கவியரசர் முடியரசன் படைப்புகள் 1 முடியரசன் கவிதைகள் நெஞ்சிற் பூத்தவை முடியரசன் கவிதைகள் நெஞ்சிற் பூத்தவை தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 280 = 296 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்த இப்பரிசிலுக்கு யான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ ................ முற்றிய திருவின்மூவuஆயினு«பெட்பின்றிஈjல்யhம்வேண்டலk’ என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில்áங்கமெனcyவியவர்.இUgjh« ü‰றாண்டின்கÉதையுலகில்புJiமபூத்j மரபு¡கவிஞ®அழகு«, இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25 இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூ லாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x முடியரசன் கவிதைகள் படைப்பு 3 மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மொழிந்தருளிய வாழ்த்துப்பா 4 வாழையடி வாழை I 5 1. காவிய உலகம் காதற் சிலை 18 சுதமதி 29 2. இயற்கை உலகம் அழகின் சிரிப்பு 37 இயற்கைத் தாய் 40 எழில் 43 நிலவு 46 காற்று 49 ஆறு 52 கடல் 57 மயிலே 61 இயற்கையின் எழுச்சி 62 படைத்தோன் வாழ்க! 64 முகிலிடை நிலா 67 3. காதல் உலகம் காதல் நெஞ்சம் 68 இன்பமில்லை 70 புதருள் கனி 71 ஏன் வரவில்லை? 73 உன்னுருவே தோன்றுதடி 74 புதுமைப் பெண் 75 ஊரார் 77 பணியாள் வேண்டாம் 82 சிற்றூர்ச் செலவு 84 எந்நாளோ? 86 குளிர் நிலா 88 குழந்தை இன்பம் 90 தோற்றுவிட்டேன்! 93 எம்மவர் தந்தார் 94 முகில்விடு தூது 95 இழந்த காதல் 97 கவிதைப் பெண் 100 ஏன் மறந்தாள்? 102 4. தொழில் உலகம் தொழிலாளி 103 கூண்டுக் கிளி 105 விறகு வெட்டி 107 குதிரைநினைத்தால்....? 109 உணர்வார் யாரோ? 111 துன்பமடா துன்பம்! 112 பட்டண வாழ்வு 113 பட்டிக்காட்டான் 115 புலியேறென எழுவாய் 117 5. தமிழ் உலகம் மொழியுணர்ச்சி 119 அவளும் நானும் 122 துயில் கலைந்தது 126 தமிழ்க்காதலி 128 தமிழ்தான் என்பேர் 130 துறைதோறும் தமிழே காண்பீர் 132 உறுதி கொள்வீர் 134 6. சான்றோர் உலகம் மனத் தூய்மை 135 கவிமணி 137 திரு.வி.க. 138 மணிவிழா வாழ்த்து 140 பாரதிதாசன் 143 தமிழர் தந்தை 145 வாழ்த்துகிறார் 146 வாயுறை வாழ்த்து 148 கா. அப்பா 150 7. பல்வகை உலகம் துயில் 154 ஏது வாழ்வு? 157 மாதவி 158 உள்ளம் 160 வளரக் கெடும்! 162 கம்பன் குரல் 164 இறப்பே வா! 169 கண்ணீர் 170 மாணவர் மன்றம் 173 வேண்டுவன 175 மணமகனுக்கு 176 குடும்பம் ஒரு காவியம் 178 இளமையில் நரை 179 பிரியா நண்பன் 180 எவர்சொற் கேட்பது? 182 மன்னர் ஆட்சி 184 காவலும் களவும் 185 இளஞாயிறு 187 மறைந்தாரோ? 189 எங்கே சென்றீரோ? 190 ஆறாத் துயரம் 191 நெஞ்சம் கலந்த தாய் 193 நெஞ்சிற் பூத்தவை முன்னுரை 197 1. தமிழ் வாழ்த்து 199 2. வாளென் செயும்? 200 3. தமிழே வா! 201 4. என்னுயிர்க் காதலி 203 5. பைந்தமிழ்க் காதலி 205 6. கருத்திற் கலந்த கழகம் 206 7. எனது வாழ்க்கை 207 8. எனது வாழ்வில் 208 9. சின்னந் தவிர்ந்தேன் 210 10. நாத்திகனா? ஆத்திகனா? 212 11. பாரதிதாசன் என் அரசன் 214 12. நினைந்து மகிழ்கிறேன் 216 13. தலை நண்பன் 217 14. என்னெதிர் நில்லேல் 219 15. புகழ்ச்சியின் பயன் 220 16. அன்றும் இன்றும் 222 17. புறமும் அகமும் 224 18. நகைதரு செயல் 226 19. வாழ்க தமிழரசு 227 20. தன்னம்பிக்கை 229 21. சேரிடம் அறிந்து சேர் 231 22. புகையும் மனத்தன் 232 23. புகைப் புராணம் 233 24. களிதரு சுரும்பு (நிலைமண்டில ஆசிரியப்பா) 235 25. கல் சொன்ன கதை 236 26. கடலின் பெயர்கள் 238 27. மலையிற் பிறந்த மகள் 239 28. வான்மழையே வா! 242 29. உயிர்ப்பொம்மை 244 30. நெஞ்சிற் புகுந்த வேல் 245 31. ஆசையெனும் ஆழ்கடலில் 246 32. எத்தனைப் பாடல்கள்! 247 33. வாழ்க்கைப் போராட்டம் 248 34. காலம் வரும் - நேரம் வரும்! 251 35. அவள்தான் பாடவைத்தாள்! 254 36. புதிய உலகம் 255 37. பனிபொழியும்நிலவில்... 257 38. அவர்வரவில்லை! 259 39. இசை மாறியவீணை! 260 40. காதலர் சொல்லாடல் 261 41. பருவப் பேச்சு 262 42. காவிய மேடையில் 263 43. உவமையறியாக் கவிதை 264 44. அதுவா இதுவா? 266 45. இரண்டு குழந்தை 268 46. பள்ளிக்கு mழைத்தவள்26947. சிரித்த முகம் 271 48. சீரழிந்து போகாதே 272 49. பொய்மைகள் kயும்27350. மையல் தீர 274 51. முகக் கண்ணாடி 275 52. பேதமேது? 276 53. சிரிப்பதேனடி? 277 54. உதவுவையே 278 55. நல்குன் அருள் 279 குறிப்புகள் 280 முடியரசன் கவிதைகள் படைப்பு செயல்புரிந்து நாடோறும் செந்தமிழ்க்குத் தொண்டுசெயும் மயிலை சிவ முத்துக்கு மலர்க்கவிதை படைக்கின்றேன். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மொழிந்தருளிய வாழ்த்துப்பா வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந் தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுண் முறை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். வாழையடி வாழை I தமிழ் ஒரு கவிதைப் பண்புள்ள மொழி; பாவலர்தம் நாவிலே பண்வளர்த்த மொழி. உலகிலே கவிதை பாடுவதற்கு மிக எளிதில் வரும் மொழி தமிழ் ஒன்றுதான். ஆனால் அ, ஆ அறிந்தவரெல்லாம் அறிஞர்களாகவும், க, கா தெரிந்தவர்களெல்லாம் கவிஞர்களாகவும் ஆக முடியுமா? உயர்ந்த கருத்துக்களின் ஊற்றாகி, மொழிப் புலமையின் கரைகண்டு, கவிதை அருவி பாய்வதன்றோ கவிஞன் உள்ளம். சுருங்கச் சொன்னால் கவிதை பாடுவது குழந்தை பெறுவது போல, கருச் சிதையாமல் பிறக்க வேண்டும். பிறந்த பிள்ளை கூன் குருடு நீங்கியதாக இருக்க வேண்டும். `இவன் தந்தை என்னோற்றான் கொல் என வையகம் வாழ்த்தவும் வேண்டும். நாட்டன்பை அடகு வைத்து, மொழிப் புலமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, எண்ணியதெல்லாம் கருத்து, எழுதியதெல்லாம் கவிதையென்று கூறி, விலைபோகாக்கைச் சரக்கை வீதி வலம் வந்து விற்பதற்குப் பேரம் பேசுகிறார்கள் சில புதுமைக் கவிஞர்கள். புதுமைப் பித்தன் சொன்னதுபோல் மனைவி சோரம் போய்ப் பெற்ற பிள்ளையைச் சொந்தப் பிள்ளையென்று கொண்டாடுபவர்கள் கவிதை உலகிற் பெருகிவிட்டார்கள். பிறர் கருத்தை திருடியும் பழங்கருத்தைத் திருப்பியும் எழுதிப் பிழைக்கிறார்கள். இந்தக் கவிதா மேதைகள். பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும் பிறந்த நூற்றாண்டிலே இத்தகைய கவிதா விற்பன்னர்களும் பிறந்து தருக்கித் திரிவது கண்டு வியப்பன்று, வேதனை உண்டாகிறது மக்களுக்கு. இத்தகைய சூழலுக்கிடையேதான் கவிஞர் முடியரசனின் கவிதைகளும் வெளிவருகின்றன. அவை மக்கள் மன்றத்திலே மதிப்பும், பரிசும், மட்டற்ற வரவேற்பும் பெற்ற பிறகே வெளிவரு கின்றன என்பதில் நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. வளர்ந்து வரும் வாழைத்தோட்டத்தில் ஒரு செவ்வாழையாக, வான்புகழ்சேர் தமிழ் இலக்கியப் பேரேட்டில் வரவுகலமாக, வையகமே எதிர்நோக்கும் தமிழ்த்தாயின் தண்ணளியில் முன்னணியில் இடம் பெற்று விட்டார். முடியரசன் என உணரும்போது நாம் பூரிப்படைகிறோம், வாழ்த்து கிறோம். நிமிர்ந்த தோற்றம், மலரும் முகம், கவர்ச்சி தரும் மீசை, துருவும் கண்கள், சுருண்ட முடி இவற்றுடன் திறந்த நெஞ்சம், சிந்திக்கும் பழக்கம், சிரிக்க வைக்கும் பேச்சு, பழகும் பண்பாடு - இவர்தான் முடியரசன். அவர் தோற்றத்தை அப்படியே அவர் கவிதைகளிலும் காணும்போது அன்று முடியரசர் நாட்டிலே தமிழ் வளர்ந்தது. இன்று முடியரசன் நாவிலே தமிழ் வளர்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. `இலக்கணம், சீர், தளைகட்குக் கட்டுப்படாதவனே கவிஞன் என வால்ட்விட்மன் கூறியதாக, தமிழ் இலக்கணத்தைத் தாறு மாறாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது ஒரு காக்கை பிடிக்கும் `கவிஞர் கூட்டம். செல்வாக்குள்ளவர்களின் சிறுமைக்குக் கட்டுப் படலாம். பத்திரிகை ஆசிரியர்களின் விளம்பரப் பாட்டுக்குக் கட்டுப்படலாம். இலக்கணத்திற்கு மட்டும் கட்டுப்படக் கூடாதாம். வால்ட்விட்மன் கூறியதிலே உள்ள உண்மையை இவர்கள் உணர வேண்டும். கவிஞன்தான் இலக்கணத்திற்குக் கட்டுப்படக் கூடாதே தவிர, கவிஞனுக்கு இலக்கணம் கட்டுப்படாமல் போய்விடக் கூடாது. இத்தகைய புதுமைக் `கவிஞர்களைப் பார்த்து முடியரசன் பாடுகிறார். இலக்கணத்தைப் புதைத்து விட்டுக் கூவுகின்றார் ஒப்பாரிக் குரலெடுத்து என்று இலக்கணத்தைக் கொன்றதோடு விடவில்லையாம் இவர்கள். புதைத்துவிட்டுப் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒப்பாரியும் வைக்கிறார்களாம் கவிதை என்று. எவ்வளவு நயமான கண்டனம். முடியரசன் பாடல்களை `வெள்ளைக் கவிகளென நினைத்து, உள்ளத்தை மூடி வைத்து விட்டுப் புத்தகத்தைத் திறக்காதீர்கள், வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நயம் உண்டு, கேலியும் கிண்டலும் உண்டு, உட்பொருளும் உண்டு. எனவே உணர்ந்து, நிறுத்தி, நின்று படிக்க வேண்டும். முடியரசன் தாமே தம் பாடல்களைப் படித்துக் காட்டும் போது குரலிலும், கவிதையிலும், உச்சரிப்பிலும் கம்பீரம் தவழும். அவர் தம் பாடற் கருத்தை விளக்கும் போது நயங்கூறுவார். சுவை கொள்வார். கவிஞன் முதல் தரச் சுவையறிஞனாகவும் இருத்தல் வேண்டும். தம் பாடல்களைத் தாமே திரும்பிப் பார்க்கக் கூசுவோரும் உண்டு, `விசுவாமித்திரர் பரம்பரை போல, துன்பத்திலும் சுவைகண்ட தென்றல் உள்ளம், தாய் நாட்டு நிலை நினைத்தால் புயலாகி விடுகிறது. நல்லதமிழ் நாட்டெழுந்த இந்திப் போரில் தேட்டாளர் முகங்களிலே அறுத்தெ றிந்த திருத்தாலிக் கயிற்றில்நான் எழிலை கண்டேன் ஆம்; அது கணவனை இழந்த காரிகை கண்ணகிக்குச் சிலை எடுக்க நினைத்த சேரன் செங்குட்டுவனின் எழில்; அவன் புலியெனக் கிளம்பிப் போர் தொடங்கிப் புல்லர்களைப் புறங்காட்டவைத்த எழில், வீர எழில். வானத்து முழுமதியாள் வார்க்கின்ற நில வொளியை, வைய கத்துப் பொற் கொடியார் முக மலர்க்குப் பிறரெல்லாம் ஒப்பிட்டார். கவிஞர் முடியரசன் காண்பதோ, பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில் புரிகின்ற முழுமதியே... என்பது கவிஞருக்குப் பொதுவுடைமை ஆட்சியிலே உள்ள விருப்பத்தை அன்று நாம் சுட்டிக் காட்ட விரும்புவது, கருத்திலே உள்ள புதுமையை. முடியரசனின் `ஆறு மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு, தனிக் கவிதைகளிலே இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிர் பெற்று வாழும் சங்க இலக்கியம் போல் அது திகழ்கிறது. ஆறு ஓடுகிறது, வேகமாக ஓடுகிறது, சிலம்பு தந்த இளங்கோ வடிகள் காவிரியின் சிலம்பொலியைச் சித்தரித்துக் காட்டியுள்ளார். முடியரசனும் ஆற்றைப் பெண்ணாக்கி, அழகானதோர் கற்பனை செய்கிறார். அவளின் ஓட்டத்தைக் கண்டு கற்பனையாகச் சொல்கிறார் ஆசிரியர். ..................j‹ghš செந்தh மரையின்றிமுகங்கட்டKடியh Mறு மாள்வjற்குக்கடல்eக்»ஓடுதல்gh®” என்று. ஓடும் நீரிலே தாமரை பூக்காது என்ற உண்மையை எவ்வளவு அழகான கற்பனையின் கருவாக்கிக் கொண்டார் ஆசிரியர். கம்பனையும், பாரதியையும், பாரதிதாசனையும் வைத்துக் கொண்டு, பார்த்துப் பார்த்துக் கவிதைப் பாடி, அவர்களின் கருத்தையும் tரிகளையும்nrர்த்துச்rர்த்துச்rய்யுள்எGதும்சிy`fருமவீu®களும்இந்jஆற்iறப்பேhல்முக§காட்டமுடிaமல்ஓடுtதைத்தா‹நா«கா©»nwh«. கால்முளைத்த தாமரையின் மொக்குகள் போலக் காட்சிதரும் குஞ்சுகள் கோழிக்குஞ்சுகளின் உருவத்திலே kட்டுமன்று,fவிதையிலும்bநளிவு,cவமையிலும்òதுமை.M«, ஒவ்வொன்றும் கவிதை. இயற்கைத் தாய் அற்புதமான படைப்பு; யாரும் கற்பனை செய்யாத கவிதை. வாழும் நாட்டிலே பிறந்த கவிஞன், நாட்டின் வளத்தையும் நலத்தையும் பாடுவான். சங்க இலக்கியம் அதற்குச் சான்று. அல்லற்பட்டு அவதியுறும் நாட்டிலே வாழும் கவிஞன் ஆனந்தப் பண்பாட மாட்டான். குமுறும் நெஞ்சம் எரிமலையாக, கொதிக்கும் குருதி கொடுவாளாக, பெருமை குறைவது கண்டு பெருமூச்சு விட்டுக் கருத்தற்ற மக்களைக் கண்டு கண்ணீர் விட்டுப் பாடுவான். அவன் குரலிலே சோகம் இருக்கும். கவிதையிலே கனவிருக்கும். கருத்திலே எழுச்சியிருக்கும். ஏன்? கவிஞன் காலங்காட்டும் கண்ணாடி என்கிறார்கள். அந்தக் கண்ணாடியிலே உண்மை உருவம் கண்டால், தங்கள் உருவம் தெரிந்தால் `பிரச்சாரம், அரசியல் என்று மழுப்பிக் கவிஞனைக் குறைத்து மதிப்பிடவும் துணிகிறார்கள். இத்திறனாய்வுப் பெரியோர்கள் நல்லது செய்யத் தெரியாவிட்டாலும், அல்லது செய்யாமல் அடங்கியிருக்கலாம். `சங்க இலக்கியம் ஒரு வாழைத் தோட்டம் என்கிறார் முனைவர் மு.வ. அத்தோட்டத்தில் வாழையடி வாழையெனப் பாரதியைப் போல, பாரதிதாசனைப் போல முடியரசன் தோன்றி யுள்ளார். இளம் வாழை, இனிக்கும் வாழை, ஈனும் வாழை இவ்வாழை. நல்ல எண்ணமும் நாட்டன்பும் கொண்டவர்க்கு நல் விருந்து, குடிகெடுக்கும் சூது மதியினர்க்கு நல்ல மருந்து இவ்வாழை. ஏன்? வண்ண நிலவை, வளர் கரும்பை, தெவிட்டாத தேனை, தித்திக்கும் கற்கண்டை, நலம் வளர்க்கும் மலை வாழையை தீந்தமிழை உண்ண வருக என்று இதுவரை யாரும் சிபாரிசு செய்ததில்லை. அதனால்,* II மொழி அறிவு வாய்க்கப் பெற்றுத் தமது ஆழ்ந்த உணர்ச்சி களைப் பிறர் மனத்தில் நிகழ வைக்கும் ஆற்றலும் வாய்த்திருந்தால் ஒருவர் கவிஞராகத் திகழுதல் கூடும். இவ்விரண்டினுள் ஏதேனும் ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதாதா என்று துடிதுடிப்பவர்கள் உளர்; அவர்கள் குழந்தை பெறுவதற்கு மனைவிதானே இன்றியமையாதவள், கணவன் எதற்கு? என்று கேட்பவர்கள். கவிஞர் முடியரசன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பயின்றவர்; தம் வாழ்வை ஆழ்ந்த உணர்ச்சிகளின் கோவையாக்கி, அதனால் தமது மனத்தை மிக்க மென்மையும் நுண்மையும் உடையதாக்கிக் கொண்டவர். பிறருடைய உள்ளத்தில் தம்முடைய உணர்ச்சிகளை எதிரொலிக்க வைக்கும் இணையற்ற ஆற்றலும் வாய்த்தவர்; இதனால்தான் இவரைப் `புதுமைக் கவிஞர் என மக்கள் போற்றுகிறார்கள். இவரது கவிதை களைத் தமிழ்க் கருவூலத்திற்கு முடியரசர் தந்த காணிக்கை எனப் புகழ்கிறார்கள். III எம்மைப் போலக் கவிஞரும் உளரோ? எனச் சிலர். எழுதப் புறப்படும்போதே கேட்கிறார்கள். அவர்கள் கேள்வியில் உண்மையும் இருக்கிறது. பொதுவாக, கவிஞனுக்கு `இலக்கியப் பரம்பரை உணர்வு ஒன்று வேண்டும். எத்தனை எத்தனையோ நூற்றாண்டுகளாக வருகின்ற கவிஞர் பரம்பரையிலே தானும ஒருவன் என்ற எண்ணம் வேண்டும். பழைய `மரபுகளை வெட்டிச் சாய்க்கப் புறப்படாமல் ஒட்டிக் காக்க முற்படுகிற பழக்கமும் வேண்டும். பழங்காலக் கவிஞர்களையெல்லாம் இழித்துப் பேசி விடுவ தாலும், தம் காலக் கவிஞர்களையெல்லாம் பழித்து நகைத்து விடுவதாலும் தாம் மட்டும் கவிஞராகி விடுவதாகச் சிலர் நினைப்பு. இவர்கள் கவிஞர்கள் அல்லர்; தாம் அமர்ந்திருக்கும் `கோடு குறைக்கும் அறிஞர்கள். பழைய இலக்கியங்களின் அமைப்பு, போக்கு, நடை முதலிய சிறப்புக்களை இவர்கள் திரும்பியும் பார்ப்பதில்லை. இதனால் இவர்கட்குப் பரம்பரை உணர்வும் வாய்ப்பதில்லை. பாரதிதாசனைத் தந்தை என்றும் பாரதியைப் பாட்டன் என்றும் உரிமையோடு கூறிக் கொள்ளும் முடியரசன். அவர்களைப் போலப் பரம்பரையுணர்வு மிக்கவர். பழைய தமிழ் இலக்கிய மரபுகளைக் கற்றுப் போற்றுபவர். இதனால்தான் `வாழையடி வாழை என வந்த கவிஞர் கூட்டத்தில் சிறப்புடைய ஒருவராக இவர் திகழ்கிறார். IV சில கவிஞர்களிடையே மற்றமொரு குறை உளது. இந்நாட்டுக் கவிஞராகத் திகழ ஆசைப்படும் இவர்கள் தமிழைப் புறக்கணிக் கின்றனர். தமிழ் இலக்கிய, இலக்கண அறிவை இழித்துரைக் கின்றனர். