கவியரசர் முடியரசன் படைப்புகள் 4 நெஞ்சு பொறுக்கவில்லையே மனிதனைத் தேடுகிறேன் மனிதரைக் கண்டுகொண்டேன் முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 4 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 264 = 280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 175/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் :இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்தஇப்பரிசிலுக்குயான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ K‰¿a திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x நெஞ்சு பொறுக்கவில்லையே காணிக்கை 5 நெஞ்சக் குமுறல் 2 1 தமிழ்த்தாய் வணக்கம் 7 2 நெஞ்சு பொறுக்குதில்லையே 8 3 நெஞ்சத் துடிப்பு 11 4 அச்சுமுறிந்தால்... 16 5 வகுப்பறையும் மாணவரும் 19 6 நூலகமும் மாணவரும் 21 7 ஒப்பனையும் மாணவரும் 23 8 அரசியலும் மாணவரும் 25 9 இதழ்களும் மாணவரும் 27 10 திரைப்படமும் மாணவரும் 29 11 பெற்றவர்தூங்கினால்.......?31 12 ஓடம்பழுதானால்.........?32 13 புலவர் குறிக்கோள் 34 14 காசுக்கா நீதி? 37 16 மருத்துவ மனையா? வருத்தும் மனையா? 41 17 நியாaவிலைக்கl44 18 கையூட்டுலகம் 47 19 பூக்களிற் புழுக்கள் 49 20 ஏச்சு மேடை 52 21 தேர்தலாற் கண்ட பயன் 54 22 கண்ணீர்த்துளி 56 23 எது நாட்டுப் பற்று? 58 24 உலகை நினையுங்கள் 60 25 எழுத்துலகம் 63 26 nகள்வி- gதில்6527 ஓதிக்கெட்டவன் 68 28 திருமணச் சந்தை 70 29 படிப்பும் நடப்பும் 74 30 ஈழம் சிவந்தது. 75 31 உலகம் சிவக்கும் 79 32 தேவ தாசி 82 33 முளையிலே கிள்ளுக 86 34 ஒப்பனை மகளிர் 89 35 திரையரங்க வீரம் 92 36 மனித மந்தை 94 மனிதனைத் தேடுகிறேன் பொழுது புலரட்டும் 99 காணிக்கை 101 குன்றக்குடி அடிகளார் 101 1 நந்தா விளக்கே! 102 2 மனிதனைத்தேடுகிறேன்.... 104 3 அந்தோ அரசியலே! 107 4 அரசியல் அரங்கம் 109 5 வண்ணமும் எண்ணமும் 110 6 நாடு உருப்படுமா? 113 7 தேர்தல் திருவிழா 114 8 சிலம்பட்டும் போர்முரசு! 118 9 உரிமையும் கடமையும் 121 10 எது துணிவு? 123 11 தீண்டாமை 124 12 நல்ல சமையமடா! 126 13 கடைத் தெருவில் 127 14 நமது வாணிகம் 129 15 நல்ல உலகமடா! 131 16 சிவப்பு விளக்கு 133 17 முன்னறிவிப்பு 135 18 இருண்ட வீடு 138 19 துன்புறவோ பெற்றாள்? 141 20 òதுÉதிbசய்வோம்14321 விடிவு தோன்றும் 145 23 போலிக் குடும்பம் 150 24 சமுதாய வீதியிலே 154 25 திரையுலகக் கற்பு 158 26 வாழ்வுப் பாதையில் - பக்தி 159 27 இன்றைய மனிதன் 165 28 வெம்புவான் கம்பன் 170 29 பாரதி கண்ட பெண்ணுரிமை 175 30 இதுவா முன்னேற்றம்? 178 31 பெண்ணின் பெருமை 180 32 அணையா விளக்கு 187 மனிதரைக் கண்டு கொண்டேன் முன்னுரை 195 தமிழ் வாழ்த்து 197 1 என்றும் வாழ்வர் 198 2 தமிழ்த் தொண்டு 199 3 அப்பரடிகள் 201 4 எழுத்து மலை 202 5 வாழிய தமிழ் முனிவர் 204 6 வாழிய மனித நேயம் 206 7 பழமை வேண்டான்! 