கவியரசர் முடியரசன் படைப்புகள் 6 வள்ளுவர் கோட்டம் ஞாயிறும் திங்களும் முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 208 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் இப்பரிசிலுக்குயான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ முற்றிய திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் brம்மல்,பhர்திUத்தப்பiடத்தசீ®த்திருத்தச்சிWகதைகள். முoaur‹ படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x வள்ளுவர் கோட்டம் கோட்ட வாயில் 3 காணிக்கை 5 1 முப்பால் அமுது 6 2 குறள்நெறிக் கொற்றம் 7 3 ஏன் சிரித்தான்? 13 4 சாதிப் போர் 16 5 கனவின் நிழல் 20 6 இன்பமா? துன்பமா? 23 7 திருக்குறள் நம் மறை 26 8 பொது நூல் 27 9 இம்மைநலம் துய்ப்போம் 28 10 அறத்தின் வழிகாட்டி 29 11 சுவையோ சுவை! 34 12 குறள் மனிதன் குறிக்கோள் 37 13 வள்ளுவர் கண்ட உடைமைகள் 41 14 மானங்காப்போம் 46 15 குடும்பமும் குறளும் 50 16 சிரிப்பும் அழுகையும் 52 17 வாழ்க்கைக்குத் தலைவன் 54 18வள்ளுவர்இன்றுவந்தால்...? 58 19 நடை பயில்வோம் 64 20 வள்ளுவன் அறநெறி ஆசான் 66 21 தில்லியில் வள்ளுவர் 71 22 வள்ளுவர் வழி 73 23 நல்ல குடும்பம் 78 24குறளு«ஏசுவு«82 25 எந்நாளோ 83 26 வள்ளுவர் கோட்டம் 84 27 உய்யுமோ தமிழர் நாடு? 92 28 வள்ளுவர் உலகில் 94 29 வள்ளுவர்உலகில்... 96 30 வள்ளுவர்உலகில்... 98 31 வள்ளுவர் உலகில்... 99 32 வள்ளுவர் உலகில்...100 33 வள்ளுவர்உலகில்... 101 34வள்ளுவர்உலகில்...103 35 வாழ்க அவ்வுலகம்! 104 36 வள்ளுவம் பகைமைக்கு மருந்து 105 37 நமது கடமை 106 திங்களும் 1 வேலைச்சுழற்றுங்கள்வேதனையைநீக்குங்கள்!! 109 2 தமிழினத்தின் தனித்தலைவர் 113 3 தன்மானப் புத்தகத்தை மூட மாட்டோம் 118 4 புத்துலகச் சிற்பி 121 5 இயற்கைப் பெரியார் 129 6 இனத் தலைவர் 132 7 தட்டி எழுப்பினார் 133 8 உடைத்தெறிந்தார் 134 9 தண்டூன்றும் பெரியார் 135 10 சங்கே முழங்கு 136 11 ஆதவன் 137 12 வெண்தாடி வேந்தர் 138 13 போராட்ட வீரர் 140 14 பகலோன் வாழ்க 142 15 தொண்டுக்கிலக்ணங்கண்டவர் 143 16 இன்றைய நாடு 145 17 ஒன்றா இரண்டா? 147 18 எப்படிப் பெரியார் வாழ்வார்? 148 19 பல்லாண்டு பல்லாண்டு 149 20 காஞ்சிக் கதிரவன் 151 21 தமிழ் காத்த தலைவர் 153 22 புரட்சித் தலைவன் 155 23 தமிழ்நாட்டுப் பேரரண் 157 24 எழுத்தும் பேச்சும் 160 25 கழகம் வென்றது 162 26 அரசு நாட்டினான் 164 27 தலைவா வருக! 166 28 காக்குங் கைகள் 167 29 தாய்மொழிக் காவலர் 169 30 காக்குந்தொழில்வல்லான் 175 31 ஆழம் அறியா அன்புள்ளம் 178 32 அண்ணா வருக! 181 33 யாழ் உடைந்தது 183 34 அடக்கத்தை அடக்கம் செய்தோம் 188 35 நெஞ்சம் நெக்குருகும் 190 36 பண்பு மலர் 191 37 அண்ணா பேசினார் 194 38 அண்ணா வழியில் அயராதுழைப்போம் 200 39 வெற்றி மலர் சூடுங்கள்! 205 40 தொடர்ந்து செல்வேன் 208 வள்ளுவர் கோட்டம் கோட்ட வாயில் உலகப் பெருமையைநமக்குஈட்டித்தந்தஒருநூல்திருக்குறள்.அத்தகு சிறப்பு வாய்ந்த நூல், தமிழ்மறை என்று சாற்றவும் படுகிறது. உலகப் bபாதுமைXதுவதால்bபாதுமறைvனவும்òகலப்படுகிறது.m¤jF பெருமை வாய்ந்தது eம்மறை.e«kiwia நாம் உணர்ந்துள்ளோமா? உணர்ந்து நடக்கின்றோமா? நெஞ்சில் கைவைத்து விடை சொல்ல நமக்கு வாயுண்டா? குறள்நெறி, eம்xழுகியிருப்பின்ïன்றுfணும்bகாடுமைகள்eடைபெறுமா?மக்கட்பண்பும் மறைந்திருக்குமா? மக்களை eம்மால்fணமுடிகிறதா?எங்கோ சிலரே அரிதாகத் தென்படுகின்றனர். திருக்குறள் நம்மறை என நம்புவது உண்மை யானால் அரசியல், சமுதாய இயல், தனி மனித இயல், இப்படிப் பாழ்பட்டிருக்குமா? ஆதலின் நம்மறை கூறும் நெறி முறைகள் நாடெங்கும் பரவ வேண்டும் என்னும் ஆர்வத்தால், இந்நூல் வெளியிடப் பெறுகிறது. உங்கள் ஒத்துழைப்பும் இருப்பின் அவ்வார்வம் நிறைவேறும். நிறைவேறின் சண்டை ஏது? சச்சரவு ஏது? மக்கட் பண்பல்லவா நம்முள்ளங்களில் தாண்டவமாடும். உலகப் புகழுக்கும் நாம் உரியராவோம்! வருக! கை தருக! வள்ளுவம் பற்றிய பாடல்கள் தொகுக்கப் பெற்றமையால் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயருடன் இந்நூல் உலாவருகிறது. அலுவலகங்களிலும், ஆலயங்களிலும், நண்பர்கள் இல்லங்களிலும், நாடக அரங்குகளிலும், புகும்பொழுது இடத்திற்கேற்ற மன நிலையைப் பெறுகிறோம். அதுபோல் இக்கோட்டத்தினுள் புகுவார்க்கும் ஒரு மன நிலை வேண்டும். இம் மனநிலைதான் ஆன்ற பயன் தரும். தண்ணீர் மேல்மட்டத்திலேயே தோன்றிக் காட்சி இன்பம் தரும் தாமரை மலர் போன்று, மேலோட்டமாகப் பயில்வார்க்கு இன்பம் பயப்பனவும் இந்நூலுள் உண்டு. நீந்திக் குளிப்பார் பெறும் இன்பம் போல, இறங்கி நீந்துவாரும் இன்பம் மாந்திக் களிப்பர். மூழ்கி எழுவார், உயரிய பொருள்கள் பெற்றுத் துய்த்தலும் ஆகும். இதில் இன்பங்காண விழைவார்க்கு ஓரளவேனும் மொழிப் பயிற்சியும், நூற் பயிற்சியும் வேண்டப்படுவனவாம். பயிற்சியில்லார் எதிற்றான் இன்பங்காண முடியும்! ஆதலின் பயில்க! பயன் பெறுக! அன்புள்ள முடியரசன் காணிக்கை குறள் நெறி வாழ்ந்த கொள்கையர் நாடும் அந்நெறி செல்ல நாடியவர் கல்வித் தொண்டே கடவுள் தொண்டாகப் புரிந்தவர் புதுக்கோட்டை அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் அவர்களுக்கு இந்நூல் காணிக்கை. முடியரசன் 1 முப்பால் அமுது மூவாப் புகழ் கொண்ட முப்பாற் சிறப்பை ஒரு நாவால் தொகுத்துரைக்க நாம்முனைதல் - மேல்வானைக் கையால் முழம்போட்டுக் காட்ட நினைப்பதுவாம் ஐயா அளந்துரைப்பார் ஆர்? நல்ல அறமிருக்கும் நாடும் பொருளிருக்கும் சொல்லரிய இன்பச் சுவையிருக்கும் - வெல்லரிய முப்பால் அமுதருந்தி மொய்ம்புபெற வாரீரோ எப்பாலுஞ் செல்லேல் இனி. 31.5.1969 2 குறள்நெறிக் கொற்றம் நல்ல குறிக்கோளை நாட்டிற் பரப்புதற்கு வல்லார் அமைத்து வளர்க்குந் குறட்கழகத் தேரை இழுத்துவரும் தீரம் மிகு செயலர் நேரில் எனையணுகி நெஞ்சைக் குளிர்வித்துக் கோனாட்சி வேண்டிக் குறள்நெறிசேர் கொற்றத்தால் நானாட்சி செய்ய நயந்தென்னை வேண்டிநின்றார்; ஆண்டறியேன் என்றாலும் யானுற்ற ஆண்டறிவேன் ஈண்டதனால் ஓலக்கம் ஏற மனங்கொண்டேன்; பேரால் முடியரசன் பேரிடர்கள் உற்றாலும் பேரா முடியரசன் பெற்றுவந்தேன் கொற்றத்தை; நாட்டரசன் நானல்லேன் என்றாலும் நான்குவகைப் பாட்டரசர் என்னும் பரம்பரையில் வந்தவன்யான்; வள்ளுவனார் சொல்லிவைத்த வாழ்வுக் குறள்நெறியில் எள்ளளவுங் கோடா தொழுகிவருங் கொற்றவன்யான்; பாட்டால் உலகாளும் பாவலர்தம் நெஞ்சத்து வீட்டில் கொலுவிருக்கும் வெற்றித் திருமகளைப் பொங்கிவரு மன்பால் புகழ்ந்தேத்தும் என்தலையில் தங்கமுடி பூண்டு, தனியாட்சி செய்பவன்யான்; தாங்குங் கவிமுடிதான் சான்றோர் மரபுணர்ந்து பாங்கோ டணிசேரப் பண்ணி முடித்தமுடி; ஒட்டார்பின் செல்லா உரமென்னும் வைரத்தைப் பட்டாங் கறிந்து பதித்தமைத்த நன்முடியாம்; வான்மழைதான் பொய்க்க வருந்தும் உயிர்கண்டு நான்மனத்தில் அஞ்சி நலிவதனால், என்னாட்டு மக்கள் நலங்காக்கும் மாகவலை நாடோறும் மிக்கு வருவதனால், மிஞ்சிவரும் பஞ்சத்தில் தள்ளிவிடு மோஎன்ற தாங்காத் துயரத்தால் வெள்ளிமுடி சூடி வெளிவருவேன் துன்பகற்ற; என்னாட்டில் மாற்றார்க் கிடமில்லை என்றாக்கித் தன்னாட்சி பெற்றதெனச் சாற்றுமொரு பூங்கொடிதான் பட்டொளி வீசிப் பறந்து சிறந்திருக்கக் கட்டி யமைத்தஒரு காவியத்துக் கோட்டைக்குள் கற்பனை யாலியற்றிக் காட்டும் அரியணையில் பொற்புடன் வீற்றிருந்து பூமி தனையாள்வேன்; கட்டிக் களித்திருக்குங் காவியப் பாவையவள் பட்டத் தரசியெனப் பக்கத் தமர்ந்திருப்பாள்; பேராயம் எட்டென்று பேசும் அரசியலில் சீராய எண்தொகையே பேராயம் என்னாட்டில்; ஐந்து பெருங்குழுவும் ஆள்பவர்க்கு வேண்டுமென்பர்; ஐந்துபெருங் காப்பியங்கள் அக்குழுவால் நின்றிலங்கும்; யானையொடு தேர்குதிரை காலாள் எனும்படைகள் மோனையொடு நல்லெதுகை முற்றிவரும் நாற்பாவாம்; வில்லென்றும் வாளென்றும் வேலென்றும் பல்வகையாச் சொல்கின்ற போர்க் கருவி சுற்றியுள பாவினங்கள்; போரில் படையெடுத்துப் போற்றாது வந்தாரை நேரிற் புறங்கண்டு நெஞ்சம் நிமிர்ந்திருப்பேன்; வாள்வீரங் காட்டி வருவார் எவரெனினும் தோள்வீரங் காட்டுந் துணிவுடையேன்; என் புகழைக் கூறும் பரணி கொளவில்லை என்றாலும் வீறு பெறவிளங்கும் வீரஞ்சேர் காவியத்தின் நாயகன் நானென்று நானிலத்து மாந்தரெல்லாம் வாய்நிறையப் பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்கள்; உள்ளத் தெளிவுடனே ஒட்டிவரும் நல்லவர்பால் பிள்ளைத் தமிழ்மொழியாற் பேசி மகிழ்ந்திருப்பேன்; என்கொற்றம் போற்றாமல் எள்ளி வருவாரேல் பின்பற்றுஞ் செம்மாப்பு பீடுபெற நானிற்பேன்; தாழ்வுதர எண்ணித் தருக்குடையார் சூழ்ந்துவரின் வாழ்வு பெரிதன்று, வளையா பதியாவேன்; கள்ளத் தனத்தாற் கயமை புரிவாரின் பிள்ளைத் தனத்தைப் பிறழும் மயக்கத்தைப் போக்கக் கடுகம் புகட்டி, நாலடியில் காக்குமுயர் நன்னெறியைக் காட்டி, உயர்திணையாய் நல்வழியில் நாளும் நடந்திடுக என்றுசொலி அல்வழியை விட்டேக ஆற்றுப் படுத்திடுவேன்; வேற்றுமைக்கு வித்திட்டு வீண்குழப்பஞ் செய்வாரேல் கூற்றுக் கிரையாக்கக் கூராய்தம் ஒன்றுடையேன்; மெய்யை ஒழித்துவிட்டு மேவுமுயிர் வேறாகச் செய்யுந் தனிநிலைமை சேர்ந்திலங்கும் ஆயுதமாம்; வாள்பிடித்து முன்செல்வேன் வால்பிடித்துப் பின்செல்லேன் கோள்பிடிக்க அஞ்சிடுவேன் கோல்பிடிக்க அஞ்சுகிலேன்; தாள்பற்றி நின்றறியேன் தக்க கவியெழுதத் தாள்பற்றி நிற்பதுண்டு; தன்மான நெஞ்சுண்டு; சுற்றிப் பகைவருமேல் சூழ்ந்ததனைத் தூளாக்க வெற்றிவேற் கையுடையேன்; வீரமிக்க என்தோளில் சிந்தா மணிமாலை சேர்த்து மகிழ்விக்க முந்தி எழில்குலுங்க முன்னிற்பாள் வெற்றிமகள்; என்றன் தனிப்பாடல் எல்லாங் குடிமக்கள் என்றுங் குறையின்றி ஏற்றமுற வைத்திருப்பேன் சாதி மதங்களைநான் சாடி வெறுத்தாலும் ஓதுமதம் ஏழும் உலவிவரும் என்னாட்டில்; செப்பம் திரண்டுவரச் செங்கோல் செலுத்துதற்கு முப்பத் திரண்டாக முன்னோர்சொல் உத்திகளால் குற்றங்கள் பத்துங் குலவாமல் நீக்கிவிட்டு மற்றழகு பத்தும் மருவிவர நான்புரப்பேன்; கூறிவரும் மக்கள் குறைநீக்க நல்வளமை ஊறிவரச் செங்கோல் உயர்த்திப் பிடித்திருப்பேன்; முப்பால் முகிலாகி மும்மாரி திங்கள்தொறும் தப்பாமல் பெய்வதனால் தண்ணீர் நிறைந்திருக்கும்; நெஞ்சம் எனும்வயலில் நேர்மைக் கலங்கொண்டு, துஞ்சலிலா நல்லெருது தோளில் நுகம்பூட்டி, ஆழ உழுதுழுது, அன்பென்னும் நீர் பாய்ச்சிக் சூழறிவை வித்தாக்கித் தொன்மை உரமிட்டு, நல்லறமாம் நாற்றின் நடுநடுவே தானாகப் புல்லி வளர்கின்ற பொய்மைக் களைகட்டு, நூலினர் வாய்மொழிந்த நுண்ணிய கேள்விஎனும் வேலி அமைத்தங்கு வேளைதொறும் ஏகி, அழுக்கா றவாமுதலாம் ஆவொடுமா பற்றி இழுக்காமல் தின்னாமல் எப்பொழுதுங் காத்திடலால் இன்பமுதற் பைங்கூழ்கள் என்னாட்டில் தோற்றுவித்து துன்பமெனும் வன்பசிதான் தோன்றாமல் செய்திடுவேன்; கொற்றஞ் செய்திருக்கக் கூறும் பெரியாரைப் பற்றித் துணைக் கொள்வேன்; பாருக்குள் மேலாமென் நாட்டின் முதலமைச்சர் நன்காய்ந்த பேரறிஞர்; காட்டும் அவர்நெறியிற் காவல் புரிந்திருப்பேன்; பேரறிஞர் காட்டும் பெருநெறியை நன்மொழியை ஊரறியப் போற்றி உலகாண் டுயர்ந்திருப்பேன்; போற்றும் பெரியார் புகன்ற அறிவுரையைத் தூற்றிப் பழிக்குந் தொழிலைப் புரிந்தறியேன்; பண்பாட்டின் சின்னமெனப் பாரோர் புகழ்ந்தத்தும் தென்னாட்டின் பேரறிஞர் சீர்மை பழித்தறியேன்; கூறுங் குறள்நெறியிற் கொற்றம் நடத்துதலால் ஏறும் புகழ்பரவும் என்னாட்டில் ஆற்றல்மிகும் நல்ல கலைஞருக்கு நாளும் மதிப்பளிப்பேன்; சொல்லும் புகழ்மாலை சூட்டி வரவேற்பேன்; போற்றி ஒரு நாளும் தூற்றி மறுநாளும் சாற்றேன்; கலைஞருக்குத் தக்க பரிசளிப்பேன்; அஞ்சாத நாவலர்க்கும் அண்டிவரும் பாவலர்க்கும் எஞ்சாச் சிறப்பளிப்பேன் ஏற்றம் பெறவைப்பேன்; ஒன்றிப் பழகிடுவேன் உள்ளத்தில் எந்நாளும் நின்று நிலைபெறவே நீள நினைந்திருப்பேன்; நண்பர் புடைசூழ நாளும் மகிழ்ந்திருப்பேன்; பண்பிற் சிறந்தஎன் பட்டத் தரசியையும் விட்டுப் பிரிந்திருப்பேன் வேண்டியஎன் நண்பர்தமை விட்டுப் பிரிந்தறியேன் வேளைதொறும் அந்நினைவே; மெய்யுணர்வால் என்னுளத்தில் மேவுமவர் நோதக்க செய்துவிடின் பேதைமையாற் செய்திருப்பர் என்றமைதி பெற்றிருப்பேன் மேலும் பெருங்கிழமை கொண்டதனால் மற்றதனைச் செய்திருப்பர் என்றும் மனங்கொள்வேன்; எம்மைப் பிரிக்க எவரேனும் முன்வந்து மும்மைப் பொழுதும் முயன்றாலும் செல்லாது; யாப்பதுதான் கோட்டை அரணாகச் சூழ்ந்திருக்கும் காப்பியனார் செய்ததொல் காப்பியமே ஆழ்அகழி; நண்ணார் புகமுடியா நாற்புறஞ்சூழ் கோட்டைக்கு முன்னோன் பவணந்தி முன்வாயில் செய்தமைத்தான்; மாமதியன் கைவல்லான் மாறன் எழுதிவைத்த நூன்முறையால் செய்தமைத்த நுண்மாண் நெடுங்கதவை மோதித் தகர்த்தவரும் மும்மதத்து யானைகளும் பாதிப் பொழுதில் பரிதவித்துப் பின்செல்லும்; மாற்றார் படையெடுத்து வந்தறியார் என்னாட்டுள் ஏற்ற தொடைமுடித்தே என்பால் வருவார்; படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையேன் அரசர்க்குள் ஓங்கி உயர்ந்திருப்பேன் முப்போகம் வேண்டி முனைந்து செயல்புரிவார் எப்போகம் வேண்டிடினும் தப்பேதும் செய்தறியார் ஒர்பரத்தைத் தேடி உளமெல்லாஞ் சோர்ந்தாலும் சேர்பரத்தை நாடிச் செலவறியார் என் மாந்தர்; நானாட்சி செய்ந்நாட்டில் நாளும் புதியவரி தானாட்சி செய்யும் தடுப்பார் எவருமிலர்; மக்கள் வரவேற்று மன்னன் எனைநோக்கி மிக்க மகிழ்ச்சியினால் மீக்கூர ஏத்தெடுப்பர்; அன்பால் வருவார்க்கடி கொடுப்பேன் அப்பொழுதும் என்பால் ஒருசிறிதும் வன்புமனங் கொள்ளார்; தலைப்படுவார் தம்மைத் தளையிடுவேன் இட்டால் தளைப்படுவர் அன்றித் தலைநிமிர்ந்து நோக்கார்; கொடுங்கோலன் என்றுங் குறைசொல்லார் செங்கோல் தொடுங்கையன் என்றே தொழுதேத்தி நின்றிருப்பர்; பின்னை அவர்மனத்தைப் பேணிமிகு சீரெல்லாம் அன்னை மனம்போல அள்ளி வழங்கிடுவேன்; இவ்வண்ணம் ஆட்சிசெயும் என்பால் அணுகிவந்து மெய்வண்ணம் அன்புமனம் மேவுஞ் செயலாளர் கோலோச்ச என்கையிற் கொற்றங் கொடுத்துவிட்டார் தாலோச்சும் பாட்டில் தனியாட்சி செய்யும் உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தி னுள்ளே இருப்பளிங்கு வாரா திடரென்று நம்புவதால் ஆட்சி முறையால் அரங்கைத் தொடங்குகின்றேன் மாட்சிமை சேர் மன்றை மதித்து. குறள் விழா, காரைக்குடி 2.3.1975 3 ஏன் சிரித்தான்? அண்டப் பெருவளியில் ஆடிச் சுழன்றுவரும் உண்டைப் பெருவடிவம் உற்றதொரு பூதலத்திற் பற்றிப் படர்ந்துபகை யாகவரும் பாழிருட்டு முற்றத் தொலைந்ததென முன்சாமக் கோழிசொல, மொட்டு முகமவிழ மொய்த்துவரும் வண்டினங்கள் சொட்டும் நறவருந்திச் சொக்கிஇசை பாடிவரக், கூடுறையும் புள்ளினங்கள் கூவிக் குரலெழுப்பிப் பாடுபட எங்கும் பறப்பனபோல் சுற்றிவரக், கோலப் புரவியினக் கூட்டம் அணிவகுத்தாற் போலக் கடலலைகள் பொங்கிப் படர்ந்துவரச், செம்மை எனும்நிறத்தைச் செந்தழலிற் போட்டுருக்கி வெம்மை தணித்து வெளிவானக் கீழ்த்திசையில் பூசி மெருகிட்டுப் பொங்கும் எழில்பரப்பித் தேசு மிகவாகச் செந்நிறத்தை மேற்பாய்ச்சித் தங்கத் தகடொன்று தன்னந் தனியாகப் பொங்குங் கடலகத்துப் பூத்துக் கிளம்புதல்போல் தோன்றும் இளங்கதிரோன் தொல்லுலகில் பொன்னொளியை கான்று தகதகக்கக் கண்களிக்கச் செய்துநின்றான்; ஓய்ந்திருந்த இந்த உலகத்தை வாழ்விக்கப் பாய்ந்துவரும் அந்தப் பகலவனைச் சூரியனைப் போற்றி வணங்குதற்கும் பூவெடுத்துத் தூவுதற்கும் ஏற்ற இருகைகள் இல்லா திருக்கின்றோம்; வண்ண மலரிருக்கும், வாசம் பரந்திருக்கும், கண்ணுங் களித்திருக்கக் காட்சி நிறைந்திருக்கும், ஓடை விரிந்திருக்கும், ஓங்கும் மரமிருக்கும், மேடை சிறந்திருக்கும், மெல்லியபூங் காற்றிருக்கும், கூவுங் குயிலிருக்கும், கூடும் எழிலிருக்கும், யாவும் நிறைந்திருக்கும் யாங்குமிலாப் பூஞ்சோலை அத்தகுநற் சோலை அதனுட் புக்குலவி மெத்தநலந் துய்த்தின்பம் மேவுதற்குக் கால்களில்லை; மேகத் திரைக்குள்ளே மேனி மறைத்தாலும் வேகத் தொடுமீண்டும் விண்ணில் உலவிவந்து வட்ட எழில்முகத்தை வந்துவந்து காட்டிநலம் கொட்டுங் குளிர்மதியைக் கோதில்லா வெண்ணிலவைக் கண்டு களிப்பதற்கும் காட்டும் அதனெழிலை உண்டு சுவைப்பதற்கும் உற்ற விழியில்லை; பண்டைத் தமிழ்தந்த பண்ணமைந்த யாழிருந்தும் சுண்டித் தெறித்தின்பந் துய்க்க விரலில்லை; முன்னோர் வகுத்துரைத்த முத்தமிழுள் ஒன்றான பண்ணார் இசையிருந்தும் பாடுதற்கு வாயில்லை; கிட்டாக் குறிஞ்சிமலர் கிட்டியது கையகத்தே தொட்டு முகர்ந்துமணம் துய்க்கஒரு மூக்கில்லை; மாவின் கிளையிருந்து மட்டில்லா இன்பமுறக் கூவுங் குயிலிருந்துங் கொள்ளச் செவியில்லை; குன்றெனவே சோறு குவிந்திருந்தும் வாயார நன்றெனவே உண்ணுதற்கு நல்ல பசியில்லை; பாருலகப் பேரறிஞன் பாவலனாம் வள்ளுவன்றன் கூரறிவுப் பேருணர்வால் கூறிவைத்த பொன்மொழியை நானிலமே உய்வதற்கு நாவல்லான் சேர்த்துவைத்த மாநிலமே காணாத மாநிதியைப் பெற்றிருந்தும் அப்பெருமை தேர்ந்துணர அவ்வழியிற் சென்றொழுக எப்பொழுதுஞ் சிந்திக்க இங்கே திறனில்லை; என்று நினைந்திரங்கி ஏங்கிக் கவலையினால் ஒன்றும் புரியாமல் உள்ளந் துவண்டிருந்தேன்; ஆங்கே எனதருகில் ஆணழகன் ஓர்மகன்தான் தீங்கே தெரியாத தெய்வத் திருமகன்போல் வந்து கருணையுடன் வாலறிவன் நின்றருளைச் சிந்தும் விழியாற் சிறிதென்னை நோக்கியிதழ்ப் புன்னகை செய்தான்; புலவனவன் புன்சிரிப்பில் என்ன பொருளென் றுணர இயலவில்லை! ஏளனமா? அன்றி இரக்கத்தின் காரணமா? தாளமென உள்ளந் தவிதவித்தேன்; அம்மகனை நோக்க நிமிர்ந்தேன் நுழைபுலத்தான் அவ்விடத்தை நீக்கி மறைந்தான் நினைந்து. 4 சாதிப் போர் பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் என்று சொல்லிப் பேராசான் ஆண்டிரண்டா யிரங்கள் செல்ல இறப்புக்குள் போய்விட்டான் எனநி னைந்தே எத்தனையோ ஆயிரங்கள் சாதி சொல்லிப் பிறப்பிக்கும் ஆற்றலினைப் பெற்று விட்டோம்; பிறகெதற்கு வள்ளுவற்குத் திருநாள் ஒன்று? சிறப்பிக்கும் நோக்கமிதா? அன்றி ஏய்க்கும் செயலுக்குச் சின்னமிதா? தெரிய வில்லை. சாதியினை ஒழிக்கவெனச் சங்க நாதம்; சாதிக்கோர் சங்கமென எங்குங் காணும்; வேதியனைப் பஞ்சமனைப் படைக்கும் வேதம் வேற்றுமையை நமக்குள்ளே இன்னும் ஓதும்; மேதினியைப் பாழ்படுத்த வந்த சாதி மேலுமினி வாழ்வதுதான் என்ன நீதி? ஓதிவருங் குறளுக்குத் திருநாள் என்றால் உண்மையினில் சாதியினி ஒழிதல் நன்றாம். இத்தனைநூ றாண்டுகளாய்ச் சாதிப் பேய்தான் 1*இரிந்தோட வேண்டுமெனச் சொன்னோம்; ஆனால் பித்தரைப்போல் மன்பதையை வளர்த்து வந்தோம்; பிழையான வளர்ப்புமுறை கொண்ட தாலே அத்தொழுநோய் நமைவிட்டு நீங்க வில்லை; ஆதலினால் முறைமாற்றி வளர்க்க வேண்டும்; உத்திமுறை மாறிவிடின் மாந்தர்க் குள்ளே ஒற்றுமையாம் செடிவளரும் உறவும் பூக்கும். எண்ணிலவாய்ச் சாதிமுறை வளர்ந்து விட்டால் யாவரும்நம் கேளிரெனும் உறவுப் பண்பு மண்ணிலன்றோ புதைபட்டுப் போகும்! சாதி மடமையினை வளர்த்துவிடின் மேல்கீழ் என்ற எண்ணமொன்றே தோன்றுமலால் உறவா தோன்றும்? எல்லாரும் ஓரினமாய் வாழ்ந்தா லன்றோ நண்ணிவரும் உறவுமுறை? உறவு தோன்றின் நாவலனாம் வள்ளுவற்கும் மகிழ்வு தோன்றும். உறவுமுறை வளர்ந்துவரின் அவ்வ ளர்ச்சி உளமொன்றித் தளிர்க்கின்ற காதல் காட்டும்; பிரிவுதருஞ் சாதிமுறை வளர்ந்து விட்டால் பேணிவருங் காதலுக்குச் சாவே கூட்டும்; பிறவியிலே மேலென்றுங் கீழ்மை என்றும் பேசிஉயர் காதலையே தீய்ப்ப தற்குச் சிறிதளவும் நாணுகிலோம் சாதி காப்போம் சிந்தனையைப் பேதைமைக்கே கொடுத்து விட்டோம். காதலெனும் மென்மலரைக் கசக்கி விட்டோம் கற்றவரும் அதன்செவ்வி உணர்ந்தோ மல்லோம்; ஓதலிலே திரைதனிலே எழுதும் நூலில் உரைப்பதிலே காதலைத்தான் உயர்த்திச் சொல்வோம் காதலது நம்வீட்டில் புகுந்து விட்டால் கனன்றெழுவோம் சாதியெனும் வாளெ டுப்போம் மோதியதன் நெஞ்சத்தைப் பிளப்ப தற்கே முனைந்திடுவோம் கண்மூடிச் செயலே செய்வோம். சாக்காடு நோக்கிநடை போடும் போதும் சாதிக்கே நடைபாதை போடு கின்றோம்; வாக்காளர் நடத்துதிரு நாளிற் கூட வள்ளுவனே தோற்கின்றான்; சாதி வெல்லும்; வேக்காடு சாதிக்கு வைக்கும் நாளே வியனுலகப் புகழ்நமக்குக் கிட்டும் நாளாம்; நோக்காடு கொண்டொழுகுஞ் சமுதா யத்தில் நூறுவகைச் சாதிகளாற் பயனே இல்லை. பார்ப்பானைச் சுடுகின்ற காடும் உண்டு பறையனுக்குச் சுடுகாடு தனியே உண்டு ஆர்ப்பரிக்குஞ் சமயங்கள் பலவுண் டென்றால் அத்தனைக்கும் தனித்தனியே சுடுகா டுண்டு மேற்போன கடவுளர்க்குஞ் சாதி யுண்டு மேதினியைச் சீர்குலைக்கும் பிற்போக் காளர் ஏற்பாடு தொலையும்வரை வள்ளு வற்கே எடுக்கின்ற திருநாளாற் பயனே யில்லை முற்போக்குப் பெருவெள்ளம் திரண்டு ருண்டு முழுமூச்சில் எதிர்த்தோடிப் பெருகும் நாளில் பிற்போக்குக் கும்பலெலாம் ஒன்று கூடிப் பிழையான செயல்செய்ய நினைந்து பேசிக் கற்பாறை யிட்டதனைத் தடுக்கக் கண்டோம்; கற்களெல்லாம் சிதறுண்டு போயிற் றன்றே; பிற்பாடும் மடமுடையார் தடுத்தால் அந்தப் பெருவெள்ளம் தடைபட்டு நின்றா போகும்? பாரதியென் றுரைக்குமொரு பருவமேகம் பாரதிக்குத் தாசனெனும் கரிய மேகம் பாரதிர முழங்கிவரும் இளைஞர் கூட்டப் பரம்பரையாம் கோடைமுகில் அனைத்துங் கூடி ஊரதிர இடிஇடித்து மின்னல் கூட்டி ஓயாது மழைபொழிய வெள்ளம் பொங்கிச் சீறிவரும் வேகத்தில் அந்தக் கும்பல் சிறுவர்விடு கப்பலென மூழ்கிப் போகும். cŸs¤ij cÆ®j‹id cÆiu¤ jh§F« clšj‹id tŸSt‰F¥ ã‹nd ngh¡» tŸSt¤J¡ nfh£gh£il e‹F z®ªJ ita¤JŸ thœth§F thœªJ Éngh«; tŸSt¤ij¥ bg‰wâU eh£l f¤nj thœ»‹w ngW‰nwh«; Mj yhny gŸs¤âš åHhkš ï‹g thÅš gw¡»‹w ÃiybgWnth« thß®!வாரீர்! 5 கனவின் நிழல் உள்ளத்து மாசகற்ற ஓதும் புலவனுக்குத் தெள்ளத் தெளிந்து திருநாள் எடுத்தவர்கள் பாடென் றெனக்கோர் பணிதந்து விட்டமையால் ஏடொன் றெடுத்தே எழுத முனைந்திருந்தேன் பேரறிவு கூடிப் பிறந்திங்கு வந்தது போல் கூரறிவு கொண்ட குறளடியான் என்முன்னே வந்து நகைத்துநின்றான்; வாவென்றேன் யாரென்றேன்; முந்து தமிழ்மாலை முனைந்து புனைவோனே! ஈரா யிரத்தாண்டின் முன்னே எழுந்தவன்யான் ஓரா திருந்தனையே உன்னறிவை என்னென்பேன்! என்பெயரைச் சொல்லி எடுக்குந் திருநாளில் என்னை யறியா திருக்கின்றாய், என்றுரைத்தான்; சொன்ன குறிப்பாலே தூயமறை தந்தவனை முன்னவனை முப்பால் மொழிந்தவனைக் கண்டுணர்ந்து செந்தமிழ்த்தாய் தந்த திருமகனே நின்னுருவம் எந்தவிதம் உண்டென்று யானறியேன்; ஈங்குள்ளோர் கண்டபடி கைவண்ணங் காட்டிப் பலவடிவம் கொண்டமைத்து விட்ட கொடுமையினால் மெய்வடிவம் காண வியலேன் கடியா தெனைப்பொறுப்பாய் பேணி உனைவணங்கும் பெற்றிமையன் நானையா என்றப் பெரியோன் இணையடியைப் பற்றிநின்றேன்; நன்று தமிழ்மகனே நான்மொழிந்த முப்பாலை ஓதி யுணராமல் ஓதும் நெறிநிற்க யாதும் அறியாமல் *ஆகுலங்கள் செய்கின்றார்; மாசகற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கோர் ஆசையுற்று நல்ல அறநெறியில் நிற்கவிலை; மாந்தர் எனைமறந்தார் வாய்மைக் குறள்மறந்தார் போந்த நெறியெல்லாம் போய்ப்புகுந்தார்; இன்னுங்கேள் *இம்மைப் பயன்துய்க்க எண்ணும் மனிதருக்குச் செம்மைப் படுத்திச் சீரான நன்னெறிகள் எத்துணையோ சொன்னேன் எனினுமவர் கேட்டிலராய்ப் பித்தரைப்போல் இவ்வுலகில் பேதுற் றலைகின்றார்; பத்துக் குறளால் பகவன் இயல்பனைத்தும் நத்தும் படியுரைத்தேன் நல்ல நெறிவகுத்தேன் எள்ளளவும் அந்நெறியை ஏற்று நடக்காமல் பிள்ளைகள்போல் இன்னும் பிழைபடவே செய்கின்றார்; கல்லாலும் செம்பாலும் காசுமணிப் பொன்னாலும் இல்லா உருவம் இறைவனுக்குத் தந்தார் சிலையாகச் செய்தார் சிறப்பெடுத்துப் போற்றும் கலையாகச் செய்தார் கடவுட்பேர் தந்தார் நிலையாகக் கோவிலுக்குள் நிற்கவைத்தார்; ஆனால் விலையாக ஊர்கடத்தும் வேலையிலும் ஈடுபட்டார்; உள்ளத்தில் ஆண்டவனை ஓர்சிறிதும் எண்ணாமல் கள்ளத் தனமாகக் கடல்கடத்திச் செல்கின்றார்; பாயிரத்தின் முன் சொன்ன பண்பை மறந்துவிட் டாயிரந் தெய்வங்கள் ஆக்கிப் படைத்துத் திருடிப் பிழைக்க திருநீறும் பூசிக் குருடர் உலகமெனக் கூத்தாட்டம் ஆடுகின்றார்; மக்கள் படுதுயரை மாநிலத்துக் கண்டுணரத் தக்க அறிவிலராய்த் தாம் மட்டும் வாழ்கின்றார்; மற்றோரை வாழ்வித்துத் தாமுமிங்கு வாழுமனம் அற்றோர்பால் நெஞ்சுருகும் அன்புநெறி காண்பதெங்கே? அன்புநெறி இல்லையெனில் ஆருயிரைத் தன்னுயிர்போல் எண்ணும் அருள்நெறிதான் எங்கே தழைத்துவரும்? நல்வழிகள் காட்டவரும் நாளிதழ்கள் மங்கையரை வில்வளையச் செய்வதுபோல் மேனி வளைவுபடக் காட்டும் படத்தைக் கவர்ச்சிப் படமென்று போட்டுப் பொருள்பறிக்கும் புன்மைகள் வாழுலகில் பெண்மை உயர்ந்திடுமோ? பேணுமுயர் கற்புநெறி திண்மை அடைந்திடுமோ? தீமைதரும் அவ்விதழே நாட்டில் விலையாகும் நாகரிகம் காணுகின்றேன் கேட்டை விளைவிக்கும் கீழ்மைமிகும் இந்நாளில் என்பெயரைச் சொல்லி எடுக்குந் திருநாளால் இன்பமது எள்ளவும் என்மனத்தே தோன்றவில்லை; கொள்கை விளக்குங் குறள்நெறியில் ஒன்றேனும் உள்ளி நடந்தால் உளத்தே மகிழ்ந்திடுவேன் நல்வாழ்வு வாழத்தான் நான்தந்தேன் முப்பாலை அல்வாழ்வு வாழத்தான் ஆரும் விழைகின்றார்; வேண்டு வேண்டாவா வேதக் குறள்நூலென் றீண்டுமொழிப் போர்தொடுக்க என்மக்கள் வந்துள்ளார் இந்த இழிநிலைக்கோ இன்பக் குறள்தந்தேன் வெந்துயரில் ஏனோ விழுந்து மடிகின்றார்? செந்தமிழைப் பாடிச் சிறப்புறுத்த வந்தவனே! இந்த நிலைமாற்ற ஏடெடுத்துப் பாட்டெழுது; தென்னாட்டுப் பண்பாடு தேய்ந்தழிந்து போகாமல் நன்பாட்டு வல்லமையால் நாகரிகப் பாட்டெழுது பின்பாட்டுப் பாடிப் பிழைக்காதே நின்பாட்டை முன்பாட்டாக் கொள்ள முனைந்தெழுக என்றுரைத்தான்; தெள்ளுதமிழ்ப் பாவலன் தேன்மொழியைக் கேட்டுணர்ந்து வள்ளுவன் தாள்மலரை வாழ்த்தித் தொழுதெழுந்து ஐயா சிறியேன்நான் ஆணை தலைக்கொண்டேன் உய்யா திருக்கும் உலகமினி உய்யுமென வாய்விட்டுச் சொன்னேன்; வழியும் வியர்வையினால் பாய்விட் டெழுந்தேன் பகற்கனவு கண்டுள்ளேன் பட்டப் பகற்பொழுதில் பாவலர்க்குத் தோன்றுமிது நெட்டைக் கனவின் நிழல். 