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்பதெல்லாம் குறுகிய மனம் எனக் குறை கூறுகின்றனர். மேனாட்டுக் கவிதைகள் பற்றித் தாம் கேட்டதையும் ஒரு சில பார்த்ததையும் வைத்துக் கொண்டு அந்நாட்டு மரபுகளையே பின்பற்றுகின்றனர். அவற்றையே புகழ்ந்து திரிகின்றனர். இதற்குச் சார்பாக `யாம் இந்நாட்டிற்கு மட்டும் உரிய, குறுகிய மனம் படைத்த கவிஞர் அல்லேம், உலகக் கவிஞராவோம் என்று இறுமாந்து பேசுகின்றனர். பாரதியையும் தாகூரையும் அறிந்தால் இவர்கட்கு உண்மை விளங்கும். அவர்கள் தங்கள் நாட்டுக்கு முழு உரிமையுடைய கவிஞர்களாகத் திகழந்துதானே உலகக் கவிஞர்களாக உயர்ந் துள்ளார்கள். அவ்வாறன்றி `உடனே உலகக் கவிஞராகும் போக்கு, காலூன்றி நடக்கப் படிக்காத குழந்தை. தாவப் படித்த கதையாகும். மேலும் இத்தகையவர்கள் நிலை, காலம் மாறி விதைக்கப்பட்ட பயிர் போலவும் இடம் மாறி நடப்பட்ட செடி போலவும் இரங்கத் தக்கதாக முடியும். பாரதியைப் பாருங்கள். தமிழ் என்றால் தேனூறும் நன்னெஞ்சம் அவன் நெஞ்சம். தமிழ் நாட்டுப் பெயர் கேட்டால் தேன் பாயும் இரு செவிகள் அவன் செவிகள். தமிழினத்தைப் பாடுங்கால் பூரிக்கும் இருதோள்கள் அவன் தோள்கள். இத்தகையான் குறுகிய மனத்தவனா? கூறுங்கள். கவிஞன் என்பவன் நுண்மை மிக்க உணர்வுடையவன். நாட்டுப் பற்றின் உயர்ந்த எல்லையையும், மொழிப் பற்றின் ஆழ்ந்த எல்லையையும், இனப் பற்றின் விரிந்த எல்லையையும் கவிஞன் ஒருவனிடந்தான் காணமுடியும். கவிஞனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய இவ்வுணர்வுகளையே குறுகிய மனம் என்று குறை கூறுவது முறையாகுமா? பிறந்த மண்ணில் காலுன்றாமல், உண்ட சோற்றுக்கு நன்றி காட்டாமல், உணர்வூட்டிய மொழிக்குத் துணையாகாமல் பரந்த மனப்பான்மை பேசும் விரிந்த அறிவு எதற்கு? அந்தக் கூட்டத்தில் சேராததால்தான் முடியரசன் சிறப்புடைய கவிஞராகத் திகழ்கிறார், இவரது பாடல்களில் வரிக்குவரி, சொல்லுக்குச் சொல் இவ்வுணர்வுகள் விரவிப் படிப்பவர்களைப் பண்புள்ளவர்களாக்கும் பான்மையுடன் திகழ்கின்றன. இவற்றைக் குறை என எண்ணுவோர் இருந்தால், அவர்கள் நெஞ்சம் இனியேனும் நிறைவுறுக என வாழ்த்துவோம். V கவிதையை மதிப்பிட அதன் வடிவம், கற்பனை, கருத்து, நடை, சொல்லாட்சி, உணர்ச்சி, உணர்த்தும் முறை, அணி நலம், சுவை - இனையன பல அளவு கோல்களாகும். இவை அனைத்தையுமே கொண்டு எல்லாக் கவிதைகளும் விளங்குவன என எண்ணுதல் கூடாது. ஒரு கவிதைக்கு நிலைத்த வாழ்வும் பெருகும் புகழும் தர இவற்றுள் சில நலங்கள் மட்டும் அமைந்திருந்தாலும் போதும். ஒன்றிரண்டு பகுதிகள் மட்டும் தனிச் சிறப்புடன் அமைந்திருந் தாலும் போதும். கவிஞர் முடியரசனின் கவிதைகளைக் கற்பவர்கள், இவற்றுள் பல நலங்களையும் பெற்று அவை விளங்குவதை உணர்வர். வற்றாத கருத்தென்னும் வளமான கடலின் கண். அரிய உணர்வென்னும் ஆராத அலைமேலே. பாட்டுத் திறத்தோடு மனங்கவரும் கற்பனை யாம் பாய்மரத்துக் கலமேற்றி, எழிலே உருவான இன்பக்கரை நோக்கி நம்மையெல்லாம் அழைத்துச் செல்லும் இலக்கியம் இது. வண்டுகள் மலர் தோறும் சென்று தேனை உண்டு வருவது. கடன்பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக் கடைதோறும் புகுந்துவரும் கணக்கனைப்போல் இருக்கிறது என்கிறார். காலத்திற்கு ஏற்ற உவமை என்பீர்கள். அது மட்டுமன்று, கவிஞர் வாழ்ந்த காலத்துக் கொடுமைகளுள் ஒன்றை, உள்ளபடி காட்டும் கண்ணாடியும் ஆகும். இவ்வாறு பாடிச் செல்லும் வண்டை `அடைபட்டுக் கிடக்க வெனச் சொல்லி `அல்லிமலர்க் கூட்டம் குவிந்து கொண்டதாம். இக்கற்பனை, இத்தகைய கொடுமைகட்கு எதிர்காலத்தில் எத்தகைய முடிவு உண்டு என்பதையும் நமக்குச் சொல்லி வைக்கின்றது. நீங்கள் பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறீர்கள். அங்கு ஒரு கட்சிக்காரர் பேசும்போது, மற்ற கட்சிக்காரர்கள் குழப்பம் விளைவிப்பதுண்டு. இது முறையாகுமா? வெறும் வன்முறைச் செயலுக்காக அஞ்சி, மதியுடையவர்கள் மீண்டும் மேடை ஏறாது இருப்பார்களா? இக்குழப்பம், இந்த உலகத்தில் மட்டுமென்ன, வானுலகத்திலும் நடைபெறுகிறது. விண்மீன்களின் பெருங் கூட்டத்திடையே மதியர் என்னும் அம்புலியைர் மேடை ஏறிச் சொற்பொழிவு செய்கிறார். இதைப் பொறுக்காத எதிர்க்கட்சி முகிலன் விளக்கை அணைத்து ஒளியை மறைத்தான். இடியிடித்துக் குழப்பத்தை உண்டாக்கினான். முடிவு என்ன? மீண்டும் அமைதி நிலவுகிறது. கூட்டம் கலையவில்லை. மதியர் மீண்டும் மேடை ஏறிவிடுகிறார். விடியும் வரை சொற் பொழிவு திகழ்கிறது. மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று மாண்பு வரும் எனக்குழுமும் வீண்மீன் கூட்டம் `அதுமகிழ வானத்து மேடை ஏறி அம்புலியார் சொற்பொழிய முகிலன் ஓடி எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான் இடியிடித்தான் குழப்பத்தை ஆக்கி விட்டான் இதிலென்ன கண்டனனோ? kâa® ehis Vwhkš ïU¥ghnuh nkil ÛJ? எவ்வளவு அழகிய கற்பனை. இன்றைய குழப்ப அரசியலைக் கூட ஒரு கணம் மறந்து, இக்கற்பனை இன்பத்திலே நாம் ஈடுபட்டு விடுகிறோம். மேலும் பட்டிக்காட்டான், இளமையில் நரை என்ற கவிதைகளும் இன்றைய வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டு கின்றன. காவலும் களவும் என்ற தலைப்பில் இவர் நாட்டுத் தலைவர்களின் நன்றி கெட்ட செயலை மிகவும் கடிந்துரைக் கின்றார். இவ்வாறு, பல இடங்களில் இவர் தாய் நாட்டுக்காக வழக்காடும் முறையிலே பாடுகிறார். தன் கட்சியை, அடித்துப் பேசும் வழக்கறிஞனைப் போலக் காணப்படுகிறார். கவிஞருக்கு ஏன் இந்த வேலை என்று கேட்பவர்களுக்கு, உலகை ஆளும் - அறிவிக்கப்படாத - சட்டமன்ற உறுப்பினர்களே கவிஞர்களே* என்ற ஆங்கிலக் கவிஞர் ஒருவரின் கருத்தைத்தான் விடையாகக் கூற வேண்டும். É‹brÞl® v‹D« ïy¡»a¤ âwdhŒî m¿P®, `fÉP‹ xnu xU tÇÆdhny - áy rka§fËš xnu X® milbkhÊÆdhny Tl cz®¢á Ãiwªj cÆnuhÉa bkh‹iw e« f‰gidÆny gË¢ál¢ brŒaKoí«’ v‹W T¿¡ fÉPÅ‹ M‰wiy És¡F»wh®.* கைவல்ல ஓவியன் சில வரை கோடுகளை இழுத்து உயிருள்ள ஓவியத்தைப் படைத்து விடுவது போன்றது இது. நாற்று நடும் பெண்களைச் சுழன்றாடும் குழல்மாதர் என்னும்போது அவர்களது இயக்கம் உணர்த்தப்படுகிறது. `கால் இழுத்துத் தவழ்கின்ற குழந்தை என்றதும் நம் முன்னர்த் தவழ்ந்து வரும் குழந்தையையே நாம் காண்கிறோம். `விரிகொம்பு மான் என்பது ஓர் ஓவியம். `தும்பி எழுந்து ஆர்க்கின்ற முல்லை என்பது ஓர் ஒளிப்படம். `மண்தின்றால் தீமை என அறியாப்பிள்ளை குழந்தையின் வயதையும் இயல்பையும் காட்டும் கருவி. சினந் துரைக்க நீச் சிந்து `பசித்த கண்கள் என்பது வறுமைக் காவியம். ஆம், பணம் உடையவர்கள் சினந்துரைப்பதும் பசித்தவர்கள் அழுவதும் தானே உலகத்தின் கடைச்சரக்கு. காவியங்களின் கைச்சரக்கு, வயிற்றிலே பொங்கி எழுந்த பசி, கண்களிலே வெளிப்படுவதைப் பார்த்துப் `பசித்தகண்கள் என்று கூறுகிறார். இரட்டுற மொழிதல் என்னும் சிலேடை நயத்தில் இக்கவிஞர் மிகவும் வல்லவர். இவர், கவிதைகளில் பெரும்பாலனவற்றில் உட்பொருள் வைத்தே பாடியுள்ளார். உண்மையிலே `உய்த்துணரும் வகையிலே படைப்பதுதான் கவிதையின் நீடித்த வாழ்வுக்கு உதவும். மட்டுமென்ன. மனித சமுதாய வளர்ச்சிக்கே இத்தோல்வி துணை நிற்குமாகையால், ஆயிரம் முறை தோற்பதற்கு நாமும்தான் ஆயத்தமாக இருக்கிறோம். பிள்ளை பெறாதவனையும் தந்தை யாக்கும் இப்பாமலர்கள். கவிஞன் நமக்குத் தெரிந்ததைத் தானே சொல்லுகிறான். நாம் அன்றாடம் கண்டு, நுகரும் பல நிகழ்ச்சிகளைத் தானே குறிப்பிடு கிறான். இதிலே தனிச் சிறப்பு என்ன இருக்கிறது? நிறைய இருக்கிறது - நாம் கண்டவற்றிலே தான், இதுவரை நாம் காணாத உண்மை ஒன்றும் இருப்பதை எடுத்துச் சொல்லுகிறான். நாம் அனுபவிக்கும் அதே நிகழ்ச்சியிலேதான், நாம் இதுவரை உணராத புதுமை ஒன்றும் இருப்பதைக் குறிப்பிடுகிறான். உரைநடை எனக்கு, நான் முன்னறியாத ஒன்றைச் சொல்லுகிறது. fÉijnah eh‹ K‹d¿ªâUªj x‹iwna brhšY»wJ” v‹W r® thšl® uhny v‹w m¿P® T¿dhuh«.* கோழி எவ்வளவு கருத்தோடு தன் குஞ்சுகளைப் பாதுகாக் கிறது. பருந்தையும் எதிர்த்து, பார்ப்புகளைச் சிறகால் அணைத்துப் பாதுகாக்கிறது அல்லவா? அதே கோழி, தன் குஞ்சுகளாக முன்பு விளங்கியன என்பதையும் மறந்து, தன் இரையை அவை கவர்ந்து விடுமோ என்று அஞ்சி, மூக்கினால் கொத்தியும் சிறகால் அடித்தும் விரட்டக் காண்கிறோம் அல்லவா? இதிலே புதைந்து கிடக்கும் ஒரு புதுமையான கருத்தைக் கவிஞர் தருகிறார். தன் மகனை மிக அன்புடன் பேணும் ஒரு தாய். மருமகள் வந்தவுடனே, அவள் மீது கொள்ளும் வெறுப்புணர்ச்சியால் பெற்ற மகனையும் புறக்கணிக் கின்றாள் அல்லவா? அதற்கு இதை ஒப்பிடுகிறார் ஆசிரியர். `வளரக் கெடும் என்ற தலைப்பமைந்த இப் பாடல் புதுமை மிக்க, ஒப்பற்ற கற்பனையாகும். ஓர் ஆங்கிலப் பேரறிஞர், மனிதனின் உணர்ச்சிகளை ஆட்சி செய்யும் அரசர்கள், என்று கவிஞர்களைக் குறிப்பிடுகிறார். (Poets are the rulers of ment’s spirits” - J.C. Shairp.) தமிழ் முடிசூடிப் படிப்பவர்தம் மன அரியணை ஏறி உணர்ச்சிகளை ஆளும் பாட்டுத் திறத்தாலும், அதைக்கொண்டு `வையகத்தைப் பாலிக்கும் திறத்தாலும் இவரும் முடியரசராகவே திகழ்கின்றார். ஆம், காதலியைப் பற்றிய கவிதையைப் படிப்பவனைக் காதலனாக, குழந்தையைப் பற்றிய பாவை இசைப்பவனைத் தந்தையாக, மொழி பற்றிய பாடல்களில் ஈடுபடுபவனைத் தமிழனாக, பண்புதரும் பாட்டுக்களை ஓதுபவனை மனிதனாக உயர்த்தி நல்லாட்சி புரிகின்றார். இப்பேரிலக்கியத்தால் நாம் பெறும் பயன்கள் இத்தனை யென்றால், இவை போதாவா? இந்நூல் அச்சேறுங்கால் மெய்ப்பு நோக்கிச் செப்பம் செய்த கவிதைச் செல்வர் கல்லாடனுக்கும், எழுச்சிப் பாவலர் இலக்கி யனுக்கும் நன்றி கலந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இருபத்தெட்டாண்டுகளுக்குப் பின் மூன்றாம் பதிப்பாக இந்நூலை வெளிக் கொணர்ந்த முத்துப் பதிப்பகத்தாரை வியந்து பாராட்டும் முகத்தான் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கின்றேன். தமிழண்ணல் An appreciation by VR. M. CHETTIAR, B.A., `Mudiarasan’ is a modern Tamil poet who is young, enthusiastic and sings with gusto of life’s perplexing problems: he is a born poet, a genius indeed who enjoys life, finds out the poignant secrets of existence, and rapturously exercises his ardent imagination in building up his human theme, without being baffled by the occasional riddles of social evils and human deviations and distractions. When he sings of Nature’s myriad graces, he is enthralled by the beauty of creation which has a perennia sweetness and consoling solemnity, as a wholesome remedy for the human camouflage and delinquency of conduct. When he sings of love, the human secrets of sweeter existence emerge in a transparent poetic picture which sincerely thrills the reader who easily understands and enjoys the poet’s solemn secrets profoundly and sensitively. When he deals with the relation between capital and labour, he goes to the root of the trouble..... the uneven distribution of wealth, the tyrannical capitalist and the struggling labourer who perhaps under a benign rule can enjoy life better, tenderly and tranquilly. When the poet discusses the importance of Tamil as our mother-tongue, his rapture knows no bounds: he is frank, ecstatic, and assuring in his profound poetic utterance, insisting on the sincerity of his over helming suggestions. Even child can easily grasp the fundamental brilliance of his argument in defence of his mother-tongue with all its alluring charms of sweeter delicacy and expansive accommodation. When Mudiarasan recalls to his memory the achievements of Bharathithasan, Kalianasundara Mudaliar, Desika Vinayagam Pillai and the Crucifixion of Jesus Christ, he cheerfully details their solemn and enduring merits which the world always welcomes as a universal triumph of the human spirit summoned by the human crises. When his poems tranquilly bless the souls of the great departed Indians, they have the geunine tenderness of a warm, holy enduring benediction indeed. His miscellaneous poems enlighten us on the poetic profundity of Kambar’s genius in its entire universa appeal of artistic resplendency. Mudiarasan’s poetry is charming indeed both in matter and manner: his prosodic variety will please all, and his poetic diction is racy, vivid, ripping, subtle, resonant and suggestive, employing his own concrete, convincing imagery to vivify the imaginative spell of happy human experiences in life’s heaving cosmos. The poet’s ethical emphasis is direct, and never deviates from the central crisis of life’s languorous lavishness. We may assure the young poet a glorious future in the world of growing modern Tamil poetry in its expansive accommodative march. His poems console us tenderly, peacefully and permanently. His musical compositions appear as a separate book of varied graces and inspiration: the exhilarated reader can welcome therein the poet’s dignity, and clarity of harmonious diction designed for the ecstasy of musical utterance. Simple words sing rapturously, inducing a fountain of delight in the listener’s ear. Karaikudi, VR.M. CHETTIAR 11-3-1961 1. காவிய உலகம் காதற் சிலை நிலைமண்டில ஆசிரியப்பா தண்மலைச் சாரல் சார்தரும் சிற்றூர் கண்கவர் பொழில்சூழ் கருமலைக் குறிஞ்சி எனும்பெயர் கொண்டெழில் இலங்கிய தவ்வுழி இனமயில் அகவ இருந்ததோர் குன்றம்; கலைஞன் கோட்டம் குன்றின் அடியில் சிற்பக் கோட்டம் ஒன்றினை நிறுவி உலகோர் வியக்க வாழ்ந்தனன் சிற்பம் வல்லான் ஒருவன்; போழ்ந்தகற் பாறையிற் புகுத்திய புதுமை கண்டார் அவனைக் கடவுளே என்பர்; கற்பனைத் திறனும் கைச்சிற் றுளியும் பொற்புடன் படைத்த அற்புதப் பொருளெலாம் தொடாஅது நின்று தொலைவில் காண்போர் விடாஅது நோக்கி வியப்புற் றவையெலாம் உயிர்ப்பொரு ளென்றே உரைப்பர்; அவர்தாம் அயிர்ப்பொரு சிறிதும் அடையார்; அருகில் தொட்டுப் பயின்றபின் துணிகுவர் சிலையென; எட்டுத் திசையும் நிகரிலை எனமனம் விட்டுப் புகழ்வர்; விளைபுகழ் மொழிகள் கொட்டும் பொருள்கள் குறியாக் கொள்ளான் கலைவளர் நோக்கம் ஒன்றே கருத்தில் நிலையாக் கொண்டான் நினையான் பிறிதை; கலையே அவனாம் அவனே கலையாம் கலைஞன் எனும்பெயர்க் கமைந்தோன் அவனே; கண்ணொடு கண்ணிணை கண்ணில் ஒளியும் கையில் உளியும் எண்ணிற் சிலையும் இளமையிற் பொலிவும் உடலிற் கட்டும் ஒருங்குடன் பெற்றோன் இடமுடைக் கோட்டத் திருந்துழி ஆங்கண் அழகிள நங்கை அவன்முன் நின்றாள்; பழகிய தோழியும் பக்கலில் நின்றனள்; நிமிர்ந்தவன் நோக்கினான் நீள்விழி மீட்கிலன் எதிரெதிர் விழிகள் இமையா திருந்தன; வினாவும் விடையும் பெண்மையின் இயல்பால் பேதை நாணினள்; அண்மையில் நின்ற ஆருயிர்த் தோழி, எங்கள் தலைவி மங்கையர் திலகம் உங்களை நாடி உவந்திவண் வந்தனள் வந்தவள் தன்னை வைத்தகண் எடாஅது நுந்தம் விழியால் நோக்குதல் முறையோ? என்றொரு வினாவை எழுப்பிட, எழுந்தவன் ஒன்றிய துயில்கலைந் துணர்ந்தெழு பவன்போல் விழிகளைத் துடைத்து மீண்டுற நோக்கி எழிலுற வடித்த என்சிலை உயிருடன் எழுந்திவண் வந்ததோ எனநான் மயங்கிக் கொழுந்து