்களிற் சில ஐயங்கள், மறுப்புக்கள் எழுப்பினார். சில விளக்கந் தந்தேன். சிலவற்றை ஏற்றுக் கொண்டார். சிலவற்றை ஏற்காது உரத்து வாதாடினார். அவர்அமைதியாக இருக்கும் பொழுது நாம் எடுத்துச் சொன்னால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். அவர் மனத் திற்குச் சரியென்று படுதல் வேண்டும். சரியெனப் படும் வரை விடார். பாரதியும் பாரதிதாசனும் ஏறி இறங்கி வந்த படிகளில், சண்முக னார் வாழ்ந்து கொண்டிருந்த இன்பமாளிகைப் படிகளில் நானும் பலமுறை ஏறி இறங்கியிருக்கிறேன். அவர்கள் ஒதுங்கியிருந்த ஓட்டுக் குடிலுக்குள்ளும் புகுந்து வந்துள்ளேன்.  6 பாட்டுப் பறவைகளின் புகலிடம் புரவலர் தமிழ் வடமொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரசுவதி என்னும் சான்றோர், தமிழில் மொழி பெயர்த்துதவிய ஞான சூரியன் என்னும் நூலின் முன்னுரையில் நம் வயி.சு. சண்முகனாரைப் பற்றிய குறிப்பொன்று காணப் படுகிறது. இதனை (ஞான சூரியனை) எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட் செலவில் அச்சிட்டு வெளியிட்டவர், பொது ஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழருமாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு. சண்முகம் அவர்களாவார். - பெரியார் சுயமரியாதைப் பிரசார தாபனம் குடியரசு வெளியீடாகிய ஞானசூரியனிற் குறிப்பிட்டாற் போல இவர், பொதுவாகப் பலருக்கு உதவும் மனப்பாங்கு படைத்தவ ராகினும் சிறப்பாகக் கவிஞர் பலரைப் புரந்து வந்த வள்ளலும் ஆவார். பாட்டுப் பறவைகளாகிய பாவலர் பலர்க்கும் புகலிடமாக விளங்கினார். பாரதி சந்திப்பு தேசியகவி சி.சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், இந்நூலாசிரியர் முடியரசன் மூவரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை முதலிய கவிஞர்களுக்கும் உதவிகள் செய்துள்ளார். பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுதே சண்முகனாருக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அதன் பின்னர் பாரதியார் கடையத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்ட சண்முகனார் கடையத் திற்குச் சென்றார். அங்கே தேடியலைந்து, னிட்டைக் கண்டுநிடித்து, அவ் னிட்டின் முன்னர் பின்று, ‘பாரணியார் ஹிருக்கிறாரா? என்று குரல் கொடுத்தார் சண்முகனார். உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். செந்நிற மேனியும் முழுதும் மழிக்கப்பட்ட வழுவழுப்பான தலையும் கருத்த தாடிமீசையும் உடையவராக ஒரு முகமதியர் போல அவர் வந்து நின்றார். வீடு தவறி வந்து விட்டோமோ என எண்ணிய சண்முகனார், அவரைக் கூர்ந்து நோக்கி, ஒளியுமிழும் விழிகளைக் கண்டு, இவர் பாரதியார்தான் என்று வணக்கம் தெரிவித்தார். உள்ளேழீருந்து வந்தவர் சண்முகனாரை நோக்கிக் ‘கானாடு காத்தாவீஸீருந்து வருகிறீர்களா? என்று வினவினார். எப்படித் தெரிந்து கொண்டார் என வியந்த சண்முகனாரின் விழிகளில் நீர் ததும்பி நின்றது. உணர்ச்சி வயப்பட்டமையால் ஒன்றும் பேசவியலாது. ஆம் என்று மட்டும் விடை தந்தார், இது பற்றி வயி. சு. சண்முகனாரே கூறுகிறார். 1918 ஆம் ஆண்டில் பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுது அவரிடம் கடிதத் தொடர்பு கொண்டேன். 7-2-1919 அன்று மாலை 3 மணிக்குக் கீழக்கடையத்தின் தென்கிழக்கு மூலைக் கோடியில் இருந்த பாழடைந்த ஓர் வீடு தேடிச் சென்று, இங்குதான் பாரதியார் இருக்கிறாரா என்று வினவிய போது உள்ளேயிருந்து நல்ல சிவந்த மேனி மழுங்கச் சிறைத்த வழுவழுப்பான தலை, கூரிய மின்னலிடும் உறுதியான தாடி மீசைகளுடன் அசல் முசல்மான் வடிவில் பாரதியார் வந்து அமைதியாக நின்றார். ஐயமுற்று மூன்று விநாடி நேரத்தில் அவரின் விரிந்த, சுடரொளி வீசும் கண்களைக் கண்டு, உறுதி பெற்றுக் கை கூப்பி வணங்கினேன். - எழில் ஏவிளம்பி - மாசி அதன் பின்னர் இருவரும் நெருங்கிய தொடர்பு கொண்டு பழகி வந்தனர். இன்று பாரதியாரைப் போற்றிப் புகழ் பாடும் தலைவர் களும் பிறரும் அவரைப் புறக்கணித்து ஒதுக்கி வந்த காலத்தே - பாரதியார் வறுமைக்கு ஆளாகி இடர்ப்பட்ட காலத்தே, அவருக்கு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பேணிக் காத்துப் பொன்றாப் புகழ் படைத்த பேரருளாளர் நம் சண்முகனார். கடையத்திற் பாரதியாரைக் கண்டு மகிழ்ந்த சண்முகனார், அவரைக் கானாடுகாத்தானுக்கு வருமாறு அழைத்தார். வருவோம் என்று மறுமொழி கூறினார். சண்முகனார், கானாடுகாத்தானுக்கு வந்த பின்னரும், வருக வருகவெனப் பல மடல்கள் பாரதியாருக்கு எழுதினார். பாரதியார் வருகை அதனை யேற்றுக் கொண்ட பாரதியார், 28-10-1919 ஆம் ஆண்டு காலை 10.30 மணிக்குக் காரைக்குடிப் பேருந்து நிலையத்தில் வந்திறங்கினார். அங்கே அவரை அன்புடன் வரவேற்று மகிழ்ந்த இளைஞர் களுடன் அளவளாவிக் களித்துப் பகல் உணவுக்குப் பின் மாலையில் கானாடுகாத்தானுக்கு வந்து சேர்ந்தார். சண்முகனார் அகமும் முகமும் மலர வரவேற்று, அவர்க்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தந்து பேணி வந்தார். வறுமைழீல் உழன்று கொண்டிருந்த பாரணிழீன் பிலைமைக் கிரங்கிய சண்முகனார், குடும்பத்துடன் பாரணியைத் தம் ஹில்லத்ணி லேயே வைத்துப் புரக்க எண்தி, ‘ஹிங்கேயே வந்து ஜீடுங்கள் ஒரு குறைஜிலீன்றிக் கவவீத்துக் கொள்கிறேன்! என்று கூறினார். வேண்டியவை அனைத்தும் செய்து தருகிறேன். இந்த அறையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்; நான் இந்த அறையை வைத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு இந்த அலமாரி; எனக்கு இந்த அலமாரி. இந்த மேசை உங்களுக்கு; இது எனக்கு என்று பாகப்பிரி வினை செய்வது போல் பங்கு போட்டுக் காட்டி வேண்டினார். தக்க புரவலர் கிடைத்தார் எனக் கருதிய பாரதியாரும் தங்கு வதென முடிவு செய்து. கடையத்திலிருந்த தம் மனைவியாரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார். அம்மையார் வர இசைய வில்லை. மனைவியாரை அங்கே தனித்திருக்க விட்டு விட்டுத் தாம் மட்டும் இங்கேயிருக்க விரும்பவில்லை பாரதி யார். சில நாள் மட்டும் தங்கியிருந்து விட்டுக் கடையத்துக்குப் புறப்பட்டு விட்டார். வீறுபெறும் பாவலன் சோறு பெறத் துயருறுவதா? என நெஞ் சுருகிய சண்முகனார், அக்காலத்தே திங்கள் தோறும் நாற்பது உரூவா தவறாமல் அனுப்பிக் கொண்டிருந்தார். இக்காலத்தே உண்மைப் பாவலர்தம் நிலையறிந்து, தர முணர்ந்து உதவுவார் சிலரேனும் இருந்தாலன்றோ உயரிய இலக்கியங்களைத் தமிழ்நாடு பெற முடியும்? சங்க காலத்துப் புலவர்களை அக்காலத்து வேந்தர்கள் புரந்து வந்தமையாலன்றோ சங்க இலக்கியக் கருவூலங்களை நாம் பெற முடிந்தது! புலமைக் கடலுள் மூழ்கிய சான்றோர், பாட்டு முத்துகளைத் தேடுவரே அன்றி வெறும் பணங் காசுகளைத் தேடியலைய விழையார். அதனால் முத்தெடுக்க மூழ்கி உழலும் பாவலர்க்குக் கை கொடுத்துக் காக்க வேண்டுவது நாட்டு மக்களுடைய கடமை யாகும். பாரதியின் விளையாட்டு நாடகத் துறையில் தனிக்கொடி நாட்டிய அவ்வை தி.க. சண்முகம் அவர்கள், காரைக்குடியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த சமயம், பாவேந்தர் பாரதிதாசன் கானாடு காத்தானில் இருக்கும் செய்தி யறிந்து, அவரைக் காணக் கானாடுகாத்தானுக்குச் சென்றார். அப்பொழுது சண்முகனார், கவிஞர்கள் இயல்பை எடுத்துக் கூறி, அவர்களிடம் எச்சரிக்கை யாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். அந்தச் சண்முகனார் கூறிய அறிவுரையை இந்தச் சண்முகம் எனது நாடக வாழ்க்கை என்ற நூலில் விவரிக்கிறார். பாருங்கள்: காரைக்குடியில் இருந்த போது புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் கானாடு காத்தான் வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கவிஞரை நேரில் காணவும் பில்கணன் சம்பந்தமான அனுமதி யைப் பெறவும் எண்ணிக் கானாடு காத்தான் சென்றேன். எங்கள் நண்பர் திரு. வை.சு. சண்முகஞ் செட்டியார் இல்லத்தில் இருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். செட்டியார் அவர் களைப் பார்த்தேன். செய்தி களை விவரமாகச் சொன்னேன். வை.சு.ச. அவர்கள் மகாகவி பாரதியாரோடு நெருங்கிப் பழகியவர். கவிஞர்களோடு எச்சரிக்கை யாகப் பழக வேண்டும் என்று எனக்குச் சில அறிவுரைகளையும் கூறினார். பாரதிதாசன் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளத்தூர் போயிருப்ப தாகச் சொன்னார். பாரதியாரைப் பற்றி ஒரு விசித்திர மான செய்தியையும் அறிவித்தார். ஒருநாள் செட்டியார் இல்லத்திற்குப் பாரதியார் வந்திருந்து தங்கியிருந்த போது, திடீரென்று எனக்கு அவசரமாக ஒரு நூறு ரூபாய் வேண்டும்; கொடுப்பீரா? என்றாராம் பாரதி. உடனே வை.சு.ச. இதோ கொடுக்கிறேன் என்று பெட்டியைத் திறந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்தார். பாரதி நோட்டை இருபுறமும் திருப்பிப் பார்த்து விட்டு, இது எனக்குத் தானே? என்றார். ஏன் சந்தேகம்? என்றார் வை.சு.ச. இல்லை; எனக்குச் சொந்தமான நோட்டை நான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை யுண்டல்லவா? என்றார் பாரதி. தாராளமாக, எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் - இது வை.சு.ச.வின் பதில். மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே எழுந்து நின்றார். வை.சு.ச.வுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன், ஏதாவது தேவையானால் வாங்கிவரச் சொல்கிறேன் என்று அவரும் எழுந்து நின்றார். அதற்குள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாரதியார் தம் கைலிருந்த நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு விட்டார். வை.சு.ச.வுக்கு ஒரே வியப்பு. ஏனைய்யா கிழித்தீர்? என்று கேட்டாராம். என் நோட்டை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உமக்கென்னையா அக்கறை? என்று சொல்லிக் கொண்டு கலகல வென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைச் சொல்லி விட்டு, மேதைகளான கவிஞர்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்குப் பாதியாவது இருக்கு மல்லவா? என்றார். இவ்வாறு அவ்வை சண்முகம் எழுதுகிறார். வறுமையில் வாடிய பாரதியார், நூறு உரூவாத் தாளைக் கிழித்தெறிந்த நிலையை என்னென்பது? கிறுக்குத்தனமென்பதா? சிறு பிள்ளைத்தனமென்பதா? இவ்வுலக மாந்தருக்கு அப்படித் தான் எண்ணத் தோன்றும். ஆனால் பாவலர் உலகம் தனியுலகம்! இதெல்லாம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு. அவர்கள் உள்ளத்தைக் காசாசை பற்றிக் கொள்ள முடியாது. காசும் தூசும் அவர்களுக்கு ஒன்றுதான். பற்றற்ற உண்மைத் துறவியின் மனநிலைதான் அவர்கள் மன நிலையும். பாரதியைப் புரந்த வள்ளல் பாரதியாரைப் பல்லாற்றானும் புரந்து, பேணிக் காத்துச் செட்டி நாட்டில் அவர் புகழ் பரவக் காரணமாக விளங்கியவர் வயி.சு. சண்முகனாரேயாவர். அதனைத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க.தமது நூலிற் சுட்டுவதைக் காணலாம். அந்நாளில் எனக்குப் பக்கத் துணைவராய் முன்னணி வேலை செய்தவர் சிலர். அவருள் குறிக்கத் தக்கவர் நால்வர். அவர் சொ. முருகப்பச் செட்டியார். ராய, சொக்கலிங்கஞ் செட்டியார், வயி.சு. சண்முகஞ் செட்டியார், பிச்சப்பா சுப்பிரமணியஞ் செட்டியார்.... வயி.சு. சண்முகஞ் செட்டியார் பாரதிப் பித்தர். செட்டி நாட்டில், பாரதியத்துக்குக் கால் கொண்டவர் அவரே. -திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் வயி. சு. சண்முகனாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய பாரதி யார் இருமுறை - முதன்முறை 28-10-1919 முதல் 10-11-1919 வரையும் அடுத்த முறை 6-1-1920 முதல் 10-1-1920 வரையும் - செட்டிநாட்டுக்கு வந்திருந்தார். பாரதியாருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அன்பளிப்பாக அனுப்பி, வயி.சு.ச. இரண்டாண்டுகள் அவரை ஆதரித்து வந்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவை அச்சானதற்கு வயி.சு.ச. அவர்களே காரண மாவார்கள். இந் நூல்களின் கையெழுத்துப் பிரதி இவர் களிடம் இருந்து வருகிறது. - செட்டிநாடுந்தமிழும் - சோமலெ திரு.வயி.சு. சண்முகஞ் செட்டியார் கானாடுகாத்தானில் பிறந்தவர். வயிரவன் கோயிலைச் சேர்ந்தவர். அவர் சிறந்த தேச பக்தர். கவி. சுப்பிரமணிய பாரதியாரை ஆதரித்த வள்ளல். தம் நெருங்கிய நண்பரான வயி. சு.ச. வைச் சந்திப்பதற்காக, பாரதியார் கானாடுகாத்தானுக்கு வந்து, சில நாள் தங்கியிருந் தார்... இந்து மதாபிமான சங்கத்தைப் பற்றியும் நகரத்தார்களைப் பற்றியும் பாரதியார் பாடல்கள் பாடுவதற்கு வயி.சு.ச. அவர்களே காரணமாவார். வயி.சு.ச.வைப் பற்றியும் பாரதியார் விரிவாகப் பாடியிருக் கிறார். பாரதியார் பாடல்கள் சிலவற்றைச் சின்னஞ்சிறு வெளியீடு களாக, முதல் முறையாகப் பாரதியார் காலத்திலேயே அச்சிட்டு வழங்கியவர், வயி.சு.ச. சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். ஒருமுறை வயி.சு.ச. பெருந்தலைவர் காமராசரைச் சந்திக்கத் தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட முதலமைச்சர் காமராசர், தாமே எழுந்து போய் பாரதியாரை அவர் காலத்திலேயே ஆதரித்த வள்ளலே வருக என்று மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார். - நகரத்தார் குரல் நவம்பர் 1986 பாவேந்தர் தொடர்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பத்துக்கும் சண்முகனார் குடும்பத்துக்கும் உறவு முறைப்பழக்கம் இருந்தது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. மஞ்சுளாபாய் அம்மையார், புரட்சிக்கவிஞரை அண்ணன் என்றுதான் அழைப்பார். சண்முகனார்க்கு மைத்துனர் முறையா கிறார். அந்த அளவிற்கு அவர்களுக்குள் நெருக்கமான இறுக்கமான தொடர்பிருந்தது. புரட்சிக் கவிஞருக்குப் பல வகையாலும் உதவி செய்து ஆதரித்து வந்தார். குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடிப் பங்கு கொண்டு, தாமே முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். முத்தமிழ் நிலையம் தோன்றுவதற்கும், புரட்சிக் கவிஞரின் நூல் சில வெளியாகவும், இயல், இசை, நாடகம் மூன்றும் ஒருங்கே அமைந்த பாரதிதாசன் இன்ப இரவு அரங்கேறவும், கவிஞரின் மூத்த மகள் சரசுவதியின் திருமணம் நிகழவும் முயற்சிகள் மேற் கொண்டு, பல்வகை உதவிகள் புரிந்திருக் கிறார். இவருவரும் உரிமையுடன் ஒன்றிப் பழகுவர். அதே சமயம் சண்டையும் போட்டுக் கொள்ளுவர். கடுமையாகச் சொற்கள் வெளி வருவதும் உண்டு. குழந்தைகள் அன்போடு இணைந்து விளையாடும் பொழுது திடீரென்று டூ விட்டுவிடுவதுண்டு. அப்படித்தான் இருவர் செயலும் இருக்கும். இருவர் மனமும் போக்கும் ஒரே தன்மையன. அதனால் சண்டைகள் நிகழ்வதுண்டு. சினந்து வெளியேறி விடுவதுமுண்டு. ஆனால் இச்சினம் சில நாள்தான் நிற்கும். பிறகு கவிஞர் இன்ப மாளிகைக்கு வந்து விடுவார். சண்முகனார் எவ்வகை வேறுபாடு மின்றி நடந்ததை மறந்து விட்டு, உள்ளம் ஒன்றிப் பழகுவார். கணவன் மனைவியரிடையே ஏற்படும் ஊடல் எவ்வளவு நேரம் நிலைக்கும்? உடனே மறைந்து விடும். பின்னர் ஒன்றி விடுவர். அவ்வாறே இவர்கள் நட்பில் ஏற்படும் ஊடலும் இருக்கும். மைத்துனர் முறையல்லவா? ஊடலும் கூடலும் நிகழ்வது இயல்புதானே! இந்நிகழ்ச்சிக்கு எடுத்துக் காட்டாக, அண்ணன் இராம. சுப்பையா அவர்கள் எழுதிய நானும் என் திராவிட இயக்க நினைவுகளும் என்ற நூலில் ஒன்று காணலாம். பாரதிதாசனோட புத்தகங்களை வெளியிடறதுக்காகவே, முத்தமிழ்க் கழகம் (முத்தமிழ் நிலையம்) ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள்தான், அந்தக் கழகத்தோட மானேஜிங் டைரக்டர். அப்போ முரசொலியில் இருக்கிற திரு. அரு. பெரியண்ணன், முருகு, சுப்பிரமணியன் எல்லாம் அந்தக் கழகத்திலே இருந்தாங்க. அதுலே பாரதிதாசனுக்கும் வை.சு.வுக்கும் கொஞ்சம் ஒத்து வரலே. பாரதிதாசன் ரொம்ப முரட்டுக் குணம். வை.சு.வும் யாருக்கும் பயப்பட மாட்டார். ஒருநாள் பாரதிதாசன் நம்ம வீட்டுக்கு வந்து, உடனே வை.சு. வீட்டுக்குப் போகணும்னார். ரொம்பக் கோபமா இருந்தார். உடனே நான் (இராம. சுப்பையா) கிளம்பிட்டேன். எங்க கூட சாமி. பழநியப்பனும் வந்தாரு. கானாடுகாத்தான் போய், இந்த விஷயத்தைப் பத்திப் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னே பொதுவாய் பேசிக்கிட்டிருக்கும் போதே பாரதிதாசனுக்குக் கோபம் வந்திடுச்சு. எழுந்திருங் கப்பா... இனிமே இந்த வீட்லே ஒரு நிமிஷம்கூட இருக்கக் கூடாதுன்னு சத்தம் போட்டார். வேகமாக வாசலுக்கு வந்தோம். (நகரத்தார் வீடுகள் மிகப் பெரிதாக இருப்பதால் முகப்பு வாயில் பூட்டப் பட்டிருப்பது வழக்கம். வேறு வழியில் புழக்கமிருக்கும்) சாமி. பழநியப்பன், கவிஞர்கிட்டே, ஐயா, வீடு பூட்டியிருக் கிறது ன்னு மெதுவாச் சொல்ல, சத்தம் போட்டு உடைன்னாரு. கம்பியை எடுத்துப் பூட்டிலே ஓங்கி அடிச்சேன். உடைஞ்சு விழுந்திடுச்சு. மூணு பேரும் வேகமாக வீடு வந்து சேர்ந்தோம். இவ்வாறு கோபமாக வெளிவந்த பாரதிதாசனை அதன்பிறகு பலமுறை இன்பமாளிகையிற் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்திற்குத் தான் அப்படி. அதன் பிறகு அதை மறந்தே விடுவார்கள். வயி.சு. சண்முகனாரும் பாவேந்தரும் இந்நாள் இலர். அவர்க்குப் பிறகும் கூட இரு குடும்பமும் தொடர்பு கொண்டு விளங்குகிறது. நாமக்கல் கவிஞர் நட்பு பிற்காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல், வே. இராமலிங்கம் பிள்ளையவர்கள். தொடக்கத்தில் ஓவியக் கலையில் வல்லவராக விளங்கி வந்தார். சிறந்த முறையில் ஓவியம் வரைந்து விற்பனை செய்யும் நோக்கத்துடன் செட்டிநாட்டிற்கு வந்திருந்தார். அம்முறையில் கானாடுகாத்தானுக்கு வந்து வயி.சு. சண் முகனாரைச் சந்தித்தார். அப்பொழுது பாரதியார் அங்கு வந்து தங்கியிருக்கும் செய்தியறிந்து, அவரைக் காணத் துடித்தார். பாரதியார் வெளியிற் சென்றிருப்பதாகச் சண்முகனார் கூறினார். அதன்பின் நாமக்கல் கவிஞரே கூறுகிறார். கேளுங்கள்: ஊருக்கு அரைமைல் தூரத்தில் ஒரு கிராம தேவதையின் கோயில். அங்கே ஒரு மரத்தின் அடியில் பாரதியாரும் அவருடைய நண்பர்களும் உட்கார்ந்து கொண்டு, களித்துச் சிரித்துக் கலகலப் பாகப் பேசிக் கொண்டிருந்தனர். கையெழுத்து மறைந்த நேரம். வெளிச்சம் குறைவான இடத்தில் உட்கார்ந் திருந்ததால் முகத்தை நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பலமுறை கேள்விப் பட்டிருந்த எனக்குப் பாரதி யாருடைய படம் ஒன்று என் மனத்தில் பதிவாகியிருந்தது. முண்டாசுக் கட்டைக் கண்டவுடனேயே பாரதியாரை அறிந்து கொண்டேன்... வேங்கடகிருஷ்ணையர், இவர் ராமலிங்கம் பிள்ளை, நல்ல ஆர்டிட், உங்களைப் பார்க்க வேண்டுமென்று... என்று முடிக்கு முன், பாரதியார், ஓ! ஓவியக் கலைஞரா? வருக கலைஞரே! தமிழ் நாட்டின் அழகே கலையழகுதான்... பிள்ளைவாள்! நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் என்று சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார்... பேசிக் கொண்டே அவர் தங்கியிருந்த ஜாகைக்கு (இன்ப மாளிகைக்கு)ப் போனோம். அங்கே பாரதியாரைப் பார்க்கப் பல பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் அங்கே விருந்து நடந்தது. உணவுக்குப் பின் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு... அங்கே படுத்துக் கொண்டோம். - என் கதை - நாமக்கல் கவிஞர் இன்ப மாளிகையில்தான் பாரதியாரும் நாமக்கல் கவிஞரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர். அப்பொழுது, நாமக்கல் கவிஞர், தமக்கும் கவிதை எழுதத் தெரியுமென்று கூறி, ஒரு பாடலையும் பாடிக் காட்டினார். கேட்டு மகிழ்ந்த பாரதியார் பாண்டியா! நீ ஒரு புலவனடா என்று பாராட்டினார். கவியரசரால் பாராட்டப்பட்ட ஓவியக் கலைஞர் இராம லிங்கம் பிள்ளை, பின்னை நாளில் அரசவைக் கவிஞராக விளங்கினார். நாமக்கல் கவிஞர் இன்ப மாளிகையில் தங்கியிருக்கும் பொழுது, சண்முகனாரிடம். உங்கள் உருவத்தை (ஆயில் பெயிண்டால்) ஓவியமாக வரைந்து தருகிறேன் என்றார். சண்முகனார் அதை விரும்பவில்லை. ஆனாலும் வந்தவரை வறிதே விடுக்க விருப்பமில்லை. அதெல்லாம் வேண்டாம். தலைவர்கள் படத்தை வரைந்து கொடுங்கள் என்று மறுமொழி தந்தார். ஏசு, புத்தர், இராமலிங்க அடிகளார், காந்தியடிகள் பால கங்காதரதிலகர், சிவாஜி போன்றோர் படங்களை வரையச் செய்தார்கள். படங்களின் எண்ணிக்கை அளவுக்கு ஏற்ப உடனே தோதகத்தி அலமாரி செய்யப்பட்டது. அதன்பின் அந்த அலமாரியில் படங்களை வைத்தார்கள். குழந்தைகளும் சண்முகனாரும் தினமும் காலையில் அப்படங்களைக் கும்பிட்டு வணங்கி வருவார்கள். சண்முகனார், அவ்வோவியங்களைக் கண்டு மகிழ்ந்து தக்க பொருட்கொடை தந்து உதவினார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையவர்கள் எளிமையாக வாழ்ந்த போதிலும் பெருமிதங்குன்றாது வாழ்ந்த பெருமகன். அவர் எவரிடத்தும் பொருள் வேண்டார். எவரேனும் கொள்ளெனக் கொடுப்பினும் கொள்ளேன் என்று மறுத்து விடுவார். இவருக்கு நேரிடையாகப் பொருளுதவி செய்யா விடினும், அவர்தம் நிகழ்ச்சி களுக்காக நன்கொடைகள் வழங்கியிருப்பதாகச் செவி வழிச் செய்தி. முடியரசன் உறவு முடியரசனாகிய நான் கவியரசராகிய பாரதியாரைப் பாட்ட னாகவும் பாவேந்தரைத் தந்தையாகவும் கருதி வருபவன். பாட்டனும் தந்தையும் இன்ப மாளிகையில் அமர்ந்தாடிய ஊஞ்சலில் நானும் அமர்ந்து ஆடும் பேறு பெற்றுள்ளேன். விடுதலைப் பறவையாகிய பாரதியும் உணர்ச்சிப் பறவை யாகிய பாரதிதாசனும் உரிமையுடன் பறந்து திரிந்த இன்ப மாளிகையில் நானும் பறந்து வந்துள்ளேன். அவ்வானம் பாடிகளுக்கு எத்தகைய வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் வழங்கப்பட்டதோ அதே வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் சிட்டுக் குருவியாகிய எனக்கும் வழங்கப்பட்டன. வயி.சு. சண்முகனாரும் மஞ்சுளாபாய் அம்மை யாரும் எனக்குப் பெற்றோர் நிலையிலிருந்து, அன்பு பொழிந்தனர். இன்ப மாளிகை என் சொந்த மாளிகையாகவே விளங்கி வந்தது. அக்குடும்பத்தில் நானும் ஓர் உறுப்பினனாகவே இருந்து வருகிறேன். சண்முகனாரிடம் அன்பும் உரிமையும் நான் பெற்ற அளவிற்கு, உதவிகள் பெற்றிலேன். உதவிகள் பெறுமளவிற்குச் சூழ்நிலைகள் ஏற்படவில்லை. மேலும் நான் தொடர்பு கொண்ட காலத்தே, சற்று நொடித்திருந்தார். பாட்டுப் பறவைகள் உலவிய அந்த இன்ப மாளிகை, அரண் மனையோ என ஐயுறத்தக்க அக் கொலுமண்டபம் இப்பொழுது மண்மேடாக்கப்பட்டுக் கிடப்பதைக் காணின் நெஞ்சங் குமுறும்! வயிறு பற்றி எரியும்! ஒரு முறை என்னை விளித்து, தம் மகள் பார்வதி நடராசனைச் சுட்டிக்காட்டி, இனி, இவள் உன் அக்காள்; ஏதேனும் உதவி தேவை எனில் அக்காளிடம் போய்ச் சொல் என்று கூறினார். அவ்வாறே என் உடன் பிறந்த தமக்கை யாகவே அம்மையாரும் இருந்து வருகிறார்.  7 பாரதியின் பாட்டுத்தலைவன் பாரதி வருகை செட்டிநாடு வட்டாரத்தில் உள்ள கானாடுகாத்தானில் சிறப்புற வாழ்ந்த வை.சு. சண்முகம் செட்டியார், நம் கவியரசர் பாரதியை ஆதரித்த வள்ளல்களுள் ஒருவர். இவருடைய அழைப்பின் பேரில், அவர் இல்லம் சென்று, அவரின் விருந்தினராகச் சில நாட்கள் தங்கியதும் உண்டு.... வை.