6 இன்பமா? துன்பமா? வள்ளுவத்து வாழ்வியலைத் தெளியக் கற்று வாழ்வாங்கு வாழ்வதுதான் வாழ்வாம் என்று தெள்ளுதமிழ்ச் சான்றோர்கள் செப்பி வைத்தார்; செப்புமொழி கற்றுணர்ந்து வாழ்ந்தோ மல்லோம் பள்ளமுறு கழிநீரின் தேக்கம் போலப் பாழாகச் செய்துவிட்டோம் பெற்ற வாழ்வை! கள்ளமுறும் பிறநெறியைச் சார்ந்து கெட்டோம்! கயமைஎலாம் நம்வாழ்வில் புகுத்தி விட்டோம்! பிறக்கின்றோம் வளர்கின்றோம் காதல் செய்வோம் பிறகுவரும் உறவுகளும் காணு கின்றோம் துறக்கமெனப் பேரின்பம் வாழ்விற் காண்போம் தொலைப்பரிய துன்பமெனச் சிலநாள் சொல்வோம் இறக்கின்றோம் இறுதியிலே இறந்த பின்னர் *எச்சமெனும் புகழொன்று நிலைத்து நிற்கச் சிறக்கின்ற வாழ்வியலைக் கற்றோ மல்லோம் சிறுவிலங்குக் கூட்டமென வாழ்ந்து விட்டோம். இவ்வுலகில் பிறக்கின்றோம், பிறந்த பின்னர் இறக்கின்றோம், இறவாமல் இருந்த தில்லை; இவ்விரண்டு செயலுக்கும் இடையில் தான்நாம் இருக்கின்றோம்; இடைவெளியில் நாமி யற்றும் வெவ்வினைகள் எவ்வளவோ! அடடா அந்த விளையாட்டின் திறமெல்லாம் விளம்ப எண்ணின் அவ்வளவும் சொல்வதற்கு வள்ளு வற்கும் அடங்காது போய்நிற்கும் அவனும் தோற்பான். உலகியலின் கூறெல்லாம் ஆய்ந்து ணர்ந்தோன், ஒப்பற்ற பேரறிஞன், முப்பால் சொல்லி இலகுபுகழ் கொண்டொளிரும் ஆசான், வாழ்வை இன்பமென எடுத்துரைத்தான்; அதனை விட்டு விலகுநெறி தனிற்புகுந்தோம் மாயம் என்ற வெற்றுரையை நம்புகின்றோம் அதனால் வாழ்வை பலதுயரம் நிறைந்ததொரு கூடம் என்றே பாழ்நெஞ்சில் நினைந்துவிட்டோம் தாழ்வே கொண்டோம். ஆற்றுக்குக் கரையிரண்டு வேண்டு மன்றோ? அதுபோல வாழ்வுக்கும் கரைகள் வேண்டும்; ஏற்றமிகும் ஒருகரைதான் இன்பம் ஆகும் இணையான மறுகரைதான் துன்பம் ஆகும்; காற்றுக்குள் இரண்டுண்டு; தென்றல் ஒன்று கடுகிவரும் வாடைஒன்று; வாடை கண்டு காற்றைத்தான் வெறுப்பதுண்டோ? வாழ்வில் துன்பம் கலந்துவரும் நிலைகண்டு வெறுத்தல் நன்றோ? வாடைஎனுங் காற்றுவரின் போர்வை கொண்டு வருந்தாமல் நடுங்காமல் தடுத்துக் காப்போம்; தேடரிய வாழ்வுதனில் துன்பம் வந்து சேருங்கால் துவளாமல் ஊக்கங் கொண்டு பாடுபட அத்துன்பம் விலகிப் போகும்; பாருய்ய வந்தவனாம் வள்ளு வன்சொல் ஏடதனில் இவ்வுண்மை நன்கு தோன்றும் இடுக்கண்கள் வருங்காலை நகுதல் வேண்டும். இன்பத்தின் பின்பக்கம் துன்பம், அந்த இடருக்குப் பின்பக்கம் இன்பம், இந்த எண்ணத்தை முன்வைத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கின்ற கனியாகும் அன்றோ? வாழ்வின் பின்பக்கம் ஒன்றுண்டாம் என்னும் அந்தப் பேருண்மை தனையெண்ண வேண்டும்; மற்றைப் பின்பக்கம் சாக்காடே ஆகும் என்ற பேருண்மை உணர்ந்துவிடின் அச்சம் சாகும். பிறக்குங்கால் தாலாட்டு; மண்ணில் பின்னர் இறக்குங்கால் ஒப்பாரி; இரண்டும் பாட்டு; மறக்காதீர் வாழ்க்கையொரு கவிதை யாகும்; மலர்ந்துவருங் கவிதைக்குள் திளைத்து வாழ்வீர்! வெறுக்காதீர் வாழ்க்கைதனை! சாக்கா டென்றால் வீரனுக்கோர் பூக்காடு; கோழைக் குத்தான் பொறுக்காத நோக்காடு; வாழ்க்கைப் போரில் புறங்காட்டா வீரனைப்போல் வாழ்வீர் நின்றே. 7 திருக்குறள் நம் மறை நமக்கென ஒருமறை யுண்டு - அதை நம்பி நடந்திடு நன்னெறி கண்டு - நமக்கென அமைப்பால் உயர்ந்திடும் அருட்பால் மருந்து விருப்பால் அருந்தி இருப்பாய் திருந்தி - நமக்கென உடலில் படிந்திடும் அழுக்கினைத் துடைத்தனை உளத்தில் மாசுகள் அடைந்திட விடுத்தனை! மடமை அகன்றிட மாந்தனென்று றுயர்ந்திட வாழ்வினைத் துலக்கிடத் தாழ்வினை விலக்கிட - நமக்கென எதையெதை யோமறை என்றுநீ போற்றினை என்பயன் கண்டனை இழிநிலை கொண்டனை! கதைகளை நம்பினால் காண்பயன் ஒன்றிலை கருத்தினை வளர்த்திடும் திருக்குறள் படித்திடு - நமக்கென ஆயிரம் திருவிளை யாடல்கள் பாடினை அம்மஓ! நீயும் ஆடல்கள் ஆடினை! காயினைக் கவர்ந்தனை கனியினை மறந்தனை கருத்தினில் ஒருகுறள் நிறுத்திடின் உயர்ந்தனை - நமக்கென 2.7.1987 8 பொது நூல் ஏசு பெருமானும் ஏத்தும் முகம்மதுவும் பேசும் உலகப் பெருநெறியின் தத்துவமும் போதி முனிவன் புகன்றனவும், மாவீரர் ஓதி உணர்த்தும் உயர்ந்த அருள்நெறியும், நெஞ்சைக் கனிவிக்கும் நேர்மைமிகும் ஆத்திகமும், நெஞ்சத் துணிவுரைக்கும் நேரில்லா நாத்திகமும், என்றுவரும் என்றுவரும் என்றே எதிர்நோக்கி நின்றுலகம் நோக்கும் நிலைத்த சமத்துவமும், எல்லாப் பொருளும் இதன்பால் உளவென்று நல்லோர் புகழ்ந்துரைத்த நல்ல திருமறைநூல்; சாதி கடந்து சமயத்திற் கப்பால்நின் றோதும் உயரறநூல்; ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொல்லா அரசியற்குப் போகாத் தனிப்பெருநூல்; எல்லாரும் ஏற்கும் இயல்புடைய நம்குறள்நூல்; சாதிச் சழக்கும், சமயப் பிணக்குகளும், மோதிக் கெடுக்கும் முரண்பாட் டரசியலும் வள்ளுவன்பாற் சேர்க்காமல் வாழ்க்கைத் துணைநூலை உள்ளுவோம் கைக்கொள்வோம் ஓர்ந்து. 9 இம்மைநலம் துய்ப்போம் வாலாட்டி நாளெல்லாம் வம்புசெயும் மாந்தரைமுப் பாலூட்டி ஆளாக்கும் பாவலனை இவ்வுலகில் மாந்தர் குலமனைத்தும் மாறாத இன்பத்தில் நீந்திக் களிக்கவைத்த நேரியனைத் தீந்தமிழில் தக்க புலவரெனச் சான்றோர் நமையுரைக்கத் தக்கவழி நல்குந் தகவோனை மிக்க அறியாமை என்னும் அகத்திருளை ஓட்டச் சரியான நல்வழிகள் தந்தானை நெஞ்சில் இடுக்கண் வருங்கால் இனிதுரைத்துத் துன்பம் துடைத்து மகிழ்வூட்டுந் தூயவனைப் பாருலகோர் உள்ளத்தை எல்லாம் ஒருசேர ஈரடியால் அள்ளிக்கொண் டன்புடனே ஆள்பவனை வள்ளுவனைச் செந்தமிழ்க்குக் காவலனைச் சென்னி மிசைவைப்போம் சிந்தைக்குள் நல்ல திருமறையை வைத்திருப்போம் செம்மை யுளத்தேமாய்ச் செந்நெறியில் நின்றொழுகி இம்மைநலந் துய்த்திருப்போம் இங்கு. 10 அறத்தின் வழிகாட்டி வள்ளுவனை வழிகாட்டி என்று பாட வன்பாகக் கைகாட்டி விட்டார் நண்பர்; தெள்ளுதமிழ் நாவலனை உளத்திற் கொண்டு சிந்தனையாம் பேருலகம் நோக்கிச் சென்றேன்; துள்ளுநடை போடுகையில் வழியி ரண்டு தோன்றுவதைக் கண்டங்கே மலைத்து நின்றேன்; தெள்ளியநல் வழிஎதுவோ? என்று நெஞ்சம் தெளியாமல் இருவழியும் நோக்கி நின்றேன். வடக்குவழி தெற்குவழி என்றி ரண்டுள் வடவழியில் புகத்துணிந்தேன் வாடைக் காற்று நடுக்கியது மனம்வெறுத்துத் திரும்பி விட்டேன்; நல்வழியாம் தென்வழியில் நடந்து சென்றேன்; நடக்கையிலே மணத்தோடு தென்றல் வந்து நலந்தரலால் புலமெல்லாம் மகிழக் கண்டேன் கடக்களிறு போல்நடந்தேன்; அவ்வி டத்தே கலகலவென் றொருசிலர்தாம் சிரிக்கக் கேட்டேன். நடைநிறுத்தி அவர்தம்மை நோக்கி நின்றேன்; நன்கணிந்த திருநீறு குவிந்த கொண்டை தடையின்றி வளர்ந்திருக்குந் தாடி மீசை தளதளத்த மார்பகத்தே பட்டை நூல்கள் இடையிலொரு நீள்கச்சை இந்த வேடம் ஏற்றவரும், தலைமழித்துப் பட்டை நாமம் உடையவரும், வடநாட்டுக் கொண்டை யிட்ட உடல்வலிமை கொண்டவரும் அங்கு நின்றார். நகைக்கின்ற பெரியீரே நீவி ரெல்லாம் நானறியப் புகல்வீரோ யாவிர் என்று? திகைக்கின்றேன் அருள்புரிக என்றேன்; எம்மைத் தெரியாயோ? வள்ளுவர்தாம் நாங்கள் என்றார்; வகைக்கொருவர் நிற்கின்றார்; எத்து ணைப்பேர் வள்ளுவர்கள்? *என்றயிர்க்குங் காலை மற்றோர் நகைப்பொலியும் என்செவியிற் கேட்ட தங்கே நான்நின்றேன் அவரெல்லாம் மறைந்து விட்டார். நகைத்தவர்யார் எனவினவி நின்றேன்; ஆங்கே நான் என்ற விடைகேட்டேன் உருவ மில்லை; திகைக்காதே வள்ளுவன்நான், உன்றன் நெஞ்சுள் சிரிக்கின்றேன், என்னுருவங் காணாய் தம்பி, உகைத்தெழும்பும் உணர்வுடனே யாங்கு வந்தாய்? உன்விழைவு யாதென்றான்; வணங்கி நின்று பகைப்புலத்தர் சூழ்ச்சிஎலாங் கடந்து வந்த பாவலனே உனையொன்று வேண்டு கின்றேன். காலமெலாந் துன்பங்கள் சூழ்ந்த போதும் கவலையிலா மனிதனென வாழ வேண்டும்; ஞாலமெலாம் ஆள்பவனே! தீமை ஒன்றும் நண்ணாமல் வாழ்வெல்லாம் இயங்க வேண்டும்; மேலவனே! வழிபுகல்வாய் என்றேன்; தம்பி! மேதினியில் அறநூல்கள் காட்டு கின்ற சீலநெறி செல்வோக்குக் கவலை யில்லை, சிறுமையில்லை என்றென்றுந் தீமை யில்லை. அறத்தைவிடச் சிறப்பளிக்கும் ஆக்கம் இல்லை அவ்வறத்தை மறப்பதைப்போற் கேடும் இல்லை அறத்தாலே வருவதொன்றே இன்பம் ஆகும் அஃதின்றேல் புகழில்லை பொருளும் இல்லை; அறச்செயலே செயற்பால தாத லாலே அச்செயலே எவ்வெவருஞ் செய்தல் வேண்டும்; மறச்செயலைத் தவிர்த்தறமே புரியும் மாந்தர் மனக்கவலை அற்றவராய் வாழ்வர் என்றான். இன்னுங்கேள்! முகமலர்ந்தும் இனிது தேர்ந்தும் இளகுமனம் பொருந்திவரும் இனிய சொற்கள் பன்னுதலே அறமாகும்; பயனால் நன்மை பயக்கின்ற சொற்களைத்தன் மனத்தால் ஆய்ந்து கன்னலென இனியசொலின் தீமை தேய்ந்து கனிவுதரும் அறம்பெருகும்; மேலும் மாந்தன் தன்னுளத்து மாசகற்றித் தூய்மை செய்யத் தலைப்படுதல் நல்லறமாம் என்று சொன்னான். மற்றொருவன் நல்வாழ்வைக் காணும் போது மனம்புழுங்கும் அழுக்காறும், ஐம்பு லன்கள் சுற்றிவரும் வழியெல்லாம் சுழல விட்டுத் துய்க்குமவாக் கொள்மனமும் இவ்வி ரண்டால் பற்றிவரும் வெகுளியுடன் இன்னாச் சொல்லும் பறித்தெறிந்து வாழ்வதுதான் அறமாம் என்றேன் சொற்றவெலாம் மறந்துவிட்டுச் சுற்று கின்றாய் தூயநெறி காட்டிவிட்டேன் நடந்து காட்டு காட்டியஇவ் வழிதனில்நீ நடந்து சென்றால் கவலையிலா மனிதனென வாழ்வாய் என்றான்; ஊட்டியஇவ் வறவுரைகள் நெஞ்சிற் கொண்டேன் ஒப்பில்லா மொழிப்புலவ! எனக்கோர் ஐயம் ஓட்டிடுக! அறங்களிலே சிறந்த தொன்று துறவறமா? இல்லறமா? உரைக்க என்றேன்; ஏட்டிலதைப் பார்த்திலையோ? எல்லா ஏடும் அறமென்ப தில்வாழ்க்கை ஒன்றே தம்பி மாலையிட்ட மங்கையினை வஞ்சி யாமல் மனம்விரும்பி இனியசொலி ஒன்று பட்டுக் காலையிளம் பரிதியெனக் குழந்தை பெற்றுக் கழறுகிற மழலைமொழி கேட்கும் இன்பம் போலவரும் இன்பமிங்கே ஒன்றும் இல்லை! புரியாத தெரியாத உலகம் வேண்டிக் கோலமது தவசியென வேட மிட்டுக் கொடுமைசெயல் அறமன்று; தெளிக சிந்தை இல்லறத்தைச் செம்மையுற ஆற்று கின்றோன் இருநிலத்துப் பயனனைத்தும் பெற்று வாழ்வான்; நல்லறத்தை விட்டுநின்று காவி தாங்கி நடப்பதனால் நல்லபயன் ஒன்று மில்லை; இல்லறத்து நெறிநிற்போன், துறவ றத்தில் இருந்துதவம் நோற்பாரின் நோன்மை கொள்வான்; கல்லடுத்த காடெதற்கு? தவமெ தற்கு? கருணைதரும் இல்லறமே மேலாம் என்றான். அறப்போர்க்குப் பொருள்தெரிய வேண்டும் ஐயா! அல்லல்தரும் செயலன்றோ போரில் உண்டு; மறப்போரை அறஞ்சேர்த்து வழங்கல் ஏனோ? மக்களதைச் செயநினைதல் நன்றோ? என்றேன்; மறப்போர்தான் பிறருயிரை எடுப்ப தாகும் அறப்போரோ தன்னுயிரைக் கொடுப்ப தாகும்; சிறப்பான தமிழ்மானங் காத்தல் வேண்டின் சிறந்ததடா இவ்வறப்போர்; செயலிற் காட்டு! உன்னினமும் தாய்மொழியும் நாடும் வாழ உயிரீய வேண்டுமடா; வயிற்றுச் சோறு தின்னுதற்கே வாழாதே! மான வாழ்வில் தீங்கொன்று புகுந்திடுமேல் வீரங் காட்டி மன்னவன்போல் இந்நாட்டில் வாழ்க என்று வழியுரைத்துப் போய்விட்டான்; எனது நாட்டின் துன்னிவரும் அறப்போர்க்கு வழியைக் காட்டித் துணிவளித்த வள்ளுவனை வாழ்த்து கின்றேன். திருக்குறட் கழகம், காரைக்குடி (1961) 11 சுவையோ சுவை! பாரைத் திருத்திப் பயன்படுத்தப் பண்படுத்தி ஏரைப் பிடித்தோன் எழில்கொழிக்கக் கண்டிருந்தான்; மண்ணில் தனதுழைப்பால் மாநிலத்துத் தாய்தந்த உண்ணும் பொருளெடுத்தே ஒவ்வொன்றுந் தான்சுவைத்தான்; கார்ப்பும் புளிப்புங் கசப்புந் துவர்ப்புடனே யார்க்கும் பிடிக்கும் இனிப்போ டுவர்ப்பென்று சொல்லும் அருமைச் சுவையெல்லாம் அப்பொருளில் மல்குதலைக் கண்டவற்றை வாயாற் சுவைத்துணர்ந்தான் நெஞ்சங் களித்தான் நினைந்து நினைந்தொருநாள் விஞ்சுஞ் சுவையை விரித்துரைத்தான் ஆறென்று; நாச்சுவையை ஆறாக நாட்டுக் குரைத்தவனே பாச்சுவையுங் கண்டு பகர்ந்தான் வகைசெய்து; வாயுணவே நோக்காக வாழ்ந்தோன் அவனல்லன் தோயுஞ் செவியுணவுஞ் சொன்னான், அதன்மேலும் தோற்றுசுவை எட்டென்றுஞ் சொன்னான் அவன்பெற்ற ஆற்றலினைக் காணின் அடடாஓ! என்று மருட்கைச் சுவைதோன்றும்; மாநிலத்தில் முன்னோர் பெருக்கும் புகழறியப் பேரார்வந் தோன்றிவரும்; ஓதும் இலக்கியத்தை ஓதிச் சுவையமைத்துத் தீதின்றிச் செந்தமிழைக் காத்த திறத்தினையும் அத்தமிழை ஓம்பும் அரும்புலவர் வாழ்ந்ததையும் எத்திசையும் பேர்மணக்க ஏற்றமுடன் வீற்றிருந்தே ஆண்ட தமிழ்வேந்தர் ஆட்சியையுங் காணுங்கால் மீண்டும் பெருமிதமே மேலோங்கும்; அஃதன்றி மூவேந்தர் ஆண்டு முறைசெய்த இந்நாட்டைப் பாவேந்தர் பாடிவைத்த பாட்டெல்லாம் நாம்சுவைப்பின் நாவேந்திப் பாடுதற்கு நாள்போதா; ஆயினுமே தாழ்வேந்தும் இந்நாள் தமிழகத்தை நோக்குங்கால் வாளேந்தி வாழ்ந்தோர் வறுமைக் கிலக்காகித் தாளேந்தி இவ்வண்ணம் தாழ்வதுவோ என்று கவலை மிகவாகிக் கண்கணீர் சிந்த அவலச் சுவைநம்மை ஆட்டிப் படைத்துவிடும்; காட்டிக் கொடுக்குங் கயமைக் குணமிந்த நாட்டில் உலவிவரல் நமக்கெல்லாம் இளிவரலே; வாயின் சுவைக்கும் வயிற்றின் சுவைதனக்கும் நாயின் இழிந்து நலங்கெட்டு வாழ்பவரைக் கொள்கைப் பிடிப்பின்றிக் கோணற் சிறுமதியால் எள்ளுந் தொழிலால் இருப்போரைக் காணுங்கால் தோன்றும் நகைச்சுவையே; தோழர்களே நம்மைஎலாம் ஈன்றதிரு நாட்டுக்கும் இன்பத் தமிழ்மொழிக்கும் கேடு விளைக்கின்ற கீழோரைக் காணுங்கால் பாடுகின்ற பாடலிலும் பாயும் பெருவெகுளி; நாட்டின் நலம்மறந்து நாளுந் தமைநினைந்து தேட்டை யடித்துவருந் தீயோரும், பிள்ளைகளை வீட்டிற் பெருக்கிவரும் வீணர்களும், கற்றுயர நாட்டம் இலராகி நாகரிகம் பெற்றவர்போல் ஊரெல்லாஞ் சுற்றி ஒழுக்கம் உணராமல் பேரெல்லாங் கெட்டழியப் பிஞ்சிற் பழுத்தவரும் எங்கும் பெருகும் இழிநிலையைக் காணுங்கால் எங்கள்திரு நாட்டின் எதிர்காலம் என்னாமோ? வெந்தே உரிமை விழலாகிப் போய்விடுமோ? அந்தோ! எனமயங்க அச்சச் சுவைதோன்றும்; புக்க இருளைப் புறங்காணக் கீழ்வானில் செக்கச் சிவந்துவரும் செங்கதிரைக் காணுவதால் உள்ளங் களித்தே உவகைச் சுவைதோன்றும் வெள்ளமென இன்பம் விளைந்து பெருக்கெடுக்கும்; பாட்டுச் சுவையறிந்த பாரோரே நாம்வாழும் நாட்டுச் சுவையறிவீர் நன்கு. வள்ளுவர் பேரவை, சிவகங்கை 29.4.1962 12 குறள் மனிதன் குறிக்கோள் பெருவழியிற் செல்வோர்கள் வழியின் நாப்பண் பிரிந்துசெலும் பலவழிகள் கிளைத்தல் கண்டு மறுகியுளம் திகைத்தவராய் நிற்றல் போல மாந்தரெலாம் பலநெறிகள் வாழ்வில் வந்து பெருகுதலால் செல்வழியைத் *தேறா ராகிப் பேதுறுங்கால் நன்னெறியைக் காட்டு தற்கு வருமொருவன் வகுத்துரைத்த குறிக்கோள் யாவும் வையமெலாம் உய்யஒரு வழியே செய்யும் அருளென்னும் பெருவேந்தன் ஆட்சி செய்யும் அறிவுலகைப் பொதுமைநலம் பூத்து நின்று பரவுகின்ற புத்துலகைக் காண எண்ணிப் பரிவுடனே விரைந்துசெலும் நம்முன் இங்கே இருவழிகள் கிளைவழிகள் பிரிதல் கண்டோம்; இரண்டிலொன்று மனுவழியாய்; மற்றும் ஒன்று பெருமைமிகு தமிழ்வழியாய்த் தோன்றுங் காலை பேராசான் நல்வழியிற் செலுத்து கின்றான் சாதியினால் சமயத்தாற் பிளவு பட்டுத் தடுமாறித் தாழ்வுற்று மக்கள் தம்முள் மோதுண்டு போகாமல் தடுத்துக் காத்தான் முன்பில்லாத் தீப்பழக்கம் வேண்டா என்றான்; ஓதுகின்ற சீர்திருத்தப் பெரியா ராக ஒப்பில்லா நம்பெரியோன் காட்சி தந்தான்; ஏதமிலா புலமைபெறும் ஆசான் காட்டும் இனியவழி நாட்டுக்கு நலமே கூட்டும். கடவுளெனும் ஒரு பொருட்டுக் கட்டி விட்ட கதைகளுக்கோர் அளவுண்டோ? அவற்றால் மாந்தர் மடமைஎனும் பேரிருளில் வீழ்ந்து மூழ்கி வழிவகைகள் காணாமல் ஏங்கித் தாழ்ந்தார்; கடல்பொருவும் வாலறிவன் சிந்தித் தாய்ந்து கடவுளெனும் செம்பொருட்கு வகுத்து ரைத்த திடமுடைய குறிக்கோளைப் பூண்டு நிற்பின் தீயநெறி எவ்வண்ணந் தலையெ டுக்கும்? நல்லரசை நாட்டுதற்கு வழிகள் சொல்லும் நாவலர்க்குத் தலைவனவன், எங்கள் அண்ணல் சொல்லுகின்ற அரசியலின் நெறியிற் சென்றால் துயரேது? கொடுங்கோலர் பிழைப்பும் ஏது? சொல்லரசன் குறிக்கோள்கள் சட்டம் ஆனால் *தொழும்புசெயும் நிலையேது? வறுமை ஏது? நல்லறிஞன் குறளுருவன் தொண்டை நாடன் நாகரிக அரசியலின் தந்தை யாவன். இருளகற்றுங் காலையிளங் கதிரோன் என்ன இருநிலத்து மாந்தருக்கு மனத்து நோயை மருளச்செய் தோட்டுகிற புலவன் றன்னை மருத்துவத்துக் கலைஞரென மதித்து நிற்போம்; பொருளெடுத்து நிறைத்திருக்கும் அவன்றன் பாட்டில் புகன்றிடுநல் வழிநிற்போர் பிணிய றுப்பர்; மருளகற்றும் குறளமுதைக் குழுமி நின்று மாநிலத்து மாந்திநலந் துய்த்து வாழ்வோம். அறஞ்சொன்னான் பொருள்சொன்னான் அதனோ டன்றி ஆருயிர்கள் தளிர்ப்பதற்குக் காமஞ் சொல்லி அறம்பிறழா அகத்துறையும் சொல்லி வைத்தான் அத்துறையில் வள்ளுவன்றன் வித்த கத்தின் திறங்கண்டு துய்ப்பதற்குப் புலமை வேண்டும்; தீதில்லா நெறிமுறையிற் காமஞ் சொன்னான் உரங்கொண்ட பேரறிஞன் காதற் பாடல் ஒவ்வொன்றுந் தேனடையாய் இனிக்கக் காண்போம். காமமெனுஞ் சொல்லொலியைக் கேட்டு நெஞ்சங் கலங்கியிது கொடுநெறியாம், வேண்டா என்று பாமரரை ஏய்ப்பவரும் பாரில் உண்டு பாலுணர்வும் நூலுணர்வும் அறியார் பாவம்! தேமதுரத் தமிழ்க்குறளில் காணுங் காமம் தித்திக்குந் தேன்பாகோ செங்க ரும்போ யாமறியோம் உவமைசொல; உவமை யாக யாதுரைத்தும் பயனில்லை காமம் விஞ்சும். இல்லறத்தை *இல்அறமா நடத்தி நாளும் இடர்கண்டோன் விலங்கென்றும் பாரம் என்றும் சொல்லிவிட்டுக் காவிக்குள் புகுந்து கொண்டான்; சுவைகாணும் நெறியறியான் வாழ்ந்துங் கெட்டான்; இல்லறத்தின் குறிக்கோளைக் குறளிற் காண்போன் எவன் வெறுப்பான் இல்வாழ்வை? மேலோன் சொன்ன நல்லறத்தின் நெறிநிற்போன் இந்த இன்ப நலமொன்றே பேரின்பம் என்று சொல்வான். நெஞ்சங்கள் நிலமாகச் சிறிய செந்நா நிலத்தையுழும் ஏராகக் கருணை யோடு விஞ்சுபுகழ்க் கவியாற்றல் காளை யாக வித்தாக அறமிட்டுப் பொருளைப் பாய்ச்சி நஞ்சுமிழும் அழுக்காறு வெகுளி ஆசை நாலுவகைச் சாதியெனுங் களையெ டுத்து நஞ்செய்நிலப் பயிராக விளைத்தான் இன்பம் நானிலத்தின் உயிரெல்லாம் உய்யக் கண்டோம். ஈரடியால் மாநிலத்தார் உள்ள மெல்லாம் இனிதளந்தான் புகழ்கடந்தான் மொழிக டந்தான் ஓரடியும் நெடுமுடியும் காணா வண்ணம் உயர்ந்தோங்கும் நெடியோனை மனந்து ணிந்தே ஊரறியக் குறள்மனிதன் என்று நீங்கள் உரைத்தமைக்குக் காரணமென்? *கால்கு றைந்த ஈரடியான் குறளடியான் என்று நோக்கி இவ்வண்ணம் உரைத்தீரோ? ஆம்ஆம் உண்மை வள்ளுவர் பேரவை, சிவகங்கை 14.7.1963 13 வள்ளுவர் கண்ட உடைமைகள் மாடமொடு நீடுமதில் சூழ்ந்தி ருக்கும் மாமனைகள், விளைந்துவரு நன்செய் புன்செய், தேடரிய பெருஞ்செல்வம், மணியும் பொன்னும் தேர்ந்தெடுத்துச் செய்தஅணி கலன்க ளோடு மாடணியும் *சாகாடு, தொலைவி னின்று வந்திறங்கும் விலையுயர்ந்த ஊர்தி யின்னும் நாடதனில் எதையெதையோ உடைமை என்று நம்பியதைப் பெறுவதற்கே உழலு கின்றோம். இவற்றையெல்லாம் உடைமையென நம்பி **வெஃகி எவ்வகையாற் பெறுதுமெனச் சூழ்ந்து செய்யும் தவற்றையெலாஞ் சொல்வதெனில் யாரால் ஒல்லும்? தந்திரங்கள் வஞ்சனைகள் பொய்ம்மை இன்னும் எவற்றையெலாம் செய்தேனும் வளத்தில் வாழ ஏங்குகிறோம் பிறருயிரை வாங்கு கின்றோம் **அவத்தைஎலாம் நாணாமற் செய்து நின்றே அலைகின்றோம் ‡kiy»‹nwh« இனத்தா ரோடு. கொடுமைபல செய்தவற்றைப் பெற்ற பின்பும் கொண்டபொருள் போதுமெனும் எண்ணம் நெஞ்சிற் கடுகளவும் படுவதுண்டோ? இல்லை யில்லை; கரைகாணா ஆசையினால் இன்னும் யாரைப் படுகுழியில் தள்ளிடலாம், எவர்தஞ் சொத்தைப் பறித்திடலாம் சுருட்டிடலாம் எனநி னைத்தே அடுகழுகுப் பார்வையினைச் செலுத்து கின்றோம் ஆறறிவுப் போக்கினையே கொளுத்து கின்றோம். எல்லாமே தனக்குரிமை என்று நாளும் ஏப்பமிடுந் தனியுடைமை யுலக மொன்றாம்; இல்லாமை யில்லாமற் செய்து காக்க எல்லார்க்கும் பொதுவாகும் உடைமை என்று மல்லாடும் பொதுவுடைமை உலகம் ஒன்றாம்; மாநிலமே இவ்விருவே றுலக மாகிப் பொல்லாத விளைவுகளால் மோதி நிற்கப் போராடும் ஒருவழியிற் புகுந்து விட்டோம். தென்னகத்தே தோன்றியநல் லுரிமை தன்னால் தீந்தமிழ்க்குத் தனியுடைமை யாகி நின்று மன்னுயிர்க்கே பொதுமையறம் உரைப்ப தாலிம் மாந்தர்குலப் பொதுவுடைமை யாகி விட்ட தன்னிகர்த்த திருக்குறள்நூல் வகுத்த மைத்துத் தருகின்ற உடைமையெலாம் மறந்து விட்டோம்; பொன்னினைத்தே மண்ணினைத்தே மயங்கி நின்று போராடித் திரிகின்றோம் பகைமை கொண்டோம். அன்பெனுமோ ருடைமைதனை அகத்திற் கொள்ளும் அவனேயிங் குயிர்வாழ்வான் என்னத் தக்கான் என்புடைய வெற்றுடம்பே அன்பில் லானேல் எனமொழியு மினியகுறள் கற்றி ருந்தும் வன்புடைய மனத்தேமாய் ஈர மற்று வாழ்கின்றோம் நடைப்பிணமாய் அந்தோ அந்தோ! என்புகன்று திருத்துவது? குறளின் மேலா இனியொருநூல் யாண்டிருந்து கண்டெ டுப்போம்? மனமென்னுங் குரங்கடக்கி, வரம்பு மீறும் வாயடக்கி, நினைந்தவெலாஞ் செய்து காட்டும் தினவென்னுஞ் செயலடக்கி, மயல டக்கித் திரிபின்றி வாழ்பவர்க்குத் தாழ்வே யில்லை; கனவென்னும் பொழுதத்துந் தீமை யில்லை; காலமெலா முயர்வுண்டு; நன்மை யுண்டாம்; எனமொழியும் அடக்கமெனும் உடைமை தன்னை எள்ளளவும் கைக்கொள்ள நினைந்த துண்டா? எத்துணைதான் கற்றாலும் ஒழுக்க மென்ற இலக்கணத்தைக் கல்லாதான் அறிவே யில்லான் பித்தனவன், கடையனென உலகம் பேசும்; பின்றொடர்ந்து பழிகளெலாம் அவனைச் சேரும்; முத்தனைய சிலசொல்லாற் குறளு ரைத்த மொழிப்பொருளை நமக்குடைமை யாக்கி னோமோ? பித்தளையைப் பொன்னாகக் கருதி யிங்குப் பேதுற்றோம் எதையெதையோ உடைமை என்றோம். தீங்கொருவன் செய்தவழிச் சினந்தெ ழுந்து சிறுமைசெயின் அவன்காண்ப தொருநா ளின்பம் ஆங்கவனைப் பொறுப்பானேல் உலகி லென்றும் அழியாத புகழுக்கே உரிய னாவன்; தீங்குறளில் பொறையுடைமை என்று சொன்ன சிறப்புடைமை நமக்குடைமை யான துண்டோ? நீங்கிடுமவ் வொருநாளை யின்பங் காண நினைக்கின்ற மடமைக்கே ஆளாய் நின்றோம். பொருளுடைமை புல்லர்க்கும் வாய்ப்ப தாகும்; பூமிதனில் உடைமைக்குள் உடைமை என்னும் அருளுடைமை சான்றோர்க்கே அமைவ தாகும்; அணியுடைமைக் குறளிதனை ஒதக் கேட்டும் மருளுடைமை மிகுந்தவராய்ப் பகைமை பூண்டு மாநிலத்துப் போர்வெறியே கொண்டு ழன்று செருவொழிய மனமிலராய்ச் சினந்தெ ழுந்து சிறுமைசெய நினைந்திருந்தோம் தாழ்வே கண்டோம். அளப்பரிய செல்வங்க ளுடைய ரேனும் அறிவென்னும் ஒருசெல்வம் இல்லா ராயின் வளப்பமது காணாத வறிய ராவர்; வளரறிவு பெற்றவரே எல்லாம் பெற்றார்; உளத்திலுறு குறைநீங்க மெய்ம்மை காண உதவிவரும் அவ்வறிவுச் செல்வந் தேடி விளக்கமுற நினைந்ததுண்டா? நன்றில் உய்க்க விழைந்ததுண்டா? தீதுக்கே செலுத்து கின்றோம். அசைவில்லா மனவூக்க முடையான் றன்பால் ஆக்கமெலாம் வழிவினவிச் சென்று சேரும்; திசையெல்லா மவன்புகழே பரவி நிற்கும்; தீதுறுங்கால் மனமுடைந்தாற் பயனே யில்லை; வசையில்லா மனவெழுச்சி கொண்டு ழைத்தால் வாழ்விலுயர் நிலைகாண்பர்; ஆனால் நாமோ இசைவில்லா ஒருதுயரங் காண நேரின் இடிந்துமன முடைந்தயர்ந்து சோர்ந்து நிற்போம். தெய்வத்தாற் பயன்குன்றி நின்ற தேனும் தேகத்தா லுழைப்போர்க்குப் பயனுண் டென்றே உய்யத்தான் வழியுரைக்குங் குறளைக் கண்டோம்; ஓதுகின்றோம் ஆனாலும் முயன்று நின்று செய்யத்தான் மனமுண்டா? சோம்பல் கொண்டு செயலின்றி விதியென்று பழியைப் போட்டுப் பொய்யைத்தான் மொழிகின்றோம் கடமை செய்யோம் புழுவினுக்கு மெதிர்நில்லாச் சிறுமை கொண்டோம். உரந்தோயு முடலழகன் கண்கா லாய உறுப்பழகன் ஆயினுநற் பண்பில் லானேல் அரம்போலுங் கூரறிவிற் பெரிய னேனும் அவன்மாந்தன் எனவுரையா துலகம்; நல்ல மரம்போலுந் தோற்றத்த னெனப்ப ழிக்கும்; மனிதரென அறிவுடையோர் நமைம திக்கத் திறம்பாத பண்புநமக் குடைமை என்று செம்மாந்து நிற்பதற்கும் உரிமை யுண்டோ? அல்லவற்றைச் செய்வதற்கு நாணங் கொள்வர் அறிவுடைய குலமக்கள் என்ற றிந்தும் நல்லவற்றைச் செய்வதற்கே நாணு கின்றோம் நாணுக்கும் நமக்கும்வெகு தூர மன்றோ? சொல்வதற்கும் நாணுகிறேன் பழிகள் செய்யத் தொட்டறியாத் துறையுண்டோ? ஒன்று மில்லை செல்லவிட்ட நாணமது நம்மைக் காணின் சிரித்தொதுங்கித் தலைகுனிந்து நாணிச் செல்லும். குறள்பிறந்த திருநாட்டிற் பிறந்த மாந்தர் குறையுடைய வாழ்வினராய் வாழ்ந்தா ரேனும் அருள்நிறைந்த மனத்தினராய்க் குறள்நூல் காட்டும் அருநெறியில் வழுவின்றி ஒழுகும் சான்றோர் ஒருசிலர்தாம் ஆங்காங்கே வாழ்த லாலே உலகமினு மழியாமல் நிற்கக் கண்டோம் தெருளறிவு தருநூலை ஓதி ஓதித் தெளிந்தொழுக முயன்றிடுவோம் வாரீர்! வாரீர்! வள்ளுவர்சொல் லுடைமையெலா மவ்வ வர்க்கு வாழ்வளிக்குந் தனியுடைமை யாகுங் கண்டீர்! வெள்ளமெனச் சேர்ந்துறையும் மன்ப தைக்கு விழவுதரு பொதுவுடைமை யாகுங் கண்டீர் உள்ளமது குழைந்தும்மை வேண்டு கின்றேன் ஒப்பரிய குறள்நெறியை உடைமை யாக்கி அள்ளுதமிழ்ப் பாமொழியை நெஞ்சிற் றேக்கி அளப்பரிய இன்பத்தில் திளைப்போம் வாரீர். திருக்குறள் விழா, செங்கோட்டை - 20.5.1967 14 மானங்காப்போம் விரிந்ததலைத் தென்னையிளங் கீற்றுட் பாய்ந்து விளையாடிச் சலசலவென் றொலிஎ ழுப்பி விரிந்தமலர்க் கொடிபடரும் மாடத் துள்ளே மெல்லென்று வருதென்றல் நீவி யின்பம் புரிந்திருக்கத் தேய்பிறைதன் ஒளியை வீசப் புந்தியினை ஒருநிலையிற் செலுத்தி நின்று சுரிந்துவிழும் அலைகடல்சூழ் உலக மாந்தர் சூழ்நிலையை மனப்போக்கை நினைந்தி ருந்தேன். தென்றலையுந் தோல்வியுறச் செய்யும் நல்லாள் திருந்தடியிற் சிலம்பொலியும் கேளா வண்ணம் மென்றளிரின் அடியெடுத்து நிலத்தில் வைத்து மெல்லெனவந் தென்னருகில் நின்று நெஞ்சில் ஒன்றிவருஞ் சிந்தனைதான் யாதோ? என்றாள்; உயர்மானம் இன்றுள்ள மாந்தர் வாழ்விற் குன்றிவரும் நிலைகண்டேன்; இந்த வாழ்வு குறள்பிறந்த நாட்டினிலோ! என்று நைந்தேன். மானத்தை மாந்தரிடங் காண எண்ணி வானத்தை நோக்குகின்றீர் என்ன கண்டீர்? khd¤ij eif¥òwnt brŒJ É£l k©Âyij¡ fhzhj jhnyh! என்றாள்; தேனொத்த மொழிபுகன்றாய் ஆம்ஆம் உண்மை தேய்பிறையில் அதுகண்டேன்; களங்கம் ஒன்று பூணத்தான் மனமின்றி உடலந் தேய்ந்து பொன்றுதற்கு முயல்வதுகாண்! அதுதான் மானம். புகழ்ப்பேறும் பொருட்பேறுங் கருதி வஞ்சப் பொய்ம்மொழிகள் பலபேசி நடித்துக் காட்டி மிகப்பேணத் தகுமானம் விடுத்துப் பின்னர் மேதினியில் ஊனோம்பி வாழும் வாழ்க்கை உகப்பான தெனவுரைக்க ஒவ்வார் மேலோர்; உயிர்விடுத்தும் மானத்தைக் காக்கும் வாழ்வே பகுத்தாயும் அறிவுடையார் உயர்ந்த தென்பர்; பாழ்வயிற்றைக் காப்பதெனில் நாயுங் காக்கும். ஒருமானங் காப்பதுதான் முறைமை என்றால் உலகத்தில் வருமானம் போமே என்பார்; திரிமானஞ் செய்திருந்து பதவிக் காகத் தீமைஎலாம் செய்துயர்வார்; கொள்கை தன்னிற் சரியான பிடிமானம் இல்லார் ஒன்றில் தங்காமற் கிளைதோறுந் தாவித் தாவி வருவார்தம் வாழ்க்கையிலே மானம் எங்கே மறைந்துளதென் றாய்ந்திடினும் காண்ப துண்டோ? சிக்கெடுத்து நெய்தடவி மலர்கள் சூட்டிச் செய்ம்முறைகள் பலசெய்து பேணிக் காத்துத் தக்கபடி வளர்க்கின்றாய் கூந்தல் தன்னை; தலைமகளே அதுதலையின் இழிந்து விட்டால் மிக்கதொரு முயற்சியினால் வளர்த்த தென்று மீண்டுமதைப் போற்றுவையோ? சீசீ என்று பக்கலிலே எறிந்திடுவை மானந் தாழ்ந்த பதர்மனிதன் நிலையுமது போல்வ தென்றேன். நெருநலொரு மணத்தைலம் வாங்கி வந்தேன் நெடுங்கூந்தல் அடர்ந்துவரும் ஆசை யாலே பொருண்மிகவுஞ் செலவிட்டேன் எனநி னைந்தோ புகலுகின்றீர் இவ்வண்ணம் எனப்பு லந்தாள்; அருள்விழியே உவமைக்குச் சொன்னே னன்றி அணுவளவும் உனைக்கருதிச் சொன்னே னல்லேன்; பொருணிறையுந் திருக்குறளிற் கண்ட சொல்லைப் புகன்றதலால் நெஞ்சறிய மற்றொன் றில்லை. என்று சொலி யருகிருந்தேன்; பதவி தன்னால் எண்ணரிய செல்வத்தால் அறிவு கல்வி ஒன்றுதவ வேடமெனும் இவற்றா லெல்லாம் உயர்வெய்தி யுலகத்து மாந்தர் முன்னே குன்றனைய வாழ்வினரும் மானங் குன்றும் கொடுமைகளைச் செய்கின்றார் குறளுஞ் சொல்வார் நன்றுசெய நினைவார்போல் நடிப்புஞ் செய்வார் நாடிவரால் நலம்பெறுமோ நவில்க என்றாள். குன்றனைய வாழ்வினரும் மானங் குன்றின் கொடுவிலங்கே அவர்க்குநிகர் என்னல் சாலும் என்றுரைக்க நினைந்திடினோ கவரி மாவந் தெனையுவமை சொல்லற்க எனத்த டுக்கும்; ஒன்றுமயிர் நீங்கிடினும் உயிரை வேண்டா உயர்பண்பை அதுதன்பாற் கொண்ட தாலே; நன்றெனவே உயிர்விரும்பி மானம் போக்கும் நல்லவர்க்கோர் உவமைசொல ஒன்று மில்லை. தன்னிலையிற் றாழாமை வேண்டும் வேண்டும் தாழ்வுவரின் வாழாமை வேண்டும் வேண்டும் தன்னுயிரை மிகச்சிறிதா எண்ணல் வேண்டும் தகுமானம் ஒன்றனையே காத்தல் வேண்டும் புன்னலமே காப்பதற்கு மாற்றான் பின்னே போயவனை வால்பிடித்து வாழல் வேண்டா என்னுமொரு குறிக்கோளில் வாழ்ந்து நின்றால் இனியகுறள் தோன்றியதன் பயனைக் காண்போம். பொதுவாழ்விற் புகுந்திடுவோர் மான மெண்ணிப் புகுவாரேல் அவர்கனவு பலிப்ப தில்லை அதுபோகத் தனிவாழ்வில் மானம் ஒன்றே தளராமற் சிதையாமற் காத்தல் வேண்டும் மதுவாழும் மலர்க்குழலி நினக்கும் ஒன்று மறைவாக மெதுவாகச் சொல்லு கின்றேன் பொதுவாகக் குறையாடை, மானம் வேண்டும் பொற்றொடியார் அணியாமை வேண்டும் என்றேன். வள்ளுவர் விழா. திருச்சி வானொலி நிலையம், 24.5.1967 15 குடும்பமும் குறளும் வையகம் உய்ய வந்ததோர் தலைமகன் பொய்யா மொழிஎனப் புகழ்பெறும் வள்ளுவன் மாந்தர் வாழும் வழியெலாந் தொகுத்துத் தீந்தமிழ்ப் பாட்டால் திருக்குறள் தந்தனன்; அந்தநன் னூலை அழகிய பதிப்பில் தந்து மகிழ்ந்தோம்; தங்கத் தகட்டில் எழுதிக் களித்தோம்; ஏனைய மொழிகளில் தழுவிப் பெயர்த்துத் தலைநிமிர்ந் திருந்தோம்; ஆண்டெலாங் கூடி அதன்புகழ் பாடி ஈண்டிய புகழை எய்தினோம்; ஆனால் கொஞ்சு தமிழிற் கூறிய நெறிகளை நெஞ்சத் தகட்டில் நிலைபெற எழுதிலோம்; வாழ்க்கைத் துணைநூல் வள்ளுவன் தந்தும் பாழ்த்த நெறியில் படரவே விழைந்தோம்; கண்ணிலாக் குருடன் கைவிளக் கிருப்பினும் என்ன பயனை எய்துவன்? அதுபோல் அறிவிலா நம்மிடம் அருங்குறள் இருந்தும் பெறுபயன் ஒன்றும் பெற்றிலோம் கற்றிலோம்; குடும்பம் நடத்திடக் கொஞ்சமுங் கற்றிலோம் படுந்துயர் ஒன்றே பாரினில் கண்டோம்; நல்லதோர் குடும்பம் நடத்திடும் நெறிகள் இல்லையோ நம்பால்? ஏனவை மறந்தோம்? இன்சுவைக் கனிகள் என்றுங் குலுங்கும் அன்பு மணமலர் அளவிலா திலங்கும் இன்பப் பூங்கா இல்லற வாழ்வே என்பதை மறந்தோம் இடரினில் புகுந்தோம்; பொருளே குறிக்கோள்! பூமியில் பிள்ளைகள் பெறலே குறிக்கோள்! பெருவயி றாரத் தினலே குறிக்கோள்! இவ்வணந் திரிந்தால் அதுவா வாழ்வு? அதுவோ இன்பம்? எதுதான் வாழ்வெனப் புரியா திருந்தோம்; இதுதான் வாழ்வென இயம்பினன் வள்ளுவன்; அவ்வழிச் சென்றினி அன்பினைப் பெறுவோம் செவ்விய நன்மைகள் சேர்ந்திட முயல்வோம் ஏழிசை யாழென இனியநம் குடும்பம் வாழிய வாழிய வாழிய நலமே. 