பாவேந்தம் 25 கட்டுரை இலக்கியம் - 6 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 25 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 336 = 368 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 230/- கெட்டி அட்டை : உருபா. 275/- படிகள் : 1000 நூலாக்கம் : வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  இலக்கியப் பெரியார் பாவேந்தர்! பஞ்சிலிருந்து திரியையும் உருவாக்கலாம்; திரையையும் உருவாக்கலாம்! விளக்கின் வெளிச்சத்தைக் கூடுதலாக்கத் திரி உதவும்; வெளிச்சத்தை மறைக்கத் திரை உதவும். படைப்பாற்றலும் அறிவும் பஞ்சு போன்றவை. அவை எந்த நோக்கத்திற்குப் பயன்படுகின்றன என்பதைப் பொறுத்தே திரியா, திரையா என்னும் தெளிவு கிடைக்கும். சிந்திக்கவும் ஏற்றத் தாழ்வைச் சீர்படுத்தவும் உதவும் எழுத்து வாசிப்போர் மனத்தை வெளிச்சமாக்கும், அது திரி! மூடத்தனத்தைச் சுமந்துவரும் எழுத்து, வாசிக்கும் மனத்தை இருட்டாக்கிவிடும், அது திரை! இத்தகைய எழுத்தாளர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்று எச்சரிப்பார் பாவேந்தர் பாரதிதாசன். பழமை வாதத்தைத் தாங்குவோர் அவருக்குப் பழிகாரராகவே தெரிவார். அழியாத மூடத் தனத்தை - மிக அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதல்எழுத்(து) ஓதினும் மதிஇருட் டாகும் (பக். 7) வழக்கம் என்பதற்காக எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர் பாவேந்தர். வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ள வேண்டாம் (பக். 92) புதிய சிந்தனைகளால் மாந்த மனத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு எத்தனையோ இடையூறுகள் முளைத்தபடி இருக்கும். பழமைவாதம் குறுக்கே பாயும். பணப் பெட்டிகள் ஆசை காட்டும். அடக்குமுறை அச்சுறுத்தும். முற்போக்குச் சிந்தனை யோடு எழுந்தோர், தொடர்ந்து தடுமாறாமல் நடைபோடுவது கடினம்! குறிக்கோளில் உறுதியும் தெளிவும் இருப்போரிடம் மட்டுமே, நிலையான கொள்கைப் பயணம் தொடர்ந்தபடி இருக்கும். அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ பெற்றதன் கொள்கையைப் பிறர்கை மாற்றுவோன் உற்றது உரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன் கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன் மனிதருள் வாய்ந்த மனித விலங்கு. (தொகுதி 15; பக். 337) மனிதர், மனித விலங்கு - இருபிரிவும் நம்மைச் சுற்றி உண்டு. உருவத்தால் எல்லோரும் மாந்தரே. உள்ளத்தாலும் செயலாலும் மாந்தர் களாவதற்குத் தடுமாறாத குமுகாயச் சிந்தனை வேண்டுமென்கிறார் பாவேந்தர் எழுதும் முறைக்கும் அவர் வழிகாட்டுவார். சிறிதளவே எழுதி னாலும் நிறையப் படிக்கவேண்டும் என்பார். பிறரை நகலெடுப்பது அறிவு வறுமையின் அடையாளமாம்! புதிய அறிவையும் புதிய மனத்தை யும் பெறத் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று அறிவுறுத்துவார். சிறிதெழுதத் தேடி நிறையப் படிப்பாய்! பிறர்அடி பார்த்துப் பிழைப்போன் - வறியன்! கருவி விருப்பாய் அறிவுநிலம் கல்லி வருவி புதிய மனம். (பக். 334) புதிய மனம் பெற்றிருந்த பாவேந்தர் நீண்ட வாழ்நாளையும் பெற்றிருந்தார். குமுக மாற்றத்திற்கான எல்லாத் துறைகளையும் சிந்தித்தார். அவற்றை எழுத்தாக்கினார். தமக்குப் பின் பெரிய எழுத்தாளர் படையை பாவேந்தர் பரம்பரை எனத் திரளச் செய்தார். கடவுள் சிந்தனையோடு எழுந்து, காந்தியச் சிந்தனையால் வளர்ந்து, பெரியாரியச் சிந்தனையாளராக மலர்ந்தார். கடவுளை மதங்களைக் காப்பவர் என்போர் கருணை யிலாநிலம் பொருள்நனி கொண்டோர் உடைமை பறித்தஇக் கொடியரில் கொடியர் ஒழிந்தபின் பேநலம் உறுவர்இவ் வுலகோர் முதுகில் அமர்ந்த முதலாளி மூளையில் அமர்ந்த மதவாதி (பக். 347) இரு தரப்பையும் துடைத்தெறிவதன் மூலமாக உலகம் நலமடை யும் என்பதை இவ்வரிகளால் பாரதிதாசன் தெளிவுபடுத்துகிறார். மக்கள் வாழ்வைப் பின்னோக்கி இழுக்கும் ஒவ்வொன்றையும் பாரதிதாசன் கேள்விக்கு உள்ளாக்கினார். கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே கூலிமக்கள் அதிகரித்தார் ... (பக். 14) என்று உழைப்போரின் வறுமைக்குக் காரணம் கூறினார். பாதிக்கு nதபசிvன்றுரைத்jல்செய்தgவத்தைக்fரணம்fட்டுவார்- kதtதத்தைcம்மிடம்Úட்டுவார்- gதில்Xதிநின்wல்படைTட்டுவார்(பக்.73) தலையெழுத்தையும் பாவத்தையும் காரணமாகக் காட்டி, வறுமையைச் சுமக்கச் சொல்லும் மதவாத ஏமாற்றைத் தோலுரித்தார். நன்றிக்கு வாழ்ந்திட வேண்டும் - உரம் வேண்டும் - திறம் வேண்டும் - உன் நாட்டிற்கே நீவாழ வேண்டும் - நம் ஞாலப் பெரியார் செல்லும் பாதை யினை விடாதே விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்! (தொ. 18; பக். 47) காரணம் கேட்டுக் கடைபிடிக்கச் சொல்லும் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் அணிவகுக்குமாறு வலியுறுத்தினார். வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற் கேஅடை யாளம் - வாய் விட்டிசைப் பீர்கள்சுயமரி யாதைஎக் காளம். (பக். 160) தன்மான இயக்கத்தின்கீழ் தமிழர்களை ஒன்றுகூடச் சொன்ன பாரதிதாசன், தாமும் ஒருவராய் நின்று வாழ்நாள் இறுதிவரை பணி யாற்றினார். பகுத்தறிவுத் துலாக்கோலில் பழந்தமிழ் இலக்கியங்களையும் எடைபோட்டுக் காட்டியது பாவேந்தர் செய்த புதுமை! திருமூலர் பாடியவை 3000 பாடல்கள் எனச் சேக்கிழார் பாடி யுள்ளார். திருமந்திரத்தில் இப்போது 47 பாடல்கள் கூடுதலாக உள்ளன. அவை இடைச் செருகல்தானே என்று அவர் வினா எழுப்பினார். ‘மூவா யிரம்சொன்னார் மூலன்என்றார் சேக்கிழார் பாவேது மேல்நாற்பே னேழ்? (பக். 176) திருமந்திரத்தின் முதற்பாடல் ஒன்றவன்தானே எனத் தொடங்கும் என்கிறார் சேக்கிழார்! ஐந்து கரத்தனை என இப்போதுள்ள முதற் பாடல் இடைச்செருகல் அல்லவா! திருமூலர் காலத்தில் விநாயகர் வணக்கம் ஏது? இலக்கிய உலகிற்குப் பாவேந்தர் புதுக் குருதி பாய்ச்சினார். ஒன்றவன் தானே எனல்என்று சேக்கிழார் நன்று நவின்றாரன் றோ? ஐந்து கரத்தனை ஆனதொரு செய்யுள்செய்து முந்தவைத்தார் மூலன்நூ லில் (பக். 176) எல்லோரையும் படைத்தவர் கடவுள் என்றால், கோவிலுள் நுழையும் வலிமையும் எல்லோருக்கும் உண்டு! நாயும் காக்கையும் நுழையும் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதைத் தடுக்கிறார் களே! நாயை விடவா அவர்கள் கேவலம்? என பாவேந்தர் கேட்டார். குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? (பக். 139) தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு எனத் தனிநூலே படைத்தார். அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் (பக். 83) பெண்களைப் புதுமைப் பெண்களாக்க விரும்பினார் பாவேந்தர். தொழிலாளர், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் என எந்தப் பிரிவினர் ஒடுக்கப்பட்டாலும் பாவேந்தர் பாடல் உரிமைக் கனல் கக்கியது. ஒடுக்குமுறை உலகத்தின் எந்த மூலையில் எழுந்தாலும் பாவேந்தர் எதிர்ப்புக் குரல் பாட்டாய்க் கனன்றது. வியத்நாமில் அமெரிக்கா நடத்திய அட்டூழியமும், பாவேந்தரின் எதிர்ப்புக்குத் தப்பவில்லை. அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள் ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை (பக். 313) இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா - பாவேந்தருக்கு வேடனாகத் தெரிந்தார். திபேத்து வேடனார் இந்தியா வந்தார் (பக். 380) என்று குருவிகளை எச்சரித்தார். உண்மையை உணர்த்துவதும் பரப்புவதும் கடினம் என்பதை உணர்ந்த அவர், போகும் போக்கில் கூறினார். பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு (பக். 308) காலால் நடக்கும் உண்மையைவிட, சிறகாய் பறக்கும் பொய் விரைவாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்! உண்மையைச் சார்ந்து நிற்போருக்கு, உழைக்கும் நெருக்கடி கடுமையாய் இருப்பது இயற்கை! சமுதாயம் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்ற முனையும் வேகத்துடன் வெளிப்பட்டவை பாவேந்தர் பாடல்கள்! அதற்காக அவர் ஏற்ற எதிர்ப்பும் இழப்பும் ஏராளம். அவற்றை இத் தொகுப்பில் ஒன்றுதிரட்டி பார்ப்பது இதுவரை கிடைக்காத வாய்ப்பு. தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியன் பாவேந்தரின் படைப்புகள் அனைத்தையும் பாவேந்தம் என 25 தொகுப்புகளாக இளங்கணி பதிப்பகம் வழி வழங்க முன்வந் திருப்பது தமிழுலகம் பெற்ற பேறு! சமுதாயம் சார்ந்த பாவேந்தரின் பாடல்கள் அடங்கிய இத் தொகுப்பு புதிய உலகை உருவாக்கும் சிந்தனையைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும்! - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கிநூழீஞ் றீஜீஹமூர்ஙூ குமீக்ஷீயுகூந்) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (ஸசுஙிபீகுளிட்கி ஹகுமூர்கூயு) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! (கீகுட் கிகுதீநூக்ஷி-ஸநூணீபிகீகுங் கீநூட்க்ஷி) 15. இதயம் எப்படியிருக்கிறது? (யகூஏகிஞ் ரூபுமீக்ஷீஹிகுதுகிஞ்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (நிகுங்கிணூங் ஸ்ஙீரகூநி கிதீக ப்ஙுரூ றுஹிஷீந்ஒ) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பாவேந்தரின் புனை பெயர்கள் 1. பாரதிதாசன் 2. கே.எ. பாரதிதாசன் 3. புதுவை கே.எ.ஆர். 4. கே.எ.ஆர். 5. நாடோடி 6. வழிப்போக்கன் 7. அடுத்த வீட்டுக்காரன் 8. கே.எ. 9. சுயமரியாதைக்காரன் 10. வெறுப்பன் 11. கிறுக்கன் 12. கிண்டற்காரன் 13. அரசு 14. கைகாட்டி 15. கண்டெழுதுவோன் 16. செய்தி அறிவிப்பாளர் 17. உண்மை உரைப்போன் 18. கே.ஆர். 19. குயில் செய்தியாளர் புனைபெயர் வைத்துக்கொண்டமைக்கான காரணங்கள்: ... ... நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம்: அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருப்பதுதான். சாதிக் கொள்கையை முன் அவ்வாறு எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக்கொண்டதும் ஏதாவதொரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும், பாரதியாரைப்போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்து வைத்துப் பாடல் இயற்றவேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே - பாவேந்தர் பாவேந்தர் பாரதிதாசன் முன் மரபினர் சுப்பராயன் பழனியம்மாள் பரதேசியார் காமாட்சி கனகசபை பழனியம்மா காமாட்சி அம்மாள் இலக்குமி அம்மையார் (ஓந்ஙூ நிகூக்ஷறீ) (றுயுதீநூகுபீஒ நிகூக்ஷறீ) தெய்வநாயகம் சிவகாம சுந்தரி சுப்பராயன் சுப்புரத்தினம் இராசாம்பாள் (கீகுயுர்ந்குசுங்) பாவேந்தர் பாரதிதாசன் மரபினர் சுப்புரத்தினம் (கீகுயுர்ந்குசுங்) - பழனியம்மா சரசுவதி (1) கோபதி (2) வசந்தா (பிபீழிஙூ) (3) இரமணி (4) கண்ணப்பர் (நிங்க்ஷதுநிங்க்ஷங்) தண்டபாணி சிவசுப்பிரமணியம் (நிமநிகிங்) சாவித்திரி (நிமநிகிஞ்) (நிமநிகிங்) (நிமநிகிங்) பாவேந்தர் பாரதிதாசன் பின் மரபினர் (1) சரசுவதி - கண்ணப்பர் (நிமநிகிங்) புகழேந்தி பாரி மல்லிகை இளமுருகு நவமணி தங்கமணி சண்முக வேலாயுதம் மலர்க்கொடி சுப்புரத்தினபாரதி இசையமுது பரமநாதன் சிலம்பொலி அறிவுடைநம்பி சபரி வேந்தன் (2) கோபதி (நிங்க்ஷது நிங்க்ஷங்) - சாவித்திரி செல்வம் தென்னவன் பாரதி அமுதவல்லி மணிமேகலை மீரா செல்வநாதன் பாவேந்தன் தேனருவி இசையரசி (3) வசந்தா (பிபீழிஙூ) - தண்டபாணி தமிழ்ச்செல்வம் (நிகிஞ்) பாண்டியன் சேரன் முத்தையன் அருண்மொழி புகழ்வடிவு புகழ்வடிவு வேனில் சங்கத்தமிழ் அருட்செல்வம் இளங்கோவன் வெண்ணிலா (4) இரமணி (ப்ஏக்ஷீ) - சிவசுப்பிரமணியம் செங்குட்டுவன் (வீரமணி) மணிமேகலை முல்லைக்கொடி அன்புமணி சுப்புரத்தினம் அமுதா குப்புசாமி பொன்னுவேல் நாகராசன் இரமணீதரன் முகிலன் பாரதிதாசன் சிறிநிதி விசயேந்திரசோழன் ரேகா மேனகா சிறிவெங்கட் குறிப்பு : புதுச்சேரி அரசு கலை - பண்பாட்டுத்துறை வெளியிட்ட நினைவு அருங்காட்சியக விளக்கக் கையேட்டிலிருந்தும் மற்றும் மகள் (சரசுவதி) வயிற்று பேரன் புகழேந்தி மூலம் பெற்ற மரபுவழி விவரங்கள். பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன் vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiv பாவேந்தர் புனை பெயர்கள் xxiv பாவேந்தர் மரபினர் xxv சொற்பொழிவுகள் 1. அகில பிரஞ்சிந்திய ஆரம்ப ஆசிரியர் (சிண்டிகேட்) ஐக்ய தேசீய சங்கப் பொதுக்கூட்டம் 3 2. கண்டு உவந்தேன் 9 3. கவிஞன் உள்ளம் 11 4. தமிழ்த் தொண்டு 12 5. நூலறிவும் - உணர்வும் 14 6. தமிழும் இசையும் 17 7. தமிழும் பாரதியும் 19 8. கலை என்றால் என்ன? 27 9. இசை என்பது என்ன? 31 10. இந்தி எதிர்ப்பு மாநாட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உரை 34 11. தமிழ் இன்பம் 36 12. அகமகிழ்விழா 45 13. சிறைமீண்டபெரியார்க்குத்தில்லையில்வரவேற்பு... 52 14. சிற்றம்பலத்திšமுப்பெUமுழக்க« 55 15. பெரியாருக்கு வெள்ளிவாள் பரிசளிப்புப் பொதுக்கூட்டம் 59 16. புதுவை வேதபுரீசர் நூல்நிலையத்தில் புலவர் குமாரசாமி அவர்கட்குப் பாராட்டுவிழா 62 17. Mம்பளாப்பட்டில் புரட்சிக்கவிஞர் 65 18. jன்மான cணர்ச்சிcள்ளவன்jமிழ்த்âUமணத்தையேவிUம்புவான்67 19. புனிதா நாட்டிய அரங்கேற்று விழா 69 20. ம.பொ.சி.யை வள்ளுவரே வாழ்த்தினார்! 72 21. பெரியார் பாதையில் செல்லுங்கள் 75 22. தமிழின எதிரிகளுக்கு இறுதி எச்சரிக்கை 78 23. உண்மை பாரதியார் 86 24. பாரதியார் பாடல்களைப் பாடுவோர் கவனத்திற்கு: 95 25. பாரதியார் 99 பயன் கிண்டல்கள் 105 ஐயாயிர வருடத்து மனிதன் 143 1. புதுவையில் வரவேற்பு 144 2. நம் நிரூபர் வீட்டில் தங்கினார் 149 3. நம் நிரூபர் வீட்டில் தங்கினார் 153 4. காட்டு மேட்டில் உலாவுதல் 157 5. காட்டு மேட்டில் உலாவுதல் 160 6. காட்டு மேட்டில் படுக்கை 162 7. மற்றவறைப்போல் சைவக் கொள்கையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததே 165 8. சைவக் கொள்கையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததே! 167 9. முழங்கால் முதல் உள்ளங்கால் வரைக்கும் ஓர் பனையின் உயரம் 169 10. காட்டு மேட்டில் படுக்கை 171 தனிப் பாடல்களுக்கு விளக்கம் 177 1. பாலனைப் பழித்தல் 178 2. தமிழ்ப்பெண் மனப்பான்மை 180 3. குழந்தை இன்பம் 182 4. சோற்றுக்கடை மொட்டைச்சி மீது கவியாண்டான் பாடியது. 184 5. கம்பன் செய்த பிழை 185 6. முருகனுக்கும் திருநாமமா? 185 7. பேறு பதினாறு 186 8. இராமன் தெய்வம் அல்லன் 187 9. பார்ப்பான் பார்ப்பானைத் திட்டினான் 188 10. கச்சியப்பர் என்ற புலவர் கூறுகின்றார் 189 11. கம்பன் தொண்டு 190 அச்சில் வெளிவராதப் பாடல்கள் 191 1. ஈ.வெ.ரா. நாகம்மையார் 192 2. வள்ளி உள்ளம் 193 3. உயிர் குளிரும் 194 4. எந்தவிடம் செல்கின்றாய் 194 5. ஒழுகும் அமுது 195 6. நீஅது...! 196 7. கண்ணணும் பெண்ணும் 197 8. சதிராடினாள் 198 9. முருகன்! 199 10. விடுதலை 200 11. வழிமேல் Éழி 200 12. கிழவன் fதல்! 201 13. சால eம்பினேன் 201 14. cன் விருப்பமும் ஏதடா? 202 15. gரததேவி 203 16. மதம் காரணம் 204 17. ஜின்னா! 205 18. வெல்க இங்கிலாந்து நாடு 206 19. குழந்தைகள் சத்யாக்கிரகம் 208 20. மணக்கும் இயற்கை 209 21. களிப்போம் 210 22. புது வருஷ வாழ்த்து 211 23. பரிமள மாலை 212 24. பூக்காரி முனியம்மா 213 25. புத்தகம் 214 26. வருவாரோ 215 27. பாடகி 216 28. நாட்டியக்காரி 218 29. கீரைப் பாட்டு 220 30. கொஞ்சும் மொழி நஞ்சுமொழி 221 31. தமிழ்த் திருத் தேவி 221 32. தாய்நாடு 222 33. சுதர்மன் சோகம் 223 34. நீசரிடம் சிக்கிய ராசன்மகன் 224 35. மாறு வேடத்தில் 224 36. குருநாதர் போற்றி 225 37. நான் படித்திட வேண்டும் 225 38. தீராயோ கவலை 226 39. பணி செய வைத்தாய் 227 40. வந்தே மாதரம் மெட்டு 228 41. துதிப்போம் 229 42. செந்தமிழ்க் கவியாகச் செய்தாய் 230 43. என் தாயே என் கண்ணி 231 44. இலங்கை தமிழ்நாடே 232 45. ரோசாத் தோட்டத்தில் ராசாசி 234 46. பாவேந்தர் பாரதிதாசன் சிறப்புரை 235 பாவேந்தர் வழங்கிய மற்ற நூல்களுக்கான முன்னுரைகள் மற்றும் அணிந்துரைகள் 236 நேர்காணல் 242 நிழற்படங்கள் 260  சொற்பொழிவுகள் 1. கவிஞர் பதில் 28.7.1946ல் சென்னையில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிதியளிப்பு விழாவில், நிதியைப் பெற்று கொண்டு கவிஞர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம். எனக்கு இன்று அளித்த கௌரவத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது எனக்கு அளித்த கௌரவ மல்ல; தமிழுக்கு அளித்த கௌரவம். செய்யத் துணிபவனுக்கு, எண்ணத் துணிபவனுக்குத் தான் வெற்றி கிட்டுகிறது. தன்னுடைய செயல் முறையும், கொள்கையும் சரியானதென்று நம்புபவன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சி கொள்கை யினின்றும் பிறழக்கூடாது. இவனுக்கு என்றாவது ஒருநாள் வெற்றி வந்தே தீரும். என்வாழ்நாள் முழுவதும் இதுவே என் கொள்கை யாக இருந்து வந்திருக்கிறது. சுயேச்சையான மனோபாவத்திடம் எனக் கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் பலன்தான் நான் இன்று பெற்றிருக்கும் இந்தப் பணமுடிப்பு. இன்று, தமிழகத்தில் பழமையின் சிறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் போதும் என்னும் மனோபாவம் பொதுவாகப் பரவியிருக்கிறது. இது முன்னேற்றத்திற்கு வழிகாட்டாது. பழைமையை உதறித் தள்ளிப் புது வழியை மேற்கொள்ளுபவன் தான் உண்மையான சேவை செய்தவன். தமிழுக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மக்களின் தமிழ்க் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கரையான் அரித்த பழைய துறையிலிருந்து மெல்ல மெல்ல விலகிப் புரட்சிகரமான புதுத் துறையில் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய நவயுக எழுத்தாளர்களும், கவிகளும்! தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமானால், அதற்கு உண்மையாகவே புத்துயிர் பிறக்கவேண்டுமானால், இத்தனை எழுத்தாளர்களும், கவிகளும் குறுகிய சாதி வேறுபாடுகளைத் தகர்த்து எறியக் கங்கணங் கட்டிக்கொண்டு புறப்படவேண்டும். அடிமை மனப் பான்மையை ஒழித்து, சுயேச்சையான எண்ணத்தையும், பரந்த நோக்கங்களையும் வளர்க்க முற்படவேண்டும். இந்த விஷயத்தைப் பற்றி எழுது என்று கவிஞனிடம் ஒப்பந்தம் பேசுவது நடக்காத காரியம். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இன்னொருவர் சொல்லி, கவி எழுத முடியாது. ஒரு கொடுமையை அல்லது ஒரு காட்சியைக் கண்ட அளவில் உணர்ச்சி தூண்டக் கவி எழுத வேண்டும். என் இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான்! தமிழ் படி; தமிழ் பேசு, தமிழ் எழுது, கொடுமை கண்ட விடத்து எதிர்த்துப் போராடு. யாரேனும் தமிழைப் பழித்தால் லேசில் விடாதே. அச்சமின்மையை வளர். புரட்சி மனப்பான்மை என்னுள் புகுந்த பொழுது எனக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் ஏற்பட்டன. நான் அவைகளைக் கண்டு அஞ்சவில்லை. ஏனெனில் எதிர்ப்பி லிருந்து நன்மை பிறக்கிறது; அறிவு வளர்கிறது. பாரதியார் அச்சம் தவிர் என்றும், போர் முனை விரும்பு என்றும் தான் கூறியிருக்கிறார். தமிழ் வாழ்க! - சக்தி இதழ், 1946 செப்டம்பர் 2. கவிஞன் உள்ளம் கவிஞன் உள்ளும் புறமும் துருவி முத்துக்குளிப்பது போன்று உண்மையை, அழகைக் கண்டெடுத்துக் காட்டுபவன். கவிஞனுக்கும் புலவனுக்கும் மேதையில் வித்தியாசமில்லை யெனினும் கவிஞன் இயற்கையிலேயே கவிதை கட்டும் சக்தி பெற்றவனாயிருக்கின்றான். இயற்கை அழகிலும் மக்கள் உள்ளத்திலும் கவிஞன் இரண்டறக் கலந்து, துருவி சித்திரம் தீட்டிக் காட்டுகின்றான். மற்றவர்கள் இயற்கை சக்தியிலடக்கப்பட்டு மேலெழுந்தவாரியாகச் சுவைக்கிறார்கள். எவ் விடத்தும் கவிஞன் சுதந்திரம் உடையவன். பெரும்பான்மையோருக்குக் கவியாகும் வித்து உண்டு. கவியன் கவிஞனாகப் பிறக்கிறான். ஆனால் அந்த வித்தை எருப்போட்டு, நீர் விட்டு வளர்க்கும் வழிகள் உண்டு. கவிஞன் ஆவதற்கு இலக்கணம் இலக்கியம் ஒன்றும் படிக்க வேண்டா மென்று சிலர் சொல்கிறார்கள். அப்படியல்ல; அவற்றைக் கட்டாயம் படித்துத் தானாக வேண்டும். கவிஞன் ஒரு நாட்டுக்கு என்ன செய்ய முடியு மென்பதைப் பாரதியார் நிரூபித்துக் காட்டிவிட்டார். அவரது பாட்டுக் கள் வெளிவந்தது முதல் நாட்டில் தமிழ் வேட்கை அதிகரித்து உள்ளது. கவிஞன் சரியாக உணர்ந்து சரியாகச் சொல்வான். சாசுவதமான உண்மையைத்தான் சொல்வான். இந்த உண்மைகள் கவிஞனுக்கு முன்னாலே புலப்படுகின்றன. மற்றவர்களுக்குப் பின்னாலே புலப்படு கின்றன. சிலர் தம்மையே புலவரென்று நினைத்துக் கொண்டு திண்டாடு கின்றனர். புதிதாக ஒன்றும் சொல்லத் தெரியாது. முன்னுள்ள கலம்பகம் அந்தாதியைப் பார்த்து வரிசையாக அதையே பாடுவது. புதிதாக ஓர் இலக்கியம் செய்யச் செயலில்லை. கல்லாடம் போன்ற நூல்களில் பாக்கியிருப்பதற்கு உரையெழுத முடியாது. எதையாவது மொழி பெயர்ப்பது, செத்த நூல்களை மொழி பெயர்ப்பது ஒரு புலவனின் வேலையா? சொந்தத்தில் ஒன்றும் வராது. யாராவது புதிதாகப் பாட முற்பட்டால் பிடிக்கவில்லை. இலக்கணம் தெரியாது என்று குறை சொல்லிக் கொண்டிருப்பது, கையாலாகாத இவருக்குப் பெரிய புராணமும் கம்பராமாயணமும் இல்லாவிட்டால் பேச்சுக்கே இடமில்லை. இதைவிட்டால் வேறு வழியேது? தமிழ்மொழி எல்லா பாமர மக்களும் மிக எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலே, எல்லா மதத்தினர்களும், உலக மக்களனைவரும் தமிழ் மொழியை விருப்புடன் படிக்கும் வகையிலே இயற்ற வேண்டும். 3. தமிழ்த் தொண்டு தமிழ் உண்மையாகவே இந்த நாட்டில் பரவவேண்டுமானால், தமிழ் எங்கும் தழைத்தோங்க வேண்டுமானால், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ் மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவ வேண்டும். எவ்வளவு தூரம் மக்களிடையே சுயமரியாதைக் கொள்கைகள் பரவுகின்றனவோ, அவ்வளவு தூரம் தமிழ் மொழியும் பரவும். தமிழ் மொழி பரவ வேண்டுமானால், என்ன என்ன தொண்டுகள் செய்ய வேண்டும். புலவர் புலமை என்றால் புதுப்பிப்பவர் புதுமை என்று பொருள். இங்குள்ள புலவர்கள் எதைப் புதியதாக எழுதினார்கள்? புது வெளியீடுகள் எத்தனை வெளியிட்டார்கள்? கவிஞன் என்பவன் ஓர் மலை, ஆறு, தடாகம், இயற்கை, சோலை முதலியவற்றைத் தனது கவிதா திறமையால் எழுதுபவன். இங்கு எத்தனைப் புலவர்கள், எவ்வளவு வெளியீடுகள் தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியிருக் கின்றனர். இல்லை, கம்பராமாயணத்தை மொழிபெயர்ப்பதும், கம்ப ராமாயணத்தைச் சுருக்கி எழுதுவதும், பெரியபுராணத்தை வசன நடையில் சுருக்கி எழுதுவதும், புதுப்புது உரை எழுதுவதும் ஆகிய இதிலேயே தங்களுடைய வாழ்நாளை, அறிவைச் செலவழிக்கின்றனர். ஓர் புலவன், ஓர் புத்தகத்தை வெளியிட்டால் அதைக் கிறிதவன், முகம்மதியன், ஆங்கிலேயன், மற்ற உலகிலுள்ள எல்லா மக்களும் ஆவலுடன் படிக்கும் வகையிலே இருக்க வேண்டும். அதை விடுத்து தலைப்பிலேயே தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டிற்கும் இறைவாபோற்றி, சிவமயம் என்று மிக மிகக் குறுகிய மனப்பான்மையிலேயே இருந்தால், எப்படி நமது மொழியை எங்கும் பரப்ப முடியும் என்பதைச் சிந்தியுங்கள். நான், தோழர் சி.என்.அண்ணாத்துரை அவர்கட்கும், தோழர்கள் சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார் ஆகியோர்களுக்கும் நடந்த விவாதங்களைக் கவனித்தேன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு செந்தமிழ்ச் செல்வி எனும் புத்தகத்திலே எழுதிய பாரதியார் தலை கீழாய்ப் புரட்டி, மனமார தன்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக மாறிப் பேசுகின்றார். ராவணன் ஆரியன் என்றும், ராமன் திராவிடன் என்றும் உலகம் சிரிக்கும் வண்ணம், பிறர் ஒப்பா வண்ணம் பேசுகிறார். சேலத்திலே பாரதியார் அவர்கள் ராமாயணத்தில் ஊழல்க ளிருக்கின்றன. ஆனால் கலையாயிற்றே கலையை அழிக்கக் கூடாது என்று கூறினாராம். கலை என்றால் என்ன? புலவர்களால் இயற்றப் படுவதுதானே. நாம் எவ்வளவோ இயற்றிக் கொள்ளலாமே. பாரதியார் முயன்றால் முடியாதா? அல்லது பண்டிதர்கள் பிழைப்புக்கும் செல்வாக்குக்கும் இதுதான் வேண்டுமா? சொல்லட்டும் ஒப்புக் கொள்வோம். ஆனால், ஏன் மக்களிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி தங்களுடைய வாழ்நாளை வீணாளாக்கிக் கொள்வதால் தன் நாட்டையும், தமிழ் மக்களது முன்னேற்றத்தையும், தமிழ்மொழி அபி விருத்தியையும் தங்களது மிகக் குறுகிய நோக்கங்களால் கெடுக் கின்றன. இதைக் கண்டு பிறநாட்டார், நம்மைப் பரிகசிக்க மாட்டார்களா? நமது நாட்டில் டாக்டர் பட்டம், மற்றும் பட்டங்கள் எல்லாம் எப்படி? மேல் நாட்டில் டாக்டர் பட்டம் எப்படி? இவற்றை ஆராய வேண்டாமா? நாம் முன்னேற, நமது மொழி முன்னேற வழி தேட வேண்டாமா? பட்டங்களைப் பற்றி நீங்கள் மயங்க வேண்டியதில்லை. சிபார்சு செய்தால் வந்துவிடக் கூடியதுதான். 4. நூலறிவும் - உணர்வும் மனிதன் அறிபவன், மனிதனுக்கு அறிவுண்டு. மனிதன் எவற்றையும் அறிபவன். எவையும் அறிவுக்கு உட்பட்டவை. உண்மை என்பது உள்ளத்தின் தன்மை. அதாவது, உட்புறத்தின் இயல். மெய்மை என்பது மெய் (உடல்)யின் தன்மை. அதாவது, மேற் புறத்தின் இயல். கடலின் மேற்புறம் கண்டோன் கடலின் மெய்மை கண்டோனாவான். கடலின் உள்ளியல் கண்டோன் கடலின் உண்மை கண்டோனாவான். மனிதன் அறிபவன். தன்னுண்மை, தனது மெய்மை, உலகுண்மை, உலகின் மெய்மை அடங்கல் உண்மை அனைத்தையும் அறிபவன் (அடங்கல் - எல்லாம்). அறிவு என்பது உண்மை, மெய்மைகளை அறிதல் என்பதனோடு அனைத்தையும் அறிதல் என்பதும் ஆகும். அறிவின் நோக்கம் பெரிது! அறிபவனாகிய மனிதன்தான் இல்லம், ஊர், நாடு, கண்டம், உலகம், வானம், வானுள்ள கோளங்கள் ஆகியவை உள்ளிட்ட பெரும்புறம் அனைத்தின் உண்மையையும், மெய்மையையும் அறியும் நோக்கமுடையவன். இப்பெரு நோக்கமுள்ள மனிதனின் நிலையோ சிறிது. தொட்டா லன்றி உணரமுடியாத உடல், கூப்பிடு தூரத்தில் உள்ள உருவத்தைக் காண முடியாத சிறு கண்கள், சிறிய காதுகள், சிறிய வாய், சிறு மூக்கு ஆகிய இவற்றையுடையவன், அனைத்தின் உண்மை மெய்மைகளை அறிதலான தனது நோக்கத்தை அவன் எவ்வாறு நிறைவேற்றுவான்! இதனால் அவன் கல்வி கற்றல் அவசியமாகிறது. கல்வி என்பதற்குப் பெயர்ப்பு என்பது பொருள். கல்லல், கல்வி, கற்றல், கற்பு அனைத்தும் ஒரு பொருட்சொற்கள், சூரியன் பல்லாயிர அடி உயரத்தில் இருக்கிறது; ஒளியால், வெப்பத்தால் அது அறியப்படுகிறது. இதுவன்றி அதன் உட்புறத்தின் தன்மை வெளிப்புறத்தின் தன்மை அறியப்படவில்லை. ஆயினும் அறிஞர் ஆக்கிய நூற்களில் அச்சூரிய னது விஷயப் பெயர்ப்பு உண்டு. சூரியனால் எதிர்பார்த்த அறிவு அதைப் பற்றிய விஷயப் பெயர்ப்புள்ள கல்வியால் நிரம்பலாம். அறிவு என்பதற்கும், நூலறிவு அல்லது கல்வியென்பதற்கும் வித்தியாசம் உண்டு. அறிவு உண்மை மெய்மைகளை மாத்திரம் ஆதாரமாக உடையது. நூலறிவு அல்லது கல்வி என்பது உண்மை, மெய்மை, பொய்மை, மடமை முதலியவைகளை ஆதாரமாக உடையது. கேள்வியறிவும் இவ்வாறே. ஒருவனுக்கு தன்னிலையில் உள்ள அறிவானது விவாதத்துக் குரிய நூலறிவால் பெருகிவரும் காரணத்தால் பொதுவாக மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் அறிவு தார்க்கீகத்துக்கு உட்பட்டதேயாகும். அறிவினால் எதிர்பார்க்கும் பயன் இன்ப வாழ்வு பெறுவதாகும். உண்மையும், மெய்மையும் உடைய இவ்வறிவால் இன்பவாழ்வு பெறுதல் நிச்சயம். பொய்மை மடமைகளையும் உடையதான தார்க்கீக ஞானத்தால் இன்ப வாழ்வு கிட்டுதல் நிச்சயமாகுமா? தார்க்கீகமாவது இது சரியா? சரி அன்றா? சரி என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! பிழை என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! வினைப்பயன் எதுவாயிருக்கலாம்! தீமையோ! நன்மையோ! என ஒருவன் தனக்குள் தர்க்கம் புரிவதாகும். தார்க்கீக ஞானமானது செயலில் இரங்கத் தீவிரப்படுத்தாது. ஒன்றைப் பற்றி நிச்சயிப்பதற்கும், தயங்குவதற்கும் காரணத்தைத் தானே கண்டுபிடித்திருக்கும் நூலறிவு தார்க்கீகத்துக்குரியதே. அநுபவஞானம் என்பதொன்று உண்டு. அது உணர்வு, உணர்ச்சி எனவும் சொல்லப்படும். உணர்வு என்பதைச் சிறப்பித்து உணர்வு எனும் பெரும் பதம் என்றார் ஆழ்வாரும். தார்க்கீக அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் தார்க்கீக ஞானமானது செயலில் வருவது துர்லபம். ஒன்றை அறிந்ததற்கு அறிந்தபடி செயல் செய்வதற்கும் இடையில் தாமதமேயின்றி அறிவும் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வது உணர்வு. நெப்போலியன், நூலறிவால், தார்க்கீக ஞானத்தால் காரியம் செய்யவில்லை எனவும், அவனது வெற்றி அனைத்தும் உணர்வின் பயனே எனவும் சொல்வர் பாரதியார். நமது நாட்டில் விவாதத்துக்குரிய நூலறிவும், கேள்வியறிவும் மிகுதியாகும். இதனால்தான் நம்மவர் செயலற்றுக் கிடக்கின்றனர். பட்டறிந்ததின் பயனாகவாயினும் உணர்ச்சி பெறவில்லை. உணர்ச்சி தேவை! உணர்ச்சி பிழைபடுவதில்லை. அது உண்மை மெய்ம்மைகளை ஆதாரமாகக் கொண்டது அறிவும் செயலும் அன்றோ! அந்தோ! உணர்வு பெறாதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள், நூலறிஞர்கள். கடவுட் பைத்தியம், மதப் பூசல், சாதியிறுமாப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பட்டதொல்லை பல பெரும் பாரதம்! இவைகளைத் தொலைக்க வேண்டும் என்பதை உணராதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள்! அந்தோ இவ்விஷயத்தில் இவர்கள் உணர்வு கொள்ளாதிருத்தலேயன்றி ஏழு ஆண்டுகளாகக் குடியரசு செய்து போந்த கிளர்ச்சியின் பயனாக உணர்ச்சி ஏறிவரும் பெருமக்களை, சுயமரியாதைக்காரரை - அறிவியக்கத்தினரைப் பார்த்து, இவர்கள் நூலறிவற்றவர் என்றும், ஆராய்ச்சியற்றவர் என்றும் சொல்லி உணர்ச்சிக்குத் தடை போடவும் முயல்கின்றனர். இவ்வறிஞர் செயல், தார்க்கீகப் பெரியார் செயல் இரங்கற்குரியதாகும். ஓ புராண அறிஞர்களே! இதிகாச அறிஞர்களே! கடவு ளறிஞர்களே! மத அறிஞர்களே! சாதி அறிஞர்களே! மூடப்பழக்க வழக்க அறிஞர்களே! நூலறிஞர்களே! தார்க்கீக அறிஞர்களே! கண்ணைத் திறந்து பாருங்கள்! உணர்வு என்னும் பெரும்பதம் நோக்கி மக்கள் அபரிமிதமாக ஓடுகின்றனர். நீங்கள் இருந்த இடத்தினின்று அசையாமலிருக்கின்றீர்களே! உங்கள் நிலை என்னாகும்? நான் கல்வி, நூலறிவு வேண்டியதில்லை என்கின்றேனா? இல்லையில்லை. உண்மை, மெய்மைகளை ஆதாரமாக உடைய பகுத்தறிவு, நுண்ணறிவு, உணர்வு, நுண்ணுணர்வுகளையுடையார் ஆக்கிய நூல்களைக் கொள்ளுமாறு கூறுகிறேன். தார்க்கீகத்தை வளர்க்கும் நூற்களைத் தள்ளுமாறு கூறுகிறேன். நல்வாழ்வுக்கு, சுதந்திர வாழ்வுக்கு - சமத்துவமான வாழ்வுக்கு, சகோதரத்துவ வாழ்வுக்குரிய வகையில் உணர்வு கொள்ள வேண்டுமென்பதே எனது கோரிக்கை. 5. தமிழும் இசையும் கவிதையில் தெய்வத் தன்மையிருக்கிறதென்கிறார்கள். அது வேண்டாம்; மனிதத் தன்மையிருந்தால் போதும். தெய்வத் தன்மை என்று சொல்லிக் குட்டிச் சுவராகப் போய்விட்டோம். சிவபெருமான் அகதியருக்குத் தமிழைச் சொன்னார். எதுபோல்? பாணினிக்கு வட மொழியைச் சொன்னதுபோல், எடுக்கும்போதே கலகம் மூட்டி விட்டார்கள். தமிழன் ஆதியைப் பற்றி புராணங்கள் சொல்கின்றன. தமிழ் உண்மையிலேயே உயர் நிலையிலிருந்தது. கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெளிந்தாய்ந்த பசுந்தமிழ் என்றதனால் சிவபெருமான்கூடச் சங்கத்தில் ஒரு மெம்பராக இருந்து தமிழை ஆய்ந்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து சிவபெருமானுக்கு முன்னாலேயே தமிழும் தமிழரும் இருந்தார்கள் என்று சொல்ல வேண்டும். தமிழர்கள் பல நூற்றாண்டுக ளாகத் தூங்கிக் கொண்டிருந்து விட்டார்கள். உயர்ந்த இடம் கோவில் என்று மதிக்கப்படுகிறது. ஆனால் அங்கு தமிழுக்கு என்ன இடம் கிடைக்கிறது? மானங்கெட்டுப் போய்த் தான் இருக்கிறோம். தமிழுக்கு ஏற்ற இடம், அந்தது கொடுக்கப்பட வில்லை பழங்கதைகள் பேசுவதால் பயனில்லை. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் அச்சம் - காரணமில்லாத அச்சம் காணப்படுகிறது. அதற்கு மடமைதான் காரணம். பாரதியார் எடுத்த எடுப்பிலேயே அச்சந் தவிர் என்றார். தமிழ் இசையைப் பற்றிச் சொன்னார்கள். தமிழ் இசையைக் கெடுத்தவை ஹார்மோனியமும், தியாகராஜய்யர் கீர்த்தனமும் என்று பாரதியார் சொன்னார். தியாகராஜர் ஒரு இசைப்புலவர் அல்ல; மொழிப் புலவரல்ல. நல்ல கவிதைக்கு மொழிப் புலமையும் வேண்டும்; வெறும் இசைப் புலமை மட்டும் போதாது. தியாகராஜர் ஏன் மொழிப் புலவரல்ல என்று சொன்னார்? அவரது பாடல்களில் பல பிழைகள் இருக்கின்றன வென்று தெலுங்கர்களே சொல்லுகிறார்கள். அவர் பாடியிருப்பது ஒரு நாடோடி பாஷை. தெலுங்கு அல்லாத, தமிழ் அல்லாத ஒரு பாஷை. நானும் தமிழன்தான். ஆனா தெலுங்குப் பாட்டு வேண்டாமென்று சொல்லக்கூடாது. ஒரு சில பாட்டுக்களைத் தமிழில் பாடினால் போதும் என்று சொல்கிறவர்கள் பத்து வருஷத்துக்கு முன் தமிழ்ப் பாட்டு சிலவற்றையாவது இடையிடையே பாடி வைக்கக் கூடாதா? சில்லரையென்று சொல்லி ஏன் இழிவு படுத்தினார்கள்? எதற்கும் அடிமைத்தனம் மாறவேண்டும். பக்தியென்ற முட்டாள் தனத்தினால் தான் அடிமைத்தனம் உண்டாகின்றது என்று அறிஞர்கள் சொல்லு கிறார்கள். உயர்ந்த கவிதைகள். கலைகள் என்றால் அவை பகுத்தறி வுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும்; உயர்ந்த எண்ணங்களையும் நோக்கங்களையும் பரப்புபவையாக இருக்க வேண்டும். குறுகிய நோக்கம், கொள்கை, லட்சியம் இவற்றைப் புகட்டும் கவிதைகளை உயர்ந்தவையென்று சொல்வதற்கில்லை. அவற்றைப் படிப்பதால், போற்றுவதால், ஒரு சமூகம் முன்னேற முடியாது. 6. தமிழும் பாரதியும் பாரதியார் என்றால் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியாரைத்தான் குறிக்கும். பாரதி என்றால் நமக்கு அவருடைய நினைவுதான் வருகிறது. அல்லது பாரதி யார் என்று கேட்டாலும் விடை தெரியு மாறு ஆராய்வோம். பசி ஏற்பட்டபோது உணவு கிடைத்தது என்று சொல்லும் படியாக தமிழ்நாட்டில் தமிழ் நிலை குன்றியிருக்குங்கால் அறிஞர்கள் எதிர் பார்த்தபடி பாரதியார் தமிழர்களிடையே தோன்றினார். தமிழின் ஆதிகால இடைக்கால நிலைகள் வெவ்வேறாயிருந்தன. கடைக் கால நிலையும் மாறுபட்டே இருந்தது. ஆனால் கடைக்காலத்தில் தமிழுலகம் பாரதி தேவை தேவை என்று கதறிற்று. விடை யுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொழிக் கிரைத்தாங்கியன் மலயமா முனிக்குத் திடிமுறுத்தியும் மொழிக்கெதிராக்கிய தென் சொல் மடமகட் கரங்கென்பது வழுதி நாடன்றோ இது திருவிளையாடற் புராணத்தில் காணப்படுவது. சிவபெருமானே தோன்றி, தமிழைச் சொன்னதாயிருந்தால் அதைப்பற்றி நமக்கென்ன கவலை? ஆபத்து வந்தால் அந்தச் சிவ பெருமானே வந்து கவனித்துக் கொள்வார் என்று தமிழர்கள் நம்பினார்கள். தமிழ் அமானுஷ்யமான காரியங்களையெல்லாம் செய்யவல்லது. சர்வசக்தியுடையது. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யவல்லது. பரத்துவம் அளிக்கவல்லது என்றெல்லாம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ஓ! அப்படியா? jÄœ ï›tsbtšyh« brŒíkh?நிரம்ப ஆனந்தமாயிற்றே? ஆனால் ஒன்றையும் செய்ததாகக் காணோம்! கண்ணுதற் பெருங் கடவுளுங் கழக மோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப் பசுந் தமிழேனை மண்ணிடைச் சில விலக்கண வரம்பிலா மொழி போ லெண்ணிடைப் படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ. கடவுளே கழகத்தில் வந்திருந்து சீர்திருத்தி விட்டுப் போனதாகப் பாடப் பட்டிருக்கிறது. தமிழ் இனிமையானது என்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை. தமிழுக்குச் சொல்லப்படும் உயர்வைத்தாம் நாம் ஆட்சேபிக் கிறோம். மனிதன் செயலற்றுப்போகும்படி தமிழின் உயர்வு கற்பித்து எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. பாஷையே முத்தொழிலை யும் செய்யவல்ல சக்தியுடைய தென்றால், அந்தப் பாஷையை நாம் சீர்திருத்த முயலு வானேன் என்று தமிழன் நினைத்தான். ஒரு கதை சொல்லுகிறேன். ஒரு அரசன் வீட்டில் பலர் திருடினர். திருடின சொத்துக்களை அலமாரி யிலும் பூமிக்கடியிலும் வைத்திருந்தனர். கோயில் பூசாரி சுவாமியின் கழுத்தைத் திருகி அதன் தொந்திக்குள் திருட்டுச் சொத்தைப் போட்டு விட்டார். அரசனது ஆட்கள் மற்ற இடங்களிலிருந்த சொத்துக்களைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் சுவாமியின் வயிற்றுக் குள்ளிருந் ததைப் பார்க்கவில்லை. அய்யர் திருடி கடவுளின் வயிற்றில் வைத்து வைப்பாரென்று மக்கள் நினைப்பார்களா? இல்லை, கடவுள் பெயரால் அமைக்கப்பட்ட சிலையில் திருட்டுச் சொத்து வைக்கப் பட்டிருக்கும் என்று காவலாளிகள் நினைக்கவில்லை. அப்படி நினைப்பது - சிலையை எடுத்துப் பார்க்க எண்ணுவது பக்தியாளர் களுக்கு விரோத மானதெனக் கருதி விட்டனர். இதனாலேயே பார்க்க முடியாமற் போய் விட்டது. எவ்வளவு மரியாதை செய்யலாமோ அதற்குமேல் லட்சம் மடங்கு சொல்வது ஆபத்தில்தான் முடிகிறது. அக்காலத்தில் கையாளப்பட்ட பொருள்கள், வாழ்க்கை இவைகளை அனுசரித்து இலக்கணம் செய்யப்பட்டது. ஆயிர மாயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் முன்னிருந்தது போலவே இருக்க வேண்டு மென்று சொல்வது சரியா? காலதேச வர்த்த மானத்துக்கேற்ப இலக்கண மும் இலக்கியமும் மாற்றியமைக்கத் தான் வேண்டும். இல்லா விட்டால் அழிந்துபோகும். தெய்வத்தன்மை பொருந்திய தமிழ்தானே சீர் திருத்திக் கொள்கிறதா? இல்லை, சீர்திருத்த வேண்டுமென்றால் கோபம் வருகிறது. முன்னிருந்தோர் மதங்களைப் பற்றியே பாடிப்பாடி உயர்ந்த பக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள். மற்றவைகளைப் பற்றி அவர்கள் பாடக்கூட நினைத்ததில்லை. முதல் நூல், வழிநூல், சார்புநூல், இந்த மூன்றையும் தவிர வேறு வகையில் ஏதாவது செய்தால், அந்தக் காலத்தில் ராஜாக்களிடமிருந்து கவிப்பெரு மக்கள் காதையோ மூக்கையோ அறுத்து விட உத்தர விட்டு விடுவார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றிப் பாடாத வேறு நூல்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கடவுளையே பாடவேண்டிய கஷ்டத்திலிருந்து விடுபட விரும்பிய சிலர் கடவுளை நாயகனாக வைத்துக் கவியியற்ற ஆரம்பித்தார்கள். கடவுளைப் பற்றிப் பாடினால் தான் நல்லவன்! இல்லாவிட்டால் கவிஞன் அல்ல, இப்படியிருந்தால் பாஷை எப்படி விருத்தியாகும்? வெற்றி கிடைத்தால் கடவுளினால், தோற்றுப்போனால் அது விதி. 30 வருடத்துக்கு முன் ஒருவர் ஒரு நாவல் எழுதினார். இது வழி நூலா, சார்பு நூலா என்றெல்லாம் கேட்கத் தலைபட்டுவிட்டார்கள். சுதந்திரமாக நினைத்ததை எழுத தைரியமில்லாதிருந்தது அக் காலத்தில், இந்த நிலையில், அயர்லாண்டு தன் பாஷையை அபி விருத்தி செய்து சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர் ஆண்டுதோறும் இலக்கணத்தை மாற்றியமைக் கின்றனர். இதனால் இலக்கியம் வளருகிறது என்ற செய்தியைக் கேட்கிறோம். இங்கிலீஷ் புத்தக சாலை யில் ஒரு புத்தகத்தை எடுத்துப்பார்த்தால் சோப்பு செய்யும் வகை காணப்படுகிறது; தமிழ் புத்தக சாலையில் ஒன்றை எடுத்தால் அங்கிங் கெனாதபடி என்றுதான் ஆரம்பிக்கும். முந்தி இருந்தது பழைய பதிப்பு. இப்பொழுதிருப்பது புதிய பாக்கெட் சை பதிப்பு. இவ்வளவுதான் வித்தியாசம்! உலகத்தில் வேறு கருத்துக்கள் இல்லையா? கவி காண்கிற பொருள்களிலெல்லாம் கவனம் செலுத்துவான். தான் இன்பத்தை நுகர்வான், பாடுவான், பிறர் படிப்பர், அவர்களுக்குப் புரியும், இன்பத்தை அனுபவிப்பர், இப்படிச் செய்ய வல்லவன் கவி. இந்தச் சமயத்தில் யாருக்கும் பயப்படாத சுதந்திரம் என்றால் என்ன என்பதை எளிய நடையில் சொல்லித்தர ஆள் தேவை. பிறந்தார் பாரதியார்! அவருக்கு எதிர்ப்பு இருந்ததா! அவர் அனுபவித்தது போன்று வேறு யாரும் அவ்வளவு சிரமங்களை அனுபவித்ததில்லை. சூரியனைத் தினம் பார்க்கின்றான். கும்பிடுகிறான். சூரியனைப் பார்த்தானா அவன்? இல்லை; அவனுக்குக் கண் இல்லை; கவி பார்க்கிறான்; அதே சூரியனை! இன்பத்தை - அழகை அனுபவிக் கிறான். எடுத்துச் சொல்லுகிறான். பிறகு அனைவரும் பார்க்கின்றனர். முன் பார்த்த அதே சூரியனை இப்பொழுது பார்த்துமுன் காணாத இன்பத்தை இப்பொழுது காண்கின்றனர். குமரியை எல்லோரும்தான் பார்க்கிறார்கள். குமரியைப்பற்றிக் கேட்டால் அது முக்கோணமாக அமைந்திருக்கிறதெனச் சொல்வார்கள். ஆனால் கவி என்ன சொல்கிறார். நீலத்திரைக் கடலோரத்திலே - நின்று நித்தந் தவஞ்செய் குமரி யெல்லை அங்கே ஒரு குமரியிருந்து தவம் செய்கிறாளாம். இது கவிஞனின் உள்ளம், பாரதியார் புதுவைக்கு வருமுன்தேசிய கீதமும் நாட்டு வாழ்த்தும் பாடினார். தேசீயப் பாட்டு என்றால் எப்படியிருக்க வேண்டும்? நான் வாழும் தேசம் என்னுடையது. நான் ஒருவனே இருந்தாலும் அந்தத் தேசம் என்னுடையதுதான். என் வகுப்பார் உயர்ந்தவர்கள். இப்படிப் பட்ட கருத்துக்களை நிரப்பியிருப்பது தேசீயக் கவி ஆனால் நமது அன்பர்கள் பலர் தினமும் தேசீய கீதம் எழுதுகிறார்கள்! பாரதியார் தேசீய கீதம் ஒன்றை எழுதி என்னிடம் காண்பித்து, பிரஞ்சுக் கவி எவ்வளவு வீரமாக எழுதியுள்ளான்; எனக்கு அவ்வளவு வருமா என்று சொன்னார். தாம் எழுதியது கூட அவ்வளவு, உயர்ந்ததல்ல என்று நினைத்தார். தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவ ளென்றுணராத இயல்பின ளாமெங்கள் தாய் முப்பது கோடி முகமுடை யாளுயிர் மொய்ம்புற வொன்றுடையாள் முப்பது கோடி மக்களையுடையது எங்கள் நாடு. ஆனால் உயிர் ஒன்றுதான். இன்னும் உங்கள் நாட்டில் பதினெட்டு பாஷைகள் இருக்கின்றனவே, நீங்கள் எப்படி முன்னேறப் போகிறீர்கள்? என்று யாராவது கேட்டால் என்ன சொல்வது? பாடுகிறார் : செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை யொன்றுடையாள். எங்களிடம் ஒற்றுமையில்லையென்று என்னை ஏமாற்றாதே. சிந்தனை ஒன்றுதான் என்று கூறுகிறார். ஜாதி-இது முன்னிருந்ததில்லை, பின்னுமிருக்க வேண்டாம் என்றார் பாரதியார். இதற்கு முன் கபிலர் சொன்னார், அவருக்குப் பெரிய ஆசாமிகள்கூடச் சொன்னார்கள். அவைகளெல்லாம் மூலை யில் கிடக்கின்றன. ஆனால் பாரதியாருடையதை அப்படித் தூக்கி மூலையில் எறிந்துவிட முடியுமா? மற்றவர்கள் முன்னேறுவதைக் கண்ட தமிழனுக்குப் பசி ஏற்பட்டிருக்கிறதே, இருதயத்தைக் குலுக்கிச் சுடச் சுடக் கொடுத்தால் மூலையில் போடவருமா? பாரதியின் கீர்த்தியைத் தொலைத்தார்கள். அவருக்குப் பணம் வராமல் தடுத்தார்கள்; பெரியவர்களென் போரெல்லாம் எதிர்த்தார்கள். ... ... ... ... ... ... ... ... ... வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே, என்று பாடியதில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்! ஆனால் அதற்கு முன்னாலே இன்னொன்றைச் சேர்த்ததில்தான் கசப்பு! பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரை யென்ற காலமும் போச்சே. பாரதியார் மகள் சிறு குழந்தை அக்காலத்தில், அந்தப் பெண் இப்பொழுது பாரதியாருடைய சரித்திரத்தை எழுதுகிறது. அந்தப் பெண்ணுக்குப் பாரதியாரைப் பற்றி என்ன தெரியும்? அவர் புதுவையி லிருந்து மைலத்திற்குப் போனதாக எழுதுகிறாள். அந்தப் பெண், அவ்வளவும் அபத்தம், பக்கத்தை நிரப்ப அதையும் பத்திரிகாசிரியர் வெளியிடுவதா? கவிஞனைப் பற்றி உண்மையை எழுதவேண்டும். பொய்யை எழுதிப் பொய்யென்று கண்டுபிடிக்கப்பட்டால் மற்றவையும் பொய்யென்று கருதப்பட்டுவிடும். பாரதியார் புதுவையிலிருந்து, சுதேசமித்திரனுக்கு ஒருநாள் வியாசமும், மறுநாள் பாட்டுமாக எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு சில சமயம் ஆனந்த மேலீட்டால் இரண்டு நாளும் பாட்டுக்களே எழுதி யனுப்பிவிட்டார். அதற்குப் பத்திரிகாசிரியரிட மிருந்து பதில் வந்தது. சமாசாரப் பத்திரிகையில் கவிக்கு இடமில்லையென்று. பிறகு வியாச மேயெழுதத் தொடங்கினர். பாட்டைப் பாட்டு என்று உணரவில்லையே என்று பாரதியார் வருந்தினார். அப்பொழுது சென்னையில் வி.வி.எ. ஐயர் ஆங்கிலக் கவிகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு அவ்வளவு அழகாக எழுதக் கூடிய கவி தற்காலம் தமிழுலகில் இல்லை என்று அபிப்பிராயம் எழுதினார். இதைப் பார்த்த பாரதியார் மிகவும் வருத்தப்பட்டார். நம்மைத் தாங்கி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று ஏங்கினார். அப்பொழுது சென்னையிலிருந்து ஒரு வெள்ளைக்காரன் பாரதிக்குக் கடிதம் எழுதியிருந்தான். நான் யார் தெரியுமா? தாகூரின் கவிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவருக்கு உலகத்தில் கீர்த்தியை வாங்கிக் கொடுத்தானே அவனிடமிருந் தவன் நான். நீர் சிறந்த தமிழ்க் கவி என்று கேள்விப்பட்டேன். உம்முடைய கவிகளை நமக்கு எழுதியனுப்பவும் என்று எழுதியிருந்தான். பாரதியார் எழுதினார். வேண்டுமடி யெப்போதும் விடுதலை - அம்மா! தூண்டு மின்பவாடை வீசுதுய்ய தென்கடல் சூழநின்ற தீவிலங்கு சோதி வானவர் ஈண்டு நமது தோழராகி எம்மோ டமுதமுண்டுகுலவ நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ இரண்டு நிமிடத்தில் எழுதினார். இரண்டு தினங்களில் இங்கிலீஷ் கவி வந்தது. பாரதியார் பாடினார். ஆஹா! அதே உருவத்தில் அமைத்து விட்டானே கவியை என்று பாராட்டினார். அந்தக் கவி இங்கிலீஷ் பத்திரிகைகளில் வெளிவந்தது. பெரியவர்கள் ரசித்தனர். அப்பொழுது சுதேசமித்திரன் ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நீங்கள் அடிக்கடி கவி எழுதுங்கள் என்று. தமிழ் நாட்டின் நிலை அப்படி யிருந்தது. தமிழ்ச்சுவையை இங்கிலீஷால் அறியமுடியுமா? தமிழ்ப் பாட்டின் இனிமை தமிழனுக்குத் தெரிய வில்லை. இங்கிலீஷ்காரன் தமிழ்ப்பாட்டு நன்றாயிருக்கிறது என்று சொன்ன பிறகுதான் தமிழனுக்குத் தெரிகிறது. நமக்குப் பிடித்ததை மட்டும்தான் கவி எழுத வேண்டுமென்று விரும்புவது தவறு. யாருடைய விருப்பத்துக்காகவும் கவி பாட முடியாது. கவிஞன் இஷ்டம்போல் பாடவேண்டும். கவிஞன் எல்லாருக்கும் பொதுவாயிருக்க வேண்டும்; எதிலும் சேரக் கூடாது என்றெல்லாம் சொல்வது தவறு. எதைப்பற்றியும் கவி பாடலாம். எல்லாருக்கும் இன்பத்தை ஊட்டலாம். எளிதாகச் சொல்லலாம். உயர்ந்த கருத்துக்களைத் தெளிவாக்கலாம் என்பவைகளை நிரூபித்துக் காட்டியவர் பாரதியார். பாரதி ஜாதியை ஒழிக்கிறான், அனுஷ்டானமற்றவன், ஆசார மற்றவன் என்றெல்லாம் அப்போது தூஷித்தார்கள். அவருடைய மனைவியிடம் எல்லாப் பெண்களும் நகை போட்டிருக்கிறார் களே, உனக்கில்லையே, உன் புருஷனைக் கேள் என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள். இம்சை பொறுக்கமாட்டாமல் தாமே தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பது இந்த மடையர்களின் முடிவு. காரைக்குடி யில் அன்பர்கள் பாரதியார் திட்டத் திட்ட அதைப் பொறுத்துக் கொண்டு உபசாரம் செய்து அவருக்கு வேண்டியதையெல்லாம் அளித்தார்களென்றால் அதை மறுக்க முடியுமா! மூன்று லட்ச ரூபாய் களைக் கொடுத்து, அழகான வீட்டில் உட்காரவைத்து, ஐந்து ஆட்களை அமர்த்தி, நூலாக எழுதித்தள்ளு என்றல்லவா, சொல்லியிருக்க வேண்டும் பாரதியிடம், இல்லை, அவர் தெருத் தெருவாக அலைந்தார். எனக்குத் தெரியும். விரிந்த உள்ளமில்லாமல் அவருடைய குலத் தினரே அவரைத் தூஷித்தார் கள். செத்துப்போன பின்னர் பாரதி நாமம் வாழ்க என்றார்கள். காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தார். அதை எதிர்த்து எழுதியது சுதேசமித்திரன் பத்திரிகை. விற்பனையாக வில்லை. பிறகு பாரதியைக் கூப்பிட்டார்கள். அவர் காந்திஜிக்கு விரோதமாக எழுத மாட்டேனென்று சொல்லிவிட்டார். உங்களிஷ்டம்; எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள் என்றார்கள். இதற்கென்ன அர்த்தம்? பாரதிக்கு எல்லா மதமும் ஒன்று. கூடுமானால் மதமே இல்லை யென்றாலும் பரவாயில்லை. ஜாதி இல்லையென்பது அவருடைய அகராதியில் தீர்ந்த விஷயம். மூடநம்பிக்கைகளை ஒழித்தவர் பாரதியார். இந்த தேசம் உருப்பட வேண்டும். தமிழர்கள் சுதந்திரத்துக்கு லாயக்கானவர்களாக ஆக்கப்படவேண்டும்; தமிழினால்தான் தமிழர்கள் வீரர்களாக முடியும். தமிழ் வளர்ந்தால் தமிழன் உயர்வான் இதுதான் அவரது மதம். அவர் முகமது, கிறிது, முத்துமாரி, சக்தி எல்லாவற்றையும் பற்றிப் பாடியிருக்கிறார். தமிழில் இனிமையாக எதைப் பற்றியும் பாட முடியுமென்பது அவர் கருத்து. பாரதி முத்து மாரியம்மனைப் பற்றி பாடியிருக்கிறாரோ என்று ஒருவர் கேட்டால் தாராளமாக அவருக்கு அதை எடுத்துக் காட்டலாம். பாரதியார் பாட்டு யாருக்கு விளங்காது? இறையனார் அகப் பொருளைத்தான் பாடினார். ஆனால் இறையனார் அகப் பொருளை எடுத்துப் பார்த்தால் ஒன்றுமே விளங்காது. வித்வான்க ளெல்லாம் உயர்ந்த பதமில்லையே! இதற்கு வசனமாக எழுதி விடலாமே என்பார்கள். எளிய நடையில் எழுதத்தானே முடியாது. பத்தியினாலே - இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடி! கவி நேரேபோய் நேரே வரவேண்டும். அதை விட்டு ப-க்-தி-யி-னா-லே என்று இழுத்துத் தாளங்களை எண்ணிப் போட்டுப் பாடவேண்டிய தில்லை. இப்படிப் பாடினால் அர்த்தம் விளங்காது. காதலையும் கலையையும் பரிகசிக்கக் கூடாது. அவைகளை வளர்க்க வேண்டும். பத்திரிகாசிரியர்கள் தாய் தந்தைக் கொப்பானவர்கள். விமரிசனம் என்ற தலைப்பில் துளிர்விட்டு விளையும் பயிர்களைக் கிள்ளியெறிந்து விடக்கூடாது. அவர்கள் இவைகளை வளர்க்க முற்படவேண்டும். - அன்பு ஆறுமுகம் (தொ.ஆ.) மு.ப. திருச்சி, 1947 7. கலை என்றால் என்ன? தமிழுக்கு முன்னேற்றம் வேண்டுமா? என்பது சில புலவர்களின் சந்தேகம். ஏன்? சிவபெருமான் வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கேற்ப தென்மொழியை அகத்தியருக்கு அருளினார் என்று, சிவபிரானே தமிழை உண்டாக்கினதாகப் பாடியிருக்கிறது. இந்தச் சிவபெருமான் அந்தக் காலத்தில் தமிழை உண்டாக்கியபோதே இந்த வடமொழி, தென்மொழி கலகத்தையும் உண்டாக்கிவிட்டார். தமிழை உண்டாக்கிய சிவபெருமான் மறுபடியும் சங்கமமர்ந்து பண்ணுறத் தெரிந்த பசுந்தமிழ் என்று, தமிழை மறுபடியும் கற்றுக் கொண்டாராம். உண்டாக்கிய சிவபெருமானே தமிழை மறந்துவிட்டு மறுபடியும் சங்கத்தில் உட்கார்ந்து தமிழ் படித்துக் கொண்டாராம். ஒருவேளை தாம் உண்டாக்கிய தமிழைத் தாமே மறந்து விட்டாரோ என்னவோ! இல்லை; ஒருவேளை, தமிழ் தாழ்ந்து போச்சு என்று நினைச்சு மறுபடியும் தாமே படிக்க ஆரம்பித்தாரோ என்னவோ! எது எப்படியோ? சிவபெருமான் உண்டாக்கிய தமிழ். அதற்கு மனிதர்க ளாகிய நாம் முன்னேற்றம் எப்படிச் செய்ய முடியும்? தமிழே சிவம் என்று இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டும் சொல்லிக்கொண்டும் நம் நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் பலர் இருக்கின்றார்கள். தமிழ் நூல்களை எடுத்துப் படிக்கலாமென்றால் தென்னாடுடைய சிவனே போற்றி - எந்நாட்டுக்கும் இறைவா போற்றி என்று இந்தச் சங்கதியில்லாமல் வேறொன்றையும் காணோமே. ஒரு கிறிதவரோ, ஒரு முலீமோ அல்லது வேறு எந்த மதத்தவரோ தமிழ்நூல் நிலையத்தில் நுழைந்து ஒரு தமிழ் நூலை எடுத்துப் படிக்கலாம் என்று விரித்தால் முதல் முதல் உள்பக்கத்தில் மேலே ஒரு குறி; அதற்குக் கீழே பிள்ளையார் பாட்டு. அதற்குக் கீழே சிவன் பாட்டு. இப்படி ஒரு 5 அல்லது 6 பாட்டுக்கள். பிறகு எழுதினவர் பெயர், இப்படியிருப்பதைப் பார்த்தால், ஓ, இது என்னவோ பிள்ளையாரைப் பற்றியும் சிவனைப் பற்றியும் எழுதியிருக்கிறது போலும் என்று மூடி வைத்துவிடுவான். மேனாட்டில் ஒரு வெள்ளையன் உட்கார்ந்து கொண்டிருக்கையில் ஒரு பழம் விழுந்தது. அதைப் பார்த்தான். அது ஏன் கீழே விழுந்தது என்று ஆராய்ந்தான். புத்தகங்கள் எழுதினான். அவை மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. சப்தம் எப்படி உண்டாகிறது? ஒன்றை ஒன்று மோதினால் சப்தம் உண்டாகிறது. இந்த ஆராய்ச்சியில் விளக்கின் ஒளி சுவரில் மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. ஆனால் உனக்குக் கேட்பதில்லை. பலவற்றை இவ்வாறாகக் கண்டுபிடித்தான். புத்தகங்கள் எழுதினான். மக்கள் படித்து வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நம் தமிழ்ப் புத்தகங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டிற்கும் இறைவா போற்றி என்பதைவிட வாழ்க்கைக்கும், அறிவிற்கும் பயன்படக் கூடியதாக ஒன்றும் காணோமே. தமிழ்ப் புலவர்களெல்லாம் எழுதட்டுமே. ஒரு வாலிபன். அவனுக்கு ஒரு இளம்பெண் - பெண்டாட்டி. அவர்களுக்கு ஒரே குழந்தை. ஒரு பண்டாரம் வந்து குழந்தையை அறுத்துச் சமைத்துப்போடு என்று கேட்டானாம். இருவரும் குழந்தையை வெட்டிக் கறி சமைத்துப் போட்டார்களாம். இப்போது யாராவது வந்துகேட்டால் அப்படிப் போடுவார்களா? அல்லது கேட்டவன்தான் தப்பித்துக்கொண்டு போய்விடுவானா? மற்றொருவ னிடம் பண்டாரம் போய் அவனுடைய பெண்டாட்டி வேண்டுமென்று கேட்டானாம். உடனே பெண்டாட்டியைக் கொடுத்தானாம். ஒருவனுக்கு இரண்டு பெண்டாட்டிகள். ஒரு பண்டாரம் வந்து, எனக்குப் பொம்பளை வேண்டும் என்று கேட்டான். அவன் ஊரெல்லாம் தேடியும் பொம்பளை கிடைக்கவில்லை. கடைசியில் வருத்தத்துடன் தன் பக்கத்தில் நிற்கும் இரண்டு பெண்டாட்டிகளைப் பார்த்தான். அவர்கள் நீங்கள் ஏன் வருத்தமாயிருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அடியார் ஒரு பெண் கேட்கிறார். எங்கேயும் கிடைக்கவில்லை. ஆகையால் தான் வருத்தமாயிருக்கிறது என்றார். ஒருத்தி சும்மா யிருந்தாள். மற்றொருத்தி, தங்கள் சித்தம்; நான் தயார். பண்டாரத்துடன் படுத்துக் கொள்ளுகிறேன் என்றாள். உடனே அந்தப் புருஷனுக்குச் சந்தோஷ முண்டாகி அவளைப் பார்த்து நீதான் பதிவிரதை என்று அவள் காலில் விழுந்தானாம். இம்மாதிரியான கேவலமான ஒழுக்கங்களைத் தான் வாழ்க்கையில் கற்றுக்கொடுக்கக் கூடிய புத்தகங்களிலிருக் கின்றன. இராமாயணம் ஆரியக்கதை. தமிழனை அரக்கனென்றும், குரங்குகளென்றும் கரடிகளென்றும் கூறும் கதை. ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்ட புலவர், ஆரியக் கதையாகிய இராமா யணத்தை எரிக்க வேண்டும் என்றால் எதிர்ப்பானேன்? எரிப்பது கொடுஞ் செயல்; இஃது அவ்வளவு நன்றாயில்லை என்றால், குளிர்ந்த நீரில் கரைத்துவிட்டால் போகிறது. இப்போது இராமாயணத்தை எரிக்கக் கூடாது என்று எதிர்க்கும் புலவர்கள், அக்காலத்தில் தோழர் பூர்ணலிங்கம் பிள்ளை இராவணப் பெரியார் என்ற புத்தகத்தை எழுதினபோது ஏன் இம்மாதிரியான எதிர்ப்புகள் செய்யவில்லை? மறைமலையடிகள் இராமாயணத்தைக் குறைகூறி எழுதினதற்கு ஏன் அப்போது எதிர்க்கவில்லை? சுயமரியாதைக்காரர் சொன்னால் அது தவறு அதை எதிர்க்கவேண்டுமா? பெரியாரும் தோழர் அண்ணாத் துரையும் இராமாயணம் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்களாம் இப்புலவர்கள். ஆகையினால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று இந்தப் புலவர்கள் கூறுகிறார்கள். பெரியார்களெல்லாம் அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள். தமக்கு அதிகம் தெரிந்ததாகக் கூறிக் கொள்ள மாட்டார்கள். பெரியாருக்குக் கம்பராமாயணம் தெரியாது என்று சொன்ன பாரதியாருக்கு வால்மீகி இராமாயணம் தெரியுமா என்று கேட்கிறேன். கலை போய்விடும் என்று கதறுகிறீர்கள். கலையென்றால் என்ன வென்றே உங்களுக்குத் தெரியவில்லை. தமிழ்க் கலை உயர்ந்ததாக இருக்க வேண்டுமானால் கலைக்குக் காரணமான எண்ணங்களும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். இவ் விரண்டையும் பிரிக்க முடியாதே. இழிவான கதை, கலையானால் அக்கலை எப்படி உயர்ந்ததாகும்? கலை என்பது புலவன் உள்ளத்திலே தோன்றி மலரும் எழுச்சி (Originality) அதைக் கற்பதுதான் கல்வி. கலை என்பது மூலம், உள்ள உணர்ச்சியை ஊட்டுவதுதான் கலை. இழிவான ஒழுக்கத்தைக் காட்டிடும் கதையுடைய கலையும் இழிவானதே. அதை ஒழிக்கத்தான் வேண்டும். இக்காலத்தில் ஐந்தாம் படை வேலை செய்பவர்களைக் கண்டிக்கிறோமே, ஏன்? அந்த ஐந்தாம் படை வேலைசெய்து தன் அண்ணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமா? இது தவிர, நிறையப் பொய்கள். இராமன் பாணம் ஒன்று, இரண்டு, ஆயிரம், லட்சமாய் விட்டதாம். அவன் அம்பறாத் துணியில் இத்தனை அம்புகளும் எப்படி வைத்திருந்தான்? அஃது எவ்வளவு பெரியது? இந்த மாதிரியான பொய்களையே புலவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்தக் கேவலம் எங்கேனும் உண்டா? பெரியபுராணத்தில் கண்ணப்பன் பன்றியைக் கொன்று அதன் மாமிசத்தை மென்று ருசி பார்த்துச் சிவபிரானுக்குக் கொடுத்தானாம். எவ்வளவு அசிங்கம்? ஏன் இப்படி எழுதினான்? எழுதினவனுக்கு அந்த ஒழுக்கந்தான்; அவனுக்கு அந்தப் புத்திதான் வரும். சேக்கிழார் அந்த இழிந்த செயலுக்கு ஏற்றவன். இந்த ஆபாசங்களை எரிக்க வேண்டும் என்று சுயமரியாதைக்காரர் சொன்னால், அதற்குப் பெரிய புலவர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு எதிர்க்க வருகிறார்கள் சில புலவர்கள். ஐயா, ஒருவன் அசிங்கத்தில் கால் வைத்துக்கொண்டு நிற்கிறான். அதை மற்றொருவன் பார்த்துக் குறிப்பாகக் காட்டுகிறான். சீக்கிரம் போய்க் காலைக் கழுவிக் கொள்ளும்படி சொல்லுகிறான். ஆனால், அப்படியே அந்த அசிங்கம் பட்டு இருக்கிற தோற்றம் ஓர் அழகிய சித்திரம்போல் அமைந்து இருக்கிறது. அதைக் கழுவாதே என்பார் பாரதியார் முதலிய பண்டிதர்கள். 8. இசை என்பது என்ன? இசை என்பது என்ன? ஒரு நாட்டில், பழைய நாள் தொட்டு மக்களின் உணர்வில் ஊறி நாளடைவில் உருப்பட்ட இலக்கணம் உடையது. பாட்டுக்கு பாவம் எப்படியோ, அப்படியே இசையும் முக்கியம். இனிய மொழி என்பது அந்நாட்டின் பேச்சு, பாட்டுக்கு வேண்டிய மொழிகள்; எல்லாருக்கும் புரியும்படி இருக்க வேண்டும்! இலக்கண முடையவையாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பாவமும், இசையும், கருத்தும் பிறக்கின்ற கவிஞனின் உள்ளமானது மொழியிலக்கணம், யாப்பிலக்கணம், பயின்றதாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பாடும் பாடல்கள் பாடியவனுடைய பெருமையைக் கெடுத்து விடுவதோடு, எதைக் குறித்துப் பாடினானோ அந்தச் செய்தியே இகழ்ச்சிக்குரியதாகிவிடும். பாடல்களின் நோக்கம் என்ன எனில், பாவமும் இசையும் மொழியும் இருப்பது மாத்திரமல்ல; பாடும்போது கருத்து விளக்கமுற வேண்டும். பாடலில் மொழி. அதாவது, கருத்துத்தான் இரத்தினம். பாவமும் இசையும் வர்ணத்தகடும், வேலைப்பாடுந்தான். இப்போது உரைநடைக்கும் பாடலுக்கும் உள்ள வேறுபாடு விளங்கியிருக்கும். பாடலின் மேன்மையை இன்னும் கூற வேண்டு மானால், உரைநடையானது கேட்க முடியும்; எழுதி வைக்க முடியும்; நினைவில் நிறுத்த ஏற்றதல்ல. பாட்டு நினைவில் நிற்கும். பாடுவது, பாட்டின் கருத்தை மக்கள் நினைவில் நிற்கச் செய்யத்தானே! பாடலினால் ஒரு கருத்தை மற்றொருவன் நெஞ்சில், உரித்த சுளைபோல் புகுத்தமுடியும். அதுபோலவே இன்பம் பயக்கும். ஆயிரம் பேர் பேசட்டும்; அது சந்தைக் கடைக் கூச்சலாகவோ அல்லது அறிஞரின் சொற்பொழிவாகவோ இருக்கட்டும். எதுவாயிருந்தாலும் அந்தப் பேச்சு நடுவில் ஒரு பாடல் கிளம்பினால், எல்லோருடைய செவிகளும் அப்பாட்டை நோக்கியே திரும்பும். சூரியனை நோக்கிச் சூரியகாந்திப் பூ திரும்புவதுபோல. அதென்னமோ பாடலில் மக்கள் நெஞ்சை அள்ளும் ஒரு வகை தன்மை அமைந்திருக்கிறது. பாடலின் மேன்மை, அதன் உபயோகம் இவற்றைக் கருதி யல்லவா மதத் தலைவர்களும் தம் தம் கொள்கையைப் பாடலால் அமைத்தார்கள். சைவக் கொள்கையை நிறுவத் தேவார திருவாசகங் கள் என்ன? வைணவத்திற்குத் திருவாய் மொழி என்ன? மற்றும் வேதாந்த கருத்துக்களுக்குத் திருப்புகழ், தாயுமானார் என்ன, இவைகள் எல்லாம் இன்னிசைப் பாடல்கள். இன்னும் கிறிதவம், இலாமியம் கூடப் பாடலால் மக்கள் உள்ளத்தைக் கவரும் நோக்கம் உடையது. பாட்டுக்கு மகிழ்வதென்பது, உயிரின் இயற்கை என்று கூடச் சொல்லலாம். மனிதனின் இயல்பான நிலை தவிரச் சிறிது மகிழ்ச்சி உண்டானால், அவன் பாட அல்லவா தொடங்கி விடுகிறான். ஏனைக் குழந்தை பாட்டை விரும்புகிற தென்றால், பாட்டில் உள்ள பாசத்தன்மை பற்றிக் கூறவா வேண்டும்? உடல் நலியப் பாடுபடுகிறவர்களும் பாடுகிறார்கள். உழுபவன் பாடுகிறான். ஏற்றம் இறைப்பவன் பாடுகிறான். இவ்விடத்தில் மற்றோர் உண்மை நமக்கு விளங்குகிறது. பாட்டானது மனிதனுக்கு இன்பந் தருவது மட்டிலும் அல்லாமல், அது இருக்கும் துன்பத்தையும் நீக்கக் கூடியது. சேற்றில் முள் தைப்பதுகூடத் தெரியவில்லை. உழவுப் பாடகனுக்கு. பாட்டின் உபயோகத்தைச் சொல்ல வேண்டுமானால், நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை. வீரப்பாடல் எனில் பசையற்ற நெஞ்சையும் துடித்தெழும்படி செய்கிறது. இதற்குச் சான்று, பிரான் தேசத்து உலகப் புகழ் பெற்ற மர்ஸேயே என்னும் போர் நடைப்பாட்டு ஒன்றே போதும். சோகப்பாட்டு, சோகம் பொழிவதைச் சந்திரமதி புலம்பலே சொல்லிவிடும். பாட்டுக்கு முன் வறுமை பறக்கிறது. பாட்டுக்குமுன் பசி பறக்கிறது. செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று கூறினார் வள்ளுவர். பிச்சைக்காரன் பாடிக்கொண்டே பிச்சை கேட்கிறான். அவனுக்குச் சோறு கிடைக்காவிடில், பாட்டோடு தூங்கி விடுகிறான் இரவில். பாட்டில் இன்னொரு சொக்குப்பொடி, பகலெல்லாம் உழைத்து, அரைத் தூக்கத்தில் கிடக்கும் ஒரு பெண்ணையும், பிச்சைக்காரனின் தெருப்பாட்டு எழுப்பி விடுகிறது. விசையாய் எழுந்து பிச்சை யிடுகிறாள். இன்னொன்று கேளுங்கள். மூக்கறையன் பாடினால் நன்றா யிராது. பாடாமல் இருப்பதில்லை. ஙொண ஙொண என்று பாடுகிறான் உரக்க; பல்லில்லாக் கிழவர்க்கும் பாட்டு வெறி, இது மட்டுமா? பாடும் உணர்வேயில்லாதவன் கூட, மற்றவன் பாடும் விருத்தத்துக்குத் தாளம் போட்டுத் தலையசைத்து மகிழ்கிறான். இவற்றையெல்லாம் எண்ணித்தான் நம் தமிழையே மூன்றாகப் பிரித்து இசையை நடுவில் அமைத்தார்கள். மேலும் ஆய கலைகள் அறுபத்து நான்கின் பாட்டையும், ஓவியத்தையும், பெருங்கலை என்றும் இனிய கலை (லலித வித்யா) என்றும் கூறினார்கள் 9. அகில பிரஞ்சிந்திய ஆரம்ப ஆசிரியர் (சிண்டிகேட்) ஐக்ய தேசீய சங்கப் பொதுக்கூட்டம் திரு.கனக சுப்புரத்தினம் அவர்களின் ஆவேச மொழிகள் அக்ரமக் கோட்டை தரை மட்டம் திரு.வேங்கட கிருஷ்ணசாமியின் மேளம் கிழிந்தது 24 மார்ச் 1932 காலை 9 மணிக்கு அகில பிரஞ்சிந்திய ஆரம்ப ஆசிரியர் ஐக்ய தேசீய சங்க பொதுக் கூட்டம் மிஷன் வீதித் தலைமைப் பாடசாலைக் கட்டிடத்தில் கூடியது. கூட்டத்திற்கு அதிக வயதுடை யவரும் மாஜித் தலைமையாசிரியருமான லோக்கல் கௌன்சில் மெம்பருமான திரு. கையார் அவர்கள் தலைமை வகித்தார்கள். திரு.கையார், தம்மைத் தலைமை வகிக்கக் கோரியதன் மூலம் தமக்குத் தந்த கௌரவத்திற்காக வந்தனமளிப்பதாகவும் கூட்டத்தின் நடவடிக்கைகள் சாந்தமான மொழிகளின்மூலம் நடைபெறத் தாம் விரும்புவ தாகவும் கூறித் தமது ஆசனத்தில் அமர்ந்தார்கள். கல்வே காலேஜ் ஆசிரியர் திரு. மரியானி அவர்கள் பொதுக்கூட்டத்தின் காரியதரிசியாக நியமிக்கப் பட்டார். பெரும்பான்மை ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். சங்கத்தின் தலைவரான திரு.வேங்கட கிருஷ்ணசாமி கூட்டத்தினரையும் தலைவரையும் வரவேற்றுத் தனது இரண் டொரு தந்திர மொழிகளால், எந்தப் பிரச்சனைகளும் கிளறா திருக்க வேண்டுமென்ற கருத்தால் மேலே நடக்க வேண்டிய இரண்டொன்றைக் குறிப்பிட்டு விட்டு நிறுத்தினார். கூட்டம் கூட்டியதின் நோக்கத்தையும் யோசித்து, முடிவு கட்ட வேண்டிய விஷயம் இன்னது என்பதையும் நிர்வாக சபைத் தலைவரான வேங்கடகிருஷ்ணசாமி குறிப்பிடாதது வெட்கத்திற்குரியதென்று அனைவராலும் கருதப்பட்டது. சென்ற வருடத்திய நடைமுறை களைப் பற்றியும், அவர் எந்தக் குறிப்பையும் ஆஜர் செய்யவில்லை. மேலே எதுபற்றி, யார் பேசுவது என்றுகூடத் தெரியாதபடி மொட்டையாக நிறுத்திவிட்டார். இதன்பின் திரு.செங்கோல் ஆந்த்ரே அவர்கள் எழுந்து, ஏனையா, தலைவரே! நீர் சென்ற ஆண்டு பணந்தண்டியதற்கு ரசீது தருவதாகச் சொல்லி இதுவரை கொடாததற்குக் காரணம் என்ன? என்றார். இதற்கு மறுமொழியாக வேங்கடகிருஷ்ண சாமி, நீர் கொடுத்த பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக் கிறதா என்பதை மாத்திரை கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். இந்த நியாயமற்ற பதிலைப் பற்றிக் கூட்டத்தில் அருவருப்பும் கூச்சலும் கிளம்பிற்று. உடனே தனரக்ஷகர் திரு.கனகசுப்புரத்தினம் அவர்கள் எழுந்து தலைவரைப் பார்த்துத் தாம் பேசப் போவதாகக் கேட்டுக் கொண்டார். அனுமதி கிடைத்தது. தனரக்ஷகரின் வார்த்தைகளைக் கூட்டத்தினர் வெகு ஆவலாய் எதிர்ப் பார்த்தார்கள். கூட்டத்தில் நிசப்தம் ஏற்பட்டது. தனரக்ஷகர் திரு.கனகசுப்புரத்தினம் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசிய பேச்சுக்களின் சாரம் வருமாறு:- கனம் தலைவரவர்களே, தோழர்களே, பண சம்பந்தமான பேச்சுக்களும் இப்போது கிளம்பியிருக்கிறது. சங்கத்தின் பணப் பொறுப்பு என்னுடையதாதலால் அதற்குப் பதில் சொல்வதின் மூலம் என் வார்த்தைகளை இப்போதே ஆரம்பித்துவிடலாம் என்று நினைக் கிறேன். மேலும் நான் சங்கத்தின் பொக்கிஷதார் என்ற முறையிலும் சங்க அங்கத்தினன் என்ற முறையிலும் பேச விரும்புகிறேன். தோழர்களே, ஒரு சங்கமானது, சட்டத்தாலும் பணப் பொறுப் பாலும், சட்டத்திற்கு பொருந்திய அநுபவ முறையாலும் நடைபெறுவ தாகும். முதலில் நமது சங்கத்தின் பணப் பொறுப்பு எவ்வகையில் இருந்தது என்பதுபற்றிக் கூறுகிறேன். 1931ம் ஆண்டு முதற் பகுதியில் நடைபெற்ற தேர்தலின்படி நான், பொக்கிஷதார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும் என்னிடம் கணக்குப் புத்தகம் ஒப்படைக்கப் படாமலே இருந்ததோடு எனக்குத் தெரியாமல் திரு.வேங்கடகிருஷ்ண சாமியும், உதவித் தலைவர் திரு. மலைக்கண்ணும், சந்தா வசூல்செய்து வந்தார்கள். செலவும் செய்து வந்தார்கள். சந்தா கொடுத்தவர்கட்கு இவர்கள் ரசீது கொடுத்ததே இல்லை. இந்த அக்ரமத்தை யோசியுங்கள். பிராஞ்சு தேசத் தலைமைச் சங்கத்திற்குத்தான் (பிரசிடெண்ட்) தலைவர் உண்டு. இங்குள்ள கிளைச் சங்கத்திற்கு காரியதரிசியே தலைவருமாக இருக்கிறார். இதனால், இந்த வேங்கடகிருஷ்ணசாமியிடம் ஒரு தலைவருக்குள்ள அதிகாரமும் ஒரு காரியதரிசிக்குள்ள அதிகாரமும் இருக்கிறது. இதனோடு பொக்கிஷதாருக்குமுள்ள அதிகாரத்தையும் துராகிருதமாக வகித்திருப்பதால் எந்த அதிகாரமாவது எந்தப் பொறுப்பாவது மற்றவருக்கு உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். தலைமை ஆசிரியர் என்றும், வெகுநாளைய உத்தியோக, அநுபவம் பெற்றவர் என்றும், நமக்கெல்லாம் பிரதிநிதி என்றும் சொல்லிக் கொள்ள ஆசைப்படும் வேங்கட கிருஷ்ணசாமியும், மலைக்கண்ணும் சந்தாதாரிடம் பணம் பெற்றதற்கு ரசீது கொடுக்கவேண்டும் என்ற நேர் வழியையும் அனுசரிக்கவில்லை. இப்படிப்பட்ட காரியத்திற்கு இவர்கள் உதாரண புருஷராக விளங்கலாமா? இவர்களின் மனோ பாவந்தான் என்னவென்று கேட்கிறேன். பொதுவாக நம்மை எல்லாம் மனிதராகவோ, அறிவும் ஆற்றலும் உள்ளவராகவோ, ஆசிரியர் என்பதாகவோ மதித்ததாகச் சொல்ல முடியுமா? நீங்களே இதுபற்றி ஓர் முடிவுக்குவர விட்டுவிடுகிறேன். ஆனால் உம்மிடம் பொறுப்பு ஒப்படைக்காதது பற்றி நீர் பிரதாபித்தீரா என என்னை நீங்கள் கேட்கலாம். இதுபற்றி நிர்வாக சபையில் கிளர்ச்சி செய்து பார்த்தேன்! பயன்படவில்லை! பயன் ஏற்படுவதும் துர்லபமாகவே யிருந்தது. மேலும் இது பற்றியே நிர்வாக சபை சட்டவிரோதமாகக் கூட்டாமலே இருப்பதுண்டு. ஆனால் நான் ஊரில் இல்லை என்றோ, வீட்டைவிட்டு வரமுடியாது என்றோ தலைவருக்குத் தெரிந்தால் அப்போது கூட்டங் கூட்ட தவறுவதில்லை. நான் போகாதிருந்தாலும், வந்திருந்தார் என்றுதான் நடைமுறைக் குறிப்பில் குறித்திருப்பார்கள். குறிப்பாக வேங்கடகிருஷ்ணசாமியின் ஏகபோக அதிகாரத்தை நிலைநாட்டவே காரியம் நடைபெற்று வந்தது. ஆசிரியன் பத்திரிகை துவக்குமுன் அதற்காக ஓர் தனிக்கூட்டம் நியமிக்கப்பட்டது. அதன் தலைவர் திரு.கலியாணசாமி, வெளியிடுவோர் திரு.சிவகுருநாதன், பிற பதவியாளர் பிறர் என்று நியமிக்கப்பட்டது. இது சாங்கியமேயன்றி எல்லாப் பொறுப்பும் என்னிடந்தான் என்று மறுநாள் முதலே வேங்கட கிருஷ்ணசாமி கூறிக் காரியம் நடத்தினார். இதில் எந்தச் சட்டத்தை, எந்த மனிதரை மதித்தார் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இனி, இவர் இன்ன தொகை வசூலித்ததாகவும், அத்தனையும் செலவழித்ததாகவும் கூறிஅனைத்தையும் இரண்டொரு நாளில் கணக்குப் புத்தகத்தில் (ஒரு வருடக்கணக்கை) குறித்துக் கொடுத்ததைக் கொண்டு பார்த்தால் வேடிக்கையாகவே இருக்கிறது. அதில், வந்த சந்தா வரவு வைக்காமலும் வராத சந்தா வரவு வைத்தும் இருப்பதோடு, இந்தத் தப்புக் கணக்குக்கு ஆதாரமாக வேங்கடகிருஷ்ணசாமி கைப்பட எழுத்து மூலம் கடிதம் இருக்கிறது. (காட்டப்பட்டது) இதுவுமன்றிக் கணக்குப் புத்தகத்தில் செலவு எழுதியுள்ள மாதிரிகள் விவரமின்றி ஏமாற்றமாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர நான் உத்தேசித்ததில் ஏதாவது தப்பு உண்டா? இந்த நிலை தங்களுக்குத் தெரிய வேண்டாமா? இதுபற்றி என்னைக் கலகம் செய்பவன் என்று ஒரு சில தோழர் சொல்லியதாகக் கேள்வி. தோழர்களே! இவர் இப்படி சொல்லியதற்குக் காரணம் என்னவென்ப தையும் நான் கூறிவிடுகிறேன். எந்த நிலை எப்படி மாறினாலும் தங்கள் நலம் பாதகம் அடையாது என எண்ணியிருக்கும் தோழர் உண்டு. அவர்கள் என்னை கலகக்காரன் என்று சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? ஆனால், அரிசியையும், நமது பிள்ளை குட்டியின் வயிற்றுப் பிழைப்பையும் ஒத்திட்டுப் பார்த்துக் கிராமங் களில் தாயற்ற பிள்ளைகள் போல் வருந்தும் ஏழை ஆசிரியர்கள், சம்பளம் உயருமா? என்பது பற்றியே கனவு கண்டவண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் கிளர்ச்சியானது நல்லதென்றே தோன்றும் என்று நம்புகிறேன். சங்கத்தால் ஏற்படும் நலமானது ஆசிரியர்களுக்குப் பொதுவாக அமையவேண்டும் என்பதில் அவர்களுக்கு மிக்க கவலையுண்டு. நான் என் கருத்தை ஆதரிக்கும் பெரியார்களைக் கொண்டு சங்கத்தை நல்ல நிலையில் வைக்க வேண்டும் என முயலுவதற் கிடையில் ஒரு சிலர், அதை மறுத்துச் சங்கத்தை நடத்தப் பேர்வழி வேறு கிடையாது என்று கருவத்தோடு கூறினவாகவும் கேள்வி. இதில் ஓரளவு உண்மையுண்டு. ஏனெனில் 250 ஆசிரியன் பத்திரிகை 15 ரூபாய் என்று விவரமற்ற கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள். இரண்டு செக்கு கனம் (தலைமைச் சங்க அதிகாரி, கனம் லப்பியேருக்கு அனுப்பப்பட்டது என்று எழுதியிருக்கிறார்கள். இப்படியே எல்லாம் மொத்தமாகக் கணக்கெழுதி வைத்திருக்கிறார்கள். இதன்பிறகு சங்கத்தை நடத்த வரும் ஆசிரியர்கள் கணக்குப் புத்தகத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு எப்படி நடத்த முடியும்? புதியவர்கள் சென்ற வருடத்தில் இருந்த தலைவர்கள் 250 பத்திரிகை 15 ரூபாய் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் ஓ! அச்சுக்கூடக் காரரே! அப்படியே 15 ரூபாய்க்கு 250 பத்திரிகை கொடுங்கள் என்றால் அச்சுக்கூடக்காரர்கள் அச்சடிக்க பாரம் 1க்கு இத்தனை ரூபாய் என்ற விவரமும், பைண்டு செய்ய 100க்கு இத்தனை ரூபாய் என்ற விவரமும் கம்பியால் தைக்க 1 க்கு இத்தனை ரூபாய் என்ற விவரமும் உமது சங்கப் பழங்கணக்கில் இல்லையா? என்று கேட்கும்போது பிரதாபப் புதுத் தலைவர்கள் ஓகோ நம்மால் சங்கத்தை நடத்தமுடியாது என்ற முடிவுக்குத்தான் வரக்கூடும். பொய்யை ஆதாரமாக உடைய பழைய ததாவேஜிகளைக் கொண்டு மெய்யான வழியில் சங்கத்தை நடத்திக் கொண்டுபோக ஆள் அகப்படமாட்டார் என்பதில் பொய் ஒன்றும் இல்லையல்லவா? சங்கத்தின் சிறப்பு விதிகளேயல்லாமல் மூலாதார மான சட்டங்களே அவமதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பணத்தைப் பொறுத்த விஷயமாக விளையாடியிருக்கிறார்கள் என்பதையும் நான் விளக்கினேன். அநுபவமுறையைக் கையாண் டிருப்பதையும் பாருங்கள். 