கவியரசர் முடியரசன் படைப்புகள் 12 எப்படி வளரும் தமிழ்? எக்கோவின் காதல் முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 216 = 232 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 145/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக் காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங் களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகை யெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்பு களையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந்தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்பு களை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க் களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்த இப்பரிசிலுக்கு யான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ ................ முற்றிய திருவின்மூவuஆயினு«பெட்பின்¿ஈதšயா«வேண்டலமே’ என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடு மொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப் பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக் கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்கு களில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல்களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக் கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடி மணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவை களும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந் தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை ix வாழ்க்கைக்குறிப்பு xi இயற்றிய நூல்கள் xii எப்படி வளரும் தமிழ் 1 எப்படி வளரும் தமிழ்? 3 2 மகார் நோன்பு 11 3 ஒருமையா? ஒற்றுமையா? 20 4 கவிதை பிறந்த கதை 25 5 இருபதாம் நூற்றாண்டில் கவிதை 33 6 கூட்டுக் களியினிலே கவிதை 42 7 மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன் 50 8 கவிதை இன்பம் - சொல்லழகு 58 9 பாவேந்தர் வாழ்வும் இலக்கியப் பணியும் 66 10 வேர்ப் பலா 78 11 தமிழின்பம் தனி இன்பம் 85 12 பார் போற்றும் தமிழர் நாகரிகம் 90 13 புலவர் உள்ளம் 96 14 மங்கல வாழ்த்து 103 எக்கோவின் காதல் முன்னுரை 111 1 எக்கோவின் காதல் 112 2 அத்தை வீட்டில் பேய்! 130 3 கண்மூடி வழக்கம் 140 4 சந்தேக முடிவு 148 5 கடைமுழுக்கு 158 6 காக்கையின் கடிதங்கள் 167 7 கிருஷ்ணார்ச்சுன யுத்தம் 176 8 அணைந்த விளக்கு 186 9 அவமானச் சின்னம் 191 10 அழிந்து விடுமோ? 199 11 இரண்டு தந்தி 205 எப்படி வளரும் தமிழ்? 1 எப்படி வளரும் தமிழ்? உலக நாடுகள் பலவும் தத்தம் தாய்மொழி வாயிலாக அறிவியல் முன்னேற்றங் கண்டு தலை நிமிர்ந்து நிற்பதை நாம் காணுகின்றோம். தமிழ் மொழியிலும் அறிவியல் வளர்ச்சி காணத் துடிதுடிக்கும் நல்லுள்ளங் கொண்டோர் சிலரும் ஈங்குளர் என்பதும் அதன் பொருட்டுப் பெருமுயற்சி மேற்கொண்டு உழைத்து வருகின்றனர் என்பதும் நமக்குக் களிப்பூட்டுவன வேயாகும். அப் பெருமக்கள் உரத்த குரல் கொடுக்கும் பொழு