பாவேந்தம் 24 கட்டுரை ïy¡»a«-5 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 24 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 240 = 272 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 170/- கெட்டி அட்டை : உருபா. 225/- படிகள் : 1000 நூலாக்கம் : வ. மலர், .இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  இலக்கியப் பெரியார் பாவேந்தர்! பஞ்சிலிருந்து திரியையும் உருவாக்கலாம்; திரையையும் உருவாக்கலாம்! விளக்கின் வெளிச்சத்தைக் கூடுதலாக்கத் திரி உதவும்; வெளிச்சத்தை மறைக்கத் திரை உதவும். படைப்பாற்றலும் அறிவும் பஞ்சு போன்றவை. அவை எந்த நோக்கத்திற்குப் பயன்படுகின்றன என்பதைப் பொறுத்தே திரியா, திரையா என்னும் தெளிவு கிடைக்கும். சிந்திக்கவும் ஏற்றத் தாழ்வைச் சீர்படுத்தவும் உதவும் எழுத்து வாசிப்போர் மனத்தை வெளிச்சமாக்கும், அது திரி! மூடத்தனத்தைச் சுமந்துவரும் எழுத்து, வாசிக்கும் மனத்தை இருட்டாக்கிவிடும், அது திரை! இத்தகைய எழுத்தாளர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்று எச்சரிப்பார் பாவேந்தர் பாரதிதாசன். பழமை வாதத்தைத் தாங்குவோர் அவருக்குப் பழிகாரராகவே தெரிவார். அழியாத மூடத் தனத்தை - மிக அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதல்எழுத்(து) ஓதினும் மதிஇருட் டாகும் (பக். 7) வழக்கம் என்பதற்காக எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர் பாவேந்தர். வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ள வேண்டாம் (பக். 92) புதிய சிந்தனைகளால் மாந்த மனத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு எத்தனையோ இடையூறுகள் முளைத்தபடி இருக்கும். பழமைவாதம் குறுக்கே பாயும். பணப் பெட்டிகள் ஆசை காட்டும். அடக்குமுறை அச்சுறுத்தும். முற்போக்குச் சிந்தனை யோடு எழுந்தோர், தொடர்ந்து தடுமாறாமல் நடைபோடுவது கடினம்! குறிக்கோளில் உறுதியும் தெளிவும் இருப்போரிடம் மட்டுமே, நிலையான கொள்கைப் பயணம் தொடர்ந்தபடி இருக்கும். அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ பெற்றதன் கொள்கையைப் பிறர்கை மாற்றுவோன் உற்றது உரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன் கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன் மனிதருள் வாய்ந்த மனித விலங்கு. (தொகுதி 15; பக். 337) மனிதர், மனித விலங்கு - இருபிரிவும் நம்மைச் சுற்றி உண்டு. உருவத்தால் எல்லோரும் மாந்தரே. உள்ளத்தாலும் செயலாலும் மாந்தர் களாவதற்குத் தடுமாறாத குமுகாயச் சிந்தனை வேண்டுமென்கிறார் பாவேந்தர் எழுதும் முறைக்கும் அவர் வழிகாட்டுவார். சிறிதளவே எழுதி னாலும் நிறையப் படிக்கவேண்டும் என்பார். பிறரை நகலெடுப்பது அறிவு வறுமையின் அடையாளமாம்! புதிய அறிவையும் புதிய மனத்தை யும் பெறத் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று அறிவுறுத்துவார். சிறிதெழுதத் தேடி நிறையப் படிப்பாய்! பிறர்அடி பார்த்துப் பிழைப்போன் - வறியன்! கருவி விருப்பாய் அறிவுநிலம் கல்லி வருவி புதிய மனம். (பக். 334) புதிய மனம் பெற்றிருந்த பாவேந்தர் நீண்ட வாழ்நாளையும் பெற்றிருந்தார். குமுக மாற்றத்திற்கான எல்லாத் துறைகளையும் சிந்தித்தார். அவற்றை எழுத்தாக்கினார். தமக்குப் பின் பெரிய எழுத்தாளர் படையை பாவேந்தர் பரம்பரை எனத் திரளச் செய்தார். கடவுள் சிந்தனையோடு எழுந்து, காந்தியச் சிந்தனையால் வளர்ந்து, பெரியாரியச் சிந்தனையாளராக மலர்ந்தார். கடவுளை மதங்களைக் காப்பவர் என்போர் கருணை யிலாநிலம் பொருள்நனி கொண்டோர் உடைமை பறித்தஇக் கொடியரில் கொடியர் ஒழிந்தபின் பேநலம் உறுவர்இவ் வுலகோர் முதுகில் அமர்ந்த முதலாளி மூளையில் அமர்ந்த மதவாதி (பக். 347) இரு தரப்பையும் துடைத்தெறிவதன் மூலமாக உலகம் நலமடை யும் என்பதை இவ்வரிகளால் பாரதிதாசன் தெளிவுபடுத்துகிறார். மக்கள் வாழ்வைப் பின்னோக்கி இழுக்கும் ஒவ்வொன்றையும் பாரதிதாசன் கேள்விக்கு உள்ளாக்கினார். கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே கூலிமக்கள் அதிகரித்தார் ... (பக். 14) என்று உழைப்போரின் வறுமைக்குக் காரணம் கூறினார். பாதிக்கு nதபசிvன்றுரைத்jல்செய்தgவத்தைக்fரணம்fட்டுவார்- kதtதத்தைcம்மிடம்Úட்டுவார்- gதில்Xதிநின்wல்படைTட்டுவார்(பக்.73) தலையெழுத்தையும் பாவத்தையும் காரணமாகக் காட்டி, வறுமையைச் சுமக்கச் சொல்லும் மதவாத ஏமாற்றைத் தோலுரித்தார். நன்றிக்கு வாழ்ந்திட வேண்டும் - உரம் வேண்டும் - திறம் வேண்டும் - உன் நாட்டிற்கே நீவாழ வேண்டும் - நம் ஞாலப் பெரியார் செல்லும் பாதை யினை விடாதே விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்! (தொ. 18; பக். 47) காரணம் கேட்டுக் கடைபிடிக்கச் சொல்லும் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் அணிவகுக்குமாறு வலியுறுத்தினார். வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற் கேஅடை யாளம் - வாய் விட்டிசைப் பீர்கள்சுயமரி யாதைஎக் காளம். (பக். 160) தன்மான இயக்கத்தின்கீழ் தமிழர்களை ஒன்றுகூடச் சொன்ன பாரதிதாசன், தாமும் ஒருவராய் நின்று வாழ்நாள் இறுதிவரை பணி யாற்றினார். பகுத்தறிவுத் துலாக்கோலில் பழந்தமிழ் இலக்கியங்களையும் எடைபோட்டுக் காட்டியது பாவேந்தர் செய்த புதுமை! திருமூலர் பாடியவை 3000 பாடல்கள் எனச் சேக்கிழார் பாடி யுள்ளார். திருமந்திரத்தில் இப்போது 47 பாடல்கள் கூடுதலாக உள்ளன. அவை இடைச் செருகல்தானே என்று அவர் வினா எழுப்பினார். ‘மூவா யிரம்சொன்னார் மூலன்என்றார் சேக்கிழார் பாவேது மேல்நாற்பே னேழ்? (பக். 176) திருமந்திரத்தின் முதற்பாடல் ஒன்றவன்தானே எனத் தொடங்கும் என்கிறார் சேக்கிழார்! ஐந்து கரத்தனை என இப்போதுள்ள முதற் பாடல் இடைச்செருகல் அல்லவா! திருமூலர் காலத்தில் விநாயகர் வணக்கம் ஏது? இலக்கிய உலகிற்குப் பாவேந்தர் புதுக் குருதி பாய்ச்சினார். ஒன்றவன் தானே எனல்என்று சேக்கிழார் நன்று நவின்றாரன் றோ? ஐந்து கரத்தனை ஆனதொரு செய்யுள்செய்து முந்தவைத்தார் மூலன்நூ லில் (பக். 176) எல்லோரையும் படைத்தவர் கடவுள் என்றால், கோவிலுள் நுழையும் வலிமையும் எல்லோருக்கும் உண்டு! நாயும் காக்கையும் நுழையும் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதைத் தடுக்கிறார் களே! நாயை விடவா அவர்கள் கேவலம்? என பாவேந்தர் கேட்டார். குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? (பக். 139) தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு எனத் தனிநூலே படைத்தார். அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் (பக். 83) பெண்களைப் புதுமைப் பெண்களாக்க விரும்பினார் பாவேந்தர். தொழிலாளர், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் என எந்தப் பிரிவினர் ஒடுக்கப்பட்டாலும் பாவேந்தர் பாடல் உரிமைக் கனல் கக்கியது. ஒடுக்குமுறை உலகத்தின் எந்த மூலையில் எழுந்தாலும் பாவேந்தர் எதிர்ப்புக் குரல் பாட்டாய்க் கனன்றது. வியத்நாமில் அமெரிக்கா நடத்திய அட்டூழியமும், பாவேந்தரின் எதிர்ப்புக்குத் தப்பவில்லை. அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள் ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை (பக். 313) இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா - பாவேந்தருக்கு வேடனாகத் தெரிந்தார். திபேத்து வேடனார் இந்தியா வந்தார் (பக். 380) என்று குருவிகளை எச்சரித்தார். உண்மையை உணர்த்துவதும் பரப்புவதும் கடினம் என்பதை உணர்ந்த அவர், போகும் போக்கில் கூறினார். பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு (பக். 308) காலால் நடக்கும் உண்மையைவிட, சிறகாய் பறக்கும் பொய் விரைவாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்! உண்மையைச் சார்ந்து நிற்போருக்கு, உழைக்கும் நெருக்கடி கடுமையாய் இருப்பது இயற்கை! சமுதாயம் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்ற முனையும் வேகத்துடன் வெளிப்பட்டவை பாவேந்தர் பாடல்கள்! அதற்காக அவர் ஏற்ற எதிர்ப்பும் இழப்பும் ஏராளம். அவற்றை இத் தொகுப்பில் ஒன்றுதிரட்டி பார்ப்பது இதுவரை கிடைக்காத வாய்ப்பு. தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியன் பாவேந்தரின் படைப்புகள் அனைத்தையும் பாவேந்தம் என 25 தொகுப்புகளாக இளங்கணி பதிப்பகம் வழி வழங்க முன்வந் திருப்பது தமிழுலகம் பெற்ற பேறு! சமுதாயம் சார்ந்த பாவேந்தரின் பாடல்கள் அடங்கிய இத் தொகுப்பு புதிய உலகை உருவாக்கும் சிந்தனையைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும்! - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கிநூழீஞ் றீஜீஹமூர்ஙூ குமீக்ஷீயுகூந்) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (ஸசுஙிபீகுளிட்கி ஹகுமூர்கூயு) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! (கீகுட் கிகுதீநூக்ஷி-ஸநூணீபிகீகுங் கீநூட்க்ஷி) 15. இதயம் எப்படியிருக்கிறது? (யகூஏகிஞ் ரூபுமீக்ஷீஹிகுதுகிஞ்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (நிகுங்கிணூங் ஸ்ஙீரகூநி கிதீக ப்ஙுரூ றுஹிஷீந்ஒ) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்... vii வலுவூட்டும்வரலாW x பதிப்பின் மதிப்பு xiii புகழுரை xvi குயில் கட்டுரைகள் 1. நேருவுக்குத்தÅஅதிகார« 3 2. பத்தியுண்டு புத்தியில்லை 5 3. கம்முய்னிசிட்டுகளை விட்டு வைக்கக்கூடாது 8 4. சுப்பையாவை விட்டு வைப்பது தப்பையா! 12 5. ஏழ்மை ஒழியுமா? 14 6. நடவடிக்கை எடுக்க வேண்டாமா? 20 7. தமிழ் 21 8. டில்லி ஆட்சியாளர்க்கு! 24 9. தோழர் சம்பத் அவர்கட்கு! 28 10. முன்னேற வேண்டுமானால் 30 11. புன்மை மணச்ச நல்லூராரும் அன்னை மணியம்மையாரும் 33 12. உண்டு என்பார்; இல்லை என்பார்! 36 13. டயருக்குப் பரிசு 40 14. பட எரிப்புப் nபார்VW!42 15. பட எரிப்புப் போர் வென்றது 44 16. புதுவையில் பட எரிப்பு! 46 17. சப்பான் tழிjப்பானது 47 18. பொன்னும் தங்கமும் 49 19. புதுவைச்செய்தி! 53 20. காமராசர் கோட்டைக் குப்பம் வருகை 66 21. புதுவைக் காங்கிரசு 70 22. உருசியாவில் திருக்குறள் விளக்கம் 71 23. வடநாட்டில் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது? 76 24. கரை உடைந்த ஏரி 79 25. செங்கோன் தரைச்செலவு 81 26. தமிழகத்தில் பஞ்சாயத்து ஆட்சி 83 27. செய்தி ஏடுகள் அனைத்தும் சிறிய போக்குடையனவே 89 28. தெய்வமிகழேல் 92 29. புகைவண்டிக் கட்டணச் சீட்டிலும் இந்தியாம் 94 30. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் 96 31. குருசாமியைவிட சனார்த்தனமே மானி 97 32. உள்நாட்டுப் போரா? 99 33. பெற்ற மனத்தில் சிவாஜி கணேசனை இன்னொரு முறை போய்ப் பாருங்கள் 101 34. புதுவை ஐ கமிஷனருக்கு நாட்டுப்புறத்தான் வெளிப்படை அஞ்சல் 104 35. அரிசி சோம்பலை உண்டாக்குமா? 106 36. தெய்வம் இகழேல் 108 37. விடாமழையில் தமிழகம்! 110 38. புதுவை முதல் நீதி சன்னிதானத்தின் கிறேப்பியேவின் தில்லு முல்லு 114 39. காங்கிரசு மானங் கெட்ட நிலை 116 40. உங்களால் எல்லாம் முடியும் ஆனால் ஒன்று மட்டும் முடியாது 117 41. தமிழ் வாழ்க! 119 42. கூலித் தொண்டு கூடாது! 121 43. இரு முறையும் வாழ்த்துகிறோம் 125 44. அராபிய எண்கள் தமிழ் எண்களே 127 45. தி. மு. க. 130 46. இளங் கவிஞர்க்கு 132 47. காமராசரைத் தூக்கி எறிய வேண்டும் 134 குயில் - திங்கள் இருமுறை இதழ் 48. தமிழிலக்கணம் புறக்கணிக்கப்பட்டது 136 49. குயிலின் நிலை 139 50. இந்தி எரிக! எரிப்பவர் வாழ்க! 140 51. வெல்க தமிழகம் 142 52. முதலமைச்சர் ஆண்டு வாழ்த்து 143 53. தி.மு.க. செஞ்சிக் கிளிகள் 145 பிற இதழ்க் கட்டுரைகள் 54. தமிழ் 148 55. அம்மியும் நகரும்! 151 56. அன்பே சிவம் என்பது ஆத்திகர் கரடி 154 57. விருத்தமல்ல 157 58. தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும்! 161 59. பாட்டு எழுது 163 60. சங்கீத வித்வானோடு 168 61. காலிகள் 173 62. திரை நீக்கம் 174 63. சினிமா உலகம் வாழ்க 175 64. மறைமலை அடிகள் 177 65. எது கலை? 178 66. தமிழின் வெற்றி எங்கே இருக்கிறது? 181 67. வழிகாட்டிகள் 185 68. சாதி ஏன்? 188 பாரதியாரோடு பத்தாண்டுகள் 69. பாரதியும் பெண்களும் 194 70. கத்தி விளையாட்டுப் பார்க்கிறார் கவி பாரதி 198 71. புதுவையில் பாரதியார் செல்வாக்கு 201 72. ரவிவர்மா பரமசிவப் பட பாரதி 203 73. பாரதி திருநாளில் 207 74. இனிமேல் சாப்பிடவில்லை! 212 75. ரசத்திலே தேர்ச்சி கொள் 214 77. பாரதியாரைப் பற்றி ... ! 217 78. இந்தத் தடவை புதுவையில் பாரதி விழா 219 79. புதுவையில் பாரதி விழா 220 80. பாரதிவிழா 221 81. பாரதியார் பற்றிய சில குறிப்புகள் 224 82. பாரதியார் அன்பு 227 83. புதுமைக் குயில் பறந்தது 230 84. பாரதி தனித்தமிழ்ப் பாட்டு 234 85. சொந்த வீடும் வந்த வீடும் 238 86. பழைய நினைவுகள் 242 87. பாரதி பட்டினி நோன்பு? 246  குயில் கட்டுரைகள் 1. நேருவுக்குத் தனி அதிகாரம் மக்கள் மேற்கொண்டுள்ள தொழில்களையும் வாணிகத்தையும் அரசினர் கொண்டு நடத்துவது நல்லது. அரசினர் கொண்டு நடத்தும்போது அது அரைகுறையாகக் கொண்டு நடத்துவதாயிருக்கலாகாது. அதனால் பல கேடுகள் உண்டாகலாம். எல்லாத் தொழிலையும் எல்லா வாணிகத்தையும் அரசினர் நடத்த வேண்டும். அரசினர் இந்த நிலையை அடையாதிருக்கும் வரைக்கும் அரசினர் சைனாக்காரனிடமும் உருசியாக்காரனிடமும் மக்களைக் காட்டிக் கொடுப்பதாகவே முடியும். ஓரிடத்தில் சென்று குவிந்துள்ள நிலங்களை இல்லாதவர்க்கு மீட்டுக் கொடுக்கும் அரசினர் முயற்சியை கூடச் சில தன்னல விருப்பினர் எதிர்க்கின்றார்கள். தொழில்களையும் வாணிகத்தையும் - முழுதும் அரசினர் எடுத்து நடத்தத் தொடங்கும்போது அந்த எதிர்ப்பாளிகளின் எதிர்ப்பு மிகுதிப்படும் என்பதற்காக அரசினர் அஞ்சுதல் கூடாது. சைனாவின் ஆட்சிமுறை அடடா மிக நல்லதாய் இருக்கின்றது. உருசியாவின் ஆட்சிமுறை மிக நல்லதாயிருக்கிறது என்று இங்குக் கூறி மக்களிடையே கலகத்தை வளர்க்கும் பொதுவுடைமைக்காரர்கள் தொழில் எல்லாம் அங்கு அரசினரால் நடத்தப்படுகின்றன என்றும் வணிகம் எல்லாம் அங்கே அரசினரால் நடத்தப்படுகின்றன என்றும் பெருநிலக் கிழாருக்கும் சிறுநிலக்கிழாருக்கும் என்றும் வேறுபாடே அங்கு இல்லை என்றும் அதனால் அந்த நாட்டில் எல்லாரும் பணக்காரர்கள் என்றும் சொல்லுகிறார்கள். இதைக் கேட்கும் மக்களும் அப்படியா என்று வாயைப் பிளக்கின்றார்கள். உருசியாவுக்கும் வாழ்த்துக் கூறுகின்றார்கள். அதே நேரத்தில் இங்குள்ள ஆட்சி முறைக்குத் தாழ்ச்சியும் வீழ்ச்சியும் கூறுகின்றார்கள். இதைக் கேட்கும் தமிழர்கள் வெட்கமுறாதிருக்க முடியவில்லை. பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கெட்ட நிலைக்கு இடம் கொடாமலிருக்க உடனே செய்ய வேண்டியவை தொழில், வாணிகம் அனைத்தையும் அரசினர் ஏற்று நடத்துவதும், நிலத்தை அனைவருக்கும் பங்கிடுவதும் ஆகும் அன்றோ! மைசூர்ச் சுரங்க உரிமையாளர் சங்கக் கூட்டத்தில் அரசியல் வாணிகத் தலைவராகிய பூனச்சா இந்த நெறியை எதிர்க்கிறார். இவர் எதிர்க்கிறார் என்றால் எல்லாரும் எதிர்க்கிறார் என்பது பொருளல்ல. இவர் போன்ற தனிநலக்காரர் அனைவரும் எதிர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த எதிர்ப்புக்களையெல்லாம் பொருட்படுத்தாது முன்னேற வேண்டுமானால் நேருவுக்குத் தனி அதிகாரம் கொடுப்பதையும் நாம் ஆதரிக்கவேண்டும். தனி அதிகாரம் ஒருவர்க்குத் தந்து அவரால் இந்த நாடு, அடைந்தாக வேண்டிய நலன்கள் மிகுதியாய் உண்டு. அவ்வாறு தனி அதிகாரம் கொடாவிடில் இந்த நாடு அடையக்கூடிய தீமைகள் மிகப் பல. சீனாவை இங்கு இருந்து கொண்டும் ஆதரிக்கும் தீயர்களும் இருக்கிறார்கள்! எடுத்துக்காட்டு இதைவிடவா தேவை? - குயில், கிழமை இதழ், 5.1.1960, ப.3 2. பத்தியுண்டு புத்தியில்லை மலையாளிகள் பண்பாடு இல்லாத காட்டுமிராண்டிகள், அவர்களிற் பலர் படித்தவர்கள் என்று சொல்லப்படலாம். என்ன படிப்பு? அந்தக் காட்டுமிராண்டித்தனத்தைத் தூண்டிவிடும் படிப்புத்தான். இந்த மலையாளிகள் இரக்கம் என்பது இல்லாதவர்கள் என்பது அரசினராலே உறுதியாக்கப்பட்டிருக்கிறது. மக்களை ஈவு, இரக்க மின்றி, அடித்துத் துன்புறுத்த மலையாள ஊர்க் காவலரைத் தாம் அரசினர் கருவியாகக் கொள்ளுவார்கள், இது நாடறிந்த உண்மை. பொதுவாக மலையாளிகள் இப்படி என்றால் மலையாளிகளில் ஒருவகையில் உயர்ந்தவர் என்று முட்டாள்தனமாக எண்ணப்படும் போற்றிகளின் மனப்பாங்கு காட்டுமிராண்டித் தனத்தையும் மிஞ்சுவ தாகவே இருக்கும். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் அது எல்லாம் செய்யும். போற்றிகள் கன்னடத்து அறிஞர்களால் போத்திகள் எனப் படுகின்றார்கள். இவர்கட்கு வேலை கோயிற் படிவங்கட்கு அருச்சனை முதலிய செய்வது. திருச்செந்தூர் முதலிய இடங்களில் உள்ள கோயில்களில் கோயில் வேலைசெய்ய இந்தப் போற்றிகள் அமைக்கப்பட்டிருக்கின்றார்கள். போற்றிகள் நம்பூதிரிகள் அல்லர்; அவரிலும் கொடியவர்; இங்குள்ள பார்ப்பனர்க்கு நிகரானவர்கள். தில்லி அமைச்சர் புகைவண்டித் துறை அமைச்சர் இராமசாமி திருச்செந்தூர்க் கோயிலுக்குச் சென்றாராம்! அங்கிருந்த போற்றியிடம் திருநீறு வாங்கக் கையேந்தினாராம். அந்தப் போற்றி திருநீற்றை விட்டெறிந்தானாம். இதில் அமைச்சர் இராமசாமி செய்த குற்றம் முதலில் ஆராயப்பட வேண்டும். கோயிலுக்குப் போகின்ற ஒருவர் கோயில் நடைமுறைத் திட்டத்திற்கு உட்பட்டே ஆகவேண்டும்; அந்தக் கோயிலில் அருச்சகன் போற்றி! அவன் காட்டுமிராண்டி! அவன் வழக்கமாக இப்படிச் செய்வதை முற்கூட்டியே அமைச்சர் அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தும் கோயிலுக்குப் போனார் என்றால் அது பிழை. போன பின் போற்றியின் போக்கிரித் தனத்திற்கு வருந்துவது பிழைக்கு மேற்பிழை. இனி, ஊர்க்காவல் முதலிய துறைகளின் சென்னை அமைச்சர், பத்தவச்சலம் திருநீற்றுத் தூளை விட்டெறிந்தது சரி என்றார். ஆனால் விட்டெறிவது காட்டுமிராண்டித்தனம் என்றும், இக்காட்டுமிராண்டித் தனத்தை இனியும் இருக்கும்படி விடக்கூடாது என்றும் அவர் சொன்னாரா என்றால் இல்லை. இது அவர் செய்த பிழை. எனினும் அவர் கருத்து நிறைவேற அப்படித் துணிவுடன் நடந்து கொண்டதால் பிழையாகாது. அவர் கருத்து என்னவெனில், கூறுவோம். இராசகோபாலாச்சாரி தம் - தி.மு.க. க்களையும் சேர்த்துக்கொண்டு காமராசர் ஓட்டத்தைத் தடுத்து விட நினைத்துச் செய்யும் முயற்சி வெளிப்படை முயற்சி. ஆனால், காமராசர் ஓட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பத்தவச்சலம் முதலிய சிலர் செய்யும் முயற்சி மறைமுக முயற்சி. பக்தவச்சலமும் சுப்பிரமணியமும் தமிழை எதிர்த்துப் பேசுகிறார்கள். தமிழர் பண்பாடுகளை இகழ்ந்து பேசுகிறார்கள். இவைகளை எண்ணித் தமிழர்கள் தங்கள் மனவருத்தத்தைக் காட்டிக் கொண்டு வருவது கண்டும், அப்படிச் செய்கிறார்கள். இதனால் தமிழ், தமிழ்ப் பண்பாடுகளை எதிர்த்தால் பொதுமக்களுக்கு அமைச்சர் அவை மேல் சிறப்பாகக் காமராசர் மேல் கசப்பு ஏற்படும் என்பது நன்றாக அவர்கட்குத் தெரியும். தெரிந்திருந்தும் பேசுகிறார்கள். கடைசியாகத் திருநீற்றை இராமசாமி கையிற் கொடாமல் விட்டெறிந்ததையும் தாங்கிப் பேசுகிறார் பத்தவச்சலம். என்ன பொருள்? இவர்கள் காமராசரை ஒழித்துக் கட்டி இவர்கள் அந்த இடத்தைக் கௌவிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயலிலும் இறங்கி விட்டார்கள் என்பது தானே பொருள்? இப்போது பத்தவச்சலம் முதல் உத்தண்டன்கள் வரைக்குமுள்ள வீடணர்கட்கு காமராசரை ஒழிக்க உதைந்துகொள்ள நல்ல உதைமானங்களும் இருக்கின்றன. அதோ அவருடைய இராசாசி. அதோ இராசாசியின் காலடியில் தம் - தி.மு.க. காங்கிரசு கண்ணீர்த்துளிகள். இதுவரைக்கும் பக்தவச்சலம் கருத்தை விளக்கினோம். இவர்கள் எல்லாம் பத்தியுடையோம் நாங்கள் என்றால் ஒப்புக் கொள்ளக் கூடியதன்று. பத்தியுடையோம் என்று தருமபுரங்கள் சொல்லை, ஒப்புக் கொள்ளுகின்றோம் ஆனால் அவர்கள் அதே நேரத்தில் நாங்கள் புத்தியுடையோம் அல்லோம் என்றும் ஒப்புக்கொள்ளவேண்டும். என்ன?. கோயிலுக்கு வரும் மக்களிடம் திருநீறு கொடுப்பது என்றால் அந்த திருநீற்றின் உண்மை என்ன? கோயிற் கடவுள் அணிந்த நீற்றுப் பொடியை மக்கட்குக் கொடுத்து அவர்களைக் கடவுள் அருள் பெற்று உய்யுமாறு பண்ணுவதுதானே! பத்தியுடையவர்களே; கடவுள் அணிந்த திருநீற்றைக் கோயிலுக்கு வந்தவர் காலடிக்கு அருச்சனை பண்ணுகின்றானே போற்றி! அது பற்றி உங்களுக்குக் கவலை - மானம் சூடு ஊறு ஒன்றும் இல்லையா? சிவன் பூசுவதும் வெண்ணீறு; பூண்பதுவும் பொங்கரவம் என்பதால் திருநீற்றில் உண்மை தெரியாமலா போய் விட்டது உங்கட்கு? அதைப் போற்றி, தூக்கி எறிந்தான் விட்டெறிந்தான் என்றால் உங்கள் உடல் நடுங்கி இருக்கவேண்டுமே! சிரிக்கின்றீர்களே மானங் கெட்டவர்களே? உங்களுக்குப் பத்தி ஒரு கேடா? பத்தி என்ற வடசொல்லுக்கு அடிமைத்தனம் என்பது பொருள். அடிமைத்தனத்தை தாமே காட்டிக் கொண்டீர்கள்? தருமபுரத்துக்கு அதிகாரிகளை அடிக்கடி அழைப்பது காகிதப் பையை அவர்கட்குக் காணிக்கை வைத்து நீர்தாம் சிவன் என்று அவர்கள் காலில் விழுவது. இதனால் அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொள்வது அடிப்பது கொள்ளை சிவத்தின் பேரால். சிவ நெறியின் பேரால்! காமராசரே கருத்தைச் சற்றே திருப்புங்கள். நீங்கள் மிக்க அறிவாளியாயிருக்கலாம். இந்தச் செய்தியில் இப்போது உங்கள் நண்பர்கள் உங்களை நோக்கித் தூக்கியுள்ள, தடி பற்றி நீங்கள் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். பத்தவச்சலங்களின் வாலை ஒட்ட அறுக்காவிடில், தருமபுரம், உத்தண்டிகள் போன்றாரின் வாலை ஒட்ட அறுக்காவிடில் உங்கள் சேதி கோவிந்தாதான்!. - குயில், கிழமை இதழ், 12.1.1960, ப.4-5 3. கம்முய்னிசிட்டுகளை விட்டு வைக்கக்கூடாது நாட்டின் விடுதலைக்கும், நாட்டு மக்களின் உரிமைக்கும் இந்தியப் பொதுவுடைமைக்காரர்கள் (கம்முய்னிசிட்டுகள்) எப்பொழுதும் இடையூறாக அமைந்துள்ளார்கள். இக்கட்சியின் நடவடிக்கைகளை மக்களும் அரசினரும் விழிப்புடன் கண்காணித்து வர வேண்டும். சீனாவைக் குறித்து உறுதியானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிச் சனசங்கத் தலைவர் பீதாம்பர தாசு பேசுகையில் இவ்வாறு கூறினார். அவரின் இந்த சொற்பொழிவில் சீனாக்காரனைத் துரத்துவதில் நேரு அவர்கள் வேண்டுமென்றே சுறுசுறுப்பு காட்டாமல் இருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டுகிறார். இந்திய நாளிதழ்களில் பார்த்தால் ஒவ்வொரு நாளும் பொதுவுடைமைக்காரரின் வன்முறைச் செயல்களே நிரம்ப நிரம்பக் காட்சியளிக்கின்றன. பிறந்த நாட்டின்மேல் பற்றில்லாதவர்கள் பொதுவுடைமைக் காரர்கள் என்ற நற்சான்றை எல்லாத் தலைவர்களிடமிருந்தும் பெற்றுள்ள ஒரு கட்சியைக் குறிப்பிட வேண்டுமானால் அது பொதுவுடைமைக் கட்சிதானே! இத்தமிழகத்திலும் பொதுவுடைமைக்காரர்கள் நடத்தையைக் கேட்க வேண்டுமானால் குழந்தைகட்கும் தெரிந்ததே. தமிழகத்தில் பொதுவுடைமைக்காரர்களால் தொல்லையடையாதவர்கள் இல்லை. அவர்களின் தீச்செயல்கள் - முடிச்சு மாறித் தனம் - மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியிருப்பதும் அது அரசினரின் மடத் தனத்தால் முன்னேறி வருவதும் தெரிந்த செய்தி. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் நாம் காணும் புதுமை என்ன வென்றால், இத்தமிழகப் பதவியாளரும் செல்வரும் புலவர்களும் வெளிப்படையாகவே இந்தப் பொதுவுடைமைக் காரருக்கே தம் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை முன்னே தள்ளுகின்றார்கள். இலக்கிய மேடைகளில் கயவர்களை இழுத்து வந்து சிறப்புச் செய்கின் றார்கள். இது ஏனோ தெரியவில்லை. அவர்களைப் பாராட்டுகின் றார்கள். பீதாம்பர தாசு சொல்வதுபோலப் பொதுமக்களும் அரசினர்களும் இந்தியப் பொதுவுடைமைக்காரர் பற்றி விழிப்போடிருந்தால் மட்டும் போதாது என்று நாம் எண்ணுகின்றோம். அக்கட்சியை வேரோடு பூண்டற்றுப் போகும் வகையில் ஒழித்து விட வேண்டும். புதுவைப் பொதுவுடைமைக்காரர் செய்துவரும் அடாத அறமல்லாத திடுக்கிடத்தக்க செயல்களில் ஒன்றைக் கேளுங்கள்: புதுவைப் பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் பெயர் சுப்பையா என்பது. அவர் இங்குள்ள நகரமன்றின் பொருள்களைத் திருடினார்! அவ்வாறு திருடுவதற்கு அவர் கையாண்ட முறையை நோக்குவோர் சுப்பையா நீதிமன்றம் என்பதொன்று இல்லவே இல்லை என்று நினைத்தே இவ்வாறு நடந்திருக்கிறார் என்ற முடிவுக்கே வருவார்கள். எல்லாருக்கும் தெரிந்த இந்த மறைமுகச் செயல் நீதிமன்றத்தில் ஏறுவதற்குள் அவர்கள் குதித்த குதிப்புகள் இரப்பர் பந்துகளிலும் காண முடியாது. கத்தியைத் தூக்கிப் புதுச்சேரியை இரண்டு துண்டாக்கி விடுவோம் என்றார்கள். திருடாதவர்கள் போல! தம்மீது இல்லாததை நீதிக்காரர்கள் சொல்லிவிட்டது போல! அப்போதெல்லாம் புதுவையில் அரசினர் இருந்தார்களா இறந்து ஒழிந்தார்களா என்று கூடக் கேட்க நேரும். அவ்வளவு குதிப்பு. குற்ற ஆய்வு நடந்தது நடந்தது. அப்படியே நடந்தது. அஞ்சினோர்க்கு வேலை விரைவில் முடியாதல்லவா! அதிகாரிகள் அஞ்சியதற்குக் காரணம் உண்டு. இந்தக் கூட்டம் சிறைச்சாலையை உடைக்க கிளம்பவில்லையா ஒருநாள்! கொலை செய்து செய்து குவிக்கவில்லையா பிணங்களை; ஒரு காலத்தில்! பெருமக்களின் தலைவரைச் சுட்டுக்கொல்லவில்லையா ஒரு பட்டப் பகலில்? வெடிகுண்டு தொழிற்சாலையின் திறப்புவிழாவும், அகப்பட்டுக் கொண்டதால் திகைப்பு விழாவும் நடத்தவில்லையா ஒரு காலத்தில்? இந்த வாணவேடிக்கைகளின் இடையே வாழ்ந்தவர்கள் தாமே இப்போதுள்ள அரசின் பல அதிகாரிகள். ஐயோ பாவம்! நாள்தோறும் பேய்க் கனவு தானே கண்டு வந்தார்கள் அதிகாரிகள்! சுப்பையாவின் திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் கால்வைத்தது. சான்றினர் விளங்கப்பெற்றனர். சிரிப்பாகச் சிரித்தது தருமம். காறித் துப்பியது இவர்களை இப்படிவிட்டு வைத்தவர்களை! தொடக்க நீதிமன்றம் சுப்பையாவுக்கு ஓராண்டு சிறை என்று தீர்ப்பளித்தது. வேண்டுமென்றே செய்தார்களாம் இந்தத் தீர்ப்பை! தீர்ப்புப் பொய்! தீர்ப்பாளர்கள் பொய்யர்கள். தீர்ப்பு மன்றம் ஒழிக. தீர்ப்புமன்றக் கட்டிடம் ஒழிக ... புதுவை ஒழிக. புதுவையுடன் இணைந்து கொண் டிருக்கும் இந்த உலகம் ஒழிக. வானுயரத்துக்கு நேராக உயர இருக்கும் வ... தருமக் கர்த்தர்களாகிய பொதுவுடைமைக் காரர்கள் வாழ்க. இந்த ஒலி வானைப் பிளந்தது. கூட்டத்தில் தனி முறையில், திண்ணையில். வீட்டுக்குள் தெருவில், சந்து பொந்துகளில் எங்கும் இப்படி! வெளியூர்த் தலைவர்களைக் கொண்டு கண்டனக் கூட்டங்கள் வேறு! இரண்டு நாட்களின் முன் அந்த வழக்கு மேல்நீதி மன்றத்துக்கு வந்தது - வருவதற்கு முன் இந்தக் கூட்டம் செய்த முன்னேற்பாடு ஆழ்ந்த கருத்துடையதுதான் ஆனால் முழு முட்டாள்தனமானது. அது என்ன தெரியுமா? தீர்ப்பாளர்களை வேலையினின்று நீக்கிவிடுவது, அல்லாமலும் அவர்களை நடுங்கவைத்துத் தமக்குப் பொய்ச் சலுகைக் காட்டும்படி செய்துகொள்வது. குற்றத்தை ஆராய்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை கேட்கும் பொறுப்புள்ள பர்க்கே முதலிய தீர்ப்பாளர்கள் செய்ததாகப் பொய் கோட்டை ஒன்றைத் தாளினால் கட்டினார்கள். தீர்ப்பாளர்களை வேலையைவிட்டு நீங்கவேண்டும் சில காலத்திற்கு (அதாவது சுப்பையா வழக்கு முடிகிற வரைக்கும்) என்று எழுதினார்கள்; பேசினார்கள். இதுபற்றி அவர்களுக்கு உள்ள சாக்கால் அனைத்தையும் சொல்லிக் காட்டினார்கள். இன்னாரைக் கொண்டு தீர்ப்பாளர்களைப் பற்றி தில்லி சட்டமன்றில் வழக்கைக் கொண்டு வருவோம். பொதுக்கூட்டம் போட்டார்கள். பொதுக்கூட்டத்தில் கோலார் இராமாநுசம் என்பவரை விட்டுக் கடை கடையென்று கடைய வைத்தார்கள். கோலாராரை அவர் செய்த இந்தக் குற்றத்திற்காகச் சிறையில் தள்ளியதால் தெருத் தெருவாய்க் குலைத்தார்கள். மரத்திற்கு முரம் ஏறிக் கத்தினார்கள். தீர்ப்பாளர்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அதிகாரிகள் இந்தக் கூட்டத்தை அழைத்துச் சொல்லியும் பார்த்தார்கள். இல்லை இல்லை அவர்கள் குற்றவாளிகள்தாம் என்று குட்டிச்சுவர் கண்ட இடத்தில் நின்று விண்ணாள் காதும் கிழியும்படி கத்தினார்கள். மேல் நீதி மன்றத்தில் வழக்கு வந்தது. சுப்பையா வேண்டுமென்றே வராமல் வீட்டில் இருந்துகொண்டே வெளியூருக்கு - (அதிக தூரத்துக்குப்) போயிருப்பதாகக் கூறிக் கொண்டார். அவருக்காகத் தோன்றிய வழக்குரை காரரும் போகாத ஊருக்கு வழிகாட்டியாக நடந்துகொண்டு சண்டித்தனம் செய்தார். தீர்ப்பாளர்தம் நடுவுநிலை இடத்தினின்று வழுவாமலும் துடை நடுங்கிப் போகாமலும் ஓர் ஆண்டு சிறை, இருநூறு பிரான் குற்றப் பணம் என்று தீர்ப்பளித்தார். துவக்கினது கூட்டம் அல்லார்! அவிழ்த்தன குரங்குகள் வாலை. நான் ஊரில் இல்லாதபோது - எட்டத் தொலைவில் இருந்தபோது - நான் வர முடியாமல் இருந்தபோது இந்தத் தீர்ப்பாளர் எப்படித் தீர்ப்பளிக்கலாம்! விட்டேனா! மழுங்கச் சிறைத்து விடுகின்றேன் என்று தொடங்கினார்கள் தம் வாய்ப் பந்தலை! குடித்தனம் செய்யும் வீட்டில் மர நாயைவிட்டு வைக்கலாமா? குத்துவிளக்கு இருக்க வேண்டிய கூடத்து மாடத்தில் மூதேவிச் சிலையை விட்டு வைக்கவேண்டிய தேவை என்ன? இந்திய கம்முய்னிசிட்டுகளின் கட்சி இப்படி ஒன்று இருக்க வேண்டுமா? இந்தக் கேள்வியை நாம் ஆளவந்தார்களைக் கேட்கின்றோம்! அரசினரைக் கேட்கின்றோம். - குயில், கிழமை இதழ், 26.1.1960, ப. 3-4, 7 4. சுப்பையாவை விட்டு வைப்பது தப்பையா! திருட்டுக் குற்றத்திற்காக - அதிலும் நகர மன்றத்தின் பொருள் களையே திருடிய குற்றத்திற்காகப் புதுவைக் - கீழ் நீதிமன்றத்திலும் மேல் நீதிமன்றத்திலும் ஓராண்டு சிறைத் தண்டனையடைந்துள்ள புதுவைப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் சுப்பையா அவிழ்த்து விடப்பட்ட கோயிற் காளை மாடு போல் ஊரில் உலவுகின்றார். இவ்வாறு ஒரு குற்றவாளி ஆடி வரும் வெளிப்படை யான விளையாட்டுக்கும் புதுவை ஊர்க்காவல் துறை ஒத்திருக்கிறது என்று நினைக்க வேண்டியிருக்கிறது. எனில் இந்த வருந்தத்தக்க நிலைக்கு என்ன காரணம் என்றே எமக்குப் புரியவில்லை. சுப்பையா இந்த நிலையிலும் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார் என்றால், நீதித்துறையின் ஒரு சிலரையே பேர் சொல்லித் திட்டும்படி விட்டு வைக்கப்பட்டிருக்கிறார் என்றால் நீதிக்காரர்களில் சிலரைச் சிலர் பழிவாங்குகின்றார்களா? நீதித்துறையின் அதிகாரிகளே சுப்பையாவுக்கு ஒத்திருக் கின்றார்களா? அல்லது நீதித்துறை அஞ்சுகின்றதா? இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டு அரசினரும் சும்மா இருக்கின்றார்கள் என்றால் பொது மக்கள் அமைதியாய் வாழ்வது தான் எப்படி? பொது மக்களின் அமைதியான வாழ்விலும் புகுந்து விடுகின்றார் சுப்பையா. பொது நலன் கருதிப் பொதுவுடைமைக் கட்சி செய்யும் தீய நடவடிக்கைகளை எதிர்த்தவர்களைச் சுப்பையா தேடுகின்றார்; இவர் களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கும் முயற்சியைத் துவக்கிவிட்டார். நம் நீதித்துறைக்கு உடல் நலமில்லையா? இந்த நிலை ஒரு மணி நேரம் கூட நீடிக்கலாகாது. நாம் இதை மக்கள் நலம் கருதியும் ஆட்சியாளர் நலங்கருதி யுமே சொல்லுகின்றோம். சுப்பையாவைப் பிடித்துச் சிறையில் போடவேண்டும். ஆளவந்தார்களே, அரசினர்களே! இதே பொதுவுடைமைக் கூட்டம் அமைச்சரவையையும் கவிழ்த்துத்தானே இந்த நாட்டை அன்றைக்கே கேரளமாக்காமல், தோல்வி நிலையிலிருந்த காங்கிரசுக்கு உயிர் தந்து காத்த கை தான் இதை எழுதியது. ஆதலால் என் பக்கம் திரும்புக. - குயில், கிழமை இதழ், 2.2.1960, ப.3 5. ஏழ்மை ஒழியுமா? மணச்சநல்லூர்க் கழக உயர்நிலைப் பள்ளி மாணவர் மன்றத்தில் பேசிய குன்றக்குடி அடிகளார், பேய்கள் தங்க வேண்டும் என்பதற்காக இருள் இருக்க வேண்டும் என்று நினைப்பதுபோல் பணக்காரர்கள் தருமம் செய்ய வேண்டும் என்பதற் காக ஏழைகள் இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லுகின்றார்கள் என்று கூறினார். இவ்வாறு அடிகள் கூறியதை விடுதலை ஆசிரியர், இது ஆச்சாரியார் தொடங்கியுள்ள சுதந்திராக் கட்சியை மறைமுகமாகத் தாக்குவது என்று சுட்டிக் காட்டினார். எனவே ஏழைகள் என்றும் பணக்காரர்கள் என்றும் இரு பிரிவு இருக்க வேண்டும் என்று ஆச்சாரியார் சொன்னார் என்றும், அப்படி இருக்கக் கூடாது என்று குன்றக்குடியார் சொன்னார் என்றும், குன்றக்குடியார் கருத்தே சரியானது என்று விடுதலை ஆசிரியர் கூறினார் என்றும் நாம் கொள்ளுவதில் பிழை ஒன்றும் ஏற்பட்டுவிடாது. அவ்வாறு வைத்தே மேலே நம் ஆராய்ச்சியை நடத்துகின்றோம்: தருமம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏழைகள் இருக்க வேண்டும் என்று ஆச்சாரியாரோ, அவர் கட்சிக்காரரோ சொல்லி யிருப்பார்கள் என்று நாம் எண்ணவில்லை. பணக்காரர் பணக்கார ராகவே இருக்க வேண்டும் என்றுதாம் ஆச்சாரியார் சொல்லி வருகின்றார். தருமம் செய்வதற்காக ஏழைகள் இருக்க வேண்டும் என்று அவ்வளவு பொதுவாக, தருமம் பெறுகின்றவர்களிலிருந்து தம்மை விலக்கிப் பேசுவதை ஆச்சாரியாரிடம் நாம் இனியும் காண முடியாது. பணக்காரர் இருக்க வேண்டும்; அவர்களைத் தாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது தமக்கே அவர்கள் பயன்பட வேண்டும் என்பதுதானே அவரின் அடிப்படைக் கொள்கை. இனி, குன்றக்குடியார் சொல்வதை நோக்குவோம். அவர் உலகில், ஏழ்மையை ஒழித்துவிடமுடியும் என்று நினைக்கின்றார். அதை விடுதலை ஆசிரியரும் ஆதரிக்கிறார் ஏழ்மை என்றால் வறுமை! வறுமை காரணமாகத்தான் ஒருவன் இரக்கும் நிலையை அடைகின்றான். அதனால் இரந்து உண்பானையும் ஏழை, வறியவன் என்றே தமிழில் கூறுவதுண்டு. இந்த வறுமை, உலகில் இருந்துகொண்டுதான் இருக்கும்; அடியோடு ஒழிக்க முடியாது என்றும், அந்த வறுமை உலகில் இருந்து கொண்டு இருப்பதும் உலக மக்களின் நடைமுறையில் ஒரு சுவையை உண்டாக்கும் என்றும், வறியவர் அதாவது இரப்பவர் உலகில் இல்லா விட்டால் வாழ்க்கையில் சுவை இராது. நடைமுறையானது மரப்பாவை இயங்குவது போலிருக்கும் என்றும் திருவள்ளுவர் கருதுகின்றார். இதை நாம் இன்னும் சிறிது நுணுகி ஆராயவேண்டும். இரந்துண்ணும் நிலைக்கு, அதாவது வறுமைக்கு எது காரணம்? ஈத்துவக்கும் நிலை, அதாவது செம்மைக்கு எது காரணம்? என்று நோக்கினால் அறியாமையும் அறிவுடைமையுந்தான் காரணம் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். எனவே அறியாமை காரணமாகத்தான் வறுமை உண்டாகின்றது. அறிவு காரணமாகத்தான் செம்மை (செல்வம்) உண்டாகின்றது. கேள்வி : குருடனும் முடவனும் நொண்டியும் வறியர்களாகி - இரப்பவர்களாகிக் கிடக்கின்றார்கள். அவர்களின் ஏழ்மை நிலை அறியாமையாலா வந்தது? விடை : அவர்களின் அறியாமையால் அவர்கட்கு அந்நிலை (நொண்டி முடவன் என்ற நிலை) ஏற்பட்டது. பிறக்கும் போதே அந்நிலையோடு பிறந்தார்கள் என்றால் அவர்களின் பெற்றோரின் அறியாமை காரணம். கேள்வி : முற்பிறப்பில் செய்த தீவினை காரணம்! விடை : அது கயிறு! இனி, செம்மை நிலைக்கு அறிவுடைமைதான் காரணம்! இல்லையா? கேள்வி : அறிவுடையவன் ஏழ்மை நிலை அடைகிறான். அறிவில் லாதவன் செம்மை அடைந்திருக்கின்றான். மேலும் அறிவுடையவன் செல்வத்தை இழந்து விடுகின்றான். அறிவில்லாதவன் செம்மை நிலையைப் (செல்வத்தை) பெறுகின்றான். இவற்றிற்குக் காரணம் என்ன? விடை : இவை சிறுபான்மை. இவற்றிற்கு ஊழ் என்ற தெய்வம் காரணம் என்பார்கள் சமயக் கணக்கர். அது புரட்டு. அரசியல் சட்டம் காரணம்! ஊழ் என்றாலே சட்டம் என்பதே பொருள். ஊரில் பரவலாக விற்கக்கூடிய சரக்கை எல்லாம் ஒருவன் வாங்கிக் குவித்து வைக்கிறான்; விலையை ஏற்றி விற்கலாம் என்று! விலை குறைந்து விடுகின்றது. இழப்பு நேர்ந்துவிடுகின்றது. வறுமை நிலைமை அடைகின்றான். இங்கு அறிவுடையவன் வறியவனானான் என்று எண்ணுகின்றார்கள். அவன் அந்த நிலையை அடைந்தற்கு அவன் அறியாமை மட்டும் காரணம் அன்று. வாணிகம் பற்றிய சட்டமும் அவன் வறுமைக்குக் காரணம் ஆயிற்று. ஒரு பாரட்லா குதிரைப் பந்தயத்தில் செல்வத்தை இழக்கின்றான். குதிரைப் பந்தயத்தை உருவாக்கியது சட்டம். சட்டம் காரணம் அவன் இழப்புக்கு! ஒருவன் தொழில் செய்வதில் தேர்ந்தவன். அறிவுடையவன். அவனுக்கு நாட் கூலி அரையணா பொற்காசு என்கிறது சட்டம். அந்த அறிவுள்ள தொழிலாளிக்கு ஏற்படும் வறுமைக்கு எது காரணம்? சட்டம் காரணம். எப்படிப் பார்த்தாலும் வறுமை அறியாமையால்! செம்மை அறிவால்! என்றே முடியும். எனவே அறியாமை முழுதும் உலகி னின்று ஒழியும் வரைக்கும் வறுமை என்பதும் இருக்கும். அறிவு என்பது ஒன்று இருக்கும்; வரைக்கும் செம்மை என்பதும் இருக்கும் என அறிதல் வேண்டும். இல்லாதவர்களை இருப்பவர்களாக்குவதற்கு - இரப்பவரை இல்லாமல் செய்வதற்கு - எல்லாரும் நிகர் என்று ஆக்குவதற்கு அறியாமை போக வேண்டும். போகுமா? விடை : போகாது, போகாது. கேள்வி : கல்வியால் அறியாமை தீரும் கற்பக் கழி மடம் அஃகும் என்கின்றார்களே! விடை : ஒருவன் கற்கும் அளவுக்கு - அவனிடத்திலுள்ள மடமை போகும் என்றால் அறியாமையின் முதன்மையே தீர்ந்தது என்றா பொருள்? கேள்வி : உருசியாவில் செல்வன் வறியவன் என்ற இரட்டையே ஒழிந்துவிட்டதல்லவா? விடை : அது கரடி கேள்வி : புதிய சீனாவில்கூட அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லுகின்றார்களே? விடை : இல்லை. ஏற்றத்தாழ்வு எப்போதும் இருக்கும். அறிவு அறியாமை அகல முடியாதவை. வறுமையும் செம்மையும் வாழ்ந்து கொண்டுதாம் இருக்கும் இரப்பானும் ஈவானும் இரப்பதும் ஈவதும் எப்போதும் இருக்கும். இந்த இரண்டில் ஒன்று வேரற்றுப் போவதென்பது முடியவே முடியாது. கேள்வி : சமயங்கள் சாற்றுவதெல்லாம் அறியாமையை நீக்குவதற் காகத்தானே? விடை : எந்தச் சமயமாவது எந்த இடத்திலாவது அறியாமையை நீக்கிற்று என்றால் அது தனி மனிதனிடமிருந்த அறி யாமையைப் பற்றியது. உலகின் அறியாமை முதலற்றுப் போக வழிசொல்லும் நூல் - கல்வி இயக்கம் தோன்றிய தில்லை; தோன்றப் போவதுமில்லை. அதுபோலவே உலகில் வறுமை வேரற்றுப் போக வழி சொல்லும் நூல், கல்வி இயக்கம் இருக்கவே முடியாது. இருக்கலாம் என்றால் அந்த வறுமையை முழுதும் - ஒழிக்கவே முடியாது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். திரு வள்ளுவர் இதுபற்றிச் சொல்லும்போது இன்னும் ஒரு படி தாண்டி விடுகின்றார். இரப்பவர் உலகில் இல்லாவிட்டால் மக்களின் நடை முறையில் சுவை இராது என்கிறார். இதனால் இரப்பார் இருப்பர். இல்லாமற் போகார். இல்லாமல் செய்ய முடியாது என்று வைத்து அப்படி அவர்கள் இல்லாவிட்டால் உலக மக்களின் போக்குவரவு - நடைமுறை மரப்பாவை போவதும் வருவதும்போல இருக்கும். சுவையற்ற வாழ்க்கையாய் முடியும் என்று கூறுகின்றார். இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று - குறள் என்பது காண்க. இவ்வாறு நலம் கூறுவதால், தமிழ்ச் சான்றோர் இவ்வாறு கூறுவதால் - ஏழைகளை முன்னேற்றமுறச் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக எண்ணிவிடக்கூடாது. அதுபோலவே பொதுவுடைமைக்காரர்கள் செல்வ நிலையில் மக்கள் நிகர் என்ற நிலையை உண்டாக்கி விடுவோம் என்று அவிழ்க்கும் பொய்ம் மூட்டைகளை முழுவதும் நம்பிவிட வேண்டும் என்று எண்ணிவிடக் கூடாது. ஏழ்மையின் வேரையே அழித்து விடுவோம் என்று சொல்வோர் வாய்ப்பந்தல் போடுவோரே! குன்றக்குடி அடிகளாரும் விடுதலை ஆசிரியரும் வாய்ப் பந்தல் வேலையில் ஈடுபட வேண்டாம். உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கவேண்டும். அறிவித்துத் தனிப் பட்டவர் கொண்டுள்ள அறியாமை ஏழ்மைகளையுடையவர் களுக்குச் சலுகை தேடவேண்டும். சாதியை ஒழிக்க முன்வர வேண்டும். வெளிப்படையாக சாதியின் பேரால் சுரண்டும் கூட்டத்தை ஒழிக்க முன்வந்து பாடுபட வேண்டும். வெளிப் படையாக மதத்தின்பேரால் மக்களைச் சுரண்டும் நிறுவனங் களை ஒழிக்கப் பாடுபடவேண்டும். வெளிப்படையாக ஏழ்மையை - வறுமையை ஒருபுறமாக ஒதுக்கி, சமநிலையின் பயனை மக்கள் நுகரும்படி செய்யலாம், அமெரிக்காவைப் போல! உருசியாவைப் போல! உலகப் பேரறிஞர்கள் செய்யும் முயற்சியெல்லாம் அறியாமையின் முதன்மையை முழுமையை ஒழிக்க அல்ல. தனித்தனி ஏழை மக்களைப் பலவாறாக - சாதி - மதம் - ஆகிய படுகுழிகளினின்று மீட்க தனித்தனி மனிதனின் கெட்ட சூழ்நிலைகளை நல்லாதாக்க! அதனால் அறிவு ஏணியில் சில படிகளில் அடி வைக்கும்படி செய்யலாம் என்று. மற்றவர்போல் பொது நலத்தை அவர்கள் நுகரும்படி செய்யலாம் என்று. அறியாமை முழுதும் நீக்கிய நிலை ஏழ்மை என்பது இல்லாத நிலை - இரப்பார் இல்லாத நிலை - ஆகிய இந்த நிலையை நாம் உண்டாக்க வேண்டுமானால் அது புத்தர் சொல்லுவது போன்ற உலகின் சாக்காட்டு நிலைதான். இதையும் பார்க்க. ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்கணவர் ஈவாரும் கொள்வாரும் (இரப்பாரும்) இல்லாத இடம் வானந்தான்! - குயில், கிழமை இதழ், 2. 2. 1960, ப. 12-13 6. நடவடிக்கை எடுக்க வேண்டாமா? சில நாட்களின் முன் நடந்த கம்முய்னிடு (செஞ்சிச் சாலையில்) பொதுக் கூட்டத்தில் சட்டசபை உறுப்பினராகிய கலியாணசுந்தரம். புதுவை நீதிக்காரரையும் போலீசுகாரர்களையும் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார். அவரே தம் சொற்பொழிவின் முடிவில் என்னை இப்போதே இங்குள்ள அதிகாரிகள் பிடித்துச் சிறைப்படுத்தக் கூடும் என்றும் கூறினார். இதனால், கலியாணசுந்தரம் வேண்டுமென்றே முன்கூட்டியே தாம் போட்டுக் கொண்டிருந்த திட்டத்தின்படியே பேசினார் என்று தெரிகின்றதல்லவா? அக்கூட்டத்தின் நடைமுறையையும், பேச்சுக்களையும் குறிப்பெடுக்கவும் கண்காணிக்கவும் வந்திருந்த போலீசு அதிகாரிகள் சிலர் அல்லர் பலர். அதிகாரிகளுக்கு கலியாணசுந்தரம் பேசியது தெரியாது என்று சொல்லி விடமுடியாது. புதுமை என்ன என்றால், கலியாணசுந்தரத்தின் மேலோ, அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆள் மேலோ போலீசோ, நீதிக்காரர்களோ எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. நாம் விரும்புவது இதுதான்:- போலீசு கலியாணசுந்தரம் பேசியதைக் குறிப்பெடுத் திராவிட்டால், போலீசின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசு குறிப்பெடுத்து அனுப்பியிருந்தும், ஆட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், காரணம் சொல்ல வேண்டும். சொல்ல விருப்பமில்லையானால் வெளிப் படையாக எங்களை இந்த அரசினர் ஒன்றும் செய்யமுடியாது என்று பரவலாகச் சொல்லித் திரியும் கம்முய்டுகளின் முழக்கத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். - குயில், கிழமை இதழ், 16.2.1960, ப. 2 7. தமிழ் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது. தமிழ் மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி. ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூலமாகத்தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது. தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்விலக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடுநிலை உலகமே சொல்லும். தமிழிலக்கியங்கள் தம் வேலையை மனநிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். தமிழ் மொழியில், தமிழ் இலக்கியங்களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும். நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்குந்தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது. தமிழை ஒழிக்கும் நோக்கமுடையவர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி. அவர்கள் தமிழரின் அண்டையிலேயே குடித்தனம் பண்ணுகின்றார்கள். தமிழ்த்தாயை ஒழிக்கச் சொல்லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு. தாய்மொழியை எதிர்க்கும் அதைக் கொல்ல நினைக்கும் கொல்ல நாடோறும் ஆவன செய்துவரும் ஒரு கூட்டத்தை நம் தமிழரிற் சிலரே நத்துகிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள். எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்தவேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடு இது. கன்னல் தோறும் கண்டுவரும் இன்னல் இது! என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக! அந்தத் தீயர்களை வாழ்த்த வேண்டும், அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந்நாள்வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி - உணர்ச்சி ஏற்பட்டது. நல்லவேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள். அவர்கள் தீமை வளர்க. தமிழர்கள் எழுக. உணர்ச்சிபெறுக. தமிழிலக்கியங்களில் - இன்றுள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித்தமிழில் இல்லையாம். தமிழ்க்கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த கன்னக் கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். வளர்ந்துவரும் தனித் தமிழையும் கலந்துவரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள். இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள். தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன? தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவாயிருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்கவேண்டும். தமிழை எதிர்ப்பவன், தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும். தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்; விட்டுவிலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்ப்பற்று காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக்கூடாது எவரும்! சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும். ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று. இந்த அமைச்சரவை இந்தக் கட்சி, இந்த ஆள், நல்ல அவை, நல்ல கட்சி, நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடுவது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே. அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல. இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டியவனா என்பது ஒன்றுதான். தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல்லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்றுதான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதியினனா? நீ வேறு இனத்தவனா? இரு! அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு! ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு. தமிழின் நலம் கருதிப் போராடுகின்ற வனாயிரு! அந்தப் போரில் தலைபோவதாயினும் அஞ்சாதிரு! நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே! போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக போர்! தமிழ்த்தாய் வெல்க! தமிழர்கள் விடுதலை எய்துக. - குயில், கிழமை இதழ், 23.2.1960, ப. 2-3 8. டில்லி ஆட்சியாளர்க்கு! எதையும் தீர ஆராய்க ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருக்கிறது புதுவை அரசு! அதனால் அது தனக்குரிய வழியில் நடந்துசெல்ல முடியாமல் தத்தளிக்கிறது. இந்நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் புதுவையரசு வெயிலில் காயாமலும், மழையில் நனையாமலும் காத்து வருகின்ற வர்கள், ஊர்க்காவல் துறையினர் அல்லர்; கல்வித் துறையினர் அல்லர்; பொதுநிர்வாகத் துறையினர் அல்லர் - இவர்களில் பெரும்பாலோர் தத்தளிக்கும் புதுவையரசின் தலையில் கிடைத்த மட்டும் மண்ணை அள்ளித் தூவுகின்றவர்களே, இவர்களிடம் ஒற்றுமை யுணர்ச்சி என்பது மருந்துக்குமில்லை. தந்நலத்தையே எண்ணி ஆவனசெய்கின்றவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் தங்களுக்கு ஒரு கிராக்கியை ஏற்படுத்திக் கொள்ள கம்யூனிடுகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாம் சொல்லும் இந்த உண்மை நிலையைத் தில்லி அரசியலார் தெரிந்துகொள்ளும் காலம் ஒன்று இருந்தால் அதுதான் புதுவையரசின் தத்தளிப்பு நிலை காக்கப் படுங் காலமாகும். புதுவையரசுக்கு இப்போது உயிர்த்தண்ணீர் ஊற்றி வருகின்றவர்கள் நீதித்துறையினர்தாம். பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருக்கும் சிலரின் நோக்கத்தோடு இன்றுள்ள நீதித் துறையினர் ஒரு தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை. கடமையுணர்ச்சியில்லாத அவர்களின் போக்கை இந்நாள் நீதித்துறையினர் நஞ்சென்று எண்ணுகின்றவர்கள். மேலே நாம் எடுத்துக்காட்டிய துறையினர்கூட இந்த நீதிக் காரர்களின் தனித்த போக்கை - தம்மோடு கூடி வயிற்றை நிரப்பிக் கொள்வதார் கொள்கைக்கு ஒத்துவராத பெருந்தன்மையை - உடைத்துத் தள்ள மறைவாக முயற்சி செய்யாத நேரமே இல்லை. இவ்வாறு இன்றுள்ள நீதித் துறையினரின் கட்டுப்பாடான ஒரு நிலையை உடைத்துத்தள்ள வேண்டும் என்று உருவாகியுள்ள ஒரு கட்சிக்கு இன்று செல்ல நாய்க்கர் என்பவர் தலைமை வகிக்க ஒப்புக்கொண்டு தம் குதிரையைப் பள்ளமென்றும், மேடு என்றும் பாராமல் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. நீதித் துறை என்ற நல்லதொரு கூட்டைப் புய்த்துவிட எண்ணுகின்ற - அதனால் தம் திருட்டுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள தண்டனையினின்று தப்பித்துக்கொள்ள எண்ணுகின்ற கம்யூனிடுகளுக்குப் பல நாட்களாகத் துணைபுரிந்துவரும் செல்ல நாய்க்கர் இன்று உருவாகி யுள்ள கூட்டத்திற்கே தலைமை தாங்க ஒப்புக்கொண்டது பற்றி - அந்த அநீதிக்காரர்கள் - குதிக்கின்றார்கள். அதே நேரம் பொதுமக்கள் உள்ளம் கொதிக்கின்றார்கள். நீதித் துறையைக் காட்டிச் செல்வத்தை மீதிப்படுத்தி மேல் மெத்தை வைத்துக் கொண்டதில் தப்பில்லை. ஆனால் அந்த நீதிக் காரர்களுக்கே வெடிகுண்டு தூக்கும் அநீதிக் கூட்டத்திற்கு ஆதரவு காட்டுவது எவ்வளவு சிறுமை என்பது நாம் செல்ல நாய்க்கருக்கு நினைவூட்ட எண்ணுகின்றோம். செல்லநாய்க்கருக்குச் சில நண்பர்கள் இருக்கலாம், அந்த நண்பர்களுக்குச் செல்லநாய்க்கர் தனி முறையில் சலுகை காட்டலாம். அதைவிட்டு அந்த நண்பர்களைத் திடீரென்று தருமமே வீற்றிருக்க வேண்டிய நாற்காலியில் உட்காரவைத்துவிட எண்ணினால், அவர்களின் தகுதி, ஆராய்ச்சி செய்யப்படவேண்டாமா? அல்லது புதுவையரசு செல்ல நாய்க்கரின் அப்பன் வீட்டுச் சொத்தா? செல்ல நாய்க்கர் இன்றுள்ள நீதித் துறையினர் மேல் சொல்ல ஏதாவது பழி வைத்திருக்கிறாரா? அல்லது அவர், நீதித் துறையில் சேர்த்துக் கொள்ளச் சொல்லும் இசுமாயிலுக்குச் சொல்ல ஏதாவது தகுதி வைத்திருக்கிறாரா என்றால் இல்லவே இல்லை. இசுமாயில் யார்? பழைய அமைச்சர்! ஏன் தள்ளுகடை செய்யப் பட்டார் - இல்லை இல்லை ஏன் குறுக்கில் பதவியை விட்டு ஓடினார்? செல்ல நாய்க்கருக்கு நினைவில்லாவிட்டால் மருத்துவமனையில் போய் விசாரிக்கட்டுமே. நேரமிருந்தால் பாகிதானுக்குப் போய் அங்குள்ளவர்கள் புதுவை அமைச்சரை நோக்கிக் காறியுமிழ்ந்த வெள்ளத்தில் குளித்துவிட்டு வரட்டுமே. இசுமாயிலுக்கா நீதிபதி பதவி? நீதித்துறையின் நிலை என்ன ஆகும்! ததலாவுக்குப் பெரிய அலுவலிடம் கொடுக்க வேண்டுமாம். ததலா மனிதரில் ஒருவனாக மதித்திடவும் தகுதியற்ற ஆள் அல்லவா? செல்ல நாய்க்கர் சொல்லுகிறாராம்:- நீதிபதிகளும், நீதித்துறை அதிகாரியும் உறவினர் என்று! இதைச் செல்ல நாய்க்கர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ளுகிறோம். இதில் நம் கருத்து என்னவெனில் இப்போதுள்ள நீதிபதிகள் சிலரும் நீதித்துறைத் தலைவரும் உறவினர் என்றால் - அதை நாம் பாராட்டவேண்டும் என்பதுதான். ஏன்? அந்த உறவினர் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதன் வாயிலாக என்ன அநீதி செய்தார்கள்? தந்நலங் கோரி அவர்கள் செய்த தீர்ப்புக்கள் எவை? அவர்கட்கு இருக்கும் அதிகாரத்தைக் கெட்ட வழியில் செலவிட்டுச் சொத்து - ஒருகாசு சேர்த்துக் கொண்டார் என்ற எவனாவது விரலை விடட்டும்! அவரெல்லாம் உறவினர் இவரெல்லாம் உறவினர் உள்நாட்டுப் பிள்ளைகளைப் புதுவையில் வைக்கக் கூடாது என்று எழுதிய பழைய புகார் விண்ணப்பத்தின் நகல் செல்ல நாய்க்கர் மேசையில் இருக்கலாம். அது நாலு குடும்பமே புதுவையை ஆண்டபோது சரியான விண்ணப்ப மாயிருக்கலாம். உள்நாட்டு அரசியலில் செல்லநாய்க்கரும் தலைநீட்ட அது அப்போது பயன்பட்டிருக்கலாம். அப்படிச் செல்ல நாய்க்கர் தலைதூக்கியும் ஒன்றும் செல்ல நாய்க்கரால் கிழிந்து விடவில்லை என்று மக்கள் கசந்து கொண்டார்களே அப்போது அந்தப் புகார் விண்ணப்பம் சரியானதாயிருக்கலாம். இப்போது நல்லவர்களை ஒழித்துக்கட்ட உதவுமா? முடியுமா? அப்போது ஆறாயிரம் கல்லுக்கு அப்பால் இருந்தான் நாடாண்ட பிரஞ்சுக்காரன். ஆதலால் அவர்களை ஏமாற்றி சொந்தக்காரர் என்று சொல்லி அவன் பேரையும் கெடுத்து ஊர்த்தாலியையும் ஒட்ட அறுத்துக் கூத்தாட முடிந்தது. இப்போதும் செல்ல நாய்க்கர் அதே புகார் விண்ணப்பத்தை முன்னைய விலைக்கே விற்பனை செய்கிறார் என்றால் செல்ல வேண்டுமே! அவரெல்லாம் சொந்தக்காரர் இவெரல்லாம் சொந்தக் காரர் என்று செல்ல நாய்க்கர் புகார் விடும் தாளும் அடுத்த வீட்டுக் காரனுக்குத்தானே? ஆறாயிரம் மைலுக்கு அப்பாலுள்ளவனுக்கா? டில்லிக்குத் தெரியாதா சொந்தக்கார நீதித் துறையினர் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவருடையதே என்று! சன்னல் கம்பி ஒவ்வொன்றும் அவர்களுடையதே என்று! திருடியதன்று. சுவருக்குப் பூசிய சிமிட்டி திருடியதன்று. கைக்கூலியாக வாங்கியதென்று காட்ட அவர்களின் சட்டைப் பையில் - அவர்களின் வீட்டில் என்ன உண்டு? அவர்களின் பரம்பரைக் குடும்பத்தின் நல்ல பெயர்தான் உண்டு. செல்ல நாய்க்கர் வேண்டுமானால் இரண்டு கண்ணாடிகளின் நடுவிலிருந்து தம் முதுகைப் பார்க்கட்டும். இன்னொன்று! இந்த நீதிபதிகளில் சிலர் வருவாய்த்துறையினின்று வந்தவர் களாம். செல்ல நாய்க்கர் கூறும் புகார்களில் இதுவும் ஒன்று. கேவல் சிங்கின் புகழுக்குரிய செயலென ஒன்றை நாம் காட்ட வேண்டுமானால், வருவாய்த் துறையினின்றும் கல்வித் துறையினின்றும் எடுத்து நீதித் துறையை அவர்களிடம் ஒப்படைத்த திறமை ஒன்றைத்தான் காட்ட முடியும். நீதிபதிகள் வருவாய்த் துறையினின்றும் கல்வித் துறையி னின்றும் நீதித் துறைக்கு வரவேண்டும் என்ற ஒரு நியதி ஆட்சியாளர் தம் நினைவில் வைக்கவேண்டிய ஒன்றாகிவிட்டது. அண்மையில் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றுக் கொள்வாரானால், அவ்விடத்திற்கு வரத்தக்கவர் வருவாய்த் துறையிலுள்ள கோன்த்திரோ சிலர்தான் என்பதும் செல்ல நாய்க்கருக்கே தெரியும். அன்றியும் வருவாய்த் துறையினின்று நீதித் துறைக்கு வந்தவர்கள் அதற்குரிய தகுதிச் சான்று இல்லாதவர்களா? இன்று நீதித்துறையில் எந்த மாற்றமும் தேவை இல்லை. தேவைதான் என்பவர் தந்நலக்காரர்கள். கம்யூனிடுகள் அடக்கப்பட வேண்டும். அவர்கட்குப் பரிந்து பேசுகின்ற ஆட்கள் கலகக்காரர்கள். அதிகாரிகள் கம்யூனிட்டுகளுக்கு அஞ்சக்கூடாது என்பதை நாம் எச்சரிக்கை முறையில் தெரிவிக்க எண்ணுகின்றோம். - குயில், கிழமை இதழ், 8.3.1960, ப. 5, 6, 7, 9. தோழர் சம்பத் அவர்கட்கு! தோழர் சம்பத் எம்.