பாவேந்தம் 20 கட்டுரை இலக்கியம் -1 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 20 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 176 = 208 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 130/- கெட்டி அட்டை : உருபா. 180/- படிகள் : 1000 நூலாக்கம் : வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. s : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  வாழ்வு தந்தோர் வாழ்வு! ‘மேடுபள் ளங்களைக் கண்டே - நலம் விதைக்க எழுத்துழு வோன்எழுத் தாளன்! (தொகுதி 15; பக். 359) எழுத்தாளருக்கு இப்படி இலக்கணம் கூறும் பாரதிதாசன், தாம் வகுத்த இலக்கணத்திற்குத் தாமே இலக்கியமாகவும் திகழ்ந்தார். மேடு பள்ளம் இல்லாத சமத்துவ நிலையை எல்லாத் துறையிலும் ஏற்படுத்த அவர் எழுதுகோல் இயங்கியது. தனக்குழைக்கும் எழுத்தாளர், பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் - என எழுத்தாளர்களை அவர் இருவகைப்படுத்தினார். ஏற்றத்தாழ் வான குமுக அமைப்பை மாற்ற முயலாமல், பழமைவாதப் பாதையில் தவழ்ந்தபடி, பணமும் புகழமே குறியாக இருப்பவர்கள் எழுத்தா ளராகவும் இருப்பார்கள். தனக்குழைக்கும் எழுத்தாளர் எனப் பாவேந்தர் அவர்களைத் தள்ளி நிறுத்தினார். எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்ப தான இடம்நோக்கி - (தொகுதி 15; பக். 186) நடைபோட்டபடி, எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் இழப்பையும் பொருட்படுத்தாமல் மானிட மேன்மைக்காக வாழும் எழுத்தாளர்களும் இருப்பார்கள். பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் என அவர்களைப் பெருமைப்படுத்தினார். இருக்கும்நிலை மாற்றுமொரு புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம் - (தொகுதி 15; பக். 92) என வரையறை வகுத்துக் காட்டினார் பாவேந்தர் பாரதிதாசன். பிறர்க்குழைக்கும் எழுத்தாளர்களைப் பாட்டுப் பூச் சொரிந்து பாராட்டினார். அவரால் பாராட்டப்பட்டோரின் பெயர்களில் பலவும் இன்றைய தலைமுறைக்குப் புதிதாக இருக்கலாம்; எதிர்காலத் தலைமுறைக்குப் புதிராகத் தெரியலாம்! பாவேந்தரால் பாராட்டப்பட்டுள்ள சான்றோர்களின் வரலாறுகளைத் தொகுத்தால், தமிழின மேம்பாட்டு வளர்ச்சி வரலாறு கிடைத்துவிடும். தமக்கு மூத்தோர், தம் வயதுடையோர், தமக்கு இளையோர் எனத் தாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, மொழி இன மேம்பாட்டுக்காக வாழ்ந்தோரைத் தம் பாடல்களில் வாழ வைத்துள்ளார் பாவேந்தர். பழமைக் குட்டையில் முப்பது வயது வரை தாமும் மூழ்கிக் கிடந்தமைக்கு வருந்துகிறார்: முப்பது ஆண்டுகள் முடியும் வரைக்கும்நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்! ( தொகுதி 15; பக். 4) தான் கரையேற உதவிய கைகளுக்குரிய பாரதியை நன்றியுடன் போற்றுகிறார். பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றிஎன் பாட்டிற்குப் புதுமுறை புதுநடை காட்டினான் (தொகுதி 15; பக். 4) தாம் பெற்ற பயனை எல்லோரும் பெறுவதற்குரிய வழியையும் சொல்கிறார். பகை நடுங்கச் செய்த பாரதி பாட்டை நீ பாராட்டு மறவனே! பார்ப்பான் உயர்வென்றும், பாட்டாளி தாழ்வென்றும் ஏற்பாடு செய்தநூல் இழிந்தநூல் என்றால் கூப்பாடு போட்டு நாட்டினை ஆயிரம் கூறாக்கித் தாம்வாழ எண்ணிடும் அந்தப் பகை நடுங்கச் செய்த பாரதி பாட்டை நீ பாராட்டு மறவனே! (தொகுதி 18; பக். 27) பாரதியைப் பக்கத்திலிருந்து பார்த்து, தம் அழுக்கை அகற்றிக்கொண்ட பாரதிதாசன், பழைய நிகழ்ச்சிகளைப் பாட்டால் அசைபோடுகிறார்: பொழுது விடிய புதுவையிலோர் வீட்டில் விழிமலர்வார் பாரதியார் காலை வினைமுடிப்பார் தாம்பூலம் தின்பார் தமிழ்ஒன்று சிந்திடுவார் போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம் (தொகுதி 18; பக். 19) பாரதியை அருகே சென்று பார்க்குமாறு பாவேந்தர் பாடலை நம்மை அழைத்துச் செல்கிறது. செந்தமிழ் நாடெனும் போதினிலே வேண்டுமடி எப்போதும் விடுதலை கரும்புத் தோட்டத்திலே முதலிய பாரதி பாடல்கள் தோன்றிய வரலாற்றைப் பாட்டால் படம் பிடித்துள்ளார் பாவேந்தர். சிலப்பதிகாரம் பற்றிப் பேசுவதற்குத் தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார் புதுவை சென்றுள்ளார். பேச்சைக் கேட்பதற்குப் பாரதியாரோடு பாரதிதாசனும் சென்றுள்ளார். இதுதான் பேச்சு எனப் பாராட்டியபடி பாரதிதாசன் பக்கத்தில் பார்க்கிறார். திரு.வி.க. பேச்சில் சொக்கிப்போன பாரதியார் நிலை கொள்ளாத மகிழ்ச்சியில் நின்றும், அமர்ந்து கைகொட்டியபடி இருக்கிறார். இந்தக் காட்சி பாரதிதாசனிடம் பாட்டாய் விரிகிறது: புதுவையிலே கலியாண சுந்தரனார் ஆற்றியசொற் பொழிவில், தூய மதுவையள்ளி மலர்தேக்கி வண்டுகட்கு விருந்தாக்கி மயக்கு தல்போல் பொதுவினர்க்குச் சிலப்பதிகா ரச்சுவையை நடையழகைப் புகலும் போதில் இதுவையா பேச்சென்பேன்; பாரதியார் கைகொட்டி எழுவார், வீழ்வார். (தொகுதி 18; பக். 92-93) பாரதி முதலிய பலதுறைச் சான்றோர்களையும் பாவேந்தர் பாட்டால் போற்றியுள்ளதை இத் தொகுப்பில் பார்க்கலாம். எளிய நடையில் தமிழ் எழுதக் காரணமானவர் பாரதி என்றும், தூய தமிழ் நடையில் எழுதக் காரணம் தமிழ்மறவர் வை. பொன்னம் பலனார் என்றும் - தமது எழுத்து நடை மாற்றத்திற்குக் காரணமான இருவரையும் நினைவு கூர்கிறார். முன்னை பழகுதமிழ் மூட்டியவர் பாரதியே பின்னை அழகுதமிழ் ஊட்டியவர் - கொன்னை வடசொற் கலப்பின்றி வண்டமிழ் இன்பம் இடச்செய்தார் பொன்னம் பலம். (தொகுதி 18; பக். 198) பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. சீவானந்தம் மக்களுக்காக ஊர் ஊராகச் சுற்றிவந்தவர். குழந்தைகளையும், குடும்பத்தையும் நினைக்காத அவருக்கு அழுக்குச் சட்டையை மாற்றவும் நினைவு இருக்காதாம்! எப்போது பெண்கொண்டார்? இல்லத்தில் மக்கள்தமை எப்போது கையில் எடுத்தணைத்தார்? - முப்போதும் மாசுடையும் மாற்றாத சீவாவுக்(கு) ஊர்ஊராய்ப் பேசுவது தானே பெரிது. (தொகுதி 18; பக். 177) குமுக மேம்பாட்டிற்காக எந்தவிரல் அசைந்தாலும், அந்த விரலுக்குப் பாட்டுக் கணையாழி போட்டு மகிழ்வது பாவேந்தர் இயல்பு. பகுத்தறிவாளராகிய பாவேந்தர் மற்றவர்களின் கடவுட் பற்றையோ சமயப் பற்றையோ பொருட்படுத்தாமல், தமிழ் மேம்பாடு தமிழினமேம்பாடு இவற்றுக்கான பணியையே அளவுகோலாக்கிக் கொண்டார். வ.