1931ம் ஆண்டு சந்தா செலுத்தியவர்களின் பெருந்தொகையைக் கவனித்தால் திரு. முனிசாமி என்பவர் ஒருவரே என்று சொல்ல வேண்டும். 1929ம் ஆண்டில் திரு. கிருஷ்ணசாமி ஐயங்கார் ஒருவரே. இந்த இரண்டாண்டிலும் ஏமாந்த மனிதர் இருவர்தாம்போலும், ஆனால் சங்கத்தின் நிர்வாகச் சபையினர்கூட ஒரு காசும் கட்ட முன்வரவில்லை. எந்த ஆண்டில் எவர் சந்தா கொடுத்தார்களோ அவரே அந்த ஆண்டில் சங்கத்தினர் என்பது கண்டிப்பான விதி. ஒருவர் மாத்திர சந்தா கொடுக்க அவர் பேரால் 10 நிர்வாகதர்கள் தலைப்பாகை போட்டுக் கொண்டு அதிகாரிகளிடம் சென்று பகட்டிக் கொள்ளவும், பொது ஆசிரியர்களை அடிமைப்படுத்தவும் பின்வாங்கியதில்லை. பிரஞ்சு தேசத்திலுள்ள லப்பியேருக்கு 90 ரூ அனுப்ப அந்த ஆண்டுகளில் அவசியமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டில் மாத்திரம் 90 ரூ. அனுப்ப வேண்டிய அவசியம் குதித்திருக்கிறது. விவரம் எழுதவோ இஷ்ட மில்லை. இன்னும் புதுவையில் நடைபெறும் ஆசிரியன் பத்திரிகையைக் காரைக்காலில் உள்ள புனிதா அச்சுக்கூடத்தில் அடிப்பதால் ஏராளமான செலவு ஏற்படுகிறது. அந்த அச்சுக் கூடத்தில் பத்திரிகை அடிப்பதன் மூலம் திரு. நாராயணசாமியைத் திருப்திபடுத்த எண்ணமிருந்தால் அதை நான் ஆட்சேபிக்கிறேன் என்று சொல்லியிருந்தும் அடுத்த பத்திரிகையும் காரைக்காலுக்கே அனுப்பப்பட்டது. ஆயினும் இனி புதுவையிலேயே அச்சடிக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. இந்த உறுதி வார்த்தையை நம்பலாம். ஏனெனில் அவ்வளவோடு பத்திரிகை நின்றுவிட்டதல்லவா? தமது சொந்தப் பணத்தை மாத்திரம் செலவழிப்ப தில் கண்ணும் கருத்துமாய் இருப்பதும் ஏழை ஆசிரியர்களின் பொதுப் பணத்தைச் செலவழிப்பதில் பணத்தை மண்ணாக நினைப்பதும் நம்மை எவன் என்ன செய்யமுடியும் என்று எண்ணுவதும், மன்னிக்கத் தக்கதா என்பதை எண்ணிப் பாருங்கள். தோழர்களே, ஓராண்டு வரைக்கும் உங்களால் பொக்கிஷதார் என்று நியமிக்கப்பட்ட என்னிடம் ஒன்றையும் காட்டாமல் வரவு, செலவு செய்திருக்கும் மனப்பான்மை எப்படிப்பட்டது என்பதை நன்றாக யோசியுங்கள். ஆயினும் நான் இந்தக் குற்றங்களுக்காகத் தனி நின்று பல மாதங்களாகத் தொடர்ந்து நடத்திவந்த கிளர்ச்சியின் பயனாகவே இன்று இந்தப் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு விஷயத்தை நினைத்தால் மட்டும் என் நெஞ்சம் துடிக்காமல் இருக்க முடியவில்லை. இவ்வாறு எதேச்சாதிகாரம் செலுத்திவரும் இந்த வேங்கடகிருஷ்ணசாமி, மலைக் கண்ணு முதலியவர்கள் இன்றும் வேறு ஓர் போலினா, செக்கூர், முத்தி யேல் முதலிய சங்கங்களின் தன ரக்ஷகராகவும், உதவிக் காரியத ராகவும் இருக்கிறார்கள் என்பதும், அச்சகங்களில் உயர்தர ஆசிரியர் களும், வெள்ளைக்காரர்களும் கல்வி அதிகாரிகளும் சேர்ந்திருக் கிறார்கள் என்பதும், அதனால் அங்கு இவர்கள் மிக்க ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள் என்பதும் நாமறிந்த விஷயமாகும். இவ்விதம் அதிகாரிகளிடம் இவர்கள் சேர்ந்து ஒழுகும் ஒழுக்கத்தின் பயனாக எட்டி நிற்கும் என்போன்ற ஆசிரியர்கட்கு ஒழுங்கு முறை களைக் காட்ட வேண்டியதிருக்க அதிகாரிகளால் உயர் ஆசிரியர் களால் வெள்ளைக்காரர்களால் ஏற்படும் செல்வாக்கை ஆயுதமாகக் கொண்டு நம்மை அடிமைப்படுத்த முயற்சிப்பார்களானால் இந்தப் பெரியார் களால் நாம் எப்படி முன்னுக்கு வரமுடியும் என்பதை யோசியுங்கள். அதிகாரிகள் வெள்ளைக்காரர்களிடம், பூச்சி பிடிக்கும் இவர்கள், நம்மிடம் திரும்புகையில் மனிதரை மனிதரென்றும் நினைக்கக் கூடாதா? இந்த அநியாயத்தை எண்ணமாட்டீர்களா? (அருகிலுள்ள மேசையில் ஓங்கி அறைந்தார்). தலைவரே, தோழரே, சட்டம், பணம், அநுபவமுறை அனைத்தையும், இகழ்ச்சி செய்வதன் மூலம் பொதுவாக ஆசிரியர்கள் துரும்பாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உங்களிடம் விளக்கினேன். இன்னும் இதுபற்றி எவரேனும் கேட்கும் கேள்விகட்கும் விடையளிப்பதன் மூலம் நான் மேலே சொல்லியதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறுகிறேன். - புதுவை முரசு, 28.3.1932 10. கவிஞர் பதில் 28.7.1946ல் சென்னையில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிதியளிப்பு விழாவில், நிதியைப் பெற்றுகொண்டு கவிஞர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம். எனக்கு இன்று அளித்த கௌரவத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது எனக்கு அளித்த கௌரவமல்ல; தமிழுக்கு அளித்த கௌரவம். செய்யத் துணிபவனுக்கு, எண்ணத் துணிபவனுக்குத்தான் வெற்றி கிட்டுகிறது. தன்னுடைய செயல் முறையும், கொள்கையும் சரியானதென்று நம்புபவன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சி கொள்கையி னின்றும் பிறழக்கூடாது. இவனுக்கு என்றாவது ஒருநாள் வெற்றி வந்தே தீரும். என்வாழ்நாள் முழுவதும் இதுவே என் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. சுயேச்சையான மனோபாவத்திடம் எனக்கிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையின் பலன்தான் நான் இன்று பெற்றிருக்கும் இந்தப் பணமுடிப்பு. இன்று, தமிழகத்தில் பழமையின் சிறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் போதும் என்னும் மனோபாவம் பொதுவாகப் பரவி யிருக்கிறது. இது முன்னேற்றத்திற்கு வழிகாட்டாது. பழைமையை உதறித் தள்ளிப் புது வழியை மேற்கொள்ளுபவன் தான் உண்மையான சேவை செய்தவன். தமிழுக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மக்களின் தமிழ்க் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கரையான் அரித்த பழைய துறையிலிருந்து மெல்ல மெல்ல விலகிப் புரட்சிகரமான புதுத் துறையில் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய நவயுக எழுத்தாளர்களும், கவிகளும்! தமிழ் நாட்டின் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமானால், அதற்கு உண்மையாகவே புத்துயிர் பிறக்க வேண்டுமானால், இத்தனை எழுத்தாளர்களும், கவிகளும் குறுகிய சாதி வேறுபாடுகளைத் தகர்த்து எறியக் கங்கணங் கட்டிக் கொண்டு புறப்படவேண்டும். அடிமை மனப் பான்மையை ஒழித்து, சுயேச்சையான எண்ணத்தையும், பரந்த நோக்கங்களையும் வளர்க்க முற்படவேண்டும். இந்த விஷயத்தைப் பற்றி எழுது என்று கவிஞனிடம் ஒப்பந்தம் பேசுவது நடக்காத காரியம். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இன்னொருவர் சொல்லி, கவி எழுத முடியாது. ஒரு கொடுமையை அல்லது ஒரு காட்சியைக் கண்ட அளவில் உணர்ச்சி தூண்டக் கவி எழுத வேண்டும். என் இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான்! தமிழ் படி; தமிழ் பேசு, தமிழ் எழுது, கொடுமை கண்டவிடத்து எதிர்த்துப் போராடு. யாரேனும் தமிழைப் பழித்தால் லேசில் விடாதே. அச்சமின்மையை வளர். புரட்சி மனப்பான்மை என்னுள் புகுந்த பொழுது எனக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் ஏற்பட்டன. நான் அவைகளைக் கண்டு அஞ்சவில்லை. ஏனெனில் எதிர்ப்பிலிருந்து நன்மை பிறக்கிறது; அறிவு வளர்கிறது. பாரதியார் அச்சம் தவிர் என்றும், போர் முனை விரும்பு என்றும்தான் கூறியிருக்கிறார். தமிழ் வாழ்க! -சக்தி இதழ், 1946 செப்டம்பர். 11. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உரை (7.7.48 இந்தி எதிர்ப்பு மாநாடு) அன்புமிக்க தலைவர் அவர்களே! பெரியார் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் ஒரு ப்ரஞ்சு இந்தியவாசி. எனவே எனக்கு இந்த மாகாண சர்க்காரைப்பற்றி அதிகம் தெரியாது. இருந்தும், எனக்கு இம் மாநாட்டார் அழைப்பு அனுப்பியிருந்தனர். என்ன நடக்கிறதென்று பார்த்துப் போகலாம் என்று வந்தன். வந்த இடத்தில் பேசும்படி கேட்டுக் கொண்டார்கள். அதற்கேற்ப நானும் ஏதோ எனக்குத் தோன்றுவதைச் சொல்லுகிறேன். இந்திமொழிபற்றி இந்தி மொழியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும். ஏனென் றால் அது இந் நாட்டின் பொது மொழியாம். இந்தி பொது மொழி யென்றால் எந்த நாட்டின் பொதுமொழி? நாவலந்தீவு என்று ஒரு நாடு இருப்பது உண்மைதான். ஆனால் அதில் இரண்டு தனி நாடுகள் உண்டு. அவைதான் ஒன்று ஆரிய நாடு. ஒன்று திராவிட நாடு என்பன வாகும். ஹிந்தி ஆரிய நாட்டின் பொதுமொழியா? திராவிட நாட்டின் பொதுமொழியா? திராவிட நாட்டின் பொதுமொழியா ஹிந்தி? அதுவும் ஒரு திராவிடனாகிய நீயா இந்தி இந்நாட்டின் பொதுமொழி என்று கூறுவது? திராவிட நாட்டைத் தனி நாடாகப் பிரிக்க முயற்சி நடந்து வருவது உனக்குத் தெரியாதா? அல்லது திராவிட நாட்டுப் பிரிவினைக் குள்ள மக்கள் ஆதரவு உனக்குத் தெரியாதா? ஒரே நாடுதானா? இமயம் முதல் குமரி வரையில் ஒரே நாடென்கிறாயே, எப்போ தாவது இந் நாவலந்தீவு முழுமையும் ஒரே நாடாக இருந்ததுண்டா? நாடுள்ள நிலை உனக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் எங்க ளுக்குத் தீங்கு செய்யப் பார்க்கிறாயா? இன்றென்னமோ கட்டாயத்தால் ஒன்றாய் இருக்கிறோம் என்பது உண்மைதான். என்றாலும் நாளை பிரிய வேண்டியதுதானே திராவிடநாடு! பிரிவினைக்கு இடையேயுள்ள காலமும் மிகச் சொற்பமாகத்தானே இருக்கமுடியும்? அதற்குள் ஏன் நீ துள்ளிப் பார்க்கிறாய்? இந்தி படித்தால் தீமை என்ன? ஹிந்தியைப் படித்தால் நன்மை ஏற்படும் என்கிறாயே? அது என்ன உன்னுடைய உத்தேசமா? யாரைக் கேட்டாய் நீ? ஹிந்தியால் நன்மை ஏற்படுமா, தீமை ஏற்படுமா என்று உனக்குத் தெரியுமா? இனி கேட்பதென்ன? மறைமலையடிகளாரும், திரு.வி.க. அவர்களும் இந்தியால் தமிழ் கெடும், தமிழர்கள் கெட்டுப்போய் விடுவார்கள், என்று கூறிவிட்டபிறகு இக் கூட்டம் இதை ஒப்புக்கொண்ட பிறகு வேறு யாரை நீ கேட்கவேண்டும்? இவர்களைவிட தமிழ் அறிந்தவர்கள், தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள் வேறு யார்தான் இந் நாட்டில் இருக்கிறார்கள்? மொழி வெறியருக்கு எச்சரிக்கை! திராவிட நாடு எப்படிப் பிரிய முடியும் என்று உனக்குச் சந்தேகம் தோன்றுகிறதா? போய் ஜின்னாவின் சட்டமாம் பிள்ளையைக் கேள். தக்க பதில் கொடுப்பார். முனிஸிபாலிட்டி எலக்ஷனிலேயே ஓரளவுக்குத் தெரிந்திருக்குமே உன் சர்க்காருக்குள்ள ஆதரவும், எதிர்ப்பும். நீ அவ்வப்போது பேசி வருவதைப் பார்த்தால் இந்தி நுழைப்பில் உனக்கே போதிய இச்சையில்லை என்பது நன்றாக விளங்குகிறதே! அப்படியிருக்கும்போது ஏன் சில வடநாட்டவருக்கும் இங்குள்ள சில ஒத்தைப் புத்தி பார்ப்பனருக்கும் பயந்து இந்தியை இந் நாட்டில் நுழைய விடுகிறாய்! நீ ஏன் தயவு பார்க்கிறாய்! தைரியமாக வடநாட்டார் உத்தரவை நிராகரித்துப் பார். திராவிட நாட்டு மக்கள் ஹிந்தியை வெறுக்கிறார்கள்; ஆகவே இந் நாட்டில் ஹிந்தியைக் கட்டாயமாக்க முடியாது, என்று கூறிவிடு. அதற்கு எங்களைச் சாட்சியாகக் காட்டு. நீயாக ஏன் பழியை ஏற்றுக் கொள்கிறாய்? நீ நிராகரித்துவிட்டால் அவர்கள் தாமாக எங்களுடைய எதிர்ப்பை ஏற்பார்கள் இல்லையா? வீண் குழப்பத்தை ஏன் இந் நாட்டில் உண்டாக்குகிறாய்? அவர்கள் ஆட்டுவித்தபடி ஏன் நீ ஆடிக்கொண்டிருக்கிறாய்? திராவிட மக்களுக்கு உன்னிடமுள்ள நம்பிக்கையை ஏன் இதன்மூலம் கெடுத்துக் கொள்கிறாய்? இந் நாட்டுப் பெரும்பான்மை திராவிட மக்கள் அத்தனை பேருடைய ஆதரவும் உனக்கிரும்போது ஏன் அச்சப்படுகிறாய்? தைரியமாக வடநாட்டார் உத்தரவை நிராகரித்துவிடு. இன்றேல் எங்கள் எதிர்ப்பையேனும் ஏற்றுக்கொள். (17.7.1948இல் சென்னையில் நடந்த மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரை) 12. தமிழ் இன்பம் அன்புள்ள தோழியர்களே, தோழர்களே! இத்தகைய கூட்டத்தில் தலைவனென ஒருவர் மேடையில் தோன்றினால், முதலில் எத்தனையோ செய்திகள் சொல்லியாக வேண்டும் சடங்குபோல. என்னைவிடப் பல அறிஞர்கள் இருக்கையில் என்னை ஏன் தலைவனாக அமைத்தீர்கள் என்று வருந்துவதுபோலக் காட்டிக் கொள்ளவேண்டும். அதன்பின் உடனே வரவேற்புக் குழுவினர் என்னைத் தலைவனாக்கியதற்காக நன்றி கூறுகிறேன் என்று மகிழ்ச்சி யையும் காட்டிக் கொள்ள வேண்டும். இது எவ்வளவு தொல்லை பாருங்கள். இதுபோலப் பல சொல்லியாக வேண்டும். அவைகளை யெல்லாம் நான் சரிவர சொல்லி விட்டதாகவே நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஏன் என்றால் எனக்கு நேரமில்லை. தோழர் சம்பத்து அவர்கள் தம் வரவேற்புரையில், இம்மாநாடு திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதல்ல; முத்தமிழ் வளர்ச்சி மாநாடு - முத்தமிழின் வளர்ச்சியே அடிப்படைக் கொள்கையாக உள்ளது; அவிநாசியார் நடத்திய மாநாட்டுக்கு இது போட்டியாக நடத்தப்படுவதுமல்ல என்றுகூறி நிலைமையைத் தெளிவுபடுத்தினார்கள். தோழர் சம்பத்து அவர்களின் பேச்சிலிருந்து, இது போட்டி மாநாடு என்று சிலர் நினைப்பதாயும், தெரிகிறது, வியப்பு! தாய்மொழி உணர்ச்சியால் திரண்டுள்ள இப்பெரு மக்களின் மாநாடு, சிலரின் தனி ஏற்பாட்டுக்குப் போட்டி என்று புகலவும் படுமோ என்றுதான் நான் கேட்கின்றேன். பெருமக்கள் நாங்கள்! உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டப் பட்டது இம்மாநாடு என்பதை இம்மாநாட்டின் முடிவிலே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையே இம்மாநாட்டின் அடிப்படைக் கொள்கையில்லை எனில், இம்மாநாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகத்தார் ஏன் கூட்டவேண்டும் என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கூட்டியதற்குத் தலையாய காரணங்கள் இரண்டு. முதற்காரணம்: இந்நாட்டுப் பெருமக்கள் முன்னேற்றக் கழகத்தார்கள். இரண்டாவது காரணம்: அவர்கட்குத்தான் முத்தமிழ் வளர்ச்சியில் அக்கறை உண்டு. தமிழை ஒழிக்கவே இந்தியைத் திணிக்கிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டிக் கிளர்ச்சி செய்து வெற்றியை நிலை நாட்டியவர்கள் நாம். இந்தித் திணிப்பை மக்கள் எவ்வளவு வன்முறை யாக எதிர்க்கின்றார்கள் என்பதை நம்மால் தெரிந்து கொண்டவர்கள் அவிநாசியார் கூட்டத்தார். மக்களுக்குள்ள அந்த மனப்பான்மையைப் பயன்படுத்துவதன் வாயிலாக அதிகாரிகளிடம் ஒட்டிக்கொள்ளக் கூட்டப்பட்டதுதானே அவிநாசியார் மாநாடு? இல்லையா? அம் மாநாட்டில் சர்.ஆர்.கே.சண்முகனார் என்ன சொன்னார்? தமிழை அழிக்கவே இந்தியைப் புகுத்துகிறார்கள் என்று அந்நாளில் ஒரு கூட்டத்தார் சொல்லியது சரியாயிற்று என்று அவர் கூறவில்லையா? ஒரு கூட்டம் என்றார். தாயின் பெயரைக் கூறத் தயங்குகின்றார் சரி! காரணம், அவர் நிலை அப்படி இருக்கிறது. ஏறத்தாழ இந்தி பற்றிய வரைக்கும் நம் கருத்தை ஒட்டியே பேசியிருக்கிறார்கள். அவிநாசியார் உள்பட. அவிநாசியார் பேசியதை நான் நாளேடுகளில் படித்துப் பார்த்தேன். தமிழுக்குப் பரிந்து பேசுகின்றார். ஆயினும் குறிப்பிடத் தக்க ஒன்றை அவர் பேச்சில் நான் எதிர்பார்த்தேன். அதை அவர் கூறவில்லை. அவர் கல்வி அமைச்சராய் இருந்தாரல்லவா? அப்போது திருக் குறள் முப்பாலில் காமத்துப்பாலை ஒழித்துவிடவேண்டும் என்றார். காமத்துப்பால் அவர் பருகியுள்ள தாய்ப்பாலிலேயே இல்லாமற் போயிருக்கலாம். எனினும், அவர் கூட்டிய இந்த மாநாட்டில் அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கவேண்டும். அவ்வாறு செய்ய வில்லை அவர். அவிநாசியாரின் இன்றைய கூட்டு முன்னணி நாளைக்கு காமத்துப் பாலை ஒழிக்கத்தானோ என்று ஐயுறுவோர் இருப்பார்கள் அன்றோ? திராவிடம் என்ற சொல்லே பிடிக்கவில்லையாம் சர்.ஆர்.கே.எ. அவர்களுக்கு. எந்தப் புராணத்திலும் பார்க்கவில்லையாம். அவர் அந்தப் பெயரை. அதுதான் எந்தப் புராணத்திலும் இல்லாமற் போய் விட்டதே. தமிழ் படித்தவர்களையாவது கேட்டிருக்கலாம் அவர். கேட்டிருந்தால் அவர்கள் அருகில் மனுமிருதியில் இருப்பதையும், காட்டியிருப்பார்களல்லவா? பாகவத புராணத்தில் காட்டியிருப்பார்க ளல்லவா? இறையனார் அகப்பொருள் பதிப்புரையில் சி.வை.தாமோதரம் பிள்ளை திராவிடம் என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்து காட்டியிருப்பது சர்.ஆர்.கே.எ.களுக்கா தெரியப்போகிறது. தமிழ் என்ற சொல்லே திராவிடம் என்று திரிந்தது. ஆதலால் திராவிடம் தமிழே. திரிபடைந்த தமிழ்ச் சொல்லைத் தமிழல்ல என்று ஒதுக்குவது சரியல்ல. வாழைப் பழத்தை வாளைப்பளம் என்றால், அது தமிழல்ல என்று ஒதுக்குவாருண்டா- என இவ்வாறெல்லாம் நான் பன்முறை விளக்கியிருக்கின்றேன். இப்போதும் தாயுமானவர் பாடலைக் கேளுங்கள்: கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என்சொல்கேன் மதியை என் சொல்கேன் கைவல்ய ஞான நீதி நல்லார் உரைக்கிலோ கன்மமுக்கிய மென்று நாட்டுவேன் கன்மம் ஒருவன் நாட்டினா லேபழைய ஞானமுக்கிய மென்று நவிலுவேன் வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவுந் திராவிடத்திலே வந்ததா விவகரிப் பேன் வல்லதமிழ் அறிஞர்வரின் அங்ஙனனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைதந்த வித்தைஎன் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே! என்றார். தமிழே திராவிடம் என்பதை உட்கொண்டே தாயுமானார் இப் பாடலைச் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். திராவிடம் என்ற சொல்லை முதலில் கையாண்டது 7-ம் நூற்றாண்டென்று கால்டுவெல் கூறுகின்றார். சங்கரர், ஞான சம்பந்தரைத் திராவிடச் சிசு என்றார். இவைகள் சர்.ஆர்.கே.எ. கூட்டத்திற்குத் தெரிந்திருக்க வழி யில்லை. தெரிந்திருப்பவரைக் கூட்டிக் கொள்வதும் தம் போக்குக்குச் சரி அல்ல என்பதும் அவர்கள் எண்ணம். தமிழ்ப் பெருமக்களை, அதாவது எங்களை விலக்கிப் பேசு வதன் வாயிலாகத் தான் கருதும் நிலையை அடையவேண்டும் என்று அவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றார்கள். எங்கள் தெருவழியாகச் சென்றால் அவர்களின் எண்ணம் நிறைவேறக் கூடும் என்பதை எதிர்காலம் அவர்களுக்குக் காட்டும். நிற்க! மாநாட்டைத் துவக்கி வைத்து, நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசுகையில் ஆங்கிலத்தை முவ்வாங்கிலம் என்றோ, பிரான்சை முப் பிரான்சு என்றோ அல்லது இந்தியை முவ்விந்தி என்றோ கூறுவ தில்லை; ஆனால் இயல், இசை, நாடகம் என்ற முப்பிரிவுண்மையால் தமிழை முத்தமிழ் என்பதுண்டு; தமிழின் சிறப்புக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும் என்று கூறினார்கள். அதிலென்ன அட்டி? ஆனால் இங்கிலீஷ், பிரான்சு முதலிய பிறமொழிகளில் இயலிசை நாடகங்கள் இல்லையா? இங்கிலாந்தில் சென்று நாடகம் எங்கே என்றால் டிரக்கில் அல்லவா ஏற்றி வருவார்கள் அதற்கு மாறாகத் தமிழில் இன்று நாடகம் தேடினால் அண்ணாத்துரை முதலியவர்கள் எழுதிய சிலவற்றைத்தானே காட்ட முடியும். அப்படி யிருக்கத் தமிழ்தான் இயல், இசை, நாடகம் உடையது என்று கூறுவதில் என்ன சிறப்பு இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். கூறுகின்றேன்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் மூன்றும் ஒன்றை விட்டொன்று பிரிக்க முடியாதபடி இயற்கை முறையில் அமைந் துள்ளது. மரத்தின் அடிமரம், கிளை வகைபோல, வேறெந்த மொழிக ளிலும் இப்படியில்லை. இருக்கவும் முடியாது. தமிழ்ச் சொல்லில்தான் மெய்ப்பாட்டு வளம் அமைந்திருக்கிறது. ஏனெனில் தமிழ்போல் தொன்மை வாய்ந்த மொழிகள் இருக்கலாம். ஆனால் தமிழின் பண்பாட்டிற்கு மற்ற மொழிகள் அனைத்தும் பிற்பட்டவை என்று கூறுவேன், நாகரிகத்திலும் அப்படி! தமிழன் தமிழின் இயற்கையால் ஒவ்வொன்றிலும் இசையையும் நாடகத்தையும் கண்டான். இன்றல்ல; நேற்றல்ல; அகத்தியர் காலத்திற்கு முன்னேயே! நாடகம் என்றாலேயே டிராமா அல்ல; ஆடல்! கதை தழுவிய ஆடலின் கட்டம் டிராமா. ஒவ்வொரு சொல்லிலும் இசையும், நாடகமும் காண முடிகிறதா? வா என்பது ஓரெழுத்தொருமொழி, அவ்வெழுத்தைப் படியுங்கள். அந்த நிலையில் அது இயற்சொல். தொலைவில் இருப்பவனை நோக்கி மற்றொருவன் வா என்னும் போது அந்த வா வையும் உற்று நோக்குங்கள். அண்மையில் உள்ள அன்பின் குழந்தையை அன்னை வா என்னும்போது அந்த வா வையும் நோக்குங்கள். இரவில் உணவுண்ட பின்னும் திண்ணையில் நேரத்தைப் போக்கும் காதலனை மனைவி வா என்னும் போது அந்த வாவையும் நோக்குங்கள். ஒரே வாவில் எத்தனை வர்ணமெட்டு! எத்தனை ஆடல்! மெய்ப்பாடுகள்! மற்றோர் எடுத்துக்காட்டு: வலக்கையில் வாளும், இடக்கையில் கேடயமும் தூக்கியபடி மறவன் ஒருவன், போர் எதிர்த்த மற்றொரு மறவனை நோக்கி வா என்றான். இங்கு மறச்சுவை காணப்படுகிறது. வா என்பதில் தோன்றும் இசையில் நாட்டை இராகத்தின் விதையைக் காணுகின்றான். தமிழன் வா என்று சொல்லிய மறவன் நிற்கும் நிலையில் வில் தொடுக்கும் நிலை எனப்பட்டது. அவன் கண்ணில் மறம் (வீரம்). இவ்வாறு எல்லாச் சொல்லிலும் அச்சொல் எழும் எல்லா இடத்திலும் விரும்பிய இசை நாடகம் (ஆடல்) அனைத்தையும் பெரிது படுத்தி, வகைப்படுத்தி இலக்கணம் வகுத்தனர் தொல்லாசிரியர் எனல் வேண்டும். இயற்றமிழுக்கு இன்ன யாப்பு; அதற்கு இன்ன இசை; இன்ன தாளம்; இன்னவகைக் கருத்து. இசைத் தமிழாயின் இதற்கு இன்ன யாப்பு; இன்ன இசை; இன்னதாளம்; அமைக்க வேண்டிய கருத்து இன்னது. இப்படியே நாடகத் தமிழுக்கு! எழுத்து, எழுத்தைக் கொண்டது சொல், சொல்லைக் கொண்டது சொற்றொடர் ஆகிய இவை எப்படி ஒன்றினின்று ஒன்று உணரப் பட்டதோ அவ்வாறு அமைந்துள்ளது நம் முத்தமிழின் அமைப்பு. பிற மொழிகள் அப்படியல்ல. ஆதலினால்தான் நாவலர் அவர்கள் முத்தமிழ் என்ற பெயரே தமிழின் சிறப்புக்கு எடுத்துக் காட்டு என்கின்றார். மற்றும் ஒன்று கூறினார்கள் நம் நாவலரவர்கள்: தமிழுக்கு வரும் இழுக்கு தமிழருக்கு வரும் இழுக்காகும் இந்த எச்சரிக்கை நம் நினைவில் இருக்கவேண்டும். தமிழ் என்றாலே தமிழ் மொழியை மட்டும் குறிப்பதோடு நிற்கவில்லை. தமிழ் என்றால் தமிழர்களையும் குறிக்கின்றது. செந்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து என்ற அடியில் வரும் செந்தமிழ், தமிழரைக் குறிப்பது காண்க, அன்றியும் தமிழ் என்ற சொல் தமிழர் படையையும் குறிக்கும். தென்தமிழ் ஆன்றல் காண்கு தும்யாம் என்று கனக விசயர்கள் கூறியதாக வரும் சிலப்பதிகார அடியில் தமிழ் என்பது தமிழர் படையைக் குறிப்பது காண்க! இதனாலும் தமிழுக்கு வரும் இழுக்கு தமிழருக்கும், தமிழர் படைக்கும் வரும் இழுக்கே என்பதை நாம் உணரலாம். இந்நாளில் நம் தமிழின் நிலை எவ்வாறுள்ளது? அந்நாளில் தமிழரசினரால் காப்பாற்றப்பட்ட தமிழ் இந்நாளில் காங்கிர அரசினரால் மாய்க்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நாளில் அரசியலாரின் புதுச்சட்டப்படி தமிழ் மாணவன், தன் தாய் மொழியாகிய தமிழை அறியாமலே, தமிழின் பகை மொழியா லேயே தேர்வுகளில் வெற்றி மாலை சூடிக் கொள்ளலாம். இதைவிடக் கேடான நிலை தமிழுக்கு ஏற்பட முடியாது. இன்றைய தமிழ் நாட்டின் ஆளவந்தார்களும் தம் ஓட்டர்களைத் தட்டிக் கொடுக்க எண்ணித் தமிழுக்குப் போட்ட விலங்கைத் தளர்த்த எண்ணினாலும் கெடுகெடு என்று தலைமை அரசியலார் கூறித் தமிழையும் ஓடு; தமிழைக் கெடுத்தவனையும் ஓடு என்று ஆணை யிட்டு விடுகின்றார்கள். மாலைமணியில் 500 திராவிட முன்னேற்றக் கழகக் கிளைக் கழகங்கள் கிளைத்துள்ளதாகக் காண்பேன். இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று பட்டேலும், சமகிருதம் படிக்க வேண்டும் என்று நம் கல்வி அமைச்சரும் சொல்லிய மறுநாள் மாலைமணியில் இன்றுவரை கிளைத் துள்ள கிளைக் கழகங்கள் 600 என்றிருப்பதைக் காணுவேன். ஆள வந்தார்களின் நிலை இரங்கத்தக்கது. எதற்காக இப்படி மக்கள் செல்வாக்கை இழக்கின்றார்களோ தெரியவில்லை. இதனால் நம் தமிழன்னைக்கு இந்நாட்டில் எந்தப் பற்றுக்கோடும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆதலால் தமிழன்னை இம் முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டை நோக்கி, உன் பற்றொழிய ஒரு பற்றுமில்லை உடையவனே என்று கூறுகின்றான். நாமே நம் தமிழைக் காப்போம்! நாமே தமிழ்த் தாயின் பகை யாயின் அனைத்தையும் தொலைப்போம். நாமே நம் முத்தமிழை அதற் குரிய இடத்திற் சேர்ப்போம். இம்மாநாடு இரண்டு நாளைய நிகழ்ச்சியோடு மட்டும் கலைந்து விடாது. புலவர் மணிகளையெல்லாம் ஒன்று படுத்தி நிலையான நிறுவனமாக இலக்கிய மாமன்றம் என ஒன்றை நிறுவுவது இம் மாநாட்டின் நோக்கம் என்று நம் நாளேட்டில் கண்டிருப்பீர்களே! இலக்கியம் இலக்கணம் என்ற சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல என்று நம் நாவலர்கள் கருதுவதாலும் முத்தமிழ்ப் பெருமன்றம் என்றே பெயர் வைக்கலாம் என்று நம் புலவர் நெடுஞ்செழியனார் முதலியவர்கள் ஒப்புக் கொள்வதாலும் இம்மாநாடு உண்டாக்கப் போகும் நிறுவனத்திற்கு முத்தமிழ்ப் பெருமன்றம் என்ற பெயரே வழங்குவதாக! அம் முத்தமிழ்ப் பெருமன்றம் செய்ய வேண்டிய வேலை என்ன? முத்தமிழ் விரவிய எத்துறையிலும் தலையிட்டுத் தமிழர் கலை, ஒழுக்கம், நாகரிகம் இவற்றிற்கு ஏற்ற வகையில் நிறுத்தும். இயற்றமிழ்ப் பெருநூற்கள் பிறழ்ந்த உரையினால் அடுக்காத வகையில் கருத்தைப் பரப்புகின்றன. அவைகளைத் திருத்தம் செய்ய வேண்டாமா? தொல்காப்பியத்துக்கு புத்துரை கண்டுள்ளார் நாவலர் பாரதியாரவர்கள். அவற்றுள் - ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்பது தொல்காப்பிய நூற்பா. இதில் பழைய உரைகாரரில் ஒருவர் உயர்ந்தோர் என்பதற்கு உயர்ந்த வருணத்தோராகிய பிராம்மணர் என்றும், மற்றொருவர் உயர்ந்த வருணத்தோராகிய பிரம்ம க்ஷத்திரிய வைசிய ஆகிய மூன்று பிரிவினர் என்றும் பொருள் கூறி யுள்ளார்கள். உண்மை கண்டு புத்துரை கூறவந்த நாவலர் கூறியதையும் நவிலுகிறேன். உயர்ந்தோர் எனப்பட்டவர் இங்கு பிராமணர் அல்ல: அன்றி க்ஷத்திரீய வைசியரும் அல்லர். இந்த நூற்பாவிற்கு முன்பாட்டில் தொல்காப்பியர் கூறிய கட்டாய பணியாளராகிய தாழ்ந்தோர் அல்லாத எல்லாத் தமிழ் மக்களும் ஆவார் என்று தக்க மேற்கோளுடன் எவரும் மறுக்க முடியாத வகையில் பொருள் கூறித்தமிழர் பெருமையைக் காத்துள்ளார்கள் பாரதியார் அவர்கள். அவர்கள் இதுவரைக்கும் அகத்திணையியல், புறத் திணை யியல், மெய்ப்பாட்டியல் ஆகியவை மூன்று சுவடிகளாக அச்சிட் டுள்ளார்கள். மற்றவையும் வெளிவரும். அவர்கள் இந்தப் புத்துரை செய்வதன் வாயிலாகத் தமிழுக்கும், தமிழர்க்கும் எத்தனையோ நன்மை செய்துள்ளார்கள். அப்புத்துரையைப் பாராட்டி மக்கள் அனைவரும் அதையே படிக்கவேண்டும் என்று வற்புறுத்த ஒரு முத்தமிழ்ப் பெருமன்றம் வேண்டுமன்றோ? இசைத் துறையில் வல்லுநர் பலர் தமக்குரிய புகழை அடையாத வாறு நிறச் செல்வாக்குத் தடைசெய்து கொண்டு வருவதை நாம் காண் கின்றோமன்றோ? தடை நீக்கி வழிவகுக்க முத்தமிழ்ப் பெருமன்றம் இன்றியமையாத தன்றோ? இந்நாட்டில் நாடகங்களின் நிலை எப்படி? மறைந்திருந்து வாலியைக் கொன்றவன் கதையையா இந்நாளில் நம் இளைஞர் காணும்படி விடுவது? அண்ணியார் மதியாத காரணத்தால் தான்பெற்ற ஏழு பிள்ளை களையும் அலற, அலறக் கிணற்றில் தள்ளியவளைக் கற்பலங் காரி என்று காட்டும் நாடகத்தையா நம் மகளிர் காணும்படி விடுவது? உடன் பிறந்தானின் உயிரையும் அவனின் நாட்டையும் பெருமை யையும் அயலான் காலடியில் வைத்த அறக்காடனை ஆழ்வான் என்று காட்டும் கதையைப் பார்க்க விடுவதுண்டா? தழைத்த குடித்தனத்தின் தலைமகனைக் குழம்பு வைத்துக்கொடு என்று மொழிந்த பண்டாரத்திற்கு அவ்வாறே வழங்கிய கதை வழக் கொழிந்து போனால் போதும் என்றால், கண்ணீரைப் பொழிந்துவிடும் ஆட்களுக்கு அறிவு புகட்ட முத்தமிழ்ப் பெருமன்றம் வேண்டுமா, வேண்டாமா? அந்நாள் வேண்டப்படுவனவாக இருக்கலாம். இந்நாள் அவை சற்றே ஒதுங்கித்தான் இருக்க வேண்டும் என்றால், இராமாயணத்தை - இராமாயண இலக்கியத்தை, பெரிய புராணத்தை - சுவை ஒழுகும் பாடல்களைக் குற்றம் சொல்வதா என்பார் சிலர். அந்தச் சிலரின் சொல்லில் உள்ள சிறுமையை, வஞ்சகத்தை விளக்கி முரசறைய முத்தமிழ்ப் பெருமன்றம் ஒத்தாசை செய்யுமன்றோ? கம்பராமாயணம் ஏறத்தாழ 12000 செய்யுட்கள் உடையது இல்லையாம். கம்பர் செய்தது மொத்தம் 3000தானாம் டி.கே.சி. பார்த் தாராம்! பார்த்ததால் தானே, அப்படியே அச்சிட்டும் வெளியிட்டார். அவர் வெளியிட்டதில் அவர் மேற்கொண்டுள்ள எழுத்திலக்கணம் எப்படி? சொல்லிலக்கணம் எப்படி? வாள்த்தடங்கண் - கல்த்தரை - என்றல்லவா எழுதுகின்றார். கம்பராமாயணத்தை மட்டுமின்றி, தமிழிலக்கணத்தையும் கொளுத்திய டி.கே.சி.யின் நிலை எப்படி? அய்யர் கூட்டத்திற்கு அப்பாவாம். டி.கே.சி.யை ஏன் கண்டிக்கவில்லை - தமிழன் முன்னேற்றத்தில் அக்கறையுடையாரின் செயலைப் பாருங்கள்! தமிழ் நூற்கள் அனைத்தும் ஆராய்ச்சி செய்யப்படுதல் வேண்டும். உரைத் தூய்மை உடனே வேண்டும். அவ்வழியிற் செலுத்தப்படும் தமிழ் மக்களை நல்வழிப் படுத்த, முத்தமிழ்ப் பெருமன்றம் வேண்டும். அது வாழ்க! - கோவையில் நடைபெற்ற முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் ஆற்றிய உரை, 15.2.1954 13. தமிழ்ப் பொழில் - அகமகிழ்விழா 21.2.1954 அன்று தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி ஆண்டுவிழாவில் பாவேந்தர் உரை யான் இதுகாறும் எத்துணை கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் சொற்பொழிவாற்றியிருக்கின்றேன். ஆயின் ஒரு கல்லூரித் தலைவரேனும், உயர்நிலைப் பள்ளியாசிரியரேனும், இனிய தமிழில் பிழையறப் பேசி யான் கேட்டேனில்லை. இக் கல்லூரியின் தலைவர் இனிய தமிழில் பிழையற அழகுறப் பேசினார். நான் அதற்காக மிக மகிழ்கின்றேன். இக் கல்லூரியின் தலைவர் சட்டசபை உறுப்பினர் என்பதையறிய மிகமிக மகிழ்கின்றேன். இற்றை ஞான்று தமிழ் மொழியின் நிலை மிகத் தாழ்ந்துள்ளது. தமிழர்களை ஆள்கின் றவர்கள் தமிழ் அறியாதவர்கள். தமிழ் அறிய விழையாதவர்கள். தமிழறிஞர்கள் இன்று ஆளும் உரிமை பெறவில்லை என்பது மிகமிக வருந்தற்பாலதாம். இக் கல்லூரியின் தலைவர் முன்னினைவுடனும், துணிவுடனும், திராவிடக் கட்சித் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் நிலைமையை அடைந்துள்ளார்கள். தமிழகம் நற்றவம் புரிந்துளதோ இல்லையோ? ஆயின் நற்றலைவரை அடையப்பெற்றுள்ளது எனலாம். கல்லூரியின் தலைவர் மிக நன்றாக இனிய தமிழில் பொருள் கனிய உரையாற்றுகின்றார். தமிழெனில் அவருக்கு உயிரெனத் தோன்றுகின்றது. மொழி எங்கு உயருமோ, அங்குதான் நாடு உயரும். தமிழ் மொழி முன்னேற்றம் பெறாதவரையில், மொழிக்கு இடையூறான தளைகள் அறுபடாதவரையில் தமிழகம் வேறெவ்வாற்றானும் முன்னேற்றம் பெற முடியாது. தமிழ் மொழியை உயிரினும் உர்வென வுன்னி அனைவரும் உவந்து பயிலவேண்டும். பயிலுதற்கு வாய்ப்பளிக்கவேண்டும். உலகையே யாண்ட வுயர்தமிழ் இன்றெய்தியிருக்கும் இழிநிலையை எண்ணின், நாணி ஒடுங்கி, அழியோமா என்று எண்ணவேண்டிய நிலையை எய்துவோம். திருக்கோயில்களில் தாய்மொழியாம் தமிழ்மொழி எங்ஙனம் பெருமைபடுத்தப்படுகின்றது? எண்ணிப் பார்த்தோமா? சிவன் வடமொழியைப் பாணினிக்களித்து அதனை ஒப்பத் தமிழ் மொழியை குடமுனிக்களித்தார் என்பர். குமரன் தமிழ் பயின்றவன். திருமால் தமிழ்நாட்டுக் கடவுள், இவர்களுக்குத் தமிழ் தெரியாதா என்ன? இவரிடத்துக் கூறி நிறைவை வேண்டும் தமிழன் இவர்களிடம் தன் மொழியில் கூற முடிகின்றதா? இடையில் ஒரு தரகர் இருப்பார் அவர் வடமொழியில் நமக்காகப் பேசுதல் (சிபாரிசு) செய்கின்றார். இதுவே தமிழ்மொழியின் நிலையினைக் காட்டுகின்றதன்றோ? துணியின் மாசு நீக்கும் வண்ணான் நம் அழுக்குத் துணியை இழிவுபடுத்தினால் நாம் பொறுக்கமாட்டோம் வந்த விருந்தினனின் மிதியடியை இழிவு படுத்தினால் அவன் பொறுக்கமாட்டான். ஆயின் உயிருக்கு நேராம் தமிழ் எங்கே எங்ஙனம் இழிவு படுத்தப்படுகின்றதென்பதை எண்ணிப் பார்த்தோமா? சிந்தித்திருந்தால் தரகருண்டா வடமொழிச் சிபார்சு உண்டா? மீறிச் சிவனே வந்தாலும் விடுவோமா? கோயில் ஒவவொரு வருள்ளத்தையும் பற்றிக் கொண்டிருக்கின்றது. அங்கு தமிழ் தலைகவிழ்ந்து நிலைகுலைந்து நிற்கின்றது. அடுத்துக் கல்லூரி, பள்ளிகளில் தமிழன் நிலைமையைப் பார்ப்போம். அங்கு தமிழுக்கு உயர்வுண்டா? தமிழாசிரியர்களுக்கு உரிமை யுண்டா? எவ்வித உரிமையுமற்றவராகவன்றோ இருக்கின்றனர். தமிழாசிரியன் எதற்கும் தலைமையாசிரியனையே எதிர்நோக்குவான். தமிழறியாத் தலைமையாசிரியரை ஏன் எதிர்நோக்கவேண்டும்? இந்த நிலைமை மாறவேண்டும். தமிழாசிரியர்களுக்கு நிறைந்த உரிமை யளிக்கவேண்டுமென்ற நோக்கம் ஆழ்ந்த கருத்துக்களை உட் கொண்டது என்பது அறிவார்க்குப் புலனாக வேண்டும். தமிழ் நூல்களுக்கு உரையியற்றுவோர், பொருந்தாத உரைகளை வலிந்து கொடாது தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப வரைதல் வேண்டும். நூலாசிரியன் உளத்திற்கு மாறான உரையை வரைதல் கொடிய செயலாகும். காட்டாக ஆதி பகவன் என்பதற்குப் பல்வேறான பொருள்களை வரைவர். ஆ என்பது பகுதி, தி என்பது தொழிற்பெயர் விகுதியாகும். (ஆதல் - பொருள்) தொழிலாகுபெயராய் நின்று மூலப் பகுதியை உணர்த்தியது. பகவன் என்பதில் பகவு, பகுதி, அன் ஆண்பால் விகுதியென்பர். உண்மை உரையையே கூறவேண்டும். பொய்யும் போலியுமான வுரைகளை வரைதல் பெருந்தீங்கு பயப்பதோர் செயலாகும். ஆ பயன் குன்றும். அறுதொழிலோர் நூன்மறப்பர். காவலன் காவான் எனின் என்பது குறள். இதற்கு உரையாற்றிய பரிமேலழகர் அரசன் செம்மையாக ஆளாவிட்டால் பசு பால் கறக்காது அறு தொழிலோர் அத் தொழிலைச் செய்ய் என்பார். வள்ளுவர் கருத்து இதுதானா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். உண்மையுரையிது வாகா. ஆவினது பயனை என ஆறாம் வேற்றுமைத் தொகை யாகக் கொள்ளின் ஆப் பயன் என ஒற்று மிகுதல் வேண்டும், மிகாமை யின் ஆகின்ற பயன் ஆன பயன். (ஆகும் பயன்) என்ற பொருளில் ஆ பயன் என்பதை வினைத் தொகையாகக் கொள்ளலே பொருந்தும் ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும கோவலர் எனும் சிலப்பதிகார அடியில் ஒற்று மிகுந்து ஆறாம் வேற்றுமைத் தொகையாதல் காண்க. எனவே, அரசன் செம்மையாக ஆளாவிட்டால் அவ்வாட்சி ஆகும் பயன் குன்றுமென்பது பொருளாம். பரிமேலழகர் கூற்றுப்படி அறு தொழிலான ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாம். ஆயின் பண்டைக்காலத்தே தண்டமிழ் நாட்டின்கண் இருந்த அறுதொழிலாவன உழவு, தொழில், வாணிகம், விச்சை, சிற்பம், வரைவு என்பனவாம். பண்டைக் கைத் தொழில்கள் வியாபாரம் எனும் தலைப்பில் ஆராய்ச்சித் தொகுதியில் மு. இராகவய்யங்கார் எடுத் தாண்டுள்ளமை காண்க. மேற்கூறிய ஆறுமே பண்டைய அரசியற் றுறைகளாகும். அவற்றின் தலைவனே வள்ளுவன் எனப்படு கின்றவனாவான் அதுவே வள்ளுவன் உள்ளமாகும். நாம் தூங்குகின்றோம் வேற்றுவர் இங்குவந்து தம் விருப்பப்படி தங்கள் கொள்கையைப் பரப்புகின்றனர். கோவில், பள்ளி முதலிய வற்றின் நிலை தமிழ் மொழியை நோக்கத் தாழ்ந்தேயுள்ளது. மிகத் தாழ்ந்தே உள்ளது என்னலாம். தமிழன் கேட்டவர்க்குக் கேட்டவை கோட்டமின்றி வழங்கும் தன்மையன். தமிழன் அன்பு காரணமாக ஏமாற்றம் அடைந்தான். வந்தவர்க்கெல்லாம் இடமளித்த தமிழன் இன்று வாட்டமுற்று கிடக்கின்றான். இன்று மாணவர்களிடை இலக்கணப் பயிற்சி மிகவும் குறைந்து காணப்படுகின்றது. இலக்கயம் தெளிவாகத் தெரியாது வேறு எவ்வளவு கற்றிருப்பினும் அதனால் பயன் யாதுமில்லை. தமிழில் சொல் ஒவ்வொன்றும் எதனை உட்கொண்டு நிற்கின்றதென்பதை இலக்கண அறிவின்றி அறியவியலாது தமிழ்ச்சொல்லை இலக்கய நெறியோடு ஆய்ந்து பார்த்தே தமிழரின் பண்பாட்டை அறியலாகும். காட்டாக நிலம் உள்பொருள் எனப்படும். நிலப் பகுதி அம் விகுதி அழியாதது என்பது பொருள். உலகம் என்ற சொல் உலோகம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்ததன்று. உலகம் உலத்தல் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்ததேயாகும். உலத்தல், துன்பத்தைக் கொடுப்ப தாம். அடுத்து, அமிழ்தம் என்ற சொல் அமிழ்து வினைத்தொகை நிலைத் தொடராகும். மேலிருந்து விழுகின்றதாகிய உணவு என்பதாம். (து - உணவு) இலக்கணமுடையோன் மழையென உணருவான். அமிர்தம் என்ற வடமொழியின் திரிபன்று குறளில் வானின்றுலகம் வழங்கி வருதலான் தானமிழ்தமென்றுணரற்பாற்று என்பதும் அது. நான் இங்கு பேசுங்கால் நம் தமிழ் மொழியின்நிலை என்ற முறை யாற்றான் பேசுகின்றேன். அரசியல் முறையிலன்று. இந்தியாவில் இரு பெரும் நூல்களுள்ளன. ஒன்று பகவத் கீதை வடமதுரைக்காதார மானவர் செய்தது. வடநாட்டார் அந் நூலின் முறைப்படி ஒழுகுவர் இப்பக்கம் மாதானுபங்கி என்பதால் நாம் வள்ளுவரையே பின்பற்றவேண்டும். நல்ல முறையில் தமிழ் செழித்து வளரத் தடைகள் இருத்தல் கூடாது. இலக்கணப் பயிற்சி வலியுறுத்தப்படவேண்டும். தெய்வம் என்ற சொல்லில் தெய், பகுதி; அம், விகுதி, வ், என்பது எழுத்துப்பேறு, இது வட சொல்லன்று. தெய்யென் கிளவி கொள்ளலும் கோறலும் என்பது பிங்கல நிகண்டு. தொல்காப்பியத்தில் வகர யகர மயக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் தெய்வம் என்ற சொல் காட்டப் பட்டுள்ளது. பண்டு அழிவுக் காட்சியை (தீ, பெருங்காற்று பெருமழை) தெய் என்ற சொல்லால் வழங்கி வந்தனர் (கள்வர் கொள்ளையிடலுமது) பிறகு மழை பின் பயனையுணர்ந்து நெருப்பின் பயனை யுணர்ந்து கருவிகள் பல செய்தனர். இவ்வாறு உயர்வு ஏற்படவே அவற்றை உயர்வாக எண்ணினார்கள். நிலவையும் கதிரவனையும் பாராட்டினர் ஆயினும் பழைய தெய் என்னும் பெயராலேயே அழைத்தனர். பின்னர் இவற்றையெல்லாம் ஆக்கி அழிக்கும் ஒன்றைத் தெய்வம் எனவும் கடவுள் எனவும் கொண்டனர். இவ்வாறு சொற்களைப் பகுத்துப் பகுத்து ஆய்ந்து ஆய்ந்து பொருகாண இலக்கணப் பயிற்சி எங்ஙனம் இன்றியமைதது என்பதனை யுணர்த்தவே இவ்வெடுத்துக் காட்டுகளைக் காட்டினேன். தமிழ்ப் பள்ளிகளில் கட்டாய இலக்கணப் பயிற்சி இருந்தாற்றான் மொழிப்பயிற்சி பயனுடையதாகவிருக்கும். நாடும் மொழியும் முன்னேறும். அடுத்தபடி இன்றைய படக் காட்சியின் நிலையைக் காண்போம். தமிழறியாதவனே இடம் பெறுகின்றான். இன்றியமையாச் சிறப்பின வாயினும் குன்றவருபவிடல் என்பது குறள். இக்கருத்தையுணரல் வேண்டும். தமிழன் பண்பாட்டைப் புண்படுத்தும் கொள்கைகளைக் காட்டக்கூடாது. புரட்சிக் கருத்தென்றால் என்ன? பொதுமக்களுக்கு நலம் நல்குவதெனத்தன்னால் கருதப்படும் கருத்தை ஒருவன் (சட்டத் தையும்) அரசியலாரையும் புறக்கணித்துத் தன்னலம் துறந்து செய்வதே யாம். தன் வயிற்றுக்காகவும், தன்னுடைய வாழ்வின் மேம்பாட்டுக் காகவும் சட்டத்தையும் அரசியலையும் புறக்கணிப்பது புரட்சியேயல்ல. இன்று கதை எழுதுவோன், வழிகாட்டி நடத்தவோன் யாவரும் தமிழ்ப் பண்பாட்டை அறியாதவர்கள். இன்று வாழ்க்கைநிலை, உணவு, படக்காட்சி, உடை, என்கின்ற முறையில்தான் அமைந்துள்ளது. உணவுக்குச் செலவிடும் பொருளைக்கூடப் படம்பார்க்க இன்றைய மனிதன் செலவிடுகின்றான். இந்த நிலை விரும்பத்தகாததாகும். தமிழ்நாட்டின் பண்பாடு, கலை முதலியவற்றைச் சிதைக்க இன்றைய படக்காட்சி பயனாகவுள்ளது. வெளிநாட்டான் ஒருவன் இந்த நிலையைக் கண்டால் தமிழகம் என்றொரு நாடுண்டு என்பதையே மறந்துவிடுவான். நல்ல இசை வளர்த்த தமிழ்நாட்டில் வர்ண மெட்டுகள் தோன்றியுள்ளன. அவை உள்ளத்தைத் தூண்டுகின்றனவா? படத்தில் லருபவர் அணிவது மேல் நாட்டுடை, ஆடுவது மேனாட்டு ஆடல், பேசுவதும் பிறிதோர் மொழியில். இசை விரும்பத்தக்கனவா? தமிழ்நாட்டிற்குரிய உடை, மொழி, நடை, ஆடல் அனைத்தும் அழிந்தனவேயோ? தமிழ்ப் படத்தில் நடிப்பவர் வேற்று நாட்டவர். அவர் எங்ஙனம் தமிழ்ப் பண்பாட்டை, உள்ளத்தை நடித்துக் காட்டுவார்? உணர்ச்சி எங்கே பிறக்கும்? எனவே தமிழின் பெயர் எத்துறையினும் இழிவுபடுத்தப்படுள்ளது. மறைக்கப்பட்டுள்ளது. இனி மதத்துறை. அங்குத் தமிழின் நிலையென்ன? ஆதீனத்தி லுள்ளவர்களைச் சமயச் சார்பாகக் கடவுள் அனுப்பியிருந்தால் மகிழ்வு. ஆயின் அங்ஙனம் அவர்கள் நடப்பதில்லையே. கட்டிட நிதிக்கு பொருள் உதவி வேண்டிய ஆதினத்தார் ஒருவர் வடமொழியிலன்றோ கையெழுத்திட்டிருந்தார். தமிழ் வடசொல்லிலிருந்து வந்தென்பர் வடவர். சோழவந்தான் சண்முகம் பிள்ளை இலக்கணக் கொத்திலுள்ள அச் செய்தியை மறுத்ததால், உடனே ஆதினத்தார் ஒருவரை அழைத்து வந்து சண்முகம் பிள்ளைக்குத் தொல்லைகள் அளித்தனர். எனவே மடாதிபதிகளும் தமிழன்பர்கள்போல நடிப்பரேயன்றி உண்மைத் தமிழ்க்காதலராகார். அடுத்து இன்றைய செய்தித் தாள்களை எடுத்துக் கொள்ளு வோம் வேற்று மொழியையே மிகுதியும் கலந்து எழுதுகின்றனர். நல்ல தூய அழகிய தமிழ்ச் சொற்களிருக்கும்போது வேற்றுமொழிச் சொற்களை நாடுதல் அறிவுடைமையாகுமா? எனவே நல்ல தமிரில் செய்தித் தாள்களை வெளியிடவேண்டும். தமிழ் மாணவர்கள் நன்றாக இலக்கணம் பயிலவேண்டும். தமிழர்கள் அனைவரும் தமிழ் கற்கவேண்டும் - அவ்வாறு கற்று மொழி யறிவு பெருகினாலொழிய மொழியும், நாடும் முன்னேறாது. (பின்னுரை) முற்கூறிய தளைகளெல்லாம் அறுபடுமாயின் வருங்கால இலக்கியம் வளமுடையதாகத் தூயதாக இருக்கும். இன்று தமிழில் நாம் எண் போடுவதில்லை. தாயை மறப்பதுபோலத் தமிழை மறந்து திரிகின்றோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் இன்று ஒரு கண்ணை இழந்துவிட்டோம். இன்னொரு கண்ணையும் இழந்து வருகின்றோம். நாம் மீண்டும் அவற்றைப் பெறுவோமா? பெற வேண்டும் பெற முயலவேண்டும். தமிழ் மொழியிலேயே அனைத்தையும் எழுதவும் பேசவும் வேண்டும். காட்டாகத் திருமண அழைப்பிதழ்களைத் தூய தமிழில் அச்சிடவேண்டும். தமிழறிஞர்களைக் கொண்டு திருமணம் செய்வித்தல் வேண்டும். வாழ்க்கையின் சிறந்த நிகழ்ச்சியாகிய திருமணத்தில்கூடத் தமிழ்மொழி யிடம் பெறவில்லையெனில் அதைவிடக் கொடிய செயல் வேற்ன்னுளது? இன்றைய தினம் நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்தப்படுவ தில்லை நாம் நம்முடைய குறைகளைக் கூறி முறை வேண்ட இடையில் வேற்று மொழி அறிந்த ஒருவர் வேண்டும்? என்ன இவ்விழிநிலை! தமிழ்நாட்டை ஆள்கின்றவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் பொதுமக்கள் நன்மை கருதி ஆள்கின்ற வர்கள் தொண்டு செய்கின்றவர்கள் தமிழ்மொழி அடிப்படையில் செய்யட்டும். மீண்டும் தமிழைத் தன் உயர்நிலைக் கிட்டுச் செல்க. தமிழ்மொழியின் மீட்சியைக் குறிக்கோளாக வைத்துப் பணியாற்றுக. மக்களை ஒன்றாகக் கூட்டவல்லது மொழியென்றேயாகும். எக் கட்சி யினரையும், எம்மதத்தினரையும் ஒன்றாக்கவல்லது மொழியேயாம். தமிழின் நிலை குலைந்தால் தன்னிலை குலைவதாக எண்ண வேண்டும் மொழியின் பெருமையே தன் பெருமையாகும். தமிழ் மக்கள் தமிழையறிந்து உணர்ந்து பெருமைசெய்யவேண்டும், கல்லூரியின் தலைவர் அறிஞர் சுயப்பிரகாசம் அவர்களை உள நிறைந்து பாராட்டுகிறேன். - தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச் சங்க திங்கள் வெளியீடு, ப.152-161, மார்ச்சு 1954. 14. சிறைமீண்ட பெரியார்க்குத் தில்லையில் வரவேற்பு ... புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையுரை: பெரியார் அவர்கட்கு முதற்கண் என் வணக்கம்! தாய்மார்களே, பெரியோர்களே, இன்று மாலை நம்மை மழை அச்சுறுத்தியது நேரு ஆட்சிபோல! நாம் அஞ்சிவிடவில்லை. அதற்கு மாறாக வெப்பத்தினின்று விடுதலை அடைந்தோம். இஃது நம் எதிர்கால விடுதலையைக் குறிப்பதாயிருந்தது. நிற்க: சிறைமீண்ட நம் பெரியார் ஏன் சிறைப்படுத்தப்பட்டார் என்பது உங்கட்குத் தெரியும். அவர்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகச் சாதி ஒழிந்தால்தான் இந்நாடு உருப்படும் என்று தொண்டாற்றி வருவதும் உங்கட்குத் தெரியும், சாதிக் கோட்பாடு இந்நாட்டில் இருப்பதால் இந்நாட்டு மக்களில் ஒருவர்க்கு என்பதின்றி எல்லோர்க்கும் தீமையும் பழியும் நீங்கப்போவதில்லை என்று பெரியார் எடுத்துக்காட்டி வருவதும் உங்கட்குத் தெரியும். உங்கட்குத் தெரியும் உங்கட்குத் தெரியும் என்கின்றேன் ஆயினும் உங்கட்குத் தெரியாதது ஒன்றுதான் உண்டு என்றும் நான் சொல்லப் பின்னிடமாட்டேன். அஃதென்னவெனில், நம் பெரியார், கட்சிகளால் மூடப்பட்டிருக்கும் தமிழர் எல்லோருக்கும் பெரியார். எல்லோருக்கும் தந்தை. எல்லோருக்கும் அன்னை என்பது மட்டும் உங்கட்குத் தெரியவில்லை. அவர் திராவிடர் கழகத்தார்க்கு மட்டுமா உரியவர்? அவரால் திராவிடர் கழகத்தார் மட்டுமா நலன் அடைகின்றார்கள்? இல்லவே இல்லை. அவர் என்ன சொல்லுகின்றார்? - தமிழர்கள் அனைவரையும் பற்றியுள்ள பழியும் வறுமையும் தொலையவேண்டும் என்று போராடு கின்றார் திராவிடர் கழக மக்களை மட்டும் நோக்கிச் சொல்வதா இச்சொல்? பெரியோர்களே! தாய்மார்களே! குடும்பத் தலைவன் தன் குடும்பத்தார்க்கேற்பட்ட பசித் தீத் தணிய இரண்டு மாகாணி அரிசி அளந்து கொடுத்தான். இந்த நிலையில் அவன் தன் குடும்ப நலனைக் கோரியவன் என்றால் பொருந்தும். அவ்வா றன்றி அக் குடும்பத் தலைவன் தொடர்ந்து ஆயிரமூட்டை அரிசியை நாட்டார் அனைவர்க்கும் அளந்துகொண்டே போனானாயின் அவன் குடும்ப நலனை மட்டும் கருதினான் என்பது பொருந்தாதன்றோ? அவன் நாட்டின் நலனைக் காத்தவன் ஆனான் அன்றோ! சாதி ஒழியவேண்டும். தமிழ்நாடு தமிழர்க்கு ஆகவேண்டும் எல்லோரும் வாழவேண்டும் என்பவர் இந்நாட்டில் பெரியாரன்றி வேறு எவர்? அவ்வாறாயின், தமிழர் அனைவர் நலனுக்கும் பாடுபடுபவர் பெரியார் ஒருவரே அன்றோ? பெரியார் திராவிடர் கழக மக்கட்கு மட்டும் உழைப்பவரா? திராவிடர் அனைவர்க்கும் தமிழர் அனைவர்க்கும் உழைக்கும் தமிழர் தலைவர் அன்றோ? தமிழர் காவலர் அன்றோ! தமிழரின் பன்னூ றாண்டின் தவப்பயன் அன்றோ! நீங்கள் ஏன் ஏமாறவேண்டும்? - அவர் தி.க. கட்சி. நீங்கள் எங்கள் கட்சியிலேயே இருக்கவேண்டும் என்று ஒரு கீழ்மகன் சொன்னால், நீங்களும் உங்களைக் குள்ளமாக்கிக்கொள்ள வேண்டுமா? பெரியார் அவர்களையும் குள்ளமாக்கிவிடலாமா? பெரியார் உண்மை கூறுகின்றார். சாதி இல்லை என்பதைவிட உண்மைக் கூற்று வேறு எது? சாதியைத் தொலையுங்கள் என்பதைவிட உண்மைத் தொண்டு எது? உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். என்பது வள்ளுவர் வாய்மை! தமிழர்கட்கு ஆன - இவ்வுண்மையை உளமாரச் சொல்லும் பெரியார்க்கன்றோ தமிழ்மக்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் கிடைக்கும்! பெரியாரை - அவர் அருங்கொள்கையை ஆதரிப்பதில் கட்சி ஒன்றா? அப்படி உங்களைத் தடுத்து நிறுத்தும் கட்சி ஒன்றும் இருக்கிறதா இந்த நாட்டில்? தாய்மார்களே பெரியோர்களே, எதிரில் நிற்கிறது நம் கடன்! அண்மையில் இருக்கிறது நாம் செய்யத்தக்க அருந்தொண்டு! அது தான் பெரியாரின் அடிபற்றுவது! அதுதான் இந்நாட்டை மீட்கும் அரும் பணியாகும். உங்களை எந்தக் கட்சியும் தடுக்கமுடியாது. ஒன்றுபட வேண்டும். பெரியார் சொல்லுக்காதரவு தருக. அவர் எழுத்துக்காதரவு தருக. அதாவது விடுதலையை எல்லோரும் படிக்க. அவர் நூற்களை அனைவரும் வாங்கிப் படிக்க. அவர் உடல் அசைவு ஒவ்வொன்றும் உங்களால் பின்பற்றப்பட வேண்டும். அவர் தமக்கென்று மூச்சுவிடவில்லை. அவர் காட்டும் வழி உங்கள் உயிருக்கு உடலுக்குப் பொருளுக்கு ஆக்கம் என்க. - குயில், கிழமை இதழ், 8.7.1958 15. சிற்றம்பலத்தில் முப்பெரு முழக்கம் பாவேந்தர் தலைமையுரை: மனிதன், விலங்கு பறவைகளினும் உயர்ந்தவன். எனின் காரணம், மனிதன் மொழியுடையவன் என்பதுதான். விலங்குகள் பறவைகளுக்கு மொழியில்லை ஆதலால் அவைகள் மனிதனைவிடத் தாழ்ந்தவைகள். மனிதன் பகுத்தறிவுடையவன் அதாவது மன அறிவு உடையவன் என்று கூறுவார்கள். இவ்வாறு மேலெழுந்த வாரியாகக் கூறுவதால் பயனில்லை. ஏனெனில், விலங்கு பறவைகளுக்கும் மன அறிவு அதாவது பகுத்தறிவு உண்டு. ஆயினும் விலங்கு பறவைகளுக்கு மன அறிவு அதாவது பகுத் தறிவு மலர்ச்சியடையவில்லை ஏனென்றால், அவைகளுக்கு மொழி யில்லை. மனிதனுக்கு மொழியே பகுத்தறிவை மலரச் செய்தது. அதாவது மனிதனுக்கு மொழிதான் மன அறிவை மலர்ச்சியடையச் செய்தது. மொழிப்பயன் இது மட்டுமல்ல. மொழியானது இனத்தைச் செய் கின்றது. தனி மனிதனால் ஆகாததை இனம் ஆக்கிவிடும். ஆதலால் இனம் என்பது தனி மனிதனுக்கு உறுதுணையாவது என்று அறிதல் வேண்டும். இன்னும் மொழியானது மனிதனுக்குப் புகழைச்சேர்க்கும். செல்வத்தைச் சேர்க்கும் அவனுடைய வரலாற்றை நிலை நிறுத்தும். மொழி என்பது, பேச்சும் எழுத்தும் ஆகும். இதன் வளர்ச் சியைத்தான் இலக்கியம் என்பார்கள். மொழியானது வளரும் இயற்கை யுடையது. தமிழனுக்குத் தமிழ்மொழி தமிழன் தோன்றிய நாளில் தோன்றி யது எனின், தமிழன் தோன்றியது, மக்கள் தோற்றத்தின் முதற்பகுதி என அறிதல் வேண்டும். எனவே தமிழ்மொழி முதன்மையானது. தமிழனுக்கு எல்லாம் செய்தது தமிழ் ஆனமை தெரிந்தே தமிழனைத் தொலைக்கத் தமிழைத் தொலைக்க வழிதேடுகின்றனர் வடக்கர். தமிழனுக்குள்ள தமிழ்ப்பற்றை வேரறுக்க வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியமும் தமிழும் தனிமொழியல்ல அவை வடவர் மொழியாகிய ஆரியத்தின் பிள்ளை என்று ஒரு வாய்ப்பட்டது போல் கூறி வருகின்றார்கள். இதன் பொருட்டு, வடவருக்குப் பெரும் பொருள் அளவில் செலவிட்டு வருகின்றார்கள். இந்தியை மிக முயன்று தமிழ்நாட்டில் புகுத்துவதும் இதன் பொருட்டேயாகும். திராவிட மொழி ஆராய்ச்சியின் பேரால் மீனாட்சிசுந்தரம், சேது ஆகிய இரு பிள்ளைகளையும் வடவர் ஆளாக்கி, தமிழை ஒழித்து வருவது இதற்குத்தான். தமிழ்நாடு மீட்சி அடையவேண்டும் என்பதற்குக் காரணம் ஆண்டு ஒன்றுக்கு 66 கோடி அயலார் கொண்டு போவது மட்டுமல்ல; அயலார் நம் மொழியை ஒழிக்கத் தொடங்கி - முயற்சியை விடாது செய்து வருகின்றார் என்பதுதான் முதன்மையான காரணம் என உணரவேண்டும். தமிழ் கொல்லப்பட்டால் தமிழினம் கொல்லப்பட்டதாகிவிடும் என்பதுதான் .. யின் முடிந்த எண்ணம். இதற்கோர் எடுத்துக்காட்டு: மேலும் உள்ள தமிழர்களிடமிருந்து பிரஞ்சுகால தமிழ்மொழி முற்றிலும் பறிக்கப்பட்டு வருவதால் 16. பெரியாருக்கு வெள்ளிவாள் பரிசளிப்பு பொதுக்கூட்டம் புரட்சிப் பாவேந்தர் உரைச் சுருக்கம் வாள் வெட்டுவது, துணிப்பது ஆகிய வேலையைச் செய்வது. வடவர்க்குத் தமிழகத்தின் மேல் இருக்கும் தொடர்பை வெட்டுபவர் பெரியார்தாம்! இதன் அறிகுறியாகவே, மாணவர்கள் பெரியார் அவர்கட்கு இந்த வெள்ளி நெடுவாளைப் பரிசாக்கி உயர்ந்தார்கள். பெரியார் வாழ்க! மாணவர் வாழ்க! சனார்த்தனம் இந்த இயக்கத்திற்கென வாழ்நாட்களைச் செலவிட்டு வருகின்றவர். படாடோபம் இல்லாமல் தொண்டாற்றும் செயல்வீரர். தன்னலங் கருதாதவர், ஆதலால் அவர்களுக்குப் பதக்கம் அளித்தது மிக்க பொருத்தமாகும். தெ.ஆ.மா. தலைவர் கிருட்டினசாமி தம் தலைமைப் பொறுப்பை நேரிய முறையில் நடத்திச் செல்பவர். அவரைத் தாழ்த்த வேண்டும். இவரை உயர்த்த வேண்டும் என்ற மனக் கோட்டம் சிறிதும் இல்லாமல் பொதுநலம் கருதியே தொண்டாற்றும் ஆற்றல் உடையவர். அவர்க்குப் பதக்கம் அளித்தது பொருத்தமே யாகும். தெ.ஆ.மா. தலைவர் கிருட்டினசாமி, தம் தலைமைப் பொறுப்பை நேரிய முறையில் நடத்திச் செல்பவர். அவரைத் தாழ்த்தவேண்டும் இவரை உயர்த்தவேண்டும் என்ற மனக் கோட்டம் சிறிதும் இல்லாமல் பொதுநலம் கருதியே தொண்டாற்றும் ஆற்றல் உடையவர் அவர்க்குப் பதக்கம் அளித்தது பொருத்தமேயாகும். என்று கூறி, பெரியார் அவர்களைப் பேசக் கேட்டுக்கொண்டார். பெரியார் ஏறத்தாழ இரண்டுமணி நேரம் பேசியதில் வியப் பொன்றுமில்லை. அத்தனை பெரிய கூட்டமும் ஆடாமல் அசை யாமல் மூச்சுத்தான் இருந்ததோ இல்லையோ என்னும்படி இருந்தது கருத்தாகக் கேட்டதுதான் வியப்பு! காரணம் என்வாய் இருக்கலாம்? பெரியார் அவர்களின் சொல் ஒவ்வொன்றும் சுவையான கருத்தைக் கொண்டிருந்ததுதான் என்க. காலைமுதல் இரவு 10.30 மணி வரைக்கும் மக்கள் அடைந்த முப்பெரு முழக்கமும் பெருமக்களுககுப் பெரும்பயனை விளைத்து விட்டது. இவ்வாறெல்லாம் முன்னின்று முயன்ற தெ.ஆ.மா. தலைவர் கிருட்டினசாமி அவர்கட்கும், மாணவர் தலைவர் சனார்த்தனம் பாலசுப்பிரமணியம், இரா. கோபாலகிருட்டினன், ம. சச்சிநாநந்தம், அ. பாலகிருட்டினன், மு. இராமசாமி முதலியவர்கட்குச் சிதம்பரம் கடமைப் பட்டதாகும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்நாடு! - கண்டெழுதுவோன், குயில், 2.12.1958 17. புதுவை வேதபுரீசர் நூல்நிலையத்தில் புலவர் குமாரசாமி அவர்கட்குப் பாராட்டுவிழா புரட்சிக்கவிஞர் தலைமையுரைச் சுருக்கம் அன்புள்ள சென்னை மாநில முதலமைச்சர் காமராசர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! இன்று நடைபெற இருப்பது புலவர் குமாரசாமி அவர்களின் பாராட்டு விழாவாகும். இவ்வாறு பாராட்டத் தகுந்த தகுதி, புலவர்க்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம். பிரஞ்சுக்காரர் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் புதுவையை ஆண்டார்கள். ஆயினும் அவர்கள் தமிழுக்கு ஒரு நிறுவனத்தையும் தோற்றுவித்தாரில்லை. பிரஞ்சு கலை இங்குப் பரவ வேண்டும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார்கள். தமிழுக்கு நிறுவனம் இல்லையே, வளர்ச்சியில்லையே என்று கேட்டால் துரத்திக் கொண்டு வருவார்கள். ஒருவர் தமிழில் புலமை பெற வேண்டுமானால் அவராகக் கையூன்றி எழுந்திருக்க வேண்டும். சென்னை முதலிய இடங்களில் போய்த் தேர்வுபெற்று வரவேண்டும். பிரஞ்சுக்காரர்தாம் தமிழ்வகையில் இப்படி நடந்து கொண்டார்கள். அதன் பிறகு ஆளவந்த இவர்களாவது ஏதாவது தமிழுக்குச் செய்தார்களா என்றால் இல்லவே இல்லை. சட்டமன்றில் முதற்காலத் தில் நான் (பாரதிதாசன்) தமிழுக்குக் கல்லூரி ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு போனேன். அது எல்லா ராலும் ஒருமுகமாக ஒத்துக் கொள்ளப்பட்டு நிறைவேறியது. அடுத்த ஆண்டில் அது செயலுக்கு வரும் என்றார்கள். பிறகு அடுத்தபடியாக வரும் என்றார்கள். இல்லை, தீர்மானத்தின் நகலாவது இருக்கிறதா? என்று சட்டசபை அலுவலகத்தில் தேடினேன். அத்தாள் கிழித்து எறியப்பட்டதென்று தெரிந்தது. தமிழுக்கு ஆட்சியாளரும், சட்டசபைத் தலைவர்களும், அமைச்சர்களும் செய்த நன்மை இப்படி! இவ்வாறு ஒரு பிடிப்பும் இல்லாத தமிழ் இன்னும் உயிருடன் இருந்து வருகிறது என்றால் - தமிழ்ப் புலவர் குமாரசாமி தாம் சென்ற கால் நூற்றாண்டாகப் பலவகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர். இன்று போர்த்தப்போகும் பொன்னாடையை யாரைக் கொண்டு போர்த்துவது? பொற்கிழியை யாரைக் கொண்டு கொடுப்பது! யார் தகுதியுடையவர்? தமிழை ஒழித்துக் கட்டும் புதுவையில் புலவர்க்குப் பொன்னாடை போர்த்த தமிழே தமிழகத்தில் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற சட்டம் செய்தருளிய புண்ணியவான் காமராசரைத் தேடிச் சென்றேன். நிலைமையைக் கூறிக் காமராசரை அழைத்தபோது அவர்கள் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்கள், நம் தாய் மொழியாகிய தமிழை இவ்வகை மனித முயற்சியால் காப்பாற்ற முடியுமே அல்லாது வரவேற்புரையில் சென்னியப்ப முதலியார் கூறியபடி தமிழுக்கும் தெய்வத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எண்ணி வாளா யிருந்து விடக்கூடாது. தமிழ் சிவபெருமானால் செய்யப்பட்டது - சிவபெருமானால் ஆராய்ந்து திருத்தம் செய்யப்பட்டது என்று கூறி மனநிறைவு அடைந்து தூங்கிக் கொண்டிருந்ததால் தான் இன்று தமிழின் நிலை வருந்தத் தக்கதாகி விட்டது. தமிழுக்கும் தெய்வத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் அந்தத் தெய்வம் ஏது? அப்படி ஒன்று இருக்கிறதா? இருந்தால், தமிழ்ச் சொல்லெல்லாம் வடசொல்லில் இருந்து வந்த தென்றும், தமிழே வடமொழிச் சிதைவென்றும், தமிழ் நாகரிகம் என்று ஒன்று இருந்ததில்லை: வடவர் நாகரிகத்தினின்றே தோன்றியதுதான் என்றும் கூறத் துணிவார்களா? துறக்கம் சுவர்க்கம் என்பதினின்று வந்ததென்று கூறுவார்களா? இந்தக் காட்டுமிராண்டி நம்பிக்கைகள் எல்லாம் ஒழியவேண்டும்; மக்கள் முயற்சி என்பதையே நம்பி முன்னேற்றமடையவேண்டும். புரட்சிக் கவிஞர் முடிவுரை (என விரிவாக பேசியபின் விழாக் குழுவினர் சார்பில் முதலமைச்சருக்கு வாழ்த்துரை ஒன்றும் படித்தார்.) கவியரங்கம் பற்றி முதல்வர் கூறியதை நீங்கள் மனதில் இறுத்த வேண்டும். எளிய நடை எல்லோருக்கும் புரியக்கூடிய நடை வேண்டும் என்றுதான் முதல்வர் குறிப்பிட்டார்கள். பாரதியார் குறுகிய காலத்தில் பெரும் புகழுக்குரியவர் ஆனார் என்றால் அவர் எளிய நடையில் அன்றைய தமிழர்க்குத் தேவையான கருத்தை வைத்துக் கவிதைச் சுவை கெடாத முறையில் பாட்டு எழுதியதால்தான். அதை விட்டுக் கடவுளை அடைவதற்கே வழிகாட்டும் பாட்டுக்களை எழுத எண்ணி யதே இல்லை அவர். நம் நாட்டை நாம் ஆள வேண்டும். தமிழன் கீழான நிலையை விட்டுத் தனக்குரிய இடத்தை அடைய வேண்டும் என்ற கருத்து மக்கள் உள்ளத்தைக் கவரக் கூடியதாகும். அத்தகைய கருத்தையும் தெளிவான - புரியத்தக்க வகையில் செய்யுள் இயற்றவல்லானை நோக்கிப் பெரும்புகழ் வந்து குவியக் கேட்பானேன். இதில் பாரதியாருக்கு எத்தனையோ எதிர்ப்புக்கள் இருந்தன. அதற்கெல்லாம் அவர் அஞ்சிவிடவில்லை. தமிழ் மொழியோ, தொன்மை உடையது; எந்தக் கருத்தையும் எளிய நடையில் சொல்லுதற்குத் தமிழ்போல் ஒரு மொழி கிடைப்பதும் அரிதன்றோ! அப்போதிருந்த (புதுவையில்) அரவிந்தர்கூட முதலில் தமிழ் வளமுடைய மொழி அல்ல என்றுதான் நினைத்திருந்தார். உணர்வும் அறிவும் வேறுவேறு பொருளுடைய தென்பதற்குத் தமிழில் ஆதாரம் உண்டா என்று பாரதியாரை அரவிந்தர் கேட்டார். அதுபற்றி வருந்தி யிருந்த பாரதிக்கு உணர்வு எனும் பெரும்பதம் தெரிந்து, நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் என்ற ஆழ்வார் செய்யுளை நான் நினைவுப்படுத்தி அரவிந்தர்க்கும் தமிழின் பெருமை விளங்கும்படி செய்ய நேர்ந்தது. பெரியோர்களே! தாய்மார்களே! உங்களுடைய பேராதரவாலும் நம் முதல்வர் திரு. காமராசர் தொல்லை நோக்காது இங்கு வருகைதந்து சிறப்பித்ததாலும் புலவர் விழா நன்முறையில் இனிது நிறைவேறிற்று. தமிழ் வாழ்க, தமிழகம் வெல்க, புலவர் குமாரசாமி வாழ்க (என முடிக்க - பெருமக்களும் தமிழ் வாழ்க என்ற வாழ்த்தொலி யுடன் பிரிந்தனர்.) - குயில், கிழமை இதழ், 10.2.1959 18. ஆம்பளாப்பட்டில் புரட்சிக்கவிஞர் (10.6.59 இல் (தஞ்சை மாவட்ட) ஆம்பளாப்பட்டில், தோழர் இராமலிங்கம் - பாப்பா ஆகிய இருவர்க்கும் தாலி கட்டுதலில்லாத - திருந்திய திருமணம் நடைபெற்றது. அதற்குத் தலைமை தாங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் வருமாறு:) ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளாக இதுபோன்ற திருந்திய திருமணத்தின் இன்றியமையாமை குறித்து, தந்தை பெரியார் அவர்கள் முழக்கம் செய்து வருகின்றார். தமிழனின் திருமணத்தைப் பார்ப்பனன் ஒருவன் முன்னின்று நடத்தி வைப்பதால் மணமக்களுக்கு ஏதோ பெருநலம் ஏற்படுவதாயும், அப்படி நடத்தாவிட்டால் ஏதோ குறை ஏற்படுவதாயும் மக்கள் எண்ணுகிறார்கள். அதுவே சரி என்று சொல்லும் தலைவர்களும் இருக்கின்றார்கள். நாமெல்லாம் தமிழர்கள் - நமது தாய்மொழி தமிழ்- இப்படிச் சொல்லும் ஒரு தமிழ், மகனின் திருமணத்தை நடத்த நாங்க ளெல்லாம் ஆரியர்கள் - எங்களது தாய்மொழி சமகிருதம்! என்று கூறும் ஒரு பார்ப்பானையா அழைக்க வேண்டும்? அவன் ஒன்றுந் தெரியாத ஒரே காரணத்தால் தானே தருப்பையும் கையுமாகத் திரிகின்றான். தமிழன் கட்டிவைத்த கோயிலால் தனது வயிற்றை நிறைத்துக் கொள்கிறான். நம்மால் வாழ்ந்தும், நம்மை மதிக்காதவன் பார்ப்பான் - அவனுக்குத் தமிழர்களாகிய நாம் ஏன் மதிப்பு தரவேண்டும்? ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது திருமந்திரம் அருளிய திருமூலரின் வாய்மொழி. ஒன்றே குலமும்! என்பதிலிருந்து நாமெல்லாம் ஒரு தாய் - மக்கள்; நமக்குள் சாதி பேதம் கிடையாது வயிற்று என்பதும், ஒருவனே தேவனும் என்பதிலிருந்து தெய்வம் ஒன்றே; நம் கண்ணுக்குத் தெரிவனவெல்லாம் தெய்வங்களல்ல என்பதும் பெறப்படும். எக்கட்சியைச் சேர்ந்தவராயினும் சாதி என்பதே கிடையாது என்ற ஆன்றோர்கள் சொல்லை ஒப்ப வேண்டும். அப்படி ஒப்புவதால் தமிழர்கட்கும் தமிழ் நாட்டுக்கும் விளையும் நன்மைகள் பலவாகும். தமிழ்நாடு மீளவேண்டும்; தமிழர்கள் தன்மானம் உள்ளவர்களாக வாழவேண்டும் என்பது நம் கருத்து. இதனை எதிர்ப்பவர்கள் தமிழர்கள் அல்லர்! மனிதர்கள் அல்லர். நமது கழகம் ஒரு கட்சியல்ல; இயக்கம். இயக்கமென்பது ஒரு நல்ல கருத்தை மக்களிடையே இயங்க வைப்பது. கட்சி என்பதோ பிளவு மனப்பான்மையை உண்டாக்குவது. எப்படியெனில் - எனக்கு ஓட்டுப் போடு - அவனுக்கு ஓட்டுப் போடாதே என்பதுபோல! இதுதான் கட்சி - திராவிடர் கழகம் - என்றாவது எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டதுண்டா? கிடையாதே. இதுதான் கட்சிக்கும் இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடு. இங்குக் குழுமியிருப்போரில் பலவிதமான கட்சிக்காரர்கள் இருக்கலாம். எவர் எக்கட்சியைச் சேர்ந்தவராயினும் மனமொத்துப் பல்லாண்டு வாழ்க வென மணமக்களை வாழ்த்து வோமாக. (புரட்சிக்கவிஞரவர்களின் முன்னுரை இவ்வாறு முடிந்தபின் - நாத்திகம் ஆசிரியர் இராமசாமி, பட்டுக்கோட்டை இரா.இளவரி, சி.நா.விசுவநாதன் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர். திருமணம் இனிது முடிந்தது.) - குயில் கிழமைஇதழ், கண்டெழுதுவோன், புதுவை, 16.6.1959 19. தன்மான உணர்ச்சி உள்ளவன் தமிழ்த் திருமணத்தையே விரும்புவான் புதுவைத் திருமணம் ஒன்றில் புரட்சிக் கவிஞரின் தலைமையுரை: (26.5.59இல் முருகையன் - பதுமாவதி, வேங்கடாசலம் அங்கயற் கண்ணி இவர்களின் திருமணம் புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. தலைமை தாங்கிய பாவேந்தர் அவர்களின் உரைச்சுருக்கம் வருமாறு:) ஒருவனும் ஒருத்தியும் தம்முள் மனம் ஒத்தபின் நிகழ்வதே மணமாகும். திருமணம் நடக்குமுன், மணமகனுக்கு மணமகள் ஏற்றவள் தானா? - மணமகள் மணமகனுக்கேற்ற குணநலம் வாய்க்கப் பெற்றவளா? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். நமது மூதாதையர்கள் திருமணமும் இப்படித்தான் நடந்ததென அறிகிறோம். அவர்கள் தம் திருமணத்தில் பார்ப்பானுக்கு முன்னிடம் கொடுத்தது கிடையாது. பொன்னையும், பொருளையும் அள்ளித்தந்து, திருமணத்தை நடத்தித் தர அவனை அழைத்ததும் கிடையாது. அவர்கள் இது நல்லது - இது தீயது என எவற்றையும் பகுத்தறியும் ஆற்றல் படைத்தவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர்கள் பார்ப்பானை முன்வைத்து நடத்துவதால், மணமக்களுக்கு நல்லது விளையும் என்னும் மூடநம்பிக்கைக்கு இடம் கொடாதவர்களாக வாழ்ந்தார்கள். திருமணத்தில் பார்ப்பானுக்கு முதலிடம் தந்து நடத்துவதை - எது நன்று - எது தீது என்று பகுத்தறியும் ஆற்றல் இல்லாதவர்கள் ஆதரிப்பார்கள். தன்மான உணர்ச்சி உடையவர்கள் தமிழ்த் திருமணத்தையே விரும்பிச் செய்வார்கள். ஆயிரக்கணக்கான தமிழ்த் திருமணங்களை நான் நடத்தி வைத் திருக்கிறேன். அந்த மணமக்கள் எந்தவித நலக்குறைவுமின்றி இன்றும் வாழ்கிறார்கள். ஊர்ப்பானை உருட்டுகின்ற பார்ப்பான் முன்னின்று நடத்துவதாலேயே திருமணமக்கள் பெருநலம் அடைகிறார்கள் என எண்ணுவது தவறு! தேவர்கள் சாட்சியாகத் திருமணத்தை நடத்துகிறான் பார்ப்பான். அவன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கங்கை நீரை வரச் செய்கிறான் என்பதெல்லாம் புரட்டு - அவற்றை அப்படியே நம்புவதெல்லாம் முட்டாள்தனம். பார்ப்பான் தமிழனுக்கு நேர் விரோதி. நமது மொழி, கலை, நாகரிகம் இவற்றை ஒழிப்பதே அவனது நோக்கம். அப்படிப்பட்ட வனை வைத்தா திருமணத்தை நடத்துவது? எந்தத் தமிழ் மகனும் அப்படி நடத்திக் கொள்வதை ஒப்பமாட்டான். ஒரு பார்ப்பானுக்கு வெறிபிடித்தால் வெளியில் கிடப்பதை எல்லாம் உள்ளுக்கிழுத்துப் போட்டுக் கொள்வான்! அதேபோல ஒரு தமிழனுக்கு வெறிபிடித்தால் உள்ளுக்கிருப்பதை எல்லாம் வெளியில் இழுத்துப் போடுவான் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்! இதையெல்லாம் தமிழர் நன்கு உணர வேண்டும்! வாழ வேண்டும். நமது தாழ்வில் மகிழ்வு கொள்ளுபவன் ஒழிக்கப்பட வேண்டும்! - இந்தச் செயலுக்குத் தமிழர் என்று முன் *tªjhnuh அன்றுதான் தமிழகம் மீளும் - தமிழ்மொழி தழைக்கும். மணமக்கள் - அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின் சொல்லுக்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். (இவ்வாறாகத் தலைவர் முன்னுரை முடிந்ததும், புலவர்கள் ஆறுமுகம், கருணானந்தம் முதலானோர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். திருமணம் இனிது முடிந்தது.) - கண்டெழுதுவோன், குயில், கிழமைஇதழ், 30.6.1959 20. புனிதா நாட்டிய அரங்கேற்று விழா 7 வயது சிறுமியின் ஆடலில் எக்குறையுமின்மை 27.11.1960 அன்று சென்னை வாணி மகாலில் மாலை 6.30 மணி யளவில் ஆ.சு.சு. புரொடெக்ஷன்ஸ் மேனேஜர் திரு.சண்முகம் (சாம்பு) அவர்களின் பேத்தி இளையாள் புனிதாவின் நாட்டிய அரங்கேற்றம், சென்னை போலீஸ் டெபுட்டி கமிஷனர் திரு.வி. குழந்தை வேலு, பி.ஏ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வரங்கேற்ற விழாவிற்கு நகரப் பெருமக்கள் பெரு மளவில் வந்திருந்தனர். சிறுமி புனிதா, திரு. முத்தையாபிள்ளை, திரு. கிட்டப்பா பிள்ளை, திருமதி. கமலாம்பாள் ஆகியோரின் மாணவி என்பதை முற்கூட்டியே அறிந்திருந்த பெருமக்கள் புனிதாவிடத்தில் ஆடற் கலையின் திறத்தை எதிர்பார்த்தனர். மக்கள் தாம் எதிர் பார்த்தை விட அதிகமான திறமையைக் கண்டு வியப்புற்றார்கள். சிறுமி புனிதா ஏறத்தாழ 2.30 மணி நேரம் வரிசைப்படி ஆடியதில் எப்பகுதியிலும் எந்தத் தவறும் உண்டாகவில்லை. நாட்டிய முடிவில் தலைவர் குழந்தைவேலு அவர்கள் தமது தலைமையுரையில் சிறுமியின் நாட்டியத் திறமை பற்றி மிகவாகப் பாராட்டிப் பேசினார்கள். அதோடு அன்னார், சிறுமியின் நாட்டியத் திற்கெனப் பாடிய முதல் மூன்று பாடல்கள் தெலுங்கில் அமைந் திருந்ததைக் குறிப்பிட்டு, அவை தமிழிலேயே இருந் திருந்தால் மிக நன்றாகவிருக்கும் எனக் கூறியது குறிப்பிடத் தக்கதாகும். அடுத்தபடியாக, திரு.ஜெமினிகணேசன் சிறுமியை வாழ்த்து முகத்தான் ஆடல் திறத்தை இனிய முறையில் எடுத்துக்காட்டிப் பாராட்டினார்கள். மூன்றாவதாகப் பாராட்டிப் பேசிய நடிகவேள் எம்.ஆர். இராதா பேசுகையில், பொதுவாகக் குடும்பப் பெண்கட்கு நாட்டியப் பயிற்சி முதலியவற்றை அளிப்பதை நான் எதிர்ப்பவனாயினும், நாட்டிய நடிகைகள் என்ற குளநீர் வறண்டு போகாமல் ஊற்றெடுக்கும் முறையில் தோன்றிய இந்த இளைய நாட்டியக் காரிகையை நான் மனமார வரவேற் கின்றேன் என்பது முதலாகப் பேசிச் சிறுமிக்கு வாழ்த்துக் கூறினார். கடைசியாகச் சிறுமியைப் பாராட்டிப் பேசிய கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சொற்பொழிவின் சுருக்கம் வருமாறு: - (தொடரும்) குயில், கிழமை இதழ், புதுச்சேரி, இசை 24-25; குரல் 3; 6.12.1960 நாட்டிய அரங்கில் கவிஞர் சொற்பொழிவு: புனிதாவின் ஆடல் திறத்தைத் தலைவரும் திரு.ஜெமினி கணேசன் அவர்களும் நடிகவேளும், மனமாரப் புகழ்ந்து பேசினார்கள். அவர்கள் புகழ்ந்தது போதுமா என்று நான் கேட்கிறேன். ஆனால் அதைவிடப் புகழ்கின்ற என் உள்ளத்தை அப்படியே வெளிக்குக் காட்டவும் என்னால் முடியவில்லை. ஏழாண்டு சிறுமி, ஏதும் தவறின்றித் திறம்பட ஆடியதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? அந்தச் சிறுமி தன் பரம்பரை யிடத்திலிருந்த ஆடற்கலைக் குரிய அடிப்படைத் திறமையைக் கையோடு வாங்கிக்கொண்டு உலகில் பிறந்தாள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. புனிதா நீண்ட ஆயுள்பெற வேண்டும்; பெரும்புகழ் பெறவேண்டும். பெற்றோருக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர், ஆசிரியைகட்கும், பெரும்புகழும், நீடித்த ஆயுளும் பெற வேண்டும். இந்நாட்டு மக்களின் பெயரால் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டுமானால் ஆட்டிவைத்த ஆசிரியர் மூவர்க்கும்தான் சொல்ல வேண்டும். நிற்க, நான் இந்தக் கொட்டகையில் புகும் போழ்து ஒரு தோழர் என்னிடம் நடிகவேள் இராதா அவர்கள் மழையால் வாதையுற்ற மக்கட்கு உதவிபுரிந்த நடிகர்களைக் குறை கூறினார், அது பற்றி உங்கள் கருத்தை விளக்க வேண்டும் என்று கேட்டார். அது பற்றி நான் இங்கு சில கூற ஆசைப்படுகிறேன். மழை ஏறத்தாழ 22 நாள் பெய்தது. அது அதிகம் பெய்து விட்டதாகச் சொல்ல முடியாது. அப்படியிருக்க மக்கட்குத் தொல்லை ஏற்படக் காரணம் என்ன? நீர்த்தேக்கங்கள் ஆழ மண் எடுக்கப் படவில்லை. அவற்றின் கரைகள் உயர்த்தப்படவில்லை. குடிசைகள் பள்ளத் தாக்கில் கட்டப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட வில்லை. இவைகள் தாம் தொல்லைக்குக் காரணம். ஆட்சி யாளர்கள் முதலிலேயே எண்ணி இயற்றப்பட வேண்டியவைகள் இவைகள். செய்தார்களா? ஏன் செய்யவில்லை? பழந்தமிழ் நூற்களில் தமிழரசர்கட்குத் தமிழ்ப் புலவர் மண் எடுத்தல் முதலிய வற்றில் விழிப்போடிரு என்று கூறியிருப்பதை இன்றும் காணலாம். அரசினர் அதனைக் கவனிப்பதில்லை. ஏன்? தமிழுக்கு அவர்கள் மதிப்பே தருவதில்லை. தமிழும் அவர்கட்குத் தெரியாது, அறிவுள்ள நடிகர்களாவது இந்நினைவை அரசினர்க்கும் மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டாமா? அவர்கள் தொல்லைப்பட்டு வந்தார்கள். இந்தக் கொடையாளிகள் பணத்தையும், சோற்றையும் தூக்கிக் கொடுத்தார்கள். இதனால் அரசினர் செய்யவேண்டிய கடமைகளை நினைவுறுத்தாது விட்டார்கள். கொடை கொடுத்த நடிகர்களைக் கேட்கிறேன் ஏன் கொடுத்தீர்கள்? மழையால் துன்புறுகின்றவர்கள் சற்றே துன்புறும்படி விட்டுப் பாருங்கள். என்ன ஆகும்? கடமை மறந்த அரசினர்மேல் பழியுண்டாகும். அதனால் அவர்கட்கு நல்லறிவு உண்டாகும். சரி, இப்போது சோறு போட்டீர்கள், பணம் கொடுத்தீர்கள் அதன் பிறகு அரசினரும் 15. ரூ. கொடுக்க முடிவு செய்துள்ளார்கள். பல ஆண்டு கட்கு முன்னமே ஏறத்தாழ 100 கோடி ரூ. செலவிட்டு ஊர்ப் பள்ளத்தை மேடு செய்திருக்கவேண்டிய அரசினர், நீர்த் தேக்கங்களை ஆழப் படுத்த வேண்டிய அரசினர், அவற்றின் கரையை உயர்த்தவேண்டிய அரசினர், இழந்த குடிசையின் உடையவர்கட்குக் கொடுக்க எண்ணி யுள்ளது 15ரூ. நீங்கள் இதுவரை உடனடியாகக் கொடுத்தது பல லட்சம். அடுத்தபடியாக மற்றொரு மழை இந்த அளவிலேயே பெய்தால், இது போலவே தான் குடிசைகட்குத் தொல்லை உண்டாகும். நீங்கள் உடனே சோறு போடவேண்டும். உடனே பணம் கொடுக்க வேண்டும். உடனே துணி கொடுக்கவேண்டும். மூலாதாரமான தவறுக்குக் கழுவாய் உண்டாகவில்லை. கொடை கொடுத்த நடிகர்க ளாவது அரசினர் இவ்வாறு கண்மூடிக் கொண்டிருந்தது தவறு என்று சொல்லிக் காட்டினார்களா? அதுவுமிலை இவற்றை எல்லாம் எண்ணித்தான் M.R.ïuhjh கொடை கொடுத்த நடிகர்களை குறை கூறினாரேயல்லாமல் இல்லாதவர்க்கு ஈதல் வேண்டும் என்ற அடிப்படையை அவர் மறுக்கவில்லை. இராதாவைச் சிறுவயது முதல் நான் அறிவேன். அவர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர். பெரியோ ரிடத்தும் நிரம்பக் கேள்விச் செல்வம் பெற்றவர். நான் கூட வீடிழந்தவர்கட்குப் பேருதவி புரிந்த நடிகர்களை என் மனதார வாழ்த்துவது போலவே அறிவுரை கூறிய இராதா அவர்களை யும் வாழ்த்துகிறேன் என்று கூறி முடித்தார். நன்றி கூறுதலுக்குப் பின் புனிதவதியை வாழ்த்திய வண்ணம் பெருமக்கள் பிரிந்தார்கள். - குயில், கிழமை இதழ், புதுச்சேரி, இசை 24-25; குரல் 3; 13.12.1960 21. ம.பொ.சி.