பாவேந்தம் 21 கட்டுரை இலக்கியம் - 2 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 21 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 264 = 296 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 185/- கெட்டி அட்டை : உருபா. 235/- படிகள் : 1000 நூலாக்கம் : ர்மநிர் வ. மலர், நிழூட்குகஒகூஹி சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  வாழ்வு தந்தோர் வாழ்வு! ‘மேடுபள் ளங்களைக் கண்டே - நலம் விதைக்க எழுத்துழு வோன்எழுத் தாளன்! (தொகுதி 15; பக். 359) எழுத்தாளருக்கு இப்படி இலக்கணம் கூறும் பாரதிதாசன், தாம் வகுத்த இலக்கணத்திற்குத் தாமே இலக்கியமாகவும் திகழ்ந்தார். மேடு பள்ளம் இல்லாத சமத்துவ நிலையை எல்லாத் துறையிலும் ஏற்படுத்த அவர் எழுதுகோல் இயங்கியது. தனக்குழைக்கும் எழுத்தாளர், பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் - என எழுத்தாளர்களை அவர் இருவகைப்படுத்தினார். ஏற்றத்தாழ் வான குமுக அமைப்பை மாற்ற முயலாமல், பழமைவாதப் பாதையில் தவழ்ந்தபடி, பணமும் புகழமே குறியாக இருப்பவர்கள் எழுத்தா ளராகவும் இருப்பார்கள். தனக்குழைக்கும் எழுத்தாளர் எனப் பாவேந்தர் அவர்களைத் தள்ளி நிறுத்தினார். எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்ப தான இடம்நோக்கி - (தொகுதி 15; பக். 186) நடைபோட்டபடி, எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் இழப்பையும் பொருட்படுத்தாமல் மானிட மேன்மைக்காக வாழும் எழுத்தாளர்களும் இருப்பார்கள். பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் என அவர்களைப் பெருமைப்படுத்தினார். இருக்கும்நிலை மாற்றுமொரு புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம் - (தொகுதி 15; பக். 92) என வரையறை வகுத்துக் காட்டினார் பாவேந்தர் பாரதிதாசன். பிறர்க்குழைக்கும் எழுத்தாளர்களைப் பாட்டுப் பூச் சொரிந்து பாராட்டினார். அவரால் பாராட்டப்பட்டோரின் பெயர்களில் பலவும் இன்றைய தலைமுறைக்குப் புதிதாக இருக்கலாம்; எதிர்காலத் தலைமுறைக்குப் புதிராகத் தெரியலாம்! பாவேந்தரால் பாராட்டப்பட்டுள்ள சான்றோர்களின் வரலாறுகளைத் தொகுத்தால், தமிழின மேம்பாட்டு வளர்ச்சி வரலாறு கிடைத்துவிடும். தமக்கு மூத்தோர், தம் வயதுடையோர், தமக்கு இளையோர் எனத் தாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, மொழி இன மேம்பாட்டுக்காக வாழ்ந்தோரைத் தம் பாடல்களில் வாழ வைத்துள்ளார் பாவேந்தர். பழமைக் குட்டையில் முப்பது வயது வரை தாமும் மூழ்கிக் கிடந்தமைக்கு வருந்துகிறார்: முப்பது ஆண்டுகள் முடியும் வரைக்கும்நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்! ( தொகுதி 15; பக். 4) தான் கரையேற உதவிய கைகளுக்குரிய பாரதியை நன்றியுடன் போற்றுகிறார். பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றிஎன் பாட்டிற்குப் புதுமுறை புதுநடை காட்டினான் (தொகுதி 15; பக். 4) தாம் பெற்ற பயனை எல்லோரும் பெறுவதற்குரிய வழியையும் சொல்கிறார். பகை நடுங்கச் செய்த பாரதி பாட்டை நீ பாராட்டு மறவனே! பார்ப்பான் உயர்வென்றும், பாட்டாளி தாழ்வென்றும் ஏற்பாடு செய்தநூல் இழிந்தநூல் என்றால் கூப்பாடு போட்டு நாட்டினை ஆயிரம் கூறாக்கித் தாம்வாழ எண்ணிடும் அந்தப் பகை நடுங்கச் செய்த பாரதி பாட்டை நீ பாராட்டு மறவனே! (தொகுதி 18; பக். 27) பாரதியைப் பக்கத்திலிருந்து பார்த்து, தம் அழுக்கை அகற்றிக்கொண்ட பாரதிதாசன், பழைய நிகழ்ச்சிகளைப் பாட்டால் அசைபோடுகிறார்: பொழுது விடிய புதுவையிலோர் வீட்டில் விழிமலர்வார் பாரதியார் காலை வினைமுடிப்பார் தாம்பூலம் தின்பார் தமிழ்ஒன்று சிந்திடுவார் போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம் (தொகுதி 18; பக். 19) பாரதியை அருகே சென்று பார்க்குமாறு பாவேந்தர் பாடலை நம்மை அழைத்துச் செல்கிறது. செந்தமிழ் நாடெனும் போதினிலே வேண்டுமடி எப்போதும் விடுதலை கரும்புத் தோட்டத்திலே முதலிய பாரதி பாடல்கள் தோன்றிய வரலாற்றைப் பாட்டால் படம் பிடித்துள்ளார் பாவேந்தர். சிலப்பதிகாரம் பற்றிப் பேசுவதற்குத் தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார் புதுவை சென்றுள்ளார். பேச்சைக் கேட்பதற்குப் பாரதியாரோடு பாரதிதாசனும் சென்றுள்ளார். இதுதான் பேச்சு எனப் பாராட்டியபடி பாரதிதாசன் பக்கத்தில் பார்க்கிறார். திரு.வி.க. பேச்சில் சொக்கிப்போன பாரதியார் நிலை கொள்ளாத மகிழ்ச்சியில் நின்றும், அமர்ந்து கைகொட்டியபடி இருக்கிறார். இந்தக் காட்சி பாரதிதாசனிடம் பாட்டாய் விரிகிறது: புதுவையிலே கலியாண சுந்தரனார் ஆற்றியசொற் பொழிவில், தூய மதுவையள்ளி மலர்தேக்கி வண்டுகட்கு விருந்தாக்கி மயக்கு தல்போல் பொதுவினர்க்குச் சிலப்பதிகா ரச்சுவையை நடையழகைப் புகலும் போதில் இதுவையா பேச்சென்பேன்; பாரதியார் கைகொட்டி எழுவார், வீழ்வார். (தொகுதி 18; பக். 92-93) பாரதி முதலிய பலதுறைச் சான்றோர்களையும் பாவேந்தர் பாட்டால் போற்றியுள்ளதை இத் தொகுப்பில் பார்க்கலாம். எளிய நடையில் தமிழ் எழுதக் காரணமானவர் பாரதி என்றும், தூய தமிழ் நடையில் எழுதக் காரணம் தமிழ்மறவர் வை. பொன்னம் பலனார் என்றும் - தமது எழுத்து நடை மாற்றத்திற்குக் காரணமான இருவரையும் நினைவு கூர்கிறார். முன்னை பழகுதமிழ் மூட்டியவர் பாரதியே பின்னை அழகுதமிழ் ஊட்டியவர் - கொன்னை வடசொற் கலப்பின்றி வண்டமிழ் இன்பம் இடச்செய்தார் பொன்னம் பலம். (தொகுதி 18; பக். 198) பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. சீவானந்தம் மக்களுக்காக ஊர் ஊராகச் சுற்றிவந்தவர். குழந்தைகளையும், குடும்பத்தையும் நினைக்காத அவருக்கு அழுக்குச் சட்டையை மாற்றவும் நினைவு இருக்காதாம்! எப்போது பெண்கொண்டார்? இல்லத்தில் மக்கள்தமை எப்போது கையில் எடுத்தணைத்தார்? - முப்போதும் மாசுடையும் மாற்றாத சீவாவுக்(கு) ஊர்ஊராய்ப் பேசுவது தானே பெரிது. (தொகுதி 18; பக். 177) குமுக மேம்பாட்டிற்காக எந்தவிரல் அசைந்தாலும், அந்த விரலுக்குப் பாட்டுக் கணையாழி போட்டு மகிழ்வது பாவேந்தர் இயல்பு. பகுத்தறிவாளராகிய பாவேந்தர் மற்றவர்களின் கடவுட் பற்றையோ சமயப் பற்றையோ பொருட்படுத்தாமல், தமிழ் மேம்பாடு தமிழினமேம்பாடு இவற்றுக்கான பணியையே அளவுகோலாக்கிக் கொண்டார். வ.உ. சிதம்பரனார், இ.மு. சுப்பிரமணியம் ந.சி. கந்தையா, (சந்திரசேகரப் பாவலர்) தண்டபாணி தேசிகர் பவானந்தம் பிள்ளை விபுலானந்தர் நீ. கந்தசாமி அவ்வைதுரைசாமி க. வெள்ளைவாரணனார் இப்படிப் பலரையும் அவர் பாராட்டிப் போற்றுவதற்கு இந்த அளவுகோலே காரணமானது. அம்பேத் காரின் எரிமலை எண்ணமும் எழும்புயல் செயலும் விரிவுல கத்தையே விழிப்புறச் செய்தன (தொகுதி 18; பக். 210) என்று அண்ணல் அம்பேத்காரை வியப்பார். தமிழ்முத லாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச்சீனி வேங்க டத்தின் கால்தூசும் பொறாதான் என்பேன். (தொகுதி 18; பக். 202) என மயிலை சீனி வேங்கடசாமியைத் தோளில் தாங்குவார். அறிஞர்களைப் போற்றும்போது அவரிடம் வெளிப்படும் நுட்பத் தமிழ், இளையோர்க்குப் பாடும்போது எளிமைத் தமிழ் ஆகிவிடுவதை இத் தொகுப்பில் பார்க்கலாம். கொய்யாப் பழத்துக்கு கொம்புண்டு காலுண்டு கூறும் எருதுக் கிரண்டும் இல்லை (தொகுதி 18; பக். 357) எருதுக்கு இல்லாத கொம்பும் காலும் கொய்யாப் பழத்துக்கு மட்டும் வந்தது எப்படி? எழுதிப் பார்த்தால்தான் பாரதிதாசனின் குறும்பு தெரியும். கணகண வென்று மணிய டித்தது காது கேட்கலையா? - பாப்பா காது கேட்கலையா? - தம்பி காது கேட்கலையா? - உன் கையிற் சுவடிப் பையை எடுக்க நேரம் வாய்க்கலையா? (தொகுதி 18; பக். 384) பள்ளிக்கூடம் புறப்படும் காலைநேரப் பரபரப்புக் காட்சியைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இளமைக் கால நிகழ்ச்சிகள் மனத்தில் புரளும். ‘வெந்நீர் ஊற்றிச் செம்பை வைத்தால் என்ன போட்டுக் குடிப்பாய்? (தொகுதி 18; பக். 392) இந்தக் கேள்விக்குக் குழந்தை கூறுவது நாம் எதிர்பார்க்காத விடை: வெந்நீர் ஊற்றிச் செம்பை வைத்தால் விரலைப் போட்டுக் குடிப்பேன் (தொகுதி 18; பக். 392) சூடுமிகுந்த நீராயிருந்தால் தொண்டை புண்ணாகிவிடும். விரலை விட்டு வெப்பத்தை அளப்பது சரியான முறைதான்! நுண்ணுணர்வு, எளிமை, வாழ்க்கைப் பார்வை, வழிகாட்டும் தெளிவு முதலியவை பாரதிதாசன் எழுத்துகளின் பொதுப் பண்புகள். சான்றோர், இளையோர், வாழ்த்துகள் என்னும் முப் பகுப்பில் பாவேந்தர் பாடியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் இளங்கணி பதிப்பகம் வழி 25 தொகுப்புகளாக ஒரே நேரத்தில் வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியனின் முயற்சி மலைப்பானது! கடினமான பணியில் இறங்கியுள்ள இளந்தமிழனுக்குத் தமிழுலகம் கை கொடுக்கும் என்பதில் அய்யமில்லை. - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி – 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! 15. இதயம் எப்படியிருக்கிறது 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் – 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன்... ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பி‹மதிப்òxv 1. வள்ளுவர் உள்ளம் 1 2. பாட்டுக்கு இலக்கணம் 125 3. கேட்டலும் கிளத்தலும் 175  வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் உள்ளம் உரைப் பாயிரம் சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர், இப் பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் âருவுளங்bகாண்டார்.brŒíŸ என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று; ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி. நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவையும், அறிவு, முனைப்பு, மனம், ஆதி (மூலப் பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும், அவற்றின் நிலையின்மையும் பிறவுமாகக் கூறப்பட்ட பருப் பொருள், நுண்பொருள் அனைத்தும் பொருள்களே. இப் பொருள்கள் அனைத்தும் அகப்பொருள், புறப்பொருள் என இருபெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப் பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதிணையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை. இனி, அகம், புறம் எனும் இரு பொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் என்க. இவ்வாறு நூற்பயன் நான்காகக் கொள்வது வடவர்முறை அன்றோ எனின், அன்று. கடல் கொண்ட குமரி நாட்டு முதற் கழகத்தார், உலகுக்கு முதற்கண் அருளிய தமிழ் நான்மறை என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் பற்றியதன்றோ? அந்நான்கனுள் அறமாவது தமிழ்ச் சான்றோர்களால் தமிழ் நான்மறை முதலிய நூல்களில் செய்க என்றவற்றைச் செய்தலும், மனு முதலிய நூற்கள் கூறியவற்றை விலக்கலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது. அறம் எனச் சொல்லிய வற்றினின்று வழுவாது ஒழுகுதல். வழக்காவது ஒரு பொருள் மேல் என்னுடையது என்னுடையது என்னுடையது என, இருவர்க்கு ஏற்படும் மாறுபாடு காரணமாகத் தொடர்வது. அது கடன்படல் முதல் பதினெட்டுப் பிரிவுகளையுடையது. தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழுவினோரை, அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடித் தக்கவாறு தண்டித்தல். தண்டு - கோல், தடி அதனடியாகப் பிறந்தவை. தண்டம், தண்டனை; தண்டித்தல், தூய தமிழ்ச் சொற்கள். அறமும் வழக்கும் தண்டமும் அறமேயாயினும் அறநூற் செய்த தமிழ்ச்சான்றோர் பின்னிரண்டையும் மன்னன்பால் அளித்து முறைசெய்யச் சொல்லி யருளுவர். மற்றைய அறமேயும் இல்லறம், துறவறம் என்னும் இருவகைத் தாதலின் அவற்றுள் இல்லறத்தை முதற்கண் கூறுவான் தொடங்கி அனைத்தும் நிகழ்தற்குரிய உலகின் தோற்றத்தை ஈண்டுக் கூறுகின்றார். அறத்துப்பால் அதாவது அறத்தைக் கூறும் பகுதி; இரண்டனுருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. அதிகாரம் - 1 உலகின் தோற்றம் அதாவது உலகாகிய இடம், உலகத்து உயிர்கள், அவற்றின் நிலை ஆகியவை தோன்றும் முறையாம். 1 அகர முதல வெழுத்தல்லா மாதி பகவன் முதற்றே யுலகு என்பது பாட்டு. அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்று ஏ உலகு. என்பது அப்பாட்டின் சொற்களைப் பிரித்துரைத்தது. அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி உலகு பகவன் முதற்று ஏ என்பது சொற்களைப் பிரித்து, மொழி மாற்றியமைத்தது. (மேற் செய்யுட்களுக்கெல்லாம் சொற்பிரித்தலை மட்டும் குறிக்க பி’ என்பதையும் அதனோடு மொழிமாற்றையும் குறிக்க ‘பி.மா.:’ என்பதையும் குறிக்கப்படும்.) பொருள்: அகரம் முதல -அகரத்தை முதலாக உடைய, எழுத்து - எழுத்துக்களும், எல்லாம் - அவ்வெழுத்துக்களாலாகிய சொற்களும், அச்சொற்களால் பெறப்படும் பொருள்களுமாகிய எல்லாம். ஆதி - முதன்மையினின்று தோன்றியவை. உலகு பகவன் முதற்று - மக்கள் பகவனை முதல்வனாகக் கொள்ளத்தக்கவர். கருத்து: உலகும், உயிர்களும், மற்றுள்ளவைகளும் ஆதி என்பதினின்று தோன்றியவை. ஆயினும் உலக மக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே. ஏ - ஈற்றசை. முதல - குறிப்புப் பெயரெச்சம், மலர, காய (அகம்) என வந்தன காண்க. ஆதி-வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற் பெயர். ஆ-முதல் நிலை, தி- இறுதி நிலை, செய்தி, உய்தி என்பவற்றிற் போல. ஆதி, முதன்மை ஒரு பொருட் சொற்கள். இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர். ஆதியாவது எல்லாப் பொருளுந் தோன்றுதற்கிடமானது, இதை, தனையறிவரிதாய்த் தாமுக் குணமாய் மனநிகழ் வின்றி மாண்பமைப் பொருளாய் எல்லாப் பொருளும் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதல் மூலப் பகுதி. - மணி. சமய: 203 - 206 என்பதாலும் அறிக. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று பண்புகளும் ஒன்றுபட்ட நிலை ஆதி என்று உணரப்படும். அவற்றின் கலங்கிய நிலையே இவ்வுலக மெல்லாம் என்க. எல்லாம் ஆதி என்றதால், உலகம் ஆதி அல்லது முதன்மையி னின்று தோன்றியது என்றவாறாயிற்று. எல்லாம் ஆதியினின்று தோன்றின என்னாது, எல்லாம் ஆதி என்றது என்னையெனில், காரணத்தில் உள்ளதே காரியத்திலும் உள்ளது என்னும் உள்ளது சிறத்தல் (சற்காரியவாதம்) ஆனதோர் முறைகொண்டு, மகனறிவு, தந்தை யறிவு (நாலடி) என்பது போல. எல்லாம் - எழுவாய், ஆதி- பயனிலை. பகவன் வட சொல் அன்று; பகல் எனப் பொருள்படும் பகவு ஆண்பால் இறுதிநிலை பெற்றது. பகல் - அறிவு, ஆகு பெயர், உணர்வு எனலும் அஃது. பகவன் ஆண்பாலாற் சொல்லப் படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க. மேலைச் செய்யுட்களிலும் இவ்வாறே. அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குணர்வாய் ஒன்றாய் எங்கும் பரந்து நித் தியமாய் நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடன் - மணி. சமய. 227 - 232 என்பதால் பகவன் இலக்கணம் அறியப்படும். எண்ணூலை வடவர் சாங்கியம் என்பர். எண்ணூல் என்பது அனைத்தும் இருபத்தைந்து தத்துவமென எண்ணப்படுதலின் வந்த காரணப் பெயர். சாங்கியம் என்பது சங்கியையையுடையது, சாங்கியம் ஆனது வடமொழித் தத்திதப் பெயர். இவ்வாறு மொழி பெயர்த்துக் கொண்டனர் வடவர். எண்ணூல் திருவாரூர்க் கபிலரால் முதற் கண் ஆக்கி இவ்வுலகுக்கு அளிக்கப்பட்ட தத்துவ நூல். தலைக்கழக நாளினின்று சென்ற 2500 ஆண்டு முன் வரை இஃது எழுதாக் கிளவியாயிருந்தது. பின்னர் கபிலர் நூலாக்கினர் என்பர் ஆராய்ச்சியாளர். மேல்நாட்டில் எழுந்த தத்துவ நூல்களுக்கும் எண்ணூலே அடிப்படை என அறிதல்வேண்டும். எந்நாளில் நூல் தோன்றுகின்றதோ அந்நாளில் மக்களிடம் பரவி யிருந்த பண்பாட்டின் அடிப்படையில் தான் நூற் கருத்துக்களும் அமையும் என்பது இயற்கைச் சட்டம். திருவள்ளுவர், திருக்குறளும் பெரும்பாலும் எண்ணூற் கொள்கையின் அடிப்படையில்தான் எழுந்துள்ளது என்பது மறுக்கக் கூடியதன்று. இஃது மேல் வரும் செய்யுட்களின் உரைகளில் எடுத்துக் காட்டப்பெறும். மற்றும் நீத்தார் பெருமை ஏழாம் செய்யுள் உரையில் எண்ணூற் கொள்கை விரிக்கப்படும். அங்குக் காண்க. இக்குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினார். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமையக் கணக்கர் மதி வழியே நூல் செய்தாரிலர். வள்ளுவர் உள்ளம் என்னும் இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு: ஆத்திகன்: பகவன் என்பதற்கு மெய்யுணர்வு, அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா? உரை ஆசிரியர்: ஆமாம் அறிவான தெய்வமே என்று தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதா என்று அருணகிரிநாதரும் ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந்நூலாசிரியரும் போல. நாத்திகன்: அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா? உரை ஆசிரியர்: பெறத்தக்கது அறிவு என்று நான், உண்மை உரை கூறினேன். அதனால் கடவுள் ஒருவர் உண்டு என்று ஆய் விடாது. அப்படி ஆய்விடுமானால் ஆய்விடட்டும். அதனால் உமக்கென்ன முழுகிப் போகும்? ஆத்திகன்: மக்கள் பெறத்தக்கது அறிவு என்று மட்டும் கூறிய நீவிர் அறிவாகிய கடவுள் என்று ஏன் கூறவில்லை? உரை ஆசிரியர்: கடவுள் என்ற சொல் மக்கள் அறிவுபெறாத காலத்தில் ஏற்பட்டதாய் இருக்கலாம். கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது என்ற அதன் பொருளையும் நோக்குக. எட்டாத ஒன்றுக்குப் பெயர் எப்படி எட்டியிருக்கும்? இவைகளைக் கருதி யன்றோ வள்ளுவர் தம் நூலில் கடவுள் என்ற பெயரையே எடுத்தாளாது விட்டார். நாத்திகன்: சாங்கியம் என்பது ஒரு மதமா? உரை ஆசிரியர்: இல்லை. தமிழர்பால் தொன்று தொட்டு இருந்து வரும் பண்பாடு. இடையில் திருவாரூர்க் கபிலர் எண்ணூல் என்ற பெயரால் நூலாக இயற்றியருளினார். நாத்திகன்: அந்தப் பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அக் கால நூல்கள் உண்டாகும் என்பதை விளக்க முடியுமா? உரை ஆசிரியர்: மேல் என்றால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்ப்பது இந்நாள் வழக்கம். இந்நாளில் ஏற்படும் நூற்களும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் உண்டாகும். கீழ்ப்புறத் திற்கும் மேல் என்பது பொருந்தும் என்று கொண்டு கீழ்நோக்கார். அதுபோலவே அக்காலத் தமிழர்கள் இந்த உலகம் என்றைக்கு உண்டானது என்று ஆராய்வது பயனற்ற வேலை என்பார், உலகம் ஆதியினின்று முதன்மையினின்று தோன்றிற்று என்றார்! அந்தக் கருத்தின், - பண்பாட்டின் அடிப்படையில் தான் அக் கால நூற்களும் அமைந்தன. உலகம் ஒருவனால் உண்டாக்கப் பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு நூல் அமையாது. இதுதான் சாங்கியத்தின் அடிப்படையில் குறள் உண்டாயிற்று எனப்பட்டது சாங்கியம் மதமன்று; அது எவராலும் உண்டாக்கப் பட்டது, அன்று. அக்கருத்துக்களின் தொகுதியே எழுதாக்கிளவி எனப்பட்டது. எழுதியபின் எண்ணூல் என்றார்கள். எண்ணூல் பல மொழியில் பெயர்க்கப்பட்டது. ஆரியர் - திபேத்தியர் முதலியவர்களால் பலவாறு திரித்து எழுதப்பட்டது. சாங்கியக் கருத்துக்கள் இயற்கையோடு இயைந்தவை. பகுத் தறிவுக்கு ஒத்தவை. ஆதலால்தான் அக்கருத்துக்கள் தத்துவ நூற்கள் என எழுந்த அனைத்திற்கும் அடிப்படையாகி மிளிர்கின்றன. மதம், சமையம் என்று சொல்லப்படுவன அனைத்தும் ஒருவனால் - ஒரு கொள்கையை நோக்கி மக்களை இழுக்க உண்டாக்கப்படுவன. சாங்கியம் - கருத்துக்கள் - பண்பாடுகள் எவராலும் - எவரைத் தம்பக்கம் இழுக்கவும் ஆக்கப்பட்டன அல்ல என்பதை உணர்வார் அதை மதம் என்றார் என்பதை நீவிர் இங்கு நினைவிற் கொள்க. ஆத்திகன்: எழுத்தெல்லாம் அகரத்தை முதலாகக் காரணமாகக் கொண்டவை. அதாவது அகரத்தினின்றே மற்ற எழுத்துக்கள் உண்டாயின, இது பெரியோர் கொள்கையல்லவா? உரை ஆசிரியர்: எழுத்துக்கள் அனைத்தும் ஓம் என்றதினின்று தோன்றியவை என்று விளக்கிய மாணிக்க நாயக்கர் சிறியோரா? அன்றியும், அ முதல் ஔ வரைக்குமுள்ள உயிர்கள் பனிரண்டு. அவற்றில் ஓர் எழுத்திலிருந்து மற்றவை தோன்றின என்பது எப்படிப் பொருந்தும்? காலில் விலங்கும் கையில் விலங்கும் உடல் மறைய ஒரே வகைச் சட்டையுமாய்ச் சிறையில் இருக்கும் பனிரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மற்றவரை ஆக்கினான் எனில் அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்? சொல்லத்தான் வேண்டும் என்று மதத் தலைவன் சொன்னால் கேட்கத்தான் வேண்டுமென்று மதமக்கள் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். இவையெல்லாம் ஊற்றுக்கு நிற்காது. ஆத்திகன்: எழுத்துக்களில் நான் அகரமாய் இருக்கிறேன் என்று கண்ணபிரானே சொல்லவில்லையா? உரை ஆசிரியர்: ஆமாம். கண்ணபிரான் மக்களை இருட்டில் வருக என்று அழைக்கிறான். நாம் ஏன் போக வேண்டும்? வள்ளுவரைப் பின்பற்ற வேண்டுவது வையத்தின் கடனன்றோ? ஆத்திகன்: இந்த அதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து என்று இருந்ததை நீவிர் உலகின் தோற்றம் என்றது என்ன? உரை ஆசிரியர்: இதுதான் வள்ளுவர் உள்ளம். கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை. நாத்திகன்: முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் அருளிச் செய்தனவா? உரை ஆசிரியர்: இல்லை என்று வ.உ.சிதம்பரனார் எண்ணுகின்றார். நான் அவ்வாறு எண்ணவில்லை. உரை முழுவதும் நீர் படித்த பின் நான் சொல்லுவது உண்மை என்று உமக்கே தோன்றலாம். - குயில், கிழமை இதழ், 1.12.1959 முதற் குறள் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் (bjhl®¢á) ஆத்திகன்: உலகு பகவான் முதற்று என்பதன் பொருளைத் தெளிவு படுத்த முடியுமா? உரை ஆசிரியர்: உலகு - உலகினர், பகவன் முதற்று-பகவனை முதன்மையாகக் கொள்ளத்தக்கவர். இங்கு முதன்மை என்பது காரண முதன்மையன்று, இடமுதன்மை. எனவே அறிவை உலக மக்கள் முதலிடத்ததாகக் கொள்ளத்தக்கவர். மக்கள் பெறத்தக்கது அறிவே ஆகும் என்றார். அறிவு ஒன்றை ஆக்கத்தக்கதன்று. எவற்றிற்கும் மேலானது; சிறந்தது; பெறத்தக்கது என்க. - குயில், கிழமை இதழ், 8.12.1959 2 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ னற்றா டொழாஅ ரெனின் பி.மா. : வாலறிவன் நல்தாள் தொழாஅர் எனின் கற்றதனால் ஆய பயன் என் கொல் பொருள்: வாலறிவன் - தூய அறிவுடையவனாகிய பகவனுடைய, நல்தாள் - நல்ல அடியை, தொழாஅர் எனின் - தொழாமற் போவாராயின், கற்றதனால் ஆய பயன் என் கொல்- படித்ததனால் ஏற்பட்ட பயன் என்ன? (இல்லை என்றபடி) கருத்து: மெய்யுணர்வை உண்டாக்காத கல்வியால் பயனில்லை. வாலறிவை வாலறிவன் என்றதற்கேற்பத் தத்துவத்தை நற்றாள் என்றார். தாள், அடி, தன்மை, தத்துவம் ஒரு பொருட் சொற்கள். தன்மையின் அடியாகிய தன் என்பது வடமொழிச் செய்கை பெற்றுத் தத்துவமாயிற்று. நற்றாள் தொழுவதாவது, தத்துவ உணர்வு பெறுவது. கடவுளரையும் துறவிகளையும் அடிகள் என்னும் பிற்கால வழக்கும் எண்ணூல் கொண்டே என்க. தத்துவ உணர்வுபெற்ற நிலையே வீடு ஆகிய எண்ணூற் கொள்கை இங்கு அறியத்தக்கது. தொழாஅர் - ழ் என்பதன் மேனின்ற ஆ தனக்குள்ள இரண்டு நொடி நேர நீட்டலோடு மற்றும் ஒரு நொடி நீட்டலுக்கு அ என்பதையும் வேண்டிற்று. உயிரளபெடை. வள்ளுவர் உள்ளம் என்ற இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு: நாத்திகன்: வாலறிவன் என்பதும் வாலறிவுதானோ? உரை ஆசிரியர்: அஃறிணைப் பொருளை உயர்திணையாகச் சொல்லி வைப்பது கவிமரபு என்று தெளிக. நாத்திகன்: வாலறிவு உண்டு. அதற்குத் தாளும் (காலும்) இருக்குமோ? உரை ஆசிரியர்: வாலறிவை வாலறிவன் என்றவர் தத்துவத்தைத் தாள் என்றார். பாட்டுப் படித்துச் சுவை உணரும் ஆற்றல் உமக்கு இருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர். நாத்திகன்: தத்துவம் என்றால் என்ன? உரை ஆசிரியர்: தன்மை என்பது பொருள், வாலறிவன் நற்றாள் என்றால் அறிவின் நல்ல தன்மை என்பதுதான் பொருள், பெறத்தக்கது அறிவின் தன்மை என்றது அறிவுக்குரிய குணம் செயல்களை, ஆத்திகன்: திருக்குறளை நாத்திகத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போகின்றீரா? உரை ஆசிரியர்: ஆத்திகத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போவதும் நாத்திகத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போவதும் பிழையே. ஏன் எனில் வள்ளுவர் உள்ளம் நாத்திகமும் இல்லை ஆத்திகமும் இல்லை. அவர்நெறி உண்மை நெறி. வையத்தில் வாழ்வாங்கு வாழும் நெறி. ஆத்திகன்: மெய்யுணர்வு என்று நீவிர் சொல்வதெல்லாம் கடவுளை அல்லவா? உரை ஆசிரியர்: மெய்யுணர்வை ஆத்திகன் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். நாத்திகன் கடவுளின்மை தான் மெய் யுணர்வு என்கிறான். இதுதான் நன்று இதுதான் நன்று அன்று என்று கருதி அந்நெறியை மேற்கொள்வது மெய்யுணர்வு. நாத்திகன்: மெய்யுணர்வு உண்டாக்காத கல்வியும் உளவோ? உரை ஆசிரியர்: மிகுதியாய் உண்டு. அவை ஆரியர் நூற்கள். பாரதம் இராமாயணம் புராணங்கள் தமிழர்களால் கற்கத் தகாதவை! பொய்கள் நிறைந்தவை. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. தமிழரின் செயலுக்கு ஒத்துவராதவை. எடுத்துகாட்டு: ஒரு பெண் ஐந்து ஆடவரை மணந்து கொண்டதாகப் பாரதம் பகர்கின்றது. தமிழர் ஒத்துக் கொள்ளலாமா? உலகம் ஒத்துக் கொள்ளுமா? நாத்திகன்: நன்று! நன்று! ஆத்திகன்: மெய்யுணர்வை உண்டாக்கத் தக்க நூற்கள் தமிழ் நூற்களோ? உரை ஆசிரியர்: தமிழ் நூற்களும், ஆரியர் நூற்கள் ஒழிந்த பிற மொழி நூற்களும் என்று கடைப்பிடிக்க. ஆத்திகன்: ஏன் அப்படி? உரை ஆசிரியர்: ஒருவன் ஒரு கொலை செய்துவிடுகிறான். அக் கொலை செய்ததனால் கொலை செய்தவனுக்கு உண்டாகும் மனக் கோட்டம் ஒரு பார்ப்பனனுக்கு ஒன்று கொடுப்பதனால் தீர்வ துண்டா? தீர்ந்து விடுகின்றது என்று ஆரியர்நூல் சொல்லுகிறது. இதை அறிவுலகம் ஒத்துக் கொள்ளுமா? மக்களில் உயர்வு தாழ்வு பிறப்பிலேயே உண்டு என்கிறது. அறிவுலகம் ஒத்துக் கொள்ளுமா? இவ்வாறு அமைந்த நூற்களைக் கற்கலாமா? எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்றும் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்றும் வள்ளுவர் அருளினார். அவர்போலவே பிற தமிழ்ச் சான்றோரும் சாற்றினார்கள். கற்கத் தக்கவை இத்தகைய தமிழ் நூற்களன்றோ? - குயில், கிழமை இதழ், 8.12.1959 3 மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். ã.: மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலம் மிசை நீடு வாழ்வார். பொருள்: மலர் மிசை - உலக உயிர்கள் மாட்டு, ஏகினான்- சென்று பரந்தவ னாகிய பகவனுடைய, மாண் அடி - பெருமை பொருந்திய அடிகளை, சேர்ந்தார் - பின்பற்றியவர்கள், நிலமிசை - இவ் வுலகின்கண், நீடுவாழ்வார் - நீண்டகாலம் வாழ்ந்திருப்பார்கள். கருத்து: மெய்யுணர்வு பெற்றார் தாம் விரும்பும் காலம் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்தின்புறுவர். மலர் - மலர்தல் என்பதின் முதனிலைத் தொழிற் பெயர். உலகுக் கானது ஆகுபெயர். உலகை மலர் என்றும் மயில் என்றும், ஆதியை அரும்பு என்றும், மயிலின் முட்டை என்றும் எண்ணூல் கூறும். இதை உட்கொண்டே உலகை மலர் என்றார் ஆசிரியர். ஏகுகின்றான் என முக்காலத்திற்கும் பொதுவாகக் கூறாமல், ஏகினான் என இறந்த காலத்தாற் கூறியது ஆதியினின்று உலகம் வெளிப்பட்ட பின்னரே பகவனின் இறைமை தோன்றிய தென்பதைக் குறிக்க. நிலமிசை நீடுவாழ்வார் என்பதற்கு, வீட்டுலகில் நீண்ட நாள் வாழ்ந்திருப்பார் எனப் பொருள் கூறுவாருமுளர். அவர்அறியார். ஆசிரியர், வீட்டுலகையே கூறியிருப்பாரானால் நீடு வாழ்வார் எனக் கூறியிரார், வீட்டுலகில் நீணாள் வாழ்தலும், ஐந்தாறு நாள் வாழ்ந்து மீளுதலும் என இரண்டில்லையாதலால். அன்றியும் நிலமிசை என்பது வீட்டுலகில் எனப் பொருள்படாமையும் உணர்க. மன்னுக பெரும நீ நிலமிசை யானே (புறம்-6) என்றவிடத்தும் அப்பொருள் ஆதல் அறியற்பாலது. மிசை ஏழனுருபு. ஆரிய மறைச்சார்பினர், வேதநூற் பிராயம் நூறு என்பர். அவர்கள் தமிழ்ச் சான்றோர் பன்னூறாண்டுகள் வாழத் தெரிந்தவர்கள் - அவ்வாறு வாழ்ந்தவர்கள் என்பதையும் நம்பாத நாத்திகர்கள். மற்றும், உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை; *மனைக்கும் அழிவில்லை. வளியினை வாங்கி வையத்தில் அடுக்கிடில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம். என்று திருமூலர் அருளிச் செய்தவற்றையும், கூற்றங் குதித்தலும் கைகூடும் என இவ்வாசிரியர் குறித்ததையும், நோற்றார் மன்ற தாமே கூற்றம்; கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் என மாமூலனார் அருளியதையும் நோக்குக. வள்ளுவர் உள்ளம் என்ற இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு: ஆத்திகன்: அன்பர் உள்ளமாகிய மலரில் இருப்பவன் என்று மலர்மிசை யேகினான் என்பதற்குப் பொருள் கொண்டால் வரும் இழுக்கென்ன? உரை ஆசிரியர்: அரும்பு - ஆதி; அதாவது முதன்மைக்குப் பெயர். மலர் உலகின் பெயர். உலகிலுள்ள உயிர்களுக்கும் பெயர். அறிவு உயிர்களிடமெல்லாம் பரவியிருப்பது தெரிந்தது. அறிவில்லாத இடத்தில் உயிர் இல்லை அன்றோ! ஆதலால் இவ்வாறு மெய்ப் பொருள் கூறப்பட்டது. இதனால் வரும் இழுக்கு என்ன? நாத்திகன்: ஆன்மா எங்கும் பரவி இருப்பது என்று ஆத்திகர் சொல்வ தொப்பவே அறிவு உயிர் தோறும் பரவி இருக்கிறது என்று கூறி ஆத்திகத்தை வலியுறுத்துகின்றீரா? உரை ஆசிரியர்: மக்களிடத்து ஆறறிவு இருத்தலைப் பார்! விலங்குகளிடத்து ஐந்தறிவு இருத்தலைப் பார்! வண்டு, நண்டு முதலியவற்றிடத்து நான்கறிவு பார்! சிதல், எறும்புகளிடத்து மூன்றறிவு பார்! நத்தை அட்டைகளிடம் இரண்டறிவைப் பார்! புல், மரம் முதலியவற்றில் ஓரறிவு பார்! எனவே, உலக உயிர்களிடத்து - அறிவு பரவியிருப்பது உண்மை. இதைப் பார்த்து ஆன்மா எங்கும் பரவி இருக்கிறது என்றார் ஆத்திகர். அதைப் பார்த்தா இவ்வுரை கூறப்பட்டது? ஆத்திகன்: நிலமிசை நீடு வாழ்வார், அதாவது உலகில் நீண்ட நாள் வாழ்வார் எனில் ஏன் வாழ வேண்டும்? அவ்வாறு வாழ எண்ணுவது பற்று விடாமையை அன்றோ குறிக்கும்? உரை ஆசிரியர்: உலக மக்களை நல் வழியிற் செலுத்தி வாழ வைப்பதற்கு வாழுவோர்; இல்லத் துறவிகள். நாத்திகன்: இப்போது நுறாண்டுகட்கு மேல் உயிர் வாழ்வோர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் இல்லத் துறவிகள்தாமோ? உரை ஆசிரியர்: பின், பிஞ்சில் பழுத்தவர்களா? ஒழுக்கமில்லாதவர்களா? ஊரான் பணத்துக்கு ஆசைப்பட்டவர்களா? இல்லத் துறவிகளே (அதாவது) பிறர் நலங் கருதி தன்னலந் துறந்தவர்களே! ஆத்திகன்: மாணடி சேர்ந்தார் எனில் அறிவு பெற்றவர்கள் என்பது உம் உரை; அறிவு பெற்றவர் பிறர் நலம் காப்பவரா? ciu MáÇa®: ï›tháÇaU« ‘m¿Édh‹ M»aJ©nlh ã¿â‹ nehŒ, j‹nehŒngh‰ ngh‰wh¡ fil? என்றதும் காண்க. அறிவின் பயன் அறிக. - குயில், கிழமை இதழ், 15.12.1959 4 வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கி யாண்டு மிடும்பை யில. பி.மா. : வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு இடும்பை யாண்டும் இல. பொருள்: வேண்டுதல் வேண்டாமை இலான் - மக்களிடமிருந்து ஒன்றை விரும்புதலும், இவர் இன்னது செய்திலரே என அவர்களை வெறுத்தலும் இல்லாத பகவனின்; அடி - அடியை, சேர்ந்தார்க்கு - அடைந்தார்க்கு, இடும்பை - துன்பம், யாண்டும் இல - எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லை. கருத்து: மெய்யுணர்வு பெற்றோர்க்கு யாண்டும் துன்பம் ஏற்படுவதில்லை. இக்குறட்பாவால், உருவ வணக்கத்தையும், அவ்வுருவங்கட்குக் கோயில் கட்டுவது, உணவு, உடை, இழை தருவது முதலிய (மடமை) வழக்கத்தையும் எதிர்த்தார் ஆசிரியர். யாண்டும் என இரட்டுற மொழிந்தார். எவ்விடத்தும் என்றதால் அரச வாயிலாயும், நோய் வாயிலாயும், தீயவர் வாயிலாயும் அறியாமை வாயிலாயும் வருந்துன்பங்கள் என்றாராயிற்று. சேர்ந்தார்க்கு யாண்டும் - சேர்ந்தார்க்கியாண்டும். குற்றியலுகரத்தின் முன் யகரம் வர அவ்வுகரம் இகரமாகத் திரிந்தது. யகரம் வரக்குறள் உத்திரி யிகரமும், அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய (நன்னூல்) வள்ளுவர் உள்ளம் என்ற இக்குறளுரையின் மேல் எழுந்த ஆத்திக நாத்திகர் வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு ஆத்திகன்: வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதற்கு ஒரு பொருளை விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் எனப் பரிமேலழகர் கூறியபடி பொருள் கொண்டால் வரும் இழுக்கு என்ன? உரை ஆசிரியர்: ஒரு பொருளை விரும்புவோன் அதே பொருளை விரும்பாமலும் விடுவான் என்பதோ, ஒரு பொருளை வெறுப் பவன் அதே பொருளை விரும்புவான் என்பதோ எவ்வாறு பொருந்தும்? எனவே பரிமேலழகர் பொருள் இழுக்குடையது. நாத்திகன்: வேண்டுதல் வேண்டாமை இலான் என்றதும் அறிவைத் தானோ? உரை ஆசிரியர்: வேறென்ன? அறிவுதான் பிறரிடமிருந்து ஒன்றை விரும்பாதது. அப்பிறர் ஒன்று தாராமை பற்றி அவரை வெறுக்காதது. ஆத்திகன்: அடி சேர்தல் என்பதும் தத்துவ உணர்வு பெறுவதுதானோ? உரை ஆசிரியர்: ஆம். ஆத்திகன்: இடும்பை என்பதற்குப் பரிமேலழகர் பிறவித் துன்பம் என்று பொருள் கூறினார். அவ்வாறு கூறுவதால் வரும் இழுக்கு என்ன? உரை ஆசிரியர்: பிறவித் துன்பம் என்று பொருள் கூறினால் மறு பிறப்பை ஒத்துக் கொண்டதாகும். அது வள்ளுவர் உள்ளமன்று. இடும்பை எங்கெங்கு இருந்து உண்டாகும் என்னில் - இயற்கையின் மோதுதலாலும், ஒழுக்கக் கேட்டினாலும், தன் தந்தை தாய்மாரின் ஒழுக்கக் கேட்டினாலும் வரும். எவ்வகைத் துன்பமும் அறிவு பெற்றானை அண்டுவதில்லை என்பதும் இங்கு அறிந்து வைக்க. - குயில், கிழமை இதழ், 22.12.1959 5 இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. பி.மா. : இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா. பொருள்: இறைவன் - எங்கணும் இறைந்தவனாகிய பகவனின், பொருள் சேர் - உண்மையான, புகழ் புரிந்தார் மாட்டு - புகழை விரும்பிச் சார்ந்தாரிடத்தில், இருள் - அறியாமையானது, சேர் - சேர்க்கின்ற, இருவினையும் - நல்ல செயல் எனப்படுவதும் தீயசெயல் எனப் படுவதும், சேரா - சேரமாட்டா. கருத்து: மெய்யுணர்வை நாடுவாரிடத்தில் அம் மெய்யுணர்வு பெறுதலாகிய நிலையான இன்பத்துக்குக் காரணமாகிய செயலன்றி மற்றுள்ள பொருள் சேர்த்தல் முதலியவற்றிற்குக் காரணமாகிய நல்வினை, தீவினைகள் நாடமாட்டா. செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்தலென்னும் பேச்சுக்கே இடமின்றி ஒருவன் மெய்யுணர்வடைந்த நிலையே வீட்டு நிலை - அதாவது, நிலையான இன்பநிலை என்னும் எண்ணூல் முடிபு இங்கு எண்ணி மகிழத்தக்கது. மெய்யுணர்வொன்றே புகழுக்குரியது என்பார் புகழ்புரிந்தார் மாட்டு என்றார். இக்குறட்பா உரைமேல் எழும் ஆத்திக நாத்திகர் வினாவுக்கு உரை ஆசிரியர் தரும் விடை வருமாறு: நாத்திகன்: இப்பாட்டின் பொருளை இன்னும் தெளிவுபடுத்த முடியுமா? உரை ஆசிரியர்: மனம் தன்னிலையில் நிற்பதே பொருள்; அதாவது அடையத்தக்கது! அது வெளியிற் குதிப்பது - அதாவது பொருள் களின் மேற் பற்றுக் கொண்டு திரிவது துன்பத்தையே செய்யும். அப்படிச் செல்வதென்பது நல்ல செயல் செய்வதாகவும் சொல்லப்படலாம். தீய செயல் செய்வதாகவும் சொல்லப்படலாம். இரண்டும் தீமையையே பயக்கும். அறிவை அதாவது மெய்யுணர்வை அடைந்தவர்களிடம் இந்த இரண்டு வகைச் செயல்களும் (நல்வினை, தீவினை) இரா. அவர்களின் மனம் தன் னிலையிலேயே இருக்கும் என்பதுதான் இச் செய்யுளின் கருத்து. ஆத்திகன்: மெய்யுணர்வு என்பது என்ன? உரை ஆசிரியர்: உணர்வு என்பதற்கும் அறிவு என்பதற்கும் வேறுபாடு உண்டு. உணர்வு மன அறிவு. அது நுண்பொருள் பற்றியது. அறிவு புலனறிவு. அது பருப்பொருள் பற்றியது. உணர்வுடையான் உணர்ந்த நிலையும் செயல் செய்யும் நிலையும் ஒருங்கு உடையவன். இதைத்தான் ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து, நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்றார் ஆழ்வார். அறிவுடையான் அறிந்த நிலையும் செயல் செய்யும் நிலையும் ஒருங்கு உடையவன் அல்லன். அறிந்தான் அறிந்தபடி செய்யுமுன் ஐயந்திரிபுகளுக்கும், ஆராய்ச்சிக்கும் உள்ளாகிக் கிடப்பான். இங்குக் காட்டிய உணர்வைத் திருவள்ளுவர் மெய்யுணர்வு என்று கூறிச் சிறப்பித்தார். ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே, மெய்யுணர் வில்லாதவர்க்கு என்பதிற் காண்க. இனி, உணர்வை அறிவென்றே சொல்வதும் நூல்வழக்கே என்க. - குயில், கிழமை இதழ், 28.12.1959 6 பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். பி. : பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறி நின்றார் நீடு வாழ்வார். பொருள்: பொறி வாயில் ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளை வாயிலாக உடைய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்ற மெனும் ஐந்தும் பற்றி வரும் ஐந்து அவாவினையும், அவித்தான் - நீக்கினோனாகிய பகவனைப் பற்றிய, பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறிக்கண் வழுவாமல் நின்றவர்கள், நீடு வாழ்வார் - எந்நாளும் இன்புற்று வாழ்வார்கள். கருத்து: அவா நீங்கிய நிலையானது மெய்யுணர்வு, அவ்வுணர்வை அடைதற்கு மெய்யான ஒழுக்க நெறி நிற்றல் வேண்டும். நீடு வாழ்தலாவது, அருள் மிகுதியால் தன்னலம் நீக்கி மக்கட்குச் செய்யும் தொண்டு நிறைவுறு மட்டும் துன்பின்றி வாழ்ந்திருத்தல். தீர் ஒழுக்கம் - வினைத் தொகைநிலைத் தொடர். ஐந்தவித்தான் - இரண்டனுருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. ஐந்தவித்தானைப் பற்றிய என விரிக்க. ஒழுக்கநெறியை இறைவனே இயற்றினான் என்ற பொருளில் கபிலரது பாட்டு என்பது போல் செய்யுட்கிழமைப் பொருளில் வந்தது என்பர் சிலர். அவரெல்லாம் உருவ வணக்கத்தை நாட்டில் வளர்த்து இன நலம் தேடும் கலகக் கொள்கையர். இக்குறட்பாவின் உரையின் மேல் எழும் ஆத்திக நாத்திகர் வினாவும் உரையாசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: ஐந்தவித்தான் என்றதும் அறிவைத்தானோ? உரையாசிரியன்: மெய்யுணர்வு நிலைதான் ஐந்தவித்த நிலை. நாத்திகன்: மெய்யொழுக்கம் என்றதால் பொய்யொழுக்கம் என்பதும் ஒன்று உண்டு போலும்! அஃதென்ன? உரையாசிரியர்: நல்லொழுக்கம் தீயொழுக்கம் என இந் நூலாசிரியரே சொல்லியருளினார் அன்றோ! பொய்யொழுக்கம்: கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து என்ற குறட்பாவால் கொலைத் தொழிலுடைய ஆரியர் எவ்வாறு தம்மைக் காட்டிக் கொண்டாலும் அவர்கள் புலைவினையரே. இச் செய்தி புன்மை இது, மேன்மை இது என்று நுண்ணிதின் அறிவோர் நெஞ்சத்ததன்றி அறியார்க்குத் தெரியவழியில்லை என்று சுட்டினார் ஆயிற்று. இதுபோற் பல உண்டு. ïjdhš bghŒbahG¡f« ï‹dbj‹gJ«, mªbe¿na xGFth® cs® v‹gJ« f©nlh« m‹nwh? நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம், என்றும் இடும்பை தரும் என்பதும் காண்க. நாத்திகன்: ஐந்தவித்தானுக்கே நீடு வாழ்தல் முடியும் என்றார் எனில் இல்லறத்தானுக்கு அது முடியாது என்றாரா ஆசிரியர்? இதுபற்றி விளக்குக. உரையாசிரியர்: ஐந்தவித்தலின் அதாவது பற்றின்றி வாழ்தலின் பயன்களில் சிறப்பானதொன்றைக் கூறினார். பற்றறுத்தல் என்றதொரு பண்பாடு துறவிக்கு மட்டுமே நலம் செய்யும் என்று அவர் கூறினாரல்லர். இல்லறத்தானுக்கும் அது தேவை என்பது மட்டுமன்று, இருந்தே தீர வேண்டும் என்றும் அறிய வேண்டும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல், அதனின் அதனின் இலன் என்றதை நோக்குக. அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை என்பதையும் எண்ணுக. இல்லறத்தான் எந்தெந்தப் பொருளின் ஆசையை நீக்கிக் கொள்ளு கின்றானோ, அந்தந்தப் பொருளைத் தேடுதலால் நேரும் துன்பம் இல்லாதொழியும். இஃதுணர்த்துதற்கே இல்லறமே இன்பமாம் என்று குறித்தார். எனவே இல்லறத் தானும் பற்றறுக்க வேண்டும்; அதனால் அவனும் பயன் பெறுவான் - நீடு வாழ்வான் என்க. - குயில், கிழமை இதழ், 05.01.1960 7 தனக்குவமை யில்லாதான்றாள் சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது. பி.மா. : மனக்கவலை தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மாற்றல் அரிது. பொருள்: மனக்கவலை - மனத்துன்பத்தை, தனக்கு உவமை இல்லாதான் - தனக்கு நிகர் இல்லாத பகவனின், தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அடியடைந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு, மாற்றல் அரிது - தீர்த்தல் முடியாது. கருத்து: உவமை சொல்ல முடியாத மெய்யுணர்வு பெற்றார்க்கன்றி மனக் கவலை தீராது. ஒரு பொருளுக்கு உவமையாக அப்பொருளினும் சிறந்த ஒன்றையே சொல்ல வேண்டும். மெய்யுணர்வினும் சிறந்தது இல்லையாதலின் தனக்குவமை இல்லாதான் என்றார். அரிது- இன்மைப் பொருட்டு, உவமை உவத்தற்றன்மை, உவமை பொருளுக்கு ஆகுபெயர். இச்செய்யுள் உரையின் மேல் எழும் ஆத்திக நாத்திகர் வினாவும் உரையாசிரியர் விடையும் வருமாறு: நாத்திகன்: அறிவு அல்லது உணர்வு மெய்யுணர்வுக்கு உவமை சொல்ல முடியாதா? அவ்வாறாயின் அது கடவுளா? உரையாசிரியர்: மாந்தர் பெறத்தக்கது மெய்யுணர்வு. அதாவது அறிவு என்று வள்ளுவர் கூறியபடி கூறினேன். இதில் கடவுள் பற்றிய செய்தியே எழவில்லை. மாந்தர் பெறத்தக்கது மெய்யுணர்வு என்றேன். அந்த மெய்யுணர்வைத்தான் தனக்குவமை இல்லாதான் என்பது போன்ற வகையில் சொல்லிப் பாடல் வழக்கம் செய்தார் என்கின்றேன். இதுகேட்டும், அப்படியானால் கடவுளா இப்படி என்றால் கடவுளா என்றுகூறி உன் மனத்தைக் குழப்பிக் கொள்ளுவ தால் என்ன பயன்? மெய்யுணர்வுக்கு நிகராக மற்றொன்றைச் சொல்ல முடியாது என்றுதான் பொருள் கூறினேன். இதுதான் வள்ளுவர் உள்ளமும். உவமை சொல்ல முடியாதது மெய்யுணர்வு என்றால் அது கடவுளா என்று கேட்கின்றாய். இது பிழையான கேள்வியாகும். ஆத்திகன்: தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் ஓர் உருவத்தைக் கூறினார் அல்லவா? உரையாசிரியர்: இல்லை. தனக்குவமை இல்லாத அறிவு மெய்யுணர்வு என்பதைப் பாவாணர் அவ்வாறு கூறுவது பாவலர் மரபு என்பர். இன்னொன்று: தனக்குவமை இல்லாதான் ஒருவனின் உருவம் ஒன்று இருக்கவே முடியாது. எப்போது ஒன்று உருவம் பெற்றதோ அப்போதே அது உவமை சொல்லப்படும் பொருளாகி விடும். மெய்யுணர்வுக்கு அப்படியில்லை. உவமை சொல்ல முடியாதது அது. ஆத்திகன்: தாள் எனில்? உரையாசிரியர்: தன்மை! மெய்யுணர்வின் தன்மை (தத்துவம்) உணர்ந்த விடமே பெறத்தக்கது பெற்றதாகும். மெய்வுணர்வு பெற்ற நிலையில் எந்த மனக்கவலையும் இல்லாதொழியும் என்பது இதன் பொருள். தாள் ஒருவனின் கால் அன்று. தாள், அடி இவை தத்துவம், தன்மை என்னும் பொருளுடையவை. - குயில், கிழமை இதழ், 12. 1. 1960 8 அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது. பி.மா : பிற ஆழி நீந்தல் அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் அரிது. பொருள்: பிற ஆழி நீந்தல் - அறமல்லாத மறத்தின் பயனாகிய துன்பக் கடலை நீந்திக் கரையேறுதல் என்பது, அறம் அழி - அறத்தின் பயனான இன்பக் கடலாகிய, அந்தணன் - உயிர்களிடத்து அரு ளுடையானாகிய பகவனுடைய, தாள் - அடிகளை, சேர்ந்தார்க்கு அல்லால் - சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு, அரிது - அரிதாகும். (முடியாதென்றபடி) கருத்து: மெய்யுணர்வு அறக்கடல். அதனைப் பற்றித் துன்பக்கடலைக் கடத்தல் வேண்டும். அறம், அதன் பயனாகிய இன்பத்தைக் குறித்தது - ஆகுபெயர். மேலே அறம் என்றதால் அடுத்து வந்த பிற, அறமல்லாத மறத்தின் பயனாகிய துன்பம் எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதுவும் ஆகு பெயர். அந்தணன் - அம் தண்மை என்னும் சொற்றொடர் அன் இறுதி பெற்றது. அம் தண்மை என்பது அழகிய தட்பம் எனப் பொருள் தந்து அருளைக் குறித்தது. அந்தணன் என்பதற்கு மறையின் அந்தத்தை அணவுவோன் எனத் தம் கலகக் கொள்கைக்கேற்றவாறு பொருள் கூறிப் பொய்ப்பர். அத் தன்மையுடையோர் அந்தண் கூடல், அந்தண் பாதிரி, அந்தண் காவிரி என வருவன கண்டு தெளிந்து அடங்க வேண்டும். அந்த தண்மையுடையதெனில் பொருந்துமோ எனிற் பொருந்தும். அருள் என்பதே உணர்வின் பயனன்றோ? இன்பக் கடல் என்று மெய்யுணர்வைக் கூறலாமோ எனில் கூறலாம். மெய்யுணர்வு தான் இன்பமாதலால். ஆழி - ஆழ்ந்தது. காரணப் பெயர். இச்செய்யுளின் உரைமேல் எழும் ஆத்திக நாத்திகர் எழுப்பும் வினாவும் உரையாசிரியர் விடையும் வருமாறு: நாத்திகன்: அறவாழி அந்தணன் என்று, மெய்யுணர்வைக் கூறுவதன் மூலம் தென்னாட்டுப் பார்ப்பனர்க்கு உயர்வு தந்து விடுகின்றாரா வள்ளுவர்? உரை ஆசிரியர்: இல்லை, அவ்வாறு கூறி இங்குள்ள பார்ப்பனரின் வாயை அடக்குகின்றார் திருவள்ளுவர். வேறென்ன? அந்தணன் என்ற பெயர் மெய்யுணர்வுக்கே - உயர்ந்த பொருளுக்கே பொருந்தும். அருளில்லாத பார்ப்பனர்க்குச் சிறிதும் பொருந்தாது என்பதை யல்லவா வள்ளுவர் சொல்லாமற் சொன்னார்? ஆத்திகன்: அறவாழி அந்தணன் என்று சொன்னதால் வள்ளுவர் கடவுளுக்கு உருவம் காட்டினார் அன்றோ? உரை ஆசிரியர்: கடவுளைப் பற்றி இங்குப் பேச்சேயில்லை. வள்ளுவர் உள்ளங்கண்டவர்கள் இதை நன்கு அறிவார்கள். அறவாழி - இன்பக்கடல், அந்தணன் - அருளுடைய மெய்யுணர்வு. இதில் கடவுள் முழக்கம் எள்ளளவும் இல்லாமை உணர்க. ஆத்திகன்: இன்பக் கடலாகிய அருளுடைய மெய்யுணர்வு என்று பொருள்படுகின்றதால் அது பொருந்தாதன்றோ? உரை ஆசிரியர்: ஏன் பொருந்தாது? மெய்யுணர்வு இன்பக் கடல்தான். அது அருளுடையதுதான். அறிவில்லாத ஒன்றில் இன்பத்தை யும் அருளையும் காண முடியுமோ? நாத்திகன்: அறவாழி என்பதற்குத் தருமசக்கரம் என்று பொருள் கொள்ளுகின்றார்களே சிலர்? உரை ஆசிரியர்: அருக சமயத்தார் ஆழி என்பதைச் சக்கரம் என்று கூறி இழுக்கடைகின்றார்கள். ஏன்? அறவாழி என்றால் தருமச் சக்கரம் என்பவர் பிற ஆழி என்பதற்கு என்ன பொருள் கூறுவார்? மேலும் நீந்துவர் என்று வள்ளுவர் சொல்லி வைத்தார். நீந்தப்படுவது கடலா? - அல்லது சக்கரமா? - கடல் தானே? - குயில், கிழமை இதழ், 26.1.1960 9 கோளிற் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் றாளை வணங்காத் தலை. பி.மா. : எண் குணத்தான் தாளை வணங்காத் தலை கோள் இல் பொறியின் குணம் இல ஏ. பொருள்: எண் - மக்கள் சிறப்பென எண்ணுகின்ற, குணத்தான் - குணங்களையுடைய பகவனின், தாளை - அடியை, வணங்காத் தலை - வணங்காவிடத்து, கோள் இல் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றவற்றில் தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்ள முடியாத, பொறியின் - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளைப் போல, குணம் இல - ஒருவனுக்கமைந்த மன அறிவாகிய உணர்வும் பயன்படல் இல்லை. கருத்து: எப்பொருட்கும் மேற்பொருள் என்று மெய்யுணர்வை உணரா விடத்து மற்ற ஐயுணர்விருந்தும் பயனில்லை. வணங்கல் - தன்னினும் உயர்ந்த பொருளை உயர்ந்ததென்று கொள்ளுதல். வணங்காத் தலை என்பது வினை எச்சம், ஈத லியையாக் கடை (குறள்) என்பது போல. அறிவு வேறு, உணர்வு வேறு, அறிவு - பருப்பொருள் பற்றியது, உணர்வு - நுண்பொருள் பற்றியது. அறிவு ஐந்தும் பொறிகள் ஐந்தினையும் வாயிலாக உடையன. உணர்வு - மனத்தை வாயிலாக உடையது. வணங்காத் தலை என்பதற்கு வணங்காததாகிய தலை என்று பொருள் கொள்வாருமுளர். அவர் அறியார். மெய்யும் வாயும் கண்ணும் மூக்கும் காதும் பயனற்றுப் போகையில் தலை மட்டும் வாழுமோ? இனி எண்குணத்தான் என்பதற்கு எட்டுக் குணத்தான் என்று பொருள் கூறி, இது சைவர் நூலிற் கண்டது என்றும் கூறுவர். சமயக்கணக்கர் மதிவழி கூறாத வள்ளுவர் சைவக்கருத்தை எடுத்தாள்வாரா? அன்றியும் உருவம் ஒன்றுக்குக் குணங்கள் இத்தனை என்றும் வகுப்பரோ? இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக,நாத்திகர் வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: குணம் இல அதாவது பயன் இல்லை என்றீர்கள்! எப்போது? உரை ஆசிரியர்: எண் குணத்தான் தாளை வணங்காத போது. ஆத்திகன்: எது போல? உரை ஆசிரியர்: கெட்டுப் போன பொறிகள் போல, பொறியின் என்பதில் இன் ஐந்தனுருபு. ஒப்புப் பொருள். ஆத்திகன்: எண் குணத்தான் என்றது சிவபெருமானை அல்லவா? உரை ஆசிரியர்: சிவபெருமான், ஐயப்பன் முதலிய உருவ வணக்கத்தை எதிர்ப்பவர் வள்ளுவர். எண் குணம் என்பது வினைத்தொகை நிலைத்தொடர். எண்ணும் எண்ணிய எண்ணுகின்ற என முக் காலத்தும் விரிவது. எண் என்பது எண் குணம் எட்டுக் குணமன்று. நாத்திகன்: சிவபெருமானை வள்ளுவர் ஆதரித்தார் என்று காட்ட ஆத்திகர் முயல்வது முட்டாள்தனந்தானே? உரை ஆசிரியர்: ஆம் ஆம் ஆம். உங்கட்கு அண்ணன் மார் அவர்கள். நாத்திகன்: அப்படியானால் நாங்களும் முட்டாள்கள்தாமோ? கடவுள் உண்டு என்பாரை எதிர்ப்பார்களாகிய நாங்களுமா முட்டாள்கள்? உரை ஆசிரியர்: உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லப்படுவது எது? கடவுள்தானே! எனவே இரு சார்பினரும் கடவுள் எனும் ஒன்றை வைத்துத்தாமே கணக்குப் போடுகின்றார்கள்.! ஆத்திகன்: திருவள்ளுவர்? உரை ஆசிரியர்: அந்தத் தெருப்பக்கம்கூட அடி வைக்கவில்லை. மக்கள் பெறத்தக்கது அறிவு; அதாவது உணர்வு. - குயில், கிழமை இதழ், 2. 