பி. அவர்கள், கண்ணீர்த்துளிகள் மேல் வெறுப்புற்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார் என்று கேள்வி. நான் ஒன்று சம்பத் அவர்கட்குச் சொல்ல ஆசைப்படுகின்றேன். சம்பத் அவர்களை நான் ஆற்றல்மிக்கவர் என்று எண்ணுவதாலும், நேர்மையுடையவர் என்று எண்ணுவதாலுமே இதைச் சொல்ல எண்ணினேன். சொல்ல ஒண்ணா எதிர்ப்பின் கீழ்ப் பெரியார் அவர்கள் தம் சுய மரியாதை இயக்கத்தையும், திராவிடர்க் கழகத்தையும் இந்நிலையில் மிக நன்னிலையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார். நல்ல கருத்துக்களைப் பல எதிர்ப்புக்கிடையிலேயும் மக்கள் பின்பற்றும் நிலையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார். பெரியார் தம் இயக்கம் பற்றிய அளவில் செய்திருக்கும் பெரிய குற்றம் என்னவென்றால் இயக்கத்திற்குப் பல இலக்கக் கணக்கான பணத்தைச் சேர்த்து விட்டதுதான். இதனால் என்ன ஆகி விட்டது என்றால், அவரைச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவரைக் காலை வாரி அடித்துவிட்டுப் பணத்தை அடித்துக் கொண்டு போகவேண்டும் என்பதிலேயே நாட்டமுடையவர்களாகித் திரிகின்றார்கள். இன்று பெரியாரின் நிலையை நோக்குவார் கண்ணீர்விடுவார் என்பதில் ஐயமில்லை. குருசாமி, பொதுச் செயலாளர், விடுதலைக்கு ஆசிரியர், அவர் இந்த இரண்டு ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு செய்யும் வேலை என்ன தெரியுமா? அண்ணாதுரை வேலை செய்கின்றார். கிளைக் கழகங்கள் எல்லாவற்றிலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டார். பெரியாரைக் கைகால் ஆடவொட்டாமல் செய்துவிட வேண்டும் என்பது அவர் நோக்கம், காலிப் பசங்களையெல்லாம் கையில் பிடித்துக் கொண்டு இழிசெயல்கள் அனைத்தையும் செய்து வருகின்றார். ஒரு பயல் கூட்டத்தில் சொன்னான்: பெரியாரை வெட்டி வெட்டி வெட்டிப் போட்டுப் பிரியாணி செய்து அள்ளி அள்ளி அள்ளிப் புசிக்க வேண்டும் என்று கூறினான். அவன் குருசாமி கட்சிக்காகப் பரிந்து இவ்வாறு கூறினானாம். இயக்கத்தில் - கிளைக் கழகங்களின் தலைவராயிருப்பவர்களில் பெரும்பான்மையோர் காலிப் பசங்களாகவே இருக்கின்றார்கள். பெரியாரால் இவற்றிற்கெல்லாம் மீட்சி காணமுடியவில்லை. அவரால் ஒன்றும் செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தி வைத்து விட்டார் குருசாமி. எவனையும் எதையும் கேட்கமுடியவில்லை. தனிக்கொடி தைக்கப்படுகின்றது. தனிக்கட்சி உருவாகி விட்டது. இந்த நிலையில் சம்பத் அவர்கள் கண்ணீர்த்துளி கட்சியை உதறித் தள்ளிவிட்டுத் திராவிடர் கழகத்தில் சேர்ந்து அதைக் காப்பாற்றித் தரவேண்டும். தோழர், சம்பத், எம்.பி. அவர்கள் இன்று நாட்டுக்குச் செய்ய வேண்டிய இன்றியமையாத தொண்டு இதுதான். எண்ணித் துணிக. - குயில், கிழமை இதழ், 15.3.1960, ப.3 10. முன்னேற வேண்டுமானால் தனி மனிதன் முன்னேற வேண்டுமானால். முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்பதைக் கருத வேண்டியதில்லை. ஓர் இயக்க ஏட்டைத் தன் நலத்துக்காகவும், இயக்கத்தைக் கலைத்துக் குட்டிச்சுவராக்குவதற்கும் கருவியாக எடுத்தாள வேண்டும். தலைவர்கள் முன்னேற வேண்டுமானால் அறிவினால் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன்னோய்போற் போற்றாக் கடை என்பதைக் கருத வேண்டியதில்லை. பெரியாரின் காலைப்பிடித்துக் கொண்டே எழுந்து, பெரியாரையே ஒழித்துக்கட்ட வேறு புதிய கொடியுடன் புதிய கட்சி ஒன்றை ஏற்படுத்த இடைவிடாமல் முயற்சி செய்ய வேண்டும். ஏற்படுத்தப் போகும் கட்சி முன்னேற வேண்டுமானால் பல்குழுவும் பாழ்படுத்தும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு என்பதைக் கருத வேண்டியதில்லை. பெரியாருக்கு எதிர்ப்பாக உள்ள பக்தவச்சலத்திடம் ஓடி நான் நூற்றுக்கு ஐம்பது பங்கு பீபீயாயிருந் தாலும், மீதியாகிய நூற்றுக்கு ஐம்பது வேளாளன்தானே உங்கள் பெரியார் ஒழிப்பு இயக்கத்தில் எனக்குப் பெரும் பங்கு கொடுக்கலாமே என்று கேட்க வேண்டும். ஒரு குடும்பி பொருள் நிலையில் முன்னேற வேண்டுமானால் இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருவ விடல் என்பதைக் கருத வேண்டியதில்லை. ஒரு கவிஞனிடம் குடும்பத்தோடு சென்று கவிதைகளையும் நாடகத்தையும் வெளியிடும் உரிமை வேண்டும் என்று சொல்லிப் பெற்றுக் கொண்டு இன்னொருவரிடம் ஓடி வெளியிடும் செலவுக்கு பணம் தேவை என்று கேட்டுப் பெற்றுக் கொண்டு அச்சடிப்பவனிடம் ஓடி அச்சிட்டபின் கூலியைக் கொடுத்து விடுகின்றேன் என்று அச்சிட்டுக் கொண்டே-அவ்வாறு பல பதிப்புக்கள் வெளியிட்டு நிறைய காசடித்துக் கொண்டு, கவிஞர், பண உதவியாளர், அச்சுக்கூடத்தார் அனைவர் நெற்றியிலும் பட்டை நாமத்தைப் போட்டு விட்டுப் பொதுத் தொண்டுதானே என்று சொல்லிவிட வேண்டும். ஒரு புலவன் முன்னேற வேண்டுமானால் அறன்ஈனும், இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்பதைக் கருத வேண்டியதில்லை. தாய்மொழியைக் குறைத்தும், தாய் நாட்டைக் குறைத்தும் பார்ப்பானிடம் கூறிப் பொருள் சேர்க்கவேண்டும். நடிகன் முன்னேற வேண்டுமானால் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேறப் படும் என்பதைக் கருத வேண்டியதில்லை. தன்னினும் புகழ்பெற்ற நடிகனைப் பற்றிய சுவரொட்டிகளை ஆள்வைத்துக் கிழிக்க வேண்டும். தலைவர்கள் பொருள்நிலையில் முன்னேற வேண்டுமானால் மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல் என்பதைக் கருத வேண்டியதில்லை. பெரும்புகழ் உடைய கலைஞனுக்கு நடக்கும் பாராட்டுக் கூட்டத்தில் ஆளை வைத்து மண்ணை அள்ளிப் போடச் செய்ய வேண்டும். திரைப்படக் கவிஞர் எழுத்தாளர் முன்னேற வேண்டுமானால் அஃகி அகன்றஅறிவு என்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் என்பதைக் கருத வேண்டியதில்லை. பிறர் எழுதிய பாட்டைத் தாம் எழுதியதாகவோ, பிறர் எழுதிய பாட்டில் சில சொற்களை மாற்றியோ, பிறர் எழுதிய செய்யுள், உரைநடைகளின் கருத்தை எடுத்தோ தம் பெயரால் வெளியிட்டு மானமில்லாத பட முதலாளிகளிடம் பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். பார்ப்பனர் முன்னேற வேண்டுமானால் புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் என்பதைக் கருத வேண்டியதில்லை. தமிழர்களையும் தமிழ்ப் புலவர்களையும் தமிழ்க் கவிஞர்களையும் தமிழர் நாகரிகம் கலை ஒழுக்கங்களையும் தமக்குக் காது கொடுக்கும் கயவர்களிடம், புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ வேண்டும். காட்டிக் கொடுப்பார் முன்னேற வேண்டுமானால் பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். என்பதைக் கருத வேண்டியதில்லை. பார்ப்பனருக்காகத் தமிழர்களின் திறத்தினைப் பழித்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால் கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் என்பதைக் கருத வேண்டியதில்லை. மேற்குறித்த கீழ்மக்களைப் பெரியார் அப்படியே விட்டு வைத்துக்கொண்டே போகவேண்டும். - குயில், கிழமை இதழ், 12.4.1960, ப.2-3 11. புன்மை மணச்ச நல்லூராரும் அன்னை மணியம்மையாரும் ஓரஞ்சல் நமக்குக் கிடைத்தது. அதில்: திரு. குயில் ஆசிரியர் பாவேந்தர்க்கு, மணச்சநல்லூர் அம்பட்டன் வணக்கமாகத் தெரிவித்துக்கொள்வது. புகழக் கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்ந்தும் புகழத் தக்க விடுதலை ஆசிரியர் குருசாமியவர்களை இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வருகின்றீர் இது சரியா? (கையெழுத்தில்லை) இது கலக உள்ளம் படைத்தவரும், இயக்கத்தைக் கீழறுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவரும் ஆகிய ஒருவரால் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஆயினும் நாம் மணியம்மையாரை ஏன் புகழ்கின்றோம்? குருசாமியை ஏன் இகழ்கின்றோம் என்பதை விரிவாக விளக்கச் சொல்வதால் இதை மகிழ்ச்சிக்குரிய அஞ்சல் என்றே கொள்ளு கின்றோம். நாம் இளமைப்போதில் முருகனைப் புகழ்ந்தோம் - பாடினோம். ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று; பாடத்தக்க ஒரு பொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம். முருகனைப் பாடுவதை விட்டோம். பாரதி தமிழ் பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன்; பாரதியைப் புகழ்ந்தோம்; பாடினோம். இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும் புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கின்றாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். தாம் போகும் வழியை மறைத்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன். தமிழரைக் காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல; மலைமேல் நின்று மெல்ல அல்ல தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம். அது மட்டுமல்ல. குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுக்குண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம். புகழ்ந்து எழுதினோம். புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந் தார்கள். பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல. குருசாமி, குஞ்சிதம் அம்மையார், அண்ணாதுரை, பொன்னம்பலனார். ஆனால் பெரியாரின் உடம்பைவிட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக்கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப் பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் கக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல்வைத்துள்ள அருளால் முடியாது; பெரியார் சாகட்டும் என்று தவங் கிடக்கும் அண்ணாத்துரை, குருசாமி, குஞ்சிதம் அம்மையார், பொன்னம்பலனார்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டு - பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை, அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்? பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப்பொருளாலும் அழகுபெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள். அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங் கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக் கட்டுவதின்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வ தன்றி, ஓர் இதழைக் கிள்ளி தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை. பெரியாரை அணுகும் சிறுக்கிகள் சிலரையும் நாம் கண்டதுண்டு. அவர்கள் பெரியாரே நீவிர் எம்மைப் பிடியுங்கள். எம் ஆம்படையான் மார் உங்கள் கோட்டையைப் பிடித்துக் குட்டிச் சுவராக்கட்டும் என்று சொல்வதன்றி நல்ல எண்ணம் மருந்துக்கும் காணப்படுமா? மணச்சநல்லூராரே, நான் யாரைப் புகழ வேண்டும்? - குயில், கிழமை இதழ், 10.5.1960, ப.2-3 12. உண்டு என்பார்; இல்லை என்பார்! (வினா – விடை) உண்டு என்பாரை வடவர் ஆத்திகர் என்பர். இல்லை என்பாரை நாத்திகர் என்பர். காஞ்சி நாத்திகர் குப்புசாமியவர்கள் வெளியிட்ட ஆத்திக நாத்திக சம்வாதம் என்ற நூலில் உள்ள வடசொற்றொடர்களைத் தமிழாக்கி இங்கு வெளியிடப்படுகிறது. உண்டென்பான் : (இல்லை என்பானை நோக்கி) கடவுள் நம்பிக்கை உமக்கு உண்டா? இல்லை என்பான் : கடவுள் என்று எதைச் சொல்லுகின்றீர்? உண்டு : உலகினர் எல்லோரும் அறிந்திருக்கையில் நீவீர் மட்டும் எதைச் சொல்லுகிறீர் என்று கேட்பது சரியா? இல்லை : உலகினர் எல்லோரும் அறிந்திருக்கும்போது நீரும் அறிந் திருப்பீரே. நீவிர் கண்டவண்ணம் அதை எனக்கும் காட்டக் கூடாதா? உண்டு : அது காட்டக்கூடியதன்று. இல்லை : குணமில்லையா அதற்கு? தொழில் இல்லையா அதற்கு? இவற்றைக் கொண்டாவது குறிப்பிடலாமே? உண்டு : ஆம்! தன் வயத்தனால், தூய உடம்பினன் ஆதல், இயல் பாகவே கட்டுக்களினின்று நீங்குதல், அருள் உடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை, இவை எட்டும் கடவுளின் குணங்கள். இக் குணங்களால் ஆக்குவது - காப்பது-அழிப்பது-மறைப்பது-அருளுவது ஆகிய ஐந்து தொழில்கள். இக் குணங்களையும் செயல்களையும் கொண்டு கடவுளை அறிந்து கொள்ளலாம். இல்லை : மேலே கடவுள் காணப்படாதது என்று சொன்னீரா, இல்லையா? இப்போது குணங்கள் செயல்களைக் கண்டதுபோல் சொல்லுகிறீர். காணப்படாதது எதுவோ அது உருவமில்லா தது. அதில் உள்ள குணங்கள் எப்படித் தெரிந்தன? தொழில்கள் எப்படித் தெரிந்தன? உண்டு : ஏன் தெரியாது? காற்று என்பது காணப்படாததுதானே! குளிர்ச்சி, வெப்பம், மேலேபடுவது ஆகிய மூன்று குணம் தெரியவில்லையா? மரங்களை முறிப்பது, நீர், மண்ணை வாரி இறைப்பது முதலிய செயல்களும் தெரியவில்லையா? இல்லை : காற்றுக்கு இயற்கையில் குளிர்ச்சியுமில்லை; சூடுமில்லை; அவை தீயின் சேர்க்கையாலும் கதிரின் சேர்க்கையாலும் உண்டாவன. தண்ணீரில்பட்டு வந்தால் குளிர்ந்திருக்கும், தீயிற்பட்டு வந்தால் சூடாயிருக்கும். அவ்வளவு தான். அது அசையும் என்கின்றீர். அசையாத நிலை யுடையதுதான். தட்பவெப்ப மாறுதல்தான் காரணம் அசைவுக்கு! இயற்கையில் காற்றுக்கு அசைவு இல்லை. ஆகையால் நீர் காட்டிய எடுத்துக்காட்டுகள் பிழையானவை. உண்டு : என்ன ஐயா, ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டீர்கள்; பல நாட்களாக நாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை யெல்லாம் மண்ணாக்கிவிட்டீரே. குயவனுக்குப் பல நாள் வேலை. தடி எடுத்தவனுக்கு ஒரே நாள் வேலை தானோ! இருக்கட்டும்; வேறு ஒன்றைக் காட்டிக் கேட்கின்றேன். இதோ இந்த வீடு, தானே இப்படி ஏற்பட்டுவிட்டதா? இதைக் கட்டியவன் ஒருவன் இருந்தாகத்தானே வேண்டும்? அவனை நாம் பார்க்கவில்லையானாலும் அவன் செயல் தெரிகின்ற தல்லவா? இல்லை : அதுபோல் அங்கே ஒரு வீட்டைக் கட்டினான் கொல் லூற்றுக்காரன், இங்கொன்று கட்டியதைப் பார்த்தோம். அது போலத் தான் நீ காட்டிய இந்த வீட்டைக் கட்டி யவன் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணுகிறோம். கண்ணிலே காணப்படுவதுதான் இதற்கெல்லாம் ஆதாரம். வேறு ஒன்றும் இருக்கமுடியாது. அதுபோலவே இந்த உலகத்தைக் கட்டியவனும் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணிக் கொள்ள வேண்டுமா! அதெப்படி? வீடு கட்டப் படுவதைப் பார்த்திருக்கிறோம், கட்டியவனையும் பார்த்திருக்கிறோம்; இந்த உலகத்தைப் போல் இன்னுமோர் உலகத்தைக் கட்டும் போது நீர் பார்த்தீரா? கட்டியவனை, நீர் பார்த்தீரா? சொல்லுமே. அன்றியும் உம் கொள்கைப்படி கடவுள் எங்கும் நிறைந் தவர்! அப்படி இருக்கையில் அனைத்து உலகத்தையும் அவர் எங்கிருந்து கொண்டு கட்டிமுடித்தார்? அனைத்து உலகிலும் அவர் இல்லையானால் அவர் எங்கும் நிறைந்தவ ராதல் எப்படி? சரி, கடவுள் வேறு; அனைத் துலகும் வேறா? உமது இந்த எடுத்துக் காட்டும் சரி யில்லாமல் போயிற்றே! உண்டு : அதற்கும் அப்படிச் சொல்லிவிட்டீர். அனைத்துலகும் கடவுளும் கயிறும் பாம்பும் போன்றவை என்கின்றேன். அதற்கென்ன சொல்லுவீர்? இல்லை : கயிறும் பாம்பும்போல என்றீர். அப்படியானால் இரண்டும் ஒன்றா? இரண்டா? உண்டு : இரண்டுதான்! ஆனால் மாலை நேரத்தில் கயிறும் பாம்பும் ஒன்றாகவே தோன்றும் அல்லவா? அதைக்கொண்டு சொன்னேன். இல்லை : அப்படியானால் பாம்பு கயிறா? கயிறு பாம்பா? உண்டு : பாம்பு கயிறுமல்ல; கயிறு பாம்புமல்ல. இல்லை : அப்படியென்றால் கடவுள் அனைத்துலகு அல்ல. அனைத்துலகும் கடவுளல்ல என்று ஆகின்றது. சரி, கயிறு பாம்பாகத் தோன்றியது எப்படி? உண்டு : முன்பு பாம்பைக் கண்ட பழக்கத்தால். இல்லை : உலகில் பாம்பு உண்டா, இல்லையா? உண்டு : உண்டு இல்லை : உண்டா! அது இருந்ததால் கண்டானா இல்லாமல் கண்டானா? உண்டு : இருந்தால்தான் காணமுடியும். இல்லாததில் பொரு ளில்லையே. இல்லை : அந்தத் தோற்றமாகிய, அதாவது இல்லாததாகிய பாம்பு கடித்தால் நஞ்சு ஏறுமா? உண்டு : இல்லை இல்லை : கயிறுபோல் கடவுள் என்று சொன்னாய். பாம்பு போல் அனைத்துலகும் என்று சொன்னாய். கயிற்றில் பாம்பு பொய்யாய்த் தோன்றியதுபோல கடவுளிடமும் அனைத் துலகும் பொய்யாய்த் தோன்றுகின்றது என்று ஆயிற்று. ஆனால் முன்னம் ஒருவன் பாம்பை மெய்யாகக் கண்ட பழக்கத்தால் கடவுளையே அனைத்துலகமாக எண்ணு கின்றான் என்று ஆகின்றது. ஆயின் கயிறு வளைந்து கிடந்தால் சற்றேறக் குறைய பாம்பைப் போலத் தோன்றுவது சரிதான்! ஆனால் பாம்பின் தோற்றத்திற்கு கயிறு காரணமாய் இருந்ததுபோல அனைத்துலகின் தோற்றத்திற்குக் கடவுள் காரணமாயிருக்க வேண்டுமே! அப்படியானால் நாம் பாம்பையும் கண்டிருக்கின்றோம்; கயிற்றையும் கண்டிருக் கிறோம். இவை ஒன்றுபோல் ஒன்று இருக்கும் என்பதையும் ஒப்புகின்றோம். ஆனால் கயிற்றைக் கண்டிருக்கும் நாம் கடவுளைக் கண்டிருந்தால்தானே. கயிறு பாம்பாய் தோன்றியது போலக் கடவுள் அனைத்துலகாய்த் தோன்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீர் புகன்ற இரண்டு பொருள் களும், கண்ணுக்குத் தோன்றுவன. ஆனால் அனைத் துலகைப் பொய்யாகவேனும் அல்லது 21மெய்யாக வேனும் காட்டுவதற்குக் காரணமான கடவுளே கண்ணுக்குக் காணப் படாததாய் இருக்கையில் அது அனைத்துலகமாகத் தோன்றுகின்றதென்று நீர் சொன்னால் தலையாட்ட நான் என்ன பெருமாள் மாடா? - குயில், கிழமைஇதழ், 10.5.1960, ப.5-6 13. டயருக்குப் பரிசு பஞ்சாப் படுகொலை புகழ். டயர் படுபாவி தன்னிடம் இருந்த தோட்டாக்கள் தீரும்வரை மக்களைச் சுட்டுக் கொன்றான். அதற்கு அந்நாளில் ஆண்ட வெள்ளை அரசு அவனுக்குக் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? வீரவாள் பரிசு! சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற சனார்த்தனம். எம்.ஏ. அவர்களை அங்கிருந்த குருசாமி, லோகநாதன் என்ற ரௌடிப் பையனைக் கொண்டு அடிக்கவும் முயன்றார் என்பது பலருக்கும் நினைவிருக்கலாம். குருசாமிக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? இயக்கத்தின் தலைவர் என்ற பரிசு! ஜூன் 5ம் தேதி பட எரிப்புப் போராட்ட நாள். அதே நாள் குருசாமியின் புதுக்கொடிக்குக் கம்பம் நாட்டு நாள். பட எரிப்புப் போராட்டத்தில் முதலிற் சிறை செல்ல இருப்பவர் ஆதித்தனார். இரண்டாவது சிறை செல்ல இருப்பவர் பெரியார். இவர்களை வழிகூட்டி அனுப்புகின்றவர் குருசாமி. இயக்கத்திற்குப் புதிய திட்டம் வகுப்பவர் குஞ்சிதம் அம்மையார். உண்டியல் தண்டி உலை வைப்பவர் எ.டி.விவேகி; அமைச்சர் பத்தவச்சலம் வீட்டில் இயக்க முடிவுப்படி திருச்சிற்றம்பலம் பாடப்படும். சென்ற பொதுத் தேர்தலில் காஞ்சிப் பகுதியில் அண்ணாத் துரையை எதிர்த்தும் பார்ப்பனர் ஒருவரை ஆதரித்தும் கூட்டத்திற் பேச அனுப்பப்பட்டவர் குருசாமி. குருசாமியுடன் சென்றவர் குஞ்சிதம், குஞ்சிதம் அம்மையாரை கூட்டத் தொடக்கத்தில் பேச அழைத்தார்கள் காஞ்சித் திராவிட கழகத்தார். அம்மையார் சொன்னது: என்ன இருந்தாலும் ஹி ஹி! குருசாமியை பேசச் சொன்னார்கள். அவர் பேசியது என்ன தெரியுமா? பார்ப்பன எதிர்ப்பு. பட எரிப்புப் போராட்ட காலத்தில் விடுதலை ஏடு புதுக் கொடியை ஆதரிக்கும், விடுதலை ஆசிரியர் அன்னை மணி யம்மையார் எப்போதும் போலவே சும்மா இருப்பார்கள். ஒரு திருட்டுப் பையன் விடுதலைச் செயலகத்தில் புகுந்து தன் சொந்த நன்மைக்கு உகந்த வகையில் தனிப்பகையைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் எழுதினாலும் அன்னையார் சும்மா தாம் இருந்து விடுவார். அதைப் பெருந்தன்மை என்றே நினைக் கின்றார்கள், அன்னை மணியம்மையார். இயக்கத்தின் தலைவர் குருசாமியாம்! பிரிட் பிளாக் மார்க்கட் திருநாவுக்கரசு துணைத் தலைவராம். அரோகரா! பட எரிப்புப் போராட்டத்தில் துணிந்து ஈடுபடப் போகின் றார்கள். திருநாவுக்கரசு, எ.டி.விவேகி, லோகநாதன், மணச்ச நல்லூர் மூவேந்தர் முதலியவர்கள். மற்றவர்கள்? பட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எவரும், எவர்க்கும் அஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் உள்ளத்தில் மட்டும் தமிழன்னை வீற் றிருக்க வேண்டும். தமிழக விடுதலை விருப்பம் நெஞ்சத்தில் பெருக் கெடுக்கவேண்டும்; இயக்கத்தில் உள்ள கலகக்காரப் பசங்களுக்காகத் தனியாக ஒரு சோடி ஆணிகட்டிய செருப்பைத் தயாராக வைத்திருக்க வேண்டும். ஒருசாமிக்கும் அஞ்சாத சுயமரியாதைக்காரன் குருசாமிக்கு அஞ்சமாட்டான். - குயில், கிழமை இதழ், 31.5.1960, ப.2, 3 14. பட எரிப்புப் போர் ஏறு! தமிழ்நாடு நம் தாய்நாடு! அதை நாம் நம்மதாக்க வேண்டும். பிற நாடுகள் வடநாட்டான் உடையவை. அவற்றை நாம் வெறுக்க வேண்டும். அங்கெல்லாம் பரந்துள்ள வடவர் அதிகாரத்தில் தீயை வைக்க வேண்டும். அப்படி அவன் வரைந்துள்ள படத்தைக் கொளுத்திக் காட்ட வேண்டும். கொளுத்திக் காட்டுவது தமிழர் வெறுப்பைக் காட்டியவாறு. கிளர்ச்சி! - அதோ தொடங்கிவிட்டது. தீப்பந்தத்தோடு தமிழர்கள் அணி அணியாகச் செல்கின்றார்கள். தமிழா ஏறு! தமிழ் மகளே ஏறு! குடித்தனம் நாளைக்கு, வாணிகம் நாளைக்கு! கைத்தொழில் நாளைக்கு. இன்று அதோ பிறன் அதிகாரம் பரவியுள்ள எல்லைப் படத்தைத் தமிழர்கள் எரிக்கப் போகின்றார்கள். தமிழா ஏறு! தமிழ் மகளே ஏறு! தூங்குவது நாளைக்கு! சோறு உண்பது நாளைக்கு. மூச்சு விடுவது நாளைக்கு. ஏறு! தமிழா ஏறு! ஏறு தமிழ்மகளே ஏறு! நீ காங்கிரசுக்காரனா? காங்கிரசிலேயே இரு! நீ கண்ணீர்த் துளிக் காரனா? அங்கேயே இரு! நீ கம்முய்னிசிட்டா? இரு. ஆயினும் நீ ஒரு தமிழன் என்பதை மறவாதே! வடவரின் ஆட்சியை ஒழிக்க, இந்தியை விலக்கத் தமிழகத்தை விடுவிக்க ஏறு! எடு தீப்பந்தத்தை. தமிழ் ஆட்சிமொழி என்பது நிலைநிறுத்தப்பட வேண்டுமா? பார்ப்பனர் குளறுபடி நீக்கப்பட வேண்டுமா? ஏறு! தமிழில் இல்லாதது இல்லை என்பதும், தமிழ் சிறந்தால் தமிழர் வாழ்வு சிறப்படையும் என்பதும் தமிழ் பிற மொழிகளின் தாய் என்பதும், தமிழைக் காட்டிக் கொடுப்பவன் கயவாளிப் பையன் என்பதும், தமிழைவிட்டு ஆங்கிலத்தைப் போற்றுவோன் முடிச்சுமாறிப் பையன் என்பதும் நிலைநாட்டப்பட வேண்டுமானால் ஏறு! எடு தீப்பந்தத்தை! கொளுத்து வடவர்கள் ஆட்சியை. தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்பட வேண்டுமா? ஆகாஷ்வாணியை வானொலியாக்க வேண்டுமா? ஏறு தமிழா! ஏறு தமிழ் மகளே! பெரியாரை வாழ்த்து! ஆதித்தனாரை வாழ்த்து! ஏறு! வெல்க பட எரிப்புப் போர்! வெல்க தமிழ்! வீழ்க இந்தி! வடவன் ஆட்சிக்குத் திருச்சிற்றம் பலம்! தமிழ்நாடு விடுதலை பெறுக! ஏறு. - குயில், கிழமை இதழ், 7.6.1960, ப. 1, 2 15. பட எரிப்புப் போர் வென்றது சென்ற ஞாயிறு நாடெங்குமுள்ள தமிழர்கள், தமிழகம் நீக்கிய நாட்டின் படத்தை எரித்தார்கள். இதைக் கொண்டே பட எரிப்புப் போர் வென்றது என்று நாம் கூறிவிடவில்லை. கண்ணீர்த் துளிகளும், காங்கிரசுக்காரரும், பொதுவுடைமைக் காரரும், கீழறுக்கும் குருசாமியும் மறைவான வகையிலும் வெளிப் படையான வகையிலும் உருவாக்கி வந்த முட்டுக்கட்டைகளை - தடைச்சுவர்களை ஒரு பொருளாகவும் எண்ணாமல் தன் இலக்கை நோக்கித் தொண்டர்கள் - போர்வீரர்கள் முன்னேறினார்கள் என்பதைக் கொண்டுதான் இப்போர் வெற்றி யடைந்தது என்கின்றோம். எத்தனை அறிக்கைகள் நாங்கள் அப்படி பண்ணிவிடுவோம் இப்படிப் பண்ணி விடுவோம் என்று! அவர்களில் முகவரிக்கு ஓர் ஆள் வேண்டுமே! இல்லவே இல்லை. கீழறுப்புக்காரர் கனவுதான் என்ன ஆயிற்று; பத்தவச்சலங் களைத் தொட்டுப் பார்த்தார். பத்தவச்சலங்களோ தம் நடுக்கத்தை வெளிப்படுத்தினார். கீழறுப்போர் நடக்கப் போவதைத் தெரிந்து கொண்டு பெரியாரிடம் நேரத்தோடு ஓடி வந்து உட்கார்ந்து கொண்டார். பெரியாரை சிறைப்படுத்தவந்த அதிகாரியிடம் நானும் வருகிறேன் என்று கெஞ்சி வண்டியில் ஏறிக் கொண்டார். வியப் படைந்த பெரியாரோ அப்படியானால், வீரமணியே! இமய வரம்பனே! நீயும் வந்தேறுக என்றார். சிறைநோக்கி வண்டி நடந்தது. அதிகாரிகள் முன்கூட்டியே தலைவர் சிலரைப் பிடித்துப் போவதையும், பிடித்தபின் மறுநாளே விடுதலை செய்யப் போவதையும் கீழறுப்புக் குருசாமி தெரிந்து கொண்டிருந்ததால் விசுவாக எழுந்தார் நானும் சிறைக்கு வருகிறேன் என்று. அதற்கு முன் அவர் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருந்தது என்ன? சிறைக்குப் போவதான எண்ணம் எனக்கு இல்லை என்பதுதான். அவர்தம் தோழர்களாகிய பொறுக்கிப் பசங்களுக்குச் சொல்லி வந்ததென்ன? சிறைக்குப் போகக்கூடாது என்பதுதானே! தமிழர் உள்ளம் ஓர் எரிமலை. அது தணலைக் கக்க தொடங்கிய நிலையில் அதைக் காங்கிரசும் மற்றக் கீழ் மக்களும் ஒரு குவளைத் தண்ணீர் ஊற்றி அவித்துவிட எண்ணினார்கள். எண்ணுகிறார்கள் என்றால் அது அவர்களின் மூடத்தனமே யொழிய வேறில்லை. குருசாமிகள் குறுக்குக் கோட்டை நோக்கிக் காலைப் பின்னே வைத்துவிடும் இந்தப் போர் என்றால் அது அவனவன் காணும் பகற்கனவே அல்லாமல் வேறென்ன? முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பெரியார் எரிச்சலின் சூடு அடியிடத்தைத் தீக் குழம்பாக்கி வைத்திருப்பதையும், மலையுச்சிச் சிவப்பேறிக் காட்டுவதையும் நாம் அன்றைக்கே அறிவோம் - குருசாமிகளும் மற்ற மடையர்களும் இன்றைக்கும் அறியவில்லை என்பதற்காக நாம் இரங்குவது தவிர வேறென்ன செய்ய முடியும். இந்த தாழங்காய்ப் பத்தவச்சலங்களின் உள்நோக்கத்திற்கு இந்த எரிமலை உட்கார்ந்து விடும் என்று எவரும் நினைக்க வேண்டாம். தமிழர்களே! தமிழத்தாய்மார்களே! தாழங்காய்களையும் மற்றக் கூழைமட்டைகளையும் கக்கத்தில் தூக்கிக்கொண்டு தன் இலக்கில் போய் நின்று சிரிக்கும் எது? தமிழர் உள்ளத்தின் எரிமலை! பெரியார் முழங்கிய விடுதலை முழக்கம்! மானங்கெட்டவர்களே! புதுக்கொடி தைப்பவர்களே! பொறுக்கிப் பசங்களே! உங்கள் பேராசையை, வஞ்சச் செயல்களை நெஞ்சினுள்ளேயே புதைத்துவிடுங்கள். நாலாயிரம் பேர் சிறை சென்றார்கள் இந்தப் போரில்! அப்படி என்றால் என்ன பொருள்? இந்தத் தமிழகம் தன் நெஞ்சத்தைப் பெரியார் நெஞ்சமாக்கிக் கொண்டது. நாட்டுத் தமிழர் அனைவரும் ஒருமனப்பட்டார்கள். தமிழருக்கும் விடுதலைக்கும் இடையில் சாணளவு தூரமும் இல்லை. இருப்பதாக நினைப்பவர் பேடிகள். தமிழக வீரர்கள்வெல்க! தமிழ் வெல்க! தமிழர் விடுதலை வாழ்க! பெரியார் வாழ்க! ஆதித்தனார் வாழ்க! - குயில், கிழமை இதழ், 14.6.1960, ப. 2, 3 16. புதுவையில் பட எரிப்பு! ‘eh« jÄH®! இயக்கத்தைச் சார்ந்த தமிழ நம்பி (கிருஷ்ண ராஜ்) கூட்டத்தில் எந்தப் பிளவும் இல்லை. புதுவைத் திராவிடர் கழகத்தினரில் கனகரங்கம் கூட்டம் என்றும், நோயெல் கூட்டம் என்றும், தமிழ்த்தொண்டன் கூட்டம் என்றும் மூன்று பிரிவுகள் உண்டு. தமிழநம்பி (இவர் தினத்தந்தி ஏஜண்டு) தம் கூட்டத்தோடு படம் எரிக்கப் போவதாக முன் கூட்டியே, அரசினர்க்கும் பொதுமக்களுக்கும் அறிவித்திருந்தார். அவரை எதிர்த்துப் புதுவைக் காங்கிரசைச் சேர்ந்த காலிகள் மிரட்டல் துண்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். பட எரிப்பு நாள் காலையில் தமிழ நம்பியையும், பழநியையும் குபேரின் ஆட்கள் பட்டப்பகலில் மக்களறியப் போலீசு இன்பெக்டர் சின்னசாமி ஐயர் முன்னிலையில் நினைவு இழக்கும் வரைக்கும் தாக்கினார்கள். தமிழ்த்தொண்டன் கூட்டத்தைச் சார்ந்த இருவரும் தாக்கப் பட்டதாகக் கேள்வி. இதிலோர் அருவருக்கத்தக்க செய்தி என்னவெனில், நாம் தமிழர் இயக்கத் தமிழநம்பி முதலியவர்களையும், தமிழ்த் தொண்டனைச் சேர்ந்த இருவரையும் தாக்கப்போவதைத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கனகலிங்கமும் நோயேலும் ஆதரித்தார்கள், ஆதரித்தும் வருகின்றார்கள் என்பதே. படம் எரித்ததற்காக மொத்தம் 12 பேர்களுக்குத் தலா 25 பிராங்க் வீதம் தண்டம் செய்து வெளியில் அனுப்பினார்கள் அரசினர். தமிழநம்பி பற்றி வழக்கு நடைபெறும் அவர் சிறையினின்று தற்காலிக விடுதலை பெற்றிருக்கின்றார். தாக்கிய காலிகளைச் சிறைப்படுத்தியது போல் காட்டி உடனே வெளியில் விட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது. புதுவை அரசினர்க்கும் அறிவும், ஆண்மையும் இருந்தால், சட்டத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் பொறுப்புக் காட்ட வேண்டுமே தவிர, காலிப்பசங்களைக் கொண்டு இவ்வகைச் செயல்செய்வதை ஆதரித்தது சரியல்ல. - குயில், கிழமை இதழ், 14.6.1960, ப.3 17. சப்பான் வழி தப்பானது சப்பானில் முந்திக் குண்டுபோடச் சொன்ன தலைவர் ஐசன் ஓவர் அல்லர். அவர் வேறு. இன்று ஐசன் ஓவர் தலைமையில் இருக்கிறது அமரிக்கா. இன்றைய அமரிக்கா உலக மக்களை நல்ல வழியில் அழைத்துச் செல்லும் நோக்கம் உடையது. வாழும் மக்களை வாழும் நிலையிற் சேர்க்கத் துடிப்பது. இது உலகு அறிந்த உண்மை. சப்பானுக்கு வர இருந்த ஐசன் ஓவரை வரக் கூடாது என்று மறியல் செய்த ஜப்பான் மாணவரும், பிறரும் கம்முய்னிடுகள் கருத்தை நிறைவேற்றியிருக்கின்றார்கள். அவர்கள் பிழை செய்து விட்டார்கள். பழைய அமரிக்காவை எதிர்த்ததால் பழைய அமெரிக்கா சப்பானில் குண்டு போட்டது. இன்றைய உருசியாவைச் சப்பான் ஆதரிப்பதில் உருசியா சப்பானின் தலைமேல் போட இருக்கும் குண்டு அதைவிடப் பெரிதாகும். சப்பான், மாணவரும், பிறரும் உருசியா விளம்பரத்திற்கு மயங்கி, அதைப் பெரிதென்றும் வல்லமை பொருந்தியதென்றும் நினைக் கின்றார்கள். அதுதான் இல்லை. உருசியா என்னிடம் வலிவுள்ள போர்க்கருவிகள் உள்ளன என்று கூறுவது மெய்யாக இருக்கலாம். ஆயினும் அவை அமரிக்காவைவிட வலிவுடையன அல்ல. பெருந் தொகையுடை யனவும் அல்ல. தற்காப்பு முறையில் சிறந்தது உருசியா. சென்று தாக்கும் ஆற்றல் உருசியாவுக்கு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. தன் முன்னேற்றத்தையும், உலகின் முன்னேற்றத்தையும் எண்ணும் ஒரு நாடு இந்நாள் உருசியைத் துணை கொள்ளக் கூடாது. அமரிக்காவைத் துணைக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் விழுப்பம் தருவது. அஃது வன்மைமிக்கது. ஒழுக்கமில்லாத நாடு இழுக்கம் அடைவது உறுதி. அமரிக்கா ஒழுக்கமுடையது; அந்த நாட்டின் ஆட்சித் தலைவன் ஒரு சர்வாதிகாரி அல்லன். மக்கள்பால் அன்பு உடையவன். உருசியத் தலைவன் அவ்வாறு அல்ல! நேற்றிருந்தான் ஒரு தலைவன். அவன் இன்று தலை நெரித்துக் கொல்லப்பட்டான் என்ற கதை மிக உண்டு உருசியாவில்! நாள்தோறும் உண்டு உருசியாவில். அமரிக்காவின் இன்றைய நோக்கம் மிகச் சிறந்தது. விழுந்துள்ள பிற நாடுகளை எழுந்து நடக்க உதவுவது. உருசியா அப்படியல்ல. ஏமாந்த நாட்டை அறத்தின் எதிரியாக்குவது. உருசிய நாடு இவ்வுலகில் செய்துள்ள அரிய செயல் ஒன்றுதான். அதுதான் உருசியா எல்லாவற்றிலும் சிறந்துள்ளது என்று நம்பவைத்தது. அந்த நாட்டில் ஏழ்மையென்பதே இல்லை. எல்லாரும் அங்கே பணக்காரர். சோறில்லை என்று அழும் ஆள் ஒருவனும் அங்கு இல்லை. இப்படி அமெரிக்கா சொல்லுமானால் நம்ப முடியும். உருசியா இப்படிச் சொல்லித் திரிவது ஏன் எனில் உலகில் ஏமாந்தவர் அதிகம் என்பது கருதி. நாசிசம் பஞ்சத்தை உண்டாக்கிவிடும் என்பதை நாம் உருசியாவின் வாயால் எத்தனை முறையோ கேட்டிருக்கிறோம். இன்று இத்தாலி மக்கள் நாடோறும் நுகர்ந்து வரும் வாழ்க்கை வழியில் நூறில் ஒரு பங்கைக் கூட உருசியாவில் காணமுடியாது. நாம் கூறும் இது, புதுமை என்று தோன்றலாம். ஆயினும் உண்மையே. உலகின் ஒழுக்கத்தை உலகின் நலத்தை விரும்புவோர் ஒழுக்கமில்லாத காட்டுமிராண்டித் தனத்திற்குச் சென்று கொண்டிருக் கின்ற உருசியாவையும், சீனாவையும் ஒன்று சேர்த்து வாலறுக்க வேண்டும். இதற்கு அமரிக்காவையும் இங்கிலாந்தையும் பிரான்சை யும் ஆதரிப்பதில் குற்றமொன்றும் நேர்ந்துவிடாது. உலக நலத்திற்கு நல்லது. உலக முன்னேற்றத்திற்கு நல்லது. - குயில், கிழமை இதழ், 28.6.1960, ப.2, 3 18. பொன்னும் தங்கமும் ஆராய்ச்சி பொன்: பொல்லல் - பொலிதல், அழகடைதல். இதன் வேர்ச் சொல் பொல் என்பது. இது எதிர்மறை. ஆ பெற்று பொல்லா என்று எதிர் மறைப் பெயரெச்சமாகி வரும். பொல்லாச் சிறகு என்பது அழகில்லாத சிறகு எனப் பொருள்படுவது காண்க. இதனால் பொல் என்பதற்குப் பொலிவு, அழகு என்பதே பொருளாம் என்று உணர்க. பொல் என்பதன் ஈறு திரிந்து பொன் ஆயிற்று. கல்-கன் எனவும், நல்-நன் எனவும் ஆனாற்போல. எனவே பொன் காரணப் பெயர். பொலிவு, அழகு என்பன அதன் பொருள்கள். பொலன் என்பது பொன்னுக்குப் பெயர். இதுவும் பொல் என்பதன் அடியாய்ப் பிறந்தது காண்க. பொன் என்பது பொலி வுடையது; அழகுடையது என்று சொல்லும்போது அது மாசில்லாதது; ஒளியுடையது என்பனவும் பெறப்படும். பொன், ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என நால்வகைப்படும் என்று நூல்கள் நுவலும். இவ்வாறு வழக்கில் இல்லை. சாம்பூநதம் உயர்ந்ததென்று அந்த நூல் அறிவிக்கும். உலகின் நடுவில் சம்பு (நாவல் மரம்) இருப்பதாகவும், அதனால் அது சம்புத்தீவு (நாவலந்தீவு) எனப் பெயர் பெற்றதாகவும், அந்த நாவலின் சாறு ஒழுகிப் பெருகும் இடத்தில் கிடைப்பதுதான் சாம்பூ நதம் என்றும் பொன் என்பதாகவும் அந்நூல் விரித்துரைக்கும். இவை வழக்கில் இல்லை யாதலால் இவை பற்றிய ஆராய்ச்சியும் தேவையில்லை. பொன் மண்ணில் கிடைப்பது. பொலிவுடையது. அழகுடையது, ஒளியுடையது, மாசில்லாதது என்பவை மட்டும் பொன்னுக்குச் சிறப்பாக அமைந்தவை என எண்ணிவிட வேண்டாம். பொன், வெள்ளி, இரும்பு முதலியவைகளைவிட எடையுள்ளது; நயப் புடையது. பொன், பொலிவு முதலியவற்றையும் எடையையும் நயப்பை யும் உடையதாதலின் அது மதிப்புடையது என்பது மறத்தல் கூடாது. பொன்னின் பயனை இந்நிலம் அறியும். அதன் விலை உலகில் உள்ள பொன்னின் அளவைக் கொண்டு மதிப்பிடப்படும். பொருள்களில் நெல் முதலிய பயன்படுபொருள்கள் எல்லாம் காலத்தால் நிலைகெடும்; சீரழியும். ஆனால் பொன் சீர்கேடு, நிலைகேடு அடைவதே இல்லை. ஓர் அரசு எதைக்கொண்டு மதிப்புப் பெறுகின்றது. எனின், அந்த அரசில் இருக்கும் பொன்னின் அளவைக் கொண்டேயாகும். ஓர் அரசில், ஒரு நாட்டில் ஒரு கோடி மூட்டை நெல் இருக்கலாம். அது கொண்டு அந்நாட்டை மதிப்பிடுவதில்லை. பொன் இருப்பைப் கொண்டுதான். மன்னரும் பிறமக்களும் பொன்னகை பூண்டு தம் அழகுக்கு அழகு செய்வார். பொன்னைவிட மேலானவை வயிரம், முத்து, பவழம், மாணிக்கம், பச்சைவைடூரியம், கோமேதகம் என்று கூறுவார். இதை ஒத்துக்கொள்ள முடியாது. இவையும் தன் பெருமைக்கு வேலியாகப் பொன்னையே எதிர்பார்த்துக் கிடக்கும். ஆசைகொள்ளும் அத்தனை பொருளையும் மூன்றாகக் கூறுவர். அவை மூவாசை. அவையாவன: பொன்னாசை, மண் ணாசை, பெண்ணாசை. ஆசைக்குரிய மூன்றுவகைப் பொருள் களுக்கும் முதலாக வைக்கப்படுவது பொன்னாசை. - குயில், கிழமை இதழ், 26.7.1960, ப.6, 7 பொன்னும் தங்கமும் ... ஆசையை இழுக்கும் மண்ணினும் பெண்ணினும் பொன்னே சிறந்தது என்பதும் இதனால் அறியவேண்டும். இது பொய்யன்று. ஏன்? மண் ஒரு நாட்டிற்கு ஒரு மதிப்பு. பெண்ணும் அப்படியே. பொன் அப்படியல்ல. எங்கும் எப்போதும் பெருமதிப்பு. மண்ணின் நிலை மாறும்! எடுத்துக்காட்டாக விளைநிலம் ஒன்று; விளையாத நிலம் ஒன்று. மணல் மேடு ஒன்று, படுகுழி ஒன்று, பொன் கொழிக்கும் நிலம் ஒன்று. எரிமலை நாடு ஒன்று. பெண் பற்றியும் இவ்வாறு எண்ணிப்பார்க்க. அழகிய பெண் ஆதலின் மதிப்புடையாள். ஆனால் நோயில் வீழ்ந்துவிட்டால்? ஒழுக்கம் கெட்டால்? பொன்னின் நிலையான மதிப்பு மாறுவதில்லை. அழகு மாறுவதில்லை. பொலிவு மாறுவதில்லை. ஒளி மாறுவதில்லை. விலை மாறுவதில்லை. எடை மாறுவதில்லை. நயப்பு மாறுவ தில்லை. தில்லைக் கோயில் மதில் அதனுள்ளிருக்கும் சிவபெரு மானால் மதிப்படைவதில்லை. அம்மதிலின்மேல் திகழும் பொற்குமிழ்களால் மதிப்படையும். உலகை ஆளும் உருவப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் அழகு தந்து, மதிப்புத் தந்து, ஒளி தந்து ஆள்வது பொன்னே ஆளும். பொன்னுடையரேனும் புகழுடைய ரேனும் மற் றென்னுடைய ரேனும் இலராவர் - இன்அடிசில் புக்களையும் தாமரைக்கை பூநாறும் செய்யவாய் மக்களைஇங் கில்லா தவர். என்ற செய்யுளை ஆய்க. இதில் புகழ் முதலிய எவற்றிற்கும் முதலில் பொன் கூறப்பட்டது ஒன்று. பொன் முதலிய பொருள்களை ஒருவர் உடையவராய் இருந்தாலும் அவர் மக்கட்பேறு இல்லாதவராயின் பொன் முதலியவைகள் இல்லாதவர்க்கு நிகர் என்பது இச்செய்யுட் கருத்து. மக்கட்பேற்றை உயர்வுபடுத்திக்காட்டப் பொன்னின் பெயரையே சொல்லிக் காட்ட வேண்டியதாயிற்று இரண்டு, மூன்றாவதாக: மக்களைப் பெறுவது பொன்னைப் பெறுவதைவிட மேல் என்ற இச்செய்யுள் கூறுவது புனைந்துரையே. மக்கள்மேல் வெறுப்புறும் தந்தையரும் உள்ளார். பொன்னை வெறுப்பார் உளரோ. மக்களைப் பெற்றவரைக்கும் போதும் என்பவர், பொன்னைப் பெற்றவரைக்கும் போதும் என்பதுண்டா? மக்களைப் பெற்ற வரும் அம்மக்களைப் பொன் அணிவிப்பதன் மூலமே மகிழ்ச்சியடைகின்றனர். குண்டுமணிப் பொன்னுக்கும் வழியில்லை. ஆதலால் எனக்கேன் பிள்ளை என்பாரும் உள்ளார். நாட்டின் நிலை கண்டு மக்கட்பேற்றைக் கட்டுப்படுத்தச் சட்டமும் செய்தனர். அவர்கள் பொன்னின் அளவைக் கட்டுப் படுத்தத் தொடங்கினால் வேடிக்கைதான். நாட்டை ஆளுகின்றவர் அரசர் என்றும், மக்களின் படித்திருவாளர் என்றும் சொல்லுவதில் உண்மை யிருப்பதாகக் கூற முடியாது. அந்தந்த நாட்டையும் ஆளுவது அந்தந்த நாட்டில் அமைந்த பொன்னே! என்னே, பொன்னின் பெருமை! இனிப் பொன்னை வைத்துத் தங்கத்தை ஆராய வேண்டும். தங்கம் தங்கம் என்ற சொல், தங்கல் - தங்குதல், இருப்பு என்ற பொருளைத் தரும் ஒரு தொழிற்பெயர். அது தங்கம் என்ற பொருளுக்கு ஆகும்போது, தொழிலாகு பெயர் ஆகும். தங்கு, முதனிலை; அம், தொழிற்பெயர் இறுதிநிலை. தங்கம் என்ற சொல்லால் குறிக்கப்படும் பொருள் பொன்னே யாயினும், பொன் என்ற சொல்லை வைக்கும் இடத்திலெல்லாம் தங்கம் என்ற சொல்லை வைத்து எழுதுவதும் பேசுவதும் சிறப்புடைத்தன்று. தங்கம் என்ற சொல், இடம் நோக்கிக் கையாளப்பட வேண்டிய ஓர் இன்றியமையாத சொல்லேயாம். ஈடு காட்டும் பொருட்டுத் தங்க வைத்துள்ள பொன்னைத் தங்கம் என்று சொல்லுதல் வேண்டும். ஓர் அரசு நாணயத் தாளை மக்களிடைச் செலாவணிக்கு விட்டிருக்கிறது. நூறாயிரங்கோடி ரூபாய்க்குப் பதிலாக நோட்டை வெளியிட்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அங்ஙன மாயின், நூறாயிரம் ரூபாய் பெறக்கூடிய பொருளுக்கு ஈடாக அவ்வரசு பொருளறையில் பொன்னை வைத்திருப்பது இயற்கை. அங்ஙனம் இருப்பாக அல்லது தங்குதலாகவுள்ள அப் பொன்னைப் பொன் என்பதைக் காட்டினும், தங்கம் என்று கூறலே சாலச் சிறப்புடைத்து. பொன்-பொலிவுடையது என்று முன்னம் குறிப்பிடப் பெற்றுள்ளது. இப்போது தங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஈடாகத் தங்க வைக்கப்படுவதாகும். எனவே முன்னம் கூறிய பொன்னுக்கும், இப்போது விளக்கமுறும் தங்கத்திற்கும் பொருள் வேறுபாடு காண்க. -குயில், கிழமையிதழ், 2.8.1960, ப. 5 19. புதுவைச்செய்தி! பாலசுப்பிரமணியன் ப செர்வீசு என ஒரு நிறுவனம் புதுவைப் பெருமாள் கோயில் தெருவையே தனக்குரிய பட்டரையாக்கிக் கொண்டது. பட்டரையில் டமார் டமார் என்ற பழுது பார்க்கும் இடி முழக்கம் நாள்தோறும் இரவு எட்டு மணிமுதல் விடிய ஐந்து மணி வரைக்கும் நிற்பதேயில்லை. பல பஸுகள் ஒன்றின்பின் ஒன்றாகப் பெருமாள் கோயில் தெரு (காந்தி ரோடுக்கும், பாரதி வீதிக்கும் நடுவில்) வந்து நிற்கும். அவை ஒவ்வொன்றையும் தயாராகக் காத்திருக்கும் ஆட்கள் பழுது பார்க்கத் தொடங்கி விடுவார்கள். அங்குள்ள வீட்டுக்காரர்கள் தூங்க முடியாது. தூங்கியவர்கள் திடீர் திடீர் என்று எழுந்துவிடவேண்டும். இந்த இழவில் அந்தத் தெருவில் குழந்தைகள் வாழ்வது எப்படி? பல குழந்தைகள் இறந்துபோனதும் உண்டு. பாலசுப்பிரமணியம் ப நிலையத்தை நேரில் வந்து அதிகாரிகள் பார்க்கவேண்டும். எப்போதாவது அந்தப் பஸுகள் அதற்கென்று காட்டப்படும் காடி கானாவின் உள்ளே அடி வைத்திருக்குமா? காடி கானா நிறையச் சம்மட்டிகளை பணை முதலிய கருவிகள் மட்டுமே இடம்பெற முடியும். தெருக் குறட்டிலேயே தண்ணீர்க் குழாய் அமைந்திருக்கும். அதில் பொருத்தப்பட்ட ரப்பர் குழாய்கள் உ உர் என்று சீறாத இரவே இல்லை. காலை ஆறு மணிக்குத் தெருவின் நீரோடையைப் பார்த்தால் மணல்மேடு காட்சியளிக்கும். ஒவ்வோர் இரவிலும் அத்தனை பகளையும் பழுது பார்க்கவேண்டும் என்பதோடு அவைகளைத் தனித்தனியே கழுவியாக வேண்டும். முனிசிபாலிட்டியைச் சேர்ந்த தெரு முனிசிப்பாலிட்டியான தெருக் கூட்டும் ஆட்கள் மிக அக்கரையோடு காலையில் வந்து; கழுவியதால் ஏற்பட்ட மணலையும், சேற்றையும் அள்ளி விடு கின்றார்கள். அதற்காகவே முனிசிப்பாலிட்டி ஆளை அனுப்புகிறதா? நாடோறும் அந்தத் தெருவில், கழுவுவதால் ஏற்படும் கீலகம் திருத்தப் படுகிறது. தெரு முழுதும் - வெளியில் பஸுகள் ஏன் நிறுத்தப்பட வேண்டும்? இரவு முழுதும் அந்தத் தெரு ஏன் கொல்லர் பட்டரையாகி பலர்க்கும் பெருந்தொல்லை கொடுக்கவேண்டும்? இதற்கெல்லாம் ஒரே பதில்தான் காதில் விழுகிறது. பஸுகளுக்கு உடையவர் வேங்கட சுப்பாரெட்டியாருக்கு வேண்டியவராம். கொங்கம்பட்டு ரெட்டியார் வேங்கட சுப்பா ரெட்டியாருக்கு வேண்டியவராயிருப்பது இப்படித் தெரு மக்களுக்குத் தொல்லை கொடுக்கத்தானா? நல்ல வேடிக்கை! பன்முறை நேரில் அந்த பஸின் சொந்தக்காரகட்கு இதை எடுத்துக் கூறியாய்விட்டது. ஒவ்வொரு தடவையும் அந்தச் சொந்தக்காரர் தமக்கு சாய்காலைக் கூறி மக்களை நடுங்க வைக்கிறார். அலார் நாளைக்கு இராது நாளைக்கு இராது என்று நானூறு நாட்கள் கழிந்தன. பெரிய கடைப் போலீசுத் தலைவர் புதியவர்; தம் அலுவலை மிக நன்றாய்ப் பார்த்து வரும் நல்லவர் என்று கேள்வி. அவர் சூதாடும் தொழில் உடைய பல கூட்டத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். குச்சுக்காரி விடுதிகளைக் கண்டுபிடித்துத் தண்டனைபெறச் செய்துள்ளார் என்று பேசிப் புகழ்ந்து பேசாத நேரமில்லை. பெரியகடைப் போலீசுத் தலைவர் கதிர்வேல் அவர்கட்கும், முனிசிப்பல் தலைவர் திரு. காசீம் அவர்கட்கும், நாம் விண்ணப்பித்துக் கொள்வது: பெருமாள் கோயில் தெருவில் பாலசுப்பிரமணியம் ப ஒன்றுகூட வெளியில் நிற்கக்கூடாது, இரவிலும் சரி, பகலிலும் சரி! ப பழுது பார்ப்பதென்பதும் இடி முழக்கமும் அடக்கப்படுதல் வேண்டும். பகலிலும் சரி, இரவிலும் சரி. தெருவில் பஸுகளை நிறுத்திக் கழுவுதல் கூடாது. அதனால் தெருவில் சேறும் பள்ளமும் படுகுழியும் ஏற்படும்படி விடக் கூடாது. கண்காணிக்க வேண்டுகிறோம். - பெருமாள்கோயில் தெருவான் - குயில், 2.8.1960, ப. 6, 7 அ. புதுவைச்செய்தி! முதலியார் பேட்டை மேரி முதலியார்பேட்டை மேரி கணக்கில் ஊழல் இருப்பதாகப் பேசிக்கொள்வதில் உண்மை இருக்கிறதா என்பதை அதிகாரிகள் முற்கூட்டியே கவனித்து ஆவன செய்யவேண்டும். மேரி வைத்தியலிங்கம் கம்யூனிட் என்பதற்காக அஞ்சிவிடக்கூடாது. தெய்வசிகாமணி மராமத்துத் துறையில் வேலை பார்த்து வரும் தெய்வசிகா மணி என்பவர், கடை வைக்க பங்கு ஏற்படுத்த உத்தரவு கேட்பவர் களிடம் அருவருக்கத்தக்க முறையிலும், மக்கள் தலை கிளப்புதற்கு முட்டக்கட்டை போடும் முறையிலும், ஏழை வணிகர்கட்குத் தொல்லை கொடுக்கும் முறையிலும் நடந்துகொள்வதாகத் தெரிகிறது. அரசினர் உடனே கவனிக்கவேண்டும். அவரிடம் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை? அவை வந்து எத்தனை ஆண்டுகள் ஆயின? அவை பைசலாக இன்னும் எத்தனை ஊழிகள் ஆகும்? செல்வராஜ் ஆபத்திரி செத்தவரை உயிர்ப்பிக்கும் செல்வராஜ் ஆபத்திரி என்று பேசிக் கொள்ளும் T.B. மருத்துவக் கட்டிடம் மிகச் சிறிது. அத் துறைக் கென்றே கருவடிக்குப்பத்தில் வசதியாகப் பெரிதாகக் கட்டிடம் கட்டப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அதை நடைமுறையில் விரைவில் வைத்தால் மிக நன்மையாயிருக்கும். தனி ஆராய்ச்சியுடைய மக்களால் போற்றப் படுகின்ற டாக்டர் செல்வராஜ் இருந்தும் அவரை இந்த அரசு விரைவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? விம்ரோ கம்பெனி சாராயம் காய்ச்சும் அரசினர் நிறுவனத்திலிருந்து மேனாட்டு மதுவகைகள் உண்டாக்கும்படி அரசு ஏறத்தாழ மூன்றாண்டுகட்கு முன்பு கட்டளை இட்டது. அந்த நிறுவனத் தாரும் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் பெருஞ்செலவில் முடித்து வைத்திருந்தார்கள். ஆனால் ஒருநாள் அந்த ஏற்பாடுவேண்டாம் என்று அரசின் பொறுப்புள்ள அதிகாரியிடமிருந்து மறுப்புக் கிடைத்த தாம். இதுபற்றி அரசு விம்ரோ சாராய வாணிகரையும் நம் சேஷன் அவர்களையும், அப்போது கோந்தர்பிசியோம் தலைவராயிருந்தவரையும் விசாரிக்க வேண்டும். நயமான விலையில் அரசுக்கு ஆதாயமான வகையில் மேல்நாட்டு மதுவகை இங்கு ஆக்கப்பட்டால் எந்தச் சாராயக் கம்பெனிக்கு வாணிகம் குறைந்துவிடும்? அப்படிக் குறைந்தால் அரசு அதிகாரிகட்கு என்ன கெட்டுப் போகும்? கோந்திரி புசியோம் என்பது வரி வசூல் செய்யும் ஒரு பெருந் துறை. அதில் பிரெஞ்சுக்காரன் நாளில் பணக் கொள்ளை யடித்தவர்கள் பலரும் அந்தத் துறையைத் தான் பயன்படுத்திக் கொண்டார்கள். அரசு கவனம் செலுத்த வேண்டிய துறை அது. அங்கு இன்று அலுவல் பார்ப்பவர்கள் நாணயமுள்ளவர்கள் தானா? என்பதை அறிய அடிக்கடி அவர்களின் பழைய தாள்கள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் அடிக்கடி அவர்கள் கைகள் சோதிக்கப் படவேண்டும். சேஷன் ஷேப் தே கபினே என்ற இடத்தில் இப்போது இருந்து வரும் சேஷன் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து பல்லாண்டுகள் ஆகி விட்டன. ஆனால் அரசு சேஷன் அந்தப் பொறுப்புள்ள அலுவலில் பல்லாண்டுகள் இருக்கும்படி ஏற்பாடு பண்ணிவிட்டது. காரணம் அவர் வேலையில் கெட்டிக்காரராம். எந்த வேலையில்? மருத்துவ விடுதி அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்தைந்நூறு அரிவாள் என்பது ஒரு பழமொழி. நம் அரசு தலைமை மருத்துவ மனையில் ஒன்றுக்கு நூறு வீதம் அலுவல்காரர்கள் வரவழைத்துச் சேர்க்கப் பட்டிருக்கின்றார்கள். தலைமையிடம் ஒவ்வொன்றுக்கும் மேற் பார்வைக்காக ஒவ்வொரு மகா நிபுணரை ஏற்பாடு செய்திருக் கிறார்கள். திருவாரூர்த் தேரிழுக்கும் ஆட்களை எல்லாம் விடுதியில் சேர்த்துவிட்டார்களோ என்னமோ? அது பற்றி யாரும் அதிகமாகக் கவலை கொள்ளவில்லை. ஆனால் இவ்வளவு ஆட்கள் இருந்தும் நோய் என்று வரும் ஏழை மக்கள் நிற்க இடமுண்டா? ஒரு டாக்டருக்கு ஒரு நாளைக்கு 500 ஏழை நோயாளிகள்! அதிகாலையில் வந்தவர்கள் இருட்டிய பிறகு வீடு திரும்ப முடிகிறது. அந்தக் காட்சியை மேலதிகாரிகள் பார்த்தார்களோ பார்த்ததில்லையோ நாம் கோருவதெல்லாம் ஐ கமிஷனர், சீப் செக்ரட்டேரி போன்றவர்கள் ஒரு முறை காலையில் அந்தக் கோரக் காட்சியைப் பார்க்க வேண்டும் என்பதுதான். கதிர்வேல் தளவாய் போலிசு கொம்மிசனராயிருந்த சின்னசாமி ஐயர் காரைக்கால் டி எ பியாக அனுப்பப்பட்டார். இதுகேட்டு நாம் திடுக்கிட்டோம். இந்த அரசு கம்யூனிடுகளுக்கு இவ்வளவு சலுகை காட்டுவானேன்? அவர், கம்யூனிடுகளின் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அஞ்சாமல் செய்து வந்தார். கம்யூனிடுகள் சின்னசாமி ஐயரை அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் என்று ஆர்ப்பாட்டம் செய்து வந்தார்கள். அது வெறும் ஆர்ப் பாட்டம் அல்ல என்று முடிந்தது. அவர்கள் எண்ணியதை முடித்து விட்டார்கள்! அப்போதே நமக்கு இந்த அரசினர் மேல் பெரிய ஐயப்பாடு இருந்தது. இந்த அரசு கம்யூனிடுகளுக்குச் சலுகை கொடுப்பதை வெளிப்படையாகவே செய்து வந்தது. இப்போதும் இந்த அரசு, கம்யூன்டுகளுக்குப் பரிந்து கொண்டு தன் தலையை நீதித் துறையில் நுழைத்துக் கொள்ளு கிறதென்று நினைக்க வேண்டியிருக்கின்றது. இதுவகையில் மக்களுக்கு ஏற்படும் மனக்குழப்பம் புதுவை எல்லையையும் தாண்டிப் போகக் கூடும். நிற்க. சின்னசாமி ஐயரைக் காரைக்காலுக்குப் போக வைத்த துடன், அவருடைய இடத்துக்குத் திரு கதிர்வேல் தளவாய் அவர்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளப் போகின்றார்களாம். கதிர்வேல் புதுவை ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின் மக்கள் அடைந்த பேறு: கடைத்தெரு கலகம் அற்று இருக்கிறது. இது ஐ.ஜி அவர்கட்குப் பிடிக்கவில்லையா? நல்ல கதிர்வேல் தளவாய் அவர்களை அவர் இப்போதிருக்கும் கடைத்தெரு போலீசுலேயே வைக்க வேண்டும். அவரைக் கடைத் தெருவிலேயே வைத்து அலுவல் உயர்வு, சம்பள உயர்வு செய்து விடலாம்; கதிர்வேல் கோத்துக்குத்தான் போக வேண்டும் என்று ஆசைப்பட்டாலும். - குயில், 16.8.1960 ஆ. புதுவைச்செய்தி! கப்பல் தலைவர்க்கு வரவேற்பு தில்லி I.N.S கப்பல் தலைவர், கப்பற்படை வீரர்கட்குப் புதுவை நகர மாளிகையில் 18.8.60 மாலை 5.15 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திரு, மேயர் காசீம் அவர்கள் அழைக்கப் பட்டிருந்த ஊர்ப் பெரிய மனிதர்கள், பெரிய அலுவலினர் ஆகியோரை அன்புடன் வரவேற்றுச் சிற்றுண்டி அளித்த முறை மிக மேன்மையானதாகும். ஐ கமிஷனரும் பிறரும் வரவேற்பில் கலந்து கொண்டு சிறப்புறுத்தினமை பாராட்டத்தக்கதாகும். நகர மாளிகை ஆடவர் மகளிர் பெருங்கூட்டத்தால் அழகாகத் திகழ்ந்தது. இந்த நல்லநேரத்தில், திரு ஐ.ஜி அவர்கள் கம்யூனிடு தலைவர் சுப்பையாவுடன் நீண்ட நேரம் தனித்துப் பேசியிருந்தது பொருள் உள்ள வேடிக்கை. ஒரு வழிப் போக்குவரவு காந்தி தெருவில் எந்த வண்டிகளும், வடகனினின்று தெற்கு முகமாகப் போவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. இது நடை முறைக்கு வந்து சிலநாட்கள் ஆயின. ஏதாகிலும் பயன் உண்டா? நன்மையை விடத் தீமையே மிகுதி என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாத் தெருக்களிலும் இபோது வண்டிகளின் போக்குவரவு மிகுதியாகிவிட்டது. தெருக்களில் பொதுவாகக் கார்கள் விரைந்து செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டுமே என்ற கவலை போலீசுக்கு என்றுமே இருந்ததில்லை. ஒருவழிப் போக்குவரவுக்கு இப்போது என்ன தேவை ஏற்பட்டதோ தெரியவில்லை. ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு போலீகாரரை நிறுத்த வேண்டியதை விட இந்த ஒரு வழிப் போக்குவரவு ஒரு சிறிதும் தேவையற்றதாகும். இந்தத் தடவை நம் போலீசு ஐ.ஜி. அவர்களும் சேர்ந்துதான் இன்னின்னார் இன்னின்ன பாதையில் ப விடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் அவரே தான் காரணம்: இன்று பகாரர் அனைவரும் தாம் வாழும் தெருவையே ப நிறுத்தும் இடமாக ஆக்கிக் கொண்டு தெருவினர்க்குத் தொல்லை விளைவிப்பதற்கு! எந்த பகாரன் தனக்கு உள்ள பகளை வண்டி விடுதியில் அடக்கி வைத்திருக்கிறான். இதற்கு மாறாக ஐ.