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் அழைப்புக் கிணங்க முதல் முறையாகக் கானாடுகாத்தான் செல்லக் காரைக் குடியில் பாரதி வந்து இறங்கிய போதில், இந்த மதாபிமான சங்க நண்பர்கள் பாரதியைக் கண்டு மகிழ்ந்து அளவளாவியதுடன், அவருடைய பாடல்களைப் பாடக் கேட்டும் இன்புற்றனர். அதன் பின்னர், பாரதியை அவர்கள் கானாடுகாத்தான் செல்ல விடுத்தனர். பாரதி சில நாள்கள் கானாடுகாத்தானில் தங்கி யிருந்தார். சீனி. விசுவநாதன் கலைமகள் தீபாவளி மலர் 1985 பாரதி பாடிய மனிதர் பாரதியார், கானாடுகாத்தானில் தங்கியிருக்கும் பொழுது, ஒரு நாள் இன்ப மாளிகையில், அவர், கையைக் கட்டிக் கொண்டு விறைப்பாக அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந் தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சண்முகனார், ஏதாவது கவிதை பாடலாமே என்றார். உடனே பாரதியார், கவிதை வேண்டும் போதெல்லாம் வராது; அது தானாக வரவேண்டும் என்று விடையிறுத்து விட்டார். கூட்டுக் களியினிலே - கவிதை கொண்டுதர வேணும் என்று பாடியவரல்லவா? அதனால், அது தானாக வரவேண்டுமே யொழிய, நினைத்த போதெல்லாம் வராது என்று சட்டென்று கூறி விட்டார். மீண்டும் உலவத் தொடங்கி விட்டார். சிறிது நேரம் உலா நடக்கிறது; சிந்தனை சிறகடித்துப் பறக்கிறது. பாடலும் பிறக்கிறது. கவிதை தானே, இதோ பாடுகிறேன். கேளுங்கள் என்று சொல்லிப் பாடத் தொடங்கிவிட்டார். பாடி முடிந்தது. பின்னர், அப்பாடலைத் தம் கையாலேயே எழுதிக் கையொப்ப மிட்டு நாளுங் குறித்துச் சண்முகனாரிடம் கொடுத்தார். அப்பாடலை அப்படியே தருகி றோம்; பல்லாண்டு வாழ்ந்தொளிர்க! கானாடு காத்தநகர்ப் பரிதி போன்றாய், சொல்லாண்ட புலவோர்தம் உயிர்த்துணையே, தமிழ்காக்குந் துரையே, வெற்றி வில்லாண்ட இராமனைப்போல் நிதியாளும் இராமனென விளங்கு வாய்நீ மல்லாண்ட திண்டோளாய், சண்முகநா மம்படைத்த வள்ளற் கோவே! செட்டிமக்கள் குலத்தினுக்குச் சுடர்விளக்கே, பாரதமா தேவி தாளைக் கட்டியுளத் திருத்திவைத்தாய், பராசக்தி புகழ்பாடிக் கனிந்து நிற்பாய், ஒட்டியபுன் கவலைபயம் சோர்வென்னும் அரக்கரெலாம் ஒருங்கு மாள வெட்டியுயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவமென மேவி நின்றாய். தமிழ்மணக்கும் நின்னாவு; பழவேத உபநிடத்தின் சார மென்னும் அமிழ்துநின தகத்தினிலே மணம்வீசும்; அதனாலே அமரத் தன்மை குமிழ்படநின் மேனியெலாம் மணமோங்கும்; உலகமெலாங் குழையும் ஓசை உமிழ்படுவேய்ங் குழலுடைய கண்ணனென நினைப்புலவோர் ஓது வாரே. பாரதத னாதிபதி யெனநினையே வாழ்த்திடுவர் பாரில் உள்ளோர்; ஈரமிலா நெஞ்சுடையோர் நினைக்கண்டால் அருள்வடிவம் இசைந்து நிற்பார்; நேரறியா மக்களெலாம் நினைக்கண்டால் நீதிநெறி நேர்ந்து வாழ்வார்; யாரறிவார் நின்பெருமை? யாரதனை மொழியினிடை அமைக்க வல்லார்? பலநாடு சுற்றிவந்தோம்; பல்கலைகள் கற்றுவந்தோம்; இங்குப் பற்பல் குலமார்ந்த மக்களுடன் பழகிவந்தோம்; பலசெல்வர் குழாத்தைக் கண்டோம்; நிலமீது நின்போல்ஓர் வள்ளமையாம் கண்டிலமே, நிலவை யன்றிப் புலனாரச் சகோரபட்சி களிப்பதற்கு வேறுசுடர்ப் பொருளிங் குண்டோ? மன்னர்மிசைச் செல்வர்மிசைத் தமிழ்பாடி எய்ப்புற்று மனங்க சந்து பொன்னனைய கவிதையினி வானவர்க்கே அன்றிமக்கட் புறத்தார்க் கீயோம் என்னநம துளத்தெண்ணி இருந்தோம்மற் றுன்னிடத்தே இமையோர்க் குள்ள வன்னமெலாங் கண்டுநினைத் தமிழ்பாடிப் புகழ்தற்கு மனங்கொண் டோமே. மீனாடு கொடியுயர்த்த மதவேளை நிகர்த்தவுரு மேவி நின்றாய் யா(ம்)நாடு பொருளைஎமக் கீந்தெமது வறுமையினை இன்றே கொல்வாய் வானாடும் மண்ணாடுங் களியோங்கத் திருமாது வந்து புல்கக் கானாடு காத்தநகர் அவதரித்தாய், சண்முகனாம் கருணைக் கோவே! சித்தார்த்த - ஐப்பசி யரு. 1919, அக்டோபர் 31 சி.சுப்பிரமணிய பாரதி கானாடுக்காத்தான் பொன் அனைய கவிதை எனப் பாரதியார் கூறியது, இக்கவிதைக்கு மிகப்பொருந்தும். ஒட்டிய புன் கவலை, பயம், சோர்வு என்னும் அரக்கரெல்லாம் ஒருங்கு மாய வெட்டி எனக் கூறுவதால், சண்முகனாரிடம் கவலையோ அச்சமோ சோர்வோ சிறிதும் காணப்படாத தன்மை யைப் பாரதியார் நன்கு அறிந்து கொண்டவர் என்பது தெரிகிறது. ஈரமிலா நெஞ்சுடையார் நின்னைக் காணின் அருள் வடிவமாகி நிற்பர் எனவும் நேரறியா மக்களெலாம் நின்னைக் காணின் நீதி நெறியில் நிற்பர் எனவும் கூறுவதால் சண்முகனார் அருளுள்ளமும் கண்டிப்பும் கட்டுப்பாடும் உடையவர் என்பது புலனாகிறது. இவ்வியல்புகள் உடையார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். தம் மக்களை, பேரன் பேர்த்திகளை இவ்வாறே வளர்த்தார். யாரறிவார் நின்பெருமை? யாரதனை மொழியினிடை அமைக்க வல்லார்? என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் பாரதி. இதோ, அவர் ஏக்கம் நீக்கப்படுகிறது; அவர் ஆவல் நிறைவேறுகிறது. ஆம், சண்முகனார் பெருமை உலகத்தால் அறியப்படுகிறது; அப் பெருமை மொழி யினிடை அமைக்க வும் படுகிறது. மன்னர் புகழ் பாடினோம்; செல்வர் பெருமை செப்பினோம்; அதனால் எய்ப்புற்றோம்; மனங் கசந்தோம்; அதனால் மனிதரை இனிப்பாடோம் வானவரையே வாயாரப் பாடுவோம் என்று உறுதி பூண்டிருந்த பாரதியார், மனிதராகிய சண்முகனாரை ஏன் பாடினார்? உன்னிடத்தே இமையோர்க்குள்ள வன்னமெலாங் கண்டோம்; நின்னைப் பாடிப் புகழ்ந்தோம்; மனம் மகிழ்ந்தோம் என்று அவரே காரணமும் கூறி விடுகிறார். சண்முகனார் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காரணத் தால், பாரதியார் விழிகளுக்கு, வானுறையுந் தெய்வமாகத் தோன்றியிருக் கிறார். உயரிய பண்பாடுகளின் உறைவிடமாகி, உதவும் உள்ளங் கொண்ட ஒப்புரவாளராகி, மீமிசை மாந்தராக விளங்கினார் அவர். பாரதியார், சண்முகனார்க்கெழுதிய மடல்களின் கட்டு களை, சண்முகனாரின் இல்லத்தில் நான் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அம்மடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. அவை கிடைப்பின், பாரதியாரைப் பற்றியும் சண்முகனாரைப் பற்றியும் அரிய செய்திகள் நமக்குக் கிட்டும். இப்பாடலில் வரும் யாம் நாடும் பொருளை எமக்கீந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய் என்ற வரிகள் நம் நெஞ்சத்தைக் குடைகின்றன. வறுமையில் அம் மாபெருங் கவிஞன் வாடியதையும் இன்றே கொல்வாய் அவ்வறுமையை எனக் கதறுவதையும் நாடும் பொருளை எமக்கீவாய் என வேண்டுவதையும் நினையும் பொழுது உள்ளம் உடைகிறது. கரந்திருந்த பாடல் திருடப்பட்டது மறைந்து கிடந்த இப்பாடல் உலகறிய வெளி வந்ததே ஒரு கதை. பாரதியார் பாடலொன்று சண்முகனாரிடம் இருக்கிற தென்பதை அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அறிந்து கொண்டோம். அதனைப் பார்க்கலாமா? என்று நாங்கள் வேண்டிய பொழுது மறுத்து விட்டார். எனக்கும் நண்பர் தமிழண்ணலுக்கும் அப்பாடலைப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே துடிப்பு. அவர் துணைவி யார் மஞ்சுளாபாய் அம்மையாரிடம் தனியே கெஞ்சினோம். சரி, இன்னொருநாள் வாருங்கள்; தேடி எடுப்போம் என்றார். அதன்படி நாங்கள் இருவரும் கானாடுகாத்தான் சென்றோம். அப்பொழுது இன்பமாளிகை கைவிட்டுப் போனதால் ஓட்டுக் குடிலில் வாழும் சமயம் அது. நாங்களும் அம்மையாரும் ஓரறையில் இருந்த பெரிய பெட்டி யொன்றைத் துருவித் துருவி ஆரய்ந்து கொண்டிருந் தோம். நாங்கள் வேறு ஏதோ பணி செய்கிறோம் என்று கருதிக் கொண்டிருந்தார் சண்முகனார். பாரதியார் மடல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம்; படிக்கவில்லை. பாடல் தெரிகிறதா என்று பார்ப்போம். இல்லை யென்றால் மடித்து வைத்து விடுவோம். படித்துக் கொண்டிருந்தால் நேரம் ஆகும். இவ்வளவு நேரம் என்ன செய்கிறீர்கள்? என்று அதட்டுவார். அதனால் அஞ்சிக் கொண்டே விரைந்து விரைந்து பார்த்தோம். எங்கள் முயற்சி வீண்போகவில்லை. பாடல்கள் எழுதிய தாளொன்று கிடைத்துவிட்டது. அப்பொழுது நாங்களடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவே கிடையாது. விரைவில் கொண்டு வந்து விடுங்கள்; அதே இடத்தில் வைத்து விடுவோம். ஐயாவுக்குத் தெரிந்தால் சத்தம் போடுவார் என்று அம்மா சொன்னார்கள். இவ்வாறு திருடிக் கொணர்ந்த அப்பாடலை அப்படியே அச்சுக் கட்டை (பிளாக்) எடுத்துக் கொண்டு, திரும்பக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து முன் இருந்தவாறே வைத்துவிட்டோம். இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக நாங்கள் நடந்தும், ஐயா அவர்கள், என்னப்பா அது? உள்ளே போகிறீர்கள்! வெளியே வருகிறீர்கள்! மெதுவாகப் பேசுகிறீர்கள்! என்ன சங்கதி? V«kh v‹d mJ? என்று அதட்டினார். ஒன்றுமில்லை; இந்தப் பெட்டிகளை என்னால் தூக்க முடிய வில்லை. பிள்ளைகளை எடுத்து வைக்கச் சொன்னேன் என்று மழுப்பி விட்டார்கள். அப்பொழுது நானும் தமிழண்ணலும் எழில் என்னும் இதழில் தொடர்பு கொண்டு நடத்தி வந்தோம். அச்சுக் கட்டை எடுக்கப் பட்ட அப்பாடலை வெளியிட்டு, அதனருகில் தெளிவாக அப்பாடலை அச்சுக் கோத்து அச்சிட்டுக் குறிப்பும் எழுதி விளம்பி ஆண்டு மாசி இதழில் வெளியிட்டு விட்டோம். இதழ் சண்முகனாருக்கும் விடுக்கப்பட்டது. இதழைப் புரட்டிக் கொண்டு வந்த சண்முகனார் பாடலைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான் விசுவாமித்திரர் ஆகிவிட்டார். யார் இந்தத் திருட்டுத் தனம் செய்தது? வரட்டும் அந்தப் பையன்கள்; அம்மா! நீங்களுமா இதற்கு உடந்தை! ïj‰F¤ jh‹ mªj miw¡FŸ nghtJ« tUtJkhf ïUªÔ®fnsh? என்று கனல் தெறிக்கப் பேசிவிட்டார். அம்மா வாய் திறக்க வில்லை. இத் திருட்டுக்கு அம்மா ஒத்துழைக்கவில்லை யென்றால் பாரதி பாடிய இப்பாடலைத் தமிழகம் இழந்திருக்கும்! பாடல் வெளிவந்த பின்னர், சில நாள் கழித்து, சண்முகனார் இல்லத்துக்குச் சென்றோம். ஏம்ப்பா! இதென்ன அயோக்கியத் தனம்? எனக்குத் தெரியாமல் பாடலை எடுத்துக் கொண்டு போய், என் உடன் பாடில்லாமல் வெளியிட்டிருக்கிறீர்களே! இது பெரிய தப்பு. அம்மாஷிம் சேர்ந்து ஹிதைச் செய்ணிருக் கிறார்கள்? என்று தமக்கே உரிய உரத்த குரலில் கடிந்து கொண்டார். ‘நிள்ளைகள் ஆசைப்பட்டார்கள், அதற்காக ஏன் ஹிவ்வளஷி கடுமையாகப் பேச வேண்டும்? என்று எங்கள் சார்பாக வாதாடி னார்கள் அம்மா. சீற்றம் மேலும் மிகுதியாயிற்று. நான் எவ்வளவோ அமைதி கூறினேன். அடங்கவில்லை. விட்டு விட்டேன். அவர் பேசும் வரை பேசி விட்டு, அமைதியுற்றார். இது தான் வேளையென்று கருதி நான், ஐயா உங்கள் ஒப்பு தலின்றி இதனை வெளியிட்டது தவறுதான். ஆனால் இத்தவற்றை நாங்கள் செய்யாதிருந்தால், நீங்கள் தேசத் துரோகம் செய்தவர் களாகக் கருதப் படுவீர்கள் என்றேன். ‘என்ன அப்படிச் சொல்கிறாய்? என்றார். ஆம்; பாரதியின் பாடல்கள் நாட்டுக்குரிய சொத்து. பொதுச் சொத்தாகிய பாரதியின் பாடலொன்றை நாட்டுக்குக் கொடுத்து விடாமல் மறைத்து வைப்பது நாட்டுக்குச் செய்யும் குற்றமல்லவா? என்றேன். உரத்துச் சிரித்து விட்டார். அதன்பின் அமைதியாகப் பேசினார். நீங்கள் வெளியிட்டது தப்பில்லப்பா; பாரதி இந்தப் பாடலில் என்னை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்திருக் கிறார். நான் இப்பொழு திருக்கும் நிலையில் இது வெளிவந்தால் ஊரார் என்ன நினைப் பார்கள்? ஏதோ உள் நோக்கத்தில் விளம்பரப்படுத்திக் கொள்கிறான் என்றுதானே எண்ணுவார்கள். அதனால்தான் வேண்டாமென்று சொல்கிறேன் என்று அன்றிருந்த நம் நிலைக்கு இரங்கி வருந்திக் கூறினார். சித்திரபாரதி செப்புவது சண்முகனாருக்கும் பாரதியாருக்கும் இருந்த தொடர் பையும், பாரதியின் குடும்பத்தை ஆதரிக்க அவர் எண்ணி யதையும், அவர் மீது பாரதியார் பாடல் பாடியதையும் திரு. ரா.அ. பத்மநாபன் தாம் எழுதிய சித்திரபாரதி என்ற நூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். கானாடுகாத்தானுக்கு வருமாறு வை.சு. சண்முகம் என்ற தனவணிக அன்பர் வேண்டிக் கொண்டதின் பேரில் சுப்பிரமணிய பாரதியார் 28-10-1919 அன்று காலை 10.30 மணிக்கு, காரைக் குடியில் சிவன் செயல் ஊருணித் தென்கரையிலிருந்த மதுரை ப டாண்டில் வந்திறங்கினார். பல இளைஞர்கள் அவரை வரவேற்றனர். அன்று மாலை பாரதி கானாடுகாத்தான் போய்ச் சேர்ந்தார். அங்கே வை.சு. சண்முகம் இல்லத்தில் ஒன்பது நாள் இருந்தார். கவிஞரின் தேவைகள் யாவும் அங்கு கவனிக்கப் பெற்றிருந்தன. அந்த ஊரிலேயே பாரதி இனித் தங்கி வசதியாய் வாழலாமென, செல்லம்மாவை அழைத்துவர ஒரு ஆளைக் கடயத்துக்கு அனுப்பி னார். ஆனால் செல்லம்மா வரவில்லை. அதனால் மனைவியின்றி இங்கே வாழ இயலாதென்று பாரதி, 6-11-1919 அன்று கிளம்பிச் சென்று விட்டார்..... கானாடு காத்தானில் வள்ளல் சண்முகத்தின் மீது பாரதி ஒரு பாடல் பாடியுள்ளார். எட்டயபுரம் ஜமின்தாரிடம் நொந்து, மன்னர்மிசைச் செல்வர் மிசைத் தமிழ்பாடி யெப்ப்புற்று மனங்கசந்து பொன்னனைய கவிதையினி வானவர்க்கேயன்றி மக்கட் புறத்தார்க்கீயோம் என்று கொண்டிருந்த முடிபை வை.சு. சண்முகத்தின் வள்ளன்மை கண்டு மாற்றிக் கொண்ட தாக இப்பாடலில் பாரதி குறிப்பிடுகிறார். இவ்வாறு பாரதியாருக்கும் ஏனைப் பாவலர்க்கும் ஒப்புரவு செய்து, இறுதி வரை அரியேறென வாழ்ந்து வந்த சண்முகனார் 1962 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்துப் பொன்றாப் புகழுடம்பு எய்தினார். இப்பிரிவுக்கிரங்கிய திரு.ரா. அ. பத்மநாபன் 16-12-62 வெளி வந்த தினமணி - சுடரில், பாரதியை ஆதரித்த வள்ளல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைக் காணும் பொழுது, சண்முகனார் பாரதியிடம் கொண்ட ஈடுபாட்டையும் அவருக்குப் பின்னரும் அக்குடும்பத்தை ஆதரிக்க எண்ணிய அருளுள்ளத்தையும் உணர முடிகிறது. அக்கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. கானாடுகாத்தான் தமிழ் வள்ளல் வை.சு. சண்முகம் இவ்வாண்டு ஜுன் 19 ஆம் தேதி காலமானார் என்ற செய்தி பாரதி அன்பர் களுக்குத் தனி வருத்தத்தை உண்டாக்கி யிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வை.சு.சண்முகத்தின் அழைப்பின் பேரில் பாரதியார் இருமுறை செட்டிநாட்டிற்கு விஜயம் செய்திருக்கிறார். 28-10-1919 அன்று கானாடுகாத்தான் போகும் வழியில் காரைக்குடியில் நண்பர்களால் வரவேற்கப் பெற்றார் பாரதி, மதுரை பஸில் காலை 10.30 மணிக்கு வந்து இறங்கினார் கவிஞர். காரைக்குடி இந்துமதாபிமான சங்க அன்பர்கள், பாரதியார் நேரே கானாடுகாத்தான் போய் விடுவதற்குச் சம்மதிக்கவில்லை. கவிஞருடன் அளவளாவி அவருடைய கவிதைகளைக் கேட்க விரும்பினார்கள். வை.சு. கூறுகிறார். நம் கவிஞர் திலகத்தைக் காலஞ் சென்ற செ.அ.ராம. முருகப்பச் செட்டியார் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அவருடைய தோழருடன் இறக்கினோம். அங்கேயே அவர்களுடைய குளியல், உணவு முடிந்தது. நம் கவிஞர் பெருமானின் அழகிய திருவடிவமும், திறமும், மீசை விறைப்பும், அன்புகனிந்து வெடிப்புறப் பேசிய பேச்சும், உணர்ச்சி மிகுந்த நடுங்க வைக்கும் தோற்றத்துடன் நெஞ்சில் பதியுமாறு சொற்களை வீசிய வீரமும், அசையாத தெய்வ பக்தியும், புலமையின் தெளிவும், எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்து விட்டன. தாம் இயற்றிய பாடல்களைப் பண்ணோடும் - உணர்ச்சி யோடும் அவர் பாடியது கேட்டு நம் அன்பர்கள்அளவிலா மகிழ்ச்சிப் பெருக்கடைந்த பிறகு எங்களைப் புறப்பட அனுமதித்தனர். 28-10-1919 அன்று மாலை கவியரசர் கானாடு காத்தான் வந்து சேர்ந்தார்கள்...... 1918 டிசம்பரில் புதுவையை விட்டு சென்னை மாகாணத்துக்குத் திரும்பி வந்து, தமது மனைவி யாரின் ஊரான கடயத்தில் வசித்தார் - பாரதியார். அவருக்குப் பல இன்னல்கள் நேர்ந்தன. தமது நூல்களைப் பிரசுரிக்கவும், புதிதாக ஒரு பத்திரிக்கை துவங்கவும் முயன்றார். ஆதரவு இல்லை. எட்டயபுரம் மன்னரைப் போய்ப் பார்த்துச் சீட்டுக் கவி அனுப்பினார். மன்னர் இவரைச் சந்திக்கவே பயந்து, ஆதரவு தராமல் விடுத்தார். இவ்வாறு மனம் கசந்த நிலைமையிலேயே, கவிதையினி வானவர்க்கே அன்றி, மக்கட் புறத்தார்க்கீயோம் என்று உறுதி பூண்டார் கவிஞர். இந்த உறுதியைத்தான் வை.சு.வின் பேரன்பும் ஆதரவும் மாற்றி விட்டன.... பாரதியார் காலமான பின்னரும், பாரதியார் குடும்ப நலனில் வை.சு. ஊக்கம் காட்டினார். பாரதியார் காலமான பின் பாரதி நூல்களை வெளியிட்டு, அதிலிருந்து ஜீவனம் நடத்தப் பாரதி குடும்பம் முயற்சி செய்தது. இது வெற்றிகரமாக நடக்கவில்லை. 1923இல் பாரதி குடும்பத்தின் சிரமத்தைப் போக்கும் கருத்துடன் பாரதி நூல்களின் உரிமையைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளவும் ஒழுங்காகப் பிரசுரிக்கவும் வை.சு.முன் வந்தார். இதற்குப் பாரதியாரின் மனைவி செல்லம்மா சம்மதித்தார். எனினும் எடுத்த காரியம் முற்றுப் பெறாமலே போயிற்று. திரு.வை.சு. சண்முகம் அவரின் மறைவு தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் பெரிய நஷ்ட மாகும்.  8 இயற்கைப் பண்புகள் இளமையில் முற்போக்கு உலக வாழ்க்கை எப்பொழுதும் மாறுதலை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கின்றது. எங்கு பார்த்தாலும் எந்த விஷயத்தை நோக் கினாலும் ஒன்றும் இருந்தபடி இருப்பதில்லை. மாறுதலை அடைந்து கொண்டேயிருககின்றது. இதனை உணராத மக்களே நம்மைக் காய்வர். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு கிராப் செய்து கொள்ள வேண்டுமென்று கிளர்ச்சி செய்தேன். அப்பொழுது நடந்த விஷயங்கள் உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். சுமார் ஒன்றரை வருடங்கள்கிளர்ச்சிசெய்தோம்... அதற்காக சாதிரங்களையோ, புராணங் களையோ ஆராயவில்லை. நான் கிராப் செய்து கொண்டு வெளியே வரத் தொடங்கியதும், பல பல ஜனங்கள் எதிர்த்து என்னோடு வாதாடினார்கள். (திரு. இராம. சுப்பிரமணியம் சிறுவயதில் கிராப் வைத்தபோது ஒரு மாதம் வீட்டுக்குள்வர,வீட்டார்அனுமதியில்லை.)........... இந்தக் கிராப்புக்கு இவ்வளவு எதிர்ப்பிருந்தால் கலப்புக் கல்யாணத்துக்கு எவ்வளவு எதிர்ப்பு ஏற்படக் கூடும்! இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி, நீலாவதி, இராம சுப்பிர மணியம் கலப்புமணம் செய்து கொண்டமைக்காகப் பாராட்டுரை நிகழ்த்தும் பொழுது, மு. சின்னையா செட்டியார் (பண்டிதமணி மு. கதிரேசனாரின் இளவல்) குறிப்பிட்டது. (நீலா. இராம. வரலாறு) கிராப்பு வைத்துக் கொள்வதற்கு, அக்காலத்தில் அவ்வளவு எதிர்ப்பு இருந்தது செட்டிநாட்டில். செட்டி மக்கள் தலையை மழுங்க மழித்துக் கொள்வது அக்கால வழக்கம். அவ் வழக்கத்துக்கு மாறாக நம் சண்முகனார் துணிந்து கிராப்பு வைத்துக் கொண்டார். சிறு வயதிலேயே முற்போக்கெண்ணம் அவரிடம் இயல்பாகவே மலர்ந்திருந்தமையால் சமுதாயத்துக்கு அஞ்சாது, எதிர்த்து நின்று, கிராப்பு வைத்துக் கொண்டார். மகள் திருமணம் சண்முகனார் தம் மகள் பார்வதிக்குத் திருமணஞ் செய்து வைக்க நினைத்தார். அதற்குரிய முயற்சியில் ஈடுபட்டார். செல்வர்கள் இசையாமை வயி.சு.ச. குடும்பத்திற்குச் சமமாக இருந்த செல்வர்கள். ஐயர் வைத்து முறைப்படிதான் திருமணம் நடத்த வேண்டும்; சீர்திருத்த முறையில் நடத்துவதானால் நாங்கள் உடன்படோம் என்றனர். சண்முகனாரோ உறுதி கொண்ட நெஞ்சுடையவர். தம் கொள்கை யை விட்டுக் கொடுக்க மறுத்து விட்டார். சண்முகனார் பணத்துக்கு முதன்மை தராமல் கொள்கைக்கே முதன்மை தரும் இயல்பினர். அதனால், தமது சமுகத்தில் படித்தவ ராகவும் நல்லவராகவும் தம் கொள்கைக்கு இசைபவராகவும் உள்ள இளைஞருக்குத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து, அதற்காக முயன்றார். மணமகன் கிடைத்தார் காரைக்குடியில், மெ. நடராசன் என்ற பெயருடைய படித்த நல்ல இளைஞர் ஒருவர் கிடைத்தார். இவருக்கே மகளைக் கொடுக்க உறுதி செய்தார். ã‹d® kzkf‹, v«.V., o.fh«., படித்துப் பட்டம் பெற்றார். அவர்கள் குலவழக்கப்படி வைதிக நெறியில் திருமணம் நடத்த விரும்பாத சண்முகனார், தமிழவேள் சர்.பி.டி. இராசன் தலைமையில் நடத்த முடிவு செய்து, திருமண அழைப்பும் அச்சிட்டு, அனை வர்க்கும் அழைப்பிதழ்கள் முறைப்படி அனுப்பி விட்டார். பங்காளிகள் எதிர்ப்பு இராயவரத்திலிருந்த பங்காளிகள், இதென்ன! சடங்கு முறைகள் இல்லாத திருமணம்! இதற்கு நாங்கள் வரமாட் டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். உள்ளூர் உறவினர் வந்து, மீண்டும் பங்காளிகளிடம் சென்று, நேரில் வேண்டிக் கொண்டால் வந்து விடுவார்கள் என்று கூறினார்கள். அதெல்லாம் முடியாது; முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப் பட்டு விட்டது. வருவோர் வரட்டும்; என் கொள்கைப்படி திருமணம் நடந்தே தீரும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் சண்முகனார். கொள்கை வென்றது திருமணம் 7-7-1935 அன்று தமிழவேள் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தந்தை பெரியார், அண்ணன் இராம. சுப்பையா, செயல் வீரர் நீலாவதி, இராம. சுப்பிரமணியன், சீர்திருத்த வீரர் சொ. முருகப்பனார், முற்போக்குச் சிந்தனை யாளர் மு. சின்னையா செட்டியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், கொடைச் செல்வர் மெ.செ.மெ.மெ. மெய்யப்பச் செட்டியார், பூவாளுர் பொன்னம் பலனார், ஆறு. ஆ. ராம. சொக்கலிங்கம் செட்டியார் போன்ற பெருமக்களும் இயக்கத் தொண்டர்களும் கூட்டமாக வந்திருந்து சிறப்பித்தனர். தந்தை பெரியாரவர்களும் ஏனைய தலைவர்களும் வாழ்த் துரைக்கத் திருமணம் எவ்வகை ஊறுமின்றி வெற்றியுடன் இனிதே நிறைவேறியது. தாம் செய்வது சரியெனத் தெரிந்தால் எவ்வகை எதிர்ப்போ தொல்லையோ வரினும் பின்வாங்கார். செய்தே வெற்றி காண்பார். எதிர் நீச்சலிலேதான் இவர்க்கு இன்பம். தவறெனத் தெரிந்தால் திருத்திக் கொள்ளவும் தயங்கார். எளிமைப் பாங்கு சண்முகனார் நிமிர்ந்த தோற்றங் கொண்டவர்; புன்முறுவல் தவழும் முகத்தினர்; எப்பொழுதும் வெற்றிலை மென்று கொண் டிருக்கும் வாயினர்; அன்பு தவழும் பார்வையாளர்; உரத்த குரலிற் பேசும் இயல்பினர். ஆனால் அக்குரலில் அதிகாரம் இராது. அன்பும் உரிமையும் குழைந்திருக்கும். குறுநில மன்னர்போன்ற பெருமித நடையுடையவர். ஆயினும் அனைவரிடமும் எளிமை யுடன் பழகுவார். கலப்பு மண ஆதரவு கலப்பு மணத்திற்குப் பேராதரவு நல்குவார். பல கலப்பு மணங் களைத் தாமே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். நீலாவதி, இராம. சுப்பிரமணியம் கலப்பு மணம் செய்து கொண்ட பொழுது, வயி.சு.சண்முகனார் சிங்கப்பூரில் தங்கியிருந்தார். அங்கிருந்தே அக்கலப்பு மணத்திற்கு வாழ்த்துத் தந்தி விடுத்திருந்தார். செல்வர் நீலாவதி இராமசுப்பிரமணியம் திருமணம் உறுதியான சீர்திருத்தத் திருமண மாகும். வாழ்த்துகிறேன். வயி.சு. ஷண்முகம் பத்துப்பகாட், சிங்கப்பூர், 15-10-1930 கலப்பு மணத்தில் - சீர்திருத்தத் திருமணத்தில் சண்முகனார் எத்தகைய உறுதியான பற்று வைத்திருந்தார் என்ற உண்மை யை இச்செய்தி உணர்த்துகிறது. சாதிப்பற்றின்மை சாதிப் பற்றும் அவரிடம் கண்டதில்லை. எப்பொழுதும், சண்முகம் என்று மட்டுந்தான் கையொப்பம் இடுவார். செட்டியார் என்ற சாதிப் பெயரைத் தம் பெயருடன் ஒட்ட மாட்டார். சாதிப் பற்றின்மையால் எவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனப்பாங்கு இவரிடம் மிகுந்து காணப்பட்டது. எவரையும் அயலாகக் கருதாது, உறவினராகவே எண்ணும் பண்புள்ளம் இவரிடம் ஒளி விட்டமையை இவர்தம் நிகழ்ச்சிகள் பல எடுத்துக் காட்டும். சாதிப்பற்று இல்லையெனினும் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இனப்பற்று இவரிடம் மேலோங்கி நின்றன. இப்பற்று இவர்தம் உள்ளத்தின் அடித்தளத்திற் பதிந்து விட்டமையால் பொதுநலம் பேணி வாழ்வதிலும் தலைசிறந்து விளங்கினார். பொது நலப்பற்று பொதுநலம் பேணுங் குறிக்கோளுக்காகவே தனவைசிய ஊழியர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டது. சமுதாயச் சீர்கேடுகளை ஒழித்துக் கட்ட அரும்பாடு பட்டது இச்சங்கம். இச்சங்கம் முளைக்க முதற் காரணமாக விளங்கியவர் நம் சண்முகனார். தமிழறிஞர் சொ. முருகப்பனார் குமரன் என்னும் இதழை நடத்தி வந்தார். அவ்விதழில், பல புனைபெயர்களில் சமுதாயக் கொடுமைகளைச் சாடி எழுதி வந்தார். அஞ்சா நெஞ்சன் என்னும் ஒரு பெயரும் அவர் பூண்டிருந்த புனை பெயர்களுள் ஒன்று. இப்பெயரில் எழுதும் கட்டுரைகள், உணர்ச்சியும் வேகமும் கொண்டு, காரசாரமாக வெளிவரும். இக்கட்டுரைகளைப் படித்துச் சுவைத்து, மகிழ்ந்து, அவற்றின் வயப்ப்டடு, இக்கட்டுரைகளை எழுதும் அஞ்சா நெஞ்சனைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டார். ஆவலை நண்பர் ஒருவரிடம் எடுத்துரைத்தார். அதன் பயனாக அஞ்சாநெஞ்சனாகிய முருகப்ப னாரும் வயி.சு.சண்முகனாரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முருகப்பரைச் சண்முகனார் பாராட்டி மகிழ்ந்து, சமுதாயச் சீர்திருத்தத்திற்காக ஓரமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார். இருவரும் கலந்து, சிந்தித்து, வயி.