உ. சிதம்பரனார், இ.மு. சுப்பிரமணியம் ந.சி. கந்தையா, (சந்திரசேகரப் பாவலர்) தண்டபாணி தேசிகர் பவானந்தம் பிள்ளை விபுலானந்தர் நீ. கந்தசாமி அவ்வைதுரைசாமி க. வெள்ளைவாரணனார் இப்படிப் பலரையும் அவர் பாராட்டிப் போற்றுவதற்கு இந்த அளவுகோலே காரணமானது. அம்பேத் காரின் எரிமலை எண்ணமும் எழும்புயல் செயலும் விரிவுல கத்தையே விழிப்புறச் செய்தன (தொகுதி 18; பக். 210) என்று அண்ணல் அம்பேத்காரை வியப்பார். தமிழ்முத லாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச்சீனி வேங்க டத்தின் கால்தூசும் பொறாதான் என்பேன். (தொகுதி 18; பக். 202) என மயிலை சீனி வேங்கடசாமியைத் தோளில் தாங்குவார். அறிஞர்களைப் போற்றும்போது அவரிடம் வெளிப்படும் நுட்பத் தமிழ், இளையோர்க்குப் பாடும்போது எளிமைத் தமிழ் ஆகிவிடுவதை இத் தொகுப்பில் பார்க்கலாம். கொய்யாப் பழத்துக்கு கொம்புண்டு காலுண்டு கூறும் எருதுக் கிரண்டும் இல்லை (தொகுதி 18; பக். 357) எருதுக்கு இல்லாத கொம்பும் காலும் கொய்யாப் பழத்துக்கு மட்டும் வந்தது எப்படி? எழுதிப் பார்த்தால்தான் பாரதிதாசனின் குறும்பு தெரியும். கணகண வென்று மணிய டித்தது காது கேட்கலையா? - பாப்பா காது கேட்கலையா? - தம்பி காது கேட்கலையா? - உன் கையிற் சுவடிப் பையை எடுக்க நேரம் வாய்க்கலையா? (தொகுதி 18; பக். 384) பள்ளிக்கூடம் புறப்படும் காலைநேரப் பரபரப்புக் காட்சியைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இளமைக் கால நிகழ்ச்சிகள் மனத்தில் புரளும். ‘btªÚ® C‰¿¢ br«ig it¤jhš v‹d ngh£L¡ Fo¥ghŒ? (தொகுதி 18; பக். 392) இந்தக் கேள்விக்குக் குழந்தை கூறுவது நாம் எதிர்பார்க்காத விடை: வெந்நீர் ஊற்றிச் செம்பை வைத்தால் விரலைப் போட்டுக் குடிப்பேன் (தொகுதி 18; பக். 392) சூடுமிகுந்த நீராயிருந்தால் தொண்டை புண்ணாகிவிடும். விரலை விட்டு வெப்பத்தை அளப்பது சரியான முறைதான்! நுண்ணுணர்வு, எளிமை, வாழ்க்கைப் பார்வை, வழிகாட்டும் தெளிவு முதலியவை பாரதிதாசன் எழுத்துகளின் பொதுப் பண்புகள். சான்றோர், இளையோர், வாழ்த்துகள் என்னும் முப் பகுப்பில் பாவேந்தர் பாடியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் இளங்கணி பதிப்பகம் வழி 25 தொகுப்புகளாக ஒரே நேரத்தில் வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியனின் முயற்சி மலைப்பானது! கடினமான பணியில் இறங்கியுள்ள இளந்தமிழனுக்குத் தமிழுலகம் கை கொடுக்கும் என்பதில் அய்யமில்லை. - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி – 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! 15. இதயம் எப்படியிருக்கிறது 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் – 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்... vii வலுவூட்டும்வரலாW x பதிப்பின் மதிப்பு xiv முன்னுu xvii 1. வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1  வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1 காட்சி தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு பண்ணிக் கொள்ளு கிறார்கள். ஆனால் இந்த தீயமுயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலையுடைய உலகமும் அறிந்து நகையாடக் கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை. தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல். விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில், இல்லை. காட்சி - தொழிற் பெயர். அதில் காண், முதனிலை. சி-தொழிற் பெயர், இறுதிநிலை, காண் என்பதின் இறுதியில் cள்ள-ண்,vன்றbமய்யானது- á,vன்றtšலினம்வªjல்-£-ஆFம்என்பJசட்ட«.அதனhšjh‹ fட்சிvன்றாயிற்று.fhzš, காண்டல், காட்சி அனைத்தும் ஒரே bபாருள்cடையவை.vdnt காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள். காட்சியைக் காக்ஷி ஆக்குவதில் - தமிழ்ச் சொல்லை வட சொல் ஆக்குவதில் அவர்கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள். பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்: தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம். இனி, இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக் கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்ன என்று தமிழரிற் சிலர் எண்ணலாம். அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டுவைத்ததால் என்ன ஆயிற்றுத் தெரியுமா? வடமொழியினின்று தான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்து தான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்லுவதோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயலுகிறார்கள். அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள். இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கி வர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப் படிக்க. கணம் இயல்பாக ஒருவன் கண் இமைக்கும் நேரத்திற்குப் பெயர். இச்சொல் கண் என்பதிலிருந்து பிறந்தது. கண் அம் கணம் ஆகி, அது கண்ணிமைக்கும் நேரத்திற்கானதை ஈறு திரிந்ததோர் ஆகுபெயர் என்பர். இவ்வாறு கண் என்பது அம் பெறாமலே கண்ணிமைப் போது என்ற பொருள் தருவதும் உண்டு. கயற்கணின் அளவும் கொள்ளார் - சீவக சிந்தாமணி 1393 என்று வந்துள்ளதும் கருதத்தக்கது. எனவே கணம் வந்தவர் சொல்லன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கொள்க. இதைப் பார்ப்பனர் க்ஷணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள். கணமும் க்ஷணமும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. கணம் என்ற தமிழ்ச் சொல் பழந்தமிழ் நூல்களில் நாம் எடுத்துக் காட்டியவாறு காரணப்பெயராய் வந்துள்ளது. இந்நிலையில் நாம் அறிய வேண்டியது என்னவெனில், வந்தவர் நம் தமிழாகிய கணத்தை க்ஷணம் என்று தம் வாய்க்கு வந்தவாறு சொல்லிக் கொண்டார்கள் என்பதே. தானம் தன்மை என்பது மை ஈற்றுப் பண்புப் பெயர் ஆகும். மை ஈற்றுப் பண்புப் பெயர்கள் அனைத்தும் பல மாறுதல்களை அடையும். ஈறு