23.12.1967 16 சிரிப்பும் அழுகையும் கார்முகில்கள் நீர்சொரிய, வான்மு ழங்கக் கண்கவரும் கொடிமின்னல் விளக்கங் காட்டச் சீர்பெருகும் நிலமகளை ஏரைத் தாங்கும் செய்யவளைப் பரிசமெனக் கலப்பை தந்து பார்புகழ மணம்புணர்ந்தான் உழவன் என்பான் பாராமல் ஒருநாளும் இருந்த தில்லை; ஓர்பொழுது செல்லாமல் கிழவன் நிற்பின் ஊடிவிடும் என்றஞ்சி நாளுஞ் செல்வான். நெஞ்சுவந்து பிரியாமல் வாழும் நாளில் நிலமங்கை ஈன்றெடுத்த செல்வங் கண்டான் விஞ்சுகின்ற மகிழ்க்கடலில் திளைத்து நின்றான் விளைநிலத்தாள் தருஞ்செல்வம் உலகுக் கெல்லாம் எஞ்சலிலா இன்பத்தை ஈத லாலே ஈன்றதொரு ஞான்றையினும் பெரிது வந்தான் தஞ்சமென வந்தவரைத் தாங்கு கின்ற தனியறத்தை வேளாளன் பேணு கின்றான். உழவனெனப் பேர்சொல்லிச் சோம்பி நின்றே உழைப்பொன்றும் இல்லானாய் உறங்கி வாழ்ந்து பழகியவன் விதியினையும் துணையாக் கொண்டு பசிபோக்க ஒன்றுமிலேன் என்று துன்பில் முழுகுமவன் முகம்நோக்கி நிலமாம் நல்லாள் முணுமுணுத்து நகைக்கின்றாள்; உழைப்பை நல்கும் அழகனையே அவள்விரும்பி நாளும் நாளும் அழகெல்லாம் விரிக்கின்றாள் சிரிக்கின் றாளே. தொழுதுண்டு பின்செல்லும் மாந்தர் தம்மைச் சுமக்கின்ற உலகமெனும் பெருந்தேர் செல்ல உழுதுண்டு வாழ்பவனே ஆணி யாக உதவுகின்றான் எனப்புலவன் உரைத்த பின்னே எழுதுண்ட கோலாலே எழுதிக் காட்ட என்னுளது? பெருமைமிக வுடையா னேனும் அழுதுண்டு வாழ்கின்றான் உலகைக் காக்க அமுதுதரும் அவ்வுழவன்; முறையோ ஈது? செய்யாறு, 17.1.1969 17 வாழ்க்கைக்குத் தலைவன் உள்ளம் நினைத்ததை ஓரா தியற்றும் பள்ளிப் பருவம், பதினா றகவை; எண்ணக் குதிரையில் ஏறித் திரிந்து மண்ணில் விண்ணின் மகிழ்ச்சியைக் கண்டு பண்ணும் கூத்தும் நுகரும் பருவம்; தவறுகள் செய்தும் தருக்குடன் அலைந்தும் கவலையே யின்றிக் களிப்புறுங் காலம்; இளமைத் துடிப்பில் இதுதான் வாழ்வென உளமதிற் கருதி ஒழுகினேன்; அந்நாள் ஓதும் பொழுதில் ஒருநூல தனுள் தீதிலா ஒருவரி தெரிதரக் கண்டேன்; ஒளிநிறை வடிவினன் ஒருவன் ஆங்கே தெளிமுகங் காட்டிச் சிரித்தனன் நோக்கி இளையோய் உலகில் இயற்றுக அறம் என அளிமிகு மொழியால் அறைந்தனன் என்பால்; அறஞ்செய் பருவமும் அவ்வறம் இயற்றிட உறுபொருட் பெருக்கமும் உற்றே னல்லேன் எவ்வணம் நல்லறம் இயற்றிட வல்லேன்? செவ்விதின் உரைஎனச், செப்பினன் மறுமொழி: மனத்துக் கண்ணுறும் மாசுகள் அகற்றின் அனைத்தறன் இதனை ஆக்குக என்றனன்; இனியநல் நெறியதாம் எளியநல் முறையதாம் இனிஅது செய்வேன் எனநான் முயன்றேன் அன்றே என்மன மாசுகள் அகன்றன நன்றே மொழிந்த நாவலன் வாழிய! இன்னுஞ் சிலமொழி இசைத்தனன் என்பால்; ஏதிலார் குற்றம் எடுத்தெடுத் தியம்பித் தீதுகள் சேர்க்கத் தெரிந்தனை நின்பாற் சேர்ந்துள குற்றம் தேர்ந்துணர் பெற்றிமை பெற்றா யல்லை, பெற்றனை யாயின் உற்றொரு தீதும் உனைவருத் தாதே என்றவன் உரைமொழி ஏற்றது முதலா ஒன்றிய குற்றம் ஒன்றா தொழித்தேன்; உள்ளத் தூய்மையும் உயர்பெருந் தெளிவும் தெள்ளத் தெளியத் தெரித்தனன் அதனால் அவனே தலைவன் அவற்குநான் அடிமை; தவமே செய்தேன் தலைவனைப் பெற்றேன்; கற்கும் பருவங் கடந்தேன் கட்டெழில் நிற்கும் பருவம் நெருங்கிய தென்னை; மங்கை ஒருத்தி மாலை சூட்டிடப் பொங்கும் இன்பப் புத்துல கதனில் உறவைப் பெருக்கும் ஒருநெறி புகுந்து நிலவுப் பயன்கொள நினைந்ததென் மனனே; மங்கையர் இன்பம் மாபெருந் துன்பம் எங்கும் இடர்தரும் இருளுல கதுவாம் துறவைப் பெருக்கித் துயரின் நீங்கி இறவாப் பெருநெறி எய்துக என்றொரு குரலுங் கேட்டது குழம்பிய தென்மனம்; உரவோன் மனமுவந் துலகுக் குணர்த்தும் குறளுங் கேட்டது குழப்பந் தெளிந்தது; அறநெறி நின்றே இல்வாழ் வாற்றின் புறநெறி யதனுள் போய்ப்பெறும் பயன்என்? அறனெனப் பட்டதே இல்லறம் அதனைப் பிறன்பழிப்பின்றி பேணுக என்றனன் தலைவன் அவன்சொல் தலைமேற் கொண்டேன்; நலமிகு மனையாள் நற்றுணை யாக, மனமகிழ் வுடனே வாழ்க்கைத் தோணி இன்பக் கடலுள் இனிதே மிதந்தது; முன்பின் அறியா மொய்ம்புடை வறுமை வன்புடன் புயலென வந்து வீசிடப் பற்றாக் குறையெனும் பாழ்அலை மேலெழச் சுற்றிய கவலை சுறாவென எதிர்ந்திட முற்றிய துயர்க்கடல் மூழ்கித் தவித்தேன்; வழிதெரி யாதுளம் வாடிடும் எனக்கு வழிசொலுந் தலைவன் வருவனோ என்று தாங்காத் துயரந் தாங்கிக் களைத்தேன்; நீங்காத் தலைவன் நேரினில் தோன்றி, ஏங்கேல் தம்பி, இடுக்கண் வருங்கால் ஆங்கே நகுக, அதுவே மருந்தாம் அடுக்கிய இடுக்கண் அளப்பில வரினும் மடுத்தவா யெல்லாம் பகடென முயன்றால் இடுக்கண் என்செயும்? எழுச்சிகொள் தம்பி, எதையுந் தாங்கும் இதயம் வேண்டும் எனவழி காட்டினன் என்னுடைத் தலைவன்; கனிந்த மொழியன் காட்டிய வழியால் துணிந்தேன் முயன்றேன் துயரே இல்லை! இன்பம்! இன்பம்! இணையிலா இன்பம்! உள்ளஞ் சோர்வுறின் ஓடிவந் தென்பால் வள்ளுவன் காட்டிய வழியெலாம் விளம்பின் ஒன்றா இரண்டா ஒரா யிரமாம்; குன்றா வளத்துடன் கூர்மதி இருப்பினும் நன்றாம் பணிதல் நாடுக இதனை; ஒன்றுநன் றொருவர் உனக்குச் செய்ததை என்றும் நினைத்திரு ஈதுனை உயர்த்தும்; காக்கும் பொருள்பல காவா விடினும் நாக்கினைக் காக்க நாளும் தவறேல்; மறந்துங் கேடு மற்றவர் தமக்குப் புரிந்திட நினையேல் போற்றுக நன்மை; எனப்பல நெறிகள் இனிதே உணர்த்தி மனத்துட் பண்புகள் விளைத்தனன்; அவனே இனிய வாழ்க்கைக் கேற்றதோர் தலைவன்; எனநான் கொண்டுளேன்; இப்புவி வாழ்வோர் அனைவர் தமக்கும் அவனே தலைவன் அருளும் அறமும் கருதிய தலைவன்; தேர்தலில் நில்லா நேரிய தலைவன்; ஆர்நிகர் உள்ளார் அவற்கெனுந் தலைவன் போட்டியிங் கில்லாப் புகலருந் தலைவன் பாட்டால் பண்பை ஊட்டிய தலைவன் மக்கள் நலமே மதித்திடுந் தலைவன் மிக்குயர் அறிவால் மேம்படுந் தலைவன் வாழிய தலைவன் வாழிய நலமே வாழிய குறள்நூல் வாழிய இனிதே. 31.5.1969 18 வள்ளுவர் இன்று வந்தால்...? நெல்வேலிச் சீமைபெறும் நீள்புகழைச் சொல்வதெனில் சொல்வேலிக் குள்ளடங்காத் தொன்மைச் சிறப்பாகும்; சங்கத் தமிழ்சொல்லும் தண்பொருநை பாய்வதனால் பொங்கும் வளத்துடன்சேர் பூமி யிதுவாகும்; செந்தமிழைத் தென்றலுடன் சேர்த்து மகிழ்ந்தளிக்கும் சந்தனங்கள் சூழ்பொதியச் சாரல் திருநாடாம்; செப்புபுகழ் இப்பதியில், சேர்த்த திரவியமாம் ஒப்பில் தனந்தந்து கல்விப்பா லூட்டுதலால் நற்றாயும் ஆனவர்பேர் நாட்டிவருங் கல்லூரி பெற்ற பெருமைகளைப் பேசி மகிழ்கின்றேன்; அன்றிங்கு வெள்ளையரின் ஆட்சிதனை ஓட்டுதற்கு- ஒன்றிவரு காதலினால் நின்றுகலம் ஓட்டியவர் மிக்குவரும் நாட்டன்பு மேவியதால் வன்சிறையில் செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் கற்றஇடம், பாட்டை தெரியாமல் பாடுகின்ற போதுபுதுப் பாட்டை நமக்களித்த பாவலராய்க் காவலராய்ப் பாட்டுத் திறத்தாலே பாருலகைக் காத்தெனக்குப் பாட்டனென வந்தவராம் பாரதியுங் கற்றஇடம் ஆதலினால் இந்த அரங்கேறிப் பாடுதற்குக் காதல் மிகவுடையேன் கைகூப்பி வணங்குகின்றேன்; வள்ளுவனென் றெல்லாரும் வாய்மணக்கச் சொல்கின்ற தெள்ளுதமிழ்ப் பேருடையான் தேர்ந்த புலமுடையான் அன்றிங்கு வாழ்ந்ததனால் ஆருயிர்க்கு முப்பால்நூல் ஒன்றிங்குத் தந்துவந்தான்; உண்மையில் இன்றுவரின் முப்பாலைத்தொட்டு முடிக்காது விட்டிருப்பான்; எப்பாலோ சென்றவனும் ஏங்கிப் புலம்பிடுவான்; வஞ்சனையே வையத்தில் வாழும் நிலைகண்டு நெஞ்சு கொதித்து நினைந்து நினைந்தழுவான்; மக்கள் நிலைமாறி மாக்கள் நிலைக்கேகித் தொக்கிருக்கக் கண்டு துடிதுடித் தேவிழுவான்; சொல்லும் *உயர்திணையைச் சூழுலகிற் காணாது வல்லதோர் *அஃறிணையாய் வாழ்வாரைக் கண்டழுவான்; கற்றறிவு காட்டுவதில் *முற்றாக நில்லாது சொற்றதோர் *எச்சமெனச் சூழ்வாரைக் கண்டழுவான்; எச்சங்கள் நற்பெயரை ஏற்க முடியாமல் அச்சங்கொள் தீவினைக்கே ஆளாகக் காண்பான்; இலக்கணத்தார் *வேற்றுமை எட்டென்பர் இங்கோ சொலத்தொலையா வேற்றுமை சூழ்ந்திருக்கக் கண்டிடுவான்; பண்பு தொகைதொகையாய்ப் பாரில் பரவாமல் *பண்புத் தொகையான பாழ்நிலையைக் கண்டிடுவான்; உண்மைஅறம் நேர்மை உலகத்தில் தேடுங்கால் *அன்மொழியாய்ப் போனதுகண் டாற்றா தழுதிடுவான்; நாற்பா வகைஎல்லாம் நன்குணர்ந்த பாவலர்தம் நூற்பாக்கள் கண்டுவக்க நுண்ணறிவன் இன்றுவரின் வெண்பா எனும்பெயரால் விட்டுவைத்த நூலெடுத்து *வெண்பாட்டுக் கண்டுளத்தில் வேதனைகள் கொண்டிடுவான் நல்ல *அகவல்நூல் நாடி வருங்காலை அல்லல் மிகுந்தோர் அகவலன்றி வேறறியான்; *வஞ்சிப்பாக் காண வருவோன்றன் கண்முன்னே வஞ்சிப்பா ரன்றி வளர்பாக்கள் கண்டறியான்; பாட்டில் *கலிஎன்னும் பாவகையைத் தேடிடுவான் நாட்டில் கலியே நடமாடக் கண்டிடுவான்; இவ்வண்ணங் காணுங்கால் ஏங்கி அழுதழுது செய்வண்ணம் யாதென்று சிந்தித் தலமருவான்; கண்ணீரை மாற்றக் கடவுளுறை கோவிலுக்குள் புண்ணீர்மை மாறுமெனப் போய்ப்புகுவன்; அங்குறையும் ஆண்டவன் தாள்மலரை ஐயன் தொடக்கண்டு தீண்டாதே தீண்டாதே தேவன் திருவடியை, எட்டி யிருந்தே இறைவனைநீ போற்றிடுக, தொட்டு வணங்குகிற தொல்லுரிமை நிற்கில்லை; என்ற குரல்கேட்பான்; ஏங்கித் தொழுதபடி நின்ற கடவுள்முகம் நோக்கி நிலைத்திருப்பான்; என்னவிடை சொல்வான் *எழில்விடையன்? வள்ளுவற்கு முன்னர்ச் சிலையாகி *மூங்கையென நின்றிருப்பான்; வாலறிவன் மூங்கையென *வாளாமை கொண்டுமறை* நூலவற்கு மாற்றம் நுவலா திருப்பானேல் செத்தான் இறைவனவன் செத்தே மடிந்துவிட்டான் அத்தா இறந்தனையோ? ஐயஓ என்றழுவான்; தெய்வஇசைப் பாட்டென்ற தேவாரத் தேனிருந்தும் செய்யதிரு வாய்மொழியாம் தித்திக்கும் பாலிருந்தும் தேன்சுவையும் பாலின் தெளிசுவையுங் காணாமல் கூன்மனத்தர் செய்த கொடுமைகளைக் கண்டேயோ? செந்தமிழ நாட்டகத்துச் சேர்ந்திருந்தும் எங்கிருந்தோ வந்தமொழி கேட்டேயோ? மாறினைநீ கல்லாக என்றெல்லாஞ் சொல்லி *இனைந்து மனமுருகி நின்றன்னான் வெய்துயிர்த்து நீடு நினைந்தழுவான்; கூறு படுத்திடவே கூறுஞ் சமயங்கள் நூறு வகையாம்! நுவல்வழியும் வெவ்வேறாம்! எல்லாருங் கொண்டொழுகற் கேற்ற நெறிமறந் தல்லா நெறிபுகுந்தே அல்லற் படுகின்றார்; ஒன்றே குலமாக ஒன்றே இறையாக நன்றே புகல்நெறியை நாடாமல் ஓடுகின்றார்; ஒற்றுமைதான் இங்கே உருப்படுமா? மக்களுக்குள் பற்றுள்ளந் தோன்றிப் பரவிடுமா? இம்மாந்தர் நெஞ்சகத்தே மாசகற்ற நேராமல் எத்துறையும் வஞ்சித்தே ஆகுலங்கள் வாய் விட்டொலிக்கின்றார் என்று மனம்நைந் தெழுந்து நடந்தகன்று நின்று விழியால் நிலவுலகை நோக்கிடுவான்; வாழ்கின்ற மாளிகையோ வான முகட்டளவு ஏழ்நிலைய மாடத் தெழிலோ டுயர்ந்திருக்கும்; உள்ளுறையும் மாந்தர் உள்ளமோ கீழ்நோக்கிப் பள்ளம் படுகுழியில் பாய்ந்து விழுந்திருக்கும்; உண்டு களித்திருப்போர் ஓர்புறத்து மாளிகையில் பண்டை அரசரெனப் பஞ்சணையில் சாய்ந்திருப்பர்; நெஞ்சுலர்ந்து வாயுலர்ந்து நிற்கும் இடமிழந்து பஞ்சையர்கள் ஓர்புறத்தே பட்டினியில் வீழ்ந்திருப்பர்; மஞ்சு தவழ்ந்து வரும் மாடமனை ஓர்புறத்து விஞ்சும் எழில் தாங்கி வீறுபெற நின்றிலங்கும்; ஓடென்றுங் காணா தொழுகுஞ் சிறுகுடில்கள் வீடென்ற பேரால் விளங்கும் மறுபுறத்தே; மேடென்றும் பள்ளமென்றும் மேலென்றுங் கீழென்றும் நாடின்னுஞ் சொல்லி நடப்பதெலாங் கண்டிடுவான்; கண்டால் வெகுண்டு கவியைக் கணையாகக் கொண்டே உலகைக் கொளுத்தும் நிலைபெறுவான்; எல்லாரு மிந்நாட்டு மன்னரெனச் சொன்னபினும் பொல்லா நிலையைத்தான் பொய்யா மொழிகாண்பான்; இந்நாட்டு மன்னர் இரந்துமுயிர் வாழ்வதுபோல் எந்நாட்டுங் காணா இயல்பதனைக் காணுங்கால் வெம்பித் துடிக்காமல் வேறென்ன செய்திடுவான் அம்புவியைத் தந்தோன் அமைத்ததிது வென்றால் படைத்தவன் இங்கே பரந்தொழிக என்றே வெடுக்கென்று கூறாமல் வேறென்ன பேசிடுவான்; இவ்வண்ணங் காண்பதனால் எள்ளி நகைத்தாலும் செய்வண்ணந் தோன்றாமல் சிந்தித் தழுதாலும் வெங்கொடுமை மாய்க்க வெகுண்டே எழுந்தாலும் இங்குலகில் ஒன்றிரண்டு நன்மை இருப்பதனால் வள்ளுவன் சொல்நெறியில் வாழ்வோர் இருப்பதனால் உள்ளம் மகிழ்ந்திருப்பன் ஒப்பரிய அப்பெரியோன்; உள்ளத்தாற் பொய்யா தொழுகி உலகத்தார் உள்ளத்துள் எல்லாஞ்சேர்ந் துள்ளவனை நெஞ்சத்தில் பொய்யா விளக்கேற்றிப் புன்மை இருளகற்றும் வெய்யோன் எனநின்ற வித்தகனை வெய்யோர் கறுத்தின்னா செய்தாலும் காழ்ப்புமிகக் கொண்டு மறுத்தின்னா செய்யா மனத்தானை இவ்வுலகம் ஏந்திப் புகழ்பரவ ஏத்தித் தொழுகின்ற காந்திப் பெயரானைக் கண்டால் மகிழ்ந்திடுவான்; கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிந்துலகை வெல்லுஞ்சொல் லானை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்வார்ப் பொறுக்கும் இயல்புடைய சான்றோனை அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டங் கொண்டானை இன்னாசெய் தார்க்கும் இனியசெய் வானை மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன் தகுதியான் வென்றுவரும் தண்ணளிசேர் நெஞ்சானை இந்நாட்டை மீட்க எழுந்துவரும் நல்லவனைத் தென்னாட்டுக் காந்திஎனச் செப்புநம் அண்ணாவைக் கண்டால் மகிழ்வான் களிப்பால் குதிப்பான் உண்டோ இவற்குவமை என்றுள்ளம் பூரிப்பான்; பாருல கெங்கும் பகுத்தறி வோங்கிவர யாருஞ் செயற்கே அரிய செயலாற்றிச் சாதி சமயச் சழக்ககற்றிப் பேதைமையை மோதித் தகர்த்தெறிய முற்பட்ட நம்பெரியார் தொண்ணூறு தாண்டிவிட்ட தொண்டுகிழ மானாலும் தொண்டு புரிவதனால் தூயோன் மனமகிழ்வான்; புத்துலகம் பூப்பதற்குப் பொங்கி எழுமறவர் வித்திட்டு நீர்பாய்ச்சி வேளை தவறாமல் பாடுபட்டுக் காக்கும் பயிர்நிலத்தைக் காணுங்கால் நாடுகெட்டுப் போகாமல் நன்மையுறும் என்றுணர்ந்து வள்ளுவத்துப் பேராசான் வையப் பெரும்புலவன் உள்ளத்துக் கொள்வான் உவப்பு. திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி திருநெல்வேலி. 1.3.70 19 நடை பயில்வோம் வையத்து மாந்தரெலாம் வாழும் முறை தெரிந்து உய்யத்தான் ஓதி ஒருநூலைத் தந்தமகன்; பேராழி சூழுலகிற் பேதைமையாம் பாழிருட்டைப் போராடி நீக்குதற்குப் பூத்துவருஞ் செங்கதிரோன்; உள்ளமெனும் பைங்கூழ்கள் ஓங்கித் தழைத்துவரத் தெள்ளமுதம் பாய்ச்சிச் சிரித்துவருந் தண்ணிலவு; பற்றிப் படர்ந்துநமைப் பாழ்செய்யும் நோய்க்குணங்கள் முற்றத் தொலைக்க முளைத்துவரும் நன்மருந்து; கற்றோர் மனம்பூத்துக் காய்த்துக் கனிகுலுங்க வற்றாப் புனல்சுரந்து வாழ்வளிக்கும் பேராறு; வெண்முத்துச் செம்பவளம் வேண்டியமட் டுங்கொடுத்து மண்ணகத்தை வாழ்விக்கும் மாண்புயர்ந்த பேராழி; மண்டி வருமாந்தர் மாசகற்றி நெஞ்சத்திற் கொண்ட பிணியகற்றும் குற்றாலப் பேரருவி; உள்ளத்தைப் பற்றி உலுக்கிவரும் வெப்பத்தை மெள்ளத் தணிப்பதற்கு மேவிவருந் தென்றல்; அறிவுப் பசியால் அழுதிருக்கும் நம்மைப் பரிவுப் பெருக்கால்முப் பாலூட்டும் நற்றாய்; அறஞ்சொல்லி ஆன்ற பொருள்சொல்லிக் காமத் திறஞ்சொல்லிக் காட்டித் தெளிவிக்கும் பேராசான்; ஈரா யிரத்தாண்டின் முன்னே எழுந்ததொரு பேரா மலைநிகர்ப்போன் பேரறிஞன்; அன்னவன்தான் நாடெல்லாம் மெச்சவரும் நற்கலைஞன்; எந்நாளும் வீடெல்லாம் போற்றி வியக்கவரும் நாவலனாம்; பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்துக் காட்டுந் திறலுடைய கட்டழகுப் பாவேந்தன்; செய்கவெனச் சொல்லி விதித்தான் சிலவற்றைச் செய்யற்க என்றுசில செப்பி விலக்கிவிட்டான்; பாவல்லான் செய்யப் பணித்தவற்றை நாம்விலக்கிப் பூவெல்லாம் வைத்துப் புகழ்பாடிப் போற்றுகின்றோம், மேலோன் வகுத்துரைத்த வேதப் பொருளுணர நூலோன் நமக்களித்தான் நுண்மாண் நுழைபுலத்தை; பெற்ற புலத்தால் பெரியோன் குறளையினிக் கற்றுக் கசடறுத்துக் கற்றவற்றை நெஞ்சிருத்திப் பாட்டைத் தெளிந்துணர்ந்து பாட்டை விலகாமல் நாட்டில் நடைபயில்வோம் நாம். 1.3.1970 20 வள்ளுவன் அறநெறி ஆசான் வையப் பெரும்பள்ளி வாழ்கின்ற மாணாக்கர் உய்யக் குறளுரைத்த ஒப்பரிய நாவலனை ஆசான் எனவுரைப்பின் அப்பெரியோற் கீடாகக் கூசா தெடுத்துரைக்கக் கூர்மதியார் யாருள்ளார்? நல்ல குலனுடையான், நாடும் அருளுடையான், சொல்லுமுயர் தெய்வந் தொழுகின்ற கொள்கையினான், பல்கலைகள் யாவும் பயின்ற தெளிவுடையான், கல்விதனை நூற்பொருளைக் கட்டுரைக்கும் வன்மையினான்; ஓங்குங் குணமும் உலகியலை நன்கறியும் பாங்கும் மிகவுடையான் பார்புகழும் நம்ஆசான்; எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்று கொண்டொழுகுங் கல்விப் பெருமையினான், சொல்லுங்கால் தன்சொல்லைச் சூழ்ந்துரைக்கும் மற்றோர்சொல் வெல்லுஞ்சொல் இல்லாமல் விண்டுரைக்க வல்லான், மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன் தகுதியான் வென்றுவிடத் தக்க பொறுமையினான் இல்லார்போல் முன்னிருந் தேக்கற்றுங் கற்கின்ற நல்லார் முயற்சிக்கு நல்லபயன் ஈந்திடுவான், நன்னிலத்தின் மாண்பனைத்தும் நாவலற்கும் உண்மையினால் அந்நிலத்துக் கொப்பாகும் ஆசான் இவனன்றோ? யாரும் அளந்துரைக்க லாகா அளவுடனே பாரில் பரந்திருக்கும் பல்வகைய நற்பொருளும் சாதிச் சழக்காலும் சாற்றுசம யத்தாலும் மோதித் துளக்க முடியாப் பெருநிலையும் யாதுமொரு நாட்டினரும் யாதுமோர் ஊரினரும் காதம் பலவெனினும் காணப் படுமுயர்வும் வற்றி வறந்தாலும் வந்தார் வளம்பெறவே உற்றருளும் வண்மை உயர்பண்பும் பெற்றமையால் ஈங்குநாம் செய்தவத்தின் ஏற்றத்தால் வந்தவனை ஓங்கும் மலைதனக் கொப்பென் றுரைத்திடலாம்; எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருளைச் செப்பி உணர்வித்துச் சேர்ஐயம் நீக்கிச் சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து நமருய்ய வந்தவனை நல்லாசான் என்றுரைப்போம்; மங்கலமாய் நின்றானை மாநிலத்தார் எல்லாரும் பொங்கிமனம் மேற்கொளவே பூத்திங்கு வந்தானை இன்றி யமையா திலங்கும் பெருமானை நன்று முகமலரும் நாண்மலருக் கொப்பானைக் காலம் அறிந்துகலை கற்கும் இடனறிந்து சால அறநெறிகள் சாற்றுவித்த சான்றோனைச் சொல்லும் நெறியனைத்துஞ் சூழ்ந்து மனத்தமைத்து மெல்ல முகமலர்ந்து விள்ளுதிரு வாயானைக் கொள்வோன் குறிப்புணர்ந்து கொள்ளும் நிலையறிந் துள்ளங் கொளுமா றுரைக்கின்ற வித்தகனை ஆசான் எனப்பெற்றோம் அன்னவனை நாம்தொழுது பேசாநாள் எல்லாம் பிறவாத நாளன்றோ? அன்னமெனக் கிள்ளைஎன ஆடெனவே மாணவர்க்கு முன்னர் உவமைகளை முன்னோர் மொழிந்திடுவர்; முந்நிலைய மாணவர்க்கும் முப்பால் மொழிந்தவன்தான் அந்நிலையில் நில்லாமல் அப்பாலும் ஓதுகின்றான்; நூல்பகரார் என்று நுவன்றுவைத்த மாணவர்க்கும் நூல்பகர்ந்து பால்புகட்டி நோய்நீக்குந் தாயானான்; ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் கள்ளுண்டல் சான்றோர் முகத்துவகை சார்ந்திடுமோ? ஆதலினால் உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால் எண்ணப் படவேண்டார் என்று களிமகற்கும் பாடம் உரைக்கின்றார் பண்பாட்டை ஊட்டுதற்கு நாடும் அறநெறியை நன்கு நவில்கின்றான்; மாண்முயற்சி யின்றி மடிபுரிந்து வாழ்வீரேல் காண்பா ரிடித்துக் கழறுதற்கே ஆட்படுவீர், உற்ற குடியை உயர்குடியா வேண்டுபவர் முற்ற மடியாண்மை மாற்றி முயன்றொழுக வேண்டு மெனக் கூறி விரும்பிப் புகட்டிமடி யாண்டவர்க்கும் நல்ல அறிவுரைக்கும் ஆசான்; பிணக்கனுக்குந் தீய பிணியனுக்கும் கெட்ட சினத்தனுக்கும் மந்தனுக்கும் சேர்த்தே அறஞ்சொன்னான் காமிக்கும் மானிக்குங் கள்வன் தனக்குமிழி பாவிக்கும் ஏழைக்கும் பாடம் உரைக்கின்றான்; ஆர்த்திருக்கும் நெஞ்சில் அழுக்கா றவாவெகுளி சேர்த்திருக்கும் மாசெல்லாம் தேய்த்தே அகற்றிவிட்டுத் தூவுடைய அன்பதனில் தோய்த்தெடுத்துச் செவ்வியஓர் நாவென்னுந் தூரிகையால் நல்லான் மனத்திரையில் ஒப்பில் அறமென்னும் ஓவியத்தைத் தீட்டிவைத்தான் செப்பில் அடங்குவதோ தேவன் திறமெல்லாம்? சீர்மை அரசியலாம் செந்நிலத்தைப் பண்படுத்த நேர்மை பெறுமமைச்சை ஏர்முனையாக் கொண்டுழு தெஞ்சாப் பொருள்வித்தை எங்கும் மிகத்தூவி, அஞ்சாப் படையங்குத் துஞ்சாது காவல்செய, நான்குபுறம் வேலியென நன்றே அரணமைத்துப் பாங்குபெறும் நல்லறத்தைப் பாய்ச்சி வளர்த்தோம்பி நட்பாம் உரமிட்டு நன்குவிளை கூழதனால் கொட்பா திருக்கக் குடியோம்பும் காராளன்; செப்பும் எழுத்தெல்லாம் சேரும் அசைஎல்லாம் ஒப்பில் புலவனவன் ஓதுசீர் எல்லாம் அடியெடுத்து வைத்தால் அறநெறியில் வைக்கும் தொடையடுத்த பாவெல்லாம் தூய அறமணக்கும்; காமக் கடும்புனலை நீந்திக் கரைகாண ஏமப் புணையாக இல்லறத்தைச் சொல்லிவைத்தான்; சொல்லாப் பொருளில்லை சொன்ன பொருளிலெலாம் இல்லா அறமில்லை எல்லாம் அவனுரைத்தான்; ஆசான் மொழிந்த அறநெறிகள் கேட்டபினும் பேசா திருக்கின்றோம் பேணாமல் அந்நெறியை; வள்ளுவத்துப் பேராசான் வையப் பெரும்புலவன் உள்ளத்தால் நாமுணர ஓதிவைத்தான் செம்பொருளை; பொல்லாங்கை நீக்கிப் புவியோர் அறிவுபெற எல்லாரும் ஏத்தும் இறைநெறியைக் கற்பித்தான்; ஆனாலும் அந்நெறியை ஆய்ந்துரைத்த செம்பொருளைக் காணா தலைகின்றோம் கண்மூடிக் கெட்டழிந்தோம்; எல்லாருங் கொண்டொழுகற் கேற்ற நெறிவிடுத்துப் பொல்லா நெறிபுகுந்து புந்தி யிழந்தோம்; அரனென் றொருகடவுள் ஆனாலும் செய்யும் அறனை மறந்தே அலைதலன்றி யாதுகண்டோம்? மாலென்றோம் அன்னவனை மாயன் என அழைத்தோம் மால்கொண் டுழல்கின்றேம் மாயங்கள் செய்கின்றோம்; புத்தன் எனமொழிவோம் புத்தி தனையிழந்து பித்தர் எனுமாறு பேதுற் றலைகின்றோம்; பேரருள் காட்டும் பெரியன் சினனென்போம் சீறுஞ் சினத்தைச் சிறிதேனும் விட்டோமா? அல்லா எனஒன்றும் அப்படியே சொல்லிடுவோம் அல்லா நெறிநடந்தே அல்லற் படுகின்றோம்; ஏசு பெருமான் எனவுரைப்போம் மற்றவரை ஏசு நெறியன்றி என்னபயன் கண்டுவிட்டோம்? ஏமாற்ற என்றே இறைநெறியைச் சொல்வதன்றி ஓர்மாற்ற மின்றில்லை உள்ளத்தை மாற்றிவிட்டோம்; நாமிழைக்குந் தீவினையால் நல்லதோர் செம்பொருள்மேல் *தோமிழைக்க ஐயங்கள் தோன்றிவரக் காண்கின்றோம் இன்றுவரும் மாணாக்கர் ஆசான் இயம்புவதைக் கொன்றுவருங் காலமிது! கொன்றோம் அவன்மொழியை, முப்பாலாய் நல்ல முறைசொல்லும் நூலிருந்தும் அப்பாலைக் காணாமல் அப்பாலே செல்கின்றோம்; தாய்ப்பாலை நம்பாமல் மேய்ப்பானை நம்பிநின் றாப்பாலுக் காக அலைகின்றோம்; நாம்பெற்ற ஐம்பொறியுங் கேடுறலால் அந்தோஇம் மாநிலத்தில் *செந்நெறியுங் காணாமல் *சென்னெறியுந் தோன்றாமல் வாடி அலைகின்றோம் வாழ்வு கெடுகின்றோம் தேடி மயங்கித் திசைதெரியா தேங்குகிறோம்; சென்றதெலாஞ் செல்க திருமறையைத் தேர்ந்தினிமேல் நன்றுவழி சென்றுய்வோம் நாம். தருமபுரம் திருமடம் 9.6.1971 21 தில்லியில் வள்ளுவர் அலுவலுக்குப் புகலிடத்தைத் தேடித் தேடி அங்கங்கே குடிபுகுந்த தமிழ மாந்தர் தொலைவிடத்துப் புகுந்தாலும் தமது நாட்டைத் தூயதமிழ்ப் பண்பாட்டை மறவா ராகி நிலைபெறுத்தும் இயல்புடையார் எனவு ணர்ந்து நெடும்புகழ்சேர் தில்லியிலும் வள்ளு வத்தின் நிலையுணர்த்த ஒருமன்றம் நிறுவி வைத்த நெஞ்சத்தைச் செந்தமிழால் வாழ்த்து கின்றேன். வகுத்தமைத்த சமுதாயம் சீர ழிந்து வருவதுகண் டுளமுருகிச் சீர்தி ருத்தம் புகுத்தியவர் *இராசாராம் மோகன் ராய்அப் புகழ்மனிதர் வடநாட்டுச் சிற்பி ஆவார்; பகுத்தறிவுக் கொள்கையினால் சமுதா யத்தைப் பண்படுத்தும் இராசாராம் தெற்கு நாட்டார்; வகுத்தவர்தாம் வள்ளுவற்குக் கண்ட மன்றம் வாழ்கவென வளர்கவென வாழ்த்துகின்றேன். உலகத்துப் பாவலரைத், தமிழ கத்தின் ஒப்பரிய நாவலரை, உலக வாழ்க்கைக் கலைவகுத்த புலமைமிகும் கலைஞர் கோவைக், கற்றுணர்ந்த அறிஞர்கள் அறிஞர் தம்மைச், சிலைவடித்த திருவுருவில் நிலைத்து நிற்கும் சிந்தனையிற் பெரியாரை, நுழையும் நுண்மாண் புலமிகுத்த வள்ளுவரைத் தில்லிக் குள்ளே புகழ்பரவக் குடியேற்றி வைத்தோர் வாழ்க. தலைவைத்த பனியுறையும் மலையின் மீது தமிழ்மாந்தர் மறங்காட்ட நாணிற் பூட்டும் சிலைவைத்தார் அன்றிருந்தோர்; உலகுக் கெல்லாம் செந்தமிழின் அறங்காட்ட வள்ளு வற்குச் சிலைவைத்தார் இன்றிருப்போர்; உலகம் உய்யச் சிந்திக்கும் பேராசான் சிலையை நாட்டி நிலைவைத்தார் தமிழ்த்தாயின் கோவி லுக்கு; நெஞ்சத்துக் களிப்பேறி வாழ்த்து கின்றேன். 