கவியரசர் முடியரசன் படைப்புகள் 2 காவியப் பாவை பாடுங்குயில் (பாடல்கள்) முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 240 = 256 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்தஇப்பரிசிலுக்குயான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ ................ முற்றிய திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே என்னும்சங்க¥புலவர்களி‹வைuவரிகளுக்கு¢சான்றாக¥பெருமிjவாழ்îவாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் mழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக்குலவும்கவிதைகள்படைத்துத்jமிழுக்குப்òதியmணிகலன்களைச்N£டியவர்.தkது fÉதைகள்மூyம்ச_கஅÚதிகளை- மÅதரிடையேgதங்களைக்க‰பிக்கும்ஏ‰பாடுகளை- குUட்டுப்பHக்கவHக்கங்களைச்சhடியவர்.மÅjnea¤J¡F« சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x காவியப் பாவை படைப்பு 3 என்னுரை 4 1 காவியப் பாவை 5 2 அமிழ்தம் கசக்குமோ? 6 3 உயிர் வெல்லமோ? 7 4 தமிழில் பாடு! 8 5 தயக்கம் ஏன்? 9 6 வாய் நோகுமோ? 11 7 உலகில் ஒரு நூல்! 12 8 உயிர்த் தமிழே! 13 9 சங்க இலக்கியம் 15 10 விந்தையடா விந்தை 17 11 மறந்தறியேன் 20 12 வெறி வேண்டும் 21 13 தமிழ் - என் தெய்வம் 22 14 தமிழ் - என் தாய் 24 15 தமிழ் - என் தந்தை 27 16 தமிழ் - என் காதலி 29 17 தமிழ் - என் மனைவி- 31 18 தமிழ் - என் மகன்- 33 19 எங்கள் நாடு 35 20 மறவர் நாடு 36 21 தமிழகம் தாழ்ந்ததேன்? 37 22 தமிழர் வாழ்வு! 38 23 தமிழன் ஏக்கம் 39 24 முன்னையர் வாழ்வு 40 25 தாயகம் காப்போம் 42 26 வாழ்க தாயகம் 43 27 நாட்டுப்பண் 44 28 நாட்டு வாழ்த்து 45 29 இனிப் பொறுக்க முடியாது 46 30 நாணம் ஏனோ? 47 31 முத்தம் தந்தான் 48 32 இன்னும் வரக்காணேன்! 49 33 எந்தவிதம் மறந்தார்? 50 34 ஏனிந்த வம்பு? 51 35 வருவாரோ? வாராரோ? 52 36 ஆவி கலந்த அழகி 53 37 நடந்தது என்ன? 54 38 ஆடினாள் 56 39 ஆட வாராய்! 58 40 விளையும் பயிர் 59 41 கூடித் திரிவோம் 61 42 வீணை மீட்டுவோம் 62 43 ஆற்றங்கரைக் காதலி 64 44 ஆடுவோம் பாடுவோம் 66 45 பேசும் தெய்வம் 67 46 செற்றம் தவிர்ந்தேன் 68 47 வெண்ணிலவே கண்வளராய்! 70 48 பிள்ளைக் குறும்பு 72 49 நிலையாய் இரு 74 50 புண்படுமா? 75 51 படமும் பாடமும் 77 52 பாரதியின் குரல் 78 53 ஏழையைக் கண்டிலேன்! 80 54 விடுதலை வேண்டும் 81 55 என்ன உலகமடா? 83 56 சொல்லும் செயலும் 85 57 இன்பத்தின் நிழல் 86 58 இரண்டும் உண்டு 87 59 ஏழை ஏது? 88 60 அன்பாய் இரு! 89 61 வள்ளலார் வழி 90 62 நாடகம் ஆடுகிறான் 91 63 தேடிய எழில் 92 64 பாப்பா பாட்டு 94 65 ஆடு மயிலே! 95 66 காலைக் கதிரவன் 97 67 மாலை நேரம் 98 68 மாமியும் மருமகளும்! 99 69 அத்தர் விற்போன் 101 70 வறுமைப் பிணி 102 71 விளம்பர உலகம் 103 72 பல்கலைக் கழகம் 105 73 என்ன செய்து விட்டாய்? 106 74 உள்ளமும் உதடும் 108 75 மீண்டும் வருமோ? 110 பாடுங்குயில் குயிலின் குரல் 115 காணிக்கை 117 ரூதின் அவர்களுக்கு 117 1 தமிழ் வாழ்த்து 118 2 குயிலெனக் கூவுவோம் 119 3 தலைமை வகிப்போம் 121 4 எப்படிப் பொறுப்பேன்! 123 5 மூடம் என்று மாறுமோ! 125 6 நானொரு பாடும் பறவை 127 7 எனது நேரம் 129 8 ஏங்குதல் நீதியோ? 131 9 மருளும் உலகம் 133 10 கடவுள் எழுதிய கவிதை 134 11 பொங்கிக் கிளர்ந்தது வீரம் 135 12 நானே அரசிருப்பேன் 136 13 காட்டிக் கொடுக்கலாமோ? 137 14 ஒற்றுமையா? ஒருமைப்பாடா? 139 15 போது விரிந்தது 141 16 தெரு விளக்கு 143 17 கொலைக்களம் 145 18 நமக்குத் தொழில் 147 19 பெற்றோர் புலம்பல் 149 20 என்றும் பிறப்பேன் 150 21 நானொரு குழந்தை 151 22 என்றும் நானோர் இளைஞன் 153 23 யாரடியோ? 155 24 குற்றங் குற்றந்தான் 157 25 கற்பனை மன்னவன் 159 26 கவிதைக் காதலி 161 27 இளைஞர்களே கேளுங்கள் 163 28 துயரக் கவி 165 29 தமிழுக்கு என்னைத் தருவேன் 166 30 மாந்தன் கற்பனை 167 31 ஏறு முன்னேறு 169 32 மலர் தந்த பாடம் 171 33 அவன் கண்ட பலன் 173 34 எல்லாம் கலப்படம் 175 35 கலையாம்! தொழிலாம்! 177 36 உலகம் எங்கள் கையிலே! 179 37 மண் குதிரை 181 38 காதற் காவியம் 182 39 கவிதை உலகு 183 40 இதுதான் அவர் வேலை 184 41 ஓடக்காரன் 185 42 தேன் கூடு 187 43 அவன் தான் இறைவன் 189 44 உலக நாடகம் 190 45 குழம்பிய உலகம் 191 46 கவி மயக்கம் 193 47 நல்ல நேரம் 194 48 என் காதலி 195 49 அவளொரு காவியம் 196 50 இசை மயக்கம் 197 51 தமிழ் பாடத் தடையா? 198 52 மனம்போல் விளையாடு 199 53 தானே வருவாள் 201 54 அறிஞர் வாழ்க! 202 55 யார் பொறுப்பார்? 203 56 உறங்கிய வீணை 204 57 ஐந்து பூதம் 205 58 என்னென்ன பேசுகிறான்! 206 59 ஏமாளி உலகம் 207 60 இருவகை மயக்கம் 208 61 வாழுங் கவிஞன் 209 62 குறிக்கோளை நோக்கி 211 63 யாழெடுத்து வா 212 64 கவிதை எழுதிய காகிதம் 213 65 தப்புத் தாளம் 214 66 படியாத பிள்ளை 215 67 நான்பாடும்போது... 217 68 கற்பவர் செயலா? 219 69 நற்பணியாற்றுவோம் 221 70 எனது உலகம் 223 71 உலகம் சிரித்தது 225 72 திறந்தன கதவுகள் 227 73 நாளைய eடு22974 அருகில்அவளிருந்தால்... 231 75 காதல் இலக்கணம் 233 76 அழகிய மணவாளன் 234 77 எழுதுங்கள் புதுக்கவிதை 235 78 மணல் வீடு 237 79 இசையால் வந்த மயக்கம் 239 காவியப் பாவை படைப்பு தமிழிசைக் fவலர்mண்ணாமலைmரசருக்குbrhªj மொழியிசையைக் சூழ்ந்த பனியகல வந்த பரிதியென வந்தமையாற் - சிந்தித்துப் பண்ணால் அமைநூல் படைத்து மகிழ்கின்றேன் அண்ணா மலைமன் அடிக்கு. -முடியரசன் என்னுரை - இயல், இசை, கூத்து என மூன்று திறங்கண்டது தமிழ். நிலத்தை ஐவகையாக்கி, அவற்றிற்குப் பண்களும் வகுத்தது தமிழ். பண் என்றும் திறமென்றும் பகுத்தது தமிழ். இசைக் கருவிகள் எத்தனையோ கண்டது தமிழ். ஆயினும் தமிழிலே இசையில்லை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினர். கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், வள்ளலார், வேதநாயகர் போன்றோர் இசைப் பாடல்களை இயற்றித் தந்தனர். எனினும் தமிழிலே இசைப்பாடல்கள் இல்லையே என்று துணிந்து கூறினர். அயன்மொழிப் பாடல்களே அரங்குகளில் ஆர்ப்பரித்தன. அதனைக் கேட்ட பாரதியும் பாரதிதாசனும் மனம் வெம்பி இடித்துரைத்தனர். எவர் செவியிற் பட்டது? எவர் நெஞ்சைத் தொட்டது? சுத்தானந்த பாரதியார் பாவநாசம் சிவன் இவர்களெல்லாம் தமிழில் இசைப்பாடல் இயற்றினரே ஏன்? பாடப்படும் பாடல்களில் பத்துக்கு ஆறேனும் தமிழிற் பாடுங்கள் என்று கெஞ்சினோம். எவர் செவியிலும் ஏறாது போயிற்று. இசையில் பாஷைத்துவேஷம் என்று திசை திருப்பினர். அந்தோ! தமிழர் என்ற பெயர்தான் இவர்களுக்கு இன்னும் இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்தனவே இப்பாடல்கள். மொழி, நாடு, காதல், அறம் முதலியவற்றை மையமாகக் கொண்டவை இவை. தமிழிசைக்கு இந்நூல் ஒரு வளர்ச்சிப் படியாக அமையும் என எண்ணுகிறேன். காரைக்குடி அன்பன் 13.3.80 முடியரசன் 1 காவியப் பாவை - எடுப்பு எங்கள் தமிழ் மொழியே! - உயிரே! -எங்கள் தொடுப்பு இங்குனை நாங்கள் இகழ்ந்தத னாலே இழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம் -எங்கள் முடிப்பு பூமியில் மானிடர் தோன்றிய நாளே பூத்தனை தாமரைப் பூவினைப் போலே பாமிகும் காவியப் பாவையே தாயே! பணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே -எங்கள் இயலிசை கூத்தென இலங்கிடு வாயே எமதுயிர் உணர்வுகள் யாவையும் நீயே மயலெமை நீங்கிட மதியருள் வாயே மைந்தரைக் காத்தருள் செந்தமிழ்த் தாயே -எங்கள் 2 அமிழ்தம் கசக்குமோ? - எடுப்பு தமிழ் வாழ்க என்று சொன்னால் குடிமூழ்கிப் போகுமோ? இங்குத் -தமிழ் தொடுப்பு அமிழ்தம் கசக்குமோ? தென்றல் கொதிக்குமோ? அலறுகிறீர்! கதறுகிறீர்! உமக்கிது அடுக்குமோ? -தமிழ் முடிப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உண்டீர்! ஆயினும் அந்தோ நன்றியைக் கொன்றீர்! தாயினும் மேலாம் தமிழ்மொழி வாழ்ந்தால் தாக்குமோ? உம்மைச் சாய்க்குமோ? எங்கள் -தமிழ் துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னால் துடிக்கிறீர்! கண்ணீர் வடிக்கிறீர்! மேலும் மறைவாகச் சூழ்ச்சிகள் செய்கிறீர் இந்நாள் மாதமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள்? -தமிழ் 3 உயிர் வெல்லமோ? - எடுப்பு மொழிவளம் பெற முயல்வாய் - தமிழ் முதலிடம் பெறின் நீ உயர்வாய் உயர்வாய் -மொழி தொடுப்பு விழியினும் மேலென விரும்பிட வேண்டும் வெறுத்திடும் செயலினை ஒழித்திடல் வேண்டும் -மொழி முடிப்பு இயல்இசை கூத்தெலாம் இலங்கிடக் கூடுவாய் எதிர்ப்பொன்று கண்டால் எழுந்ததைச் சாடுவாய் முயல்வந் தெதிர்த்தால் முரண்புலி அஞ்சுமோ? முத்தமிழ்ப் பகைவரைச் சரண்புக நெஞ்சமோ? -மொழி கயல்புலி வில்லால் காத்தனர் வேந்தர் கண்டவர் நுழைவால் கவிழ்ந்தனர் மாந்தர் அயலவர் ஆட்சி விளைத்திடும் கேட்டை அகற்றிட இங்கே அமைத்திடு பாட்டை -மொழி மானம்உனக் கிலையோ? மனம்வைத்தால் பகைமலையோ? மறவர்குலம் இலையோ? மனம் என்ன சிலையோ? ஈனம்நமக் கல்லவோ? இழித்துலகம் சொல்லவோ? இந்த உயிர் வெல்லமோ? வீரமர பல்லமோ? -மொழி 4 தமிழில் பாடு! - எடுப்பு பாடுவ தென்றால் தமிழினில் பாடு பாவையே உளமகிழ் வோடு! -பாடு தொடுப்பு வாடிடும் என்மன வேதனை தீர்ந்திட வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப் -பாடு முடிப்பு வையம் பெற்றது தமிழ்மொழியாம் - அதன் வழி வழி வந்தன பிறமொழியாம் ஐயம் இல்லை உண்மையிதாம் - கண்ணே அருமைத் தமிழே நமதுயிராம் -பாடு இடுக்கண் வருங்கால் சிரித்திடுவாய் - மன இழுக்கெனும் மாசுகள் துடைத்திடுவாய் வடுக்கள் நீங்கிட வாழ்ந்திடலாம் - என வள்ளுவன் சொன்னதைப் பாடிடுவாய் -பாடு நன்மைகள் செய்ய முயன்றிடுவாய் - இன்றேல் நலிவுகள் செய்திட முனையாதே என்னும் மேலோர் அறவுரையை - நல்ல எழிலொடு காதலை வீரமதைப் -பாடு 5 தயக்கம் ஏன்? - எடுப்பு ஆண்டவன் வெறுத்தாரோ? - தமிழை அன்பர்கள் தாம் மறுத்தாரோ? -ஆண்டவன் தொடுப்பு வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி விடுத்தொரு பிறமொழி விழைவது முறையோ? -ஆண்டவன் முடிப்பு நெஞ்சை உருக்கும் திருவா சகநூல் நினைக்க இனிக்கும் தேவா ரங்கள் அஞ்சலி செய்திட உதவா என்றால் அந்தநல் ஆத்திகம் வேண்டாம் இங்கே -ஆண்டவன் இந்தநன் னாட்டார் எடுத்தது கோவில் இருப்பதும் அருச்சகர் தமிழகக் காவில் வந்திடும் மொழிக்கோ வளர்ந்திடும் வாழ்வு வாழ்ந்தநம் மொழிக்கோ வந்தது தாழ்வு -ஆண்டவன் தமிழைக் கோவிலுள் தடுத்திடும் பகையைத் தவிடெனப் பொடியெனச் செய்திடல் வேண்டும் தமிழன் என்றொரு இனமுண் டாயின் தயங்குவ தேனோ? எழுவீர்! எழுவீர்! -ஆண்டவன் நாமிடும் சோற்றினை ஒருநாள் உண்ட நாயும் நன்றியை மறவா தன்றோ? பூமியில் தோன்றிய நாள்முதல் உண்டோர் புன்மைகள் செய்திட முனைவதும் நன்றோ? -ஆண்டவன் 6 வாய் நோகுமோ? - எடுப்பு வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? ஐயா வந்தவர்க்குத்தான் அது தாழ்வாகுமோ? -வணக்கம் தொடுப்பு கணக்கின்றி வந்தவந்த மொழிக்கெல்லாம் பணிகின்றோம் கனிவான மொழியான தமிழாலே துணிவாக -வணக்கம் முடிப்பு பிறமாந்தர் அவர்மொழியே பேசுகின்றார் பிழையாக இங்கேதான் ஏசுகின்றார் மறவேந்தர் காத்தமொழி பேசுதற்கு மனமின்றி அறிவின்றிக் கூசுகின்றார் -வணக்கம் எங்கெங்கும் காணாத காட்சி ஐயா இன்னுமிதை வளரவிடின் வீழ்ச்சி ஐயா அங்கங்குத் தாய்மொழியின் ஆட்சி ஐயா ஆண்டாண்டு ஆண்டமொழி தாழ்ச்சி ஐயா -வணக்கம் 7 உலகில் ஒரு நூல்! - எடுப்பு ஒருநூல் அது பெருநூல் உள்ளம் உயர்த்திடும் குறள்நூல் -ஒருநூல் தொடுப்பு வருநூல் அனைத்தும் வாரிவாரிக் கொள்ளும் திருநூல் பண்பினைத் தருநூல் உலகில் -ஒருநூல் முடிப்பு அகழ்தொறும் அகழ்தொறும் வெளிப்படும் புனல்போல் பயில்தொறும் பயில்தொறும் அகப்படும் புதுப்பொருள் புகழ்சொல ஆயிரம் நாவுகள் வேண்டும் புவியோர் உணர்ந்து போற்றிடல் வேண்டும் -ஒருநூல் அறிதொறும் அறிதொறும் மனவளம் மிகுந்திடும் அகப்பொருள் புறப்பொருள் அனைத்தும் நிறைந்திடும் அறநெறி வாழ்வினில் திளைத்திடப் புணையாம் அன்பும் அறிவும் வளர்ந்திடத் துணையாம் -ஒருநூல் 8 உயிர்த் தமிழே! - முன்னைப் பழம் பொருளே-வேந்தர் மூவர் உயிர்த் தமிழே! கன்னற் சுவை யமுதே-என்றன் கண்ணின் மணி விளக்கே! என்னைப் பழிப்பவனை-நான் ஏதும் நினைப்பதில்லை உன்னைப் பழிப்பவனைப்-பகையா உள்ளம் நினைக்கு தம்மா! தீங்குனைச் சாரு தென்றால்-என்றன் சிந்தை கொதிக்கு தம்மா! பாங்குனை மேவு தென்றால்-நெஞ்சம் பாய்ந்து மகிழு தம்மா! ஆங்கிலம் கற்றவரும்-வந்த அயல்மொழி கற்றவரும் ஈங்குப் புறக்கணித்தார்-அறிவை என்று பெறுவாரோ? தாயைப் பழித்துரைத்தால்-நெஞ்சம் தாங்கிட ஒப்பவில்லை நாயவன் என்றுமிழ-உணர்வு நாடிப் பெருகுதம்மா! காயைக் கவர்ந்திடுவார்-நல்ல கனிச்சுவை தானுணரார் மாயச் சுமையுடலை-ஓம்பிட மானம் விலைபகர்வார் தோள்வலி மிக்கமையால்-எம்மைத் தூற்றினர் வட வேந்தர் வாள்வலி யாலவரை-வீழ்த்தி வாழ்ந்ததும் இந்த இனம் மாள்வது கண்டபினும்-பேதை மாந்தரும் துஞ்சுகின்றார்! MŸtJ« v«bkhÊnah?-ï§nf ஆண்மையும் செத்ததுவோ? 9 சங்க இலக்கியம் - எடுப்பு சாற்றி வளர்ந்திடுவாய் - நம் சங்க இலக்கியப் பெருமையெலா மிங்குச் -சாற்றி தொடுப்பு போற்றி வளர்த்திடும் பொறுப்பினை ஏற்று மாற்றலர் தூற்றிடும் கூற்றினை மாற்று -சாற்றி முடிப்பு காதலும் வீரமும் கண்ணெனக் கூறும் கற்பவர் நெஞ்சினில் பெருமிதம் சேரும் தீதெனும் அடிமைச் சிறுமைகள் மாறும் தெளிவுடன் அறிவும் சிந்தனை கூறும் -சாற்றி சாதி சமயச் சழக்குகள் இல்லை சகலரும் உறவினர் என்பதோர் சொல்லை ஓதிய அறநூல் சங்கத்துச் செல்வம் உயிரெனக் காப்பதால் பகையைநாம் வெல்வம் -சாற்றி கனிதரு வாழைத் தோட்டம தென்பார் கம்பரும் பிறரும் அதன்வழி என்பார் நனிமிகு மகிழ்ச்சி மனமதில் ஆடும் நலிவுகள் தளர்வுகள் நம்மைவிட் டோடும் -சாற்றி அகம்புறம் கலியுடன் நற்றிணை சேரர் அடல்பகர் பத்தொடு ஐங்குறு நூறு தகும்பரி பாடல் குறுந்தொகை எட்டு தண்டமிழ்க் காப்பியம் இவைஎலாம் தொட்டுச் -சாற்றி 10 விந்தையடா விந்தை - மாநிலந் தன்னில் நடத்தி வரும் - விந்தை மானிடர் செய்கையைச் சாற்றுகின்றேன் ஏனிவர் இவ்வணம் ஆற்றுகின்றார் - என எண்ணித் துணிந்துசொல் ஓர் முடிவு செத்த பிணத்தைப் புதைத்து வைத்த - குழி சென்றங்கு மீண்டுங் கிளறுகின்றார் பித்தரைப் போலப் பிதற்றுகின்றார் - இனிப் பேசாப் பிணத்தின் முன் பேசுகின்றார் தோண்டி எடுத்திடும் மேனிதனில் - படி தூசி துடைத்துடன் பூமுடித்து வேண்டிய பூசை செலுத்துகின்றார் - இந்த விந்தையை யாதென் றுரைத்திடுவேன் சூட்டு புகழுரை எத்தனை தான் - அட! சொல்லுக் கடங்காமல் மிக்கதடா! ஏட்டில் எழுதிய போற்றிகளும் - ஒரு எண்ணிக்கை காட்டத் தொலையுமதோ? ஆயிரம் ஆயிரம் கொட்டுகின்றார் - அணி ஆடை பல செய்து பூட்டுகின்றார் கோயிலைப் போற்பல மாளிகைகள் - கட்டிக் கொள்ளையாம் மானியம் கூட்டுகின்றார் விந்தையடா இது விந்தையடா - என வேறொரு திக்கில் விரைந்து சென்றேன் சிந்தனை அற்றவர் அங்கிருந்து - புரி செய்கையைக் கண்டுளம் நொந்ததடா கண்ணொளி மங்கிய காட்சியினான் - பிறை கண்டது போலொரு கூனுடையான் எண்ணிய எண்ணம் விளம்புதற்கே - ஒரு ஏதுவிலான் திக்கு வாயுடையான் நின்று நடந்திடக் கால்களிலான் - அவன் நிற்பது வோஒரு கோலின்துணை ஒன்றிய கோலினைப் பற்றுதற்கோ - கையில் உற்றவிரல்களும் முற்றுமிலான் இத்துணைப் பண்புகள் கொண்டவனை - நலம் ஏற்றிட ஊசிகள் போடுகின்றார் சித்த மருத்துவம் செய்யினுமே - அவன் சீரிய வாழ்வினைக் காண்பதுண்டோ ஆணிப்பொன் னாடையும் போர்த்துகின்றார் - நல்ல ஆட்சிப் பொறுப்பையும் நல்குகின்றார் காணிக்கை எத்தனை கொட்டுகின்றார் - இந்தக் காட்சியைக் காணக்கண் கூசிநின்றேன் உள்ளம் உருக்கிடும் ஓர்குரல்தான் - செவி உற்றதும் சட்டென நான் திரும்பக் கள்ளமில் லாஒரு ஏழைமகன் - பசி காட்டும் முகத்துடன் நின்றிருந்தான் கட்டுதற் கோர்துணி அற்றவனாம் - கையில் காசு பணங்களும் அற்றவனாம் திட்டி விரட்டினர் அன்னவனை - அவன் தேம்பிக் கிடப்பதைக் கண்டு நின்றேன் தங்க உடல்நலம் கொண்டவன்தான் - அவன் தங்க இடமின்றிச் சுற்றுகின்றான் எங்கும் புறக்கணிப் பானதடா - சிங்க ஏறு வளங்குன்றிப் போனதடா! ஆவி உடல்வளம் அத்தனையும் - பெறும் ஆண்மகன் இப்படித் தேய்ந்திடவே பாவி மடம்படு மானிடர்கள் - நஞ்சு பாய்ச்சுதல் கண்டுளம் வெந்ததடா! செத்த மொழிக்கிங்கு சீர்வரிசை - ஒரு செம்மை பெறாமொழிக் கேற்றமிங்கே பெற்ற மொழிக்கொரு காவலில்லை - என்ற பெற்றியை நெஞ்சம் நினைந்ததடா! 11 மறந்தறியேன் - எடுப்பு தாயே உனைநான் மறந்தறியேன் - நின் தாளலால் வேறெதும் நினைந்தறியேன் - தமிழ்த் -தாயே தொடுப்பு நீயே துணையென்று நெஞ்சினில் கொண்டு நினைந்திடும் மனைதனை மறந்ததும் உண்டு - தாயே முடிப்பு உன்முகம் மலர்ந்தால் என்முகம் மலர உளமகிழ்ந் திருந்தேன் உலகினை மறந்தேன் என்முகஞ் சுருங்கிட நன்மனம் வருந்திட ஏனெனை விடுத்தாய் இடர்தனைக் கொடுத்தாய் -தாயே நொந்தே நின்மகன் நுடங்கிடல் நன்றோ? நோய்தனை நீக்கிடல் தாய்கடன் அன்றோ? நந்தா விளக்கே நானென்ன செய்தேன்? நாளெலாம் இருள்தனில் நலிந்திடச் செய்தாய் 12 வெறி வேண்டும் - காதல் வெறி வேண்டும் - தமிழ்ச்செல்வி காதல் வெறி வேண்டும் - என்றன் பேதை மனத் திடையே - உன்றன்எழில் பேரொளி வீசிடவே - அந்தக் காதல் ஒளிப் பிழம்பால் - இன்பநிலை கண்டு களித்திடுவேன் - இன்பப் போதை வெறி யினிலே - வான் வெளி புக்குப் பறந் திடுவேன் செல்வத் திரு மகளே! - உன்னை நான் சேர நினைக் கையிலே - வஞ்சம் புல்லும் மனத் தவர்தாம் - கூடியொரு புன்மை தரு வாரேல் - என்றன் மல்லல் திரு நெடுந்தோள் - பகையை மாற்றிப் புறங்காண - உன்றன் முல்லை நகை காட்டிப் - போர்வெறி மூட்டித் தர வேண்டும் போரில் உரம் காட்டி - உன்னை நான் போற்றி மலர் சூட்டி - என்றும் வாரி நலம் பருகி - நல்லின்ப வாழ்வு பெற வேண்டும் - அந்த வாரி யிடை மூழ்கிக் - கண்ட நலம் வாழ்த்திப் புகழ்ந் துரைத்து - நின்னைப் பாரில் உயர்த் துதற்கே - என்நெஞ்சில் பாட்டு வெறி வேண்டும். 13 தமிழ் - என் தெய்வம் - கோவில் எனது நெஞ்சம் - தனிலே கூடி யருள் புரிவாய் காவியப் பா மாலை - அணிந்தே காத்திட வேண்டு மம்மா நாவின் மிசை யிருப்பாய் - எனக்கு நல்ல மனந் தருவாய் பாவினில் சொல் லிலெல்லாம் - சக்தி பாய்ந்து வர வேண்டும் உன்றன் திருப் பெயரைச் - சொல்லி ஊரினை ஏய்த் திடுவோர் நன்றென வா ழுகின்றார் - நின்றன் நன்மையை நா டுகிலார் துன்றிய பண் பினரும் - உன்பால் தூயநல் லன் பினரும் நின்று வருந் திடவே - செய்தல் நீதியின் பாற் படுமோ? நெஞ்சில் உனை நினைந்தே - என்றும் நேர்மையில் நிற் பவரை மிஞ்சும் வறு மையினால் - துன்பம் மேலிடச் செய் துநின்றாய் வஞ்சனை செய் மனிதர் - அவர்க்கு வாழ்வுகள் தந் துநின்றாய் வஞ்சியுன் சோ தனையோ? - எங்கள் வாழ்வெலாம் வே தனையோ? நித்தம் உனைத் தொழுதே - எங்கும் நின்புகழ் பா டுமெனைப் பித்தன் வெறி யனென்றே - உலகம் பேசுதல் காண் கிலையோ? முத்தமிழ் தந் தபித்தால் - செல்வம் முன்னின்று தே டுகிலேன் இத்தரை மீ தினிலே - வறுமை எத்தனை துன் பமம்மா! கொல்லும் வறு மையிலும் - செம்மை குன்றா திலங் கிடவே வெல்லும் மன நிலையைத் - தாயே வேண்டுகி றேன் அருள்வாய் சொல்லுமென் பா டலினால் - உலகம் சூழ்ந்து வணங் கிடவே வல்லமை வேண் டுமம்மா - என்றும்நான் வாழ்ந்திட வேண் டுமம்மா. 