2. 60 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார். பி.மா : இறைவன் அடிசேரா தார் பிறவிப் பெருங்கடல் நீந்தார். (இறைவன் அடி சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர். பொருள்: இறைவன் - எங்கும் நிறைந்துள்ள பகவனின், அடி சேராதார் - அடியை எக்காலத்தும் எண்ணாதார், பிறவிப் பெருங்கடல் நீந்தார் - பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரை சேர மாட்டார்கள். சேர்ந்தார் - இறைவன் அடியை எக்காலும் எண்ணுகின்றவர், நீந்துவர் - பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேறுவார்கள். கருத்து: மனத்தை ஒருவழிப்படுத்தினார் துன்புறுதல் இல்லை. நீந்தார் என்பதனோடு பிறவிப் பெருங்கடல் என்ற தொடர் சேர்க்கப்பட்டது. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்பதற்குத் தக இறைவனடி சேர்ந்தார் என்பது வருவிக்கப்பட்டது. ஈண்டுப் பிறவி என்றது மாண்டு பிறப்பதையன்று. நொடிதோறும் மிகப் பலவாக வேறுபட்டு வரும் மனக்குறிப்பையே. இவ்வாறு புத்தரும் கூறுகிறார். அதைக் கணிகக் கணக்கு என்பர். முற் பிறப்பும் மறு பிறப்பும் கூறுவோர் சில சமயக் கணக்கர்தாமே யன்றி எல்லாச் சமயத்தார்க்கும் எல்லா அறிஞர்கட்கும் அஃது ஒப்பமுடிந்ததன்று. வள்ளுவர் எம்மதத்தையும் சார்ந்தவர் அல்லர் என்பதை மறத்தல் கூடாது. இக்குறட்பாவின் உரை மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும்: ஆத்திகன்: பிறவி என்பதற்கு நீவிர் சொல்லும் பொருள் புதுமை யானது அல்லவா? உரை ஆசிரியர்: உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு நோக்காடு என்பதுண்டு. உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு மட்டுமன்று பலர்க்கும் புதுமை யாகத்தான் தோன்றும். பிறப்பென்னும் பேதமை என்றவிடத்து பிறப்பு என்றதற்கு என்ன பொருள்? பிறப்பு என்னும் பேதமை என்றதனால் பிறப்பு என்பது மனம் பற்றியது அல்லவா? அவ்வாறில்லாவிட்டால் பிறப்பாகிய பேதமையை என்பாரா? குழந்தை தாய் வயிற்றினின்று பிறக்கும் பிறப்புக்குப் பேதமை என்று கூறுவாரா? கூறினார் என்றால் பிறப்பு என்பதற்கு வேறு பொருள் உண்டு என்று தோன்றவில்லையா? இனிப் பிறப்பு என்னும் பேதைமை நீங்கிச் சிறப்பென்னும் செம் பொருள் காண்பது அறிவு என்பதற்கு மனம் தன்னிலை யில் நில்லாமல் கணந்தோறும் பொருட்களின் மேல் செல்வ தாகிய பிறத் தலாகிய மனப் பிறப்பு ஆகிய பேதைமை நீங்கினால் சிறப்பு என்று சொல்வதோர் செம் பொருளாகிய அறிவை அடைவதே அறிவாகும் என்பதாம். அறிவை அறிவது பொருள் என்றார் அருணகிரியாரும். எனவே பிறவி என்பதற்கு நொடிதோறும் மிகப் பலவாக வேறுபட்டு வரும் மனக்குறிப்பு என்று நாம் பொருள் கூறியது உண்மைப் பொருள் கூறியதேயாகும். அது வள்ளுவர் உள்ளமேயாகும். இறைவனடி சேர்ந்தார்க்கு பிறவியில்லை என்பது இக் குறட்பாவின் கருத்து. பிறவியில்லை - மனக் கோட்டம் இல்லா தொழியும். இவ்வாறாகிய மனம் பொருள்கள் மேற் செல்லுவது ஒரு நாளைக்கு ஒரு முறை யல்ல - ஒரு கணத்துக்குப் பன்முறை. ஆதலால் பிறவிப் பெருங்கடல் என்றார். நாத்திகன்: இறைவன் என்று கூறுவது கடவுளை அல்லவா? உரை ஆசிரியர்: இறைவன் - இறைந்தவன்; எவ்வுயிரிலும் பரவியவன். அதாவது அறிவு. இதைக் கடவுளுக்கு இட்டுக் கூறினார்கள் என்றால் இறைவன் கடவுளாகிவிடமாட்டார் என்க. இறைவன் என்று மன்னனுக்கும் சொல்வதுண்டு. தன் அதிகாரம் மக்களிடம் இறைந்து பரவி நிற்றலால். நாத்திகன்: நீந்துதல் என்ன? உரை ஆசிரியர்: பலவாகிய மனக்குறிப்புகளைக் கடல் என்றதற்கு ஏற்ப நீந்துதல் என்று சொன்னார். ஆத்திகன்: புத்தர் மறுபிறப்பு இல்லை என்றாரா? உரை ஆசிரியர்: இல்லை என்றுதான் சொன்னார். ஆத்திகன்: பிறப்பு ஒழிய வேண்டும் என்று சொன்னாரே? உரை ஆசிரியர்: அவர் பிறப்பு ஒழியவேண்டும் என்றது வேறு பொருளில். மக்களின் துன்பம் ஒழியவேண்டுமானால் மக்கள் எல்லாரும் பிறவாமல் இருக்கவேண்டும். அதாவது மனிதப் பூண்டே வேரற்றுப் போகவேண்டும் என்றார். ஆத்திகன்: ஐயையோ, எல்லாரும் செத்துவிட்டால் இவ்வுலகம் என்ன ஆவது? உரை ஆசிரியர்: இன்ப நிலை எய்தும். ஆத்திகன்: மக்கள் ஒருங்கே தொலைவதும் இன்பமா? உரை ஆசிரியர்: வேறென்ன? எண்ணிப்பார்க்க. பதற வேண்டாம். நீ ஒரு நாளிரவு தூக்கம் வராமல் துன்புற்றிருந்தாய். அது துன்ப மானது என்று நீயே சொன்னாய். நீ ஒரு நாள் நன்றாகத் தூங்கினாய். அடடா நான் இரவு இன்பமாகத் தூங்கினேன் என்றாய். சில மணி நேரம் அயர்ந்து உலகத் துன்பங்களில் சேராமல் தூங்கியதே இன்பம் என்ற நீ நூறு கோடி ஆண்டுகள் அயர்ந்து எத்தொல்லையுமின்றித் தூங்குவது பேரின்பம் என்று சொல்லமாட்டாயா? - குயில், கிழமை இதழ், 16.2.1960 அதிகாரம் - 2 வான் சிறப்பு மழையினது சிறப்புக் கூறுவது. வான் மேலிடம் - அங்குள்ள மழைக்காயிற்று. ஆகுபெயர். மழை என்பது புனலே, புனல் பற்றிக் கூறுதல் பொதுவாகக் கூறுதலாம். அப்புனல், மேற்சென்ற வழி வாழ்வார்க்குப் பயன்படுமாறு கூறுதல் அதன் சிறப்புக் கூறுவது எனப்பட்டது. மேல திகாரத்தில் உலகின் தோற்றம் கூறினார். இவ்வதிகாரத்தில் தோன்றிய உலகு அற்றொழியாது நிலை நிறுத்தும் மழைச் சிறப்புக் கூறினார் என அறிக. 11 வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று. பி. : வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று. பொருள்: வான் - மழையானது, நின்று - நிலையாக நின்று பொழிந்து வர அதனால், உலகம் - உலகின் உயிர்கள், வழங்கி வருதலால் - நிலைபெற்று வருவதனாலே, தான் - அம் மழையானது, அமிழ்தம் என்று - அமிழ்து என்று, உணரல் - உணருதற்குரிய, பாற்று - பான்மையைக் கொண்டிருக்கிறது. கருத்து: மழை, அமிழ்து என்னுந் தன் பெயருக்கேற்ப உலகை நிலைபெறு விக்கிறது. நிற்க என்னும் செயவெனெச்சம் நின்று என செய்தெனெச் சமாகத் திரிந்தது. இப்பாட்டால் ஆசிரியர் மழையே அமிழ்து என்னும் உண்மையை வற்புறுத்தினார். அமிழ்தமே மழை என்றிருக்கவும் அதை வற்புறுத்திக் கூறுவானேன் எனில் அம்ருதம் என்ற வடசொல்லாற் சொல்லப்படுவதே அமிழ்தென்றும், அதுவே சாவா மருந்தென்றும் மக்களிடைப் பரப்பப்பட்டுள்ள புராணக் கொள்கையை மாற்றி உண்மையை நாட்டவே என்க. அமிழ்து அமிழ் - து என்ற இரு சொற்களால் அமைந்த வினைத்தொகை நிலைத்தொடர். அமிழ் - அமிழ்கின்றது - உணவு. மேனின் றமிழ்கின்ற உணவு காரணப் பெயர். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகுக்கு அவனளி போல் மேனின்று தான் சுரத்தலால் என்ற சிலப்பதிகார அடிகளாலும் மழை மேனின்று வரும் சிறப்பு குறிப்பிடுவதறிக. இனி மழையே அமிழ்தாயின் ஈண்டு அமிழ்து என்னும் சொல்லாற் குறிப்பிடுவதில் சிறப்பென்னவெனில், வெப்பமானது முகக்கும் நிலையில் அந்நீர், முகில் என்றும், அம்முகில் நீரைக் கொண்டு நின்ற நிலையில் அந்நீர் கொண்டல் என்றும், அக்கொண்டல், மேற்சென்ற நிலையில் அந்நீர் வான் என்றும், அவ்வான் கருமையுற்ற நிலையில் அந்நீர் கார் என்றும் அக்கார் மழைக்கும் நிலையில் அந்நீர் மழை என்றும், அம் மழைதான் வாழ்வார்க்கு அமிழும் உணவாகி அமிழ்ந்து வரும் நிலையில் அமிழ்தென்றும் அவ்வமிழ்து நிலத்தை மருவும் நிலையில் மாரி என்றும் மற்றும் பற்பல நிலைகளில் அந்நீர் பற்பல பெயர் பெறினும் அவற்றில் அமிழ்து என்று கூறப்படும் நிலையே சிறப்பாதல் அறிக. இப்பாட்டில் அமிழ்து, அமிழ்தம் என அம் சாரியை பெற்றது, குன்றம், மன்றம் என்பவற்றிற் போல. இன்னும் அமிழ்தம் என்பது அமுதம் எனவும் மருவி வழங்கும். அம்ருதம் என்பது வடசொல். அது அமிர்தம் அமுர்தம் எனப் பலவாறு மருவி வரும். அம்ருதம், அமிழ்தம் என்ற தமிழ்ச் சொல்லி னின்று இடையில் ஆக்கிக் கொண்ட தெனிற் பொருந்துமே யன்றி உலகு தோன்றியபோது தோன்றிய மழையின் பெயராகிய அமிழ்தம் என்ற சொல் இடையிற்றோன்றிய புராணத்தாற் சொல்லப் படும் அம்ருதத்தினின்று தோன்றியது எனல் பொருந்துவதாகா தென்றுணர்க. அமிழ்து - சாவா மருந்து, அஃது சாவாமைக்கே அடிப்படையானது. அம்ருதம் அவ்வாறன்று: பகைவனின் வாளைத் தடுப்பதோர் பலகை போன்ற சாவைத் தடுப்பதோர் கருவி என்று கதையில் வரும் சொல். உலகுயிர்க்கெல்லாம் பயனளிப்பதன்றி அம்ருதம் தேவர்க்குப் பயன் படுவதாக இடைக் காலத்திற்கு சொல்லப்படுவது. அமிழ்து என்ற சொல்லாற் குறிக்கப்படும் பொருள் இதோ என்று (மழையை) இன்றும் காட்டமுடியும். அம்ருதம் என்ற சொல்லாற் குறிக்கப்படுவதான புராணம் கூறும் பொருள் எங்கே? இப்பாட்டின் உரைமேல் எழும் ஆத்திக நாத்திகர் வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் - மழையைப் படைத்தார். அந்த மழையைப் பெய்ய வைத்து உயிர்களைக் காக்கின்றார் என்பதற்கு மாறாகத் திருவள்ளுவர் மழை உயிர்கள் அற்று ஒழியாமல் காக்கின்றது என்றது பிழையல்லவா? உரை ஆசிரியர்: நீ சொல்லுகிறபடி பார்த்தாலும் மழை உயிர்களைக் காக்கின்றது என்பதில் பிழை ஒன்றுமில்லையே. நீ என்ன எண்ணுகின்றாய் என்றால், கடவுளால் படைக்கப்பட்ட மழையைக் கொண்டு கடவுள் உலகைக் காக்கின்றார் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கவேண்டும் என்பதுதான். கடவுள் இந்த உலகை யும் மற்றுமுள்ள உலகங்களையும் படைத்தார் என்பது உனக்குத் தெரியும். அதுமட்டுமா? எல்லா உலகங்களிலும் உள்ள எல்லா வற்றையும் படைத்தார் கடவுள் என்பதும் உனக்குத்தெரியும். மழையையும் கடவுள் படைத்தார் என்பதும் உனக்குத் தெரியும். அந்தக் கடவுள் வைகுந்தத்தில் உட்கார்ந் திருக்கிறாரா, சிவ புரத்தில் உட்கார்ந்திருக்கிறாரா என்பதும் உனக்குத் தெரியும். அதே கடவுள் தெருக்கள் தோறும் உள்ள கோயில்களில் என்ன உருவத்தோடு எத்தனை மனைவி மக்களோடு உட்கார்ந்து கொண்டு என்னென்ன காரியங்களை எவரெவர்களைக் கொண்டு எப்படி எப்படிச் செய்துவருகிறார் என்பவை உனக்குத் தெரியும். கடவுள் தம் அன்பர்களைக் கொண்டு இந்த உலகத்தை எப்படி எப்படி ஆட்டி வைக்கின்றார் என்பது உனக்குத் தெரியும். ஆனால் உன்னிடமுள்ள வீரத் தனத்தையும் காட்டு மிராண்டித் தனத்தையும் திருவள்ளுவரிடத்திலேயும் நாம் எதிர்பார்க்க முடியுமா? மழை பெய்கின்றது, உயிர்கள் வாழ்கின்றன என்பதை - கேள்விக்கு இடமில்லாமல் அறிவுக்குப் பொருத்தமாகத் திருவள்ளுவர் சொல்லத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆத்திகன்: அப்படியானால் கடவுள் இல்லை என்பது வள்ளுவர் கருத்தா? உரை ஆசிரியர்: இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் படி வள்ளுவர் நமக்கு எதையும் சொல்லவில்லை. ஆத்திகன்: உலக மக்கள் அடையத் தக்கவை இன்னவை என விளக்க வேண்டாமா? உரை ஆசிரியர்: ஆம்! அடையத் தக்கது அறிவு என்று அவர் முழங்கிய முழக்கத்தின் பெயர்தான் திருக்குறள். நாத்திகன்: அப்படியானால் மழையைக் கடவுள் என்கின்றாரா வள்ளுவர்? உரை ஆசிரியர்: உன் உள்ளத்தில் படிந்துள்ள கடவுள் என்ற ஒரு பெயர் திருவள்ளுவர் உள்ளக்கடலில் எவ்விடத்திலும் தட்டுப் படவில்லை. மக்கள் உயிர் வாழ்க்கைக்கு மழை மிக்க பயன் பட்டு வருகின்றது என்பதுதான் வள்ளுவர் கருத்து. மழை மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்றுதான் அவர் சொன்னார். அப்படிப்பட்ட உட்பொருளை கடவுள் என்பதோடு எந்த இடத்திலும் எப்போதும் பிணைக்க எண்ணியதேயில்லை. அந்த வகையில் அவர் உன்போன்றவர் அல்லர். நாத்திகன்: அமிழ்து மழையா? உரை ஆசிரியர்: வேறென்ன? நாத்திகன்: அமிழ்து இனிமையாயிருக்கும்... மழை அப்படி இருக்கிறதா? ciu MáÇa®: mĜ⚠cŸsjhf Ú brhšY« ïÅikia¢ Rit¤J m¿ªâU¡»whah?அதை அளந்திருக்கிறாயா? நாத்திகன்: தேனமுது, பாலமுது என்னும் போது அமுது இனிமை என்று தோன்றுகிறது. அந்த இனிமையின் அளவும் ஒருவாறு புலப்படுகின்றது. மழையில் அப்படி என்ன இருக்க முடியும்? உரை ஆசிரியர்: தேன் என்றே சொல்லாமல் தேனமுது என்று ஏன் சொல்லவேண்டும். பால் என்று சொல்லாமல் பாலமுது என்று ஏன் சொல்லவேண்டும்! அப்படிச் சொல்லவேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது? மழை அதாவது இனிமை யானது. இனிமையான ஒரு தனிப்பொருள் கூட்டுக்கறியல்ல. இதுவும் இனிமையுடையதுதான் என்று தேனைக் காட்ட இனிமையுடைய அமுதையும் சேர்க்கின்றார்கள். மழையை அல்லாமல் அமுது ஒன்று தனியாக எங்கும் இல்லை. இனியும் இருக்கப்போவதும் எவ்விடத்துமில்லை. - குயில், கிழமை இதழ், 23.2.1960 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய துஉ மழை. பி. : துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு துப்பு ஆய துஉம் மழை. பொருள்: துப்பார்க்கு - உண்பார்க்கெல்லாம், துப்பு ஆய - உயிர்த் துணையாகிய, துப்பு ஆக்கி - சோறு கறி முதலிய உணவுகளை உண்டாக்கி, து - அவ்வுண்ணுதலையுடைய, பார்க்கு - உலகுக்கு, துப்பு ஆய துஉம் மழை - தானே உண்ணு நீர் ஆகியும் உதவுவது மழையாம். கருத்து: உயிர்த் துணையாகிய உணவையாக்கி, உண்ணும் நீருமாகி உதவுவது மழை, து - முதனிலைத் தொழிற் பெயர் து + பார், துப்பார். இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க தொகைநிலைத் தொடர். துவ்வினையுடைய பார் என விரியும். சோறு முதலியவைகளை ஆக்கினால் மட்டும் அமையாது, உண்ணு நீரும் இன்றியமையாதது என்பார், துப்பாய தூஉம் - மழை என்றார். துப்பாயதுஉம் உயிரள பெடை. பார் உலகின் உயிர்க்கு ஆகுபெயர். முன் உள்ள துப்பார்க்கு வினையாலணையும் பெயர். அரக்கும் பவளமும் ஆயுதப் பொதுவும் துணையும் வலியும் பொலிவும் நெய்யும் அனுபவ மும்துய் மையும் துப்பாகும் - பிங்கலந்தை, 3656 என்பதால் துப்பு என்ற சொல்லின்பொருள் இத்தனை என்பது அறிக. இவ்வுரையின்மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: மக்களுக்கு ஏற்படும் பயன் பற்றிப் பேசும் போதெல்லாம் கடவுள் நினைவை உண்டாக்க வேண்டும். இதுநம் தமிழ்ச் சான்றோர் கையாண்டு வரும் முறை. இதற்கு முற்றிலும் மாறாக வள்ளுவர் நடக்கலாமா? மக்கட்கு மழை பெரும் பயன் விளைக்கின்றது என்று கூறுவதைவிடக், கடவுள் மழைதந்து மக்களைக் காத்து வருகின்றார் என்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்! உரை ஆசிரியர்: கடவுள் பற்றிய விளம்பரங்கள் குறைகின்றன என்பது உன் கருத்து. அதை எண்ணி எண்ணி இடர்ப்படுகின்றாய், விளம்பரம் இல்லையானால் கடவுள் இல்லாமல் போய்விடும் என்றும் கருதுகின்றாய். காரியம் தொடங்கும்போது கடவுள் பற்றி நினைக்க வேண்டும். நூலொன்று தொடங்கும் போது கடவுள் பற்றி நுவலவேண்டும். கட்டுரைகள் எழுதினால் முதலில் கடவுள் ஒருவர் உண்டு என்பதுபற்றித்தான் எழுதவேண்டும். இதெல்லாம் கடவுள் என ஒரு பொருள் இல்லை என்பதை மனதில் வைத்துச் செய்யப்படும் முயற்சி என்று தோன்றுகிறது. இருக்கும் பொருளைப் பற்றி இருக்கின்றது இருக்கின்றது என்ற முழக்கம் ஏன்? கடவுள் உண்டு என்பதில் ஆத்திகனுக்கு உள்ள ஐயப்பாடு நாத்திகனிடம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆத்திகனே, மழை முதலிய பொருள்களின் பயனை அறிதலில் ஆசையாயிரு! கடவுளை இழுத்து இழுத்துப் போடுவதால் பொருட்பற்றி அறிவதோர் ஆற்றல் ஏற்படாது. - குயில், கிழமை இதழ், 15.3.1960 13 விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. பி.மா. : விண் நின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உண் இன்று பசி உடற்றும். பொருள்: விண் - மழையானது, நின்று - மிகுதியாக இருக்கவும் அது, பொய்ப்பின் - பெய்யாதாயின், விரிநீர்வியன் உலகத்து - விரிந்த நீரையுடைய இந்த அகன்ற உலகத்தின் கண், உண் இன்று - உணவு இல்லாதொழியும் அதனால், பசி உடற்றும் - பசி நோய் துன்புறுத்தும். கருத்து: மழையின்றேல் பசி நோய் மிகும். விண் - மழை. ஆகுபெயர். விண் என்றாராயினும் விண்ணிற் பெரிதளவு உள்ள மழை முதலைக் கொள்வதால், நின்று செய வென் எச்சத்திரிபு. இவ்வுலகு விரிந்த நீரினையுடையதாயினும் அஃது நிலையான பயன் தந்து நிற்பதன்று என்பார் விரிநீர் வியனுலகத்து உண்ணின்றுடற்றும் பசி என்றார். உலகத்து - அத்துச் சாரியை ஏழனுருபின் பொருள் தந்து நின்றது. உண் - முதனிலைத் தொழிற்பெயர். உணவுக்கு ஆகியது ஆகுபெயர். பசி வந்திடப் பத்தும் பறக்கும் என்பதால் பசி உடற்றும் என்று கூறி மழையின் இன்றியமையாமையை விளக்கினார் இப் பாட்டால். இக்குறட்பாவின் உரைமேல் எழும் ஆத்திக நாத்திகர் வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: விண் என்றது மழையை. நின்று என்றால் என்ன பொருள்? உரை ஆசிரியர்: இருக்க என்பது பொருள். நின்று என்றது நிற்க என்றிருக்க வேண்டும். இவ்வாறு செய்து என வினையெச்சம் செய்து என் வினையெச்சமாகத் திரிவது வழக்கம். ஆத்திகன்: பொய்ப்பின் என்றால் என்ன பொருள்? உரை ஆசிரியர்: இருக்கும் மழையை என்னிடம் கொஞ்சம் கூட இல்லை என்று பொய்க்குமானால் - என்று பொருள். இருப்பதை இல்லை எனல் பொய்யல்லவா? ஆத்திகன்: இன்னொரு கேள்வி. வருந்த மாட்டீர்கள் என்று எண்ணு கிறேன். அதுதான் விரிநீர் வியனுலகமாயிற்றே, அது மழை பெய்யாவிட்டால் பசித்துன்பத்தையா அடையும்? உரை ஆசிரியர்: காவிரிக்கரையில் அமைந்த ஓரூர் மழை இல்லையே மழையில்லையே என்று கழுதை போலக் கத்தியதை நீ கேட்டதில்லையா? ஏன்? விளைவில்லை. அதனால் நெல்லில்லை. அதனால் உணவு இல்லை. பசித்துன்பம் பொறுக்க முடியவில்லை. விரி நீர் உலகமாக இருந்தாலும் மழையில்லாவிடில் அரோகரா தான் என்று கூறி மழையின் இன்றியமையாமையை வற்புறுத்தினார். ஆத்திகன்: உண்ணின்று என்பதை உள்நின்று எனப் பிரித்து - பசியானது வயிற்றின் உள்ளே இருந்து கொண்டு துன்புறுத்தும் என்று பொருள் கொண்டால் என்ன? உரை ஆசிரியர்: பசி என்பது வயிற்றின் நிலை வேறுபாடு, அப்படி யிருக்க பசி வயிற்றுக்குள் ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டு தொல்லைப் படுத்துவதென்பது எப்படி? அதை விட, மழை யில்லா தொழியு மானால், உணவு இல்லா தொழியும், பசித் துன்பம் உண்டாகும் என்று கூறும் பொருள் நன்றா யில்லையா? உண் இன்று எனப் பிரிக்க, உண் என்பது உணவு என்றும் இன்று என்பது இல்லாதொழியும் என்றும் பொருள் கூறப்பட்டது. நாத்திகன்: விண் என்ற சொல்லை வள்ளுவர் எடுத்தாண்டே இருக்கக் கூடாது. விண்ணை வைத்துத்தான் விண்ணவரை ஆக்கினார்கள். ஆத்திகர்கள். விண், இல்லாத பொருள். விண் என்பது மேலுலகம் என்று புளுகுகிறார்களென்பதும் காண்க. மேலிருப்பதால் மழையை விண் என்றார்கள். உரை ஆசிரியர்: ஐந்து பருப் பொருள்களில் ஒன்றான விண் என்பது தள்ளத் தக்கது அன்று. அது இங்கு மேல் என்று பொருள்படுவது கொண்டும் தள்ளிவிடுவதற்கில்லை. நீ சொல்லலாம், மேல் என்பதும் கீழ் என்பதும் ஆராயும்போது ஒன்றாகத்தானே முடியும் என்று! உலகினும் பெரிய உள்ளத்தில் மேலும் கீழும் ஒன்றுதான். உலகளவுள்ள உள்ளத்தை வைத்தே இங்கு குடித்தனம் செய்கின்றோம் என்பதை நோக்குக. - குயில், கிழமை இதழ், 12.4.1960 14 ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் பி.மா. : உழவர் புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் ஏரின் உழாஅர். பொருள்: உழவர் - ஊழுவோர், புயல் என்னும் வாரி - மழை என்னும் அரிய வரவு, வளங் குன்றிக் கால் - பயன் குன்றிய இடத்து, ஏரின் உழா அர் - ஏர் கொண்டு உழுதலைச் செய்ய மாட்டார். கருத்து: மழையின்றேல் உழவு நடவாது. உழாஅர் - உயிரளபெடை, குன்றியக்கால், குன்றிக்கால் என இடையகரம் குறைந்தது. வாரி - வார்தலின் முதனிலைப் பகுதிப் பொருள் இறுதி நிலை இகரம் பெற்றது. வாரி என்பதை வடசொல் என்று கூறுவாரும் உளர். அவர். வார்தல், போகல், ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமை யும் செய்யும் பொருள - தொல்; உரி, 21 என்பதால் வாரி தூய தமிழ்ச் சொல்லாதல் அறியார். ஆத்திகரும் நாத்திகரும் இச்செய்யுள் உரையின் மேல் எழுப்பும் வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: அவனன்றி ஓரணுவும் அசையாதெனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டாய் என்ற தமிழ்ச் சான்றோர் மொழிக்கு மரியாதை காட்டப்பட வேண்டுமே என்பதுதான் என் கேள்வி. உரை ஆசிரியர்: அது முட்டாள்தனமான கேள்வி என்பதுதான் என் விடை. நாத்திகன்: இவ்வுரையின் கருத்தால் மக்கள் ஆற்றல் குறைத்து எடை போடப்படுகிறது. என்ன? மழை இல்லா விட்டால் உழவு நடவாது என்றால், அண்டை அயலில் உள்ள ஏரி குளங்களிலுள்ள தண்ணீரை இறைத்துக் கொள்ளலாம் அன்றோ? உரை ஆசிரியர்: மிக்க அறிவாளி! மழை இல்லையானால் அண்டை அயலில் உள்ள ஏரியிலும் குளத்திலும் மட்டும் தண்ணீர் இருக்குமோ? ஆத்திகன்: புயல் என்பதன் பொருள் என்ன? உரை ஆசிரியர்: புய்த்தல் பிறவினை, புய்தல் தன்வினை, புய்தல் - ஓரிடத்தினின்று விரைவாகப் புடை பெயர்தல் - ஆகு பெயராய் மழையை உணர்த்திற்று. இது இழிவழக்காய் பிய்த்தல் என வழங்கும். புய் என்பதின் அடியாகப் புயல் தோன்றியது. புயல் எனினும் புய்த்தல் எனினும் ஒன்றே. மழையானது விரைந்து அடிக்கும் நிலையில் அதைப் புயல் என்று சொல்ல வேண்டும். புயல் இன்றியமையாச் சொல். நாத்திகன்: புயல் என்று கூறி அமையாது புயல் என்னும் வாரி என்றது ஏன்? உரை ஆசிரியர்: விரைந்து அடிக்கும் மழையாயினும் அது வேண்டா இடத்துச் சிதறாமல் வேண்டும் வழி வருதலைக் குறிக்க வேண்டும் ஆதலின் புயலென்னும் வாரி என்றார். - குயில், கிழமை இதழ், 10.5.1960 15 கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதுஉ மெல்லா மழை. ã.kh.: கெடுப்பதூஉம் மற்று ஆங்கே கெட்டார்க்குச் சார்வு ஆய் எடுப்பதூஉம் எல்லாம் மழை. பொருள்: கெடுப்பதூஉம் - பெய்யாது உலகில் வாழ்வாரைக் கெடச் செய்வதும், மற்று ஆங்கே - அஃதன்றி அவ்விடத்து, கெட்டார்க்கு சார்வு ஆய் - அவ்வாறு கெட்டவர்க்குத் துணையாகி, எடுப்ப தூஉம் - பெய்து கைதூக்கி விடுவதும் ஆகிய, எல்லாம் மழை - அனைத்தும் மழை. கருத்து: பெய்யாது கெடுப்பதும் பெய்து வாழ்விப்பதும் மழை பெய்யா விடத்து மக்கள் கேடுறுவதும் பெய்த விடத்து நலமுறுவதும் ஆகிய மழையினதாற்றல் விளக்கியவாறு. கெடுப்பதூஉம், எடுப் பதூஉம் உயிரளபெடைகள். மற்று வினைமாற்று. இயற்கையின் கொடையாகிய மழை மக்களுக்குத் தீமை செய்யவேண்டும் என்றோ நன்மை செய்யவேண்டும் என்றோ எண்ணிப் பெய்வதும் பெய்யா தொழிவதும் செய்யாது எனினும், மழையால் மக்கள் அடையும் நலம், தீது கருதி அதைக் கெடுப்பது எடுப்பது என்கின்றார் என்பது இங்கு அறிதல் வேண்டும். இவ்வுரை மீது எழும் ஆத்திக, நாத்திகர் கேட்டலும் உரை ஆசிரியர் கிளத்தலும் வருமாறு: ஆத்திகன்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் உடையவர் கடவுள் ஒருவரே. இச்செய்யுளின்படி காத்தலும், அழித்தலும் மழையால் முடியும் என்றாகிறது. இவர் செய்துள்ள மற்றச் செய்யுளால் படைத்தலும் செய்கின்றது மழை! இது எவ்வாறு பொருந்தும்? உரை ஆசிரியர்: மழை பெய்யாவிட்டால் புல்லும் முளையாது, மழை பெய்யாவிட்டால் மக்கட்குக் கேடு உண்டாகும். மழை பெய்தால் மக்கள் அடைந்த கேடு ஒழியும் என்பதில் கடவுள் பற்றிய மறுப்பு ஏதாகிலும் உண்டா? குற்றி நட்டுத் தடுக்கி விழுகின்றீரே. நாத்திகன்: மழைகெடுக்கும் எடுக்கும் என்றுகூறி அறிவற்ற பொருளை அறிவுடைய பொருள்போல் கூறியது சரியா? அறிவில்லாத உருவங்களை அறிவுடையனவாகக் கூறுவது அறிவுக்குப் பொருந்தாத உருவ வணக்கத்தை ஆதரிப்பதாகாதா? உரை ஆசிரியர்: ஆகாது. பேசாத ஒன்றைப் பேசுவது போலவும் வராத ஒன்றை வருவது போலவும் அறியாத ஒன்றை அறிந்தது போலவும் வைத்துச் செய்யுள் செய்வதென்பது கவிமரபு! - குயில், கிழமை இதழ், 31.5.1960 16 விசும்பிற் றுளிவீழி னல்லால்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது. பி.மா : பசுமைபுல் தலை விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே காண்பு அரிது. பொருள்: பசுமை புல்தலை - பசும்புல்லின் தலையையும், விசும்பின் துளி வீழின் அல்லால் - மழையின் துளி மண்ணில் வீழ்ந்தா லல்லாது, மற்று - வேறு வகையால், ஆங்கே - அவ்விடத்து, காண்பு அரிது - காண முடியாது. கருத்து: மழையின்றேல் ஓரறிவுயிராகிய பசும்புல்லும் உண்டாதல் இல்லை. விசும்பு-மழை, ஆகுபெயர். மற்று - வினைமாற்று, தலையும் என வரவேண்டியது தலை என நின்றது. இழிவு சிறப்பு உம்மை தொக்கது. மக்கள் கெடுதலேயன்றி ஓரறிவுயிராகிய புல்லும் தலை யெடாது என்பார், பசும்புல் தலை காண் பரிது என்றார். ஓரறிவுயிரைக் குறித்தார் எனினும் ஈரறிவுயிர் முதலியவை களையும் கொள்ள வேண்டும். பசுமை புல்-பசும்புல். பசுமையின் ஈறுகெட்டு இனமிக்கது. விசும்பின் ஐந்தாவதின் இன் உருபு நீங்கற் பொருளில் வந்தது. காண்பு தொழிற் பெயர். பு, தொழிற் பெயர் இறுதி நிலை. அரிது, இன்மை குறித்தது. இவ்வுரைமீது எழும் ஆத்திக நாத்திகர் கேட்டலும் உரை ஆசிரியர் கிளத்தலும் வருமாறு: ஆத்திகன்: விசும்பு மழையா? உரை ஆசிரியர்: விசும்பு ஆகு பெயராய் மழையைக் குறிக்கும் என்று கூறியுள்ளேன். ஆத்திகன்: விண் என்பதும் மழைதான் எனப்பட்டது. எனவே மேலே மழைக்கு ஆதாரமானதோர் நீர் இருப்பு உண்டோ? உரை ஆசிரியர்: உண்டு. ஆத்திகன்: அது யாரால் உண்டாக்கப்பட்டது? உரை ஆசிரியர்: ஒன்று உண்டு என்றால் அதை ஆக்கிய பொருள் ஒன்று இருக்கவேண்டும் என்பது உம் கருத்தா? ஆத்திகன்: வேறென்ன? உரை ஆசிரியர்: சரி, ஒரு பொருள் உண்டு என்றால் அதை ஆக்கிய ஒரு பொருள் இருக்க வேண்டும். ஆக்கிய பொருள் ஒன்று உண்டு என்றால் அதை ஆக்கிய பொருள் ஒன்று இருக்க வேண்டுமே! நீர் கேட்டதும் ஒரு கேள்வியா? உலகு என்றுமிருப்பது; அவ் வுலகின் ஒரு பகுதி விண். ஆத்திகன்: விண் உலகின் ஒரு பகுதியா? உரை ஆசிரியர்: ஆம்! உலகம் என்பது நீயிருக்கும் தரை மட்டுமன்று. அதைச் சுற்றியுள்ள வெளியும் இவ்வுலகைச் சேர்ந்ததே. நாத்திகன்: பசும்புல் தலை என்றால், பசும்புல் முளைக்க ஆதாரமான பசும்புல் மூலம் என்பது பொருளல்லவா? உரை ஆசிரியர்: அவ்வாறும் கொள்க. - குயில், கிழமை இதழ், 7. 6. 1960 17 நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின். ã.kh.: எழிலி தடிந்து தான் நல்காது ஆகிவிடின் நெடுமை கடலும் தன் நீர்மை குன்றும். பொருள்: எழிலி தான் - முகிலானது, தடிந்து - மின்னி, நல்காது ஆகிவிடின் - மழை தராதாகிவிட்டால், நெடுமை கடலும்- நீரான் மிக்க கடலும், தன் நீர்மை - தனது நீரின் மிகுதித் தன்மை, குன்றும் - குறையும். கருத்து: மழையின்றேல் பெருங்கடலும் தன் மிகுதித் தன்மை குறையும். நீர்மை- நீரின் தன்மை. அஃதாவது நீரினது மிகுதித் தன்மை. நீரின் இயல்பு குறைதலாவது, அதன் கண்ணுள்ள நீர் வாழுயிர்கள் பிறவாமையும், மணி முதலாயினபடாமையுமாம் என்று பொருள் கூறுவாரும் உளர். அது பொருந்தாது. நீரின் தன்மை பற்றியே இங்குப் பேச்சே தவிர அதற்கு அப்பாற்பட்ட உயிர் முதலியன பற்றியன்று. நீர் மிகுதித் தன்மை குறையாவிடில், உயிர், மணி குறைதலில்லை என்பதையும் குறிக்கவே, நீரின் மிகுதி அளவில் குறையும் என்றார். தான் - அசை, தடிதல் - மின்னுதல், எழிலிக்கு இயற்கை அடையாய் நின்றது. கடலே நீர் முதன்மையன்று. கடலுக்கு நீர் முதன்மை மழை என்றதோர் உண்மையை இப்பாட்டால் விளக்கினார். இவ்வுரை மீது எழும் ஆத்திகர் நாத்திகர் கேட்டலும் உரை ஆசிரியர் கிளத்தலும் வருமாறு: நாத்திகன்: கடலோ நெடிது, நிறைத் தண்ணீர் இருக்கின்றது. அப்படிப் பட்ட பெருநீரும், மழை பெய்யாவிட்டால், அளவிற் குறையும் என்பது இக் குறட்பாவின் கருத்து. மழை பெய்யாவிட்டால் கடல் நீரே இல்லாமற் போய்விடும் என வள்ளுவர் கருதினார். இது கொண்டு எண்ணினால், கடல்கட்கும் ஆதாரமாக விண்ணில் ஒரு பெரு வெள்ளம் இருக்கிறது என்றாகிறது. அதனால், நாம் வாழும் இந்த உலகம் பெருவெள்ளத்தை வைத்திருக்கும் விண்ணால் வாழ்கின்றது என்றாகிறது. சில சமைய நூல்கள் விண்ணுலகு நாம் பெறத்தக்க பேறு, மண்ணுலகில் பிறந்ததன் பயன் விண்ணுலகை அடைவதே என்று கூறுவதில் உண்மை யிருக்கின்றதாகக் கொள்ள வேண்டுமா? உரை ஆசிரியர்: விண்ணுலகு என ஒன்றில்லை. அது ஆத்திகர் விட்ட கரடிதான். ஆனால், உலகுக்குச் சொந்தமான- உலகோர் பிரித்து எண்ணப்படாத ஒரு மண்டிலம் இருக்கிறது. அங்குக் கடலுக் காதாரமான வெள்ள இருப்பு இருக்கலாம் - இருக்கின்றது. அப்படி யிருந்தால், அதைத் தேடி வைத்திருப்பது விண்ணுலகா? இல்லை உலகந்தானே? ஆதலால், இல்லாத விண்ணுலகை மக்கள் பெறத் தக்கது என்பது பொய்யின்மேல் அடித்த ஆணி! நாத்திகன்: அப்படி ஒரு வெள்ளக்காடு இருக்கத்தான்வேண்டும் என்பதற்கு ஆதாரம் என்ன? அந்த வெள்ளக் காட்டுக்குக் காரணம் கடவுள் என்பதை மறுப்பதெப்படி? உரை ஆசிரியர்: நீர் கேட்ட இரண்டில் கடைசிக் கேள்விக்குப் பன்முறை பதில் சொல்லப்பட்டாய்விட்டது. கடலுக்காதாரமான வெள்ளக்காடு உண்டு என்பதற்குத் திருவள்ளுவரின் இத்திருக்குறள் சான்று. மற்றொன்று எண்ணிப் பார்க்கவேண்டும். இவ் வுலகு, நீர், நெருப்பு, காற்று, மண்,வெளி என்ற ஐந்து பருப் பொருள்களால் ஆனது. அவற்றில் நீர் என்னும் பருப்பொருள் கடல் மட்டுமல்ல; உம் வீட்டு அண்டாவில் நிறைந்துள்ள நீர் மட்டுமல்ல என்பதை நீவிர் உற்றுணரவேண்டும். கடலுக்கு அப்பாலாகவும் நீர் உண்டு என்பதை எவராலும் மறுக்கமுடியாது. - குயில், கிழமை இதழ், 14. 6. 1960 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. ã.kh.: வான் ஒர்க்கும் ஈண்டு வானம் வறக்குமேல் சிறப்பொடு பூசனை செல்லாது. பொருள்: வான் ஓர்க்கும் - மேல் நோக்கி (மழை வரவை) ஆராயும், ஈண்டு - இவ்வுலக மக்கட்கு, வானம் - மழை, வறக்கு மேல் - பெய்யாவிடில், சிறப்பொடு- விழாவுடன் கூடிய, பூசனை- பூசனையானது, செல்லாது - நடவாது. கருத்து: மழையின்றேல் விழா முதலிய நடைபெறமாட்டா. சிறப்பொடு பூசனை என்பதை, இக்காலத்தில், கல்லையும் செம்பையும் காட்டி மடமையையும், கலகத்தையும் வளர்த்து வரும் கோயில்கள் என்பவற்றில் நடைபெறும் விழாவுடன் கூடிய பூசனை என்று மக்கள் நினைக்கும் வண்ணம், நித்திய நைமித்தியங்கள் என்ற சொற்களைப் பயன்படுத்திக் காட்டுவார் பரிமேலழகர் தம் உரையில். சிறப்பொடு பூசனை என ஆசிரியர் சொன்னது எதை? வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்தலை ஒள்வாள் புதல்வன்கண்டு- அன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர. - தொ; புற. 5 மேற்கோள் மன்னன் புதல்வன் வாட் போரிட்டு மேம்பட்டான். அம் மேம்பாடு கண்டு மக்கள் அன்புற்றார், அதனால் அவனை நாடாளச் செய்தார். அப்போது நடக்கின்றதோர் விழா. விழா - சிறப்பு. காப்பு நூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால் கொண்மின் நாளை வரக்கடவ நாள். - தொ; புற.5. மேற்கோள் தமிழ் மறவன் தனிநின்று போராடிப் பருவுடல் நீத்துப் புகழுடன் நிறுவினான். அவனுக்கு நடுகற் சிறப்பும் பூசனையும் செய்ய நாள் குறித்தார். அஃதோர் சிறப்பொடு பூசனை, பூசனை - தூய்மை செய்தல், பூசு முதனிலை, ஐ தொழிற் பெயர் இறுதி நிலை, அன் சாரியை. அன்றுகொள் ஆபெயர்த் தாரமரில் வீழ்ந்தோற்கு இன்று கொள் பல்லான் இனமெல்லாம் - குன்றாமல் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ பீடம் வகுத்து. - தொ.புற. 5 மேற்கோள் இதுவும் அது. மற்றும் பகைவரின் ஆனிரை கவர்ந்து மீண்ட மறவர் நடத்துவது முதலிய சிறப்பொடு பூசனையையே குறித்தது இச்செய்யுள், இதை மறைக்கும் எண்ணத்தோடு கல்லிலும் செம்பிலும் கடவுளைக் காட்டும் பொல்லா நெறி குறித்ததாகப் புகல்வார் உரை, துகளுரையாம் என விடுக்க. உருவ வணக்கத்தைத் தூற்றுவாராகிய திருவள்ளுவர் அதைப் போற்றுவாரா? எண்ணிப் பார்க்க! வான் ஓர்த்தல்- மேல் நோக்கி (மழை பற்றி) ஆராய்தல் என்று பொருள் கூறப்பட்டது. ஓர்த்தல் - ஆராய்தல். ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் (குறள் 357) என இவ்வாசிரியரே கூறியமை காண்க. ஓர்க்கும் - உம்மீற்றுப் பெயரெச்சம், நிகழ் காலத்தது. வான் ஓர்த்தலாவது: வெள்ளி, கரும் பாம்பு, செம்பாம்பு, அறிஞன், ஆகிய கோள்களோடு மதி கூடினால் மழை உண்டாகும். ஆதலின் அக்கோள் நிலை நோக்கி ஆராய்தலாம். வைகாசித் திங்கள் மதிகுறைந்த நாலாம் நாள் பெய்யுமே யாயிற் பெருமையாம் - பெய்யாக்கால் ஏரி குளமும் எழிற்கிணறும் நீர்வற்றும் பாரில் மழையில்லை பார். இது கருதியும் மேனோக்கி ஆய்வர். வானம் - மழை, ஆகுபெயர். இக்குறட்பாவின் உரைமேல் எழும் ஆத்திகர் நாத்திகர் வினாவும், உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: பூசனை என்பது பூஜா என்ற வடசொல்லின் சிதைவல்லவா? உரை ஆசிரியர்: சொன்னவர் யார்? ஆத்திகன்: வடசொற்காரர் சொல்கின்றார்கள். உரை ஆசிரியர்: யாரிடத்தில்? ஆத்திகன்: என்னிடத்தில். உரை ஆசிரியர்: நீர் வடவரின் அடியார் என்பதைக் கருதித்தாமே? ஆத்திகன்: தமிழர் என்று கருதியே. உரை ஆசிரியர்: நீர் தமிழர் என்பது மெய்யானால் அவரைச் சும்மா விட்டனுப்பியிருக்க மாட்டீரே? ஆத்திகன்: என்ன செய்யமுடியும்? உரை ஆசிரியர்: குறைந்த அளவில் அவருக்கு விடையாவது கூறி யிருக்கலாமே? ஆத்திகன்: என்ன என்று? உரை ஆசிரியர்: எம் தமிழ்ப் புலவர்கள் பூசனை என்பது தமிழ் என்றும், மேலும் காரணப் பெயர் என்றும் கூறி விளக்கியிருக்க நீர் இப்படிப் பேசுவது தீய செயல் ஆகும் என்று. நாத்திகன்: வானை நோக்கியிருக்கும் இவ்வுலகத்தில் மழையில்லா விட்டால் ஒன்றும் நடவாது என்று மொத்தமாகக் கூறாமல் சிறப்பையும், பூசனையையும் இழுத்துப் போடுவது ஆத்திகப் போக்கையே காட்டுகின்றதல்லவா? உரை ஆசிரியர்: சிறப்பையும் பூசனையையும் திருவள்ளுவர் இழுத்துப் போட்டுத்தாம் நும் பண்டைத் தமிழக மேன்மையை உமக்குக் காட்ட எண்ணியருளினார் வள்ளுவர் என்க. - குயில், கிழமை இதழ், 21. 6. 1960 19 தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் ã.kh.: வியன் உலகம் வானம் வழங்காது எனின் தானம் தவம் இரண்டும் தங்கா. பொருள்: வியன் உலகம் - அகன்ற உலகின் கண், வானம் வழங்கா தெனின் - மழை பெய்யாவிட்டால், தானம் - தானமும், தவம் - தவமும் ஆகிய இரண்டும் - இரண்டறங்களும், தங்கா - நிலைபெறமாட்டா. கருத்து: மழையின்றேல், தானமும் தவமுமாகிய அறங்கள் நடைபெறா. தானம் - இல்லார்க்கு உள்ளார் மனமுவந்தளிப்பதோர் பண்பு. தானம் - தன்மையின் - மை இறுதி கெட்டு முதல் நீண்டு அம் இறுதி நிலைபெற்றது. பசுமை, பசு, பாசி; கொடுமை, கொடு, கோடு, கோட்டம் என்பவை போல. ஈறு போதல் இடையுகரம் இய்யாதல் ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் தன்ஒற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே - நன்; சூ. 136 என்பதால் மையீற்றுப் பண்பு வேறுபடும் வகை அறிக. தானம்: தூய தமிழ்ச்சொல். இதை வடமொழியென்று கூறுவர். இதேபோன்ற ஓசையுடைய மற்றொரு சொல் வடமொழியில் இருக்கலாம். அது இது வன்று. மற்றும், தானம் என்ற தமிழ்ச் சொல்லை வடவர் எடுத்தாண்டு மிருக்கலாம், சொல் வறுமைப்பாடு உடைய வந்தேறிகள் ஆனதால். தவம் - தவ: மிகுதிப் பொருள் தருவதோர் உரிச்சொல். அது பிறர்பால் எழும் அருள்மிகுதியைக் குறித்தது. தவ என்பது, இழி வழக்கமாக மகர இறுதிபெற்றது. எது போல வெனில், சட்ட என்ற செம்மைப் பொருட் டாவதோர் அகர ஈற்று இடைச்சொல் இழிவழக்காக மகர ஈறு பெற்றமை போல. இவ்வாறு சிவஞான போத உரையாசிரியரும் கூறினார். இதை தப என்ற வடசொல்லின் சிதைவு என்று அறியாது கூறுவாரும் உளர். உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப. - தொ; உரி.3 என்பதால் தவ என்ற சொல் மிகுதிப் பொருள் தருவது அறியப்படும். இக் குறட்பாவின் உரைமேல் எழும் ஆத்திகர், நாத்திகர் வினாவும், உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: தானமும் தவமும், அடுத்த பிறவியில் எதிர் பார்க்கப்படும் சிவபெருமானின் சீபாதம் கருதியல்லவா? உரை ஆசிரியர்: அப்படித்தான் மடத்தார் வெளியிட்ட மடவுரை வரைந்தது. அதைவிட்டு இவ்வுரையை ஊன்றிப் படிக்க! பிறந்தவன், இறந்தபின் மீண்டும் பிறப்பான் என்பதும், சிவபெருமான் என்பதும், சீபாதம் என்பதும் சமையக்கணக்கர் திரிக்கும் கயிறு. பெறத்தக்கது மெய்யுணர்வு என்றார் வள்ளுவர். நாத்திகன்: தானம் என்பதும் தவம் என்பதும் ஆத்திகர் பேச்சுக்கள் அல்லவா? உரை ஆசிரியர்: அவை ஆத்திகர் பேச்சுக்களும் அல்ல; நாத்திகர் பேச்சுக்களும் அல்ல. அவை தூய தமிழ்ப் பேச்சுக்கள். தானம் என்பது தன்மை என்ற பொருள் உடையது. அது பண்பாகு பெயராய்க் கொடைக்கு ஆயிற்று. தவம் என்பது பற்றிய விளக்கத்தையும் உரையிற் காண்க. - குயில், கிழமை இதழ், 28. 6. 1960 20 நீரின் றமையா துலகெனின் யார் யார்க்கும் வானின் றமையா தொழுக்கு ã.kh.: உலகு நீர் இன்று அமையாது எனின் யார் யார்க்கும் ஒழுக்கு வான் இன்று அமையாது. பொருள்: உலகு - உலகம், நீர் இன்று அமையாது - நீர் இன்றி நிலை பெறமுடியாது. எனின் - என்றால், ஒழுக்கு - ஒழுக்கம், யார் யார்க்கும் - எப்படிப்பட்டவர்க்கும், வான் இன்று - மழை யில்லாமல், அமையாது - நிலைபெறாது. கருத்து: மழையின்றேல் ஒழுக்கம் நிலையாது. நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் - தொ. மரபு. 89 ஆதலின் நீரின்றமையாது உலகு என்றார். வானின்று அமையா தொழுக்கு என்பதற்கு, மழையில்லாவிடில் மழை யொழுக்கு இராது என்று பொருள் கூறினார். அவர் பொருள் சிறவாமை உணர்ந்திலர். ஒழுக்கு - ஒழுக்கம் ஆதலை இவ்வாசிரியர் கூறிய. பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. - பிறனில் விழையாமை 8 என்ற பாட்டாலும் அறிக. மணக்குடவரும் இவ்வாறே பொருள் கொண்டார். உயிரினும் சிறந்ததாக ஓம்பப்படும் ஒழுக்கம் போலும் மழையும் இன்றியமையாதது எனப் பொருட் பெற்றி உணர்த்துவார், யார் யார்க்கும் வானின்றமையா தொழுக்கு என்றார். இன்று - இன்றி, எதிர் மறைக் குறிப்பு வினையெச்சம். இக்குறள் உரையின் மேல் எழும் ஆத்திகர் நாத்திகர் வினாக்களும், அவற்றிற்கு உரை ஆசிரியர் தரும் விடையும் வருமாறு: ஆத்திகன்: மழையால் ஒழுக்கம் நிலைபெற்றுவிடுமா? நீரினால் உலகு நிலை பெற்றுவிடுமா? உரை ஆசிரியர்: ஒழுக்கம் என்பது இல்லறமோ துறவறமோ பற்றி ஒழுகுவது - நடந்து கொள்வது அன்று. மழையில்லாமல் முடியுமா? ஏன் நீரில்லாமல் உலகம் நிலை பெறாதல்லவா? நீ சொல்வாய் கடவுள் இல்லாமல் எதுவும் நடக்காது என்று, சொல்லிக் கொண்டிரு! அதனால் தொல்லை என்பதெல்லாவற்றையும் விலைக்கு வாங்கு, மடத்தம்பிரான் முதலியவர்களைப் போல!ஆனால் யார் மனத்தையும் புண்ணாக்க எண்ணாது உண்மைக்கு ஒத்த வகையில் செய்யுள் செய்த வள்ளுவரிடத் தில் மட்டும் வராதே; வாலாட்டாதே. நாத்திகன்: மழை இருந்தால் வாழலாம் என்று மட்டு மன்றியமையாமல் வள்ளுவர் கடவுள் வேண்டாம் என்று கூறியிருக்கலாம். அவ்வாறு கூறாமை என்ன? உரை ஆசிரியர்: எதில் அவர் மாட்டிக் கொள்ளவில்லையோ அதையே அவர் ஒத்துக் கொள்வாரா? கடவுள் வேண்டாம் என்று கூறினால் என்ன பொருள்? கடவுள் என்பதொரு சொல்லை அவர் ஒத்துக் கொண்டதாகி விடாதா? ஆத்திகன்: இவ்வாறு செய்யுள் செய்தார் திருவள்ளுவர் என்றாலும் கடவுளின் நீர் இன்றியமையாதது. கடவுளின் வான் (மழை) இன்றி யமையாதது என்று கூறியதாகத் தானே கொள்ள வேண்டும்? உரை ஆசிரியர்: நாத்திகன் நவிலுவான்: நீரால் உலகமையும், மழையால் ஒழுக்கமையும், கடவுள் இல்லை என்று வள்ளுவர் சொன்னதாகவே கொள்ள வேண்டும் என்பான். எவனும் வள்ளுவரிடம் மாட்டிக்கொண்டு தொல்லையடைய வேண்டாம். ஆத்திகனோ நாத்தகனோ மனிதர்போல் நடந்துகொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் கொள்கை என்க. - குயில், கிழமை இதழ், 5.7.1960 அதிகாரம் - 3 நீத்தார் பெருமை அஃதாவது துறந்தாரது பெருமை கூறுவது. மழையால் நிலை நின்றனர் உலக மக்கள்; அது போதியதன்று. அவர்கள் அறம் உணர்ந்து ஒழுகல் வேண்டும். அதற்கு அறநூல் வேண்டுமன்றோ? அஃது இயற்றி யருளும் ஆற்றல் இல்லந் துறந்தார்க்கே அமைவது, இஃது அறம், இஃது மறம் என்று துணிவதோர் துணிவு அவர்க்கே உண்டாதலின். அறப் பனுவலின் உயர்வு அதன் ஆசிரியர் ஆற்றலின் உயர்வையே பொறுத்தது ஆதலின், நீத்தாரது நூற் பெருமை எனப்படாமல் நீத்தார் பெருமை என்றே கூறப்பட்டது. 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு. ã.kh.: ஒழுக்கத்து விழுப்பத்து நீத்தார் பெருமை வேண்டும் பனுவல் துணிவு. பொருள்: ஒழுக்கத்து - உலக மக்களின் ஒழுக்கத்து பொருட்டும், விழுப்பத்து - மேன்மையின் பொருட்டும், நீத்தார் பெருமை - இல்லந்துறந்த தமிழ்ச் சான்றோரின் பெருமை என்னெனில், வேண்டும் - வேண்டப்படுகின்ற, பனுவல் துணிவு - நூலில் இது அறம், இது மறம் என்று அவர் துணிந்த துணிவேயாகும். கருத்து: நீத்தார் பெருமை, அவரின் பனுவற்றுணிவால் ஏற்பட்டது. ஒழுக்கத்து, விழுப்பத்து என்பவற்றின் அத்துச்சாரியைகள் நான்கனுருபின் பொருள் தந்து நின்றன. இவ்வாறே பொருள் கொண்டார் மணக்குடவரும். வேண்டும் பெயரெச்சம்; மக்கள் விரும்புகின்ற என்ற பொருள். இதில் மக்கள் அவாய் நிலையாற் கொள்க. நீத்தார் - துறந்தார். துறத்தல் இருவகை: இல்லந் துறத்தல், உள்ளந் துறத்தல். இவ்வாறு பட்டினத்து அடிகளும் பகர்ந்தார். அது வருமாறு: அறந்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான் அவனிற் சதகோடியுள்ளத் துறவுடையான் ... ... இல்லத்துறவாவது: மனை மக்களின் நலத்தையும், தன் நலத்தையும் துறந்து மக்கள்பால் அருள் உள்ளம் துறவாத நிலை. இதுவே இங்குக் கூறிய நீத்தார் நிலை என்க. மற்ற உள்ளத் துறவு உலகுக்குப் பயன்படாது. அவர் அறப்பனுவல் செய்வது யாங்ஙனம்? உள்ளத்தையும் துறந்த நிலை செயலுக்கு ஏற்றதாகாது. இக்குறள் உரையின் மேல் எழும் ஆத்திகர், நாத்திகர் வினாக்களும் அவற்றிற்கு உரை ஆசிரியர் தரும் விடையும் வருமாறு: நாத்திகன்: ஆத்திகத்தில் ஒழுக்கம் காண முடியுமா? உரை ஆசிரியர்: நாத்திகத்திலும் ஒழுக்கம் இருக்க முடியுமா? ஆனால் திருவள்ளுவரால் ஒழுக்கம் இன்னதென்று நல்ல முறையில் கூறப்பட்டிருப்பது காண்க. ஆத்திகன்: மக்களின் ஒழுக்கத்திற்காகவும் மேன்மைக்காகவும் இல்லத் துறவை மேற்கொண்டவர்கள், ஒழுக்கத்தின் மேன்மை இலக்கணங்களை எவரிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்? நாத்திகன்: எவர் உண்மையாக இல்லத் துறவு பூண்டார்களோ அவர்கள் மற்றொருவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. அவர்கள் அறியாதது ஒன்றுமில்லை; வள்ளுவரைப் பார்க்க. - குயில், கிழமை இதழ், 12.07.1960 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. பி. : துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று. பொருள்: துறந்தார் - அறப்பனுவல் அருளிச் செய்யும் பொருட்டு இல்லந் துறந்த தமிழ்ச் சான்றோரது, பெருமை - பெருமைக்கு, துணைக் கூறின் - நிகர் இவ்வளவு என்று கூறப் புகுந்தால், அது வையத்து இறந்தாரை - இன்று வரைக்கும் உலகத்தில் இறந்தாரின் தொகையை - எண்ணிக்கொண்டு அற்று - கணக் கெடுத்தால் எப்படி முடியாதோ அப்படிப்போல் முடியாது போகும். கருத்து: இன்றுவரை இறந்தார் தொகையை எண்ண முடியாதது போல், துறந்தார் பெருமையையும் இவ்வளவென்று கணக்கிட்டுச் சொல்ல இயலாது. துறந்தார் - இறந்த கால வினையாலணையும் பெயர். ஆறனுருபு தொக்கது. பெருமை - நான்காவதன் தொகை, துணைக்கூறல் ஒரு சொற்றன் மையது. கொண்டு, கொண்டால் என்பதன் திரிபு. அற்று- அத் தன்மைத்து; குறிப்பு வினைமுற்று. ஒரு நாளில் அன்றி எந்நாளிலும் அமைய இது பொருள் என அடைதற்கு அடிப்படையான ஒழுகலாறு களைத் துணிவுற்று இயற்றியருளினார் ஆதலின் அவர் பெருமை அளவிட முடியாதாயிற்று. இச் செய்யுள் உரையின் மேல் எழும் ஆத்திக, நாத்திக வினாவும், உரை ஆசிரியர் விடையும் வருமாறு: நாத்திகன்: துறந்தார் என்று நடித்துத் துணிந்து கொள்ளையடிக்கும் ஆட்களைப் பார்த்து வருகின்றோம். சிவசிவா என்பார்கள்; கோவிந்தா என்பார்கள்; சைவத்தை நிலைநாட்டுகின்றோம் என்பார்கள்; வைணவத்தைப் பரப்புகின்றோம் என்பார்கள். இவர்கட்குப் பெருமை ஒரு கேடா? உரை ஆசிரியர்: வள்ளுவர் சொல்லும் துறந்தார் சங்கராச்சாரியும் அல்லர்; தருமபுரத்தாரும் அல்லர். நாத்திகன்: வேறு? உரை ஆசிரியர்: அவர் குறித்தது துறந்தாரை! நாத்திகன்: அப்படியானால் சரி. ஆத்திகன்: சிவனடியாரைக் கண்டால் சிவனையே கண்டதாக மகிழ்ந்து அவர்க்கு மனநிறைவு செய்யவேண்டும். நாமக்கட்டி நெற்றியைக் கண்டால் நாராயணனையே கண்டதாக மகிழ்ந்து ஆடவேண்டும் என்பதை இச்செய்யுள் நமக்கு நினைவூட்டவில்லையா? உரை ஆசிரியர்: ஆமாம் நினைவூட்டுகின்றது. அவர்களைக் கண்டால் உடனே ஊர்க்காவலர்க்கு அறிவித்துவிடவேண்டும். அவர்கள் முடிச்சவிழ்த்திருந்தால் பிடித்துக் கொள்வார்கள். பிச்சை எடுப்பது கண்டால் பிச்சைக்கார விடுதிக்கேனும் சாவடிக்கேனும் அனுப்பு வார்கள். ஆத்திகன்: சங்கராச்சாரியைக் கூடவா? உரை ஆசிரியர்: அவர் பாட்டனைக்கூட. நாத்திகன்: இறந்தாரை எண்ணிக் கொள்வது அருமையா? உரை ஆசிரியர்: இறந்தார் இத்தனை பேர் என்று கணக்குக் காட்டுவது மட்டுமன்று, இவ்வளவு தொகையிருக்கும் என்று மனத்தால் அளப்பதும் முடியாது என்றபடி. - குயில், கிழமை இதழ், 26.07.1960 23 இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. ã.kh.: இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை உலகு பிறங்கிற்று. பொருள்: இருமை - அறம் பாவம் என்னும் இரண்டின், வகைதெரிந்து - கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து, ஈண்டு - இல்லறத்தினின்று, அறம் பூண்டார் - துறவறத்தை மேற்கொண்டாராகிய தமிழ்ச் சான்றோரின், பெருமை - பெருமையே, உலகு - உலகில், பிறங்கிற்று - மேன்மையுற்றது. கருத்து: செயற்கருஞ்செயல் என்பது மக்கள் கடைத்தேற ஒருவன் இல்லந்துறத்தல் என்பதேயாகும். இருமை - இருமைத்தன்மை. இரண்டு என்றபடி. இவ்வாறே மூன்றைக் குறிக்க மும்மை எனவரும். இருமைத் தன்மை என்பதன் மரூஉவே இருமை என்க. பாவம் - வடமொழியன்று; தூய தமிழ்ச் சொல். மனம் தன்னிலை திரியாது நிற்றலே பொருள். அஃது பொருள்களின் மேற்சென்று பரவுதல் மனக்கோட்டம். பர - பரவுதல் முதனிலை. அம்தொழிற் பெயர் இறுதி நிலை. அறம் என்பதன் எதிர்மொழி மறம் அன்று, பாவம் என்பதேயாகும். அது பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி என்றதனாலும் அறிக. இச்செய்யுள் உரையின்மேல் எழும் ஆத்திக, நாத்திக வினாவும், உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: இருமை என்பதற்குப் பரிமேலழகர் பிறப்பு, வீடு என்று பொருள் கொண்டிருக்க நீவிர் அறம் பாவம் என்று பொருள் கூறியதென்ன? உரை ஆசிரியர்: பரிமேலழகர் பிறப்பு, வீடு என்று பொருள் கொண்டது பொருந்தாது. பிறப்பு, வீடு என எண்ணுங்கால் நடுவில் இருப்பு (வாழ்க்கை) என்பதும் எழுவதால் அறம் பாவம் என்று எண்ணும் போது இடையில் எதுவும் விடப்படவில்லை. நாத்திகன்: அறம் என்றால் முற்பிறப்பில் செய்ததா? பாவம் என்பதும் அப்படித்தானா? உரை ஆசிரியர்: முற்பிறப்புக் கேள்வி எழுப்பப் படுவதே தேவை யில்லை. பிறந்துள்ளவன் இதற்குமுன் பிறந்தான் என்பது பற்றியும், இனியும் பிறப்பான் என்பது பற்றியும் திருவள்ளுவர் ஒன்றுமே சொன்னதில்லை. இதை மேலே விளக்கப்படும் முற் பிறப்புப் பிற் பிறப்புப் பற்றி திருவள்ளுவர் கூறியுள்ளதுபோல் பரிமேலழகர் உரையில் தோன்றுகின்றதென்றால் அது பரிமேலழகர் வேலைப்பாடு என்க. நாத்திகன்: இல்லத்தினின்று துறவறத்தை அடைந்தவர் என்று பொருள் கூறினீர்கள் அஃதென்ன? உரை ஆசிரியர்: அவர்கள் இல்லத் துறவிகள் என்பதை அறிவித்தற் பொருட்டு! - குயில், கிழமை இதழ், 2. 8. 