208 8 தொடர்வோம் தொண்டு 209 9 புதுக்கோட்டைக் காந்தி 210 10 மணிவிழா வாழ்த்து 212 11 வாழும் அண்ணாமலை 216 12 தமிழ்க் கடல் 218 13 மாணிக்கப் புலவன் 219 14 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா 221 15 பதிப்புச் செம்மல் 223 16 உடன் பிறவாத் தமக்கை 224 17 நட்பிற் பெரியன் 225 18 பொற்கிழி பெற்றவன் 227 19 வணிக நோக்கறியான் 229 20 கலைத்திறன் காட்டும் கணபதி 231 21 பழனி தந்த பாட்டு 232 22 பாளைநகர்ப் பண்பாளன் 233 23 உயர்ந்தவன் 235 24 அன்பு தரும் அழகன் 237 25 தோள் தந்தான் 245 26 அழகின் சிரிப்பில் கலைஞர் 246 27 தூற்றலுக்குத் துவளாதான் 255 28 முறுவலிக்கும் இளையவனே 257 29 வாழிய தமிழரசு 258 30 என்றும் உயர்க எழில் முல்லை 262 31 வாழிய கவிதை 263 32 உலகத் தமிழ்க் கழக வாழ்த்து 264 நெஞ்சு பொறுக்கவில்லையே நெஞ்சக் குமுறல் இந்திய நாடு விடுதலை பெற்று முப்பத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குடியரசு நாடென உலகுக்கும் உணர்த்தி விட்டோம். சில போர்களும் நடத்தி வெற்றியும் பெற்றுவிட்டோம். அறிவியல் துறையில் ஓரளவு முன்னேறி விண்வெளியில் கலம் செலுத்தும் அளவிற்கு உயரிய மதிப்பும் பெற்றுள்ளோம். அடிமை அகன்றது; மக்களாட்சி மலர்ந்தது; மகிழ்ச்சி. ஆனால்..............? நாம் விடுதலை நாட்டில் வாழும் மக்கள் எனத் தக்க வகையில் தகுதி பெற்றுள்ளோமா? பண்பாட்டில். ஒழுக்க நெறியில், பொது வாழ்வில் வளர்ச்சி பெற்றுள்ளோமா? சாதிச்சழக்குகள் ஒழிந்தனவா? சமயப்பூசல்கள் ஓய்ந்தனவா? ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதும், சுரண்டி வாழ்வதும் தொலைந் தனவா? தலைவர்களையே சுட்டுக்கொல்லும் அளவிற்குத்தானே முன்னேறியிருக்கிறோம்! விடுதலைபெறுவதற் காகச் சிந்திய குருதியைவிடப் பெற்ற பின் சிந்தும் குருதிதானே மிகுதியாக ஓடுகிறது. மக்கள் மாக்காளகியிருக்கிறோம்! அடிமைகளாகவே வாழ வேண்டியவர்களுக்கு விடுதலை ஏன்? என்று சலித்துக் கொள்ளும் வகையிற்றானே நாடு நடந்து கொண்டிருக்கிறது! பண்பாட்டிற் சிறந்து விளங்கும் மக்கள் வாழும் நாடுதான் விடுதலையை, மக்களாட்சி முறையை நுகர்ந்து, அதன் பயனைப் பெற்று, இன்புற்று வாழ இயலும். மக்கட்பண்பு வளராத நாட்டில் விடுதலையால். மக்களாட்சியால் யாதுபயன்? அங்கே இன்பமோ அமைதியோ மகிழ்ச்சியோ அரும்புவதுண்டோ? குரங்கின் கையிற் சிக்கிய மாலையாகி எல்லாரும் இந்நாட்டு மன்னராகிக் குடிகளே இல்லாத நாடாகி, இறுதியில் நாடு அம்மன்னர் கையிற் சிக்கிச் சீர்குலைந்து நிற்கும். இது நாடோறும் நாம் நேரிற் கண்டறிந்து வரும் உண்மை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை வழங்கிய நாடு; இன்னும் நூற்றுக்கணக்கில் நீதி நூல்களை உருவாக்கிய நாடு; உள்ளத்தாற் பொய்யாதொழுகிய காந்தியடிகளை அருளிய நாடு; சான்றாண்மை என்னும் சொல்லுக்கே இலக்கியமாக நின்ற தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வை