22 வள்ளுவர் வழி கார்மேகம் நெடுவானில் சூழும் போது கானமயில் தோகைவிரித் தாடல் செய்யும்; கூர்வேனிற் பருவநிலை வந்தால் எங்கும் கூவுகிற இசைக்குயில்கள் பாடல் செய்யும்; நீர்சூழும் பொழுதத்துக் குளத்தில் வாழும் நெடுங்கயல்கள் துள்ளிவிளை யாடும் ஓடும் பார்மகிழ எழிற்கலைகள் தோன்ற வேண்டின் பண்பட்ட சூழ்நிலைகள் வாய்க்க வேண்டும். ஊர்வாழச் சீர்பாடும் கவிஞன் வாழ்வில் உவகைஎனும் தண்முகில்கள் சூழ்ந்து நின்றால், *ஏர்வாழும் இளவேனிற் பருவந் தோன்றி இன்பமெனும் இளந்தென்றல் வீசிச் சென்றால் பேர்வாழும் அவன்நெஞ்சில் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும்; கலையுணர்வும் ஓங்கி நிற்கும்; பார்வாழ வழிபுகல்வான்; தோகை கொண்ட பச்சைமயில் போலாவான்; குயிலும் ஆவான். மாறுபட்ட சூழ்நிலையால் சோர்வும் உற்று மதிமயங்கி மனம்கலங்கி நிற்கும் போது வீறுபெற்ற செயலாளர் என்பால் வந்து விழாவரங்கில் பாட்டரங்கத் தலைமை ஏற்கக் கூறிவிட்டுச் சென்றனர்காண் கார்கா லத்தில் குயிலைத்தான் வாய்திறந்து பாடச் சொன்னார் வாரிவிட்ட இவர்திறத்தை வாழ்த்த மாட்டேன்; வாழ்த்துகின்றேன் பேரவையை வணங்கி நின்றே அறமுரைத்த பெரும்புலவன் நாட்டுக் காக அமைத்தவழி வாய்மைவழி, வாழ்வுக் காக மறமகற்றும் நல்லவழி, கல்லும் முள்ளும் மாற்றிவரும் தூயவழி, மேடு பள்ளம் அறவெறுக்கும் நேர்மைவழி, அருளைச் சிந்தும் அன்புவழி, இன்பமெனும் தென்றல் வீசி நறுமணத்தை வழங்குவழி, கான்வி லங்கு நடவாத அச்சமிலா வழியும் ஆகும். தனிமனிதன் வாழ்வுக்கு வழிகள் சொல்லும் சமுதாய வாழ்வுக்கும் வழிகள் சொல்லும் இனிமைமிகு மனைவியொடு கூடி வாழும் இல்லறத்து மாந்தருக்கு வழிகள் சொல்லும் கனிவுதரும் இவ்வுலக வாழ்வை நீத்துக் காவிக்குள் நிற்பவர்க்கும் வழிகள் சொல்லும் தனியுடைமை பொதுவுடைமை என்றி ரண்டு தரப்பட்ட ஆட்சிக்கும் வழிகள் சொல்லும் அரிவையர்க்கு வழிசொல்லும் ஆண்மை மிக்க ஆடவர்க்கும் வழிசொல்லும்; கல்வி கற்கும் சிறியவர்க்கு வழிசொல்லும்; கற்றுத் தேர்ந்த சீரியர்க்கும் வழிசொல்லும்; வயதால் மூத்த பெரியவர்க்கு வழிசொல்லும் இளைஞ ருக்கும் பின்பற்ற வழிசொல்லும்; தமிழ நாட்டுக் குரியவர்க்கு வழிசொல்லும் உலகமாந்தர் உய்வதற்கும் வழிசொல்லும் குறளின் பாட்டு. மனக்கோட்டம் தவிர்க்கஒரு நூலைத் தந்து வாழவழி சொன்ன திருவள்ளு வற்கு வனப்பூட்டும் திருக்கோட்டம் அமைத்து நெஞ்சில் வளர்ந்துவரும் நன்றியினை யுணர்த்தும் வண்ணம் மனப்பூட்டைத் திறந்தாரை வாழ்த்தும் வேளை மாகவிஞன் வள்ளுவற்குக் கோட்டம் ஏனோ? எனக்கேட்டான் ஒருபேதை; நன்றி யின்றி எதையேனும் உளறுவதே தொழிலாக் கொண்டோன். எதையேனும் எழுதுவது, கண்ணை மூடி எப்படியோ உளறுவது துணிவென் றெண்ணிக் கதையாக அளப்பதெலாம் துணிவே அன்று; கயமைஎன அதைஉலகம் கடிந்து சொல்லும்; இதையேதான் எழுதிடுவேன் இப்ப டித்தான் இயம்பிடுவேன் எனவரம்பு பூண்டு நின்று, பதையாமல் இடர்வரினும் தொடர்ந்து செல்லும் பயணந்தான் துணிவென்று சான்றோர் சொல்வர். செழிக்கட்டும் நாடென்று சிந்தித் தாய்ந்து செந்நாவான் பன்னூறு திட்டம் சொன்னான் கொழிக்கட்டும் நலமெல்லாம் என்ற நெஞ்சைக் கூசாமல் பழிக்கின்றார் இல்லை என்றே; பழிக்கட்டும் மறைக்கட்டும் ஏதோ சொல்லிப் பார்க்கட்டும் குறைவில்லை; நாட்டு மக்கள் விழிக்கட்டும் அதன்பின்னர் உண்மை தோன்றும்; விடியட்டும் இருளுக்கு வேலை யில்லை. நாட்டுக்கு நலஞ்சேர்க்கும் எண்ணம் ஒன்றே நாடியவன் சொலுந்திட்டம் கணக்கே யில்லை; ஓட்டுக்குச் சொலவில்லை ஊரை ஏய்க்க ஒப்புக்குச் சொலவில்லை உண்மைக் காகப் பாட்டுக்குள் வழியெல்லாம் சொல்லி வைத்தான் பார்த்தபினும் இலைஎன்றால் ஊர்சி ரிக்கும்; ஏட்டுக்குள் இருப்பதனை எடுத்துப் பார்த்தால் எல்லாமே புரிந்துவிடும் நலமும் ஆகும். அகில்கொடுத்த புகைமணத்தைப் பேழைக் குள்ளே அடைத்துவிட முயலுவரேல் அடைந்தா போகும்? துகிலெடுத்துச் சூரியனை மறைத்து நின்றால் தோன்றாமல் சுடரென்ன மறைந்தா போகும்? திகில்கொடுத்த இருள்கிழித்துக் கிழக்கு வானில் செங்கதிரோன் தகதகக்கத் தோன்றி விட்டான் முகில்கிழித்து வெளிக்கிளம்பி முகத்தைக் காட்டும் முழுமதிபோல் குறள்நெறிகள் ஒளிரக் கண்டோம். திருக்குறளின் வழியிங்குத் திறந்தி ருந்தும் திரைப்படத்தின் வழியன்றோ நாடு கின்றார்; உருப்படுமா அவரெண்ணம்? நாட்டில் நன்மை உயர்ந்துவரச் சரிப்படுமா? போன போக்கில் மருட்கொளிபோல் பொறுப்புடையார் நடந்து சென்றால் மதியுடையார் நகைக்காமல் யாது செய்வர்? நெருக்கடியில் கலைந்து விடும் சாயப் பூச்சை நினைந்துசெலின் நாடன்றோ பாழில் வீழும்! கலகத்தை விட்டொழிக்க மக்கட் பண்பு கனிந்துநலம் செழித்திருக்க பொய்ம்மை யாவும் கலகலத்துப் போயொழிய, உள்ள மெல்லாம் கடல்போல விரிந்திருக்கப், பகைமை நீங்கி உலகத்தில் ஒற்றுமைகள் நிலைத் திருக்க உள்ளுவரேல் வள்ளுவரே துணையாய் நிற்பர்; இலவடுத்த கிளிபோல எதையோ நம்பி ஏமாந்து திரிகின்றார் பேதை மாந்தர் பெட்டகத்தே பெருநிதியம் நிறைந்தி ருந்தும் பேழையினைத் திறந்துணர மாட்டா திங்குத் தட்டெடுத்துத் திரிகின்றார்; தமது செல்வம் தரையகத்துப் புதையலெனக் கிடந்தும் தோண்டி தொட்டெடுத்துத் தாம்நுகர்ந்து, பிறருக் கீந்து தோளுயர்த்தி வாழாமல் மற்றோர் பின்னே கெட்டலைந்து திரிகின்றார்; இனிமேல் அந்தக் கீழ்மையெலாம் போயொழியும் குறள் உணர்ந்தால் நல்வாழ்வை அடைவதற்கு விழையும் மாந்தர் நடத்திவரும் பயணத்தில் தொடர்ந்து செல்லப் பல்வேறு வழியுண்டு; சான்றோர் செல்லும் பண்பட்ட ஓர்வழியுண் டிடப்பு றத்தே செல்வாரும் அதைவிடுத்து வலப்பு றத்தே செல்வாரும் காட்டுகிற வழிகள் உண்டு; பொல்லாத குறுக்குவழி ஒன்றும் உண்டு; பொய்யான இருட்டுவழி ஒன்றும் உண்டு. காரிருளில் வழிநடக்க விழைதல் வேண்டா; கதிரவனார் காட்டுகிற வழியே செல்க; பேரிருளிற் கொண்டுய்க்கும் வழிகள் வேண்டா; பெரும்புலவன் வள்ளுவன்சொல் வழியே செல்க; ஈரமிலாச் சுடுமணலில் செல்ல வேண்டா; இருபுறமும் பொழில்சூழும் வழியே செல்க; கூரறிவுக் கண்ணுடையார் விழியை மூடிக் குழிவீழப் பார்ப்பாரோ? கொடுமை யன்றோ? குறள் விழா, காரைக்குடி 25.1.1976 23 நல்ல குடும்பம் விருந்தோம்பும் வேளாண்மை வேட்கையுடன் நாளும் இருந்தோம்பி நிற்கும் இயல்புடைய பேருளமும், ஒவ்வொருவர் நெஞ்சத்தும் உற்ற குறிப்புணர்ந் தவ்வவர்க்கும் ஏன்றகடன் ஆற்றுஞ் செயற்றிறனும், குற்றம் பொறுக்கின்ற கொள்கைத் திறந்தாங்கி மற்றவரைப் போற்றி மதிக்கும் மனப்பண்பும், பெற்றவரைப் பேணிப் பெருமை தரநடக்கக் கற்றறிந்து தங்கடமை காக்கும் மகப்பேறும் கொண்டிலங்கும் நல்ல குடும்பந்தான் பல்கலைகள் கொண்ட கழகமென முன்னோர் குறித்துரைத்தார்; அக்கழகங் காக்கின்ற ஆற்றல் மிகக்கொண்ட தக்கஇணை வேந்தரெனத் தந்தையைத்தான் சொல்லிடலாம்; வீட்டின் அகத்திருந்து வேண்டும் பணிபுரிந் தூட்டி வளர்க்கின்ற ஒப்பில்லா அன்புளத்துத் தாயே துணைவேந்தர்; தாளாற்றி நாளெல்லாம் ஓயா துழைத்துவரும் உள்ளன்பு கொண்டிலங்கும் நாயகனும் நாயகியும் நல்லபே ராசிரியர் ஆயும் அறிவெல்லாம் அன்னவர்தாம் சேர்ப்பர்; சிறுகுறும்பு செய்யுஞ் சிறுமகா ரெல்லாம் அருகிருந்து கல்வி யறிவுபெறும் மாணவராம்; ஆதலினால் இல்வாழ்வை ஆர்ந்த பல்கலைகள் ஓதுங் கழகமென ஒப்பிட் டுரைத்தார்கள்; கொண்ட மனைக்கிழத்தி கூடும் அடிமைஎனக் கண்டபடி பேசியொரு கட்டுக் கடங்காமல் ஆங்காங்கே சுற்றி அலையும் மனத்தோடு தீங்குக்கே சென்று திரிகின்ற காளையரும், தற்கொண்டான் சொல்லுமொழி தாண்டி நடப்பதுதான் முற்கொண்ட கொள்கைஎன முற்போக்குக் காட்டிஅவன் கூறாமற் காவியுடை கொள்ளும் படியாக மாறாக வேநடக்கும் மங்கை வடிவினரும், பள்ளிக்குச் செல்லாமற் பாடம் பயிலாமற் சொல்லுக் கடங்காமற் சுற்றித் திரிபவராய்ச் செய்யாத செய்கைஎலாஞ் செய்தே மகிழ்பவராய்ப் பொய்யாக என்றும் புனைவதுவே தந்தொழிலாய்ப் பெற்றவர்தம் நெஞ்சம் பெருந்துயராற் புண்ணாகக் குற்றங்கள் செய்வதையே கொண்டொழுகும் பிள்ளைகளும் கூட்டாட்சி செய்யுங் குடும்பத்தைக் காணுங்காற் காட்டாட்சி செய்யுங் கடுவிலங்குக் கூட்டங்கள் சார்ந்துரையும் கண்காட்சிச் சாலைஎனச் சொல்வதன்றித் தேர்ந்துணர்ந்து வேறுவமை செப்ப இடமில்லை; ஆணுக்குப் பெண்ணடிமை அல்லளெனுங் கொள்கைதனைப் பேணிச் சமத்துவமே பெற்றொளிரும் இல்லறந்தான் இன்பம் உடைத்தாகி ஏற்றம் படைத்தொளிரும்; அன்பின் அடிப்படையில் ஆக்குவதே இல்வாழ்க்கை; பெற்றெடுத்த தாய்தந்தை பேர்காக்கும் மைந்தர்களைப் பெற்ற குடும்பந்தான் பேறுபெற்ற நற்குடும்பம்; கொண்டான் அறிவுநிலை கூடிவருஞ் செல்வநிலை கண்டே தகநடக்கும் காரிகையே நன்மனையாம்; நெஞ்சக் குறிப்புணர்ந்து நேரம் அறிந்துமனச் சஞ்சலத்தைப் போக்கிவரும் வஞ்சியரே நற்பெண்டிர்; தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காக்குஞ் சோர்விலாத் தோகையரே நற்றுணையாம்; பேரின்பம் உண்டென்று பேசிடுவர் கண்டவர்தாம் யாரென்றால் நானென்று யாரும் வருவதில்லை; செவ்வியநல் இல்வாழ்க்கை சீர்பெற் றிடநடந்தால் அவ்வின்பம் ஈங்கே அடைந்து நுகர்ந்திடலாம்; இல்லவள் மாண்பானால் இல்லதென்? நல்லாற்றின் இல்லறஞ் செல்லுங்கால் எல்லாமே வந்தெய்தும்; இல்லற மென்னும் இனியதோர் வாழ்க்கையினைப் பல்லறங்கள் கற்பிக்கும் பள்ளியெனச் சொல்லிடுவர்; *பன்னும் பொதுநலத்திற் பற்றொன்று மில்லாமல் தன்னந் தனியாய்த் தனக்கென்று வாழ்கின்ற காட்டு விலங்கேபோற் கண்மூடிக் கொள்கைகளை வேட்டுத் திரியாமல் வேண்டி யுதவிடவும், ஏனையோர் துன்பமோ இன்பமோ யாதெனினும் தானுமது பெற்றதுபோல் தன்னுள் நினைந்தன்பு கொண்டொழுக வேண்டுமெனுங் கொள்கை பயின்றிடவும், அண்டையில் வாழ்வோர்பால் அன்பைப் பெருகவிட்டு மெள்ளநம் உள்ளம் விரிவடையச் செய்திடவும் கள்ளந் தொலைத்துக் கனிவுளத்தைப் பெற்றிடவும், நன்றென்றுந் தீதென்றும் நாமே பகுத்துணர நின்றுரைக்கும் பள்ளி நிகரில்லா இல்லறமே; எத்துயரம் வந்தாலும் ஏற்று மனத்தகத்தில் அத்தனையுந் தாங்கும் அளப்பரிய வல்லமையும், உள்ளம் அலைந்துமிக ஓடிக் கலங்காமல் தெள்ளத் தெளியவைத்துச் சீர்செய்யும் சிந்தனையும், இன்றொன்று நாளையொன் றேற்ற வகைதெரிந் தொன்றொன்றாச் சொல்லி உயர்த்திவரும் அப்பள்ளி; தானென்ற தற்செருக்கைத் தள்ளித் தனக்காகத் தானென்ற பேராசை தன்னைத் தகர்த்தெறிந் தெல்லாரும் ஒன்றென்றே எண்ணுகிற ஒப்புரவைச் சொல்லாமற் சொல்லிச் சுடரேற்றும் நற்பள்ளி; பள்ளியெனும் இல்வாழ்வில் பங்குடையோர் இவ்வனைத்தும் உள்ளமுறக் கற்பதைத்தான் ஓதிவைத்தார் கற்பென்று; பாரில் அதைமாற்றிப் பாவையர்க்கு மட்டுமென்று கூறிப் பிரித்துரைத்தார் கொண்டவனுந் தப்பிவிட்டான், வீடில்லை பொன்னில்லை வேண்டும் பொருளில்லை தோடில்லை மற்றுந் துணியில்லை என்றாலும் நீங்காத பேரன்பு நெஞ்சில் நிறைந்திருந்தால் தாங்காத பேரின்பந் தானேவந் தெய்திவிடும்; *ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யானாலும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை எனவுரைத்த மூத்தோர் மொழிப்பொருளை முன்னிறுத்தி நாம்வாழின் பூத்துக் குலுங்கும் பொலிவு. இலக்கியப் பேரவை ஈரோடு 23.12.1967 24 குறளும் ஏசுவும் நிலைமண்டில ஆசிரியப்பா ஞாலம் உணர ஞான ஒளியால் சீலம் பெருகிடச் செப்பிய பெருமான், மக்கள் வாழ்வு மலர்ந்திட வேண்டி மிக்க துயரம் மேவிய அண்ணல், அன்பின் உருவம், அருள்பொழி விழிகள், துன்பந் துடைக்கத் தோன்றிய தூதர், பொன்முடி சூட்டப் புரியா மாக்கள் முண்முடி சூட்டி முடித்த ஞான்றும் எரிவாய் நரகம் எய்துவர் அவரென அவர்நிலைக் கிரங்கி ஆண்டவன் றன்பால் வேண்டி நின்றனர்: வினைபுரி இவர்தாம் அறியா தியற்றினர் அவர்பிழை பொறுப்பாய் என்றருள் பொழிந்தனர் ஏசு பெருமான்; இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்கெனச் சொன்ன குறளில் தோய்ந்துள பொருளை மாசிலா மைந்தர், மாநிலம் போற்றும் ஏசுவின் செயலில் கண்டனம் இனிதே. 25 எந்நாளோ அறத்தாலே வருவதுதான் இன்ப மென்றே ஆதிமகன் ஓதிவிட்டான்; வேறு வேறு திறத்தாலே வருவதுதான் இன்பம் போலத் தெரிந்தாலும் நிலையான இன்பம் அன்று; மறத்தாலே பெறத்தானே முயலு கின்ற மாந்தரையே காணுகின்றோம்; அதனை நீக்கும் குறிப்பேனுங் காணவிலை; கோவில் கட்டிக் கொலுவைக்குங் கடவுளர்க்குங் குறைவே யில்லை. வள்ளுவனை உலகினுக்குத் தந்து நின்று வான்புகழைத் தமிழ்நாடு பெற்ற தென்று அள்ளுதமிழ்ப் பாரதிதன் பாட்டிற் சொன்னான்; அதன்பொருளை ஓர்ந்துணர மாட்டா தாகி, வள்ளுவனை விற்றதுபோல் நினைந்து கொண்டு, வள்ளுவற்கும் நமக்குமினி உறவே இல்லை உள்ளுவதும் முறையிலைஎன் றெண்ணிப் போலும் ஒதுக்கியது தமிழ்மறையைத் தமிழர் நாடு. சாதியினால் சமயத்தாற் பிளவு பட்டுத் தனியுடைமைப் போக்கதனால் தாழ்வு பட்டு மோதுண்டு போகாமல் காத்து நிற்கும் முன்னேற்றக் கொள்கைஎனும் சமத்து வத்தை ஓதுகின்ற குறள்நூலைப் பெற்றி ருந்தும் ஒன்றேனும் பற்றாமல் ஒழுகு கின்றோம் தீதகன்று மாந்தரெலாம் வாழ வேண்டிச் செயல்வடிவம் தருதிருநாள் எந்த நாளோ? 26 வள்ளுவர் கோட்டம் அறுசீர் விருத்தம் மனத்தினுள் அழுக்கை நீக்கும் வாக்கினுள் தூய்மை யாக்கும் வினைத்திறன் அனைத்தும் நேர்மை விளைத்திடும் நன்மை சேர்க்கும் தினைத்துணைச் சொல்லால் பாட்டால் தீமைகள் அனைத்தும் மாய்க்கும் அனைத்துல குள்ள மாந்தர் அனைவரும் போற்றும் நன்னூல். ஒருசிறு பாடல் நெஞ்சில் ஒட்டிக்கொண் டாலே போதும் சிறுமைகள் அனைத்தும் தேய்த்துச் செம்மையை வாழ்விற் சேர்க்கும் *பருவரல் மிகுந்த வாழ்விற் பண்புடன் அமைதி கூட்டும் குறளென அதன்பேர் ஓதிக் கும்பிடும் உலக மெல்லாம். குறளெனும் அந்நூல் இங்கே குலவிடும் தமிழர்க் கெல்லாம் திருமறை யாகும் கண்டீர் தெளிநல் லுலகத் தார்க்கும் ஒருமறை யாகுங் கண்டீர் உயரிய அதனைத் தந்தோன் ஒருதமிழ் மகனே யாவன் உலகுக்குந் தலைவன் ஆவன். தமிழ்மொழிப் பெருமை யெல்லாம் தக்கவர் உணர வைத்தான் தமிழின மேன்மை யெல்லாம் தகவுறத் தெரிய வைத்தான் தமிழகப் பண்பா டெல்லாம் சரிவரத் தெளிய வைத்தான் தமிழரை உலக மெல்லாம் தாங்கியே புகழ வைத்தான். உள்ளுறு கோட்டம் நீக்கி உலகினில் நிமிர்ந்து வாழத் தெள்ளிய குறள்நூல் தந்த தெய்வமா கவிஞ னுக்கு வெள்ளிய கோட்ட மொன்று வியப்புற அமைக்க நெஞ்சில் உள்ளினர் ஒருவர் எங்கள் ஒப்பிலாக் கலைஞர் இங்கே. ஆய்ந்தொரு நிலத்தைத் தேடி அரிதினிற் பண்ப டுத்தித் தேர்ந்திடும் சிற்பம் வல்லார்த் தேடியிங் கழைத்து வந்து வாழ்ந்திட வண்ணக் கோட்டம் வகுத்தனர் கலைஞர் நெஞ்சில் வாய்ந்திடும் நன்றி யிங்கே வளர்ந்தது கோவி லாக. பாழ்பட்டுக் கிடக்கும் நெஞ்சம் பண்படக் குறளைத் தந்து வாழ்வுக்கு நெறிகள் ஓதும் வள்ளுவன் கோட்டம் காணப் பாழ்பட்டுக் கிடந்த ஏரிப் பகுதியைப் பண்ப டுத்தித் தாழ்வுற்ற தரையை ஏற்றித் தந்தனன் கோவி லாக. நூற்றினும் மேலார் சிற்ப நூலினில் வல்லார் கூடிச் சோற்றையும் மறந்து கண்கள் துயில்வதும் மறந்து தங்கள் ஆற்றலைப் படைத்துக் காட்ட அவருளி எழுப்பும் ஓசை காற்றிலே மிதந்து வந்து களிப்புற இசைத்த தங்கே. முற்றியே நெஞ்சில் தோன்றி முதிர்ந்திடும் கலைஞர் ஆசை, சிற்றுளி செதுக்கும் ஓசை சேர்ந்தெலாம் ஒன்றாக் கூடிப் பெற்றதங் குருவம் ஒன்று பெரும்புகழ்க் கோட்ட மாக நற்றமிழ் உள்ளம் வாழ்த்தி நாடெலாம் மகிழ்ந்த தன்று. தென்றிசை நோக்குங் கோட்டம் திராவிடர் கலையைக் காட்டும் இன்றும்அக் கலையில் வல்லார் இருப்பதைச் சிற்பங் காட்டும் மன்றினை முழுதுங் கண்டார் மனத்தினில் வியப்பைக் காட்டும் ஒன்றதற் குவமை சொல்வார் உளத்தினில் மயக்கங் காட்டும். தொழில்முறை சிறந்து காட்டும் தோரண வாயி லுள்ளே நுழைபவர் தமைம றப்பர் நுண்ணிய ராய்மி தப்பர் எழில்மிகு மைய மன்றில் ஏந்திடும் தூண்க ளில்லை அழகிய கலைகள் காட்டும் அரங்கமும் அங்கே உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் கூடும் நடுவரங் கதனின் பாங்கர்க் கற்றவர் அதங்கோட் டாசான் காப்பியர் உருவம் உண்டு; சொற்றிடும் குறளிற் கூறும் சொற்பொருள் உணர்த்தும் சிற்பம் பெற்றிடுந் திருத்தேர் ஒன்று பெருமிதத் தோடு நிற்கும். உலகெலாம் உணர்ந்த எங்கள் ஒப்பிலான் வடிவந் தாங்கும் கலையுலாம் திருத்தேர் அங்கே காணலாம் கண்டு வந்தால் உலவலாம் இன்ப வானில் உளமெலாம் படிந்த தீமை விலகலாம் குறள்வி தைத்தால் விளையலாம் தூய வாழ்வு. மூன்றுபால் உணர்த்தும் பாட்டை மூவண்ணக் கற்கள் கொண்டு தோன்றவே பொறித்து நூலின் தோற்றம்போல் விரித்து வைத்தே ஆன்றதோர் விருப்பால் காண அணுகிடும் மாந்தர் தம்மைக் கூன்தவிர் மனத்தர் ஆக்கும் குறள்மணி மாடம் உண்டு. தமிழக முதல்வ ராகத் தாம்அமர்ந் திருந்த வேளை இமைவிழி இமையா நோக்க எழுப்பிய கோட்டத் துள்ளே அமைவுறக் கலைஞர் பேரும் அழகுறப் பொறிக்கக் கண்டோம் சமைவுறுங் கோவில் கண்டோர் சரித்திரப் புகழ்தான் என்றார். இலையிதற் குவமை என்றே ஏத்தினர் கண்ட மாந்தர் கலைமலி கோவில் கண்ட காவலன் வாழ்க என்றார் புலையுளங் கொண்ட மாந்தர் புழுங்கினர் புகழைக் கேட்டுக் கலைஞரின் பெயர்பொ றித்த கல்லினை எடுத்து விட்டார். இந்திய நாட்டை ஆளும் இந்திரா காந்தி அம்மை நிந்தியார் எவரும் என்று நெருக்கடி நிலையை யாக்கிச் சிந்தியா நிலையில் நின்று செந்தமிழ் ஆட்சி மன்றை இந்திரா கலைத்து விட்டார் எடுபிடி சொல்லைக் கேட்டு. கள்ளவிழ் மாலை சூடும் கலைஞரே தமிழர் நாட்டில் வள்ளுவர் கோட்டங் கண்டார் வான்புகழ் அவரைச் சாரும் உள்ளினர் இவ்வா றாக ஒதுக்கினர் கலைஞர் பேரை எள்ளினர் பழிகள் கூறி இகழ்ந்தனர் அறியா மாந்தர். பேரெடு தம்பி என்பார் பெரியவர்; எழுதி வைத்த பேரெடுக் கின்றார் இந்தப் பேதையர்; வள்ளு வன்றன் பேரெடுத் தெறிந்து விட்டால் பெருமறை பிறர்க்கா சொந்தம்? ஆரெடுத் தெறிந்தா லென்ன அவர்புகழ் வளர்ந்தே தோன்றும். நாரெடுத் தெறிந்து விட்டால் நாண்மலர் மணமா போகும்? சேறெடுத் தெறிந்தால் வானிற் செங்கதிர் மறைந்தா போகும்? நீரெடுத் திறைத்தா லென்ன நிலமெலாங் கரைந்தா போகும்? பேரெடுத் தெறிந்து விட்டால் பேருண்மை மறைந்தா போகும்? பேதைமைச் செயலா? அன்றிப் பிள்ளைமைச் செயலா? தீயோர் போதனைச் செயலா? அன்றிப் புத்தியில் செயலா? என்று வேதனை கொண்டோம்; நாட்டில் வேற்றவர் ஆடு கின்றார்! காதைகள் திரும்பும் நாளைக் கடிதினிற் காண்பார் இங்கே. ஆட்சியில் இருப்போர் இந்த அழிசெயல் செய்து வந்தால் மாட்சிமை என்ற சொல்லுக் கொருசிறு மதிப்பும் இல்லை வீழ்ச்சியை விரைந்து பற்ற விதையினைத் தூவி விட்டார் ஆட்சியின் ஆண வத்தார் அழிதலே வரலாற் றுண்மை. கலைத்தொழில் தேர்ந்த நண்பன் கணபதி என்னும் பேரான் மலைத்திடும் வண்ணம் கண்டான் வள்ளுவர் கோட்டம் ஒன்று நிலைத்திடும் பேரும் பெற்றான் நெஞ்சினில் வஞ்சம் இல்லான் கலைத்திறன் வாழ்க என்பேன் கனிதமிழ் நிறைந்த நெஞ்சால் வைத்திய நாதச் சிற்பி மாதவம் செய்தான் என்று மொய்த்துல குரைக்கும் வண்ணம் மொய்ம்புற முனைந்த மைந்தன் வைத்துள உளியால் இந்த வையமே வியந்து போற்றக் கைத்திறன் காட்டின் நின்றான் கல்லையும் கனிய வைத்தே. கயல்விழிக் கண்ண கிக்குக் களங்கமில் அன்னம் வைத்து மயல்விழி மாத விக்கு மாமயில் ஒன்று வைத்து வியனுல கேத்தும் வண்ணம் வியப்புறும் சிற்பம் செய்தான் பயன்கொள நினையா நெஞ்சன் படைத்தனன் புகாரில் அன்றே. 15.4.1976 27 உய்யுமோ தமிழர் நாடு? உயர்தனிச் செம்மை வாய்ந்த ஒருமொழி தமிழாம் எங்கள் உயிர்மொழி நிலையை என்றன் உளத்தினில் நினைந்த வண்ணம் வியர்வையின் கொடுமை மாற வீதியில் உலவி வந்தேன் அயர்விலன் ஒருவன் என்முன் அணுகினன் அவனை நோக்கி. உனக்கென வேதம் உண்டோ? உண்டெனில் அதன்பேர் என்ன? எனக்கதைத் தெளியச் சொல்வாய் எனத்தமிழ் மகனைக் கேட்டேன்; மனத்துறும் வேதம் நான்கு வாய்த்துள; அவற்றின் பேரோ இனித்திடும் இருக்கு சாமம் எசுர்அதர் வணமே என்றான். மற்றொரு மகனை நோக்கி மாந்தனை உனக்கோர் வேதம் பெற்றதும் உண்டோ? சொல்வாய்! பேரதும் உரைப்பாய் என்றேன்; உற்றெனை உருத்து நோக்கி, உலகெலாம் உய்யும் மார்க்கம் தெற்றென உணர்த்தும் வேதம் திருக்குரான் எமதே என்றான். சிந்தனை முகத்தில் தேக்கிச் சென்றிடும் பொழுதில் என்முன் வந்திடும் ஒருவற் கண்டேன்; வணங்கிய அவனை நோக்கிச் செந்தமிழ் மகனே நின்றன் சீர்மறை சொல்வாய் என்றேன்; விந்தைகள் மிகுந்து தோன்றும் விவிலியம் எமதே என்றான். உருக்கிடும் தமிழிற் சொன்ன ஒருமறை அறியா ராகி *அருத்தியில் தழுவிக் கொண்ட அயலவர் மறையே சொன்னார்; திருக்குறள் எங்கள் வாழ்க்கைத் திருமறை என்று கூற ஒருத்தரை இங்குக் காணேன் உய்யுமோ தமிழர் நாடு? 20.7.1978 28 வள்ளுவர் உலகில் 1. கடவுள் உலகங்கள் ஏழென்பர்; இல்லை என்றே உரைப்பவர் இன்றுமுளர்; அதனால் இங்குக் கலகங்கள் பலநிகழும்; எனினும் ஈண்டுக் கண்முன்னே பலவுலகங் காண்ப துண்மை; கலையுலகம், திரையுலகம், எழுத்தில் வல்லார் காணுலகம், பேச்சுலகம், வணிக வேந்தர் உலவுகிற தொழிலுலகம், கற்ப னைக்குள் உதித்துவரும் உலகமெனப் பலவும் உண்டு. உள்ளமுறும் நினைவலைகள் வீசும் பாங்கில் உலகங்கள் பலதோன்றும்; அதுபோல் இங்கு வள்ளுவனார் ஓருலகம் படைத்துத் தந்தார்; வாய்மைநெறி பல கூறி எனையழைத்தார்; துள்ளிவரும் பெருமகிழ்வால் அவர்பின் சென்று தூயதொரு வாழ்வுதரும் உலகங் கண்டேன் தெள்ளுதமிழ்ப் புலவன்றன் உலகிற் கண்டு தெரிந்தவற்றுள் சிலவற்றை எடுத்துச் சொல்வேன். அப்புலவன் பேருலகில் கோவில் எங்கே அமைந்துளது? கண்டுகளி கொள்வோம் என்றே எப்புறமும் திரிந்தலைந்தும் காண வில்லை; எழிற்கோவில் நினைப்பவர்தம் மனமே என்று செப்புகிற ஒலிகேட்டேன்; வியந்து நின்றேன் செம்பொருளின் திருவுருவங் காண எண்ணி அப்பெரியன் படைத்தளித்த உலக மெங்கும் அலைந்தபினும் ஓருருவுங் காணவில்லை மாந்தனிவன் கற்பனையில் வடித்து வைத்த மாறுபடு சிலைகளினால் பகைமை கொண்டு தாந்தமது கடவுளெனச் சண்டையிட்டுத் தந்நலத்தை நினைவாரை அங்குக் காணேன் காந்துகிற வெகுளிஅவா அழுக்கா றற்றுக் கனிந்துவரும் மனத்துக்கண் மாச கற்றி ஏந்துகிற தொழிலனைத்தும் பிறருக் காக்கும் இறையுணர்வில் மிக்காரை அங்குக் கண்டேன். வாலறிவன், எண்குணத்தான், மலரின் மீது வாழுபவன், ஐந்தவித்தான், பகவன், தன்னைப் போலொருவர் இல்லாதான், அறத்தின் ஆழி, பொதுமையுளன், சாதியிலா அந்த ணன்முப் பாலுலக இறைவனிவன் உருவ மில்லான் பரிந்துருகும் உணர்வுக்குள் வாழ்வான் என்று நூலறிவன் உணர்ந்துரைத்த தன்மை கண்டேன் நூறுருவம் கடவுளுக்குக் காண வில்லை. ஆனைமுகம் ஆறுமுகம் அங்கே யில்லை ஐந்துமுகம் நான்குமுகம் அங்கே யில்லை. ஏனைமுகத் தெவ்வுருவும் காண வில்லை இறைவனிவன் எனக்காட்டும் சிலைக ளில்லை கூனையுறு பிறையில்லை தொப்பி யில்லை குணக்குன்றை அறைந்தெடுத்த சிலுவை யில்லை தானைகொளும் கொலைக்கருவி ஒன்று மில்லை தனியுலகம் அவ்வுலகம் என்றேன். 21.1.1979 திருக்குறள் பேரவை, நாமக்கல் 29 வள்ளுவர் உலகில்... 2. குடும்ப வாழ்வு விற்போலும் விழியுடையார் ஆண்மை சேர்க்கும் விழைவுடையார் காதலராய் உலவக் கண்டேன் பொற்பாரும் மெய்க்காதல் விழைவ ரன்றிப் புனைந்துவரும் *மெய்காதல் கருத மாட்டார் கற்பாளர் கைகளினால் தொடவும் மாட்டார் கண்களினால் காதல்மொழி பேசி நிற்பார் மற்போர்கள் நிகழ்த்துகிற மறவரைப் போல் மண்தரையில் புரள்கின்ற நிலையும் வேண்டார். மலர்ந்துவரும் மலரைவிட மெல்லி தென்று வள்ளுவன்சொல் காமத்தைக் கசக்கி நைத்தே உலர்ந்துவிடச் செய்ததன்பின் நீரை ஊற்றி ஊறவைத்துக் காய்ச்சியதைப் பிழிந்தெ டுத்துக் கலந்துவரும் பிறநாட்டுப் பண்பும் சேர்த்துக் கலையென்னும் பெயர்கூறிப் படங்க ளாக்கி வளர்ந்துவரும் கலைத்தொழில்கள் அங்கே யில்லை வாழ்வுதரும் கலைத்தொழில்கள் அங்குக் கண்டேன். உகப்புடனே இல்லறத்தில் ஈடு பட்டோர் ஒருவனென ஒருத்தியென வாழ்தல் கண்டேன்; அகப்பொருளைப் புறப்பொருளாச் செய்ய மாட்டார் அதன்செவ்வி நன்குணர்ந்த அந்த வீட்டார்; தகப்பனென அன்னைஎனப் பெயர்கள் கொண்டு சரிநிகராய் ஒருமனமாய் வாழ்தல் கண்டேன்; மகப்பெறுதல் ஒன்றுமட்டும் குறியாக் கொள்ளார் மாண்புடைய இல்வாழ்வுப் பயனே கொள்வார். பெற்றுவிட்டோம் பிள்ளைகளை, யாது செய்வோம்? பேணுதற்கும் வகையற்றோம் என்று நெஞ்சில் உற்றதுயர் தாங்காமல் புலம்ப வில்லை ஓரிரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாலே; வெற்றுடலின் கவர்ச்சிகளில் மயங்க வில்லை விளைந்துவரும் உளப்பண்பை நயந்து வாழ்ந்தார்; கற்றவரை உருவாக்க வேண்டு மென்ற கடமையினால் நாட்டுக்கும் நன்மை செய்தார். 30 வள்ளுவர் உலகில்... 3. மக்கள் பெற்றார்க்குப் புகழ்சேர்க்கும் மக்கள் கண்டேன் பெரியோர்சொற் படிநடக்கும் மக்கள் கண்டேன் கற்றாரை ஆசானை மதித்தல் கண்டேன் கல்வியிலே நெஞ்சூன்றிப் பயிலக் கண்டேன் வெற்றார வாரங்கள் முழங்கக் காணேன் விளைகின்ற நற்பயிரை முளையிற் கண்டேன் சற்றேனும் களியாட்டம் காண வில்லை தகுமக்கள் வள்ளுவரின் உலகிற் கண்டேன். முகம்மறைக்கப் பிடர்மறைக்கத் தொங்கு கின்ற முடிவளர்த்துத் திரிகின்ற மக்கள் இல்லை; நகம்மறைக்கத் தெருத்துடைக்கத் துவளும் பாங்கில் நாகரிகக் காற்சட்டை யணிவா ரில்லை: நகையெழுப்பிக் குரலெழுப்பித் தெருவின் நாப்பண் நங்கையர்க்குக் கிலியெழுப்பிச் செல்வா ரில்லை; தொகைபெருக்கிச் செலவழித்துத் தொலைத்து விட்டுத் துயர்பெருக்கிக் கலையழித்துத் திரிவா ரில்லை. பழிபிறங்காப் பண்புபெற முனைவா ருண்டு பண்பழித்துப் பழிபிறங்க நினைவா ரில்லை; விழியுறங்கும் வேளையிலும் பயில்வா ருண்டு விழித்துவிட்டு நடுப்பகலில் துயில்வா ரில்லை; பழிதவிர்ந்த கலையறிவைத் தெரிவா ருண்டு பகுத்தறிவைப் பாழ்படுத்தித் திரிவா ரில்லை; மொழிவிளங்கும் நூலறிவைக் கற்பா ருண்டு மூளைதனைப் பிறமொழிக்கு விற்பா ரில்லை. 31 வள்ளுவர் உலகில்... 4. சுற்றத்தார் இன்பத்தில் துய்க்குங்கால் சுற்றி ஈண்டி இனிதுமனம் மகிழ்கின்ற சுற்றம் உண்டு; துன்பத்தில் துவள்கின்ற போதும் வந்து சூழ்ந்திருந்து துணைசெய்யும் சுற்றம் உண்டு; பொன்பெற்று வளம்பெற்று வாழும் போது *புகல்தந்து தன்சுற்றம் தழுவி நின்று தன்மட்டில் வாழாது பிறரும் வாழத் தாம்பெற்ற இன்பத்தைப் பகிர்வா ருண்டு. எமதுநிலை கேளீரென் றிசைக்கும் முன்னே எழுந்தோடி வந்துதவும் கேளி ராகி, எமதுயிரில் எழுமுணர்வில் கிளைத்துத் தோன்றி இடைமுறியா அன்புடைய கிளைக ளாகி, அமுதெனினும் மருந்தெனினும் பகிர்ந்து வாழ ஆவலுறும் பங்காளி யாகி, நெஞ்சில் கமழுறவு செழித்திருக்க இனிது பேசிக் களிப்பூட்டும் சுற்றத்தார் அங்கே உண்டு. 32 வள்ளுவர் உலகில்... 5. ஏடுகள் படித்தவுடன் பள்ளியறை நினைவைத் தூண்டும் பாழ்பட்ட புனைகதைகள், விரித்துக் கையில் எடுத்தவுடன் நெஞ்சத்தில் கனலை மூட்டும் இழிவுநிலை ஓவியங்கள், திரைப் படத்தில் நடித்துவரும் நங்கையர்தக் கவர்ச்சி காட்ட நழுவவிடும் ஆடையொடு நிமிர்ந்து நிற்கும் தடித்தவர்தம் நிழற்படங்கள் இவற்றை எல்லாம் தாங்கிவரும் ஏடுகளை அங்குக் காணேன். சிற்றின்பச் சுவைசேர்க்கும் வண்ண வண்ணச் சிவப்புவிளக் கேடுகளும் காண வில்லை; முற்றவுணர் மதியுடையார் வரைந்து வைத்து முத்தமிழின் சுவைசேர்க்கும் ஏடு கண்டேன்; கற்றவர்தம் உள்ளத்தை நிமிர்த்துக் காட்டும் காப்பியங்கள் தாங்கியுள ஏடு கண்டேன்; நற்றமிழர் உயிர்விடினும் மானம் மட்டும் நழுவாமற் காக்கின்ற ஏடு கண்டேன். 33 வள்ளுவர் உலகில்... 6. நண்பர்கள் பொய்யாத மொழியான்றன் உலகில் நண்பர் புடைசூழ நான்வந்தேன்; அவர்தம் கேண்மை *எய்யாமல் வளர்மதிபோல் வளரக் கண்டேன் எனதுதமிழ் நூல்நயம்போல் இனிக்கக் கண்டேன்; மெய்யாக அகம்நகவே பழகி நிற்பார்; மேலொருகால் இடுக்கண்வரின் உடுக்கை காக்கும் கையாக வந்துதவிக் காத்து நிற்பார்; கள்ளமிலா உணர்ச்சியினால் கிழமை கொள்வார். குடிபிறந்த ஒழுக்கத்தார், பழியை அஞ்சும் கொள்கையினார், மனத்துக்கண் மாசு தீர்ந்தார்; இடித்துரைத்துத் திருத்திவரும் இயல்பு கொண்டார்; என்றேனும் நோதக்க செய்து விட்டால் வெடித்தெழுந்து சினங்கொள்ளார்; உரிமை தன்னால் விளைவறியாப் பேதமையால் நிகழ்ந்த தென்று துடைத்தெறியும் நண்பரவர்; அவர்தம் நட்பால் தோளெல்லாம் பூரித்து நிமிர்ந்து நின்றேன். போர்முனையில் வாரிவிடும் குதிரை போலப் புகுந்திடர்கள் சூழுங்கால் ஓடி விட்டுச் சேர்பொருள்கள் மிகுபொழுதில் குழைந்து வந்து சிரித்துவிளை யாடிமகிழ் நண்ப ரில்லை; தார்புனையும் வில்வணக்கம் போல்வ ணங்கும் தந்திரஞ்சேர் சொல்வணக்கம் செய்வா ரில்லை; நேர்மொழிகள் பலபேசி வினைகள் வேறு நிகழ்த்துகிற நட்பினரும் அங்கே யில்லை. நகையேயும் பகைவேண்டார்; புலமை தோய்ந்த நயமிக்க சொல்லுழவர் பகைமை வேண்டார்; பகைமையையும் நட்பாக்கிப் பழகு கின்ற பண்புடையார்; நயவஞ்சம் சிறிது மில்லார்; மிகைசெய்து தம்மூரார் பகைமை கொள்ளார்; மேலோரைப் பழித்துரையார்; பிறன்பொ ருட்குத் தகுதியிலா ஆசை கொளார்; நாடு காக்கும் தன்மானப் பெருமையன்றிச் சிறுமை யில்லார். 34 வள்ளுவர் உலகில்... 7. பகைவர்கள் தன்மான உணர்வுக்குத் தீங்கு நேரின் தளராமல் இளைதாக முள்ம ரத்தை முன்மாளச் செய்திடவே முனைந்து நிற்பர்; முற்றியபின் களைந்தெறிய முயல்வ துண்டோ? பின்மாறும் கேள்போலப் பகைவ ரில்லை; பிழையாத வாள்போலும் பகைவ ருண்டு; மின்கோல வாழ்வுதனை நச்சி நின்று மேவாரைச் சார்ந்தொழுகும் கயவ ரில்லை. நேருக்கு நேர்நிற்கும் பகைவ ருண்டு நிழலுக்குள் பதுங்கிவரும் பகைவ ரில்லை; போருக்குள் விலகாத பகைவ ருண்டு புன்மைக்குள் வீழ்கின்ற பகைவ ரில்லை; மாருக்குள் வேல்தாங்கும் பகைவ ருண்டு மானத்தை விலைபேசும் பகைவ ரில்லை; வீறுக்கு வீறுசெயும் பகைவ ருண்டு விழலுக்கு நிகரான பகைவ ரில்லை. 35 வாழ்க அவ்வுலகம்! மொழிகாக்கப் போராட்டம் அங்கே யில்லை முத்தமிழும் செழித்தோங்கி வளர்வ தாலே; அழிதீக்குள் எவ்வுடலும் கருக வில்லை அயல்மொழியைத் திணிப்பவர்கள் இன்மை யாலே; பழிதூற்றும் வெங்கொடுமை அங்கே யில்லை பண்பாடு கற்றவர்கள் வாழ்வ தாலே; அழிவாக்கி உயிர்போக்கும் சிறைகள் இல்லை அயலாட்சி அவ்வுலகில் இன்மை யாலே. உள்ளுணர்வால் உணர்கின்ற கடவுள் வாழும், உயர்காதல் இல்லறமும் திகழ்ந்து காணும், தெள்ளுதமிழ் ஆட்சிபெற்றுச் சிறந்தி ருக்கும், தீதகல மக்களிடம் ஒழுக்கந் தோன்றும், உள்ளமதில் பழகுகிற நட்பி ருக்கும், உட்பகையைத் தவிர்சுற்றம் சூழ்ந்தி ருக்கும் வள்ளுவனார் நல்லுலகம் வாழ்க என்போம் வளர்கஅது தொடர்என வணங்கி நிற்போம். 