யை வள்ளுவரே வாழ்த்தினார்! இங்கே நாம் கூடி இருப்பது நம் சிவஞானம் அவர்களை வாழ்த்துவதற்காக. சிவஞானம் என்று சொல்லும்போது எல்லோருக்கும் சிவ உணர்வு வருவதில்லை; தமிழ் உணர்வுதான் வரும. சிவஞானம்என்று சொன்னவுடன் சிலம்புச் செல்வர் நினைவுதான் வருகிறது. எனக்குத் தெரிந்து இருபது ஆண்டு காலமாக நம்முடைய சிவஞானம் தமிழுக்கே உழைத்து வருகிறார். அவருடைய பெயரை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு இருக்கும் வகையில் தமிழ்த்தொண்டே செய்து வருகிறார். தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காக நம் சிவஞானம் செய்யும் தொண்டு மறக்கக்கூடியது அல்ல. சிவஞானம் என்ற பெயரில் இந்த நாட்டில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால், நம் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்கள் தமிழர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவர். அந்த அளவுக்குத் தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காகத் தொண்டு செய்து வருகிறார். இப்போது தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்குத் தொண்டு தேவைப்படுகிறது. மற்றவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்க அவசியம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் அடைந்து வரும் இன்னல் சிறிதன்று. இந்த நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட, தமிழுக்காகப் பரிந்து பேச முன்வரவில்லை. நம் நாட்டில் பலகட்சிகள் இருக்கின்றன. ஆனால் தமிழை முன் வைத்துத் தொண்டு செய்ய அவர்கள் முயலவில்லை. நம் சிவஞானம் அன்று முதல் இன்று வரை தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காகத் தொண்டு செய்கிறார். அன்று அவர் கிழித்த கோட்டிலிருந்து தவறவில்லை. இங்கே நாம் இரண்டு காரியங்களுக்காகக் கூடி இருக்கிறோம். ஒன்று நம் சிவஞானம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்த. இரண்டாவ தாக, நம் சிவஞானம் ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்துக்கு நாம் மனமார ஆதரவு தெரிவிக்கவும் கூடி இருக்கிறோம். சிவஞானம் அவர்களை வாழ்க என்று நாம் வாழ்த்துவதற்கு நமக்கு வள்ளுவர் வழிகாட்டி இருக்கிறார். எப்படி என்றால், அவர் ஒழுக்கம் உள்ளவர். ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார் என்று திருவள்ளுவர் பாடி இருக்கிறார். சிவஞானம் அவர்களிடம் சிகரெட், பொடி, மது போன்ற ஒழுக்கக் கேடுகள் இருந்து நான் பார்த்தது இல்லை. இரண்டாவது இல்லற ஒழுக்கம். இவைகளை நம் சிவஞானம் கடைப்பிடித்து வருகிறார். பலர் கட்சிச் செல்வாக்கை வைத்துக் கொண்டு கெட்ட வழியில் செல்வார்கள். ஆனால், நம் சிவஞானம் எப்போது கோடு கிழித்துக் கொண்டாரோ - திட்டம் வகுத்துக் கொண்டாரோ அதில் இம்மியும் பிறழாமல் இருக்கிறார். இல்லற ஒழுக்கம், அரசியல் ஒழுக்கம் நிரம்பப் பெற்றவராக இருக்கிறார். அவரை நாம் வாழ்த்துவதை விட - குறிப்பாக, திருவள்ளுவரே வாழ்த்திவிட்டார் நீடு வாழ்வார் என்று. மனிதன் ஒழுக்கத்துடன் தவத்தைச் செய்து வந்தால் நீண்ட நாள் வாழலாம். இது தமிழர் கொள்கை. சிவஞானம் எதற்காக உழைக்கிறாரோ, அந்தக் கொள்கை நெறிக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அதில்தான் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். தமிழ் மொழிக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டு காலமாக தமிழ் நெருக்கடியில்தான் இருந்து வருகின்றது. இன்னும் அந்த நெருக்கடி அற்றுப் போகவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தியதால் தமிழுக்கு ஏற்பட்ட நெருக்கடி மிகப் பெரியது. மாதர்கள்கூட நூற்றுக்கு இருபத்தைந்து சதவிகிதம் தான் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். 75 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். சென்னை நகர மக்கள் நாட்டுப்புறத்திற்குப் போனால் அங்குள்ள மக்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். காரணம், நாட்டுப்புற மக்களுக்கு இடை இடையே ஆங்கிலத்தைக் கலந்து பேசத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் அவர்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். இதைக் கூர்ந்து கவனித்த நம் சிவஞானம் ஆங்கிலத்தைப் பரவவிடாதே என்று சொல்லுகிறார். ஆங்கிலத்தை நாம் எதிர்க்க வேண்டும். சிலர், இந்தி, ஆங்கிலம் இரண்டும் வேண்டாம்; தமிழ் போதும் என்கிறார்கள். சிலர், இந்தி வரவேண்டாம் என்று சொல்லுகிறார்கள். சிலர், தமிழ், ஆங்கிலம் என்று சொல்லுகிறார்கள். மூவர் சொல்வதும் விஷயம் ஒன்றுதான். இப்படி மூன்று கட்சிகள் இருக்கின்றன. தமிழ் ஆட்சிமொழியாக, பாடமொழியாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதோ பேதப்பட்டு இருக்கிறார்கள். அதை நீங்கள் உணர்ந்து சிவஞானத்தை ஆதரிக்கவேண்டும். நாட்டுக்கு ஏற்பட்டுள்ள தீமை நீங்க வேண்டும். தமிழுக்கு, தமிழகத்திற்கு, தமிழருக்குத் தொண்டு செய்ய சிவஞானம் அவர்கள் நீண்டநாள் வாழ வேண்டும். நாம் அவருடைய கருத்துக்கு ஆதரவு தர வேண்டும். இப்படிப்பட்ட புண்ணியவான்களுக்குப் பின்னால் நம் ஒற்றுமையை ஏன் காட்டக்கூடாது? சிவஞானம் அவர்களின் கொள்கையைக் கொண்ட இரண்டு கட்சிகள் இருக்கின்றன. அவர்களை இங்கே காணோம். மற்ற ஒரு கட்சி வராது. அதை நினைத்து வருத்தப்படத் தேவை இல்லை. கட்சிகள் நாட்டு ஒற்றுமையை முன்வைத்துப் பணியாற்ற வேண்டும். இதற்கு இன்னார் தலைவரா? நாம் இரண்டாம் பட்சமா? என்று நினைத்தால் எங்கே உருப்படுவது? நமது ம.பொ.சி. நீண்டநாள் வாழவேண்டும். அவரது கருத்துக்கு நாம் பேராதரவு தரவேண்டும். (26.06.1963-இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடந்த ம.பொ.சி.யின் 58-ஆவது பிறந்த நாள் விழாவின்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிகழ்த்திய தலைமையுரை.). 22. பெரியார் பாதையில் செல்லுங்கள் 13 ஆண்டுகளுக்கு முன், 1957ஆம் ஆண்டு பிராமணாள் உணவு விடுதிகளுக்கு எதிராக தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டத் தீ தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம் கொழுந்துவிட்டு எரிந்த நேரம். இந்தப் பின்னணி யில் 23.6.57 அன்று குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் புரட்சிக்கவிஞர் ஆற்றிய வீர உரையின் பகுதிகள் இவை: இப்போது பார்ப்பனர் உணவு விடுதிகளில் உண்ணக் கூடாது என்று பெரியார் அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இதில் மாணவர்கள் முற்றிலும் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்கலாம். அரசியலாரை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் மக்கள் மட்டுமே கலக்க வேண்டும். எந்தப் பகுதியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பெரியார் அவர்கள் கூறுகிறார்களோ அதில் கலந்து கொள்ளக்கூடாது. நம்முடைய சீர்திருத்தப் போராட்டத்திற்கு வேண்டிய கிளர்ச்சிகள் உங்களிடமே உள்ளன. எத்தனை முயற்சிகள், எந்தெந்த முயற்சிகள் உண்டோ அத்தனை முயற்சிகளையும் கையாள வேண்டும். இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக்கப்பட்டு ஒன்று நமக் கென்றும், மற்றொன்று பார்ப்பானுக்கு என்றும் கூறப்பட்டால் சும்மா விடலாமா? இதுபோன்ற சின்ன தகராறுக்கெல்லாம்கூட பெரியாரிடம் செல்லலாமா? நாமே இதற்கு முடிவு கட்ட வேண்டும். பெரியார் பாதையில் செல்லுங்கள்: ஆகையினால் தோழர்களே! அரசியல் பகுதி எது, சமூகப் பகுதி எது என்பதை நீங்கள் நன்கு அலசிப் பார்த்துப் போராடவேண்டும். இப்படிப்பட்ட சமுதாயத் துறையில் பெரியாருக்கு முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு. நீங்கள் அவர் வழி நிற்க வேண்டும். அவர் பாதையில் செல்ல வேண்டும். தியாகத்தால் வளர்ந்த இயக்கம்: சிதம்பரம் பக்கம் பாதூர் என்ற ஊரில் ராஜன் என்ற வாலிபர் இருந்தார். இந்த இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர். அந்த ஊரிலே நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றைப் போட்டார். அதற்கு அந்த ஊரில் உள்ளவர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? நீங்கள் சற்றுக் கவனமாகக் கேளுங்கள். அவருடைய மனைவியைத் தூக்கிச் சென்றனர். அவரையும் அடித்து ஊரை விட்டு விரட்டினர். அவருடைய வீட்டைப் பிடுங்கிக் கொண்டு அவருடையது அல்ல என்று சொல்லிவிட்டனர். தாய், பாட்டி முதலியோரை ஊருக்கு அனுப்பிவிட்டனர். கடைசியிலே மானத்திற்கு இழுக்கு வந்ததை எண்ணி எண்ணி ஏங்கிய அந்தத் தமிழன், தஞ்சைக்கருகில் உள்ள கல்லூரிக்குப் பக்கத்தில் தூக்கு போட்டுக் கொண்டு மாண்டார். அதைப் போல பல உத்தமர்கள் தியாகம் செய்து வளர்த்த இயக்கம் இது. எதிரியின் பெரும் சதி: சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும் சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணி பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பெரிதும் விரும்பினார்கள். பெரியார் அவர்களும் வர ஒப்புக்கொண்டார். ஆனால் சனாதனிகளும் தீட்சதர்களும் எதிர்ப்பை பலமாக ஆரம்பித்துவிட்டார்கள். அன்றைய தினம் கலகம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். ஒவ்வொருவனிடமும் கல், தடி, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அன்று பெரியாரை ஒழித்துவிடுவது என்றே திட்டமிட்டு விட்டனர். நிலைமை மிகமிக பயங்கரமாக இருந்தது. நாங்கள் பத்துப் பேர்கள் போயிருந்தோம். இந்நிலையை பார்த்து விட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய் பெரியார் வந்ததும் திரும்பிப் போகச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டிக் கொண்டு ரயிலடிக்குப் போனோம். பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம். பெரியாரின் ஆண்மையும் வீரமும்: ஆனால் வருகிறேன் என்று கூறியிருந்த வண்டியில் வந்திறங் கினார். உள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக் கொண்டே விடு, விடு என்று ஊருக்குப் போனார். போக வேண்டாம், ஆபத்து, ஆபத்து என்று நாங்கள் கூறியதைக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக் கூடாது என்று பயந்தோமோ அதே இடம். போலி களின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்துவிட்டது. போலீகாரர்களின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்துவிட்டன. இன்று என்ன செய்யப் போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை. எதிரிகளின் மனத்தையும் ஈர்த்த பேச்சு: இந்த நிலையில் பேசவும் ஆரம்பித்துவிட்டார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக - உள்ளம் கவரும் விதத்தில் பேசினார். உங்கள் பையன் ஒருவன் படித்திருக்கிறான். பார்ப்பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றுதானே? ஆனால் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக்குக் கிடைக்கும்? இதைத்தானே கூறுகிறேன் என்றார். உயர்ந்த கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம்பித்தன. கடைசியில் மூட நம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆலயத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப் போட்டு வேட்டி துவைப்பேன் என்றார். எதிர்த்த கரங்கள் திரும்பி தட்டுதலின் மூலம் ஓசையைக் கிளப்பின. அன்று சாகடிக்கப்படவிருந்த பெரியார், நடராசன்கோவில் துவம்சமாக்கப்பட வேண்டும் என்று பெரியார் அன்று கட்டளை யிட்டிருப்பாரேயானால் நொடியிலே ஆகியிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம் நிலையானது. இயக்கம் மக்களுக்கு உண்மையாகப் பாடுபடுவது - எந்த இயக்கம், சமுதாயம் முன்னேற உண்மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேரவேண்டும். தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது. எஞ்ஞான்றும் விழிப்போடு இருக்கவேண்டும். பெரியார் சொல்லுகின்ற அறிவுரை களை அன்றாடம் கடைபிடிக்க வேண்டும். - விடுதலை இதழ், 21.4.1970 23. தமிழின எதிரிகளுக்கு இறுதி எச்சரிக்கை தலைமை வகிக்கும் அரசர் அவர்களே, டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களே, மற்றும் தோழியர்களே தோழர்களே உங்களுக் கெல்லாம் என்னுடைய வணக்கம். இதுவரைக்கும் நாம் அறிஞர்களுடைய பாராட்டுதல்களை யெல்லாம் கேட்டுவந்தோம். அநேக செய்திகள் நமக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் சுருக்கிப் பார்த்தால் நமக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. அது என்ன என்று கேட்டால் இந்த நாட்டிலே தமிழ் வளர்ச்சி அடைவதிலே சிலருக்கு வெறுப்புக்கூட உண்டு போலும். இந்த நாட்டிலே தமிழ்நாட்டிலே நம் தாய்நாட்டிலே தாய்மொழியாகிய தமிழின் முன்னேற்றம் தடைப்படவேண்டும் என்றுகூட நினைக்கின் றார்கள் போலும். அதை இதுவரைக்கும் பேசிய அறிஞர்கள் வாயிலாக நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். இன்றைக்கு அப்படி வெறுப்படைகின்றவர்கள் தமிழர்களுக்குப் பகைவர்களாக வாழ்கின்றவர்களுக்கு இன்றைக்கு ஒரு இறுதி எச்சரிக்கைக் கிடைத் திருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்றே நினைக் கிறேன். பாருங்கள், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களுக்கு இந் நாளிலே இத்தகைய அரசர்களாலும், பெருமக்களாலும் எவ்வளவு புகழ் ஏற்படுத்தப்படுகிறது, அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை நன்றாக யோசிக்கவேண்டும். ghuâah®Tl v«.V., ã.vš., பெரிய வழக்கறிஞர் அவர். அவர் ஆங்கிலப் பட்டம், வழக்கு அறிஞராக இருந்ததும், அவர்களுடைய இன்றைய டாக்டர் பட்டத்திற்கு பெற்றதற்குக் காரணமாகமாட்டார். வேறு என்ன அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ததுதான் என்பது தோன்றுகிறது. இதுமட்டுமன்று 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் அரசர் அண்ணாமலை அவர்கள் தம் பெருநிதியை எந்த வகையிலே செலுத்தலாம் என்று தம்மையேத் தாம் கேட்டுக்கொண்டார். பல்கலைக் கழகம் ஒன்று தமிழர்களுடைய முன்னேற்றத்திற்காக ஏற்படுத்த வேண்டியதுதான் என்ற ஒரு முடிவுக்கு வந்தார். அந்த தமிழர் களுடைய தவத்தின் பயனாக ஏற்பட்ட அந்த முடிவு இருக்கிறதே அது நல்ல வகையிலே தமிழுக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்த அந்தக் காலத்திலேகூட அது நன்றாக அவர்கள் பெருமுயற்சியினாலே முன்னேறிக்கொண்டு வந்தது. இப்படிப்பட்ட பல்கலைக் கழகத்தை அது உண்டாக்கியது அந்த எண்ணம் அவர்களுடைய முயற்சி. பல் கலைக் கழகம் நன்றாக நடந்து கொண்டு வருகிறது. அப்பொழுதுகூட நம் அரசருக்கு சேரவேண்டிய புகழ் சேர்ந்தது என்று என்னால் சொல்லமுடியவில்லை. செயற்கரிய காரியத்தைச் செய்தார் இதற்கு முன்னே சரித்திரத்திலே நாம் கண்டறியாத அளவு நல்ல நேரத்திலே பயன் உள்ள இந்தக் கொடையைக் கொடுத்தார். அவர்களுக்கு அப்போதுகூட அவ்வளவு புகழ் ஏற்படவில்லை. அதன்பிறகு தமிழிசை தமிழ்நாட்டிலே இசைபாடுவது என்றால் தமிழிசை பாடவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. தமிழ்நாட்டிலேத் தமிழர் களுக்குப் புரியாத இசையில் பாடப்பட்டு வருகிறது. அந்த புரியாத பாஷையிலேதான் பாடப்படவேண்டும் என்று சிலர் சொல்லிக் கொண் டிருக்கிறார்கள். அப்போது தமிழிசை வேண்டும் என்று அவர்கள் துவக்கினார்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும் இப்பொழுதுதான் பெருநிதி செலவிட்டு பெரும்பாடுபட்டு இப்படிப்பட்ட பல்கலைக் கழகத்தை அமைத்து, அதற்குரிய நிறைய படித்தவர்கள் அனுபவம் உடையவர்கள் மீனாட்சி சுந்தரனார் - மீனாட்சி சுந்தரனார் - மீனாட்சி சுந்தரனார் - னா அவர் வக்கீலா இருக்கிறதனால் அல்ல - தமிழுக்கு ஏதோ தொண்டு செய்தார் அவ்வளவுதான். இன்னும் அவர் சேதுப்பிள்ளை ஆகா எப்படிப்பட்ட வக்கீல் அப்டீன்னு யாராவது சொல்றாங்களா? இப்ப அரசர் அவர் சொன்னபோதெல்லாம் அவர் நல்ல வக்கீல் இப்ப வக்கீல் பேசப்போறார் அப்டீன்னா சொன்னாரு. வக்கீல் ஒன்னும் அவர் அதில் முழுகிப் போய்விடவில்லை. அவர் தமிழ் படித்தவர் தமிழுக்குத் தொண்டு செய்கின்றவர் என்றதிலே அது அவருக்கு உள்ள வக்கீல் தொழில் அது இதுக்காக அல்லாம் அதுகளுக்கும் உண்டு. அவர் செய்த தமிழ்த்தொண்டு இருக்கே அதுதான் அவருக்குப் புகழ் கொடுக்கிறது. இன்னும் மற்றவர்கள்கூட அப்படித்தான். ஆகையினாலே தமிழ்த் தொண்டுக்கு இந்த நாட்டிலே எவ்வளவு ஆதரவு இருக்கிறது இந்த நாடு போற்றுகிறது தமிழ்த் தொண்டு செய்கின்றவர்கள் கையிலே ஒரு பெரும் வெல்லத்தக்க ஆயுதமாக இந்த மக்கள் அமைந்து விடுகின்றார்கள். தமிழ்த் தொண்டு மனமார செய்கின்ற ஒருவனை இந்த நாட்டிலே எதிர்ப்பவர் யாரும் இல்லை என்ற அளவு வந்துவிடுகிறது. இதிலே ஒரு புதுமை உங்களுக்குத் தோன்றலாம். தமிழ்நாட்டிலே ஒவ்வொருவரும் தமிழிலே பேசவேண்டும் தமிழிலே எழுத வேண்டும் இதுதான் இயற்கை. அப்படி எழுதுகின்றவர்கள் பேசுகின்றவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்கின்றார்கள் இதற்கு என்ன அவர்களுக்கு இவ்வளவு ஏக்கம். ஆகா இவர் வந்து தமிழுக்குத் தொண்டு செய்கிறாரே, இவர்வந்து தமிழ் பேசுறாரே, நூல் எல்லாம் செய்றாரே அப்டீன்னா இதில் என்ன ஒரு நூதனம் இருக்கப் போவுது. பிரான் இருக்கு இங்கிலாண்ட் இருக்கு ஆக எல்லாம் இங்கிலாண்ட்ல இங்கிலீஷ் படிச்சவந்தான். எனவே அவன் செய்கின்ற காரியம் எல்லாம் இங்கிலீஷிக்குத் தொண்டுதான் செய்து கிட்டுருக்கான் அங்க பொறந்தவன். அவன் ஒவ்வொருத்தனையும் போயி இப்பப்போ நம்ம சோமசுந்தர பாரதிய நாம் இப்ப புகழ்ந்து கொள்ளுகிறோமே அத மாதிரி புகழ்ந்து கொண்டிருக்கின்றானா அங்க இல்லை. இங்கே தமிழுக்குத் தொண்டு செய்கின்ற ஒருவனை மக்கள் தன் தலைவன், தன் தந்தை, தன் தாய் என்று எல்லாம் போற்றி அவன் காலடியிலே போய் சூழ்ந்து கொள்கிறார்கள் என்றால் இதற்கு என்ன காரணம். அதயில்ல நாம் கண்டுபிடிக்கணும். இந்த நாட்டிலே தமிழ் முன்னேறக்கூடாது தமிழை ஒழித்தால்தான் தமிழர்களை ஒழிக்க முடியும் - தமிழை ஒழித்துத்தான் அவர்கள் தலைமேல் நாம் ஏறி உட்காரமுடியும் என்று நினைக்கின்ற ஒரு கூட்டம் இருக்கின்றது. அந்தக் கூட்டத்தை நினைத்துத்தான் தமிழுக்குத் தொண்டு செய் கின்றவர்களுக்கு நம்முடைய மக்கள் பேராதரவு கொடுக்கிறார்கள். அய்யா என்னா குறை வேண்டுமானாலும் செய் - அந்தக் கூட்டத்தை விடாதே என்று சொல்கிறேன். நம்முடைய தாய்மொழி இங்கு எதிர்ப்புக்கு உட்பட்டு - உட்படுத்தப்பட்டு இருக்கிறது. நம் ஒவ்வொரு வீட்டின் பக்கத்திலும் தமிழன் பக்கத்திலும் ஒரு ஐந்தாம் படை இருக்கிறது. ஆகையினாலே இப்படித் தமிழ்த்தொண்டு செய்கின்ற ஒவ்வொருவரையும் நமக்கு பார்த்தால், மக்கள் பார்க்கும்போது அவர்களுக்கு அறிவு தெரிகிறது. ஆகையினாலே புகழ்கின்றார்கள், ஆகையினாலே இந்த நிலையை அடைவிக்கப்படுகின்றார்கள். கவர்மெண்டு... சொன்னபடி இந்தி கட்டாயமாக்குது. ஆக்குறது எது கவர்ன்மெண்டு. பிரைம் மினிடர் நின்னுக்கிட்டு இருக்கிறாரு தெரு தெருவா பிரச்சாரம் பண்றார். அப்படிதான் இருக்கும் கட்டாயம்தான் ஆக்கணும்-ன்றார். இன்னும்கூட ஐந்தாம் படைகள் எல்லாம் வேகமாக வேலை செய்து தெருவுக்கு தெருவுக்குத் - தெருவுக்குத் தெருவு -தெருவுக்குத் தெருவு அவர்கள் என்ன நினைத்து வேலை செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எந்தப் பேரைச் சொல்லியாவது தமிழை ஒழிச்சுக் கட்டணும் அவ்வளவுதான். இந்தி மேல அவர்களுக்கு ரொம்ப காதல் கீதல் ஒன்னும் இல்லை. இதை வாய்ப்பாக வைத்துக்கொண்டு தமிழை எப்படியாவது ஒழிச்சுக் கட்டணும். இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 25 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு கதை காலட்சேபம் இருக்கோ இல்லியோ காலட்சேபம் பண்றதுக்கு ஒருத்தனக் கூப்பிட்டு 100 ரூபாய் பேசி உக்காந்துகிட்டுக் கேட்டா காலட்சேபம் என்னா பண்றது தமிழ்நாட்டுல சம்கிருதம் பாட்டு, தெலுங்கு பாட்டு, கன்னடம் மாத்தாட பாருதியானு அல்லது இடை இடையே லோகம் சொல்றதுக்கூட தமிழ் லோகம் இருக்காது எல்லாம் நமக்குப் புரியாத மொழிதான். நாடகத்துக்குப் போனானாலும் பூல ஜானி லேலோன்னுட்டுப் பாடிக்கிட்டுருக்கான். வரும்போது இந்துதான், போகும்போது இந்துதான் நடு மையத்தில இந்துதான். மற்றும் பத்திரிகைகள்ல பார்த்தால் நெறைய இருக்கும். அதுல செய்யுள்ன்ட்டு ஏதாவது இருந்தால் அத படிக்கக்ககூட மாட்டாங்க. இந்த மாதிரி நேரத்தில் இப்படியெல்லாம் இருந்தபோது அய்யா நம்முடைய அரசர் இங்கு தமிழிசைதான் தேவை என்று சொன்னார்கள். அப்போது அவர்களுடைய அடையாளம் நமக்குத் தெரிந்தது. அவர்கள் என்ன சொன்னார்கள். சமகிருதத்துல பாட வேண்டும், கன்னடப்பாட்டு இருக்கவேண்டும், தெலுங்குப் பாட்டு அய்யர்வாள் பாட்டு இருக்கவேண்டும். ஆனால் தமிழ்ப்பாட்டு பிரயோஜனம் இல்லை வேண்டியதில்லை. என்ன சொன்னார்கள் அதற்கு வெறும் ம்... ம்... ம்... என்பதே போதும். பாட்டு என்பது என்ன ஒரு மனிதனிடத்திலே நாம் நம்முடைய கருத்தை உரைநடையாக சொல்லும்போது அது ஒருவகையிலே அவருடைய நெஞ்சைத் தொடுகிறது. ஆனால் அது ஒரு கவிதையாக ஒரு இசையுடையதாக அமைந்தால் அவருடைய நெஞ்சை அப்படி இப்படி போகவிடாமல் அதுவாக ஆக்கிக் கொள்கிறது. இதனுடைய பயன் இவ்வளவுதான். அப்போது என்ன வாதிட்டார்கள். பாட்டிற்கு சொல் வேண்டியதில்லை. எங்கேயாவது இந்த அநியாயம் கேட்டிருக்கமுடியுமா? பாட்டிற்கு சொல்லே வேண்டியதில்லை என்று வாதிட்டார்கள். அப்போது அவர்கள் உள்ளம் என்ன தெரிந்தது எந்த மொழியாவது வந்து இங்கு புகுந்து கொள்ளவேண்டும். அதுக்கு நாம் வந்து தூக்கிப் பேசவேண்டும் அப்பொழுதுதான் தமிழ் பரவாது என்று அவர்கள் நினைத்தது நன்றாக வஷ்டமாக தெரிந்தது. நாமும் தமிழிசை அரசர் இங்கு துவக்கிய போது அழைக்கப்பட்டவன்தான். ஒருத்தர் கேட்டார் வந்து அப்போ நிர்வாகக் கூட்டம் நடக்கிறது, ஆமான்யா தமிழிசை தமிழிசைன்னு - தமிழிசையை வச்சி நான் இங்க ஏற்பாடு பண்றன்னு சொல்லிட்டு அரசரிடத்தில சொல்லிகிட்டு இங்க எங்களையெல்லாம் கூட்டி வச்சுட்டு அவர் சொல்றாரு. ராகவய்யங்கார் இருக்கார், கா. சுப்பிர மணியபிள்ளையும் இருக்கார். ஆமாய்யா தமிழிசை தமிழிசைன் றீங்களே தமிழ் இசைன்னுட்டு என்ன இருக்கு? கர்நாடக சங்கீதம்னு ஒன்னு இருக்குது? தமிழ் இசைன்னுட்டு ஒன்னு இருக்குதா அது எது அதைக் காட்டு? அப்படின்னு கேட்கிறார். இவர் இராகவய்யங்காருக்கு அவர் சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை. புண்ணியவான் எழுந்தார் தமிழிலா இசை இல்லை தமிழிலா இசை இல்லை தமிழிலா இசை இல்லை என்று அழறார். அழுதுட்டு என்ன சொல்றார் அவரு, தமிழ் இசைதான் எல்லாம், தமிழில இசை இல்லை என்று சொல்ல வாண்டாம் நீங்கள். ஆனால் நான் படிச்ச காலத்திலே சிலப்பதிகாரத் தில் முதலியவற்றிலே இசை பற்றிய விவரம் இருக்கும் அதை நன்றாக படிக்கலை. தமிழிசை மிக்க உண்டு மிக உண்டு என்று உண்மையி லேயே அழுதார். நான் இவரைக் கேட்டேன் கா. சுப்பிரமணிய பிள்ளையை, என்ன சார் தமிழ்ப் பற்று உடைய பெரும்புண்ணியவானா இருக்காரே இவரைப் பற்றி-இவரை வந்து தமிழ்ப்பற்று இல்லை அவரு சாதி - கீதின்னு அப்டீன்னு நினைக்கிறவர்னுல்லாம் சொன்னீங்களே சொன்னாங்களே அப்டீன்னு சொன்னேன். அய்யோ நினைக்கலாமா? இந்தக் கொடுமையான பேச்சை அவர் சகிப்பாரா? உண்மையிலேயே அவர் - அவரும் அவர் போன்றவர்களுக்கும் தமிழ்ப்பற்று மிக உண்டு. தமிழிலே இசை இல்லை என்று சொன்னால் அதை அவர்கள் சகிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்களா? என்று கேட்டார்கள். அதன்பிறகு நான் என்னை கா. சுப்பிரமணியபிள்ளை நீங்கள் பதில் சொல்லுங்கள். அவருக்கு உடல்நலம் இல்லை அப்டீன்னு சொன்னாரு. சில தமிழ் இசை எல்லாம் சொல்லி இதற்கு சுரம் வச்சிருக்கீங்களா அப்டீன்னு கேட்டேன். பழம் பஞ்சுரம்னு இருக்குது ஒரு ராகம் அதற்கு சுரம் இருக்கா உங்க கர்நாடக சங்கீதம் வேறன்றீங்களே அதுல சுரம் இருக்குனுமே சொல்லுங்க அப்டீன்னேன். இப்படி ஒரு பத்து இசை ராகத்தைச் சொல்லி இதுக்கு சுரம் ஏதாவது இருக்கா அப்டீன்னேன். இல்லை அப்டீன்னார். இல்லாட்டிப் போனா அப்ப வேற ஒரு இசை இருக்கோ இல்லியோ அதுக்குப் பேருதான் தமிழிசை. கர்நாடக சங்கீதம் பழைய ராகங்களுக்கு ராகம் இருக்கிறது அந்த மாதிரி இந்த தமிழிசை இருக்கே அதுக்கு மொத்த பேரு என்ன? அப்டீன்ட்டு அவர் கேட்டாரு. அப்பொழுதுதான் நான் சொன்னேன் அதற்குப் பேருதான் தென்பாங்கு என்பது அப்டீன்னேன் எழுதிக்கிட்டாரு. இப்படிப்பட்ட அந்த நேரத்திலெல்லாம் நமது இணைவேந்தர் அவர்களும், நம் அரசர் அண்ணாமலையார் அவர்களும் மட்டும் அல்லாமல் வேற யாராலை யும் முடியாது அந்த எதிர்ப்பை ஒரு வகையில் அழகா சமாளித்துக் கொண்டு அந்த தமிழிசை எடுத்தக் காரியத்தை முடித்தது யாருக்கும் வராது எல்லாரையும் தட்டிக்கொடுத்து அந்தக் காரியத்தை ஒப்பேற்றி னவர்கள் அது நிலையாக இருக்கும்படி செய்தார்கள். அன்றைக்கு இந்த அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு - பல்கலைக் கழகத்திற்கு தமிழிசை என்று சொன்னதினாலே ஏற்பட்ட புகழ் நாம் கண்ணால் பார்த்தது அது அளவற்றது. இதனாலேதான் நான் சொன்னேன் இங்கே பாரதியாரவர்கள் அவர் அடையவேண்டிய மதிப்பைத்தான் இன்று அடைந்தார். இன்னும் சொல்லுவேன் அவர்கள் இந்த பொன் னாடையை போர்த்தலுக்கும், டாக்டர் பதவிக்கும் மிக்க தகுதியுடை யவர்களே - தகுதியுடையவர்கள் என்று சொல்வதோடு அவர்கள் தமிழுக்குச் செய்திருக்கிற தொண்டு இருக்கிறதே அதை நாம் அதன் அண்டையிலேயே நோக்கிப் பார்த்தால் அவர்கள் இதற்கெல்லாம் மிக்க தகுதியுடையவர்கள் என்பது தெரியும். நான் முன்னே சொன்னேனே பெரிய எதிர்ப்புக்கு இடையே பத்தாயிரக்கணக்கான மக்களை அங்கு அங்கு அங்கங்கு அங்கங்கு கூட்டிக்கொண்டு நின்று அவர்கள் சொன்னபடி மீசையை முறுக்கிக்கொண்டு அந்த இந்திக் கட்டாய பாடம் ஆக்கவேண்டும் என்று நேராக வெளிப்படையாக முயற்சி செய்த அந்த முதலமைச்சரை பேரைக் குறித்து முட்டாளே என்று கேட்டார் - என்று அழைத்தார்கள் வெளிப்படையாக. அது சில இப்போது நீங்க அது மிகையான சொல்லாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் இல்லை - அவர்கள் உள்ளத்தை அப்போது பார்த் திருந்தால் அவர்கள் ரொம்ப அடக்கமாக நடந்துகொண்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். இன்னும் மா அஞ்சாத நெஞ்சு படைத்தவர் என்றெல்லாம் இங்கு சொன்னார்கள். எதைக்கொண்டு அவர்கள் சொன்னார்கள். பல எதிர்ப்புக்களின் இடையே இந்தி இந்த நாட்டிற்கு வரக்கூடாது என்று சொன்னது மாத்திரம் இல்லை. நான் முன்பு சொன்னேனே ஆரியர் என்றும் தமிழர் என்றும் என உள்ள ஒரு வேறுபாடு வேறுபாடு உள்ள மனப்பான்மைகள் அதை நன்றாக விளக்கி, இந்த வேறுபாடு, இந்த மமதை இது எல்லாம் ஒழிய வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லிக் காட்டியவர் இந்த நாட்டிலே மகாகவி பாரதியாருக்குச் சமமாக வேறு யாரையும் சொல்லமுடியாது. அவர் நன்றாக பழைய இலக்கியங்களில் இருந்து விளக்கினார். அப்படி அழகாக விளக்கினவர் தைரியமாக சொன்னவர்கள் பாரதியார். ஆகையினாலதான் பேராசிரியர்கள் அனைவரும் புலி என்றும் சிங்கம் என்றும் சொன்னார்கள். ஆகையினாலே நான் என்ன சொல்லிக் கொள்ளுகிறேன் அரசர் அவர்களுக்கு உங்களுடைய தமிழ்த் தொண்டு உலகம் அறிந்தது கொஞ்சமாக இருக்கலாம், தமிழ்நாடு நன்றாக அறியும். ஆகையினாலே தமிழ்நாடு உங்களிடத்திலே - நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. இந்த தமிழ் உங்களால் காப்பாற்றப்படவேண்டும் என்று இருக்கிறதுபோல் இருக்கிறது. அவர்கள் கனவு காணுகிறேன் என்று சொன்னார்கள் - இல்லை நான் நேராகவே அப்படித்தான் முடியப்போகிறது என்று சொல்லுகிறேன். இங்கே அரசர் அவர்களிடத்திலே தெரிவிக்கவேண்டும் என்று பல பெருமானவர்களும் இன்னும் ஆசிரியர் அவர்களும் இன்னும் வெளியிலே உள்ள புலவர்களும் ஒன்று நினைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை உங்களிடத்திலே சொல்லும்படி அவர்கள் என்னைக் கண்டு சொன்னார்கள். அது சின்ன விஷயமாகத்தான் எனக்குத் தோணுது. இந்தத் தமிழுக்கென்று ஒரு கல்லூரி ஏற்படுத்தவேண்டும் அது உங்களால்தான் முடியும் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளுகி றார்கள். இந்த தமிழ்ப் பட்டம் ஏற்படுத்தவேண்டும் மகா மகா வாத்தியார் எல்லாம் தொலையணும் - சமகிருதம் படித்தவர் களுக்குத்தான் பட்டம் கிட்டம் குடுக்கணும் தமிழ் மாத்திரம் படிச்சவன் மனுசனா இல்லை இந்த அயோக்கியத் தனமான சங்கதி எல்லாம் உதறித் தள்ளிட்டு பலகோடி தமிழர்கள் உங்க பாக்கெட்ல. நீங்க தைரியமா செய்யலாம் என்று பணிவோடு கேட்டுக்கொண்டு, நம் தமிழர் தலைவர் - புலவர் பெருமான் - தமிழ் ஆற்றல் உள்ளவர் - நெஞ்சு உரம் உள்ளவர் - டாக்டர் சோமசுந்தர பாரதி அவர்களுக்கும் முன்னே டாக்டர் பட்டமும் வரும்படியும், இன்று பொன்னாடை போர்த்தும்படியும் செய்த அரசருடைய ஏற்பாட்டை - நல்ல எண்ணத்தை - விசாலமான உள்ளத்தை நாம் பாராட்டுவதோடு இத்தகைய தமிழ்த்தொண்டு செய்து இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்று, பொன்னாடை பெற்று இன்று தமிழர்களுடைய எதிரிகள் இறுதி எச்சரிக்கையைச் பெறும்படி செய்த நம் நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கும் என்னுடைய பெரும் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அவர்கள் நீடூழி வாழவேண்டும், நீண்ட நாள் வாழவேண்டும் இத்தகைய தமிழுக்கு பெரிய நலம் செய்து தீர வேண்டிய நிலையிலே இருக்கின்ற மிக ஆற்றல் உடைய நம் அரச ரவர்கள் நீடூழி வாழவேண்டும் என்று சொல்லி முடிப்பதற்குமுன் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழர்களுடைய உள்ளத்தின் பேரால் நான் கேட்டுக் கொள்ளுகிறேன் தமிழுக்கு வேண்டிய நீங்கள் எந்த முயற்சியைத் தொடங்கினாலும் உங்களுக்குத் தமிழர்கள், கோடிக் கணக்கான தமிழர்கள் உங்களுக்குப் பின்னே. உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் அவர்கள் தாங்குவார்கள் என்று என்பதை உறுதிக் கூறிக்கொண்டு என்னுடைய பாராட்டுரையை முடிக்கின்றேன். - சோமசுந்தரபாரதியார் அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் (1955) பாவேந்தரின் பாராட்டுரை 24. உண்மை பாரதியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், கல்லூரி மண்டபத்தில் 6.9.49 மாலை 5 மணிக்குப் பாரதிவிழா - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். மாணவ தலைவர் தோழர் என். சஞ்சீவி அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் கூறியதாவது: இப் பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பெருமன்றம் பற்பல பேச்சாளர், எழுத்தாளர் - நாடாள்வோர் யாவரையும் வரவேற்றுள்ளது. ஒரே ஒரு குறை இருந்தது. அதுதான் புரட்சிக் கவிஞரை வரவேற்காதது. பாரதி விழாவை இங்கு எழுந்தருளியிருக்கும் புரட்சிக்கவிஞரின் இதயத் துடிப்பிலேதான் காண்கிறோம். எட்டயபுரத்திலே கட்டியுள்ள மணி மண்டபத்திலே அல்ல. பின்னர் புரட்சிக் கவிஞர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். புரட்சிக் கவிஞர் என்னை பாரதி விழாவிற்கு தலைமை தாங்க அழைத்ததற் காக உங்கட்குப் பெரிதும் நன்றி செலுத்துகிறேன். என்னை யாரும் பாரதி பற்றிப் பேச அழைப்பதில்லை. பாரதி, பாரதி என்று கொம்மாளமடிக்கும் கூட்டம் என்னைக் கூப்பிடுவ தில்லை, ஏன்? நான் வந்தால் உண்மைப் பாரதியாரைப் பற்றிக் கூறி விடுவேன். அவர்கள் காட்டிவரும், பேசிவரும் வண்ணம் தீட்டப் பட்ட பாரதியார் மறைவார் என்ற பயம்தான். 1906-இல் தான் பாரதியார் புதுச்சேரிக்கு வந்தார். இன்னும் வ.வெ.சு. ஐயர், திருவல்லிக்கேணி சீனுவாசாச்சாரியார், அரவிந்த கோஷ் முதலியோரும் வந்தனர். இவர்களுக்கெல்லாம் சுதேசிகள் என்று பாண்டியில் பெயர். அரவிந்தர் வ.ரா. முதலியோர் ஒரு குழு. வ.வெ.சு ஐயர் முதலியோர் ஒரு குழு. பாரதி, நான் முதலியோர் ஒரு குழு. சீனிவாசாச்சாரியார் எதிலும் இருப்பார் மூன்று குழுக்களும் வெவ்வேறாக இருந்தன. அரவிந்தர் முதலியோர் தமிழென்று ஒரு மொழி இருப்ப தையோ, அதைப் பற்றி நினைப்பதையோ அறியாதார். வ.வெ.சு. ஐயர் வர்ணாரமம் உண்டு என்றால் தமிழைப் போற்றத் தயார். பாரதியார் தமிழிலே வாழ்ந்தார். அன்றைய நிலை அப்படி, பாரதியார் பார்ப்பனராக இருந்தாலும் தமிழைப் போற்றினார். காரணம், அவர் தமிழ்ப்புலவரின் மகன் என்பதுதான். பாரதியார் முதலில் பாட ஆரம்பித்தது காவடிச் சிந்துதான். புரியும் படி காவடிச் சிந்து அமைவதே காரணம். அரவிந்தர் ஆங்கிலத்தில் ‘ASIA’ பத்திரிகை ஆரம்பித்தார். ஆனால் பாரதியாரோ தமிழில் இந்தியா பத்திரிகை ஆரம்பித்தார். தமிழைப் பாரதி இப்படிப் போற்றினார். அங்கே - அரவிந்த குழுவிலே என்ன சங்கதி BENGALI - வங்காளம் சிறந்த மொழி, அடுத்தாற்போல் தெரிவது ஆங்கிலம்தான். ஆங்கிலப் புத்தகத்தைப் பாஷனாக வெளியே தெரியும்படி வைத்துக்கொண்டு உலாவுவார்கள். நான் பாரதியிடம் என்ன கண்டேன். அவர் வாழ்க்கை எப்படி என்பவற்றைப் பின்னுரையில் கூறுகிறேன். பின்னர் மாணவர் தோழர் குலசேகரன், தோழர் மா. இராசமாணிக்கம், தோழர் கே.எ. மகாதேவன், கு. ராஜவேலு ஆகியோர்களின் உரைகளுக்குப்பின் பின்னுரையாக பாவேந்தர் உரையாற்றியது. நான் கண்ட பாரதி நண்பர் இராசமாணிக்கம் அவர்கள் என்னை பாரதியாரைப் பற்றி நான் கண்ட பாரதி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதும்படி கேட்டார், இதேபோல் முன்பே தினசரி ஆசிரியர் டி.எ. சொக்கலிங்கமும் கேட்டார். நான் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அது ஆயிரம் பக்கங்கள் வரும். இன்று பாரதி பாட்டைப் புகழ்பவர்கள், உண்மை பாரதியை மறைத்துவிட்டார்கள். மறைத்துவிட்டதாக நினைத்து மனப்பால் குடிக்கிறார்கள். ஆனால் அவர்களையும் தப்பி, ஜாதிகள் இல்லையடி பாப்பா முதலிய பாடல்கள் வந்துவிட்டன பதிப்பில். ஜாதியே இல்லை என்ற பிறகு இவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் மட்டும், அதிலும் குறிப்பிட்ட கூட்டத்தார் மட்டும், அதிலும் குறிப்பிட்ட ஒரு சில மடையர்கள்! ஏனோ இப்படிப்பட்ட வீண் வேலைகளிலீடுபடுகிறார்கள். பாரதியின் முக்கியக் கொள்கை பாரதியார் தமிழ்ப் பற்றுடையவர். தமிழுக்கு உயிர் உண்டாக் கினார். எல்லோருக்கும் புரியும்படி எழுதினார். பாடினார். அதற்குப் பிறகுதான், அரவிந்த கோஷுக்குத் தமிழ் என்று ஒன்று இருப்பதாகப் புரிந்தது. வ.ரா. முதலானோர் தமிழ்ப் புத்தகங்களைத் தேடிப் பிடித்தனர். பாரதியாருடைய முக்கிய கொள்கை ஜாதி ஒழிப்பு, அதுதான் அவரிடம் இருந்த சிறந்த கொள்கை, குறிப்பிட்டுப் பேச வேண்டியக் கொள்கை. அவர் பாடியிருக்கிறார் சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோற்றுப் பார்ப்புக்கு ஒரு நீதி என்று. இது எங்கே? அவர் புத்தகத்தில் இல்லை என்னிடம் இருக்கிறது. மறைத்து விட்டனர்! சுயநலம் கருதி. பாரதியார் செத்ததற்கே இதுதானே காரணம். இத்தகைய பழிவாங்கப்பட்டார் என்றுதான் நான் கருதுகிறேன். இப்போது ஜாதி சேப்பங்கட்டி இருக்கிறது. சீக்கிரம் இறந்துபடும். சந்தேகமில்லை. பாரதியார் பார்ப்பனர். தெரிந்தும் சொன்னார் ஜாதிகள் இல்லை யடி பாப்பா என்று. பாரதிதாசன் புனைபெயர் தமிழில் நல்ல எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி இதைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தோஷம்கூட, நான் அப்பொழுது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன், அப்போதே சில பத்திரிகைகளில் கட்டுரைகளும், பாட்டுகளும் எழுதி அனுப்புவது வழக்கம். அப்போது நான் உத்தியோகத்தில் இருந்து கொண்டு இக்காரியம் செய்வது உத்தியோகத்திற்கு தொல்லை தரும். யாராவது செய்வார்கள் என்று கருதி நான் ஓர் புனை பெயர் வைத்துக் கொள்ள விரும்பினேன். அப்போது என் கண்முன்னே சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோற்றுப் பார்ப்புக்கு ஒரு நீதி என்று கேட்ட பாரதியார், பார்ப்பனனாய் இருந்தும் பயப்படாது. தீமை வருமென்று தெரிந்திருந்தும் திகைக்காது, தமிழில் புரியும்படி சொல்லிய பாரதியார் தான் நின்றார். உடனே பாரதிதாசன் என்று புனை பெயர் வைத்துக் கொண்டேன். நான் அவனுக்கு, அந்தப் புண்ணியவானுக்கு, தன் குலத்தார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாத புண்ணியவான் பாரதிக்கு தாசனாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்று கருதுகிறேன். பாரதியார் கஷ்டப்படவில்லை பலர் பாரதியார் மிகவும் அவதைப் பட்டார் - என்றெல்லாம் கூறுகிறார்கள். வருத்தப்படுகிறார்கள் பெரிய பிரச்சாரம் வேறு நடக்கிறது. நான் சொல்கிறேன் பாரதியார் கொஞ்சம்கூட கஷ்டப்பட வில்லை. அவர் புதுவையில் 13 வருடங்கள் இருந்தார். அவரோடு நானும் கூடவே இருந்தேன். தெரியாதவர்கள் கூறும் சங்கதிதான் அது. அவர் கஷ்டப்படவேயில்லை. அவர் சுருட்டுப் பிடிக்கும் பழக்க முடையவர். பாண்டிச்சேரியில், சுருட்டிய சுருட்டு (இங்குப் போல்) விற்க மாட்டார்கள். புகையிலையாக வாங்கி அதை சுருட்டாகச் சுருட்டித் தான் பிடிக்கவேண்டும். இப்படிச் சுருட்டுப் பிடிக்க பாரதியாருக்குத் தெரியாது. ஆனால் அவர் பாண்டியை விட்டு வெளிவரும்வரை அவர்முன் சுருட்டி வைப்பர் பக்கத்திலிருப்பவர், அவ்வளவு சவுகரியம் இருந்தது. அவருக்கு அங்கே. அதுமட்டுமா! அவர் ஈவரன்கோயில் தெருவில் குடியிருந்தார். அப்போது அவர் மகளுக்கு காய்ச்சல் வந்தது. டாக்டர் அம்பு வந்தார். விஷக் காய்ச்சல் என்று கூறினார். அவர்கள் வீட்டில் ஒரு கேணி இருந்தது அதில் சூரிய ஒளி படர வில்லை என்றார். வேறு வீடு வேண்டும் என்ன செய்வது. என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள். சுமார் 1 1/2 மணி நேரத்திற்குள்ளாகவே, அவர் வீட்டிற்கு எதிர்த்த வீடு, குடியிருந்தவர்கள் காலி செய்யப்பட்டு, பாரதியார் குடும்பத்தோடு குடியேறினார். எப்படி முடிந்தது? யார் வீடு அது தெரியுமா? அது பெத்தாச்சி செட்டியார் வீடு. அவருக்குப் பாரதியார் அளித்த பெயர் விளக்கெண்ணெய்ச் செட்டியார் என்பது. அதில் குடி யிருந்தவர் ஒரு C.I.D. அவர் ஒரு பெண்ணை அங்கு வைப்பாக வைத்திருந்தார். அப்படிப்பட்ட செட்டியாரிடம் (செட்டியார் பண விஷயத்தில் மகா கண்டிப்புக்காரர்) முன் பணம் கட்டி, அங்கிருந்த C.I.D. அவர்களைக் காலி செய்து பாரதியாரைக் குடியேற்றினோம்? யார்? நானும் என்போன்ற தோழர்களும். எப்படி? எங்களுக்கு இருந்த எண்ணமெல்லாம் பாரதி வருத்தப் படக்கூடாது. அவர் மகளுக்கு காய்ச்சல், கேணி நல்லதல்ல! வீடு மாற வேண்டும். உடனே சென்றோம். காலி சொன்னோம். பயந்தே காலி செய்தனர். இப்படியும் இருக்குமா? நடக்குமா? என்று திகைக்கலாம். நம்பவேண்டிய சேதி ஏன்? நான் சொல்லுகிறேன் என்பதால். அவருடைய சாப்பாட்டிற்கோ குடும்ப சவுகரியத்திதுக்கோ - ஒன்றும் குறைவில்லை. கஷ்டமும் இல்லை. கஷ்டப்பட்டார் என்று சொல்வது வெறும் பொய். பின் எப்படி இந்த வதந்தி பாரதி கஷ்டப்பட்டார் என்று பரவிற்று? சொல்கிறேன் கேளுங்கள். வைரத்தோடு இல்லை அதுதான் கஷ்டம். எதைக் கொண்டு பாரதியார் கஷ்டப்பட்டார் என்று சொல்லுகிறார்கள்? அவருக்கு சோறில்லையா? இருந்தது. வசதியாக. பாண்டிச்சேரியில் அப்போது இருந்த சீனிவாச்சாரியார் வீட்டுப் பெண்கள் எல்லாம் வைர நகைகள் அணிந்து விளங்கினர். வ.வெ.சு. அய்யர் வீட்டிலும் அவ்வாறே. ஆனால் பாரதியார் கால வீட்டிலோ சிகப்புக்கல் தோடுதான், அதுவும் அப்பாஜி காலத்தது. இதுதான் நிலை. அவர் வீட்டில் சதா அவர் வீட்டில் அந்த இருக்கு! இவர் வீட்டில் இப்படி; இந்த நகை; நம்ம வீட்டில் என்ன இருக்கு - என்று தொல்லைப் படுத்துவார்கள், என்று பாரதியார் அடிக்கடி கூறி வருத்தப்படுவார். அவர் வீட்டில் வாழ வழி இருந்தது. ஆனால் வைரத்தோடுதான் இல்லை. உண்மை சாப்பிடக் கஷ்டம் இல்லை. சரியான நகைகள் இல்லை. இது வறுமையா? கஷ்டமா? நகையில்லாத குறைதான்? டாம்பீகம் வேண்டுமா? பலமுறை அவர் குடும்பத்தார் பிறந்த வீட்டிற்குச் செல்வர் அப்போதெல்லாம்கூட அவருக்கு ஒரு குறைவுமின்றித்தான் எல்லாம் நடந்தது. வறுமை கஷ்டம் என்று கூறுவது சுத்தப்பொய்! அவர் சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலைபார்த்தபோது, வெளிநாட்டு விஷயங்களை மிக நன்றாக மொழிபெயர்த்தார். சைனாவுக்குப் பக்கத்திலே ஒரு தீவு பற்றிய செய்தி வெளிவந்தால் அது எங்குள்ளது என்பது பற்றிய குறிப்பு பிராக்கட்டுக்குள் அடைப்புக் குறிக்குள் அடங்கியிருக்கும். இது தற்காலத்து உதவி ஆசிரியர்கள் அறிய வேண்டிய செய்தி. புதுமுறை நூல்கள் தமிழில் புதுமுறையில் மக்களுக்குப் புரியும்படி நூல் எழுதியவர் பாரதியார்தான். அதற்கு முன் புலவர்கள் ஒரே பொருள் பற்றிப் பல நூல்கள், ஒரே முறையில் எழுதுவார்கள். கலம்பகம் என்றால், திருவருணைக் கலம்பகம், புதுவைக் கலம்பகம் என்று போகும். அடுத்தாற்போல் அந்தாதி என்று பல நூல்கள். மற்றும் அம்மானைகள் இப்படித்தான். புது முறையோ, புதுப் பொருள் பற்றிய நூல்களோ கிடையாது. தைரியமில்லை எழுத. இந்த வழியில் புதுமுறைக்கு எடுத்துக்காட்டு சிந்து. இதில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து பாரதியாரை மிகவும் கவர்ந்தது. திருக்குறள் உரை அக்காலத்தில் தமிழைப்பற்றி மக்கள் மிகக் கேவலமாக நினைத்தனர். ஒருவர் ஒன்று கூறிவிட்டால் அதை மறுப்பதோ கூடாது. குறிப்பாக, திருக்குறளுக்கு பலர் உரையெழுதினார்கள். இதில் பரிமேலழகர் உரைதான் சரி. கவனிக்கப்படவேண்டும் என்கின்றனர். ஏன்? அவருக்குப் பின் அறிவு போய்விட்டதா? நீ ஏன் சிந்திக்கக் கூடாது? பரிமேலழகர் தெய்வந்தொழா அள் கொழுநன் தொழு தெழுவள், பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளுக்குக் கணவனை தெய்வமாகக் கொண்டு ஒழுகும் கற்புக்கரசி பெய் என்று சொன்னவுடன் மழை பெய்யும் என்று பொருள் கொள்கிறார். இதை எப்படி ஒப்புவது! இப்போது மழையில்லையே! கற்புக்கரசி யாரும் பெய் என்று சொல்லவில்லையா? அப்படியானால் எல்லாப் பெண்களும் குச்சுக்காரிகளா? இதற்கு நீ சிந்தித்து வேறு பொருள், தக்க பொருள், ஏன் கொள்ளக் கூடாது. கணவனைப் பேணும் பெண், பெய் என்று வேண்டும்போது காலம் அறிந்து, அவசியமானபோது பெய்கின்ற மழை போன்றவள். அக்கணவனுக்கு என்று ஏன் பொருள் கொள்ளக்கூடாது. மழை பெய்தும் கொடுக்கும், பெய்யாதும் கொடுக்கும் என்று சொல்வதுண்டு. அப்படியின்றி அவசியமுள்ளபோது பெய் என்றதும் பெய்கின்ற மழையைப் போன்றவள் கற்புள்ள மனைவி என்று கொள்ளுக. புதிய துறையில் எழுத பொருள் காண முற்படுங்கள். பாரதியைப் பின்பற்றுகள். பாரதியார் சுதேசமித்திரனுக்குப் பாண்டியிலிருந்து ஒருநாள் கவிதையும் ஒருநாள் கட்டுரையும் எழுதுவார். திடீரென்று அவர்கள் கவிதை வேண்டாம், கட்டுரையே போதும் என்றார்கள். அப்போது தென்னாட்டுக்கு டாக்டர் கஸிக் என்று ஒருவர் வந்தார். அவர் பாரதியார் சிறந்த கவிஞர் என்று கேள்விப்பட்டு அவருக்குக் கடிதம் எழுதி, அவர் கவிகளை அனுப்பும்படியும், அதைத் தாம் அவர் கருத்துக் குலையாமலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் அவர் தாம் தான் வங்கக் கவி ரவீந்தரநார்த்தாகூரின் கவிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்றும் கூறினார். அதுபோல் பாரதியும் வேண்டு மடியெப் போதும் விடுதலை சும்மா வேண்டுமடி யெப் போதும் விடுதலை என்ற பாட்டை எழுதியனுப்பினார். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அக்காலத்தில் New India பத்திரிகையில் வெளிவந்தது. இம்மாதிரி இரண்டு மூன்று தடவை வந்ததும் சுதேசமித்திரன் பழையபடி கவிதை கேட்டது. அப்போது பாரதியார் சொன்னார் தமிழின் கவிதையைப் பிறநாட்டான் புகழவேண்டும், அப்போதுதான் அதனைத் தமிழர் உணர்கிறார்கள் என்று. பாரதியார் பண்பு பாண்டியிலே பாரதியார் பலரும் பார்க்கவேண்டும் என்றே கடைவீதி நடுவே முலிம் கடையில் தேநீர் வாங்கி அருந்துவார். அவர் ஒருசமயம் என்ன சுப்புரத்தினம், என் பெண் பேறு ஒரு தாழ்ந்த சாதியானோடு ரங்கூனுக்கு ஓடிப்போய், அங்கிருந்து எனக்கு அப்பா நான் இன்னாரோடு இங்கு சுகமே, இருக்கிறேன், அவரைத் தான் நான் விரும்புகிறேன் மணம் செய்துக்கொள்ளப் போகிறேன் என்று எழுதவேண்டும் அதைக் கேட்டு நான் ஆனந்தப்படவேண்டும் என்றார். போற்றுபவர் அவரைத் தூற்றினர். அவர் இங்கு வந்ததும் அவருக்கும் பூர்ணாதிலேகியம் நிறையக் கொடுத்தனர். opium என்னும் அபினியை அளவு மீறிக் கொடுத்தனர். செத்தார். சீர்திருத்தக் கருத்துக்களுக்காகவே அவர் பழி வாங்கப் பட்டார் என்றே கூறுகிறேன். இன்று அவரைப் போற்றுபவர் அன்று அவரைத் தூற்றினர். கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடனில் ஆபாசம், ஆபாசம் என்று இவர் பாடலைக் கிண்டல் செய்தார். பெண்கள் மார்பகத்தைக் குறிக்கும் பொதுப்பெயரை கவிதையில் எழுதியதற்காக மகா மோசம் என்று எழுதினார். இன்று புகழ்கிறார் என்றால் அது அவர்கள் வழக்கம். வாடிக்கை கல்கி ஆனந்த விகடனில் அவரை மட்டக்கவி என்று எழுதியதைக் கண்டித்து நான் கவிதா மண்டலத் தில் பாரதி உலக கவிதானப்பா என்று தீட்டினேன். அது எனது கவிதைகள் 2-ம் பகுதியில் வெளியிடப் பட்டிருக்கிறது. கண்டு கொள்க. அவர் எழுதிய நூல்களை வெளியிட திருப்புகழ் மணியைக் கேட்டாராம். முடியாது என்றாராம். புரட்சி தேவை என வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார். சுதேசமித்திரனில் பாரதியை, ஒழுக்க ஈனன், பூணூல் போடுவது இல்லை. சுருட்டுப் பிடிப்பவன், ஆசாரமற்றவன் என்றெல்லாம் கண்டித்துக் கட்டுரைகள் வந்தன. பாரதி சொல்வார் பூணூல்தான் ஆசாரமா? உச்சிக் குடுமி, நான்கைந்து மயிர்கள்தான் ஒழுக்கத்திற்கு அறிகுறியா? இல்லை! என்று. அவர் சாதி ஒழிப்புக் கொள்கை தலைசிறந்தது. குறிப்பிட்ட எவரும் கூறாத நேரத்தில் தைரியமாக, எளிய தமிழில் சொன்னார்! அதை பிற்பற்றுவோமாக. நான் பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குள்ள காரணம் அப்போது அவர் (பாரதியார்) என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக - உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம்! அவருக்கு நூற்றாண்டுகளுக்குமுன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியார் இறந்தபின் சாதியை எதிர்த்துச் சீர்திருத்தங்களை ஆதரித்த பெரியாரை ஆதரிக்கத் தொடங்கினேன். - குயில், 1960 (சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 6.9.1947இல் நடைபெற்ற விழாவில் தலைமை ஏற்று ஆற்றிய உரையிலிருந்து. பேரறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மாலைமணி நாளேட்டில் 8.9.1949இல் வெளிவந்தது. தொகுத்து அனுப்பியவர்: பொன் கு. கோதண்டபாணி) 25. பாரதியார் பாடல்களைப் பாடுவோர் கவனத்திற்கு: பாரதியார் பாடல்களை என்ன பண்ணிலே அதை இயற்றி னாரோ, அந்தப் பண் தெரிந்து பாடினாலொழிய அந்தப் பாட்டிலே எதிர் பார்த்த அளவு இயைபு அடைய முடியாது. பல இசைப் புலவர்கள் பாரதி பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள். அவர்கள் இசை நன்றாக அமைந்துவிட்டதென்று திருப்தி அடைந்தார்களே யொழிய அதை எந்த அளவிலே பாரதியார் பாடினார் என்பதை அறிந்து பாடவேண்டும் என்பதிலே சிறப்புக் கண்டார்களில்லை. இனி உதாரணத்திற்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் பாரதி பாட்டிலே, பாருக்குள்ளே நல்ல நாடு என்பதை இசைப் புலவர்கள் பலர், பலரிடத்துக் கேட்டிருப்பீர்கள். இப்பொழுது நான் அதனிசையைத் திருப்பி - அந்தப் பாடலைச் சொல்லிப் பார்க்க ஆசைப்படுகிறேன். இப்படிச் சொல்வதினாலே என்னிடத்திலே ஒரு நல்ல இசைப் புலவர்கள் பாடுகின்ற அளவு இனிமையை நீங்கள் எதிர் பார்க்க முடியாது. அந்தப் பாட்டு என்ன ராகத்திலே இந்த மாதிரியிலே அவர் பாடினார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அந்த அளவிலே நான் பாடிக்காட்ட முடியும். பல்லவி ஞானத்திலே பரமோனத்திலே - உயர் மானத்திலே அன்னதானத்திலே கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர்நாடு - இந்தப் - பாருக் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ஆற்றினிலே சுனையூற்றினிலே - தென்றல் காற்றினிலே மலைப்பேற்றினிலே ஏற்றினிலே பயன் ஈந்திடுங் காலி இனத்தினிலே உயர்நாடு - இந்தப் - பாருக் என்பது இயைபு. இந்த மாதிரியே அவை எண்ணி விசாலமான பொருளுடையவர்கள் இசைஞானமுடையவர்கள் இந்த மாதிரியிலே பாடினால் மிகுந்த சுவையை அனுபவிக்கலாமென்று சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருநாள் பாரதி அவர்களும் நானும் இன்னும் சில தோழர்களும் இருக்கையிலே, தபால்காரன் சுதேசமித்திரன் இதழையும், ஒரு தபாலையும் கொண்டுவந்து கொடுத்தான். அதிலே, பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே தமிழர்கள் படுகின்ற பாட்டை தீவிரமாக எழுதியிருந்தார். அன்றைக்கு அதைப் பார்த்தவுடனே, அவருக்கு அன்றைக்குப் பாடல் எழுதவேண்டும். அந்தப்பாட்டை என்ன கருத்து அமைத்துப்பாட வேண்டும் என்பது தெரிந்துவிட்டது. உங்களுக்குத் தெரியும். பாரதி தினமும் சுதேசமித்திரனுக்கு ஒரு கவிதை - மற்றொரு நாள் உரைநடை எழுதுவது உண்டு. அன்றைக்கு அதைப் பார்த்த அளவே, தமிழர்கள் அங்கு படுகின்ற பாடுபற்றி மிக வருந்தினார்கள். அந்த வருத்தத்தை - அதே நேரத்திலே பாட்டாக எழுதிக் காட்டினார்கள். இராகத்தைப் பொருத்த அளவில், இன்ன தாளத்திலே இருக்கவேண்டும் என்பதில் பிரத்தியேகமாக யாரும் சிந்திப்பதில்லை. பாரதியார் ராகமும் தாளமும் இயைபோடு இருக்கவேண்டும் என்ற கருத்துடையவர், பாட்டு எழுதத் தொடங்குமுன், ஆ... ஆ... ஆ ஆ ஆ என்று ஆலாப்பிக்கிறார். எழுதிக் கொண்டே போகிறார்கள். எழுதி முடிந்தபிறகு, பல்லவி கரும்புத் தோட்டத்திலே - ஆ கரும்புத்தோட்டத்திலே சரணங்கள் கரும்புத் தோட்டத்திலே - அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே! - ஹிந்து மாதர் தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய் சுருங்குகின்றனரே! அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு மருந்திதற்கில்லையே? - செக்கு மாடுகள் போலுழைத்தேங்குகின்றார் அந்தக் - கரும்பு என்று பாடினார். இந்த மூர்ச்சை இழுக்கும்படி இசைப் புலவர்கள் இதைப் பாடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதை அவர்கள் நன்றாக என்போன்றவர்கள் இன்னும் அவர் காலத்தில் இருந்த ஒரு சிலரும் இருக்கின்றனர். அவர்களைக் கொண்டாவது தெரிந்து கொண்டு பாடவேண்டும் என்பதிலே அவர்கள் சிரத்தை கொள்ள வேண்டும். சிரத்தை கொள்ளா விட்டாலும் அவர்களைக் கேலி செய்யாமல் இருக்க வேண்டும். ஓரிடத்திற்கு நான் போயிருந்தபோது என்னுடைய தலைமை யிலே பாரதி பாடல் போட்டி நடந்தது. அதிலே, பல்லவி ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு என்று பாடவேண்டியிருக்க, அந்தத் தோழர் ஒருவர் ஜய முண்டு ... பய மில்லை மனமே என்று பாடினார். மேகராக குறிஞ்சிப் பண்ணிலே நீலாம்பரி ராகம். இதிலே பாடினார் அந்தத் தோழர். இப்படிப் பட்ட பிழைகள் செய்யாமல் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் பாட முடியாத நிலையிலும், இப்போது அந்த மெட்டால் உங்களுக்குப் பாடிக் காட்டினேன். நாட்டை நினைப்பாரோ? - எந்த நாளினைப் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ? - அவர் விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே - துன்பக் கேணியிலே யெங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டு முரையாயோ? இவர் விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர் - கரும்பு இதுதான் கவிஞன் குரல் முன்னே சொன்னது போலவே ஒரு இசைப்புலவர் முருக பக்தி உடையவர். பாரதியார் எழுதிய முருகா! KUfh! என்ற பாட்டைப் பாடினார். பாடினார் என்று சொல்லுவதை விட அவர் அழுதார் என்று சொல்லவேண்டும். அது தான் பொருத்தமாக இருக்கும். பாரதியார் முருகனாக இருக்கட்டும் அல்லது சிவ பெருமா னாக இருக்கட்டும், அல்லது சக்தியாக இருக்கட்டும் அங்கே போய் அருள் செய்யவேண்டுமென்று கூறி அருள் பிச்சை கேட்பதேயில்லை. கெஞ்சுகின்ற வழக்கத்தை நான் அவரிடத்தே பார்த்ததே கிடையாது. இது எப்படி இருக்கிறது என்று கேட்டால், மிகப் பசியாக இருக்கிறது; ஏதேனும் போடக் கூடாதா? போடுங்கள் என்று கேட்கவேண்டிய ஒருவன், பசியாய் இருக்கின்றது; போடுகின்றாயா? இல்லையா? என்று அதிகாரத் தோரணையில் கேட்பதாயிருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது இவர்கள் கடவுளைப் பற்றிக்கேட்பது? இது நியாயமா என்று தோழர்கள் கேட்கலாம். நியாயம் இல்லாமல் வேறு என்ன என்று நானும் பதில் சொல்வேன். ஏனென்று கேட்டால், பாரதி அவர்கள் தமக் கென்று கேட்கவில்லை. அழகாகச் சொல்வார் ஊருக்கு உழைத்திடல் யோகம்; தவம் ஓங்கிமொறு வருந்துதல் யாகம் வருந்துதல் யாகம் பேருக்கு நின்றிடும்போதும் பொங்கலில்லாத அமைதி மெய்ஞ் ஞானம் அப்படிப்பட்ட விசாலித்த அன்புடையவர் பாரதியார், தமக் கென ஒன்று கேட்கும்போது கெஞ்சுகின்ற பாவம் தோன்றும். உலக மக்களுக்கெனக் கேட்கும்போது அவ்வாறு தோன்றாது. பல்லவி முருகா! முருகா! முருகா! சரணங்கள் வருவாய் மயில்மீ தினிலே வடிவேலுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் - முருகா அடியார் பலரிங்குளரே அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே! அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே! - முருகா (கோவை அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு நடத்திய பாரதி விழாவில் பாரதிதாசன் ஆற்றிய உரைப்பகுதி. திருச்சி வானொலி நிலைய ஒலிப்பதிவு.) 26. பாரதியார் கரந்தைப் புலவர் கல்லூரி இளங்கோவடிகள் தமிழ்க் கழகம் பாரதி நினைவுவிழாச் சிறப்புக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம். அறிஞர்களே! தாய்மார்களே! கவிஞர் பாரதியார் புதுவையில் தங்கியிருந்தபோது எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஏறக்குறைய பன்னிரண்டு யாண்டுகள் தொடர்பு கொண்டிருந்தேன். அப்போது புதுச்சேரியில் வாழ்ந்துவந்த தமிழறிஞர்கள் பாரதியாரைக் கவிஞர் என ஒத்துக் கொள்ளவில்லை. இவருக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தக்க புலமை கிடையாது என்பது அவர்களுடைய முடிவாகும். அவருக்கு எழுத்து, சொல், யாப்பு பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் உண்டு என்பதை யான் வலியுறுத்துவேன். அந்நாளில் அவர் புலமையில் நம்பிக்கை கொண்டவர்களில் யானும் ஒருவன். இதனால் எனக்கு எதிர்ப்பும் ஏற்பட்டது. என்னுடைய கடந்தகால வரலாற்றைப் பார்த்தால் எனக்கு என்றும் எவ்விடத்தும் எதிர்ப்பு இருந்தது என்பது புலனாகும். அவ்வெதிர்ப்புகள் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. மாறாக என்னுடைய வாழ்வை உயர்த்தியதென்றே கூறலாம். எக்காரியத்தை இயற்றத் தொடங்கினும் எண்ணித் தொடங்க வேண்டும். நமக்கு நல்லது. அறமானது என்று படும் எண்ணங்களை மற்றவருடைய எதிர்ப்புக்கும் செயலுக்கும் அஞ்சாமல் செயற்படுத்த வேண்டும். பாரதியாரோடு தொடர்பேற்படுவதற்கு முன்னர் என்னுடைய நிலைமையை நீங்கள் அறிய ஆசைப்படுவீர்கள். யான் ஒரு தமிழாசிரியன். மேலும் அக்காலங்களில் பல வகையான இசைப் பாக்களைப் பக்திநெறியில் பாடிக் கொண்டிருந்தவன். அக்காலத்து யான் பாடிய பாக்கள் எங்கள் ஊர்ப்புறங்களிலும், சென்னை முதலான இடங்களிலுமுள்ள அன்பர்களால் விரும்பிப் பொருள் கொடுத்து ஏற்றுப் பாடப்பெற்றன. அக்காலங்களில் புதுவையில் அறிஞர் கூடிப் பல கருத்துக்களைப் பற்றிய சொற்பொழிவாற்றும் கலைமகள் கழகம் என ஒரு பேரவை இருந்தது. அதன்கண் யான் ஒருமுறை உணர்வும் அறிவும் வேறுபட்டவையென்று பேசினேன். உணர்வென்பது நுண் பொருள் பற்றியது. அறிவென்பது பருப்பொருள் பற்றியது. இதற்குச் சான்றாகத் திருமங்கை யாழ்வார் பாடிய வாடினேன் வாடி என்று தொடங்கும் பாவில் நாடினேன் நாடி யென்றது பருப்பொருளைப் பற்றிய அறிவு தொழிற்படும் நிலை. உணர்வென்னும் பெரும் பதம் தெரிந்து என்றது நுண்பொருள் பற்றிய உணர்வு தொழிற்படும் நிலை. இவ்விரு வேறுபாடுகளை ஆண்டுள்ளோர் ஒப்பவில்லை. பின்னர் ஆங்கிலம் ஆரியம் தீந்தமிழ் நிறைமறைமலையடிகளும் நறைபழுத்த துறைத்தீந்தமிழில் சுவையொழுகச் சொற்பெருக்காற்று. ஞானியா ரடிகளும் அறிவும் உணர்வும் வேறென்பதை விளக்கியுள்ளனர். நிற்க, பாரதியாருடைய தொடர்பு என்னுடைய பாநெறியில் ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியது. அவர் கண்ணெதிரில் காணப்படும் மக்களின் தேவைகளைப் பாடினார். அது என்னுடைய மனத்தைக் கவர்ந்தது. பிறகே என்னுடைய பாக்கள் அரசியல், சமுதாயம் மொழி ஆகிய துறைகளில் உள்ள குறை நிறைகளை உருவாக எடுத்துக்காட்டத் தலைப்பட்டன. இவ்வகையில் பாரதியாருக்கு யான் மிகவும் கடமைப் பட்டவன். அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாக்களில் தமிழனின் தனித்த நாகரிகத்தையோ, பண்பாட்டையோ பற்றிப் பாடவில்லை. காரணம், கூடாது என்பதல்ல. அவரறிந்த வகையில் தமிழன் நாகரிக மெல்லாம் ஆரியச்சார்புடையவேயாகும். சங்க நூல்களை அறிந்தவர் தான் தமிழனின் தனித்த பண்பாடுகளை அறிய முடியும். அத்தகைய நூற்றொகுதிகள் உண்டு என்பது அவருக்குத் தெரியாது. அவருக்கு மட்டுமல்ல. தமிழ்ப் புலமை சான்ற அவருடைய தகப்பனார்க்கே தெரியாது. இதனை அவரே கூறியுள்ளார். எட்டையபுர அரசரோடு இவருடைய தகப்பனார் அளவளாவிக் கொண்டிருக்கும் போதெல்லாம் இராமாயணம், பாரதம் போன்ற நூல்களின் கருத்துக்களே பேசப்படும்; ஆராயப்படும். ஆகவே இவை பற்றிய செய்திகளே பாரதிக்குத் தெரியும். கதைகளின் போக்கை மாற்றியும் கூட்டியும் தமிழில் இராமாயண பாரதமாகிய நூல்களை அமைத்திருப் பினும், அவைகளில் காணப்படும் அடிப்படையான சில பண்பாடுகள் தமிழருக்கு எட்டுணையும் பொருந்தாது. சான்றாக சொற்பாலமிழ் திவள்யான் சுவை என்றாற் போல ஓருயிரும் ஈருடலுமாய் வாழ்க்கை நடத்திய தமிழருக்கு ஒருத்தியைப் பலர் மணத்தல் போன்ற வாழ்வு முறைகள் ஒவ்வாவென்பது வெள்ளிடை மலையன்றோ! புற வாழ்வில் தமிழர் நிகழ்த்திய போர் முறைகளும் வடவர் முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். மறைந்து நின்று வேண்டாதாரை அம்பெய்து அழிப்பது தமிழன் வாழ்வில் காணாத புதுமை. கடந்தடு என்ற சொற்றொடர் வரு மிடமெல்லாம் நச்சினார்க்கினியரென்னும் பேராசிரியர் வருசியாது எதிர் நின்று கொன்று என்று விளக்கம் வரைவதைக் காணலாம். தமிழ் நூல்களைப் பாரதி அறிந்ததைவிட ஆங்கில நூல்களும் வடமொழி நூல்களுமே அறிவார். மேலும், தமிழரைப் பற்றி அறிந்த சிறப்பான செய்திகளும் அவரறியாமல் மறைக்கப்பட்டன. தமிழையும் தமிழ் நாட்டையும் சிறப்பித்துப் பாடுவதற்கு ஓரமையம் வாய்ந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி நடத்திவந்த திருமிகு. பாண்டித்துரைத் தேவரவர்கள் தமிழ்நாட்டைப்பற்றிச் சிறந்த பா பாடுபவருக்குப் பரிசளிப்பதாகச் செய்தித்தாள்களில் அறிவிப்புச் செய்தனர். நாங்கள் இதனைப் பாரதிபால் அறிவித்தோம். அவர் முதலில் உடன்படவில்லை. நாமெல்லாம் வெள்ளைக்காரருக்கு எதிர்ப்பானவர்கள். பாண்டித்துரைத் தேவர் போன்றோருக்கு இது போன்ற செய்திகள் பிடிக்காது. இந்நிலையில் நம்முடைய பாடலை அவர் ஏற்பது என்பது ஐயம். நாம் வறிதே எழுதி அவர்களுடைய அவமதிப்பைப் பெறுவதில் என்ன பயன்? என்றனர். நீங்கள் அங்கு அனுப்பாவிட்டாலும் எங்களிடத்திலாயினும் கொடுங்கள் என்று கூறினோம். பின்னரே பாடல் எழுதினார். இந்த சமயம் வாய்க்காவிடில் தமிழ் நாட்டில் தமிழ்க் கவிதைகளை வழங்கிய பாரதிக்குத் தமிழ் நாட்டை மட்டும் சிறப்பித்துப் பாடுவதற்கு வாய்ப்பே இருக்காது. இச்செய்தி உங்கட்கு வியப்பை அளிக்கலாம் உண்மை இதுதான். தமிழ் மக்கள் தத்துவம் நன்குணர்ந்தவர். உலகிற்குத் தத்துவத்தை வழங்கியவர், குமரிநாட்டுத் தமிழ்மக்களேயாவர். திருமந்திரத்தில் இறைவன் உலகேழின் உள்ளும் புறமும் தங்கி அவ்வப்பொருள்கள் தம்மியல்பில் திரிபடையாது வைத்திருத்தல் போல, தமிழ்ச் சாத்திரங் களையும் மக்கள் வாழ்வில் பொருள் மிகாதபடி வைத்துள்ளார் என்னும் கருத்துப்பட, அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான் எங்கு மிகாமை வைத்தான் உலகேழையும் தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே என்று கூறியுள்ளார். மனிதன் தன்னுடைய வாழ்வில் மனமறிந்த தவறுகளை இயற்றக் கூடாது; அவ்வாறு தவறிழைத்தால் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்யக் கூடாதென்பதே தமிழ்ப் பெரியோர்கள் கூறிய முறை. இதனைத் திருவள்ளுவர். என்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்று கூறியுள்ளார். வடவர் முறை இத்தகைய தன்று. எத்தகைய தவறு செய்யினும் அதற்கு கழுவாய் உண்டு. சான்றாக ஒரு கள்வன், மக்கள் ஒதுங்கிய சமயத்தில் குழந்தையின் கழுத்தில் அணிந்துள்ள சங்கிலிக்காகத் தூக்கிக்கொண்டு சென்று குழந்தையைக் கொன்றுவிட்டான். தங்கச் சங்கிலிக்காக உயிரைக்கொன்ற உய்தியில் குற்றம் புரிந்த கொடி யோனுக்கும் கழுவாய் உண்டு. குழந்தைபோன்ற உருவைப் பொன் னாலோ வெள்ளி யாலோ அல்லது வேறு மதிப்புடைய பொருளாலோ செய்து பிராமணர் கட்குத் தானமாகக் கொடுத்தால் பாவமில்லை யென்பது பொருந்திய அறவிதியா என்பதனை அறிஞர்களே சிந்தியுங்கள். உண்மையான கழுவாயாக அது இருக்குமேல் குழந்தை பிழைத்து வர வேண்டும். அப்போது தான் இதனைக் கழுவாய் என்று கூறலாம். அவ்வாறில்லை யாயின் கள்வனை ஒத்த இயல்பினன்தானே கழுவாய் செய்வித்தவ னும்? அன்பர்களே! இத்தகைய குழறுபடியான அறங்களைத் தமிழர் வகுக்கவில்லை. இத்தகைய சீரிய தனித் தமிழ்ப் பண்பாடுகள் பாரதிக்குத் தெரியாது. வடிவேலறிய வஞ்சனை யில்லாதவர். அறிந்தால் பாடியிருப்பார். சமுதாய வாழ்வில் இவர் கொண்ட கருத்துக்களை இப்போது மறைக்கின்றனர். தமிழர், வடமொழி நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் கடமைப் பட்டவரேயெனும் போலி எண்ணம் பெரும்பாலான அறிஞர்களிடம் ஊறியிருந்தது. வேட்டி என்னும் அருமையான தமிழ்ச் சொல்லை வேஷ்டி என்று வழங்கும் அண்பர்களை அறிவோம். வடமொழியில் வழங்கும் இச் சொல்லே தமிழில் வழங்கியதென்பதால் இச்சொல்லின் தமிழ்த் தன்மையை உணரவில்லை. வெட்டப்படுவதால் வேட்டி, துண்டிக்கப்படுவதால் துண்டு, துணிக்கப்படுவதால் துணி, அறுக்கப் படுவதால் அறுவை என்று வழங்கும் பிற சொற்களையும் காண்க. எச்சொல்லையும் பிரித்துப் பார்த்தால் தமிழா பிறமொழியா என்பது விளங்கும். இவ்வியல்பினரைத் திருத்தாது விடுவோமாயின் ஆட்டுக் குட்டியென்பதை ஆஷ்டுக்குஷ்டி என்பதிலிருந்து வந்ததாகவும் கூறுவர். நண்பர் வ.ரா. அவர்கள் ஒருமுறை ஆட்டுக்குட்டி எனல் சரியில்லை. ஆடுகுட்டியென்றே சொல்லவேண்டுமென்றனர். இளம் பிள்ளைகள்கூட ஆட்டுக்குட்டியென்றே கூறுவர், யான் அவரிடம் சென்று உமக்குத் தெரியாததில் தலையிடுவது சரியல்ல. ஆடுகுட்டி என்றால் வினைத்தொகை நிலைத் தொடராகி ஆடியகுட்டி, ஆடும் குட்டியென்றாற் போலல்லவா பொருள்படும். என்று கூறினேன். கவிஞர் என்பதுகூடத் தமிழல்ல என்பாரும் உண்டு. நல்ல தமிழ்ச் சொல் இது என்பதனைக் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு என வள்ளுவர் கூறியவற்றால் உணரலாம். கவிகை என்பது கை விகுதி பெற்ற தொழிற்பெயர். கவிதல் என்பது பொருள். தொழிற்பெயரின் விகுதியாகிய கை என்பதனை நீக்கினால் எஞ்சி நிற்பது கவி என்னும் முதனிலையாகும். கவிகை என்பது கவிந்து நிற்பது என்னும் கருத்தில் தொழிலாகு பெயராகக் குடையை உணர்த்திற்று. உலக நாட்டைக் கவிந்து நிற்பது கவிகையானால் மக்கள் உள்ளங்களை, எண்ணங்களைக் கவிந்து நிற்பது கவி என்பதும் வெள்ளிடை மலையாக விளங்குகின்றது. மேலும் இலக்கணம் என்பதுகூடத் தமிழல்ல என்னும் தமிழறிஞரை அறிவேன். இது இலக்கு - அணம் என்று வருவது. இலக்கணத் தொடர்ந்து என மணிமேகலையில் வந்துள்ளது. மொழிக்கு இலக்காகப் பொருந்தி இயல்வதனை இலக்கண மெனத் தமிழ்ப் பெரியோர் வழங்கினர் என அறிக. நாகரிகம் என்பதும் நகரை அடிப்படையாகக் கொண்டு வந்ததென்பர். உண்மை அதுவல்ல. நாகர் என்ற ஒரு இனத்தாரைத் தமிழர்கள் மிகவும் வெறுத்தனர். இவர்கள் மலையில் வாழ்ந்தனர். நாகம் விண்குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை. எனச் சூடாமணி நிகண்டிலும் நாகம் என்பது மலையைக் குறிக்குமெனக் கூறியிருத்தல் காண்க. நாகத்தில் வாழ்பவராதலில் நாகர் எனப்பட்டனர். இவர்கள் தமிழர்கட்குப் பகையானவர். பண்பாடற்றவர். இதனை மணிமேகலை என்னும் நூலில் நாகர் தலைவனைக் கூறும் போது, “கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில் எண்குதன் பிணவோடிருந்தது போலப் பெண்டுடன் இருந்தன னென்றும்! அவர்களிடையில் தப்பிச் சென்ற சாதுவன் என்னும் வாணிகன் அவர்கள் மொழியைப் பேசிய அளவிலேயே நாகர் தலைவன். நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டவகொடும் என ஆணையிடுகின்றமையும் இவர்களின் நாகரிகமற்ற தன்மைக்குச் சான்றாமென்க. நாகரை இகழ்ந்தவர் ஆதலின் நாகரிகர் எனப்பட்டனர். கருமம் என்பதும் வடமொழியல்ல, வாழ்விற்கு அடிப்படை யான வினைகளே கருமம் என்று கூறப்பட்டது. கரு என்பது முதல், அடிப்படை என்ற பொருளைக்காட்டும். உழவு, தொழில், வாணிகம், வரைவு, விச்சை, தச்சு என்னும் அறுவகையான தொழில்களே வாழ்விற் கடிப்படையாகும். அறு தொழிலோர் நூன்மறப்பர், காவலன் காவா னெனின் என்ற வள்ளுவர் வாக்கும் ஈண்டு நினைவுகூறல் தகும். கோயில் என்பது மன்னவன் இருக்குமிடத்திற்கே பண்டை நாளில் வழங்கியது. கோ என்பது அரசன். இல் என்பது வீடு. கோயில் என்றால் அரசன் வீடு என்பது பொருள். மறத்துறை மண்டிய மன்னவன் கோயிலும் எனச் சிலம்பு முழங்குவதும் காண்க. இறைவனிருக்கு மிடத்தைக் கோயில் என்பது பிற்கால வழக்கு. ஒவ்வொரு ஊரிலும் ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலர் கூடி வழக்கு முதலியவைகளை ஆயும் மன்றமிருந்தது. மன்றங்களில் அவ் வூரில் சிறக்க வாழ்ந்த பெருமக்கள் அடக்கம் செய்து வழிபாடு இயற்றினர். இதுவே நாளடைவில் கோயிலாக மாறியது. நம் நாட்டு அமைச்சர் முதலிய நாடாள்வோர் அறுவகைத் தொழிலையும் பாது காக்க வேண்டும். மழையில்லை என்று கூறியமக்கட்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த ஒருவர் கோயிலுக்குச் செல்லுங்கள் என்றாராம். மழை கோயிலுக்குப் போனால் வராது. மழையென்பது இயற்கையின் கொடை, இது வருந்தி அழைத்தாலும் வராது புலம்பிப் போவெனப் போக்கினும் போகாது. இதனை மாரி, வறப்பில் தருவாருமில்லை யதனை சிறப்பில் தணிப்பாருமில் என்னும் நாலடியார் கொண்டும் அறியலாம். இல்லை. இல் என்பது குறிப்பு வினை முற்றுக்களாயினும் எல்லா இடங்களையும் மூன்று காலங்களையும் காட்டிநிற்கும் எதிர்மறைச் சொல்லாகும். எனவே இன்றும் இல்லை. பண்டுமில்லை. நாளையும் இல்லை; இந்நாட்டிலில்லை. இந்தியாவிலில்லை. உலகத்திலுமில்லை. சங்க காலந்தொட்டுத் தமிழர் அரசியலில் தம்மவர் வாழப் பொறாத உள்ளங்கொண்டவராகவே இருந்தனரென்பதை அறிகின் றோம். உழவர் உழாத நான்கு பயன்களையுடைய பாரியின் பறம்பினை மூவேந்தரும் குறுநில மன்னரும் முற்றுகையிட்டமையும், சேரன் சேங்குட்டுவனின் வெற்றிக்கு மனம் பொறாத பாண்டியர் சோழர் கூற்றும் இக்கால அரசியல் தமிழர் செயல் திறங்களும் தக்க சான்றாகும். இதுபோன்ற சூழ்ச்சியான எண்ணங்கள் ஒழியும்நாளே தமிழர் தலைதூக்க முடியும். அதற்காவன செய்வோமாக. இன்பமெனப்படுதல் - தமிழ் இன்பமெனத் தமிழ் நாட்டினர் எண்ணுக. - குயில் : 10.6.67 1. அடைத்துக் கொண்டு நிற்காதே தொந்தி பெருத்த அசலூர் பிராமணர், ஒரு செட்டியார் வீட்டின் வாசற்படியில் நின்றபடி செட்டியாரை நோக்கி - தர்மம் ஏதாவது செட்டியார்: ஏன் காணும் போம்! போம்! ஐயர்: தங்களுக்குப் புண்ணியம் வரவேண்டாமா? செட்டி: புண்ணியம் வருகிற வாசற்படியைத்தான் அடைத்துக் கொண்டு நிற்காதே என்கிறேன். 2. சுமந்து பெற்றீரோ? சாதிரி: இந்தப் பனிரண்டாறை (வேஷ்டி) நான் வாங்கிய படி விற்றுத் தருகிறாயா என்றார். துடுக்குக் கோபாலன்: ஆகா! ‘ï¥go¡ fh£L§fŸ! என்று வாங்கி வழியிற்போன ஏழை ஒருவனிடம் கொடுத்து ஓடிப்போ என்றான். சாதிரி: இதென்ன, சும்மா கொடுத்துவிட்டாயே! து.கோ: பின்னென்ன! நீர் சுமந்து பெற்றீரோ! 3. அந்த முண்டத்திற்குத் தெரியாதோ? தேவதை வசியக்காரர்: ஏண்டா! என் பிள்ளையை நேற்றுத் திட்டினாய்? திட்டினவன்: ஆம், இராத்திரி உன் தேவதையைக் கூப்பிட்டிருப்பாய். என்மீது தூண்டி விட்டிருப்பாய். அந்தத் தேவதை என்னை என்ன செய்வதாய் உன்னிடம் சொல்லிற்று? வசியக்காரர்: உன் பல்லை உடைத்து விடுவதாய்ச் சொல்லியிருக்கிறது. திட்டினவன்: எனக்குக் கட்டின பற்கள் தவிர சொந்தப் பல் இல்லை என்று அந்த முண்டத்திற்குத் தெரியாதோ? 4. கொடுத்த ரூபாய் எப்போது வரும் ஒரு கோர்ட்டுச் சேவகன்மேல் ஆவேசம் வருவதுண்டு. காணிக்கை செலுத்தி அவரவர் குறி கேட்கலாம். ஒருநாள் குப்பன் ஒரு ரூபாய் கட்டிவிட்டுக் குறி கேட்டிருந்தான். திடீரென்று துரை அங்கு வந்து விட்டார். சாமி எழுந்து துரைக்குச் சலாம் அடித்தது. துரை போனபின்... சாமி: மற்ற கேள்வியும் கேட்கலாம்... குப்பன்: நான் உனக்குக் கொடுத்த ஒரு ரூபாய் எப்போது வரும்? 5. சிரிப்பும் வருத்தமும் இந்து கடவுளுக்குக் கற்பூரம் கொளுத்துவது வழக்கம். பர்மியர் கடவுளுக்கு காகிதம் கொளுத்துவது வழக்கம். இந்து: நான் என்ன வருத்தமாய் இருந்தாலும் நீ கடவுளுக்குத் தாள் கொளுத்துவதைக் கண்டால் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விடுகிறது. பர்மியன்: நான் என்ன சந்தோஷமாய் இருந்தாலும் நீ கற்பூரத்தைக் கொளுத்தக் கண்டால் எனக்கு அடக்கமுடியாத வருத்தம் உண்டாகிறது. 6. கெட்ட தும்மல் கண்ணன்: உன் தும்மல் நல்ல தும்மல்தானா மிடர்? குருடன்: பேஷான தும்மல். நினைத்த காரியம் சித்தி. என்ன நினைத்தாய்? கண்ணன்: எச்சில் என்மேலே படும்படி எவனாவது தும்மினால் அவன் கண்களைப் பெயர்க்க நினைத்தேன். உனக்குத்தான் கண்ணில்லையே? கெட்ட தும்மல். 7. பக்தியின் முதிர்ச்சி செட்டியார்: சிவன் கோயிலுக்கு எதிரில் நின்று, அரஹர அரஹர மஹா தேவா, என்று கும்பிட்டார். இதற்குள் செட்டியாரின் குமாதா பின் வந்துநின்று, வாடிக்கைக்காரர் நமது நல்லெண்ணெயை விலைகுறைத்துக் கேட்கிறார் என்றான். செட்டி: ஒன்றுக்குப் பாதி மணிலா எண்ணெயைக் கலந்து கொள். இது தெரியாதா? குமாதா: மெதுவாய்ப் பேசுங்கள். அவரும் இதோ வருகிறார். செட்டி: (சுவாமி பக்கம் திரும்பி) அரஹர மஹாதேவ சம்போ ... ... 8. பெண் தொட்டிலிலா அல்லது வயிற்றிலா? தெலுங்கு வைசியர்: (தன் வீட்டில் பெண் பார்க்க வந்தவர்களை நோக்கி) எங்கள் வீட்டுக்கு மருகராக வரவிருக்கிறவர் சாயுமான நாற்காலியில் உட்காருகிறவரா? அல்லது கட்டிலிலேதானா? மாப்பிள்ளை வீட்டார்: பெண் தொட்டிலில்தானா? அல்லது வயிற்றி லேயேவா? - கிண்டற்காரன்; புதுவை முரசு, 17.11.1930 9. சர்வம் விஷ்ணுமயம் பாகவதர்: அப்பா சர்வம் விஷ்ணுமயம் ஜகத் அல்லவா! சிஷ்யன்: பன்றி மலந்தின்னுவதை, நான் வராகவதாரம் பூமியை பெயர்த் தெடுப்பதாகவே காண்கிறேன். மச்சாவதாரத்தைத்தான் என் வயிற்றில் செலுத்துகிறேன். 10. ராகு கால பயன் ஒருவன்: நான் ராகு காலத்தில் வெளிக் கிளம்பினதால் தான் பத்து ரூபாய் நோட்டு விழுந்துவிட்டது. மற்றவன்: நான் ராகு காலத்தில்தான் அந்தப் பத்து ரூபாய் நோட்டைக் கண்டெடுத்தேன். 11. பெரிய பாவம் செய்துவிட்டேன். பாதிரி: நீ ஏதாகிலும் பாவம் செய்தாயா? சொல்லிவிடு. நான் சுவாமி யிடம் சொல்லித் தீர்த்துவிடுகிறேன். கிறிதுவர்: ஆம்! சுவாமி ஆம்! பெரிய பாவம். பாதிரி: என்ன அப்படி? கிறிதுவர்: பாதிரிகள், ஏழைகள் மட்டில் இரக்கம் உள்ளவர்கள் என்று நினைத்துவிட்டேன். 