சு. சண்முகனார். சொ. முருகப்பனார், இராய. சொக்கலிங்கனார், பிச்சப்பா சுப்பிர மணியன், காந்தி மெய்யப்பச் செட்டியார், சிராவயல் காசிச் செட்டியார், அருணாசலம் செட்டியார் முதலாக எழுவர் கொண்ட தனவைசிய ஊழியர் சங்கத்தை உருவாக்கினர். சங்கம் ஆற்றிய தொண்டு இச்சங்கம் செட்டி நாட்டில் அக்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இச்சங்கத்தின் சார்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிடுவது பொருத்த மாகும். நற்சாந்துபட்டி என்னும் ஊரில் நகரத்தார் மரபைச் சேர்ந்த முதியவர் ஒருவர், இளம் பெண்ணொருத்தியைத் திருமணஞ் செய்து கொள்ள ஏற்படாகியிருந்தது. இச்செய்தி வயி.சு. சண்முகனார்க்கு எட்டியது. உடனே சங்கத்தின் சார்பில் ஊருக்கிருவராகச் சேர்ந்து, கூட்டமாகச் சென்று, மறியல் செய்து, அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அம் முடிவின் படி கூட்டம் நற்சாற்றுபட்டிக்கும் படை யெடுத்தது. மணமகள் வீட்டின் முகப்பில் மறியலுக்காகக் கூட்டம் அமர்ந்து கொண்டது. மணமகன் வரவிடாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு. கூட்டம் அமர விடாமற் செய்ய எண்ணிய அவ்வில்லத் தார் என்னென்ன இடையூறுகள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்தனர். கூட்டம் அசையவில்லை. மணமகள் வீட்டார் இதையறிந்து, தந்திரமாகக் கொல்லைப்புற வழியாக ஆரவார மின்றிச் சென்று திருமணத்தை முடித்து விட்டனர். நாள் குறிப்பெழுதுதல் இவரிடம் பாராட்டத் தக்க ஒரு பழக்கம் உண்டு. நாள் தவறாமல் நாள் குறிப்பெழுதும் பழக்கமே அது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அக்குறிப்பில் இடம்பெறும். அவர்தம் இல்லத்தில் குவியல் குவியலாக அந்நாள் குறிப்பேடுகள் குவிந்து கிடந்ததை நாங்கள் கண்டிருக் கிறோம். அக் குறிப் பேடுகள் இப்பொழுது கிடைத்தால் நாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ளத் துணையாகும். அவ்வேடுகள் யாண்டுள்ளன எனத் தெரிந்து கொள்ள இயல வில்லை! கணக்கில் நேர்மை நாடோறும் கணக்கெழுதிவைப்பதிற் குறியாக இருப்பார். சில நாளில் இருப்புத் தொகையில் ஐந்து குறையுமாகினும் என்ன செலவு செய்தோம் என்று சிந்தித்துக் கொண்டேயிருப் பார். இரவு எவ்வளவு நேரமானாலும் எழுந்திருக்க மாட்டார். வீட்டார் வந்து, நேரமாகிறதே! திட்டக்குறைவு என்று எழுதி விட்டு உறங்கலாமே என்பர். உடனே அவருக்குச் சினம் வந்து விடும். சோம்பேறிப் பயலும் திருட்டுப்பயலுந் தான் திட்டக் குறைவு என்று எழுதுவான். v‹idí« m¥go vGj¢ brhš»Ö®fŸ? என்று வெகுண்டு உரைத்து விட்டுச் செலவான வகையைக் கண்டுபிடித்து, எழுதி விட்டுத் தான் உறங்கச் செல்வார். செய்வன திருந்தச் செய் என்பது கோட்பாடு. விடாப்பிடி எதிலும் விடாப்பிடியான குணம் உடையவர். தவறான வற்றில் அவ்வாறு செயற்பட மாட்டார். நல்லனவற்றில் - தமக்குச் சரியென்று தோன்றியவற்றில் - நேர்மையானவற்றில் தான் அவ்வாறு விடாப் பிடியாக இருப்பார். அதனால் எவ்வளவு ஊறுகள் நேரினும் அசைந்து கொடார். இக் கொள்கையினால் பல இழப்புகள் நேர்ந்தன. நேர்ந்தும் இறுதி வரை உறுதியோடு தான் வாழ்ந்தார். வளர்ப்புமுறை மக்களை வளர்க்கும் முறை, மற்றவரினும் வேறுபட்டிருக்கும். அன்பு காட்டுவார்; அப்பொழுது அன்னையாக இருப்பார். கண்டித்துரைப்பார்; அப்பொழுது தந்தையாக விளங்குவார். அறிவுரை கூறுவார்; அப்பொழுது நன்னெறி மொழியும் ஆசானாக மிளிர்வார். கட்டுப்பாட்டை வற்புறுத்துவார்; அப்பொழுது படைத்தலைவராகத் தோற்றம் அளிப்பார். இதை இவ்வாறு செய்யலாமா? அவ்வாறு செய்யலாமா? என்று கலந்துரையாடுவார். அப்பொழுது தோழராக விளங்குவார். கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை, உண்மை, பகுத்தறிவு, சிந்திக்கும் ஆற்றல், உதவும் பண்பு, பணிவு, பெருமிதம் இவ்வரும் பெருங் குணங்களை இவரால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடமும் காணலாம். அவர்கள் பெரியவர்களாகிக் குடும்பப் பொறுப்பேற்ற பின்னரும் இன்றுங் காணலாம். திறந்த மனம் மனத்திற் பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசுவார். சுற்றி வளைத்துப் பேச மாட்டார்... நேரடியாகப் பட்டென்று கூறும் இயல்பு இவரிடம் உண்டு. இச்சமுகத்தினர், எதனையும் வெளிப் படையாகப் பேசி விட மாட்டார்கள். மறைமுகமாகக் குறிப் பாகவே உணர்த்துவர். அதிலும் திருமணப் பேச்சு முதலியவற்றில், பிடிகொடுக்காமல் வெகு நாகரிகமாகப் பேசுவர். ஆனால் சண்மு கனார் இவற்றிற்கெல்லாம் அப்பாற் பட்டவர். வெட் டொன்று துண்டிரண்டு என்பார்களே அப்படித் தான் இவர் பேச்சு. எடுத்துக் காட்டாக ஒன்று குறிப்பிடுகின்றேன். ஒரு நாள் காரைக்குடிக்கு வந்து, தம் திருமகள் பார்வதி நடராசன் இல்லத்தில் இருந்து கொண்டு, என்னை அழைத்து வரச் செய்தார். சென்றேன். வாங்க தம்பி, என் பேத்தி கமலாவுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறேன். உங்களுக்குத் தெளீந்த நல்ல பையன் யாராவது உண்டா? என வினவினார். திடீரென்று இவ்வாறு வினவியதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. இத்தகைய செயல்களில் எனக்கு அவ்வளவாகப் பயிற்சியும் இல்லை. விழித்தேன். இப்பொழுது ஒன்றும் அவசரம் இல்லை. மெதுவாக எண்ணிப் பார்த்துச் சொல்லலாம். இவ்வாறு கூறி, என் தடுமாற்றத்துக்கு ஓர் ஊன்று கோலானார். இதற்குள் என் மனக்கண் முன் காரைக்குடி அண்ணன் இராம. சுப்பையா மகன் சுப. முத்துராமன் (திரைப்பட இயக்குநர்) வந்து நின்றார். ஐயா, நம் அண்ணன் இராம.சுப்பையா மகன் முத்து ராமனைப் பார்க்கலாமே என்றேன். ‘பையன் எப்படி? - இது சண்முகனார் வினா. நல்ல பையன்; நல்ல பேச்சாளி; ஒழுக்கமான பையன்; ஏவி.மெய் யப்பச் செட்டியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான்; அவரிடம் நல்ல பிள்ளையென்று பெயர் வாங்கியவன் - என்று விடை பகர்ந்தேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்ட சண்முகனார், தம் மகளை அழைத்து, உடனே ஆள் அனுப்பி நம்ம விசாலாட்சியைக் (முத்துராமன் தாயார்) கூட்டி வரச் சொல் என்று ஆணை யிட்டார். சிறிது நேரத்தில் விசாலாட்சி ஆச்சி வந்து விட்டார்கள். வந்து அமர்ந்தவுடன், விசாலாட்சி! நம்ம கமலாவை உன் பையன் முத்துராமனுக்குக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன். Ú v‹d brhš»whŒ? என்று நேரடியாகக் கேட்டு விட்டார். அண்ணன் - நீங்கள் சொல்லும் பொழுது நான் என்ன சொல்லப் போகிறேன். சரி - என்று ஆச்சியாரும் இசைவு தெரிவித்து விட்டார்கள். திருமணம் நிறைவேறியது. நகரத்தார் குடும்பங்களில், இரண்டே மணித்துளிகளில் (நிமிடம்) திருமணம் பேசி முடித்ததைக் காணவே முடியாது. துணிவுள்ளம் உச்சிமீது வான் இடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை யென்று பாரதி பாடிய பாடல் வரிக்கு இலக்கியமாக - எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் ஒருவருண்டா? என வினவினால், ஆம்; உண்டு; அவர் தான் வயி.சு. சண்முகம் என்று துணிந்து கூறலாம். சண்முகனார் இல்லத்தை விட்டு வெளியிற் புறப்பட்டால் கைத்துப்பாக்கியின்றிச் செல்ல மாட்டார். ஒரு நாள், வழக்கப் படி கைத்துப்பாக்கியுடன் வெளியிற் செல்ல எண்ணிப் புறப்பட்டு வாயிலுக்கு வந்து விட்டார். அப்பொழுது நண்பர் சிலர் எதிரில் வந்து விட்டனர். வெளியிற் செல்வதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் நண்பர்கள் விடவில்லை. சிறிது நேரம் சீட்டாடி விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்தினர். இவருக்கும் அவ்விளை யாட்டில் விருப்பமுண்டு. வற்புறுத்தலுக்கு இசைந்து விட்டார். சீட்டாடுவது அக்கால இளைஞர்க்கு ஒரு பொழுதுபோக்கு. சீட்டாட்டம் தொடங்கியது. மும்முரமாக நடைபெற்றது. சீட்டாட்டம் ஆடும்பொழுது துப்பாக்கியை மடியின் மேல் வைத்து, அதன் மேல் ஒரு தலையணையையும் வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர் தலையணை மேல் கையை வைத்து அழுத்தி விட்டார். சண்முகனார் தம் மடியில் வைத்துக் கொண்டிருந்த துப்பாக்கி வெடித்து அவருடைய துடையில் குண்டு பாய்ந்து விட்டது. குருதி வழிந்து வேட்டியை நனைத்து விட்டது. அருகிலிருந்தவர் அஞ்சி நடுங்கி விட்டனர். ஆனால் சண்முக னாரோ சிறிதும் அஞ்சினாரல்லர். சத்தமிடாமல் என்னுடன் வாருங்கள் என்று கூறி விட்டார். தோழர்கள் துணையுடன் தமது மகிழுந்தில் மருத்துவமனைக்குச் சென்று, அறுவை செய்து, குண்டை எடுத்துவிட்டு, மருந்திட்டுக் கொண்டு, கட்டுடன் வீடு திரும்பினார். கட்டுடன் கண்ட வீட்டார், ஆ என்ன இது - என்று அலறி விட்டனர். ஒன்றுமில்லை; துடையில் கட்டியொன்று புறப்பட் டிருந்தது. அதை ஆபரேசன் செய்து கொண்டேன் என்று அமைதியாக மறுமொழி தந்தார். அச்சமின்மை பிறிதொரு சமயம் பங்காளி வீட்டுத் திருமணத்திற்காக உறவினரு டன் இராயவரத்திற்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்து திரும்பும் பொழுது இருட்டி விட்டது. மண வீட்டார் தடுத்தும் இவர் கேட்கவில்லை. மாட்டு வண்டிகளில் வந்து கொண்டிருந் தனர். இரவு 11 மணி. நடுவழியில் திருடர் சிலர், வண்டியை வழிமறித்தனர். பெண்கள் அஞ்சி நடுங்கிக் கூக்குரலிட்டனர். சண்முகனார் சிறிதும் அஞ்சில ராகிக் கைத்துப்பாக்கியை யெடுத்து வானை நோக்கிச் சுட்டு விட்டு, உயிர் பிழைக்க வேண்டுமானால் ஓடி விடுங்கள்; இல்லை யென்றால் தீர்த்துவிடுவேன் என்றார். திருடர்கள் மூலைக்கொருவராக ஓடி விட்டனர். எதையும் தாங்கும் இதயம் 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் செட்டி நாட்டிற்கு வந்திருந்த பொழுது இன்பமாளிகையில் தான் தங்கியிருந்தார். அவருடன் கதூரிபாய், தேவதாசு காந்தி, இராசகோபாலாச் சாரியார் முதலான பெருமக்களும் வந்திருந்தனர். உணவு முதல் எல்லா ஏற்பாடுகளும் இங்கேதான். செட்டி நாட்டிலுள்ள ஊர்களுக்குச் சென்று கூட்டத்திற் பேசி விட்டு, நன்கொடையாகக் கிடைத்த தொகை. ஏலத்திற் கிடைத்த தொகை, கூட்டத்தில் உண்டியல் மூலங் கிடைத்த தொகை அனைத் தையும் கொணர்ந்து, இன்ப மாளிகைக்கு வந்து தான் எண்ணுவர். காந்தியடிகள் தொடர்பால், சண்முகனார் தாம் வைத்திருந்த மேல் நாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து விட்டார். காந்தி யடிகள், செல்வராகிய சண்முகனாரிடம் இயல்பாகக் காணப்படும் எளிமையைக் கண்டு வியந்து பாராட்டினார். ஹிருவரும் உரை யாடிக் கொண்டிருக்கும் பொழுது, ‘ஏன் ஹிவ்வளஷி ஆடம்பரமான மாஹீகைழீல் வாழ்கிறார்கள்? என்று வினவினார். இதோ நம் வீதியிலுள்ள வெள்ளையரைச் சார்ந்து வாழ்கின்ற - பெருஞ் செல்வரின் அரண்மனைக்குச் சமமாக, வெள்ளையனை எதிர்க்கும் நமக்கும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பு மனப் பான்மைதான் வேறொன்றுமில்லை, எனச் சண்முகனார் விடை யிறுத்தார். இதை விட்டு விரைவில் நீங்கள் வெளி வந்தாக வேண்டும். நாட்டு மக்களுடன் சேர்ந்து தொண்டு செய்ய வேண்டும்? - இது காந்தியடிகளின் வேண்டுகோள். சில விவகாரங்கள் இருக்கின்றன; அவை தீர்ந்ததும் உங்கள் விருப்பம் போல் வெளியேறி விடுகிறேன் - இது சண்முகனாரின் மறுமொழி. காந்தியடிகள் வேறொன்றும் பேசாமல், புன்முறுவல் பூத்தார். (விவகாரம் என்று குறிப்பிட்டது, தமக்கும் அவர்களின் உறவினர் களுக்கும் தொழில் சம்பந்தமாக அப்பொழுது நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு) ஆனால் அந்த விவகாரம் சண்முகனாரின் இறுதி நாள் வரை முடியவில்லை. அதனால் மனம் சிறிது நொந்த நிலையில் கடைசி நாளில் தம் மகள் பார்வதி நடராசனிடம் ஆத்தா அன்று காந்தியடிகள், நீங்கள் வெளி வந்து விட வேண்டும் என்று கூறியபோது தொடர்ந்துள்ள வழக்கை முடித்தவுடன் வந்து விடுகிறேன் என நான் கூறினேன். அப்போது அவர் ஒன்றும் பதிலுரையாது புன்னகை பூத்துப் பேசாதிருந்தார். அந்தப் புன்முறுவலின் பொருள் அன்று எனக்கு விளங்க வில்லை. இன்றுதான் அது விளங்குகிறது. வழக்கை நீங்கள் விட்டு விட்டால் ஒழிய வழக்கு உங்களை விடாது என்பதைச் சொல்லாமல் சொல்லியுணர்த்தியதை நான் அப்பொழுது புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன். அன்று விளங்கவில்லை. இன்றுதான் அது விளங்குகிறது - என்று கூறியிருக்கிறார். இந்த நிலையிலுங்கூட, அந்தச் சிரிப்பை நினைந்து, அதற்கு நயமான பொருளும் உரைத்து, வியந்தாரே தவிர மனம் சோர்ந்து விடவில்லை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அடிக்கடி தம்பிமார்களுக்குக் கூறுவதுண்டு. அந்த இதயத்தை - கலங்காத நெஞ்சுரத்தைச் சண்முகனார் இயற்கை யிலேயே பெற்றிருந்தார். அத்தகைய பேராற்றலைப் பலமுறை நான் கண்டதுண்டு. அவருடைய இன்ப மாளிகை அரண்மனை போன்றதென முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வழக்கு வழக்கென்று வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருந்தமையால் பொருளெல்லாம் இழந்து, இன்ப மாளிகையையும் இழந்து நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செல்வம் வரும் வழியும் அடைபட்டது. ஆனால் அது செல்லும் வழி மட்டும் பெரிதாகிக் கொண்டிருந்தது. ஒரு பழுதுபட்ட பழைய வீடு. சிதைந்த ஓடுகள் வேய்ந்த சிறிய வீடு. அவ்வீட்டிற்குள் வசித்து வந்தார். ஒரு நாள் நான் அங்கே அவரைக் காணச் சென்றேன். அங்கேயும் அந்த நிலையிலும் அதே குரல், அதே தோற்றம் அதே வரவேற்பு. முடியரசன்! ஏன் இப்பொழுதெல்லாம் அடிக்கடி வருவதில்லை? - சண்முகனார் விடுத்த வினா. நான் சற்றே உருகி விட்டேன். ஐயா, உங்களை இன்ப மாளிகை யிற் கண்டுகளித்த என் கண்கள், நீங்கள் இச்சிற்றிலில் இருப்பதைக் காணக் கூசுகின்றன. அம்மன வேதனைதான் அடிக்கடி இங்கு வருவதைத் தடை செய்கிறது என்று தயங்கிய வாறு கூறினேன். ஒரு பலத்த சிரிப்பு, அட! போப்பா, ஹிதெல்லாம் ஒரு ஜீளை யாட்டு, ஹிதற்குப் போய் வருத்தப் படலாமா? என்று எனக்கு ஆறுதல் சொன்னார். எதையும் தாங்கும் இதயத்துக்கு இதனினும் வேறு சான்று வேண்டுமோ?நான் சிலையாகி விட்டேன். எனினும் என் நெஞ்சத் துடிப்பு நிற்கவில்லை. m¤Jo¥ò x›bth‹W« ‘ï‹dhik ï‹g« vd¡bfhË‹ MF«j‹, x‹dh® ÉiHí« áw¥ò? என்று நிறுத்தி நிறுத்தி ஒலித்துக் கொண்டிருந்தது. கலங்கா நெஞ்சம் ஒரு முறை இன்பமாளிகையின் மாடியின் ஒரு புறத்தே தீ பற்றிக் கொண்டது. அதனையறிந்ததும் வடக்குப் பகுணிழீல் வாழ்ந்து கொண்டிருந்த ஆணி ணிராஜீட மக்கள், ‘நம்ம ஐயா னிட்டிலே தீப்நிடித்து, ஜீட்டதே! என்று அலறிக் கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். உடன் காரைக்குடியிலிருந்து நெருப்பு அணைக்கும் படையினரும் வந்து மறுபுறம் பரவாமல் தடுத்து விட்டனர். ஆதி திராவிட மக்களுக்குச் சண்முகனார், ஆண்டு தோறும் கதராடைகள் வழங்குவதுண்டு. அதனால் - நன்றிப் பெருக்கால் ஓடோடி வந்து அணைத்து உதவினர். இம்மக்கள் விரைந்து வந்து அணைக்காதிருந்தால் படையினர் வந்து சேரும் முன்பாக முழுவதும் நெருப்புப் பரவி இருக்கும். வீட்டில் நெருப்புப் பற்றிய செய்தி, சிங்கப்பூரிலிருந்த சண்முக னார்க்குத் தந்தி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்முரசு ஆசிரியரும் உரிமையாளருமான சாரங்க பாணி தலைமையில் நிகழ்ந்த கூட்டத்தில் மேடையில் சொற்பொழிவு ஆற்றிக் கொண் டிருந்த சண்முகனாரிடம் தந்தி கொடுக்கப் பட்டது. அதை வாங்கிப் படித்து விட்டுச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். கூட்டம் முடிந்தபின் சாரங்க பாணியிடம் தந்தியைக் கொடுத்தார். அவர் படித்து விட்டுச் சண்முகனார் அமைதியைக் கண்டு வியந்தார். இவ்வாறு எத்தகு நிலையிலும் சண்முகனார் பதற மாட்டார்; கலங்க மாட்டார். நேர்மையுள்ளம் நகரத்தார் மரபில் பெண்ணுக்குச் சீதனப் பணம் கொடுப்பது வழக்கம். அப்பணத்தைப் பிறரிடமோ கணவரிடமோ கொடுத்து வைப்பது வழக்கம். அது வட்டியுடன் வளர்ந்து கொண்டிருக்கும். அவ்வழக்கப் படி, சண்முகனார் கடையில் சீதனப்பணம் கொடுத்து வைக்கப்பட்டது. இப்பொழுது நொடிப்பு ஏற்பட்ட சமயம். வழக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடியிருக்கும் வீடும் போய் விடுமோ? என அஞ்சி, நெருங்கிய உறவினர்கள், சீதனப் பணத்துக்காக வீட்டை இலக்குமி ஆச்சி பேரில் மாற்றி எழுதி வையுங்கள்; வீடாவது மிஞ்சட்டும் என்று வேண்டினர். அது அயோக்கியன் செய்கிற வேலை; என்னையுமா அதைச் செய்யச் சொல்கிறீர்கள், முடியாது என்று மறுத்து விட்டார். வீட்டை இழக்க நேரினும் ஏற்றுக் கொள்ள அணியமாக இருந்தார். நேர்மையிழக்க ஒருப்படவில்லை. சண்முகனாரின் பதினெட்டாம் வயதில் தொடங்கிய வழக்கு, இறுதிக் காலம் வரை தொடர்ந்து கொண்டே யிருந்தது. வழக்கின் பொருட்டு, அவரடைந்த துன்பங்கள், இழப்புகள் எண்ணிலடங்கா. எனினும் விடாப் பிடியாக நின்றார். இவ்வழக்கு, செட்டிநாட்டிலும் மலேயாவிலும் மிக விளம்பர மான வழக்கு. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்ற வழக்கு. ஆதலின் இலக்கங்கள் பல இழக்கும் நிலை ஏற்பட்டுக் குடும்பம் எய்க்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் இன்ப மாளிகை ஏலத்துக்கு வந்து விட்டது. எனினும் உள்ளூரில் அம்மாளிகையை ஏலத்தில் எடுக்க எவரும் முன் வந்திலர். வழக்கில் தொடர்புடைய எதிரியே பணம் கொடுத்து, பினாமி யாக ஒருவரை விட்டு ஏலத்தில் எடுக்கச் செய்து விட்டார். இன்ப மாளிகையில் குறுநில மன்னர் போல வாழ்ந்த சண்முகனார், வேறு வீட்டில் குடியிருப்பதை மகன் சோலையும் மகள் பார்வதியும் விரும்பவில்லை. கூடின விலை கொடுத்துப் பெரிய வீடு வாங்கவும் பொருள் வசதியில்லை. அதனால் ஒரு சிறு பழைய வீட்டை மகள் பார்வதி தேடிப்பிடிக்க, மகன் சோலை அதனை விலைக்கு வாங்கித் தர, அவ்வில்லத்தில் சண்முகனார் குடியேறினார். சண்முகனார் மறைவுக்குப் பின்னர், வழக்கில் எதிரியாக இருந்தவர் இன்ப மாளிகையை இடித்து, இத்தாலியப் பளிங்குக் கற்களினாலும் உயரிய வேலைப் பாடமைந்த மரங்களினாலும் கட்டப்பட்ட வீட்டை இடித்துப் பிரித்தெடுத்து, வெள்ளைக் கற்சுவர்களைக் கூட விடாமற் பிரித்து, அவற்றை விற்றுப் பணமாக்கி விட்டார். தலைவர்கள், பாவலர்கள், சான்றோர்கள் பலரின் காலடி பட்ட அந்த இன்ப மாளிகை இன்று தரையோடு தரையாகி, மண்மேடிட்டு, முட்புதர்கள் மண்டிக் காண்போர் கண்ணையும் நெஞ்சையும் கலங்கச் செய்து, கையறுகாட்சி தந்து கிடக்கிறது.  9 வாழ்க வயி.சு. சண்முகனார் கவிஞர் பழ. மு. முத்தழகப்பர் (வை.சு.ச. தலைமையில் தனவணிக இளைஞர் சங்கத்திற் சேர்ந்து சமுதாயப் பணியாற்றும் பேறு பெற்றவர் பழ. மு. முத்தழகப்பர். ஐயாவின் இயல்புகளை நேரிற் கண்டறிந்தவரா தலின் தம் மனத்தி லிருப்பதைக் கவிதையாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.) 1. தனவணிக வாலிபர்கள் சங்கத்தின் தலைவரவர் தலைமை யின்கீழ் மனமினிக்கப் பணிபுரிந்தோம் இளைஞரெலாம் அந்நாளை மறக்க வில்லை தினமணியாய்க் கடமையிலும், செந்தமிழாய் இனிமையிலும் திகழ்ந்த வீரன் மனமறிந்து செயல்புரிந்து வளமிகுந்த வாழ்வுபெற வழிமேற் கொள்வோம். 2. பாரதியார் தமைத்தேடிப் பரிசளித்துப் பாட்டுவளம் பரவச் செய்தார் பாரதியின் தாசனார் நாமக்கல் பாவலராம் புலவர் தம்மைச் சீராட்டிப் பாராட்டித் தென்சீதக் காதியெனத் திகழ்ந்த சீமான் நீரூட்டி உரமூட்டித் தமிழ்ப்பயிரை எந்நாளும் நிமிரச் செய்தார். 3. அடுத்தவர்க்கு நிழலாவார் அன்னையினும் தயவுடையார் ஆண்மை யாளர் மிடுக்கான தோற்றத்தார் கதராடை மேனியினார் அன்பு தோய்ந்த துடுக்கான பேச்சாளர் தூயகலை வல்லார்க்கு வாரி வாரிக் கொடுக்கின்ற கரதலத்தார் வை.ச.சண் முகனாரின் குறிப்புக் காண்பீர். 4. மேனாடும் போற்றிடும் கானாடு காத்தநகர் மேவுமுயர் தியாக சீலன் தேனோடு செந்தமிழ் சீரோடு வாழ்ந்திடச் சேவையாற் சிறந்த செம்மல் மாநாடு மேம்படச் சமுதாயம் ஓங்கிட மகத்தான பணிகள் ஆற்றி வானாடு வாழ்ந்திடும் வை.சு.ச. பேர்புகழ் உலகெலாம் பரவி வாழ்க.  10 வை. சு. சண்முகம் முத்தமிழ்க்காவலர் bg.கி.M. விசுவநாதம் (சண்முகனாரும் முத்தமிழ்க்காவலர் அவர்களும் ஒரே இயக்கத்தி லிருந்து நெடுநாள் பழகிய வர்கள். தொண்ணூறாம் அகவையில் வாழும் இவ்விளைஞர் ஒரே காலத்தில் வாழ்ந்து, பழகிக் கண்டறிந்த உண்மைகளைக் கட்டுரையாக - வழக்கம் போற் சுருக்கமாக ஆனால் விளக்க மாகத் தந்துள்ளார்.) நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம் தமிழகத்தில் சிறந்து உயர்ந்து விளங்கும் ஒரு செல்வச் சமூகம், வருந்தி உழைப்பதும், சிக்கனமாக வாழ்வதும், சேமித்த பொருள்களை அறச்செயல் களுக்கு வாரி வழங்குவதும் அவர்களின் கொள்கைகள். இச்சமூகம் இல்லாவிடில் பல திருக்கோயில்கள் சீர்குலைந்து போயிருக்கும். இன்றும் கூட பற்பல திருக்கோயில்களில் திருப்பணிகளும் குட முழுக்கு களும் இச்சமூகத்தினரால் நடை பெற்று வருவதைக் காணலாம். சமயத்தொண்டு மட்டுமல்ல கல்வித் தொண்டிலும் இச்சமூகத்தினர் தலை சிறந்து விளங்குகின்றனர். ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், கருமுத்து தியாகராசச் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களும், கோடி கொடுத்தும் குடியிருந்த வீடும் கொடுத்த கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களால் காரைக்குடியில் தோற்றுவிக்கப் பெற்ற கல்வி நிறுவனங்களும் இதனை மெய்ப்பிக்கும், பிறரிடம் நன்கொடை பெறாமல் தங்களின் சொந்த வருமானத்தைக் கொண்ட பல்கலைக்கழகங்களையும் பல துறைக் கல்வி நிறுவனங்களையும் தோற்றுவித்த பெருமை இவர்களுக்கு உண்டு. சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வது மட்டுமல்ல. நாட்டுப் பற்றிலும் இச்சமூகத்தினர் சிறந்து விளங்கியவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் அவர்கள். செட்டி நாட்டு அரசர் நீதிக்கட்சியிலும் வை.சு. சண்முகம் அவர்கள் காங்கிர கட்சியிலும் பற்றுக் கொண்டவர்கள். இருவரும் ஒரே ஊரில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்பவர்கள். 1927ல் காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்த பொழுது செட்டிநாடு சென்று கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் இல்லத்தில் இராஜாஜியுடன் தங்கியிருந்த செய்தி நகரத்தார் வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்று. வை.சு. சண்முகம் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகப் பணிபுரிபவர். தனவைசிய ஊழியர் சங்கமொன்றைத் தமிழ்க் கடல் ராய சொக்கலிங்கம், சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிர மணியம், காசிச் செட்டியார், காந்திமெய்யப்பன் முதலிய நண்பர்களின் துணைகொண்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருமை அவருக்கு உண்டு. அடுத்து இப்பெரு மக்களால் தோற்றுவிக்கப் பெற்றதும் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் பெற்றது மான இந்து மதாபிமான சங்கம் இன்றும் காரைக்குடியில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு வந்திருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்து அவரைப் பற்றியும் அவரது தொண்டுகளைப் பற்றியும் புகழ்ந்து பல பாடல்களைப் பாடி அவரிடம் கொடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட வை.சு. சண்முகம் அவர்கள், தன்னைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பாடியிருப்பதால் அதனை அச்சிட்டு வெளியிட விரும்பாமல் பல ஆண்டுகள் வரை தன் பெட்டியி லேயே வைத்திருந்தார். அப்பாடல்கள் காரைக்குடிக் கவிஞர் முடியரசனிடம் கிடைத்து அதை அவர் எழில் இதழில் வெளியிட்டார். சமயப்பணி, கல்விப்பணி, நாட்டுப்பணி மட்டுமல்ல சமூக சீர்திருத்தப் பணியிலும் நகரத்தார் சமூகத்தில் பலர் சிறந்து விளங்கி உள்ளனர். அதிலும் பெரியார் வழியைப் பின்பற்றிச் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து முதல் முதலாகக் கலப்பு மணம் செய்து கொண்டவர் மரகதவல்லி முருகப்பா அவர்கள். இதனை அடுத்து அச்சமூகத்தில் நடந்த கலப்புத்திருமணங்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நீலாவதி இராம. சுப்பிரமணியம் திருமணம், அருணகிரி சுந்தரி திருமணம், வை.