14 தமிழ் - என் தாய் - செந்தமிழ் என் பவளாம் - நல்ல செல்வக் குடி மகளாம் முந்தை மொழிகளிலே - அவளும் மூத்தவ ளாய்ப் பிறந்தாள் முந்திய மூ வரசர் - அவையில் மொய்ம்புறத் தான் வளர்ந்தாள் வந்தவர் யா வருக்கும் - செல்வம் வாரி வழங் கிடுவாள் தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல செய்கையொன் றே யறிவாள் என்று பிறந் தவளோ? - இவள் எத்தனை ஆண் டினளோ? இன்றும் இள மையுடன் - அன்னை ஏற்றம் உறப் பொலிவாள் ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற ஒண்டொடி யா மவளே கன்னடத் தான் துளுவன் - மலையன் கண்டு மொழித் தெலுங்கன் என்னுமிந் நால் வருக்கும் - அவரை ஈந்து மணம் முடித்தாள் பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப் பெற்றவ ளைப் பகைத்தார் நன்னடைப் போக் கிழந்தார் - அந்த நால்வரும் நன் றிகொன்றார் ஈன்றெனைக் காத் தவளை - மனமே எங்ஙனம் நான் புகழ்வேன் சான்றவர் மெச் சிடவே - முப்பால் தந்து வளர்த் தனள்தாய் தோன்றுசங் கப் புலவர் - படைத்த தொட்டிலில் ஆட் டினவள் மூன்றர சர் கதைகள் - சொல்லி மூள்வலி யூட் டினள்தாய் என்றன் வய துநிலை - பருவம் ஏற்பவை தான் உணர்ந்தே நன்றறி வுக் கதைகள் - நகை நாட்டும் பிற கதைகள் ஒன்றிய வீ ரமுடன் - காதல் ஊட்டுஞ் சுவைக் கதைகள் மின்றளிர் மே னியினாள் - சொல்லி மேன்மை யுறப் பணித்தாள் மேவுக தொண் டுளமே - என்பாள் மேகலைக் கா தையினால் பாவுக நீ தியென்பாள் - எங்கள் பாண்டியன் கா தையினால் கோவுயர் குட் டுவனால் - வீரங் கொட்டி முழக் கிடுவாள் பாவில் நகைச் சுவையாத் - தருவள் பாண்டவர் காதையினால் வாழ வழி வகுத்த - திரு வள்ளுவன் ரா மலிங்கம் ஆழ நெடும் புலமைக் - கம்பன் அவ்வை யுட னிளங்கோ சோழரில் பாண் டியரில் - கவி சொன்னவர் சீத் தலையான் தோழர்கள் என் றிவர்போல் - பலரைத் தொல்புகழ்த் தாய் கொடுத்தாள் தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த் தாயெனைக் காத் தமையால் தன்கடன் போற் றுதற்கே - கவிஞன் தந்தனன் வேற் படையே நன்னடை நல் கினரோ - இந்த நாட்டினை ஆள் பவரே என்கடன் ஆற் றிடுவேன் - பகையை எற்றி முருக் கிடுவேன். 15 தமிழ் - என் தந்தை - முன்னைத் தமிழ் மொழியே! - உலகில் மூப்பறி யா முதலே! என்னை மகன் எனவே - புவியில் ஏற்றமுடன் அளித்தாய் கற்றுத் தெளி வதற்கே - ஆசான் கண்டு பயிற் றுவித்தாய் முற்றும் உணர்ந் தவனாம் - அந்த முன்னவன் வள் ளுவனாம் முத்தமிழ் வா ணர்கள்சூழ் - அவையில் முந்தி யிருந் திடவே அத்தனே என்னை யுமோர் - சான்றோன் ஆக்கி மகிழ்ந் தனைநீ தூது கலம் பகமாய்ப் - பெருகும் தோழர்கள் பற் பலராம் தீது விளைப் பவராய் - அமையின் செப்பித் திருத் துவைநீ குற்றமொன் றில் லதுவாம் - நல்ல கோல மனை யளித்தாய் கற்றவன் கட் டியதே - அதுதொல் காப்பியம் என் பதுவே வாரி முகந் தெடுத்தே - இன்ப வாரி திளைப் பதற்கே நேரிய செல் வங்கள்தாம் - தொகையில் நேடித் திரட்டி வைத்தாய் ஐவகைக் காப் பியமாம் - செல்வம் ஆக்கி எனக் களித்தாய் கைதவக் கள் வரினால் - இரண்டு காப்பியம் கா ணுகில்லேன் பாட்டிசைச் செல் வங்களும் - இழந்தேன் பட்டயம் மட் டுமுண்டு நாட்டினில் முன் பிறந்தோர் - அயர்வால் நானவை காண் கிலனே இத்தனை போய் விடினும் - இன்னும் எட்டுத் தொகை யுடனே பத்தெனும் பாட் டுளதாம் - ஒவ்வொன்றும் பற்பல கோடி யன்றோ! பாட்டுப் புறப் பொருளால் - வீரப் பாங்கில் எனை வளர்த்தாய் ஈட்டும் அகப் பொருளால் - காதல் இல்லறம் கூட் டுவித்தாய் நின்பெயர் காத் திடுவேன் - தமிழே நீஎனைப் பெற் றதனால் உன்பெயர் ஓங் குதற்கே - பற்பல ஓவியம் நான் படைப்பேன். 16 தமிழ் - என் காதலி - பாரி மலை யருகில் - நல்ல பண்பினர் வா ழிடமாம் ஊரில் ஒரு பொழிலில் - உனைநான் உற்றறி நாள் முதலே மீறிய கா தலினால் - தமிழே மெய்ம்மறந் தே உழல்வேன் கூரிய நின் விழியால் - எனை நீ கொல்வது தான் சரியோ ஆசை மனத் திரையில் - எண்ணம் அத்தனை யுங் கலந்து பாச முடன் எழுதி - உருவைப் பார்த்து மகிழ்ந் திருப்பேன் பேச மன மிலையேல் - உயிரைப் பிய்த்தெனைக் கொன் றுவிடு மோசம் புரி வதென்றால் - என்றன் மூச்சை நிறுத் திவிடு உன்னைப் பெறு வதற்கே - இங்குநான் ஓடித் திரி வதெல்லாம் என்னைப் புறக் கணித்தால் - உயிரை எப்படி நான் சுமப்பேன் உன்னெழிற் கா தலன்றோ - என்னை உன்மத் தனாக் குதடி கன்னற் சுவை மொழியே - என்னைக் கட்டி யணைத் திடடி செல்வம் உற வரினும் - வறுமை சேர்ந்து துயர் தரினும் பல்வகை இன் னலிலும் - என்மனப் பாவையே நான் பிரியேன் நல்வழி காட் டிடடி - உன்றன் நட்பொன்று போ துமடி சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு தோழியுன் சித் தமடி நாட்டவர்க் கஞ் சுதியோ? - உலகில் நம்மைத் தடுப் பவர்யார்? காட்டுப் புலி யடிநான் - போரில் காத்திடு வேன் உனையே வாட்டம் தவிர்ந் திடடி - கொடிய வாளுக்கும் அஞ் சுகிலேன் கோட்டை மதி லகத்தோர் - முழக்கும் கொட்டுக்கும் அஞ் சுகிலேன் காதல் உல கினிலே - அகப் பொருள் காவின் நடு வினிலே மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை மீதினில் நா மிருப்போம் மாதுநீ யா ழெடுத்தே - இசை மாரி பொழிந் திடுவாய் காதற் களி யினில்நான் - பற்பல காவியம் பா டிடுவேன். 17 தமிழ் - என் மனைவி - வெள்ளி நிலா வினிலே - ஒரு வெட்ட வெளி தனிலே அள்ளி அணைத் தசுகம் - அதனால் ஆவி சிலிர்த் ததடி சிந்தா மணி தவழும் - மார்பில் சேர்ந்து திளைத் தசுகம் எந்த விதம் உரைப்பேன் - எழுதி ஏட்டினில் காட் டுவதோ? நற்றிணை ஐங் குறுநூ - றகமும் நல்ல குறுந் தொகையும் உற்ற கலித் தொகையும் - தமிழே ஊட்டி மகிழ வைத்தாய் மேவித் தழு வுவதற்கே - உன்மணி மேகலை பற் றுகையில் நீவிட் டகன் றுவிடின் - பிரிவு நெஞ்சைத் துளைக் குமடி வந்த வடக்குத் தெரு - மகள்பால் வாஞ்சைஎன் றெண் ணினையோ அந்தப் பொது மகளைத் - தொடவும் ஆசையொன் றில் லையடி வாழ்வு வளம் இழந்தாள் - வடக்கில் வாடகை வீடு டையாள் சூழ்வினை ஒன் றுடையாள் - வலையில் சொக்கிவிட் டேன் எனவோ ஊடிப் புலந் துநின்றாய் - என்றன் உள்ளம் அறிந் திலையோ? நாடித் திரி பவனோ - வஞ்சக நங்கையின் கா தலுக்கே மேலைத் திசை யுடையாள் - ஒருத்தி மேன்மைக் குண முடையாள் வாலைக் கும ரியுடன் - நண்பாய் வாய்மொழி பே சிடுவேன் நெஞ்சிற் கெடு தியில்லை - அவளால் நேர்வது நன் மையடி வஞ்சிக் கொடி யிடையே புலவி வாட்டந் தவிர்ந் திடடி நெஞ்சத் தடந் தனில்நீ - உலவும் நீள்சிறை அன் னமடி வஞ்சனை இல் லையடி - நீயே வாழ்க்கைத் துணை வியடி பேதை மனக் குயிலே - உன்னைப் பெற்றவள் இல் லையடி ஏதுக் கடி புலவி - தமிழே என்னைவிட் டெங் ககல்வாய்? காலில் சிலம் பொலிக்க - வருவாய் காதல் மது பருகிக் கோலப் பெரு வெளியில் - கவி வெறி கொண்டு திரி வமடி சோலை வெளியிடையே - நாம் சுற்றித் திரி வமடி மாலை நிலா வரவே - தனியாய் மாடந் தனை யடைவோம் அங்குநம் கூட்டுறவால் - பிறந்த அன்புக் குழந் தைகளை சங்கக் கவிதை என்றே - உலகம் சாற்றிப் புக ழுமடி 18 தமிழ் - என் மகன் - பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்தாய் - அன்புப் பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய் உள்ளக் கவலைகள் ஓட்டவந்தாய் - என்றன் ஓவிய மேபுகழ்க் காவியமே கொஞ்சுங் கனியிதழ் நீதிறந்தால் - உள்ளம் கொள்ளைகொள் ளுங்களி கூடுதடா விஞ்சு நலந்தரு யாழுடனே - குழல் வேண்டுகி லேன்தமிழ் மாமகனே பைந்தளிர் மேனியைத் தீண்டுகையில் - தமிழ்ப் பாலக னேநடை காணுகையில் பைந்தமி ழேஎன நின்பெயரைச் - சொல்லிப் பாடிப் புகழ்ந்துனைப் பேசுகையில் நின்மொழி என்செவி சேருகையில் - நெஞ்சில் நேரும் மகிழ்வினை யாதுரைப்பேன் என்னுயிர் மூச்சென ஆனவனே - எனக் கேதுக்கடா அந்த மேலுலகம் வீதி களில்விளை யாடுகையில் - என்றன் வேதனை யாவுமே ஓடிடினும் தீது புகுந்து விளைந்திடுமோ - என்று செந்தமி ழேமனம் அஞ்சுகிறேன் கெட்ட மொழியினைப் பேசுவது - மிகக் கேடு தருஞ்செயல் விட்டுவிடு சிட்டு நிகர்த்திடும் என்மகனே - வரும் சின்ன மொழியையும் தள்ளிவிடு சாதி சமயங்கள் என்பவரை - நண்பிற் சார்ந்து பழகுதல் தீமையடா ஓதிய சங்கத்தில் உள்ளவரே - நம்மை ஓம்பி வளர்த்திடும் நல்லவராம் உன்னைச் சிறியவர் ஏசுகையில் - பெற்ற உள்ளம் கொதிப்பதை யாரறிவார்? முன்னைப் பெருமைகள் அத்தனையும் கொண்டு முன்னேறிச் செல்லுதல் வேண்டுமடா முற்றவும் உன்திறம் ஆய்ந்துணர்ந்தே - இன்பம் மூழ்கித் திளைப்பவ ளாயிடினும் பெற்ற பொழுதினும் நான்மகிழ்ந்தேன் - பிறர் பேசிப் புகழ்ந்துனைப் போற்றுகையில் வந்தவள் காதலில் சிக்கியதால் - தந்தை வாழ்வில் மனங்கொளும் பான்மையின்றி நொந்திடச் செய்தனர் ஆயினுமே - நன்னூல் நூற்று வளர்த்திடு வேன்உனையே நின்னைப் பெறுவதற் கென்னதவம் - செய்தேன் நேரினில் உன்னடை கண்டவர்கள் என்னைஓர் தக்கவள் என்றுரைத்தார் - புகழ் ஏற்றிட வந்தனை வாழியவே 19 எங்கள் நாடு - எடுப்பு எங்கள் நாடு வாழ்க வாழ்கவே வளர்கலை மேவும் அறிஞர்கள் சூழும் -எங்கள் முடிப்பு தனக்கென்று வாழாத நல்லவனைப் பெண்மையிங்குத் தலைநிமிர உழைத்தவனை எங்கேசென் றாலுந்தன் மனத்துள்ள கருத்தினையே சொல்பவனை மற்றவரை மதிப்பவனைக் கலியாண சுந்தரனைத் தருநாடு நூலோடும் ஏடுகளைச் செல்லோடி அழிக்காமல் நுழைந்தோடித் தேடியருள் சாமிநாதன் வளர்நாடு பாலோடு துளிநஞ்சு கலந்தாலும் தீமைஎனப் பகர்ந்தவனைத் தமிழியக்க மறைமலையைப் பெறுநாடு சிறுபிள்ளை உள்ளங்கள் சீர்திருந்த வேண்டிநலம் சேர்கவிகள் பொழிமுகிலாம் கவிமணியின் தவநாடு வரும்வெள்ளை மாந்தருக்குப் பணிவதில்லை என்றுகவி வாகைகொளும் பாரதியும் பரம்பரையும் விளைநாடு இருள்சூழ்ந்து மருள்சூழ்ந்து சமுதாயம் இருட்டறையில் எதுவுண்மை பொய்யென்றே அறியாமல் தூங்குகையில் இருள்கீழ்ந்து வெளிக்கிளம்பும் ஞாயிறென அறிவொளியை ஈந்துவந்த ஈவேராப் பெரியாரின் திருநாடு இசைவாணர் கலைவாணர் விஞ்ஞானப் பெருமக்கள் எழுத்தாளர் பெரும்புலவர் கவிவாணர் நாடுய்ய வசையில்லா வழிகாட்டும் பேரறிஞர் தமிழ்காக்க வரிந்துகட்டி முன்னிற்கும் புலிக்கூட்டம் மிகுநாடு 20 மறவர் நாடு - எடுப்பு பகைவென்று புகழ்கொண்ட பழநாடு நிதம் வாழ்கவே -பகை முடிப்பு வாளோடு வாள்மோதும் போரென்ற மொழிகேட்டு மகிழ்வோடு தோள்வீங்கும் மாவீரர் வளர்நாடு தோளோடு வாள்வீழ்ந்து பகைமாயப் போராடும் துணிவாளர் பகைபணியிற் கனிவாளர் நிறைநாடு விழுப்புண்ணை மேலாக விழைகின்ற ஒருநாடு வேல்வரினும் இமையாத வீரமிகு தமிழ்நாடு புழுக்கூட்டம் எனப்பகையை அழித்தொழித்துப் பெயர்கின்ற புதல்வனுக்குப் பாலூட்டி வளர்த்ததிருத் தாய்நாடு தூங்குகிற வேங்கையினை இடருகிற குருடனெனத் தொலைவார்கள் எமைஇகழ்வோர் என்றெதிரும் மறநாடு பூங்குழலி பிறநாட்டுப் பகையறுக்க ஒருமகனைப் போருக்குப் போவென்று வேலீயும் தாய்நாடு 21 தமிழகம் தாழ்ந்ததேன்? - எடுப்பு தமிழகமே-நம்நாடு தாழ்நிலை எய்திய தெதனாலோ? -தமிழகமே தொடுப்பு அமிழ்தெனும் தமிழ்மொழி காத்தனர் வேந்தர் அருஞ்செயல் புரிந்தனர் வாழ்ந்தனர் மாந்தர் -தமிழகமே முடிப்பு முரசொலி கேட்டால் மூண்டெழுவார்-போரில் முதுகிடப் புறப்பகை கண்டிடுவார் அரசரும் புலவரும் இணைந்திருந்தார்-இங்கே அகப்பகை எவ்விதம் புகுந்ததுவோ? -தமிழகமே தென்றல் தவழ்ந்திடும் தமிழகமே-இன்று தேய்ந்திடக் கண்டிரோம் என்றெழுந்தார் நன்றிது செய்தனர் எனமகிழ்ந்தோம்-ஆனால் நாய்க்குணம் புகுந்தது பாசறையில்! -தமிழகமே விடுதலை என்றொரு சொல்கேட்டோம்-நாட்டில் வீரமும் மானமும் உண்டென்றோம் கெடுதலைப் புரிந்திடும் வினையார் - நாடு கீழ்நிலை எய்திடச் செய்கின்றார் -தமிழகமே 22 தமிழர் வாழ்வு! - எடுப்பு வாழ்வினைப் பாராய் நீ - தமிழர் வாழ்வினைப் பாராய் நீ -வாழ்வினை தொடுப்பு தாழ்வினை ஏற்றார் தமிழினைப் போற்றார் தம்மவர் ஆட்சியை அழித்திடும் கூற்றார் -வாழ்வினை முடிப்பு அலைகடல் கடந்து பலபல நாடு அனைத்துமே சென்று பட்டனர் பாடு கலைபல கண்டோர் நிலையினைக் கண்டு கலங்குதென் உள்ளம் கவலையே கொண்டு -வாழ்வினை 23 தமிழன் ஏக்கம் - தமிழன் என்றதுமே-மிகப்பரி தாபம் பிறக்குதம்மா! இமயம் வென்றானே-அவன் இன்று ஏற்றங் குறைந்தானே! சமையம் போகாதோ? - தொல்லைதரும் சாதி தொலையாதோ? சமத்துவ வாழ்வு-மீண்டும் தளிர்த்துச் செழிக்காதோ? உழுபவன் ஒருவன்-உடைதர உழைப்பவன் ஒருவன் பழமையின் பேரால்-பயன்பெறப் பார்ப்பவன் வேற்றவனோ? அழுதிடும் பாலன்-பசியால் ஆவி தொலைந்தாலும் கழுவுவர் பாலால்-அந்தோ கல்லுருத் தேவுகளை ஓட்டைக் குடிசையுள்ளே-உணவின்றி ஒட்டி உலர்ந்த மகன் வேட்டியும் இல்லாமல்-அவனுறும் வேதனை தீராதோ? மாட்டினும் கீழாக-மனிதன் மாண்டிடும் தீய நிலை ஓட்டிட வேண்டுமம்மா-உண்மையை ஓர்ந்திட வேண்டுமம்மா 24 முன்னையர் வாழ்வு - வாணிகம் செய்தநம் முன்னையர் கண்டநல் வாழ்வினைக் கூறுவன் கேட்டிடுவீர் தோணிகள் ஓட்டினர் சூழ்கடல் சுற்றினர் சூட்டினர் நம்புகழ் நாட்டினரே ஆழ்கடல் ஆயினும் சூழ்புயல் ஆயினும் அஞ்சில ராகிய நெஞ்சினராய்க் கீழ்கடல் மேல்கடல் யாவினும் ஓடினர் கிட்டும் நிதிக்குவை விஞ்சினரே தெற்குக் கடல்தனில் கொற்கைத் துறைதனில் தேடிக் கிடைத்தநன் முத்துக்களை விற்கத் திசைதொறும் சென்றனர் பொற்குவை வேண்டிய மட்டுங் குவித்தனரே மீனக் கொடியுடன் காணப் படுங்கலம் மேலைக் கடல்தனில் ஓடிவரும் மானப் புலிக்கொடி விற்கொடி ஏந்திய வங்கங்கள் தென்கடல் கூடிவரும் மெல்லிய நற்றுகில் பட்டுடை பொன்மணி மேவிப் படர்தரு செம்பவழ வல்லியும் நல்லகில் ஆரமும் ஆதிய வாரிக் கொடுத்தது நம்புவியே ஆழ்கடற் சாவகம் புட்பகம் சீனமும் ஆதி யவனம் கடாரமுடன் ஈழம் முதலன தேயமெ லாமிவர் ஏகினர் தோணியில் வீரமுடன் இவ்வகை வாழ்ந்தனர் என்னின மாந்தர்கள் என்றதும் என்னுளம் பொங்கியதே அவ்வியல் தேய்ந்தனர் இன்றவர் என்றதும் ஆவென் றுயிர்த்துளம் மங்கியதே 25 தாயகம் காப்போம் - எடுப்பு பாதை தெரிவது பார் பார் - அந்தப் பாதையில் எதிர்ப்பவர் யார் யார்? -பாதை தொடுப்பு தாதையர் ஆண்ட தாயகம் காத்திடத் தாரணி யாளும் உரிமையை மீட்டிடப் -பாதை முடிப்பு வஞ்சகர் செயல்கள் வாழ்ந்ததும் இல்லை வாய்மைகள் என்றும் மாய்ந்ததும் இல்லை நஞ்சினும் கொடியோர் நன்றியைக் கொன்றோர் நடத்திடும் நாடகம் இனிமேல் இல்லை -பாதை இழந்ததை மீட்போம் இருப்பதைக் காப்போம் எதிரிகள் செய்திடும் சூழ்ச்சியை மாய்ப்போம் விழுந்தவர் எழுந்தார் விழித்தனர் மாந்தர் வீணரின் செயல்களை வேரொடு சாய்ப்போம் -பாதை 26 வாழ்க தாயகம் - எடுப்பு வாழ்க தாயகம் - அம்மா வாழ்க நீயகம் - வாழ்க முடிப்பு உயிர்நீ உடல்நீ உளம்நீ வளம்நீ பயிர்நீ பயன்நீ பயன்தரு பொருள்நீ வெயில்நீ மழைநீ விழிநீ மணிநீ பயில்தரு சுவைநீ பழகிய மொழிநீ வெளிநீ வளிநீ புனல்நீ அனல்நீ விளைவுறு நிலம்நீ விதைநீ முளைநீ ஒளிநீ வயல்நீ உயர்வுறு மலைநீ அளிநீ தொழில்நீ அளவில கலைநீ பிறந்தோம் தவழ்ந்தோம் பிணைந்தோம் நடந்தோம் திரிந்தோம் மகிழ்ந்தோம் திருவாழ் மடியில் சிறந்தோம் பயின்றோம் சிரித்தோம் வளர்ந்தோம் நிறைந்தோம் உயர்ந்தோம் நினைவோம் உனையே 27 நாட்டுப்பண் - (சனகண இசையிற் பாடுக) உயிருடல் பொருள்திரு நாடெனும் நினைவே ஓங்கிட வேண்டுவம் நாமே துஞ்சாது நின்று குலையாம லிந்நாட்டைத் தோழமை கொண்டுல காள்வோம் நெஞ்சு கெடாவகை உரமாய் நின்றால் நிற்பவர் எதிரில் உளரோ? படைபலம் நாமே பாரீர்! தடைகளை நீக்கிட வாரீர்! நாமே தமிழுல காள்வோம்! புகழ்வளர் நம்முயர் தாயக நினைவே போற்றுவம் போற்றுவம் நாமே நலமே மிகவே பெறவே பலபல நல மிக வே 28 நாட்டு வாழ்த்து - வாழ்க தமிழகம் வாழ்க தமிழகம் வாழ்க தமிழகமே! சூழ்கடல் மூன்றொடு வேங்கடம் எல்லையாய்த் தோன்றுக தாயகமே! நல்லவர் ஆட்சியில் தங்கி வளர்ந்திடும் நாடு செழித்திடவே! அல்லவை நீங்கிட நாட்டினிற் செந்தமிழ் ஆட்சி தழைத் திடவே! வான முகட்டினைத் தொட்டு நிமிர்ந்திடும் மாமலைத் தாயகமே கானம் இசைத்திடும் பேரரு வித்திரள் காட்டி மிளிர்த்திடுமே! ஓடிய ஆறுகள் மெல்லிய கால்களை ஊன்றிய ஊர்களெல்லாம் கூடிய செந்நெலின் ஆடிய பைங்கதிர் கோலம் விளைத்திடுமே! தெண்கடல் முத்தொடு சேர்ந்து படர்ந்திடும் செம்பவளக் கொடியும் மண்ணதில் தங்கமும் வல்லிரும் பின்னன வாழ்ந்திடும் தாயகமே! கல்வி வளர்ந்திடப் பண்பு செழித்திடக் கற்றவர் வாழியவே! செல்வ மிகுந்திட எங்களின் தாயகம் சீருடன் வாழியவே! 29 இனிப் பொறுக்க முடியாது - எடுப்பு இன்னும் பொறுத்திருக்க இயலாது - சும்மா இருக்கின்றீர் மணங்கொள்ள முயலாது -இன்னும் தொடுப்பு கன்னமெல்லாம் சிவந்த காரணம் யாதென்று கடிந்துரைத்தாள் அன்னை கலங்க வைத்தாள் என்னை -இன்னும் முடிப்பு சோறுண்ண மறுத்தால் சூதென்ன சொல்லென்பாள் தூங்குதூங் கென்று வாங்கிடுவாள் உயிரை வேறென்ன செய்தாலும் விளையாட மறுத்தாலும் வியப்பாள் தந்தையொடு கலப்பாள் முறைப்பாள் -இன்னும் உடல்வேறு பாடுகளை உன்னித்து நோக்குகிறாள் உறவுமுறை யிலொரு மாப்பிள்ளை தேடுகிறாள் மடல்சேரும் தாழைமரச் சோலைக்கு வாருங்கள் மணம்வைக்கும் நாள்தன்னை மாதென்பால் கூறுங்கள் -இன்னும் 30 நாணம் ஏனோ? - எடுப்பு கதவில் உடல்மறைத்துக் காட்டுகிறாள் முகத்தை-எனைக் கண்டவுடன் நாணம் கொண்டமையினாலோ? -கதவில் தொடுப்பு விதவிதமாம் மலர்சூடி மேலாடை சூடாமல் விளையாடித் திரிந்தாளே அதை எல்லாம் மறந்தாளோ? -கதவில் விளையாடும் ஒருநாளில் வீண்வம்பு நான்செய்தேன் வெம்பிஅழு தெனைவைதாள் நான் வளையை நொறுக்கியபின் தலைநோகக் கொட்டியதை நினையாமல் மறுநாளும் தானாக விளையாட வந்துதையும் மறந்தாளோ? -கதவில் குடங்கொண்டு நீரோடு வருங்காலை இப்போது குனிந்ததலை நிமிராமல் நடந்துபிறர் அறியாமல் தடங்கண்ணி ஏகிடுவாள் தனியான நிலைகாணின் தானோக்கி நகைசெய்வாள் மானோக்கி மனம்யாதோ? -கதவில் 31 முத்தம் தந்தான் - எடுப்பு வந்தோடி முத்தம் தந்தானடி - தோழி அந்தமிகுந்த என்றன் சிந்தை மகிழ்ந்தவீரன் -வந்தோடி தொடுப்பு பந்தாடி மீள்கையிலே பகலோனும் வீழ்கையிலே செந்தாமரை முகத்தில் செவ்வாய் இதழ்புதைய -வந்தோடி முடிப்பு சோலையிலே பலநாள் மாலையிலே வருவான் சொன்னதில்லை ஒருசொல் சுந்தரக் குரிசில் மேலையிலே மணந்தான் போலவே நினைந்தான் மெல்லவே சிரித்தான் உள்ளமே பிணித்தான் -வந்தோடி 32 இன்னும் வரக்காணேன்! - எடுப்பு இந்நேரமாகியும் காணேனே - காலையில் எழுந்திருந்து சென்றவர் -இந்நேரம் தொடுப்பு தென்னைமர நிழல்வந்து தெருவாயிற் படிஓரம் சேர்ந்ததே! ஒன்பது மணிச்சங்கும் ஓய்ந்ததே -இந்நேரம் முடிப்பு எக்காலும் ஆர்வமாய் உண்பார் என்றெண்ணி என்நாதன் மனம்மகிழ எழுந்தோடி நான்செய்த சிக்கான நூல்போன்ற இடியப்பம் வீணாகச் சில்லிட்டுப் போகுதே! நெஞ்சமும் நோகுதே! -இந்நேரம் வரும்வழியில் எவரேனும் வாய்கிளறி விட்டாரோ வம்பெதற்கோ அரசாங்கப் பேச்சைத்தான் தொட்டாரோ? தரும்சுவையில் மேலான தமிழென்றால் உயிராச்சே! தாய்மொழியின் நிலையத்தான் உரையாடி நின்றாரோ? -இந்நேரம் 33 எந்தவிதம் மறந்தார்? - எடுப்பு எந்தவிதம் மறந்தாரோ - என்னை நொந்து மெலிந்திடவே பிரிந்தாரே -எந்த தொடுப்பு வந்திடுவேன் மழைக் காலத்திலே என்றார் வாராமலே இன்னும் வாட்டியே கொன்றார் -எந்த முடிப்பு வாட்டமுகங் கண்டால் நெஞ்சம் நெகிழ்ந்திடக்கெஞ்சுவார் வம்புகள் செய்துபின் வாரியணைத்தெனைக் கொஞ்சுவார் சேட்டைமொழிபேசி முத்தங் கொடுத்தெனைக் கூடுவார் செப்பமான தமிழ்ப்பாடல் மகிழ்ந்திடப் பாடுவார் -எந்த 34 ஏனிந்த வம்பு? - எடுப்பு என்ன குற்றம் செய்தேன்? - நிலவே! ஏனிந்த வம்பு? இனியிலை தெம்பு! - என்ன தொடுப்பு அன்னவர் இல்லைஎன்ற ஆணவமோ? காதல் மன்னவர் இங்குவரின் காணுவையோ? - என்ன முடிப்பு நள்ளிராப் போதில் நஞ்சினை உமிழ்ந்தாய் நலிவே தந்தாய் மெலிவால் நொந்தேன் பள்ளியில் புழுவெனப் பதைத்திடச் செய்தாய் பாழ்மதி யேஎனை வீழ்ந்திடச் செய்தாய்! -என்ன மேகத்தில் நுழைந்தாய் மீண்டுமேன் எழுந்தாய்? மென்றுதின் னாமலே மேகமேன் உமிழ்ந்ததோ? சாகத்தான் செய்வையோ? தீயைத்தான் பெய்வையோ சஞ்சலப் படுகிறேன் பஞ்செனக் கெடுகிறேன் -என்ன 35 வருவாரோ? வாராரோ? - எடுப்பு வருவாரோ வாராரோ மணவாளன் தைநாளில் -வருவாரோ தொடுப்பு உறவாடி ஒருகன்னம் சிவப்பேறச் செய்தார் ஒசிந்தோடி நாணினேன் மறுகன்னம் புதைத்தார் -வருவாரோ முடிப்பு பொருள்சேரும் தமிழ்ப்பாடல் பாடுவேன் புதிதான