12. திருமாளிகை அலங்கரிக்க தென்னங்கீற்று ஐயங்கார்: நமது இஞ்சினீயர் ராமசாமி ஐயங்கார் வைகுந்தத்தில் திருமாளிகை அலங்கரித்துக் கொண்டாராமே? (செத்துப் போனார் என்று அர்த்தம்) கீற்று முடைபவன்: அவர் இஞ்சினீயர் ஆகையால் அங்கேபோய் மாளிகை செப்பனிட்டார். நான் பத்துத் தென்னங் கீற்றைத்தான் எடுத்துப்போகவேண்டும் கூரை கட்டிக் கொள்ள. 13. இனிமேல் கிடைக்காதோ? கோயில் பரிசாரகர் மனைவி: இதென்ன, கோயிலின் முறம் வீட்டுக்கு வந்திருக்கிறது. பரிசாரகர்: அரிசி கொழிக்க உதவும்; இருக்கட்டும். மனைவி: ஆனால் கோயிலில் கொழித்த அரிசி இனிமேல் கிடைக்காதோ? 14. நல்ல ஏற்பாடு வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போக ஏற்பாடு செய்திருக் கிறார்கள் முன்னோர்கள். அதிலும் அன்று இராத்திரி அங்கு போய் முற்றலான தேங்காய் உடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். விடிந்தால் சனிக்கிழமை தலை முழுக்கு. ஆட்டிறைச்சிக்கு அந்தத் தேங்காய் உதவுகிறது, பாருங்கள்! நல்ல ஏற்பாடு. 15. நடராஜாவைவிடத் தீக்ஷிதர் ஏற்றம் சிதம்பரம் தீக்ஷிதர் ஒருவரும், நடராஜாவும் எல்லா வியத்திலும் சமம். இன்னும் சொல்லப்போனால் தீக்ஷிதனுக்கே சிறிது ஏற்றம் சொல்லலாம். நடராஜாவுக்கு புதுச்சேரி பிராந்தி கிடைக்காது. 16. அந்தப் பாதகம் தீர்க்கத்தான் ரயிலில் அழைக்கிறோம் சுவாமியார்: நாம் பல்லக்கில் ஏறிக் கொள்வோம். நான்கு பேர் சுமந்து போவார்கள். நம்மை இரயிலில் அழைப்பதிற் புண்ணியமில்லை. ஒருவன்: நாலு பேர் சுமக்கும் பாதகம் தீர்க்கத்தானே ரயிலில் அழைக்கிறோம்? - கிண்டற்காரன்; புதுவை முரசு, 24.11.1930 17. சாமிக்கு காது செவிடு அன்பர்: செட்டிமேல் சாமி வந்திருக்கிறது. நீ நினைத்திருப்பதைக் கேள். கேட்க வந்தவர்: சுவாமி! நான் ஒன்றை நினைத்து வந்திருக்கிறேன். சாமி: என்ன? கேட்க வந்தவர்: பணம் காணாமல் போயிற்று. எப்போது அகப்படும்? சாமி: சீக்கிரம் சௌக்யமாய்விடும். கேட்க வந்தவர்: இதென்ன ஐயா! சாமி இப்படிச் சொல்லுகிறதே! அன்பர்: அவருக்குக் காது செவிடு! நீ கூவிக் கேட்கவில்லை 18. குலமும் குணமும் அண்ணன்: குலத்தளவே யாகுங் குணம் என்பது மெய். தம்பி: கள்ளுக்கடையில் நுழைபவர் அனைவரும் ஒரே குலத்தவ ரென்பது பொய்! 19. நிறுத்தி விட்டேன் புரோகிதர்: ஏன் முதலியார்வாள் உங்கள் தகப்பனாருக்குத் திவச மென்று வந்திருக்கிறேன். சுயமரியாதைக்காரன்: நான்தான் அதையெல்லாம் நிறுத்தி விட்டேனே. போங்கள்! நீங்கள் வரும்போது (என்) வீட்டு வாசற்படியில் (என்) நாய் இருந்ததா சுவாமி? புரோகிதர்: எனக்கென்ன கவலை இந்த இழவெல்லாம் கவனிக்க? சுயமரி. : இல்லை இல்லை வீட்டில் சாமானை அடித்துக்கொண்டு போக யாராவது வந்தால் குலைப்பது வழக்கம். 20. சாத்திரம் மெய் அம்மன் கோயில் பூசாரி: இந்த இரண்டு பொட்டணத்தில் ஒரு பொட்டணத்தை எடு. வந்தவள்: (எடுத்துப் பார்த்து) குங்குமம் இருக்கிறது. பூசாரி: நீ என்ன நினைத்தாய். வந்தவள்: சென்ற வருடம் நான் செத்துப்போக வேண்டியவள் என்று சாத்திரம் இருந்தது! அந்தச் சாத்திரம் பொய் என்றால் விபூதி கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்! 21. முருகன் மகத்துவம் ஒருவன்: சோமுவுக்கு உடம்பு சௌக்யமாய் விட்டதா? மற்றவன்: நேற்று நான் சொன்னபடி அவன் முருகனுக்குக் காவடி எடுப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டான். நமக்கு முருகன் மகத்வம் சொல்லவா வேண்டும், ஏன் கேட்கிறீர்? ஒருவன்: இல்லை! நான் டாக்டரிடம் விடுமுறை பெற வேண்டியதா யிருக்கிறது. என்ன பிரார்த்தனை வேண்டுமானாலும் செய்து கொள்ளுகின்றேன். உம் முருகன் மகத்துவத்தால் இப்போது சிறிது சுரம் வரவழைக்கிறீரா! 22. மகா சக்தி வாய்ந்தவர் அர்ச்சகர்: பார்த்தாயா தில்லை கோவிந்தராஜ வாமி படுத்தபடி இருக்கிறார்? மகா சக்தி வாய்ந்தவர்! பார்த்தாய்விட்டதா? பக்தன்: இருங்கள் சுவாமி! அவர் எழுந்திருப்பதைப் பார்த்துவிட்டுப் போய்விடுகின்றேன். அர்ச்: அது இங்கில்லை. பக்தன்: மகாசக்தி வாய்ந்தவர் என்றீர்களே, எழுந்திருப்பதே தகராறோ? 23. காலராவுக்கு மறுபெயர் பொன்னன்: கால்ரா என்பதற்கு தமிழில் என்னமோ சொல்லுவார்கள். மறந்துவிட்டேன்... சிதம்பரம் தெரிசனத்தில் என்ன வரும்? ஐயர்: புண்ணியம் வரும். பொன்னன்: ஆம் ஆம் ஆம் அதுதான்! நன்றாய் வரப்படுத்தவேண்டும். கால்ரா என்றால் புண்ணியம்; கால்ரா என்றால் புண்ணியம்; கால்ரா என்றால் புண்ணியம் ... - கிண்டற்காரன்; புதுவை முரசு, 01.12.1930 24. இரண்டையும் ஒழி வைதிகன்: சிலர் திருநீறு என்பதற்குத் துண்ணூறு என்றும், திருநாமம் என்பதற்கு நாமம் என்றும் சொல்வது வருந்தத்தக்க விஷயம். சுயமரியாதைக்காரன்: இதுதானா கண்டீர்கள் இரண்டையும் ஒழி என்பதற்கு ஒளி என்று சொல்வது எவ்வளவு ஆபாசம்? 25. கடமை தீர்ந்தது சப் இன்பெக்டர் ராமசாமி நாயுடு, தனக்குக் கீழுள்ள ஏட் ராமையரைக்கொண்டே தருப்பணம் செய்துகொண்டு கையிலிருந்த ஒன்றே காலணாவை குரு என்ற முறையில் தக்ஷணையாகக் கொடுத்தார். உடனே ஏட், எஜமானன் என்ற முறையில் அதே 15 பைக்கு ஒரு பாக்கெட் நேஷனல் சிகரேட் வாங்கிக் கொடுக்க நேர்ந்தது. 26. வேடத்தின் பயன் சுயமரியாதைக்காரன்: பண்டித ஐயர்வாள்! உலோகம் என்றால் என்ன? ஐயர்: பூமிக்குப் பெயர் - பொன், வெள்ளி இவைகளுக்குப் பெயர். R.k.: உலோக குரு என்பதிலுள்ள உலோகத்திற்குப் பின்னைய அர்த்தமே பொருந்தும். ஐயர்: அவைகளுக்காகத்தானே!.... 27. நல்ல விரதம் தங்கம்: என்னம்மா, 2½ மணிக்கெல்லாம் விளக்கு ஏற்றி விட்டீர்கள்? கற்பகம்: காலையில் என் வீட்டுக்காரர் கொஞ்சம் பழம், கொஞ்சம் அல்வா, கொஞ்சம் பிட்டு, கொஞ்சம் பால் சாப்பிட்டுப் போய் மத்தியானமும் அப்படியே செய்தார். இன்று கார்த்திகை! தீபம் கண்டுதான் சாப்பிடுவார். அதற்காகத்தான் தீபம் ஏற்றிவிட்டேன். தங்கம்: ஒழிந்தது தொல்லை! அதற்குமேல் எத்தனை தரம் வேண்டு மானாலும் சாப்பிடலாம்; இத்தனையும் ஜீரணமாக வேண்டும்! 28. பெரியோர்கள் சொல்லுகிறார்கள் வீட்டுக்காரன்: ஐயரே! சிராத்தம் பண்ண வந்தீர்கள்! சென்ற சிராத்தத் தில் ஐயருக்கு வேஷ்டி கொடுப்பது நீக்க வேண்டியதாயிற்று. இந்தத் தடவையும் ஒன்றை நீக்கிவிட உத்தேசம். ஐயர்: இருப்பதைக் கொண்டு நடத்த வேண்டியதுதான்! நீக்க உத்தேசிப்பது என்ன? வீட்டு: ஐயரை நீக்கிவிடும்படி பெரியோர் சொல்லுகிறார்கள். போய் வருகின்றீர்களா? - கிண்டற்காரன்; புதுவை முரசு, 08.12.1930 29. திருப்பிப் பார் ஒருவன்: ஆஹா நரகத்தில் மனிதர்கள் என்னென்னவிதமாய்க் கஷ்டப் படுகிறார்கள்! எம தூதர்கள் என்னென்ன கஷ்டப்படுத்துகிறார்கள்! மற்றவன்: நீ வருத்தப்பட நியாயமில்லை. நீ பார்க்கும் படத்தைப் திருப்பிப் பார். அப்படியெல்லாம் ஒன்றுமிராது. 30. பயனற்றதால் வணங்கப்படுகிறது. ஒருவன்: எல்லாப் பக்ஷிகளும் இருக்க, ஆழ்வார் (பருந்து) மாத்திரம் வணங்கப்படுவதற்குக் காரணம் தெரியுமா? பிறன்: தெரியும்! அது கறிக்கு உதவாது. 31. சாமி மதிப்பு ஐயர்: உங்களூரில் நடராஜா விக்ரகம் திருட்டுப் போய்விட்டதென்ற கேள்வி. அதன் விலை என்ன மதிப்பிருக்கும்? செட்டி: திருடப்படும் சாமிக்கு மதிப்பென்ன? 32. சண்டைக் காலத்தில் நன்மைக்கு வழியேது? பக்தன்: ஒரு காலத்தில் பிரமனும், விஷ்ணுவும் சண்டை போட்டார்களே. உலகநிலை அப்போது எப்படியிருந்திருக்கும்? சுயமரியாதைக் காரன்: பிரமனும் விஷ்ணுவும் இல்லாதிருந்த காலத்தைவிட அப்போது சிரமப்பட்டுத்தானிருக்கும். - கிண்டற்காரன்; புதுவை முரசு, 05.01.1931 33. விளம்பரத்திற்கு நல்ல கருத்து பிராமணர்கள் ஓமம் செய்து, அதன் புகையால் மழையை உண்டாக்கி க்ஷேமம் தேடினார்கள். - சிகரெட் வியாபாரிகளே! உங்கள் விளம்பரங்கட்கு இதில் நல்ல கருத்துக்கள் அடங்கியிருக்கின்றன. 34. இரண்டு கற்பனைகள் உன் பொருளைப் பாதுகாக்கத் திருடனைப் போய் யோசனை கேளாதிருப்பாயாக. பாதிரியும், பார்ப்பனனும் சொல்வதை மாத்திரம் நீ நம்பிக் கொள்வாயாக. 35. பணம் சம்பாதிக்கும் வழி எனக்குக் கொடுக்க வேண்டிய நூறுரூபாயைக் கொடுக்க வில்லை; சுவாமிக்கு வாகனம் செய்யக் கிளம்பியிருக்கிறீர். உன் கடனைத் தீர்க்க பணம் சம்பாதிக்கத்தானே வழி தேடுகிறேன்! 36. சதுர பெஞ்ச் நான் எத்தனை நாள் இந்த மனையில் உட்கார்ந்திருப்பேன்? ஒரு சதுரப் பெஞ்ச்சாவது வேண்டும் என்றேன். எஜமான் சதுரப் பெஞ்ச் கொடுத்தார். ஆனால் அதற்குக் கால்கள் இல்லை. சரிதான்! சரிதான்! இர்வின் காந்தி சமரசம்! 37. ஆதிக பத்திரிகை மதிப்புரை சுயமரியாதைப் பத்திராசிரியரே, எமது பத்திரிகையைப் பற்றி மதிப்புரை எழுதச் சொன்னால் நல்ல எழுத்து, நல்ல தாள், நல்ல ராப்பர் என்றுதானா எழுதுவது? ஆதிகப் பத்திராதிபரே, மறந்துவிட்டேன். நல்ல அச்சுக்கூடம், நல்ல எழுத்துப் பௌண்டரி என்பதையும் சேர்த்திருக்கவேண்டும். 38. இரக்கமுள்ளவர்கள் விதவையான மகள்: தாய் தந்தையரே, என்னை தம்பி முண்டை என்கிறான். தாய் தந்தை: அவன் கொஞ்சங்கூட இரக்கமில்லாதவன்; இரவு 10 மணியாகிறது. எங்களுடைய கட்டிலைச் சுத்தப்படுத்து; பாலும் பழமும் தயார் செய். 39. பிதிர்க்களின் விலை ஐயர் வழியாகப் பிதிர்களுக்குக் கொடுக்கும் சாமான்களுக்கு விலை ஜாபிதாகவும் சேர்த்துக் கொடுத்தால் ஐயர்வீட்டுத் தெருவிலிருக்கும் பிதிர்க்கள் அவைகளை விலைதெரிந்து வாங்கச் சௌகரியப்படும். 40. பூனைகளான பூனை என்வீட்டில் ஒரு பூனைக்குக் கழுத்தில் சிலுவை கட்டினேன்; மற்றொரு பூனைக்கு நாமம் இட்டேன்; உடனே பூனை பூனைகளாகி விட்டன. 41. பக்ஷிகளின் மதத்திற் சேராதீர்கள். மனிதத் தன்மை வேண்டுமானால் மனிதர் சொல்லும் மதங்களை ஒப்புக்கொண்டுதானாக வேண்டும் ஐயையோ! பக்ஷிகளின் மதத்திற் சேராதீர்கள். நீங்கள் முட்டை யிட ஆரம்பித்துவிடுவீர்கள். 42. உயிர்களைச் சிருஷ்டிக்க அவர்களால் முடியுமோ? மேல்நாட்டுச் சாதிரிகள், மல மூத்திராதியிலிருந்து அமோனியா முதலிய வதுக்களைச் செய்கிறார்கள். எங்கள் கோயிற் சாதிரிகள்போல், அவர்க்கு அபிஷேகப் பொருளாகிய பால், தயிர்களிலிருந்து உயிர்களைச் சிருஷ்டிக்க முடிகிறதில்லை. 43. நடராஜ விக்ரகம் முழுமுதற் கடவுள் இந்த நடராஜ விக்ரகமல்ல. இது நாதிகர் வார்த்தையாம். அந்த நடராஜ விக்ரஹம் மூச்சை இழுப்பதையும், மூச்சை விடுவதையும் குறிப்பதற்காக ஏற்பட்டது. இது ஆதிகர்களின் வார்த்தை. 44. பார்சல் பரமசிவத்தை அனுப்பு நமது வீட்டுக்கு நல்ல பரமசிவமாக ஒன்று கொடுங்கள். பழய பரமசிவம் இருக்கிறது; நாளைக்கு ஜெர்மனியிலிருந்து புதிய (படம்) பரமசிவம் வருகிறது பார்ஸல் பரமசிவத்தை நாளைக்கு வீட்டுக்கு அனுப்பு. 45. கேட்டுப்பார் பிராமணன்: பிராமணன் மகன் பிராமணனே. நீ அறியாதவன், உன் தகப்பனாரைக் கேள். சூத்திரன்: பிராமணனுக்கே பிராமணன் பிறக்கிறானா! இதை உன் தாயாரைக் கேட்டுப்பார். 46. எங்கள் உலகத்தை ஏன் கெடுக்கவேண்டும். ஆதிகன்: எங்கள் மதங்களைத் திட்ட உமக்கு அதிகாரம் இல்லை. சுயமரியாதைக்காரன்: மதங்கள் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா யிருக்கலாம். எங்கள் உலகத்தை ஏன் கெடுக்கவேண்டும். - புதுவை முரசு, 23.03.1931 47. நம்பத்தான் வேண்டும் பண்டிதர்: சுப்பன் மனித சஞ்சாரமில்லாத காட்டில் தனியாக தன் நாக்கை மூக்கால் எட்டினான்; செத்தான். ராமன்: ஒருவருக்கும் தெரியாமல் நடந்திருக்கையில் அவன் நாக்கை மூக்கால் எட்டினது உங்களுக்கு எப்படித் தெரிந்தது! பண்டிதர்: உன் நாலாம் பாட்டனை நீ கண்டிராவிட்டாலும் அவன் இருந்தான் என்று கொள்ளுகிறதுபோல் இதையும் கொள்ள வேண்டும். - புதுவை முரசு, 20.04.1931 48. வழக்கு, ஏமாற்றுகளைக் காப்பாற்ற ஏழை: ஐயா! என்ன? நீர் கடவுள் பேரால் எல்லா விஷயங்களையும் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு உமது இஷ்டத்துக்குக் கோர்டில் வழக்குப் போடுகிறீரே! ஆதிகர்: கடவுள் பேர், மக்களை ஏமாற்ற! வழக்கு போடுவது, அந்த ஏமாற்றுகளைக் காப்பாற்ற! 49. ஆள்வோரின் காலடிக்கே நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; ஆனால் சுயமரியாதை மகாநாடு கூடாதிருக்க - ஆள்வோரின் காலடிக்கே ஆளாவோமே இங்ஙனம் ஓர் காரைச் சிவநேசர். - கிண்டற்காரன்; புதுவை முரசு, 27. 4. 1931 50. மோக்ஷத்துக்கு வழி அடிகள்: பணம் கொடுங்கள் இதோ மோக்ஷம். குடிகள்: எப்போதும் இது ஓர் கவலையா? வேண்டிய பணம் மொத்தமாய்க் கொடுக்கிறோம். மோக்ஷத்துக்கு முன்னே போய் வழிகாட்டித் தொலையுங்கள் 51. குரங்காட்டி மதம் அண்ணன்: இந்தக் குரங்காட்டி இந்தக் குரங்குகளை என்னென்ன விதமாக ஆட்டி வதைக்கிறான்! தம்பி: அவை குரங்காட்டி மதத்திலிருந்து விடுதலையடைய வேண்டும். 52. கடவுளை நோக்கி சுருட்டுப் புகை கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு உண்டு உண்டு - உதாரணம்: மனிதன் சுருட்டுப் பிடித்து விடும் புகை, கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா? - கிண்டற்காரன்; புதுவை முரசு, 4.5.1931 53. 33 கோடி தேவர்கள் ஒரு கிறீதவர் சில நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில்: எங்களுக்குத் தினசரி ஒரு பண்டிகைவுண்டு. வருடம் 365 நாளைக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறார் என்றாராம். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் பிராமண வேதியர், எங்களுக்கு 33 கோடி தேவர்கள் உண்டல்லவா என்று கர்ஜித்தாராம். 54. மகளுக்குச் சீதனம் 65 வயதுடைய மாப்பிள்ளைக்குக் கலியாணம் செய்துகொடுத்த பெண்ணின் தகப்பனார் தன் மகளுக்குச் சீதனங் கொடுக்கும்போது தாம்பூலம் இடிக்கும் ஒரு உரலையும் கொடுத்தாராம். 55. தேவர்கள் படத்திற்குக் கண்ணாடி தேவர்கள் படத்திற்குக் கண்ணாடி போடக் கூடாதென்றும், அதனால் மேல்படி தேவர்களுக்குக் காண்பிக்கும் தூபதீபம் தடைபட்டுப் போவதோடு, அவர்கள் (தேவர்கள்) சக்தியும் குறைந்துபோய் விடுகிற தென்றும் வேதியர்கள் ஒரு சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்களாம். 56. கைநீட்டி வாங்கியதில்லை! கடவுளை எண்ணிக் காசைத் தொலைக்காதே என்று சுய மரியாதைக்காரர் ஒருவர் சொன்னாராம். அதற்குக் கடவுள் ஒரு செம்பு சல்லியும் தன் கையை நீட்டி வாங்கியதில்லையென்று பதில் சொன்னாராம் ஒரு வேதியர். 57. அவரவர்கள் பாவத்திற்கு... அரசாங்கச் சட்டத்திற்குச் சத்தியம் செய்துவிட்டு, வைக்கீல்களும் நியாயாதிபதிகளும் வழக்கைப் புறட்டிவிடுகிறதாக சொல்லிக் கொண் டிருந்த ஒரு மூடனுக்கு அவரவர்கள் பாவத்திற்கு அவரவர்கள் என்று ஒரு ஞானியார் சமாதானம் சொன்னாராம். 58. விக்கிரகத்திற்குள் கிராமபோன்! விக்கிரகங்களெல்லாம் வாய்பேசாமல் ஊமைபோல இருப்பதால் தான் நாதிகர்கள் பரிகசிக்கிறார்கள் என்று ஒரு புதுவைவாசி ஒரு சிற்ப சாதிரியினிடம் சொல்லிக்கொண்டாராம். அதற்கு சிற்பி, விக்கிரகத்திற்குள் கிராமபோன் வைத்துவிடக்கூடாதாவென்று யோசனை சொன்னாராம். - புதுவை முரசு, 8. 6. 1931 59. நல்ல நிலையடைந்த மாடுகள் தொப்ளி: எங்கள் மத குருக்கள் சுமார் 100 ஆண்டாக எங்கட்குப் படிப்பு வசதி, ஆபத்ரி வசதி செய்ததின் மூலம் நல்ல நிலைக்குக் கொண்டுவந்து ... ... சுய: நிறுத்து, நிறுத்து, - நல்ல நிலைக்குக் கொண்டுவந்து அப்படி நல்ல நிலையடைந்த மாடுகளைக் கறந்து குடிக்கிறார்கள்; யார் இல்லை யென்றது? 60. சாம்பலின் மகத்துவம் ஆதிகன்: விபூதி ஜலதோஷத்தைப் போக்குவது தெரிந்தும், அதை வெறுப்பது பற்றி வருந்துகிறேன். Ra.: சைவமதம் உண்டாக்கிய பெரியோர், ஜலதோஷத்துக்குச் சிகிச்சையாகச் சாம்பலைக் கண்டுபிடித்தார்கள் என்பது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். 61. குதிருக்குள் இல்லை ஆதிகன்: இங்கிலீஷில் இருப்பதுபோல் தமிழில் ஆடுகளின் உருப்புகளுக்கு, இன்றியமையாத பெயர்கள் இல்லை. இதனால் தமிழின் கேவலம் புலனாகிறது. Ra.: சமகிருத பாஷையில் அப்பெயர்கள் உண்டு. (மநு மிருதியில் உண்டு) இதனால், புலால் தின்னாதவர் என்னும் பார்ப்பனர் யோக்யதை புலனாகிறது. 62. சுந்தரனுக்குக் கூட்டிக் கொடுத்தது யார்? உபாத்தியாயர்: வகுப்பிலுள்ள சுந்தரம் சரியாய்க் கணக்குப் போட்டிருந் ததைச் சந்தேகித்து வகுப்பை நோக்கி, ‘சுந்தரனுக்குக் கூட்டிக் கொடுத்தவன் யார்? என்றார். ஓர் புதிய மாணவன்: சார் சுந்தரனுக்குச் சிவபெருமான் பரவை நாச்சியாரைக் கூட்டிக் கொடுத்தார். - புதுவை முரசு, 8. 6. 1931 63. திருப்பிப் பிடித்த ரிவால்வார் ஆதிகர்: பழய சுயமரியாதைக்காரர்களே தமது ரிவால்வாரைச் சுயமரியாதை இயக்கத்தின்மேல் நீட்டிவிட்டார்கள். சுயமரி.: குண்டு வெளிப்பட்டபின் தெரியும், அவர்கள் ரிவால்வாரைத் திருப்பிப் பிடித்திருந்த சேதி! - புதுவை முரசு, 24. 8. 1931 64. ராஜபாட்டையை உண்ட க்கும் முனிசிபாலிட்டி சுயராஜ்யவாதி: காங்கிர ஒன்றே சுயராஜ்யத்திற்கு ராஜபாட்டை. சுயமரியாதைக்காரன்: சுயமரியாதை இயக்கம் அந்த ராஜபாட்டையை உண்டாக்கும் முனிசிபாலிட்டி. 65. குரங்குத்தனம் வேண்டாம் ஆதிகர்: திருப்பதியில் உள்ள குரங்குகளிற் சில நாமம் போட்டுக் கொண்டு பிறந்திருப்பதைச் சுயமரியாதைக்காரர் அறிவார்களா? சுயமரியாதைக்காரர்: அப்படியிருக்கையில் மனிதன் நாமம் போடுவது குரங்குத் தனம் என்பதை ஆதிகர் அறிவார்களா? - புதுவை முரசு, 24.08.1931 66. குரைத்துக் கொண்டிருக்கிறதே! பத்திரிகை ஏஜண்டு: நமகாரம்! என்னிடம் தமிழரசு, விகடச் சக்கரம் ஆகிய பத்திரிகைகள் இருக்கின்றன. வாங்குகிறீர்களா? வீட்டுக்காரன்: நீங்கள் முன்னமே வந்தாப் போலிருக்கிறதே. பத்திரிகை ஏஜண்டு: ஆம், உங்கள் வீட்டு வாசற்படியில் நாய் ஒன்று குரைத்துக் கொண்டிருந்தது. வீட்டுக்காரர்: அதுதான் உமக்கேத் தெரிகிறதே, அதுதவிர இன்னும் இரண்டையும் என்னை வாங்கிக்கொள்ளச் சொல்லுகிறீரே? 67. மாட்டுக்கு ஜீவகாருண்யம் ஒருவன்: அடடா! காந்தியடிகள் தானே செத்த மாட்டின் தோலைச் செறுப்புக்குக் கொண்டுபோவது என்ன ஜீவகாருண்யம் பாருங்கள் சார்! மற்றொருவன்: அடிகளின் இந்தப் பயிரங்கச் செய்தியில் உயிர் மாட்டைத் தின்னுபவர்களை ஒழிக்கவேண்டும் என்ற கருத்து அடங்கியில்லாவிட்டால் அடடடடடா மிக்க ஜீவகாருண்ய மிருக்கும் சார்! 68. யோக்கியமான யோசனை காங்கிரகாரர்: நமது சுயராஜ்ய கவர்ன்மெண்டு ஏற்பட்டால் ஒரு நொடியில் சீர்திருத்தம் செய்து கொள்ளலாம். சுயமரியாதைக்காரர்: இந்த யோக்கியமான யோசனை கதர், ஹிந்துப் படிப்பு, இந்து முலீம் சமரசம், கள்ளுக்கடை மறியல் முதலியவற்றில் ஏன் இல்லை. 69. ஒழிக்க வழி காங்கிரகாரன்: சுயமரியாதைக்காரர்களை ஒழிக்கவேண்டும். சு. k.: ஒழிக்க உம்மிடம் ஆள் இல்லை; தைரியமில்லை. அதற்கு அத்தாட்சி; காங்கிர இன்னும் இருக்கிறது. 70. ஆசாரக் கவலை ஆதிகன்: பண்டித மாளவியா, தமது ஆசார வாழ்க்கைக்குப் பங்க மில்லாமல் கங்கை நீரை புட்டியில் அடைத்துக் கொண்டு போயிருக்கிறார். இதில் உனக்கென்ன கவலை? மற்றவன்: போன இடத்தில் ஆசாரச் சாவு நேர்ந்துவிட்டால் பச்சை மட்டை, இரண்டு மூங்கில், ஏழு புள், வைக்கோல், முறம், பொரி, இவைகள் எல்லாம் இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்ற கவலை ஏற்படுகிறது. 71. ஏற்றம் இறைக்க ஏழைகள் ஒருவன்: சுயராஜ்ய கவர்ன்மென்டில்தான் மிராசுதாரர்கட்கு ஏற்றம் உண்டு. மற்றவன்: ஆம்! ஆம்! அப்போதுதான் அந்த ஏற்றம் இறைக்க ஏழைகள் மலிவாகக் கிடைப்பார்கள்! 72. பெரிய கவலைதான் எனக்கு ஒரு திகில், அதாவது, அடிமை இந்தியாவிலேயே, கற்களைக் கடவுளாய் நினைக்கச் சொல்லுகிறார்களே, சுதந்திர இந்தியாவில் வருணாச்சிரமக் கொடுமையை ஐகிரீமாக நினைக்கச் சொன்னால் என்ன செய்வது? 73. இக்கேள்விக்கு இடமேது ஆதிகன்: சொந்த மரியாதை (சுயமரியாதை)யைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியவர், கடவுள் தலையில் கை வைப்பதேன்? R.k.: இருக்கும் கடவுள் தலையில் கைவைத்தால் அப்போது இக் கேள்வி கேட்கலாம். - கிண்டற்காரன்; புதுவை முரசு, 21. 9. 1931 74. குலத்தொழில் மாணவர் விடுதி அதிகாரி: பிள்ளைகளே உங்களில் எந்தெந்தத் தொழில் யாராருக்குரியதோ அதன்படி இங்கேயும் அந்தந்தத் தொழிலைச் செய்துவிடவேண்டும். பிராமணைப் பிள்ளை: என் தொழில் வேதம் ஓதுவது சார். சூத்திரன்: இல்லை! இல்லை! காப்பிக் கிளப்பில் எச்சில் பாத்திரம் எடுப்பது. - புதுவை முரசு, 28.09.1931 75. மலவிர்த்தியில் கவலை அந்நியன்: தொழில் விர்த்தி; கல்வி விர்த்தி முதலியவற்றில் எதன் விர்த்தியைப் பற்றி உங்கள் நாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்? இந்தியன்: மல விர்த்தியைப் பற்றி தினம் கவலை! - புதுவை முரசு, 12.10.1931 76. வாத்தியார் நெற்றியில் முறம் ஒரு மாணவன்: முறம் எழுதச் சொன்னார் வாத்தியார். எழுதிக் காட்டவு மில்லை. நீ அசல் முறம்போல் போட்டாயே! அது எப்படி? மறு மாணவன்: வாத்தியார் நெற்றியில் முறம் போட்டிருந்தது உனக்குத் தெரியாதோ? - புதுவை முரசு, 26.10.1931 77. உடலை எது காக்கும்? சன்யாசி: தருமம் தலைகாக்கும் கின்யாசி: உடலையெல்லாம் எது காக்கும்? 78. பெண்சாதிக்கு அன்னியத் துணி கதர் பிரசாரகர்: சகோதரர்களே! கதர் துணியைக் கட்டினாலன்றி சுயராஜ்யம் கிட்டாது. சு.ம. : இந்த யோக்கியர் தன் பெண்சாதிக்குக் கதர் சேலையில் விருப்ப மில்லையென்று உயர்ந்த ரகங்களில் அன்னியத் துணி வாங்கிக் கொடுப்பவர். 79. நம்மாலும் முடியாது; நம்மைப் படைத்தவனாலும் முடியாது கூலிக்கு வியாசம் எழுதுபவர்: சுயமரியாதைக்காரரைத் திட்டுவதை விட வேறுவழியில்லை. பத்திராதிபர்: எந்த கொள்கையை ஆட்சேபித்து? கூ-ர்: கொள்கை ஆட்சேபிக்க நம்மாலும் முடியாது. நம்மைப் படைத்தவனாலும் முடியாது. வேறு என் செய்வது? - புதுவை முரசு, 04.01.1932 80. என் சந்தோஷத்திற்கும் உத்தரவு தேவை புருஷன்: பெண்ணே! ஒரு சேதி. பெண்சாதி: என்ன, நூதனமா? புருஷன்: இல்லை ... ... நான் ஒருவளை காதலிக்கிறேன். பெண்சாதி: அதற்கென்ன? புருஷன்: இங்கேயே அழைத்துவந்து விடலாமென்ற எண்ணம். பெண்சாதி: ஆகா! தடையொன்றுமில்லை. சந்தோஷமாக அழைத்து வந்து வாழுங்கள். ஆனால், என் சந்தோஷத்திற்கும் இதைப் போன்ற ஓர் உத்தரவு தேவை. என்ன சொல்லுகிறீர்? - புதுவை முரசு, 18.01.1932 81. சர்க்க பார்த்ததில்லையோ? ஆதிகன்: ராமராஜ்யத்தில் புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடித்தன. சுய.மரி: சிங்கம், புலி, ஆடு, மனிதன் ஒரே தொட்டியில் தண்ணீர் குடித்தது உனக்குத் தெரியாதா? சர்க்க வரட்டும். 82. கலப்புத் திருமணத்தின் ஜிலுப்பு ஒரு ஜாதிப் பெண்ணும், மற்றொரு ஜாதி ஆணும் கலந்து கொள்ளக்கூடாது. இடையில் கரண்ட் அடிக்கும் என்பது, பெரிய காந்தி, குட்டிக் காந்திகளின் அபிப்பிராயம். பெரிய காந்தி மகன், சின்ன காந்தி மகள்மேல் கை போட்டுவிட்டதாகச் செய்தி கிடைக்கிறது. காதலர்களைக் கேட்டால் தெரியும். கலப்பு விவாகத்தின் ஜிலுப்பு! கோமுட்டிப் பிள்ளை யாண்டான், ஐயங்கார் பொடிசின் மேல் கைவைத்தபோது, இளநீர்க் காய்மேல் கைவைத்தது போலிருந்ததாம். 83. பருந்தாகிவிட வேண்டாம் பார்ப்பனன்: உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடுமா? சுய. மரி: பிறர் உடலைத் தின்று ஜீவிக்கும் பருந்தாகி விடாதிருக்கவே தான் ஊர்க்குருவி நினைக்கிறது. 84. இயற்கை எழில்! சைவப் பழம்: கம்பராமாயணம் முதலிய காவியங்களில் இயற்கை எழில் மிளிர்கிறது. சுயமரியாதைப் பிஞ்சு: பேசும் சினிமாவில் பார்த்தீரா? இயற்கை எழில்-நினைப்பு வருவதோடு, காதாலும் கண்ணாலும் வழிகிறது. 85. பழநியாண்டியின் கோவணம்! பழைய பிரஞ்சுக்காரரிடமிருந்து கதர் நெசவையும் பழநியாண்டிக் கடவுளிடமிருந்து கௌபீனத் (கோவணத்)தோடிருக்கவும் காந்தி கற்றுக் கொண்டதாக நம்பத் தகுந்த இடத்திலிருந்து செய்தி கிடைக்கிறது. 86. ஒரு குரங்குகூட அகப்படவில்லையே! நினைக்க நினைக்க எனக்குக் கோபம் வருகிறது! இராமனுடைய கணையாழியைக் கடலைத் தாண்டிச்சென்று சீதையிடம் கொடுத்த குரங்குகள் உள்ள இந்தத் தேசத்தில், புதுச்சேரியிலிருந்து நேஷனல் சிகரேட்டைக் கொண்டு போய்த் தோழர் அழகிரிசாமியிடம் கொடுக்க ஒரு குரங்குகூட அகப்படவில்லையே. 87. நகரை நாடி வருவதேன்? ஆதிகன்: வருணாரமம் எங்கும் உண்டு. சு. மரி: கிராமங்களில் உண்டா? ஆதிகன்: கிராமங்களில்தான் அதிகமுண்டு. சு. மரி: நீர் சொல்லுவது மெய்யானால், கிராமத்தார் அடிக்கடி வர்ணம் வாங்குவதற்காக, நகரத்தில் உள்ள வருணாரமங்களைத் தேடி வருவதேன்? 88. காராபூந்தியின் ருசி! காங்கிரகாரன்: தோழரே! நாம் ஒரே தடவைதான் சாகமுடியும். மேலும் இன்றில்லாவிட்டாலும் நாளைக்குச் செத்துத்தான் ஆக வேண்டும். தேசத்திற்கு உயிர்விடலாம் வாரும்! தனிமனிதன்: ஓய்! வீண் பேச்சுப் பேசாதிரும்! அடிவரும்போல் தோன்றினால் ஐயாமுத்து மனைவியை முன்னிறுத்திவிட்டு அறையில் புகுந்துகொள்ளுகிறார். கண்ணப்பர் நின்று போன தலையங்கத்தைப் பிறகு எழுதித் தொடங்குவதற்காக, பெஷலாக அன்பர்கள் விரும்பியாக வேண்டும் என்கிறார். உயிர்விடக் கூப்பிடுகிறீரே? கையில் இருக்கும் காலணா காராப்பூந்தியின் ருசி, செத்தபின் அறிய முடியாது ஓய்! 89. பொம்மைக்காரா இங்குவா! ஆதிகன்: ஆள் தட்டைச் சுமக்கிறான். தட்டில் ரொட்டி இருக்கிறது. ரொட்டிக்காரா! இங்கு வா என்று கூப்பிடவேண்டியதிருக்க, ரொட்டி! இங்கு வா என்றால் ரொட்டி வருமா? சுயமரி : ஆள்வடம் இழுக்கிறான். வடம் வண்டியில் பொருந்தியிருக் கிறது. வண்டிமேல் மயில்வாகனம் (மரத்தால்) அமைக்கப் பட்டிருக்கிறது. அதன்மேல் சுப்பிரமணியசாமிப் பொம்மை வைத்திருக்கிறது. பொம்மைக்காரா? மயில்வாகன மேறி வா முருகா எனப் பாடினால் போதுமா? 90. கடவுள் இல்லை தோழர் சிங்காரவேல் கடவுள் இல்லை என்று சொல்வதன் மூலம் கடவுளைத் திட்டினார். யாழ்ப்பாணத்துப் பத்திரிகையொன்று தோழர் சிங்காரவேலைத் திட்டுவதற்காகக் கடவுள் உண்டு என்கிறது. நான் அனைவரையும் திட்டியாக வேண்டும்; கடவுளைப் பற்றிக் கவலை இல்லை என்பதுதான் அதற்கு வழி. 91. பல்லைக் கடித்துக் கொண்டிரு! நெருப்பு மிதித்தல், தரையில் புரளுதல், அண்ணாந்தாள் போடுதல், காவடி தூக்குதல், உடம்பில் அலகு ஏற்றிக் கொள்ளுதல் - இவைகளால் மனிதனுக்கு நோக்காடு உண்டாகாமலிருப்பது கடவுள் சக்தி. காங்கிர காரர் குண்டாந்தடியடி படுவது ஆத்ம சக்தி. அதனால் கடவுள் சக்தி என்பதும் ஆத்ம சக்தி என்பதும் வெட்கத்தை ஆற்றமாட்டாமல், பல்லைக் கடித்துக் கொண்டிருப்பதுதான் என்று விளங்குகின்றது. - கிண்டற்காரன்; புதுவை முரசு, 15. 2. 1932 92. எனக்குப் பாதம் ஏது? மண்பாண்டம் செய்யும் தொழிலாளி ஒருவர் வீதி முனையில் இருந்த மாரியம்மன் சந்நிதியில் நின்று, அம்மையே! உன் பாதத்தைத் தந்து ரஷிக்கவேண்டும் என்று வேண்டினார். உடனே மாரியம்மன், பக்தா! என் உடல் வேப்பிலை. அந்த வேப்பிலை, ஒரு மண் கலயத்தில் ஒட்டியிருக்கிறது. எனக்குப் பாதம் ஏது? கலயம் வேண்டுமா? 93. தேவலோகம் போய்விட்டன! கலிகாலம் பிறந்ததும் சிங்கமும் அன்னப் பக்ஷியும் தேவலோகம் போய்விட்டதாகச் சொல்லுகிறார்கள். இப்போதிருக்கும் சிங்கத்திற்கும் அன்னத்திற்கும் தேவலோகம் சென்றவைகளுக்கும் வித்தியாசம் இருப்பதால்தான் இப்படிச் சொல்கிறார்கள். வித்தியாசம் என்ன வென்றால் இப்போதுள்ளவை உயிருள்ளவை. அப்போதிருந்தவை அட்டை அல்லது மரம். 94. புரியாமல் பேசுகிறீரே! சுயமரியாதைக்காரன்: இதற்குமுன் என் சொத்து அழிந்த விதத்தை வெளியில் சொல்ல வெட்கமாகயிருக்கிறது. ஆதிகன்: ஐயோ! ஒரு கோயிலாவது கட்டி வைத்திருக்கலாகாதா? சுயமரியாதைக்காரன்: நடந்த விஷயம் அதுதானப்பா! 95. ஒரு விஷயம் புரிந்தது. சோமசுந்தரக் கடவுள் மதுரையில் கல் யானையைக் கரும்பு தின்னச் செய்தார். இப்போதும் பார்ப்பனர் கல்சாமிகளைச் சோறு தின்னச் செய்கிறார்கள். இவ்விரு விஷயத்தில் ஒரு விஷயம் புரிந்து போயிற்று. இந்த ஐயர், சாமி தின்பதாகத் தாமே அடித்துக் கொண்டு போகிறார். அந்த ஐயர், கரும்பைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போனதை யாரும் பார்த்ததில்லை. 96. உங்களால்தானே பரவிற்று பார்ப்பனர்: என்ன சுயமரியாதைக்காரரே, இப்போது புதிதாக உமக்குப் பிராமண பக்தி ஏற்பட்டதோ? என்னைக் கும்பிடுகிறீரே? சுயமரியாதைக்காரன்: மிக்க வணக்கம்! நன்றி செலுத்துகிறேன். பொது ஜனங்களிடம் காட்டிச் சொல்லும்படி உங்கள் ஊழல்கள் இருந்ததா லல்லவா, சுயமரியாதைக் கொள்கை இவ்வளவு தூரம் பரவிற்று! 97. அதனால்தான் பொதுத் தொகுதி கேட்டது சுயமரி: அவசரச் சட்டத்தின்படி சிறையாக்கப்பெற்ற ஐயாமுத்து ஜாமீனில் வெளிவந்தார். சிலர் எதிர் வழக்காடாமலே சிறை செய்கிறார்கள். இருசாராருக்கும் காங்கிர வருவாயில் சமபாகந்தானே? காங்கிரவாதி: ஆஹா! அதனால்தான் பொதுத்தொகுதி கேட்டது. 98. வறட்டி கூடச் சமமாக இல்லையே! ஒரு பலம் மிளகாய், ஒரு பலம் உப்பு, ஒரு பலம் பாதரசம் இவைகளை 100 வறட்டியில் புடம் போட்டால் ரசம் கட்டும் என்று ரசவாதி அருளிச் செய்தார். சுய.மரி: ரசவாதியே! இங்கிலீஷ்காரன் உதவியால் இந்நாட்டில் பலத்தின் எடை எங்கும் சமமாகவே இருந்து வருகிறது. வைதிகரின் தன்மையால், நாட்டில் வறட்டிகூடச் சமமாக இருக்க வில்லையே! 99. தேங்காய் பழம் கடவுளுக்கா? ஐயர்: (சாமிக்கு உடைத்த தேங்காயில் பாதிகொடுத்து பழத்தில் பாதி எடுத்துக் கொண்டு மீதியைப் பக்தரிடம் கொடுத்து) பொடி யிருக்கிறதா? பக்தன்: கடவுள் பொடியுமா போட ஆரம்பித்துவிட்டார்? ஐயர்: இல்லை! எனக்கு. பக்தன்: எடுத்து வைத்திருக்கும் தேங்காய், பழம் கடவுளுக்கு என்பது இதனால் உறுதியாகிறதோ? 100. உலகம் நடைபெறுகிறது ஆதிகன்: இன்றைக்கு ஒரு கடவுள் இருப்பதால்தான் உலகம் நடைபெறுகிறது. சுயமரி: இன்றைக்கு உலகம் நடைபெறுவதால்தான் அதை 20 கடவுளாலும் நிறுத்தமுடியாது. - கிண்டற்காரன்; புதுவை முரசு, 22.02.1932 101. பெண் தெய்வங்களே பறிகொடுக்கிறதே ஒருவன்: பெண்கள் நகைகளைத் திருடர்களுக்குப் பறிகொடுத்து விழிக்கின்றார்களே. மற்றவன்: ஐயா, பெண் தெய்வங்களே திருடர்களிடம் நகைகளையும் - ஏன் சில சமயங்களில் சேலையையும் பறிகொடுத்து விழிக்கையில், பெண்கள் பறிகொடுப்பதில்தானா பரிதாபம் உண்டாய்விட்டது! - புதுவை முரசு, 29.02.1932 102. தையற்காரச்சாமி தோழா நீ ஒருவரையும் கேவலமாக நினையாதே? துண்டு பீடியையும் மதி. துடைப்பக்கட்டையையும் அசட்டை செய்யாதே! இப்போது கோமுட்டித்தெரு தையற்காரச்சாமியை எத்தனை பெரிய மனிதர் வண்டியில் அழைத்துப் போகிறார்கள் பார்த்தாயா? - புதுவை முரசு, 29.02.1932 103. வயிற்றிற்கு என்ன செய்வது? தகப்பன்: (மகனைப் பார்த்து) படுவாப் பயலே! குடிக்கக் கஞ்சில்லை சுயமரியாதையாம், உதைக்கிறேன்பார். மகன்: கஞ்சியில்லாதது தெரியுமே? வேலை செய்வதை விட்டுவிட்டு விழாக் கொண்டாட்டம் எதற்கு? கஞ்சிக்கு வைத்திருந்த பணத்தைக் கோயிலுக்குக் கொடுத்துவிட்டாயே வயிற்றிற்கு என்ன செய்வது? 104. தையற்காரச்சாமி சாமியார்: பெண்ணே! தாம் எப்படித்தான் போகிறோமென்றறியாது போகும் பெண்கள், ஆடவரைக் கண்ட மாத்திரத்தில் அப்போதுதான் ஞாபகம் வந்ததைப் போல் உடனே மூஞ்சியை பொட்டி போடுகிறார்களே காரணம் என்ன? பெண்: அப்படியில்லாவிட்டால் உம் போன்றவர்கள் ரகசியமாக எங்களைக் கும்பிடுவதோடல்லாமலும் எங்கள் காலிலும் விழுவீர்களா? 105. எனக்கா அச்சாரம் போடுறே? சிறுவன்: 50 வயது கிழவனுக்கும் 6 வயது பெண்ணுக்கும் அகமதாபாத் தில் கலியாணம் நடத்தயிருந்தார்களாம். அதை லேடி வித்யா கௌரி அவர்கள் தடையுத்தரவால் நிறுத்தி விடலாம். கிழவி: கிழப் பசங்களுக்கெல்லாம் அறியாப் பெண்ணைக் கொடுக் கின்றார்கள். எங்கெங்கோ திரிந்தும் எனக்கு ஒரு பசங்கள்கூட ஆப்பிடலையே! சிறுவன்: கிழவி! எனக்கா அச்சாரம் போடுறே! ஐயையோ எங்கப்பா அடிப்பாங்கோ! நான் பத்திரிகையில் பார்த்து சொன்னாக்கா... ... - புதுவை முரசு, 29. 2. 1932 106. மலையை மூக்குத்தூள் என்று நம்பு! ஜோன் ஆப் ஆர்க் அந்தக் காலத்தில் கொஷோம் முதலிய பாதிரிகளின் தீர்ப்பின்படி கொளுத்தப்பட்டாள். இந்தக் காலத்தில் பாதிரி களின் தீர்ப்பின்படி, தெய்வமாக்கப்பட்டாள். நம்பிக்கையைப் பொறுத்த விஷயம். மலையை மூக்குத்தூள் என்று நம்பு. சுறீர் என்று ஏறும்! 107. பெருமாள் அளப்பு! தையற்காரன்: அளவு நாடா வாங்கினால்தான், இந்தத் துணியை அளந்து தைக்க முடியும். அதற்காக 2 ரூபாய் இருக்கிறது. அதை நீர் சுவாமிக்குக் கேட்கிறீர். சுவாமி இதையளந்து கொடுக்கட்டுமே! சாமிக்குப் பெயர் மாத்திரம் உலகளந்த பெருமாள் என்கிறீரே! ஐயர்: பெருமாள் அளப்பு நமக்கு ஒத்து வருமா? 108. பயனை உத்தேசிக்கும் போது நாமாகக் கொடுத்தாலும், அவராக எடுத்துப் போனாலும் பயனை உத்தேசிக்கும்போது பறிபோனதாகத்தான் சொல்லவேண்டும். திருவாளர்களான ஐயர் - திருடர் விஷயத்தை யோசிக்க! 109. சாமிகட்கு கலியாணமும் கருமாதியும் தோழர்: கோயிற் சாமிகட்கு ஆண்டுதோறும் கலியாணம் நடத்தியதன் பயன் தெரிந்து போயிற்று. இனிச் சுடுகாட்டுக் கருமாதி நடத்தினாலாவது நமக்குச் சௌக்யம் ஏற்படுமா? சுய : ஏற்படலாம். அதுவும் சடங்கில்லாமல் செய்தால்தான்! 110. பழங்கால அறையைக் காலி செய் செட்டியார்: பாழாய்ப்போன சுயமரியாதை இயக்கம் 20 வருடத்திற்கு முன் ஏற்பட்டிருந்தால் இந்த 1000 மூட்டை மணிலாக் கொட்டையை அடுக்கத்தானா இடம் அகப்படாது. சுயமரி: கோயில் காலியாக நாளிருக்கிறது. அதற்குள் உங்கள் பழங்கல அறையைக் காலி செய்! 111. தலைமயிரையாவது விட்டானா! ஆதிகன்: தாலியையாவது விட்டார்களா? பாவிகள். சுய. மரி: போலீ கவனிக்கவில்லையா? ஆதிகன்: போலீ கவனிக்கவுமில்லை; தப்பித்துக்கொண்டு ஓடிவரக்கூடிய இடமாகவுமில்லை. மலைமீது நடந்த விஷயம். சுய.மரி: சரி! சரி! ஏழுமலையானா! ஏழுமலையான் தாலியை அறுத்தது ஒருபக்கமிருக் கட்டும். தலைமயிரையாவது விட்டானா? 112. மனித முட்டையிருந்தால் தோதாயிருக்கும் இந்தியன்: எங்கள் பெண்களை, ருதுவான பின் அறையைவிட்டு வெளிக்கிளம்ப விடுவதில்லை. வெள்ளைக்காரன்: மனித முட்டையிருந்தால், அந்தப் பெண்கள் அடைகாக்கத் தோதாயிருக்கும். - புதுவை முரசு, 14.03.1932 113. முத்தால்பேட்டை வெள்ளைவாரிக்குப் போய் பாருங்கள் வெளியூரார்: ஐயா, புதுச்சேரி சமத்துவம் பெற்ற நாடு என்று சொல்லுகிறார்களே, மெய்தானா? உள்ளூரார்: என்ன சந்தேகமாய்க் கேட்கின்றீர்களே! மட மடவென்று முத்தால்பேட்டை வெள்ளைவாரிக்குப் போய் பாருங்கள்! 114. வார்த்தையாடிப் பத்திரிகை வயோதிகர்: தம்பி! புதுவைமுரசு காலாடிப் பத்திரிகையாமே மெய்தானா? சிறுவன்: இல்லை சார்! காலாடுவது பொது உடைமைக் காலத்தில். இப்போது வம்பர்களின் வாயையடக்க வார்த்தையாடுவது சார்! 115. அவசரச் சட்டம் அதிக உஷ்ணம் சீக்கன்: ஏண்டா மூக்கா! தேசீய சு-ம-காரத் தலைவர்களெல்லாம் எங்கேடா? சந்தடியைக் காணோமே. மூக்கன்: எங்காகிலும் காற்று வாங்கப் போயிருப்பார்கள். சீக்கன்: இப்போது அதிக உஷ்ணமுண்டா? மூக்கன்: ஆமாண்டா, அவசரச்சட்டம் அதிக உஷ்ணண்டா. 116. ஏமாறுங் குணமுடையவர்கள் கன்னி: புரோகிதர்களெல்லாம் ஏமாற்றுங் குணமுடையவர்களாமே? கின்னி: இல்லை, இல்லை. நம் மக்கள் ஏமாறுங் குணமுடையவர்கள். - புதுவை முரசு, 28.03.1932 117. சரவதி பக்தர் ஆதிகர்: என்ன சார் செய்கிறீர்கள்? சார்: சரவதி பூஜை நடத்துகிறேன். ஆதிகர்: உங்களிடம், ஒரு சேதியாக வந்தேன். ஆனையப்பன் M.A., B.L., பூர்த்தியாகிவிட்டது. வேலை தேவை. சார்: அவன் கிடக்கிறான். அவனை ஒழித்துவிடவேண்டும்! சுயமரி: ஆனால், அட்டைச் சரவதியைக் கும்பிடுவீர்; மனித சரவதியை ஒழிப்பீரோ! - புதுவை முரசு, விசேஷ அநுபந்தம், 8. 8. 1931 118. கண்ணாடியில் என்ன பார்க்கிறாய்? தாய்: நிலைக் கண்ணாடியில் வெகுநேரம் உன் உருவத்தைக் கவனிக்கிறாயே! காரணம்? மகன்: நான் கடவுளைப் பற்றிக் கவலை கொள்ளாத மதத்தை விட்ட - ஜாதியை விட்ட - மனிதனாகிவிட்டேன். இப்போது என் உருவம் எந்தப் பக்கம் மூளியாகிவிட்டது என்று பார்க்கிறேன். 119. மதகுருவா? அப்பு: மூக்குத் துவாரத்தில் இரண்டு திரி, நெற்றிக்கு நேரில் தொங்கும் கழுதை வால் போன்ற மயிர், சடையாகப் பின்னி விட்ட தாடி, ஆடைக்குப் பதிலாகக் கழுத்து முதல் கால்வரைக்கும் ஒரு பொத்தலுள்ள சால்வை. இந்த மனிதன் வெறியனோ! சீனு: இல்லை; அவன் ஒரு மதகுருவாய் இருப்பான். 120. பாதிரி போல் இருப்பாரோ? கிட்டு: குப்பனுடைய தகப்பனார் ஒல்லியாக-இளைத்து இருப்பாரே அவரா? வேல்: பாதிரிபோல் இருப்பாரே? 121. உடம்பு பெருக்கவழி கண்ணு: உழைப்பை நிறுத்திவிட்டால், உடம்பு பெருக்கிறதா என்று பார்க்கப் போகிறேன். வேணு: ஏன்? பார்ப்பனர்களில் சதையில்லாத ஆசாமி இல்லையா? 122. காணாமற் போன பொன் நகை எங்கே? ராமு: சீனு, சூத்திரன் திடீரென்று இறந்தான். ஒரு பிராமணன் அதற்கு வருந்தினான். சூத்திரப் பிரேதத்தைக் கட்டியழுத பிராமணனை நான் இன்றைக்குத்தான் பார்த்தேன். குண்டு: சரி, அப்படியானால் பிரேதத்தில் காணாமற் போன பொன் அரை ஞாண்கயிற்றை ஐயர்தான் அமுக்கி இருப்பார். 123. குருக்களுக்கு அவன் சீஷன்! ராஜு: காலமெல்லாம் பால் கொடுத்த பசு இறந்ததும் அவன் அதற்காக வருந்தவில்லை. முத்து: காலமெல்லாம் பணங்கொடுத்தும், சாகப்போகும் போது கொடாதவனைச் சபிக்கும் குருக்களுக்கும் அவன் சீஷனா? இல்லையா? 124. மனிதத் தன்மை ஆதிகன்: கடவுள் கௌரவத்தைக் கெடுப்பது மனிதத் தன்மையா? சுயமரி: மனிதன் கௌரவத்தைக் கெடுப்பது கடவுள் தன்மையா? 125. இழப்பவனும் பறிப்பவனும் ஆதிகன்: நாம் யாரிடம் சேருகிறாமோ அவர் குணந்தான் படியும். சுயமரி: அப்படியானால் இழப்பவனிடம் சாவகாசமுள்ள புரோகிதன் பறிப்பவனாக இருக்கலாகாதே! 126. ஒரே பெயர் சாமியார்? ஆடு மேய்ப்பவனுக்கு ஆட்டிடையன் என்று பெயர். ஆட்டினால் நன்மையை எதிர்பார்த்து வதைப்பவனுக்கு கசாப்புக்காரன் என்று பெயர். மனிதனை மேய்ப்பவனுக்கும் மனிதனால் நன்மையை எதிர்பார்த்து வதைப்பவனுக்கும் மாத்திரம் ஒரே பெயர் சாமியார். 127. கடவுளை நம்பாத நோயாளி டாக்டர்: நான் கடவுளை நம்பாதவன். நோயால் வருந்தும் இடத்திலிருந்து வருகிறேன். சுயமரி: நானும் கடவுளை நம்பியவர்கள் நோயால் வருந்துமிடத்தி லிருந்துதானே வருகிறேன். டாக்டர்: அந்த ஆபத்திரியை அப்படியா நீர் சந்தேகிக்கிறீர்? சுயமரி: அது மாத்திரமல்ல, கடவுள் நம்பிக்கையற்ற நோயாளியிடம் டாக்டர் ஜோலி வைத்துக் கொள்வது பற்றி மிக்க சந்தேகம். 128. எடை குறைவு சைவன் சுயமரியாதைக்காரனானபின் அவனை நிறுத்துப் பார்த்ததில் நிறையில் காற்பலம் குறைவு ஏற்பட்டது. விபூதி யிடுவது நீங்கியதால்! 129. அறிந்து கொள்வது எது? ஆதிகன்: கடவுளில்லாமல் பொழுது போகாது. பொழுது விடியாது என்ற விஷயம் வெகு சாதாரணமாக அறிந்துகொள்ளக் கூடியது தானே. சுயமரி: கடவுளிருந்தால், பொழுது போக வேண்டியதும் பொழுது விடிவதும் அவசியமில்லை என்ற விஷயத்தை நீர் அறிந்து கொள்வது கஷ்ட சாத்தியந்தான்! 130. ஆடு தானே வந்து விழும் பார்ப்பனன்: முற்காலத்தில் யாக குண்டத்தில் ஆடு தானே வந்து விழும். தமிழன்: ஆட்டின் பீசத்தைப் பிசைவதைப் போட்டோ எடுக்கும் இக் காலத்தில் தானே வந்து விழுவதென்பது பொய்யாய்த்தான் போயிற்று. 131. ஒரு சந்தேகம் சரியாய் இரவு 1 மணி, தூக்கம் வரவில்லை. நமது புரோகிதரிடம் போனாலும் ஏதாகிலும் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றிற்று, மூன்றாவது வீதியிலுள்ள எங்கள் புரோகிதர் வீடு போய்க் கதவைத் தட்டினேன். உள்ளே குறட்டைவிடும் சத்தம் கேட்டதைத் தவிர, ஏன் என்று கேட்கவில்லை. பிறகு, ஐயர் அலறி எழுந்து யார்? யார் என்றார், கதவை இரண்டு உதை விட்டதினால். புரோகிதர்: யார் இந்நேரத்தில்? நான்: நான்தான் கிண்டல்காரன். புரோ: என்ன அப்பா; நல்ல தூக்கம்! நடுநிசி! நான்: ஒரு முக்கியமான விஷயத்தை நாடி வந்திருக்கிறேன். உங்களுக்கு மிக்க கீர்த்திக்குரிய விஷயம். ஐயர் விளக்கேற்றிக் கொண்டு வேஷ்டியைத் திருத்தமாய்க் கட்டிக்கொண்டு என் எதிரில் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். ஐயர்: என்ன விஷயம்? இந்நேரத்தில் வந்ததைப் பார்த்தால் நூதனமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும். (ஒரு சிட்டிகைப் பொடி போட்டுக் கொண்டு, என்னிடமும் நீட்டி) பொடி போடுகிறீரா? என்ன நூதனம்? அதை முன்னதாகச் சொல்? நான்: எனக்கேற்பட்டிருக்கும் கவலையில் பொடியும் ஒரு கேடா? ஐயர்: (ஆச்சரியமாய்) அப்படி என்ன? நான்: விஷயம் அதற்கு... அதற்குச் சொந்த அர்த்தம் இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களிடம் அகராதி இருக்கிறதா? ஐயர்: நீர் சொல்லுமே! எனக்குத் தெரியாவிட்டால் பிறகு அகராதி கொண்டு வருகின்றேன். நான்: அப்படியானால் சரி. விஷயம் என்னவென்றால் புரோகிதர் வீட்டுக்கு வீடு சென்று அரிசி, பருப்பும் மரக்கறிகள் மற்றும் சாமான்கள், சொர்ணப்புஷ்பம், இவைகளெல்லாம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த விஷயம் பகலில்தானே நடக்கிறது? ஐயர்: ஆம், நான்: பகலில் நடத்தும் இதற்குப் புரோகிதம் என்றல்லவா பெயர்? ஐயர்: புரோகிதம் என்றுதான் பெயர். நான்: புரோகிதம் என்ற பெயர் இதற்காகிவிட்டது. பகற் கொள்ளைக்கு என்ன பெயரிடுவது... யோசித்து, காலையிலாவது சொல்லுங்கள்; நான் போய் வருகின்றேன். - புதுவை முரசு விசேஷ அநுபந்தம் 132. ரேகை சாதிரம் ரேகை சாதிரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐயர் வேலப்பரை வேண்டினார். வேலப்பர், ஐயரை உள்ளே அழைத்துத் தெருக்கதவைச் சாத்திக் கொண்டு கைகழுவிக் கொண்டு வருவதாய் அறைக்குச் சென்று பின் ஐயர் எதிர் உட்கார்ந்திருந்தார். ஐயர்: கையை விரித்து நீட்டுங்கள். வேலப்: நன்றாகப் பார்த்துப் பலன் சொல்லுங்கள் (உள்ளங்கையை வேலப்பர் காட்டினார். அதில் சுயமரியாதைக்காரன் என்று எழுதியிருந்தது.) ஐயர்: (அதைப் பார்த்ததும்) நீர் தெருக் கதவைச் சாத்திய காரணம் என்ன? வேலப்: நான் காரணமில்லாமல் தெருக்கதவைச் சாத்துகிறவன் என்று ரேகை சொல்லுகிறதோ? 133. கடவுள் ஆவேச சக்தி தாய்: என் மகளுக்கு வெகு நாளாகியும் பிள்ளை இல்லை. சாமி: நீ ஒரு பொருளைப் பற்றிக் கேட்கின்றாய். ஒரு நாள் அல்லது ஒரு மாசம் அல்லது ஒரு வருஷத்தில் கிடைக்கும். தாய்: (சாமிக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யயை நோக்கி) இதென்ன! சாமி என்னமோ சொல்லுகிறதே! சிஷ்யை: உரக்கச் சொல்லவேண்டும். சாமிக்குக் காது செவிடு. - புதுவை முரசு விசேஷ அநுபந்தம் 134. பிள்ளை வளர்க்கும் முறை ஆதிகர்: பிள்ளைகளைச் சிறுவயதிலேயே ஒழுக்க முறையில் வளர்க்க வேண்டும். சுய.மரி: அதோ நிர்வாணமாக நிற்கிறானே, அவன்தான் உங்கள் பிள்ளையோ? ஆதிகர்: ஆம்; பார்த்தீர்களா? பக்கத்திலுள்ள பையன் (தலைசீவி நன்கு உடுத்தி இருந்தவனைக் காட்டி) ஒரு நாளாவது நெற்றியில் நாமம் வைத்துக் கொள்வதில்லை. 135. நம் நாட்டுப் பெண்களிடம் கலை வளர்ச்சி தகப்பன்: மகளே! என்ன செய்கிறாய். மகள்: கோலம் போட்டுப் பழகுகிறேன். தகப்பன்: எத்தனை நாள் சொல்வது. பல பேர் வருவார்கள்? யாராவது உன் திறமையைப் பார்த்துக் கண்ணாறு போட்டால் என்ன செய்வது? - புதுவை முரசு விசேஷ அநுபந்தம் 136. ஆயிரம் வருடமாக அடித்துக் கொண்டு போகிறான். மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர். (தோட்டியைக் காட்டி) இவர் யார்? உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகின்றார். மே. இந்தி: (வண்ணானைக் காட்டி) இவர் யார்? உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார். மே. இந்: திரும்பவும் சலவை செய்து வந்து கொடுப்பாரா? உள்: ஆமா! மே. இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்? உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டைக் கட்டிக் கொண்டு போகிறார். மே. இந்: சமையல் செய்து கொண்டு வந்து கொடுப்பாரா? உள்: திரும்பிக் கொடுப்பதில்லை. மே.இந்: அடித்துக் கொண்டா போகின்றான்? உள்: ஆம் மே.இந்: அடித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா, இருப்பார்கள். உள்: ஆம்! ஆம்! மே.இந்: அடித்துக்கொண்டா போகின்றான்? உள்: ஓய்! எத்தனை தரம் சொல்லுவது! அடித்துக் கொண்டுதான் போகின்றான்! அடித்துக் கொண்டுதான் போகின்றான்! 100 வருடமாக இப்படி. 137. என்னைக் கேட்கிறீர்களா? சாது: சத்திரத்துக்கு வருக அப்பனே! உனது முற்பிறப்பு இப்பிறப்பு மறுபிறப்பு நடவடிக்கைகளைச் சோதிடத்திற் பார்த்துச் சொல்லுகிறேன். அபின் எங்கே விற்கும்? வாலிபன்: என்னைக் கேட்கிறீர்களா? - பாரதிதாசன் கதைகள் 138. சீக்கிரம் வெளுத்துவிடும் புரோகிதன்: சென்ற தடவையில் தவசத்துக்கு வந்தேன். நீர் கொடுத்த அரிசி கறுப்பாக இருந்தது. இப்போதும் அதற்குமேல் இருக்கிறது. என் மந்திரமும் உங்களுக்கு கறுப்பாக முடிந்துவிடும். வீட்டுக்காரர்: சீக்கிரம் எல்லாமே வெளுத்துவிடும். போய் வாருங்கள். - பாரதிதாசன் கதைகள் 139. படைத்தது யார்? (ஒரு சிற்பி கோயிலில் வினாயகருக்கெதிரில் நின்று வணங்கிய வண்ணம்) அப்பனே! (ப்ரபூ)! என்னை ரக்ஷிக்க வேண்டும். கை கால்கள் நோயில்லாமல் இருக்க கிருபை செய்ய வேண்டும், எல்லாவற்றையும் படைத்த கருணாநிதியே! அண்மையிலிருந்த ஒருவன்: சிற்பியாரே! இந்த வினாயகரை யார் செய்தது? அமைப்பாக இருக்கிறது. சிற்பி: நான்தான் செய்தேன்! ஒருவன்: எல்லாவற்றையும் அது படைத்ததாய் சொன்னீர்களே! அதற்காகக் கேட்டேன். - பாரதிதாசன் கதைகள் 140. போலீ காபந்து இல்லாமல் வைகுண்டத்திற்குப் போக வேண்டாம். ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததின் பயனாய்ச் சர்க்காரால் தூக்கில் இடப்பட்டான்; அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின்படி, அந்தக் கொலைகாரன் வைகுண்டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீ காபந்து இருந்தாலொழிய வைகுண்டத்திற்கு எவரும் போக வேண்டாம்! - பாரதிதாசன் கதைகள் 141. வானலோகத்தில் காற்றே இல்லை வானலோகம் சென்றுவிட்டால், ஊர்வசி, ரம்பை சகிதம் சுகமாய் இருக்கலாம் என்று நாம் சொல்லுகிறோம். அங்கு மூச்சுத் திணறும்படி காற்றே இல்லை என்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள்! 142. குரு பூஜை தான் நடக்கிறது. புத்தர்களை ஒழிக்க கடவுள் சங்கரராக அவதரித்தாராம். சங்கரருக்கு இப்போது, குருபூஜைதான் நடக்கிறது. 40 - 50 கோடி புத்தர்கள் வாழ்கிறார்கள். - பாரதிதாசன் கதைகள் 143. என்ன அர்த்த புஷ்டி! வருந்தி அழைத்தாலும் வாராதுவாரா! பொருந்துவன போமின் என்றாற் போகா என்ன அர்த்த புஷ்டி! இந்த வரிகளைப் பொன் தகட்டில் செதுக்குமுன், ஈய எழுத்தால் அச்சடித்து விட்டார்கள். - பாரதிதாசன் கதைகள் 144. மோக்ஷ வழி காட்டுங்கள் அடிகள்: பணம் கொடுங்கள்; இதோ மோக்ஷம். குடிகள்: எப்போதும் இது ஓர் கவலையா? வேண்டிய பணம் மொத்தமாய் கொடுக்கிறோம். மோக்ஷத்துக்கு முன்னே போய் வழிகாட்டித் தொலையுங்கள். - சிரிக்கும் சிந்தனைகள் 145. அவர்கள் நினைப்பது சரி சர்வ வல்லமையுள்ள கடவுளுக்குப் பரிந்துகொண்டு கோபிக்கும் தொண்டர்கள், அந்தக் கடவுள் பேரால் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டிப்பவரைப் பற்றிப் போலீஸின் உதவியை நாடுவதுண்டு. கடவுளைவிடப் போலீகாரன் அதிக வல்லமையுடையவன் என்று அவர்கள் நினைப்பது சரி. - சிரிக்கும் சிந்தனைகள் 146. அழிப்பது அரிது தான் ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது முதுமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாக முடிகிறது. - சிரிக்கும் சிந்தனைகள் 147. ஒற்றுமைக்கு வழியேது பிற நாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம் நாட்டினர், சரக்குக் கேடாயிருந்தாலும் அதனுடைய டப்பியை அழகு படுத்துவது போல் வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலியவைகளை எழுதிக்கொண்டு சமூகபேதத்தை வளர்த்துக்கொண்டு போகின்றார்கள். - சிரிக்கும் சிந்தனைகள் 1. புதுவையில் வரவேற்பு (நமது சொந்த நிருபர்) புதுச்சேரியில் உள்ள கட்டிடங்கள் எல்லாவற்றிலும், புதுவைக் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டு உயரமானது. அதைச் சுற்றிப் பெரியதோர் மேடையுண்டு. அந்த மேடையின் மீது வானத்திற்கு முட்டுக் கொடுத்தது போன்ற ஓர் உயர்ந்த உருவம் திடீரென்று பகல் 10 மணிக்குக் காணப்பட்டது. பெருங் கிளர்ச்சி ஏற்பட்டது. புதுவை மக்கள் அனைவரும் அங்குக் கூடிவிட்டனர். கிராமங்களிலும். இச்செய்தி காட்டுத் தீப்போற் பரவத் - தொகை தொகையாய் மக்கள் வந்து கடைவீதிக் `கூட்டத்தை மற்றும் பெரிதாக்கினர் - கடைசியில் புதுவையில் எள் விழ இடமில்லை. மக்கள் மயம்! உருவத்தைப் பார்த்து எவரும் பயப்படாதது குறிப்பிடத்தக்கது. மணிக்கூண்டுக்கு மேற்பட்ட உயரம்! சந்தேகமேயில்லை மனிதஉருவம்! இதைத் தெரிந்துகொள்ள - வெகுநேரம் சென்றது! பிறகு கூட்டத்தார் அனைவருக்கும் ஏககாலத்தில் ஒர் நிச்சயம் ஏற்பட்டது! மனிதன்! மனிதன்! என்ற கூச்சல். ஆரவாரம். இச்சத்தம் சென்னை வரைக்கும் கேட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. கூட்டத்தின் ஆச்சரியப் பார்வை! நிச்சப்தம் நிலவியது. இந்தச் சமயத்தில் உருவம் தன் இடதுகையை மணிக்கூண்டின் உச்சியில் ஒர்பிரசங்கி தன் இடதுகையை அண்டையில் இருக்கும் மேசையின் மீது ஊன்றுவதுபோல்- ஊன்றிற்று. உருவத்தின் ஆரம்பப் பேச்சு: - நான் ஐயாயிர வருடத்து மனிதன் அடடே! அடேயப்பா! கரகோஷம் பலத்த ஆரவாரம்! இதற்கிடையில் ஒருவன் மற்றொருவனிடம் இந்த ஆச்சரிய மனிதருக்கு ஓர் வரவேற்பளிக்க வேண்டும். என்ன சொல்லுகிறாய்? மற்றவர் - ஆம்! ஆம்! ஆம்! நீதான் அதற்குத் தகுதி. ஒருவன் - என்னால் முடியாது. இந்த யோசனை எங்கும் பரவியது ஏற்றுக்கொள்ளுபவரும் இல்லையா? புதுவை முரசின்நிரூபர் - நான்! அப்படியானால்சரி - மெத்த சந்தோஷம் ஏதாகிலும் சொல் என்று அனைவரும் சொல்லினர். நிரூபர் எங்கே நின்று, எந்த வரத்தில் வரவேற்புக் கூறுவது? ஒன்றும் புரியவில்லை. சற்று யோசித்தனர் மணிக்கூண்டின் வாயிலைத்திறந்து அதன் உள் ஏணிவழியாய் ஏறி மணிக்கூண்டின் உச்சிக்குப் போய் அந்த உயர் மனிதரின் காதண்டை வரவேற்புப் பத்ரம் நடத்துவது என்று தீர்மானித்தார் புதுவையின் மேயர் உத்தரவு உடனே கிடைத்தது நிரூபர் மணிக்கூண்டின் உச்சியில் போய்ச்சேர்ந்தார். இதற்குள் - மாலை போடாமல் பத்திரம் வாசிப்பது முட்டாள் தனம் என்றான் ஒருவன் (கூட்டத்தில் பெருநகைப்பு இத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை பெரிய மாலை கட்டுவது?) நிரூபர் மணிக்கூண்டிலிருந்து - பெரியீர்! என்று துவக்கினார்- (ககும்தகும்றகூச்சல்) தங்கள் வருகை நல்வருகை ஆகுக! ஏறக்குறைய தமிழர்களின் ஆரம்ப காலமுதல் நீங்கள் வாழ்ந்து வருகின்றீர்கள் இவ்வாச்சரிய வாழ்வானது தமிழர்களின் முடிவுக்காலம்வரை நீளுக. ஆரம்பகாலத்தின் ஒரு முனையை இடதுகையால்பற்றி வலது கையை முடிவின் மேல் தாவிச் செல்லுவதற்கிடையில் தங்களைப் புதுவையில் யாம் காணப்பெற்றொம் இதனிலும் பெறதக்க பேறுயாதுள்ளது? கால மென்னும் தத்துவத்தை ஏப்பமிட்ட உயர்வுடையீர் தங்களின் நீண்ட கால வாழ்வுக்குக் காரணம் எங்கட்குப் புலப்பட வில்லை. எனினும் தங்களால் எங்கட்கும் உலகத்துக்கும் நிரம்ப விஷயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். பண்டைத்தமிழர் வாழ்வின் விவரத்தைக் காட்டத்தக்க செப் பேடுகள் சிலாசானங்கள் சில இருப்பினும் அவை மக்கள் எதிர்பார்ப்பன வற்றையெல்லாம். உரைக்க மாட்டா. மேலும் அவை சிலகாலத்துக்கு முன்னைய விஷயங்களையே சிறுபான்மையாக வெளிப்படுத்துவன நீங்கள் ஆரம்பகாலமுதல் இன்றுவரை நிகழ்ந்தனவற்றைத் தெரிவிக்கும் பேசும் செப்புப் பட்டயம் சிலாசாசனம் என்பது உண்மை! இதில் எமக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவுண்டோ? தங்கள் வரவால் புதுச்சேரியின் மூலமாக உலகுக்கும், தமிழர்க்கும் வாழ்க்கையிலோர் புதுமை ஏற்படும் -ஏற்பட்டுவிட்டது. மற்றும் ஆச்சர்ய புருஷரே வரவேற்பு அளிப்பதென்றால் வரவேற்பளிக்கப்படும் மனிதரின் முன்னைய அறிமுகம் தேவை. அப்போதுதான் அவர்களைப் புகழ்ந்து பேசி உபசாரம் சொல்ல முடியும் தங்களின் தோற்றத்தைக் கொண்டே எவ்வளவும் கூறத்தகும் என்றாலும் அநுபவபூர்வமாகப் பேச முடியாமை பற்றி வருந்துகிறோம். ஒருவருடைய நற்குணத்தின் மிகுதியைப்பற்றிக் கூறப்புகுந்தால் இதற்கிது சமம் அவரை நற்குணக்குன்று என்பதுண்டு. கொடையைப் பற்ற உபமானம் கூறுவதானால் பாரிஎன்பது அறிவுக்குச் சூரியன். இது போல் இழந்துசமம் என்று சொல்லும்வகையில் - தங்களின் தோற்றத்தைக் கொண்டே. நாங்கள் அறிவு ஆண்மை - முதலிய அனைத்தும் நிரம்பியவராக மதிப்பதால் - உங்கட்கு உபமானம் காட்டுவது கடினம். நீங்கள் காலம்! தங்கள் வடிவத்தின் எல்லைவானம் (வெளி) மனித வாழ்வு தங்கள் கர்ப்பம். இத்தகைய கௌரவம் வாய்ந்த தங்கட்கு நிகர் தாங்கள். மற்றொன்று; தங்களை அடைந்ததால் எங்கட்கு நிகர் நாங்களே அல்லவா? கேளுங்கள் கேளுங்கள் என்ற கூச்சல்) இனி - தங்களைப்பற்றி எத்தனையோ உயர்வுப் பேச்சுகள் பேசலாம். இதனோடு அப்பகுதியை நிறுத்தி - புதுவை மக்கள் சார்பாகத் தங்கட் கோர் விண்ணப்பம் செலுத்தி என் சிற்றுரையை முடிவுக்குக் கொண்டு வர எண்ணுகிறேன். நீங்கள் வெகுகாலம் இப்புதுவையில் தங்கிப்போக வேண்டுகிறோம். இறந்தகாலம் பற்றிய சந்தேகங்களை யாங்கள் வெளிப்படுத்தும்போது தயவுசெய்து தாங்கள் தெளிவு கூற வேண்டு கின்றோம். மற்றும் எங்கள் நன்மைக்கான யோசனை தந்து எம்மைக் காக்கவேண்டும்கிறோம். எங்கள் வணக்கத்தை ஏற்க! (கரகோஷம் வரவேற்புக்குப் பதிலை மனிதர் வெகு ஆவலாய் எதிர்பார்த்தனர்.) வானத்து மின்னல்! அவர் அவ்வளவு உயரத்திலிருந்ததன் முகத்தை நட்டுப்பார்த்துக் கொண்டு புன்னகை காண்டினார். அவர் பிறகு தமது கரத்தை உயரத் தூக்கி உள்ளங்கையைக் குடைபோல் விரித்து. நீங்கள் வாழ்க! என்றார், மக்கள் உள்ளம் சிலிர்த்துப் போயிற்று. அன்பர்களே, நீங்கள் என்னைக்கண்டதும் கொண்ட ஆச்சர்யம் இயல்பானது - புதுவை முரசின் நிரூபர் மூலமாக எனக்குக் கூறிய வந்தனோபசார வாழ்த்துள் என்னை அளவுகடந்து புகழ்ந்திருக்கிறீர்கள்! அத்தனை புகழ்ச்சிக்கு நான் அருகனல்ல. வான் - காலம் என்ற மகத்வம் எனக்குப் பொருத்தமன்று. இத்தனை காலமாக, சுமார் ஐயாயிர வருடமாக - நான் உயிர்வாழ்ந் திருப்பதற்குக் காரணம் நானும் அறிய முடியவில்லை. நீங்களும் நெடு நாள் வாழுந் தன்மையை அடையவேண்டும் என்று உம்மை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் ஒருவர்க்கொருவர் அன்புடையவராகவேண்டும்; சமூகத்தில் அன்புபாராட்ட வேண்டும் உலக மக்கள்பால் அன்புபாராட்ட வேண்டும் அன்பின் உருவம் ஆகவேண்டும். இறந்த காலத்தில் மறைந்த எண்ணற்ற விஷயங்களை என்னிடம் தெரிந்துகொள்ள நினைக்கிறீர்கள். நானும் உங்கள் போலவே நினைப்பும் மறப்பும் உடையவன் எனினும் கூடியமட்டும் சொல்லுவேன். அச் சொற்களில் சில பொதுவானவையாய் இருக்கும் சில உம்மில் சிலர்க்கு வருத்தத்தையோ சந்தோஷத்தையோ கொடுப்பனவாக இருக்கக் கூடும். இதில் நான் ஜாக்கிரதையாக இருந்து உங்களின் பொது நலத்துக்குரியவைகளை மாத்திரம் வெளியிட வேண்டும். இறந்த கால விஷயங்களைத் தெரிந்துகொள்வதிலே மாத்திரம் எதிர்கால முன்னேற்றம் இருப்பதாகக் கருதுகிறீர்களா? அது முழுதும் சரியன்று. நான் உங்களைக் காப்பாற்றுபவன் அன்று வாழ்வில் தூய்மை யடைக. மூடக் கொள்கைகள் மூடச்செயல்கள் இவைகளை நீக்குக அறிவுபெறுக! நீங்கள் இன்பவாழ்வடைக. நான் வெகுகாலம் உங்கள் முன் இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் இதற்குச் சம்மதிக்க முடியாமை பற்றி நான் உணவு. கொள்ளும் நேரம் வரைக்குந்தான் இங்கு தங்க முடியும். இதற்குள் நீங்கள் என்னிடம் கேட்பனவற்றிற் கெல்லாம் பதில் சொல்லி விடுகிறேன். உங்களில் ஒருவர் மூலமாகவே என் வாய்ப் பிறப்பை நீங்கள் அறியவேண்டும் - புதுவை முரசின் நிரூபர் அதற்குத் தக்கவர். அந்த நிரூபர் வீட்டிலேயே நான் தங்க உத்தேசம் (எப்படி? என்ற கூச்சல்) - பிறகு தெரிந்து கொள்ளுங்கள். சிலர் - ஐயா! உங்கள் வார்த்தையில் ஒன்றுதான் எங்கட் கெல்லாம் பெரும் வருத்தத்தை உண்டுபண்ணுகிறது நீங்கள் உணவு கொள்ளும் நேரமும் ஆய்விட்டது அது வரைக்கும் தான் இங்கிருக்கமுடியும் என்றால்... பதில் - சீக்கிரம் நான் சாப்பிடவேண்டும் அதுவரைக்கும்தான் இருக்கமுடியும். கேள்வி - எவ்வளவு நேரம்? பதில் - 100 வருடம். நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன் புதுவை முரசின் மூலமாக வார வாரம் என்னுடைய வாய்மொழிகள் கண்டு கொள்க என்று மணிக்கூண்டின் மேல் இருந்த புதுவை முரசின் நிரூபரைத் தோளின் மேல் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். ஒரு சந்தேகம்! ஒரு சந்தேகம்! முற்காலத்தில் தீண்டத்தகாதவர் இருந்ததாய்த் தங்கட்கு நினைப்பிருக்கிறதா? பதில் - இருந்தார்கள் இருந்தார்கள் பிறகு ஆகட்டும் (பெரியார் நடக்கிறார்.) அவர் யார்! ஐயா! ஐயா! என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் புதிதில் ஆரியரைத் தமிழர்கள் தீண்டாமல் இருந்தார்கள். பலத்த கரகோஷம்! ஆரவாரம்! பெரியார் மறைந்தார். 2. நம் நிரூபர் வீட்டில் தங்கினார் (நமது நிருபர்) இந்த ஐயாயிரவருடத்து நெடுமனிதர் திடீரென்று புதுவை மணிக் கூண்டின் பக்கத்தில் தோன்றியதும், மக்கள் சூழ்ந்து ஆச்சரியப் பட்டதும் பிறகு அவர்க்கு என் மூலமாக ஒர் வரவேற்புப் பத்திரம் வாசிப்பித்ததும் அதற்குப் பதிலாக ஐயாயிரவருடப் பெரியார் கூறியதும் மணிக்கூண்டின் மேல் நின்று கொண்டிருந்த என்னை அவர்தோளில் தூக்கிக்கொண்டு மறைந்ததும் விந்தையாதலால் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மேல் நிகழ்ந்ததைக் கேட்க அவாக் கொண்டிருப்பார்கள். மணிக்கூண்டு இருக்கும் இடத்திற்கும் என் வீட்டிற்கும் கூப்பிடு தூரமே. பெரியார் பத்துமைல்தூரம் என்னைத் தூக்கிச் சென்றார் ஜனங்கள் இல்லாத நாட்டுப்புற வயலுக்கு மத்தியில்-தோளிலிருந்து என்னை இறக்கி விட்டார். அண்ணாந்து பார்த்தேன். ஐ. மனிதர் - என்னபார்க்கிறாய்? நான் - (பயந்து) இங்குக் கொண்டுவந்து விட்டுவிட்டீர்களே இங்கு ஆவதென்ன? ஐ. மனிதர் - வரும்போது நான் எங்கே உன் வீடு என்று கேட்டதற்கு 40 - 50 அடி தாண்டு தூரமே என்று சொன்னாய் அல்லவா? 50 தாண்டுக்குமேல் நான் ஒருதாண்டும் தாண்டவில்லையே. நான் - ஐயோ நான் வழக்கப்படி என் வீட்டையல்லவா சொன்னேன்? இதற்குப் ............................. மனிதர் தமது சிரிப்பில் ............................. சிரித்தார் கோடை யிடி என்று பயந்து முகத்தைப் பார்த்தேன் விஷயம் புரிந்தது. ஐ. - பெரியார் இதை அறிந்து சிரிப்புக்குப் பயந்துபோனாய் அல்லவா இது போல் சமீபத்தில் ஒரு விஷயம் நடந்தது வடக்கே ஒரு பெண் மற்றொருவன் மகனைக் கட்டிக் கொண்டாள். இதைப்பற்றிப் பெண்ணின் தகப்பன் என்னிடம் தன்மகள் ஓர் இழிந்த மனிதனைக் கட்டிக்கொண்டாள் என்று வருந்தினான். அதற்காக என்னை என்ன செய்யச்சொல்லுகிறாய் என்று கேட்டேன். அவன் அந்தப் பெண்ணையும் அந்த இழிந்தவனையும் தூக்கிக் கடலின் நடுவில் எறிந்துவிட்டால் நலம்என்று பதைத்தான் அந்த இழிந்தவன் என்பவன் எங்கே இருக்கிறேன் என்று கேட்டேன் பக்கத்து வீதியில் உள்ள சிங்காரத் தோப்பில் என் மகளுடன் உலாத்துகிறான். இழிந்தவன் என்பவனை உடனே எட்டித் தூக்கி என்னிரு கையிலும் ஏந்திப் பார்த்தேன் சாதாரண மனிதனே! புறத்தே மனிதனாக இருக்கலாம் உள்ளே இழிவு இருக்கக்கூடும் என்று சந்தேகித்து - இழிந்தவன் என்பவனை நோக்கி அடா என்னைப் பார்த்தாயா! ஜாகிரதை! நீ இழிந்த மனிதனாமே அந்த இழிவைக் காட்டிவிடு என்னிடத்தில் என்று பயப்படுத்தினேன். அவன் நடுநடுங்கி வாய்குழறி நான் நாயடுதான். அந்தப் பெண் பார்ப்பனத்திதான் என்று சொன்னான். புதுபெயர்கள் எனக்கு விளங்கவில்லை என்னடா என்னென்னவோ கூறுகின்றாய் நீ கட்டிக்கொண்ட பெண்ணின் தகப்பனார் சொல்லுகிறாரே என்றேன். மனிதருக்கு ப்ராம்மண மனிதர் ஒரு பகுதியினர் உயர்த்தி என்றும், மனிதர்க்குள் க்ஷத்திரிய மனிதர் வைசிய மனிதர், சூத்திர மனிதர் ஆகிய பகுதிகள் தாழ்ந்தவை என்றும் அந்தப் பிராம்மண மனிதர் சொல்லுவதுண்டு. நாங்களும் அதை ஒரு சமயம் ஒத்துக்கொண்ட துண்டு. இப்போது அந்தப் பிராம்மணப் பெண் என்மீது ஆசைப்பட்டாள் நான் நாயடு ஒத்துக்கொண்டேன் என்றான். சரி உன்னிடம் அந்தப் பிராம்மணப் பெண் இழிவு இருப்பதாய்ச் சொன்னாளா என்று கேட்டேன் இல்லை என்னை அவள் தன் உயிரென மதிக்கிறாள் என்றான். கையிலிருந்த நாயடுவைக் கீழேயிருந்த பார்ப்பனன் பக்கத்தில் விட்டேன். நாயடு பார்ப்பனனைக் கண்டு கோபித்தான். இடை மறுத்துப் பார்ப்பனனைப்பார்த்து ஏன்காணும் நீ உயர்வு ஆனதெப்படி என்று கேட்டேன். அவன் சாத்திரம் என்றான். சாத்திரம் யார் செய்தது என்றேன் கடவுள் செய்தது என்றான். எனக்கு மிக்க கோபம் வந்தது. ஏன் கடவுள் செய்தார் என்றேன் மக்கள் நன்மைக்கு என்றான். உன் மகள் இந்து நாயடுவின் சேர்க்கையால் நன்மையடைந் தாளல்லவா என்றேன் இல்லை யென்றான். அவளைக் கேட்கலாமா என்றேன் வேண்டாம் என்றான். உன் மகள் தன்மனதுக்கு ஒவ்வாத ஒரு பிராமணனைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று நீ சொல்லும் கடவுள் சொல்லியிருப்பாரா? என்றேன். ஆம் என்றான் -. கேள் மனிதனே! அக்காலத்தில் மக்கள் கேவலம் வினவறியாக் குழந்தைபோலிருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அடங்குவ தில்லை. காரணமற்ற கொலைகள் நாகரிகமற்ற வாழ்வு நடந்தது. ஆதலால் அவர்களை ஒரு நெறிப்படுத்த வேண்டியதிருந்தது. இதற்காக மலையின் மூங்கிற் காடுபற்றி யெரிவதைக் காட்டியும் வெள்ளம் புகுந்து அழிப்பதைக் காட்டியும் சூரிய சந்திரர்களைக் காட்டியும் கெட்டவர்களை இப்படிக்கடவுள் செய்வதாய்ச் சொல்லி அப்போதிருந்த காலும், மற்றும் சிலரும் சேர்ந்து ஒரு கடவுளைச் சிருஷ்டித்தோம். நாங்கள் உண்டாக்கிய அந்தக் கடவுளின்பேரால் அக்காலமக்களிடை அன்பை வளர்க்கப் பார்த்தோம். அதற்கு அக் காலத்தவர்கள் ஒழுங்குப்பட்டவர்போல் காணப்பட்டாலும், பகுத்தறி வுண்டாக உண்டாக ஒழுங்கு பெற்றார்கள் என்பதே மெய்யாயிற்று. காணாதகடவுள் காணாமலே இருந்ததால் அன்பு பெறவில்லை. பின்பு கோயில்கட்டிக் கடவுள் வைத்தோம். அப்போதும் அவர்கள் எங்கள் வீட்டிற் பக்கத்திலிருந்து கொண்டு எங்களிடம்பூவும் தண்ணீரும் கேட்கும் கடவுள், எங்களை அழிப்பதெப்படி ஆள்வதெப்படி என்றார்கள், ஏனிந்தக் கடவுளைச் சிருஷ்டித்தோம் என்று நாங்கள் நினைத்தோம். நினைத்துப் பயனில்லை. நாங்கள் சிருஷ்டித்த கடவுளுக்கு அநுசாரணையாய்ச் சொன்ன வார்த்தைகளாலும், காணாத பொருள் ஒன்றில் அவா மேலிடும் என்ற உண்மையாலும் நாங்கள் சிருஷ்டித்த கடவுளை மக்கள் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் வட இந்தியாவில் குடியேறிய ஆரியர் என்ற ஒருவகையார் முன்னேறி இத்தென்னிந்தியாவிலும் வந்தார்கள். நாங்கள் ஒரு காரணத்திற்காகச் சிருஷ்டித்த கடவுளைத் தென்னிந்திய மக்கள் உண்மையாகவே காண்பதற்கு முயற்சி செய்து கொண் டிருப்பதை அந்த ஆரியர் கண்டு - தங்களைத் தமிழர் சேர்த்துக் கொள்ளவும் மேலும் தங்களை உயர்வாக மதிக்கவும் தக்கபடி ஒரு கடவுளை உண்டுபண்ணினார்கள் உங்கள் கணக்குப்படி எதிரில் (நிற்கும் பார்ப்பனன் நாயடு இவர்களிடம்) இந்தக் கடவுள் சிருஷ்டிக்கப் பட்டு வெகுகாலம் ஆயிற்று இப்போது அவ்விதக் கடவுள்களே வேண்டியதில்லாமற் போய்விட்டது அப்படி யிருக்க அந்தக் கடவுள் சொல்லியதாய் என்னிடம் ஓ! பார்ப்பனே சொல்லாதே! கடவுள் சொன்னதாய்ச் சொன்ன தெல்லாம் ..... சந்தர்ப்பத்தை உத்தேகிறது ... பால் இருவர் கட்டுபட்டனவர்கள் எதிர்க்காதே. ஓ! பார்ப்பனனே உன்மகளையும் உன்மருகனையும் நீ ஆசீர்வதித்துப்போ-இருவரையும் கடலில் தூக்கிப் போடச் சொன்னாய் காதலுற்ற இருவர்களைக் கடலில் தூக்கிப் போடச் சொன்ன மூடனான உன்னை எங்குத் தூக்கி எறிகிறது? என்றுதான் யோசிக்கிறேன். என்றேன் பார்ப்பனன் பயந்தான். ஆனாலும் எப்படியிருந்தாலும் இந்த இருவருக்கும் நரகந்தானே கிடைக்கும் என்றான். சிரித்தேன் சிரித்தேன் அடக்க முடியவில்லை. நிரூபர் - உங்கள் சிரிப்பிலா? எங்கள் ஸ்வரத்திலா? பெரியார் - என்சிரிப்பில். வீதியில் இருந்த கட்டிட மெல்லர்ம் அதிர்ந்தன. இங்கீலீஷ் படை ஆயத்தப்பட்டு யாரோ எதிரிவந்து இந்தியாவின் நடுவில் குண்டுபோடுகிறான் என்று தீர்மானித்தார்கள். நிரூபர் - இதுவரைக்கும் நீங்களும் நானும் பேசியவைகளைக் குறித்திருக்கிறேன் இதைப் புதுவை முரசுக்குக் கொடுக்க வேண்டும். பெரியார் - அப்படியானால் வா? பெரியர் என்னைத்தூக்கிக்கொண்டு போனார். புதுவை முரசு ஆபீஸில் விஷயம் கொடுக்கப்பட்டது. எனது வீடு விசால மில்லாதலால் பெரியர் நடுவாசலில் உட்கார்ந்தபடி இருக்கிறார். - புதுவை முரசு, 17.11.1930 3. நம் நிரூபர் வீட்டில் தங்கினார் (நமது நிருபர்) என் சிறியவீடு ஐயாயிரவருடப் பெரியவருக்கு ஒருசிறிதும் படுக்கவோ தாராளமாய் உட்காரவோ முடியாதாயினும் அவர் என் வீட்டின் நடு வாசலிற் கால்களை நன்றாய்ச் சப்பளித்து ஒடுக்கி உட்கார்ந் திருந்தார். இவ்வாறிவர் ஒருவாரம் வரைக்குமா உட்கார்ந்திருந்தார் என்று வாசகர் சந்தேகங் கொள்ளலாம். நான்கு மணி நேரத்திற்கு ஒரு தரம் நாம் சாப்பிடுவதும் 100 வருடத்திற்கொருதரம் அவர் சாப்பிடுவதும் சமம் என்றால் ஒருவாரம் அவர் ஒரேநிலையில் உட்கார்ந்திருக்கக் கேட்பானேன். நிற்க. என்கேள்வி - சென்றவாரம் நீங்கள் தமிழ் நாட்டில் முற்காலம் அறிவற்றிருந்த தமிழரைச் சொல்லித் திருத்தவேண்டி, ஒரு கடவுளைச் சிருஷ்டித்ததாகவும், பிறகு வந்த ஆரியர் தங்களை உயர்வு படுத்தவும் தங்களை அந்நாளைய தமிழர் அங்கீகரிக்கவும் ஒருகடவுளைச் சிருஷ்டித்ததாகவும் சொன்னீர்கள். அங்ஙனமாயின் கடவுளை நீங்கள் சிருஷ்டித்ததென்பது எவ்வாறு? அதிலும் இரண்டு கடவுள்களா? ஐ - பெரியவர்பதில் - உலக மக்களில் ஒவ்வொரு தொகுதி யினரும் தங்கள் தொகுதியின் நலங்கருதியும் பிறர் நலத்துக்கு ஒவ்வாத முறையிலும் கடவுள் இலக்கணம் அமைத்திருக்கக் காரணம் என்ன? இதனால் கடவுளை ஒவ்வொரு தொகுதியினரும் தமது கலத்துக்கு ஏற்றவாறு சிருஷ்டித்துக் கொண்டனர் என்பது தோன்ற வில்லையா? எனது கேள்வி - அப்படியானால் கடவுள் மனிதரால் சிருஷ் டிக்கப்பட்டவரா? கடவுளையா நாம் சிருஷ்டிக்கமுடியும்? ஐ-பதில் - முடியாது அதனால்தான் கடவுளைச் சிருஷ்டிக்க வேண்டாம் என்கிறேன். என்கேள்வி - நீங்கள் சொல்லுவது ஒன்றுக்கொன்று முரணாக இல்லையா? ஐ-பதில் - இதுவரைக்கும் இந்த உலகில் கடவுள் கடவுள் என்று சத்தமிட்ட அனைத்தும் கற்பனைக் கடவுளே! மனிதத் தொகுதி தம் நலங்கருதிக் கட்டிவிட்ட கட்டுக்களே! அந்தக் கற்பனை வேண்டாம். எ-கேள்வி - ஆனால் உண்மைக்கடவுள் ஒருவர் உண்டா? இல்லையா? என்று கேட்கிறேன். ஐ-பதில் - மனிதருக்குத் தெரியாத விஷயம் உண்டு என்றுதான் உனது கேள்விக்கு நான் பதில் சொல்லமுடியும். எ. கேள்வி - தெரியாத விஷயத்தைப் பற்றி நான் கேட்க வரவில்லை. கடவுள் உண்டா என்கிறேன். ஐ-பதில் - நீ எதை நினைத்து அதற்குக் கடவுள் என்றபதத்தை உபயோகிக்கிறாயோ அதற்குக் கடவுள் என்ற பெயர் சரிதானோ சரியில்லையோ அதையார் கண்டது! ஏனெனில் கடவுள் என்ற பதம்- கடந்தது என்று பொருள்படுகிறது. நீ கேட்பதானது கடந்தது என்பதோடு ஒற்றுமையுடைய தாயிருக்கும் என்பது நிச்சயமா? எ. கேள்வி - அங்ஙனமாயின் அவ்விஷயத்தைக் கடவுள் என்ற பதத்தால் குறிக்காமல் எப்பதத்தால் குறிப்பது? ஐ-பதில் - எப்பதத்தாலும் குறிக்க வேண்டாமே. எ. கே - அதைப் பற்றிப் பேசுவதெப்படி? ஐ-பதில் - பேசுவதால் ஆக வேண்டியதென்ன? எ- கேள்வி - யானை முதலாக எறும்பு கடையாக உள்ள எண்பத்து நான்கு லக்ஷம் யோனிபேதங்களும் கடவுளை அடைவதே நோக்கமாகக் கொண்டவை அல்லவா? ஐ. பதில் - யானைமுதல் என்றாய்! உலகில் யானைதான் பெரிது என்பது உனது கருத்தும், உம்மவரின் கருத்துமா? யானையினும் பெரியவை பல உண்டு. எறும்பினும் சிறியவை எண்ணற்ற கோடி. எண்பத்து நான்கு லக்ஷம் யோனி பேதம்! இதையும் உண்மைப்படுத்த முடியாது. இவையனைத்தும் கடவுளை அடையும் நோக்கமுடையவை என்றாய் எந்தக்கடவுளை? நாங்கள் அந்தக்காலத்தில் ஏற்படுத்திய கடவுளையா? ஆரியர் அந்தக் காலத்தில் ஏற்படுத்திய கடவுளையா? ஆத்துமனேதேக மென்னும் சார்வாகன் கடவுளையா? ஆத்துமன் இந்த்ரியம் என்னும். சாருவாக ஏகாதசியின் கடவுளையா? ஆத்துமன் பிராணனே என்னும் இரணியகர்ப்பனென்னும் சாருவாக ஏகாதசியின் கடவுளையா? தேகாதி விலக்ஷணனாயும் தேகபரிணமிதனாயும் பரிணமித மத்தியில் சங்கோச விகாசதர்ம யுக்தனாயும் இருப்பான் என்னும் சைதன் கடவுளையா? புத்தியே ஆத்துமன் என்னும் பௌத்தன் கடவுளையா? ஆநந்தமே ஆத்மன் என்னும் கௌளயாமள காத்மீகர் கடவுளையா? பாஞ்சராத்ரன் கடவுளையா? லௌகிகன் கடவுளையா? நியாய வைசேடிகர் கடவுளையா? இந்தவரிசை நிற்க. கிறீஸ்தவர் கடவுளையா? மகம்மதியர் கடவுளையா? இதுவல்ல இதுவல்ல என்று அன்மைச்சொல்லால் சொல்லிச்சொல்லி இளைக்க வேண்டியது தான் என்கிறார்களே அந்தக் கடவுளையா? கண்டவர் விண்டிலர் விண்டலர் கண்டிலர் எனப்படும் கடவுளையா? திருநள்ளாற்றுச் சேற்றுக்குளத்தில் முழுகினால் ரிஷபவாகனத்தில் ஒடிவருவார் என்னும் கடவுளையா? ராமா என்றாலும் போதும் தேவலோகத்தில் இருந்து விமானம் அனுப்பும் என்னும் கடவுளையா? கோயிற் கடவுளையா? கல்மண் கல்யாண முருக்கமரம் இவற்றால் பார்த்தது போல் உருவமைக்கப்படும் கடவுளையா? சதுர்த்தியன்று 4 பணம் போட்டு வாங்கி வரும் களிமன் கடவுளையா? எந்தக் கடவுளை அடைவது நோக்கம் நீ சொல்லும் சரியாய் 84 லக்ஷம் ஜீவராசிகளுக்கு? கடவுள் விஷயம் தகராறு தம்பி! எ. கேள்வி - பல மதத்தினரும் பலவிதமாய்ச் சொல்லுகிற படியாலும், அவை ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுவதாலும் கடவுள் இலக்கணம் இன்னும் கண்டறியவில்லை என்கிறீர்களா? ஐ-பதில்-சில வார்த்தைகளை மீதிப் படுத்திவைத்துக்கொண்டு ஆம் என்கிறேன். எ-கேள்வி - அதென்ன: ஐ-பதில்-பின் என்ன பல மதத்தினரும் நாளைக்கு ஒரே முடிவுக்கு வந்துவிட்டால் அதே நிமிஷத்தில் நீ சொல்லும் கடவுள் எதிரில் வந்து சிரிக்கப்போகிறதா? எ-பதில்-சிரிக்காவிட்டாலும் உண்மை தெரியவேண்டும் அல்லவா? ஐ-பதில்-சரி! அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தால் அந்த முடிவு உண்மையாய் விடுமோ? எ-கேள்வி-இப்போது நான் சைவர்கள் கடவுள் நிர்த்தாரணம் பண்ணிவைத்திருப்பது சரி என்கிறேன். மறுக்கிறீரா? ஐ-பதில்-மறுக்கிறேன். ஆனால் வீண் வேலை கடவுளைப் பற்றிய எதையும் மறுக்கலாம். எ-கேள்வி-இல்லை இல்லை மறுத்துக் காட்டுங்கள். ஐ-பதில்-சரி இதுவரைக்கும் எழுதியதைப் புதுவை முரசுக்கு அனுப்பு. (தொடரும்) - புதுவை முரசு, 24.11.1930 4. காட்டு மேட்டில் உலாவுதல் (நமது நிருபர்) நான் சைவம் மிகப் பழமையானதல்லவா என்று கேட்டதற்கு, ஐயாயிரவருடத்து மனிதன் - ஆம்! எங்கள் வாழ்க்கையின் முதற் பகுதியில் அதாவது தமிழர் வாழ்க்கை தொடங்கிய காலத்து ஒருவரை ஒருவர் துன்புறுத்தியும், தமக்குள் கட்டுப்பாடற்ற முறை யிலும் நடந்துவந்தனர். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு, அவர்களிடமிருந்த அந்தக் கட்டுப்பாடற்ற முறை யானது தடையா யிருந்தது. இது கண்ட அறிவுடைய சிலர் வருந்தினர். அவர்கள் செம்மையுற வேண்டும் என்று பலவகையில் முயன்றனர். செம்மை வாழ்வு! செம்மைவாழ்வு!! என்று கூச்சலிட்டனர். இவ்விதம் அந்நாளில் பொது நன்மைக்கானவைகளைச் சிந்தித்து, எற்றது செய்ய முன் னின்றவர் நாளடைவில் மற்றத் தமிழர்களால் நன்கு மதிக்கப்பட்ட தோடு அவர்களால் அந்தணர் என்றும் அழைக்கப்பட்டனர், அந்தணர் என்ற பதத்திற்கு (அம்+தண்+அர்) நல்லதண்மையை யுடையவர் அதாவது மிக்க கருணையுடையவர் என்பது பொருள். இவ் வந்தணர் தம்மிற் கூடிப் பொதுமக்களுக்குத் தேவையான குணம் செய்கை முதலியவை இன்னபடி இருத்தல் வேண்டும் என்று வரையறுப்ப துண்டு. அவ்வாறு வரையறுத்த விஷயம் அனைத்தும் அறம் எனப் பட்டது அறுத்தல்-அறு-அறம் என்பன ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய பதங்கள். அறம் - தருமம். அந்தணர் அறம் வகுத்தது கொண்டு பின்னாளில் அவர்களை அறவோர் என்றும் அழைக்கலாயினர். நான் - ஐயா, இவ்வந்தணர் என்போர் செம்மைவாழ்வு வேண்டும் என்று வற்புறுத்திவந்ததாய்ச் சொன்னீர்கள். செம்மை வாழ்வு என்று அவர்கள் சொன்னது எப்படிப்பட்ட வாழ்வை. என்ன அர்த்தத்தில் சொன்னார்கள். ஐ. மனிதர் - அதைத்தான் சொல்ல ஆரம்பிக்கிறேன். பிரதாப காலத்தில் தமிழர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டவை ப்ரதான மூன்று அவை சூரியன், அக்கினி, சந்திரன் இவைகள் தமக்கு ஜீவாதார மான நன்மை புரிகின்றன என்றும், தம்மைக் காத்து வருகின்றன என்றும் கண்டார்கள். சூரியன் குறித்த நேரத்தில் மறைவதும் ஒளி தருவதும், பயிர் பச்சைகளுக்கும் ஜீவராசிகட்கும் எழுச்சியை உண்டாக்குவதும், அக்கினியானது திடீரென்று காட்டில் (மூங்கில் தேய்வதால்) தோன்றித், தோன்றிய இடத்தையேயழிப்பதும், தங்கட்குப் பல வகையில் உபயோகப்படுவதும், சந்திரன் குளிர்ந்த ஒளிகொட்டித் தண்மை செய்வதும், இவர்களின் நம்பிக்கைக்குக் காரண மாயின. இதனாலேயே அக்காலத்துத் தமிழர்கள் சூரியனை வள்ளி யென்று சொன்னார்கள். (வள்+இ) வளப்பத்தைச் செய்வது என்பது இதன் பொருள் - அக்கினியைக் கந்தழியென்று அழைத்தார்கள் (கந்து - தறி கம்பம். அழி - அழிப்பது) கட்டுக்கடங்காதது; அழியும் இடத்தைத் தனது தோன்றுமிடமாய்க் கொண்டது; என்பன அதன்பொருள் சந்திரனைக் கொடிநிலை என்று சொன்னார்கள். அக்காலப் பொருளில் கொடி என்பது வளைவுக்குப் பெயர். நிலை என்பது நிற்பதாம்; எனவே சந்திரன் ஒளிவளைந்து நிற்பதென எண்ணினார்கள். நான் - அப்போதெல்லாம் உங்கட்கு என்னவயது? ஐ-ம-தேனடை எடுத்து அந்தத் தேனடையோடு மணற் கிழங்குகளைச் சேர்த்துண்ணும் பருவம்; வினவு தெரிந்தவன்! நான் - கொடிநிலை, வள்ளி, கந்தழி என்ற பதங்களின் விசேஷத்தைச் சொன்னீர்கள். செம்மைவாழ்வு என்பதென்ன என்றல்லவா நான் கேட்டேன். ஐ-ம- அதைத்தான் சொல்லிவருகிறேன். இந்த மூன்றில் சூரியன் அக்கினி இவைகளின் நிறத்தை அவர்கள் செம்மை என்று சொன்னார்கள். செம்மை சிவப்பு நிறம் அல்லவா? செம்மையென்ற பெயர் உண்டாகிய விதம் இதுவேயாகும். இந்தச் செம்மை யுடைய பொருள்களாகிய சூரியன், அக்கினிகளை அவர்கள் எவ்வளவு மேலாக மதித்திருந்தார்கள் என்பதை முன்னம் சொன்னேன். கீர்த்தி யுள்ள பெயரை மக்கள் தமக்கோ தம்பிள்ளைகட்கோ தம் பிரியமான இடம் முதலியவற்றிற்கோ இட்டு வழங்குவதுபோல் அக்காலத் தமிழர்கள் தமது மேன்மையான பொருள்களுக்குள்ள செம்மை என்ற பெயரைத் - தாம் எதிர்பார்க்கும் நன்மையான பொருள், நன்மையான காரியம் அனைத்துக்கும் பொதுவாய் அமைத்துச் சொல்வதுண்டு. நல் வாழ்வு என்பதையும் அவர்கள் செம்மை வாழ்வு என்று சொன்னார்கள். பிறகு நாளடைவில் செம்மை என்ற பதத்திலிருந்து செவ்வை, செவ்வன், செவ்வனே, செவ்வனம், செவப்பு, செவேலென, சிவந்த, சிவ், சிவ்வு, சிவம் என்ற அர்த்தத்திலும் சப்தத்திலும் சம்பந்தமுடைய பதங்கள் தோன்றின. சூரியன் நீரை ஆவியாக மாற்றி இழுப்பதைச், சிவ்வென்று இழுப்பது என வழங்குவதுண்டு. இதனால் சிவ், சிவ்வு என்பவை சூரியன் பெயர் என்பதை அறிய மேலும், சூரியனிலிருந்து செம்மையென்ற வார்த்தை கிடைத்தது; அது மேன்மை - நன்மை முதலிய பொருளில் பிறகு வழங்கலாயிற்று. மேற் காட்டிய செம்மை முதல் சிவம் ஈறாக உள்ள அனைத்தும் செந்நிறம் - அல்லது உயர்வு என்ற பொருளையே தருவதும் காண்க. எனவே சிவம், செம்மை யுடையது என்ற பொருளையே தருவதாகும். சிவம் என்ற பெயர் இயற்கை முறையில் - வந்தவிதம் கூறினேன். பின் அது என்னென்ன கூறினேன். பின் அது என்னென்ன நிலையடைந்தது என்பதைக் கூறுவேன். இதை முரசுக்கு அனுப்புக. - புதுவைமுரசு, 1.12.1930 5. காட்டு மேட்டில் உலாவுதல் சிவம் என்பதென்ன? இறந்த இடத்தைக் குறிக்க, நட்ட தறியே சிவலிங்கமாயிற்று! (நமது நிருபர்) புதுவைக்கு மேற்கில் மூன்று மைலில் உள்ள மேட்டுப் பாங்கான பூமியைக் காட்டுமேடு என்பார்கள். நமது ஐயாயிர வருடப் பெரியார் அங்கு உலவிய வண்ணம் என்னுடன் சம்பாக்ஷித்ததைச் சென்றவாரப் பத்திரிகையில் அறிவித்திருந்தேன். காட்டு மேடு மனிதசஞ்சாரமற்ற இடமேயாயினும் மிக்க உயரமுடைய இவர் பேசுவதை நான் கேட்பது மிக்க கஷ்டமாயிருந்தது. அதிலும் அவர் உலாத்துகிறார். இரண்டடி பெயர்த்துவைத்தால் சுமார் அரை மயிலுக்கப்பால் சென்றுவிடுகிறார். அவர் உலாத்துவதையும் நான் தடங்கல்பண்ண எனக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் என்ன செய்வது என் கஷ்டத்தைச் சொன்னேன். அவரும் சரியென்று சொல்லி உட்கார்ந்தார். நான் நின்றபடி அவர் முகத்தை அண்ணாந்து பார்த்துப் பேசினேன். இதிலும் எனக்குச் சிரமம் இருப்பதை அவர் எண்ணி என்னைத் தம் தோளில் உட்கார வைத்துக் கொண்டார். சம்பாஷணை ஆரம்பித்தது. நான்-சூரியன், அக்கினி இவைகளிடமிருந்து செம்மை என்ற பதமும் அதனடியாக, சிவப்பு - சிவந்த, சிவ், சிவம் முதலிய பதங்களும் உண்டாயினஎன்றீர்கள்! சிவம் என்பதற்கும் செம்மையுடையதென்றே அர்த்தம் என்பதையும் தெரிவித்தீர்கள். மேலும் அது பற்றிச் சொல்லுவதாய்ச் சொல்லியிருந்தீர்கள். ஐயாயிர வருட மனிதன் - கல்வி கற்க ஆரம்பித்தனர் கல்வியைச் சிவம் என்றனர். அதாவது கல்வி கற்பது செம்மை வாழ்வையுண் டாக்கும் என்றார்கள். தம் வாழ்வில் நல்ல நெறிகளை உண்டாக்கினர். புயவலியுடையவனாகவும் கற்றவனாகவும் பார்த்துத் தலைவனாக்கி அவனுக்கு அடங்கி நடக்க ஆரம்பித்தார்களாயினும், அஃது நேரிய முறையில் நடைபெறாமல் இருந்தது. தலைவர்கள் போலவே-பொதுவில் ஆலோசித்துச் சொல்லும் அந்தணர்கள் என்போரும் ஒருபால் தலை தூக்க ஆரம்பித்தார்கள். ஜனத்தலைவன் அதாவது அரசன் எனப்படுவோனும் அந்தணர் யோசனைப்படி நடக்க ஆரம்பித்தான். இதனால் அக்கால அந்தணர்க்கு அரசன் முதல் அனைவரும் கௌரவம் வைத்ததுவிளங்கும். இவ்வந்தணர் எனப்படுவோர் அரசனைக் கௌரவப்படுத்துவதன் முலமாகத் தாமும் கௌரவம் அடையவேண்டும் என்று எண்ணினார்கள். அந்தணர் அரசர்களைக் கௌரவப்படுத்த அவர்கள் நடத்திய சிலகாரியங்களில் ஒன்று இங்குக் கவனிக்கத்தக்கது. அதாவது ஓர் அரசன் இறந்து போனால் அவன் இறந்த இடத்தில் ஒர் தறி நட்டு அதன்மேல் அவ்வரசன் பெயரைக் குறித்தார்கள். அவ்வாறு சவக்குழியின்மேல் நடப்படும் தறிகள் கருங்கல், மூங்கில், மீன்களின் முள், மரம் ஆகிய அவ்வவ் விடத்தில் கிடைக்கக்கூடியனவாக அமைவது வழக்கம். பிறகு அந்தணர்கள் இறந்தாலும் அவர்களின் பிரேதக் குழியைக் குறிக்கத் தறி நட ஆரம்பித்தார்கள். இதன் மேல் பொது யோசனை சொல்லும் அந்தணர்கட்குத் தறி நடுவதில் மிக்க குஷால் உண்டாயிற்று. ஓர் அரசனைச் சனங்கள் வணங்குவதுபோலவே சவக்குழியின் தறிகளை யும் (தறி-கம்பம்) வணங்கி மரியாதை செய்யவேண்டும் என்ற பாடம் கிளம்பிற்று. அங்ஙனம் தறிகளை வணங்குவது செம்மை வாழ்வுக்கு இன்றியமையாதது என்றார்கள். எனவே சவக்குழியின் தறிகளை - அந்தக் கம்பங்களைச் சிவம் என்றார்கள். - புதுவைமுரசு, 8.12.1930 6. காட்டு மேட்டில் படுக்கை காதில் ஆந்தைக்கூடு (நமது நிருபர்) நான் (நிரூபர்) நேற்றுக்காலை 8-மணிக்கு ஐயாயிர வருடப் பெரியரிடம் சென்றேன். காட்டுமேட்டிற்கு வண்டிசெல்லாது. நடந்து போகவேண்டிய திருப்பதால் கிரமம் ஏற்படுகிறது. நான் அவரை நெருங்குகையில் அவர் சுமார் ஒருபர்லாங்கு தூர நீளமாகக் கவிழ்ந்து படுத்திருந்தார். அவர் இரு கைகளையும், தலையணைபோல் மடக்கித் தலையணையாக்கி அதன்மேல் தலை கவிழ்ந்திருந்தார். சமீபத்தில் நான் சென்றதும் ஆச்சர்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவர் காதில் ஓர் ஆந்தை வெளியே பறந்து சென்றது. நான் இதென்ன விஷயம் என்று அவரைக் கேட்டேன். அதற்கு ஐயாயிர வருடத்தார் ஓர் பக்ஷி என் காதை ஏதோ மரப்பொந்தென்று நினைத்து நான்கு நாளாக வந்து தங்குவதும் வெளிச் செல்வதுமாக இருக்கிறது. வேலையற்றகாது பக்ஷிக்காவது உபயோகப் படட்டும் என்றிருந்து விட்டேன். என் காதை நீ பரிசோதி! சில சமயம் கூடு கட்டியும் இருக்கும் என்றார். அவர் காதைப் பரிசோதித்ததில் ஆந்தையின் கூடு கிடைத்தது. அக்கூட்டில் இரண்டு முட்டைகளும் கிடைத்தன. நான் ஆச்சரியம் அடைந்தேன். ஐயாயிர வருடத்தார் - இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. விஷயத்தைத் தொடங்குகின்றேன். அரசரும், அந்தணரும், சமாதியில் நட்ட தறிகளும் கடவுள்கள்! அக்கால அரசரும் அந்தணரும் இறந்துபோனால், அவ் விடத்தில் தறிநட்டு, அதில் இறந்தவர் பெயரைக் குறிப்பார்கள் என்றும், அத்தறி கட்கும் நாளடைவில் சிவம் எனப்பட்டன என்றும், மக்கள் அத்தறிகளை வணங்க வேண்டியதாயிற்றென்றும் இதிலிருந்து அரசர் அந்தணரையும், அந்த அரசரையும் உயர்வு செய்து செய்து வந்ததன் பயனாக அரசர் அந்தணர், தறிகள் - கடவுள்கள் என்று மதிக்கும் நிலை ஏற்பட்டது. இம் மூவகைக் கடவுள்களில் அரசக் கடவுளே மிக்க செல்வாக்கடைந்தது. அரசபதவியில் அவா ஒவ்வோரிடத்தும் இருந்த பலசாலிகள் அந்தந்த எல்லைக்குத் தாம்தாம் அரசர் என்று சொல்ல முன்வந்தனர். அரசபதவிக்கு அக் காலத் திருந்த மேம்பாடே அதில் ஏற்பட்ட இவாவுக்குக் காரணம். இச் சந்தாப்பத்தில் தான் தமிழ் மொழி பேச்சளவில் இருந்ததுபோய் எழுத்திலும் ஆரம்பித்தது. அரசர் வன்பு தாம் தாம் ஆளவேண்டும் என்றும், தமது ஆட்சிக்குட்பட்ட எல்லையைப் பெரிதாக்கவேண்டும் என்றும் அரசர் எனப்படுவோர் கொண்டவன்பினால் அக்கால மக்கள் புற்றீசல்கள்போல் மடிவா ராயினார். போரில்லாத நாளும் இடமும் அச்சமயம் இருந்ததில்லை. மக்கள் இலக்ஷியம் போர் என்று நினைத்தழிந்தனர். கொள்ளையும் கொலையும் அறியாதவர் இலராயினர். அவர்கள் கள் குடிப்பதுண்டு. புலால் தின்பதை அறியார்கள். அன்பியக்கம் கண்டார்கள்! எங்கணும் அரசர்! எவ்விடத்தும் போர்! எந்நாளும் உயிர்ச்சேதம்! இதிலிருந்து மக்களை மீட்க அறிவுவந்த பலர் ஆராய்ந்தனர். தம்வாழ்வு செம்மையடைய வேண்டும் எனக் கவலைகொண்டனர். அன்பியக்கம் தோற்றுவித்தனர். ஒருவரை யொருவர் நலிவுறுத்தாமல் பரஸ்பரம் அன்புகொள்ளுங்கள் என்று போதித்தனர் அன்பின் பயனை விளக்கினர். இவ்வேலை நேரிய முறையில் பகுத்தறிவுக்கேற்ற வகையில் நடைபெற்றது. நல்ல பலன் ஏற்பட்டது. தமிழ்க்கல்வி துளிர்த்தது. தமது செம்மை வாழ்விற்கு அன்பு ஒன்றே ஏற்றது என்று உணர்ந்தார்கள். அன்பும் சிவம் எனப்பட்டது. ஆடவரும் பெண்டிரும் போரில் ஓய்வுற்றனர். ஒற்றுமை பெற்றனர். கட்குடியைத் தீதென் றறிந்தனர். தமிழ் வளர்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதுவரைக்கும் சாதி என்பதோ சமயமென்பதோ அறியார்கள். அந்தணர் என்போர் - இப்போது ஒருசாதிப் பிரிவினருள் நாட்டண்மைக்காரர் இருப்பது போல் அந்நாளில் பாவிக்கப் பட்டனர். இதன்றி மக்கள் உயர்வு தாழ்வு என்ற பாவம் இருந்ததில்லை. தம் வாழ்வில் துளித் துளியாய்ப் புதுமை யடைந்தனர். ஆயினும் அரசர் அசல் கடவுள் என்ற சீர் கேடு. ஒருபக்கம் வளர்ந்து கொண்டே வந்தது. அரசக் கடவுளல்ல அரசரிலும் மேம்பட்ட சோமசூரியாக்னி (சூரியன் - சந்திரன் - தீ) களே கடவுள்கள் என்ற கொள்கை திரும்பிற்று அந்தச் சந்திரன் சூரியன் தீ இவை மூன்றும் தயவுசெய்து மண்ணில் குறிப்பிட்ட இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டால் இவ்வரசர் கொட்டம் அடங்கும் என்று அந்தணர் நினைத்தனர்; பொது மக்களுக்கும் அரசர் அட்டகாசம் பிடிக்கவில்லை. கேவலம் நாட்டாண்மைக்காரர் போன்ற அந்தணர் என்போரும் மனிதர்களே என்ற அறிவும் ஏற்பட்டது. எனினும் ஆட்சி முறையில் இக்காலம் போன்ற ஓர் ஒழுங்கு ஏற்படுத்தவும் சந்தர்ப்பமில்லை. பலமில்லை. பக்குவ மில்லை. இதன் பயனாக - அந்தணர் அடிக்கடி பொதுமக்கள் சகிதம் நிழல் தரும் மரங்களின் அடியில் கூட்டமிட்டு அரசருக்கு எதிரான அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்தனர். அரசர் அந்தணர் என்ற கட்சி ஏற்பட்டது. வாதம் ஏற்பட்டது. அந்தணர் அபிப்பிராயமே பலப்பட்டது. புயவலியுடைய அரசர் அபிப்பிராயம் தோல்வியடைந்தது. இதற்குக் காரணம் அந்தணர் என்போரின் தந்திரமே. அந்தணர், இருக்கும் அரசனைவிட - அவனைப்பெற்று இறந்து போன அரசனே வேலானவன் என்றான் இதை இருக்கும் அரசனே எதிர்க்க நியாயமில்லை பொதுமக்கள் ஆம் ஆம் என்றனர். மேலும் இறந்த அரசர்களின் பெயரால் நடப்பட்ட தறிகளே வணங்கத் தக்கவை என்று அந்தணர் சொல்லினர். அனைவரும் ஆம் ஆம் என்றனர் அரசனும் ததாஸ்து (அப்படியே) சொன்னான். அந்தணர் கூட்டங்கள் மரத்து அடிகளில் வலுப்பெற்று வந்தன. அம்மரங்கள் தறிநட்டிருந்த இடத்தில் இருப்பவை. அவ்விடம் பொதுமக்களால் பரிசுத்த இடமாக - நாளடைவில் பாவிக்கப்பட்டது. மரத்தினடியில் தறிகளாகிய சிவம் - அந்தணர் கூட்டம் - ஆகிய இந்தச் சித்திரத்தை மனதில் வைத்துத்க்கொள்க! பிறபின். - புதுவைமுரசு, 15.12.1930 7. மற்றவறைப்போல் சைவக் கொள்கையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததே (நமது நிருபர்) ஐயாயிர வருடத்தார் கூறுவது:- (தொடர்ச்சி) மேற்சொல்லியவாறு பதி, பசு; பாசங்கள் அநாதியே உள்ளவை ஆதலால் பஞ்ச கிருத்தியமும் அநாதியே என்றாகிறது; இதனால் நான் மேலே காட்டிய வாறு பொருந்தாதிருப்பது மல்லாமல், ஆதிகாலமென்பதற்கும் ஆதி காலப் பொருள் என்பதற்கும் ஓர் காலமும் பொருளும் இல்லை என்று முடிவது மின்றி, முதலிற் சிருட்டிக்கப் பட்ட வயதே சிருட்டி கர்த்தா வுக்கும் (பதி) வயதாகிறது. சிருட்டிகர் வயதுடையவராய் இருப்பதால் கடவுள் அல்லர் என முடிகிறது. ஆதலால் பசு பாசங்களும் பஞ்ச கிருத்தியங்களும் அநாதியே என்று சொல்லும் சைவக் கொள்கை பகுத்தறிவுக்கு ஒவ்வாததே. இதில் இன்னொரு விஷயம் ஆக்ஷேபிக்கக் கூடியது: கடவுள் தம்மை யொப்ப தாகிய ஒர் அநாதி நித்திய வஸ்துவைத் தம்மினின்றும் வேறாகப் பிறப்பிக்கிறார் இவர், தமக்கு ஒப்புடைய இன்னொன்றையும் உடையவராகிக் கடவுள் என்ற லக்ஷணங்குன்றிப் போகிறார். இவ்விஷயமாகச் சைவர்கள் சொல்ல வருவன என்ன? விநாயக - சுப்பிரமணிய - வீரபத்திராதியோர் சிவபதியின் பல சத்தியாரூடி களாக அவ்வப்போது ஓரோர் கிரியையை முடித்தற் பொருட்டுச் சிவம் அதிட்டித்து நின்ற விசேட புண்ணியாத் துமாக்களே அன்றிச் சிவத்தை ஒப்பதான பதிகளல்லவே என்றும் அவ்வாறு சிவம் அதிட்டித் துள்ளஆன்மாக்கள் ஆகமங்களில் கூறப்பட்டிருக்கிறபடி சிவ பக்கம்-ஆன்ம பக்கம் என்னும் ஈரியல்புடையன என்றும், மந்திரி தேசாதிபதி நியாயாதிபதி முதலியவர்களால் நாம் நேரே ஆளப்பட்டாலும் அவர்கள் மூலமாய் நம்மை ஆள்பவன் அரசன் ஒருவனே என்றும், அதுபோலப் பிரமாவால் சிருஷ்டிக்கப்பட்டும், விஷ்ணுவால் திதிக்கப்பட்டும், உருத்திரனால் அழிக்கப்பட்டும் நடக்கின்ற இவ்வுலகம் அவர்கள் மூலமாகச் சிவனாலேயே அவ்வாறு நடைபெறுகின்ற தென்றும், பிரம விஷ்ணு உருத்திராதியோர் பெயரே அந்தந்தக் கிரியை அவரை அதிட்டித்து நின்ற சிவத்துக்கும் செல்வதன்றி அவ்வான்மாக்கள் சிவமல்லவென்றும் சமாதானம் சொல்லக்கூடும். நன்று! கயமுகனென்னும் அசுரனால் தேவர்களுக்குண்டாயிருந்த உபத்ரவத்தை நீக்கும் பொருட்டுத் தேவர்களோடு கூடிப் போய் யுத்தம் செய்து அவனைச் சங்கரிக்க அனுப்பும்படி சிவனும் உமையும் யானை உருவடைந்து கூடிய யானைமுக விநாயகர் பிறந்தாரென்றும், சூர பன்மன் என்பவனால் தேவர்களுக்கு உண்டாயிருந்த உபத்திரவத்தை நீக்கத் தேவர்களோடு கூடிப்போய் யுத்தம் பண்ணி அவனைச் சங்கரிக்க அனுப்பும்படி சிவன் ஆறுமுகங்களோடு நின்று அந்த முகங்களி னின்று புறப்பட்ட ஆறு நெருப்புப் பொறிகளால் சுப்பிர மணியர் உண்டாயினர் என்றும், சிவனுடைய மாமனாகிய தக்கன். சிவனுக்கு விரோதமாகச் செய்து கொண்டிருந்த தேவர்களையும் அழிக்கச் சிவன் கொண்ட கோபத்திலெழுந்த வியர்வையிலே வீர பத்திரர் உண்டா யினர் என்றும், ஸ்காந்த முதலிய புராணாதிகள் சொல்கின்றன. அசுரரை அழித்தலும், மதத்தையழித்தலும் கடவுளே சிலரை அதிட்டித்துத்தான் ஆக வேண்டிய பெரிய காரியங்களா? அங்ஙனமிருக்க, சிவன் அத் தொழிலை எளிதில் முடிக்காமல்; தாமே சிலரை அதிட்டித்துப் போய்ப் புரிந்திருப்பதால் அவர் சக்தியில்லாத வராகிறார். சிவன் யானையாகிப் புணர்ந்தார் என்பதால் காம சேட்டையுடையவராகிறார். மேலும் சுப்பிர மணியர் பிரமாவைச் சிறையிலிட்டுப் பிரமாவின் சிருட்டித் தொழிலைப் பலநாள் அவரே செய்திருந்தபின் சிவன் சுப்பிரமணிய ரிடத்திற் போய் இதஞ்சொல்லிச் சிறைமீட்டு அத் தொழிலைப் பிரமாவிடம் ஒப்படைத் தார் என்று கந்த புராணம் கழறுகிறது. சிவனைச் கொல்லுவதற்காகத் தாருக வனத்து ரிஷிகள் செய்த யாகத்தில் புலி, மான், பாம்புகள், பூதங்கள், முயலகன் முதலியவை பிறந்தன என்றும் புராணம் விளம்புகின்றது. தக்கன் சேனையை அகோர வீரபத்திரர் அழிக்கும்போது பிரமா சிருட்டித்து விடுவாரென்று அருணாசல புராணம் அறைகின்றது. சிவனே சிருட்டிக் குரியவராயின் சுப்பிரமணியர் பலநாள் சிருட்டி செய்திருத்தலும், சிவன் மீட்டும் அத் தொழிலைப் பிரமாவுக்குக் கொடுப்பித்தலும், பிரமா முதலியவர்கள் சிவனுக்கு விரோத மானவைகளைச் சிருட்டித்தலும் சம்பவிப்பனவோ? இதனால் சைவ புராணங்களின்படியேயும் சிருட்டி முதலியவை சிவனுடைய தொழிலல்ல என்றாகிறது. விஷ்ணு இராக்கதரை அழிக்க ஸ்திரீ ரூபங் கொள்ள, சிவன் அவனை மோகித்துத் துரத்திப் பிடித்துப் புணர, அரிகர புத்திரர் பிறந்தார் என்றும் கந்த புராணம் சொல்லுகிறதே - இவரும் சிவப் பொருளின் சத்தியாரூடியாக ஒரு காலத்தில் ஒர் கிரியையை முடித்தற் பொருட்டுச் சிவம் அதிட்டித்துநின்ற விசேட புண்ணியான் மாதானோ! ஆயினும் காயாதிகள் மெய்யங் கடவுளுக்கு உரியன அல்லவாதலால் சைவக் கொள்கை பகுத்தறிவுக்கு ஒவ்வாததே. (தொடரும்) - புதுவைமுரசு, 12.1.1931 8. சைவக் கொள்கையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததே! சைவர்கள் புராணங்களை விலக்க முடியாது. (முன் தொடர்ச்சி.) பிரமன், விஷ்ணு முதலியவர் விசேஷ ஆன்மாக்களன்றி அவர்கள் கடவுள் அல்லர் என்று சைவர் சொல்ல வருவதும் உண்டு என்றேன். அது பொருத்தமாகாதென்று துவக்கியதை இன்னும் தொடர்கின்றேன்: ஓர் ஆன்மா ஒரேகாலத்தில் இரண்டு உடலில் இருக்கலாமா? அங்ஙனமே விஷ்ணு ஒரேகாலத்தில் பூலோகத்தில் பரசுராமராகவும், தசரதராமராகவும் இருந்தனரென்று ராமாயணம் கூறுகிறது. சிவஞான சித்தியார்முதற் சூத்திரத்து 60-ம் பாட்டு ரையில் அயன் முதலோர் அணுக்களல்லர் என்றும், 2ம் சூத்திரத்து 74ம் பாட்டுரையில் பிரம விஷ்ணுக்களைப் பசு வர்க்கத்தில் உள்ளவர் என்ன லாகாது என்றும், சொல்லியிருப்பதால் விஷ்ணு ஆன்மா அல்லர். பாசம் சடப் பொருளாதலால் பாசமும் அல்லர். ஆதலால் அவரும் பதியென்று வைத்திருப்பதாகவே முடிகிறது. அன்றியும் ராமாயண பாசுராம படலத்தில் விஷ்ணுவும் சிவனும் ஒருவரை ஒருவர் எதிர்த்து வில்லம்பு முதலியவைகொண்டு யுத்தம் செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதனால் இவர்கள் வெவ்வேறானவர்களேயன்றி ஒருவரல்லர். ஆதலால் சைவசமயம் பலபதிகளை யுடையது. இரண்டு கடவுள்கள் இருப்பினும் அவருள் ஒருவருக்குகொருவர் கடவுளாக முடியாதாத லாலும், இவ்விருவரும் வில் அம்பு கொண்டு சண்டை போடுவதால் கடவுளின் தன்மை இல்லாதவராகையாலும் இவ்விருவரும் கடவுள் களாக இருக்க முடியாது ஆதலால் சைவக்கொள்கையும் மற்றவற்றைப் போல் பகுத்தறிவுக்கு ஒவ்வாததே. இவ்விஷயத்திலும் சைவர்கள் சொல்லும் சாதாரண சமாதானம் பின் வருமாறு: சிருஷ்டி, திதி முதலிய சக்திகளின் வேறுபாட்டை யுணர்த்து வதற்காக இவ்வாறு சிருஷ்டியைச் சிருஷ்டி கர்த்தா என்றும், திதியைத், திதி கர்த்தாவென்றும் ரூப காலங்காரமாகப் புராணங்களில் எழுதி வைத்தாலும் அறிவுடையார் அதன் அந்தரார்த்தம் அறிவர்; அறிவில்லார் அறிய மாட்டார். ஆனால் புராணக்கொள்கையைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளக் கூடாது. புராணங்களின் ஆபாசம் மிக்க வெளிப் படையாய் விட்டதை அறிந்தும் சைவசித்தாந்த சாஸ்திரம் முதலியவை சிறிது பூட்டகமாகவே யிருப்பதாய் எண்ணியும் புராணத்தைக் கைவிட்டாவது சாத்திரத்தைக் காத்துக் கொள்ளவோம் என்று சைவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் சைவ சாத்திரங்கட்கும் புராணங்கட்கும் சம்பந்த மில்லையா? இது தான் நமது கேள்வி. பார்ப்போம். புராண மென்பது வேத -உப-அங்கம் நான்குள் ஒன்றாய்ச், சர்க்க (உலகத்தினது தோற்றம்) பிரதிசர்க்க (ஒடுக்கம்) வங்கிச (பாரம்பரியங்கள்) மனுவந்தர, வங்கிசானு சரிதம் என்னும் பஞ்சல க்ஷணங்களையும் வைதிகதாந்த்ரீக கருமத்தைபும் சொல்வ தாதலால் அது வேதவாக்யப் பொருள்களை வலியுறுத்தி விரித்துச் சொல்வதே ஆகும் என்று சைவநூல்களே சொல்லுகின்றன ஆதலால் புராணத்தில் சொல்லப் பட்ட கதைகளெல்லாம் சைவர்களால் உண்மையான வைகளென்றே ஒப்புக்கொள்ளத் தக்கவைகளாம். அல்லாமலும் சைவ சித்தாந்த சாத்திரமாகிய சிவஞான சித்தியாரின் முதற் சூத்திரத்து 48-49ம் பாட்டுரைகளில் சிந்திதனாயினும், அசிந்திதன் என்பதற்கு வேதத்துள் விச்சுவாதிக ளென்பது முதலிய நான்கு சுருதிகளும், அருணாசல புராண முதலிய புராணங்களும் சான்று என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் திருவாவடு துறை ஆதீனத்துச் சிவஞான சுவாமிகள் செய்த திருவேகம்பர் அந்தாதியின் 36ம் பாட்டில் பொருந்தங்கு மாரிக்குறும் பற்றிருவர் புகழ் சிவம் என்றும், இதனுரையில் யான் பரம் யான் பரம் என்று போர் புரிதற்குக் காரணமாகிய தமது அழிவில்லாத பொல்லாங்கு நீங்கிப் பிரம விஷ்ணுக்களாகிய இருவருந்துதிக்கும் பரசிவம் என்றும் சொல்லப் பட்டது. ஆதலால் சைவாசிரியர் முதலியவர் கட்குப் புராணங்களும் பிரமவிஷ்ணு சண்டைகளும் அங்கீகாரந்தான். ஆதலால் ரூபகாலங் காரமாகக் கற்பித்தவை என்று சமயோசிதமாகக் கூறிக் கொள்வது கூடாது. இனி, அன்னமும் பன்றியுமாகப் பிரமவிஷ்ணுக்கள் சிவன் முடிகாண முயன்றதில் இருவருடைய இழிவு தெரிந்தது தவிர ஒருவர் உயர்வும் அதில் விளக்கவில்லை, ஆகையால் சிருஷ்டி, திதிகளின் மகத்துவத்தைக்காட்ட இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறோம்? - புதுவைமுரசு, 19.1.1931 9. முழங்கால் முதல் உள்ளங்கால் வரைக்கும் ஓர் பனையின் உயரம் பனைமரத்திலிருந்தவனுடைய நடுக்கம் (நமது நிருபர்) ஐயாயிரவருடப் பெரியார் இன்னும் புதுவைக் காட்டு மேட்டிலேயே படுத்திருக்கிறார். நான் அவரிடம் நேற்றுச் சென்றேன். அவர் அப்போது கவிழ்ந்து படுத்தபடி தமது வலது காலை (முழங்கால் முதல் உள்ளங்கால் வரைக்கும்) தூக்குவதும் பிறகு தரையிற் கிடத்துவது மாயிருந்தார். இது அவர் நினைத்துச் செய்தது அல்ல. நினையாச் செய்கை. தூங்கும்போது அவருடைய முழங்காலிலிருந்து உள்ளங்கால் வரைக்கும்-அடுத்திருந்த பனை மரத்தின் உயரத்துக்குச் சரியாக இருந்தது. இதை எட்டியிருந்து கவனித்தேன். சிறிதுநேரத்திற் கெல்லாம் சாற்றுக்காக அந்தப் பனைமரத்தில் ஏறுவதற்கு ஒருவன் வந்தான். ஏறிவிட்டான். ஐயாயிர வருடப்பெரியார் பிறகு காலை யுயர்த்தினார் வேடிக்கை! வேடிக்கை மாத்திரமன்று பரிதாபம்! மரத்தின் மேலிருந்த மரமேறி நடுங்கினான் மலைப்பாம்பும் மற்றொருதரம் அவனைத் தாவிற்று. மரத்திலிருந்து அவன் தவறினான். மலைப் பாம்பின் படத்தில்தான் வீழ்ந்தான். படம் பூமியில் தாழ்ந்தது. மரமேறி கீழே இறக்கப்பட்டான். அது மலைப்பாம்பன்று என்று உணர்ந்தான். வேறு இன்ன தென்றும் அவனுக்கு அறியக்கூடவில்லை. நான் அவனை நெருங்கி - நீ உன் வீடுபோ என்றேன் அவன் போய்விட்டான். இச்செயலைப்பற்றி நான் ஐயாயிரவருடம் பெரியாரிடம் கூறினேன் அவர் அதற்கு நான் என்னை அறியாது செய்யும் செய்கையிலும் பிறருக்குத் தீமை ஏற்படவில்லை மேலும் என் காலண்டை அந்தப் பனைமரம் இருந்ததை அறியேன் நாளைக்கு அவன் சாறு இறக்க வரும்போது நான் சிறிது தூரம் நகர்ந்துவிட வேண்டும் அஃதிருக்கட்டும் விஷயத்தை ஆரம்பிக்கிறேன். அரசர் செயலையே சிவத்திற்கு ஏற்றினார்கள். அரசர் தாமே கடவுள் என்றாகிவிட்டதைத் தடுக்க அந்தணர் முயன்று தறிகளே கடவுள் என்றும், அவைகளையே வணங்க வேண்டும் என்றும், நாளடைவில் ஏற்பாடு செய்துவந்தனர். இதனோடு நிற்க வில்லை அரசர் ஜனங்கட்கு நன்மை செய்கின்றனர் ஜனங்களைக் கள்ளர், பகைவர் முதலியவர்களிடமிருந்தும் காப்பாற்றுகின்றனர். அது போல இந்தத் தறிகளாகிய கடவுள்கள் நன்மை செய்யுமா காப்பாற்றுமா என ஜனங்கள் கேட்கக் கூடுமென்று நினைத்த அந்தணர்கள் அந்தத் தறிக் கடவுள் களும் காப்பாற்றும், நலம்செய்யும் என்றும், ஆதலால் அரசர்க்குப் பகுதி கட்டுவது போல் நாமும் கடவுள்களுக்கு மிருகபலி-நரபலி இட்டுவரவேண்டும் என்றும் கட்டிவிட்டார்கள். நாளடவில் இதை ஜனங்கள் நம்பியதோடு அரசர்களும் நம்பினார்கள். பலியும் இட்டுவந்தனர். அரசன் வீடுபோல் சிவத்துக்கும் கட்டினார்கள். இவ்வகையாகவே பிணமேட்டில் தறிகளாகிய சிவம் அதாவது கடவுள்கட்கு மர நிழலே இடமாய் இருப்பது சரியல்லவென்று சொல்லிக் கட்டடமும் கட்டத் தலைப் பட்டார்கள். அரசன் மாளிகைக்கு அக்காலத்தில் கோயில் என்று பெயர். அதன் அர்த்தத்தைக் கவனிக்க கோ என்பது அரசனுக்குப் பெயர். இல் என்பது வீடு. அந்த அரசன் வீடுபோலவே மரத்தையும் தறியையும் பலி பீடத்தையும் உள்ளிட்டுக் கட்டிய கட்டிடத்துக்கும் கோயில் என்றே பெயர் வைத்தார்கள். பிறகு நாளடவில் நரபலியும் மிருக பலியும் நிறுத்தப்பட்டன. தறிகளை அதாவது சிவங்களைத் தண்ணீர்விட்டு அலம்புவதும் பூச்சூடுவதுமே அக்கடவுள்களுக்கு உவப்பு என நின்றது. இச்சமயத்தில் தமிழ் நல்ல நிலையை அடைந்திருந்து தங்கள் நியதிகள், கட்டுப்பாடுகள், அரச லக்ஷணங்கள், போர் - விவாகமுறை முதலியவற்றைப்பற்றி நாங்கள் ஏற்பட்டன, இனிய கவிகள் உண்டாயின. இங்குச் சொல்லிய பகுதிபோக மீதியுள்ள-இன்றைய சைவத்தின் நிலைக்கு தென்னாட்டில் கலந்து கொண்ட ஆரியர்களே காரணம் இப்போது நான் நீ கேட்டபடி சைவக்கொள்கையை மறுக்கத் தொடங்குகிறேன். (தொடரும்) - புதுவைமுரசு, 22.12.1930 10. காட்டு மேட்டில் படுக்கை ஒரு தீர்ப்பு (நமது நிருபர்) எல்லாச் சமயத்தையும் மறுப்பது சாத்தியமே. அது போல் சைவத்தையும் பகுத்தறிவுக்கெதிர் நிறுத்தினால் அதுவும் தும்ஸமாகி விடுமென்று ஐயாயிரவருடப்பெரியார் சொன்னதுண்டு. சைவத்தை மறுத்துக்காட்டுங்கள் என்று நான் கேட்டதையும் முன்னொருதரம் வாசகர்கட்கு அறிவித்திருக்கிறேன். அதைமறுக்கப் புகுந்த ஐயாயிர வருடத்தார், சைவச்சின்னமாகிய கோயில் சிவலிங்கம், பூசை, இவைகளைப் பற்றி நாளடைவில் உருவாகிய அபிப்பிராயங்களையும் அவைகள் தோன்றிய முறையையும் கூறி முடித்தார்கள், சைவ மறுப்புக்கு இக் கூற்றுக்கள் தேவையா? என்று தெரிய வேண்டும் ஒன்று. இரண்டாவது ஐயாயிர வருடத்தாரைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டுக்கடிதம் எழுதியுள்ளார்கள். அக்கடிதங்களை அவரிடம் காட்டி அக் கேள்விகட்கெல்லாம் பதில் வாங்கவேண்டும். மூன்றவாது சைவ மறுப்பு ஐயாயிரவருடப் பெரியாரிடம் எனக்கு எவ்வளவு வேலை யிருக்கிறது பாருங்கள்! நேற்று முன் சென்றேன். நேற்றுச் சென்றேன். என் வேலை முடியாதபடி இடையிடையே ஆச்சரிய சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் எதைத் தள் ளுவது? எதை வாசகர்களின் எதைத் தள்ளுவது? எதை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதென்றே தோன்றவில்லை நேற்று நடந்த ஆச்சர்ய சம்பவத்தை நான் செல்லத் தவறக்கூடாதென்றே நினைக்கிறேன். அதைச் சொல்லிவிட்டு இன்றைக்கு அவரிடம் நான் குறித்துக் கொண்டு வந்துள்ள சைவ மறுப்பை ஆரம்பிக்கிறேன். நேற்று ஐயாயிர வருடப் பெரியார் மல்லாந்து படுத்திருந்தார். அவர் தம் இரு கைகளையும் நீளப்பரப்பி இருந்தார் இருகால்களையும் சேர்த்து நீட்டியும் இருகைகளையும் நீளப்பரப்பியும் இருந்ததை ஒருவர் ஆகாயத்திலிருந்து பார்த்தால் ஒரு பிரமாண்டமான சிலுவை தரையிற் கிடப்பதாய் எண்ணுவார்கள். அவர் படுத்த கோலத்தை நான் விளக்கி விட்டேன். வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்க. காட்டுமேட்டில் ஒரு பகுதி ஆங்கில அரசினர்க்குச் சொந்தம். மற்றொரு பகுதி பிரஞ்சு அரசினர்க்குச் சொந்தம். பிரஞ்சு அரசாட்சி யிலுள்ள புதுவை நகரில் ஒருவீட்டில் இரண்டு ஏழைகள் 100 ரூபாய் பெறும்படியான நகைகளைப் பகலில் திருடிவிட்டார்கள். திருடி யவர்கள் இரண்டு வீதிகள் தாண்டுமுன் வீட்டுக்காரச் செட்டி அறிந்து தானும், தன் நண்பனுமாகத் துரத்திச் சென்றார்கள். திருடர் காட்டு மேட்டில் ஆங்கில அரசினர் எல்லையில் போய் நின்று விட்டார்கள். பிடிக்கச் சென்ற இருவரும் காட்டு மேட்டில் பிரஞ்சு அரசினர் எல்லையில் தங்கித், திருடர்களை உறுத்திப் பார்த்தனர். அப்போது நல்ல வெய்யில். தரை சூடேறியிருந்தது. திருடர் இருவரும் அங்குக் கிடந்த ஓர் நீண்ட பனைமரத் துண்டில் நின்றார்கள். மற்ற இருவரும் பிரஞ்சு எல்லையில் மற்றொரு நீண்ட பனைமரத் துண்டில் ஏறி நின்றார்கள். இரு கட்சியும் பரஸ்பரம் கோபப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது தவிர நெருங்க வழியில்லை. திருடர்கள் - உங்கள் வீட்டில் நகைகளைத் திருடினோம் வாஸ்தவம். வல்லமையிருந்தால் வந்து எம்மைப் பிடித்துக் கொள்ளுங்கள் முடியாதே? நாங்கள் போகின்றோம் என்று அட்டகாசம் பேசி நடக்க ஆரம்பித்தார்கள். இத்தனை நேரம் இவ்விருவரையும் சுமந்த பனைமரம் இவ்விருவர்களை யும் கீழே தள்ளி மேலே புரண்டது. இதுமாத்திரமா? பனைமரம் திருடர்களைப் பிரஞ்சு எல்லையில் தள்ளிக்கொண்டு வந்தது. இதுகண்ட மற்ற இருவரும் விட்டோமா என்று சொல்லித் திருடர்களை நோக்கி, நடக்க ஆரம்பித்தார்கள். பனைமரம் அவர்களை நடக்கவிடவில்லை. இரு கட்சிக்கும் பனைமரத்தின் செய்கை 100 பிசாசுகளை ஞாபகப்படுத்திற்று. ஒரே பயம்! அந்த நால்வர் போட்ட சத்தத்தால் காட்டுமேடு வண்ணாரத் தெருவாயிற்று. இரண்டு பனை மரங்களும் ஒவ்வொன்று இருவர் வீதம் உயரத் தூக்கின. பிறகு தாழ்ந்தன. நால்வரும் ஓர் பெரிய மேட்டின்மேல் நிறுத்தப் பட்டனர். அம் மேட்டையடுத்து ஓர் பெரியகற்பாறை! நால்வரும் குதித்தோட எத்தனிக்கும் சமயம்! ÚY§fŸ!-ïJ கற்பாறை சொன்ன வார்த்தை. நால்வரும் அக் கற்பாறையைப் பார்த்தார்கள். ஓ! அன்றைக்கு மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் தோன்றிய பெரியார்! நாம் அவர் தேகத்தின் மேல் நிற்கிறோம்! பனைமரம் அவர் கைகள்! இவை யனைத்தும் அவர்கள் உள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக க்ஷணத்தில் தோன்றின. பிறகு நமஸ்காரங்கள் ஆசீர்வாதங்கள் வாதி பிரதிவாதிகள் வாக்குமூலங்கள் நடந்தன ஐயாயிர வருடப் பெரியார் தீர்ப்புக் கூறுகையில் சொன்னதாவது: ஏழையின் ஏழ்மைக்குச் செல்வனின் செல்வம் காரணம். செல்வம் என்பது என்ன? ஒருவனிடத்தில் வேண்டியதற்கு மேல் அளவு கடந்து சேர்ந்த பொருள். அதிக பொருளை வைத்திருக்கும் மனிதர், பலவித ரூபத்தில் திருடர்கள் உண்டாவதற்குக் காரணர் ஆகிறார்கள். அந்தத் திருடர்கள் பலவகையில் செல்வன் பொருளைக் கிரஹிக்கிறார்கள். சங்கராச்சாரியை 108 ரூபாய்ப் புஷ்பத்தால் அர்ச்சனை செய்து மகிழும் ஒருவன் 100 ரூபாய் திருடியவனைக் கோபிப்பது எவ்வாறு பொருந்தும் இந்த வழக்கின் சாரம் என்னவெனில் இச் சமூக நிதியில் இரண்டு பசிக் காரர்கள் 100 ரூபாய் எடுத்துக் கொண்டார்கள். இனி மேல் அவர்கள் 100 ரூபாய்க்கொண்டு ஏதோ தொழில் செய்து விருத்தியடைய வேண்டும். என்று நான் தீர்ப்புச் செய்கிறேன். 100 ரூபாய் பறி கொடுத்த தாய்ச் சொல்லுபவர் இன்னும் தம்மிடமுள்ள அதிக பொருளை ஏழைகட்குக் கொடுப்பதன் மூலம் திருடர்கள் தம்மிடம் அண்டாத விதம் செய்து கொள்ள யோசனை சொல்லுகிறேன். என்று பெரியார் தீர்ப்புச் சொல்லி முடித்தார். நானும் (நிரூபர்) அங்குப் போய்ச் சேர்ந்தேன். நடந்ததெல்லாம் தெரிந்துகொண்டேன். வாதி பிரதிவாதிகள் போய்விட்டார்கள். வாதி பிரதிவாதிகள் பெரியாரிடம் அகப்பட்ட தெப்படி? இதைப் பெரியாரைக் கேட்டேன். பெரியார் - வாதியும், பிரதி வாதியும் என் உள்ளங்கைளில் என்றார். விளக்கியும் சொன்னார். நான்-இனிச் சைவ மறுப்பை ஆரம்பியுங்கள் இதை ஆரம்பித்து முடிப்பதானது சைவர் - அசைவர் ஆகிய வாதி பிரதிவாதிகளுக்குத் தீர்ப்புச் சொன்னதாகவே முடியும் நீங்கள் ஜாக்ரதையாய்ப் பேச வேண்டும். ஐயாயிரம் - வாதி பிரதிவாதிகள் என் உள்ளங்கைகளில்தான்! இன்னொருதரம் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார். 11. மற்றவற்றைப்போல் சைவக் கொள்கையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததே ஐயாயிரவருடத்தார் கூறியதாவது: சிவம் என்ற பதம் - அச்சிவம் பெற்ற உருவம்- அஃது அடைந்த கோயில் இவைகளைப்பற்றி நான் சொல்லிவந்தவைகளால் சைவக் கொள்கைக்கு மூலவேர் மூடத்தனமும், பொய்யுமே ஆகும் என்பது விளங்கியிருக்கும். இந்த அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப் பட்டிருக்கும் பிற சைவக் கொள்கைகளும் பகுத்தறிவுக்கு ஒத்துவரா என்பதைக் காட்ட முயல்கின்றேன். சிவம் (I) என்னும் பதியும், அச்சிவப் பொருளின் ஆணைக்குள் அடங்கித், தம்மையும், பதியையும், உணரவல்லனவாகிய தொகைப் படா அநந்த ஆன்மாக்களும் (II) அந்த ஆன்ம ஞானத்தைச் சிதைத்து நின்றதாகிய மலமும், (III) தமக்கோர் நிமித்த காரணமில்லாமல் நித்தியப் பொருள்களாய் அநாதி காலத்திலேயே உள்ளன என்பது சைவக் கொள்கை. சிவம் - ஆன்மாக்கள் - மலம் மூன்றும் அநாதி காலத்தி லேயே உள்ளனவாம். மலம் என்பதென்ன? அது இரு வகைப் படும். அவை ஆணவ மலம், கன்ம மலம் என்பன. ஆன்மாவில் ஆணவ மலத்தால் யான் - எனது என்னும் ஆணவமும், கன்ம மலத்தால் பாவ-புண்ணியமும் வரும். ஆணவ மலம் ஆன் மாவிற்குக் கர்மங்கள் இயற்றுவதில் ஒர் விருப்பம் உண்டாக்கக்-கருணா மூர்த்தி யாகிய சிவன் சரீரத்தைக் கொடுத்து அநுபவிக்கச் செய்வார். இதனால் அறியவேண்டியது என்ன? ஆன்மாக்களின் விருப்பம் முன்னுண்டா னது என்பதும், அதை அநுபவிப்பதற்கென்றே தநுகரண புவன போகங்களெல்லாம் பின்னுண்டாயின என்பதுமாம். விரும்பப்படு பொருள் உண்டாகாத முன்பே விருப்பம் உண்டாவ தெப்படி? அவ் விருப்பத்தைச்செய்கின்ற மலம் இருந்ததென்ப தெப்படி? அம் மலத்தால் ஞானம் சிதைந்து அஞ்ஞானம் கொண்டிருந்த ஆன்மா இருந்ததென்பது எப்படி? ஆகையால் ஆணவ மலம் ஆன்மாவுக்குக் கன்மத்தில் விருப்பம் உண்டாக்கினதுமில்லை. ஆன்மா விரும்பினது மில்லை. ஆதலால் இப்படிப்பட்ட ஆன்மாவும், மலமும் அநாதியில் இருந்ததுமில்லை. மேலும் இச் சைவக் கொள்கையை நானாசீவ வாதக் கட்டளை முதலியவைகளும் எதிர்க்கின்றன. உபநிஷத்துச் செய்யுள் ஒன்று இருக்கிறது. பேசரிய பரத்தினில் ஆரோபமதா மூலப்பிரகிருதி தோன்றும். இதிற் சாத்திகமா மாயை, ஈசனிதிற் றோன்றும். இராசதம், அவித்தை, ஆவரணம், விக்ஷேபமதாம். சூசக விக்ஷேபமதில் சூக்கும பூதமதாம் சூக்க உடல் இரு குணத்தால் தோன்றிடும். தாமதத்தில் மாசில் பஞ்சீகரணமாய் ஐம்பூதவடிவாய் அதில் தூல சடம் தோன்றும், அனைத்தும் இவ்வாறு ஒடுங்கும். இச்செய்யுள் மாயை ஆன்மாவாதி அனைத்தும் பிரமத்தி னின்று தோன்றி அப் பிரமத்திலேதானே அடங்கும் என்கின்றது. இனி - சைவம் சொல்லுகிறது. சகல புவனங்களும் மாயை மலத்தினின்று தோன்றின. இதைக் கவனிப்போம். புவனங்கள் படைக்கப்படுமுன்பு அந்த மாயா பாசமானது எந்த இடத்தில் இருந்தது? மலமானது ஜடந்தானே? அது இருப்பதற்கு ஓரிடம் வேண்டுமே. மேலும் அநாதியாயுள்ளது அழியுந்தன்மையை அடையாது. பாசம் அநாதியாயுள்ளதென்பது சைவக் கொள்கை. மலம் அழிகின்றதே! பாசம் அழிகின்றதே! இது போகட்டும். ஆணவ கன்ம மலங்களால் அநாதியிலேயே பற்றப்பட்டு அஞ்ஞானத் தோடும், விருப்பத்தோடும் ஆன்மாக்கள் இருப்பதும் போதாதென்று சிவம் தாமேயும் மாயை மலத்தையும் (தநுகரண புவன போகங்களாக) அவ் வான்மாக்களுக்குத் தந்து பந்தித்துவிட்டுத் தாமும் திரோதாயிமலமாகிய சிவசத்தியால் மும்மலங்களையும் தொழிற்படுத்தி ஆன்மாக்களைப் போக்கியப் பொருளில் அமிழ்த்தித் திரரோபவனாய் நின்று, அதனால் சுவேச்சையின்றி மலத்தினால் நடத்தப்பட்டு, அறியாமல் பாவஞ் செய்யும் ஆன்மாக்களை அவை செய்யும் பாவங்களுக்காகச் சிவமே அவைகளை நரகத்தில் விட்டு வாதிக்கிறார். இதனால் சிவன் நீதி யில்லாதவராகிறார். மேலும் தாம் செய்யப் புகுந்ததொழிலால் தாம் நீதி யற்றவராவோம் என்று தாமே அறியா திருந்தமையால் சிவன் ஞான மில்லாதவராயும் இருக்கிறார். இவை முதலிய குற்றங்கள் தமக்கு வராமல் மலத்தை நீக்கும் சக்தி இன்னும் தமக்கு இல்லாதிருத்தலால் சிவன் வல்லமை இல்லா தவராயுமிருக்கிறார். இதிலேயே இன்னொன்று; நான் கூறியதையே இங்குத் திருப்பிக் கூறுவதாக நினைக்க வேண்டாம். சிவன் - ஆன்மா - ஆண்வம் முதலிய மலமும் அநாதியாயுள்ளவை. அந்த அநாதியிலேயே விருப்பத்தை உண்டாக்கிற்று. ஆன்மா அவ்விருப்பத்தை நிறை வேற்றக் கூடாமல் வருந்திற்று அதுகண்டு சிவன் இரக்கங் கொண்டு மாயை மலத்தால் உலகத்தையும், உடலையும் உண்டு பண்ணி அவ் வான்மாவுக்கு அந்த உடலைத் தந்து உலகத்தில் விட்டார் என்பதில், உலக சிருஷ்டியும் அதற்குக் காரணமாகிய சிவ இரக்கமும், அதன் காரணமாகிய ஆணவ மலத்தின் செய்கையும் காரண காரியங்களா யிருப்பதால் இவையெல்லாம் ஏக காலத்தில் நிகழ்வனவா? பல காலத்தில்தானே நிகழ்ந்தன? ஆதலால் அநாதி காலத்தில் ஆணவ மலம் ஆன்மாவுக்கு விருப்பத்தைத் தந்து ஆன்மா அவ்விருப்பத்தால் வருந்தியிருந்த காலம் வரைக்கும் சிவன் ஒரு நினைவும் இல்லாமலா இருந்தார்? உலகம் படைக்கப்பட்ட காலம்வரைக்கும் சிவன் ஒரு கிருத்தியமும் செய்யவில்லையா? அப்படியானால் சைவக் கொள்கையின்படியே சிவன் விகார லக்ஷணம் உடையவர் அல்லவா? அன்றியும் சிவன் சிருஷ்டி தொடங்கும் காலத்தில் பிரமன் முதலிய பஞ்ச கர்த்தாக்கள் இல்லையல்லவா? அவர் முதலில் தனியா யிருந்து சிருஷ்டியாதி கிருத்யம் செய்து - பின்புதான் அதற்குப் பஞ்ச கர்த்தாக்களில் அதிட்டித்துப் பஞ்ச கிருத்யங்கள் புரிந்தாரோ? அதன் பிறகு சுப்பிரமணியர் பிரமாவுக்குப் பதிலாய்ச் சிருட்டிக் கிருத்யம் செய்திருந்த காலத்தில் சிவன் பிரமாவை விட்டுவிட்டுச் சுப்பிர மணியரை அதிட்டித்தது என்ன? ஏதாவது - எங்காவது - ஒத்து வருகிறதா? முதலில் சிவன் தாமே சிருஷ்டி செய்தார் - பிறகு பிரமாவுக்குள் இருந்து சிருஷ்டி புரிகிறார். அதன் பிறகு சுப்பிர மணியருக்குள் ஒடிப்புகுந்து கொள்ளுகிறார். நாம் காணாத பொருள்! நாம் அறியாத ஒர் விஷயம்! அதை நம்மவர் கடவுள் என்று பெயரிட்டழைப்பதேசரியோ பிழையோ! அதிலும் அந்த வஸ்துவுக்கு நாங்கள் சொல்லும் லக்ஷணமே லக்ஷணம் ஆகும் என்றும் அதிலும் அந்த வஸ்துவே வந்து எம் காதில் சொல்லிவிட்டு எதிரில் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போயிற்று என்றும் சொல்கின்ற ஒவ்வொரு மதங்களின் கட்டுக்களும் பகுத்தறிவுக் கொவ்வாதனவே. சைவக் கொள்கையும் தான். - புதுவைமுரசு, 5.1.1931 1. பாலனைப் பழித்தல் பூவோடு சேர்ந்துள்ள மணத்தைப் பிரிக்க முடியாது என்று நினைக்காதீர்கள். வண்டு இரண்டையும் தனித் தனியே பிரித்து விடுகிறது. எப்படி? வண்டு தேனைப் பூவிலிருந்து எடுத்து விடுகிறது. அதனால் அப்பூவுக்கு மணமிருந்தும் பயனில்லை. கீர்த்தி இழநது போகிறது; கொள்வாரில்லாமல் வாட்டமடைகிறது; மணம் விலகுகிறது. சொல்லும் அதன் பொருளும் பிரிக்க முடியாததென்று கருதி விடாதீர்கள். புலவர்கள் சொல்லை எடுத்துக்காட்டி அதன் பொருளைப் பிட்டுப்பிட்டு வைத்து விடுகிறார்கள். உயிரையும், உடம்பையும் பிரிக்கத்தான் எமனிருப்பது உங்கட்குத் தெரியும். கரும்பையும் அதன் சுவையாகிய சாற்றையும் பிரிப்பது எது? ஆலை. எள்ளில் எண்ணெய் கலந்திருக்கிறது. அந்த ஒற்றுமையைப் பிரித்து எண்ணெய் வேறு பிண்ணாக்கு வேறாகப் பிரிப்பது செக்கு. இன்னும் பாலோடு சேர்ந்த நீரையோ அன்னம் பிரித்து விடுகிறது. இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு மங்கை தனது காதலனோடு இன்பத்தை இடையறாது அனுபவித்து வந்தாள். ஆனால் அவள் கர்ப்பவதியாகி, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள். அந்தக் குழந்தை அவளுக்கு இழைத்த தீமையை என்னவென்று சொல்வது! அவள் சொல்லுகிறாள் அந்தக் குழந்தையைப் பார்த்து: அருமைப் பாலகனே! நானும், உன் தந்தையுமாகிய - காதலர் இருவரும் பாலும், நீருமாய் இருந்தோம். பூவும் மணமுமாயிருந்தோம். சொல்லும் பொருளுமாயிருந்தோம். கரும்பும் சுவையுடைய சாறுமாய் இருந்தோம். எள்ளும் எண்ணெயுமாயிருந்தோம். இவ்வாறு ஒருமனப் பட்டு இருந்து வந்த எமக்கு நீ அன்னமும், சுரும்பும் (வண்டும்), புலவரும், யமனும், ஆலையும், செக்குமாய்த் தோன்றிவிட்டாய் என்று கூறுகிறாள். அச்செய்யுள், அரும்பா லகாமுனம் பூமணம் சொற்பொருள் ஆகம்உயிர் கரும்பாஞ் சுவைஎள்ளும் எண்ணெயும்போல ஒத்த காதலரைப் பெரும்பாலில் நல்லன்னம் கங்காசலத்தைப் பிரிப்பது போல சுரும்பாப்புலவர் எமன்ஆலை செக்கெனத் தோன்றினையே. இதனால் அந்தத் தாயின் மானேபாவம் என்ன என்று எண்ணுகிறீர்கள்? இளங்குழந்தையை உடைய அன்னை காதல் இன்பத்தைத் தற்காலிகமாக இழந்து போயிருந்தாலும் அதைவிட அப்பனாகப் புத்திரப்பேறு அவளுக்கு அளவற்ற இன்பத்தைத் தருகிறது. இந்த மனோபாவத்தை விளக்க வந்ததுதான் இந்தப் பாட்டு. இவ்வித இனிய - பொருட்செறிவுள்ள கவிதை தருவதில் பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் ஓர் உயர்நிலையை அடைந்து விடுகிறார். - தமிழரசு, 15.2.1939 2. தமிழ்ப்பெண் மனப்பான்மை பண்டைத் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ்ப் பெண்கள் எப்படிப்பட்ட உயர்ந்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தார்கள்? அக்காலத்தில் தமிழ் ஆடவர்கள் நிலை என்ன? அவர்கள் ஒழுக்கம் எப்படிப்பட்டது? ஆகிய பல விஷயங்களை அடியில் வரும் ஓர் பழந்தமிழ் வெண்பா விளக்குகின்றது. தமிழ் மங்கை தன் தோழியிடம் கூறுகிறாள். வெண்பா ஐயைந் திருபத்தைந் தோரிரவில் தான்வரினும் வெய்ய கணையைந்தும் வேள்விடினும் - தையல் நல்லாள் கையைந் தறியாத காளைகள்தோள் சேருவளோ மெய்யைந் தறப்பெற்ற மின். கேளடி தோழி. அழகும், விவேகமும் உடைய இவள் (நான்) இருபத்தைந்து பொருள்களையும் ஒரே ராத்திரியில் எனக்குக் கொடுப்பவனாக இருந்தாலும் சரி, அப்படி அவன் கொடுக்க வரும் சமயத்தில், மன்மதன் தனது ஐந்து கணையையும் என் மேல் பாய்ச்சி எனக்குக் காதல் நோயைப் பண்ணி விட்டாலும் சரி, கைத்தொழில் ஐந்து தெரியாதவராக இருப்பாரானால் அப்படிப்பட்ட காளைகளின் தோளை அங்கீகரிப்பாளா? (அங்கீகரிப்பனோ) ஒரு போதுமில்லை. இவள் (நான்) இன்னும் எப்படிப்பட்டவள் தெரியுமா? (மெய் ஐந்து) உடற்குற்றம் ஐந்தும் நீங்கப் பெற்ற மின்னல் போன்ற இடையையுடையவள். ஐயைந்து இருபத்தைந்து பொருள் என்றால் என்ன? மலைபடு திரவியம்: மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம். காடுபடு திரவியம்: இறால் (தேன்கூடு மெழுகு), தேன், அரக்கு, மயிற்பீலி (மயிலிறகு), நாவி கதூரி. நாடுபடு திரவியம்: செந்நெல், சிறுபயிறு (நவதானியம்), கரும்பு, வாழை, செவ்விளநீர். நகர்படு திரவியம்: அரசன், பித்தன், மந்தி, யானை, கண்ணாடி கடல்படுதிரவியம்: உப்பு, முத்து, பவளம், சங்கு, ஒக்கோவை (அம்பர்). உடற்குற்றம் ஐந்து: கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன் இடை, நட்டுவிழுதல். கைத்தொழில் ஐந்து: எண்ணல் (கணிதப்பயிற்சி), எழுதல் (எழுத்து வன்மை), இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ் வாசித்தல். மன்மதன் கணை ஐந்து: தாமரைப்பூ, மாம்பூ, அசோகப் பூ, முல்லைப் பூ, கருநெய்கற்பூ (நீலோற்பலம்). அந்தக் காலத்தில் ஆடவன் கல்வித் தேர்ச்சியும், வீணை வாசித்தலாகிய கலைத் தேர்ச்சியும், திருத்தொண்டும் உடையவனாக இருத்தல் வேண்டும் என்று தெரிதலால் அந்நாள் தமிழ்நாட்டின் பெருநிலையும் நமக்கு விளக்குகிறது. இந்த வெண்பாவை அதன் பொருளோடு வரப்படுத்தி வையுங்கள். தமிழரசு, 15.2.1939 3. குழந்தை இன்பம் குழந்தை தொட்டிலில் அழுவது கேட்டாள் இளந்தாயான முருகி. சமையலறையில் வேலைக்காரியிடம் வேலை வாங்கிக் கொண்டிருந் தவள், தொட்டிலை நோக்கி ஓடிவந்து, குழந்தையைத் தூக்கி உச்சி முகர்ந்து மார்போடணைத்துப் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் விழியில், மேசைமேல் ஒரு கடிதம் தெரிகிறது. அக்கடிதம் காற்றால் அசைக்கப்பட்டு, முருகியின் கைக்கெட்டும் தூரத்தில் வந்து விழுகிறது. அந்தக் கடிதம் பிரித்த கடிதம். அது தன் மணவாளனுக்குக் குமுதம் என்ற அயலாளால் எழுதப்பட்ட கடிதம். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது: என் அன்பே! நீங்கள் வரும் வழியில் என் விழி வைத்திருப்பேன் ஆலமரத்தடியில் நீர்த்துறையில் என்னைச் சரியாய் மாலை 7 மணிக்கு வந்து சந்திக்க வேண்டுகிறேன். வருகையில் பச்சைப் போர்வையைப் போர்த்திக் கொண்டு வருவது நலம். நீங்கள் வராவிடில் என்ன நடக்கும்? அன்று எனக்குத் தந்த இன்பம் தெவிட்டாதது. மறக்க முடியாதது. இன்று உங்களை நான் அடையாவிடில் சகிக்காத நெஞ்சம். என்னை நீங்கள் மறந்தீர்கள் என்று நான் நினைத்துவிட்டால் சாக்காடு நிச்சயம். -குமுதம் இந்தக் கடிதத்தின் படிதான் அவர் சென்றார். ஆம்! கடிதம் வந்தது. எனக்குத் தெரியாமல் இங்கு வந்து வாசித்தார். அவள் சொன்ன படி பச்சைப்போர்வையை வெடுக்கென்று எடுத்துப் போர்த்திக் கொண்டார், மளமள வென்று சீப்பால் தலைமயிரைச் சீவித் தள்ளிக் கொண்டு போய்விட்டார். போகும் விசையில் கடிதத்தை அவர் அப்படியே போட்டுவிட்டார். அதுதான் சங்கதி என்று தனக்குள் எண்ணினாள் முருகி. அச்சமயம் பால்குடித்துத் தலைநிமிர்ந்த குழந்தை, நீலவிழிகாட்டி, பூவாய் திறந்து தாய்முகம் நோக்கிச் சிரிக்கிறது. தாயின் சிந்தனையைத் தன் பக்கம் இழுக்க முயன்றது. தாய் தன் அன்பான குழந்தையை நோக்கிச் சொல்லுகின்றாள்: குழந்தாய், தாமரையின் அரும்பு போன்ற என் மார்பை நீ பால் மயமாக்கிவிட்டாய். உன் அப்பன் நெஞ்சையோவெனில் என் விஷயத்தில் இரும்பாக்கிவிட்டாய். அவர் இப்போது காதலிக்கும் ஏந்திழையை அவருக்குக் கரும்பாக்கிவிட்டாய். என்னை அவருக்கு வேப்பிலையாக்கி விட்டாய். இவ்விதம் செய்தாயே என்று உறிப் பிள்ளையைத் தூக்கித் தரையில் மோத எத்தனிக்கையில் பிள்ளையின் அழகு முகம் அவள் நெஞ்சத்தில் தாயன்பை மின்ன வைத்தது. பெரும்பாக்கியமல்லவோ நீ மகனே என்று பழையபடி பிள்ளையைத் தழுவி முத்தமிட்டு முகத்தோடு முகம் சேர்த்தாள். இக்கருத்தமைந்த கவிதையைத் தாய்மார் வரப்படுத்தி வைக்கவே கீழே தருகிறேன். அரும்பாக்கிய கொங்கை பாலாக்கி யுமுகங்கள் அப்பன் நெஞ்சை இரும்பாக்கி என்நெஞ்சைப் பித்தளை யாக்கி அவ்வேந்திழையைக் கரும்பாக்கி என்னையும் வேம்பாக்கி இவ்வணம் கண்டனையே! பெரும்பாக் கியமல்லவோ மகனே உனைப் பெற்றதுவே! இது பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் நறுங் கவிதைகளில் ஒன்று. - சினிமா உலகம், சென்னை 1938 4. சோற்றுக்கடை மொட்டைச்சி மீது கவியாண்டான் பாடியது. கவியாண்டான் ஒரு கவிஞர். ஓர் அறவிடுதியில் மொட்டைப் பார்ப்பனத்தியின் சோற்றுக்கடையில் உண்டனர். நன்றாகவா இருக்கும்? வயிறெரிந்து பாடிய பாட்டு: வாயெரியக் கையெரிய, வயிறெரியச் சட்டிவைத்து வறுத்துக் கொட்டிக் காயெரியக் கடினமுடன் அரைவயிற்றுக் கன்னமிட்ட கடினக் காரி. தாயெரிய மகனெரியச் சேடியெனும் மொட்டைமுண்டை தலைமேற் பற்றித் தீயெரியக் கண்டக்கால் எனதுடைய வயிற்றெரிச்சல் தீருந் தானே. - பாரதிதாசன் குயில், 29.7.1958 5. கம்பன் செய்த பிழை கம்பன் நாராயணனை நராயணன் என்று பிழை செய்ததைக் குறித்துக் காளமேகம் சொன்ன கிண்டற் பாட்டு நாரா யணனை நராயணன்என் றேகம்பன் ஓராமற் சொன்ன உறுதியால் - நேராக வாரென்றால் வர்என்பேன் வாள்என்றால் வள் என்பேன் நாரென்றால் நர்என்பேன் நான். வார் என்பதற்கு வர் என்றால் எவ்வளவு பெரிய பிழையோ அவ்வளவு பெரிய பிழை நாராயணனை நராயணன் என்று கம்பன் சொன்னது என்பது குறிப்பு. - குயில், 29.7.1958 6. முருகனுக்கும் திருநாமமா? அருணாசலக் கவிராயர் வடவேங்கடத்துக்குச் சென்றபோது சொன்னது: வடவேங் கடமலையில் வாழ்முருகா நிற்கும் திடமோங்கும் நின்சீர் தெரிந்து - மடமோங்க நாமத்தைச் சாற்றினார் நம்மையு என் செய்வரோ மாமுற்றிங் கார்இருப்பார் காண். - குயில், 29.7.1958 7. பேறு பதினாறு பதினாறு பேறும் பெற்றுப் பெருவாழ்வு பெறுக என்று வாழ்த்துவது உண்டு. இதில் பதினாறும் பெற்று என்றால் பதினாறு பிள்ளைகளைப் பெற்று என்பது பொருள் என்று நினைக்கின்றார்கள் சிலர். பதினாறு வகைப் பேறுகள் இன்னவை என்பதை இச் செய்யுளால் அறிக. இச்செய்யுள் காளமேகப் புலவர் பாடியுள்ள துதிவாணி என்று தொடங்கும் செய்யுளின் தனித்தமிழ் மொழிபெயர்ப்பாகும். கட்டளைக் கலித்துறை புகழ்1 கல்வி2 வீரம்3 புனைவெற்றி4 மக்கள்5 பொருள்6 துணிவே7 மிகுநெல்8 மணிநலம்9 மேலாம் நுகர்ச்சி10 அறிவு11 அழகு12 பகுபல் பெருமை13 பழங்குடித் தன்மை14 பிணிகளின்மை15 தகும் ஆண்டும்16 ஆகும் பதினாறு பேறெனச் சாற்று வரே இதில் துணிவு என்பதை வடவர் தைரியம் என்பர். நெல்மணி என்பது நெல் முதலிய மணி வகையைக் குறிக்கும். நலம் இதை வடவர் சௌபாக்கியம் என்று கூறுவர். போகம் என்று வடவர் சொல்லி யுள்ளதை நுகர்ச்சி என்ற இன்றியமையாத தமிழ்ச் சொல்லால் சொல்லுவர் நம் தமிழ் மோலோர். பகுபல் பெருமை மேலும் மேலும், புதிது புதிதாக ஏற்பட்டுவரும் பெருமை என்க. பழங்குடித்தன்மை - தமிழ்ப் பெருங்குடிகட்கிருக்க வேண்டிய உயரிய பண்பாடுகள். தகும் ஆண்டு - வாழ்நாள் மிகுதி. - குயில், 5.8.1958 8. இராமன் தெய்வம் அல்லன் காளமேகம் தில்லைக்குச் செல்கின்றார். அவரைத் தில்லை கோவிந்தராசர் கோயிலிலுள்ள நம்பியார் காணுகின்றார். காளமேகப் புலவரைத் தம் இராமனைத் தெய்வமென்று கூறும்படி முயலுகின்றார். அவர் கேட்டார்: காளமேகப் புலவரே இராமன் கடவுள் அல்லனோ? அதற்குக் காளமேகப் புலவர் பாடுகின்றார். சத்தாதி ஐந்தையும் தாங்காத தெய்வம் தனிமறையும் கர்த்தா எனுந்தெய்வம் அம்பலத் தேகண்டும் கண்கள் இரு பத்தானவன் மைந்தன் பொய்த்தேவி யைக்கொல்லப் பார்த்தழுத பித்தான வன்தனை யோதெய்வ மாகப் பிதற்றுவதே. இதன் பொருள்: பிறப்பு இறப்பில்லாத தெய்வமானவனும் ஒப்பில்லாத நான் மறையும் தலைவன் என்று புகழும் தெய்வமானவனும் ஆகிய கூத்தனை அம்பலத்தில் கண்டும் கண்கள் இருபதுடைய இராவணன் மகனான இந்திரசித்தன், பொய்யாகிய சீதையைக் கொல்வதை கண்டு அழுத பித்துடையவனைத் தெய்வமென்று பிதற்றுவது கூடாது என்பதாம். பொய்ச் சீதை என்பதையும் அறியாத ஒருவனைக் கடவுள் என்று சொல்ல முடியாது என்பது கருத்து. - குயில், 15.8.1958 9. பார்ப்பான் பார்ப்பானைத் திட்டினான் தமிழரிடம் அமைவு காட்டாத சோழியப் பார்ப்பானைக் காளமேகப் பார்ப்பான் சொன்னது. சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக் கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி போட்டாளே வேலையற்றுப் போய் - குயில், 19.8.1958 10. கச்சியப்பர் என்ற புலவர் கூறுகின்றார் பொங்குதமிழ் அயோத்திவாழ் தசரதன்என் போனிடத்தும் பூதூர் வேந்தன் துங்கவடு கனிடத்தும் வீரராகவர் இருவர் தோன்றினா ரால்! அங்கொருவன் ஒருகலைமான் எய்திடப்போய் வசைபெற்றான் அவனி பாலன் இங்கொருவன் பல்கலைமான் எய்திடப் போய்க் கல்வியினால் இசைபெற் றானே இதில், தசரத ராமன் கலைமானை எய்திடப் போய் வசையே பெற்றான் என்று பாவாணர் கூறியது குறிப்பிடத் தக்கது. - குயில், 9.9.1958 11. கம்பன் தொண்டு பொன்னும் மாமணியும் புனை சாந்தமும் கன்னி மாரொடு காசினி ஈட்டமும் இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள். தன் மகன் இராமனுக்கு முடிசூட்டப் போவதைக் கேட்டுக் கோயிலுக்குப் போய்ப் பார்ப்பனர்க்குத் தானமாகப் பொன்னையும் பெருமை பெற்ற மணிகளையும், பூசுதற்குரிய சந்தனத்தையும், இளம் பெண்களையும், பல ஊர்களையும் இவை போன்றவைகளையும், சோற்றையும் ஆடைகளையும் அளிக்கின்றாள். இராமாயணத்தைத் தமிழாக்கிய கம்பன், தமிழ்ப் பண்பாடு கெடாமல் - தக்கவாறு மாற்றியமைந்துள்ளான் என்கின்றனர். எங்கே மாற்றியமைத்தான்? - பார்ப்பானுக்கு இளம் பெண்களை யும் கொடுப்பதென்பது தமிழர் பண்பாடா? - அந்த இழி செயல் ஆரியர்க்கு ஏற்கும். அதை அப்படியே தமிழர் முன்வைக்கும் கம்பனின் செயல் எத்தகையது? எண்ணுக. - குயில், 28.10.58  புரட்சிப் பாவலர் பாரதிதாசன்  தமிழில் முதல் கவிதை இதழ் நடத்தியவர் பாரதிதாசன். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் என்பது இதழின் பெயர்.  நாடகம் எழுதிய முதல் தமிழ்க் கவிஞரும் இவரே. கதை, நாடகம், கட்டுரை, கவிதை என இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் கையாண்ட முதல் பாவலர் பாரதிதாசனே.  தம் 37ஆம் வயதில் பகுத்தறிவு இயக்க ஈடுபாட்டையும் பெரியார் தொடர்பையும் (1928-இல்) பெற்றார்.  தமது 47ஆம் வயதில் (1938-இல்) பாரதிதாசன் கவிதைகள் எனக் கவிஞரின் பெயரிலேயே வெளிவந்த முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.  கதரைப் பற்றியும் மதுவிலக்குப் பற்றியும் முதன்முதலாக பாடிய பெருமை பாரதிதாசனுக்கே உண்டு.  குடும்பக் கட்டுப்பாடு பற்றி - இந்திய மொழிகளிலேயே முதன்முதல் பாட்டெழுதிய சிறப்பும் பாரதிதாசனுக்கே உரியது.  திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்த திராவிடர் இயக்க முதல் எழுத்தாளர் பாரதிதாசன்.  பகுத்தறிவுக் கருத்தை மையமாக வைத்து முதன்முதல் நாடகம் எழுதி வழிகாட்டியவரும் இவரே. இரணியன் அல்லது இணையற்ற வீரன் எனும் தலைப்பில் நடிக்கப்பட்ட அந்நாடகம் 1939இல் நூலாக வெளிவந்தது. பின்பு, அரசால் தடை செய்யப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளானது.  பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிய காரணத்தால், தாம் பணி செய்த பள்ளிகளில் தொடர்ந்து இடமாற்றத்திற்கு உள்ளாகித் துன்புறுத்தப்பட்டார்.  பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாய்க் குற்றம் சாட்டப்பட்ட பாரதிதாசன், சிறைத் தண்டனைக்கு உள்ளானார்; ஒன்றரையாண்டு ஆசிரியப் பணியிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டார். பின்பு வழக்கில் வென்று ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.  புதுவையில் 1911இல் பாரதியார் தொடர்பை பெற்றதால் புதிய சிந்தனை வெளிச்சம் பெற்றார். அந்த நன்றியுணர்வால் பாரதிதாசன் எனத் தனக்குப் புனை பெயர் சூடிக்கொண்டார்.  பாரதியார், தந்தை பெரியார் இருவரை மட்டுமே தம் வாழ்நாள் இறுதிவரை தலைவர்களாய் மதித்தார்.  அறிஞர் அண்ணா அவர்களால் திரட்டப்பட்ட இருபத்தைந் தாயிரம் உருபா வழங்கப்பட்டு, 29.07.1946ஆம் நாள் சென்னையில் நடந்த விழாவில் பாரதிதாசன் சிறப்பிக்கப்பட்டார்.  29.04.1891இல் பிறந்த புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன், 21.4.1964ஆம் நாள் தம் 73ஆம் வயதில் இயற்கை எய்தினார்.  பாரதிதாசனின் எண்ணங்கள் இலக்கியங்களாய் மலர்ந் துள்ளதால், காலந்தோறும் தமிழர்களின் உள்ளங்களோடு உறவாடிக் கொண்டுள்ளார். (நூல்: பகுத்தறிவு இயக்கத்தில் பாரதிதாசன், சூலூர் அறிவுநெறி வெளியீடு, 2005) பாவேந்தர் பற்றி அறிஞர்கள் 1. புரட்சிக்கவி கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவர்; காலஞ்சென்ற பாரதியாரின் பிரதம சீடராவார். பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டு பண்ணினது போல பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர் திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. இனிய எளிய நடையிலுள்ள இவரது பாக்கள் படிப் போருக்கு இன்பம் பயக்கும் என்பதில் யாதும் ஐயமில்லை. மதங் களிலும், பழைய ஆசாரங்களிலும் ஊறிக்கிடந்த மக்களிடையே இவ ருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி யிருக் கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி. அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட் விட்மன் தமிழ் நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன். இக் கவிஞரைப் பல துறையிலும் பாராட்ட வேண்டியது தமிழ் மக்களின் முதற் கடமை யாகும். - கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (நூல்: பாவேந்தர் பாரதிதாசன் பெருமை, வெளியீடு: அபிராமி பப்ளிகேஷன், பிப்பிரவரி 1980) 2. புதுமை அறிஞர் - புதுவைக் கலைஞர்! உயர்ந்து வளர்ந்த உடல், பருத்து அகன்ற மார்பு, கறுத்து மினுத்த நிறம், கூர்ந்து உருளும் கண்கள், குறுகி அடர்ந்த மீசை, வீரம் நிறைந்த பேச்சு; அதட்டிச் சொல்லும் கருத்து; கலைக்கு வாழும் வாழ்வு; தமிழ்மொழியின்மீது காதல்; தமிழ் அறிஞர்மீது அன்பு; தமிழ் மக்கள்மீது கவலை; தமிழ்நாட்டின்மீது ஆர்வம்; பரந்த நோக்கம், விரிந்த அறிவு உயர்ந்த ஆண்மை, சிறந்த புலமை, எளிமையான உடை, ஏறுபோன்ற நடை ஆகிய அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்த ஓர் உருவை நீங்கள் எங்கேனும் கண்டது உண்டோ ? கண்டால், பாரதிதாசன்! எனக் கூவி அழைக்கலாம். புதுவைக் கவியரசர் பாரதிதாசன் அவர்கள், ஒரு புதுமைக்கவி அரசரே ஆவர். 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அவர்களை நான் நன்கறிவேன். அவர்களோடு பேசிப் பழகி மகிழ்ந்தது குறைவு. அவர் களின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழ்ந்தது அதிகம். தமிழுக்கு அடைமொழிகள் பல. அவற்றுள் தலையாயவை ஐந்து. அவை : இனிய, எளிய, சிறந்த, பழைய, தனித்த என்பனவாம். இவற்றுள் தலைமை தாங்குவது இனிய தமிழே. இந்த இனிய தமிழையே, தீந்தமிழ் எனவும் தேன் தமிழ் எனவும் கூறுவதுண்டு. இவற்றிற்குப் பொருத்தமாகக் கவிபுனையும் ஆற்றலில் அதிக வலிமை உடையவர் அறிஞர் பாரதிதாசன் அவர்களே ஆவர். பாரதிதாசன் கவிதைகளுக்கு உவமை கூறவேண்டுமானால், அவர் கவிதைகளையேதான் உவமையாகக் கூறவேண்டும். நாட்டு நலங் கருதிக், கவிதை புனையும் பழந்தமிழ்ப் புலவர் களைப்போல இச்காலத்திற்ல் எவருமில்லையென்று கூறிவிட முடியாது. இக்காலத்தில் உள்ள சிறந்த புலவர்களில் புதுவைப் பாரதிதாசன் ஒருவர் ஆவர். இது, கொழும்பு வானொலி நிலையத்தார், தங்கள் வானொலி மூலம் முன்பு ஒலி பரப்பிய செய்திகளுள் ஒன்று. எனது கவிகளும், என்னைப்போன்ற புலவர்களின் கவிகளும் தமிழ்மக்கள் உளத்தை மகிழ்விக்கும் ஆற்றல் வாய்ந்தவை; அன்பர் பாரதிதாசனின் கவிதைகள் நாட்டின், சமூகத்தின், மக்களின் உயிரை மகிழ்விக்கும் ஆற்றல் வாயந்தவை. இது பேராசிரியர் ந. மு. வே. நாட்டார் ஐயா அவர்களின் கருத்து. நான் பல மொழிகளிலுமுள்ள பல்வேறு இலக்கியங் களையும் படித்துள்ளேன். பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு பிரஞ்சுப் பேராசிரியர் களின் இலக்கியங்களையும் படித்துப் பார்த்திருக் கிறேன். என்றாலும் தங்களின் புரட்சிக்கவி என்ற தமிழ் இலக்கியம் போன்ற ஒன்றே யான் எங்கும் கண்டதேயில்லை. இவை திருச்சியில் ஒரு கூட்டம் நடந்த பிறகு கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் ஒரு பிராமண அன்பர் கூறிய சொற்கள். கவிஞர் பாரதிதாசன் கவிதைகளைப் படித்தேன். கதைக்காக ஒருமுறை, கலைக்காக ஒருமுறை, கவிக்காக ஒருமுறை, கருத்திற் காக ஒரு முறை, இன்பத்திற்காக ஒருமுறை எழிலுக்காக ஒருமுறை, கொள்கைக்காக ஒருமுறை, குறிப்பாக ஒருமுறை படித்தேன். ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு படித்தேன் எனவே இனித்தது. இது, அவர்களின் கவிதைகளுக்கு முன்பு ஒரு முறை யான் கூறிய மதிப்புரை. தமிழ்நாடு செழிப்பதற்காக, தமிழ்மொழி வளர்வதற்காக, தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்காக, புலவர் அறிஞர் - புதுமைக் கலைஞர் - புதுவைப் பாரதிதாசன் அவர்கள் இந் நிலவுலகில் பன்னெடுங்காலம் நல்வாழ்வு வாழவேண்டும் என நான் இந்த நாளிலே என் முழுமனதோடு ஆசைப்படுகிறேன். பாரதிதாசன் வாழ்க! - கி.ஆ.பெ. விசுவநாதம், மணிவாசகத் தமிழகம், திருச்சி. (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) 3. கவி பாரதிதாசர் ஷெல்லியும் புஷ்கினும் புரட்சிக் கவிகள். ஷெல்லி தனது இலாமியப் புரட்சியின் முன்னுரையில் இவ்வாறு எழுதினான்: நான் பழைய முறையையோ, புதிய கவிகளையோ காப்பியடிக்க வில்லை. எனக்கென ஒரு நடை கண்டு கவிபாடுகிறேன். இந்தக் காலம் என் கவியை ஒப்பா விட்டால் பரவாயில்லை. நான் யாருக்கும் அஞ்சவில்லை. சுதந்திரமாகத் தலைநிமிர்ந்து என் வழியில் நடக்கிறேன். இதே தைரியத்துடன் புஷ்கினும் பாடுகிறான் : அண்ணே! பழைய பஞ்சாங்கத்தைப் படித்தாலும் பிழிந்தாலும் சொட்டு மழையாவது வருமா ? கந்தாய பலனைப் பாடம் பண்ணினால் வயல் விளையுமா ? உலகின் முன்னேற்றம் உழைப்பில் உள்ளது. நன்றாகப் பாடுபடு. வந்ததைப் பகுத்துண். எல்லாரும் சமமென்று நினை ! இதே கருத்தைப் பாரதியார், எல்லாரும் ஓர்குலம்; உலகம் பொது வுடைமை; ஒருவனுக்கு உணவில்லாவிட்டால் உலகே பட்டினி கிடப்பது போலாகும். கட்டென்பதனை வெட்டென்போம். உடம்பில் மயிர் முளைப்பதுபோல மண்ணில் பயிர் முளைக்கிறது. வானும் அதை வளர்க்கிறது. அதன் பயனை அனைவரும் போது மட்டும் உரிமையுடன் உண்ணலாம் என்றார். இம் மூவரும் கொழுத்த புரட்சிக்கவிகள். நான்காவது புரட்சிக்கவி நமது பாரதிதாசர். பாரதிதாசர் தமிழ் இரத்தினம் - கனகரத்தினம். அவர் கவிதையும் சொல்லின்பமாகிய கனகத்திற் பதித்த பொருளின்பமாகிய இரத்தினம்போல நிலவும். நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்ற முறுக்கான மீசை, வயதை விழுங்கிய வாலிபவீறு, உரப்பான பேச்சு, புதுமை வேட்கை கொண்ட உள்ளம் - இவையே பாரதிதாசர் ! பாரதிதாசர் சென்ற இருபத்தைந்தாண்டுகளாகக் கவித் தொண்டு செய்துவருகிறார். அவர் தக்க தமிழ்ப்புலவராதலால், உள்ளுணர்ச்சிக்கேற்ற சொற்கள் அமைகின்றன. சொற்செல்வர் என்று அவரைச் சொல்லலாம். சொற்கள் உணர்ச்சியில் சாணை பிடித்துக் கலைமெருகேறி வரும் பண்பை நான் அடிக்கடி கண்டு வியந்திருக்கிறேன். பாரதியார் கவிப்புயலானால் தாசர் கவிக்கனல் என்னலாம். அவர் முதன்மையாக அறுசீர் எண்சீர் விருத்தங்களையும் ஆசிரியப்பாக்களையும் மிகத் திறமையுடன் அமைக்கிறார். அவர் கவிதைகள் எல்லாம் புதியபுதிய இயற்கை யழகுடன் பொலிகின்றன. பாரதிதாசர் பழைய கொள்கைகளை மாரீசம் செய்யும் போலிக் கவியல்லர். சாமிக்கழுகும் பேச்சும் அவரிடமில்லை. வெட்டொன்று துண்டு இரண்டாகவே அவரது உணர்ச்சி, புதுமையை நாடிப் பாய்கிறது. முதன்மையாக, காதல் சுதந்தரத்தை அவர் ஷெல்லியின் வேகத்துடன் பாடுகிறார். தமிழர் வேறெந்தச் சாதிக்கும் தாழ்ந்தவரல்லர் என்று அழுத்த மாகப் பாடி, நமது இனத்திற்கு அளவற்ற பெருமையைத் தந்திருக்கிறார். காலத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத கண்மூடித் தனங்களைச் சவுக்கடி கொடுப்பதில் அவரே இன்று முதன்மை பெற்றிருக்கிறார். மறுமலர்ச்சித்தமிழகம் பாரதியார் முதல் எத்தனையோ எழுத் தாளரைத் தந்திருக்கிறது. சுமார் நூறு நல்ல எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இவருள் பத்து அரிய கவிகள் இருக்கிறார்கள். அனைவரும் தமிழுக்கு வேண்டியவர்களே, அவர்களுள் பாரதிதாசர் ஒரு தங்கரத்தினம். அவர் நூல்களை வெளியிடும் முல்லைப் பதிப்பகம் வாழ்க! பாரதிதாசருக்கு அன்பாகுக ! - சுத்தானந்த பாரதி, அரவிந்த ஆச்ரமம், புதுவை. (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) 4. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இருபெருங் கவிஞர் பாரதியும் பாரதிதாசன் என்றழைக்கப் பட்டுவரும் கவிஞர் கோமான் கனக சுப்புரத்தினமுமே யாவர். பாரதி இப் புதிய நூற்றாண்டின் விடிவெள்ளி போல்வரெனில் பாரதி தாசன் அதன் இளைய ஞாயிறென்னலாம். அவரது கவிதை இன்னும் புதுப்புது வகையில் வளர்ச்சி யடைந்துகொண்டு வருகின்றதாதலால் அவரைத் தற்போதைக்கு இளஞாயிறு என்று கூறுவதே பொருத்த முடையதென்று எண்ணுகிறேன். பாரதிதாசன் தம்மைப் பாரதிதாசன் என்று கூறிக் கொள்கிறார்-கூறிக்கொள்ள விரும்புகிறார் என்றுகூட அறிகிறேன். ஆனால் இப்பெயர் அவர் தனிப்பெரும் சிறப்பை முற்றிலும் மறைப்பதெனக் கொள்பவருள் யானும் ஒருவன். பாரதியார், பழய செக்குமாட்டுப் போக்கைத் தமிழ்க் கவிதை யுலகினின்றும் ஓட்டியவர். அதே வகைக் கவிஞர் பாரதிதாசனும் என்ற முறையில்தான் இப்பெயர் அவருக்குப் பொருந்தக்கூடும். ஆனால் பாரதிதாசன் பழமையைத் தவிர்த்த மட்டிலுமோ, பாரதியைப் பின்பற்றியதில் மட்டிலுமோ அவர் பெருமை அமைந்துவிடவில்லை. பாரதிதாசன் கவிதைகள் வெளிவந்துள்ள தொகுதியைமட்டும் வாசிப்பவர்கள் அவரையும் பாரதியுடன் இணைத்துக் கூறலாம். ஆனால் அவர் புரட்சிக் கவிதையும் ஒன்றிரண்டு சிறு பாடல்களும் இவ்வெல்லையைத் தாண்டிவிட்டன. அவருடைய இன்றைய நூல்கள் பாரதியாரின் எல்லையைக் கடந்து பலவகையிலும் விரிவு பெற்றவையாய் விளங்குகின்றன. பாரதியார் கண்ணன் பாட்டில் தம் காவியப்பண்பை முதலில் சுட்டிக்காட்டிக் குயில் பாட்டில் அதன் மலர்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் புகழ் இவ்விரண்டையுமே பெரிதும் சார்ந்துளது. இவற்றினும் பெரிய அளவில் அவர் காவியம் அமைக்க அவர் செய்த முயற்சியே பாஞ்சாலி சபதம் ஆகும். பாரதியார் ஒரு செடி அளவில் விட்டுச்சென்ற இக் கவிதைப்பயிர் பாரதிதாசன் நூல்களில் கொடிப்பந்தர்களாகவும், நன்செய் வயல்களாகவும் சோலைகளாகவும், காடுகளாகவும் வளர்ந்து அழகும், ஆழமும், விரிவும் செறிவும் பெற்றுத் திகழ்கின்றது. கவிதைக்குக் கவிதை ; கதைக்குக் கதை ; நாடகத்துக்கு நாடகம் ; உரைநடைக்கு உரைநடை, எனப் பாரதிதாசன் கவிதை தன் முழு எல்லையிலும் பரந்து அதற்கப்பாலும் சென்றுள்ளது. பாரதியார் சிறப்புவகையில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞர் ; புதுயுகக் கவிஞர் ; பாரதிதாசன் சிறப்பு வகையில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞர் ஆவதோடு பொதுவகையில் எல்லா நூற்றாண்டுக்குமே உரியவர். பாரதியார் புது யுகத்தின் எதிரொலி. பாரதிதாசனோ புதுயுகத்தின் எதிரொலி மட்டுமின்றி யுகாந்தரங்களின் எதிர் ஒலி முழக்கமும் ஆவர்! ஏனெனில், அவர் புதுமையுடன் பழமையையும் இணைத்து என்றும் நின்று நிலவும் புதுமையுருவை நமக்குத் தந்துள்ளார். அவர் கவிதையில், சங்க காலத்தில் காணப்படும் வாய்மையையும் திணைநெறி வழாமையையும் காணலாம். ஆனால் அதன் கடுஞ்சொல் வழக்கும், புதைபொருள் மயக்கமும், செயற்கைச் சூழல்களும் இங்கே இல்லை. இடைக்காலக் காவியங்களின் கவின் நடையையும் புனைவுகளையும் இதில் காணலாம் அவற்றின் பொய்ம்மைகளும் பசப்புரைகளும் குறிக்கோளற்றுக் கும்பலுடன் கூத்தாடும் குளறுபடிகளும் இதில் கிடையா. பாரதி ஒரு வரையன்றிப் பாரதிதாசனுடன் ஒப்பிட்டுக் கூறத்தக்க கவிஞர் பிற்காலத்தில் எவருமில்லை யென்னலாம். காளிதாசனையும், ஷேக்பியரையும், மில்ட்டனையும் மொழிபெயர்க்கப் புகுந்த புலவர்கள் தமிழ்நாட்டில் தமிழர் உயிருட் கலந்து தமிழர் வாழ்வு வாழும் இறவாக் காளிதாசனும், ஷேக்பியரும், மில்ட்டனு மான ஒரு கவிஞரை (பாரதிதாசனை) அறிந்துகொள்ள முயலாதது அவர்களின் தற்கால அடிமையுணர்ச்சியையே காட்டுகின்றது. பழம் புலவர் நடை புரியாவிடினும், புரிந்துகொள்ள வைக்கப் பாடுபடும் இவர்கள், பிற நாட்டுக் கவிஞர்கள் கவிதையையும் பழங்காலக் கவிஞர்கள் கவிதையை யும் மாத்திரைக் கோலின்றித் தமிழரிடையே புத்துயிர் பெற்றெழும்படி செய்யப் பாடுபடும் இவர்கள், தம் பக்கம் நின்று, அனைவருக்கும் புரியும்படி பாடும் உயிருள்ள கவிஞன் குரலை ஏனோ உணருகின்றிலர்? பழமைக் கவிஞர்கள் மக்கள் வாழ்க்கையாகிய பாதையில் முன் நோக்கியோ அல்லது பக்கம் நோக்கியோ கூட நடப்பவர் அல்லர். பின் நோக்கி நடப்பவரே ஆவர்! பாரதிதாசன் மொழிவரையறையால் தமிழ்க் கவிஞர். ஆனால் கருத்தளவையால், கவிதைச் சுவையளவையால், மொழி எல்லையையும், நாட்டு எல்லையையும் கால எல்லையையும் கடந்த உலகக் கவிஞர்களுள் ஒருவர். பிற மொழிகளில், அவர் சிறு நூல்கள்கூட மொழி பெயர்க்கப்படுமேல் இது ஒருவாறாக உலகிற்கு விளங்குமென்று எண்ணுகிறேன். பாரதிதாசன் தனித் தமிழ்க்கவிஞர் ஆவர். அவர் நூல்களைக் கால வரிசைப்படுத்தி வாசிப்பவர், அவற்றின் கவிதைத் தன்மையின் வளர்ச்சியோடு தனித்தமிழ் நடையிலும் வளர்ச்சியிருப்பதைக் காண்பர். தனித் தமிழ்ச் சொற்களிலெல்லாம் தமிழர் இலக்கிய மாண்பு செறிந் திருத்தல் கண்டு அவர் வரவர மிகுதியான ஆர்வத்துடன் அவற்றை வழங்கி வருகிறார். அதோடு தனித் தமிழார்வம் மொழித் துறையில் தமிழன் விடுதலை வேண்டுவதைக் குறிக்கும் என்றும், அதனைப் போற்றுவது தமிழர் இயல்பு என்றும் அவர் கொள்கிறார். அழகின் சிரிப்பில் தமிழர் ஆவோர் தனித் தமிழ்ச் சொல்லையழியாது காக்கும் மரபினரே என்று அவர் கூறியுள்ளார்! - கா. அப்பாத்துரைப்பிள்ளை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி. (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) 5. ஏன் ஆவலுடன் படிக்கிறார்கள்? பல ஆண்டுகளுக்கு முன்னர் 31.4.1934ல், பகுத்தறிவு வாதிக ளாகிய நண்பர்கள் சுமார் இருபதுபேர் சேர்ந்து சென்னையிலிருந்து புறப்பட்டு பக்கிங்காம் கால்வாய் வழியாக மகாபலிபுத்திற்கு யாத்திரை சென்றோம். மகாபலிபுரத்தில் உள்ள சிற்பக் கலைகளைக் காண வேண்டும் என்பது அந்த யாத்திரையின் நோக்கம். இளவேனிற் காலத்தில் மாலை வேளையில் படகு ஏறிப் பயணம் செய்வது அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்வது மிக இன்பகரமானது. அந்த யாத்திரையின் போதுதான், புரட்சிக் கவி என்றும், பாரதிதாசன் என்றும் சிறப்புப் பெயர் பெற்றுள்ள தோழர் கனக சுப்புரத்தினம் அவர்களுடன் அறிமுகம் ஆனேன். சாந்தமான இயல்பு, அமைதியும் இனிமையும் கலந்த பேச்சு. கவிதையில் திளைத்துக் கொண்டிருக்கும் உள்ளம் இவற்றை உடையவர் பாரதிதாசன் இன்பகரமான மகாபலிபுர யாத்திரை எல்லோருடைய மனத்தையும் கவர்ந்தது போலவே, தோழர் பாரதி தாசன் உள்ளத்தைக் கவர்ந்தது. எங்கள் மனத்தில் அந்த யாத்திரையின் நிகழ்ச்சி ஊமையன் கனவு போல வெளிப்படாமல் இருந்தது, எங்களுக்குக் கவிதை பாடும் ஆற்றல் இல்லாமையினால். ஆனால், கவிதை புனையும் புலமை வாய்ந்த பாரதிதாசன் அவர்கள் அடுத்த நாளே அந்த யாத்திரையைப் பற்றிக் கவிதை ஒன்று பாடிவிட்டார். சென்னையிலே ஒரு வாய்க்கால் - புதுச் சேரி நகர் வரை நீளும் அன்னத்தில் தோணிகள் ஓடும் - எழில் அன்னம் மிதப்பது போலே! என்னருந் தோழரும் நானும் - ஒன்றில் ஏறி அமர்ந்திட்ட பின்பு, சென்னையை விட்டது தோணி - உடன் தீவிரப்பட்டது வேகம். படகு சென்றுகொண்டிருக்க, மாலை நேரத்தில் அதன் மேற்புறத் தில் அமர்ந்து எத்தனையோ இயற்கைக் காட்சிகளைக் கண்டோம் அவற்றில் ஒன்று நடுத்தர உயரம் உள்ள ஒரு பனைமரமும் ஓர் ஈச்சமரமும் இணைபிரியா நண்பர்கள் போல நெருங்கி நின்று கொண்டிருக்க, அவற்றின் இடையே அன்று பௌர்ணமி - முழு வட்ட முள்ள நிலா கடலிலிருந்து சிவந்த மேனியுடன் புறப்பட்டு மேலெழும்பி வந்தது. இக் காட்சியைக் கண்ட கவிஞர் உள்ளம் சும்மா இருக்குமா? பாருங்கள் பாரதிதாசன் கூறுவதை: வெட்ட வெளியினில் நாங்கள்-எதிர் வேறொரு காட்சியும் கண்டோம் குட்டைப் பனைமரம் ஒன்று-எழிற் கூந்தல் சரிந்த ஓர் ஈந்தும் மட்டைக் கரங்கள் பிணைத்தே-இன்ப வார்த்தைகள் பேசிடும்போது கட்டுக் கடங்கா நகைப்பைப்-பனை கலகல வென்று கொட்டும் எட்டிய மட்டும் கிழக்குத்-திசை ஏற்றிய எங்கள் விழிக்குப் பட்டது கொஞ்சம் வெளிச்சம்-அன்று பௌர்ணமி என்பது கண்டோம். முத்துச் சுடர்முகம் ஏனோ-இன்று முற்றும் சிவந்தது? சொல்வாய் இத்தனைக் கோபம், நிலாவே?