சு. சண்முகம் மஞ்சுளா திருமணம் முதலியன. குமரன் ஆசிரியர் காரைக்குடி சொ. முருகப்பா அவர்கள் காரைக்குடியில் நடத்திய இராமாநாதபுர மாவட்டச் சுயமரியாதை மாநாட்டிற்குப் பொருளாலும் உழைப்பாலும் பேருதவி புரிந்தவர் வை.சு.சண்முகம் அவர்கள். சுயமரியாதை இயக்கத்தில் புரோகித மறுப்பு என்ற ஒரு கொள்கையு முண்டு. அதை ஏற்று நகரத்தார் சமூகத்தில் பிறந்த நடராஜனுக்கும் தன் மகள் பார்வதிக்கும் புரோகித மறுப்புத் திருமணத்தை முதன் முதலாக நடத்திக் காட்டிய பெருமை வை.சு. சண்முகம் அவர் களுக்கு உண்டு. இத்திருமணத்தை 53 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1935ல் நானும் பெரியாரும் சென்று நடத்தி வைத்தது பெரும் புரட்சியாகவும் கண் கொள்ளாக் காட்சியாகவும் இருந்தது. அன்று எடுத்த புகைப் படமும் மேல்மாடியில் இருப்பவர்களுடைய தலைக்கும் கீழ்மாடியில் இருப்பவர்களுடைய காலுக்கும் ஒளி வேற்றுமை யின்றி அழகுற எடுத்த பெரிய புகைப்படம் நேற்று எடுத்தது போல் இன்னும் என் இல்லத்தில் ஒளி வீசிக் கொண்டிருக் கிறது. நான் வை.சு. சண்முகம் அவர்களை 60 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1929ல் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அதன் பிறகு இயக்கம் சம்பந்தமான பல கூட்டங்களில் சந்தித்து உரையாடி மகிழ்வ துண்டு. அப்பொழுது ஒரு முறை தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் அவர்கள், முதல் கப்பலில் மலேசியா சென்று காங்கிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். நான் அதே சமயம் மறு கப்பலில் அங்குச் சென்று நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்து அழைத்துக் கோலாலம்பூரில் உள்ள தன் இருப்பிடத்தில் விருந்து கொடுத்து மகிழ்ந்தவர் வை.சு.சண்முகம் அவர்கள். தமிழ்மக்களைக் கட்சிகள் பிரித்தாலும், மொழி ஒன்றுபடுத்தும் என்ற உண்மையை அவ்விருந்துக் கூட்டம் மெய்ப்பித்தது. வை.சு. சண்முகம் அவர்கள் பெரும் குடும்பத்தைச் சார்ந்த வராதலின் பெருங்குணமும் பெருமனமும் படைத்திருந்தார். அதிகமாகப் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததினால் தன் குடும்பத்தைப் பற்றிச் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. எவரையும் எளிதாக நம்பி விடுவார். இதனாலேயே அவரது குடும்பத்திற்கு ஏமாற்றமும் வம்புகளும் வழக்குகளும் ஏற்பட்டு அவரைத் தொல்லைப் படுத்தின. என்றாலும் அவர் மன உறுதியோடும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்தார். இறுதியாக வலக்கையில் கொடுப்பதை இடக்கை அறியாமல் செய்து வந்த கொடை மறைந்து வந்தது போல அவர் உடலும் இவ்வுலகை விட்டு மறைந்து போயிற்று. என் செய்வது? அவரது காலத்திற்குப் பிறகு அவரது செல்வ மகள் பார்வதி இன்றும் நல்ல உடல் நலத்தோடு இருந்து வருகிறார். தங்கை பார்வதிக்கு இப்பொழுது வயது எழுபத்தொன்று இருக்கலாம். வை.சு.சண்முகம் அறக்கட்டளையென ஒன்று நிறுவி யிருக்கிறார் என்ற செய்தி நம் அனைவரையுமே மகிழ்ச்சி யடையச் செய்கிறது. அன்பர் திரு. வை.சு. சண்முகம் அவர்கள் மறைந்தாலும் அவரது தொண்டும் புகழும், தமிழும் தமிழினமும் உள்ளவரை மறையாது.  11 அஞ்சா நெஞ்சர் வை. சு இராம சுப்பிரமணியம் (நீலாவதி) (இராம சுப்பிரமணியம் அவர்கள் தம் துணைவி யார் நீலாவதி அம்மையாருடன் சுயமரியாதை இயக்கத்திலும் பேராயக் கட்சியிலும் உண்மை யாகத் தொண்டு செய்தவர். சண்முகனாருடன் ஒன்றிப்பழ கியவர். அன்றைய நிகழ்ச்சிகளை இக்கட்டுரை வாயிலாக நினைவு கூர்கிறார்.) தமிழ் நாட்டில் நகரத்தார் வாழும் கானாடுகாத்தானில் சீர்திருத்த வாலிபர்களுக்கு ஓர் இரும்புத் தூணாக இருந்தவர் அமரர் வை.சு. சண்முகம் ஆவார். தனவணிக நாட்டில் அரை நூற்றாண்டுக்கு முன் சீர்திருத்தத் துறையில் ஆர்வம் காட்டிய இளைஞர் வரிசையில் சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிரமணியம், ராய சொக்கலிங்கன், மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியார், (சொ. முருகப் பரின் குரு) இராமச் சந்திரபுரம் சு. பழநியப்பா, தேவகோட்டை அ.வெ. தியாகராஜா போன்றவர்களின் வரிசையில் முதலிடம் பெற்ற தியாகச் செம்மல். வை.சு. சண்முகம் ஆவார். உளுத்துப் போன நிலையிலிருந்த 96 ஊர் நகரத்தார் சமூகப் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்தி வைக்க அஞ்சா நெஞ்சுடன் போராடினார். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தலைசிறந்த தமிழறிஞர்கள், கவிஞர்களின் புரவலராகவும் கம்பீரத்தின் சின்னமாகவும் வாழ்ந்தவர். மகாகவி பாரதியாரை இன்று போற்றும் தலைவர்களும் பிறரும் அன்று புறக்கணித்து ஒதுக்கிய காலத்தில் அவருக்கு உதவி செய்து, வேண்டிய பொருளும்கொடுத்துக் கைதூக்கி விட்டவர் அருமை அன்பர் வை.சு. சண்முகம் ஆவார். 1919-ம் ஆண்டு பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகனார் வீட்டில் தங்கிய பொழுது கானாடு காத்த நகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணைக் கோவே என்று பாடியுள்ளார். மேலும் செட்டிமக்கள் குலத்தினுக்குச் சுடர் விளக்கே என்றும் பாடியிருக் கிறார். திருச்செந்தூர்ப் பக்கமுள்ள சேரமாதேவி என்ற ஊரில் தேசபக்தர் வ.வெ.சு. ஐயர்அவர்கள் காந்தீய முறையில் ஒரு குருகுலம் ஆரம்பிக்க எண்ணியபோது, அதற்கு நிலம் வாங்கிக் கொடுத்த பெருமை அமரர் வை.சு. சண்முகனாரையே சேரும். அதோடு மட்டுமல்ல குருகுலம் கட்டிடம் கட்ட வை. சு.ச. மலேயா சென்று நன்கொடை யாகப் பொருள் சேர்த்துச் சுமார் 35,000 வெள்ளி சேர்த்தார். குருகுலம் காந்தீய முறையில் சரியாக நடைபெறவில்லை என்றும் சாதி பிரித்துச் சாப்பாடு போடப்பட்டது என்றும் தெரிந்தது. மலேயாவில் திரட்டப் பட்ட நன்கொடைப் பணத்தைக் கொடுத்த வர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று திரு.வி.க. சேலம் டாக்டர் பி. வரதராஜலு நாயுடு, சொ. KUf¥gh, uha brh., சுரேந்திரநாத் ஆரியா, முதலியவர்கள் தீர்மானித்தப்படி திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்தக் குருகுலம் எப்படி நடக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் திருமதி நீலாவதி அவர்களும் 1931-ம் வருடம் சேரன் மாதேவி சென்று பார்த்து வந்தோம். உயர் சாதிப் பையன் களுக்கு ஒரு அறையிலும் மற்ற பையன்களுக்கு ஒரு அறையிலும் உணவு பரிமாறப்பட்டது கண்டு காந்தீய முறை குருகுலம் இப்படியா! என்று மனம் வருந்தினோம். ஒப்பற்ற தேசபக்தர் வ.வே.சு. ஐயர் தூய்மை மனம் படைத்தவர் தான். குருகுலம் நிர்வகித்தவர் வைதீக மனம் படைத்த மகா தேவய்யர் என்பவர். இதனால் இந்த இழிநிலை ஏற்பட்டது மட்டுமல்ல இதற்கு ஒரு போராட்டமே நடை பெற்றது. இச்சம்ப வந்தான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பிராமண எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கக் காரணம் ஆகும் எனலாம். வை.சு.ச. அவர்கள் புதுவை பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகியவர். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட வை.சு.ச. பாரதி தாசனுக்குப் பல ஆண்டுகளாக மிகுந்த ஆதரவு காட்டி வந்திருக் கிறார்கள். தனவதிக நாட்டில் 50 ஆண்டுகளாகச் சீர்ணிருத்தம் மங்கிப் போனதற்குக் காரணம் வை.சு.ச., சொ. முருகப்பா, ராய. சொ., பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்கள் இல்லாததே என்று துணிந்து கூறலாம்.l  12 போராட்ட வீரர் இராம. சுப்பையா (திராவிட இயக்க வரலாற்றில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றவர் அண்ணன் இராம. சுப்பயை அவர்கள். சண்முகனாரிடம் நெருங்கிப் பழகிய அவர், சண்முகனாரின் வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க வீரச் செயல்களை வரைந்து காட்டுகிறார்.) மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசிய காலத்தில், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், செட்டி நாட்டு மண்ணில் அரிய சீர்திருத்தச் சாதனைகளைச் செய்த செம்மலே திரு. வை. சு. சண்முகம் அவர்கள். வை.சு என்றாலே அனைவரும் அறிவர். செட்டிநாட்டு அரசருக்கு இணையாக அங்கே இவர்கள் புகழும் மேலோங்கி நின்றது. இவரின் சிந்தனை ஆற்றலும், செயல் திறனும், விடா முயற்சியும், எதிர்ப்பைக் கண்டு அஞ்சா நெஞ்சமும் அந்த அளவுக்கு இவரை உயர்த்தின. அந்த நாள்களில், திரு. வை.சு. அவர்களுடன் இணைந்து, நான் ஆற்றிய பணிகள் சுவையானவை; என்றும் நினைவி லிருந்து அகலாதவை. தனவைசிய இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரு. வை.சு. அவர்களும் மற்ற பெரியவர்களும் ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். திரு. சொ. முருகப்பா, திரு. ராய. சொ. திரு. பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்களும் அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள். அந்தச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்குக் குறிப் பிட்டாக வேண்டும். அப்போதெல்லாம், மாப்பிள்ளை வீட்டார் தான் பெண் வீட் டாருக்குத் திருமண நேரத்தில் பணம் கொடுக்க வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள வரதட்சணைக்கு நேர்மாறான நிலை அது. mjhtJ ‘bg© j£riz! எப்படியாகிலும், பணம் கொடுத்து மணம் புரிவது சமூகக் கொடுமைதானே, ஆகவே அதை எதிர்த்துத் தனவைசிய சங்கத்தின் சார்பில் திரு. வை.சு. ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வாறு நடக்கும் திருமண வீடுகளின் முன்பு, முதல் நாளே தொடங்கி ஒரு மறியல் போராட்டம் நடத்துவதே சங்கத்தின் திட்டம். முதலில், நச்சாந்துபட்டி என்னும் ஊரில் நடைபெற்ற ஒரு பணக்காரன் வீட்டுத் திருமணத்தில் போராட்டம் தொடங்கி னோம். இளைஞனாக இருந்த நானும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். திருமணத்திற்கு முதல் நாளே, நாங்கள் நச்சாந்து பட்டிக்குப் புறப்பட்டு விட்டோம். அங்கு போய்ச் சேரும்போது இரவாகி விட்டது. இரவு முழுவதும் திருமண வீட்டிற்கு முன் நின்றுகொண்டு முழக்கமிட்டோம்; மறியல் செய்தோம். பெண்ணை வளர்த்துக் காசுக்கு விற்பதா? என்ற முழக்கம் இன்னும் என் நினைவில் உள்ளது. திருமணம் நடத்திய அப்பணக்காரனும் எங்களுக்குப் பணிவதாக இல்லை. வேலைக்காரர்களை வைத்து முற்றம் நிறையத் தண்ணீரை இறைத்துக் கட்டி வைத்து, திடீரென்று திறந்து விட்டுவிட, நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் முழுவதும் தண்ணீர். எங்களை அங்கிருந்து விரட்டவே அந்த ஏற்பாடு. ஆனால் நாங்களும் அங்கிருந்து நகர்வதாக இல்லை. ஆளுக்குப் பத்துச் செங்கற்களை எடுத்துக் கொண்டு வந்து போட்டு, அவைகளின் மேல் நின்று கொண்டு மீண்டும் முழக்கமிட்டோம். அடுத்த நாள் முகூர்த்த நேரம் தவறிப் போய், பிறகுதான் திருமணம் நடந்து முடிந்தது. இப்படி ஒரு போராட்டத்தை அன்றைய செட்டிநாடு பார்த்ததே யில்லை. முத்தமிழ் நிலையம் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் நிறுவி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களையெல்லாம் திரு.வை.சு. அவர்கள் வெளியிட்டார்கள். கவிஞருக்கும் அவருக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பும்இருந்தது; இடையில் ஒருமுறை சண்டையும் வந்தது. எல்லாவற்றிற்கும் நான் சாட்சியாய் இருந்திருக்கிறேன். நினைத்துப் பார்க்க, நினைத்துப் பார்க்க, திரு. வை.சு. அவர் களோடு இணைந்திருந்த காலத்து நிகழ்ச்சிகள் பல நினைவுக்கு வருகின்றன. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. திரு வை.சு. அவர்களின் முதல் மனைவி கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த போது, தாயாய், மருத்துவராய், செவிலியாய் திரு. வை.சு. ஆற்றிய தொண்டு மிக அரியது. நாட்டுத் தொண்டைப் போலவே, வீட்டுக் கடமைகளிலும் தவறாதிருந் தார்கள். இம்மலரைத் தொகுக்கும் கவியரசர் முடியரசனார் அவர்களும், திருமதி பார்வதி தேவி அவர்களும், மிக அரிய, அற்புதமான காரியத்தைச் செய்கின்றனர். திரு வை.சு. அவர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதோடு, அவரைப் போல அஞ்சா நெஞ்சுடன் வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்.  13 செட்டிநாட்டின் வீரத் திலகம் முல்லை பிஎல். முத்தையா (பாவேந்தர் பாரதிதாசனைத் தெரிந்தோர் அனைவரும் முல்லை. முத்தையாவை அறிந்திருப்பர். சண்முகனாரிடம் நெருங்கிப் பழகியவர். அப் பழக்கத்திற் கண்டெடுத்த முத்துகளைக் கோத்துக் கொடுத் துள்ளார் முத்து ஐயா.) மகாகவி பாரதியார், செட்டிமக்கள் குல விளக்கு என்ற தலைப்பில், 1919ல் வை.சு. அவர்களைப் புகழ்ந்து பாடியுள்ளார். அந்தப் பாடஸீன் ஹிறுணிழீல், ‘சண்முகனாம் கருணைக் கோவே! என்று முடிக்கின்றார். அதைவிட வை.சு. அவர்களுக்கு வேறு புகழ் உண்டோ? பாரதியை ஆதரித்த வள்ளல் அல்லவா வை.சு. அவர்கள்! என் மனநிறைவுக்காக, மலருக்குச் சிலவற்றை எழுதுவது என் கடமை! 1943ல் வை.சு. அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எனக்கு வயது 23, ஆயினும், தந்தை - மகனைப் போலப் பாச உணர்வோடு, பயமின்றி, உரிமையோடு பழகினேன். அதன் பின்னர், பாவேந்தர், பெரியார், அண்ணா, சோம சுந்தர பாரதியார், கோவை அய்யாமுத்து, திரு.வி.க. முதலான சான்றோர் பெருமக்களுடன் பழகு வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அது ஓர் பொற்காலமாகத்திகழ்ந்தது. வை.சு. அவர்கள் இன்ப மாளிகையில் வாழ்ந்தார்கள். அந்த மாளிகை அரண்மனையாகவும் அதில் வை.சு. அவர்கள் மன்னராகவும் வீற்றிருந்தார்கள். அந்த அரண்மனைக்கு வராதவர்கள் இருக்க மாட்டார்கள். எந்த வேளையில், எத்தனை பேர்கள் வந்த போதிலும், அத்தனை பேர்களும் தங்கி, அறுசுவை உணவு உண்டு, உறங்கிச் செல்வது வழக்கமாயிற்று. எளியேனுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது. ஒரு முறை, நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப வாய்மைக் குடிக்கு. என்ற குறளை எழுதி, அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எழுதினேன். தம்பி! உன் பாராட்டுக் கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி! என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்கள் வை.சு. அவர்கள். 1943 முதல் அவர்களின் அமரத்துவத்துககுச் சில மாதங்கள் முன் வரையிலும் எனக்கு ஏராளமான கடிதங்கள் எழுதி யிருந்தார்கள். முல்லைப் பதிப்பகத்தைத் தொடங்கி, பாவேந்த நூல்களை நான் வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் இன்ப மாளிகையில் பாவேந்தரும் வை.சு.வும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, ‘தலீஷீல் நிறமொஷீக் கலப்பு ஏன்? என்ற பிரச்னையை வை. சு. எழுப்பினார்கள். அன்று இரவே, தமிழ் இயக்கம் என்ற பாடல்களை இயற்றினார் பாவேந்தர். மறுநாள் காலையில், என்னிடம் கொடுத்து, உடனே இதை அச்சிட்டு வெளியிடு என்றார் பாவேந்தர் (அப்படியே வெளியிட்டேன்.) அப்பொழுது அருகில் இருந்த வை.சு. அவர்கள், எதையும் அழகாக அச்சிட்டு, வெளிப்படுத்துவதில் முத்தையாவுக்குத் தணியாத ஆர்வம் உண்டு என்று கூறினார்கள். அவர்கள் அன்று கூறியது, தீர்க்கதரிசியின் சொல்லாகவே அமைந்தது. (இன்று வரை 16 பக்கங்களிலிருந்து 1000 பக்கங்கள் வரை 370 அச்சிட்டிருக்கிறேனே!) ஒரு சமயம், தம்பி! உன் தேதி இல்லாக் கடிதம் வந்தது என்று வை.சு. எழுதி இருந்தார். (கடிதத்தில் தேதி குறிப்பிடாததைச் சுட்டிக் காட்டினார்கள்.) இன்றும் கடிதத்தில் தேதி குறிப்பிடும் போது எனக்கு வை.சு.வின் நினைவு எழும். வை.சு. அவர்கள் சத்திய சீலர் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு. தேவகோட்டை வழக்கறிஞர் இல்லத்துக்கு வை.சு. உடன் நானும் சென்றேன். நீதி மன்றத்தில் இன்றைய விசாரணையில் வை.சு! நீங்கள்... இவ்வாறு சொல்ல வேண்டும் என்றார் வழக்கறிஞர். உண்மைக்குப் புறம்பாக ஒரு வார்த்தையும் கூற மாட்டேன் என்றார் வை.சு. பெருந்தொகைக்கான வழக்கு அது! எதிரிக்கு வசதியும் செல்வாக்கும் மிகுதி. சூழ்ச்சியினால், பெருந்தொகையை வை.சு. இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்துக் கண்ணீர் வடித்ததைத் தவிர வேறு வழி? ஆனால், மன்னரான வை.சு. கலங்கவில்லை. நிலை குலைய வில்லை! வை.சு. அவர்கள் தம் வாழ்க்கைச் சரிதத்தை எழுதி யிருந்தால், எவ்வளவோ உண்மைகள் தெரிய வந்திருக்குமே! நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன் என்று பல முறை வற்புறுத்திக் கொண்டிருந்தேன். அது பயனற்றுப் போயிற்று. வை.சு. அவர்கள் தந்தை என்றால், மஞ்சுளா அம்மையார் தாயாக விளங்கினார். வை.சு.வின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந் தார்கள்! இன்முகம் காட்டி வரவேற்று உபசரித்ததைத் தவிர, எவரிடமும் எந்த வேளையிலும், கடுகடுப்பையோ முகச் சுளிப்பையோ காட்டிய தில்லையே! இப்பொழுது வெளிவரும் இந்த நினைவுமலர் சில ஆண்டுகளுக்கு முன்பே, வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், வை.சு. அவர்களுடன் நெருங்கிப் பழகிய சில பதிப்பாளத் தோழர்கள் முயற்சி எடுக்காமையால், வை.சு. அவர்களின் திருமகள் பார்வதி (ஆச்சி) அவர்களின் பெருமுயற்சியால் இப்போது வெளி வருகின்றது. அந்தத் தோழர்களுக்கு முன்பே நான் வை.சு.வுடன் பழகியவன். பதிப்பாளனாகவும் ஓய்வு பெற்று ஆசிரியனாகக் காலம் கழிக்கின்றேன். என்னால் இயலாமல் போனதற்கு இதுவே காரணம் என்பதை இந்தச் சமயத்தில் வருத்தத்தோடு கூறாமல் இருக்க முடியவில்லை.  14 எங்கள் வழிகாட்டி சோ. இராசா சண்முகம் (சண்முகனாரின் மகன் வழிப் பேரன் இராசா சண்முகம், தம் பாட்டனாரின் பண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, ஐயா பேரப் பிள்ளை களை எவ்வாறு வழி நடத்திச் சென்றார் என்பதையும் உளமுருகி எடுத்துக் காட்டுகிறார்.) தலைவர்கள் தொடர்பு தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த அண்ணல் காந்தியடிகள். தியாக வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட - இரும்பு மனிதராகத் திகழ்ந்த வ.வே. சுப்பிரமணிய ஐயர், எத்துணைத் தொல்லைகள் துன்பங்கள் தொடரினும் கொஞ்சமும் அஞ்சாது, தேசபக்தியை நாடு முழுதும் கொழுந்து விட்டெரியச் செய்த தீர்க்கதரிசி மகாகவி பாரதி. நாயினுங் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டு ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன் என முழங்கிய பாவேந்தர் பாரதிதாசன். சுதந்ணிரப் போராட்டத்ணில் தலீழகத்ணின் தலைஞிறந்த தலைவரும் சமுதாயப் புரட்ஞிக்கு ஜீத்ணிட்டவரும் ஆன பெளீயார் ஈ.வே.ரா., போன்ற பெருமக்களை யெல்லாம் வரவேற்று, அவர்களுடைய கொள்கைகளையும் சான்றாண் மையையும் ஏற்று அவர்களுடைய அன்பையும் நட்பையும் பெற்று விளங்கியவர் வை.சு.ச. அவர்கள். காங்கிரசுப் பேரியக்கத்திலும் பின்னர்ப் பொது வுடைமைக் கட்சியிலும் சேர்ந்து, பொது வாழ்வில் தம்மை மெழுகாக்கிக் கொண்ட ப. ஜீவானந்தம் அவர்கள் இறுதிக் காலம் வரை வை. சு. சண்முகனாரின் நட்பில் திளைத்தார். பழந்தமிழ் இலக்கிய நூல் களைக் கட்சிக்காக ஜீவா அவர் களிடம் வை.சு. வழங்கினார். செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரின் வரலாற்றை எழுதிய தேச பக்தரும் லோகோபகாரி பத்திரிகையின் ஆசிரியருமான பரலி. சு. நெல்லையப்பர், வை.சு.வின் நெருங்கிய நண்பர். தமிழ்ப்பணி பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியின் பாடல் உரிமைகளை வாங்கியிருந்த தொழிலதிபர் ஏவி. மெய்யப்பனாரிடம், பாரதியின் பாடல்களைப் பொதுச் சொத்தாக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டதை மதித்துப் பாரதியார் பாடல் களை நாட்டின் பொதுச் சொத்தாக்கிப் புகழ் பெற்றார் மெய்யப்பனார். தமிழகத்துக்கு நற்கால உதயம்! தமிழ் நாட்டில் தமிழிசையை எதிர்ப்போரும் உண்டா? என்ற தலைப்பில் அக்காலத்தில் தமிழிசைக் காகத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார்கள். தமிழ்நாடு வானொலி கேட்போர் கழகம் (Tamil Nadu Radio Listeners Association) என்ற அமைப்பினை உருவாக்கித் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்று கடிதங்களை எழுதியனுப்பிய வண்ணம் கிளர்ச்சி செய்தார்கள். பொதுப் பணிகள் வை.சு.ச. அவர்கள் இராமநாதபுர மாவட்டக் காங்கிரசின் தலவராகவும், அனைத்திந்தியக் காங்கிரசுக் கமிட்டியின் உறுப்பின ராகவும், சுயமரியாதை இயக்கத்தின் பொருளாள ராகவும் இருந்து பொதுப் பணியாற்றினார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அயல் நாட்டுத் துணிகளை ஒழிக்கும் திட்டத்தின் கீழ், தம் இல்லத்தி லிருந்த ஏராளமான துணிகளை எடுத்து வந்து, காரைக்குடி மகார் நோன்புத்திடலில் (காந்தி சதுக்கம்) எரித்து அரசியல் விழிப்பினை அன்று ஏற்படுத்தினார்கள். வை.சு.ச. தம் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் சமபந்தி போஜனம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் இது புரட்சியாக விளங்கியது. காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்த வர்களில் வை.சு.ச. வும் ஒருவராவார். நகரத்தார் சமுதாயத் தொண்டு சண்முகனார், மாறிவரும் உலகச் சூழ்நிலையை அன்றே உணர்ந்து, நகரத்தார் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான தடை களை ஆராய்ந்து, எதிர்ப்புகளுக்கும் ஏச்சுகளுக்கும் கேலி களுக்கும் மத்தியில். சமூகப் புரட்சிக்கு முன்னேற்றத்துக்கு - மனமாற்றத்துக்கு வித்திட்ட நல்லவர்; வைர நெஞ்சம் படைத்தவர். எதிர்காலத்தில் சமூகம் சந்திக்கப்போகும் தீமைகளை - சோதனை களை - பிரச்சனைகளை உணர்ந்து, அவற்றை வருமுன் காக்கச் சண்முகனார் போன்ற பெரு மக்கள் உழைத்துங் கூட அவர்தம் முயற்சி முழு வெற்றி பெறவில்லையே! நகரத்தார் சமூகப் பெண்களின் எண்ணிக்கை அந்நாளிலேயே வளர்ந்து வருவது கண்டு, திருமணம் ஆகாத பெண்களின் நிலை பற்றிச் சண்முகனார் காணும் பிரமுகர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி வருந்தினார்கள். இதற்கு மன மாற்றமும் கூட்டு முயற்சியும் பலன் தரும் என்று நம்பினார்கள். இதன் பொருட்டுத் தொண் ணூற்றாறு ஊர் நகரத்தார் கூட்டத்தைக் கோவிலூரில் கூட்டி, ஒற்றுமையை வலியுறுத்தினார்கள். லேவாதேவித் தொழில் எப்படியிருந்தது? எப்படியிருக்கிறது? எப்படியிருக்க வேண்டும்? என்று, கூட்டு முயற்சியை வலி யுறுத்திப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறு நூலை வை.சு. அவர்கள் எழுதினார்கள். உயரிய குணங்கள் பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு என்ற வள்ளுவப் பெருந்தகையின் கொள்கையை இறுதி வரை இலட்சியமாகக் கொண்டு ஒழுகி வந்தார்கள். வை.சு. அவர்கள் நொடித்துத் துன்புற்றிருந்த காலத்தில் ஒரு பிரமுகர் வந்திருந்தார். வந்தவர், ‘உங்களை வெஹீயே பார்க்க முடிய ஜீல்லையே? என்று கேட்டார். இது உற்சவ விக்கிரக மல்ல; மூலவிக் கிரகம்; வெளியே வராது என்று சுவைபட விடை தந்தார் சண்முகனார். நன்றே நினைமின்; நமனில்லை என்ற திருமூலர் வாக்கில் ஒன்றிய ஐயா அவர்களின் பேச்சில் கனிவிருக்கும்; உறுதியிருக்கும்; கம்பீரமும் கலந்திருக்கும்; தோற்றத்தில் எளிமையிருக்கும்; ஏற்றமும் இணைந்திருக்கும். எண்ணத்தில் துணி விருக்கும்; தூய்மை யுடன் தெளிவும் தொடர்ந்திருக்கும். தெய்வ பக்தி குறைந்தாலும் மறைந்தாலும் நாடு சிறக்காது. எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது; நிரக்காது. போலிப் பக்தியினால்தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற உறுதியான கருத்து வை.சு.