ஜி. மிக முயன்று செய்து முடித்துள்ள வேலை, தெருவை ப டாண்டாக - பட்டரையாகக் கொண்டு நடத்தும் ப காரர்கட்கு இன்னும் பகள் கொடுத்திருக்கின்றார். ஊர் சிரிக்கின்றது. அந்தோணிசாமி வாத்தியார் அந்தோணிசாமி வாத்தியார் அலுவல் காலம் முடிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவரிடம் கல்வித்துறைத் தலைவர் சென்று, சேஷன் ஓய்வுபெற்றும் அலுவலில் இல்லையா தெத்தா ஓய்வுபெற்றும் அலுவலில் இல்லையா! இன்னும் எத்தனை நீதிபதிகள், பெரிய அலுவல்காரர்கள் ஓய்வு பெற்றும் அலுவலில் இல்லையா? அது போல் உமக்கும் ஓர் இடத்தை உண்டாக்கி வேலை தந்தால் நீர் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறுவதாகக் கேள்வி. இது மெய்யானால் கல்வித்துறை அதிகாரியின் செயல் போற்றத்தக்கதே. ஒரு செய்தி மட்டும் நம் ஐ கமிஷனர் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அருள் காட்ட வேண்டும். கிருதவர்கட்கும், பார்ப்பனர்கட்கும் சலுகை தர ஆட்கள் இருக்கிறார்கள். இது பாராட்ட வேண்டிய செய்தி. ஆனால் கிருதுவர் பார்ப்பனர் அல்லாதவர்களின் நிலை இரங்கத்தக்க நிலையில் இருந்து வருகின்றது. நம் புதுவை மாநில அரசாங்க அலுவல் துறையில் விரைவில் கீழ்க்காணும் மாற்றங்கள் நடைபெறப் போவதாகக் கேள்வியுறு கிறோம். அவை: 1. தற்போது மாயே நிர்வாகத்துறை இயக்குநர் (Administrator) திரு. பர்கிடாக்கி புதுவை பொது நிர்வாகத் துறை செயலராகப் பணியாற்றுவாராம். 2. ஏனம் நிர்வாகத் துறை இயக்குநர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் புதுவை வருவாய்த் துறைக் கண்காணிப்பாள ராக (Inspector) நியமனம் பெறுவாராம். 3. காரை நீதிபதி திரு. இராமலிங்கம் அவர்கள் ஏனம் நிர்வாகத் துறைத் தலைவராகச் செல்வாராம். 4. புதுவைப் பொது நிர்வாகத் துறைத் துணைச் செயலாளர் திரு. இராமு மாயே நிர்வாகத் துறைத் தலைவராகப் பணியாற்றவிருக்கிறாராம். 5. புதுவை வருவாய்த் துறைக் கண்காணிப்பாளர் திரு. பச்சையப்பன் அவர்கள் காரை முதல் நீதிமன்றத்தின் நீதிபதியாக மாற்றலாகிச் செல்லவிருக்கிறாராம் தற்போது அங்கும் பணியாற்றி வரும். திரு. ஆதி மூலம் அவர்கள் ஏறக்குறைய 6 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பதோடு நீதிபதிகள் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தும் அவரை காரை முதல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யாது விடுத்தது வருந்தத் தக்கதொன்றே யாகும். - குயில், 23.8.1960 இ. புதுவைச்செய்தி! லாரிகள் லாரி வைத்துக் கொண்டு வாடகைக்கு ஒட்டுகின்றவர்கள் அனைவரும், அந்த லாரிகளைத் தெருக்களில் நிறுத்தித் தெருவை அடைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தே அந்த லாரியை வாங்கினார்கள் என்று தெரிகின்றது. போலீசு இரவில் தெருக்களை ஆராய்க. தெருக்களில் நிறுத்தப்படும் அந்த லாரிகளை இனி மேலாவது அடக்கி வைக்க அவர்கட்கு வண்டி அறைகள் உண்டா என்று பார்க்க. தடார் தடார் 24.8.60 அதிகாலை 4.30 மணிக்குப் பெருமாள் கோயில் தெரு பாலசுப்பிரமணியம் செர்வீசு ப பழுதுபார்க்கப்பட்டது. தடார் தடார் என்ற ஓசை மக்களின் தூக்கத்தைக் கிளப்பிற்று. நாலரை மணிக்குப் பழுது பார்ப்பதா? பிரிவு விழா நிதித்துறைத் துணைத்தலைவர் எ.சுப்பிரமணியம் புதுவையி னின்று மாற்றப்பட்டார். காரணம் அவர் நடுவு நிலைக் கொள்கையர். என்ன வந்தாலும் அறநெறி பிசகாதவர். அவருக்குப் பிரிவு விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் சேஷன்கள் இங்கு இன்னும் பலகாலம் இருக்க வேண்டியதற்குச் சூழ்ச்சி விழாக்கள் நடைபெறுகின்றன ஒரு பக்கம். எல். நாதன் குபேர் மக்களால் வெறுக்கப்படுகின்றவர் என்று கருதப்பட்டது. வேங்கடசுப்பா ரெட்டியார், மக்களால் விரும்பப்படுகின்றவர் என்று கருதப்பட்டது. இந்தச் சூழ்நிலை திரு.எல்.நாதன் அவர்களைக் காங்கிர தலைவராக்கியது. அந்த நல்லவர் தலைவரானதைக் குபேர் ஒத்துக் கொள்ளுகிறார்; வேங்கடசுப்பா ரெட்டியார் எதிர்க்கிறார். இது ஏன்? இந்த அரசு தற்காலிகம் என்று செர்வீ பார்க்கும் அரசின் அலுவல் காரரின் தொகை மிகப் பெரிது. அவர்கள் பிரஞ்சுக்காரர் நாளில் வேலைக்கு அமர்ந்தவர்கள். அவர்களையெல்லாம் குறைந்த சம்பளமுள்ள யூனியன் சட்டத்தின் கீழ் நிலையான செர்வீகார ராக்குவோம் என்று கூறி யூனியன் அரசு எதிர்க்கின்றது. அதனால் அவர்களின் ஒத்துழைப்பை யூனியன் அரசு இழந்துவிட அஞ்ச வில்லை. ஏனெனில் பென்ஷனில் போக வேண்டிய அதிகாரிகளை யெல்லாம் போகச் சொல்லாமல் அவர்களை எல்லாம் தன் கையை எதிர்பார்க்கும்படி செய்வதன் மூலமாகத் தன் இறுமாப்பு ஆட்சியை வலுப்படுத்திக் கொள்ளுகின்றதல்லவா? என்றாலும் அரசின் போக்குச் சரியானதென்று சொல்வதற்கில்லை. அலுவல் துறை ஒவ்வொன்றிலும் பிரஞ்சுக்காரர் நாளில் எத்தனை பேர் வேலை பார்த்தார்கள்? யூனியன் ஆட்சி வந்த பிறகு எத்தனை பேர்? முன்பு ஒருவர் என்றால் இப்போது ஐம்பது பேர். இதனால் தன் இறுமாப்பு ஆட்சிக்கு வலிவு ஏற்படும் என்று அரசு கருதுகின்றது. இதனாலெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைக் கொண்டு பொது மக்களை அடக்கி ஆளமுடியும் என்று நினைக்கிறது. அரசின் போக்குச் சரியானதென்று சொல்லிவிட முடியாது. - குயில், 30.8.1960 ஈ. புதுவைச்செய்தி! வேணு புதுவையில்தான் (டேஷன் மாடர்) புதுச்சேரிப் புகைவண்டி நிலையத்தின் தலைவர் நீண்ட காலமாகப் புதுவையிலேயே இருந்து வருகின்றார். என்றாலும் அவர் ஒழுக்க ஒழுக்கமுடையவரா? புகைவண்டி நிலையப் பெரிய அதிகாரிகள் கண்டறியவேண்டும். இன்னொன்று: அவரைச் சரிப்படுத்திக்கொள்ளாத எவர்போய் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புக்கு முன்னறிவிப்புச் செய்தாலும் இடமில்லை. சரியாய் விட்டது என்கிறார். எந்தத் தேதியில் எவர் பேர் பதியப்பட்டதோ அந்த விவரத்தை அவர் வெளியில் எல்லாரும் பார்க்க ஒட்டி வைக்கும்படி அதிகாரிகள் திட்டம் செய்யவேண்டும். இல்லை அதே நேரத்தில் உண்டு ஆர்லிக் இருக்கிறதா என்று குப்பன் கேட்டான். இல்லை என்றான் கடைக்காரன். அதே நேரத்தில் மூன்று பாட்டில் ஆர்லிக்சு வாங்கிவரச் சொன்னார் S. அய்யர் என்றான் D. அய்யர். சிப்பஞ்செய்து கொடுக்கிறான் கடைக்காரன். இப்படிப் பல. இதனால் விளங்குவதென்ன? அரசினர் கடைக்காரரிடத்தில் இருக்கும் பொருள்களின் பட்டியலைக் கடையின் வெளிப்புறத்தில் காட்சியளிக்கச் செய்யவேண்டும். மின்சார விசிறி கிடைக்கவில்லை புதுவை வாணிகர்கட்கு வெளிநாட்டினின்று பொருள்களை வரவழைத்து விற்க அனுமதி அளித்துள்ளார்கள் பாராட்ட வேண்டிய செய்தி இது. ஆனால் அந்த வாணிகர் இறக்குமதி செய்யும் பொருட்களைப் புதுவை மக்கட்கு ஒரு சிறிதும் விற்பதில்லை. இறக்குமதியான பெட்டியை உடைப்பதுமில்லை. அப்படியே தூக்கி வெளிநாடுகட்கும் பம்பாய் முதலிய இடங்கட்கும் அனுப்பி விடுகின்றார்கள். மின்சார விசிறி ஒன்றுக்கு ஓராண்டாக அலைந்தும் இன்றளவும் கிடைக்கவில்லை. இறக்குமதி நிலையத்தில் இறங்கிய மின்விசிறிகளின் தொகை 5000 என்று தெரிகின்றது. அரசினர் இப்படிப்பட்டவர்களின் லைசன்சுகளை உடனே பிடுங்கவேண்டும். எத்தனை ஆயிரம் வெளிநாட்டுச் சைக்கிள்கள் வந்து இறங்குகின்றன. அவற்றில் புதுவை யரசில் வாழும் மக்களுக்கு விற்கப்பட்ட சைக்கிள் எத்தனை? வெட்கக்கேடு. இறக்குமதி லைசன்சு பறிக்கப்பட்டால் ஒரு தொல்லையுமில்லாமல் போகும், மேல்நாட்டுப் பொருளுக்கு அலைவாரின் அலைச்சல் தீரும்! தேங்காய் நாலணாவா? அரசினர் கண்காணிக்க ஒரு மாவட்டத்தின் விளை பொருள்களை மற்றொரு மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்வதில் அரசினர் கட்டுப்பாடு ஏற்படுத்தவேண்டும். பொருட்களின் விலை ஏற்றத்தைச் சமப்படுத்த இது ஒரு வழியாகும். புதுச்சேரி மாவட்டத்தில் உண்டாகும் தேங்காய்கள் அடியோடு வெளி மாவட்டத்திற்கு லாரி லாரியாகப் போய்க் கொண்டிருக்கின்றன. இதனால் புதுவையில் தேங்காய் ஒன்று நாலணா. இறக்குமதி செய்துகொள்ளும் இடத்தில் தேங்காய் ஒன்றின் விலை இரண்டரை அணா. பல பொருள்கள் இப்படி! அரசினர் கண்காணிக்க. ஒரு சாமிக்கும் அஞ்சாதவன் குருசாமிக்கா அஞ்சுவான்? 31.8.60 சென்னை முதலமைச்சர் காமராசர் அவர்கள் புதுவைக்கு ஒரு கல் அருகிலுள்ள கோட்டைக்குப்பம் என்ற ஊருக்கு வருகை தந்தார். காமராசர் வரவேற்பிலும் பொதுக்கூட்டத்திலும் எதிலும் புதுவை மக்கள் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கட்டுப்படுத்தியது குபேர் கூட்டம். அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க எண்ணினார் புதுவைத் திராவிடர் கழகத் தலைவர் நோயேல் என்பவர். அப்படி அவர் செய்யப் போவதாகத் தம் தலைவர் குருசாமியைத் தம் தலைவர் குருசாமியை அனுமதி கேட்டார். குருசாமி குபேருக்கு அடங்கி நடப்பதால் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும், ஆதலால் காமராசர் விழாவில் கலந்துகொள்ளவேண்டாம் என்று கூறினாராம். அதன்படி திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு காக்கா கூடக் காமராசர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் திராவிடர் கழகத்தினின்று ஒரு குருவிகூட அங்கு அண்டவில்லை என்று காங்கிரகாரர் கூறிக் கொள்ளுகின்றார்கள். நானும் என் நண்பர் பலரும் காமராசர் வரவேற்புக்கான முன்னேற்பாடுகளிலும் கலந்துகொண்டோம்! ஏன்? நான் ஒரு சாமிக்கும் அஞ்சாதவன்; குருசாமிக்கு அஞ்சப் போகிறேன். புதுவையில் சோடா விலை ஏற்றம் சோடா வாணிகர் ஒற்றுமைச் சங்கம் திரை மறைவில் கம்யூனுடுகள் புதுவையில் சோடா நன்றாய் இருக்கும் என்றும், அதன் விலை ஓரணாவே என்றும் பேசாத வெளியூர்க்காரர்களே இல்லை. சில நாட்களுக்கு முன் சோடாக் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒற்றுமை நிறுவனம் ஒன்றும் அமைத்தார்கள். இதில் கம்யூனிடுகளுக்கு நல்ல வேட்டை என்று கேள்வி. ஆனால் பொதுமக்களுக்குப் புட்டி ஒன்றுக்கு அரையணா இழவு! ஓரணாவுக்கு முன்பெல்லாம் கொடுத்திருந்த சோடா ஒன்றரை அணாவுக்கு விற்பதென்று முடிவு செய்தார்கள் சங்கத்தார். அப்படியே வாங்குவோரும் அழுது வருகின்றார்கள். 100க்கு 50 வீதமா விலை கூறுவது? இதையடுத்து மீன் கடைக்காரர் ஒற்றுமைச் சங்கம், கிழங்குக் கடைக்காரர் ஒற்றுமைச் சங்கம் முதல் ஒற்றுமைச் சங்கங்கள் ஏற்படுத்த முயற்சி நடக்கிறதாம். லஞ்சம் வாங்குகின்றவர்களின் ஒற்றுமைச் சங்கம் ஒன்று ஏற்படாததுபற்றி நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் ஒன்று. இந்த ஒற்றுமைச் சங்கம் ஏற்படுத்துகின்றவர்கள் பலர்க்கு வீணாய்ப் பணத்தைக் கொட்டி அழுகின்றார்கள். ஒற்றுமைச் சங்கம் வேண்டியதே இல்லை. சரக்குக் கடைக்காரர்களும், சவுளிக் கடைக்காரர்களும, ஷாப்புக் கடைக்காரர்களும் மற்றவர்களும் விலையேற்றி விற்பதற்கு ஒற்றுமைச் சங்கமா நிறுவினார்கள். - குயில், 13.9.1960, ப. 11, 12, 13 உ. புதுவைச்செய்தி! நல்ல ஏற்பாடு புதுவை அரசினர், அரிசி வாணிகரின் பல்லைப் பிடுங்கிய செய்தி நமக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குவதோடு பொதுமக்களின் வாழ்த்தையும் பெற்றுவிட்டது. கொள்ளை ஊதியம்பெற வால் குழைத்தவர்களிடமிருந்து அரிசி அனைத்தையும் அரசினர் விலைகொடுத்து வாங்கி நியாய விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். அரிசி வாணிகர் என்ன விலைக்கு வாங்கினார்கள்? என்ன விலைக்கு விற்கவேண்டும் என்பதுபற்றி ஒரு திட்டம் வகுத்தார்கள். அதற்கு வாணிகர் ஒத்துவரவில்லை. அதற்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்தனர் அரசினர். கொள்முதலுக்குமேல் ஆதாயம் வைக்காமல் அரசினர் அரிசி விற்கச் செய்யும் ஏற்பாட்டில் ஓர் ஒழுங்குமுறை வேண்டும். உள்ளிருந்தே சுரண்டக்கூடிய அலுவல்காரர்மேல் கண்காணிப்பு வேண்டும். நியாயவிலைக் கடைகள் எங்கும் அமையவேண்டும். விற்பனை செய்யும் ஆட்கள் பார்ப்பனராயிருக்கலாகாது. அரசினர்க்கு மக்களின் நன்றி. - குயில், 22.11.1960 20. காமராசர் கோட்டைக் குப்பம் வருகை 31.8.1960 சென்னை முதலமைச்சர் திரு. காமராசர் கோட்டைக் குப்பம் வருகிறார் என்ற செய்தி ஐந்தாறு நாட்களுக்குமுன் தொடங்கியே கோட்டைக்குப்ப மக்களையும் புதுவை மக்களையும் சுறுசுறுப்பில் ஆழ்த்தி விட்டது. வரவேற்புக்கான முன்னேற்பாட்டில் அவர்கள் மனத்தைச் செலுத்தி வந்தனர். குபேர் கூட்டம் ஒன்றுதான் அந்தப் பாவி வராமல் நின்றுவிடக்கூடாதா என்று முணுமுணுத்தது. குபேர் மக்கள் முன்னிலையில் காமராசரை வாய்க்கு வந்தபடி திட்டியதையும், இங்குள்ள போலீ பெரிய நரி மறை முகமாக இதை ஆதரித்ததையும் எவரும் மறந்திருக்க முடியாத. நான், காமராசர் கோட்டைக்குப்பம் வருவது பற்றிய வரவேற்பிதழ், முட்டறாம்பட்டு வரவேற்பிதழ் எழுதுவதிலும், வரவேற்பு நடத்தும் முறை வகுப்பதிலும் ஈடுபட்டுக் கிடந்தேன். துப்பறியும் துறையிலுள்ள இராமாநுசம் ஐயங்கார், குபேரின் முன்னோடும் பிள்ளையான குப்புசாமி ஐயர் முதலிய ஒரு சிறு கூட்டம். 1. காமராசர் வரும் நேரத்தில் காலாப்பட்டிலும் முட்றாம்பட்டுக் கடுத்த ஒரு புதுவைச் சிற்றூரிலும் காமராசர்க்கு எதிர்ப்புக் கூட்டம் நடத்தத் திட்டம் இடுவதாகக் கேள்விப்பட்டேன். அந்தக் கூட்டத்திற்குப் பெயரும் காமராசர்க்கு வரவேற்பு என்றுதான் அமைப்பது என்றும் கேள்விப்பட்டேன். 2. அவ்வாறு கூட்டம் நடத்துவதனால் அவர்கள் எதிர்பார்த்த பயன்கள் என்னவெனில், காமராசர் வரவேற்புக் கூட்டத் திற்கு முக்கள் போகாமற் செய்வது ஒன்று, காமராசரைத் திட்டுவது, ஒன்று கறுப்புக்கொடி காட்ட வாய்ப்புத் தேடுவது ஒன்று. இதைக் கேள்விப்பட்ட நான், மேற்கண்ட ராமாநுசம் வீட்டின் எதிரில் ஆட்களைப் போட்டேன். குபேர் ஆட்களாகிய மேற்கண்ட குப்புசாமி ஐயர், கருணாநிதி, முன்பாரம் தையற்காரர் முதலியவர்கள் சூழ்ச்சிக் கூட்டமும், எந்நேரமும் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். துப்பறியும் புலி இருப்பது முத்தால் பேட்டை. துப்பறிவோரைப் பற்றி துப்பறியும்படி நான் அமைத்த ஆட்களும் முத்தால்பேட்டையே. அதன்பிறகு காலாப்பட்டில் ஆட்களை அனுப்பிப் புலன் ஆயும்படி செய்தேன். எதிர்ப் புதைவானம் தலைநீட்டி விட்டாலோ அதை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பதுபற்றியும் திட்டமிட்டேன். திரை மறைவில் அல்ல; ஊர் அறிய. காமராசர் கோட்டைக்குப்பம் வரும்போது அவருக்கு அளிக்கப்படும் விருந்தில் கலந்துகொள்ளப் புதுவைப் பெரிய அலுவல்காரர்களையும் தலையாய வாணிகர்களையும் கண்டு கண்டு கோட்டைக்குப்பம் பெரிய மனிதர்களுடன் நானும் அழைப்பு வைப்பதில் ஈடுபட்டிருந்தேன். ஏறத்தாழ அன்று நடுப்பகல் 11 மணிக்கு என் அச்சகத்திற்கு வந்தேன். அச்சக அமைச்சர் என்னிடம், அடிக்கடி துப்பறியும் போலீசாய் இருக்கலாம், சில ஆட்கள் வந்து வந்து காமராசர் வருகை பற்றி ஏதாவது நோட்டீசு உண்டா என்று கேட்டுப் போகின்றார்கள். ஒரு சிப்பாய் வந்து உங்களை டி.எ.பி. கோத்துக்கு வரச் சொன்னதாகச் சொல்லிப் போனார் என்று சொன்னார். உடனே தலைமைப் போலீசு நிலையத்தை (கோத்து) நோக்கி ஓடினேன். ராமாநுசம் என்னை வணக்கத்தோடு வரவேற்று டி.எ.பி. காளியப்பனைக் காட்டினார். அவரை நான் ஏன் என்னைக் கூப்பிட்டீர்கள் என்றேன். உங்கள் அன்பரில் நானும் ஒருவன். புதுவைக்குப் புதியவன். உங்களைப் பார்க்க எண்ணினேன் என்றார். நீர் அழைத்ததற்கு - எழுத்து வேண்டும். அதை எழுதிக் கொடுங்கள் என்றேன். இல்லை இல்லை இல்லை நட்பு முறையில் அழைத்தேன் என்று குயிலில் நான் எழுதியதைப் பற்றிச் சில கேட்டார். நான் குயிலில் போலீசைப் பற்றி எழுதிய அவை அனைத்தும் நேர்மை யானவை. அதில் உள்ள குறைபாடுகளை உடனே நிறைவு செய்ய வேண்டும் என்றேன். அதன் பிறகு ஐ.ஜி. உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறார் என்றார். நான் காண மறுத்தேன். டி.எ.பி. கெஞ்சினார். ஒப்பினேன். ஐ.ஜி.யைக் கண்டு நான் முதலில் கேட்டது என்னை அழைத்ததற்கு எழுத்துப்பட அழைப்புத்தர முடியுமா? என்பது. இல்லை இல்லை இல்லை நட்பு முறையில் அழைத்தேன் என்றார். இனி நட்பு முறையில் அழைப்பதாயிருந்தால் போலீசு உடையணிந்த ஆட்களை அனுப்பக் கூடாது. நேரில் என் வீட்டில் வந்து நீர் காண்பதுதான் சரியானது என்றேன். அதற்கவர், என்னைப் பற்றிச் சிலர் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னிடம் வராமலே இருந்துவிட்டீர்கள். காமராசர் வரவேற்புக்காகப் புதுவையில் பலருக்கு அழைப்புத் தந்தீர்கள், என்னை ஏன் அழைக்கவில்லை. சுப்பையாவை நான் மேடையில் தனித்துக் கண்டு பேசியதற்குக் காரணம் வேறு. அதைப்பற்றி நீங்கள் குயிலில் எழுதியது ஏன்? எனப் பலவாறு கூறினார். நான் எழுதியவை பொது மக்களின் நன்மைக்கு உகந்தவை. என்னை அழைத்தது ஏன்? அதைக் கூறுங்கள் என்றேன். இல்லை இல்லை இல்லை காமராசருக்குக் கறுப்புக் கொடி காட்டப் போவதாக ராமாநுசம் சொன்னார். நானும் அவருக்குத் தக்கபடி அமைவு கூறி மறுத்தேன் என்றார். நான் கூறியது. ராமாநுசத்துக்குக் கூறியவர் யார்? இந்தச் சேதியில் நீர் கலந்து கொண்டதே இல்லையா? இவை இன்று 7.30 மணிக்குள் விளக்கப்பட வேண்டும் என்று கூறிவந்தேன். இரவு 8 மணிக்கெல்லாம் நான் கோட்டைக்குப்பம் சென்றேன். கூட்டம் பெரியதாய் இருந்தது. அதில் குபேருக்கு முன்னோடும் பிள்ளையும், இதற்கு முன் பல கூட்டங்களிலும் காமராசரைத் திட்டியவருமாகிய சாட்சாத் குப்புசாமி ஐயரே, அந்தக் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். காலாப்பட்டில் கூட்டம் நடத்துவது கைவிடப் பட்டது என்றும் கேள்விப்பட்டேன். காமராசர் கூட்டத்தில் பலர் பேசினார்கள். குப்புசாமி ஐயரும் பேசினார். காமராசருக்கு அவர்சூட்டிய புகழ்மாலை கொஞ்ச நஞ்சமல்ல. அதன் பிறகு கூட்டம் முடிந்தது. இதில் நான், புதுவைத் திரு ஐ கமிஷனர் அவர்கட்குத் தெரிவித்துக் கொள்வது: புதுவையில் இப்போது இருந்து வரும் ஐ.ஜி. முல்க் அவர் களுக்கு இங்கு அவர் வேலை பார்ப்பதில் மிக்க தொல்லை ஏற்பட்டு வருகிறது. அவர் சென்னை முதலமைச்சருக்கு ஒரு காதைக் கொடுக்கிறார். மற்றொரு காதில் ஒரு பாதியைக் குபேருக்குக் கொடுக்கிறார். மீதிப் பாதிக் காதைச் சுப்பையா வீட்டுக்கு மறைவாக அனுப்பி வருகிறார். எத்தனை தொல்லை பாருங்கள். அவர் புதுவைக்கு வந்த நாளாய் அமைதி ஏற்படவேண்டிய இடத்தில் கலகம் வந்து குந்திக் கொள்ளுகிறது. மேலே நான் குறிப்பிட்டவை பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். நரிகள் செயலுக்குத் தீர்வை காண வேண்டும் என்பதே யாகும்! - குயில், 6.9.1960, ப. 4 - 5 21. புதுவைக் காங்கிரசு போன வாரம் புதுவைச் சட்டசபை கூடியது. அரசின் தலைவர் சொற்பொழிவுக்குப் பின், காங்கிரகாரர் தமக்குள் வள்வள் என்று குலைத்துக் கொள்ளுவதற்காக ஒரு வாரம் சட்டசபை தள்ளிப் போட்டது. புதுவைக் காங்கிரசு M.L.A.¡fŸ 27 பேர். இவர்களில் சுயேச்சைகளும் இருக்கிறார்களாயினும் அந்தச் சுயேச்சைகள் எதிர்பார்த்தபடி காங்கிரசு அடுக்களை நோக்கி ஓடிவிட்டவர்களே! இனி 27ம் போக மீதியுள்ளவர் கம்யூனிடுகள் 12 பேர் மட்டுமே! எனவே சட்டசபையை நன்கு நடத்திக் கொண்டு போகும் வாய்ப்பும் காங்கிரசுக்காரர்கட்கே உண்டு. அந்தக் காங்கிரசுக்காரர்கள் தாம் தங்கள் பொறுப்பை மறந்து, கோமுட்டித் தெருவில் கோட்டான்களாய்க் கூவிக் கொண்டிருக்கின்றார்கள். மேலிடத்து ராசு வந்தார் அமைதிப்படுத்த! கீழிட்டதால் முயன்றார். வழக்கப்படி திரும்பிப்போய்விட்டார். ஒரு வாரம் முடிந்தும் சட்டசபைக்குப் போனார்களா காங்கிரசுக்காரர்? தம்மில் ஒற்றுமை அடைத்தார்களா? அல்லது இனியாவது ஒற்றுமை அடையும் நிலையில் உள்ளனவா அவர்கள் தன்னல உள்ளங்கள்! இதற்குத் தொடர்பில்லாத ஒரு கதையைச் சொல்லிவிட்டு இந்தத் தலையங்கத்தை முடித்து விடுகின்றோம். ஓரூரில் ஊர் திருடிப் பசங்கள் பலர் இருந்தார்களாம். அவர்கள் எதிரில் நாடு திருடி ஒருவன் வந்தானாம். நீங்கள் வேறு வேலை செய்யக்கூடாதா? என்று கேட்டானாம். இப்போது நாங்கள் அடைந்து வரும் ஊதியத்திற்குப் பழுதில்லாமல் இருக்குமானால் நீங்கள் காட்டும் வேறு வேலையையும் செய்யத் தயார் என்றார்கள். அதற்கு நாடு திருடி அப்படியானால் நீங்கள் எல்லோரும் ஏதாவதொரு சட்டசபையில் உறுப்பினராகி விடுங்கள் என்றார்கள். ஊர் திருடிப் பசங்களின் எடுத்த காரியம் உடனே வெற்றி! - குயில், கிழமை இதழ், 13.9.1960, ப.2 22. உருசியாவில் திருக்குறள் விளக்கம் தமிழ்க்கலை மன்றத்தின் 6ஆவது ஆண்டின் பொதுக் கூட்டம் இன்று (30. 8. 1960) மாலை அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. மன்றத்தின் தலைவரும் முன்னாள் முறை நடுவருமான திரு.வி.சு ப்பிரமணியம் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள். சென்னை ஆட்சித் தமிழ் அமைப்புத் தலைவர் திரு.கீ. இராமலிங்கனார் கடவுள் வாழ்த்துப் பாடினார். தலைவர் வி.சுப்பிரமணியம் தமது முன்னுரையில் தமிழ்க் கலை மன்றத்தின் தொண்டினைப் பாராட்டி, மொழி வளர்ச்சி, மொழியாக்கம், கலை, ஓவியம் ஆகியவற்றைத் தன்னுட்கொண்டதே தமிழ்க் கலை என்று கூறித் தமிழ்க் கலையின் தொன்மைச் சிறப்புக்களை எடுத்துரைத்தார். உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் நாகரீகம் - பண்பாடுகள் முதலியவை ஒன்றுக்கொன்று மாறுபட்டன வாய் இருக்கும் என்றும் அதனால் அந்தந்த நாட்டின் கலைகளும் பலவகையாக மாறுபட்டிருக்கும் என்றும் கூறினார். அதிகம் கற்றறிந்து அமைதியுடன் இருப்பவர்கட்கே கலையில் முதலிடம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதென்றும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற உயர்ந்த எண்ணத்துடன் நாம் நுகரும் இன்பத்தை உலக மக்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற குறிக்கோ ளுடன் வாழ்வதே தமிழ்க் கலையின் சிறப்பு என்று திரு. வி. சுப்பிர மணியம் கூறினார். இவ்வாறு தமிழ்நாடு என்னும் நாளேடுதான் முதற் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இன்னும் அது தொடர்ந்து கூறுவது கீழ்வருமாறு:- டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் உரை: மாசுகோவில் நடைபெற்ற கீழைநாட்டு மொழி அறிஞர்கள் மாநாட்டில் தாம் கலந்து கொண்டது பற்றியும், அங்குத் தாம் ஆற்றிய சொற்பொழிவு பற்றியும் டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் எடுத்துக் கூறினார். உலகினருக்கு திருவள்ளுவர் தரும் செய்தி என்ற தலைப்பில் மாசுகோவில் நிகழ்த்திய உரை பற்றித் திரு சிதம்பரநாதன் அவர்கள் சொன்னதாவது: திருவள்ளுவர் வாழ்வியலில் பல்வேறு குணங்களையும் நன்கு உணர்ந்தவர். செம்மையாக வாழ்வை நடத்தி உயர்நிலை அடைதற்கு வழிவகைகளைக் கூறும் கருத்துக்கள் பல திருக் குறளில் பொதிந்து கிடக்கின்றன. அன்றாட வாழ்வை இனிமையும் பண்பும் பயனும் உடையதாக்குவதே திருக்குறளின் உள் உணர்ச்சி யாகும். இது ஓர் அப்பட்டமான வாழ்க்கை நூல் என்பதையும் அம் மாநாட்டில் நான் தெளிவுபடுத்தினேன். அதற்கு அங்கே நல்ல வரவேற்புக் காணப்பட்டது. நம் இலக்கியச் சான்றுகள் பற்றியும் எடுத்துக் கூறினேன். ஊழுக்கு மனிதன் அடிமையாகாமல்; ஊழ் மனிதனை அடிமையாக்க முடியும் என்ற கருத்தை நான் விளக்கியபோது உருசியர்களும், பிற அறிஞர்களும் குறளை வரவேற்றனர். இனி நாம் டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் தமிழ்த் தொண்டு பற்றி எழுதுகிறோம். டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் உருசியாவில் பேசிய பேச்சுக்கள் முழுதையும் தமிழ்நாடு நாளிதழ் மூலம் அறிந்துகொள்ள முடியவில்லை. டாக்டர் அவர்கள் உருசியச் செலவு பற்றியும், அங்குப் பேசிய பேச்சுக்கள் பற்றியும் இவ்வளவுதான் வெளியிட்டாரோ என்னமோ! அவர்கள் தமிழர்கள் பண்பாட்டின் உயர்வை, உருசியாவில் நன்கு எடுத்து விளக்கினார் என்பதில் ஐயமில்லை. திருக்குறள் தமிழரால் போற்றப்படுவதற்கு, உள்ள காரணங்கள் சிலவற்றையும் அவருக்கு நேரம் கிடைத்த வரைக்கும் விளக்கினார் என்று எண்ணுகின்றோம். ஊழ் என்பதற்கு மதக்காரர்கள் கொண்ட பொருள் வேறு; திருவள்ளுவர் கொண்ட பொருள் வேறு. மதக்காரர்கள் ஊழ் என்பதை முற்பிறப்பு ஒன்று இருந்தது. பிற்பிறப்பும் உண்டு என்பதை வலியுறுத்திப் பயன்படுத்திவந்தனர். அதற்காக அவர்கள் செலவு செய்துவந்த, செய்துவருகின்ற விளம்பரங்கள் மிகப் பெரிது. எனினும் அது அருவருக்கத் தகுந்தது. மணி மேகலை புண்ணியராசனைக் கையோடு மணிபல்லவத்துக்கு அழைத்துப் போய் நீ முற்பிறப்பில் ஆபுத்திரனாய்ப் பிறந்தாய். நீ இறந்த இடமும் மணிபல்லவந்தான். உன்னைப் புதைத்த இடமும் இதோ இதுதான். அதுமட்டுமல்ல, புதைத்த மேட்டையும் தோண்டி எடுக்கிறேன். இதோ பார், இந்த என்புகளும் உன்னுடையவையே, என்று கூறி என்புக்கூட்டை அவன் மூக்கில் அடிக்கிறாள். இது அளவு கடந்த காட்டுமிராண்டித்தனம். ஆனால் இவை அனைத்தும் மணிமேகலை ஆசிரியரின் மத விளம்பரமே தவிர மெய் என்பது கடுகளவும் இல்லை. முற்பிறப்புக் கொள்கையை நம் பண்டைய சமயக் கணக்கர்கள், தமிழர்கள் மானம் கப்பலேறும் படி முழக்கம் செய்து வந்தார்கள். இதைத் திருவள்ளுவரும் பின்பற்றினார் என்றால் திருவள்ளுவ ரும் காட்டுமிராண்டிகளில் ஒருத்தர்தாம். திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதிவழியே செல்லவே யில்லை. எங்கும்! எதிலும்! அவ்வாறிருக்க அவர் சமயக் கணக்கர் கொண்ட பொருளிலேயே ஊழ் என்ற அதிகாரத்தையும் இயற்றி, ஊழ் சிறிது முயற்சியே பெரிது என்று காட்டும் வகையில் மற்ற அதிகாரத்தையும் இயற்றுவாரா? டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் முயற்சியினால் (சமயக் காரர் கூறும்) ஊழையும் வெல்லலாம் என்று திருவள்ளுவர் கூறினார் என்று உருசியர்களின் நடுவே கூறினார் என்றால் அது கேட்கும் உருசியர்கள் மக்களுக்கு ஆகாத ஊழைத் திருவள்ளுவர் ஏன் சொல்லவேண்டும் என்று மனக்குழப்பம் அடைய நேரும். ஊழ் என்ற சொல்லுக்குச் சட்டம் என்பதுதான் பொருள். விதி என்று தான் பொருள். முறை என்றுதான் பொருள். அதைவிட்டு, முற்பிறப் பில் ஒருவன் செய்த பாவத்தையோ, புண்ணியத்தையோ தன் நாட் குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு அவன் செத்தபிறகு அவன் செய்த பாவ, புண்ணியத்தின் பயனை அவன் அடையும்படி செய்கின்ற ஒரு தெய்வம் என்ற வரிகள் ஊழ் என்னும் சொல்லில் அடங்கியா இருக்கின்றன? ஆயிரம் சமையக்காரர் திருவள்ளுவ ரிடம் வந்து துடை தட்டினால் அவைகளைப் பொருட்படுத்து கின்றவர் திருவள்ளுவரா? மக்கள் பிறப்பில் நால்வகை என்பதை உலகம் கிழியக் கத்து கின்றன பல நூற்கள். அந்நூற்களின் பொய்க் கூற்றுக்களைச் செலாவணியாக்க இலக்கக் கணக்கான தலைகள் உருண்டிருக் கின்றன. இந்த நாவலந்த தீவில் வாளேந்திய மன்னர்களை யெல்லாம் அந்த சாதிக் கொள்கையை ஒப்புக் கொள்ள வைக்கப் பட்டன! எவற்றையும் பொருட்படுத்தவில்லை வள்ளுவர் பிறப் பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்று அருளினார். இவ்வாறு பல. ஊழ் என்பது தமிழ்ச் சான்றோரால், துறந்தோரால், நீத்தோரால் அருளிச் செய்யப்பட்ட சட்டமே என்று திட்டவட்ட மாகக் கூறினார் வள்ளுவப் பெருந்தகை. அவர் கொள்கையை எதிர்த்து வந்தனர்; எதிர்த்து வருகின்றனர் சமயக் கணக்கர்கள், அவர்களே, ஊழ் என்பதன் நேர் பொருளாகிய விதிமுறை என்பதை மறுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் பிரார்த்த கருமம் என்று ஒரு கூட்டத்தார் சொல்லி வருகின்ற ஒன்றைத் திருவள்ளுவர் ஒத்துக் கொண்டதாகக் கூறுவது பொருந்தாது என்றும் ஊழ் என்று அவர் கூறியது துறவிகளால் பண்டு வகுக்கப்படும் சட்டத்தையே என்று குறிக்கலாம். ஆனால் உருசியாவில் இந்தியச் சமயக் கணக்கர்களால் கட்டப்பட்ட இருட்டறையைத் திறந்து ஒரு விளக்கை ஏற்றி வைக்க டாக்டர் அவர்களுக்கு நேரமிருந்திருக் காது என்றால் அதுவும் மெய்யேயாகும். துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் இதன் பொருளைப் பாருங்கள்! துப்புரவில்லார், உறற்பால ஊட்டா கழியும் எனின் துறப்பார், மன் அசை. அதாவது: துய்த்தற்கு வழி இல்லாத ஏழை மக்கள் தமக்குச் சேர வேண்டியவற்றைச் சேர்க்காமல் செல்லுமானால் அந்தச் சட்டத்தை மீறிப் புரட்சி செய்வார்கள் என்றவாறு. ஒருவனின் உழவுக்குக் கூலி எட்டணா என்பது பழைய சட்டமானால் இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த எட்டணா என்பதற்கு இரண்டு ரூபாய் என்பது பொருள். எனவே உழவன் இந்நாள் நாளொன்றுக்கு அடையத் தகுந்தது இரண்டு ரூபாய். உறற்பாலவாகிய இந்த இரண்டு ரூபாயைச் சட்டமானது அவர்கள் அடைய முடியாமல் நடந்து கொண்டு இருக்குமானால் அந்த உழவர்கள் அந்த சட்டத்தைத் துறக்க வேண்டும்! அதாவது சட்டத்தை உடைக்க வேண்டும்; அதாவது புரட்சி செய்ய வேண்டும் என்பதுதான் பொருள்! இதைவிட்டுப் பரிமேலழகர் என்னும் சமயக்காரர் எழுதும் பொருள் பொருந்துகிறதா என்பதையும் நோக்க. உறற்பால ஊட்டா கழியுமெனின், அடையத்தக்கவற்றை அடைவிக்காமல் செல்லுமாயின் (ஊழ்த் தெய்வம்) அந்த ஏழை மக்கள் உயிரைத் துறக்க வேண்டும். ஏழை மக்கள் கட்டிய வரிப்பணத்தை அரசன் மூல பண்டாரத்தில் அப்படியே விட்டு, அவைகளைப் பணக்காரருக்கே கொட்டியழும்படி விட்டு இவர்கள் ஒரு முழக் கயிற்றைத் தேடி எடுத்துக்கொண்டு ஆருக்கும் தெரியாமல் ஆலமரக் கிளையில் தூக்கிலிட்டுத் துடித்துச் சாகவேண்டும் என்ற பொருளிலா திருவள்ளுவர் செய்யுள் அருளிச் செய்வார்? இன்னும், ஊழ் பற்றிய திருவள்ளுவரின் பத்துக் குறட்பாவுக்கும், அது சட்டம் என்று வைத்துப் பொருள் காணுங்கால் பொருந்துவதையும் பிரார்த்துவம் என்று வைத்துப் பொருள் காணுங்கால் பொருந் தாமையையும் உய்த்து உணர்க! தமிழர்கள் இனியும் உருசியரும், பிறரும் தமிழ்க் கருத்துக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போ தெல்லாம் டாக்டர் போன்ற தமிழ் மறவர்கள் தக்கவாறு விளக்கம் தரப் பின்னடையமாட்டார்கள். - குயில், கிழமை இதழ், 13.9.1960, ப.5-7 23. வடநாட்டில் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது? கருநடர் வேந்தன் என்பான் மதுரையை வௌவிப்பாண்டிய அரசைக் கைப்பற்றுதற்குமுன் (அஃதாவது ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்) தமிழகத்தில் தமிழரசர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள் கிடைத்திலது. ஆயினும் இவ்வைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே வடநாட்டிற் பலவாகக் கல்வெட்டுக்கள் பயிலப்பட்டு வந்தமை காணக் கிடக்கின்றன. இதுகொண்டு முன்னாளிருந்த தமிழர் களுக்கு எழுத்து எழுதத் தெரியாதென்றும், வடக்கிருந்த பல்லவ அரசர்கள் தமிழ்நாட்டினும் புகுந்தபின்னரே தமிழர் எழுதக் கற்றாரென்றும் மேற்போக்காளர் சிலர் கூறா நிற்பர். இஃது ஆய்வுப் போக்கில் ஒட்டி நிற்பதன்று. போர்க்களத்தில் புறங்கொடாது எதிர்த்து நின்று வீழ்ந்துபட்ட மறவர்க்கு அற்றை நாளில் அவர்தம் பெயரும் பீடும் எழுதி நினை வாகக் கல்நடுதல் மரபென்பதை ஆசிரியர் தொல்காப்பியனார், தொல்காப்பியம் புறத்திணையியலில் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல்என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர என்று ஓதுமாற்றானும், அகநானூற்றில் நோய்பாடியார் என்பார், நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் எனக் கூறுமாற்றானும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் எழுத்துக் களின் வடிவ வேறுபாடு கூறுதலானும் ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே கல்லில் பொறிக்கும் பழக்கம் இருந்து வந்த தென்பது பெற்றாம். பொருதுவீழ்ந்த மறவர்க்குத்தவிர அரசர்கள் தம் பெயரும் பீடும் எழுதித் தமக்குக் கல்நாட்டினர் என்ற வழக்குப் பழைய தமிழ் நூல்களில் காணப்பெற்றிலது. இமயமலைவரையிற் சென்று தமது வென்றிக்கொடியை நாட்டிய இமயவரம்பன் சேரலாதன், கரிகாற் சோழன், சேரன் செங்குட்டுவன் என்னும் வேந்தரின் வரலாறு களைப் பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் உணரப் படுகின்றோமே யல்லாமல் அவராற் செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுக்களை இதுகாறும் கண்டி லோம். தலையாலங்கானத்து மாற்றலர் எழுவரைப் பொருதழித்த நெடுஞ்செழியனாவது, ஆரியரை வென்று துரத்திய நெடுஞ் செழியனாவது கல்வெட்டுக்கள் ஏதும் பொறித்ததாகக் கண்டிலோ மில்லை. எனவே இவ்வாறு நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மாபெரும் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் அறவே காணப்படாமை என்னை யென ஆராயுமிடத்து அதற்கு இரண்டு ஏதுக்கள் புலனாகின்றன. முதலாவது: அற்றை ஞான்றிருந்த பேரரசர்கள் தம்முள் பொருதா ராயினும் வேற்றரசர்களுக்கு இடங்கொடாதிருந்ததால் பெருகிய ஒற்றுமையும், பேராற்றாலும் உடையவராயிருந்தார். தமது அரசு வேற்றாரால் கௌவப்பட்டு நிலைகுலையும் என்பதைக் கனவிலும் அவர் நினைந்திலர். அதனால் அவர்கள் காலத்தான் அழியாது நிலைத்து நிற்கவல்ல கல்வெட்டுக் களை அவர்கள் வெட்டுவித்திலர். இரண்டாவது: பண்டுதொட்டே தமிழ்வேந்தர் மூவரும் செந்தமிழ்ப் பயிற்சியைப் பெரிதும் வளரச் செய்து இங்ஙனம் கொடை கொடுத்தலும் இயலுமோ எனப் பிறர் ஐயுற்று வியக்குமாறு கொடை வழங்கிப் புலவர்களைப் பேணிக் குடிமக்களும் உவப்புற வாழுமாறு அரசோச்சி வந்தனர். இதனால் கற்றவர் தொகை பெருகி, பதிற்றுப் பத்து போன்ற அளப் பரிய நூற்கள் தோன்றி அவ்வேந்தர்கள்தம் பெயரும், பீடும் உரைத்து அவற்றை மங்கா மற்றுலக்க வைத்தனர். இதனாலே அவர்கள் கல்வெட்டுக்கள் ஆக்கி வைக்கும் கருத்தே இலராயினர். சேர சோழ பாண்டியரென்னும் மூவேந்தர்கள் பண்டைய நாளில் பேராற்றல் உடையவராய் ஈடு இணையின்றி விளங்கினர் என்பதை இந்தியாவின் பெரும் பகுதியையும் விறல்கொண்டு அரசோச்சிய அசோகன் தன் ஆற்றலால் அடிப்படுத்த முடியாத பேரரசர்கள் தம் அரசியல் நாட்டின் தெற்கின்கண் உள்ளனர் என அவன் தனது பதினான்கு கல்வெட்டுக்களில் இரண்டாவது, பதின்மூன்றாவது கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இங்ஙனம் நாட்டின் பெரும் பகுதியையும் கைப்பற்றி ஒருங்காண்ட பேரரச னுக்கும் உட்படாமல் தனியரசு செலுத்திய ஆற்றலும், அறிவும், செல்வமும் சிறுபகுதியை ஆண்ட இம் மூவேந்தர் களுக்குத் திடுமென வந்திருக்க முடியாது. இத்திறம் கைவர பன்னூறாண் டுகள் கழிந்திருக்க வேண்டும். இங்ஙனம் சிறப்புள்ள தமிழகத்தில் பழைய கல்வெட்டுக்கள் காணப்படாமைக்கு ஏது தமிழ் நூல்கள் மிகுந்திருந்ததையும் அழிவுக்கு, இடமான மாறுதல் நிகழாமையுமே யாம்! மற்றும் வட நாட்டிலோ எனின், ஆரியர் வந்து நுழையத் தொடங்கிய காலந்தொட்டு, ஆசிய ஐரோப்பாவிலிருந்து பல்வேறு கொடிய பிரிவினரும் ஒருவர்பின் ஒருவராய்ப் புகுந்து, சூறை யாடியும் உயிர்க்கொலை செய்தும், மாதரைக் கற்பழித்தும், நாடு நகரைக் கொளுத்தியும், கோயில்களைத் தகர்த்தும் பெருந்தீங்கு விளைத்தும், பெரிய மாறுதல்களை உண்டாக்கி வந்தமையால், ஆரியர்க்கு முற்றொட்டே வடநாடெங்கும் பரவி யிருந்த தமிழ் மக்கள் தமிழ் மொழியின் பயிற்சியைப் பையப் பையக் கைவிட்டு அவ்வக்காலத்துப் புதிது புகுந்த ஆரியம், பாரசீகம், சித்தியம், கிரேக்கு; ஊணம் முதலான பல்வேறு மொழிகளைக் கைக்கொண்டு, தம் பின்னோர் நினைவுகூர்தற் பொருட்டுத் தாந்தாம் செய்த நூற்களை அவ்வயல் மொழிகளி லேயே கற்களில் செதுக்கி வைப்பாராயினர். இவ்வாறே ஐரோப்பாவிலும், ஆசியாவின் பல பிரிவு களிலும் கல்வெட்டுக்கள் தோன்றியமைக்கு ஏது, அந்நாடுகளில் பண்டை நாளி லிருந்து மக்கட் பிரிவின பலரும் கொடுந்தன்மையும் கொடுஞ் செயலும் உடையராய் ஒருவரையொருவர் அலைத்து, நெருப்பினும், செந்நீரி னும் அந்நாடுகளை மூழ்குவித்துப் பெருங்குழப்பங்களை உண்டாக்கி வந்தமையே கல்வெட்டுக்கள் பலவும் தோன்றியமைக்கு ஏதுவாயின! எனவே, அயலவர் கலப்பினாலும், அவரால் நேர்ந்த அல்லலா லுமே வடநாட்டில் கல்வெட்டுக்கள் வெட்டும் பழக்கங்கள் பல்கி இருந்தன! - குயில், கிழமை இதழ், 27.9.1960, ப.4-5 24. கரை உடைந்த ஏரி கரை உடைந்திருக்கிறது. ஏரியில் நிரம்பியுள்ள வெள்ளம் ஊரை அழித்துவருகிறது. பொதுமக்களின் சார்பில் தொண்டாற்றும் அரசினர் இதில் கவலை கொண்டிருப்பதாகக் கருத முடியவில்லை. அதற்கு மாறாக கரை உடைப்பு ஏற்பட்டதற்கே அரசினர் காரணமோ என ஐயுற வேண்டியிருக்கிறது. த்ராவோ புய்புளித் தெய்வசிகாமணிக்குக் கொடுத்துள்ள அதிகாரம் மிக விரிவானது. அதை அவர் மேற்கொண்டு நடத்தும் முறை நாடு சிரிக்கிறது. பெரியகடைத் தெருவில் ஓர் ஓட்டலுக்கு உடையவர் மோகன் என்பவர். அவர் தம் ஓட்டல் குறட்டில் ஒரு பங்கு அடித்துக் கொள்ள விண்ணப்பம் கொடுத்தது. 1960 ஜனவரி 4. ஆனால் அவருக்குத் தெய்வசிகாமணி உத்தரவு கொடுத்தது 19.9.60. இதில் வியப் பில்லை. இடையிலுள்ள இத்தனை மாதங்களில் தெய்வசிகாமணி செய்து வந்த போக்கிரித் தனங்கள் மிக வியப்பை உண்டாக்குவ தாகும். இவற்றையெல்லாம் இனியாவது அரசினர் ஆராய்ந்து பார்த்துத் தெய்வ சிகாமணி இடத்தில் ஒரு மனிதரைப் பிடித்துப் போட்டால் நலமாக விருக்கும். வாணிகர்கள், குடிமக்கள் அவரால் அடைந்துவரும் இன்னல்கள் மிகப்பல. காசிலிங்கம் என்பவர் யார்? அவருக்கும் தெய்வசிகா மணிக்கும் என்ன தொடர்பு? இவை ஆராயப்பட வேண்டும். மோகன் பங்குக்குத் தம் குறட்டில் உத்தரவு கேட்டால் அதே குறட்டில் காசிலிங்கத்திற்கு உத்தரவு கொடுத்து முடிந்து விட்டதாக வம்பு தொடுக்கிறார் தெய்வசிகாமணி. இந்தக் கூத்து அரசினர் சார்பில் நடைபெறுகிறது. பன்முறை அரசினர்க்கு முறையிட்டும் நடை பெறுகிறது என்றால் ஏரியை உடைத்தவர் யாராய் இருக்கும்? எல்லாத் துறையிலும் வெளிப்படையாகவே இப்படிப்பட்ட தீய போக்குகள் காணப்படுகின்றன. இதை யூனியன் அரசிடம் ஒப்பந்தத்தின் மேல் விட்டுப் போனான் பிரஞ்சுக்காரன். அந்த ஒப்பந்தத் திட்டங்கள் அனைத்தும் வந்திருக்கும் யூனியன்காரரால் அடியோடு புறக் கணிக்கப்படுகின்றன என்று மக்கள் கருதுகின்றார்கள். நாம் அப்படிக் கருதவில்லை. யூனியன் அரசினர் போக்குக்கு உதவியாக உள்ள திட்டங்களை அவர்கள் புறக்கணிப்பதே இல்லை என்பது நம் கருத்து. ஆனால் சிறிது நாட்களுக்கு முன் புதுவை அசம்பளியில், அதிகார மாற்றம் ஏற்படுவதற்குள் அதிகார மாற்றம் நடந்து விட்டால் நாம் எப்படி நடப்போமோ அப்படியே இன்று முதல் நடக்கத் தொடங்கி விட வேண்டும் என்ற முழக்கம் கிளம்பிற்று. இந்த முட்டாள்தனமான பேச்சுகள் அரசினர்க்கு மகிழ்ச்சியை உண்டாக்கியன என்றும் நினைக்க வேண்டியதிருக்கிறது. ஏனெனில் நடைபெறும் காரியங்கள் அப்படித்தான் காட்சியளிக் கின்றன. இதனால் புதுவையில் ஒரு புதிய இயக்கம் தோன்றி யிருப்பதாகக் கேள்வி: அதிகார மாற்றம் நடக்குமட்டும் பிரஞ்சு சட்ட திட்டங்களே அமுலில் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த இயக்கத்தின் நோக்கமாம். யூனியன் போக்குக்கும், இந்தப் புதிய இயக்கத்தின் போக்குக்கும் வேறுபாடு உண்டு. யூனியன் போக்கு, தன்னிட முள்ள ஆயுத வலிமையை அடிப்படையாகக் கொண்டது. புதிய இயக்கம் மக்களின் எண்ணத்தைத் திரட்டுகின்றது. மக்களாட்சி முறையில்! புதிய இயக்கத்தை அரசினர் அச்சுறுத்தலாம். அதுவும் அடங்கிவிடலாம் என்றாலும் அரசினர் நேர்மையாக மக்களுக்கு மதிப்பு வைத்து இரக்கம் வைத்துத் தம் அதிகாரத்தை நடத்திக் கொண்டு போக வேண்டும் என்று நாம் கூறுகின்றோம். - குயில், கிழமை இதழ், 4.10.1960, ப.2 - 3 25. செங்கோன் தரைச்செலவு அ. தமிழுக்கு வரலாறு உண்டு இது ஒரு தமிழ்ப் பெருநூல். இதனைப் பாடியவர், தமிழகத்தில் தலைநாளில் வாழ்ந்த தனியூர்ச் சேந்தன் என்பவர். செங்கோன் என்ற மன்னனின் தரைப்படை எழுச்சி என்பது செங்கோன் தரைச்செலவு என்பதன் பொருள். பெருவள நாட்டரசனாகிய செங்கோன் வேற்றரசரின் நாட்டை விரும்பிப் போருக்குச் சென்றதைக் கூறுவது என்க! இந்நூலைக் கொண்டும், இந்நூலின் உரையைக் கொண்டும், ஏழ்தெங்கநாடும், பெருவளநாடும் இருந்தவண்ணம் அறியப் படும். பேராறு என்னும் ஓராறு இருந்தது விளங்கும். மணிமலை என்னும் மலையும் முற்றும் மனக்கண்ணுக்குக் காட்சி தருவன. சக்கரக்கோ அகத்திரன், நெடுந்துறையன் இடைக்கழிச் செங்கோடன் முதலிய பெரும் புலவர் வாழ்ந்தமை புலப்படும். அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய நூற்கள் பெருநூல், இயல்நூல், தாப்புலி என்னும் யாப்பு நூல். இச் செங்கோன், பஃறுளி ஆறு கடல் கொள்ளப்படுமுன் இருந்தவன். ஆ. சினம் இருக்கலாம்! அதை ஒழித்துவிடாதே! நல்லவரிடம் தோன்றும் சினம் கடிவாளமிட்ட திரை! சினத்தைக் கொன்றவன் தாய்மொழியையும் காட்டிக் கொடுப்பவன். அவன் ஒரு செவிட்டு ஊமை; கொள்ளை மூக்கறையன். இ. தமிழக எல்லை அறியாதது யார் தவறு? இடைக்காலத்தில் தமிழகத்தின் வடஎல்லை வடமலை (வட வேங்கடம்) எனப்பட்டது. அதனால் விந்தியமலை முதல் குமரி வரைக்கும் தமிழ்நாடு நீண்டிருந்தமை புலப்படும். ஏன்? அக்காலத்தில் விந்தியந் தொடங்கித் தென்பாங்கில் நீளக் கிடந்த பெருங்காட்டின் சிறந்த பகுதி வேங்கடம். ஆதலால் வேங்கடத்தைச் சொன்னால் வேங்கடத்தைச் சார்ந்த காட்டுப் பகுதியையும் மலைப் பகுதியையும் கொள்ளவேண்டாமா? அந்நாளில், வடவேங்கடத்திற்கும் விந்தியத்திற்கும் இடையில் ஐந்தாறு நாடுகளும் ஏழெட்டு நகரங்களும் (நாகங்களும்) பத்துப் பத்து ஊர்களும் வாழ்ந்தனவோ? ஒன்றுமேயில்லை. இந்நாளில் சென்னை என்றால் தமிழகத்தையும் சேர்த்துக் கணக்கிடுவதில்லையா? அதைவிட்டுச் சென்னை என்றால் மார்வாடிகள் வாழும் பகுதிக்கு மட்டுமா பெயர்? - குயில், கிழமை இதழ், 4.10.1960, ப.11 26. தமிழகத்தில் பஞ்சாயத்து ஆட்சி சட்டமன்றம் என்றும், நகரமன்றம் என்றும் உள்ள நிறுவனங் களில் மட்டும் அதிகாரம் குறைந்துவிட்டது. அது பரவல் ஆக்கப் பட வேண்டுமானால் பஞ்சாயத்து ஆட்சி எங்கும் வேண்டும் என்பது இன்று தமிழக அமைச்சர்களால் ஆதரிக்கப்படுகின்றது. இதுபற்றிச் சில கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம். அக்டோபர் முதற்கொண்டு மூன்றுகட்டமாகப் பஞ்சாயத்து ஆட்சிமுறை தேவை என்பதுபற்றிப் பஞ்சாயத்து மாநாடு ஒன்று 25.9.1960இல் நடத்தப்பட்டது எங்கும். இந்தக் கிளர்ச்சி மாநாட்டை முன்னின்று நடத்துகின்றவர்கள் யார் தெரியுமா? மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலியவர்களே! அடிசக்கை! முழக்கம் சின்னதாகவா இருக்கும். பறையின் தோல் கிழிந்தே போகாதா? அக்டோபர் துவங்கி முதற்கட்டமாக 75 பஞ்சாயத்து நிறுவனம் ஏற்படுத்திவிட்டு மறுவேலை பார்க்கப்படும். மற்ற இரு கட்டங்களிலும் இந்த மாநிலம் முழுவதிலும் 374 பஞ்சாயத்து யூனியன்கள் கொழுக்கட்டை மாதிரி பிடித்து வைக்கப்பட்டுவிடும். மதுரை, கோவை, திருச்சி, தேவகோட்டை, வேலூர், சீபெரும் புதூர் ஆகிய இடங்களில் இவ்வகை மாநாடுகள், மேள தாளத்தோடும் பெட்டி வாண ஊர்வலத்தோடும், ஆடல் பாடல் களோடும் நடை பெற்றுள்ளன. முயற்சியின் நோக்கத்தின்படியே நூற்றுக்கணக்கான மக்கள் குட்டை வெள்ளம்போல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சீபெரும்புதூரில் நடந்த மாநாட்டில் சட்டமன்றத் தலைவர் ô.கிUZzhuh› நாவசைத்த சிறு பகுதியை நினைவில் வைக்க வேண்டும். அவர் சொன்னார்: ஆட்சியாளர் இதுவரைக்கும் செய்து வந்துள்ள திட்டங் களால் மக்களுக்கு நன்மை ஏற்படவில்லை. ஆதலால்தான் இந்தப் புதிய பஞ்சாயத்து முறைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். இவற்றால் நன்மை ஏற்படும். பஞ்சாயத்துக்களுக்குப் பொறுப்பு அதிகம். உணவு அபி விருத்தி, குடும்பக்கட்டுப்பாடு, கல்வி, உடல்நலம், குடிநீர் முதலியவைகளில் இனிச் சிறிதும் புறக்கணிப்பு ஏற்படவே ஏற்படாது. மக்களின் பெரிய பெரிய தேவைகளையெல்லாம் மக்களே அரசினர் உதவியால் நடத்திக் கொள்ளலாம். இதனால் எல்லாக் கட்சிகளும் நன்மை பெறலாம். இன்னும் பல. திரு.எம்.கோஷாச்சாரி சொன்னதையும் கேளுங்கள்: சட்ட நடவடிக்கைகளில் புதிய மாற்றங்களை விளக்கிய அவர் ஆலய விழாக்களுக்கு மட்டும் வரி ஏற்படுத்தப்பட்டது. அதுபோல கல்வி, உடல் நலத்துறைகட்கும் வரி ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். அதன் பிறகு, தாலுக்கா, ஒன்றுக்கு ஆறு பஞ்சாயத்து ஏற்படும். இதனால் மக்கள் நேரே தம் காரியங்களை நடத்திக்கொண்டு போக ஏற்படும் என்று ஏ.கே.தங்கவேல் எம்.எல்.சி. வழிகூறினார். இவைகளை ஏன் இங்கு எடுத்துக் காட்டினோம் என்றால் இப்போது ஏற்படுத்தப் பட்டு வருகின்ற பஞ்சாயத்தைக்கொண்டு அரசினர் எதை அடைய நினைக்கிறார்கள்? அவர்கள் உள் எண்ணம் என்ன என்பன வற்றைப் புரிந்துகொள்ளுவதற் காகவே என்க! முதலில் நீங்கள் கருத வேண்டியது என்ன? பஞ்சாயத்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அமைச்சர்களும், சட்ட மன்றத்தி னரும் பேசியுள்ளவற்றில், தமிழ்நாடு, தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலை ஆகிய இவைபற்றி ஒரு பேச்சு உண்டா என்பதை நோக்குக! இந்நாள், அரசினர் கொள்கைகட்கு நேர்மாறான வழியில் சென்று கொண்டிருக்கிறது மக்கள் எண்ணம் என்பதை ஊன்றி உணர வேண்டும். குச்சுக்காரிகள் விடுதியின் பக்கம் குடித்தனக்காரி திரும்பாததுபோல இந்தியை ஆதரிக்கும் அரசினர் பக்கம் மக்கள் திரும்புவதில்லை. ஆகாஷ்வாணியை ஆதரிக்கும் அரசினர் பக்கம் தமிழ் மக்கள் திரும்புவதே இல்லை. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க மறுக்கும் அரசினர் - ஆட்சியாளர் மூஞ்சியில் விழிக்கவும் மறுக்கின்றார்கள் தமிழ் மக்கள். தமிழை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழர்களின் இன்றியமையாத் தேவைகளைக் கட்சி சிறிதும் ஏறெடுத்துப் பார்க்கவும் மறுக்கும். அரசினரை-ஆட்சியாளரை தமிழ்மக்கள் மதிக்கவே மாட்டார்கள். தமிழரை எதிர்க்கும் தமிழரின் பகைவர்கட்கே இந்த நாட்டில் சலுகைகள் மிகுதி! நெய்வேலி முதலிய ஊர்களில் சென்று பாருங்கள். ஊரெல்லாம் பார்ப்பனர் வீடுகள் அலுவலின் தலைமை யும், கடைமையும் நூற்றுக்கு நூறு பார்ப்பனர்கட்கே! தமிழை எதிர்க்கும் இலக்குமணசாமிகட்கும் தமிழரைக் காட்டிக் கொடுக்கும் கயவர்கட்குமே சலுகைகள் மிகுதி. மார்பை மறைப்பதாகக் கூறிக்கொண்டு மார்பின் துணியை விலக்கி விலக்கிக் காட்டும் தோல் வணிகர்போல இந்தியை ஒழிப்போம் என்று கூறி அதை நிலை நிறுத்தி வருகின்றார்கள் அரசினரும், அமைச்சர்களும் பிறரும். சேதுப் பிள்ளைகளுக்கு, அண்ணா மலைப் பல்கலைக் கழகம் துணைவேந்தர் இடம் கொடுப்பதாக ஆசைகாட்டித் தமிழுக்கே உலைவைக்கச் செய்து வருகின்றார்கள், அரசினரும் ஆட்சியாளர்களும். தமிழகத்தில் தமிழர்களின் கோயில்களில் வடமொழி வழிபாடு ஏன் என்று கொதிக்கும் தமிழர் நெஞ்சங்களில் தீயை வைக்கிறார்கள், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள், அரசினர்கள். சாதி வேண்டாம் என்பதை ஆதரிப்பதுபோல் நடிக்கிறார்கள், அமைச்சரும் அவரும் இவரும். அதே நேரத்தில் கோயிலில் நுழைந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரப் பையன் தமிழர்கட்குத் தரநேரும் சாம்பலையும், தேங்காய் மூடியையும் தமிழர்களின் காலண்டையில் வீசித்தான் எறிய வேண்டுமாம். அந்தப் பிச்சைக் கூட்டம் தூய்மை உடைய கூட்டமாம். இப்படி பத்தவத்சலம். தமிழை - தமிழ் மாணவர்களைத் தமிழர்களை நிலை கலங்கக் செய்யும் வகையிலும், தமிழர்களின் ஆணிவேரை அடியோடு பிடுங்கும் வகையிலும் அரசினரும், அமைச்சர்களும் செய்து வரும் திருத்தொண்டுகள் திரைமறைவில் நடப்பவை கொஞ்சமல்ல மிகுதி! ஒன்றல்ல; நூறுக்கு நூறு! பாலம் கட்டப்படுகின்றன! ஏன்? மக்களை மடக்க, அவர்களின் இயற்கையான விருப்பங்களை நிறைவேற்ற அல்ல. பரூட் தனிப்பட்டவர்கட்குத் தரப்படுகின்றன. ஏன்? ஆளை வளைக்க! தமிழ் வாழ அல்ல! அதைத் தொலைத்து வரும் நாடகத்திற்குத் திரைபோட. கல்வித்துறை விரிவுபடுத்தப்படுகின்றது. பள்ளிக்கூடங்கள் மிகுதியாக்கப்படுகின்றன. ஏன்? இந்திக்கு வழிவிட! எல்லாரும் படித்தாக வேண்டுமே என்ற கவலையினால் அல்ல! அடடா! இவர்கள் கல்விக்கு நல்லது செய்கின்றார்கள். இவர்கள் ஒருபோதும் தமிழைக் கொல்லுவார்களா என்று மக்களை எண்ண வைக்கவே. ஆங்கிலத்தை விடமாட்டோம்; கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வோம். இந்தியையும் விடமாட்டோம்; கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வோம் என்றெல்லாம் கூறிவரும் பித்தலாட்டக் காரர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்து விடுவார்கள் என்பது இவர்களின் பகற்கனவு! இன்றல்ல, இன்னும் இருநூறு ஆண்டுகள் கரடியாய்க்கத்தினாலும் தமிழைத் தின்னும் இந்தப் பெருச்சாளிகளை ஆதரிக்கப் போவதில்லை தமிழர்கள்! எனவே, தமிழ் மக்கள் கவலை வேறு; அவர்களின் பெரு விருப்பம் வேறு. இன்றைய அரசினர், ஆட்சியாளர் விருப்பம், வேறு. மறைமுகமான சூழ்ச்சி. ஆட்சியாளர் அரசினர் ஆகியோரைக் கண்ணெடுத்தும் பாராமல், தமிழ்ப் பெருமக்கள் வேறுபுறம் சென்று கொண்டிருக் கிறார்கள். அந்தத் தமிழர்களைத் தங்கள் பக்கம் சேந்த வீசப்படும் கடைசி வலைக்குத்தான் பஞ்சாயத்து ஏற்பாடு என்று பெயர். தமிழகத்திற்குப் பிறந்தவன் ஒரு பெரும் மொழியை - பண்டை மொழியை உயர்தனிச் செம்மொழியைத் தாய் மொழி யாகக் கொண்டவன், அயல்மொழியே என்றும் இருக்கவேண்டும் என்கின்றான். அதாவது, தமிழன் ஆங்கிலத்தை கேட்கின்றான். என்றும் இருக்கவேண்டும் என்கின்றான். விரும்புகின்றான். இருக்க வேண்டும் என்கின்றான். இது உலகப் புதுமையில் ஒன்று. காட்டுமிராண்டித் தனத்தின் எடுத்துக்காட்டு. புதிய புதிய பொருள்கள் ஏற்பட்டுவருகின்றன. அவற்றிற் கெல்லாம் பல காரணங்களால் தமிழில் பெயர்கள் இல்லை. அவைகள் தமிழில் ஏற்பாடு செய்யுமட்டும் ஆங்கிலம் இருக்கட்டும் என்பவன் ஒருவன் இருந்தால் அவன் மனச்சான்று உடையவன். நல்லவன். அவனால் நாட்டுக்குத் தீமை ஏற்படாது; அவனை நாம் பாராட்டத் தடையில்லை. இப்படி, எவனாவது சொல்லுகின்றானா? நான் ஆங்கிலத் தால் சம்பாதிக்கிறேன். மக்களால் அல்ல, தமிழால் அல்ல! ஆதலால் ஆங்கிலமே எந்நாளும் இருக்கட்டும் என்று இவன் கூறுவதாகத் தானே பொருள்! இந்த மனக் கோளாறுகட்கும் காட்டிக் கொடுக்கும் கயமைக்கும் இன்றைய அரசினர் காரணம். மக்களின் கண்ணில் தூவப்படும் மிளகாய்ப் பொடிக்குப் பெயர் பஞ்சாயத்து ஆட்சி. சிற்றூரில் அடிமையில் வாழ்ந்துகொண்டு வரும் தமிழர் களை - தமிழில் புதைந்துகிடக்கும் அவர்களின் உள்ளங்களை அரசினர் - ஆட்சியாளர் என்ற முரட்டு மாடுகளை இயற்கையில் வெறுக்கக்கூடிய பழந்தமிழர்களைத் தங்கள் காலில் போட்டுக் கழுத்தையிறுக்க ஏற்படும் சூழ்ச்சிக்குப் பெயர் பஞ்சாயத்து ஆட்சி. சிற்றூரில் ஏற்பட்டது ஒரு பஞ்சாயத்து! அவர்கள் தமிழ்நாடு என்றுதான் நம் தாய்நாட்டை அழைக்க வேண்டும் என்று முடிவு கட்டினால் அவ்வாறே செயற்படுத்தப்படுமா? கோயிலில் தமிழன்றிப் பொருள் தெரியாத கூச்சல் வேண்டாம். எங்கள் திருவாசகம் வேண்டும். எங்கள் திருவாய் மொழி போதும் என்று சொன்னால் பார்ப்பன அரசினரை பார்ப்பன ஆட்சியாளர் பல்லை நறநறவென்று கடிக்கமாட்டார்கள் என்பதற்கு உறுதிமொழி உண்டா? எங்கள் பிள்ளைகளின் நாவில் இந்தி இருப்பாணி நுழையாது என்று பஞ்சாயத்துப் பழந்தமிழர் முடிவு கட்டினால் நேரு நான்சன் என்று கூறமாட்டாரா? கூறினால் இங்குள்ள அமைச்சர் அதற்கு மகிழ்ச்சி காட்ட மாட்டார்களா? பஞ்சாயத்தார் முடிவே முடிந்த முடிவு என்ற ஒரு சொல் உறுதிப் படுத்தாவிட்டால் இந்தப் பஞ்சாயத்து ஏற்பாடு வேண்டாம். அது தீயர் போடும் வலை. தமிழர் கண்ணுக்கு மிளகாய்ப்பொடி. பஞ்சாயத்தார் முடிவே முடிந்த முடிவு என்று உறுதி கூறினால் மட்டும் போதாது. தமிழன் எல்லாத் துறைக்கும் நேராகவோ மறைமுகமாகவோ அதிகாரிகளாலும் ஆளவந்தார்களாலும் ஏற்படும் எல்லாவகைத் தீங்குகளுக்கும் பஞ்சாயத்தார் ஒத்துப்போனதாகத் தெரிந்தால் அந்தப் பஞ்சாயத்து நிறுவனம் ஒழிந்துபோனதாகக் கருதப்பட வேண்டும். என்ற அடிப்படைச் சட்டம் வேண்டும். தமிழுக்குச் சாவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வானொலி என்ற சொற்றொடர் கேட்டால் அதிகாரிகளின் காது எரிமலைக்கு முன் புறாக்குஞ்சு! தமிழ்க்கலை மாண்டு போனதற்குக் கல்லில் எழுத்து எழுதுகிறது இந்த ஆட்சி. ஒருத்தி ஐந்து பேரை மணந்து கொண்டாளாம். அவள் குச்சிக் காரி அல்லவாம். அவளுக்குக் கோயிலாம், அந்தக் கோயிலுக்குக் காப்பாளர் தம்பிரான்களாம். எப்படி இருக்கிறதா? இவைகளை எல்லாம் எண்ணி ஒரு முடிவு செய்து ஈடேற்றம் காணப் பஞ்சாயத்துக்கு உரிமை வேண்டும். இல்லையானால் பஞ்சாயத்து பஞ்சாயத்தே. - குயில், கிழமை இதழ், 4.10.1960, ப. 12 - 14, 3 27. செய்தி ஏடுகள் அனைத்தும் சிறிய போக்குடையனவே ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு பணக்காரர் இருந்தார். அவர் ஆலை வைத்து நடத்தும் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். அவருக்குச் சைவந்தான் பிடிக்கும். ஏனென்றால் சைவம் பணக்காரரை ஆதரிக்கும். ஏழைகளைத் தள்ளி மிதிக்கும். அவர் தம் சைவக் கொள்கையைப் பல்லைக் கடித்துக் கொண்டு மேற்கொண்டு வந்தார். மேலுக்கு! உள்ளூர அன்று! பின் ஏழை மக்களை ஏய்த்துப் பிழைப்பதான ஒரு போக்கிரித்தனத்தை மறைக்க அந்தச் சைவ முழக்கம் நல்ல திரை அல்லவா? என்றும் தமக்குப் புகழ் வேண்டும். புகழ் உண்டானால் உண்மைப் போக்கு மறையும் என்பதும் அவர் உள் எண்ணம். நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்தார். அது நாளிதழ் போலவே வெளிக்குத் தோன்றிய போதிலும், உற்று நோக்கினால் அது ஓர் பழி வாங்கும் பட்டாக்கத்தி என்பது புலனாகும். அதற்கு எங்கும் செய்தி அனுப்புவோர் இருக்கின்றார்கள். நெஞ்சில் ஈரமில்லாதவராயும் வடிகட்டிய வஞ்சகராகவுமே ஆள் பொறுக்கிய திறமை அந்த ஏட்டின் சொந்தக்காரருக்கு அமைந்த தனித்திறமை என்றே சொல்ல வேண்டும். ஏட்டின் சொந்தக்காரராகிய அந்தப் பணக்காரருக்குத் தனி முறையில் யார் யார் ஆகாதவர்? தம் பழிவாங்கும் கொள்கையை நிறைவேற்றும் முறை எப்படி? இவற்றையெல்லாம் தம் ஏட்டின் எழுத்தாளராகட்கும், செய்தியாளர்கட்கும் சொல்லி வைத்திருந்தார். மதுரையில் அந்த ஏடு நடக்கும்! மதுரையிலேயே குறிப்பிடத் தக்க வகையில் கூட்டம். அதிலும் அந்த ஏட்டின் சிறந்த எழுத்தாளரையும் கொண்டே அந்தக் கூட்டம் நடக்கும். ஆனால் அதுபற்றி அந்த ஏட்டில் ஒரு வரி கூட, ஓர் எழுத்துக் கூட இராது ஏன்? அந்தக் கூட்டத்தின் குறிப்பிடத்தக்க பேச்சாளர், ஏட்டாளர்க்கு ஆகாதவர் அல்லவா? தம் குறுகிய கொள்கை, நாட்டைச் சுரண்டும் எண்ணம் இவற்றிற்குப் புறம்பானது. ஆனால், நாட்டிற்கு நல்லதான எந்தச் செய்தியும் அந்த ஏட்டில் தலைகாட்டாது. செய்தி ஏட்டின் நிலை எப்படி? செய்தி ஏட்டின் தீய போக்கு எப்படி? நாம் இங்கு இந்தச் சைவப் பணக்கார ஆலை அதிகாரியின் ஏட்டை மட்டும் ஏன் இவ்வளவு விரிவாகக் காட்டினோம் என்றால், நான் தமிழன், நான் தமிழ்ப் பற்றாளன், என்று பகட்டிக் கொண்டு தமிழர் கண்ணில் மண்ணை அள்ளிப் போட்டு நல்ல பெயரையும் நிலை நாட்டிக் கொள்பவர் அவர். அவர் நடத்தும் ஏட்டின் தகுதியே இப்படி என்பதைக் குறிக்கவே இதைச் சொன்னோம். மற்ற ஏடுகளைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. விடுதலையின் ஆசிரியர் மணியம்மையார் என்று அந்த விடுதலையிலேயே போட்டிருக்கும். ஆனால் குருசாமி என்பவர் தம் பெயரைக் குறிக்கையில் எல்லாம் பெயருக்கு முன் விடுதலை ஆசிரியர் என்ற பட்டத்தைச் சேர்த்துக் கொள்ளத் தவறவே மாட்டார். இப்படிப்பட்ட குறிசாமியின் பொறுப்பில் நடக்கும் விடுதலை எந்த முறையில் நடக்கும்? தெரிந்ததுதான்! ஆயினும் மொத்தத்தில் கூறுகின்றோம். பெரியாரின் இயக்க ஏட்டைக் கொண்டே பெரியாரின் அன்பர்களை விலக்கிப் பெரியாரின் வன்பர்களை விலைக்கு வாங்கி வயிற்றை நிரப்பி வருகின்றார். நாள்தோறும் மறவாமல் இயக்க அன்பர்களை மறை முகமாகத் தாக்கிக் குறைவுபடுத்தி எழுதுவதில் அவர் சிறிதும் அஞ்சுவதில்லை. கண்ணியம் ரெட்டியார் அந்தப் பக்கத் திராவிடக் கழகத் தலைவர். ஆனால் குருசாமிக்குப் படையல்போட மறுப்பவர். ரெட்டியார் இப்படிச் செய்யலாமா? அவர் வாதைபடத்தானே வேண்டும். அவர் இயக்க நடவடிக்கை பற்றி (இன்றியமையாச் செய்தி) விடுதலைக்கு எழுதுவார் அது விடுதலையில் வருமா? வராது. ரெட்டியாராவது விடுவாரா? பெரியாருக்கு எழுதினார். அதன்பிறகு பல நாட்களின் பின்பு விடுதலையில் அச்செய்தி வெளிவந்தது. அதன்பிறகு? அப்படித்தான்! போடுவதே இல்லை. ரெட்டியார் பெரியாருக்கு எழுதினாரா? இல்லை. இந்தச் சின்ன செய்திக்கு இத்தனை பெரிய இழவா? இது ஒன்றை எடுத்துக்காட்டாகச் சொன்னோம். சுருக்கமாகச் சொன்னால் விடுதலை நடக்கவில்லை; நடப்பது கெடுதலையே! குருசாமியின் போக்கு, பித்தலாட்டம் மாறுபாடு நரிச்செயல் நன்றியற்ற பிழைப்பு எல்லார்க்கும் தெரியும். பல நாட்களாகத் தெரியும். அவரால் விளையும் கேடுகளைப் பட்டறிந்துள்ள மக்கள் பத்தாயிரம். இதில் இன்னொரு வியப்பு என்ன? பெரியாருக்கு நன்றாகத் தெரியும். விடுதலையை நடத்துகின்றார் குறிசாமி. பதவி உயர்வு பெற்று வாழ்கின்றார்! குறிசாமி இருக்கின்றார் குறிசாமி. ஆனால் எம் பெரியார் இறந்துகொண்டு வருகின்றார். இந்த நிலையிலும் தீப் பந்தத்துக்கு மண்ணெண்ணெய் ஊற்றுகின்றார். இவை தவிர மற்ற நாளேடுகள் எப்படி என்பதை நான் விளக்கத் தேவையில்லை. பார்ப்பனர் ஏடுகள்! - குயில், கிழமை இதழ், 11.10.1960, ப. 2-3 28. தெய்வமிகழேல் ‘bjŒt¤ij ïfHhnj! என்பது இதன் பொருள். இது ஔவை வாக்கு. தெய்வம் வழிபடு - தெய்வம் போற்று என்னாமல் இகழேல் என்றது என்னவெனில் கூறுவேன். இகழத்தக்க பகுதி தெய்வம் என்பதில் உண்டு. அதனால்தான் தெய்வத்தை இகழாதே என்றார் அம்மையார். தெய்வம் என்பதில் இகழத்தக்க பகுதி எது? தெய்வம் என்ற சொல்லின் சொந்தப் பொருளை மட்டும் நோக்கினால் தெரியும். தெய்வம் - கொள்ளுவது (விழுங்குவது) சொல்லுவது! தெய் என் கிளவி கொள்ளலும் கோறலும் என்ற பிங்கலந்தையைக் காண்க! தெய் என்பதன் அடியாகப் பிறந்ததே தெய்வம்! தெய் முதனிலை; அம் பெயர் இறுதி நிலை. வ் பெயர் இடை நிலை. தெய்வம் என்பதை வடசொல் என்று கூறிப் பிழைப்பர் வடசொற் சார்பினர். யகரத்தின்முன் வகரம் மயங்கும் என்று கூறியது தொல்காப்பியம். தெய்வம் என்பதையே எடுத்துக் காட்டாகக் கூறினார், உரை ஆசிரியர். இதனால் தெய்வம் தூய தமிழ்க் காரணப் பெயர். இல்லையா? தெய்வம் என்பது விழுங்குவதும் கொல்லுவதுமான ஒன்றின் பெயர் என்பதால் இகழத்தக்க பகுதி அதில் இருத்தல் பெறப்படும். இன்னும் இது விளக்கப்படும். அறிவு நிரம்பாத மிகப் பழநாள், மக்கள் காற்றையும், காட்டிற் றோன்றும் தீயையும், மழையையும், வெயிலையும் தெய் - தெய்வம் என்றனர். அவற்றின் பயன் உணர்ந்தபின் அவர்கள் அவற்றை வாழ்த்தினர். தெய்வம் என்பது கண்ணையும் கருத்தையும், மனத்தையும் கவர்வதும், பயன்படுவதுமான பொருளுக்குப் பெயர். செங்கதிர் அழகியது. பயன்படுவது; அதைப் போற்றினார் கள்! நிலவும் அப்படி; மழையும் அப்படி! மற்றும் நீரையும், நிலத்தையும், தீயையும் தமிழ் நூலையும் மொழியையும், மலையையும் பிறவற்றையும் தெய்வம் என்று கூறுவதும் நோக்குக! மொழிநூல் வல்லவர், தெய்வம் என்று சொல்லை நோக்கி இகழ்தல்வேண்டாம். kuò neh¡»Lf! என்பார். தெய்வம் இகழேல் என்றார் ஔவையார். பயன்படு பொருள்களையும் கண்ணையும், மனத்தையும், கவர்கின்ற பொருள்களையும் இகழக்கூடாது என்பதை இதனால் அறிந்து கொண்டோம். - குயில், கிழமை இதழ், 11.10.1960, ப.7 29. புகைவண்டிக் கட்டணச் சீட்டிலும் இந்தியாம் கட்சிகள் நடத்துகிறார்கள்! காங்கிர கட்சி ஒன்று; திராவிடர் கழகம் இரண்டு; திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று; தமிழரசுக் கழகம் நான்கு; நாம் தமிழர் இயக்கம் ஐந்து; கம்யூனிடு கட்சியோடு ஆறு. தமிழகத்தில் கட்சிகளுக்குக் குறைவில்லை. இன்று அந்தக் கட்சிகள் எல்லாம் என்ன செய்கின்றன? நேரிடையாகவோ மறைமுக மாகவோ காமராசரிடம் காக்காய் பிடிப்பதுதான். காமராசரோ நேருவுக்குக் காக்காய் பிடிப்பதில் தவறுவதே இல்லை! திராவிடர் கழகத்தின் தலைவராகக் குருசாமியை அமைத்த தன் நோக்கமே காமராசரைக் காக்காய் பிடிப்பதுதான் என்று குருசாமியே தன் உள் கட்சிக்காரர் ஒருவரிடம் கூறிப் பெருமை அடித்துக்கொள்ளுகிறார். இந்த நிலையில் அரசினர் டிக்கெட்டிலும் இந்தியைப் புகுத்துவார்கள். தாயின் வயிற்றிலுள்ள குழந்தையின் நெற்றியிலும் இந்தியைப் பொறிப்பார்கள். கட்சிகள் என்ன செய்யும்? மக்களைச் சுரண்டுவதில் முழு நாளையும் செலவு செய்யுமே தவிர, நேருவைக் காக்காய் பிடிக்கும் காமராசரைக் காக்காய் பிடிக்குமே தவிர, மானம் கருதிக் களத்தில் இறங்கவா செய்யும்? இந்தி நாளடைவில் தொத்திய ஒவ்வொரு பகுதியையும் தமிழர் எதிர்த்து வந்துள்ளார்கள். தில்லி எதையும் சட்டை பண்ணவே யில்லை. இவ்வாறு சட்டை பண்ணாத இந்த அரசினர், ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பைக் கண்டு நடுங்கியதையும் எதிர்ப்பாளர்க்குப் பணிந்து போனதையும் நாம் மறந்து போகவில்லை. அத்தகைய அரசினர் சில நாட்களாக எதற்கும் அஞ்சாமல் இந்திக்குக் கணிசமான ஆதரவு தருகின்றார்கள் என்றால் என்ன பொருள்? இப்போதுள்ள கட்சிகள் அனைத்திலும் குருசாமிகளே நிறைந் திருக்கிறார்கள் என்பதுதானே. இதை அறிவுடையவர் நன்றாய் அறிந்து வருகின்றார்கள். கட்சிகள் ஆ, ஊ என்று கிளப்பும் கூச்சல்களுக்கு ஏதாவது பொருள் உண்டா? பொருள் உண்டு என்றால் அது பொது மக்களிடம் பறிக்கும் பொருள் உண்டு என்றுதானே கொள்ள வேண்டும். அதுதானே! நடப்பதும்! ஏன் தமிழகத்தின் மானத்தைக் காக்கத் தமிழர்கள் என்பவர் அனைவரும் ஒன்றுபடவில்லை? ஏன் தமிழுக்கு உயிர்விடத் தயக்கம்! தமிழைக் காட்டிக் கொடுப்பதில் கட்சித் தலைவர் அனைவர்க் கும் இருந்து வரும் காட்டிக் கொடுக்கும் போக்கை ஏன் நீக்கிக் கொள்ளக் கூடாது பொதுமக்கள் கேழ்வரகு வாங்கும் பணத்தை யும் கட்சிக்குக் கொடுத்து வந்தார்களே! சிறைக்குப் போ என்றால் பிள்ளை குட்டிகளுடன் பாயைச் சுருட்டிக் கொண்டு பழந்துணியை மூட்டைக் கட்டிக்கொண்டு புறப்படவில்லையா? அவர்கள் இப்படி ஊசலாடும்போதும், தமிழின் மானம் கப்பலேறும் போதும் இந்த விளையாட்டா? காக்காய் பிடிக்கும் வேலையா, காசு சுரண்டும் திருத்தொண்டா? நாளேடுகள் தமிழகத்தில் வளர்ந்து வருகின்றன? அவை என்ன செய்கின்றன? காமராசரிடம் காக்காய் பிடிக்கின்றன. ஏன் கோட்டா வுக்காக? பெர்மிட்டுக்காக? ப ரூட்டுக்காக! என்று தொலையும் இந்த மானங்கெட்ட போக்கு! கட்சிக்காரர்களே, நாளேடுகளே, உங்களுக்கு மான மிருந்தால் இந்தி நுழைவு நீங்க தமிழன்னை குறைபாடு நீங்க எல்லாரும் இன்றே ஒன்றுபட்டுச் செயல் தொடங்க வேண்டும். - குயில், கிழமை இதழ், 18.10.1960, ப. 2 - 3 30. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் இஃது உலகநீதிச் செய்யுளில் ஒன்று. இதன் பொருள் வருமாறு: கோயில் - அரசியல்; இல்லா - இல்லாத ஒழுங்கு முறை யமையாத ஊரில் - ஊரிலே, குடியிருக்க வேண்டாம் - குடியிருக்கக் கூடாது என்பதாம். கோயில் என்பது அரசன், அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதைப் பழம்தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும். மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும் என்ற சிலப்பதிகார அடிகளையும் நோக்குக! அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன? அஃது அமையாத இடம் என்றால் என்ன? என்பதை ஆராய வேண்டும். பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத்தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டுவந்தான். இவ்வாறு ஒழுங்குமுறை வகுக்கப்படாத காலம் ஒன்றிருந் திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாகவே இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது. அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது. ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது. கோயில் என்பதற்கு, உருவமைந்துள்ள கலகத்துக்கும், மானக்கேட்டிற்கும் மூடத்தனத்திற்கும் ஆதாரமாக இருந்து வரும் இடங்கள் என்று பொருள் கொள்வது தவறு. திருவள்ளுவரும் உருவ வணக்கத்தை எதிர்க்கிறார் என்பதை மனத்தில் கொள்க! - குயில், கிழமை இதழ், 18.10.1960, ப.4 31. குருசாமியைவிட சனார்த்தனமே மானி குருசாமியைப் போல் கூட்டத்திலிருந்து கொண்டே கையில் கொடுவாள் ஏந்துவதைக் காட்டிலும் சனார்த்தனம் போல் நான் இந்தக் கூட்டத்தை விட்டு நீங்கிக் கொள்ளுகின்றேன் என்று கூறுகின்றவர் ஆயிரம் பங்கு நல்லவர். குருசாமி தி.க.வில் இருப்பதைவிட சனார்த்தனம் விலகிக் கொள்வதால் தி.க.விற்குத் தீமை ஏற்படாது. நல்லவர் எங்கிருப்பினும் நல்லவரே! சனார்த்தனம் எங்கே சென்றாலும் நல்லவரே! தீயவர் எங்கும் இருப்பினும் தீயவரே. குருசாமி எங்குச் செல்லினும் நல்லவராகிவிட மாட்டார். சனார்த்தனம் தி.க.வில் இருந்தவரைக்கும் அவரால் இயக்கத் திற்கு எந்தத் தீமையும் இல்லை. அவர் எவரிடத்திலும் இலஞ்சம் வாங்கியதில்லை. காமராசரிடம் தூது போவதாகக் காட்டிக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றிப் பணம் அடித்ததில்லை. தேர்தலில் கூட்டம் போட்டுப் பேசிக் காங்கிரசை வெற்றி பெறச் செய்வதாக மொத்தக் குத்தகையெடுத்துக் காங்கிரசிடம் குத்தகைக்கு முற்பணமாகப் பெருந்தொகையை அடித்து மெத்தை வீடு கட்டிக் கொள்ளவில்லை. கார் வாங்கவில்லை. விடுதலையைப் பிடித்துக் கொண்டு பொதுமக்களிடம் பிச்சை எடுக்க அதைக் கருவியாக்கிக் கொள்ளவில்லை. சனார்த்தனம் இயக்கத்தை விட்டுப் போய்விட்டார். குருசாமி தலைவராயிருக்கும் இயக்கத்தில் பலர் இன்றும் இருக்கின்றார்கள்? இதில் நமக்கேற்படும் ஐயம் என்ன என்றால் இருக்கின்றனர் என்பவர்கள் ஏன் இருக்கின்றார்கள் என்பதுதான்? சனார்த்தனம் போய்விட்டார்! மானம் உடையவர் போய் விட்டார்! இயக்கத்தில் இருப்பவர்கள் இயக்கம் இன்று போய்க் கொண் டிருக்கும் இழிவான பாதையினின்று அதைத் தடுத்து நல்வழிப் படுத்த வில்லை என்றால் என்ன பொருள்? இயக்கம் இருப்பதாகவா பொருள்? பெரியாரின் ஈரலுக்கு மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கும் முதலைகளை அவர் ஏன் விட்டு வைத்திருக்கிறார்? என்பது பெரியாருக்குப் புரியலாம். நமக்குப் புரியுமா? நமக்கு எது புரிய வில்லையோ எது சரியல்ல என்று தோன்றுகின்றதோ அதை நாமும் விட்டு வைத்துக் கொண்டு போவோமேயானால் நாம் மனிதர் என்றாவது மதிக்கப் படுவோமா? இவ்வளவு தீய மனிதனுக்குப் பெரியார் அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலை என்ன இருக்கிறது? அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் அந்தத் தீயவனின் போக்கை விட்டு வைப்பதைவிட இயக்கத்தைக் கலைத்து விடுவது ஆயிரம் பங்கு நலம் பயப்பதாகுமே! - குயில், கிழமை இதழ், 25.10.1960, ப.2, 3 32. உள்நாட்டுப் போரா? புதுச்சேரி அமளி குமுளி படுகின்றது. புதுச்சேரிப் பொது மக்கள் கொதிப்புற்றிருக்கிறார்களாம். அமைதி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டதாம். டில்லி அரசும் விழிப்போடுதான் இருக்கிறதாம். தலைமைப் போலீசு நிலையத்தில் ஆயுதங்கள் ஆயுதப்படுத்தப் படுகின்றனவாம். நிலைமையை விளக்கிப் பிரஞ்சு நாட்டுத்தலைவர் தெகோலுக்குத் தந்தி பறக்கின்றனவாம். அந்தப் பேச்சைக் காதிலே கேட்டான் நவாப் சைதுல்லா என்பதுபோல் அதையும் டில்லியினர் தெரிந்து கொண்டு போர் ஆயத்தம் செய்கின்றார்களாம்! சும்மாவா இருப்பார்கள்! இவ்வாறு மக்களுக்கும் அரசினர்க்கும் எதிர்பார்க்கப்படும் இந்த உள்நாட்டுப் போருக்கு என்ன தேவை ஏற்பட்டுவிட்டதோ நமக்குத் தெரியவில்லை. புதுவை அரசை - புதுவை ஆட்சியை யூனியனிடம் சிக்கற ஒப்படைக்கவேண்டிய தெகோல் அப்படி ஒப்படைக்கக் காலம் தாழ்த்துவது சரியல்ல என்பது டில்லியரசின், புதுவையில் கம்முய் னிடு கட்சியின் முடிவான கருத்து! அதுபற்றி அவர்களிடம் விட்டுப்போன புதுவை ஆட்சியை யூனியனாக மாற்றியமைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அவர்கள் ஆயுதங்களின் அடியில்தானே புதுவை மக்கள் அகப்பட்டு விழிக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் யூனியன் கட்டத்திற்கு ஒத்தவாறு மாற்றிக்கொண்டு வருகிறார்கள், கடைசியாக! பிரஞ்சு சட்டப்படி அமைந்த நீதி இலாக்காவிலிருந்து, பழய நீதிபதிகளுக்கும் அமைப்பு முறைக்கும், இங்கு அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் பிரஞ்சு வக்கீல்களுக்கும் கல்தா கொடுக்கத் தொடங்கி வேலையை யும் தொடங்கிவிட்டார்கள் என்றால் இதில் வியப்போ ஓக்காளிக்க வேண்டிய பகுதியே என்ன இருக்கிறது. யூனியன் வரட்டும் என்று கையொப்பம் மக்களிடம் வாங்கியதற்கா வக்கீல்கள்தாமே! செல்ல நாய்க்கர் பிரஞ்சு நீதி இலாக்காவை ஒழித்துக் கட்டத்தான் வேண்டும் என்றும் நீதியிலாக்காவை ஒழித்துக் கட்டி விட்டுத் தம்மையும் இசுமாயில் சாயபுவையும் யூனியன் சார்பில் தலைவர்களாய் அமைத்துக் கொள்ளும்படியும் சொல்லவில்லையா? இதையெல்லாம் விட்டுவிட்டு, பிரெஞ்சு வக்கீல் மார் மக்களை இப்படிக் கிளப்பிவிடுவதால் ஏற்படும் உயிர் இழப்புக்குப் பொறுப் பேற்பார்களா அவர்களா? - குயில், கிழமை இதழ், 25.10.1960, ப.4-5 33. பெற்ற மனத்தில் சிவாஜி கணேசனை இன்னொரு முறை போய்ப் பாருங்கள் (1) நினைத்தாலும் நெஞ்சில் எட்டிக்காய்ச் சாறு வடியும்! தமிழர்க்குக் கசப்பு நாள் தீபாவளி நாள். இரத்தப் பனைவரி என்பது ஒரு கொடிய அம்மை நோய்க்குப் பெயர். எதிர்த்த வீட்டுக்காரிக்கு அந்த அம்மை நோய் கண்டது. அவள் ஐந்து பிள்ளைகளைப் பெற்ற அச்சுப் பாவை, நோய் கண்ட மூன்றாம் நாள் அவளைப் பழந்துணியில் சுருட்டிப் பாடையில் வைத்துக்கொண்டு போய்ப் புதைத்து வந்துவிட்டான் தலைவன். அவனுக்கு எவ்வளவு மனத்தொல்லை இருக்கும்? அவ்வளவு மனத்தொல்லையை உண்டாக்குவது தமிழனுக்குத் தீபாவளி. அந்தத் தலைவனுக்குத் தலைவியைப் பறிகொடுத்த அந்த நாள் என்றால் எத்தனை அருவருப்பு இருக்கும். அத்தனை அருவருப்பைக் கொடுப்பது தீபாவளி என்ற நினைவே! அந்தத் தலைவன் அந்தப் பனைவரி அம்மை நோயை எப்படித் திட்டுவான்? உண்மைத் தமிழன் அப்படித் திட்டுவான். அந்தத் தீபாவளி நாளை. பெரிய ஒரு தமிழர் தலைவனைப் பெண்ணைக் காட்டி மயக்கிக் கொன்ற ஆரியப் பாவியின் காரியத்தை மழுப்பவும், தமிழர்க்கு ஏற்பட்ட பேரிழவை அவர்கள் பொறுத்துக் கொள்ள வும் வழக்கத்தில் வைத்த அந்தத் தீபாவளிக்குச் சிறப்புச் செய்ய வந்தன ஐந்து படங்கள். தீபாவளிக்கு ஐந்து புதிய திரைப்படங்கள் வந்தன. எந்த நாட்டிலும் இயலாத புதுமை இது! ஓசி நுழைவல்ல; பணங் கொடுத்தே போய்ப் பார்த்தேன். மூன்று நாளில் ஐந்து படத்தையும். அவைகளில் கண்ணுக்கு விருந்தாக்கிப் போட்டதும், கருத்துக்கு இலக்கியத்தைச் சொரிந்ததும் சிவாஜி கணேசன் நடித்த பெற்ற மனம் ஒன்றுதான். கடலைப் பார்க்கின்றோம். கடல் இயற்கையின் ஒரு பகுதி. எதிர்பார்க்கும் மகிழ்ச்சியை அதில் அடைய முடியவில்லை. ஒரு தாளின் ஓரத்தில் ஆளையே மயக்கும் கடற்படம். அது அறிவை அழைத்துக் கொண்டுபோய் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றது. தாளும் நினைப்பில் இல்லை. தாளில் எழுதிய ஆளும் நினைப்பில் இல்லை. கடல் அலைகளின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு கின்றோம். தாளையும் ஆளையும் மறக்கச் செய்தது எது? மனிதன் திறமையின் வெற்றி! அது கலை! பெரியாரை நேரிற் பார்க்கிறோம். நேரிற் பார்க்கும் பெரியார் இன்னும் சற்று நேரம் என்னிடம் இரு என்று சொல்வதில்லை; இன்னும் சற்றுநேரம் என்னுருவத்தைப் பார்த்துக் கொண்டிரு என்று அவர் கூறுவதில்லை. இன்னும் சற்று நேரம் என் பேச்சினிமையை அள்ளிப் பருகிக் கொண்டிரு என்று சொல்வதில்லை. ஆனால் சிவாஜி கணேசன் நடிப்பினில் தோன்றும் பெரியாரை நாம் பிரிய முடியவில்லை. அவர் உள்ளத்தை அவர் பேச்சை நுகர்ந்து கொண்டே இருக்க ஆசைப்படுகின்றோம். பெரியாரைக் காண நாம் காட்சியளவில் அல்ல. கலையளவில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த அருஞ்செயலைத்தான் சிவாஜி கணேசனின் திறமையின் வெற்றி என்கின்றோம். இன்னும் ஒருமுறை பெற்ற மனத்தில் சிவாஜி கணேசனிடத்தில் பெரியாரைக் கண்டு மகிழப் போகும்படி உங்களுக்கு நினைவூட்டுகின்றேன். (தொடரும்) - குயில், கிழமை இதழ், 1.11.1960, ப. 2 - 3 (2) சென்ற இதழ் தொடர்ச்சி... பெரிய இடத்துப் பையன் ரௌடியாய்த் திரிகின்றான். கண்ட பெண்களைக் கண்ணடிப்பது, கைலி கட்டிக்கொண்டு அதைப் பின்னால் தூக்கிப் பிடித்தபடி உலவுவது, எல்லோருக்கும் முன்னே சிகரேட் பிடிப்பது ஆகிய இடங்களிலெல்லாம் நாம் சிவாஜி கணேசனைக் காணமுடிவ தில்லை; அறநெறியே அறியாத ஒரு காலாடிப் பையனையே காண்கின்றோம். அவன் கண்களில் காலாடித்தனம்; உதட்டின் ஓரத்தில் காலாடித் தனம்; சொற்களில் காலாடித்தனம்; ஒவ்வோரசைவிலும் காலாடித் தனமே தாண்டவமாடுகின்றது. அவனுக்கு ஏழ்மை என்பதே இன்னது என்று தெரியாது. பஞ்சம் என்பதை வினவறிந்த நாள்முதல் பார்த்தறியாதவன். அவன் நுகரும் செல்வம் அழியாதது; எவராலும் அசைக்க முடியாதது என்ற அவன் நெஞ்சத்தை நடிப்பின் கொஞ்சத்திலேயே காட்டி விடுகின்றார் நடிகர் திலகம். வளர்ப்புத் தாயையும் தந்தையையும் சொந்தப் பெற்றோர் என்றே அவன் நம்புவதால் தானொரு செல்வப் பிள்ளை என்று காட்டுகின்றன கண்கள். அவன் அவர்கள் பேச்சைக் கேட்பதே இல்லை. அயலார்க்கு அவனால் தீராத தொல்லை. இவ்வாறு நந்துருணித் தனம் காட்டும் அந்தப் பயலை உதைக்கலாமா என்று தோன்றுகின்றது பார்க்கும்போதெல்லாம். ஆனால். அடுத்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம் எளிமையிலும் நோயிலும் கிடந்து உழலும் அந்த ஒருத்திதான் தன் தாய் என்று அறிய நேர்ந்து விடுகின்றது. காணவேண்டுமாம். விரைவில் காண வேண்டுமாம். துடிக்கின்றான் பையன். கோகோவென்று அழுகின்றான். துன்பத்துக் குரிய நடிப்புக் கட்டங்கள் எத்தனை உண்டோ அத்தனையிலும் வாகை சூடுகின்றான் அந்தப் பையன். எத்தனை முகமாற்றங்கள்! எத்தனைகுடம் கண்ணீர்! எத்தனை கோடி உடலின் வியர்வைத் துளிகள்! அத்தனையும் அப்படி அப்படியே. பெருஞ் செல்வத்தில் புரள்பவனும், வருந்தும் நிலையி லுள்ள பெற்ற தாயையே பெரிதும் விரும்புவான் ரௌடித்தனத்தி லிருந்தும், அவிழ்த்துவிட்ட காளைத் தனத்திலிருந்தும் ஒருவனை இயற்கை முறையில் இழுக்கும் காந்தம் பெற்ற மனம். தன் நடிப்பின் திறத்தால் இந்த இயற்கை உண்மையை - மறுக்க இயலாத தருமத்தை விளக்கினார் அந்த இலக்கியத் தந்தை. இந்த நூற்றாண்டின் தனி ஒரு நடிகர் அவர் பெயர் சிவாஜி கணேசன். மற்றொருமுறை பெற்ற மனம் பார்க்க. - குயில், கிழமை இதழ், 8.11.1960, ப.2, 15 34. புதுவை ஐ கமிஷனருக்கு நாட்டுப்புறத்தான் வெளிப்படை அஞ்சல் ஐயா புதுச்சேரி அய் கொமிஷனரே, கும்பிடறேன். நானு முன்னெல்லாம் என் குறைபாடுகளை திருவரங்கப் பெருமாளிடத்தில் சொல்லறது வழக்கம். இப்ப அவுரு இல்லே. திகிதிகிண்ணு எரிஞ்சிப்புட்டாரு. பாப்பாரப் பசங்க துணியிலே எழுதி வைச்சிக்கிட்டுப் பொழக்கின்றானுவ. இப்போ என் குறையை உங்களிடந்தான் சொல்லணும். நீங்கதான் எனக்கு வடக்குமலையான். அதுமில்லாமே சேஷன் சப்ளை பண்ற சயனன் அதாவது நீங்கதான் எனக்கு சேஷசயனன். இன்னொரு தடவை ஒங்களுக்குக் கும்பிடறேன். சானகி ரமணா! லட்சிமிகாந்தா! பெருமா கோயில் தெருவிலே - ராத்திரியிலே தூங்க முடியுலே. கடைசியா 24ம் நாள் இரவுகூட, சரியா 2 மணி வரைக்கும் கொங்கம் பட்டான் பாலசுப்ரமணியன் ப செர்வி, கருமார் பட்டரை ஓச்சல் ஒழிசல் இல்லாமே டமார் வேலை நடந்துகொண்டுதான் இருந்தது. இது மெய்யிங்க. உட்டேண்ணுங்க! பெருமா கோயில் தெருவு எவன் அக்கா தங்கச்சி ஊர்மேலே போயி சம்பாரிச்சது? கொங்கம்பட்டானை இதுக்காகப் பெரியக்கடை போலீசு முன்னியே கூப்பிட்டு கண்டிச்சு இருக்குது. அப்பறமும் கொங்கம்பட்டு அடங்காமே இரவிலே டமார் டமார் போட்டதுக்காக அபராதமும் வாங்கியிருக்குது. அப்பறமும் இப்படியே பண்ணி வருது. ஐ கொமிஷனர் ஏழுமலையானே, அந்தக் கொங்கம்பட்டானை நீங்க நேரே கூப்பிட்டுக் கொங்கம்பட்டான் செய்ற போக்கிறித்தனம் மெய்தா னாண்ணு பாத்து கொங்கம்பட்டான் ப லைசன்ஸே புடுங்கிக் கொண்டு கொங்கம் பட்டானைக் குடுமியே புடிச்சி இழுத்தும் போய் கொங்கம்பட்டிலே வுட்டுட்டு வந்தா நல்லதா இருக்கும். பொதுவா, ரெட்டிவோ, முன்னெல்லாம் ரெட்ட மாட்டு வண்டியிலேதான் பொண்டாட்டியை ஏத்தி, வீட்டு ஆளை ஓட்டச் சொல்வாங்க. வண்டி ஜோரா போய்க்கினே இருக்கும். ரெட்டிமார் கொல்லை வெளிவேலையை மட்டும் நல்லா கவனிச்சு வருவாங்க. அதனாலே நெலம் நல்லா வெளிஞ்சி வந்தது. இப்ப என்னாண்ணா ஆளுக்கொரு காரு வாங்கிக்கினு, புதுச்சேரி உள்ள புகுந்து கலகம் பண்ணிகினு கெடக்றாங்க. இது மெய்யிங்க! உட்டேண்ணுங்க. ஐ கொமிஷனர் கோவிந்தா, இந்த கொங்கம்பட்டான் கொட்டத்தை அடக்கிக் குடுங்க. சேஷசயனா நீங்க மட்டும் சேஷன் மேலே நல்லா தூங்கிட்டா போதுமா? நாங்க மட்டும் கோஷ சயனர்களாகிச் சாகவேணுமா? கொஞ்சோண்டு அருள்பண்ணுங்க. - குயில், கிழமை இதழ், 1.11.1960, ப.5 35. அரிசி சோம்பலை உண்டாக்குமா? இப்படிச் சொன்னவர் நேரு பத்தாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் அரிசிச்சோறு உண்டு வருகின்றார்கள். அவர்களிடம் சுறுசுறுப்புக்குக் குறைவிருந்ததாக ஒரு தகவலும் இல்லை. எந்த ஆராய்ச்சிக்காரனும் அரிசியை எதிர்த்த தில்லை. அன்றும் இன்றும் அறிவிற் குறைந்துவிடவில்லை தமிழர்; வீரத்தில் குறைந்ததாக வரலாறு இல்லை. அரிசிச் சோறு சோம்பலை வளர்க்கும் என்று நேருதாம் இன்று கூறுகின்றார். சிலகால், இன்று அரிசியின் தரம் குறைந்து போனதோ என்னமோ! அப்படியானால் கோதுமையின் தரமும் குறைந்து போகாமல் இராது. இன்றைய நிலையில் அரிசிச் சோறும் கோதுமைச் சோறும் தம் தரத்தில் மாற்றமடைந்துதான் இருக்கின்றன என்றால் அதுபற்றி நாம் எண்ணித்தான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். கோதுமை அரிசிச்சோறு உண்பவர்கள் ஏமாற்றும் ஆற்றல் வாய்ந்தவர்கள்; மேலும் அவர்கள் அறநெறியினின்று வழுவு கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். அரிசிச் சோறு உண்பவர்களை ஏமாந்த சோணகிரிகள்; அற நெறியினின்று உயிர் போனாலும் தவறாத நேர்மையுடையவர்களா யிருக்கின்றார்கள். இவைகளை விட்டுக் கோதுமை சுறுசுறுப்பை உண்டாக்குகின்றது என்றோ அரிசி சோம்பலை உண்டாக்குகிறதென்றோ சொல்வதில் ஒரு சிறிதும் உண்மையில்லை. நேரு அவர்கள் நிரம்பப் படித்தவர். அவர் சொல்லை இலேசாகத் தள்ளிவிடவும் நாம் எண்ணவில்லை. ஒருகால் கோதுமை உண்பவர்கள் அறிவாளிகளாய் இருக் கின்றார்களோ என்னமோ! அரிசியுண்ணும் தமிழரிடம் அறிவு குறைந்திருக்கிறதோ என்னமோ - இது ஆராயத்தக்கதே. அப்படிப் பார்த்தாலும் கோதுமை உண்ணுகின்றவர்களில் இருக்கும் அறிவாளிகளைவிட, அரிசி உண்ணுகின்றவர்களில் மிகுதி யானவர் அறிவாளிகளாயிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். ஒருவகையில் நேரு சொல்லில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. தமிழர் அரிசிச்சோற்றை மறந்துவிட்டால் நேரு அவர்களின் முட்டாள்தனமான அறத்திற்கு அயலான நடவடிக்கையைத் தமிழர் எதிர்க்க மாட்டார்கள், பின்பற்றுவார்கள்; தமிழ்ப்பற்று ஒழிந்துவிடும். எதிர்ப்பாற்றல் தொலைந்துவிடும் என்று கருதுகின்றாரா? இப்படிப் பார்த்தால் நேரு சொற்களில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. - குயில், கிழமை இதழ், 8.11.1960, ப. 3, 13 36. தெய்வம் இகழேல் இது மெய்யுணர்வுடைய தமிழ்ச் சான்றோர் உருவ வணக்கம் உடையவர்களை நோக்கிச் சொன்னது. எங்கள் தெய்வம், ஆடுகள், கோழிகள், பன்றிகள் அறுத்துப் படையல் போடச் சொன்னது என்று கூறி அவ்வாறே கொலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கூறியவர்கள் இவ்வாறான கொலைத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், தம்முடைய ஆசையின் பொருட்டுச் செய்வதாகச் சொல்வது இல்லை. தெய்வம் இப்படித்தான் செய்யச் சொன்னது என்கின்றார்கள். தெய்வம் இவ்வாறு கேட்குமா? இவ்வாறு கேட்கும் என்றால் தெய்வமாகுமா? கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க எல்லாருக்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே! என்ற தாயுமான அடிகளின் கருத்தை நோக்கினால் தெய்வத்திற்குப் பன்றி வெட்டும், கோழியறுப்பும் உவப்பாக மாட்டா என்பது தெரிகின்றதல்லவா? இதற்கு மாறாக எங்கள் தெய்வம் அந்தக் கொலைத் தொழிலை விரும்புகிறது என்பவர் தெய்வத்தை இகழ்ந்தவர் அல்லவா? அவர்களை நோக்கியே தெய்வம் இகழேல் எனப்பட்டது. தெய்வம் என்று சொல்லியது எதை? ஓருருவும், ஒரு பெயரும் வேண்டுதல், வேண்டாமை இல்லாத ஒன்றை சொல்லியது என்க! மற்றும் தெய்வம் என்ற சொல்லாற் பெறப்படும் பொருள் எது என்பதையும் நோக்குக! தெய்வம் என்பதின் முதற்கண் உள்ள தெய் என்பதற்குக் கொல்லுவது; விழுங்குவது என்பவையே பொருளாகும். தெய் என் கிளவி கொள்ளலும் கோறலும் என்ற பிங்கலந்தை யடியையும் நோக்குக. அறிவு நிரம்பாத காலத்தில் காற்றையும், மழையையும், நெருப்பையும் தெய் என்று கூறி வெறுத்தார்கள். அறிவு வளர வளர அவற்றின் பயனை அறிந்தார்கள் வாழ்த்தினார்கள். ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும் முதலிய வற்றை நோக்குக! இதனால் தெய் என்னும் அடியாகப் பிறந்த தெய்வம் என்பதின் பொருள் பயன் விளைவிப்பவை என்றாவதை ஊன்றி உணர்தல் வேண்டும். ஞாயிறு, திங்கள், வான், நீர், தீ, காற்று, மண் என்பனவும், அவைகளின் வழியில் தோன்றிய மழை, மலை முதலியனவும் தெய்வங்கள் அல்லவா? அவைகளை இகழ்தல் நன்றா? ஆதலால் தெய்வம் இகழேல் என்று கூறியருளினார்கள் தமிழ்ச் சான்றோர் எனவும் கொள்க! - குயில், கிழமை இதழ், 15.11.1960, ப. 2, 3 37. விடாமழையில் தமிழகம்! சிவாஜிகணேசனார்க்கு மக்கள் வாழ்த்து தொல்லைக்கு அரசினர் தூக்கம் காரணம் ஏறத்தாழ இருபது நாட்களாக விடாமழை வேலைசெய்து கொண்டிருக்கிறது. ஆனால் வேளாண்மைக்கு வேண்டிய அளவுதான் மழை பெய்திருக்கின்றது. அப்படியிருக்க, மழை துவங்கிய நாலைந்து நாட்களிலேயே மக்கள் மழையைப் பழிக்கத் துவங்கிவிட்டனர். மழை அளவுக்கு மிஞ்சிப் பெய்து தொல்லையை உண்டு பண்ணி விட்டதாம். ஏரிகள் அனைத்தும் கரை உயர்த்தப்பட்டிருந்தனவா? ஆழ மண்ணெடுக்கப்பட்டிருந்தனவா? பள்ளத்தில் கிடக்கும் குடித்தன வட்டாரங்களைத் திரும்பிப் பார்க்கப் பட்டனவா? இந்தக் காலத்து ஆட்சியாளர்க்கு இவைபற்றிய நினைவு உண்டா? அறிவு உண்டா? அந்தக் காலத்துத் தமிழரசர்க்குத் தமிழ்ப் புலவர்கள் ஏரியில் மண்ணெடு! கரையை உயர்த்து! வாய்க்கால் வரப்பில் மனத்தை ஊன்று என்று சொல்லி வைப்பார்கள்; நினைவுறுத்துவார்கள். தமிழரசரும் அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் கொண்டு செய்து வருவார்கள். அவ்வாறு புலவர்கள் சொல்லியதையும் அரசர் செய்து வந்ததையும் இன்றைக்கும் தமிழ்ப் பெரு நூற்களிற் காணலாம். காணலாம்! ஆட்சியாளர்க்குத் தமிழ் தெரிந்தால்தானே! அடைமழையாலும், பெருவெயிலாலும் இவைபோன்ற பிறவற்றாலும் குடிகட்குத் தீமை நேராமல் முன்னேற்பாடாக அரசு என்ன செய்யவேண்டும் என்பதற்குப் பச்சைத் தமிழ்ச் சான்றோர் அருளிவைத்த தமிழ் நூற்கள் இன்றும் கட்டுக் கட்டாய் இருக்கின்றன. எவன் தமிழரை மதிக்கின்றான்? எவன் தமிழை மதிக்கின்றான்? எவன் தமிழைப் படிக்கின்றான்? அதற்கு மாறாகக் குட்டி நிலவு செய்கின்ற மட்டிகளின் நாட்டுக்குப் போய் வந்து அந் நாட்டைப் புகழ்ந்து பேசுவதில் பெருமை கொள்ளுகின்றான். இதோ குடிசைகளிலெல்லாம் வெள்ளம் புகுந்துவிட்டதே. தெருக்கள் அனைத்தும் வெள்ளத்தின் உள்ளே மாட்டிக் கொண்டனவே, ஏரிகள் உடைந்துவிட்டனவே, குளங்கள் இருப்பிடம் தெரியவில்லையே. பாயையும், தலையணையையுமாவது தூக்கிக்கொண்டு மேட்டு நிலத்தை நோக்கி ஓட்டம் பிடிக்கலாமா என்று நினைத்த காலையில், அவர்களின் கண்கள், பாயும், தலையணையும் வெள்ளத்தில் ஓடும் காட்சியைக் காணுகின்றன. அதே நேரத்தில் மேட்டு நிலத்தின் வீட்டுக் காரர்கள் எங்கள் வீட்டுக்குள் யாரும் நுழையக்கூடாது என்று கோலைத் தூக்கிக் கொண்டு வாயிலில் நிற்கிறார்கள். பிள்ளை யழுதாலும் தாய்க்குக் காது கேளாதிருக்கலாம். வயிற்று வலிக்காரனுக்கும் அதை மறந்திருக்கும் நேரமும் இருக்கலாம். ஆனால், பசியுடையவனுக்கு அதை மறந்திருக்கும் நேரம் ஒரு சிறிதும் இராது. இன்று புதுமையான செய்தி என்னவென்றால், குடரை எதிர்க்கும் மக்கள் பசிகூட நெஞ்சிற்படவில்லை. பிள்ளை குட்டிகளைச் சாக்காட்டி னின்று மீட்டு அடுத்த மணி நேரத்தை அடைவது எப்படி? - இந்த அச்சந்தான் ஏழை மக்களின் நெஞ்சத்தை அள்ளிக் கொண்டிருக் கின்றது. சேலையில்லை என்று சிற்றப்பன் வீட்டுக்குப் போகின்றாளாம் ஒருத்தி, ஓலையைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம் சிற்றப்பன் மனைவி; சிற்றாத்தாள்! உறையுள் இல்லை. உணவு இல்லை என்று தண்ணீரில் நீந்தி ஓடுகின்ற ஓர் ஏழைக் குடும்பம், அதே போன்ற ஓர் குடும்பத்தை, அதே அழுகையை எதிரில் காண்கின்றது. ஆதி மூலமே என்று அலறிய யானைக்கு அஞ்சேல் என்று ஓடிவந்து அருள்செய்தானாம் பறவையில் ஏறும் பச்சை மேனியன். அந்தப் பறவை படும் பாடு ஆலைவாய்ப் பஞ்சு படுமா இந்த மழையில், பச்சை மேனியனும் கச்சிதமாய் எரிந்து சாம்பராய் விட்டான் திருவரங்கத்தில். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க இன்று யாருளார்? ஏரிகள் எல்லாம் ஆழமாக்கப்பட்டிருந்தால்! கரை உயர்த்தப் பட்டிருந்தால்! குடிசைகளை எல்லாம் கட்டடமாக்கியிருந்தால்! பள்ளத் தாக்குகள் எல்லாம் மேடாக்கப்பட்டிருந்தால்! தெருக்களைச் செப்ப னிடும் ஒப்பந்தக்காரர்களிடம் அதிகாரிகள் இலஞ்சம் வாங்காதிருந் தால்! வாய்க்கால்கள் வரப்புகள் செம்மை செய்ய உடையவர்கட்கு அரசினர் உதவி செய்திருந்தால்! பெருவாய்க்கால்கள் அரசினரால் சீர்திருத்தம் செய்யப்பட்டிருந்தால்! ஆளுவோர்க்குத் தமிழ்நூல் அறிவிருந்தால்! மக்கள் தலைவர் கட்குத் தமிழன் இருந்தால்! தமிழ்ப் புலவர்களை மதித்திருந்தால்! கண் திறந்தால் நெஞ்சந் திடுக்கிடும் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? தமிழகமே! என் அன்னையே! சென்னைப் பெரும் பகுதியை வைத்து எண்ணிப்பார். ஓர் இளைஞர், சிவாஜி கணேசன் அருளே திருமேனியாய்க் கொண்டவன். இன்று இல்லாவிட்டால் மக்களின் ஏக்கம் எவ்வாறு தீரும்? (தொடரும்) - குயில், கிழமை இதழ், 22.11.1960, ப.1 - 4 சென்ற இதழ் த் தொடர்ச்சி விடாமழையில் தமிழகம்! சென்னை மாவட்டம் முழுதும் இலக்கக் கணக்கான மக்கள் மழையால் வீடிழந்தனர். வீட்டிலுள்ள பொருள்களை இழந்தனர். எங்கே அடுப்பு மூட்டுவார்கள்? எங்கே குந்துவார்கள்? எங்கே படுப்பார்கள்? ஒன்றுமே புரியவில்லை. ஆங்காங்குள்ள பெரிய வீடுகளில் ஒண்ட இடங்கேட்டுத் திரிகின் றார்கள். கணவன் மட்டுமா? அவன் மனைவியும் தொடர்கின்றாள். குழந்தைகள் முந்தாணியைப் பிடித்தபடி பின் தொடர்கின்றார்கள். பெரிய பிள்ளைகள் பசியால் பள்ளிக்கூடத்தையும் மறந்துவிடுகின் றார்கள். தெருக்களில் வெள்ளம்! வீடிழந்து வெளிவந்த ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் நீந்தவேண்டிய தொல்லை தொலைந்த பாடில்லை. வெள்ளத்தின் மேலெல்லாம் தட்டுத் தடுமாறி நடக்கும் மக்கள் தொகை இரங்கத்தக்க காட்சி! உணவுக்கு என்ன செய்வது? பிள்ளை குட்டிகளைக் காப்பாற்று வது எப்படி? இந்த நிலையில் சிவாஜிகணேசன் வெள்ள நிவாரணக் கமிட்டி என்ற முகவரிப் பலகையோடு வட்டாரந்தோறும் கார்கள், எங்கும் மக்களை அணுகுகின்றன. குழம்பிட்டுப் பிசைந்த சோறும், கறியும் வைத்துக் கட்டிய பொட்டலங்களை நீட்டுகின்றன கமிட்டியின் தொண்டர் கைகள். அவாவோடு வாங்குகின்றன அந்த குளிரால் நடுங்கும் எளிய கைகள்! வட்டாரந்தோறும் இவ்வாறு வாடும் மக்களைக் காண்போர் வருந்துகின்றார்கள். காண்பார் வாய் எல்லாம் - சிற்றூர் தோறும், பேரூர் தோறும் சிவாஜி கணேசன் வாழ்த்து! - குயில், கிழமை இதழ், 29.11.1960, ப.8 38. புதுவை முதல் நீதி சன்னிதானத்தின் கிறேப்பியேவின் தில்லு முல்லு புதுவை முத்தியாலுப்பேட்டை, டைலர் சித்தாநந்தம் அவர்களின் மனைவி பவுனாம்பாளுக்கு கிறேப்பியே (ஜெகநாத ஐயங்கார்) ஓர் அறிக்கை (கையொப்பமிட்டு) அனுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையின்படி பவுனாம்பாள் 29 ரூ. 35 புதுக்காசு அரசினர்க்கு கட்டியாக வேண்டும். பவுனாம்பாளின் கணவர் டைலர் சித்தாநந்தம், கொள்ளைக்காரர். எதிர்பார்த்தபடி ஏமாந்துவிட வில்லை. சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் எத்தனை உண்டோ அத்தனை யிலும் சென்றார். அலுவல்காரர்கள் அத்தனை பேரையும் கேட்டார். இந்த வேலை தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தன. எதற்காக என் கைப்பணத்தை இழக்க வேண்டும்? என்ன காரணம்? - இதுதான் சித்தாநந்தம் அவர்களின் கேள்வி: இவரைக் கேட்டால் அவரைக் கேள். அவரைக் கேட்டால் இன்னொருவரைச் சொல்லி அவரைக்கேள்:- நாலு நாட்கள் தீர்ந்தன. ஏறத்தாழப் பத்து ரூபாய் செலவு. ரோமான் என்னும் உசியே சித்தாநந்தத்திடம் சொல்லியுள்ள சேதி மிக வியப்பானது. கட்டத்தான் வேண்டும். ஆனால் நீர் 15 ரூபாய் கொண்டு வந்து என்னிடம் கொடு. எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணி விடுகின்றேன் என்பது. கடைசியாக கிறேப்பியே பீரோவில் உயர் அலுவல்காரராகிய சண்முகம் என்பவரைக் கேட்டபோது, அவர் பவுனாம்பாள் 29 ரூ. 35 புதுக்காசு கட்ட வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நடுவுநிலை தவறாத நிலையில் கூறிவிட்டார். பவுனாம்பாளுக்கு வந்துள்ள அறிக்கையில் எண் 510-5. கையெழுத்து கிரேப்பியர் ஜகநாதன் உசியே பொர்த்தேர் தெ கோந்த்ரேத் ட. ரோமன். அறிக்கையில் சொல்லியிருப்பது பெருமாள் பேட்டைக்குடி முனிசாமி, குப்பம்மாள் இவர்கள் குமாரத்தி பவுனாம்பாள் சண்டை போட்டதற்கு நீதிச் செலவு. இப்படி ஒரு மறைமுகச் சம்பாதனை இன்னும் எவ்வளவு? எத்தனை காலமாக நடக்கின்றதோ தெரியவில்லை. நீதி இலாக்காத் தலைவர் இதைக் கண்காணிக்க குற்ற வாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரப்படுகின்றது. - குயில், கிழமை இதழ், 22.11.1960, ப.2, 15 39. காங்கிரசு மானங் கெட்ட நிலை வெள்ளப் பாழினால் தீமை அடைந்தார்க்கு உதவி செய்வதற்காக இரண்டு கூட்டம் ஊரில் பணம் தண்டுகின்றன. எந்தெந்தக் கூட்டம்? ஒன்று வேங்கடா சுப்பா ரெட்டியார் கூட்டம், மற்றொன்று குபேர் கூட்டம். வேங்கடவரும், குபேரரும் காங்கிரசுக்காரரே. எப்படி நிலைமை! வேங்கடசுப்பாரெட்டியார் கம்முய்னிடுகளையும் சேர்த்துக் கொண்டு பணந்தண்டும்போது குபேர் கூட்டத்திற்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகின்றதாம். குபேர் வேங்கடவருக்குக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுவதாக நாம் கேள்விப்படவில்லை. ஏனென்றால் குபேர் கூட்டத்தில் கம்முய்னிடுகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பணம் தண்டும் இந்த நல்ல தொண்டில் புதுவை வழக்கறிஞர் பெருமாள் அவர்களும் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது பெருமாள் அவர்கள் எந்தக் கட்சியையும் சேராத தலைவர் ஆவார். - குயில், கிழமை இதழ், 22.11.1960, ப.14 40. உங்களால் எல்லாம் முடியும் ஆனால் ஒன்று மட்டும் முடியாது தமிழை அழிக்க உங்களால் முடியாது. உங்களால் எல்லாம் முடியும்; தமிழை அழிப்பது மட்டும் முடியாது. நீங்கள் தமிழை ஒழிக்க எண்ணுகின்றீர்கள். உங்களையே முழுவதும் ஒழித்துக் கொள்ள எண்ணுகின்றீர்கள். நீங்கள் அரசியல் தலைவரும், மக்கள் தலைவருமாய் இருக்கலாம்; பேராற்றல் உடையவர்களாய் இருக்கலாம். தமிழை அழிக்க உங்களால் முடியாது. அரசியல் அதிகாரம் இருக்கிறது; மக்கள் ஆதரவும் இருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம். அந்த எண்ணம் உண்மையாகவும் இருக்கலாம். உங்களில் எந்த ஆற்றலும் - தமிழை அழிக்கப் பயன் படாது. நாட்டு மக்கள் உங்கட்கு அடங்கியவர்களாய் இருக்கலாம்; அவர்களை நீங்கள் அடக்கி வைத்திருக்கலாம்; அவர்கட்கு உங்கள் தாய்மொழிப் பற்றை நீங்கள் உங்கள் கையில் அடக்கி வைத்திருக்க வில்லை. தமிழர்களின் தாய்மொழிப் பற்றும் உங்கள் கையில் அடங்கிவிட்டதாக நீங்கள் கனவுகாண வேண்டாம். நீங்கள் சுரண்டிகளாய் இருக்கலாம். நாட்டு மக்களும் சுரண்டி களுக்கேற்ற கரண்டிகளாய் இருக்கலாம்; நீங்கள் இடும் எல்லா வேலை களையும் கண்ணைமூடிக்கொண்டு செய்கின்றவர்களா யிருக்கலாம்; நீங்கள் தமிழின்மேல் கை வைக்கின்றபோதும் அவர்கள் உங்கட்கு ஒத்து இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். பொதுமக்கள் எலிகளாய் இருக்கலாம். தமிழைக் குறைத்துப் பேசவேண்டாம்; எலிகளிடம் புலிகள் கண்டு நடுங்க நேரும். வல்லமையால் ஒரு பெரு நாட்டைச் சுண்டுவிரலில் அடக்கி ஆண்டவர்களை நீங்கள் கண்டு இருக்கலாம். அப்படி ஒருவ ரல்லர்; பலரைக் கண்டிருக்கலாம். எங்காவது ஓரினத்தின் தாய் மொழியைப் பிரிக்க எண்ணியவர்களைப் பார்த்ததுண்டா? பல மொழிகள் பேசும் பல இனங்களைத் தனி ஒரு குடைக் கீழ் வைத்து ஆளும் வில்லனைக் கண்டிருப்பீர்கள். அந்தப் பல இனங் களையும் மொழியால் ஓரினமாக்க எண்ணியதையேனும் எண்ணி உயிர் தப்பியதையேனும் நீங்கள் பார்த்ததுண்டா? அயல்மொழி தமிழகத்தில் பாய வாய்க்கால் வெட்டித் தருவதாய் நீங்கள் ஒருவர்க்கு வாக்குறுதி அளித்திருக்கலாம்; வாக்குறுதியை வாங்கியவர்களின் பாசறை உங்களைக் காப்பாற்றத் தோள் தூக்கி நிற்கலாம்; உலகில் முடியாதது என ஒன்றிருப்பதை நீங்கள் எண்ண வேண்டாமா? தமிழர்களைக் கொண்டே தமிழை ஒழித்தல் என்பது முடியக் கூடிய காரியம் அன்று. தமிழர்களை அல்லாமல் தமிழ்நாட்டை ஆள நினைப்பதும் அவ்வாறே. ஆற்றலுள்ளவர்களே! ஆட்சிப் பொறுப்பு உள்ளவர்களே, குன்றின்மேல் ஏறி நில்லுங்கள். கூச்சலிட்டுக் கூறுங்கள்; தமிழுக்குத் தீங்கு நினைத்தது மெய்; மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம் என்று தாய்மொழிக்கு இயன்றவாறு ஆக்கந்தேடுவோம் என்று ஆயிரம் தரம் உறுதி கூறுங்கள். - குயில், கிழமை இதழ், 20.12.1960, ப.2 - 3 41. தமிழ் வாழ்க! வரப்போகின்ற தேர்தலில் போட்டியிட ஒன்றல்ல; பல கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. ஆச்சாரியார் காமராசரை விட்டேனா என்கிறார். அண்ணாத்துரை ஆச்சாரியாருக்கு ஆதரவு கொடுப் பதன் வாயிலாக வெற்றியைப் பிடித்து என் பையில் போட்டுக் கொண்டுவந்து விடுவேன் என்கிறார். அரிவாள் - சுத்தி ஒன்று இருக்கிறது. ஆதரித்தால் அவரின் அடி வேரையே வெட்ட முடியும் என்று மூக்கின் மேல் விரலை வைத்து எண்ணத்தில் ஆழ்கின்றது. நாம் தமிழர் இயக்கம் ஒன்று நடுவில் புகுந்து வெல்லப் பார்க்கிறது. எத்தனை கட்சிகள்! அத்தனை கட்சிகளிலும் எந்தக் கட்சி யாவது அழிக்கப்பட்டுவரும் தமிழை அழியாது காக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இன்று மேற்சொன்ன கட்சிகளின் மனப்போக்கை ஆராய்ந்தால் கிடைப்பது ஒன்றுதான். அதுவும் வருந்தத்தக்க ஒன்று. தமிழை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அது. இந்தக் கட்சிகள் பலவாறு பேசலாம். தம் உள்ளத்தை மறைக்க முயலலாம். ஆயினும் தமிழை ஒழிப்பதில் எந்தக் கட்சியும் முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை. இதில், நாம் தமிழர் கட்சி சேர வில்லை எனலாம். அதையும் நாம் நூற்றுக்கு நூறு மெய் என்று எண்ணிவிட முடியவில்லை. தமிழை மீட்கவேண்டும். தமிழின் மேன்மை புலப்பட வேண்டும்: தமிழை ஒழிய விட்டு வேறு வழியில் தமிழர்க்கு நன்மை செய்து விடுவேன் என்பவன் வஞ்சகன்; அவன் மக்களை ஏமாற்றுகின்றவன்; அல்லது மெய்யுணர்வற்றவன் என்றே முடிவுகட்ட வேண்டும். கட்சிகள் இருட்டறையினின்று வெளிச்சத்தில் வரவேண்டும். தமிழர்க்கு நல்லது செய்வதென்பது தமிழை மீட்டுத் தமிழ்த் தாயின் பகைவர்களை ஒழித்துத் தமிழ்ப் பயிரை வளர்ப்பதே. தமிழைக் கொன்று தமிழர்கட்கு நலம் செய்வது என்பது உயிரைப் போக்கி உடம்பைத் தென்றலில் உலவவிட எண்ணுவதேயாகும். என் கட்சி வன்மையுடையது என்று ஒருவர் மார் தட்டலாம்; என் கட்சி இதற்கு முன் தமிழர்க்கு நல்லது செய்திருக்கிறது என்று இறுமாப்புக் கொள்ளலாம். நான் எல்லாம் உணர்ந்தவன் என்று பிதற்றலாம்; ஆயினும் தமிழுக்கு என்ன செய்தாய்? என்று ஒரு தமிழன் கேட்டால் தலையைக் குனிய வேண்டி வரும்; கட்சிக்காரர் எண்ணிப் பார்க்க! - குயில், கிழமை இதழ், 3.1.1961, ப.2, 4 42. கூலித் தொண்டு கூடாது! சென்ற பொதுத் தேர்தலில், பெரியார் தம் தொண்டர்களை யெல்லாம் காங்கிரசை ஆதரிக்கக் கட்டளையிட்டார். பெரியாரும் பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழக்கம் செய்தார். காங்கிரசுக்கு - காமராசருக்கு வெற்றி கிடைத்தது. வெற்றிப் பெற்ற காமராசரும், சுப்பிரமணியம் முதலிய அமைச்சரும் பெரியாருக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் ஏதாவது இரண்டு சொற்களாவது சொன்னார்களா - அல்லது இகழ்ந்து பேசாமல் சும்மாவாவது இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. தி.க.வை யார் அழைத்தார்கள்? அவர்களாக வலிய வந்து எங்களை ஆதரித்தார்கள் எனப் பலவாறு கூறித் திரிந்தார்கள். பெரியார் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால், காமராசர் எம்மை இகழ்ந்தாலும் நாம் அவரைத் தாம் ஆதரிக்க வேண்டும் என்றார் பெரியார். பொதுநலம் கருதி பெரியார் இவ்வாறு சொன்னார் என்று பொதுமக்கள் எண்ணிக் கொள்வார்களா? பல ஆண்டுகளாகவே இந்தியை எதிர்த்து ஒரு பேச்சும் பேசவில்லை பெரியார். சில ஆண்டுகளாக தமிழை எதிர்த்து பேசி வருகிறார் பெரியார். அவை பொதுநலத்திற்குக் கேடு சூழ்வன என்று பொதுமக்கள் எண்ணாமல் இருந்து விடுவார்களா? சென்ற பொதுத் தேர்தலில் காமராசை - காங்கிரசை ஆதரித்த பெரியார், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு பிழைகளைச் செய்துவிட்டார். தேர்தலில் நிற்பதில்லை என்று கூறிக்கொண்டு, தேர்தலில் நிற்பவர்களை ஆதரித்து நின்றது ஒன்று. காங்கிரசை - காமராசரை ஆதரிக்க வேண்டுமென்பதற்காகக் கண்ணை மூடிக் கொண்டு பார்ப்பனனுக்கும் வாக்குப் பிச்சைக் கேட்டது மற்றொன்று. பெரியார் சொல்லைத் தட்டாமல் பின்பற்றத் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இனியும் தொண்டர்களை இப்படியே எடுத்தாண்டு கொண்டு போவது பெருந்தன்மையாகுமா என்பது ஆராய்ச்சிக்குரியதேயாகும். தொண்டர்களின்மேல் பெரியாருக்கு இரக்கம்வேண்டும். அவர்களின் நிலை இரங்கத்தக்கதேயாகும். சாதி வேண்டாம். மூட வழக்கங்கள் தொலைய வேண்டும். பார்ப்பான் தமிழரின் பகைவன். புராணங்கள் நம்பக் கூடியவை அல்ல என்பன போன்ற கருத்துக்களைச் செயல்படுத்தப் புறப்பட்ட பெரியார், மக்களிடம் செல்வாக்குப் பெற்றார். இந்த வகையில் கிடைத்தவர்கள் தாம் இப்போது பெரியாரிடம் இருக்கும் தொண்டர்கள். அவர்கள் இன்று வரைக்கும் பெரியார் சொன்னபடி ஆடியதில் அவர்கள் கண்ட பயன் என்ன? தம் கொள்கை - தம் இயக்கம் தூய நெறியில் முன்னேறிற்று என்று அவர்களின் நெஞ்சம் மகிழ்ச்சிக் கூத்தாடு கின்றதா? தம் நிலையில் எள்ளத்தனை உயர்ந்தார்களா? ஆனால் தம் ஒன்றுபட்ட நிலையிலிருந்து பிரிவினை நோய்வாய்ப் பட்டு துன்புறுகின்றார்கள். இந்தக் கால்ராவைப் பரப்பும் சில குருசாமிகளுக்கு பெரியார் ஆசனந் தருகிறார். சிறைக்குப் போகச் சொல்வார் பெரியார் - அட்டி சொல்வ தில்லை. தொண்டர்கள். துன்பப்படச் சொல்வார் பெரியார். சாகவும் பின்னடை - யார் தொண்டர்கள். எதிர் வழக்காட வேண்டா மென்பார் பெரியார். எதிர் வழக்காடால் சிறைக்குப் போவார்கள், குருசாமி தவிர மற்றத் தொண்டர்கள். சிறையிற் சென்ற தொண்டரின் பெண்டு பிள்ளைகள் நாட்டுக்காகத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளத்தான்வேண்டும் என்பார் பெரியார். தகரக் குவளையைக் கையில் ஏந்திக்கொண்டு தெருத் தெருவாகப் பிச்சை எடுக்கவும் மனம் கூசார் தொண்டர் பெண்டுகள் பிள்ளைகள், காமராசரை ஆதரிக்கவேண்டும் என்பார் பெரியார் - தலையில் துணியைக் கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள் தொண்டர்கள். காமராசரை ஆதரிக்கும் காரணத்தால் நாட்டைக் கெடுக்கும் பார்ப்பனருக்கும் தேர்தலில் பரிந்து பேச வேண்டும் என்பார் பெரியார்! மானத்தை விற்றும் அப்படியே என்பார்கள் தொண்டர்கள். அதுமட்டுமல்ல. பணந்தண்டச் சொல்வார் பெரியார். பசி என்றும் பாராமலும் பணந்தண்டக் கிளம்புவார்கள். வரவேற்பு என்பார் பெரியார். தர ஏற்பாடு செய்வார்கள், தொண்டர்கள். தேர்மேல் ஏறிக் கொள்வதாய்ச் சொல்வார். ஏற்றிவிட்டுப் பார் மேல் நடந்து ஓடுவார்கள் தொண்டர்கள். காணிக்கை கேட்பார் பெரியார். மாணிக்கம் குவிப்பார்கள் தொண்டர்கள். இப்படிப்பட்ட தொண்டர்களுக்குப் பெரியார் அளித்துவரும் பரிசு என்ன? அவர்களிடம் ஒற்றுமையைக் கெடுத்து வேற்றுமையை வளர்த்து அவர்களுக்கு எந்நேரமும் மனத் தொல்லையா? தொண்டர்களுக்கும் சொந்த ஆசை இருக்கும். அந்த ஆசை யின் காரணமாகப் பொதுப் பணம் என்பதில் விரல் வைத்தார்களா? இல்லவேயில்லை. ஒருவர், இருவர் தம் இயக்கக் கருத்துக்களை வளர்க்க ஏடுகள் வெளியிட எண்ணுவார்கள். எண்ணிய இடத்திலேயே அந்த எண்ணம் மண்ணாக்கப்படும். ஏடு வெளிவந்துவிட்டால் அதை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கப் படும். வெளி யிடுவார் ஒருவர், அதற்காக அவர் படும்பாடு எது படும். நாடகம் போடுவார் ஒருவர். அவரை ஒழித்துக் கட்டிய பின்புதான் மறுவேலை. காலமெல்லாம் இயக்க முன்னேற்றத்திற்கு உழைப்பார் ஒருவர். அவர் எதிரிகளின் நலங்கருதி மூக்கறுப்படுவார். பழிவாங்கப்படுவார். மானமிழந்து போகும்படி செய்யப் படுவார். இன்னும் பெரியார், தொண்டர்களின் அன்பை இழந்து விடவில்லை. இனிமேலாவது, பெரியார் தருமத்தை மதிக்க வேண்டும். இனிமேலாவது பெரியார் நம்பினோரைக் காப்பாற்ற வேண்டும். தேர்தலில் கலந்து கொள்வதில்லை. தி.க. இந்தத் திட்டத்தை மாற்றவேண்டும். மாற்ற வில்லையானால், எவருக்கும் தேர்தல் தொண்டுசெய்வதையும் கைவிட வேண்டும், பெரியார் கைவிட மனமில்லையானால் எவருக்குத் தொண்டு செய்கின்றோமோ, அவர்கள் (காங்கிரசு) ஏதாவதொரு திட்டத்திற்குக் கட்டுப்படுவதாகப் பெரியாரையும் தொண்டர்களை யும் கேட்டுக்கொள்ள வேண்டும். தேர்தல் தொண்டு செய்து தருவதாக மொத்தக் குத்தகையும், குருசாமிக்குக் கீழ்க் குத்தகையும் பேசிக்கொண்டு, தொண்டர்களை ஏய்ப்பது கூடாது. வேலை தீர்ந்தபின் காங்கிரசுகாரர் பேசும் முடிச்சு மாறித் தனமான பேச்சைக் கேட்டுத் தொண்டர் மனம் புண்படும்படி செய்யலாகாது. தமிழ்நாடு என்று பேர் வைக்க மறுக்கும் பேர்வழிக்குத் தொண்டு செய்ய எண்ணமிருந்தால், தனிமுறையில் நடக்கட்டும். இந்திக்கு வழிகோலும் வகையில் எல்லாத் துறையிலும் தமிழ் கொலை செய்யப்படுகின்றது. பெரியாருக்கு இது பிடித்தமாக இருக்கு மானால் தனிமுறை யில் வேலை செய்யட்டும். குருசாமியை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும். சரியான ஒத்துக்கு மத்தளம்! தமிழில் என்ன இருக்கிறது கேட்கின்றார் நன்றியுள்ள குருசாமி. இன்னொன்று, ஒரு வட்டத்தில் ஒரு பொறுக்கிப் பையனை காங்கிரசு, சட்டசபை தேர்தலுக்கு நிறுத்துகிறது. அதே வட்டத்திலுள்ள - மானமுள்ள, மரியாதைக்குரிய தி.க. தொண்டரும் இருக்கிறார். அந்தப் பொறுக்கிப் பையனை ஆதரித்து அவனுக்குத் தேர்தல் தொண்டு செய்ய வேண்டுமா? எங்கே அடுக்கும் இந்தக் கூத்து. இந்த நிலையில் அந்தத் தி.க. தொண்டரையே தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன கெட்டுப் போகும்; அந்தத் தொண்டர் சட்டசபை உறுப்பினர் ஆகிவிட்டால் என்னை மதிக்க மாட்டார் என்று சொல்லுவது பெருந்தன்மையான பேச்சா? இயக்கத்திலுள்ள ஓர் அரை மேளம் முன்னொரு நாள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ள தி.