தெல்லாம் நம் உள்ளம் பூரிக்கத்தான் செய்கிறது. ஆனால், முரண் பட்ட கொள்கை கள் பரவிய தமிழ்நாட்டில் அக் குரல், காற்றுடன் காற்றாகக் கலந்து விடுகிறதே தவிர, நோக்கம் முழுமைபெற உதவுகிறதா என எண்ணிப் பார்க்கும்பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது. அடிப்படை யின்றி மாளிகை எழுப்ப இயலாது. அதுபோல அடிப்படையான மொழியுணர்ச்சியே இல்லாத பொழுது, அறிவியல் முன்னேற்றங் காண இயலாது. இயற்கையும் செயற்கையும் ஆங்கிலேயர் ஆங்கிலப் பற்றூட்டத் தங்கள் நாட்டிலே கழகங்கள், மன்றங்கள், சங்கங்கள் தோற்றுவிக்கவில்லை; சப்பானியர் தமது மொழியுணர்வூட்டவும் அதனைப் பரப்பவும் அவர்தம் நாட்டில் மன்றங்கள் அமைக்கவில்லை; செருமானியர் தம் மக்களுக்கு மொழியுணர்வூட்டக் கழகங்கள் காணவில்லை. k‰w vªj eh£odU« V‰gL¤j KayhjnghJ, jÄœeh£oš k£L« jÄœ k‹w§fŸ V‹? என வினவுவாரும் ஈண்டுள்ளனர். அஃது உள் நோக்கங் கொண்ட வினா; தமிழ் வளர்ச்சியில் அக்கறை காட்டாத நெஞ்சங்கள் வெளிப்படுத்தும் வினா. இன்னுஞ் சிலர், பிற நாட்டினர் செய்யாத ஒன்றை நாம் செய்துள்ளோமே என்று வியந்துகொள்வதும் உண்டு. இஃது அறியாமையில் முகிழ்த்த வியப்பு. பிற நாட்டினர்க்கு மொழிப் பற்று, மொழியுணர்ச்சி யென்பது இயல்பாக வாய்த்த ஒரு பண்பு. தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்ச் சான்றோர் தட்டித் தட்டி யெழுப்பி யும், அரசியல் தலைவர்கள் போர்ப்பறை சாற்றியும் மொழிப்பற்றை உண்டாக்க வேண்டிய ஓர் அவலநிலை இருந்து வருகிறது. அவ்வுணர்வு இயல்பாக அமைந்த நாடுகளுக்கு மன்றங்கள் வேண்டற் பாலனவல்ல. செயற்கையாக ஊட்ட வேண்டிய தமிழ்நாட்டில் மன்றங்கள் இன்றியமையாது வேண்டப்படுவன வேயாம். தமிழ்நாட்டின் நிலை தமிழகத்தில் தமிழ்மொழிக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு களும் இடையூறுகளும் எண்ணிலடங்கா. அறியாமை, தன்னலம், நயவஞ்சகம், வருவோர்க்கெல்லாம் தலை வணங்கல், எளிதில் நம்புதல் முதலியன மண்டிக் கிடக்குந் தமிழ்நாட்டில், தமிழன்னை எத்தனை யெத்தனை இடையூறுகளுக்கு ஆட்பட்டுக் கண்ணீர் சிந்துகிறாள் என்பதை மாசகற்றிய மனமுடையோர் நன்கு அறிவர். தமிழ்ப் பற்று என்று சொன்னாற் போதும்; குறுகிய மனப்பான்மை என்று பழி சுமத்தப்படுகிறது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றவுடனே மொழிவெறி என்று இகழப்படுகிறது. பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழில் எழுதுதல் கூடாது எனினோ மொழி வெறுப்பு எனத் தூற்றப்படுகிறது. எப்படியோ இரு வேறுள்ளங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டேயாதல் வேண்டும். அதனாற்றான் தங்குதடை யின்றித் தமிழ் வளர இயலவில்லை என்பதுதான் உண்மை. துறைதோறுந் துறைதோறும் தமிழ் புறக் கணிக்கப்படுகிறது என்பதை எவரால் மறுக்க முடியும்? குறுகிய நோக்கம், மொழிவெறி, மொழிவெறுப்பு என்றெல்லாம் வான்பிளக்கக் கூவும் கூக்குரல் கேட்கிறதே அதில் உண்மையுளதா என நோக்குதல் வேண்டும். அக் கூக்குரல் தமிழ் வளர்ச்சி கண்டு, பொறுக்கா தெழுந்த குரல்; வெறுப்பாற் பிறந்த குரல்; வேறொன் றில்லை. அஃது உண்மை சிறிதுங் கலவாத பொய்ம்மைக் குரல் என்பதை