வுக்கு உண்டு. துன்பங்கள் அணிவகுத்துச் சூழ்ந்த போதும், சுடச்சுட ஒளிரும் பொன் போலத் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக் கையும் குறை யாமல், நெஞ்சுறுதியுடன் வாழ்ந்த பெரு மகனாரின் எண்ணமும் வாழ்வும் நமக்கு வழிகாட்டுமாக. இனி, ஐயா அவர்கள் என்னை ஆளாக்கிய முறைப் பற்றி இரண்டொன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குள் தகராறு வந்து விட்டது. யாரோ, எப்போதோ சொன்னது சடாரென்று நினைவுக்கு வர, நல்லதுக்குக் காலமில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த இடத்திற்குத் தற்செயலாக வந்த ஐயா, நல்லதுக்குக் காலமில்லையா? ah® brh‹dJ? என்று கேட்டுவிட்டு நடந்ததை விசாரித்தார். உடனே நல்லோர் பெரியோர் என்றெண்ணும் காலம் வந்ததே - கெட்ட -நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே என்ற பாரதியின் பாடல் வரிகளை, என்னைப் பல தடவை (Imposition) எழுதச் செய்தார்கள். ஐயா அவர்கள், இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றிருந்த போது, என்னிடம் ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற குறள் பற்றிப் பேச்சு எழுந்தது. நான் டாக்டர் மு.வ. எழுதிய திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற நூலிற் படித்த பொருளில்லார் இவ்வுலகில் இல்லை என்பதைப் பற்றி எடுத்துச் சொன்னேன். அடடா! அப்படி ஒரு பிலை நாட்டில் ஏற்பட்டு ஜீட்டால் எப்படிழீருக்கும்! என்று மிக வியந்து மகிழ்ந்தார்கள் ஐயா.குழந்தைகளாகிய எங்களைப் பாசத்துடனும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்தார்கள். பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை நாள் தோறும் எங்களைப் பாடச் சொல்வார்கள். 1947 இல் கானாடுகாத்தான் கொரட்டியார் ஊருணி அருகில் அமைந்திருந்த பள்ளியில் முதல் சுதந்திர தின விழா நடைபெற்றது. சிறுவர் சிறுமியர்க்கான பாரதி பாட்டுப் போட்டி, விளையாட்டுப் போட்டி முதலியவை நடைபெற்றன. நானும் கூட்டத்தில் இருந்தேன். நான் அஞ்சிக் கொண்டே அமர்ந்திருந்தேன். நமக்கோ குரல் வளம் இல்லை; ஐயா நம்மைப் பாடச் சொல்லாமல் விடப் போவதும் இல்லை என்று தயக்கத்துடன் ஒதுங்கியிருந்தேன். நான் எதிர் பார்த்த படியே நடந்து விட்டது. விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்ற முழுப் பாடலையும் (எனக்குரிய குரல் வளத்துடன்) பாடினேன். வீட்டுக்குத் திரும்பி வந்த ஐயாவுக்கோ பெரு மகிழ்ச்சி. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே வெற்றி எட்டுத்திக்கும் எட்டக்கொட்டுமுரசே போன்ற பாரதி பாடல்களை ஊர்ப் பிள்ளைகள் பலர் பாடினாலும் விடுதலைப் பாட்டைப் பொருத்தமான நேரத்தில் இவன்தான் பாடினான் என்று என்னைப் பாராட்டிச் சொன்னார்கள்.  15 வைராக்கியம் படைத்த வை.சு. சண்முகனார் எபி. முத்துராமன் (திரைப்பட இயக்குநர் சுப. முத்துராமன், தம் மனைவி கமலாவின் பாட்டனார் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.) அய்யா வை. சு. சண்முகம் அவர்களைப் பற்றி நினைவு நூல் வெளியிடுவதறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாகும். இக்கால இளைஞர்கள் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் ஒரு தைரியமே வரும். இன்ப மாளிகை என்று தன் வீட்டிற்குப் பெயர் வைத் தார்கள். அங்கு வராத தலைவர்களே இல்லை. மகாத்மா காந்தி யார், பாரதியார், பாரதிதாசன், வ.வே. சு. ஐயர் அனைவரும் இன்ப மாளிகையின் விருந்தினர்கள். வழக்கு ஒன்றின் காரண மாக அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று, ஒரு சிறிய வீட்டில் வாழ நேர்ந்தபோதும் இன்பமாகவே வாழ்ந்தார்கள். அவர்களின் மகனார் சோலை அவர்கள் (என் மாமனார்) மூன்று தலைமுறை வழக்கை எடுத்துக் கொண்டு, சிங்கப்பூர், மலேசியாவில் தாமே நீதிமன்றங்களில் வாதாடினார்கள். அவரின் வாதத்திறமையை வழக்கறிஞர்களே பாராட்டினார்கள். வேலைக்கும் போய்க் கொண்டு இதனைச் செய்தார்கள். அவர்கள் திறமை - கடுமையான உழைப்பு - தைரியம் வேறு யாருக்கும் வராது. அவர்கள் பட்ட கஷ்டங்கள் பலனாகும் போது அவர்கள் இல்லை. கமலாவை நான் திருமணம் செய்து கொண்ட அன்று என்னிடம் கமலாவை நன்கு வைத்துக் கொள்ள வேண்டு மென்று காரண காரியங்களோடு உருக்கமாகக் கூறினார்கள். எங்களின் நல்ல இல்லற வாழ்க்கைக்கு அந்த அறிவுரைகளே அதிவாரமாக அமைந்தன. அய்யாவின் வளர்ப்பு, அம்மானைச் சிறந்த மனிதனாக ஆக்கியது. அவர்களின் மகள் பார்வதி ஆச்சி அவர்களின் திருமணத்தை அந்தக் காலத்திலேயே பி.டி. ராசன் அவர்கள் தலைமையில் சீர்திருத்த முறையில் நடத்தினார்கள். திருமதி. பார்வதி நடராசன் அவர்கள் எதையும் சிந்தித்துச் செயலாற்றம் தன்மை கொண்டவர்கள். என் மைத்துனர் ராஜா. சண்முகம் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா சென்றபோது அவர்களுக்குத் துணையாக இருந்து, வந்த கஷ்டங் களையெல்லாம் சமாளித்து இருவரும் வெற்றி பெற்றார்கள். இந்த மன தைரியத்துக் கெல்லாம் அய்யாவின் துணிச்சலான வளர்ப்பு முறையே காரணம். எங்கள் வீட்டில் சில நாள்கள் வந்து தங்கியிருந்தார்கள். அதுவும் நாங்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் அவர்களின் அறிவுரை களும் வாழ்க்கை முறைகளும் எங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. கடிதங்கள் எழுதுவது - அதற்கு நகல் எடுத்துக் கொள்வது - பதில் கடிதங்களைப் பதிவு செய்து வைப்பது - அன்றைய செலவுகளை அன்றே கணக்கில் எழுதி இருப்புப் பார்ப்பது - எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்வது - உணவில் கட்டுப்பாடு - உறக்கத்தில் ஒழுங்கு - பிள்ளைகளிடம் அன்பு, அதே நேரத்தில் கண்டிப்பு - எதையும் துணிவோடு சொல்வது, செய்வது இவை போன்ற பல - அவர்களின் கடமைகளாகும். செட்டிநாட்டில் சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர்களின் வரிசையில் இவர்களுக்கு முதலிடம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வைராக்கிய மாக எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள். காந்தியார் நூற்ற நூலால் செய்த துண்டை அன்றே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தேசப்பற்றைக் காட்டிக் கொண்டார்கள். பாரதியார் படங்களை இன்று பார்க்கிறோமே அந்தப் படங்கள் அய்யா அவர்கள் முயற்சியில் எடுக்கப் பட்டவை. பாரதியார் அய்யாவைப் பற்றிப் பாடியபாடல் குறிப்பிடத் தக்கது. அய்யாவின் அன்பை, விருந்தோம்பலைப் பெறாத தமிழறிஞர்கள் மிகக் குறைவு. அய்யாவின் வீட்டில் நான் மாப்பிள்ளையாக ஆனதற்குப் பெருமைப்படுகிறேன். அவரின் தொண்டுகள் இந்த நூல் மூலம் தமிழகத்திற்குத் தெரியட்டும். இதனை ஆக்குவதில் முனைந் துள்ள உயர்திரு கவிஞர். முடியரசனார் அவர்களுக்கும், திருமதி. பார்வதி ஆச்சி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறேன்.  16 எங்கள் குல விளக்கு கமலா முத்துராமன் (சண்முகனார்க்கு மகன் வழிப் பேர்த்தி கமலா. தாமறிந்தவற்றைச் சுருக்கமாக நமக்குத் தருகிறார்.) ஐயா வை.சு. சண்முகம் அவர்கள் அக்காலத்தில் இராமநாத புர மாவட்டக் காங்கிரசுத் தலைவராகவும் அனைத்து இந்திய காங்கிரசுக் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்து தேசத் தொண்டு செய்தார்கள். யோகி சுத்தானந்த பாரதியாரின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்தார்கள். பிற்காலத்தில் தாவர இயலில் பேரறிஞராகத் திகழ்ந்த மயூர நாதன் அவர்கள் படிப்பதற்கு வை.சு. உதவி செய்தார்கள். அந்த அறிஞர் வை.சு.விடம் கடைசிவரை மதிப்பும் நன்றியும் செலுத்தினார்கள் என்று ஐயா சொல்வார்கள். நன்றே நினைமின் நமனில்லை என்ற திருமூலர் வாக்கை அடிக்கடி சொல்வார்கள். குழந்தைகளிடத்தில் ஐயா வை. சு. வுக்கு மிகவும் பாசம் உண்டு. குழந்தைகளாயினும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். நன்கு படிக்க வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். தினமும் மதிய உணவுக்கு முன்பு மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாச னாரின் குறிப்பிட்ட பாடல்களை எங்களைப் பாடச் செய்வார்கள். நல்ல புத்தி மதிகளைக் குழந்தைகளாக இருந்த எங்களிடம் கனிவோடும் சில சமயம் கண்டிப்பாகவும் சொல்வார்கள்.  17 எங்களை ஆளாக்கிய ஐயா எ. rhªjh nrhkRªju« B.Sc., (மகன் வழிப் பேர்த்தியாகிய சாந்தா, தம் ஐயாவின் குழந்தை வளர்ப்பு முறைகளை நினைவு கூர்கிறார்.) எங்கள் ஐயா என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அறிவுரை களும் அடுத்துப் பழமொழிகளும் தான். எங்கள் சிறுவயதில், அன்று சொன்னவை மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து, இன்று அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றன. அன்பு காட்டுகையில் அன்பாகக் கூறி, கண்டிக்கையில் கோபமாகக் கூறித் திருத்துவதற்கு அன்று நமக்கு இருந்த ஐயா, இன்று நம் பிள்ளைகட்கு இல்லையே என்று தோன்று கின்றது. அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை. கேட்பதற்கு அப்பொழுது நேரம், பொறுமை எல்லாம் இருந்தன. ஆனால் இப்போதோ எல்லாமே இயந்திர வாழ்க்கையாகி விட்ட நிலையில், தானாகத் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடும் பொழுது சிறு சச்சரவு வந்தால், உடனே ஒரு பாரதியார் பாட்டு ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா... என்பார்கள். மாலை நேரத்தில், விளக்குப் போடத் துணை தேடுகையில், அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என்ற பாரதியார் பாட்டைப் பாடிக் கொண்டே போ எனக் கூறுவார்கள். விளையாடுகையில் சிறு பிள்ளை யானால், சிறு பிள்ளைக்கு விட்டுக் கொடு என்றும், பெரிய பிள்ளைகட்குத் திருப்பி பதில் சொன்னால் அவர்கள் சொல்வதனால், உடம்பில் காய்த்துத் தொங்குகிறதா என்றும் கேட்பார்கள். சக வயதுப் பிள்ளையானால், பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார் என்று கூறுவார்கள். ஒரு முறை பாரதிதாசன் ஐயா அவர்கள் வீட்டுக்கு வந்த போது, வழக்கம் போல் வாருங்கள் என்று கூறி விட்டேன். உடனே, ஐயா கோபப்பட்டு, வரவேற்க நாங்கள் இருக்கி றோம்; நீ வணக்கம் என்று கூற வேண்டும் என்றார்கள். சாப்பிடுகையில் எதையுமே வீணாக்கக் கூடாது என்பார்கள். சிறு வயதில் கீரையைப் பார்த்தால், விளக்கெண்ணெய் சாப்பிடப் போவதைப் போல் சங்கடமாக இருக்கும். ஐயாவை ஏமாற்றி விட்டு, சாப்பிடாமல் தப்பிக்கவே முடியாது. ஐயா அவர்களின் கல்வி ஆர்வத்தினால்தான் வசதியில்லாத நிலையிலும் நாங்கள் படிக்க முடிந்தது. அதே சமயம் நாங்கள் தற்பெருமை கொள்ளுதல் கூடாது என்பதற்காகக் கற்றது கைம் மண்ணளவு என்பது ஔவையார் வாக்கு என்பார்கள். பெண் குழந்தைக்குப் பொறுமை மிக வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். யாராவது, நம் மனம் வருந்தும்படி செய்து விட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. நாமும் திருப்பிச் செய்தால் தான் அதன் வேதனை அவர்கட்கும் தெரியும் என்றால், உடனே இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற திருக்குறளை மேற்கோள் காண்பிப் பார்கள். எங்கள் ஐயா என்று கூறியவுடன், நினைவுக்கு வருவது அவர் களின் கம்பீரத் தோற்றமே. சோர்வின்மைக்கும், தைரியத் திற்கும், விடா முயற்சிக்கும், எடுத்துக் காட்டாக வாழ்ந்த அவர்களின் நினைவு, என்றும் எங்கள் மனத்தில் நிற்கும்.  18 கலங்காத நெஞ்சம் கலங்கியது சுசீலா சுப்பிரமணியம் (மகள் வழிப் பேர்த்தியாகிய சுசீலா, சண் முகனாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் தாம் அறிந்தவற்றை உருக்கமுடன் கட்டுரையாக்கித் தந்துள்ளார். நம்மையும் உருக வைக்கிறார்.) முப்பெரும் வேந்தர் காலத்திலிருந்தே மதிப்பும் பெருமையும் பெற்ற தன வணிகர் குலத்தில் செல்வச் செழிப்பு மிக்க, படிப்பாற்றல் மிக்க குடும்பத்தில் சுப்பிரமணியன் செட்டியார் அவர்கட்கும், அழகம்மை ஆச்சி அவர்கட்கும் பிறந்த ஒரே ஆண்மகன் எங்கள் ஐயா. வயி. சு. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆவார். எங்கள் ஐயாவைப் பற்றித் தெரிந்து கொள்ளு முன் அவர்களின வம்சா வழியை நான் தெரிந்து கொண்டதை எழுத ஆசைப்படுகிறேன். எங்கள் ஐயாவின் தந்தையார் சுப்பிரமணியன் செட்டியாரவர்கள் தாய் நாட்டிலும், மலாயா நாட்டிலும் புகழ் பெற்றவர்கள். மிகுந்த திறமையும், கெட்டிக்காரத் தனமும், கடின உழைப்பும், நேர்மையும், தர்ம சிந்தனையும், பரோ பகாரக் குணமும், பாசமும் உள்ளவர்கள். சின்ன வயதிலேயே கடல் கடந்து மலாயா நாடு சென்று சிறப்பான முறையில் அங்குத் தொழில் புரிந்து நன்கு பொருளீட்டி, அங்குத் தர்மங்கள் பலப்பல செய்து, மலாயா நாட்டில் கோவிலும் கட்டிய வர்கள். மலாயா அரசால் பாராட்டப் பட்டவர்கள். எங்கள் ஐயா அவர்களின் தந்தையார் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பெருமையுடன் எடுத்துக்காட்டாக வாழ்ந்த வர்கள். அவர்களின் துணைவியார் - எங்கள் ஐயாவின் தாயாரவர்கள் கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்ந்தவர். வாழ்நாளில் முக்காற் பகுதி கணவர் மலாயா நாட்டில் இருந்த போதும் அடிக்கடி தாய் நாடு வந்து உடன் திரும்பி விடும் நிலையிலும் அந்தப் பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்து, கணப் பொழுதும், அயாரது, எங்கள் ஐயா, அவர்களின் சகோதரிகள் இருவர் ஆக மூன்று குழந்தைகளையும் கண்போலக் காத்து வந்தார். தினம் வரும் விருந்தினர், சுற்றத்தாரை வரவேற்று, வேண்டியவர்கட்கு வேண்டியதை அளித்து, விருந் தோம்பல் பண்பிலும் தலை சிறந்து விளங்கினார்; கணவர் மிகச் சின்ன வயதிலேயே காலமான பின்னர், அதையும் தாங்கி, கண்டிப்புடனும், திட்டத்துடனும் உறுதியோடும் செயல் பட்டுக் குழந்தைகளை மிக மிக நல்ல முறையில் மேன்மையாகக் கொண்டு வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்ததால் மிக நல்ல முறையில் வளர்க்கப்பட்டவர்கள் எங்கள் ஐயா. அந்த நாளிலேயே மிகச் சின்ன வயதிலேயே வெள்ளையனைத் தோற்கடிக்கும் ஆங்கில உச்சரிப் போடும், தங்கு தடையின்றி இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசுவார்கள். எங்கள் ஐயா அவர்களின் இல்லத்தில் இன்ப மாளிகை யில் நாங்கள் பேரன், பேத்திகள் வாழ்ந்த காலம், எங்கள் வாழ்க்கையின் பொற்காலம், மகிழ்ச்சியான, உற்சாகமான காலம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் திட்டமிட்டுச் செயற்படும் விதம் கற்றுக் கொடுத்து, பொறுப்புகளையும் அவரவர் வேலை கடமை களையும், தவறாது செய்யப் பழக்கினார். அதே நேரம் சிறிய தவறு செய்தாலும், கண்டிப் போடு கூறி, பாசம் அன்பு கலந்து எங்கட்கு அறவுரை கூறி, எல்லாவற்றிற்கும், எல்லாச் சூழ்நிலைக்கும் ஏற்ப எங்களை வளர்த்தார். எங்கள் ஐயா அவர்களின் கண் பார்வையைப் பார்த்தாலே ஒரு ஒளிவீசும் தன்மையும், தீட்சண்யமும், புலப்படும். சிறு வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்து கொண்டோம். பழங் காலக் குருகுல வாசம் போல நாங்கள் பயிற்றுவிக்கப் பட்டோம் நாங்கள் அனைவரும் பேரன், பேத்திகள், எங்கள் ஐயாவி னாலும் ஆயா மஞ்சுளாபாய் வை. சு. அவர்களினாலும் மிக மிக நல்ல சுறுசுறுப்பானவர்களாகவும் அறிவாளர்களாகவும் தன் தன் வேலைகளைத் தானே செய்பவர் களாகவும் வளர்க்கப்பட்டோம். அதிகாலை 5 மணிக்கெழும் பழக்கமும், பாரதியார் பாடல்கள் தினம் மூன்று தடவை வீதம் பூராவும் பாடவைத்து, தேகப் பயிற்சியிலிருந்து இரவு 9.00 மணிக்குத் துயிலப் போகும் வரை எல்லாம் திட்டப்படி நடக்கும். கணப்பொழுதும் சோர்வு வராது. அப்படி எல்லாம் மிக மிக நல்லமுறையில் எங்களை வளர்த்தனர். உண்மையே பேச வைத்து, உண்மை, நேர்மை, நியாயத்துக்குப் போராடி வெற்றி பெறும் வழியை அன்றே எங்கட்குச் சொல், செயல் முறையில் கற்றுத் தந்தனர். முடிந்தவரை பிறர் துன்பத் தைப் போக்கும் பாதையிலும், அச்சப்படும் செயல்கட்கு அச்சப்படும் படியும், இச்சகத்திலுள்ளோரும் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்ச மில்லை என்ற பாரதி கூற்றுப் படி, என்ன இடையூறு, பகை வந்தாலும் நல்லதைச் செய்ய, நீதியை நிலை நாட்ட, உண்மையை வெளிக்கொணர முயலவும் எங்களைப் பழக்கினார். எங்கள் பள்ளிக்கூடப் பருவ நாளில், இன்ப மாளிகைக்கு வரும் அறிஞர்கள், தலைவர்கள், சித்தர்கள், ஞானிகள், சிநேகிதர்கள், எல்லாரும் எங்களைப் பார்த்துப் பிரமித்துப் போவார்கள். இந்தக் குழந்தைகள் எவ்வளவு அறிவோடு, சுறுசுறுப்போடு, பணிவு, மரியாதையுடன் உள்ளார்கள்! என வியந்து எங்கள் ஐயா அவர் களையும், ஆயாள் அவர்களையும் பாராட்டி என்னையும் என் தங்கைகளையும், எங்கள் அம்மான் மக்களையும் பாராட்டி எங்களுடன் அளவளாவி மகிழ்ந்து, பாரதியார், பாரதிதாசன் பாடல்களை நாங்கள் பாடுவதையும் இரசித்துப் பாராட்டி விடை பெறுவர். எங்கட்குள் சண்டைகள் வந்து அறியோம். போட்டி, பொறாமைக்கு அர்த்தம் தெரியாது. மிகுந்த தைரிய சாலி களாக வளர்க்கப் பட்டோம். நாங்கள் எதையாவது பார்த்து அல்லது கேட்டுப் பயந்தாலும், எங்களின் பயத்தின் அடிப் படையைக் கூர்மையாக ஆராய்ந்து ஒரு நொடியில் ஆதார பூர்வமாகச் செயலிலோ, சொல்லிலோ காட்டி, நாங்கள் பயந்ததற்கு நாங்களே வெட்கப்படும் படி செய்வார்கள். தைரியம் ஆயுள் பரியந்தம் எங்கட்குக் கை கொடுக்கும்படி எங்களை ஆக்கினார்கள். கட்டுப்பாடாக, சுதந்தர மாக எங்களை வளர்த்து, அறிவையும், ஆராயும் ஆற்றலையும் எங்கட்கு ஊட்டினார்கள். எங்கள் ஐயா அவர்கட்கு எவ்வளவோ செல்வமும், சொத்து களும் இருந்தன. அவர்களின் தீவிர, பிரதிபலன் எதிர் பார்க்காத நாட்டுப்பற்றால் ஏகப்பட்ட செல்வத்தைச் செலவு செய்தார்கள். எஞ்சிய செல்வத்தை நியாயமான உரிமைக்காக நீதி மன்றங்களிலும் செலவிட்டார்கள். மேலும் எவ்வளவோ நல்ல காரியங்கட்கும், கஷ்டத்திலுள்ள நண்பர்கட்கும் உதவி செய்தார்கள். இன்ப மாளிகை மட்டும் மீதி இருந்தது. அந்த நிலை யிலும் எந்தப் பழம் வந்தாலும் எங்களுக்காகக் கூடையோடு தான் வாங்கப்படும். எங்களோடு வீதிப் பிள்ளைகளுக்கும் தெவிட்டும் மட்டும் கொடுக்கப்படும். பலூனா, பொம்மை களா, சிலேட்டு களா, நோட்டா, பென்சிலா எல்லாம் மொத்த மாக வாங்கப்படும். எங்களுக்கும் ஊர்ப் பிள்ளைகட்கும் விநியோகிக்கப்படும். எங்கள் கண் எதிரே எங்களின் ஐயா அவர்கள், ஊரில் தேள் கொட்டப்பட்டு வந்தவர்களையும் பாம்புக் கடிபட்டு வந்தவர் களையும் காப்பாற்றியுள்ளார். யார் கவலைப்பட்டு, துன்பப் பட்டு வந்தாலும் அவர்கள் ஆபத்து, சங்கடங்கள் விலகும். நன்றியோடு விடை பெறுவார்கள். எவ்வளவோ நல்ல காரியங் களைச் செய்துள் ளார்கள் எங்கள் ஐயா. எங்கள் ஐயா அவர்களின் தோற்றமும், பேச்சும் கம்பீரமாக இருக்கும். அந்த உண்மையான தேஜசான, கூர்மையான, கனிவான, நேர்மையான, தைரியமான கண்கள் தனித்தன்மை வாய்ந்தன. அவர்களின் முகத்தை நேருக்கு நேர் நோக்கும் தைரியம் யாருக்கும் வராது. இதற்கு ஒரு உதாரணம், எங்கள் ஐயா அவர்கள் எங்கள் ஆயாள் அவர்களையும், என் தயார் அவர்களையும், என்னையும் (நான் சிறு பிள்ளை 3 அல்லது 4 வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்) அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்குக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். இரயில் பயணம். அப்போது பாண்டிச்சேரி பிரான்சு ஆட்சியிலிருந்தது. அதனால் பயணிகளைச் சோதனை செய்து சுங்கவரி விதிப்பது செயல்பட்ட காலம். பாவேந்தர் வீட்டில் தங்கி இருந்தோம். எங்கள் ஐயாவும், பாவேந்தரும் பேசிக் கொண்டிருக்க, நான் என் தாயார் பாவேந்தரின் துணைவியார், அவர்களின் புதல்விகள் அனைவரும் பாண்டிச் சேரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். பல தினங்கள் சென்று கானாடுகாத்தானுக்குத் திரும்பினோம். பாண்டிச்சேரியிலிருந்து ரயிலில் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், இரயில் நின்றது. சுங்கச்சாவடி சோதனை அதிகாரிகள் மற்ற எல்லாரையும், அவர்களின் பொருள்களையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள், எங்கள் ஐயா அவர்களைப் பார்த்தவுடன் எந்தச் சோதனையும் செய்யாமல், மரியாதை கலந்த மென்மையான சிரிப்பை, எங்கள் ஐயாவுக்குக் காணிக்கை ஆக்கிவிட்டு, மிடுக்குடன் மற்ற பயணிகளைச் சோதனை செய்யப் போய் விட்டனர். அடுத்த ரயில் நிலையம் வந்த பின், எங்கள் ஐயா எப்போதும் வைத் திருக்கும் சின்ன வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, வெற்றிலை போட்டார்கள். அப்போது எங்கள் ஐயா, என் ஆயாள் அவர் களிடமும், என் தாயார் அவர்களிடமும், சொன்னார்கள், தங்கம், வைரங்கள் இந்த டப்பாவில் எவ்வள வோ வைத்துக் கடத்துபவர்கள் இருப்பதால் தானே இந்தச் சுங்கச்சாவடி. உள்ளதைக் கொண்டு நேரான பாதையில் நடந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கலாமே என்றார். ஐயா அவர்களின் பார்வை, கம்பீரம், முகம் இவற்றைக் கண்ட சில வினாடிகளிலே, அவர்களின் அகம் அப்படி இருக்கும் என்பதை, அந்த கட்டம் அதிகாரிகள் அறிந்து கொண்டு, சுத்தமான, சத்திய மான, நேர்மையான காந்தீய வாதியாகிய எங்கள் ஐயா அருகில் வந்து சோதனை செய்யாத தோடு, ஐயாவுக்கு மரியாதையும் செலுத்திச் சென்றார்கள். நாங்கள் பள்ளிகளில் கற்றதைவிட யாருக்கும் கிடைத்தற் கரிய எங்கள் ஐயா அவர்களின் மூலம் கற்றது கடல் அளவு. அதுதான் இன்று எங்கட்குக் கை கொடுக்கிறது. ஐயா அவர் கட்கு எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு இருந்தது. உலக ஆசா பாசங்களைத் துறந்த சாமியார்களி லிருந்து, ஞானிகள், சித்தர்கள், தேசத் தலைவர்கள், தேச பக்தர்கள், கவிஞர்கள் என இன்ப மாளிகைக்கு வந்து செல்லாத வர்கள் இல்லை. ஐயா அவர்கள், ஊருக்கே, நாட்டுக்கே எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள். ஐயா அவர்கள் ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், சிறந்த மருத்துவராகவும், சிறந்த மேதையாகவும், கருணை வள்ள லாகவும், சிறந்த தியாகியாகவும், முடிந்தவரை துன்பம் உற்றவர் கட்கு உதவிக்கரம் நீட்டித் துன்பத்தைப் போக்குபவ ராகவும், எல்லார் குடும்பத்தையும் தன் குடும்பம் போலப் பாவித்தவர் களாகவும், தனக்கு, நான் என்ற சொற்களுக்கு அர்த்தம் தெரியாத வர்களாகவும் பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு உள்ளவர் களாகவும், நல்லதைச் செய்ய, நீதியை நிலைநாட்ட, குற்றங் களைக்களைய, நேர்மைக்குச் சோதனை வரின் எது வந்தாலும் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துச் சமாளித்து வெற்றி காணும் தன்மை உடையவர்களாகவும், வாழ்ந்து, எல்லா நல்ல தன்மைகட்கும் ஒட்டுமொத்தமாக விளங்கிய ஒரே நபர் ஐயா அவர்கள். ஈ.வெ.ரா. ஐயா அவர்கள், அறிஞர் அண்ணாத்துரை அவர்கள், ஜீவானந்தம் ஐயா அவர்கள், பாரதிதாசன் அவர்கள், கவிஞர் முடியரசன் அவர்கள் எல்லாம் இன்ப மாளிகைக்கு வந்து போனது இன்றைக்கும் எனக்கு நினைவு உள்ளது. சீமான் வீட்டுப்பிள்ளை எங்கள் ஐயா. தமக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், கடைசியில் இன்ப மாளிகையும் போய், எல்லார்க்கும் கைகொடுத்த எங்கள் ஐயாவுக்கு ஆயிரம் கஷ்டம் வந்து, உடலும் மனமும் எய்த்து, சாதாரண வீட்டுக்கு மாறிவந்த சில வருடங்களில் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடை பெற்றார்கள். என்றாலும் எங்கள் ஐயா அவர்களின் புகழும், கொடையும், தியாகமும் தேசத்தொண்டும் வை.சு. என்றாலே எல்லாரும் புரிந்து கொள்ளும் அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளன. எனக்கு மகன் பிறந்து, குழந்தையுடன் நான் சிங்கப்பூர் புறப் பட்ட போது எங்களை வழிஅனுப்ப எங்கள் ஐயா அவர்களும், ஆயாள் அவர் களும் சென்னைத் துறைமுகம் வந்து எங்களை வழியனுப்புகையில் நான் அவர்களைப் பார்த்துப் பார்த்து அழ, பிரியா விடைக்கு அழ, என் ஐயாவின் உடலும், வலுவும் எய்த்துள்ள தற்கு மேலும் அழ, இனி மீண்டும் சிங்கப்பூரிலிருந்து நாம் திரும்பி வரும்போது, பல ஆயிரம் பேருக்கு நிழல் தந்த இந்த ஆலமரம் இருக்குமா என எண்ணி மிக மிகக் குலுங்கி அழ, அந்த நிலையிலும் கண்ணில் நீரைக் காட்டாமல், எங்களைக் கப்பலேற்றியவுடன், எங்கள் ஆயாவுடன் நின்று கொண்டு கைகளை இருவரும் அசைக்க, நாங்கள் கப்பலின் மேல்தளத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கையை அசைக்க, பின்னர்க் கப்பல் மிதக்க ஆரம்பித்த நேரத்தில், கலங்காத எங்கள் தெய்வம் ஐயா அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு கையை ஆட்டி விடை கொடுத்த காட்சி, கடைசிக் கட்டமாகவும் என் வாழ்வின் துக்கத்தின் முதல் கட்டமாகவும் அமைந்து விட்டது. அதன்பின் தாய்நாடு வந்தபோது எங்கள் ஆயாவைத் தனி மரமாகப் பார்த்துத் தவித்தோம். அந்தச் சாதாரண வீட்டில் எங்கள் தெய்வத்தின் மறைவுக்கு வந்த (அப்து தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த) அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் திராவிட கழகத் தூண்களில் ஒன்று சரிந்து விட்ட தாகக் கூறியதை ஆயா எங்களிடம் சொன்னார்கள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், பேரைச் சொன்னால் ஊர் தெரியணும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்தவர்கள் எங்கள் ஐயா.  