ஈன்ற நாடு. சமுதாயச் சீர்திருத்தத்திற்காகவே வாழ்நாள் முழுதும் பாடுபட்ட பெரியார் பிறந்த நாடு; இன்னா செய்தார்க்கும் அவர் நாண நன்னயம் செய்த பேரறிஞர் அண்ணா தோன்றிய நாடு; இன்னும் எத்தனையோ சான்றோர்களைப் பெற்றெடுத்து, அதனாற் பெருமை கொண்ட நாடு, இற்றைநாள் மாந்தரின் இழிசெயலால் பழிக்குள்ளாதல் முறையோ? கயமைகள் என்று தொலையும்? அறிவுக் கண்கள் எப்பொழுது திறக்கும்? நாடு எந்நாள் திருந்தும்? தனித்து உண்ணாதவர், முனிவில்லாதவர், துஞ்சாதவர், அஞ்சுவது அஞ்சுபவர், புகழெனின் உயிருங்கொடுப்பவர் பழியெனின் உலகு வரினுங் கொள்ளாதவர். அயர்வில்லாதவர், தமக்கென முயலாதவர், பிறர்க்கென முயல்பவர் என்றின்னோ ரன்னர் உண்மையால் உண்டாலம்ம இவ்வுலகம் என இயம் பினான் இளம்பெருவழுதி. எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே என அருளினார் அவ்வையார். பண்பு டையார்ப் பட்டுண் டுலகம் என வாய் மலர்ந்தருளினார் வள்ளுவப் பெருந்தகை. இத்தகைய நன்னெறிகளை யெல்லாம் நவின்றவன்தான்; நன்குணர்ந்தவன் தான்; ஆனால் இன்று?............ உருவத்தால் மனிதனாகி, உள்ளத்தால் விலாங்காகித் தானே திரிகின்றான். ஆடவர் பெண்டிர், இளையர் முதியோர் எவரும் விதிவிலக்கல்லர். அதிலும் குறிப்பாக நாளைய உலகை உருவாக்கும் மாணவர் உலகம் தம்மை மறந்து. நாட்டை மறந்து மயக்குற்ற நிலையில் திரிவதையே காண்கிறோம். எங்கெங்கு நோக்கினும் அங்கங்கே நேர்மை நெளிந்து கிடக்கிறது; நாணயம் நலிந்து கிடக்கிறது; ஒழுங்கு மழுங்கிக் கிடக்கிறது; தூய்மை துவண்டு கிடக்கிறது; சுருங்கக் கூறின் மனச்சான்றே மறைந்து கிடக்கிறது. புண்ணிய பூமி என்று இந்த நாட்டுக்குப் பெயர்! ஒரோ வழி நன்மாந்தரைக் காணல் கூடும். எனினும் யாது பயன்? கடலிற் கரைத்த பெருங்காயந்தானே? இவ்வாறு நேர்மை முதலியன குறைந்து, பண்பாடுகள் மறைந்து மக்கள் மாறிவரும் நிலைமையைக் காணும் பொழுதெல்லாம் நினைந்து நினைந்து உருகி உருகி, நெஞ்சம் குமுறுவதுண்டு. அக்குமுறலின் வெளிப்பாடே இத்தொகுப்பிற் காணப்பெறும் கவிதைகள். நடுவுநிலைமையில் நின்று நாட்டைப் பார்க்கிறேன் நாட்டைச் சுற்றிக் குற்றங்களும் குறைபாடுகளும் முற்றுகையிட்டுக் கிடப்பதைக் காணுகிறேன். அவை கடியப்பட வேண்டுமென் பதற்காகக் கண்டிக்கிறேன். அக்கண்டனத்தில் என் நண்பர்களும் சிக்கலாம்; அதற்கென் செய்வது? கண்டனத்துக் குள்ளானோர் வருந்துவர் என்பதையும் அறிவேன். மாணவன் வருந்துவானே என்பதற்காக ஆசானும், மகன் வருந்துவானே என்பதற்காக அன்னையும் கண்டிக்காமல் இருந்துவிடின் நிலைமை என்னாவது? குமுகாயம், மண்புக்கு மாயுமே என்று குமுறும் எனது நெஞ்சம், கடமையைச் செய்யத் தூண்டுகிறது. எனது கடமையை நான் செய்கிறேன்.