36 வள்ளுவம் பகைமைக்கு மருந்து பல்பிணியுங் குடிகொண்ட குமுகா யத்தைப் பற்றியுள நோய்நாடி முதலும் நாடி நல்வகையில் அதுதணிக்கும் வழியும் நாடி நலம்வாய்க்க மருந்தளிக்கும் வள்ளு வம்போற் சொல்வகையில் ஒன்றில்லை; எரியுஞ் செந்தீ தோய்வன்ன இன்னாத செயினும் நின்பாற் புல்லவரும் ஒருவன்பாற் சினவேல் என்று புகல்மருந்து பகைமைக்குக் கைம்ம ருந்து. கொன்றன்ன கொடுமைகளை ஒருவன் செய்தால் கொடுஞ்சினமும் பகைமையுந்தான் அவன்மேற் றோன்றும்; என்றுமிது மாந்தனுளத் தியற்கை யாகும்; இப்பிணிதான் தீரஒரு மருந்தும் உண்டோ? நன்றுண்டு; முன்னரவன் உனக்குச் செய்த நலமொன்றை நினைத்துக்கொள்! பகைமை யாவும் அன்றொழியும் எனவுரைத்த வள்ளு வந்தான் அருமருந்து; கூட்டுக்குள் அடை மருந்து. கொடுமைகளைச் செய்தார்க்குக் கொடுமை செய்தால் கொழுந்துவிடும் பகைமைத்தீ; அதனால் என்றும் கெடுதல்பல பரவிவரும்; அழிவுந் தோன்றும்; கேடறுக்கும் வள்ளுவத்தில் அதனை நீக்கி விடுமருந்து சொலக்கண்டோம்; செய்தார் நாண விளைத்துவிடு நன்மைகளை; பகைமை மாறும்; நெடுகஅது நலமாகும் எனும ருந்து நெஞ்சுக்குத் தேன்கலந்து தரும ருந்து. 37 நமது கடமை பொய்யகத்தைப் பற்றாமல் தூய ஐந்து புலன்அழுக்குப் படராமல் மாசு நீக்கிக் கையகத்துக் கனியிருக்க அதைவி டுத்துக் காயதனைக் கவராமல் மெய்ம்மை கூறிச் செய்வினைக்குள் தீமைகளைப் புகவி டாமல் செம்மையுற ஒழுக்கநெறி விளக்கிக் காட்டி வையகத்துள் வாழ்வாங்கு மாந்தர் வாழ வழிவகுக்கும் திருமறையைத் தந்தான் வாழ்க. உலகவர லாறுரைக்கும் சுவடிக் குள்ளே ஓரேடு தமிழினத்தின் வரலா றாகச் சொலமறைநூல் தந்தானை, பண்பா டெல்லாம் தொகுத்தெடுத்து மொழிந்தானை, எங்கள் செந்நாப் புலவனெனும் பெயரானை, சிறிய பாட்டால் புதுமையுற உலகினையே அளந்து காட்டிக் குலவுபுகழ் கொண்டானை வணங்கி நின்று கொள்கைவழி நடப்பதுநம் கடமை யாகும். ஞாயிறும் திங்களும் 1 வேலைச் சுழற்றுங்கள்! வேதனையை நீக்குங்கள்!! நாட்டில் இயங்கிவரும் நாலுவகைக் கட்சிக்கும் ஆட்டுந் தலைவருண் டாடிவருந் தொண்டருண்டு; தன்மானக் கட்சிக்குந் தக்க தலைவருண்டு; அன்பான தொண்டர் அளவில்லா வீரருண்டு; தொண்டர் தலைவரெனச் சொல்லளவில் நின்றாலும் அண்டும் ஒருகுடும்பம் ஆனதுதான் நம்கழகம்; ஐயா எனவுரைத்தும் அண்ணா என அழைத்தும் மெய்யான பற்றுளத்தால் மேம்பட்டு நின்றவர் நாம்; அண்ணா என அழைப்போம் அன்புள்ள தம்பீஎன் றண்ணன் நமையழைப்பான்; அவ்வண்ணம் நாமிருந்தோம்; நூலொன்றால் கோத்தமைத்த நூறு வகைமணிகள் போலொன்றி நல்லுறவு பூண்டு வளர்ந்தவர் நாம்; ஒன்றாக்கி நின்ற உறவுநூல் எப்படியோ நன்றாக்குந் தோழர்க்குள் நாலாறு கூறுபட்டுக் கட்டவிழ்ந்து வெவ்வேறாய்க் காணும் மணிபோல ஒட்டுறவே யின்றி உதிர்ந்துகிடக் கின்றோம்; உறவு முறைகாண உள்ளவன்நான் வேறு வரவு முறைகாண வந்து புகவில்லை; ஆதலினால் நம்கழகம் அல்லற் படும்போது வேதனை கொள்கின்றேன்; மீண்டும் உறவுமுறை காணத் துடிக்கின்றேன்; காளையரே முன்போலப் பேணிச் செயல்செய்யப் பேருள்ளங் கொள்ளீரோ? நாட்டை நினையுங்கள்! நாடாண்ட நம்மினத்தின் பாட்டை நினையுங்கள் பைந்தமிழை எண்ணுங்கள்! வீட்டின் தனிநலத்தைச் சற்றே விலக்கிவைத்து நாட்டின் பொதுநலத்தை நாடுங்கள்! நாடிவிடின் நானென்ற சொல்மறையும் நாமென்ற சொல்மலரும்; ஏனென்றால் தொண்டுக் கிலக்கணம் ஈதேதான்; அண்ணன் திருநாளில் அத்தலைவன் சொன்னவற்றை எண்ணி நடந்திடவே இன்றும்மை வேண்டுகிறேன்; நேற்றை வரலாற்றை நெஞ்சில் நிறுத்துங்கள்! ஏற்றை நிகர்வலியீர் இன்று நடப்பதையும் சிந்தித் தெதிர்நிறுத்திச் சீர்தூக்கி நோக்குங்கள்! வந்த இடரெல்லாம் வாயடங்கிப் போயொழியும்; நாளை எதிர்காலம் நன்றாக வேண்டுமென்றே காளையருக் கிந்தக் கருத்தை மொழிகின்றேன்; என்னைத் தவறாக எண்ணி எடைபோட்டுப் பின்னக் கணக்கைப் பிழையாகப் போடாதீர்! கூடாரங் கூடார மாகக் குடிபுகுந்து சூடாத பூக்கெய்து சூடிப் பழிசுமந்து மானந் தனையிழந்து மற்றவர்தம் தாள்பிடித்துக் கூனல் மனத்தோனாய்க் கொள்கையை விற்றதிலை; நேற்றொன்று கூறி நிலைநாட்டி இன்றதனை மாற்றி யுரைக்கும் மதிசிறிதும் பெற்றதிலை; அன்றுநான் சொன்னதையே இன்றும் மொழிகின்றேன் என்றுமதே சொல்வேன் இனிமேலா மாறிடுவேன்? ஏற்றுங் கொடிதான் இருவண்ணம் என்னெஞ்சில் ஏற்றும் எழில்வண்ணம் என்றும் ஒருவண்ணம்; கொச்சை மொழிபேசிக் கூட்டம் மிகச்சேர்த்துப் பச்சைப் புளுகால் பலபேரை ஏமாற்றிக் கச்சேந்தும் மாதர் கலவிக் கதைகூறிப் பச்சோந்தி போலப் பலவண்ணங் காட்டேன் நான்; மெச்சும் மொழிபேசி மேன்மைக் கருத்துரைத் தச்சம் சிறிதுமின்றி அல்லல் எதுவரினும் துச்சம் எனமதித்துத் தொண்டுசெயத் தன்மானக் கச்சைகட்டி நிற்கும் கடப்பா டுடையவன்நான்; ஈரோட்டு வேந்தர் எடுத்த இனவெழுச்சிப் போராட்டப் பாசறைக்குட் போய்ப்புகுந்த நாள்முதலே நீர்க்கோல வாழ்வில் நெடிதே துயருறினும் போர்க்கோலம் மாறவிலை புத்திடு மாறவில்லை; கோட்டுக்குள் கோடு குதிக்கும் கவியாகி நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சங் கொண்டதிலை; கேட்டுக்குக் கேடு கிளர்ந்தெழுந்து தாக்கிடினும் நாட்டை யுருவாக்க நாளும் நினைப்பவன் நான்; பாடென்ன பட்டாலும் பண்பாட்டை எந்நாளும் பாடுபட்டுக் காக்கப் பழகி நடப்பவன்நான்; சங்கமெனுந் தோட்டத்தில் சாற்றுச் சுவைமிகுந்து தொங்குங் கவிப்பழங்கள் துய்த்துப் பழக்கமுண்டு யாப்பமைந்த பாடல் இயற்றித் தருவதற்குக் கோப்பைப் பழங்கள் குடித்துப் பழகவில்லை; சாதிச் சழக்ககலச் சாத்திரத்துச் சூழ்ச்சிகளை மோதித் தகர்த்தெறிய முன்னேற்றம் பெற்றிலங்கக் கட்டாயம் வேண்டும் கலப்புமணம் என்றதுண்டு தட்டாமல் அவ்வாறே சாதி தனைத்தொலைத்தேன்; சாதிக் கலப்பைத்தான் சாற்றி நடந்ததன்றி ஓதும் மொழிக்கலப்பை ஓர்நாளும் சொன்னதிலை; செந்தமிழில் வந்தமொழி சேர்ந்தால் இனிக்குமெனச் சந்தைமொழி பேசும் சழக்கனென ஆகவில்லை; பாட்டுத் தொழிலுடையேன் பண்பாட்டுச் செந்தமிழை நாட்டுந் தொழிலுடையேன் நாட்டை யுருவாக்க வேட்டுத் தொழில்புரிவேன் வேட்டுவைத்து நானறியேன் வீட்டை நினைந்தறியேன் வெந்துயரம் உற்றாலும் ஒன்றே வழியென்பேன் ஒன்றே மொழியென்பேன் நன்றே நினைந்து நடக்கின்றேன்; ஆதலினால் ஓங்கும் விளம்பரங்கள், உற்ற துணைபுரிந்து தாங்குந் திருக்கைகள், தாங்காத் துயரகற்றிக் காக்குந் திருவுளங்கள் கண்டதிலை இன்றுவரை; ஏக்கம் அதனாலே எள்ளளவும் கொண்டதிலை; நாட்டின் நலம்நினைந்து நல்ல கனவுலகில் பாட்டுப் பறவையெனப் பாடி வருபவனை வீட்டுத் துயர்வந்தா வீழ்த்திவிடும்? வீழ்ந்துவிடின் பேட்டுத் தனமாகும் பிள்ளைச் செயலாகும்; ஆதலினால் நம்கழகம் அல்லற் படும்போது வேதனை கொள்கின்றேன் வேதனையை நீக்கிடுவீர்! காலைக் கதிரவனைக் கார்முகில் சூழ்ந்துளது வேலைத் திறமையுடன் வீசுங்கள்! முன்போலப் பொங்கும் இனவுணர்ச்சி பொங்கட்டும்! அவ்வுணர்ச்சி எங்கும் பரவி எழுந்துபுயல் ஆகட்டும்! வீசுபுயல் வேகத்தால் மேகங்கள் ஓடட்டும்! தேசுபெறும் செங்கதிரோன் செய்யஒளி வீசட்டும்! வீறுநடை போடுங்கள் வெற்றிமலர் சூடுங்கள்! கூறுகிறேன் என்கை குவித்து. தமிழ்நாடு அரசு அண்ணா விழா, கலைவாணர் அரங்கம், சென்னை. 15.9.1977 2 தமிழினத்தின் தனித்தலைவர் தொண்டொன்றே வாழ்வின் தொழிலாக நாளெல்லாம் கொண்டிலங்கும் நம்பெரியார் கோலம் வடித்தெடுத்தே வண்டலுக்குப் பேர்பெற்று வாழ்வுதரும் தஞ்சைமண்ணில் அன்றெடுத்தார் ஓர்சிலைதான் அந்நாள் கவியரங்கில் நாட்டுக் குழைத்துவரும் நம்மினத்துக் காவலர்க்குப் பாட்டெழுத வேண்டிப் பணித்திருந்தார் வீரமணி; நன்றிக் கடன் செலுத்த நல்லதொரு வாய்ப்பிதுவாம் என்றுநான் எண்ணி இசைவும் அளித்துவிட்டேன்; சூழ்நிலையால் பாமாலை சூட்ட இயலாமல் ஆழ்துயரம் கவ்வியதால் அன்றுமுதல் நொந்திருந்தேன்; அந்த மனத்துயரம் ஆறும் படியாக இந்தநிலை வாய்த்ததென எண்ணி மகிழ்கின்றேன்; அன்றுதஞ்சை மண்ணில் அவர்க்குச் சிலையெடுத்தார் இன்றுதிண்டுக் கல்லில் எடுத்தார் சிலையொன்று; பாமலர்கள் சூட்டப் பணித்தமையால் இவ்வரங்கில் நாமகிழ நெஞ்சம் நனிமகிழப் பாடுகின்றேன் என்தந்தை தோன்றிய ஊர் இவ்வூரே; அவ்வூரில் முன்வந்த எம்மினத்தின் மூத்ததிருத் தந்தையை நான் பாடுகின்ற பேறடைந்தேன்; பாவலர்கள் சொன்மலர்ள் சூடுகின்ற தாள்மலரைச் சூடுகிறேன் என்தலையில்; பற்றிப் படர்ந்திருந்து பாழ்செய்யும் ஆரியத்தைச் சுற்றித் தொலைப்பதற்குச் சூறா வளியாகி வேரெல்லாம் பேர்த்தெறிய வேகப் புயலாகி ஊரெல்லாம் நாடெல்லாம் ஓடி வரும்நாளில் ஆய்ந்துணர மாட்டா தறியாமைப் பேரிருளில் தோய்ந்து கிடந்தோர் தொடுத்தெறிந்த கல்லெல்லாம் சேர்ந்து திரண்டு சிலையாக வந்தின்று நேர்ந்திங்கு நிற்பதுபோல் நெஞ்சம் நினைக்கிறது; கல்லுக்கும் சொல்லுக்கும் காட்டும் எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் அஞ்சாது தொண்டுசெயும் அந்நாளில் ஆரியரின் கால்வருடும் அன்பர் திருக்கூட்டம் சீறிவரும் நாகமெனச் சேர்ந்து பெரியார்மேல் வீசி எறிந்தபொருள் வீசைப் பொருளாகிக் காசு பணமாகக் காண்கின்றேன் இந்நாளில்; பேராசைக் காரர் பெரியார் எனச்சொல்ல ஓராசை என்மனத்தே ஓடிச் சுழல்கிறது; தம்வயது தொண்ணூற்றைத் தாண்டிவிட்ட பின்புமவர் தம்வயது நீண்டுவரத் தாம்ஆசை கொள்கின்றார்; ஏனிந்த ஆசைஎனில் இன்னும்பல் முன்னேற்றம் நானிங்குச் செய்வதற்கு நாடுகின்றேன் என்கின்றார்; நம்மினத்தை ஈடேற்ற நாடுகின்ற ஆசை எனில் எம்முயிர்க்கு வைத்தநாள் எல்லாம் அவர்க்கீவோம் பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு நல்லாண்டு பெற்றிலங்க நாமெல்லாம் வாழ்த்திடுவோம்; தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயலென்ற முன்மொழியால் தாம்பெற்ற தி.மு.க. தாயகத்துப் பேரவையில் ஓங்குற்று மேன்மைபெற உண்டாக்கி விட்டமையால் தந்தை செயும்பணியைத் தாழ்வின்றிச் செய்துவிட்டார் அந்தப் பெருமகனை அய்யாவை வாழ்த்திடுவோம் தேயத்தில் கட்சிபல சேர்ந்து வளர்வதுண்டு நேயம் வளர்க்கின்ற நேர்த்தியைநாம் பார்த்ததுண்டா? ஐயா எனஉறவு சொல்லி அழைப்பதற்கு மெய்யாக ஓர்தலைவர் மேதினியிற் கண்டதுண்டா? அண்ணா அண்ணாவென் றழைக்கின்ற அன்புமொழி எந்நாளில் எக்கட்சி எங்கே உரைத்ததுண்டு? வீட்டுக் குடும்பம்போல் வேண்டிப் பழகுகின்ற நாட்டுக் குடும்பமென நம்கழகம் வாழ்வதற்குக் கற்பித்த நம்ஆசான் காட்டும் நெறிநடக்க முற்பட்டு நின்றால்நாம் முன்னேற்றம் பெற்றிடுவோம்; முன்னேற்றம் நாம்பெற்றால் மூத்திருக்கும் இக்கிழவர் இந்நூற்றைத் தாண்டி இனிதிருந்து வாழ்ந்திடுவார்; தொண்ணூறு தாண்டி விடின் தொண்டுகிழம் என்றுரைப்பார் தொண்ணூறு தாண்டிடினும் தொண்டுக் கிழவரிவர்; இவ்வுலகை மாயமென ஏய்க்கும் மதச்சழக்கை வெவ்வுரையால் சுட்டெரிக்கும் வெந்தழல்தான் நம்பெரியார்; எம்மதமும் அண்டா நெருப்பிவர்தாம் என்றாலும் அம்மா மதத்தலைவர் அண்டும் மதித்தலைவர் திட்டப்படும் புலவர் சிந்தையது நோவாமல் ஒட்டிப் பழகும் உரிமைத் தலைவரிவர்; வாளெடுப்போம் நம்பகையை வாட்டிடுவோம் என்றுபல நாளெடுத்துக் கூறிடினும் நம்பகையால் வந்தவர்க்குக் கேடொன்றும் சூழாக் கிழவரிவர்; நெஞ்சத்தில் சூடொன்றப் பேசிடினும் தோழமைக்குத் தந்தையிவர்; வன்முறைகள் நாடா வலியரிவர்; தம் கருத்தைச் சொன்முறையால் நற்புரட்சி தோற்றுவித்த வீரரிவர்; பார்போற்றும் வண்ணம் பகுத்தறிவுக் கல்லூரிச் சீர்போற்றி நின்றிலங்கச் செய்யும் முதல்வரிவர்; தென்னாட்டை மீட்கத் திறல்காட்டி நம்பகைவர் *வெந்காட்டி ஓடச்செய் வெண்தாடி வேந்தரிவர்; இந்தி எனும்பெயரால் இங்குவரும் ஆதிக்கம் முந்தித் தொலைத்துவிட மூட்டும் பெருநெருப்பு; தங்கமுடி யாமல் ததும்பிவரும் சிந்தனைகள் பொங்கி வழிகின்ற புத்தறிவுப் பேருற்று; சாதி சமயங்கள் சாத்திரங்கள் என்றுபல ஓதும் மடமை உடைக்கும் வெடிமருந்து; நல்ல குடியரசும் நாடும் விடுதலையும் வெல்லும் படிதந்த வீரத் தலைவரிவர்; உய்வ்வண்ணம் ஆய்ந்தறிந் தோய்வே அறியாமல் செய்யரிய செய்து பெரியார் எனவானார்; நாட்டை அடிமைக்குள் நட்டு மிடிமைக்குள் வாட்டி நமையாண்ட வஞ்சகத்து வெள்ளையரை ஓட்டுதற்குப் பாடுபட்ட ஓரியக்கம் பேரியக்கம் காட்டும் நெறிநின்று கடுஞ்சிறையுட் புக்கதெலாம் நாடறியும், அந்நாள் நலிவுற்ற ஓரினத்தைப் பீடுபெறச் செயவதற்குப் பிற்போக்கு வைக்கத்தில் காட்டிய அத்துணிவைக் கண்டவர்கள் வீரரென ஏட்டில் எழுதி எடுத்துப் புகழ்ந்தார்கள்; நாட்டிற் குழைத்தஇவர் நம்மினத்தின் மேன்மைக்குக் கேட்டார் சிலவுரிமை; கேட்டும் மறுத்ததனால் காஞ்சிபுர மாநாட்டில் கண்சிவக்கப் பேசிவிட்டு வாஞ்சைகொளும் நம்பெரியார் வந்தார் வெளியேறி; எங்கள் இனத்துரிமை ஏற்றம் பெறவந்த சிங்கம் நிகர்தலைவர் சீர்மைமிகு காஞ்சியிற்றான், ஏற்றமிகும் அண்ணா இனப்போர்ப் படைத்தலைமை ஏற்கத் தகுதியுளார் என்று தெரிந்தெடுத்தார்; நாடு பிரிவதுதான் நன்மை பயக்குமென நாடி முடிவெடுத்தார் நல்லாரூர் தன்னில் பிரிவினைக்கு வித்திட்ட பேர்பெற்ற அவ்வூரில் உரிமைக் குரல் தந்(து)- உறவுக்குக் கைதந்து தன்னாட்சி நாடுந் தலைமகனை, இந்தியத்தின் முன்னாட்சி செய்கின்ற மு.க.வைத் தந்தவரார்? மூன்று தலைமுறையை முற்போக்குத் தலைவர்தமை ஈன்று கொடுத்தவரார்? இன்னும் படைப்பவரார்? பிற்போக்குக் கொள்கைகளைப் பேரிடிபோல் தாக்கிநின்ற முற்போக்குக் கொள்கையினான், மொய்ம்புடைய ஏறனையான், பாட்டுக் குரியவனைப் பாரதியை விஞ்சிவிட்ட பாட்டுக்கு வேந்தனவன், பாரதியின் தாசன்றன் பாட்டுக்குள் வீரத்தைப் பாய்ச்சியவர் ஈரோட்டுப் பாட்டனன்றோ? ஆற்றலெலாம் பாடி முடிவதுவோ? ஒப்பரிய நற்றலைவர் ஆனாலும் ஓர்பொழுதும் தற்செருக்குக் காட்டாத் தலைவர் அப் பண்பால் எளிமைத் தலைவர்; எவரிடத்தும் இன்சொல் மொழியுந் தலைவர்; முழுமைபெறும் நம்தலைவர்; தள்ளாட்டம் உற்றும் தடுமாற்றம் இல்லாமல் சொல்லாட வல்லஒரு சோர்வில்லாப் பேச்சாளர்; பல்லெல்லாம் வீழ்ந்தும் பகுத்தறிவைப் பாய்ச்சுகின்ற சொல்லெல்லாந் தித்திக்கும் சூடுங் குறையாது; கிண்டல் நிறைந்திருக்கும் கேலி மிகுந்திருக்கும்; கிண்டி அறிவைக் கிளர்ச்சி கொளச்செய்யும்; சிந்தித்துக் கண்ட சிறப்புமிகும் தங்கருத்தை எந்தச் சமயத்தும் எங்குந் துணிந்துரைக்கும் அஞ்சாத நெஞ்சத்தை ஆரிடத்துங் கண்டதில்லை; துஞ்சாத சிங்கத் துணிவுமிகப் பெற்றார். நமது தலைமுறையில் நாம்பெற்ற பேற்றால் இமயப் புகழ்கொண்ட ஈடில் தலைவர் நமக்குக் கிடைத்துள்ளார்; நாளும் உழைத்தே நமக்குற்ற தாழ்வை நசுக்கித் தொலைத்துவிட்டார்; நாமும் தமிழரென நாடாளும் மாந்தரென *ஏமம் மிகக்கொண் டினிதிங்கு வாழ்கின்றோம்; பெற்றதொரு நல்வாழ்வைப் பேணி மிகக்காத்து நற்றமிழர் என்றுரைக்க நாம்வாழ்வோம் என்றுசொலித் தந்தை பெரியாரின் தாள்வணங்கி வாழ்த்துரைத்துச் சிந்தை மகிழ்ந்திருப்போம் சிந்தனையைப் பேணிடுவோம் என்றுநான் சொல்லி இருகை குவிக்கின்றேன் மன்றிலுளார் வாழ்க மகிழ்ந்து. பெரியார் சிலை திறப்பு விழா திண்டுக்கல் 17.9.1970 3 தன்மானப் புத்தகத்தை மூட மாட்டோம் கேட்டதடா ஒருசெய்தி தொண்டு செய்தே கிழமான பழமொன்று விழுந்த தென்றே; போட்டதடா என்னெஞ்சில் பாராங் கல்லைப் பொழுதுபுலர் நேரத்தே அந்தச் செய்தி; கேட்டழுகை வரவில்லை எனது கண்ணில் கிறுக்குற்ற எனதுமனம் அழுத தாலே; பாட்டெழுத வரவில்லை எனது கையே பகலவனைத் தொழுதழுது புலம்ப லாலே. நெஞ்சுரத்தை மட்டுமொரு துணையாக் கொண்டு நீபட்ட பாட்டையெலாம் நினைந்த தன்றி அஞ்சலிக்கு நானெழுதும் பாட்டை என்றன் அகங்கருத முடியாமல் தவித்த தையா! வெஞ்சினத்து *மடங்கலுக்கு நிகராய் வந்த வெண்தாடி வேந்தேஎன் புலம்ப லாலே நெஞ்சுருக்கும் என்துயரப் பாட லாலே நினைகின்றேன் தொழுகின்றேன் ஐயா நின்னை. ஐயாஉன் தலைமகனை அறிஞர் செம்மல் அண்ணாவை அன்றிழந்தோம் துயரில் மூழ்கிக் **கையாறு மிகவுழந்தோம் நின்றன் பேரன் கலைஞர் தரும் ஆறுதலால் தேறி வந்தோம்; நையாமல் நையும்வணம் இங்கு நாங்கள் நாதியற்று நிற்கும்வணம் பிரிந்து விட்டாய்! ஐயா எம் ஐயாஎன் றலறு கின்றோம் யாரைக்கண் டாறுதலைப் பெறுவோம் ஐயா! சமுதாய மருத்துவனே! பிணியுற் றோனைச் சாகாமல் காப்பதுதான் எனது கொள்கை அமுதான இனியமருந் தென்பா லில்லை; அறுவைசெயும் மருத்துவன்நான்; நோயுற் றுள்ள குமுகாயம் வருந்தினுமோர் கவலை யில்லை; குற்றுயிராய்ச் சாகவிடேன் என்றுகூறி எமைமேவும் பிணிநீக்கி மான முள்ள இனமாகத் தலைநிமிரும் வாழ்வு தந்தாய்! உடல்நலமும் உயிர்நலமும் கருதா தெங்கள் உயர்வுக்கே உள்ளளவும் உழைத்திருந்தாய் விடுமுயிரைத் தாழ்ந்திருக்கும் தமிழி னத்தின் விடுதலைக்கே விடுவேன்என் றுழைத்து நின்றாய் அடலரியே ஆருயிரே எம்மி னத்தின் அடிமைதனை அகற்றவந்த தலைவா நாங்கள் படுதுயரை எவ்வண்ணந் தாங்கிக் கொள்வோம்? பகலவனே பயணத்தை ஏன்மு டித்தாய்? கண்மூடிக் கிடந்துழன்ற தமிழி னத்தைக் கண்டுமனம் நொந்தெழுந்து தட்டித் தட்டிக் கண்திறக்க வைத்தாயே! திறக்கும் போது கண்ணெல்லாம் குளமாகச் செய்து விட்டுக் கண்மூடிக் கொண்டாயே! ஐயா உன்றன் கடமைஎலாம் முடிந்ததென்றோ? நினது மெய்யை மண்மூடிக் கொண்டாலும் ஐயா எங்கள் மனமெல்லாம் நீயிருக்கத் திறந்து வைத்தோம். கண்மூடிக் கிடந்தாலும், எங்கட் காகக் காலமெலாம் உழைத்துழைத்துப் பழுத்த மெய்யை மண்மூடிக் கிடந்தாலும், துயரம் எங்கள் மனமூடிக் கிடந்தாலும், கண்க ளெல்லாம் தண்ணீரிற் கிடந்தாலும் எமக்குத் தந்த தன்மானப் புத்தகத்தை மூட மாட்டோம்; கண்மூடிப் பழக்கங்கள் சாயும் மட்டும் கடமைப்போர் ஆற்றுவதில் ஓய மாட்டோம். ஈரோட்டுப் பாசறையில் பயிற்சி பெற்ற எதையுமஞ்சாப் போர்வீரர் சூழ்ந்து நிற்கப் போராட்டம் போராட்டம் என்று சொல்லிப் போராடிக் காலமெலாம் வாழ்ந்த வேந்தே! நீரோட்டம் அற்றாலும் எங்கள் நெஞ்சில் நீகாட்டும் போராட்டம் ஓய்வ தில்லை; வேரோட்டும் பேரால மரமே உன்றன் விழுதுகளாய் நின்றிருந்து கொள்கை காப்போம். தந்தை பெரியார் இயற்கை எய்திய செய்தி கேட்டுப் பாடியது 24.12.1974 4 புத்துலகச் சிற்பி மூவேந்தர் ஆட்சிசெயச், சங்கத் தோட்டம் முத்தமிழாம் கனிவளர்க்கப், பெருமி தத்துப் பாவேந்தர் அறமுரைக்க, உலக மெல்லாம் பணிந்தேத்தும் வள்ளுவனார் முப்பால் ஓத, மாவேந்துங் காட்டகத்து மற்றை நாட்டார் மாக்களென மதியின்றி வாழ்ந்த நாளில் நாவேந்தும் புகழ்மிகுத்த தமிழர் நாடு நாகரிகத் தொட்டி லென விளங்கக் கண்டோம். வயல்கண்டார், தொழில்கண்டார், வளமை சேர்க்கும் வழிகண்டார், பகுத்துண்ணும் வகையுங் கண்டார், இயல்கண்டார், இசைகண்டார், எழிலார் கூத்தின் இனங்கண்டார், ஈடில்லாக் கலைகள் கண்டார், கயல்கண்டார் அதுபோலக் கடலிற் செல்லக் கலங்கண்டார் போராட்டக் களமுங் கண்டார், செயல்கண்டோர் வியந்தேத்தும் அரசு கண்டார், சீர்கண்டார், பேர்கண்டார் தமிழ மாந்தர். தப்பொன்றும் அறியாத வெள்ளை யுள்ளத் தமிழ்மாந்தர் விருந்தோம்பும் பண்பால் இங்கு முப்புரியர் வரும்போது வருக என்று முகமலர்ந்து வரவேற்றார்; வந்த வஞ்சர் எப்படியோ வலைவிரித்தார் வீழ்ந்து விட்ட எம்மினத்தார் தமைமறந்தார் மயங்கி நின்றார்; ஒப்பில்லை எனவுரைக்க வாழ்ந்தி ருந்த ஒருநாடு திருநாடு வீழ்ந்த தன்றே. நடமாடும் வழியெல்லாம் நான்கு வேத நரிக்கூட்டம் ஊளையிட, அறிவை மாய்க்கும் படுமூட நம்பிக்கை விலங்கு சுற்றப், பஞ்சாங்க முட்புதர்கள் மொய்த்துக் காணக், கடுநரகம் சொர்க்கமெனும் மேடு பள்ளம் கலக்குறுத்தத், தருப்பைஎனும் நெருஞ்சி குற்றத், தடமேதுந் தெரியாமல் விழியி ரண்டைச் சமயமெனும் சாதிஎனும் புழுதிமூட, அறியாமை இருள்பரவத், தடங்கள் தோறும் ஆயிரமாம் கடவுளெனும் பரல்கள் மேவத், திருநீறு திருநாமம் என்று கூறும் சின்னமெனுங் கற்றாழை வளர்ந்து நிற்கத், தெரியாத தலையெழுத்து மறுபி றப்பு தீவினைகள் எனச்சொல்லும் கள்ளி காளான் நெறியாவும் படர்ந்திருக்கக் காடாய் மாறி நிழல்பரப்பும் பூஞ்சோலை கெட்ட தந்தோ! திருமணங்கள், இசையரங்கம், கோவில் இன்னும் தெளிதமிழில் எழுதிவந்த நூல்கள் எல்லாம் உருவிழந்து நிலைமாறித் திரிந்து போக, உட்புகுந்த ஆரியமே ஆட்சி செய்ய, அறிவிழந்தார் நெறியிழந்தார் வீரம் மிக்க ஆண்மையொடு தன்மான உணர்வி ழந்தார் அரசிழந்தார் குறியிழந்தார் உரிமை கெட்டார் அடிமைஎனத் தமிழ்மாந்தர் ஆகி விட்டார். புகைபடிந்த ஓவியம்போல், சுவர்க ளெல்லாம் புழுதியடை மாளிகைபோல், கருமை கொண்ட முகில்படர்ந்த முழுமதிபோல், அழுக்க டர்ந்து மூடியஓர் பளிங்கினைப்போல், மண்ணுக் குள்ளே புகவிழுந்த பொற்சிலைபோல், பனிப டிந்த பொன்மலர்ப்பூஞ் சோலையைப்போல் தமிழர் நாடு தகவிழந்து பொலிவுதரும் அழகி ழந்து தகதகக்கும் ஒளியிழந்து நின்ற தந்தோ! கல்லடர்ந்து முள்ளடர்ந்து கள்ளி முள்ளி கற்றாழை மிகவடர்ந்து புதர டர்ந்து செல்வழிகள் தோன்றாமல் திகைத்து நிற்கச் சீர்கெட்ட பாதையெலாம் செப்ப னிட்டு நல்வழிகள் பலஅமைத்துப் புதுமை மிக்க நாடாக்க வளமாக்க உழைத்த போது பல்லிடர்கள் உற்றாலும் ஆரி யத்தின் பாம்பெதிர்த்து வந்தாலும் அயர்ந்தா ரல்லர். அஞ்சாத அரியேறு, கொடுஞ்சி றைக்கும் அடங்காத புலிப்போத்து, வாழ்நாள் எல்லாம் துஞ்சாத போர்க்களிறு, கொண்ட கொள்கை துவளாத பெருங்கரடி, எவரை யும்போய்க் கெஞ்சாத கவரிமான், உழைப்பில் சோம்பிக் கிடவாத அடலேறு, முதுமை யுற்றும் எஞ்சாது பாடுபடும் பொழுது துள்ளி எழிலாகப் பாய்கலைமான் எங்கள் தந்தை. ஊர்தோறும் பம்பரம்போல் சுற்றிச் சுற்றி உழைத்துவரும் அந்நாளில் அறியா மாந்தர் பேர்கூறி வைதார்கள், நடையன் முட்டை பிறவெல்லாம் எடுத்தெறிந்தார், கூச்சல் போட்டார் ஊர்கூடிக் குழப்பத்தை விளைத்து மேடை ஒளிவிளக்கை அறுத்தெறிந்தார், பாம்பை விட்டார் யார்கூடித் திரண்டெதிர்த்தும் இகழ்ந்து பேசி யாதுரைத்தும் நம்தலைவர் கலங்க வில்லை. தேரோட்டி விழவெடுக்குங் கூட்டத் தாரும் தெருவெல்லாம் கல்வைத்துப் பூசிப் பாரும் ஏரோட்டி உழைப்பாரும் கற்ற மாந்தர் எழுத்தாளர் மற்றோரும் விழித்தெ ழுந்தார்; ஈரோட்டுப் பாசறையில் வந்து சேர்ந்தார்; இனவுணர்வும் மொழியுணர்வும் பெற்ற பின்னர் தார்சூட்டி எடைக்கெடையில் பொருள் கொடுத்தார்; தலைவரவர் பொருள்புகழால் மயங்க வில்லை, இகழ்ச்சிக்கும் நம்தலைவர் கலங்க வில்லை ஏத்தெடுத்த புகழ்ச்சிக்கும் மயங்க வில்லை; மிகச்சிவந்த பகலவன்போல் கடமை யாற்றி மேற்கொண்ட பணியாற்றி வெற்றி கண்டார்; இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் செவிகள் சாய்த்தால் இயங்காது பொதுத்தொண்டு; குறிக்கோள் ஒன்றே அகத்திருக்க வேண்டுமெனும் நெறியைக் காட்டும் ஐயாபோல் தொண்டாற்ற வல்லார் யாரே? எவ்வுணவே என்றாலும் ஏற்றுக் கொள்ளும்; இரவெனினும் பகலெனினும் தொண்டு செய்யும், எவ்வழியில் என்றாலும் பயணஞ் செய்யும்; இருவிழியும் துயிலாது விழித்தி ருக்கும்; செவ்வாயில் பல்லெல்லாம் வீழ்ந்த போதும் செம்மையுறச் சொல்லெல்லாம் அவர்நா ஓதும்; ஒவ்வொருகால் நோய்வரினும் எதிர்த்து நிற்கும்; உளம்போல அவருடலும் புரட்சி செய்யும். ஏறுங்கால் மேடைதனில் அம்மா அம்மா எனஅரற்றுங் குரல்கூடக் குகையில் சிங்கம் சீறுங்கால் முழங்குவது போலக் கேட்கும்; சேர்ந்துவிட்ட முதுமையிலும் மேடை ஏறிக் கூறுங்கால் அவர்மொழிகள் கனலைக் கக்கும்; கொழுந்துவிடும் சிந்தனைகள் ஒளியை வீசும்; சேருங்கள் தமிழினத்தீர் சிந்தித் தாய்ந்து தெளியுங்கள் விழியுங்கள் என்பார் ஐயா. காரோட்டும் பெருவளிபோல் உலகைப் பற்றும் காரிருளை ஓட்டுகிற பகல வன்போல் ஈரோட்டில் வந்துதித்த பெரியார் தாமும் இனஇழிவைத் தொலைப்பதற்கு நடத்தி வந்த போராட்டம் எத்தனையோ! அதனால் ஐயா புகுந்தசிறை எத்தனையோ! அறப்போர் என்றே பாராட்டும் படிசெய்தார்; மனிதர் யாரும் பழுதுறவோ வன்முறையோ செய்தா ரல்லர். பதவிகளில் தமிழர்க்குப் பங்கு வேண்டும் படிப்பினிலும் அப்படியே உரிமை வேண்டும் புதுவுலகில் பிற்பட்டோர் வாடல் நன்றோ? பொதுமைநிலை சரிசமங்கள் அவர்க்கும் வேண்டும் இதுதகுதி இதுதிறமை என்று பேசி ஏய்ப்பவரை எதிர்த்துப்போ ராடி நின்றார்; புதுநிலைமை வளர்பொழுதில் ஆள்வோர் மீண்டும் புகுத்துகிறார் தகுதிதிறம் வெட்கம் வெட்கம். வேதங்கள் புராணங்கள் இதிகா சங்கள் வேண்டாத சட்டங்கள் இவைகள் எல்லாம் தீதுங்கள் வாழ்வுக்கென் றெடுத்துரைத்துத் தெளிவித்தார் அவற்றைஎலாம் தீயி லிட்டார் வாதங்கள் பலபுரிந்தார் வெற்றி கண்டார் வளரறிவுச் சுடரொளியைத் தூண்டிவிட்டார் பேதங்கள் பேதைமைகள் தொலைப்ப தற்குப் பெரும்போர்கள் நடத்திநமைக் காத்த வீரர். புலவர்தமைப் பொய்ந்நூலைச் சாடி னாலும் புலவரெலாம் இவர்பக்கம்; பிளவு பொய்ம்மை மலிசமயக் கொள்கைகளை எதிர்த்த போதும் மதத்தலைவர் இவர்பக்கம்; கடவுட் பொம்மை கலகலக்க உடைத்தெறிந்த போதும் அந்தக் கடவுளரும் இவர்பக்கம்; ஆரி யத்தை அலறவைக்கப் போர்தொடுத்து நின்ற போதும் ஆச்சாரி யாருமிவர் நண்பர் ஆனார். சமயத்தின் பொய்ம்மைஎலாம் தொகுத்து வைத்துச் சமுதாயச் சீர்கேட்டைச் சிந்தித் தாய்ந்தே இமயத்தின் மேல்நின்று மக்கள் முன்னர் எடுத்துரைத்த வாதங்கள் கொள்கை எல்லாம் உமியொத்த மனத்தவரைத் தவிர மற்றோர் உண்மைஎனத் தெளிந்ததனால் பகைமை யின்றித் தமையொத்த ஐயாவின் பக்கம் நின்றார் தந்நலத்தை நாடாத ஐயா வென்றார். தீண்டாமை ஒழிப்புப்போர் நடத்திக் காட்டித் தீமைகளை முறியடித்த வைக்கம் வீரர் வேண்டாத பெண்ணடிமை தொலைப்ப தற்கும் வீழ்ந்துவிட்ட தமிழினத்தின் விடுத லைக்கும் ஈண்டையா போர்நடத்தி வெற்றி கண்டார்; ஈங்கின்றிப் பிறநாட்டிற் பிறந்தி ருந்தால் ஆண்டுள்ளோர் ஆபிரகாம் லிங்கன் என்பார் அறிவுரைத்த சாக்கரடீ சென்று ரைப்பார். யாராண்டால் நமக்கென்ன என்றி ருந்த எமக்கெல்லாம் உணர்வூட்டி அறிவும் ஊட்டிப் பாராண்ட தமிழினமே விழித்து நோக்கு! gF¤j¿thš MŒªJz®thŒ! என்ற தந்தை நூறாண்டுப் பணிவியந்து விழாவெ டுத்தோம் நோக்கி எதிர் வீட்டிலுள ஒருவன் நம்மை யாராரோ போட்டிவிழா எடுத்தா ரென்றே ஏளனங்கள் செய்கின்றான்; பேதை மாந்தன்! வெம்மைமிகும் பாலையைப்போல் தலைவ ருண்டு விளைவறியா நெய்தலைப்போல் தலைவ ருண்டு செம்மறிமேய் முல்லையைப்போல் தலைவ ருண்டு சேர்விலங்கு குறிஞ்சியைப்போல் தலைவ ருண்டு *கொம்மையுறும் உழுபடையால் பிளந்த போதும் கொடுமைகண்டு கலங்காமல் பயனே நல்கும் நன்மருத நிலம்போல உணர்வு தந்து நமைஎல்லாம் காக்கின்ற தலைவர் ஐயா. நாதியற்றுக் கிடந்துழன்ற தமிழினத்தை நானிலத்தில் தலைநிமிரச் செய்த கோவே! தீதகற்றும் சொன்மலர்கள் தேர்ந்தெ டுத்துச் செந்தமிழிற் பாமாலை தொடுத்து வந்து காதலுற்று நின்னடிக்குச் சூட்டு கின்றோம் கைதொழுது வாழ்த்துகின்றோம் எமது நெஞ்சில் கோதகற்றும் பகுத்தறிவை இன்னும் ஏற்று! கொடுமைகளை எதிர்க்கின்ற துணிவும் ஊட்டு. நீதந்த பகுத்தறிவுச் சுடரை ஏந்தி நிமிர்ந்திங்கு நிற்கின்றோம் வீரம் தாங்கிப் பாதந்த தமிழ்மொழிக்குத் தீங்கு வந்தால் பாய்ந்தெழுந்து சேர்ந்தெதிர்ப்போம் மானங் காப்போம்; யாதெந்தத் துயர்தரினும் அச்சங் கொள்ளோம்; யாம்எமது திருநாட்டின் உரிமை காப்போம்; பூதந்த தேனுண்ட வண்டே போலப் புத்துலகப் பாடல்களே பாடி நிற்போம். வெண்தாடி வேந்தர் வாழ்க விறல்மிகு பெரியார் வாழ்க கண்மூடி வழக்கம் நீங்கிக் கதிரவன் ஒளியே வாழ்க தண்ணாரும் தமிழும் நாடும் தழைத்தினி தென்றும் வாழ்க பண்பாரும் கழகம் வாழ்க பகுத்துணர் அறிவே வாழ்க பெரியார் நூற்றாண்டு விழா, பெரியார் திடல், சென்னை. 