போதல் இடை உகரம் இய்யாதல் ஆதிநீடல் அடி அகரம் ஐயாதல் தன் ஒற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனம்மிகல் இனையவும் பண்புக் கியல்பே என்ற நன்னூற் பாட்டினால் இன்னின்ன மாறுதல் அடையும் என்பது அறிக. மேற்சொன்ன தன்மை என்ற பண்புப் பெயர் ஈறுபோதல் என்ற சட்டத்தால் மை கெட்டுத் தன் என நின்றது. அந்தத் தன் என்பது ஆதி நீடல் என்ற சட்டத்தால் தான் என நீண்டு நின்றது. அந்தத் தான் என்பது அம் என்ற பண்புப் பெயர் இறுதி நிலை பெற்றுத் தானம் ஆயிற்று. தானம் என்பதன் பொருள் தன்மை, உணர்வு என்பன. எனவே தானம் என்பது கொடைத்தன்மை என்று உணர்தல் வேண்டும். தானம் என்பது ஈண்டுக் காட்டிய பொருளில் அமைந்து இருப்பதை அடியில் வரும் சிந்தாமணி (2924)ச் செய்யுளாலும் அறியலாம். கருங்கடற் பிறப்பின் அல்லால் வலம்புரி காணுங் காலைப் பெருங்குளத் தென்றும் தோன்றா பிறைநுதல் பிணையி னீரே அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் தெரியின் மண்மேல் மருங்குடை யவர்கட் கல்லால் மற்றையவர்க் காவ துண்டோ இச் செய்யுளில் வந்துள்ள அருங்கொடைத் தானம் என்ற தொடர் மேலே நாம் காட்டிய வண்ணம் தானம் என்பது தன்மை என்று பொருள்படுவது காண்க. எனவே தானம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் அன்றோ? இதைப் பார்ப்பனர் வடமொழிச் சொல் என்று கயிறு திரிப்பார். தானம் என்ற சொல் வடவர் இலக்கியத்திலும் இருக்கின்றதே எனில், ஆம், வந்தேறிகளாகிய வடவர் தமிழினின்று எடுத்துக் கொண்டார்கள் என்றே அறிய வேண்டும். - குயில், 1.6.1958 2 இலக்கணம் இலக்கம் - குறி, அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்பு விட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம். இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியைக் குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதை சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதும் உண்டு. (இலக்கு + அணம்) இலக்கணம் என்றால் என்ன பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம் - அணுகுவது. ஈறு திரிந்ததோர் ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் நின்றால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது. இது செயவென் எச்சம். (இலக்கு + அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு ஆன்றோர் ஆட்சியில் வந்துளதா எனில், மணிமேகலையில் 30-வது பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 18-வது அடியில், இலக்கணத் தொடர்தலின் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க. அதைத் தொடர்ந்தும், சொற்றகப் பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம். இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ. மீனாக்கி, அழகு முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள். இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காகத் தமிழ் வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலப் படிப்பால் பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் எனத் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றவர் என்பதையும் தமிழர்கள் அறிந்து வைக்க வேண்டும். நேயம் இது நேசம் என்னும் வடசொல்லின் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049-ம் செய்யுள். நெய் பொதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பனரும், பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதையே உளக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள். நெய் என்ற சொல்லினடியாகப் பிறந்தப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக. மீன் இது கூட மீனம் என்ற வடசொல்லின் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதிநிலை பெற்ற தொழிற்பெயர். அது அவ்விறுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள். அம்முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள். எனவே மீன் என்பது முதனிலைத் திரிந்தத் தொழிற் பெயர். அது தொழிலாகு பெயராக மீன் என்னும் கோளைக் குறிக்கும். எனவே மீன் தூய தமிழ்ச் சொல் காரணப் பெயர். கோள்மின்னும் மீன்சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயராதல் உணர்க. ஆசை இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும். மனம் தன்னிலை நிற்றல், பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவு ஆயிற்று. அசைதல் தொழிற்பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலைத் திரிந்த தொழிற்பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றிற் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகின்றது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் ஈண்டு நினைவுறுத்தினோம். பூசை இது பூஜா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர். பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையு மாகும். பூசுதல் என்பதுதானே இது? பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க. நாடகம் இது தூய தமிழ்ச் சொற்றொடர், வடமொழியன்று, நாடுகின்ற அகம் என விரியும் நிகழ்கால வினைத்தொகை நிலைத் தொடர் என்பர் தொல்காப்பியர். இனி அகம் என்ற சொல்லுக்கு அகம், மனம், மனையே, பாவம் அகலிடம் உள்ளும் ஆமே என்ற நூற்பாவினால் பொருள் காண்க. நாடு அகம் என்பதில் வரும் அகத்துக்கு அகலிடம் என்று பொருள் கொண்டு (மக்கள்) உள்ளம் நாடுகின்ற அகன்ற இடம் எனக்கொள்க. இது நாடகமாகிய இடத்தைக் குறித்தது. இனி, நாடுகின்ற பாவம் அதாவது மெய்ப்பாடு எனக் கொண்டு நாடுகின்ற ஆடல்நிலை என்றும் பொருள் கொள்க. எவ்வாறாயினும் நாடகம் என்றது. தூய தமிழ்ச் சொற்றொடர் என்பதில் தமிழர்க்கு ஓர் ஐயமும் வேண்டா. - குயில், 8.6.1958 3 தெய்வம் தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும் என்பதொரு நூற்பா. பிங்கலந்தைப் பழம் பதிப்பில் காணப்பட்டது. இதே நூற்பா தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும் என்ற வேற்றுமையுடன் புதிய