பிறரை வருத்த வேண்டு மென்பதற்காக எழுதவில்லை; அவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன். கண்டனத்தால் அவர்தாம் வருந்துவது உண்மை யானால். அவர்தம் செயலால் உலகம் வருந்துகிறதே அதற்கென் செய்வது? தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் ஆதலின் தம்மைப்போற் பிறரையும் எண்ணித் தவறிழைக் காது தம்மால் இயன்ற அளவு நன்மை செய்க. பொது நலம் புரிக. ஒல்லும் வகையால் அறவினை ஆற்றுக! நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தலை அகற்றுக; நேர்மை பேணுக; மக்கட்பண்பு காத்து மக்களென வாழ்க! நாடு வாழும். மக்களாட்சி மலர்ந்து உண்மையில் மணம் பரப்பும். நாமும் நல்வாழ்வு துய்ப்போம். காரைக்குடி அன்பன் 7-10-1985 முடியரசன் காணிக்கை பொது வாழ்வுக்காகத் தம் வாழ்வையே பொசுக்கிக் கொண்ட ஈகச் செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார்க்கு காணிக்கையாக்கி வணங்குகின்றேன். - முடியரசன் 1 தமிழ்த்தாய் வணக்கம் காவுக்குள் மலரை வைத்தாய் கண்டுக்குள் சுவையை வைத்தாய் பூவுக்குள் தேனை வைத்தாய் பூமிக்குள் பொன்னை வைத்தாய் ஆவுக்குள் பாலை வைத்தாய் ஆர்வத்தில் ஊறும் என்றன் பாவுக்குள் அனைத்தும் வைப்பாய் பாருக்குள் முதன்மைத் தாயே. கல்லுக்குள் தீயை வைத்தாய் கனலுக்குள் வெம்மை வைத்தாய் வில்லுக்குள் வீரம் வைத்தாய் வேலுக்குள் கூர்மை வைத்தாய் *செல்லுக்குள் இடியை வைத்தாய் சிந்தைக்குள் பொங்கும் பாடற் சொல்லுக்குள் அனைத்தும் வைப்பாய் தொன்மைக்குள் தொன்மைத் தாயே. 2 நெஞ்சு பொறுக்குதில்லையே எங்கெங்குக் காதினும் தீமையடா- உல கெங்கணும் வாய்மைகள் ஊமையடா அங்கங்கு வாழ்பவர் எள்ஹீனரே-குணம் அத்தனை ஜிங்கொண்டு தள்ஹீனரே தங்கடன் செய்வணில் தூங்குகிறார்- மனச் சான்றுகள் கொய்யவே ஏங்குகிறார் ஹிங்கவர் நல்லவ ராவதெந்நாள்?-கெடும் எண்ணங்கள் யாவுமே போவதெந்நாள்? பிஞ்சு மனத்தவ ராகினுமே- கலை பேணி முதிர்ந்தவ ராகினுமே வஞ்சியர் ஆடவர் யாவருமே -படும் வாழ்வு மலர்ந்திடத் தீவினையே அஞ்சில ராகியே கூட்டுகின்றார்-அந்தோ ஆசையில் நேர்மையை வாட்டுகின்றார் நெஞ்சு பொறுப்பதற் கில்லையடா- இந்த நிலைகெட்ட மாந்தரால் தொல்லையடா ஆறறி வுள்ளவர் மாந்தரடா- விலங் காகிட ஏன்மனம் சாய்ந்ததடா? சோறது பெற்றிடத் தாழ்ந்தனரே-மனத் தூய்மையை விற்றிட வீழ்ந்தனரே மாறிய போக்கினைக் கற்றனரே- உயர் மான வுணர்ச்சியைச் செற்றனரே கூறிய நீதிகள் எவ்வளவோ-அவை கூறுவர் மேடையில் அவ்வளவே தந்நலம் ஒன்றையே தேடுகிறார்- அதைச் சட்டமென் றாக்கிட நாடுகிறார் என்னதான் செய்யினும் நெஞ்சினிலே-முனம் ஏற்றுகி றாரவர் வஞ்சனையே பன்னிய நல்லறம் நீக்கினரே-மனப் பண்புகள் யாவையும் போக்கினரே இந்நிலை கண்டுளம் வாடுகிறேன் அதை எற்றித் துவைத்திடப் பாடுகிறேன். எங்கெது காணினும் வஞ்சமடா- அதை எப்படித் தாங்கிடும் நெஞ்சமடா இங்கெவர் போக்கிலுங் குற்றமடா-இதை எண்ணிடும் போதெலாம் செற்றமடா எங்கணுங் கீழ்மையைச் சாடிடுவேன்-மனம் ஏற்றம் பெறக்கவி பாடிடுவேன் பொங்குக பண்புகள் பொங்குகவே-நலம் பூத்துப் பொலிந்துவி ளங்குகவே நாயினுங் கீழென வாழ்வதுவோ-திரு நாட்டின் பெரும்புகழ் சாய்வதுவோ?