நிகருடற் கொடியிடை யாள்தனை உற்று நோக்கினேன் உறுபிழை பொறுப்பீர்! எற்றுக் கிவ்வயின் என்பால் வந்தீர்? பொற்றொடி இவள்யார்? புகலுதி என்றனன். காரணம் கூறினள் முழுதுணர் கலைஞ! முன்னிநீ படைத்த பழுதிலாச் சிற்பக் கோட்டம் நிறைதரு சிலையெலாம் கண்டுநின் கலையெலாம் கண்டிவண் உலவலாம் எனமனம் உந்திட வந்தனம்; வளநா டாளும் வடிவேல் மன்னவன் உளமகிழ் மகளாய் ஒருதனி வந்தவள் முரசொலி முழங்கும் முத்துவள நாட்டின் அரசிளங் குமரி யாமிவள் என்றனள்; வரவுரை கூறினன் கலைநலம் விழையும் கருத்துடன் வந்தீர்! தலைதரும் வணக்கம் தந்தனென் நுமக்கே வருக வருக! வடிவுடைச் சிலைநலம் பருக வருக! பாவையீர்! வருக என் றக்குல மகளிரை அழைத்துடன் சென்று தக்கநற் சிலையெலாம் தனித்தனி காட்டினன்; படிமம் வேண்டினள் சிலைத்திறம் காட்டும் சிற்பியின் வினைத்திறம் கலைத்திறம் அனைத்தும் கண்டு வியந்து பலபடப் புகழ்ந்து பாரில் நிகருமக்(கு) இலைஎன உணர்ந்தேன் எனைப்போல்ஒருசிலை கைத்திறன் முழுதும் காட்டிச் சமைத்துத் தைத்திரு நாளில் தருதல் ஒல்லுமோ? விழைந்ததென் உள்ளம் வேண்டினென் நுமைஎனக் குழைந்து கனிந்து கூறினள் அரசி; சிற்பியும் ஒப்பினான் எழில்விளை நிலமே! என்தொழில் அதுவாம், முழுநலம் பெறுசிலை முடிப்பேன், இதுவரை கற்பனைத் திறத்தால் கற்சிலை சமைத்தேன் பொற்புடை நின்போல் பொற்சிலை சமைக்க இன்றே தொடங்குவென் ஏழாம் நாளில் நன்றே முடிப்பேன் நல்லாய்! என்முன் அசைதல் இன்றி அவ்வயின் நில்லென; நசையுடன் நின்றனள் நங்கையும் அவன்முன். உறுப்பெழில் நோக்கினான் நின்ற நிலையை நிமிர்ந்தொரு முறைமனம் ஒன்றும் படியவன் உற்று நோக்கினன்; பின்பவள் மலர்த்தாட் பெருவிரல் நோக்கி இன்ப வல்லியின் இடையினை நோக்கி இடையில் ஒன்றும் இடக்கை நோக்கி வடிவொடு தொங்கும் வலக்கை நோக்கி எடுத்த மார்பும் தொடுத்த தோளும் கழுத்தின் வடிவும் கண்டபின் முகத்தின் வட்டம் நோக்கி வாயிதழ் நோக்கி ஒட்டும் புருவம் ஒண்குழைச் செவியை எட்டும் விழியின் இணைஎழில் நோக்கிக் கதுப்பும் நுதலும் கண்கவர் மூக்கும் விதுப்புற நோக்கி வெய்துயிர்த் தனனே. சிற்றுளி வல்லதோ அவ்வயின் நின்ற ஆருயிர்த் தோழி இவ்விதம் பெருமூச் செறிவதன் நோக்கம் யாது என வினவ ஆடவன் கூறுவான் மாதுடல் அமைப்பின் மாண்புகள் யாவும் சிற்பச் செந்நூல் செப்பும் இலக்கணச் சொற்படி கண்டேன் சொக்கினேன், இவளுரு அற்புதப் படைப்பாய் அமையும் எனினும் விழியில் வழியும் ஒளியும் அருளும் பிழிதேன் பொழியும் மொழிபுகல் வாயின் இதழில் தவழும் இனிய மூரலும் புதுமைச் சிலையில் புகுத்திக் காட்ட என்கைச் சிற்றுளி வல்லதோ எனநான் உன்னிப் பார்த்தேன் உயிர்த்ததென் நெஞ்சென; இருவர் நெஞ்சம் சிலையாய் நின்றவள் சிரித்தனள்; வாயில் நிலையாய் நிற்கும் நிரல்படு முத்தின் ஒளிபட அவன்முகம் களியால் மலர்ந்த(து); அளிநிறை நெஞ்சை அவன்பால் வைத்துத் தளிரடி பெயர்த்துத் தையல் நடந்தனள்; பேதையின் பின்செல்லும் பேதுறும் மனத்தைத் தீதிலன் தடுத்துத் திருப்பினன் அவள்சிலை படைத்திட வேண்டும் பணியுள ததனால்; உடைத்தொரு கல்லில் உளியை நாட்டினன் தளிரடிச் சிலம்பொலி உளியடிக் கெழுமொலி குளிர்மலைச் சாரலில் குலவி எதிர்ந்தன சிலம்பொலி தாழ்ந்தது சிற்றுளி ஒலித்த (து) முடிந்தது படிமம் உண்ணான் உறங்கான் உடல்நலம் பேணான் கண்வழி புகுந்து கருத்திற் கலந்தவள் வண்ண உருவம் வடிப்பதே தொழிலாய் ஒவ்வோ ருறுப்பும் உன்னி நோக்கிச் செவ்வனே முடித்தனன் செப்பிய எழுநாள் முடிந்தது சிலையும் முடிந்தது நெஞ்சிற் படிந்த உருவின் படிமம் கண்டனன்; காதல் மடவார் கடைக்கண் பணித்தால் ஈதொரு பணியோ? ஏழ்சிலை முடிப்பர்! காதல் வேகம் கடிதே கடிதே! சிலையா அவளா? மன்னன் மகளாம் மயிலியும் வந்தனள் நன்னர்ச் சமைத்த நயத்தகு படிமம் கண்டனள் வியப்புக் கொண்டனள் மிகவே; `ஒண்டொடி என்போல் உளதோ இவ்வுரு? விண்டிடு மெய்என வினவினள் தோழியை; மயிலியைச் சிலையின் மருங்கினில் நிறுத்திப் பயிலியற் சாயல் பார்த்தனள், விம்மி எது சிலை எது நீ எனக்காண் பரிது! புருவச் சிலையில் பூத்துள வியர்வால் உருவச் சிலை எது உன்னுடல் எதுவென உணர வல்லேன்; ஒப்பிலை இவற்கே! இணர்மலர்க் கோதையின் இதழின் சிரிப்பும் இன்னருள் விழியும் எப்படிப் படைத்தனை? கற்பனை மிகுத்திடும் சிற்பக் கலைஞ! Éòfœª nj¤j K‰gL« vd¡F ehî« x‹nw ehbd‹ brŒnf‹? சிலையில் ஒருகுறை `பலபடப் புகழும் பாவாய்! என்றன் கலைமுறைத் திறனைக் காட்டிலேன்; நெஞ்சில் வாழும் வடிவின் வார்ப்படம் இவ்வுரு ஊழால் அமைத்திடும் உருவினில் ஒருகுறை உளதிவள் நெஞ்சை உளியாற் படைத்த சிலையிற் பொருந்தச் செய்திலேன் என்றனன்; நெஞ்சம் கலந்தன `நெஞ்சை நும்பால் நிறுத்திச் சென்றேன் வஞ்சம் செய்தீர் என்றனள் வஞ்சி; தொலைவில் இருக்கும் சிலையைக் காணத் தோழி அகன்றனள், தூயநற் கலைஞன் `வாழி நெஞ்சே வாழிய மயிலி என்றன் நெஞ்சும் உன்றன் நெஞ்சும் ஒன்றிய படியால் எடுத்ததைச் சிலையில் வைத்திட மறந்தேன் மைத்தடங் கண்ணி! ij¤âU ehËš jh«fyª jdnt; k‹d‹ kfŸ Ú kaYW« v‹ghš m‹òl‹ fil¡f© mUSâ nah? என, காதல் மன்னன் `மாண்புயர் கலையில் மணிமுடி யரசர்! ஏனுமக் கையம்? என்மன வுலகில்நீர் ஆளும் மன்னர்! அன்பரீர் நும்மை நாளும் நினைந்தே நலிவுறு கின்றேன் என்றலும் தோழி இடையில் வந்து நின்றனள் பின்னர் நீங்கினர் இருவரும்; ஆடினன் பாடினன் அருவி நீரில் ஆடினன் ஓடினன் ஆண்டுள மலர்களைச் சாடினன் அச்சிலை சார்ந்துதன் மெய்யால் மூடினன் காதலில் மூழ்கினன் சிற்பி; வேந்தனும் சிலையும் வேட்டம் போகிய வெள்வேல் வேந்தன் கோட்டம் காணிய குறுகினன் ஆங்கண் `குறிஞ்சி நாட்டின் கோமகன் வந்தான் அருந்திறல் அரசர்க் கரசன் வந்தான் என்றிரு காவலர் இசைத்திட, எழுந்து சென்று வணங்கிச் சிற்பக் கலைஞன் குறிஞ்சி நாட! நின் கொற்றம் வாழி! செறிந்தநல் லறஞ்சேர் செங்கோல் வாழி தெரிந்த வகையால் செய்துளேன் சிற்பம் அறிந்திட வந்துளீர் அடியனேன் வணக்கம்; என்று கூறி இயற்றிய சிலைஎலாம் நன்று காட்டிட, நாடாள் வேந்தன் அழகோ வியமாய் ஆண்டுள சிலையை விழியால் பருகினன் வியந்தனன் அவன்திறம் நின்றுள சிலையெலாம் நிரல்பட நோக்குவோன் ஒன்றிய ஒருசிலை உற்று நோக்கினன் மயிலியின் சிலையில் மயங்கி அதனை விலையால் பெறுவான் விழைந்தனன்; சிற்பக் கலைஞன் அதன்நிலை கழறினன் விரித்து; ஆசை அரும்பியது வடிவேல் மன்னன் மகளெனக் கேட்டலும் கொடியிடை யிவள்போல் குவலயம் யாங்கணும் வடிவுடை யழகி வாழ்ந்திடல் காண்கிலேன் என்னடி வணங்கித் திறைகொடுத் திருக்கும் மன்னவன் இவற்கோர் மனங்கவர் மகளுளாள் என்ப தறிந்திலேன் இன்றே தெரிந்துளேன் பின்பவட் காண்பேன் பேதையை மணப்பேன் என்று மனத்துள் எண்ணினன் சென்றான். தூது தோற்றது சென்ற குறிஞ்சியான் செய்தி எழுதி வடிவேல் மன்னனின் மகட்கொடை வேண்டிக் கடிதிற் செல்லும் காவலற் போக்கினன்; முடங்கல் கண்ட முழுமதி முகத்தாள் தடங்கல் சொல்லித் தானொரு சிற்பிக் குரியள் என்பதை உணர்த்துக என்றனள்; சீற்றம் எழுந்தது சிறியவள் விடுத்த செய்தியைக் கேட்டுச் சீறி எழுந்தனன். `சிற்றர சன்மகள் மீறிய உரைசொல மேவிடும் செருக்கைக் கூரிய மதிகொடு கொட்டம் அடக்குவேன் தீப்பொறி சிதறச் சினந்துரை கூறிக் `கூப்பிடு அந்தக் கொடுஞ்செயற் சிற்பியை என்றலும் ஏவலர் ஏகினர் கொணர்ந்தார்; சூழ்ச்சி சுழன்றது நின்றிடும் சிற்பியை நெருங்கினன் குறுகிக் `கலைவலோய்! நின்றன் காதற் குறிப்பின் நிலையெலாம் அறிகுவன் நீயொரு குடிமகன் அரசியை மணத்தல் அடுக்குமோ? அதனால் கருமலைக் குறிஞ்சிக் காவலன் ஆக்கிடக் கருதி உனையிவன் கடிதின் அழைத்தேன்; என்மொழி கேட்க இசைகுவை யாயின் மன்மகள் நினக்கு மனைமகள் ஆவள் உன்கலைத் திறனை உலகமும் ஏத்தும் என்றனன் வேந்தன்; இசைந்தனன் சிற்பி; குன்றடர் மலையைக் குடைந்தொரு கால்வாய் சென்றிடப் படைத்துச் சிற்பத் திறமெலாம் காட்டி அதனிரு கரையிலும் அமைத்திடல் வேட்டனன் யானே விரைவினில் முடிப்பின் வேட்டவள் தன்னை வியன்மணம் கொள்வாய்; காட்டுக நின்திறம் கலைஞ! என் ஆணை வினைகள் முடியுமுன் விழைவோட் காண முனைவதும் குற்றம்இம் மொழியுமென் ஆணை, எனமொழிந் திருந்தனன் இறையவன் அரியணை; சுழல்மனம் துணிந்தது kd«Ãiw JaÇd‹ ka§»d‹ brŒtif ahbjd m¿»y‹; `ahbd‹ brŒFbt‹ ÔJW nkh?எனச் சிந்தனை செய்தனன்; மயிலியின் திருவுரு மனக்கண் தோன்றலும் வெயிலவன் போல வெண்முகம் சிவந்தது; `குறிஞ்சி நாட; நீ கொடுத்தஇவ் வாணையை விரைந்து முடித்துநான் வெற்றியுங் கொள்வேன் எனுமொழி கூறி ஏகினன் சிற்பி; வினைத் திறன் வெற்றி காதல் உணர்வு கருத்தினில் உந்தி மோதி எழுதர முனைந்தனன்; உழைப்பால் மலையைக் குடைந்தனன் மாபெருங் கால்வாய் அலையொடு பாய்ந்த(து) அதனிரு கரையில் உலகம் உவப்ப உயர்பெருஞ் சிலையெலாம் படைத்தனன்; ஆண்டுகள் பலப்பல கடந்தன உடலந் தளர்ந்தனன் உள்ளந் தளர்ந்திலன் தடந்தோள் வீரன் தலைநிமிர்ந் திருந்து வெற்றிச் செருக்கொடு விழித்து நோக்கினன் பெற்ற களிப்பால் பெருமூச் செறிந்தனன்; சிற்றுளி கைவிரல் பற்றி யிருந்தது; காதற் கனவு பலித்திடக் கண்டேன் ஏதுக் கினித்துயர்? இவ்வுல காள்வேன் நானும் அவளும் வானம் பாடி போலப் பறந்து வானில் திரிவோம் எனப்பல கற்பனை எண்ணி நின்றனன்; சூழ்ச்சி வென்றது சினப்படு வேந்தன் செய்ததோர் சூழ்ச்சியால் ஆங்கோர் கிழவி அழுது வந்தனள்; `தீங்குனக் கென்ன? செப்பெனச் செப்பினள்; `வடிவேல் மன்னன் மகளென வந்த கொடியிடை மயிலி மடிந்தனள் என்றாள்; அலறினன் கதறினன் `ஐயகோ என்றனன் `பலபகல் இரவுகள் பாடுபட் டுழைத்ததால் உறுபயன் இதுவோ! உலகம் முடிந்ததோ! இருளெனைச் சூழ்ந்ததோ! ïÅcÆ® ÉiHtnjh! கலைஞன் புலம்பல் காடெலாம் பரவி மலையகம் மோதி எதிரொலித் தெழுந்தது; மாதின் சிலைபால் ஓடினன் மயங்கி மோதினன் முட்டினன் `மோனத் திருக்கும் காதற் சிலையே கண்ணீர்த் துளியால் குளித்திடு! என்னுயிர் குடித்திடு விரைவில் யாண்டுச் சென்றனை? யாதுநீ எண்ணினை? M©L tUnt‹ M%Æ®¡ fhjÈ! என்றவன் புலம்பிக் குன்றினில் ஏறி நின்றனன் வானை நிமிர்ந்து நோக்கினன்; காற்றில் கலந்தான் விரலுறு சிற்றுளி வீசி எறிந்தனன் `மயிலி மயிலி மனங்கவர் மயிலி மயிலி நானும் வருவேன் என்று பலகால் அலறிப் பாய்ந்தனன் கீழே சிலையாய் நிற்பவள் சீறடி வீழ்ந்தனன்; கதறலும் உயிரும் காற்றுடன் கலந்தன சிதறிய குருதி சிலையெலாம் நனைத்தது கவலைகள் தீர்ந்தான் காதலும் தீர்ந்தான்; திவலைகள் அலறின சிலைகளும் அலறின குன்றுகள் அலறின குகைகளும் அலறின பறவைகள் அலறின பாரெலாம் அலறின; அவலப் பாடல் மாய்ந்தனன் சிற்பி என்றொரு மாற்றம் தோய்ந்தது செவியில் துடித்தனள் மயிலி; `ஐயகோ ஐயகோ ஆர் செய் சூழ்ச்சி? வையகம் பொறுக்குமோ! வானகம் இருக்குமோ! உண்மைக் காதலை உலகம் வெறுத்ததோ? bg©ik¡ »§nf bgUªJa® jhndh! என்றனள் ஏங்கி ஏகினள் குறிச்சிக் குன்றினில் ஏறிக் குத்தினள் கீழே சிலையின் அருகே அவளும் சேர்ந்தனள் கலையும் உயிருடன் காதலும் தீர்ந்தனள்; மலையும் மரமும் மலைத்து நின்றன; அழும்ஒலி போல அவலம் பாடி இழுமெனும் ஒலியால் இயங்கிய(து) ஆறே. 293 (பழமைச் சிறப்பு வாய்ந்த இலக்கிய வளங்கொண்ட பாரசிகம், என்றென்றும் நிலைத்து வாழும் உயிர்க் கவிஞர் பலரைத் தந்துள்ளது. அக்கவிகளுள் நிசாமி என்பவரும் ஒருவர். அவர் படைத்த காவியங்கள் உணர்ச்சி வேகம் மிக்கவை. கோசுரு சிரீன் என்னும் பெருங் காப்பியம் அவர்தம் படைப்புகளுள் ஒன்றாகும். அக் காவியக் கதையைத் தழுவி எழுதப்பட்டது இந்நெடும் பாட்டு.) சுதமதி நிலைமண்டில ஆசிரியப்பா பூவும் பூவையும் பல்வகை மலர்தொறும் பாடிப் பாடிப் புல்லிதழ் அகமெலாம் ஞெகிழப் புக்குத் தேறல் மாந்திச் சுரும்பினம் திரிதரும், ஆரல் பார்த்து நாரை தவஞ்செயும் பொய்கை சூழும் பொதும்பர் அதனுள் பெய்வளை ஒருத்தி பேணினள் செலீஇ நறுமலர்ச் செடிதொறும் நாண்மலர் கொய்தனள் திருமணம் பெறாஅச் சேயிழை; அவள்இடை நிகர்த்தோம் நாமென நினைத்தஓர் பூங்கொடி முகிழ்த்தநல் லரும்பால் நகைத்துச் செருக்கத் தருக்கினை நோக்கிய தையல் முறுவலால் தருக்கினை அடக்கித் தலைகொய் தனளே; தாமரைப் பொய்கையுள் தளையவிழ் மலர்க்குக் காமரு பொலிமுகங் காட்டினள்; அவ்வுழைப் புரியவி ழாமுகைப் போதுகள் நோக்கலும் கருவிளை விழியாள் கவிழ்த்தனள் தலையை; இச்சிறு முகைக்கொரு ஒப்பிலை என்பால், என வாங்கு, வெய்துயிர்ப் புறுங்கால் விம்மிய மார்பகம் கண்டனள் களித்தனள் தண்டொடுந் திருகிக் கொண்டனள் அம்முகை; கொவ்வைக் கனியைச் சுவைத்தனள் அதுதான் துணையிதழ்க் கொவ்வாத் தகைத்தென உமிழ்ந்தனள்; சாயல் நடைஎழில் காணலும் மயிலொடு அன்னங் கலங்கின பாணொலி கேட்டுப் பைங்கிளி குயிலொடு நாணின; இவ்வணம் நங்கை நின்றுழி, அவனும் அவளும் தொடுக்குந் தெரியல் தோளினன், சுடரொளி விடுக்கும் பொற்பூண் விடலை, பலர்தொழும் கடவுட் கோலக் காளை ஒருவன் தடமலர்ச் சோலையுள் தையலைக் கண்டனன் கண்டார்ப் பிணிக்கும் காரிகை எழில்நலம் உண்டான் விழியால், உலகின் அழகெலாம் ஓருருக் கொண்டிங் குற்ற தோவெனத் திகைத்து நின்றனன், நிலத்தை நோக்கினள், பதைத்தனள் நிமிர்ந்தாள், பார்வையைத் திருப்பினன், ஈரிரு விழிகளும் மாறி மாறி ஓரிரு முறையால் ஒன்றிக் கவ்வின; நன்னுதல்! யார்நீ? என்னலும் நாணினள்; பின்புறம் தொங்கும் பின்னல் கண்டவன் என்னுயிர் பின்னினை எழில்முகங் காட்டி நின்வர லாறுரை நேரிழாய்? என்னலும், சண்பை நகரெனச் சாற்றும் இவ்வூர்ப் பண்பினன் வேதப் பார்ப்பன முதுமகன் அழலோம் பாளன் அன்பினன் கோசிகன் என்போன் மகள்யான் என்பெயர் சுதமதி இம்மொழி செப்புமுன் இளையன் உணர்வால் கைம்மலர் பற்றிக் கனியிதழ் கொய்தான் செய்வகை யற்றுச் சேயிழை நின்றனள்; வயங்கிழை மாதே வடபுலத் துறைவேன் பயங்கெழு பூம்புகார்ப் பதியில் நிகழ்வுறூஉம் இந்திர விழாவுக் கேகினன், வழியிடை முந்திய தவத்தால் முன்வந் துற்றனை! என்பெயர் மாருத வேகன் என்பர் அன்பின் கிழத்தி ஆகுதி என்று வன்பால் அவள்கைம் மலரினைப் பற்றினன்; இணர்மண மாலை ஏற்று மகிழும் மணம்பெறா முன்னர் மலருடல் தீண்டுதல் குணமிகு செயலெனக் கூறார் என்றனள்; யாழோர் மணத்தால் யானுனைக் கூடுவேன் தோழீஇ எனஅவள் தோள்தழீஇச் சென்று பூம்புகார்த் தங்கிப் போகம் சுவைத்தனன்; யாழும் வாழ்வும் பெருமுழ வெங்கணும் திருவிழா அறைந்தன, தெருவொலந் தோரணம் வாரணந் திகழ்ந்தன, மகார்முதல் யாவரும் மனங்களி கூர்ந்தனர். புகார்நகர் விழாவிற் பொலிந்தது யாண்டும் அலைமணற் கரையெலாம் நிலவினர் மக்கள், இளைஞர் துணையொடும் இன்னிசை பாடினர். குழலும் யாழும் கூடி இசைத்தன. மழலைச் சிறுமகார் மணலில் ஆடினர், மாந்தர் ஒலியொடு மற்றிசை ஒலியும் சேர்ந்து கடலொலி சிறிதெனச் செய்தது; மாருத வேகன் மனத்தினில் மகிழ்ச்சி சாருத லின்றித் தனிமையை நாடிச் சிந்தனை முகத்தில் தேக்கின னாகி நந்தின் சினைகள் சிந்திய ஒருபால் புந்தியில் அலைகள் புரள இருந்தனன்; என்மனங் கவர்ந்தோய் யாதுற் றனைகொல்? நின்முகஞ் சோர்வுறின் என்னுளஞ் சோர்வுறும். இந்திர விழாவில் வந்தோர் யாரும் நொந்திலர், மகிழ்வைச் சிந்தையில் தேக்கினர், நாமுங் களிப்போம் வாவென நீவிச் சுதமதி யாழினைச் சுருதி கூட்டினள்; புதுவகைச் சுவையெலாம் பொருந்தப் பாடிக் காணா இன்பக் காதல் ஊட்டினள்; ஆணோ யாழில் அவலம் மீட்டினன்; மாருத வேகன் மாறின னாகக் காரிகை கலங்கினள்; காதலி! இசையில் அவலம் காதல் அனைத்தும் சுவையே கவலை நினக்கேன்? கைவிரல் ஒட்டி மீண்டும் யாழினை மீட்டுதி கண்ணே! காண்டும் இன்பங் களிஉல கதனில் என்றனன்; தோகை எடுத்தனள் யாழை; ஒன்றிய குரலால் உள்ளம் உருக அவலச் சுவையே அவளும் பாடினள்; திவவுக் கோல்யாழ் தெரிநரம் பிடையே சுவைசெய் சிறுவிரல் துடிப்புடன் தடவி முடிநிலை யுறுங்கால் முறிந்ததோர் நரம்பே; இடியொலி கேட்டெனத் துடியிடை நடுங்கி இதய நரம்புதான் இற்ற