19 எங்கள் அருமை ஐயா டாக்டர் மா. மணிமேகலை, மருந்தியல் துறைத்தலைவர் (மகள் வழிப் பேர்த்தி மருத்துவர் மணி மேகலை, பெரும் பாலும் சண்முகனாரிடம் வளர்ந்தவர். சண்முகனாரின் வாழ்க்கையில் நாடி நரம்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.) நான் கைப்பிள்ளையாக இருந்த பருவத்திலிருந்து, இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்து இரங்கூனிலிருந்து என் பெற்றோர் திரும்பும் வரை என் அருமை ஐயா அவர்களால் வளர்க்கப் பட்டேன். பெற்றோர் திரும்பிய பின்னரும், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஐயா அவர்களிடமே சென்று விடுவ துண்டு. எப்படியும் எட்டு முதல் பத்துப் பிள்ளைகள் வரை ஐயா அவர்கள் நேர்முகக் கண்காணிப்பில் வளர்ந்து வந்தோம். குழந்தைகளிடம் ஐயா அவர்கள் காட்டிய அன்பும், பாசமும், ஒழுங்குமுறைப் பயிற்சியும் வார்த்தைகளின் வரம் பிற்கு அப்பாற் பட்டவை. அவற்றை இன்று நினைக்கும் போதும் கண்கள் கலங்கும். எங்களுக்கு நொண்டி விளை யாடுவது, கிப்பிங் விளையாடுவது, நீச்சல் அடிப்பது, கண்ணாமூச்சி விளையாடுவது, நிலாக்காலங் களில் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று உருண்டைச் சோறு அளிப்பது, பயனுள்ள - நாட்டுப் பற்று, வீரம் நிறைந்த கதைகள் - நிகழ்ச்சிகள் கூறுவது, இவையனைத்தும் என்முன் நிழலாடு கின்றன. குழந்தைகள் அனைவருக்கும் ஐயா அவர்கள் அளித்த கட்டுக்கோப் பான ஒழுங்கு நெறிகள் இன்றும் என்றும் எங்களுக்குத் தோன்றாத் துணையாகவுள்ளன. பிள்ளைகளுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டால் ஐயா அவர்கள் சண்டைக்குக் காரணமானவரைக் கூப்பிட்டு, ஒரு குண்டூசி கொண்டு வரச் செய்து, அதைத் தமது கையில் சதையில் குத்தி எடுக்கச் சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் கவலையாகவும் வேதனை யாகவும் இருக்கும். எங்கள் அருமை ஐயா அவர்கள் வேதனை யாகச் சிரித்தபடி சொல் வார்கள். இந்த ஊசி குத்தியது எனக்கு வலியில்லை. நீங்கள் சண்டை போடுவதுதான் வலிக்கிறது என் பார்கள். குழந்தை களிடையே மறுபடி சண்டைப் பிரச்சினை வராது. தனிப்பட்ட முறையில் பிள்ளைகள் தவறு செய்தால், அந்தப் பிள்ளை முன் பிரம்பால் தம்மை அடித்துக் கொள்வார்கள். உங்களைச் சரியாக வளர்க்காமல் விட்ட தவறுக்கு எனக்குத் தண்டனை என்பார்கள். பிள்ளைகளை வளர்க்கும் விதம், அபரிமித மான பாசம், அப்பழுக்கற்ற அன்பு, மனோதிடம் இவை யாவும் எவரையும் எங்கள் ஐயா பால் ஈர்க்கக்கூடியன. காலையில் விரைவில் எழுந்திருத்தல், அளவுடன் பகலுணவு கொள்ளுதல், சாப்பிடும் முன் பாரதியார் பாடல்கள், பாரதி தாசனார் பாடல்கள் பாடும் ஒழுங்கு முறைகள் எங்களுக்கு இளம் வயதிலேயே ஐயா அவர்களால் வித்திடப்பட்டவை. பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட குடும்பத்தினர் உற்றார், உறவினர் இவர்களிடையே குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள், பிரிவுகள், கருத்து வேறுபாடுகள் இவைகளில் பாதிக்கப் பட்டவர், ஐயா அவர்களின் உதவியை நாடுவதும் வீட்டில் பஞ்சாயத்து செய்து, பிரச்சினைகளை சுமூகமாக ஆனால் ஆணித்தரமாகத் தீர்த்து வைப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாக நடக்கும். ஐயா அவர்களின் மன உறுதி, விவேகம், உண்மைக்குப் போராடும் மன வலிமை எவரையும் அயர வைக்கும். இதை எண்ணற்ற நிகழ்ச்சி களில் கண்டுள்ளேன். மூட நம்பிக்கை ஐயா அவர்கட்கு ஒத்து வராத ஒன்று. அதை எதிர்க்க, ஒழிக்க ஐயா அவர்கள் எடுத்த முயற்சிகள், சமாளித்த எதிர்ப்புகள் ஏராளம். ஐயா அவர்கள் பள்ளியில் நான் கற்றவை, உணர்ந்தவைதான் எனது பள்ளிப் படிப்பு, கல்லூரி உயர் கல்விப் படிப்பு, எனது பலதரப்பட்ட பணிகள் அனைத்திற்கும் ஆழமான அடித்தளமாக அமைந்தன. ஐயா அவர்களின் கூர்மையான புத்தி, புத்திசாலிகளையே தூக்கி விழுங்கக்கூடியது. மோசடி பண்ணியவர்களை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை, போலிப்ப கட்டு வரட்டு கவுரவம் பார்ப்பவர்களை, எந்த விதமான தவறு செய்பவர்களையும் நேரடியாக அவர்கள் உணரும் வண்ணம் தவற்றைச் சுட்டிக் காட்டுவார்கள். இதனால் ஐயா அவர்கள் பலரது வெறுப்பினையும் பகையினையும் தேடிக் கொள்ள நேர்ந்தது. அதற்காக ஐயா அவர்கள் என்றும் மனந்தளர்ந்ததே கிடையாது. நேர்மைக்காகவும், உண்மைக்காகவும் அந்த உயர்ந்த உள்ளம் போராடி, இலட்சியத் திற்கு என்றும் வெற்றியைக் குவித்தது. பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டு, மோசடிக் கும்பலினால் வழக்கு விவகாரப் புதை மணலில் சிக்கி, உடல் வலிமை குன்றினாலும் மனவலிமை என்றும் ஐயா அவர்களிடம் வானளாவியே இருந்து வந்தது. ஐயா அவர்களிடம் சுயமரியாதைக் கட்சியினர் திரு. பாரதிதாசனார் அவர்கள், தந்தை பெரியார், மணியம்மையார் அவர்கள், ராய. சொ. அவர்கள், திரு. சொ. முருகப்பா - மரகதவல்லி அம்மையார் அவர்கள், கவியரசர் முடியரசனார் அவர்கள், இன்னும் எண்ணற்ற பெரியோர்கள் தொடர்பு கொண்டிருந்ததையும், ஐயா அவர்கள் மாநாடுகளிற் பங்கெடுப் பதையும் (அடிக்கடி என் இளவயதில் பார்த்ததை) நினைவு கூர்கிறேன். இவை அனைத்தும் பின்னர்நான் பொது நிகழ்ச்சி களில் பங்கு பெறும் போது பெரிதும் உதவின. ஐயா அவர்களின் சிந்திக்கும் திறன், செயல் வேகம் மிக உன்னத மான ஒன்று. எதையும் தொலை நோக்குக் கண்ணுடன் தான் பார்ப்பார்கள். நகரத்தார் சமூகம் திருமணத்தில் எளிமை காட்டாமல் பொருள் விரயம் செய்து நசுங்குகிறதே எனச் சமூக முன்னேற்றத்தில் அளவரிய அக்கறையுடன் கூறுவார்கள். மற்றவர்களுக்கும் என் அருமை ஐயா அவர்கட்கும் என்ன வேறுபாடு என்றால், ஐயா சொல்வதைத் தான் செய்வார்கள். செய்வதைத்தான் சொல்வார்கள். சமூக நலம் கருதி தன் ஒரே புதல்வி (என் அருமை அம்மா) திருமணத்தை 1935-ம் ஆண்டு சீர்திருத்தத் திருமணமாகச் செய்து காண்பித்தார்கள். உறவினர் எதிர்ப்பு - எவ்வளவு கடுமையாக இருந்தும் தன் இலட்சியத்தி லிருந்து விலகவில்லை. அந்த அளவு துணிச்சல், உண்மையான சமூகப் பணி எவருக்கு வரும்? இன்று வரை அது கேள்விக் குறிதான். நான் 1957-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர விருப்பப் பட்டேன். என் பெற்றோர் எனக்கு மிக்க ஊக்கமளித்தனர். நகரத்தார் பெண்கள் ஆண் /பெண் இருவரும் சேர்ந்து படிக்கும் கல்லூரிக்கு - குறிப்பாக மருத்துவத்துறைக்குப் போகாமலிருந்த காலக்கட்டம், அச்சமயம் என் அருமை ஐயா அவர்கள் அளித்த ஊக்கமும், துணிச்சலும் ஆக்கபூர்வமாகக் கூறிய கருத்துகளும் என் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தன. நீ ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக உள்ள திருமதி விஜய லெட்சுமி பண்டிட்டைப் போல் வர வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பியதைக் கண்களில் நீர் மறைக்க நினைவு கூர்கிறேன். தாரமிழந்த கணவருக்கும், தாலி இழந்த மங்கைக்கும் திருமணம் என மறுமணம் செய்து காட்டிய புரட்சியை எண்ணிப் பார்க்கிறேன். எந்த எதிர்ப்பிற்கும் அஞ்சாத நெஞ்சம் அந்த உயர்ந்த நெஞ்சம். எடுத்த இல்ட்சியம் கொள்கை தான் முடிவு. அந்தஇலக்கை அடையும் வரை ஐயா அவர்கள் அயர்ந்ததே இல்லை. அதற்காக ஐயா அவர்கள் உடல் அளவில் பொருள் அளவில் பட்டபாட்டை நான் நன்கு அறிவேன். என்னுடைய வாழ்க்கையில் சோதனைகள் வேதனைகள் வரும் போது ஐயா அவர்களை, திடமும் வலிமையும் அளிக்க மானசீக மாக வேண்டுவது என் அன்றாட நிகழ்ச்சி, தைரிய இலட்சுமியின் முழு உருவாக ஐயா அவர்களை - அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையை வைத்துக் கருதிப் போற்றி வணங்குகிறேன். ஐயா அவர்களிடம் மற்றவர் நம்மை துன்புறுத்துவதாக வருந்திக் கூறினால் நாய் நம்மைக் கடித்தால் நாயை நாம் திருப்பியா கடிப்பது? நாம் விலகிச் செல்ல வேண்டும் என்பார்கள். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், நெளிவு சுழிவு களில் மாட்டும் போது ஐயா அவர்கள் கூறிய நெறிமுறைகள் எனக்கு விவேகத்தை அளிக்கும். இன்னொரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. ஒரு முறை ஐயா அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டபடி மயக்க மருந்தின்றி விட்டிலேயே அறுவை சிகிச்சை நடந்தது. ஐயா அவர்களின் மனவலிமைக் கண்டு டாக்டரே அயர்ந்து போனார். அந்தக் காலத்தில் இரண்டுமுறை வாதம், பேச்சின்மை வந்த போது, ஐயா அவர்கள் தியானப் பயிற்சியினாலும் அளவற்ற மன வலுவினாலும், இரத்தக்குழாய் அடைப்பு விலகி, பூரண நலம் பெற்றார்கள். நான் படித்த மருத்துவத் துறைக்கு, ஐயா அவர்கள் சவாலாக விளங்கினார்கள். கட்டுப் பாடான உணவு முறை களிலும் சித்த வைத்தியத் துறையிலும் நிறைந்த ஈடுபாடு காண்பிப்பார்கள். எப்படிப்பட்ட கஷாயமானாலும் கடும் கசப்பாக இருந்தாலும் ஐயா அவர்கள் சிரித்த முகத்துடன் சாப்பிடும் காட்சி என் நினைவில் பசுமையாக உள்ளது. மூலிகை மருந்துகள், புதிய முறைகட்குத் தம்மையே பரிசோ தனைக்கு மனமுவந்து உட்படுத்திக் கொள்வார்கள். நான் இறுதியாண்டு மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, சிறு விடுமுறையில் ஐயா அவர்களைப் பார்க்கப் போன போது புதிய மூலிகை மருந்தினை உட்கொண்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந் தார்கள். அந்த நிலையில் நீ படிப்பதுடன் நில்லாது, மூலிகை மருந்துகளில் கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உள்ள மூலப் பொருட்கள் மூலிகைகள் - அவற்றிலிருந்து தான் வெளி நாட்டு மருந்து வருகிறது என்றார்கள். அவற்றை நான் மருந்தியலில் மேற்படிப்பு (எம்.டி.) மேற்கொண்ட போது மிகுந்த ஈடு பாட்டுடன் நினைத்து வியப்பதுண்டு. ஐயா அவர்கள் செல்வத்தில் திளைத்த போது உற்றார், உறவினர், சமூகம், சுயமரியாதை இயக்கம், சுதந்திரப் போராட்டம் எனப் பல்வேறுபட்ட வகையில் அனைவர்க்கும் தம் செல்வத்தை மனமு வந்து வாரி வழங்கினார்கள். தன்னை மோசடி செய்தவர் களிடம் வழக்குப் போட்டு, கோர்ட் விவகாரங்களில் சிக்கி, தான் வசித்த இன்ப மாளிகையை இழக்கும் நிலைவந்த போது கூட எங்கள் அனைவரையும் உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே என உயர்கவி பாரதியின் பாடலை உரக்கப் பாடச் செய்து, அனைவர்க்கும் திடம் அளித்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. எங்கள் ஐயா என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல் அந்த நிலை கலங்காத உயர்ந்த உள்ளத்தை ஆராதிக்கிறேன். பயன் கருதாமல் இலாப நட்டக் கணக்குப் பாராமல், விளம்பர மின்றி ஐயா அவர்கள் மற்றவர்கட்குச் செய்த உதவிகள் - உடல் அளவில், பொருள் அளவில், மனத்தளவில் செய்தவை கணக்கி லடங்கா. நன்றியுடையோர் சிலர், நன்றி மறந்தோர் பலர். இன்றைய சந்தர்ப்பவாதிகளைக் காணும் போது என் மனத்தில் என் அருமை ஐயா அவர்கள் வானளாவி உள்ளார்கள். ஐயா அவர்களின் திறமை, துணிச்சல், உண்மைக்கும் நேர்மைக்கும் இலட்சியத்திற்கும் வாழ்ந்து காட்டிய முறை, பரிவு, பாசம் இப்படி எண்ணற்ற பரிமாணங்களில் எழுதிக் கொண்டே போகலாம். அதற்கு அளவும் இல்லை. எல்லையும் இல்லை. வை.சு. என்ற இரண்டெழுத்தின் மகிமையும் திறமையும் எழுத்தில் அடங்காதது. ஐயா அவர்கள் ஒரு சகாப்தம் என்றும் என் மனத்தில் நிறைந்துள்ள அந்த மாமேதையைச் சிரம் தாழ்த்தி, இரு கரம் குவித்து, வணங்கி, என்றும் எங்கள் அருமை ஐயா அவர்களின் அருள் நிலைத்திட நீடு புகழ் ஓங்கி நிற்கப் பிரார்த்திக்கிறேன்.  20 எங்கள் தந்தையார் பார்வதி நடராசன் (சண்முகனாரின் திருமகளார் இளமை முதல், கண்டும் கேட்டும் அறிந்தவற்றை நினைந்து நினைந்து எழுதுகின்றார்) தந்தையாரவர்களைப் பற்றி அவர்களின் இளமைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி அத்தை மூலமாகவும் சிறிய தாயார் மூலமாகவும் கேட்டறிந்தவைகளையும் நானே அறிந்தவைகளில் நினைவுக்கு வந்தவைகளையும் வைத்து எழுத முற்படுகின்றேன். தூக்க நிலையிலிருந்த செட்டிநாட்டையும் தனவணிக சமூகத்தையும் முதன் முதல் தட்டியெழுப்பி விழிக்கச் செய்தவர்களில் எங்கள் தந்தையார் ஒருவர். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலிருந்த முற்போக்கு இளைஞர்களை ஒன்றுகூட்டித் தனவைசிய இளைஞர் சங்கம் உண்டாக்க மூலகாரணமாக இருந்தவர்கள். சீர்திருத்தக் கொள்கைகளைச் செயல் முறைக்குக் கொண்டு வந்த வகையில் இவர்கள் முதலாமவர். முற்போக்கு முயற்சி அக்காலத்தில் தனவணிக சமூகத்தில் முதியவர், நடுத்தர வயதினர், இளைஞர் யாவரும் தலையை மழுங்க வழித்துத் தான் இருப்பர். கழுத்தில் பட்டுக் கயிற்றில் ஓர் உருத்திராட்சம் கோத்துக் கட்டி யிருப்பர். பிற்காலத்தில் தங்கச் சங்கிலியில் உருத்திராட்சம் கோத்துக் கட்டியிருப்பர். இதற்குக் கெவுடு என்று பெயர் சொல்வார்கள். இந்தக் கோலமுடையவர்களை யார் கண்டாலும் இவர் செட்டி யார் என்று பார்த்த விநாடியே தெரிந்து கொள்வார்கள். நெற்றி நிறையத் திருநீறும் பூசியிருப்பர். தந்தையாரும் தனவைசிய ஊழியர் சங்கத்தினரும் முதன் முதலில் கிராப் வைத்துக் கொண்டவர்களாம். சமூகப் பெரியவர்கள், இந்த இளைஞர்களைத் திட்டோ திட்டென்று திட்டுவார்களாம், பிறகு வெகு விரைவிலேயே எல்லா நகரத்தார் ஊர்களிலும் உள்ள அத்தனை இளைஞர்களும் கிராப் வைக்கத் தொடங்கி விட்டார் களாம். துணிவுள்ளம் ஓர் அலமாரி முழுவதும் மருந்துகள், பஞ்சு, மாத்திரை உரைக்கும் கல், தைலங்கள், தேள் கடிக்கு மருந்து முதலானவை நிறைந்திருக்கும். அந்த அலமாரிக்கு மருந்து அலமாரி என்றே பெயர். அக்காலத்தில் ஏழை எளிய மக்கள் அவசரத் தேவைக்கு நள்ளிரவில் கூட இவர் களிடம் வருவார்கள். மருந்து சாப்பிட்டோ வாங்கிக் கொண்டோ செல்வார்கள். ஒரு சமயம் பாம்புப் பிடாரன் ஒருவன் வந்தான். வேரின் அடிப்பாகம் போன்ற சில துண்டுகளைக் காட்டி, பாம்பு கடித்தால் உடனே விஷத்தை இறக்கிவிடும் இந்த வேர் என்று கூறி விலைக்கு வாங்கிக் கொள்ளச் சொன்னானாம். அதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய தந்தையார், பிடாரனிடம், உன் பாம்பைக் கொத்த விட்டு, உன் மருந்தினால் விடத்தை இறக்கி விடு பார்ப்போம் என்று கையை நீட்ட பாம்பு கை விரலில் கொத்தியது. பிடாரன் வைத்திருந்த வேர் பயனளிக்கவில்லை. விடம் தலைக்கேறி, வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்து விட்டார். தற்செயலாக வந்த பாட்டியார், பிடாரனைக் கண்டதும் நிலைமையை ஊகித்து அறிந்து கொண்டார். அதற்குள் பிடாரனும் ஓடி விட்டான். தந்தையாரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார்கள். அந்த நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக மருத்துவரும் அங்கிருந்தார். மாற்று ஊசி, மருந்து மூலமாக எமன் பிடியிலிருந்து தந்தையார் மீட்கப்பட்டார்கள். குறிப்பெழுதும் பழக்கம் வரகவி சுப்பிரமணிய பாரதியாருடன் தந்தையாருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1918 அல்லது 1919 ஆம் ஆண்டு என்று கருதுகிறேன். அப்பொழுது தந்தையாரவர்களுக்கு வயது இருபத்து மூன்று இருக்கலாம். அவர்கள் காங்கிரசில் எந்த ஆண்டு சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. 1914 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே நாள் குறிப்பு எழுதும் பழக்கம் அவர்களிடமிருந்தது. இறுதிக் காலத்தில் நோயில் படுக்கும் வரை தொடர்ந்து எழுதி வந்தார்கள். இப்பொழுது அக்குறிப்புகள் இருக்கும் இடம் தெரிய வில்லை. அவை கிடைத்திருந்தால் தமிழ்நாட்டில் - குறிப்பாகச் செட்டி நாட்டில் காங்கிரசு பரவியது. அதற்காக அவர்கள் ஆற்றிய பணிகள், சுயமரியாதை இயக்கத்தினால் செட்டிநாட்டில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் எல்லாம் சான்றுகளுடன் நமக்குக் கிடைத்திருக்கும். அவை கிடைக்காத காரணத்தினால் அவர்கள் ஆற்றிய பணிகளை முழுமையாக நாம் அறிந்து கொள்ள முடிய வில்லை. பெரு மதிப்பிற்குரிய தம்பி முடியரசன் அவர்கள் அதிக முயற்சியும் அக்கறையும் எடுத்துச் சான்றுகள் பலவற்றைத் தேடித் தொகுத்து உள்ளார். காந்தியடிகள் தொடர்பு மகாத்மா காந்தியடிகள் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த பொழுது, செட்டி நாட்டுப் பகுதியில் சுற்றுப்பயணம் வைத் திருந்த பொழுது 1927 ம் ஆண்டு கானாடுகாத்தானில் தந்தை யாரவர்களின் இன்ப மாளிகை என்ற வீட்டில் தான் தங்கி இருந்தார்கள். அவர்களுடன் மூதறிஞர் இராஜாஜி, புலாபாய் தேசாய், அன்னை கதூரிபாய், தேவதா காந்தி மற்றும் பல பெரியோர்களும் தொண்டர்களும் அங்குதான் தங்கி இருந்தார்கள். அந்த 2,3 நாள்களும் தினசரி பலநூறு பேர் களுக்குச் சாப்பாடு அங்கேதான். செட்டு சமையல் காரர்கள் சமையல். அப்பொழுது ஒரு நாள் காந்தியடிகள் தந்தையார வர்களிடம் உங்களைப் போன்றவர்களின் சேவைதான் நாட்டுக்கு மிகத் தேவை. இன்னும் தீவிரமாகச் செயல்பட நீங்கள் வந்துவிட வேண்டும் என்று கூறினார்களாம். ஒரு வழக்கு நடைபெறுகிறது. நான் போட்ட (ஆரம்பித்த) வழக்கை முடித்து விட்டு வந்து விடுகிறேன் என்று தந்தையார வர்கள் பதில் கூறினார்களாம். அதற்கு காந்தியடிகள் இதிலிருந்து நீங்கள் வெளியேறிவிட வேண்டும். என்று வருத்தமுடன் ஆழமான பார்வையில் பார்த்துப் பதில் கூறினார் களாம். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக காங்கிர மகாசபைக் கூட்டம் (சூரத்தில் என்று தந்தையார் கூறிய நினைவு) நடந்ததாம். அது குழப்பத்தில் முடிந்ததாம். பிரச்சினையில், அணுகுமுறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் திலகர் கோஷ்டி கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டதாம். அப்படி வெளியேறியவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தியாகச் சுடர்களான, திரு. வ.உ. சிதம்பரனார், திரு. சுப்பிரமணிய சிவா மற்றும் சிலருடன் தந்தையாரவர்களும் வெளியேறி வந்து விட்டார்களாம். காந்தியடிகளின் அந்நிய நாட்டுத் துணி பகிஷ்காரத்தில் கலந்து கொண்டு செட்டிநாட்டு மக்களுக்குத் தேச பக்தியை ஊட்ட, காரைக்குடியில் மகார் நோன்புப் பொட்டலில் (தற்பொழுது அந்த இடத்திற்கு காந்தி சதுக்கம் என்று பெயர்) அந்நியத் துணிகளை வைத்துக் கொளுத்த ஒரு நாளை நிச்சயித்து, அன்று ஊர் முழுவதும் தண்டோரா போடச் செய்து, இவர்கள் வீட்டிலிருந்த விலை உயர்ந்த துணிமணிகளை எல்லாம் மூட்டைகளாகக் கட்டி, அந்த இடத்தில் குவித்துத் தீ வைத்துக் கொளுத்தி, ஓர் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்கள். அதிலிருந்து வீட்டில் அனைவரும் கதர் ஆடைதான் கட்டினோம். பாவாடையும் சட்டையும் அவ்வளவு கனமாக இருக்கும். ஆனால் அதைவிடப் பல மடங்கு கனமானது தாயார் அவர்களின் சேலை. அதைத் துவைக்கும் வேலைக்காரப் பெண் தூக்கிப்பிழிய முடியாமல் சங்கடப் படுவாளாம். kfhfÉ ghuâah®, jÄœ¤ bj‹wš âU.É.f., தமிழர் களைத் தலை நிமிர்ந்து வாழ வைத்த பெரியார் ஈ.வெ.ரா. தேசபக்தர்கள் சுரேந்திரநாத் ஆர்யா, வரதராஜுலு நாயுடு, ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னை மெழுகுதிரி ஆக்கிக் கொண்ட திரு. ப. ஜீவானந்தம் போன்ற பல பெரு மக்கள் கானாடு காத்தானில் எங்கள் தந்தையார் இல்லத்தில் தான் வந்து தங்குவார்கள். அப் பகுதிக்குப் பிரசாரத்துக்கு வரும் தலைவர்களைக் கூட்டி வரத் தஞ்சாவூர் அல்லது திருச்சி ரயில் நிலயைத்துக்கு இவர்கள் கார் அனுப்பி வைக்கப்படும். ஏனெனில் அந்தக் காலத்தில் இப்பகுதிக்கு ரயில் கிடையாது. தந்தையாரின் சொந்தச் செலவில்தான் இவை யெல்லாம் நடைபெறும். ஜீவானந்தம் தொடர்பு இப்பகுதிக்குப் பிரசாரத்துக்கு வந்த ஜீவானந்தம் ஐயா அவர்கள் வழக்கம் போலக் கானாடு காத்தானுக்கு வந்திருந் தார்கள். அப்பொழுது எனக்குச் சுமார் 14 வயதிருக்கலாம். தந்தையாரும் அவரும் பல விஷயங்களைப் பேசிக் கொண் டிருந்தார்கள். சீவா ஐயா மிகச் சத்தமாகப் பேசினார்கள் (இதனால்இவர் தொண்டை, உடல்நிலை பாதிக்கப்படுவ தினால்) அதனால் தந்தையார் சீவா ஐயாவிடம் ஒரு அணாக் கொடுத்து வாங்கும் பொருளை ஒரு ரூபாய் கொடுத்து ஒருவன் வாங்கினால் அவனைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு மதிப்புத் தெரியாதவன், முட்டாள் என்று நினைப்பேன் என்று சீவா ஐயா கூற, தந்தையார் அப்படியானால் நாமிருவர் மட்டும் தானே இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம். பல நூறு பேர், ஆயிரம் பேர் கூடி இருக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவது போல ஏன் இவ்வளவு சத்தம் போட்டுப் பேசுகிறீர்கள்? உங்கள் உடல் நலத்தை இது எத்தனை தரம் பாதித்து உள்ளது. கூட்டத்தில் பேசும் பொழுது இருமல், தொண்டைச் சிரமத்துடன் பேச வைத்து விடுகிற தல்லவா? இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அன்பு கலந்த கண்டிப்புடன் கூற, சீவா ஐயா ஒரு குழந்தை போலச் சிரித்துக் கொண்டு பவ்யமாகத் தலையசைத்து ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி - காட்சி மறக்க முடியாத ஒன்று. இந்தியாவிற்குள் வரத் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், வங்காளத்திலிருந்தும், கேரளாவிலுமிருந்தும் இவர் (சீவா ஐயா) கைக்கு வந்து சேரும். அவைகளை இங்கு வைத்திருந்து படித்தும், பிறகு தேவைக்கு ஏற்ப எடுத்தும் செல்வார்கள். தந்தையாரவர்களின் பணநிலை சுருங்கிய பின்னர் இயக்கங் களில் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையினர் ஒதுங்கினர். ஆனால் சீவா ஐயா அவர்களோ முன்னைக்காட்டிலும் அன்பு மிகுதியுடன் அப்பகுதிக்குப் பிரசாரத்துக்கு வரும் பொதெல்லாம் எத்துணைச் சிரமப்பட்டும் தந்தையாரவர்கள் உயிருடன் இருந்த வரை கானாடுகாத்தான் வந்து இவர்களைப் பார்க்காமல் சென்றதில்லை. இருவருக்கும் உள்ள நட்பு மிக மிக ஆழமானது. அசைக்க முடியாதது. ஒருமுறை கூடக் கீறல் கண்ட தில்லை. இருவரும் ஒருவிதப் பாச உணர்வில் கட்டுப் பட்டிருந் தனர் என்றே கூறலாம். ஆரம்ப காலம் முதல் தந்தையாரவர்கட்குக் கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு, ஆனால் அதே சமயத்தில் பலாத்கார வழியில் நம்பிக்கையும் இல்லை. பிடித்தமும் இல்லை. கோ. சாரங்கபாணி தொடர்பு சிங்கப்பூரில், தமிழ் முரசு பத்திரிகையின் உரிமையாளர், ஆசிரியர் உயர்திரு கோ. சாரங்கபாணி ஐயா அவர்களும், தந்தை யாரவர்களிடம் எல்லையற்ற அன்பு பூண்டிருந்தவர்கள். திரு. கோ. சா. ஐயா அவர்கள் சிறு வயதில் சிங்கப்பூர் வந்திருந்த பொழுது அவர்களின் வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஒரு வழி காட்டியாக, உறுதுணையாகத் தந்தையாரவர்கள் இருந்திருக் கிறார்கள். அந்த நன்றியை அவர் ஒரு போதும் மறந்ததில்லை. ஒரு தம்பி அல்லது மகனைப் போலத் தந்தையாரவர்களிடம் நடந்து கொள்ளுவார்கள். தந்தையாருக்குப் பொருள் மெலிவு ஏற்பட்டு விட்டது. ஒரு சமயம் கேசுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டாதாம். நிலை மையைத் தந்தையாரவர்கள் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார்கள். தந்தையாரவர்களே எதிர்பாராவிதம் தந்தி மணியார்டரில் சில ஆயிரம் அனுப்பி வைத்து விட்டு, சிறிதுநாளில் மேற்கொண்டு பணம் அனுப்பி வைக்கிறேன் என்று எழுதி, அதன்படி அவர்களின் மனைவியின் நகைகளை (அவர் சீனப் பெண்மணி) பேங்கில் அடமானம் வைத்து மறுபடியும் பணம் டிராப்ட் மூலம் கிடைக்கச் செய்தார்கள். பிறகு இந்தப் பணங்களை என் அண்ணன் சிங்கப்பூரில் கொடுத்து