1960 24 உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து. ã.kh.: உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வைப்புக்கு ஓர்வித்து வரன் என்னும். பொருள்: உரன் - அறிவு, என்னும் - என்கின்ற, தோட்டியான் - தோட்டிக் கருவியால், ஓர் ஐந்தும் - ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகளையும், காப்பான் - அவற்றின் புலன்கள் மேல் செல்ல ஒட்டாமற் காக்கவல்ல இல்லத் துறவியானவன், ஓர்வித்து - தான் கண்டவாறு உண்மை பிறரையும் உணரும்படிசெய்து, வைப்புக்கு - உலகினர்க்கு, வரன் என்னும் - இதுவே பெறத்தக்க இன்பப் பேறு என்று அருளிச் செய்து வலியுறுத்துவான். கருத்து: இல்லத் துறவுடையான் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வுலகம் என்று எண்ணித் தொண்டு செய்வான். என்னும் - செய்யும் என்னும் முற்று. இங்கு ஆண்பாலுக்கு வந்தது. காப்பான் எழுவாய், என்னும் பயனில்லை. வரன் - வரம் என்பதன் திரிபு, வியன் - அகன் என்பவற்றிற்போல், வியல் என்கிளவி அகலப் பொருட்டே. (தொல். சொல் - 364) என்ற நூற்பா வுரையில் இது வியன் தானை விறல் வேந்தே (புறம் 38:4) எனத் திரிந்தும் நிற்கும் என்றது இங்குக் கருத்தக்கது. வரன் என்பதன் பொருள் என்னெனில் கைவரல் என்பது. இதை வடவர் சித்தி என்பர். ஈண்டு இன்பப்பேறு எனப் பொருள் கூறப்பட்டது. ஓர்வித்தல் - ஓர்தல் என்பதன் பிறவினை. தோட்டி - யானை ஓட்டுவதோர் கருவி. இதை வடவர் அங்குசம் என்பர். உள்ளத் துறவுடையான் எல்லா வற்றையும் துறந்தவன், அவன் இன்பமெனக் கொண்டதுதானே ஆனதோர் நிலை என்பர் சில தத்துவ நூலுடையார். இல்லந்துறந்தார் மன அறிவுடன் உலக முன்னேற்றத்தின் பொருட்டுத் தொண்டு செய்வதே இன்பமெனக் கொண்டவன் என்ற அரிய உண்மையை விளக்கவந்தது இந்தக் குறட்பா என உணர்தல் வேண்டும். இச்செய்யுள் உரையின்மேல் எழும் ஆத்திக, நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: உரன் என்பது பற்றி அறிய வேண்டியதென்ன? உரை ஆசிரியர்: உரம் என்பதன் போலியே, உரன். அதை மொழி இறுதிப் போலி என்க. மரம் - மரன், திறம் - திறன் முதலியவும் அது. நாத்திகன்: வரம் என்பது வரன் ஆயிற்று என்றீர். நன்று - வரம் என்பது கடவுள் கொடை என்று கூறுகிறார்கள். அதை வள்ளுவர் ஏன் வற்புறுத்த வேண்டும்? உரை ஆசிரியர்: ஆத்திகர் தத்தம் மதத்தையே சேர்ந்தவை உலகமும் உலகப் பொருள்களும் என்று காட்டுவர். அன்றியும் அயல் மதத்தவர்க்கு அவற்றின்மேல் எவ்வுரிமையும் இல்லை என்றும் மறுப்பர். தமிழ்ச் சொற்களுக்குத் தம் எண்ணம் போன போக்கில் காரணம் கற்பிப்பர். அதுபற்றித் திருவள்ளுவரிடமா வாலாட்டு வது! அவர் மதங் கடந்தவர் அல்லரோ? வரம் - வா என்பதன் அடியாகப் பிறந்த - வரவு - அரிய வரவு என்ற பொருளுடைய தான தமிழ்க் காரணப் பெயர் என்று மனதுள் பதிக்க. ஆத்திகன்: ஓர் வித்து? உரை ஆசிரியர்: உணர்வித்து, உணரும்படி செய்து. ஆத்திகன்: உணரும்படி செய்து பெறத்தக்க பேறு என்பான் துறவி என்பதில் உணரும்படி என்றால் எதை? உரை ஆசிரியர்: வரன் என்பதை! ஆத்திகன்: அதை அல்லவா முதலில் சொல்லியிருக்க வேண்டும்? உரை ஆசிரியர்: உணரும்படி செய்தலை முதலில் வைத்தது விரைவை உணர்த்த. இதுதான் பெறத்தக்கது என்பதை உணர்வில் ஏறும்படி விரைந்து செய்து என்றபடி. - குயில், கிழமை இதழ், 09.08.1960 25 ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி. பி.மா: ஐந்து அவித்தான் ஆற்றல் சாலும் கரி அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே? பொருள்: ஐந்து - பொறிகள் ஐந்தையும், அவித்தான் - புலன்களின் மேற்செல்லவொட்டாமல் அடக்கிய தமிழத் துறவியினது, ஆற்றல் - அறப்பனுவலுக்கு, சாலுங்கரி - போதிய சான்று, அகல் விசும்புளார் கோமான் இந்திரனே - அகன்ற விசும்பில் உள்ள வரின் கோமானாகிய இந்திரனாற் செய்யப் பெற்றதென்னும் ஐந்திர நூலா? இல்லை. கருத்து: தமிழ் நூற்களுக்கு வடநூல் முதனூலன்று. ஆற்றல் என்றால் ஆற்றலால் விளைந்த அறப்பனுவலை இவ்வாறு ஆனது தொழிலாகு பெயர். இந்திரன் என்றது இந்திரனாற் செய்யப் பெற்றதாய் உரைக்கும் ஐந்திரம் என்னும் நூலை. இவ்வாறு ஆனது ஆக்கியோன் ஆகு பெயர்: திருவள்ளுவர் படித்தான் என்பதில் திருவள்ளுவர் அருளிய திருக்குறளுக்கு ஆனது போல். அகல் விசும்புளார் கோமான் என்றது இந்திரன் என்ற பெயருக்கு அடை. இவ்வாறு அகல் விசும்புளார் கோமான் என்று அடை கொடுத்தார் எனின், இந்திரன் ஒருவன் இருந்தான் என்பதையும் ஆசிரியர் ஒப்பினார் என்றும், அவ்வாறு ஒப்பவே, ஐந்திர நூல் தமிழ் நூற்களின் முதல் நூலாகும் தகுதியையும் ஒப்பத்தான் நேரும் என்றும் பலவாறு எண்ணியிழுக்கடைதல் வேண்டாம். வண்தமிழ் நாட்டின் கண் வந்தேறிகள் தம்மை உயர்த்திக் காட்டப் பொய்ந்நூற்கள் பல புனைந்தனர். அவ்வாறு புனைந்த பொய் நூற் கருத்துக்களை மெய்யென பரப்பி வந்தனர். அவற்றைத் தமிழர் நம்பித் தம் ஒழுக்கத்திற் பிறழலாகாதன்றோ? அது பற்றியே திருவள்ளுவர் இந்நூலில் பெரும்பான்மை யிடங்களில் தமிழர்க்கு விழிப்பை ஆக்கி மீட்கத் திருவுளங் கொண்டார் என்பதை மறக்க லாகாது. பின்னை ஏன் அவ்வாறு அடை தந்தார் எனின், நூல் செய்வார் அந்நூலைச் செய்து செல்வதில் எழுவகை முறைகளை மேற்கொள்ளு வார்கள். அவை வருமாறு: எழுவகை மதமே 1. உடன்படல், 2. மறுத்தல், 3. பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவே, 4. தாஅன் நாட்டித் தனாஅது நிறுப்பே, 5. இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவே, 6. பிறர்நூற் குற்றங் காட்டல், 7. பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே. (- நன்னூல் சூ. 11) இவற்றில் பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே என்பது என்னவெனில், பிறர் கொள்கையில் ஒருபுடை மேற்கொண்டு பின்பு அது முழுதும் மறுத்தொழித்தல் என்க. இக்கொள்கை கொண்டே ஆசிரியர் அதை எடுத்தார். நஞ்சு நிறைந்த குடத்தைக் கையில் வாங்கித் தான் மண்ணிற் புதைக்க வேண்டும்; வாங்கிச் சுமப்பதுகொண்டே அதை அவன் அருந்தினதாக எண்ணிவிடுதல் கூடாதன்றோ! வடவர் கதைப்பது போல் இந்திரன் ஒருவன் இருந்தானாயினும் ஆகுக. அவனும் தேவர் தலைவனே ஆயினும் ஆகுக. ஐந்தவித்த அறத் தமிழர் ஆக்கிய நூலுக்கு ஐந்தவியாது அயன் மாதர் கற்பவித்த அறமிலான் இந்திரனின் ஐந்திரம் முதனூலாகாது என்பார், அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங்கரி என்றார். இந்திரனே என்பதற்கு இந்திரனா என்பது பொருள். ஏ வினா எதிர்மறைப் பொருட்டு, கரி - உண்மை, காரணம் கரு முதனிலை இ இறுதினிலை. இச்செய்யுள் உரையின்மேல் எழும் ஆத்திக, நாத்திக வினாவும், உரையாசிரியன் விடையும் வருமாறு: ஆத்திகன்: அகல் விசும்பு உளார் கோமான் என்று இந்திரனைச் சிறப்பித்தார் வள்ளுவர். ஆதலால் இந்திரனை ஆதரிக்கின்றார் அல்லரோ? உரை ஆசிரியர்: இந்திரனைப் பற்றித் தமிழரின் எதிரிகள் அவ்வாறு சொல்லித் திரிவதையே வள்ளுவர் சொன்னார். தமிழர் களிடையே அந்த இந்திரன் கதை புகுந்துவிட்டது. அதை அப்படியே சொல்லிக் காட்டித்தானே மறுக்கவேண்டும்? அடையோடு சொல்லாவிட்டால் வேறு இந்திரனையும் குறித்து விடுமன்றோ? நரேந்திரன் முதலிய பல இந்திரர்கள் பெயர்கள் உலவுகின்றதையும் நோக்குக. ஆத்திகன்: கரி வடசொல் என்கிறார்களே? உரை ஆசிரியர்: கரு என்ற தமிழ்ச் சொல் கரு + இ = முற்றும் அற்று ஒரோ வழி என்ற நன்னூல் சட்டத்தால் கரி எனப் புணர்ந்தது. கரு முற்றியலுகரம். அதன் முன் இகர உயிர் வந்தது. இகரம் பெயர் இறுதிநிலை. எனவே அது தூய தமிழ்க் காரணப் பெயர். சொல்லு வார்கள் இது வடசொல் என்று. அவர்கள் எதைத்தான் தமிழ்ச் சொல் என்று சொல்லுகிறார்கள்! வீட்டிற்குள் புகுந்து பொருளைத் திருட வந்த ஒரு கூட்டம் தனக்கு ஆளவந்தார் ஒத்திருப்பது எண்ணி, வீடே என்னுடையது என்றுதானே சொல்லும்! - குயில், கிழமை இதழ், 16.8.1960 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். ã.kh.: பெரியர் செயற்கு அரிய செய்வார், சிறியர் செயற்கு அரிய செய்கலா தார். பொருள்: பெரியர் - தமிழத் துறவிகள், செயற்கு அரிய செய்வார் - பிறர் செய்தற்கு அரியவான செயல்களைச் செய்வார்கள். சிறியர் - அறிவில்லாதவர், செயற்கு அரிய செய்கலாதார் - செய்தற்கு அரிய செயல்கள் செய்யமாட்டார். கருத்து: பெரியர் என்றது தமிழத் துறவிகளை. அவர் செயற்கரிய செய்தலாவது, தன்னல நீத்தலும் பிறர் நலம் காத்தலும். சிறியர் என்றது அறிவிலாதாரை - வந்தேறிகளை - உயிர்கள் மாட்டுச் செந்தண்மை இல்லாதவரை. இதுவும், அறப் பனுவல் செய்த துறந்தாரை உட்கொண்டே சொல்லி அவர் அருமை கூறியவாறென்க. இச்செய்யுள் உரையின்மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும், உரை ஆசிரியர் விடையும் வருமாறு: நாத்திகன்: பெரியர் என்றது எப்படித் தமிழத் துறவிகளைக் குறிக்கும்? உரை ஆசிரியர்: அதிகாரத்தால்! நாத்திகன்: துறவிகளிலும் தமிழத் துறவிகளைக் குறிக்கும் என்பது எப்படி? உரை ஆசிரியர்: தமிழகத்தில் தமிழரால் தமிழில் சொல்லியுள்ளது ஆங்கிலத் துறவியையா குறிக்கும்? அல்லது ஆரியத் துறவியையா குறிக்கும்? ஆத்திகன்: செயற்கரிய செய்தல், யோகம் முதலிய செய்து கடவுளை அடைதல் அல்லவா? உரை ஆசிரியர்: இவ்வாறு திருவள்ளுவர் கருதினமைக்குச் சான்று ஒன்றையும் காணோம். பிறர் நலம் கருதி இல்லம் துறத்தலும் மக்களின் மேன்மைக்கும் ஒழுக்கத்திற்கும் உழைத்தலும் அவர்களின் நோக்கம் என்பதற்கு இந்த அதிகாரம் சான்று. ஆத்திகன்: செயற்கரிய செய்யாமை என்பது என்ன? உரை ஆசிரியர்: மதத்தையும், சாதியையும் வற்புறுத்தும் செக்கு மாடுகள் செயற்கரிய செய்யாதவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று கூறிய அருஞ் செயலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய அருஞ் செயலும் அவர்கள் செய்யாதவர்தாமே! - குயில், கிழமை இதழ், 23.8.1960 27 சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. ã.kh.: உலகு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே. பொருள்: உலகு - உலகமானது, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும், என்ற, ஐந்தின் - ஐந்து நுண் பொருள்களின், வகை - கூறு பாட்டை, தெரிவான் கட்டே - ஆராய்ந்துணர்ந்தவன் கண்ணதே. கருத்து: மெய்யுணர்வுடையார்க்கே உலகின் உண்மை காணல் கூடும். பகவன் என்பது மெய்யுணர்வின் முதன்மை என்பது முன்னே விளக்கப்பட்டது. அம்மெய்யுணர்வைப் பெற்றவரே அப்பகவனை அடைந்தவர் என்க. மெய்யுணர்வு பெற்ற நிலையே வீடு என்னும் எண்ணூற் கொள்கை இங்குக் கருதத் தக்கது. எல்லாம் இருபத்தைந்து தத்துவங்களில் அடங்கின என எண்ணூல் கூறுகின்ற அவ்விருபத்தைந்தையே ஆசிரியர் இங்குச் சுவை முதலி யவும் அவற்றின் வகையும் எனச் சுருங்கக் கூறினார். இப் பாட்டுக்குப் பரிமேலழகரும் உரை கூறுகையில் இது சாங்கியநூ (எண்ணூ)லின் அடிப்படையில் அமைந்ததான உண்மையை ஒப்புகிறார். எண்ணூல் விளக்கம் தத்துவம் 1 : ஆதி (மூலப்பகுதி) இது இன்னபடி என்று ஒருவராலும் அறியப்படாதது. காமம், வெகுளி, மயக்கம் என்ற முப்பண்புகளினாயது. மனத்திற்கு விளங்காதது. எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடமானது. தனக்கொரு பெரிது இல்லாதது. தத்துவம் 2 : அறிவு (புத்தி) இது ஆதி (மூலப்பகுதி) யினின்று தோன்றியது. தத்துவம் 3 : வெளி (ஆகாயம்) இது அறிவினின்று (புத்தி) தோன்றியது. தத்துவம் 4 : காற்று (வாயு) இது வெளியினின்று தோன்றியது. தத்துவம் 5 : நெருப்பு (தேயு) இது காற்றினின்று தோன்றியது. தத்துவம் 6 : நீர் (அப்பு) இது நெருப்பினின்று தோன்றியது. தத்துவம் 7 : மண் (பிரிதிவி) இது நீரினின்று தோன்றியது. தத்துவம் 8 : மனம் இது மண் முதலியவற்றின் கூட்டத்தினின்று தோன்றியது. தத்துவம் 9 : முனைப்பு (ஆங்காரம்) இது மனத்தினின்று தோன்றியது. தத்துவம் 10 : ஒலி இது வெளியினின்று தோன்றியது. தத்துவம் 11 : சுவை இது நீரினின்று தோன்றியது. தத்துவம் 12 : ஒளி இது தீயினின்று தோன்றியது. தத்துவம் 13 : நாற்றம் இது நிலத்தினின்று தோன்றியது. தத்துவம் 14 : ஊறு இது காற்றினின்று தோன்றியது தத்துவம் 15 : செவி இது ஒலியினின்று தோன்றியது. தத்துவம் 16 : வாய் இது சுவையினின்று தோன்றியது. தத்துவம் 17 : கண் இது ஒளியினின்று தோன்றியது. தத்துவம் 18 : மூக்கு இது நாற்றத்தினின்று தோன்றியது. தத்துவம் 19 : மெய் இது ஊற்றினின்று தோன்றியது. தத்துவம் 20 : பேச்சு இது மெய்யினின்று தோன்றியது. தத்துவம் 21 : கால் இது மெய்யினின்று தோன்றியது. தத்துவம் 22 : கை இது மெய்யினின்று தோன்றியது. தத்துவம் 23: எருவாய் இது மெய்யினின்று தோன்றியது தத்துவம் 24 : கருவாய் இது மெய்யினின்று தோன்றியது தத்துவம் 25 : பகவன் இது எதினின்றும் தோன்றியதன்று மெய்யுணர்வு. இப்பாட்டால், அறப்பனுவல் செய்வார் இங்ஙனம் தத்துவ உணர்வு உடையார் என்று குறித்தார். இச்செய்யுள் உரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: திருவாரூர்க் கபிலர் அருளிய எண்ணூற் கொள்கை ஒரு மதமல்லவா? உரை ஆசிரியர்: இல்லை: பண்டைத் தமிழர் பண்பாடு. அதைத் தத்துவம் என்றும் சொல்வர். ஆத்திகன்: மதவிளக்கம் கூறுவார் எண்ணூற் கொள்கையையும் ஒரு மதமாகவே வைத்து விளக்குவர். உரை ஆசிரியர்: எனக்குத் தெரியாது. ஆத்திகன்: தத்துவ விளக்கம், கூறும் ஆசிரியர்கள் எண்ணூற் கொள்கையையும் தத்துவ நூற்களில் ஒன்றாக வைத்துப் பாடம் சொல்லுவதை நீவிர் அறிவீரா? உரை ஆசிரியர்: தத்துவம் மதமல்ல என்று நீவிர் அறிய வேண்டும். ஆத்திகன்: எண்ணூற் கொள்கையைப் பண்பாடு என்று கூறுவது சரியா? உரை ஆசிரியர்: மதமான பேயாற் பிடிபடாமல் இருக்க அவர்களிடம் அமைந்திருக்கும் பண்பாடுதான் எண்ணூற் கொள்கை. உலகம் சிவனாற் படைக்கப்பட்டது திருமாலார் படைக்கப்பட்டது என்றெல்லாம் பண்டைத் தமிழர் தடுமாறியதில்லை. முதன்மையி னின்று உலகம் தோன்றியது என்று எண்ணி மதவலையிற் படாத திறம் பண்பாடுதான். மக்கள் அடையத்தக்கது. சிவனடி, திரு மாலடி, பிற என்று பண்டைத் தமிழர் தடுமாறியதில்லை. பெறத் தக்கது அறிவு என்றார்கள். சிவனும், திருமாலும் பிறவும் மக்கள் நல்வாழ்வுக்குத் தேவையில்லை என்றார்கள். உருவ வணக்கம் முட்டாள் தனம் என்றார்கள். இவ்வாறு மேற்கொண்டு ஒழுகுவது தான் பண்பாடு. இவ்வாறு கூறுவதுதான் கபிலர் எண்ணூல்! இதைத் தான் வடவர் சாங்கியம் என்று மொழி பெயர்த்துக் கொண்டனர். நாத்திகன்: கடவுள், சிவம், திருமால் வேண்டியதில்லை என்று சாங்கியம் கருதுவதால் சாங்கியம் நாத்திக நூலே ஆகும். அன்றியும் சாங்கியம் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது திருக்குற ளாதலின். திருக்குறள் நாத்திக விளக்கமே. அன்றியும் நாத்திக விளக்கமே திருவள்ளுவர் செய்தார். ஆதலின் வள்ளுவர் நாத்திகன் இல்லையா? உரை ஆசிரியர்: மக்கள் பெறத்தக்கது மெய்யுணர்வு என்றுகூறி விளக்கிய திருவள்ளுவர் நாத்திகருமல்லர் ஆத்திகரும் அல்லர். - குயில், கிழமை இதழ், 30.8.1960 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். பி.மா : நிலத்து நிறைமொழி மாந்தர் பெருமை மறைமொழி காட்டி விடும். பொருள்: நிலத்து - உலகின் கண், நிறை - உண்மை நிறைந்த, மொழி மாந்தர் - நூலைச்செய்த தமிழ்ச் சான்றோரின், பெருமை - பெருமையை, மறை - பொய்மை உடைமையால் மறை மறைந் தொழிந்த, மொழி - மொழிகள், (பாடைகள்) காட்டிவிடும் - எடுத்துக் காட்டிவிடும். கருத்து: பொய்ந்நூலுடைய பிறமொழிகளே மெய் நூலருளிய தமிழ்ச் சான்றோரது பெருமையைக் காட்டிவிடும். ஒரு மொழி (பாடை) நிலைத்து வாழவேண்டுமானால் அம்மொழி யில் உண்மை நூற்கள் அமைய வேண்டும். அவ்வுண்மை நூற்களை யும் மெய்யுணர்வுடையாராலேயே செய்ய முடியும். அத்தகு நூலாசிரிய ரின் பெருமையைப் பொய்ம்மை நிறைந்திருந்த காரணத்தால் நூற் களும் ஒழிய அந்நூற்களை யுடைய மொழியும் ஒழிந்து போன தொன்றே எடுத்துக் காட்டி விடும் என்பார் இவ்வாறு கூறினார். நிறைமொழி - நிறைந்த மொழி. அஃதாவது உண்மை நிறைந்த மொழி என்றாம். இறந்த கால வினைத்தொகை நிலைத்தொடர். நிறைமொழி என்பதிலுள்ள மொழி என்பது நூலுக்காயிற்று; ஆகு பெயர், திருவாய்மொழி, திருவாசகம், முனிமொழி என்பவற்றிற்போல. மறைமொழி - இறந்தகால வினைத்தொகை நிலைத் தொடர், நிகழ் காலத்து எனினும் இழுக்காது. அவ்வாறு கூறினால், மறைமொழி என்பது மறைந்து வருகின்ற மொழி என விரிதல் வேண்டும். இதில் வரும் மொழி, மொழி முதலைக் குறித்தது. இதைப் பாடை என்பர் வடக்கர். தமிழ் உலகு தோன்றிய நாளில் தோன்றியது என்பர் தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்தவர். இன்றுவரை அது அழியா திருப்பதால் தமிழ் மொழியில், தமிழ்ச் சான்றோர் உண்மை நிறைந்த நூற்களையே இயற் றினார் என்பது உணரப்படும். ஆரியம் மறைந் தொழிந்த மொழிகளில் ஒன்று. இப்பாட்டுக்குப் பரிமேலழகர் கூறிய உரை வருமாறு: நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழி யினையுடைய துறந்தாரது பெருமையை, நிலத்து மறை மொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின் கண் அரவணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும். நிறைமொழி என்பது அருளிக் கூறினும், கொண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல் பயனா னுணர்த்துதல் என்பது. இதில் அருளிக் கூறுவதும் வெகுண்டு கூறுவதும் துறவிகளுக்கு என்று காட்டினார். துறவிகள் அருளிக் கூறுவது எப்போது? வெகுண்டு கூறுவது எப்போது? தமக்குப் பயன் பட நடந்து கொள்ளும்போது அருளிச் கூறுவார் என்றால், பயனை எதிர்பார்ப்பதும், அதற்குக் கைம்மாறு செய்வதும் துறவிகட்கு அடுக்குமா? பிறர் தமக்குத் தீமையுற நடந்து கொள்ளும்போது வெகுண்டு கூறுவார் என்றால் சிறியோர் செய்த சிறுபிழைக்கு வெகுளுவதும், அதற்காக அவரை ஒறுத்தலும் துறவிகட்கு அடுக்குமா? நீத்தார் என்பதற்கு முற்றுந் துறந்தார் என்று பொருள் கூறிய பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறலாமா? புராணங்களில் நாம் காணும் துறவிகளைத் தமிழ்த் துறவிக ளுடன் ஒப்பிட்டுப் பேசவும் கூடாது. இப்பாட்டில் புராணத் துறவிகளை ஆசிரியர் கூறியிருக்க முடியாது. அவர் தமிழ்த் துறவிகளை உட் கொண்டே கூறினார். ஆதலின் பரிமேலழகர் கொண்ட அருளிக் கூறுதல், வெகுண்டு கூறுதல் புராண விளக்கம் பொருந்துவதன்று. இவ்வாசிரியரே, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு என்றும் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல் என்றும் பலவாறு கூறித் தமிழத் துறவிகளின் சால்பை விளக்கி யருளினார். அதை உற்றுநோக்குவார்க்குத் துறவிகளுக்குப் பிறரை அருளிக்கூறும் நிலையும் வெகுண்டு கூறும் நிலையும் ஏற்படுதல் இருக்க முடியாது என்பது புலனாகும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (குறள் 341) என இவ்வாசிரியர் கூறியபடி, எப்பொருள் மேல் செல்லும் பற்றை விடுகிறானோ அப் பொருளைப் பெற வேண்டும் என்பதால் வரும் துன்பம் இல்லாதொழியும். ஆதலின், துறவிகள் எப்பொருள் மேலும் பற்றுவையார் என்றால், சிலரால் நலம் பெறுதலால் அவரை அருளிக் கூறுதலும், சிலரால் தீமை பெறுதலால் அவரை ஒறுத்தலும் செய்யார். புராணத் துறவிகளின் இழிந்த போக்கினை எண்ணுக. அவர்கள், ஒருவன் பிழை செய்தான் என்றும், ஒருவன் மதியாதிருந்தான் என்றும், அவர்களைக் கல்லாக்குவதும், எரிப்பதும் ஆகிய பல வெறுக்கத்தக்க ஒறுத்தல்களைச் செய்ததாய்க் கூறப்படுகிறது. இத்தகைய பிற்போக்காளர் அருளிக் கூறினாலும் வெகுண்டு கூறினாலும் அவ்வாறே பயன் கிடைத்துவிடும் என்பதும் இயலாத தொன்று. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிக்கு இடமளிக்கும் அவர்கள் துறவிகளாதலும் இல்லை. இதனால் நிறைமொழி என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் அதுபற்றி அவர் தந்த விளக்கமும், தங்கொள்கை நோக்கித் தமிழரை இழுத்துச் செல்வனவேயன்றி, ஏற்புடையன அல்ல என மறுக்க. இனிப் பரிமேலழகர்,நிறைமொழி என வரும் தொல்காப்பியச் செய்யுளின் பிழையான உரையினை மேற்கொண்டு இப்பாட்டுக்கும் அது போலவே உரையும் விளக்கமும் தந்திருக்கிறார் என எண்ணக் கிடக்கின்றது. இவ்வாறு சொற்றொடர் ஒப்பு நோக்கிப் பலவிடங்களில் பொருந்தாவுரை செய்து தம் திருந்தா நிலையை வெளிக்காட்டி யிருக்கின்றார். இது மேலே சொல்லவேண்டிய இடத்தில் சொல்லப்படும். இச்செய்யுள் உரையின்மேல் எழும் ஆத்திக, நாத்திக வினாவும், உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: முனிவர்கள், ரிஷிகள் சாபமிட்டாலும், அனுக்ரகம் செய்தாலும் அப்படியே பயன் ஏற்படுத்துவ தில்லையா? உரை ஆசிரியர்: ஆரிய முனிவர்களும் ரிஷிகளும் அவர்களால் கொல்லப் படுகின்றவர்களும் யார் என்று முதலில் ஆராயவேண்டும். பண்பாடு சிறிதும் இல்லாதவரும், தகுதி இல்லாதவருமே அவ்வாறு கொல்லப்படுகின்றனர் என்று அவர்களின் புராணங்கள் இதிகாசங்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வாறே பயனைத் தந்துவிடும் என்பதில் பொருளே இல்லை. ஒருவர்க்கு அருளுதலும் ஒருவர்மேல் வெகுளுவதும் ஏற்படுவது எந்த மனத்தில்? பற்று நிறைந்த மனத்தில். பற்றுடையான் சான்றோன் அல்லன். ஆரியர் சொல்லும் இக்கதைகள் அறிவின் அடிப்படையில் எழுந்தன அல்ல. அவை வெறும் பூச்சாண்டிகள். நாத்திகன்: உலகில் என்னாது நிலத்து என்று வள்ளுவர் சொல்லுவா னேன்? உரை ஆசிரியர்: மறைந்து வருகின்ற - மறைந்தொழிந்த மொழியைச் சொல்ல வந்தவர், என்றும் நிலைத்து நிற்கின்ற இடையில் ஒருவரால் தோன்றியதல்லாத உலகத்தையே கூற வேண்டும். அவ்வாறு பொருள் படுவது நிலம். நில் என்ற முதனிலையின் பொருளை நோக்குக. ஆத்திகன்: மாந்தர் என்று வள்ளுவர் சொன்னது கொண்டு தமிழத் துறவிகளையே அவர் சொன்னார் என்று கொள்வது எப்படி? உரை ஆசிரியர்: நிறைமொழி என்ற அடையால். - குயில், கிழமை இதழ், 6. 9. 1960 29 குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. பி. : குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. பொருள்: குணம் என்னும் - காமம் வெகுளி மயக்கம் என்று சொல்லப் படுகின்ற, குன்று - மலைத்தலையில், ஏறி நின்றார் - ஏறி அசை வின்றி நின்றாரது, வெகுளி - அம்முக் குணங்களில் ஒன்றான வெகுளியை, கணமேயும் - கண் இமைக்கும் நேரங்கூட, காத்தல் அரிது - அவ் வெகுளப்பட்டார்க்குத் தீமை உண்டாகும்படி வைத்துக் காப்பது அரிது. (இல்லை என்றபடி) கருத்து: முக்குணங்கட்கும் அப்பாற்சென்ற மெய்யுணர்வுடையார் தம்பால் ஒரோவழித் தோன்றும் வெகுளியை அதே கணத்தில் அடக்கிக் கொள்வார்கள். குணம் மூன்று: காமம், வெகுளி, மயக்கம், இவற்றை முறையே சத்துவம், இரசசு, தமசு என்பர் வடவர். இப் பண்புகளைத் தாண்டிய நிலையே மெய்யுணர்வு நிலை என்று கூறும் எண்ணூல். ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் அறிதற் கெளிதாய் முக்குணம் அன்றி பொறியுணர் விக்கும் பொதுவும் அன்றி எப்பொரு ளுந்தோன் றுதற்கிடம் அன்றி அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குணர்வாய் ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடன் - மணிமே; சம, 226 - 232 என்பது மீண்டும் நினைவுகூரத் தக்கது. உலகுக்கு அறப்பனுவல் இயற்றுவார் வெகுளி மேற் கொள்ளின் அவ்வெகுளி, அவரிடமுள்ள எல்லாப் பண்பு களையுமே அழித்து விடும். ஆதலின், வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்றார். கணம் என்பது கண்ணிமைக்கும் நேரம். கண் முதனிலை. அது கணம் என ஈறு வேறுபட்டு நின்றதோர் ஆகுபெயராய் கண் இமைக்கும் நேரத் திற்கு ஆயிற்று. கபிலம் என்பதிற்போல. இதற்கு இவ்வாறே இலக்கணம் கூறினார் தொல்காப்பிய உரைகாரரும், கணம் என்ற சொல் வடமொழியில் க்ஷணம் ஆக்கப்பட்டது, கடைக்கண் - கடாக்ஷம் ஆக்கப்பட்டது போல. அரிது - இன்மை குறித்தது. குணம் வடசொல் என்று கூறி இழுக்கடைவர் வடவர். குண்டு என்றதன் அடியாகப் பிறந்த தூய தமிழ்ச் சொல் அது. இவ்வாறு மறைமலையடிகளாரும் கூறினார்கள். குண்டு - தேங்குமிடம்; அறிவின் நோக்கம் அஃதே குணம் என்க. இச்செய்யுட்குப் பரிமேலழகர்கூறிய உரை தம் பயனற்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. துறவிக்குச் சினம் உண்டாகும், அச்சினம் சிறிது நேரமே இருக்குமாயினும், எதிரியை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கும். ஆதலால் வந்தேறிகள் காட்டும் பூச்சாண்டிகளுக்கு நீங்கள் நடுங்கி அவர் மகிழும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள் என்பார். அவ்வாறு பொய்யுரை கூறினார் என்க. இக்குறட்பாவுக்கு உரைக்கப் பெற்ற உரைமேல் எழும் ஆத்திக நாத்திகர் வினாவும் உரை ஆசிரியர் கூறிய விடையும் வருமாறு: நாத்திகன்: குணத்தைக் குன்று என்றது என்ன? உரை ஆசிரியர்: மனம் தன்னிலை நிற்றல் பொருள். அது பொறிவழிச் செல்லுங்கால் மனக்கோட்டம் எனப்படும். முக்குண வடிவான மனம் அசைதல் கூடாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். ஆதலால் குணத்தை அசைதலில்லாத குன்று என்று கூறினார். நாத்திகன்: ஏறி நின்று என்றது என்ன? உரை ஆசிரியர்: மனம் இடம்விட்டு அசையாது நிற்றலை அவ்வாறு கூறினார். நிற்றல் - நிலைத்தல். ஆத்திகன்: கணமேயுங் காத்தல் அரிது என்றால் ஒரு கண நேரமும் தாழ்க்காமல் குற்றம் புரிந்தாரை ஒழித்து மறுவேலை பார்ப்பார் - நல்லவாறு நடந்து கொண்டவர்களை ஒரு கண நேரமாவது தாழ்க்காமல் அவர்க்கு மாடிவீடு உண்டாகும்படி செய்து விடுவார்கள் என்பது பொருள் அல்லவா? உரை ஆசிரியர்: முக்குணம் மாறும் இயல்புடையது. இதனால்தான் முல்லானைப் பாடும்போது, காலையில் ஒன்றாவர் கடும்பகலில் ஒன்றாவர். மாலையில் ஒன்றாவர் மனிதரெல்லாம் - சாலவே முல்லானைப் போல முகமுமகமும் மலர்ந்த நல்லானைக் கண்டதில்லை நாம் என்று முக்குண இயல்பை விளக்கியருளினார். அவ்வாறு குணம் மாறுதல் அடையும்போது, அதாவது வெகுளி தலை காட்டுங் கால் அதை அதே கணத்தில் இல்லாமற் செய்து விடுவார்கள் தமிழ்ச் சான்றோர் என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஆத்திகன்: காத்தல் அரிது என்றால்? உரை ஆசிரியர்: இருக்கும்படி விட்டு வைப்பது இல்லை என்பது பொருளாகக் கொள்க. - குயில், கிழமை இதழ், 13. 9. 1960 30 அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். ã.kh.: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர். பொருள்: எவ்வுயிர்க்கும் - எவ்வுயிர்களிடத்திலும், செந்தண்மை பூண்டு ஒழுகலான்- செவ்விய அருளைப் பூண்டொழுகும் காரணத்தால், அந்தணர் என்போர் - அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் தமிழ்ச் சான்றோர், அறவோர் - துறவறத்தினர். கருத்து: தமிழ்ச் சான்றோர் எவ்வுயிர்கண் மாட்டும் அருளுடையர் ஆதலின் அவர் இல்லத்துறவிகளே. பூணல் - நோன்பாக நோற்றல் என்றவாறு. அந்தணர் - அழகிய தட்பத்தையுடையார். தட்பம் அருள் என்றவாறு. அந்தணர் என்பதிலுள்ள அந்தண்மை என்பது தமிழில் பல சொற்களுக்கும் அடையாக வருவதுண்டு. அவை அந்தண் காவிரி, அந்தண் கூடல், அந்தண் பாதிரி முதலியன. இவற்றை யறியாது, அந்தணர் என்பதற்கு வேதாந்தத்தை அணவுவோர் என்று கூறும் குறிகெட்டவர்களும் உளர். இவ்வுரை மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: அந்தணர் என்ற சொல் இப்போதுள்ள பார்ப்பனரைக் குறிக்கின்றதா? உரை ஆசிரியர்: இல்லை. ஆத்திகன்: பின்னையேன் பார்ப்பனரை அனைவரும் அந்தணர் என்று அழைக்கின்றனர்? உரை ஆசிரியர்: அனைவருமா? ஆத்திகன்: பெரும்பாலோர். உரை ஆசிரியர்: பெரும்பாலோரா? ஆத்திகன்: சிலர் உரை ஆசிரியர்: சிலரா? ஆத்திகன்: பின் என்ன? உரை ஆசிரியர்: அறிவற்ற சிலர் என்று கூற வேண்டும். ஆத்திகன்: அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள். அது ஏன்? உரை ஆசிரியர்: அறிவற்ற சிலர் ஏன் பார்ப்பனரை அந்தணர் என்கின்றனர் என்பதா உம் கேள்வி? ஆத்திகன்: அறிவற்றவர் ஆதலின் அவ்வாறு சொல்கின்றார்கள் போலும். உரை ஆசிரியர்: இப்போதுள்ள பார்ப்பனர் தம்மைப் பூசுரர் (உலகின் தேவர்) என்றும் சொல்லிக் கொள்கின்றனர். இது ஏமாற்று. அவ்வாறே தமிழர் சிலரும் சொல்கின்றனர். இது அறிவின்மை யின் பயன். அந்தணர் என்பவர் துறந்தோர் என்று வள்ளுவர் கூறியிருக்கவும் இவரா அவரா என்பது சரியா? எண்ணுக. நாத்திகன்: துறந்தோராவார் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதல் வேண்டுமோ? உரை ஆசிரியர்: தன்னலத்தின் பொருட்டுப் படிற் றொழுக்கம் பூண்டுள்ளாரும் உலக குரு என்று தம்மைச் சொல்லிக் கொள் வோரும் மடத்தலைவர், தம்பிரான்கள் என்று சொல்லிக் கொள்வோரும் துறந்தவர் தாமோ? கொலை வேள்வி செய்வோனும் அதைஆதரிப்போனும் துறந்தவனா? அந்தணனா? கோயில் திருவிழாத் தொடங்க எருமை மாட்டை வெட்டச் சொல்லும் பாவி துறந்தவனா? இல்லை என விடுக்க. - குயில், கிழமை இதழ், 20. 9. 1960 அதிகாரம் - 4 அறன் வலியுறுத்தல் அஃதாவது: அறம், ஆற்றல் உடையது என்பதைக் கூறுவது. முன்னர் அறப்பனுவல் ஆசிரியரின் மேன்மையையும், அவ்வற நூற் பெருமையையும் கூறினார். இவ்வதிகாரத்தில் அறம் மிக ஆற்ற லுடையது. அதை மக்கள் மேற்கொண்டே ஒழுகுதல் வேண்டும் என வற்புறுத்தினராயிற்று. அறம் அறன் ஆனது, மொழி இறுதிப் போலி. 31 சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு. பி.மா : சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு உயிர்க்கு ஆக்கம் எவன். பொருள்: சிறப்பு ஈனும் - மெய்யுணர்வையும் நல்கும், செல்வமும் ஈனும் - கல்விச் செல்வம், பொருட்செல்வம் எனப் படும் செல்வத்தையும் நல்கும், அறத்தின் ஊங்கு - அறத்தை விட, உயிர்க்கு - மக்கட்கு, ஆக்கம் எவன் - உயர்நிலை வேறு எது? கருத்து: அறமுடையான் அனைத்தும் உடையான். சிறப்பு - பொதுமையற்றது. அஃது மெய்யுணர்ந்த நிலை ஆதலின், சிறப்பு மெய்யுணர்வு எனப் பொருள் கொள்ளப்பட்டது. ஆக்கம் - உயர் நிலை. கடையில் நின்ற ஓகாரம் அசை. ஊங்கு - ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்தது. இவ்வுரை மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: அறன் வலியுறுத்தல் என்பதன் பொருள் விளங்கவில்லை. உரை ஆசிரியர்: அறத்தின் ஆற்றலை (அறிந்து பின்பற்றும்படி) வலி யுறுத்துவது நாத்திகன்: சிறப்பு என்றால் மெய்யுணர்வா? உரை ஆசிரியர்: உரையை முழுதும் படித்துப் பார்க்க. ஆத்திகன்: ஆக்கம் என்ன பொருள்? உரை ஆசிரியர்: ஆக்கம், ஆக்கப்படுவதோர் செல்வத்திற்கு ஆனது காரணப் பெயர். செல்வம் ஒருவனுக்கு மேன்மையளிப்பதால் உயர்நிலை எனப் பொருள் கூறப்பட்டது. ஆத்திகன்: அறம் என்றால் என்ன? உரை ஆசிரியர்: மாசற்ற மனத்தால் நினைப்பனவும், நினைப்பின் பயனாக வரும் செயல்களும் - அறம், அறச் செயல்கள் என்று அறிக. நாத்திகன்: மாசற்ற மனம் என்பது வடவர் கூறும் ஆத்மாவா? உரை ஆசிரியர்: வடவர் சொல்லும் ஆத்மா என்பது பொருளற்ற சொல். மனம் உள்ள பொருள், அதன் தூய்மை, மக்கள் பெறத்தக்க பேறு என்பதே திருவள்ளுவர் கருத்து. - குயில், கிழமை இதழ், 27. 9. 1960 32 அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லை கேடு. ã.kh.: ஆக்கம் அறத்தின் ஊங்கு இல்லை, கேடு அதனை மறத்தலின் ஊங்கு இல்லை. பொருள்: அறத்தின் ஊங்கு - அறஞ் செய்வதை விட, ஆக்கமும் - ஒருவனுக்கு மேன்மை நிலையும், இல்லை - உண்டாதல் கிடையாது, அதனை - அந்த அறம் செய்வதை, மறத்தலின் ஊங்கு - மடமையால் மறந்து விடுவதைவிட, கேடு இல்லை - கேடான நிலை கிடையாது. கருத்து: அறஞ்செய மறப்பதைவிட கேடான நிலை இருக்க முடியாது. அறத்தின் பயன் முன்னும் கூறியவர் பின்னும் அதைக் கூறிய தென்ன எனில், அதனை மறத்தலினால் வரும் கேட்டினைத் தெளி வுறுத்த என்க. இவ்வுரை மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: இங்குக் கூறப்பட்ட மறதி பற்றி விளக்குக. உரை ஆசிரியர்: அறம் செய்ய அட்டியில்லை. ஆனால் செய்யா திருந்துவிட்டதற்கு மறதிதான் காரணம் என்பவன் ஊரை ஏமாற்றுகிறவனே. தூய மனமானது. தூய செயலைச் செய்ய மறந்ததற்குக் காரணம் என்னவாயிருக்க வேண்டும்? அவன் உள்ளம் கேடுற்றிருக்க வேண்டும். இருக்கவே, கெட்ட செயலை - பாவச் செயலைச் செய்திருக்கவேண்டும். அதனால் விளைவது கேடே. நாத்திகன்: ஊங்கு என்பது என்ன? உரை ஆசிரியர்: பார்க்கிலும், காட்டிலும் என்ற பொருளையுடையது. ஐந்தாம் வேற்றுமை உருபாக நின்றது, இடைச்சொல். - குயில், கிழமை இதழ், 4.10.1960 33 ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல். ã.kh.: செல்லும் வாய்எல்லாம் ஒல்லும்வகையான் ஓவாதே அறம்வினை செயல். பொருள்: செல்லும் வாய் எல்லாம் - மனஞ் செலுத்துமிடத்தும், சொற் செல்லுமிடத்தும், மெய் செல்லுமிடத்தும் ஆகிய எல்லாவிடத் திலும்; ஒல்லும் வகையான் - அவரவர்கட்கு இயன்றவகையால், ஓவாது - இடையறாது, அறம் வினை - அறச் செயல்களை, செயல் - செய்க. கருத்து: எல்லாவிடத்திலும், இயன்றவகை இடையறாது அறம் செய்க. கால்வாய் வெட்டிக் கங்கையைக் கொணர்வான் ஒருவன் செயலும் அறச் செயலே. இல்லார்க்கு ஒரு பிடிச்சோறிடுவான் ஒருவன் செயலும் அறச் செயலே. இவற்றில் எவனுக்கு எது இயலுமோ அதைச் செய்க என்பார் ஒல்லும் வகையான் என்றார். பெரிதோ சிறிதோ இடையறாது செய்க. இன்றேல், அல்வழிப்படும் மனம் என்பார் ஓவாதே என்றார். செயல் வியங்கோள் வினைமுற்று. இவ்வுரை மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: ஒல்லும் வகை? உரை ஆசிரியர்: கூடிய மட்டும் நாத்திகன்: எல்லாவிடத்தும் என்று வற்புறுத்தியதென்ன? உரை ஆசிரியர்: நடையிற் கிடந்த வைக்கோலை அங்கிருந்த மாட்டிற்கு எடுத்துப் போட்டான். அவன் கடையிற் குந்தி கள்ள வாணிகம் செய்தால் என்ன பயன்? ஆத்திகன்: சிவன் கோயிலுக்குப் போக வேண்டிய நேரத்தில் சிற்றிலக்கண வினா விடை படித்தல் அறமா? உரை ஆசிரியர்: கோயிலுக்குப் போகாதிருப்பதும், சிற்றிலக்கணம் படிப்பதுமாகிய இரண்டும் அறமே. - குயில், கிழமை இதழ், 4.10.1960 34 மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற. ã.kh.: மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் பிற ஆகுலம் நீர. பொருள்: மனத்துக்கண் - மனத்தில், மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - மாசு இலாதவன் ஆகுவது எந்த அளவோ அந்த அளவுக்கு அவன் அறமுடையவன். பிற- மாசு உளன் ஆகுதல் எல்லாம், ஆகுல நீர - பொய் விளம்பரத் தன்மை யுடையவை. கருத்து: அறம் என்பது மன மாசு அற்ற நிலை. மாசு என்பது குற்றம், தீயன எண்ணுதல், தூய உள்ளத்தானன்றித் தீய உள்ளத்தால் ஒன்று செய்து செல்வான்; அது தூயதாகக் காட்டப் பெரிய விளம்பரம் செய்வான். அதையே ஆகுலநீர என்றார். ஆகுலம் - அகம் கலித்தல் என்றதன் மரூஉ மனம் அத்து, கண், அத்துச்சாரியை. கண் ஏழனுருபு. மனம் - பொறிவழிச் செல்லாது ஒரு வழி மன்னுவது எது? அது மனம். காரணப் பெயர். முழுமை அறம் என்பது மெய்யுணர்வு பெற்றநிலை, அஃது வீட்டு நிலை எனப்படும். முழுமையற்ற அறத்தையே இங்கு மாசு இலன் ஆதல் அனைத்து என்றுரைத்தார். மனத்துக்கண் எவ்வளவு மாசு தீர்ந்ததோ அவ்வளவு அறம் என்றார் என அறிதல் வேண்டும். அனைத்து - அத்தனைத்து மரூஉ மொழி. பிற - பலவின் பால் குறிப்பு வினையாலணை யும் பெயர். எழுவாய். நீர - பலவின்பாற் குறிப்பு வினை முற்று. மாசு தீர்ந்த மனம் அறம் என ஆசிரியர் அருளிய இது, இதற்கு முன் உலகுக்கே தெரியாத ஒன்று. இவ்வுரை மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: மாசிலன் ஆதல் அனைத்து அறம் என்பதை விளக்குக. உரை ஆசிரியர்: அனைத்து என்பது அத்தனை அல்லது அவ்வளவு என்றபடி. எவ்வளவு மாசு போயிற்றோ அவ்வளவு அறம் என்றாம். நாத்திகன்: அறம் என்பது இன்னது என்று விளக்கினார் திருவள்ளு வரை யன்றி வேறெவரும் இலரோ? உரை ஆசிரியர்: இவ்வகையில் விளக்கினார் திருவள்ளுவரே. வேறு வகையில் விளக்கினார் சாக்கரிட்டீசு என்பார். அவர் விளக்கியது: அறம் என்பது இன்பத்தைப் பெறுவதோர் ஆற்றல் என்பது. இவ்வாறு கூறியதில் அறம் என்பதன் விளக்கம் நிரம்பாமை அறிக. ஆத்திகன்: முழுமை அறம் என்பது மெய்யுணர்வு என்றும் அதுவே வீடுபெற்ற நிலை என்பதும் உங்கள் கருத்தா? உரை ஆசிரியர்: மாசற்ற மனம் மெய்யுணர்வு என்பது என் கருத்து. மெய்யுணர்வு பெற்ற நிலையே வீட்டு நிலை என்பது எண்ணூல் (சாங்கியம்) கருத்தாகும். - குயில், கிழமை இதழ், 11.10.1960 35 அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம். பி. : அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொன் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொருள்: அழுக்காறு - பிறர் ஆக்கங்கண்டு பொறாமையும், அவா - ஐம்புலன்கள் மேலும் செல்லுகின்ற அவாவும், வெகுளி - அவாக் காரணமாக எழும் சினமும், இன்னாச் சொல் - இனிமை யில்லாத கடுஞ் சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நான்கும், இந்த நான்கு குற்றங்களையும், இழுக்கா - நீக்கி, இயன்றது - நடந்தது எதுவோ அது, அறம் - அறமாம். கருத்து: மனக் குற்றங்களின் வழி இயல்வது அறமாகாது. இழுக்கா - செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்தகாலத் தெரி நிலை வினையெச்சம். இழுக்கி என்பது பொருள். இழுக்கி - நீக்கி. இவ்வுரை மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: இழுக்கா வியன்ற தறம் என்பதை வேறு வகையில் பிரித்துப் பொருள் கூறலாமோ? உரை ஆசிரியர்: ஆம், இழுக்கு ஆ இயன்றது அறம் என்ற பொருள் கூறலாம். அப்படிக் கொள்ளும்போது ஆ என்பது ஆக எனப் பிரித்து இழுக்காக இயன்றது என்று என்பதின் கடைக்குறை என்க. அழுக்காறு முதலிய நான்கும் குற்றமாக வைத்து மற்றப் பண்புகளின் வழியே தோன்றுவது அறம் என்று விரித்துரைக்க. நாத்திகன்: அவா இன்றேல் செயல் எவ்வாறு தோன்றும்? உரை ஆசிரியர்: அவா என்றது இங்குத் தன்னலத்தின் பொருட்டே பொருள்களின் மேற் செல்லும் பேராசையை! அத்தகைய அவா இன்றிச் செயல் செய்தல் வேண்டும். செய்யவே குற்றம் நிகழாது. ஆத்திகன்: வெகுளி நீங்கவே இன்னாச்சொல், சொல்லலும் நீங்கும். ஆகவே, வெகுளியைச் சொன்னவர் இன்னாச் சொல்லைச் சொல்லவேண்டியதென்ன? உரை ஆசிரியர்: இன்னாச்சொல் வெகுளியால் மடடும் எழும் எனல் வேண்டாம். அஃதின்றியும் தோன்றுதல் கூடும். கேலிச் சொல் முதலியவும் இன்னா செய்தலினால் அவையும் இன்னாச் சொற்களே ஆகும். - குயில், கிழமை இதழ், 18.10.1960 36 அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை. பி. : அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது பொன்றும் கால் பொன்றாத் துணை. பொருள்: அன்று அறிவாம் - உடல் அழியும் காலத்திற் பார்த்துக் கொள்ளுவோம், என்னாது - என்று எண்ணாமல், அறம் செய்க - இடையறாது என்றும் அறத்தைச் செய்து கொண்டிருக்க, அது - ஏனெனில் அவ்வறமானது, பொன்றுங்கால் - உடல் அழியும் நேரத்தில், பொன்றாத்துணை - மற்றோர் அழியா வுடம்பு. கருத்து: பருவுடல் போயினும் புகழுடல் தருவது அறம். துணை - அறம் செய்தற்கும், உயிர் மேவுதற்கும் துணையாவது. ஆதலின் உடம்பைத் துணை என்றார். பொன்றாத் துணை- கெடாத உடம்பு, புகழ் என்றவாறு. மற்று - அசை. பொன்றுங் கால் - பெயரெச்சத் தொடர், கால் - காலம், கடை - குறைந்தது. சாதலின் இன்னாதது இல்லை என்றார் இவ்வாசிரியர். அச் சாக்காட்டுத் துன்பம் ஏற்படும்போது அதை நீக்குவது மருத்துவனாலும் ஆகாது. ஆயின் அவன் தேடியுள்ள புகழே நீக்க வல்லது. அஃதேயு மின்றி அப்புகழ் அத்துன்பத்தை இன்பமாக்கி விடும். இவ்வுடம்பு செல் லினும் செல்லுக இதோ நிலைபெறுகின்றது புகழுடம்பு என்றெண்ணி அமைதியடை வான் என்பார் இவ்வாறு கூறினார் ஆசிரியர். இதற்குப் பிறரெல்லாம் உடம்பை விட்டு உயிர்போகும் பொழுது அறம் அவ்வுயிருக்குத் துணையாகச் செல்லும் என்று கருதும்படி பொருள் கூறுவார். சமய நிலை ஒன்று, சமயம் அற்ற நிலை ஒன்று. இரண்டுக்கும் பொதுவாக நின்று செய்யுள் செய்தார் ஆசிரியர். போம் உயிருக்கு அறம் துணை செல்வது என்பது சமயநிலைச் சார்பாகும் என விடுக்க. இக்குறட்பாவின் உரை மேல் எழும் ஆத்திக, நாத்திக வினாவும், உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: பொன்றும் கால் பொன்றாத்துணை என்றதின் பொருள் உயிர் சென்று மற்றோர் உடலிற் சேரும்போது என்று பொருள் கொள்வது நன்று அன்றோ? உரை ஆசிரியர்: மறுபிறப்புக் கொள்கையை நிலை நாட்ட எண்ணும் மதக் கணக்கர் அவ்வாறு பொருள் கொள்வார் எனினும் அவர் கூறும் பொருளுக்கு ஏற்ப என்ன இருக்கிறது இங்கே? பொன்றுதல் - கெடுதல். எது கெடுதல்? உடம்பு தானே? உயிரா கெடும்? அல்லது பொன்றுதல் எனின் உடம்பைவிட்டு உயிர் நீங்குதல் என்று பொருள் கொள்ளவேண்டும் எனில் அவ்வாறு நலிந்து பொருள் கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது? மதக் கணக்கருக்கு ஆக்கந் தேடித் தர வேண்டியவர் உரை யாசிரியரா? சரியன்று! நாம் சொல்லி யுள்ள உரையை மற்றும் (ஒருமுறை) படித்துப் பார்க்க. அதுவே வள்ளுவர் உள்ளம் என்பதை நுணுகி ஆய்க. அறத்தால் புகழ் வரும்! அறஞ் செய்தானுக்கு ஏற்பட்டுள்ள புகழை அவ்வறஞ் செய்தான் அறியும் சூழ்நிலை ஏற்படும். அவன் பருவுடல் அழியும் போது அவனுக்கு ஏற்பட்ட புகழ் அவனை நோக்கித் தேறுதல் கூறும் நீ சாகவில்லை; இருக்கின்றாய்; எப்போதும் இருப்பாய் என்று! மக்கள் தேடத் தக்கதும் இதுதானே! - குயில், கிழமை இதழ், 25.10.1960 37 அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை. ã.kh.: சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை அறத்து ஆறு இது என வேண்டா. பொருள்: சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் - பல்லக்குச் சுமந்து போவானும் ஏறிச் செல்வானுமாகிய இருவரினது, இடை - நடுவில் நின்று, அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தினது பயன் இதுதான் என்று பணிகளில் உயர்வு தாழ்வு காண்பது விரும்பத்தக்க தன்று. கருத்து: செய்யுந் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. ஏறிச் செல்வான் உயர்ந்தான் ஆதலுமில்லை; சுமந்து செல்வான் தாழ்ந்தானாதலுமில்லை. அஃதேயுமன்றி ஏறிச் செல்லும் நிலை உயர்ந்தது மில்லை; சுமந்து செல்லும் நிலை தாழ்ந்ததுமில்லை. முயற்சி மிகுதியாலும் குறைவாலும் ஏற்படும் அன்றைய நிலை வேறுபாடு அது. முயற்சி திரு வினை ஆக்கும் அன்றோ! இவற்றையெல்லாம் கருதாது சில சமயத்தவர் கூறுவதை மேற்கொண்டு மயங்குதல் விரும்பத் தக்கதாமோ! வந்தேறிகள், முற்பிறப்பில் தம்மைக் கருதி நன்கொடை கொடுத்து ஏமாறுதலாகிய அறத்தைச் செய்தால், வரும் பிறப்பில் உயர்நிலை அடையலாம் என்று கூறி மறுபிறப்புக் கொள்கையை இந்நாட்டிற் பரப்பி நம்பச் செய்தார்கள். அதை ஆசிரியர் முற்றும் மறுப்பார் இவ்வாறு கூறினார். இடை-நடுவிடம் வேற்றுமையுருபன்று. பொன்றாத்துணை பெயரெச்சத் தொடர். பொன்றா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். சிவிகை - விசிகை எழுத்து நிலை மாறிய போலி, சிவிறி - விசிறி போல. விசித்தல் - இழுத்துக் கட்டுதல், சிவிகைக்கு ஆகுபெயர். அறத்தாறு இது என வேண்டா - என்றது இன்னதல்ல இதுவென மொழிந்தது. இக்குறட்பாவின் உரைமேல் எழும் ஆத்திக நாத்திக வினாக்களும் உரை ஆசிரியர் விடையும் வருமாறு: ஆத்திகன்: ஆத்திகர் கொள்கைக்கும், ஆரியர் நான்மறைக் கொள்கைக்கும் பரிமேலழகர், மணக்குடவர் முதலிய உரை யாசிரியர் கொள்கைக்கும் இழுக்குத் தேடும் முகத்தால் இக்குறட்பாவுக்கு இவ்வாறு உரை கூறியது பொருந்துமா? உரை ஆசிரியர்: இவ்வாறு நாம் கூறிய இவ்வுரை ஒன்றுதான் பொருந்தும்! இதுவே வள்ளுவர் உள்ளமும் ஆகும் என்க. இக்கருத்தில் இக்குறட்பாவை வள்ளுவர் அருளிச் செய்ய வில்லை எனில் அவர் உலகினர்க்கு இன்றியமையாது சொல்ல வேண்டிய ஒன்றைச் சொல்லா தொழிந்தார் என்ற பழி அவருக் கேற்படும். குறளில் எல்லாம் உண்டு என்ற சொல்லுக்கும் இழுக்கு ஏற்பட்டிருக்கும். செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்ற உண்மையை இக்குறட்பாவில் அன்றி வேறு எங்கும் வள்ளுவர் கூறவில்லை. - குயில், கிழமை இதழ், 1.11.1960 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். பி. : வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல். பொருள்: வீழ் நாள் படாஅமை - (அறம்) செய்யாமற் கழிந்த நாள் இல்லாமல், நன்று - அறத்தை, ஆற்றின் - செய்து வருவானா னால், அஃது - அந்த அறமானது, ஒருவன் - ஒருவனின், வாழ்நாள் வழி அடைக்கும் கல் - வாழ் நாட்கள் அழிந்தோடாமல், சாகாமையைத் தேக்குவதோர் அடை கல். கருத்து: அறம் வாழ்நாள் கழிந்து போகாமல் சாவாமையைத் தேக்கி வைப்பதோர் அடைகல். இடைவிடாது அறமே செய்து கொண்டிருப்பான் ஒருவனின் வாழ்நாள் வீணிற் கழியாது. எனவே, அவனுக்கு மூப்புவராது, சாக்காடு அண்டாது என்றால், ஒருவன் அறமே செய்து நாட்களைப் பயனுள் ளனவாக்கினால் அந்நாட்கள் மட்டும் கழியாது நிற்குமா? அதனால் மூப்பு வராமற் போகுமா? சாக்காடு அண்டாதோ? - என்று கேட்கலாம். இடைவிடாது அறமே செய்வான் ஒருவனுக்கு மட்டும் வாழ்நாள் கழிவதில்லை. அந்த அறம் அவனுக்குச் சாகாமையைச் சேர்க்கின்றது என்று நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவோன் பிழை செய்துவிட்ட வனாகான். தீமைக்குட்பட மாட்டான். அவன் சாகான்; என்றும் இன்புற்றிருப்பான். அவனால் உலகம் இன்புறும், துன்பு நீங்கும். யாண்டுபல ஆக நரையில ஆகுதல் யாங்காகியர் என வினவுதி ராயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண் டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே. - புறம். 192 இல்லந் துறந்த புலவன் ஒருவன் இடைவிடாது அறமே செய்து வந்தான்; அதுவேயுமன்றி அவன் ஏவல் கேட்போர் எல்லோரையும் அறமே செய்விப்பதோர் அறத்தையும் செய்தான்; அதுவுமேயன்றி அரசனையும் அறந்தவறாத வனாக்குவதோர் அறத்தையும் செய்தான்; அவன் மனைவி மக்களையும் அறிவு நிரம்பியவராதற்குரிய அறப் பண்பாடும் மிக்கிருந்தான்; ஆன்றவிந்தடங்கிய சான்றோர் வாழும் ஊராகத் தன்னூரை ஆக்குவதோர் பேரறத்தையும் செய்து வந்தான். அவ்வாறாக அவனை நரையே அடையவில்லை. என்ற கருத்துக்களைத் தன்னுட் கொண்டமைந்தது இச்செய்யுள். இவ்வாறு சொன்னால், அவ்வறவோனுக்குப் பிறகு நரைக்காதா? அவன் சாகமாட்டான் என்று நம்புவது எப்படி? - என்று கேட்கலாம். நரை என்பது காலத்தால் ஏற்படும் மாறுதல் என்பார் மேற்புல் மேய்வார். அவ்வாறு கூறுவது தவறு. காலம் என்பதோர் தனிப் பொருள் இல்லை என்பதை ஊன்றி உணர வேண்டும். ஆனால் பொருளின் நிகழ்ச்சி என்பது ஒன்று உண்டு. மகன் ஒரு பொருள், அப் பொருளின் நிகழ்ச்சி என்பது அவனின் தொழில்கள். அத்தொழில்கள் அறம் பற்றியவை, பாவம் பற்றியவை என இருவகைப்படும். பாவம் பற்றிய தொழில்கள் விரைவும் குறியும் அற்றவை. அறம் பற்றிய தொழில்கள் விரைவுடையவை. குறியுள்ளவை (குறி - இலக்கு). வண்டியுருளையின் ஆரையின் விரைவுக்கு உலகின் காலக் கணக்குச் செல்லும். மகன் என்பதோர் உயிர் உருளையின் ஆரையின் விரைவுக்கு அது செல்லாது. அவ்வறவோன் அறச் செயலின் விரைவு தன் இலக்கை அடையும் வரைக்கும் நிற்காது. அவ்விடத்தில் உலகின் காலக் கணக்குப் பயனற்றுப் போகும். ஏனென்றால், காலம் என்பதோர் தனிப்பொருள் இல்லை. பொருளின் நிகழ்ச்சி என்பது உண்டு. இறப்பே நிகழ்வே எதிரது என்னும் திறத்தியல் மருங்கில், தெரிந்தனர் உள்ளப் பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும். - தொல். 732 என்பதை ஊன்றியுணர்க. அம்ருதம் உண்ணுபவர்கள் சாகாதிருந்தனர் என்னும் பொய்யான புராணக் கருத்தை நம்புவாரை அப்பாழுங் கிணற்றினின்று மீட்டு நன்னெறி காட்டினார் இப்பாட்டினால் ஆசிரியர். வீழ்நாள், வாழ்நாள் வினைத்தொகை நிலைத்தொடர்கள். படாஅமை - உயிரளபெடை. நன்று - அறம் என்றவாறு. வழியடைத்தல் - அது செல்லும் வழியடைத்துச் சாகாமை காத்தல். ஆற்றின் - செயின் என்னும் வாய்ப்பாட்டு எதிர்கால தெரிநிலை வினையெச்சம். அறம் பிறவியை அகற்றும் என்ற கருத்தில் பிறரெல்லாம் நலிந்து பொருள் கூறி இழுக்குவார். அவர்தம் சமயம் நோக்கி மக்களை இழுக்க முயல்வார் என விடுக்க. - குயில், கிழமை இதழ், 8.11.1960 39 அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. பி. : அறத்தான் வருவதே இன்பம் மற்றஎல்லாம் புறத்த புகழும் இல. பொருள்: அறத்தான் - நன்று ஆற்றுவதோர் ஆற்றலின் காரணமாக, வருவதே இன்பம் - வருவதே இன்பமாகும். மற்ற எல்லாம் - அறமல்லாத வழியில் செய்யப்படும் செயல் அனைத்தும், புறத்த - இன்பத்தின் புறமாகிய துன்பத்தின் பாற்பட்டவை, புகழும் இல- அச்செயல்களால் புகழும் ஏற்படா. கருத்து: இன்பம் என்பது அறத்தால் வருவது. அறத்தான் - ஆன் மூன்றாவதன் உருபு. முதற் கருவிப் பொருளது. இன்பம் என்பது காம நுகர்ச்சி என்றார் பரிமேலழகர். காம நுகர்ச்சி மட்டும் இன்பம் அன்று; ஈத்து வத்தலும் இன்பம்; குழந்தை மழலை கேட்டலும் இன்பம். மனமகிழ்ச்சியே இன்பம் என்க. இன்பம் காம நுகர்ச்சியே என்று பொருந்தாப் பொருள் கொண்டதால் அறத்தால் வருவதே இன்பம் என்பதற்கு இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் என நலிந்து பொருள் கொள்ள நேர்ந்தது. அற ஒழுக்கத்தின் பாற்பட்ட மனையாளோடு கூடிச் செய்யும் அறத்தாலும், இல்லந்துறந்து செய்யும் அறத்தாலும் இன்பம் வரும். மற்றெல்லாம் - மற்ற எல்லாம், அகரம் தொக்கது. புறத்த, இல - பலவின்பால் குறிப்பு முற்றுக்கள். - குயில், கிழமை இதழ், 15.11.1960 40 செயற்பால தோரு மறனே வொருவற் குயற்பால தோரும் பழி. பி.