16-9-1978 5 இயற்கைப் பெரியார் அடித்தளத்தில் சிந்தனைகள் கனிவ ளம்போல் அடர்ந்தடர்ந்து படர்ந்திருக்கும்; தோண்டத்தோண்ட வெடித்தெழும்பும் அறிவெனும்நீர்; அறியா மாந்தர் விளைக்கின்ற தீமைகளைத் தாங்கிக் கொள்ளும்; பிடித்துழுது பிளப்பதுபோல் துயர்தந் தாலும் பெரும்பயனே நல்குமிவை; நிலத்தின் பாங்கு; படித்தறியா அடிமைகளாய்க் கிடந்தார் உய்யப் பாடுபட்ட பெரியாரும் நிலமே போல்வார். ஆரியமாம் பாறையெலாம் சிதறி வீழ ஆர்ப்பரித்துப் பாய்கின்ற அருவி நீராம்; பாரிலுளார் தாகத்தைத் தீர்த்து வைக்கும் பகுத்தறிவு சுரந்துவரும் ஊற்றின் நீராம்; சோறுதர வளப்படுத்த ஊர்கள் தோறும் சுற்றிவரும் வற்றாத ஆற்றின் நீராம்; பேரறிவுச் சிந்தனையின் ஆழங் காணாப் பெருங்கடலின் நீரெனவும் பெரியார் ஆனார் வேண்டாத குப்பைகளை அழிப்ப தற்கு வேண்டுவதும் நெருப்பேயாம்; இருட்டைப் போக்கத் தூண்டுவதும் நெருப்பேயாம்; அரிசி தன்னைச் சோறாக்க உதவுவதும் நெருப்பே யாகும்; தீண்டாமை சாதிமதக் குப்பை மாய்க்கும் தீயாகிப் பகுத்தறிவுச் சுடரைப் பாய்ச்சும் தூண்டாத விளக்காகி மாந்த ராகத் தொழும்பர்தமை ஆக்குகிற நெருப்பும் ஆனார். உயர்வானில் சிதறிவிழும் கல்லால் பூமி உருண்டைக்குப் பழுதின்றிக் காக்கும் காற்று; செயலறியா நம்மினத்தார், ஆரி யத்தின் சிந்தனையில் வெடித்துவிழும் கற்கள் தாக்க மயலாகி அழியாமல் பெரியார் காத்தார்; மாந்தரெனப் பழுதின்றி வாழச் செய்தார்; புயல்போலச் சினந்தெழுந்து வீசி னாலும் பூமணக்கும் தென்றலென இனிமை செய்வார். பகலவனும் குளிர்மதியும் விண்ணுக் குண்டு பார்ப்பவர்கள் அளந்தறியா அகலம் உண்டு; பகுத்தறிவுப் பகலவனும் ஆயந்து தோய்ந்து பண்பட்ட கூர்மதியும் அளந்து பார்த்துப் புகலறியாச் சிந்தனையும் பெரியார்க் குண்டு; பொலிவுதரும் * உடுக்கணங்கள் விண்ணுக்குண்டு புகழ்பரப்பும் தொண்டருடுக் கணம்போற் சுற்றிப் பொலிவுதரும் விண்ணாகி விளங்கு கின்றார். அனைத்துலக மாந்தரெனும் குமுகா யத்துள் ஐயாவும் ஓரணுவே; அணுவின் ஆற்றல் கனைத்துவரும் ஆரியமாம் நாக சாகி கனல்விழுந்த பஞ்சாகிப் பொசுங்க வீழ்த்தும்; மனத்துவளர் மடமையெனும் கோட்டை எல்லாம் மண்ணோடு மண்ணாகத் தூள்தூள் ஆக்கும்; இனத்துணர்வைப் பகுத்தறிவை ஆக்கும் ஆற்றல் எந்நாளும் அவ்வணுவுள் நிறைந்தி ருக்கும். திருத்தலங்கள் திருக்கோவில் வேண்டா என்று தெரிவித்தார் நம்பெரியார்; அவர்தம் பேச்சை மறுத்துரைக்க இயலவில்லை; என்றா லும்நான் மறுக்கின்றேன்; தன்மான இயக்கத் தார்க்குத் திருத்தலங்கள் மூன்றுண்டு; நம்மை உய்யச் செய்கின்ற வழிகாட்டும் தலங் ளாகும்; பொறுத்திருந்தால் என்மொழிக்குப் பொருள்வி ளங்கும் புனிதமிகு தலங்களென ஏற்றுக் கொள்வீர். பாரோடு நம்நாடு சமமாய் நிற்கப் பகுத்தறிவுக் கொள்கைஒளி பரவி நிற்கப் பேரோடு புகழோடு தமிழி னத்தார் பிறரோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டப் பேரேடு பெற்றிலங்கும் தமிழ்மொ ழிக்குப் பேரிடர்கள் வாராமல் தடுத்துக் காக்க ஈரோடு காஞ்சிபுரம் ஆரூர் என்னும் இம்மூன்றும் நம்மவர்க்குத் தலங்கள் அன்றோ? 6 இனத் தலைவர் பெரியாரை நினையாத தமிழன் இல்லை பேசாத புகழாத நாவும் இல்லை; மரியாதை தமிழனுக்கு வாய்த்த தென்றால் மாமேதை பெரியாரின் தொண்டே யன்றோ? சரியாத அப்பெரியர் வாழ்நாள் எல்லாம் சலியாது தளராது முயலா விட்டால் நரியாரின் சூழ்ச்சிக்குள் தமிழி னத்தார் நசுக்குண்டு விழிபிதுங்கி அழிந்து தீர்வர். மங்காத புகழ்படைத்த தமிழி னத்தான் மாற்றானுக் கடிவருடி யாகி விட்டான் இங்காளும் உரிமையினை அவனுக் கீவேன் எதிர்த்துவரும் எப்பகையும் துணிந்து சாய்ப்பேன் *வெங்காயம் தளர்ந்தாலும் ஓய மாட்டேன் வென்றிடுவேன் என்றெழுந்த பெரியார் போல இங்காரும் உழைத்ததில்லை வீரம் மிக்க இனவெழுச்சி வரலாற்றுத் தலைவர் ஆவார். 7 தட்டி எழுப்பினார் தட்டி எழுப்ப வந்தார்- நம்மைத் தட்டி எழுப்ப வந்தார் - ஐயா தன்மான எண்ணத்தை வளர்க்க வந்தார் - தட்டி பட்டிகள் தொட்டிகள் பட்டண ஊர்களில் மட்டிகள் போலினும் வாழ்ந்திடும் மாந்தரைத் - தட்டி கொண்டித் தொழுவத்தில் கட்டிய மாடெனக் குப்பையில் மேய்கிற கோழிக ளாமெனச் சண்டை யிடும்மதச் சாத்திரக் குப்பையில் சாதியில் கட்டுண்டு சாய்ந்து கிடந்தோரைத் - தட்டி அண்டிப் பிழைத்தவர் ஆட்சி பிடித்தனர் ஆட்சி புரிந்தவர் மாட்சி யிழந்தனர் மண்டி யிடும்பல தொண்டு புரிந்தனர் மாயையில் தூங்கினர் கண்கள் திறந்திடத் -தட்டி 18.6.1979 8 உடைத்தெறிந்தார் உடைத்தார் அறப்போர் தொடுத்தார்- ஐயா உலகம் எதிர்ப்பினும் ஒருதனி நின்றே - உடைத்தார் படைத்தான் அழித்தான் காத்தான் என்றெலாம் படித்தார் உரைத்தார் பழங்கதைச் சடங்கெலாம் - உடைத்தார் எத்தனை எத்தனைச் சாதி - அவை என்றும் நிலைத்திடச் சாத்திர நீதி பித்தரைப் போலினும் ஓதி - வரும் பீடைகள் கேடுகள் யாவையும் மோதி - உடைத்தார் கற்பனை பற்பல கூவிப் - பல கட்டுக் கதைகளை மெய்யெனத் தூவி விற்பனை செய்தனர் பாவி - அந்த வெற்றுரை யாவையும் செற்றிடத் தாவி - உடைத்தார் 18.6.1979 9 தண்டூன்றும் பெரியார் தண்டூன்றிப் பெரியார் நடந்தார் - இங்குத் தமிழ்மாந்தர் தடுமாறித் தாழ்வுக்குள் வீழாமல் - தண்டு தொண்டுகிழம் கொண்டாலும் துவளாமல் நின்றார் தொண்டடிமை செய்தவர்கள் தோள்நிமிர்ந்து வென்றார் - தண்டு உயர்ந்தவர் தாழ்ந்தவர் பிறப்பினில் ஓதும் ஒருசிலர் வாழ்வினை உயர்த்திடும் வேதம் தயங்குதல் இன்றிஅம் மாயையை வீழ்த்திடத் தமிழக மாந்தரைத் தட்டியெ ழுப்பிடத் -தண்டு சாத்திரக் கோத்திரச் சண்டைகள் நாளும் சாதிகள் மோதிட மண்டைகள் வீழும் ஆர்த்தெழும் ஐயாவின் போர்க்குரல் சூழ அக்குரல் கேட்டதும் ஆரியம் வீழத் -தண்டு 19.6.79 10 சங்கே முழங்கு சங்கே முழங்கு - வெற்றிச் சங்கே முழங்கு - முச் சங்கம் வளர்த்ததமிழ் எங்கும் தழைக்கவெனச் - சங்கே எங்கே வரும்படைகள்? எங்கே வரும்தடைகள்? இங்கே புகும்பகைகள் எல்லாமே தூளென்று - சங்கே எங்கோ இருந்தவர்கள் இங்கே புகுந்தவர்கள் இம்மா நிலத்துமொழி இரண்டாம் நிலைக்குவர வெங்கோல் செலுத்துவதை *நுங்கா திருப்பதுவோ? வெங்களம் கண்டுவரும் வேங்கைகள் யாமென்று - சங்கே மூடத் தனத்தைவிடு சாடக் களத்திலெழு மூத்துப் பழுத்தமொழி காத்துப் புரந்திடென ஆடிக் களங்கண்ட தாடிக் கிழப்பெரியர் ஐயா உரைத்தமொழி மெய்யே எனப்புகலச் - சங்கே 20.6.1979 11 ஆதவன் நினைஆதவன் என்று நினையாதவன் - ஒன்றும் புரியாதவன் கண்கள் திறவாதவன் - ஐயா - நினை மண்மேவும் அறியாமை இருள்யாவும் தொலைக்கும் மதிமேவும் ஒளிபாயும் செயல்யாவும் விளைக்கும் - நினை ஆண்டவர் யார்உரிமை பூண்டவர் யாரென அறியாமல் நினையாமல் அசையா திருந்தோம் மூண்டெழும் போர்மறவன் போலெழுந் தார்ர்த்தனை முன்னவர் யாமெனும் உரிமையைச் சேர்த்தனை - நினை கண்மூடி வழக்கங்கள் கடவுளர் விளக்கங்கள் கதைகூறும் மயக்கங்கள் கயமையின் குழப்பங்கள் மண்மூடிப் போகட்டும் மடமைகள் சாகட்டும் மதிமேவி வாழட்டும் எனக்கூறி மார்தட்டும் - நினை 20.6.1979 12 வெண்தாடி வேந்தர் வெண்தாடி வேந்தரைப் பாரீர் - செய்த விந்தைகள் யாவையும் பாடுவம் வாரீர் - வெண்தாடி கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகக் காலமெல் லாம்உழைத்து மேனியெல்லாம் பழுத்த - வெண்தாடி பண்ணுயர் தமிழும் பாங்குயர் இனமும் பாரினில் மேம்படப் போர்பல தொடுத்தார் கண்ணொளி குறைந்தும் கால்நடை தளர்ந்தும் கலங்காமல் தன்னலங் கருதாமல் உழைத்தார் - வெண்தாடி செந்தழல் மேனி சிந்தனை ஞானி சிங்கம்போல் முழக்கம் சீரிய பழக்கம் வெந்துயர் தாக்கினும் வீணர்கள் தூற்றினும் வெஞ்சிறை யேகினும் அஞ்சில ராகிய - வெண்தாடி சிக்கனக் காரர் செலவிட ஒவ்வார் சேர்த்தவை எல்லாம் யார்க்கெனத் தந்தார்? மக்களுக்கு கென்றே மனத்தினிற் கொண்டார் தொகுத்தார் வகுத்தார் கொடுத்தார் அந்த - வெண்தாடி பகலிலும் இரவிலும் பயணம் செய்வார் பனிமழை பாரார் பசியெனச் சோரார் இகலது சாய இழிவுகள் மாய எதிர்ப்பார் அறப்போர் தொடுப்பார் அந்த - வெண்தாடி ஆதர வின்றி அண்டிய பிள்ளை அத்தனைப் பேருக்கும் அவர்தாம் தந்தை ஓதிய கொள்கை மோதுதல் அன்றி ஒருதனி மனிதரைப் பகைத்ததும் இல்லை - வெண்தாடி தண்டின் துணையால் தளர்நடை நடந்தும் தரைதனில் நடந்திட இயலா திருந்தும் தொண்டின் பணியில் துவளா திருந்தார் தொழுவோம் அவர்பணி தொடர்வோம் எங்கள் - வெண்தாடி 21.6.1979 13 போராட்ட வீரர் போராட்டக் களங்கண்ட வீரர் - பாரில் பொதுவான சமுதாய அறங்கண்ட சூரர் - போராட்டக் ஈரோட்டுத் தலந்தந்த பிள்ளை - எங்கள் எழுச்சிக்கும் தன்மான உணர்ச்சிக்கும் தந்தை வேரோட்ட முடியாமல் வேதக் - கொள்கை வீணாகி மண்மீது பாழாகிச் சாயப் - போராட்டக் தீண்டாமை பின்னின் றிழுக்கும் - மாந்தர் தெருவக்குள் நடமாட முடியாத வைக்கம் ஆண்டோடி நேராகச் சென்றார் - சாதி ஆணவப் போருக்குள் போராடி வென்றார் - போராட்டக் தேசியம் என்றிங்குக் கூறி - இந்தி தேவையென் றோதினர் ஆட்சியில் ஏறிப் பேசிய வாதத்தைக் கொன்றார் - இந்தி பின்னிட்டுச் சென்றோடக் களமொன்று கண்டார் - போராட்டக் கலைகற்க உண்டிங்குச் சாதி - நின்று கைகட்டிப் பணிசெய்ய உண்டிங்குச் சாதி நிலைமுற்றும் அடியோடு மாறிக் - கல்வி நீரெங்கும் பாய்ந்தோடக் களங்கண்டார் மோதிப் - போராட்டக் கற்பனைக் கோட்டைக்குள் சாமி - பொய்கள் கட்டிக் கதைக்கப் படித்தஆ சாமி விற்பனைப் பாட்டுக்குள் பூமி-கெட்டு வீழாமற் காத்தவர் ஈ.வே.ரா.சாமி - போராட்டக் வேத புராணங்கள் கோடி - மக்கள் வீரத்தை மானத்தை மூடினர் பாடி யாதென்று காரணம் நாடி - வீரம் யாவையும் மீட்டவர் வெண்ணிறத் தாடி - போராட்டக் ஏடாண்ட பொய்யைப் படித்து-வாழ்வில் ஏமாளி யாகினர் நாட்டைக்கொ டுத்து பீடாண்டு வந்தவழி மாந்தர்- பாழும் பேதைத் தனத்தைப் பிடித்துத் தடுக்கப் - போராட்டக் நாடாண்டு வந்ததமிழ் மகனே - நீயோ நாணிக் குளித்துடலம் கூனிக்கிடந்தாய் கூடாண்டு வந்தபுலி மறவா- முரசம் கொட்டடா கொட்டடா என்றுகளங் கண்டார் - போராட்டக் 21.6.1979 14 பகலோன் வாழ்க பகலோன் வாழ்க பகலோன் வாழ்க பகுத்தறி வுக்கதிர் பாய்ச்சி விளக்கிடும் - பகலோன் புகுமிருள் கலங்கிடப் புத்தொளி துலங்கிடப் புன்மைகள் தொலைந்திடப் பொருள்களை விளக்கிடும் - பகலோன் பொய்யெது மெய்யெது புரியா திருந்தோம் பொருளெது மருளெது கருதா திருந்தோம் அயலெது நமதெது தெரியா திருந்தோம் அறிவொடு விழிகளை அழகுற மலர்த்திய - பகலோன் கற்பனைக் கூண்டினுள் கண்ணயர்ந் திருந்தோம் கலகல ஒலியொடு சிறகடித் தெழுந்தோம் பற்பல பணிகளில் பரிவுடன் புகுந்தோம் பழுதறத் துயிலெழப் புதுமுறுக் கேற்றிய - பகலோன் 22.6.79 15 தொண்டுக்கிலக்ணங்கண்டவர் தொண்டுக் கிலக்கணங் கண்டவர் பெரியார் தொடர்ந்ததன் இலக்கியம் ஆகவும் உரியார் - தொண்டு கண்டதை ஏசியும் கல்லினை வீசியும் கண்டவர் தாக்கினும் கொண்டது பேசித் - தொண்டு குளித்திடப் பன்னீர் கொடுத்திடும் செழிப்பால் கோமான் அவரென யாவரும் அழைப்பர் குளித்திட எனினோ முகம்மிகச் சுழிப்பார் குளிக்குமந் நேரமும் பணியிடைக் கழிப்பார் - தொண்டு புகழ்ந்திடும் தோழர் போற்றின ராயினும் பொருளென அவற்றை மதித்துளம் மயங்கார் இகழ்ந்திடும் மாந்தர் தூற்றின ராயினும் இருசெவி வழங்கார் எள்முனை கலங்கார் - தொண்டு மலர்பல தூவிய பஞ்சணை மேவிய மதிதவழ் மாளிகைத் துயில்வளம் படைத்தார் அலைந்திடும் ஆண்டிகள் போலதை விடுத்தே அல்லும் பகலும் அயரா துழைத்தார் - தொண்டு பகலிலும் உழைப்பார் இரவிலும் விழிப்பார் பகுத்தறி வுச்சுடர் எழுத்தினில் படைப்பார் மிகுமிள வேனிலும் குளிர்பனி நாளிலும் மிடுக்குடன் பொதுப்பணி யாற்றிட நடப்பார் - தொண்டு இளையவர் எனினும் இனியன உரைப்பார் எதிரிக ளாயினும் கனிவுடன் அழைப்பார் இளமையை இழந்தும் முதுமையை அடைந்தும் இளையார் பணியிடைக் களையார் பெரியார் - தொண்டு பிறவியில் தலைவர் பெரும்பொருள் வணிகர் பேணிய புகழுக் குரியார் எனினும் துறவிகள் போலொரு தோற்றமும் உடையார் துளிசெருக் கடையார் அடக்கமும் உடையார் - தொண்டு 23.6.1979 16 இன்றைய நாடு அயில்வேலும் உடைவாளும் உண்டான நாடு - இன்று அயலார்கள் அரசாளச் சரிபோடும் நாடு - அயில் வயல்யாவும் கயல்பாயும் புனல்சூழும் நாடு வயிறார உணவார இயலாத நாடு மயிலாடும் குயில்பாடும் வளமான நாடு மனம்நோகத் தெருவோரம் குடிவாழும் நாடு - அயில் தலையான நெறிகண்டு புகழோடு நின்றோர் தன்மானங் கெடும்போதும் உணராத நாடு தலைநாளில் மொழிமூன்று வகையாகி நின்றும் தமிழாலே இசைபாடத் தெரியாத நாடு - அயில் கதையாகக் கனவாக எதையேனும் சொல்வார் காணாத உலகாள வழியோதிச் செல்வார் பொதுவாகும் பொருள்யாவும் எனுமாறு நாடிப் புதுவாழ்வு நனவாக முயலாத நாடு - அயில் அரங்கேறும் மொழியாளர் பொழிவார்கள் சொல்லை ஆனாலும் அவர்வாழ்வில் தொடர்பேதும் இல்லை நிறமாறும் பச்சோந்தி மரபாளர் சொல்லில் நினைகின்ற பயனேதும் விளைவாவ தில்லை - அயில் அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார் அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார் மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார் வழியேதும் தெரியாத விழியாத கண்ணார் - அயில் புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும் புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும் செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா? சிறிதேனும் உணராமல் சிலையாக நின்றார் - அயில் பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன? அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார் அணுவேனும் நகராமல் மரமாகி நின்றார் -அயில் 24.6.1979 17 ஒன்றா இரண்டா? ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல - ஐயா உழைத்தவை யாவையும் தொடுத்துச் சொல்ல - செய்கை - ஒன்றா வெயிலா மழையா நடந்து செல்வார் - நாம் விழித்திடத்தமிழினம் பிழைத்திடச் செய்த - தொண்டு - ஒன்றா சென்றால் இருந்தால் நம் நினைவு - கண் சிறிதே அயர்ந்தால் நம் கனவு - கனவு - ஒன்றா நினைவும் கனவும் எவர்க்காக - போர் நெஞ்சினில் பொங்குதல் நமக்காகப் - போர் - ஒன்றா நின்குலம் தழைத்திடத் தமிழ்கமகனே - நீ நிலைத்திடத் துடித்தெழு! நின்கடனே உயிரும் உடலும் நிலைத்தவையோ? - என்றும் உழைப்பாய் நின்னினம் உயர்ந்திடவே உயர்ந்திடவே உயர்ந்திடவே 25.6.79 18 எப்படிப் பெரியார் வாழ்வார்? பெரியார் எப்படி வாழ்வார் -நம் பேச்சும் செயலும் பிளவுபட் டிருந்தால் - பெரியார் சரியா தவறா சடங்குகள் என்றே அறியா திருந்தால் அறிவையும் மறந்தால் - பெரியார் சாதியும் மதமும் சரிப்பட வில்லை சமுதா யந்தான் உருப்பட வில்லை மோதிய பகையோ சாய்ந்திட வில்லை மூடமும் இங்கே மாய்ந்திட வில்லை - பெரியார் சிந்தனை செய்கெனச் செப்பினர் அன்றோ? சிறிதும் நும்செவி புகுந்ததும் உண்டோ? மந்தைகள் போலினும் வாழ்வது நன்றோ? மாந்தர்கள் எனநீர் மாறுவ தென்றோ? - பெரியார் 6.12.1982 19 பல்லாண்டு பல்லாண்டு பொருளுயர்ந்த அரசியலில் முதலி, பேச்சில் பொடிவைத்து நகைசெய்யுங் கலைஞன், நெஞ்சில் அருளுயர்ந்த பண்பாட்டில் ஐயன், ஆடை அணி ஆடம் பரந்தன்னில் செட்டி, பேசும் விரிவுரையால் உளங்கவரும் கள்ளன், என்றும் வெல்கின்ற அறப்போரில் மறவன், கேடு தருகின்ற பழிமொழியை நாடான், எங்கள் தமிழ்த்தாயின் புகழ்காக்கும் வீரப் பிள்ளை. ஒருநாளும் பெரியார் சொல் தட்டான், என்றும் உயர்தமிழில் நீங்காத பத்தன், நன்மை உருவாகும் செயலொன்றே பார்ப்பான், பேச்சில் உவமைசொலும் நாவிதனாய் நிற்பான், ஆட்சி புரிமாந்தர் அடக்குமுறைக் குடையான், நல்ல புதுமைக்கும் பழமைக்கும் இடையன், அந்தத் திருவாளன் நம்மவர்க்கு *நாய்க்கன், அன்பைச் செழிப்பிக்கும் வேளாளன் எங்கள் அண்ணா. நன்மகனாம் பிள்ளையிவன் வாழ்நா ளெல்லாம் நாட்டுக்கே பணிசெய்ய ஈன்ற தாயின் பொன்வயிற்றை மணிவயிற்றை வாழ்த்து கின்றேன்; பூதலத்து மாந்தரெலாம் அண்ணா அண்ணா என்னுமொரு உறவுமுறை சொல்லும் வண்ணம் இந்நாட்டுத் துரையிவனே என்னும் வண்ணம் முன்னுணர்ந்து பெயர்வைத்த திருவாய் தன்னை முக்காலும் வாழ்த்துகின்றேன் வாழ்க என்றே. துரையென்றால் அரசனெனப் பொருளு ரைப்பர்; சொற்புகழ்சேர் திராவிடநா டவற்குச் சொந்தம்; துரையிவற்குத் தலைநகர் தான் காஞ்சி யாகும்; துணைநலமாம் பட்டத்து ராணி யுண்டு; முறைவகுக்கும் நெடுஞ்செழியன் கொள்கை குன்றா முடியரசன் தென்னரசு போல்வா ரிங்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்; எழுதுங் கோலே செங்கோலாம்; எழுத்தெல்லாம் படையின் கூட்டம் வெல்லரிய படைவரிசை யுடைய வேந்தன் வீற்றிருக்கும் அரியணைதான் தமிழர் நெஞ்சம்; நல்லறிஞன் இவனாட்சி பெருகக் கண்ட நாவிரண்டு கொண்டவர்கள் அழுக்கா றுற்றுப் புல்லியசொற் கணைதொடுத்தும் அஞ்சா நெஞ்சன் புன்முறுவல் செய்துபகை வென்று நின்றான்; சொல்லரசன் இவன்பெயரை வாழ்த்தி நிற்போம் தூயபுகழ் மாலைபல சூட்டி நிற்போம். நாட்டுக்குப் பெருமைதரும் வீரன் ஆனான் நாகரிக அரசியலின் தலைவ னானான் பாட்டுக்குப் பொருளானான் பகைசேர் நெஞ்சும் பாராட்டும் பண்புடைய நல்லோன் ஆனான் கேட்டுக்கு வித்தாகும் மடமை என்னும் கிளர்பகைக்குப் போராடும் எதிரி யானான் ஏட்டுக்குள் ளடங்காத புகழின் மிக்கான் எம்மவர்க்கோர் உறவானான் அரணும் ஆனான். எழுத்தினிக்கும், பேச்சினிக்கும், எண்ண மெல்லாம் இனித்திருக்கும், முத்தமிழும் வல்லான் றன்பால் பழுத்திருக்கும் நடிப்பினிக்கும், கழகம் காக்கும் பண்பினிக்கும், அரசியலின் திறமி னிக்கும், பழித்திருக்கும் கயவரையும் பொறுத்தி ருக்கும் பாங்குயர்ந்த சிறப்பினிக்கும், மேலோன் றன்னை வழுத்துகிறேன் வாழ்த்துகிறேன் தமிழும் நாடும் வாழ்வதற்கே பல்லாண்டு கூறு கின்றேன். 20 காஞ்சிக் கதிரவன் அடிமைஎனும் இருளகற்ற வந்த காஞ்சி அறிஞனொரு செம்பரிதி, உரிமை பூத்துப் படிவளரத் தமிழ்மாரி பொழியும் வானம், பரவிவரும் தம்பியராம் உடுக்க ணங்கள் தொடருமொரு முழுத்திங்ள், மூடச் செய்கை தூரோடு சாய்ந்துவிழக் கடிது வீசிப் படருமொரு புயற்காற்று, வறியர் வாழ்வில் படர்துடைத்து நலம்பயக்குந் தென்றற் காற்று குற்றால மலைமுகடும் நாணும் வண்ணம் கொட்டுகிற சொல்லருவி, எங்கள் அண்ணா வற்றாத கலையூற்று, கோலார் போல வளமான சிந்தனைகள் நிறைசு ரங்கம், கற்றோரின் நூல்களெல்லாம் தேக்கி வைத்துக் காக்கின்ற அணைக்கட்டு, முகில்ப டர்ந்து பற்றாத முழுமதிசேர் நீல வானம், பண்பாறு பாய்கின்ற கடலும் ஆவான். திருவெண்காட் டின்னிசையும், சொக்க வைக்கும் சீர்த்திருவா வடுதுறையின் மிடுக்குஞ் சேர்ந்தே உருவங்காட் டுங்காரு குறிச்சி மன்னன் ஊதிவந்த நாதசுரம்; மதங்கொண்டோடும் பொருவெண்கோட் டானைதனை அடக்கி வந்த புலியனைய உதயணன்பால் இருந்த நல்யாழ்; மருவுங்காட் டானிரைகள் மயங்கி நிற்க வாயூதும் ஆயன்கைக் குழலும் ஆவான். அரசியலில் நடிப்பறியான், ஆனால் நல்ல அரசியலின் நடப்பறிவான்; நீண்ட காலம் பரவுதமிழ் நாடிதனைப் பற்றி நின்ற பழிதீர்ப்பான், பழிதீர்த்துக் கொள்ளமாட்டான்; உரமுடையன் நயம்விஞ்சும் சொல்லே சொல்வான்; ஒருநாளும் நயம்வஞ்சம் பேச மாட்டான்; உருவமதிற் சிறுமையினைப் பெற்ற தன்றி உள்ளமதிற் பெருமையையே பெற்று நின்றான். பகுத்தறிவுப் பெருங்கடலுள் முளைத்து வந்த பகலவனை, அறியாமை இருட்க ணத்தைச் செகுத்தொழிக்கும் பரிதிதனை, துயிலை நீக்கச் சிவந்தெழுந்த சூரியனை, அரசி யல்வான் தகதகக்கப் பண்பொளியைப் பாய்ச்சி எங்கள் தமிழ்செழிக்கக் கிளர்ந்தெழுந்த செஞ்ஞாயிற்றை உகப்புடனே தமிழரினம் மலர்ந்து தோன்ற உதித்தெழுந்த கதிரவனை வாழ்த்து கின்றேன். 21 தமிழ் காத்த தலைவர் செப்பும் மொழிபதி னெட்டுடையாள் என்றாலும் ஒப்புமனச் சிந்தனை ஒன்றுடையாள் பாரதத்தாய் என்றுரைத்தான் என்பாட்டன்; ஏற்புடைய அக்கருத்தை ஒன்றுபடும் ஆற்றை உணரா வடபுலத்தார் செப்புமொழி ஒன்றென்றார் சிந்தனைகள் நூறாகத் தப்புவழி மேற்கொண்டார்; தக்கார் பலர்கூடிச் செந்தமிழ்க்குத் தீங்கு சிறிது வரஒவ்வோம் இந்திக்குத் தென்னாட்டில் என்றும் இடமில்லை; ஒற்றுமைக்குத் தீமை எருவாக்க எண்ணாதீர் பற்றுமக்குத் தாய்மொழியில் பாரித் திருப்பதுபோல் எங்களுக்கும் தாய்மொழியில் ஈடில்லாப் பற்றுண்டு பொங்கும் மொழியுணர்வைப் புல்லென் றிகழாதீர் என்றெல்லாம் கூறி இடித்துரைத்தும் கேளாராய்த் தென்றல் உலவுந் திருநாட்டில் இந்தியினை வன்பில் திணித்தார் வடபுலத்து வாழ்மாந்தர்; அன்போ டுரைத்தும் அவர்செவியில் ஏறவில்லை நம்மை அடிமையென நாடாள்வோர் எண்ணியதால் வெம்மை வழியை விழைந்து திணித்தார்கள்; பாரில் குடியரசுப் பண்பை எடுத்தெடுத்துக் கூறிப் பயனில்லை; கூடார் எனமாறிக் கொண்டதே கொள்கையெனக் கொட்டம் அடிக்கின்றார் கண்டும் பொறுத்திருந்தால் காலம் நமைப் பழிக்கும் போர்க்கோலம் பூணுங்கள் போற்றுங்கள் தாய்மொழியை யார்க்கும் அடிமையலோம் ஆளப் பிறந்தவர்நாம் கொன்று குவித்தாலும் கூட்டில் அடைத்தாலும் நின்றமரில் தோளை நிமிர்த்துங்கள் என்றெல்லாம் ஆர்ப்பாட்டப் *போர்ப்பாட்டை அண்ணன் முழங்கிஒரு போர்ப்பாட்டைக் கண்டு புறங்கண்டார் இந்தியினை; செந்தமிழ் நாடாளச் செங்கோல் தனையேந்த வந்ததும் நம்தமிழ் வாழ வழிசெய்தார்; எம்முடைய நாட்டில் இரு மொழி போதுமென மும்மொழிக் கொள்கை முறிய வழிசெய்தார்; செந்தமிழைக்காத்து சிறந்த தலைமகனைப் பைந்தமிழிற் பாடிப் பரவுவதே நம்கடமை நாம்வாழ வந்தவனை நல்லவனை வாழ்த்திடுவோம் தேன்பாயும் தீந்தமிழைச் சேர்த்து. 22 புரட்சித் தலைவன் தாழ்ந்திருக்குந் தமிழகமே உன்னை யிங்குத் தாழ்வுபடச் செய்தவரார்? செய்தார் தம்மை வீழ்ந்துபடச் செய்திடுவேன் வெற்றி கொள்வேன் வீரமிக்க தோளும் மீண்டும் உன்னை வாழ்ந்திருக்கச் செய்திடுவேன் உன்னைக் காக்க வாழ்வெல்லாம் ஈந்திருப்பேன் என்று கூறி, ஆழ்ந்ததுயில் கொண்டிருந்தோர் எழுச்சி கொள்ள ஆர்ப்பரித்துப் புரட்சிவழி காட்டி நின்றான். ngh®Kur« M®¤âLth‹ KH¡f«nf£L¥ bgh§»vG« kw¥òÈÆ‹ T£l§ fh©gh‹, ‘gh®kUs cÆbuL¡F« kw¥ngh® m‹W gǪJEk JÆ®bfhL¡F« mw¥ngh® v‹gh‹ X®Kiwjh‹ cÆ®nghF« nght bj‹whš ckJâU eh£L¡nf ngh¡F j‰F ah® tUå®? என்றழைப்பான்; வந்தார் தம்மை அறிஞனவன் அறநெறியில அழைத்துச் செல்வான். கொலைக்குணத்து மாந்தரையும் வயப்ப டுத்தும் கூரறிவுப் பேச்சாளன், எழுத்தின் வேந்தன், கலைத்துறையில் நிகரில்லா நடிப்பில் வல்லான், கருத்துவளங் கொழிக்கின்ற சுரங்கம் போல்வான், நிலைப்படுத்த அரசியலை ஆய்ந்த மேதை, நீள்புகழின் முகட்டுமிசை நின்ற போதும் தலைக்கனத்தை அவனிடத்துக் கண்ட தில்லை தன்னடக்க நெறிகாட்டி உயர்ந்து நின்றான். கிழமைமிகு பெரியாரின் கழகம் சேர்ந்து கிளைத்துயர உழைத்தான்பின் பிரிந்த போதும் கழகமதை அழித்துவிடக் கருத வில்லை; கண்டபடி ஏசவில்லை; ஈதி ரட்டைக் குழல்மருவு துப்பாக்கி என்றே சொன்னான் குணமென்னுங் குன்றேறி நின்றா னன்றோ? அழகுமிகு முன்னேற்றக் கழகங் கண்டான் ஆர்ப்பரிப்புச் செய்யவில்லை பணியே செய்தான். உடனிருந்து வளர்ந்தோர்தாம் பிரிந்து சென்றே உளம்நோகப் பழித்தாலும் பழிக்க மாட்டான்; இடுபழியே தொழிலாகக் கொண்டு வாழ்வோர் இன்னாமை செய்தாலும் அவர்தாம் நாண இடனறிந்து புகழ்ந்துரைப்பான் அதனால் அந்த எதிரிகளும் மனந்திரிந்து மதிக்க லானார்; கடமையினைப் புரிந்திருந்தான் கட்டுப் பாட்டைக் காத்திருந்தான் கண்ணியமாம் வாழ்வும் பெற்றான். 23 தமிழ்நாட்டுப் பேரரண் அறிவுடைய மாந்தரெலாம் அறிஞர் ஆகார் அளப்பிலநூல் பயின்றவரும் அறிஞர் ஆகார்; நெறியொழுகி, அருள்சுரந்து, மக்கட் பண்பு நிறைந்திருந்து, பிறர்துயரம் துடைத்து, நல்ல குறியுடைய வாழ்வுநெறி மலரத் தம்மைக் கொடுப்பவரே அறிஞராவர்; அனைத்துங் கூடி அறிஞரெனும் சொல்லுக்கே உரிய ரானார் அண்ணாஎன் றழைப்பதற்கும் உரிய ரானார். குறளுக்கும் மூன்றெழுத்தே அண்ணா என்னும் குளிர்மொழிக்கும் மூன்றெழுத்தே; உலகம் போற்றும் குறள்வகுக்கும் பால்மூன்றே அண்ணா சொன்ன கோட்பாடும் ஒருமுன்றே; நுவலும் பாட்டின் உருவுக்கும் பேர்குறளே அண்ணா கொண்ட உருவமதும் குறளேயாம்; அதனால் அண்ணா குறளுக்கு நிகராவார்; மேலும் வாழ்வு கூறுகிற குறளுக்குப் பொருளும் ஆவார். பாவேந்தன் பாடடுக்கோர் அரணாய் நின்றார் பைந்தமிழிப்பண் பாட்டுக்கும் அரணாய் நின்றார் நாவேந்தர் கோவேந்தர் கூடிக் காத்த நாட்டுக்கும் அரணானார் நமது நெஞ்சப் பூவேந்தும் நம்அண்ணா தமிழ்மொ ழிக்குப் பொலிவுதரும் அரணாணார் தமிழி னத்தார் தாழ்வேந்திப் போகாமல் காத்து நிற்கும் சரித்திரத்தின் பேரரணாய் விளங்கு கின்றார். தனித்தனியே பிரிந்தவர்க்கும் கூடு நர்க்கும் தலைமகனாம் இம்மன்னன் காத லூட்டிக் கனிச்சுவையை விஞ்சுதமிழ் அமுதம் பெய்து களிப்பூட்டும் நிறைமதியன் ஆவான் கண்டீர்; அனிச்சமலர் மென்மையினை மனத்திற் கொண்ட அம்மதியை *ஓரிரவிற் கண்டாற் போதும் தனிச்சுவடு பதித்தமையை உணர்ந்து கொள்வர் தமதுள்ளம் உடலுயிர்கள் உருகி நிற்பர். மறைமலையும் பாரதியும் திரு.வி.க.வும் மானமுள்ள புலவர்களும் விதைத்து வைத்த நிறைவிதைகள் முளைத்தெழுந்து பசுமை கண்டு நின்றிருந்த தமிழ்ப்பயிர்கள், இந்தி என்னும் உறைவெயிலின் வெம்மையினால் வாடுங் காலை, உழவருளங் களிப்பெய்த வந்த காஞ்சிப் பெருமுகிலை ஈரோட்டுப் **பொருப்பில் தோய்ந்து பெய்ம்மழையைத் தமிழ்மொழியால் வாழ்த்திநிற்போம். கலைமலர்கள் பல பூத்துக் கொத்துக் கொத்தாய்க் கண்குளிர மனங்குளிரக் காட்சி நல்கும் பலவகைய புகழ்மணக்கும் கனிகள் நல்கும் பாடிவரும் தம்பியராம் தும்பி கட்கு நலமருவும் அறிவுத்தேன் சொரிந்து நிற்கும் நாவசைய மொழித்தென்றல் உலவி நிற்கும் உலகிலுளார் இன்பமுறக் குளிர்ச்சி நல்கும் உயர்சோலை காஞ்சியிலே வளர்ந்த தம்மா! அம்மலர்சூழ் சோலையில்தேன் பருகி நாளும் ஆயிரம்பல் லாயிரமாய்ப் பாடிப் பாடித் தும்பிபல பறந்திங்கு வளர்ந்த துண்டு; தும்பிகளால் மகரந்தப் பொடிபரந்தே அம்புவியில் பலமலர்கள் பூக்கக் கண்டோம்; அவற்றிலுறு நறுமணங்கள் பரவிச் சென்று மொய்ம்புடைய கோட்டைஎலாம் மணக்கக் கண்டோம், மொய்த்திருந்து மக்களெலாம் வியக்கக் கண்டோம். பகையென்றும் நட்பென்றும் பாரா வண்ணம் பழிவாங்கும் சிற்றறிவு சேரா வண்ணம் நகைமொழியால் மாற்றலரை ஈர்க்கும் வண்ணம் நாகரிக அரசியலை நடத்திக் காட்டி மிகுபுகழால் உயர்ந்தானை, எளியர் வாழ்வு மேலோங்கச் செய்தானை, எங்கள் எட்டுத் தொகைமொழியில் தோய்ந்தானை, பண்பு காக்கும் அரணாகிச் சூழ்ந்தானைத் தொழுது நிற்போம். 24 எழுத்தும் பேச்சும் முழுத்தாளில் எதைஎதையோ எழுதி விட்டு முற்போக்கு மறுமலர்ச்சி என்று சொல்லி எழுத்தாளர் உலகத்தில் சிலபேர் கூடி ஏடெல்லாம் குப்பையென மாற்றி விட்டார் குழுத்தோற்று நாணும்வணம் எழுதிக் காட்டிக் கூரறிவுச் சுடர்வேல்போல் எழுத்தை மாற்றி எழுத்தாளர் உலகத்தை வென்று நின்றான் இவன்நடையை எழுத்தாளர் தொடர லானார். பரலோகக் கதைகளையே படைத்துக் காட்டிப் பாடலொடு நடிக்கின்ற திரைப் படங்கள் உரமேறிப் பரவிவரும் அந்த நாளில் ஒரிரவு நம்அண்ணன் விழித்தி ருந்தான் தரமான திரைப்படங்கள் உலவக் கண்டோம் தன்மான வுணர்ச்சிமிக வளரக் கண்டோம் அறிவாளன் கலையுலகம் புகுந்தான் அங்கும் அவன்வெற்றித் திலகந்தான் பெற்றுக் கொண்டான். பொருள்பெறவும் புகழ்பெறவும் நடிக்க வில்லை புகைப்படங்கள் எடுப்பதற்கும் நடிக்க வில்லை இருள்செறியும் தமிழகத்தைத் தமிழி னத்தை எழுச்சிபெறச் செய்வதற்கே நடித்து வந்தான் சுருள்குழலார் மயங்குதற்கு நடிக்க வில்லை சோர்தமிழர் மயக்கத்தை அகற்று தற்கே அருளுடையான் நாடகங்கள் எழுதிக் காட்டி அழகுறவே நடிப்பதற்கும் கற்றுத் தந்தான். நாடாண்ட இனத்தவன் நீ! உலகில் மூத்த நாகரிகத் தமிழ்மொழிக்குச் சொந்தக் காரன்! ஏடாண்ட இலக்கியநூல் ஆயி ரங்கள் ஈங்குண்டு சான்றாக; எடுத்துப் பார்நீ! கேடாண்ட நரிக்குணத்தர் சூழ்ச்சி யாலே கீழானாய்! விழித்தெழுநீ! மானம் எங்கே? *பேடாண்ட பிறப்பாநீ? என்று பாடம் கற்பித்த பேராசான் எங்கள் அண்ணன். சாதி என்றும் சமயமென்றும் மேல்கீழ் என்றும் சமனிலைகெட் டடிமையென வாழுங் காலை ஆதியில்இங் கில்லாத கருத்தை மாய்க்க அறிவென்னும் படைதாங்கிப் போர்தொடுத்து, மோதவரும் பகைஎதிர்த்து, வெற்றி கண்டு முன்னேற்றப் பாதைதனில் மக்கள் செல்ல ஓதிவந்த பகுத்தறிவுப் பேச்சால் அன்பால் ஊட்டிவிட்ட இனவுணர்வால் எழுச்சி பெற்றோம். 