முறையாலே ஆடுவேன் மருள்மாலை வருவார் நான் ஊடுவேன் மகிழ்வாக்கித் தருவார்பின் கூடுவேன் -வருவாரோ சொன்னசொல் அத்தனையும் மறப்பாரோ சுடுநிலவில் துயருண்டு கிடப்பேனோ என்னினைவு இல்லாமல் இருப்பாரோ எத்தனைநாள் இத்துயரம் பொறுப்பேனோ -வருவாரோ 36 ஆவி கலந்த அழகி - எடுப்பு அவளோர் அழகி - என் ஆவி கலந்தனள் பலநாள் பழகி -அவள் தொடுப்பு குவளை அவள்கண் குளிர்தேன் பார்வை குடிக்கத் தவிக்கும் விழிக்குள் நிறைந்திடும் -அவள் முடிப்பு குழலோ குரல்வாய் இசையால் பணியும் குயிலோ பயில மெதுவா அணையும் முழுவான் நிலவோ முகமோ தெரியேன் முகிலோ குழலோ எனுமா றறியேன் -அவள் பிழியா நறவோ குறையா மதியோ பிணையோ யாழில் பிறவா இசையோ எழுதாக் கிழியோ பொளியாச் சிலையோ எதுதான் இணையோ நிகர்தான் இலையோ -அவள் 37 நடந்தது என்ன? - செவிலி : அன்னம் தளர்ந்திட முன்னம் நடந்தவள் ஆடி நடந்தனள் கண்ணம்மா - இதில் என்ன நடந்தது பொன்னம்மா - கதை எங்கு நிகழ்ந்தது சொல்லம்மா தோழி : கொண்டை முடித்திரு தண்டை ஒலித்தெழில் கொஞ்ச நடந்தனள் சோலையே - காதல் கொண்டு தொடர்ந்தொரு காளையே - இந்தக் கோலம் விளைத்தனன் மாலையே செவிலி : கன்னம் சிவந்தது கண்ணும் சிவந்தது கன்னி தளர்ந்தனள் கண்ணம்மா - எது முன்னஞ் சிவந்தது செல்லம்மா - கதை முற்றும் விளங்கிடச் சொல்லம்மா தோழி : கட்டி யணைத்தவன் முத்தங் கொடுத்திடக் கன்னஞ் சிவந்தது முன்னமே - இடை தொட்டுப் பயின்றவன் சின்னமே - விழி செக்கச் சிவந்தனள் அன்னமே செவிலி : சூதறி யாதவள் வாதறி யாதவள் சொக்கி நடந்தனள் மங்கையே - இதில் யாது நடந்தது தங்கையே - முகம் ஏக்கம் படர்ந்ததேன் நங்கையே தோழி : காதல் மலர்ந்தது நாணம் பிறந்தது கண்டு தெளிந்தனள் யாவுமே - துயர் மாது முகந்தனில் மேவுமே - அவன் மாலை அணிந்தபின் போகுமே 38 ஆடினாள் - எடுப்பு ஆடினாள் நடம் ஆடினாள் அங்கும் இங்கும் எங்கும் ஓடி - ஆடினாள் முடிப்பு சடையோடு மலராடச் சதிராடும் அவளோடு நடைபோட முடியாமல் மடவன்னந் தடுமாற - ஆடினாள் முழவாளர் விரலாட முன்கையில் வளையாட இழைபோல்என் உயிராட மழைகாணும் மயில்போல - ஆடினாள் அடதாளம் பிழையாமல் அழகாகக் காலாட உடனாடு கிண்கிணியும் மேகலையும் ஊடாட - ஆடினாள் வடந்தாங்கும் குடமாடக் குடந்தாங்கும் இடைஆடத் நடந்தோளில் குழையாடத் தணியாதென் மனமாட - ஆடினாள் விரலாலே மலர்காட்டி விழியாலே எனைவாட்டிக் குரலாலே குழலோட்டிக் குவிமுல்லை நகைகாட்டி - ஆடினாள் 39 ஆட வாராய்! - எடுப்பு ஆடவாராய் என்னோ டாடவாராய் ஆடுமெழில் மாதரசே! - ஆடவாராய் தொடுப்பு பாடும்முறை நானறிந்து பாடிடுவேன் பெண்மயிலே பைந்தமிழே! என்னுயிரே! பாடியபின் தாமதமேன் -ஆடவாராய் முடிப்பு கட்டுதுகிற் கச்சின்மிசை முத்துவடம் ஆடக் கைத்தலங்கள் மொய்த்தவிரல் கற்றமுறை நாடப் பட்டுடுத்தும் சிற்றிடையில் மேகலைகள் பாடப் பற்றுகழற் கெச்சையொடு தெக்கணத்துக் கூத்து -ஆடவாராய் அஞ்சனமைக் கண்ணிரண்டும் கஞ்சமலர் விஞ்ச அம்பொனடிச் செஞ்சிலம்பு தஞ்சமெனக் கெஞ்ச மஞ்சள்ஒளி தங்குமெழில் கொஞ்சுமுக வஞ்சி வந்தெனது நொந்துழலும் வேதனைதீர் நெஞ்சில் -ஆடவாராய் மெல்லியலே உள்ளமதை நல்விழிகள் சொல்ல மெய்யுருகி என்மனமும் நின்மனமும் புல்லச் சொல்லுதொறும் தாள்விரல்கள் தாளவழி செல்லத் துள்ளிவரும் மான்பிணைபோல் சூழ்ந்துவரும் வல்லி! -ஆடவாராய் 40 விளையும் பயிர் - தலைவன்: கொடிதூவும் மலர்யாவும் அணை யாகுமோ - தென்றல் குளிர்பூசி மணம்வீசித் துணை யாகுமோ - நமக்குப் புணை யாகுமோ தலைவி: மயிலாடக் குயில்பாடும் வனம் யாவுமே - காதல் மகிழ்வோடு விளையாடும் இட மாகுமே - நமக்குப் பட காகுமே தலைவன்: நிலமீதில் உயர்வானின் நலஞ் சேருமோ - காதற் கலையாவும் நிலையாகி நன வாகுமோ - அன்றிக் கன வாகுமோ தலைவி: நனவாகும் நலமாகும் நம தாவலே - காதல் நினைவாலே உறவாடுங் குயில் பாடுமே - இந்த மயில் ஆடுமே இருவரும்: உளம்யாவும் உயிர்யாவும் ஒன் றாகுமே - காதற் களமேவும் நமதின்பம் உயி ராகுமே - விளையும் பயி ராகுமே 41 கூடித் திரிவோம் - நெற்றிப் பிறை தனிலே - புரளும் நீள்சுருள் கூந்தலடி முற்றத் துறந் தவரைக் - காதல் மோகத்தில் ஆழ்த்துமடி பேச்சுக் குறும் பதனால் - என்னைப் பேதுறச் செய்துவிட்டாய் வீச்சு விழி களினால் - எனக்கு வேதனை தந்து விட்டாய் கச்சுக் குடங் களினால் - எனக்குக் கள்வெறி மூண்டதடி நச்சுப் படம் விரித்தாய் - நெஞ்சம் நைந்திட நீசிரித்தாய் சின்னக் குறு நகைதான் - உன்றன் செவ்விதழ் ஓரத்திலே மின்னப் பொழிந் திடுவாய் - என்னுயிர் மீண்டும் தளிர்த்திடவே வெண்கலத் தண் குரலோ - உனக்கு வீணை நரம்பொலியோ பண்கலந் தே இசைத்தால் - இன்பப் பாற்கடல் மூழ்கிடுவேன் பாடிக் களித் திடுவோம் - இன்பப் பாலிற் குளித்திடுவோம் கூடித் திரிந் திடுவோம் - வானக் கோல வெளிதனிலே 42 வீணை மீட்டுவோம் - தலைவன் : வானத்திலே கோட்டைகட்டித், தோட்டம் படைத்தேன் - அங்கே வாசமலர் பூத்திருக்க வாழ்வு கொடுத்தேன் தேன்குடிக்கும் நாளைஎண்ணிச் சிந்தை மகிழ்ந்தேன் - அந்தத் தெய்வமலர் வாடியதால் தேய்ந்து சிதைந்தேன் தலைவி: காய்ந்தமலர் வீழ்ந்துவிட்டால் காலம் மாறுமே - அந்தக் காலத்திலே வேறுமலர் பூத்துக் காணுமே பூத்தமலர் வாழ்வுதனில் புதுமை காட்டுமே - அந்தப் புதுமைஎலாம் நாளுமின்பப் போதை யூட்டுமே தலைவன்: வாடுமென்றன் வாழ்விலின்பம் வந்து கூடுமோ? - காதல் வாஞ்சையினால் மீண்டும்மன வண்டு பாடுமோ? தலைவி : நாடிவரும் வீணையிலே நாதம் இல்லையா? - அந்த நாதந்தரும் பாடலிலே நாட்ட மில்லையா? இருவரும்: வீணையினை நாமெடுத்தே மீட்டி வருவோம் - காதல் விந்தைஎலாம் கண்டுலகில் மேன்மை பெறுவோம் 43 ஆற்றங்கரைக் காதலி - ஆற்றங் கரையினிலே - ஒரு நாள் ஆடி அமர்ந்திருந்தேன் நாற்ற மலர்வீச - நடந்து நங்கை ஒருத்திவந்தாள் கூற்று நிகர்கண்ணால் - என்னையே கொல்வது போல்நடந்தாள் காற்றெனப் பின்தொடர்ந்தேன் - மெல்லிய கைம்மலர் பற்றிவிட்டேன் சட்டென நின்றுவிட்டாள் - மார்பில் சாய்த்துக்கொண் டங்குநின்றேன் விட்டு விடும்என்றாள் - உயிரை விட்டிட நான்விரும்பேன் கட்டிய பெண்போல - என்பால் காதல் மொழிசொன்னீர் மட்டிலா அன்புகொண்டால் - மனத்தை மாற்ற லரிதென்றாள் மந்திர மில்லாமல் - ஓதும் மறையவர் இல்லாமல் சந்தன மில்லாமல் - தாலிச் சரடுமே இல்லாமல் அந்தஇடம் மணந்தோம் - சான்றும் அகமன்றி வேறில்லை தொந்திர வில்லாமல் - நாங்கள் துணைவர்களாகி விட்டோம் பஞ்சணை தூங்கிடுவேன் - தமிழால் பாடி எழுப்பிடுவாள் கொஞ்சு மொழிபேசி - வெந்நீர் குளித்திட வாருமென்பாள் நெஞ்சினில் அன்பொழுக - அப்பம் நெய்யொழுகத் தருவாள் வஞ்சி விடைதருவாய் - என்றால் வாள்விழி காட்டிடுவாள் சென்றிடு வேன்அலுவல் - மனையில் செய்வன செய்திடுவேன் ஒன்றும் மணியோசை - கேட்டால் ஓடிடு வேன்அவள்பால் முன்றினில் நின்றிருப்பாள் - வாயின் முத்துக்கள் காட்டிடுவாள் கன்றிடத் தந்திடுவாள் - முத்தம் கணக்கில் அடங்காவே உடைகளை மாற்றிவிட்டுக் - காற்றில் உலவிடச் சென்றிடுவோம் கடைகளும் சென்றிடுவோம் - நல்ல கட்டுப்பூ வாங்கிடுவாள் நடைஎழில் காட்டிஅவள் - அரும்பு நகைத்திடப் பால்கொணர்வாள் தடையொன்றும் இல்லாமல் - இன்பம் தந்திடு வாளவளே 44 ஆடுவோம் பாடுவோம் - கொஞ்சு மொழிபேசும் மங்கையரே இங்குக் கூடி மகிழ்ந்துநாம் ஆடிடுவோம் - இனிப் பஞ்சமெ லாமொழிந் தின்பமே பொங்கிடப் பாற்பொங்கல் பற்றியே பாடிடுவோம் சர்க்கரைப் பொங்கலும் வெண்ணிறப் பொங்கலும் சாற்றுக் கரும்புடன் சேர்த்துவைத்து - வாழை நற்கனி பற்பல உண்டு மகிழ்ந்திட நாம்படைப் போமடி காதலர்க்கு பாளை விரித்திடும் தென்னைம ரக்காவின் பக்கத்திலே மக்கள் கூட்டத்திலே - நாளை காளை தழுவிடும் காதலர் வீரத்தைக் கண்டு மகிழ்ந்துநாம் பாடிடுவோம் அண்ணன்மார் தம்பிமார் ஐயாவும் சேர்ந்துண்ண ஆக்கிப் படைக்கின்றோம் அன்புப்பொங்கல் - உண்டு பண்ணிசைப் பாரவர் பாட்டினுக் கேற்பவே பாவைய ரேமகிழ்ந் தாடிடுவோம் வீட்டுக்குள் ளேதிரு நாட்டுக்குள் ளேபகை ஓட்டிடுவோம் அன்பு காட்டிடுவோம் - இதைக் கேட்டு மகிழ்ந்திட வந்தது தைப்பொங்கல் கேடுகள் நீங்கிடப் பாடிடுவோம் வாழ்க தமிழினம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வான்மழையே - எங்கும் வாழ்க மகிழ்வன்பு வாழிய நானிலம் வாழ்த்துவம் வாழ்த்துவம் மங்கையரே! 45 பேசும் தெய்வம் - சின்னஞ் சிறியதோர் வாய்திறந்து - மழலை சிந்துகையில்மன நோய்பறந்து பன்னரும் பேரின்பம் ஆகுதடா - சித்தர் பகர்ந்த வெலாமெங்கோ போகுதடா வாரி யணைத்ததைக் கொஞ்சுகையில் - முத்த மாரி வழங்கிடக் கெஞ்சுகையில் மீறி உதைத்திடு காலிரண்டும் - பத்தி மேவி வணங்கிடும் தாளிரண்டாம் வாகண்ணே என்றுகை நீட்டுகையில் - பொக்கை வாய்திறந் தன்பு சிரிக்குதடா சோகம் முதற்பகை மாய்ந்திடவே - அது சுட்டுப் பொசுக்கும்புன் மூரலடா நீராட்டிப் பொட்டிட்டு மேனியிலே - நல்ல நீலப்பட் டாடையைச் சூட்டிச்சிறு தேரோட்டம் ஓட்டிநான் காட்டுகையில் - அது தெய்வத் திருநாளாய்த் தோன்றுதடா மோனத் துயில்கொள்ளும் போதினிலே - இமை மூடிக் கிடக்குங்கண் மீதினிலே ஞானச் சுடரொளி வீசுதடா - தெய்வம் நண்ணிவந் தென்னெஞ்சிற் பேசுதடா கொண்டாடு வாரிடம் கூடிநிற்கும் - அன்பு கூர்ந்தவர் பாற்குடம் நாடிநிற்கும் சண்டாளர் நல்லவர் என்றறியா - நெஞ்சம் சார்ந்திடும் பிள்ளைஎன் தெய்வமடா 46 செற்றம் தவிர்ந்தேன் - அடஞ்செய்தாய் நீஎன் றடித்தேன் - பின்னர் அழுகின்ற கண்கண்டு நெஞ்சந் துடித்தேன் குடங்கையில் கன்னத்தைச் சேர்த்துத் - துயில்வாய் குறுநெற்றி எழில்காட்டும் மேலாக வேர்த்து கண்ணீர் வழிந்துலரும் கன்னம் - நெஞ்சைக் கலக்குவதை யறியாய்நீ கண்ணயர்ந்த பின்னும்; தண்ணீர் நிறைந்தகுளத் தோரம் - நின்று தாவிக் குதித்துவிளை யாடினையிந் நேரம் துள்ளித் திரிந்துவிளை யாடி - கெட்ட துட்டத் தனம்புரியும் சிறுவரொடு கூடிப் பள்ளிக்குப் போகாமல் நின்றாய் - கண்ட பலகாரப் பொருளைநீ வாங்கியே தின்றாய் பாடம் படிக்கின்ற வேளை - விட்டாற் பயனுண்டோ ஆசானுக் கென்சொல்வாய் நாளை? ஓடும் படிக்கான செல்வம் - அன்றாம் ஓதித் தெளிந்துணரும் நிலையான கல்வி சட்டையை அழுக்காக்கி விட்டாய் - நோய்க்குச் சாருமிடம் நீதந்து மேனிநலம் கெட்டாய் பட்டம்விட் டாடுகிறபோது - செய்தாய் பக்கத்து வீட்டுக் குழந்தையொடு வாது சினந்தேன்நீ உண்ணுகிற போது - சோற்றைச் சிதறினாய் வீடெங்கும் என்றறிந்த போது மனம்போன போக்கிலுனை வைதேன் - பிள்ளை மனநிலையை அறியாதிக் குற்றங்கள் செய்தேன் குற்றம் பொறுப்பாய் என் கண்ணே - எனநான் கூறுவதை அறியாய்நீ புரியாய்என் கண்ணே செற்றம் தவிர்ந்தேன்என் கண்ணே - நாளை செல்வமே உன்னோடு விளையாடு வேனே 47 வெண்ணிலவே கண்வளராய்! - கடைந்தெடுத்த பொற்சிலையே கண்காணும் தேவே நடந்துவரும் வெண்ணிலவே நாண்மலரே கண்வளராய் வீட்டுப் பெரியோர் விளைத்துவரும் என்துயரை ஓட்டப் பிறந்தவனே உத்தமனே கண்வளராய் புலர்காலை வீசுகின்ற பூங்காற்றே நின்றன் மலர்விழிகள் நீர்சிந்த மனம்பொறுக்க வல்லேனோ பசியால் அழுதாயோ பாலகனே கண்கள் கசியாதே அன்போடு கலந்துபால் நான்தருவேன் நிலத்தில் எழுஞ்சுடரே நித்திலமே என்கலியை விலக்கப் பிறந்தவனே வீட்டிற் கணிகலமே உழைப்பார் நிலையுணர்ந்தோ ஒண்டவந்தோர் இங்கே களைப்பாறித் தீங்கிழைக்கும் கயமைக் குணங்கண்டோ தமிழ்வளர ஏதும் தடங்கல் வருமென்றோ இமைமூட மனமின்றி இருக்கின்றாய் என்கண்ணே மடங்கல் உரங்காட்டும் மாமல்லர் காத்திடுவார் தடங்கல் வாராது தம்பிநீ கண்வளராய் பழிப்புரைகள் வந்தணையப் பார்த்திருக்க மாட்டார்கள் விழித்துவிட்டார் உன்னாட்டார் வீணாக அஞ்சாதே பன்மொழிகள் கற்றுணர்ந்த பண்புடையார் வாழ்வதனால் புன்மையிங்கு நேராது பூஞ்சிட்டே கண்வளராய் நம்நாட்டைச் சீரழிக்கும் நாலுவகைச் சாதிகளை வெந்காட்டச் செய்த விறலோனே கண்வளராய் ஆளும் மொழிஒன்றே அதுவும் தமிழென்றே நாளும் சொலும்என்றன் நாயகன்றன் மார்பகமும் பாட்டன் தடந்தோளும் பாய்ந்து விளையாடி வேட்டைக் களமாக்கும் வீரனே கண்வளராய் நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சப் போக்குக்குச் சாட்டை அடிகொடுக்கச் சார்ந்தவனே கண்வளராய் செஞ்சொற் சிலம்பிருக்கச் செம்மைக் குறளிருக்க அஞ்சற் கிடமில்லை ஐயன்மார் தேடிவைத்த சங்கத்துச் செல்வங்கள் சாந்துணையும் போதுமடா வங்கத்துச் சென்றோடி வாணிகம் செய்வதுபோல் பாரெல்லாம் சென்று பரப்பிடுவாய் நின்மொழியை ஊரெல்லாம் ஓடி ஒலிஎழுப்ப வேண்டுமடா ஆண்ட இனத்தாரை ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டு மெனக்கருதும் விழைவுடனே நீவாழ்வாய் அறம்நாட்ட வந்தவனே ஆணவம்சேர் மாற்றார்க்கு மறம்காட்ட வந்தவனே மாமணியே கண்வளராய் 48 பிள்ளைக் குறும்பு - எடுப்பு சொன்னாலும் புரியாத பருவம் - என்றன் துயரத்தைச் சற்றேனும் உணராத சிறுவன் -சொன்னாலும் முடிப்பு காலைச் சுடர்தோன்றும் முன்னே - தூக்கம் கலையாமல் கண்விழித் தழுவானென் கண்ணே பாலைக் கொடுத்தான பின்னே - அந்தப் பாலன் குறும்புக்கோர் அளவுண்டோ பெண்ணே -சொன்னாலும் வாயிலில் மாக்கோலம் போட்டுப் - பின்னர் வந்தங்கு நோக்குவேன் அவன்கூச்சல் கேட்டுக் கோயிலில் பிள்ளையார் போலே - அந்தக் கோலப் பொடிக்குள்ளே மூழ்கித் தவிப்பான் -சொன்னாலும் சோறாக்க விடுவானோ பிள்ளை - அப்பப்ப சொல்லமுடி யாதபடி தருவானே தொல்லை கூறாக்கி வைப்பானே யாவும் - சமையற் கூடமவன் பயில்கின்ற போர்க்கூட மாகும் -சொன்னாலும் தண்ணீர்க் குடங்களையும் பார்ப்பான் - மூடும் தட்டங்கள் விட்டெறிந்து தாளங்கள் சேர்ப்பான் கண்ணீரைக் கொட்டி அவன் தீர்ப்பான் - தட்டுக் காலிலே பட்டுத் தெறித்தவுடன் ஆர்ப்பான் -சொன்னாலும் தாலாட்டித் தொட்டிலிலே போட்டால் - மெல்லத் தலைதூக்கிச் சிரிப்பானே என்பாட்டைக் கேட்டால் வாலாட்டித் திரிகின்ற சேட்டை - சொன்னாலும் வயிறெரியுங் கேளடிநான் படுகின்ற பாட்டை -சொன்னாலும் என்றேனும் நூலொன் றெடுப்பேன் - கண்டால் என்னைப் பிடித்துத் துவைத்துக் கடிப்பான் அன்றேஅந் நூலுக்கும் ஆயுள் - தீரும் ஆனாலும் என்னைத்தான் அவர்நெஞ்சங் காயும் -சொன்னாலும் கதவைத் திறந்தாலே போதும் - கண்டு கடிதோடி முன்வாயில் தெருவிலே வீழும் பதறி நான் ஓடிவரும் முன்னே - அந்தப் பவழச்செவ் வாய்நிறையும் பெருவாரி மண்ணே -சொன்னாலும் பஞ்சணையில் துயில்கொள்ளும் போது - சின்ன பாலகனின் பால்வழியும் கண்ணிமையின் மீது கொஞ்சிவிளை யாடுமெழில் காண்பேன் - செய்த குறும்பெல்லாங் காணாத தாயுள்ளம் பூண்டேன் -சொன்னாலும் 49 நிலையாய் இரு - எடுப்பு கொள்கையில் நிலையாயிரு மனிதா - கொண்ட கொள்கையில் நிலையாயிரு மனிதா - எந்தக் கொடுமைகள் வந்தாலும் கலையாதிரு மனிதா -கொள்கை தொடுப்பு கொள்ளைநிதி பலவாக உனைநாடிக் குவிந்தாலும் கொடுவறுமை மிகவாகித் துயராலே அவிந்தாலும் -கொள்கை முடிப்பு சரியா இது தவறா என அறிவால்மிக நினைவாய் தகுமேஇது எனஓர்நெறி விழைவாய் அதில் புகுவாய் உரமேபெறு பயமேதொலை இறவாதவர் இலையே ஒருசாண்வயி றுணவேபெற நிலைமாறுதல் புலையே -கொள்கை 50 புண்படுமா? - மாணவச் செல்வங்களே - நும்பால் மாசுகள் நேர்கையிலே நாணிடப் பேசிடுவான் - உங்கள் நன்மையை நாடிடுவான் குற்றம் புரிந்துவிடின் - உங்கள் கொள்கை திரிந்துவிடின் சற்றும் தயங்கலிலான் - வன்சொல் சாற்றிட முன்வருவான் புண்படும் உங்கள் மனம் - என்று பூட்டிய வாயினனாய்க் கண்படை கொள்ளுவனேல் - ஆசான் கல்வியைக் காப்பவனோ? நோயினைத் தீர்ப்பதற்கே - கற்ற நூலின் மருத்துவன்பால் போயுடல் காட்டிடுங்கால் - அப்பிணி போக்குதற் கீவதென்ன? வெல்லமும் சர்க்கரையும் - தந்தால் வேதனை தீர்ந்திடுமோ? சொல்லவுங் கைக்குதம்மா - அந்தச் சூரண மாத்திரைகள்! கையினிற் சீழிருந்தால் - நல்ல கத்தியி னாலறுப்பான் மெய்யினில் புண்படுமே - என்றால் மேனி நலம்பெறுமோ? சாதிச் சழக்குகளும்-பொய்மைச் சாத்திரக் குப்பைகளும் மோதிப் பகைக்குணத்தால் - சண்டை மூண்டு மலிந்ததுவே மூட மதிச்செயலால் - மாந்தர் மொய்ம்பு சிதைந்தனரே! நாடு நலிந்ததுவே - மன்பதை நாற்றம் மிகுந்ததுவே! இச்சமு தாயமதை - மாற்றி ஏற்றங் கொடுப்பதென்றால் எச்செயல் ஏற்றதுவோ - நன்றே எண்ணித் துணிந்திடுவீர்! உற்ற புரட்சியினால் - அன்றி ஓர்நலம் கூடிடுமோ? மற்றவர் புண்படுவார் - என்றால் மன்பதை சீர்பெறுமோ? 51 படமும் பாடமும் - எடுப்பு பாடத்தை மறந்துவிட்டான் - தலைவன் படத்தைமட்டும் எங்கும் திறந்துவைத்தான் -பாடத்தை தொடுப்பு வேடத்தை நல்லதென் றேற்றுக் கொண்டான் வெற்றொலி எங்கணும் சாற்றிக் கொண்டான் -பாடத்தை முடிப்பு சந்தையில் கூடுதல் போலவே கூடுவான் சந்தடி யின்றியே போரெனில் ஓடுவான் மந்தையில் கூடல்போல் மாந்தனும் கூடினால் மாண்புகள் நாட்டினில் கிட்டுமோ தேடினால்? -பாடத்தை கூடையில் பூக்களைப் பார்ப்பது போதுமா? கொண்டையில் வைத்தெழில் சேர்ப்பது பாவமா? மேடையில் கொள்கையை வைப்பது போதுமா? மேவிடும் வாழ்க்கையில் விட்டிடல் ஆகுமா? -பாடத்தை 52 பாரதியின் குரல் - வீதிகள் எங்கணும் என்புகழே - பாடி வெற்றி முழக்கிடும் மானிடரே சாதிகள் இன்னும் தொலைத்தீரோ - பொய்மைச் சாத்திரம் ஏதும் விடுத்தீரோ? ஆடியும் பாடியும் கூத்தடிப்பீர் - என்றன் ஆர்வமெ லாம்எங்கோ போட்டழித்தீர் பாடிய என்னுடைப் பாக்களிலே - அந்தோ பற்பல ஊனங்கள் ஆக்கிவிட்டீர்! தன்னலம் ஒன்றையே மேம்படுத்த - என்பால் சாகசக் காதலைக் காட்டுகிறீர் என்னுளம் யாதென எண்ணுகிலீர் - உமக் கேற்பவே என்னைச் சுழற்றுகிறீர்! தெய்வங்கள் பற்பல வேண்டுகிறீர் - பகைத் தீயை வளர்த்திங்கு மாளுகின்றீர் உய்யும் வழிசொன்ன என்மொழியைப் - புதைத் தோங்கிய மண்டபங் கட்டிவிட்டீர்! கோவிலில் மாணவர் கல்விபெறப் - பள்ளிக் கூடங்கள் ஆக்கிட முன்வருவோர் ஆவலைக் கொன்று விழுங்குதற்கே - சட்டம் ஆக்கிட முன்னிருந் தார்ப்பரிப்பீர்! தீண்டாமை என்றொரு சாக்கடையை - இன்னும் தெய்வத்தின் முன்னரும் பாய்ச்சுகின்றீர் வேண்டாமென் றெத்துணைப் பாடல்சொன்னேன் - எலாம் வீணாக்கி என்பெயர் பாடுகின்றீர்! ஐயையோ என்னுயிர்ப் பாடல்பல - இன்னும் ஆரு மறியாமல் பூட்டிவைத்தீர் வையைக் கரைதனில் ஓரறையில் - அவை வாழ்விழந் திங்ஙனம் மாய்வதுவோ? செந்தமிழ் இன்பம் சிறந்ததென்றேன் - சுவைத் தேனினும் மேலதாச் செப்பிவைத்தேன் நொந்திட என்னுளம் செய்துவிட்டீர் - என்றன் நோக்கம் அனைத்தும்வீண் ஆக்கிவிட்டீர்! ஒண்டவந் தார்விடுத் தோடியபின் - நாட்டில் ஒப்பில் சமுதாயம் ஆக்கிடவே கண்ட கனவெலாம் பாழ்படுத்தி - நெஞ்சும் கண்ணுங் கலங்கிடச் செய்துவிட்டீர்! இன்னுமித் தீநெறி நாடுவதை - நீக்கி ஏற்றம்பெற் றோங்க உழைத்திடுவீர் சொன்னதைச் செய்கையில் காட்டிடுவீர் - என்னைத் தூயநல் லன்புடன் நாடிடுவீர்! 53 ஏழையைக் கண்டிலேன்! - கல்லைக் கனிய வைத்தான் - அங்கே கற்பனை தேக்கி வைத்தான் சொல்லத் துடிதுடித்தே - கவிதை துள்ளிக் குதித்ததடா! உண்ணவும் நேர மிலான் - சற்றே ஓய்வும் ஒழிவு மிலான் எண்ண மெலாங் குவிய - நெஞ்சில் ஏக்கம் நிறைந்ததடா! ஐந்து விர லிடையே - சிற்றுளி ஆடித் திரிந்ததடா! அந்த நடந் தனிலே - அவன்விழி ஆழ்ந்து பதிந்ததடா! எண்ணமும் சிற்றுளியும் - பெற்ற ஏந்திழைப் பெண்ணொருத்தி வண்ண முகங் காட்டிச் - சிற்ப வாழ்வினைக் கொண்டுநின்றாள் மங்கையைப் போற் றிடவே - பளிங்கு மாளிகை கட்டி வைத்தார் எங்கும் அவள் புகழே - கண்டேன் எத்தனை விந்தையடா! மங்கைக்கு வாழ்வளித்த - சிற்பி மாய்ந்து மறைந்துவிட்டான் எங்கெங்குத் தேடினுமே - அந்த ஏழையைக் கண்டிலனே! 