உணர்தல் வேண்டும். தமிழ் மக்களிடம் வெறியுணர்வு மட்டும் இருந்திருப்பின் பிறமொழி இங்கே வாலாட்டுமா? தமிழன் றோ கோலோச்சும். அறிவுடையோர், நடுவுநிலைமை பிறழாதோர், உண்மையுணர்ந் தோர், உள் நோக்கம் இல்லாதோர், வெறி யென்றும் வெறுப் பென்றுங் கூறார். அவ்வாறு கூறின் காந்தியடிகள், தாகூர், இலெனின் போன்ற மேன்மக்களையும் அக் குற்றத்துக் குரியோராகக் கருத வேண்டிவரும். தாய் மொழியையும் அதில் உள்ள இலக்கியங் களையும் மதிக்காமல், வேறு மொழிகளுக்குத் தங்களை அடிமை யாக்கிக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அளவு வேறு நாட்டில் இல்லை என்று கூறியவர் யாரெனக் கருது கிறீர்கள்? நோபல் பரிசு பெற்று, உலகப் புகழுக்குரியவராகத் திகழ்ந்த இரவீந்திர நாத் தாகூர்தான். இவர் பிறமொழி வெறுப் பாளரா? நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டிருக் கிறோம். தேவையின்றி அயன்மொழிச் சொற்களை நம்முடைய மொழியில் நாம் பயன்படுத்தி வருகிறோம். அயன்மொழிச் சொற்களை அவ்வாறு ஆளும்போதும் தவறாகவே ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில் Nedochoty, Nedostatki, Probely என்னும் சொற்கள் இருக்கையில் அயன்மொழிச் சொல்லை நாம் நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாளுதல் வேண்டும்? அண்மையில் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்ட ஒருவர், அயன்மொழிச் சொற்களை ஆளத் தொடங்குவா ராயின் அவரை மன்னித்துவிடலாம். ஆனால், அவ்வாறே செய்கிற ஓர் எழுத்தாளரை மன்னிக்கவே முடியாது. தேவை யின்றி அயன் மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதன் மீது ஒரு போரையே தொடுக்க வேண்டிய நேரம் இதுவன்றோ? (பெங்களூர் குணா) இவ்வாறு கூறியவர் யார்? உலகமே ஒன்றாக வேண்டும் என்று கைதூக்கிய, விரிந்த, பரந்த, அகன்ற மனப் பான்மை படைத்த, புத்துலகச் சிற்பி வி.ஐ.இலெனின் தான். இவரைக் குறுகிய மனப்பான்மையுடையவர் என்று எந்த அறிவாளி யாவது கூற முற்படுவாரா? நம்மைக் குறைகூறும் விரிந்த மனப் பான்மை படைத்த நிறைமதியாளர் இதற்கு என்ன மறுமொழி கூறுவர்? உலகமே இவ்வாறுதான் இயங்குகிறது; தாய்மொழியை மதித்துப் போற்றி வளர்த்து வீறுநடை போடுகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்றான் இயற்கைக்கு மாறான நிலை! அரசியல் காழ்ப் புணர்ச்சிதான் அவர்களை அவ்வாறு பேசச் செய்கிறது. தமக்கும் தாய்மொழி தமிழ்தான் என்றவுணர்வு அவர்தங் குருதியில் வற்றி விட்டது. என் செய்வது? அவர்தம் உடலில் ஓடுங் குருதி, தூய்மை யடைந்து, தாய்மொழியுணர்வுடன் பரவும் நாள் எந்நாளோ? கல்வித் துறையில் இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம் ஆட்சி செய்கின்றன. இந் நிலையில் தாய்மொழியுணர்வு தலை தூக்குமா? பிஞ்சு நெஞ்சங் களிலேயே மொழியுணர்வு வேரோடு கல்லியெறியப் படுகிறதே! அப்பேசும் பொற்சித்திரங்கள், தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றழைக்கும் இன்னொலி, நம் செவியில் தேனாக வந்து பாய வில்லையே! அயன்மொழி வேரூன்றிய அவ்விளைய உள்ளங்களிலே என் மொழி தமிழ், நான் தமிழன் என்ற உணர்வுகள் எப்படி