தோவெனப் பதறினள்; அஞ்சேல் பாவாய் என்றனன்; இருப்பினும் அவள்மனம் ஒருப்பட வில்லை; காதலும் கடவுளும் சிரிப்பினை யிழந்தனள் சிந்தையிற் கலக்கம் நிறைந்தனள்; அவளுறு துயரம் நீக்குவான் அலையெழு புனலிடை மலைநிகர் மரக்கலம் பலவரூஉம் அழகினைப் பார் எனப் பகர்ந்தனன்; அலமரும் மரக்கலம் ஆகினேன் யான் எனச் சிலைநிகர் அம்மகள் செப்பின ளாகப், பலவகைச் செடிதொறும் பறந்து படிந்து மலரிடைத் தேன்நுகர் வண்டுகள் காண் என, அலர்தரு நறவம் அருந்திப் பிறிதொரு மலர்முகம் நோக்கும் வண்டினம் புரிசெயல் நின்னிற் றோன்றா தொழிகதில் அம்ம! என்னலும், இளையன் ஏனுனக் கையம்? உலையில் காய்ச்சி உருக்கிய பொன்னால் மேற்றிசை வானை மெருகிடல் போல்நிறம் தீற்றிய கதிரோன் மறையும் செக்கர் வானெழில் காணுதி! வாட்டந் தவிர்தி! வீணில் ஐயுறின் விளைவன தீயவே இங்ஙனம் ஆற்றியும் இளையோள் தெளிந்திலள்; வானை மினுக்கி மறைவுறுங் கதிரென என்னை மயக்கி என்னலம் நுகர்ந்து மின்போல் மறைதல் நின்பால் நிகழுமோ என்னும் ஐயம் எழுந்ததென் உளத்தே; யாழோர் கூட்டமென் றென்னலம் உண்டனை கீழோர் நாட்டம் எனநிலங் கிளக்கவும், நம்பிய நானிவண் நரம்பறும் யாழென வெம்பவும், கைவிடல் கனவிலும் விழையேல் இருவிழி கலங்க இயம்பினள் இங்ஙனம்; சிறுமதி யுடையாய் செய்கையில் பொய்க்கும் குறுமனம் இல்லேன், கொண்டவள் தவிக்கக் காதல் பொய்க்கும் கயவனும் அல்லேன் காதல் இன்றேல் சாதல் இதுமெய்! தெய்வம் உண்டெனத் தெளிகுவை யாயின் செய்நம் காதல் மெய்யெனத் தெளிகுவை பெண்மதி பின்மதி! ஆம்இஃ துண்மை! கண்ணிழி நீர்துடை கலங்குதல் ஒழி என் றுள்ளம் மாற்றி ஊக்கினன் சென்றான். பள்ளியில் மெல்லிய பஞ்சணை துயிலும் கள்ளவிழ் கோதை கனவுகண் டஞ்சி நள்ளிர வதனில் நடுங்கிப் பிதற்றினள்; தேற்றினன் தெளிந்தாள், துயிற்றினன் துயின்றாள்; பூவையும் புலம்பலும் காற்றுடல் வருடக் கண்மலர் அவிழ்ந்தாள் கதிரவற் கண்டாள் காதலற் காணாள் அதிர்ந்தனள் உள்ளம் அந்தோ பேதை! ஓடினள் தேடினள் ஊரெலாந் தேடினள்! வாடினள்; இரவொடு மாருத வேகன் ஓடினன் என்பதை உணர்ந்தனள் தளர்ந்தனள்; கடவுளைக் காட்டிக் கழறினன் நம்பினேன், கடவுள் போலவன் கட்படாஅ தொழிந்தனன், வடவன் கூற்றை வாய்மைஎன் றெண்ணி இடங்கொடுத் ததனால் இந்நிலை உற்றேன், மடவன் இவ்வணம் மாறினன், காதல் நலமறி யாமகன் நயவஞ் சகனிவன் குலமகன் அல்லன் கொடியன்! எங்கே ஏகுவென் யானினி எங்ஙனம் வாழ்கேன்? பெண்மதி பின்மதி என்று பேசினன், உண்மை உண்மை, உணரா தொழிந்தேன். வேக மாருதம் என்ன விரைந்தனன், போகிய மாருத வேகனுக் கப்பெயர் ஒன்றும் பரிசென இன்றிங் குணர்ந்தேன் என்றெலாம் அரற்றி இருந்தனள் சுதமதி; தந்தையும் மகளும் சண்பை நகரோன் சதுர்மறை யாளன் நன்மனை யிழந்த நரைமுதிர் கோசிகன் தன்மகட் காணான் தனித்துய ரெய்தித் தென்னங் குமரி நன்னீர் ஆட நண்ணும் மாக்களொடு நாடினன் பெயர்வோன் கடலொடு கலக்கும் காவிரி மூழ்கிய வடமொழி யாளரொடு வருவோன் புகாரில் பிழைமணப் பட்டஅப் பேதையைக் கண்டனன்; மழையெனக் கண்ணீர் வடித்துத் தன்மகள் உற்ற இடும்பை முற்ற உணர்ந்து பெற்றவள் நிலைக்குப் பெரிதும் வருந்தித் தன்பதி செல்லின் வன்பழி நேரும் என்பதால் ஆங்கண் இருந்தனன்; அவளைப் பிரியா னாகிப் பிச்சையாற் புரந்து திரிவோன் ஒருநாள் தெருவரு புனிற்றாப் பாய்ந்திட ஆங்கே சாய்ந்தனன்; மகளொடும் மறைநூல் மாந்தர் வாழிடன் குறுகி உறைவிடம் வேண்டினன்; ஓதிய அந்தணர் `பிழைநடை யுடைய பேதை நின்மகள் உழைய ளாகலின் ஒதுங்கிடம் இலை, இது வேதம் பயிலிடம் விரைந்தே அகலுதி என்றனர் வேதியர்; இருவரும் பின்னர்ச் சமணப் பள்ளியைச் சார்ந்து நும்சரண் இவண்எமக் கொருதுணை யில்லேம் என்றனர்; `புரிநூன் மார்பிற் பொலிவீர்! நீவிர் வேள்வி யியற்றி வேத நெறிப்படூஉம் ஆள்வினை உடையீர் ஆதலின் ஈண்டுப் புகுந்தக வில்லீர் முரணிய புன்மைகள் நுழைந்திடின் எம்நெறி பிழையுறும் என்று கையுதிர்த் தொதுக்கினர்; கலங்கிய முதுமகன் வெய்துயிர்த் தாங்கோர் வேற்றிடன் குறுகினன்; பாங்குறும் புத்தப் பள்ளியைக் காணலும் ஈங்குறல் சாலவும் ஏற்புடைத் தாகும் என்றுளங் கொண்டோன் மகளொடும் புக்குப் பெரியீர் நும்சரண் பேதுற வுற்றோம் அருளீர் அருளீர் ஐயகோ அருளீர் என்றரற் றுரைக்க இரங்கிய சாரணர் நின்துயர் துடைத்தோம், நீள்துய ருற்று நின்ற மகளொடும் வைகுதி என்றனர்; தப்பிய தன்மகள் சுதமதி தன்னொடும் புத்தப் பள்ளியில் புகலிடம் பெற்றனன்; பாலும் பிரையும் புகுந்த மறைநூல் புகல்நெறி யாளர்க்கு நெகிழ்ந்திடங் கொடாஅ நிலையின தாதலின் சமணக் கொள்கை தகவிழந் தழியப் பகையாய் மாறிப் பழிவாங் கினரே; புத்தமோ அவர்க்குச் சித்தம் நெகிழ்ந்தது கருணை ஒன்றே கருப்பொரு ளாதலின் முரணிய கொள்கை நெறியினர் தமக்கும் புகலிடம் தந்தது; புக்கவர் நண்பாய் நகுமுக முடையராய் நன்கனம் பழகினர்; காய்ச்சிய பாலிற் கலந்தது பிரையே புத்தமுந் திரிந்தது பூத்தநன் னிலத்தே! 212 (இஃது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை தரும் செய்தியாகும். மணிமேகலையின் தோழி சுதமதி. இவள் வரலாறு மலர்வனம்புக்க காதையில் 29 முதல் 41 வரையிலுள்ள வரிகளில் காணப்படுகிறது. அதனை விரிவு படுத்தி, வேத நெறியால் சமணநெறிக்கும் புத்தநெறிக்கும் நேர்ந்த விளைவுகளையும் கூறுகிறது இந்தப் பாட்டு.) 2. இயற்கை உலகம் அழகின் சிரிப்பு எண்சீர்விருத்தம் அலைகடலின் அப்புறத்தே ஓரக் கோட்டில் அடரிருளை அகற்றியபின் கிழக்கு வானில் கலையாத செந்நிறத்தைப் பூசி விட்டுக் காதலியைக் காணவரும் காத லன்போல் தலைகாட்டிக் கதிரவன்தான் சிரித்துக் காட்டும் தன்மையினில், மகிழ்வூட்டும் அழகு தன்னில் கலையழகு சிரித்துவிளை யாடக் கண்டு கழனிகளின் வரப்போரம் நடந்து சென்றேன் முழந்தாளிற் கையூன்றிக் குனிந்து நின்று முன்தானை எடுத்திடையில் இறுகக் கட்டிச் சுழன்றாடும் குழல்மாதர் கால்வ யிற்றுச் சோற்றுக்கு நாற்றுநடும் போது தன்னால் எழுந்தாடும் கையசைவில், வீட்டுக் காரன் ஏர்பிடித்துக் களைத்திருப்பான் என்று சொல்லி விழுந்தோடி உணவுகொண்டு வந்த பாவை விளையாடி உணவூட்டும் காட்சி தன்னில், நீர்சேந்தி நிறைத்தகுடம் இடுப்பில் வைத்து நெளியஒரு கைவீசிச் செல்லும் சிற்றூர் சேர்மாதர் மென்னடையில், குருவி காக்கை செழுங்கதிரைத் தின்னாமல் காப்ப தற்கு வார்தொடுத்த கவண்வீசிக் கூவுங் காலை வாயெழுப்பும் இசைக்குரலில், மண்ணை வெட்டி நீர்கட்டும் தொழிலாளி நீள்பு யத்தில் நின்றுநடம் செய்கின்ற அழகைக் கண்டேன் கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சிதரும் குஞ்சுகள்தம் வாயில் கோழி வேல்மூக்கால் அன்புகலந் திரையை யூட்டும் வேளையிலும், வானத்து வீதி செல்லும் பால்மதியப் பெண்தனது விண்மீன் என்னும் பல்விரித்துச் சிரிக்கின்ற போதும், மண்மேல் கால்மடித்துத் தவழ்கின்ற குழந்தை பேசும் காலத்தும் நல்லழகின் சிரிப்பைக் கண்டேன். வெம்புலியின் பாய்ச்சல்தனில், வீரன் ஏந்தும் வேல்நுனியில், தோள்வலியில், படம்வி ரித்து வெம்பிஎழும் நாகத்தின் ஆட்டந் தன்னில், விரிகொம்பு மான்விழியில், தேனை உண்ணத் தும்பிஎழுந் தார்க்கின்ற முல்லைக் காட்டில்; தோகைவிரித் தாடுகின்ற மயிலி டத்தில், செம்பவழக் கொடிக்கடலின் அலைக்கூட்டத்தில் சேர்ந்திருக்கும் அழகெல்லாம் சிரிக்கக்கண்டேன் இங்கெல்லாம் சிரிக்கின்ற அழகு கண்டேன் இனியதமிழ் பேசுகின்ற மனிதன் வாழ்வில் பொங்கிவரும் அழகில்லை! உழைத்துண் டாக்கும் பொருளெல்லாம் பிறர்நுகரப் பெற்ற தாலோ தங்கள்குலம் வாழாமல் சுரண்டு வோரைத் தரைமட்டம் ஆக்கஎழும் எண்ணத் தாலோ மங்குமவன் முகத்தினிலே சிரிப்பும் இல்லை! மனிதரினம் விலங்கினமாய் வாழல் நன்றோ? மக்கள்நலம் பேணுகின்றோம் என்று சொல்லி மணிப்பீடம் ஏறிவிட்டோர் மதத்தின் பீடம் தக்கதுணை என்றெண்ணி அயர்ந்து விட்டார்; தறிகெட்டுத் திரிகின்றார்; மேடை ஏறிக் கொக்கரித்தல் ஓயவில்லை; சட்டத் தாலும் கொடுமைகளும் மாயவிலை; அறிவு மாய்க்கும் அக்குணத்தார் ஆட்சியிலே அழகும் இல்லை ஆதலினால் வாழ்க்கையிலே சிரிப்பும் இல்லை! ஆற்றாலும் மலையாலும் சோலை யாலும் அழகுசிரித் தாடுகின்ற நாட்டில் வாழ்வீர்! சோற்றாலே துயருறுவோர் தமிழர் என்னும் சொற்கேட்டுத் துடித்திலதோ உங்கள் உள்ளம்? மாற்றாரின் காலடியில் நாட்டை விட்டீர்! மடிகின்றீர்! இக்கேட்டை அழிக்கும் எண்ணம் தோற்றாதோ உங்களிடம்? அடிமை வாழ்வு தொலையாதோ? அழகிங்கே சிரிப்ப தென்றோ? 8 இயற்கை உலகம் (கோவையில் 1950 மே 27, 28 தேதிகளில் பாவேந்தர் பாரதிதாசனார் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டுக் கவியரங்கில் முதற் பரிசில் பெற்றது.) இயற்கைத் தாய் அறுசீர்விருத்தம் புனல்நிறைந்த தடமலர்கள், படர்கொடியிற் பூத்தமலர், கோட்டுப் பூக்கள் இனையபல மலர்நாறும் மணமானாள்; இருநிலத்துப் பொருள்கள் தோறும் மனங்கவர்ந்து நிறைந்திருக்கும் எழிலுருவம் அவளுருவாம், மலையில் வாழ்வாள். எனைமகனாப் பெற்றெடுத்தாள் முருகென்னும் எழிற்பேரும் உடையாள் வாழ்க! அழுக்காறாம் எறும்பூரும், பொய்மைஎனும் அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும், இழுக்கேறா நல்லறிவுப் பசிதோன்றும் இத்தனையும் தாங்க ஏலா தழுதிடுவேன்; விரைந்தோடி என்பால்வந் தன்பென்னும் முலைசு ரந்த பழுதில்லா முப்பாலை ஊட்டிடுவாள்; பார்புரக்கும் தாய்மை வாழ்க! *தென்றலெனும் தொட்டிலிலே எனைக்கிடத்தித் தேன்நுகர மலர்கள் தோறும் சென்றிருந்து தமிழ்பாடும் வண்டொலியால் செவிகுளிரத் தாலே தாலோ என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள்; எழுந்தழுதால் ஆறு காட்டிக் குன்றிருந்து வீழருவி, கடல்காட்டிக் கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி. இளங்காலை இருட்கதவம் திறந்துநோக்கி இன்னுமெழ வில்லை யோஎன் றுளஞ்சினந்து முகஞ்சிவந்து கதிர்க்கரத்தால் உறக்கத்தில் எழுப்பு வாள்தாய், குளறிஎழுந் தன்னவளை வைதிடுவேன், கோணாமல் அன்பு கூர்ந்து முளரிமுகங் காட்டிடுவாள் முத்தமிழால் வைதோர்க்கும் வாழ்வே தந்தாள்; விடிபொழுதில் ஆறென்னும் கைநீட்டி விளையாடிக் குளிக்க வா!வா!! பிடிவாதம் செய்யாதே என்றழைப்பாள், பேசாமல் நானி ருந்தால் இடியொலியால் உறுத்ததட்டி மழைத்துளியால் எனைநனைத்து நீரும் ஆட்டிக் கொடிநிகர்த்த மின்னொளியால் நகைத்திடுவாள், கூத்தாடி நான்கு ளிப்பேன். குளிர்மிகுந்து நடுக்கமுறின் மனந்தளர்வாள் கொணர்ந்திடுவாள் ஞாயி றென்னும் ஒளிநெருப்பை! குளிர்காய்வேன், அதன்பின்னர் kலர்க்காட்டுள்XடிXoநËமலருள்நிiறமணத்தைவhரிவந்துehன்மகிழஉlÈற்பூச அனிbதன்றல்உருnவாடுவருtள்தன் அ‹ãனைத்தான்உuத்தல்ஆk? படி¤âLf எனச்சொல்லிக் குயிலினங்கள் பசுங்கிளிகள் இவற்றைத் தந்தாள்; பிடித்தவற்றைப் பார்க்கையிலோர் அறங்கண்டேன்; பேசுமொழி சொந்த மேயாம் அடுத்தவற்றின் குரலல்ல நீயுமுன் றன் அனைமொழியால் பேசு! பாடு!! தடுப்பவர்யார்? என்றனஅ›வேடுகள்தா«தாயேதhய்மொழிnயவாழ்f! விண்ணரங்கிற் கருமுகிலாம்திரைநீக்கி,விதவிதமாவhனம்gடி பண்ணிசை¡க,ஒளிåசிப்புடைNGம் பல்வகைaம்Ûனப்பெ©கள் கண்சிÄட்டிஉடனhட,முழுநிyîக் காரிfயும்நlனம் ஆட மண்ணf¤துமகவெல்லhம்களிகொŸsமனம்வைத்தhŸஎன்ற‹ அன்னை வளைந்துள்ள வெண்ணிறத்துப் ãறைநிலவை thனத்தில்க¥பல்எ‹று தiளந்துள்ளமு»லலையின்நLவிடத்தேjtழ்ந்தோடச்rய்தாள்;இ‹பம் விisந்துள்ளம்களிTரப்பகbலல்லாம் விisயாடஇரு£புலத்iதப் பிளªதெழும்பும்கதிuவனைப்பந்bதனவே பிŸiளஎனக்களி¤தாள்அன்iன கட‰fiuÆš விளையாட இடந்தந்தாள்; கலகலத்த இரைச்ச லோடு படர்ந்தலைகள் கரைநோக்கி விளையாடப் பாய்ந்துவரும், நானும் செல்வேன், மடங்கியொடுங் கிக்கடலுள் எமைக்கண்டு பிடியென்று மறைந்து போகும் அடங்கிடுவேன்; உடன்சிரித்து மற்றோர்பால் அலையெழும்பும், அயர்ந்து போவேன். மலையுறைவாள், அகங்கசிந்து நிலவுலகில் மக்கள்பசித் திருப்ப ரென்று நிலைகலங்கிக் கீழிறங்கி ஆறென்று நெடுகநடந் தெவ்வி டத்தும் கலைகுலுங்கக் கால்களினால் ஓடிமலர்க் கண்மலர வயலிற் பாய்ந்து, குலைகுலுங்கும் கதிர்க்கையால் உணவூட்டிக் குறைநீக்கி மகிழ்வாள் அன்னை. 11 (குன்றக்குடி விசாகத் திருநாள் கவியரங்கில் `முருகன் என் தாய் என்ற தலைப்பில் பாடப் பெற்றது.) எழில் எண்சீர் விருத்தம் வளம்நிறைந்த தமிழ்மொழிக்கு விரும்பிச் சாத்தன் வழங்குமணி மேகலையில், அவளுக் கென்றே உளம்நிறைந்து முப்பொருளால் இளங்கோச் சேரன் உருவாக்கித் தந்துமகிழ் சிலம்பில், கம்பன் பழங்கதையை மெருகேற்றிப் பாரோர் போற்றப் பாவையவள் மகிழவென்று தந்த நூலில், களங்கமின்றிக் கோவைசெய்து தேவன் தந்த கலைசிந்தா மணியிலும்நான் எழிலைக் கண்டேன். விண்முட்டும் கோபுரத்தில், அங்குச் சாந்து வினைவல்லான் அமைத்தசுதைப் பாவை தன்னில், கண்ணெட்டும் போதாதோ எனுமா றாங்குக் கற்றச்சன் வடித்தகருங் கல்லின் சிற்பம், பண்ணொட்டும் யாழேந்தும் கல்விப் பாவை பரிந்துநடம் புரிந்தருளும் தோற்றந் தன்னை எண்ணட்டும் இங்கிருந்தே என்ற நோக்கில் எழுப்புகலைக் கூடத்தில் எழிலைக் கண்டேன். கண்ணொன்றால் காவியத்தை ஆக்கிக் காட்டும் காரிகையார் நடையுடையில் எழிலின் தேக்கம், மண்தின்றால் தீமைஎன அறியாப் பிள்ளை மழலைமொழிப் பார்வைகளில் எழிலின் ஓட்டம், விண்சென்று மீளுகின்ற பட்டம் விட்டு விளையாடும் சிறுசெருவில் எழிலின் பாய்ச்சல், தண்ணென்ற புனலோடைச் சலச லப்பில் தகுமெழிலின் பளபளப்பு விளங்கக் கண்டேன். சுடர்விட்டுக் காட்டுகின்ற கதிரோன் தோன்றச் சுருக்கவிழ்ந்து சிரிக்குமுகத் தாம ரைக்குள் கடன்பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக் கடைதோறும் புகுந்துவரும் கணக்க னைப்போல் இடம்விட்ட மலர்தோறும் சென்று தேனை இனிதுறிஞ்சி இசைபாடிச் செல்லும் தும்பி அடைபட்டுக் கிடக்கவெனக் குவிந்து கொண்ட அல்லிமலர்க் கூட்டத்துள் அழகு கண்டேன். விண்பரப்பில் மீன்நடுவே ஒளியைக் கான்று மென்னடையில் நிலவுப்பெண் ஊர்ந்து செல்ல, மண்புரக்கும் வேலியென அமைந்த வேலை மடிந்துமடிந் தலைஎழுப்பிக் கரையில் மோத, மண்பரப்பில் எழுப்பியுள வலைஞர் சிற்றில் மனைவியின்பால் விடைபெற்றுத் தோணி ஏறிக் கண்மறைக்கும் நெடுந்தொலைவு கடலுள் ஏகிக் கடும்புயலும் சுறவினத்தின் வாயும் தப்பி, மீன்பிடித்துக் காதலன்தான் மீள்தல் கண்டு மீள்வாரோ? மீளாரோ? எனத்த ளர்ந்த மான்படித்த பார்வையினாள் அகத்துள் பொங்கும் மகிழ்ச்சிஎல்லாம் வெளிக்காட்டும் முகத்தி டத்தே தான்நடித்தாள் எழிலணங்கு; தந்தை முன்னர்த் தள்ளாடி நடந்தோடி அப்பா! என்று தேன்வடித்த சொல்லாலே குழந்தை கூவத் திரும்பினவன் முகத்தகத்தும் எழிலைக்கண்டேன். கொடிதாங்கி உரிமைப்போர்க் களத்துச் சென்ற குமரனவன் உயிர்நீங்க ஆள்வோர் தந்த அடிதாங்கித் தலையிழிந்து கொட்டும் செந்நீர், அடிமைஎனும் சிறுமையினை அழிப்பான் வேண்டி நெடிதோங்கும் பிறனாட்சி தொலைக்கும் போரில் நின்றிருந்த பெரியோன்தன் அகன்ற மார்பு வெடிதாங்கிச் சிந்துகின்ற குருதி, யார்க்கும் விளங்காத எழில்காட்டக் கண்டேன் கண்டேன். மனவிருளை அகற்றிடுக சிந்தித் தாய்க! மறைப்பின்றி உரைத்திடுக! இங்ஙன் செய்யின் நனவுலகில் மனிதரென வாழ்வோம்! என்று நவின்றவனை அடைத்திடுக கொடுஞ்சி றைக்குள் எனவுரைத்துக் கொடுநஞ்சைக் கொடுத்தான் வேந்தன் எனதுயிரிற் பெருங்கொள்கை விடுதல் ஏலேன் சினவுயிரை விடுதல்எனக் கெளிதாம் என்று செப்பிஅவன் குடித்தெறிந்த கிண்ணத் துள்ளே நாட்டுக்குச் செய்தபெருந் தொண்டுக் காக நரிக்குணத்தர் அவற்களித்த தூக்கு மேடை காட்டுகின்ற சுருள்கயிற்றில், இறந்து பட்ட காளையவன் சவக்குழியில், எலும்புக் கூட்டில், நாட்டிற்காச் செக்கிழுத்து மெலிந்த தோளில், நல்லதமிழ் நாட்டெழுந்த இந்திப் போரில் தேட்டாளர் முகங்களிலே அறுத்த றிந்த திருத்தாலிக் கயிற்றில்நான் எழிலைக் கண்டேன். 