54 விடுதலை வேண்டும் - வேண்டும் விடு தலையே - எனக்கு வேண்டும் விடுதலையே யாண்டும் பறந் திடுவேன் - வானில் யாவையும் கண்டிடுவேன் வண்ணப் பசுங் கிளியைச் - சிறையில் வாட்டி வதக்குவதோ சின்னஞ் சிறியவரும் - என்றன் சிந்தையைத் தேக்குவதோ என்னினம் வாழ்ந்திடவும் - செந்தமிழ் ஏற்றம் மிகுந்திடவும் மன்னுயிர்த் தா யகமே - உலகில் மாட்சிமை பெற்றிடவும் பாடுவ தென் தொழிலாம் - இதற்குப் பற்பல ஊறுகளோ! நாடு மொழி இனமே - உயர நாடுவ தோர்குறையோ? வீணரின் கூச் சலினால் - உரிமை வேட்கை தணிந்திடுமோ? கோணல் நரிக் குணத்தால் - பாயும் கோளரி அஞ்சிடுமோ? கட்டுக் கடங் கிடுமோ - புன்மைக் காசுக் கடங்கிடுமோ விட்டுக் கொடுத் திடுமோ - என்றன் வீர சுதந்திரமே பட்டம் பத விகளில் - வாழ்வில் பற்றெனக் கில்லையடி சிட்டென நான் திரிவேன் - எனக்குத் தீமைகள் இல்லையடி 55 என்ன உலகமடா? - தேமலர்ச் சோலைதனில் - ஒருநாள் சென்று புகுந்திருந்தேன் மாமரக் கூட்டமங்கே - பூத்து மாமணம் வீசியதே தென்றல் உலாவரலால் - இனிமை தேடி வரவுங்கண்டேன் ஒன்றிய நல்லமைதி - நெஞ்சில் ஓங்கிட நின்றிருந்தேன் எங்கிருந் தோஇனிய - குரலொன் றென்னைக் கவர்ந்ததுவே அங்கிருந் தேகினன்நான் - குரல்வரும் அந்தத் திசைவழியே கன்னங் கரியஉடல் - எழிலைக் காட்டும் சிவந்தகண்கள் மின்னும் அழகினையே - கண்டு மெய்மறந் தங்குநின்றேன் கன்னங் கருநிறந்தான் - எனினும் காதலிற் சிக்கிவிட்டேன் இன்னும்நீ பாடிடுவாய் - என்னை இன்பத்தில் ஆழ்த்திடுவாய் என்னலும் அவ்விசைதான் - மீண்டும் எங்கும் நிறைந்ததுவே கன்னலின் சாற்றினிமை - உவமை காட்டுந் தரமிலதே யாழில் எழுமிசையோ - குழலோ யாதெனக் கூறிடுவேன்? பாழுல கைமறந்தேன் - அந்தப் பைம்பொழில் இன்னிசையால் அவ்விசை கேட்டொருவன் - அடடா! அக்குயில் வாழ்கவென்றான் செவ்விய ஓர்கவண்கல் - மோதிடச் சென்று பறந்ததுவே சென்று பறந்ததடா - அடவோ! br¤J koªâUªjhš bk‹W òá¥gj‰nf - m¡FÆš bk¤j¢ Rit¡Fklh! என்னச் சலித்துரைத்தான் - கவண்கல் எய்த சிறுகயவன் என்ன உலகமடா! - நன்மை எப்படி வாழுமடா! 56 சொல்லும் செயலும் - எடுப்பு சாதி தொலைந்திடச் சொலுந்தோழா - உன்பால் சாற்றிடு வேனொரு மொழிகேளாய் -சாதி தொடுப்பு வீதியில் எங்கணும் பேசி முழக்கினை வீட்டினுள் வந்ததும் பூசி வளர்த்தனை -சாதி முடிப்பு பேருக்கும் புகழுக்கும் பேசத் துடித்தாய் பேதங்கள் கண்டுள்ளம் கூசி நடித்தாய் ஊருக்கு மாத்திரம் கூறி முடித்தாய் உள்ளத்தில் இல்லத்தில் எங்கே விடுத்தாய்? -சாதி சாதியின் பேராலே வீதிகள் வைத்தாய் சங்கங்கள் ஒவ்வொரு சாதிக்கும் வைத்தாய் ஓதிடும் பள்ளியில் ஒட்டியே வைத்தாய் உண்மையில் தேர்தலில் ஓங்கிட வைத்தாய் -சாதி 57 இன்பத்தின் நிழல் - நல்லதோர் யாழினை பெற்றுவந்தேன் - அதை நானெடுத் தேஇசை மீட்டிநின்றேன் மெல்லிசை என்செவி பாய்கையிலே - அதில் மேவிய ஓர்நரம் பற்றதடா! செந்தமிழ்க் காவியம் செய்துவைத்தேன் - அதில் சிந்தனை யாவையும் பெய்து வைத்தேன் வந்தது வாழ்வென நம்பிநின்றேன் - அது மண்ணிற் புதைந்து சிதைந்ததடா! பச்சைப் பசுங்கிளி பாய்ந்துவந்தே - என்பால் பாச முடன்மொழி பேசியதே இச்சைஎலாம் அதில் வைத்திருந்தேன் - மனம் ஏங்கிடப் பூனையும் கவ்வியதே! கண்கவர் சிற்பமொன் றாக்கிவைத்தேன் - அதில் கற்பனை யாவையும் தேக்கிவைத்தேன் புண்பட என்மனம் ஆனதடா - அந்தப் பொற்சிலை பாழ்பட்டுப் போனதடா! புத்துலகம் ஒன்று நான்படைத்தேன் - அதில் பொன்னிற மாளிகை கட்டிவைத்தேன் பித்தனைப் போல்மனம் பேதுறவே - அதில் பேரிடி ஒன்று விழுந்ததடா! 58 இரண்டும் உண்டு - இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை இரண்டும் கொண்ட ஆறடா - வாழ்வு இரண்டும் கொண்ட ஆறடா இரண்டு கரையும் இல்லை என்றால் வறண்டு போகும் பாரடா - இதைத் தெரிந்து நெஞ்சம் தேறடா! வரவும் உண்டு செலவும் உண்டு வாழ்க்கை என்ற ஏட்டிலே - நம் வாழ்க்கை என்ற ஏட்டிலே பிறப்பும் இறப்பும் பிணைந்து தோன்றும் பெருமை யுண்டு நாட்டிலே - இதைப் பேசுமே குறள் பாட்டிலே! இரவும் பகலும் இரண்டும் ஒன்றாய் இணைந்த தேஒரு நாளடா - ஒன்றாய் இணைந்த தேஒரு நாளடா இரண்டும் உலகில் மாறிமாறி இயங்கும் உண்மை கேளடா - இதை எண்ணி மண்ணில் வாழடா! 59 ஏழை ஏது? - எடுப்பு ஏழை ஏது செல்வர் ஏது - நாம் இந்த உலகில் பிறக்கும்போது -ஏழை தொடுப்பு நாளை மண்ணில் சாகும் போது நாம் வகுத்த பேதம் ஏது -ஏழை முடிப்பு இடையில் வந்த வேறு பாடே இனியும் நின்றால் வளரும் கேடே உடையும் உணவும் உடைமை யாவும் உலக மாந்தர் பொதுமை யாகும் -ஏழை உயர்வும் தாழ்வும் பிறப்பில் ஏது உலகில் அதனால் விளையும் தீது துயரம் நீங்க மனிதர் யாரும் தோழரானால் இன்பம் சேரும் -ஏழை 60 அன்பாய் இரு! - எடுப்பு எத்தனைதரம் சொல்வேன் - மனமே எல்லாரிடமும் அன்பாய்இரு என்று -எத்தனை தொடுப்பு பித்தனைப் போல் கல்லாத பேயனைப்போல் - நீ பேசித்திரியாதே நேசித்திருப்பாயென்று -எத்தனை முடிப்பு வஞ்சனைகள் செய்யாதே வாழ்வினில் பொய்யாதே வாயில்வந்த படியெல்லாம் வாதுகள் செய்யாதே நஞ்சனைய தீமொழிகள் நவிலாதே பிறர்பொருளை நாடாதே நடுநிலைமை கோடாதே என்றுநான் -எத்தனை 61 வள்ளலார் வழி - எடுப்பு வள்ளல் வழி நடப்பாய் - மனமே! வாழும் முறை வகுத்த ராமலிங்க -வள்ளல் தொடுப்பு உள்ளொன்றும் புறமொன்றும் உரையாடி விளையாடும் உலகோரை நாடாதே! பகல்வேடம் போடாதே! -வள்ளல் முடிப்பு சாதியினால் மதப் போதையினால் மறைச் சாத்திரத்தால் மன ஆத்திரத்தால் இந்த மேதினிமேல் பகை கொள்ளாதே இதைத் தள்ளாதே எனநமக் கறிவுரை தந்திடும் -வள்ளல் பேராசைப் படவேண்டாம் பிறர்பொருளைத் தொடவேண்டாம் பெருநெறியை விடவேண்டாம் பொய்யுரையால் கெடவேண்டாம் மாறாத மனவுறுதி சோராதே நோய்தன்னால் மாயாதே மதியிழந்து தேயாதே எனவுரைத்த -வள்ளல் 62 நாடகம் ஆடுகிறான் - எடுப்பு பூமியில் நாடகம் ஆடுகிறான் - மனிதன் பொய்ம்மை வேடங்கள் போடுகிறான் - வேடம் போடும் பாணியில் பாடுகிறான் -பூமியில் முடிப்பு கல்வியில் வேடம் அரசியல் வேடம் கடவுளைக் காணுந் துறையினில் வேடம் நல்லவன் வல்லவன் போலே வேடம் நட்பிலும் பேச்சிலும் அனைத்திலும் வேடம் -பூமியில் கால்களைப் பிடிப்பான் கைகளைப் பிடிப்பான் காரியம் முடிந்தால் கழுத்தினைப் பிடிப்பான் வாலையும் பிடிப்பான் வாழ்விலும் நடிப்பான் வந்ததைச் சுருட்டி ஓட்டம் பிடிப்பான் -பூமியில் கண்களில் நீரும் கைகளில் கும்பிடும் காட்டி நடிப்பான் உலகமும் நம்பிடும் எண்ணும் நினைப்பினில் எத்தனை வஞ்சம் இவனை நினைத்தால் நடுங்கிடும் நெஞ்சம் -பூமியில் 63 தேடிய எழில் - எடுப்பு எழில்வாழும் இடந்தேடினேன் - நான் இரவோடு பகலாக அலைந்தோடினேன் -எழில் முடிப்பு மயில்போல நடமாடும் மடமாதர் காலிலே மயலோடும் கயல்போலும் மடவார்கண் வேலிலே -எழில் முகிலாலே முகமூடி நிலவோடும் வானிலே குகைசேரும் புலியானைக் குலம்வாழும் கானிலே -எழில் கருமேக வரைமீது கனியாடு காவிலே உருவாகி மணம்வீசி ஒளிசேரும் பூவிலே -எழில் விரிதோகை மயிலாடி விளையாடும் போதிலே அரியேறு திமிரோடு நடைபோடும் போதிலே -எழில் கவிபாடும் பணிசேரும் கவிவாணர் நாவிலே புவிவாழ உழுவார்தம் புயமேவும் ஏரிலே -எழில் அருகேஎன் உடனாகி அருள்வாழும் நெஞ்சிலே? உறவாடி எழில்வாழ்வ துணராமல் எங்குமே -எழில் 64 பாப்பா பாட்டு - அறிவை வளர்த்திடு பாப்பா - நாட்டை ஆளப் பிறந்தவள் நீயன்றோ பாப்பா அறிவைக் குறைத்திடும் தாள்கள் - வாங்கி ஆதரித் தாலிங்குத் தீமையே பாப்பா அன்புடன் ஒற்றுமை வேண்டும் - சாதி அகம்பாவத் தீமையை அகற்றிடல் வேண்டும் உண்மை நெறிதனைப் போற்று - நெஞ்ச உறுதி குறைந்திடாத் தன்மையை ஏற்று முயற்சியில் நம்பிக்கை வேண்டும் - கெட்ட மூடத் தனங்களைப் போக்கிடல் வேண்டும் அயர்ச்சியே இல்லாது பாப்பா சொந்த அருமைத் தமிழ்மொழி பயின்றிடு பாப்பா ஒழுக்கமே உயர்வுக்கோர் ஏணி - அதைநீ உணர்ந்து நடந்திட்டால் நாட்டுக்கோர் ஆணி அழுக்கின்றி உடல்உள்ளம் கொண்டால் - துன்பம் அணுகவே அணுகாது நின்னையே கண்டால் 65 ஆடு மயிலே! - எடுப்பு ஆடுமயிலே நடம் ஆடுமயிலே ஆடுங்கலைக் கழகு தேடுமயிலே முடிப்பு விண்ணகத்துக் கார்முகிலைக் கண்டு மகிழ்ந்தாய் விஞ்சுமெழில் தோகைதனை மெல்ல விரித்தாய் கண்ணிமைக்க நேரமின்றிக் கண்டு மகிழ்ந்தேன் கற்பனையைத் தூண்டிவிட்டாய் ஆடு மயிலே பண்ணமைக்கும் பாவலர்கள் பாடும் பொருளாய்ப் பயில்வல்ல ஓவியர்கள் தேடும் பொருளாய் வண்ணவகைக் கண்படைத்த தோகைமயிலே வட்டமிட்டு வட்டமிட்டே ஆடு மயிலே கெண்டைவிழி மாதர்களுன் அண்டை வருவார் கெஞ்சியுன்றன் சாயல்பெறச் சண்டை இடுவார் கொண்டைமயில் வென்றோமென்று கொண்டு திரிவார் கோதையர் செருக்கடக்கி ஆடு மயிலே கண்டவர்கள் நெஞ்சுருக ஆடி வருவாய் கற்றவர்கள் மெச்சுதமிழ் பாடி மகிழ்வாய் எண்டிசையும் எங்கள் புகழ்கூடி வரவே எக்களிப்பு மிக்குவர ஆடு மயிலே பாடும் இசைக்குருகி நெஞ்சு நெகிழ்ந்து பாதமெடுத் தாடுகையில் வஞ்ச மனத்தார் வேடர் பெருவலையை வீசி வருவார் வீழாமல் கண்விழித்தே ஆடு மயிலே நாட்டைக் கெடுக்கும்நரிக் கூட்டம் நிகர்வார் நச்சுக் குணம்படைத்த நாகம் அனையார் கேட்டுச் செயலனைத்தும் நீக்கி விடவே கெக்கலித்துச் சுற்றிநடம் ஆடு மயிலே 66 காலைக் கதிரவன் - எடுப்பு காலையில் தோன்றும் கதிரவனை - தாமரை கண்டு மலர்ந்தது பொய்கையிலே -காலை தொடுப்பு சோலைமலர்களை வண்டினம் நீவிடத் தூங்கிய மந்திகள் கிளைகளில் தாவிட -காலை முடிப்பு பள்ளிச் சிறார்கள் மனந்தெளி வடைந்து பயின்றிடும் ஒலியெழக் கன்றுபால் அருந்திடத் துள்ளித் திரிந்திட யாவரும் மகிழ்ந்திட துணையொடு தூங்குவார் மனம்மிக வருந்திட -காலை எழில்மிகு கோலம் வகைவகை வனைந்திட எங்கணும் மங்கல ஒலிகள் முழங்கிட விழிமலர் அலர்ந்திடப் புத்துணர் வோங்கிட வினைஞர்கள் உழவர்கள் தந்தொழில் செய்திட -காலை 67 மாலை நேரம் - எடுப்பு மாலை நேரந் தோன்றும் வானமே மனமகிழ் பலவகை நிறமுடன் -மாலை தொடுப்பு சோலையில் பறவைகள் கூட்டில் உறைந்திட வேலையில் ஆதவன் மெல்லவே மறைந்திட -மாலை முடிப்பு ஓதிய பிள்ளைகள் ஒன்றி விளையாட வீதியில் ஆவினம் கன்றுள்ளி ஓட மாதர்கள் நற்றமிழ் இன்னிசை பாடக் காதலர்ப் பிரிந்த கன்னியர் வாட -மாலை உள்ளங் கவர்ந்திடும் உன்எழில் கண்டேன் கள்ளங் கவடற்ற அமைதியுங் கொண்டேன் வெள்ளம்போல் உணர்வெழக் கவிதைகள் விண்டேன் மெள்ள மெள்ள இன்ப உலகினிற் சென்றேன் -மாலை 68 மாமியும் மருமகளும்! - எடுப்பு மருமகளைப் படுத்துகிற துன்பம் - சொந்த மாமிக்குத் தந்துவரும் தனியான இன்பம் -மருமக முடிப்பு சட்டியை ஏன்போட் டுடைத்தாய் - வீட்டைச் சரியாகக் கூட்டென்று சொன்னேன்மு றைத்தாய் கொட்டியா இங்கே கிடக்கு? - அப்பன் கொடுத்தானோ சீரெல்லாம்? வாயைய டக்கு கொண்டவனை வசமாக்கிக் கொண்டாய்! - நீதான் குடும்பம் நடத்துகிற பாங்கையே கண்டால் அண்டையிலே சிரிப்பார்கள் உன்னை - இவளை அடக்காமல் விட்டாயே என்பார்கள் என்னை நீவந்து கால் வைத்த நாளாச் - செல்வம் நீறாகிப் போச்சுதே வாழ்வெல்லாம் பாழாய்! நோய்வந்து வீழ்ந்தான் உன் ஆளன் - உன்னை நொடிப்போதில் உயிர்கொண்டு போகானோ காலன்! கொன்றாலும் ஆறாது நெஞ்சம் - என்னைக் கொஞ்சமும் மதிக்காமல் திரிகின்றாய் பஞ்சை என்றென்று பலவாறு பேசி - முகத்தில் இடிப்பாள் அடிப்பாள் மறைப்பாளே பூசி குனிந்தாலும் நிமிர்ந்தாலும் குற்றம் - வாயில் கொட்டாவி விட்டாலும் குற்றமே குற்றம் இனிதான ஒருவார்த்தை உண்டா? - ஐயோ இப்படியா படவேண்டும் மருமகளாய் வந்தால்? 69 அத்தர் விற்போன் - எடுப்பு அத்தர் விற்று வருவோனின் தொல்லை - அப்பப்பா அவன் கையில் அகப்பட்டார் தப்பிடுவதில்லை -அத்தர் முடிப்பு பூசுவது நம்முடலில் ஒன்று - சின்ன போத்தலில் அடைத்துக் கொடுப்பது மற்றொன்று காசுவரும் படிஒன்றே நோக்கம் - குழைந்து கனியமிகப் பேசிடுவான் கண்டபலன் ஏக்கம் -அத்தர் தடவுவான் மற்றொன்றெ டுத்தே - என்ன தடுத்தாலும் தாளிற்சு ருட்டிக் கொடுத்தே தடவுவான் நம்தலையைப் பார்த்து - வேறு தப்பவழி இல்லையென நாமிருப்போம் வேர்த்து -அத்தர் ஆரீவர் இப்பொருளைப் போலே - பூசும் ஆடைமணக் கும்அடடா ஐந்தாறு நாளே பாரீசுச் சரக்கொன்றி ருக்கு - நல்ல பம்பாய்ச் சரக்கிங்கி லாந்துச்ச ரக்கு - அத்தர் என்று பல தேயத்தைச் சொல்வான் - நம்மை எப்படியும் வாய்திறக்க ஒட்டாமல் வெல்வான் ஒன்றேனும் உண்மையோ என்று - பார்த்தால் உள்ளூர்ச் சரக்கென்று தெரியுமே நன்று -அத்தர் 70 வறுமைப் பிணி - எடுப்பு வறுமை எனும் பிணியே - கொடிதே வறுமை எனும் பிணியே -வறுமை தொடுப்பு சிறுமைகள் வந்திடச் சிந்தையும் நொந்திடத் தீமைகள் தந்திடும் தீரமும் சிந்திடும் -வறுமை முடிப்பு புல்லரைப் பெரிதாப் போற்றுவர் பொன்னால் பொருளிலை என்றால் புகழிலை இந்நாள் கல்லறைப் பிணமும் காசென்று சொன்னால் கணத்தினில் பேசிடும் காரணம் என்னோ? -வறுமை கோடையில் காய்ந்த குளம்போல் வாழ்வு குன்றிடும் அந்தோ கொடிதிந்தத் தாழ்வு மூடிடும் வீட்டில் முந்துற ஓடி முட்டவிடும் பணமே வாழ்வின் உயிர்நாடி -வறுமை 71 விளம்பர உலகம் - எடுப்பு விளம்பர உலகமடா - புகழ் விற்பனை நிலையமடா - இது -விளம்பர முடிப்பு களம்பல கண்டவர் காளையர் எனினும் கறிக்குத வாதவர் என்றுரை தூற்றும் உளந்தனில் துணிவொரு சிறுதுளி யில்லா ஒருவனை உயர்பெரு வீரனென் றேத்தும் -விளம்பர கூரிய அறிவொடு நேரியர் எனினும் கூளங்கள் போலவர் வாழ்வினைத் தேய்க்கும் சீரிய மதிசெயல் இல்லவன் ஆகினும் சீர்நலம் யாவையும் அவனிடஞ் சேர்க்கும் -விளம்பர நெஞ்சினில் தேங்கிய சிந்தனை தந்திடும் நீள்புகழ்க் காவிய மாகினும் தாழ்த்தும் பிஞ்சுளம் யாவையும் நஞ்சென மாற்றிடும் பேதையர் தந்திடும் நூலினை வாழ்த்தும் -விளம்பர எத்துயர் ஆகினும் விட்டுயிர் போகினும் ஏற்றிடும் கொள்கையர் வாழ்வினை வாட்டும் மெத்தையில் சாய்ந்தவர் மேனிமி னுக்கியர் மேடையில் வாழ்பவர்க் கின்பங்கள் ஊட்டும் -விளம்பர மல்லிகை யாகிய நன்மலர் தாமவை மாபெரும் விளம்பரம் இல்லெனில் வீழும் புல்லிய கள்ளியிற் பூத்தவை யாகினும் பூமியில் விளம்பரம் உண்டெனில் வாழும் -விளம்பர மருள்படு சிந்தையர் மயங்கிய நெஞ்சினர் மதியைம றந்தவர் இங்குளர் என்றால் இருள்பக லாகிடும் பகலிர வாகிடும் எதனையும் நம்புவர் விளம்பரம் ஒன்றால் -விளம்பர 72 பல்கலைக் கழகம் - எடுப்பு பல்கலைக் கழகம் பார் - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பார் தொடுப்பு கல்வியில் பெரியோர் கலைபல பயின்றோர் கருத்துடன் வளர்த்திட விருப்புடன் உழைத்திடும் -பல்கலை முடிப்பு இசையொடு வீணையும் இசைத்திடும் ஒருபால் இலக்கிய ஆய்வுகள் நடத்திடும் ஒருபால் வசையிலாச் சொல்லமர் முழங்கிடும் ஒருபால் வாரிவாரிக் கல்வி வழங்கிடும் ஒருபால் -பல்கலை சிலைக்கோவில் மேவுமொரு தில்லைப் பதியருகில் திருவேட் களவனத்தைச் சீராக்கி ஊராக்கிக் கலைக்கோயில் தமிழ்மொழிக்கே காணுமொரு வேட்கையினால் கருணைமிகு வணிகர்குல மன்னனவன் எழுப்பியருள் -பல்கலை 73 என்ன செய்து விட்டாய்? - எடுப்பு எதனைச் செய்தே உயர்ந்துவிட்டாய் - நீதான் எதனால் உலகிற் சிறந்துவிட்டாய்? -எதனை தொடுப்பு இதயம் ஒன்றை மறந்துவிட்டாய் - கண்கள் இருந்தும் ஒளியைத் துறந்துவிட்டாய் -எதனை முடிப்பு சிரிக்கத் தெரிந்தும் மறைத்துவைத்தாய் - நீயே சிந்தையில் அன்பைக் குறைத்துவைத்தாய் திறக்குங் கதவை அடைத்துவைத்தாய் - நெஞ்சில் தீமைகள் யாவும் படைத்து வைத்தாய் -எதனை எதனால் நீதான் செருக்கடைந்தாய்? - உள்ளம் இல்லை அதனால் உருக்குலைந்தாய் உதவும் நினைவை இழந்துவிட்டாய் - வீணில் உடலால் சுமைபோல் வளர்ந்துவிட்டாய் -எதனை பள்ளியில் எல்லாம் படித்துவிட்டாய் - ஆனால் படித்ததை அங்கே முடித்துவிட்டாய் தெள்ளிய அறிவைக் கெடுத்துவிட்டாய் - அதனைத் தீமைக் கெனவே கொடுத்துவிட்டாய் -எதனை பேச்சில் முழுதுஞ் சொல்லிவிட்டாய் - வீணில் பெருமைகள் யாவும் அள்ளிவிட்டாய் பூச்சும் வேடமும் போட்டுநின்றாய் - செயலில் புன்மைகள் மட்டுமே காட்டுகின்றாய் - எதனை வானில் நடந்தே முடித்து விட்டாய் - அங்கே வண்ண நிலாவைப் பிடித்துவிட்டாய் ஏனை வியப்பும் நடத்திவிட்டாய் - ஆனால் ஏனோ குணத்தைக் கெடுத்துவிட்டாய் - எதனை அறிவின் எல்லை அறிந்துகொண்டாய் - இயற்கை ஆற்றலை எல்லாந் தெரிந்துகொண்டாய் உரிமை வாழ்வும் விரும்புகின்றாய் - மற்றோர் உரிமையை மட்டுஞ் சுரண்டுகின்றாய் -எதனை ஓரா யிரமுறை ஆடுகின்றாய் - கடவுள் ஒவ்வொன் றின்முனும் பாடுகின்றாய் மாறா இன்பந் தேடுகின்றாய் - ஆனால் மனிதனை மட்டும் சாடுகின்றாய் -எதனை மனிதனை மனிதன் விரும்பிவிட்டால் - நெஞ்சில் மானிட அன்பே அரும்பிவிட்டால் தனிமனி தன்மனந் திருந்திவிட்டால் - உலகம் சரிநிகர் சமமாய் உயருமடா -எதனை 74 உள்ளமும் உதடும் - உள்ளமும் புகழும் உதடும் புகழும் உண்மை உணர்ந்திட வேண்டுமடா கள்ளம் எதுவென உள்ளம் எதுவெனக் கண்டு தெளிந்திட வேண்டுமடா நல்லவர் வருவார் அல்லவர் வருவார் நன்மைகள் பெறலாம் எனத்தேடிச் சொல்லிடும் புகழ்மொழி சொக்கிட வைத்திடும் சோதனை செய்திட வேண்டுமடா உண்மையும் உண்டாம் பொய்ம்மையும் உண்டாம் உன்புகழ் பாடும் பாடலிலே உண்மையும் பொய்ம்மையும் ஓர்ந்து தெளிந்திடும் உள்ளம் உனக்கே வேண்டுமடா நேற்றுனை வைதார் இன்றுனைப் புகழ்வார் நிலைமையை எண்ணிப் பார்த்திடடா காற்றுள போதே தூற்றிட வந்தார் காரணம் இதுதான் கண்டிடடா எட்டியின் கனிகள் இருவிழி கவரும் எழிலினைக் கொண்டுள தறிந்திடடா கட்டிய புனைமொழி கேட்டிடும் போது காதுகள் குளிர்ந்திடும் தெரிந்திடடா காட்டிய எழிலால் கனியது சுவைத்தால் கண்களை மூடிடச் செய்திடுமே ஊட்டிய புனைமொழி உரைத்திடும் உதடுகள் உனையே மறுநாள் வைதிடுமே கூவிடுங் குயிலுங் காகமும் ஒன்றெனக் கொள்வது முறையோ சாற்றிடடா நாவொடு மனமும் ஒன்றிய மாந்தர் நல்லுரை கொண்டு போற்றிடடா புகழ்ந்திடும் மொழியோ இகழ்ந்திடும் மொழியோ பொதுப்பணி புரிவோன் ஒன்றெனவே அகந்தனில் உடையான் புறந்தனில் உடையான் அவனே தலைவன் மன்றினிலே 75 மீண்டும் வருமோ? - கண்பழு தாகினுங் காணலாம் - உலகைக் காணுங் கருவியைப் பூணலாம் பண்புகள் பாழ்பட நேருமேல் - என்ன பக்குவஞ் செய்யினுந் தீருமோ? உண்ணும் உணவுகள் மாறுமேல் - வேறோர் உண்டி தனைக்கொண்டு தேறலாம் எண்ணும் நினைவுகள் மாறுமேல் - பாரில் எப்படி உயர்ந்திட லாகுமோ? பள்ளம் படுகுழி வீழ்ந்தவன் - வந்து பார்த்தவன் கைதர மீளலாம் உள்ளம் படுகுழி வீழுமேல் - பின்னர் ஓங்கிய வாழ்வினில் மீளுமோ? நஞ்சினை உண்டொரு மாந்தனும் - உய்ந்து நானில வாழ்வினை ஏந்தலாம் நெஞ்சகம் வஞ்சனை உண்ணுமேல் - வாழ்வு நேர்மையிற் சென்றிட ஒண்ணுமோ? மந்தையில் மேய்ந்திடும் மாடுகள் - வந்து மாலையில் வீட்டினைக் கூடலாம் சிந்தை மேய்ந்திடப் போகுமேல் - வந்து சேரிடம் எய்திடல் ஆகுமோ? தேடும் பொருள்பழு தாகலாம் - பின்னர்த் தேடின் அதுநிறை வாகலாம் கூடும் மனம்பழு தாகுமேல் - எந்தக் கொம்பனும் மீண்டிடல் ஆகுமோ? வானம் வறண்டிடும் போதிலும் - தோண்ட வந்திடும் நீரினால் வாழலாம் மானம் வறண்டிட நேருமேல் - எந்த மாந்தனும் வாழ்ந்திட லாகுமோ? செல்லும் வழிதடு மாறலாம் - மீண்டும் செல்ல நினைத்தஊர் சேரலாம் நல்ல நடைதடு மாறுமேல் - இந்த நானில மேபழி கூறுமே பாடுங்குயில் குயிலின் குரல் கவிஞனைப் பித்தனென்றும், பிழைக்கத் தெரியாதவனென்றும் உலகம் பேசுவது செவியில் விழத்தான் செய்கிறது. கவிஞன், தான் என்ற எண்ணமற்றவன்.