பதிப்பில் காணப்படுகின்றது. ஆதலின், தெய் என்பதற்குக் கொல்லுதல், விழுங்குதல் தெய்வம் என்பன பொருளாகக் கொண்டால் இழுக்கில்லை. இதனால் நாம் அறியக்கிடக்கும் செய்தி என் எனில் கூறுவோம். அறிவு நிரம்பாத பண்டை நாளில், பெருங்காற்றையும், கனலை யும், காட்டாற்றையும், வெப்புறுத்தும் வெங்கதிரையும், பெருமழையை யும், விலங்குகளின் எதிர்ப்பையும் தெய் என்று சொல்லி வந்தார்கள். அறிவு நிரம்ப நிரம்ப அவற்றின் பெரும்பயனை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவாராயினர். அறிவு நிரம்பாப் போது வெறுப்புப் பொருளில் வழங்கப்பட்ட தெய் அறிவு நிரம்பிய பிறகு விருப்புப் பொருளில் வழங்கலாயிற்று. தெய் என்ற சொல் அம் இறுதி நிலையும் வ் என்ற பெயரிடை நிலையும் பெற்றுத் தெய்வம் என்றாயிற்று. (தெய்+வ்+அம்) அறிவு நிரம்பாத போது வெப்புறுத்திய ஞாயிற்றையும், நிலவுறுத்திய திங்களையும், துன்புறுத்திய தீயினையும் அறிவு நிரம்பிய காலத்து எவ்வாறு போற்றினார் என்பது நோக்கத் தக்கது. கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. என்ற இந்தத் தொல்காப்பிய நூற்பாவால் ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றையும் வடுநீங்கு சிறப்புடைய தெய்வங்கள் என்று வாழ்த்தியது புலனாகிறதன்றோ! மழையைத் தெய்வமாகக் கொண்டனர்; - போற்றினர். புனலைத் தெய்வமாகக் கொண்டனர்; - போற்றினர். இங்கு அறியத்தக்க மற்றோருண்மை என்னெனில், தெய்வம் என்ற சொல்லால் இந்நாள் சொல்லப்படுவன பயன்பொருள்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆம். பசு தெய்வம், நிலம் தெய்வம், நீர் தெய்வம், சொல் தெய்வம், பெரியவர் அருளிய நூல் தெய்வம் பிறவும் தெய்வங்கள், சமையக் கணக்கர் இத்தெய்வங்களை எல்லாம் மேல் நின்று நடத்துவதோர் பெரிய பொருள் உண்டென்றும், அது கடவுள் இயவுள் என்றெல்லாம் பெயர்பெறும் என்றும் கூறினாராக, அச் சமையக் கணக்கு முற்றிய வழித் தாம் தாம் கண்ட கடவுள் இப்படி இப்படி என்று கூறுவாராகி, உலகில் கலகம் பல விளைத்து வருவராயினர். தெய்வம் தூய தமிழ்ச்சொல் என்பதில் தமிழர்க்கு ஏதேனும் ஐயமிருக்க முடியுமா? முடியாதன்றோ! ஆனால் பார்ப்பனனும், அவன் வால் பிடித்துத் திரியும் சில தமிழர்களும், தெய்வம் வடசொல் என்று உளறி வருகிறார்கள். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு வருமாறு:- தொல்காப்பிய நூன்மரபு 24-வது நூற்பா, ய், ர்,ழ், என்னும் மூன்று மெய்யின் முன். க, த, ந, ம, ச, வ, ஞ, ய என்ற ஒன்பது எழுத்துக்களும் தனித்தனி வந்து நிற்கும் என்று கூறுகையில் ய் முன் வா வருவதற்கு எடுத்துக்காட்டாக தெய்வம் என்ற சொல் காட்டப் பட்டுள்ளது. எனவே தெய்வம் தூய தமிழ்ச் சொல் என்பதை எவராலும் மறுக்க முடியாதன்றோ? - குயில், 17.6.1958 4 காவியம், காப்பியம் இவை இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையவை. இவை வடசொற்கள் என்று கூறிப் பிழைப்பர் பார்ப்பனரும் அவர் அடி நத்துவாரும். காத்தல், காப்பு இவை இரண்டும் தொழிற் பெயர்கள். முன்னதில் தல் தொழிற்பெயர் இறுதி நிலை. பின்னதில் பு தொழிற் பெயர் இறுதி நிலை. இந்த இரண்டு தொழிற் பெயர் இறுதி நிலைகட்குப் பதிலாக அம் என்ற இறுதி நிலை பெற்றுக் காவம், காப்பம் என வரின் அது பிழை யாகாது. எனவே, காவம் காப்பம் என்ற இரு தொழிற் பெயர்களும் இடையில் இகரச்சாரியை பெற்று காவியம், காப்பியம் என வந்தன என அறிதல் வேண்டும். இது எதுபோல எனில், ஓவம் என்பது இகரச் சாரியை பெற்று ஓவியம் என வந்தது போல என்க. நெஞ்சைப் பயனற்ற வழியிற் செல்லாது நன்னிலைப் படுத்திக் காப்பது காப்பியம், காவியம் எனப் பொருள்பட்டுக் காரணப் பெயர்களாகியவாறு காண்க. காவியம், காப்பியம் வடமொழி இலக்கியத்திலும் வருவதால் அவை வடமொழியே எனக் கூறுவாரை நோக்கி, உங்கள் வடமொழி இலக்கியத்தின் ஆண்டு என்ன? சொற்கள் உங்கட்கு ஏது? Ú§fŸ ïªj eh£L¡F tU«nghnj všyh¢ brh‰fisí« bfh©L tªÔ®fsh? என்று கேட்கவேண்டும். ‘všyh¢ brh‰fisí« eh§fŸ bfh©Ltªnjh«’ v‹W mt®fŸ T¿dhš ‘ïika« v‹w brhšiy tU«nghnj bfh©L tªÔ®fŸ vÅš Ú§fŸ ïUªj ïl¤âš ïika« v‹w kiy ïUªâU¡fnt©Lnk - ïUªjjh? என்று கேட்கவேண்டும். இமையம் இமைத்தல் - ஒளித்தல். இமையமலை பனிமூட்டத்தால் ஒளி செய்தலால் அப்பெயரிட்டு அழைத்தார்கள் பண்டைத் தமிழர்கள். எனவே, காவியம், காப்பியம், இமையம் என்பன செந்தமிழ்ச் செல்வங்களே! வந்தவர் மொழியல்ல என நெஞ்சில் நிறுத்துக. வேதம் வேதம் வந்தவர் மொழியன்று. வேய்தல் - மறைத்தல், வேதல் என மருவியது. வேய்ந்தான் என்பது வேய்ந்தன் என மருவியது போல, பின் வேதல் என்பது வேதம் என ஆனது. ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். கபிலம் என்பதிற்போல. வேய்ந்தன் என்பதில் வேய்தல் எனின் கொற்றக்குடையால் மறைத்துக் காத்தல் என்று கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு மறைமலையடிகளும் உரைத்தார். எனவே, வேதம் செந்தமிழ்ச் சொல்லே எனக் கொள்க. மானம் மன்னல் தொழிற் பெயர். மன் ஈறுகெட்ட தொழிற் பெயர். அதாவது முதனிலைத் தொழிற் பெயர். மான் முதனிலை திரிந்த தொழிற் பெயர். அது முதனிலைப் பொருள் இறுதி நிலையாகிய அம் பெற்று மானம் என ஆயிற்று. மேற்சொன்ன மன்னல் அதாவது மன்னுதல் என்றால் தன்னிலையில் மாறாது நிற்றல் என்பது பொருள். அதனால்தான் மானம் என்பதற்குப் பொருள் கூறிய தமிழ்ச் சான்றோர் தன்னிலையில் மாறாது நிற்றலும், மாற்றம் நிகழ்ந்துழி வாழாது சாதலும் என்று பொருள் கூறிச் சென்றார்கள். தீப் பார்ப்பனர்களும் தேப் போமீக்களும் இதை வடசொல் என்று தமக்குத் தோன்றியவாறே கூறி மகிழ்வர். மானம், உலகம் தோன்றியதுமுதல் மானத்துக்காக வாழ்ந்துவரும் தமிழரின் தூய தமிழ்ச்சொல் என்க. ஆதி ஆதி என்பது வடசொல்லாம். அச்சொல்லும் திருவள்ளுவருக்கு தாய்க்குப் பெயராம். அந்தத் தாய்கூட ஒரு புலைச்சியாம். ஆதி வடசொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற் பெயர். ஆ-முதனிலை, தி-இறுதிநிலை; செய்தி, உய்தி என்பவற்றிற் போல. ஆதி - முதன்மை, இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர். பகவன் பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள். பகவு என்பதற்குப் பாவேந்தர்கள் அன் இறுதி நிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச் சொல். பகவன் வடசொல்லாம்; அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழ்வதற்குக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. என்ற குறளின் முதற்பாட்டில் திருவள்ளுவர் தம் பெற்றோர் நினைவாக அவர் பேர்களாகிய ஆதி பகவன் என்பனவற்றை வைத்தாராம். ஆதி பகவன் என்பது வடசொற்றொடர் என்று பரிமேலழகர் கதைத்ததற்குக் காரணம் கண்டுகொள்க. இன்னொருமுறை கூறுகின்றேன். பகவன் தூய தமிழ்ச்சொல். - குயில், 24.6.1958 5 கங்கை நவ்வல், நாவல் என்பன ஒரு பொருள் உடைய தமிழ்ச் சொற்கள். இது இந்தியாவின் நடுப்பகுதியில் மிகுதி. நாவல் மிகுதியாக நடுப்பகுதியில் இருந்த காரணத்தால் பண்டைத் தமிழர்கள் இத்தீவை நாவலந் தீவு என்றார்கள். தென் என்பது அழகு. அது கண்ணுக்குப் பொருளாகும்போது அழகு எனப்படும். மனத்துக்குப் பொருளாகும்போது இனிமை எனப்படும். எனவே, தென்-அழகு, இனிமை என்க. தென் என்பதிலிருந்து தென்னை, தென்கு என்பன தோன்றின. இவற்றின் பொருள் அழகியது, இனியது என்பன. எனவே, தென்னையும் தென்கு அல்லது தெங்கும் அவ்வகையான மரத்திற்குக் காரணப் பெயர். தென்னை மரம் அதாவது தெங்கு அழகியதாக இருத்தலும் நோக்குக. இத்தென்னை நாவலந்தீவின் தென்புறம் மிகுதி. தென்னை இருந்த காரணத்தாலேயே இப்புறத்திற்கு தெற்கு என்று கூறினார்கள் பண்டைத் தமிழ் மக்கள். வடம் என்பது ஆலமரம். அது வட்டமாக மேலோங்கித் தழைப்பதால் அவ்வாறு காரணப் பெயர் பெற்றது. வடமரம் அதாவது ஆலமரம், நாவலந் தீவுக்கு வடபுறத்தில் மிகுதி. அந்தப் பக்கத்தை வடக்கு என்றார்கள் பண்டைத் தமிழர். வடக்கு என்ற சொல் வடமரம் இருத்தலால் வந்த காரணப் பெயர் என அறிக. எனவே நாவல் மரங்கள் மிகுதியாக நடுவிடத்தை அழகு செய்ததால் இத்தீவுக்கு நாவலந்தீவு என்கிறார்கள் பண்டைத் தமிழர்கள். தென்னை மரங்கள் அழகு செய்து சிறக்க இருந்ததால் இப்பக்கத்தை தெற்கு என்றார்கள். வடமரம் மிகுந்திருந்த காரணத்தால் அப்பக்கத்தை வடக்கு என்றார்கள். யார்? பண்டைத் தமிழர்கள். இன்னும், மேற்கு என்பதற்கு மேல் (உயரம்) என்பதுதான் பொருள். உயர்ந்திருக்கும் பக்கம் ஆதலால் அது மேற்கு என்கிறார்கள். கிழக்கு என்றால் கீழ் (தாழ்த்தி) என்பதுதான் பொருள். அப்பக்கம் தாழ்ந்திருத்தல் கருதியே கிழக்கு என்கிறார்கள். இதுவரைக்கும் சொல்லியவற்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னவெனில்: 1. நாவலந்தீவு முழுவதும் இருந்தவர்கள் தமிழர்கள் மட்டும் தான். 2. நாவலந்தீவு முழுவதும் வழங்கியது தமிழ் மட்டுந்தான். 3. நாவலந்தீவு முழுவதும் இருந்த - இருக்கின்ற பொருள்கள் அனைத்துக்கும் உள்ள பெயர்கள் அனைத்தும் தமிழர் இட்ட தமிழ்ப் பெயர்களே! ஆரியர்கள் பிறகு வந்தார்கள். பிறகு வந்தார்கள் என்றாலும் அவர்கள் பிறகு இந்நாட்டுப் பொருள்களுக்குப் பெயர் வைத்திருக் கலாம் என்றால் அதெப்படி முடியும்? எந்த இடத்திலிருந்து வந்தார்களோ அந்த இடத்தில் இல்லாத இமையத்திற்குப் பெயர் எப்படி அவர்கள் கொண்டு வந்திருக்க முடியும்? கங்கு என்பது கரைக்குப் பெயர். தமிழில் கங்கு- கங்கை என்று வருவதற்கு இலக்கணச் சட்டம் இருக்கிறது. அதை ஐயீற்றுடைக் குற்றுகரச் சொல் என்பார்கள். கங்கையாறு கரையாற் சிறப்புற்றது பற்றி அதைக் கங்கு அல்லது கங்கை என்றார்கள் அங்கிருந்த பண்டைத் தமிழர்கள். கங்கா என்ற வடமொழிச் சிதைவுதான் கங்கை என்று பார்ப்பனர் பகர்வர். அவர் கால்நத்திகள் கழறுவர். நாவலந்தீவுக்கே உரிய பொருள்களுக்கெல்லாம் நாவலந்தீவின் மொழியாகிய தமிழ்ப் பெயர்தான் உண்டு என்று காட்டப்பட்டது இதுவரைக்கும். பொதுவான பொருள்களுக்கு அமைந்த சொற்களிற் பெரும் பாலனவும் தமிழ்ச் சொற்களாகும் என்பது மறுக்க முடியாததாகும். சலம் ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக் காரர்கள். சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாகத் தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்றார்கள் அல்லவா? நாத் திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது. - குயில், 1. 7. 1958 6 உவமை உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரைமலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை, முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது உவமை எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க. அமிழ்து இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் என்றும் அமுது என்றும் மருவி வழங்கும். இதைப் பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியார்களும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப் பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது. மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமிழ்து எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து-உணவு. இதனாற்றான் வள்ளுவரும். வானின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க. மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன் பின் பல்லாயிரம் ஆண்டுகளின் பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும். ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் (ஆலமரம்) என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல் + அ+ அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பதன் நேர் பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்துக்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந் துரைத்தனர் அறிஞர் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது. ... ... மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவலமுற்றாள். (சீவக சிந்தாமணியின் 897வது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துளது காண்க. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் ஐந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக. எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி, இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை - மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப் பட்டனர். அவ்வாரியர் மலைப் பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். வாழ்ந்தும் தமிழர்க்குத் தீமை செய்தே வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து - ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை - நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்ப தென்று. அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. - குயில், 8.7.1958 7 திராவிடம் இது தமிழம் என்பதன் திரிபு ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன. பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்: மேலாம் தமிழ்என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்? தமிழரல்லார் நாக்குத் தவறு. தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள் தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்! ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை ஓதலினால் மாறுபடல் உண்டு. தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம் த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப் படியுரைத்தால் யார்வியப்பார் பார். தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு த்ரமிள த்ரமில்எல்லாம் சாற்றின் - தமிழின் திரிபே அவைகள்! செழுந்தமிழ்ச் சொல் வேர்தான் பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு. திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில் பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த பழத்தைப் பயம் பளம் என்பார் அவைகள் தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம். உரைத்தஇவை கொண்டே உணர்க தமிழம் திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம் ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல் ஆரியச்சொல் ஆமோ அறி. தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும் நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும் பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப் பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு. திராவிடம் தன்னந் தனியா ரியமா? திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ! இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர் என்பார்சொல் ஏற்புடைய தன்று. திராவிடம் என்னல் தமிழின் திரிபே திராவிடம் ஆரியச்சொல் அன்று - திராவிடம் வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள் வெல்கஎன்று விண்டதுவே யாம். வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில் செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! - முந்தியே இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே எங்கிருந்து கொண்டுவந்தார் பேர் வேட்டி! இது வேஷ்டி என்ற வட சொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பன அடியாரும் பகர்வர். வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப் பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ எனும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப்படுதலின் அறுவை என்றும், துணிக்கப்படுதலின் துணி என்றும், துண்டிக்கப்படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத்தக்கதாம். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க. ஆசாரம் ஆசு + ஆர்வு + அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது. பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத் தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார். அதி இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச்சொல், அதைத்தல், அதை, அதி, என்பனவற்றிற்கு மிகுதி என்பது பொருள். - குயில், 15.7.1958 8 அதி இது தூய தமிழ்ச் சொல் என்றும் அதைத்தலின் முதனிலை யாகிய அதை என்பதுதான் ஆதி என்றாயிற்று என்றும் கூறி யிருந்தோம். அது பற்றி நண்பர் ஒருவர் (பெயரைக் குறிப்பிட வேண்டாமாம்) அதை என்பது அதி என்று வர இலக்கணச் சட்டம் இடந் தருகின்றதா என்று கேட்டுள்ளார். ஒரு சொல் வேறுபாடு உறுவதையும் மருவி வருவதையும் தமிழிலக்கணம் ஒத்துக் கொள்ளுகிறதல்லவா?. அதன்படியே அதை என்பது அதி என வேறுபட்டுள்ளது அல்லது மருவிற்று அறிதல் வேண்டும். இதற்கு மற்றொரு மேற்கோள் அவைத்தல், அவித்தல் என்றும், அவை என்பது அவி என்றும், வந்தது காண்க. ஆசிரியர் இது வடசொல் என்று ஏமாற்றுவார். தூய தமிழ்ச் சொற்றொடர் ஆகும். ஆசு - குற்றம். இரியர் - நீங்கியவர். மடமை என்னும் குற்றத்தினீங்கியவர் ஆசிரியர். காரணப் பெயராதல் அறிக. மடம் அறியாமையை உணர்த்தும் போது மடம் தூய தமிழ்ச் சொல்லே. அற நிலையத்துக்கு ஆகும் போது வடமொழி என்க! அரங்கு அரக்குதல் என்னும் தொழிற் பெயர் (உடலில்) புடைபெயர்ச்சி செய்தல் என்று பொருள்படும். அதன் முதனிலையாகிய அரக்கு என்பதற்கும் அதுவே பொருள். அரக்குதல், அரக்கு என்பவற்றின் தன்வினைகள் அரங்குதல், அரங்கு என்பது. பொருள் என்னவெனில் (உடல்) புடைபெயர்தல், அஃதாவது உடலசைதல், ஆடல் ஆகும். இனி, அரங்கு என்பது அம் இறுதி பெற்றும் பெறாமலும் ஆடுமிடத்திற்கு ஆனது ஓர் ஆகுபெயர் என்க! இச் சொல் நம் செந்தமிழ்ச் செல்வமேயாகவும். இதை வடசொற் சிதைவென்று கூறுவார் கூற்று நூற்றுக்கு நூறு பொய்யென மறுக்க. முரலை அண்மையில் வடசொற் பற்றுடையார் ஒருவர், இது முரலா என்ற வடசொற் சிதைவு என்று கூறினார். எரிச்சல் வந்துவிட்டது. அதனால் சிரிக்க வாய்ப்பிழந்தோம். ஆரியர் நாற்றமே இந்த நாவலந்தீவில் ஏற்படாத காலத்திலேயே, வட நாட்டிலிருந்த நருமதை ஆற்றுக்குத் தமிழர் முரலை என்று பேரிட்டு அழைத்தார்கள். முரலை என்ற தொழிற்பெயருக்கு, முரலுவது ஒலிப்பது, அதிலும் புறத்தால் ஒலிப்பது என்பது பொருள். அஃது தொழிலாகு பெயராய் முரலை ஆற்றைக் குறித்தது. எனவே தூய தமிழ்ச் சொல் அன்றோ? முரலி இது முரலுதலை-ஒலித்தலையுடையது என்ற பொருள் கொண்டது. மேலும் உள்ளால் ஒலிப்பது என்று கொண்டனர் பண்டைத் தமிழர். இதை வடவர் முரளி என்று