விட்டார்கள். தந்தையாரவர்களின் பிள்ளைகள் என்பதினால் எனது அண்ணன் அவர்களிடமும் என்னிடமும் அளவற்ற பிரியத் துடன் நடந்து கொள்வார்கள். தந்தையாரவர்கள் இறந்த பின்னரும் எனக்கும், என் அண்ணனவர் கட்கும் ஒரு தந்தைபோல (நாங்கள் சிங்கப்பூரில் இருந்த பொழுது) பலமாகவும், உறுதணையாகவும் இருந்து வந்தார்கள். அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் அருமைத் துணைவியாரும் என்னிடம் (அண்ணன் அவர்கள் காலமாகி விட்டார்கள்) அவர்கள் உயிருடன் இருந்தவரை நல்ல அன்பு, ஆதரவுடன் இருந்துவந்தார்கள், அந்தக் காலத்தில் சிங்கப்பூரில், மலேசியாவில் தமிழர்களின் நலன், வளர்ச்சிக் காக, முன்னேற்றம் பத்திரிகை மூலமும், தமிழ் முரசு பத்திரிகையின் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் முன்னேற்றம் பத்திரிகை உரிமையாளர் திரு. கோவிந்தசாமி பிள்ளை அவர்களும் தந்தையாரவர்களும், திரு. கோ. சாரங்கபாணி ஐயா அவர்களும் இன்னும் சிலரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீண் போக வில்லை. விதைத்த விதை மரமாகிப் பலன் தந்து வருகிறது. எங்கள் தாயார் எங்களின் தாயார் அவர்கள் அன்புள்ளம் கொண்டவர்கள். பெண்கள் எழுத்தறிவு பெறாத காலம். அவர்களின் 9-ஆவது வயதில் அவர்கட்குத் திருமணம் செய்யப்பட்டதாம். ஒரு சில மாதங்கள் தந்தையாரவர்கட்கு இளையவர்களாம். தந்தையார் அவர்கள் மனம் போலத்தான், எதையும் செய்வார்களாம். அவர்கள் சொல்லுக்கு மாறாக நடந்ததில்லையாம். அந்தக் காலத்தில் பெண்கள் ரவிக்கை அணிய மாட்டார் களாம். தந்தையார் சொற்படி ரவிக்கை அணிந்தார்களாம். கதராடை கட்டச் சொன்ன போது எந்தத் தயக்கமும், மறுப்பும் காட்டாது சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டார்கள். தந்தையாரவர்கள் கார் ஓட்டும் போது அருகில் முன் சீட்டில் உட்காரச் சொன்னபடி உட்கார்ந்து செல்வார்களாம். இதைப் பார்த்து ஆச்சிமார்கள் எல்லாம் கேலி செய்வார்களாம். தாயார் அவர்கள் இதைப் பொருட்படுத்தியதில்லை. இதே போல் அந்தக் காலத்தில் பெண்கள் கணவருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இவர்கள் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஒரு சமயம் வீட்டுக்கு வந்திருந்த சகோதரிகளை கொழுந்திமார்களை ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூப்பிட்ட பொழுது, அவர்கள் கண்டிப்பாக மறுத்துவிட்ட நிலையில், தாயார் தயங்கிப் பிறகு அவர்களுடன் சாப்பிடுகிறேன் என்று கூறத் தந்தையாருக்கு கோபம் வந்து வேலையாட்களுடன் (அதாவது சமையல் ஆள், கார் டிரைவருடன்) ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடு வீர்கள். கணவர், அண்ணனுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட மாட்டீர்கள்! எப்பப் புத்திவரப் போகிறதோ என்று கூறிவிட்டுத் தாயாரைப் பார்க்க, தாயார் பரிதாபமாகப் பார்க்க அன்று தந்தையார் மட்டும் உணவருந்திச் சென்றார்கள். ஆனால் அடுத்த முறை வந்திருந்த பொழுது இப்படி நடக்க வில்லை. தந்தையார் பிள்ளைகள் தாயார் ஒரு புறமும், சற்றுத் தள்ளி பக்க வாட்டில் தங்கைகள், கொழுந்திமார்கள் அனை வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள்! இதெல்லாம் சுமர் 60 வருடங்கட்கு முன்பு நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதர ஆச்சிமார்களும், உறவினர்களும் எங்கள் அருமைத் தாயாருக்கு வைத்த பெயர் அவள் புரியாதவள். அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் ஆம்பிளையான் சொன்னால் என்ன? இப்படியா நடப்பது என்றும் உறவினர் கூறுவதுண்டு. தாயைப் பெற்ற பாட்டியும் கூட ஆம்பிளையான் சொன்னால் என்ன? இவளுக்குப் புத்தி எங்கே போச்சு? அவர்கள் (கணவர்) சொல் வதைக் கேட்டு இவளும் சேர்ந்து ஆடுகிறாளே! எல்லாரும் கூடிக் கேலி செய்கிறார்கள் என்று கூறுவதை நான் பல முறை என் காதாரக் கேட்டுள்ளேன். தாயார் அடிக்கடி நோய் வாய்ப்பட்டார்கள். அந்தச் சமயங்களில் தந்தையார் தாயாருக்குச் செய்யும் பணிவிடை களை எந்தக் கணவரும் இவ்வளவு அன்பு சிரத்தையுடன் செய்ய முடியாது. தாயாரவர்கட்கு, கணவர் தெய்வமாகக் காட்சியளிப்பார். அவர்கள் கணவரை வீட்டிலுள்ளோர் குறை சொன்னால் நல்லா இருப்பீர்கள் அங்கிட்டுப் போய்ப் பேசுங்கள் என்று கூறி விடுவார். அல்லது இவர்கள் வேறு பக்கம் சென்று விடுவார்கள். மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்தார்கள். தாயார் அவர்கள் அவர்களின் 39, 40 வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். என் சொல்லுக்கு மறுவார்த்தை அவள் கூறின தில்லை என்று தந்தையார் பிறரிடமும், எங்களிடமும் கூறுவதுண்டு. அவர்களின் மறைவுக்குப் பின்னர் வாழ்க்கைத் துணைவியாக வந்த திருமதி மஞ்சுளாபாய் அம்மை யார வர்களும் தந்தையார வர்கட்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். தந்தையாரவர்கள் எப்பொழுதும் அவர் களை நீங்கள் என்று தான் பன்மையில் அழைப்பார்கள். சிற்றன்னையார் அவர்களும் மகன், மகள் முறை உள்ள எங்களைத் தம்பி, தங்கச்சி என்று சொல்லி நீங்கள் என்றே பன்மையில் சொல்லுவார்கள். குழந்தை வளர்ப்பு இவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறை அலாதியானது. நாங்களும், அத்தை மக்களும் சிறுவயதினராக இருக்கும் போதும் மருந்துகள், குறிப்பாக மாதம் ஒரு முறை விளக்கெண்ணெய் சாப்பிடக் கொடுப்பார்கள். நாங்கள் தயங்குவோம். தந்தையார் முகம் மாறாமல் விளக்கெண்ணெயை விட்டு, விட்டுச் சப்பிச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டுவார்கள். இதைப் பார்த்தவுடன் ஒரு தைரியம் ஏற்பட்டு, நாங்களும் மட, மடவென்று ஒரே வாயில் குடித்து விடுவோம். விட்டு, விட்டுச் சப்பிச் சாப்பிட எங்களால் முடியாது! அதே போல் காலில், முள் குத்தி விட்டால் அதை எடுக்க காலைக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டோம். அவர்கள் உடனே ஒரு குண்டூசியை எடுத்து இப்பப் பாருங்கள், நான் அழுகிறேனா, வலிக்கிறது என்று முகத்தைச் சுளிக்கிறேனா என்று கூறி அவர்கள் காலில் சிறிது ரத்தம் தெரியக் கூடிய அளவு ஆழமாகக் குத்திக் கொண்டு காட்டுவார்கள். இதைப் பார்த்துப் பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் காலைக் கொடுத்து விடுவோம். சுலபத்தில் முள்ளை எடுத்து விடுவார்கள். தினசரி பிரார்த்தனை, உத்தேச வருடம் 1926-ஐ அனுசரித்து இருக்கும். நானும் அண்ணனும் சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது 5.30க்கு எல்லாம் எங்களை எழுப்பி விடுவார்கள். 6 மணிக்குத் தந்தையார், தாயார், அண்ணன், நான் ஆக நான்கு பேரும் ஒன்றாக உட்கார்ந்து பிரார்த்தனை செய்வோம். அவையாவன:- 1. என் வாழ்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக இருப்பது என் மனப்பான்மைதான். 2. இன்பத்துக்கும், துன்பத்துக்கும் அடிமையாகிவிட மாட்டேன், எனக்கு வேண்டுவது எல்லாம், திடமான, மாறாத ஊக்கமே. 3. சுறுசுறுப்பும், உயர்வு தாழ்வு கருதாது வேலை செய்யும் குணமும் வேண்டும். 4. எண்ணங்கள் செயலில் வருமாறு செய்தலே உத்ஸாகமாக இருப்பதற்கு வழி. 5. சாவுக்கும் துணிந்துவிட்ட நான் என் வாழ்வில் நேரும், எந்த நிகழ்ச்சிகளைக் கண்டும் ஆணவமுறவும், பயப்படவும் காரணமே இல்லை. 6. அரசாங்கமே எனது வசப்படினும் ஆணவமுறேன். அவயவங்கள் இழக்கப்படினும் கவலையுறேன். உயிர் போயினும் உத்ஸாகம் குன்றேன். 7. எனது தவற்றை எனக்கு எடுத்துக்காட்டுவோரிடம் நன்றி செலுத்துவேன். வீணாகத் தூற்றுவோரைக் கண்டு இரக்கம் கொள்ளுவேன். 8. மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்காதவர்களுக்கு அச்சமும், சோர்வும் அவமானமும் வரா. மனச்சாட்சிக்குத் தொண்டு செய்யும் அடிமையாகி விட வேண்டும். 9. சோம்பல் அழிக, கவலை ஒழிக. அச்சம் அடியோடு மாய்க. 10. அன்பு பெருகி, அறிவு வளர எப்பொழுதும் முயல வேண்டும்! இதை ஒவ்வொன்றாகத் தந்தையாரவர்கள் கூற நாங்கள் மூவரும் அதை அப்படியே திரும்பக் கூறுவோம். கூறி முடித்த வுடன் அவரவர்கள் வேலையைக் கவனிக்கச் சென்று விடுவோம். சில மாதங்கள் தான் இது நடந்தது. பிறகு தந்தையார் சிங்கப்பூர் சென்று விட்டார்கள். அண்ணன் படிக்க கொழும்பு சென்று விட்டார்கள். என்னைச் சென்னைக் கான்வென்ட் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். பிற்காலத்தில் எங்களின் பிள்ளைகளும் பிற பிள்ளைகளு மாக 8 முதல் 10 பேர் தாயார் வீட்டில் இருப்பார்கள். அந்தப் பிள்ளைகள் பகலுணவு சாப்பிட உட்கார்ந்தவுடன் பாரதியார், அல்லது பாரதிதாசன் பாடல்களில் ஏதாவது ஒரு முழுப் பாடலைப் பாடி விட்டுத் தான் உணவில் கை வைக்கவேண்டும். தந்தையார்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார்கள். நாங்கள் 5.30 மணி சுமாருக்கு எல்லாரும் எழுந்து விடவேண்டும். எழுப்பினவுடன் எந்தக் குழந்தை ஒரு மாதத்தில் அதிக நாள் முதலில் எழுந்து விடுகிறதோ அதற்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பார்கள். பிள்ளைகளின் படுக்கையின் அருகில் வந்து ஒன்று, இரண்டு, மூன்று என்று கூறிக் கையினால் மூன்று முறை தட்டிச் சப்தம் எழுப்புவார்கள். குழந்தைகள் நான் முந்தி, நீ முந்தி என்று எழுந்து விடுவார்கள், பள்ளியில் இன்ன பிள்ளை என்னை அடித்து விட்டது என்று ஒரு பிள்ளை அழுது கொண்டு தந்தையாரிடம் வந்து சொன்னது. இதைக் கேட்டு இவர்கள் கோபம் உற்றார்கள். அடிபட்டேன் என்று வெட்க மில்லாது வந்து கூறுகிறாயே. திருப்பிக் கொடுக்க வேண்டியது தானே, நீ அடிபடத்தான் லாயக்கு என்று கூறிப் பிள்ளையைக் கண்டித்துத் தைரியமூட்டினார்கள். எனது திருமணம் அவர்களின் புதல்விக்கு (எனக்கு) திருமணம் பேசினார்கள். ஆர்வமுடன் செய்து கொள்ள வரன் வீட்டார் சம்மதம் தெரிவிப் பார்கள். தந்தையாரவர்கள் திருமணம் புரோகிதர் இன்றிச் சீர்திருத்த முறையில் நடைபெற வேண்டும். பெண்ணும் மாப் பிள்ளையும் மணையில் உட்காருவது கூடாது. மற்ற வைதீகச் சடங்குகள் ஏதும் இன்றிக் குறிச்சிகளில் உட்கார்ந்து சங்கிலிகள், மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனை யைப் போடுவார்கள். இந்த நிபந்தனைகளைக் கேட்டு, இவர்களைப் போற் பொருள் வசதி படைத்தோர் இதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால் தந்தையோ கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. தன் ஒரே மகளுக்குப் பண வசதியுள்ள இடம் அமையாவிட்டாலும் பரவாயில்லை. தன் கொள்கைக்கு ஒத்து வருகிற ஓர் படித்த பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து விடுவோம். விவகாரத்தில் உள்ள சொத்துகள் தனக்கு அனு கூலமாகக் கிடைத்து விடும். உண்மையான உரிமை இவர் கட்குத் தான். அப்படிப் பணம் வந்தவுடன், ஆண் மகனுக்கும், பெண் மகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விடுவோம். தன் மகளுக்கும் இதனால் வசதி கிடைத்து விடும் என்று எண்ணி, அதன்படியே இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதித்த குடும்பத்தில் திருமணம் செய்விக்கப்பட்டது. இத்திருமணம் அந்தக் காலத்தில் 1935-ல் செட்டி நாட்டையே ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. பெரிய பரபரப்பை, பெரிய எதிர்ப்பை உண்டாக்கிய ஒன்று. அந்தக் காலத்தில் செட்டிய வீட்டில் திருமணம் 6 நாள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்கு நடைபெறும். பெண்ணுடைய ஊருக்கு மாப் பிள்ளை வீட்டார், உறவினர் பங்காளிகளுடன் வருவர். அவர்களுக் கென்று பெண்ணுடைய ஊரில் மாப்பிள்ளை வீடு என்று வாடகைக்கு அமர்த்தி இருப்பர். இதைத் தந்தையாரவர்கள் மாற்றி விட்டார்கள். கானாடு காத்தானில் உள்ள இவர்களின் மாளிகையிலேயே மாப் பிள்ளை வீட்டாரும் வந்து இறங்கினார். 6 நாள் நடைபெறும் திருமணத்தை 3 நாளாக்கினார்கள். சீர்திருத்த முறையில் புது மாதிரியில் செய்வதற்குப் பங்காளி களின் அனுமதி - சம்மதம் கேட்க விரும்பவில்லை. பங்காளி வீடுகள் அத்தனையும் ராயபுரத்தில் உள்ளன. திருமணத்திற்கு 2 நாள் முன்னாடித்தான் பங்காளிகளுக்கு அழைப்பு விடுக்கும் வழக்கப்படி இவர்களும் செய்தார்கள். என் பெண்ணுக்கு என் விருப்பப்படி திருமணம் செய்வதற்கு இவர்கள்அனுமதி கேட்க அவசியம் என்ன என்ற கருத்தில் முதலில் போய்ச் சம்மதம் கேட்கவில்லை. ஆனால் காரைக் குடியில் மாப்பிள்ளை வீட்டார் பங்காளிகளை முதலில் பார்த்துப் பேசிச் சம்மதம் பெற்றுவிட்டார்கள். ஆனால் பங்காளிகள் 6 நாள் திருமணத்தை 3 நாளாகக் குறைக்கச் சம்மதிக்கவில்லையாம். இதனால் மாப்பிள்ளை வீட்டார் கானாடுகாத்தானில் 3 நாள் திருமணம் நடக்கிறபடி நடக்கட்டும். காரைக்குடியில் பெண் அழைத்த வீட்டில் 3 நாள் சாப்பாடுகள் வைத்துக் கொள்ளலாம் என்று கூறப் பங்காளிகள் சம்மதம் தெரிவித்துக் கானாடு காத்தானில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்துவிட்டனர். ஆனால் பெண் வீட்டிற்கு முதல் நாள் வரும் பங்காளிகளில் இரு வீட்டார் மட்டும் முன்னாடியே வந்து விட்டனர். பங்காளிகளில் ஒரு முக்கியதரும் தந்தையாரும் எப்போதுமே ஒருவருக்கொருவர் முரணிக் கொண்டே இருப்பர். அதனால் இதை ஒரு காரணமாக வைத்து ராயபுரத்தில் அத்துணை பங்காளிகளையும் கானாடு காத்தானுக்குத் திருமணத்துக்குச் செல்லக் கூடாது. நம்மை எல்லாம் (இவரை) மதிக்காமல், சம்மதம் பெறாமல் செட்டியவீட்டுப் பழக்கத்தையே தகர்த்து, திருப்பூட்டுச் சடங்கு செய்யாமல் மாப் பிள்ளையே பெண் கழுத்தில் தாலி கட்டுவதாம். ஐயர் வர மாட்டாராம். அதனால் இந்தக் கலியாணத்துக்கு போகக்கூடாது என்று கூறித் தடுத்து விட்டார்கள். (ஆனால் ஏற்கனவே கோவிலுக்குப் பாக்கு வைத்தபடி திருமணத்தன்று கோயில்மாலை வந்து விட்டது. பங்காளிகள் வராததைத் தந்தையார் பொருட்படுத்த வில்லை. செட்டிநாட்டில் சீர்திருத்தத்தில் அக்கறை உள்ள தனவணிக இளைஞர்கள் அவர்கள் மனைவிகளுடன் பல ஊர்களில் இருந்து வந்து குழுமி விட்டனர். தந்தையாரவர் களிடம் அன்பும் மதிப்பும் வைத்திருந்த அழைப்பு அனுப்பி யிருந்த பல தனவணிக சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களும் அழைப்பு இல்லாத செட்டியார்களும் கூட, எப்படி இத் திருமணம் நடைபெறுகிறது பார்ப்போம் என்று எண்ணி அவர்களும் வந்து விட்டனர். திருமணத்தன்று பங்காளிகள் கூட்டத்தை விட, 2, 3 மடங்கு கூட்டம் கூடி விட்டது. சர்.பி.டி. ராசன் (அப்போதைய கல்வி மந்திரி) அவர்கள் தலைமையில் பெரியார் ஈ.வெ.ரா. முன்னிலையில் எங்கள் திருமணம் நடை பெற்றது. முதல் நாளே திருமணம் பதிவு செய்தாச்சு. எங்கள் திருமணத்துக்குப் பிறகு ஒருவாரம் பத்து நாளுக்குள் இதே முறையில் அமராவதி புதூரில் திரு. பிச்சப்பா - சுப்பிரமணியம் அவர்களின் இரண்டாவது புதல்வியின் திருமணமும் சீர்திருத்த முறையில் நடைபெற்றது. வைதீகப் பெரியவர்கள் ஆத்திரம் கொண்டு ஏற்கனவே கோவிலுக்குப் பாக்கு வைத்தும் கோவில் மாலை அமராவதி புதூர் திருமணத்துக்கு வரவிடாது தடுத்து விட்டனர். முன்னாடி நடந்த திருமணத்தில் பெண் வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் கோவில் மாலை வந்துள்ள நிலையில் எங்கள் வீட்டுத் திருமணத்துக்கு மட்டும் வராமல் எப்படித் தடுக்கலாம்? என்று திரு. பிச்சப்பா சுப்பிரமணியமும் அவர்களின் பங்காளி களும் கேட்க, எல்லாக் கோவில்களையும் சேர்ந்த தனவணிகர் களில் வைதிகக் கோஷ்டி சீர்திருத்த இளைஞர்கள் கோஷ்டி என இரு பிரிவாகக் கோவில் மாலைப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்கள். இது இச்சமூகம் முழுமையும் ஒரு கலக்குக் கலக்கி விட்டது. எந்தச் செட்டிய வீட்டிலும் பல மாதங்கள் இப்பேச்சே அடிபட்டது. சங்கத்துக்கலியாணம் இது என்று ஒரு பெயரையே வைத்து விட்டனர். ஆரம்பத்திலிருந்தே எங்கள் தந்தையாரவர்களிடம் திரு. ராம. சுப்பையா அண்ணன் அவர்கள், ஒரு தந்தையிடம் பழகுவது போல் பழகி வந்தவர்கள். எங்கள் திருமண வேலையிலும் மற்றும் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சி களிலும் முன்னின்று முக்கிய பங்கெடுத்துச் சளைக்காது, பம்பரம் போல் செயலாற்றிப் பங்கு கொள்வார்கள். பிற் காலத்தில் என் அண்ணன் மகள் லெட்சுமி என்ற கமலாவை இராம. சுப்பையா அவர்களின் மூத்தமகன் திரு. எ.பி. முத்துராமன் அவர்களுக்குச் (சினிமா டைரக்டர்) சீர்திருத்த முறையிலேயே திருமணம் செய்து கொடுத்து மகிழ்ந்தார்கள். தந்தையார். செட்டிய வீட்டுப் பெண்கள் காலில் செருப்புப் போட மாட்டார்கள். முதன் முதலில் இதைச் செய்ததும் இந்த வீட்டுப் பெண்கள்தாம். அன்னையார் மறைவு தந்தையார் அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் பொழுது தாயாரவர் களுக்கு நோய் கூடிவிட்டது. உள்ளூர்ச் சட்டைக் கார லேடி டாக்டர் மிக நிபுணத்துவம் வாய்ந்தவர். மாதம் இருமுறை வந்து பார்த்துச் செல்லுவார். உடல் நிலையில் மாற்றம் நேர்ந்தால் தகவல் கொடுத்தால் உடன் வந்து கவனிப்பார். இப்படி ஒரு முறை டாக்டர் வந்திருந்தபோது புதல்வியாகிய என்னிடம் அம்மா இனி அதிக நாள் இருக்க மாட்டார்கள். ஒரு மாதத்துக்குள் எதுவும் நேரலாம். இதை இன்றே அப்பாவுக்குக் கடிதம் எழுதிவிடு என்று கூறிச் சென்றார். உடனே அதன்படி எழுதினேன். அந்தச் சமயம் சிங்கப்பூரில் கே விசாரணைச் சமயம், அதற்கு ஏற்பாடு செய்து வைத்து வரவேண்டும். அப்பொழுது விமானப் பிரயாணம் இல்லாத காலம். கப்பல் பயணம் 9 நாள், ரயில் பயணம் 1 நாள், ஆக வீடு வர 10 நாள் ஆகிவிடும். அதற்குள் எதுவும் நேர்ந்து விட்டால்...? என்று கருதி உறவினரில் இருவருக்கும், எனக்கும் (கொழும்பில் படித்துக் கொண்டிருந்த) என் அண்ணன் அவர் களுக்கும், உயர்திரு. சொ. முருகப்பா அவர்களுக்கும் ஒரே மாதிரியில் நான் அங்கு வந்து சேரு முன்பாக என் மனைவியாருக்கு ஏதும் நேர்ந்து விட்டால் வைதீக முறையில் ஏதும் செய்யக் கூடாது. நிறையப் பூக்கள் வாங்கிக் காரை அலங்காரம் செய்து, காரில் வைத்து இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். (ஏனெனில் அப்பொழுது பங்காளிகள் கூட்டு இல்லாத நிலையன்றோ) குளிப் பாட்டி நல்ல சீலை வாங்கி, மாலைகள் அணிவிக்க வேண்டும். பந்தல் போடக் கூடாது. பிராமணரைக் கூட்டிச் சவண்டி செய்யக் கூடாது. சவண்டியன்று ஏழை எளிய மக்களுக்கு (உள்ளூர் அரிசனங் கட்கு) சாப்பாடு போடுங்கள் என்ற முறையில் கடிதம் அல்ல உத்தரவு போட்டு எழுதி விட்டார்கள். அதே மாதிரி அவர்கள் வரும் முன்பாகத் தாயார வர்களும் காலமாகி விட்டார்கள். உறவினர்கட்கும் நண்பர்களுக்கும் தாயார் பிறந்த வீட்டுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. தாய் வீட்டுப் பங்காளிகள் மறுநாள் பட்டு, இதர சாமான்கள் கொண்டு வந்து விட்டனர். திரு. சொ. முருகப்பா அண்ணனவர்களும் ராம. சுப்பையா அண்ணனவர்களும் இன்னும் சிலரும் முதல் நாளே, தாயார் இறந்த உடனேயே வந்திருந்து சீர்திருத்த முறையில் செய்யத் திட்டம்வகுத்துச் செயல் பட்டனர். முருகப்பா அண்ணன் என்னிடமும் அண்ணனிடமும், நாளை எல்லாரும் வந்தவுடன் உங்களிடம் வைதீகச் சடங்கு செய்யும் படி கட்டாயப் படுத்துவார்கள். நீங்கள் இருவரும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. தந்தையாரவர்கள் விருப்பப்படி அவர்கள் சொற்படி தான் நடக்க வேணும், அப்பச்சி எழுதியபடிதான் நடப்போம் என்று கூறி விடுங்கள். மேற்கொண்டு பேசுவார்கள். உங்கட்குப் பயம் ஏற்படும். அப்படி ஏற்பட்டால். முருகப்பா அண்ண னிடம் சொல்லுங்கள் என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடுங்கள். நானும் பிறரும் மற்ற வற்றைக் கவனித்துக் கொள்ளுகிறோம் என்று சொல்லி வைத்து விட்டார்கள். அதன்படியே நாங்கள் நடந்தோம். பள்ளத்தூர் தாயார்பிறந்த வீட்டுப் பங்காளிகள் மறுநாள் வந்தார்கள் பந்தல் போடுவதில்லை என்பதை அறிந்தார்கள். பேசிப் பார்த்தார்கள். ஒத்து வரவில்லை. கொண்டு வந்த பட்டு, இதர சாமான்களை வீட்டில் அப்படியே வைத்துவிட்டு எதிலும் கலந்து கொள்ளாமல் சாப்பிடாமல் கோபம், வேதனை யுடன் சென்று விட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்த்துச் சமைத்த சாப்பாடு எல்லாம் வீணாகி விட்டது. பூக்களினால் அலங்கரிக்கப்பட்ட காரில் பிரேதம் எடுத்துச் செல்லப்பட்டது. இதுவும் அச்சமூகத்தை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பல மாதங்கள் பல ஊரிலும், வீட்டிலும் இதே பேச்சு. தந்தையின் கல்வி நிலை தந்தையாருடைய பள்ளிப் படிப்பு அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்பு வரைதானாம். இவர்களின் சொந்த முயற்சி யினாலும், ஆர்வத்தினாலும் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் சிங்கப்பூர், மலேயாவில் இருக்கும் பொழுது ஆங்கிலம் கற்றுக் கொண்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் வல்லமை பெற்றிருந் தார்கள். தேவையும், ஆர்வமும் இருந்தால் முடியாதது என்ன? இவர்களுடைய சிங்கப்பூர் லாயர் ஒரு வெள்ளைக்காரர். சட்டத்தில் மகா வல்லுநர். இவருடன் தந்தையார் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்களாம். ஒரு சமயம் கோர்ட்டில் விசாரணை நடக்கும் பொழுது நீதிபதி முன்பு லாயர் பேசிக் கொண்டிருந்த பொழுது, தந்தையார் இவரின் லாயரிடம் சில சட்ட நுணுக்கங்களை நினைவுபடுத்திக் கூறினார் களாம். இதை நீதிபதி கவனித்து விட்டார். அந்த சிங்கப்பூர் ஹைகோர்ட் தீர்ப்பில் வை.சு. சண்முகம், அவரின் வயதுக்கு மேல் திறமைசாலி என்று ஓர்இடத்தில் கூறியுள்ளார். எதிரிகள் செய்த அபாரமான மோசடிகளை எல்லாம் அம்பலமாக்கி, ஆணித்தர மாகத் தீர்ப்பு எழுதி, வை.சு. அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வகையில் தீர்ப்பளித்தார். தந்தையார் இயல்புகள் தமிழ் மொழி வளர்ச்சியில் ஆர்வம் மிக்கவர் எம் தந்தையார். தமிழ்க் கவிஞர்கள், தமிழ் அறிஞர்களிடம் மிகுந்த ஈடுபாடு, பற்றுள்ளம் கொண்டவர்கள். இவர்களின் துன்பநிலை, அறிந்தால் தந்தையார் மனம் கொதித்துப் பேசுவார்கள்; மனம் நைவார்கள். இயன்ற உதவிகளை வலியச் சென்று தம் கடமை யாகக் கருதிச் செய்வார்கள். இன்ப மாளிகைக்கும், பிறகு வசித்த ஒரு பழைய வீட்டிற்கும் சித்தர்களும் வந்து செல்வ துண்டு. மதுரை அருகில் ஒரு கிராமத்திலிருந்து இரண்டு சித்தர்கள், வருவதுண்டு. இவ்விருவரும் உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் அதற்குள்ள நரம்பு களைக் கணித்து அதைப் பிடித்து நீவி விட்டு அந்த நோயை அகற்றி விடக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள். அவருள் ஒருவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. முகத்தில் ஒரு கடுமையான தோற்றம். நல்ல உயரமாக இருப்பார். முதல் நாள் வந்து, அன்றோ மறுநாளோ சென்று விடுவார். இன்னொருவர் செல்லச்சாமி என்பவர். இவர் பல் விளக்க மாட்டார். எப்பொழுதும் வாயில் வெற்றிலை, புகையிலை அடக்கி இருப்பார். யாரிடமும் ஒரு குழந்தை போலக் குழந்தைப் பேச்சாகவே பேசுவார். செட்டிநாட்டில் மிகப் பெரிய செல்வர் வீடாக இருக் கட்டும், அங்கும் சென்று இதமாக ஓரிரு வார்த்தை குழந்தை பேசுவது போலப் பேசிவிட்டு வருவார். நடுத்தர வீட்டுக்கும் வருவார். தீண்டப் படாதவர்கள் என்று அக்காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த சாதியினரின் வீட்டுக்கும் சென்று வருவார். ஆனால் இவர் தந்தையார் வீட்டுக்குத்தான் அதிகம் வருவார். அழுக்கு வேட்டி கட்டியிருப்பார். இதைப் பார்த்து நல்ல வேட்டியை தந்தையார் கொடுப்பார்கள். வாழைப் பட்டையில் மூக்குப் பொடி வைத்து இருப்பார். மடியில் சொருகி வைத்திருப்பதினால் அதை எடுத்துப் பிரிக்கும் போது கொட்டி விடும். கிழிந்து விடும். இதை உணர்ந்த தந்தையார், 4, 5, மூக்குப்பொடி டப்பா வெள்ளியில் செய்து வாங்கி ஒன்றைக் கொடுப்பார்கள். இவர் எளிய மக்கள் வசிக்கும் பகுதிக்குத் தவறாது செல்வார். அங்கு சாமி எனக்கு வேட்டி கிழிந்து விட்டது என்று கூற வேண்டியதுதான் தாமதம், உடனேயே இவருக்கு யாரும் கொடுத்துள்ள நல்ல வேட்டியை உரிந்து கொடுத்து விட்டு அந்தப் பழைய வேட்டியை இவர் வாங்கிக் கட்டிக் கொண்டு விடுவார். பிறகு அடுத்த நாளே, அந்த ஊரிலோ அடுத்த ஊரிலோ இவர் விரும்பும் வீட்டுக்குச் செல்லுவார். போன உடனேயே இவர் கோலத்தை அந்த வீட்டார் கண்டு வேறு நல்ல வேட்டி கொடுத்து விடுவர். மூக்குப்பொடி டப்பாவோ வேட்டியோ இவரிடம் தங்காது. இந்த நிலை அறிந்த பிறகு மூக்குப்டி டப்பா கொடுப்பதைத் தந்தையாரவர்கள் நிறுத்தி விட்டார்கள். இவர் காசைக் கையில் தொட்டதை யாரும் பார்த்ததில்லை. மற்ற விருந்தினர் சாப்பிடும் இலையை வேலைக்காரர் எடுத்து எறிந்து விடுவது வழக்கம். ஆனால் இவர் சாப்பிட்ட இலையை எங்கள் தாயார்தான் எடுத்துப் போய் வெளியில் போடுவார்கள். மிகப் பெரிய வீட்டை இழந்து, கைப்பொருள் அனைத்தையும் இழந்து, ஒரு சிறு பழைய வீட்டில் வசித்துக் கொண்டு, சிரமத்துடன் கேசை நடத்திக் கொண்டு வாழ்ந்த நிலையிலும் நாங்கள் கவலைப் பட்டு ஏதும் கூறினால் இந்த நிலைமைகள் எல்லாம் நிச்சயம் நல்லபடி மாறிவிடும். உண்மைக்கு அழிவில்லை, அது வெற்றி பெற்றே தீரும். கவலைப்படுதல் முட்டாள் தனம், வாழ்க்கை நரகமாகிவிடும். இதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று பலவாறு சமாதானம் கூறி, நம்பிக்கை - தைரியத்தை எங்கட்குக் கொடுப்பார்கள். இன்ப மாளிகை மிகப் பெரிய வீடு. பணியாளர்களைக் கூப்பிட்டால் அவர்கட்கு கேட்காது. அதனால் மேசையில் ஒரு மணி வைத்திருப் பார்கள். அதை அழுத்தினால் மணி அடிக்கும் 1 தரம் அடித்தால், ஒரு ஆள் வரும் (சமையல் ஆள், எடு பிடி வேலையாள், டிரைவர், கணக்குப் பிள்ளை) இன்னாருக்கு இத்தனைத் தடவை மணி அடிக்கப்படும். அந்த ஆள் வரவேண்டும் என்று ஏற்கனவே பணியாளருக்கு அறிவிக்கப் பட்டிருக்கும். அதன்படி அந்த அந்த மணிக்கு ஏற்ப அவர்கள் வந்து பணியினை முடிப்பார்கள். பொது வாழ்வு, கே இரண்டிலுமே ஈடுபட்டு, தொழிலை நேரடியாகக் கவனிக்காது முழுதுமாக மானேஜர்கள் பொறுப்பில் பர்மாவிலும், மலேயாவிலும் விட்டதினால் வரவு சுருங்கித் தொழில் நட்டமாகிப் பொருளாதார நிலை சீர்குலைந்து போய் விட்டதினால் எடுபிடி வேலையாள் எல்லாம் போய்விட்ட நிலை. ஒரு பழைய வீட்டில் வசித்து வந்த நிலை. ஆனால் இந்த வீட்டிலும் அந்த மணியோசை எழும். 