தனக்கு என்ற ஆசையற்றவன். சுருங்கக் கூறின் தன்னை மறந்தவன், ஆதலின் அவன் செயல், அவன் பேச்சு, அவன் போக்கு, அவன் பார்வை அனைத்தும் ஏனைய மாந்தரினும் மாறுபட்டுத் தோன்றும். மாறுபட்ட இக்காட்சியால் அவன் பித்தனாகிறான்; பிழைக்கத் தெரியாதவனும் ஆகிறான். அவன் உலகமே தனிஉலகம்! இயற்கை எழில் காணுங்கால் இன்பம் பெறுகிறான். மற்றவர் துயரப்படுங்கால் துன்பமடைகிறான். கொடுமைகள் காணும்பொழுதெல்லாம் குமுறி எழுகின்றான். இவ்வாறு இன்பம், துன்பம், குமுறல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுப் பொங்கியெழும் அவ்வுணர்ச்சிகளை வெளிக்காட்டக் குரல் கொடுக்கிறான். அக்குரல்தான் கவிதையென்று உலகத்தாற் கொண்டாடப் பெறுகின்றது. உலகச் சூழ்நிலைகள், அவனுடைய உள்ளுணச்சிகளைக் கிளறிவிட்டு. நெஞ்சத்திலே கொந்தளிப்புகளை அலை மோத விட்டு, அவனைப் புலம்ப விடுகின்றன. அந்தப் புலம்பலைக் கேட்டு உலகம் மகிழ்கிறது. தன் மகிழ்ச்சிக்காக உலகம் அவனை மீண்டும் மீண்டும் புலம்ப விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அவன் மண்ணிற்புதைந்துவிட்டாலோ அவனுக்காக உலகம் புலம்புகிறது. அப்புலம்பலை ஒலிபெருக்கி வைத்துப் பரப்பவும் செய்கிறது. நல்ல உலகமடா இது! போகட்டும்; நாட்டுச் சூழ்நிலை, வீட்டுச்சூழ்நிலை இவற்றின் தாக்குதல் களுக்கு இலக்கான என் மனத்திலும் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றின. உறுத்திக் கொண்டேயிருந்த அந்த உணர்ச்சிகள் நேரம்வாய்க்கும் பொழுது பாடல்களாக வெளிப்பட்டன. அப்பாடல்கள் மெல்லிசைப்பாடல்கள். ஆம்; புது முறைப் பாடல்கள். ஆயினும் தாளம் தப்பாதவை; ஒரு கட்டுக் கோப்புக்குள் அடங்கி நடப்பவை. செவி சாய்த்துக் கேட்டுப்பாருங்கள். அவ்வுண்மை புலனாகும். கற்பனை வளமும், பொருள் நலமும் செறிய எழுதும் இளைஞர் பலர் இன்று கவிதை உலகிலே உலாவரல் கண்டு மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடுகிறது. ஆயினும் கவிதை என்ற பெயரால் உரைநடைகளை எழுதுவது கண்டு அம்மகிழ்ச்சி வற்றி வறண்டு போய் விடுகிறது. வழி தவறிச்செல்லும் அவர்களுக்கு இந்நூல் நேர்வழி காட்ட உற்ற துணையாகும் என்று நம்புகின்றேன். அன்பன் முடியரசன் காணிக்கை தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வல்ல தமிழன்பரும் என் கவிதையின்பால் ஆழ்ந்த பற்றுடையவரும் படகு கவிழ்ந்து இளம் பருவத்திலேயே இயற்கை எய்தியவரும் தமது பெயரைச் செம்பியன் எனத் தமிழாக்கிக் கொண்டவரும் ஆன சோவியத்து நாட்டுத் தோழர் ரூதின் அவர்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி மகிழ்கின்றேன். முடியரசன் 1 தமிழ் வாழ்த்து செந்தமிழே என்னுயிரே புலவர் நெஞ்சில் சேர்ந்தாடும் எழில் மயிலே என்னுட்பொங்கி உந்திவரும் உணர்வதனால் கூவிக்கூவி உவகைதரும் பூங்குயிலே மொழிக் குலத்தில் முந்திவரும் தெய்வமே என்னைச் சூழ்ந்து மொய்த்து வரும் துன்பமெலாம் நீக்கி யின்பம் தந்துவரும் ஆரணங்கே அன்பே நின்றன் தான்வணங்கி நிற்கின்றேன் அருள்வாய் அம்மா. முடியரசன் 2 குயிலெனக் கூவுவோம் மலர்விழி சோலையை நாடிடுவோம் மயிலென மகிழ்வுடன் ஆடிடுவோம் மலர்தொறும் வண்டெனப் பாடிடுவோம் மனங்கவர் குயிலெனக் கூவிடுவோம் கூவிடுங் குரல்தனைத் தடுத்திடவே கொடுமைகள் வருமெனில் துடித்தெழுவோம் ஏவிடும் வேலுரு வெடுத்திடுவோம் எதிர்த்திடும் பகைதனை அடக்கிடுவோம் கனிநிகர் கவிதைகள் படைத்திடுவோம் காவியம் பற்பல தொடுத்திடுவோம் இனிமைகள் யாவையும் படைத்திடுவோம் இடர்தருஞ் செயல்களைத் தடுத்திடுவோம் வறுமையின் கொடுமையைப் போக்கிடுவோம் வளமைகள் யாவுமே ஆக்கிடுவோம் சிறுமைகள் நம்மிடம் நீக்கிடுவோம் சிந்தனை நெஞ்சினில் தேக்கிடுவோம் உழைப்பினை நலமுறக் காட்டிடுவோம் உரிமையை உலகினில் நாட்டிடுவோம் பிழைப்பினைப் பறித்திடும் கூட்டமதைப் பெரும்புலி போலெழுந் தோட்டிடுவோம் உறிஞ்சிடும் அட்டைகள் உலவிடுமேல் உலகமும் அறநெறி விலகிடுமே அறிந்திடின் அனைவரும் நலமுறலாம் அமைதியும் நிலமிசை நடமிடலாம் இயற்கையின் விளைவெனும் உடைமையெலாம் யாவரும் பெறஒரு தடையிலையாம் செயற்கையில் அவைதனி யுடைமையெனில் சிறியவர் செயலது மடைமையுமாம் நலமுற அனைவரும் கூடிடுவோம் நாட்டினில் அமைதியை நாடிடுவோம் மலர்விழி சோலையைத் தேடிடுவோம் மனங்கவர் குயிலெனப் பாடிடுவோம் 3 தலைமை வகிப்போம் சுரண்டலும் பதுக்கலும் ஒழிப்போம் - அதற்குத் துணைவரும் பகைதனை அழிப்போம் இரண்டிலும் பிழைப்பவர்ப் பழிப்போம் - அவர்க்கே இனியொரு விதிமுறை விதிப்போம் மனிதனை உழைப்பினை மதிப்போம் - கொடிய வறுமையை இடரினை மிதிப்போம் இனியநல் லுலகினைப் படைப்போம் - அங்கே எதிர்வரும் தடைகளை உடைப்போம் உடையவர் எளியவர் இருப்பார் - அதுதான் உலகினில் விதியென வகுப்பார் கடையவர் உயரியர் பிறப்பால் - இருப்பர் கடவுளின் செயலென உரைப்பார் கடவுளை விதியினை மறுப்போம் - தூய கடமையை உரிமையை மதிப்போம் மடமையை அடிமையை வெறுப்போம் - நல்ல மதியினை உணர்வினை வளர்ப்போம் வயல்களில் உழைப்பினைக் கொடுப்போம் - அங்கே வருபயன் அனைத்தையும் எடுப்போம் துயரிலை எனமடல் விடுப்போம் - உழைப்பால் சுரந்திடும் பொருள்களை மடுப்போம் பொறிகளுந் தறிகளும் வளர்ப்போம் - அங்கே புதுநெறி முறைகளில் உழைப்போம் நிறைவுறு பொருள்களை விளைப்போம் - நாட்டின் நிலையுயர் வெய்திடச் செழிப்போம் புதுமுறை உலகினைப் படைப்போம் - அங்கே பொதுமையில் அறநெறி விரிப்போம் உதவிடும் மனத்தொடு சிறப்போம் - உலகில் ஒருசரி நிகரென இருப்போம் அயர்வினைப் பகையெனத் தகர்ப்போம் - நாளும் அவரவர் கடமையை உகப்போம் அயலவர் சுரண்டிடின் செகுப்போம் - அந்த அணியினில் தலைமையை வகிப்போம் 4 எப்படிப் பொறுப்பேன்! இருளுடன் ஒளியையுங் காண்பேன் - உலகின் இயல்பெனும் மனநிலை பூண்பேன் வறுமையும் வளமையுங் கண்டால் - மாந்தன் வாழ்வினில் எப்படிப் பொறுப்பேன்? மருதமும் பாலையும் உண்டு - விடுவேன் மண்மிசை இயல்பெனக் கொண்டு உரியவன் எளியவன் இருத்தல் - இயல்பென் றுரைத்திடின் எப்படிப் பொறுப்பேன்? தடமலை சமதரை இருக்கும் - அவையும் தரைதனில் இயல்பென இருப்பேன் குடிலுடன் மாளிகை இருப்பின் - நெஞ்சம் குமுறா தெப்படி யிருக்கும்? பூவுடன் பிஞ்சுகள் மடியும் - அஃதும் பூமியில் இயல்பென முடியும் சாவுகள் இளமையைத் தொடரின் - உள்ளம் சமநிலை எப்படி யடையும்? மலர்தனிற் பனிநீர் குந்தும் - அதுதான் மனமகிழ் அழகினைச் சிந்தும் உலரிய விழிநீர் சிந்தின் - என்றன் உளமோ கடலெனப் பொங்கும் விரித்திடும் தோகையின் கண்கள் - காணின் விளைத்திடும் என்மனம் பண்கள் தரித்திடும் ஆடையிற் கண்கள் - காணின் தலைக்கொளும் ஆயிரம் புண்கள் முழுமதி வடிவினில் குறையும் - அதுவும் முழுமையும் ஒருநாள் மறையும் உழுபவன் வடிவினில் குறையின் - என்றன் உளமோ கனலாய்ப் புகையும் பசியுடன் நலிவுகள் மிகுத்தால் - இங்கே பாய்புலி யாய்மனஞ் சினக்கும் இசையா வுலகினைப் படைத்தால் - இனியும் எப்படி என்மனம் பொறுக்கும்? 5 மூடம் என்று மாறுமோ! கடவுள் கடவுள் என்கிறாய் - நாளுங் கயமை யாவுஞ் செய்கிறாய் மடமை நோக்கிச் செல்கிறாய் - நல்ல மதியை அந்தோ கொல்கிறாய் கல்வி தெய்வம் என்கிறாய் - நாளுங் கற்க என்ன செய்கிறாய்? செல்வந் தெய்வம் என்கிறாய் - அதனைத் தேடத் தீமை செய்கிறாய் சின்னம் உன்றன் மெய்யிலே - செய்யுஞ் செயல்கள் எல்லாம் பொய்யிலே சொன்ன வேதங் கையிலே - வஞ்சம் சூது நெஞ்சப் பையிலே எத்தி வாழப் பார்க்கிறாய் - அதனுள் இறைவன் பேரைச் சேர்க்கிறாய் கொத்துங் கழுகுப் போக்கினால் - உன்றன் கொள்கை நன்மை யாக்குமோ? செய்யுந் தீமை யாவுமே - அந்தத் தேவன் என்றால் தீருமோ? பொய்யும் மெய்ம்மை யாகுமோ? -காட்டுப் பூனை புலியென் றாகுமோ? நூறு நூறு சாதிகள் - இங்கு நுவலுங் கோடி வீதிகள் வேறு வேறு நீதிகள் - சொல்லி வேத மென்றும் ஓதினாய் ஏழை செல்வன் ஏனெனில் - அந்த இறைவன் என்று வீணிலே மோழை வாதங் கூறினாய் - உன்றன் மூடம் என்று மாறுமோ? நெஞ்சின் மாசை ஒட்டுவாய் - நல்ல நினைவை யங்கே கூட்டுவாய் வஞ்சம் நீக்கி வீட்டுவாய் - செய்கை வாய்மை யாக்கிக் காட்டுவாய 6 நானொரு பாடும் பறவை நானொரு பாடும் பறவை - பொழிவேன் நாடொறும் பாடல் நறவை வானில்வி ரிப்பேன் சிறகை - மறவேன் வாழ்ந்திடும் மண்ணின் உறவை பாடுவ தென்றன் தொழிலாம் - அன்பும் பண்பும் எனதிரு விழியாம் கூடிடும் நட்பெனும் மழையில் - நாளும் குளித்துளம் மகிழ்வதென் வழியாம் சிந்தனை விரிசிற குடையேன் - காற்றுச் சீறிடல் கண்டுளம் உடையேன் முந்திய தமிழிசை நடையில் - கவிதை மொய்ம்புறப் பாடுதல் உடையேன் கொள்கை கொணர்ந்ததை முடைவேன்-அந்தக் கூட்டினில் வந்தே அடைவேன் தெள்ளிய தமிழ்மழை விழைவேன்- என்றும் தித்தித் திடஇசை பொழிவேன் ஈயென் எதிலும் அமரேன் - நறுமலர் எதுவோ அதையே நுகர்வேன் வாயினில் வந்ததை உளறேன்- துன்பம் வாய்த்திடின் அதனால் தனரேன் வாழ்வினைப் பெரிதாக் கருதேன்- என்றும் வாய்மையை மீறித் திரியேன் தாழ்விலுஞ் செம்மைக் குரியேன்-என்றன் தாயகங் காக்குங் குறியேன் விண்மிசை யாண்டுந் திரிவேன்-அங்கே விந்தைகள் ஆயிரம் புரிவேன் மண்மிசை என்றும் வருவேன்-இன்பம் மாநிலம் எய்திடத் தருவேன் பாடிடு வேன்புது வுலகை- அங்கே படைத்திடு வேன்பொது வுடைமை சாடிடு வேன்வரும் படையைத்- தாக்கிச் சமர்புரி வேன்அது கடமை 7 எனது நேரம் நினைவுடன் வாழ்வது சிலவேளை-கனவில் நீந்திடப் போவது பலவேளை முனைவுடன் வாழ்வது சிலவேளை-துயரங் மூழ்கிடத் தாழ்வது பலவேளை நட்பில் திளைப்பது சிலவேளை -தனியே நலிந்து கிடப்பது பலவேளை கற்பில்* களிப்பது சிலவேளை - துயரங் கண்டு கழிப்பது பலவேளை சிரிப்பினில் வாழ்வது சிலபோது-கண்ணீர் சிந்தித் தேய்வது பலபோது நெருப்பினில் காய்வது பலபோது-இன்பம் நெஞ்சினில் தோய்வது சிலபோது நல்லன காண்பது சிலபோது-நாட்டில் நாணயங் காண்பது சிலபோது அல்லன தோன்றுதல் பலபோது-மண்ணில் அல்லலுந் தோன்றுதல் பலபோது என்னலம் நெஞ்சினில் ஒருநாளே-மக்கள் இனநலம் மிஞ்சிடும் பலநாளே என்னகம் வஞ்சியும் ஒருநாளே-நினைவில் ஏழையர் பஞ்சையர் பலநாளே மாந்தனைக் காண்பது சிலநாளே- மனித மாக்களைக் காண்பது பலநாளே ஆய்ந்துளந் தங்குதல் சிலநாளே-மக்கள் ஆகுலம் பொங்குதல் பலநாளே மண்ணில் நடப்பது சிறுநேரம்-நானோ வானிற் பறப்பது நெடுநேரம் நண்ணும் மகிழ்ச்சிகள் சிறுநேரம்-நெஞ்சம் நையுந் தளர்ச்சிகள் நெடுநேரம் வீட்டை நினைப்பது சிறுநேரம்-மனைவி வேட்கை யிருப்பதுஞ் சிறுநேரம் நாட்டை நினைப்பது நெடுநேரம்-கவிதை நயந்து தொடுப்பதும் நெடுநேரம் 8 ஏங்குதல் நீதியோ? தாயுன தின்னருள் பாடவைத்தாய்-துன்பந் தாக்கிட ஏனுளம் வாடவைத்தாய்? ஆயும் புலமையை நாடவைத்தாய்-அம்மா அப்புறம் ஏன்பொருள் தேடவைத்தாய்? கைப்பொருள் என்னிடம் தங்கவிட்டால்-நெஞ்சிற் காயங்கள் யாவையும் மங்கிவிட்டால் மெய்ப்பொரு ளின்மணம் பொங்கவிட்டே பார்ப்பேன் மேனியில் பாமலர்த் தொங்கலிட்டே விண்ணுல கொன்றனை நான்படைப்பேன்-அங்கே விந்தைகள் ஆயிரம் மேலமைப்பேன் மண்ணுல குய்ந்திடத் தேன்கொடுப்பேன்-இந்த மைந்தனைத் துன்புற ஏன்விடுத்தாய்? மாமயில் போலொரு மங்கையினாள்-நல்ல மாலைச் சுடர்நிகர் செங்கையினாள் காமுறு வேளையின் அங்கவளை-ஏனோ கட்டுற வைத்தனை சங்கிலியால்? கற்பனை வான்மிசை நான்பறப்பேன்- அங்கே காதல் மகள் தரும் தேன்சுவைப்பேன் பொற்புடை யாளவள் தானழைத்தாள்-வானில் போய்வரு மென்சிற கேனறுத்தாய்? இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன்-அங்கே எத்தனை எத்தனை ஆய்ந்திருபேன் மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன்-நீயேன் வந்தரு ளாமலே ஒய்ந்திருந்தாய்? உன்னை விடுத்தொரு சுற்றமில்லை-நெஞ்சில் ஒட்டிய வேறொரு பற்றுமில்லை என்னைப் புரப்பதில் குற்றமில்லை-அம்மா ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை? 9 மருளும் உலகம் உலகம் மாறி உருள்கிறது மனமும் சுருங்கி மருள்கிறது கலகம்காண விரைகிறது கடமை யாவும் குறைகிறது சமயம் சாதிப் பிளவுகளால் சண்டை ஒன்றே வளர்வதனால் இமயம் குமரி இடைவெளியில் எங்கும் பண்பே தளர்கிறது மாந்தர் என்னும் உணர்வுகளை மறந்தே போனோம் மதவெறியில் நீந்தும் வழியே தெரியவில்லை நீளும் பகைமை மறையவில்லை போரே எங்கும் புகைகிறது போதனை மட்டும் வளர்கிறது யாரே வருவார் அமைதிதர? எவரும் இல்லை பகை குறைய! நாவில் மட்டும் நல்லுரைகள் நயவஞ் சகமே உள்ளுரையில் சாவில் செல்லும் உலகமிது சற்றே எண்ணின் நலம்பெறுக 10 கடவுள் எழுதிய கவிதை கவிதை வரைந்தவன் பாடிவந்தான்-அவன் கடவுள் எனும்பெயர் சூடிவந்தான் புவியில் நிகரெனக் கில்லையென்றான்-இது புதுமைப் படைப்பெனச் சொல்லிநின்றான் படிப்பறி யார்தமைக் காட்டிநின்றே-என்றன் படைப்பினுள் ஒன்றிது காண்க என்றான் எடுத்தறி வோடதைப் பார்த்தபின்னர்-அட எழுத்துப் பிழையிது வென்றுசொன்னேன் பொய்ம்மை வனைந்திடும் புல்லர்நின்றார்-தமைப் புனைகவி யாமெனச் சொல்லிநின்றான் செம்மை கெடுங்கவி செய்துவிட்டாய்-இது சீர்கெட்ட பாட்டெனச் செப்பிவிட்டேன் வாழ்வு பெரிதென மானம்விட்டார்-தமை வாழுங் கவியெனக் காட்டிவிட்டான் தாழ்வு படக்கவி ஆக்கிவிட்டாய்-இது தளைகெட்ட பாட்டென நீக்கிவிட்டேன் இமைப்பொழு தாகினும் இன்பமிலார்-பெறும் இரந்துணும் வாழ்வினைப் பாடலென்றான் அமைப்பினைப் பாழ்படப் பாடிவிட்டாய்-ஈது அடிகெட்ட பாட்டென மூடிவிட்டேன் வறுமை யுடன்வளங் காட்டிவந்தே-அவை வளர்விதிப் பாட்டென நீட்டிவந்தான் சிறுமை படக்கவி காடடவந்தாய்-தொடை சேர்கிலாப் பாட்டெனப் போட்டுநொந்தேன் 11 பொங்கிக் கிளர்ந்தது வீரம் (சீனம் நம்மைத் தாக்கியபோது பாடப்பட்டது) வெள்ளையர் ஆண்டிட வீழ்ந்துகிடந்தது நாடு-கதை வேறுநடந்தது வெந்தும டிந்தது பாடு கொள்ளையர் மீண்டிவண் கூடிப்புகுந்திட லாமோ-அவர் கொட்டம டங்கிடக் கூடிஎ திர்த்திடு வோமே ஏழைய ராயினும் கோழையரல்லர்நம் மாந்தர்-படை ஏற்றம்மி குந்திடப் போரிற்ப டைக்கலம் ஏந்திக் காளைகள் ஆயிரம் காணுமப கைப்புலம் நீந்தும்-ஒரு காவல்பு ரிந்திடும் சேனைபெ ரும்புகழ் ஏந்தும் சங்கம்மு ழங்கிட வெங்களங் கண்டிடும் வீரர்-எம் சந்ததி சந்ததி யாகவ ளர்ந்திடும் சூரர் தங்களைப் பெற்றிடுந் தாயகங் காத்திடுந் தீரர்-அவர் தாவியெ ழுந்திடின் ஒடிவரும்பகை தீரும் சாவுக்க ளந்தனில் ஆடிக்க ளித்திடும் நேரம்-எனச் சங்கமொ லித்தது பொங்கிக் கிளர்ந்தது வீரம் சூவைவி ரட்டிடச் சூடுபி டித்தது நாட்டில்-ஒரு சுட்டுவி ரற்கிடை விட்டுக்கொ டுத்திட மாட்டோம். 12 நானே அரசிருப்பேன் மருவிய முகிலாய்த் தவழ்ந்திடுவேன்- மலைமேல் மழையாய்ப் பொழிந்திடுவேன் அருவியின் உருவாய்த் திகழ்ந்திடுவேன் ஆறென உலகில் நுழைந்திடுவேன் வயல்தனில் புனலாய்ப் பாய்ந்திடுவேன் வண்டலுந் துணையாத் தோய்ந்திடுவேன் பயிரென விளைந்தே சாய்ந்திடுவேன் பசிதனைப் புவியில் காய்ந்திடுவேன் உலகினில் எங்கணும் ஓடிடுவேன் ஒவ்வொரு மண்ணையும் நாடிடுவேன் கலகல எனுமிசை பாடிடுவேன் கடலுள் முடிவிற் கூடிடுவேன் கனிகளின் உருவில் தொங்கிடுவேன் கனியுள் சுவையாய்த் தங்கிடுவேன் இனியநல் லிளநீர்த் தெங்கினிலே இன்பம் மிகவே பொங்கிடுவேன் ஏரியுங் குளமும் நிறைந்திருப்பேன் எளிதே மணலுள் மறைந்திருப்பேன் ஊரவர் தொடத்தொடச் சுரந்திருப்பேன் உலகஞ் செழித்திட வரங்கொடுப்பேன் மழலையின் இதழில் துடிதுடிப்பேன் மகளிரின் விழியுள் குடியிருப்பேன் அழகிய சோலையில் கொடிபிடிப்பேன் அவனியில் நானே அரசிருப்பேன் 13 காட்டிக் கொடுக்கலாமோ? காட்டிக் கொடுக்க லாமோ-நாட்டைக் காட்டிக் கொடுக்கலாமோ-மாலை சூட்டி யழைக்க லாமோ-பகையைச் சூழ்ந்து பிழைக்கலாமோ? வீட்டைக் கெடுக்க லாமோ-உள்ளே வேட்டை தொடுக்க லாமோ-இங்கே தேட்டை யடிக்க லாமோ-கெட்ட சேட்டை பிடிக்க லாமோ? நாடித் திரிய லாமோ-பிறனை நத்தி அலைய லாமோ-அடிமை தேடிக் கொடுக்க லாமோ- நாட்டைத் தீயர் பிடிக்க லாமோ? கூடி விளக்க லாமே-நமக்குள் கொள்கை முழக்க லாமே தேடிக் கொடுக்க லாமே-அதனைச் சேர்ந்து முடிக்க லாமே தாயைப் பழிக்க லாமோ-பகைக்குத் தாழ்ந்து பிழைக்க லாமோ-இழிந்த நாயை நிகர்க்க லாமோ-ஈன்ற நன்றி மறக்க லாமோ? காலைப் பிடிக்க லாமோ-பகைக்கு வாலைக் குழைக்க லாமோ-நமது வேலைக் கொடுக்க லாமோ-கையில் வேலை கெடுக்க லாமோ? பற்றை விடுக்க லாமோ-நாட்டின் பண்பைக் கெடுக்க லாமோ-பகையைச் சுற்றி நொறுக்க வாவா-பகைவர் சூழ்ச்சி விரட்ட வாவா 14 ஒற்றுமையா? ஒருமைப்பாடா? ஒற்றுமை என்றொரு சொல்லுண்டு-மேலும் ஒருமைப் பாடென ஒன்றுண்டு சற்றே அவற்றின் பொருள் கண்டு-நின்பால் சாற்றிடுவேன்கேள் மனங்கொண்டு கட்டிய மாலைகள் தொங்கும்பார்-அவற்றில் கண்கவர் பூக்கள்வி ளங்கும்பார் மொட்டுடன் முல்லைது லங்கும்பார்-இன்னும் மூவகைப் பூவுமி லங்கும் பார் எத்தனை எத்தனை வண்ணம்பார்-நெஞ்சில் இன்பம் விளைந்திடப் பண்ணும்பார் அத்தனை அத்தனை வண்ணப்பூ-மாலை ஆகிடச் சேர்ந்ததை எண்ணிப்பார் மாலையிற் சேர்ந்தவை நின்றாலும்-தத்தம் மணத்தோ டுறுபெயர் குன்றாமல் கோலமு றத்தொடர்ந் தொன்றாகும்-இதுவே கொண்டிடும் ஒற்றுமை என்றாகும் ghbyhL r®¡fiu x‹whdhš-ehK« gU»l ntRit e‹whF« ghÈL r®¡fiu v‹dhF«?-toî« பண்டைய பேரதும் இன்றாகும் ஒன்றனுள் ஒன்றுக ரைந்தழியும்-தம்பி ஒன்றே வளரம றைந்தொழியும் இன்றொரு மைப்பா டெனமொழியும்-சொல்லில் *ஏய்பொருள் தானிது பாரறியும் நம்முடன் மற்றவர் தாழ்வின்றி-வாழ நாடுவ தொற்றுமை வாழ்வன்றோ? நம்மழி வேபிறர் வாழ்வென்றால்- அதுதான் நாடும் ஒருமைப் பாடென்பார் x‰Wik v‹gij nt©Lânah?-j«ã ஒருமை எனுமது வேண்டுதியோ? உற்றொரு தீர்வினைத் தேர்ந்தெடுநீ-அந்த உண்மையை நெஞ்சினில் பூண்டெழுநீ. 15 போது விரிந்தது செவிலி JŸS«* ãiz aidahŸ-ï‹W òŸË kÆš eilahŸ!-kd« கள்ள மிலா தமகள்-இன்று வெள்கும் முக முடையாள்! ஆடைஅணிவகையில்...kd« நாடுதல் இன் றியவள்-எங்கும்ஆoவருபவள்தான்-முன்dர் ஓoத்âரிபவள்தh‹ ஏந்திழை தா னெடுத்தே-கருங் கூந்தல் தனை முடித்தாள்-அதில் பூந்துணர் சேர்த் தமைத்தாள் - புதுச் சாந்துகள் மேற் படைத்தாள்! கண்ணில்மை பூ சுகிறாள்-கடைக் கண்களில் பேசுகிறாள் - ïதழ்ப்òன்னகைåRகிறாள்-மொழி எ‹னென்னgசுகிறாள்!சந்தளிர் போ லுடலில்-நறுஞ் சந்தனம் நீ îகிறாள்-தனம்Éந்தைjUம்வiகயில்-இரு பªதெனவி«மு»றாள்! மி‹dš இடை தளரச்-சடைப் பின்னல் கிடந் தசைய-மட அன்ன நடை நடந்தாள்-கொடி என்ன அவள் படர்ந்தாள்! br¥ò¢ áiy vdnt-ïtŸ x¥gid brŒ jns!-ïij v¥go¡ f‰ wdnsh?-Ú செப்படி பெண் மகளே தோழி:- மாது திரிந் ததனால்-ஒரு ஏதம் நிகழ்ந் ததிலை-இளங் காதல் மலர்ந் ததம்மா-மணப் போது விரிந் ததம்மா.. 16 தெரு விளக்கு மிகத்துணி வுடனே நடுத்தெரு வோரம் லிரவிய இருளில் நிலைபெறும் ஓர் தொழிலேன் அகப்பொருட் கள்ளர் புறப்பொருட் கள்ளர் அவரவர் செல்வார் அறிந்தும் வாய்மொழியேன் பனியிலும் மழையிலும் நனைவதும் உண்டு பகல்தரும் வெயிலில் காய்வதுந் தினமுண்டு தினையள வெனினும் தனிநலம் இன்றிச் செய்திடும் பொதுநலஞ் சேரும் மனமுண்டு புகுமிருள் கண்டால் எனைவர வேற்றுப் புவியோர் தொழுவார் புகழ்வார் கைகுவித்தே பகல்வரும் அதன்பின் எனைமதி யார் இப் பாரினர் செயலை நகைப்பேன் வாய்குவித்தே ஊரார் அனைவரும் விழிதிற வாமல் உறங்கிடு வார்நான் இரவினில் விழித்திருப்பேன் சோரா விழியிமை ஒருநாள் சோர்ந்தால் தூற்றுவர் பழிகள் சாற்றுவர் பொறுத்திருப்பேன் தெருவிலென் னருகினில் சிறுவர்கள் ஆடித் திரிந்திடு வார்மனம் மகிழ்ந்திருப் பார்விருப்பால் ஒருகால் உடையேன் நடவா நிலையேன் ஓடிட முடியாக் கவலையில் நானிருப்பேன் கலைபயில் சிறுவர் கல்வியைப் பெறஎன் காலடி நின்றே தவமிருப் பார்தெருவில் விலைதர முடியாக் கலையினைக் கற்றே மேன்மைகள் எய்தினர்; நூல்களிற் பேர்தெரியும் வறியவர் உரியவர் எனும்நிலை யின்றி வளரொளி எவர்க்கும் வழங்கிடும் முறைகொண்டேன் சிறியவர் எறியும் கல்லடி பட்டுச் சிதறிட என்முகம் சீர்கெடும் நிலைகண்டேன் என்னருள் ஒளியால் இருளது நீங்கி எழில்பெறும் உலகம் இனிமையில் திளைத்திருக்கும் பன்னரும் நலங்கள் பாலித் திடுமெனைப் பழுதுறச் செய்தால் பண்பா நிலைத்திருக்கும்? 17 கொலைக்களம் கல்வியின் கொலைக்கலம் கட்சிகள்-அந்தக் கலைகளின் புதைகுழி பள்ளிகள் கொல்களம் அறிவினுக் காசைகள்-அதைக் கொள்குழி வெண்ணிறக் காசுகள். புதுக்குரல் கவிதையின் கொலைக்களம்-அச்சுப் புத்தக மேஅதன் புதைப்பிடம் பதுக்குதல் வாணிகக் கொலைக்களம்-அதன் படுகுழி கருநிறக் கணக்குகள். பெண்மையின் கொலைக்களம் திரைப்படம்-அந்தப் பிணந்தனைப் புதைப்பது துணிக்கடை உண்மையின் கொலைக்களம் படித்தவன்-நீதி ஓதிடும் மண்டபம் புதைப்பிடம் இறைவனைக் கொல்பவர் போலிகள்-அங்கே எழுப்பிடும் கல்லறை கோவில்கள் உரிமையின் கொலைக்களம் ஆணவம்-அந்த உரிமையின் புதைப்பிடம் வஞ்சகம் kd¤âid¡ bfhšfs« muáaš-mj‹ kiwFÊ ahtJ âdrÇ ïd¤âid¡ bfhšfs« rhâfŸ-mj‹ ïLFÊ ah«kj thâfŸ., அன்பினைக் கொல்களம் தன்னலம்-அதன் அடைகுழி ஆசைகொள் புன்மனம் தன்மையை மாய்ப்பது கள்ளினம்-அதைத் தாங்கிடும் புதைகுழி பெண்ணலம். பண்பினைக் கொல்களம் சூதுகள்-அதன் படுகுழி யாகிடும் வாதுகள் மன்பதை சாய்வது மோதலில்-அதன் மறைகுழி நால்வகை வேதமே. 