-உனக் கேற்றிய தார் எனக் கேட்டோம். எங்கள் மகாபலிபுர யாத்திரையைப் பற்றி வாசகர்களிடம் விவரித்துக் கூறி நேரம் போக்க வேண்டும் என்பது எனது கருத்தன்று நான் சொல்ல வந்த செய்தியைக் கூறுகிறேன். தோழர் பாரதிதாசன் அவர்கள் அறிமுகமானது முதல் அவர் உள்ளத்திலிருந்து அவ்வப்போது வெளிப்படும் அவரது கவிதை களைப் படித்து வந்தேன். அக் கவிதைகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. எனது உள்ளத்தை மட்டும் அன்று படித்த ஏனையோர் உள்ளங்களையும் கவர்ந்தன. கற்பவர் உள்ளத்தைக் கவரும் ஆற்றல் பாரதிதாசன் கவிதைகளுக்கு எப்படி உண்டாயிற்று? ஏன் எல்லோரும் இவர் பாடல்களை ஆவலுடன் படிக்கிறார்கள்? பாரதிதாசன் கவிதைகளில் உண்மை, இனிமை, அழகு இம் மூன்றும் அமைந்துள்ளன. அதனால் தான் அவரது கவிதைகள் படிப்போர் உள்ளத்துக்கு இன்பம் அளிக்கின்றன. - அறிஞர் மயிலை. சீனி வேங்கடசாமி (நூல்: பாவேந்தர் பாரதிதாசன் பெருமை, வெளியீடு: அபிராமி பப்ளிகேஷன், பிப்பிரவரி 1980) 6. தலைமையானவர் முன்னாளில் தமிழகத்தில் மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அறிவு நெறிகளை வழங்குந் தொழிலை மேற்கொண்டிருந்தவர் இனிய கவி வழங்கும் புலவர்களே யாவர். நாட்டில் ஏரி குளங்களைப் பெருக்கி, நீர் நிலைகள் மிகுவித்தோரும், போர்வரின் அஞ்சாது சென்று பொருது வென்றி மேம்படு வித்தோரும் புலவரே யென்பது தமிழகத்தின் வரலாறு. வரலாறு காண்போர் நன் கறிவர். இடைக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மக்கள் நலத்தைப் பேணு வதிலும் தம்மை ஆதரித்த வள்ளல்களின் புகழ்பாடுவதே செயலெனத் தொண்டாற்றியதனால் தம் தலைமை நிலையை இழந்தனர். இந் நாளில் அவர்கள் மீளத் தலையெடாவாறு பிற மொழியும் பிற தொடர்புகளும் மேம்படலாயின. ஆயினும் மக்கள் தம்மைத் தமிழர் என்றும், தமது தொன்மை நலம் இதுவென்றும் மெல்லத் தெரிந்து கொண்டனர். தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப் பணியின் தவறு நலங்களைப் பகுத்தறி யலானார்கள். அவர்களிடையே பாரதிதாசனார் போலும் தகவுடைய கவிகள் தோன்றலாயினர். அவருள் பாரதி தாசனார் தலைமையிடம் பெற்றுத் திகழ்கின்றார். - பேரா. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை 7. புரட்சியுள்ளம் பாவலர் பாரதிதாசன் கடலைப் பாடுகின்றார். கடலின் ஓரத்தை நோக்கி, மணல் மெத்தையை நோக்கி, மெத்தை மேல் தாக்கவரும் அலைகளை நோக்குகின்றார். அலைகள் பெருகு கின்றன; ஏறி எழுகின்றன; வீழ்ந்து தாழ்கின்றன. அவற்றின் பூரிப்பும் ஏற்றமும், வீழ்ச்சியும் புரட்சியும் கண்டார் பாவலர். பலகாலும் பார்த்துப் பார்த்துப் பழகிய மற்றொரு காட்சியும் அவர் கண்முன் உடன் தோன்றுகிறது. (அதனைத்தான் உவமம் என்பது.) அவர் பலகாலும் பழகிய காட்சி எது? அக்காட்சியில் அலைகளைப்போல் பூரித்தல் ஏறுதல், வீழ்தல், புரளுதல் அனைத்தும் உள்ளனவா? அக் காட்சிதான் கல்வி நிலையத்தில் இளைஞர் ஓடிஆடி மகிழ்ந்து திளைக்கும் காட்சி. ஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஓரம் எல்லாம் கீரியின் உடல் வண்ணம்போல் மணல்மெத்தை; அம் மெத்தைமேல் நேரிடும் அலையோ, கல்வி நிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும் வீழும் புரண்டிடும் பாராய் தம்பி! (அழகின் சிரிப்பு;கடல்-1.) கடலைக் கண்டும் மகிழும் உள்ளம் - இயற்கையின் அழகுச் சிரிப்பில் மயங்கிய உள்ளம் பள்ளிக்கூடத்துச் சிறுவர்களை நினைக் கின்றது. சிறுவர்களின் சுறுசுறுப்பை நினைக்கின்றது; அவர்களின் பூரிப்பையும் களிப்பையும் ஆடலையும் நினைக்கின்றது ! ஏன்? கடல் அலைகள் தரும் இன்பத்தைவிட, கல்வி நிலையச் சிறுவர்கள் பல மடங்கு பெருகிய இன்பம் தருவதைப் பாரதி தாசன் நன்கு உணர்த்தவர். அதனால்தான் அலைகளின் இன்பப் புரட்சி அவருக்குச் சிறுவர்களின் வாழ்க்கைப் புரட்சியை நினைவூட்டுகின்றது. சிறுவர்களின் சுறுசுறுப்பில், அழகைக் கண்டு இன்புற்ற உள்ளமே புரட்சியுற்ற உள்ளம். முதியவர்கள் சிறுவர்களைக் கண்டு எண்ணும் எண்ணத்தையும், பழங்கால ஆசிரியர்கள் பள்ளிக்கூடச் சிறுவர்களைக் கண்டு எண்ணும் எண்ணத்தையும் வீழ்த்தி வென்ற புரட்சியுள்ளம் இங்கே விளங்குகின்றது. பாட்டுக்களில் புரட்சி என்றால், வெறுஞ் சொற்களில் மட்டுமோ? எதுகை, மோனைத் தொடைகளில் மட்டுமோ? உவமைத் திறங்களில் மட்டுமோ? இவையனைத்தும் புரட்சிகள் ஆகலாம்; ஆயினும், இவை போதிய பயன்தரா ! மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத புதிய கருத்துக் களை எழுப்பிச் செம்மை செய்வதே சீரிய புரட்சி! அதனை இங்கே காணலாம். - பேராசிரியர் மு. வரதராசனார் பச்சையப்பன் கல்லூரி, சென்னை, (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) 8. பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன் பாவலர் பாரதிதாசன் அவர்கள், பெரும்பாலும் ஆசிரியப் பாவிலும், ஆசிரிய மண்டிலத் (விருத்தத்) திலும், இக்காலத்திற்கும், இந்நாட்டிற்கும் ஏற்றவாறு பொதுமக்கட்கு விளங்கும் எளிய - இனிய - இலக்கண நடையில், சீர்திருத்தக் கொள்கைகளையும், முன்னேற்ற வழிகளையும் உணர்ச்சிக் கருத்துக்களையும், எழுச்சிச் செய்தி களையும், அறிவுக் கதிர்களையும், அழகிய சிறு நூல்களாகவும், தீஞ் சுவைப் பாட்டுக்களாகவும், இடைவிடாது எழுதி வெளியிட்டுவரும் நாட்டுத் தொண்டு ஒப்பற்றதாகப் போற்றத்தக்கதாம். பண்டைக்காலத்தில் அறிஞர் சிலர் தத்தம் ஊருக்கு மட்டு மின்றித் தமிழ்நாடு முழுமைக்குமே ஆசிரியராக நூலாலும் - உரையாலும் அறிவுறுத்தினர். இவருள், மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும், மதுரை ஆசிரியன் பாரதவாசி நச்சினார்க்கினியரும் சிறந்தவராவர். இவர் போன்றே நம் பாவலரும், புதுச்சேரிக்கு மட்டுமன்று, தமிழ்நாடு முழுமைக்குமே ஆசிரியராவர். இவ்வாசிரியர் இருபாலர்க்கும் தந்த எதிர்பாராத முத்தத்தின் பின், விலை யேறப்பெற்ற பல எதிர்பாராத முத்தங்கள் (முத்துக்கள்) இவர் வாயினின்று ஒவ்வொன்றாய் வந்து கொண்டே யிருக்கின்றன. இவற்றுள், இருண்ட வீடு, குடும்ப விளக்கு என்னும் ஈர் உரையாணி களும் ஒவ்வொரு வீட்டிலும், அழகின் சிரிப்பு ஒவ்வொரு மாணவ னிடத்தும் இருக்கத்தக்கன. இவற்றுள் முன்னவை நல்வாழ்க்கைக்கும், பின்னது இயற்கை வள்ளலிடம் புலமையும், பாவன்மையும் பெறுவதற்கும் ஆற்றுப்படுப்பன. அழகின் சிரிப்பு என்னும் பெயரே பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சிறு செய்யுளாகும். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் என்னும் குறளுக்குக் கல்விச் செல்வத்திற்கு ஏற்ற உரையைக் கொள்வதற்குத் தூண்டுவது அழகின் சிரிப்பாகும். இங்ஙனம், பண்டு செய்யுள் மொழியாயிருந்து, இன்று உரைநடை மொழியாயிருக்கும் தமிழை, முன்பு முத்தமிழாயிருந்து இன்று இயற்றமிழ் அளவாயிருக்கும் தமிழை, ஒருகால் திருந்திய கருத்துக்களையே கொண்டிருந்து இன்று மூடப் பழக்க வழக்கங்களையும் பொய்க் கதைகளையுங் கூறுந் தமிழை, மீண்டும் செய்யுள் மொழியாயும், முத்தமிழ் மொழியாயும், செந்நெறி மொழியாயும், மாற்றுவதால் பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன் என்றேன். இவரைச் சிலர் புரட்சிப்பாவலர் என்பர். புரட்சி என்பது கீழ் மேலாய்ப் புரளுவதாதலாலும், இடைக் காலத்திலிருந்து சீர்கெட்ட தமிழை மீண்டும் தலைக்காலம் போலச் சீர்படுத்துவது நம் பாவலர் தொழிலாத லாலும், பழந்தமிழ் புதுக்கலென்றாலும் புரட்சி என்றாலும் ஒன்றேயென்க. இவர் பலர்க்கும் ஏற்பப் பல பொருள்படுமாறு தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டதே ஒரு புரட்சி என்க. பொது மக்கட்குரிய அறிவு விளக்க நூல்களைப் பிற் காலம்போல் உரை நடையில் வரையாது முற்காலம்போற் செய்யுளிலே வரைந்தது மற்றுமொரு புரட்சியென்க. இவரைப் பின்பற்றியே பொது மக்கட்கு எளிய செய்யுள் நடையில் நூல் யாத்த ஏனோருமுளர். ஆயினும், இவர் என்றும் சிறந்தே நிற்பார் என்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை. இப் புரட்சிப் புலவர் நீடூழி வாழ்ந்து நிலவுலகிற்கு, சிறப்பாக, எம் தமிழ்நாட்டிற்கு, ஒரு பெரும் காரிருள் நீக்கும் கதிரவனாக விளங்குமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் மீதூர்வாராக. - ஞா. தேவநேயப்பாவாணர், சேலம் கல்லூரி (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) 9. தேனருவி பாவேந்தர் என்னும் பாட்டுத் தேனருவி சேலம் சேர்வராயன் மலையடிவாரத்தில் நுங்கும் நுரையுமாகக் சுழித்து ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், அதன் சுழலில் சிக்காமல் கரையோரமாகக் குளித்துக் கொண்டு அதன் அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்த வண்ணம் நின்று கொண்டிருந்த துடிப்புள்ள இளைஞர் கவியரசு கண்ணதாசன். அவர் பேச்சு வாக்கில் பாவேந்தரைப் பற்றிச் சிதறிய சில முத்துக்கள் இங்கு சிறிய மாலையாகக் கட்டப்பட்டுள்ளன. இம்மாலையில் உள்ள முத்துக்கள் மூன்றுதான்; என்றாலும் அவை ஆணிமுத்துக்கள். பாவேந்தர் பாரதிதாசன் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் சில படங்களுக்குப் பாட்டும் வசனமும் எழுதிக் கொண்டிருந்த நேரம். அப்போது மாடர்ன் தியேட்டர் அலுவலகத்திலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் சண்ட மாருதம் என்ற பத்திரிகையில் மாதம் முப்பது ரூபாய்ச் சம்பளத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எதிர்காலக் கனவுகள் ஏக்கங்களாக என் கண்களில் தேங்கியிருந்தன. பாவேந்தர் அப்போது புகழேணியின் உச்சியில் இருந்தார். அப்போது அவருடைய சிறிய அசைவுகளும் எனக்கு வரலாறாகப் பட்டன. நினைவில் நின்ற ஓரிரு நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதியை மாடர்ன் தியேட்டர்ஸார் திரைப்படமாக உருவாக்கிக் கொண்டிருந்தனர். பாவேந்தர் அதற்குப் பாட்டும் வசனமும் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய பாடல்களுக்கு தட்சணாமூர்த்தி இசையமைத்துக் கொண்டிருந்தார். கமழ்ந்திடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால் - நாதா தாவிடுதே இன்பம் மேவிடுதே என்ற பாடலுக்கு ரெகார்டிங் நடந்து கொண்டிருந்தது. கமழ்ந்திடும் என்ற சொல் உச்சரிப்பு கடினமாக இருந்தது. இன்னும் எளிய சொல்லாக இருந்தால் ரெக்கார்டிங்கில் அது தெளிவாக இருக்கும் என்று இசை யமைப்பாளர் கருதினார். உடனே அங்கிருந்த பாவேந்தரை அணுகிக் கமழ்ந்திடும் என்ற சொல் ரெகார்டிங்கில் தெளிவாக இல்லை. அதை மாற்றி இன்னும் எளிமையான சொல்லொன்றைப் போட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்குப் பாவேந்தர் வாயிடுக்கில் சிகரெட்டை இடுக்கியவண்ணம் அதெல்லாம் மாத்தமுடியாது. bu¡fh®o§ bjËth ïšiy‹dh Rªju¤J¡»£l brhšÈ bufh®o§ bkÎid kh¤j¢ brhšY! என்று கூறினார். பிறகு இசை யமைப்பாளர் என்னிடம் வந்து அச்சொல்லை மாற்றிக் கொடுக்கும்படி கேட்டார். நான் குலுங்கிடும் பூக்களெல்லாம் என்று மாற்றிக் கொடுத்தேன். இதைக் கேள்விப்பட்டதும் பாவேந்தருக்கு என் மேல் கோபம். இந்த நிகழ்ச்சியின் எதிரொலியாகச் சென்னை ஏ.வி.எம். டுடியோவில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஏ.வி.எம்.மில் பராசக்தி படப்பிடிப்பு நடந்து கொண் டிருந்தது. பராசக்திக்குரிய பாடல்கள் ரெகார்டிங் செய்து கொண் டிருந்தனர். பாவேந்தர் ரெகார்டிங் நடந்த இடத்தில் ஏதோ உரக்கப் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பேசாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்குப் பாவேந்தர் ஏ.. என் பேச்சும் ரெகார்ட் ஆயிடும்னு பயப்படறியா, ரெகார்டிங் மெஷின் என்னோட பாட்டில கமழ்ந்திடும்கற சொல்லை ரெகார்டு பண்ணமுடியல... எம் பேச்சைத் தா ரெகார்டு பண்ணப் போவுதா ... போப்பா... என்று சலிப்போடு சொன்னார். மாடர்ன் தியேட்டர்ஸில் கல்யாணி என்ற படத்துக்கு Wire Recording நடந்து கொண்டிருந்தது. இசையமுதில் உள்ள பாவேந்தரின் அதோ பாரடி என்று தொடங்கும் வண்டிக்காரன் பாட்டு ரெகார்டிங் ஆகிக் கொண்டிருந்தது. பதிவாகி முடிந்ததும் அப்பாட்டை ரெகார் டிங் அறைக்குள் வைக்கச்சொல்லி வெளியில் இருந்து கேட்டார் பாவேந்தர். அதன் இசையமைப்பு அவருக்கு திருப்தி தரவில்லை. பாவேந்தர் அருகில் இருந்தவர்களைப் பார்த்து, ஏப்பா! சங்கீதம் போட்றவ வண்டியோட்டி இருக்கானா? தூரத்தில் இருந்து வண்டிக்கார பாட்டைக் கேட்டிருக்கணும்... ஊம் என்று சலித்துக் கொண்டார். அபூர்வ சிந்தாமணி என்ற படத்துக்குப் பாவேந்தர் வசனம் எழுதியிருந்தார். அப்படத்துக்கு வெளிப்புற காட்சிகளை எடுப்பதற்காக நடிகர் குழு ஏர்க்காடு மலையடிவாரத்துக்குச் சென்று கொண்டிருந்தது; பாவேந்தரும் உடன் வந்து கொண்டிருந்தார். அவர் ஏறிச் சென்ற காரின் குறுக்கே ஒரு வாத்துக் கூட்டம் சரேலென்று வந்தது. காரோட்டி எவ்வளவு முயன்றும் வண்டியை நிறுத்த முடியவில்லை. ஏழெட்டு வாத்துகள் வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டன. உடனே பாவேந்தர் அங்கிருந்தவர்களிடம், செத்துப்போன வாத்துக்கெல்லாம் சுந்தரத்தைப் பணம் கொடுக்கச் சொல்லு என்று சொல்லிவிட்டு அவ் வாத்துக்களைச் சேலத்தில் அப்போது குடியிருந்த நகைச்சுவை நடிகை பி.எ. ஞானத்தின் வீட்டுக்கு அனுப்பிச் சமைக்கச் சொன்னார்; இரண்டு நாள் சுவைத்துச் சாப்பிட்டார். கோவையில் தமிழ் தேசியக் கட்சி மாநாடு நடைபெற்றது. அதில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவாதனும், பாவேந்தரும், நானும் கலந்து கொண்டோம். நடுப்பகல் உணவு கோவை அறிஞர் ஜி.டி.நாயுடு இல்லத்தில் ஏற்பாடாகி இருந்தது. இலையில் உணவு பரிமாறப்பட்டது. ஜி.டி. நாயுடு சைவ உணவுக்காரர் ஆயிற்றே. இலையில் உப்பு, பருப்பு, சோறு, நெய், புடலங்காய் பரிமாறப்பட்டிருந்தன. அந்த சாப்பாட்டை பார்த்தவுடனே பாவேந்தருக்கு ஓர் அலெர்ஜி. ஜி.டி. நாயுடு அருகில் நின்று கொண்டிருந்தார். பாவேந்தர் அவரைக் கூப்பிட்டு, ஏப்பா நாயுடு! இதைச் சாப்பிட்டுத்தா உயிரோட இருக்கறயா? என்று கேட்டார். நாயுடு சிரித்தார். பிறகு அருகில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து, கண்ண தாசா! எந்திரி! நமக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று சொன்னார். நானும், பாவேந்தரும் பெங்களூர் பிரியாணி ஓட்டலுக்குச் சென்றோம். பாவேந்தர் மாரடைப்பால் தாக்கப்பட்டுச் சென்னை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி கிடைத்தது. சென்னை அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தமிழ்மலை கட்டிலில் சாய்ந்து கிடந்தது. மூக்கின் வாயிலாகப் பிராணவாயு செலுத்தப்பட்டிருந்தது. கொஞ்சம் நினைவு வந்ததும் எழுந்து உட்கார்ந்தார். மாரடைப்பால் தாக்கப்பட்டவர் படுக்கையில்கூட அசையாமல் கிடக்கவேண்டும். ஆனால் பாவேந்தர் எழுந்து உட்கார்ந்தார். பாத்ரூம் போகணும் என்றார். அருகில் இருந்த அன்பர் ஒருவர் எழுந்திருக்காதீர்கள்? இங்கேயே போகலாம்! என்று கூறித் தடுத்தார். பாவேந்தருக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. ஏ! நீயார் என்னைத் தடுக்க! kÇahijia bfL¤J¡fhnj! என்று அந்த நிலையிலும் சத்தம் போட்டார். பாவேந்தர் பிறரை அதட்டியே பழக்கப் பட்டவர். அவரை யார் அதட்டமுடியும்? பிறகு அருகில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து மெதுவாக பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றனர். அன்றே அவர் ஆவி பிரிந்தது. புதுவைக் குயிலின் குரல் ஒடுங்கியது. பாவேந்தர் மாடர்ன் தியேட்டர் சுபத்ராவுக்கு வசனம் எழுதினார். போருக்குப் புறப்பட்ட காதலன் அருச்சுனனைச் சுபத்ரா வைத்தகண் வாங்காமல் பார்க்கிறாள். அருகில் இருந்த அவள் அரண்மனைத் தோழி, அதை ஓர்நாள் நினைவு கூர்ந்து சுபத்திரை? m‹W nghU¡F¢ br‹w gh®¤jid, Ú it¤j f© th§fhkš gh®¤jid? என்று குறிப்பிடுகிறாள். இந்த வரிகளைக் கேட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன. என்றாலும் இன்றும் அவ்வரிகள் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. - கவியரசு கண்ணதாசன் (நூல்: பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், 1990) 10. என் தந்தையார் இவர் பாவேந்தர் குடும்பக் காவியத்தின் முதற்பாதை; பாவேந்தர் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி; தமிழுக்குப் பிறந்து தமிழுக்கே வாழ்க்கைப்பட்டவர். குடும்பவிளக்கு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் என்று அந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்படும் தலைவி இவரே! அறுபதாம் அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் இவர், வீட்டு வேலைகளைச் சுறுசுறுப்போடு செய்யும் காட்சி, பறந்தனள் பச்சைப் பசுங்கிளி ... ...v‹w பாவேந்தர் பாட்டை உள்ளத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. குடும்பவிளக்கில் படம் பிடித்துக் காட்டப்படும் Éருந்தோம்பும்mழகை,ïன்றும்ïவர்åட்டுக்குச்bசன்றால்Rவைத்துkகிழலாம்.ò¡ff¤âÈUªJ புதுவை வரும் இவரைப் பெருமாள் கோவில் தெருக் கோடியில் கண்டால் பழனியம்மா! குடும்ப விளக்கு வருது! என்று பாவேந்தர் பரிவோடு குறிப்பிடுவதுண்டு. சரசுவதி அம்மையார், பனித்த கண்களோடு தம்தந்தையாரை இக்கட்டுரையில் நினைவு கூர்கிறார். எங்கள் தாத்தா திருவாளர் கனகசபை முதலியார் புதுவையில் பெரிய வணிகர்; மளிகை மண்டியின் உரிமையாளர். கப்பலில் சரக்கு ஏற்றி பிரெஞ்சு நாட்டுக்கு அனுப்பிவைப்பார். அவர் ஒரு முறை சரக்கு ஏற்றி அனுப்பிய கப்பல் கவிழ்ந்து போனதால் வளமான எங்கள் குடும்பமும் கவிழ்ந்தது. அப்போது எங்கள் தாத்தாவின் வயது எழுபது. வேணு (எ) சுப்பராய முதலியார் எங்கள் பெரியப்பா. அவருக்கு மளிகைமண்டி வாணிகம் தொழில்; சோதிடம் துணைத்தொழில். மணிக் கணக்குச் சோதிடம் சொல்வதிலும், கோசாரபலன் கூறுவதிலும் வல்லவர். புதுவைப் பிரமுகர்களான திருவாளர்கள் ஞாந்தியா முதலியார், சின்னையா முதலியார் ஆகியோர்க்கு இவர் குடும்பச் சோதிடர். இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டில் அவர்கள் வீட்டுக்குச் சென்று சோதிடம் சொல்லிவிட்டுத் திரும்புவார். என் தந்தையார்க்குச் சோதிட மெல்லாம் பிடிக்காது. என் பெரியப்பாவைப் பற்றி அவர் நகைச்சுவை யாக அடிக்கடி ஒரு செய்தியைக் குறிப்பிடுவதுண்டு. பெரியப்பாவும் என் தந்தையாரும் சிறுவர்களாக இருந்தபோது நடந்தது இந்நிகழ்ச்சி. ஒருமுறை என் பெரியப்பா ஒரு பெட்டியின் மீது அமர்ந்தபோது பெட்டிச் சந்தில் அவரது கை சிக்கிக் கொண்டதாம்; வலி பொறுக்க முடியாமல் முருகா! முருகா! என்று கதறினாராம். அருகிலே நின்று கொண்டிருந்த எங்கள் தாத்தா எந்திரிடா மடையா? KUf‹ v‹dlh brŒth‹? என்று சொன்னாராம். இதை என் தந்தையார் கூறும்போதெல்லாம் நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். புதுவைக் கல்வே கல்லூரியின் எதிரில் மயிலம் சுப்பிரமணிய மடத்தார் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி வந்தனர். அத் திண்ணைப் பள்ளியில்தான் என் தந்தையார் தொடக்கக் கல்வி பயின்றார். திருவாளர் திருப்புளிசாமி ஐயா அப்பள்ளியின் ஆசிரியர். கல்வே கல்லூரியில் முதல் வகுப்பிலிருந்து பி.ஏ. பட்ட வகுப்பு வரை கற்றுக் கொடுக்கின்றனர். தமிழகத்துக் கல்லூரிகளில் ஆங்கிலத் துக்கு உள்ள சிறப்பிடம் அங்கு பிரெஞ்சு மொழிக்குண்டு. தமிழ்ப் புலவர்களுக்கென்று புதுவை அரசாங்கம் அந்நாளில் பிரவே- தமிழ் என்று ஒரு தேர்வு நடத்தி வந்தது. கல்வே கல்லூரியில் ஈராண்டு பயின்று அத்தேர்வு எழுத வேண்டும். என் தந்தையாரும் அக் கல்லூரியில் பயின்று அத்தேர்வு எழுதி முதல்வராக வெற்றி பெற்றார். கல்வே கல்லூரியில் இவர் படித்துக்கொண்டிருந்த காலத்தில் புலவர் பங்காரு புத்தர் இவருக்குத் தமிழ் பயிற்றும் பேராசிரியராக விளங்கினார். ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரான சாரம் மகா வித்துவான் பு.ஆ. பெரியசாமி பிள்ளையிடம் இலக்கிய இலக்கணத் தோடு வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களையும் பயின்றார். என் தந்தையாருக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டவுடன் புதுவை அரசு அவர்மீது ஒரு பொய் வழக்குப் போட்டுச் சிறையில் தள்ளிவிட்டது எங்கள் தாய்ப் பாட்டனார் பெயர் பரதேசியார்; பாட்டி பெயர் காமாட்சி அம்மாள். தென்ஆர்க்காடு மாவட்டத்தில் பெண்ணை ஆற்றுக்கு வடகரையில் உள்ள புவனகிரிப் பெருமாத்தூர் இவர்கள் சொந்தவூர். திருமணம் உறுதியானபிறகு என் தந்தையார் சிறைக்குச் செல்வதைக் கண்டு என் பாட்டானார் மிகவும் அஞ்சினார். ஆனால் என் பாட்டி ஆமாம்! அவர் அப்படித்தான் சிறைக்குப் போவார். ஆனால் சீக்கிரம் திரும்பி வந்திடுவார். நீங்க கவலைப்படாதீங்க என்று கூறி அவரைத் தேற்றினாராம். என் தந்தையார்க்கு மிகவும் பிடித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பாரதியார்; மற்றொருவர் இந்தக் காமாட்சிப் பாட்டி. இந்தப்பாட்டி மருமகனைக் கண்டால் அஞ்சி நடுங்குவார். மருமகன் எங்கே கோபித்துக் கொள்வாரோ! எங்கே சாப்பிடாமல் போய் விடுவாரோ! எங்கே பழனியம்மாளை வேண்டாம் என்று சொல்லி விடுவாரோ! என்றெல்லாம் வீணாக அச்சப்படுவாராம். மாமியார் வீட்டுக்குச் சென்றுவிட்டுப் புதுவை திரும்பியதும் உங்க பாட்டி என்னைக் கண்டு ரொம்ப நடுங்கறாங்க. அதனால் நா ரொம்ப அமைதியா இருந்துட்டு வந்த? என்று எங்களிடம் தந்தையார் கூறுவதுண்டு. உணவுப் பழக்கத்தில் என் தந்தையாருக்கு ஒரு கட்டுத்திட்டம் கிடையாது. ஒரு நாளைக்கு அதிகாலையில் தேநீர் கேட்பார். mL¤j ehŸ mnj neu¤âš njÚ® bfh©L nghŒ¡ bfhL¤jhš, ‘c§fis ah® ï¥nghJ njÚ® nf£lh®fŸ? என்று திட்டுவார். எப்போதாவது என் தாயாரைக் கூப்பிட்டு, பழனியம்மா! கைகால் வலிக்குது. ஏதாவது பண்ணு! என்று சொல்லுவார். என்ன செய்வது? என்று என் தாயார் கேட்டால் ஏதாவது செய் என்று சொல்லுவார். காலையில் இட்டிலி சாப்பிடும்போது தேங்காய்ச் சட்டினி, வெங்காயச் சட்டினி, தயிர், மிளகாய்ப்பொடி, உருக்கு நெய், பழைய மீன் குழம்பு இத்தனையும் கேட்பார். சாப்பிட்டு முடித்ததும் எண்ணெய்ப் பசை படிந்த கையை அழகாக வெளுத்த வேட்டியிலே கறைபடும்படி துடைத்துக் கொள்வார். இதைப் பலமுறை பார்த்தபிறகு, இது நம் குறையே என்றுணர்ந்து அவர் சாப்பிட்டு முடித்ததும், சோப்புக் கட்டியும், துண்டும் கொண்டுபோய்க் கொடுப்பதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன். நாவல்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை அவருடம்புக்குச் சேரா. ஒருமுறை நாங்கள் அவற்றை வீட்டில் வாங்கி வைத்திருந்ததைக் கண்டதும் கிணற்றில் எடுத்துக் கொண்டுபோய் கொட்டிவிட்டார். என் தந்தையார் சிந்தனையில் மூழ்கி மும்முரமாக எழுத்து வேலையில் ஈடுபட்டிருக்கும்போது நாங்கள் திண்டாடிப் போவதுண்டு. சற்று நேரத்துக்கு முன்தான் சாப்பிட்டு முடித்திருப்பார். âObu‹W ‘gh¥gh! என்று குரல் கொடுப்பார். நான் எழுந்து ஓடுவேன். என்னைப் பார்த்து என்னம்மா! நான் சாப்பிட்டுட்டேனா? என்று கேட்பார். சில சமயம் தட்டில் உணவு பரிமாறியிருந்தால் அப்பளத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டுப் போய்ப்படுத்துக் கொள்வார். கொஞ்ச நேரங்கழித்து, என்ன பண்றீங்க எல்லாம், நா பசியோட கிடக்கற...! என்று சத்தம் போடுவார். சில சமயம் பாதி சாப்பிட்ட நிலையில் கைகழுவிவிட்டு எழுந்து விடுவார். குளிப்பதற்காகக் குளியல் அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி, உட்காரும் பலகையும், செம்பையும் அருகில் வைத்து விட்டு அவருக்கு நாங்கள் அறிவிப்பது வழக்கம். என் தந்தையார் குளிப்பதற்கு உள்ளே செல்லுவார். கொஞ்ச நேரம் பலகையில் மௌனமாக அமர்ந்திருப்பார். பிறகு வெந்நீரை ஒரு கையால் மொண்டு மொண்டு காலில் ஊற்றிக் கொண்டு மற்றொரு கையைச் சுண்டித் தாளம் போட்டுக் கொண்டிருப்பார். தாளச் சத்தத்தைக் கேட்டதும் என் தாயார் போய்ப் பாரும்மா! சிட்டிகை வருது என்று கூச்சல் போடுவார். சில சமயம் சென்னையிலிருந்து அவசரமாக வீடு திரும்பும்போது இரவு நேரமாக இருக்கும். வீட்டில் அவருக்கு ஏற்ற உணவு இருக்காது. சோற்றைப் போட்டு இரசத்தை ஊற்றி அப்பளத்தைப் பொரித்து வைப்பார் என் தாயார். சோற்றைத் தூவென்று துப்பிவிட்டு, அப்பளம் கசக்கிறது என்று கூப்பாடு போடுவார். சாப்பாட்டுக் கிண்ணி மேலே பறக்கும். பிறகு என்னைக் கூப்பிடுவார். அப்பளம் இரசத்துக்குக் கசக்கும். அது என் தாயார் கவனத்துக்கு வருவதில்லை. நான் மீண்டும் போய்ப் பருப்புத் துவையல் அரைத்துக் கொடுத்து சமாதானம் செய்தால்தான் சாப்பிடுவார். பருப்புத் துவையலோடு அப்பளத்தைத் தொட்டுச் சாப்பிடச் சொல்லுவேன். ஆமாம்மா! இப்பத்தான் நல்லாருக்கு என்பார் தந்தை. இரவு நேரங்களில் எழுதும்போது நிறைய ரொட்டியும் ஜாமும் வேண்டும். காலையில் அவர் அறைக்குள் நுழைந்தால் சிகரெட் துண்டும், சாம்பலும், நெருப்புக் குச்சியுமாகக் கிடக்கும். அவர் எழுதிய கையெழுத்துப் படிகளும் இறைந்து கிடக்கும். சிலசமயம் அவர் கையெழுத்துப் படிகளை எடுத்துப் பார்த்தால் ஒன்றின்மேல் ஒன்று ஏறியிருக்கும். ‘v‹d¥gh ï¥go vGâÆU¡»Ö§f? என்று கேட்டால் விளக்கிலே எண்ணெய் தீந்து போச்சு. கூப்பிட்ட ... யாரும் வரலை. இருட்டிலேயே எழுதி முடிச்சுட்ட ... என்று கூறுவார். சுவாரசியமாக எழுதும் நேரங்களில் குப்புறப்படுத்து நெஞ்சுக்கு தலையணையைத் தாங்கலாக வைத்துக்கொண்டு எழுதுவார். சில சமயங்களில் எழுதும் போது தாகமாக இருக்கிறது என்பார். சீரகம் போட்டுக் காய்ச்சி வடித்த நீரைக் கொண்டு போய்க் கொடுத்தால் குடித்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கி விடுவார். அதிகாலை தொடங்கி ஒய்வொழிச்சல் இன்றி வேலை செய்யும் என் தாயார் அசதி காரணமாக இரவு எட்டு மணிக்கே படுத்துக் கொள்வார். படுத்தால் மீண்டும் அவரால் எழுந்திருக்க இயலாது. ஆனால் தந்தையாரோ இரவில் எழுதிக் கொண்டிருக்கும்போது பசியென்பார், நான் எழுந்து ஏதாவது தின்பண்டம் செய்து கொடுக்க வேண்டும். இரவு 1 மணிக்குப் பூசணி அல்வா கேட்பார். நடு இரவில் பல் தேய்த்து விட்டு சாப்பிடுவார். இப்ப அழுத்திப் பல் தேய்ச்சுட்டுக் காலையிலே லேசா துலக்கினாப் போச்சு! என்று சிரித்துக் கொண்டே சொல்வார். எந்த வேலையையும் அனாவசியமாக நீட்டிக் கொண் டிருப்பது என் தந்தையாருக்குப் பிடிக்காத ஒன்று. பல் தேய்ப்பதாக இருந்தாலும் குளிப்பதாக இருந்தாலும், உடையுடுத்துக் கொள்வதாக இருந்தாலும் விரைவில் சுறு சுறுப்பாகக் செய்து முடிக்க வேண்டும்; இல்லா விட்டால் கண்டிப்பார். சிலசமயங்களில் எங்கள் வீட்டில் சமையல்காரர்கள் இருப்பார் கள். என் தந்தையாரின் சுவைக்கு ஏற்பச் சமையல் செய்ய முடியாமல் அவர்கள் விழிப்பார்கள். கோழியை அறுத்துத் துண்டு போடுவதிலும் கூட என் தந்தையாரின் விருப்பமறிந்து துண்டுபோட வேண்டும். இல்லா விட்டால் திட்டிவிடுவார். கோழிக்கறியைச் சமையல்காரன்தான் சமைக்க வேண்டும். நானோ என் தாயாரோ அதில் தலையிடக்கூடாது. ஒருநாள் கோழிக்கறி, சமைக்கும்போது என் தாயாரை உப்புப் போட அனுமதித்ததற்காக அச்சமையல்காரனை வீட்டை ட்டு துரத்தி விட்டார். எங்கள் வீட்டில் வேலை செய்த சமையல் காரர்களுக்கு, அவர்கள் வைக்கும் குழம்பைவிட நாங்கள் வைக்கும் குழம்புதான் மிகப் பிடிக்கும். ஒருமுறை என் தந்தையாரிடம் நற்சான்றிதழ் பெற்றுச் செல்வதற் காக ஒரு சமையல்காரன் வந்தான். இரண்டு நாள் வீட்டிலிருந்து சமைத்துப்போடு. உன்னுடைய சாப்பாடு எப்படி இருக்கிறது என்று சுவைத்துப் பார்த்து விட்டுச் சான்றிதழ் தருகிறேன் என்று என் தந்தையார் கூறினார். முதல்நாள் சமைப்பதாகச் சொல்லி அன்றைய உணவை அவன் பாழடித்தான். ஒரு பெரிய உருண்டைப் புளியை எடுத்துப் பாத்திரத்தில் ஊற வைத்திருந்தான். அப்போது எதேச்சை யாக உள்ளே வந்த என் தந்தையார் அதைப்பார்த்து விட்டு ‘எதற்காக இவ்வளவு புளி ஊற வைத்திருக்கிறாய்? என்று அவனைக் கேட்டார். குழம்புக்கும் இரசத்துக்கும் சேர்த்து ஊற வைத்திருக்கிறேன் என்று அவன் சொன்னான். உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. எப்போதும் குழம்புக்கும் இரசத்துக்கும் தனித் தனியாகப் புளி ஊற வைக்க வேண்டும். ஒன்றாக ஊற வைத்தால் முதல்பாதி மிகுதியாக புளிக்கும்; மறுபாதி துவர்க்கும். அதனால் குழம்பின் சுவையும் கெட்டுவிடும்; இரசத்தின் சுவையும் கெட்டுவிடும். இரண்டாவது நாள் நான் சமைத்தேன். தானும் கற்றுக் கொள்வ தாகச் சொல்லி அச்சமையல்காரன் என் அருகிலிருந்து அன்று கற்றுக் கொண்டான். என் தந்தையாரைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக அயலூரிலிருந்து எங்கள் வீட்டைத் தேடி யாராவது அடிக்கடி வந்து கொண்டிருப்பார்கள். முதல் முறை ஒழுங்காக நடந்து கொண்டவர் களாக இருந்தால் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக்கொள்வார். ஒழுங்காக நடந்து கொள்ளாதவர்கள் வீட்டைத் தேடி மறுமுறை வந்து விட்டால் அவர்கள் பாடு திண்டாட்டந்தான். யாரவ கூப்பிடு!... போடா...! சுட்டமில்லை. போனமுறை வந்திருந்தப்ப பிட்நோட்டீ போடல சாப்பாடு சரியில்லை. ஒழுங்கா வண்டி ஏற்றி விடல. போ போ! வர முடியாது என்று திட்டி அனுப்பி விடுவார். கூட்டத்துக்குப் போகும் போது அவர் எந்த இடத்துக்குப் போகிறாரோ அந்த இடத்தின் தட்பவெப்ப நிலைக்கேற்ப உடை, போர்வை கம்பளிச்சட்டை ஆகியவற்றைப் பெட்டியில் வைத்து அனுப்புவோம். திரும்பி வரும்போது வெறும் பெட்டியும், அழுக்குத் துண்டும் தான் வரும். கேட்பவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விட்டு வந்து விடுவார். ஒருமுறை வெளியூர் சென்றிருந்த போது வைர மோதிரத்தையும் கடிகாரத்தையும் கூட யாருக்கோ கொடுத்துவிட்டு வந்து விட்டார். யாருக்கு அவர் எதைக் கொடுத்தாலும் வீட்டில்வாயைத் திறக்கக் கூடாது. திறந்தால் அன்று வீடு தலையாலங்கானந்தான். இன்றைய பேச்சாளர்கள் கூட்டத்திற்காக வெளியூர் சென்றால் ஆயிரம் ஐநூறு என்று வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். அன்றைய நிலை அப்படியில்லை. என் தந்தையார் கூட்டங்களுக்கு அயலூர் சென்று விட்டு வெறுங்கையோடு திரும்புவதுண்டு; சில நாட்களில் கைப்பணத்தைச் செலவு செய்துவிட்டு வருவதுண்டு. ஆகையால் அவர் கூட்டத்திற்குப் போகிறேன் என்று சொன்னால் என் தாயாருக்குக் குலை நடுங்கும்; தப்புத் திப்பென்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து தமது வெறுப்பை வெளிப்படுத்துவார். தம்மிடம் பணம் கேட்டு விடுவாரோ என்று என் தாயாருக்கு அச்சம். இதைக் குறிப்பால் அறிந்து கொண்டு என்னை அருகில் அழைப்பார் என் தந்தையார். ஏம்மா! சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுட்டா கல்யாணம் நின்னுடும்னு உங்கம்மா நினைக்கறா! என்று கூறுவார். நான் கையை நீட்டுவேன். வளையலைக் சுழற்றி விற்று எடுத்துக் கொண்டு கூட்டத்துக்குப் போய் விடுவார். 1930 ஆம் ஆண்டில் நான் பத்து வயதுப் பெண். அப்போது என் தந்தையார் ஒரு தீவிர தேசியவாதி. காங்கிர மீதும், கதர் மீதும் அவருக்கு அளவு கடந்த பற்று. கதர்த்துணியைத் தோளில் சுமந்து கொண்டு தெருத் தெருவாகச் சென்று விற்று வருவார். வீட்டில் நாங்கள் எல்லாரும் அணிவது கதராடைதான். என் தாயார் அப்போது கழுத்தில் அணிந்திருந்த பத்துபவுன் நகையை விற்று அந்தப் பணத்தில் தாம் எழுதிய கதர் இராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டார். நாங்களே அந்நூலைத் தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பினோம். கைச் செலவுக்குப் பணமில்லாத நேரத்தில் அவருக்குக் காரண மில்லாமல் கோபம் வரும். ஒருமுறை என் தாயார் ஓராண்டுக்குத் தேவையான புளியை வாங்கி இரண்டு பானைகளில் நிரப்பி வைத்திருந்தார். அவற்றைப் பார்த்ததும் வந்ததே கோபம்! புளி! அங்கே பெரிய பானைப்புளி! அப்படிச் சின்னப்பானைப் புளி! எதுக்கு? பத்து வருஷத்துக்குப் புளியா. .. பால அடிப்ப! என்று சத்தம் போடத் தொடங்கி விட்டார். வாத்தியார் சுப்புரத்தனம் என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் நடுக்கந்தான். எப்போதும் அவர் கையில் ஒரு கூட்டம் இருக்கும். வீட்டில் கத்தி, அரிவாள், தடி எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் ஓய்வு வேண்டி என் தந்தையார் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொள்வதும் உண்டு. பள்ளியி லிருந்து மருத்துவ விடுப்பு எடுப்பதற்காக அரசாங்க மருத்துவரிடம் சென்று மருத்துவ சான்றிதழ் (ஆநனஉயட ஊநசவகைஉயவந) கேட்பார். அவர் கொடுக்க மறுத்தால் பத்திரிகையில் எழுதி உன் குட்டை அம்பலப் படுத்துவேன் என்று மிரட்டி விட்டு வந்து விடுவார். அன்று மாலை மருத்துவரே வீடு தேடிவந்து மருத்துவச் சான்றிதழை வழங்கி சமாதானப் படுத்திவிட்டுப் போவார். மருத்துவ மனையில் படுத்துக் கொண்டு அங்கேயே கவிதை எழுதிப் போடுவார். நாங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வருவோம். பிரெஞ்சு நாட்டில் விழிமலை என்றோர் இடமுண்டு. அம்மலை அந் நாட்டு மக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. அம் மலையின் ஊற்றுநீர் மருத்துவத் தன்மை வாய்ந்ததென்றும், அந்நீரை அருந்திய நோயாளிகள் நோய் நீங்கப் பெறுவர் என்றும் பிரெஞ்சு மக்கள் நம்புகின்றனர். அந்தக் காலத்தில் அந்நீரைப் புட்டிகளில் அடைத்துப் புதுவைக்குக் கொண்டுவந்து மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுப்பர். நோயாளிகள் அதை விரும்பி அருந்துவர். ஆனால் என் தந்தையார் அதைக் கைகழுவப் பயன்படுத்துவார். நான் பள்ளி இறுதி வகுப்பு (S.S.L.C) வரைதான் படித்தேன். அதற்குமேல் என் கல்வியைத் தொடர என் வீட்டுச் சூழ்நிலை இடந் தரவில்லை. நான் மேற்படிப்புக்குச் சென்றிருந்தால் என் தந்தையாரின் எழுத்துப்பணி குறைந்திருக்கும். என் இளமைக்கால வாழ்க்கையின் பெரும்பகுதி என் தந்தையாரின் மனங்கோணாமல் அவரைப் பேணுவதிலேயே கழிந்தது. நான் எப்போதும் அப்பாபெண். அவர் உள்ளமறிந்து நடந்து கொள்வதில் கண்ணுங் கருத்துமாக இருப்பேன். ஓர் ஆசிரியர் இரவில் வீட்டுக்கு வந்து எனக்குத் தனிப்படிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண் டிருந்தார். அவர் எனக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது பாப்பா! பாப்பா என்று அறைக்குள்ளிருந்து என் தந்தையார் கூப்பிட்டுக் கொண்டிருப்பார். அவர் தேவைகளைக் கவனித்துக் கொண்டே கல்வி கற்பது எனக்கு மிகவும் கடினமாகத்தான் இருந்தது. இரவு பதினொரு மணிக்கு அவர் தூங்கிய பிறகு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுப் பாடங்களைப் படித்து முடிப்பேன். இரவு எந்நேரம் படுத்தாலும் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளைத் தொடங்கி விடுவேன். குடும்ப விளக்கு நூல் முதல் பகுதி 1942 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் குடும்பப் பணிகளை நான்கைந்து ஆண்டுகள் நான் செம்மையாகச் செய்து கொண்டிருந்த நேரம் அது. என்னைப் பார்த்துத்தான் குடும்ப விளக்கின் தலைவிக்கு உருவம் கொடுத்ததாக என் தந்தையார் அடிக்கடி கூறுவதுண்டு. கொஞ்சநாள் நான் இசையும் கற்றுக் கொண்டேன். சேலத்தி லிருந்து ஓர் இசையாசிரியர் வந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார். இசையில் என் தந்தையாருக்கு ஈடுபாடு அதிகம் என்றாலும், எப்போது பார்த்தாலும் சரிகமபதநி என்று கத்திக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. யார்ரா அவ?... எப்பப்பாத்தாலும் சரிகம பதநின்னுக்கிட்டு... அவனை . வெளிய போகச் சொல்லு.... என்று சத்தம் போடுவார். நானும் என் தம்பி கோபதியும் பள்ளி மாணவர்களாக இருந்த போது எங்களுக்கென்றே சில பாடல்களை எழுதிக் கவிதாமண்டலம் பத்திரிகையில் வெளியிட்டார். கல்வியின் மிக்கதாம் நிற்கையில் நிமிர்ந்துநில் சேரிடம் அறிந்துசேர் மரங்கள் அடர்ந்திருக்கும் காடு என்ற பாடல்கள் அப்போது எழுதப்பட்டவை. நெட்டப்பாக்கம் பள்ளியில் நாங்கள் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளி விழாவில் நடிப்பதற்காக எழுதப்பட்டதே வீரத்தாய் என்ற கவிதை நாடகம். அதில் நான் வீரத்தாயாக நடித்தேன். கோபதி சுதர்மனாக நடித்தான். 21.1.44இல் எனக்கும் புலவர் கண்ணப்பனாருக்கும் திருச்சிராப் பள்ளியில் பதிவுத் திருமணம் நடைபெற்றது. 22.1.44 ஆம் நாள் காலை ஒன்பது மணிக்குப் பெரியார் முன்னிலையில் பாராட்டுக் கூட்டம் கட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. என் திருமணம் நடைபெறப் பெரிதும் முயற்சி எடுத்துக்கொண்டு உறுதுணையாக இருந்தவர்கள் கானாடுகாத்தான் தனவணிகர் திரு. வை.சு. சண்முகம் செட்டியாரும், அவரது துணைவியாரான மஞ்சுளாபாய் அம்மையாரும் ஆவர். மஞ்சுளாபாய் அம்மையார் எங்கள் குடும்பத்தின்பால் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரை எங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாக்கி அத்தை என்று அன்போடு அழைப்பது வழக்கம். எப்போதும் அரசியலிரும் கவிதையிலும் மூழ்கிக் கிடப்பவர் என் தந்தையார். அவர் உலகமே வேறு; உலகியலுக்கு இறங்கி வந்து செயல்படுவது அவருக்குச் சற்றுத் தொல்லையாகத்தான் இருக்கும். அது போன்ற வேளைகளில் மஞ்சுளா பாய் போன்ற நல்ல உள்ளம் படைத்த அன்பர்கள் தாமே முன்வந்து உதவுவது வழக்கம். திருமதி மஞ்சுளாபாய் அவர்களே மாப்பிள்ளை பார்த்து விட்டுத் திடீரென்று ஒருநாள் புதுச்சேரி வந்தார். அவரே ஒட்டடை அடித்து வீட்டைத் தூய்மை செய்தார்; பால் வாங்கிக் கொண்டு வந்தார். பெண் பார்க்கும் படலத்தை உடனிருந்து நடத்தினார். திருமணத்தைப் பற்றி முதன் முறையாக என்னிடம் கேட்டபோது, அப்பாவைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது; அவரைத் தொடர்ந்து செல்வதில்தான் எனக்கு விருப்பம். அப்பாவைக் கேளுங்கள். அவர் விருப்பம் எதுவோ அதுதான் என் விருப்பம் என்று நான் சொன்னேன். பெரியாரைப் பின்பற்றும் தன்மான இயக்கத் தோழர்கள் சடங்குத் திருமணத்தை எதிர்ப்பவர்கள். ஆண் பெண் சமத்துவத்தை வற்புறுத்திப் பேசிய பெரியார் தாலி பெண்ணுக்குப் பூட்டப்படும் அடிமைச் சாசனம் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதனால் சீர்திருத்தத் திருமணங்களில் அன்று தாலிகட்டும் நிகழ்ச்சி இடம் பெறுவதில்லை. எனது திருமணப் பேச்சு நடைபெற்ற போது தாலி அணிவதற்கு என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். அப்போது என் தந்தையார், கட்டிப் பாளையம் சிற்றூர் ஆயிற்றே! அங்கு ஏதாவது எதிர்ப்பும் பூசலும் ஏற்பட்டால் என்ன செய்வது? என்று கூறினார். எதிர்ப்பதற்குத் தானே நாம் இருக்கின்றோம் என்று நான் சொன்னேன். பிறகு புலி வில் கயல் பொறித்த மூவேந்தர் சின்னத்தைத் தங்கத்தால் செய்து என் மங்கல நாணில் அணிவித்தார்கள். அதற்குப் பிறகு எங்கள் குடும்பத் திருமணங்களில் புலிவில்கயல் அணிவது வழக்கமாகி விட்டது. திருமணம் முடிந்து முதன் முறையாக என் கணவரோடு பிறந்தகம் சென்று சில நாட்கள் மகிழ்ச்சியோடு தங்கியிருந்து விட்டுப் புக்ககத்துக்குப் புறப்பட்டேன். இருபதாண்டுகள் இருந்து பழகிய வீட்டையும், உறவையும், குறிப்பாக என் அன்புத் தந்தையாரையும் பிரிந்து வருவது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது; என் தந்தை யாருக்கும் என் பிரிவு மிகவும் வேதனையைக் கொடுத்திருக்க வேண்டும். வழியனுப்பிவிட எங்களோடு வந்த தந்தையார், விழுப்புரம் வந்ததும் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே சென்றுவிட்டார். என்னிடம் சொல்லிக் கொண்டால் நான் கண்ணீர் விடுவேன் என்று அவர் எண்ணியிருக்கலாம். தந்தையார் என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டதால் எனக்கு வருத்தம். கட்டிப்பாளையம் சென்றதும் நான் தந்தையாருக்குக் கடிதம் எழுத வில்லை. தம்பி தங்கையரின் நலன் விசாரித்து அம்மாவுக்குக் கடிதம் எழுதினேன். சென்னையிலிருந்து திரும்பிவந்த தந்தையார், நான் அம்மாவுக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்தவுடன் என் வருத்தத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். என் வருத்தத்தைப் போக்க ஆதரவோடு அன்புக் கடிதம் ஒன்று வரைந்தார். அம்மா! உன் பிரிவு என்னை மிகவும் வருத்துகிறது. உன்னைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதுவையில் இருக்கும் நான் வலிய தோளும் வாளும் இழந்த படைவீரன்போல் இருக்கிறேன் என்று எழுதியிருந்தார். இவ்வரிகளைப் படிக்கத் தொடங்கியதும் என் கண்கள் நீர்க்குளமாகி விட்டன. நினைக்கும்போதெல்லாம் நெஞ்சை உருக்கும் வரிகள், இந்த வரிகள்! திருமணம் என்ற புயல் எனது உயிரைப் புதுவையிலும் உடலைக் கட்டிப்பாளையத்திலும் ஒதுக்கி விட்டதாக அப்போது நான் எண்ணி வருந்தினேன். என் உள்ள நிலையை உணர்ந்த என் கணவரும் உடனே விடுப்பெடுத்துக் கொண்டு என்னோடு புதுவை புறப்பட்டார். நான் புதுவைக்கு இந்த நாளில் வருகிறேன் என்று முன்னதாகவே கடிதம் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம். என் வரவை எதிர்நோக்கி அவர் எப்போதும் திண்ணையிலேயே அமர்ந்திருப்பார். பெருமாள் கோவில் தெரு முனையில் என்னைப் பார்த்ததும் வீட்டுக் குள்ளிருக்கும் என் தாயாரை விளித்து, பழனியம்மா! குடும்ப விளக்கு வருது என்று கூறுவார். என் கணவர் புதுவைக்கு வரும்போதெல்லாம் என் தந்தையாரே கடைக்குச் சென்று மீன் வாங்கிக் கொண்டு வருவார். என் தலைப்பிள்ளையான புகழேந்தி புதுவையில் பிறந்தபோது பிரெஞ்சு நாட்டிலிருந்து இறக்குமதியான சாக்லெட்டைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம் குத்துக் குத்தாக வாரிவழங்கினார். பேரன் புகழேந்தி மீது அவருக்கு அளவு கடந்த விருப்பம். தமக்கு உடம்பு சரியில்லையென்றால் தந்தி கொடுப்பார். நான் குழந்தையோடு புறப்பட்டுச் செல்வேன். புகழேந்தியைப் பார்த்ததும் அவருக்கு உடம்பு குணமாகிவிடும். என் தந்தையாருக்கு உள்ளமும் நாக்கும் ஒன்றுதான். உள்ளத்தில் என்ன நினைக்கிறாரோ அதை எதிர்ப்புகளுக்கஞ்சாமல், பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசிவிடுவார்; எழுதி விடுவார். அதனால் அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும் அவருக்கு எதிரிகள் அதிகம். எதிர்ப்பு அதிகம் ஆக ஆக அவருக்குச் சுறு சுறுப்பு அதிகமாகுமே தவிர சோர்வு ஏற்படாது. அவர் எந்த நிலையிலும் அச்சப்பட்டு நான் பார்த்ததில்லை. இந்தப் பண்புகளால் அவருக்கு ஏற்பட்ட தொல்லைகள் ஏராளம். கல்வித்துறை அதிகாரிகள் வேண்டு மென்றே இவரை அடிக்கடி இடம் மாற்றிக் கொண்டிருப் பார்கள். காரைக்கால், நீராவி, கூனிச்சம்பட்டு, நெட்டப்பாக்கம், முதலியார்ப்பேட்டை ஆகிய வெளியூர்க்காரர் களுக்கும், புதுவையில் கல்வே கல்லூரி முதல் மற்ற முத்திரைப் பாளையம், உருளையன் பேட்டைப் பள்ளிகளுக்கும் அவரைப் பந்தாடிக் கொண்டிருப்பார்கள். அதற்காக என் தந்தையார் கலங்க மாட்டார்; தம் கொள்கைகளையும் விட்டுக் கொடுக்க மாட்டார். கல்லூரி வகுப்புகளுக்குப் பாடம் பயிற்றுவிக்கத்தக்க பெரும் புலமையும் ஆற்றலும் பெற்றிருந்தாலும் சிறுவர்களின் மீது கொண்ட அளவிறந்த பற்றின் காரணமாகக் கீழ் வகுப்புகளுக்கே என் தந்தையார் ஆசிரியராக இருப்பதுண்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியரான பண்டித மணி மு. கதிரேசன் செட்டியார் இதைப்பற்றிக் குறிப்பிட்டு என்ன? பாரதிதாசன் அட்டைக் கிளா வாத்தியார் தானே என்று ஒருமுறை கேவலமாகப் பேசி விட்டார். பண்டிதமணி அடுத்த முறை கூட்டத்தில் பேசப் புதுச்சேரிக்கு வந்த போது, கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து அவ்வாறு பேசியதற்காக அவரை மன்னிப்புக் கேட்கும்படி செய்தார்கள். ஏழை மாணவர்கள்பால் என் தந்தையாருக்கு எப்போதும் அன்பும் பரிவும் உண்டு. தேர்வு மேற்பார்வையாளராக இருக்கும்போது ஏழைப் பிள்ளைகளுக்கு இவரே சொல்லிக் கொடுத்து மதிப்பெண் போட்டுத் தேர்விலும் வெற்றியடையும்படி செய்துவிடுவார். ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கும் சில பெண்கள், தனிப் படிப்புக்காக வீட்டுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் பெண்களுக்குக் கல்வியோடு பண்பாட்டையும் புகட்டுவது இவர் வழக்கம். பெண்கள் இரட்டைச் சடை போட்டுக் கொண்டு வந்தால் இவருக்குப் பிடிக்காது. உடம்பு மறைய ஆடை உடுத்த வேண்டுமென்று வற்புறுத்துவார். பெண்களுக்கு அலங்காரம் தேவையில்லை; தாயுள்ளமே தேவை. என்று அடிக்கடி கூறுவார். என் தந்தையார் எதற்கும் கண்கலங்கமாட்டார். என் தங்கை இரமணிக்குப் பிறகு பிறந்த கைக்குழந்தையொன்று ஏழு தினங் களில் இறந்தபோதுகூட அவர் கண்கலங்கவில்லை. ஆனால் பாரதியாரைப் பற்றி யாராவது பேசினால் அழுவார் - சாகிறேன் என்று யாராவது சொன்னால் பேடித்தனம் என்பார். ஆடை, மீசை ஆகியவற்றின்மீது என் தந்தையார் அதிக அக்கறை காட்டுவது வழக்கம். அவர் அணியும் மேற்சட்டை (Long Coat) அவர் விருப்பப்படி தைக்கப்பட வேண்டும். அவர் விருப்பத்துக்குக் கொஞ்சம் மாறாக இருந்தாலும், தூக்கித் தையற்காரன் முகத்தில் வீசி எறிந்து விடுவார். அவருடைய மீசையை ஒழுங்கு செய்யும்போது சவரத் தொழிலாளி மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவருக்குக் கடுமையான கோபம் வந்துவிடும். மீசை ஒழுங்காக வெட்டிவிடப்பட்டிருக்கிறதா என்று கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பார்ப்பார். என் தந்தையார் ஒரு கறவை மாட்டைப் போன்றவர். கறவை மாட்டை எவ்வளவுக்கெவ்வளவு கவனமாகப் பேணுகின்றோமோ அவ் வளவுக்கவ்வளவு அதிகமாக அது பால் கொடுக்கும். அப்பா விடம் கல்வியும் செல்வமும் சேர்ந்திருக்கிறது. அவரை நன்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று என் தம்பியிடமும், தங்கைகளிடமும் நான் அடிக்கடி கூறுவதுண்டு. அவரைச் சரியாக கவனிக்க வில்லை யென்று எழுதமாட்டார். - திருமதி சரசுவதி கண்ணப்பர் (பாவேந்தர் மகள்) 11. அச்சம் அவர் அறியாதது இவர் பாவேந்தர் என்ற இலக்கியப் பேராற்றின் வடிகால்; புரட்சித் தென்றலில் பூத்த இளவேனில்; தேன் கவிதை தீட்டிய கனக சுப்பு ரத்தினத்தின் ஆண் கவிதை! இவர் கவிதை மொழியான பிரெஞ்சை யும் கரும்பு மொழியான தமிழையும் கற்றுத்தெளிந்தவர், இவருக்குப் பால்ஸாக்கையும் பிடிக்கும்; பரணரையும் பிடிக்கும். பாவேந்தர் தம் வாழ்க்கையில் காதலோடு தொகுத்த பாட்டுக் குறுந்தொகையான இவர், இன்று பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை யும் படைப்புகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார். நான்கைந்து முத்துக்களைக் கோத்துக் கோத்துப் பாவேந்தர் நளினமாக எழுதிய உரைநடை, இவர் கையிலும் கொஞ்சி விளையாடு கிறது. அச்சத்தை அறியாத பாவேந்தர் மாலையில், இக்கட்டுரை மணமிக்க ஒரு பிச்சிப்பூ! நான்கு வயதுக் குழந்தையாக நானிருந்த போது, “நீ சாமிக்குப் பயப்படுவாயா? எனக்குப் பயப்படுவாயா?” என்று ஒரு பையன் என்னைக் கேட்டான். அதை நான் என் தந்தையாரிடம் சொன்னேன். உடனே ‘எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன்’ என்று விடையிறுக்கச் சொல்லி எனக்கு மனவலிமை அளித்தவர் கவிஞர். நெஞ்சுர மிக்க அவரை நினைக்கும்போதெல்லாம் அவரின் எழுத்தாற்றலுக்கு வித்தாக அமைந்த நிகழ்ச்சிகள் இன்றும் என்னுள்ளத்தில் படமாடிக் கொண்டிருக்கின்றன. தன் இளமைப்பருவ நண்பர்களைக் கண்டாலே கவிஞருக்கு எப்போதும் அளவிலா மகிழ்ச்சி. புதுவையில் நீண்ட காலத்துக்கு முன் வேலை நிமித்தமாகப் பிரிந்து விட்ட அரங்கநாதனை மீண்டும் நெட்டப் பாக்கம் சிற்றூரில் சந்தித்த போது துள்ளிக் குதித்தார் கவிஞர். அரங்க நாதன் இளைஞராக இருந்த போது நாடகங்களில் அனுமன் வேடம் ஏற்பது வழக்கம். அதனால் ‘குரங்கு ரங்கநாதன்’ என்று நண்பர்களால் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார். இவ்வடைமொழிக்கு வேறுஒரு காரணமும் உண்டு. கவிஞர் தம் குழாத்துடன் சிறுவயதில் செய்த துடுக்குத் தனங்களில் இந்த அரங்கநாதனுக்கும் முக்கியப் பங்குண்டு. நெட்டப்பாக்கத்தில் வருவாய்த் துறையைச் சார்ந்த கணக்குப் பிள்ளையாக அரங்கநாதன் வேலை பார்க்கும் சமயம், தமிழாசிரியராக வந்து சேர்ந்தார் கவிஞர். நாங்கள் அரங்க நாதனை மாமா என்றும், அவரின் துணைவியாரை அத்தை என்றும் அன்புடன் அழைப்போம். அந்த அம்மையாரின் பெயரும் சுப்புரத்தினம். மிக நெருக்கமாக அவர்களோடு எங்கள் குடும்பம் பழகிக் கொண்டிருந்தது, மாலை வேளையில், அரங்கநாதன் வீட்டுத் திண்ணையில் அரசு அலுவலர் உட்படக் கவிஞர் குழாம் சீட்டு ஆடுவது வழக்கம். புள்ளி ஒன்றுக்கு ஒரு தம்பிடி, கவிஞர் நன்றாகவே சீட்டு ஆடுவார்; தம்பிடிக் காசாகவே ஒரு சிறு மூட்டை கட்டிக் கொண்டு வீடுவந்து சேருவார். ஒரு விடுமுறைநாள் - எல்லாரும் பிற்பகலிலேயே கூடிவிட்டார் கள். மாலை மயங்கிப் பொழுது இருட்டத் தொடங்கிய நேரம், சுறுசுறுப்பாகச் சீட்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. “ஐயோ!” என்று குரல் எழுப்பி, மேலே எழும்பிக் குதித்தார் அரங்கநாதன். ‘அங்க பாரு’... சுப்பு பா... ... பா!” என்று குழறினார். அவர் வாயிலிருந்து சொற்களே வெளிவரவில்லை. கவிஞர் திண்ணையி லிருந்து எட்டி உயரப் பார்த்தார். திண்ணையோரத்தில் சாய்ந்திருந்த பூவரச மரக்கிளையில் பச்சைப் பாம்பு ஒன்று நழுவிக் கொண்டிருந்தது. பச்சைப் பாம்பைக் கண்டு அச்சமேலீட்டால், எழும்பிக் குதித்த அரங்க நாதனை நோக்கிக் கவிஞர் “அந்தக்கால நாடகத்திலே கடலைத் தாண்டிக் குதிக்கறதா பச்சையா புளுகிப் பாடுவ இப்ப, பச்சைப் பாம்பைப் பாத்துட்டு, எம்பிக் குதிக்கிறியே... சரியான அனுமாரப்பா நீ!” என்று சொல்லிவிட்டுக் கலகல என்று நகைத்தார். அரங்கநாதனுக்குப் பழைய நினைவுகள் பளிச்சிட்டன. “கணக்குப் பிள்ளையான எனக்கு இளம்பிராயத்திலே இருந்ததும் அச்சம்; இப்போதும் அச்சந்தான்! கவிஞனான உனக்கு இளம் வயதி லிருந்தே அச்சம் என்பது இன்னதென்று தெரியாமல் போய்விட்டது.” என்று கூறினார் அரங்கநாதன். ‘அச்சந்தவிர்’ என்றார் பாரதி. ‘அச்சத்தின் வேர் மடமை’ என்றார் பாவேந்தர். பாடல்களில் மட்டுமல்லாமல்; வாழ்க்கையிலும் அச்சத்தை அறியாதவர் என்பதற்குப் பல சான்றுகள் உள. ஒரு நிகழ்ச்சி. பாவேந்தரே கூறுகிறார் கேளுங்கள்: “புதுவையில் அடைக்கலமாயிருந்த பாரதியார் குழாத் துக்கு அயல் நாடுகளிலிருந்து அடிக்கடி செய்திகள் வரும். என் மூலமாகத் தான் புரட்சி வீரர்க்குத் தகவல் போய்ச் சேரும். இதைப்பற்றி அன்றைய ஆங்கிலத்துப்பறிவாளர்க்கும் தெரியும். வந்த தகவல் என்ன என்பதை அறிந்து கொள்ளத் துடிப்பார்கள். அவர்களை மடக்கி அனுப்புவதுதான் எங்களுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. மாடசாமி புதுவையில் தங்கியிருந்ததை அறிந்து கொண்டு துப்பறிவாளர்கள் புதுவையில் மொய்த்தார்கள். மாடசாமியைப் புதுவையிலிருந்து அயல் நாட்டுக்கு அனுப்பி விடுவது என்று முடிவு எடுத்தாகி விட்டது. ஆனால் அதுவரைக்கும் மாடசாமியைக் காப்பாற்றியாக வேண்டுமே! மயூரேசன் என்பவர் அன்றைய வால்காட் கம்பெனியில் வேலை செய்தவர். ஆங்கிலத் துப்புத் துலக்கிகளுக்கு அவர் உளவு சொல்லிக் கொண்டிருந்தார். இந்த மயூரேசன் அரவிந்தர் வீட்டிலிருந்த புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய ஐந்து நூல்களை எப்படியோ களவாடிச் சென்று விட்டார். இந்த விபரம் எனக்குத் தெரியும். ஒருநாள் நடராஜாச் சாரியின் நாடகம் பார்த்து விட்டுத் திரும்பிய அரங்கநாதனும் நானும் சற்றும் எதிர்பாராமல் மயூரேசன் வீட்டில் எட்டிப் பார்த்த போது அரவிந்தர் வீட்டிலிருந்து களவாடப்பட்ட புத்தகங்களும் பக்கத்தில் ஒரு கைத் துப்பாக்கியும் இருக்கக் கண்டு, பளிச்செனத் தோன்றிய ஒரு தந்திரமாக, அவற்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டோம். மறுநாள் மாடசாமி யிடம் அந்தத் துப்பாக்கியைத் தந்து ஈஸ்வரன் தருமராஜா கோயில் தெருவிலிருக்கும் பாரதி வீட்டுக்குச் சென்றோம். துப்பறிவோரும் மயூரேசனும் தொடர்வது தெரிந்தது. எதிரிலிருந்த காமாட்சியம்மன் கோவிலில் புகுந்து அதற்கருகிலிருந்த ஒரு வீட்டில் மாடசாமியை ஒளித்துவிட்டேன். மீண்டும் காமாட்சியம்மன் கோவில் உட்புறம் நுழைந்து சுற்று மதிற்சுவர் மீது ஏறிப் பக்கத்தில் உள்ள தெருவில் குதித்து விட நினைத்தேன். கோவிலுக்குள்ளே வந்துவிட்டான் மயூரேசன். கண் இமைக்கும் நேரம். மிக உயர்ந்த மதிற்சுவரினின்று கீழே குதித்தேன். ஓட்டமாக ஓடிப் பாரதி வீட்டிற்குள் புகுந்தேன். வெகுநேரங் கழித்து மாடசாமியை மீட்டு வீடுவந்து சேர்ந்தேன். மறுநாள் பாரதி என்னைப் பார்த்து, “மீண்டும் இந்த உயரத்தி லிருந்து உன்னால் குதிக்க முடியுமா? உனக்குள் கனன்று கொண்டிருந்த புரட்சி எண்ணம் உன் காலுக்கு வலிமையூட்டியுள்ளது?” என்று கூறினார். மக்கள் நலனுக்கான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதில் பாவேந்தர் மிகவும் துணிச்சலானவர்; எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சா தவர். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. தேவி குளம் பீர்மேட்டைத் தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்பதற் காக ஒரு கடையடைப்புப் பேராட்டத்தைப் பாவேந்தர் புதுவையில் நடத்தினார். புதுவையில் அனைத்துக் கட்சிகளையும், ஒன்றுபடுத்திக் கிளர்ச்சி அமைதியான முறையில் நடைபெறத் திட்டம் வகுத்திருந்தார். அவரே வீதி வீதியாய்ச் சென்று ஏற்பாடுகளைக் கவனித்தார். “ஊர்வலம் செல்வதற்குப் போலீஸ் வழங்கிய ஆணையில் சில வீதிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த வீதிகளில்தான் போக வேண்டும்.” காவல் துறை அதிகாரி இப்படி எச்சரித்தார். “அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டு ஒரு சிற்றுண்டி விடுதி நோக்கிச் சென்றார் பாவேந்தர். “நீங்கள் விதிமுறையை மீறி இப்போது போகிறீர்கள்,” என்று மறுபடியும் சற்றுக் கண்டிப்பாகக் கூறிய அதிகாரி, தந்தையாரின் எதிரில் போய் நின்றார். பாவேந்தர் சொன்னார்; நான் வீதியில் நடக்கவும் கூடாதா? அதிகாரி : நீங்கள் நடக்கிறீர்கள்... உங்களின் பின்னால் சில ஆயிரம் பேர் வருகிறார்களே? பாவேந்தர் : அதற்கு நானென்ன செய்வது? அதிகாரி : இது ஓர் ஊர்வலமாகிவிட்டது என்கிறேன் நான். பாவேந்தர் : ஊரிலிருக்கின்ற அத்தனை கடைகளும், நிறுவனங்களும் சாத்தப் பட்டிருக்கையில் ஒரே ஒரு ஓட்டல் மட்டும் திறந்திருப்பதைப் பார்க்க வருகிறார்கள் மக்கள்... அதிகாரி : நீங்கள் இந்தப் பகுதியிலிருந்து போய்விட்டால் மக்கள் கூட்டம் கலைந்து போய்விடும். பாவேந்தர் : நான் ஒன்று சொல்கிறேன்....இந்த ஒரே ஒரு கடையும் மூடப்பட்டு விட்டால் மக்கள் கூட்டம் கலைந்துவிடும். அதிகாரி: கடையைத் திறந்து வைத்திருப்பது தனியொருவரின் விருப்பம். காவல்துறை அதிகாரியுடன் கவிஞர் ஏதோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள், ஏதோ நடக்கப்போகிறது என்று கருதி இவர்களைச் சூழ்கிறார்கள். காவல் அதிகாரி இவரிடம் முறையின்றிப் பேச்சுக் கொடுத்து விட்டதை உணர்கிறார். கவிஞர்பால் அந்த அதிகாரிக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் அவருக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமே! அவர் இதை யோசித்துக் கொண்டிருக்கையில், “ஏம்பா....” என்ற இடிக்குரலை எழுப்பிச் சிற்றுண்டி விடுதியில் நுழைகிறார் பாவேந்தர்; கடை உரிமையாளர் கவிஞரின் நண்பர்தான். அவர் கேட்கிறார்; “நான் கடையை மூடிவிட்டால்.. தேவிகுளம் பீர்மேடு பகுதியைத் தமிழ்நாட்டுடன் சேர்த்துவிடுமா அரசாங்கம்? சொல்லேன் சுப்பு!” பாவேந்தருக்குச் சினம் பொங்கிவிட்டது. அடாவடிப் பேச்சன்றோ இது? “நீயா சாத்தினா கிடைக்காது, நாங்க கேட்கிற உரிமை! நான் சாத்தினா கிடைச்சிடும்! வீண் வம்பை வளர்க்காதீங்க!” என்று எச்சரிக்கை விடுத்தார் பாவேந்தர். கடை சாத்தப்பட்டுவிட்டது. மறுநொடியில் வெளியில் காத் திருந்த மக்கள், ஊரில் வேறு எங்காவது கடை திறந்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று அறிந்துவரக் கலைந்து சென்று விட்டனர். ஒரு சிறிய வெற்றிலை பாக்குக் கடையும் இல்லை... மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன வீதிகள். கடைகளைத் திறக்காவிட்டால் கடும் விளைவு ஏற்படும் என்று எச்சரித்து இரவோடு இரவாகக் கலகக்காரர்கள் சிலரை மாற்றுக் கட்சியினர் அமர்த்தியிருந்தனர். ஒரு சிறிய கலகக் குறியும் இல்லாமல் கிளர்ச்சி நடைபெற வேண்டும் என்ற திட்டத்தில் இறங்கினார் பாவேந்தர்; அவ்வாறே நடைபெற்றது. “உரிமைக்குப் போராடுகிறவர்கள், ஊர் அமைதியைக் குலைப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டும்; அது பொது நலனுக்காக மட்டுமே அமைய வேண்டும்” என்பார் தந்தையார். இவர் படைத்த குடும்ப விளக்குக் கூறுகிறது. தலைவன் தலைவியர்கள் தங்கள் குடும்ப அலைநீங் கியபின்- அயலார் - நிலை தன்னை நாடலாம் என்னாமல் நானிலத்தின் நன்மைக்குப் பாடு படவேண்டும் எப்போதும் - நாடோ ஒரு தீமை கண்டால் ஒதுங்கிநிற்றல் தீமை ... ... ... ... ... ... ... ... ... இழுக்கென்று காணில் நமக்கென்ன என்னாமல் கண்டஅதன் ஆணிவேர் கல்லி அழகுலகைப் - பேணுவதில் நேருற்ற துன்பமெலாம் இன்பம்! ... - மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்) 12. பாடிப்பறந்த குயில்! மறைமலையடிகளின் மகளார் நீலாம்பிகை அம்மையார் தம் தந்தையைப் போல் எழுத்தாற்றல் பெற்றவர், பாவேந்தரின் புதல்வி யருள் எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்றவர் இவரே! பாவேந்தரின் வாழ்க்கை வானில் நாள்தோறும் பளிச்சிட்ட வரலாற்று மின்னல்களை, இவர் வரைகோட்டுப் படமாக்கி அடிக்கடி செய்தித்தாள்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சுவையான நிகழ்ச்சிகளைத் தெரிந்தெடுத்துச் சுவையாக சொல்லும் ஆற்றல் இயல்பாகவே இவரிடம் அமைந்திருக்கிறது. இக்கட்டுரையில் தம் தந்தையாரைப் பற்றிய சில செய்திகளை நினைவுபடுத்திக் கூறியுள்ளார். நானும் என் தங்கை இரமணியும் பள்ளிச் சிறுமிகளாக இருந்த நேரம், நான் எப்போதும் பள்ளிக்கு ஒழுங்காகச் சென்றுவிடுவேன். தங்கை இரமணி அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவாள். இதையெல்லாம் கவனிப்பதற்கு என் தந்தையாருக்கு நேரமிருக்காது. ஆசிரியர் தொழிலும், அரசியலும், கவிதையும் அவருக்குச் சரியாக இருக்கும். ஒரு நாள் நான் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். என் தங்கை இரமணி பள்ளிக்குப் புறப்படாமல் முரண்டுபிடித்துக் கொண்டிருந்தாள். தந்தையார் அறைக்குள் உட்கார்ந்து மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார். என் தாயார் கூச்சலிடத் தொடங்கினார். “பள்ளிக்குப் போகாம சின்னப்பொண்ணு ஏமாத்திக்கிட்டிருக்கிறா. நீங்க அதைப்பத்தி கொஞ்சமாவது அக்கறை எடுத்துக்கறீங்களா.... உங்க வேலையுண்டு நீங்க உண்டுண்ணு இருந்தா பெண்களோட படிப்பு என்னாகிறது?” என்று என் தந்தையாரைப் பார்த்து முறை யிட்டார் என் தாயார். என் தந்தையார் எதுவும் பேசவில்லை. அமைதி யாக எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்தவிதச் சலனமும் தென்படவில்லை. அவ்வாறு அவர் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது எங்கள் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது. நானும் என் தங்கையும் பள்ளிக்குச் சென்று விட்டோம். அடுத்த நாள் காலை நாங்கள் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, என் தந்தையார் மிகவும் அன்போடு “இந்தாம்மா இரமணி! இங்கே வா!” என்று கூப்பிட்டார். நானும் இரமணியும் அவரருகில் சென்றோம். அவர் கையில் ஒருதாள் இருந்தது. அத் தாளில் ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது. அப்பாடலை இசையோடு பாடிக் காட்டினார். அப்பாடல் மிகத் தெளிவாகவும், எங்கள் பிஞ்சுள்ளங் களில் பதியும்படியும் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் மெய் மறந்து எங்கள் தந்தையார் பாடிய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ‘தலை வாரிப் பூச்சூடி’ என்று தொடங்கும் அப்பாடல் ‘தந்தை பெண்ணுக்கு’ என்ற தலைப்பில் இசையமுது முதற்பகுதியில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் தாயினால் அலங்கரிக்கப்பட்டுப் பள்ளிக்கு அனுப்பப்படும் பள்ளிச் சிறுமியின் தோற்றமும், அவள் கண்ணீரும், தந்தையின் அறிவுரையும், கல்வியின் சிறப்பும் மிக அழகாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இப்பாடல் திரைப்படப் பாடலாக வந்து தமிழகத்தில் நல்ல விளம்பரத்தைப் பெற்றதோடு, ஒவ்வொரு பெண்கள் பள்ளியிலும் பாடி ஆடி நடிக்கப்படுகிறது. எங்கள் தாயார் பள்ளி செல்லாமல் பிடிவாதம் செய்த என் தங்கையைப் பற்றி முறையீடு செய்த போது தந்தையார் முகத்தில் சலனமேதுமில்லாமல் எங்களைக் கூர்ந்து நோக்கிய தன் பொருள் எனக்கு இப்போது தான் விளங்கியது. மற்ற தந்தையாராக இருந்தால் தாயாருடன் சேர்ந்து கொண்டு பிள்ளைகளைத் திட்டித்தீர்த்திருப்பர்! ஏன்? அடித்தும் இருப்பர்! எங்கள் தந்தை பாவேந்தர் அல்லரோ? அவர் சிந்தனை உடனே கவிதையின் பக்கம் திரும்பி விட்டது. வீட்டிலே நடந்த இச்சிறுநிகழ்ச்சி, நாட்டுக்கே பாடமாக விளங்கும் இலக்கியமாக மலர்ந்து விட்டது. என் தந்தையாருக்குச் சோதிடத்தில் ஈடுபாடு கிடையாது. எனினும் சோதிடம் வல்லார் ஒருவர் அவருக்கு நெருங்கிய நண்பர். அச் சோதிடர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். சாப்பாட்டு வேளைக்கு! சோதிடமும் சொல்வார். உணவுண்டும் செல்வார்; கவிஞரைத் தவிர. புதுவையில் உள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாவருக்குமே அவர் சோதிடம் கூறுவதுண்டு. அவரிடம் கவிஞருக்குப் பிடிக்காத ‘அம்சம்’ ஒன்று உண்டு! அது ‘நீ பயப்படாதே சுப்புரத்தினம்’ என்று அவர் சொல்வது தான். சோதிடர் நெடுநாளைய நண்பர் என்பதோடு, கவிஞரை விட வயதில் மூத்தவர். இவற்றையெல்லாம் கருதி கவிஞர் ஒன்றும் சொல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்து விடுவார். ஒருநாள் கவிஞருக்குப் பள்ளி விடுமுறை. வழக்கப்படி சோதிடப்புலி வந்தது. கவிஞரும் அவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கப்படி சோதிட நண்பர், “சுப்புரத்தினம்! நான்... பிள்ளை வீட்டுக்குப் போனேன். எலக்சியம் (தேர்தல்) சம்பந்தமாகப் பேசிக் கிட்டிருந்தோம்! அவரை எதிர்த்து நிக்கறவன் சாய்கால் உள்ள ஆளாம்! கொஞ்சம் கவலைப்பட்டார். நான் சொன்னேன். பயப்படாதே! உனக்கு இன்ன ராசியில் இன்னார் இருப்பதால்...! என்று நிறுத்தினார். கவிஞர் எதிர்நோக்கியிருந்த நேரம் வாய்த்துவிட்டது. திடுமென்று சாய்வு நாற்காலியைவிட்டு எழுந்து விட்டார். “ஏண்ணே(ன்) உனக்குக் கொஞ்சமாவது அறிவு கிறிவு இருக்கா? எவ்வளவு பெரிய ஆள் அவன்! இந்த சோசியத்தை நம்பியா பொலீத்திக் (அரசியல்) பண்றான்! நிலைமையை உங்கிட்ட சொன்னான். அதுக்கு நீ பயப்படாதேன்னு சொன்னா என்னா அருத்தம்? நீ வந்தா, இது இப்படியிருக்கு அப்பா! அதுக்குத் தகுந்தமாதிரி நடந்துக்கோ’ ன்னு சொல்லணுமே தவிர, ‘நீ பயப்படாதே’ன்னு சொன்னா அது தப்பில்லையா? ஒருவன் சோசியத்தை நம்பிப் பயந்துவிடுகிறான் என்றோ துணிச்சலா இருக்கிறான் என்றோ சொன்னால் அவனை மடையன் என்றுதா சொல்லணும்’ என்று காட்டமாகத் தாக்கிவிட்டார். வெலவெலத்துப் போய்விட்டார் சோதிடர். “சுப்புரத்தினம்! நான் கிழவன்! கோவிச்சுக்கிறாதே! நீ சொல்றதும் சரிதான்! எல்லோரும் பயந்துக்கிட்டேயே இருக்காங்க! ஆனா, உன்னைப்போல இருக்கிறவங்ககிட்ட அப்படிச் சொல்லுவது தப்பு தான்!” என்று அழாக்குறையாகச் சொன்னார் சோதிடர். “அது இருக்கட்டும் அண்ணே! நீ கையைக் கழுவிக்கிட்டுவா, சாப்பிடலாம்” என்று சோதிடர் தலையில் ‘ஐசை’ வைத்தார் கவிஞர். எதற்கும், எங்கும், யார்க்கும் அஞ்சுவது என்பதே அவர் வாழ்க்கையில் இருந்ததில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி சரியான சான்று. 1955 ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ‘மக்கள் முன்னணி’ என்ற கூட்டமைப்பு வெற்றி பெற்றது. பல்லாயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கவிஞர் சட்ட மன்ற உறுப்பினரானார். மூத்த உறுப்பினர் என்ற முறையில் இவர் தலைமையில்தான் சட்டமன்ற முதல் கூட்டமே துவங்கப்பட்டது. அத் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றோர் உறுப்பினரும் நண்பருமான திருவாளர் உசேன் அவர்கள் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவ்விருந்துக்குக் கவிஞரும் அழைக்கப்பட்டிருந்தார். எல்லாம் தூய நெய்யால் சமைக்கப்பட்ட உயர்தரப் புலால் உணவுகள். கோழி ரோஸ்ட் பரிமாறப்பட்டது. கவிஞர் சுவைத்து உணவு கொண்டிருந்தார். அளவுக்கு மீறி நெய் சேர்க்கப்பட்டிருந்ததால் கவிஞருக்கு உணவு தெவிட்டத் தொடங்கிவிட்டது. விருந்து வைத்தவர் இதைப் பார்த்தார். அருகிலிருந்து ஊறுகாய்த் தட்டத்தைக் கவிஞர் அருகிலே நகர்த்தி வைத்து “*முசியே! இந்த ஊறுகாயைக் கொஞ்சம் சாப்பிடுங்கள்; சரியாகி விடும்!” என்றார். புளிப்புச் சுவையுள்ள ஊறுகாயைக் கவிஞர் சிறிது வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டார். சில வினாடிகள் கழித்து மீண்டும் கவிஞர் கோழியைச் சுவைக்கத் தொடங்கினார். திரு. உசேன் இதை மிக மகிழ்ச்சியோடு கண்டு களித்துக் கொண்டிருந்தார். கவிஞர் திடீரென்று ‘அட! கோழியை ஊறுகாய் வாழ வைத்து விட்டதே!’ என்றார். கவிஞர் சொன்ன கருத்தின் பொருள் விளங்காமல் விழித்தார் விருந்து வைத்த நண்பர். பாவேந்தர் இயற்கையெய்திப் பல ஆண்டுகள் கழித்து 25.4.68 இல் புதுவையில் நடைபெற்ற பாவேந்தர் நினைவு விழாவில் திருவாளர் உசேன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது இவ்விருந்து நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து பின்கண்டவாறு கூறினார். “பாவேந்தர் கூறிய கருத்தின் பொருள் அன்று எனக்குப் புரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகள் கழித்து இப்போது தான் புரிந்தது. செல்வர்கள் மட்டுமே உண்ணக்கூடிய நெய்யில் பொரித்த கோழிக் கறியைப் பெரும்பாலும் ஏழைகள் மட்டுமே உண்ணக்கூடிய ஊறுகாய் வாழ வைத்துவிட்டதே என்றால் - செல்வர்களை ஏழைகளே வாழ வைக்கிறார்கள் என்பது அதன் பொருள். இக்கருத்தை விளக்கவே பாவேந்தர் அவ்வாறு கூறினார். உண்ணும்போதும் உறங்கும்போதும் கூட அவர் சமதர்மச் சிந்தனையோடு வாழ்ந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த சான்றாகும்.” கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன் கீழிருக்கும் கடைக்கால் - எங்கள் சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்! - திருமதி வசந்தா தண்டபாணி 13. தமிழ் தந்த செல்வம் வாத்தியார் - கனக சுப்புரத்தினம் நாட்டுக்குப் பெரிய பாவேந்தராக இருக்கலாம். ஆனால் - வீட்டுக்குத் தாத்தா என்பதில் ஐயமில்லை. பாட்டுத் தாத்தாவின் உறவு பேரன் பேத்தியிடம் எவ்வாறு இருந்தது என்பதை, இக்கட்டுரை படம்பிடித்துக் காட்டுகிறது. காங்கிரசும் கோழிக்கறியும் காமராசருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்பது நாடறிந்த செய்தி. அவருக்குப் பாவேந்தரை மிகவும் பிடித்திருந்தது என்ற செய்தி பலருக்குச் தெரியாது. பாவேந்தரின் விருந்தாளியாக காமராசர் புதுவை வந்திருந்த போது தமது பிஞ்சு நெஞ்சில் பதிவான காட்சிகளைக் கொஞ்சு தமிழில் கூறுகிறார், பாவேந்தரின் மகள் வழிப் பேத்தி தமிழ்ச் செல்வம் முத்தையா. ‘அடடே தின்னும்மா!’ என்று - ஆப்பிள் பழத்தை அன்போது தந்த தாத்தாவுடன் அன்று புதைக்கப்பட்ட தமது ஆசைகளைக் கண்ணீர் கதையாக்கிக் காட்டுகிறார் பேத்தி. 1952 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டு ஆம். அதுதான் என் பிறந்தநாள். நிறைமதி நாளன்று நான் பிறந்தபோது எதிர்விட்டு அம்மாள் பார்க்க வந்தார்களாம். “அக்டோபர் 2-ஆம் தேதி பிறந்திருக்கிறாள். இன்று காந்தியின் பிறந்த நாள். காந்திமதி என்று பெயர் வையுங்கள்” என்று சொல்லிச் சென்றார்களாம். எங்கள் மாமா மன்னர் மன்னன் கூடத்தில் இருந்த தாத்தாவைப் பார்த்து, ‘பெயர் ஏதாவது சொன்னால் மேரியில் பதிந்து விடலாம்’ என்று கூறியபோது தாத்தா உலாவத் தொடங்கினாராம்; அதாவது சிந்திக்கத் தொடங்கி விட்டார் என்பது பொருள். கொஞ்ச நேரம் கழித்து அங்கிருந்த என் பெரியம்மா சரசுவதி, “ஏம்பா, கண்ணகி என்று வைத்தால் என்ன?” என்று கேட்டபோது, “சரி யில்லை அம்மா! கண்ணகி மிக உயர்ந்த குடும்பத்துப் பெண். அவள் படிப்பறிவுள்ளவளாக இருந்தும், வாழ்க்கை தொடங்கிய காலத்தில் இல்லையெனினும், தான் தொல்லைப்படப்பட, தன் அறிவைப் பயன்படுத்தித் தன் கணவனை எதிர்த்துப் போராடி யிருக்கலாம். மாறாக கணவனை இழந்தபிறகே போராடுகிறாள். எனவே, அவளும் அழிந்தாள். கணவனும் அழிந்தான். நாடே அழிந்தது. அவளுடைய வாழ்க்கை என் பேத்திக்கு வேண்டாம். என் பேத்தி தமிழுக்குச் செல்வம்; தமிழ் தந்த செல்வம். எனவே தமிழ்ச் செல்வம்’ என்றுதான் அவளை அழைக்க வேண்டும்; தமிழ்ச் செல்வி’ எனச் சொல்லக் கூடாது என்று கூறினாராம். தாத்தாவின் விருப்பப்படி ‘தமிழ்ச் செல்வம்’ என்று எனக்குப் பெயர் சூட்டப் பட்டது. அறிவுரைகள் அடங்கிய சிறுசிறு கதைகள் எங்கட்குச் சொல்லி, எனக்கும் தம்பி பாண்டியனுக்கும் சிரிப்புக் காட்டித் தாமும் சிரிப்பார் எங்கள் தாத்தா. அதில் ஓர் ஊமையின் கதை, ஊமை ஒருவன் தோப்புக்கு மலங்கழிக்கச் சென்றான். அப்போது அவ்வூர்ப் பணக் காரன் ஒருவனும் சென்றான். பணக்காரனுக்குப் பின்னால் மலத்தில் ஒரு நாவற்பழம் விழுந்தது. ஊமையைக் கவனிக்காத பணக்காரன் நாவற்பழத்தை எடுத்து வேட்டியால் துடைத்து விட்டு வாயில் போட்டுக் கொண்டான். அந்நொடி யில் ஊமை கைதட்டிச் சிரித்தபடி எதிரில் நின்றான். பணக்காரன் அதிர்ந்து போனான். ‘பின்னர் ஊமை தானே’-- என்று நினைத்து அவ்விடத்தை விட்டு நகர முயன்ற போது, ஊமை ஏளனச் சிரிப்புடன் சாடைகாட்டி ‘ஊராரிடம் சொல்லப் போகிறேன்’ என்றானாம். பணக்காரன் மிகவும் அஞ்சி ஊமையின் கைகளைப் பிடித்துக் கெஞ்சி, ‘எவரிடத்திலும் சொல்ல வேண்டாம்; உனக்கு எது வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்று உறுதி கூறினான். ஊமை சிரித்துக் கொண்டே சென்று விட்டான். அன்று மதியம் மேற்படி பணக்காரனின் மிகப் பெரிய அரிசி மண்டிக்குச் சென்றான் ஊமை. அங்கே கடையினுள் அரிசியில் கல்லைச் சில ஆட்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஊமையைப் பார்த்துவிட்டு கடையின் வாசலில் வந்திறங்கிய பணக்காரனுக்குச் சாடை காட்டினார்கள். பணக்காரன் ஊமையை மிரட்ட எண்ணியபோது காலையில் நடந்தது நினைவுக்கு வந்தது. ஊமையை அருகில் அழைத்து ‘கல் கலந்த அரிசியை என் வீட்டிற்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். இனிமேல் அரிசியில் கல் கலக்க மாட்டேன்’ என்று கூறினான். ஊமை சுட்டு விரலைக்காட்டி அசைத்து விட்டுச் சென்றான். அவமானத்துக்கு அஞ்சிய பணக்காரனைக் கொண்டு அந்த ஊமை ஊரார்க்குப் பல நன்மைகள் செய்து விடுகிறான். இந்தக் கதையைத் தாத்தா ஒருநாள் சொல்லவில்லை; பலநாளில் பல்வேறு நிகழ்ச்சிக ளாகச் சொல்லியிருக்கிறார். எனக்கு நினைவு தெரிந்தபிறகு ‘அமைதி’ கதைத் தலைவன் ‘மண்ணாங்கட்டி’ யையும் இந்த ஊமையனையும் நினைவு படுத்திக் கொள்வேன். இளைஞர் இலக்கியப் பாடல்கள் முதலில் எங்களுக்காக எழுதப் பட்டன. தாத்தா இனிமையாகப் பாடல்களை பாடுவதுண்டு. ஆனால் எங்கள் அம்மாயிதான் ‘என்னாவென்று எடுத்துரைப்பேன்; இந்தக் கடைதனில் இருக்கும் பொருள் வரிசையை’ என்று தாத்தாவின் இனிய பொருள் வரிசைப் பாடலை அடிக்கடி பாடிக் காட்டுவார்கள். பின்னர் தம்பி பாண்டியனின் குறும்புச் செயலைக் கண்டித்து அடிக்க மனம் வராத காணத்தால் தான், இளைஞர் இலக்கியப் பாடல்கள் எழுந்தன. புதிதாக வண்ணம் பூசப்பட்ட கதவிலும் அவன் பயங்கர மான ‘ந’னாகாக்கையைப்படமாக வரைந்தான். அதைப்பார்த்து விட்ட தாத்தா கடுஞ்சினத்துடன் அவனை அடிக்கக் கையை ஓங்கிய போது, தம்பி மழலை மொழியால் ‘நான் தான் தாத்தா காக்கா படம் போட்டேன், நல்லா இருக்கா?’ என்றான். குழந்தையை அடித்துத் திருத்த முடியாது என்றுணர்ந்த தாத்தா. சுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே! - நல்ல சுவரிலும் கதவிலும் கிறுக்காதே! என்பன போன்ற பாடல்களை ‘நேர்பட ஒழுகு’ என்ற தலைப்பில் அமைத்துப் பாடினார். அத் தொகுதியில் இடம் பெற்றுள்ள பாடல்களில் இன்னந் தூக்கமா - தம்பீ இன்னந் தூக்கமா என்ற பாடல் தாத்தாவால் அன்றாடம் துயிலெழுப்பப் பாடப் பட்டது. எட்டு மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டியவர்கள் ஏழு மணிவரை படுக்கையில் இருந்தால் என்னவாகும்? எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தாத்தா வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது அம்மா, அம்மாயி முதலானோர், விருந்தினர்க்கு உணவு படைக்கும் போது தடுக்கிட்டு இலைகளைக் கழுவி எடுத்து வருவது, தண்ணீர் வைப்பது, போன்ற வேலைகளை நானே விரும்பி ஏற்பேன். தம்பி தானும் செய்வதாகத் தகராறு செய்வான். எனவே நாங்கள் இருவரும் விருந்தினர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம். அவ்வகையில் விருந்தினர் யாரோ வந்த போது நானும் தம்பியும் செய்த சிறு தொண்டினை நினைத்துப் போற்றி ‘துணைவர் இலக்கணம்’ என்ற தலைப்பில் வந்த கதை போன்ற கவிதையில் குறிப்பிட்டுள்ளார். “உங்கள் சிரிக்கும் சிறுவர் எங்கென்று கேட்க வீட்டுக்கார ராகிய எங்கள் தாயும் தந்தையும் வீட்டுப் பாடம் விரும்பி அங்கொருவீட்டுக் கேகினர் என்றது கேட்டுக் கையலம்பத் திரும்பினர், கண்டனர் இருகையில் தண்ணீர் ஏந்தி நிற்கும் தமிழ்ச்செல்வத்தைப் பாண்டியப் பையனை”. என்று எங்களை கவிதையில் பாராட்டியுள்ளார் என்னருமைப் பாட்டனார். அடுத்து என்னுடைய பிறந்தநாள் ஒன்றிற்காக ‘பிறந்த நாள் இந் நாள்’ என்ற தலைப்பில், கீழ் வரும்பாடலை எழுதினார். பிறந்தநாள் இந்நாள் - பேறெல்லாம் பெற்றுநீ வாழ்க பன்னாள் இனியெல்லாம் நீ - பிறந்தநாள் ... சிறந்த நாட்கள் ஆயின சென்றநாளெல்லாம் செந்தமிழ்த் தொண்டுநாள் ஆகட்டும் - பிறந்தநாள் ... பட்டிலோர் பாவாடை கட்டிக் கொண்டாயா? - நன்று பால்நுரை போற்சட்டை இட்டுக் கொண்டாயா? நன்று ஓட்டுமாம் பழமிதோ ஆப்பின் ஆரஞ்சி பிட்டுமாப் பண்ணியம் உண்ணுவாய் செஞ்சு - நீ - பிறந்தநாள் ... அனைவரும் இங்கே உனைஒன்றே ஒன்று பாடென்றார் இலையா? ஆமாம் கனிஒன்று தோலுரித்துச் சுளையோடு கன்னல் கலந்ததாய்ப் பாடம்மாபாடு! நீ - பிறந்தநாள் ... பெரிய பெண்ணானால் ஆடவாசொல்வார் உஃஉஃ அரியதமிழ்பாடி ஆடவேண்டாமா; ஆமாம் திருவோங்கு செந்தமிழ்ப் பாண்டியன் பாட்டுச் செப்பிய வண்ணமே ஆடிக்காட்டு நீ. - பிறந்தநாள் ... பிறிதொரு முறை நான் படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய குரலை இனிமையாக நம் தமிழோடு ஒப்பிட்டு 15. 4. 62இல் குயில் ஏட்டில் ஒரு பாடல் எழுதி வெளியிட்டார். அண்டை வீட்டின் அறையிலிருந்து புழுவாய்க் காய்ந்த பனைஓலைமேல் கூடல்வாய்த் தண்ணீர் கொட்டும் ஓசை வந்தது, சென்று பார்த்தேன் இந்திப் பாடம் நடத்தினார் ஈச்வரே. அறைக்குள் யாழிசை ஏதென்று சென்றே எட்டிப் பார்த்தேன், பேத்தி நெட்டுருப் பண்ணினாள் நீதி நூல் திரட்டையே. என் சின்னத் தம்பி சேரன் பிறந்த பிறகு முத்தியால் பேட்டை யில் இருக்கும் என் தாத்தாவின் மற்றொரு வீட்டில் நாங்கள் குடி யமர்த்தப்பட்டோம். தாத்தாவும் அம்மாயியும் சேர்ந்து செய்த ஏற்பாடு இது. அங்கு கொஞ்சநாள் வரை மின்சார வசதியில்லாமல் இருந்தது. அதனால் - தாத்தா மிகவும் பாதிக்கப்பட்டார். எப்போதும் அவருக்கு மின்விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். சென்iயிலிருந்து அவர் வரும் போதெல்லாம் எங்களிருவரையும் பனை மட்டை விசிறியால் விசிறிச் சொல்வார். என்னை அன்பாக ‘சின்னக்குட்டி’ என்றே அழைப்பார். தம்பியை ‘மொட்டைப் பையா’ என்று அழைப் பார். விசிறியை எடுத்து 10 போடு என்பார். 10 போடு என்றால் 10 தடவை விசிறு என்று அர்த்தம். நாங்கள் 1,2,3,4,5 என்று விசிறும் போது எண்ணிக்கையை மறந்து விட்டு 10 தடவைக்கு மேல் 100 தடவை விசிறி விட்டுப் போதுமா தாத்தா?’ என்று கேட்போம்; தாத்தாவும் மனமிரங்கி ‘போதும்மா’ என்று கூறி அவிழ்த்துவிட்டு விடுவார். இப்பணியில் தம்பி ஒத்துழைக்கமாட்டான். ‘போ தாத்தா? எப்பப் பாத்தாலும் விசிறு விசிறு என்று சொல்லிக்கிட்டு’ என்பான். நான் மட்டும் பொறுமையுடன் செய்து முடிப்பேன். இவ்வாறு சிறுவர்களுக்காகவும், தமிழுக்காகவும், பகுத் தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், தமிழ் மண்ணில் தோன்றித் தமிழால் உயர்ந்து, தமிழை உயர்த்திய பாவேந்தர் அவர்களின் பேத்தியாகத் தோன்றி, அவரின் தலையாய கொள்கைகளை முழு உணர்வோடு பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பதில் உவகை அடைகிறேன். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள், இரவு எட்டு மணி. சமையல் கூடத்திலிருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. வீட்டின் கூடம் நாற்காலிகளாலும் மேசைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேசைகள் மீது இலைகள் போடப்பட்டு முக்கிய விருந்தினர்க்குப் பிடித்தமான வான்கோழி பிரியாணி, கோழிக்கறி இவைகளெல்லாம் பரிமாறப்பட்டுள்ளன. பலா, வாழை போன்ற கனிகளும் இலையில் இடம் பெற்றிருக்கின்றன. வந்திருந்த முக்கிய விருந்தினர், மற்றவர்கள் உட்பட எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். முக்கிய விருந்தினர் நடுவில் அமர்ந் திருக்க என் தாத்தா ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் அமர்ந்திருக் கின்றோம். ‘என்னுடைய பேத்தி’- முக்கிய விருந்தினர்க்கு என்னை அறிமுகப் படுத்துகிறார் என் தாத்தா. ‘உங்களுடைய மகனோட மகளா?’ ‘இல்ல. என்னுடைய பொண்ணு வசந்தாவோட மக.’ நான் வியப்போடு இதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் பக்கத்தில் என்னுடைய பெரிய தம்பி அமர்ந்து கொண்டிருக் கிறான். ‘உங்க பாட்டு ஏதாவது பாடுமா?’ -- முக்கிய விருந்தினர் கேள்வி. ‘நல்லா பாடும். பாடு.’ - என் தாத்தாவின் பதில். உரத்த குரலில் பாடி முடிக்கின்றேன் நான்; எல்லாரும் சிரித்துக் கொண்டே கைதட்டுகின்றனர். விருந்தின் போது நான் பாடியதைக் கேட்டு, எல்லாரையும் வியக்க வைத்த அந்தப்பாடல்: பலவித வாழைப் பழமொடு கொய்யா பலா விளா பேரிச்சை மாம்பழம் சில வகைக் கிச்சிலை, பொம்பிலி மாசுடன் சீத்தா பழமும், ஆத்தா பழமும் குலை குலையாகக் கொடிமுந்திரியும் இன்னும் பலவித கனிகளுடனே என்ன வென்றே எடுத்துரைப்பேன் நான் இந்தக் கடைதனிலே இருக்கும் பொருள் வரிவை என்ன வென்றே எடுத்துரைப்பேன். முக்கிய விருந்தினர் பெருந்தலைவர் காமராஜ் சிரித்து விட்டு என்னைத் தட்டிக் கொடுககிறார். ஆம். அன்றைய முக்கிய விருந்தின ராகக் கலந்து கொண்டவர் காமராஜர் தான். அவரோடு பக்கத்தில் அமர்ந்து உண்ணும் பேறு என் தாத்தாவால் எனக்குக் கிடைத்தது. மற்றொரு முறை .... கவர்னர் மாளிகை .... விருந்து.... ஆம். எங்கே விருந்தென்றாலும் என்னையும் அழைத்துச் செல்லத் தவற மாட்டார் என் தாத்தா. பலவிதமான உணவு வகைகள் தட்டில் பரிமாறப்பட்டுள் ளன; பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறோம். என்னிடம் ஓர் ஆப்பிளை எடுத்துத் தருகிறார் தாத்தா. நான் அதைப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை மறுபடியும் போகும் போது அங்கேயே வைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பயத்தோடு தின்னாமல் வைத்துக் கொண்டிருக் கிறேன். ‘தின்னு’ - தாத்தாவின் குரல். ‘திரும்ப வைத்துவிட்டுத்தானே போகணும்? நான் தின்னலாமா?’ என்று சந்தேகத்துடன் கேட்கிறேன். ‘அடே, தின்னுமா’ - சிரிக்கின்றார் தாத்தா. இன்னும் எனக்குப் பயம் நீங்கவில்லை... பயத்தோடு பாதியைத் தின்றுவிட்டு, மீதியைத் தம்பிக்குப் பத்திரப்படுத்திக் கொள்கிறேன். கவர்னரிடம் அன்று எனக்கு அறிமுகம். 1964 - ஏப்ரல் 21 ...... ராஜா உயர் நிலைப்பள்ளி .... தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன ..... நானும், என்னுடைய தம்பியும் எழுதிக் கொண்டிருக்கின்றோம். தலைமையாசிரியர் எங்களை நோக்கி வருகிறார். ‘தமிழ்ச் செல்வம் ... தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை யாமே!... பேப்பர்ல வந்திருக்கு... நீ தம்பியைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போ....’ தேர்வை தொடர்ந்து எழுத முடியாத ஏமாற்றம். தாத்தாவின் உடல்நிலை குறித்துத் திகைப்பு. வீட்டிற்குத் திரும்புகிறோம். தாத்தா இறந்த செய்தி காதில் நெருப்புத் துண்டமாய் விழுகிறது. மாலையில் தாத்தாவின் உடல் வேனில் வருகிறது. கலைஞர், கண்ணதாசன், டி.கே. சண்முகம் போன்றோர் கள் மலர் வளையம் வைக்கின்றார்கள். பிறகு யார் யாரோ வருகிறார்கள். போகிறார்கள்! உடல் முழுக்க மாலையில் மூடப்பட்டுள்ளது. நான் அழுது கொண்டே இருக்கிறேன். பலர் என்னைச் சூழ்ந்து கொண்டு - ‘யார் இனி உனக்கு வேண்டியதை வாங்கித் தருவார்?’ என்று கூறி அழுகின்றனர். பின்னர் என்னுடைய தாத்தாவின் உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் புதைக்கப் படுகிறது. ஆம் ... என்னுடைய ஆசைகளும் தான். திருமதி. தமிழ்ச்செல்வி முத்தையா 14. பொது மக்களின் கவி “நமக்குத் தொழில் கவிதை. நாட்டுக் குழைத்தல். இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்றார் பாரதி.” பாரதி கவிதா மண்டலத்திலே பாரதிதாசனுக்குத்தான் முதலிடம். பாட்டுத் திறத்தாலே - வையகத்தை பாலித்திட வேண்டும். பாரதி வழியில் பாரதிதாசனும் தமிழ் பாலிக்கிறார். பாரதி சென்ற தலைமுறையில் வாழ்ந்தார். “பாரதிதாசன்” இன்று வாழ்கிறார். கவிதை யின் அமைப்பையும், அடக்கத்தையும் அளவு கோலாகக் கொண்டு, ஒரு தலைமுறையின் வளர்ச்சியையும், மாறுதலையும், ‘பாரதிதாசன்’ கவிதைகளில் பார்க்கவேண்டும். அமைப்பில் அருமையான மாறுதல்கள் அதிசயிக்கத்தக்க வளர்ச்சி. பரம் பரைக்குப் பெருமை. அடக்கத்திலும் புதுமைகள் உண்டு. இங்குச் சில சொற்கள், இது பொதுமக்களின்யுகம் பாட்டாளி மக்கள் சகாப்தம், புதுமைக்கவி, புரட்சிக்கவி பொதுமக்கள் கவி யாகவே இருந்து தீர வேண்டும். பொது மக்கள் போராட்டங்களை, பொது மக்கள் கனவுகளைப் பிரதி நிதிப்படுத்திக் கவிமழை பொழிந்தாக வேண்டும். “சோஷலிஸ்டு (இந்த) சகாப்தத்தின் தலை சிறந்த கவிஞன்” என்று ஸ்டாலினால் பாராட்டப்படுகிற மாயக்காவ்ஸ்கி சொல்கிறான். “நான் இன்று நமது புதிய வாழ்வைக் கட்டும் பாட்டாளிப் பொது மக்களின் கவியாக மாத்திரமே இருக்க முடியும். வாழ்நாள் முழுவதும் நான் பாடுபட்டது அழகிய பாடல்கள் ஆக்கி, கேட்பவர் காதுகளில் செஞ்சொல் தேனைச் சொரிந்து நெஞ்சை அள்ளுவதற்காக அல்ல. சிலரைச் சில முறைகளைத் தலை குப்புறக் கவிழ்ப்பதே எனது போராட்டம்... எனது 20 ஆண்டு இலக்கியப் பணியில் உண்மையாக நான் இலக்கியக் குத்துச் சண்டையே நடத்தி வந்திருக்கிறேன்.” முதலாளி சமூகத்திட்டத்தில் “கலை கடைச் சரக்காகி விட்டது.” கிறிஸ்டோ, பர்காட்வெல், ‘மாயையும், யதார்த்தமும்’ என்ற நூலில் கூறுவது போல இன்று ‘சமூக உணர்ச்சி சமூகச் செயலிலிருந்து எலும்பி லிருந்து சதைபிய்க்கப்படுவதுபோல், பிய்க்கப்படுகிறது. நிலப்பிரபுத் துவ முதலாளித்துவ - ஏகாதிபத்திய சமூக அமைப்பில் வாழ்கிறார் பாரதிதாசன். ஏகாதிபத்யம், முதலாளித்துவம் நிலப் பிரபுத்துவம் ஒழியப் பாட வேண்டியது பாரதிதாசன் கடமை. பிரிட்டிஷ் ஏகாபத்திய ஒழிப்பில், பரிபூரண அரசுரிமை கொண்ட புதிய தமிழகம் மலர அவர் பாட வேண்டும். சாதிமதக் கொடுமைகளைத் தூள் தூளாக்க, குருட்டும் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய, பகுத்தறிவை விரிவாக்க, தமிழ்ப்பற்றுப் பொங்கியெழ, பெண்ணடிமைத்தனம் நொறுங்க. பொதுவாக நில, பண, முதலாளிகளின் கொடுமையை உணர்த்த சுருங்கச் சொன்னால் தொழிலாளித்துவ சீர்திருத்தமான பாடல் களைத்தந்துள்ளார் பாரதிதாசன். - பொதுவுடமை வீரர் ப. ஜீவானந்தம் 15. பாரதிதாசன் நண்பர் பாரதிதாசனின் ஐம்பத்து நான்காவதாண்டு நிறைவை யொட்டி ஒரு புத்தகம் வெளியாவதுபற்றி நான்மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். பாரதிதாசன் உலகத்தில் தோன்றிப் பல ஆண்டுகள் ஆயினும், அவர் உடம்பிலும் உள்ளத்திலும் இளமை யுடையவ ராகவே விளங்குகின்றார். அவர் ஓர் உண்மைக் கவியாயிருப்பதே அவரது இளமைக்குக் காரணம். பாரதிதாசனை ஒரு வீரக்கவி யென்று சொல்ல வேண்டும். பாரதியார் சொல்லும் “வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தை” பாரதிதாசன் பாடல்களில் காணலாம். அசத்தியத்தை, அஞ்ஞானத்தை, அநியா யத்தைக் கண்டிப்பதில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பற்றவை. “பொய்திகழும் உலகநடை என் சொல்கேன், என்சொல்கேன்” என்று தாயுமானவர் புலம்பினார். “நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!” என்று பாரதியார் நெஞ்சம் குமுறினார். பாரதிதாசனும் அதே நிலையில்தான் தமது பாடல்களைப் பாடியிருக்கிறார். சில இடங்களில் அவரது கண்டனம் மிகவும் கடுமை யாயிருப்பின், அதற்கு அவரது உணர்ச்சி மிகுதியே காரணமாகும். தமிழ்நாட்டில் கவி பாடுவதில் பாரதிதாசனுக்கு நிகரானவர் பாரதிதாசனே ஆவர். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, பல அற்புதப் பாடல்கள் பாடித் தமிழ் அன்னைக்குச் சூட்ட வேண்டு மென்று அவர் அடிமலர்களை வாழ்த்துகின்றேன். - பரலி. சு. நெல்லையப்பர், ஆசிரியர் லோகபகாரி (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) 16. தமிழ்த்தாயின் தவப்புதல்வர் கவிஞர் பாரதிதாசனுக்குப் பல பெரியார்களும் புலவர்களும், இதரத் தமிழ் அறிஞர்களும் புகழ்மாலை சூட்டியிருக்கிறார்கள். அவரைப் புரட்சிக் கவிஞரென்றும் புதுமைக் கலைஞரென்றும், புதுமை அறிஞரென்றும் பலவிதமாகப் பாராட்டியிருக்கிறார்கள். நந் தமிழ் நாட்டில் அவருடைய சிறந்த கவிதைகளைப் போற்றாதார் யாருமே யில்லை என்று சொல்லலாம். அவருடைய புரட்சிக் கொள்கைகளும், புதுமை எண்ணங்களும் சிறுபான்மைக் கூட்டத்தாருக்கு உடன்பா டில்லாமல் இருக்கலாம்; அவருடைய பரந்த கருத்துகளும், சிறந்த அறிவுரை களும் பிற்போக்காளர்களுக்கு வேம்பாக இருக்கலாம்; ஆனால், கவிஞர் பாரதிதாசன் கவிதைகளின் பண்பை அனுபவித் தவர்கள் அனைவரும் அதைத் தீம்பாலமுதமாகக் கொள்வர் என்பதில் ஐயமில்லை. அப்படிப் பட்ட அரும்பெருங் கவியரசை எவ்வளவு புகழ்ந்தாலும் அது மிகைபடக் கூறல் என்னும் குற்றத்தின்பாற் படாது. எவ்வளவு புகழுரை கூறினாலும் அவ்வளவும் தகும் என்று சொல்லும்படியான பெருமை உடையவை நமது அருமைக் கவிஞர் பாரதிதாசனுடைய கவிதைகள் அவருடைய சொல் வளம், கற்பனைத் திறம், அறிவுச் சித்திரம், மொழிப்பற்று, இயக்கத் தொண்டு முதலிய வற்றை நன்கறிந்த தமிழுலகம், இன்று அவரை “தமிழ்த்தாயின் தவச் சேய் வாழி! பல்லாண்டு வாழியவே! என்று மனமுவந்து வாழ்த்துகின்றது. - பத்திரிகை ஆலோசகர், டி. ஏ. வி. நாதன் (நூல்: புரட்சிக்கவிஞர், வெளியீடு: சை.சி.நூ.ப. கழகம் - சென்னை, நான்காம் பதிப்பு 23.11.1983) 17. ஏ! தாழ்ந்த தமிழகமே! தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே !! மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர் கா. சு. பிள்ளை) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்து கொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளித் தமைக்கும் எனது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒரு சில நாட்களுக்கு முன்பே நடந்திருக்கவேண்டும்; பல வேலையின் காரணமாக நான் வரத் தவறியதால் முடியவில்லை; அதற்கு மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய தோழர் தண்டபாணி அவர்கள் பலபடச் சொல்லிவிட்டார். அவர் என்னைப் புரட்சியின் சிகரம் என்றார். புரட்சி இவ்வளவு குள்ளமா யிராது. புரட்சி யின் சிகரம் என்றால், அது இங்கே அமர்ந்திருக்கும் டாக்டர் சிதம்பர நாதன் அவர்களுக்குப் பொருந்தும். அவர் மிகவும் உயரமானவர். ஆகவே, நான் புரட்சியின் சிகரத்திற்குப் பக்கத்திலே, மலைச் சாரலிலே நின்றுகொண்டு, ஏதோ சில பேசலாமென்றிருக்கிறேன். ஒரே இனம் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அளித்த கவிதைகளை நான் பார்த்திருக்கிறேன்; படித்துமிருக்கிறேன் என்பதற்காக மட்டுமல்ல நான் பாரதிதாசன் படத்தைத் திறந்துவைக்கப் பிரியப்படுவது. புரட்சிக் கவியும் நானும் ஒரே இனம்; ஒரே இனக் கொள்கை உடையவர்கள். பொதுமக்கள், துர்ப்பாக்கியவசமாக அவர் நாட்டுக்கு ஆற்றுகின்ற தொண்டைப் பற்றி நினைக்காவிட்டாலும், ஒரு சிறு நன்றியாவது செலுத்தாவிட்டாலும், பல மாணவர்களின் உள்ளங்களிலே பாரதிதாசன் மேல் அன்பு ஊடுருவிப் பாய்ந்து அவருக்கு இப்படிப்பட்ட பாராட்டுதல் விழா நடத்துவது பற்றி பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் கலந்து வருகிறது. பலர் படித்தவர்கள், கட்சிக் கொள்கைகளைப் பரப்பு பவர் என்று கூறுகிறார்கள். புரட்சிக் கவிஞரைப் பற்றிக் குறிப்பிடும்போது, தலைவர் அவர்கள் எடுத்துக் காட்டியது போல; கவிஞர் மாத்திரம் ஓர் கட்சியின் கவி; குறிப்பிட்ட கொள்கைக்காகத் தனது கற்பனா சக்தியையே பாழ்படுத்து கிறவர்; வகுப்புவாதத்தை வளர்க்கிறவர்; நாத்திகர்’ என்று மாத்திரம் ஒரு சிலரால் தூற்றப்படாமல் இருந்தால், அவரது எழுத்துக்கள் ஒவ் வொன்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அவர் அப்படியே இருந்தாலும் இருப்பதற்கக் காரணம் அவரது இயற்கை யல்ல. இந்தத் துரதிர்ஷ்டவசமான நாட்டிலே நானா விதமான கட்சிகள் நடமாடுகின்றன அக்கட்சிகள் என்னும் கூடாரத்திலே கவிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்ற, வெட்ட வெளியிலே கொண்டு வந்து உலவச் செய்ய, தமிழர்களுக்குப் போதிய உள்ளம் இருக்கு மானால், நாங்கள் தடை சொல்ல மாட்டோம். அந்தக் கட்சிக் கவி என்று சொல்லப்படுபவரிடம் சொல்பவர்கள் கட்சி பேதமின்றிக் கவி என்பதற் காக மட்டும் அன்பு செலுத்தினால் போதும்; இன்பம் பெறலாம். எதற்காக? புரட்சிக் கவிஞரின் கருத்தோவியங்களைப் பற்றி அறிஞர் சிதம்பர நாதனைப் போன்றவர்கள்தான் பேசுவது பொருத்த மாகும். ஆனால், என்னைப்போல் அவரது கொள்கையைக் கடைப்பிடித்து, நண்பர் தண்ட பாணி குறிப்பிட்டதுபோல் அவருக்குத் தோழனாகவும் இருந்து, அவரது கருத்துக்களை ஏட்டிலே தீட்டியும், நாட்டிலே பேசியும், செயலிலே காட்டியும் வருபவர்கள் உரிமைக்காகப் பேசலாம். ஆகவே நானும் உரிமைக் காகக் கவிஞரின் படத்தைத் திறந்து வைக்க அருகதையுள்ளவன். அப்படித் திறந்து வைக்கும்போது, கவி கண்ட நுட்பத்தைப் பற்றியோ கலை நயத்தைப் பற்றியோ, காவிய ரசத்தைப் பற்றியோ அல்லது அவைகளுக்கு விளக்க உரையோ, விரிவுரையோ கருப் பொருளோ, பருப்பொருளோ கொடுக்க அல்ல, நான் பேச இருப்பது. நல்லகாலம் இப்பொழுது தமிழிலே பாடுகின்ற, தமிழுக்காக உழைக்கின்ற எல்லாக் கவிவாணர்களையும் தமிழ்நாடு வரவேற்கின்றது. எக் கட்சியினராயினும் செய்கிறதொண்டு தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பயன்படுகிறதென்றால், தமிழனுடைய உள்ளம் குளிர்கிறது. உடனே கவிகளைக் கட்டி அணைக்கத் தனது இரு கரங்களையும் நீட்டுகிறான்; பாராட்டுகிறான்; பரிசளிக்கிறான். இது நாட்டின் நற்காலத்திற்கோர் எடுத்துக்காட்டு. இதற்குமுன் இதற்கு முன்பெல்லாம், கடந்த 10, 15-ஆண்டுகளாக, இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது கிடையாது. கவிகளை மக்கள் கனவிலுங் கூடக் கருதினாரில்லை. தமிழுந் தன்னந்தனியே தமிழரை விட்டுப் பிரிந்து உலவிற்று. உதாரணமாக, அப்பொழு தெல்லாம் தமிழ் ஆசிரியர் களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வளவு தொடர்பு இருந்ததென்றால், முருகனுக்கும் தெய்வ யானைக்கும் எவ்வளவோ அவ்வளவு. தமிழ்ப் பண்டிதர்களுடைய நிலையே தனி. அவர்கள் சரிந்த தலைப்பாகையும், உலர்ந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும், வீட்டில் அரைடஜன் குழந்தைகள் என்ற எண்ணமும், குறைந்த ஊதியமும் அவர் களைப் பரிதாபகரமான நிலையிலே கொண்டுவந்து நிறுத்திற்று. அதிக ஆற்ற லிருந்தும், ஆங்கிலம் கற்காத காரணத்தால் நிலை தாழ்ந்தது. தமிழ னுக்குத் தாய் மொழியைக் கற்றுக் கொடுத்த காரணத்திற்காகச் சம்பளம் குறைந்தது. அவர்களை இகழுவது, தள்ளிவைப்பது ஆகியவைகளின் பிரதிபலிப்பு மாணவர்களிடை யேயும் தென்பட்டது. தமிழ் வகுப்பு என்றால் இஷ்டப்பட்டால் போகிற வகுப்பு என்று நினைத்தார்கள். தமிழ் வகுப்பு நடந்து கொண்டே யிருக்கும். தெய்வ யானையை விட்டுவிட்டு வள்ளியைத் தேடிக் கொண்டு முருகன் போவதுபோல், மாணவர்கள் வாத்தியாரை விட்டுவிட்டு வெளியே போய் விடுவார்கள். ஆனால் அந்த நிலை இன்று மாறிவிட்டது. எங்குச் சென்றாலும் தமிழ், தமிழர் என்ற பேச்சுக்களையே நான் பார்த்திருக்கிறேன். ஓரிரண்டு ஆண்டுகளாக ஆங்கிலத்திலேயே பேசுவேன் என்று சபதஞ் செய்து கொண்டிருந்தவர்கள்கூட, இன்று தமிழிலேயே பேசுவேன்; தமிழிலேயே எழுதுவேன், எண்ணுவேன்’ என்று சொல்லுவதை, தமிழிலே கவிதைகள்; தமிழிலே நாடகங்கள்; தமிழிலே இசைகள்; இவைகளை யாரும் எங்குச் சென்றாலும் பார்க்கலாம். நேற்றுக் கூப்பிட்டிருந்தால் ‘வரமாட்டேன்’ என்று இன இறுமாப்புடன் இருந்திருப்பவர்கள் கூட, இன்று தாமும் தமிழர், தமிழர் இனம் என்று சொல்லிக் கொள்ள முற்படுகிறார்கள். ஆனால், இந்த நிலை என்றும் மாறாமல் நிலைத்திருக்குமா! நேற்றைய உறக்கம் இன்றைய விழிப்பு என்ன! இவ்வளவு நாளுமில்லாததோர் விருப்பு, ஓர் உணர்ச்சி, தாய்மொழிப்பற்று, தன்னினப்பற்று, தமிழர்களிடையே ஏற்பட்டதற்கு, தமிழன் தன்நிலை உணரவந்ததற்குக் காரணம், இந்தப் புரட்சிக்கவி பாரதிதாசன் நேற்று இல்லை; இன்று இருக்கிறார் என்று சொல்லுவேன் என்று நீங்கள் கருதினால், அப்படிச் சொல்பவனல்லன். அவருக்கு முன்னால் இருக்கும் பெயரே, அவருக்கு முன் மாபெருங்கவி பாரதியார் இருந்தார் என்பதை நினைவூட்டுகிறது. கவிகளும் புலவர் களும் இதற்கு முன் இருந்த இழிநிலைக்கும், தமிழினிடையே தமிழர் பற்றுக் கொள்ளாத தற்கும் காரணம்: தமிழ்நாடு என்றால், அது குறுகிய மனப்பான்மை என்றும், தமிழ் மொழி என்றால் அது உத்தி யோகத்திற்கு இலாயக்கான தல்லவென்றும் தமிழ் படித்த ஒருசில வட்டாரங்களிலே உலவிவந்ததும், தமிழ்நாட்டின் எல்லையைக் குறிக்கவந்தால், தமிழனுடைய மேன்மையைப் பண்பைக் குறித்தால், தமிழனுடைய தனித்தன்மையைக் குறித்தால், நாம் நாட்டுக்குச் செய்கின்ற நாச காரியங்கள் என்று தவறாக, தெரியாமல், பாமரர்களும், படித்தவர்களும் கருதினதும் தான் ஆகும். தெரிந்து, பாமரர்களுக்குப் பரிந்து பேசுவதுபோல நடிக்கும் நயவஞ்சகர்கள் நாட்டிலே உண்டாக; எத்தர்களும் ஏமாளிகளும் ஏற் பட்டனர். ஏமாற்றி வாழ்பவன் எத்தன். ஏமாறுபவன் ஏமாளி. தன்னுணர்வு அற்ற மக்களால் தமிழும் தமிழ் அறிஞர்களும் போற்றப் படாமல் மூலை முடுக்குகளிலே தூங்கிக் கிடந்தனர். ஆனால் இன்று, தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புகின்றனர். துக்கப்படுகிறவர்களுடைய துயரத்தைத் துடைக்கின்றனர். தேம்பித் திரியும் கவிவாணர்களைத் தேடிப்பிடித்து, அவர்களை மார்போடு அணைத்து உச்சிமோந்து, முத்தம் கொடுத்து உள்ளம் பூரிக்கின்றனர். இவனா, இவன் என் இனத்தவன். அது தமிழா? அமிழ்தினுமினிய தல்லவா? அவனா, அவன் ஓவியக்காரன்; அவன் ஓவியங்கள், ரவி வர்மா படத்துடன் போட்டியிடும். அவன் தமிழிசைவாணனா? தமிழிசை எந்த விதத்திலும் தெலுங்கைவிடக் குறைந்ததல்லவே! அவன் நடனக் காரன்; அவனது நடனம் வடநாட்டு நடனத்தைவிட ரம்யமாக இருக்கும்! அவன் நடிகன். மேல் நாட்டு நடிகனும் அவனிடம் தோற்று விடுவான். தமிழ்நாட்டு நடிகன் நமது இருதயத்தைத் தான் நடிக்கும் நாடகn மடையாக்கிக் கொள்கிறான். அவன் கவிஞன்; அவன் பாக்களில் ஓர் அடிக்கு, மேல் நாட்டிலே, ஓராயிரம் பொன் கொடுப்பார் என்று இன்று தமிழ் அறிவாளிகளை, சிற்பிகளை, சிந்தனையாளர்களை, கவிஞர்களை, கலைவாணர்களை தமிழகம் போற்றுகின்றது. அந்த நிலை நேற்று இல்லை; இன்று இருக்கிறது, நாளை நீடித்திருக்க வேண்டும். நிலைத்திருந்தால்தான், ஒரு பாரதிதாசன் அல்ல; எண்ணற்ற பாரதிதாசர்கள் தோன்றுவார்கள். அவர்களைக் கண்டு, அவர்கள் காட்டிய வழிகளைத் தமிழகமும் தமிழரும் பின்பற்றிப் பயனடைய ஏதுவாகும். சங்க இலக்கியம் கவிஞர்களையும் மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுதற்கும் இன்னுமொரு காரணமுண்டு. சங்க இலக்கியங் களிலே, நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள் உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர் புரிந்துகொண்டிருக்கலாம். சிலர் புரிந்ததுபோல் பாவனை காட்டலாம். நான் சங்க இலக்கியங்களைப் படித்தவனல்லன்; அல்லது படித்த வனைப் போலப் பாவனை செய்பவனுமல்லன். அதற்காக வெட்கப் படப்போவது மில்லை. சங்க இலக்கியங்களை நான் படிக்க வில்லை என்றால், அதற்குக் காரணம் எனது அறியாமையல்ல. என் கண்முன் சங்க இலக்கியங்கள் நர்த்தன மாடவில்லை. என் கண்முன் அவைகளைக் கொண்டு வந்து புலவர் பெருமக்கள் நிறுத்தவில்லை. யார் அணுகுவார்கள்? நாவலர்களும், பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலு பக்கமும் வேலிகள் அமைத்து, இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில் எழுப்புச் சுவரை எழுப்பி வைத்துக் கொண்டும் “உள்ளே ஆடுது காளி, வேடிக்கைப் பார்க்க வாடி” என்பது போலத் ‘தொல் காப்பியத்தைப் பாரீர் அதன் தொன்மை யைக் காணீர்’ என்றால் அதனிடம் யார் அணுகுவார்? சங்க இலக்கியங் களை வீட்டைவிட்டு வெளியேற்றி, நாட்டிலே நடமாடவிட வேண்டும். நடன சுந்தரிகளாகச் சிறுசிறு பிரதிகள் மூலம், தொல்காப்பியக் கருத்துக்களைத் தொகுத்து வெளியிட்டால்தான் தொல்காப்பியம் சிறு சிறு குழந்தைகளாக ஒவ்வொரு வருடைய மடியிலேயும், மனத்திலேயும் தவழும். ஒவ்வோர் இல்லமும் இலக்கியப் பூங்காவாகக் காட்சியளிக்கும். இன்றைப் புலவர்கள் உண்மையிலேயே இனிமையையும், எளிமை யையும் சங்க இலக்கியத்துடன் சேர்த்து மக்களுக்கு ஊட்டியிருப்பார் களானால், சங்ககாலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கு மானால், அவர்கள் ஒவ்வோர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும் உழவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை என்பதை நினைக்கும் பொழுது தான் அவர்கள் இவ்வளவு நாட்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல, துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது. கம்பனா? இளங்கோவா? புலவர்கள் தாங்கள் நன்மை செய்வதாய்க் கருதிக் கொண்டு, ஒருசில புலவர்களையும், கவிகளையுமே பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தியும், பொது மக்களின் பாராட்டுதலுக்கு, அந்த ஒரு சிலரே அருகதையானவர்கள் என்று சொல்லியும் வருகிறார்கள். அதன்மூலம் உண்மைக் கவிகள், உயிர்க்கவிகள், சங்ககாலப்புலவர்கள், மறைக்கப் படுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள், இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், கம்பனை எந்த அளவுக்கு பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தினார்களோ, அந்த அளவுக்குச் சங்ககாலப் புலவர்களை அறிமுகப் படுத்தவில்லை. கம்பனைத் தெரிந்த பொது மக்கள்தாம் அதிகம் இருப்பார்களே தவிர, இளங் கோவைப் பற்றித் தெரிந்தவர்கள் கொஞ்ச மாகத்தான் இருப்பார்கள். வேண்டுமென்றால், தில்லையில் ஓர் ஓட்டுப் பெட்டியை வைத்துப் பிரச்சாரமில்லாமல், அப்படி இருந்தால் இரு பக்கமும் நடத்தி, கம்பனுக்கும், இளங்கோவுக்கும் ஓட்டுப் போடச் சொன்னால், தேர்தலில் கம்பன்தான் வெற்றி பெறுவான். ஆனால் நாம் நமது கற்பனா சக்தி முன்பு இரு வரையும் நிறுத்திப் பேசச் சொன்னால், கம்பர் இளங் கோவைப் பார்த்து, ‘எனக்கு உயிர் ஊட்டிய உத்தமரே’ என்பர்; ‘எனக்கு அணி அழகு தந்த ஆணழகரே’ என்பர். திரைபோட்டு விட்டனர் அகத்தையும், புறத்தையும், அதிலே காட்டப்பட்ட கருத்துக் களையும், அணிகளையும், உவமைகளையும் நாம் அறியாமற் போனதற்குக் காரணம், பத்திரிகைகள் ஒரு கவியைப்பற்றியே புகழ்வதும், ஒருசில கவிதைகளிலேயே அது எவ்வளவு பழமையில் அழுந்தியிருந்த போதிலும், புதுமை மிளிர்வதாகவும், ரசம் ததும்புவதாகவும் விளம்பரப் படுத்துவதும், மிதிலைச் செல்வியைப் பற்றியும், கோசலைச் செல்வனைப் பற்றியும் மாதாந்தர வெளியீடு களும், ஆண்டு மலர்களும், பிரத்தியேகப் புத்தகங்களும் வெளி யிடுவதும்தான் ஆகும். கம்பனையும், சேக்கிழாரையும் அடிக்கடி பலப்பல நிறங்களிலே காட்டுவதன் மூலம் - கம்ப ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் தத்துவார்த்தங்களாலும், புதுமைக் கருத்துக்களாலும் காட்டி நிலை நாட்டுவதன் மூலம், வள்ளுவனை மக்கள் அதிகம் காண முடிய வில்லை. அகநானூற்றையும், புறநானூற்றையும் மக்கள் மறக்க நேர்ந்தது. கற்றறிந்தோர் ஏற்றும் கலித்தொகையைக் கற்றவரிடம் காண்பதே அரிதாகிவிட்டது. பரிபாடலைப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே, சங்க இலக்கியங்கள் மங்கி, மக்களுடைய மனத்தைப் பெறாமல் போன தற்குக் காரணம் அந்தச் சங்க இலக்கியக் கர்த்தாக்களைக் காண முடியாதபடி நமது கண்முன் திரைபோட்டு விட்டார்கள். ஒரு சிலரையே மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், பொது மக்களுடைய ஆதரவைப் பெறமுடியும்; குறிப்பிட்ட திட்டம் நிறை வேறும்; மக்களுடைய மனத்தை மாசற்ற கவிகளின் மீது பாயவிடாமல், மருண்ட பாதைக்கு இழுத்துச் சென்றால்தான் என்ன! எதிர்க் கட்சியினருக்கு மட்டமா அல்லவா என்று பார்த்துக் கொண்டால் போதும் என்றெண்ணி விடும் நயவஞ்சக நாசக்காவலர்கள் நாட்டிலே உலவி வருகிறார்கள். பிரச்சாரம் கம்பனுக்குப் பிறகு எவ்வளவு கவிவாணர்கள் தோன்றினாலும், கம்பனுக்குமுன் பலர் இருந்தபோதிலும், அவர்கள் வெறும் கவிகளா யிருக்கலாம்; ஆனால் கவிச்சக்ரவர்த்தி கம்பன் தான் என்று சிலர் சொல்லுகிறார்கள். கவிதை எவ்வளவு புரட்சி கரமாயிருந்த போதிலும், கவிதை காலத்தைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இருந்த போதிலும், அவைகளை இயற்றியவர்களைக் கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் போற்றுகின்ற கவியிடம் (நாமக்கல் கவியுடன்) உள்ள கட்சிக் கொள்கைகள் தெரியா. அந்தக் கவியுடன் போட்டியிடக்கூடிய புரட்சிக்கவியிடம் (பாரதிதாசன்) உள்ள காலத்துக் கேற்ற கருத்துக்கள் கட்சிக் கொள்கைகளாகத் தெரியும். உடனே இந்தக் கவியைக் கட்சிக்கவி, கற்பனாசக்தியைக் குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாழ்படுத்திவிடுகிறவர் என்று பொது மக்களுக்கு அறிமுகப்படுத்திவிடுவார்கள். அறிவிழந்த மக்கள் அதை நம்பிக் கவிதைகளைக் கைவிடுவார்கள். காரணம் இல்லாமல் இல்லை ஏன் புரட்சிக்கவியைப் புத்துலகச் சிற்பியாக மக்கள்முன் கொண்டு வந்து நிறுத்துவதில்லையென்றால், அவருடைய புதுமைக் கருத்துக்களைக் காணும்படி மக்களைத் தூண்டுவதில்லையென்றால் காரணமில்லாமலில்லை. மக்கள் புரட்சிக் கவியின் உண்மை உருவத்தைப் பார்த்துவிட்டால், அவர்களால் தூக்கிவைக்கப்பட்ட கவிகள் தொப்பென்று கீழே விழுந்து விடுவார்கள். கவிகளுக்கு மதிப்புக் குறையும்; போற்றினவர்கள் பிழைப்பும் கெடும். இளங் கோவைப் பற்றி மக்கள் அறிய ஆரம்பித்து விட்டால், ‘சிலம்பு’ நாட்டிலே ஒலிக்க ஆரம்பித்துவிட்டால், கம்பனுக்கும் கம்ப ராமாயணத்துக்கும் அவ்வளவு மதிப்பு இராது. மேன்செஸ்டர், கிளாஸ்கோ முதலிய இடங்களி லிருந்து மெல்லிய துணிகள் வருகின்றன என்றால், லாங்கிளாத்துக்கு அவ்வளவு கிராக்கி இருக்காது என்பது மட்டுமல்ல; சேலம் ஆறு - ஏழு முழ வேட்டி களுக்கும் மதிப்பு இருக்காது அமதாபாத் புடவைகள் ஆமோகமாகக் கிடைக்கின்றன என்றால் ஆரணங்குகள் பெங்களூர்ப் புடவையை எப்படி விரும்புவர்? கம்பனைப் பற்றி நான் குறை கூறுவதாக நினைக்கக் கூடாது. உங்களிடமுள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஒரு சிலரைப் போற்றுவதன் மூலம்தான் புகழடைய முடியும்; நமது புலமை மிளிரும் என்ற நினைப்பு ஒழிய வேண்டும். பாண்டியன் பரிசு இந்த முறையில் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு குறையைப் போக்குவதாக இருக்கிறது. பாண்டியன் பரிசு, சங்ககால இலக்கியங்களி லுள்ள உவமைகளையும், அணிகளையும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளுமாறு இயற்றப் பட்டிருப்பதைக் காணலாம். பாடலுக்கு லட்சணம் படித்தவுடன் இலேசில் புரிந்து கொள்ளக்கூடாது என்றும், புலமைக்கு லட்சணம் பிறர் கண்டு பயப்பட வேண்டும் என்றும் கருது கிறார்கள். பாரதிதாசனின் காவியத்தைப் பார்க்க, படித்து உணர, இலக்கணம் தேவையில்லை; இலக்கியங்களைப் படித்திருக்க வேண்டுவதில்லை; நிகண்டு தேவையில்லை; பேராசிரியர்கள் உதவி தேவையில்லை. ஆனால் இதைப்புலவர்கள் சிலர் வெறுக்கின்றனர்; மறுக்கின்றனர்! எளிய நடையினை எழுதுவது ஓர் ஆற்றலா என்று தம்மால் எழுத முடியா விட்டாலும் ஏளனம் பண்ணுகின்றனர்! புலவர்களுக்கே பழக்கம் ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ, அல்லது அதில் ஏதாவது குறையோ காணாவிட்டால், சில புலவர்களுக்குத் தூக்கமே வராது. திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவுரை என்று திரு. கலியாணசுந்தரனாரால் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்படும். அந்தப் புத்தகம் அச்சில் இருக்கின்ற அதே நேரத்தில் அதே அச்சுக் கூடத்திலேயே திரு. வி. க. வுக்குச் சில கேள்விகள் என்று ஓர் துண்டுப்பிரசுரம் வெளி யாகும். ஒருவர் போட்ட புத்தகத்திற்கு இன்னொருவர் மறுப்பு எழுதா விட்டால் அவருக்கு நிம்மதி ஏற்படாது. காரணம், அவர்களிடம் மூல தனம் குறைவு. ஒருவர் எடுத்து ஆளவேண்டுமென்றிருந்த அணியை, இன்னொருவர் கையாண்டிருப்பார். ஆகவே, எழுதியதில் குற்றங்கள் கண்டு பிடித்து அவரது பிழைப்பையும் கெடுத்து விடவேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் மீதும் குற்றமில்லை! அவர்களிடம் எண்ணற்ற கருத்துக்கள் ஊறுவதில்லை. கடந்த ஐந்து ஆறு ஆண்டு களாக நானும் பார்க்கிறேன்; பாரதியார், சுந்தரம் பிள்ளையைத் தவிர மேல் நாடுகளில் உள்ளது போலக் கலையைக் காலத்தின் கண்ணாடி யாக்குகிறார்களா; அல்லது கலையைக் கடைவீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறார்களா? அவர்களது பாக்களிலே எழுச்சி இருக்கிறதா? அதனால் நாடு உயர்ச்சியடைய ஏதாவது மார்க்கமுண்டா? என்றால் இல்லை; காரணம் புலவர்களின் பிற் போக்கான நோக்கமே. நான் ஒரு புலவரைப் பார்த்து, ‘தோழரே! அணுகுண்டு கண்டு பிடித்தது எவ்வளவு ஆச்சரியம்! அதன் அழிவு சக்தியைக் கேட்டீரா?’ என்றால், “அது என்னப்பா பெரிது; ஆங்கிலேயனோ அமெரிக்கனோ தான் அழிவு சக்தியை ஏற்படுத்த, அந்த ஆயுதத்தைக் கையிலேந்த வேண்டும். நம் பரமசிவம் நெற்றிக் கண்ணைத் திறந்தால் போதும், கண்ணிலிருந்து நெருப்பு ஜ்வாலைகள் பறக்கும்; எதிரே உள்ள அத்தனை பொருள்களும் சாம்பலாகிவிடும்; என்று பதில் சொல்லுவார். ‘அது இருக்க இது ஏன்?’ என்ற பிற்போக்கான நோக்கமும், சோம்பேறித்தனமும்தான் காரணம். அது இருக்க இது ஏன்? ‘அது இருக்க இது ஏன்? என்று மேல்நாடுகளிலே கருதி இருப் பார்களானால், ஆளில்லா விமானத்திற்குப் பிறகு அணுகுண்டு கண்டு பிடித்திருக்க முடியுமா? தொல்காப்பியம் நமக்கு இருக்கும்போது, நமக்கு வேறென்ன வேண்டும் என்றிருந்தால், அகமும் சிலப்பதிகார மும் கிடைத் திருக்க வழியுண்டா? சிலப்பதிகாரமே போதுமென்றிருந் தால், கலிங் கத்துப்பரணி கிடைத்திருக்குமா? கலிங்கத்துப் பரணியே போதுமென் றிருந்தால் மனோன்மணீயம் தோன்றியிருக்க முடியுமா? மனோன் மணீயம் போதுமென்றிருந்தால், பாரதியாரின் தேசிய கீதங்களைக் கேட்டிருக்க முடியுமா! பாரதியாரின் தேசிய கீதங்களே போது மென்றிருந்தால், தேசிகவிநாயகம் பிள்ளையின் தாயினுமினிய அன்பு குழைத்தூட்டும் பாக்களைப் பார்த்திருக்க முடியாது. தேசிக விநாயகம் பிள்ளையே போதுமென்றிருந்தால், நாமக் கல்லாரின் “கத்தி யின்றிரத்த மின்றி” என்ற புதுமாதிரியான சண்டைத் தத்துவப் பாடலைக் கண்டிருக்க முடியுமா? அது போலத்தான் நாமக்கல்லாரே போதுமென்றிருந்தால் ‘கொலை வாளினை எடடா! மிகு கொடியோர் செயலறவே’ என்னும் பாரதி தாசனின் உணர்ச்சி மிக்க புரட்சிகரமான பாடலைக் கேட்டிருக்க முடியாது. காலத்தின் சிருஷ்டி கர்த்தா பாரதிதாசன், மேல்நாட்டுக் கவிகளைப்போல் கலையைக் காலத்தின் கண்ணாடியாக்குகிறார். காலத்தையே சிருஷ்டிக்கிறார் காலத்தையே சிருஷ்டிக்கிறார் என்பதுமாத்திர மல்ல; காலத்தை மாற்றுகிறார். காலத்தை மாற்றுகிறார் என்பது மட்டுமல்ல; மாறிய காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் என்பது மாத்திர மல்ல, சமயம் கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார். தென்றல் வளரும், நிலவு வளரும்; செல்வம் வளரும். அவை போல அவரது கவிதை களும் வளர வேண்டும். பத்துப் பேர்கள் ஆனால், அவைகள் வளரக்கூடாது என்று ஒரு பத்துப் பேர்கள் - அந்தப் பத்துப் பேர்களுடைய பெயரையும் அரசியல் மேடையா யிருந்தால் குறிப்பிட்டிருப்பேன். இஃது அறிவு மேடையானதால் குறிப் பிடாமல் விடுகிறேன். கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்க ளெல்லோரும், தங்களைத் தவிர வேறு யாரும் சங்க இலக்கியங்களை அறிய முடியாது; அப்படியே அறிந்தாலும் பொது மக்களின் ஆதர விற்குத் தங்களைத்தவிர வேறுயாரும் அருகதை அற்றவர்கள் என்று கருதுகிறார்கள். கையில் ஊமையர் ஒரு மாதத்திற்கு முன் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந் தொகையில், ஓர் உவமையைப் படித்தேன். இந்தக் காலத்தில் கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வித்தியாசத்தைப் பாருங்கள்! இந்தக் காலத்துப் புலவர்கள் எந்தக் கருத்தை ஓர் அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் கூறிவிட்டார்; அந்த அடிதான் ‘கையில் ஊமையன்’ என்பதாகும். ஒரு தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப் பாருங்கள்! கட்டுக்கடங்காத காளை; இருந்தாலும் கட்டுப் படுகிறான் இரு கண்களுக்கு மனத்தில் ஏதோ நினைக்கிறான். அதை எதிரேயுள்ள கட்டழ கியிடம் சொல்ல முடியவில்லை; எதைப் போல் என்றால் - காலைநேரம் காட்டிலே ஓர் பாறையிலே வெண்ணெய் இருக்கிறது; கையில் ஊமையன் இதற்குக் காவல்; காலைக் கதிரவன் காலையில் எழுந்து தனது இளங்கதிர்களைப் பாய்ச்சுகிறான். வெண்ணெய் உருகுகிறது. வெண்ணெய் உருகுவதைப் பார்க்கிறான். பார்த்ததும் ஐயோ! வெண்ணெய் உருகுகிறதே’ என்று கூறலாம். ஆனால் வாயில்லை. நேரே ஓடிப்போய் எல்லாம் உருகுவதற்குள் எடுக்கலாம்; ஆனால் கையில்லை. கதிரவன் இந்தக் கையில் ஊமையனின் கதியற்ற நிலையை அறியான். அவன் அவனது வேலையைச் செய்கிறான். அவன் பிரபஞ்சத்திற்கும் சொந்தம். காவலாளிக்குக் கையில்லை, வாய் ஊமையே தவிர கண் மாத்திர மிருக்கிறது இந்தக் கோரக் காட்சியைக் காண. அதைப் போலவே கண் மாத்திரம் இருக்கிறது கட்டழகியைக் காண ஆனால் சுய மரியாதை இல்லாததாலோ, சுதந்திர உணர்ச்சி இல்லாததாலோ கை யில்லை (கையில் துணிவில்லை) அவளது கரத்தைப் பிடிக்க. அந்த வடிவழகியைக் கண்டு ஏதோ பேச வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் சமுதாயக் கட்டுப்பாடுகள் அவனது வாயை மூடிவிட்டன. எவ்வளவு அருமையாக ஒருவன் ஒருத்தியைச் சமுதாயக் கட்டுப்பாடு களால் தொடமுடியாமல் கஷ்டப்படுகிறான் என்பதை ஒரு சிறு அடியில் விளக்குகிறார், ‘கையிலூமன் வெண்ணெய் உருகாது பாதுகாத்தாற் போன்று” என்று. மறக்கலாம், ஆனால் மறைக்க முடியாது சங்க இலக்கியங்களின் இன்பங்களைச் சொல்லிக் கொண்டிருந் தால், இன்று முழுவதுஞ் சொல்லிக் கொண்டிருக்க லாம். சங்க இலக்கிய நுட்பத்தை அனுபவிக்கவேண்டிய இடங்களை, நமக்கு ஏற்ற எளிய முறையில் அளிப்பது என்றால், அந்தத் துறையில் பாரதிதாசன் நாட்டுக்கும் நமக்கும் செய்துள்ள தொண்டினை மறந்தாலும் மறக்கலாம்; ஆனால் மறைக்க முடியாது. பாரதிதாசன் தரும் இலக்கியச் சுவையை அனுபவிக்க இலக்கணம் கற்றிருக்க வேண்டியதில்லை. பாரதிதாசன் பாக்களைப் படித்தவுடன் அவை நமது இரத்தத்தோடு இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலே ஊறுகிறது; சுவைத்தால் ருசிக்கிறது; படிக்கிறோம்; பாரதிதாசன் ஆகிறோம், படிக்கிறோம்; நாமும் பாடலாமா என்று நினைக்கிறோம். படிக்கிறோம்; தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்கிறோம். ஆனால், சில புலவர்கள் அதிலே இலக்கண அமைப்பு இல்லை; என்னலாம். அஃது அவர்களது ஓய்வுநேர வேலையாக இருக்கட்டும். காரியத்திலே ஈடுபடுகிற நாம், ஓட்டைச் சுட்டியாயிருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று கருதுகிறோம். கவைக்குதவுமா கற்க நிகண்டு தேவையில்லையே. பாட்டிலே ஏதாவது எளிமையுடன் இனிமை மாத்திரம் கலந்துவிடாமல் எழுச்சியும் கலந்திருக்கிறதா, புரிகிறதா, புரிந்து பயனடையலாமா என்று பார்க்கிறோம். நாம்தான் பெரும் பான்மை, அவர்கள் குறைந்த எண்ணிக்கை என்று சொல்லி ஓரிடத்தில் கூறுவது போலப் பாட்டைப் படித்தவுடன் புரிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்; கடின நடையிலே கவிதைகளை விரும்புபவர்கள் எண் கொஞ்சந்தான், அவர்கள் பாரதிதாசனின் பாக்கள் எந்தச் சின்னங்கள் மட்டமானவை என்று தேடித் திரிபவர்கள். நாம்தான் சுவையை அப்படியே அனுபவிப் பவர்கள். பயனடைகிறோம்; காரணம் எளிய இனிய நடை. இதுவரை அவரது நடையைப் பற்றிச் சொன்னேன். அவர் எடுத்துக் கொள்ளும் பொருள் என்றால், அவர் கொடுக்கும் தலையங்கங்களென்றால், அவை புரட்சிகரமாயிருக்கும்; புதுமையாயிருக்கும். இரண்டு நாக்குகள் ஒரு காலத்திலே, தமிழகத்திலே சாலைகளையும், சோலை களையும் கண்டு களித்துச் சந்தனக் காடுகளிலே, சந்தம் அமைத்துப் பண் பாடினார்கள். பிற்காலத்திலே, அதாவது இடைக்காலத்திலே, வாழ்வு இந்த லோகம் அந்த லோகமாகப் பிரிந்தது. பேரம்பலம், சிற்றம் பலம் என்பது போல. மாயா வாழ்வு மனித வாழ்வு என்று ஏற்பட்டது. இடைக்காலப் புலவர்களின் உள்ளங்களிலே ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட காட்சிகள் தோன்றி மறைந்தன. ஒரே உதட்டில் இரண்டு நாக்குகள் புரண்டன. குன்றைப் பற்றிப் பாடுகின்ற நேரத்திலே,அந்த லோகம், அந்த வாழ்வு என்ற எண்ணங்கள் தோன்ற, அந்தக் குன்று முருகனுடைய தோளாகவும், அதுவும் வள்ளியிடம் கொஞ்சிய தோளாகவும் காட்சி யளித்ததே தவிர, மலைச் சாரலிலே வளைந்து ஓடும் ஆறு; கரடு முரடான பாதை; அவைகளைத் தாண்டி மலை மீதிருந்து கீழே பார்த்தால் காடு தெரியும் காட்சி; காடுகளிலே சிறுத்தை யும், புலியும் உலவும் காட்சி அங்கு வேடுவரும் வில்லியரும் ஆடுகிற வேட்டை; ஆகிய இயற்கை எழில், அந்த விநாடி தோன்றவில்லை. கற்பனைக் கொலை இன்று நாடக மேடைகளில் நடக்கிற வள்ளித் திருமணத் திற்கும், அதிலிருந்துதான் இது கற்பனையானதோ என்று எண்ணும்படியான ஓர் இயற்கை நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்; பண்டைக் காலப் புலவர்களின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தையும், இடைக்காலத்திலே இரட்டை வாழ்க்கையி னிடையே புராண மெத்தையில் புரண்ட புலவர்களின் உள்ளத்தையும் இந்தச் சிறு படப்பிடிப்பு தெளிவாக்கும் என நம்புகிறேன். ஓர் தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக்கொண்டு வந்தவன் முன் ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள்; நல்ல அழகி; பக்கத்திலே பளிங்கு நீரோடை கட்டழகன் அந்த மங்கையை மணந்து கொள்ள இச்சைப் படுகிறான். மணந்து கொள்வதென்றால் இந்தக் காலத்தைப்போலப் பொருத்தம் பார்க்க ஐயரைத் தேடுவது தேவையில்லாதிருந்த காலம் அது. காதலர் இருவரும் கண்களாற் பேசினார்கள். வாய் அச்சுப் பதுமை போலிருந்த போதிலும் அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள் அஞ்சாதே அஞ்சுகமே என்றான். ஆனால், சற்று நேரத்தில் ஓர் அலறல் கேட்கிறது. அது என்னவென்று கேட்கிறாள். அந்த ஏந்திழையாள். அது என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிறும் யானையின் குரல் என்றான், பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது. ஐயோ, யானையா! அச்சமாயிருக்கிற தென்றாள். ‘அச்சமானால் அருகே வா’, என்றான் வந்தாள்; அணைத்துக் கொண்டான்!! திருமணம் முற்றிற்று!!! இந்த ஒரு சம்பவத்தைப் பிற்காலத்தில் வள்ளி கதையாக்கி, அந்த வீரனை வேலனாக்கி, கிழவனாக்கி, தேனும் தினைமாவும் கேட்டான் என்று சொல்லி, வளையற்காரனாக்கி விட்டார்கள். வைதீகத்தைப் புகுத்தி, மூடநம்பிக்கையை வளர்க்கும் பகுத்தறிவிற் கொவ்வாத ஏடுகள் இருக்குமானால் அவை குற்றம் என்று கருதப்பட்ட காலம். இதனால் அந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போல் அப்போது கவிதைகள் எழுந்தன. இடைக் காலத்திற்குத் தகுந்தாற்போல், இன்றைய வள்ளிகதை போன்றவைகள் இயற்றப்பட்டன. காலத்திற்கேற்றவாறு தான் கவிதைகள் இயற்றியிருக்கிறார்கள் என்றால் காலம் என்னும் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்ளாதவன் சிறந்த கவியாக மாட்டான். அவன் கோர்ட்டுகளில் உள்ளவர்களைப்போல, ஒரு காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துவைக்கும் ரிகார்டுபேர் வழி, அவன் அழகாக நெல்மணிகளைச் சேகரித்து மிராசுதாருக்குக் கொடுக்கும் பண்ணையாள். அவன் சிறந்த கவியாகமாட்டான் சிருஷ்டி கர்த்தாவாக மாட்டான். எக்காலத்திலும் ஜீவித்திருக்கும் உயிர்க் கவியாக மாட்டான். காலமெனும் சிறை இடைக்காலக் கவிகளும் அதற்குப் பின்னால் ஏற்பட்ட அநேக கவிகளும். காலமென்னும் சிறையிலே தங்களைத் தாங்களே ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் அதினின்றும் வரமுயன்றால், அதைச் சுற்றி மதமெனும் மண்டபச் சுவரை ஏறிக்குதிக்க வேண்டும். ஆதலால்தான் அந்தக் கவிகளுக்கு, ஆண்டவனின் அவதார லீலைகளைப் பற்றியும், கைலைக்கும் திருப்பதிக்குமுள்ள தொடர்பைப் பற்றியும், தேவாதி தேவர்களைப் பற்றியும், தேவாதி தேவன் கௌதமர் ஆசிரமத்திலே செய்த ஆபாசத்தைப் பற்றியும் எழுத எண்ணம் பிறந்ததே ஒழிய, காடுகளைப் பற்றியோ, மாடுகளைப் பற்றியோ, மலைகளைப் பற்றியோ கவிதைகள் செய்யவில்லை . செய்ய வில்லையா? அடாது! காலைக் கதிரவனைப் பற்றியும் மாலை மதியத்தைப் பற்றியும் பாட்டுக்களில்லையா? இதோ பாரு என்று சொல்லலாம்; இருக்கின்றன. ஆனால் வைதிகமெனும் குறுக்குச் சங்கிலியுடனே பிணைக்கப் பட்டிருக்கின்றன. கவிதா ரசத்துடனேயே அவை கல்லூரி மாணவர் களின் நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன. அதனால்தான் நமது புரட்சிக்கவி அந்த இரண்டையும் வெட்டு என்கிறார்; கூரில்லாத வாளைக் கூராக்கு என்கிறார். படிஇல்லாத குளத்திற்குப் படி கட்டு என்கிறார். குன்று இல்லாத இடத்திலே செய் குன்றாவது செய் என்கிறார். குள்ள உள்ளத்தைக் கொலை செய் என்கிறார். கூனாதே, நிமிர்ந்து நட என்கிறார். மேகத்திலிருந்து நிலவொளி வெளியே வரட்டும் என்கிறார். அந்த லோகத்தைப் பற்றிப் பாடாதே; இந்த லோகத்தைப் பற்றிப் பாடு என்கிறார். நாம் வாழும் இந்த இடத்தைப் பாடு என்கிறார். காலத்துக்கு அடிமையாகாதே என்கிறார்; இலக்கணக் கட்டுப் பாட்டுக்குப் பயப்படாமல் பாடு என்கிறார். அதனால்தான் அவரைப் “புரட்சிக் கவி” என்று அழைக்கிறோம்; உயிர்க்கவி உண்மைக்கவி என அழைக்கிறோம். புரட்சிப் புதுமை புரட்சிக்கவி என்றுதான் அழைக்கிறோமே ஒழிய, புரட்சியில் முதற்கவி என்றழைக்கவில்லை. அவர் இந்த லோகத்தைப்பற்றி இவ் வளவு புரட்சிகரமாகப் பாடுவதற்குக் காரணம் அவர் வாழும் புதுவை ஆகும். புதுவையானது பிரான்சு நாட்டைச் சேர்ந்தது. பிரான்சு சுதந்திரத் தின் பிறப்பிடம். நாம் எல்லாம் ராஜாதி ராஜர்களைப் போற்றிய நேரத்தில், அங்கு அரசர்களைச் சிறையில் அடைத்த காலம். அரண் மனைகளை ஆசிரமங்களாக அநியாயக் கோட்டைகளாக ஆக்கிய நேரத்திலெல்லாம் அங்குப் பாஸ்டிலி உடைக்கப்பட்ட நேரம். ஆண்டான் அடிமை என்ற வார்த்தைகள் இங்கு உலவிய நேரத்தி லெல்லாம் அங்குச் சுதந்திரம், விடுதலை என்ற கோஷங்கள் வானைக் கிழித்த நேரம். அந்தப் பிரான்சின் சாயல். அந்தப்பிரான்சின் தென்றல் அவர் வசிக்கும் புதுவையில் வீசுவதால்தான் அவர் கொடுக்கும் தலைப்புக்கள் புரட்சிகரமானதாக - புத்துலக கருத்துக்களைக் கொண்டிலங்குவதாக இருக்கின்றன. யாருக்குத் தெரியும்? பல கவிகளுக்கு, அவர்கள் பாடுகிற பாட்டுக்களைப்பற்றி அவர் களுக்கே தெரியாது. ஆனைமுகனைப் பற்றி அழகாகப் பாடுவார்கள்; துதிக்கையைப் பார்த்ததுண்டா? அதன் அகல நீளமென்ன வென்றால் தெரியாது. ஊர்வசியும் ரம்பையும் சிறந்த நாட்டியக்காரிகள்; அவர்க ளிருப்பது தெய்வலோகம் என்றால், கேள்வி ஞானமே ஒழிய அனுபவ மேது? பத்துத்தலை ராவணனைப்பற்றிப் பாடுகிறார்களென்றால், இராவணனைப் பார்த்ததேது? பரமசிவன் பார்வதியுடன் ரிஷபவாகன ரூபராய்த் திடீர் திடீரெனத் தோன்றி மறைகிறார் என்றால், என்றாவது கண்டதுண்டா? படித்ததை எழுதுகிறார், கேட்டதை ஒப்புவிக் கிறார். அதாவது ஒருவர் கேள்விப்பட்டு எழுதுவார். சொல்லுவார் சொன்னதைக் கேட்டவர் அதையே எழுதுவார். இது பரம்பரை என்பதே தவிர கண்டதை - பார்ப்பதை அனுபவப் பூர்வமாக எழுதுகிறார்கள் என்பதற்கில்லை. சிந்தனை சொல்லிற்று பாரதிதாசன் மாத்திரம்தான், தான் கண்டதை எழுதுகிறார்; பார்த்ததை எழுதுகிறார், புரியாத விஷயங்கள் தெரியாத விஷயங்கள் ஜோலிக்கே போகமாட்டார்; காணாத கடவுளைப் பற்றி எழுதமாட்டார்; இன்று இல்லாவிட்டாலும் நாளை பரிகாசத்திற்கு இடமாகும் என்று நான் வேதாந்தத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கையாயிருக்கும்; சங்கராச் சாரி பொருளா தாரத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கையா யிருக்கும். மானையும் மடந்தையையும்பற்றிப் பாடவேண்டிய புலவர்கள், ஆறு முகத்தைப் பற்றியும், ஆறுமுகத்தில் எந்த முகம் வள்ளிக்கு முத்தம் கொடுத்த சொந்த முகம் என்பதைப் பற்றியும், பரம சிவத்தின் வேலா யுதத்தைப்பற்றியும், அந்தவேல் மொட்டையா யிருந்தால், மேருமலை யின் எந்தப் பாகம் தீட்ட உபயோகப்படும் என்பதைப் பற்றியும் பாடினால் வேடிக்கை யாயிருக்கும் என்பது மட்டுமல்ல; ஏதோ ஒரு புலவர் கஞ்சாப் புகையில் கப்சா அடிக்கிறார் என்றுதானே நினைக்க நேரிடும்? பண்டிதர்களின் பரம்பரையிலே, பாரதிதாசனும் கொஞ்ச நாள் இருந்தார். கவி பாடினார்; மற்றவர்களைப் போல மயிலையும் முருகனையும் பற்றிப் பாட்டுக்கள் பாடினார். வள்ளியைப் பற்றி லாலிகள் பாடினார். அவரது பாக்களும் வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வைத்த நேரத்தில், மஞ்சள் பெட்டியில் வைத்துப் பூசிக்கப்பட்டன. இதைப் பார்த்தார் நம் கவிஞர். நாம் இவ்வளவு நாட்களாகப் புளுகி விட்டோமே; எவ்வளவு மக்களை மருளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம்; அவர்களுக்கு உண்மையை உரைக்க வில்லையே; நாம் அகப்பட்டுக் கொண்டோமே; நெற்றிக்கண் பரமசிவத்தைப் பாடிவிட்டு, பிறகு ஓர் பகுத்தறிவுவாதி, ‘நீ பரமசிவத்தைப் பார்த்தாயா?” என்று கேட்டால் என்ன சொல்வது என்று சிந்தித்தார். அந்தச் சிந்தனை அவருக்குச் சொன்னது, ‘உனக்குக் கவிதைபாடக் கயிலாயம் தானா தேவை. கடவுள் தானா வேண்டும்? சுனையைப்பற்றிப் பாடு; பாறையைப்பற்றிப் பாடு; தென்றலைப் பற்றிப் பாடு; நீல வானைப் பற்றிப் பாடு; கோல விழியைப் பற்றிப் பாடு; முழுநிலவைப் பற்றிப் பாடு; கூர்வாளைப் பற்றிப் பாடு; வீரனின் தோளைப் பற்றிப் பாடு; வட்டத்தாமரையைப் பற்றிப் பாடு; அவை உன் பேனாமுனையின் கட்டளைக்குக் காத்துக் கிடக்கின்றன’ என்று இதை ‘ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னும் அவரது கவிதையிலே பார்க்கலாம். அது அவரது கவிதை மட்டுமல்ல, அவரது சுய சரித்திரமுமாகும். அவர் செய்தது நம்பத் தகாதவைகளை நம்புவதா? நம்பும்படி நாட்டு மக்களை நிர்ப்பந்திப்பதா? இதைவிட நயவஞ்சகச் செயல் வேறொன்றுமில்லை. அந்த லோகமே வேண்டாமென்று இந்த லோகத்துக்கு வந்தார். கடவுள் முதற் கொண்டு கர்ப்பத்தடை வரைக்கும். காதலிலிருந்து விதவை மறுமணம் வரைக்கும். சுண்ணாம்பு இடிக்கிற பெண்ணின் பாட்டி லிருந்து ஆலைச் சங்கு நாதம் வரைக்கும். அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதை, கண்டுகளிப்பதை, நாம் பாடவேண்டு மென்றிருந் ததைப் பாடினார்; பாடுகிறார் நாம் பார்ப்போம்! இந்தக் கட்டழகியின் கண்ணீருக்காவது ஒரு பாட்டுப்பாட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் பாட முடியாது அதை பாரதிதாசன் பாடுவார். நமது வேலையை அவர் செய்து தருகிறார். நாம் விதவைகளைப் பார்க்கிறோம்; அவர்கள் பூவணியாத கோலத்தைப் பார்க்கிறோம்; அவர்கள் கன்னத்தில் வழிந்து காய்ந்து போன நீரைப் பார்க்கிறோம் தேம்புதலைக் கேட்கிறோம். மமதையாளர் அவர்களுக்கு மணவாளர்களும் தேவையா என்று சொல்லுவதைக் கேட்கிறோம். அவர்களே மாளவேண்டிய வயதில் காமரசம் பருகுவதற்காகக் கன்னிகைகளைத் தேடுவதைப் பார்க்கிறோம்; தாத்தாவுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் தாழ்வாரத்திலே தனியே புரள் வதைப் பார்க்கிறோம். அவளது கண்ணீர் தலையணையை நனைத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்; பார்த்துக் கருத்தை வெளியிடக் கவிதைகள் காட்டலாமா என்று நினைக்கிறோம். ஆனால், முடிய வில்லை. கவிஞர் பாரதிதாசன் அதைக் கவிதையால் பாடுகிறார். பாடி, ‘இதைத்தானே தம்பி நீ பாட வேண்டுமென்று நினைத்தாய்?’ என்று காட்டுகிறார். நாம் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். அவர் கவிதை களிலே, அந்த லோகத்தைப் பற்றியோ, அந்த வாழ்வைப் பற்றியோ இருக்காது. காதற்ற ஊசி பட்டினத்தடிகள் காலத்திலிருந்துதான் மாய வாழ்க்கை பற்றி மக்கள் அதிகம் நினைக்க ஆரம்பித்தனர். ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்ற மாயா வாழ்க்கைத் தத்துவம் இன்றும் உலவுகிறது. நாடகங்களிலே நீங்கள் இதைப் பார்த் திருக்கலாம். அங்கிருந்து அரசன் வருவான். அரசனைப் பார்த்து ஒருவன் கேட்பான், ‘இந்த அரண்மனை யாருக்குச் சொந்தம்; இந்த நந்தவனம் யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டி யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டி யிலுள்ள இருபது லட்சம் யாருக்குச் சொந்தம்?’ என்று அரசன், ‘யாருக்கும் சொந்தமல்ல’ என்று சொல்லுவான். உண்மையிலே அவன் இறந்துபிறகு அதை அவன் மகன் அனுபவிப்பான்; மகனில்லாவிட்டால் மருமகன் அனுபவிப்பான்; மருமகன் இல்லாவிட்டால் அவனது வாரிசுகளில் ஒருவன் அனுபவிப் பான். வாரிசுமில்லாவிட்டால் தர்ம கர்த்தாக்கள் அனுபவிப்பார்கள். தர்மகர்த்தாக்கள் இல்லாவிட்டால், நிரந்தரதர் மகர்த்தர்களாகிய நமது சர்க்கார் அனுபவிப்பார்கள். இதை மக்கள் உணருவதில்லை. உணர அவர்கள் மனம் இடம் கொடுக்காது. அந்த ‘மாயம்’ எந்த அளவிற்கு மயக்கத்தை மக்களிடையே உண்டாக்கிற்று என்றால், நாற்பது வயது ஆளைப் பார்த்து, ‘என்ன, சௌக்கியமாயிருக்கிறீர்களா?’ என்றால், சௌக்கியமா யிருக்கிறேன்; இல்லை என்று மேல் ஸ்தாயி இறங்கிக் கீழ் ஸ்தாயியிலே சொல்லுவான். அப்படிச் சொல்வதிலே சுரங் குறைந்திருக்குமென்பதோடு மட்டுமல்ல; பேச்சுடன் பெருமூச்சும் கலந்து வரும். அந்தக் கலப்பு கேட்டவனுக்கே பயமும் கவலையையும் உண்டாக்கிவிடும். நல்லாயிருக்கிறேன் என்று சொன்னால் என்ன? மேல் நாடுகளிலே ஆங்கிலத்திலே ஹெள டு யு டு என்றால் உடனே ஓ.கே. (நன்றாயிருக்கிறேன்) என்று சொல்லுவார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்கிறார்கள். நாம் ஏதோ இருக்கிறோம்; பத்து வயதிலே பரதேசியாகி, பரலோகத்தைப் பற்றி, மாயத்தைப் பற்றி, ‘ காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்று பாடுகிறோம். இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு சார்? எல்லாம் மாயவாழ்வு; இது சதம் என்றா கருதுகிறீர்கள் என்று உண்மையிலேயே, தெரிந்தோ தெரியாமலோ எண்ணுகிறவர்கள், ஏட்டிலே தீட்டுகிறவர் கள், நம்மவரில் அநேகம் பேர் இருக்கின்றனர். அழைத்தால் ‘சிவனே, அப்பா, உனது பாதாரவிந்தம் எப்போது கிடைக்கும்’ என்று சிலைக்கு முன் கதறுகிற ஒரு சைவரிடம், ஒரு வேளை பரம சிவன் போல் யாராவது முன்னால் வந்து, ‘பக்தா பயப்படாதே, எழுந்திரு! உனது சிவ நேசத்தைக் கண்டு உள்ளம் பூரித்தேன். இன்று முதல் நீ என்னுடன் இரண்டறக் கலந்து கொள்ளலாம் வா!’ என்று அழைத்தால் போவதற்கு அவர் தயாராயிருப்பாரா? கேட்கிறேன். என்ன சொல்லுவார் அப்போது? ‘பிரபோ! தாங்கள் காட்சியளித்தது போதும்’ என்பார். அப்பொழுதுதான் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தன் மகன், பி.எல். முதல் வகுப்பிலே பாசாக வேண்டாமா என நினைப்பார். தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடித்துவைக்க வேண்டுமே என்று நினைப்பார் போன வருடம் பாங்கியிலே போட்ட 9 ஆயிரம் எப்போது 10 ஆயிரமாக ஆகும் என்று எண்ணுவார். ஈசனைப் பற்றிய எண்ணம் தோன்றாது. உண்மையிலேயே அவர்கள் பக்தியில் அர்த்தமிருக்கிறதா? மாயவாழ்க்கைப் பேச்சில் நிஜம் இருக்குமா என்றால் இல்லை. இவைகளெல்லாம் மக்களை மயக்கி, அவர்கள் உழைப்பிலே வாழ்வதற்காக நயவஞ்சகர்களால் வகுக்கப் பட்ட சூழ்ச்சியான வழிகள். மக்கள், இதை நம்பி இந்த வழியிலே போய்த் தடுமாறு கிறார்கள். புரட்சி மனப்பான்மையைத் தீர்த்தவைகள் விழுப்புரம் ஜங்ஷனிலிருந்துகொண்டு பாண்டிக்குப் போகிறவன் வழி பார்ப்பது போலவும், திருச்சி ஜங்ஷனிலுள்ளவன் மதராசுக்குப் போவதற்கு விளிப்பது போலவும், மக்கள் பிறந்தவுடனே அண்ணாந்து மேலே பார்த்துக்கொண்டு, ‘அப்பா, இதைவிட்டு எப்போது அந்த லோகத்திற்கு வருவேன்’ என்று, இந்த லோகத்தை ஒரு ஜங்ஷனாக்கி விட்டார்கள். சமணர்கள் காலத்தில் நிலையாமைத் தத்துவம் கொஞ்சம் வளர ஆரம்பித்தது. மணிமேகலையில் ஓர் இடத்தில் யாக்கை நிலையாமை பற்றி ஆசிரியர், சுதமதியின் வாயின் மூலம் கூறி யிருக்கிறார். சுதமதி, மணி மேகலையின் தோழி. மலர் வனத்திலே மணி மேகலையைக் கண்ட அரச குமாரன் (உதயகுமாரன்) ‘மானே! மயிலே! மரகதமே!’ என்று கூறுகின்றான். கூறிக்கொண்டே கிட்ட வருகிறான். அப்போது சுதமதி கூறுகிறாள். “வினையில் வந்தது; வினைக்கு விளையாவது; புனைவது நீங்கிற் புலால் பறத்திடுவது; மூப்புவிளி வுடையது; தீப்பிணி யிருக்கை; பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்- மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து” - மணிமேகலை “மானே என்கிறீரே, அங்கே என்ன இருக்கின்றது? தோல், தோலைப் பிய்த்தால் இரத்தம், சீழ்; இவற்றிலா காமரசம் பருகலாமென்று வந்தீர்?” என்று யாக்கை நிலையாமையைப் பற்றிக் கூறுகிறாள். காம வேகத்தை அடக்குவதற்காகச் கதமதி அரசகுமாரனிடம் யாக்கை நிலையாமையைப் பற்றிக் கூறினது போல, மக்களின் மனோவேகத்தை அடக்க மாயா வாழ்வைப் புகுத்தினார்கள் சில நயவஞ்சகர்கள், எத்தர்கள், நல்லவர்களைப் போல் நடித்தார்கள் ஏமாளிகள். இந்த லோகத்தில் கஷ்டப் படாமல், அந்த லோகத்தில் சுகம் கிடைக்கும்; இந்த லோகத்தில் நடக்கிற அநியாயங்களுக்கு அந்த லோகத்தில் நீதி கிடைக்கும் என்றெண்ணி, எவ்வளவோ கொடுமைகளை எவர் இழைத்தாலும் அது எம்பெருமான் இட்ட கட்டளை என்று சொல்லவும் முடியாமல். விழுங்காமல் அனுபவித் தார்கள். அனுபவிக்கிறார்கள். மாயா வாழ்வு, விதி, அந்த லோகம் என்பவைகளெல்லாம் புரட்சி மனப்பான்மையைத் தீய்த்து விட்டன. வேறு நாடாயிருந்தால்? இல்லாவிட்டால் 150 ஆண்டுகளாக இவ்வளவு பெரிய நாடு, பரந்ததொரு விஸ்தீரணத்தைக் கொண்ட நாடு, பலப் பல புராணப் பெருமைகளைக் கொண்ட நாடு அந்நியனுடைய ஆட்சியிலே இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது பார்த்திருக் கிறீர்களா? மேல்நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு ஒரு தடவை புரட்சி என்று படிப்போம். கலையிலே புரட்சி; நடையுடை பாவனையிலே புரட்சி; பொருளாதாரத்தில் புரட்சி; எல்லாவற்றிலும் எங்கும் புரட்சி என்று படிப்போம். இங்கு ஏதாவது புரட்சி உண்டா என்றால் இல்லை. (இன்று இல்லா விட்டால் நாளையாவது ஏற்படுமா?) வங்கத்திலே பஞ்சம் ஏற்பட்டது. பட்டினியால் பல லட்சம் பேர் பிணமாயினர். அந்தப் பிணத்தை நாயும் நரியும் இழுத்தன என்ற இந்தக் காட்சி - என்ற இந்த நிலை மேல் நாடுகளிலே, வேறு நாடுகளிலே மட்டும் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அப்பொழுதே புரட்சி நடந் திருக்கும். ஆனால் துர்ப்பாக்கியமான இந்நாட்டிலே அது கிடையாது. ஏன் ஏற்படவில்லை? ஆங்கிலேயனுடைய ஆயுதங் களுக்கு அஞ்சியா; இல்லை. புரட்சி மனப்பான்மையையே நமது கவிதைகளும், காவியங் களும் அடக்கி விடுகின்றன; ஆதலால்தான். இருந்தால் என்ன? இறந்தால் என்ன? அதனால்தான் நமது கவி பாரதிதாசன் இந்த லோகத்தைப் பற்றி பாடுகிறார். இந்த லோகத்தில் நீ பிறந்தது வாழ; வாழ என்றால் நிம்மதியுடன் வாழ; பிறரைச் சுரண்டாமல் வாழ; பிறரை வஞ்சித்தால் தான் வாழலாம் என்ற எண்ணமில்லாமல்; சுதந்திரமாய் வாழு என்கிறார். உருதிலே சிறந்த கவியான இக்பால் என்பவர் வாழ்க்கையைப்பற்றிக் குறிப்பிடும்போது, அச்சமற்ற வாழ்க்கை தேவை என்றார். அச்சமற்ற வாழ்க்கை என்றால் அந்நியருக்கு அச்சமற்ற வாழ்க்கை அறியா மைக்கு அச்சமற்ற வாழ்க்கை; சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு அச்ச மற்ற வாழ்க்கை. அந்த அச்சமற்ற வாழ்க்கையைத்தான் தமிழன் நடத்த வேண்டும். அதற்கு இடையூறாக எந்தக் கட்டுப்பாடுகள் வந்த போதிலும், தூள் தூளாக்க வேண்டும். இதைத் ‘தாயின் மேலாணை, தமிழக மேலாணை, தூய என் தமிழ் மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன், என்று அவர் பாட்டில் கூறுகிறார் அவர் கவிதைகளிலே இந்த லோகத்தை பற்றி, இந்த வாழ்வைப் பற்றி, வாழ்கின்ற முறையைப் பற்றித்தான் இருக்கும். இதுதான் தேவை. அவன் ஏன் ஏழை? பூர்வ ஜென்மத்தில் செய்த பாவம். அவன் ஏன் பணக்காரனாயிருக்கிறான்? அவன் செய்த புண்ணியம். அவன் ஏன் தூங்காமலும் வேலை செய்துகொண்டே இருக் கிறான்; இவன் ஏன் கவலையில்லாமல் தூங்குகிறான்? அவா ளவாள் பூர்வ ஜென்ம பலன். தாழ்ந்த ஜாதி என்ற ஒன்று ஏன் இருக்க வேண்டும்? உயர்ந்த ஜாதி இருக்கிறபொழுது தாழ்ந்த ஜாதி இருந்து தானே ஆகும் என்ற வேதாந்தங் களையும் - பிறந்தோம்; பரமன் இட்ட கட்டளையை அனுபவித்துத் தானே தீரவேண்டும். என்ற கோழை உள்ளங் களையுமே வளர்ப்பவைகள் எந்த உருவத்தில் இருந்தால் என்ன? கலையாயிருந்தால் என்ன? காவியமாயிருந்தால் என்ன? எழுசீர் அடியாயிருந்தால் என்ன? அந்தாதியாயிருந்தா லென்ன? அகவலா யிருந்தால் என்ன? இவைகள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? பிற்காலத்திற்குத் தேவையில்லை. தேவை யில்லை என்று சொல்லு பவர்களைக் கலையின் விரோதிகள், கலை நிலை உணரா மக்கள் என்றும், தங்களையும் ஆதரிக்க ஒரு பத்துப் பேர்கள் இருக்கி றார்கள் என்ற துணிச்சலால் சிலர் சிந்தனையின்றி நிந்திக்கலாம். ஆனால், அவர்களெல்லோரும் வருங்கால மக்களின் கண்டனத்துக் குரியவர்கள். ஏன் சொல்லுகிறேன் மீனாட்சி சுந்தரனார்களும், சிதம்பரநாதர்களும் புத்தம் புதுக் கவிதைகளை - காவியங்களை இயற்றித் தரத்தானே இருக்கிறார்கள். சேரன் செங்குட்டுவனின் வீரத்தைப்பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள் என்று மீனாட்சிசுந்தரனாரைக் கேளுங்கள்; ஏன்? வீரம் சேரன் செங்குட்டுவனில்தான் இருக்கிறதா? கம்ப ராமாயணத்திலே வீரம் செறிந்திருக்கிறதே? என்பார்கள். நான் மீனாட்சி சுந்தரனாரைப்பற்றி ஏதோ தவறாகக் கூறுகின்றேன் என்று நினைக்க வேண்டா. இராம னுடைய வீரம் தமிழனுடைய வீரத்திற்கு நல்ல எடுத்துக் காட்டல்ல. தமிழனுடைய வீரத்திற்குத் தக்க சான்று உள்ளதைப் பாடுங்கள் என்கிறோம். புதிய கவிதை களைப் பாடுங்கள் என்கிறோம். எங்கள் ஊனக்கண்ணுக்குத் தெரியும் பொருளைப்பற்றிப் பாடுங்கள் என்கிறோம். சாதாரண மக்களின் சதையையும் பிய்க்கும்படியான கவிதை களையும் பாடுங்கள் என்கிறோம். தாயின் தன்மை ததும்பும்படி பாடுங்கள் என்கிறோம். தேயிலைத் தோட்டத்திலே நமது இளம் பெண்கள் படுகிற கஷ்டத்தைப் பற்றிப் பாடுங்கள் என்கிறோம். பாட்டாளி கொடிய பணக்காரனுக்கு அடிமை; பணக்காரன் பூசாரிக்கு அடிமை; பூசாரி ஏட்டுக்கடிமை; ஏடு கலைக்கு அடிமை; கலை கலா ரசிகர்களுக்கு அடிமை; கலா ரசிகர்கள் பழமைக்கடிமை என்ற அடிமைத்தனம் அறுபடும் மார்க்கத்தைப் பற்றிப் பாடுங்கள் என்கிறோம். குட்டி பாரதிதாசன் நாமக்கல் கவிஞரின் மகனார், “தியாகி”யில் தீட்டிய ஒரு கவிதையைப் பார்த்தேன். நாமக்கல் கவிஞர் வீட்டிலே ஓர் குட்டி பாரதிதாசன் வளர்கிறார். மணியடிக்கிறதாம். பள்ளிக்கூடம் விட்டு வீடு வருகிறார். வழியிலே சாலைக்குப் பக்கத்தில் எச்சிலை வீழ்கிறது. சில நாய்கள் பாய்கின்றன. அந்த நாய்களுடன் இவர் கண்களும் பாய்கின்றன. ஆனால் ஆச்சரியப்படவில்லை. அடுத்த விநாடி ஓர் வற்றிய மனித உருவம் வருகிறது. எச்சிலைகளின் மேல் பாய்கிறது. பாய்ந்து நாயைக் காலால்கூட அடிக்க வலுவில்லாமல், கையால் பிடித்துத் தள்ளுகிறது. தள்ளிவிட்டு, நாயின் எச்சிலை உண்கிறது. நாய் சும்மா போகவில்லை. ஒரு கடி கடித்துவிட்டுப் போகிறது; இதைக் காணத் தம்பிக்கு ஆச்சரியம் மட்டுமல்ல; வேதனையும் பிறக்கிறது. தம்பி, இந்தக் காட்சியை இன்னும் காணும்படியான இந்த நிலையிலே உள்ள, ‘ஏ! பாரத நாடே’ என்கிறார். கவிதை முடிகிறது. முடிக்கிறார் என்றால், எல்லோரையும் போல, “ஈசனே சிவகாமி நேசனே” என்று முடிக்கவில்லை. ‘என் நாடே’ என்று கவிதையை முடிக்கிறார். இன்று கவிதைகள் அப்படிப்பட்ட முறையிலே வெளிவர வேண்டும் என்கிறோம். முத்திரை மோதிரம் பாரதிதாசன் பாக்கள் அத்தகையன; அதனால்தான் அவர் பாக்களை மாணவர்கள் போற்றுகின்றனர். அவரைச் சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம், அவர் காரசாரமாகச் சாதியைச் சமயத்தைக் கண்டிக்கிறார் என்பதற்காக. பாரதிதாசன் வர்ணாசிரமத்தைக் கண்டிக் கிறார் கண்டிக்கலாமா? சனாதனத்தைச் சாடலாமா? வகுப்புவாதத்தை வளர்க்கலாமா என்று கேட்கின்றனர். வகுப்பு வாதத்தை அவர் வளர்க் கிறார் என்றால், வகுப்பு வாதம் இந்த நாட்டைவிட்டுப் போகத் தான் விட்டு விலகத்தான் - பாரதி தாசன் பாடுகிறார். கவிதைகளைக் கவண் கற்களாக உபயோகப்படுத்துகிறார். அந்தக் கற்கள் வருணா சிரமத்தைத் தாக்கு கின்றன. அது யாருக்குச் சொந்தமான கோட்டையா யிருந்தால் என்ன? அது யாருக்குச் சொந்தமான கொhத்தளமா யிருந்தால் என்ன? தாக்கட்டும், தகர்க்கட்டும் என்கிறார். அந்தக் கோட்டைக்குச் செந்தக்காரர் யார் என்று பார்க்கிறார்; அவர்களைத் தாக்குகிறார். கன்னையா கம்பெனி நாடகம் நடக்கிறது. ராஜபார்ட் வேஷத்தில் உள்ளவனின் ராகம் ரசிக்கவில்லை, தொண்டை கட்டிய காரணத்தால், உடனே நாடகத்தைப் பார்ப்பவர்கள், ‘உள்ளே போ’ என்று கூச்சல் போடு கிறார்கள்; போய் விடுகிறான். நாடகம் முடிந்து வெளியே போகிறவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள்? ‘கன்னையா கம்பெனி மோசம்’ என்பார்கள் ராஜமாணிக்கம்பிள்ளை நாடகம் நடக்கிறது. நடிகர்களின் திறமையாலோ அல்லது மின்சார விளக்குகளின் மினுமினுப்பாலோ உட்கார்ந்திருப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. நாடகம் முடிந்து வெளியே போகிறவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள்? ‘ராஜமாணிக்கம் கம்பெனி நன்றாயிருக்கிறது’ என்பார்கள். எப்படித் தொண்டை கட்டிய நடிகன், கம்பெனிக்கும் சொந்த மானதால் கன்னையா கம்பெனி பழிப்புக்கிடமாகிறதோ, அதேபோல, வருணாஸ்ரம கொடுமைக்கு, ஜாதீயக் கொடுமைக்குச் சொந்தக்காரர் களாய் இருப்பவர்கள் பழிப்புக்கு இடமா கிறார்கள். ஜாதீயக் கொடுமையின் மேல் எந்தச் சிலாசாசனம் பொறிக்கப் பட்டிருக்கிறது? யாருடைய முத்திரை மோதிரம் போடப்பட்டிருக்கிறது என்று பார்த்த நேரத்தில், ஒரு வகுப்பாரின் முத்திரை மோதிரம் தெரிந்தது. தெரிந்ததால்தான். நாமும் நமது கவியும் ஆரியத்தைத் தாக்குகிறோம் காரணத்தோடு. பார்ப்பனர்கள் எனது ஆருயிர் நண்பர்கள்; எப்படியிருந்தால்? பார்ப்பனர்கள் மாத்திரம் தங்களுடைய குறையை நீக்கிக் கொள்வார்க ளானால், இந்தப் பாரில் பார்ப்பனத் தோழர்களைப் போலப் பரம திருப்தி யாளர்கள் யாரும் எனக்கு இருக்க முடியாது. நீக்கிக் கொள்ள கொஞ்சம் தன்னலமற்ற தன்மை வேண்டும்; புதுமைக் கருத்து வேண்டும்; துணிவு வேண்டும்; அஞ்சாநெஞ்சம் வேண்டும். புதுச்சேரியிலே வைதிகர் களைத் திட்டுகிறார்களென்றால், பயப்படாமல் போய், ஏன் என்று பார்க்க வேண்டும். காக்கை குருவி எங்கள்குலம் என்று பாரதி பாடிய இந்த நாட்டிலே, சூத்திரர்கள், மனிதர்கள் எங்கள் குலம் என்று சொல்வதற்கு இன்றும் அஞ்சுகிறார்கள் என்றால், நாங்கள் வீசுகிற குண்டு எந்தக் கோட்டைமீது வீழ்ந்தாலென்ன? அதிலிருந்து வெளி வரும் விஷ வாயுக்கள் - நச்சு வாடைகள் முடக்கு வாதங்கள் ஒழிய வேண்டும். பார்ப்பனத் தோழர்கள் மாத்திரம் நம்முடன் கைகோத்துத் தோளுடன் தோள் இணைந்து, நாம் “ஜாதியை ஒழிப்போம்” என்று எழுதியும், பேசியும், செயலிலே காட்டியும் வருவது போல் வரட்டும்; வராவிட்டால் சும்மா இருக்கட்டும். சும்மா இல்லாவிட்டால் எதிர்க்காம லாவது இருக்கட்டும். எதிர்க்காமல் இருக்கமுடியவில்லை என்றால், ஏளனம் செய்யாமலாவது இருக்கட்டும்; ஏன் என்று கேட்காமல் எதை யாவது செய்யட்டும் என்று கூறட்டும். பாருங்கள், பத்து வருடத்தில் ஜாதி ஒழிகிறதா, இல்லையா என்று! கவி கண்ட கனவு நனவாகிறதா, இல்லையா என்று. அறிவு கெட்ட தமிழகம் எங்கே - எடுத்துக் கொள்ளுங்களேன். ஒரு பத்திரிகை “பகவத் கீதையிலே நாலு சாதி இருக்கவேண்டும்” என்று பரமாத்மா கூறியிருக் கிறார். என்று எழுதும். “அது யார் சென்னது? பகவத்கீதையிலே சாதிக் காதாரமில்லை” என்று ஒரு பேப்பர் எழுதும். மற்றோர் பேப்பர், “நீங்கள் கீதையை வேறுவிதமாக அர்த்தம் பண்ணிவிட்டீர்கள்” என்று செந் தமிழ்ச் செல்வி தீட்டும். அறிவு கெட்ட தமிழகம்; எதைத்தான் நம்பும்? கீதையை நம்புமா? தனிப்பட்டவர்கள் சொல்லும் தத்துவார்த்தத்தை நம்புமா? அலங்காரமான உடை ஆனால் ஆபாசமான கருத்து காலையில் நான் ரயிலில் வரும்பொழுது, நான் வந்த கம்பார்ட் மெண்டில் ஒரு கல்லூரிமாணவர், திருச்சி, செயிண்ட் ஜோசப்பில் வேதாந்தம் படிக்கிறவர்; இருபார்ப்பனப் பண்டிதர் களிடம் தர்க்கம் பண்ணிக்கொண்டு வந்தார். மாணவர், அந்த ஐயர்களைப் பார்த்து, “வினை என்கிறார்களே, அதைப்பற்றி விதண்டா வாதக்காரர்கள் சில சமயங்களிலே கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரிய வில்லை; அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்” என்றார் உடனே பண்டிதர்கள் கேட்பதற்குப் பதில் சொல்லாமல், “நீங்கள் கல்லூரியிலே படிக்கிறேன் என்கிறீர்களே, சாப்பாடு எங்கேயோ?” என்று மாணவரைக் கேட்டார்கள். மாணவர், அதற்கு, பிராமணர்களுக் கெல்லாம் நம் ஹாஸ்டலிலே தனி இடம் உண்டு. அங்கேதான் சாப்பாடு” என்றார். நெற்றியிலே ஒன்றும் இல்லாவிட்டாலும், உடனே மாணவன் பிராமணன் என்று தெரிந்து கொள்கிறார்கள்; மாணவன் நெற்றியிலே நீறில்லை. கல்லூரியிலே படிக்கிறவர்; அதுவும் வேதாந்தப் படிப்புப் படிக்கிறார்; இங்கிலீஷ்காரனும் பார்த்துப் புதுமாதிரி என்று கற்றுக் கொள்வான்; அவ்வளவு அழகாகக் கிராப்பை வாரி விட்டிருக்கிறார். அலங்காரமான உடைதான்; ஆனால் ஆபாசமான கருத்துக்கள். மாணவன் பிராமணன் என்று தெரிந்து கொண்ட பிறகுதான் அந்தப் பண்டிதர்கள் ‘சரி, விவாதிக்கலாம்’ என்கிறார்கள். விவாதம் ஆரம்பமாயிற்று. மாணவன்கேட்டான் ‘ஒருவன் கஷ்டப்படவும் இன்னொருவன் சுகப்படவும் காரணம் என்ன?’ என்று, அதற்கு அவனவன் செய்த பாவபுண்ணியம் என்று பதில் அளித்து விட்டு மாணவனைப் பார்த்து, “சரி தம்பி, ஒருவன் 60ம், இன் னொருவன் 40ம் மற்றொருவன் 20-ம் மார்க்குகள் வாங்கக் காரணம் என்ன?” என்றார்கள், அவன் பண்டிதர்கள் மொழியிலேயே “அவா ளவாள் படித்த படிப்புக்குத் தக்கவாறு” என்றான். பண்டிதர்கள் “இதைப் போலத்தான் சுகத்தையும் கஷ்டத்தையும் அவாளவாள் செய்த பாவ புண்ணியத்திற்குத் தக்கவாறு அடைகிறார்கள்” என்று எடுத்துக் காட்டினார்கள். அவர்கள் விவாதிக்கத் தர்க்கசாத்திரம் தேவையில்லை; வேதாந்தங்களே உதாரணம்; கதைகள் மூலம்தான் விளக்குவார்கள். ‘சரி அதிருக்கட்டும்’ என்று. சற்று நேரம் கழித்து மாணவன், “இந்த ஜென்மத்தில் அனுபவிப்பது, போன ஜென்மத் தில் செய்த பாவம்; போன ஜென்மத்தில் கஷ்டத்தை அனுபவிப்பதற்கு, அதற்கு முந்திய ஜென்மத்தில் செய்த பாவம்; என்று இப்படியே அதற்கு முன் ஜென்மம், அதற்கு முன் ஜென்மம் என்று போய்க் கொண்டே இருந்தால் முதல் ஜென்மம், அதாவது ஆண்டவன் உயிரை உடலிலே முதன் முதல் புகுத்திய ஜென்மம் - அந்த ஜென்மத்திலே செய்த பாவத் திலே கொண்டு போய்விடும். அந்த ஜென்மத்தில் பாவம் செய்ததற்கு யார் குற்றவாளி? படைக்கும் பொழுதே பாவத்தைச் செய்யாதபடியல்லவா ஆண்டவன் படைத்திருக்க வேண்டும்? அது இல்லாமல், பாவம் செய்யும் படியே படைத்து விட்டு, “பாவம் ஏன் செய்தாய்?” என்று கண்டிப்பது ஒரு குற்றம்’; பாவம் செய்யாமல் படைக்காதது இன்னொரு குற்றம்; ஆகவே, நாம் செய்கிற பாவத்திற்குக் குற்றவாளி பரமன்தான் என்று சொல்கிறீர்களா? ஜென்மம் என்பது உண்டா? அப்படியிருந்தால் முதல் ஜென்மத்திற்கு முன் என்ன நடந்தது என்று யாராவது கேட்டால் என்ன பதிலளிப்பது” என்றான். பண்டிதர்கள் கொஞ்சம் விரைத்துப் பார்த்தார்கள். “ஜென்மம் என்று ஒன்று உண்டா என்று கூடவா கேட்கிறீர்கள். நம்பிக்கையி லிருந்துதான் வாதமே எதுவும் தொடங்க வேண்டும். முதல் ஜென்மம் இருந்தது என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முந்திய விவரங்கள் சொன்னால் புரியாது. அதிருக்கட்டும். இந்தப் பிரச்சினை யெல்லாம் யார் கிளப்பிவிட்டது? ஈரோட்டு நாயக்கராகக்தானிருக்கும். இவர்களெல்லாம் பெரியார்களாம். ஒரு கட்சியின் தலைவர்களாம்” என்று பேச ஆரம்பித்தது, விவாதத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். இது தான் காலையில் ரயிலில் கண்ட காட்சி. இதுபோல் இன்னும் வருணாசிரமம் தாண்டவமாடினால்; அதை ஆதரித்துக் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் எழுதினால்; இந்தச் சாதி மட்டம், அந்தச் சாதி உசத்தி என்று சாதி மட்டக்கோலை நாம் வைத்திருக்கும் வரையில், வேண்டு மென்றே ஒரு கட்சியையும், கட்சியின் தலைவரையும் தூற்றுகிற வரையில், இந்த நாடு நற்கதி யடைய மார்க்கமில்லை. யாருக்கு வெட்கம், அணுகுண்டு சகாப்தத்திலே? வைதிகத்தையும், மூடப்பழக்கத்தையும் வளர்க்கும் மகா மகத்திற்குப்போகாதே என்று, சுயமரியாதைக்காரன் சொன்னான் என்பதற்காக கல்கி, மகாமகக் குளத்தையும், அங்குக் குழுமியிருந்த மக்களையும் படம் பிடித்துக் காட்டி, “இதோ பாருங்கள், சுய மரியாதைக்காரன் காட்டுக் கூச்சல் போடுகிறானே. எவ்வளவு கூட்டம் இந்த நெருக்கடியான காலத்திலும்? இதிலிருந்து அவர் களுக்குப் பிரச்சார பலமில்லை என்று தெரிகிறதல்லவா?” என்பதன் மூலம், சுய மரியாதைக்காரனுக்கு வெட்கம் என எழுதியது, யாருக்கு வெட்கம்? முதலில் கல்கி ஆசிரியர் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்து விடுகிறார். இந்த அணுகுண்டு சகாப்தத்திலே, அழுக்கு நீரிலே குளித்தால் ஆண்டவ னுடைய அருளைப்பெறலாம் என்பதை ஆதரிப்பது போலல்லவா நமது படம் இருக்கிறது என்று அவமானப் படவேண்டியவர் அவர்தான். ஆகவே, எதையும் சுயமரியாதைக்காரன் சொன்னான் என்பதற் காக எதிர்க்காமல், மகாமகம் மடமையை வளர்க்கிறது என்றவுடன், தின மணி ஆதரித்து எழுதட்டும்; சுதேசமித்திரன் தலையங்கம் தீட்டட்டும்; ஹிந்து எழுதட்டும்; வேண்டுமென்றால் மதறாஸ் மெயில் மாத்திரம் மகா மகத்தை ஆதரிக்கட்டும்; இந்த நாட்டில் எவ்வளவு காலம் அறியாமை நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் அவர்களுடைய அந்நிய ஆட்சி நீடித்திருக்கும் என்பதற்காகப் பத்து வருடம் சுயமரியாதைக்காரன் சொல்வதை ஏற்று எழுதட்டும்; எழுதாவிட்டாலும் எதிர்க்காம லிருக்கட்டும். பாருங்கள், பத்துவருடத்திற்குப்பின் இந்த நாட்டிலே ஜாதி இருக்குமென்று நினைக்கிறீர்களா? அஞ்ஞானம் இருக்குமா? தீண் டாமை இருக்குமா? எல்லாம் போன இடம் தெரியாமல் போய்விடும். ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு பாரதியார்கூட, “ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்று கூறினார். இதைச் சொல்லியும் - ஒரு கத்தைக்குச்சியை ஒடிக்க முடியாது. தனியா யிருந்தால் ஒடித்து விடலாம் என்று சொல்லியும், பள்ளி மாணவர்களுக்கு ஒற்றுமையின் அவசியம் போதிக்கப்படுகிறது. ஒற்றுமை என்றால் எதற்கு ஒற்றுமை? நெருப்புக்கும் நீருக்குமா? மானுக்கும் புலிக்குமா? பினாயிலுக்கும் தண்ணீருக்கும் பேதமிருக்கும்; ஆனால் அதில் ஒற்றுமையைக் காணுதல் என்றால் முடியுமா? வேற்றுமையில் ஒற்றுமை இந்து, முஸ்லீம் ஆகிய இருபெரும் சமுதாயங்கள் பல துறைக ளிலே வேற்றுமையைக் கொண்டவைகள். அவைகளில் ஒற்றுமை என்றால் ஏற்படுமா? வேற்றுமையில் ஒற்றுமை காண்பி; இது தர்க்கத்துக் குரியது; மாணவர்கள் கேள்வித் தாளுக்குரியது. நாட்டுக் குரியதா? நாட்டிலே நடவாது. அதை உத்தேசித்துத்தான் நமது புரட்சிக் கவிஞர், உலகம் என்று உலகம் பொதுவுடைமை பேசுவதைக் கடுமை யாகக் கண்டிக்கிறார்; இனம் கலந்தால் இடறும் என்கிறார்; சனாதன ஊற்றைத் தூர்க்க வேண்டும் என்கிறார். வருணாஸ்ரமத்தின் வாயிற் படியை அடை என்கிறார். வேதாந்தம், சித்தாந்தம் எல்லாம் வேலை ஒழிந்த நேரத்தில் ஆண்டிகள் விவாதிக்க வேண்டிய பொருள். கொலை வாளை எடு, முதலில் கொடியோர் செயலை அறவே ஒழிப்போம் என்றும், மகாராசர்கள் உலகாளுவதா என்றும் கேட்கிறார். கொலை வாளினை எடு அந்தக்காலத்திலே கஷ்டம் ஏற்பட்டால், ‘இஷ்டமுடன் என் தலையில் இட்டவனும் செத்துவிட்டானோ, முட்டப் பஞ்சமே வந்தாலும் பாரமவனுக்கே’ என்று பாரம் பழிகளை ‘அவன்’ மேல் சுமத்தினார்கள்; பதிலை எதிர்பார்க்காமல் இடைக்காலத்தில், ‘கேட்ட வரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள், கூட்டோடு எங்’கே குடி போனீர்’ என்று கடவுளைப் புலவர்கள் தேட ஆரம்பித்தார்கள். ஆனால் பாரதி தாசனோ, “கடவுளைக் காணமுடிய வில்லை. ஆகையால் கடவுள் வந்து கடுங் கோலர்களைத் தண்டிப்பார் என்று நினைக்காதே; கொலை வாளினை எடடா; நாம்தான் அந்த மதோன்மத்தர்கள் மண்டையிலே அடிக்கவேண்டும்” என்கிறார். அந்தக்கால மக்கள், ‘கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், கடும்புலி வாழும் காடும் நன்றோ’ என்று அரண்மனையைவிட ஆரண்யமே மேல் என்று ஆரண்யம் புகுந்தார்கள், அரசாட்சியைப் பற்றிக் கவலைப்படாமல். பாரதியார் வந்தார். “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று அழகாக அரசியலைத் தாக்கச் சொன்னார் மக்களை. ஆனால், பாரதிதாசனோ, கொலை வாளைக் கையில் கொடுத்து நேரே நம்மைக் களத்திலேயே கொண்டு வந்து நிறுத்துகிறார். காதலும் வீரமும் பாரதிதாசன் தென்றலைப் பற்றியும், தமிழைப் பற்றியும், வீரத்தைப்பற்றியும்தானே பாடினார்; காதலைப்பற்றிப் பாடியிருக்கிறாரா என்றால் வேண்டிய மட்டும் பாடியிருக்கிறார்; அவர் கவிதைப் பகுதி களில் எந்தப் பகுதியை படிக்காவிட்டாலும் காதல் பகுதியைப் பற்றி யாரும் படிக்காமலிருக்கமாட்டார்கள் என்பதற்காக, நான் காதலைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. காதலையும் வீரத்தையும் பாடும் படியும், பாடி ஆடும்படியும், அதை இசையிலே காட்டும்படியும், அவரது காவியங்களும், கவிதைகளும் சொல்லுகின்றன. தமிழ் நாட்டிலே காதலைப் பற்றியும் வீரத்தைப்பற்றியும் புலவர்கள் அதிகம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் காரணம், தமிழ் நாட்டின் இயற்கை எழில், இங்குச் சுற்றிப் பார்த்தால், இங்கிலாந்தில் காணப்படுவது போலச் சுண்ணாம்புக் குன்றுகள் தோன்றா; அழகிய குன்று களுக்குப் பக்கத்திலே சாலைகள்; சாலைகளுக்குப் பக்கத்திலே சோலைகள்; வற்றாத ஜீவநதிகளுக்குப் பக்கத்திலே அவைகள் பாய்ந்திடும் நன்செய்கள்; நன்செய்களிலே நிற்கும் பஞ்சை உழவர்கள்; அந்த உழவர்கள் பாடும் பள்ளு; அந்தப் பள்ளு நெஞ்சை அள்ளும் விதம். இந்தக் கவின் பொருந்திய காட்சி தமிழனுக்குக் காதலை ஊட்டுகிறது. காட்டை நாடாக்கி யிருக்கிறார்கள். ஒரு காலத்திலே விந்திய மலைக்குத் தெற்கே காடாயிருந்ததைப் பிற நாட்டார் கண்டு மெச்சத் தகுந்த அளவு மட்டுமல்ல; பொறாமைப்படும் அளவுக்கு அழித்து, நாடுகளும் வீடுகளும் அமைத்திருக்கிறார்கள். வியாபாரத்திலே தழைத்தோங்கி இருக்கிறார்கள். வீரத்திலே திளைத்திருக் கிறார்கள். இன்னும் வீரம் போற்றப்படுகிறது போர்க்களங்களிலே! தமிழனுடைய வீரம் மங்காதிருக்கக் காரணம், தமிழனுடைய வீரத்திற்கும் பிறருடைய வீரத்திற்குமிருந்த வித்தியாசமே. தமிழன் என்றும் அக்கினியாஸ்திரம் உபயோகித்ததில்லை; பாசுபதத்தைப் பயன்படுத்தியதில்லை. அவனது ஆயுதங்கள் அவனிரு பருத்த தோள்கள். இடையிலே வாள்; வாள் ஏந்தக் கை;கைக்கேற்ற கருத்து; கருத்துக்கேற்ற களம்; களத்துக்கேற்ற காட்சி; அங்குப் பிணக் குவியலைக் கண்டு பயப் படாத காட்சிக் கேற்ற கம்பீரம். கனக விசயரைக் கைதுசெய்ய கங்கைக் கரைக்குச் சென்றான். செங்குட்டுவன் என்றால், சென்றான் வீரர்களுடன்; வீரர்கள் சென்றனர் வாள்களோடு; திரும்பினர் வெற்றியோடு. அன்று ஆரியம் தாள் பணிந்தது வாளுக்காக. சேரன் செங்குட்டுவன் வெற்றி பெற்றான் என்றால், ஐயனுடைய அருளாலல்ல; மழையைப் பொழியும் வருணா ஸ்திரமில்லாமல், அழிக்கும் அக்கினி யாஸ்திரமில்லாமல், இலங்கையை ஆட்டிடுமாமே அந்த வாயு வாஸ்திரமில்லாமல், சேரன் சண்டையில் வெற்றி பெற்றான். இந்த அஸ்திரங்கள், குலோத்துங்கன் ராசராசன், போன்றவர்கள் பர்மாமீது படையெடுத்தபோதும், பிறநாடுகளைப் பிடித்தபோதும் உபயோகப்படவில்லை. உபயோகப்பட்டதாக சான்றுகளில்லை. தமிழர் களுக்கு ஒரு வீசை இரும்பு; ஓர் சிறிய உலைக்கூடம்; கொஞ்சும் மூளை; இவை இருந்தால் போதும். வாள் வடிக்க. வாள் வடித்துவிட்டார்க ளானால், அவர்களுக்கு முன்னமேயே இருக்கின்ற அஞ்சா நெஞ்சமும், அருமைக் கையும் போதும். பர்ணசாலைகள் அமைக்க வேண்டியதில்லை; நெடும் பல யாகங்கள் செய்ய வேண்டியதில்லை; ஐயனின் அருளைப் பெற, எப்பொழுது அம்மையும் அப்பனும் சண்டை சச்சரவு களில்லாம லிருக்கிறார்கள் என்ற நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அந்த மாதிரியான தமிழனின் வீரத்தை அழகாகப் பாடியுள்ளார் பாரதிதாசன். பாரதிதாசன் பாரதிதாசன் பாக்கள், தமிழனின் வீரத்தையும் காதலையும் நினைவூட்டும்; பாரதிதாசன் படம் அதற்கு உறுதுணையாயிருக்கும். பாரதிதாசன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அவருக்குப் பாராட்டுதல் செய்வதற்கும், செய்வதற்குக் காரண மாயிருந்தவர் களுக்கும், துவக்கியவர்களுக்கும், அதைத் துவக்கிய மாணவர் களுக்கும் உறு துணையாக நின்று பேராதரவு அளித்த பேராசிரியர் களுக்கும் எனது வணக்கம். அவர்களை நன்றாக, மனமார வாழ்த்து கிறேன். பாரதிதாசன் முகத்திலே அமைதி தவழாது; அதற்குப் பதிலாக புரட்சி வாடை வீசும்; கோப ஜ்வாலை வீசும். திரு. வி. க. ஆண்மையில் பெண்மை காணுவது போலக் காணமுடியாது. அவரது முகத்திலே மீசை கறுத்து முறுக்கேறியிருக்கும். அவருடைய முகத்திலே யோகத்தின் சின்னங்களைக் காணமுடியாது. யாகத்தின் தழும்புகளைக் காணலாம். அவர் அண்மையிலே புதுவையில் சிலரால் காலித் தனமாகத் தாக்கப்பட்டார். ஆனால், புதுவையில் பட்ட அந்தத் தியாகத் தழும்புகள் இந்தப் படத்திலே தெரியாது. அந்தத்தியாக மூர்த்தியின் திருவுருவப்படம் தமிழ்நாடு எங்கணும், மாட மாளிகைகளிலே; மாட மாளிகை மட்டுமல்ல, மண் குடிசைகளிலே மட்டுமல்ல, மக்களுடைய மனத்திலேயும் பிரகாசிக்கவேண்டும். அவரது ஆவேசம் எல்லோருக்கும் உண்டாகுமாக! அவரது ஒவ்வொரு கவிதையும் இந்நாட்டின் விடுதலைக்காக வெடிகுண்டு களாகுமாக! அவரது ஒவ்வொரு கவிதையும் ஒரு ரூசோவாக மாறுமாக!! அவரது ஒவ்வொரு கவிதையும் ஒரு வால்டேராக மாறுமாக!!! ஏ தமிழ்நாடே! ஏ தாழ்ந்த தமிழ்நாடே! தேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே! தன்மானமற்ற தமிழ்நாடே! நன்றிகெட்ட தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கடவு ளின் லட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத் துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! ஏ, சோர்வுற்ற தமிழ் நாடே! வீறு கொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உயிர்க் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று! புரட்சிக் கவிகளைப் போற்று!! புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!! என்று கூறி, உங்கள் அனைவரின் சார்பாகவும், பெருமை யுடனும், மகிழ்ச்சியுடனும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது படத்தைத் திறந்து வைக்கிறேன். - புரட்சியின் சிகரம் பேரறிஞர் அண்ணா (நூல்: பாவேந்தர் பாரதிதாசன் பெருமை, வெளியீடு: அபிராமி பப்ளிகேஷன்ஸ் - சென்னை, பிப்ரவரி 1980) 18. போற்றிப் பாராட்ட வேண்டும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய இரண்டு நாள் பிறந்த தினவிழா மறக்க முடியாத நாள். நாம் மறந்து விட்டதாக மக்களினால் கருதப்படுகிற நிலையை மாற்றி நினைவு கூர வேண்டிய நாள். அவருடைய கவித்திறனை மட்டுவல்லாமல் கொள்கைப்பிடிப்பையும் நாட்டுமக்களுக்குத் தேவையான முன்னேற்றக் கருத்துக்களையும் அவர்கள் எப்படிச் சொல்லிச் சென்றார்கள் - சொல்லி வைத்திருக் கிறார்கள் எதிர்காலத்துக்கும் - எந்த நாட்டுக்கும் அது பொருத்த கூர்வதற்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்ததை எண்ணி முதலில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கவிஞர்களை - தமிழ் படித்த பெரியோர்களை - தமிழாய்ந்த நல்லோர்களைப் பாராட்டுவதன் மூலம் தமிழுக்கு மரியாதையும் தமிழ் படித்தவர்களுக்கு நாட்டிலே உரிய இடத்தையும் மக்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய நிலையையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் ஒவ்வொரு செயலில் ஈடுபடும் போதும் அதிலே அக்கறை காட்டுகின்றோம். இந்த முயற்சியிலே நாம் ஈடுபடும் போது என்னைப் பொறுத்த வரையில் நான் தமிழிலே மிகப் பெரிய ஆற்றல் பெற்றவன் ஆய்ந்து அதைப் பற்றி நன்கு புரிந்தவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதை நாடறியும் - நானுமறிவேன். என்றாலும் என்னையும் எங்களைப் போன்றவர்களையும் ஒருங்கிணைத்துக் கடமையாற்ற எண்ணும் பொழுது அரசியலை முன் வைத்துக் கொள்வதில்லை. எனக்கு விரோதியா நண்பனா என்று நான் எண்ணிப் பார்ப்பதில்லை. எதிர் காலத்தில் எனக்கு உதவி செய்வார்களா அல்லது ஊறு விளைவிப்பார்களா என்பதைப் பற்றி நான் சிந்திப்பதே இல்லை. நாட்டிலே உள்ள நிலைமைகளை எண்ணிப் பார்த்து எந்தெந்தத் திறமை எங்கெங்கு இருக்கிறதோ அமரர் பேரறிஞர் அண்ணா சொன்னது போல ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ என்பது போல எங்கே அந்தத் திறன் இருந்தாலும் அதிலும் தமிழ் ஆய்ந்தவர்கள் இருந்தால் அவர் களைப் போற்றிப் பாராட்ட வேண்டும்; அவர்களுக் குரிய இடத்தைத் தரவேண்டும். என்பதுதான் என்னுடைய -எங்களுடைய நோக்கம் என்பதை நான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். இன்னொன்றையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். கவிஞர் சுரதா அவர்களை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து நான் அவர்களுடன் நெருங்கிப் பழகி - நண்பராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றவன். ஒரு திரைப்படத்திற்கு பாடல் அமைத்துக் கொடுத்தபோது அவருடைய திறமையைக்கண்டு நான் கண்ணீர் விட்டுப் போற்றியதுண்டு - பாராட்டியதுண்டு. அதைப் போல அவரை நான் கடிந்து கொண்டதும் உண்டு. நான் பலமுறை அவர் மனம் புண் படும்படி பேசியிருக்கிறேன்.காரணம், இவ்வளவு நல்ல ஆற்றலைத் தமிழிலே பெற்றிருந்தும் அது தமிழினத்துக்குப் பயன்படும் வகையில் நீங்கள் இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தவறுகின்றீர்களே என்று நான் பலமுறை அவரிடம் கோபித்துக் கொண்டதுண்டு, சில மாதங்கள் நான் பேசாமல் வேண்டுமென்றே ஒதுங்கிப் போனதும் உண்டு. என்னுடைய கவலை எல்லாம் இதுதான். தமிழை ஆய்ந்து பார்க்கத் தெரிந்தவர்கள் - அதை நன்கு உணர்ந்தவர்கள் - இந்த நாட்டுக்குத் தங்களுடைய அறிவைப் பயன்படுத்தாமல், ஆற்றலைப் பயன்படுத்தாமல் இருந்தால் அவர் எவ்வளவுதான் படித்திருந்தாலும் - உன்னத நிலைமையில் இருந்தாலும் இந்தத் தமிழகத்திற்கு-தமிழுக்கு - தமிழருக்குச் செய்கின்ற துரோகம் என்றுதான் நான் கருதுவேன் என்பதை இங்கே நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். ஆனால் இன்றைய தினம் தங்கப் பதக்கத்தையும் பெற்றுப் பத்தாயிரம் பரிசையும் பெறுகிறார் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது தமிழுக்காகத் தொண்டு செய்யும் நாள் தொடர்கிறது என்பதை எண்ணி நான் மனமார வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கின்றேன், அவரைப் போற்றிப் பாராட்டுவதில் நான் பெருமை கொள்கின்றேன். பாரதிதாசன் அவர்களுடைய கவிதைகளைப் பற்றியும்-அவர் எதை, எந்தெந்தக் கொள்கைகளைப் பற்றி, எல்லாம் சொன்னார் என்பதைப் பற்றியும் பலர் இங்கே குறிப்பிட்டி ருக்கின்றார்கள். நானும் பிறருடைய பேச்சைக் கேட்பதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலே இருந்து பாரதிதாசன் அவர்களைப் பார்த்தார்கள். நான் அதிகமாக இங்கே கவிதை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அவர் எந்தப் பிரிவையும் விட்டுவைக்க வில்லை. தொழிலாளர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒரு தொழிலாளி எப்பொழுது வேலையை விட்டு வீட்டுக்குத் திரும்பி வருகிறான் என்று அவனுடைய வாழ்க்கைத் துணைவி வீட்டின் வாயிற்படியில்நின்று ஆலையின் சங்கே ஊதாயோ என்று அந்தச் சத்தத்தைக் கேட்பதற்காகக் காத்து நிற்கின்றாள் - தன் கணவனுடைய உழைப்புக்குப் பிறகு - அவனைக் காணவில்லையே என்று எவ்வளவு அக்கறையாகக் காத்திருக்கிறாள் என்பதும் அந்த அலையின் சங்கு ஊத வேண்டும் என்று எண்ணும் பொழுதே அந்தத் தொழிலாளி எவ்வளவு நாள்-எவ்வளவு மனி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் பலன் என்ன என்பதை யும் அந்தப் பாடலிலே எண்ணிப்பார்க்கின்றபோது அந்த மங்கையி னுடைய மன நுட்பத்தை- மனவேகத்தை அந்த மனதிலே இருக்கின்ற வேதனையை எண்ணிப் பார்க்கும்போது - நாம் நன்கு புரிந்து கொள்ளமுடியும். ஒரு தொழிலாளியின் வேதனையை-உழைப்பை. எவ்வளவு மணிநேரம் அந்தத்தொழிலாளி வேலை செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கக் கூடிய நாள் நெருங்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. இதுபோல் ஒவ்வொன்றை யும் அவர் தொட்டுப் பார்த்திருக்கிறார் என்பது மட்டுமல்ல - நம் இதயத்திலே பதியவைத்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது அப்படிப்பட்ட கவிதைகள் - கருத்துக்கள் - வெறும் பாட புத்தகங்களாக மட்டும் இருந்து விடாம - ஒவ்வொரு தமிழனும் -ஒவ்வொரு மனித உள்ளம் படைத்தவனும் அவைகளைத் தனது உள்ளத்தில் ஏற்றி வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு அவை நாட்டிலே பரப்பப் பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த வகையில் தான் பல்கலைக்கழகத்தில் அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் அதுபோலவே இந்த பாரதிதாசன் விழாவில் மகிழ்ச்சி நாளில்-நாம் மன மகிழ்வு கொண்ட நாளில் - இந்தப் பிறந்த நாளில் கவிஞர் களுக்குப் பரிசளிப்பு என்ற நிலைமையை உருவாக்கி யிருக்கிறோம். கவிஞன் மட்டும்தான் கற்பனைக்கு உண்மைலேயியே சொந்தக் காரன். ஒரு கவிஞன் தான் எதைப் பற்றியுமே சிந்திக்க முடியும் எதைப் பற்றியும் அவன் எந்த வகையிலும்-அவன் எங்கிருந்து வேண்டு மென்றாலும் பறந்து சென்று அதைக் காணமுடியும் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பாரதிதாசன் தியாகத்தைப் பற்றி இந்த நாட்டிற்குச் சொல்லிச் சென்றதை நான் இங்கே குறிப்பிடுவது என் கடமையாகும் ‘அமைதி என்றொரு நாடகத்தை அவர்கள் எழுதி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த நாடகத்தை அவர்கள் எழுதியிருக்கின்றார்களே தவிர பேச்சுக் கிடையாது, இவ்வளவு கவிதையை - கருத்துகளை - திறமையாகக் கூறியிருக்கின்ற அவர்கள் அதில் உரையாடலே இல்லாமல், கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். தியாகத்தைச் செய்கின்ற, ஒரு மனிதனை அவர் கதாநாயகனாகக் காட்டி ஊமை நாடகத்தை எழுதியிருக்கிறார்கள்; தன்னை ஈந்து மற்றவர்களைக் காப்பாற்றுகிற ஒரு பெருந்தன்மை-தியாகம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டாம் என்று சொன்னால் அந்த நாடகத்தின் கருத்துகளை நாடு முழுவதும் பரப்பவேண்டியது எவ்வளவு தேவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள முடியும் அப்படிப்பட்ட- பெரும் கொள்கைகளுக்கு-முன்னேற்றக் கருத்துக்களுக்குச் சொந்தமான அவர் எப்படி மறைக்கப் பட்டார் என்பதையும் - மறைக்கப்படுகின்ற நிலைமையிலே இருந்தார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நான் அவருடைய மகனிடம் அவர் எழுதிவைத்த சில பாடல்களை வேண்டுமென்று கேட்டபொழுது - உரிமையைப் பெற நான் விரும்பியபொழுது - இன்னும் வெளிவராத சில பாடல்கள் எழுதிவைக்கப் பட்டிருப்பதை நான் கண்டேன். அதிலே இருப்பவை ஒன்றிரண்டு இல்லை என்றாலும், அவைகளை எப்படியாவது மக்களுக்குச் கிடைக்கமாறு செய்யவேண்டு மென்ற ஆசை எனக்கு இருக்கிறது. இங்கே சொன்னார்கள் எப்படியாவது தேசியச் சொத்தாக-மக்களுடைய பொதுச் சொத்தாக ஆக்கப்பட வேண்டும். பாரதியாரின் பாடல்களைப் போல என்று சொன்னார்கள் தமிழக அரசு நிச்சயமாக அந்த முயற்சியை மேற்கொள்ளும் என்பதை இங்கே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; அதுமட்டும் போதாது. அவருடைய குடும்பம் எப்படி வாழ்கின்றது என்பதை சிந்தித்துப் பார்த்து, கவனித்து, அவருடைய குடும்பம் நல்வாழ்வுபெற-அவர் குழந்தைகள் நல்வாழ்வு பெற - வசதி பெற - தமிழக அரசு நிச்சயமாகப் பொறுப் பேற்றுச் செய்யும் என்பதையும் இங்கே நான் கூறிக் கொள் கின்றேன். அவர் வாழ்ந்த வீடு - அவர் எழுதிய எழுதுகோல் - அவரால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இவைகளை எல்லாம் சேர்க்க முடியுமானால் சேர்ப்பதற்கு இந்த அரசு நிச்சயமாக அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படும். அது மட்டுமல்ல, இங்கே, பாவலர் முத்துச்சாமி அவர்களும் டாக்டர் நாவலர் அவர்களும் ஒரு எண்ணத்தைச் சொன்னார்கள். அதைத்தான் நான் வெளியிடுவதாக இருந்தேன் என்பதையும் கூறும்பொழுது பல மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்பாடு செய்து அதை ஆங்காங்கே அரசின் செலவில் கொடுக்துப் பணத்தைப் பெறாமல் அல்ல, திரும்பப் பெறவேண்டும். ஆனால், முதலில் அரசு செலவு செய்து, அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளை ஏற்படுத்தி பல மாநிலங்களுக்குத் தந்து குறிப்பாக ‘இந்திவேண்டும், ஆட்சிமொழியாக’ என்று சொல்லுகின்றவர் களுக்குப் புரியும்படியாக அதை அங்கே அனுப்பி வைக்க விரும்புகிறேன் என்பதையும் அதை இந்தியிலேயே படிக்குமாறு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் நான் கருதுகிறேன். என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்பதை யும் கொள்ள விரும்புகிறேன். இது இந்தியை வளர்ப்பது ஆகாதா என்று, ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருப்பவர்கள் குறை கூறக்கூடும். ஆனால் அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை எப்படி யாவது இந்தக் கருத்துகள் தீவிர சிந்தனைகளுக்கு நம்மை உருவாக்கக் கூடிய கருத்துகள் நாடு முழுவதும் பரப்பப்பட்டாக வேண்டும். தமிழ் என்றால் என்ன - தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் -தமிழை எப்படிக் கருதுகிறார்கள் - தமிழுக்கு ஆபத்து என்றால் என்ன விளைவுகள் ஏற்படுமென்பதை நாம் அவர்களுக்குப் புரியும் படியயாக அவர்கள் மொழியிலேயே குறிப்பிட்டுக் கொடுப்பது பனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன். அந்த வகையிலே தமிழக அரசு தன் முயற்சி களைத் தீவிரமாக மேற்கொள்ளும் - அந்த ஏற்பாடுகளைச் செய்யும். ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பிறர் குறை கூறினாலும் - யார் சுமத்தினாலும்-யார் பொய்வதந்திகளைப் பரப்பினாலும் - தமிழக அரசு நிச்சயமாகத் தமிழர் நலன்களைத் தமிழ் மொழியைக் காப்பதில் எந்தவித தியாகத்தையும் செய்யப் பின் வாங்காது என்பதை பாரதிதாசன் விழாவில் நாம் நினைவு கூர்கின்ற இந்த நன்னாளில் அண்ணாவின் மீது ஆணையிட்டு நான் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அரசு விழா இன்று எடுத்து நடத்தினாலும் அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் - சமுதாயச் சீர்திருத்த அமைப்புகள் - திராவிடாக் கழகம் போன்றவை நிச்சயமாக இந்த விழாக்களை ஆங்காங்கு நடத்தி, தமிழ்மொழி தெரிந்த தமிழாய்ந்த-அறிஞர் களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அதற்கேற்ப ஆங்காங்கு அரசுக்குச் சொந்தமான இடங்கள் இருக்குமானால்-குறைந்த வாடகையில் கிடைப்பதற்கு -நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வேண்டிய வசதிகளைத் தமிழக அரசு செய்து கொடுக்கும் என்பதையும் இங்கே நான் தெரியப்படுத்திக் கொள்ளுகின்றேன். பாரதிதாசனுடைய இந்த விழா மன நிறைவோடு - மன மகிழ்வோடு - நல்லோர்கள் போற்றிப் பாராட்டுகின்ற வகையில் சீரும் சிறப்புமாக அமைவதற்கு உதவி செய்த அத்தனை பேர்களுக்கும் தமிழக அரசின் சார்பாக நான் நன்றி கூறிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். - புரட்சித்தலைவர், முதலமைச்சர் எம். ஜி.ஆர் 19. புரட்சியை உருவாக்கியவர் தமிழ் இலக்கியத்தில் புதுமலர்ச்சியைப் பாரதியார் தொடங்கி வைத்தார். அப்பணியை முழு அளவிலே நிறைவேற்றி வருகிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். செம்மையையே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்த தமிழ் இலக்கியம் இடைக்காலத்தில் பொய்மை புனைந்துரையில் பட்டுத் தவித்தது. அதற்குப் பின் சில்லரைப் பாடல்களே தமிழுக்குக் கிடைத்தன. நிலையான இலக்கியங்காணுவார் இல்லாமல் போயினார். இச்சமயத்தில் பாரதியார் ஒரு கவிதா பரம்பரைக்கு வழி வகுத்தார். பரம்பரையான போக்கையும் சில மாறுபாடுகளுக்கு உள்ளாக்கினார். ‘நாட்டு வேட்கை, மொழிப்பற்று இவற்றை மக்களுக்கு ஊட்டவும் கவிதை கருவியாகாலாம் என்று காட்டினார். புரியாமல் இருப்பதே பாட்டு என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து எளிய நடைக்கு ஏற்றம் தந்தார். யாப்பு முறையிலேயே புதுப்பாவினங்களைக் கையாண்டார், இவைகளே பாரதியார் செய்த புரட்சிகள், எந்தக் கொள்கைக்கும் தொடங்குபவர்கள் எவ்வளவு அவசியமோ, அதுபோலக் கொண்டு செலுத்துபவர்களும் அவசியமாகும். அவ் வகையில் பாரதிதாசன் பாரதியின் கொள்கையை கொண்டு செலுத்துபவர்’ என்பதை ஐயமறக் காட்டி வருகிறார். மறுமைக்கு வழிகாட்டுவதே பாட்டின் நோக்கம் என்றிருந்த எண்ணத்தைச் சிதற அடித்து வருகிறார். பாடல் பெறும் பொருள்களிலே கடவுள் ஒன்று என்பது அவர் கருத்து அவர் கவிதைகளிலே வண்டிக்காரன் மனைவி பேசுவாள். கிராமத்துக் குப்பன் பேசுவான். காணுகின்ற பொருளைப் பற்றி சிந்தனை கொடுப்பதாக அமைந்திருக்கும் அவர் கவிதை. பாரதியார் தம் கவிதையால் தேசிய வெறியூட்டினார். பாரதிதாசன் சமுதாயப் புரட்சியை உருவாக்கி வருகிறார். இருவரும் மக்களின் நலத்துக்கே மக்களின் உயர்வுக்கே தம் கவிதைகளைப் பயன்படுத்தி யுள்ளதைக் காண்கிறோம். மற்றும் பாரதியார் மேற்கொண்ட எளிய நடை. புதுப் பாவினங்கள் இவற்றையும் பாரதிதாசன் கையாண்டு வருகிறார். பாரதிதாசனுக்கென இலங்கும் சிறப்பியல்புகள் சிலவற்றைப் பார்ப்போம். ஒன்று-அவர் கையாண்டு வருகின்ற தமிழ் நடை. இனிமை, எளிமை, அதோடு தெளிவும் சேர்ந்து உயிருள்ள நடை யாய்ப் படிக்கப் படிக்கச் சுவை பயக்கிறது. அவருடைய வாக்கில் சொற்கள் கொஞ்சுகின்றன. கருதிய பொருளை விளக்குவதில் அவற்றிற்கு இணை அவைகளே யென்று சொல்லலாம். இரண்டாவது- பிழையற்ற யாப்பு முறை. இலக்கணப் பிழை. சொற்பிழை, பொருட்பிழை என்ற பேச்சே கூடாது என்பது அவர் வாதம். கவிஞர்கள் இலக்கண இலக்கியங்களை நன்கு படித்திருக்க வேண்டும் என்பது அவர் அடிக்கடி வற்புறுத்தி வருகின்ற கருத்து. மூன்றாவது- அவருடைய இயற்கை உணர்வு. பெரும்பாலான கவிஞர்கள் இயற்கையைப் பற்றிச் சொல்லும் போது தாம் பழைய நூல்களிலே படித்த வற்றைத்தான் பாடுவார்கள். நேரில் இயற்கையைத் தெரிந்து. நுணுக்கமாக உணர்ந்து கவி புனைவார் மிக அருமை. நம் புரட்சிக் கவிஞர் இயற்கையைப் பற்றி பாடியன மிகுதி. அத்தனையும் அவர் சொந்தமாகத் தெரிந்து சொல்கின்ற கருத்துகளின் கோவை. பழைய பாடம் ஒப்புவிக்கும் வழக்கம் அவரிடம் இல்லை. இன்னும் சொல்லிச் செல்லலாம், நீண்டு போகுமென்று நிறுத்துகிறேன். பாரதிதாசனார்க்கு ஒரு குறிக்கோள் உண்டு. அதை வலியுறுத்தும் முறையிலே பாடல்களை இயற்றுகிறார். அப் பாடல்கள் இளைஞர்களின் உள்ளத்தைத் தொட்டுவிட்டன. அதன் அறிகுறியே புரட்சி கவிஞருக்குப் பாராட்டு, நிதிமலர் என்பேன், அவரின் கவிதைகள் காலத்தை வென்று நின்று. நிலவும் என்பதையும் நாம் காண்போம். - முருகு. சுப்பிரமணியன் (நூல்: பாவேந்தர் பாரதிதாசன் பெருமை, வெளியீடு: அபிராமி பப்ளிகேஷன்ஸ் - சென்னை, பிப்ரவரி 1980) 20. பாவேந்தர் - ஒரு நினைவுச் சரம் மைக்கேல் ஏஞ்சலோவும் லியனார்டோ டாவின்சியும் கவிதை பாடத் தெரிந்த சிற்பிகள். பாலசுப்பிரமணியம் பாட்டையே சிற்பமாய்ப் படைக்கும் கவிஞர். இவர் தோட்டத்தில் நிலவுப் பூக்களும் உண்டு; நெருப்பு மலர் களும் உண்டு. ஒளிப் பறவையாய்ச் சிறகை விரிக்கும் உயர்ந்த கற்பனை களுக்குச் சொந்தக்காரரான சிற்பி பாவேந்தரின் கடைசி கால நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார். 1954-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெள்ளி விழாக் கொண்டாடியது. அப்போது நான் தமிழ்ச் சிறப்பு வகுப்பு மாணவன். வணக்கத்துக்குரிய என் ஆசிரியரும், பாவேந்தரின் அன்பிற் குரிய மாணாக்கருமான கவிஞர். மு. அண்ணாமலை வாயிலாகப் புரட்சிக் கவிஞரைப் பற்றி (அப்போதெல்லாம் பாவேந்தரை அப்படித்தான் அழைப்பது வழக்கம்) நிறைய நிறையக் கேட்டு மகிழ்ந்த நான் அவரைக் கண்ணாரக் காணக் கொதித்துக் கொண்டிருந்தேன். ஆனால் வெள்ளி விழாவையொட்டிப் பாவேந்தரின் கவிதையை மட்டுமே படித்து நிறைவு கொள்ள வேண்டியதாயிற்று. ஓரிரு மாதங்களில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்ய நேர்ந்தது. வெள்ளிவிழாவில் பல்கலைக் கழகத்தோடு தொடர்புடைய பலருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். அவர் பட்டம் பெற்றபோது பட்டமளிப்பு விழா மன்றத்தில் எழுந்த கரவொலியும் மகிழ்ச்சி ஆரவாரமும் அடங்க நெடுநேர மாயிற்று. இந்நிகழ்ச்சி, அந்நாள் தமிழக ஆளுநராக இருந்த ஸ்ரீ பிரகாசாவுக்குப் பெரும் வியப்பை உண்டுபண்ணியது. இதனால் நாவலர் பாரதியாரைக் கௌரவிக்க இரண்டொரு மாதம் கழித்து மற்றொரு விழாவைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவுக்கு நாவலர் பாரதியாருடன் ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ ஆகியோரும் பாவேந்தர் பாரதிதாசனும் அழைக்கப்பட் டிருந்தனர். பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் பாவேந்தர் தங்கி யிருந்தார். மாணவர் கூட்டம் அவரை மொய்த்துக் கொண்டது. அப்போது நான் ஆசிரியராகவும், ச. மெய்யப்பன் துணை ஆசிரியராகவும் இருந்து நடத்தி வந்த முத்தமிழ்மலர் கையெழுத்து ஏட்டினை அவர் பார்வைக்குப் பணிவுடன் கொடுத்தேன். மாணவர்களின் ஓவிய வண்ணமும் காவிய நேர்த்தியும் பார்த்து மகிழ்ந்து ‘நறுமலர் இஃதே’ என்று எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார். மற்றொரு மாணவர் தயாரித்த மலரை அவர் பார்த்துக்கொண்டிருந்தபோது அதன் ஆசிரிய ரான மாணவர், ஒரு பாராட்டுக்கவிதை எழுதித்தர வேண்டினார். பாவேந்தர் ஒன்றும் பேசவில்லை. மீண்டும் மீண்டும் அம்மாணவர் வற்புறுத்திக் கேட்டதும் இரண்டு வரிகள் எழுதினார். பிறகு அந்த மாணவரை ஏறிட்டுப்பார்த்து ‘இதற்குப் பொருள் சொல்’ என்று கர்ஜித்தார். பயந்து நடுங்கிப் போன பையன் ஏதோ சொன்னான். ‘மூணாவது சீர்லே மோனை சும்மாவா போட்டிருக்கேன்?’ என்று முழங்கியதும் அந்த அறை நிசப்தமாகி விட்டது. நல்ல வேளை யாக அதற்குள் மற்ற அறிஞர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள யாரோ கவிஞரை அழைத்தார்கள். அவர் வரமுடியாது என்று மறுத்தார். இதைக் கேள்விப்பட்டு உடனே அந்த அறைக்கு தெ.பொ.மீயே நேரில் வந்து கவிஞர் இல்லாமல் புகைப்படமா? என்று கூறி அவரை அழைத்துச் சென்றார். அக்காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பாராட்டு விழாவில் பாவேந்தர் ஒரு நெருப்புச் சூறா வளியாகப் பேசினார் என்று மட்டுமே இப்போது நினைவில் நிற்கிறது. அடுத்தமுறை நான் பாவேந்தரைக் கண்டது ஒன்பது ஆண்டு களுக்குப் பிறகு சென்னையில் தியாகராயநகரில். அவர் தங்கியிருந்த நாட்களில் 1963 மே மாதத்தில் ஒருநாள் நானும், என் நண்பர் மணி வாசகர் நூலகம் மெய்யப்பனும், இலக்கியப் பதிப்பகம், சோமையாவும் பாவேந்தருக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய கவிஞர் பொன்னடியானுடன் பாவேந்தரைக் காணச் சென்றோம். என் முதல் கவிதைத்தொகுப்பான ‘நிலவுப்பூ அச்சாகிக் கொண்டிருந்தது. அத்தொகுப்புக்குப் பாவேந்தரின் அணிந் துரைக் கவிதை பெற்றே தீரவேண்டுமென்ற கட்டாயம் எனக்கு. அதற்காகத் தான் பாவேந்தர் இல்லத்துக்குப் போனோம்.’ நாங்கள் காத்திருக்கக் கவிஞர் பொன்னடியான் பெரிய ஹாலில் தட்டி வைத்து மறைக்கப்பட்ட பகுதியிலிருந்த பாவேந் தரின் அனுமதி பெறச் சென்றார். நாங்கள் அழைக்கப்படுமுன் அறையில் மாட்டப் பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வை யிட்டேன். பெரும்பாலான படங்களில் பாண்டியன் பரிசு படத் தொடக்க விழாவில் பாவேந்தரும் சிவாஜி கணேசனும் காட்சி தந்தனர். பாவேந்தரின் ஆசைக் கனவான பாண்டியன் பரிசு படம் வெளிவராத கதை பலருக்கும் தெரியுமே! விரைவில் நாங்கள் பாவேந்தர் முன்னால் அழைக்கப்பட்டோம். பத்தாண்டுகளுக்கு முன் கம்பீரமாக தோற்றத்தோடு திகழ்ந்த கவிஞர் ஓரளவு சோர்வோடு காட்சியளித்தார். கட்டிலில் எழுதுகிற அட்டை யோடு அமர்ந்திருந்தார். அவருடைய மாணவர் மு. அண்ணாமலை யின் மாணவன் நான் என்றதும் “அப்ப .. நீ என் பேரன்...” என்று சொல்லிக் கொண்டே என்னை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். என் மேனி சிலிர்த்துப் பரவசமுற்றது. கவிழ்ந்து சாய்ந்து எழுதிக் கொண்டிருப்பது தம் வழக்கம் என்று சொல்லிப் புறங்கைகளைத் தூக்கிக் காட்டினார். கருமையாக இரண்டு புறங்கைகளும் தழும்பு பாய்ந்திருந்தன. தமிழ்க் கவிதை முற்றத்தில் காலத்தால் அழிக்க முடியாத சுவடுகளைப் பதித்த பாவேந்தரின் கரங் களில் இருந்த தழும்புகள் யுத்தகளம் சென்று வந்த போர் மறவனின் வீரத் தழும்புகளை எனக்கு நினைவூட்டின. பின்னர் அச்சாகியிருந்த கவிதைப் பகுதிகளை அவர்பால் தந்து அணிந்துரை வேண்டினோம். இரண்டு நாள் கழித்து வந்தால் படித்து விட்டு அணிந்துரை தருவதாகத் தெரிவித்தார். அந்தக் கவிதை சந்நிதானத்திலிருந்து வணங்கி விடைபெற்றோம். இரண்டு நாள் கழித்து காலைப் பொழுதில் நானும் சோமையாவும் பலவகைக் கனிகளையும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு போனோம். இதெல்லாம் எதுக்கு.. என்று சொல்லிய பாவேந்தர் ‘பழனியம்மா’ என்று மனைவியாரை அழைத்து அவற்றை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். விரைவில் அம்மையார் பழச் சுளைகளையும் கீற்றுகளையும் தட்டுக்களில் கொடு வந்து வைத்தார். ‘நம்ம சாயல் ... கவியிலே இருக்கு... இன்னும் நீட்டா (நீளமாக) எழுதணும்’ என்றார் பாவேந்தர். பிறகு ஒரு தாளை எடுத்து, ‘என் கையெழுத்து சரியா இருக்காது... இதை நீயே பிரதி செய்...’ என்று அணிந்துரைக் கவிதையைக் கொடுத்தார். கவிதையை நான் பிரதியெடுத்தேன். கவிதை இது. அண்ணா மலைப்பல் கலைக்கழகப் பேராசான் அண்ணா மலையென் அரியதமிழ் மாணவனின் கண்ணான மாணவன்நான் என்று கழறித்தம் கையெழுத் துப்படியைக் கண்ணுக் கெதிர்வைத்தே அண்டியசீர்ப் பொள்ளாச்சிக் கல்லூரி ஆசான்நான் அரிய நிலவுப்பூக் கவிதைநூல் நான்செய்தேன் கண்செலுத்த வேண்டுமென்றார்; மாட்டேனென்றா சொல்வேன் கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான் கண்டேன் பாட்டுத் திறம்கண்டேன் பாலசுப் பிரமணியம் பாவாணர் செய்தஅப் பச்சைத் தமிழ்நூலில் நாட்டுத் திறம் என்னே நாற்கவியும் முத்தமிழும் நல்கும் பயன்என்னே நாவூறிப் போனேன்நான் வீட்டிற் குறட்டைவிட்ட செந்தமிழர் கண்விழிக்க வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல் பாட்டை திறக்க வந்த பாலசுப் பிரமணியம் பைந்தமிழ்ப் பாவாணர் புகழ்பெற்று வாழியவே! இந்தக் கவிதை என்னை பூரிப்பில் ஆழ்த்தியது. பிரதியெடுத்துக் கையொப்பமிடப் பாவேந்தரிடம் கொடுத் ததும், ‘நான் என்ன எழுதி யிருக்கிறேன். நீ எப்படி எழுதி யிருக்கிறாய்?’ என்று கேட்டார். கடைசி வரியில் நான் ‘பாட்டைத் திறக்க’ என்று ஒற்றுப் போட்டு எழுதி யிருந்தேன். ஒற்றை அடித்துத் திருத்தி, பாதை திறக்க என்ற பொருளில் தான் பாட்டை திறக்கண்ணு போட்டிருக்கேன்’ என்று சொல்லிக் கையொப்பமிட்டார். பாவேந்தர் இப்படிப் பாராட்டியதை வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாது. பணிந்து வணங்கி விடை பெற்றோம். அப்போது பாவேந்தர், ‘இப்ப நான் மத்திய அரசு எடுக்கும் பாரதி வரலாற்றுப் படத்துக்கு உரையாடல் எழுதிக் கொண்டிருக் கிறேன்’ என்று தெரிவித்தார். அது ஏன் பயன்படுத்தப்படாமல் போயிற்று எனத் தெரியவில்லை. அதே சமயம் நிலவுப்பூ அச்சுப் பகுதிகளையும் ஓவியங் களையும் பாராட்டிவிட்டு ‘நம்ம மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம் புத்தகத் தயாரிப்பு அவ்வளவு நல்லா வரலே...’ என்று வருத்தப்பட்டுக் கொண்டதும் எனக்கு நன்கு நினைவில் நிற்கின்றது. 1963 செப்டம்பர் 22-ஆம் நாள் பொள்ளாச்சி நகரில் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலமும் நானும் மற்றும் பல பாரதி அன்பர்களும் ஒன்றாக இணைந்து மிகப் பிரம்மாண்டமான பாரதி விழா நிகழ்ச்சி ஒன்றுக்குத் திட்டமிட்டோம். ஒருநாள் முழுவதுமாக காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் அமைக்கப் பட்டன. எஸ். இராமகிருஷ்ணன், சிலம்பொலி செல்லப்பன், ரஷ்ய நாட்டுத் தமிழ் மாணவி இசபெல்லா முதலிய பற்பல அறிஞர்களும் கவிஞர்களும் கலந்துகொண்ட பெரு விழாவிற்குப் பாவேந்தரையும் அன்புடன் அழைத்திருந்தோம். விழாநாளன்று பயணியர் விடுதியில் காலை ஏழரை மணிக்கே பாவேந்தர் வந்து சேர்ந்து விட்டார். எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும்படி பாவேந்தரின் துணைவி யார் பழனியம்மாளும் உடன் வந்திருந்தார். வந்த உடனேயே முகச்சவரம் செய்ய ஆள் வேண்டு மென்று கேட்டார். பக்கத்திலிருந்த முடி வெட்டும் நிலையத்துக்குப் போகலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. ‘அதெல்லாம் ஒத்து வராது... இங்கேயே ஒருத்தரைக் கூட்டிவா’ என்று கர்ஜித்தார். அவ்வாறே உடன் கட்டளையை நிறைவேற்றினோம். மயிலஞ்சந்தை என்ற இடத்தில் பெரிய பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. காலையில் என் தலைiயில் கவியரங்கம். பாவேந்தர் முன்னிலையில் நிகழ்ந்தது. அந்நிகழ்ச்சியில், ‘அலைபாடும் தென்புதுவை அழகாடும் பட்டினத்தின் கலைபாடும் குயிலான கவியரசர் பாவேந்தர் சிலைபோல வீற்றிருக்கச் சிறியேன் அவர்திருமுன் குலம்பாடி நலம்பாடக் குறுக்கிட்டேன் மன்னிப்பீர்.’ என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நான் கவிதை பொழிந் தேன். இளங்கவிஞர்களின் கவிதைகளைத் தலை யசைத்துச் சுவைத்து மகிழ்ந்தார் பாவேந்தர். தொடர்ந்து கருத்தரங்குகள் நிகழ்ந்தது. பிற்பகல் இசை நிகழ்ச்சி, சிறப்புச் சொற்பொழிவுகள், ரஷ்யப் பெண்மணி இசபெல்லாவின் உரை, பாவேந்தர் தம் உரை நிகழ்த்தக் காத்திருந்ததில் ஓரளவு பொறுமை இழந்து போயிருந்தார். இதனிடையே அவருக்கு முன்பே அறிமுக மாயிருந்த சிலர், ஆளியாறு அணைக் கட்டுக்கு போய் வந்துவிடலாம் என்று அவரை விழாவை விட்டு அழைத்துப் போய்விடத் திட்ட மிட்டனர். விழாப் பொறுப்பாளர்களான எங்களுக்குக் கிடைத் தற்கரிய நிதி கை நழுவிப் போய்விடக் கூடாதே என்ற அச்சம் வந்துவிட்டது. அதனால் மற்ற பேச்சாளர்களை விரைவு படுத்தினோம். எனினும் இரவாகிவிட்டது. பாவேந்தர் பேசத் தொடங்கும் போது: பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். அப்படியொரு கூட்டத்தை, ஓர் இலக்கிய விழாவிற்கு அதுவரை பொள்ளாச்சி நகரம் சந்தித்ததில்லை. பாவேந்தர் தம் பேரூரையில் பாரதியோடு தமக்கேற் பட்ட உறவையும், அன்பையும் உணர்ச்சியோடு எடுத்தியம்பினார். பாரதி பாடல்கள் பலவற்றை எப்படிப் பாட வேண்டும் என்று பாடிக் காட்டினார். சில பாடல்கள் பிழையாகப் பதிக்கப் பெற்றிருப்பதாகவும் மொழிந்தார். உரையாடல் போலவும், இசை நிகழ்ச்சி போலவும் - ஒரு சொற் பொழிவு போலல்லாமல்-ஒரு கலை நிகழ்ச்சி போலவும் பாவேந்தர் உரை அமைந்தது. ‘கோல்கைக் கொண்டுவாழ்’ என்ற பாரதி வரியை தவறாகப் புரிந்துகொண்ட சுதேசமித்திரன் பத்திரிகையைக் கேலி செய்தார். கதா காலட்சேபங்கள் ‘கீர்த்தனாரம்பத்திலே’ என்று தொடங்குவதை எடுத்துக்காட்டி ‘ஒரு புதுரம்பம் கண்டு பிடிச்சிருக் கான்-கீர்த்தனாரம்பம்’ என்று கிண்டல் பண்ணினார். பாவேந்தரை மேடையில் பேச வைக்க முடிந்ததே என்ற பெரிய நிம்மதி ஏற்பட்டது. அன்றிரவு பாவேந்தரும் பழனியம்மாளும் பயணியர் விடுதியில் தங்கினர். அதிகாலையிலேயே நண்பர் பழனியப்பன் இல்லத்திலிருந்து சூடான இட்டிலியும், காரமான குழம்பும் கொண்டு வரப்பட்டது. பாவேந்தர் இச்சிற்றுண்டியை வெகு ரசனையோடு உண்டார். மதிய உணவுக்குப் பாவேந்தரின் பழைய நண்பர் குமார சாமி பிள்ளை வீட்டுக்குப் போகும்வரை பல செய்திகளைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் நிதிக் குறைப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது பாவேந்தர் துண்டை விரிச்சு கூட்டத்தில் தண்டனும் என்றார். ‘தண்டல்’ என்ற சொல் எனக்கு அப்போது புதுமையாக ஒலித்தது. அதனால் சிரித்தேன். கவிஞர் கே.சி. எஸ். என்னைக் கடிந்து அப்படிச் சொல்வது, தென் ஆர்க்காட்டில் வழக்கு என்று தெரிவித்தார். பின்னர் பாவேந்தர் மறைந்த ஜீவா அவர்களின் சிறப்புக் களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஜனசக்தி ஜீவா மலருக்குத் தாம் கவிதை கொடுத்திருந்தும் மலர் தமக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். அப்போது எங்களுக்கிருந்த வசதிக் குறைவில் கவிஞர் பெருமானைப் புகைப்படம் எடுக்கக்கூட முடியவில்லை. ஆனால் அவரை அழைத்துச் சென்ற குமாரசாமிபிள்ளை கவிஞரையும் திருமதி பழனியம்மாளையும் அமரவைத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். நண்பர் குமாரசாமிபிள்ளை பாவேந்தரைத் தம்முடன் அழைத்துச் சென்ற போது நாங்கள் விடை பெற்றுக் கொண்டோம். பிறகு அவர் கவிஞரைக் கரூருக்கு அனுப்பி வைத்ததாக எங்களிடம் தெரிவித்தார். பாவேந்தர் மறைவுக்கு முன் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி களில் ஒன்று பொள்ளாச்சி நிகழ்ச்சி என்று கருதுகிறேன். வெகு விரைவிலேயே சென்னையில் உடல் நலிவுற்று அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியாக வந்தது. இன்று எங்கள் ஊரில் பாவேந்தர் தங்கியிருந்த பயணியர் விடுதி இடிக்கப்பட்டு இல்லாமல் போய் விட்டது. ஆயினும் பாவேந்தர் அங்கு தங்கியிருந்த நினைவு அழியா ஓவியமாய் நின்று நிலைக்கிறது. - கவிஞர் சிற்பி 21. பாரதிதாசன் என் ஆசான் பகுதியெலாம் சொற்களுக்குத் தலைமை தாங்கும்; பழங்களெல்லாம் விதைகளுக்குத் தலைமை தாங்கும்; தகுதியெலாம் திறமைக்குத் தலைமை தாங்கும்; தந்தங்கள் பற்களுக்குத் தலைமை தாங்கும்; மிகுதியெலாம் நீரானால் கடலாய்த் தோன்றும்; மிச்சமெல்லாம் அறிவானால் புகழாய்த் தோன்றும்; விகுதியென நிற்காமல் பகுதி போன்று விளங்கியவர் பாவேந்தர்; அவரென் ஆசான்! கற்பிப்போன் ஆசானாம்; அவனி டத்தில் கற்போனே மாணவனாம்; பண்டை நாளில், கற்பித்தோன் பெரும்புலமை பெற்றி ருந்தான். கற்றோனும் கசடறவே கல்வி கற்றான். பற்பலநாள் பாவேந்த ரோடி ருந்தும் பாடம்நான் கேட்கவில்லை என்ற போதும், சிற்றருவி போன்றவன்யான் அவரி டத்தில் தினந்தோறும் பாட்டெழுதிக் காட்டி வந்தேன். நீட்டுயர்ந்த திண்ணையின்மீ தமர்ந்தி ருப்பார்; நின்றபடி நானிருப்போன்; உள்ளே நீபோய்ப் பாட்டுயர்ந்த சுவடிகளை நீண்ட நேரம் படியென்பார்; நன்றாகப் புரிந்து கொண்டு, தீட்டுக நீ பாட்டென்பார், பிழையிருந்தால் திருத்துகிறேன் நானென்பார்; எழுதி வந்து காட்டிடுவேன், அதைத்திருத்திக் கொடுப்பார், அந்தக் கவிதைகளென் கைவசத்தில் இப்போ தில்லை ! நீரைப்போல் அண்ணாவும், திண்மை கொண்ட நிலத்தைப்போல் பெரியாரும், கரிகாற் சோழன் தேரைப்போல் அழகிரியும் இருந்த நாளில், தீயைப்போல் பாவேந்தர் இருந்து வந்தார். நேருக்கு நேராக பகைவர் தம்மை நின்றெதிர்த்த பெருங்கவிஞர் தம்வாழ் நாளில் ஆருக்கும் அஞ்சாமல் வாழ்ந்து வந்தார்; அவரேஎன் கவியாசான்; அதங்கோட் டாசான் ! - கவிஞர் சுரதா 22. பாவேந்தரோடு பாவேந்த ரோடென்றும் அருகிருக்கும் பேற்றைப் பல்லாண்டு பெற்றவன்நான், பலநூலைக் கற்றேன்: பூவேந்து செந்தேனின் புதுச்சுவையை ஒக்கும் புரட்சிமிகு பாடலெல்லாம் அவர்பாடக் கேட்டேன்: மாவேந்து பழச்சாறே அவர்யாத்த பாடல்! மறுமலர்ச்சி மனமலர்ச்சி மொழிமலர்ச்சி கூட்டும்! காவேந்து பேரெழிலாம் கவியரசர் உள்ளம் கனிந்துவந்த கவிதையெலாம் எனை ஊக்கக் கண்டேன். இளவயதில் அவரிடத்தில் நான்பயின்று வந்தேன்; இனியமுகம் பாடத்தை எடுத்தியம்பும் ஆற்றல் வளமுடையார்; வகையுடையார்; அவரிடத்தில் கற்றோர் மாத்தமிழன் வளமுடையார்; பற்றுடையார்; அஞ்சா உளமுடையார்; செயலுடையார், உயர்நோக்க முடையார்; ஒண்டமிழன் முன்னேற்ற நோக்குடையார் ஆவர்! களமுடைய எதிர்க்கிறன் போர்மறவன் என்றன கவியரசர் பகைகண்டு கலங்கியதே இல்லை. பாப்புனையும் நற்றொழிலை அவரித்தில் கற்றேன்; படித்துணரும் நற்செயலை அவரிடத்தில் கண்டேன் யாப்பணியைத் தொன்னூலை அவர்விளக்கக் கேட்டேன்; யார்இனிமேல் அவர்போல எனையூக்க வல்லார்? காப்பணியாய் எனக்கிருந்தார்; நற்கவிதை யாக்கும் கலைச்செறிவை நனிவிளக்கி எனைஎழுதச் செய்தார்; பாப்பாவின் இனமெல்லாம் பாடுகின்ற ஆன்ற பரம்பரையை, நற்கவிஞர் பாசறையைக் கண்டார். காடெடுத்த பல்லவர்கள் நற்றொண்டை நாட்டின் கடல்புரளும் சீர்ப்புதுவை பெற்றெடுத்த செம்மல் ஏடெடுத்தால் பாப்பிறக்கும், இனியதமிழ் பிறக்கும்; எவரிடத்தும் பேச்செடுத்தால் இருபொருளும் பிறக்கும்; மாடெடுத்து நகைசெய்வோர் மலைக்கின்ற வண்ணம் வகைவகையாய்த் தமிழ்முத்து மணிமாலை யாக்கிப் பீடெடுத்த தமிழ்த்தாயின் முடிசூட்டிச் சென்ற பெரும்புலவர் பாவேந்தர் எனதாசான் வாழ்க! பன்னூறு திருமணத்தில் அவைத்தலைமை ஏற்பார்; படர்ந்துவரு நிழல்போல அவரோடு செல்வேன் தொன்னூலின் பொருள்விளக்கிச் சுவைவிளக்கி இல்லம் தொடங்குகின்ற மணமக்கள் நல்வாழ்விற் காண பொன்னூறு தீந்தமிழால் புதுக்கருத்தைச் சொல்வார் புதுக்கிள்ளை போல்நானும் இரண்டொன்று சொல்வேன் மன்னூறு விருந்தினிலும் அருகமர்த்திக் கொண்டு வயிறார உண்ணென்று வாயாரச் சொல்வார். பலாமொய்க்கும் ஈப்போல அவரிருக்க வந்து பல்லோர்கள் சூழ்ந்திடுவார்; நீண்டகடல் ஓர நிலாச்சோற்றை உண்பதுபோல் அவர்வாயின் பேச்சை நெடுநேரம் கேட்டிருப்பார்; சிரித்துமகிழ்ந் திருப்பர் புலாலுணவே அவர்விருப்பம்; அவரோடே சேர்ந்து புசித்தின்பம் கண்டதினால் புல்லுணவை மறுத்தேன் உலாவுவார் கடலோரம் அதிகாலை மாலை; ஒப்பில்லாக் கனகசுப்புக் கவியரசர் வாழ்க! கானெழுத்த மலைக்காட்டு நீரருவி! நன்கு கனிந்திருக்கும் குண்டுபலா! மாவாழை! உச்சித் தேனெழுந்த செஞ்சொல்லார், பூக்காட்டுத் தும்பி! செந்தமிழ்த்தாய் ஈன்றெடுத்த சீர்த்திமிகு செல்வர், வானெழுந்த ஞாயிரவர்! அவரொளியைப் பெற்று மறிகடல்சூழ் உலகத்தில் தொடுவானில் தோன்றும் கூனெழுந்த நிலவுநான்! எனதாசான் நீண்ட குமரிமுனைத் தமிழ்க்கடலே; கடலோரம் நானே! - கவிஞர் வாணிதாசன் 23. பாரதிதாசன் என்னும் பாமன்னன் மூடத் தனம்எனும் முட்புதர் பாண்டி முழுஇருள் நிலமான தமிழகத்தில்-அவன் பாடத் தலைப்பட்ட நாள்முத லாகதது பகுத்தறிவின் ஓளி பாய்ந்ததண்ணெ!-மனப் பார்வைக் குருடெல்லாம் தீர்ந்த தண்ணே! வேடங் கலைந்தவோர் நாடக அரங்காக வேதனை மிரண்டோட முளைந்ததண்ணே!-அவன் பாடம் நடத்திய பாட்டரங் கம்எலாம் பாலுலை யாகி நிறைந்த தண்ணே!-அந்தப் பட்டாளத் தால்தெம்பு பிறந்தண்ணே! ‘நேருக்கு தேர்நின்று நெஞ்சுக்கு முன்நின்று நின்னைக் குறிபார்க்கும் பகைவனிடம்-தம்பி போரிடக் கற்றுக்கொள்’ என்று புறப்பட்ட புரட்சிக் கவிஅவள் எரிமலைதான்!-அவன் உதிர்த்த சிறுசொல்னும் பெருவிலைதான்! ஆருக்கும் அஞ்சாமல் விலையாகிக் கெஞ்சாமல் அறிவெனும் பாதையில் தான்நடந்து-இந்தச் சீர்மிகு நாட்டிற்குச் செந்தமிழ் வீட்டிற்குக் சிந்தை தெளிவிக்கும் சிந்திசைத்தான்-ஒன்றாய்ச் சேர்ந்தாடும் தீமைவேர் வந்தசைத்தான்! பாய்ந்து வரும்ஒரு காட்டா றாகவே பாடிவந் தானந்தப் பாட்டாறு-தலை சாய்ந்த சமூகத்தின் நெஞ்சி நிமிரவே பாவைத் தான்கவி தேனாறு!-கொள்கைப் பயிர் வளர்த் தான் அவன் நம்பேறு! ஆய்ந்த பலகலை வாணனவன், எங்கள் அண்ணலவன் சுவைக் கன்னல்வன்-அன்று மாய்ந்த பழம்புகழ் மீட்டுத் தரவந்த மறவனவன் கவிக் குரவனவன்-இந்த மண்மானக் காப்பிற்கோர் வடிவம் அவன்! வீரம்என் றேசொல்லும் சொல்லக் கிலக்மண மாம விளங்கிய வீரனவன்! - எந்த நேரமும் நெஞ்சில் இனித்திடும் பூங்கவி நெய்து உதவிய வேந்தனவன்! - பசும் நெய்நிகர் நல்மண மாந்தனவன்! பாரதி தாசன் எனும் அந்தப் பாமன்னன் பண்பில் மணந்த புகழ்வண்ணன்! - இந்த பாரில் பறந்து திரிந்து வலம்வந்த- பாவலர் வரிசையில் முதல மகன்; மக்கள் பாசத்தில் கலந்தஓர் தலைமகன்! - கவிஞர் பொன்னடியான் 24. உணர்வில் கலந்த கவிஞன் பாரதிதாசன் உயிர்துறந் தார்எனப் பக்கத்தி லுள்ளோர் பேசி நின்றார்-அவர் சீரறி யாமற் பிதற்றுகின்றார்-எனச் சொல்லியே தானும் நடந்து சென்றேன். சென்னையி னின்று பிணம் வரும் என்கின்ற செய்தியைச் சிற்சிலர் பேசிநின்றார்-அவர் சொன்னது கேட்டுக் கொதிப்படைந்து வெறுஞ் சொத்தைகள் என்று வழிதொடர்ந்தேன். உயிரில் உணர்விற் கலந்த கவிஞன் என் உயிரில் உயிர்கொண் டுலவுகின்றான்-வெறும் துயரில் நான்மூழ்கிக் கிடக்கவில்லை அவன் தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்! - கவிஞர் தமிழ்ஒளி இரங்கற் செய்திகள் 1. நிலைத்து வாழ்வார்! புரட்சிக் கவி பாரதிதாசன், தமிழ்மொழியின் வளத்துக்கும், மறு மலர்ச்சிக்கும் அரும்பாடுபட்டார்; ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்று வித்தார்; பல வாரிசுகளையும் பெற்றார். மகாகவி பாரதியின் வாரிசாக வாழ் பேறும் பெருமையும் அவருக்கு வாய்த்தன. கனக சுப்புரத்தினம் மறைந்தார். ஆனால் புரட்சிக்கவி பாரதிதாசன் மறையவில்லை. அவர் நம் மனத்தில் என்றும் நிலைத்து வாழ்வார். தமிழ்மொழி, அழியா வரம் பெற்றது. அந்த மொழி உள்ளவரை தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் புகழும் வாழும் - வாழ வைப்போம். சென்னை-5. ம.பொ.சிவஞானம் 2. தமிழினத்துக்குப் பெரிய இழப்பு புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்திய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறிக்காமல் பாரதிதாசன் ஒருவரையே குறிக்குமாறு, தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்றுவிட்டார். சிறந்ததை மிக மிக விரும்பிப் போற்று தலும், தீயதை மிக மிக வெறுத்துத் தூற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டில் புகுந்து சமுதாயத்தில் இடம்பெற்று விட்ட தீய பழக்க வழக்கங் களையும் மூடக் கருத்துக்களையும் கடிந்து பாடி, படிப்பவர் உள்ளத் தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுக்களில் விழுமிய கற்பனையும் உண்டு; வேகமான உணர்ச்சியும் உண்டு; பழந்தமிழ்மரபும் உண்டு; புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர் வாழ்வுக்கு அவர் தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்து வந்தன. அவர் பிரிவு தமிழினத்துக்குப் பெரிய இழப்பாயிற்று. சென்னை - 30. (டாக்டர்) மு.வரதராசன் 3. பாவேந்தர் மறைந்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் அவர்கள் இந்த நூற்றாண்டின் ஈடிலாக் கவிஞர். அவரது இழப்பு தமிழகத்தின், தமிழரின், தமிழ்க் கவிஞரின் பேரிழப்பு ஆகும். தமிழகப் புலவர் குழுவில் அவர் ஓர் உறுப்பினராக இருந்து தமிழுக்கும், தமிழர்க்கும் அவராற்றிய தொண்டு மிகப் பெரிய தொண்டாகும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவதோடு, அரிய கருத்துக்களை, எளிய நடையில், உயர்ந்த கவிதைகளாக்கும் கலை தமிழகத்தில் மறைந்து விடாதிருக்கவும் வேண்டுவோமாக. திருச்சி - 8. - கி.ஆ.பெ.விசுவநாதம் 4. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு புதுவை - கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனார் சிறந்த தமிழ் அறிஞர்; தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை நன்கு பயின்றவர்; தீண்டாமை, பெண்ணடிமை, கைம்மைத் துன்பம், மூடக்கொள்கைகள் முதலியவற்றைத் தம் பேச்சாலும் பாக்க ளாலும் வன்மையாகக் கடிந்தவர்; சீர்திருத்த உள்ளம் கொண்டவர்; பேச்சிலும் மூச்சிலும் அதனையே வெளிப்படுத்தியவர். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி(பில்ஹணீயம்), எதிர் பாராத முத்தம், பாண்டியன் பரிசு என்னும் காவியங்கள் இவரது தமிழ்ப் புலமையையும் சீர்திருத்த உள்ளத்தையும் ஆழ்ந்த தமிழ்ப் பற்றையும் நன்கு புலப்படுத்துவன. இவர் அண்மையில் பாடிய மணிமேகலை வெண்பா, குறிஞ்சித்திட்டு முதலியவை மிகச் சிறந்தவை என்று அறிஞர்கள் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். திரைப்படக் கதை, வசனம் எழுதுவதிலும் இவர் சிறந்தவர். பாரதிதாசனார் உண்மை நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாவார்; அஞ்சாநெஞ்சினர்; தமக்குச் சரியென்று பட்ட கருத்துக்களை அஞ்சாமல் வெளியிடும் ஆற்றல் வாய்ந்தவர். தமிழச் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர். விருந்து பேணுவதில் சங்க கால வள்ளல்களை ஒத்தவர். அவர்தம் ஆருயிர் மனைவியார் திருவாட்டி பழனியம்மாள் அவர்கள் கணவருக்கேற்ற காரிகையாவார்; அவர்தம் குறிப்பறிந்து நடப்பவர்; திறம் படைத்தவர். எனவே கவிஞரது பின்வாழ்க்கை இறுதிவரையில் நல்வாழ்க்கை யாகவே இயங்கியது. பாரதிதாசனார் உயர்ந்த பண்புகள் உடையவர்; தமிழைப் பற்றிப் பெருங்கவலை கொண்டவர்; தமிழர் நல்வாழ்வில் பேரவாக் கொண்டவர். இப் பல நலங்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற கவிஞர் பெருமான் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆயினும் என் செய்வது? பிறந்தவர் இறப்பது உண்மை. அவருடைய உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றி நடந்து அவரது ஆன்மாவை இன்புறுத் துவதே கடமையாகும். சென்னை-1. டாக்டர் மா.இராசமாணிக்கனார் 5. பிறவியில் கவிஞர் நெட்டியாலே ரோஜாப் பூவைப் போலச் செய்கிறார்கள். முதலில் தனித்தனியே இதழ்களைச் செய்து காம்பையும் செய்து பின்பு கோக்கிறார்கள். அப்பால் வர்ணம் தீட்டுகிறார்கள். பிறகு ரோஜா அத்தரைத் தெளிக்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றாக ஒட்டிக் கடைசியில் அந்தச் செயற்கை ரோஜாப்பூ வடிவெடுக்கிறது. ஆனால் உண்மை ரோஜாப்பூ அப்படி இதழ் இதழாக ஒட்டி வருவதில்லை. அது மலராவதற்குள் அங்கங்கள் யாவும் ஒரு மிக்க உருவாகி வளர்ந்து ரோஜாவாக மலர்ந்து மணக்கின்றன. உண்மைக் கவிஞனிடம் கவிதை இயல்பான ரோஜாப் பூப்போல மலர்கிறது. அது முழு உருவம் எடுப்பதற்கு முன் அங்கம் அங்கமாக ஒட்டப்பெறுவதில்லை; முழுமையாகவே வளர்கிறது. கருத்து, சொல், ஓசை, வடிவம் எல்லாம் இணைந்து வளர்ந்து உருவம் பெறுகின்றன. கருத்தைத் தனியே நினைத்து அதற்குச் சொல்லைத் தேடி வைத்து, எதுகை மோனைக்காக வெட்டித் தட்டிச் சரிப்படுத்தி வரும் செய்யுள் நெட்டி ரோஜாப்பூவைப் போன்றது. பாரதிதாசன் பாட்டு இயற்கையான ரோஜாப்பூப் போன்றது. கருத்துடன் சொல்லும் உணர்ச்சியும் வடிவமும் இழைந்து இணைந்து உருவாகின்றன. அது எவ்வாறு தெரிகிறது? எதுகைக்காக அநாவசிய மான சொல் வந்து ஒட்டுவதில்லை. ஓசைக்காக வீண் அடைமொழிகள் சுமையாகச் சேர்வதில்லை. பாட்டின் ஓட்டத்தோடு சொல்லும் உணர்ச் சியும் வடிவமும் பிறவும் தாமே இயல்பாகப் பொருந்தி நிற்கின்றன. கருத்தின் உயர்வு தாழ்வுபற்றி அபிப்பிராய பேதம் இருக்கலாம். ஆனால் கவி வடிவத்தின் கச்சிதமான அமைப்பைப் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இராது. இதுதான் பிறவிக் கவிஞனுக்கு உள்ளசிறப்பு, அதைப் பாரதிதாசனிடம் கண்டோம். சென்னை-28. - கி.வா.ஜகந்நாதன் 6. மறையாத கவிஞன் தோற்றம் உண்டேல் மரணம் உண்டு என்பது முதுமொழி யாயினும், நம் போன்ற சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் தான் இம் முதுமொழி உண்மையாகும். படைக்கப்பட்டப் பொருள்கள் அனைத்துமே அழிந்துவிடும் - கலைகளைத் தவிர. அக்கலைகளி னுள்ளும் தலையாய கவிதைக் கலை கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து சிரஞ்சீவத்துவம் பெற்று நிலைபெறுகின்ற ஒன்றாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயிலையும், சிலப்பதி காரத்தையும் படைத்தவர்கள் மறைந்துவிட்டார் களாயினும், இன்றும் என்றும் அழியாமல் நிற்கக்கூடியவை அவை என்பதை நன்கு அறிவோம். 20-ஆம் நூற்றாண்டில் தந்நிகரில்லாக் கவிஞனாய் திகழ்ந்த கவியரசர் பாரதிதாசனார் பூதவுடல் நீத்தார் என்பது பெரும் துயரத்தை விளைவிக்கின்ற ஒன்றாயினும், கவிஞரை பூதவுடலுக்காக மட்டும் நாம் போற்றவில்லை. அவர் விட்டுச் சென்ற கவிதைத் தொகுதிகள் “குடும்ப விளக்கு”, “பாண்டியன் பரிசு” போன்ற கவிதைகள் தமிழ்மக்கள் விரும்பினால்கூட அழிக்க முடியாத செல்வங்கள் ஆகும். இன்னும் 100 ஆண்டுகள் கழித்துத் தம் இலக்கிய வரலாறு எழுதப் பெறும்போது இந்த நூற்றாண்டின் பண்பாட்டைத் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டிய ஒரு பெரும் கவிஞர் என்ற சிறப்பைப் பிறர் யாருக்கும் பகிர்ந்து கொடாமல், தாமே பெறக்கூடிய பெரும் புகழாளர் கவியரசர் பாரதி தாசனார். யாருடனும் இனிமையாகப் பசி, அன்பு பாராட்டும் நற்பண்பு படைத்தவர் அவர். எப்போதும் மிக உயர்ந்த குறிக்கோளையே நினைந்து, பேசி, வாழ்ந்தார் என்பதை அவருடன் பழகிய நம் போன்றவர்கள் நன்கு அறியமுடியும். கவிஞன் மறைய முடியாது; கவிதைக்கு அழிவில்லை; ஆனால் நற்பண்புகளின் உறைவிடமாய், உயர்ந்த குறிக்கோள்களுக்கும், லட்சியங்களுக்கும் கொள்கலனாய் இருந்த நற்பண்பாளர் மறைந்தாரே என்றுதான் வருந்துகின்றோம். சென்னை - 4. - அ.ச.ஞானசம்பந்தன் 7. இறவாத புகழுடையார் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன் என்று பாரதியாரே செம்மாப்புடன் கூறியுள்ளார். பாரதிதாசனாரும் அதை யொட்டிப் பாரதிதாசன் என்ற பெயரையே தம் பெயராகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவர் மறைந்தாரென்று சொல்வதற்கில்லை. தமிழ் உள்ள அளவும் பாரதிதாசனாருடைய பாடல் அவருடைய புகழுடம் பாக என்றைக்கும் வாழும். பாரதிதாசனார் தமிழின் நரம்பறிந்து கற்றவர்; தமிழிலக்கணத்தை இன்பமாகக் கற்பித்தவர். பாரதியாரின் பாடல்களைவிட இவருடைய பாடல்களில் தமிழின் பழம்பெருமையைக் காணலாம். ஆனால் பாரதியாரிடத்திற் போல இவரிடத்திலும் புத்துலகப் புதுப்போக்கினை முழுவதும் காணலாம். பாரதியார் எல்லாவகையான உரிமைகளையும் வற்புறுத்திப் பாடினார்; ஆனால் தேசியமே அக்காலத்திற்கேற்ப நம் காதில் விழுந்தது. பாரதிதாசனாருடைய மனமோ சமுதாயத்தில் சம உரிமை இல்லாமை கண்டு புழுங்கி எரிமலை வெடித்தாற் போலப் பாட முன்வந்தது. அந்தப் போக்கிலேயே நாடகங்களையும் கதைகளையும் உருவாக்க முயன்றார். சிலபோது குறுகிய நோக்கம்போலத் தோன்றும்; ஆனால் நாளடைவில் அவை மறையும். சமுதாய உரிமைக் குரலை என்றென்றும் அங்கே கேட்கலாம். பாரதிதாசனாரும் நெஞ்சு பொறுக்கொணாத நிலையினால் பாவாணர் என்ற நிலையை மறந்து நாவாணராகிச் செய்யுள் எழுத முயன்றதுண்டு. அவற்றைச் சொற்பொழிவுகள் எனக் கொண்டு மகிழ்தல் கூடும். நாவல்கள் பல மலிந்து வரும் காலத்தில் நாவல்போல் இனிக்கும் செய்யுட் கதைகளை எழுதக் கூடுமென்று பல எழுதிக் காட்டினார். அவருக்குப் ‘புரட்சிக் கவிஞர்’ என்று பெயர் வாங்கித் தந்தது ‘ புரட்சிக் கவி’ என்ற சிறுகாப்பியமே யாகும். நையாண்டிக் காப்பியம் பாடுவதிலும் வல்லவர் என்பதைச் ‘சஞ்சீவி மலைச் சாரலில்’ காணலாம். தமிழின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர். அதை அவருடைய நூல்களெங்கும் காணலாம். குமரகுருபரரை உலகம் மறவாதபடி இக்காலத்திற்கேற்பவும், தம் கொள்கைக் கேற்பவும் உயர்த்திச் சிறந்த காப்பியம் பாடி வைத்துள்ளார். இந்திய நாட்டில் பெரும் புரட்சி செய்தவர்களில் ஒருவராகக் குமரகுருபரரை அங்கே உயர்த்திக் காட்டுகிறார் நம் கவிஞர். இயற்கையைத் தாமனுபவித்தபடியே நம்மை அனுபவிக்கச் செய்வதிலும் அவர் சிறந்த வெற்றி கண்டுள்ளார். சிறுசிறு பாடல்களாக அமைந்த இவை சொல்லழகும், கருத்தழகும் பெற்று மிளிர்கின்றன. இசைப் பாடல்களும் பாடியுள்ளார். அவற்றை இசையுடன் படிக்காமற் போவோமானால் வெறும் அடுக்குமொழிகளெனத் தோன்றக்கூடும். அவற்றை இசைப் பாடல்களாக ஓதும்பொழுதே அப்பாடல்களில் வரும் ஒவ்வொன்றும் இசையோடிசையா யியைந்து இன்பந் தருவதைக் காணலாம். அவர் பாட்டில் தமிழின் மிடுக்கைக் காணலாம். அவர் பாட்டின் கருத்தை விரும்பாதவர்களும் சொற்களைக் கொண்டு மயக்கும் மகேந்திர ஜாலத்தில் மயங்காதிருக்க முடியாது. அவர் முதன்முதலில் பதிப்பித்த கவிதைத் தொகுதி என்றென்றும் தமிழ்மணம் சீவி வாழும். வாழ்வில் உயர்ந்தவர்களைப் பற்றியே காப்பியம் எழுதும் பழம் போக்கிற்கு மாறாகத் தாழ்ந்து ஒதுக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வையும் காப்பியமாகப் பாடிக்காட்டும் புதிய மரபினைப் பாரதிதாசனார் நிலைநாட்டியுள்ளார். பழங்காப்பியங்களும் வாழவேண்டுமென்ற பெருநோக்குடையவர் அவர். ஒருவகையில் பார்த்தால் அவர் மனத்தைக் கவர்ந்த காப்பியங்கள் குடிமக்கள் காப்பியங்களேயாகும். சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையை யும் இந்த இருபதாம் நூற்றாண்டிற்கொத்த உயிர்த்துடிப்புள்ள தமிழில் எழுதி நம்மை மகிழவைத்துள்ளார். இந்த நூற்றாண்டின் முப்பெரும் பாவாணர்கள் நமக்கு வழிகாட்டி வாழ்ந்தனர். பாரதி, கவிமணி, பாரதிதாசன் ஒருவர் ஒருவராக மறைந்தனர். ஆனால் அவர்கள் வழி மேலும் மேலும் வளர்ந்தோங்கும். அவரோடு நாம் வாழ்ந்த காலம் இது. பேரொளி தோன்றியது. அங்கெழுந்த புகையைக் கண்டு கண்களில் கண்ணீர் வாரக் கண் சிவந்து நின்றோம். ஒளியைவிடச் சில போது மேல்வந்து தாக்கிய சூட்டினையே உணர்ந்தோம். ஆனால் புகையும் சூடும் இனித் தோன்றா. கவியின் ஒளியே என்றென்றும் வாழும். பாரதிதாசனார் புகழுடல் வாழ நாமும் வாழ்வோமாக. - பல்கலைச் செல்வர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் 8. பாவேந்தர் பாடுகிறார்! பாரதிதாசனார் மறைந்தார் எனச் செய்தி கேட்ட அன்றும் புதுவையில் அவரது இறுதிப்பயணத்தில் கலந்துகொண்ட போதும் பேரிழப்புணர்ச்சி நம்மையெல்லாம் வெறுமையில் தள்ளிற்று. ஆனால் அவர் நினைவாக அவரது கவிதை நூல்களைத் திறந்திடின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரது கம்பீரமான உருவம் நம்முன் தோன்றி மிடுக்கோடு பாடுகிறது. அவருள்ள நாட்களில் அவரது கவிதைகளில் காணப்படாத பொருளெல்லாம் இன்று வெளிப்பட்டு நம்மைப் பரவசப்படுத்துகிறது. பாவேந்தர் கவிதைகள் படிக்கும் ஒவ்வொருவரையும் புது மனிதராக்கும் என்பது உறுதி. உள்ளத்தின் மூலையில் பதுங்கியிருக்கும் கோழைத்தனத்தைத் துரத்தியடித்து துணிவூட்டும் ஆற்றல் அவர் கவிதைகளுக்கிருப்பதை எவரும் உணரலாம். சாதி துடைத்த சமூகத்தில் சமநீதிப் பொருளாதாரம் காணத் துடிக்கும் அவரது கவிதைச் சிறகின் படபடப்பை நமது செவிகள் இன்றும் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன. உழைப்பவர்க்குப் பரிந்தும், ஏய்ப்பவரைக் கடிந்தும், “ஒன்றே சமூகம் என் - றொண்ணார்க்கே இறுதி” - எனச் சுட்டு விரல் ஆட்டி எச்சரிக்கும் புரட்சிக் கவியரசு, நமது உள்ளத்திரையில் உருவாக நின்று, ஓங்கிக் குரலெடுத்துப் பாடிக் கொண்டுதானிருக்கிறார். மக்கள் கவிஞர் பாரதிதாசன் காணவிரும்பிய - நம்மை யெல்லாம் சமைக்கத் தூண்டிய சமூகத்தை நாம் அமைக்கப் போகிறோமா? அன்றி அவரது பாடலுக்குத் தாளஞ்சேர்த்து, காலில் சதங்கையிட்டு ஆடி ஓயப் போகிறோமா? பாடலின் இசைக்கவர்ச்சியைத் தாண்டி, சூழ இருக்கும் கருத்தினை அறிந்து செயல்படுவோமாக! சென்னை -17. - ஈ.வே.கி.சம்பத் 9. இரங்கற்பா மன்னவர்க்கு மன்னன் மாகவிஞன் பேரறிஞன் தன்னேரிலாத தமிழ்ப்புலவன் கண்மறைந்தான்! பொன்னாடும் பூந்தமிழும் பொருளாய் உலவியவன் தன்னாவி நீத்தவனாய்த் தனியுறக்கங் கொண்டு விட்டான்! இன்னொருவன் எப்போ(து) இங்கே பிறப்பானோ? இப்படியோர் தோற்றம் எவர்க்கினிமேல் வாய்த்திடுமோ? சாகும்வரை அவன் தலைநிமிர்ந்தே நின்றிருந்தான் வேகுமே பொன்னுடலும்! வெந்தணலின் வாய்ப்படுமோ? இல்லை! அவன் நினைவை எந்நாளும் நாம் வடிப்போம்; வல்லதமிழ்த் தேனீயை வாழ்த்தி வணங்கி நிற்போம்! - கவிஞர் கண்ணதாசன் தென்றல் திரை, 23.4.1964 10. சிங்கத்தின் பெரும் பயணம் “வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழுவதை நான் பார்த்திருக் கிறேன். ஆனால், நிலவே விழுந்துவிட்டதை இப்பொழுதுதான் பார்த்தேன்! தமிழ் வானம் இருண்டு விட்டது! தமிழ்க்கொடி கருகிவிட்டது! பாடுவதைத் தவிர வேறொன்றும் அறியாத வண்ணக்குயில் பறந்து விட்டது. இந்தத் துன்பத்திற்கு முடிவே இல்லை. இந்தக் கண்ணீருக்கு ஆறுதல் இல்லை. தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய அங்கம் மறைந்துவிட்டது! நிமிர்ந்த நன்நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் படைத்த கவி மன்னன் கண்மூடி விட்டான். கணவனை இழந்த மனைவிக்கு ஆறுதல் சொல்லலாம்; தந்தையை இழந்த மகனைத் தேற்றலாம்; மகுடத்தை இழந்துவிட்ட தமிழ்த்தாயை யார் தேற்ற முடியும்? தனக்கிருந்த பாதுகாப்பை இழந்துவிட்ட தமிழ்க் கவிதை மரபுக்கு யார் ஆதரவு சொல்ல முடியும்? “தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்! விடே”னென முழங்கிய குரலெங்கே? “எமை நத்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத்தாழும் தொடேன்’ எனச் சபதம் கூறிய தலைவன் எங்கே? “நீர் நிறைந்த கடலையொக்கும் நேர் உழைப்பவர் தொகை! நேர் மிகுந்த ஓடம் ஒக்கும் நிறைமுதல் கொள்வோர் தொகை! சூறை ஒன்று மோதுமாயின் தோணியோட்டம் மேவுமோ?” என்று தொழிலாளர் புரட்சிக்கு வித்தூன்றிய தூயவன் எங்கே? “மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகம்” எங்கே? “எப்பக்கம் வந்து புகுந்துவிடும் - இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்? “இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா? நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே” - என்று இந்தி எதிர்ப்புக்க முதற் சேனை சேர்த்த கோமகன் எங்கே? அவன் பறந்து விட்டான். அந்தக் குரல் அடங்கிவிட்டது! தமிழ்ச்சிங்கம் பயணம் போய்விட்டது. இந்தத் தலைமுறைக்கு அவனே கவியரசன் அவனது பெயர் எங்கள் நெஞ்சிலிருந்து அகலாது பாரதிக்கு நாடுகண்ட விழாவை பாரதிதாசனுக்கு நாம் காணுவோம்! தமிழ் வாழுங் காலம் வரை அவன் பெயர் வாழ வழி செய்வோம்” - கண்ணதாசன் 11. ஏறு மறைந்தது தமிழ்ச் சமுதாயம் தன் தலைமுறைக்கு வாய்த்த தனிக் கவிஞனை இழந்து விட்டது. ஏறுபோல பீடுநடை போட்ட ஏந்தல் இன்று கண்மூடி விட்டார். 75 வயது நிறைந்தவரா இவர்? என்று எண்ணும்படி சிங்கம்போல் நின்ற செம்மல் இன்று உலகை மறந்து விட்டார். கடைசி நிமிடம் வரைnயிலே அவர் பிரக்ஞையோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த உடல் உரமும் உள்ள உரமும் இனி யாருக்கு வாய்க்கும்? பாரதி பாடாததெல்லாம் பாரதிதாசன் பாடினார். அவரது சொல்லாட்சியும் கருத்தோட்டமும் இந்தத் தலை முறையில் வேறொருவரிடம் தோன்றுவது அரிது. இன்றைய அரசியல், அவரது பாட்டிலே பிறந்த அரசியலாகும். இன்றைய இசை, அவரது சொல்லிலே தோன்றிய இசையாகும். இன்றைய சமுதாயம் நிமிர்ந்து நிற்பதற்கு - பெரியாருக்கு அடுத்தபடி - அவரே காரணம். பாடிய குயில் பறந்துவிட்டது. மற்ற பறவைகளும் பறக்க வேண்டியவையே! ஆனால் பறந்துபோகும் தருணம் வரை, அந்தக் குயிலை மறக்க முடியாது. நாம் அவர் நினைவுக்கு மரியாதை செய்வோம். நமது கண்ணீரைக் காணிக்கையாக்குவோம். - கண்ணதாசன் 12. குரல் நிறுத்திய குயில் கழுத்து நிமிர்ந்த தமிழின வேங்கை கனலாய் வாழ்ந்த தமிழன் எழுத்து நிமிர்ந்த பாடல் படைக்கும் எழுச்சிப் புலவன் வீரம் பழுத்து நிமிர்ந்த புரட்சிச் செம்மல் பாயும் புயலாய் எம்மை இழுத்து நிமிர்ந்த பாரதி தாசன் இலையே! இலையே! இலையே! போற்றப் பிறந்த களத்தின் பொருநன் புன்மை உற்றிழிந்த எம் வாழ்வை மாற்றப் பிறந்த மாபெரும் ஆற்றல் மறந்திகழ் இனப்போர் மண்ணில் ஆற்றப் பிறந்த அருந்தமிழ் வீரன் ஆரியர் நெஞ்சில் கூர்வாள் ஏற்றப் பிறந்த பாரதி தாசன் இலையே! இலையே! இலையே! பீடு படைத்த புலவன் மதத்தைப் பிளந்த சூறைக் காற்று கேடு படைத்த மடமைக் குப்பைக் கிடங்கை எரித்த நெருப்பு நாடு படைத்த நல்லறி வாளன் நஞ்சர் நெஞ்சை நொறுக்கி ஏடு படைத்த பாரதி தாசன் இலையே! இலையே! இலையே! மனத்தை வளர்த்த மாந்தர் நேயன் மண்ணில் நாளும் மண்டைக் கனத்தை வளர்த்த வல்லாண்மையினர் கழுத்தை முறித்தோன்! அடிமைத் தனத்தை வளர்த்த தளைகள் அனைத்தும் தறித்த போர்வாள்! மாந்தர் இனத்தை வளர்த்த பாரதி தாசன் இலையே! இலையே! இலையே! - கவிஞர் காசி ஆனந்தன் nnn