மா: ஒருவற்கு செயற்பாலது ஓரும் அறனே உயற் பாலது ஓரும் பழி. பொருள்: ஒருவற்கு செயற்பாலது - ஒருவனுக்குச் செய்யத்தக்கது, ஓரும் அறனே - ஆராய்ந்து செய்யப்படும் அறமேயாகும், உயற் பாலது - நீக்கத்தக்கது, ஓரும்பழி - அவன் அறிந்த பழி. கருத்து: தெரிந்து செய்யத் தக்கது அறம், தெரிந்து நீக்கத் தக்கது பழி. ஓர்தல் - ஆராய்தல். ஓரும் அறன், ஓரும் பழி பெயரெச்சத் தொடர்கள். தெரியாது செய்யும் குற்றம் குற்றமன்று. தெரிந்து செய்வது குற்றம். ஆதலால் ஓரும் பழி என்றார். அவ்வாறே ஓரும் அறமும் கொள்க. அறம் - அறன். போலி. செயற்பாலது உயற் பாலது குறிப்பு வினை முற்றுக்கள். அவை முதல் வேற்றுமையில் வந்தன. வினையாலணை யும் பெயர்கள். பழிக்குக் காரணமாகிய பாவத்தைப் பழி என்றார். - குயில், கிழமை இதழ், 15.11.1960 அதிகாரம் - 5 இல்வாழ்க்கை அஃதாவது, மனையாளோடு கூடி வாழ்தலின் சிறப்பு பாழே மடக்கொடி இல்லாமனை ஆதலின், இல் என்பது மனையாளோடு கூடி வாழும் நிலையைக் குறித்தது. வாழ்க்கை என்றது வாழ்க்கைச் சிறப்பை. இல்லினது வாழ்க்கை என விரிக்க, ஆறாம் வேற்றமைத் தொகை நிலைத் தொடர். வாழ்வார்க்கு இன்றியமையா அறம் நிறைந்த பனுவலைத் துறந்தார் இயற்றியருளியதாலும், மழையினாலும் மெய்யுணர்வு பெறுவதோர் வேட்கையாலும் நிலைபெற்ற தான இவ்வுலகின் தோற்றத்தைக் கூறியருளிய ஆசிரியர், சமயக் கணக்கர் மதி வழி கூறாது அறிவுடையார் இன்னது செய்வார், இன்னது விலக்குவார் என எடுத்துக் காட்டுதல் வாயிலாக இது பொருள் எனக்கூறுவாராகி முதற்கண் இல்வாழ்க்கையைக் கூறியருளினார். 41 இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை. ã.kh.: இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க் கும் நன்மை ஆற்றின் நின்ற துணை. பொருள்: இல்வாழ்வான் என்பான் - மனையாளோடு கூடி வாழுகின்றவன் என்று சொல்லப் பெறுகின்றவன், இயல்பு உடைய - இயற்கைத் தொடர்புடைய, மூவர்க்கும் - அன்னை, தந்தை, ஆசிரியன் ஆகிய முத்திறத்தார்க்கும், நன்மை ஆற்றின் நின்ற துணை - அந்த முத்திறத்தார்க்கும் ஆன நல்லொழுக்க நெறிக்கு ஏற்ப நின்ற துணையாவான். கருத்து: இல்வாழ்வான் தாய், தந்தை, ஆசிரியர்க்கு நற்றுணையாதல் வேண்டும். தாய் தந்தை ஆசிரியன் மூவரும் இல்வாழ்வானுக்கு இயற்கை முறையில் அமைந்த தொடர்புடையாராதல் வெளிப்படை; பிறப்புத் தருதல், வளர்ப்புத் தருதல், அறிவு தருதல் ஆகிய மூன்றும் அம்மூவர்க்கும் உரியவையாதலின். மூவர் என்பவர், வடவர் கூறும் பிரமசாரி, வானப் பிரத்தன், சந்நியாசி என்றார் பரிமேலழகர். வருண முறையை எதிர்க்கும் திருவள்ளுவர் பிரமசாரி முதலிய மூவரை உட்கொண்டு செய்யுள் செய்வாரா? - பரிமேலழகர் தம் மதம் நோக்கித் தமிழரை வலிந்து இழுக்க முயல்வது வெளிப்படை. இவ்வாறு பொய்ப் பொருள் கூறிய அவர் மேற் செய்யுட்களிலும் இடர்ப்பட்டு, ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய் புகன்று செல்வது ஆங்கு ஆங்கும் காட்டப் பெறும். இல்வாழ்வான் அன்னைக்குத் துணையாவது என்பது, பிணி, மூப்பு, சாக்காடு நேராமல் உண்டி உடை உறையுள் உதவுவதோடு, தானும் நன்னெறி பற்றியே ஒழுகுதல். தந்தைக்குத் துணையாவது என்பது, உண்டி முதலிய உதவுவதோடு, இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்லையும் ஏற்படுத்தல். ஆசிரியர்க்குத் துணையாவது என்பது தயையாக வித்தையைச் சாற்றினோன் ஒரு பிதா (குமரேச சதகம்) ஆதலின், அவனையும் தந்தை என எண்ணி, அவற்கு, உண்டி முதலிய வற்றில் குறைபாடு இன்றித் துணை செய்வதும், அவன் பால் என்றும் நன்றியுடையனாதலுமாம். என்பான் - எனப்படுவான், செயப்பாட்டு வினை செய்வினையாய் வந்தது. - குயில், கிழமை இதழ், 22.11.1960 42 துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை. ã.kh.: இல்வாழ்வான் என்பான் துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் துணை. பொருள்: இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வான் என்று சொல்லப் பெறுவோன், துறந்தார்க்கும் - இல்லம் துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும் - வறியவர்க்கும், இறந்தார்க்கும் - செத்தவர்க்கும், துணை - துணையாம். கருத்து: துறவிகட்கும், வறியவர்கட்கும், இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை. இங்குத் துறந்தார்க்கும் என்றது களைகண் ஆனவரால் துறக்கப் பட்டாரை என்றுகூறி இடர்ப்பட்டார் பரிமேலழகர், துறந்தாரைச் சந்நியாசி என்று முற்பாட்டில் கூறிப் பொய்த்ததால். துவ்வாதவர் - சாப்பாடின்றி வருந்துபவர் ஆதலின் வறியவர் என்றாம். இறந்தார்க்கு இல்வாழ்வான் துணை செய்தலாவது: நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கட் செலுத்துவதென்று பரிமேலழகர் உரை கூறினார். புலனழுக்கற்ற அந்தணாளரான கபிலரும் நகை செய்த கொள்கை இது. புத்தே ளுலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது. - மணி; சிறை, செய். 22, 137 இனி, இறந்தார்க்கு இல்வாழ்வான் செய்யும் துணையாவன: வையம் உய்ய அவர் வகுத்த முறைகளை அவர் இறந்தபின், பயனுற வெளியிடுவதும் முடிக்காமல் விட்ட மருந்தை அவர் இறந்தபின் இவ்வுலகிற் பரப்புதலும், இயற்றிய நன்னூற்களை அவர் இறந்த பின் முடித்துப் பயன்படுத்தலும், பிறர் நலம் கருதித் தொடங்கிய பெருஞ்செயல், அரும் பொருள்களை அவர் இறந்தபின் நிறைவு செய்து உலகுக்குப் பயன் படுத்தலும். இறந்தார்க்குச் சேரவேண்டிய புகழை அவர்க்குச் சேர்ப்பதே இருப்பார் கடவுள் என்க. இறந்தாரின் உடலை இடுகாடு சேர்ப்பதும் இருப்பார் செய்யும் துணை எனின் அதுவும் அமைவதே. - குயில், கிழமை இதழ், 22.11.1960 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க னென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை. ã.kh.: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்ற ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை. பொருள்: தென்புலத்தார் - கடல் கோட்பட்ட குமரி நாட்டி னின்று புகலென வந்தோரும், தெய்வம் - தெய்வங்களும், விருந்து - விருந்தினரும், ஒக்கல் - சுற்றத்தாரும், தான் - தானும், என்ற - என்று சொல்லப்பட்ட, ஐம்புலத்து - ஐந்து இடத்தும், ஆறு - செய்யும் அறநெறியை, ஓம்பல் - வழுவாது காத்தல், தலை - தலையாய அறமாம். கருத்து: தென்புலத்தார் முதலிய ஐந்திடத்தார்க்கும் இல்வாழ்வான் துணையாதல் வேண்டும். தென்புலத்தார் பற்றிய விளக்கம்: தொல்காப்பியப் பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் உரை நவிலுங்கால் குமரி என்ற சொல்லுக்குக் குமரியாறு என்று பொருள் கூறினார். அவர் அவ்வாறு பொருள் கொண்டதற்குக் காரணம். நச்சினார்க்கினி யருக்கு முன்னிருந்த இளம்பூரணரும், இறையனாரகப் பொருள் உரை ஆசிரியர் முதலியோரும், புறநானூற்றுப் புலவர் சிலரும் குமரியை ஓர் ஆறென்று கூறியிருந்ததேயாகும். தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்துக் குமரி என்பது ஓர் ஆறாக இருந்திருக்க வேண்டும் என்றே ஆராய்ந்துணரப் பட்டதாகும். அடியார்க்கு நல்லார் குமரிக்குத் தெற்கே ஒரு காலத்திருந் தொழிந்த நாற்பத்தொன்பது நாடுகளின் பெயர்களையும் பின்வருமாறு கூறினார். அக்காலத்துப் பஃறுளி என்னும் ஆற்றுக்கும், குமரி என்னும் ஆற்றுக்கும் இடையே எழுநூற்றுக்காவத ஆறும் அவற்றின் நீர் மலிவானென மலிந்த, ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன் பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பனை நாடும், என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால் குமரியாகிய பௌவம் என்றார் என்று உணர்க. முன்னொரு காலத்தில் குமரி முனைக்குத் தெற்கில் குமரியாறு ஒன்று இருந்ததென்றும், அதற்குத் தெற்கே பல காவதத்துக்கப்பால் பஃறுளியாறு இருந்ததென்றும், இவ் விரண்டுக்கும் இடையே உள்ள நிலப்பகுதி கடலாற் பன்முறை யாகக் கொள்ளப்பட்டதென்றும் அறியக் கிடக்கின்றதன்றோ! அவ்வாறு பலகால் கடல்நீர் ஏறி விழுங்கப்படுந்தோறும், அந் நாடுகளில் இருந்தாராகிய தென்புலத்தார் (தென்புறத்தார்) இங்குப் புகல் என்று புகுவாரன்றோ? அவரையே இங்கு ஆசிரியர் தென்புலத்தார் என்றார் என்க. தென்புலம் - தெற்கிடம்; ஏழ்தெங்கநாடு முதலிய நாற்பத் தொன்பது நாடுகள். தென்புலத்தார் என்பது பிதிரர் என்று பொருள் கூறினார் பரிமேலழகர். அவ்வாறு அவர் பொருள் கூறியதற்கு, இடைக் காலத்தில் வடவரால் புகுத்தப்பட்ட பொய்நூற்களே காரணம் என்க. தென்புலம், தெற்கும் புலமும் ஆகிய இரு சொற்களால் ஆகியது. புலம் - இடம். புலம் என்பது அறிவுக்கும் பெயர் எனின், இங்குப் பொருந்தாமை அறிக. கலை மலிந்த தென்புலவர் கற்றோர் தம் இடர் தீர்க்கும், - கருப்பறியலூர். (சுந். தேவாரம் திருப்பறி) என்ற இடத்தும் தென் புலத்தாரையே குறித்த தென்பர். தெய்வம் என்பதன் விளக்கம். மிகுபழ நாளில், தன்னில் எழுந்து இன்னல் விளைக்கும் காட்டுத் தணலையும், எந்நிலத்தும் பாய்ந்து இடர்ப்படுத்தும் காட்டாற்றுப் புனலையும், மாற்றருந் துன்பம் விளைவிக்கும் பெருங்காற்றையும், கலங்கக் கலங்க வந்தடிக்கும் விலங்குகளையும் எண்ணிப் பொதுவாக அத்துன்பத்தைத் தெய் என்ற சொல்லாற் குறித்தார்கள். தெய் என்ற அச்சொல்லிற்குக் கொல்லுவது என்பது பொருள். தெய் என் கிளவி கோறலும் தெய்வமும் (பிங்கலந்தை 642) என்பது இங்கு நோக்கற்குரியது. பின்னர் அம்மக்கள் அறிவு வளர்ச்சி பெற்ற அளவில், அத்தணலை உணவு ஆக்குதற்கும், உலைக்களம் எடுத்தற்கும், அப் புனலை, நெல் முதலிய விளைத்தற்கும், குள முதலிய காண்டற்கும், அக்காற்றை வெப்பம் ஆற்றுதற்கும், நெல்லைத் தூற்றுதற்கும், அவ்விலங்குகளை ஏரடித்தற்கும், பால் கறத்தற்கும் பயன்படுத்துவராகி அவற்றைப் போற்றலானார்கள். திங்களைப் போற்றினர்; செங்கதிர் போற்றினர்; மழைதரும் வானைப் போற்றினர்; வளஞ் செய்யும் நிலத்தைப் போற்றினர். அப்போதும் அவர்கள் அவைகளைத் தெய் என்றே கூறினர். மொழி வளர்ச்சி ஏற்பட்ட போதன்றோ தெய் என்பது தெய்வம் ஆயிற்று. தெய்வம் தூய தமிழ்ச் சொல். (தெய்-வ்-அம்) தெய் முதனிலை; அம் பெயரிறுதிநிலை; வ் பெயரிடைநிலை எனப் பிரித்துணர்க. இதை வடசொல் என்று கூறி மகிழ்ந்து கொள்வார் சில கலகக்காரர். யரழ என்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து - வகர மொடு தோன்றும் (தொ.எ.29) என்ற எழுத்து மயங்கு முறைக்குத் தெய்வம் வரலாறு காட்டப்பட்டதையும் அவர் அறியார். இதனாலே, நாளடைவில் கண்ணையும் மனத்தையும் கவரும் பொருள்களையும், பயன்படு பொருள்களையும் தெய்வம் என்றார் என அறிந்து கொள்ள வேண்டும். காலம் உலகம் உயிரே உடம்பே, பால்வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல்லென வருஉம், ஆயீரைந்தும் பிறவும் அன்ன, ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம், பால்பிரிந் திசையா உயர்திணை மேன. - தொ.சொ.58 என்ற நூற்பாவினால், காலம் தெய்வமாயிற்று. சொல் தெய்வம் ஆயிற்று. செயல் தெய்வம் ஆயிற்று. ஞாயிறு, திங்கள், கோள்கள் தெய்வங்கள் ஆயின. பின்னும் செல்வம் தெய்வமாயிற்று. நெல் முதலியவை தெய்வங்கள் ஆயின. வெற்றி, புகழ், நூல் தெய்வங்களாயின. சான்றோர் தெய்வம், அன்னை தெய்வம், தந்தை தெய்வம், ஆசிரியன் தெய்வம், தலைவிக்குத் தலைவன் தெய்வம், காதல் தெய்வம், அரசன் தெய்வம் ஆயினவாறு காண்க. குரவை தழீஇயாம் மரபுளிப் பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும். - முல்லைக்கலி 3 அடி 75 -76 இதில் புகழ் தெய்வமாயிற்று. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். - குறள் 28 இதில் சான்றோர் தெய்வங்களாகக் கூறப்பட்டனர் என்றிவ் வாறு (தொல் - பொருள் 81-ம் பாட்டின் உரையில்) கூறப்பட்டது. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. - குறள் 15 இதில் மழை தெய்வமாகக் கூறப்பட்டது. (இவ்வாறு தொல் - பொருள் 81-ல் கூறப்பட்டது.) காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி ஆ வாழியரோ நெடிது. இதில் ஆ தெய்வமாகக் கூறப்பட்டது. ( உரை) கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. - தொல். 88 இதில் கதிரும் தீயும் திங்களும் தெய்வங்கள் ஆயின. குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற புதல்வர்க்குத் தந்தையும் தாயும் - அறவோர்க்(கு) அடிகளே தெய்வம் அனைவர்க்கும் தெய்வம் இலைமுகப் பைம்பூ ணிறை. - நீதிநெறி விளக்கம் 27 இதில் கொழுநன் முதலியவர் தெய்வங்கள் ஆயினவாறு காண்க. மற்றும், அன்பு, அறிவு, வாய்மை, அறம் முதலிய நற்பண்புகள் அனைத்தும் தெய்வங்கள் எனவும் அறிதல் வேண்டும். இனித் தென் புலத்தாரை ஓம்புவதாவது: தமிழ் நாட்டார் என்று கருதி அவர் வாழ்வுக்கு ஆன வழிவகை செய்தலாம். தெய்வங்களை ஓம்புவதாவது: ஆப் போன்றவைகளை நன்கு காத்தலும், அரசன் போன்றோரை வாழ்த்தி அவர் கட்டளைக்குக் கட்டுப்படுவதும் அவரைப் போற்றுவதும் ஆம். நிலம், தீ, நீர், வளி, விசும்பு போன்றவைகளின் பயனறிதலும் போற்றுதலும் ஆம். அறம் முதலியவற்றின் அருமை தெரிந்து மேற் கொண் டொழுகலும் ஆம். புகழைப் பெரும்பயனாகக் கருவி உலகில் அருஞ்செயல் செய்தலும் ஆம். இனி விருந்தோம்பலாவது - உள்ளம் உவந்து வரவேற்று உண்பித்தல். ஒக்கல் ஓம்பலாவது: உறவினர்க்கு ஒன்று உற்றுழிக் கை கொடுத்தலாம். தன்னை ஓம்புதலாவது: தன் மனைவி மக்களையும் தென் புலத்தாரையும் காத்தற்கு ஆன தகுதிக்கு இடையூறின்றித் தன்னைக் காத்துக் கொள்வதாம். தலை - முதன்மை, அஃது அறம் என்றாம். - குயில், கிழமை இதழ், 29.11.1960 44 பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில். பி.மா: வாழ்க்கை பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் எஞ்ஞான்றும் வழி எஞ்சல் இல். பொருள்: வாழ்க்கை - ஒருவனின் இல்வாழ்க்கையானது, பழிஅஞ்சி - பழிக்கு அஞ்சி, பாத்தூண் உடைத்து ஆயின் - பகுத் துண்டலைக் கொண்டதாயிருப்பின், எஞ்ஞான்றும் - எக் காலத்தும், வழி எஞ்சல் இல் - அவன் வழி வருவோர் உயர்ந்து நிற்றலன்றிக் கெடுதல் இல்லை. கருத்து: நல்வழியில் செல்வம் சேர்க்கவேண்டும். அதையும் தனக்குள்ளது கழித்து மற்றதைப் பொது நலத்துக்குப் பகிர்ந்து உதவ வேண்டும். பகுத்துண்டலைப் பின்னர்க் குறித்தலின், முதற்கண்ணுள்ள பழியஞ்சுதல் செல்வம் சேர்த்தற்கண் பழியஞ்சுதல் எனக்கொண்டு அறவழியில் பொருள் தேடுக என்றாராயிற்று. பாத்தூண் என்றது, தன் குடும்பத்துக்கானதைவிட மிஞ்சிய செல்வத்தை அரசுக்கும், அற நிலையங்கட்கும் ஆம் வகையில் பிரித்துக் கொடுத்தலை. பகுத்து - பாத்து என மருவிற்று. உண்ணலின் முதனிலை ஆகிய உண், ஊண் எனத் திரிந்தது. இது முதனிலை திரிந்த தொழிற் பெயர். பழியஞ்சி என்பது இரட்டுற மொழிந்தது: பழியஞ்சிப் பொருள் சேர்த்தலுக்கும், பழியஞ்சிப் பாத்தூண் உடமைக்கும் ஆயினமையான். பகுத்துண்ணுதலில் பழியஞ்சுவதாவது, தான் பெற்ற செல்வம் தன் நாட்டுக்கே ஆம்படி பகுத்தல்; பிற நாட்டார்க்கு ஆம்படி பகுத்தானாயின் அவனுக்குப் பழிநேரும் என்க. ஒருவன் மீத்துவைக்கும் செல்வத்தாலேயே அவன் வழி வருவோர் வாழ முடியும் என்று கருத வேண்டா, அவன் பழியஞ்சிப் பகுத்துண்ணக் கடவன். அதனால் அவன் அடைந்த அறமும் அறத்தால் வந்த புகழும் வழி வந்தோரை வாழவைக்கும் என்பார், இவ்வாறு கூறினார் ஆசிரியர். 45 அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனும் அது. பி.மா.: இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்து ஆயின் அது பண்பும் பயனும். பொருள்: இல்வாழ்க்கை - காதலிருவர் கருத்தொருமித்து வாழ்வதோர் இல்வாழ்க்கையானது, அன்பும் - அன்பையும், அறனும் - அறத்தையும், உடைத்தாயின் - கொண்டதாயிருந்தால், அது - அவ்வாறு கொண்ட அது, பண்பும் பயனும் - அவ்வில் வாழ்க்கையின் பண்பும், பயனுமாகும். கருத்து: மன நலத்தானாகிய அன்பும், அறமும் கொண்ட இல் வாழ்க்கையே பேரின்ப வாழ்க்கை. அன்புக்கும் அறத்திற்கும் அப்பாலாக இன்பம் பயப்பதொன் றில்லை என்பார் பண்பும் பயனும் அது என்றார். இச் செய்யுளால் உருவ வணக்கம், சமயக் கணக்கர் கூறும் தம்மில் மாறுபட்ட பலவகை முயற்சிகள், மூட வழக்கங்கள் அனைத்தையும் மறுத்தார். இதில் பயன் என்றது இன்பத்தை; பண்பு என்றது அன்பையும், அறத்தையும்; அன்பும் அறமும் கொண்டிருத்தலே இன்ப நிலை என்று வலியுறுத்தியதை உற்று நோக்கித் தெளிக. 46 அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றில் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவ தெவன். பி.மா: இல்வாழ்க்கை அறத்து ஆற்றின் ஆற்றில் புறத்து ஆற்றில் போஓய்ப் பெறுவது எவன்? பொருள்: இல்வாழ்க்கை - மனையாளோடு கூடிச் செய்யும் இல் வாழ்க்கையை, அறத்து ஆற்றின் ஆற்றில் - அறவழியில் நடத்தினால், புறத்து ஆற்றில் போஒய்ப் பெறுவது எவன்? பிற வழியிற் சென்று பெறத் தக்க பயன் எது? (ஒன்றுமில்லை என்றபடி.) கருத்து: அற வழியில் ஆற்றும் இல்வாழ்க்கை இன்பந்தரும். பிற வழியில் ஆற்றுவது துன்பந்தரும். புறத்தாறு என்பது, துறவற நெறி என்று கருதினார் பரிமேலழகர். துறவறத்தாலும் பயனை அடையலாம் என மேல் ஆசிரியர் குறித்தார் ஆதலின் அது பொருந்தாது. அறநெறிக்கண் இல்லறம் செய்வதால் இன்பம் கிடைக்கும் என்றார் முன்னும். பிற நெறி என்றது, ஈண்டு வந்தேறிகள் மக்கள் பால் விதைத்துள்ள மடமை நெறிகளை. கொலை வேள்வி செய்வதால் வானுலகு பெறலாம். உருவங்களை நோக்கி நோற்றலால் எல்லாம் பெறலாம் என்பன போன்றவற்றில் உள்ள தீ நெறிகளால் துன்பமே உண்டாம் என்பார் இவ்வாறு கூறினார் என்க. அறத்தாறு, புறத்தாறு என்பவற்றில் ஆறு - வழி. ஆற்றின் என்பது, ஆற்றுதலின் முதனிலையாகிய ஆற்று, இன் என்ற எதிர் கால வினையெச்ச இறுதிநிலை பெற்றது. எவன் - எது, எவை எனும் இரண்டுக்கும் பொதுவாய் வரும் வினா. 47 இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. பி. : இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாந் தலை. பொருள்: இல்வாழ்க்கை - இல்லாளோடு கூடிவாழும் வாழ்க்கை யினின்று, இயல்பினால் - அதற்குரிய அற முயற்சியோடு, வாழ்பவன் என்பான் - வாழ்கின்றவன் என்று சொல்லப் பெறுவான், முயல்வாருள் எல்லாம் தலை - பிற வழியில் முயல்வார் எல்லாரினும் மேலானவன். கருத்து: அற முயற்சியுடன் கூடிய இல்லறத்தான், பிற முயற்சி செய்வானினும் மேலானவன். பிறமுயற்சி: கொலை, வேள்வி, உருவ வணக்கம் முதலியவை. 48 ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து. பி. : ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. பொருள்: ஆற்றின் ஒழுக்கி- தவஞ் செய்வாரைத் தவநெறியே ஒழுகச் செய்து, அறன் இழுக்கா இல்வாழ்க்கை - அறம் பிழைக்காத இல் வாழ்க்கையானது, நோற்பாரின் நோன்மை உடைத்து - அத்தவம் செய்வாரின் ஆற்றலை விடப் பேராற்றல் உடையதாகும். கருத்து: தவம் செய்வார் ஆற்றலினும் இல்வாழ்க்கை நடத்துவான் ஆற்றல் பெரிது. தவம் செய்வார்க்குறும் இடையூறு நீக்குவான் இல்வாழ் வான் ஆதலின், இல்வாழ்வான் ஆற்றல் பெரிது என்றார். ஒழுக்கி - ஒழுகி என்பதன் பிறவினை. - குயில், கிழமை இதழ், 13.12.1960 49 அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று. பி.மா : இல்வாழ்க்கையே அறன் எனப்பட்டது. அஃதும் பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று. பொருள்: இல்வாழ்க்கையே அறன் எனப்பட்டது - மனையாளோடு கூடி நடத்தும் வாழ்க்கையே அறம் எனப்பட்டது, அஃதும் - அறமே நிறைந்த அவ்வில்வாழ்க்கையும், பிறன் பழிப்பது இல் ஆயின் - பிறனால் பழிக்கப்படுவது இல்லா தொழிந்தால், நன்று - அறம் எனப்படும். கருத்து: இல்வாழ்வே, அறவாழ்வு என்று சொல்லப் படினும், ஒரு மாசு உறினும் அது அற வாழ்வு எனப்படாது. துறவறத்தின் வேருக்கு இல்லறமே காரணம் ஆதலின், அறன் என்றார். அதுவேயுமன்றி இல்லாளோடு கூடி நடத்தும் வாழ்க்கை வகையில் அறமே நிறைந்திருத்தலின் இல் வாழ்க்கையே அறம் என்றார் என்பதும் அறிதல் வேண்டும். இனி, அறம் நிறைந்த அவ்வில்வாழ்க்கையும், பிறன் பழிக்கும் வகையில் சிறிது குற்றப்படினும் அஃது அறன் எனப் படாது என்பார் இவ்வாறு கூறினார் ஆசிரியர். அறன் எனப்பட்டதே என்பதன் பிரிநிலை ஏகாரம் இல்வாழ்க்கை என்பதனோடு கூறப்பட்டது. நன்று - அறம். துறவறத்தைச் சிறப்பிலதாகக் காண்பார் ஆசிரியர், ஏன்? இல்லத் துறவை நீக்கி உள்ளத் துறவினை ஆராயின், அவ் வுள்ளத்துறவால் உலகுக்குப் பயன் எதுவுமில்லா தொழிலால் என்க. மேலும், துறந்தான் என்பான், இல்வாழ்வானையே எதிர்பார்த்தவனாகிறான் அதனாலும் என்க. 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும். பி.மா.: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். பொருள்: வையத்துள் - உலகத்தில், வாழ்வாங்கு வாழ்பவன் - வாழும் முறைப்படி வாழும் ஒருவன், வான் உறையும் - வானுலகில் வாழ்வதாகச் சொல்லப்படும், தெய்வத்துள் வைக்கப்படும் - தெய்வங்களின் வரிசையில் வைத்து எண்ணப் படுவான். கருத்து: மனையாளோடு கூடி, வாழும் முறைப்படி வாழ்க. வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றது பிறர் தம் மதம் மேற்கொண்டது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் என்றது, அவ்வாறு மேற்கொண்ட அப் பிறர் மதத்தைக் களைந்தது. தெய்வத்துள் வைக்கப்படுவதற்குச் சமயக் கணக்கர் மேற்கொள்ளப் பணித்த முறைகள் வேறு வேறு. அவற்றையெல்லாம் தேவையற்றவை என ஒதுக்கி, வாழும் முறைப்படி வாழ்க என்றார். எத்தனை சமையங்கள்! அவையும் ஒன்றினோடொன்று ஒவ்வாதவை. அச்சமயங்கள், மக்களை மேற்கொள்ளப் பணிக்கும் முறைகள் எத்தனை! அவைகளும் ஒன்றினோடொன்று ஒவ்வாதவை. அம்முறைகளை மேற்கொண்டு மக்கள் படும் இன்னல்கள் எத்தனை! மான இழப்பு, மதியிழப்பு, செல்வ இழப்பு, செயலிழப்பு! இத்தனை பாட்டுக்கும், பயனுண்டு எனும் உறுதியேனு முண்டா? அதுவும் இல்லை. எனினும் மக்கள் தெய்வ உலகத்தில் தெய்வ வரிசையில் சேர இத்தனையும் பட்டுத்தான் ஆக வேண்டும் என்று நம்புகின்றார்கள் - நம்பச் செய்ததால். ஆசிரியர், மக்கள் மனத்தில் இடம் பெற்றுவிட்ட இந்த நம்பிக்கையை எதிர்க்க எண்ணவில்லை. தெய்வ வரிசையில் தெய்வமாகச் சேர வேண்டியதற்கே வழி சொல்வார் போல், மக்கள் மேற்கொள்ள வேண்டிய முறையை இதோ என்று காட்டினார். மக்களே! மனையாளோடு கூடி வாழும் முறை தவறாது வாழ்க்கை நடத்துங்கள் என்று கூறி அருளினார். இவ்வாறு ஆசிரியர் கூறியருளியதால், அவர் நல்லதோர் உண்மையை மக்களுக்குக் காட்டினாராயினர். இவ்வாறு ஆசிரியர் கூறியருளியதால், சமயக் கணக்கர் மதி வழியேகுதல் வேண்டாம் என்றும் விழிப்பூட்டியவராயினார். இவ்வதிகாரத்தால், இல்வாழ்க்கையின் மேன்மை, அதன் பயன் இவ்வாறென விளக்கியதோடு, சமையங்களையும் மறுத்து, வாழு முறைப்படி வாழ வேண்டியதோர் உண்மையையும் கூறியருளினார். - குயில், கிழமை இதழ், 20.12.1960 அதிகாரம் - 6 வாழ்க்கைத் துணை நலம் அஃதாவது: முற்கூறிய இல்வாழ்க்கைத் துணையாகிய இல்லாளின் நன்மை. 51 மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. பி.மா.: வாழ்க்கைத் துணை மனை தக்க மாண்பு உடையாள் ஆகி, தன் கொண்டான் வளம் தக்காள். பொருள்: வாழ்க்கைத் துணை - இல்வாழ்க்கைத் துணைவியாவாள், மனைதக்க - மனையின்கண்ணதான அறத்திற்கு ஏற்ற, மாண்பு உடையள் ஆகி - நற்பண்புடையவளாகி, தன் கொண்டான் - தன்னைக் கொண்டவனது, வளம் தக்காள் - வருவாய்க்குத் தக்க செலவு செய்யும் செட்டு உடையவள். கருத்து: வாழ்க்கைத் துணைவி, மனையறத்துக்கு ஏற்ற பண்புடையவள்; வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்யும் செட்டுடையவள்: மனைக்குத் தக்க என்பது மனைத்தக்க என வந்தது; நான்கன் தொகை. வளத்துக்குத் தக்காள் என்பது வளத்தக்காள் என வேறுபாடுற்றது. தன்கொண்டான், தன்னைக் கொண்டான் என விரிக்க. இரண்டன் தொகை. வேறுபாடு என்பதை விகாரம் என்பர் வடவர். 52 மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். ã.kh.: இல்லாள்கண் மனைமாட்சி இல்ஆயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். பொருள்: இல்லாள் கண் - இல்லாளிடத்து, மனைமாட்சி - மனை யறத்துக்கு வேண்டிய நற்பண்பு, இல் ஆயின் - இல்லையாயின், வாழ்க்கை - அவ்வில் வாழ்க்கையானது, எனை மாட்சித்து ஆயினும் இல் - செல்வ முதலியவற்றால் எத்தகைய பெருமை யுடையதாயினும் அனைத்தும் இல்லையாகும். கருத்து: செல்வ முதலிய உற்ற குடும்பமாயினும், இல்லாளிடம் வேண்டிய நற்பண்பு அற்றதாயின் அனைத்தும் அற்றதாகிவிடும். மாட்சி - இதில் மாண் முதனிலை சி பண்புப் பெயர் இறுதிநிலை. இத்தூய தமிழ்ச் சொல்லை இன்றும், ஆரியச் சார்பினர் க்ஷி என்ற எழுத்து இட்டு எழுதி வட சொல்லாக்கி வருகின்றனர். காட்சியையும் அப்படி. அதில் காண் முதனிலை, சி தொழிற் பெயர் இறுதி நிலை. 53 இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ னில்லவண் மாணாக் கடை. பி.மா.: இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் இல்லவள் மாணாக்கடை உள்ளது என். பொருள்: இல்லவள் மாண்பு ஆனால் - இல்லாள் மாண்பு உள்ளவள் ஆனால், இல்லது என் - அக்குடும்பத்தில் இல்லாதது என்ன, இல்லவள் மாணாக்கடை - இல்லாள் மாண்பு இல்லாதவளானால், உள்ளது என் - அக்குடும்பத்தில் இருப்பது என்பது எது? (ஒன்று மில்லை என்றபடி). கருத்து: இல்லாள் மாண்பு உடையள் ஆதல் வேண்டும். மாண்புடையாள் ஆனால் எனற்பாலது, மாண்பு ஆனால் எனப்பட்டது. பண்பு பண்பிற்கானது ஆகுபெயர். இல்லாளிடம் பண்பில்லா விடில் என்ன இருந்தும் பயனில்லை என்றாராயிற்று. - குயில், கிழமை இதழ், 20.12.1960 54 பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். பி.மா.: கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் பெண்ணின் பெருந்தக்க யா உள. பொருள்: கற்பு என்னும் திண்மை - கற்பு என்பதோர் அசையாத் தன்மை, உண்டாகப் பெறின் - அடையப் பெற்றால், பெண்ணின் பெருந்தக்க யாஉள - பெண்ணை விட பெருத்த பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்? (இல்லை என்றபடி). கருத்து: கற்புள்ள மனையாளைப் பெறுவதைவிட வேறு பேறு இல்லை. கற்பு என்பது, பொருள் ஊட்டமுள்ள ஒரு தமிழ்ச் சொல். அது கல் என்ற முதனிலையும், பு என்ற பண்புப் பெயர் இறுதி நிலையும் உடையது. கல்லின் தன்மை என்பது அதன் நேர் பொருள். கல்லின் தன்மையாவது: உலகம் வியக்குமாறு போரில் திறங்காட்டி இறந்த மறவன் பெயர் பொறித்தும், உலகினர்க்கு நன்னெறி காட்டிச் சென்ற தமிழ்ச் சான்றோர் பெயர் பொறித்தும், தன் வாழ்க்கைத் துணைவனோடு ஒன்றிய உள்ளமானது அசையாத்தன்மை பெற்று அரிது செய்த மகளிர் பெயர் பொறித்தும் கல் நடுவார்கள் அன்றோ! அக்கல் அருஞ்செயல்கட்கு அடிப்படையான பெரும் பண்புகளை நினைவுபடுத்தும் அன்றோ? கல்லின் தன்மை இதனால் அறியப்படும். எனவே தக்காரின் பெரும் பண்பே கற்பு என அறிதல் வேண்டும். கற்பு, கற்றல் என்ற பொருளுடையது என்றும், ஒரு பெண் இளமையில் பெற்றோரிடம் கற்பதாலும் மாமன் மாமியரிடம் கற்பதாலும், அப்பெயர் வந்ததென்றும் சொல்வாரும் உளர். இது சிறப்புடையப் பொருள் அன்று. ஏன்? எக்காலத்தும் பிறரிட மிருந்தே கற்கும் ஒருத்தியைத் தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்தல் முதலிய அறிவு ஆற்றலு டையவளென்று கொள்ளுவதற் கில்லை ஆதலின். பெண்ணின் - இன் ஐந்தனுருபு: நீங்கற் பொருட்டு. தக்க - பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர். 55 தெய்வந்தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. பி.மா: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என மழை பெய்யும். பொருள்: தெய்வம் தொழாஅள் - தெய்வங்களைத் தொழமாட்டாள், கொழுநன் தொழுது எழுவாள் - கணவனைத் தொழுதபடியே துயில் விட்டெழுவாள், (அவள் அக் கொழுநனுக்கு) பெய் என பெய்யும் மழை - பெய் என்று எண்ணிய அளவில் பெய்தால் ஒத்த பயன் மழை. கருத்து: கண்ணையும் மனத்தையும் கவர்வனவும், மிக்க பயன் விளைப் பனவும் ஆகிய தெய்வம், தன் கணவனைவிட வேறு இல்லை என்று எண்ணும் மனைவி, அக் கணவனுக்குப் பயன் மழை. பெய்யெனப் பெய்யும் மழை என்றது, அளவறிந்து பெய்வதோர் பயன் மழையை, ஞாலம் விரும்பிய வண்ணம் பெய்யும் மழை போல் காதலன் விரும்பியபோது, அவன் பெருமளவு இன்பம் அளிப்பவள் என்று காதல் இன்பத்தை விளக்கினார். இவ்வாறு காதலின்பத்துக்கு மழையை உவமித்தார் ஆசிரியர், மற்றோரிடத்தும். அது வருமாறு: வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. - குறள், 1112 என்றது காண்க. இப்பாட்டிற்கு வேறு வகையாற் பொருள் கொண்டார் பிறரெல்லாம். பிறதெய்வங்களைத் தொழாது, கணவனையே தொழுவாள், மழையை நோக்கிப் பெய் எனில் அம்மழை பெய்து விடும் என்றன்றோ பொருள் கொண்டார்? அது பொருந்தாது. என்னை? மழையை நோக்கிப் பெய் என வேண்டுவாள் எனில், எத் தெய்வத்தையும் வணங்காதவள் எனப்பட்டவள் மழைத் தெய்வத்தை வணங்கியவளாவாளன்றோ! இது கிடக்க, பன்னாட்கள் விண்ணின்று பொய்ப்பதும் உண்டு. அந்நாட்களிலெல்லாம் கற்புடைப் பெண்டிர் இல்லாதொழிந்தார் என்பதா? உலகப் பெண்கள் அனைவரும் கற்பில்லாதவர் எனக் கொள்ளும் மனுவின் கொள்கையுடையார் அவ்வாறு கருதுவது பொருத்தமே யாகும். கற்புடை மகளிராலேயே இவ்வுலகு நிலை பெறுகின்றது எனக் காணும் தமிழர் அவ்வாறு கருதார். ஆதலால், வள்ளுவர் உள்ளம் அது வன்று. மழை இயற்கையின் கொடை, அது மக்கட்குக் கட்டுப்பட்டதன்று. உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லை அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல். - நாலடி 104 என்றதால், வாரா மழையை வருவிப்பார் என்றும், எங்கும் இல்லை யென்பதையும் உணர்க. அஃதேயும் அன்றி, வந்து அளவின் மிக்குப் பொழிந்து கெடுக்கும் மழையைத் தடுப்பாரும் இல்லை என்பதை அறிந்து வைக்க. தொழாஅள் - உயிரளபெடை கற்புடைய பெண் அமிர்து ... - சிறுபஞ்ச மூலம் என்ற அடியோடு இச்செய்யுள் ஒப்புநோக்கத்தக்கது. கற்புடைய பெண்ணானவள் தன் கணவனுக்கு அமிழ்து என்பது அவ்வடியின் பொருள். - குயில், கிழமை இதழ், 27.12.1960 56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். பி.மா.: தன்காத்து தன்கொண்டான் பேணி தகைசான்ற சொல் காத்து சோர்வு இலாள் பெண். பொருள்: தற்காத்து - கற்பினின்று அசையாமல் தன்னைக் காத்தும், தன் கொண்டான் பேணி - தன்னைக் கொண்டவனாகிய கணவனைக் காத்தும், தகை சான்ற சொல் காத்து - பெருமை மிக்க தன் குடிக்குரிய புகழைக் காத்தும், சோர்வு இலாஅள் பெண் - ஆகிய இவற்றில் சிறிதும் மனத்தளர்ச்சி யில்லாதவள் எவளோ, அவளே, மனைவி. சேர சோழ பாண்டியர் வழி வந்தவள் என்ற புகழ்ச் சொல்லுக்கு இழுக்காகும்படி ஒழுக்கந் தவறமாட்டாள் என்பார், தகை சான்ற சொல் காத்து என்றார். மனவுறுதியுடையவள் என்பார் சோர்விலாள் என்றார். பெண்- மனைவி. கருத்து: தன்னையும், துணைவனையும், குடிப் பெருமையையும் காப்பதில் மனத்தளர்ச்சியில்லாதவள் பெண். பண்பு, குடிப்பிறப்பு நிலைமை முதலியவற்றில் தனக்கொப்புடை யானைக் கண்டு காதலால் மனம் ஒன்றுபடு மட்டும் தன் கற்பைத் தான் காத்துக் கொள்பவள் பெண். அஃதேயுமன்றி கொண்ட தலைவனைப் பிரிந்த வழியும் கற்பில் தன்னைக் காத்துக் கொள்பவள் பெண் என்பார் தற்காத்து என்றார். தன்னைக் கொண்டவன், அதாவது தன் உள்ளத்தைப் பறித்தவன் இருளிலும், இடுக்கணிலும் வருவதைத் தவிர்க்க என்று கூறித் தலைவனைத் தடுத்துக் காத்தலால் தற்கொண்டான் பேணி என்றார். - குயில், கிழமை இதழ், 27.12.1960 57 சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. பி.மா : மகளிர் நிறை காக்கும் காப்பே தலை சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? பொருள்: மகளிர் - தமிழ் மகளிர், நிறை - தம் நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துவதோர் நிறையை, காக்கும் காப்பே தலை - காப்பதோர் காவலே உலகில் சிறந்தது. சிறை காக்கும் காப்பு - பிற வந்தேறிகள் தம் மனைவியரைச் சிறை வைத்தலால் காக்கும் காப்பு, எவன் செய்யும் - என்ன பயனைச் செய்யும் (பயன்படாது என்றபடி). கருத்து: மகளிர் மாட்டு வந்தேறிகள் கொண்ட மனப்பான்மை தமிழர்களால் வெறுக்கத்தக்கதாகும். மனு சொல்லுகிறார்: மாதர்கள், கற்பு நிலை இன்மையும், நிலையா மனமும், நட் பின்மையும் இயற்கையாக உடையவர்களாதலால், அவர்களின் கணவன்மார்களால், சிறை வைத்துக் காப்பாற்றப் பட்டிருப்பினும், கணவர்களை அம்மகளிர் பகைப்பார்கள். மகளிர்கட்கு இந்த இயற்கைப் பண்பு பிரமன் தோற்றுவித்தபோதே உண்டான தென்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்கான கட்டாய முயற்சி செய்யவேண்டும் - என்று. தம்மினப் பெண்களின் இயற்கை நடைகண்டே மனு இவ்வாறு கூறினார். நிறைகாத்தல் என்றது தமிழ் மகளிரைப் பற்றியது. சிறை காத்தல் பிற வந்தேறிகளைப் பற்றியது. நிறை - என்பதில் நிறு முதனிலை; ஐ தொழிற் பெயர் இறுதி நிலை. நிறுத்தல் என்பது பொருள். - குயில், கிழமை இதழ், 27.12.1960 58 பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு. பி.மா.: பெண்டிர் பெற்றான் பெறின் பெருமை சிறப்பு புத்தேளிர் வாழும் உலகு பெறுவர். பொருள்: பெண்டிர் - மகளிர், பெற்றான் பெறின் - தன் உள்ளத்தைக் கவர்ந்த துணைவனின் உள்ளத்தைக் கவர்ந்தாராயின், பெருமை சிறப்பு புத்தேளிர் வாழும் உலகு பெறுவர் - பெருஞ் சிறப்பினை யுடைய தெய்வங்கள் வாழுவதெனச் சொல்லப்படும் உலகைப் பெறுவார்கள். கருத்து: தற்கொண்டான் உள்ளத்தைக் கவர்ந்த மகளிர் எல்லாப் பேறும் பெறுவார். புத்தேளிர் வாழும் உலகு என்றது புகழ், செல்வம், முதலிய பயன்படு பொருள்களும், கண்ணையும் மனத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆகிய கூட்டத்தை, இது முன்னர் விளக்கப் பட்டது. பெற்றான் பெறின் இரண்டாம் வேற்றுமைத் தொகை. நிலைமொழி உயர்திணையானதால் பெற்றாற் பெறின் என்றாயிற்று. புத்தேளிர் உயர்திணைப் பன்மை, தெய்வங்கள் என்பது பொருள். பெற்றான் பெறின் என்பதற்குக் கணவனை வழிபடுதல் பெறுவராயின் எனப் பொருள் கூறினார் பரிமேலழகர். வழிபடுவதால் காதலர் இருசார்பினரும் எதிர்பார்க்கும் இன்பம் அடைதலில்லை என்பதை அவர் எண்ணினாரில்லை. - குயில், கிழமை இதழ், 03.01.1961 59 புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை. பி.மா.: இகழ்வார்முன் ஏறு போல் பீடு நடை புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை. பொருள்: இகழ்வார்முன் - இகழ்வாராகிய பகைவர் எதிரில், ஏறுபோல் பீடு நடை - அரிமா ஏற்றைப் போல் நிமிர்ந்த நடை, புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை - புகழை விரும்பிய மனையாள் இல்லாதார்க்கு இருக்கமுடியாது. கருத்து: நன் மனைவியைப் பெறாதான் பகைவர் முன் நிமிர்ந்து நடக்க முடியாது. புரிந்த என்னும் பெயரெச்சத்தின் ஈற்று அகரம் தொக்கது. இல்-மனைவி, ஆகு பெயர். இல்லாள் ஒருத்தி புகழை விரும்புவதாவது: ஆதிமந்தி, ஔவை போன்ற பெண் மக்களையும், செங்குட்டுவன் வள்ளுவன் போன்ற ஆண் மக்களையும் உலகுக்கு ஈன்று தர விரும்புவது முதலியவை: பீடுநடை - பெருமை நடை, நிமிர்ந்த நடை என்றாம். 60 மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு. பி.மா.: மனைமாட்சி மங்கலம் என்ப மற்று அதன் நன்மை கலம் நன்மை மக்கள் பேறு. பொருள்: மனைமாட்சி - மனையாளின் நற்பண்பு, நற் செயல்களை, மங்கலம் என்ப - குடும்பத்திற்கமைந்த இயற்கை யழகு என்பர் அறிவுடையோர். அதன் நன்மை கலம் நன்மை மக்கட் பேறு என்ப - அதற்கு மேல் அமைந்த நல்லணியாவது நல்ல மக்களைப் பெறுவது என்பர் அறிவுடையோர். கருத்து: மனைமாட்சி மங்கலம் என்ப. நன்மக்கட் பேறு, அதன் மேல் அமைந்த நல்லணி என்ப. மங்கலம் - இயற்கையழகு. நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர் மறுவில் மங்கல அணியே அன்றியும் பிறிதணி அணியப் பெற்றதை எவன் கொல்? - சிலப்; மனையறம், 62-64 என்பதில் மங்கல அணி, இயற்கை அழகென்று பொருள் கொள்ளப் பட்டது காண்க. இயற்கை அழகிருக்கவும், செயற்கை யழகாய அணியும் இல்லாள் விரும்புமோ எனின், அவள் மக்களை விரும்புதல் போல் விரும்பும், இதனாலன்றோ, மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. - நன்.55 எனப் பிறரும் கூறி மகளிர்க்கு அணியின் தேவையை விளக்கினார். நன்மக்களாவார்: இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்லை உண்டாக்கும் மக்கள். என்ப - என்பது நன்மக்கட்பேறு என்பதனோடும் கூட்டப்பட்டது. - குயில், கிழமை இதழ், 3. 1. 1961 அதிகாரம் - 7 மக்கட் பேறு 61 அஃதாவது, நன் மக்களைப் பெறுதல். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட் பேறல்ல பிற. பி.மா.: பெறுமவற்றுள் அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற யாம் அறிவது இல்லை. பொருள்: பெறுமவற்றுள் - ஒருவன் பெறத்தக்க பேறுகள் பலவற்றில், அறிவு அறிந்த மக்கட் பேறு அல்ல பிற- பொருட் பெற்றியறிந்த நன்மக்களைப் பெறுவதல்லது வேறு பேறுகளை, யாம் அறிவது இல்லை - யாம் அறியப் போவதுமில்லை. கருத்து: நன்மக்களைப் பெறுதலைவிட வேறு பெறத்தக்க பேற்றை யாம் அறிந்ததுமில்லை, அறிகின்றதுமில்லை, அறியப் போவதுமில்லை. அறிவது இல்லை என எதிர்காலத்தாற் சொன்னது, மற்றக் காலத்தையும் கொள்ளுவதற்கு. உம்மை தொக்கது. அறிவு அறிதல் என்பதில் முதற்கண்ணுள்ள அறிவு, பொருள் என்ற வாறு; அது பொருளின் உயர்வுக்காதலின் ஆகுபெயர். முன் அதிகாரத்தில், மனைமாட்சி நன்கலம் என்று கூறினவர், இவ்வதிகாரத்தில் அதையே வலியுறுத்தத் தொடங் கினார். அடுத்த பாட்டில் அதற்குக் காரணம் கூறுவதும் காண்க. - குயில், கிழமை இதழ், 3. 1. 1961 62 எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். பி.மா.:பழி பிறங்கா பண்பு உடை மக்கள் பெறின் எழு பிறப்பும் தீயவை தீண்டா. பொருள்: பழி பிறங்கா - பிறர் பழிக்கும் பழி ஏற்படாத, பண்பு உடை - நற்பண்புடைய, மக்கள் பெறின் - மக்களை ஒருவன் பெறு வானானால், எழு பிறப்பும் தீயவை தீண்டா - அவனது ஏழு தலைமுறைக் கண்ணும் துன்பங்கள் அணுகமாட்டா. கருத்து: நன்மக்களைப் பெற்றவனது ஏழு தலைமறைக் கண்ணும் தீமைகள் அணுகமாட்டா. ஏழு தலைமுறை என்றது, கீழேழு தலை முறையை, அவன் மகன், பேரன் முதலியவரை. எழு பிறப்பு என்பதற்கு எழுவகைப் பிறப்பு என்று பொருள் கொண்டார் பரிமேலழகர். ஒருவன் வினைக்கீடாக மக்களாய், விலங்காய்ப், பறவையாய், ஊர்வனவாய், நீர் வாழ்வனவாய், மரம் செடி கொடிகளாய்த், தேவராய்ப் பிறப்பானாம். அவன் நன்மக்களைப் பெற்றுவிட்டு, இறந்து, பின் மக்களாகவோ, விலங்காகவோ பிறந்தால், எந்தத் தீமையும் அந்த மக்களோ, அந்த விலங்கோ, பிறவோ அடைவதில்லையாம். ஏன்? - இது கிடக்கட்டும்! நன்மக்களைப் பெற்ற ஒருவன் அடுத்த பிறப்பாகக் கீரைத் தண்டாகப் பிறந்தாலும், அந்தக் கீரைத் தண்டும் தீமை யடைவதில்லை எனில், கீரைத்தண்டாய்ப் பிறப்பதே தீமையடைந்தவாறு தானே! அவன் புலியாய்ப் பிறக்கின்றான் எனின், புலியாய்ப் பிறப்பதே தீமையடைந்தவாறு தானே? நன்மக்களை அடைந்ததால் பயன் என்ன? எழுவகைப் பிறப்பு எனப் பொருள் கொண்டது பொருந்தாது என விடுக்க. இனி எழு பிறப்பு - ஏழு தலைமுறை என்பதற்கு மேற்கோள் வருமாறு: கேசவன் றமர் கீழ்மேல் எமரே ழெழு பிறப்பும் - திருவாய் மொழிப் பாட்டு என்பதற்குக் கீழே ஏழு தலைமுறையும், மேலே ஏழு தலை முறையும் எனப் பொருள் ஆவதும், அவ்வாறே பொருள் கொண்டதும் காண்க. பாவந் தன்னையும் பாறக்கைத் தெமர் ஏழேழு பிறப்பும் - 2ஆம் பத்து என்பது போல மற்றும் பலவிடத்து வருதலும் காண்க. ஒருவன் நன்மக்களைப் பெறுவான் எனில், அவனது ஏழு தலை முறையுடையாரும் தீமை காணார் என்பது மட்டும் பொருந்துவதோ எனில், ஆம் பொருந்துவதே. அறிவுடைய மகனுக்கு மகனும் அறிவுடையானன்றோ? அவனுக்கு மகனும் அவ்வாறே அன்றோ? இவ்வாறு ஏழு தலைமுறையுடையாரும் அறிஞராவார் அன்றோ? - அறிவுடையார் ஆகவே, தீமைகள் அண்டா என்பது சொல்லவும் வேண்டுமோ! எழுபிறப்பு என ஏழைக் குறித்தது என்னவெனில் ஒன்றல்லாதது ஏழ் எனக் கூறுவது வழக்கு. ஒருவனை நோக்கி மற்றொருவன் கடைக்குச் சென்று நெல்லும், கொள்ளும் வாங்கி வா என்றான். அது கேட்டோனும் நன்று என்றான். பின்னும் அவன், நெல்லும், கொள்ளும் வாங்கி வா என்றான். அதற்கு மற்றவன் ஏழு முறை கூறுவதென்ன என்று முனிந்தான். ஒன்று அல்லாதது ஏழு ஆனமை காண்க. 63 தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும். பி.மா.: அவதபொருள் தம் தம் வினையான்வரும் தம் மக்கள் தம்பொருள் என்ப. பொருள்: அவர் - அம் மக்களுக்கு, பொருள் - செல்வமானது, தம் தம் வினையான் வரும் - தத்தமது செயலின் தகுதிக் கேற்பச் சேரும் ஆதலின், தம் மக்கள் தம் பொருள் என்ப - பெற்றோர் தம் மக்களே அப்பெற்றோரின் முதுமைக்கு வேண்டிய செல்வம் என்று அறிவுடையோர் கூறுவார். கருத்து: பெற்றோரின் முதுமைக்கு அவர்தம் மக்களே செல்வம். பெற்றோர் மனந்தூயராய் நற்செயல் செய்து வாழ்க்கைத் துணை பெற்று, நன் மக்களைப் பெற்றாராக அவர் முதுமை பெற்ற ஞான்று, அம் மக்களும் மனந் தூயராய் நற்செயல் செய்து தம் பெற்றோரின் முதுமைக்கு நற்றுணையாவார் என்பார். இவ்வாறு கூறினார் ஆசிரியர் என்க. தம் மக்கள் என முற்கூறிய அதனால் அவர் என்றது அம் மக்கள் என்றால். பொருளைச் சேர்ப்பாரைப் பொருள் என்றே கூறினார். இஃதோர் ஆகுபெயர். தம்தம் வினையான்வரும் என்றது எதற்கு எனில், தந்தை தேடிய செல்வத்தால் வாழ்நாளைக் கடத்த நினையார் நன்மக்கள்; தாமே முயன்று தேடுவார் என்றதைக் குறிக்க என்க. 64 அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ். பி.மா.: தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிது. பொருள்: தம் மக்கள் - பெற்றோர்தம் குழந்தைகள், சிறுகை - தம் சிறிய கைகளால், அளாவிய கூழ் - துழவப் பெற்ற சோறானது, அமிழ் தினும் ஆற்ற இனிது - அமிழ்தைவிட மிக இனிமையுடையது பெற்றோருக்கு. கருத்து: குழந்தை கையிட்டு அளாவிய சோறும், பெற்றோர்க்கு அமிழ்தைவிட இனிமை செய்யும். சிறிய அளவினதான கை என்றும், அழகிய கை என்றும் எண்ணுமாறு சிறுகை என்றார். அமிழ்து - மேனின்று அமிழும் உணவு என மழையின் காரணப் பெயர், இனிமை தரும் பொருளுக்கு வழங்குவதாயிற்று. குழைதலின், கூழ் காரணப் பெயர். சிறுகையாற் கூழை அளாவிய இக் குழந்தையோடு, படைப்புப் பலபடைத்துப் பல்லாரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக் குறை இல்லைத்தாம் வாழும் நாளே. - புறம். 188 எனப் பாண்டியன் அறிவுடைய நம்பி காட்டும் இக் குழந்தையையும் ஒப்பு நோக்கி இன்புறுக. - குயில், கிழமை இதழ், 10. 1. 1961 65 மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. பி.மா.: உடற்கு இன்பம் மக்கள் மெய்தீண்டல் செவிக்கு இன்பம் மற்று அவர் சொல் கேட்டல். பொருள்: உடற்கு இன்பம் - பெற்றோரின் உடலுக்கின்பமாவது, மக்கள் மெய்தீண்டல் - குழந்தைகளின் உடம்பைத் தீண்டுவது, செவிக்கு இன்பம் - அவர்களின் காதுக்கு இன்பமாவது, அவர் சொல் கேட்டல் - அக்குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்பது. கருத்து: குழந்தையுடல் தீண்டல், உடற்கின்பம் பயக்கும். அவர் மழலை கேட்பது, காதுக்கின்பம் பயக்கும். முற்பாட்டால் நாவிற்கினிமை கூறி, இப்பாட்டில் உடற்கும், காதுக்கும் ஆகும் இனிமை கூறினார். மற்று - வினைமாற்றுப் பொருளுடைய இடைச்சொல். குழந்தை நிலையில் சொல்லும் சொல்லையே ஈண்டு ஆசிரியர் குறித்தார். அதனாலன்றோ மீண்டும் அவர் எனச் சுட்டினார். தீண்டல், கேட்டல் என்பன தீண்டுதலாலான இன்பத்திற்கும் கேட்டலாலான இன்பத்திற்கும் ஆனமையான் ஆகு பெயர்கள். செவ்வி - அழகு: செவ்வியின் தொகுத்தல் பெற்ற செவி காரணப் பெயர். இஃதறியார் இதை வடசொல் என்பார். 66 குழலினிதி யாழினி தென்பதம் மக்கண் மழலைச்சொற் கேளா தவர். பி.மா.: தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் குழல் இனிது யாழ் இனிது என்ப. பொருள்: தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் மக்களின் மழலைச் சொல்லின் இனிமையை நுகர்ந்ததில்லாதவர், குழல் இனிது - புல்லாங்குழலின் ஓசை இனியது, யாழ் இனிது என்ப - யாழின் ஓசை இனிமையுடையது என்று கூறுவார்கள். கருத்து: தம் குழந்தைகளின் மழலையின்பம் நுகர்ந்தவர் குழல், யாழ்களின் இசையை இனிதென்னார். குழல், யாழ், மழலை என்பவை, அவற்றின் இனிமையைக் குறித்தன. குழல் என்றதால், துளைக் கருவி அனைத்தும் கொள்க. யாழ் என்றதால் நரம்புக் கருவி அனைத்தும் கொள்க. துளைக்கருவி, நரம்புக் கருவிகளில் மிகச் சிறந்தன குழலும் யாழும் ஆதலின், அவற்றை மட்டும் குறித்தார். மழலை - எழுத்தும், சொற்றிறமும் நிரம்பா மொழி. சென்ற பாட்டில் சொல் என்றார் ஆயினும், மழலைச் சொல்லையே குறித்தது என்பதை இப்பாட்டில் வந்துள்ள மழலைச் சொல் என்பதால் அறிக. 67 தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல். பி.மா.: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து ந்தி இருப்ப செயல். பொருள்: தந்தை - பெற்றோன், மகற்கு ஆற்றும் - தன் மகனுக்குச் செய்ய வேண்டிய, நன்றி - நன்மையாவது, அவையத்து - கற்றோர் குழுவில், முந்தி - மேம்பட்டு, இருப்பச் செயல் - இருக்கும்படி செய்வது. கருத்து: தன் மகனைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே. வடவர் வாழ்க்கையின் தீநெறி பற்றாது தந்தை, மகனுக்குக் கல்விச் செல்வத்தைப் பண்ணுவதோடு நிற்றல் வேண்டும் என்றும், அவனுடைய மண வாழ்க்கையுரிமை முதலியவற்றில் குறுக்கிடுதல் கூடாதென்றும் விழிப்புறுத்துவார் இவ்வாறு கூறினார் ஆசிரியர். தம் பொருள் என்ப தம் மக்கள் என்ற முற்செய்யுள் மகன் கல்வி, கேள்விகளில் சிறந்து, செய்தக்க செய்து முதிய தன் தந்தைக்குச் செல்வமாதலைக் குறித்தது; ஆதலின் அச்செய்யுள், இச் செய்யுளை யடுத்து நிறுத்தற்குரியது. இச்செய்யுள் மகனின் கல்வி கேள்விகளிற் சிறப்புறுதல் பற்றியது ஆதலால் என்க. முந்துதல் அவையத்தாரினும் அறிவான் மேம்படுதல். 68 தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. பி.மா.: மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் தம்மில் தம் மக்கள் அறிவு உடைமை இனிது. பொருள்: மாநிலத்து மன் உயிர்க்கு எல்லாம் - பெரு வையத்திலுள்ள பெருமை பொருந்திய மக்களெவர்க்கும், தம்மில் - (பெற்றோர்) தம்மைவிட, தம் மக்கள் - தம் பிள்ளைகளின், அறிவு உடைமை - மேம்பட்டு வரும் அறிவுடைமையானது, இனிது - அப் பெற்றோர்க்கு இனிதாகும். கருத்து: பெற்றோரினும் மக்கள் அறிவான் மேம்படுதல், அப் பெற்றோர்க்கு இனிதாகும். தந்தை மகனைச் சான்றோனாக்குதலை முற்பாட்டிற் குறித்த ஆசிரியர், இப்பாட்டில் அவ்வாறு கல்வி வல்ல மக்கள், தம்மினும் அறிவால் உயர்ந்தாராய்த் திகழ்ந்தால் அதுபற்றி மகிழ்வார்கள் என்று குறித்தார். மன் - பெருமை. மன்னுயிர் என்றதால் மாந்தர் என்பது பெற்றாம். மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்றதால், மக்களியற்கைப் பண்பே அதுவாகும் என்றாராயிற்று. 69 ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய். பி.மா.: தன்மகனை சான்றோன் என கேட்ட தாய் ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும். பொருள்: தன் மகனை - தான் ஈன்ற மகனை, சான்றோன் என - கல்வி, கேள்வி நிறையப்பெற்றவன் என்று, கேட்ட தாய் - பிறரும் சொல்லுதலைக் கேட்ட தாயானவள், ஈன்ற பொழுதின் - ஆண் குழந்தை பெற்றதாக மருத்துவச்சியால் சொல்லக் கேட்ட பொழுது உண்டானதைவிட, பெரிது உவக்கும் - மிகுதியும் மகிழ்ச்சியடைவாள். கருத்து: உலகினர் தம் மகனைச் சான்றோன் என்று சொல்லக் கேட்ட தாய் பெரு மகிழ்ச்சியடைவாள். தன் மகன் சான்றோன் என்பதைத் தாய் அறிந்து வைத்தும், அது பற்றி மகிழ்ச்சி கொள்ளாள் ஏன்? தன் மகன் சான்றோன் என்பதை அவள் அறிவாள். அதன் மேலும், உலகினர் அவ்வுண்மை யறிந்து - அவனது சான் றாண்மை அறிந்து கூறியக் கால், அதற்கே மகிழ்வாள் என்பார் இவ்வாறு கூறினார் ஆசிரியர். - குயில், கிழமை இதழ், 17. 1. 1961 70 மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை என்னோற்றான் கொல்லெனுஞ் சொல். பி.மா.: மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல். பொருள்: மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - மகனானவன் தன்னைக் கல்வி, கேள்விகள் நிறையச் செய்த தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி என்னெனில், இவன் தந்தை எந் நோற்றான் கொல் எனும் சொல் - இவனுடைய தந்தையானவன் இந்த நல்ல மைந்தனைப் பெறவும், இவனைச் சான்றோனாக் கவும் என்ன தவத்தைச் செய்தானோ என்ற சொல்லேயாகும். கருத்து: இந்த நன்மகனைப் பெற இவன் தந்தை என்ன தவத்தைச் செய்தானோ என்று உலகம் சொல்லும் ஒரு சொல்லை ஆக்குவதுதான் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவியாகும். மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடன் கூறப்பட்டது. இவ்வதிகாரத்தால் மக்கட்பேற்றின் அருமையும், பயனும், இனிமையும், மக்களுக்குத் தந்தை கடனும், மக்களிடம் தந்தை எதிர்பார்க்கத் தக்க கடனும், தாய்க்கு மக்கள் ஏற்படுத்தும் இன்பமும் விரித்தார் ஆசிரியர். தந்தை தவம் செய்தலாவது அன்பு, அறம் ஒழுக்கங்களில் பொறுப்பேற்றல். - குயில், கிழமை இதழ், 24. 1. 