9 (காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் திரு. சா. கணேசன் தலைமையில் பாடப்பெற்ற பாடல்.) நிலவு எண்சீர் விருத்தம் ஒளிமிகுந்த குளிர்நிலவே! உன்னைக் கண்டேன் உள்ளமெல்லாம் உவகையுற இன்பங் கொண்டேன்; களிமிகுந்த காதலருக் கின்பத் தோணி! கடைந்தெடுத்த வெண்முத்தம் நின்றன் மேனி; தளிர்போலும் குழவிகளின் கதறல் நீக்கும் தாயர்தமக் குதவிடுவாய்! உலகைக் காக்கும் எளிமைமிகு தொழிலாளர் அயர்ந்த போதில் எழுந்துமுகம் காட்டிமகிழ் வூட்டும் மாது! ஒருபொழுதும் வயிறார உண்ணல் காணா துயிர்நிற்க இரந்துண்ணும் ஏழை, திங்கள் வருபொழுது அரைவயிறு மட்டும் உண்டு வருந்துகிற உழைப்பாளி, நிறைய உண்ணும் பெருவயிற்றுப் பணக்காரன் யாவ ரேனும் பிழையாது நிலவளித்து மாட மீதும் சிறுகுடிசை மீதுமொளி வீசி இன்பம் சேர்க்கின்ற பொதுவுடைமை ஆட்சி கண்டேன். *பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில் புரிகின்ற முழுமதியே! உன்னைக் கண்டு மதுவுண்ட வண்டானேன்; இன்பப் பாடல் வாய்குளிர மனங்குளிரப் பாடி நின்றேன்; புதுவுலகம் விரைவினில்நாம் காண வேண்டின் பொலிவுபெறும் முழுமதியர் ஆட்சி வேண்டும் இதுவுண்மை எனநினைந்தேன்; களங்கம் உன்பால் இருக்கின்ற தெனஒருவன் இயம்பி னானே! நிறைமதியர் நிலவுலகம் நிலைக்குங் காறும் நீள்புகழால் ஒளிபரப்பு வார்,இவ் வுண்மை நிறைமதியம் இரவிங்கு நிற்குங் காறும் நெடுங்கதிரால் ஒளிபரப்பிக் காட்டும்; மேலும் குறைமதியர் புகழெல்லாம் வெளிப்ப கட்டாய்க் குறைந்துவிடும் மிகவிரைவில் என்ற உண்மை குறைமதியம் சிறுநேரம் பகட்டி வானிற் கூத்தாடி மறைந்துநமக் கெடுத்துக் காட்டும் மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம்; அதுமகிழ வானத்து மேடை ஏறி அம்புலியார் சொற்பொழிய, முகிலன் ஓடி எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான், இடியிடித்தான், குழப்பத்தை ஆக்கி விட்டான்; இதிலென்ன கண்டனனோ? மதியர் நாளை ஏறாமல் இருப்பாரோ மேடை மீது? நிலவணங்கே! உனைக்கதிரோன் கூடுங் காலை நீலமுகிற் குழல்தளரக் கட்ட விழ்ந்து பொலபொலவென் றுதிர்ந்தநறு மலர்கள் தாமோ பூத்திருக்கும் விண்மீன்கள்? வானம் நீங்கள் நலம்நுகரும் பஞ்சணையோ? கதிரோன் எங்கே நடந்துவிட்டான்? உதிர்மலரை மீண்டும் சேர்த்துக் குலமாலை யாக்குதற்கு மின்னல் நாணைக் கொண்டுவரச் சென்றனனோ? கூறாய் தோழி! வானத்துத் தாயென்பாள் கதிரோன் என்ற வம்படித்து விளையாடித் திரியும் சேயைச் `சீனத்துச் சிறுகிளியே! செங்க ரும்பே! செய்யாதே வீண்வம்பு, புசிக்க வாவென் றேனத்துச் சோறிட்டாள்; சிறுவன் ஓடி எற்றிவிடச் சிதறியவெண் சோறு போல மீனத்துக் குழுவெல்லாம் விளங்கும்! வீழ்ந்த வெள்ளித்தட் டாமென்ன நிலவு தோன்றும். முகிலென்னும் துகிலுடுத்து நாணம் ஓங்க முகம்மறைத்துச் செல்கின்ற பெண்ணென் பேனோ? நகில்கொண்ட அல்லிப்பெண் முகம லர்ந்து நகைகாட்டப் பிறரெவரும் அறியா வண்ணம் பகல்மறைந்து முகில்நுழைந்து செல்லு கின்ற களவொழுக்கத் தலைவனெனப் பகரு வேனோ? மிகுவிண்மீன் வயிரங்கள் கொள்ளை கொள்ள முகில்பதுங்கும் திருடனென விளம்பு வேனோ? 8 காற்று அறுசீர் விருத்தம் இரவலர்கள் எவரேனும் வருவாரோ என்றஞ்சிக் கதவ டைக்கும் புரவலர்கள் சாளரத்துக் கதவுதனைப் பூட்டாது திறந்து வைத்து வரவுரைகள் கூறுகின்றார் காற்றுக்கு; வரவிலையேல் பணத்தை வீசி இரவுபகல் மின்விசிறி கொண்டவர்கள் எப்பொழுதும் சுழற்று கின்றார் செலவழித்துப் பெற்றாலும் இயற்கைமணம் சேர்காற்றைப் பெற்றிட் டாலும் இலவளித்த பஞ்சணையார் மென்காற்றில் இழைந்திருக்கும் சுகத்தை எள்ளின் அலகனைத்தும் அறிவாரோ? சுரங்கத்தில், ஆலைகளில், உலைக்க ளத்தில், பொலபொலக்க உடல்வியர்க்க உழைப்பவரே பொலிநலத்தைக் காண்பா ராவர் குளிர்நிலத்தில் மலர்ச்செடியில் உராயுங்கால் குளிர்மணத்தை வீசும் காற்று; வெளியிடத்திற் சுடுநிலத்தில் வரும்பொழுது வெப்பத்தை வீசிச் செல்லும்; அளியகத்தே மிகுசான்றோர்ச் சார்பவரும் அறநெறியர் ஆவர்; தீமை நெளிமனத்தர் தமைச்சார்வோர் இவ்வுலகில் நேர்மையிலா வழியே சார்வர் பருவஎழில் மலர்ந்துள்ள பெண்ணொருத்தி பதியின்பால் புலந்து கண்ணீர் பெருகஉதிர்த் தசையாமல் நிற்பதுபோல் பெருந்துணர்ப்பூஞ் செடிகள் எல்லாம் மருமலர்கண் ணீர்சிந்தித் தலைசாய்த்து மணமின்றி நிற்கும், பின்னர் அருகணையும் கணவன்வந் தவளிதழை அசைக்கின்ற போழ்து மங்கை, *இதழ்விரித்து நகைகாட்டல் எனத்தென்றல் இனிதாகச் செடிகள் மீது மெதுவாகத் தடவஇதழ் விரித்தரும்புப் பல்காட்டும்; மேலும் வண்டு பதம்பாடச் செடிகொடிகள் நடமாடப் பரிந்தவற்றை மணக்கும் தென்றல்; இதுபிறந்த மலைஎங்கள் தமிழகமே எனும்போது சிலிர்க்கும் உள்ளம் ஐம்பூதத் தொன்றான காற்றிலையேல் அம்புவியில் இயக்கம் ஏது? தெம்பேது மக்களுக்கு? துயில்பவனைத் தெருளில்லா இரவுப் போதில் நம்பூறும் படிஅவனோர் பிணமல்லன் எனுந்திறத்தை நவில்வ தெல்லாம் மென்பூவின் மூக்கில்வரும் காற்றன்றோ? மேதினியே காற்றால் வாழும். பணிவோர்க்குக் காப்பளித்துப் பணியாரை வேரறுப்பர் பண்டை எங்கள் அணிசேர்க்கும் முடியரசர்; பெருவளியும் அடிக்குங்கால் ஆற்றின் நாணற் பணிவேற்றுக் கொண்டங்குத் தலைநிமிர்ந்த பனைதென்னை மரங்கள் யாவும் அணிவேரற் றடிவீழச் செய்திடுமால்; ஆருக்கும் பணிதல் நன்றாம். நீர்கொண்ட மேகத்தைக் கடலினின்று நெடுந்தொலைவு உந்தி வந்து பேர்கொண்ட மலைப்பாங்கிற் சேர்ப்பதுவும் பின்னுமதைக் குளிரச் செய்து நீர்கொட்டச் செய்வதுவும் காற்றன்றோ? நீணிலத்துச் சான்றோர் என்ற பேர்பெற்றோர் அடுத்தடுத்து நன்மைகளே பேணிவந்து செய்தல் காட்டும்; வடக்கிருந்து வருவாடை வாட்டுவதும் தெற்கில்வரும் தென்றல் இன்பம் கொடுப்பதுவும் காட்டுமொரு பேருண்மை, கொடுமையிலாத் தமிழ் நாடும் வடக்கிருந்து வருபவையால் துயருழந்து வாடுவதும் தெற்கோ இன்பம் படைப்பதுவும் நாடறியும், உயர்வாம்இப் பண்புணர்த்தும் தென்றல் வாழ்க. 9 ஆறு எண்சீர் விருத்தம் gfšKGJ« btÆšfhŒªJ nk‰ghš nrU« gfytid tÊaD¥ã¡ Ñœ¥ghš â§fŸ KfbkG¥ò« ntisjÅš k»œî T£l Kušyh ahbHL¤jhŸ fhjš ešyhŸ; Kf«Rʤnj‹, `Vbd‹whŸ?, `கவிதை யாக்க முயல்கின்றேன் நீபாட முனைதல் நன்றோ? jfÉJnth? எனவுரைத்தேன்; யாழை வைத்தாள்; `தளிர்க்கரத்தாய்! என்னுடன்வா என்றழைத்தேன். அவளுடன்நான் கற்பனையில் மிதந்து சென்றேன் `அத்தான்! X® IaK©L, brŒíŸ ah¡f¡ ftiyjU« ïy¡fznk‹ nt©L«? என்றாள்; `காரிகையே! ஆற்றுக்குக் கரையேன் வேண்டும்? சுவர்போலும் கரையிலையேல் ஆற்றின் தன்மை என்னாகும் சொல்லிடுக! ஊர்பாழ் அன்றோ? அவமின்றி மொழிவிளங்கக் கவிதை என்னும் ஆற்றுக்கும் இலக்கணமோர் கரையே யாகும்; பாவலன்தன் கவிப்பொருளைப் பாடுங் காலை பாட்டகத்தே இலக்கணமும் அமைதல் வேண்டும் ஆவலுடன் கவிபுனைவோர் இலக்க ணத்தை அருகில்வைத்துப் பெருங்கவிஎன் றெண்ணிக் கொண்டு தாவுகின்றார் பாடுதற்குத் தவறி வீழ்ந்து, தகுபுலவோர் இலக்கணத்தைப் புதைத்து விட்டுக் கூவுகின்றார் ஒப்பாரிக் குரலெ டுத்து; கொடுமையிது! fÉP‹j‹ kuò« m‹W! பண்டிதர்வே றென்னசொல்வார்? தமிழை எங்கும் பரவவிட மனமில்லார் எனந கைத்தாள்; அண்டவந்த பிறமொழியால் தமிழை மக்கள் அயர்த்தடிமை ஏற்றிருந்த போது காத்துக் கொண்டிருந்த பண்டிதனைக் குறைசொல் கின்றாய்! குறைமதியைத் தலைக்கொண்டாய்! கவிஞனும் யார்? பண்டிதன்தான், உளறாதே! மொழியாம் ஆற்றில் படிந்தெழுந்தால் உன்மடமை கரைந்து போகும்; சிறுநெஞ்சில் ஊற்றெடுத்து மேனி எங்கும் செழிப்பதற்குக் கிளைத்தோடும் குருதி யைப்போல் குறுகிடத்தே தோன்றிப்பின் நாட்டில் செல்வம் கொழிப்பதற்குக் கிளைத்தோடும் ஆறு, வெற்பில் விறுவிறுக்க அருவியெனப் பாறை மீது வீழஅது கல்லாகி, ஓடஓடக் குறுமணலாய், ஒன்றுதிரிந் தொன்றாம் என்ற குவலயத்தின் பரிணாம உண்மை காட்டும்; மேற்றிசையில் செந்நிறத்தைக் கதிரோன் பாய்ச்சும் வேளையிலே அவ்வொளியை ஆறு தன்மேல் ஏற்றுனது மெய்வண்ணம் காட்டி, ஒவ்வோர் இடங்களிலே நெளிந்தோடி இடையைக் காட்டி, நாற்றுநிறை வயல்களுக்குப் பிரிந்து சென்று நாள்வருவாய்க் கால்காட்டி, ஓடை மீது காற்றுரசச் சலசலவென் றோடுங் காலை களிநடஞ்செய் காற்சதங்கை ஒலியைக் காட்டி கரையோரம் அலைக்கையால் வாரி விட்ட கருமணலால் சுருள்கூந்தல் காட்டி, வெள்ளை நுரைசேரும் புனல்தள்ளும் சங்கி னத்தின் நுண்சினையால் பல்காட்டி, ஓடி ஓடி, இரைதேடும் கயல்மீனால் கண்கள் காட்டி, இறுமாந்து செல்லுங்கால் தன்பால் செந்தா மரையின்றி முகங்காட்ட முடியா ஆறு மாய்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார்! *ஊர்மக்கள் வெறுத்தொதுக்கும் கழிநீர் எல்லாம் ஓடிவந்து கலந்தாலும் மாசு நீங்கி ஊர்விட்டு நீங்குகையில் தூய்மை யாகி ஊர்ந்துசெலும் ஆறுகண்டு தமிழைக் காண்பாய்! சார்பற்றுத் தனித்தியங்க வல்ல என் றன் தமிழ்மொழியில் பிறமொழிகள் கலந்த போதும் நேர்வுற்று மாசின்றி இயங்கும் பண்பை நினைப்பூட்டும் ஆற்றுக்கு வாழ்த்துக் கூறு! வாழ்த்தென்று கூறுகையில் பழைய எண்ணம் வாட்டுதடி! நம்முன்னோன் ஆட்ட னத்தி, காழ்த்தபகை நீக்குவிறல் சோழன் பெற்ற கனிஆதி மருதியுடன் ஆற்று வெள்ளம் ஆழ்த்திவிடும் என்றுணரா தாடச் சென்றான்; அவள்கண்ணீர் ஆறாக அவனைக் கொன்ற பாழ்த்துறைபார்! இலக்கியமாம் ஏட்டுச் செல்வம் அழித்தொழித்த பதினெட்டாம் பெருக்கை யும்பார்! கடிதோடும் வெள்ளத்தால் ஊரின் செல்வம் கரையின்றி அழித்தொழியக் கண்டு நொந்து முடியரசன் கரிகாலன் மக்கள் வாழ்வு முந்துறவே இருமருங்கும் எழுப்பித் தந்த நெடிதோங்கு கரைகளைப் பார்! அவனின் றில்லை நிலைத்துநின்ற தவன்பணியே; ஆத லாலே படியாள்வோர் புவியாட்சி மாறும் உண்மை படித்திடுக! பயனுள்ள செயலே செய்க! உருக்குலைய உழைத்துழைத்துச் செல்வம் இல்லா உழைப்பாளர் வாழ்வினைப்போல் வறண்டு தோன்றும் பெருக்கில்லாக் காட்டாறு காண்பாய்! ஈகை பேணாத பெருஞ்செல்வர், மிடியால் வாடி இருப்பவர்க்குப் பயனில்லா தொழிதல் போல எரிகதிரால் வதைந்தவர்க்கு நிழலொன் றீயா திருக்குமரம் கரைகளிற்காண்! வறுமை யுற்றோன் இளமைஎன வதங்குசெடி கொடிகள் காண்பாய்! கடற்கணவன் எங்குள்ளான் என்று தேடிக் கதறிக்கொண் டோடுகின்ற ஆற்றுப் பெண்ணாள் தொடக்கண்டு பெருங்கடலோன் அலைக்கை நீட்டித் தோள்தொட்டான், மகிழ்வுற்றாள், பிரிவுத் துன்பம் விடக்கண்டாள், ஒன்றாகக் கலந்து விட்டாள்; வேறிடத்தே பிறந்துளநீ அறியா என்பால் கடைக்கணித்துக் கலந்துவிட்டாய்! ஆறும் எங்கோ உருவெடுத்தும் கடலோடு மணத்தல் காண்பாய்! முப்பதுநாள் தமிழ்சொல்லிப் பள்ளிக் கூட முதல்வர்தரும் ஊதியத்தைக் கடனுக் கெல்லாம் ஒப்படைத்துப் பதினைந்து நாள்கள் ஓட்டி ஒழிந்தசின்னாள் என்செய்வேன் என்ற எண்ணம் கப்பிடநீ அருள்சுரந்துன் அன்னை தந்த காப்பளித்துக் காப்பளித்தாய்! அதுபோல் வானம் தப்பியதால் பெருக்கற்றும் ஊற்று நீரால் தரணியினைக் காக்கின்ற ஆறு காண்க! மலைமீது தோன்றிப்பின் அருவி யாக மன்னர்பகைப் போர்முரசம் என்ன ஆர்த்து, நிலையாமல் ஓடிப்போய்க் கரையே யில்லா நீர்க்கடலில் மறைகின்ற ஆறு கண்டேன்; உலையாத உண்மைகண்டேன்; உலகில் தோன்றி உருப்பெற்ற பொருள்ஒருநாள் மறைதல் உண்மை கலைமானே! மறைவதன்முன் மக்கள் வாழ்வைக் காக்கின்ற ஆற்றைப்போல் கடமை செய்க! கிளர்ச்சிசெயும் தொண்டர்களின் உணர்ச்சி வெள்ளம் கெடுவழியில் செல்லாமல் தடுத்து நன்கு வளர்ச்சிபெறச் செய்கின்ற தலைவன் போல வருவெள்ளப் பெருக்கனைத்தும் பாழ்ப டாமல் அளப்பரிய நன்மைசெயத் தடுத்து நிற்கும் அணைக்கட்டின் அழகைப்பார்! மனிதன் ஆற்றல் விளக்குகிற செயலதுவாம்; இயற்கை எல்லாம் வென்றாளும் மனிதர்திறம் என்னே! என்னே!! ஒருதுறையில் ஆண்பாலர் மற்றோர் பக்கம் உயர்மாதர் நீராடும் காட்சி யைப்பார்! கருமுகில்வந் தமர்ந்ததுபோற் கிடந்த யானை கழுவுகின்ற பாகனையும் அவனைச் சூழ்ந்து சிறுவர்பலர் நீரிறைத்தே ஓடி ஆடிச் செய்குறும்பும் காணடிநீ! இந்த ஆற்றில் ஒருசாதிக் கொருதுறையுண் டென்ற கொள்கை ஒழிந்ததையும் பாரடிநீ! செல்வோம் வாவா! 16 (காரைக்குடி, கம்பன் திருநாள் கவியரங்கில் திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாடப்பெற்ற பாடல்) கடல் அறுசீர் விருத்தம் கவலையொடு நின்பால்வந் தமர்ந்திருக்கும் கடன்பட்ட மாந்தர் தம்மைத் திவலையுடன் அலையெழுப்பி அக்கவலை தீர்க்கின்றாய் காதல் வாழ்வில் தவழ்கின்ற இளைஞர்க்கும் மணங்கொண்டார் தமக்குமொரு சேர இன்பம் உவக்கின்ற படியெல்லாம் கொடுக்கின்றாய் உவர்க்கடலே இன்னும் கேட்பாய்! தங்கத்தைப் பவழத்தை ஒளிமுத்தைத் தளிர்க்கரும்பை நெல்லை எல்லாம் துங்கத்தன் கைநீட்டித் தருகின்ற தூயதமிழ் நாட்டை விட்டுச் சிங்கத்தை நிகர்தமிழர் கூலிகளாய்ச் சீர்கெட்டுச் செல்லு கின்ற வங்கத்தைக் கண்டேயோ பொங்குகிறாய்? வாய்திறந்து கத்து கின்றாய்? எத்தனையோ அருநூல்கள் செல்லார்கட் கிரையாக்கி விட்டோம், மேலும் பித்தரைப்போல் மூடரைப்போல் பதினெட்டாம் பெருக்கென்றும் ஆற்றி லிட்டோம், இத்தனையும் போதாமல் சங்கத்தில் இருந்தவற்றை நீயும் கொண்டாய்! கத்துதிரைப் படையெழுப்பி ஏனின்னும் கரைநோக்கி வருகின் றாய்நீ? சங்கத்து நிலவியநல் இலக்கியத்தை, சகமெல்லாம் புகழ்ந்து போற்ற வங்கத்து வணிகத்தால் ஓங்குபுகார் வளமிக்க நகரை, எங்கள் சிங்கத்தை நிகர்பன்னீர்ச் செல்வத்தைச் செத்தொழியச் செய்தாய்! அந்தோ! கங்கொத்தும் அலைகடலே! எமையிங்கு கலங்கிமனம் இரங்க வைத்தாய் அன்றிழைத்த தீமையெலாம் போதாவென் றாவினங்கள் உயிர்போய் மாள, நின்றிருந்த உயர்மரங்கள் வீடெல்லாம் நிலைவீழ, மக்கள் தம்மைக் கொன்றழித்து நாகையினைச் சுவைத்தாயோ? கொழிதரங்கம் பாடி என்ன இன்றிருக்கும் ஊரினையும் அலைக்கையால் இழுப்பதற்கோ சென்றாய் அங்கே? நெய்தலெனப் பெயர்சூட்டி இரங்கலென நினக்குரிமைப் பொருளும் தந்த செய்கையது நன்றுநன்று! அழித்தழித்தே இரங்கியழச் செய்தாய்! அந்தச் செய்கையினை மறந்துவிட்டோம் நீஎமக்குச் செய்ந்நன்றி நினைத்த தாலே; செய்வளர முகிலுக்கு நீர்கொடுக்கும் சிறப்புனது நன்மை அன்றோ! கடற்பரப்பில் அலைஎழும்ப நீர்பிளந்து கப்பல்விரைந் தோடுங் காலை அடக்குமுறை ஆங்கிலத்தார் அரசெதிர்த்த சிதம்பரப்பேர் அண்ணல் தெற்குக் கடற்பரப்பில் கலம்விட்ட நினைவெழுந்து கண்ணெதிரே தோன்றும்; இன்னும் விடக்காணோம் தமிழ்க்கலங்கள் நாட்டுணர்வு விட்டனரே எனவும் தோன்றும். உன்னிடத்தே முத்துண்டு பவழமுடன் உணவாகும் மீனும் உண்டு; பொன்கொழிக்கும் கப்பல்களைப் பாழாக்கும் பொல்லாத சுறவும் உண்டு; மன்னிலத்தும் அப்படித்தான் மக்களுக்குள் வாழ்வழிக்கும் திமிங்கி லங்கள், கன்மனத்துச் சுறவினங்கள், நல்லொளியைக் காட்டுகிற முத்தும் உண்டு. உலகுக்கோர் பொதுவுடைமை நீயென்ற உண்மையுணர்ந் திருந்தும் சில்லோர் கலகத்தார் எனதுகடல் உனதுகடல் காணென்று பூசல் செய்வார்; விலகத்தான் கோடுண்டா! குறியுண்டா? வீணாக மக்கள் யாரும் உலகத்துப் பொருளெல்லாம் தமதென்றே ஒற்றுமையை மாய்க்கின் றாரே! கற்றுணர்ந்த சான்றோரின் உள்ளம்போல் கடலேநீ ஆழம் கொண்ட பெற்றியுணர்ந் தாழிஎன்றார்; யாதும்மூர் பிறரெல்லாம் கேளிர் என்ற பற்றுடைய தமிழினத்தார் பரந்தமனப் பான்மையெனப் பரந்து நிற்கும் ஒற்றுமையைக் கண்டன்றோ எம்முன்னோர் உனைப்பரவை என்று சொன்னார் *விளங்காத மொழிபேசும் என்மகவு விளையாடும் பொழுது மண்ணில் மழுங்காத சிறுவிரலால் கீறிவிடும் வளைவுகள்போல் கரையில் நண்டு ஒழுங்காக அமையாமல் ஓடியோடிக் கோலமிடும்; ஆளைக் காணின் இளங்காளை முன்வந்தால் நாணமுறும் இளையவள்போல் மறையும் ஓடி கடலுக்குள் வலைவீசி மீன்பிடிக்கக் காதலனை வழிய னுப்பிக் குடிலுக்குள் அவன்வரவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மங்கை யுள்ளம் துடிதுடித்துக் குமுறுவதைப் போல்நீயும் துடிக்கின்றாய்! குமுறு கின்றாய்! கடனுக்கோ? m‹¿atŸ J‹g¤ij¡ f©nlh?