யரும்பும்? நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இவர்கள் வளர்ந்து உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள்வரை அயன் மொழியிலேயே பயில்வா ராயின், தாய் மொழியில் அறிவியலை எவ்வாறு வளர்ப்பர்? இரண்டுங் கெட்ட நிலையிற்றானே தடுமாறுவர். அத்தி பூத்தாற் போல ஆங்கொருவர் ஈங்கொருவர், தமிழில் அறிவியல் வளங் காட்டுவார் உளரேயெனில், விதிவிலக்காக அவர் காணப்படுத லன்றி மற்றொன்றில்லை. அரியணையில் அமர்ந்திருப்போர் தமிழ், தமிழ் என்று வாய்ப்பறை சாற்றினும் கல்வித் துறையிலிருந்து வெளிப்படும் ஆணைகள், அறிக்கைகள் எம்மொழியில் வருகின்றன? தமிழிலா வருகின்றன? அவ்வாணைகள், மாவட்டக் கல்வி அலுவலர்க்கே தெளிவாக விளங்காமல் தடுமாறச் செய்வதும் உண்டு. ஒரு மாவட்ட அலுவலர் ஒருவகையாகப் பொருள் கொள்ளுவார். அடுத்த மாவட்டத்தவர் வேறுவகையிற் பொருள்சொல்வார்; இறுதியில் தணிக்கைக்கு வருவோர், இரண்டுந் தவறு என்று மற்றொரு புதுப் பொருள் தருவார். மொழி வளர்க்கும் பண்ணை யாகிய கல்வித் துறையே சீர்குலைந்திருக்கும்போது தமிழ் எவ்வாறு வளரும்? அரசியல் துறையில் புதிய கல்விக் கொள்கையிலும் தமிழ் புறக்கணிக்கப்படு கிறது. உண்மை நிலையை ஆய்ந்து, நடுவு நிலைமையுடன் கல்விக் கொள்கை யை வகுத்து, அவ்வவர் தாய்மொழிக்கு ஆக்கந் தந்து, சிந்தனையில் ஒற்றுமையுணர்வு காண விழையாது, ஒரு மொழி யால் ஒருமைப் பாட்டை வளர்த்துவிடலாம் என எண்ணுகின்றனர். இவ்வெண்ணம் பன்மைப் பாட்டை வளர்க்குமே தவிர, ஒற்றுமை யுணர்வை வளர்க்காது. இக் கொள்கையில் அரசியல் நோக்கம் பொதிந்துளதே அன்றி அறிவு நோக்கம் காணப்படவில்லை. பல மொழிகள் வழங்கி வரும் ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மொழி கோலோச்ச விரும்பினால் சிறிதளவேனும் காணப்படும் ஒற்றுமையும் கருகி விடும் என்பதை உணராத அரசியலாலும் தமிழ் இரண்டாம் நிலை மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது. மதத் துறையில் தமிழ்நாட்டு மக்கள், வந்து புகுந்த இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம் என்று பல்வேறு மதங்களைத் தழுவி வருகின்றனர். தாம் தாம் விரும்பிய மதங்களை ஏற்றுக்கொண்டு, ஒழுகி வருவது அவ்வவர்க்கமைந்த உரிமை. தமக்குச் சிறந்ததாகத் தோன்றிய ஒன்றை வழிபாட்டுக்காக ஏற்றுக் கொண்டதுடன் அமையாது, அவ்வந் நாட்டுக்குரிய மொழிகளுக்கும் அடிமைப் பட்டு விட்டனர். தமிழர் என்ற உணர்வை அடியோடு மறந்து விட்டனர் - இழந்து விட்டனர். இந்து மதம் புகுந்தோர் ஸ்ரீநிவாஸன், ஜகந்நாதன், விருத்த கிரீஸ்வரன், பங்கஜாக்ஷி, பிரேமலதா, புஷ்பவல்லி என்ற பெயர் களைச் சூட்டிக்கொண்டு, வடமொழிக்கு வால்பிடித்தனர். இசுலாம் மதத்தைச் சார்ந்தோர் ஹாஜா ஹமீது, இஸ்மாயில், ரஹீம், ஜமீலா, ரசீதா என்று அரபுமொழிக்கு மண்டியிட்டனர். கிறித்துவத்தை நம்பியோர் டேனியல், விக்டர், ஜார்ஜ், அனவுன் சியா, டெய்சி என்று ஆங்கிலப் பெயர்களுக்கு அடிமையாகினர். எம் மதம் பற்றினும் தமிழராக நின்று, தமிழ்ப் பெயர் களைச் சூட்டிக் கொள்வதால் வரும் குறையென்ன? ஈண்டு உண்மை நிகழ்ச்சியொன்றைச் சுட்டிக் காட்டுவது பயன்தரும். kJiuÆš thœªJbfh©oU¡F« bgh¿Æaš tšYe® xUt®,