1961 அதிகாரம் - 8 அன்புடைமை அஃதாவது, பிற உயிர்களுடனுள்ள தொடர்பினின்று தோன்றுவ தோர் உணர்வுடைமை. அன்பு - தொடர்பு. அத் தொடர்பினின்று தோன்றும் உணர்வுக்கு ஆனது ஆகு பெயர். உடைமை - கொண்டிருக்குந் தன்மை. வாழும் உடல், உயிர் இரண்டிற்கும் உள்ள தொடர்பும், உடலும் உயிரும் கொண்ட உலகத்தான் ஒருவனுக்கும், அவ்வுலக மக்கட்கும் உள்ள தொடர்பும், அவ்வுலகத்துள்ள ஒருமொழி பேசுவானுக்கும் அம் மொழி பேசும் மக்களுக்கும் உள்ள தொடர்பும், அம்மொழியுடைய ஊரானான ஒருவனுக்கும் அவ்வூர் மக்களுக்கும் உள்ள தொடர்பும், அவ்வூரின் அமைந்த ஒரு குடும்பத்தானுக்கும் அக்குடும்பத் தினர்க்கும் உள்ள தொடர்பும், அக்குடும்பத்தின் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உள்ள தொடர்பும், பெற்றோருக்கும் பிள்ளைகட்கும் உள்ள தொடர்பும் உடன்பிறந்த ஒருவனுக்கும் உடன்பிறந்தார்க்கும் உள்ள தொடர்பும் என அத்தொடர்பு பலவாக வைத்து எண்ணப்படும். அஃதேயுமன்றி, வானப் பெருவெளியில் தாழாது நிலை நிற்கும் ஓர் உருண்டைக்கும், பிறவுருண்டைகட்கும் தொடர்பு உண்டு என்பர் பொருட் பெற்றியுணர்ந்தார். அத்தொடர்பும் அன்பே என வைத்து அன்பின் ஆற்றலை உற்றுணர்க. இனி வேறு முகத்தான் அன்பினது உயர்வு காட்டப்படும். அஃதாவது அன்பு இன்றேல், அனைத்துலகும் அனைத்துயிரும் ஒன்றற் கொன்று தொடர்பில்லாத துகள்களாகப் பறந்து மறைந் தொழியும் என்பதாம். வாழாது வாழ்ந்த தமிழர், அறிவு வாழ்க்கை பெற்ற நாள். அன்பின் உண்மை கண்ட நாளேயாகும். சமையக்கணக்கர் பிற்றை நாளில் அஃதறிந்தாராக, அன்பே கடவுள் என்று கூறித் தம் பிழைபாட்டை நீக்கிக் கொள்ள முயன்றார்கள். அன்பு உணர்வின் வழியது. உள்ளது சிறத்தல் என்ற கொள்கை யால் உணர்வே அன்பு, அன்பே உணர்வு என அறிய வேண்டும். அன்பு அல்லது உணர்வு என்பது ஒன்றை உண்டு பண்ணாதது. அது மற்றொன்றினின்றும் தோன்றாதது. என்றும் உள்ளது. இதைத்தான் முதற்பாட்டில் பகவன் என்றார் என்பது முன்னரே விளக்கப்பட்டது. மக்கள் பெறத்தக்க ஒன்று அன்பு, அன்பு என்பதன் வேர்ச்சொல் அன் என்பது. தொடர்பு என்பதே அதன் பொருள். அன்னை என்பதிலும் அன்றில் என்பதிலும் வேர்ச்சொல் அன் என்பதே. தொடர்பு என்பதே அதன் பொருளாவதை உணர்ந்து இன்புறுக. அன்னை - மக்களோடு தொடர்புடையவள்; அன்றில், தன் துணையோடு தொடர்புடையது. 71 அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புன்கணீர் பூசற் றரும். பி.மா.:ஆர்வு அலர் புன்மை கண் நீர் பூசல் தரும் அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ? பொருள்: ஆர்வு - ஆர்வத்தால், அலர் - வெளிப்படுகின்ற, புன்மை கண்ணீர் - புல்லிய கண்ணீரானது, பூசல் தரும் - தூற்றி விடும் ஆதலின், அன்பிற்கும் - பிற உயிர்மேல் ஏற்படும் தொடர் புணர்ச்சிக்கும், அடைக்கும் தாழ் உண்டோ - தெரியாது வைத்துச் சாத்தும் தாழ்ப்பாள் உண்டோ? கருத்து: தொடர்புணர்ச்சியை மறைத்தல் அரிது. தாழ்ப்பாள் - தாழ். இழி வழக்கு. அன்பிற்கும் என்பதன் உம்மை உயர்வு சிறப்பு. புன்மை-கண்ணீர்-புன்கணீர், மை யீறு போயிற்று. அன்பு என்பதற்குக் காதல் என்று பொருள் கூறினார் பரிமே லழகர். அது பொருந்தாது. அவ்வாறு கூறிய அவரே, பின்னர் தொடர்பு பற்றி உண்டாகும் காதல் என்று குறிப்பிடுவதும் காண்க. இஃதன்றியும், அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. - குறள் 73 என்று கூறிய இடத்தும் உற்று நோக்குக. இனி, புன்கணீர் பூசல்தரும் என்பதற்குத் தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்டுழி அன்புடையார் கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உண்ணின்ற அன்பினை எல்லோரும் அறியத் தூற்றும் என்று பொருள் கூறினார் அவர். பிறர் துன்பம் கண்ட இடத்தில் மட்டும் கண்ணீர் வரும் என்பது பொருந்தாது. பிறர் இன்புறுதல் கண்டு இன்புறுதலும், துன்புறுதல் கண்டு துன்புறுதலும் அன்பு என அறிதல் வேண்டும். அவர் அன்பு என்பது தொடர்பு என்ற உண்மைப் பொருளை அறியாமையால் இவ்வாறு கூறினார் என்க. இங்கு மற்றொன்றும் நினைவுகொள்ள வேண்டும், இன்புறக் கண்டு இன்புறும் போதும் கண்ணீர் வரும் என்பது. 72 அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு. பி.மா.: அன்பு இல்லார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் பிறர்க்கு என்பும் உரியர். பொருள்: அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பில்லாதவர் எவரும் பொருள் முதலியவற்றால் தமக்கே பயன்படுபவர். அன்புடையார் பிறர்க்கு என்பும் உரியர் - அன்புடையவர் பிறர்க்குப் பொருள் முதலியவற்றால் பயன்படுவது மட்டுமன்றித் தம் உடலாலும் பயன்படுவார். கருத்து: அன்புடையார் பிறர்க்குத் தம் உடல், பொருள், ஆவி மூன்றாலும் பயன்படுவர். தமக்கு உரியர் என்றது, தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் தமக்கே பயன்படுத்துபவர் என்றவாறு. இங்கு உடல் என்றது உடலுழைப்பை. பிறர்க்குப் பயன்படுவதையும் இவ்வாறு கொள்க. என்பு - உடலுக்கு ஆகுபெயர். என்பும் உரியர் ஆதலை, பாடி நின்றனென் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல், என் நாடிழந் ததனினும் நனிஇன் னாதென வாள்தந் தனனே தலைஎனக்கு ஈய. - புறம் 165 எனப் பேசப்படும் குமணன் முதலியோரிடத்துக் காண்க. என்பும் என்றதிலுள்ள உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. - குயில், கிழமை இதழ், 24.1.1961 73 அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. பி.மா.: அருமை உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கு என்ப. பொருள் : அருமை உயிர்க்கு - மக்களுயிர்க்கு, என்போடு இயைந்த தொடர்பு - உடம்போடு ஏற்பட்டுள்ள தொடர்பினை, அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்புடன் இயைய வழங்கும் வழக்கம் என்று அறிந்தோர் கூறுவார்கள். கருத்து: அன்பு, உடலுயிர்க்குள்ள தொடர்பு. உடல் உயிர் இரண்டிற்கும் உள்ள தொடர்பைக் கூறினார் எனினும், பிற தொடர்பும் கொள்க. 74 அன்பீனு மார்வ முடைமை யதுவீனு நண்பென்னு நாடாச் சிறப்பு. பி.மா.: அன்பு ஆர்வம் உடைமை ஈனும் அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும். பொருள்: அன்பு - தொடர்புணர்ச்சியானது, ஆர்வம் உடைமை ஈனும் - எல்லா உயிர்களிடத்தும் விருப்பம் உடை யனாம் தன்மையை உண்டாக்கும், அது - அவ்விருப்பமுடை யனாந் தன்மையானது, நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும்- தொடர்பு கருதிப் போற்றுதலும், தொடர்பின்மை கருதித் தூற்றுதலும் இல்லாததான அளவிறந்த சிறப்பை உண்டாக்கும். கருத்து: அன்பு நிலை அருள் நிலையிற் சேர்க்கும். அருள் என்பது, அன்பு ஈனும் குழவி என்று மேற்காட்டுவார்; ஈண்டும் அன்பு என்பது முதிர்ச்சிக்கண் அருளாகும் என்று மொழிந்தார். ஆர்வம் என ஈண்டுக் குறித்தது, எல்லா உயிர்கண் மாட்டும் எழும் விருப்பத்தை, நாடாச் சிறப்பு என்றது, நாடுதற்கரிய சிறப்பை; அஃதாவது இவர் நமர், இவர் பிறர் என்ற எண்ணமே தோன்றாத நிலையில் உயிர்கண் மாட்டு எழுவதோர் அருளை. 75 அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. பி.மா.:வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப. பொருள்: வையகத்து - உலகத்தின்கண், இன்பு உற்றார் - இல்லந் துறந்து மக்கட்குத் தொண்டு செய்தலினால் இன்பம் எய்தியவர், எய்தும் சிறப்பு - பெறுவதோர் நன் மதிப்பானது, அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப-அன்பு உடையராகி இல்லறத்தோடு பொருந்தியதா லாகிய பயன் என்று அறிவுடையார் கூறுவர். கருத்து: துறந்தார் அடையும் சிறப்பும் இல்லறத்தோ டியைந்த அன்பாலானது. வழக்கு - பயன், ஆகுபெயர். மனைவி மக்கள்பால் உற்ற அன்பு, அருளாக அஃது அனைத்துயிரும் தன்னுயிரென் றெண்ணுவதோர் பண்பாடே, உலக மக்களின் நலன் கருதித் தொண்டு செய்யச் செய்ததன்றோ எனின், அவனுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. அந்நன் மதிப்புக்கு அவன் அன்பே காரணம் என்பார், இவ்வாறு கூறினார் என்க. அஃதேயுமன்றி, ஒருவனின் உடல் வீழ்ந்த பின்னரும் மற்றொரு நிலை உண்டென்னும் பிறர்நூற் கொள்கையையும் மறுப்பார் வையகத்து இன்புற்றார் என்றார். 76 அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை. பி.மா.:அறியார் அறத்திற்கே அன்பு சார்பு என்ப மறத்திற்கும் அஃதே துணை. பொருள்: அறியார் - அறியாதார், அறத்திற்கே - அறஞ் செய்தற்கு மட்டுந்தான், அன்பு சார்பு என்ப - அன்பானது துணை யாகும் என்று கூறுவார்கள். மறத்திற்கும் - வீரச் செயலுக்கும், அஃதே துணை - அந்த அன்பே துணையாவது. கருத்து: தீமையினின்று மீட்க, அத்தீமையின் மேல் விரைவதோர் வீரத்திற்கும் அன்புதான் துணை செய்கின்றது. ஆய்ந்து தெரிந்த புகன்மறவ ரோடு படுபிணம் பிறங்க நூறிப், பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே - பதிற்றுப் பத்து 69.8.10 என்பது போன்ற இடங்களில் மறத்திற்கும் அன்பு துணையாதல் காண்க. 77 என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம். பி.மா.: அறம் என்பு இலதனை வெயில்போல அன்பு இலதனை காயும். பொருள்: அறம் - அறமானது, என்பு இலதனை - என்பு இல்லாத தசைக் கூட்டை, வெயில்போல - வெயிலானது காய்ந்தாற்போல், அன்பு இலதனை காயும் - அன்பில்லாத உடம்பைக் காய்ந்து பொசுக்கிப் பயனற்றதாக்கி விடும். கருத்து: அன்பில்லா உடம்பை அறம் பொசுக்கி விடும். என்புள்ள உடம்பை வெயில் காய்ந்து பொசுக்குவது அரிது என்பார், என்பிலதனை வெயில் போல என்றார். அன்புள்ள உடம்பை அறம் பொசுக்கித் தீர்ப்பது அரிது என்பார், அன்பில தனை அறம் என்றார். அன்பில்லா உடம்பை அறம் பொசுக்கவே, அவ்வுடம்பு பெறத்தக்க பேறுகளை இவ்வுலகிலிருந்தே பெற இயலாமை அறிக. அன்பில்லாத இடத்தும் உயிர் உண்டேயன்றோ, பெறத்தக்க பேறுகளைப் பெற என்ன தடை என்று கேட்பார்க்கு விடை என்னவெனில், அன்பு இல்லா தொழிய, உயிர் இருத்தலால் ஆவது ஒன்றுமில்லை என்பதாம். உயிர் என்பதைத் திருவள்ளுவர் இன்றியமையாப் பொருளாகக் கருதவே யில்லை. அன்பையே அவ்வாறு கருதினார் என்பது கருதத்தக்கது. 78 அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று. பி.மா.: அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை வன் பாற்கண் வற்றல்மரம் தளிர்த்தற்று. பொருள்: அகத்து - மனத்தின் கண், அன்பு இல்லா உயிர் - அன்பு இல்லாத உயிரானது, வாழ்க்கை - உடம்புடன் கூடி வாழ்வதானது, வன்பாற்கண் - வன்னிலத்தின் கண், வற்றல் மரம் - பட்ட மரம், தளிர்த்தற்று - தளிர்த்தால் அதை ஒக்கும். கருத்து: வன்னிலத்திற் பட்டமரம் தளிர்க்காதது போல அன்பில்லாத உயிரோடு கூடிய உடம்பு வாழ்தல் என்று மில்லை. முன்னைய செய்யுட் கருத்தையே வலியுறுத்தினார். வற்றல் - தொழிற் பெயர். வற்றல் மரம் - பட்டமரம், பண்புத் தொகை நிலைத் தொடர். - குயில், கிழமை இதழ், 31. 1. 1961 79 புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு. பி.மா.:யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும். பொருள்: யாக்கை - உடம்பின், அகத்து உறுப்பு - அடிப்படை உறுப்பாகிய, அன்பு இலவர்க்கு - அன்பில்லாதவர் கட்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - இன்றியமை யாமைக்குப் புறம்பான கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் வாழ்க்கைக்கு என்ன உதவியைச் செய்து விடும் (செய்யமாட்டா என்றபடி). கருத்து: யாக்கையில் கண் முதலிய உறுப்புக்களினும் மனத்தின் அன்பு ஆகிய உறுப்பு இன்றியமையாதது. மற்றொரு வகையானும் அன்பினதுயர்வு கூறினார். மற்றைய புறத்துறுப்புகளின் வரிசையிலேயே உயிரையும் வைத்துக் காட்டினார் இச் செய்யுளில், ஊன்றியுணர்க. அன்பினுயர்வு கூறவே, இல்லறத்தோடுள்ள தொடர்பும் கூறினார் ஆயிற்று. யாக்கை - யாத்தல், கட்டுதல் தொழிற் பெயர். தோல், நரம்புகளால் கட்டியது போன்றமையின் உடலுக்கு ஆகுபெயர். 80 அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு. பி.மா.: உயிர்நிலை அன்பின் வழியது அஃது இல்லார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த. பொருள்: உயிர்நிலை - உயிர் நின்ற உடம்பாவது எது எனில், அன்பின் வழியது - அன்பை முதலாக் கொண்டு அதன் வழியாக அமைந்தது, அஃது இலார்க்கு - அந்தக் காரணப் பொருளாகிய அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு உடம்புகளோ எனில், என்பு தோல் போர்த்த - என்பும் தோலும் போர்த்தவை. கருத்து: உயிருடன் கூடிய உடல் அன்பினின்று வந்தது. இல்லறத்திற்கு அன்பு இன்றியமையாதது என்பதும், அவ்வன்பு உயிர் வாழ்வுக்கே காரணமானதென்பதும் இவ்வதி காரத்தால் விளக்கி யருளினார். - குயில், கிழமை இதழ், 7. 2. 1961 அதிகாரம் - 9 விருந்தோம்பல் அஃதாவது, விருத்தினரைப் பேணுதல். விருந்தினராவார், கடல் கோட்பட்டு வரும் குமரி நாட்டினின்று அவ்வப்போது வந்துறுவாரும், தெய்வ வரிசையில் வைத்தெண்ணப்படும் சான்றோர், அரசர் முதலியோரும் அவரல்லாத பிறரும். (43 குறள் உரை பார்க்க) விருந்து - புதுமை, புதுமையாய் வந்தோர்க்கு ஆகுபெயர். உண்பித்தல் என்னாது ஓம்பல் என்றது, உண்பித்தலோடு அமையாது, எதிர்கோடல், முகமலர்தல், அவர் விருப்பம் அறிதல் முதலியவும் குறித்தற்கு. விருந்து அன்பின் வழியது ஆதலின், அன்புடைமைக்குப் பின் இது வைக்கப்பட்டது. 81 இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. பி.மா.: இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள்: இருந்து - அறத்தின்கணிருந்து, ஓம்பி - பொருள் காத்து, இல்வாழ்வது எல்லாம் - இல்லத்தின் கண் வாழ்ந்திருப்பதெல்லாம் எதற்கு எனில், விருந்து ஓம்பி - வரும் விருந்தினரைப் பேணி, வேளாண்மை செய்தற் பொருட்டு - உதவி செய்வதன் பொருட்டேயாகும். கருத்து: இல்வாழ்வது விருந்தினரைப் பேணுதல் நோக்கத்தக்கது. 82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. பி.மா.: தான் உண்டல் சாவா மருந்து எனினும் விருந்து புறத்தது ஆ வேண்டற்பாற்று அன்று. பொருள்: தான் உண்டல் - தான் உண்ண இருப்பது, சாவா மருந்து எனினும் - சாவாமைக்கு ஆதரவான மருந்தே ஆயினும், விருந்து புறத்தது ஆ - வந்த விருந்தினர் ஒரு புறத்தே இருக்க, அவரை விட்டுத்தானே, வேண்டற்பாற்று அன்று - உண்ணுமோர் பான்மையுடையதன்று. (உண்ணுதல் கூடாது என்றபடி). கருத்து: மருந்தேயாயினும், விருந்தோடுண்ணுதல் வேண்டும். அமிழ்து - மேனின்று அமிழ்வது, மழை, அது சாவா மருந்து ஆத லின் அப்பெயராலும் வழங்கலாயிற்று. சாவா மருந்து - சாவதைத் தவிர்க்கும் மருந்து. நாளடைவில் இனிய பொருளுக்கெல்லாம் ஆயிற்று என்க. 83 வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. பி.மா.:வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. பொருள்: வருவிருந்து - வந்த வருந்தினரை, வைகலும் - நாடோறும், ஓம்புவான் - பேணுவானது, வாழ்க்கை - நல் வாழ்க்கையானது, பருவந்து - வருந்தி, பாழ்படுவது இன்று - கேடுறுவது இல்லை. கருத்து: வாழ்வு விருந்திட்டுக் கேடுற்றது என்பது இல்லை. வருவிருந்து ஓம்புவான் புகழ் செய்தான் ஆதலின், அவன் வாழ்வு கேடுறுதல் இல்லை என்பார் பாழ்படுதல் இன்று என்றார். வருவார்க்கு ஊட்டலின் வளங்குறையாதென ஐய மறுத்தார் இப்பாட்டால். வருவிருந்து - இறந்த கால வினைத்தொகை நிலைத் தொடர். வந்த விருந்து என விவரிக்க. - குயில், கிழமை இதழ், 7. 2. 1961  பாட்டுக்கு இலக்கணம் அ. தமிழைச் சரியாய் எழுத 1. வல்லெழுத்து மிகாத இடங்கள் வல்லெழுத்து என்றது க், ச், ட், த், ப், ற் என்ற வல்லொற்றுக்கள். மிகாத இடங்கள் என்றால் என்ன? அகர வீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லெழுத்து வந்தால் இடையில் வல்லொற்று மிகாது. இதுதான் வல்லெழுத்து மிகாத இடம். வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் படிப்பவர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வரும்படி சொன்னான் என்பதில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. அவற்றில் - வரும்படி என்ற சொல் நிலை மொழி, சொன்னான் - வருமொழி. இனிப் பெயரெச்சம் என்றால் என்ன? எது? என்பவைகளை விளக்குகின்றேன். பெயரெச்சம்: பெயர் குறைந்துவரும் எச்சச் சொல், அதாவது குறைந்த சொல் பெயரெச்சம். எனவே, பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் என்க. எடுத்துக் காட்டு: வருகின்ற பாம்பு. இவைகளில் வருகின்ற என்பது பெயரெச்சம். அது பாம்பு என்ற *bgabu¢r¤ij¡ கொண்டு முடிந்தது காண்க. வந்த குதிரை என்பதில் வந்த என்பது இறந்தகாலத் தெரிநிலைப் பெயரெச்சம். வருகின்ற குதிரை என்பதில் வருகின்ற என்பது நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்சம். சென்ற காலம் என்பதில் சென்ற என்பது இறந்தகாலத் தெரி நிலைப் பெயரெச்சம். செல்கின்ற காலம் என்பதில் செல்கின்ற என்பது நிகழ் காலத் தெரிநிலைப் பெயரெச்சம். இவைபோல வருவன எல்லாம் பெயரெச்சம் என்க. தெரிநிலை என்றால் என்ன? - காலம் தெரிகின்ற நிலை இறந்தகாலத் தெரிநிலை என்றால் இறந்த காலத்தைத் தெரியக் காட்டுகின்றன என்பதைப் பொருளாகக் கொள்க. பெயரெச்சம் பல வருமாறு: நடந்த, நடக்கின்ற, வந்த, வருகின்ற, மடிந்த, மடிகின்ற முதலியவை. இங்குக் காட்டிய பெயரெச்சங்கள் அகரத்தைக் கடைசியில் உடைய பெயரெச்சங்கள். மேலும் காலத்தைத் தெரிய காட்டும் தெரிநிலைப் பெயரெச்சங்கள். இனிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டுகின்ற குறிப்புப் பெயரெச்சங்களும் உண்டு. பெரிய பாம்பு என்பதில் பெரிய என்பது குறிப்புப் பெயரெச்சம். சிறிய, அரிய முதலியனவும் குறிப்புப் பெயரெச்சம். சிறிய, அரிய முதலியனவும் குறிப்புப் பெயரெச்சங்களே. பயிற்சி: கண்ட - இறந்த காலத் தெரிநிலைப் பெயரெச்சம் காணுகின்ற - நிகழ்காலத் சிரித்த - இறந்த காலத் சிரிக்கின்ற - நிகழ்காலத் பெரிய - குறிப்புப் பெயரெச்சம் சிறிய - வலிய - மெலிய - உள்ள - ஆகிய தெரிநிலைப் பெயரெச்சத்திற்கு முன்னும், குறிப்புப் பெய ரெச்சத்திற்கு முன்னும் வல்லெழுத்து வந்தால் மிகாது. இயல்பாகும். பெரிய + குதிரை = பெரிய குதிரை கண்ட + போது = கண்டபோது காண்கின்ற + கண் = காண்கின்ற கண் சிரித்த + பெண் = சிரித்த பெண் சிரிக்கின்ற + பிள்ளை = சிரிக்கின்ற பிள்ளை - குயில், சென்னை, 15. 4. 1962  அகரத்தை ஈறாக உடைய கண்ட முதலிய பெயரெச்சங்களின் முன்போ, க, பெ, பி, ஆகிய வல்லெழுத்து வந்தால் மிகவில்லை இயல்பாகவே இருந்தது காண்க. பெரிய + குதிரை = பெரிய குதிரை சிறிய + பன்றி = சிறிய பன்றி வலிய + கொக்கன் = வலிய கொக்கன் மெலிய + கயிறு = மெலிய கயிறு உள்ள + பணம் = உள்ள பணம் அகர ஈற்றுக் குறிப்புப் பெயரெச்சங்களின் முன் வல்லினம் வந்தால் மிகாது என்பது தெரிகின்றது. சிலர், வந்தக் குதிரை என்றும், போனப் பிள்ளை என்றும், என்றக் காலம் என்றும், பெரியப் பையன், சிறியப் பாம்பு என்றும் எழுதி வருகிறார்கள். அவர்கள் பெயரெச்சத்தின் முன் வலிவரின் மிகாது என்பதை அறியார் போலும். தெரிநிலை வினைமுற்று என்றும், குறிப்பு வினைமுற்று என்றும் இரண்டுவகை வினைமுற்றுகள் உண்டு. அகரத்தை ஈறாகவுடைய இருவகை வினைமுற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாது இயல்பாகும். வந்தன குதிரைகள் வருகின்றன பறவைகள் எரிந்தன கொள்ளிகள் எரிகின்றன கட்டைகள் இவைகளில் முதலில் உள்ளவை இறந்த கால அஃறிணை வினைமுற்றுக்கள், அவற்றின் முன் கு, ப, கொ, க, ஆகிய வல்லெழுத்து வந்தன. இயல்பாயின. மிகவில்லை. இனிக் குறிப்பு வினைமுற்றுப் பற்றிப் பார்ப்போம். பெரியன குதிரைகள் சிறியன குதிரைகள் வலியன கழுகுகள் இவற்றில் பெரியன, சிறியன; வலியன குறிப்பு வினை முற்றுக்கள், அவற்றின் முன் கு, கு, க, வல்லினம் வந்தன இயல்பாயின: சிலர், வருகின்றனக் குதிரைகள், பெரியனக் குதிரைகள் எனப் பிழையாய் எழுதி விடுகின்றார்கள். அவர்கள் அகர வீற்று அஃறிணைப் பலவின்பால் வினைமுற்றுக்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதை அறியார் போலும். பல, சில என்பவை பலவின்பால் அஃறிணைப் பெயர்ச் சொற்கள். இந்த இரண்டு சொற்களின் முன்பும் வல்லெழுத்து வந்தால் மிகாது இயல்பே யாகும். எடுத்துக் காட்டு: பல குதிரைகள், பல பேர்கள், பல தேர்கள், சில குதிரைகள், சில பேர்கள், சில தேர்கள். சிலர், பலப்பேர், சிலக் குதிரைகள் என்று பிழையாய் எழுதிவிடுகிறார்கள். அவர் பல, சில என்னும் அஃறிணைப் பலவின் பால் பெயர்களின் முன் வல்லினம் இயல்பாகும் என்பதை அறியார் போலும். இதில் இன்னொன்று நினைவிற் கொள்ள வேண்டும். பல என்பதன் முன் பல என்பதே வந்தால் பலபல என்றும் ஆகும். பலப்பல என்றும் ஆகும். பற்பல என்றும் ஆகும். அப்படியே சில முன் சில வரின் சிலசில, சிலச்சில, சிற்சில என்றெல்லாம் ஆகும். - குயில், திங்கள் இருமுறை, சென்னை, 15. 4. 1962. 2. வல்லெழுத்து மிகாத இடங்கள் அம்ம ஓர் இடைச்சொல். இச்சொல் செய்யுளில் சொற்றொ டருக்கு முதலில் வரும். அம்ம தோழி. கேட்பாய் தோழி என்று பொருள். இந்த அம்ம என்பதன் முன் வல்லெழுத்து மிகாது. எடுத்துக்காட்டு: அம்ம தோழி மிகவில்லை. அல்லவா? என்ப, உண்ப, வருப என்றால், என்று சொல்லுவார்கள், உண்ணுவார்கள், வருவார்கள் என்று பொருள். உயர்திணைப் பலர்பால் வினை முற்றுக்கள் இவை. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது. இயல்பே யாகும். என்ப பெரியோர், உண்ப கண்ணனார், வருப தந்தையார், இயல்பே ஆகின காண்க. அன்ப, நண்ப என்றால் அன்பனே நண்பனே என்று பொருள், அருகில் இருப்பவனைக் கூப்பிடுவது. அண்மை விளி என்பர். இந்த அண்மை விளியாகிய அன்ப, நண்ப என்பவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது. இயல்பே யாகும். அன்ப + செல் = அன்ப செல்; நண்ப + தின் = நண்ப தின். மிகாமல் இயல்பாயின காண்க. செய்யிய போனான் என்ற சொற்றொடரை நோக்குக. இதன் பொருள் செய்யப் போனான் என்பதுதான். செய்ய என்பதற்குப் பதிலாக செய்யிய என்று பாட்டில் வரும். பேச்சு வழக்கில் வராது. செய்யிய என்பது போலவே உண்ணிய காணிய என்றெல்லா மும் வரும். உண்ணிய உண்ண, காணிய காண. செய்யிய, உண்ணிய, காணிய என்பனபோல வரும் வினை யெச்சங்களின் முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும்; மிகாது. செய்யிய + சென்றான் = செய்யிய சென்றான். உண்ணிய + போனான் = உண்ணிய போனான். காணிய + சென்றான் = காணிய சென்றான். வாழ்க, வெல்க, செய்க, வாழிய என்பவை வியங்கோள் வினைமுற்றுக்கள் என்று சொல்லப்படும். இவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது. இயல்பேயாகும். வாழ்க பெரியார், வெல்க கந்தனார், செய்க பொன்னனார், வாழிய பூதனார் இயல்பாயின காண்க. வருக என்பதும் வியங்கோள் வினைமுற்றுத்தான். வருக கற்றார் என்று இயல்பாயிற்றுக் காண்க. இதுவரைக்கும் அ என்ற எழுத்தைக் கடைசியிலுள்ள சொற்களின் முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும் என்பது பற்றிக் கூறினேன். அவற்றில் சில கேள்விகள் கேட்கின்றேன். பல, சில என்பவை என்ன சொற்கள்? அவற்றின் முன் வரும் வல்லினம் மிகுமா? விடை: பலசில அஃறிணைப் பலவின்பால் பன்மைப் பெயர்கள். இவற்றின் முன்வரும் வல்லெழுத்து மிகாது. பல போயின, சில சென்றன, சென்றன குதிரைகள் என்ற தொடரில் சென்றன என்பது என்ன சொல்? வலிமிகுமா? விடை: சென்றன அஃறிணைப் பலவின் பாற்படர்க்கை வினைமுற்று, இதன் முன் வல்லெழுத்து மிகாது. சென்றன குதிரைகள் அதுபோல இன்னும் சில சொற்கள் சொல்லிக்காட்டு. போயின வந்தன முதலியவை அம்ம என்பதன் முன்வரும் வல்லெழுத்து மிகுமா. விடை: மிகாது, அம்ம தோழி என இயல்பாயிற்றுக் காண்க. அகர ஈற்றுப் பெயரெச்சங்கள் சில கூறுக. விடை: வந்த குதிரை என்ற தொடரில் வந்த என்பதும், நடந்த கழுதை என்பதில் நடந்த என்பதும் பிறவும் பெயரெச் சங்கள். இவற்றின் முன் வலி மிகுமா? விடை: மிகாது; இயல்பாகும். வந்த + குதிரை - வந்த குதிரை வாழ்க, வாழிய, வருக என்ற வியங்கோள் வினைமுற்றுக் களின் முன் வரும் வலி இயல்பாகுமா? விடை: ஆம்! ஆ (ஆகார ஈறு) இனி ஆ என்ற எழுத்தைக் கடைசியாகக் கொண்ட சொல்லின் முன் வல்லினம் வந்தால் மிகாத இடங்களைச் சொல்லுகின்றேன். ஓடா, வாரா, உண்ணா, தின்னா என்றால் ஓடமாட்டா, வரமாட்டா, உண்ணமாட்டா, தின்னமாட்டா என்பது பொருள். ஓடா + குதிரைகள் = ஓடா குதிரைகள். வாரா + காளைகள் = வாரா களைகள். உண்ணா + குரங்குகள் = உண்ணா குரங்குகள். தின்னா + பன்றிகள் = தின்னா பன்றிகள். ஓடா, வாரா* உண்ணா, தின்னா என்பனவும் இவை போன்றவை களும் அஃறிணைப் பலவின்பால் எதிர்கால வினைமுற்றுக்கள் என்று சொல்லப்படும். எதிர்மறை என்றால் என்ன? வரும் என்றால் உடன்பாடு வாரா என்றால் எதிர்மறை தின்னும் என்றால் உடன்பாடு தின்னா என்றால் எதிர்மறை - என வேறுபாடு அறிக. நண்பா வேலா என்பன சேய்மை விளிகள், சேய்மையிலிருப் பாரை அழைப்பது சேய்மை விளி. விளித்தல் = அழைத்தல், நண்பா, வேலா, குப்பா என்பவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகாது. நண்பா + போ = நண்பா போ வேலா + தின் = வேலா தின் பிறவும் இப்படியே அம்மா, அப்பா, பாப்பா - இவையும் விளிகள் அம்மா + போவீர் = அம்மா போவீர் அப்பா + தின்னுக = அப்பா தின்னுக பாப்பா + செல் = பாப்பா செல் அண்ணா + தருக = அண்ணா தருக மிகவில்லை: இயல்பாயின அல்லவா? சேர nrhH* பாண்டியா என்பவையும் இப்படியே சேரா + காக்க = சேரா காக்க, சோழா + போர் புரிக = சோழா போர் புரிக பாண்டியா + புகழ் பெறுக = பாண்டியா புகழ் பெறுக. சேராக் காக்க, சோழாப் போர்புரிக என்பன பிழைகள். - குயில், திங்கள் இருமுறை, சென்னை, 1. 5. 1962 3. ஒற்று மிகாத இடங்கள் அ, ஆ, இ ஆகியவற்றைக் கடைசியில் உடைய சொற்களின் முன் வரும் வல்லெழுத்து மிகாத இடங்கள் இன்னின்னவை என இதுவரைக்கும் எடுத்துக் காட்டப்பட்டன. சென்ற குயிலில் இகர ஈற்றுச் சொற்களின் முன் வரும் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகும் இடங்கள் குறிக்கப்பட்டன. அவை அனைத்தும் உங்கள் நினைவில் இடம் பெற்றவையா என்பதை அறிய இங்கே பயிற்சிக் கேள்விகளும் அவற்றிற்கான விடையும் தரப்படுகின்றன. கண்ட + போது = கண்டபோது காண்கின்ற + கண் = காண்கின்ற கண் சிரித்த + பெண் = சிரித்த பெண் தெரிநிலை பெயரெச்சத்தின் முன் வல்லெழுத்து இயல்பாயிற்று. பெரிய + குதிரை = பெரிய குதிரை சிறிய + பன்றி = சிறிய பன்றி வலிய + சொக்கன் = வலிய சொக்கன் மெலிய + கயிறு = மெலிய கயிறு உள்ள + பணம் = உள்ள பணம் குறிப்பு பெயரெச்சத்தின் முன் வலி இயல்பாயிற்று. வந்தன + குதிரைகள் = வந்தன குதிரைகள் வருவன + பறவைகள் = வருவன பறவைகள் எரிந்தன + கொள்ளிகள் = எரிந்தன கொள்ளிகள் எரிகின்றன + கட்டைகள் = எரிகின்றன கட்டைகள் தெரிநிலை வினைமுற்றுக்களின் முன் வலி இயல்பாயிற்று. பெரியன + குதிரைகள் = பெரியன குதிரைகள் சிறியன + குருவிகள் = சிறியன குருவிகள் வலியன + கழுகுகள் = வலியன கழுகுகள் குறிப்பு வினைமுற்றுக்களின் முன் வலி இயல்பாயிற்று. வருக + தமிழரே = வருக தமிழரே செல்க + பொன்னா = செல்க பொன்னா வாழிய + செந்தமிழ் = வாழிய செந்தமிழ் வியங்கோள் வினைமுற்றின் முன் வந்த வலி இயல்பாயிற்று. பல + குதிரைகள் = பல குதிரைகள் சில + குதிரைகள் = சில குதிரைகள் அஃறிணைப் பலவின்பால் பெயர் முன் வலி இயல்பாயிற்று. - குயில், திங்கள் இருமுறை, சென்னை, 16. 5. 1962 4. வல்லெழுத்து மிகாத இடங்கள் அகர ஈற்றுச் சொல்லின் முன்னும், ஆகார ஈற்றுச் சொல்லின் முன்னும் வல்லெழுத்து வந்தால் மிகாத இடங்கள் காட்டப்பட்டன. இனி இகர ஈற்றுச் சொல்லின் முன் வல்லெழுத்து மிகாத இடங்கள் காட்டப்படும். புலி, எலி, சாணி, துணி, ஆணி, ஏரி ஆகிய இவைகள் இகர ஈற்றுச் சொற்கள் கடைசியில் இகரம் இருப்பதால். இந்த இகர ஈற்றுச் சொற்களின் முன் வல்லெழுத்து வந்தால் மிகுமா மிகாதா என்பது விளக்கப்படும். புலி போனது, எலி தின்றது, துணி கிழிந்தது, ஆணி பெரிது என்பன எழுவாய்த் தொடர் என்று சொல்லப்படும். புலி போனது என்றால் புலியானது போனது என்றுதானே பொருள். எலி தின்றது என்றால் எலியானது தின்றது என்றுதானே பொருள். ஆணி பெரிது என்றால் ஆணியானது பெரியது என்று பொருள்படவில்லையா? இப்படிப் பொருள்பட வருவதுதான் எழுவாய்த் தொடர் என்பது. எழுவாய்த் தொடரா யிருந்தால் இகர ஈற்றின்முன் வல்லெழுத்து மிகாது. எலி + தின்றது = எலி தின்றது சாணி + குறைந்தது = சாணி குறைந்தது புலி + பாய்ந்தது = புலி பாய்ந்தது இனி, உம்மைத் தொகைநிலைத் தொடர் என ஒன்று இருக்கிறது. புலி, கரடி என்பது உம்மைத் தொகை நிலைத்தொடர். புலியும் கரடியும் என்று பொருள்படும்போது நடுவில் உம் என்பது குறைந்து வந்தது அல்லவா? புலி + கரடி = புலி கரடி புலி இகர வீற்றுச் சொல். அதன்முன் க என்ற வல்லெழுத்து வந்தது. மிகவில்லை. இதை எப்படிச் சொல்ல வேண்டுமென்றால் இகரத்தின் முன் உம்மைத் தொகையில் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும். அதுபோலவே. ஏரிகுளம், இதற்கு ஏரியும் குளமும் என்பது பொருள் ஆதலால் இது உம்மைத் தொகையில் இகரத்தின் முன் வல்லெழுத்து வந்ததால் இயல்பாயிற்று. ஏரி + குளம் = ஏரிகுளம் இயல்பாயிற்று. ஏரிக்குளம் என்பது பிழை. மந்தி + கடுவன் = மந்திகடுவன். மந்தியும் கடுவனும் என்று பொருள். இனி, இகர ஈற்றுச் சொல் உயர்திணையாய் இருந்தால் வரும் வல்லெழுத்து மிகாது. கூனி உயர்திணைச் சொல் இதன் முன் வல்லெழுத்து வந்தால். கூனி + பேசினாள் = கூனி பேசினாள் என்று இயல்பாகும். கூனிப் பேசினாள் என்பது பிழை. அண்ணி + சென்றாள் = அண்ணி சென்றாள். செட்டி + போனான் = செட்டி போனான். குழலி + கண்டாள் = குழலி கண்டாள். முதலி + பேசினான் = முதலி பேசினான். இனி எறிபந்து என்பதன் இடையில் ஒற்று மிகாது. எறி + பந்து = எறிபந்து அது போலவே, விரி + பசும்பொன் = விரிபசும்பொன் என இயல்பே ஆகும். மிகாது. ஏன்? எறி என்பதும், விரி என்பதும் வினைத்தொகை. எப்படி? எறி என்பது எறிந்த என்று இறந்த காலத்தையும் காட்ட வில்லை. எரிகின்ற என்று நிகழ்காலத்தையும் காட்டவில்லை. எறியும் என்று எதிர்காலத்தையும் காட்டவில்லை. இப்படி வருகின்றவைகள் வினைத் தொகை என்பார்கள். எறி, விரி, பிரி, திரி, இவைகள் வினைத்தொகைகளே - குயில், திங்கள் இருமுறை - சென்னை, 16. 6. 1962  சுக்கு, பட்டு, பாட்டு, முத்து, காப்பு, நேற்று இவைகள் வன்றொடர்க் குற்றியலுகரங்கள். நாட்டு புகழ் என்பதன் பொருள் நாட்டுகின்ற புகழ், அல்லது நாட்டும் புகழ், அல்லது நாட்டிய புகழ். ஆகையால் நாட்டு என்பது வினைத்தொகை. இந்த நாட்டு என்பதன் முன் வல்லெழுத்து வந்தால் மிகாது. இயல்பாகும். எடுத்துக்காட்டு: நாட்டு + புகழ் = நாட்டு புகழ் கூப்பு கை என்பதும் அதுவே. எனவே கூப்பு என்பதன் முன் வரும் வல்லெழுத்து மிகாது. இயல்பாகும். கூப்பு + கை = கூப்புகை. சங்கு, பஞ்சு, மாண்பு, பந்து, வம்பு, ஒன்று இவைகள் மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்! இவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகாது; இயல்பாகும். எடுத்துக்காட்டு: சங்கு + பிறந்தது = சங்கு பிறந்தது பஞ்சு + காய்ந்தது = பஞ்சு காய்ந்தது பண்பு + குறைந்தது = பண்பு குறைந்தது பந்து + பறந்தது = பந்து பறந்தது வம்பு + பண்ணினான் = வம்பு பண்ணினான் ஒன்று + செய்தான் = ஒன்று செய்தான் பெய்து, சார்பு, போழ்து, சால்பு, தெள்கு இவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது; இயல்பாகும். எடுத்துக்காட்டு: பெய்து + தந்தான் = பெய்து தந்தான் சார்பு + பற்றியது = சார்பு பற்றியது சால்பு + கண்டோம் = சால்பு கண்டோம் போழ்து + புலர்ந்தது = போழ்து புலர்ந்தது தெள்கு + நடித்தது = தெள்கு நடித்தது தெள்கு என்பது தெள்ளுப்பூச்சி. நாகு, காசு, நாடு, காது, நூறு இவை நெடிற்றொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன் வலி மிகாது. இயல்பாகும். எடுத்துக்காட்டு: நாகு + பெரிது = நாகு பெரிது காசு + கொடு = காசு கொடு பாடு + படு = பாடுபடு நூறு + பணம் = நூறுபணம் நாகு என்றால் என்ன தெரியுமா? எருமை. எஃகு, கஃசு, அஃது கஃசு என்றால் கால் பலம் இவை ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம். இவற்றின் முன் வரும் வலி மிகாது இயல்பாகும். எடுத்துக்காட்டு: எஃகு + கடிது = எஃகு கடிது கஃசு + கொடு = கஃசு கொடு அஃது + பெரிது = அஃது பெரிது எஃகு என்றால் இரும்பு. அறுகு, இரிசு, குறடு, பெரிது, தருபு, தவறு, இவை உயிர்த் தொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன் வலி மிகாது. இயல்பாகும். எடுத்துக்காட்டு: அறுகு + பெருத்தது = அறுகு பெருத்தது இரிசு + கழன்றது = இரிசு கழன்றது குறடு + பெரிது = குறடு பெரிது பெரிது + கொடுத்தான் = பெரிது கொடுத்தான் தருபு + தந்தான் = தருபு தந்தான் தவறு + செய்தான் = தவறு செய்தான் அறுகு என்றால் அறுகம்புல். தருபு என்றால் தருவது. - குயில், திங்கள் இருமுறை, சென்னை, 1. 8. 1962  பிரி + பொருள் = பிரிகின்ற, பிரிந்த, பிரியும் என மூன்று காலத்துக்கும் பொதுவாய் நிற்பதால், திரி + புலி = திரிபுலி = திரிந்தபுலி, திரிகின்ற புலி, திரியும் புலி என்று பொருள்படுதல் காண்க. இனி, வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான். மிகவில்லை. இயல்பாயிற்று. வரும்படி என்ற தொடரை நோக்குக. இதை வினையை அடுத்தபடி என்பார்கள் ஏன்? வரும் என்பது வினைச்சொல். அதை அடுத்து வந்ததால் வினையை அடுத்தபடி என்பதாயிற்று. இதுபோலவே. போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான். இயல்பாயிற்று. போகும்படிச் சொன்னான் என்பது பிழை. மறுபடி + சொன்னான் = மறுபடி சொன்னான். மறு என்பதை அடுத்து வந்தபடி முன்னும் வல்லெழுத்து இயல்பாயிற்று. இனி, வா ஏடி, போ ஏடி என்பன வாடி போடி, என வழங்கும். இந்த வாடி போடி என்பவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகாது இயல்பே யாகும். வாடி + பெண்ணே = வாடி பெண்ணே போடி + கண்ணே = போடி கண்ணே இனி, வாழி + பொன்னா = வாழி பொன்னா வாழி + தோழி = வாழி தோழி என இயல்பாகும். ஏன்? வாழி என்பது வியங்கோள் வினைமுற்று. அதற்குமுன் வரும் வல்லெழுத்து மிகாது. இயல்பாகும். இனி, படிப்பாய், நடிப்பாய், அடிப்பாய், ஒடிப்பாய் என்பன படி, நடி, அடி, ஒடி என்று நிற்கும். இவற்றின் முன் வல்லெழுத்து மிகாது. படி + கண்ணா = படிகண்ணா நடி + பாப்பா = நடிபாப்பா அடி = பார்ப்போம் = அடிபார்ப்போம் ஒடி + சுள்ளியை = ஒடிசுள்ளியை இந்த படி, நடி, அடி, ஒடி அனைத்தும் ஆய் குறைந்து வந்த ஏவல் ஒருமை வினைமுற்றுக்கள் என்று சொல்லப்படும். பயிற்சிக் கேள்வி: குன்றி சிதைந்தது எப்படி ஆகும்? குன்றி + சிதைந்தது + குன்றி சிதைந்தது என இயல்பாகும். ஏன்? குன்றி என்பது குண்டுமணிக்குப் பெயர். எனவே குன்றியானது சிதைந்தது என்று பொருள்படுகின்ற எழுவாய்த் தொடரானதலால் இயல்பாயிற்று. - குயில், திங்கள் இருமுறை - சென்னை, 15. 5. 1962 5. வல்லெழுத்து மிகாத இடங்கள் ஈகாரத்தை இறுதியாக உடைய நிலைமொழியின் முன் வல்லெழுத்து வந்தால் மிகாமல் இயல்பாகும் இடங்கள் சில! அவை வருமாறு: நீ என்பது ஈகாரத்தை இறுதியாக உடையதுதானே. ஏன் / ந் + ஈ = நீ ஆதலால் இந்த நீ என்பதன் முன்வருகின்ற வல்லெழுத்து மிகாது; இயல்பாகும். நீ + போ = நீ போ நீ + காண் = நீ காண் நீ + படி = நீ படி நீ + தொடு = நீ தொடு. போ, ப, க, தொ ஆகிய வல்லெழுத்து வந்தன; மிகவில்லை யல்லவா? நீ போ என்று எழுதாமல் நீப்போ என்று எழுதிவிட்டால் பிழையாகிவிடும். நீ முன்னிலை ஒருமைச் சொல். தம்பி என்று அருகில் இருப்பவனை அழைக்கிறோம். ஆனால் தூரத்தில் இருப்பவனைத் தம்பீ - என்று அழைக்கின்றோம். இந்தத் தம்பீ என்ற சொல்லின் கடைசியில் ஈ இருக்கின்றது. அதன் முன் வரும் வல்லினம் மிகாது; இயல்பாகும். தம்பீ + கொண்டுவா = தம்பீ கொண்டுவா தம்பீ + பார்த்துவா = தம்பீ பார்த்துவா ஈகார இறுதி பற்றி இவ்வளவே தெரிந்து கொண்டால் போதும். இனி உகர இறுதி முன் வலி இயல்பாகும் இடங்கள் கூறப்படும். - குயில், திங்கள் இருமுறை, சென்னை, 1. 7. 1962 6. வல்லெழுத்து மிகாத இடங்கள் இனி உ என்ற எழுத்தைக் கடைசியாக உடைய சொல்லுக்கு முன் வல்லெழுத்து வந்தால் மிகாத இடங்கள் இன்னின்னவை என்பது சொல்லப்படும். உகரத்தை இறுதியாக உடைய சொற்கள் எல்லாம் இரு வகைப் படும். ஒன்று குற்றியலுகரச் சொற்கள். இன்னொன்று முற்றியலுகரச் சொற்கள். இங்கே முதலில் குற்றியலுகரச் சொற்கள் கூறப்படும். குற்றியலுகரச் சொல்லின் கடைசியில் கு, சு, டு, து, பு, று என்ற ஆறு எழுத்துக்களில் ஏதாவது ஒன்று இருக்கும். இந்த கு, சு, டு, து, பு, று என்பவை என்ன எனில் உகரம் ஏறியுள்ள வல்லெழுத்துக்கள். இந்த ஆறு எழுத்துக்களில் ஓரெழுத்துக் கடைசியில் இல்லாவிட்டால் அச்சொல் குற்றியலுகரச் சொல் அல்ல. பாக்கு, குச்சு, பாட்டு, முத்து, சீப்பு, காற்று ஆகிய இந்த ஆறு சொற்களிலும் கு, சு, டு, து, பு, று வந்துள்ளது காண்க. ஏழு என்பதில் கடைசியில் கு, சு, டு, து, பு, று எதுவுமில்லை. ஆதலால் இது குற்றியலுகரச் சொல் அல்ல. இங்கு இன்னொரு சேதி சொல்ல வேண்டும். கடைசியில் கு, சு, டு, து, பு, று என்பதில் ஒன்றைப் பெற்று வந்தால் மட்டும் போதாது. ஒரு குற்றெழுத்தை யடுத்து வந்தாலும் அது குற்றியலுகரச் சொல் ஆகிவிடாது. புகு, விசு, மடு, அது, தபு, அறு இவைகள் குற்றியலுகரச் சொற்கள் அல்ல. ஏனெனில் அந்த கு, சு, டு, து, பு, று என்பவை ஒரு குற்றெழுத்தை அடுத்து வந்தன. நாடு குற்றியலுகரச் சொல்லா? ஆம், ஒரு நெட்டெழுத்தைத் தானே அடுத்து வந்தது? குற்றியலுகரச் சொற்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது இதுமட்டுமல்ல. இன்னும் உண்டு. சுக்கு என்பது கு என்பதைக் கடைசியில் உடையதாக அமைந்திருப்பதால் இது குற்றியலுகரந்தான். இருந்தாலும் அது என்ன குற்றியலுகரம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கடைசியில் இருக்கும் கு எதை அடுத்து வந்துள்ளது? க் என்ற வல்லெழுத்தை அடுத்து வந்துள்ளது. அதனால் அதை வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் என்று சொல்ல வேண்டும். சங்கு குற்றியலுகரம் தான். கடைசியிலுள்ள கு எதை அடுத்து வந்துள்ளது. ங் என்ற மெல்லெழுத்தை. ஆகையால் அது மென்றொடர்க் குற்றியலுகரம். போழ்து இது இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஏன் கடைசியிலுள்ள து என்ற எழுத்து ழ் என்ற இடை எழுத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. போழ்து - பொழுது, சால்பு, சார்பு என்பவைகளும் இடைத் தொடர் குற்றியலுகரங்களே. அழகு, பெரிது, இரிசு முதலியவை உயிர்தொடர்க் குற்றிய லுகரங்கள் ஏன்? கடைசி எழுத்தானது உயிரை அடுத்து வந்ததுள்ளது. ழ் + அ = இரண்டும் சேர்ந்ததுதானே ழ? அதில் உயிர் இருந்ததல்லவா? அந்த உயிரெழுத்தை அடுத்துத்தானே சொல் முடிந்திருக்கிறது. அஃது - இது ஆய்தத் தொடர். ஏன் ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வந்தது. ஆடு, காசு முதலியவைகள் நெடிற்றொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? நெட்டெழுத்தை அடுத்து வந்தது. நெடிற்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் எப்போதும் முதலில் நெட்டெழுத்தைப் பெற்று இரண்டெழுத்துச் சொல்லாகவே இருக்கும். - குயில், திங்கள் இருமுறை - சென்னை, 1. 7. 1962 ஆ. பாட்டுக்கு இலக்கணம் பாட்டு என்றால் என்ன? அறிவிற் சிறந்தவர்கள் பல சொற்களை வைத்து அழகு அமைய ஒரு பொருளைப் பற்றிப் பாடுவது பாட்டு. ... சொல்லால் பொருட்கிடனாக உணர்வின் வல்லார் அணிபெறச் செய்வன செய்யுள் என்ற நன்னூல் அடியை நினைவில் வைத்துக் கொள்க. பாட்டு, பாடல், செய்யுள் அனைத்துக்கும் பொருள் ஒன்றே. பாட்டு இன்னது என்பது ஒருவாறு புரிந்தது. இனி அப்பாட்டுக்கு இலக்கணத்தைக் கூறுமுன் பாட்டுக்கு இலக்கணம் படிக்க வேண்டும் என்பது பற்றிக் கூறுகின்றேன். பாட்டு எழுத இலக்கணம் தேவை இல்லை என்று இக்காலத்தில் சிலர் கூறுகிறார்கள். அது தவறு. இலக்கணம் தேவை. இலக்கணம் தெரியாதவர்களும் பாட்டு எழுதுகிறார்கள்; எழுத முடியும் என்று கூறுகின்றவர்கள் ஊன்றி நோக்காது மேலெழுந்தவாரியாகக் கூறினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஊற்றுக் கண்டதும் அதைக் கிணறு, ஊருணி என்று கூறிவிட லாகாது. ஊறிய ஊற்று ஓர் ஒழுங்கிற்கு உட்பட வேண்டும். சேறு எடுக்க வேண்டும். பக்கங்கள் அமைக்க வேண்டும். அதன் பிறகுதான் அது கிணறு அல்லது ஊருணி. ஒழுங்கு பெறாத ஊற்றால் எதிர்பார்த்த பயன் கிடைக்காதது போலக் கல்லாதான் கற்ற கவியும் பயன் தராது. படிக்காதவர், யாப்பிலக்கணம் பயிலாதவர் எழுதும் பாட்டும் நன்றாகவே இருந்தது. எனினும் அறிவுடையார் அதை ஒப்பமாட்டார் என்பது திருவள்ளுவர் கருத்தாகும். கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடை யார். என்றது காண்க. பாட்டுக்கு இலக்கணம் பயில எண்ணுவோர் பாட்டுக்கு இலக்கணம் பயில வேண்டியது இன்றியமையாதது என்று நம்ப வேண்டும். இலக்கணம் தெரிந்து கொள்ளாமலேயே பாட்டு எழுதலாம் என்பதை அறவே மறந்துவிடவேண்டும். இன்னொன்று முதலில் சொல்லி விடுகின்றேன். சொல்லிக் கொண்டே வரும்போது முன்னே சொன்னதை மறந்து விடக்கூடாது. நினைவாற்றல் இன்றியமையாதது. எழுத்திலக்கணம் அசை இன்ன தென்பது 1 அ இது தமிழ் எழுத்துக்களின் வரிசையில் முன்னிருப்பது. வாயைத் திறப்பதினாலேயே தோன்றிவிடும். க், ங், ச், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 மெய்யின் மேலும் தனித்தனி ஏறி, அவைகளை க, ங - ன என்று ஆக்குகின்ற நிலையை எண்ணி இதை உயிர் என்று சொல்ல வேண்டும். மற்ற நேரத்தில் அ என்ற எழுத்து மட்டும் சொல்லுக. க் + அ = க; ன் + அ = ன மெய் எழுத்து என்றால் உயிரில்லாத உடம்பு எழுத்து என்பது பொருள். இந்த மெய் எழுத்தைச் சொல்லிக் காட்ட முடியாது. உயிர் கூட்டித்தான் சொல்லிக் காட்ட முடியும். க் ங் முதலிய 216 எழுத்துக்களுக்கும் உயிர் மெய் எழுத்துக் கள் என்று பெயர், உயிரும் மெய்யும் கூடிப் பிறத்தலினால்! அ என்ற எழுத்துக்கு மெய் எழுத்தை இயக்குவது தவிர வேறு வேலை இல்லையா? - உண்டு. அவன், அவள், அவர், அது, அவை, அம்மனிதன், அப்பெண், அம்மனிதர், அக்களிறு, அக்குருவிகள் என்பவை சுட்டுப் பெயர்கள். ஒன்றைச் சுட்டிக் காட்டுவதால் இந்தச் சுட்டுப் பெயர்களில் எல்லாம் முதலில் அ இருக்கிறது. எனவே இங்கு அ என்ற எழுத்துச் சுட்டுப் பொருளில் வந்தது. இப்போது அ என்ற எழுத்து உயிர் எழுத்தா? இல்லை சுட்டெழுத்து. அதனால்தான் அ ஒரு பொருளைச் சுட்டிக் காட்டும் போது சுட்டெழுத்து என்று சொல்லப்படும். சுட்டாத போது அ என்ற எழுத்து என்றுதான் சொல்ல வேண்டும். அ: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன பாட்டின் ஆறு உறுப்புக்கள். அவற்றில் இது (அ) அசையாய் வரும். இது தனியாய் வந்தாலும், அசைதான். ஒரு மெய் எழுத்தைக் கூடச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அசைதான். அ, அல்லது அக், அங், அச், அஞ், அன் என்று இவைகளுக்கு நேரசை என்று பெயர். அச்சம் என்பதில் இரண்டு நேரசைகள் இருக்கின்றன. அச் ஒன்று, சம் ஒன்று. அ, அ இரண்டும் என்பதில் முதலில் உள்ள அ என்பதும் நேரசை. மேலும் அ என்பது குற்றெழுத்து, குறில் என்றும் சொல்வதுண்டு. எனவே அ என்ற குறில் தனித்து வந்தாலும், ஒரு மெய்யைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் நேரசை என்று நினைவில் வைத்துக் கொள்க. இதுபோலவே இ, உ, எ, ஓ, என்ற எழுத்துக்களும் குற்றெழுத்துக்களே. இவைகளும் தனித்து வந்தாலும், மெய் எழுத்தைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் நேரசைகளே. எடுத்துக்காட்டு: அ அக், இ, இச், உ, உஞ், எ, எம் - இந்த ஐந்து தவிர இன்னும் குற்றெழுத்துக்கள் இருக்கின்றன. அவை யாவன. அ என்ற உயிரேறிய க் அதாவது க என்ற உயிர்மெய் எழுத்தும் குற்றெழுத்தே. மேலும் 18 மெய்யின் மேலும் 5 குறிலும் தனித்தனி ஏறத் தோன்றுகின்ற 90உம் குற்றெழுத்துக்களே என அறிக. இப்போது நேரசை எவ்வளவு ஆகிவிட்டது பாருங்கள். 90 உயிர்மெய்க் குறிலும் 5 உயிர்க் குறிலும் தனித்தோ, மெய்யைச் சேர்த்துக் கொண்டோ வந்தால் அவை எல்லாம் அசை, அதாவது, குறிலசை. மேலும் நேரசை. அ ஓரசை, அம் ஓரசை, க ஓரசை, கண் ஓரசை, ப ஓரசை, பல் ஓரசை என்று நினைவில் கொள்க. - குயில், திங்கள் இருமுறை இதழ், சென்னை 15. 4. 1962 2 ஆ இதுவும் மெய்யெழுத்துக்கு உயிர் தரும்போது உயிர் எழுத்து எனப்படும். ஆ தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் நேரசை எனப்படும். ஆ தனித்து வந்தது. ஆக், ஆங் ஒற்றெடுத்து வந்தன. அ என்பதற்கும் ஆ என்பதற்கும் வேறுபாடு என்ன? அ குறில்; ஆ நெடில். ஆ என்பது நீண்ட ஓசை உடையது அல்லவா. இனி, ஆ ஏறியதால் உண்டாகும் கா, ஙா முதலியனவும் நெட்டெழுத்துக்களே. ஆ என்ற நெட்டெழுத்துக்கும் கா, ஙா முதலிய நெட்டெழுத்துக்கும் வேறுபாடு என்ன? ஆ உயிர் நெட்டெழுத்து கா, ஙா முதலியவை உயிர் மெய் நெட்டெழுத்துக்கள். பயிற்சி: உயிர்க் குற்றெழுத்துக்கள் எவை? அ, இ, உ, எ, ஒ ஆகிய 5. உயிர்மெய் குற்றெழுத்துக்கள் எவை? க, கி, கு, கெ, கொ, ங, ஙி, ஙு, ஙெ, ஙொ, ச, சி, சு, சொ, முதலிய 90. எனவே குற்றெழுத்துக்கள் 95. உயிர் நெட்டெழுத்துக்கள் எவை? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய 7 உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் எவை? கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ. ஙா, ஙீ, ஙூ, ஙே, ஙை, ஙோ, ஙௌ. சா, சீ, சூ, சே, சை, சோ, சௌ. ஞா, ஞீ, ஞூ, ஞே, ஞை, ஞோ, ஞௌ 18 x 7 = 126 என்க. இதனோடு உயிர் நெட்டெழுத்துக்களையும் சேர்த்து 133 என்க. நெட்டெழுத்துக்கள் 133-ம், குற்றெழுத்துக்கள் 95-ம் சேர்த்தால் 133 + 95 = 228 ஆகும். இந்த 228 எழுத்துக்களும் தனித்து வந்தாலும், ஒற்றடுத்து வந்தாலும் நேரசைகள். அ. தனித்து வந்த நேரசை. அம் ஒற்றடுத்து வந்த நேரசை. ஆ தனித்து வந்த நேரசை. ஆம் ஓற்றடுத்து வந்த நேரசை என நினைவில் வைத்துக் கொள்க. பயிற்சி: அன்றில் என்பதில் அன், றில் என இரண்டும் நேரசைகள் வந்தன. ஆண்பால் என்பதில் ஆண், பால், என இரு நேரசைகள் வந்தன. தாரா என்பதில், தா, ரா இரு நேரசைகள் வந்தன. காண்பார் என்பதில் காண், பார் என இரு நேரசைகள் வந்தன. பார்க்க, என்பதில் பார்க், க என இரு நேரசைகள் வந்தன. நிரையசை: இதுவரைக்கும் நேரசை விளக்கப்பட்டது. இனி நிரையசை வருமாறு:- இரண்டு குற்றெழுத்து வந்தால் நிரையசை. கட, நடு, பழ என்பவையும் பிறவும். அதுமட்டுமல்ல. இந்த இரு குற்றெழுத்தும் ஒற்றடுத்து வந்தாலும் அவை நிரையசைகள். கடல், நடும், பழம், கட என்ற இரு குறில் ல் என்பதைச் சேர்த்துக் கொண்டு வந்தது காண்க. அதுமட்டுமல்ல. ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து வந்தாலும் நிரையசையே. கடா, தடா, விடா இவற்றில் க என்பது குறில், டா என்பது நெடில். இரண்டும் சேர்ந்து கடா என வந்தது. ஆகவே அது நிரையசை. அதுமட்டுமா? அந்த ஒரு குறில் ஒரு நெடில் ஒற்றடுத்து வந்தாலும் நிரையசையே. படாக், தடார், விடார் இவற்றில் ஒரு குறில், ஒரு நெடில் ஒற்றடுத்து வந்தன காண்க. இதுவரைக்கும் சொல்லி வந்த நேரசை நிரையசை இரண்டையும் நேர், நிரை என்றும் சொல்வதுண்டு. பயிற்சி: வாக்குண்டாம் - இருப்பவை என்ன? - வாக் - நேர், குண் - நேர், டாம் - நேர். மூன்று நேர் இருக்கின்றன. நல்ல என்பதில் நல், ல இரண்டு நேர் இருக்கின்றன. மன முண்டாம் என்பதில் மன - நிரை ; முண் - நேர்; டாம் - நேர். ஒரு நிரை இரு நேர் உள்ளன. மாமலராள் - நேர் நிரை நேர் உள்ளன. நோக்குண்டாம் - நேர், நேர், நேர் உள்ளன. மேனி - நேர், நேர் நுடங்காது - நிரை , நேர், நேர் பூக்கொண்டு - நேர், நேர், நேர் துப்பார் - நேர், நேர் திருமேனி - நிரை நேர், நேர் தும்பிக்கை - நேர், நேர், நேர் யான், பாதம் - நேர், நேர், நேர் தப்பாமல் - நேர், நேர், நேர் சார்வார் - நேர் நேர் தமக்கு - நிரை நேர். இதுவரைக்கும் நீங்கள் நேரசை, நிரையசை இன்னது என்று தெரிந்து கொண்டீர்கள். சீர் இனிச் சீர் பற்றிக் கூறுகின்றேன். ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவகைச்சீர், நாலசைச்சீர் எனச் சீர் நான்கு வகைப்படும். ஓரசைச்சீர் காட்டுகின்றேன். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் இதில் கடைசியில் வந்துள்ள வார் என்பது ஓரசைச்சீர் மேலும் நேரசை. கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் கடைசியிலுள்ள எனின் என்பது ஓரசைச்சீர். மேலும் நிரையசை. ஈரசை வந்ததைக் காட்டுகிறேன். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் நான்கு சீர்களும் வந்துள்ளன. அவையனைத்தும் ஈரசைச் சீர்களே. கற்கை - நேர், நேர் நன்றே - நேர், நேர் பிச்சை - நேர், நேர் புகினும் - நிரை நேர். எனவே எட்டுச் சீர்களும் ஈரசைச் சீர்கள் ஆனமைக் காண்க. மூவசைச்சீர் காட்டுகின்றேன்: காடைக்குக் கானீளம் காக்கைக்கு வாய்நீளம் பாடைக்குக் கோல்நீளம் பச்சையப்பா - நாடிப்பாப் பாம்புக்குப் பல்நீளம் பாட்டுக்குப் பண்நீளம் வேம்புக்கு வேர்நீளம் ஆம். இது வெண்பா. இதில் முதலடியில் நான்கு சீரும், இரண்டாம் அடியில் நான்கு சீரும், மூன்றாம் அடியில் நான்கு சீரும். நான்காம் அடியில் இரண்டு சீரும் ஆம் என்ற ஓரசைச் சீரும் வந்துள்ளன. கா, டைக், குக் - நேர், நேர், நேர் ஆகிய மூவசைக் சீர்வந்தது காண்க. கானீளம் - கா, னீ, ளம் - நேர் நேர் நேர். இதுவும் மூவசைச் சீர். கடைசியிலுள்ள ஆம் என்பது மட்டும் ஓரசைச்சீர். மற்றவை அனைத்தும் மூவசைச் சீர்கள் என்க. நமர்பயில்வது - தமிழ் மொழியென நவிலாயோ, என்ற அடியில் நமர்பயில்வது நிரை, நிரை, நிரை. தமிழ்மொழியென - நிரை, நிரை, நிரை. நவிலாயோ - நிரை நேர் நேர் என அனைத்துச் சீர்களும் மூவசைச் சீர்களே ஆயின. - குயில், திங்கள் இருமுறை இதழ், சென்னை, 1. 5. 1962 3 சென்ற குயிலில் மூவசைச் சீர் விளக்கப்பட்டது இனி நாலசைச்சீர் வருமாறு: நேர் நேர் நேர் நேர் இப்படி நாலசை சேர்ந்து வருமானால் அதை நாலசைச்சீர் என்று சொல்லுவர். அதன் வாய்பாடு பின்வருமாறு:- தேமாந் தண்பூ என்பது நாலசைச் சீர் 16 ஆகும். அவை வருமாறு: நேர் நேர் நேர் நேர் - தேமாந் தண்பூ நிரை நேர் நேர் நேர் - புளிமாந் தண்பூ நிரை நிரை நேர் நேர் - கருவிளந் தண்பூ நேர் நிரை நேர் நேர் - கூவிளந் தண்பூ நேர் நேர் நிரை நேர் - தேமா நறும்பூ நிரை நேர் நிரை நேர் - புளிமா நறும்பூ நிரை நிரை நிரை நேர் - கருவிள நறும்பூ நேர் நிரை நிரை நேர் - கூவிள நறும்பூ நேர் நேர் நேர் நிரை - தேமாந் தண்ணிழல் நிரை நேர் நேர் நிரை - புளிமாந் தண்ணிழல் நிரை நிரை நேர் நிரை - கருவிளந் தண்ணிழல் நேர் நிரை நேர் நிரை - கூவிளத் தண்ணிழல் நேர் நேர் நிரை நிரை- தேமா நறுநிழல் நிரை நேர் நிரை நிரை - புளிமா நறுநிழல் நிரை நிரை நிரை நிரை - கருவிள நறுநிழல் நேர் நிரை நிரை நிரை - கூவிள நறுநிழல் பூ என்று முடிகின்ற எட்டும், நிழல் என்று முடிகின்ற எட்டும் ஆகிய பதினாறும் நாலசைச் சீர்கள் என்று நினைவில் பதிக்க. - குயில், திங்கள் இருமுறை இதழ்இ சென்னை, 15. 5. 1962 4 சீர் பற்றி இன்னும் சில சொல்லப்படும். நேர் நேர் என்ற ஈரசைகளையும் சேர்த்துச் சொல்வதற்குப் பதிலாக தேமா என்று சொல்லிக் கொள்ளலாம். இது நினைவிற்காக ஏற்படுத்திக் கொண்டது: வாய்பாடு என்பார்கள். நேர் நேர் = தேமா நிரை நேர் = புளிமா நிரை நிரை = கருவிளம் நேர் நிரை = கூவிளம் பயிற்சி:- தேமா என்பதில் தே என்பது நேர். மா என்பதும் நேர் என்க. புளிமா என்பதில் புளி நிரை. மா நேர் என அறிக. கருவிளம் என்பதில் கரு, நிரை. விளம் என்பது நிரை என அறிக. கூவிளம் என்பதில் கூ என்பது நேர். விளம் என்பது நிரை என அறிக. தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற நான்கும் ஈரசைச் சீர்கள். மேலும். தேமா, புளிமா என்ற இரண்டின் இறுதியிலும் மா என்று வருவதால் இவ்விரண்டையும் மாச்சீர் எனல் வேண்டும். பயிற்சிக் கேள்விகள்: ஈரசைச்சீர் எத்தனை? ஈரசைச் சீர் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என நான்கு. இந்த நான்கை இரண்டு பிரிவாகச் சொல்லிக் காட்டு: தேமா, புளிமா, மாச்சீர் என்றும், கூவிளம், கருவிளம், விளச்சீர் என்றும் சொல்லப்படும். இனி மூவசைச் சீர் காட்டப்படும். மூவசைச் சீர்: நேர் நேர் நேர் என்பதும், நிரை நேர், நேர் என்பதும், நிரை, நிரை, நேர் என்பதும், நேர், நிரை நேர் என்பதும், நேர், நேர், நிரை என்பதும், நிரை நேர் நிரை என்பதும், நிரை நிரை நிரை என்பதும், நேர் நிரை நிரை என்பதும் ஆகிய எட்டும் மூவசைச் சீர்கள். இவற்றிற்கு வாய்பாடுகள் வருமாறு: நேர் நேர் நேர் = தேமாங்காய் நிரை நேர் நேர் = புளிமாங்காய் நிரை நிரை நேர் = கருவிளங்காய் நேர் நிரை நேர் = கூவிளங்காய் நேர் நேர் நிரை = தேமாங்கனி நிரை நேர் நிரை = புளிமாங்கனி நிரை நிரை நிரை = கருவிளங்கனி நேர் நிரை நிரை = கூவிளங்கானி ஆகிய எட்டு. இந்த எட்டையும் இரு பிரிவாக்கிச் சொல்லப்படும். தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் ஆகிய இந்த நான்கும் காய்ச்சீர் எனப்படும். இறுதியில் காய் என்று முடிவதால் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி இவைகளைக் கனிச்சீர் என வேண்டும், கனி என்று முடிவதால். - குயில், திங்கள் இருமுறை இதழ், சென்னை, 16. 6. 1962 5 இதுவரைக்கும் எழுத்து, அசை, சீர் என்பன பற்றி பார்த்தோம். இனித், தளை பற்றிக் கூறப்படும். சீர் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவது தளை. நேர் நேரோடும், நிரை நிரையோடும் பொருந்தி வருவதும் நேர் நிரையோடும், நிரை நேரோடும் பொருந்தி வருவதும் தளை ஆயின. அம்மா என்றன் ஆசை என்றன் என்பது அகவல் அடி. அதில் அம்மா என்பது நேர் நேர்; அதாவது தேமா. என்றன் என்பது நேர் நேர். அதாவது தேமா. எனவே, நேர் என்பதோடு நேர் ஒன்றிய தளை! நேர் நேர் என்பதில் கடைசியில் நேர் இருப்பது காண்க. இன்னும். வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் என்பது வெண்பா அடி. வாக்குண்டாம் என்பது தேமாங்காய். அதாவது நேர் நேர் நேர். அதனோடு நல்ல அதாவது தேமா நேர் நேர்வந்தது. இதைக் காயுடன் - அதாவது நேர் நேர் நேருடன் நேர்வந்து ஒன்றியது - இதையும் தளை என்று காண்க. தளை என்பது பற்றி இவ்வளவு மட்டும் தெரிந்து கொண்டால் போதும். அடி இனி அடியைப் பற்றிச் சொல்லப்படும். அடி என்பது மேற்சொன்ன தளை ஒன்றை ஒன்று அடுத்து வருவது. செய்யுட்களில் இருசீர் கொண்ட அடியும், முச்சீர் கொண்ட அடியும், நாற்சீர் கொண்ட அடியும், ஐஞ்சீர் கொண்ட அடியும், ஐந்துக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடியும் வரும். மேலும் செய்யுட்களில். இரண்டடி கொண்ட செய்யுட்களும், மூன்றடி கொண்ட செய்யுட்களும், நான்கடி கொண்ட செய்யுட்களும், பல அடிகள் கொண்ட செய்யுட்களும் உண்டு. அடிபற்றி இவ்வளவே தெரிந்து கொண்டாற் போதும். சுருக்கமாக இதுவரைக்கும் சொல்லி வந்தவற்றை மறக்காமல் இருக்க வேண்டும். இனி, அடுத்த குயிலில் இப்படி அமைந்தது இன்ன செய்யுள் என்றும், இப்படி அமைய வேண்டும் இன்ன செய்யுள் என்பவைகள் சொல்லப்படும். தொடை என்பது பற்றி அதனால் சொல்லப்படும். - குயில், திங்கள் இருமுறை இதழ், சென்னை, 1. 7. 1962 6 வெண்பா காய்முன் நேர் வரவேண்டும். மாமுன் நிரை வரவேண்டும். வாக்குண்டாம் நல்ல - என்பதில் வாக்குண்டாம் என்பது தேமாங்காய். நல்ல என்பதில் முதலில் நேர் இருக்கிறது. இதைத் தான் காய்முன் நேர் வரவேண்டும் என்பது. நல்ல மனமுண்டாம் என்பதில் நல்ல என்பது தேமா; மன முண்டாம் என்பதின் முதலில் நிரை இருக்கின்றது. இதைத் தான் மாமுன் நிரை வரவேண்டும் என்றது. இவ்வளவு சொல்லிவிட்டால் போதாது. வெண்பாவில் நேரிசை வெண்பா என்பது ஒன்று. வாக்குண்டாம் என்று தொடங்கும் பாட்டெல்லாம் வெண்பாதான். அதிலும் அதுதான் நேரிசை வெண்பா. நேரிசை வெண்பாவிற்கு நான்கு அடிவரும். அந்த நாலடியில் முதலடி நாற்சீரடி. அடுத்த அடி முச்சீரடி. அந்த முச்சீரடியை அடுத்து ஒரு தனிச்சொல். அதன்பிறகு நாற்சீரடி. அதன் பிறகு முச்சீரடி. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. இதில் முதலடி நாற்சீரடியாக இருப்பது காண்க. அடுத்த அடி முச்சீரடியும், தனிச்சொல்லும் ஆனது அறிக. அதற்கு அடுத்த அடி நாற்சீரடி ஆனதறிக. கடைசி அடி முச்சீரடியாய் இருப்பதறிக. வெண்பாவைப் பற்றி இவ்வளவு மட்டும் சொல்லி விட்டால் போதாது. வாக்குண்டாம் என்பது முதலடி. அடுத்த அடி நோக்குண்டாம் என்று இருப்பதை நோக்க வேண்டும். அப்படி எதுகை வைத்துத் தொடங்க வேண்டும். இரண்டாம் அடியை வாக் என்பதற்கு நோக் என்பது எதுகை. முதலெழுத்து நெட்டெழுத்தாய் இருந்தால் அடுத்த அடியின் முதலெழுத்தும் நெட்டெழுத்தாய் இருக்கவேண்டும். அடுத்த எழுத்து க் என்றிருந்தால் அடுத்த அடியின் அடுத்த எழுத்தும் க் என்றே வரவேண்டும். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு எண், கண் என எதுகை வந்திருப்பதைக் காண்க. எண் என்பதற்குக் கண் எதுகையே தவிர காண் என்பதோ, கன் என்பதோ எதுகை அல்ல. முதலடியும் இரண்டாம் அடியும் எதுகை உடையவைகளா யிருந்தால் மட்டும் போதாது. தனிச் சொல்லும் எதுகையுடையதாய் இருக்க வேண்டும். வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு என்பதில் வாக்-நோக்-பூக் என எதுகை வருதல் காண்க. கடைசி இரண்டடிகளும் எதுகையோடு வரவேண்டும். துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு துப் என்றும் தப் என்றும் வந்தது காண்க. - குயில், திங்கள் இருமுறை இதழ், சென்னை, 15. 7. 1962 7 நேரிசை வெண்பா என்பது நாலடி கொண்டது. எடுத்துக்காட்டு: தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயாற்சொற் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்க ளுரைப்பதும் தீதே அவரோ டிணங்கி இருப்பதும் தீதே. குறள் வெண்பா என்பது இரண்டடியாக வருவது. எடுத்துக்காட்டு: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிபெற்றுப் பலவாறு வரும். எடுத்துக்காட்டு: வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகல் வைகுமென் றின்புறுவார் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார். இது ஒரே வகை எதுகையால் வந்த இன்னிசை வெண்பா. மேலும் இதில் தனிச்சொல் இல்லை. இன்றுகொல், அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை! ஒல்லும் வகையாம் மருவுமின் மாண்டார் அறம்! இது முதலிரண்டடி ஒரே எதுகையும் பின் இரண்டடி ஒரே எதுகையும் கொண்டு வந்தது. தனிச்சொல் இல்லை. இவ்வாறு பல வரும். இனி பஃறொடை வெண்பா பல அடிகள் கொண்டுவரும். (தொடரும்) குறிப்பு: எழுதி வருவதை ஊன்றி நோக்கவேண்டும். முன் கூறியதைப் பின் மறத்தல் கூடாது. பாட்டுக்கு இலக்கணம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றியமையாதது. - குயில், திங்கள் இருமுறை இதழ், சென்னை, 1. 8. 1962 இ. பாட்டு எழுதுவோர்க்கு! பாட்டு எழுதுவோரிற் பலர், இன்னும் குற்றியலுகரத்தின் முன் வரும் உயிரைப் புணர்க்காமலே பாட்டின் அடி அளவை நிரப்பி வருகின்றார்கள். எடுத்துக்காட்டு: கண்டு அவனைக் கயல்விழிதான் காதலித்தாள் என்பது வெண்பாவின் ஓரடி. கண்டு மென்றொடர்க் குற்றியலுகரச் சொல். இதன் முன் அவனை என்ற உயிர் முதற்சொல் வந்தால் கண்டவனை என்று புணர வேண்டும். அவ்வாறு கண்டவனை என்று புணர்ந்தாலோ தளை தட்டும். அதனால் கண்டு என்பதைக் கண்டே என்றும் ஆக்கிக் கொண்டால் அது குற்றியலுகரமும் ஆகாது; ஓசையும் கெடாது. வெண்பாவுக்கு மட்டும் அன்று; எந்தப் பாட்டிலும் இது கருதப்படவேண்டும். ஆநந்தக் களிப்பு நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டுவந் தானொரு தோண்டி - அவன் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி - நந்த இதே மெட்டில் ஒருவர் கீழ்வருமாறு பாட்டு எழுதுகிறார். அது வருமாறு: நாட்டை அடுத்தொரு காடு - அதில் நாவலின் பொந்து அதிலொரு பாம்பு போட்டது ஒன்று ஐயப்பன் - கீழ்ப் பொத்தென்று வீழ்ந்தனன்; செத்து மடிந்தான் என்பது. இதன் முதலடியில் காடு+அதில் என்பன காடதில் என்று புணர வேண்டும். புணர்த்துப் பாடிப் பாருங்கள். ஓர் எழுத்துக் குறைவது தெரியும். இனி, இரண்டாம் அடியில், பொந்து + அதில் என்பன பொந் ததில் எனப் புணரவேண்டும். ஓர் எழுத்துக் குறைவதால் பாட்டின் ஓசையைக் கெடுக்கவில்லையா? மூன்றாம் அடியில், போட்டது, ஒன்று என்பன போட்ட தொன்று எனப் புணர வேண்டும். இதுவும் அப்படியே. பிறகு, ஒன்று ஐயப்பன், ஒன் றையப்பன் எனச் சேர்தல் வேண்டும். இப்படிச் சேரவே ஓசை கெடவில்லையா? இந்தத் தொல்லையெல்லாம் இல்லாமல் இருக்க இதைத் திருத்திப் பார்ப்போம். நாவலின் பொந்தாகும் அதிலொரு பாம்பு என்றால் பிழை நேராது. நாட்டை அடுத்தொரு காடு - அதில் என்பதை நாட்டை அடுத்தொரு காடே என்று ஆக்கிக் கொள்ளலாம். போட்டது ஒன்று ஐயப்பன் என்பதை, போட்டது வேஒன்றை யப்பன் என்றாக்கினால் எப்பிழையும் நேரவில்லை. இதிற் சிலருக்கு ஐயப்பாடு ஒன்று தோன்றலாம். வண்டு இருந்து பாடு அரங்கு எனக் குற்றியலுகரத்தை உயிரோடு புணர்க்காமல் அச் சடித்துள்ளார்களே என்று அவர்கள் ஐயுறலாம். அது படிப்போருக்கு பொருள் விளங்குவதற்காகப் பிரித்து அச்சடித்திருக்கின்றார்கள். அதைப் புணர்த்து ஓசைப் பாடும் போது கெடுகிறதா? இல்லையே. வண்டிருந்து பாடரங்கு ஓட்டம் தடைப்படவில்லை; தளை தட்டவில்லை; இசை கெடவில்லை. இந்த வகையில் பிரித்து எழுதலாம். - குயில், கிழமை இதழ், 15. 9. 1959 ஈ. பாட்டு எழுதுவோர்க்குச் சில குறிப்புக்கள் தன், தான் ஒருமைக்குரியவை. தம், தாம் பன்மைக்குரியவை. ஆதலால், அவன், என்பதனோடு தன் வரும் (அவன்றன்) அவர் என்பதனோடு தாம் வரும் (அவர்தாம்) அவ்வாறே, அவன் என்பதனோடு தான் வரும். (அவன்றான்), அவர் என்பதோடு தாம் வரும் (அவர்தாம்) கீழே தரப்படும் அப்பர் செய்யுளை நோக்குக. ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை என்றுவந்தாய் என்னும் எம்பெருமான்றன் உம் பன்மை, தம் பன்மையாதலால் உடன் வந்தது. உம் + தம் = உந்தம் பெருமான்றன் என்பதில் பெருமான் ஒருமை. தன் ஒருமை யாதலின் உடன் வந்தது. பெருமான் + தன் = பெருமான்றன். பாட்டு எழுதுவோர் பலர் உந்தன் என்றும் எந்தன் என்றும் எழுதுகின்றார்கள். உன்றன் என்றல்லவா எழுத வேண்டும். என்றன் என்றல்லவா எழுத வேண்டும்? உந்தம் என்றால் பிழையில்லை. எந்தம் என்றால் பிழையில்லை. எம் பன்மை தம் பன்மை ஆதலின். சுக்கு, பேச்சு, பட்டு, முத்து, காப்பு, புற்று என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம், வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள். ஏன்? ஈற்றயலெழுத்தைப் பாருங்கள். வல்லெழுத்தே இல்லையா? சங்கு, பஞ்சு, பண்பு, பந்து, பாம்பு, அன்பு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் மென்றொடர் குற்றியலுகரச் சொற்கள். ஏன்? ஈற்றயல் மெல்லெழுத்து! செய்து, சார்பு, சால்பு, போழ்து, தெள்கு என்பன போன்றுவரும் சொற்கள் எல்லாம் இடைத் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். ஏன்? ஈற்றயலெழுத்து இடையெழுத்து. அஃது, இஃது, எஃது, இருபஃது, கஃது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் ஆய்தத் தொடர் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்து ஆய்த எழுத்து. சகடு, பிசகு, படகு, மதகு, ஒப்பாது, விறகு, பொழுது, பெரிது, சிறிது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள், ஏன்? ஈற்றயலில் உயிர் எழுத்து. காசு, சாறு, நாடு, ஏது, ஈபு, ஆறு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் நெடில் தொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள். ஈற்றயலெழுத்தென்றால் என்ன? சுக்கு என்பதன் ஈற்றெழுத்து கு அதன் அயலெழுத்து க். வல்லெழுத்து எவை? க், ச், ட், த், ப், ற் என்ற ஆறும். மெல்லெழுத்தென்றால் எவை? ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறும். இடையெழுத்தென்றால் எவை? ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறும் ஆய்த எழுத்து ஃ. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் என்பதில் உயிர் என்றது எதை? சகடு என்பதன் ஈற்றயல் எழுத்தாகிய க என்பதை, ஏன் எனில் க் என்றதன் மேல் அ இருக்கிறதே அதைக் குறித்து. நெடில் எவை? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ அன்றியும் இவை ஏறியதால் உண்டான கா, கீ, கூ, கே, * கோ, கௌ முதலிய அனைத்தும் கொள்க. இதுவரைக்கும் சொல்லியவற்றால் குற்றியலுகரம் இன்னதென்று புரிந்தது. இனி, அக்குற்றியலுகரச் சொல்லின் முன்வரும் உயிரெழுத்து எப்படியாகும் என்பது கூறப்படும். சுக்கு + அரிது = சுக்கரிது. என்றாகும் - சுக்கு என்றதன் ஈற்றிலுள்ளது. கு அதன்மேல் உள்ள உ மறைந்துவிட்டது சுக், க், மீந்தது. அதன் கடைசி க் மேல் வரும் அ ஏறிக் கொள்ளும். சுக்கரிது என்று ஆனது காண்க. இதைத் தான் நன்னூல் உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்றது! எனவே. சுக்கு + அரிது = சுக்கரிது சுக்கு + ஆணம் = சுக்காணம் சுக்கு + இனிது = சுக்கினிது சுக்கு + ஈவாய் = சுக்கீவாய் சங்கு + ஒலி = சங்கொலி சங்கு + ஊதல் = சங்கூதல் செய்து + அளித்தார் = செய்தளித்தார் நாடு + அழகு = நாடழகு நாடு + ஆண்டான் = நாடாண்டான் அஃது + ஏது = அஃதேது என்று புணரும். பாட்டெழுதுவார் பாட்டெழுதும்போது, அக்கரிது என்று புணர்த்தே எழுதவேண்டும்; சங்கொலி என்று கூட்டியே எழுதவேண்டும். இதை விளக்குவோம். அகவல் எழுத - ஓர் அடிக்கு நான்கு சீர் வேண்டும். திங்கள் எழுந்தது செங்கதிர் மறைந்தது என்பது நாற்சீர் வந்த அகவலடி. இதுபோன்ற அகவலடி எழுதவரும் பாவாணர் சங்கு ஒலியும் சாறு ஊற்றும் என்று எழுதினால் பிழையாகும். ஏன்? இப்படிப் பிரித்தெழுதலா காதன்றோ? சங்கு ஒலியும் என்பன சங்கொலியும் என்றுதான் புணரும். சங்கொ ஈரசைச் சொல்போக மீதி லியும் என்ற ஓரசைச் சொல்லே இருக்கின்றது. ஓரசைச் சொல் அகவலில் வராதன்றோ? அதுபோலவே சாறு ஊற்றும் என்பன சாறூற்றும் எனப் பிரிதலாலும் ஓரசையாக வந்து அகவலைக் கெடுக்குமன்றோ? என்று அவர் தாம் வருவார் என்று அரசி நினைந்து அழுதாள். அரசன் வரக் கண்டு அகமகிழ்ந்தாளே! என்பது, என்றோ அவர்தாம் வருவார் என்றே அரசி நினைந்தே அழுதாள் அரசன் வரக்கண் டகமகிழ்ந் தாளே! என்றாவது திருத்தப்பட்டால் பிழையறும். என்றாவது திருத்தப்பட்டால் பிழையறும். - குயில், கிழமை இதழ், 9. 9. 1958 உ. இளங் கவிஞர்க்கு நான் பன்முறை எடுத்துக்காட்டியிருந்தும் இளங் கவிஞர்களில் பெரும்பாலோர் திருந்தவே இல்லை. 1. உந்தன் என ஒரு சொல்லே இல்லை. உன்றன் உண்டு; உந்தம் உண்டு. 2. வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்லின் முன் வல்லெழுத்து வந்தால் இடையில் ஒற்று மிக வேண்டும். பாக்குத் தின்றான் என்பது போல. 3. மோதி, பேசி, வருந்தி என்பன போன்றவை வினை யெச்சங்கள். அவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகும். மோதிச் சலசல என்பதுபோல. இதற்காக நான் இளங்கவிஞர்கட்குச் சொல்வது என்னவெனில், தாம் எழுதியதைத் தம் அருகிலுள்ள புலவர் ஒருவரிடம் காட்டினால், அவர்கள் திருத்தித் தருவார்கள். இலக்கண அறிவும் உண்டாகும். அதன் பிறகு அதை அனுப்பலாம். இப்படிச் செய்தால் எனக்குத் தொல்லை குறையும். தம் பிழையைப் புலவர் அறியக் கூடாது என்று நினைப்பது தவறு. யாருக்கும் தெரியாமல் ஆசிரியர் திருத்தி வெளியிடுவார். அதனால், நாமும் படிக்காமலே இருந்து விடலாம் என்றா நினைப்பது? இனி. இளங்கவிஞர் கவிதைகளில் உள்ள பிழைகளை வெளிப்படை யாகவே திருத்த எண்ணியிருக்கிறேன். (சான்றாக கீழ்வரும் வேற்றார் ஒருவர் தம் பாடலைக் காண்க) ஏக்கத்தின் எல்லை ஆர்க்கின்ற அலைகடலில் ஆழ்ந் திருக்கும் அழகான வெண்முத்து பலவெ டுத்து கோர்த்தெடுத்த கவினைப்போல் காட்சி நல்கும் குன்றாஉன் பல்வரிசை! குருதி கொட்டும் போர்க்களத்தில் அண்டலரின் ஆகம் மீளும் பொற்றமிழன் அயிலன்ன வண்டி ரண்டும் பார்க்கின்ற காளையெந்தன் உயிர்ப றித்து பறந்திடுதே தொலையுலகு; செய்வ தென்னே! பிழையும் திருத்தமும் காண்க: முத்து x பல எடுத்து என்பது முத்துப்பல எடுத்து என்றிருக்க வேண்டும். முத்து வன்றொடர்க் குற்றியலுகரம். எடுத்து x கோத்து, எடுத்துக் கோத்து கோர்த்து என்றே ஒரு சொல் இல்லை கோத்து எனல் வேண்டும். கோர்வை என்பதும் பிழை கோவை எனல் வேண்டும் கோ என்பது முதனிலை ஆதலால். எந்தன் பிழை: என்றன் சரி. பறித்து x பறந் = பறித்துப்பறந் - குயில், கிழமை இதழ், 31. 1. 1961 ஊ. ஒருவள் என்று எழுதுக ஒருத்தரைம திப்பதில்லை உன்றன் அருளாலே என்று திருப்புகழில் வருகின்றது. ஒன்றவன்தானே என்று திருமந்திரத்தில் வருகின்றது. ஒருவன், ஒருத்தி என்று வரவேண்டும் என்ற தொல்காப்பியக் கட்டுப்பாட்டை மீறியவை இவை. ஒருவர் எனற்பாலது ஒருத்தர் என வந்ததன்றோ? ஒருவன் எனற்பாலது ஒன்றவன் என வந்ததன்றோ? இனி, ஒருத்தி என வரவேண்டியதை ஒருவள் என வரும் வகை விடுவதில் குற்றம் ஒன்றும் நேராது என்பதே என் கருத்து. ஒருவள், ஒருவளை, ஒருவளால், ஒருவளுக்கு, ஒருவளின், ஒருவளது, ஒருவளிடம், ஒருவளே என எட்டு வேற்றுமைக்கும் வரும்படி எழுத்தாளர் எழுதுவதை நான் எதிர்க்கவில்லை. - குயில், கிழமை இதழ், 7.2.1961 எ. எழுத்துச் சிக்கனம் 31 எழுத்தே போதும் உயிர் 12, மெய் 18, உயிர்மெய் 216, ஆய்தம் 1, இத்தனை எழுத்துக்கள் தமிழில் இருப்பதால் மிகத் தொல்லையாய் இருக்கிறதென்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது சரிதான். எழுத்துக்களின் வரிவடிவத்தைக் குறைக்கவேண்டும் என்கிறார்கள். ஆம் என்று நாமும் கூறுகிறோம். வரி வடிவங்களைக் குறைக்க வேண்டிய முறையைப் பற்றி பலர் பலவாறு கூறுகிறார்கள். கூறுகிறவர்கள் எல்லாம் பொது நலங்கருதியே கூறுகிறார்கள். அதில் இம்மியும் ஐயமில்லை. தமிழ் டைப்ரைட்டிங் மெஷினில் மிகப் பல எழுத்துக்கள் அமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் அந்த மெஷின் மற்றவை களைவிட மிகப் பெரிதாகி விடுகிறது. அச்சுக்கூடத்தில் எழுத்துப் பெட்டிகளின் அறைகளோ மிகமிக; ஒரு திண்ணையளவு பெரியதாக அமைய வேண்டியதிருக்கிறது. கை, ள என ஒரே இனத்தில் இரண்டு வகை. கை என்பது போலவே ளை என்றும் இருந்தால் என்ன முழுகிவிடும்? க இது குறில் கா இது நெடில். ஆனால் உ இது குறில். ஊ இது நெடில். எத்தனை தொல்லை? உ குறில் உ நெடில் என்றால் ஏன் பொருந்தாது? - இப்படிச் சிலர் கேட்கிறார்கள். து இது குறில். தூ இது நெடில். து இது குறில், து இது நெடில் என்றால் ஏன் பொருந்தாது - இப்படிச் சிலர் கேட்கிறார்கள். எழுத்தின் வரி வடிவத்தைச் சிக்கனப்படுத்து முறைப்பற்றி உங்கள் கருத்தென்ன என்று சிலர் நம்மைக் கேட்டார்கள். குயிலில் சொல்லுவதாகச் சொன்னோம். சொல்லுகிறோம். ஆயினும் நம் கருத்தை யாரும் ஒப்பமாட்டார்கள். ஒப்பமாட்டார்கள் என்பதற்காக நாம் சொல்லாமல் இருப்பதுண்டா? - கிடையாது. நாம் சொல்லும் முறையைக் கையாண்டால் டைப்ரைட்டிங் மெஷினிலும் எழுத்துப்பெட்டி அறைகளிலும் 31 எழுத்துக்கள் போதும். ஒத்துக் கொள்ளுகிறவர்களின் நிலைமைதான் சரியில்லை. க என்பது ஓர் எழுத்தல்ல. க் என்பதும் அ என்பதும் சேர்ந்தது. க. இப்படியேதான் உயிர்மெய் 216ம் பை என்பது ஓர் எழுத்தல்ல. ப் என்பதும் ஐ என்பதும் சேர்ந்ததுதான் பை. க என்று ஓர் எழுத்து வேண்டாம். க் அ என்றே குறிக்கலாம் என்கிறோம். கண்ணன் என்று எழுத வேண்டுமானால் க் அண்ண அன் என்று குறிக்க. விசிறி என்பதை வ்இ ச்இ ற்இ என்று குறிக்கவேண்டும். இந்த முறையை மேற்கொண்டால் உயிர் 12 மெய் 18. ஆய்தம் 1 ஆக 31 எழுத்துக்கள் போதும். எல்லாவற்றையும் எழுதிவிடலாம். இந்த 31 எழுத்தால், இப்படி எழுதுவதால் ஒரு வரியில் மிகப்பல எழுத்துக்கள் போடவேண்டும் என்று கூறலாம். அப்படியில்லை. சில எழுத்துக்களே அதிகமாகின்றன. வழக்கத்தில் வருவது முடியாது என்று கூறலாம். வழக்கத்தில் வருவது இலேசு என்று தோன்றுகிறது. அஃது பெரிது ஆயினும் எளிது என்பதை அஃத்உ ப்எர் இத்உ ஆய்இன்உம் எள்இத்உ என்று எழுதுக. சில நாட்கள் தொல்லையாக இருக்கும். பிறகு எளிதாகிவிடும். இங்கிலீஷிலும் பிரஞ்சிலும் இப்படித்தானே. பு என்பதை இங்கிலீஷில் pu என்றுதானே போடுகிறான். பிரஞ்சிலோ அவளப்பன் pou என்று மூன்று எழுத்துக்கள் போடவேண்டும். - குயில், கவிதைகள், 15. 5. 1948 உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1 ஆக 31 எழுத்தைக்கொண்டே எழுத்துக் குடித்தனத்தைச் சிக்கனப்படுத்தலாம் என்று கூறினோம். ஒரு தோழர் தெரிவிக்கிறார்: நீங்கள் சொல்லிய வழி ஏற்றது. அதனோடு ஆ என்பதை அ என்றும் ஈ என்பதை இ என்றும்... சுருக்கலாம் என்கிறார். செய்யலாம் என்கிறோம் அப்படியே. அதன்படி ஈவது விலக்கேல் என்பதை இ வ்அ த்உ வ்இ ல்அக் க்எல் என்று எழுதுக. - குயில், கவிதைகள், 15. 6. 1948  கேட்டலும் கிளத்தலும் ஆசிரியருக்கு அஞ்சல் 1 கேள்வியும் - விடையும் கேள்வி: அடிகள் என்று பெரியோர்களையும் கடவுளரையும் சொல்லு கிறார்கள். ஒன்றும் விளங்கவேயில்லை. விளக்க வேண்டு கிறேன். விடை: தோழருக்கு மட்டுமா விளங்காமலிருக்கிறது! தமிழ்ப் புலமை மிக்க புலவர் பலர்க்கு விளங்கவில்லை என்று நினைக்க வேண்டியதாகிறது. அடி, தாள் என்பன ஒரு பொருட் சொற்கள். அடி, தாள் என்றால் மக்கள் உறுப்பாகிய காலையே குறிப்பதாகக் கொள்ளக் கூடாது. வேறு பொருளும் உண்டு. அதுதான் தத்துவம் என்பது. இனி, அடிகளே என்று பெரியோர்களைச் சொன்னால், தத்துவ உணர்வு உடையவரே என்று பொருள். அடிகளே என்று கடவுளைக் கூறினால் தத்துவனே என்று பொருள். அடிகள் என்னும் வழக்குத் திருவாரூர்க் கபிலர் தொகுத்த எண்ணூல் அதாவது சாங்கிய நூல் வழக்கு. அனைத்தும் இருபத்தைந்து தத்துவத்துள் அடங்கின என்று சாங்கிய நூல் சாற்றுகின்றது. அதுவேயுமன்றி, அனைத்தும் இருபத் தைந்து தத்துவமாம் என்றுணர்ந்த நிலையே விடுதலை என்றும் அச்சாங்கிய நூல் உறுதிச் செய்கின்றது. அடிகள் என்ற சொல் சமண சமயத்தாருடையது என்றும், சைவ சமயத்தாருடையது என்றும் கூறிக் கொள்வது பொருத்தமன்று. திருக்குறளில் தாள் என்றும் அடி என்றும் வருமிடங்களில் இவ்வாறே பொருள் காண வேண்டும். திருக்குறள் மடத்துப் பதிப்பில் நற்றாள் என்பது சிவ பெருமான் சீபாதம் என்று பொருள் சொல்லப்பட்டிருப்பதும் கலப்பற்ற பிழையே யாம். திருக்குறளில் அடி என்றும் தாள் என்றும் வந்துள்ளதால், திருவள்ளுவர் உருவ வணக்கத்தை ஒப்புகின்றார் என்று வேறு சிலர் எண்ணுகின்றார்கள். அதுவும் மேற்கூறியவாறு பிழையே யாம். ஏன் எனில். ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. என, உருவ வணக்கத்தை மறுக்கும் வள்ளுவரே அதை ஏற்பாரா? ஏற்கமாட்டாரன்றோ! இனித் தத்துவம் என்ற சொற்பற்றியும் சில கூறுவோம். தத்துவம் வடமொழியன்று. தன்மையின் அடியாகிய தன் துவம் பெற்று வடமொழிச் செய்கைக்கு உட்பட்டது. துவம் நீக்கி தன்மை என்று சொன்னாலே தத்துவம் அடிதாள் என்று சொன்னதேயாகும் என அறிதல் வேண்டும். தத்துவம் என்ற சொல்லுக்கு நாம் கொள்ளும் பொருளை வடசொல் கொள்ளவில்லை என்பது ஆராயற்பாலது. - குயில், 17. 6. 1958  கேள்வி: கலாசாலை என்பது வடமொழித் தொடர். அதைத்தான் தமிழர்கள் கல்லூரி என்று சொல்லித் திரிகிறார்கள் என்று என் பார்ப்பன நண்பர்கள் சொல்லுகிறார்கள். எப்படி? விடை: கலாசாலை என்பது கலப்பில்லாத வடமொழிச் சொற்றொடரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது அதுகிடக்க, கல்லூரி என்பது பற்றிப் பார்ப்பனர்கள் கருத்துரைத்தார்கள் எனில், அவர்கட்கும் தமிழுக்கும் என்ன தொடர்பிருக்க முடியும். தமிழாராய்ச்சி யேனும் அவர்கட்கு உண்டா? என்று நாம் கருதிப் பார்த்து, அவர் உரை கரடி என்று தள்ள வேண்டும். ஈண்டு நாம் எடுத்துக்காட்டும் செய்யுளை உற்று நோக்குக. கலத்தற் காலம் கல்லூரிநற் கொட்டிலா முலைத் தடத்திடை மொய்எருக் குப்பையா இலக்கம் என்னுயி ராஎய்து கற்குமால் அலைக்கும் வெஞ்சரம் ஐந்துரை யானரோ. சிந்தாமணிச் செய்யுளில், கல்லூரி பயிலும் இடம் என்று பொருள் தரல் கண்டு மகிழ்க. - குயில், 8. 6. 1958 கேள்வி: காரியம், காரணம், சலம், மனம், தாமரை இவை போன்ற சொற்கள்; இலக்கண வாயிலாகத் தமிழ்ச் சொற்களே என்று நீங்கள் ‘வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா? என்ற தலைப்பின்கீழ் விளக்கி உள்ளீர்கள். இவை வடசொற்கள் என்று பேராசிரியர் m.கி.guªjhkdh®, நல்ல தமிழ் எழுத வேண்டுமா என்ற தம் நூலில் சொல்லுகின்றார். இரா. கணபதி 14, கம்போங்லாமா தெரு, சிங்கப்பூர். பதில்: பேராசிரியர் பரந்தாமனார், நான், வந்தவர் மொழியா வெளியிடுவ தற்கு முன்னமே எழுதிவிட்டார். இல்லையானால் அச்சொற்கள் வடசொற்கள் என்பதைக் காரணத்தோடு விளக்கியிருப்பார் அல்லவா? கேள்வி: இங்கு (சிங்கப்பூரில்) ஆரியர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இந்தியன் மூவி நியூ என்னும் திரைப்பட திங்களிதழில் அவ்வாசிரியர் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் வடசொற்களாகவே பெய்து வைக்கிறார். இரா. கணபதி 14, கம்போங்லாமா தெரு, சிங்கப்பூர். பதில்: உப்பொடு நெய், பால், தயிர், காயம் பெய்து அடினும் கைப்பறா பேய்ச் சுரையின் காய். தமிழரைப் பற்றியுள்ள இந்த நோயைத் தீர்க்கும் மருந்து பெரியாரிடந்தான் இருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பே இதற்கு விலை. கேள்வி: சூது, த்யூத என்பதின் திரிபென்றும், விஞ்சை, விந்த்யா என்பதன் திரிபென்றும் வையாபுரியார் சொல்லியுள்ளார், எப்படி? - கி. அறிவழகன், மூக்கன், வேலூர் பதில்: வையாபுரியார், தமிழே ஆரியத்தினின்று பிறந்தது என்று சொன்னவர்; சூதும் விஞ்சையும் வடசொற்கள் அல்ல! விளக்கம் நூலில் வந் - செந் (ப. ) என்ற தலைப்பின்கீழ் இருக்கிறது. இவ்வாறு அது வடசொல், இது வடசொல் என்கிறவர்கள் ஏன் அவ்வாறு உளறுகின்றார்கள்? அவர்கட்கு வடசொல்லும் தெரியாது - தமிழும் தெரியாது. ஒன்றுமட்டும் தெரியும். தமிழைத் தாழ்த்துவதன் வாயிலாகத் தமிழரைத் தாழ்த்தித் தமிழரின் உரிமையைத் தாழ்த்தித் தமிழர் பொருளைக் கொள்ளை யடிப்பது என்பது! - குயில், 7.4.1959 2 கேட்டல்: கோட்சே பார்ப்பான் காந்தியைக் கொன்றது கேட்ட பார்ப்பனர் உள்ளம் நாணவில்லையே. கிளத்தல்: கோட்சே, காந்தியைக் கொன்றதையும் அவர்களின் கட்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பின்புதான் தென்னாட்டுச் சோதாப் பார்ப்பான் புல்லெடுக்கும் கை வில்லெடுக்கவும் கூடும் என்று சொன்னான். கேட்டல்: அடுத்த சென்னைச் சட்டமன்றத் தேர்தலில் பார்ப்பனர் வாக்கெல்லாம் கண்ணீர்த் துளிக்குத்தானோ? கிளத்தல்: கண்ணீர்த் துளிகளைப் புதைப்பதற்குத்தான் பார்ப்பானின் சுதந்தராக் கட்சி. கேட்டல்: சென்ற தேர்தலில் கண்ணீர்த்துளியை எதைக் கொண்டு ஆதரித்தார்கள்? கிளத்தல்: அதன் தகப்பன் வழியைக் கொண்டு. கேட்டல்: ஆதித்தன் எவ்வளவு தூரம் பெரியாருக்கு ஒத்திருப்பார்? கிளத்தல்: நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர். கேட்டல்: வான் இடத்தின் இரண்டாந் தலைவனான திங்களை மண்ணிடத்தில் உருசிய எறிகுண்டுப் பாம்பு தொட்டது என்றால் திங்களின் மானந்தானே கப்பலேறிற்று? கிளத்தல்: மண்ணின் பெருஞ்செல்வந்தான் கரியாயிற்று. கேட்டல்: திடீரென்று உருசிய எறிகுண்டு திங்களைத் தீண்டிய செய்தி கேட்கப்படுகின்றதே? கிளத்தல்: இல்லை, இல்லை, இல்லை, குருசேவு அமெரிக்கா போவதைத் தம் நாட்டு அரசியல் நிபுணருக்குச் சொல்ல, அரசியல் நிபுணர் தம் நாட்டு விஞ்ஞான நிலையத்தார்க்குச் சொல்ல, நிலையத்தார் ஏடு எழுது நிபுணர்க்குச் சொல்ல, ஏடெழுது நிபுணர் அயல் நாட்டு விளம்பர நிலையங்கட்கு அறிவிக்க, அயல் நாட்டு விளம்பர நிலையத்தார் உலகத்தார்க்குச் சொல்ல, அதன் பிறகுதானே குருசேவு அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். கேட்டல்: இராசகோபாலாச்சாரி சுதந்தராவுக்கு நிறையப் பணங் கொடுக்கக் காரணம் என்ன? கிளத்தல்: கூட்டுப் பண்ணை முறையை ஆச்சாரி எதிர்த்து ஒழிக்கக் கூடும் என்று பணக்காரர் நம்புவதால். கேட்டல்: அறுவை முறையில் கருத்தடை செய்வதை அரசினர் ஆதரிக்கிறார்கள் என்று தமிழன் சொல்லுகிறான். அதையே வயிற்றை அறுத்துக் கருவை அழிக்கிறார்கள் என்று பார்ப்பானின் கூலி சொல்லுகிறான். இவற்றில் எந்தப் பேச்சு இனிதாய் இருக்கிறது? கிளத்தல்: எப்போதும் தினத்தந்திப் பேச்சுத் தினத்தந்திப் பேச்சுத்தான். - குயில், கிழமை இதழ், 22. 9. 1959 3 கேட்டல்: கோயிலில் தமிழ் வழிபாடு சரியில்லை என்று பக்தவத்சலம் கூறினார்! இவர் சொல்வது சரியா? கிளத்தல்: (வட நாட்டினின்று) ஆட்டி வைத்தால் (தமிழகத்தில்) ஆரொருவர் ஆடாதாரே! கேட்டல்: அஞ்சல் தலை, பணவிடைகளில்தமிழ் வரும்படி செய்த சுப்பராய னுக்குத் தமிழகத்தில் பாராட்டுக் கூட்டங்கள் நடத்த வேண்டாமா? கிளத்தல்: அதற்குள்ளேயா? இடையில் தடையேற்பட்டுவிட்டால்? வட நாட்டான் நல்லவனாய்விட்டானா? உப்பொடு, நெய், பால், தயிர், காயம் பெய்து அடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய். கேட்டல்: சுதந்தரத் தமிழ்நாடு ஏற்பட்டால் வெளிநாட்டான் வந்துவிடுவான் என்று சுப்பராயன் சொல்வது சரியா? கிளத்தல்: அடிமைத் தமிழ்நாட்டில் இப்போது வந்திருப்பவன் அயலானில்லை என்பது சுப்பராயன் எண்ணம். கேட்டல்: நாமெல்லாம் இந்தியர் என்று எண்ணி வாழ வேண்டும் என்கிறார் சுப்பராயன் - சரியா? கிளத்தல்: அது முடிந்தாலும் இந்தியர் தாய்மொழி யெல்லாம் இந்தி என்று எண்ணி வாழமுடியாது. கேட்டல்: திருமண வீட்டில் இரண்டு நாட்கள் இசைத்தட்டுகள் காதைத் துளைக்கும் என்று காமராசர் கூறுகிறார். சரியா? கிளத்தல்: காதிருந்தால்தானே அது துளைக்கப்படும்! தமிழரின் காதுகள் ஒழிந்து போய்ப் பல்லாண்டுகள் ஆயின. இருந்தால், கோயிலிலும் திருமணத்திலும் திருவிழாக்களிலும் வடமொழி உளறலை ஏன் என்று கேட்டிருப்பார்களே! அதோ பார் ஆகாஷ்வாணி! கேட்டல்: மலையாளியுடன் நாம் சேர்ந்து வாழ முடியுமானால் வடநாட்டானோடும் வாழமுடியும் என்கின்றார் ம.பொ.சி. சரியா? கிளத்தல்: பாரதம் மலையாள நாட்டிலும் உண்டு; வடநாட்டிலும் உண்டு. ஆதலினால் இரண்டும் ஒன்றுதானே என்கிறார் ம.பொ.சி. ஆனால் ஒருத்தியை ஐந்து ஆட்கள் மணப்பதென்பது மலையாளத்தில் இல்லை. வடநாட்டில் இன்றும் நூற்சான்றாக நடைபெறுகின்றது. இது மபொசிக்கு. மறதி. கேட்டல்: இராசாசியின் சுதந்தராக் கட்சி ஆற்றல் வாய்ந்ததுதானா? கிளத்தல்: அட்டி என்ன? கண்ணீர்த் துளிகட்கு ஆதரவு மறுத்ததன் மூலம் அதையும் கெடுத்தது. சீர்த்திருத்த காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் அதையும் கெடுத்தது. அடுத்த தேர்தலில் பார். - குயில், கிழமை இதழ், 29. 9. 1959 4 கேட்டல்: ஊர்க்காவல் அமைச்சரும், முதலமைச்சரும் நிதியமைச் சரும் தமிழகத்தைத் தனி உணவு மண்டலமாக்க தில்லிக்குப் போகிறோம் என்று போனதில் என்ன ஆயிற்று? கிளத்தல்: மானக்கேடு ஆயிற்று. பிரிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான். வடக்கன். கேட்டல்: ஆந்திர முதலமைச்சர் சஞ்சீவி ரெட்டி சிறிது உணர்ச்சி உடையவராகக் காணப்படவில்லையா? கிளத்தல்: தென் உணவு மண்டலத்தைக் கலைத்துவிட வேண்டும். ஆந்திரா, தமிழகம், மைசூர், கேரளா ஆகியவை தனித்தனி மண்டலமாக்கப் படவேண்டும். வடக்கே ஒரிசாவும், மத்தியப் பிரதேசமும் தனித்தனி மண்டல மாகப் பிரிக்கப்பட்டிருக்கையில் இங்கு மட்டும் ஏன் இந்த இழவு? என்றெல்லாம் கூறி வடக்கன் அநீதியை வன்மையாகக் கண்டித்திருக்கின்றார் சஞ்சீவி. இப்படியெல்லாம் போக்கிரித் தனமாக பேசமாட்டார்கள் நம் தமிழமைச்சர்கள். கேட்டல்: இப்படித் தமிழக நன்மைக்கு வடக்கர் ஒத்து வராததால் தமிழக அமைச்சர்கள் தம் பதவியினின்று விலகல் அஞ்சலை நேருவிடம் கொடுத்துவிடப் போகின்றார்களாமே! எப்போது? கிளத்தல்: வருகிற திங்கட்கிழமை இராகுகாலம் கழித்து! கேட்டல்: முறிந்த எலும்புகளை 48 மணி நேரத்தில் ஒட்டவைக்கும் பிளாடிக் பசை ஒன்றை அமெரிக்கா கண்டுபிடித்திருக்கிறது. இங்கு அப்படி ஏதாவது உண்டா? கிளத்தல்: ஒரே மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு நாமம் போடத்தக்க ரப்பர் டாம்பு போன்ற ஒரு பொறியைத் திருவரங்கம் பார்ப்பனர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்! கேட்டல்: காங்கிர கட்சித் தேர்தலில் ஊழல்கள், லஞ்சம், பித்த லாட்டங்கள் தாண்டவமாடின. ஆதலால் நான் காங்கிரசிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று பிரசுபூர் மாவட்டச் சட்டமன்றின் உபதலைவர் இந்திராகாந்திக்கு எழுதினார். இந்தச் செய்தியை காங்கிரசுக்கு வால் பிடிக்கும் செய்தித் தாள்களும் வெளியிடக் காரணமென்ன? கிளத்தல்: மற்ற மாவட்டங்களில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று மறைக்க. கேட்டல்: மேற்கு வங்க எல்லையில் காவல் காக்கப்படை ஒன்று திரட்டப் போவதாக முதலமைச்சர் டாக்டர். ã.á.uhŒ இராச்சிய சபையில் தெரிவித்தார். இது உங்களுக்குத்தெரியுமா? கிளத்தல்: அதுமட்டுமல்ல, நாட்டை எதிரிக்குக் காட்டிக் கொடுக்காத இனம் இந்தியாவில் பார்ப்பன இனந்தான் என்றுகூட முடிவு செய்துள்ளதாக நமக்கு மற்றொரு செய்தி எட்டியிருக்கிறது. - குயில், கிழமை இதழ், 6.10.1959 5 கேட்டல்: அமெரிக்கா முழு ஆயுதக் குறைப்புக்கும் உடன்படுகிறதா? கிளத்தல்: ஆமாம்; வாயால்! கேட்டல்: கல்கத்தா அருகில் ஒரு வெள்ளியை மற்றக் கட்டிகளிலிருந்து பிரித்தெடுக்கும் தொழிலை நாலேகால் கோடிச் செலவில் ஏற்படுத்தினார்களாம். அது வேலை செய்யாமலே அப்படியே இருக்கிறதாமே. எப்போது வேலை செய்யத் தொடங்கும்? கிளத்தல்: வேலை செய்வதற்கா தொழிற்சாலை ஏற்படுத்தினார்கள்? இல்லவேயில்லை. தெரிந்தவர்கள் கொள்ளை யடிக்கத்தானே! கேட்டல்: ஏழைகளுக்கு நன்மை செய்துகொண்டிருக்கும் காங்கிரசுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் இராசாசி என்று காமராசர் ஏன் சொன்னார்? கிளத்தல்: பயனற்ற பேச்சுத்தான்! காங்கிரசை ஒழிப்பதும் ஏழைகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படாமல் தடுப்பதும்தானே இராசாசி கனவு! கேட்டல்: உதைத்துத் துரத்துவோம்! இப்படி இந்தியாவின் எல்லைப் பகுதியை விழுங்கிவரும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தாராமே நேரு? கிளத்தல்: அரசியல் நரித்தனம். இதென்ன இப்படிச் சொன்னீரே நேருவே என்று சீனா ஒரு அதட்டு அதட்டினால் நேரு சொல்லக் கூடியதும் இதுதான். ஒன்றுமில்லை, இதெல்லாம் அரசியல் நரித்தனம். கேட்டல்: தில்லியை விட்டுப் பிரிந்தால் தமிழகச் செலவுக்குப் பணம் கொடுப்பவர் யார்? என்று அமைச்சர் இராமையா கேட்கிறாரே? கிளத்தல்: பணத்துக்காகத் தமிழகம் அடிமையாய் இருக்கட்டுமே என்பது அமைச்சர் கருத்து. கேட்டல்: வறுமை ஒழிய வேண்டுமானால் கதர் கட்ட வேண்டும் என்று ஏன் அமைச்சர் மாணிக்கவேலர் சொல்லுகிறார்? கிளத்தல்: யாரும் கதர் கட்டவில்லை என்று வைத்துக் கொள்வோம். எத்தனை பார்ப்பனர் வீட்டில், அடுப்பில் பூனை தூங்கும் தெரியுமா? கேட்டல்: காதற் களமாகிவிட்டது கோயில் என்று குன்றக்குடியாரே சொல்லுகிறாரே? கிளத்தல்: திராவிடர் கழகத்தார் எதிரில் அப்படி! கோயிற்காரர் எதிரில் - வேறுவகையாக! - குயில், கிழமை இதழ், 13.10.1959 6 கேட்டல்: சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன? கிளத்தல்: இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றுக்கு வாரிக் கொடுத்த - கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்கா விடில் திருச்சி நகரசபை இருந்தென்ன, தொலைந்தென்ன? கேட்டல்: சேலம் மாவட்டத்தில் தீர்த்தமலைப் பாங்கில் அகப்படக் கூடிய இரும்புக் கட்டியின் அளவு 475 கோடி என்று மதிப்பிட் டிருக்கிறார்கள். தென்னாட்டின் வருங்கால நிலை எப்படி? கிளத்தல்: தமிழகத்தில் அடிமை நிலைமை தீரும் வரைக்கும் இதற்கெல்லாம் மகிழ்ச்சியடைந்து விடுகிறவன் முட்டாள். கேட்டல்: இந்தியா எங்கும் உள்ள திரைப்படக் காட்சி விடுதிகள் 4000! ஆனால் தமிழகத்தில் மட்டும் 2000 உள்ளன. நிலைமை மகிழ்ச்சிக்குரியதுதானே? கிளத்தல்: அழுகைக்குரியது. அடிமையுணர்ச்சியில்லாத தமிழ்ப் புலவரின் உள்ளத்தினின்று திரைப்படங்கள் உண்டாகவேண்டும். அப்போது காட்சி விடுதிகள் கணக்கின்றிப் பெருகவேண்டும். கேட்டல்: பேரறிஞர்கள் ஏ.இராமசாமி, ஏ.இலட்சுமண சாமி ஆகிய வர்க்கு இன்று 72ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது. இந்தக் கொண்டாட்ட நேரம், அவர்கள் நாட்டுக்குச் செய்துள்ள அருஞ்செயல்கள் நினைவுக்கு வரவில்லை. கிளத்தல்: நாட்டுக்கா? vªj eh£L¡F?, இந்தியாவுக்கு! தமிழகத்துக்கு அல்ல! அவர்களின் விழா நேரம் அவர்கள் பேராற்றல் தமிழ்க்கும், தமிழரின் மானத்திற்கும் முழுதும் பயன்பட வில்லையே - என்ற நினைவுதான் மேலாடுகின்றது. கேட்டல்: குன்றக்குடி அடிகளார் அஞ்சல் தலையில், வள்ளுவரைப் பொறிப்பதைவிட வள்ளுவர் உள்ளத்தைப் பொறிக்கலாம் என்கிறாரே! கிளத்தல்: பார்ப்பான் சொல்லிக் கொடுத்திருப்பான், உருவம் பொறிப் பதையும் கெடுக்க. கேட்டல்: குச்சுக்காரி விடுதிகள் மிகுதியாவதால் ஊர்க்காவற்காரர் களையும் மிகுதியாக்க வேண்டுமா? கிளத்தல்: அதெப்படி முடியும். ஒழுக்கக் கேடுகள் விரைவாக வளர்ச்சி யடைந்து வருவது யாரும் அறிந்தது. வளர்ச்சிக்குரிய வேரைக் கிள்ள வேண்டும். அதற்கு மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப் படுத்தப்படவேண்டும். செல்வநிலை நிறைவு பெறவேண்டும். சாதி ஒழிய வேண்டும். தமிழர் ஒன்றுபட வேண்டும். நாடு விடுதலைபெற வேண்டும். *nf£lš: ஆச்சாரி கேட்பது சுதந்திரமல்ல. அவர் இந்த நாட்டுக்குக் கேட்பது காட்டுமிராண்டித்தனம். *»s¤jš: என்று கோயிலில் தமிழ் வேண்டாம் என்ற பக்தவத்சலம் பகர்கின்றாரா? - குயில், கிழமை இதழ், 20.10.1959 7 செ.மு. இளங்கோ, சென்னை. கேட்டல்: கவி, கவிஞர் என்னும் சொற்கள் வடசொற்கள் என்று நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகர வரிசை என்னும் நூலில் காணப்படுகிறதே. கிளத்தல்: கவிதல் என்பதன் அடியாகிய கவி என்பதையே கொண்டு தோன்றிய கவி, கவிஞர் என்ற சொற்கள் தூய தமிழ்க் காரணப் பெயர்களே என்று நான் சொல்வதை நீலாம்பிகை யம்மையார் அல்ல. எவராலுமே மறுக்க முடியாது, தமிழ் இலக்கணம் ஒப்புவதால்! வல்லுநர் ஒன்று பற்றி ஒரு முடிவு கூறுவதற்கு அவர்களுக்குள்ள ஆராய்ச்சித் திறன் மட்டும் போதியதன்று. காலமும் தேவை. நீலாம்பிகையார் ஆராய்ந்த காலம் ஒன்று. அதே காலம் கல்லுப் பிள்ளையார்போல உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. கேட்டல்: முயற்சி செய்தல் என்பது வடவர் முறையா? முயலுதல் என்பது தமிழர் முறையா? கிளத்தல்: அப்படி ஒன்றுமில்லை. தமிழ்ச் சொற்களின் உண்மைப் பொருளை நோக்குதல் வேண்டும். செய்தல் என்பது செம்மை யுற முடித்தல் என்ற பொருளில் அமைந்தது. செம்மையின்மை கெட்டு முன்னின்ற மெய்யாகிய ம் திரிந்து செய் என நின்றது. அதன் அடியாகத் தோன்றியதின் தொழிற் பெயரே செய்தல் என்பதை உணரும் போது முயற்சி செய்தல் என்ற சொற்றொடர்க்கு முயற்சியைச் செம்மையுற முடித்தல் என்னும் பொருள் சிறத்தல் காணப்படும். முயற்சியுடையார் என்பது வடவர் நெறி என்று சொல்லி விடுதல் கூடாது. முயற்சியை எப்போதும் உடையவர் என்பது அத்தொடரின் பொருள், ஆதலால் பட்டுக்கோட்டை இரா. இளவரி. கேட்டல்: உதயசூரியன் தமிழ்ச் சொல்லா? கிளத்தல்: உதயசூரியன் கலப்பில்லாத வடசொற்றொடர். - குயில், கிழமை இதழ், 27.10.1959 8 கேட்டல்: திரு.பிடி.ராசன் அவர்கள் சுதந்திராக் கட்சியை ஆதரிக்கிறார். அப்படியானால் கண்ணீர்த்துளி கட்சியைக் கைவிட்டு விட்டாரா? கிளத்தல்: கைவிட்டு விடவில்லை. கண்ணீர்த்துளி கட்சியை, கையிற் பிடித்துக் கொண்டுதான் சுதந்திராவை ஆதரிக்கிறார். கேட்டல்: சீன இந்திய - முரண்பாடு பற்றி முதல்வர் நேரு பேசி வருவதில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன? கிளத்தல்: எல்லை முரண்பாட்டைச் சரிக்கட்ட நாட்டுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியது சரியான பேச்சு. அவரும் நாட்டு மக்களின் ஒத்துழைப்பைப் பெற விரைவில் செய்யவேண்டியது சாதி அடிப்படையில் அமைந்துள்ள சட்டத்தை மாற்றி அனைவரும் சமம் என்ற நிலையை உண்டாக்கி விடுவதாகும். கேட்டல்: சீன நெருக்கடியைச் சரிக்கட்ட இந்தியா சீனாவின் எதிர்ப்பு நாடுகளின் துணையைக் கோர வேண்டிய திருக்க, நடுவு நிலைமைக் கொள்கையினின்று தவறவே மாட்டோம் என்று நேரு சொல்வது சரியா? கிளத்தல்: நேரு சொல்வதன் பொருள், துணை செய்ய விரும்பும் நாடுகள் தாமாகவே துணை செய்யட்டும் என்பது தான். துணை செய்ததற்கு விலை கேட்க மாட்டார்கள் அல்லவா? கேட்டல்: இலக்கியம் தமிழ்ச் சொல்லா? கிளத்தல்: ஆம். விளக்கம்: வந்தவர் மொழியா? brªjÄœ¢ brštkh? (பக். ) என்ற தலைப்பில் வந்துள்ளது. கேட்டல்: லை. இப்படி எழுதுவது தவறு என்கின்றார் அல்லவா? கிளத்தல்: தவறு என்பது தவறு. ல என்று எழுதுவது இடையில் புகுந்தது. லை என்பது தான் சரி. கேட்டல்: தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கருநடர் ஆகியோரின் கூட்டுத் தொகை என்ன? கிளத்தல்: பதினைந்து கோடி. கேட்டல்: சகரம் தமிழில் மொழிக்கு முதலில் வராதா? கிளத்தல்: தொல்காப்பியத்தில் வராது. நன்னூலில் வரும். கேட்டல்: தொல்காப்பியர் காலம் எது? கிளத்தல்: தொல்காப்பியர் காலம் 5600 ஆண்டுகட்கு முன் என்று பேராசிரியர் மறைமலையடிகளார் அருளிச் செய்தார். கேட்டல்: தமிழின் எழுத்துக்களைச் சுருக்கி பயன்படுத்தினால் தமிழின் வளர்ச்சிக்கு ஊறு பயக்குமா? கிளத்தல்: ஊறு உண்டாகாது. கேட்டல்: வடமொழி எழுத்துக்களாகிய ஜ, ஷ, ஹ, க்ஷ, ஸ, ஆகிய எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களோடு கூட்டிக் கொள்ளலாமா? கிளத்தல்: இந்த ஒலிகள் தமிழில் இருக்கையில் வடமொழி எழுத்துக்கள் வேண்டியதே இல்லை. ஃ என்ற ஆயுதத்தைத் தமிழ் எழுத்தில் முறைப்படி சேர்த்தால் வடவரின் ஜ முதலிய ஒலி உண்டாகும். மாணிக்க நாய்க்கர், இதுபற்றி வெளியிட்ட நூலிற் பரக்கக் காண்க. அன்றி F என்ற ஒலியும் தமிழில் இல்லை. அதையும் ஆயுதத்தால் உண்டாக்கலாம். விடுதலையில் ஃப் என்று குறிப்பதன் வாயிலாக F என்ற ஒலியைக் காட்டுவது காண்க. க்ஷ என்பதற்கு ட்ச போதும்; ஹ என்பதற்கு அ போதும், ஸ என்பதற்கு ச போதும். இதுபற்றி புலவர் குழுவில் பேச்சு வந்தபோது, தேவநேயப் பாவாணர் ஜ, ஷ முதலிய ஒலிகளே வேண்டியதில்லை என்று கூறியது, மாணிக்க நாயக்கர் முறையையே எதிர்த்ததாகும். பெர்னாட்ஷா என்பதற்கு பெர்னாட்சா என்றே போடலாம் என்பது பாவாணர் கருத்து போலும். - குயில், கிழமை இதழ், 10.11.1959 9 கேட்டல்: விலாசம் வடசொல்லாதலால் அதற்குத் தமிழ்ச்சொல் எது? கிளத்தல்: முகவரி! பழநியாண்டி விலாசம் என்பதை விட பழநியாண்டி இல்லம், பழநியாண்டி நிலையம், (வணிகத் துறையானால்) பழநி யாண்டி மண்டி என்பனவற்றில் ஏற்றதொன்றை வைத்துக் கொள்க. கேட்டல்: வாணிகத்தில் நாணயம் எப்போது? கிளத்தல்: தனியாரிடத்தினின்று வாணிகம் முற்றும் பறிக்கப்பட்டு அரசினரால் நடத்தப்படும்போது. கேட்டல்: இந்திய எல்லையில் கால் வைத்துள்ள சீனாவைத் துரத்த என்ன செய்ய வேண்டும்? கிளத்தல்: நேரு படை சேர்க்கிறார். இது வருந்தத்தக்கது. ஆனால் முதலில் செய்யத்தக்கது மற்றொன்றுண்டு இந்தியாவிலுள்ள கம்யூனிடு கட்சியை உடனே கலைத்து விடவேண்டும். கம்யூனிடு தலைவர்களைச் சிறையில் தள்ள வேண்டும். கேட்டல்: உணவுப் பொருள் விலையைக் குறைக்க அரசினர் உடனடியாகத் தலையிட வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செய்யும் கிளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கிளத்தல்: தனியாரிடத்தில் விட்டு வைத்துள்ள வாணிகம் மீட்கப்பட வேண்டும். அதற்கான முயற்சி, அனைத்துக் கட்சியின் கிளர்ச்சி யன்று; நேரடி நடவடிக்கை! நெல் விற்பவன், ஏறிய விலைக்கு மலையாளத் தானுக்கு விற்கிறான். அந்த வண்டியைத் தமிழன் ஓட்டிக் கொண்டு போகிறான். வண்டி மறிக்கப்படவேண்டும். ஓட்டுபவனை அனைத்துக் கட்சியினரும், சாலை மரத்தில் கட்டிப்போட வேண்டும். விலை ஏறட்டும் என்று சரக்கைப் பதுக்கி வைப்பவன் கடை அனைத்து கட்சியின் ஆராய்ச்சிக்கு உட்பட வேண்டும். கொண்டபடி போலும் விலை பேசி லாபஞ் சிறிது கூடிவர நயமுரைப்பார் (குமரேசசதகம்) என்பதற்கு மாறாக வாணிகர் நடந்துகொள்ளும்போது, அதாவது மிகப் பெரு விலை பெற்றுப் பொருளை விற்கும் போது அனைத்துக் கட்சி நேரே அந்த வணிகனுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும். அனைத்துக் கட்சி இப்போது நடத்திவரும் பொதுக்கூட்டத்தால் பொது மக்களுக்குத் தீமை ஏற்படுகிறதென்றே சொல்லவேண்டும். இயற்கை முறையில் வேண்டிய நேரடி நடவடிக்கையைப் பொதுக் கூட்டம் எழாமற் செய்கின்றதல்லவா? கேட்டல்: நல்லிசைப் புலமைவல்ல மெல்லியலார் தமிழகத்தில் எத்தனை பேர்கள் இருந்தார்கள்? கிளத்தல்: முப்பத்தொரு பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயர் வருமாறு: 1. ஆதிமந்தியார், 2. வெள்ளிவீதியார், 3. உப்பை உறுவை, 4. ஓக்கூர் மாசாத்தியார், 5. ஔவையார், 6. காவற் பெண்டு, 7. காக்கைபாடினியார், 8. காரைக்கால் அம்மையார், 9. காமக்கணிப் பசலையார், 10. கிழார் கீரன் எயிற்றியார், 11. குறமகள் இளவெயினி, 12. குறமகள் குறி எயினி, 13. குன்றியாள், 14. குமிழிநாயல் நப்பசலையார், 15. தமிழறியும் பெருமாள், 16. நல்வெள்ளி, 17. நெடும் பல்லியத்தை, 18. பாரி மகளிர், 19. பூதப்பாண்டியன் தேவியார், 20. பூங் கண்ணுத்திரையார், 21. பேய்மகள் இளவெயினி, 22. பொன்மணியார், 23. போந்தைப் பசலையார், 24. மதுவோலைக் கடையத்தார், 25. மாறோகத்து நப்பசலையார், 26. மாற்பித்தியார், 27. முன்னியூர் பூதியார், 28. வருமுலையாரித்தர், 29. வரதுங்கராமன் தேவியார், 30. வில்லிபுத்தூர்க் கோதையார், 31. வெண்மணிப்பூதியார். கேட்டல்: ஒருவர் வெளியிற் செல்லப்போகும்போது அவரை எங்கே போகின்றீர் என்று கேட்டால் குற்றமா? கிளத்தல்: எங்கே போகின்றீர் என்று கேட்டால் குற்றமன்று; கேளாவிடில் குற்றம் நேரலாம். கேட்டல்: நான் என் மகளுக்கு சாந்தி என்று பெயர் வைத்தேன். அது வடசொல் என்று தோழர் சிலர் எதிர்க்கிறார்கள். அது வடமொழியா? வேறென்ன வைக்கலாம்? கிளத்தல்: சாந்தி என்பது வடசொல். அதே பொருளுடைய தூய பண்டைய தமிழ்ப் பெயர்வேண்டுமானால் அமைதி என்பதை வைத்துக்கொள்ளுங்கள். - குயில், கிழமை இதழ், 24.11.1959 10 கேட்டல்: அசுவமேத வேள்வியில் குதிரையைக் கொல்வதாகச் சொல்வது பொய் என்று சொல்லப்படுகின்றது. அது பொய்யா? - அழகன், கோவை. கிளத்தல்: ஆரியர் நாகரிகத்தை அறிவுடையோர் கான்றுமிழத் தொடங்கவே ஆரியநூற் கருத்துக்களை திருத்தத் தொடங்கினர். அசுவமேத வேள்வியில் குதிரையை வெட்டுவது மட்டுமா? வெட்கக்கேடு, பாரிஷதன் என்னும் அரசன் மனைவியாகிய வபுஷ்டமை மேல் ஆசை வைத்த இந்திரன் எண்ணம் முடியாமற் போகின்றது. அதன்பின் பாரிஷதன் அசுவமேத வேள்வி செய்ய ஒரு குதிரையை வெட்டுகிறான். உடனே செத்த அக் குதிரையின் உடலுள் இந்திரன் புகுந்து கொள்ளுகின்றான். வேள்வி முறைப்படி வேள்விக்குரியவனான பாரிஷதன், மனைவியாகிய வபுஷ்டமை யின் பெண்குறியில் செத்த குதிரையின் குறியைப் பொருத்தும் வேளையில் இந்திரன் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுகின்றான். இது சிவமகா புராணத்தில் இருக்கிறது. இதனால் ஆரியப் பார்ப்பனரின் காட்டுமிராண்டித் தனமும், விருப்பப்படி தம் நூற்கருத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் தன்மையும் தீய ஒழுக்கமும் விளக்கமாகின்றன. கேட்டல்: தமிழுக்குப் புகழ் தரும் செயல் எது? - kh.