கூறுவார்கள். முரலி என்பது குழலுக்கு - புல்லாங் குழலுக்குப் பெயர். தூய தமிழ்ச் சொல் என்பதை அறிந்து மகிழ்க! மா இஃது மஹா என்ற வடசொற் சிதைவாம். என்னே மடமை! மா! எனின் பெரியது, சிறந்தது, விலங்கு, மாமரம், முதலிய பல பொருள் குறிக்கும் உரிச்சொல் என்று, வடமொழி என்பது இந்நாட்டிற்கு புகுவதற்கு முன்னமே தமிழ் நூல் கூறிற்று. பெரிது என்ற பொருளில், மாப்பெரிய என்று எழுத வேண்டும். (இடையில், ப் விரிக்கா விடில் மா பெரிது) மா என்பது மகா என்ற வடசொற் சிதைவு என்று கொண்டதாகி விடும். மா இருக்க மஹா எதற்கு? கண்ணியம் இது கண்யம் என்பதன் சிதைவு என்பர் பார்ப்பனரும் அடியாரும். கண்ணல், எண்ணல், சிறத்தல் என்பன ஒன்றே. கண்ண, கண்ணிய எனச் செய, செய்யிய எனும் வாய்ப்பாட்டு வினை யெச்சங்களாயும் வரும். கண்ணியம் இகரச் சாரியையும் அம் இறுதி நிலையும் பெற்ற பெயர். வடவர் சொல்லும் கண்யம் வேறு; தமிழர் கொண்ட கண்ணியம் வேறு என அறிதல் வேண்டும். - குயில், 22.7.1958 9 காமம் இதை வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில், வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது; தமிழினின்று திருடியது. காமக்கணிப்பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதில் காமம்; கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு. இவ்வாறு மொழிபெயர்த்தவர் சங்கப் புலவர் என்ப. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், அட்சி என்ற இரு சொற்கள் உண்டு. அட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழ்ச் சொல்லே ஆதலும், அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச் சொல்லாகிய காம் என்பதனின்று தோன்றியது. இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றியறியற்பாலது. ஓம் இது வடசொல் அன்று. தூயதமிழ்ச் சொல் - காக்க என்பது இதன் பொருள். சங்கம் சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்ற பொருள் குறிக்குமிடத்து அது தமிழ் சொல்லா, வடசொல்லா என்பதுதான் ஆராய்ச்சி இங்கே. தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடபால், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன. வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவர். தென்கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். புலம் - அறிவு. தென் கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிலக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க. சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம். பதி அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும், பதி என்பது வடசொல்லன்று, வழங்கிடுவார், வடவரும் அவர் அடியார்களும். எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே. - தொல்காப்பியம் மொழிமரபு, 44 என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே. கலை இதுவும் தூய தமிழ்ச் சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வற்புறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள். பிலம் பில்கல் என்பதன் முதனிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. எனவே, பிலம் தூய தமிழ்ச் சொல். தொல். மொழி மரபு - 49ஆம், பாட்டின் உரை, இது தமிழ்ச் சொல்லாதலைக் குறித்தது. குலம் இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகின்றது. இது தூய தமிழ்ச் சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும். - குயில், 29.7.1958 10 அந்தணர் இதை அந்தம் + அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழிவழக்காடுவர் இழிவுறு பார்ப்பாரும் இனம் கண்டு வேர்ப்பாரும். வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே! அம்+தண் = என்பன அந்தண் என்றாயிற்று. இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது, நாட்டார் கண்கட்கு. அழகு செய்வாரின் தொண்டின் அருட்டன்மை. இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்படியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, அந்தண்காவிரி என வந்துள்ளவை காண்க. அந்தணர் என்பவர் யார்? - கூறுவோம்; அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லம் துறந்தான் ... என்பது பட்டணத்தடிகள் பகர்ந்தது. இல்லறத்தானைவிட மக்கள் நலம் கருதி இல்லம் துறந்தான் சிறந்தவன் என்று குறித்தார். மேலும் அதைத் தொடர்ந்தே அவர், அவனிற் சத கோடி உள்ளத் துறவுடையான் என்றும் கூறினார். அவ்வாறு இல்லந் துறந்தவனை விடச் சிறந்தவன் உள்ளத்துறவுடையான். எனவே துறவு இல்லத்துறவு, உள்ளத் துறவு என இரு வகைப் படும். இவ்விரண்டில். இல்லத்துறவே மேலானது மக்கட்குப் பயன்படுவதால். இக்கூறிய இல்லத் துறவிகளையே நம் தமிழ் முன்னோர் அந்தணர் என்றார் என்று கடைபிடிக்க, அந்தணர் என்ற சொல் அயலவர் மாசுபடாத செந்தமிழ்ச் செல்வம். மனம் மனசு என்ற வடசொல்லின் சிதைவென்பார் வந்தவரும், சில கந்தல்களும். மன்னுவது மனம் என்பதைத் தமிழ் மக்கள் அறிந்து ஏமாறா திருக்க வேண்டும். உலகுக்கு முதன் முதலில் தத்துவ நூல் (கபிலர் எண்ணூல்) தந்தவர்கள் தமிழர்கள். அதில் மனம் என்பதின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தியதை மன்னுவது என்ற காரணத்தால் மனம் என்று அதற்குப் பெயர் அமைத்தமையே காட்டும். மனமானது புலன்வழிச் செல்லாமல் தன்னிலையில் மன்னுவதே உணர்வு நிலை என்றும், அந்த உணர்வு நிலையே விடுதலை வீடு என்றும் கூறும் கபிலர் எண்ணூல். தூய தமிழ்ச் சொல்லாகிய, மனம் என்பதை வந்தவர் எடுத்துக் கொண்டனர்; வேறு வழியில்லாததால் என்று அறிந்து வைக்க. பிணம் பிண் என்ற வேர்ச் சொல் நீக்கம் என்ற பொருளுடையது. உயிர் நீக்கிய உடலைக் குறிப்பது எனக் கொள்க. அதில் அம் இறுதி நிலை. எனவே பிணம் தமிழ்ச் சொல்லே. - குயில், 5. 8. 