நீ உண்மை சொல்வாய்! நீலமணிக் கடற்கப்பால் கீழ்வானில் நெடுங்கதிரோன் செந்நி றத்தைக் கோலமுடன் பூசுவதைக் கண்டேன்நான் குதித்தெழுந்து கடவுள் என்றேன்; ஞாலமூளார் நாத்திகமாம் என்கின்றார் நானதற்குச் செய்வ தென்ன? வேலையிலார் சொல்லுக்குச் செவிசாய்த்தா வேலைகளைச் செய்கின் றாய்நீ? 13 மயிலே அறுசீர் விருத்தம் விண்ணுக்குப் பொலிவூட்டும் பன்னிறங்கள் விளையாடும் தோகைக் கண்ணின் எண்ணிக்கை எத்தனைபார்! அழகைத்தான் என்னென்பேன்! ஒலிக்கும் மேகப் பண்ணுக்குத் தவறாமல் அடிவைத்துப் பரதத்தைச் செய்வாய்! என்றன் கண்ணுக்கும் புண்பட்ட கருத்துக்கும் களிப்பூட்டும் மயிலே வாழ்க! மங்கையர்க்கு நின்சாயல் உண்டென்ன மனமெனக்கோ ஒப்ப வில்லை; இங்கிருக்கும் சாதியைப்போல் எண்ணற்ற கண்ணுள்ள நீளத் தோகை இங்கிதமாய் விரித்துநடஞ் செய்யுங்கால் எழுப்புகிற குரலின் ஒசை நங்கையரின் இன்குரலுக் கொப்பில்லை நகைக்கின்றார் அதனைக் கேட்டு புள்ளிமயில்! உன்னைக்கண் டாலறிவுப் புலவனுக்குத் தோகை காட்டி உள்ளமதில் கற்பனைகள் சேர்க்கின்றாய்! ஓவியன்வைத் தெழுது கோலைத் துள்ளிவிளை யாடச்செய் கின்றாய்நீ! துடுக்குள்ள பெண்ணை நோக்கி எள்ளிநகை செய்வதற்கோ நிமிர்கின்றாய்? எழில்மயிலே! மீண்டும் ஆடு! 3 இயற்கையின் எழுச்சி நேரிசை ஆசிரியப்பா இயற்கை யரசி உலாவர எண்ணி எழுந்தனள் போலும் எனக்கரு தியதால் விளக்குக் கம்பம், வீதியில் நின்ற தந்திக் கம்பம் தலைவணங் கினவே; இவற்றின் கம்பியால் எடுத்தன தோரணம்; வீடுகள் தாமும் வீழ்ந்து வணங்கின; உயர்பெரு மரங்கள் உச்சியை மட்டும் அசைத்து நின்றன ஆர்ப்பொலி கேட்டு நின்ற நிலையில் நெடுக வீழ்ந்தன; புள்ளினம் தம்வாய் புதைத்து நின்றன; ஓடுகள் மலரென உதிர்ந்தன எங்கும்; குடிசைக ளிவற்றைக் கோமகள் காணல் வேண்டா என்று விரும்பிய வான்மரம் அடிவயிற் றகத்தில் அடக்கிக் கொண்டன; சிற்சில குடிசைகள் சிதறி வானில் வாண வேடிக்கை விளைத்தன; மக்கள் அங்கு மிங்கும் அலைந்து திரிந்தனர்; கதிரவன் மதியன் கரந்து நோக்கினர்; ஊரெலாம் பேரொலி ஓங்கி உயர்ந்தது; மூன்று நாள்கள் எங்கும் முழக்கம்; உலாமுடித் தேகினள் ஊரெலாம் ஓய்ந்தது; ஆயினும் வெவ்வே றார்ப்பொலி எழுந்தன; மண்ணிற் புதைந்த மகவைத் தோண்டிய தாங்கொணாத் துயரால் தாயர்தம் கதறல், கைகால் இழந்தோர் கதறும் அழுகுரல், வீடுகள் இழந்தோர் விளைத்திடும் கூக்குரல், மாடுகள் ஆடுகள் மாண்டன என்றே ஏழை மாந்தர் எழுப்பிய அலறல், சிதைந்த கோலங் காணச் செல்லும் சிறுசிறு குழுவினர் செய்திடும் பேரொலி, சிதைந்த குடில்களைச் செப்பஞ் செய்வோர் எழுப்பொலி அனைத்தும் எழுந்து பரந்தன; அண்டையில் நின்ற மரங்கள் அனைத்தும் தம்சிறு குடிலைத் தகர்த்ததை எண்ணிச் சீற்றங் கொண்டார் போலச் சிற்சிலர் துண்டு துண்டாய்த் துணித்தனர் உறுப்பினை முண்டமாய்க் கிடந்தன முழுமரம் அனைத்தும்; பள்ளிகள் பற்பல பாழாய் நின்றன; எங்கும் சிதைந்தும் அழிந்தும் இருந்தன; இல்லம் இழந்த எளியோர் சிந்திய கண்ணீர் மழைநீர் கலந்து பரவின; இழப்பொலி இழப்பொலி எங்கும் ஒலித்தன; அந்தோ அந்தோ அவலம்! இயற்கை அரசியின் எழுச்சிப் பயனே! 44 (1955-ஆம் ஆண்டில் தமிழகம் எங்கும் வீசிய பெரும்புயலால் நேர்ந்த விளைவுகளைக் கண்டு பாடப் பெற்றது.) படைத்தோன் வாழ்க! நிலைமண்டில ஆசியரிப்பா கற்பனை உலகம் பிருந்தா வனத்தின் பேரெழில் கண்டேன் பிறந்தார் உறுபயன் பெற்றேன் அன்றே; அப்பே ரெழில்நலம் அவனியில் காணத் தப்பியோர் விழிப்பயன் தப்பியோர் ஆவர்; எண்ண இயலா வண்ண மலர்கள் கண்கவர் வனப்பொடு கற்பனைப் பெருக்கும்; நிலமிசைப் படுபுல், நிமிர்தரு செடிகள்; வலைநிகர் கொடிகள் வகைவகை யாகக் கைபுனைந் தியற்றிய காட்சியே காட்சி! இருவிழி எதுவரை எட்டுமோ அதுவரை பரவிய எல்லை படைத்ததப் பூங்கா; பசுமையும் தண்மையும் பாங்குடன் குழைத்துப் பூசிய தென்னப் பொலிபூங் காமிசை வீசிய விழியோர் வியப்புற் றாங்கே இமையா நாட்டத் திமையோர் ஆவர்; விண்ணுல குண்டென விளம்புவர் கண்டிலேன் கண்ணெதிர் கண்டேன்அக் கற்பனை உலகை; நீரின் விதைகள் நீரால் விளைத்திடும் விந்தைகள் எத்தனை! நேரிற் காணின் அல்லது நிலைமையைப் பாரித் துரைக்கப் பற்றுமோ ஒருநா? ஆயினும் ஒரு சில அறைகுவன் கேண்மின்! உரமிலா உள்ளத் தொருவன்மற் றாங்கே மருவு மவர்தம் வயமே யாகி இயங்குதல் உலகத் தியற்கை அதுபோல் தனக்கென ஒருநிறம் இல்லாத் தண்ணீர் மினுக்கிடும் பலநிற விளக்கொளி சார்தலால் அதனதன் நிறமாய் அழகொளி காட்டிப் புதுவிருந் தளிக்கும் போமவர் விழிக்கே! நாடக அரங்கில் நாலுந் திரையெனப் பாடொலி அருவிப் பாய்ச்ச லோவெனப் பலவகை நிறநீர் பாங்குடன் இறங்கிச் சலசல ஒலியுடன் ஓடும் ஒருபால்; குற்றப் பட்டோர் கொடுஞ்சிறை யதனுள் உற்றிடல் போல ஒருபால் அந்நீர் தொட்டிச் சிறையுள் துளங்குதல் இன்றிக் கட்டுப் பட்டுக் கிடப்பது கண்டேன்; ஊற்றுக் குழல்நீர் ஊற்றுக் குழல்நீர் காட்டும் வித்தை வேற்றோ ரிடத்தும் கண்டே னல்லேன்; விரிகுடை யோவென ஒருபாற் காணும். வரிசிலை யோவென ஒருபால் வளையும், இனிமேல் தனிமை ஏலேன் என்றே அணிமைத் தொட்டி யகத்துள் வீழ்ந்து மாயும் ஒருபால், மற்றொரு பாங்கர்ப் பிரிந்தவர் கூடும் பெற்றிமை போலப் பொருந்தும் இருபுறத் திருந்து வருநீர்; இருபுலப் பகைவர் எதிர்எதிர் நின்று பொருது வீழும் பான்மையே போல அணிஅணி யாக அவ்விடை மோதும். எண்பே ராயமும் ஐம்பெருங் குழுவும் தன்புடை சூழத் தனிவீற் றிருக்கும் மன்னவன் போல மற்றவை சூழ்தர மதர்த்து நிற்கும் மற்றொன் றொருபால், நிரல்பட அரிவையர் நின்று நடம்புரி செயலெனப் பெரியவும் சிறியவும் ஆகி ஆடி அசைதரும் அழகினை ஒருபால் நாடி விழியால் நலம்நுகர்ந் திருந்தேன்; அச்சமும் இன்பமும் நலத்தகு நண்பர் உளத்தெழும் விழைவால் அளப்பரும் ஆழமும் அகலமும் உற்ற குளத்தினில் இயந்திரத் தோணிகள் ஏறி விரைந்தோம், நானோ வியர்வியர்த் திருந்தேன்; இருந்தஎன் நண்பர் ஏளனம் செய்தனர், வீரம் பழித்தனர், விடுத்தேன் அச்சம்; நீரில்அத் தோணி நீந்துங் காலை உலகை மறந்தேன் உயர்விற் பறந்தேன் அடடா இன்பம்? அத்தனை இன்பம்! அஞ்சுதல் ஒழிந்தார் நெஞ்சினில் இன்பம் விஞ்சுதல் உறுதிஇவ் விளக்கமும் பெற்றேன்; படைத்தவன் வாழ்க மீண்டும் திரும்பி மேடையில் நின்று காண்டகும் அந்தக் காட்சியை நோக்கி உடைத்தோ இவ்வெழிற் குவமை? இதனைப் படைத்தோன் வாழி! படைத்தோன் வாழி! என்றேன்; நண்பன் இறைவனோ என்றனன்; அன்றே என்றேன்; அரசனோ என்றான்; அறியா துரைத்தனை ஆருயிர் நண்பா! உறுதி குலையா உழைப்பினை நல்கிக் குருதியை நீராக் கொட்டிய ஏழை பாரில்இப் பூங்கா படைத்துத் தந்தனன் ஆரிதை உணர்வார்? அவனை வாழ்த்தினேன்; இதன்நலம் அறியான் பிறர்நலம் பேணுவான் இதமுடன் உழைக்குமவ் வேழையை வாழ்த்தினேன்; வாழிய அவன்குலம் வாழிய நன்றே! 81 (மைசூரிலுள்ள பிருந்தாவனத்தைக் கண்டு, மனங்குளிர்ந்து பாடியது.) முகிலிடை நிலா பாம்பொன்று நினைவிழுங்கும் என்று சில்லோர் பகர்ந்திடுவார் அதைநம்பார் அறிவில் நல்லோர்; வேம்பன்னார் எமைவீழ்த்த இனைய சூழ்ச்சி விளைத்தார்கள் தொலைத்தார்கள் தமிழர் ஆட்சி; கூம்புவதேன் தாமரைகள் உன்னைக் கண்டு? குடைந்துதேன் அருந்தமலர் சென்ற வண்டு தேம்புவதைக் காணோயோ சிறையிற் பட்டு? சென்றிடுவாய் வெளியில்விடச் சொல்லி விட்டு ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர் போலே அழகிழந்தாய் உனையடைந்த மேகத் தாலே; நாரியரின் முகங்கண்டு நாணி உள்ளே நண்ணினைநீ எனஎண்ணி நகைத்தாள் முல்லை; வேறினத்தார் நாடாள வீணன் அல்லேன் வேலெடுத்துப் போர்தொடுப்பேன் வெற்றிகொள்வேன் சீரழிப்பேன், எனக்கிளம்பும் வீரன்போலச் சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே. 2 (பொன்னி இதழில் `பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் வெளிவந்த பாடல்கள். இரு பாடல்களே கிடைத்தன.) 3. காதல் உலகம் காதல் நெஞ்சம் நேரிசை வெண்பா அவன் :- கொல்லும் விழியுடையாய்! கொவ்வைக் கனியிதழாய்! அல்லும் பகலுமுன் அன்புபெற - அல்லற் படுமென்னை உள்ளத்தாற் பாராயோ? ஆவி சுடுதுயரைத் தீராயோ? சொல்! cŸs¥ bgUÃy¤âš X§»¥ gl®tifÆš mŸË¤ bjˤJÉ£lhŒ m‹òÉij - »ŸË¥ g¿¤bj¿a¥ ghLg£nl‹ ghHhƉ nw!என் குறிக்கோளாய் வாழ்வாயோ கூறு! நண்பர் பலசொன்னார்; நான்மறக்க ஒல்லுவதோ? கண்ணுள் மணியாய்க் கலந்துவிட்டாய்! - பண்ணும் பனுவலுமென் றாகிவிட்டாய்! பாவிஎனைச் சேர மனமிலையோ? சொல்லிடுவாய் மற்று. அவள் :- படுப்பேன், புரள்வேன், பின் பஞ்சணையில் கண்ணீர் விடுப்பேன், எழுந்திருந்து வீழ்வேன்;- தொடுக்குமுயிர் தாங்கவழி யானறியேன்; தையலெனைச் சார்துயரும் ஓங்கிவளர் கின்ற துயர்ந்து. அத்தான்! உமதுயிரை ஆட்கொண்ட நானினிமேற் செத்தால் நலமென்று சிந்தித்தேன்;- பித்தாய்த் திரிவீரே என்றெண்ணிப் பேசா திருந்தேன்; அறியீரோ என்உண்மை அன்பு? பெற்றார் தடையுண்டு; பின்பிறந்தார் நால்வருண்டு; உற்றார் பலருண்டே உண்மையிது - முற்றாமல் காதல் கருகிவிடும் காலந்தான் வந்திடுமோ சாதல் உறுநிலையைத் தந்து! இருவரும் :- காணச் சகியாரோ காதலரை ஒன்றாக்கிப் பேணத் தெரியாரோ பேருலகில் - கோணற் சிறுமதிகள் தீயாவோ தீராத காதல் நறவுண்டு நாம்மகிழ நன்கு. 7 (உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருப் பெற்றவை இப்பாடல்கள்.) இன்பமில்லை எண்சீர் விருத்தம் எத்தனைதான் காத்திருந்தும் என்ம னத்தே இடங்கொண்டாள் எழில்கொண்டாள் நகைக்கும் பற்கள் முத்தனையாள் வரவில்லை பொறுத்தி ருக்க முடியவில்லை, அறிஞரவர் வரைந்து தந்த புத்தகத்தைப் புரட்டிவிட்டுப் பேசா தங்குப் பூட்டிவிட்ட வானொலியைத் திருப்பி விட்டேன்; அத்தனையும் வீணாயிற் றென்னி டத்தே அவளில்லை ஆதலினால் இன்ப மில்லை! அமையாத அலைக்கடலின் கரைய மர்ந்தேன் அலைநிமிர்ந்து காதலினை நிமிர்த்த தங்கே; இமையாடும் பொழுதேனும் இருந்தேன் அல்லேன். எழிற்பூங்கா வுள்நுழைந்தேன், தென்றல் வந்து சுமையாக மோதிற்று; நிழற்ப டத்தால் துயர்தீரும் எனநினைந்துச் சென்றேன் அங்கும் உமையாளும் சிவனாரும் காதல் கூர உருகியணைந் தமர்ந்திருக்கக் கண்டேன் கண்டேன்; மனமுடைந்து வீடடைந்து மாடி யேறி மலர்பரவு பஞ்சணையில் புரண்டி ருந்தேன் எனைமறந்த அவள்தந்த இன்பம் போன்ற இன்சுவைப்பால் அருந்தியபின் கசந்த தாலே சினமடைந்தேன்; முழுநிலவு கார்கி ழித்துச் சிறிதாகச் சாளரத்துள் கதிர்வீ சிற்றே அனநடையாள் என்னருகே இன்மை யாலே அதன்பாலும் அழகில்லை இன்பம் இல்லை! 3 புதருள் கனி உருத்தெழுந்த மார்பகத்தாள், வில்லொடித்த புருவத்தாள், உள்ளத்தே தைத்தோடிப் பாய்கின்ற வேல்விழியாள், கருத்தெழுந்த மேகத்தைப் புறங்கண்ட கரிகுழலாள், கன்னத்தில் அழகொளியாள், அன்னத்தின் எழில்நடையாள், சிரித்தெழுந்த செவ்விதழாள், இன்மொழியாள், அழகெல்லாம் சேர்த்தெழுந்த உடலுடையாள், அவளைக்கண் டென்மனத்தை மறுத்தெழுந்த ஆர்வத்தால் யாரென்றேன் விதவைஎன்றாள்; மனமுடைந்தேன் மதியிழந்தேன் உன்மத்த நிலையடைந்தேன் அச்சச்சோ! அவள்நுகர முடியாத மலரானாள்! அகங்கவரும் எழில்கொண்ட சிலையானாள்! கோழைமன அச்சத்தார் முட்புதராம் அதனடுவே கனியானாள்! ஆவலெலாம் பாழன்றோ! இளம்பருவ எழில்நிறைந்த பச்சைமயில் இவளன்றோ! பாவையிவள் நாள்முழுதும் பதியின்றித் துயருறவோ! அறமிதுவோ! விதவைஎனும் கொச்சைமொழி இல்லாமல் செய்திடுவேன் என்றுறுதி கொண்டுன்றன் விருப்பம்யா தெனவினவக், கோதையவள் சிந்துகின்ற நீர்துடைத்து விருப்பந்தான் ஆனாலும் சீறிடுவர் உறவினர்தாம் சாதியினில் ஒதுக்கிடுவர் நிந்தனைகள் பேசிடுவர் நேர்நிற்க ஆற்றலிலேன் நீறாகிப் போகாதோ நேர்மையற்ற சட்டமெலாம் நொந்துழலும் என்னிலையை அறியாது பெற்றோரும் நோயென்று செப்புகின்றார் செய்வதெதும் நானறியேன் இந்தநிலை உள்ளளவும் எப்படிநான் ஒப்பிடுவேன் என்றுருகிச் சொல்லிவிட்டு முகமாறிப் போய்விட்டாள். 3 (இப்பாடல் உண்மைப் படப்பிடிப்பு. எண்சீரில் புதிய வடிவம்.) ஏன் வரவில்லை? அறுசீர் விருத்தம் விண்ணிடத் தெறிந்த வெள்ளைப் பூசணிக் கீற்றோ என்ன எண்ணிடப் பிறங்கும் நல்ல இளம்பிறை நிலவே! என்னை நண்ணிடத் துடிக்கும் பாவை நானிவண் வந்த பின்னும் மண்ணிடைப் பரப்பில் காணேன் மங்கைஏன் வரவே இல்லை? கண்கவர் சிறுவர் சேர்ந்து கடுமழைப் புனலில் ஓடப் பண்ணிய கப்பல் போலப் படர்பிறை நிலவே! என்றன் உண்ணிறைந் திருக்கும் செல்வி ஓடிவந் திருக்கக் காணேன் எண்ணிய தேதும் உண்டோ? ஏனவள் வரவே இல்லை? அகத்தியின் குவிபூத் தோற்றம் அன்னதோர் பிறைநி லாவே! பகற்பொழு தகலும் நேரம் பார்த்ததும் வருவேன் என்றாள் இகழ்ச்சியோ செய்கின் றாள்என் றேங்கிடும் உள்ளம் ஆங்கே பகர்ந்ததை மறந்தோ போனாள்? பாவைஏன் வரவே இல்லை? 3 உன்னுருவே தோன்றுதடி எண்சீர் விருத்தம் உள்ளத்தில் படிந்துவிட்டாய் அழகுப் பாவாய்; உணர்வுடனே கலந்துவிட்டாய் தமிழின் பாட்டாய்; கள்ளக்கண் பார்வையிலே சொக்கி விட்டேன்; கரைபுரண்டு வருகின்ற காத லாற்று வெள்ளத்தில் புணையாவாய் என்றே உன்னை வேண்டியதை மறுத்தனையே! உயிர்நி லைக்கக் கள்ளைத்தான் நம்பினும்அம் மதுநி றைந்த கைக்கிண்ணத் துன்னுருவே தோன்றக் கண்டேன் கச்செதிர்க்கும் உன்மார்பு கலக்க வில்லை; காட்டுமலர்ச் சிரிப்புந்தான் அசைக்க வில்லை; பச்சைமயில் சாயலுக்கும் பதைத்தே னல்லேன்; படியவைத்த துன்னிசையோ அன்றே; உன்றன் இச்சைமிகும் பார்வையில்தான் கட்டுண் டேன்நான் என்னாசை மறுத்தனையே! என்றன் வாழ்வுக் கச்சாணி அனையவளே! சோலை செல்லின் அங்கெல்லாம் உன்னுருவே தோன்றக் கண்டேன் இனிக்கின்ற சிலம்பெடுத்தேன் கானற் பாட்டாய் இசைக்கின்றாய்! மாதவியாய் நடிக்கின் றாய்நீ! கனிச்சாறே! சிலம்பொலியும் கேட்டு நின்றேன் காதலைநீ புறக்கணித்துச் செல்லல் நன்றோ? cd¡bf‹W bfhiy¥gh®it mikªj njh?என் உயிர்வாழ மனமின்றி நஞ்செ டுத்துத் தினச்சென்றேன் அதனிடத்தும் என்னை வாட்டும் செவ்விதழாய்! உன்னுருவே தோன்றக் கண்டேன். 3 புதுமைப் பெண் கலிவெண்பா தோழி:- என்னடி உன்முகம் இப்படி வெண்மையதாய்ச் சின்னத் தனமும் சிறிதுநிலை மாறியதேன்? உண்ணா துறங்கா திருப்பதுமேன்? என்னுயிரே! கண்ணே! இதனுண்மைக் காரணத்தைச் செப்பாயோ? தலைவி:- நல்லபசி இல்லை நலமில்லை வேறொன்றும் இல்லையடி என் அன்பே! இப்படி ஏன் வாட்டுகிறாய்? தோழி:- ஆமாம் நீ ஏனுரைப்பாய் அன்பில்லை என்னிடத்தே ஏமாற்றுச் சொற்கள் இயம்புகிறாய் போய்வருவேன் தலைவி:- நில்லடி என்தோழி நேர்ந்ததையே சொல்லுகிறேன் பல்லை விரித்துப் பரிகாசம் பண்ணாதே நெஞ்சை ஒளித்ததொரு வஞ்சகம் இல்லைஎன்பார் நெஞ்சம் நீயன்றோ நேரிழையே! தாயறியாச் சூலுண்டோ? உண்மையைநான் சொல்லி விடுகின்றேன் மாலுண்டேன் காதல் மதுவால் மனந்தளர்ந்தேன் தோழி:- காதல் மதுவா? கட்டழகன் யாரோடி? ஈதென்ன விந்தை! எனக்குரைப்பாய் யாரென்று தலைவி:- தன்மானங் கொண்டோர், தமிழ்வீரர், நாட்டுமக்கள் நன்மானங் காக்க நயந்துதொண்டு செய்கின்றார், அண்ணா துரைபோல் அழகாகப் பேசுகின்றார், பெண்ணாப் பிறந்தார் பெறுமிழிவு நீக்குகின்றார் அன்னார்பால் என்னெஞ்சம் ஆழ்ந்ததடி; சேர்ந்துறையும் நன்னாள்தான் கூடுமட்டும் நல்லுறக்கம் வந்திடுமோ? தோழி:- போதுமடி உன்காதல்! பொல்லாப்பு வந்துவிடும்; தீதுபல நேருமடி; தேசத்தார் தூற்றிடுவார்; அன்பால் மணப்பதற் கம்மான் மகனிருக்க வன்பில் விரும்பேல் மறந்துவிடு மற்றவரை! தலைவி:- காய்ச்சும் இரும்பு கவர்ந்திட்ட நீர்போல ஆச்சுதடி என்மனம் அன்பர் அவரிடத்தே நாட்டார்கள் காதல் நலமறியார் புல்லுரைக்கும் வீட்டார்கள் சொல்கின்ற வெற்றுரைக்கும் நானஞ்சேன் உள்ளம் விழைந்த ஒருவரை விட்டுவிட்டு கள்ளச் செயல்புரியக் கற்பறியா நல்லகுலப் பெண்ணென்றா எண்ணினைநீ? பேதைமையால் கூறுகிறாய் கண்ணின் இமைபோலக் காப்பவனே? என்னுளத்தைத் தொட்டார்க் குரியளாய்த் தோள்தோய்ந்து வாழலன்றிக் கட்டாயக் கல்யாணங் கண்டிப்பாய் நான்வேண்டேன் அஞ்சி அஞ்சி வாழ்ந்த அரிவையர்கள் இந்நாளில் மிஞ்சிவிட்ட செய்கையினை மேல்நடத்திக் காட்டுகிறேன் என்றுரைத்துச் சின்னாளில் ஏறனைய காதலனை மன்றலன்று கொண்டாள் மகிழ்ந்து 40 ஊரார் எண்சீர் விருத்தம் வாழவிடார் சாகவிடார் வாழ்வில் ஓர்நாள் வகைகெட்டு வறுமையுறின் உதவ வாரார்; ஏழைஎனில் எதுசெயினும் ஊரார் கூடி இதுகுறையாம் அதுகுறையாம் என்று நம்மைத் தாழவுரைத் தின்புறுவர்; செல்வன் என்ன தகிடுதத்தம் செய்தாலும் தாளம் போட்டு வாழவென்றே காக்கைபிடித் தலைவர் அந்தோ! வாழ்கின்றார் மனிதரெனும் பெயரும் தாங்கி என்குடும்பக் காவியத்தில் இலங்கும் ஒவ்வோர் ஏடுகளைப் புரட்டுகிறேன் சிறிது கேண்மின்! என்குடும்ப விளக்கினைநான் மணவா முன்னர் எழிலரசி அவளோடு களவொ ழுக்கம் நன்மையென ஒழுகிவரும் நாளில், ஊரார் நவின்றவெலாம் புகல்வதெனில் பலநாள் ஆகும்; வன்மைமிகு பழியுரைத்தார், பொய்கள் சொன்னார். வகைவகையாய்த் தீமைகளை இழைத்தும் பார்த்தார் நோய்வந்து பற்றியதால் சின்னாள் நங்கை நொந்துழன்று மிகமெலிந்து வெளியில் எங்கும் போய்வந்து நடவாமல் இருந்தாள்; ஊரார் பொல்லாத ஒழுக்கத்தாற் கருப்பம் உற்றாள். நோய்வந்த தெனச்சொல்லிக் கருவைக் கொன்றாள். நூதனமாத் தற்கொலைக்கும் முயன்றாள் என்று வாய்வந்த படியெல்லாம் அளந்து விட்டார். வகையறியா தோடிவிட்டாள் என்றும் சொன்னார். மற்றவர்கள் சொல்வதெலாம் கருதா தென்றன் மனம்விரும்பி மணமுடிக்கத் துணிந்து விட்டேன் கற்றவரும் மற்றவரும் சினந்து நோக்கக் கைபிடித்தேன் பதிவுசெயும் தலைவர் முன்னே; உற்றார்கள் ஊரார்கள் உறுமி னார்கள் ஒவ்வாதே சமுதாயப் பண்புக் கென்று சொற்றார்கள் சாதிகுலம் போச்சே! இந்தச் சொல்லரிய கொடுமையினை எங்குக் கண்டோம்! v‹wh®fŸ m›tsÉš É£lh nuh?