1 தடவை மணி அடித்தால் பேரன் வருவார். 2 தடவை மணியடித்தால் ஒரு பேத்தி, 3 தடவை மணி அடித்தால் மற்றொரு பேத்தி வந்து ஐயா ஏவும் வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டுச் செல்வார்கள். தனி மனிதரைப் பற்றிப் பாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்த வரகவி பாரதியார் அதை மாற்றிக் கொண்டு செட்டி மக்கள் குல விளக்கு என்று தந்தையார் பெயரில் கவிதை எழுதினார்களாம். பிற்காலத்தில் பல இளைய தலைமுறை யினர் தந்தையாரவர்களிடம் வந்து மகாத்மா காந்தியடிகளின் கடிதங்கள், பாரதியாரின் கடிதங்கள், கவிதைகள் முதலியவற்றை வெளியிடக் கருதிக் கேட்டவர்கள் பலர், இன்னும் திரு. சோம. லெ. போன்றவர்கள் கானாடுகாத்தானுக்கு வந்து, அன்றைய செட்டி நாடு இருந்த நிலையில் சமூகத்துக்கும், காங்கிர, சுயமரியாதை இயக்கங்களுக்கும் நீங்கள் ஆற்றிய சேவை விவரங்களையும் தாருங்கள் கூறுங்கள் என்று எவ்வளவோ கேட்டும் பெறமுடியாது வருத்தத்துடன் சென்றுள்ளனர். நானே ஒரு முறை கேட்டுப் பார்த்தேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் இந்தக் கடிதங்கள், கவிதைகள் எல்லாம் அந்தக் காலத்தில் நானிருந்த நிலையை வைத்து எழுதியவை. இப்பொழுதுள்ள நிலையில் வெளியிட விரும்பவில்லை. நல்ல காலம் நிச்சயம் வரும். அப்பொழுது வெளியிடலாம். என்று கூறிவிட்டார்கள். கடைசியாக எப்படியோ தந்தையாரவர் கட்குத் தெரியாது எனது சிற்றன்னையார் உதவியுடன் கவிஅரசர் முடியரசனார் அவர்கள் அப்பாடலை எடுத்து அவர்கள் வெளியிட்ட எழில் பத்திரிகையில் இதனை வெளிவரச் செய்து விட்டார். ஒரு பொங்கல் நாளன்று வழக்கில் ஒரு கோர்ட் தீர்ப்பு வந்தது. அதில் பாதி இவர்களுக்கு அனுகூலமாகவும், பாதி எதிர்த் தரப்புக்கு அனுகூலமாகவும், விரும்பினால் அப்பீல் செய்யலாம் என்று ஜட்ஜ்மென்ட் ஆகி இருப்பதாக வக்கீலிட மிருந்து கடிதம் வந்துள்ளது. மறுநாளோ, அதற்கு மறுநாளோ நான் காரைக்குடியிலிருந்து தந்தையாரவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். தீர்ப்பு விவரம் கூறினார்கள். சற்றுப் பொறுத்து மகாத்மா காந்தி சொன்னது தான் நடந்தது. நான் வழக்கை முடித்துவிட்டு வருகிறேன். என்று கூறிய என் வாழ்நாள் முழுவதும் முடியாது போய் விட்டது. என்னை இந்த நிலைமைக்கும் கொண்டு வந்து விட்டது. அன்று மகாத்மா, நீங்கள் இதிலிருந்து வெளிவந்து விட வேண்டும் என்று கூறியதன் பொருள் இன்று தான் விளங்குகிறது. நீங்கள் வழக்கை விட்டாலொழிய, வழக்கு உங்களை விடாது - என்பதையே அன்று அவர் அப்படி உணர்த்தியுள்ளார். அதன் பொருள் அப்பொழுது விளங்கவில்லை, என்று கூறிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு நானும் வேதனையில் மூழ்கினேன். தந்தையும் மகளும் அந்நிலையிலிருந்து விடுபடச் சிறிது நேரம் பிடித்தது. இவ்வாறு அனைத்தும் இழக்கும் நிலை வந்துங்கூடப் பிறருக்கு உதவும் மனத்தை மட்டும் இழக்கவில்லை. தந்தையாரவர்கள் வறுமையின் பிடியிலிருந்த பொழுது, அவர் களின் கடைசிக் காலத்தில் லோகோபகாரி என்ற தேசியப் பத்திரிகையை நடத்தி வந்த திரு. பரலி. சு. நெல்லை யப்பர் அவர்களிடமிருந்து ஓர் கடிதம் வந்தது. முன்பு போலச் செல்வச் செழிப்புடன் வை.சு.ச. இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பண உதவி கேட்டு எழுதப்பட்டது அக்கடிதம். நான் காரைக்குடியி லிருந்து அந்தச் சமயம் வாரம் தவறாது தந்தையாரவர்களைக் கானாடுகாத்தான் சென்று பார்த்து வருவது வழக்கம், அப்படி ஒரு முறை சென்றிருந்த போது கடிதத்தை எடுத்துப் படிக்கும் படி கூறிவிட்டு, என்றும் தன்னம்பிக்கை, தைரியமுடன் இருந்து வந்த அவர்கள், ஏன் இன்னும் நான் வாழ்கிறேன், என்று ஒரு கேள்வி யைப் போட்டு நிறுத்திக் கொண்டார்கள். எங்களுக்கு எல்லாம் எழுதும் கடிதங்களின் கடைசியில் எல்லாம் இனிதே முடியும் என்று இருக்கும். அல்லது எல்லாம் நன்மைக்கே என்றே முடித்திருப்பார்கள்.  21 தனவணிகரும் ஹிந்து மதாபிமான சங்கமும் வை.சு.சண்முகம் (குறிப்பு : தமிழறிஞர் சொ. முருகப் பனாரின் மணி விழா மலருக்காக இந்து மதாபிமான சங்கத்திற்கு வயி. சு.ச. எழுதிய கட்டுரை இது. சமூக முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு, இலக்கிய ஆர்வம், பாரதியார்பாற் கொண்ட பற்று, நாள் குறிப்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் முதலிய குண நலங்களை அறிய இக்கட்டுரை துணை நிற்பதைக் காணலாம்.) நம் சங்கம் நிறுவியவர்களில் தலையாய நண்பர் சொ. முருகப்பா அவர்களின் அறுபதாண்டு நிறைவு விழாவில், அவர்கட்குச் சிறப்புச் செய்யும்பாராட்டுக் கூட்டத்தில் நம் சங்கம் தோன்றிய வரலாற்றை அனைவரும் அறிய ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நம் அன்பர் சொ. முருகப்பா அவர்களுடன் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக நான் நட்புரிமை கொண்டிருக் கிறேன். நள வருடம் பங்குனி மாதம் க ஆம் நாள் (31.3.1917) அன்று காரைக்குடியில் நண்பர் அ. ராம. இராமனாதன் செட்டியார் அவர்கள் வீட்டில், சொ. முரு அவர்களை முதன் முதலாகக் கண்டேன். பொழுது போக்காக அங்கு அன்பர்கள் சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது பக்கத்திலிருந்து, அவர்களில் ஒருவருக்கு அன்பர் சொ. முரு. ஆட்டம் சொல்லிக் கொண்டிருந் தார்கள். யாசகம் பெற அங்கு வந்த புலவர் ஒருவரிடம் இரண்டு மூன்று அன்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். அதில் சொ. முரு. வந்து கலந்து பேசியபோது அவர்கட்குத் தமிழ்ப் புலமை இருப்பது தெரிந்தது. அவர்கள் பேசிய துடுக்கான, கவர்ச்சிகர மான பேச்சு என் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர்கள் சென்ற பிறகு விசாரித்ததில் அவர் பெயர் எ. முருகப்பன் என்று சொன்னார்கள். தேவகோட்டையில் அப்போது நடந்த வைசிய மித்திரன் வாரப் பத்திரிகையில் எ. முருகப்பன் என்பவர் சில மாதங் கட்கு முன் எழுதிய கட்டுரை ஒன்று பார்த்தது நினைவுக்கு வந்தது. தேவை! தேவை!! மந்திரவாதிகள் தேவை!!! அறியாமை என்ற பேய் தனவணிகப் பெண்களைப் பிடித்திருப்பதால் அவர்களும் பேயாகி விட்டனர். அந்த இரு பேய்களும் தனவணிக ஆண் மக்களைப் பிடித்தாட்டி வைக்கிறது. அவைகளை விரட்டத்தக்க மந்திரவாதிகள் தேவை! என்பது தான் அக்கட்டுரையின் சுருக்கம். அந்தக் கட்டுரை எழுதியவர்தான் எ. முருகப்பன் என்பவர் என்று தெரிந்தது. அவர்களைப் பார்க்க வேண்டு மென்று நண்பர் அ. ராம. ராம. அவர்களிடம் கூறியதும் ஆள் அனுப்பினார்கள். நண்பர் சொ. முரு. பத்தே நிமிடங்களில் அங்கு வந்தார்கள். எதற்காக என்னைப் பார்க்க விரும்பினீர்கள்? என்றார்கள். மந்திரவாதிகள் தேவை! mtru¤ njit! என்று விளம்பரம் செய்தீர்களே! அத்தகையோரிடமிருந்து மனுக்கள் ஏதும் வந்ததா? என்றதும் வரவில்லை. அடுத்த மகாமகத்துக்குள் வராது என்பதும் எனக்குத் தெரியும் என்றார்கள். வரவே மாட்டார்கள் என்பதனா லேயே அவசரத் தேவை என்று அழைப்பு விட்டீர்களோ? அப்படி யானால் அத்தகையோர் முன் வந்தாலும் அவர்களுடன் ஒத்து ழைக்கவும் நீங்கள் தயாரில்லையோ? என்ற வினாவுக்கு, யார் சமூகத் தொண்டு செய்ய முன்வரப் போகிறார்கள்? மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியாரும், வைசிய மித்திரன் இராமனாதன் செட்டியாரும் ஏழு எட்டு ஆண்டுகளாக எழுதி முயற்சிக் கிறார்கள் யாரும் முன் வரக் காணோமே! என்றார்கள். பத்திரிகையில் எழுதிவிட்டால் போதுமா? அவ்விருவரும் வெகு தொலைவில் இருக்கிறார்கள் நம் சமூகத் தொண்டு புரிய நம் பகுதிக்கு நடுநாயக மாக விளங்குகின்ற காரைக்குடியில் ஓர் சங்கம் நிறுவலாகாதா? தமிழ் மொழி வளர்ச்சி கருதி மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சங்கம், அன்பர் மு.கதி. அவர்கள் முயற்சியால் ஏழெட்டு ஆண்டு களாகத் தோன்றி வேலை செய்கிற மாதிரி தொண்டு புரியலாம் என்பதற்கு மேலைச் சிவபுரியில் வ.பழ.சா. குடும்பத்தார் பொறுப் பேற்றிருக் கிறார்கள். இங்கு யார் பொறுப்பேற்பது? என்றார்கள். நீங்கள் இருக்கிறீர்கள், அன்பர் அ. ராம. ராம. இருக்கிறார்கள். இங்குள்ள மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றேன். அது முதல் அடிக்கடி காரைக்குடியிலும் கானாடு காத்தானிலும் அன்பர்கள் சொ. KU., அ.ராம.ராம. இருவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டது. நம் சமூக சீர்திருத்தத்தைப் பற்றி முதன் முதலாகக் கட்டுரை எழுதிச் சொற்பெருக்காற்றி வந்த அன்பர் காலஞ் சென்ற மு. சின்னையா செட்டியார் அவர்களைக் கண்டு பேச 12.8.1917 அன்று அன்பர்கள் சொ. KU., அ. ராம. ராம.வுடன் மகிபாலன்பட்டி சென்று அவர்களுடன் இரண்டு நாள் தங்கி ஆலோசனை பெற்றோம். 15.9.17 அன்று கண்டரமாணிக்கத்தில் விவேகானந்த சபை ஆண்டு விழா மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியார் தலைமையில் நடந்தது. நம் நண்பர் சொ. முரு. அதில்தான் முதன் முதலாக நம் சமூக வளர்ச்சி பற்றிச் சொற்பெருக்காற்றினார். சொ. முரு. அவர்கள் அப்போது இயற்றிய பாடலைக் கீழே காணலாம். உள்ளம்பூ ரித்தோம் உவகை மிகக்கொண்டோம் வெள்ளஆ னந்தம் மிகப்பெற்றோம் - கள்ளமிலாக் கண்டமா ணிக்கம்அதில் கண்ணியனாம் சின்னையனைக் கண்டமா ணிக்கம்எனக் கண்டு தமிழ்ப் புலவர் சிதம்பர அய்யரை ஆசிரியராகக் கொண்டு நம் சங்கத்தில் தமிழ்க் கலாசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. பல அன்பர்கள் அதன் மூலம் மொழி வளர்ச்சி அடைந்தனர். அன்பர் ராய. சொக்கலிங்கனார் அவர்கள், கல்வி நலம் பெற்றது இக்கலா சாலையிலேயே. இக்கலாசாலையே, நம் சங்க அங்கத்தினர் மாதக் கூட்டங்கள் நடத்தி, நாவன்மை பெறச் சொற்பொழிவாற்றிப் பழக நல்ல வாய்ப்பாக இருந்தது. நம் சங்கம் தோன்றிய இரண்டு ஆண்டுகட்குள் உள்நாடு வெளிநாடுகளில் வாழ்ந்த தனவணிகர்கள் 150 பேருக்கு மேல் நம் சங்கத்தில் உறுப்பினராகப் பெருகிச் சங்கம் நல் வளர்ச்சி பெற்றது. 1918 முதல் நம் குல வளர்ச்சி கருதித் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு, நம்மவர்கள் தங்கும் ஊர் நகரத்தார்க்கும் செய்கோன், சையாம், மலாயா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளில் உள்ள நகரத்தார்களுக்கும் அனுப்பினோம். செட்டிமார் நாட்டில் நடந்த திருவிழாக்களிலும் தனவணிகர் கூடும் இடங்களில் எல்லாமும் நம் சங்க உறுப்பினர்கள் சென்று குல வளர்ச்சி நாடி 96 ஊர்க் கூட்டத்தை மீண்டும் கூட்டிவிட வேண்டும் என்று பேசி வந்தனர். அவர்கள் அனைவரும் இந்து மதாபிமான சங்கத்தின் உறுப்பினர்கள் தாம். தமிழ்நாட்டில் சமயத்துறை, நாட்டு நலம்,மொழி வளர்ச்சி, இனப்பற்று ஆகிய வழிகளில் முயலும் நல்லோர்கள், பெரியோர்கள் அனைவரும் நமது சங்கத்தின் ஆண்டு விழாக்களிலும் இடையேயும் நம்முடன் ஒத்துழைத்ததால் நம் இந்து மதாபிமான சங்கம் பல நல்வாழ்த்துக்களைப் பெற்று விட்டது. அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த பெரியோர்களில் எவருமே நம் அழைப்புக்கிணங்கி வந்து, நம்முடன் கலந்து, சங்கத்தை வளர்க்க ஒத்துழைக்கத் தவறியதே இல்லை என்று துணிவாகக் கூறலாம். நம் இந்து மதாபிமான சங்கம் பெற்ற நல் வளர்ச்சியின் பயனாகத் தனவணிகர்களிடையே நம் குறிக்கோள்களில் முதலாவதான சமூகத் தொண்டு புரிய மேடைகளை உண்டாக்கக் கூடிய ஆற்றலைப் பெற்று விட்டோம். 11.9.1919 அன்று மாலை நான்கு மணிக்கு நம் சங்க நிலையத்தில் நம் இந்து மதாபிமான சங்க உறுப்பினருள் முதன்மையான சிலர் தனவைசிய ஊழியர் சங்கத்தைத் தோற்று வித்தனர். அந்த ஊழியர் சங்கம் கடுமையான நிபந்தனைகளை உடையது. அதன் திட்டங் களில் ஒன்று தனவைசிய ஊழியன் என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகை நடத்த வேண்டும் என்பது. நம் சங்கத்தின் உறுப்பினர் களில் சிலர்தான் அதன் உறுப்பினர். ஊழியர் சங்கத்தின் முதல் செயலாளரும் சொ.முரு. அவர்கள்தான். 28.9.19 அன்று தனவணிக மரபின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள தேவகோட்டை கரு. கி சொர்ணநாதன் செட்டியார் அவர்களி டத்தில் ஆலோசனை வாழ்த்துப் பெற நண்பர் சொ. முரு. காலஞ் சென்ற நம் சகோதரர் அமராவதிபுதூர் பிச்சப்பா, சுப்பிரமணியன் இருவருடன் தேவகோட்டை சென்றோம். 20க்கும் 24க்கும் இடையே வயதுடைய கட்டிளங்காளை களான உங்கள் நல்ல எண்ணம் தொண்டு எல்லாம் நிறை வெய்தும். என்னாலான உதவிகளைச் செய்கிறேன். நான் உங்களில் ஒருவன் என வாழ்த்தி அனுப்பினார்கள். நம் சங்க உறுப்பினருள் எண்மர் சேர்ந்து ஊழியர் சங்கம் கண்டனர். அவர்களில் எழுவரை 27.9.19 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் நிழல் படம் பிடித்தா. நேற்றிருந்தவர் இன்று இல்லை என்ற பெருமையை உடையது உலகு என்று பொய்யா மொழியார் கூறுகிற பெருமைக்கு இலக்கான உறுப்பினர் பிச்சப்பா சுப்பிரமணியம் அவர்கள் ஒருவர் என்பதை நம் இந்து மதாபிமான சங்கத்தினர் ஒரு போதும் மறக்க முடியாது. அப்படத்தில் உள்ளோர் எழுவரில் அறுவர் இன்றும் நலமே வாழ்கின்றோம். 28.10.19 அன்று நம் கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கானாடுகாத்தான் வரும் வழியில் நம் நண்பர்களால் வரவேற்கப் பெற்று முதன்முதலாகக் காரைக்குடியில் காலை 10.30க்கு வந்து இறங்கினார்கள். சிவன் செயல் ஊருணித் தென் கரையில் தான் அப்போது மதுரை ப வந்து நிற்கும். நம் கவியரசர் பாரதியாருடன் வந்த தோழரையும் கவியரசருடன் ஏக வசனத்தில் அவர் பேசுவதையும் கண்ட நம் அன்பர்கள் இந்து மதாபிமான சங்கத்தில் அவர்களை புகவிட இணங்கவில்லை. எனினும் அவருடன் பேச, அவர் பாடல் களை அவர் பாடுவதைக் கேட்க விரும்பியதால் என்னுடன் நம் கவிஞர் பெருமானைக் கானாடுகாத்தானுக்கு அனுப்பவும் இணங்கவில்லை. நம் கவிஞர் திலகத்தைக் காலஞ்சென்ற செ.அ. ராம. முருகப்ப செட்டியார் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அவருடைய தோழருடன் இறக்கி னோம். அங்கேயே அவர்களின் குளியல், உணவு முடிந்தது. நம் கவிஞர் பெருமானின் அழகிய திருவடிவும், நிறமும், மீசை விரைப்பும், அன்பு கனிந்த வெடிப்புறப் பேசிய பேச்சும், உணர்ச்சி மிகுந்த - நடுங்க வைக்கும் தோற்றத்துடன் நெஞ்சில் பதியுமாறு சொற்களை வீசிய வீரமும், அசையாத தெய்வ நம்பிக்கையும், புலமையின் தெளிவும் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்து விட்டன. தாம் இயற்றிய பாடல்களைப் பண்ணோடும் உணர்ச்சி யோடும் அவர் பாடியது கேட்டு நம் அன்பர்கள் அளவிலா மகிழ்ச்சிப் பெருக்கடைந்த பிறகு எங்களைப் புறப்பட அனுமதித்தனர். 28.10.1919 அன்று மாலை கவியரசர் கானாடுகாத்தான் வந்து சேர்ந்தார்கள். 6.11.19 அன்று எதிர் பாராத விதமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டுக் கடையம் செல்ல வேண்டும் என்றார்கள். அன்று பயணமாகக் காரைக்குடி சென்றார்கள். 6.11.19 அன்று நம் இந்து மதாபிமான சங்கத்தின் அமைப்புக் களையும் உறுப்பினர்களின் தொண்டுகளையும் ஆர்வத்தையும் மாலை நேரில் பார்த்ததும் புனிதமான புலவரின் உள்ளம் பூரித்து விட்டது. மறுநாட் காலை அவர் செல்வதாக இருந்ததைக் கைவிட்டு விட்டார். நம் இந்து மதாபிமான சங்கம் மறக்க முடியாத வாழ்த்துப் பாக்களை நம் கவியரசரிடமிருந்து பெற ஓர் நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. இந்து மதப் பெருமை, இந்து மதாபிமான சங்கம் பெற்றிருந்த வளர்ச்சி, நம் உறுப்பினர்களின் பண்பாடு, ஊக்கம் அனைத்தையும் கண்டு அணு அளவும் பிழையில்லாத உண்மை களை ஒருங்கே கொட்டி வைத்திருக்கிற வாழ்த்துப் பாக்கள் அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் பொங்கி மலர்ந்த இளமை மணம் மாறாத பூக்களாக இன்றும் நம் உள்ளந்தோறும் மணங் கமழ்ந்து விளங்கு கின்றன. அப்போதையத் தமிழ் நாட்டின் தவப்பயன், உள்ளத் துறவு பெற்ற சிறந்த வேதாந்தி, மாசு மறுவற்ற நாட்டன்பர், இணையற்ற தமிழ்த் தொண்டர், மனிதப் பிறவியில் உயர்வு தாழ்வு கூறுதல் ஐயத்துக்கு இடமில்லாத பாவமாகும் என்று துணிந்து கூறி அதன் படி வாழ்ந்து வழிகாட்டிய வீரர், மங்கையர் முன்னேற்றத்தில் மட்டிலா ஆர்வங் கொண்ட மகான் பாரதியார், மிடுக்குடன் வேகமாக எவர் நெஞ்சத்தையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் புரட்சிக் கருத்துக்களை உரைநடையும் பாடலுமாக நம்மிடையே கொட்டிவிட்டு 32 ஆண்டுகட்கு முன்பே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். புனித உள்ளங்கொண்ட நம் புலவர் ஏறு பாரதியாரிடம் நம் சங்கம் பெற்ற வாழ்த்துக்கள், நமக்குத் தோன்றும் இன்னல் களைத் தடுத்து நிறுத்தி மறுமலர்ச்சி தரும் என்பது நிரூபிக்கப் பெற்ற உண்மையாக நிலவுகிறது. நம் கவியரசர் 6.1.20 முதல் 10.1.20 வரை மறுமுறையாகக் கானாடுகாத்தான் வந்திருந்தார்கள். நம் சங்கத்தில் அக்கவிஞரின் நிழல் படம் எடுத்து அது நம்மிடம் இருக்கிற வாய்ப்பைத் தமிழ் நாடடில் இருந்த வேறு எந்தச் சங்கமும் பெறவில்லை. பாரதியாரின் வாழ் நாளில் இரண்டு முறையே நம் பகுதிக்கு வந்தார்கள். அப்போது இரு வாழ்த்துப்பாக்கள் தான் பாடினார்கள். முதலாவது தமக்கு விருப்ப மான ஒரு தனிமனிதர் மீது. இரண்டாவது நம் இந்து மதாபிமான சங்கத்தின் மீது. வேறு பாடல் எதுவும் இப்பகுதியில் இருந்த போது அவர்கள் பாடவில்லை. 8.9.20 அன்று பொதுவாக இந்து மதாபிமான சங்கத்தை முழுமனத்துடன் ஆதரிக்கவும் சிறப்பாகத் தனவணிக குல வளர்ச்சியை ஆதரிக்கவும் தனவைசிய ஊழியன் என்ற வாரப் பத்திரிகை தோன்றியது. அதன் ஆசிரியர் சொ. முரு. அவர்கள் தான். அப்பத்திரிகைத் தோன்றிய ஓராண்டுக்குள் ஊழியர் சங்க உறுப்பினர்கள் காட்டிய வழியில் அதற்கு உறுதுணை யாக, நம் இந்து மதாபிமான சங்கம் நின்றதனால், 60 ஆண்டுகளாகக் கூடாது கிடந்த 96 ஊர்க் கூட்டத்தை, அதை இனிக் கூட்ட முடியாது எனப் புரளி பேசியவர்கள் தலை கவிழ்ந்து நம் குறிக்கோளுக்கு இணங்கி வணங்குமாறு கூட்டி வைத்த பெருமையைத் தனவைசிய ஊழியன் பெற்று விட்டது. செட்டிமார் நாட்டுக் கிராமங்களில் பெரும்பாலான ஊர்களில் எல்லாம் நம் இந்து மதாபிமான சங்கத்தின் உறுப்பினர்கள் தொகை பெருகி நின்றது. அவர்கள் உதவி பெற்று, நம் தனவணிக குலத்தில் வெளிநாட்டில் வசித்தோர் உள்பட உள்ள முழுப்புள்ளி, அரைப் புள்ளி, மணமாகாத சிறுவர், சிறுமியர், விதவைகள், குழந்தைகள் ஆண், பெண் அடங்கலுக்கும் ஊர் வட்டகை, கோவில் பிரிவுகள் ஆகிய வற்றை விவரமாக நம் ஊழியர்கள் கணக்கெடுத்தனர். 15.7.1921 அன்று கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் நடந்தது. தனவணிகர்கள் 96 ஊர்களில் வாழ்ந்த காலத்தில் நம் குலத்தவர் மகாநாட்டுக்கு 96 ஊர்க்கூட்டம் என்ற பெயர் இடுகுறிப் பெயராக இருந்தது. நம் குலத்தினர் 78 ஊர்களில் அப்பொழுது வசித்தனர் என்ற உண்மை அப்போதுதான் வெளிப்பட்டது. 18.8.21 அன்று கோனாபட்டில் எண்ணூற்றுக்கதிகமாக உறுப்பினர் களான தனவைசிய வாலிபர்களின் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் நம் தனவணிக குல அபிமானத்தில் எத்தகைய வியக்கத்தக்க ஆர்வங் காட்டினர் என்ற காட்சியை ஒரு போதும் மறக்க முடியாது. சமயப் பற்றினால் அரசர்களால் கட்டப்பெற்ற ஆலயங்களைப் புதுப்பிக்க ஆறுகோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது தனவணிக சமூகம். செலவிட்டவை கழித்து, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் சொத்துக்களைச் சத்திரம், மடம், விடுதி, வேத பாட சாலை, நந்தவனம், பசுமடம் போன்ற தாபனங்களுக்கு ஒதுக்கி வைத்திருக் கிறது. கன்னியாகுமரி முதல் காசி வரையும் அதற்கு அப்பால் நம்மவர் வாழும் வெளிநாடுகளிலும் இச்சொத்துக்கள் பரவி இருக்கின்றன. நம் இந்து மதாபிமான சங்கம் நமது நண்பர்கள் மெ.ராம. மெ; ராய.சொ; அ.ராம.ராம; அழ. அருணாசலன்; பழ. வெங்கடாசலம் போன்ற பலரின் விடாமுயற்சியால் இன்று புத்துயிர் பெற்று நமக்கெல்லாம் பெருமகிழ்வு தந்து நிற்கிறது. திருநாவுக்கரசர் கூறுகிறபடி, நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே! கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப் பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கிலும் பஞ்சமுண்டுஎன்று என்னொடும் சூள்அறும் அஞ்சல்நெஞ் சேஇமை யாதமுக்கண் பொன்னெடுங் குன்றம்ஒன்று உண்டுகண் டீர்இப் புகல்இடத்தே. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பாடல்களில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளைக் கருதி, ஊக்கம் கொண்டு, நம் வழித் தோன்றல்களாகிய வாலிபர்கட்கு வழிகாட்ட வேண்டியும், நமது இந்து மதாபிமான சங்கத்திற்கு நல்வளர்ச்சி நல்குமாறும், நமது நண்பர் சொ. முருகப்பா அவர்கட்கு நீண்ட நல்வாழ்வைத் தருமாறும், எல்லாம் வல்ல சக்தியைப் பிரார்த்திப்போம் ஆக. முற்றும்  கவியரசர் முடியரசன் படைப்புகள் கவிதைகள் தொகுப்பு 1 முடியரசன் கவிதைகள் 1954 நெஞ்சிற் பூத்தவை 1999 தொகுப்பு 2 காவியப்பாவை 1955 பாடுங்குயில் 1983 தொகுப்பு 3 கவியரங்கில் முடியரசன் 1960 தமிழ் முழக்கம் 1999 தொகுப்பு 4 நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 மனிதனைத் தேடுகிறேன் 1986 மனிதரைக் கண்டுகொண்டேன் 2005 தொகுப்பு 5 தாய்மொழி காப்போம் 2001 புதியதொரு விதிசெய்வோம் 1999 தொகுப்பு 6 வள்ளுவர் கோட்டம் 1999 ஞாயிறும் திங்களும் 1999 காவியம் தொகுப்பு 7 பூங்கொடி 1964 வீரகாவியம் 1970 தொகுப்பு 8 ஊன்றுகோல் 1983 இளம்பெருவழுதி புதிய நூல் 2008 இலக்கணம் தொகுப்பு 9 தமிழ் இலக்கணம் 1967 பாடுங்குயில் 1975 தொகுப்பு 10 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு) புதிய நூல் கடித இலக்கியம் தொகுப்பு 11 அன்புள்ள பாண்டியனுக்கு 1999 அன்புள்ள இளவரசனுக்கு 1999 சிறுகதை + கட்டுரை தொகுப்பு 12 எப்படி வளரும் தமிழ்? 2001 எக்கோவின் காதல் 1999 தொகுப்பு 13 சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 