18 நமக்குத் தொழில் பாடல் பொழிந்திடும் என்வாயை-பள்ளிப் பாடம் மொழிந்திட வைத்தாயே! கூடும் முகில்வான் மிதப்பேனைப்-பள்ளிக் கூடச் சிறையுள் வதைத்தாயே! காலங் கடந்துல காள்வேன்நான்-கடிகைக் காலங் கணக்கிட வாழ்வேனோ? ஞாலம் புகழ்ந்திட வாழ்வேன்நான்-சிறுவர் நாவிற் படமனந் தாழ்வேனோ? கற்பனை வானில் பறப்பேனா? -பாழுங் கட்டுரைத் தாள்கள் திறப்பேனா? பொற்புள பாமலர் பறிப்பேனா? - பற்றாப் பொருள்தனை எண்ணிச் சிரிப்பேனா? செம்மை வளர்த்துல காக்குவனோ? - பொழுதைச் *செம்மை தெளித்தினும் போக்குவனோ? K«ik¤ jÄœjid C¡Ftndh?-v‹w‹ மூச்சைப் பழுதுற நீக்குவனோ? நாட்டை வளர்த்திட வேவந்தேன்-வாழ்வின் நன்மை தளர்ந்திட வேநொந்தேன் நாட்டை மறந்திடும் பாவந்தான்-அங்கே நாடக மாடுவ தேகண்டேன் கனிமலர்க் காவென நான் வந்தேன்-பண்பு கருகிடுந் தாவென ‡ntbehªnj‹ தனியுரி மைக்கவி நானம்மா-துன்பம் தரும்அடி மைத்தொழில் ஏனம்மா? òÅj¤ bjhÊbyd eh‹bfh©nl‹ - ï‹W ò‹ik¢ br¿îs njf©nl‹ ïÅÆ¤ bjhÊš vd¡ nfd«kh?-fÉij எழுதும் பணிபுகு வேனம்மா. 19 பெற்றோர் புலம்பல் உண்ணுஞ் சுவையமு தூட்டிவிட்டோம் - நன்மை ஒதிடும் பள்ளியில் கூட்டிவிட்டோம் எண்ணம் அனைத்தையும் வாட்டிவிட்டீர்-ஊரார் ஏளனஞ் செய்திடக் காட்டிவிட்டீர்! கற்றவர் சொல்லையுங் கேட்பதில்லை-வீணே காலங்கள் போவதும் பார்ப்பதில்லை பெற்றவர் சொல்லையும் ஏற்பதில்லை - நல்ல பிள்ளைகள் யாரையும் சேர்ப்பதில்லை! வேடிக்கை செய்வதும் எல்லையில்லை - பள்ளி வேளைதொறுஞ் சென்று கற்பதில்லை நாடிக்கை வண்ணமே காட்டிநின்றால்-உங்கள் நாளை நடப்பென்ன காளைகளே? சட்டையில் மாற்றங்கள் கண்டுவிட்டீர் - நல்ல சால்பையும் ஐயையோ கொன்றுவிட்டீர்! *அட்டைகள் தூக்கலில் வென்றுவிட்டீர் - ஆனால் ஆகா நெறிக்கன்றோ சென்றுவிட்டீர் பாழ்வினை எத்தனை செய்துவிட்டீர்-அந்தோ பள்ளியில் கல்வியைக் கொய்துவிட்டீர் யாழிசை கேட்டிடக் காத்திருந்தோம்-ஆனால் ஆந்தையின் கூக்குரல் கேட்டுநொந்தோம் bg‰wt® eh§fnshthœªJÉ£nlh«-v§fŸ ãŸisfŸ Ú§fnsh jhœªJbf£lhš c‰wij v¥go¡ f©oU¥ngh«?-thia ஊமைகள் போலவா கொண்டுநிற்போம்? 20 என்றும் பிறப்பேன் அன்று பிறந்தேன் அரை நூற்று மூன்றன்பின் இன்றும் பிறக்கின்றேன் என்தமிழ்க்கு-நன்றுசெய என்றும் பிறப்பேன் இளங்குழந்தை போலிருப்பேன் தொன்றுதமிழ் முப்பால் சுவைத்து காலம் அனைத்துங் கலங்காத நெஞ்சுரமும் ஞாலம் வணக்குபுகழ் நற்கவியும்-கோலமுறச் சூழ்ந்திருக்கும் நட்பும் சுடர்க்கொடிநான் பெற்றென்றும் வாழ்ந்திருக்க ஈவாய் வரம் சொல்லும் மொழிக்குள்ளே சூடேற்றித் தீமையெலாம் வெல்லுந் திறமளிக்க வேண்டுமம்மா-நல்ல உலகொன்று காண உளங்கொண்டேன் அன்னாய் நிலைகொண்டு வந்தென்முன் நில் 21 நானொரு குழந்தை குடும்பம் எனக்கோர் நடைவண்டி-நல்ல கொள்கை வெறிதான் தொடர்வண்டி இடும்பை தவிர்த்திடும் முப்பாலே-என்னை இனிதே வளர்த்திடும் தாய்ப்பாலாம் ஆயும் மொழியே சிறுகோலி-அதனை அறிவால் தெறிப்பேன் குழிகோலி பாயும் குழியோ கவியாகும்-ஆடல் பார்த்து மகிழ்வது புவியாகும் பாமலர் என்றன் மழலைமொழி-பாட்டில் பாவும் பொருளே குவளைவிழி மாமழை வானந் தவழும்வழி-அங்கே மதியம் உருள்பந் தெனதுவழி காவியம் என்றன் மணல்வீடு- பொங்கும் கற்பனை யதுதான் சிறுசோறு வாவினி அம்மா மகிழ்வோடு-நெஞ்சின் வாழை விரிப்பேன் பரிவோடு உலகின் நிலையே தெரியவிலை-அங்கே உண்மையும் பொய்யும் புரியவிலை அலகில் விளையாட் டாடிடுவேன்-என்னோ டாரும் வரவிலை கூடிடவே உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை-சொன்னால் உடனே அழுவேன் வெறுப்பதிலை கள்ளங் கவடந் தரிப்பதிலை-நீயேன் கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை? அழுக்கா றாசை வெகுளியெனும்- நெஞ்சின் அழுக்குகள் யாவுங் கழுவினைநீ இழுக்கா மானம் அருளறிவு -அணிகள் எத்தனை எத்தனை அருளினைநீ நின்னருள் மாமழை பொழிந்திடுவாய்-நானும் நீங்கா ததனுள் நனைந்திடுவேன் என்னுயிர் நீதான் தமிழம்மா-என்னை எடுத்தொரு முத்தம் அருளம்மா. 22 என்றும் நானோர் இளைஞன் என்றும் நானோர் இளைஞன்-பாடல் எழுதிக் கொழிக்குங் கவிஞன் ஒன்றும் வாழ்விற் சுவைஞன்-நெஞ்சில் உணர்ச்சித் துடிப்போ மிகைஞன் செந்தமி ழமுதம் உண்டேன்-முதுமை சிறிதள வேனும் அண்டேன் சிந்தையில் இளமை கொண்டேன்-உலகம் சிறிதாய்த் தோன்றிடக் கண்டேன் கற்பனைப் பெண்ணே வருவாய்-நின்றன் கைகளை என்பால் தருவாய் பொற்கலன் ஆயிரந் தருவேன்-அவையே புதுமைக் காவிய உருவாம் ஊரார் ஏதோ மொழிவார்-அதுதான் உளரும் வாயர் தொழிலாம் பாராய் எனைநீ விழியால்-என்னைப் பழகிய பின்நீ குழைவாய் என்றும் உனதே நெஞ்சம்-அதுவே எழிலார் மலர்சேர் மஞ்சம் ஒன்றிய ஆசையிற் கெஞ்சும்-எனைநீ ஒதுக்கிடின் உயிரே அஞ்சும் உனைநான் என்றும் பிரியேன்-பிரியின் உயிர்தான் பெரிதோ தரியேன் புனைபா உணர்வாற் பொழிவேன்-கண்டு பூமியும் நம்மைத் தொழுமே வானிற் பறந்தே செல்வோம்-நம்பால் வருமிடர் அனைத்தும் வெல்வோம் தேனில வுக்கதை சொல்வேன்-அங்கே தெள்ளிய பாநலம் கொள்வோம் கண்ணுள் ஒளியாய் ஒன்றி-நீஎன் காலம் முழுதும் நின்றால் மண்ணும் விண்ணும் ஒன்றே-என்றும் மருவிக் களிப்போம் நன்றே 23 யாரடியோ? கொள்ளைப் பனிபொழி மார்கழித் திங்களில் கோலமி டத்தெரு வாயிலிலே அள்ளிப் புனல்தெளித் தென்மகள் புள்ளிகள் ஆயிரம் வைத்தனள் பாரடியோ! வெள்ளை நிலாமகட் கன்னி உலாவரும் வீதியில் எத்தனை கோலமடி! வெள்ளி எனும்பெயர் கொண்டிடும் புள்ளிகள் விந்தையில் வைத்தவள் யாரடியோ? ஈகை மனத்தவ ளேஉனைப் போல்மகள் ஏந்தி நடம்புரிந் தாளடியோ! †xif மிகுத்திட ஆடல் விளைத்திடும் ஓவியம் எத்தனை பாரடியோ! மேகம் முழங்கிடத் தாளம் இசைத்திட மென்மயில் கூத்திடல் காணடியோ! தோகை விரித்தொரு மாமயில் ஆடிடச் சொல்லிக் கொடுத்தவர் யாரடியோ? நாடொறுங் கற்றிடும் பாடலைப் பெற்றிடும் நம்மகள் பாடிடல் கேளடியோ! வாடிடும் என்மனந் தேறிடச் செய்திடும் வல்லமை வாய்ந்திடும் யாழடியோ! கூடிடும் மாமலர்ச் சோலையி லேஒரு கொம்பினில் தீங்குயில் கூவுதடி! பாடிடும் மென்குரல் தேனடி! அவ்விசைப் பாடங் கொடுத்தவர் யாரடியோ? பற்றிய ஆசையில் சிற்றில் இழைத்திடும் பாவையுடன் செல்வியைப் பாரடியோ! சுற்றிடும் நீள்மதில் முற்றிய வீடுகள் சூழ்ந்துள காட்சியைக் காணடியோ! தொற்றிய தென்னையில் பற்றி யசைந்திடும் தூக்கணங் கூடுகள் பாரடியோ! கற்றவர் போலவை கட்டிட அத்திறன் கற்றுக் கொடுத்தவர் யாரடியோ? 24 குற்றங் குற்றந்தான் பத்தியின் பேரால் நடந்தா லென்ன பகுத்தறி வாலது நடந்தா லென்ன கற்றவன் தீமை புரிந்தா லென்ன மற்றவன் அதையே செய்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் பட்டைகள் தீட்டிக் கொட்டைகள் கட்டிப் பதுக்கலும் கடத்தலும் செய்தா லென்ன சட்டையை மாட்டிச் சமத்துவம் பேசிச் சதிச்செயல் திருட்டுகள் செய்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் கோவிலில் நாடொறும் பூசனை செய்வோர் கும்பிடுஞ் சிலையைத் திருடின ரேனும் பாவிய மடமையைச் சாடிடுந் தூய பகுத்தறி வாளர் கவர்ந்தன ரேனும் குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் ஆட்சியில் ஏறி அறநெறி காப்போர் ஆசையில் தவறுகள் இழைத்தா லென்ன மாட்சிமை அறியா வஞ்சகர் கூடி மற்றவர் பொருளைப் பறித்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் கற்றவர் என்போர் கயமைகள் யாவும் கலைஎனும் பேரால் செய்தா லென்ன மற்றவர் இங்கே மடமைகள் யாவும் வயிறெனும் பேரால் செய்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் வெள்ளியி லான விளக்கது கொண்டு வேய்ந்திடுங் கூரையில் வைத்தா லென்ன கொள்ளிக ளான விறகினைக் கொண்டு குடிசையில் நெருப்பினை வைத்தா லென்ன குற்றங் குற்றந்தான் -ஒரு சட்டஞ் சட்டந்தான் கன்னியர் தவறின் கண்டனம் வேறு காளையர் பிறழ்ந்தால் அதன்பெயர் வேறா? இந்நிலை கண்டார் அறமென ஓதார் இழிசெயல் ஒன்றினை யார்செய் தாலும் குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் 25 கற்பனை மன்னவன் கவியெனப் போற்றிடும் பேர்படைத்தான்- நெஞ்சில் கற்பனை யாலொரு பார்படைத்தான் புவியதை ஆண்டிடக் கோலெடுத்தான் -அங்கே புதுமைகள் பற்பல தான்கொடுத்தான் வறுமைப் பகையொடு போர்தொடுத்தான்-மக்கள் வளமுடன் வாழ்ந்திடச் சீர்கொடுத்தான் சிறுமைக் குறைகளை வேரெடுத்தான்-ஆண்மைச் சிங்கமென் றோங்கிடும் பேரெடுத்தான் நலமிகும் ஆட்சியொன் றேவிரித்தான்-யாவும் நாட்டவர்க் கேபொது வென்றுரைத்தான் குலமகன் மன்னவன் போற்சிரித்தான்-என்றும் கோட்டைகள் கட்டிட வேகுறித்தான் கற்பனை நாட்டையே மேல்நினைந்தான்-மண்ணில் கட்டிய வீட்டினைத் தான்மறந்தான் முற்பட மாந்தரை யேநினைந்தான்-கொண்ட மொய்குழல் மாதினைத் தான்மறந்தான் பாட்டுல குக்கவன் சோறளித்தான்-பாரில் பைந்தமிழ்க் கோவெனப் பேரெடுத்தான் வாட்டம ளித்திடும் சோர்வினைத்தான்-சொந்த வாழ்வினில் கண்டுகண் ணீர்வடித்தான் சோறின்றிப் பற்பல நாள்கழித்தான்-சூழும் துன்பங்கள் போக்கிடத் தான்விழித்தான் மாறொன்று கண்டிலன் வாழ்வினிற்றான்-அந்த மன்னவன் கற்பனை வாழ்வெடுத்தான் சிந்தனை யாலவன் வான்பறப்பான்-தன்னைச் சேர்ந்திடும் துன்பமெ லாம்மறப்பான் நொந்துழல் வேளையி லேசிரிப்பான்-அந்த நூலவன் வேதனை யார்துடைப்பார்? 26 கவிதைக் காதலி இன்பங்கள் சூழ்கின்ற போது-நெஞ்சை எட்டிப் பிடித்துக் களிப்பிக்கும் மாது துன்பங்கள் வந்துற்ற போதும்-என்னைத் தொட்டுப் பிடித்துக் களிப்பாளெப்போதும் கலைமாதின் உள்ளமோ வெள்ளை-என்றன் கலிதீர்க்க வந்தாடும் போதிலோர் பிள்ளை அலைமோதும் துன்பத்தில் *தள்ளை-வஞ்சி †MáÇa¤ தருகின்ற இன்பமோ கொள்ளை தனியாக நான்வைகும் வேளை-என்பால் தாவிக் குதித்துச் சிரிப்பாள்அப் பாவை இனிதாக வாய்த்துள்ள கோவை-வாயால் ஈந்தாளே அவ்வின்பம் எந்நாளும் தேவை கண்ணுக்குள் கண்ணாக நிற்பாள்-காதல் காட்டாற்று வெள்ளைத்தைக் கண்டேத விப்பாள் பெண்ணுக்குள் ஒன்றாகி நிற்பேன்-ஆ ஆ பேரின்பம் பேரின்பம் விண்ணுக்கும் அப்பால் கவிமாது முன்வந்த காலை-இன்பங் காணாமல் கூடாமல் வேறென்ன வேலை? அவளாகத் தான்வந்து மாலை-சூட்டி அணைப்பாள் தொடுத்தே கொடுப்பேன்பா மாலை கண்காட்டி விட்டங்குச் செல்வாள்-நானும் கைகாட்ட என்பால்வந் தேதேதோ சொல்வாள் பண்காட்டும் பாட்டொன்று சொல்வேன்-இன்னும் பாடென்று பாடென்று நெஞ்சிற்பு கல்வாள் நெஞ்சங்கள் ஒன்றாகும் போது-மற்ற நினைவேதும் இல்லாமல் செல்வேன் விண்மீது கொஞ்சுங்கள் கொஞ்சுங்கள் என்றே-வஞ்சி கொண்டாடி மன்றாடிக் கெஞ்சுவாள் நின்றே என்பாட்டில் இன்பங்கள் கண்டாள்-விஞ்சும் எழில்கொண்ட பொற்பாவை நீள்காதல் கொண்டாள் பின்பாட்டுப் பாடாமை கண்டாள்-என்னைப் பித்தாக்கி நீங்காத சொத்தாக்கிக் கொண்டாள் 27 இளைஞர்களே கேளுங்கள் இளையவரே ஒன்று கேளுங்கள்-சொல்லும் என்மொழி கேட்டே வாழுங்கள் பழகிட என்முன் வாருங்கள்-நல்ல பண்புடன் நீர்முன் னேறுங்கள் கலைகளைக் கற்றே தேருங்கள்-அங்கே கற்பதை வாழ்விற் சேருங்கள் நிலைகளை இங்கே பாருங்கள்-கையை நெஞ்சினில் வைத்தே கூறுங்கள் அரசியற் பாடம் போற்றுங்கள்-போற்றி அறிவினை நெஞ்சில் ஏற்றுங்கள் அரசியற் போரில் நாட்டங்கள்-செல்லின் அய்யோ சூழும் வாட்டங்கள் உடைகளைச் சற்றே மாற்றுங்கள்-நாட்டின் உடைமைகள் எல்லாம் போற்றுங்கள் கடமையைச் செய்தே காட்டுங்கள்-கெட்ட கயமையைத் தூவென் றோட்டுங்கள் பொதுவிடம் நீங்கள் செல்லுங்கால்-செய்யும் புன்செயல் யாவுந் தள்ளுங்கள் எதுசரி என்றே சொல்லுங்கள்-பின்னர் எவ்வழி நன்றோ செல்லுங்கள் சாதியின் வேரை வெட்டுங்கள்-நெஞ்சில் சமநிலைப் பண்பை ஒட்டுங்கள் மேதினி எல்லாஞ் சுற்றுங்கள்-அங்கே மேன்மைகள் கண்டே பற்றுங்கள் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள்-போக்க வழிவகை கண்டே கொள்ளுங்கள் தாழ்ச்சிகள் எல்லாந் தள்ளுங்கள்-சோம்பிடத் தளர்வதை நீங்கள் எள்ளுங்கள் மொழிபல கற்கச் செல்லுங்கள்-ஆனால் முத்தமிழ் உயிராச் சொல்லுங்கள் இழிசெயல் சாய்த்தே வெல்லுங்கள்-நாட்டில் எழில்வளங் காண நில்லுங்கள் 28 துயரக் கவி குரல்மறந்த குயிலானான்-நீந்தும் குளமிழந்த கயலானான் இறகொடிந்த மயிலானான்-வாழ்வில் இடருழந்தே மயலானான் ஒலியிழந்த மணியானான்-பார்வை ஒளிமறைந்த விழியானான் கலிமிகுந்த துயராலே-பாவம் களைதுறந்த முகமானான் முகில்படர்ந்த நிலவானான்-தூசு முழுதடைந்த சிலையானான் துகில்வளைந்த படமானால்-சோகச் சுவரெழுந்த மனையானான் துயர்படர்ந்த கவியானான்-இன்பச் சுவைமறந்த கலையானான் புயலெழுந்த புவியானான்-துன்பப் புகைபுகுந்த விழியானான் நரம்பறுந்த யாழானான்-போரின் நடுவொடிந்த வாளானான் சுரும்பிருந்தே சூழாமல்-தேனின் துளியிழந்த பூவானான் கவிபொழிந்த முகிலம்மா-பாடற் கனிமிகுந்த பலவம்மா தவிதவிக்க விடினம்மா-யார்தான் தலைவனுக்குப் புகலம்மா? 29 தமிழுக்கு என்னைத் தருவேன் 56-ஆம் பிறந்தநாளன்று பாடியது சுற்றிவ ளைத்திடு மெத்துய ரத்தையும் சுட்டுமு டித்ததை-எறிவேனே சொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும் சொற்றமி ழுக்கெனைத்-தருவேனே தொற்றிய ணைத்தவ ளைப்பெறு மக்களைத் தொட்டிடர் பற்றினும்-மருள்வேனோ? சொக்கிட வைத்திடும் எப்பொருள் கொட்டினும் தொட்டுளம் விற்றிட- வருவேனோ? கற்றம னத்தினிற் குற்றம கற்றிடும் கட்டழ குத்தமிழ்-மொழிமாதே கத்துக டற்புவி மெத்தம டத்தனம் கற்றடி மைப்படத்-தரியேனே பெற்றநி லத்தினர் உற்றஇ டுக்கணைப் பிய்த்தெறி யத்திறம்-அருள்வாயே பித்தம னத்தினர் நற்றெளி வுத்திறன் பெற்றிட நற்கவி-பொழிவேனே. 30 மாந்தன் கற்பனை கற்பனைமிக்கான் உலகில்-அதனால் கடவுளைத் தந்தான் சிலையில் அற்புதஞ் சொன்னான் கதையில்-நல்ல அறிவைம றந்தான் தரையில் கல்வியைக் கற்பனைக் கண்ணால்-கண்டு கலைமகள் என்றவன் சொன்னான் பல்வகைச் செல்வமுங் கண்டான்-தெய்வப் பற்றால் திருமகள் என்றான் தோற்றமும் வாழ்தலுங் கண்டான்-செத்துத் தொலையும் ஒடுக்கமும் கண்டான் நாட்படு கற்பனை கொண்டான்-மூன்றும் நான்முகன் மாலரன் என்றான் பூமியுந் தேவியில் சேரும்-தோற்றப் பொலிவொரு மன்மதன் ஆகும் சாமியென் றெத்தையும் கூறும்-மாந்தன் சாற்றிய கற்பனை பாரும் வானுயர் கோபுரங் கட்டிக்-கோவில் வாயிலில் வந்துகை கட்டித் தானொரு மண்குடில்கட்டி-வாழ்ந்து தலையெழுத் தென்றவன் மட்டி அருள்தரும் ஆண்டவன் என்றான்-மக்கள் அன்பினை நெஞ்சினில் கொன்றான் பொருள்தரும் என்றுபு கன்றான்-உழைக்கும் பொழுதெலாம் சோம்பலில் நின்றான் குற்றங்கள் எல்லாம் புரிவான்-சுற்றிக் கோவிலி னுள்ளே வருவான் முற்றிய தேங்காய் தருவான்-பாலும் மொய்த்துள பூவுஞ் சொரிவான் அத்தனைப் பாவமுந் தீரும்-என்றே அங்கவன் நம்பியே கூறும் பித்தனைப்போலஎல் லாரும்-செய்தால் ‡ÕiHfŸ எப்படித் தீரும்? 31 ஏறு முன்னேறு உழைப்புக்கு நல்லதோர் காலம்-வந்தால் ஓங்கிவ ளர்ந்திடு மேயிந்த ஞாலம் பிழைப்புக்குப் போடாதே தாளம்-சென்று பின்பாட்டுக் கூட்டத்தில் பாடாதே மேலும் தன்மானம் ஒன்றையே நாடு-பெற்ற தாயகந் தானுனக் கெப்போதும் வீடு எந்நாளும் பாட்டாளி யோடு-கூடி எங்கெங்குந் தோளேற்றிப் படவேண்டும் பாடு எங்கெங்குக் காணினுந் தேம்பல்-மக்கள் எவ்வெவர் வாழ்விலும் இன்பங்கள் கூம்பல் பொங்கிப்ப டர்ந்திடும் சோம்பல்-கொண்டு போற்றிவ ளர்த்ததால் வந்ததித் தீம்பு சோம்பலை மாய்த்திடல் வேண்டும்-நின்றன் தோளில்உ ழைப்பினைச் சேர்த்திடல் வேண்டும் மாம்பழக் கொட்டையைத் தோண்டி-நட்டு மாஞ்செடி தந்திடும் மந்திரம் வேண்டாம் உன்னை உழைப்பினை நம்பு-யாரோ ஓதிய வேதத்தை நம்பினால் வம்பு பொன்னை வளர்த்திடுந் தெம்பு-நாட்டிற் பூத்துக் குலுங்கிட நாடிக் கிளம்பு ஆலைத் தொழில்புரிந் தாலும்-பள்ளி ஆசிரி யப்பணி ஏற்றிருந் தாலும் சீலைத் தொழில்புரிந் தாலும்-எங்கும் சீருடன் நின்கடன் ஆற்றுக நாளும் நாட்டையும் உன்னையுஞ் சேர்த்து-நெஞ்சில் நாளும் நினைத்தே உழைத்திடும் வேர்த்து வீட்டையும் நாட்டையும் பார்த்து-தம்பி வீறுகொண் டேஎழு தோள்களை ஆர்த்து eh‹Kf‹ c‹k©il x£oš-Vnjh eh£od‹ v‹gij beŠirÉ£ nlh£oš V‹tW ik¤Ja® eh£oš?-j«ã ஏறுமுன் னேறுழைப் பாலுயர் கோட்டில் 32 மலர் தந்த பாடம் அரும்பிச் சிரிக்குஞ் சிறுமலரே-நெஞ்சை அள்ளிக் கவரும் எழிலுருவே விரும்பிக் கிடக்கும் எனதுளமே-நின்பால் வீசும் மணமும் நுகர்வுறவே இதழை விரித்தே நகைபுரிவாய்-வண்டோ ஏழிசை பாடச் சுவைதருவாய் புதுமைப் பொலிவால் நலந்தருவாய்-மாதர் போற்றிப் புகழும் நிலைபெறுவாய் விரியும் இதழில் சிறுபணிகள்-காலை வீழும் பொழுதில் பெறுமழகு பரிதிக் கதிரால் மெருகுபெற-நின்னைப் பார்த்துக் களிப்பேன் இருவிழியால் உருவாய் வருங்கால் அரும்பென்பார்-நின்றன் உடலோ பருத்தால் போதென்பார் சிறிதே விரிந்தால் மலரென்பார்-கீழே சிதறி விழுந்தால் *வீஎன்பார் உலகில் பிறந்தாய் மணந்தந்தாய்-மாதர் உள்ளம் மகிழத் துணைநின்றாய் இலகும் எழிலைப் பிரிகின்றாய்-வாடி எங்கோ-தரையில் உதிர்கின்றாய் இருக்கும் பொழுதில் பிறர்மகிழ-உன்னால் இயலும் வகையால் உதவிடுக குறிப்பு மொழியால் அறிவுரையை-என்பால் கூறி முடித்தாய் நினதுயிரை அழகும் மணமும் நிலையலவே-பாரில் ஆடி யடங்கும் முறையுளதே குழையும் மனத்தில் அருள்பெறுவேன்-மக்கள் குலமே உயர உதவிடுவேன் குளிரும் மலரே ஒருமொழியை-உன்பால் கூற நினைத்தேன் செவிவழியே தளரும் நிலைதான் வருபொழுதும்-மாந்தர் தமக்கே கொடுப்பேன் எனதுயிரை. 33 அவன் கண்ட பலன் சாற்றுக் கரும்பது தோற்றுப் பிறக்கிடச் சாற்றுகி றான் கவிதை-வீட்டில் சோற்றுப் பருக்கையை ஆக்கிப் படைத்திடச் சுற்றுகி றாள் மனைவி நூற்றுக் கொடுத்திடும் பாட்டுப் புனைந்துபல் நூற்றினும் மேல் தருவான்-அந்தோ நேற்றுத் துவைத்தது மாற்றுத் துணியிலை நேரிழை யாள் பகர்வாள் கண்டு வியந்திடக் கட்டி முடித்தனன் கற்பனையால் மனையே-அந்தப் பெண்டு மயங்கிடப் பிள்ளை சுருண்டிடப் பெற்றனன் சோ தனையே உண்டு களித்திட ஊருக் களித்தனன் ஒப்பறு பா வமுதே-அந்தத் தொண்டு மனத்தவன் கண்டு சுவைத்தது தொல்லையின் வாழ் வதுவே பாடிக் கொடுத்தவன் சூடக் கொடுத்தனன் பைந்தமிழ்ப் பா மலரே-உள்ளம் வாடிக் கிடந்தனன் வாழ்விற் கலங்கினன் வண்டமிழ்ப் பா வலனே கூடிக் கிடந்தவர் ஓடிப் பிரிந்தனர் கொண்டனன் ஒர் கவலை-என்றும் ஆடித் திரிந்தவன் வாடிப் பொழிந்தனன் அம்ம! கண் ணீர்த் திவலை மட்டித் தனங்களைச் சுட்டுப் பொசுக்கிடும் மாவலி கொண் டவன்தான்-தன்னைக் கட்டிப் பிடித்துடல் தொட்டுச் சுவைத்திடும் காலனை வென் றவன்தான் கட்டிப் பிடித்தொரு விண்ணை வளைத்ததில் ஏறிந டந் தவன்தான்-கண்ணீர் கொட்டிச் சொரிந்திட மண்ணிற் கிடந்திடர் கூடிக்கி டந் தனனே! 34 எல்லாம் கலப்படம் உண்பொருள் எல்லாங் கலப்படம்-பேசும் உண்மையில் பொய்யுங் கலப்படம் கண்படும் யாவுங் கலப்படம்-இங்கே கண்ணியம் எங்கே உருப்படும்? பண்புகள் எல்லாங் கலப்படம்-எண்ணிப் பார்ப்பவர் நெஞ்சில் புலப்படும் மண்படும் எண்ணெய் கலப்படம்-வஞ்சர் மண்டையில் கூடக் கலப்படம் செந்தமிழ்ப் பாட்டில் கலப்படம்-நெஞ்சில் சிந்தனை பேச்சில் கலப்படம் சந்தனப் பூச்சில் கலப்படம்-கோவில் சாமிகள் கூடக் கலப்படம் நெய்திடும் நூலில் கலப்படம்-நல்ல நெய்தரும் பாலில் கலப்படம் செய்தொழில் யாவுங் கலப்படம்-கள்வர் செய்கையின் பேரே கலப்படம் வாணிகர் வேலை கலப்படம்-இங்கே வள்ளலில் கூடக் கலப்படம் தோணிகள் ஏறுங் கலப்படம்-நாட்டின் தூயநல் மானம் புறப்படும் நோய்மருந் தெல்லாங் கலப்படம்-வந்த நோய்களும் எங்கே சரிப்படும்? காய்கனி கூடக் கலப்படம்-காவல் காத்திடுஞ் சட்டங் கலப்படம் ‡ntªâaš காரர் கலப்படம்-அன்னார் வீட்டினுள் சென்றால் வெளிப்படும் மாந்தருக் கெல்லாம் வெளிப்படை-ஆனால் மாற்றிடத் தானே பொறுப்பிலை jhaf¥ ngiu¡ bfL¤âo‹-Ûsh¤ j©lid jªjhš rÇ¥gL« thŒbkhÊ¥ ng¢rh âU¤âL«?