இத் தெருவதனில் இருப்பதுவுங் கூடா தென்றார்; கொன்றாற்போற் கொடுமைபல செய்தார்; மேலும் குடும்பத்தில் நிகழ்கின்ற நன்மை தீமைக் கென்றாலும் அழைப்பதில்லை; வறுமை நோய்வந் திடர்படுத்தக் கடன்கேட்டேன் கொடுத்தா ரில்லை நன்றப்பா கலப்புமணம் என்று சொல்லி நகைத்தார்கள் பகைத்தார்கள் உள்ளம் நொந்தேன்; காதல்மிகு வாழ்வினையே முன்னோர் கண்டார். கண்டதிலை சாதிமுறை, உயர்வு தாழ்வு ஓதவிலை, சங்கத்து நூல்கள் சான்றாம் உணர்ந்திடுவீர் என்றுரைப்பர்; தலைய சைப்பர்; காதல்மணம் கலப்புமணம் செயலிற் காட்டக் கருதிடினோ கரடிபுலி யாக மாறித் தீதிழைப்பர் ஊரார்கள்; பேச்சில் மட்டும் தீரரவர் செயலென்றால் அஞ்சிச் சாவார்; நாட்டுநிலை என்வருவாய் துணைவி மேனி நலமறிந்து நான்கைந்தாண் டான பின்னர் வீட்டினிலே என்பிள்ளை தவழ்ந்து பேசி விளையாட நினைத்திருந்தேன்; சாதி மாறி, நாட்டாரும் விரும்பாத, கடவுட் கொவ்வாச் செயல்புரிந்தான் நாத்திகத்தின் வழியிற் சென்றான் கேட்டானா நம்முரையை? பிள்ளைப் பேறு கிடைத்ததுவா? கடவுள்செயல், என்றார் ஊரார். நல்லுடையால் அணிசெய்து மாலை வேளை நானவளை உடனழைத்துப் பூங்கா செல்வேன்; வில்உளத்து மாந்தர்சிலர் மனம்வி யர்ப்பர்; வினைவிதைப்பர்; அருகிலுளோர் செவிக டிப்பர்; நல்லதுவோ அழுக்காறு? வறுமை மிஞ்சி நலிவுறுத்த நல்லாடை இலையேல் இந்தப் பொல்லாதார் அப்போதும் விடவே மாட்டார் புல்லனென்று கஞ்சனென்று புகல்வர் அன்றோ? ஊராருள் இத்தகையர் இருப்பி னும்நல் உள்ளத்தார் ஓரிருவர் இருப்ப துண்மை; நேராரும் விழைகின்ற ஒழுக்கம் வாய்மை நேர்மையெனும் கொள்கையினர், மடமைக் கூட்டம் சேராதார், சீர்திருத்த நோக்கங் கொண்டார், செப்புவதைச் செய்திடுவார், ஊரார் கூற்றைப் பாராதார், உதவுகின்றார் என்றன் வாழ்வில் பக்கமிருந் துடன்பிறந்த அண்ணா வானார் காதலனைக் கோவலனை மதுரை வேந்தன் கள்வனெனக் கொலைசெய்தான் என்று கேட்டு வேதனையில் மூழ்கிஉயர் செல்வ வாழ்வை வெறுத்துமணி மேகலையும் தானும் தூய மாதவனைச் சார்ந்துமனத் துறவு பூண்ட மாதவியை ஊரார்கள் தூற்றி னார்கள் கோதுரைகள் செவிவிழுந்தும் புறக்க ணித்தாள் குறிக்கோளில் வென்றிகண்டாள் கற்பின் செல்வி என்னோடு சினந்தில்லாள் அயலான் வீட்டில் இருந்ததனால் மனமொப்பி அவளை மீண்டும் என்னோடு வாழவிடேன் மானம் மேலாம் இவ்வண்ணம் ஊராருள் ஒருவன் அங்குச் சொன்னான்அவ் வுரைகேட்டி ராமன் என்னைச் சுட்டினனோ? கடலிலங்கைச் சிறையி ருந்த மின்னாளைக் கொடுவந்தேன் எனவ ருந்தி மீண்டுமவள் வெங்கானம் போக விட்டான் மெல்லியலாள் தன்மனையாள் எனவும் எண்ணான் மேலுமொரு பதினாலாண் டவளும் கானில் அல்லலடைந் தாளென்றும் கருதல் செய்யான் ஆரணங்கு கருவுற்றாள் எனவும் பாரான் மல்குசின மேகொண்டான் ஊரார் சொன்ன மாற்றமொன்றே மதித்தானச் சனகன் பெண்ணைச் சொல்லரிய துயரோடு கானம் ஏகச் சொன்னான்அக் குடும்பத்தில் பிரிவும் கண்டான். உரைத்திடுவர் ஊரார்கள் தங்க ருத்தை ஒன்றுக்கும் செவிசாய்த்தல் கூடா தன்னோர் உரைப்பதனைச் செவிமடுத்தால் குடும்ப வாழ்வில் உலைவுவரும் உண்மையிது; புளியைப் பாலில் கரைக்காதீர் பிறருரையைக் கேட்டு வாழ்வில் கலங்கிமிகத் துயருழந்து சாக வேண்டா குரைக்கின்ற ஒலிகேட்டுக் கதிரோன் வானில் குறுகுவதற் கஞ்சுவனோ? அவன்போல் வாழ்வீர் உரைத்தவெலாம் ஆண்பாலர் செயலே ஆகும் ஊராருள் பெண்ணினமோர் அங்கம் அன்றோ? மறைப்பின்றி அவர்செயலும் சொல்லு கின்றேன்; மாமியிடம் சென்றோர்பெண் அவள்ம னத்தைக் கரைத்திடுவாள், மருமகளைக் குறைகள் சொல்வாள், `கண்டபடி உனைவைதாள், மதிக்கவில்லை, விறைப்போடு திரிகின்றாள், அடக்கம் இல்லை, வீதியெலாம் கைகொட்டிச் சிரிக்கு தென்பாள். மற்றொருநாள் மருமகளைக் காண்பாள் `உன்றன் மாமியென்ன இப்படியா இருப்பாள்? உன்னைப் பெற்றவள்போற் கருதாமல் தாழ்த்தித் தாழ்த்திப் பேசுகிறாள். உடையுடுத்த நகைகள் பூணச் சற்றுமவள் பொறுக்கவிலை, கணவன் உன்கைச் சரடாக உள்ளானாம், குடும்பச் செய்தி மற்றவர்பால் இவ்வண்ணம் பேசல் நன்றோ? kUkfŸjh‹ gÂ¥bg©nzh? என்று சொல்வாள். இப்படியே இருபாலும் கோளே பேசி இணைந்திருந்த குடும்பத்திற் பகையை மூட்டித் தப்பறியாக் கணவனுளம் நோகும் வண்ணம் சச்சரவே நிறைத்திடுவாள்; ஊரார் சொல்லை அப்படியே நம்புவதால் விளையும் தொல்லை அளவிலவே ஆதலினால் ஆய்ந்து செய்து தப்பெதுவும் நேராமல் அன்பாய் வாழ்ந்து தரணிபுகழ் மாமிமரு மகளாய் வாழ்வீர் ஆண்டுபல ஆனாலும் நரையே யின்றி அழகுகெடா திளமையுடன் விளங்க வேண்டின் பூண்டொழுகும் அன்படக்கம் அறிவு சால்பு பூணெனக்கொள் சான்றோராய் ஊரார் வாழ வேண்டுமென எங்கள்பிசி ராந்தைப் பேரோன் விளம்பினனவ் வுரைபோற்றி மக்கட் பண்பு தாண்டாமல் வாழ்ந்திடுக ஊரார் எல்லாம்; தழைத்திடுமே அன்புமகிழ் வின்பம் யாவும்! 17 (காரைக்குடி, கம்பன் திருநாள் கவியரங்கில் திரு. நாமக்கல் கவிஞர் தலைமையில் பாடப் பெற்ற பாடல்.) பணியாள் வேண்டாம் எண்சீர் விருத்தம் குடும்பவிளக் கெனும்நூலைக் கொணர்க என்று குயில்மொழியை என்துணையைப் பாடு கென்றேன்; `விடும்அத்தான் அவ்வெண்ணம்; பக்கத் துள்ளோர் விரும்பவிலை நாம்சிரித்துப் பேசும் பேச்சை; சுடும்படியாச் சொல்கின்றார் எதிர்த்த வீட்டார்; துணைவரொடு சமமாகப் பழகல் கூடக் கொடுங்குணமென் றறைகின்றார் தெருவி லுள்ளார்; குடும்பமென்ன இருட்சிறையா என்று சொன்னாள் அடிபேதாய் ஊரார்கள் அப்ப டித்தான் ஆர்ப்பரிப்பர், அருகினில்வா! அவர்கட் காக மடிவதுவோ நமதின்பம்? அன்பும் சேர்ந்து மாள்வதுமோ? இலக்கணமே மொழியைக் காக்கும். அடிவேராம் அதுபோல்நம் குடும்பத் திற்கும் அன்பொன்றே அடிப்படையாம், பண்பும் ஆகும்; கடிவாளம் அறுந்தவர்தம் பேச்சைக் கேட்டுக் கடிந்துரையேல் அன்பென்னும் இலக்க ணத்தை. என்றுரைத்தேன்; `நன்றத்தான் இந்த ஊரார் இயல்பெனக்குப் பிடிக்கவில்லை, கோவி லுக்குச் சென்றிருந்தேன் குழாயடியில் நின்றி ருந்தேன் செழும்புனலில் நீராடச் சென்றேன் அங்கு நின்றிருந்த பேரெல்லாம் பிறர்கு டும்ப நினைவொன்றே கொண்டுகுறை கூறிக் காலம் கொன்றிடுவர், அப்பப்பா! eiu¤J _¤J¡ nfhÿ‹W« »H§fSkh ngr nt©L«? தேன்சுளையே! அங்கெல்லாம் இனிமேற் செல்லேல் தேர்ந்தெடுத்துப் பணியாளொன் றமைப்பேன் என்றன் மான்விழியே! அடுக்களையும் விடுத்து வந்து மகிழ்ந்திருப்போம் எனப்புகன்றேன்; நானி ருக்க ஏன்பணியாள்? நன்றத்தான் உங்கள் எண்ணம்! எழுந்தோடிக் காய்நறுக்கி உங்கட் கென்று நான்சமைத்துப் பரிமாற, நீங்கள் உண்டு, நன்றுநன்று சமையலெனக் கூறும் போது நான்காணும் இன்பத்துக் குவமை யுண்டோ? நம்மன்பிற் கிடையூறாம் பணியாள் வேண்டாம்; ஊன்பெருத்தே உதியமரம் ஆக மாட்டேன், உலைவாயை மூடவொரு மூடி யுண்டு கூன்காணும் உள்ளத்தார் ஊரார் வாய்க்குக் குவலயத்தில் மூடியிலை ஆத லாலே தேன்காணும் இசைபாடி என்றும் போலத் திகழ்ந்திடுவோம் வாருங்கள் அத்தான் என்றாள். 5 சிற்றூர்ச் செலவு எண்சீர் விருத்தம் பட்டணத்தில் என்மனைவி பிறந்து வாழ்ந்தாள்; பகலுணவு முடித்துப்பின் படுத்தி ருந்தேன் தட்டெடுத்து வெற்றிலையை மடித்தெ டுத்துத் தந்தின்பம் சேர்த்திருந்தாள், பாளை நீக்கி விட்டெழுந்த நகைஉதட்டைப் பற்றி நாளை விடியலுக்குள் என்னூர்க்குச் செல்வோம் என்றேன்; கட்டழகி எனச்சொல்லிக் கட்டி முத்தம் கணக்கின்றித் தந்தாலும் வாரேன் என்றாள் `ஏன் என்றேன் `பட்டிக்கா டென்று ரைத்தாள்; `என்னைஉனக் களித்துள்ள அன்னை வாழும் தேனெனவே இனிக்கின்ற என்றன் ஊரைத் தீதுரைத்தாய் அதனலத்தை உணரா திங்கே கானுண்டோ? உணவுவிளை களந்தான் உண்டோ? fh¡»‹w jhaf¤ij¡ fhz v©Â ehD‹id miH¡»‹nw‹ tUf! என்றேன் `நடப்பதற்கு முடியாதே என்றாள்; பின்னர் v¥gonah xU¥g£lhŸ ÉiuªJ bršY« òift©o V¿¥nghŒ Ciu neh¡»¤ j¥bgJî« neuhkš elªJ br‹nwh«; jiH¤JŸs taštu¥ãš el¡F§ fhiy “m¥g¥gh ešytÊ” v‹W brhšÈ mf«behªJ KfŠRʤJ elªJ tªjhŸ; `ï¥goth’ v‹wtŸif g‰w `Inah! என்றழுதாள் என்னென்று பதறிக் கேட்டேன். மென்காலில் முள்தைத்த தென்ன, நெஞ்சில் வேல்குத்திக் கிழித்ததுவே றொன்றும் பேசா தென்காதல் மிகுதியினால் குனிந்து முள்ளை எடுத்தவளை வருந்தாதே மன்னிப் பாய்நீ என்மீது சினந்தனையோ? இனிமேல் இங்கே வருமெண்ணம் இல்லைஇல்லை என்றேன்; பாவை என்னென்ன சொல்லுகிறீர் அத்தான் நீங்கள் இருக்கின்ற இடமேதான் இன்பப் பூங்கா! என்றெழுந்து நின்றுகொண்டாள் ஒடிந்த உள்ளம் இனிதுமகிழ்ந் தெழுந்துவழி நடந்தேன் பின்னர் குன்றனைய தோள்பற்றிக் கெந்திக் கெந்திக் குளிர்மொழியாள் நகையாடி நடந்தாள்; கண்ணே! இன்றெனது மனம்நொந்து பதறி விட்டேன் என்றவுடன் ஆடவரே அப்ப டித்தான் ஒன்றுமிலா தஞ்சிடுவார் என்று சொன்னாள் உள்ளங்கள் பரிமாறிச் சென்றோம் மேலும். 5 எந்நாளோ? எண்சீர் விருத்தம் மனையாளை இல்லிருத்தி மாலை ஓர்நாள் மனஅமைதி பெறஎண்ணிச் சென்றேன்; நல்ல `சினிமாஎன் றுரைத்தார்கள்; அதனால் நானும் சிறிதெண்ணி உட்புகுந்தேன்; தொடங்கி னார்கள் மனநிலையை முகக்குறிப்பால் உணர்த்தும் அந்த மங்கையைப்போல் நடிப்புலகில் கண்ட தில்லை! அனநடையும் அவள்குரலும் படப்பி டிப்பும் அத்தனையும் புகழ்ந்தார்கள் ஆங்கி ருந்தோர் கலையுண்டு நடிப்புண்டு நடன முண்டு கண்கவரும் அழகுண்டு; நெஞ்சை அள்ளும் நிலையில்லை பேச்சொன்றும் புரிய வில்லை நினைப்பெல்லாம் எங்கெங்கோ சென்ற தங்குச் சிலைஎன்ன இருந்தஎனை மணியின் ஓசை செவிபுகுந்து கிளப்பிற்று வீடு சென்றேன்; `தலைவலிஎன் றுரைத்தேன்நான்; `என்னை விட்டுத் தனியாகச் சென்றீரே வேண்டும் என்றாள் இல்லையடி! புரியாத மொழிப்ப டத்தை இனிதெனநான் பார்த்ததனால் வந்த நோவு! நல்லஇயல் தமிழ்மொழியின் நிலையை எண்ணின் நைந்துருகிப் போகுதடி எனது நெஞ்சம்; சொல்லரிய தாய்மொழியைப் பிழைகள் நீக்கிச் சொல்லறியா எழுதறியாத் தமிழர் நாட்டில் புல்லறிவால் பிறமொழியர் படத்தை ஏனோ புகுத்துகிறார்? என்னென்பேன் அவர்தம் போக்கை படம்பிடிக்கும் கூட்டத்தார் தகிடு தத்தம் பண்ணுகிறார்; அறிவிருக்க அன்னார் மூளை இடங்கொடுக்கும் நாளென்றோ? கலையும் வாழ்வும் இணைந்திருக்கும் படங்காணும் நாள்தான் என்றோ? மடமையினைத் தொலையாரோ? என்றேன்; பேச்சு மடைதிறந்து விட்டீரோ? உறங்கும் நேரம் கடமையினைச் செய்திடுவீர்! என்றாள்; தூக்கம் கண்கவ்வ அவளென்னைக் கவ்விக் கொண்டாள். 4 குளிர் நிலா நேரிசை ஆசிரியப்பா திருமணம் என்ற தேன்மொழி என்றன் செவியில் வார்த்தான் சிறிய தம்பி; அவர்தான் எத்துணை அழகோ! என்னை அணைத்தணைத் தின்பம் அருத்துவர், பின்னர் எழிலுறு மழலை இன்பக் குழவி என்கைத் தருவார், இன்பம்! இன்பம்! எனமனக் குதிரை ஏறிச் சென்றேன்; * * * கண்ணே என்றார் கடிதினில் திரும்ப அவரே நின்றார்; அத்தான் என்றேன், இன்பச் சூட்டால் இறுக அணைத்தார், இதழைக் கொய்தார், எடுத்துச் சொல்ல இயலா நிலையில் இருந்த என்னைத் தெரியா உலகம் தெரியச் செய்தார், அடடா இன்ப ஆற்றினில் மிதந்தோம், கரையே இல்லை காதல்! காதல்!! * * * அணைப்பால் மட்டும் ஆறுதல் இல்லை, துணைவர் தந்த தோள்தோய் இன்பச் சின்னம் இல்லை; செருநரும் விழையும், செயிர்தீர் செல்வன் சிந்தும் சிரிப்பை அள்ளிப் பருக அவாவிற் றுள்ளம்; இளம்உடல் தீண்ட இன்சொற் கேட்கத் துடிதுடித் திருந்தேன்; துணைவரும் நானும் புண்ணியத் தலங்கள் புக்குநீர் மூழ்கியும் புண்ணியம் இல்லை; புதல்வற் பேறினி உண்டோ என்றோம் உள்ளூர்க் கணியர் ஏடுகள் புரட்டி இல்லை என்றார்; இடிந்ததென் உள்ளம் இருண்டதென் வாழ்வு மகப்பே றில்லா மலடோ அந்தோ! எனச்சின் னாள்கள் ஏங்கி யிருந்தேன். * * * திரைகடல் கடந்து செல்வந் திரட்டப் பிரிந்தனர்; நானோ பெண்மையின் இயல்பால் வருந்தி மெலிந்தேன்; வந்தனர் ஒருநாள்; எழில்மணி மாட இருப்பில் இருந்தோம், குளிர்எனை அவர்பாற் கொண்டு சேர்த்தது, நடுங்கிய என்றன் நாணம் காத்திடக் கணியர் கூற்றைப் பொய்யெனக் காட்டிட உள்ளம் நைக்கும் உறுதுயர் தீர்ந்திட இன்பக் குளிர்நிலா இருள்முகில் நுழைந்த(து); என்முகம் அவர்தம் மார்பிற் புதைந்தது; மீண்டும் திங்கள் மேலெழுந் தொளிக்கதிர் வீசிச் சிரித்தது; விடியலைக் கண்டோம்; * * * உணவு வெறுத்தேன் உமட்டலைக் கண்டேன் புளிப்பில் விருப்பம் பூத்தது, வாழ்வில் இனிப்பு மலர்ந்திட இன்பங் காய்த்தது காதற் கனியைக் கண்டேன் எண்ணம் பலித்த(து) இனியிலை துயரே. 46 குழந்தை இன்பம் எண்சீர் விருத்தம் பாய்ந்தோடும் அருவிமலைப் பக்க மெல்லாம் பல்வண்ணப் பூக்களிலே மென்மைத் தென்றல் தோய்ந்தோடி வந்துடலில் வருடும் போது சொல்லரிய இன்பமன்றோ அருமை அத்தான்! ஆய்ந்தெடுத்த யாழெடுத்துப் பாடு கின்றேன் அருகினிலே வாருமதோ பாரும் வானில் வாய்ந்தொளிரும் வெண்ணிலவு கூட்டும் இன்பம்! வரம்புண்டோ? என்றுரைத்தாள் துணைவி நல்லாள் வெண்முகில்சூழ் மலைமுகடும் முகட்டி னின்று வீழ்ந்ததிரும் அருவிகளும், வண்ணப் பூவால் கண்கவரும் செடிகொடியும், கொடிகள் தாவிக் காட்டுகின்ற மரத்தொகையும், தென்றற் காவில் பண்சொல்லும் வண்டுகளும், மாலை வானில் படர்கின்ற செந்நிறமும், காதல் நங்காய்! விண்மதியும் தருமின்பம் என்றன் பிள்ளை விளையாடும் காட்சிதரும் இன்பம் ஆமோ? ஆய்ந்தெடுத்த இசைவல்லார் செய்த வீணை ஆர்த்தெழுப்பும் இன்னொலியும், கானில் நன்கு காய்ந்திருக்கும் வேய்ங்குழலில் தோன்றும் பண்ணும், கடும்பாம்பும் மெய்மறந்து நிற்க இன்பம் தோய்ந்திருக்கும் படியூதும் சூழலும், இன்னும் துன்பமெலாம் துடைக்குமிசைக் கருவி யாவும் பாய்ந்தளிக்கும் இன்பமெலாம் என்றன் பிள்ளை பரிந்துளரும் மழலைதரும் இன்பம் ஆமோ? அப்படித்தான் சொல்லிடுவீர்! மாடி மீதில் அன்றொருநாள் குறுந்தொகைப்பாட் டொன்று சொல்லி ஒப்புண்டோ இதற்கென்றீர்! அதனோ டென்னை உவமித்துக் கேலிசெய்தீர்! உண்ண வாரும் எப்பொழுதும் இதுதானா? என்றால் நூலில் எழும்சுவையால் சுவையுணவை மறந்தேன் என்பீர்! எப்பொழுதே னும்விளக்கை அணைக்க வந்தால் இருஇருநூல் இன்பம்உயர் வென்பீர் அத்தான்! நானூற்றுப் புறப்பாடல் சொல்லு கின்ற நம்முன்னோர் செய்தபெரும் வீரப் போரும் தேனூற்றோ எனக்கருதும் அகநா னூறு செய்யகுறுந் தொகைகூறும் காதல் வாழ்வும் கால்நூற்றோ டைந்தாண்டின் அகவை யில்யான் கண்டசில காவியமும் தந்த இன்பம் மானோட்டும் விழியுடைய கண்ணே! என்றன் மகவுதரும் இன்பத்திற் கீட தாமோ? போகட்டும்; இசைபாடி அணையின் மீது புகழ்ந்தீரே நானின்பம் தந்த போது! வேகட்டும் உணவென்றால் சேலை பற்றி விளையாடிப் பெற்றீரே அந்த இன்பம், வேகத்தோ டென்னிதழைச் சுவைக்கும் போது விளைந்தசுகம் எப்படியோ? சொல்வீர்? என்றாள்; ஆகட்டும் எனச்சொல்லி அவள்கை பற்றி அருகிருத்தி உயிர்க்கொழுந்தே! மஞ்சம் ஏறி நரம்பேறும் யாழ்மீட்டிக் காதல் கூட்டி நல்லிசையால் மகிழ்வூட்டி இருக்கும் போதும் மரஞ்சேர்ந்த மாதுளைபோல் தோன்றும் உன்றன் மார்பகத்தால் பேரின்பம் தந்த போதும் சுரந்தூறும் உன்இதழைச் சுவைக்கும்போதும் சொல்லரிய இன்பத்தைக் காணு கின்றேன் இருந்தாலும் என்குழந்தை மெய்யில் தாவி இளங்கையால் தொடுகின்ற இன்பம் ஆமோ? என்றுரைத்தேன்; போங்களத்தான்! என்று சொல்லி எழுந்தோடி ஓர்புறத்தே ஊடி நின்றாள்; சென்றழைத்தேன் திரும்பாமல் ஊஹும் என்றாள்! செவ்விதழாய்! ஏனிந்தக் கோபம்? என்றேன்; நன்றுநன்று தாழ்வென்றீர் என்னின் பத்தை! நானெதற்காம்? எனப்புலந்தாள்; முகத்தைத் தொட்டேன் கன்றியகண் ணீர்சிந்தப் பதறி விட்டேன் கதறியழும் மகவொலியால் விழித்துக் கொண்டேன். 