கிU£od‹, திருப்பாதிரிப்புலியூர் கிளத்தல்: வடவரை அடக்குவதுதான். வடவர் உட்கும் வான்தோய் நல்லிசை என்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பதிற்றுப் பத்துப் புகழ்வது காண்க! கேட்டல்: வானொலியை ஆகாஷ்வாணி என்பது பொருந்துமா? - செந்தமிழ்ச்செல்வி, புதுவை. கிளத்தல்: ஆகாஷ்வாணி என்ற வடசொற்றொடர். ஆகாஷ்வாணி என்று இந்தியில் வந்தது. ஆகாஷ்வாணி என்பதும் ஆகாச வாணி என்பதும் அசரீரியாகிய தரும தேவதை யைக் குறிக்கும் என்று அவர்கள் ஆதரிக்கும் வடநூலில் இருக்கிறது. அப்படி யிருக்கையில் வானொலியை ஆகாஷ்வாணி என்றோ ஆகாச வாணி என்றோ சொல்லுகின்றவர், ஆராய்ச்சியற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும். கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடக் கழகம் செயலற்றுப் போகும் என்று குத்தூசி குருசாமி எண்ணுகிறார். உங்கள் கருத்தென்ன? - சித்தாநந்தம், முத்தால்பேட்டை. கிளத்தல்: ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்ததல்ல தி.க. அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்துக்கள் இயற்கையோ டியைந்தவை. தி.க. அழிவதென்பது இந்த ஊழியில் இல்லை. கேட்டல்: தமிழ்ப் புலவர்கள் அனைவரும் தி.க. கொள்கைகளை எதிர்க்கின்றார்களா? - பாண்டியன், மேல்பட்டாம்பக்கம். கிளத்தல்: சிலர் தி.க.வின் மூங்கில் தூண்கள். பலர் இரும்புத்தூண்கள். முன்னதற்கு எடுத்துக்காட்டு தெ.பொ.மீ: பின்னதற்கு டாக்டர் இராசமாணிக்கனார். கேட்டல்: தமிழகம் பிரிய வேண்டும்; அப்போதுதான் தமிழை மீட்க முடி யும் என்று சொல்லச் சொல்லத் தமிழுக்கு எதிர்ப்புதான் மிகுகின்றது. - கணேசன், திருச்சி. கிளத்தல்: இப்போது எதிர்ப்பு மிகுதிப்பட்டு வருவதாக எண்ணுவது பிழை. எண்ணெய் இல்லாததால் படர்ந்தெரிகின்றது. கேட்டல்: சுதந்திராக் கட்சியும், கம்யூனிடு கட்சியும், கண்ணீர்த் துளிகளும் ஒன்றுசேர்ந்தால் காமராசர் கை தாழ்ந்துவிடுமா? - தண்டபாணி, மதுரை. கிளத்தல்: தி.க. கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்கும் என்ன? காமராசரைத் தோற்கடிப்பதற்கு உரிய அறிகுறியே காணப் படவில்லை. - குயில், கிழமை இதழ், 1.12.1959 11 கேட்டல்: மதி தமிழா? - இராச. சாரதி, குயவர்பாளையம். கிளத்தல்: திருமதி தி.நீலாம்பிகையம்மையார் இயற்றிய வடசொற் றமிழ் அகரவரிசை என்னும் நூலின் பிற்சேர்க்கை யாக, யாழ்ப்பாணம் உயர்திரு சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களும் வேறுசில அன்பர்களும் ஐயப்பாடு நிகழ்த்திய சொற்கள் குறித்து, சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகட்கும் எழுதிக் கேட்டதற்கு வந்த விடைக் குறிப்புக்கள்: ... ... என்று காணப்படுகிறது. அதனடியில் மதி - தமிழ் என்று காணப் படுகின்றது. எனவே மதி தமிழ் என்று மறைமலை யடிகளார் திருவாய் மலர்ந்தருளினார். வடசொற்றமிழ் அகர வரிசை பக்கம் 280 பார்க்க. அந்த நூலை இயற்றினோர் பெயரைக் குறிக்குங்கால் திருமதி தி.நீலாம்பிகை அம்மையார் என்றே குறிப்பதும் நோக்கத்தக்கது. இனி, மதி என்பது தமிழ்ச்சொல் என்றால் அது என்ன பொருளில் அமைந்திருக்கிறது என்பது கேள்வி. மதி என்பதற்கு மதிப்பு என்பது பொருள் என்று மறைமலையடிகளே குறித்துள்ளார். திருமதி என்பதன் பொருள் திருவும் மதியும் உடையவள் என்பதாம். அவ்வாறெனில் திருமதி என்பதைத் திருவும் மதியும் உடையவன் என்றும் சொல்லலாமோ? சொல்லலாகாது. ஏன் எனில் திருமதி என்பதில் பெண்பாற் பெயர் இறுதிநிலை புணர்ந்து கெட்டது என்பர். ஆதலின் திருமதி என்பது பெண்பால் அடைமொழியாகவே கொள்ளப்படும். திருமதி என்பது உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனினும் அமையும். திருவும் மதியும் உடையாள் என்பது தவிர திருவால் ஆகிய மதி யுடையவள் (மதிப்பு) என மூன்றனுருபும் பயனும் உடன்றொக்கத் தொகை எனினுமாம். எனவே திருமதி எனத் திருவையடுத்து வரும் போதும் மதி தமிழ்ச் சொல்லேயாதல் பெற்றாம். கேட்டல்: நைஜீரிய மாணவர் இந்நாட்டில் புகைவண்டி பற்றிய அனைத்து நுட்பங்களையும் கற்றுக் கொள்ள வந்திருக்கிறார்கள். அவர்கள் நிலை என்ன ஆகும்? - சு. இராமலிங்கம், பிள்ளைத் தோட்டம். கிளத்தல்: இங்கு அவர்கள் முன்னின்று இழுக்கும் விசைப்பெட்டியில் எங்கே தலைவைத்துப் படுப்பது, எங்கே காலை நீட்டித் தூங்குவது? என்பதைத் தெரிந்து கொள்வார்கள். விசையை எப்படி முடுக்கினால் பாதையை விட்டு விலகி வண்டி தலை கீழாகப் புரளும் என்பதில் தேர்ச்சியடைவார்கள். ஓட்டைப் பாலம் இது என்று தெரிந்து கொண்டு வண்டிகள் ஆற்றில் பாய என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாய் அறிந்து கொள்வார்கள். இப்படி போக்குவரத்து மக்கள் பொழுதோடு - கூண்டோடு சிவபெருமான் திருவடி நிழலை அடைய உலக மெல்லாம் சிரிக்கும் நுட்ப வேலைகளில் தேர்ச்சி பெற்று நைஜீரியா மாணவர்கள் நற்சான்றோடு தம் நாடு சென்று தம் கையிருப்பைக் காட்டுவார்கள். அதற்குப் பரிசாக அவர்களைப் புளிய மரத்தில் கட்டிவைத்து மிலாரினால் தோலை உரிப்பார்கள் நைஜீரிய மக்கள். கேட்டல்: மாடப்பள்ளிப் பஞ்சாயத்தில் 28.11.1959ல் முதல்வர் காமராசருக்கு ஒரு வரவேற்பு அளிக்குமுன் சிரியையும் சிரிமதியையும் ஒழிப்பதான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுபற்றி முதல்வர் தமது பேச்சுக்கிடையில் ஒன்றுமே சொல்ல வில்லையே, ஏன்? - ஆ.சுந்தரேசன், சிதம்பரம் கிளத்தல்: சிரியும், சிரிமதியும் ஒழியத்தான் வேண்டும் என்று காமராசர் சொன்னால் பக்தவத்சலனார், மடத்தம்பிரான்கள், படுகாலிப் பாப்பாரப் பசங்கள் இனத்தைச் சுரண்டும் தில்லிக்காரர் வருந்து வார்கள். சிரியும் சிரிமதியும் இருக்கத்தான் வேண்டுமென்றால் தி.க.வுக்கு எரிச்சல் வரும். - குயில், கிழமை இதழ், 8.12.1959 12 கேட்டல்: ரோசா என்ற மலருக்குத் தமிழில் என்ன சொல்லுவது? - உசைன், திருமதிக்குன்றம். கிளத்தல்: வெளிநாட்டுப் பொருள் அது. அதைத் தமிழில் சொல்ல வேண்டுமானால் உரோசா என்க. தமிழ் மொழிக்கு முதலில் ரோ வராது ஆகையால்.  கேட்டல்: உதயம், சூரியன் தமிழ்ச்சொற்களா? - நா.அப்பு, பம்பாய் கிளத்தல்: வடசொற்கள்  கேட்டல்: முகம் தமிழா? - ஆ.அருணன், புதுவை. கிளத்தல்: ஆம். வந்தவர் மொழியா (குயில், 02.09.1958) பார்க்க.  கேட்டல்: போர் வீரர்களின் அதிகாரிகள் ஏறிச்சென்ற புகைவண்டியை தேசூபூர், அர்சிங்காவில் கவிழ்க்க இந்தியப் பொது உடமைக் காரர்கள் முயன்றது ஏன்? - வீ.கு.ஜீவா, கடலூர். கிளத்தல்: அவர்கள் சீனாவுக்கு உதவி செய்பவர்கள். இந்தியருக்குப் பிறந்தாலும் சீனாவையே, அப்பா, அப்பா என்று அழைப்பவர்கள்.  கேட்டல்: புதுவை சட்டசபையில் சீன வௌவுதலை எதிர்த்துத் தீர்மானம் வந்தபோது புதுவை அரிவாள் சுத்தி உறுப்பினர் எதிர்த்தார்களாமே? - முல்லை, மணப்பள்ளி. கிளத்தல்: ஆம், புதுவை அரசினர் சலுகை இதனால் அவர்களுக்குக் குறைந்துவிடுமா, என்ன?  கேட்டல்: இந்தியப் பொதுவுடைமைக்காரர் சீனாவை வெளிப்படையாக ஆதரிக்கிறார்களா? - மாறன், குடந்தை. கிளத்தல்: மறைமுகமாக ஆதரிப்பதாக இந்தியப் பேரரசு புளுகுகின்றது.  கேட்டல்: தமிழ்ச்சொல் ஆராய்ச்சி, அகர வரிசையை உருவாக்க தெ.பொ.மீனாட்சிசுந்தரம், சேதுப்பிள்ளை, துரை அரங்கசாமி, அ.ச.ஞானசம்பந்தம் ஆகியவர்களைக் குழுவாக்கி இருக்கும் சென்னை அமைச்சரவை நோக்கமென்ன? - திலகம், அரியநகர். கிளத்தல்: ஆச்சாரியின் சுதந்திரக் கட்சிக்கு வாழ்த்துக் கூறுவதுதான் நோக்கம்.  கேட்டல்: அகர வரிசை குழுவின் வேலை எப்படி இருக்கும்? - குறள்பித்தன், சென்னை. கிளத்தல்: உலகிலுள்ள கடல்கள் அனைத்தும் சகரரால் - ஆரியரால் தோண்டப்பட்டது. அதனால் அதற்கு சாகரம் என்று பெயர் ஏற்பட்டது என்றிருப்பதை தமிழர்கள் எதிர்ப்பதுண்டு. அதை எதிர்க்காமல் இருக்கும்படி அக்காரணத்தை உறுதி செய்தருளும் தெ.பொ.மீ. குழு. அகத்தியர் கமண்டலத்திலிருந்து கவேரன் மகளை இந்திரன் வேண்டு கோளுக்கிணங்கி பிள்ளையார் காக்கை உருக் கொண்டு உருட்டவே அந்தக் கவேரன் மகள் காவேரி ஆறாயினாள் எனப் புராணப் புளுகு ஒன்று உண்டு. தமிழர்கள் இதை ஏற்றுக் கொள் ளுவதில்லை. ஒத்துக்கொள்ளும்படி உறுதி செய்யும் தெ.பொ.மீ. குழு இப்படிப் பல போக்கிரித்தனங்களைச் செய்யலாம்.  கேட்டல்: குயிலில் வரும் அனைத்தும் - பெரும்பாலும் பாட்டுக்க ளாகவே இருப்பதாலும், அப்பாட்டுக்களும் எளிய நடையில் இல்லாததாலும் படிப்பதில் தொல்லை ஏற்படுகின்றது. இந் நிலையைப் போக்க எண்ணம் உண்டா? - இராமசாமி, fâ®fhk«. கிளத்தல்: பாட்டுப் படித்துப் பொருள் உணரும் ஆற்றலை மிகுதியாக்க வேண்டும் என்பதும் வடசொல் நீக்கித் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டே செய்யுள் செய்து தனித் தமிழ் நடையைப் படிப்பதில் தொல்லை காண்பவர் மற்றும் ஒருமுறை படிக்கவேண்டும். பெருக்கவேண்டும் என்பதும் குயிலின் கொள்கை. - குயில், கிழமை இதழ், 22.12.1959  13 கேட்டல்: திருக்குறளுக்கு நீவிர் எழுதும் வள்ளுவர் உள்ளம் என்ற உரை எளிய முறையில் இல்லை. படித்தவர்க்கே புலப்படும் முறையில் அமைந்திருக்கிறதே, அதற்கு நீவிர் கூறும் விடை என்ன? - பா.சு.மணி, மதுரை. கிளத்தல்: எளிய முறையில் எழுதியிருக்கிறேன். அது படித்தவர்க்கு மட்டும்தான் புரியுமென்றால் படிக்காதவர்களைப் படித்தவ ராக்குவதுதான் எப்போது? இப்போது நான் கையாண்டுள்ள முறையில் பக்கங்கள் மிகுதியாய் வேண்டியிராது. நீவிர் கேட்கும் முறையில் எழுதினால் பக்கங்கள் மிகுதியாக வேண்டி யிருக்கும் என்பதையும் உணர வேண்டும்.  கேட்டல்: பெருநிலக் கிழாரிடமிருந்து பெரும்பான்மை நிலங்களைப் பிடுங்கி நிலமில்லார்க்கு வழங்குவதோர் அரசினர் திட்டம் பற்றி நாளேடுகள் அனைத்தும் எதிர்ப்பதற்குக் காரணம் என்ன? - வேலாயுதன், மறைக்காடு. கிளத்தல்: அது பிற கட்சிகளைத் துணைக்கு அழைக்கிறது. தி.க.விற்கு ஓர் இலக்கத்துக்குமேல் கட்டடநிதி குவிந்து வருகின்றது - என்ன பொருள்?  கேட்டல்: தி.மு.க. தாழ்ந்து வருகிறது என்பதற்கு என்ன சான்று? - முத்து, விருதை. கிளத்தல்: பெரும்பாலும் நாளேடு உள்ளோர்கள் அனைவரும் பெருநிலக் கிழாரும், தன்னல உணர்ச்சி உடையவர்களும், தமிழ்நாடு உடையவர் கருமுத்துவைப் பற்றி உமக்குத் தெரியுமே. அவர் அத்திட்டத்தை எப்படி வரவேற்பார்.  கேட்டல்: கம் - சுதந் - தி.மு.க. மூன்றும் இணைந்துவிட்டால் காங்கிரசு பாடு அரோகராதானே? - தண்டபாணி, சென்னை. கிளத்தல்: சென்ற பொதுத் தேர்தலில் இம்மூன்றும் காங்கிரசை எதிர்த்தன. என்ன கிழித்துவிட்டன? இன்னமும் இம் மூன்றும் சேர்ந்து எதிர்த்தால் என்ன ஆகும்? மூன்றுக்கும் கோவிந்தாதான்!  கேட்டல்: குடும்பக் கட்டுப்பாடு, அதாவது, மிகுதியாக மக்களைப் பெறாதிருக்கும் திட்டம் எப்படியாகும்? - நீ.சந்திரன், ஈரோடு. கிளத்தல்: திட்டம் வெற்றிபெற்று வருகின்றது. மிகுதியாக வெற்றிபெற வேண்டும். சிலர், சில ஏடுகள் அதை எதிர்க்கலாம். முட்டையிடும் கோழிக்குத்தான் தெரியும் வருத்தம். முட்டையை அப்பத்தில் ஊற்றிச் சுட்டு அருந்துவோர்க்குத் தெரியுமா?  கேட்டல்: நாவலர், கணக்காயர், டாக்டர் சோமசுந்தரபாரதியார் உருவச் சிலை அமைக்க வேண்டுமா? - முருகு, முத்தாலுப்பேட்டை. கிளத்தல்: அவருக்கு மட்டுமன்று. âU.É.f., t.c.á., மறைமலை யடிகள், இசைப்பேரரசு இராசரத்தினம் ஆகியோரின் உருவங்கள் தமிழகத்து நகர்தோறும், மன்றங்கள்தோறும், பல்கலைக் கழகங்கள்தோறும் காட்சியளிக்க வேண்டும். அரசினர் இம் முயற்சியை ஆதரிக்கமாட்டார்கள். அவர்கள் போக்கு அனைத்தும் தில்லியை மகிழ்விக்கத் தமிழைக் கொலை செய் வதிலும் தமிழரை, தமிழைக் காட்டிக் கொடுக்கும் bj.bgh.Û.க் களை ஆதரிப்பதிலுந்தான் இருக்கும். பொதுமக்களே எடுத்துச் செய்யவேண்டிய அரும்பணிகள் இவை.  கேட்டல்: மத பக்தியை விட்டுத் தமிழை வளர்க்கிறேன் என்று சொன்னால் அது தமிழே ஆகாது. அப்படிப்பட்டவனும் தமிழை அறியாதவனே ஆவான் என்று பக்தவத்சலனார் கூறினார். உங்கள் கருத்தென்ன? - வேணு, சென்னை. கிளத்தல்: தமிழ் பிடிக்காது; சைவம்தான் பிடிக்கும் என்னும் தம்பிரான் கட்சிக்காரர் பக்தவத்சலனார், அது மட்டுமல்ல, பக்தவத்சல னார்க்குத் தமிழ் தெரியாது.  கேட்டல்: இராஜகோபால் ஆச்சாரி கால்பந்து ஆடலிலும் குண்டு (கோலி) விளையாடல் நல்லது என்கிறார். சரியா? - பினாகபாணி, வேலியூர். கிளத்தல்: எதற்கும் ஏட்டிக்குப் போட்டி பேசுவதின் மூலமே தம் கட்சி முன்னேற்றமடைந்துவிடும் என்று அவர் எண்ணுகிறார். ஆச்சாரியால் ஒன்றும் முடியாது. இப்படி, உளறிக் கொண்டிருப் பதோடு சரி. - குயில், கிழமை இதழ், 29.12.1959  14 கேட்டல்: முப்பாலாக வெளிப்பட வகுத்துக் கூறிய நாயனாரை வீடும் கூறினார் என்றால் எங்ஙனம் பொருந்தும்? திருக்குறளுக்கு முப்பால் என ஒரு பெயரும் உளதன்றோ? - சு. ஒளிச்செங்கோ, கண்கொடுத்தவனிதம், தஞ்சை. கிளத்தல்: நக்கீரனார், தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா அறுமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழிஉலகு என்ஆற்றும் மற்று? என்று திருவள்ளுவ மாலையிற் செப்பியுள்ளார். அதனால் குறளால் வள்ளுவர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் நவின்றமை தெளிக. இன்னும் மாமூலனாரும், அறம்பொருள் இன்பம்வீ டென்னும்அந் நான்கின் திறம்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பான்ஓர் பேதை அவன்வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடை யார். என்று திருவள்ளுவ மாலையிற் செப்பியுள்ளார். இதனால் குறளில் சொல்லப்பட்டவை நான்கும் என்பது பெற்றாம். மற்றும் கீரந்தையார். தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும் வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத் தெய்வத் திருவள் ளுவர். என்றதால் திருக்குறளில் திருவள்ளுவர் மூன்று பாலை விரித்ததன் வாயிலாக நான்கு பாலையும் நவின்ற திறம் வியக்கத்தக்கதாவது அறிக. மேலும், நரிவெரூஉத்தலையார், இன்பம் பொருள்அறம் வீடென்னும் இந்நான்கும் முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு உள்ள அரிதென்று அவைவள்ளுவர், உலகம் கொள்ள மொழிந்தார் குறள். என்றார். இதன் பொருளையும் கேட்க! இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இந்த நான்கினையும் - முக்காலத்தில் மக்கள் அறிந்துய்யும்படி சொல்லியருளிய முதுமொழி நூல் முதுமைப்பட்ட தமிழ் மொழியாலான தமிழ் நான்மறை என்ற நூலானது மக்கள் மனதிற் கொள்ளல் அரிதாகும் என்று அவைகளை வள்ளுவர், உலகம் கொள்ள எளிதாமாறு மொழிந்தார். எதை? - குறளை! மற்றும் கோவூர்கிழார், அறமுதல் நான்கும் அகலிடத்தோ ரெல்லாம் திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே முன்னை முதுவோர் மொழி. இதிலும் வள்ளுவர் அறமுதல் நான்கையும் சொன்னமை தெளிக! இனியும், இழிகட் பெருங்கண்ணனார், இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின் வீடு, அவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார். பாடினர் இன்குறள்வெண் பா. இதனாலும் வள்ளுவர் நாற்பாலும் நவின்றமை நன்கு புலப்படும். நக்கீரரும், நால்வரும் அறமுதலா நான்கினையும் ஆலின் கீழிருந்து சிவபெருமான் அருளிச் செய்தனர் எனத் தம் பாடல் களிற் பல்லிடங்களிலும் சொல்லப்படுவது தமிழ் நான்மறையே, சிவன் சொன்னது என்றது சிறப்புறுத்தியது. தமிழ் நான்மறை மறைந்தது ஆதலின் அதை மீண்டும் கொணர்ந்தது திருக்குறள் எனத் தெளிதல் வேண்டும். எனவே முப்பால் எனினும், அது நாற்பாலை உள்ளிட்டதே எனக் கொள்க! இனி, திருக்குறளில் வீட்டு நெறியைக் குறிப்பால் உணருமாறு உரைத்துள்ளமை அறியற்பாலது. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் முதலிய மிகப் பல வீட்டு நெறியை விளக்குவனவே. - குயில், கிழமை இதழ், 5. 1. 1960  15 கேட்டல்: தொல்காப்பியம் என்ற நூலைச் செய்தவர் தமிழரா? - சி.எசு. இராமு, சென்னை கிளத்தல்: இப்போது நம்மிடம் இருக்கும் தொல்காப்பியப் பதிப்பிலுள்ள நூற்பாக்கள் அனைத்தையும் ஒருவரே செய்தார் என்று கொண்டால் அவர் தமிழராயிருக்க முடியாது. ஆனால் பேராசிரியர், வெள்ளை வாரணனார் போன்றார் எண்ணுவது போல் தொல்காப்பியத்தில் சில நூற்பாக்களை இடைச் செருகலாகக் கொண்டால் அந்த நூல் தூய தமிழனால் அருளப்பட்டதே யாகும்.  கேட்டல்: சென்னைக் கோயம்பேட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்த மக்கள் இயங்கி வண்டி (ப) ஒரு கூட்டத்தாரால் மறித்து நிறுத்தப்பட்டது. மேற்பார்வையாளர் (கண்டக்டர்) வெளியில் இழுத்தெறியப்பட்டார். ஓட்டுவார் கத்தியால் குத்தப்பட்டார். இந்த அடிதடியில் 12 பேர் குருதி தெறிக்கும் புண்பட்டார்கள். இனியும் இவ்வாறு நடவாதிருக்க என்ன செய்யலாம்? - இளமுருகு, திருநெல்வேலி கிளத்தல்: ஓட்டுபவர் போர் வீரர் ஆதல் வேண்டும். அவர் அண்டை யில் போர்க் கருவிகள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது புண்பட்டால் - அடிபட்டால் - தொடக்க மருத்துவத் திற்கான மருந்து வைக்கப்பட்டிருக்கிறது. போதாது. நாம் சொல்லும் திருத்தம் அனைத்தும் நடைமுறைக்கு வருங்காலம் இயங்கி களின் போக்குவரவுகளையெல்லாம் அரசினர் எடுத்து நடத்துங் காலமாகும்.  கேட்டல்: ஆதாரக் கல்வி என்பது என்ன? - செ. துளசி, காவேரிபாக்கம் கிளத்தல்: வாழ்க்கைக்கு ஆதாரமான (அடிப்படையான) அறிவை உண்டாக்கும் கல்வியைக் கற்றலும் கற்பித்தலுமாகும். இப்போது அரசினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் முறை ஆதாரக் கல்வி என்று தோன்றவில்லை. காட்டுமிராண்டிக்கல்வி என்று தான் சொல்லவேண்டும். இந்தமுறைதான் ஏற்றது நல்லது என்று மக்களிடையே இன்று குழப்பம் செய்கின்றவர்கள் - தலைவர்கள் - கல்வி அதிகாரிகள் அனைவரும் காட்டு மிராண்டிகள் அல்லர். நல்லமுறையில் கற்றவர்களே. மாணவர் வடித்த சிறுநீரைச் சேகரித்து, அதைத் தூக்கிக் கொண்டு போய் வேண்டிய இடத்தில் பயன்படச் செய்ய வேண்டும். நெல்லை மரப்பொறியால் அரைக்க வேண்டும். பிறவும். இவைகள் அனைத்தும் ஆதாரக் கல்வியிற் சேர்ந்தவை. மற்றும் ஆதாரக் கல்வி பற்றி வெளியாகும் பாடநூற்களும் ஆரியன் ஒருவன் மாணவன் கட்டை விரலை வெட்டிக் காணிக்கை கொண்டான் என்பது போலத்தான் இருக்கும். தமிழ் மட்டும் இங்கு நன்றாகக் கவனிக்கப்படுகிறது. எப்படி? தமிழ் தெரியாதவர்களால் பாட நூல் வெளியிட வேண்டும் என்பது கட்டாயம். தமிழர் பண்பாடு ஒழிக்கப்பட வேண்டிய வலுக்கட்டாயம். - குயில், கிழமை இதழ், 26.01.1960  16 கேட்டல்: தூத்துக்குடி இடைத்தேர்தலில் கண்ணீர்த் துளி தோற்றது வியப்பல்லவா? - பி.என். கண்ணன், சாரம். கிளத்தல்: தோற்றது வியப்பல்ல. தோற்கும்படி கண்ணீர்த் துளியே கண்ணீர்த்துளிக்கு மறைமுகமாகக் குழி தோண்டியதுதான் வியப்பு.  கேட்டல்: கல்லூரிப் படிப்பில் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிப்பது என்பது என்று அரசியலார் மேற்கொண்டுள்ள முயற்சி உறுதியாக வெற்றிபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் சொல்லுகிறார். எப்படி? - த. தமிழ்ச்செல்வம், புதுவை. கிளத்தல்: அரிய பெரிய கண்டுபிடிப்பு.  கேட்டல்: உலகில் நுண் ஆய்வின் பயன் மிகுதியாயிருந்தாலும் போர் விளைவு இன்னும் இருந்து கொண்டுதானிருக்கிறது. நுண்ணாய் வினர்க்கு அதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் ஏற்படவில்லை என்று பெங்களுர் நுண்ணாய்வினோர் கழகத்தில் உருசியத் தலைவர் ஓரோசிலோவு பேசியது எப்படி? - இ. பக்கிரிசாமி, பொன்வயல். கிளத்தல்: தொல்லையுள்ளத்துக்குச் சிறியதோர் ஆறுதல்.  கேட்டல்: இந்தச் சலசலப்புக்குப் பணிந்துவிடமாட்டேன் என்று பிரெஞ்சு டிகால் அல்சீரியாவை நோக்கிக் கூறுகின்றார், சலசலப்புக்காரர் யார்? - ப.சு. மணி, வில்வநல்லூர் கிளத்தல்: பிரெஞ்சு வெள்ளைக்காரர் பிரஞ்சின்கீழ் இருந்த அல்சீரியா வில் குடியேறிப் பெருவாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள். டிகால், அந்த அல்சீரியாவுக்கு விடுதலை கொடுத்துவிட்டால் பெரு வாழ்வு வாழ்ந்து வந்த பொறுக்கிகளுக்கு இடையூறு நேர்ந்து விடும். டிகாலையே எதிர்த்துச் சலசலப்புக் காட்டுகிறார்கள்.  கேட்டல்: கேரளத்தில் கூட்டணி வெற்றி பெறுமா? - சி. பாசுகரன், சேலம். கிளத்தல்: சென்ற தேர்தலில் கேரளப் பொதுவுடைமைக்காரர்கள் மக்களுக்குப் பல வாக்குறுதிகள் கொடுத்திருந்தார்கள். மக்கள் சீட்டுப் போட்டார்கள். பொதுவுடைமைக்காரர்கள் ஆட்சி அடைந்தார்கள். ஆட்சி அடைந்தபின் கொடுத்த வாக்குறு திகளின்படி நடக்காதது மட்டுமல்லாமல், மக்களின் எதிர்ப் பாற்றல்களுக்கே ஆதரவு கொடுத்தார்கள். ஓர் எடுத்துக்காட்டு: அயலாரால் பிடுங்கிக் கொள்ளப் பட்ட பல தொழில்களைப் பொதுவாக்குவோம் என்றவர்கள், அப்படிச் செய்யாததோடு, அந்த அயலார் கையை வலுப்படுத் தினார்கள். இப்படி ஒன்றல்ல; நூறு. இதனால் மக்களுக்கேற்பட்ட வெறுப்புதான் சட்டமன்றமே கலைக்கப்படக் காரணமாயிற்று. காங்கிரசும் பிற கட்சிகளும் சேர்ந்தது கூட்டணிதான் வெல்லும்.  கேட்டல்: கேரளத்தில் நம்பூத்திரி நம்பூத்திரி என்று பெருமை அடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் உச்சிக் குடுமிகள், அப் பூத்திரி அவிந்து போவது பற்றி என்ன நினைக்கின்றார்கள்? - பொ. வடிவழகன், கூடலூர். கிளத்தல்: நம் பூத்திரி எரிந்துவிட்டது. வேறு கம்பி மத்தாப்பின் பக்கம் சேர்ந்து கொள்ளத்தாமே நினைப்பார்கள். - குயில், கிழமை இதழ், 2. 2. 1960  17 கேட்டல்: இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. என்று கூறிய வள்ளுவர், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றியான் என்றும் கூறினார். இதனால் திருவள்ளுவரை முன்னுக்குப்பின் முரண்படக் கூறினார் என்று அறிவுடையார் எண்ணுவாரன்றோ? கிளத்தல்: எண்ணினால் அது அவர் பிழை! கூழுக்கு வழியில்லை என்று இரப்பவனும் இரப்பவனே. சுவை நீர் அருந்தப் பாலுக்கு வழில்லை என்று சின்ன படியால் ஒரு படிப்பால் இருந்தால் கொடுங்கள் என்று இரப்பவனும் இரப்பவனே. நாட்டில் விளைவில்லை ஓர் இலக்கம் கலம் நெல் கொடுங்கள் என்னும் நாடுடையானும் இரப்பவனே என்பதை முதலில் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது: இரப்பாரை *ïšyhj என்ற செய்யுள் மேற்சொன்ன இரப்பவர் எல்லாரையும் பொதுவாகச் சொன்னதென்ன அறிதல் வேண்டும். அதுமட்டுமன்று; அது ஈவோருக்குப் படும் படி சொன்னதுமாகும். இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் என்ற செய்யுள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத கூழும் இல்லையே என்று இரப்பவனைப் பற்றி சொன்னது என அறிதல் வேண்டும். (அதனால் தான் உயிர்வாழ்தல் என்று பாட்டிற் குறிப்பிட்டார்). அவ்வாறு அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அது இரப்பவர்க்கு விழிப்பூட்டச் சொன்னதென்று அறிதல்வேண்டும். இதனால் வள்ளுவர் அறிவுடைமை பொருளுடைமை முதலிய எல்லாவற்றிலும் சிறிதும் உயர்வு தாழ்வு வேண்டாம் என்று கருதினாரல்லர் என்பது பெறப்படும். இனி, ஓடப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஒப்பப்பர் ஆய்விடுவார்; உணரப்பா நீ என்று நாம் கூறியதும் இதைத்தான். உதை கொடுத்தால் செல்வர்க்கு ஒப்பு ஆய்விடுவார் என்றோமே தவிரச் செல்வரே ஆய்விடுவார் என்று நாம் சொல்லவில்லை. செல்வர்க்கு ஒப்பு ஆவது வேறு. செல்வரே ஆய்விடுவது வேறு. முகத்திற்குத் தாமரை ஒப்பு என்றால், தாமரை எல்லா வகையாலும் முகமே ஆகிவிடுவதில்லை. அப்படி ஆகும் என்றால் ஒப்பு என்ற உவமை உருபு வேண்டியதில்லை. ஒப்புக் கூறுவது சில வகையால் ஒத்திருப்பதைக் கொண்டுதான். தாமரை மாலை கட்ட உதவும். முகமுமா அப்படி? முகத்தில் கண்கள் உண்டு. தாமரையிலுமா? மலர்ச்சி ஒன்றில் தான் முகத்திற்குத் தாமரை ஒப்பு. செல்வர்க்கு ஒப்பு ஆவார் என்றால் உணவு, உறையுள், உடை என்றவற்றில் தாம் ஒப்பாவார்கள் என்றபடி! அவ்வாறின்றி அறிவுநிலை செல்வநிலை உடல்நிலை அனைத் திலும் ஒரே நிறுத்த நிறையாய் இருத்தல்வேண்டும். முருகப் பிள்ளை வீட்டிலும் கருவேப்பிலைக்குப் பஞ்சமுண்டு என்பதற்கு மாறாக இல்லை என்பதே எல்லார்க்கும் இல்லா தொழியும் நிலையை நாம் வேண்டினோமில்லை. அந்நிலை என்றும் ஏற்படாது என்று நாம் எண்ணியதால்! திருவள்ளுவரும் அப்படியே என்க. நாம் இவ்வாறு கூறியதில் பிழையிருந்தால் எடுத்துக் காட்ட வேண்டும். அதை நம் குயிலில் வெளியிடத் தவற மாட்டோம். அதைவிட்டு வள்ளுவர் முரணுகின்றார் என்று கூறிக் கொள்வதால் யாருக்கு என்ன பயன் விளையும்? திருவள்ளுவர் கருத்து இதுதான் என்று நாம் நம்புவதால் இக் கருத்தை ஆதரிப்பார் எவராயினும் அவரை இதைப் பொறுத்த மட்டில் நாம் ஆதரிப்போம். இதை எதிர்ப்பார் எவராயினும் அவரை இதைப் பொறுத்தமட்டில் எதிர்ப்போம்.  கேட்டல்: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது; ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்கமுடையது என்று பெரியார் சொல்லலாமா? கிளத்தல்: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை. பகுத்தறிவுக் கொவ் வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை. அதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறுகின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவு படுத்தப் படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலா மன்றோ? கேட்டல்: தொல்காப்பியம் ஒரு தமிழனால் செய்யப்பட வில்லை. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம் அதில் மறுக்கப் படுகின்றன என்று கூறலாமா பெரியார்? கிளத்தல்: ஆயிரம் முறை கூறலாம். வெள்ளை வாரணனாரும் பிறரும், தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய செய்யுட்களை இடைச்செருகல் செய்துள்ளார்கள் என்று கூறினார்கள். இடைச் செருகல்களை நீக்கிப் பதிப்பிக்கலாமன்றோ புலவர்கள்! செய்யட்டும். செய்த பிறகு பெரியார் அவ்வாறு கூறமாட்டார். - குயில், கிழமை இதழ், 16.02.1960  கேட்டல்: ஒருவனுக்கு ஒருத்தி என்பது பற்றித் தமிழில் இலக்கியம் உண்டா? கிளத்தல்: நிறைய உண்டு. ஒருவனுக்குப் பல பெண்டிர் என்பதற்குத் தமிழில் இலக்கியம் இல்லை.  கேட்டல்: தமிழரசர்கள் முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள் என்று பெரியார் சொல்லலாமா? கிளத்தல்: ஏன் சொல்லக்கூடாது? தெருவில் கிடக்கும் நாய் விட்டை யில் சிவனைக் கண்டான். கண்டவன் சும்மாவா இருந்தான். கோயில் கட்டி அதில் நிறுவிக் கும்பிடவும் வைத்தான். இப்படி ஒரு தமிழரசன். வடநாட்டினின்று ஆரியப் பார்ப்பனர்களை அழைத்துத் தமிழர்மேல் ஏறிச் சவாரி செய்யச் சொல்லுகிறான். இப்படி ஒரு தமிழரசன்! இப்படிப் பட்டவர்கள் எல்லாம் பிற்கால மன்னர்தாமே. அதற்கு முற்காலத்தில் இருந்தவர்கள் நாகரிகம் உள்ளவர்களல்லவா நாகரிகம் இல்லாதவர்கள் ஆகிய இருவகையாரில் கொள்கை யில் வெற்றி பெற்றவர்கள் எவர்? நாகரிகம் இல்லாதவரல்லவா? அவர் காட்டிய கோயில், அவர் காட்டிய நாய் விட்டைகள்தாமே இன்று ஆட்சி நடத்துகின்றன? தமிழகத்தில் பற்றுள்ள புலவர்கள், நாகரிகமில்லாதவர் கண்ட கோயில் நாய் விட்டைகளை ஒதுக்கியும், நாகரிகம் கொண் டிருந்த மன்னரின் நாட்டுத் தொண்டைப் போற்றியும் நூற்கள் செய்ததுண்டா? செய்யவேண்டுமல்லவா! அவ்வாறு அவர்களைச் செய்யத் தூண்டுவதுதான் பெரியாரின் பேச்சு!  கேட்டல்: ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பது தமிழர் நாகரிகம் என்றால் இல்லை இல்லை. ஒருத்தி பலர்க்கு மனையா ளாவது தமிழகத்திலும் உண்டு என்று பெரியார் சொல்லலாமா? கிளத்தல்: ஒருத்திக்கு ஒருவன் என்பது தமிழர் நாகரிகம் என்பதைப் பெரியார் மறுக்கவில்லை. தமிழரின் இலக்கியம் அப்படித்தான் சொல்லுகிறது என்பதைப் பெரியார் மறுக்கமாட்டார். மறுக்கவும் முடியாது. அவர் சொல்லியதன் பொருள் என்னவெனில், தமிழர் இலக்கியம், தமிழர் நாகரிகம் ஒருத்திக்கு ஒருவன் என்றிருக்கை யிலும் தமிழகத்தில் மிகச் சில இடங்களில் காட்டுப் புறங்களிலும் ஒருத்திக்குப் பலர் ஆடவர் என்னும் முறை புகுந்துவிட்டது; இது ஆரியரின் புகுத்தல்; ஆரியத்துக்கு இடந்தரலாகாது என்றுதாமே பெரியார் சொல்லுகிறார்.  கேட்டல்: தானம் என்பதை நீங்கள் தமிழ்ச்சொல் என்று எடுத்துக் காட்டி இலக்கணத்தோடு விளக்கியிருக்கையிலும் தானம் என்பது வடசொல் என்று பெரியார் சொல்லலாமா? கிளத்தல்: தானம் என்ற ஒலி வடமொழியிலும் இருக்கிறது தமிழிலும் இருக்கிறது. வடவர் வழங்கும் தானத்தையே பெரியார் சொன்னார். தன்மை, தன், தான், தானம் என்று வந்த தமிழ்ச் சொல் லாகிய தானத்தை அவர் சொல்லவில்லை. சொல்ல முடியாது.  கேட்டல்: தமிழுக்கு இலக்கியம் இல்லை என்னலாமா பெரியார்? கிளத்தல்: இராமாயணத்தையும் பாரதத்தையும் ஆரியரின் காட்டு மிராண்டித் தனத்தைப் பின்பற்றி எழுந்த புராணம் முதலிய வற்றையும் நம் இலக்கியம் நம் இலக்கியம் என்று கூறுவதன்றித் தமிழர் இலக்கியங்கள் இன்னின்னவை என்று எடுத்துக்காட்டும் வலி இருந்ததா புலவர்களிடம்? அமைச்சர்களிடம்? தமிழிலக் கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர் திருத்தக்காரர்களை எதிர்ப்பதன்மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள்!  கேட்டல்: அறுபது ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் ஆரியமயமாகியிருப்பது தமிழுக்கு உள்ள குறைவல்லவா? கிளத்தல்: ஆண்டு அறுபது என்று ஏற்படுத்தியதே முட்டாள்தனம் அல்லவா? வீடு கட்டியது கர ஆண்டு என்றால் எந்தக் கர? வீட்டைப் பார்த்தால் அது மிகப் பழமையானதாயிருக்கின்றது. சென்ற கரவா அதற்கு முன்னைய கரவா? இந்த இழவு கருதித் தானே கிறித்து ஆண்டு வைத்துக் கொள்ளுகிறோம். இப்போது திருவள்ளுவர் ஆண்டை வைத்துக்கொள்ளத் தொடங்கியிருக் கின்றோம். அண்டைக் கடையில் நஞ்சு விற்கிறது என்றால் நஞ்சு விற்காத கடை தாழ்ந்த கடை என்று சொல்லிவிடுவதா? அண்டைக் கடையில் நஞ்சு விற்பது தப்பு என்றல்லவா சொல்ல வேண்டும். ஆரியர் வகுத்த ஆண்டுகளுக்கு ஆரியப் பெயர் தான் இருக்கும். அறுபதாண்டு ஏற்பாடு தமிழர்க்கு ஏற்றதல்ல. ஆதலால் அவற்றிற்குத் தமிழ்ப் பெயர் வைக்கவில்லை. இதனால் தமிழுக்குக் குறைவு ஏற்பட்டுவிடாது ஆரியர் ஏற்பாடுதான் அவர்களின் வண்டவாளத்தை விளக்கும்.  கேட்டல்: தமிழர் திருமண முறையைக் கூறுகின்ற தமிழிலக்கியம் எது? கிளத்தல்: திருக்குறள். நீ கேள்விப்பட்டிருக்கும் நுலைத்தான் சொன்னேன்.  கேட்டல்: திருக்குறள் முதலிய தமிழிலக்கியங்களில் தனியே ஒரு சோலையில் தனியே ஓர் ஆடவன் ஒருத்தியைக் காணு கின்றான் என்பது அந்தத் தமிழிலக்கியத்தினால் அறிகின்றோம். இப்போது அம்முறை ஒத்து வருமா? கிளத்தல்: ஒருவன் ஒருத்தியைத் தானே தெரிந்துகொள்ளவேண்டும் என்பதும் ஒருத்தி ஒருவனைத்தானே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும் ஆகிய ஓர் ஏற்பாடு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே தமிழர்களிடம் இருந்ததென்றால் - அப்படிப்பட்ட முற்போக்கான ஏற்பாடே மக்களால் பின்பற்றப்பட வேண்டும் என்ற உலகம் ஆசைப்படுகின்றது என்றால் அந்த மணமுறை இப்போது ஒத்துவருமா என்ற கேள்வி முட்டாள் தனமான கேள்வி என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. ஒருவன் ஒருத்தியை ஒருத்தி ஒருவனைத் தெரிந்து, கொள்வ தென்னும் முறையானது அந்தக் காலத்தில் தமிழகத்தில் ஏன் செயலில் இருந்தது. இந்தக் காலத்தில், தமிழகத்தில் ஏன் இல்லை என்றால் - அந்தக் காலத்தில் சாதியிருந்ததில்லை இந்தக் காலத்தில் சாதி இருக்கிறது. அதனால் ஒருத்தி ஒருவனையோ ஒருவன் ஒருத்தியையோ அண்ட முடியாமல் இருக்கிறது. அண்டிவிட்டால் சாதியைப் பார்க்காமல் ஒருவனுக்குள்ள தகுதியை - ஒருத்திக்குள்ள தகுதியைக் கொண்டே தம்மில் கலப்பு ஏற்பட்டுவிட்டால் அவர்கள் என்னென்ன தொல்லைக்கு உட்படவேண்டும் என்பதை நாம் கண்டு கொள்கின்றோம். அதற்காகவே சாதியை ஒழிக்க வேண்டும் என்பதை நாம் கண்டு கொள்கின்றோம். அதற்காகவே சாதியை ஒழிக்கவேண்டும் என்றும் பாடுபடுகின்றோம். சோலையிற்காணுதல், இப்போது சோலை இல்லாதலால் ஒத்துவராது என்று கேட்பது சரியா? சோலை இக்காலத்தில் இல்லாவிட்டால் சாலையில்காணட்டும். சாலையில்லாவிட்டால் மூளையில் ஆகட்டும். மூளையும் இல்லாவிட்டால் மாலையில் காலையில் போகும் வேளையின் நடுவில் காணட்டுமே சாதி இல்லாத மேல் நாடுகளில் நாம் பார்க்கவில்லையா!  கேட்டல்: ஒருத்திக்கு ஒருவன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் தமிழிலக்கியத்திலிருந்தே ஏற்பட்டதென்று சொல்லப்படுகின்றது. தமிழகத்தில் ஒருத்திக்குப் பல ஆடவர் என்ற முறை சிற்சில இடங்களில் காணப்படுகின்றதே அதற்கென்ன சொல்லுகின்றீர்? ஒருவனுக்கு ஒருத்தி என்பது எப்படி கைவிடப்பட்டதோ அதுபோலவே ஒருத்திக்கு ஒருவன் என்ற முறையும் கைவிடப் படவேண்டுமல்லவா? கிளத்தல்: நாலு கோடித் தமிழர்களில் நாற்பது குடும்பம் ஒருத்திக்குப் பல ஆடவர் என்ற திட்டத்தை மேற்கொண்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம். தமிழர் உருப்பட வேண்டும் என்ற நல்லெண்ணமிருப்பவர்கள் அந்தத் தவறான நிலையைத் திருத்தப் பாடுபடுவது சரியாது அல்லது எல்லாத் தமிழ் மகளிரையும் குச்சுக்காரிகளாக்கப் பாடுபடுவது சரியா? ஒருவன் ஒருத்தியை மட்டும் நெருங்கவேண்டும் என்று எண்ணாமல் பல பெண்களை நாடுகின்றான் என்றால் அது திருத்தப்படவேண்டிய ஒழுக்கக்கேடு. மகளிடத்தில் உள்ள கற்பொழுக்கத்தைக் கெடுத்துத் தலைமுழுகவா எடுத்துக் காட்டாக்கிக் கொள்வது. - குயில், கிழமை இதழ், 23. 2. 1960  கேட்டல்: ஒருத்திக்கு ஓர் ஆடவன் என்பதற்குத் தமிழில் இலக்கியம் உண்டா? கிளத்தல்: ஒருத்திக்குப் பல ஆடவர்களை ஆதரிக்கும் ஆரியர் இலக்கியத்திற்கே மதிப்புக் கொடுத்து வரும் தீயர்கள் நிறைந்த இந்தத் தமிழகத்தில் இந்தக் கேள்வியை நீ கேட்டதில் வியப் பொன்றுமில்லை. ஆயினும் இப்படிப்பட்ட அரிய கேள்வி கேட்ட உன்னை முதலில் ஒரு கேள்வி கேட்க எண்ணுகின்றேன். நீ அதற்காக வருந்தக்கூடாது. உன் மனைவிக்கு நீ இருக்க, மற்றொரு கணவனைச் சேர்க்கும் எண்ணம் உனக்கு உண்டா? அல்லது நீ இருக்க உன் மனைவி மற்றொருவனைக் கணவ னாக்கிக் கொண்டதுண்டா? கிளத்தல்: உன் முயற்சியை நான் குறை கூறவில்லை. ஏனெனில், நான் உன் நிலைமையை நீ எவர்கள் காலை நக்குகின்றாயோ, அவர்களின் இலக்கியத்தின் வண்டவாளத்தை உலகு அறியச் செய்து வருவதையே பெரும்பணியாக கொண்டுள்ளேன். இந்த நிலையில் நீ என் இலக்கியத்தில் வண்டவாளம் கண்டு அதை உலகறியச் செய்ய உனக்கு உரிமை உண்டு. அல்லவா? துரோபதை ஒரு கற்புள்ளவள் என்கின்றது ஆரியர் இலக்கியம். அதற்குக் காரணமும் கூறுகின்றது. என்னவெனில் அவள் ஐந்து பேரை மணந்தாள்; போதாக்குறைக்கு ஒன்று ஏற்பட்டது அவளுக்கு! கர்ணனையும் புணர மாட்டேனா என்றும் எண்ணினாள். இது இலக்கியத்தோடு - ஏட்டோடு நின்றுவிடவில்லை. இன்றைக்கும் நடைமுறையில் உண்டு, ஒருத்தியைப் பலர் மனைவியாகக் கொள்வது! எங்கே உண்டு, வடநாட்டில் ஆரியரிடம். இந்த குச்சுக்காரி நடத்தையையும் வைத்துப் பேரிலக்கியம் செய்துள்ளார்கள் ஆரியர்கள். நானும் அதை உலகறிய எடுத்துக் காட்டி வருகின்றேன். இல்லையா? அதுபோகட்டும்! தமிழிலக்கியத்தில் ஒருத்தி பல ஆடவரைக் கணவன் மாராகக் கொள்ளும்படி இல்லை, இல்லை, இல்லை. உன்போல் இப்படிக் கேட்ட வடிகட்டிய முட்டாள்கள் ஒருத்தன் தமிழகத்தில் உண்டா என்று கேட்டால் உண்டு உண்டு என்று நான் சொல்லக்கூடும். ஏனெனில் இதோ நீ கேட்டாய் அல்லவா? உன் கேள்வியின் முட்டாள்தனத்தை நீ சற்றே எண்ணிப்பார்! வாயால்தான் சோறு உண்ண வேண்டும் என்பதற்குத் தமிழில் இலக்கியம் உண்டா என்று கேட்டால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இரண்டு கையும் இரண்டு கால்களும் இருக்கை யில் குழந்தைபோல், ஆடுமாடுகள்போல் நடக்காமல் இரண்டு கால்களால் மட்டும்தான் நடக்கவேண்டும் என்பதற்குத் தமிழில் இலக்கியம் எங்கே என்றால் உன் மூளையை எந்த மருத்துவப் புலவரிடம் காட்டுவது? தமிழிலக்கியம் மிகத் தொன்மையானது. அது தோன்றிய நாளிலிருந்து இன்றுவரைக்கும் இனிமேலும் ஒருத்திக்குப் பல மாப்பிள்ளை இருக்கலாம் என்று கூறியதேயில்லை; கூறப் போவதுமில்லை. எங்கேயோ தமிழகத்தில் ஒருத்திக்குப் பல ஆடவர் இருக்கிறார்கள் என்றால் அது, ஒட்டுவாரொட்டி சாதியாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதோர் நோய்கூடப் பலரிடம் காணப்பட வில்லையா? திருத்தப்பட வேண்டும். திருத்திக் கொண்டுதான் வருகின்றோம். இன்னும் கேள்! இலக்கியம் செய்தருளும் தமிழ்ச் சான்றோர் ஒருத்தி ஒருவனைத்தான் மணக்க வேண்டும் என்பதற்கும் இலக்கியம் செய்தார்களானால், அவ்விலக்கியம் தோன்று வதற்கு முன்னே ஒருத்திக்குப் பல ஆடவர்கள் இருந்தார்கள் என்றல்லவா முடியும்? நேற்றிரவு உன் மனைவி உன்னிடமே படுத்திருந்தாள் என்று ஒரு பலகையில் எழுதி உன் வீட்டின் முன் தொங்கவிட நீ ஒப்புவாயா? அப்படி எழுதினால் என்ன பொருள் ஏற்படும்? இதற்கு முன் உன் மனைவி உன்னிடம் படுத்திருக்கவில்லை என்றல்லவா பொருளா கும்! உன் மனைவி அப்படிப்பட்டவள் அல்லவே, கற்புடையவள் ஆயிற்றே. அதுபோகட்டும். ஒருத்திக்கு ஒருவன் என்பது தமிழ்நாட்டில் என்றும் இருப்பது. அது தெரிந்ததுதான். ஆனால் ஒருத்திக்கு ஒருத்தன் என்பதில் உள்ள சிறப்புப் பற்றித் தமிழில் சொல்லப் பட்டிருக்கிறதா என்றாவது நீ கேட்டிருந்தாலும் அது ஒரு கேள்வி என்றாவது மதிக்கப் பட்டிருக்கும். கேட்டல்: அப்படித்தான் கேட்டேன். அதற்குத்தான் விடை சொல்லுக. கிளத்தல்: திருமகன் அருளப் பெற்றுத் திருநிலத்து உறையும் மாந்தர் ஒருவனுக்கு ஒருத்தி போல உளம் மகிழ்ந்து ஒளியின் வைகிப் பருவிரு பகையும் நோயும் பசியும்கெட் டொழிய இப்பால் பெருவிறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசலுற் றாம். என்பது சிந்தாமணி 2377ம் செய்யுள், இச்செய்யுளில், ஒருவனுக்கு மட்டும் ஒருத்தி என்று வாழும் வாழ்க்கை உளமகிழ்ச்சி தருவது என்ற கருத்து காண்க. இது ஒருத்தி ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பலருக்கு என்று வாழும் ஆரியர் வாழ்க்கை துன்பம் தருவது என்று ஆசிரியர் விளக்கவே இவ்வாறு கூறினார். இன்னொன்று: ஒருத்தி ஒருவனுக்கு மட்டும் என்ற நிலை மகிழ்ச்சிக் குரியது என்று கூறும் செய்யுள் தமிழிலக்கியம் தவிர மற்ற எதிலாவது காட்ட முடியுமா? உன்னை மட்டும் இந்தக் கேள்வி கேட்கவில்லை. உனக்குத் தெரிந்த இலக்கிய ஆய்வாளர் எவராவது இருந்தாலும் அவரையும் கேட்கிறேன். நிற்க, இனி இந்தத் துறையில் நீ தலையிடாதே. கேட்டல்: என் மீது நீர் வருந்துகிறீர். நான் கேட்டது பிழைதான்! ஆனால் பெரியார் இப்படிக் கேட்கிறாரே? கிளத்தல்: அறிவு என்பது உன்னிடம் கடுகளவும் இல்லை. பெரியார் கூறியதை நீ உன் முட்டாள் தனத்துக்குத் தகுந்த வகையில் பொருள்படுத்திக் கொண்டாய். பெரியார் என்ன சொன்னார்? அவர் கூறியதின் பொருள் என்ன? - கேள்! ஒருத்திக்குப் பல ஆடவர் என்ற தீய ஒழுக்கம் இந்நாட்டில் குடி புகுந்திருப்பதை அவர் எடுத்துக்காட்டுவதன் மூலமாக ஆரியர் கொள்கையின் விளம்பர ஆற்றலையும், தமிழர்களின் கண்மூடித் தனத்தையும் விளக்கினார். இன்றல்ல! ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளாக: ஓரிடத்தில் மட்டுமல்ல; பட்டி தொட்டிகளில் எல்லாம். இது ஒன்றைமட்டுமல்ல! சாதி புகுந்தது முதலிய ஆயிரத்தை! தோழனே, பெரியாரின் எதிரிகளின் பேச்சை ஒரு பொருளாக மதிக்கும் தீயவழக்கம் உன்னிடம் படிந்திருக்கிறது. ஒழித்துவிடு; இல்லாவிட்டால் ஒழிந்துவிடு. - குயில், கிழமை இதழ், 15. 3. 1960  20 ஏழ்மை, இரவல், குறைபாடு. கேட்டல்: ஏழ்மை என்றால் என்ன? கிளத்தல்: இழப்பு, இழந்த தன்மை என்று பொருள். கேட்டல்: இழ என்பது ஏழ் என்று ஆகுமா? கிளத்தல்: முதலில் உள்ள இகரம் ஏகாரம் ஆனது எப்படி என்றாய். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத் தினுள்ளே இருப்பளிங்கு வாரா திடர். என்ற பாட்டின் இயை என்பது ஏய என்று ஆனது நோக்குக. மிசைதல் என்பது மேய்தல் என்பதும், வியர்த்தல் என்பதே வேர்த்தல் என்பதும் பிறவும் காண்க. கேட்டல்: மகிழ்ச்சி இனி, இழந்தவன் ஏழை எனின் எதை இழந்தவன்? கிளத்தல்: அறிவை இழந்தவன். கேட்டல்: பணத்தை இழந்தவன் என்றோ, நுகர்ச்சியை இழந்தவன் என்றோ, முயற்சியை இழந்தவன் என்றோ சொல்லுதல் கூடாதோ? கிளத்தல்: நீ சொன்ன வெற்றிக்கெல்லாம் அடிப்படை அறிவே யாதலால் அறிவை இழந்தவன் என்று சொல்லுதல் வேண்டும். கேட்டல்: அறிவை இழந்தவன் அடையும் நிலை என்ன? கிளத்தல்: அவன் இரவல் கேட்பவன். அதாவது, இரப்போன் என்ற நிலையை அடைய நேரும். கேட்டல்: இன்னும் ஏழ்மைக்குப் பெயர்? கிளத்தல்: ஏழ்மை, இரவல், குறைபாடு அனைத்தும் ஏறத்தாழ ஒரே பொருளுடையவை. கேட்டல்: அறியாமை நீங்கிவிட்டால் இரவல், ஏழ்மை, குறைபாடு நீங்கி விடுமல்லவா? கிளத்தல்: ஆம். கேட்டல்: இரத்தல், ஏழ்மை, குறைபாடு நீங்கவே நீங்காது என்று நீங்கள் சொன்னதுண்டா? கிளத்தல்: ஆம்! ஆனால் நான் சொன்னது மணச்ச நல்லூருக்கன்று. மேலும் நான் சொன்னது ஏழ்மை, இரப்பு, குறைபாடு அடியோடு உலகினின்றே தீர்த்துவிட முடியாது. தீர்ந்துவிடாது என்று இன்றும் சொல்லுகின்றேன். படித்தவர்கள் என்று தம்மை எண்ணிக் கொண்டிருக்கும் முட்டாள்கள் இத்தமிழ் நாட்டில் மிகப்பலர் இன்னும் இருப்பதால் இனியும் சொல்லித்தான் ஆகவேண்டும். கேட்டல்: நீங்கள் சொல்வதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்க முடியுமா? கிளத்தல்: தனித்தோர் உயர்நிலைப் பள்ளி ஒன்று உடைமையாலும், உடையாலும், உணவு உறையுள் வகையாலும் அங்குள்ள மாணவர் நிகர். அம்மாணவர்கள் ஆண்டிறுதித் தேர்வுக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள். இரிசப்பன் இறகு (பேனா) கீழே விழுந்து உடைந்துவிட்டது. இரவல் இறகுக்கு கையேந்து கின்றான் இரிசப்பன். இந்தா என்று நீட்டுகின்றான் எட்டியப்பன். இரவல் ஈந்ததால் ஈத்துவக்கும் இன்பத்தை அடைந்தான் எட்டியப்பன். அறிவுலகம் பாடுகின்றது எட்டியப்பனை. இதைத்தான் திருவள்ளுவர். இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. என்று பாடினார். இந்தச் செய்யுளால் திருவள்ளுவர் சொல்லும் இரப்பு, மணச்சநல்லூர்ச் செய்தியன்று என்பதும் அது அடங்கல் உலகு பற்றியது என்பதும் பெறப்பட்டன. கேட்டல்: ஏழ்மை, இரத்தல், குறைபாடு, போகாது என்று நீங்கள் மொட்டையாய்ச் சொன்னதில்லை. இவ்வுலக முழுதுமிருந்து ஏழ்மை, இரவல், குறைபாடு முழுதும் போய்விடாது என்றீர்கள். மணச்சநல்லூரிலிருந்து போகச் செய்யலாம் அல்லவா? கிளத்தல்: செய்யலாம்! கேட்டல்: முழுதுலகினின்றும் அதைப் போக்கிவிட முடியாதென்று, அதை முழுதும் போக்கிவிட முடியா தென்றும் கூறினீர்கள். முழுதும் என்றால் என்ன? கிளத்தல்: ஏழ்மை, இரவல், குறைபாடு இவற்றின் முதன்மை கெடச் செய்வதைத்தான் அப்படிச் சொன்னேன். முதன்மை கெடுவது என்றால் ஏழ்மை, இரவல், குறைபாடு இவற்றின் வேர்கெடும் படிச் செய்தல். அதாவது இவற்றிற்கு ஆதாரமானது எதுவோ அதுவு மில்லாமற் செய்தல், ஏழ்மை, இரவல், குறைபாடு இவற்றின் ஆதாரம் அறியாமை, அறியாமை யோடு ஏழ்மை, இரவல், குறைபாடுகளைத் தீர்ப்பது. கேட்டல்: எனவே அறியாமை இவ்வுலகில் இல்லாமல் செய்வதும் அதனால் ஏற்படும் ஏழ்மை, இரவல், குறைபாடுகளைத் தீர்ப்பதும் (உலகில் எங்குமில்லாமல்) முடியாது என்கிறீர்களா? கிளத்தல்: ஆம்; அறியாமையை உலகில் இல்லாமல் செய்து விடுவேன் என்று ஒருவன் சொல்வதே பிழை. அறியாமை ஒரே இடத்தில் உலகில் ஒரேகாலத்திற்குள் கட்டுப்பட்டதா? நாளைக்குப் பிறக்கும் பையனின் அறியாமையை இன்று நீக்கி விடுவேன் - நீக்கிவிட்டேன் என்று சொல்வது எப்படி முடியும்? மறைமலை யடிகளார் காட்டும் பழங்கால அறிவுக்கு ஒத்ததான சைவமும் அறிவும் அறியாமையும் என்றும் உள்ளது என்று கூறுவதும் இங்கு அறிதல் வேண்டும். இந்த உலகை, உலகின் நடை முறையை, தோற்றத்தைக் காண்பவன் அறியாமையாற் காணு கின்றான். அறிவாற் காணுங்கால் ஒரு பொருளைத் தான் காண முடியும். அறியாமையைத் தனிமனிதனிடத் தினின்று நீக்கலாம். அடியோடு நீக்குவதெனில் முடியாது என்பது தான் அத்து வைதம் என்பதன் கொள்கை என்பதும் இங்கு அறியத் தக்கது. கேட்டல்: உலகில் உள்ள அறியாமையாகிய வேரையும், ஏழ்மை, இரவல், குறைபாடு என்ற அதன் மரத்தையும் என் உருசிய நாட்டினின்று நீக்கிவிட்டேன். மற்ற நாடுகளினின்றும் நீக்கி விடவும் முயலு கின்றேன் என்று உருசியன் சொல்லுவதில் உண்மை இல்லையா? கிளத்தல்: அப்படிச் சொல்லும் உருசியன் கரடி விடுகிறான் என்று நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். கேட்டல்: இரப்பாரை இல்லாத என்ற குறளை உருசியன் பார்த்த துண்டா? அதை அவன் ஏற்றுக் கொண்டானா? கிளத்தல்: கரடிவிட்டுக் காரியத்தைச் செப்பனிடுகின்றவன் அதை ஏற்றுக் கொள்ளமாட்டான். அவன் ஏற்றுக்கொள்வானா என்று எதிர்பார்த்துத் திருவள்ளுவர் அதைச் சொல்லவில்லை. உருசியனுக்கு ஏமாறாதீர், உலகத்தீரே என்று எச்சரிக்கும் முறையில் வள்ளுவர் இக்குறளைச் சொன்னார். கேட்டல்: அக்குறளை உருசியன் மறுத்ததுண்டா? கிளத்தல்: ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக உருசியன் இதற்கும் இதைப் போன்ற சிலபல குறட்பாக்களுக்கும் மறுப்புத் தேடுகின்றான். தமிழகத்திலிருந்து அழைக்கப்படும் தமிழறிஞர் களிடமிருந்தே திருக்குறளை உயிரற்றுப் போகும்படி செய்து விட வேண்டும் என்பதும் அவன் நோக்கங்களில் ஒன்றாகும். அண்மையில் தமிழகத்தினின்று அங்குச் சென்ற தமிழறிஞர் களிடம் அவன் முதலில் கேட்டது என்ன? - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் செய்த திருக்குறளில் என்ன இருக்க முடியும் என்றானாம். அதுபற்றி ஆராயாத இளைஞர்கள் ஆம் என்னாமலும் இல்லை என்னாமலும் திரும்பினார்கள் என்று கேள்வி. பல குறட்பாக்கள் உருசியனுக்குத் தலைவேதனை கொடுப்பவை. அதில் மற்றொன்று. இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார் சிலர்! பலர்நோவா தவர்! * இதன் பொருள்: ஏழை, இரப்பவர், குறைபாடுடையவர் உலகில் பெரும் பான்மையோர், மற்றவர் சிறுபான்மையோர். இதற்குக் காரணம் நோற்பார் சிலர்! நோவாதவர் பலர் என்பது தான். கேட்டல்: நோற்பார் எவர்? கிளத்தல்: தம் நலம் நீக்கிப் பிறர் நலம் கருதித் தொண்டு செய்யும் சான்றோர் நோற்பார். இந்த நோற்பார் தம் போன்ற நோற்பாரைக் காத்தலும், நோற்பாரை ஆக்கலுமே தம் மக்களிடம் படிந்து கிடக்கும் ஏழ்மை, இரவல் குறைபாடுகளை ஒருவாறு நீக்கும் பொதுவுடைமைக்காரர் எனப்படுவர். அதை விட்டு அயல்நாடு சென்று பதுங்கி வாழ்ந்து வந்த ஒரு நோற்பாரைத் தேடி அவர் மண்டையை உடைத்துவிட்டு வருக என்று இரும்புலக்கையை எடுத்துக் கொடுத்துப் பயணச் செலவுக்குப் பணமும் கொடுத் தனுப்புகின்றவனா பொது வுடை மைக்காரன்? அவனா குறைபாடு இல்லாதவன்? அவனா மற்ற மக்களோடு சரிநிகர் என்று எண்ணத்தக்கவன். அவன் வாழும் நாட்டிலா ஏழ்மையும், இரப்பும், குறைபாடும் அறவே நீங்கி விட்டன? கரடி! கேட்டல்: குறட்பாவின் பொருள் இதுதானா? கிளத்தல்: உருசியனுக்கு இடையூறாயிருக்கும் குறட்பாக்களில் இதுவும் ஒன்று என்றேன். அதே நேரத்தில் உருசியன் சொல்லும் பொது வுடைமைக் கொள்கை விரும்பத் தக்கதன்று என்பதை எடுத்துக் காட்ட எண்ணினேன். திருவள்ளுவர் காணும் பொதுவுடைமைக் கொள்கையே சிறந்தது என்று எடுத்துக்காட்ட எண்ணினேன். பெண்கள் காமம் கழிக்கும் எச்சிற் தொட்டிகள் என்பது உருசியப் பொதுவுடைமை. மணம் தேவையில்லை என்பது உருசியப் பொதுவுடைமை. நாம் பொதுவுடையை ஆதரித்தோம் என்றால் உருசியர் கண்ட பொதுவுடைமையை அன்று; திருவள்ளுவர் உள்ளத்தில் உருவாகிய பொதுவுடைமையையே. கேட்டல்: உங்கள் கட்டுரைக்கு மறுப்பு எழுதினார்களே, அதில் இரப்பாரை ïayhj* என்று நீங்கள் எடுத்துக் காட்டிய குறளுக்கு என்ன மறுப்பு எழுதினார்கள்? கிளத்தல்: உருசியன் மறுப்பு காணுகின்றான். அவன் ஒட்ட சிரைத்தப்பின், மறுப்பு எழுதுகின்ற குருசாமிக்கு அனுப்புவான். இதைக் கிண்ணத்தில் வாரிக்கொண்டு கிளம்ப இருக்கிறார். என் கட்டுரைக்கு மறுப்பு எழுதினார் குருசாமி. என்னை ஒழித்துக் கட்டும் வேலையைத் தொடர்ந்து நடத்தினார். பெரியாரை ஒருவாறு ஒழித்துக் கட்டிவிட்ட தாக அவர் எண்ணியதால், என்னை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று குருசாமி எண்ணுவ தற்குக் காரணங்கள் பல உண்டு. இவற்றில் சிலவற்றை முன்னே கூறியுள்ளேன். இப்போது ஒன்று கூற விரும்பு கிறேன். உருசியப் பொதுவுடைமை குருசாமிக்கும் பிடிக்கும், குருசாமி, குஞ்சித பாதம், சாமி சிதம்பரனார், சிவகாமி, பொன்னம்பலனார் இவர்கள் எல்லோரும் பொதுவுடைமையைச் செயலிற்காட்டியவர்கள், தந்நலமற்றவர்கள். இப்போது நான் உருசியப் பொது வுடைமையைத் திருவள்ளுவர் கொள்கைக்கு மாறானது என்று கூறியது அவர்கட்கு பிடிக்காது. அதுமட்டுமன்று; இனியும் நான் சொல்லக்கூடும் என்று முற்கூட்டியே தெரிந்து கொண்டி ருப்பார்கள். அதனால் என்னை ஒழித்துக்கட்ட வேண்டிய பணியைத் தொடர்ந்து செய்வார்கள். விடமாட்டார்கள் என்னை. கேட்டல்: விடமாட்டார்கள் என்றுதான் நானும் எண்ணுகின்றேன். இன்றுவரைக்கும் குருசாமி விட்டெறிந்த பாராங் கற்கள் எத்தனை? அவைகள் உங்களைப் படுத்தியபாடு என்ன? கிளத்தல்: மூன்று காலாடிப் பசங்கள் குருசாமிக்குப் பரிந்துகொண்டு கையொப்பமிட்டும் இடாமலும் அஞ்சல் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சொல்லுகிறார். குருசாமியால் நீர் படப் போகும் பாட்டை இப்போது அறியமாட்டீர் என்று. அவருக்கு நான் சொல்ல விரும்பும் விடை இதுதான். நாளைக்கு விழ இருக்கும் என் நரைத்த மயிரைக்கூட இன்றைக்கே அசைத்துவிட முடியாது. நான் எவரையும் தனி முறையில் குறைத்துப் பேசியதில்லை - பேசியவரை விட்டு வைத்ததும் இல்லை. அவர்கட்கு நான் சொல்லும் உண்மையான விடையால் அவர்கள் திட்டுவார்கள் என்றும் எண்ணியதில்லை. குன்றக்குடியாரும், குருசாமியும் பேசிய பேச்சும், எழுதிய எழுத்தும், இரப்பாரை இல்லாத என்பது முதலிய வள்ளுவர் குறட்பாக்களை எதிர்ப்பதுபோல, அல்லது மறந்ததுபோல இருந்ததால் அவர்கட்கு திருவள்ளுவரை நினைவூட்டி மரியாதையாக எழுதினேன் கட்டுரை. குருசாமி அதற்கு மறுப்புரையா எழுதினார்? என்னை தனிப்பட்ட முறையில் தாக்கினார். அவர் அப்படிச் செய்ததற்கு, அவரைக் கேள்வி கேட்க எண்ணாத கயவர்கள், அவருக்குப் பரிந்துகொண்டு என்னைக் கேட்க வந்தார்களென்றால் இந்தச் சலசலப்பிற்கு நடுங்கிவிடுவதா? இதற்கெல்லாம் நடுங்கலாகாது, தமிழைப் பற்றி தொண்டு செய்ய முன்வந்தவர் என்பதல்லவா என் கொள்கை. - குயில், கிழமை இதழ், 12. 