-brh‹dhš வஞ்சகர்க் கெங்கே புலப்படும்? 35 கலையாம்! தொழிலாம்! திரைப்படம் என்றொரு தொழிலாம்-மாதர் மறைப்பிடம் என்பதங் கிலையாம்! cU¥gL khvʼn fiyah«!-Inah உரைத்திடின் மானமும் விலையாம்! கடைத்தொழில் உண்டெனில் அதுதான்-காசு கிடைத்திடச் செய்வதும் அதுதான் புடைத்தெடுத் தாலது உமிதான்-நெஞ்சைக் கெடுத்திடச் செய்திடும் மதுதான் பதுக்கலைக் காட்டிடும் கதையாம்-அங்கே பிதுக்கிய மாதரின் சதைதான் புதுக்கலை என்றொரு விதமாம்-பண்பைப் புதைத்திட வந்திடும் சதிதான் நெறிப்படும் போக்கினில் இலையே-காம வெறிப்பட ஆக்கிடும் வலையே சரிப்பட செய்பவர் இலையே-பண்பை முறித்திடச் செய்வதொர் கலையோ? துணிந்திடும் மாதரும் உருள்வார்-கட்டிப் பிணைந்தவர் போதையில் புரள்வார் அணைந்திடில் தான்புகழ் வருமாம்-அந்தோ! அணைந்தது பெண்மையும் பொருளால் நகைத்திட மெல்லுடல் வளைவார்-பெண்மை திகைத்திடக் கோணலில் குழைவார் தகைத்திடும் ஆடையைக் களைவார்-அந்தோ புகைப்படங் காட்டிட அலைவார் gL¤âL« fhjy® miwÆš-cŸns el¤âL« brŒifia¤ âiuÆš gil¤âlš jhbdhU fiyah?-g©ig முடித்திட வேஎழும் கொலையா? கலைப்பெயர் சொல்லியே திரிவார்-கெட்ட புலைத்தொழில் ஒன்றையே புரிவார் நிலைத்திடு சிந்தனை யறிவார்-இங்கே தலைப்படி னேநலம் உருவாம் kl¤jd« Ä¡fd® klth®-M©fŸ jL¤ây® K‰gl *Äilth® Fo¤jdª jhDU¥gLkh?-mªj¥ படத்தொழில் தான்சரி படுமா? 36 உலகம் எங்கள் கையிலே! குலுக்கிக் குலுக்கி ஆட்டுவோம்-உடலைக் குனிந்து நிமிர்ந்து காட்டுவோம் துலக்கி ஆசை ஊட்டுவோம்-எம்மைத் தொடருங் காசைக் கூட்டுவோம் காமஞ் சொட்டப் பாடுவோம்-ஆடை கலைய விட்டே ஆடுவோம் காமக் காட்சி நாடுவோம்- அந்தக் கலையை வளர்க்கக் கூடுவோம் நடிப்பை முகத்தில் தேக்கினால்-எவரே நயந்து வந்து பார்க்கிறார்? இடுப்பை வளைத்துக் காட்டினால்- மொய்க்கும் ஈக்கள் போலக் கூட்டமே முகத்தில் உணர்ச்சி கூட்டினால்- எந்த மூடன் வருகை காட்டுவான்? அகத்தில் உணர்ச்சி ஊட்டினால்- கூட்டம் ஆட்டு மந்தை காட்டுமே. பெண்மை நாணம் பேசினால் - எங்கள் பேரும் புகழும் வீசுமோ? உண்மை கண்டு கூசுவோம்-எங்கள் உலகம் யாவும் பாசமே வீணிற் பண்பு செப்பினால்-நாங்கள் விசிறி சேர்ப்ப தெப்படி? நாணம் மானஞ் செப்பினால்-நாங்கள் நடிகை யாவ தெப்படி? கலைகள் கலைகள் என்றெலாம்-சொல்லும் கதையை நீங்கள் நம்பலாம் கலையும் ஆடை ஒன்றலால்-வேறு கலையின் சாயல் கண்டிலோம் கலையின் நுண்மை கற்றுளார்-வாழக் கையில் என்ன பெற்றுளார்? உலகம் எங்கள் கையிலே-மக்கள் உள்ளம் எங்கள் மெய்யிலே 37 மண் குதிரை திரைப்பட மாவுன் வழிகாட்டி-* பேழ்வாய்த் திமிங்கல மாவுன் படகோட்டி? நரிக்குண மாஇத் திருநாட்டில்? விட்டால் நடைப்பிண மாக்கும் குழிகாட்டி cU¥go kh‰w tÊfh£L«-nt©lh x¥gid brŒa tÊfh£L« cU¥gl theš tÊfh£L«?-g©ig ஒழித்திட வன்றோ வழிகாட்டும்! Ãiy¤âL kh *k© gÇah‰¿š?-Úªj நினைத்தனை யாயின் தடுமாற்றம் உலர்த்திய மீனைப் புனலாற்றில்-விட்டால் உயிர்த்தெழு மென்றா அதையே ற்றாய்? கவர்ச்சியில் ஒங்குங் கலைகாட்டி-உன்னைக் கவிழ்த்திடப் பார்க்கும் வலைநீட்டி தவிர்த்திடு தோழா! மனையாட்டி-போலத் தலைப்படு வாளா விலையாட்டி? 38 காதற் காவியம் இலக்கியம் ஒன்று படைப்போம்-காதல் இலக்கணம் முழுமையும் அதனுள் அமைப்போம் இலக்கியம் மலர்த்தொடை அªâL« மாதே வருவாய் மனத்தெழும் உணர்ச்சியை இதழ்வழி தருவாய் - இலக்கியம்... ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு கதையாம் ஒன்றினில் ஒன்று விஞ்சிய சுவையாம் எவ்வகைத் தடையும் இடுபவர் இலையாம் எடுத்ததை இரவெலாம் படித்திடும் கலையாம் - இலக்கியம்... படித்திடப் படித்திடப் புதியன கிடைக்கும் பலமுறை முடிப்பினும் விழைவினைக் கொடுக்கும் படித்தபின் நினைப்பினில் இனிமையைப் படைக்கும் பயனாய் இலக்கியப் பரிசிலும் கிடைக்கும் - இலக்கியம்... 39 கவிதை உலகு . மறந்தேன் உன்னுள் கலந்தேன் எழுந்தது புதுவித உணர்வு-பின்னே எத்தனை எத்தனை கனவு- கண்ணே இதுதான் கவிதை உலகு விண்ணில் மிதந்தேன் மண்ணை மறந்தேன் விரிந்தது கற்பனைச் சிறகு-வான வெள்ளிகள் தண்முகில் உறவு-தந்த விளைவே கவிதை உலகு நெஞ்சம் நெகிழ்ந்தேன் அன்பில் நனைந்தேன் நிறைந்தது வளர்ந்தது கனவு-இன்பம் நிகழ்த்திய நாடக நினைவு-தந்த நிழலே கவிதை உலகு சூழல் துறந்தேன் யாவும் மறந்தேன் சுழன்றது பறந்தது கவலை- அடடா சுரந்தது நெஞ்சினில் உவகை-அந்தச் சுவடே கவிதை உலகு 40 இதுதான் அவர் வேலை இதுதானடி அவர்வேலை-என்னை ஏறிட்டும் பார்ப்பதில்லை அந்தக் காளை - இதுதான் பொதுவான உலகொன்று வேண்டுமாம் அங்குப் பொருள்யாவும் சமமாக வேண்டுமாம் தோழி - இதுதான் அரங்கேறிப் பேசுங்கால் அயராத அருவி அவர்பேச்சில் மயங்காத பேரில்லை உருகி உறங்காத விழியோடு புரள்வேனை மருவி ஒருபேச்சுப் பேசத்தான் பொழுதில்லை அறிநீ - இதுதான் வாழ்வுக்கு வழிகாட்டுங் கவிமாலைதொடுப்பார்வறியோர்தம்துயரங்கள்கண்டுள்ளந்துடிப்பார்தாழ்வுக்குப்பலியானோர்கண்ணீரைத்துடைப்பார்தமியாளின்விழிநீரைக்காணாமல்நடப்பார் - ïதுதான் 41 Xl¡fhu‹ ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று - ஓடத்தான் சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான் - ஒடத்தான் ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும் - ஓடத்தான் வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம் - ஓடத்தான் தீரத்தான் தந்தான் முல்லை-கலி தீரத்தான் வந்தான் இல்லை †Xu¤jh‹ நேரம் இல்லை-ஆற்றின் ஓரத்தான் வரவே இல்லை - ஓடத்தான் கூடத்தே கோலம் வைத்தேன் எழிற் கோலத்தை மேலில் வைத்தேன் கூடத்தான் ஆசைவைத்தேன்-*பள்ளிக் கூடத்தான் வரவே இல்லை - ஓடத்தான் njl¤jh‹ ahnu bršth®!-Ja® தேயத்தான் யாரே சொல்வார்? பாடத்தான் நெஞ்சே சொல்லும்-காதல் பாடத்தான் வரவே இல்லை - ஓடத்தான் ஆடத்தான் வைத்தான் என்னை-புனல் ஆடத்தான் வைத்தான் கண்ணை வேடத்தான் பொய்த்தான் சொல்லை-காதல் வேகத்தான் வரவே இல்லை - ஓடத்தான் 42 தேன் கூடு (தமிழ்நாட்டு அமைச்சரவை கலைக்கப்பட்டபோது பாடியது) தென்மலைச் சாரலில் தேன்நிறை கூடு-கட்டத் தேன்சுரும் பாயிரம் பட்டன பாடு பொன்மலை மீதினில் பூமலர்க் காடு-முற்றும் போய்வந்து தேன்மிக தேக்கிய வீடு புன்மனப் பிள்ளையர் கண்டழுக் காறு-கொண்டு பொங்கினர் வீசினர் வீண்மணற் சேறு நன்மன வண்டுகள் கொண்டன வீறு-சென்று நாண்மலர் தேடின நாடொறும் நூறு ஆயிரம் சூழ்ச்சிகள் செய்தனர் கூடித்-தீயர் ஆடினர் நாடகம் மேடையில் பாடி போயின போயின சூழ்ச்சிகள் ஓடி-மாயப் பொய்ம்மைகள் வீழ்ந்தன வேருடன் வாடி ஆனிரை மேய்ந்திடும் ஆங்கொரு காடு-தன்னில் ஆடிடும் பெண்மகள் தீங்குயிற் பேடு வானுயர் சாரலில் தேன்விளை கூடு-கண்டு வாயுற வாழ்த்தினள் அன்புளத் தோடு வாழ்த்திய வாழ்த்தொலி பிள்ளையர் காது-புக்கு வாட்டிட எண்ணினர் வேறொரு சூது வீழ்த்திட வேண்டினர்; ஆமெனும் மாது-கல்லை விட்டெறிந் தாள்மலைச் சாரலின் மீது வீசிய கல்நுனி கூட்டினில் பட்டுக் கீழே வீழ்ந்திடும் தேன்துளி பிள்ளையர் தொட்டுப் பூசினர் நாவினில் கூசுதல் விட்டுப்-பின்னும் பூமியில் தூற்றினர் நாநயம் கெட்டு கோடுயர் தென்மலை தாழ்வதும் இல்லை- தேனின் கூடுள சாரலும் வீழ்வதும் இல்லை காடுகள் மேடுகள் பூத்துள முல்லை-மொய்த்துக் கட்டிடும் *தேனினம் கூட்டினை †xšiy தேனினம் சஞ்சலம் விட்டன கூடி- மீண்டும் தேடிடும் பாடிடும் பூவினை நாடி வானுயர் மாமலைக் காவினில் பாடிச்-சென்று வந்திடும் வென்றிடும் வாகைகள் சூடி 43 அவன் தான் இறைவன் தனக்கென வாழ்பவன் ஒருவன்-அவன் தாங்கிய வடிவம் மானிட உருவம் - தனக்கென தனக்கும் பிறர்க்கும் வாழ்பவன் மனிதன்-அவன் தந்ததோர் பிறவியைப் போற்றிடும் இனியன் - தனக்கென தனக்கென முயலான் பிறர்க்கென முயல்வான் தன்னையும் பொன்னையும் அவர்க்கெனத்தருவான் மனத்துயர் சூழும் பொழுதினும் அயரான் மதியான் தன்னலம் அவன்தான் இறைவன் - தனக்கென நிலத்தினில் தோன்றும் எப்பொரு ளாயினும் நிறைபயன் பிறர்பெறப் பயன்பட லாயின புலப்படும் அறிவோ ஆறுள வாயினும் புரிந்திலன் பொதுநலம் அவனா மானிடன்? - தனக்கென 44 உலக நாடகம் உலகம் ஒரு நாடகம் - அதில் ஒவ்வொரு மனிதனும் போடுவான் வேடம் - உலகம் நிலவிய அரங்கம் இல்லாமல் நடிப்பான் நினைப்பதை முடித்திடச் சுரங்களும் பிடிப்பான் - உலகம் இரவினில் போடும் எழில்மிகு வேடம் எதுதான் காணும் பகல்வரும் போது? பொருள்வரும் வேளை உறவுகள் கூடும் போனபின் எங்கோ புகுந்திட ஓடும் - உலகம் தாளமும் உண்டு மேளமும் உண்டு தாந்திமி தோமென ஆடலும் உண்டு வேளைகள் கண்டு பாடலும் உண்டு விடிந்ததும் ஓடும் கிடைத்தது கொண்டு - உலகம் சொல்லதில் வேந்தன் நடித்திடும் போது சொன்னதைத் தாண்டும் திரைவிழும் போது நல்லவன் மாந்தன் கதிர்வரும் போது நாயினும் கீழாம் அதுவிழும் போது - உலகம் அரங்கினில் நின்றால் அவனொரு பாரி அதன்பின் என்றால் படு *முல்லை மாறி இரங்கிடச் செய்வான் இனியவை கூறி ஏய்த்தபின் செல்வான் பிறர்நலம் வாரி - உலகம் 45 குழம்பிய உலகம் கள்ளர்கள் எல்லாம் வள்ளல்க ளென்றால் கண்ணியம் என்றொரு சொல்கிடையாது கொள்ளைக ளெல்லாம் வாணிகம் ஆனால் குடியர சென்றிட வாயினி ஏது? தந்நல மொன்றே வாழ்வெனக் கொண்டோர் தலைவர்கள் போலே வேடம ணிந்தார் அந்நிலை ஏதும்அறிகிலர் மாந்தர் ஆந்தையை மாங்குயில் என்றுநி னைந்தார். கோழைக ளெல்லாம் நாடகம் ஆடிக் கூத்திடு கின்றார் வீரர்கள் போலே தாழைகள் எல்லாந் தேக்குகள் என்றார் தாளங்கள் போட்டதை நம்புவ தாலே. எருக்கிலைப் பூவைத் தெருக்களில் விற்றால் எத்தனை எத்தனைப் பேர்வரு கின்றார்! மருட்கொளி போலே சூடியுங் கொண்டார் மல்லிகை முல்லையை ஏன்வெறுக் கின்றார்? மிஞ்சிய காமம் மேனியிற் சாயம் மேவிய தொழிலைக் கலையெனச் சொன்னால் அஞ்சிடல் அன்றி ஆறுதல் உண்டோ? ஆருயிர்ப் பண்புகள் அழிந்திடும் இந்நாள். உரைநடை எல்லாம் பாடல்க ளென்றால் உயரிய கவிதை நிலைஎன் னாகும்? வரைபட மெல்லாம் ஓவிய மென்றே வாழ்த்தொலி கூறின் வாழ்கலை சாகும்! கருச்சிதை வெல்லாம் பிள்ளைகளென்றால் கண்டவர் ஏளனம் செய்திடு வாரே தெருப்படி யாகித் தேய்ந்திடுங் கவலைத் தெய்வமென் றாலதை நம்புவர் யாரே! போலிக ளெல்லாம் உண்மைகள் என்றால் பூமியில் நன்மைகள் வாழ்வதும் ஏது? வேலிக ளெல்லாம் பைம்பயிர் ஆனால் விளைநில மென்றொரு சொல்கிடையாது. நல்லது கெட்டது கண்டறி யாது நடந்திடும் செம்மறி யாடுகள் போலே செல்கிற மாந்தர் சேரிடம் எங்கோ? சிந்தைகள் யாவும் குழம்பினர் அந்தோ! 46 கவி மயக்கம் ஓய்ந்து போன என்னுள்ளம்-உன்னுள் தோய்ந்த போதுதான் இன்பம்! இன்பம்! - ஓய்ந்து காய்ந்து வாடுமென் வாழ்வில்-இன்பக் காதல் நீருடன் சூழ்வாய்! சூழ்வாய்! - ஓய்ந்து கனவும் இல்லை நனவும் இல்லை கானல் நீரா? அதுவும் இல்லை மனமும் மயங்கும் மதியும் மயங்கும் மதுதான் என்றால் அதுதான் இல்லை - ஓய்ந்து இரவும் இல்லை பகலும் இல்லை இணைவிழி தாமோ உறங்கவும் இல்லை உறவும் இல்லை பகையும் இல்லை உளமொரு கடலோ? கரையே இல்லை - ஒய்ந்து விண்ணும் இல்லை மண்ணும் இல்லை வெற்றிட மோஎனில் அதுவும் இல்லை கண்ணில் காணாக் கற்பனை இல்லை கவிமகள் உன்னைப் போல்பவள் இல்லை - ஓய்ந்து உயிரில் உணர்வாய் உணர்வில் உயிராய் உளமெனும் அரங்கில் திருநடம் புரிவாய் பயிரில் மணியாய் மணியுள் பயிராய் பயில்பவ ளேநீ மருவிட வருவாய் - ஓய்ந்து 47 நல்ல நேரம் இதுதான் நல்ல நேரம் - சோம்பி இருந்திடின் தம்பி துயர்வந்து சேரும் - இதுதான் எதுதான் இருப்பினும் இடர்தான் தடுப்பினும் புதுநாள் படைத்திடப் புலியே புறப்படு - இதுதான் இளமையை வீணே செலவிடல் நன்றோ? இதுபோல் பருவம் இனிமேல் என்றோ? வளமையைக் கல்வி வழங்கிடும் நன்றே வளர்ந்தால் நின்னை வாழ்த்திடு மன்றே - இதுதான் வைகறை ஒன்றே கற்றிடத் தோது வாய்ப்பிதை விட்டால் வந்திடும் தீது வைகலும் சென்றே பள்ளியில் ஓது வாய்மொழி கேட்டால் வெற்றிதப் பாது - இதுதான் 48 என் காதலி அவள்தான் எனக்குக் காதலி-என ஆவியில் மெய்யில் நடமிடும் மாதன் - அவள் எழுத்தென்னும் மலரெடுப்பாள் எழிலாகத் தொடைமுடிப்பாள் கழுத்தில்அசை படநடப்பாள் காலடியில் சீர்படைப்பாள் - அவள் தலைமயங்கச் சுவைகொடுப்பாள் தளையுண்டு தவங்கிடப்பாள் கலைவிளங்க எனை அணைப்பாள் கனவுலகை வரவழைப்பாள் - அவள் *பாவாடை அணிந்திருப்பாள் பயிர்போல விளைந்திருப்பாள் நாவாரக் கனிந்திருப்பாள் நான்பாட மகிழ்ந்திருப்பாள் - அவள் 49 அவளொரு காவியம் அவளொரு புதிய காவியம்-என்றும் அவள்தான் எனக்குயி ரோவியம் - அவள் கவரும் படியொரு நடையழகு-நெஞ்சில் கலந்தே சுவைதரும் மொழியழகு-கொண்ட - அவள் கைவளை சிலம்புடன் சந்தங்கள் காட்டும் காதொடு தோள்கள் அணிநலங் கூட்டும் மெய்யெழில் வாயிதழ் வண்ணங்கள் சேர்க்கும் மெல்லிய அவள்குரல் இன்னிசை வார்க்கும் - அவள் கருவிழி ஓரங் காதலைக் கண்டேன் கனியிதழ் ஓரம் நகைஎழில் கண்டேன் சுருள்குழல் மலரொடு தோள்களி ரண்டும் சுமந்திடும் இடைதனில் அவலமுங் கண்டேன் - அவள் பால்மொழி ஊடலில் வெகுளியைக் கண்டேன் பணிந்தபின் கூடலில் மருட்கையைக் கண்டேன் நால்வகைக் குணங்களுள் அச்சமுங் கண்டேன் நாணும் பொழுதொரு நாடகம் கண்டேன் - அவள் பயிலும் பொழுதோ நடுஇர வாகும் பாலும் பழமும் சரிநிகராகும் துயிலும் பொழுதோ ஒருசிறி தாகும் தொடரும் சுவையோ மிகப்பெரி தாகும் - அவள் 50 இசை மயக்கம் இசையால் மயங்கும் மயக்கம்-அதனை எதுதான் உலகில் நிகர்க்கும் - இசையால் கசியா மனமுங் கசியும்-முன்பு காணா உலகம் தெரியும் -நல்ல - இசையால் கள்ளின் மயக்கம் தெரியாது-சுவைத்துக் களித்தவர் தெருவழி வரும்போது கொள்ளும் மயக்கம் அறிவேனே-உவமை கூற நினைத்தால் முடியாதே - இசையால் வானில் மதியம் நடமாட-பொதியம் வாழும் தென்றல் இசைபாடத் தேனின் மொழியாள் உறவாட - வந்து சேரும் மயக்கம் நிகராமோ? - இசையால் 51 தமிழ் பாடத் தடையா? தமிழே உன் புகழ்பாட வாழ்வெடுத்தேன்-ஆசை தணியாமல் இசைகூட்ட யாழெடுத்தேன் - தமிழே இமைமூடும் விழியாலே எதுகாண முடியும்? எழில்யாழை உறைமூடின் எதுபாட இயலும்? - தமிழே நரம்பேழும் நலமாக முறுக்கேற வைத்தேன் - நீ நரம்போடு விளையாடும் விரல்சோர வைத்தாய் திறம்பாடி உயிர்வாழுங் குறியோடு நின்றேன்-நீ திரும்பாமல் முகங்கோடிச் சிலையாக நின்றாய் - தமிழே சுமையாகத் துயர்வந்தே எனைமோதல் முறையா? சுரம்பாடும் நரம்பொன்று பகையாதல் சரியா? எமையாளுந் தமிழேஉன் புகழ்பாடத் தடையா? இரங்காமல் இருக்கின்றாய் இதுதான்உன் விடையா? - தமிழே 52 மனம்போல் விளையாடு வந்ததை எழுது கண்டதை உளறு வளரும் புதுமையில் அதுதான் பாடலடா சந்தையில் இலக்கணம் சரிவரத் தெரிந்தவர் தவறியும் இல்லை அதனால் ஏடெடுநீ தெரிந்தவ ரிருப்பினும் தென்புடன் எழுந்தே செப்பிட மாட்டார் அதனால் பாடிடுநீ புகழ்வாய் ஒருநாள் இகழ்வாய் மறுநாள் புண்படப் பாடுக அதுதான் பொருள்தருமாம் இகழினும் புகழினும் இருகை ஒலியால் ஏற்பவர் மிகப்பலர் அதனால் புகழ்பெறுவாய் பண்புகள் உணர்ந்தவர் பார்தனில் அருகினர் பயப்பட வேண்டாம் அதனால் கவிதருவாய் முதல்நாள் ஒன்றும் மறுநாள் ஒன்றும் முரண்படப் பேசுக அதுதான் அரசியலாம் இதுதான் முறையா எனவுனைக் கேட்டால் இதுவே அரசியல் என்றே உரைசெயலாம் ஏனெனில் அரசியல் தெரிந்தவர் இல்லை இருப்பினும் துணியார் எனவே பறையறைவாய் கயமைகள் செய்வாய் செய்தவை எல்லாம் கரவா துரைப்பாய் அதுதான் நலந்தருமே நயமுடன் உண்மை நவின்றனை என்றே நாடுனைப் போற்றும் அதனால் விளம்பரமே சொல்லையும் செயலையும் ஒப்பிடத் தெரிந்தவர் சொல்லவும் மாட்டார் அதனால் முழங்கிடுவாய் களிமயக் குறுவாய்க் கன்னியர் நுகர்வாய் கடவுளின் பேரைக் கலந்தால் போதுமடா எளியவர் மாந்தர் எதனையும் ஓரார் எதுநீ சொலினும் அதுதான் வேதமடா மடமையில் மூழ்கி மதியை மறந்தவர் வாழ்தலி னாலுனை உலகே சூழுமடா 53 தானே வருவாள் எனக்கொரு காதலி இருக்கின்றாள்-அவள் ஏனழைத் தால்வர மறுக்கின்றாள்? kd¤Jl dhmtŸ btW¡»‹whŸ?-ïšiy மணந்திட வேஉளந் துடிக்கின்றாள் சாற்றைத் தரவே கனியோடு தானே வருவாள் கனிவோடு காற்றில் மிதப்பேன் அவளோடு கண்ணில் மூடும் இமையோடு ஆடகப் பொன்னின் சிலம்போசை அடடா மேகலை தரும்ஒசை நாடகம் ஆடும் வளையோசை நாடொறும் கூடும் எனதாசை †nghij என்பது விதையாகும் புலமை என்பது மழையாகும் காதல் என்பது வயலாகும் கவிதை என்பது பயிராகும் 54 அறிஞர் வாழ்க! அறிஞர் வாழ்கவே-பேர் அறிஞர் வாழ்கவே-இசைப்பேர் அறிஞர் வாழ்கவே - அறிஞர் நிறையும் ஞானம் பொழியுங் கானம் சொரியும் மேகம் தவழும் வானம் - அறிஞர் âUthŒ ky®ªjhš VÊir kz¡F« nj‹kiH nghyJ fhâÅš ïÅ¡F« xUfhš nf£ãD« beŠáid cU¡F« X!ஓ! அவர்புகழ் என்றுமே இருக்கும் - அறிஞர் இசையின் மயமாய் மேடையில் இருப்பார் இசைத்திடும் பாடலில் இரண்டறக் கலப்பார் அசையும் உடலால் இசை நயம் கொடுப்பார் அவரே மதுரைச் சோமுவென் றுரைப்பார் - அறிஞர் 55 யார் பொறுப்பார்? (நெருக்கடி நிலையிற் பாடியது.) அன்றொரு காவியம் ஆக்கி வைத்தேன் - அதில் ஆயிரம் கற்பனை தேக்கி வைத்தேன் இன்றொரு பாடலை ஆக்குகின்றேன்-மன ஏக்கத்தை நானதில் தேக்குகின்றேன் செந்தமிழ் வாழ்ந்திடச் சொல்லிவைத்தேன் -அதில் செய்வன யாவையும் அள்ளி வைத்தேன் வந்தது வாழ்வெனப் பாடிநின்றேன்-இன்று வந்தது கண்டுளம் வாடுகின்றேன் காவியம் பற்றியே தூற்றுகின்றார்-கொடுங் காரியம் என்னென்ன ஆற்றுகின்றார் நாவினை எப்படி மாற்றுகின்றார்-அட! நாட்டினில் பொய்ம்மையை ஏற்றுகின்றார் f‰gid ahití« ahuʤjh®?- அந்தக் காவிய ஏட்டினை யாரெடுத்தார்? பற்பலர் போற்றிடப் பேரெடுத்த-அந்தப் பாக்களை மாற்றிடின்யார் பொறுப்பார் 56 உறங்கிய வீணை (நெருக்கடி நிலையிற் பாடியது) உறங்கிய வீணையில் அடங்கிய ஓசையை ஒருநாள் கைவிரல் எழுப்பும்-செவி மறவா இனிமையைக் கொடுக்கும்-அது மாந்தரின் நெஞ்சினில் நிலைக்கும் எழுப்பிய ஓசையை அடக்கிடும் ஆசையில் எழுந்தால் மனமிகத் துடிக்கும்-தரும் இடரால் விழிபுனல் வடிக்கும்-பின் சுடர்போல் உணர்வுகள் வெடிக்கும் Û£oa Éušfis th£ol Ãid¤jhš nkâÅ v›Éj« bghW¡F«?-mJ தீ தென வேசொலி வெறுக்கும்-பின் தீமைகள் யாவையும் ஒறுக்கும் ïÅikÆš _œ»a ïUbrÉ mil¤jhš ïirjid kdkh kw¡F«?-Mir vGkl§ fynth ãw¡F«!-ã‹ இடர்தரும் யாவும் பறக்கும் 57 ஐந்து பூதம் நீரும் நெருப்பும் காற்றும் வானும் நிலமும் சேர்ந்தே உலகம தாகும் யாரும் இவற்றைக் கூறுகள் செய்யார் யாவும் இங்கே பொதுமையு மாகும் என்றன் நீரென உன்றன் நீரென எல்லைக் கோடுகள் போடுவதில்லை கனறும் நெருப்பில் உரிமைகொண் டாடக் கரைகள் அமைத்துக் காட்டுவதில்லை தென்றல் கொண்டல் என்றன ரன்றித் திரியும் காற்றைப் பிரித்தவ ரில்லை என்றும் வானில் எல்லைக ளமைத்தே எனதென் றிசைத்தவர் எவரும் இல்லை அஞ்செனும் பூதமும் ஆருயிர்ப் பொதுமை ஆயினும் மாந்தன் ஆக்கினன் புதுமை எஞ்சிய நிலத்தில் எல்லைகள் இட்டான் இதுதனி யுடைமை எனவிதை நட்டான். 58 என்னென்ன பேசுகிறான்! வந்த போதுதான் என்ன பேசினான்? செல்லும் போதுதான் என்ன பேசினாள்? வந்து வாழ்கிற போது மானிடன் வாயில் என்னென்ன பேசுகிறான்! மாலை கண்டதும் மேடை ஏறுவான் வாயில் வந்ததை வாரி வீசுவான் காலை வந்ததும் கோலம் மாறுவான் காசுக் கென்னென்ன பேசுகிறான்! யாரும் வாழ்ந்திடக் காணக் கூசுவான் யாவுங் கண்டது போலப் பேசுவான் பாரில் நேர்மையைத் தூக்கி வீசுவான் பாவி என்னென்ன பேசுகிறான்! கோள்கள் கூறியே சண்டை மூட்டுவான் கொள்கை வாதியைப் போலக் காட்டுவான் தேள்கள் வாழ்ந்திடும் நாவை நீட்டியே தீயன் என்னென்ன பேசுகிறான்! 