8 தோற்றுவிட்டேன்! தாழிசைகள் போர்க்களத்தில் எதிர்நிற்க எவருங் காணேன் பூரித்தேன் வீரத்தாற் செருக்குங் கொண்டேன் தார்க்கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும் தளிரடியால் எனைமிதித்தாய் தோற்று விட்டேன் இசைத்தமிழில் எனைப்போலப் பாடு தற்கே எவருமிலர் எனக்கருவம் பூண்டி ருந்தேன் வசைக்கிலக்கே ஆகினேன்ஒப் பில்லா நின்றன் வாய்மழலைத் தேனிசைக்குத் தோற்று விட்டேன் ஈரமொரு சிறிதுமிலேன் வலிய நெஞ்சேன் எவர்பாலும் கருணைமொழி புகலேன் அன்பின் ஓரமதுங் கண்டறியேன் மறம னத்தேன் உன்விழியால் மனமுருக்கி வென்று கொண்டாய் பணிவறியேன் அடக்கமிலேன் சான்றோர் என்பாற் பகருமொழி மதித்தறியேன் வலிய னேனும் பணிகின்றேன் உன்முன்பு நின்மொ ழிக்குப் படிகின்றேன் என்மதலாய்! தோற்று விட்டேன் உன்தாயின் விழிக்கடைக்கோர் ஒப்பே யில்லை உலகிலென நினைந்திருந்தேன் களிப்புங்கொண்டேன் என்வாயை அடைத்துவிட்டாய் கவலை தோயா எழில்மலருன் கருவிழியால் தோற்று விட்டேன் இலக்கணநூல் இலக்கியநூல் நிகண்டு யாவும் எளிதாகக் கற்றுணர்ந்தேன் பெருமை கொண்டேன் சொலக்கருதி நாஉந்த இதழின் ஓரம் சுழல்மழலைப் பொருள்தேறேன் தோற்றுவிட்டேன் எழுதரிய ஓவியமே! என்றன் நெஞ்சில் எழுந்துநடம் செயுந்தேவே! v§fŸ fhj‰ gHªjªj Ritna!எப் படியோ என்னைப் பணிவித்து நல்லாட்சி செலுத்து கின்றாய்! 7 எம்மவர் தந்தார் நிலைமண்டில ஆசிரியப்பா மாலைப் பொழுதில் மங்கிய ஒளியில் வேலை முடித்து விரிகதிர்ச் செல்வன் மறைந்தனன்; என்னை மணந்தவர் வந்தார் கரைந்திடு புள்ளினம் கண்ணயர்ந் திருந்தன; மேலுயர் மாடம் மீதினில் ஓரறை; பாலொளி சிந்தப் பார்த்தது நிலவு; பஞ்சணை அமர்ந்தேன் பக்கத் தமர்ந்தார் அஞ்சன விழியை அவர்பாற் செலுத்தினென்; பசியோ டிருந்தவர் பாய்ந்து வந்தெனை அசைய விடாமல் அள்ளி விழுங்கினார்; இன்பக் கடலுள் இருமீன் ஆயினம்! அன்பில் திளைக்கும் அந்நல் வேளை மின்விடு விளக்கொளி மெல்லென அசையச் சன்னல் வழியே சார்ந்தனை தென்றால்! உள்ளமும் உடலும் சிலிர்த்தன; காதற் கள்ளுண் டின்பக் கற்பனை உலகில் இருந்திடும் எம்மை மறந்திடச் செய்தனை! பறந்தனம் விண்ணிற் பறவைக ளாகி; இந்த விதம்பல இரவுகள் கழிந்தன; அந்தநன் னாளெலாம் இன்பமீந் தனையால் நல்லை நல்லைஎன நவின்றேன் பலகால்; இன்றோ துணைவர் ஈங்கிலர், அதனாற் கொன்றா லன்ன கொடுந்துயர் தந்தனை! நல்லை அல்லைஎன நன்குணர்ந் தேனே; கூர்ந்து நோக்கின் குற்றம்நீ புரிந்திலை; சேர்ந்தவர் பிரிந்தார் செய்தனர் துன்பம் அதற்கென் செய்குவை? ஆய்ந்து பார்க்கின் நல்லையும் அல்லை அல்லையும் அல்லை தீதும் நன்றும் பிறர்தர வாரா எனவாங்கு ஓதிய பொருண்மை உணர்ந்தேன் இன்றே இரண்டும் ஒருங்கே எம்மவர் தந்தார்; ஒருகுண மில்லாய் ஏகுதி நீயே! 32 முகில்விடு தூது கலிவெண்பா வான வெளியரசே! வள்ளல் பெருமனம்போல் தானம் பொழிகின்ற தண்முகிலே காற்றைப் புரவியெனக் கொண்ட புரவலனே! எங்கே விரைகின்றாய்? ஒன்று விளம்புகின்றேன் சற்றேநில்! ஈர மனமுடையாய் இவ்வுலகில் எப்பொருளும் சோர விடமாட்டாய் என்றுன்னைச் சொல்கின்றார் சோரவிடாய் என்னுந் துணிவால் மொழிகின்றேன் ஆர அமர அரிவையுரை கேட்டிடுவாய்! அன்றொருநாள் என்துணைவர் ஆற்றிப் பிரிந்து சென்றார் இன்றுவரை அஞ்சல் எழுதவில்லை; நாடோறும் அஞ்சலார் இவ்வழிதான் ஏகிடுவார் ஆனாலும் வஞ்சி எனதகத்து வாயிற் படிமிதியார் கற்றைகற்றை யாக்கடிதம் கையில் குவிந்திருக்கும் பற்றாக் குறைக்கந்தப் பையிலொரு கூடையுண்டு ஐயா பெரியவரே அஞ்சலுண்டோ? என்பேன்நான் கையால் விரித்துரைப்பார் கண்கலங்கி நின்றிருப்பேன்; எத்தனைநாள் இப்படியே இன்னலுற்றுச் செத்திடுவேன்? மெத்தவுனை வேண்டுகிறேன் மேவியிதைக் கூறிடுவாய் வாடகை கேட்டுமிக வாட்டுகிறார் வீட்டார்கள், தேடறிய கல்வி தெரிவிக்கும் பள்ளிக்குச் சம்பளம் வேண்டுமென்று சாற்றுகின்றான் என்பிள்ளை; கம்பளம் விற்றுக் கடன்கழித்தேன்; கையிருப்போ ஒன்றுமிலை; இத்தகைய ஊறு மிகவருத்தக் கன்றியுடல் உன்போல் கருத்தேன்; விழிசிந்தும் நீர்த்துளியோ நின்னைப் புறங்கண்டு விட்டதுபோல் ஆர்த்து மிகுகின்ற தையாவோ! என்னவரைக் காணின் அருள்கூர்ந்து காசனுப்பச் செப்பிடுவாய்; ஆணி இருந்தால்தான் அச்சுவண்டி மேலோடும்; மெய்யில் உயிர்நிற்க வேண்டுமெனில், பள்ளிசெலும் பையன் பயில்கின்ற பாடம் வளரவெனில் காசுபணம் வேண்டுமெனக் காதலர்பால் நெஞ்சுணர்ந்து பேசு; பிழையாகப் பேசி வருத்தாதே, காதல் முகந்தன்னைக் கண்டு பலநாள்கள் ஆதல் அவரறிவார்; ஆசைக் கணவரைத்தான் கண்டு மகிழ்வுபெறக் கண்துடிக்கும் செய்தியையும் விண்டு திரும்பு விரைந்து. 36 இழந்த காதல் எண்சீர் விருத்தம் புகழணங்கு சிந்தனையாம் சோலைதனில் தனித்தி ருந்தேன் சிவந்தமுகப் பெண்ணொருத்தி அழுது நின்றாள்; நொந்திருப்ப தெதனாலோ? நின்பேர் யாதோ? நுவலுதியோ? எனப்பரிந்து வினவி னேன்யான்; இந்தவுல கெனக்கிழைக்கும் தீங்கி னைத்தான் என்னென்பேன்! மெய்க்காதல் தீய்ப்ப தற்குப் புந்தியிலாச் செயல்செய்து மகிழ்ந்த தந்தோ! புழுங்குகிறேன் என்காதல் இழந்த தாலே என்பெயரைப் புகழென்று புவியோர் சொல்வர், எந்நாளும் பொதுத்தொண்டு புரிந்து வந்த அன்பனைநான் காதலித்தேன்! பழிஎன் பாளை அவனுக்கே உலகத்தார் மணமு டித்தார்; தன்னலமே விழையுமொரு செல்வன் என்னைத் தனக்குரிமைப் பொருளாக்கப் பணத்தை வீசி என்னலத்தை நுகர்வதற்கே சுற்று கின்றான் இவ்வுலகும் சரிஎன்றால் யாது செய்வேன் கவிதைப்பெண் பார்செல்லும் நெறிநினைந்து செல்வேன் முன்னர்ப் பதறிவரும் மற்றொருத்தி நிலையைக் கண்டு யார்நங்காய் நீஎன்றேன்; என்றன் வாழ்வை யாதென்பேன் ஐயாவோ! கவிதை என்று பேர்சொல்லி எனை அழைப்பர்; கற்றோன் தன்னைப் பெருந்துணையாக் கொளநினைந்தேன்; ஆனால் கல்வி சீர்தளைகள் ஏதொன்றும் அறியாத் தீய சிறுமகன்வந் தென்னருகே சுற்று கின்றான் நான்விரும்பாக் குறிப்புணர்ந்து விலகா னாகி நரிச்செயலால் வன்முறையால் நாடு கின்றான் கூன்விழுந்த செய்திஇதழ்ப் பொறுப்பை ஏற்ற கொடுமனத்தர் அவனுக்கே உடந்தை யானார்; நான்விழைந்த கலைஞனையோ புறக்க ணிப்பாம் நங்கைக்குத் துணையாக்கி மகிழ்தல் கண்டேன் ஏன்பிறந்தோம் இவ்வுலகில் எனநி னைந்தே இரங்குகிறேன் காதலிழந் தேங்கு கின்றேன். செல்வமகள் கவியணங்கின் துயருரையைச் செவிம டுத்துக் கலங்குகிற பொழுதிலொரு நங்கை வந்து செவிமடுப்பாய் என்னுரையும் என்று கண்கள் சிந்துகிற நீர்துடைத்தாள்; சொல்க என்றேன்; புவியரங்கில் செல்வமெனப் புகல்வர் என்னை, புரட்சிசெயும் எழுத்தாளன் தனைம ணந்து தவிமனத்துக் காறுதலைத் தரநி னைந்தேன் தப்பியதால் என்காதல் துயரங் கொண்டேன் அவனுக்கோர் பெண்பார்த்தார் வறுமை என்னும் அரிவைதனை மணமுடித்தார் துயர்கொ டுத்தார்; தவறுக்கே தலைமகனாய்ப் பொய்கள் சொல்லித் திருடுவதே தன்தொழிலாய்த் திரியும் தீயன் இவறுகின்ற ஒருமகன்வந் தெனைக்க வர்ந்தே இல்லறத்தில் வாழ்வதற்கு மிகவி ழைந்தான் சுவருக்குள் வைத்திருந்து காக்கின் றான்நான் சுவைக்கின்ற காதலிழந் தேங்கு கின்றேன் வீரச்செல்வி காதலுக்குத் தரணிதரும் பரிசை நெஞ்சில் கருதிமனம் வெதும்புகிற வேளை தன்னில் சாதலுக்குத் துணிந்தொருத்தி முயல்வாள் தன்னைச் சந்தித்தேன்; உனக்கென்ன நேர்ந்த தம்மா! ஓதுததற்கு மனமுண்டோ? உரைப்பாய் என்றேன்; உரைப்பேன்என் றவள்துயரை விரித்து நின்றாள்; ஏதமிலா வீரமெனப் பெயரும் கொண்டேன் எடுப்பார்கைப் பிள்ளைஎன வளர்ந்தேன் நானும் மோதுகின்ற எப்பகைக்கும் அஞ்சா நெஞ்சன் முரணாத கொள்கைப்பற் றுள்ளான் தன்னைக் காதலித்தேன்; கொள்கையிலாப் பச்சை யோந்திக் கருத்துடைய ஒருவற்கு மணமு டித்தார்; பேதலித்தேன், காதலற்கோ இடும்பை என்னும் பெண்ணொருத்தி துணையானாள்; பாழும் பாரில் சாதலைத்தான் மேற்கொண்டேன் என்று ரைத்தாள் சலித்துப்போய்ச் சிந்தனையைக் கலைத்து விட்டேன் 8 கவிதைப் பெண் எண்சீர்விருத்தம் உணவில்லை உடையில்லை என்று வாட்டும் ஓயாத கவலையில்லை; அந்த நாளில் மணல்நின்று கடல்கண்டேன் வானில் நிற்கும் மதிகண்டேன் மலர்கண்டேன் வயல்கள் கண்டேன் தணல்கூரும் கதிர்கண்டேன் அங்கங் கெல்லாம் தணியாத காதலுடன் கவிதை என்னும் அணங்கிருந்து புன்னகைத்துக் கடைக்கண் ணோக்கால் அருகழைப்பாள் பேசாமல் நானி ருப்பேன் இதழ்விரித்துத் தென்றலெனப் பாட்டி சைப்பாள் எழில்மயிலாய்த் தோகைவிரித் தாடி நிற்பாள் விதவிதமாம் நிறங்கொண்ட துகிலு டுத்து விளையாடிச் செவ்வானில் காட்சி நல்கப் புதுமாலைப் பொழுதாகி நின்றி ருப்பாள் பூமணத்தை வீசிடுவாள் மயங்கி ருட்டில் மதிமுகத்தைக் காட்டிடுவாள் எனைம யக்கி வந்தணைப்பாள் இன்பத்தைக் கண்டு ணர்ந்தேன் உயிராகி உணர்வாகி என்ன கத்தே ஊடாடிச் சொல்லரிய மகிழ்வ ளித்துச் செயிரேதும் இல்லாத காதல் கொண்டு சேர்ந்துறைந்தாள்; சின்னாளில் செம்பொற்றாலிக் கயிறதுவால் பெண்ணொருத்தி மனைவி யானாள் இல்லறத்துக் கடன்பலவும் முறையாப் பேணி வயிறுநிறை செயலொன்றே தலையா எண்ணி வாழ்ந்தேன்நான் ஆயினுமோர் சுவையே யில்லை மனஞ்சலித்துக் கடற்கரையிற் சோர்ந்து நின்றேன் மனங்கவர்ந்த கவிதைப்பெண் வந்து நின்றாள்; எனைமயக்கி ஏகிவிட்ட எழில ணங்கே என்துயரம் அறியாயோ? மற்றொ ருத்தி தனைமணந்தேன் எனநினைந்தோ சென்று விட்டாய்? தவிக்கின்றேன் உனைக்காண அருகில் வாவா! எனைமறத்தல் சரியாமோ? முறையோ? என்றேன் என்னன்பா! உனைமறவேன் உண்மை சொல்வேன் உன்மனைவி பணிவிடையில் உனக்குப் பாவை உவந்தளிக்கும் இன்பமதில் மதலை நல்கும் இன்னமுத மழலைதனில் விழியில் மெய்யில் இற்கிழத்தி புலந்திருக்கும் விழியில் பேச்சில் என்னையினிக் காண்பரிது; குடல்வ ளர்க்க இரந்துண்போன் பொற்கரத்தில் உழைப்பால் ஓங்கும் வன்புயத்தில் விதவையர்கண் சிந்தும் நீரில் வாழ்கின்றேன் வாஅங்கே என்று சென்றாள் 5 ஏன் மறந்தாள்? மன்னரே உம்மை யன்றி மணந்திடேன் பிறரை என்றாள்; கன்னலே நீர்தான் என்றன் கட்படும் உலகம் என்றாள்; முன்னரே நமது நெஞ்சம் முழுமையிற் கலந்த தென்றாள்; சொன்னதைக் காற்றில் விட்டே தோகைஏன் மறந்தே போனாள்? காதலை வடித்துக் கொட்டிக் கடிதங்கள் எழுதி விட்டு வேதனை தந்தா ளன்றி விழிக்கடை தந்தாள் அல்லள்; மாதவள் மயங்க விட்டாள் மடல்களோ நூறு விட்டாள்; சோதனை செய்து தேர்ந்தார் துறப்பரோ நெஞ்சிற் காதல்? 2 4. தொழில் உலகம் தொழிலாளி எண்சீர் விருத்தம் மூச்சடக்கிக் கடலகத்தே மூழ்கி நல்ல முத்தெடுக்கும் தொழிலாளி வாழ்க்கை தன்னில் மூச்சிருக்க வேண்டியநல் வசதி இல்லை. முதலாளி பஞ்சணையில் கொஞ்சும் மஞ்சள் பூச்சுடைய மங்கையரை அழகு செய்யப் பூமிக்குள் அஞ்சாது நுழைந்து மின்னைப் பாய்ச்சுகின்ற தங்கத்தைக் கொடுக்கின் றானே பாவம்அவன் அங்கத்தில் ஒன்றும் இல்லை! ஆலையிலே ஆடைகளை ஆக்கு கின்றான் ஆனாலும் அன்னவனுக் காடை இல்லை காலையிலே உழைக்கின்றான் விதைக்கின் றான்நெற் களஞ்சியத்தை நிறைக்கின்றான் உடல்வ ருந்தும் வேலையிலே குறைவில்லை பசியை நீக்க வேண்டியநல் உணவெதுவும் இல்லை! இல்லை! மாலையிலே உளம்நொந்து செல்லு கின்றான் மறமிக்க தொழிலாளி நிலைமை நன்றோ? ஆடையிலே அழுக்ககற்றித் தூய்மை ஆக்கி அழகுசெய்து தருகின்றோன், பொலிவு குன்றத் தாடையிலே வளருமதை வழித்தெ றிந்து தளிர்க்கின்ற முடிவெட்டி அழகு செய்வோன், கோடையிலே வருந்தாமல் முள்ளால் கல்லால் கொடுமையொன்றும் நேராமல் நடப்ப தற்குச் சோடையின்றிச் செருப்பளிப்போன் இவர்க ளெல்லாம் தொடக்கூடாச் சாதிஎன்றால் தொலைக வையம்! வளமிக்க நாடென்பர் இந்த நாட்டில் வாழஒரு வழியின்றி வறுமை தன்னால் உளம்நொந்து கூலிகளாய்ச் செல்லு கின்றார் ஒப்பற்ற என்னினத்தார்; வேற்று நாட்டார் கிழங்கென்றும் கீரைஎன்றும் எண்ணி நம்மைக் கீழாக்கி விட்டஇந்த நிலை யொழிக்கக் களங்காண வேண்டாவோ வீரம் மிக்க காளைகளே ஏனின்னும் பாழு றக்கம்? 4 கூண்டுக் கிளி நேரிசை ஆசிரியப்பா கனிமரப் பூம்பொழில் களிப்புடன் சேர்ந்தே இனிதென வதிந்தேன், இடரொரு சிறிதும் உற்றே னல்லேன், உரிமை யாவும் பெற்றே வாழ்ந்தேன் பெரும்பகை யின்றி. எங்கோ பிறந்தான் எங்கோ வளர்ந்தான் இங்கே வந்தான் என்னையும் கண்டான் வலையினை விரித்தான் வளத்துடன் வாழ்ந்த நிலையினை இழந்தேன், நீள்சிறைக் கூண்டுள் அடைத்தான் என்னை அஞ்சிறை வெட்டி; அடைத்தனன் ஆயினும் அருங்கனி தருவான் பாலுங் கொணர்வான் பசியே இல்லை. ஆலும் வேம்பும் ஆமோ அச்சுகம்? அடிமை வாழ்வு கொடிது! கொடிது! விடியா தோநான் விடுதலை பெறவே? துடையா ரோஎன் துயரினை? எனவே துடியாத் துடித்தேன் துவண்டதென் உள்ளம். வடியாக் கிளவி வழங்கும் சிறுவன் படியாப் பருவம் பழுதிலா உள்ளம் கொண்டவன் ஓர்நாள் அண்டையில் வந்து விளையாட் டுணர்வால் விடுதலை தந்தான்; தலைகாட் டாமல் தப்பி ஓடிட முனைந்தேன் சிறகோ முறிந்தது கண்டேன். நினைந்தேன் நடந்தே நெடுங்கான் ஏக; பிதுங்கும் பெருவிழி அச்சங் காட்டப் பதுங்கி வந்தது பாழும் பூனை; ஒதுங்கி நடப்பினும் உயிர்பெறல் அரிதென மீண்டும் சென்று கூண்டுள் நுழைந்தேன் மீளா அடிமை நேர்ந்தது மேலும்; என்னிலை தானே இந்நாட் டவர்க்கும்! நன்னிலை தந்தான் நலமுயர் காந்தி விடுதலை என்றே வெளியில் வந்தனர்; கெடுதலை உள்ளம் கிடைத்ததைச் சுருட்டும் சுரண்டல் பூனை துரத்தல் காணீர்! இருண்ட வாழ்வுதான் ஏகுவ தென்றோ? பூனைகள் தொலையும் பொழுதுதான் என்றோ? கொடுமை கொடுமை என்று கூவிச் சலித்தது கூண்டுக் கிளியே! 37 விறகு வெட்டி அறுசீர் விருத்தம் kÅjÇ‹ Ãiyik f©L kd¤âÅš ftiy bfh©L jÅÆl« br‹nw‹ X®ehŸ; `joand _lh! என்று முனியனை அடித்துக் கையை முறுக்கியே இழுத்துச் சென்றார். `ïÅvid mo¡f nt©lh« ïik¥ãÅš ïw¥ng‹ Inah! என்றவன் குரலைக் கேட்டேன் இடிந்ததென் உள்ளம் ஆங்கே; கொன்றிடும் கூட்டத் தோடும் கோட்டையுள் நுழைந்தேன்; நீதி மன்றினில் தலைமை தாங்கும் மனிதரும் வினவ, ஓய்ந்து குன்றிய உயிரைத் தாங்கும் கூலியும் வாய்தி றந்தான் `இரண்டுநாள் உண்டே னில்லை, இருமலால் துடித்தாள் பெண்டு; சுருண்டன பிள்ளை எல்லாம் சோற்றுநீர் இன்மை யாலே, இரந்துயிர் வாழ்வ தற்கும் என்மனம் இடந்த ராமல் விரைந்துநான் விறகு வெட்ட வெளிப்புறக் காட்டில் சென்றேன் காய்ந்தஓர் மரத்தில் ஏறிக் கடிதினில் வெட்டும் போழ்து தேய்ந்தஎன் உள்ளம் நோவத் திட்டினார்; இறங்கி வந்தேன்; ஓய்ந்தஎன் உடலில் குச்சி ஒடிந்திட அடித்தார்; கீழே சாய்ந்தபின் நடந்த தேதும் சற்றுமே அறியேன் என்றான் `மற்றவர் காட்டிற் சென்று மரத்தினை வெட்டி னேனென் றுற்றதை உரைத்தாய்! சிறையில் ஒன்றரை மாதம் தங்கு! k‰wJ kW¤jh ah»š ku¤âÅš ÉwF bt£o ɉwâš IªJ %gh it¤âL btËÆš bršthŒ! v‹wd® mw¤ij¡ fh¥ngh®; ïojiy 圪j bj‹d Ëwd‹; ÃÄ®ªJ f©Âš ÚÇid¢ brhǪjh‹; `Inah!’ v‹wd‹, `ViH fhR¡ bf›Él« bršnt‹; v‹id¡ bfh‹¿lš e‹wh«;