4. 1960 21 கேட்டல்: தமிழர்க்கெனத் திருமணத் திட்டம் உண்டா? கிளத்தல்: உண்டு! மேலும் அது உலகத்திலேயே சிறந்தது; முதன்மை யானது; கால மாறுதலால் அசைக்க முடியாதது. கேட்டல்: அது பற்றிக் கேட்கலாமா? கிளத்தல்: நீர் தமிழ் படித்திருக்கிறீரா? கேட்டல்: தமிழ் படித்திருப்பதால்தான் கேட்க வந்தேன். கிளத்தல்: மகிழ்ச்சி! கேளும்! கேட்டல்: தொல்காப்பியம் கூறும் திருமண முறையானது தமிழர் திருமண முறையா? கிளத்தல்: இடைச்செருகல் நீங்கலாக. கேட்டல்: சிலப்பதிகாரத்திற் காணப்படும் திருமண முறை பற்றி என்ன சொல்லுகின்றீர்? கிளத்தல்: இளங்கோவடிகள், தொல்காப்பியத்தில் புகுந்த இடைச் செருகலுக்கும், தமிழகத்தில் புகுந்த மூடப்பழக்க வழக்கத் திற்கும் செய்யுள் செய்து வைத்தார். கேட்டல்: எனவே, தொல்காப்பியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் அப்பாலான தூய திருமண முறை, திருமணத்திட்டம் ஒன்று தமிழிலக்கியத்தில் இருந்தது என்கின்றீரா? கிளத்தல்: இருந்தது; இருக்கிறது என்கின்றேன். கேட்டல்: யாரும் அறியாத இடத்தில் மறைந்து கொண்டிருக்கிறது என்கின்றீரா? கிளத்தல்: எல்லாரும் அறிந்து கொள்ளக்கூடிய இடத்தில் வெளிப்படை யாக இருக்கின்றது என்கின்றேன். கேட்டல்: நான் படிக்கவில்லையே! கிளத்தல்: அதுதான் காரணம்! கேட்டல்: நான் அதைப் படிக்க வேண்டுமானால் நீவிர் அந்த நூலைக் காட்ட வேண்டும். கிளத்தல்: அதோ உம் கக்கத்தில் கேட்டல்: இது திருக்குறள்! இதிலா? கிளத்தல்: திருமணம் என்பது இன்னது, திருமணமுறை இன்னது, என்பவை கலப்பில்லாத முறையில் திருக்குறளில் காட்டப் பட்டிருக்கின்றது. கேட்டல்: விளக்கமாகவா? கிளத்தல்: ஆம்; தமிழால் கேட்டல்: இனிதாகவா? கிளத்தல்: செய்யுளால்! திருவள்ளுவருக்கே உரிய இணையற்ற நடையால்! கேட்டல்: அப்படி ஒன்றும் காணப்படவில்லையே? கிளத்தல்: உமக்குக் காணப்படாததில் வியப்பொன்றும் இல்லை. ஏன் எனில், நீர் நாள்தோறும் திருவள்ளுவரின் திருமணத் திட்டம் பற்றிப் பட்டி தொட்டியெங்கும் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றீர்! இல்லையா? கேட்டல்: நீர் சொல்வது விளங்கவில்லை. கிளத்தல்: ஓர் எடுத்துக்காட்டு; நீர் இன்று அமைந்துள்ள நிலைமைக்கு மூவர் காரணம்; அவர் உம் தந்தை, தாய், ஆசிரியர். உம் வாழ்க்கை முறை இந்த மூவர் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். உம்முடைய ஒவ்வொரு அரிய செயலுக்கும் இந்த மூவர்தான் காரணம். ஆயினும் இந்த மூவரிடத்திலும் ஒரு புதுமையும் உமக்குத் தோன்றாது. உம் வாழ்க்கை நிகழ்ச்சியிலே என் தந்தைதான் நான் தோன்றக் காரணமானவர்; என் தாய் தான் நான் தோன்றக் காரணமானவர். என் ஆசிரியர் என் புகழுக்குக் காரணமானவர் என்று என்றைக்காவது யாரிடத் திலாவது நீர் சொல்லுவதுண்டா? அந்த உண்மையான நினைவு உமக்குப் புதுமையற்றது! மிகச் சுருக்கமானது! இல்லையா? அதுபோலத் தான் உன்னால் விரிவாகப் பேசப்படும் தமிழர் திருமணத் திட்டமானது திருவள்ளுவரால் சொல்லப்பட்ட சுருக்கம்! புதுமையில்லாத செய்தி! கேட்டல்: திருக்குறளில் திருவள்ளுவர் தந்த திருமணத் திட்டம் என்ன? கிளத்தல்: ஒருவனும் ஒருத்தியும் மறைவாக ஒன்றுபடுகின்றார்கள். வெளிப்படையாக வாழ்க்கை நடத்துகின்றார்கள். பெண் ணிருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள மாப்பிள்ளையின் தந்தை பார்ப்பன னிடத்தில் போவது பற்றியோ, பெட்டி வாணம் கொளுத்துவது பற்றியோ, அம்மி சாலுங்கரகம் பற்றியோ, தீ வளர்த்துவது பற்றியோ பார்ப்பனனுக்குச் செருப்பும் பருப்பும் கட்டணமும் பொட்டணமும் காலில் வைத்து விழுவது பற்றியோ பேசவேயில்லை திருவள்ளுவர். அவர் கூறியுள்ளது சுருக்க மல்ல: என்றும் மாறு படாத உண்மைத் திட்டமானதாதலால். கேட்டல்: அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழி நான் என்றாள் ஆண்டாளம்மை. இதனால் திருமணத் திட்டத்தில் அம்மியைச் சேர்த்துக் காட்டினார் ஆண்டாள் அம்மை. திருவள்ளுவர் அதுபோல் ஏதாவது சொல்ல வேண்டாமா? கிளத்தல்: வீட்டில் குப்பையை நீக்கச் சொன்ன வள்ளுவர் வேறு குப்பையைக் கொண்டுவந்து போடச் சொல்லாததற்கு நீர் வருந்தலாமா? கேட்டல்: வடவர் நூற்களில் எவ்வளவு விரிவாகச் சொல்லியிருக்கிறது, அப்படிச் சொன்னாலன்றோ? கிளத்தல்: இல்லாததை உண்டு என்று எழுதப் பத்துப் பதினைந்து நூல்கள்தான் வேண்டும். உண்டு என்பதை எடுத்துக்காட்ட ஒன்றே முக்காலடித் திருக்குறட் காமத்துப்பால் போதாதா? அது கிடக்கட்டும். திருவள்ளுவர் இன்னும் என்ன சொல்லவேண்டும்! அவர் சொல்லாதவைகளைத் தானே இப்போது நாம் நீக்கவேண்டும்! நீக்க வேண்டும்! என்று கூறி வருகிறோம். கேட்டல்: சரி! பெரியார் தமிழில் திருமணம் பற்றிய திட்டம் ஒன்று மில்லை என்று கூறுகிறாரே? கிளத்தல்: திருமண முறையில் கோடிக்கணக்கான குப்பைகள், மூடச் செய்கைகள், முட்டாள்தனமான செலவுகள், நடைமுறைகள், மானக் கேடான செயல்கள் சேர்ந்துள்ளன; இவைகளை யெல்லாம் எடுத்துக் காட்டி ஒதுக்கச் சொல்லுகின்றவர் பெரியார் ஒருவர் தாம்! இவர் பேசுகின்ற முறையில் திருமணம் பற்றித் தமிழில் ஒரே இடமாக எங்கே விளக்கப்பட்டிருக்கின்றது? - குயில், கிழமை இதழ், 14.06.1960 22 மணவாள ராமானுசர்: கேட்டல்: சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் இல்லை. யாரைப் போடலாம் என்று எண்ணுகிறது சென்னையரசு. நீங்கள் எண்ணுவது என்ன? கிளத்தல்: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராய் இருந்து அருந்தொண்டு செய்தவர்; இப்போதும் பல்கலைக் கழகம் ஒன்றின் துணை வேந்தராய் இருப்பவர் திரு. மணவாள ராமனுசர்தாம் துணைவேந்தராய் இருக்க எல்லாத் தகுதியும் வாய்ந்தவர். அவரையே சென்னைக்கு ஏற்பாடு செய்தால் நலமாய் இருக்கும். வேறு எவரைப் போட்டாலும் இன்றைய நிலையில் சிக்கலே. கயிலாயம் அரோகரா! கேட்டல்: சீனாக்காரன் மேலும் கடவுள் ஒருவர் இல்லவேயில்லை என்றும் ஒரு கம்யூனிடு கயிலாயத்தை விழுங்கி விட்டானாம். சிவபிரான் அங்கே இருப்பாரா? கிளத்தல்: சிவபிரான் என ஒருவர் இருந்திருந்தால் சீனாக்காரன் கயிலாயத்தைப் பிடித்திருக்கமாட்டான். இராவணனுக்கு நேர்ந்தது. கேட்டல்: அன்றைக்கு இராவணன் கயிலையைப் பேர்த்தான். சிவ பெருமான் சும்மாவிடவில்லை இராவணனை. கயிலையையே தன் பெயருக்குப் பட்டாவாக்கிக் கொண்ட சீனாக்காரனைச் சிவபெரு மான் விட்டுவிடுவாரா? கிளத்தல்: அன்றைய கதை அடியோடு பொய்! கயிலையைப் பட்டா வாக்கிக் கொண்ட சீனாக்காரன் சிவபெருமானை என்ன செய்து விட்டான்? ஏன் ஒன்றும் செய்யவில்லை? இருந்தால்தானே! தமிழ் படி! கேட்டல்: தமிழை நன்கு கற்றால் உள்ளத்தூய்மை உண்டாகும் என்று இராசாசி இயம்புகிறார். அவர் இதை உள்ளத்தூய்மையோடு கூறகிறாரா? கிளத்தல்: வடமொழியில் - வடமொழி இலக்கியங்களில் அந்த இலக்கியங் காட்டும் கருத்துக்களில் இத்தனை நாள் தடவிப் பார்த்திருப்பார். ஒழுக்கத்துக்கோ நேர்மைக்கோ அங்கு வழியில்லை. தமிழில் நுழைந்தார். தமிழ் நூற்களின் அருமை பெருமைகளை முரசறைகின்றார். ஆங்கிலம்: கேட்டல்: தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டிய இடத்திலெல்லாம் ஆங்கிலம் இருக்கட்டும் என்பதை அனைவரும் ஆதரிக்கின் றார்கள். நீங்கள் அவர்களைக் குறைத்துப் பேசுகின்றீர்களே? கிளத்தல்: தமிழ் புதுச்சொற்களையடையும் வரைக்கும் ஆங்கிலம் தமிழகத்தில் இருக்கட்டும் என்று கூறிவருகின்ற பெரியாரை நான் குறை கூறவில்லை. ஆங்கிலமே தமிழனுக்குத் தாய் மொழியாய் இருக்கட்டும் என்று கூறுகின்றவன் தமிழன் ஆகான் என்பது என் எண்ணம். இந்தி எதிர்ப்பு: கேட்டல்: தி.மு.க. இந்தியை எதிர்த்துப் போர்த் துவக்கம் செய்யப் போகின்றார்கள்; எப்படி முடியும்? கிளத்தல்: அது இந்தி எதிர்ப்பும் அல்ல. போருமல்ல; நடக்க இருப்பது சம்பத்தை எதிர்க்கும் ஆரவாரம்! - குயில், கிழமை இதழ், 26. 7. 1960 23 முதலமைச்சர் காமராசர்: கேட்டல்: முதலமைச்சர் காமராசரின் பிறந்தநாள் கொண்டாட்ட ஊர்வலம் நேற்று சென்னையில் நடந்தது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? கிளத்தல்: கண்ணீர்த் துளிகள் மக்கள் செல்வாக்கைக் காட்டிக் கொள்வதற்காக இந்தி எதிர்ப்பு, கறுப்புக்கொடி காட்டல் ஆகிய கிளர்ச்சி துவக்கினார்கள். காமராசர் பிறந்தநாள் கொண்டாட்ட ஊர்வலம் தி.மு.க. சலசலப்பை அப்படியே தூக்கிவாயிற் போட்டுக்கொண்டது. வன்சொல்: கேட்டல்: செய்தித்தாள் அலுவலகம் தாக்கப்பட்டது சரியா? கிளத்தல்: ஊர்வலத்தைத் திட்டியதைப் போலவே அதுவும் சரியில்லை. கள்ளநோட்டு: கே: கள்ளநோட்டு வழக்குப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கிளத்தல்: குற்றவாளிக்குப் பின்னால் அரசினரின் எதிர்க் கட்சியும் ஒளிந்து கொண்டிருக்கலாம். டாக்டர் சிதம்பரநாதனார்: கேட்டல்: சென்னை மேலவை உறுப்பினரும், தமிழ் ஆங்கில அகராதி ஆணைக்குழுவின் தலைவருமாகிய டாக்டர் சிதம்பரநாதஞ் செட்டியார் கீழ்நாட்டுக் கலைகள் பற்றி ஆகடு 4- தேதி உருசியாவுக்கு அனுப்பப்படுகிறார். என்ன பயன்? கிளத்தல்: தமிழ்க்கலை வடகலையிலிருந்து வந்தது என்று பிதற்றும் ஒருவன் இன்று உருசியாவுக்குப் போவதால் ஏற்படும் தீமையை டாக்டர் சிதம்பரநாதனார் தடுத்தது ஒன்று; தமிழ்க் கலைகள் காலங்கண்டவை என்பதை அவர் அங்கு விளக்குவது ஒன்று; ஆகிய இருவகைப் பயன்கள் ஏற்படும். மதம்: கேட்டல்: எகிப்து நாட்டில் உள்ள பகால் மதத்தைத் தடை செய்தார் நாசர். அவர்களின் சொத்தைப் பறிமுதல் செய்தார் நாசர்! இங்கு? கிளத்தல்: இந்த நாவலந் தீவின் உரிமையே மதக் கிறுக்கர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கேட்டல்: முதலமைச்சர் காமராசரும், அமைச்சர் சுப்பிரமணியமும் இராசேந்திரப் பிரசாத்திற்குக் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று கெஞ்சுகிறார்களா? கிளத்தல்: ஆமாம்; பிறகு மிஞ்சுவதற்காக. இராசாசி: கேட்டல்: இந்தியை எதிர்ப்பது என் சொந்தக் கருத்து. என் சுதந்திரக் கட்சியின் நோக்கமன்று என்றார் இராசாசி, எப்படி? கிளத்தல்: கொள்கை முழக்கம் என்பது பல கிளைகளை உடையது. அவற்றில் இது நரி ஊளை எனப்படும். இராசாசி: கேட்டல்: உரிமைத் தமிழ்நாடு பெறுவதை இராசாசி ஆதரிக்க வில்லையே? கிளத்தல்: ஆதரித்ததுமில்லை; ஆதரிக்கிறதுமில்லை; ஆதரிக்கப் போவது மில்லை. ஆகையால்தானே இராசாசிக்கு இந்தத் தொல்லை. சீனச் சிக்கல். கேட்டல்: சீனாக்காரன் ஏறிக்கொண்டே இருக்கிறானே! கிளத்தல்: அஞ்சவேண்டியதில்லை. நம் வீராதிவீரர் நேரு மனம் வைத்தால் இரண்டு நாட்களில் ஒரேதாள் ஒரே எழுது கோலால் சேதியை முடித்து விடக் கூடும். ஐயா, சீனாக்காரரே; இந்தியாவை உங்களிடம் முழுதும் காட்டிக்கொடுத்து விட்டேன் என்று எழுதிவிட்டால் அதன் பிறகும் அவன் ஏறுவதும் இறங்குவதுமான பேச்சுக்கே இடங்கிடையாதல்லவா? கேட்டல்: தமிழர்கட்கு வரலாறு கிடையாது என்பது பற்றி உங்கள் கருத்தென்ன? கிளத்தல்: வரலாறு உண்டு என்பது என் கருத்து. - குயில், கிழமை இதழ், 9.8.1960 24 ஈ.வி.கே. சம்பத்து கேட்டல்: ஈ.வி.கே. சம்பத்தின் நிலை என்ன? கிளத்தல்: இந்தியைத் தமிழ்நாட்டில் புகுத்தித் தமிழைத் தொலைத்து விட வேண்டும் என்னும் இராசேந்திரப் பிரசாத்துக்குக் கறுப்புக் கொடி காட்டும் நிலையை உண்டாக்கினவர் சம்பத்து. இது தி.மு.க. வுக்கும் சிறப்பாக அண்ணாத்துரைக்கும் பிடிக்காவிட்டாலும் கறுப்புக்கொடி காட்டத்தான்வேண்டும் என்று மேலுக்குச் சொல்லிவிட்டுப் பிறகு ஏதோ நொண்டிச் சாக்குக் காட்டிப் பின் வாங்கச் செய்துவிட்டார். இதில் அண்ணாத்துரை அரசுக்கு நல்ல பிள்ளை ஆகிவிட்டார். இதன் தொடர்பாக அரசினரையும் அவர் கண்டு பேசினார். இது மறைவான நிகழ்ச்சி. இன்று சம்பத்து மேல் வழக்கு வந்திருக்கிறது *eh£o‹ குற்றம் அமைச்சர்களையும் சாரும் என்று அவர் சொன்னாராம். குருசாமிக் குடுக்கை கேட்டல்: சில ஊர்களில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் ஊராட்சி மன்றத் தேர்தல்களிலும் நகராட்சி மன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு இருக்கின்றார்கள். அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கப் போகின்றேன் என்று வேலூரில் சா.குருசாமி சாக்குருவி யாகக் கத்தினாராம். குடுக்கை குடுகுடுக்கின்ற மாதிரிதான் இது. அறிவூட்டமுள்ள பேச்சன்று. தேர்தலில் நிற்கும் காங்கிரசு உறுப்பினரை ஆதரித்துப் பேசியவர்களில் குருசாமியும் ஓர் ஆள். அப்படிப் பேசியதைக் குருசாமி கூலிப்பறை என்று எண்ணியிருப்பதாய்த் தெரிகின்றது. அச்செயல் தேர்தலில் நிற்பதை ஆதரித்ததல்லவா? கிளத்தல்: அதற்காகத்தான் தி.க.தோழர் தேர்தலுக்கு நிற்பதாயின் சொல்லிவிட்டுச் செய்யுங்கள் என்றார் பெரியார். மூலையில் நகர்த்தி வைத்த குந்தாணிக் குருசாமி நகரப் போகின்றதாம். நடவடிக்கை எடுக்கப் போகின்றதாம். எந்தத் தேதி? எத்தனை மணிக்கு? ப. சீவானந்தம் கேட்டல்: சீவானந்தம் எப்படி? கிளத்தல்: சீவானந்தம் தம் கொள்கையைச் சிறிதும் விட்டுக் கொடுக்காதவர். அதுபற்றி அவரைப் புகழத்தான் வேண்டும். அவர் ஒரு காலத்தில் ஏதுங்கெட்டுத் திண்டிவனத்தில் ஒருவர் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தார். புகுந்த வீட்டில் ஒரு மகள் ஏமாந்தாள். கருத்தாங்கிக் கலங்கி, என்னைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்; நான் ஒரு பெரிய மனிதனின் மகளாயிற்றே என்று கெஞ்சினாள். சீவாநந்தம் செப்புகிறார்: நான் உயர் ஜாதி. நீ தாழ்ந்த ஜாதி. உன்னை மணந்துகொண்டால் எனக்கு இழிவு வரும். அவள் வீட்டிலேயே பன்னாள் உண்டு உடுத்து இடர் செய்த சீவாநந்தம் சொன்னது இது. தன் கொள்கையை விட்டுக் கொடுத்தாரா? ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் நாம் பெரியாரை அந்தப் பெரியார் ராமசாமி நாய்க்கர் என்றார் என்று சிலர் வருந்தினார்கள். எள்ளு மூக்கத்தனை கூடச் சீவாநந்தம் தம் கொள்கையிலிருந்து விலகுவதேயில்லை. இராமையர்: கேட்டல்: அண்ணாத்துரை ஐயருக்கும், இராமையருக்கும் பிடிக்க வில்லையா? கிளத்தல்: தமக்கென ஒரு தனிக் கொள்கை உடையவர் இராமன். தனிக் குச்சு உயிரின் இயற்கை. அண்ணாத்துரை பல குச்சுக கொள்கை உடையவர், ஒத்து வருமா? எம்.ஜி. ராமச்சந்திரன் கேட்டல்: அண்ணாத்துரை எம்.ஜி.ஆரை விலக்கிவிட்டாராமே? கிளத்தல்: அப்படி நினைப்பது தவறு. எம்.ஜி.ஆரிடம் இன்னும் காசு இருக்கிறது. அண்ணாத்துரை: கேட்டல்: இந்தி ஆட்சிமொழியாகவேண்டும் என்னும் திட்டத் தாளில் அண்ணாத்துரை கையெழுத்துப் போட்டாரா? பதில்: அண்ணாத்துரையை இதில் கையெழுத்துப் போடு என்று அரசினர் கேட்டதுண்டா? - கேட்டதுண்டு எனில் அண்ணா துரை போட்டதுண்டு. நம்மையும் ஒரு பொருளாக எண்ணுவார் களா என்று தவங்கிடந்த சிறிசுகளில் அண்ணாத்துரை மிக மிகச் சிறிசு. கல்லெறிகிறார்களாம் கேட்டல்: காங்கிரசு கூடடத்தில் கலாட்டா செய்து, ã.nrh. கூட்டத்தில் ரகளை புரிந்து, தி.க. கூட்டங்களில் கலகம் விளைவித்து முடிவில் தமிழரசு கழகாத்தாரிடம் வந்திருக்கிறார்கள் தி.மு.க. தம்பிகள் என்கிறார்கள் க.மு. ஷெரீப், அதற்கு உங்கள் கருத்தென்ன? கிளத்தல்: தி.மு.க.வின் கல்லெறியை அடக்க ஷெரீப் சொல்லெறிந்தால் போதாது! அதற்கு ஒரேவழி எனக்குத தெரியும். எந்த ஊரில் எந்தக் கூடடத்தில் எந்தக் கண்ணீர்த் துளி கல்லெறிந்தாலும், கலாட்டா செய்தாலும் காஞ்சிபுரத்தானை விடக்கூடாது. இந்தக் கொள்கையைச் செயற்படுத்தத் தொடங்கிய மறு நாழிகையே நெட்டிப் பொம்மைகள் பெட்டிப் பாம்புகள். பெரியார்: கேட்டல்: வீடு என்னது என்கிறான் வடக்கன். பெரியாரின் அந்த வீட்டினுள் இருந்துகொண்டே காட்டிக்கொடுக்கும் ஒருவனை தன்பிள்ளை என்கிறான் வடக்கன். பெரியாரின் உள்ளே இருந்து கொண்டே கீழறுக்கும் ஒருவனை மேளத்தையும் அப்படித்தான் எண்ணுகின்றான். பெரியாரே! இவர்களை அடக்கமுடியாதா உங்களால்? கிளத்தல்: வீட்டை மீட்டுக் கொண்டபின் இந்தப் பசங்களைத் தூணில் கட்டிவைத்து உரிக்க வேண்டும் தோலை. - குயில், கிழமை இதழ், 16. 8. 1960 25 கருணாநிதி கரடி விடுகின்றார் கேட்டல்: கோவை மாநாட்டில் இலக்கியம் என்பது தமிழா, வடசொல்லா என்பதுபற்றிப் பேச்சு வளர்ந்ததாக கருணாநிதி சொல்வது மெய்யா? கிளத்தல்: இலக்கணம் என்ற சொல்லைப் பற்றித்தான் பேச்சு நடந்தது. என் தலைமையில் சோமசுந்தர பாரதி பேசியபோது இலட்சணம் என்ற வடசொல்லின் சிதைவே இலக்கணம் என்று கூறினார். அவருக்குப் பின் பேசவந்த பன்மொழிப் புலவர் அப்பாதுரை யவர்களையும், புலவர் வெள்ளை வாரணனாரையும், ஔவை துரைசாமி அவர்களையும் நான், உங்கள் சொற்பொழிவில் இலக்கணம் தமிழா வடசொல்லா என்பது பற்றியும் விளக் குங்கள் என்று கேட்டுக்கொண்டேன். தமிழ் மாணவர்கட்கும், தமிழறிஞர்களுக்கும் இதில் ஆசை; இதை அறிய விரும் பியதை நான் தெரிந்துகொண்டே இவ்வாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் அதுபற்றித் தத்தம் கருத்துக்களைத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு நடுவில் இலக்கணம் தமிழா? வடசொல்லா என்ற ஆராய்ச்சி இப்போது தேவையா என்று கருணாநிதி சொன்னார். நான் அதற்கு மறுப்பாக, கருணாநிதிக்கு இதில் பயிற்சி போத வில்லையானால், இலக்கணச் சொல்லின் ஆராய்ச்சியே பயனற்றதாகி விடாது. தமிழ் பற்றிய மாநாட்டில் கட்டாயத் தேவையே என்று கூறிய அளவில், கருணாநிதி, நான் இடைநேரத்தில் இங்கு வந்தேன். ஆதலால் இவ்வாறு கூறிவிட்டேன் என்று மன்னிக்க கேட்டுக் கொண்டார். மாநாட்டின் முடிவில் நான் முடிவுரை கூறத் தொடங்கினேன். இலக்கணம் தமிழா வடசொல்லா என்பது பற்றிய என் கருத்தைத் தெரிந்து கொள்ளக் கூட்டத்தார் மிக்க ஆவலாயிருந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் அண்ணாதுரையால் துடையில் கிள்ளப்பட்ட நெடுஞ்செழியன் எழுந்துவந்து மைக்கை இழுத்து வைத்துக்கொண்டு மாநாடு முடிந்தது என்று கூறி, நான் முடிவுரை கூற முடியாமல் தடுத்தருளினார். மக்கள் கலைந்தனர், ஆயினும் பல தமிழறிஞர்கள் தனிமுறையில் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இலக்கணம் தமிழா வடசொல்லா என்பதை விளக்கும்படி கோரினார்கள். மணிமேகலையில் சமயக் கணக்கர் காதையில், இலக்கணம் தொடர்ந்து என்று வருவதால் இலக்கணம் என்பது தமிழ்ச் சொற்றொடர் என்பதை விரிவாக விளக்கி மக்கள் மனத்தை அமைதியாக்கி அனுப்பினேன். - குயில், கிழமை இதழ், 11. 10. 1960 26 பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகல் இன்னா: கேட்டல்: இன்னா நாற்பது என்னும் நூலில் இச்செய்யுள் காணப் படுகிறது. இந்த அடியின் பொருளை நோக்கும்போது பார்ப்பனர் ஒழுக்கமுடையவர் என்பதும், ஆதலால் அவர்கள் உயர்ந்தவர் என்பதும் தெரிகின்றன அல்லவா? இதை நீவிர் மறுக்கின் றீர்களா? கிளத்தல்: இவ்வாறு நண்பர் வேலாயுதன் நமக்கு எழுதுகின்றார். நண்பர் இவ்வடியின் பொருளைத் தெரிந்து கொண்டாரா என்பது தெரிய வில்லை. அதன் பொருள் வருமாறு: பார்ப்பாரில் - பார்ப்பாரைப் போலவே, கோழியும், நாயும் - கோழிகளும் நாய்களும், புகல் - தமிழர் வீட்டினுட் புகுதலால், இன்னா - தீமையாகும். பார்ப்பாரில் என்பதிலுள்ள இல் போல என்ற பொருளுடைய இடைச்சொல், ஐந்தாம் வேற்றுமை உருபு. ஒப்புப் பொருளில் வந்தது என்பார்கள். பார்ப்பான் தமிழர் வீட்டில் நுழைந்தால், தீமை உண்டாவது போலவே கோழியும் நாயும் புகுந்தாலும் தீமை உண்டாகும் என்பது இதன் கருத்து. புகல் - புகுதல். புகுதல் என்ற சொல்லைக் கொண்டு வீட்டில் புகுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு கொள்வது அவாய் நிலை என்பர். பார்ப்பான் தமிழர் வீட்டில் புகுவது ஏன்? தமிழரை ஏமாற்ற. என்ன தீமை? செல்வ இழப்பு, கலகம், மடமை புகுதல். கோழியும், நாயும் புகுவது ஏன்? - பொறுக்கித்தின்ன. என்ன தீமை? பண்டங்களைத் திருடுகின்றன. வாய் வைத்துத் தூய்மை * கெடுகின்றன. வெளிக்கிருந்து வைக்கின்றன. - குயில், கிழமை இதழ், 18. 10. 1960 27 கேட்டல்: புரட்சிக் கவிஞர் புதுவையிலே இருக்கின்றவரை அவருக்கு நிலை தெளிவு ஏற்படாது என்று விளக்கமாக நானே அவருக்குக் கடிதம் எழுதினேன் என்று குருசாமிக்கு வேண்டிய தோழர் ஒருவர் எழுதுகிறார். அவ்வாறு அவர் எழுதிய அஞ்சலுக்கு நீங்கள் பதில் எழுதினீர்களா? கிளத்தல்: ஆம்; எழுதினேன். அந்த அஞ்சலில் சென்னையில் குருசாமி வீட்டில் நான் தங்கமுடியாது என்பதை நன்றாய் விளக்கி இருந்தேன். கேட்டல்: பாவேந்தர் இருந்த இடம் பாண்டிச்சேரிதானே என்று குருசாமியைப் பிடித்திருக்கும் ஓர் ஆள் எழுதுகின்றாரே! புதுச்சேரியில் எப்போதும் நீங்கள் இருப்பவர் என்பதில் ஐயப்பாடு அவருக்கு ஏன் ஏற்படவேண்டும்? கிளத்தல்: நான் பிறந்ததும், என் முன்னோர் பிறந்ததும் நான் என்றும் இருந்து வருவதும் புதுச்சேரிதான்! குருசாமி, குஞ்சிதம் பொன்னம் பலனார் முதலியவர்களும் என் வீட்டிற்கு வருவதுண்டு. நானும் என் வீட்டில் இடமில்லை என்று சொல்லுவதுண்டு. புதுவையைச் சேர்ந்த ஊசிட்டேரிக்கு அவர்கள் செல்லுவதுண்டு. அவர்களும் அந்த ஏரி மதகடியில் பொதுவுடைமை நாட்டியம் ஆடித் திரும்பி வருவதுண்டு. தனியுடைமைக்காரர் போலவே என் வீட்டில் உண்டு போவதுண்டு. அவர்கட்கும் தெரியும், நான் என்றும் புதுச்சேரியில் வாழ்பவனே என்பது. கேட்டல்: அவருக்கும் இன்றையவரை மனமயக்கம் தெளியவில்லை; விட்டுவிட்டோம் என்று குருசாமியின் நண்பர் எழுதுகிறார். கிளத்தல்: அவர் பிடியிலிருக்கும் வரைக்கும் மனத் தெளிவு எனக்கு இருக்கிறதாம். அவர் பிடியினின்று நான் தப்பித்துக் கொண்டால் எனக்கு மனமயக்கம் ஏற்படுகின்றதாம். நான் இன்றுவரைக்கும் எழுதி வெளியிட்டுள்ள நூற்கள் 60. அவற்றுள் சிலவற்றை வெளியிட்டுப் பிழைத்தார்கள். அவர்களுக்கு என் நூலைப் பொறுத்தவரைக்கும் உண்மைக் காதல் உண்டு. அவர்கள் தோலை விற்றும் என் நூலை வாங்கிப் பிழைக்க அளவற்ற ஆசை உண்டு. அவர்களின் ஆசையை நிறைவு செய்ய என்னால் எத்தனை காலத்திற்கு முடியும். பெரியாரும் அதை வெளியிட ஆசைப்பட்டார். இல்லை என்றா சொல்வது? கொடுத்தேன்; அவ்வளவுதான். எனக்கு மன மயக்கம் வந்து விட்டதாகத்தானே அவர்களுக்குத் தோன்றும். விட்டாராம் என்னை! இன்னும் பிடித்துக்கொண்டா, ஆட்டிக் கொண்டா இருப்பார்? எனக்கும் ஆண்டு 70 ஆகிவிட்டது. - குயில், கிழமை இதழ், 25.10.1960 28 *nf£lš: தி.மு.கழகத்துக்கும் இராசாசிக்கும் இதுவரை எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றார் அண்ணாத்துரை. அது பற்றி நீங்கள்? *»s¤jš: விரைவில் ஒப்பந்தம் ஏற்படும்; அதிவிரைவில் ஒப்பந்தம் முறிந்துவிடும். கேட்டல்: வெளிநாடுகளிடமிருந்து இந்தியா கடன் வாங்குவது மானக் கேடு ஆகாதென்று அமைச்சர் சுப்பிரமணியம் சொன்னார். கிளத்தல்: அது மானக்கேடானது என்று சுப்பிரமணியம் எண்ணுவதால் இப்படிச் சொன்னார். கேட்டல்: மேற்கு வங்காள அரசின் எல்லையில் இருக்கும் பெருபாரி என்ற நிலப்பகுதியைப் பாகிதானுக்குக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று தலைமை அமைச்சர் நேரு கூறினார். அவர் செய்த இந்த முடிவு சரியா? கிளத்தல்: நேருவுடனிருந்தும், மற்ற அமைச்சர்களும் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து கொண்டு வருகின்றார்கள். ஆகையால் நேரு செய்ததை எதிர்க்கவில்லை. எதிர்க்காதவரைக்கும் நேரு செய்தது சரி என்றே எண்ணப்படும். கேட்டல்: சுதந்திராக் கட்சியில் சேரும்படி அமைச்சர் சுப்பிரமணியத் திற்கு இராசகோபாலாச்சாரி அழைப்பு அனுப்பி இருக்கிறார். சுப்பிர மணியம் சேருவார் என்பதற்கு அறிகுறி ஏதாவது உண்டா? கிளத்தல்: சேரமாட்டார் என்பதற்குத்தான் என்ன அறிகுறி இருக்கிறது? கேட்டல்: என். ஜீவரத்தினம் நான் ஏன் தி.மு.க.வை விட்டு விலகினேன் என்பதுபற்றிக் கூட்டத்தில் விளக்கப் போகிறாராம். விலகியதற்குக் காரணம் உங்களுக்குத் தெரியுமா? கிளத்தல்: தி.மு.க.வில் எல்லாரும் நடந்து கொள்ளுகிறமாதிரி நடந்து கொள்ள வேண்டும். அது ஜீவரத்தினத்திற்குத் தெரியவில்லை. பொதுப் பணத்திலிருந்து ஆயிரம் ஐநூற்றையாவது குடும்பத் திற்கு ஆக்கத்தானே வேண்டும். அப்படி ஆக்கியவர்கள்தாமே இயக்கத்தின் அன்பைப் பெற்று வாழ்கின்றார்கள். சம்பத்தை இயக்கம் ஏன் வெறுக்கிறது. பொதுப் பணத்திலிருந்து ஒரு காசைக்கூட இதுவரைக்கும் திருடாததால்தானே! திருடாத ஜீவ ரத்தினங்களுக்குத் தி.மு.க.வில், என்ன வேலை? ஜீவரத் தினத்தை இயக்கத்தைவிட்டுத் தொலைக்க அவர்கள் பட்டபாடு அக்கிரகாரத்து நாய்ப் பட்டிருக்குமா? கேட்டல்: கோயில் கட்டுவது ஏழைகளின் நன்மைக்காகத்தான் என்று பக்தவத்சலம் பகருகின்றார். சரிதானா அது? கிளத்தல்: நூற்றுக்கு நூறு சரி! பணக்காரரைச் சுரண்டக் கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. இப்போது கோயில்கள் ஏழைகளின் தாலியைத் தாமே ஒட்ட ஒட்ட அறுத்து வருகின்றன. கேட்டல்: சென்னை அரசு காட்சிச் சாலையில் வந்துள்ள மனிதக் குரங்கினிடம் அமைதியில்லாததால் அது ஆப்ரிக்கா விலங்கு என்று தெரிகிறதாம். பேச்சில்லாதது கொண்டு என்ன தெரிந்து கொள்ளலாம்? கிளத்தல்: அதன் தாய்மொழி சமசுகிருதம் என்று தெரிந்துகொள்ளலாம். - குயில், கிழமை இதழ், 27.12.1960 29 கேட்டல்: புறநானூறு பார்ப்பனர் பாதுகாப்பு நூலா? கிளத்தல்: தமிழைப் பாதுகாக்கும் நூல். கேட்டல்: கண்ணி கார்நறுங்கொன்றை என்று தொடங்கும் செய்யுள் புறநானூற்றின் முதற் செய்யுளாகக் காணப்படவில்லையா? கிளத்தல்: காணப்படும்படி புறநானூற்றில் இடைச் செருகலாக்கப்பட்டது. அச்செய்யுள்கூடப் பார்ப்பனரைப் பாதுகாக்கும் கருத்துடைய தல்ல. பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவதே. அச் செய்யுள் சிவன் பெருமை கூறிச் சைவத்தில் மக்களை இழுக் கின்றதென்று இக்காலப் புலவர் எண்ணுவதில் வியப்பில்லை. சைவனால் புகழப்படும் ஒருவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற ஒரு தமிழனே என்கின்றது அச்செய்யுள். அருந் தவம், வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறைகளில் ஒன்று. அம் முறைகளில் அது சிறந்த முறையுமாகும். தவம்புரிவார் எல்லாம் தையலார் வலைக்குத் தப்பார் என்று காட்டித் தவத்தை இழிவு படுத்துவோர், ஆரியரும் அவர் வழி வந்தவராய் எண்ணப்படும் பார்ப்பனரும். மேலும் வேத நூற் பிராயம் நூறு என்று கூறி தவ நெறிக்கு இழுக்குத் தேடுவார் அவர். அவ் வகையினர் அல்லர் தமிழர். கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்ற குறட்பாவை நோக்குக. தமிழர், தவம், தையலார், மையலுக்கு அப்பாற் பட்டதென்பதும் சாவாமையை நல்கும் என்பதும் வெள்ளிடை மலை. எனவே பார்ப்பனரை எதிர்ப்பதே அச்செய்யுட் கருத்தென அறிய வேண்டும். கேட்டல்: அறங்கூற வந்த நூல் ஆகிய புறநானூற்றில், ஒரு மதத்திற்குரிய சிவனை நினைப்பூட்டுவதிற் சிறப்பென்ன இருக்க முடியும்? கிளத்தல்: அச் செய்யுள் பிற்காலச் செய்யுள். அப்பிற்கால நிலை, நாட்டில் சிவன் புகுந்த நிலை. ஆதலால் அச்சிவத்திற்குச் சொல்லப்படும் பெருமையை இழுத்துப் போட்டுத் தானே வேரை வெட்டவேண்டும். கேட்டல்: இதற்குத்தான் இவ்வாறு அமைவு கூறிவிட்டீர். மதத்தைக் குறிக்கும், சாதியைக் குறிக்கும் செய்யுட்கள் இன்னும் சில புறநானூற்றில் இருக்கின்றன. அவற்றிற்கு என்ன கூறுவீர். கிளத்தல்: அவையும் இடைச் செருகல்களே! அது போகட்டும். சில செய்யுட்கள் சரியில்லாவிட்டால் அது கொண்டு பல செய்யுட் களையும் ஒழித்துக் கட்ட முயலுவதா? இஃது எவன் செய்யும் வேலை? குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல், என்பதையும் நோக்குக. கேட்டல்: இந்தக் காலத்தில்தான் சீர்திருத்தம் இருக்கின்றது; இந்தக் காலத்தில்தாம் தமிழர் தலைவர் இருக்கின்றார்கள். அந்தக் காலத்தில் இல்லைவேயில்லை என்பது பொய்யா? கிளத்தல்: அந்தக் காலத்திலும், சீர்திருத்தக்காரர் இருந்தார்கள். அந்தக் காலத்திலும் தமிழ் தெரிந்த தமிழர் தலைவர்கள் இருந்தார்கள் என்பது பொய்யாகா. கேட்டல்: அந்தக் காலச் சீர்திருத்தக்காரர்களும் தமிழ் தெரிந்த தமிழர் தலைவர்களும் கண்டது என்ன? - தோல்விதானே? கிளத்தல்: அந்தத் தோல்வியில் தோன்றியதுதான் இந்தக் காலச் சீர்திருத்தம். அந்தத் தோல்வியில் தோன்றியவர்கள்தாம் இந்தக் காலத் தலைவர்கள். அந்தத் தலைவர்களும் தோற்கப்போவது உறுதி. அந்தத் தோல்வியிலிருந்து அவர்கள் தமிழை ஆதரிக்கும் பண்பைப் பெறப் போகின்றார்கள் என்பதும் உறுதி! கேட்டல்: அரசியல் தலைவர் இந்நாள் தமிழை ஆதரிக்கின்றார்களா? கிளத்தல்: இந்திக்கு வழிகோலும் அளவுக்கு. கேட்டல்: மக்கள் தலைவர்? கிளத்தல்: அரசியல் தலைவர்களை மகிழ்விக்கும் என்று எண்ணித் தமிழையே ஒழிக்க முற்படுகிறார் என்று எண்ண வேண்டியிருக் கிறது. இந்தியைப் புகுத்தும் வடக்கத்தியானையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டிய திருக்கிறது. - குயில், கிழமை இதழ், 3. 1. 1961 30 கேட்டல்: அண்ணாத்துரையை அடக்குவது பெரியார் பொறுப்பு என்ற கருத்தில் காமராசர் பேசினாரே! கிளத்தல்: நாங்களா அழைத்தோம் பெரியாரை என்று காமராசர் இனிக் கூறமாட்டார். கேட்டல்: சுப்பிரமணியம் தேர்தல் முடிந்தபின் சொன்னது: கிளத்தல்: நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பெரியார் முன்கூட்டியே தெரிந்துகொண்டதால் எங்களை ஆதரித்தார். நாங்கள் அவரை வேண்டிக் கொள்ளவில்லை என்று, கேட்டல்: இப்போது? கிளத்தல்: தாம் தோல்வி அடையக் கூடும் என்று எண்ணுவதால் பெரியாரை வேண்டிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. கேட்டல்: தமிழ்நாடு என்று பெயர் வைக்காததை எதிர்த்துக் களத்தில் குதிக்கப் போகிறார். ம.பொ.சி. தம் தொண்டர்களையெல்லாம் கையிற் போட்டுக்கொண்டு. கிளத்தல்: நல்ல காரியம். ஆனால் அவர் நடுவில் ஆச்சாரியார் சொல்லைக் காதிற் போட்டுக்கொள்ளக்கூடாது. கேட்டல்: கிட்டயிருந்தே கீழறுக்கும் மட்ட உருப்படிகளைப் பெரியார் நீக்காதது ஏன்? கிளத்தல்: பெரியாரால் முடியாது ஒன்று இருக்குமானால் அது இயக்கத்தினின்று எந்த ஆளையும் நீக்க முடியாததுதான். கேட்டல்: குருசாமியை ஆதரிக்காத எவரும் எங்கும் கூட்டத்தில் பேச முடியவில்லையாம். குருசாமியின் துக்கடாக்கள் அங்கங்கே சண்டைக்கு வருகிறார்களாமே? கிளத்தல்: மண்டைப் பூச்சி ஊறுகிறது. கேட்டல்: தமிழை ஒழிக்க முடியுமா? கிளத்தல்: முட்டாள்தனமான கேள்வி. தமிழும் தமிழரும் வேறு வேறு அல்ல. கேட்டல்: தமிழரை எதிர்க்கும் இலங்கைக் கிளி இங்கே ஏன் வந்தது? கிளத்தல்: தலைவர்களின் நெஞ்சக் கிணற்றில் தமிழ் உணர்வு உண்டா என்று எட்டிப் பார்க்க வந்தது. கேட்டல்: அவரவர், தேர்தல் முயற்சியில் ஈடுபடுகையில் ஆதித்தனார் என்ன பண்ணுகிறார்? கிளத்தல்: தாம்பரத்தில் சடுகுடு! கேட்டல்: ஆச்சாரி என்ன எண்ணுகிறார்? கிளத்தல்: எந்தக் கட்சியை எப்படி இழுப்பது? எப்படி ஏய்ப்பது? - என்று கேட்டல்: அண்ணாத்துரை என்ன பண்ணுகிறார்? கிளத்தல்: தேர்தலில் நிற்க என் கட்சி ஆட்கள் நூற்றுக்கு எத்தனை பேருக்கு ஆச்சாரி வாய்ப்பு கிடைக்கும் என்று. கேட்டல்: அரிவாள், சுத்தி என்ன செய்கிறது? கிளத்தல்: ஆச்சாரியார் நமக்கு அதிக ஆதரவு தருவாரா? கண்ணீர்த் துளிகளுக்கா? என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது. - குயில், கிழமை இதழ், 10. 1. 1961 31 கேட்டல்: ஆங்கிலம் படிக்காவிட்டால் பேசவும் எழுதவும் வருமா? கிளத்தல்: நெஞ்சத்தினின்று சொந்த ஊற்று வற்றாமல் பேசவரும், எழுதவரும். கேட்டல்: ஆங்கிலம் படித்தவர்களுக்கெல்லாம் சொந்த ஊற்றுத் தூர்ந்து போய்விட்டதா? கிளத்தல்: எழுதுவதின் தலைப்புக்கூட ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பே. கேட்டல்: ஆங்கிலம் படிக்காவிட்டால் தமிழில் இப்போது வெளி வந்துள்ள கதைகள் அனைத்தும் வெளிவந்திருக்குமா? கிளத்தல்: கற்பனை உள்ளம் வளர்ச்சி அடைந்திருக்கும். தமிழர் பண்பாடு பாதுகாக்கப்பட்டிருக்கும்; நல்ல நல்ல கதைகள் காலத்தால், இடத்தால் அழியாதனவாக உண்டாகி யிருக்கும். கேட்டல்: ஆங்கிலம் படித்த தமிழ்ப் புலவர்களால் அல்லவா தமிழகம் உருப்பட்டு வருகிறது. கிளத்தல்: ஆமாம்; அவர்களால்தாம் தமிழகம் உருப்படாது போகின்றது. v.fh.: தெ.பொ.மீ. கேட்டல்: தமிழ்ப் புலவர் ஆங்கிலம் படிக்க ஆசைப் படுவானேன்? கிளத்தல்: அப்படி ஒரு புலவரையும் காட்டமுடியாது. கேட்டல்: ஆங்கிலம் படித்த தமிழர் தமிழுக்கு வருவதுண்டா? கிளத்தல்: தமிழன்னையின் திருவடி தொட்டதால்தான் ஆங்கிலப்பட்டப் படிப்பினர் உருப்பட முடிந்தது. v.fh., nrhkRªju ghuâ, nrJ¥ãŸis, bj.bgh.Û., வையாபுரி பிள்ளை, இப்படி ஆயிரம் பேர். நான் ஆங்கிலம் பேசுவேன். தீந்தமிழில் பேசும் பழக்கமில்லை என்று கூறிய பலர், கூட்ட நடுவில் உதை பட்டிருக்கிறார்கள். கேட்டல்: ஆங்கிலேயன் ஆண்ட இருநூறு ஆண்டுகளில் தமிழர் ஆங்கிலம் படிக்காதிருந்தால் முன்னுக்கு வந்திருக்க முடியுமா? கிளத்தல்: முன்னுக்கு வந்திருக்க முடியும் என்பது மட்டுமன்று, ஆங்கிலேயனும் இருநூறு ஆண்டுகள் இங்குத் தங்கியிருக்க முடியாமற் செய்திருக்கலாம். கேட்டல்: ஆர்.கே.சண்முகனார் ஆங்கிலம் படிக்கா விட்டால் புகழ் கிடைத்திருக்குமா? கிளத்தல்: அவர் தமிழ் படிக்காததால் தமிழகத்தில் பட்டபாடு எது படும்? கேட்டல்: ஆங்கிலம் படித்திராவிட்டால் ஏ.ஆர்.இராமசாமிக்கும், இலக்குமணசாமிக்கும் உலகப் புகழ் உண்டாகியிருக்குமா? கிளத்தல்: உலகப் புகழ் என்பது தாம் பிறந்த தமிழ்நாட்டு மொழியை எதிர்ப்பதுதானா? அவர் பெற்ற உலகப் புகழால் தமிழுக்கு என்ன நன்மை? ஒருத்தி ஐந்து பேரைத் திருமணம் செய்து கொண்டவள் கற்புக்கரசி என்று கூறும் ஆரியர் ஒழுக்கத்திற்குத் தானே மேல் நாடுகளில் சென்று சப்பைக் கட்டுக்கட்டி வருகிறார்கள். கேட்டல்: விஞ்ஞானத்திற்குரிய சொற்கள் தமிழில் வேண்டும் என்று தலைவர்கள் சொல்லுவதில் தப்பென்ன? கிளத்தல்: தமிழில் வந்துகொண்டிருக்கும் விஞ்ஞானச் சொற்களை அவர்கள் இடைமறிக்கிறார்கள். நல்லெண்ணத்தால் சொல்ல வில்லை. தமிழில் தமிழர்க்கு இருந்துவரும் பற்றை ஒழிப்பதே அவர்களின் நோக்கம். கேட்டல்: பார்ப்பனத் தலைவன் இந்தியை எதிர்க்கிறான்; நல்லெண்ணத் தோடா? கிளத்தல்: நல்லெண்ணமிருக்க வழியில்லை. தமிழ்த் தலைவர்களில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் தவிர மற்றவர் அனைவரும் இந்தியை ஆதரிகிறார்கள். கெட்ட எண்ணமே காரணம். - குயில், கிழமை இதழ், 17. 1. 1961 32 கேட்டல்: ஆட்சி செய்யக் காமராசர் அறிவு தரப் பெரியார் என்ற மாட்சிக்கு மறுப்பும் உண்டோ? கிளத்தல்: நாட்டுக்கிதை உணர்த்தியவன் நான்தான். அவர்கள் நறுந்தமிழின் திறந்தெரிந்து நடக்கவேண்டும் என்று அறங்கூறி வருபவனும் நான்தான்! நான்தான்! கேட்டல்: பெரியார் பெருந்தொண்டை ஆதரிக்கின்றீரா? கிளத்தல்: நாற்பதாண்டாய்ப் பெரியார் செய்துவரும் நல்லதொண்டு ஒன்று; இடையில் அவர் மேற்கொள்ளும் கூலித் தொண்டு மற்றொன்று. பின்னதை வெறுக்கின்றேன், முன்னதை நான் நாற்பதாண்டுகளாக ஆதரித்துள்ளேன்; அண்ணாத் துரையைப் போலல்ல; குருசாமியைப் போலல்ல. கேட்டல்: தமிழ்நாடு என்று பெயர் வைக்க மறுப்பதால் என்ன கெட்டுப் போகும்? கிளத்தல்: வடக்கனுக்கும் மலையாளிக்கும் தெலுங் கனுக்கும் கன்னடனுக்கும், சுடுகாடும் குடியிருப்பும் ஆகிய பொது நாடு இந்த நாடு. இது நேருவின் ஏற்பாடு. நிலைமை அடியோடு மாற வேண்டு மானால் இது தமிழ்நாடு என்று இயற்பெயர் அடைய வேண்டும். எதிரியின் எண்ணம் வேரோடு மாய வேண்டும். கேட்டல்: நகரமன்றக் கல்வி அதிகாரியாகக் குஞ்சிதத்தைப் பெரியாரும், காமராசரும், சுந்தரவடிவேலும் ஆதரிக்கிறார்கள். அவர்கட்கு நீங்கள் சொல்லும் திருத்தம் என்ன? கிளத்தல்: ஆதரிப்பதை எதிர்க்கின்றவனை எதிர்க்க முடியா விட்டால் இவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும். - குயில், கிழமை இதழ், 7. 2. 1961 33 கேட்டல்: பேனா என்ன சொல்? கிளத்தல்: ஆங்கிலம்! இறகு எனல் வேண்டும். முற்காலத்தில் பறவைகளின் இறகைச் சீவி மைதொட்டு எழுதினார்கள். அதனால் வந்த பெயர் அது. கேட்டல்: பௌண்டன் பேனா? கிளத்தல்: மையூற்று இறகு, ஊற்றிறகு என்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம். கேட்டல்: இங்கி. கிளத்தல்: ஆங்கிலம்! மை எனல் வேண்டும். கேட்டல்: பேப்பர்? கிளத்தல்: தமிழில் தாள் என்று சொல்க. முதற்காலத்தில் பனை முதலிய வற்றால் எழுதினார்கள். அதனால் அப்பெயர் வந்தது. ஏடு என்பதும் தூய தமிழ்ச்சொல். ஏடு என்பது இந்நாளில் செய்தி ஏடுகளுக்கும் பெயராக வழங்குகிறது; நூலுக்குச் சுவடி எனல் வேண்டும். தினசரி ஏட்டை நாளேடு எனல் வேண்டும். தினசரி என்பதில் தினம் வடசொல், சரி என்பது செறி என்பதன் மரூஉ. கேட்டல்: சட்டை என்ற சொல்லின் வரலாறு வேண்டும். கிளத்தல்: பறவைகளின் மேல் மூடியிருக்கும் இறகுக்குச் செட்டை என்பார்கள். பண்டு தமிழில் ச மொழி முதலில் வருவதில்லை. பின்னாளில் அது மொழிக்கு முதலில் வரலாயிற்று. அப்போது செ என்ற எழுத்து ச என்றாயிற்று. எனவே செட்டை என்பது சட்டையாயிற்று. பறவைகள் போலவே மக்களும் ஏற்படுத்திக் கொண்டார்கள். துணியால் தைப்பது சட்டை அல்லது செட்டை. கேட்டல்: துணியின் பெயர் என்னென்ன? அதன் காரணம் என்ன? கிளத்தல்: துணித்தலால் துணி ஆயிற்று. துண்டித்தலால் துண்டு ஆயிற்று. கிழித்தலால் கிழி ஆயிற்று. அறுத்தலால் அறுவை ஆயிற்று. வெட்டுதலால் வேட்டி ஆயிற்று. கேட்டல்: கவிதை, தமிழ்ச் சொல்லா? கிளத்தல்: கவி முதனிலை. த் எழுத்துப் பேறு. ஐ தொழிற் பெயர். இறுதி நிலை. கவிகை என்பதுபோல. கவிகை ஓர் இடத்தை நோக்கிக் கவிழ்ந்திருப்பது. குடையைக் குறித்தது. கவிதை என்பது மனம் ஒரு பொருள் நோக்கி கவிவது அல்லது சூழ்வது, ஆராய்வது என்பனவும் பொருளாகக் கொள்க. எனவே கவிதை தூய தமிழ்ச் சொல். கவிஞர் என்பதில் கவி முதனிலை. அர் - பலர் பால் இறுதி நிலை. ஞ் பெயர் இடைநிலை. இதை வடவர் கவிக்ஞர் என்பர். க் என்ற எழுத்தை அவர் உடன்சேர்த்ததால் அது வட சொல்லாய்விடாது. மலைக்குத் திருநாமம் போட்டுவிட்டால் அது வைணவச் சொத்தாகிவிடுமா? - குயில், திங்கள் இருமுறை இதழ், 15. 4. 62 34 கேட்டல்: அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் என்றால் என்ன? எங்கே? அதன் செயல்முறை என்ன? இப்போது சென்னையினின்று வெளிவந்து கொண்டிருக்கும் குயிலுக்கும் மேற்கண்ட பெருமன்றத்துக்கும் என்ன தொடர்பு? கிளத்தல்: இவற்றிற்கெல்லாம் ஒரே விடைதான் உண்டு. குயிலைப் படியுங்கள். கேட்டல்: வெ.பொ. என்றால் என்ன பொருள்? கிளத்தல்: வெண் பொற்காசுகள். கேட்டல்: எங்கள் உள்ளத்தில் எழும் சிறிய ஐயப்பாடுகளையும் உங்களுக்கு எழுதிக் கேட்க நினைக்கிறோம். பதில் எழுதுவீர்களா? கிளத்தல்: எழுதுமுன் குயிலை ஊன்றிப் படியுங்கள். கேட்டல்: நின்று என்ற சொல்லின் முன் பேசினான் என்ற சொல் வந்தால் ஒற்று மிகுமா? கிளத்தல்: மிகாது: நின்று பேசினான் என்று எழுத வேண்டும். நின்று, இருந்து, கண்டு, மொண்டு, இவை அனைத்தும் மென்றொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன் வல்லெழுத்து வந்தால் மிகவே மிகாது. இருந்து + தூங்கினான் = இருந்து தூங்கினான். கண்டு + பேசினான் = கண்டு பேசினான் மொண்டு + குடித்தான் = மொண்டு குடித்தான். இவற்றின் இலக்கணத்தை விரிவாக ஒற்றுமிகாத இடங்கள் என்ற தலைப்பில் எழுதப்படும். கேட்டல்: மேசை தமிழ்ச்சொல்லா? கிளத்தல்: மேசை என்பது இத்தாலி மொழி என்று சிலர் கூறுகிறார்கள். நமக்கு அது உடன்பாடில்லை. உதட்டின் மீது அமைந்திருப்ப தனால் மீதை அல்லது மீசை என்று பெயர் உண்டாயிற்று. அது போலவே மீது என்ற சொல் மேது என்று ஆகும். மேது மேசை ஆதலுக்கும் வழி உண்டு. உயர்ந்திருக்கும் பெட்டிக்கு தமிழில் மேசை என்ற பெயர் உண்டானதில் தவறு ஒன்றும் இல்லை. தமிழ் நாட்டில் வழங்கும் தமிழ்ப் பெயரை தமிழ் இலக்கண வகையில் ஆராய வேண்டியது முதல் வேலை. மேசை என்பது பற்றி ஆராய இத்தாலிக்குப் போவது வீண் வேலை. - குயில், திங்கள் இருமுறை இதழ், 1. 5.1962 35 கேட்டல்: வெற்றிலைக்கு முன் என்ன போட வேண்டும்? கிளத்தல்: வெண்பா வெற்றிலைக்கு முன் என்ன போடுவார் வேலப்பா சற்றிதனை எண்ணிவிடை சாற்றென்றான்கொற்றன் நகைத்துப்பாக் கென்று நவின்றான் வேலப்பன் அகத்தியடா என்றான் அவன் ஒட்ட வைத்த வால் கேட்டல்: ஆளுக்கு முளைத்திருக்கும் வால் இயற்கையானதா? கிளத்தல்: இல்லை. இடையில் ஒட்ட வைத்ததுதான். அதை அறுத்துப்பார்; அறுபட்ட இடத்தில் புண்படாது. ஆளுக்கு நோக்காடும் இராது. முனிசாமி முதலியார் என்பதில் முதலியாரை நீக்கிப்பார். கேட்டல்: வெந்நீரில் என்ன போட்டுக் குடிப்பாய்? சிந்து கண்ணி! கிளத்தல்: வெந்நீர் ஊற்றிச் செம்பில் வைத்தால் என்ன போட்டுக் குடிப்பாய்? வெந்நீர் ஊற்றிச் செம்பில் வைத்தால் விரலைப் போட்டுக் குடிப்பேன் வெந்நீர் ஊற்றிச் செம்பில் வைத்தால் விரலைப் போடு வானேன்! வெந்நீரிலே விரலைப் போட்டால் வெப்பநிலை தெரியும் வெந்நீரை நீ அப்படியே குடித்துவிட்டால் என்ன? வெந்நீரிலே சூடிருந்தால் வெந்து போகும் குடலே. கேட்டல்: எவன் நல்லவன்? கிளத்தல்: அறுசீர் விருத்தம் அனலன் தன்கிளியை நோக்கி ஆரடா திருட்டுப் பையா? எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தனன்! அங்கு வந்த * இரிசப்பன், இவ்வா றாய்உன் இனிதான கிளிப யின்றால் எவரையும் திருட்டுப் பையா எனுமன்றோ என்றான்! நல்லன் எவன்? என்றான்! இரிசன் தானே? - குயில், திங்கள் இருமுறை இதழ், 15. 5. 1962 36 கேட்டல்: அரசியலில் அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் கலந்து கொள்ளாது என்று சொல்லிவிட்டு அது நடத்தும் குயிலில் கன்னடர் எதிர்ப்பை வெளியிடுவது சரியா? கிளத்தல்: அரசியலிலும் கட்சிக் கோட்பாடுகளிலும் கலந்து கொள்வ தில்லை என்பது தவிரத் தமிழ் பற்றிய செய்தியில் கலந்து கொள்வ தில்லை என்று சொன்னதே இல்லை. இந்திக் கொள்ளிக் கட்டையைக் கொண்டுவந்து தமிழின் மூச்சுக்குழலில் திணிக்கிறான். சும்மா இருந்துவிடுவதா? கன்னடன் தமிழைப் பழிக்கிறான். மூலையில் முக்காடு போட்டுக்கொண்டு நமக்கென்ன என்றா இருப்பது? கேட்டல்: சீனாவும் பாகிதானும் நாவலந்தீவை எளிதாய் நினைப்பதற்கு என்ன காரணம்? கிளத்தல்: உள்நாட்டுக் குழப்பந்தான் காரணம். கேட்டல்: புளியங்கிளையாகிய அமெரிக்காவைவிட்டு முருங்கைக் கிளையாகிய உருசியாவைப் பற்றி விட்டார் நேரு. இது சரியா? கிளத்தல்: இப்போதுதான் நேருவுக்கு நல்லறிவு பிறந்தது. கேட்டல்: சீனாவை தடுத்து நிறுத்துவதில் மேனனுக்கு சுறுசுறுப்பு இல்லையே? கிளத்தல்: சுறுசுறுப்பு வரவேண்டிய நேரத்தில் வரலாம். நாவலந் தீவுக்கு வேண்டிய அளவு கையிருப்பு ஆயுதம் இல்லை போலும்! கேட்டல்: அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தின் மாநாடு எப்போது? கிளத்தல்: விரைவில். - குயில், திங்கள் இருமுறை இதழ், 1. 7. 1962 37 கேட்டல்: சீனா வெடி கிளப்புமா? கிளத்தல்: வெடி இருந்தால்தானே! கேட்டல்: நம்மவர்க்கும் சீனாவை அடக்க ஏதாவது இருக்குமோ? கிளத்தல்: இல்லாமலா! கேட்டல்: இந்தி நலமா? கிளத்தல்: மூன்றாவது வகுப்புச் சீட்டில்கூட! கேட்டல்: இந்தியை இப்படியே விட்டுக் கொண்டு போனால்? கிளத்தல்: தமிழின் தலைக்கே ஆபத்து. கேட்டல்: ஏ.எல்.எ; நாகிரெட்டி இருவரும் தில்லிக்குப் போகிறார்கள். வெற்றியோடு திரும்புவார்களா? கிளத்தல்: திரும்பாமல் என்ன? வானத்தேர் வந்து சேரும் என்பதில் உமக்கு ஐயப்பாடா? கேட்டல்: கச்சா பிலிம் கிடைப்பதில் நிலைமை இப்படியே இருந்தால்? கிளத்தல்: திரைப்படங்களுக்குத் திருவாசகம் படிக்க வேண்டியது தான். கேட்டல்: ஏ.கே.வேலன் படத்தில் எல்லோரும் தமிழர்களாமே? கிளத்தல்: வாழ்க ஏ.கே.வேலனார். கேட்டல்: அண்ணாத்துரையின் படத்தைக் கன்னடத்தார் கொளுத்த லாமா? கிளத்தல்: அதைக் கருணாநிதி வரவேற்கும் வரைக்கும் கொளுத்திக் கொண்டே இருப்பார்கள். - குயில், திங்கள் இருமுறை இதழ், 15. 7. 1962 38 கேட்டல்: உயிரைக் கொடுக்கவும் அஞ்சமாட்டோம் என்று சொன்ன தி.மு.க. வீரர்கள் சிறையில் நடுங்குகிறார்களாமே? கிளத்தல்: அவர்கள் பக்கா ஆசாமிகள். உயிரை வீட்டில் வைத்துவிட்டு நடுக்கத்தை மட்டும் சிறைக்குள் கொண்டு வந்தார்கள். கேட்டல்: தி.மு.க. போராட்டத்தால் பொருள்களின் விலை மட்டுப்பட்டு விட்டதா? கிளத்தல்: சோளம் மட்டுந்தான் நயமாகக் கிடைக்கிறதாம். கேட்டல்: சிறையில் இருக்கும் தி.மு.க. வீரர்கள் அதிகாரிகளிடம் மன்னிப்புக் கேட்டதும், வெளியில் வந்ததும் ஆகிய இரண்டும் உண்மைதானா? கிளத்தல்: இரண்டும் மெய்தான். கேட்டல்: கல்லெறிந்ததும் உந்து வண்டிகளை உடைத்ததும் ஆகிய தீச்செயலில் ஈடுபட்டவர்கள் தி.மு.க. ஆட்கள் அல்லவாம்! யாரோ சிலராமே! கிளத்தல்: தலைவர்கள் இப்படிச் சொல்லுகிறார்கள். கல்லெறிந்தவர் களும் வண்டியை உடைத்தவர்களும் தி.மு.க.வைச் சேர்ந்தவர் கள்தாமாம்! இல்லை என்று யாரோ சொல்லுகிறார்களாம்! - குயில், திங்கள் இருமுறை இதழ், 1. 8. 1962 