59 ஏமாளி உலகம் எழுதிட நம்பும் பேசிட நம்பும் ஏமாளி உலகமடா-அதைப் பழுதற ஆய்ந்து பார்த்திடத் தெரியாப் பாழும் உலகமடா அச்சினில் வந்தால் அதுதான் வேதம் அப்படிப் பார்க்குமடா-சிலர் மெச்சிட மேடை ஏறிடின் அவனை மேலவன் ஆக்குமடா ஒருமுறை சொன்னால் உண்மையைப் பொய்யென் றுடனே இகழுமடா-பொய்யைப் பலமுறை சொன்னால் மெய்யென நம்பிப் பணிந்தே புகழுமடா யாரது சொன்னார் ஏனது சொன்னார் என்றே அறிவதில்லை-அட! யாரெது சொலினும் ஆறறி வுள்ளார் ஆடுகள் ஆகினரே 60 இருவகை மயக்கம் (கள்ளுண்டான் கவிமயக்கத்தில் பாடுவது.) இது ஒருவித மயக்கம் அது ஒருவித மயக்கம் இரண்டுக்குமேஒரு கால்தான் மயக்கம் இது மது அது மாது - இது ஒரு மதியினை மயக்கும் மதுவுணும் போது மனத்தினை மயக்கும் மலர்விழி மாது - இது ஒரு சொல்ல நினைத்தால் சொல்தடு மாறும் சொக்கிய விழிகளில் சுகமிக ஏறும் மெல்லிய ஆடையும் மெய்தனிற் சேரும் மேலுல கிங்கே வந்தெதிர் சேரும் - இதுஒரு உண்டதும் தலையில் ஏறிடும் போதை ஓ ஓ தரையில் மாறிடும் பாதை; கண்டதும் உணர்வில் மீறிடும் போதை கலந்தபின் அடடா ஊறிடும் காதல் - இது ஒரு 61 வாழுங் கவிஞன் கனவுகள் காண்பான் கவிஞன்-ஆனால் கண்விழி உறங்குவ தில்லை நனவுகள் ஆகும் புவியில்-அவனை நன்மைகள் தொடர்வது மில்லை பஞ்சணை போலொரு நினைவு-அங்கே பகலிர வெல்லாங் கனவு நெஞ்சினில் ஊறிடுந் தினவு- அதுதான் நீள்புகழ்க் காவியப் புனைவு மதியொடு முகிலொடு மிதப்பான்-அந்த மயக்கினில் நாள்பல கிடப்பான் புதியன புனைந்திடத் துடிப்பான்-அந்தப் போதையில் ஆயிரம் படைப்பான் மழலைகள் பேசிடும் மதலை-காணின் மகிழ்ந்திடும் அவனொரு மதலை பழகிய யாழொடு குழலைக்-கேட்டால் பாவலன் ஏழிசை நிழலே நிறமலர் மணமுடன் குலுங்கும்-கவிஞன் நெஞ்சொரு வண்டென மயங்கும் பறவைக ளாயிரம் பறக்கும்-கவிஞன் பறந்திடச் சிறகினை விரிக்கும் இயற்கையின் அழகுகள் சிரிக்கும்-அவற்றுள் இணைந்தவன் நரம்புகள் துடிக்கும் மயக்குறும் உணர்வுகள் நடிக்கும்-கவிஞன் வாயித ழோகவி உதிர்க்கும் எளியவர் விழிபுனல் சிந்தும்-காணின் இனந்தெரி யாதுக லங்கும் நெளிகடல் போலுளம் பொங்கும்-துயரை நீக்கிடப் பாடல்வ ழங்கும் கொடுமைகள் கண்டுளம் வாடும்-உணர்வு கூடிட வாய்கவி பாடும் படுமிடர் நீங்கிட ஆடும்-ஆனால் பாவலன் துயர்தான் நீடும் தோயுறும் துயரிடை வாழும்-அந்தத் தூயவன் சுழலுவன் நாளும் ஆயினும் கற்பனை சூழும்-அவன்கவி ஆயிரம் ஆண்டுகள் வாழும் 62 குறிக்கோளை நோக்கி நடந்து செல்கிறேன் நடந்து செல்கிறேன் நலிந்து போயுடல் மெலிந்து தேயினும் - நடந்து கடந்த பாதையில் நிகழ்ந்த வேதனை கலங்க வைப்பினும் மயங்க வில்லைநான் - நடந்து அடர்ந்த காடுகள் படர்ந்த மேடுகள் அலைகள் மோதிடும் ஆழ்ந்த ஆறுகள் கொடுங்கண் பார்வையின் விலங்கு மேவினும் கொண்ட என்குறிக் கோளை நோக்கியே - நடந்து இருண்ட கண்ணுடன் இரண்டு கால்களும் சுருண்டு வீழினும் தொடர்ந்து செல்கிறேன் மருண்டு சோர்கிலேன் வெருண்டு தாழ்கிலேன் உருண்டு சென்றுமே உயர்வைக் காணுவேன் - நடந்து 63 யாழெடுத்து வா யாழொன்றை எடுத்தோடி வாடி-இன்பம் யாதென் றுணர்த்தாயோ பாடி? - யாழ் வாழ்வென்றும் உனக்கென்றே வாழ்கின்றேன்-வாட்டி வருத்தாமல் மறுக்காமல் உறைநீக்கி நல்ல? - யாழ் புதுமைக்கு வழிகாட்டு புலமைக்கோர் உணர்வூட்டு பொருள் மிக்க பழம்பாட்டின் புகழுக்கு மெருகேற்று மதுகைக்கும் படியாக மனத்துக்கு மகிழ்வூட்டு நலமிக்க இசைமீட்ட நரம்புக்கு முறுக்கேற்று - யாழ் 64 கவிதை எழுதிய காகிதம் கவிதை எழுதிய காகிதம் ஆனேன்-அவர் கவிதையைச் சுவைத்ததும் காகிதம் ஆனேன் - கவிதை புவியோர் போற்றும் புலமையில் உயர்ந்தார் போனவர் இன்னும் ஏன்வர அயர்ந்தார் - கவிதை கையில் எடுப்பார் கண்வழி படிப்பார் காணும் மகிழ்வால் நெஞ்சது துடிப்பார் செய்ய இதழ்கள் சிறிதுடன் மடிப்பார் செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார் - கவிதை ஒவ்வொரு சொல்லிலும் உளத்தினைக் கொடுப்பார் ஒளிவிடும் அணியின் உயர்வினை வியப்பார் செவ்விய அடிதொடை சீர்எழில் தொடுப்பார் செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார் - கவிதை 65 தப்புத் தாளம் (மனிதன், வாழ்க்கையைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டு பாடியது.) மனிதன் பெற்றான் ஒரு பாட்டு-பாடி மகிழ்ந்தான் மனம்போல் தாளமும் போட்டு - மனிதன் இனிதென அவனவன் இசைகளும் அமைத்தான் இதுதான் இசையென விளக்கமும் கொடுத்தான் - மனிதன் இசையுடன் பாடலை அவன்வாய் இசைக்கும் இன்னொரு பண்ணிசை அதனுடன் கலக்கும் வசையெனச் சொன்னால் அவனதை மறுக்கும் வளரும் உலகில் புதுமையென் றுரைக்கும் - மனிதன் தப்புடன் சொற்பொருள் அறியா துரைக்கும் தாளமும் சிலசில சமயங்கள் சருக்கும் எப்படிப் பொறுப்பதென் றுலகமும் வெறுக்கும் எனினும் தடுத்திட முயலா திருக்கும் - மனிதன் 66 படியாத பிள்ளை சொன்னபடி கேளாத பிள்ளை-பெற்றால் தொடருவது தந்தைக்கு மாறாத தொல்லை முன்னுணர்ந்து பாராமல் அன்று-காதல் மூழ்கித் திளைத்தபயன் காணுகிறான் இன்று படியென்று சொன்னாலுங் குற்றம்-நல்ல பண்போடு நடவென்று சொன்னாலுங் குற்றம் முடிவென்ன தெரியாது நாளை- வாழ்வில் முன்னேற வழியேது படியாத காளை ஊர்சுற்றி ஊர்சுற்றி வந்தால்-வாழ்வில் உண்டாகும் பயனென்ன பெற்றமணம் நொந்தால்? வேர்விட்ட ஆல்வற்றி நின்றால்-தொங்கும் விழுதன்றோ தாங்கிப் பிடித்திடல் நன்றாம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு-கல்வி நாடிப் படிக்காத வாழ்வன்றோ காடு? தோட்டத்தைப் பாழாக்கி நின்றால்-ஊரார் தூற்றிப் பழித்துக்க தைப்பார்கள் கண்டால் குற்றமது செய்கின்ற போது-தந்தை கூறா திருப்பானோ? ஈதென்னதீது? பெற்றவர்கள் கண்டித்து நின்றால்-என்ன பிழைவந்து நேருமவர் சொன்னபடி சென்றால்? தாய்தந்தை காட்டுகின்ற சீற்றம்-பிள்ளை தற்காத்துக் கொள்ளத்தான் வேறென்ன மாற்றம்? நோய்பற்று முன்னேதெ ரிந்து-தாய் ‡ü¿¡f ரைத்துக்கொ டுப்பாள்ம ருந்து ஐந்திலே படியாத பிள்ளை-கூட்டில் அடைத்துக் கிடக்கின்ற பேசாத கிள்ளை நைந்திருளில் மூழ்குமே வாழ்வு-விடியல் நாளைக்குத் தோன்றுமோ? ஏனிந்தத் தாழ்வு? பயிர்செய்யுங் காலத்தில் நட்டால்-நல்ல பலன்கிட்டும்; என்னாகும் பருவத்தை விட்டால்? அயராதிப் போதேமு யன்றால்-நன்மை ஆடிப்பெருக் கெனவே ஓடிவரும் அன்றோ? 67 நான் பாடும் போது... என்னைம றந்துநான் பாடல்பு னைந்திட எண்ணிவ ரைந்திடும் போதினிலே எத்தனை எத்தனை இன்பங்கள் சூழ்ந்துளம் எங்கணும் பாய்ந்தெனை மோதுமடா அன்னைமொ ழித்தமிழ் அத்தனை ஆற்றலை அன்புடன் என்னிடம் தந்ததடா ஆயிரம் நன்றிகள் கூறிட நெஞ்சினில் ஆவலும் மீறியே வந்ததடா யாழிசை கூடிய ஏழிசைப் பாடல்கள் எங்கும்நி றைந்தும லர்ந்திடுமே யானுள மாளிகை வானில்மி தந்திட யாண்டும்ப றந்துதி ரிந்திடுவேன் தோழமை கூடிடத் தூய மயிற்குலம் தோகைவி ரித்தெதிர் ஆடிடுமே துய்ய மலர்க்குலம் வாயைவி ரித்திடும் தும்பிகள் யாழெனப் பாடிடுமே கற்பனை ஊறிடக் காவியம் ஒன்றனைக் கண்டுநி கர்த்திடப் பாடிடுவேன் காலிற்ச தங்கைகள் கொஞ்சிட மங்கையர் கண்ணெதிர் நின்றவர் ஆடிடுவார் பொற்புறு கிண்ணியில் பூமணத் தேறலைப் பூவையர் பற்பலர் ஊற்றிடுவார் பூங்கொடி போலிடை தாங்கிடு வார்மனம் பொங்கிட வேவெறி ஏற்றிடுவார் மூண்டிடும் அவ்வெறி மூளையி லேவந்து மொய்ம்புறச் சுற்றிவ ளைத்திடுமே முத்தமிழ்ப் பாடல்கள் மோதி மனத்தினில் முந்துற வந்துவி ளைத்திடுமே ஈண்டிய மாதரில் ஏந்தெழில் கொண்டவள் என்னுடல் மெல்லென நீவிடுவாள் இன்புறும் பூம்பொழில் தங்கிடும் மாங்குயில் என்னவே பாவினில் கூவிடுவேன் பாட்டைமு டித்துடன் ஏட்டினை மூடலும் பாழுல கில்விழி பட்டதடா! பாடிய யாழிசை ஆடிய மாமயில் பாவையர் ஆடலும் கெட்டதடா! வீட்டைவ ளைத்திடும் வேதனை சூழ்ந்தெனை வெந்துளம் வாடிடச் சுட்டதடா! வெட்டவெ ளிக்கடல் வீழ்ந்துகி டந்துயிர்! வெம்பிட வேவிழி சொட்டுதடா! 68 கற்பவர் செயலா? கட்டிளங் காளையரே-உம்மைக் கண்டிடும் வேளையிலே மட்டிலா வேதனையால்-உள்ளம் வாடிக் கலங்குகின்றேன் நட்ட நடுத்தெருவில்-நீங்கள் நாலைந்து பேர்கலந்து கட்டுக் கடங்காமல்-நின்று கத்திப் பிதற்றுகின்றீர்! ஏறிய வண்டிகளில்-நீங்கள் ஏழெட்டுப் பேர்நெருங்கிக் கூறும் வரிசையிலே-தோளைக் கோத்துத் திரிந்திடுவீர்! பேருந்தில் ஏறிவிட்டால்-அங்கே பேயாட்டம் ஆடுகின்றீர் ஆரும் வெறுத்திடவே-நீங்கள் ஆர்த்து முழக்குகின்றீர்! நாடக வேடங்கள்போல்-தலையில் நார்முடி காட்டுகின்றீர்! ஆடவர் பெண்டிரெனத்-தோன்றா ஆடையை மாட்டுகின்றீர்! அன்ன நடையினர் தாம்-செல்லும் ஆவண வீதிகளில் என்னென்ன வேடிக்கைகள்-செய்வீர் ஏளனக் கூக்குரலால் மங்கையர் வீதிகளில்-நடந்து வந்திட அஞ்சுகின்றார் உங்க ளுடன்பிறந்த-பெண்ணும் உண்டென எண்ணிடுவீர்! கற்பவர் செய்கையிதோ - நாட்டைக் காப்பவர் நீவிரன்றோ? நெற்பயிர் காண்வயலில்-களைகள் நீக்கிட முன்வருவீர்! 69 நற்பணியாற்றுவோம் நாட்டுக்கு நற்பணி யாற்றிடுவோம்-வாழ்வில் நல்லவர் கொள்கையைப் போற்றிடுவோம் கூட்டத்தில் உண்மையைச் சாற்றிடுவோம்-அங்குக் கூறிய தைச்செயல் ஆக்கிடுவோம் நற்கலை பற்பல நாட்டிடுவோம்-இந்த நானிலத் திற்புகழ் கூட்டிடுவோம் தற்குறி என்றிலா தாக்கிடுவோம்-தீய தந்நலம் யாவையும் போக்கிடுவோம் விஞ்ஞானி பற்பலர் உண்டெனவே-இங்கு வேண்டம்மு யற்சிகள் கண்டிடுவோம் பொய்ஞ்ஞானப் பித்தரை வென்றிடவே-இந்தப் பூமிக்கு நல்வழி கண்டிடுவோம் ஏழைமை நீக்கிடச் சூளுரைப்போம் - தீமை எங்கெழு மாகினும் வாளெடுப்போம் தோழமை பாடிட யாழெடுப்போம்- மக்கள் துன்பங்கள் யாவையும் தூளடிப்போம் சாதிகள் ஆக்கிய தீமைகளை-அந்தச் சாத்திரக் குட்டையின் ஆமைகளை மோதித் தகர்த்திடல் தீமையிலை-நீங்கள் மூண்டெழு வீரினும் ஊமைகளோ? சோம்பலை ஏய்த்தலை நீக்கிடுவோம்-கெட்ட சூழ்ச்சிகள் வஞ்சனை போக்கிடுவோம் கூம்பிய தோள்களை ஏற்றிடுவோம்-நாளும் கூடும் உழைப்பினை யாக்கிடுவோம் வாய்ப்பறை சாற்றலைத் தைத்திடுவோம்-நெஞ்சில் வாய்மையை நேர்மையை வைத்திடுவோம் ஏய்ப்பதை நாமினி நைத் தெறிவோம்-பொய்யை ஏறி மிதித்ததைப் பிய்த்தெறிவோம் வேதங்கள் பூதங்கள் என்றுரைத்தால்-அந்த வீணரின் கொள்கையைக் கொன் றழிப்போம் வாதங்கள் மேடையில் நின்றுரைப்போம்-சொன்ன வாய்மைகள் யாவையும் நன்றமைப்போம். 70 எனது உலகம் எனக்கென உண்டொரு வுலகம்-அங்கே இன்பங்கள் வந்தெனைத் தழுவும் மனத்தினில் தானது குலவும்-வந்த வாட்டங்கள் விட்டெனை விலகும் பலப்பல புதுமைகள் நிகழும்-நல்ல பாடல்கள் பற்பல திகழும் சொலச்சொல மனமது மகிழும்- அந்தச் சுவையினில் நாவது புகழும் மிதப்பது போலொரு கனவு-காதல் மெல்லிய மாதரின் உறவு புதுப்புது நினைவுகள் வரவு-நெஞ்சப் பூவினில் சுவைமிகு நறவு. இனித்திடும் அவ்வுல கதனில்-என்னை எதிர்த்திட ஒருபகை யிலேயே கனிச்சுவை யனையஎன் மொழியைக்-கேட்டுக் கருத்துடன் தொடர்வரென் வழியை நிமிர்த்திய தோளோடு வருவேன்-அங்கு நின்றிடு வார்க்குரை தருவேன் அமைச்சர்கள் வாழ்த்திட மகிழ்வேன்-என்றன் அரியணை மீதினில் அமர்வேன் கொடுமைகள் பொடிபடச் சிதறும்-என்வாய் கோளரி யோவென அதிரும் மிடிமைகள் இலையென உதிரும்-வஞ்சம் மேவிய சூழ்ச்சிகள் கதறும் மடம்படு சாதிகள் தொலையும்-அங்கு மதமெனும் போர்வைகள் கலையும் கடவுளின் கதைகளும் விலகும்-செம்மைக் கதிரவன் ஒளிதரப் பொலியும் இலக்கண நெறியொடு திகழும் இன்ப இலக்கிய வாழ்வினில் மகிழும் நிலத்தினில் உயர்வெனப் புகழும்-நல்ல நீதிகள் தழுவுமென் னுலகம். 71 உலகம் சிரித்தது நேர்மை யோடு வாழ்க வென்று நீதி நூல்கள் பாடின ஆர்வ மோடு நெஞ்சில் நாளும் அந்த வாழ்வை நாடினேன் ஏட்டுப் பூச்சி என்று பேசி என்னை உலகம் சிரித்தது வாயில் ஒன்றும் நெஞ்சில் ஒன்றும் வைத்துப் பேசக் கூசினேன் சேயின் வாழ்வு சாயும் போதும் செம்மை ஒன்றே பேசினேன் பித்தன் பித்தன் என்று கேலி பேசி உலகம் சிரித்தது நாட்டு வாழ்வை நச்சி நின்று நாளும் நெஞ்சில் நாடினேன் வீட்டு வாழ்வில் நாட்டமின்றி வீறு கொண்டு பாடினேன் நாட்டுப் போக்கைச் சுட்டிக் காடடி நாளும் உலகம் சிரித்தது வாடும் போது வாழ்வுக்காக வால்பி டிக்க நாணினேன் பீடு மானம் வேண்டி யின்னல் பெற்ற பின்பும் பேணினேன் எத்தர் வாழும் ஏற்றங் காட்டி என்னை உலகம் சிரித்தது அண்டை மாந்தர் என்னை யண்டி ஆசை வார்த்தை பேசினர் கொண்ட கொள்கை நின்று வாழக் கோல வாழ்வை வீசினேன் பிள்ளைத் தன்மை என்று பேசிப் பேதை யுலகம் சிரித்தது இட்ட கோடு வட்டமாக எல்லைக் குள்உலாவினேன் *தட்டு நேரில் முட்டும் போதும் தாண்ட வில்லை கால்களே ஒட்டி வாழக் கற்றி லேனென் றுலகம் என்னைச் சிரித்தது. 72 திறந்தன கதவுகள் (பணியிலிருந்து விடுபட்டபொழுது பாடியது.) கூண்டின் கதவுகள் திறந்தன-என் கோலச் சிறகுகள் விரிந்தன யாண்டும் நினைவுகள் பரந்தன-என் ஆசைக் கனவுகள் உயர்ந்தன பூட்டும் விலங்குகள் ஒடிந்தன-ஏவல் பூணுஞ் சடங்குகள் முடிந்தன வாட்டும் *வழக்குகள் பொடிந்தன-துன்ப வாழ்வின் இரவுகள் விடிந்தன பூண்ட இளமையும் கழிந்தது -பாதி பூக்கும் புதுமையில் கழிந்தது ஆண்டோ அறுபது தொடர்ந்தது-பாதி ஆசான் பணியில் நடந்தது தேக்கும் ஒருதடை இனியிலை-என்பால் தீமை வரஒரு வழியிலை பூக்கும் கவிமலர் அளவிலை-நெஞ்சம் பொங்கும் மகிழ்வினிற் கடலலை தோள்கள் மலையென நிமிர்ந்தன-நெஞ்சில் தூய்மைத் துணிவுகள் வளர்ந்தன நாள்கள் மகிழ்வுறப் பிறந்தன-எண்ணம் நாட்டின் பணியிடை விரிந்தன கோலத் தமிழ்மொழி உயர்ந்திட-நெஞ்சம் கூவிக் குரல்தரும் வளர்ந்திட ஞாலத் தொருபகை எழுந்திடின்-அப்பகை நாணிப் புறமிட முழங்கிடும் வாழத் தரையினில் பிறந்தவர்-அந்தோ வாடிப் புழுவென வதங்கினர் நாளை அவர்துயர் தொலைந்திடப்-பாடல் நாளும் கணைகளை வழங்கிடும் நாட்டின் தொழிலிடை முனைந்தவர்- வாழ நாளும் உழவுகள் புரிந்தவர் வாட்டும் வறுமையில் உழன்றனர்-மீள வாளென என்கவி சுழன்றிடும் 73 நாளைய நாடு அதோ அதோ ஒரு நாடு - கண்ணின் அருகில் தெரிவதை நீ பாடு. - அதோ எத்தனை எத்தனைக் கலைகள்-அவை அத்தனை யுந்தமிழ் மொழியில் இத்தரை மீதினில் உலவும்- கலை எத்தனை அத்தனை நிலவும் - அதோ கற்றிட வந்தனர் கலையே-வெறும் கத்தலும் கூச்சலும் இலையே கற்றவிஞ் ஞானியின் அலைகள்-நாடு காத்திடும் நினைவுடன் உலவும் - அதோ புத்தம் புதுத்தொழில் உயரும்-அவை பூத்துக் குலுங்கிட வளரும் எத்திசை நோக்கினும் கதவம்-அங்கே எப்பொழு துந்திறந் தொளிரும் - அதோ நாளும் உழைப்புகள் பெருகும்-கொடும் நச்சுச் சுரண்டலும் கருகும் பாழும் அடைப்புகள் கடியும்-மிடி பற்றிய வெந்துயர் மடியும் - அதோ ஏற்றமும் தாழ்ச்சியும் *இரியும்-மக்கள் யாவரும் ஒன்றெனத் தெரியும் மாற்றமெ லாமொரு புதுமை-செல்வம் மாந்தர்கள் யாவர்க்கும் பொதுமை - அதோ கோபுர வாயில்கள் தெரியும்-அவை கோவில்க ளாமெனல் மறையும் ஆபயன் யாவையும் விளையும்-அவை யாவரும் போய்வரும் நிலையம் - அதோ பேதைமை முற்றிலும் அழியும்-அங்குப் பெண்ணின வாழ்வுகள் தழையும் ஓதுநல் ஞானமும் ஒளிரும்-அவர் ஓர்நிக ராமெனல் மிளிரும் - அதோ பண்புகள் யாவையும் மலரும்-அமைதி பாங்குற எங்கணும் படரும் கண்கொளும் காட்சிகள் வளரும்-மனம் காவிரி யாமென மகிழும். - அதோ 74 அருகில் அவளிருந்தால்... அவளும் தமிழும் அருகிலிருந்தால் ஆயிரம் ஆயிரம் பாடல் வரும் - அவளும் குவளை மலரில் குளிர்விழி பெறுவாள் குவியிதழ் முல்லையில் குறுநகை புரிவாள் - அவளும் தண்பனி மலைமேல் தவழும் முகிலால் தனதுடல் எழிலை மூடிடும் *துகிலாள் வீண்படும் மலையில் வீழ்ந்திடும் அருவி விரலிசை மீட்டும் யாழெனுங் கருவி - அவளும் காலையில் கீழ்த்திசைக் கடல்மிசை எழுமோர் கதிர்தான் என்மனக் *கன்னியின் முகமாம் மாலையில் மேற்றிசை மினுக்கிடும் வானே மனங்கவர் எழில்கொளும் மங்கையின் மேனி - அவளும் தண்பனி நிலவில் தனிநடம் புரிவாள் தளிரில் மலரில் பனியென உறைவாள் கண்துயில் மருவும் பசும்புல் தரையாள் களிகொள் மயில்போல் ஆறெனத் திரிவாள் - அவளும் மாலையில் நாணிச் சிவந்திட வருவாள் மருளும் மாலையை மயங்கிடத் தருவாள் சீலையென் றிரவினைத் தாங்கியே திரிவாள் சிரித்திடச் சிரித்திட விந்தைகள் புரிவாள் - அவளும் செடிகொடி விரிக்கும் மலர்களிற் சிரிப்பாள் சிதறிய மலர்களில் பஞ்சணை விரிப்பாள் மிடிகெட உழைக்கும் தோள்களில் இருப்பாள் மேதினி யாவும் மேம்படும் விருப்பாள் - அவளும் உழுபவள் கலப்பையின் முனைதனில் நடப்பாள் உளிகொளும் சிற்பியின் விரல்களில் நடிப்பாள் *இழைகொளும் பாவினில் அவிநயம் பிடிப்பாள் எழுச்சிகொள் கவிஞனுக் குணர்ச்சியைக் கொடுப்பாள் - அவளும் 75 காதல் இலக்கணம் ïJjh‹ fhjš ïy¡fznkh?-njhÊ இடர்தான் பயனாய் வெளிப்படுமோ? - இதுதான் எதுநான் செயினும் எனையே மறப்பேன் ஏதும் புரியாமல் தனியே விழிப்பேன் - இதுதான் புனலாட மனமில்லை துயிலாட வழியில்லை புலந்தாட அவரில்லை புகுந்தாட மகிழ்வில்லை கனலாடும் நிலவுண்டு கனவாடும் இரவுண்டு கடுகேனும் உணவுண்ணக் கருதாத வயிறுண்டு - இதுதான் பிரிவாலே துயருண்டு பிறழ்கின்ற உடலுண்டு பேணாத குழலுண்டு சூடாத மலருண்டு வருவாரோ எனஎண்ணி மயலாடும் மனமுண்டு மணவாளன் தனைக்காணத் *தணவாத உயிருண்டு - இதுதான் 76 அழகிய மணவாளன் mt®nghy kzths‹ ahuo?-v‹w‹ ஆரணங்கே உண்டென்றால் கூறடி - அவர் கவர்கின்ற மொழிபேசும் சொல்லழகன்-என்பால் காலமெ லாம்பொழியும் அன்பழகன் - ஆணழகன் - அவர் உறவாடி மகிர்வூட்டும்குணத்தழகன்-கொள்கை உரமேறி நிற்கின்ற மனத்தழகன் (பொன்) நிறமான உடலாலே வனப்பழகன்-என்றன் நிழலான அவர்தானே எனக்கழகன்-அழகன் - அவர் பழியேதுங் காணாத நடையழகன்-நல்ல பால்போலும் நிறமான உடையழகன் மொழியாலே போராடும் படையழகன் -பகைவர் முகம்நாண உரையாடும் விடையழகன் - அவர் 77 எழுதுங்கள் புதுக்கவிதை அழகான கவியாக உருவாக்குவோம் அதனாலே தமிழ்மாதை உயர்வாக்குவோம் விழலாக வரும்யாவும் எருவாக்குவோம் விளைவெல்லாம் பயனாகப் பயிராக்குவோம் உரையான வரியெல்லாம் கவியாகுமோ? உருவில்லா ஒலியெல்லாம் மொழியாகுமோ? அரையான வரைகோடு கலையாகுமோ? அடிபாறை சிறிதானால் சிலையாகுமோ? மரபோடு வடிவங்கள் தடம்மாறினால் மதியோடு மனமிங்குத் தடுமாறினால் பிறவேறு மொழி கூடும்வெறியேறினால் பிறழ்கின்ற உரையாவும் கவியாகுமோ? உணர்வோடு கனவாகும் கருயாவுமே உருவாகி வடிவாகிற் கவியாகுமே? துணிவோடு வடிவங்கள் கொலையாகுமேல் தொலையாத பழியாக உமக்காகுமே மறையாத வடிவங்கள் பலவாக்குவோம் மரபாக வருமாறு கலையாக்குவோம் குறையோடு திரிகின்ற நிலைபோக்குவோம் குலமான கவிவாணர் பழிநீக்குவோம் வண்ணங்கள் எண்ணங்கள் புதிதாகவே வடிவங்கள் அமையுங்கள் மரபாகவே எண்ணுங்கள் எண்ணுங்கள் முனியாமலே எழுதுங்கள் முயலுங்கள் இனியாவது தனியான மரபுள்ள தமிழாகுமே தரமான நெறிகொண்ட மொழியாகுமே இனிதான வழிமாறித் தடுமாறினால் இனிமேலும் உமைநோக்கி எதுகூறுவேன்? 78 மணல் வீடு வீசும் அலைகடல் ஒரம்-மாலை வெய்யில் குறைகின்ற நேரம் பேசுங் கவிமக ளோடு-நெஞ்சம் பின்னிக் கிடந்தன போடு சின்னஞ் சிறுமியர் கூடி-அங்குச் செய்தனர் ஓர்மணல் வீடு தின்னுங் கறியுடன் சாறு - கூட்டு செய்து வடித்தனர் சோறு வட்டமிட் டொன்றியி ருந்தே-உண்டனர் வாரிப் படைத்தும கிழ்ந்தே எட்டியிருந்துண வுண்ணும்-கெட்ட எண்ணமங் கெப்படி நண்ணும்? மாவிலை தோரணம் உண்டு-நல்ல மாப்பிளை பெண்களும் உண்டு கூவினர் ஆர்த்தனர் கண்டு-மேளம் கொட்டினர் வாயொலி விண்டு எப்படி யோஅவ ரண்டை-சட்டென் றேற்பட்ட தேஒரு சண்டை அப்படி யேமணல் வீடு-தூள்தூள் ஆகிய தேசிறு மேடு நீளலைக் கைகளால் தோழி- கொட்டி நின்று சிரித்ததே ஆழி *கேளென நின்றவர் தம்முள்-வந்த கீழ்மையைக் கண்டுளம் விம்மும் அவ்விளை யாட்டினைப் பார்த்தேன்-நாட்டின் அரசியல் போக்கையும் பார்த்தேன் எவ்விதம் வேதனை சொல்வேன்-இந்த இழிவினை எப்படி வெல்வேன்! 79 இசையால் வந்த மயக்கம் இசையால் வந்த மயக்கமடி -உன் இன்பமும் என்னுளம் மறக்குமடி - இசையால் பசியோ இல்லை பாயோ தொல்லை பாலும் பழமும் பார்ப்பதும் இல்லை - இசையால் பொருளும் உணர்வும் பொருந்திய பாடல் பொழுதெலாம் கேட்டால் போகுமே வாடல் இரவும் பகலும் என்மனம் நாடும் எத்தனை எத்தனை இன்பங்கள் கூடும் - இசையால் குழலோ யாழோ கொடுத்திடும் ஒலியால் கோதைநின் வாயிதழ் படைத்திடும் குரலால் அழகோ வியமே அல்லல்கள் பறக்கும் ஆயிரம் பாடல்கள் என்னிடம் பிறக்கும் - இசையால்