க. அனைவரும் தம் பதவியை விட்டு விலகச் செய்வேன் என்றானாம். ஏன் அந்த அரை மேளம் இயக்கத்தை விட்டுத் துரத்தப்படவில்லை. கூலித் தொண்டு கூடாது! - குயில், கிழமை இதழ், 10.1.1961, ப.2-4 43. இரு முறையும் வாழ்த்துகிறோம் பிரஞ்சுக்காரர்கள் புதுவையில் இருந்து ஆண்ட கால முழுதும் அவர்கள் குரங்குப் பிடியாகக் கையாண்டுவந்த கொடுஞ் செயல்கள் இரண்டே இரண்டுதான். தமிழ் வளர்ச்சிக்குத் தடை போட்டது ஒன்று. கத்தோலிக்கர் மதவலை வீசிகட்குச் சலுகை தருவதின் மூலம் மக்களிடையே கலகம் விளைத்தது மற்றொன்று. கத்தோலிக்கர் அல்லாத ஒரு பழந்தமிழர் தனக்குச் சட்டப்படி சேரவேண்டிய ஓர் அலுவலுக்கு வாய் திறந்தது தெரிந்தால், கத்தோ லிக்கர் குருக்கள் காலனித் தலைவரைக் கண்டு பேசுவார். பழந்தமிழன் தோற்றான். அலுவலகங்களில் தலைமையிடங்கள் அனைத்தும் கத்தோலிக்கர் களுக்கே அமைய வேண்டும். மற்ற இடங்களைக்கூட கத்தோலிக்கர் களுக்குக் கொடுத்தது போக மீதியான இடங்களைத் தாம் பிறர் அடைய முடியும். குடியரசு ஆட்சியின் உறுப்பினரான கத்தோலிக்கர் வெள்ளைக்காரர் - பிரஞ்சுக்காரராய் இருந்தும் இந்தத் தீய எண்ணத்தை எந்த நொடியிலும் கைவிட்டதே இல்லை. கத்தோலிக்க மாணவர்கள் தமக்குக் கிடைக்கும் கட்டாயச் சலுகையினின்று ஏற்படும் திறமையால் வகுப்புத் தேர்தலிலும், அலுவல் தேர்தலிலும் தேறி விடுவார்களாத லால், முற்கூட்டியே தேறிவிட்டார்கள் என்றே முடிவு சொல்லப்பட்டு விடும். மருத்துவத் தலைமை விடுதிக்கு பிரான்சு நாட்டிலிருந்து மருத்துவப் புலவர் தலைவர் என்று ஒருவர் வந்து சேருவார். தலைவர் என்ற முறையில் தம் அதிகாரத்தைத் தொடங்குவார். அலுவலகத்தார் களைக் கிடுகிடு என்று நடுங்க வைப்பார். ஆனால், அதே நேரத்தில் அலுவலகத்தில் கட்டுக்கட்டத் தெரியும் என்று நுழைந்துள்ள ஒரு கத்தோலிக்க கன்னிமாடத்துக் கன்னிக்குத் தலைவர், கிடுகிடுவென்று நடுங்குவார். மருந்துக்களின் இருப்பு அத்தனையும் கன்னிகளிடம்; கணக்கு கேட்கக்கூடாது. இந்த இழிவுநிலை பிரஞ்சுக்காரர் போன பின் இராது என்று நம்பப்பட்டது. வந்த பார்ப்பனர் அந்த நிலையைத் தமக்குப் பயன்படுத்த லானார்கள். கத்தோலிக்கரிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் என்ன வென்றால் அவர்கள் பார்ப்பனர் தில்லுமுல்லுகளைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால், தங்கள் தில்லு முல்லுகளில் அவர்கள் கண்வைக்கக் கூடாது அல்லவா? அதோ பாருங்கள் கத்தோலிக்க அதிகாரிகட்குச் சலுகை மேற் சலுகை; சம்பள உயர்வுக்குச் சட்டமும் வளைந்து கொடுக்கிறது. அதோ பாருங்கள் பழைய பட்டயங்கள் செல்லரித்து விடுகின்றன. அதனால் பயனடைந்தவரிடமிருந்து செல்லரிக்காத பணம், திருவாய் மொழிப் பெட்டியில் வந்து குவிகின்றது. அத்தி பூத்ததுபோல் ஒரு நல்ல சொல் இன்று புதுவை மக்களின் காதில் விழுகின்றது. மருத்துவ மனையினின்று, கன்னிமாடத்து மகளிர் வெளியேறி விட்டார்களாம். அப்படித்தான் போய்விடுங்களென்று யூனியன் ஆளவந்தார்களும் சொல்லிவிட்டார்களாம். இச்செய்தி உண்மையானால் யூனியன்காரர்களை நாம் ஒரு முறைக்கு இருமுறை வாழ்த்துகின்றோம். இன்றோடு நோயாளிகள் கத்தோலிக்கர்களாய் இருந்தால் தான் கன்னிகளின் சலுகை கிடைக்கும் என்ற நிலை ஒழிந்தது சரி - பொது மருத்துவமனையில் மாதா கோயில் இருக்காதா? இருக்காது என்றால் மூன்று முறை வாழ்த்துவோம். - குயில், கிழமை இதழ், 17.1.1961, ப. 2 - 3 44. அராபிய எண்கள் தமிழ் எண்களே கல்விக்கு அராபிய எண்களே ஆலோசனைக் குழு முடிவு என்ற தலைப்பில் விடுதலை ஏடு குறிப்பிடும் ஒரு குறிப்புக் கீழ் வருமாறு: புதுடெல்லி ஜன.17. இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் அராபிய எண்களையே பயன்படுத்துவ தென்று மத்திய கல்வி ஆலோசனைக்குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகக் கல்வியமைச்சர் சி.சுப்பிரமணியம் கூறிய ஆயோ சனையைக் குழு ஏற்றுக் கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளதாம். இந்த எண்கள் முதலில் இந்தியாவிலேயே தோன்றியபோதிலும் இவற்றிற்கு அராபிய எண்கள் என்று பெயர் வழங்குகின்றது. இந்த எண்கள் அதாவது 1,2,3 முதலிய எண்கள் முதலில் இந்தியாவிலேயே தோன்றியவை என்று அமைச்சர் சி.சுப்பிர மணியம் கல்விக் குழுவில் சொல்லாடினார் போலும்! அவர், இந்த எண்கள் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக - இன்றுவரைக்கும் இருந்துவரும் தமிழ் எண்களே என்பதை எடுத்துக் கூறவில்லை போலும்! அதனால்தான் அக்குழு இந்த எண்கள் இந்தியாவிலேயே தோன்றியவை என்று பொதுவாகக் குறிப்பிட்டு முடிவு செய்தது. இந்த எண்கள் தமிழ் எண்களே என்ற உண்மையை அமைச்சர் தெரிந்து வைக்கவில்லை என்றும் எண்ண முடிய வில்லை. ஏன் எனில் சில ஆண்டுகளின் முன் விடுதலையில் இந்த உண்மை பெரியாரால் விளக்கப்பட்டிருந்தது. பெரியாரை என் வீட்டில் கரும்பலகையின் முன்வைத்து இன்றுள்ள 1, 2, தமிழ் எண்களே என்பதை எழுதிக்காட்டி விளக்கினேன். அதை வைத்தே நேரு, இந்த எண் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றவைகளே என்று பொதுவாகக் குறிப்பிட்டதை மறுத்து விடுதலையில் அவை தமிழ் எண்களே என்று விரித்தெழுதினார். அமைச்சரே தெரிந்து கொண்டிராமற் போனாலும் தாய் மொழி பற்றிய இந்த உண்மையை அவர் விடுதலையில் படித் தறிந்து கொண்டிருக்கலாம். அவை தமிழ் எண்கள் என்பதை அவர் அறிந்திருந்தும் அதைக் கூட்டத்தில் வெளியிடாததற்குக் காரணம் என்ன? என்பதுதான் இங்குக் கேள்வி. இது நிற்க. ஜன.17. என்ற நாள் இட்டு இந்த எண்கள் முதலில் இந்தியாவி லேயே தோன்றியவை என்ற குறிப்பை வெளியிட்ட விடுதலை ஆசிரியர், அந்தச் செய்தியின் கீழ் அந்த எண்கள் இந்தியாவிலேயே தோன்றியவை என்று மொத்தமாகக் குறிப்பிட்டிருந்தாலும், அவை தமிழகத்தில் முதலில் தோன்றிய தமிழ் எண்களே என்ற குறிப்பை யாவது எழுதியிருக்கலாம். அப்படி எழுதாதற்குக் காரணம் என்ன? இது இரண்டாவது கேள்வி. பெரியார் நன்கறிந்துள்ளார். இவை தமிழ் எழுத்துக்களே என்பதை நான் தெளிவாக விளக்கினேன் பெரியாருக்கு! அவரும் உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாக ஒரு கட்டுரையும் எழுதினார். அவரும் இப்போது ஏன் சும்மா இருந்துவிட்டார்? என்பது மூன்றாவது கேள்வி. இந்தக் கேள்விகட்கெல்லாம் சரியான விடை வேண்டு மானால் தமிழக அமைச்சரவை, தி.க. தலைவர் ஆகியோரின் இன்றைய மன நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழரின் தாய்நாட்டை - அதாவது தமிழ்நாட்டின் மேல் தமிழர்க்கு இருக்கும் உரிமை பறிக்கப்பட வேண்டும். அது வடவர்க்கும் பிறர்க்கும் உரிய நாடென்றே செய்யப்படவேண்டும், அதனால் தமிழ் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது; சென்னை இராச்சியம் என்று சொல்லுவதையே உறுதிப்படுத்த வேண்டும் ஒன்று இரண்டாவது, இந்தியைத் தமிழரின் தாய் மொழியாக்குவ தற்குத் தமிழைத் தொலைக்க வேண்டும்; தமிழில் திருமணத்திற்கு இலக்கியமே இல்லை என்று பேச வேண்டும். தமிழுக்கு இலக்கியமே இல்லை என்று பேச வேண்டும். தமிழில் ஒன்றுமே இல்லையென்று பேசவேண்டும். இந்தப் பேச்சுக்கு உதவியாக ஆங்கிலத்தைத் தமிழர்க்குத் தாய் மொழியாக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். ஆங்கிலம் இல்லாவிட்டால் தமிழன் பல்லாண்டுகளின் முன்பாகவே தொலைந்து போயிருப்பான் என்று வாயடி அடிக்கவேண்டும்; தமிழர்க்கு வரலாறே இல்லை என்று அஞ்சாமல் கூறவேண்டும். மேலும், நமக்குத் தலைமையும், பதவியும் கொடுத்த தமிழ் மக்களுக்குச் சிறிதுகூட நன்றி காட்ட வேண்டியதில்லை; அந்த ஊமைத் தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், நமக்கு மனச்சான்று வேண்டாம். உறங்கும் பிள்ளையின் ஊட்டியை அறுப்பது போல் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் மக்களை மண்ணிலிட்டுப் புதைத்தாலாவது நம் - பதவி - கூலி ஆகியவற்றை உறுதி செய்து கொண்டாற்போதும்; இதுதான் இன்றைய அரசியல் தலைவர், மக்கள் தலைவர் மனநிலை! இவர்கள் அராபி எண் என்பது தமிழகத்தினின்று சென்றதான தமிழ் எண்ணே என்பதை வெளியில் எடுத்துச் சொல்வார்களா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ், வரிவடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித் துறையின் சுவடியில் காண்க. கண்டால் இன்றைய 1 2 3 4 5 6 7 8 9 10 ஆகியவை, தமிழ் எழுத்துக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல் நாட்டுக்காரர் கற்றுக் கொண்டார்கள். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத் தாண்டனர். அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத் திற்கு உள்ளாயிற்று! இது இயற்கைதான். இந்த அறுபதாண்டில் த்த என்ற இரண்டெழுத்தும் ஒரே எழுத்தாகவே எழுதப்படவில்லையா? இடையின ர கரத்திற்கு மேலே இருந்த ஒரு கோடு நீக்கப் பட்டதான மாற்றம் சென்ற இரு நூற்றாண்டில் ஏற்பட்டதல்லவா? நிற்க. தமிழர்கள் விழிக்க! தலைவர்களின் வஞ்சகத்தை ஊன்றி நோக்குக. - குயில், கிழமை இதழ், 24.1.1961, ப.2 - 4 45. தி. மு. க. திரு. சம்பத்து தி.மு.க.வை விட்டு வந்துவிடவில்லை. ஆனால் அவர் தி.மு.க.வில் இருக்கின்றார் என்றும் சொல்லிவிட முடியாது. திரு. சம்பத்து அவர்களின் நெஞ்சம் தி.மு.க.விலிருந்து விலகி விட்டது. திரு. சம்பத்து மட்டுமா? நல்லவர்களின் நெஞ்சமெல்லாம் விலகிவிட்டன. அவர்களின் உடல்கள் மட்டும் தி.மு.க.வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. காரணம் என்ன எனில், தி.மு.க.வைத் திருத்தியமைக்க எண்ணு கின்றார்கள். முடியுமா என்றால் முடியாது என்று மூன்று முறை கூறுவோம். தி.மு.க.வில் பொல்லாதவர் பலர். நல்லவர் சிலர். சிலரால் பலரைத் திருத்தவா முடியும்? தி.மு.க.விலுள்ள பொல்லாதவர்கள் எங்குமுள்ள பொல்லாதவர் கள் போன்றவர்கள் அல்லர். கடைந்தெடுத்த பொல்லாதவர்கள். தாம் கொண்டிருந்த நல்ல கொள்கைகளை அவர்கள் தலைகீழாக மாற்றிக் கொண்டவர்கள். தமிழரின் தாலி அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட ஆச்சாரியிடம் கூட்டுச் சேரவும் ஒப்பிவிட்டார்கள். அவர்களைப் பொல்லாதவர்கள் என்று மட்டும் சொல்லிவிடக் கூடாது. பொல்லாத பொல்லாதவர் என்று சொன்னால் பொருந்துமோ என்னமோ தெரியாது. தி.மு.க.வில் உள்ளவர்கள் எல்லாரும் தூய தமிழர்களல்லவா? அவர்கள் முகத்தில் தமிழத் தன்மை தாண்டவமாடவில்லையா? அவர்கள் எல்லாரும் நல்ல நிலைமை அடைந்திருக்கவில்லையா? உயர்ந்த ஊர்திகளில் உலவவில்லையா? உடைக்கென்ன பஞ்சமா? உணவில் என்ன பஞ்சமா? பார்ப்பனரால் இந்தப் பைந்தமிழ் நாடு கெட்டுப் போகின்றது என்ற உண்மையை மாற்றிப் பார்ப்பனரால் இந்தப் பழந்தமிழ் நாடு ஈடேறக்கூடும் என்று கூறிக் கொண்டு, அந்தத் தி.மு.க. பசங்கள் எதிர்வரக் கண்டால் முடிச்சுமாறிப் பசங்கள் எதிர் வந்தது போல் தோன்றுகின்றது எனக்கு! ஆனால், பார்ப்பனர் வால் ஒட்ட அறுக்கப்பட வேண்டும்; உருவ வணக்கம் ஒழிந்து போக வேண்டும்; சாதிகள் என்பதே மறைந்து போக வேண்டும்; தமிழகத்தைத் தமிழரே ஆள வேண்டும்; அது வடவனுக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாது என்ற பெரியார் கொள்கையில் என்றைக்கிருந் தாலும் அந்தத் தி.மு.க. ஆட்கள் குதித்துத்தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கை என்னிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. நான் சாகாதிருப்பதும் அந்தக் காட்சியைக் கண்ணாரக் காணத்தான்! அண்ணாத்துரையின் போக்குக்குச் சம்பத்துத் தந்த மறுப்பும், நகர மன்றத்துக்குச் சீவரத்தினம் காட்டிய எதிர்ப்பும் தொண்ணூ றோடு துவரம் பருப்பு அல்ல; தி.மு.க.வுக்கு அடித்த சாவுமணி. திருச்சிற்றம்பலம்! - குயில், கிழமை இதழ், 31.1.1961 46. இளங் கவிஞர்க்கு நான் பன்முறை எடுத்துக் காட்டியிருந்தும் இளங் கவிஞர்களில் பெரும்பாலோர் திருந்தவே இல்லை. 1. உந்தன் என ஒரு சொல்லே இல்லை. உன்றன் உண்டு; உந்தம் உண்டு. 2. வன்றொடர்க் குற்றியலுகரம் சொல்லின்முன் வல்லெழுத்து வந்தால் இடையில் ஒற்று மிக வேண்டும். பாக்குத் தின்றான் என்பதுபோல. 3. மோதி, பேசி, வருந்தி என்பன போன்றவை வினை யெச்சங்கள், அவற்றின்முன் வரும் வல்லெழுத்து மிகும். மோதிச் சலசல என்பது போல. இதற்காக நான் இளங் கவிஞர்கட்குச் சொல்வது என்னவெனில், தாம் எழுதியதைத் தம் அருகில் உள்ள புலவர் ஒருவரிடம் காட்டினால், அவர்கள் திருத்தித் தருவார்கள். இலக்கண அறிவும் உண்டாகும். அதன்பிறகு அதை அனுப்பலாம். இப்படிச் செய்தால் எனக்குத் தொல்லை குறையும். தம் பிழையைப் புலவர் அறியக் கூடாது என்று நினைப்பது தவறு. யாருக்கும் தெரியாமல் ஆசிரியர் திருத்தி வெளியிடுவார். அதனால் நாமும் படிக்காமலேயே இருந்து விடலாம் என்றா நினைப்பது! இனி, இளங்கவிஞர் கவிதைகளில் உள்ள பிழைகளை வெளிப்படை யாகவே திருத்த எண்ணியிருக்கிறேன். (சான்றாகக் கீழ்வரும் வேற்றார் ஒருவர் தம் பாடலைக் காண்க.) ஏக்கத்தின் எல்லை ஆர்க்கின்ற அலைகடலில் ஆழ்ந்தி ருக்கும் அழகான வெண்முத்து பலவெ டுத்து கோர்த்தெடுத்த கவினைப்போல் காட்சி நல்கும் குன்றாஉன் பல்வரிசை! குருதி கொட்டும் போர்க்களத்தில் அண்டலரின் ஆகம் மீளும் பொற்றமிழன் அயிலன்ன வண்டி ரண்டும் பார்க்கின்ற காளையெந்தன் உயிர்ப றித்து பறந்திடுதே தொலையுலகு; செய்வ தென்னே! பிழையும், திருத்தமும் காண்க முத்து x பல எடுத்து என்பது முத்துப் பல எடுத்து என்றிருக்க வேண்டும். முத்து வன்றொடர்க் குற்றியலுகரம் எடுத்து x கோத்து, எடுத்துக் கோத்து, கோர்த்து என்றே ஒரு சொல் இல்லை. கோத்து எனல் வேண்டும். கோர்வை என்பதும் பிழை, கோவை எனல் வேண்டும். கோ என்பது முதனிலை ஆதலால் எந்தன் பிழை என்றன் சரி பறித்து x பறந் = பறித்துப்பறந் (ஆ. ர்.) - குயில், கிழமை இதழ், 31.1.1961, ப. 4 47. காமராசரைத் தூக்கி எறிய வேண்டும் முதலமைச்சர் காமராசர்க்குத் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு நேருவுக்கு தலைவேதனையை அளித்து வருகின்றது. முதலமைச்சருக்குப் பெரியார் உதவியாய் இருந்து வருகின்றார். பெரியார் சாதியை ஒழிக்கவேண்டும் என்பவர். மேலும், அவர் தமிழ்நாடு வடக்கன் கையிலிருந்து விடுபட வேண்டும் என்பவர். தமிழகத்திற்கு நேரு செய்யும் ஒவ்வொரு நன்மையும் காமராசர் கையை வலிவுபடுத்துகின்றது. அதனால் நேருவின் சொந்தக் காரரான பார்ப்பனரின் பகையைச் சுமந்தாக வேண்டியதாகிறது. இந்தக் காமராசரின் செல்வாக்கை மறைமுகமாக ஒழித்துக் கட்டுவது எப்படி என்று நேரு எண்ணினார். அதனால்தான் தம் சொந்தக் காரராகிய ஆச்சாரியைக் கிளப்பிவிட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. முன்போலவே தமிழகத்தின் முதல்வராய் ஆச்சாரியார், வந்து தொலைந்துவிட்டால், தமக்கு இப்போதுள்ள பார்ப்பனர் எதிர்ப்பு இராது. தமிழரின் வாலும் ஒட்ட அறுந்துவிடும். நேரு, ஆள் கொம்பன்! ஆச்சாரி தலைதூக்கி வருவதன் காரணம் நேருவாகத்தான் இருக்கவேண்டும். இது உண்மையானால் தமிழருக்கு இரட்டிப்பு வேலையாகி விட்டது. தமிழர்கள் பல்லைக் கடித்துக்கொண்டு நேருவினால் ஆடும் ஆச்சாரியை ஒரே அடியாய்த் தூக்கியடிக்க வேண்டும் வேறு ஆள் இல்லாததால், இழவே என்று காமராசரைத்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும். வெற்றி பெற்ற காமராசருக்கு அஞ்சாமை என்ற மருந்தை உடம்பில் ஏற்றி வடக்கனை எதிர்க்கச் செய்யவேண்டும். காமராசரை அல்லாமல் வேறு தலைவர்களை வெற்றிபெறும் படி செய்தாலோ அவர்கள் பொதுப்பணத்தைத் திருடுகின்றவர்கள்; மக்களின் மேல் அன்பில்லாதவர்கள். இப்போது வடவனைத் தமிழ் பற்றியும், தமிழகம் பற்றியும், தமிழ்நாடு பற்றியும், வானொலி பற்றியும் எதிர்க்காத காமராசர், வெற்றி பெற்றபின் எதிர்ப்பாரா என்று கேட்கலாம். எதிர்க்காவிட்டால் தூக்கி எறிய வேண்டியதுதானே! வேண்டியது தமிழரிடம் ஒற்றுமை! கடமை; காமராசரை வெற்றி பெறச் செய்வது! நோக்கம்: வடக்கனைத் தொலைப்பது! - குயில், கிழமை இதழ், 7.12.1961, ப. 2 48. தமிழிலக்கணம் புறக்கணிக்கப்பட்டது இன்று மட்டும் அன்று. ஆங்கிலேயர் ஆளுங் காலத்திலேயே தமிழ் வகுப்பில் தமிழிலக்கணம் புறக்கணிக்கப்பட்டு விட்டது. தம்மொழி உயர்ந்தது என்று எண்ணும்படி செய்யவேண்டு மானால் தமிழ் தலை தாழ்த்தப்படவேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் ஒரு கூட்டத்தின் எண்ணம். தமிழைத் தாழ்த்த வேண்டுமானால் தமிழிலக்கணம் மறைக்கப் படவேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். தமிழ் வகுப்பில் தமிழிலக்கணம் சொல்லித் தராமல், இருக்க அவர்கள் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும்போது ஆங்கில இலக் கணத்தை ஒரு பாடமாகவே அவர்கள் வைக்கவில்லையாம். அதுதான் நாகரீகமாம். அதுபோலவே தமிழ் வகுப்புகளிலும் தமிழ் இலக் கணத்தை ஒரு பாடமாகவைத்து நடத்த வேண்டியதில்லை என்ற சொற்களை ஆங்கிலேயர் வாயாலேயே சொல்ல வைத்தார்கள் அந்தக் கூட்டத்தார். நாகரீகமாக ஆளவந்த ஆங்கிலேயர் வாயே இவ்வாறு சொல்லும்படி செய்த அவர்கள் வெளியிலும் சும்மா இருந்துவிட வில்லை. நாளேடுகளிலும் தம்மிடமுள்ள கிழமை ஏடுகளிலும் பிழைச் சொற்களை பிழையற்ற சொற்களைப் போலப் புகுத்தினர். மாட்சி என்பதை மாக்ஷி என்று எழுதிக்காட்டி நம்ப வைத்தார்கள். அதே வழியில் சிறிது மேலே சென்று சூழ்ச்சி என்பதை சூக்ஷி என்று கொட்டை எழுத்தில் போட்டார்கள். இம்முறை இன்றளவும் நிற்காமல் தொடர்கின்றது. இப்போது காட்சி என்பதைக் காக்ஷி ஆக்கி இருக்கின்றார்கள். இது ஒன்றல்ல. இதுபோல ஆயிரக்கணக்கான சொற்களைக் காட்டமுடியும். பிழை இன்றிப் புலவரால் எழுதப்படுபவற்றை முரட்டுத் தமிழ் என்று கூறி இடுப்புடைத்தார்கள். தம் மொழியினின்றே தமிழ் மொழி வந்தது என்று கூறித் திரியும் அவர்கட்கு, உண்மையிலேயே தமிழிலக்கணம் தீராப் பகையாக இருக்கிறது. அவர்கள் இலக்கணம் என்ற சொல்லே தமிழல்ல என்பார்கள். இலக்கு அணம் என்று இலக்கண வகையால் பிரித்துக் காட்டி அது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பார்கள் இலக்கணம் அறிந்த புலவர். இங்கே நோக்குங்கள். தமிழர்கட்கு இலக்கணம் தெரிந்திருந்தால் என்னாகும் என்பதை! இது மட்டுமா? ஆங்கிலத்தையே அன்புள்ள தமிழர் காதிலும் போட்டுப் போட்டு அவர்களைக் குட்டிச் சுவராக்கி னார்கள். இன்றைக்குப் - பேசும் பேச்சில் நூற்றுக்கு எண்பது சொல்லாவது ஆங்கிலச் சொற்களாய் இருக்க வேண்டும் என்று கட்டாயப் பெருமை யாக்கப்பட்டு விட்டது. சீர்காழி என்பதைப் புகைவண்டி நிலைய அதிகாரி சிய்யாழி என்று பலகையில் எழுதுவிக்க சிறிதும் அஞ்சமாட்டான். காழி என்ற சொல் சீர் என்ற அடைமொழி பெற்று வந்தது என்பது தமிழிலக்கணம் தெரிந்தவர்க்கே தெரியும். தமிழிலக்கணத் தையே கேட்டிராத மக்களிடம் சிய்யாழி வர அஞ்சுமா? ஓர் எழுத்தாளர் சொன்னார்; ஆடு குட்டி என்ற சொற்களை ஆடு குட்டி என்றே சொல்லுக. ஆட்டுக்குட்டி என்று சொல்லா தொழிக என்று. இதுபற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியவை பல. அந்த எழுத்தாளர் தமிழிலக்கணம் தெரிந்தவர். இருக்கும் ஊரில் இரண்டு நாள் குடியிருந்தும் அறியாதவர். தமிழிலக்கணம் ஒழிந்து போக வேண்டும் என்ற தம் கூட்டத்தாரின் கொள்கையை வற்புறுத்தவே மேற்கண்டவாறு சொல்லியதாக நாம் உணர வேண்டும். இக்கட்டுரையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போக நாம் எண்ணவில்லை. புலவர் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இலக்கணப் புலமை உடைய தமிழ்ச் சான்றோரே அவ்வகுப்புக்களை நடத்திச் செல்லு கின்றார்கள். இங்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். அவர்கள் இலக்கணம் சொல்லிக் கொடுப்பதில் ஊக்கங் காட்டுவதாக நம்மால் சொல்ல முடியாது. தேர்ந்து வரும் மாணவர்கள் - புலவர்களில் நூற்றுக்கு எண்பது பேர் எந்தன் என்று எழுதுகிறார்கள்; இலக்கணம் படித்தார்கள் என்று சொல்லவே முடியவில்லை. தமிழ் இலக்கணத்தை நன்றாகச் சொல்லித் தரவேண்டும். கல்வி அதிகாரிகள், அதில் கவலை கொள்ள வேண்டும். தமிழிலக்கணம் தெரியாத ஒருவர் இலக்கியக் கடலை கரைத்துக் குடித்திருந்தாலும் பயனில்லை. கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். போலீசு டேசன் என்பதற்குக் காவல் நிலையம் என்று போட்டார்கள். அச்சொல் வழக்கத்துக்கு வந்து விட்டது. அமைச்சர் பக்தவச்சலம் அதை எடுத்து விட்டுப் போலீசு டேசன் என்றே போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். காரணம் என்ன தெரியுமா? அமைச்சர் பக்தவச்சலம் தமிழ் ஒழிய வேண்டும் என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவர். இலக்கணம் வேண்டும்! புலவர்கள் அனைவரும் மாணவர்க்கு இலக்கணத்தை ஆசையோடு பொறுப்போடு கற்பிக்க வேண்டும். இப்போதோ பக்தவச்சலனாரே கல்வி அதிகாரியாய்விட்டார். புலவர்கட்கு அவர் நல்வழி காட்டுவார் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. தமிழ்த்துறை உருப்படுமா என்பதும் நமக்கு ஐயப்பாடே. கல்வி அதிகாரிகள் விழிப்பாக இருந்தால்தான் தமிழுலகு உருப்படும். - குயில், திங்கள் இருமுறை இதழ், சென்னை, 1.5.1962, ப. 2, 3, 4 49. குயிலின் நிலை சென்ற குயிலில் (10. 05. 1962) பிழைகள் ஏராளம். அதற்குக் காரணம் இன்னும் அலுவலினரை வேண்டிய அளவு அமைக்காததே. இப்பொழுது அலுவல் பார்த்து வருகின்றவர்கள் எத்தனைபேர் என்பதையும் இப்போது சொல்லிவிட எண்ணுகிறோம். 10 பேர் இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம் அல்லது 5 பேர்கள் இருக்கலாமோ என்று நீங்கள் எண்ணிவிடக்கூடும். நான் ஒருவன், பொன்னடி ஒருவர். சென்ற இதழில் பிழை பார்க்க ஆள் இல்லாததால் இருப்பவர்க்கும் ஓய்வில்லாததால் இலக்கணப் பிழை மிகுதியாயிற்று. அதற்காக வருந்துகிறோம். இரண்டு மூன்று தமிழறிஞர்களை அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தினால் இந்தக் குறைபாடுகள் நீங்கும். அதன் பொருட்டுக் குயில் வாங்குவோரைப் பெருக்குக. அவரவர்கள் செலுத்தவேண்டிய பெருமன்ற நுழைவுக் கட்டணம் செலுத்தியவர்கள் உறுப்பினர் நன்கொடையை அனுப்பி உதவுக. குயில் பெற்றுவரும் உறுப்பினர் அதன் ஆண்டிறையை அனுப்புக. குயிலுக்கு வந்த வறுமை, உறுப்பினர்க்கெல்லாம் வந்த வறுமை எனக் கருதுக. குயிலுக்கு உடையவராகிய பெருமன்ற உறுப்பினர் எல்லோருக்கும் நாம் ஒரு உறுதி கூறுவோம். குயிலுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. தமிழகத்தில் குயில் ஈடற்ற தமிழ் ஏடாகத் திகழும். - குயில், திங்கள் இருமுறை இதழ், 15.5.1962, ப.3 50. இந்தி எரிக! எரிப்பவர் வாழ்க! திரு. டாக்டர் இராதாகிருட்டினன் அவர்கள் இந்திய அரசின் தலைவராக வந்தார் அவருக்கு முன் தலைவராக இருந்த இராசேந்திரப் பிரசாத் வந்தது போலல்ல. இவர் வருகை சிறப்பானது. இந்தியைத் திணிக்கமாட்டோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த நேரு போன்றவர்களின் கருத்தையும் மிதித்துத் தள்ளி இந்தி திணிக்கப்படத்தக்கது என்பதற்கு அறிகுறியாக அரசின் செய்தித்தாளையும் (கெஜட்) நூற்றுக்கு நூறு இந்தியிலேயே வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். வடக்கத்தியரான இராசேந்திரர் விலகிய பின் தெற்கத்தியாருக்கு அந்த இடத்தைக் கொடுத்தபோதே இதை நாம் எதிர் பார்த்ததுண்டு. தெற்கத்தியாரைக் கொண்டே மக்களைப் பழிவாங்குவதில் தில்லி அரசுக்கு ஓரடியில் இரண்டு மாங்காய் விழுந்து விடுகின்றன. தமிழரைப் பழிவாங்கிவிட்டது ஒன்று. தமிழர்கட்கு இராதாகிருட்டினன் அவர்களைப் பகையாக்கியது ஒன்று. இந்தியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளும் அக்கரையுடையவை. காங்கிரசு உட்பட. ஆனால் அக்கட்சிகளின் சூழ்நிலை சரியாய் இல்லாததால் இந்தியை எதிர்ப்பதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. இதைக் கருதும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. சூழ்நிலையாவது மண்ணாங்கட்டியாவது இந்தியைப் புகுத்து வோர் யாராய் இருந்தாலும் கட்சிகள் என்பவை எதிர்க்கத்தானே வேண்டும் என்று உள்ளம் கொதிக்கிறார்கள் மக்கள். ஒரு கட்சிதான் இயற்கை முறையில் இந்தியை எதிர்க்க முன் வந்தது. அந்தக் கட்சிதான் சூழ்நிலை - சொந்த நலம் எதையும் பொருட் படுத்தாமல் இந்தியை எதிர்க்க முன் வந்துள்ளது. அதன் பெயர் தமிழ்த் தேசியக்கட்சி. இந்தியில் வெளிவரத் தலைப்பட்டுள்ள அரசினர் செய்தி ஏட்டுக்குத் தீ வைக்கப்போகிறது. அரசினர் தமிழ்த் தேசியக் கட்சியை அதன் தலைவர்களைப் படுத்தாத பாடு படுத்தலாம். ஆனால் மக்கள் வாக்கை நூற்றுக்கு நூறு இழந்து விடும் என்பது மட்டும் உண்மை. புதிய சனாதிபதி அவர்களே! நீவிர் பதவி பெற்றவுடன் முதற்பரிசு பெற்றீர்கள். மூள்க தீ! வெல்க தமிழ்த் தேசியக் கட்சி! - குயில், திங்கள் இருமுறை இதழ், 16.6.1962, ப. 3 51. வெல்க தமிழகம் நாய்கள் குரைத்தன இதுவரைக்கும்! அவைகள் வாய்திறந்தன இப்போது! நோய்கள் நெருங்கின இதுவரைக்கும். அந்நோய்கள் தாயின் வாழ்வைத் தாக்கின இப்போது! தாயைக் காக்கும் கடமை உண்டு தமிழர்க்கு. சாகுமா? தமிழ் வாழுமா? இது இந்நாள் கேள்விகள். சாவாரா? தமிழர் வாழ்வாரா - இது இந்நாள் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குத் தமிழர் தம் பதிலை வாயாற் சொல்லி விட்டாற் போதாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. தமிழர் செயலில் இறங்க வேண்டும். இரண்டு நாள் எண்ணி அல்ல; இன்றே - இப்போதே! அதோ திட்டம் தீட்டுகின்றான் எதிரி. அந்தத் திட்டம் தமிழன் தோற்றமே இருக்கக் கூடாது என்று கூறினால் வியப்படைவதற்கில்லை. தாளைப் பிடித்தான். பிறகு தோளைப் பிடித்தான். இப்போது இப்போதென்ன இதே நொடியில் தமிழின் தமிழரின் நெஞ்சைப் பிடித்தாலும் பிடிப்பான். இன்றே செயலில் இறங்க வேண்டும். இப்போதே எதிர்த்துக் கிளம்ப வேண்டும். வேற்றுமை நமக்குள் காட்டிக் கொள்ளக் கூடாது. போர் தொடங்க வேண்டும் தமிழரெல்லாம் ஒன்றுபட்டு! எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு! தமிழை ஒழித்துத் தமிழரையும் அறவே ஒழித்துக் கட்டும் எதிரியைத் தமிழர் விட்டு வைக்கலாமா? காலந்தாழ்த்தலாமா? மறுக்கலாமா? அந்தக் கட்சி ஒழியட்டும் என்று இந்தக் கட்சி எண்ணலாமா? பெருந்தன்மையாகுமா? அறிவுடைமையாகுமா? வேருக்கு வெந்நீர் பாய்ச்சப்படும்போது மேற்கிளைகள் தம்மில் முரணுவது இயற்கையல்லவே! ஆடவர் பெண்டிர் கட்சிகள் ஒருமனம் கொள்க! பெருமனம் கொள்க! எழுக தமிழர் பெரும்படை! சுண்டைக்காய்கள் என்று எதிரிகளால் எண்ணப்படும் தமிழர் - கடல் என்று காட்டுக. பாய்க,. எதிரியின் திட்டம் பொடிபடச் செய்க. வெல்க தமிழகம்! வாழிய தமிழன்னை! - குயில், திங்கள் இருமுறை இதழ், 1.7.1962, ப.3 52. முதலமைச்சர் ஆண்டு வாழ்த்து நம் காமராசருக்கு இன்று 60 ஆண்டுகள் நிறைந்தன. அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நாம் மனமார வாழ்த்துகிறோம். ஏன்? அவர் தமிழகத்தின் முதலமைச்சர்; நல்லவர்; ஆட்சி புரிவதில் வல்லவர். அது மட்டுமல்ல; தமிழக முதலமைச்சர் என்று காமராசர் இந் நாள் இல்லையாயின், அந்தப் பொறுப்புள்ள இடத்தை அடைந்து ஆட்சி நடத்த வேறு மனிதர் இல்லை. மனிதர் இருக்கின்றார்கள். காமராசர் இல்லை என்று நாம் அறுதியிட்டுக் கூறுவோம். தமிழர்கள் அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று எண்ணுகின்றார். எண்ணியபடி செயல் செய்கின்றார். அச்செயல் செய்வதிலும் வெற்றிபெற்று வருகின்றார். தாழ்மை என்பது ஏழ்மையின் பயன் என்ற உண்மையைக் கண்டறிந்தவர். காமராசர் ஒருவரே! அயர்ந்தார் உயர்ந்தார். அதற்கு ஆன எல்லா உதவிகளும் செய்து வருகின்றார். இதைக் காமராசரின் எதிரிகளும் மறுப்பதற்கில்லை, மக்கள் தொண்டு செய்து கிடக்கும் தக்கார் அவர். அடைய வேண்டிய பெரும் புகழை அடைந்து வருகின்றாரா என்றால், இல்லை, அது மிகக் குறைச்சல் என்பது நம் கருத்து. ஏன்? - வடநாட்டவருடன் கூடிக்கொண்டு தமிழைத் தாழ்த்து கின்றார். தமிழில் என்ன இருக்கின்றது என்று முன்னொரு முறை அவர் கேட்டார். தமிழரின் தாய்மொழி பதிந்திருக்கும் உயிரில் இந்தியைப் புகுத்தவேண்டும் என்று அவர் எண்ணுகிறார். காமராசர்க்குள்ள நெருக்கடி நமக்குத் தெரிகின்றது. தமக்குரியதான பெரும் புகழை அவர் அடைந்தே தீரவேண்டும். அவர் தமிழர், தன்னலமற்றவர், பிறர் நலம் பேணும் பெருந்தகை. வடவரை அவர் எதிர்க்க வேண்டும் தமிழுக்காக! இந்தி ஒழிப்புக்காக நாலு கோடி தமிழ் மக்களுக்காக! தமிழர் பக்கம் காமராசர் சேர வேண்டும். அதனால் வடவர் எதிர்ப்பு வந்தால் மகிழ வேண்டும். தமிழை நோக்க முதலமைச்சர் பதவி மிகச் சிறியது. வாழ்க காமராசர்! - குயில், திங்கள் இருமுறை இதழ், 15.7.1962, ப.3 53. தி.மு.க. செஞ்சிக் கிளிகள் செஞ்சியில் கொழுப்பு மிஞ்சிக் குரங்குகள் ஆடல் அரங்குகள் நடத்தின. ஊரிற் புகுந்து கூரையைப் புய்த்தன. வாழை சாய்த்தன. கூழை உருட்டின. முள்ளை ஒடித்தன; பிள்ளையைக் குத்தின. கருவைச் சிதைத்தன; தெருவை எரித்தன. கொல்லையிற் புகுந்தன. கல்லை எடுத்தன! தேரில் எறிந்தன; ஊரில் எறிந்தன!!!. செஞ்சியில் குரங்குகளை, செஞ்சிக் கிளிகள் என்று சொல்வ துண்டு. இப்போதுகூட அழகில்லாத ஒருவனைப் பார்த்து இவன், செஞ்சிக் கிளி என்று சிறப்புப்படுத்துவது உண்டு. செஞ்சிக்கிளிகள் செஞ்சியில் பெருத்துவிட்டன. அவை ஊரிற் புகுந்து செய்த கிளர்ச்சியைத்தான் மேலே குறித்துள்ளேன். ஊரில் நிலவிய அமைதியை அவை மறியல் செய்தன. இந்த மறியல் நடந்து இப்போது ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. ஐம்பது ஆண்டுகளின் பின் அதே மறியலை இப்போது சென்னை, வேலூர் முதலிய இடங்களில் பார்க்க நேர்ந்தது. தி.மு.க. செஞ்சிக் கிளிகள் செய்த அறப்போரால் அஞ்சி நடுங்கினர் மக்கள். விலைவாசி குறைய வேண்டுமென்று தொலைபேசியைச் சுட்டெரித்தன குரங்குகள். அரிசி விலை குறைய வேண்டுமென்று கருவுற்ற மங்கையைக் கண்ணீர் சிந்த வைத்தன - செஞ்சிக் கிளிகள். நெல்லின் விலை குறைய வேண்டுமென்று கல்லை விட்டு எறிந்தன. கருவாடும், கத்தரிக்காயும், விலை குறைய வேண்டுமென்று திருமணப் பந்தலுக்குத் தீ வைத்தன. நெல்லிக்காய் விலை குறைய வேண்டுமென கல்லூரியில் வாலவிழ்த்தன. பருத்தி விலை குறைய வேண்டுமென்று மருத்துவ விடுதியில் பல் இளித்தன மந்திகள். நாட்டை ஆளுகின்றவர்கள் இந்தக் காட்டு விலங்குகளைக் கட்டிப் பிடித்துச் சிறையில் அடைத்தார்கள். மந்திகள் பல, மன்னிப்பு கூறி வெளிவந்தன. மற்ற குரங்குகள் மேல் வழக்குப்போட இருக்கிறார்கள். ஆளவந்தார்! - குயில், திங்கள் இருமுறை இதழ், 1.8.1962, ப.3  54. தமிழ் தமிழ் பாஷைக்கு ஓர் புதிய நிகண்டு வேண்டும். நம் தாய்ப் பாஷையாகிய தமிழ் மொழியானது மராட்டி, வங்காளி பாஷைகளைப் போலச் சமீபத்தில் அதிக விருத்தியடையவில்லையென்றாலும், கேவலம் முன்நிலையிலேயே இருந்துவிடவுமில்லை. மற்றப் பாஷைகளைப் பேசுபவர்களுள் அப்போதைக்கப்போது சில உத்தம புருஷர்கள் தோன்றித் தத்தம் மொழிகளைச் சீர்திருத்தியும் விருத்தி செய்தும் வருவதையே தங்கள் வாழ்நாளின் பயனென எண்ணி முன்னேற்றமடையும் மார்க்கத்தைத் தேடுகிறார்கள். நமது பாஷையிலோ, பண்டிதர்களும், மகாபண்டிதர்களும், நாவலர்களும், புலவர்களும், இன்னும் என்னென்னவோ பட்டங்களைத் தாமாகச் சூட்டிக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் மாத்திரம் அதிகப்பட்டுக்கொண்டு வந்தார்களே தவிர, அன்னார் பாஷை விஷயமாய் உழைத்துச் சீர்திருத்தியதை மாத்திரம் காணோம். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுக நாவலர் சில இலக்கிய இலக்கணங்களைப் பிழை சோதித்து, அக்காலத்தில் தமிழ் மொழியை மூடிக் கொண்டிருந்த இருளையொருவாறு நீக்கினார். என்றாலும், அதனைப் பின்பற்றி, அத்தொழிலை நடத்திவரும் உத்தம புருஷர்கள் அதிகமாயில்லை. சமீபத்தில் மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் பண்டை நூல்களிற் சிலவற்றை ஆராய்ந்து அச்சிடு வித்தார்களானாலும், நம் மொழியில் அருமை பெருமைகளை நோக்க அவர் ஒருவர் செய்தது போதாதென்றே சொல்லவேண்டியிருக்கிறது. நூலாராய்தலும் வெளியிடுதலுமே தம் நோக்கமாகக் கொண்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்ற சபைகளினால் பொது ஜனங்கள் எவ்வளவு நன்மை அடையலாமென்று என்று நோக்கினார்களோ அவ்வளவு நன்மையை அடைந்தார்களில்லை. மற்றும் தமிழ் மொழிக்கண் அக்கறை கொள்ளும் கடமையுடைய மடாதிபதிகளிலோ பெரும் பாலோர் வேறு வழிகளில் திரும்பிவிட்டார்கள். இவ்விதம் நம் பாஷை யானது தன்னை முன்னுக்கு கொண்டுவர நாயகனற்றுத் தவிக்கும் இக்காலத்தில் அரசாட்சியார் ஒரு லக்ஷ ரூபாய்ச் செலவில் தமிழில் ஓர் விரிவகராதி தயாரிக்க எண்ணங்கொண்டது தமிழ் மக்களுக்குச் சிறிது சந்தோஷமான சமாசாரமே. ஆனாலும், அவ்வகராதி எழுதி முடிக்கும் கூட்டத்தில் தமிழில் அதிகப் பயிற்சியில்லாத சீமைப் பாதிரிகளும் சேர்ந்துள்ளதினால் அதன் நன்மையும் எதிர்பார்க்கும் அளவு உண்டாகுமாவென்று மேதாவிகள் சந்தேகிக்கிறார்கள். நம் பாஷையின் நிலைமை இவ்விதமிருக்க, அடுத்த வடபக்கத்திலுள்ள தெலுங்கர் களோ தங்கள் பாஷையைச் சீர்திருத்துமாறு போட்டி போட்டியாய்ச் சபைகளும் சங்கங்களும் ஏற்படுத்திப் பரபரப்புடன் வேலை செய்து வருகிறார்கள். அம்முயற்சியின் கண்கூடான பயனாய் இதுவரையும் அப்பாஷையில் இல்லாததான ஒரு தினசரிப் பத்திரிகை தோன்றிச் செம்மையாய் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் ஊக்கத்தைப் பார்த்தாவது தமிழர்கள் தங்கள் பாஷையின் விஷயத்தில் ஏதாவது கவலை கொள்ளுகிறார்களாவென்றால், அதுமாத்திரமில்லை. நம் தமிழ் மொழியில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் ஏற்பட்ட தொகை நூலாகிய நிகண்டு அதன் உற்பத்திக் காலத்தில் எவ்விதம் இருந்ததுவோ அப்படியே இன்னும் இருக்கிறது. அதில் ஒரு மொழிக்கு முற்காலத்தில் இரண்டு அர்த்தம் சொல்லப்பட்டிருந்தால் இப்போது அந்த வார்த்தை அரை டஜன் அர்த்தங்களில் உபயோகப்படுகிறது. இருந்த போதிலும் அந்த அர்த்தங்களை உட்படுத்திப் புதிதாய் வேறு நூல் தயாரிக்க எண்ணினவர் கூட இல்லை. உதாரணமாக, சூடாமணி யில், ஆகுவே எலியின் நாமம் ஆம் பெருச்சாளிக்கும் பேர் என்று ஆகு என்னும் பதத்திற்கு இரண்டே அர்த்தம் சொல்லியிருக் கின்றது. ஆனால் இக்காலத்தில் கொப்பூழ், பூனை, பன்றி, சாமரை என்னும் வேறு நான்கு அர்த்தங்களிலும் அதை வழங்கு கின்றனர். துப்பு என்னும் பதத்திற்கு துப்பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை அநுபவர் பேர் என்று ஆறே பொருள் சொல்லப்பட்டிருக் கின்றது. அதனை நெய், ஆயுதப் பொது, அறிவு, உணவு, குற்றம், சகாயம், சிவப்பு, துணைக் காரணம், பானம், பொலிவு, மிகுதி முதலிய பின்னும் பன்னிரண்டு பொருள் களிலும் வழங்குகின்றனர். உவமை யுருபு அதனில் இருபத்து நான்கு சொல்லப்பட்டிருக்க, இப்போது ஐம்பதுக்கு மேற்பட்டவை வழக்கத்தி லிருக்கின்றன. இன்னும் எத்தனை யோ உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். அது நிற்க, நிகண்டு நூலின் உபயோகம் தமிழர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிற் பயின்று தேர்ந்தவர்களைச் சுற்றித் திரியும் அகராதியென்றே சொல்லலாம். எந்த வார்த்தைக்கு அவர்களை அர்த்தங்கேட்டாலும் புதகம் தேடித் திறந்து பார்த்துச் சொல்லும் ஜோலியில்லாமல் நின்ற நிலையிலேயே சொல்லக்கூடியவர் களாயிருப்பார்கள். நம் தமிழ்ப் பாஷையிலுள்ள இந்நூலை ஒப்ப மேல்நாட்டில் எந்தப் பாஷையிலும் நூல்கள் கிடையா. அவ்வளவு அருமையும் பெருமையும் பொருந்திய நிகண்டில் இப்போது புதிதாகத் தமிழ் மொழியில் சேர்ந்திருக்கும் பல திசைச் சொற்களையும் பழைய மொழிகளின் நூதன அர்த்தங்களையும் சேர்க்காமல் பண்டுள்ளது போலவே இன்னும் வைத்திருப்பது நல்லதா? நாவலர் பதிப்பித்த பிரதியில் புதிதாய் வழங்கும் அர்த்தங்களும் சிலவற்றை உரையிற் சேர்த்திருந்தாலும் அதனால் நிகண்டு பாடம் பண்ணுவார்க்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. தவிரவும், பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்ற கொள்கையோடு இலக்கண நூற்கள் வரவரப் புதுப்பிக்கப்படும்போது இந்தத் தொகை நூலையும் புதுப்பிக்க வேண்டியது அவசியமல்லவா? இதைச் செய்து முடிப்பதற்கு அரசாட்சியின் தயவாவது பொருளுதவியாவது இல்லாமல் முடியா தென்பதுமில்லை. பொருட்செலவு அதிகமாகும் என்பதுமில்லை. சில தனித்தனி வித்துவான்களாவது அல்லது சபைகளாவது பிரயாசை எடுத்துக் கொள்ளுகிறதாயிருந்தால் இந்த விஷயம் திருப்தியாய் முடியக்கூடும். பிற விஷயங்களில் முன்னேற்ற மடைய விரும்பும் தமிழர் தங்கள் பாஷை நூல்களைப் புதுப்பிக்காம லிருப்பது எவ்வளவு அவமானம்? - கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) - சுதேசமித்திரன் 26.5.1914, ப, 6-7; குமரி மலர், பொங்கல் இதழ், சென்னை, டிசம்பர் 1968 55. அம்மியும் நகரும்! அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? சுயமரியாதைக்காரர் கூச்சல் வீணாகுமா? இதுவரைக்கும் வீணாயிற்றா? சுயமரியாதை இதுகால பரியந்தம் என்ன செய்துவிட்டது என்று கேட்பவர் சுயமரியாதைக்காரரின் விரோதிகள் என்பதும் கண்டோ மல்லவா? மேலும் நமதியக்கத்தை எதிர்க்கும் பல பத்திரிகைகளின் சுயமரியாதைச் சாயையுடையனவாக ஆகிவருதலை அறிஞர் நுணுகி அறிவாரல்லவா? மக்கள் சுபாவத்தின் எதிரொலி சுயமரியாதைக் கூச்சல் என்பது மறுக்கக் கூடியதல்லவே. மக்களின் உள்ளக் கிடக்கை என்னும் நெருப்புக்குச் சுயமரியாதை ஊதுகுழாயாம் என்ற உண்மையைச் சுயமரியாதைக்காரனைவிட ஆதிகர் அதிகமாய் அறிந்துள்ளார். Mifahyšyth mt®fŸ motƉiw¥ ãir¤J¡ bfh©L, ‘Iah! என்று அலறுகிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கும் ரெயிலில் உட்கார்ந்திருக்கும் ஒருவன், தான் ஏறிப்போகும் ரயிலுக்குச் சக்கரமில்லை என்று சொல்லவே மாட்டான். ஆயினும் மனச்சாட்சியை மறைத்துப் பொய் சொல்ல நினைப்பவன் அவ்வாறு கூறவும் கூடும் அல்லவா? அதுபோலவே ஐந்து புலன்களாலும் சுயமரியாதையையே அடைந்து தன்னில் மாற்றமடைந்துவரும் ஆதிகரும், ஆதிக வால்களும் சுயமரியாதையைப் பொறாமை காரணமாக எதிர்க்கத்தான் கூடும்; எதிர்த்து எழுதத்தான் கூடும். எதிர்த்துத் திட்டத்தான் கூடும். நம் கடமை என்ன? அடிமேல் அடி அடிப்பதுதான். புராண கதாகாலக்ஷேபம் செய்யும் சுயநலக்காரர்கள் தமது காலக்ஷேபத்துக்கிடையில் சுயமரியாதைக்காரரை இழுத்துப் பேசாவிட்டால் சரிப்படுவதில்லை. ஆயினும் அதே உள்ளத்தில் தமது முட்டாள்தனமும் பிரதிபலிக்கத் தானே செய்கிறது. இதற்கு வருந்தலாமா? நம் கடமை என்ன? அடிமேல் அடிப்பது தான். புரோகித நாய்கள் சுயமரியாதைக்காரனைக் கண்டு குலைக்காவிடில் திருப்திப்படுவதில்லை. அவர்கள் கொள்ளும் சக்தி பொதுமக்களுக்கு இல்லாமற் போகவில்லையே. சங்கராச்சாரிகள் என்பவர்களின் பழைய பேச்சுக்களின் பிரதிகள் இருந்தால் எடுத்துப் பாருங்கள். இப்போது குளறுவதையும் கவனியுங்கள். இப்போதைய பேச்சுக்களில் ஐயோ, எங்கள் கதி அநியாயமாய்ப் போகிறதே என்ற மறைபொருள்தான் கிடைக்கும். சங்கராச்சாரி சுயமரியாதைக்கு எதிர்ப் பிரசாரம் பண்ணுகிறாரே என்றால், அதனால் என்ன முழுகிப் போய் விட்டது. சாகப் போகிறவன் சத்தம் போட்டுச் சாவதாலும், மறையும் காற்று மாட்டுக் கொட்டிலை இடிப்பதாலும் என்ன பிரமாதம் வந்துவிடப் போகிறது? கூச்சல் அதிகமாகவே இருக்கும்; அதிலும் இன்றைய நிலையில் கூச்சல் மிக்க அதிகமாயிருக்கும். ஆனால் நிச்சயமாய் இந்த அதிகக் கூச்சல் நமது வேலையிற் பாதியைப் பங்கிட்டுக் கொள்ளும். சுயமரியாதையின் புதிய திட்டம் செய்யத் துவக்கியிருக்கும் வேலையின் ஒளிச் சுவாலை கண்ணுக்குப் புலனாகத் துவக்கவில்லை. எதிரிகளின் குமுறல்கள் அதிகமாயிருக்கிறது என்பது சிலர் கருத்து. புதிய திட்டம் துவக்கி வெளிவந்த மறுதினமே செல்வர்கள், புரோகிதர்கள், மடாதிபதிகள் மூளையில் உழவுத்தொழில் நடை பெறுவது மறுக்க முடியுமா? 10000, 5000, 2000, 1000 என்ற முறையில் சம்பளம் வாங்கு கிறவர்கள் 10, 20 சம்பளம் வாங்கும் ஏழை உத்தியோகதர் விஷயத்தில் காட்டிய மனப்பான்மை மாறுபடத் துவங்கி இருக்கிறது. பெரிய சம்பளக்காரர்கள் ஏழை மக்களை ஒடுக்கி வருவதற்காக நமக்கு இத்தனை சம்பளம் கொடுக்கப்படுகிற தல்லவா என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஏழைகளும் அந்த அதிகப்படியான சம்பளத்தைக் கோணற் பார்வை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மடாதிபதிகளின் அட்டகாசம் ஏழைகள் கண்ணை உறுத்த ஆரம்பித்து விட்டது. மடாதிபதிகளும் அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்று சுப்பிரமணியர் துதி ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய மிராசுதாரர்களின் குமுறல்களைக் கொண்டே படிக்கத் தெரியாத உழவர்கள் விஷயம் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாள் முழுதும் உழைக்கும் நமக்குக் கூலி ஆறணாவாம்; சோம்பேறி மிராசு தாரர்களுக்கு மார்பில் சந்தனமாம் என்பன போன்ற உத்வேகமான சண்டமாருதம் தலை காட்டிவிட்டது. இந்த நிலையில் சுயராஜ்யம் வந்தால் அது பணக்காரர்களுக்கும் புரோகிதக் கூட்டத்தார்களுக்கும் மடாதிபதிகளுக்கும் ஜமீன்தார்களுக்கும் நல்லதே தவிர, ஏழை மக்கள் என்ற பெரும்பான்மையோர் நிலையில் எள்ளத்தனை மாறுதலும் இராது என்பது ஜனங்களுக்குத் தெரிந்தே வருகிறது. இதன் உண்மை சமீபத் தேர்தல் சமயத்தில் தெரியத்தான் போகிறது. வட்டியில்லாமலும் ஏழைகட்கு எள்ளின் மூக்கத்தனைப் பயனில்லாமலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்கள் கோயில் பேராலும் குருக்கள் பேராலும் மதத்தின் பேராலும் வீணாய்க் கிடக்கின்றனவாமே! அடடா, அந்தப் பணங்கள் எல்லாம் இருந்தால் ஏழை மக்களே இல்லாமல் எல்லாரும் உண்ண உணவுக்கும் உடுக்க ஆடைக்கும் ஒண்டக் குடிசைக்கும் கஷ்டமின்றி வாழலாமே! மெய்தானடா அண்ணே! சுயமரியாதைக்காரர் சொல்வதுபோல் இந்த காமாட்டிப் பசங்கள் ஏழைகளைத் தினம் தினம் ஏமாற்றி ஏமாற்றி எப்படியோ பணத்தைச் சேர்த்தார்களே ஒழியப் பாடுபட்டதும் இல்லை, படுவது மில்லை, படப்போவதுமில்லை என்ற பெரும்பான்மை ஏழை மக்களின் அபிப்பிராயம் யாருக்கு அநுகூலமானது? ஆதிகர்களுக்கு அநுகூலம் செய்யுமா? மடாதிபதிகட்கு அனுகூலம் செய்யுமா? நமது கடமை என்ன? மேற்படி அபிப்பிராயங்களுக்கு வத்தி வைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதானே! முதலாளிகள் அம்மிகளாயிருக் கட்டும்; புதைத்த செக்குகளாயிருக்கட்டும். வேர்விடுமா? நகர்ந்து தானே தீரவேண்டும்! தேசீயத்தைப் பார்த்தார்கள். அந்தக் தேசீயத்தை முன்னின்று நடத்திய தேசபக்தர்களைப் பார்த்தார்கள் ஏழை மக்கள் என்ன முடிவுக்கு வந்தார்கள்? கீர்த்தியோ லாபமோ படங்களோ அனைத்தும் முதலாளிகட்கும், பழைய மண்வெட்டியும் கூடையும் ஏழைகட்கு ஏற்படுவதை அறியாமலா இருக்கிறார்கள்? தேசபக்தப் பத்திரிகைகள் சி.பி.சாமியின் தியாகம் என்று கொட்டை எழுத்தால் போடட்டும்! வாசிக்கும் மனிதர்கள் அதை நேராக வாசிப்பதை விட்டுத் தலை கீழாகப் புரட்டிச் சி.பி. அவர்கள் முன்பெல்லாம் 1000 ஏழையர் ரத்தத்தை உண்டுவந்தார். இப்போது பதினாயிரம் ஏழைகளின் ரத்தத்தைப் புனல்வைத்துச் சாய்த்துக் கொள்ளுகிறார் என்றுதானே வாசிக்கிறார்கள். அஞ்சுதல் வேண்டாம்! பின்செல்ல வேண்டாம்! ஜயம் உண்டு! நம் கடன் இடையறாது பணியாற்றலே! -குடியரசு, ப.1-3, 26.3.1933 56. அன்பே சிவம் என்பது ஆத்திகர் கரடி சிவம் சிவம் என்று சொல்லிச் சொல்லி வயிறு வளர்த்த சோம்பேறி பசங்கள் சிவம் என்ற பதத்திற்கு வேண்டிய வரைக்கும் கௌரவத்தை உண்டுபண்ணிவிட்டார்கள். சிவம் என்பது ஆக்க வல்லது, காக்கவல்லது, அழிக்கவல்லது. ஆகையால் அதற்குத் தரகர்களாகிய எங்கள் கால்களில் விழுங்கள். நீங்கள் பாடுபட்டதைக் கொண்டு வந்துகொடுங்கள். நாங்கள் விலாப்புடைக்க தின்று தின்று கொழுக்கிறோம். நரகத்துக்கும் மோக்ஷத்துக்கும் தலைமை வகிப்பது இதே சிவம்தான். ஆகையால் நரகத்திற்குப் போகாதிருக்க சிவத்தின் கூட்டத்திற்கு அடிமையாகி வாழுங்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி நாளடைவில் நிலங்களையும் காசையும் சோம்பேறிகள் கைப்பற்றினார்கள். இதனால்தான் ஆரம்பகாலத்தில் பொதுவாக இருந்த உடைமையும் ஒரு சாராரிடம் அடையலாயிற்று. இதனால்தான் பெரும்பாலான மக்கள் நாளடைவில் ஏழைகளாகித் தவித்தார்கள். ஆயினும் இந்த முதலாளிகள் காலக்கிரமத்தில் பெரும் பான்மைத் தொழிலாளரான ஏழைகட்கு அஞ்சத் தலைப்பட்டார்கள். ஏன்? கூட்டமாகக் கூடிவந்து தமது பசிக் கொடுமை நீங்குவதற்காக முதலாளிகளை உதைத்துப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ளவும் கூடுமல்லவா? இதற்காக முதலாளிகளாகிய ஆத்திகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? தங்களில் கொழுத்த ஆட்களைப் பிடித்து அரசன் என்றும் படைவீரர் என்றும் ஒரு கூட்டத்தை உண்டாக்கி அந்தக் கூட்டத்துக்கு ஆயுதமும் கொடுத்து, அரசாட்சி என்பதன் பேரால் ஏழை மக்களிட மிருந்து தம்மைக் காத்துக் கொண்டார்கள். இதன் பிறகாவது முதலாளிவர்க்கத்திற்கு மன அமைதி ஏற்பட்டதா? இல்லை. ஏன்? நாம் ஏற்படுத்திய அரசர்கள் ஆள வேண்டும். நாடு பிடிக்கவேண்டும் என்ற பைத்தியத்தால், வெறி நாய்கள் போல சதா சண்டையிடலானார்கள். இந்தச் சண்டைகளால் தொழிலாளர்கட்கு கிராக்கி ஏற்பட்டது. சிறிது மதிப்பு ஏற்பட்டது. ஏன்? படைக்கு ஆள் வேண்டும், தொழிலுக்கு ஆள் வேண்டும். ஆகையால் இந்த அரசர்களால் நமது ஆத்திக ஏமாற்றுக்கள் முழுதும் காக்கப்படுமா? என்று பணக்காரர்களாகிய - சோம்பேறி களாகிய தம்பிரான்கள் பயந்தார்கள். இதனால் அவர்கள் என்ன முடிவுக்கு வந்தார்களென்றால் பெரும்பாலான தொழிலாளர்களை நாம் தேக பலத்தால் முழுதும் அடக்கிவிட நினைப்பது முடியாத காரியம். ஆதலால் இவர்கள் மூளையில் முட்டாள்தனத்தையும் கண்ணில் மிளகாய்த் தூளையும், தூர்த்துவிட்டால் சாவதமாக நாம் ஏழை மக்கள் உழைப்பால் வயிறு வளர்க்கலாம் என்று முடிவுகட்டினார்கள். பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மத்தின் பலன்தான் நீங்கள் ஏழையாக இருப்பது என்றும், அந்த ஏழ்மையை அனுபவித்துத்தான் ஆக வேண்டுமென்றும் பொதுமக்கள்பால் கரடிவிட ஆரம்பித்தார்கள். இந்த ஜென்மத்தில் ஏழையாக இருந்தாலும் பாதகமில்லை. மிச்ச மீதியைக் கொண்டு பூணூல் திருடர், சடைமுடித் திருடர், கோயில் திருடர், அரசாங்கத் திருடர்களுக்குப் பூசை போட்டு வந்தால் அடுத்த ஜென்மத்தில் குளுகுளு என்று வாழலாம் என்பன போன்ற கயிறுகளைத் திரிக்க ஆரம்பித்தார்கள். இந்தக் காலத்தில்தான் பிரம்மா திடீரென்று தோன்றி நான்கு வருணத்தையும் பிரசவ வேதனையின்றி முகம், புயம், தொடை, கால் ஆகிய இடத்தினின்று வெளிப்படுத்தித் தொழிலாளர்கள் கஞ்சிக்குக் கேடாக உழைக்கும் நிலையிலே இருக்க வேண்டும் என்ற பேதத்தை சாவதப்படுத்தினார். இப்படிப்பட்ட பிரச்சாரம் எவ்வளவு தூரம் வலிவடைந்து மக்களின் மூளையைக் கலக்கிவிட்டது எனில் ஏழுமலையான் பேரைச் சொன்னால் குடியானவன் பெண்டாட்டி தாலியறுக்கவும் முடிகிறது. திருப்பதியில் காணிக்கை போட்டபின் அதற்குப் பதிலாக பார்ப்பான் செருப்பால் அடிக்கையிலும், கோவிந்தா என்று தலையைக் குனிந்து காட்டும் நிலையும் ஏற்பட்டது. உலக மக்களில் 100க்கு 90 பேர் ஏழைகளாகவும் மீதிப்பேர் உலக உடைமைக்கு அதிகாரிகளாகவும் காலரீதியில் ஆத்திகமும், அரசாங்கமும் செய்துகொண்டே வந்துவிட்டன. ஆயினும் ஏழை மக்களைக் கொள்ளையிடும் இந்தக் கூட்டத்தினர்க் குள்ளே நாளடைவில் சிறிது மனத்தாங்கல் உண்டாவது சகஜமாகும். ஏனெனில் ஆட்சி செலுத்துவோரிடம் படைபலம் இருப்ப தால் கரடிவிடும் கூட்டத்தினராகிய புரோகிதர், குருக்கள், மடாதிபதிகள் ஆகியவர்களின் மதிப்பு குறைய ஆரம்பித்து. இதனால்தாமே ஆட்சி செலுத்தவேண்டும் என்ற ஆசையும் பிறந்தது. எனவே தமது ஆத்திகச் சொக்குப்பொடியைப் படைபலம் கொண்ட ஆள்வோர் மீதும் தூவிவிடவும் கச்சை கட்டினார்கள். கடவுள் பிரச்சாரம், மத வழிபாடு, பெரியார் வழிபாடு, ஆத்ம சக்தி முதலிய வலைகளை ஓயாது வீசினார்கள். நாளடைவில் உலக மக்கள் ஒருவர் தவறாமல் அந்தக் கிணற்றில் விழுந்தார்கள். போப்புக் கூட்டமும், மடாதிபதிக் கூட்டமும், சங்கராச்சாரி கூட்டமும் இன்று உலகைக் குரங்குபோல் ஆட்டி வைக்கிறார்களா இல்லையா? உழைப்பு என்பதே கொஞ்சமும் இல்லாமலேயே கோடானுகோடி பணத்திற்கு, அதிகாரிகளாகவும், படைபலம் மிகுந்த ஆள்வோராகவும், அடக்கிப் பிடிப்பவர்களாகவும் விளங்குகிறார்களா, இல்லையா? இதனால் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், ஏமாற்றுங் கூட்டமும், ஏமாறுங் கூட்டமும் உலக ஆரம்ப முதலே இருந்து வந்தன. ஏமாற்றுங் கூட்டத்தார் கருவியாக ஏற்படுத்திய கடவுள் கொள்கை மதக் கொள்கைகளும், புராதீனமானவைகளே. ஆயினும் ஏமாறுவோரிடம் சலுகை காட்டும் கட்சிகள் அவ்வப்போது தோன்றா மலும் இல்லை. அக்கட்சிகளில், பிறரிடம் அன்பு பாராட்டல் என்னும் கொள்கையானது ஏமாற்றுக்காரருக்குச் சண்டமாருதம் என்று தோன்றி யிருக்கலாம். ஏனெனில் அந்த வார்த்தை ஏழை மக்களையெல்லாம் ஒன்று படுத்திவிடும் என்று அவர் கட்குத் தெரியும். அதனால் அன்புப் பிர சாரத்தை எதிர்க்காமல் அதைத்தாமே மேற்போட்டுக கொண்டார்கள். அன்பு நெறியை ஓங்க விட்டார்களா? அதை வேரோடு கிள்ளிப் போட்டார்கள். எப்படி? கொள்ளைக் கூட்டத்திற்கு முதலாளி வர்க்கத் திற்கு ஆதரவு தந்துவரும் கடவுள் அன்பின் உருவமாயிருக்கிறார்கள். அன்பே சிவம் என்று சொல்லிவிட்டார்கள். அது முதற்கொண்டுதான் இந்தப் பாழான உலகத்தில் அன்பு என்பது ஏழை மக்கள் முதலாளி களிடமும், கடவுளிடமும் காட்டுவதுதான் என்று முடிந்து. பணக்காரன், புரோகிதன், அரசாங்கம் ஆகிய இந்தக் கூட்டம் எப்போதாவது ஏழை மக்கள்பால் அந்த அன்பைச் செலுத்தினதாக எங்காவது, யாராவது காண்பிக்க முடியுமா? ஆத்திகர் விட்ட கரடிகளில் அன்பே சிவம் என்பது அசல் கரடியாகும். -குடி அரசு, 9.4.1933 57. விருத்தமல்ல கடந்த ஆகடு மாதம் 29-ந் தேதியில் வெளிவந்த சினிமா உலகம் (காட்சி 20) 11-ம் பக்கத்தில் தோழர் ஆரியூர் வ.பதுமநாப பிள்ளை, கவிதைக் கொலை என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள பகுதி வருமாறு:- தற்காலக் கவிதையுலகில் கீர்த்தி மிகுந்து விளங்கும் புதுவை - பாரதிதாசன் அவர்களது ஜீவசக்தி பொருந்திய பாடல்களை எவரும் குறைகூற முடியாது. ஆயினும், சமீபத்தில் வெளிவந்துள்ள பாலாமணி எனும் தமிழ் டாக்கிக்கு, அவர் வரைந்துள்ள பாடல்களினிடையிலும், ஒரு விநோத விருத்தம் புகுந்துகொண்டிருக்கிறது. டாக்கியில் வாதையெல்லாம் என்று தொடங்கிப் பாடப்படும் அந்தப் பாடலின் முதற் பதத்தை அந்த அச்சுப் பேய் வதையெல்லாம் என்று குறுக்கி வைத்துவிட்டது. அவ்விருத்தத்தின் முதல் மூன்றடிகளிலும் வாதை, காதல், சாதல் என்று எதுகைகள் அமைந்திருக்க நான்காவது அடியில் மட்டும் எதுகையே இல்லை. அதுமட்டுமல்ல. பாதி அடியுடன் பட்டென்று நின்று விடுகிறது. இத்தகைய கவிதைக் கொலைகளைக் கவிதையாசிரியர் கவனித்தாரோ என்னவோ தெரியவில்லை. வாதையெல்லாம் மாமலைபோல் என்று தொடங்கும் அந்தப் பாட்டு விருத்தமல்ல, அது விருத்தமென்று தோழர் பிள்ளை நினைப்ப தற்கு ஒரு காரணமும் இல்லை. அந்தப் பாட்டின்மேல் தாமோதரன் பாட்டு என்றும், ஏதினிமேல் மெட்டு என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. அது விருத்தமாயிருந்தால் அதன்மேல் விருத்தமென்று குறிக்கப் பட்டிருக்கும். உதாரணம் வேண்டுமானால், அதே புத்தகத்தில் வேறிடத் தில் மண், பெண், பொன் ஈடிணைகள் என்று தொடங்கும் விருத்தத்தின் மேல் பண்டார விருத்தம் என்று குறித்திருப்பதைக் காண்க. தோழர் பதுமநாப பிள்ளை, தமது கட்டுரையில், விருத்தங்கள் எனப்படுபவை யாவும் நான்கு - எட்டு - பதினாறு - முப்பத்திரண்டு முதலிய அடிகளைக் கொண்டவையாகவே அமைந்திருக்கும் என்று விருத்த லக்ஷணம் கூறியிருப்பது கொண்டு யாப்பு விஷயமாகத் தோழர் பிள்ளைக்குச் சிறிதுகூட அநுபவமில்லை என்று தெரிகிறது. டாக்கியில் வாதையெல்லாம் என்று தொடங்கும் அப்பாடலைக் கேட்டிருந்தால்கூட அது விருத்தமல்ல என்ற உண்மையைத் தோழர் பிள்ளை உணர்ந்திருப்பார். அப்பாடலின் முதலிரண்டு வரிகள் பல்லவி; மற்ற நான்கு வரிகள் இரு சரணங்கள்; விஷயம் அவ்வளவுதான். அது பட்டென்று நிற்கவுமில்லை. முடிவில்லாமற் போகவுமில்லை. அதில் மோனை, எதுகைகள் வெகு தடபுடலாகவே இருக் கின்றன. நான் கவிதைக் கொலை செய்யவில்லை. பிள்ளை அழ வேண்டாம். மெட்டுப் பாட்டை விபரீதமாக விருத்தமென்று நினைத்து விட்டதன் மூலமாகச் செய்துவிட்ட கவிதைப் படுகொலைக்கு நான் அழவில்லை. சிரித்துக்கொண்டுதானிருக்கிறேன். என்னைப் பற்றிப் பிள்ளையவர்கள் எழுதிய அத்தனையும் விபரீதத்தின்மேல் எழுப்பிய கோட்டை. பழுதையைப் பாம்பென்று நினைப்பதன் பெயர் விபரீதம். ஏதோ அசந்தர்ப்பமாகத் தோழர் என்னைப் பற்றி எழுதியதற் காக நான் இம்மியளவும் வருந்த இடமில்லை. தற்காலத் தமிழ்நாட்டின் நிலை அப்படியிருக்கிறது. தமிழ் தெரியாத ஒரே காரணத்தால் பலர், தமிழ்க் கவிதைகள் தமிழ் விமர்சனம், தமிழ்ப் பத்திரிகை எழுதிப் பிழைப்பதைப் பிள்ளை யவர்கள் பார்த்து வருகிறார். அதனால் தமிழ்நாடு கோணல் வழிச் சென்று கொண்டிருப்பதையும் கவனித்து வருகிறார். சகிக்காத உள்ளம் - மொத்தத்தில் - பாய்ந்தே தீரும். பொதுநலங் கருதியெழுச்சி யடைந்த அந்த வரிப்புலியை நான் வாலுருவி விடுகிறேன், அதன் லக்ஷியத்தை நோக்கி! அவ்வெழுச்சியை நான் ஆயிரமுறை வாழ்த்துகின்றேன். பாலாமணி பாட்டுக்கள். ஜனநாயகம் ஆசிரியர் தோழர் திருமலைசாமியும், தோழர் எ.வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப்படுத்த உரிமை யுடையவர்கள். மேலும், அவர்கள் ஈரோடு ஷண்முகாநந்தா டாக்கி கம்பெனியாருக்கும் நண்பர்கள், நான் பாலாமணிக்குப் பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கிகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஈரோடு சென்றேன். பாலாமணிக்குடையவர் கதா சந்தர்ப்பங் களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன். நான் வீடு திரும்பும்போது பாலாமணியுடையவரை நோக்கி, பிரதானமாகக் கேட்டவரம் ஒன்றே ஒன்று. அண்ணா சம்ப்ரதாயப்படி பாலாமணிப் பாடல்களைப் புத்தகமாக நீங்கள் அச்சடிக்கும்போது அதில் பிழையில்லாதிருக்க - என்னையும் கலந்துகொள்ளுங்கள். அவ்வாறே வரம் கிடைத்தது. பிறகு பாலாமணி வெளிவந்தது. எனக்குக் கொடுத்த வரத்தை உடனே உறிஞ்சிக் கொண்டார்களாதலால் லக்ஷணத்தின் எதிர்முனையில் பாட்டுப் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. அது மாத்திரமல்ல, நான் எழுதிய பாடல்கள் சில நீக்கப்பட்டும், வேறு பாடல்கள் சில சேர்க்கப்பட்டும் இருப்பதைப் பார்த்தேன். அதுபற்றி ஒன்றுமில்லை. இன்னின்ன பாடல்கள் இன்னின்னாரால் ஆகியவை என்பதைக் குறிக்கவேண்டியது அவசியமல்லவா? அப்படிச் செய்யாமல் வேறொருவர் எழுதிய பாடல்களுக்கு, இடப் பக்கமாக ஃ இக்குறி வைத்ததோடு நின்றார்கள். மேலும் அப் புத்தகத்தில் அச்சுப் பிழை இல்லாத இடம் அருமையாகிவிட்டது. முதலாளிகட்கு இதில் கவலை யிருக்க வேண்டியது அநாவசியமாகத் தோன்றலாம். இருந்தாலும் அவர்களின் இச்சட்டம் அக்கிரமமானதும் நாணயமற்றது மாகும். நான் விழுப்புரத்தில் பாலாமணி பார்க்கப் போனேன். அங்குத் தோழர் மிக்சேட் அவர்களைக் கண்டேன். இப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என்று கேட்டேன். அவர் கம்பெனியின் சார்பாகச் சொல்லிய பதில்கள் ரசமானவை. பாலாமணிக்குடையவர்கள் விரும்பியபடி நான் கோரஸாக எழுதிய பாடல் இது:- ஸ்ரீபாரத தேவி! புரா தனியே! எழில் அன்னைநல் வீராவேசம் தீராக் காதல் மேவச் செய்தாய் என்னை! உதாரி ஜெயசீலி! காவேரி கங்கா தீர நாரீ! ப்ரபல ஹிமய கிரிதேஹி! கோடானு கோடிப் போர் வீரர் தங்கள் முதல்வி! புனித வளமுடைய நிலத் தலைவி! அமுதுபோல் கவிதைகள் ஆர்ந்த சாந்தமுகிவாழி! இதை நீக்கி - கார்குகா ஷண்முகா என்று தொடங்கும் ஓர் பாட்டைச் சேர்த்ததற்கு என்ன காரணம் என்றேன். ஷண்முகாநந்தா டாக்கி என்று கம்பெனிக்குப் பேர் வைத்திருப்பதால் கோரஸிலும் ஷண்முகம் என்று வரவேண்டுமாம். மேலும், முதலில் மங்களகரமாக இருக்க வேண்டுமாம். காப்பாற்று குகா என்ற பொருளில், காகுகா என்று எழுதாமல் கார்குகா என்று எழுதுவதும், பாடச் செய்வதும் பிழையல்லவா? காரால், பிழை மொழியால் துவக்குவதுதானா மங்களகரம்? சரி, போகட்டும். வேதவல்லியை நோக்கி, சச்சிதானந்தன் பாடும் ‘kJÇj மொழியுடையாய் ஒரு வார்த்தை brhšthŒ’ என்று தொடங்கும் என் பாட்டை நீக்கியதற்குக் காரணம் கேட்டேன். சச்சிதாநந்தனாக நடிக்கும் ஸ்ரீ கருணாலய பாகவதர் அந்தப் பாட்டை வெகு இனிமையாகப் பாடிவிடுவாராம். அதனால் வேதவல்லி நடிகைக்குக் குறைவு ஏற்பட்டுவிடுமாம். முதலாளிக்கு வேண்டிய பேர்வழியைவிட வேறு பேர்வழி அழகாய் இருந்துவிட்டால், அந்த அழகனின் மூக்கை முதலாளி வெட்டிவிடலாம் என்று ஓர் சட்டம் உண்டாகாமல் இருப்பது பற்றி வருத்தப்படாதிருக்க முடியுமா? - நகர தூதன், 19. 9. 1937 58. தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும்! தமிழருக்குப் புரட்சி மனப்பான்மை அவர்கள் தங்கள் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும். ஆகையால் தமிழர் தம் பகைவரால் அடையும் எவ்விதத் தொல்லையையும் நான் வரவேற்கின்றேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர் சீரழிந்து வருகின்றனர். அவர்களின் சீரழிவுக்குக் காரணம் இன்னதுதான் என்று அறிந்து வந்தும், அவர்களின் மிதமிஞ்சிய ஆதிகப் புத்தியானது அந்தச் சீரழிவும் நல்லதே என்று திருப்தியடையவைத்தது. அளவு கடந்த கடவுள் வழிபாடு, அதிலிருந்து அதே வீதத்தில் அரச வழிபாடு, அதிலிருந்து எடுத்தற்கெல்லாம் பயம், பின்னர் சுயநலம் - இந்த நோயில் ஆதியிலிருந்தே தமிழர்களை அழுத்திவந்தனர் தமிழர்களின் எதிரிகள். ஆதி முதல் தமிழர்க்கு எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாக அவர்கள் நெஞ்சுக்கு ஒரு நிமிஷ நேரமும், விடுதலை இருந்ததில்லை. வஞ்சத்தால் செல்வாக்கடைந்த மூளை, திரை மறைவில் வேலை செய்யும் அதன் விளைவாக பகிரங்க எதேச்சாதி காரம், தூக்குமரம், சித்ரவதைகள் இவைகளைக் கண்டபின்னும் அரச வணக்கம்! வறுமையிற் செம்மை - இந்த நம்பிக்கை! அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற ஐயம்! நெஞ்சு பஞ்சு படும்பாடு! நரம்புகள் துடைப்பக் குச்சி. சென்ற நூற்றாண்டில்தான் இந்த ஏமாந்தவர்! மேலும் ஏமாற்றுகிறவர்! மேலும் ஆதிக்கம் செலுத்த மூன்றாவது வர்ணம் இந்தியாவில் குதித்தது. இதனால் தமிழர் தம் நிலையை அறிய சிறிது வெளிச்சமும், தமிழரின் எதிரிகட்குத் தமது தந்திர சூழ்ச்சிகட்குத் தக்க லாபமும் ஏற்படலாயின. இப்போது தமிழர் அத்தனை மோசம் இல்லை. காதைப் பிடித்துத் தூக்கினாலும், இப்போது தமிழன் தன் சகிப்புத் தன்மையை விட்டுக் கீ என்று கத்துகிறான். தமிழரின எதிரிகள் இப்போது ஒரு தப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு: அரச வணக்கம், அதிகாரி வணக்கம், பயம், சுயநலம் இவைகள் இன்றைக்கும் தமிழனின் நிரந்தரச் சொத்து. அந்தக் காலத்தில் தமிழரின் தமிழ்க் கலைகளையெல்லாம் மாய்த்து அவைகளைக் கடல்கொண்டு போனதாகத் தமிழர்களைக் கொண்டே சொல்லிவைக்க அதை நம்பினார்கள். தமிழச்சி ஒருத்தியைச் சரிப்படுத்திக் கொண்டு 8000 தமிழர்களை நமது மூதாதைகள் படுகொலை செய்து முன்னேற வில்லையா? தமிழைப் புகழ்வதன் மூலம் தமிழர் தலைகளைப் பலியேற்க நினைத்ததில் இன்றுவரை வெற்றி! தேசத்தை அயலானிடம் காட்டிக் கொடுத்ததிலும், அதனால் சிறுபான்மையோராகிய நாம், சுகபோகத்தைக் காத்துக் கொண்டதிலும் வெற்றிமேல் வெற்றி! சில ஆண்டுகளாகக்கூட தமிழர்களுக்குத் தைத்த குல்லாய் களுக்குத் தமிழர் மூக்கைப் பிடித்துக் கொண்டுதானே தலை தாழ்த்தினார்கள். காசை பிடுங்கிக்கொண்டு காற் செருப்பைக் காட்டும் ஆளுக்கு எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று சொல்லும் இருட்டில்தானே தமிழர் குடித்தனம் பண்ணுகிறார்கள்! வந்தால் அரச போகம்! இல்லாவிடில் சென்னைக் கந்தசாமி கோயில் வீதியில் மூன்றணாவுக்கொரு பித்தளை செம்பு! பார்ப்போமே ஒரு கை? எதிரிகளின் இந்தச் சிந்தனைகள், காலந்தவறியவை என்பதே எனது அபிப்பிராயம். தமிழரை வஞ்சித்து வஞ்சித்து, அவர்களின் ஒற்றுமையைக் கலைத்துக் கலைத்து, நலி செய்து நலி செய்து பழகிய அந்த எதிரிகள் இன்று தமிழரின் மண்டையை நோக்கி ஓச்சிய கோட்டடிதான் ஹிந்திக் கட்டாயப் படிப்பு! அநேகமாக இன்று தமிழரால் ஓர் புரட்சி ஏற்படலாம். நலிந்த ஒரு தனி மனிதன் செத்துப்போவான். ஆனால் நலிந்த ஒரு ஜாதி சாகா எழுச்சியுறும். இது இயற்கைச் சட்டம்! எனது இன்பக் கனவு. -குடி அரசு, 10.10.1937 59. பாட்டு எழுது சினிமாவுக்குப் பாட்டு எழுது. நாடகப் பாட்டு எழுத. பெருமைப் படு. ஊதியம் பெறு. பொதுமக்களை இன்பத்தில் சேர். சந்தோஷப்படு. நீ பாட்டு எழுதுமுன படி. இலக்கணம் படி. இலக்கியத்தைச் சுவைத்துச சுவைத்து உன்னை விசாலப்படுத்து. ஒன்றை, அதன் சுற்றுக்கோடு வரைக்கும் ஆராய்ச்சி செய். சுருக்க மாகச் சொல். கேட்பவர்கட்கு விளக்கம் ஆகும்படி சித்திரம் செய். நீ எழுதிய வர்ண மெட்டுப் பாட்டை வாக்கியம் வாக்கியமாகப் பிரித்து அவைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதிப்பார். சிறு சிறு முடிவாக இருக்கிறதா, அர்த்தபுஷ்டியுள்ளவையாக அந்தப் பதங்கள் இருக்கின் றனவா. வீண் வார்த்தைகள் இல்லாமல் இடம் நிறைந்திருக்கிறதா வென்று பார். உனக்குக் கொடுத்தது ஒரு பல்லவி. ஒர் அனுபல்லவி, சரணம் ஆகியவற்றில் தொடர்ந்து மோனை எதுகை இருக்கும்படி செய். பல்லவி வானவர் போற்றும் வேலவனிடம் மாது நீ ஓதடி அனுபல்லவி மாமயில் நான் மலையிற்சென்று வஞ்சி என் நிலைதன்னை இன்று (வான) சரணம் நானவனுக்கும் அவன் எனக்கும்கடன் ஆவதென உண்டு சாசனம் - அதற் கேனில்லை இன்னும்வி மோசனம். என்பதில் வானவர் என்பதற்கு அனுபல்லவியான மாமயில் என்பது மோனை (தொகையும் வைக்கலாம்). பின்னுள்ள சரணத்தின் நானவ என்பதும், அதே தொகை ஆகத் தொடர்வதைக் கவனி. ஒரே ரகமான வார்த்தைகளைப் பாட்டில் உபயோகி. இரவு வருவாய் என்று, நெரு நல்மொழிந்தாயன்றோ என்பதில் நெருநல் பெரிய இடத்தில் தேடிப்பிடித்த வார்த்தை. பொருள் விளங்காது. எதுகை மோனைகள் தான், எதுகை தான் மோனையாக அமையச் செய். தஞ்ச முலகினில் எங்கணும் இன்றித் தவித்துத் தடுமாறிப் பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன் பாரமுமக் காண்டே என்பதில் தஞ்சம் என்பதன் எதிரில் தவித்து என்பது தான் மோனை. தவித்து என்பது சிரமப்பட்டுப் பெரிய இடத்திலிருந்து தேடிப்பிடித்த பதம் அல்ல; ஆதலால், தஞ்சம் என்பதற்குப் பஞ்சை என்பது தான் எதுகை. இரண்டும் ஒரே ரகம் கௌரவத்தில் இலேசாகப் பொருளைத் தருவதில். பஞ்சை என்பதற்குப் பாரம் என்பதைக் கவனி. அந்தப் பதம் அநாயாகப் பிறவி புரிகிறதா? இதில் வீண் வார்த்தைகள் இல்லை. இந்த அடியை, அதன் வர்ண மெட்டால் உனக்குப் பாடத் தெரியுமா? பாடிப் பார்! வர்ணமெட்டு, கெஞ்சுவதுபோல இருக்கும். கருத்தும் அவளப்பன். இரண்டு அபேதமாகிக் கேட்போர் நெஞ்சை அள்ளுவதைப் பார். உனக்கு (பாட்டு எழுத) அளிக்கப்படும் வர்ண மெட்டைப் பாடச் சொல்லிக் கேள். அந்தப் பழம் பாட்டை எழுதிக்கொள். அதில் எந்தெந்த வரிகள் லலிதமான போக்கில் ஒலிக்கின்றன என்று கவனித்து; அவற்றின் கீழ்ஒற்றைக் கோடு கிழி. எந்தெந்த வரிகள் மேல் தாயியில் வீறுகொண்டு செல்கின்றன என்று பார்த்து அவற்றின் கீழ் இரட்டைக் கோடு கிழி. ஒற்றைக் கோடுள்ள இடத்திலெல்லாம் - லலிதமான கருத்துக்களை வை. இரட்டைக் கோட்டில் - உற்சாகம், வீரம் இவைகளையோ, பிரதான கருத்தையோ வைத்து ஜொலிக்கப் பண்ணு. அருண கிரண தருண என்று எழுத்து ஒத்து வந்த பதங்களைப் போட்டு விட்டு ஓர் இனிய பாடலை நீ எழுதி விட்ட மாதிரி எண்ணி விடாதே. ஜனங்களை ஏமாற்றாதே! நீ எழுதியதை ஒரு சாமானிய நண்பனிடம் வாசித்துக் காட்டு. அவன் அதைக் கண்டுபிடிக்கிறானா தூலமாகவாவது என்பதை உற்றுக் கவனி! உனக்கே தெரியாத பதத்தை உபயோகிக்காதே உன்னைப் படித்தவன்போல் காட்டிக் கொள்ள! கொஞ்சம் எழுத நீ அதிகமாய்ப் படித்திரு! உன் உற்சாகம் உன்னைப் பாட்டு எழுதச் சொல்லும், எழுது! அதை நல்லாரிடம் காட்டு! நீ எழுதக் கூடியவன்! ஓடு; விரைவாக இலக்கணத்தைப் படி. கஷ்ட மில்லை. பெரியார் பாட்டுக்களின் அர்த்தம் கொஞ்சம் கேள். அதன் பிறகு கொளுத்து! பிழையாகப் பாட்டு எழுதுவதைவிடச் சரியாகக் கல்லுடைப்பது மேல் என்பதை ஒப்புக்கொள்! நல்ல வர்ண மெட்டில் பிழையான வார்த்தைகளைச் சேர்த்து பாட்டாக்கினால் நல்ல பாட்டுப் போல் தோன்றும். ஆயினும் பிறகு சாகும்; உலகம் அறிவை நோக்கி ஓடுவதால்,! குறில் வைக்கவேண்டிய இடத்தில் நெடிலையும், நெட் டெழுத்தை வைக்கவேண்டிய இடத்தில் குற்றெழுத்தையும் போடாதே. இழுபறி ஏற்படும். பாருக்குள்ளே நல்ல நாடு இதில் நாடு என்பதற்குப் பதில் நடு என்று உச்சரித்துப் பார். இராக தாளத்தைச் சரிப்படுத்த முடிந்தாலும் சாகும். யாப்பிலக்கணம் தெரிந்தால்தான் இதன் உண்மை உனக்குத் தெரியும். கூசாமல் இடையன் கைக் கோடாலியால் வெட்டக் கூட்டத்தில் ஒருவன் பித்தாபேயாவெனத் திட்ட என்பதில் பித் என்பது ராகத்தோடு உச்சரிக்கப்படும் போது பீ என்று மாத்திரம் சப்திக்கிறது. ஆபாசத்தைக் கவனி! இப்போதுள்ள எழுத்தாளர்களிற் சிலர் தமிழ்ப் பாஷை சொந்தப் பாஷைதானே; அது தானே வரும் என்பார்கள். ஏமாறாதே! எளிய நடையில் பாட்டு எழுதுவதற்கு இலக்கணம் எதற்கு என்பார்கள். நம்பாதே! நன்றாகப் படி! எளிய நடை என்பதை அவர்கள் இன்ன தென்று தெரியாமல் பேசுகிறார்கள். வரும்போது என்பது ஒன்று. சென்னையில் அதற்கு வரசொலோ என்றும் தென்பாங்கினர் வரச்சே என்றும், வைணவர்கள் எளச்சே என்றும், வேறுசில பகுதி யினர் வர்ரப்போ என்றும் சொல்லுவார்கள். இவற்றில்எது எளிய பதம்? எது வழக்கில் இருக்கும் பதம்? நீ எதைக் கையாளவேண்டும் என்றால் வரும் போது என்பதுதான். மற்றவை அங்கங்கே உலவினாலும் எல்லை கடந்தால் விழுந்து சாகும். எளிதில் பொருள் விளங்கவேண்டும். இது முக்கியம். அது இலக்கண முடையதாக இருத்தல்வேண்டும். இது முக்கியத்திலும் முக்கியம். வரும்போது என்பது தமழ் வழங்கும் எவ்விடத்திலும் கெம்பீரம் குறையாது. அது செந்தமிழ்ப் பதம். தமிழ் போலவே தமிழில் கலந்துகொண்டிருக்கும் வடமொழிப் பதத்தை உபயோகி, யாமள என்பது போன்ற வடமொழிக் கலப்பால் உன் பாட்டுப் பெருமையடையாது. வேடிக்கை, கம்மல் முதலிய திசைச் சொற்களைத் தள்ளாதே. ஆனால் சுண்ணாம்பை நூரி என்று சொல்லாதே. நூரி பச்சை மலையாளம். ரோஜா, ராஜா, ஜாம்ஜாம் இவைகளில் உனக்குப் பற்று வேண்டாம். பெரியார் எழுதிய கீர்த்தனங்கள், நாடகப் பாட்டுக்கள், பதங்கள் முதலியவற்றை நீ அதிகமாகப் படி. ஏன் என்று கேள்; ஒரு சொல்லோடு ஒரு சொல் உறவு செய்து பாட்டுச் சுவையை ஏற்படுத்துவதை, இன்னபடி என்று சொல்லிக் காட்ட முடியாது. ஆதலால், பாட்டை அர்த்தம் விளங்காத முறையில் அமைத்து வந்த குற்றத்தால் பாட்டு என்றால் அநாவசியப் பொருள் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் மக்கள். பாட்டைக் கொண்டு அதே அர்த்தத்தில் அதைத் தொடர்ந்து வசனம் பேச வைக்காதே. அப்படிவிட்டால் பாட்டை நீ அர்த்தம் புரிகிற விதத்தில் செய்யவில்லை என்று தான் ஆகிறது. பாட்டின் ஓர் வரியின் கடைசியில் இரவை என்று முடித்தால், அடுத்து வரியின் கடைசியில் அதற்குப், பரவை என்று வரும்படி வைக்காதே. பரவை - சமுத்திரம்; பொருள் விளங்காது. வரவையென்று வை. இது ஒத்த கௌரவமுடையது. பாட்டுக்களை விரைந்து எழுதாதே. மக்களிடம் அன்பு செய். கவனமாக உன் நல்லெண்ணத்தை மெதுவாகத் தேக்கி உலகெங்கும் பாய்ச்சு! ஒரே கருத்தை உயர்வான வழியில் எழுது. அதனால் கதை, காட்சிகள் உயர்ந்து தோன்றும். வீரனான தன் மணவாளன் இறந்தபின் காதலி அழுகிறான்: ஐயோ என்ன நான் செய்வேன் அரும்பாவி எவ்வா றய்வேன் உயிர்போன்ற நாதன் இறந்ததால் நான் என்ன செய்வது, எவ்வாறு அரிசி வாங்கி - யாரைக் கொண்டு சமைத்துண்டு உயிர் வாழ்வது? என்ற குற்றமான போக்குத்தான் வெளியாகிறது. வீரமாரும் திருத்தோளும் வீழ்ந்ததுவோ என்ன செய்வேன் தீராதிதீரரை நான் தெரிசிப்பதும் போனதுவோ என்று தொடங்கும் வரிகளில் என்ன உயர்வு, எத்தனை காம்பீர்யம் தொனிக்கின்றன பார். ãw ã‹!1 - ஸில்வர் க்ரீன் வருஷ அனுபந்தம், 19.3.1938 60. சங்கீத வித்வானோடு I நமது நாட்டில் உள்ள சங்கீத வித்வான்களில் பெரும்பான்மை யோரிடம் உள்ள மனோபாவத்தை விளக்கும் முறையில் இந்த சம்பாஷணை எழுதப்பட்டதாகும். *** கேள்வி : நீங்கள் நாகரீகம் உடையவராகக் காணப்படுகிறீர்கள். உங்கள் வார்த்தைகள் கம்பீரமாகவும் உங்கள் சுதந்தர புத்தியை விளக்குவனவாகவும் இருக்கின்றன. செல்வ மில்லாதவர் களுக்கு இந்த உலகம் பயங்கரமானது. நீங்கள் நிர்ப்பயமாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவது அறிய எனக்கு மிகவும் சந்தோஷம். நீங்கள் தமிழர் ஆதலால், அந்த சந்தோஷம் மிக அதிகரிக்கிறது. பதில் : ஆம் நான் ஒரு தமிழன், ஏறக்குறைய நீங்கள் சொல்லிய அனைத்தும என் விஷயத்தில் உண்மைதான். நான் ஓர் சங்கீத வித்வான். கேள்வி : அதிக சந்தோஷம். சங்கீதத்தின் உபயோகம் என்ன? பதில் : அறிஞர், கவிஞர், பக்தர் இவர்களின் உயரிய எண்ணங்களை உலக மக்களுக்கு உரைநடையில் எடுத்துக் காட்டுவது சாதாரண வழி. அந்த எண்ணங்களைக் கவிதையால் மக்களுக்கு விளக்குவது மிக்க பயன் விளைக்கக் கூடியதாகும். அந்தக் கவிதையும், இசையோடு கூடியதாயிருந்துவிட்டால் பொன்மலர் மனத்தை யும் அடைந்துவிட்டது போலாகும். அந்த இசைக்கவிக்குப் பக்க வாத்தியங்களையும் அமைத்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? எந்த எண்ணத்தை மக்களிடம் புகுத்தவேண்டுமோ, அந்த எண்ணமே அந்த மக்களின் எண்ணமாக ஆகிவிடும். அது மாத்திரமல்ல, சுவர்க்க இன்பம் மேலானது. ஆங்கே, கற்பக விருஷம், காமதேனு, சிந்தாமணி, ஹரிசந்தனம், பாரிஜாதம் என்பன உண்டு. அங்குள்ள வானவர் இளமை யோடு இருப்பார்கள். அவர்கட்குப் பசியும் இல்லை, தாகமும் இல்லை. கண்கொள்ளாக் காட்சிகள். இளம் பெண்கள், மலர் மணம், இனிய கானம், உண்ண அமுதம், உடுக்கக் காற்றினும் மெல்லிய தங்க மயமான உடைகள், உடம்பை உறுத்தாத மின்னும் பூஷணங்கள் இவை எதேஷ்டம். நீ சம்பாதித்தாக வேண்டும் என்பதில்லை. அவை உன்னைச் சம்பாதித்துக் கொள்ளத் தவம்புரியும். இப்படிப்பட்ட பதவியை - மேலுலகத்தை நீ பெற ஏற்பாடு செய். அதற்காக நீ தர்மம் செய், அதருமம் நீக்கு; பெருமாள் அருள் உனக்குக் கிடைக்கும். அந்த அருளின் ஒரு துளி போதும் அத்தனை பெரிய தேவலோகம் சொந்தமாகி விடும். என்று உரைநடைக்காரன் சொல்லுவான். இதையே ஒரு கவிஞன். ஆண்டவன் அருளினை வேண்டு - புவி அவதியை நொடியினில் தாண்டு தூண்டா விளக்கினில் மாணிக்கச் சோதியில் தோன்றிடும் சுவர்க்க மாராச வீதியில் மாண்புறு மங்கையர் தேவரின் சாதியில் வலிய அணைப்பர்நீ சென்ற தேதியில் என்று துவக்கி வர்ணிப்பான். உரைநடைக்காரன் சொன்னதிலும் கவிஞன் சொன்னதிலும், ஆண்டவன் அருளின் திறம், தேவலோகத்தின் சிறப்பு ஒருவாறு விளங்கும். ஆனால், பக்க வாத்தியங்கள் சகிதம் சங்கீதவித்வான் தனது ராக பாவத்தில் இக்கருத்தைக் குழைத்து மக்கள் செவியில் ஊற்றினால், கேட்போர் வானலோகத்தில் இன்ப மனுபவித்துக் கிடப்போர் ஆவார்! வேறு பேச்சில்லை. சங்கீதம் மிக்க உபயோகமுடையது. கே : நீங்கள் சங்கீதத்தின் உபயோகத்தை நன்றாகக் கூறி விட்டீர்கள். எனவே, சங்கீதத்தால் உருகாத ரேடியம் இன்னும் கண்டுபிடிக்க வில்லை என்பதும், அர்த்த புஷ்டியுள்ள ஒரு கருத்தமைந்த ஒரு கவிதையைச் சங்கீதமானது மனிதனின் உயிரிற் புகுந்து அவனை அந்தக் கருத்தின்படி அகண்டா காரப்படுத்தி விடுகிறது என்பதும் விளங்கிற்று. இதுமாத்திரமல்ல. அதே சங்கதி பொய்யாக இருந்தாலும் நம்ப வைத்துவிடும் சக்தி சங்கீதத்திற்கு உண்டு. அவ்வளவு தானே? ஆம்! தடையில்லை. அப்படியானால் சங்கீத வித்வானாகிய தாங்கள் மக்களிடம் பாட்டுக்கள் நல்லனவாக, நாட்டின் முன்னேற்றத்திற்குரியன வாக, அல்லது பக்தியின் வித்தாக கண்ணாடிபோல் மக்களுக்குச் சன்மார்க்கதை விளக்கிக் காட்டுவனவாக இருக்கவேண்டும். ஒரு நாட்டை முன்னேற்றமுறச் செய்யும். சக்தியைக் கையில் அடக்கிக் கொண்டிருக்கும் பெரியார் களின் கூட்டத்தில் இப்படிப்பட்ட சங்கீத வித்வான்களும் சேர்ந்தவர்கள் என்று கூறத்தடையில்லை. பதில் : தடையேது? நன்றாய்ச் சொன்னீர்கள். கேள்வி : ஆயிர மக்கள் கூடிக்கொண்டு தங்கள் வாயினின்று அமுத கானத்தின்மீது ஏறிவரும் கவிதைகளை எதிர்பார்த்திருக் கையில், ‘நீங்கள் பொடிபோடுவது நல்லது; அது மூளையை வெகு பெரிதாக்கிவிடும்? என்று அழகாக, இனிமையாக. பாவத்துடன் பாடிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? கேட்போர் அனைவரும் பொடிபோட ஆரம்பித்து விடுவார்கள். பதில் : வேறென்ன? உலகம் கெட வேண்டியதுதான். கேள்வி : நல்லெண்ணம், கல்வி, அறிவு, ஒழுக்கம் அனைத்தும் சங்கீத வித்வான்களிடம் குடிகொண்டிருக்க வேண்டும். பதில் : ஓ! அதற்கென்ன சந்தேகம்? கேள்வி : நீங்கள் தமிழ்நாட்டினர். பேஷான தமிழர். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உரியவர்களில் நீங்கள் ஒருவர். தமிழ் படித்திருக்கிறீர்களா? தமிழ்க் கவிகளை ஏராளமாகப் பொருளுடன் பார்த்திருக்கிறீர்களா? கவிதை ரசிக்கத் தெரியுமா? தமிழ் இலக்கணமும், கவிதை செய்யும் திறமும் உண்டா? நாட்டின் நிலை, தேவை, நாட்டில் எழுந்துள்ள அபிப் பிராய பேதங்கள் இவைகளைப் பரிசீலனை செய்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்ததுண்டா? என்ன பேசாதிருக்கிறீர்களே? பதில் : ஒழிவில்லை. தமிழ் படிக்க வேண்டும். பத்திரிகை படித்தால் பொதுவிஷய ஞானம் வரும் என்று கேள்வி. கேள்வி : நான் ஏமாற்றமடைந்தேன். ஆச்சரியப்படுகிறேன். இனிமேலா படித்தாக வேண்டும்? சரி நீங்கள் கச்சேரியில் பாடும் பாட்டுக்கள் என்னென்ன? (தொடரும்) - தமிழரசு, 15.1.1939, ப,66-68 II சங்கீத வித்வான் கூறினார் பிள்ளையார் கீர்த்தனம் முதலில் பாடுகிறேன். பிறகு ... ... கேள்வி : சரி, பத்ததி தெரிகிறது. ஆரம்ப முதல் அந்தியம் வரைக்கும் என்ன பாஷையில் பாடுகிறீர்கள்? பதில் : பெரும்பாலும் தெலுங்கில்தான். கடைசியில் தமிழ்கூட, பாடுகிறேன். கேள்வி : தெலுங்கு தெரியாதவரிடம் கூடவா தெலுங்கில் பாடுகிறீர்? பதில் : தெலுங்கு தெரியாத தமிழர்கள் அழைக்கிறார்கள். தமிழர் கேட்கிறார்கள். பாடுகிறவனாகிய நான் கூடத் தெலுங்கு தெரியாத தமிழன் தான். கேள்வி : இது ஏமாற்று அல்லவா? பதில் : எப்படி ஏமாற்றுவதாகும். என் குரு தெலுங்கில் உள்ள த்யாகராஜ க்ருதிகள் சொல்லிக் கொடுத்தார். குருவும் அதைத் தான் தம் காலத்தில் தெரிந்து கொண்டிருக்கிறார். நான் மாத்திர மல்ல. சங்கீத வித்வான்கள் அனைவரும் அப்படியே. வழக்கமாகிவிட்டது. கேள்வி : தமிழர்கள் வழக்கமாக ஏமாற்றப்படுகிறார்கள். என்கிறீர்களா? பதில் : நான் தெலுங்கில் பாடுவது தெரிந்தும், என்னைத் தெரிந்தும் தமிழர்கள் அழைக்கிறார்கள். நான் கச்சேரியை முடித்துக் கொண்டதும் அவர்கள் மனம் ஒப்பித்தான் பணம் கொடுக்கிறார்கள். எப்படி ஏமாற்றமாகும்? கேள்வி : ஏமாறுகிறவர்கள் அவர்கள் தாமே; யாரும் ஏமாற்ற வில்லையே என்கிறீர்கள். அதுதானே உமது வாதம்? பதில் : நன்றாய் யோசிக்கப் போனால் அதுதான். கேள்வி : ஏமாறுகிறவர்களிடம் பணம் பெறுகிறவர்கள் - பெறுவதை நிறுத்தினால் அவர்கள் ஏமாற வழியில்லை. ஆனால் நீங்கள் ஒன்று செய்யலாம். தமிழர்கட்குத் தெரிந்த தமிழில் பாடுக. அது அவர்களுக்கு நற்போதனை யாகவும், பக்தி பிரசாரமாக வும் ஆகும். இருக்கட்டும். உமக்கே அர்த்தம் புரியாமல் இருக்கும் ஒன்றை மக்கள் கூட்டத்தில், தலையசைத்து கை காட்டி, சிரித்து கோபித்து இப்படியெல்லாம் பாவனை காட்டி உச்சரிக்கிறீர்களே. இது என்ன யோக்கியதை? பதில் : சங்கீதத்தின் நோக்கம் என்ன தெரியுமா உனக்கு? வர பேதத்தை உச்சரிப்பதா? அதற்கு நீ ரென்ன? வாத்தியக் காரர்கள் இருக்கிறார்களே? யோசித்துப் பாரும் இன்னும் ஒருமுறை கூறுகிறேன். உரைநடையில் ஒரு விஷயத்தை வெளியிடுவதைவிட, ஒரு கவிதையின் மூலம் வெளியிடு வதால் கேட்பவர்க்கு மிக்க பிரயோஜனமும் உண்டாகும். அந்தக் கவிக்கும் சங்கீதத்தை அமைத்தல் பாடினாலோ மிக்க ப்ரயோஜனம் அபிப்ராயத்தை-அறிஞர்களின் எண்ணத்தைப் பக்தர்களின் உள்ளத்தை - விளக்க - சங்கீதமே ஒழிய, சங்கீதத்திற்காக வார்த்தைகள் அல்ல, தெரிந்த மொழியில் மேலான எண்ணங்களை ராகத்தோடு, பாவத்தோடு அறிந்து கொள்ளுவதுதான் உமக்குப் பணம் கொடுப்பதன் நோக்கமே தவிர, ஆளுக்காக அவன் சங்கீதத்தோடு கூட்டிக் கூவும், கூச்சலுக்காக அல்ல! தமிழ்நாட்டின் நிலையை உணர்ந்த துண்டா நீவீர்! தமிழ் தமிழ் என்று கதறுகிறார்கள்! உமது முறையை ஏமாற்று வித்தையைத் திருத்திக் கொள்ள முற்பட. வேண்டாமா நீவிர்? - தமிழரசு, 15.2.1939 61. காலிகள் தமிழ்நாட்டில் தமிழர்கள் எல்லாம் காலிகள், சுயமரியாதைக் காரர்கள்! படித்தவர்கள் எல்லாம் காலிகள் - ஆரியர் பஞ்சாங்கப்படி! வடநாட்டில் வங்காளத்தில் இருக்கும் போ கட்சிக்காரர்கள் எல்லாம் காலிகள், ஆதித் திராவிடர் அனைவரும் காலிகள் - காந்தீயர்களின் அட்டவணைப்படி, ஆந்திரதேசத்தில் ஆந்திர மாகாணம் கேட்பவர்கள் அனைவரும் காலிகள் - ஆச்சாரியார் அகராதிப்படி! இது மாத்திரமல்ல, காரே போன்ற நீதிமான்கள், அவர்கள் கட்சிக்காரர்கள் எம்.என். ராய் போன்றவர்கள், அவர்கள் கட்சிக் காரர்கள், சுதேச அரசர்கள், அவர்களை ஆதரிக்கும் மக்கள் அனைரும் காலிகள் - காந்தியின் ஜோதி சொன்னபடி. திருவாங்கூர் காங்கிரகாரர்கள் காலிகள், கொச்சி திவான் ஒரு காலி - விகடன் திட்டத்தில்! மறியல் செய்பவர் காலிகள், பட்டினி கிடப்பவர் காலிகள் - படேல் நியாயப்படி. வரியை எதிர்ப்பவர்கள் காலிகள் - மூர்த்தியின் எண்ணப்படி. இந்தியை எதிர்ப்பவர்கள் காலிகள், கொடிய சட்டங்களை வெறுப்பவர்கள் காலிகள், நீதி நிர்வாகப் பிரிவினை கோருபவர் காலிகள் - ஆச்சாரியார் நீதி சாதிரப்படி. காங்கிரஸுக்கு எல்லாரும் காலிகளாய்த் தெரிவதால் இனிக் காங்கிர காலிதான் போலிருக்கிறது. - தமிழரசு, 15.2.1939. 62. திரை நீக்கம் ஓர் பார்ப்பனனைப் பார்த்து நீ தமிழனல்ல என்றால் தமிழன் தான் என்கிறான். நீ ஓர் ஆரியன் என்றால், ஆரியர் திராவிடர் பிரச்னையே கூடாது அதெல்லாம் பிரிவை உண்டாக்கும் என்கிறான். இதுவரைக்கும் எந்தப் பார்ப்பானாவது நான் ஆரியனல்ல என்று சொல்லி இருக்கிறானா யோசித்துப் பாருங்கள். இத்தனை பெரிய உலகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பது எல்லாத் தேசத்திலும், எல்லா ஜாதியாரிடத்திலும் கண்டதுண்டு. இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பார்ப்பனனிடம் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பார்த்ததுண்டா? படிக்காத பார்ப்பான் புரோகிதனாகி விடுகிறான். தமிழ் படித்த பார்ப்பான் தமிழை அழிக்கத் தொடங்கிப் பொருளும், புகழும் அடைகிறான். நோயாளிப் பார்ப்பான் பக்ஷணம் விற்கிறான். இங்கிலீஷில் பட்டம்பெற்ற பார்ப்பான் இங்கிலீஷ்காரனை ஆதரிக்கக் கிளம்பு கிறான். அவர்களின் பந்துக்களாக உள்ள பார்ப்பனர் தேசீயத்தில் இறங்கி விடுகிறார்கள். அரைகுறை இங்கிலீஷ்கள் தமிழ்ப் பத்திராசிரியர்களாகி விடுகிறார்கள். பார்ப்பனர்களால் நடத்தும் பத்திரிகைகள் இப்போதும் நல்ல படியாகத்தான் நடந்து வருகின்றன. ஏனெனில் பார்ப்பனர்கள் ஒவ் வொரு பத்திரிகையிலும் இரண்டிரண்டு காப்பிகள் வாங்கு கிறார்கள். அது மாத்திரமல்ல சில தமிழர்கள் இருட்டில் இருக்கிறார்கள். இப்போதுதான் விளக்கேற்ற நெருப்புப் பெட்டியைத் தடவுகிறார்கள். என் மகன் பல துறையிலும் அறிவில்லாதவனாக இருக்கிறான். சங்கீதமா, எழுத்துவன்மையா, தமிழ் இலக்கியமா இலக்கணமா, இங்கிலீஷிலாவது தமிழிலாவது உள்ள கலைகளா ஒன்றுமில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டான். தமிழ்நாடு தானே சார் இது. ஒன்றும் தெரியாதவன் விமரிசனம் எழுதலாமே. என் நண்பர் ஒருவர்க்குப் போட்டிப் பரிசு கிடைத் திருக்கிறது. எதில் என்று கேளுங்கள். வியாசம் எழுது வதில். ஆனால் அந்தப் போட்டிப் பரிசில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கின்றது. - தமிழரசு , 15.3.1939 63. சினிமா உலகம் வாழ்க தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்கள் தலை நீட்ட ஆரம்பித்தன! ஆயினும் அத்தொழிலில் பெரும்பாலோர் ஈடுபடத் தயங்கினர், ரகசியத்தை விளக்குவாரின்றி! தமிழ்ப் பெருமக்கள் சினிமாக் கலையை நன்றாக ரசிக்கத் தெரியாத நிலையில் இருந்தனர். கலை நுணுக்கங்களை விளக்கிக் காட்டுவாரின்றி! பத்திரிகாசிரியர்கள் சினிமாவுக்கென ஓர் பத்திரிகை ஆரம்பிக்கும் நினைவும் துணிவும் கொள்ளவில்லை. நம்பிக்கை இன்மையால்! ஆனால், அந்நேரம் ஒரே ஒரு உள்ளம் மாத்திரம், தமிழ் நாட்டிலும் தமிழ்ப் படங்களுக்கென்று, தமிழ்ப் படங்களின் விளைவுக்கென்று, கலையின் விருத்திக்கென்று, ஓர் சினிமாத் தமிழ்ப் பத்திரிகை வேண்டும் என்பதை உணர்ந்து துடித்தெழுந்தது. அதே வினாடியில், அவ்வுணர்வு செயலில் வந்தது. சினிமா உலகம் தமிழ்நாட்டு வானத்தில், வட்டமிடக் கண்டோம். இனிய தொனியுடன் - அழகிய சிறகோடு, சினிமா உலகம் - பண்டிதர் பி.எ.செட்டியார் இருபெயர்கள் அறிவுலகத்தால் பாராட்டப் பெற்றன. பெருமக்களோ எனில், வரவேற்கவும் பாராட்டவும் நாளடைவில் முன் வந்தனர். இமயமலைச் சிகரம் காண முன் வருவார் போல! பண்டிதர் தமது உத்தியோகத்தை விடுத்தார். அவர் இடையறாது உழைக்க வேண்டியதிருந்தது. கரும்பின் சுவையை மக்களுக்கு எண்பித்து காட்ட, படம் எடுப்பது என்பது ஓர் நல்ல தொழில்; சினிமா மக்களின் முன்னேற்றத்திற்கு அவசியம்; கலை இப்படிப்பட்டது; சினிமாவால் முன்னேறிய நாடுகள் இவை; அந்தத் தொழிலின் ரகசியம் இதுதான் - இப்படியெல்லாம் முழக்கஞ் செய்தது சினிமா உலகம், ஆ என்று வாய் திறந்தது தமிழ்நாடு; ஆம் என்று தலையசைத்தது வாசகர் நெஞ்சம்! இன்னும் மேலே பறந்தது. ï‹D« ïÅjhf¥ gho‰W ‘áÅkh cyf«! வகுத்த வழியில் - அதன் பிறகு எத்தனை அறிஞர்கள்! எத்தனை சினிமாத் தமிழ்ப் பத்திரிகைகள்! புதிய சிறகை, புதிய தொனியை எழுப்பிய அன்று தொடங்கி, இன்றுவரை, தமிழ்நாடு பெற்ற பயனுக்கு - சினிமா உலகத்தின் ஐந்தாவது ஆண்டு என்று பெயர். சினிமா உலகத்திறகு - பண்டிருக்குத் தமிழரின் நன்றி உரியது. அதோ! அந்தப் பெருஞ் சிறப்போடு விளங்கும் அமெரிக்க நாட்டின் பெருஞ் செயல்களின் ஆரம்ப முனையில் - அதை முதலில் கண்ட அறிஞனின் - தீரனின் திருப்பேர் மின்னுகிறது. சினிமாக் கலைக்குத் தொண்டு செய்து - சுவை விளைத்து, நலம் புரியும் சினிமாப் பத்திரிகைகள் என்ற சிகரத்தின் மேல், பண்டிதர் நாமம் சுடர் விளக்கு! இதை மறுப்பதற்கில்லை. தமிழ்நாடு வாயார வாழ்த்துகிறது. நாம் வாழ்த்து கின்றோம். சினிமா உலகம் பண்டிதர் பி.எ.செட்டியார் பல்லாண்டு பயன் விளைத்துப் பயன்பெற்று வாழ்க என்று. - சினிமா உலகம், ஏப்ரல் 1939 64. மறைமலை அடிகள் தமிழ்ப்பெரும் புலவர்கள், தமிழ் பற்றி எண்ணுங்கால், தமிழின் பெருமன்னராகிய அடிகளின் ஆணையையே எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் அடிகள் தம் தமிழ் நூற்கள் அத்தனையும் அவரின் தெளிந்த உள்ளம்; முடிந்த தீர்ப்பு. துன்பமற்ற சாவு, துறவுள்ளமுடையார்க்கே - ஒழுக்க முடையார்க்கே - எவ்வுயிர்க்கும் தீங்கினை உன்னாதார்க்கே நேரும் என்பர். அடிகளுக்குப் புற்றுநோயோ கண்டது? மருத்துவரோ கருவி இட்டு ஆற்ற முயன்றனர். கைகால்களோ சோர்ந்தன? உடற்புண்களோ புரையோடின? புழுக்களோ மொய்த்தன? ஐயோ என்று அலறியபடி பன்னாளோ துடித்தனர்? அடிகள் உயிர் உடலைவிட்டு நீங்கி அமைதி யுலகம் அடையாது. இடை வெளியிலோ கொள்ளியாய்த் திரிந்தது? இல்லை. அடிகள் அமைதியை விழைந்தார்கள். அமைதி பெற்றார்கள். நாம் அவர்களைப் பிரிந்து அழுதாற் பயனென்ன? அவர்களின் கொள்கை எது? அதை எண்ணி, அவர்களை நம்முடனே இருக்கச் செய்வோம். தமிழர்க்கெல்லாம் அவர் நினைவு நல்வழியாகும். -குறள் மலர், 29. 9. 1950 65. எது கலை? கலை, கலை என்கிறார்கள் எங்கும், எதற்கும். கலை என்னும் சொல்லை எடுத்தாள்வதில் அவர்களுக்கெல்லாம் ஒரு தனி ஆசை இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆசையோடு எங்கும் எதற்கும் எடுத்தாளும் அவர்கள் அந்தச் சொல்லுக்குள்ள பொருள்தானென்ன, அதாவது அப் பெயரால் குறிக்கப்படும் பொருள்தான் எது என்று ஆராயவும் நேரம் கிடைப்பதில்லை போலும் அவர்கட்கு. பூக் கட்டுவதையே ஒரு கலை என்கின்றான் பூக் கட்டுவான்; பொன் நகை செய்வோன் அதையே ஒரு கலை என்கின்றான் அத் தொழில் செய்வோன். ஆடற்கலை, பாடற்கலை, செய்யுட்கலை, ஓவியக் கலை என்று உண்மை நிலையில் வரும் இக் கலைச்சொல், வழி பிசகித் திருடும் கலை, பொய் சொல்லும் நிலையையும் அடைந்துவிட்டது இந் நாளில். அதனால் கலை என்பது என்ன என்பதை விளக்குவதுதான் இங்கு இதை எழுதப் புகுந்ததன் நோக்கமாகும். என் வீட்டின் சிறிய அறையில் என் தோழர் என் எதிரில் வந்து உட்கார்ந்தார். பாடத் துவங்கினார்; அவ்வளவுதான். என் சிறிய அறையில் எதிரிலிருந்த என் தோழரை நான் மறந்துவிட நேர்ந்தது! நான் அதே நேரத்தில் ஓர் அழகிய பெரிய சோலையின் நலத்தை நுகரத் தொடங்கிவிட்டேன். மலர்கள் மணஞ் செய்கின்றன. அவை பன்னிறம் காட்டுகின்றன. தென்றல் தண்ணென வீசுகிறது. இந்த இன்ப உலகில் இருந்த என் காதில் சோடா வேண்டும் என்ற ஒரு சொல் விழுகின்றது. அப்போதுதான் நான் என் அறையைக் காணுகின்றேன். அப்போது நான் என் தோழர் பாடல்வல்லாரைக் காணுகின்றேன். இந்த இடத்தில் என்னை, என் வீட்டையும் எதிரிலிருந்த தோழரையும் மறக்கச் செய்தது எது என்பதற்குத் தக்க விடை தேட வேண்டும். கடினமான வேலையல்ல. சுலபமாகவே விடைசொல்ல முடியும். என் அண்டையிலிருந்த தோழரை, என்வீட்டை மறக்கச் செய்தது தோழர் பாடிய சோலைப் பாடல்தான். மற்றொன்று: என் வீட்டு அடுப்பங்கரையின் சுவர். காவிரி அவ்வளவு பெரிதல்ல. ஆயினும் ஒருநாள் என் துணைவி படைத்த இலையின் எதிரில் உட்கார்ந்த நான் எதிரில் சுவரை நோக்கினேன். நிழல் மரம் தழைந்த கரையை உடைய காவிரி ஓடுகிறது. கரையி லிருந்த ஓர் ஆலின் கிளையில் குந்தியிருந்த குரங்கு என்னை அச்சுறுத்துகிறது. இட்ட சோற்றை ஆறப்போட்டு எங்கேயோ அண்ணாந்து பார்க்கிறீர்களே - இந்தத் தொடர் மொழி கேட்டேன். அடுப்பங் கரையில் இருத்தல் கண்டேன், சோற்றைக் கண்டேன், துணைவியைக் கண்டேன். இவைகளை நான் மறக்குமபடி செய்தது எதுவோ அதுதான் கலை. முன்பு நான் மறக்கும்படி செய்தது எதுவோ அதுதான் கலை. முன்பு நான் கூறியதில் நீங்கள் செய்யுட் கலையை அறிந்தீர்கள். கலை என்பது பருப் பொருள் அன்று; அது கருத்துப் பொருள். சுவரில் நான் கண்ட ஓவியம் பருப் பொருள். அதுவன்று கலை. ஓவியத்தை ஆக்குவதற்குக் காரணமாய் அமைந்த ஓவியக்காரனின் ஆற்றலே கலை எனப்படுவது, என்று அறியவேண்டும். ஒரு பெட்டியைப் பார்க்கிறீர்கள். அதில் நீங்கள் கலையைப் பார்க்க முடிகிறதில்லை. ஏனெனில் அது நம்மை மட்டற்ற ஓர் இன்ப உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதில்லை. அது கல்வியின் விளைவுதானே. அந்தப் பெட்டியைப் போலவே மற்றொருவன் மற்றொரு பெட்டியும் செய்வதுண்டு. சிற்றுளிக்காரன் மரத்தில் கொடி, இலை, மலர் காட்டுகிறான். இலை அசைதலைச் செய்வதாகவும் காட்சியளிக்கிறது. நம்மைக் கவர்ந்து கொள்ளுகிறது. அவ் வேலை அவனுக்கே உரியது. பிறரிடம் அதைக் காண முடிகிறதில்லை. கல்வி அன்று, அதுதான் கலை. அந்தச் சிற்றுளிக்காரனின் ஆற்றல்தான் கலை. இன்னும் இதுபற்றி விரித்தரைக்கத் தேவை இல்லை. விரிந் துரைக்க இடமுமில்லை. இனி இவ்வகை இன்று, மக்களால் பேசப்படும் கலை என்பது பற்றி நம் திருவள்ளுவர் ஏதாவது சொல்லியுள்ளாரா? - எனில் இவ்வுலகில் வள்ளுவர் ஒருவர் மட்டுந் தான் கலை என்பது பற்றிச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொன்னார் என்று நாம் பெருமையடைய வேண்டும் என்பேன். அவர், உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு என்று கூறியருளினார். இதன் பொருளையும் கூறுகின்றேன். இது நன்று, இது நன்று என்று எதை அறிவுள்ள மக்கள் ஒப்புக் கொள்ளுக்கின்றார்களோ அது ஒட்பம்; அதாவது கலை. மற்று அறிவு என்பது என்னவெனில் அது ஒன்றைப் பற்றும்; பற்றியதைப் பிறகு விடாது அதாவது ஒரு பொருளின் உண்மையறிந்து கொள்ளும். அதன் பின் அதே பொருளின்மாட்டு மடைமையும் கொள்ளாது. மேலே கூறப்பட்ட ஒட்பம் என்பதையும் அறிவு என்பதையும் வள்ளுவர் இங்கே ஒரே செய்யுளில் கூறினார். ஏன்? ஒன்றுக்கொன்று தொடர்புடைமையால் என்க. இச் செய்யுளில் வரும் மலர்தலும் என்ற சொல் உம்மீற்று வினை யெச்சமாகும். இதில் வினாவெழும். கலையென்ற சொல்லிருக்க ஒட்பம் என்ற சொல்லை ஏன் வள்ளுவர் எடுத்தாண்டார்? என்பது. கலை, கல்வி, கற்றல் அனைத்தும் ஒரே பொருள் உடையவை. கல்வி, கல் முதனிலை, வி இறுதி நிலை. கலை, கல் முதனிலை ஐ இறுதி நிலையில் தொகுத்தல், ஆவதையும் நோக்குக. கற்றல் அல்லது கல்வி என்பது வேறு; ஒட்பம் என்பது வேறு, கல்வியே ஒட்பம் என்று நினைத்துவிடாமல் நம்மைக் காப்பார், ஒட்பம் என்ற சொல்லையே மேற்கொண்டார் என்க. இன்னும் ஒன்று; அறிவுக்கும் ஒட்பத்திற்கும் உள்ள சிறிது வேற்றுமை என்னவெனில் கூறுகிறேன். ஒட்பம் என்பது ஒன்றுக்குள்ள இலக்கணத்திற் சிறிது மாறியும் வரும் ஆயினும் அது - இது மிக நன்று இது மிக நன்று என்று அறிவுடை மக்களால் ஒப்புக்கொள்ளப்படும். ஒரு நிற்கும் கோட்டின் மூன்று ஒடிசலிலிருந்து மக்களின் ஓவியம் தொடங்கவேண்டும் என்பது இலக்கணம். ஒட்பம் அந்த இலக்கணத்திற்கு அப்பால் சென்று அமையவும் கூடும், ஆயினும் அது ஒட்பம்; அதாவது கலையே. - தென்றல், 15.9.1955 66. தமிழின் வெற்றி எங்கே இருக்கிறது? தமிழ்வான் கலைச்சொல் மழை பொழியும்; தமிழ்க்கடல் விஞ்ஞானச் சொல்முத்துச் சொரியும். விஞ்ஞானம் முதலிய பாடங்களைத் தமிழில் கற்பிக்க முடியாது என்று சொல்லுகின்றார்கள்; அப்படி சொல்லுகின்றவர்கள் தமிழர் நலத்தில் நல்லெண்ணம் உடையவர்களா என்று பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி ஆகவேண்டும் என்றால் ஆகமுடியாது என்பதற்கான காரணங்களைத் தேடுவதில் காட்டுகின்ற சுறுசுறுப்பை ஆட்சிமொழி ஆக வேண்டியதற்குக் காட்டுவதில்லை அவர்கள். தமிழில் கலைச்சொற்கள் இல்லையாம், விஞ்ஞானச் சொற்கள் இல்லையாம். தமிழில் எந்த ஏட்டில் கலைச் சொற்களும் விஞ்ஞானச் சொற்களும் இல்லையோ அந்த ஏட்டை விரைவாகத் தேடிக் காட்டுவார்கள் ஆதாரமாக. திருச்சியில் தமிழ் ஆட்சிமொழியாக வைக்கப்பட்டது மாதிரிக்காக. அப்படி வைக்கப்பட்ட காலத்தில் ஆட்சிப்பொறி ஒரு குழறுபடியான நிலையில் இருந்தது. தமிழை ஆட்சிமொழியாக வைத்தவர்கள் தமிழ் ஆட்சிமொழியா யிருக்கத் தகுதியற்றது என்ற கோள் விண்ணப்பங்களையும் உருவாக்கினார்கள். கலைச்சொற்கள் தமிழில் கண்டுபிடிக்கத் தனிக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதே குழுவில் தமிழின் பகைவர்களையும் கணிசமான முறையில் சேர்த்திருந்தார்கள். உருப்பட்டதா முயற்சி? விஞ்ஞானம் முதலிய பாடங்களைத் தமிழில் சொல்லிக் கொடுக்கமுடியாது என்பது போன்ற கதைகள் கதைப்பவர்கட்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதை ஊன்றி நோக்கவேண்டும். காட்சி என்பது சரியல்லவாம்; காக்ஷி என்று போடவேண்டுமாம்; ஆட்சி என்பது சரியல்லவாம். ஆக்ஷி என்று போடவேண்டுமாம். மாட்சி, சூழ்ச்சி என்பன பிழையாம். மாக்ஷி, சூக்ஷி எனல் வேண்டுமாம். இத்தகைய பாழ்படுத்தும் உட்பகை இந்த நாட்டில் இருந்துகொண்டு தானே இருக்கிறது. எந்தத் துறையில் தமிழர்க்குப் பகைவர் இல்லை? தமிழ் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கலாகாதாம். தனிமொழி அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது சரியல்லவாம். தத்தி விளையாட எண்ணும் தவளைகளை - தமிழர்களை ஒழித்துக்கட்ட எத்தனை விரியன் பாம்புகள்! தமிழின் அடிப்படையில் தமிழ்நாடு பிரிய வேண்டும்; தமிழ் ஆட்சிமொழி ஆதல் வேண்டும் - இந்தத் தமிழிசை தமிழர்கட்கு எவ்வளவு இன்பத்தை உண்டாக்கின! விலாப் புறத்தில் வேல்கொண்டு தாக்குதல்போல இதை எதிர்த்த அறிஞர்கள் எத்தனை பேர்? இதை எதிர்த்த கட்சிகள் எத்தனை? விஞ்ஞானச் சொற்களும் கலைச் சொற்களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன என்று சொல்லவரும் அறிஞர்கள், அச்சொற்கள் ஆங் கிலத்தில் எப்போது தோன்றின என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. விஞ்ஞானப் பொருள்களும், கலைப்பொருள்களும் உண்டான பின்பே விஞ்ஞானச் சொற்களும் கலைச் சொற்களும் உண்டாயின. புதுப்பொருள்களுக்குப் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் கிடைக்கும்; தமிழில் கிடைக்கமாட்டாவோ? சிறந்த இலக்கியங்களையுடையது தமிழ். பல கிளை மொழி கட்குத் தாய்மொழி தமிழ். தொன்மையானது தமிழ். இன்றுவரைக்கும் வழக்கழிந்து விடவில்லை. சாகாதது தமிழ். தமிழில் விஞ்ஞானச் சொற்கள், கலைச் சொற்கள் கிட்டமாட்டா என்று சொல்லுவோர் ஆட்டுக்குட்டி என்பது ஆஷ்டுக்குஷ்டி என்று ஆகாதா என்று தவங்கிடக்கும் கூட்டத்தாராகத்தான் இருக்கமுடியும். இன்று கிடைத்துள்ள தமிழ்நாடு தமிழர்களின் தமிழ்ப் போராட்டத் தின் பயனாகக் கிடைத்தது என்று சொல்லமுடியாது. மறைவான காரணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு தரப்பட்டதுதான் தமிழ்நாடு. இன்று கிளம்பியுள்ள ஆட்சிமொழி ஒப்புதல் தமிழர்களின் - தமிழ்ப் போராட்டத்தின் விளைவன்று. இன்று தமிழின் அடிப்படையில் தமிழ்நாடு பிரித்தவர்கள் நாளைக்கே வேறொரு காரணத்தால் இருமொழி மும்மொழி அரசாக்கி விடவும் கூடும். தமிழ் ஆட்சிமொழியும் அப்படியே. தமிழில் கலைச் சொற்கள் இல்லை; விஞ்ஞானச் சொற்கள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் அவைகளைத் தேடியடையலாம் என்ற நல்லெண்ணத்தால் சொல்வதில்லை; தேடவும் முடியாமல் போகட்டும் என்ற கெட்ட எண்ணத்தால் சொல்லுகின்றவர்கள். நாம் அவர்களை நோக்கி இதோ வேண்டிய அளவு கலைச் சொற்கள்; இதோ வேண்டிய அளவு விஞ்ஞானச் சொற்கள் என்று நீட்டினால் அவர்களது அழகு முகத்தில் மகிழ்ச்சி தோன்றாது; அசடுதான் வழியும். ஏன்? - அவர்கட்குத் தமிழர்கள் உருப்பட வேண்டும் என்ற எண்ணமே இல்லை. என்ன செய்தால் தமிழர்களிடத்தில் கலகம் நீடிக்கும்! எப்படி நடந்துகொண்டால் தமிழர்கள் தமக்குள் அடித்துக்கொண்டு நம் காலையே சுற்றிச் சுற்றி வந்து செத்துக்கொண்டே போவார்கள்! இதுதானே மேலாட்சியின் திருவுள்ளமும்! தமிழ்க் கடலில் கலைச் சொல், விஞ்ஞானச் சொற்களாகிய முத்துக்களை வாரவேண்டுமானால், அப்படி வாரிய முத்துக்கள் ஒதுக்கப்படாதிருக்க வேண்டுமானால், தமிழ் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வர வேண்டுமானால், அப்பெயர் நிலை நிற்க வேண்டு மானால், தமிழின் அடிப்படையில் ஏற்படும் தமிழ்நாடு, இருமொழி அடிப்படை மும்மொழி அடிப்படை என்று கூறி மாறாமலிருக்க வேண்டுமானால் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டுக்கு ஒரு தமிழன் தலைவனாகத் திகழ்ந்ததில்லை. தமிழின் பகைவர் அப்படிச் செய்து வெற்றிபெற்று வந்துள்ளார்கள். இன்று தமிழ்நாட்டில் வியக்கத்தக்க ஒருநிலை காணப் படுகின்றது. தமிழரின் பகைவரால் எறியப்படும் ஆயிரக்கணக்கான ஈட்டிகளின் நடுவில் கைவலுத்த காமராசர் காணப்படுகிறார், கண் கலங்கும் செந்தமிழர் பாங்கில். நம் உள்ளத்தைக் குறுகிய நோக்கங்கள் தழுவக்கூடாது. கருங் குளவிகளின் பாட்டுக்குக் காதைக் காட்டவேண்டாம். தமிழர்களின் தோள்கள் அனைத்தும் அந்த ஆலின் கிளைகளைத் தாங்கும் விழுதுகள் ஆதல் வேண்டும். தமிழ்நாடு முழுதும் ஒரே காமராசர்; காளான்கள் இல்லாத ஒரே ஆலமரந்தான் தோற்றமளிக்க வேண்டும். கிட்டாது கிட்டிய ஆலினை வெட்டி எறிய நினைப்பது விபீடணத் தன்மை. தமிழ் வான் கலைச் சொல் மழை பொழியும்; தமிழ்க் கடல் விஞ்ஞானச் சொல் முத்துச் சொரியும். தமிழர் வாழ்வு மேம்படும். தமிழரைப் பற்றித் தமிழின் பகைவர் புலிக் கனவு காண வேண்டும். தமிழர் பிரிந்து வாழும் இயல்பினர் அல்லர். தமிழ் முழக்கம் செந்தழலாய் எரிய வேண்டும். அப்போது இரும்புச் சிதறல்களாகிய தமிழர்கள் ஒரே இரும்புக் கூண்டாகித் திகழ்வார்கள். அவர் தமிழர்க்கு நல்லன பல செய்தார். இதை யாரும் மறுக்க முடியாது. அவர் நல்லன பல செய்ய முடியாது தவிக்கிறார். ஆம். அதனால்தான் அவர் கையை இன்னும் வலிவு படுத்த வேண்டும். எதிரிகளிடம் சேர்ந்து கொண்டு கூத்தடிப்பதால் என்ன விளையும்? தமிழின் வெற்றி தமிழரின் அசைக்க முடியாத ஒற்றுமையில் தான் இருக்கிறது. - கலைக்கதிர், ஜனவரி, 1956, ப.33-35 67. வழிகாட்டிகள் நான் சின்னப் பையனாக இருந்தபோதே என் மனத்தைக் கவர்ந்தவை இரண்டு. ஒன்று தமிழ். மற்றொன்று உடற்பயிற்சி. என் தமிழின முதிர்ச்சி பாட்டாய்க் கனிந்தது. உடற்பயிற்சி நாட்டுக்கு உழைப்பதில் கொண்டு போய்விட்டது. பாட்டும் நாட்டுக்கு உழைப்பும் ஒன்றுபட்ட நேரம்தான் நான் சுப்பிரமணிய பாரதியைச் சந்தித்த நேரம். அவரை நான் சந்திக்குமுன் என் பாட்டுக்கள் எப்படியிருந்தன என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் எனக்குப் பாரதி எந்த முடக்கினின்று எதற்கு வழிகாட்டினார் என்பது விளங்கும். சூரர்குலம் வேரறுக்க ஒருவேலும் - நான் துணைஎனப் பிடித்திட இருகாலும் - எண்ணும் காரியத்தை முன்னிட்டுவிற் கோலெடுத்து வேடர்புன மானைவிட்டுன் மெய்யுருவம் வேறுபட்டு நீமணந்த ஏர்குறத்தி அணைத்திட அறுதோறும் - தெய்வ யானையும் அணைத்திடமற் றறு தோறும் - எண் எந்த நாளும் - என் துயர் மாளும் ஓர்குடிமற் றோர்குடியைக் கெடப்பார்க்கும் - இந்த உலகத்தை நினைத்திடில் உளம் வேர்க்கும் - கொடு மாரன்விடும் பாணமதி லேமனது நோகஇள மாதர்வச மாகிஅ லையாதுசுக மே பெருகச் சீர்கடப்பந் தார்குலுங்க மயில்மேலே -அலை சிறு கடல் மேல் உதித்த வெயில்போலே - வர இதுவேளை - குகப் பெரு மானே கற்பகப் பொதும் பரிடைக் குயில்பாடும் -க லாப மயில் ஓடி அங்கு நடமாடும் - மிக நற்றருக்கள் வாசமலர் உட்குடைந்து தேனினங்கள் பொற்பொடியைச் சூறையிடும் அற்புதங்கொள் வான்மயிலம் சுற்றிவருவார் குடியில் உதிப்போனோ - கனக சுப்புரத்தினம் தமிழில் துதிப்பேனோ-எக் கதிதானோ -மால் மருகோனோ இது முருகனைப் பற்றிய பாடல். இனி, காணும் பொருளிலெல்லாம் கண்ணா உன் இன்னுருவம் காணேனோ பூணும் என் உள்ளமெல்லாம் புன்மை தீர்ந்துன்பதத்தைப் பூணேனோ கேட்கும் ஒலியனைத்தும் கேசவா என்றென் காதில் கேட்காதோ நான் வேட்கும் பொருளைனைத்தும் விண்ணோர் பதியே நீயாய் விளையாயோ! இது திருமாலைப் பற்றியது. அந்நாளில் நான் எழுதிய பாட்டுக்கள் பதினாயிரத்தில் இவை இரண்டு. இவை வரிப்பாடலினத்தைச் சேர்ந்தவை. இக் காலத்தில் வர்ண மெட்டுப் பாடல்கள் என்று கூறுகிறார்கள். இவை தவிரப் பெரிய வண்ணம், சிறிய வண்ணம் எனப்படும் வகையில் என்னால் எழுதப் பட்டவை பல்லாயிரம். வெண்பா,விருத்தம் முதலியவை வேறு பல்லாயிரமிருக்கும். இனத்தால் பலவகை! எண்ணால் பல்லாயிரம். ஆனால் தோரணை ஒன்றுதான்! பாட எடுத்துக் கொண்ட பொருளின் பெயர்ப் பட்டியலும் அந்தப் பொருள் பற்றிய கதையும் பெண்ணேசலும் மண்ணேசலும் பொருளேசலும் பாட்டை நிரப்பிவிடும்; என்னை உன்னிடம் அழைத்துக்கொள் என்ற அவலத்தோடு முடிவு பெறும். மேலே குறித்துள்ள பாடல்களைக் காண்க. அவற்றில் எளிய நடை முயற்கொம்புதான். நாட்டின் அன்பு மருந்திற்கும் கிடையாது. இந்நாள் மக்களுக்குச் சொல்லவேண்டிய கருத்துக்கள் இப்படித்தானா இருக்கவேண்டும்? வேணு என்பவர் என் உடற்பயிற்சி ஆசிரியர். பாரதிக்கு உடற்காப்புத் தோழர். அவருக்குத் திருமணம் நடந்தது. அதன் சார்பாக ஒரு சிறிய கச்சேரி. வாய்ப்பாட்டு என்னுடையது. தொன்று நிகழ்ந்ததனைத்து முணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்... என்று பாடிக்கொண்டிருந்தேன். பாரதி, வ.வே.சு.ஐயர், சீனிவாசாச்சாரி முதலியோர் என்புறமிருந்து நான் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந் தார்கள். அப்போதும் நான் பாரதியாரைப் பார்க்கவில்லை. அதற்கு முன்பும் பார்த்ததில்லை. ஆனால் பாரதியாரால் எழுதப்பெற்ற சுதேச கீதங்கள் என்ற நூலிலிருந்து பல பாடல்களைத் தெரிந்து வைத் திருந்தேன். அப்போது நான் பாடியதைக் கேட்டே அவர் ஒரு தமிழ்ப் புலவனையும், நாட்டுத் தொண்டனையும் நண்பனாகப் பெற ஆசைப் பட்டார் என்று பின்னால் வேணு அவர்கள் வாயிலாகக் கேள்விப் பட்டேன். அதே நேரத்தில் வேறு அவர்களால் நான் பாரதியைப் பெற்றேன். எடுத்தெழுதி வைத்திருந்த ஏடுகளோடு மிகுதியும் பழகினேன். அதன் பிறகு என் பாட்டுக்கள் மேலே எடுத்துக் காட்டினேனே அப்படி யில்லை! மக்களுக்கு என்ன கருத்துக்கள் வேண்டுமோ அன்ன கருத்துக்களை வைத்து எளிய நடையில் சுவைபட எழுதுதல் என்ற வழியை அவரே எனக்குக் காட்டியவர். அதன்மேல் நான் அன்று முதல் இன்று வரைக்கும் எழுதி வெளி யிட்டுள்ள ஏறத்தாழ அறுபது கவிதை நூல் உரைநடை நூற்களைக் காண்க. - குமுதம், 16.3.1961 68. சாதி ஏன்? புதுவை, குமுகாய விழிப்பு மன்றத்தின் 50ஆம் ஆண்டுவிழா மலரில் பாவேந்தர் எழுதிய இக்கட்டுரையைப் பாரதிதாசன் குயிலுக்கு திரும்பவும் வழங்கியிருந்தார் ஜாதி, சாதி என்ற சொல், தமிழர்கள் எல்லாருடைய நாவிலும் பயிலுவதான ஒரு சொல், அச்சொல் தமிழன்று; வடசொல். சாதி என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது எனில் பிறப்பு என்பதாகும். தமிழல்லாத ஒரு சொல் தமிழர்களால் என்றும் எங்கும் எடுத்தாளப் படுகிறது. அதே பொருளுடைய பிறப்பு என்ற தமிழ்ச்சொல் தமிழர்களால் எடுத்தாளப்படுவதில்லை. ‘Ú v‹d rhâ? என்று தமிழன் தமிழனை நோக்கிக் கேட்கின்றான். அல்லது நான் இன்ன சாதியென்று ஒரு தமிழன் தமிழர்களிடம் கூறுகின்றான். இந்த இடங்களில் சாதி என்னும் சொல்லை நீக்கி, பிறப்பு என்ற சொல்லை வைக்கவில்லை. நீ என்ன பிறப்பு? நான் இன்ன பிறப்பு என்று ஏன் சொல்லவில்லை? இப்படி ஒரு கேள்வி எழுகிறதல்லவா? ஆம்! விடை என்ன? பிறப்பில் வேற்றுமை காண்பது தமிழனின் பிறப்பிலேயே இருந்ததில்லை என்பதுதான் விடை. அப்படியிருக்க, பிறப்பு என்ற பொருளுடையதான சாதி என்ற அயற்சொல் எவ்வாறு இந்நாட்டில் புகுந்தது? சாதி புகுந்தது மட்டுமா? சாதி என்ற சொல்லுக்குடையவர்களின் சாதிப்பிரிவும் இங்கு ஏற்பட்டு விட்டது. ஏற்பட்டுவிட்டது மட்டுமா? தமிழர் நெறி மறந்துபோயிற்று. சாதிப்பிரிவு தமிழரின் நெஞ்சத்தில் வேரூன்றித் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்துவிட்டது என்று கூறினால் அது பொய்யாகாது. இங்கு இன்று ஒரு தமிழன் மற்றொரு தமிழனைக் காணுகின்றான். என்றால் தமிழன் என்ற தன் நாட்டானை அவன் காணுவதில்லை. எதிர் நிற்பாரின் சாதிதான் அவனுக்குத் தோற்றமளிக்கின்றது. தமிழன் மரத்தை மரமென்று எண்ணுகின்றான் சரியாக! நாயை நாயென்று எண்ணுகின்றான் சரியாக, ஆனால் ஒரு தமிழ் மகன் மற்றொரு தமிழ் மகனை வேறென்னவோ என எண்ணுகின்றான் பிழையாக! இஃது உலகில் எங்கணும் காணாத வியப்புச் செய்தி, தன்னைத் தானே முகவரி தெரிந்துகொள்ளாத ஒரு இனம், பாழான நிலையில் புதைக்கப்பட்டிருக்கும் தமிழினம்தான். பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவது தமிழரது இயல்பு அன்று என்று தமிழர்க்குத் தமிழர் நூல்கள் இடித்துக் கூறவில்லையா? இடித்துக் கூறும் நூற்கள் தமிழிலில்லையா என்றால் தமிழ் நூற்கள் அனைத்தும் சாதி என்பது இந்த நாட்டில் புகுந்த அன்று தொடங்கியே எச்சரிக்கை பறை முழக்கமிட்டுக் கொண்டே வருகின்றன. திருமூலர் செப்புகின்றார்: ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று, திருவள்ளுவர் செப்புகின்றார்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று, சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி என ஔவையாரும் செவ்வையாகச் சொல்லியருளினார். தமிழ் நூற்கள் எல்லாம் அகம் புறம்மென இருவகைப் பிரிவை யுடையவை - அவற்றால் தமிழர்கள் அடையும் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு வகைப்படும். இவ் வகைப்பட்ட தமிழ் நூற்கள் எவையும் பிறப்பினால் சாதியுண்டு என்று கூறவேயில்லை. தமிழர் வாழ்க்கை முறைகூட இல்லறம் துறவறம் என இரு பாகுபாடுடையது. துறவிக்குத் தமிழ் நூற்களில் எங்கேயாவது சாதி நினைவுபடுத்தும் சொற்கள் உண்டா? அல்லது இல்லறத்தானுக்குச் சாதியை நினைவு படுத்தும் சொற்கள் தமிழ் நூற்களில் எங்காவது உண்டா? இல்லவே இல்லை. ஒரு தமிழ்ப் பையன் ஒரு தமிழ் மகளைக் காணுகின்றான். இரண்டுள்ளமும் காதலால் ஒன்றுபடுகின்றன. அவன் அவளிடம் தன் வியப்பைக் கூறுகின்றான். யாயும் ஞாயும் யாரா கியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே இதன் பொருள் என்னவெனில், நம்மிருவர் நெஞ்சமும் செந்நிலத்தில் கலந்த பெயல்நீர் போல இயற்கை முறையில் கலந்தது தவிர உன்னைப் பெற்றவள் இன்னாள், என்னைப் பெற்றவள் இன்னாள் என்றெல்லாம் நம்முள் ஆராய்ந்து கொண்டிருந்ததுண்டா? என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் ஒரு தொடர்புமில்லாததை எண்ணி நம் கலப்பில் மறுப்புக் கண்டதுண்டா என்பதாம். இதனால் பழந்தமிழர் வாழ்க்கையில் சாதிப் பிரிவைப் பற்றிய செய்தி நினைவுக்கு வரும் நிலையிலாவது இருக்கிறதா? இல்லவே இல்லை! ஆனால் சாதிக் கொள்கையை வற்புறுத்தும் நூல்கள் தமிழி லில்லையா என்று கேட்கலாம். மிகப் பலப்பல உண்டு. அவை யனைத்தும் இறக்குமதிச் சரக்குகள் என்பதை மட்டும் மறுப்பாரில்லை. சாதிப்பிரிவை வற்புறுத்தும் நூல்கள் மிகப் பலப்பல மட்டுமன்று; சாதிப்பிரிவுகளே தமிழர்களில் பெரும்பாலோரிடத்தில் செயலிலேயே உள்ளன என்பதும் உண்மைதானே! ஆனால் அது இடையில் வந்த ஒட்டுவாறொட்டியான ஒருவகை முறைக்காய்ச்சல் நோய் என்பதை எவராலும் மறுக்க முடியாது! இனி இந்நாட்டில் பரவியுள்ள தமிழர்களால் மேற்கொள்ளப் பட்டுள்ள சைவம் வைணவம் ஆகிய இரண்டு சமயநூற்களும் சாதியை வற்புறுத்தவில்லையா என்று கேட்கலாம். இப்படி கேட்பவர்கள் இன்னும் சற்றே மேற்கிளம்பிச் சைவர்களிடத்திலும், வைணவர்களிடத் திலும் சாதிக் கொள்கை செயலில் வழங்கி வரவில்லையா என்றால் ஆம் வழங்கி வருகின்றது. ஆனால் இன்றுள்ள அவ்விரு சமயங்களும் இதற்குமுன் எவ்வாறிருந்தன என்பதை ஆராயவேண்டும். அந்நாளில் சைவமென்றும் வைணவமென்றும் பிரிவுபட்டிருக்கவில்லை. அன்பு, வாய்மை முதலிய நெறி பிறழாமல் வாழுங்கள் என்பதுதான் சமயமாக இருந்தது. இப்பொழுதுள்ள கோயில்களுக்கும் கழுவாய்களுக்கும் இவைபோன்ற சமயக் குறிகளுக்கும் ஆதாரமே இருந்ததில்லை என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். தமிழர்களே வந்தேறிகள் கட்டிவிட்ட கட்டுக்களை நம்புகிறீர்கள். கடவுளை அடைய வேண்டுமென்றால் இன்னின்ன வகையில் நடந்து கொள்ளவேண்டுமென்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவற்றில் உண்மை இல்லை. நீங்கள் கடவுளை அடையவேண்டுமானால் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்றார் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும் என்பதைத் திருக்குறளில் காண்க. தமிழ்நாட்டைத் தன் பரப்பளவால் விழுங்கிக் கொண்டிருக்கின்ற - எல்லாருள்ளத்திலும் இடம்பெற்றுள்ள கோயில் என்பது என்ன என்பதை ஆராய வேண்டும். கோயில் என்ற சொல் எதைக் குறிக்கிறது? அரசனிருந்து முறைசெய்யும் பெருமனைக்குக் கோயில் என்று பெயர். மறத்துறை விளங்கிய மன்னவன் கோயில் என்ற சிலப்பதிகார அடியைப் பார்க்க. இன்றைக்குத் தமிழன் கோயிற் கடவுளுக்கு என் சொத்தையெல்லாம் ஒப்படைப்பேன் என்று குறிக்கிறான்! பார்க்கிறோம். திருமூலர் சொல்வதைக் கேளுங்கள்! கொடியசைகின்ற இந்தக் கோயிற் கடவுளுக்கு நீங்கள் ஒன்று செய்தால் நடமாடுகின்ற அந்தக் கோயிற்கடவுளாகிய மக்களுக்குப் பயன்படாதே. நடமாடுகின்ற அந்த ஏழை மக்களுக்கென்று செய்தால் கொடியசைகின்ற அந்தக் கோயிற் கடவுளுக்குச் செய்ததாகிவிடும். படமாடக் கோயில் பரமற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அஃது ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பரமற்கு அஃது ஆமே என்பதைத் திருமூலர் திருமந்திரத்தில் காண்க. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லாத வர்க்கு என்ற வள்ளுவர் குறளை அறிந்தவர்கள் உருவ வணக்கத்தையும் ஒப்பு வரோ? ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறள் செய்த வள்ளுவர் இன்று வானளாவியுள்ள கோயில்களைப் பற்றி ஒரு சொல் சொன்னது ண்டா? விரிப்பிற் பெருகும். இந்நாட்டில் உள்ள உண்மைச் சமயமும், உண்மைச் சமய நூல்களும் சாதியை எண்ணியதேயில்லை. இந்நாட்டில் உறுதி பயக்கும் என்று சொல்லப்படும் நெறிகள் இரண்டு; ஒன்று வைதீக நெறி. மற்றொன்று ஆகம நெறி. வைதீக நெறியென்பது வடவர் நான் மறையைப் பற்றியது. ஆகம நெறியென்பது ஆன்றோர் செய்த நூல்நெறி! ஆகமநெறி தமிழர்களுடையது. வைதீக நெறி பிறருடையது. சம்பந்தர் காலத்தில்கூட சைவமானது தமிழர் நெறியாகிய நூல்நெறியில் தவறியதில்லை என்று அவர் செய்துள்ள பாடல்களில் அறியலாம். வைணவமோ அதற்கு முன்னமே வைதீக நெறியில் வீழ்ந்துவிட்டது. இன்றைய நிலையில் சைவ சமயத்தை அடையாளங் கண்டு கொள்வதும் இயலாதது ஆகிவிட்டது. இன்று வைணவர்களும் சைவர்களும் சாதிச் சேற்றில் தத்தளிக்கின்றார் என்றால் இதில் வியப்பொன்றுமிருக்கமுடியாது. இனி, தமிழர்களிடத்தில் சாதிக் கொள்கை இல்லை என்று கூறிவிட்டால், சாதிக் கொள்கை கெட்டது என்று ஆகிவிடுமா என்று கேட்கலாம். நாமறிந்த வரைக்கும் பேசுவோம். நம்முன் காணப்படும் பல நாகரீக நாடுகள் நம்நாட்டைவிட இளமையுடையவை. ஆனால் அவைகள் வளர்ச்சி முறையில் தடங்கலடையவில்லை. அறிவுத் துறையில் முன்னேறிக் கொண்டே போகின்றன. நம் நாடு அந்த நாடுகளைவிட முதியது. வளர்ச்சி எப்படி? செல்வநிலை எப்படி? அறிவுத் துறையில் பிற நாடுகள் எப்படி? நம் நாடு எப்படி? காரணம் இங்கு சாதி உண்டு. அங்கெல்லாம் சாதியில்லை. ஆதலினால் நம் நாட்டில் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியது சாதி வேறுபாடு ஆகும். சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதி - குயில், 10. 2. 1968, ப.33-37  69. பாரதியும் பெண்களும் திருமதி செல்லம்மா ஊரில் இல்லை. பெரிய பாப்பா, சின்ன பாப்பா ஊரில் இல்லை. சாப்பாடு திரு. முருகேசம் பிள்ளை வீட்டி லிருந்து அம்மாக்கண்ணு எடுத்து வந்து ஐயரை உண்பித்தார். இவ்வாறு ஒருநாள் மத்தியானம் தீர்ந்தது. இராத்திரிச் சாப்பாடும் முடிந்தது. இரவில் ஐயர் சாப்பிடப் பால்காரன் வழக்கம்போல் கொண்டு வைத்துவிட்டுப் போயிருந்தான். அது பச்சைப்பால். நான் இராச் சாப்பாட்டை முடித்து ஐயரிடம் படுத்துக் கொள்ள வந்தேன். அப்போது அவர் என்னமோ படித்துக் கொண்டிருந்தார். நான் அது என்னவென்று கேட்கவில்லை. பிறகு கொஞ்ச நேரம் எழுதினார். அதையும் கவனிக்கவில்லை. நான் வந்ததும் படுத்துக் கொண்டேன். தாம் எழுதுவது இன்னதென்று ஐயர் என்னிடம் சொல்லாததற்கு நான் படுத்துக் கொண்டதுதான் காரணம். நான் தூங்கிவிட்டேன். மேலே நடந்தவை எனக்குத் தெரிய வழியில்லை. நடுநிசி புரண்டேன். நித்திரை சிறிது கலைந்தது. தலை மாட்டில் ஐயர் குந்திக் கொண்டிருந்தார். ஏன் என்றேன். இல்லை. பாலைக் காய்ச்சியாக வேண்டும். நான் கீழே போய் அடுப்பின் மேல் பச்சைப் பாலைப் பாத்திரத்தில் வைத்துப் பேப்பர்களைக் கொளுத்தினேன். வெகு நாழியாகப் பால் காயவில்லை. உன்னிடம் சொல்ல வந்தேன். உனக்குத் தூக்கம்...! எழுப்புவதுதானே. இதோ நான் போய்க் காய்ச்சிக் கொண்டு வந்துவிடுகிறேன். மெத்தையை விட்டு விரைவாகக் கீழே இறங்கினேன். அடுப்பின்மேல் பால் இருந்தது. அடுப்பின் உள்ளே பேப்பர் எரிந்த சாம்பல் அடைத்துக் கொண்டிருந்தது. நான் அந்த சாம்பலை எல்லாம் வெளியில் தள்ளிப்போட்டு வேறு பல பேப்பர்களைத் தேடிக் கொண்டுவந்து கொளுத்தினேன். பால் ஏனென்று கூடக் கேட்கவில்லை. பேப்பர் கொளுத்துவ தால் உண்டாகும் உஷ்ணம் பால் காய்ச்சுவதற்குப் போதாது என்று தெரிந்தபின் விறகை அடுப்பில் இட்டு மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்தேன். விறகில் தீப்பிடிப்பது சுலப சாத்தியமாக இல்லை. நான் இதோ சுடவைத்துவிடுகிறேன், என்று தெரிந்தவனைப் போல மெத்தையை விட்டுக் கீழே இறங்கியதால் சீக்கிரத்தில் காய்ச்சிய பால் வந்துவிடும் என்று ஐயர் நினைத்திருப்பார். எதிர்பார்த்தபடி சீக்கிரம் வராதது பற்றி அவரே கீழிறங்கி வந்தார். அடுப்புப் பற்ற வைக்கும் ஆரம்ப வேலை எனக்கும் தகராறு என்பதைக் கண்ட ஐயர், ஏன் அந்த வித்தை; அவ்விடத்திலும் இழுப்புத்தானோ? இல்லை, இல்லை இதோ ஆயிற்று. ஐயர் சிரித்தார். எனக்குக் கூட இதோ ஆயிற்று என்றுதான் தோன்றிற்று. முதலில், அதன் பிறகுதான் இது நமக்குத் தெரியாத வேலை என்று விளங்கினது என்று கூறினார். நானும் ஐயரும் சேர்ந்து அடுப்பைப் பற்றவைத்து முடித்தோம். அடுப்பு எரிய ஆரம்பித்தது. பாரதியார் சிந்தனையில் ஆழ்ந்தார். கொஞ்ச நேரத்தின் பின், சுப்புரத்னம், பெண்கள் செய்யும் வேலை அனைத்தும் ஆண்கள் செய்வது சுலபமில்லை. அவை மிக்க சாதாரணம் என்று நினைத்திருக் கின்றோம். இந்த மாதிரி வேலைகளைப் பெண்கள் அதிகாலை 4.00 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரைக்கும் செய்து நம்மைப் போஷிக் கிறார்கள். இதற்கிடையில் அவர்களை நாம் அடிக்கிறோம்; அதட்டுகிறோம். நான்கூடச் செல்லம்மாவை அடிக்கிறேன். அதெல்லாம் கூடாது. நாமும் உழைக்கிறோம். பெண்களும் உழைக்கிறார்கள்; குடும்பம் நடக்கிறது. அவர்கள் இல்லாவிடில் நாம் என்ன பண்ணுவது? இதை நினைக்கிறதில்லை. புருஷர்கள் உண்மையில் பெண்களை இழிவு படுத்துகிறார்கள். எப்போதும் தம் ஆதிக்கத்தில் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். பெண்கட்கு ஏனென்று கேட்கக்கூட வாயில்லை. அவர்கள் நிலை அப்படி... பல கூறினார். மீண்டும் சிந்தனையில் சென்றார். பெண்களுக்கு ஏதோ நன்மை ஏற்படப்போகிறது என்பது மாத்திரம் எனக்கு விளங்கிவிட்டது. இதற்குமுன் பெண்களைப் பற்றிய ஐயர் எண்ணம் சாதாரண மானது. கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமை அற்ற பெண்களின் கூட்டமடி கிளியே என்று அவர் அதற்குமுன், திறமையற்றவர்கட்குப் பெண்களை ஒப்புக்காட்டிப் பாடி இருக்கிறார். எனக்குக்கூடப் பெண்கள் விடுதலை என்ற பிரச்சினை ஒன்று இருக்கும் என்றும் தெரியாது. பால் காய்வதற்குள் பெண்கள், பெண்கள் உயர்வு, பெண்கள் விடுதலை எல்லாவற்றையும் பற்றி யோசித்து முடித்துவிட்டார். பால் காய்ந்தது. ஆற்றிச் சர்க்கரை இட்டுக் குடித்தார். படுத்துக் கொள்ளுவோமா? நாளைக்கு எது பற்றிப் பாட்டு? ஐயர் சிரித்தார். ஆனால் உடனே அறுதியிட்டுக் காம்பீரியமாக பெண்களை விடுவிப்போம் என்று பதில் கூறினார். அந்தப் பாழும் இரவு எப்பொழுது விடிந்து தொலையும்? என்றது என் நெஞ்சு - விடிந்தது. விழித்தேன். பெண்கள் வாழ்கென்று கூத்திடுவோமடா பெண்கள் வெல்கென்று கூத்திடுவோமடா என்ற பண்ணும் மொழிகளும் என்னை அவரின் பாதாரத்தில் சேர்த்தன. ஐயர் எனக்குமுன் எழுந்து எழுதிக் கொண்டிருந்தார். நான் எழுந்ததும் பாடியபாடிக் காட்டினார். தொடர்ச்சி வருமாறு: தண்மை இன்பம் நற்புண்ணியம் சேர்ந்தன தாயின் பேரும் சதி என்ற நாமமும் தாய் என்ற தத்துவம் பெண்ணாக இருப்பதாலும் பெண் தத்துவம் ஆதலாலும் அந்தத் தாயின் பெயரும் சதி என்ற பெயரும் சாந்தியையும், இன்பத்தையும், புண்ணியத்தையும் தருவனவாம் என்று கூறினார். பின்னும் அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம் ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம் என்று தொடர்ந்து, துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூரப் பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம். என்று துணிவு கூறிக் காரணத்தையும் காட்டினார். பெண்களால் தான் துன்பம் தீரமுடியும். சூரப் பிள்ளைகளை அவர்கள் கொடுக் கிறார்கள். சூரப்பிள்ளைகள் அவர்கள் அம்சம். இதைவிடப் பெண்களைப் பற்றி என்ன சொல்லவேண்டும். இவ்வாறு புதிய கருத்துக்களைப் புதிய வழியில் கவிதாரசம் ஒழுகும்படி 9 அடிகள் எழுதி முடித்தார். அன்று அய்யர் வீட்டுக்கு வந்தவர்கள், பெண்கள் உயர்ந்தவர்கள். ஆண்களோடு சமானமானவர்கள் என்ற தருமத்தை அறிந்தார்கள். தமிழ்நாடு மறுநாள் தொடங்கிப் பத்திரிகை வாயிலாகப் பெண்கள் உயர்வை உணர்ந்தது. ஒருநாள் பாரதியார் என்னிடம் சொல்லுகிறார்: நான் இப்போது செல்லம்மாவை அதட்டுகிறது இல்லை. இந்த வார்த்தையை அவர் தெய்வத்தைப் பற்றிப் பக்தர் கூறுவதுபோல் கூறினார். இதை அவர் சொல்லவா வேண்டும்? பால் காய்ச்சியபோது பிடித்த இந்த ஊற்று, புதுமைப் பெண், விடுதலைக் கும்மி, முதலியவாகப் பெருக்கெடுத்து மக்கள் உள்ளத்தில் பெண்கள் விடுதலை நாட்டின் உயிர் நாடி என்ற பயிரைக் கதிர் காய வைத்துவிட்டது. - நகரதூதன், சென்னை, 6.5.1939, ப.8 70. கத்தி விளையாட்டுப் பார்க்கிறார் கவி பாரதி நான் ஒருநாள் என் நண்பர் ஒருவர் சகிதம் ஐயரிடம் சென்றேன். (ஐயர் என்பது கவி சுப்பிரமணிய பாரதியாரைக் குறிக்கும் சொல்.) ரகசியப் போலீ நாய் பல ரூபத்தோடும், பல காரணம் கூறிக் கொண்டும் நுழையக்கூடும். ஆதலால், வழக்கப்படி, ஐயர் என் நண்பரை உறுத்துப் பார்த்தார். நான் ஜாமீன் போட்டேன், அவர் எனது நண்பர் என்று. பாரதியார் : அப்படியா! நீங்கள் எங்கிருப்பது? நண்பர் : நான் இந்த ஊர்தான். சுப்புரத்தினமும் நானும் ஒரே பாட சாலையில் வாசித்தோம். உங்களைப் பார்க்க வேண்டும் என்று நான் சுப்புரத்தினத்திடம் கூறினேன். பாரதியார் : அப்படியா, தமிழ் படித்திருக்கிறீர்களா? நண்பர் : கொஞ்சம் தெரியும். இதற்கிடையில் நான், இவர் கத்தி விளையாட்டில் சமர்த்தர். ஒரு நாளைக்கு விளையாடச் சொல்லுகிறேன் என்று ஐயரிடம் கூறினேன். அவ்வளவுதான். ஐயர் முகத்தைப் பார்க்கவேண்டுமே. ஐயர் மார்பைப் பார்க்கவேண்டுமே! தமிழரில் ஒருவர் கத்தி விளையாட்டுக்காரரா யிருப்பதால் தேச விடுதலை நிச்சயம் என்று நினைத்துவிட்டார் போலும்! அவர் சொல்லுகிறார், கத்தி வீரரைப் பார்த்து: அப்படியே, ஜமாயுங்கள்! நீங்கள் எல்லோருக்கும் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்க வேண்டாமோ? அப்படிச் செய்யுங்கள்! சும்மா இருந்தால்! அதிக பலசாலியாக இருக்க வேண்டும் அல்லவா கத்தி விளையாடு கிறதற்கு? பின் எப்படி முடியும்? இவை மாத்திரமல்ல. உத்ஸாகத்தால் எவ்வளவோ கூறினார். என் நண்பர் ஐயரின் குஷியைக் கண்டு அதிக குஷாலாகிவிட்டார். நான் இப்போதே சென்று கத்தியை எடுத்து வரட்டுமா? என்று என்னை ரகசியமாகக் கேட்டார். அப்படியே தீர்மானிக்கப்பட்டது. நண்பர் கத்தியை எடுத்துவர வீட்டுக்குப் போனார். இன்னும் சற்று நேரத்தில் ஐயர் வீட்டு மெத்தையில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா? இங்கிலீஷ்காரனுக்கும் எனது நண்பனுக்கும் யுத்தமல்லவா நடக்கப்போகிறது. நாட்டுக்கு விடுதலை நிச்சயமாகிவிடப் போகிறது. எதைக்கொண்டு சொல்ல வேண்டி யிருக்கிறது, கேளுங்கள். ஐயர் வந்தவர்களையெல்லாம் இருக்கச் சொல்லுகிறார். வராத வர்களையெல்லாம் அழைக்கச் சொல்லுகிறார். கத்தி வீரரின் மார்பை வர்ணிக்கிறார். ஐயரின் மார்பு கனக்கிறது. ஆனால் பழையபடி அகலத்திலும் கனத்திலும் ரவா தோசை போல் ஆகிவிடுகிறது. கத்தி விளையாட்டுக்காரர் வந்தார். பாரதியாரும் நானும் மற்றவர்களும் உட்கார்ந்தோம் இரண்டு பட்டாக்களை இரண்டு கையில் எடுத்தார் வீரர். ஐயருக்குத் தாம் அனுபவிக்கப்போகும் இந்தக் காட்சியை அனைவரும் அனுபவிக்கவேண்டுமே என்ற எண்ணம் போலும், எழுந்தோடிக் கீழேயிருக்கும் தம் மனைவியாரை நோக்கி, செல்வா, யாராவது வந்தால் மெத்தைக்கு அனுப்பு என்கிறார். இந்த வார்த்தை அநாவசியம். அவர்கள் யாராவது வந்தால் திருப்பியா அனுப்புவார்கள்? மீண்டும் ஓடி ஐயர், செல்லம்மா, வெற்றிலை அதிகமாக அனுப்பு! என்கிறார். இரு கையிலும் இரு பட்டாக்கள் சுழலுகின்றன. நானும் இன்னும் சிலரும் கத்தி விளையாட்டைப் பார்க்கவில்லை. ஐயரையே பார்க் கிறோம். ஐயர் கண்கள் சிவக்கும் ஒரு தரம். சிரிக்கும் மற்றோர் சமயம். ஏற்கெனவே மேல்நோக்கியுள்ள மீசையை இன்னும் முறுக்கேற்றி விடுவார். கைந்நொடிப்பார். எங்களையெல்லாம் பார்ப்பார். தேசப் பிரச்சினை ஒருவாறு வெற்றிகரமாக முடிந்து விட்டதோ என்பதுதான் எங்கள் எண்ணம். கத்தி விளையாட்டு நின்றது. நண்பர் உட்கார்ந்தார். ஐயர் : நீங்கள் வீரர்! பார்த்தீர்களா இவர் உடம்பை! நீங்கள் வீரர்! அடிக்கடி வந்து போகலாமே இவ்விடத்தில. ஐயர் கையில் ஒரு லட்சம் ரூபாய் இல்லாதது அப்போதுதான் ஐயருக்கு ஞாபகம் வந்தது. கத்தி வீரரைப் பார்த்து இந்தப் புதகங்களையெல்லாம் நீங்கள் வாசியுங்கள் என்று கூறிப் பல புதகங்களை அவரிடம் கொடுத்தார். மறுநாள் காலை, மத்தியானம், இரவு எந்த நேரத்திலும், ஐயருக்கு இதே நினைவு. வருபவரையெல்லாம், அவர், நீங்கள் நேற்று கத்தி விளையாட்டுப் பார்க்கவில்லையே? என்று கேட்பார். இந்த அதிர்ச்சியால், கத்தி விளையாடும் எனது நண்பர் தம் விளையாட்டில் முன்னிலும் அபிவிருத்தி அடைவதோடு, தாம் ஓர் வீரர் என்ற நம்பிக்கையும் உண்டாகிவிடும் அல்லவா? தமிழன் ஒரு துறையில் கெட்டிக்காரனாக இருந்துவிட்டால், ஐயர் அடையும் உத்ஸாகம் அளவிட முடிகிறதில்லை. ஐயரிடம் தென்பட்ட பன்றிக்குட்டி அசல் சிங்கமாக ஆகாமற் போவதில்லை. - நகரதூதன், 10.9.1939, ப.3 71. புதுவையில் பாரதியார் செல்வாக்கு இந்தியா பத்திரிகை நின்றுவிட்டது. அதன்பிறகு பாரதியார், சின்னையா ரத்தினசாமி நாயுடுவுடன் ஆரம்பித்து நடத்திவந்த சூரியோதயமும் நின்று விட்டது. இந்தியா பத்திரிகையைத் தான் எனக்கு நன்றாய்த் தெரியும். அப்போதெல்லாம் நான் சர்க்கார் தமிழ் ஆசிரியனாகிவிட்டேன். இந்தியா பத்திரிகையில் படம் வெளிவரும். சித்திர விளக்கமும் தெளிவாக எழுதியிருக்கும் படங்கள் ராஜீய சம்பந்தமானவை. அர்த்த புஷ்டியுள்ளவை. பத்திரிகை வெளிவருவதை வாசகர்கள் ஆவலோடு எதிர் பார்ப்பார்கள். படத்தை வெட்டி அட்டையில் ஒட்டி வீட்டுச் சுவரில் தொங்கவிட்டு வைப்பார்கள். ஒவ்வொரு படமும் இங்கிலீஷ்கார னுக்கும் இந்தியனுக்கும் உள்ள சம்பந்தத்தை - இங்கிலீஷ்காரனிடம் இந்தியன் அனுபவிப்பதை - குத்தலாக எடுத்துக்காட்டுவதுதான் அந்தப் பத்திரிகையிலேயே சுவையான பகுதி. அந்தச் சித்திரந்தான் முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம் என்னை இன்னானென்று எனக்குக் கூறியது. சிறுசிறு கதைகள்! இங்கிலீஷ்காரனை நெட்டுடைக்கும் வரலாற்றுத் துணுக்குகள்! நாளடைவில் இவைகளின் பொருளை யும் என்னால் சுவைக்க முடியும். இந்தியா நின்றபின் எழுந்த சூரியோதயமும் நின்று சுமார் ஓராண்டு ஆயிற்று. புதுவையில் தேசீய உணர்ச்சி மெதுவாக மறைந்து போகவேண்டியதுதான். ஆனால் அது மறையாமல் காத்த பெருமை இங்கிலீஷ்காரனையே சேரும். அரவிந்த கோஷ் வீட்டுக்கெதிரில் சுமார் 15 பிரிட்டிஷ் ரகசியப் போலீகாரரை திரமாகப் போட்டு வைத்தார்கள். ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதியில் சுமார் 10 ரகசியப் போலீகாரர்களைத் திரியவிட்டு வைத்தார்கள். அப்போதெல்லாம் புதுவை ஈசுவரன் தருமராஜா பெயர் போனது. ghuâah® åL, t.nt.ஸு. ஐயர் வீடு, பொன்னு முருகேசம் பிள்ளை வீடு, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் வீடு, ஆறுமுகம் செட்டியார் வீடு, ராஜா நாராயணசாமி வீடு. நாகசாமி ஐயர் வீடு அனைத்தும் அந்தத் தெருவில்தான். இவர்களுக் கெல்லாம் சி.ஐ.டி. போட்டிருந்தார்கள். மேற்சொன்ன வீட்டுக்காரர்களுடன் சேர்த்து எண்ணப்பட்ட சிவக்கொழுந்து நாயகர், சிவா நாயகர் முத்தியாலுப்பேட்டை கிருஷ்ண சாமி செட்டியார், அரவிந்த கோஷ் வீட்டு ராமசாமி ஐயங்கார் (வ.ரா) லோகநாத முதலியார், ஜயராம் பிள்ளை, குவளைக் கண்ணன், கோவிந்தராஜுலு நாயுடு, கொட்டடி (கரடிக் கூடம்) வாத்தியார் வேணு நாயக்கர் முதலியவர்கள் சதா இந்த வீதியில், பெரும்பாலும் பாரதியார் வீட்டில் இருப்பார்கள். இவர்கள் எல்லாரும் பாரதியாரைச் சந்திக்காத நாள் பஞ்சாங்கத்தில் கிடையாது. கலவை சங்கர செட்டியார், அன்பு டாக்டர், டாக்டர் நாராயண சாமி நாயுடு, டாக்டர் கோபால்சாமி நாயுடு, ஜீயர் நாயுடு ஆகிய பட்டம், பதவி, செல்வாக்குள்ளவர்கள் கூடப் பசியோடு பாரதியாரை நோக்கி வரு வார்கள் பாரதியாரைக் கண்டு பேசிய பின்னே அவர்கள் பசி தீரும். புதுவையில் படித்தவர்களிடத்தில், விஷயம் அறிந்தவர் களிடத்தில் பாரதியாருக்கு நல்ல செல்வாக்கிருந்தது. பாரதியார் வாசத் தால்தான் ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதி குறிப்பிடத்தக்க தாயிற்று. பாரதியார் வெளியில் புறப்படுவார். சி.ஐ.டி. பின் தொடருவான். சட்டப்படி அவன் பாரதியாரை அதிகமாக நெருங்கலாகாது. கொஞ்சம் எட்டியே தொடர வேண்டும். அவன் நெருங்கிவிடும் நேரமோ, அவன் தொந்தரவுப்படும் நேரமாகும். பாரதியார் அவனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் விழி கோபத்தையடையும்: அவன் செய்வது குற்றம் என்று அர்த்தம். நேர்ந்தது தொல்லை á.I.o.க்F! சி.ஐ.டி.யோடு கைகலந்த ஒரு மனிதர் யார்? பாரதியாருக்கு அந்தத் தெரு மனிதனைத் தெரியாது. பாரதியாருக்கு அத்தனை செல்வாக்கு. பொன்னு, முருகேச பிள்ளை, அவரது குமாரர்கள் ராஜாபாதர் பிள்ளை, கனகராஜா பிள்ளை ஆகியோர் பாரதியாருக்கு எல்லா விஷயத் திலும் காப்பாளர் என்றால் மிகையாகாது. முத்தியாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியார் விசேஷ பொருளுதவி செய்து வந்தார். கலவை சங்கர செட்டியாரும் உதவியாளரே. பிரபலதர்கள் அனைவருக்கும் பாரதியார் மேல் உயிர். பாரதியாருக்கு இருந்த செல்வாக்கு, பாரதியாருக்கு தெரிந்திருந்ததை விட பிரிட்டிஷ்க ரருக்கு நன்றாகத் தெரியும்! பாரதியாரை, சுதேசிகளை, ஒரு பிரிட்டிஷ் சி.ஐ.டி. அவ மதிப்பானானால், புதுவையில் உள்ள பிரிட்டிஷ் உத்தியோகதர் களின் ஆணிவேர் ஆடும். - ஹிந்துதான், பாரதி மலர், 10.9.1939 72. ரவிவர்மா பரமசிவப் பட பாரதி (பாரதியாரால் ஊக்குவிக்கப்பெற்றுக் கவியாகி, கவிதையில் பாரதியாரின் நேர் வாரிசாகத் திகழ்ந்த பாரதிதாசன் தாம் பாரதியாரை முதன் முதலில் சந்தித்த சுவையான சந்தர்ப்பத்தை இங்கு அழகுற விவரிக்கிறார். பாரதியாரைவிட ஒன்பது வயது சிறியவரானாலும், பாரதியின் நெருங்கிய நண்பர்களின் ஒருவராக விளங்கிய பாரதிதாசன், கடைசிவரை பாரதியாரை ஐயர் என்றே அழைப்பார். பாரதியைத் தவிர நிறை, எடை, தெய்வம் ஏதுமில்லை அவருக்கு. ஐயரை யாரேனும் குறை சொல்லிவிட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும். அதுமட்டுமல்ல. சாதாரண மாகப் பாரதியார் பற்றிப் பேசத் தொடங்கினாலே தம்மை மறந்துவிடுவார்; பேசிக் கொண்டிருக்கும் போதே குரல் உயர்ந்துவிடும்; ஏதோ ஆவேசம் வந்தவர் போலப் பேசத் தொடங்கிவிடுவார். கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பாரதிதாசன் புதுவையில் .... என்ற சர்க்கார் பள்ளியில் தமிழ் உபாத்தியாயராக இருந்தவர். நண்பர்களுடன் உரையாடும்போது, தமிழ்ச் சொற்களைச் சிதைவின்றி முழுமையாக அவர் உச்சரித்துப் பேசுவது கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும். பாரதியாரது வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சிக்கு வசனம் எழுத ஈடுபட்டிருந்த சமயம், சென்னை நகரில் 1964-இல் காலமானார் பாரதிதாசன். 1939 - இல் ஹிந்துதான் தமிழ் வாரப் பத்திரிகையில் வெளியிட்ட பாரதி மலரில் இக்கட்டுரை பிரசுரமாயிற்று. அனுமதியுடன் வெளியிடப்பெறுகிறது. - ரா.அ.ப.) பாரதியார் பாடி வெளியிட்டிருந்த சுதேச கீதங்கள் புதுச்சேரியில் படித்தவர்களிடையே உலவியிருந்தது. குவளை (குவளை கிருஷ்ண மாச்சாரியார்) அந்தப் பாட்டுக்களில் சிலவற்றைக் கூவிப் பாட நான் கேட்டிருக்கிறேன். என் ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள். சுதேச கீதங்களை நான் படித்துவந்தேன். ராகத்தோடு முணு முணுத்து வந்தேன். இந்தியா பத்திரிகையில் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு வளைவுகள், குவளையின் கூச்சல் இவை எல்லாம் சுதேச கீதங்களின் உட் பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷய மான உணர்வோடும், நான் ஓர் இந்தியன் என்ற அகம் பாவத்தோடும் அப்பாடல்களைப் பாட முடிந்தது நாளடைவில்! எனது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கல்யாணப் பந்தலில் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன். கணீரென்று ஆரம்பித்தேன், வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ! என்பதை, அப்போது என் பின் ஒருபுறமாக, இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று ரவிவர்மா பரமசிவம். வேணு நாய்க்கர், இன்னும் பாடு, சுப்பு என்றார். நான், தொன்று நிகழ்ந்ததனைத்தும் என்ற பாட்டைப் பாடினேன். சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர்கள் இருக்கும். 30 பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள், நான் பாடும்போது, அந்த ரவி வர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள். அந்த ரவிவர்மா பரம சிவத்தின் பெயர், விலாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத்தக்கவராக இருக்கலாம் என்று தோன்றிற்று. என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாய்க்கர். பாடினேன். அப்போது வேணு நாய்க்கர், அவுங்க யார் தெரியுமில்ல? என்று கேட்டார். தெரியாது என்றுகூட நான் சொல்லி முடிக்கவில்லை; ரவிவர்மா படம்: நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ? என்று என்னைக் கேட்டார். நான் : கொஞ்சம். படம் : உணர்ந்து பாடுகிறீர்கள். வேணு நாய்க்கர், அப்போது, அவுங்கதானே அந்தப் பாட் டெல்லாம் போட்டது! சுப்ரமணிய பாரதி என்று சொல்றாங்களே? என்று பரமசிவப் படத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு நாணம், சந்தோஷம், பயம். அப்போது என் மூஞ்சியை நான் கண்ணாடி எடுத்துப் பார்த்துக்கொள்ளவேண்டிய அவசியமே யில்லை. நான் ஓர் அசல் இஞ்சி தின்ற குரங்கு. பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார், நான் அப்போது என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே என்னால் சொல்ல முடியாது; இப்போது என்னால் சொல்லமுடியுமா? கடைசியாக, பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம் நான் மறந்துபோகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றிவிடக்கூடும் என்று அதன் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன். அவர் கூறிய வார்த்தைகளாவன: வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே? நான் வீதியில் அடிக்கடி பார்த்து, இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார் என்று ஒப்புக்கூட்டி நினைத்த மனிதர் பாரதியார் என்று தெரிந்துகொண்டது ஒன்று. அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று. அவர் எங்கள் ஊர் பிரபலதர் பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களால் பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று - அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச் சந்தோஷ மயமாக்கி விட்டன. மறுநாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன் பாரதியார் வீட்டுக்குப் போகப் போகிறேன். மறுநாள் என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் கவலையாகக் கிடந்தது. நானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்... வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில் கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில் பாடிக் கொண்டிருக்கும் சிவா நாயகரை, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர், தம்பி சாமிநாத ஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப் பார்த்தேன். நாயகர் பாட்டுக்குப் பாரதியார் ஆஹா போடும்போது நான் கும்பிட்டேன். பாரதியார் குறிப்பிட்டு, வாருங்கோ, உட்காருங்கோ. வேணு உட்கார், குயில் பாடுகிறது, கேளுங்கோ என்றார். சிவா நாயகருக்குப் பாரதியார் குயில் என்று பெயர் வைத்திருந்தார். பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு. அதன் பிறகு என்னைப் பற்றிய விவரம் நடந்தது. கொஞ்ச நேரம். எனக்கு உத்தரவு கொடுங்கள். என்று பாரதியார் அதே கூட்டத்தில் ஒருபுறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். மீதியுள்ள நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் சென்று மீண்ட வண்ண மிருந்தது. மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் உட்கார்ந் தேன். பிறகு அதைக் கையில் எடுத்தேன். விரித்தேன்... வசமிழந்தேன். நான் அதற்குமுன் இலக்கிய இலக்கணத்திலே என் காலத்தைக் கடத்தியிருந்தவன். என் ஆசிரியரும், புதுச்சேரியில் பிரபல வித்வானு மாகிய பங்காரு பத்தர், மகா வித்வான் பு.அ. பெரியசாமிப் பிள்ளை இவர்களால் நடத்தப்படும் கலைமகள் கழகத்தின் அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும் புரியாதபடி எழுதுவது தான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம் எழுதும்போது கூடக் கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்ற தப்பெண்ணமுடையவன். பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது. நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள கை யெழுத்துப் புத்தகமும் ஒரு பக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவு படுத்தும் விஷயமும் ஒரு பக்கம்; என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ள எளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை, அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம் மீந்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகுநேரம். இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த ராஜுலு நாயுடு பீடி பிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று. மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச் சுட்டிக் காட்டி, இவர் தமிழ் வாசித்தவர், சுவாமி என்றார். அதற்குப் பாரதியார், இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்கிறது! என்றார் அன்புடன், நல்லெண்ணத்துடன். அதன்பிறகு நான், போய் வருகிறேன், சுவாமி என்றேன். பாரதியார், சரி, நேரமாகிறதோ? நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும் என்று குறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை. நமகாரம், நமகாரம் என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய எண்ணமில்லாது பிரிந்தேன். என்னுடன் மற்றவர் களும் எழுந்தார்கள். நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்றுநேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை! - இந்துதான் வாரப்பதிப்பு, சென்னை, 1939 73. பாரதி திருநாளில் லோகோபகாரி ஆசிரியர் பாரதிமலர் ஒன்றை வெளி யிட்டார். செப்டம்பர் 7ஆம் தேதியில் அதில் பாரதி திருநாள் என்ற தலைப்புடன் அதன் 7ஆம் பக்கத்தில் ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நாளது செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதி திருநாள் தமிழ்நாடு முழுவதும் இத்திருநாளைக் கொண்டாட வேண்டு மென்பதும், பாரதி என்ற வீரமுரசு எங்கும் முழங்க வேண்டு மென்பதும் லோகோபகாரியின் ஆசை என்று ஆரம்பித்தார் அந்தக் கட்டுரையை. அக்கட்டுரையில் அடுத்தபடியாக அவர், கூறியிருந்ததைப் பார்க்கையில் அவர் ஆசையெல்லாம் பாரதி திருநாளைக் குட்டிச்சுவராக்க வேண்டும் என்பதுதான் போலும்! பாரதி திருநாள் கொண்டாடுவதின் நோக்கம் பாரதியாரின் தனி முறையில் அமைந்த குணம் செயல்களைக் கருதாமல் அவரிடம் பொது முறையில் அமைந்திருந்த கவிதா சக்தி, விரிந்த மனோபாவம். இவைகளைத் தமிழர்கள் பின்பற்றுவதன் மூலம் நாடு நலம்பெற வேண்டும் என்பதுதான். அப்படியல்லாமல் பாரதி திருநாள் பாரதியைப் பின்பற்று வோரைத் தூற்றுவதற்கு உபயோகமாகலாமா? பாரதி கவிதை போல் எழுதலாம் என்று முன் வருகிறவரை மட்டந்தட்டுவதற்கு உபயோக மாகலாமா? அது மாத்திரமல்ல ஒருவர் தமது சாதித் திமிர் கட்சி வெறியைக் கொண்டு மற்றவர்களை இழிவாகச் சொல்லி சண்டை கிளப்ப அந்நாளை உபயோகப்படுத்தலாமா? லோகோபகாரி ஆசிரியர் அக்கட்டுரையில் மற்றும் கூறி யிருப்பதைக் கேளுங்கள். இந்நாளில் எத்தனையோ போலிப் பாடல்கள் தோன்றி யிருக்கின்றன. எத்தனையோ போலிப் பாரதிகள், தாஸர்கள், பக்தர்கள் என்றும் தோழர்கள் என்றும் சொல்லிக்கொண்டு ரசிகர்கள் நெஞ்சையும் செவிகளையும் புண்ணாக்கி விடுகிறார்கள். இப் பாடல்களில் இலக்கணம் இல்லை. கவிதையின் இலக்கணம் இல்லை; பாரதி பாடல்களில் பல உயிருள்ள பாடல்கள். பாரதி பக்தர்களின் பாடல்களோ வெறும் பிரேத அலங்காரங்கள். தாஸர் என்றும் பக்தர் என்றும் அடக்கமாய்ச் சொல்லிக் கொண்ட போதிலும் பாரதியாரின் அவதாரம் என்றே எண்ணம்: லோகோபகாரி ஆசிரியருக்குப் பாரதிகள் அனைவரும் பாரதிதாஸர்கள் அனைவரும் பாரதி பக்தர்கள் அனைவரும் பாரதி தோழர்கள் அனைவரும் ரசிகர்கள் மனதைப் புண்படுத்து கிறதாகவே தோன்றுகிறதால் இவர்கள் அனைவர் பாடலிலும் இலக்கணம் இல்லையா? கவிதை இல்லையா? ஆசிரியர் தெரிந்து தான் சொல்லு கிறாரா? அல்லது தெரியாத்தனத்தால் பிரேதத்தை அடைகிறாரா? பாரதிகள், பாரதி தோழர்கள், பாரதி பக்தர்கள் அனைவரும் போலிகள்; இலக்கணம் தெரியாதவர்கள் என்று ஆசிரியர் கூறுவது பற்றிக் கவலையுள்ளவர்கள் லோகோபகாரி ஆசிரியருக்கு மறுப்பு எழுதட்டும். என்னைப் பொறுத்தவரைக்கும் மேற்படி ஆசிரியர் அறியும்படி, ரசிகர் அறியும்படி சில கூறிவிடுகிறேன். தாஸர் என்று ஆசிரியர் குறிப்பிட்டது என்னைப் பற்றியுந்தான் என்று எனக்குத் தோன்றியதால் தான் எழுத முற்பட்டேன். உன்னையல்ல என்று லோகோபகாரி ஆசிரியர் கூறுவாரானால் அவரைப் பற்றி நான் கூறியதை மீட்டுக் கொள்ளத் தடையில்லை. பாரதி திருநாள் என்ற கட்டுரை எழுதிய லோகோபகாரி ஆசிரியரே கேளும், எனக்கு இலக்கணம் தெரியாதென்று - நான் எழுதியுள்ள கவிதைகளை நீர் பார்த்தே - இன்று நீர் முடிவு கட்டுவது சரியானால் பாரதியார் பாடல் தோன்றிய நாளிலேயே பாரதிக்கு இலக்கணம் தெரியாதென்று முடிவுகட்டப்பட்டிருக்கும். என் கவிதைகள் இலக்கணமில்லாமல் எழுதியவை என்று அறிஞர் தள்ளுவார்களானால் பாரதியார் கவிதைகள் இலக்கண மில்லாதவை என்று ஆதியிலேயே குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். அறிஞர்களும், கவிதா ரசிகர்களும், கவிஞர்களும் கவிதை இலக்கணம் தெரியாதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற திடத்தால்தான் இவற்றைக் கூறுகிறேன். காண்பிப்பேன். லோகோபகாரி ஆசிரியர் போலத்தான் தமிழ் நாட்டில் (தமிழறிஞர்) இருப்பார்கள், என்றால் நான் இத்தனை தைரியமாகச் சொல்ல மாட்டேன். புதுவையில் பாரதியாருக்குப் பல ரகமான நண்பர்கள் உண்டு. நான் இலக்கண இலக்கியம் படித்ததால்தான் அவருக்கு நண்பன். அவர் புதுவையில் தங்கியிருந்த சுமார் 12 ஆண்டுகளில் அங்குள்ள தமிழ்ப் புலவர்கள், பாரதிக்கு இலக்கணம் தெரியா தென்று அவரை எதிர்த்தார்கள். பாரதி இலக்கணம் தெரிந்தவர் என்று அறிவிப்பதற்கு என் நட்பு பாரதியாருக்கு உபயோகமாய் இருந்தது. இன்றும் என்னிடம் அத்தாட்சிகள் இருக்கின்றன. அப்போது புதுவையில் பாரதியாருடன் இருந்தவர்களில் சிலர் இப்போதும் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் லோகோபகாரி ஆசிரியராகிய உம்முடைய பொறுப்பற்ற பேச்சுக்களைக் கண்டும் சும்மா இருந்து விடமாட்டார்கள் என்றும், நான் இங்கு சொன்னவை பற்றி அவர்கள் கருத்தைப் பொது நன்மை கருதி வெளியிடுவார்கள் என்றும் நம்புகிறேன். கவிதையின் லக்ஷணமேயில்லை என்று கூறுகிறீர். என்னை யுமா? இதற்கும் மேற்படி பதிலைத்தான் சொல்ல முடியும். செய்யுள் இலக்கணத்தை அனுசரிக்காமல் நான் கவிதை ஆக்கியுள்ளேன் என்றால் பாரதி எழுதியவை எப்படி? ரசிகர்கள் நெஞ்சை யார் புண்ணாக்குவது? நானுமா? பாரதியார் அநேக வருஷங்களாகக் கவிதை ருசியாக எழுதி வருவது தெரிந்திருந்தும் வி.வி.எ. ஐயர் அவரைப் பாராட்ட வேண்டியதிருக்க அநேக நூற்றாண்டாகத் தமிழ்நாட்டில் கவிதை தோன்றவில்லை என்று பத்திரிகையில் எழுதினார். அதையடுத்து, அயர்லாந்தில் வெர்ஹரன்கலி இறந்தார். அதுபற்றி நான் சுதேச மித்திரனில் அப்போது ஒரு கட்டுரை எழுதினேன். அதில் தமிழ் நாட்டில் பாரதி உயர்ந்த கவி என்பதை விளக்கிக் காட்டினேன் முதன் முதலில் எழுத்துப்பட பாரதி கவிதை உயர்ந்தது என்று எடுத்துக் காட்டியவன் நான்தான் அப்படி எழுதியபோது எனக்குப் புதுவையில் ஏற்பட்ட எதிர்ப்புக் கொஞ்சமில்லை. கவிதை இலக்கணமில்லை என்ற புலவர்கட்கு உண்டு என்று வரிப்பாடல் என்னும் பழந்தமிழ் முறையை எடுத்துக்காட்டி வலியுறுத்தினேன். இப்படிச் சொன்னால் போதாது. நீர் எழுதிய கட்டுரையில் உமது குலத்தினர் என்பதற்காக - பெரியார் மகா மகோபாத்யாயர் சுவாமிநாத ஐயரைப் புகழ்ந்திருக்கிறீர். நீர் மதிக்கத்தக்க ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார் என்பதில் எனக்குச் சந்தோஷம். அவர் இருக்கிறாரே மகா - சாமி... அவரையும் என்னையும் ஒரு விசிப் பலகையில் உட்காரவையும். ஏதாவது ஒரு விஷயத்தை நீர் குறிப்பிடும். குறிப்பிடக் கூடவா உமக்குத் தெரியாது? நானும் அவரும் இலக்கணத்தோடு, கவிதை இலக்கணத்தோடு, கவிதை எழுதுகிறோம். இரண்டையும் அறிஞரிடம் கொடுத்துத் திருத்தச் சொல்லும். நீர் திருத்த முடியுமென்றா சொல்கிறேன். அந்த விஷயத்தில் நீர் ஒரு மண்ணாந்தை என்பதை உம் எழுத்துகளில் ஒவ்வொன்றும் காட்டு கின்றதே. சுவாமிநாதர் எழுதியதைவிட என் கவிதையில் இலக்கணப் பிழைகள், யாப்புப் பிழைகள் - அதிகமாயிருந்தால் நான் எழுதுவதை விட்டு விடவோ நீர் சொல்லும் நிபந்தனையை, ஏற்றுக் கொள்ளவோ சம்மதிக்கிறேன். இதை ஆணையிட்டுக் கூறுகிறேன். ரகசியமாக உம்மிடம் ஒரு சேதி: நீர் அதே பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில் 4-வது வரியில் ஒரு ஊர் என்ற பாரதி வார்த்தைப் பிரயோகம் எப்படி என்று சுவாமிநாத ஐயரிடம் காட்டும் - உதாரணத்திற்கு ஒன்று சொன்னேன் காணும். நன்றாய்ச் சொன்னீர் மம்மு மாதிரி இப்படியா சொல்வது? பொதுவாக கவிதை ருசியில்லை என்று உமது அபிப்பி ராயத்தைச் சொன்னால் தப்பில்லை. தப்படித்து விட்டீரே ஒன்றும் தெரியாது என்று எழுதிவிட்டீர். தமிழகம் விழித்துக் கொண்டு தானே இருக்கிறது. அனைவருக்கும் ஒன்றும் தெரியாது என்பதன் மூலமாகத்தானா உம்மைப் புத்திசாலி என்று காட்டமுடியும்? வேறு வழியில்லையா? ஒரு வழியுண்டு. படியும். இன்னும் நீரே யோசியும். என் கவிதையில் ஓரிடத்தை எடுத்துக் காட்டி இதோ பார் பிழை என்று கூறினீரா? ஒரு பாட்டைக் குறிப்பிட்டு அதோ பார் இன்ன யாப்புக்கு விரோதம் என்று காட்டினீரா? லோகோபகாரியின் அடுத்த இதழில் அப்படி முயற்சி செய்வீரா? இன்னொன்று. நீர் கவிதையை விமர்சனம் செய்யும் யோக்யதை உடையவரா? அறிஞர்கள்முன் நாம் இருவரும் சந்திக்கச் சம்மதிக் கிறீரா? நாடு சிரிக்கிறதே! தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப் புத்தகங்கள் பெரும்பாலும் பிழையுடையவை; அவர்களே இங்கிலீஷில் வெளியிடுகின்றவை சரியாக இருக்கின்றன என்று. அந்த ரகத்தில் எந்த மட்டும் விடுதலை யடைந்தீர் நீர்? தமிழ் தெரியாத ஓர் முக்கிய காரணத்தாலேயே தமிழ்ப் பத்திரிகாசிரியராகவும் விமர்சகராக வும் திகழும் பலரில் நீர் எப்படி? கண்ணாடி எடுத்துப் பாரும். இதைக் கேளும். வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலுமே உள்ளம் குளிருதடி கிளியே என்று ஓர் ஒலி கேட்டால் அந்தக் கவிதை ரசத்தைச் சுவை பார்ப்பதில் மனம் போவதா? அல்லது அது யாரால் செய்யப்பட்டது? செய்தவன் பார்ப்பனனல்லாதவனா? என்பதில் உள்ளத்தைப் போக்குவதா? இப்படிப் பேத புத்தியுள்ள பிறவிகளுக்குக் கவிதை, இலக்கணம், கலை இவைகளில் ஆசையும் ஒரு கேடா? அன்பும் ஒரு கேடா? ஆசிரியரே உம் உள் எண்ணம் தெரிகிறது. அதற்குத் தக்க பதில் கூறி விடுகிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அது தீர்ந்தால் தான் மக்கள் உருப்படமுடியும் என்பது என் எண்ணம். கடவுள் நம்பிக்கை அதிகரித்திருப்பதைத் தமக்குச் சாதகமாக்கிப் பிழைக்கும் கூட்டத்திற்கு நான் விரோதி. ஜாதி மதம் மனிதனுக்கு அவசியமில்லை. இருக்கக்கூடாது. மேலும், சாதி மதம் இருப்பது கொண்டே பிழைக்கும் கூட்டத்திற்கு நான் விரோதி. பார்ப்பனர் இத்தமிழ்நாட்டின் முற் போக்குக்கு முட்டுக்கட்டை. பார்ப்பனீயம் ஒழியவேண்டும் என்பது என் எண்ணம். இவைகள் என் கொள்கை என்பதைத் தமிழ்நாடு முழுதும் அறியும். நான் என் எண்ணமாக எதையாவது எழுத நேர்ந்தால் இவைகளுக்கு அரண் செய்வதாகத் தான் எழுத முடியும். இது பற்றி எனது பார்ப்பன நண்பர்களும், அல்லாத நண்பர்களும் என்னை வெறுப்பதும், தந்திரமாக, என்னை மட்டந்தட்டக் காரியம் செய்வதும் நாளடைவில் நடக்கிறது. ஆயினும் அவைகளையெல்லாம் இடித்துத் தள்ளிக் கொண்டு என் எழுத்துக்கள் நிலைத்து நிற்பதைத் தான் நான் எதிர் பார்க்கிறேனே ஒழிய, சிறு பிள்ளையாண்டான்களின் சலசலப்பை பற்றி எனக்குக் கவலையில்லை. - நகரதூதன், சென்னை, 15.9.1940, ப.9, 18 74. இனிமேல் சாப்பிடவில்லை! புதுவையை விட்டுப் பாரதியார் சென்னைக்குப் போவதற்குச் சுமார் ஓராண்டுக்கு முன் பாரதியார் வீட்டில் ஒன்று நடந்தது. நடுவேளை 11 மணிக்கு நான் பாரதியார் வீடு சென்றேன். மாடியில் போய் உட்கார்ந்தேன். கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப் போத்தைச் சிங்கவேறாக்கல் - மண்ணை வெல்லத் திணிப்பு வரச் செய்தல் ... என்ற அடிகளைப் பாடக் கேட்டேன். எனவே பாரதியார் அப்போதுதான் குளிக்கின்றார் என்று அறிந்தேன். சிறிது நேரத்தில் இடையில் மாற்றுடை, கையில் துடைக்கும் சிறு துண்டு, நீர் சொட்டும் தாடி, இவற்றோடு மாடியில், அண்டையில் வந்து நின்றார். எனக்கோர் வேலையிட்டார். அந்த வேலை எனக்குப் புதிது சுப்புரத்னம் கீழே அலமாரியில் மருந்து இருக்கிறது எடுத்துவா என்றார். என்ன உடம்புக்கு என்றுகூட நான் அவரைக் கேட்டுக் காலங்கடத்த நினைக்கவில்லை. கீழே சென்று அலமாரியைத் திறந்தேன். எதிரில், அலமாரித் தட்டில் வாழை இலைமேல் கச்சைக்காய் அளவுள்ள மருந்துருண்டைகள் சுமார் இருபது இருந்தன. அவற்றில் ஒன்றை நான் எடுக்கும்போது பாரதி நண்பர்களில் ஒருவரான குயில் வந்தார். (பாரதியார் சிவாவைக் குயில் என்று கூப்பிடுவது வழக்கம். சிவா குயில்போல் பாடுவார்.) என்ன சுப்பு? என்றார் அவர் என்னை நோக்கி. ஐயர் மருந்து எடுத்துக்கொண்டு வரச்சொன்னார், என்றேன். அதற்கு அவர், ஊஹூம், என்றார். ஓர் உருண்டையை எடுத்து வாயில் போட்டு விழுங்கினார். அதோடு நிற்கவில்லை. நீ ஒன்றை எடுத்துக்கொள். லேகியம், நல்லது; மருந்து, என்றார். நானும் அப்படியே செய்தேன். அவர் எனக்கும் நண்பர்; இன்றும் இருக்கிறார். சிவா, பாரதியாருக்கு மருந்து கொண்டு கொடுத்தார். நானும் கூடத்தான் போனேன், ஆனால் எனக்கு மயக்கம். சிவாவிடம் தனியாகக் கூறினேன் மயக்கம் வருகிறதென்று. அவர் கூறினார்; அது, பூரணாதி லேகியம். வீட்டுக்கு ஓடிப்போய் நன்றாய்த் தூங்கிவிடு. சிவா, நான் செய்யவேண்டிய வேலைகளை வெகு சுருக்கமாய்க் கூறி விட்டார்! என் பெற்றோருக்கு விஷயம் தெரிந்துவிடாதா? தெரிந்தால் நடைபெறுவது ஒரு பாரதமாயிற்றே! நான் நடேச ஐயர் மிட்டாய்க்கடைக்கு நேரே ஓடினேன். நடேச ஐயர் எனக்கு நண்பர். அவரிடம் ஒளியாமல் சேதியைச் சொன்னேன். அவர், இதைத் தின்னு, இதைத் தின்னு காரம், தித்திப்பு பலரகம் கொடுத்தார். தீர்ந்தது, விடைபெற்றுக்கொண்டேன். மறுநாள் நடுப்பகல் 11 மணிக்குப் பாடசாலை விட்டார்கள். நான் அப்போது பாடசாலை உபாத்தியார்; நேரே பாரதியாரிடம் போனேன். பாரதியார் விழிகள் தத்தளித்தன. ஆயினும், சரியான பதிலைச் சொல்லிவிட்டார். நான் இனிமேல் சாப்பிடவில்லை என்று. புதுவையில் பாரதி தங்கியிருந்த நாட்களில் நிறைய எழுதினார். சென்னை சென்றால் இவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவியும்; கற்கண்டு போன்ற காவியங்களை எழுதிக் குவிப்பார் என்று நான் நினைத்தேன். பணம் கிடைத்தது; பூரணாதி லேகியத்துக்கு மட்டும்! பாட்டு எழுதினார்; ஐந்தாறு! அவையும் அதற்காக! அறிஞர்கள் மரியாதை காட்டினார்கள்! ஐயோ அவரை இழந்துவிட்டது தமிழ்நாடு! அவரை இழந்துவிட்டது செந்தமிழ் உலகு! - தமிழன், பாரதிமலர், 13.8.1942, ப. 22 75. ரசத்திலே தேர்ச்சி கொள் அருவியின் வீழ்ச்சிபோல நெஞ்சிலிருந்து கவிதை சலசல வென்று பெருகி உருவாகவேண்டும். கவிதையை உருவாக்க வேண்டுமே என்பதற் காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கமாட்டார் பாரதியார். எழுதிக்கொண்டே போவார் பாரதியார். கவிதை நின்றுவிட்டது என்று கூறி அந்த ஏட்டை அப்படியே எடுத்து வைத்துவிடுவார். மறு நாளோ மறு மாதமோ கூட, அந்தக் கவிதையின் மற்ற பகுதியானது விட்ட இடத்திலிருந்து சுரப்பதுண்டு. புதிய ஆத்திசூடி எழுதத் துவங்கினார். அது யௌவனம் காத்தல் செய் என்பது வரைக்கும் ஓடியது. பிறகு நின்றது. அதை அப்படியே எடுத்து வைத்துவிட்டார். மறுநாள். நானும் பாரதியாரும் அதிகாலையில் எழுந்து விட்டோம். பாரதியார் உள்ளத்தைக் காலை மகிழ்ச்சி தோளைக் குலுக் கிற்று. அவர் சொன்னார்... சுப்புரத்தினம்! மனிதர் வீடு பிடிக்கவில்லை இயற்கையின் வீட்டில் உலாவ வேண்டும். எங்கே போகலாம்? என்று! நான், வாழைக்குளம் தாண்டி அடர்ந்த தென்னந் தோப்பும் நீர் ஊற்றும் உண்டு. நிலமும் தூய்மையாக இருக்கும் என்றேன். புறப்பட்டோம். தெருமுனையை அடைந்தவுடன், பினாகபாணி குழந்தையின் சாவு எதிரில் வந்தது. இறந்த குழந்தையுடன் போகிற பினாகபாணி, எங்களை எதிரிற் கண்டு கும்பிடும் போட்டுவிட்டார். மெதுவான குரலில் பாரதியார் என்னிடம் என்ன? என்றார். இந்த என்ன என்பதின் விரிவுரை என்ன வென்றால் திடீரென்று இப்படிப்பட்ட தொல்லையில் அகப்பட்டுக் கொண்டோமே, போய்த்தான் தீர வேண்டுமா? என்பதாம். கவிதை உலகு இப்போது ஒத்து வராது; வழக்க உலகில் இறங்கித் தான் ஆக வேண்டும். அதனால் நான் பாரதியாரை நோக்கி, ஆம்; போய்த்தான் ஆகவேண்டும் இடுகாடு மட்டும் என்றேன். பாரதியார் பிண வீட்டுக்குப் போக விரும்ப மாட்டார். இரக்க மில்லாதது காரணமல்ல. அடிமை நாட்டாரின் குழி விழுந்த கண்களில், துன்பத் துளிகளையும் காண அவரால் பொறுக்க முடியாது. மணவீட்டுக்குப் பாரதியார் இரண்டு தடவை கூடப் போவார். சாப்பிடுவதற்கல்ல. அரிதாக மகிழ்ச்சியடைந்த மக்களோடு அளவளாவப் பாரதியாருக்கு விருப்பம் அதிகம். கூட்டத்தோடு நானும் பாரதியாரும் நடந்துகொண்டிருந் தோம். மெதுவான குரலில் பாரதியார் என்னிடம் மிக்க தொலைவோ? என்று கேட்டார். நான், வாழைக்குளம்; தென்னந் தோப்பு; நீரூற்று; அருகில் தான் பாப்பம்மா கோயில் என்றேன். பாரதியார் கொஞ்சம் அமைதி அடைந்தார். குழந்தை புதைக்கப் படுகிறது. அருகில் சிலர் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு பலர் இருவர் மூவராக நிழல் கண்ட இடத்தில் நின்று பேசுகிறார்கள். பாரதியாரை, நாராயணசாமி முதலில் தனியாக அழைத்துச் சென்று அங்கிருக்கும் பாப்பம்மா கோயிலின் பழைய வரலாற்றைப் புளுகிக் கொண்டிருந்தான். எனக்கு அவன் சங்கதி பிடிக்காது. நான் உட்கார இடம் தேடிக் கொண்டிருந்தேன். சிதைந்த மல்லிகைச் செடி. அதில் ஒரே ஒரு மிலாரில்தான் உயிர் இருந்தது. அந்த உயிருள்ள மிலாரும் தரையைத் தழுவி இருந்தது. இலைகள் ஒளிப்பச்சை; இடைக்கிடையே நேற்று மலர்ந்த பூக்கள், மலரவேண்டிய காய் அரும்புகள்! மல்லிகைச் செடியின் அண்டையில் மேல்துண்டை விரித்துப் போட்டுப் படுத்துக்கொண்டேன். காலை எட்டரை மணி! இளவெயிலின் மெல்லிய தங்கக் கதிர்கள். சிறு காற்றில் ஆடும் பச்சிலை மேல் மின்னிக்கொண்டிருந்தன. சிற்றரும்பும் பூவும் சிரித்துக் கொண்டிருந்தன இடுகாட்டில். பசியும் இள வெயிலின் குத்தலும் எனக்குத் தெரியவில்லை. பாரதியார் வந்தார். குடிக்கத் தண்ணீருக்கு என்ன செய்வது என்றார். இளநீர் தேடிச் சென்றேன். ஒரு காய்தான் அகப்பட்டது. சீவிப் பொத்தலிட்டபடி எடுத்து வந்தேன். நீ சாப்பிட்டாயா? என்று கேட்டார். காய் அகப் படுவது அரிதாயிருக்கிறது; எனக்குத் தாகமில்லை என்றேன். ஆவலாய்க் குடித்து வெறுங்காயைக் கீழே போட்டார். பாரதியார் கூறுகிறார்: சுப்புரத்தினம் உனக்கு இளநீர்க் காயில்லை. அதுமட்டுமல்லாமல் உன் மல்லிகைச் செடியிலிருந்து பூக்களையும், அரும்புகளையும், பறித்துக்கொண்டு போய் விட்டான் அதோ அந்தக் கல்லின் மேல் போட!. உயிர் ததும்பும் அழகைவிடப் பாப்பம்மா கோயில் சாமி சிறந்ததில்லை என்பது பாரதியார் எண்ணம். அவரது இந்தக் கருத்தை நான் புரிந்து கொள்ளமுடியவில்லை. நான் கேட்டேன். அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்? என்று நீ மல்லிகையின் மணத்தையும் அழகையும் சுவைத் திருந்தாய். நான் பார்த்தேன், அப்போது என் நெஞ்சு பெற்ற இன்பத்தின் அளவை நீ கணக்கெடுக்கவில்லை; எடை தெரிய வில்லை உனக்கு. ரசத்திலே தேர்ச்சி கொள்!என்றார். யௌவனம் காத்தல் செய் என்று நிறுத்தி, புதிய ஆத்தி சூடியின் அடுத்த வாக்கியமாகவும், எனக்கொரு பாடமாகவும் இதைக் கூறினார். ரசத்திலே தேர்ச்சி கொள் என்று அவர் கூறிய வுடன், சுப்புரத்தினம்! நமது ஆத்திசூடி விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது என்று கூறி, ராஜசம் பயில் போகலாமா? என்றும் கூறினார். போகலாம்! என்றேன். பாரதியார், ரீதி தவறேல். ருசி பல வென்றுணர் என்று கூறிக் கொண்டே, ஊரில் நுழைவதற்குள் வௌவுதல் நீக்கு எனப் புதிய ஆத்திசூடியை முடித்துத் தீர்த்தார். - சக்தி, சென்னை, அக்டோபர், 1943, ப.28-30 குறிப்பு : இக்கட்டுரை பாரதியார் மலரில் 10.5.1967இல் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. 77. பாரதியாரைப் பற்றி ... ! பலர், பாரதியார் மிகவும் கஷ்டப்பட்டார் - வறுமையில் உழன்று அவதைப்பட்டார் என்றெல்லாம் கூறுகிறார்கள்; வருத்தப் படுகிறார்கள். பெரிய பிரச்சாரம் வேறு நடக்கிறது. நான் சொல்லுகிறேன், பாரதியார் கொஞ்சம்கூடக் கஷ்டப்படவே யில்லை. அவர் புதுவையில் 13 வருடங்கள் இருந்தார். அவரோடு கூடவே நானும் இருந்தேன். தெரியாதவர்கள் கூறும் சங்கதிதான் அது. அவர் கஷ்டப் படவே யில்லை. அவர் சுருட்டுப் பிடிக்கும் பழக்கமுடையவர். பாண்டிச்சேரி யில், சுருட்டிய சுருட்டு (இங்குப்போல்) விற்கமாட்டார்கள். புகையிலையே வாங்கி அதைச் சுருட்டாக சுருட்டித்தான் பிடிக்க வேண்டும். இப்படிச் சுருட்டுப் பிடிக்க பாரதியாருக்குத் தெரியாது. ஆனால் அவர் பாண்டியை விட்டு வெளியேறும் வரை, அவர் சுருட்டுவேண்டும் என்று நினைத்த மறுகணம், சுருட்டை அவர் முன் சுருட்டி வைப்பார் பக்கத்தி லிருப்பவர். அவ்வளவு சௌகரி யம் இருந்தது அவருக்கு அங்கே. அது மட்டுமா? அவர் ஈவரன் கோவில் தெருவில் குடியிருந்தார் அப்பொழுது அவர் மகளுக்குக் காய்ச்சல் வந்தது. டாக்டர் அம்பு வந்தார். விஷக்காய்ச்சல் என்று கூறினார். அவர்கள் வீட்டில் ஒரு கேணி இருந்தது. அதைப் பார்த்தார். அதில் சூரிய ஒளி படவில்லை என்றார். வேறு என்ன செய்வது? என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே அவர் வீட்டிற்கு எதிர்த்த வீடு, குடியிருந்தவர்களால் காலிசெய்யப்பட்டு, பாரதியார் குடும்பத்தோடு குடியேறினார். எப்படி முடிந்தது? யார் வீடு அது, தெரியுமா? ஒரு பெத்தாச்சு செட்டியார் வீடு அது. அவருக்கு பாரதியார் அளித்த பெயர் விளக்கெண்ணெய்ச் செட்டியார் என்பது. அதில் குடியிருந்தவர் ஒரு சி.ஐ.டி. அப்படிப்பட்ட செட்டியாரிடம் (செட்டியார் பணவிஷயத்தில் கண்டிப்புக்காரர். முன்பணம் கட்டி அங்கிருந்த சி.ஐ.டி. அவர்களைக் காலி செய்து பாரதியாரைக் குடியேற்றினோம். யார்? நானும் என் போன்ற தோழர்களும். எப்படி? எங்களுக்கு இருந்த எண்ணமெல்லாம் பாரதி வருத்தப்படக் கூடாது. அவர் மகளுக்குக் காய்ச்சல். கேணி நல்லதல்ல, வீடுமாற வேண்டும். உடனே சென்றோம். காலிசெய்யச் சொன்னோம். பயந்தே காலி செய்தனர். இப்படியும் இருக்குமா? நடக்குமா? என்று திகைக்கலாம். நம்ப வேண்டிய சேதி. ஏன்? நான் சொல்லுகிறேன் என்பதால். அவருடைய சாப்பாட்டிற்கோ சௌகரியத்திற்கோ ஒன்றும் குறைவில்லை - கஷ்டமும் இல்லை. கஷ்டப்பட்டார் என்பது வெறும் பொய். பாண்டியிலே பாரதியார் பலரும் பார்க்க வேண்டும் என்றே, கடை வீதி நடுவே முலீம் கடையில் தேநீர் வாங்கி அருந்துவார். அவர் ஒரு சமயம், என்ன சுப்புரத்தினம், என் பெண் வேறொரு தாழ்ந்த சாதியானோடு ரங்கூனுக்கு ஓடிப்போய், அங்கிருந்து எனக்கு, அப்பா நான் இன்னாரோடு இங்கு சுகமே இருக்கின்றேன்; அவரைத் தான் நான் விரும்புகிறேன் மணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று எழுதவேண்டும்; அதைக் கேட்டு நான் ஆனந்தப்படவேண்டும் என்று கூறினார். அவர், சாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை கொண்டவர் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. - குறள் மலர் 1, இதழ் 6, 18.8.1950 78. இந்தத் தடவை புதுவையில் பாரதி விழா வெளியூரிலிருந்து புதுவையைச் சுரண்ட வந்து குவிந்துள்ள பார்ப்பனர்களில் ஒருவராகிய செல்லம்மா என்பவர் தாம் நடத்தி வரும் தமிழ் ஒழிப்பு நிறுவனத்தின் சார்பாக இந்தத் தடவை பாரதி விழாவை நடத்தினார். அதில் பாரதி பற்றிய பேச்சுக்கு அதிக இடந்தரவில்லை. பாரதி பாட்டுப் போட்டியே குறிப்பிடத் தக்கதாய் இருந்தது. பாட்டுப் போட்டியின் தீர்ப்பாளர் மூவரும் பார்ப்பனப் பெரிசுகளே, போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மேற்படியாரின் சிறிசுகளே! போட்டியில் நன்றாய்ப் பாடினவர்கள் பார்ப்பனர் அல்லாத தமிழ்ச் சிறுமிகளும், தமிழ்ச் சிறுவர்களுமே என்று ஊர் முணு முணுக்கிறது. 10ஆம் தேதியன்றே பாட்டுப் பாட வைத்துவிட்டார்கள். அப்பொழுது இசைப் புலவர்கள் பலர் வந்திருந்தார்கள். இது எங்கே நடந்தது தெரியுமா? செல்லம்மாவும் செல்லம்மாவுக்குத் தெரிந்த ஓர் இளைஞரும் குடியிருக்கும் வீட்டிலேயே! இன்னின்னார்தாம் நன்றாகப் பாடினார்கள் என்று தீர்ப்புக் கூறிய பிறகு பரிசு கொடுத்த இடம் எது தெரியுமா? வேதபுரீசுவரர் கோயில். ஏன் தெரியுமா? முன்னாள் பாடுவதைக் கேட்டிருந்த இசைப்புலவர் அறியாதிருக்கத்தான். அறிந்தால் தீர்ப்பாளர்களைக் கான்று உமிழ்வார்கள் அல்லவா? பிள்ளைகள் பாட்டுப் பாடியபோது பலர் வந்திருந்தார்கள். அதாவது பத்தாம் தேதி! பரிசு கொடுத்தபோது சிலரே வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! செல்லம்மா ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்டார். தம்மிட முள்ள கறைகளை மறைக்க ஒரு நல்ல கருப்புத் திரையைத் தேடிக் கொள்ளவில்லையா? - குயில், ப.5, 30.9.1950 79. புதுவையில் பாரதி விழா 11.9.60ல் ஒதியஞ்சாலைத் திடலில் குபேர் தலைமையில் பாரதி விழாவில் ஒரு பகுதி நடந்தேறியது. பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் நடுவராக உட்கார்ந்தவர்கள் தமக்கு வேண்டியவர்கள், தம் இனத்தவர்கள் என்பதை வைத்துப் பரிசு முடிவு கட்டினார்களாம். அடுத்த நாள் (12.9.1960) விழாவில் நடிகர்திலகம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விழா நடத்தியவர்கள் பாரதி மண்டபம் கட்டப் பணம் கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், அரசினர் இதில் கவனம் செலுத்தவேண்டும்; குபேர் கவனிக்க வேண்டும்; எதுவும் இல்லை என்று தீர்ந்தால் நான் கவனிக்கிறேன் என்றாராம். பணங்கேட்டார்கள் விருந்தாக வந்தவரை! நிலைமையைச் சொன்னார்களா? ஏற்கெனவே பணந்தண்டி உட்பையில் போட்டு வைத்திருக்கும் ஆட்கள் அப்போது அங்கேதாமே இருந்தார்கள். என்னிடத்தில் இவ்வளவு இருக்கிறது. என்னிடத்தில் இவ்வளவு இருந்தது என்று சொல்லியிருக்கலாமே! ஒன்றுமில்லையாம். அப்படியானால் என்ன கருத்து! நீங்களும் கொடுங்கள், வாயிற்போட்டுக் கொள்ளுகின்றோம் என்பதுதானே! பாரதிவிழா நாள் எப்போது என்று பார்த்துத்தானா பாரதி மண்டபத்தை இடிக்க வேண்டும்? என்ன கருத்து! தோளில் வேட்டி ஒன்று போட்டுக் கொண்டுதாமே அங்கு வந்திருந்தார் மணிப்பார்ப்பனர். அவராவது ஏதாவது மூச்சு விட்டிருக் கலாமே. பாரதிவிழா நடத்துகின்றார்களாம். இவர்கள் அகப்பட்டதைச் சுருட்டும் ஆட்கள்! - குயில், கிழமை இதழ், ப.2, 20.9.1960 80. பாரதிவிழா இந்தத் தடவை புதுச்சேரியில் பாரதி விழா நடத்த சில கொள்ளைக்காரர்களின் கையாட்கள் முயற்சி செய்து வருவதாகக் கேள்வி. ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பாரதி பெயரைச் சொல்லிப் பணம் தண்டினார்கள். சேர்ந்த தொகை ஏறத்தாழ இருபதாயிரம் ரூபாய்கள். அந்தப் பெருந்தொகை சுதேசமித்திரன் ஏஜெண்டாகிய மணி என்னும் ஒரு பார்ப்பனரிடமும். திருமுடி, சேதுராமனிடமும் கல்கி ஏஜண்ட்டு கதர் நடேசனிடமும், கல்லுக் கார செயராம செட்டியாரிடமும் தேங்கி இருந்தது. அதை அவர்கள் ஏப்பமிடப் பார்த்தனர். அன்றையிலிருந்து சென்ற ஆண்டு வரைக்கும் நேரில் கண்டு கேட்டும், பொதுக்கூட்டம் நடத்தியும், கிளர்ச்சி செய்ததின் பயனாகப் பாரதி நினைவுக்காக வாங்கி யிருப்பதாகச் சொல்லப்பட்ட பாரதி மண்டபம் பழுது பார்த்துக் கட்டப் படுவதற்குப் பதிலாக இன்று அது இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது. இன்னும் பணம் தண்டுவதற்கு இஃதொரு விளம்பர ஏற்பாடா யிருக்கலாம். சென்ற ஆண்டின் முதலாண்டு கொள்ளைக்காரர்களின் தொடர்பு சிறிதுமின்றி நானும் கொள்ளைக்காரர்களைச் சேராத வேறு சிலரும் சேர்ந்து பாரதி விழா நடத்தினோம். அதற்குச் சென்னையிலிருந்து சங்கு சுப்பிரமணியன் என்ற பார்ப்பனரையும், பாரதி கண்காட்சியின் பெயரால் பார்ப்பனர்க்கு ஆதரவு தேடி வரும் ஒரு பார்ப்பனரையும், மற்றும் பாரதியார் புதல்விமாரையும் அழைத்திருந்தோம். புதுவை, சீப் செகரட்டரியாகிய ஒரு பார்ப்பனரையும் விழாவைத் தொடங்கிவைக்க ஏற்பாடு செய்திருந்தோம். விழாப் பொதுக் கூட்டத்திற்கு நான் தலைவன். பாரதி பற்றிய பொதுக்கூட்டமோ விழாவோ எதிலும் என்னை அணுக வொட்டாமல் பார்ப்பனரும், அவர் கால்வருடிகளும் தம் செல்வாக்கை யெல்லாம் கருவியாகக் கொள்வர். இது உலகுக்குத் தெரியும். இதற்குக் காரணம் பாரதியார் உயிரோடு இருந்த காலத்தில் அவரையொழித்துக் கட்டவும், அவர் இயற்றியப் பாட்டுக்களை இழிவு படுத்தவும் கல்கி முதலிய பார்ப்பன உலகம் பெருமுயற்சி செய்ததை நான் வெளிப் படுத்தத் தயங்கியதில்லை. அப்போதிருந்த சுதேசமித்திரன் ஆசிரியர் முதலியவர்கள் மறைமுகமாக எதிர்த்து வந்ததை வெளிப்படுத்த நான் தயங்கியதே இல்லை. பார்ப்பனர்களின் தீய செயல்கள் ஒழிந்தா லொழிய, பார்ப்பனீயம் ஒழிந்தாலொழிய இத் தமிழகம் உருப்படாது என்று எண்ணிய பாரதியாரின் எண்ணத்தை ஆதாரங்களோடு எடுத்து விளக்க நான் தயங்குவதே இல்லை. என்னை அழைப்பார்களா பார்ப்பனர்கள் - பார்ப்பனனின் கால் வருடிகள்? சென்ற ஆண்டின் முன்னாண்டில் என்னால் நடத்தப்பட்ட அந்த விழாவை ஒழித்துக்கட்ட, பார்ப்பனர்கள் ஒன்று திரண்டார்கள். விழா நடைபெறும் அதே நாளில் வினோபா பிறந்த நாள் என்று S.R. சுப்பிர மணியனைப் பிடித்து விளம்பரம் செய்தார்கள். குபேரைப் பிடித்து எதிர்ப்புக்குழு ஒன்று ஏற்படுத்தினார்கள். அந்தக் குழு புதுச்சேரியில் வீடு தோறும் கடை தோறும் சென்று பாரதி விழாவிற்குப் பணத்தைப் கொடுக்காதீர்கள். வினோபா விழா விற்குப் பணம் போடுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனாலும் விழாவன்று வினோபா கூட்டமும், அதன் பின்னிருந்த பார்ப்பனப் படையும் எங்கே போயின என்பது எல்லாரும் அறிந்ததே. அவர்கள் அடைந்த வெற்றித் தண்டலால் அகப்பட்டதைச் சுருட்டியதே. பாரதி விழாப் பொதுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்து கொண்டிருந்தது. சீப் செகரெட்டரி முதல் லோகநாதப் பார்ப்பனர் வரைக்கும் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் அடக்கமாகவே இருந்தன. ஆனால் கடைசியாகப் பேசிய சங்கு ஸுப்ரஹ்மண்ய சுவாமிகள்: பாரதி வருணாரம தருமத்தை எதிர்க்கவில்லை. ஜாதியை அவர் எதிர்க்கவில்லை. இதை அவர் நூற்களை முதலிலிருந்து கடைசி வரைக்கும் பார்த்துள்ள எனக்கேயல்லாமல் பிறர் அறிந்திருக்க முடியாது. இதையறியாமல் சென்னையிலுள்ளவர்கள் உளறிக்கொண்டு வருவதால் அந்தச் சென்னையை என் போன்றவர்கள் பறப்பட்டணம் என்று சொல்வதுண்டு என்று பேசி முடித்தார். என்னுடைய முடிவுரையில் அவருக்குத் தக்கவாறு அறி வுறுத்திக் கூட்டத்தை இனிது முடித்துச் சங்கு ஸுப்ரஹ்மண்ய வாமிகளை என் கையோடு கூட்டிக்கொண்டு ஆரமத்தைச் சேர்ந்த ஓர் இருட்டறையில் பதுக்கிவைத்துக் காலையில் கூவும் கோழிக்கும் தெரியாமல் காரில் கடலூருக்கு ஏற்றிப் போய் பிழைத்துப் போகும்படி விட்டு வந்தேன். விழாப் பொதுக் கூட்டம் நடைபெறுகின்ற அதே நேரத்தில் ஒரு சிறு பார்ப்பனக் கூட்டம் இந்தி அம்மையாரின் வீட்டில் விழா நடத்திக் கொண்டிருந்தது. சங்கு பறப்பட்டணம் என்றது கேட்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது. அவருக்கு நேர்ந்த நிலை கேட்டு கோட்டைக் குப்பம் போய் ஒளிந்து கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தடவை யாரின் கூட்டந்தான் பாரதிவிழா நடத்தப் போவதாகக் கேள்வி. மகிழ்ச்சிக்குரிய செய்தி. பொதுமக்களே! பணக்காரர்களே! பேச்சாளர்களே! உங்களிடம் ஆதரவுகோரி பாரதி விழாக்காரர்கள் வந்தால் இதற்கு முன் பாரதி பேரால் தண்டிய பணத்திற்குக் கணக்குக் கேட்கவேண்டும். பாரதி மண்டபம் முதலியவை பற்றிப் புதிய அலுவல் குழு ஏற்படுத்த வேண்டும். பாரதி விழாவோடு வினோபா விழாவைச் சேர்த்து நடத்தும் சூழ்ச்சியேற்பாடு கண்டிக்கப்பட வேண்டும். இந்தக் குறைபாடுகளை யெல்லாம் நிறைவு செய்த பின் பாரதி விழாவிற்கு முறைப்படி ஆதரவு தருக. - குயில், கிழமை இதழ், 6.9.1960, ப. 10-11 81. பாரதியார் பற்றிய சில குறிப்புகள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்நின்று நடத்திக்கொண்டு இருந்த பாண்டித்துரைத்தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டி ருந்தார். அதன் கருத்து பின்வருமாறு: தமிழ்நாட்டைப்பற்றிச் சுருக்கமாக எல்லாரும் பாடக்கூடிய மெட்டில் பாட்டு எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது. அந்தப் போட்டியில் கலந்துகொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம். அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம். செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று தொடங்கிப் பாட்டொன்று எழுதினார். பாட்டின் கருத்துக்களை ஊன்றி நோக்கிய நான், பாரதியாரை நோக்கிக் கேட்டவை வருமாறு: நாவலந்தீவு ஆரியர் நாடு என்று பன்முறை கூறியுள்ளீர்கள். நானும் பன்முறை அதுபற்றிக் கேட்டதற்கு நீங்கள் தக்கவாறு விடை கூறவில்லை. இப்போது தமிழ்நாட்டை எங்கள் தந்தையர் நாடு என்று சொல்லுகிறீர்கள். தமிழ் பற்றியும், தமிழ்நாடு பற்றியும், நீங்கள் எழுதியுள்ள உரை நடையில், தமிழில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய சில நூற்கள் இருப்பதாக மட்டும் கூறினீர்கள். ஆனால் இப்போது இந்தப் பாட்டில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும் கூறியுள்ளீர்கள். தமிழ்நாடு இலக்கியவளம் உடையதென்பதையும், பிற பெருமைகள் உடையது என்பதையும், கூறுகின்றீர்கள். பரிசு கருதி இப்போது இப்படிப் பாடினீர்களா? என்று கேட்டதற்கு அவர் சொன்னது என்னவெனில் கூறுவேன்: என் தந்தை எட்டயபுரத்து அரச புலவர்; அவரோடு அடிக்கடி பல புலவர் வந்து தமிழ் பற்றிப் பேசுவார்கள். எல்லாம் புராணங் களும், கம்பராமாயணம் போன்றவைகளுமாகவே இருக்கும்; தமிழ்க் கல்வி என்பது எனக்கு அங்குக் கிடைத்ததுதான். இந்தப் பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தைப் பார்த்தது கிடையாது. நான் தமிழர் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள், முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை. பண்டைத் தமிழகத்தைப் பார்க்க வேண்டுமானால் நான் சங்க நூற்களில் காணவேண்டும். எனக்குப் போன ஆண்டு வரைக்கும் பழந்தமிழ் நூற்களில், தொல்காப்பியம், அகம் புறம் முதலியவைகள் பற்றி ஒன்றும் தெரியாது. உண்மை அறிந்து கொண்டபிறகே தமிழகத்தை எங்கள் தந்தையர் நாடு என்று சொன்னேன். தமிழர்நாடு என்பது நாவலந்தீவே என்பது என் இப்போதுள்ள கருத்து. என்று விரிவாகவும் உண்மையாகவும் கூறினார். இதை நான் சொற்பொழிவுகளிலும் பாட்டுக்களிலும் கூறி வந்துள்ளேன். பார்ப்பனர்கள் பாரதி பற்றிய கூட்டம் முதலியவற்றிற்கு என்னை அழைக்காததற்கு ஆன பல காரணங்களில் இதுவும் ஒன்று. பாரதியார் செந்தமிழ் நாடு பற்றி இவ்வாறு பாடியபின் நாவலந் தீவை ஆரியர் நாடு என்ற கருத்தில் ஏதாவது எழுதினாரா என்றால் ஓர் எழுத்தும் இல்லை. அதுமட்டுமல்ல தமிழ்நாடு பற்றியும், தமிழ் பற்றியும், தமிழ்ப் புலவர் பற்றியும் பாரதியார் தவிர எவராவது இத்தனை சுவையுடன் எழுதியுள்ளாரா எனில் இல்லவே இல்லை. நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குள்ள காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக - உண்மை யாக எதிர்த்தவர் பாரதியார்தாம்! அவருக்கு நூற்றாண்டு களுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட் களுக்கு பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியார் இறந்தபின் சாதியை எதிர்த்த - சீர்த்திருத்தங்களை ஆதரித்த பெரியாரை ஆதரிக்கத் தொடங்கினேன். இன்றுவரை ஆதரித்து வருகின்றேன். இனியும் அந்தக் கொள்கையைத்தான் நான் ஆதரிப்பேன். ஏனெனில் பெரியார் கொள்கைகள் தமிழர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டால்தான் தமிழர்கள் வாழ்வார்கள். பாரதியாரை நான், ஆதரித்ததும், பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டதும் ஏதாவதொரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல்வேண்டும் என்பதற்காகவும், பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்றவேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்டவேண்டும் என்பதற்காகவுமே! பாரதியை நான் ஆதரித்தேன்; பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டேன் என்பதால் ஒரு கூட்டத்தாரிடம் நன்மை பெற விரும்பியதே இல்லை என்பது மட்டுமன்று. நான் அந்தக் கூட்டத்தின் முதல் எதிரி என்று எண்ணப்பட்டு வருவதும் உலகமறிந்த செய்தியாகும். நான் பாரதியிடமுள்ள பெரியார் காலத்துக்குப் பொருந்தாத கருத்துக்களை ஓர் இம்மியும் ஆதரித்ததில்லை. அதுமட்டுமா? ஆணித்தரமாக எதிர்த்து வருகின்றேன். சொல்லால் மட்டுமன்று ஏறத்தாழ 60 பெரு நூற்களால்! செய்யுட்களால்! நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டு இருப்பதில் பிழை ஒன்றும் இல்லை என்று கருதுகின்றேன். இவ்வாறான முடிவுக்கு வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அதிலொரு காரணம் வருமாறு: என் நூல்களை வெளியிட்டுப் பிழைக்க எண்ணியவர்கள் என் பெயர் பாரதிதாசன் என்பதற்காக அந்த எண்ணத்தைக் கைவிட்ட துண்டா? அந்தச் சுவடிகளின் அட்டையில் பாரதிதாசன் என்ற பெயரைப் பெரிய எழுத்தால் அவர்கள் அச்சடிக்க மறுத்த துண்டா? எத்தனையோ சீர்திருத்தக்காரர்கள் என் நூற்களை என் அனுமதிக்குக் காத்திருந்து பெற்று வெளியிட்டுள்ளார்கள். பார்ப்பன எதிர்ப்பாளராயுள்ள பலர் கேட்டு உரிமை பெற்று வெளி யிட்டுப் பிழைத்தார்கள். அதிலெல்லாம் நான் பாரதிதாசன் எதிர்ப்பைப் பார்க்கவே இல்லை. ஆனால் பெரியார்க்கு வெளியீட் டுரிமை கொடுக்க வேண்டாம்; கொடுத்தால் உம்மை நான் என் கூட்டத் தோடு எதிர்ப்பேன் என்று சொன்ன பிச்சைக்காரப் புரட்டர்களைத்தான் காணமுடிந்தது. v‹ ü‰fS¡F¡ fhÈ¡nfh m£ilf£o mj‹ nkš j§f Ãw¤jhš ghuâjhr‹ v‹W m¢á£L jiyÆš ö¡»¡bfh©L bjU¤ bjUthŒ¤ âǪjt®fŸ FUrhÄ B.A., FŠáj« B.A.Lt., என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அப்போதெல்லாம் பாரதிதாசன் என்ற பெயர் பற்றியோ நான் பாரதியாரை ஆதரித்தவன் என்பது பற்றியோ என்னிடம் மூச்சுவிட்ட துண்டா இந்தப் பதர்கள்! கொள்கை பற்றித் தலைவர்கள் ஒருவனை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ கிடையாது. ஆள் தமக்கு வேண்டியவனா இல்லையா? அவனால் நமக்கு ஏதாவது வரும்படி உண்டா இல்லையா? என்பது பற்றித்தான் அவர்கட்குக் கவலை. - குயில், கிழமை இதழ், 20.9.1960, ப.13-14, 10 82. பாரதியார் அன்பு (வீர உணர்ச்சி ஊட்டும் கவிதைகளை எழுதிக் குவித்தவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்! பாரதியாரின் நண்பர்! தினத்தந்தி வாசகர்களுக்காகவே தன் அனுபவங்களை எழுதுகிறார்.) சின்ன வயதிலேயே எனக்கு எதிர்ப்பு இருந்தது! வெளி எதிர்ப்பு மட்டும் அல்ல; அன்னை - தந்தை ஆகியோரின் எதிர்ப்பும் உண்டு. திண்ணைப் பள்ளியில் நான் படித்த காலத்தில், அங்கு எனக்குக் கொடுக்கும் பாடங்களைச் சரிவர ஒப்பித்துவிடுவேன். அக்காலத்தில் திண்ணைப் பள்ளி என்பது தனித்தமிழ் நிறுவனம்! சர்க்கார் பள்ளி என்பது தமிழையும் தமிழ் நெறியையும் ஒழித்துக் கட்டும் நிறுவனம்! நான் பதினைந்து வயதில் திருக்குறள் முழுதும் மனப்பாடம் செய்திருந்தேன். சதகம் முதலியவைகளையும் அப்படியே. *** புதுச்சேரி கடற்கரையில் சர்க்கார் பாடசாலை மாணவரும் நானும் சடுகுடு ஆட வாய்ப்பு நேரும். எனக்குச் சர்க்கார் பள்ளி மாணவரின் எதிர்ப்பு ஏராளம்! அவர்கள் பிரெஞ்சுதான் தாய்மொழி! என்பார்கள்! அது மட்டுமல்ல. பிரான்சுதான் அவர்களுக்குத் தாய்நாடு என்றும் சொல்லிக் கொள்வார்கள்! அவர்களிடம் என் பேச்சு எடுபடுவதில்லை! என் தந்தையாரின் நண்பரான மகாவித்வான் பு.அ. பெரியசாமிப் பிள்ளை என்னைப் புலவர் வகுப்பில் சேர்த்தார். இடைவேளையில் அவரும் எனக்குச் சங்க நூல் பாடம் சொல்லி வந்தார். சரியாய் என் பதினேழரை வயதில் புலவர் தேர்வில் 40 பேரில் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றேன். காரைக்காலை அடுத்த நிரவி என்ற ஊரின் உயர்நிலைப் பள்ளியில், ஓர், ஆசிரியர் இடம் காலியாக இருந்தது. அந்த இடத்துக்கு 30 பேர் போட்டியிட்டார்கள். நானும் அந்த இடத்தைக் கேட்டேன். இதில் எனக்கு 30 பேர் எதிர்ப்பு ஏற்பட்டது. வியப்பில்லை. என் ஆசிரியரும் பள்ளித் தலைவருமே என்னை எதிர்த்தார்கள். ஆனால் சட்டம் எனக்கே அந்த இடத்தை அளித்தது! ஆசிரியர் வாழ்க்கை நிரவியில் ஆசிரியராக நான் போனபோது நிரவி மக்களின் எதிர்ப்பு எனக்கு ஏற்பட்டது! ஒரு சின்ன பையன் ஆசிரியராய் வந்து விட்டான்! என்று சொன்னார்கள்! விரைவில் என் தகுதி கண்டு எதிர்ப்பதை நிறுத்திக்கொண்டார்கள். நிரவியைவிட்டு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டபோது நான் கண்ட புதுவை முன்னர் கண்ட இரண்டு புதுவையாக இருக்கவில்லை! புது ஒளி அடைந்த புதுவையாக இருந்தது! பாரதியாருடன் சந்திப்பு நான் நிரவியிலிருந்து புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு வந்தபோது புதுச்சேரியில் பாரதியார் இருந்தார்! வ.வெ.சு. அய்யர், சீனிவாச ஆச்சாரி ஆகியோர் புதுவையில் இருந்தார்கள். அரவிந்தர் இருந்தார். இவர்களையெல்லாம் புதுச்சேரி மக்கள் சுதேசிகள் என்றார்கள். இவர்களையெல்லாம் புதுச்சேரி மக்கள் வியப்போடு பார்த்தார்கள். வில்லினை எட்டா - கையில் வில்லினை எட்டா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திட்டடா! என்ற பாரதியின் வீரப் பாட்டைப் புதுச்சேரியிலுள்ள இளைஞர் எல்லாரும் பாடினார்கள். பாரதி தெருவில் வரும்போது மக்கள் கிண்ணித் தேரைப் பார்ப்பதுபோல் மகிழ்ந்தார்கள். பிரெஞ்சுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் எல்லாரும், நம் தாய்நாடு தமிழ்நாடு எங்கள் உடம்பில் ஓடும் குருதி தமிழ்க்குருதி என்று கூவினார்கள். புதுச்சேரியில் கால்வைத்த நான் பள்ளிக்கூடத்தில் ஓர் தமிழாசிரியன்; மேலும், என் ஆசிரியர்கள் நடத்தும் கலை மகள் கழகத்தின் உறுப்பினன்; பாரதி முதலியோர் சூழ்ந்துள்ள சுதேசி - பல்கலைக் கழகத்தில் ஓர் மாணவன். இந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மிகப் பெரியது. சுதேசிகளுடன் (தாய்நாட்டுப் பற்றாளர்களுடன்) நான் சேர்ந்திருப் பதால் பிரெஞ்சு சர்க்கார் அதிகாரிகள் என்னை எதிர்த்தார்கள். பெரிய மனிதர்கள் என்னை எதிர்த்தார்கள். பள்ளியில் அதிகாரிகள் எதிர்த்தார்கள். கவிஞன் ஆனேன் எதிர்ப்புக்களை நான் பொருட்படுத்தவில்லை! பாரதி வீட்டில் நான் ஒரு கவிஞன்! பிறகு புதுவைக்கே ஒரு புதுமுறைக் கவிஞன்! அன்றியும் சுதேசிகளின் காப்பாளர்களில் நான் குறிப்பிடத்தக்க ஆள். என் தோழர்கள் என்னிடமிருந்து சூரர்குலம் வேரறுக்க ஒரு வேலும் என்பது போன்ற பழைய முறைப் பாடல்களை இழந்தார்கள். என் மூலம் பல புதுமுறைப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவர்கள் வீரமிக்கவர்களாக ஆனார்கள். ஏறத்தாழ நான் பாரதியாரிடமிருந்து பல புதுமுறைக் கவிதை எழுதப் பழகினேன். சுதேசிகளுடன் நான் முன்னின்று உழைத்தது கொஞ்சமன்று! என்னால் உடனிருந்து காப்பாற்றப்பட்டு வந்த உத்தமர் - வீரர் - அறிஞர் மாடசாமி புதுவையை விட்டுச் சென்றார். அதன்பிறகு பாரதி முதலியவர்களின் வாரண்டு தீர்ந்ததால் சென்னைக்குப் போனார்கள்! பாரதி அன்பு சென்னையில் பாரதி இருந்தார்; ஆனால் என்னுள் வளர்ந்து வந்த பாரதி அன்பும் இறந்ததா? இல்லை! பாரதியாரின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறத் தயங்குவதில்லை! அதனால் ஒரு சாராரின் எதிர்ப்பு இன்று வரைக்கும் நீங்கியதில்லை. இதற்காக நான் அஞ்சியதும் இல்லை; அஞ்சப் போவதும் இல்லை! என் வாழ்நாளில் நான் இல்லை. தமிழ் விடுதலை பற்றி - சீர்திருத்தக் கருத்துக்களை எந்த எந்தக் கட்சியிலும் உறுப்பினர் கட்சிக் காரர் சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்நாளின் குறிக்கோள்; தமிழ் காக்கப் பெறுதல் வேண்டும் என்பதுதான்! - தினத்தந்தி, சென்னை, 6.5.1963, ப.3 83. புதுமைக் குயில் பறந்தது (புரட்சிக் கவிஞர் மறைவின்பின் அவரை நினைவுகூர்ந்து பின் வரும் முன்மொழிவோடு ஆனந்த விகடன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து பாரதிதாசன் முன்னர் எழுதிய கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.) எனக்குக் குயிலின் பாட்டும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முனவும் இனிக்கும்; பாரதிதாசன் பாட்டும் இனிக்கும் என்றார் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. ஆமாம். பாரதிதாசன் பாட்டு, இனிமையும், வேகமும், எழுச்சியும் மிகுந்த ஒன்று! பாவேந்தர் பாரதி ஏற்றித் தந்த தீபத்தை அணையாமல் காப்பாற்றி வந்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் மறைவு தமிழுக்கு நஷ்டம். தமிழ் மக்களுக்கு நஷ்டம், தமிழ்க் கவிதை உலகுக்கு ஈடு செய்யமுடியாத நஷ்டம். அவர் குடும்பத்தாருக்கு விகடன் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறான். பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி விகடனுக்கு எழுதுவதாக இருந்தார் கவிஞர் பாரதிதாசன். ஒரு கட்டுரையும் தந்தார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து தரமுடியவில்லை. அவர் தருவார்; அதை வாசகர்களுக்கு நாம் தரலாம் என்றிருந்தோம். அதற்குள் கூற்றுவன் அவரைக் கொண்டு சென்றுவிட்டான். அவர் தந்த அந்தக் கட்டுரையை இந்த இதழில் பிரசுரிக்கிறோம். ஆசிரியர் புகழ் வாழ்க்கை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆயிரக்கணக்கான பைந்தமிழ்க் கவிஞர்கள் இருந்தார்கள். பதினாயிரக்கணக்கான பைந்தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். வாய்ப்பாட்டுக்காரர்கள் வன்னா சன்னம். நகர்தோறும் நாடகப் பாட்டுக்கள், சிற்றூர் தோறும் தெருக்கூத்துப் பாட்டுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குந்தும் திண்ணைகளில் இராமாயணப் பாட்டுக்கும் கோயிலின் குறடுகளில் பாரதப் பாட்டுக்கும் பஞ்சமே இல்லை. சாவுக்கு இறுதியிலும், வாழ்வுக்கு நடுவிலும் மற்றும் திருக் கோயில்களிலும் திருவிழாக்களிலும் தேவாரமும், திருவாசகமும், திருவாய் மொழியும் வாய் ஓய்ந்தாலும் வழக்கம் ஓய்வதில்லை. ஒரு தப்பு அல்லது இரண்டு தாளம், அதுவும் இல்லா விட்டால் ஓர் உடுக்கை. அதற்கும் பஞ்சமானால் ஒற்றைத்தந்தி துத்தனாகக் கட்டையிலாவது ஒட்டியோ ஒட்டாமலோ பிச்சைக் காரர் பாட்டுக்கள் அங்கு இங்கு எனாதபடி எங்கும் கேட்கும். குறைந்தது காயமே இது பொய்யடா இனத்தில் வேளைக்குப் பத்து உருப்படியாவது காதில் விழும்! ஆனால் - சந்து, பொந்து, தமிழ் மன்றம் எந்த இடங்களிலும், தழைவு, இழவு, தமிழ்விழா எந்த நேரத்திலும் கேட்கப்படும் பாட்டில், ஒலிதான் விளங்கும்; பொருள் விளங்காது! புலவர்க்குள் பாட்டின் பொருள் பற்றிப் போர் தொடங்கும், கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் எந்த முடிவும் ஏற்பட்டு விடாது. புலவர், தாய்மொழிப் பற்றிப் போராடுவதை மற்றவர் ஆவலாக வேடிக்கை பார்க்க நெருங்குவதுண்டா என்றால், இரும்படிக்கும் இடத்தில் ஈ மொய்க்கவே மொய்க்காது. புலவர் பொதுமக்கள் அல்லர், அனாமத்துக்கள்! ஒரு கவிஞர் கவிதை இயற்றினால் அந்தக் கவிதையின் பொருள் அவருக்கும், அவர் போன்ற கவிஞர்க்குமே விளங்க வேண்டும்! அயலார்க்குப் பொருள் தெரியும்படி எழுதப்படும் கவிதை அப்பட்டம், மட்டம்! நாடகத்தில் பாட்டைக் கவனிப்பதில்லை. பாட்டின் மெட்டுக்கள் தாம் கவனிக்கப்படும். பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்ற, தேவையில்லை. அது பெரும்பாலும் இந்து தானியாய் இருந்து போகட்டுமே! இடையிடையே சமகிருத லோகம் சொல்லுகின்ற நடிகன்; சமகிருதத்தைச் சொல்லுவதாக வாந்தி எடுத்தாலும் அவன் கெட்டிக்காரன், அவனால் வருமானம் மிகுதியாகும். நல்ல தங்கை, வள்ளி, அரிச்சந்திர விலாசம் போன்ற மாமூல் நாடகங்களுக்குத் தான் நல்ல பெயர். நாடகத்துக்கு வந்தவர்கள் உருவத்தை ஆவலாகக் காணுவதல்லாமல், கதை உறுப்பினரின் உள்ளத்தையும், உள்ளத்தை விளக்கும் பாட்டையும் கேட்பதில் காலத்தை வீணாக்க மாட்டார்கள்! கதையும், பாட்டும் தலைமுறை தலைமுறையாக நடப்பவை தானே! தெருக் கூத்தாடிகள் பெருமையாகச் சொல்லிக்கொள்வது என்ன தெரியுமா? நாங்கள் இப்போதெல்லாம் நாடகப் பாணியாகவே தெருக் கூத்து நடத்துகிறோம் என்பார்கள். அங்கெப்படி வாழும் தமிழ்ப் பாட்டு? அந்நாளில் பொருள் விரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்தன; பொருள் புரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்ததில்லை. புரியாத பாட்டைக் கேட்டுக் கேட்டு மக்கள் புரியும் பாட்டைக் காட்டி இந்தா என்று அழைத்தாலும் அவர்கள் தென்னாலி இராமனின் சுடக் குடித்த பூனைகளாய் ஓடுவார்கள்! தமிழ்ப்பாட்டு என்பது தமிழர்க்கு வெறுப்பூட்டும் பொரு ளாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம். பாவேந்தர் பாரதியாரின் பாட்டுக்கு வரும் வரைக்கும் எழுந் திருக்கவே இல்லை! கொட்டை நீக்கிக் கோது நீக்கி, இந்தா என்று தந்த பலாச்சுளை மக்கட்கு அன்று பாரதியார் அருள்புரிந்த, பொருள் விளங்கும் பாட்டு. பொருள் விளங்கும் பாட்டு என்றால், கவிஞன் கவி பாடும் காலத்தில் மக்களுக்கு வேண்டிய, உண்மையை எளிதில் விளக்கக் கூடிய பாட்டு என்பதே பொருள். எளிய நடைப்பாட்டு என்றும் இதைக் கூறுவார்கள். அப்படி என்றால், எளிதில் அரிய பொருளை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்த பாட்டு என்று பொருள். வல்லாள மாவரசன் மனைவியைச் சிவனடியார்க்கு அளித்துச் சிவனடி அடைந்தான் என்ற கதையை, ஆயிரம் பாட்டால் பாடி முடித்தார் என் நண்பர் துரைச்சாமி வாத்தியார், இது காலத்துக்கு ஏற்றதல்ல; பாட்டின் நடையும் சிக்கலானது என்றார்கள் பலர். இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள். துரைச்சாமி வாத்தியார் தவறுணர்ந்து தணலிற் போட்டுக் கொளுத்தினார் புராணத்தை. ஆனால் துரைச்சாமி வாத்தியார் அரிய கருத்தை எளிய நடையில் எழுதுவது செயற்கரிய செயல் என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாவேந்தர் பாரதியார் நாட்டுக்குப் பாடத் தொடங்கியது 1906-ம் ஆண்டில்தான். அதற்கு முன் அவர் வீட்டாருக்கும், நெருங்கிய நண்பர்கட்கும் பாடியிருக்கலாம். பாரதியார் பாட்டுக்கள் எப்படி இருக்கும் என்று கேட்பவர் இருந்தால் அவர்களுக்கு நான் சொல்லும் விடை இதுதான். 1. தமிழர் 1906-ல் எந்தெந்த தமிழ்ச் சொற்களை அறிந்திருந் தார்கள்? அந்தந்தச் சொற்களையே வைத்துப் பாட்டைப் பாடினார். 2. 1906-ல் தமிழர் இருந்த அடிமை நிலையை விலக்க, அவர்கள் மீட்சி நிலையை அடைய அவர்கட்கு எக்கருத்தை வைத்துப் பாடவேண்டும். அக்கருத்தை வைத்துப் பாடினார். 3. எவ்வளவு பெரிய உள்ளம் வேண்டும்? அவ்வளவு பெரிய உள்ளத்தைக் கொண்டு பாடினார். 4. எவ்வளவு பாட்டு திறம் வேண்டும்? அவ்வளவு பாட்டுத் திறத்தைக் கொண்டு பாடினார். அந்நாள் பாரதியார் பாட்டைக் கேட்ட பாசி படிந்த தமிழ்த் தாயின் செந்தாமரை முகத்தில் மின்னிய புன்னகை, இருண்ட நாட்டில் பட்டப் பகலைச் செய்தது! தமிழர் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தார்கள். புகழ் பாரதியாரிடம் சேருமா? துரைசாமி வாத்தியாரிடம் சேருமா? - பாரதிதாசன் புகழ்வாழ்க்கை, ஆனந்தவிகடன், சென்னை, 3.5.1964, பக். 19 - 20 84. பாரதி தனித்தமிழ்ப் பாட்டு பாரதியாரின் வரலாற்றில் நான் எந்தத் துணிக்கையையும் யாருக்குச் சொல்வதாயிருந்தாலும் முதலில் பாரதியார் உள்ளம் பெரிய உள்ளம். நல்ல உள்ளம், அன்புள்ளம்; அவர் வரலாற்றில் அதைக் காணலாம். கண்டு அடுத்த நொடியில் அதை மறந்துவிடக் கூடாது. நினைத்துக்கொண்டே இருந்தாலும் பயனில்லை. நடைமுறையில் வைக்கவேண்டும் என்று சொல்லத் தோன்றும். பாரதியாரின் தமிழ்ப் பற்றுப் பற்றி இங்கே சொல்லப் போகிறேன். இதைப் படிப்பவர்களும் அவரைப் பின்பற்றினால் தமக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் நல்லது என்பதை முதலிலேயே சொல்ல எண்ணுகின்றேன். பாரதியார் காலமானபின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர்களுக்கும் எனக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் நடந்தது. பாரதியாரின் அத்தை பெயர் குப்பம்மா, மாமன் பெயர் கிருஷ்ண சிவம். இதை அம்மா எனக்குக் கொடுத்தார்கள். காசியில் பாரதியார் சின்ன பிள்ளையாயிருக்கும்போது அவர் பாடிய தனித் தமிழ்ப்பாட்டு ஆறடியில் எனக்கு நினைவிருந்த இரண்டடியை நான் பாடினேன், கேட்டார்கள். அதை அம்மா அவர்கட்கு நான் கொடுத்தேன். கிருஷ்ணசிவம் காசியில் ஒரு சிவமடத்துக்கு அதிகாரி! உடைய வரே! அதனால் பாரதியார் காசியில் படிக்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டது. கிருஷ்ணசிவம் பையனை (பாரதியாரை) ஈவரலாலுக்கு அறிமுகப்படுத்திவைக்கும்போது இவன் பிஞ்சு அல்ல: கவிப்பழம் என்று சொன்னாராம். clnd <Þtuyhš ghuâia¥ gh®¤J ‘vªj bkhÊÆš? என்று கேட்டார். கிருஷ்ணசிவமே அதற்கு விடையாகத் தமிழில் என்று சொன்னார். ஈவரலாலுக்கு முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் ஆயிற்று. சமக்ருதம் ஒன்று உண்டு. அது தனி மொழி. தமிழ் என்று ஒரு மொழியும் உண்டா? சம்க்ருதம் பெற்ற பிள்ளையைச் சம்க்ருதம் என்றே சொல்லுவதில் நாணம் ஏன்? ஈவரலால் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போனார். ஈவரலால் பேச்சு பாரதியாருக்கு அப்போது புரிய வழியில்லை. கிருஷ்ணசிவம் பாரதியாருக்கு மொழிபெயர்த்தார். அப்போது பாரதியார் ஈஸ்வரலாலை நோக்கிக் கேட்ட முதற் கேள்வி: ‘சம்ஸ்க்ருதம் ஒரு மொழி என்று சொல்லும் தகுதி அதற்கு என்ன இருக்கிறது? என்பதாகும். அதைத் தொடர்ந்து பாரதியார் நடத்திய சொற்பொழிவின் முதற் பகுதி ஈவரலாலை எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கலாம்; ஆயினும் அதில் வெளியான உண்மைகளை ஈவரலாலே பாராட்டியிருக்கிறார். ஈவரலால் அவர்களே, தமிழ் பேசும் வட்டாரத்தில் கோயில்களில் குறிப்பிட்ட நேரங் களில் சிலர் சம்க்ருத மந்திரங்கள் சொல்லுகிறார்கள்; தொழில் முடிந்தவுடன் அவர்கள் எங்கும் எப்போதும் பேசுவது தமிழ்தான்! திருமண காலங்களில் சிலர் சம்க்ருத மந்திரம் சொல்லு கிறார்கள். தொழில் முடிந்ததும் அவர்கள் எங்கும் எப்போதும் பேசுவது தமிழ்தான்! திருவிழா நாளில் வேத பாராயணம்! முடிந்ததும் கூலி கேட்பதுகூடத் தமிழில்தான்! அதுபோலவே இந்தி பேசும் வட்டாரத்தில் சம்க்ருதம் கேட்கப்படுகிறது. அடுத்தபடி அவர்கள் எப்போதும் பேசுவது இந்திதான். நாங்கள் வாழும் வட்டாரத்தில் சம்கிருதப் பள்ளி இல்லை. வட்டார மொழியாகிய தமிழ்ப் பள்ளிகள்தாம் எங்கும் உண்டு. சம்க்ருதம் என்ற வேடிக்கை மொழியின் எழுத்துக்களைத் தெரிந்து கொள்ள நான் இவ்வளவு தூரம் வரவேண்டியதாயிற்று. சம் க்ருதப் பள்ளியில் பல மொழிக்காரர்கள் சம்க்ருதம் படிக்கிறார் கள் என்று பெயர். அவரவர்களின் இந்தி, இந்துதானி, மராட்டி முதலியவற்றில்தான் எங்கும் எப்போதும் பேசுகிறார்கள். சமக்ருதம் என் தாய்மொழி என்று சொல்ல யாரையும் காணோம். ஈவரலால் அவர்களுக்கும் சமக்ருதம் தாய்மொழியல்ல. ஆரியருக்குச் சமக்ருதம் தாய்மொழியாம். ஆரியர் இருந்தால் அவர்கள் சமகிருதம் பேசவேண்டுமே. அப்படி ஒன்றும் தெரியவில்லை. சமக்ருதம் என்ற சொல், பல மொழிச் சொற்களைக் கொண்டு திருத்தி அமைத்தது என்று சொல்லுவதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஆனால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துமுன் தோன்றிய தான ஒரு மொழியைக் கேள்விப்பட்டால் அது சம் க்ருதத்திலிருந்துதான் வந்தது என்று சொல்ல மட்டும் இந்த நாட்டில் அதிகம் பேர் கிடைக்கிறார்கள். தனிமொழி என்பதான ஒன்றைக் கண்டால் அதைக் கொல்ல வேண்டும் என்பதில் காட்டப்படும் ஊக்கம் சம்க்ருதத்தை உயிர்ப்பிப்பதில் செலவழிக்கப்படவில்லை. இது என்ன வேலை? பாரதியார் பேச்சை மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டே வந்த கிருஷ்ணசிவத்தை ஈவரலால் அப்படியா என்று கூறி நிறுத்தினார். பாரதி சம்க்ருதம் உயர்த்தப்படவேண்டும் என்று தான் சொல்கிறார். அவர் கருத்து நம்மையெல்லாம் உணர்ச்சியில் ஆழ்த்துகின்றது. தமிழ்பற்றி எனக்குள்ள ஐயப்பாட்டைச் சொல்கின்றேன். அதுபற்றி எனக்கு நல்ல தெளிவு வேண்டும். தமிழில் நூற்கள் உண்டா? உண்டு என்றார் பாரதியார். தமிழிலா? தமிழில்! என்றார் பாரதியார், இன்னும் ஒரு கேள்வி; தனித் தமிழிலா? தனித் தமிழில்தான் என்றார் பாரதியார். அப்படி நான் கேள்விப்படவில்லை; தமிழ் நூற்களில் சில தமிழ்ச் சொற்கள் காணப்படும்! அவையும் சம்க்ருதத்திலிருந்து வந்தவைகளே என்றார் ஈவரலால். ஈவரலாலுக்கு நேரம் ஆயிற்றாம்! அவர் அப்படிச் சொல்லி எழுந்துபோகுமுன் கூறினார்; தனித்தமிழில் நீங்களாவது பத்துவரி எழுதிவையுங்கள்; நாளைக்கு என் நண்பர் சிலரோடு வருகின்றேன், என்றார் ஈவரலால். பாரதியார் சற்றே இருங்கள் பல வரிகள் எழுதித் தருகின்றேன் அதைக் கையோடு கொண்டுபோய் உங்கள் நண்பர்களுக்குக் காட்டலாம். அப்போது பாரதி விரைந்து எழுதிய வரிகள் நாற்பத்தெட்டு, அவற்றில் பதினாறு வரிகள் இவை: காற்றென்று சொல்வதோ ராற்றல் மற்றுக் கனலென்று சொல்வதோ ராற்றல் மாற்றமி லாததோர் விண்ணும் இம் மண்ணும் புனலுமோர் ஆற்றல் தோற்றுமிவ் வாற்றல்கள் எல்லாம் இங்குத் தோன்றிடச் செய்தது யாதோ ஆற்றலுக் காற்றலும் ஆகி அதற் கப்பாலும் உள்ளபே ராற்றல் ஒன்றெனக் கண்டவர் மேலோர் அதில் ஒன்பது சொல்பவர் மூடர் என்றும் எங்குமிருந் தாலும் அதை இல்லைஎன் றுரைத் தாலும் முன்னாதல் என்பதோர் ஆழி அதில் முத்துக் குளித்திடும் போதில் தன்திறம் எனுமொரு மேட்டில் நன்கு தட்டுப் படும்பே ராற்றல். - பாரதிதாசன், 10.7.1967, குயில், ப.24 85. சொந்த வீடும் வந்த வீடும் மனிதன் வந்த வீடு இந்த உடம்பு என்று கூறினார் பாரதியார். உடனே அவர் சொந்த வீடு எது தெரியுமா என்று என்னைக் கேட்டார். நீங்களே சொல்லுங்கள் என்று நான் சொன்னேன். சாக்காடு என்றார் பாரதியார். என் தந்தையார் இறந்த மறுநாள் அவரை நான் கண்டபோது என்னைத் தேற்றுவது கருதி அவர் துவக்கிய இந்தப் பேச்சுக்கள் சற்றே விரிவடைந்தன. அவர் தொடர்ந்து கூறியவை இவை: எல்லோரும் சாகாதிருப்பதையே விரும்புகிறார்கள். சாக்காட் டின் ஒட்டில் கிடக்கும் ஒரு கிழவியிடம் காலன் போய் நீ கிளம்பு. இங்கே இருந்தது போதும் என்றால், அவள் எனக்கு வர விருப்ப மில்லை. வேண்டுமானால் அதோ என் மருமகள் மணலிற் பிடுங்கிய வள்ளிக்கிழங்கு போல் இருக்கின்றாள். அவளைக் கொண்டு போ என்பாளாம். கதை நடத்துவோர் இப்படிக் கற்பனையாகக் கூறுவார்கள். மக்கள் இயல்பை உள்ளபடி விளக்குவதே இது. கஞ்சிக்கு வழியில்லாத ஓர் ஏழைக்கு ஆண்டு நூறு ஆயிற்று. ஏன் அவன் இன்னும் சாக மாட்டேன் என்கிறான்? அவனை எதுவோ ஒன்று சாகாதே சாகாதே என்று இந்தப் பக்கமிருந்து இழுக்கிறது. அது எது? - பற்று - உலக - ஆசை. எல்லாம் ஆண்டாய் அனுபவித்தாய் இன்னும் உனக்கேன் உலகின் தொல்லை என்று ஒரு பணக்காரனை நோக்கிக் கேட்டால் அதற் கவன் என் பேரனுக்கு இருக்கும் ஒரு மகனுக்குத் திருமணத்தைச் செய்து கண்ணால் பார்த்துவிட்டுச் செத்துப் போகலாம் என்று இருக்கிறேன், என்பான். ஒரு நோயாளியை, ஒரு தள்ளாத கிழவனை, நீ செத்துப் போ என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது சட்டப்படி குற்றமும் ஆகும். இருப்பவனை இவன் செத்துவிட மாட்டானா என்று மனத் துக்குள் நினைப்பதும் சரியில்லை என்பது என் கட்சி. இதை வளர்த்த வேண்டாம். உலகில் யாரும் சாக விரும்புவதில்லை என்று வைத்துக் கொள். அவர்கள் அப்படி விரும்பாததும் சரி என்று அதன் அண்டை யில் பதிந்து வை. ஆனால் சான்றோர்களின் செய்தி இதற்கு மாறானது. வந்த வீடு அவர்கட்குப் பிடிக்காது. வந்த காரியம் முடிந்தவுடன் அவர்கள் சொந்த வீட்டுக்குப் புறப்பட்டு விடுவார்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் அறிவு தோன்றியவுடன் தமக்கென ஒரு வேலைத் திட்டத்தை வகுத்துக் கொள்வார்கள். அந்தத் திட்டம் ஒருவாறு நிறைவேற்றிய பின் வந்த வீட்டில் ஒரு வெறுப்பும் சொந்த வீட்டில் ஒரு விருப்பும் ஏற்படாமற் போய்விடுமா? மக்கள் எல்லோரும் சரி நிகர் சமானம் என்று எல்லோரை யும் உணரும்படி செய்ய வேண்டும் - என்பது அந்த அருளுள்ளம் கொண்டவரின் திட்டம். அதுமட்டுமில்லை. இந்த வேலைத் திட்டத்துக்கு இடையூறாய் இருந்து வருகின்ற ஆங்கிலேயனை முதலில் இந்தியாவை விட்டுத் துரத்த வேண்டும் என்பதும் அவர் திட்டம் வேலையைத் தொடங்கினார். நல்ல நாள் பார்க்கவில்லை. தொடக்கவிழா நடத்த யாரையும் அழைக்கவில்லை. என்றைக்குத் தொடங்கினோம் என்பது அவருக்கே தெரியாது. அவர் செய்தியும் ஒருவருக்கும் தெரியாது. பத்துப்பேருக்குத் தெரியவேண்டுமே என்று அவர் எப்போதும் எண்ணியதில்லை. ஒரு நாள் அவர் கடற்கரையில் சொற்பொழிவு ஆற்றியிருந்த போது அவரைச் சிலர் அழுகிய முட்டைகளால் அடித்தார்கள். மறுநாள் ஆங்கிலேயனும் சிறையில் அடைக்கத் தேடினான். அப்போதுதான் அவருக்குத் தம் தொண்டில் அழியாத நம்பிக்கை ஏற்பட்டது. அறை வீட்டில் இருந்துகொண்டே அவர் அனைவரும் நிகர் என்றார். அது அனைத்து இந்தியாவிலும் கேட்கும். இந்தியாவில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆங்கிலேயன் தன் சொந்த நாட்டுக்குப் போய்த் தொலைந்தான். தெருவில் ஒரு நாள் ஒரு மனிதர் சாதி இன்னும் இந்த நாட்டைவிட்டுத் தொலையவில்லை என்று கத்தினார். இது கேட்ட இவர் சிரித்தார். சாதி ஒழிந்தது ஒற்றுமை வந்தது. ஒற்றுமை வந்தது. ஒற்றுமை வந்ததால் ஆங்கிலேயன் ஓடினான் என்று தமக்குள்ளே சொல்லி கொண்டார். இரும்புக் குண்டு தூக்கிப் போடும் வலுப்போட்டிக்கு இவர் தம் பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தார். போட்டி இருக்கின்ற வரை நேரில் ஆராய்ந்து தகுதியை உறுதி செய்யும் குழுவினர் முதலில் இவர் பிறந்தநாளை ஆராய்ந்தார்கள். தொண்ணூறு ஆண்டு மனிதர் போட்டியில் கலந்து கொள்வது கூடாதென்று மறுத்தார்கள். இதுபற்றி இவருக்கு நிரம்ப மகிழ்ச்சி வந்து சேர்ந்தது. அவர் மக்களுக்குச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். ஒழுக்கம் ஓம்புமின் உடல் ஓம்புமின் தொண்டு செய்மின் - கிழவர்களும் வெளிக்குப் போகும்போது சுருட்டுப் பற்ற வைப்பதைக்கூட விட்டுவிட்டார்கள். சிதம்பரம் தீட்சிதர் கூட நாளைக்குப் பத்துத்தரம் வெற்றிலை போடுவதையும் அதனோடு சிவகிரிப் புகையிலை அடக்கியபடி அருச்சனை செய்வதையும் விட்டு விட்டார்கள். நல்ல நிலையை அவர் நாட்டில் கண்டார். அவர் எதிரில் இளைஞர்கள் உதை பந்து அடித்துக் கொண்டிருந் தார்கள். தலைமை ஆட்டக்காரர் பெருந்தொல்லைக்குப் பின் அடித்த பந்து வெற்றியிற் போய் விழுந்தது. அப்பாடா என்று ஒருபுறம் போய் உட்கார்ந்து ஓய்வு பெற்றார் வென்றவர். எனக்கும் அந்த ஓய்வு தேவை என்று தமக்குள் சொல்லிக் கொண்டார், நாளெல்லாம் உழைத்த நல்ல பெரியவர். வீட்டுக்கு வந்தார். படுத்தார். மூட்டைப் பூச்சித் தொல்லை! கொசுக்கள் ஒரு பக்கம். வந்த வீடு போதும் போதும் என்றாகி விட்டது. அவருக்கு! சொந்த வீட்டுக்குப் போய்விட எண்ணினார். அதே நேரம் கொள்ளைக்காரன் - கொலைகாரன் கொள்ளையடிக்கின்றான். அதன் பிறகு பொருளுக்கு உடையவரை இரக்கமின்றிக் கொலை செய்து விடு கின்றான். இப்போது அந்த வெறிபிடித்த முரடன் பெருமாள் கோயி லுக்குச் சொந்தமான கள்ளுக் கடைத் தோட்டத்தில் கள் குடித்துக் கொண்டிருக்கின்றான். கள் குடித்த பின் ஊர் என்ன ஆகுமோ என்று பேசிக் கொண்டார்கள். அரசும் அந்த முரடனைச் சுட வில்லை. சுட்ட வனையும் விடாது என்பது இவருக்குத் தெரியும். ஆயினும் அவன் எதிரில் நின்று துப்பாக்கியைத் தூக்கி அவனைச் சுட்டுத் தள்ளினார். அரசு தூங்கிக் கொண்டிருந்தது. அவர் மேல் இன்னும் நடவடிக்கை தொடங்கவில்லை. அவர் அலுத்துக் கொண்டார். இவர்களை எதிர் பார்ப்பதில் பயனில்லை என்று முடிவு செய்தார். வீட்டுக்குப் போனார். இரண்டு நாளில் அரசின் காவலர் இவரைச் சிறைப்பிடிக்க ஆயத்தம் ஆனார்கள். அவர் எந்த வீட்டில் இருப்பார் என்று புலன் ஆராய்ந் தார்கள். விலங்கொடு சென்றார்கள். அவர் சொந்த வீடு போய்விட்டார் என்ற சேதி அரசினர்க்குப் பிறகுதான் தெரிந்தது. பாரதியார் வாயினின்று வரும் நீளப் பேச்சை நான் அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்வதுண்டு. அவைகளில் இதுவும் ஒரு துண்டு. இந்தத் துண்டில் கருத்தும் சொல்லும் திறனும் பாரதியாருடை யவை; காலங் கருதி ஒரு சொல்லுக்கு வேறு சொல் போட்டிருந் தால் அது என் சரக்கு. நூறாண்டோ அல்லது இரு நூறாண்டோ மனிதன் வாழ நினைத்தால் அதற்குரிய முயற்சி மூன்று நாள் உப்பில்லாச் சோறு உண்பதை விடச் சின்னது என்று பாரதியார் அடிக்கடி சொல்லுவார். நீண்ட நாள் வாழ்ந்திருக்கப் பாரதியார் காட்டிய திட்டம் ஐந்தே ஐந்துதான். அவை வருமாறு: 1. தாய் தந்தையரால் கருப்பையில் தொடரும் எந்த நோயையும் தீர்க்க இந்தக் காலத்தில் மருத்துவம் உண்டு. தீர்த்துக் கொள்ள வேண்டும். 2. சாதி மதத்தால் ஏற்படும் வேற்றுமை உணர்ச்சி அந்தக் காலத்தில் மக்களுக்கு நன்மை அளித்ததோ என்னவோ நமக்குத் தெரியாது. இந்தக் காலத்தில் அந்த வேற்றுமைச் சுழலில் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது. 3. ஒழுக்கத்தினின்று எள்ளின் மூக்கத்தனையும் தவறக் கூடாது. 4. தனக்கென வாழ்வான் விரைவில் செத்துப் போவான். அவன் அளவற்ற நோய்களால் அரிக்கப்படுவான். குள்ள எண்ணம் நீண்டநாள் வாழவிடாது. 5. மக்கள் தொண்டு. இந்த ஐந்தும் மனிதனுக்கு ஐந்து கண்கள். ஐந்து கண்ணன் என்றால் சாவு கிட்டவராது. ஆனால் ஐந்து கண்ணன் அழைத்தால் வந்து துன்பமில்லாமல் அழைத்துச் செல்லும். - பாரதிதாசன் குயில், 10.9.1967, ப.21 86. பழைய நினைவுகள் பாரதியார் புதுவையில் இருந்தபோது அவரிடம் கேட்ட பல அரிய கருத்துக்களைக் குறித்து வைத்துக் கொள்வதுண்டு. அந்தக் குறிப்பு ஏட்டுக்கு நான் பழைய நினைவுகள் என்று தலைப்புக் கொடுத்திருந்தேன். என் வீட்டில் நான் என் புத்தகங்களை வைக்கும் நிலைப் பெட்டி யானது அடிக்கடி இடம் மாறும். அப்போது வீட்டிலுள்ளவர் களின் கண்களில் அது படும். என் தந்தையார் கண்ணில் பட்டால் அதற்கு கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கத் தவறமாட்டார். என் தமையனார் அதைப் பார்க்கும் தோறும் பழைய நினைவுகள் என்ற பெயரை மாற்றிப் புது அப்பளம் என்று கூறி, இருந்த இடத்திலே போட்டுவிட்டுப் போய் விடுவார்! பாரதியார் புதுவையில் இருக்கும் காலத்திலேயே பழைய நினைவுகள் பழமையைத் தாங்கமுடியாத நிலையில் இருந்தன என்றால் அந்தத் தாள்களின் நிலை எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்க. இப்போது இரண்டு நாட்களின் முன், அதை நான் மெதுவாக எடுத்து மெதுவாகப் பிரித்துப் பார்த்தேன். பாரதி புகழ்ந்த பாட்டுக் கிடைத்தது! அயர்லாந்து - கவிஞரான வெர்ஹேரன் என்பவர், அயிரிய மொழியில் எழுதிவந்த ஹொக்குப் பாட்டுத்தான் பாரதி புகழ்ந்த பாட்டு. பாட்டுத் திறம் என்பது பல உட்பகுதிகளை உடையது. வெர்ஹேரன் பாட்டில் பாரதியார் எந்தப் பகுதியைப் புகழ்ந்தார் என்பதை அறிய நீங்கள் ஆசைப்படுவீர்கள். வெர்ஹேரன் சில சொற்களை வைத்து ஒரு காப்பியத்தை முடிப்பவர். அப்படிப்பட்ட சுருக்கப் பாட்டுக்கே ஹொக்குப் பாட்டு என்று பெயர். அவர் எழுதும் பாட்டுக்கள் அயர்லாந்து கிழமை இதழ் ஒன்றில் வெளிவரும். அது பாரதியாருக்கு அனுப்பப்படும். ஹொக்குப் பாட்டு பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது. பாரதியார் அதை ஐந்தாறுமுறை படிப்பார், என்னிடமும் வாத்தியார் சுப்பிரமணிய ஐயரிடமும் ஏழெட்டுமுறை படித்துக் காட்டுவார். அது அயிரிய மொழியில் அமைந்ததாயினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்ப்பே இப்படி இருக்கும்போது மூலம் எப்படி இருக்கும்! என்று பாரதியார் வியந்துரைப்பார். அந்த ஹொக்குப் பாடலைத் தமிழில் மொழிபெயர்க்க முடியுமா என்றார். வேலையைத் தொடங்கினார். அவர் மொழிபெயர்த்த பாட்டு இது: மயங்கினேன் முயங்கிலாள் பரீசு வாய்ந்து - எழில் மறந்திலேன். காவின் தயங்கு புறவு தன்பெடை மருவலின் தளிர்த்துஉயிர், திரும்பிட ஆங்கு முயங்கிலாள் முறுவல் தாக்கலின் முடிந்த வாழ்வு, இதழ் உணவின் மீண்டது! முயங்கிலை; முயங்கினை ஏன்? - என முயக்க நிறைவுக்கு எனப் பினும் முயங்கினாள். இது அறுசீர் விருத்தம்: இப்பாட்டின் பொழிப்புரை வருமாறு: அரிவை ஒருத்திமேல் நான் ஆசைப்பட்டேன். அவள் என்னைத் தழுவ மறுத்தாள். நான் பரீசு நகருக்கு வந்து அவளை மறந்திருக்க முயன்றேன்; மறக்க முடியவில்லை, ஒரு நாள் நான் அங்கு ஓர் பூங்காவில் தயங்கிய புறா தன் பெடையை மருவியதை நான் கண்டதால் என் உயிர் தளிர்த்த நிலையில் திரும்பியபோது அதே இடத்தில் முன் மயங்க மறுத்த அந்த மங்கையின் இளநகை என்னைத் தாக்கியதால் முடிந்துபோன என் வாழ்வு? அவள் இதழை உண்டதால் மீண்டது. முன்னே முயங்க மறுத்த நீ இப்போது முயங்கினை, ஏன்? - என்று நான் கேட்க, அதற்கவள், முயங்கும் உணர்ச்சி முழுத் தன்மை அடைய வேண்டும் என்று கூறி என்னை அவள் பின்னும் முயங்கினாள். நான் இதைப் படித்தவுடன் என் வீட்டிற்கு ஓடிப் புறநானூறு என்னும் நூலை எடுத்து வந்து பாரதியாரின் எதிரில் வைத்து இந்நூலிற் காணப்படும் பாடல்கள் அனைத்தும் ஹொக்குப் பாடல்களே என்றேன். அதில் சில செய்யுட்களைப் படித்தார்; வியந்தார்; ஆம் என்றார், அப்போது அவர் சொன்னார், சங்க நூற் பயிற்சி என் தந்தையார்க்கு இல்லை. ஆதலால் எங்கள் வீட்டிலும் அரசவை யிலும் வழங்குவ தில்லை. ஆதலால் சங்க நூற்களைப் படிக்கும் வாய்ப்பை நான் இழந்திருந்தேன்! பாரதியார் அன்று முதல் புறநானூறு, பரிபாடல் முதலிய பழந்தமிழ் நூற்களை ஆசையோடு படிக்கத் தொடங்கினார். இதன்பிறகு சில நாட்களின் பின்புதான் பாரதியார் தமிழ்நாடு பற்றி ஒரு பாட்டு எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது; அந்தப் பாட்டுத் தான்: செந்தமிழ் நாடெனும் போதினிலே, என்று தொடங்கும் பாட்டு, அதுபற்றித் தனியாக ஒரு கட்டுரை எழுத எண்ணியிருக் கிறேன். இப்போது இதே கட்டுரையில் சிலருக்குச் சில சேதி கூறி இதை முடிக்க எண்ணுகிறேன். அந்தச் சிலர், பாரதியார் மொழி பெயர்த்த இந்தப் பாட்டை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். அது மட்டும் போதாது, தமிழ்படித்த மேலோரிடம் படித்துப் பார்க்கக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் அருமை பெருமையை அவர்களால் தெரிந்து கொள்ள வேண்டும். சென்ற ஆண்டில் சிவாஜிகணேசனால் நடத்தப்பட்ட பாரதி விழாவில், சிலம்புச் செல்வர் பேசும்போது, எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும், யாப்பிலக்கணமும் பாரதியாருக்குத் தெரிந்திருந் தால் அவர் பாட்டில் இத்தனை உணர்ச்சியும் அழகும் இருந்திருக்க முடியாது என்றார். அவரை அடுத்துப் பேசிய கருத்திருமன் என்பவர், பாரதியார் கம்பனைப் படித்துவிட்டுக் கவியெழுதியவர்தாம் என்றார். இவர்களின் நிலைமைக்காக இரங்குவது தவிர நாம் வேறு என்ன செய்யமுடியும்? புலவர்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்று உண்டு. இந்தச் சிலம்புச் செல்வரின் - கருத் திருமன் அவர்களின் இருண்ட நெஞ்சில் விளக்கேற்றி வைப்பதற்காக மேலே நான் குறித்துள்ள பாரதியாரின் மொழிபெயர்ப்புப் பாட்டை மீண்டும் ஒருமுறை படித்துப்பார்க்க! புலவருக்கே உரித்தான பாரதியாரின் சொல்லாட்சியை நோக்குக, தமிழிலக்கணம் வல்லார்க்கே உரித்தான அவரின் சொற் புணர்ப்பை நோக்குக. யாப்பிலக்கண வல்லுநர்க்கே உரித்தான அளவு அடியின் ஓட்டம் ஆகிய இவற்றை நோக்கவேண்டும். எழுத்தும் சொல்லும் யாப்பும் தெரியாமல் பாட எவருக்கும் முடியாது என்பதைச் சிலம்புச் செல்வங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், குமரகுருபரரும் திரு ஞானசம்பந்தரும் மூன்று ஆண்டிலேயே பாடினார்களே. அவர்கள் எந்தப் பள்ளிக் கூடத்தில் யாப்புப் படித்தார்கள்? படித்திருக்க வேண்டியதில்லை! சிவபெருமான் அருளிருந்தது அவர்கட்கு என்று நினைக்கிறார்கள். யாப்புத் தெரியாதவர்க்குச் சிவபெருமான் அருள் இருந்தால் போதுமா? இந்தக் கட்டுக் கதையெல்லாம் மாணவர்கட்கு நல்வழி காட்ட மாட்டா. அவர்களை இருட்டில்தான் தள்ளும். அவர்கட்கெல்லாம் நான் சொல்லும் ஆணித்தரமான பேச்சு இதுதான். பாரதியார் எழுதிய வெண்பாவை யாப்பறியாதார் எழுத முடியாது. திருஞானசம்பந்தர் எழுதியுள்ள திருவெழு கூற்றிருக்கையை யாப்பறியாத எழுபது பரமசிவன்களாலும் எழுத முடியாது. பரம சிவனைப் படைத்ததே யாப்பிலக்கணம் என்று நம்பவேண்டும். - பாரதிதாசன் குயில், 10.10.1967, ப.21 87. பாரதி பட்டினி நோன்பு? இன்றைக்கு என்ன கறி வைப்பது என்று கேட்டாள் செல்லம்மா. நேற்று என்ன கறி வைத்தாய் என்று கேட்டேன். முருங்கக் காய் பருப்புச் சாம்பார் என்றாள். இன்றைக்குக் கத்தரிக்காய் பருப்புச் சாம்பார் வைத்துவிடு என்றேன். அவள் சிரித்தாள். சிரிப்புக்கு என்ன பொருள் என நான் கேட்டேன். அவள் சொன்னாள். ஆசைப்பட்ட கறியை நினைத்துப் பார்த்து சொன்னால் தானே! நேற்று முருங்கக்காய் பருப்புச் சாம்பார் என்றேன். நீங்கள் இன்று கத்தரிக்காய் பருப்புச் சாம்பார் என்று உடனே சொல்லி விட்டீர்கள். உங்களுக்குப் பிடிக்காத கறிகளில் இந்த இரண்டும் ஒன்றுதான். ஆர அமர எண்ணி ஆசைக்கு உரியதைத் தேடிச் சொல்ல வேண்டாமா? இலையில் வந்த உட்காருகிறீர்களா! சோறு போட்டு சாம்பார் போடுகிறேன். கூட ஒரு வறுவலோ, பொரியலோ வைக்கிறேன். வயிறு நிறைய உண்பதில்லை. பிசைந்து இரண்டு வாய் உண்டு எழுந்து விடுகிறீர்கள். சுப்புரத்தினம், செல்லம்மா இப்படிச் சொன்னாள். இது நூற்றுக்கு நூறு உண்மைதானே. ஆசையாக - நிறைய நாள்தோறும் உண்ண வேண்டுமானால் உயர்ந்த முறையில் கறி வகை அமையவேண்டும். அப்படி அமைந்தாலும் அதுவும் நாளடைவில் வெறுப்பை உண்டாக்காமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. இதற்கொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நாளைக்கு எளிய உணவையும் ஆசையுடன் உண்ணுவதற்கு இன்று ஒரு நாள் உண்ணா நோன்பை மேற்கொள்ள வேண்டும்; நான் சொல்லும் உண்ணா நோன்பு காந்தி சொல்லும் உண்ணா நோன்பல்ல. காந்தி சொல்வது நாடு திருந்த! நான் சொல்வது நம் மனந்திருந்த. சுண்டக் குழம்பும் பழயதும் சுவையுள்ளதுதான், தனி மிளகின் சாறும், பருப்புத் துகையலும் சுவையுள்ளதுதான். ஆமை வடை மோர்க் குழம்பு சுவையுடையதுதான்; இவைகளில் ஒன்று தாழ்ந்தது மற்றொன்று உயர்ந்தது என்பதில்லை. எல்லாம் சுவை யுடையவை. வேறுபாடு கிடையாது; இருக்கின்ற வேறுபாடு நம் உள்ளத்தின் வேறுபாடுதான். உள்ளத்திற்குத் தக்க மருந்து தேவை. அந்த உள்ளம் சுண்டக் குழம்பிலும் பழஞ்சோற்றிலும் உள்ள சுவைக்கு மகிழவேண்டும். வெறுக்கக் கூடாது. நான் சொல்லுகிறபடி ஒரு நாள் பட்டினி இருந்து பார். மறுநாள் மிக மட்டமான வெல்லம் போட்ட குழம்பிலும் அக்கார அடிசில் காட்சி யளிக்கும். செல்லம்மா உப்புப் போட மறந்த வற்றற் குழம்பும் வயிற்றுக் குள் போவது தெரியாது. இட்டலிக்குச் சட்டினி தேவைப்படாது. செல்லம்மா! - கீழே இருக்கும் தம் மனைவியை அழைத்தார் பாரதி. அம்மா வாசலில் வந்து நின்று என்ன என்று கேட்டார்கள். சமையல் ஆகிறதா? ஆகப் போகிறது நான் இன்றைக்குப் பட்டினி இருக்கப் போகிறேன். உங்கள் உடம்புக்குப் பட்டினி ஒத்துக்கொள்ளும் என்று தோன்றினால் சரி. பாரதி மாடியின் கைப்பிடிச் சுவரைத் தொட்டுத் தலையைக் கீழே நோக்கிட்டு அம்மாவை நோக்கிச் சொல்லலானார். காந்தி பலநாள் பட்டினி இருக்கிறார். ஒரு நாளாவது செத்ததுண்டா செல்லம்மா? நான் ஒரே ஒரு நாள் பட்டினியிருந்தால் செத்தும் போகமாட்டேன். இன்றைக்கு நான் பட்டினி இருந்தால் நாளைக்கு எனக்கு கீரைத் தண்டு குழம்பும், மேற்படி கீரைக் கடையலும் அமிர்தம். அம்மா எதிர்பாரா வகையில் பதில் சொன்னார்கள். அப்படி யானால் நானும் பட்டினியிருந்து விடுகிறேன். செல்லம்மா மாடிக்கு வா. இங்கே சுப்புரத்தினம் தவிர வேறு யாரும் இல்லை. மாடியில் அம்மாவுக்கும் ஐயருக்கும் நடந்த பேச்சுக்கள் அடியில் வருமாறு: நடைமுறையில் உள்ள கத்தரிக்காய், வெண்டைக் காய்களிலும், அவியல் துவட்டல்களிலும் சுவை இருந்தாலும் அது நாடோறும் உண்ணப்படுதலால் மனத்திற்கு அதில் சுவை தோன்றுவ தில்லை. ஆனால் ஒருநாள் பட்டினி இருந்து மறுநாள் உண்ணுகின்ற எளிய உணவும் சுவையாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன். உனக்கும் அப்படித்தானா? என்று கேட்டார் பாரதி. அம்மா சிரித்தார்கள். சொன்னால்தானே தெரியும் என்றார் பாரதி. நான் பட்டினி இருக்கப்போகிறேன், அதற்குக் காரணம் இரண்டு. ஒரு நாள் செலவு மிச்சம். ஒருநாள் சமையல் வேலை மிச்சம். இடையில் நான் குறுக்கிட்டுச் சொன்னேன்; இவ்வளவு தொல்லை ஏன்? நாள்தோறும் உண்டாலும் வெறுப்புத் தராத கறி வகையைக் கண்டு பிடித்துவிட்டால்? நாள்தோறும் உண்டாலும் தெவிட்டாத கறிவகை கிடையவே கிடையாது. உண்ண உண்ணத் தெவிட்டாதது ஞானி களுக்குப் பெரியோர்களுக்குத் துறவிகளுக்குக் கடவுள் நினைவுதான் என்பார்கள். எனக்குத் தெவிட்டாத ஒருத்தி செல்லம்மாதான். அம்மா விரைந்து சென்றுவிட்டார்கள். பட்டினித் திருநாள் எப்படி? அம்மா மாடிப் படியினின்று கொடி கட்டியாயிற்று. சரி! பாரதி பாடுகின்றார். தோளை வலியுடைய தாக்கி - உடல் சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி வாளைக் கொண்டு பிளந்தாலும் - கட்டு மாறா உடலுறுதி தந்து - மத வேளை வெல்லுமுறை கூறித் - தவ மேன்மை கொடுத்தருள வேண்டும்! ... ... - பாரதிதாசன் குயில், 10.11.1967 * சென்னை மேகலைப் பதிப்பகம் வெளியிட்ட ‘தமிழகம் தந்த மகாகவி’ என்ற நூலில் இக்கட்டுரை ‘இன்றைக்கு என்ன சாம்பார்? என்ற தலைப்பில் வெளிவந்தது. குமுதம் இதழ் 22.2.1963இல் இக்கட்டுரைத் தலைப்பை மாற்றம் செய்யாமல் வெளியிட்டது. பாரதிதாசன் குயில் இதழில் 10.11.66இல் இக்கட்டுரை பாரதி பட்டினி நோன்பு என்ற தலைப்பில் வெளியிட்டது. பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதன் தொகுத்த தமிழகம் தந்த மகாகவி என்ற நூலில் இக்கட்டுரை மீண்டும் பாரதி பட்டினி நோன்பு என்ற தலைப்பில் வெளி வந்தது. தலைப்பு மாற்றம் ஆய்வுக்குரியது. குறிப்பு : இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் மறவாமல் நெஞ்சில் நிறுத்தி - அதை வாழ் நாட்களில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது ஒன்று: பாரதி வாழ்நாட்களில் அவர் அயல் மாதரை அன்னை என்றும் தங்கையென்றும் நினைக்கத் தவறியதில்லை. இரண்டாவது; செல்லம்மா அவர்களிடம் பாரதிக்கு நீங்காத காதல் உண்டு. 