25 கழகம் வென்றது அண்ணா அண்ணா அருஞ்சிறைக் கொட்டிலுள் நண்ணும் நுமக்கோர் நற்செய்தி கூறுவென்; கழகம் வென்றது கதிரொளி பரந்தது; தொழுதனர் மாந்தர் தூயவர் வாழ்த்தினர்; காசும் பணமும் காவற் படையும் ஏசும் பேச்சும் இவையே துணையென நின்றனர் எதிரில் நெடுநாள் ஆள்வோர்; இடர்பல ஏற்பினும் தொடர்பணி புரிவோர்! உடலும் உயிரும் உழைப்பும் துணையெனப் படைபோல் அணிவகுத் துடனெதிர் நின்றனர்; கொல்வினைப் போக்கினர் சில்லரை நோக்கினர் சல்லியர் கூடிச் சாடினர் நம்மை ஐயஓ சுமத்தினர் அடாப்பழி ஆயினும் செய்ம்முறை பிழைத்திலர் செந்தமிழ்த் தொண்டர்; கழகம் வென்றது கதிரொளி பரந்தது; காற்றிற் சாய்வோர் கண்டதை மேய்வோர் தூற்றித் திரிவதே தொழிலெனக் கொண்டோர் கோப்பை ஒன்றே குடிபுகும் உலகென மோப்பம் பிடிப்போர் முகங்கவிழ்ந் தேகினர் வஞ்சகர் எத்துணை வாய்ப்பறை சாற்றினும் செஞ்சுடர் வளர்ச்சியைச் சிதைப்பதும் ஒல்லுமோ? கோநகர் தன்னில் மாநகர் மன்றில் வாகை சூடி வளர்ந்தது கழகம்; அரியென முழங்கி எரியெனச் சொற்போர் புரியும் வீரன் போரினில் தீரன் உரியநம் தம்பி உழைப்பால் உயர்ந்தோன் கருணா நிதியவன் காத்தனன் மானம்; *கறங்கெனச் சுழலும் கழகத் தோழர் பறந்துபறந் தாற்றிடும் அயராப் பணியினர் துட்ட விலங்குகள் உட்புக விடாது வட்டந் தோறும் வட்டமிட் டுலவினர்; போர்க்களம் புகுந்தனர் புரிந்தனர் அறப்போர்; சேர்த்தனர் வெற்றி ஆர்த்தனர் வீரர்; சென்னை மாந்தரை முன்னணி வீரரைச் சென்னி தாழ்த்தி வாழ்த்துவென் யானே; அண்ணா அண்ணா வாழ்த்துக அண்ணா நண்ணார் நமக்கிலை நாடுநம் குறிக்கோள் மாநகர் நலம்பெற மாநக ராட்சியை ஏந்துக கழகம் என்றுநும் நாவால் வாழ்த்துக அண்ணா வாழ்த்துக பெரிதே. மாநகராட்சித் தேர்தலில் கழகம் வென்ற போது பாடியது 26 அரசு நாட்டினான் அரசு நாட்டினான் - சிறையில் அண்ணன் நாட்டினான் விரைவில் நாட்டிலும் - நமது அரசு நாட்டுவான் முரசம் ஆர்த்தது - வெற்றி முரசம் ஆர்த்தது பரவி வாழ்த்துவோம் - அண்ணன் படையை வாழ்த்துவோம் பகைகள் நீங்கவே - நல்ல பான்மை ஓங்கவே குகையின் வேங்கைகாள் - ஒன்று கூடு வீர்களே பகைகள் மிஞ்சுமோ - நமது படைகள் கொஞ்சமோ! புகையும் நெஞ்சிலே - கனல் பொங்கி விஞ்சுமே உடலும் ஒன்றுதான் - பெற்ற உயிரும் ஒன்றுதான் அடிமை போகவே - போரில் அவற்றை ஈகுவோம் கடமை ஆற்றுவோம் - நாடு காவல் போற்றுவோம் உடைமை திராவிடம் - என்றே உலகில் சாற்றுவோம் வாழ்க தாயகம் - என்றும் வாழ்க திராவிடம் வாழ்க வாழ்கவே - அண்ணன் வாழ்க வாழ்கவே 1962 சூலை 19-இல் அக விலை உயர்வை எதிர்த்து மறியல் செய்தமைக்காகச் சிறைப்படுத்தப்பட்ட அறிஞர் அண்ணா. வேலூர்ச் சிறைச்சாலையில் தமது பிறந்த நாளையொட்டி, அரசங்கன்று நாட்டினார். அதன் நினைவாகப் பாடப்பட்டது இப்பாட்டு 27 தலைவா வருக! அகிலம் போற்றும் அறிஞனே வாவாவா அண்ணன் என்னும் உறவினாய் வாவாவா பகைவர்க் கிரங்கும் பண்பினாய் வாவாவா பணிவும் துணிவும் நிறைந்துளாய் வாவாவா குகையில் வாழும் சிங்கமே வாவாவா கொடுமை கண்டு பொங்குவாய் வாவாவா நகைமி குந்த முகத்தினாய் வாவாவா நன்மை வாழும் அகத்தினாய் வாவாவா சிறையின் மீளும் வீரனே வாவாவா சிந்தை வாழும் தீரனே வாவாவா திருவி டத்தின் தலைவனே வாவாவா சேனை கண்டு மகிழவே வாவாவா உரிமை காக்கும் படைஞனே வாவாவா உள்ளங் கவரும் கலைஞனே வாவாவா பெருமை சேர்க்கும் நாவினாய் வாவாவா பேணும் நாட்டை மீட்கவே வாவாவா அருளைப் பொழியும் விழியினாய் வாவாவா அறமுரைக்கும் மொழியினாய் வாவாவா மருளொ ழிக்கும் மதியினாய் வாவாவா மடமை போக்கும் வலியினாய் வாவாவா கருணை காக்கும் நெஞ்சினாய் வாவாவா கடமை போற்ற அஞ்சிலாய் வாவாவா இருள்த விர்க்கும் உதயமே வாவாவா எதையும் தாங்கும் இதயமே வாவாவா 1962 சூலை 19-இல் அக விலை உயர்வை எதிர்த்து மறியல் செய்தமையால் சிறைப்படுத்தப்பட்டு, 24.10.62-இல் விடுதலை பெற்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு வரவு கூறும் முறையில் பாடப்பட்டது. 28 காக்குங் கைகள் சங்கத்தால் தமிழ்வளர்த்த மதுரை மூதூர்த் தண்பதியில் பெரும்புலவர் கூடி நின்ற சங்கத்தில் ஒருதலைவர் எழுந்து நின்று, தகுதியிலா இழிமொழிகள் கூறி, நெஞ்சம் பொங்கத்தான் பழித்துரைத்தார்; அதனைக் கேட்டும் பொறுமைக்குப் புகலிடமாய் விளங்கும் அண்ணன் தங்கத்தின் பெருங்குணத்தான் சினக்க வில்லை தமிழ்நெஞ்சிற் பண்பொன்றே விளங்கக் கண்டேன். பழித்துரைத்த தலைவருளம் நோகும் வண்ணம் பதிலுரைக்க விரும்பவிலை; ஒருசொல் லேனும் இழித்துரைக்க எடுத்தெழுத முயல வில்லை; எவரிடத்துங் காணாத உயர்ந்த வுள்ளம் பழுத்திருப்போன், அத்தலைவர் நாட்டுக் காகப் பாடுபட்ட வீரத்தைத் தியாகப் போக்கை எழுத்தினிக்க எழுதியதற் பண்பைக் காக்க எழுந்தஎழிற் கையெங்கள் அண்ணா கையே. தென்னவர்தம் நெஞ்சமெலாம் சோலை யாக்கித் தித்திக்குங் குரலெழுப்பிக் குயிலாய்ப் பாடி மன்னரெனக் கவியுலகில் விளங்கி வந்த மாகவிஞர் ஏறனையார் கவிதைக் கையால் கன்னல்நிகர் மொழியானை அண்ணன் தன்னைக் கடுமொழிகள் சிறுமொழிகள் வரைந்தா ரேனும் முன்னவர்தம் கவிதைக்கு வலிமை கூட்டி முத்தமிழைக் காக்குங்கை அண்ணா கையே. என்னுயிரை இருவிழியைத் தாயின் மேலாம் எழில்மொழியை நான்வணங்குந் தெய்வந் தன்னை இன்னமுத இலக்கணத்தின் பிறப்பி டத்தை இலக்கியத்தின் பேரூற்றைத் தொன்மை கண்ட தென்னவர்தம் தாய்மொழியைத் தமிழை யிங்குத் தீய்க்கவரும் மொழிப்பகையைத் தடுத்துக் காத்து பன்னலமும் கனிந்துதமிழ் கொழிக்கச் செய்யப் பாடுபடும் கைஎங்கள் அண்ணா கையே. பகையுளத்து மாந்தரையும் அன்பு காட்டிப் பண்படுத்தி அரவணைத்துக் காக்குங் கைகள் மிகையடுத்துக் கூறவிலை; தமிழர் நாட்டின் மேலான மானத்தைக் காக்கும் கைகள் பகைஎடுத்தே எவர்வரினும் சீறி நின்று பாரதமாம் இந்நாட்டைக் காக்குங் கைகள் தொகையெடுத்த திட்டங்கள் தீட்டி நாட்டில் தோன்றுதுயர் துடைத்துநலம் காக்குங் கைகள். ஈரமிலா நெஞ்சத்தார் இட்ட தீயால் ஏங்குகிற எளியவரைக் காக்குங் கைகள் நேரமெலாம் தந்நலமே பேணிக் காத்த நெறியாளர் ஆட்சியிலே காணா நன்மை சேரவொரு நெறிமுறையைச் செய்து நாடு செழுமையுறப் படியளந்து காக்குங் கைகள் வீரமெலாம் ஒருவிரலில் காட்டும் அண்ணா விழிப்போடு செங்கோன்மை காக்குங் கைகள். 29 தாய்மொழிக் காவலர் நற்றலைவர் ஓரமைச்சர் யானோ இந்த நாடறிந்த முடியரசன்; அமைச்சர் முன்னே உற்றரசன் பாடுவது புதுமை யன்றோ? உண்மையினில் குடியாட்சி மதிக்கும் பண்பு பெற்றமையால் இப்புதுமை காணு கின்றோம்; பெருமைமிகு *தி.மு.க. தலைமை ஏற்க மற்றதொரு பேரரசு வணங்கி நிற்க மாறிவரும் காலத்தைப் படைத்து விட்டோம். தமிழ்மொழியின் தவமகனை, நாடு காக்கும் தலைமகனைத் தனிமகனைக் காஞ்சி தந்த அமிழ்தனைய பெருமகனைப் புகழ்ந்து பாட அறியாத நாவென்ன நாவே! கண்ணின் இமையமைனயான் மெய்ப்புகழைக் கேட்டு வக்க இயலாத செவியென்ன செவியே! அன்பால் தமையனெனும் அவன்வந்து பிறந்த ஞான்றே தமிழ்சிறந்து தனிப்பெருமை கொள்ளக் கண்டோம். கற்கண்டோ சர்க்கரையோ கரும்பின் பாகோ கனிபிழிந்து வடித்தெடுத்த இனிய சாறோ சொற்கொண்டல் பொழிமழையோ கவிஞன் தந்த சுவைமிக்க அணிமிக்க கவிதை தானோ முற்கண்ட யாழ்தந்த சுவையோ என்ன முத்தமிழின் நடையழகை எழுதிக் காட்டிக் கற்கஒரு பரம்பரையைத் தோற்று வித்துக் கனிமொழிக்குத் தமிழ்மொழிக்கோர் புதுமைசெய்தான். நஞ்சுமிழும் பாம்பினையும் மயங்க வைத்து நடம்பயிலச் செய்கின்ற மகுடி தானோ நெஞ்சமெலாம் வயப்படுத்திக் களிப்பில் ஆழ்த்தும் நெடுங்குழலாம் நாதசுரக் கருவி தானோ கொஞ்சுதமிழ் மாமழையோ அருவிக் கூட்டம் கூடியதோ ஆற்றொழுக்கோ எனவி யந்து வஞ்சகரும் மறைந்திருந்து நயந்து கேட்டு வாய்மலரும் அவன்பேச்சைப் புகழ்ந்து ரைப்பர். எதுகையுடன் மோனையெலாம் எழுந்தெ ழுந்தே எக்காளம் இட்டுநடம் புரியும் பேச்சு, புதுமையுடன் பழமையினைப் பிணைத்து வைத்துப் பொலிவூட்டிப் புத்துலகைப் படைத்துக் காட்டும்; பொதுமைமிகுங் கருத்தலைகள் ஊறி ஊறிப் பொங்கிவரும் பேரூற்றை நினைவிற் கூட்டும்; இதுவரையில் பேச்சரங்கம் காணா ஒன்றை இவன்பேச்சிற் கண்டெழிலைப் பெற்ற தன்றோ! மிகப்பெரிய பேச்சாளர் பேசும் போதும் மேவிடுவோர் தொகைமுன்பு நூற்றை எட்டும் அகத்தொளிரும் நம்தலைவன் பேச்சைக் கேட்க ஆயிரம்பல் லாயிரமாய்க் கூடக் கண்டோம்; நகைச்சுவையும் மதித்தெளிவும் வீரப் பாங்கும் நாடகமாய் இலக்கியமாய்க் கலந்து தோன்றும் பகைச்சுமையைத் தாங்கிகளும் தனித்தி ருந்து பாராட்டும் தமிழ்ப்பேச்சின் திறந்தான் என்னே! எழுத்துலகில் பேச்சுலகில் தாய்மொ ழிக்கோர் எல்லையிலாத் தனிமிடுக்கைப் படைத்து விட்டான், முழுத்திறமை கொண்டவன்றன் மொழித்திறத்தால் முத்தமிழ்க்கோர் பரம்பரையைத் தோற்று வித்தான் வழுக்கிவிழும் விகடநடை கொச்சைப் பேச்சு வம்பர்தருங் கலப்புநடை எங்கே? எங்கே? அழுக்ககலச் செய்துவிட்டான் திருப்பு மையம் ஆகிநின்று தாய்மொழிக்குக் காவல் செய்தான். வடபுலத்து வெறிமனத்தர் கூடி நின்று வளர்மொழியாம் தமிழ்மொழிக்கு மாறாய் இங்குப் படபடத்த ஒலிஎழுப்பும் இந்தி தன்னைப் பரப்புதற்கு, வஞ்சகத்தால் புகுத்து தற்குப் படமெடுத்த பாம்பெனவே முனைந்து விட்டார்; பதைத்தெழுந்து நம்அண்ணன தமிழர் நாட்டுள் விடமறுத்தான் படையெடுத்தான் போர்தொ டுத்தான் வீரத்தால் தாய்மொழிக்குக் காவல் செய்தான். செந்தமிழைக் காக்குமொரு கொள்கை பூண்டு சீறிவரும் மறக்குலத்தின் எழுச்சி கண்டோம்; உந்துகளில் தமிழ்எழுதும் கைகள் கண்டோம்; ஓர்ந்துணரின் இவற்றுக்குப் பின்னே நிற்ப தெந்தஉரு? காஞ்சிநகர் உருவம் அன்றோ? ஏந்தலவன் ஊட்டிவிடும் உணர்ச்சி யன்றோ? எந்தவிதம் நோக்கினுமே அவன்றன் செய்கை இனியதமிழ் காக்கின்ற செயலே ஆகும். பெற்றெடுத்த தாய்நாட்டைத் தமிழ்நா டென்று பேர்சொல்ல வைத்தவன்யார்? வாய்மை வெல்லும் பெற்றிமைக்குக் கோட்டைமுகம் சான்று சொல்லும்; பெரியார்முன் உந்திவிட்ட இந்திப் போரில் உற்றமுதற் படைத்தலைவன் இவனே யன்றோ? ஓயாமல் அன்றுமுதல் இன்றும் காறும் பற்றகத்துக் கொண்டுமொழிப் போரில் நிற்போன் பைந்தமிழ்க்குக் காவலனாய் விளங்கக் கண்டோம். பெரியாரே எனக்கென்றும் தலைவ ராவார் பிறிதொருவர் தலைவரெனக் கொள்ளேன் என்றே அறிவாளன் நம்அண்ணன் உறுதி பூண்டான் அத்தலைவர் தமிழ்மொழியைப் பழித்த போதும் சரியான மறுப்புரைக்கத் தவற வில்லை; தாய்மொழிக்குக் காவலன்தான் ஐயம் இல்லை; விரிவான உலகெங்குந் தமிழ்ம ணக்க விழைகின்றான் அதற்குரிய செயலும் செய்தான். சட்டங்கள் பிறகலைகள் தமிழில் ஆக்கத் தலைப்படுங்கால் மனம்பொறுக்கா உளுத்துப்போன விட்டங்கள் ஏதேதோ உளறிக் கொட்டும் வெற்றுரைக்குச் செவிசாய்க்கா வண்ணம் நல்ல திட்டங்கள் பலதீட்டித் தமிழ்வ ளர்க்கும் தீரனவன்; தாய்மொழியைத் தாழ்த்திப் பேசிப் பட்டங்கள் பெற்றவரும் திருந்தி வந்து பைந்தமிழைப் போற்றிடவே செய்த நல்லோன். புரியுமொழி புரியுமொழி எனப்பு லம்பிப் புன்மொழிகள் பலகலந்து பேசு வோர்தம் திரிபுடைய மனப்போக்கை மாற்றி விட்டான்; தெளிவுடைய தமிழ்மொழியா புரிய வில்லை? தெரியவிலை உமக்கென்றால் மனத்தின் குற்றம்; தெள்ளுதமிழ்த் தாய்மொழியின் குற்ற மன்று; உரிமையினை மறந்தமையால், அடிமை நெஞ்சம் உற்றமையால் உமதுமொழி விளங்க வில்லை. இன்றதுதான் புரியவிலை என்றால் நாளை எளிதாகப் புரிந்துவிடும்; உங்கள் மக்கள் நன்றெனவே புரிந்திடுவர்; ஆத லால்நீர் நலங்கெடுத்துப் பிறமொழிச்சொல் கலத்தல் வேண்டா என்றுமுயர் தனிமொழியைக் குழப்பி விட்டால் இளைஞரெலாம் இகழ்வரென இடித்துக் கூறி நன்றுணரும் பேரறிஞன் தாய்மொழிக்கு நலங்காக்குங் காவலனாய் விளங்கு கின்றான். சாவென்றால் ஒருமுறைதான் நம்மைச் சாரும் சாய்ந்தபினர் மறுமுறையும் உயிரை யிங்கு வாவென்றால் வாராது; போகும் அந்த வறியவுயிர் தாய்மொழியைக் காப்ப தற்கே தாவென்றால் தந்திடுவேன்; தயக்கங் கொள்ளேன் தமிழ்நாடு தனைக்காப்பேன் என்று ரைத்த நாவென்றான் வாய்மொழியை நினைந்து பார்க்கும் நாளெல்லாம் உடல்சிலிர்க்கும் உயிர்சி லிர்க்கும். செந்தமிழ்க்குத் தீங்கென்றால் அரசி ருக்கை சிறிதெமக்குப் பெரிதன்று; தாய்மொ ழிக்கு நொந்திருக்கும் நிலைவந்தால் பொறுக்க மாட்டோம்; நொடிப் பொழுதில் துச்சமென உதறி விட்டு வந்திருப்போம் போர்தொடுப்போம் தமிழ்மொ ழிக்கு வாழ்வுதரச் சிறைபுகுதத் தயங்க கில்லோம் வெந்துயர்க்கும் அஞ்சகிலோம் வாழ்வும் சாவும் விளையாட்டென் றெண்ணிடுவோம் பகைமுடிப்போம். என்றெழுந்து சூளுரைத்த அண்ணா எங்கள் எழில்மொழிக்குக் காவலனாய் விளங்கக் கண்டோம் இன்றெழுந்த மொழிப்போரில் இவனை விட்டால் எமதுமொழி காப்பதற்கோர் தலைவ னில்லை; ஒன்றுணர்ந்து சொல்கின்றேன் தமிழைக் காக்க உறுகழகம் ஈதன்றி வேறொன் றில்லை; துன்றிஎழும் கழகத்தைக் காப்ப தற்கும் தூயஒரு தமிழன்றி மற்றொன் றில்லை. பேரரசு, வளர்ந்துவரும் ஒற்று மைக்குப் பிழைசெய்ய இந்தியினைத் திணித்தால் மக்கள் போர்முரசு கொட்டிடுவர்; குருதி சிந்தப் பொங்கிடுவர்; தமிழ்மாந்தர் சினந்தெ ழுந்தால் சாரரசு சடசடெனச் சரிந்த தைப்போல் சாய்ந்தொழியும் ஆணவத்தார் ஆட்சி யெல்லாம் போரரசு செயநினைத்தால் புகுந்து பார்ப்போம் பொன்றுவதும் யாரென்று துணிந்து பார்ப்போம். செப்புமொழி பதினெட்டுக் கொண்டாள் அன்னை சிந்தனைதான் ஒன்றுடையாள் என்று சொன்ன ஒப்பரிய பாரதியின் மொழியைக் கூட ஒழிப்பதற்கோ முனைகின்றீர்? இந்தி என்று செப்புமொழி ஒன்றாக்கி, அறிவு கெட்டுச் சிந்தனையைப் பலவாக்கி, வெறிய ராகித் தப்புவினை புரிகின்றீர்! தேயம் உங்கள் தனியுடைமை யன்றுபொது வுடைமை யாகும். தாய்மொழியாம் தமிழ்மொழியே முரசம் ஆகத் தமிழகத்துப் பண்பாடு கவசம் ஆக ஆய்முறைசேர் அறிவுபடைக் கலமே யாகக் அறநெறியே வழிகாட்டும் துணையே யாகக் கூய்வருமோர் மொழிப்போரில் தலைமை தாங்கிக் கொடுமைகளைச் சாய்த்தொழிக்க எங்கள் அண்ணா தாய்வருமோர் காவலனாய் விளங்கக் கண்டோம் தலைவணங்கிப் பாடுதும்யாம் வாழ்க என்றே. அண்ணா 59-ஆவது பிறந்தநாள் விழா, சென்னை, 17.9.1967 30 காக்குந்தொழில்வல்லான் சிந்திக்க மாட்டாமல் சீரிழந்து நிற்கின்ற முந்தைத் தமிழ்நாட்டில் மொய்த்துத் துயர்ப்படுத்தும் கண்மூடிக் கோட்பாட்டைக் கட்டோடு சுட்டெரித்து மண்மூடிப் போக மறைத்துத் தொடர்ந்திங்கு நல்ல அறிவூட்ட நாட்டை வளமாக்கத் தொல்லை இருளகற்றத் தோன்றும் சுடரிரண்டு; ஒற்றைச் சுடர்தோன்றும் ஊரதுதான் ஈரோடு மற்றைச் சுடர்தோன்றி வாழிடமோ காஞ்சிநகர்; தோன்றும் ஒருசுடர்க்குத் தொண்ணூறு மேவிவரும் ஆன்றதொரு செஞ்சுடர்க் காறுபத்து தாவிவரும்; ஈரோட்டில் தோன்றுசுடர் எந்நாளும் ஒய்வின்றிப் போராட்டஞ் செய்துவரும் பொன்றா நெருப்பாகும்; காஞ்சிச் சுடரோ கனலாது காய்ந்துமன வாஞ்சைக் கதிரால் வளர்ந்துவரும் ஞாயிறது; ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றுதும்; மாயிரு ஞாலம் வளமுடன் வாழ்ந்திட ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்; எண்ணும் மனத்தில் இனித்திருக்கும் நல்லவனாம் அண்ணன் புகழ்சொல்ல ஆயிரம் நாவேண்டும்; பொன்றாப் புகழ்மணக்கும் புண்ணியன் நற்குணங்கள்; ஒன்றா இரண்டா ஒருபொழுதில் பாடுதற்கு? தோற்றுவித்த கட்சி துவளாமல் காத்துவந்த ஆற்றலுக்கு நேர்சொல்ல ஆளொருவர் ஈங்கில்லை; காளையரைக் கொண்ட கழகம் வளர்ந்துவிடின் நாளைநிலை என்னாகும் நாடே அவர்வயமாம் என்றஞ்சிப் பேரரசை ஏற்றிருந்த நல்லோர்கள் அன்று தடைச்சட்டம் ஆக்கி விடுத்தார்கள்; போயிற்றுப் போயிற்றுப் பூண்டோடு போயிற்று வாயற்றுப் போயிற்று வாயேது கட்சிக்கென் றார்ப்பரித்து நின்றார் அரசியல் சோதிடர்கள்; போர்ப்பயிற்சி நன்கு புரிந்திருக்கும் நம்அண்ணன் தாக்கவந்த சட்டம் தலைதூக்க மாட்டாமல் ஆக்கிவைத்த ஆற்றல் அறிவுளார் போற்றுகின்றார்; குட்டிக் கலகங்கள் கோள்மூட்டல் அங்குமிங்கும் எட்டிப் பிடித்தே இறுகமுடி போடல்என நாளெல்லாம் ஆடிவரும் நாரதர்கள் கூடிஒரு கேளல்லார் தம்அணைப்பில் கேடு விளைத்தார்கள்; பேசா தனபேசிப் பேயாட்டம் ஆடிவந்தார் ஏசா தனவெல்லாம் ஏசி எழுதிவந்தார்; கூடிக் களிக்குங்கால் கோமான் புகழொன்றே பாடிப் பிழைத்தவர்கள், பண்பாளன் கால்களையே ஓடிப் பிடித்தவர்கள், ஊர்ஊராச் சென்றுபல சாடிப் பழித்தார்கள் சாகும் கழகமென ஆடிக் களித்தார்கள் ஆகாத கூட்டுறவைத் தேடிப் பிடித்தார்கள் தேய்பிறைபோ லானார்கள்; சட்டமென வந்த தடையாம் புறப்பகையால் எட்டுணையுங் கேடின்றி ஏற்றமிகு நம்அறிஞன் காத்த கழகததைக் காழ்ப்பு மிகுதியினால் வாய்த்த அகப்பகைதான் வாடிடச் செய்திடுமோ என்றஞ்சித் தொண்டரெலாம் ஏங்கி யிருக்குங்கால் நன்றெண்ணிச் செய்தான் நயவஞ்சப் போக்கெல்லாம் சென்றொழியச் செய்தான் சிறுமைப் பகையனைத்தும் வென்றுமலர் வாகை விறல்மாலை சூடிநின்றான்; ஆண்டுபல வாக அரசிருக்கை வீற்றிருந்தே ஆண்டிருந்தோர் தம்மை அசைப்பதற்கு யாருமிலர் என்ற செருக்காலே எக்காள மிட்டவர்கள் நின்றுதடு மாறி நெடுமூச்சு வாங்கவைத்தான்; நாகம் படர்ந்திருக்கும் நச்சுப் பெருமரத்தை வேகப் புயலாகிவேரோடு சாய்த்து விட்டான்; சாடும் புயலாகிச் சங்காரம் செய்த பினர்ப் பாடுமிளந் தென்றலெனப் பாராண்டு நிற்கின்றான்; மக்கள் நலங்காத்து மாநிலத்தார் நெஞ்சமெலாம் புக்கிருந்து வாழ்ந்து பொலியும் உயிராகி, மாந்தர் உயிரானால் மன்னுயி;ர்கள் அத்தனையும் ஏந்தும் உடலாக ஈடின்றி ஆள்கின்றான்; காக்குந் தொழில்வல்லான் காட்டும் நெறிநடத்தல் யார்க்கும் நலமென்பேன் யான். 29.9.1968 31 ஆழம் அறியா அன்புள்ளம் சிந்தனையால் நாவலத்தால் செய்யஎழுத் தாற்றலினால் இந்தத் திருநாட்டின் ஏறனைய நல்லிளைஞர் நெஞ்சங் கவர்ந்தான் நிலையான தம்பியராக் கொஞ்சி அணைத்துக் குலவி மகிழ்கின்றான் உய்தற் குரியவழி ஓதிவந்த நம்தலைவர் செய்தற் கரியனவே செய்துயர்ந்த நம்பெரியார், தந்திரத்தில் வல்ல தகுதியுள மூதறிஞர், செந்தமிழில் வல்லார், சிவனடியார், மற்றெவரும் அண்ணனுக்கு மூத்தோர் அறிவாளர் ஆனாலும் தண்ணளியன் முன்னிலையில் தம்பியராகிவிட்டார்; அண்ணாநம் அண்ணா என் றப்பெரியர் வாயார அண்ணாவைச் சொல்லி அழைத்ததை நாமறிவோம்; பேச்சாளர் என்று பெயர் சொல்லி மேடைகளில் ஏச்சாள ராகி இழிமொழிகள் கட்டுரைத்துப் பேசிவரும் பித்துடையார் பேச்செல்லாம், நெஞ்சத்து வீசுகிற வேலாகி மேலோரைப் புண்படுத்தும்; நாடாளும் நம்தலைவன் நாவசைத்துப் பேசுங்கால் கூடாரைக் கூடக் குலவிவரப் பண்படுத்தும்; வெல்லரிய சொல்வல்லான் வெற்றி தரும்எழுத்தில் நல்லதொரு முத்திரையை நாட்டிப் புகழ்பெற்றான்; செந்தமிழில் மிக்கபுலம் சேர்ந்ததுபோல் ஆங்கிலத்தும் வந்த புலமுடையான் வாகைத் திறமுடையான்; நான்பிறந்த பொன்னாட்டை நல்லதமிழ் நாடென்று தேன்போல் இனிக்கப்பேர் செய்தானை வாழ்த்துகின்றேன்; என்னுள் கொலுவிருந் தேற்றம் தருபவட்குக் கண்ணுள் கருமணிக்குக் காவியத் தாய்மொழிக்கு மாநாடு கூட்டி மலர்சூட்டிப் பாரெல்லாம் தான்நாடச் செய்தானைத் தாள்பணிந்து போற்றுகின்றேன்; மற்றோர் வளர்ச்சியினால் தன்வளர்ச்சி மாறுமெனச் சற்றேனும் எண்ணாமல் தன்னாற்றல் நம்புமவன், சார்ந்தாரை வாழ்வித்துத் தன்போல் வளர்த்துவிடத் தேர்ந்தானைப் பல்லாண்டு வாழ்கவெனச் செப்புகின்றேன்; கற்றுணர்ந்த நல்லோர்பால் காணுந் திறமையினை உற்றுணர்ந்து போற்றிவரும் உள்ளத்தை வாழ்த்துகின்றேன்; பேராற்றல் வாய்ந்த பேராயக் கட்சியினைப் போராட்டத் தேர்தலிலே பொன்றிவிழச் செய்திடினும் வெற்றிக் களிசிறிதும் வேண்டாப் பெருந்தன்மை உற்றதொரு நற்பண்பை உள்ளூறிப் பாடுகின்றேன்; தொண்டரெலாம் தம்பியராத் தோள்தந்து காக்குமுளம் கொண்டொழுகும் அன்புளத்தைக் கோடிமுறைவாழ்த்துகின்றேன்; தந்தை பெரியாரும், தந்நலத்தை நாடிகளும் தந்த வசைமொழிகள், தாங்கும் இதயத்தை, அண்ணன் குடும்பத்தை ஆணவத்தார் கூறிவந்த புன்மொழிகள் யாவும் பொறுத்திருக்கும் நெஞ்சுரத்தைக் கோடி முறைசொல்லிக் கோவில்கட்டிக் கும்பிட்டுப் பாடி முடித்தாலும் பாட்டில் அடங்காது; நேரு பெருமகனார் நீண்ட ஒருசொல்லைக் கூற மனந்துணிந்தார்; கொற்றமிகு காளையர்கள் சீறி எழுந்தார்கள்; சிந்தனையில் செந்தமிழில் ஊறி வரும் நெஞ்சத்தான் ஒன்றுரைத்தான் தம்பியர்க்கு; நம்மிற் பெரியவர்தாம் நம்மைப் பழித்துரைத்தார் விம்மாதீர் மன்னிப்போம் விட்டு மறந்திருப்போம் என்று மொழிந்த இனிய குணத்தானை நின்று வணங்கி நெடுங்காலம் வாழ்த்திடுவேன்; நம்மிடையே வாழ்ந்து நலம்பெற்று வாழ்வுயர்ந்து தம்பி நிலைமாறித் தாவிவிட்ட ஓர்நடிகர் எங்கிருந் தாலுமவர் வாழ்க எனவாழ்த்திப் பொங்கி மொழிந்தஒரு பொன்மொழியை வாழ்த்துகினறேன்; அன்புளத்தின் ஆழம் எவரும் அறியாத தென்புலத்தான் வாழ்க சிறந்து. 29.9.1968 32 அண்ணா வருக! அண்ணா வருக அறிவே வருக கண்ணே வருக கனிவே வருக பண்பே வருக பணிவே வருக அன்பே வருக அறமே வருக முதல்வா வருக முத்தமிழ்த் தாயின் புதல்வா வருக புண்ணியா வருக தாயெனத் தமிழகம் தாங்கும் நினக்கு நோயென ஒருசொல் நுவன்றனர்; அச்சொல் தணியாத் துயரைத் தந்திட நொந்தேன் இனியாய் நினக்கோ இந்நிலை நேர்ந்ததென் றேங்கி ஏங்கி இடர்தனில் வீழ்ந்தேன்; தாங்கிய துயரம் சாற்றுதற் கரிதே; நாட்டின் நிலையும் வீட்டின் நிலையும் வாட்டிட நாளும் வதங்கிடும் என்மனம் நாட்டின் தலைவன் நலிவுற் றானெனக் கேட்டுத் துடித்துக் கிடந்தது துவண்டது; பைந்தமிழ் பாடிப் பழகுமென் நாவும் வெந்துயர் பொறாஅது வேதனைப் படலால் பாடல் மறந்து பாழ்த்துக் கிடந்தது வாடல் தவிர்த்திட வந்தனை தலைவா! வருகஎம் தலைவா வாழிய நெடுநாள் தருகசொல் லமிழ்தம் தலைவா வாழிய! புல்லிய கொடுநோய் போக்கிய வல்லவர் மில்லர் எனும்பெயர் மேவிய நல்லவர் அமெரிக்க ராயினும் ஆருயிர் காத்தலால் தமரெமக் காயினர் தமராம் அவரைப் பொங்கும் உளத்தாற் போற்றுதும் யாமே; எங்கள் தோழரென் றேத்துதும் யாமே குடர்ப்புண் தீர்த்தனர் குலவிடும் எங்கள் இடர்ப்புண் தீர்த்தனர் இனியராம் எமக்கே; நலமுற வந்துள நல்லோய் வணக்கம் இளகிய மனமும் இனியநன் மொழியும் குலவிய தலைவா கூர்மதி யுடையோய் வாழிய நெடிதே வாழிய இனிதே. அமெரிக்க நாடு சென்று நலம் பெற்றுத் திரும்பிய அண்ணாவுக்கு எழுதிய வரவுரை. 6.11.1968 33 யாழ் உடைந்தது விண்மீன்கள் புடைசூழ்ந்து நிற்க, வான வெளியினிலே முழமதியொன் றொளிரக் கண்டோம்; மண்மீது பயிர்தளிர்க்க உயிர்த ளிர்க்க வளர்நிலவைப் பாய்ச்சியது மகிழ்ந்தோம்; அந்தத் தண்மதியை முகிலொன்று வந்து சூழத் தன்னொளியும் மங்கியது மயங்கி நின்றோம்; *கொண்மூதான் விலகிவிடும் மேலைக் காற்று கூடிவரும் காலமிதென் றெண்ணி நின்றோம்; காற்றடித்த வேகத்தாற் கொடிய மேகம் கலைந்ததுகண் டொருவாறு தேறி நின்றோம்; கூற்றெடுத்த படையெடுப்பில் தோற்று விட்டோம்; குளிர்நிலவைக் கருணையிலான் விழுங்கிவிட்டான்; காற்றடிக்கச் சிதறுண்ட மேகம் எங்கள் கண்களிலே புகுந்துநிலை நின்ற தம்மா! கூற்றுவற்குப் பசியெடுத்தால் இந்த நாட்டைக் குளிர்விக்கும் முழுமதிதான் கிடைத்த தேயோ? வடிவமைந்த யாழொன்று தனது கையில் வைத்திருந்தாள் தமிழன்னை; அதனை மீட்டிப் படிமுழுதும் இசைமயமாப் படைத்து நின்றாள்; படர்ந்துவரும் இசைத்தேனைப் பருகி மாந்தர் உடல்நிமிர்ந்தார் உளம்நிமிர்ந்தார் உயர்வும் உற்றார்; உயர்விதனைப் பொறுக்ககிலாக் காலன் என்னும் கொடியஒரு பாவியவன் யாழ்ப றித்தான் குமுறியழ முகாரிப்பண் பாடு கின்றான். தமிழ்வானில் வட்டமிட்டுச் சுற்றிச் சுற்றித் தனக்குநிகர் இல்லைஎனப் பாடிப் பாடி அமிழ்தனைய இசைபரப்பி நம்மை எல்லாம் அகமகிழச் செய்ததொரு வானம் பாடி; இமிழ்கடலுக் கப்பாலும் பறந்து சென்றே இனியதமிழ் பாடிவரக் கண்டு வந்தோம்; உமிழ்சினத்துக் காலனெனும் வேடன் கண்டான்; ஒருசிறிதும் இரக்கமிலான் வீழ்த்தி விட்டான். வித்தாகி முளையாகிக் கழனி யெங்கும் விளைகின்ற பயிராகிச் செழித்து நல்ல கொத்தாகிப் பயனாகிக் கூடுங் காலை கொள்பயனைச் சிதைத்தானோர் கொடிய பாவி; பித்தாகித் திரிகின்றோம் துன்ப மென்னும் பேராழி மூழ்குகின்றோம்; தமிழர் வாழ்வின் சொத்தாகி வந்தானை அண்ணா என்னும் சொல்லுக்கே உரியானைப் பறித்தான் அம்மா! அறப்போர்கள் பலமுடித்தான் ஆட்சி பெற்றான் அன்பொன்றே மனத்தமைத்தான்; அந்த ஆட்சிச் சிறப்பாலே முதலமைச்சன் ஆனான் அண்ணன்; செந்தமிழர் நற்றவமென் றிருந்தோம்; ஆனால் இறப்பாலும் முதலமைச்சன் ஆனான் அம்மா! இத்துயரை எவரிடம்சென் றாற்றிக் கொள்வோம்? மறப்பெனும் மருந்தாலும் மாறா தந்தோ! மனமென்னும் ஒன்றனைநாம் பெற்ற தாலே. செந்தமிழ்க்கும் புலவர்க்கும் விடிவு காலம் சிறந்ததொரு பொற்காலம் மீண்டும் இங்கு வந்திருக்க வழியுண்டென் றெண்ணி எண்ணி மகிழ்ச்சியெனுங் கடலுக்குள் விரைந்து சென்றோம் உந்திஎழும் கற்பனையாம் படகில் வந்தோம் ஒளிவிளக்காம் கரைவிளக்கம் அணைந்த தந்தோ! நொந்திருக்கும் துயர்க்கடலுள் வீழ்ந்து விட்டோம்; நோவகற்றக் கைகொடுக்க வருவார் யாரே? திருக்குறளாம் தெளிதேனைச் சங்கம் தந்த தீங்கனியாம் இலக்கியத்தைத் துய்த்துத் துய்த்துத் தெருக்களெலாம் தமிழ்முழக்கம் செய்து நின்றாய்! தேயமெல்லாம் தமிழோசை பரவச் செய்தாய்! உருத்தெழுவாய் தமிழுக்குத் தீங்குண் டென்றால்! உவந்திடுவாய் தாய்மொழிக்கோர் ஆக்கங் கண்டால்! இருக்கின்ற தமிழ்ப்பணியை விட்டுச் செல்ல எவ்வண்ணம் மனத்துணிந்தாய்? அண்ணா அண்ணா! பழகுதமிழ் நிலையுயரப் பாடு பட்ட பண்பாளர் தமிழ்ப்புலவர் உருவை எல்லாம் அழகியநற் சிலைவடிவில் படைத்துப் போற்றி ஆழிநெடுங் கரையருகே வரிசை செய்தாய்! தொழவுரியர் சிலையருகே நீயும் சென்று தூயவனே நிலையாக அமர்ந்து விட்டாய்! பழையதமிழ் நிலையுணர்ந்து பாடங் கேட்கும் பற்றாலே அவ்வண்ணம் அமர்ந்தாய் கொல்லோ? மணப்பாட்டின் ஒலிகேட்க அறுபான் ஆண்டு மணித்திருநாள் நினக்குவரும் அந்நாள் என்றன் மணிப்பாட்டை நின்னடிக்குப் படைப்பேன் என்று மனக்கோட்டை கட்டிவைத்து மகிழ்ந்தி ருந்தேன்; பிணப்பாட்டுப் பாடவைத்து மறைந்தாய் அண்ணா பேச்சாலே கோட்டை தனைப் பிடித்தாய் என்றன் மனக்கோட்டை மூச்சாலே இடித்தாய்! இந்த மனவேறு பாடெதற்குக் கொண்டாய் ஐய! பண்பாடு பண்பாடென்று றுரைத்து ரைத்துப் பகைதழுவும் நெஞ்சத்தார் தம்மை யும்போய் நண்போடு தழுவியநற் கைகள் எங்கே? நலமிக்க ஒளிவிளக்காய் வந்த கோவே கண்பாடு கொண்டனையே கல்ல றைக்குள்; காரணமென்? அரசியலில் நீநி னைத்த பண்பாடு காணாத ஏக்கத் தாலோ? பகறியழ எமைவிடுத்துச் சென்று விட்டாய்! விடுதலைநாள் சுதந்திரத்தின் திருநாள் தன்னை வீரத்தின் தியாகத்தின் திருநாள் என்றாய்; அடிமையென ஆக்கிவைத்தோர் கணக்கைத் தீர்த்த அரியதொரு நாளென்றாய் நாற்பத் தேழை; உடைமைஎன வரவேட்டில் கணக்குப் பார்க்கும் உவமைமிகு நாளென்றாய் அறுபத் தேழை; கடமையினை நன்கியற்றி நின்றோய்! ஏனோ கணக்கொன்றும் பாராது மூடி விட்டாய்? பெரும்புரட்சிக் கருத்தெல்லாம் பேசி நிற்பாய்! பேச்சொன்றே கேட்டிருந்தோர் அஞ்சி, நின்னை இரும்புளத்து மனிதனென எண்ணி நாட்டில் ஏதேதோ விளைந்துவிடும் என்றி ருந்தார்; கரும்புளத்து மென்மையினை மேன்மை தன்னைக் காட்டினைநீ குடியாட்சிப் பண்பு காட்டி; பெருங்குணத்தைக் கண்டபினர்; அஞ்சி நின்ற பேணாரும் நின்நட்பை விழைந்து வந்தார். அரசியலைத் திறமுடனே நடத்த வல்லார், அண்ணாநீ தோற்றுவித்த கட்சி தன்னை உரமுடனே வளர்க்கவல்லார் தோன்ற லாகும்; உன்போலப் பாசத்தை வளர்த்துப் போற்றி அரவணைக்க வல்லாரை என்று காண்போம்? அண்ணாவென் றுறவுமுறை சொல்லிச் சொல்லி உரிமையுடன் அழைத்திடயாம் எவர்பாற் செல்வோம்? உனைநினைந்தே நாளெல்லாம் உருகு கின்றோம். படிப்படிநீ உழைத்துழைத்து மேலே சென்றாய்! பாராளும் நிலைபெற்றாய்! அதைப்போல் இன்றும் படிப்படியா வுயிர்த்துயிர்த்து மேலே சென்றாய்! பாடல்களில் நிலைபெற்றாய் சிலையும் பெற்றாய்! அடிப்படையை இழந்ததனால் ஆடி நிற்கும அரண்மனையாய்த் தமிழ்நாடு மயங்கி நின்று துடிப்படையச் செய்துவிட்டாய்! எங்கள் கோவே தொண்டெல்லாம் முடிந்ததென்றா முடித்தாய் வாழ்வை. எழுத்தெனினும் பேச்செனினும் சலிப்புத் தோன்றின் எழுதுவதைப் பேசுவதை நிறுத்து கென்று பழுத்துயர்ந்த பட்டறிவால் தம்பி யர்க்குப் பகருவைநீ! நின்வரவால் களிப்பே யன்றி வருமூச்சை நீஎதற்கு நிறுத்திக் கொண்டாய் எழுத்துலகம் பேச்சுலகம் என்றும் நின்னை எதிர்நோக்கி நிற்பதைநீ அறியாய் கொல்லோ? பண்ணாலுன் அருட்புகழைப் பாடு கின்றேன் பணிகின்றேன் மலரடியை; நின்ப டத்தைக் கண்ணார மனங்குளிரப் பார்த்துப் பார்த்து கண்ணீர்கொண் டாட்டுகின்றேன் கருணை வாழ்வே! எண்ணாத நாளொன்று வாழ்வில் இல்லை; இனியதமிழ் வளர்ப்பதிலே உன்னைக் காண்பேன்; அண்ணாஎன் கவிமலரைத் தூவி நின்றே அடியிணையைத் தலைதாழ்த்தி வணங்குகின்றேன். 16.2.1969 34 அடக்கத்தை அடக்கம் செய்தோம் படைவலியால் வடபுலத்தைச் சேர வேந்தன் பகையாக்கிப் பணிவித்தான்; நீயோ பேச்சு நடைவலியால் நட்பாக்கிப் பணிய வைத்தாய்! நாவலனே! மன்பதையைக் காக்கும் கொற்றக் குடையுடைய குடிப்பிறத்தல் துன்பம் என்று குட்டுவனும் தெளிந்துரைத்தான்; புலவர் பாட்டுத் தொடையுடையாய் முதலமைச்சன் எனினும் நானோர் சூழ்நிலையின் கைதி என நீயும் சொன்னாய். அன்றுமுதல் இன்றுவரை தோழர் என்னை அண்ணாவென் றழைக்கின்றார்; அமைச்ச ரான இன்றென்னை ஒருசிலரும் அண்ணா என்பார்; இரண்டுக்கும் இடையிலுள வேறு பாட்டை நன்றுணர்வேன் என்றுரைத்தாய்; அமைச்ச ராகி நாடாளும் பொறுப்பேற்றேன் இன்றும் தோழன் அன்றுதரும் நிலைபோல வெண்பொன் ஒன்றே அளிக்கின்றான்; மதிக்கின்றேன் மகிழ்வுங்கொள்வேன். நாடாள வந்தபினர் நூறு நூறு நான் தருவேன் நான் தருவேன் என்று செல்வர் ஓடோடி வருகின்றார்; ஏழை தந்த ஒருவெண்பொன் என்னுடலிற் குருதி யாகும்; மேடாளும் செல்வர்தரும் வெண்பொன் நூறும் மெய்ப்பூசும் சந்தனமாக் கொள்வேன் என்றாய்; ஊடாடும் பொருள்நயத்தை எளியோர் தம்பால் உனக்கிருக்கும் அன்புளத்தைக் காட்டி நின்றாய். பிறந்தனைநீ சென்னை எனும் இராச்சி யத்தில்; பெற்றெடுத்த தாய்நாட்டின் இழிவு நீக்கி இறந்தனைநீ தமிழ்நாட்டில்; தமிழ்நா டாக்க ஏற்றதுயர் பற்பலவாம்; தன்ன லத்தைத் துறந்தனைநீ நாட்டுநலம் ஒன்றே வேண்டித் தூயபணி ஏற்றனைநீ; உழைத்து ழைத்துச் சிறந்தனைநீ; அன்புருவே காந்தி யண்ணல் சிந்தையெலாம் நின்செயலில் மிளிரக் கண்டோம். புகழ்மலையின் உச்சிக்கே சென்று விட்டாய்! புவியாளும் முதலமைச்சும் பெற்று விட்டாய்! மகிழ்வுற்றுச் செருக்குற்றுத் திரிந்தா யல்லை; மன்னவனே சாமான்யன் என்றே உன்னை இகழ்வாக அடக்கமுடன் சொல்லி வந்தாய்! இனியிந்த அடக்கத்தை எங்குக் காண்போம்? தகவுடையாய் அடக்கத்தை அடக்கம் செய்தோம் தணியாத துயர்க்கடலில் மூழ்கி விட்டோம். 16.2.1969 35 நெஞ்சம் நெக்குருகும் பூவுலக வரலாறு படித்துத் தேர்ந்தார் புதியதொரு வரலாற்றைப் படைத்து வாழ்ந்தார் *நாவலர்ந்து வருஞ்சொல்லால் எழுத்தால் நெஞ்சால் நயத்தக்க நாகரிகப் பண்பு சேர்த்தார் தாவிவருந் தொண்டர்களைத் தம்பி என்று தன்மானக் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார் ஆவிதனைத் தமிழினத்தின் விடுத லைக்கே அளித்துவிட்டார் எமதுயிரில் தளிர்த்துவிட்டார். ஆண்டவனைப் பற்றுடையார் அழைப்ப தைப்போல் அண்ணாஅண் ணாவென்றே அழைக்கப் பெற்றார் மீண்டவரைப் போலொருவர் யாங்குக் காண்போம் மேலவரை நூலவரைப் பெரியார் சொல்லைத் தாண்டரிய நெஞ்சினரைப் பண்பா டெல்லாம் தழைத்துவரும் மனத்தவரைத் தமிழர் ஆட்சி மீண்டுவர உழைத்தவரை நினையுந் தோறும் மெழுகெனவே நெக்குருகிக் கசியும் நெஞ்சம். 36 பண்பு மலர் பரந்திருக்கும் உள்ளத்தை நெற்றி காட்டும்; பண்பாட்டை நகைதவழும் இதழ்கள் காட்டும்; சிறந்திருக்கும் கூர்மதியை மூக்கு காட்டும்; சிந்தனையின் ஆற்றலினை விழிகள் காட்டும்; கரந்திருக்கும் வீரத்தைப் புருவங் காட்டும்; கரகரத்த குரல்காட்டும் பெருமி தத்தை; சுரந்திருக்கும் பேரருளை உள்ளங் காட்டும் சுட்டுவிரல் தமிழரின் ஒருமை காட்டும். எளிமைதனை அணிந்திருக்கும் உடைகள் காட்டும்; ஏற்றத்தை அவர்கண்ட நடைகள் காட்டும்; ஒளிமிகுந்த அறிவாளர் எடுத்து ணர்த்தும் உயர்நெறிகள் போற்றுவதைச் செவிகள் காட்டும்; தெளிவுடைய மனமுடையார் அண்ணா என்று செப்புகிற உறவுச்சொல் உரிமை காட்டும்; அளிமிகுந்த துணிவுதனைச் செயல்கள் காட்டும்; அடக்கத்தைக் குறளான உருவங் காட்டும். பொறுமைஎனும் உயர்பண்பு கொண்டவுள்ளம் பொறாமைதனை எள்ளளவும் காணா வுள்ளம் வறுமையினைக் காணுங்கால் இரங்கும் உள்ளம் வளர்தமிழின் வாழ்வுக்கே வாழ்ந்த வுள்ளம் சிறுமையினைக் காணுங்கால் சீறும் உள்ளம் சினமென்னுஞ் சுடுநெருப்பைச் சேரா வுள்ளம் வருபவரைக் கைகொடுத்து வளர்க்கும் உள்ளம் வாழ்வெல்லாம் நலஞ் செய்தே வளர்ந்த வுள்ளம். கலைத்துறையில் திறமிக்க தலைவ ருண்டு களங்காணாப் போராட்டத்தலைவ ருண்டு கலைத்துவிடும் அரசியலில் தந்தி ரங்கள் காட்டுகிற தலைவருண்டு துறைகள் தோறும் மலைத்தெவரும் பாராட்டும் தலைவ ருண்டு வானநெறி காட்டுகிற தலைவ ருண்டு நிலைத்துவரும் பேரன்பை அண்ணன் போல நெஞ்சத்தில் வளர்த்துவந்த தலைவ ருண்டா? தொண்டர்தமைச் சொக்கட்டான் காய்க ளாக்கிச் சுரண்டிநலம் துய்க்காத தலைவன், ஏழைத் தொண்டர்தமைத் தூண்டிவிட்டுச் சிறைக்க னுப்பிச் சுகபோகங் காணாத தலைவன், நல்ல தொண்டருக்குள்தொண்டனெனக் கலந்து நின்று தோள்தந்து துணைநின்ற தலைவன், உற்ற தொண்டர்தமைத் தொண்டராக் கொண்ட அண்ணன் தொண்டுளத்தால் நிலைபெற்ற தலைவன் ஆனான். பேசுபுகழ்ப் பேரறிஞன் எங்கள் அண்ணன் பெற்றிருந்த ஆற்றலுக்கோர் எல்லை யுண்டோ? ஏசுவையும் புத்தரையும் ஏட்டிற் கண்டோம் இன்றவர்தம் பண்புருவை நாட்டிற் கண்டோம் ஏசுமொழி அத்தனையும் தாங்கிக் கொள்ளும் இதயத்தை அண்ணாவின் செயலிற் கண்டோம் வாசமலர் போல்மனத்தான் சிரித்துக் கொண்டே வசவாளர் வாழ்கவென மொழியக் கேட்டோம். ஒருவழியில் நிலைநின்று நடப்பீர் என்றே உணர்த்துதல்போல் ஒருவிரலைச் சுட்டிக் காட்டிப் பெருமையுற நிற்கின்ற சிலையின் முன்னே பேதையர்போல் துணிகொண்டு முகத்தை மூடி வருமனித உருவங்கள் கண்ட துண்டு; வாராத நோய்வந்து வாடி நின்று மருகுகிற வேளையிலும் வைதா ருண்டு; மாவலியன் பொறுமையொடு தாங்கி நின்றான். நெஞ்சமெலாம் குடிபுகுந்து மெச்ச நின்றான் நெடும்புகழின் படியேறி உச்சி சென்றான் செஞ்சுடர்போல் ஒப்பரிய தலைவன் என்றே சேராரும் உணர்ந்துதலை வணங்க நின்றான் வஞ்சமிலான் நானேநும் தலைவன் என்று மதங்கொண்டு வெறிகொண்டு சொன்ன தில்லை; நெஞ்சுருகச் சாமான்யன் என்றே சொன்னான் நெல்வயலில் விளைந்தபயிர் வளைந்தே தோன்றும். தம்பியர்தம் நெஞ்சமெலாம் இதழ்க ளாகத் தனிஅறிவு மகரந்தப் பொடியே யாக வெம்பகைக்கும் இனிமைசெயும் கருணைப் பண்பே வீசிவரும் மணமாகக் கற்ற கல்வி தெம்புடைய தண்டாகச் சுரக்கும் அன்பே தேனாகக் காஞ்சிஎனும் பொய்கை தன்னில் செம்மைநிறத் தாமரைப்பூ மலரும் போது சிறுகாலன் அம்மலரைக் கசக்கி விட்டான். 37 அண்ணா பேசினார் ஆண்டுகள் ஐம்பதின் அப்பாலே ஓரைந்து தாண்டியவன் நானெனினும் தள்ளாமை கண்டதிலை; என்றும் இளைஞனென ஏறுநிகர் காளைஎன ஒன்றும் உணர்வுடைய உள்ளம் உடையவன் நான்; என்றாலும் வெண்மை எனது தலைமுடியில் நன்றே படர நலமிக்க என்னுளத்தைச் சொல்ல முடியாத் துயரொன்று கவ்வியது நல்ல இளமை நமைவிட்டு நீங்கிடுமோ? வேண்டா முதுமைவரும் வேளை நெருங்கிடுமோ? தீண்டாமல் போகாதோ? தேய்ந்திடுமோ நம்இளமை? என்றொருநாள் என்மனையில் ஏங்கித் தனித்திருந் தொன்றும் இமைமூடி ஓய்ந்து தளர்ந்திருந்தேன்; ஆழ்கடலின் மேற்புறத்தே ஆர்த்துக் கரைகடக்க நீள்கரையில் மோதி நிமிர்ந்தெழுந்த பேரலைகள் ஓரக் கரைகடக்க ஒண்ணாமல் மீளுங்கால் நேருமொலி என்செவியில் நீங்கா தொலிசெய்ய, வீசிவெருங் காற்று விளையாடி இன்பத்தைப் பூசி எனதுடலில் பூரிப்புச் செய்திருக்கச் சென்னைக் கடற்கரையின் சீரெழிலை நோக்கியவா றென்னை மறந்தங் கினிதே நடந்துவந்தேன்; வாழும்நாள் எல்லாம்நம் வாழ்வுக்கே நாவசைத்தோன் நாளும் கடலலையாம் நாவதனால் தாலாட்டப் பேசாமல் சந்தனப் பேழைஎனுந் தொட்டிலிலே ஆசான் நெடுந்துயிலில் ஆழுங் கரையோரம் வந்தேன் உடல்சிலிர்த்தேன் வாடிவரும் என்னுளத்தில் செந்தேன் துளிர்த்ததுபோற் செம்மாந்து நின்றேன்நான்; அண்ணாஎன் அண்ணாஎன் றார்த்தேன்; அருள்பொழியும் கண்ணான்என் கண்முன்னே காட்சி தரநின்றான்; வாமன்னா என்று வணங்கித் தலைநிமிர்ந்தேன்; பாமன்னா வாழ்க எனப் பையச் சிரித்திருந்தான்; மெல்லச் சிரித்தாய்நீ மேலோய்நின் வாய்ச்சிரிப்புச் சொல்லும் பொருள்தெரியச் சொல்லிடுக என்றேன்நான்; உன்னைத்தான் தம்பி உயிர்போல் நினைந்திருந்தேன் என்னைத்தான் நம்பி இருந்தாய் நீ உண்மையிது; மண்ணுலகில் வாழுங்கால் என்னை மதித்துவந்தாய் கண்மணிபோல் உன்னைக் கருதி மகிழ்ந்தேன்நான்; என்னோ டிணைந்துநீ ஏற்ற துயரெல்லாம் எந்நாளும் எண்ணி இறுமாப் படைகின்றேன்; பூண்ட அறப்போர்கள் புக்க சமர்க்களங்கள் மீண்டும் நினைத்தாலே மேனியெலாம் புல்லரிக்கும்! தம்பி யுடையான் படைக்கஞ்சான் என்றிருந்தேன் நம்பி யதுபோல நாளெல்லாம் வென்றுவந்தாய்! வென்றுவந்த நீயின்று வேறு நினைவுகளைத் துன்றிவர விட்டுத் துவள்கின்றாய்! நாடோறும் உன்னை நினைந்தே உளம்நொந்தாய்! உன்னிளமை தன்னை நினைந்தும் தணியாத் துயர்கொண்டாய்! ஆளடிமை செய்யாமல் ஆண்ட இனத்தவன்நீ வாளுடைய தோளுயர்த்தி வட்டமிட்டுப் போர்முழுதும் வெற்றிக் கொடிநாட்டி வீரப் புகழுயர்த்திச் சுற்றித் திரிந்தவன்நீ சோர்ந்து கிடப்பதுவோ? நாட்டை நினைந்தாயா? நாடாண்ட உன்னினத்தின் பாட்டை நினைந்தாயா? பாடகலக் கேடகலத் தன்னாட்சி பெற்றுயரச் சற்றும் நினைந்தாயா? உன்னாட்சி பெற்றிங் குயர நினைந்தாயா? சாதி தொலைத்தாயா? சாத்திரக் குப்பைகளை மோதித் தகர்த்தாயா? மோத நினைந்தாயா? ஓதித் திரிவதில்தான் உள்ளம் மகிழ்கின்றாய்! சாதித்துக் காட்டிடச் சற்றும் நினைந்ததுண்டா? மூத்த தமிழ்மொழியை மொய்க்கும் பகைநீக்கிக் காத்துப் புரக்கக் கருத்தில் நினைந்தாயா? உன்னை நினைந்தே உளம்நொந்தாய்! உன்னிளமை தன்னை நினைந்தும் தணியாத் துயரடைந்தாய்! இந்த நிலைகண்டே ஏங்கி வருந்திமனம் நொந்து சிரிக்கின்றேன் என்று நுவன்றான்; மறப்போம்பின் மன்னிப்போம் என்றஒரு மாற்றம் தரத்தகுந்த அண்ணா தவறுளதேல் மன்னிப்பாய்! பொன்னை மறப்பேன் பொருளை மறந்திருப்பேன் என்னை மறப்பேன் இனிய மனைமறப்பேன் அன்னைத் தமிழ்மொழியை அண்ணா மறந்தறியேன்; என்னை யுருவாக்கும் என்னுயிரை, என்னுணர்வை, நான்வணங்குந் தெய்வத்தை, நாடி நரம்பெல்லாம் தான்புகுந்த செங்குருதி தன்னை மறப்பேனோ? தென்னாட்டு மண்ணில்தான் சேயாக நான்பிறந்தேன் அந்நாட்டு மண்ணள்ளி ஆசையுடன் தின்று தவழ்ந்தேன் நடந்தேன் தரையிற் புரண்டேன் தவந்தான் புரிந்தேன் தமிழ்நாட்டில் நான்பிறக்க; என்னுயிரின் மூச்செல்லாம் தென்பொதியக் காற்றாகும் பொன்னிமகள் ஊட்டியபால் என்னுடலின் செங்குருதி; அன்னைத் திருநாட்டை அண்ணா மறந்தறியேன் என்னைத் தவறாக எண்ணி இகழற்க! என்னினத்தை அவ்வினத்தின் ஏற்றத்தை எண்ணாத கன்மனத்தன் நானல்லேன் நாளுங் கருதுகின்றேன்; தார்கொண்ட தானைத் தலைவாநம் தாயகத்தைப் பார்மன்னா பாரிங்கே! பாவி சிலர்கூடிச் செந்தமிழைத் தாழ்த்துகிறார் சீர்கெட் டலைகின்றார் எந்தவிதம் அண்ணா இதனைப் பொறுத்திருப்பேன்? போருக்கு நானெழுந்தேன் போர்க்களத்தில் என்னெதிரில் நேருக்கு நேராக நிற்பவனோ என்னினத்தான்; என்செய்வேன் அண்ணா இனத்தான் பகையானால்? தன்மொழிக்குத் தானே தடையாக நிற்கின்றான்; நாடாண்ட நம்மினமும் நற்றமிழும் தாயகமும் பீடாண்டு கொள்ளப் பெரும்பாடு பட்டிங்கு வாழுங் கழகத்தை வாட்டி ஒழிப்பதற்குத் தாளம் இடுபவரைத் தந்நலமே கொண்டவரை நம்பி ஒருமனிதன் நாடகங்கள் ஆடுகிறான்; வெம்பித் தளர்ந்துமிகும் வேதனையால் நொந்தேன்; உடனிருந்தே கொல்லும் உறுபிணிபோ லாகிக் கடலிலங்கை வீடணனாய்க் கைவரிசை காட்டி, அரியணையின் மீதேறும் ஆசை மனத்துள் மருவும் குடிலனென மாறிமனம் போய்விட்டான்; என்றுநான் சொன்னேன் இடைமறித்துத் தம்பீ நீ இன்றுரைத்த உன்மொழியை என்செவிகள் ஏலா எதுவரினும தாங்கும் இதயத்தைப் பெற்றால் கதுவவரும் துன்பம் கடிதின் விலகுமென்றான்; என்பால் வருகின்ற எத்துயருந் தாங்கிடுவேன் அன்பால் உயரண்ணா அன்னைத் தமிழ்மொழிக்குத் தீங்கு வருமென்றால் தேறுவ தெப்படியோ? ஏங்குகிறேன் அண்ணாநீ என்னவழி சொல்கின்றாய்? கண்ணாகக் காக்கும் கழகத்தை மாய்க்கவரின் புண்ணாக என்மனந்தான் போகாதோ? நீ புகல்வாய்; என்று மனம்நொந் திருவிழிகள் நீர்சொரிய நின்றேன்; அறிஞர் நிறைமொழி வாய்மலர்ந்தார்; செந்தமிழ்க்கா தீங்கு? சிறிதேனும் வாராது; முந்தை வரலாற்றை முன்னிறுத்திச் சிந்தனைசெய்! எத்தனைக் கற்கள் தடைபோல் இருந்தாலும் அத்தனையும் மோதி அகற்றும் மொழியாம் தனக்கு வரும்பகையைத் தானே தகர்க்கும் தனித்திறமை கொண்டிலங்கும் தாய்மொழிக்காதீங்கு? பழகுதமிழ்ப் பண்பாட்டைப் பாரில்நிலை நாட்டும் கழகம் அழியுமென வீணே கலங்குகிறாய்! வையத்தைச் சூழ்கடலை வாயால் குடிப்பனெனப் பொய்வைத்த நெஞ்சன் புளுகுவதை நம்புவதோ? விண்ணகத்துச் சூரியனை வீழ்த்துவேன் என்றொருவன் மண்ணகத்துச் சொன்னால் மதியாரோபித்தனென? தன்மானத் தாளமுத்து தம்பி நடராசன் முன்னாவி ஈயமுளைத்த கழகமடா! வேலாயுத மென்ற வீரமகன் தந்த உயிர்ப் பாலால் வளர்ந்த பசுமைக் கழகமடா தூத்துக்குடியான் துணிவுடைய நெஞ்சத்தான் ஏத்தவரும் கே.வி.கே.சாமி எனுந்தம்பி தந்த உரத்தால் தழைக்கும் கழகமடா! எந்த விதமழியும் ஏன்கலங்கு கின்றாய்? மகமதியத் தோழர் மசீது முகைதின் முகமலரத் தந்தஉயிர் மூச்சுக் கழகமடா! தப்பேதும் செய்யாத் தளிரனைய மாணவர் துப்பாக்கிக் குண்டால் துடிதுடித்து வீழுங்கால் சிந்துசெந் நீரால் செழித்த கழகமடா! அந்தக் கழகத்தை ஆரழிக்க வல்லார்கள்? ஆலங் குடிதந்த அன்பன் சிதம்பரம் கோலம் மிகவுடையான் கொள்கைசேர் பொற்செழியன் எத்தனையோ தம்பிமார் ஈந்த உயிராலே இத்தரையில் நாம்வளர்த்த ஈடில் கழகமடா! செந்தமிழைக் காப்பதற்குச் சீறி எழுந்தவர்கள் வெந்தழலை மூட்டி விறகாக்கித் தம்முடலை வேகவிட்ட வீரப்பன் வீரன் சிவலிங்கம் போகவிட்ட நல்லுயிரால் போற்றும் கழகமடா! நாம்வணங்கும் சின்னமென ஆன திருச்சாமி தேமொழியைக் காக்கவரும் சென்னை அரங்கனவன் மூண்டெழுந்த செந்தழலில் மூழ்கி மடிந்தார்கள் ஆண்டவர்தம் ஈகத்தால் ஆல்போல் வளர்ந்ததடா? அந்தக் கழகத்தை ஆரழிக்க வல்லார்கள்? சிந்தைத் துயர்நீங்கிச் செம்மாந்து நிற்பாய்! இரங்கும் இயல்புடைய என்றன் மனத்தை இரவல் எனப்பெற்றான் என்தம்பி ஆரூரன்; நம்மை உருவாக்க நாளெல்லாம் பாடுபட்ட செம்மை திறம்பாத ஈரோட்டுச் சிங்கத்தின் நெஞ்சத் துணிவும் நிரம்பஅவன் பெற்றுள்ளான் அஞ்சற் கிடமில்லை அன்னான் துணையாய்நில்! என்புருவம் ஆனாலும் ஏறு நிகர்மனத்தன் அன்பழகன் எல்லாம் அவற்குத் துணையுண்டு; நாட்டை வளமாக்க நல்லசில திட்டங்கள் போட்டிருந்தேன் என்மனத்தில் பொல்லாப் பிணிவந்து வாட்டியதால் தம்பியரை வாடவிட்டுச் சென்றுவிட்டேன் போட்டிருந்த திட்டம் புரிந்தகரு ணாநிதியும் ஒன்றுங் குறையா துருவாக்கிக் காட்டுகிறான் நன்று தரும்முடிவை நன்காய்ந்து செய்கின்றான் பண்டைத் தமிழ்நாட்டைப் பார்த்து மகிழுமுளம் கொண்டே முயல்கிறான் கொள்கை குறிக்கொண்டான் உன்னை உடன்பிறப்பென் றுள்ளத்திற் கொண்டுள்ளான் என்னை அவனுருவில் என்றும்நீ கண்டிடுவாய் என்றமொழி எல்லாம் இனிதுரைத் தென்முன்னே நின்றவனைக் காணவிலை; நெஞ்சத் துடிதுடித்(து)- அண்ணா எனஅலற அருகில் துயில்மனையாள் உண்ணா தயர்ந்தீர் உறக்கத்தும் இந்நினைவா? சொன்னால் கேட்பதிலை; சொக்கி உறங்கிவிட்டீர்! என்றாள் விழிமலர்ந்தேன்; என் அண்ணன் சொன்னவற்றை பாட்டில் எழுதிவந்து பாடி முடித்துவிட்டேன் கேட்டோரே அண்ணன் கிளந்தவெலாம் நெஞ்சிருத்தி நாட்டை வளமாக்க நாடித் துணைநிற்பீர்! பாட்டை முடித்தே பணிந்து. 6.9.1974 38 அண்ணா வழியில் அயராதுழைப்போம் சங்கங்கள் மூன்றமைத்துப் புலவர் வேந்தர் சமமாக வீற்றிருந்து தமிழைக் காத்தே எங்கெங்கும் புகழ்மணக்கத் திகழ்ந்த நாடு; வணிகத்தைப் போர்த்திறத்தை எடுத்துக் காட்ட வங்கங்கள் பலசெலுத்தி வளர்ந்த நாடு; வளமிக்க அரசியலைத் தெரிந்த நாடு; நங்கையவள் காவிரித்தாய் வளர்த்து விட்ட நாகரிகத் தொட்டிலென வாழ்ந்த நாடு. எங்கெங்கோ திரிந்தவர்கள் இங்கு வந்தார் ஏமாந்த தமிழினத்தார் மனம்நெ கிழ்ந்தார்; அங்கங்கே அமர்ந்தவர்கள் துறைகள் தோறும் ஆரியத்தின் கொள்கைகளைப் புகுத்தி விட்டார்; தங்கங்கள் நிறம்மாற ஒளியும் மாறத் தந்திரங்கள் மந்திரங்கள் பூசி விட்டார்; சிங்கங்கள் குள்ளநரிக் கடிமை யாகிச் சீர்கெட்டு வாழ்ந்திடவே மாயை செய்தார். தென்னாட்டை, வந்தவரால் அடிமையான திருநாட்டைச் சீர்திருத்தி மீண்டும் சங்கப் பொன்னாட்டை உருவாக்கச் சினந்தெ ழுந்த போராட்டப் பெரியார்ஓர் பாட்டை கண்டார்; தென்பூட்டும் ஈரோட்டார் தனித்து நின்றே திருகுகள்ளி முட்புதர்கள் கன்முள் காளான் மின்காட்டும் நச்சரவம் மலியுங் காட்டை மேம்படுத்தச் செப்பனிட வழிய மைத்தார். வாஞ்சையினால் நம்பெரியார் செப்ப னிட்டு வழியமைக்கப் பாடுபடுந் திறத்தைக் கண்டு காஞ்சிக்கும் ஈரோட்டுப் பாச றைக்கும் கற்றறிந்த நம்அண்ணா வழிய மைத்தார்; தேன்சிதறும் பூஞ்சோலை பலப டைத்தார்; தெளிநீரைத் தருகிணறும் ஆக்கி வைத்தார்; தீஞ்சுவைசேர் கனிமரங்கள் பலவும் வைத்தார்; சேர்ந்திளைஞர் அணிவகுத்து நடந்து வந்தார். உறுதிகொளும் நல்லிளைஞர் நடக்குங் காலை உதவாத வவ்வால்கள் பறந்து வந்தே உறுகனிகள் பலசுவைத்துப் பறக்கக் கண்டோம்; ஒளிந்திருந்த கள்வர்சிலர் சமயம் பார்த்துப் பொருள்பலவும் திருடிக்கொண் டோடக்கண்டோம்; பொறுமையிலார் இடையிடையே தொல்லை தந்து பொறுமுவதும் கேட்டிருந்தோம் எனினும் அண்ணன் புதுவழியில் நடப்பதைநாம் நிறுத்த வில்லை. திருவிடத்தின் பெருமையினை மீண்டும் காணத் தெளிந்துணர்ந்து சிந்தித்துக் காஞ்சி அண்ணன் ஒருவழிதான் நமக்கெல்லாம் எடுத்து ரைத்தார்; உயர்தமிழும் தமிழினமும் உய்ய வேண்டி இருவழியைக் காட்டவில்லை; குழப்ப வில்லை; ஏகஇந்தி யாவென்று மழுப்ப வில்லை; வரும்வழியில் திசைமாறிப் போன மாந்தர் வாயுளறல் சிரிப்புக்கே வழியைக் காட்டும். மடமையினைத் தகர்த்தெறிந்து சிந்தித் தாய்ந்து மதிதன்னை வளர்க்கும்வழி, நலமே சேர்க்கும் கடமைவழி, கண்ணியமும் கட்டுப் பாடும் கலந்தவழி, கருணைவழி, பண்பும் அன்பும் உடையவழி, உறுதிவழி, மானங் காக்க உற்றவழி, குறள்நூலின் சங்க நூலின் இடைமருவும் தமிழர்வழி, காஞ்சிக் கோமான் எந்நாளும் எடுத்துரைத்த வழியாம் கண்டீர். துப்பாக்கி துணையென்று சொன்ன தில்லை; துணிவுளமே துணையென்று மொழிந்து நின்றார்; தப்பாக்கும் எவ்வழியும் நினைந்த தில்லை; தன்மானம் தமிழுணர்வு தன்னம் பிக்கை வைப்பாக்கிக் கொள்வதுதான் தமிழி னத்தை வாழ்விக்கும் வழிஎன்றார்; புகழ்ந்து சான்றோர் *செப்பாக்க வழியொன்றே சொல்லித் தந்தார் **சேப்பாக்க வழித்துயிலும் அறிஞர் கோமான். அல்வழியில் தமிழினத்தை அழைக்க வில்லை அருவருக்கும் வேற்றுமையை வளர்க்க வில்லை நல்வழியே ஒன்றமைத்தார் அதனைக் காட்டி நம்பிவந்த தம்பியரை அழைத்துச் சென்றார் கல்வழியோ முள்வழியோ காட்ட வில்லை காட்டுவழி மேட்டுவழி காட்ட வில்லை கொல்வழியும் சொன்னதில்லை யாரும் ஏற்றுக் கொள்வழியே உரைத்திருந்தார் தலைவர் கோமான். கருப்புக்கு மறுப்புரைத்துப் பகைமை பூண்ட கருத்தினரும் வந்தவழி, குழப்பம் செய்து வெறுப்புற்றுத் திரிந்தவரும் மனம்தி ருந்தி விழைந்தவழி, முதல்எதிரி என்று சொல்லி செருக்குற்று நின்றவரும் முதலில் வந்து சேர்ந்தவழி, செம்மைவழி, எங்கள் அண்ணன் உருக்கொடுத்துத் தந்தவழி, பெரியார் பட்ட உழைப்பாலே உருவான வழியே யாகும். அழகுநடைத் தமிழ்எழுதிப் புதிய பாங்கில் அணிவகுத்து நடப்பதற்கு வழிய மைத்தார்; பழகுதமிழ் நடைபேசிப் பாரோர் போற்றும் படையொன்று நடைபோட வழிய மைத்தார்; மழலைமொழி நடையினரும் கற்றுக் கற்று மாவீரர் போல்நடந்தார் வெற்றி கண்டார்; விழலனைய மனிதர்களும் எழுதிப் பேசி வீறுபெறும் நடைபெற்றார் வாழ்வும் பெற்றார். தூற்றாதீர் பிறர்பழியை, மேடை ஏறித் தொடுக்காதீர் வசைமொழியைக் காசுக் காக மாற்றாதீர் தமிழ்மரபை, கருத்தை மட்டும் மறுத்துரைப்பீர், தனிஒருவர்ப் பழித்தல் வேண்டா, மாற்றாரின் தோட்டத்து மல்லி கைக்கும் மணமுண்டு தெரிந்ததனை நுகர்கஎன்று சாற்றிஒரு பண்புவழி காட்டி நின்று தமிழினத்தை வளர்க்கும்வழி உணர்த்தி நின்றார். புரட்சிவழி எனச்சொல்லி உணர்ச்சி யூட்டிப் புன்மைவழி அமைக்கவில்லை; மக்கள் நெஞ்சில் மருட்சிபெறச் செய்யவில்லை; பகைத்தோர் கூட மனத்துக்குள் ஏற்கின்ற வழியே சொன்னார்; கருத்துவழி, அறிவுவழிப் புரட்சி செய்தார்; களப்புரட்சி கொலைப்புரட்சி செய்தா ரல்லர்; தரத்திலுயர் புரட்சிவழி, தன்னைத் தானே தருகின்ற அறத்துவழி ஒன்றே கண்டார். அண்ணாவின் வழியில்தான் செல்லுகின்றோம் அல்லல்பல வந்தாலும் அயர மாட்டோம்; புண்ணாகப் பழிமொழிகள் வீசும் போதும் பொழுதெல்லாம் சோதனைகள் வந்தபோதும் மண்ணாளும் உரிமையினைக் கலைத்த போதும் மனைமக்கள் தமக்கிடர்கள் விளைத்த போதும் எண்ணாத சிறைக்கூடம் வதைத்த போதும் எந்நாளும் உழைத்திருப்போம் வெற்றி கொள்வோம். அடிவயிற்றில் எமைமிதித்துக் கொன்ற போதும் அவர்காட்டும் வழியில்தான் செல்வோம் நாங்கள் அடிபட்டு மிதிபட்டுத் துயர்கள் உற்றும் அயராமல் உழைத்திடுவோம்; இரண்டு வண்ணக் கொடிகட்டி அதன்நிழலில் தொடர்ந்து நின்று குறிக்கோளை நோக்கித்தான் பயணம் செய்வோம்; மடியட்டும் எமதுயிர்கள் அஞ்ச மாட்டோம் மறிக்கட்டும் எமைப்பகைகள் விலக்கிச் செல்வோம். தம்பிகரு ணாநிதியும் எம்மோ டுள்ளார்; தலைமகனார் வழியில்தான் செல்லு கின்றார்; வெம்பிஎழும் புலிமறவர் இங்கே வுள்ளார்; வீரமகன் வழியில்தான் செல்லு கின்றோம்; கும்பியினை வளர்ப்பவர்கள் குரைத்து விட்டால் கொள்கைவழித் தொடராமல் நின்றா போவோம் நம்பிவரும் நல்லவர்கள் இங்கே வுள்ளார்; நம்அண்ணன் அமைத்தவழி தொடர்ந்து செல்வோம். அண்ணாவைப் போற்றுவது கடமை என்றால் அவர்தம்பி கலைஞரையும் போற்ற வேண்டும்; அண்ணாவைத் தலைவரென ஏற்றுக் கொண்டால் அவர்தம்பி கலைஞரையும் ஏற்க வேண்டும்; அண்ணாவின் சொல்லெல்லாம் மதிப்ப தென்றால் அவர்தம்பி கலைஞர்மொழி மதிக்க வேண்டும் அண்ணாவின் கொள்கைவழி நடப்ப தென்றால் அவர்தம்பி கலைஞர்வழி நடக்க வேண்டும். அண்ணா பிறந்த நாள் விழா. சென்னை 17.9.1978 39 வெற்றி மலர் சூடுங்கள்! நம்மை வளர்த்துவிட்ட நல்லவன் தாயுளத்தை இம்மா நிலத்தே எவரிடத்துங் கண்டதில்லை; பண்பட்ட தம்பியராம் பன்னூற்றின் ஆயிரவர் எண்ணிட்டுக் காட்ட இயலாரைச் சேர்த்தென்னைத் தாயொருத்தி தன்வயிறு தாங்காத காரணத்தால் போய்வயி றொவ்வொன்றும் புக்குப் பிறந்தோம்நாம் என்று மொழிந்தவன்றன் ஈடில்லாப் பண்புளத்தை இன்று நினைத்தாலும் என்பெல்லாம் நெக்குருகும்; நாட்டை வயமாக்கும் நாவல்லான், நற்றமிழை ஏட்டில் எழுதிமெரு கேற்றும் எழுத்தாளன், நாடும் அரசியலை நன்காய்ந்த பேரறிஞன், வாடும் எளியோர்க்கு வாழ்வு தரவந்தோன் நண்பாளன், பண்பாளன், நாடகத்துப் பேராசான், கண்போல வாய்த்தஒரு காஞ்சி புரத்தலைவன் ஒன்றாலும் நம்அண்ணன் உள்ளம் மயங்கவில்லை; மாறாட்டம் இல்லாமல் மக்கள் நலங்கருதிப் போராட்டம் நூறு புரிந்தானைத் தன்னாட்டில் ஏழை துயர்துடைக்க வெஞ்சிறைகள் ஏற்றானைக் கோழை எனப்பழித்தான் கொள்கை சிறிதுமிலான்; போராட்டம் என்றாலே போய்ப்பதுங்கும் குள்ளநரி ஈரோட்டார் தந்தஅரி யேற்றைப் பழித்ததுகாண்; அண்ணன் குடும்பத்தை அப்பிறவி ஏசிவந்த வண்ணம்போல் யாரும் வடிக்க இயலாது; வஞ்சத்தார் என்னென்ன வைதாலும் தாங்குகிற நெஞ்சத்தான் நம்அண்ணன் நின்றநிலை மாறவில்லை; வாடி வதங்கவில்லை வாய்த்தஒரு போர்க்களத்தில் ஓடி ஒளியவில்லை ஊக்கங் குறையவில்லை; மற்றவரைப் பாராட்டி வாயாரப் போற்றுவான் மற்றோர் தனைப்புகழ்ந்தால் மங்கையர்போற் கூசுவான்; ஆவிக்குள் ஆவியென ஆகிக் கடற்கரையில் மேவித் துயில்கொள்ளும் மேலோனைத் தூற்றுகிறான்; தாயைப் பழிக்கத் தயங்காத மாபாவி வாயைத் திறந்தின்னும் வைதே திரிகின்றான்; பொய்யை முதலாகப் போட்டே அரசியலைச் செய்யுந் தலைவனெனச் செத்தபினும் திட்டுகிறான்; பொய்யில் பிறந்தமனம் பொய்யில் வளர்ந்த உடல் பொய்யால் வளர்உருவம் புத்தனையா ஏசுவது? அண்ணாவை மிஞ்சிவிட்டார் ஆரூர்க் கலைஞரெனப் பண்ணால் முடிபோட்டுப் பாடுகிறான் பாடட்டும்; அண்ணா அமைத்த அருமைக் கழகத்தைக் கண்போற் கலைஞரவர் காக்கும் கழகத்தைச் சைத்தான் எனப்புகன்று சாக்கடையில் வந்தமொழி வைத்தான் நமக்கெதிரில் வாய்மூடி நிற்கின்றோம்; தன்னலத்தால் இற்றைத் தலைவருக்குப் பூமாலை சொன்னலத்தால் சூட்டுகிறான் சூட்டட்டும் வாழட்டும்; ஆனால் கழகத்தை அப்பேதை வாய்புளிக்க ஏனோ பழிக்கின்றான்? ஈதென்ன விந்தை! கலைஞர் இனிப்பாம் கழகம் கசப்பாம் நிலைபுரிய வில்லைஎன் நெஞ்சம் பொறுக்கவில்லை; பேதைத் தனமென்று பேசா திருப்பதா? போதைச் செயலென்று பூனைபோல் நிற்பதா? பேசா திருந்தவன் தான் பேதைத் தனமென்றே ஏசா திருந்தவன்தான் என்றாலும் எல்லையின்றிப் போதலால் என்றன் பொறுமை தனையிழந்தேன் ஆதலால் பாட்டுக்குள் ஆவேசங் காட்டிவிட்டேன் சூடு மிகையாகத் தோன்றுமோ என்பதனால் சாடும் முறையதனைச் சற்றே நிறுத்துகின்றேன்; அண்ணாவைப் போற்றுவோம் அண்ணன் வழிநிற்போம் கண்ணேபோல் எண்ணிக் கழகத்தைக் காத்திடுவோம் அய்யாவும் இன்றில்லை அண்ணாவும் இன்றில்லை மெய்யாக நம்மினத்தை மேலோங்கச் செய்பவரார்? என்றுநாம் ஏங்குகையில் ஈதோ இருக்கின்றேன் என்று குரல்கொடுத்தார் ஈரோட்டார் பேரரிவர்; ஈடில்லா அண்ணன் இதயத்தைப் பெற்றுள்ள பீடுள்ளார் நம்வீட்டுப் பிள்ளை என ஆனார்; ஈரோட்டுப் பள்ளியிலே ஏடெடுத்துக் கற்றுணர்ந்து பாராட்டுங் காஞ்சிபுரப் பல்கலைசேர் மன்றத்தில் கற்றுத் தெளிந்து கலைஞர் எனும்பட்டம் பெற்றுத் திகழும் பெருமை மிகவுடையார்; காற்றடித்த போதுங் கழகம் எனும்விளக்கை ஏற்றி அணையாமல் எந்நாளும் காக்கின்றார்; இன்றைக் கவர்பெருமை ஏற்றிளங் காளையர்க்கு நன்று தெரியாது நாளை புலனாகும். நாட்டை வளமாக்க நம்மினத்தை முன்னேற்றப் பாட்டை அமைக்கின்றார் பங்காளி ஆகிடுவோம்; வீறுநடை போடுங்கள் வெற்றிமலர் சூடுங்கள்! கூறுகிறேன் என்கை குவித்து. .........9.1975 40 தொடர்ந்து செல்வேன் தனக்கென்று வழியமைத்துக் கொள்ளவில்y தமிழினத்தி‹வாழ்வுக்fவழிaமைத்தான்;எனக்கென்ற›வழியொன்wதேர்ந்Jகொண்டேன்; இன்றுவuபிறழாமšஒழுFகின்றேன்;குணக்குன்wஒருநாளு«பழித்jதில்லை; குறுக்குவÊசென்றதிலை;குழப்ப«செய்ய¥பிணக்கொன்று«விளைக்கவிலை;அதனாšதுன்ப« பெற்றதுண்டு;வாழ்க்கைவள«பெற்wதில்லை. வளமற்ற நிலைகண்டோர் பரிந்து பேசி வாழவழி பலவுண்டு வருக என்றார்; உளமற்ற நிலைஎனக்கு வந்த தில்லை; உறுதியுளேன் ஒருபொழுதும் வழுவ மாட்டேன்; தளர்வுற்ற எனக்கென்ன கிடைக்கு மென்று தரங்கெட்டுப் பிறர்வழியில் சென்ற தில்லை; வளமற்று வாழ்ந்தாலும் அண்ணன் சொன்ன வழிபெற்று வாழ்கின்றேன் தொடர்ந்து செல்வேன். 17.9.1978