1958 11 கன்னி இதை வடசொல் என்று பார்ப்பனரும் அவர் அடிவருடிகளும் சொல்லுவார்கள். இது தூய தமிழ்ச் சொல்லென்றே அறியவேண்டும். கன்னி - இளமை, கன்னித்தமிழ் என்றால், இன்றும் இளமையோடு திகழும் தமிழ் என்பது பொருள். இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு: தொல்காப்பியம் நூன் மரபு 30ஆம் பாட்டு. மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும் தம்முற் றாம்வரூஉம் ரழஅலங் கடையே என்பது. இஃது என்ன சொல்லிற்றெனின் ர், ழ், என்னும் இரண்டு எழுத்துக்கள் தவிர மற்றைய எழுத்துக்கள் தம்முன் தாம் வரும் என்றது. இதில் ன் என்பதன் முன்ன வருவதற்கு எடுத்துக்காட்டாகக் கன்னி என்ற தூய தமிழ்ச்சொல் காட்டப்பட்டிருக்கின்றது. காலம் கால், காலை, காலம் ஒரு பொருட்சொற்கள். இது தூய தமிழ்ச் சொல்லே, எனினும் பார்ப்பனரும் பழிப்பனரும் இதையும் வடசொல் என்று ஏமாற்றுவர். இதனாலன்றோ தொல்காப்பியச் சொல்லதிகார உரைகாரர் காலம் உலகம் என்ற 58ஆம் நூற்பாவுரையில், காலம் உலகம் வடசொல்லன்று, ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணங்கூறார் என்று விழிப்பூட்டினார். உலகம் இது லோகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று புகலும் பொய்யரும் உள்ளார் அன்றோ? மேலே காலம் என்பதன்கண் உரைத்த தொல்காப்பியச் செய்யுள் உரையாய் இதுவும் தமிழ்ச் சொல் என்றே வற்புறுத்தியுள்ளார். உலகம் - உலகு என்றும் வரும். உலகத்தல் - துன்பம். துன்பம் நிறைந்ததாதலின் உலகம் காரணப்பெயர். இவ்வாறு மறைமலை யடிகளாரும் வரைந்தனர். ஆகுலம் இது வடமொழியன்று தூய தமிழ்ச் சொற்றொடர்; ஆகு x உலம் எனப் பிரியும். ஆகு-ஆகின்ற (ஒருவன் முயற்சியாலாகின்ற) உலம்- ஒலி. வினைத்தொகை நிலைத்தொடர். கடல் முதலியவற்றில் உண்டாகும் இயற்கை ஒலியைப் பிரித்தற்கு ஆகு என்ற அடை வேண்டிய தாயிற்று. உலம் என்பது உலம்பு என்றதன் கடைக்குறை என்பர். ஆகவே ஆகுலம் என்றது தூய தமிழ்ச் சொற்றொடர் என்க. வியா கூலம் என்பது போன்ற சொற்கள் வடமொழியிற் கேட்கப் படுகின்றன. ஆயினும் அவற்றிற்கும் ஆகுலம் என்னும் இதற்கும் தொடர்பில்லை என அறிதல் வேண்டும். ஆகுலம் என்ற சொற்றொடரை வள்ளுவர் தாம் தக்க இடத்தில் வைத்து செய்யுள் செய்து காட்டியருளினார். மனத்துக்கண் மாசு இலன்ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. என்பது திருக்குறள். மனத்துக்கண் மாசற்ற நிலையில் உண்டாகும் நினைப்பும் செயலும் அறமாகும். அல்லாதவை அனைத்தும் அறமாகா. வேறு என்ன எனின் நான் அறம் செய்தேன், நான் அறம் செய்தேன் என்று ஒலிபரப்புதலும் ஒலிபரப்பும்படி செய்தலும் ஆகிய தன்மை யுடையவைகளே என்பது இதன் கருத்து. ஈண்டு ஆகுலம் என்பது இன்றியமையாத சொற்றொடர் ஆதல் கண்டு இன்புறவேண்டும். - குயில், 12.8.1958 12 சிவம் இது தூய தமிழ்ச் சொல். செம்மை என்னும் மையீற்றுப் பண்புப் பெயரினின்று வந்த பெயர்ச்சொல். செம்மைப்பட்ட நிலை என்பது இதன் பொருள். செம்மை சிவம் ஆகுமா என்று கேட்பார் தமிழிலக்கணம் அறியாதாரும், பார்ப்பனரும், அவரடியாரும் ஆவார். அன்றியும், சைவத்தை வளர்ப்பதாகக் கூறி, மக்கட்பொதுப் பணத்தில் விழுந்து புரண்டுவரும் அறநிலையத் தலைவராகிய துறவிகள் சிலரும் சைவம் தமிழ்ச்சொல் அன்று என்று மறுத்துள்ளார்கள். அவ்வாறு மறுத்தவர்கள் காரணம் கூறி மறுத்தார்களா எனில் அதுதானில்லை. அவர்கள் எண்ணம் யாதெனில் வடமொழி ஒழிந்தால் சைவமே ஒழியுமே என்பதுதான். தமிழில் பற்றுள்ளவர்போல் நடிப்பார்கள் வேறு வழியின்மையால். மூன்றாண்டுகட்கு முன் மயிலத்து அறநிலையத்தின் ஒரு பகுதி பழுது பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக அவ் வறநிலையத் தலைவராகிய துறவியார் பொருளுதவி கோரி வேண்டுகோள் வெளி யிட்டார். அதில் அவர் தம் பெயரை வடவெழுத்தாலேயே பொறித் திருந்தார். இத் திருந்தாச் செயலுக்குக் காரணம் கேட்டாருக்கு அவர் அளித்த விடை என்ன தெரியுமா? நாம் தமிழில் கையொப்பம் இட மாட்டோம் என்பது. இந்தப் பாவி இன்றைக்கும் இப்படித்தானாம் - திருந்தவில்லையாம்; திருந்துகிற எண்ணமும் இல்லையாம். இந்த ஒழுங்கில் இவர் தமிழ்க் கல்லூரி நடத்துகிறார். இந்தக் கல்லூரி யில் பயிலும் மாணவர்கள் எவ்வாறு உருப்படுவார்களோ நாம் அறியோம். ஆயினும் அம் மாணவர்களுக்குத் தமிழ் ஆர்வத்தில் உயர்ந்து வரும் தமிழ்நாடு, விழிப்பூட்டி வருகின்றதென்றே எண்ணுகிறோம். செம்மை என்பதில் உள்ள மை ஈறுபோதல் என்ற சட்டத்தால் கெட்டது. முன்னிருந்த மெய்திரிதல் என்ற சட்டத்தால் செம், சிவ் ஆயிற்று, அம் என்ற பண்புப் பெயர் இறுதிநிலைபெற்று அந்தச் சிவ் என்பது சிவம் ஆயிற்று. அந்த சிவம் என்பதும் ஆகுபெயராய் செம்மையுற்ற ஒரு நன்னிலைக்கு ஆயிற்று என்க. செம்மை என்பது செம்மை நிறத்திற்கும் பெயர். செங்கால் நாரை என்பதிற் காண்க. செம்மை செவப்பு என்றும் சிவப்பு என்றும் வருவதும் இங்கு நோக்குக. செம்மையின் வழித்தாகிய சிவம் என்பதை செம்மை நிலை என்ற பொருளில் அமைத்துத் தமிழ்ச் சான்றோர் செய்யுள் செய்தமையை நோக்குக! தவம்புரிந் தடங்கி நோற்கும் தத்துவர்த் தலைப்பட் டோம்பிப் பவம் பரிகெமக்கும் என்று பணிந்து அவருவப்ப ஈமின் அவம்புரிந்து உடம்பு நீங்காது அருந்தவம் முயன்மின் யாரும் சிவம்புரி நெறியைச் சேரச் செப்பும்இப் பொருளும் கேண்மின். என்பது சீவக சீந்தாமணி காந்தருவதத்தையாரிலம்பகம் 605-ஆம் செய்யுள் ஆகும். இஃதேயுமன்றிச் சிவம் தூய தமிழ்ச் சொல்லே என்று அறுதியிட்டுக் கூறியருளிய மறைமலையடிகளாரின் கூற்றையும் கண்டு தெளிக. இனி, சிவம் என்பது தமிழாயின் சைவம் எனத் திரியுமா என ஐயுறுவாரும் உளர். அவ்வாறு ஆரியர் திரித்தார்கள். சிவம் என்பதை அவர்கள் தமிழினின்று எடுத்துக் கொண்டார்கள். வந்தவர்களாகிய அவர்கள், வருமுன் சிவத்தையறிந்தாருமல்லர்; அப்பெயரைக் கேட்டாரு மல்லர். அவர்களின் - ஆரிய மறையே சிவத்தைக் கண்டதில்லையே! - குயில், 19.8.1958 13 சட்டச் சுவை இதிலேயுள்ள சட்ட என்ற சொல் ஷட் என்ற வட சொல்லின் சிதைவென்று கூறி மகிழ்வார் பார்ப்பனரும், அவரடியாரும். இத்தொடரில் சுவை என்பதையும் ரசம் என்று மாற்றி ஷட்ரசம் என்பார்கள். சட்ட என்பது வடசொல்லா என்பது கேள்வி. சட்ட என்பதைச் சிவஞான போத உரையாசிரியர் செம்மைப் பொருட்டாவதோர் அகர ஈற்றிடைச் சொல் என்று கூறியுள்ளதை முதலில் நினைவில் பதியவைத்துக்கொள்ளவேண்டும். சட்ட என்பதன் பொருள் சிறப்பு, செம்மை என்பனவாகும். சட்ட என்பது பிட்டுநேர்பட என்ற திருவாசகச் செய்யுளிலும், பிறவற்றிலும் வந்துள்ளது. சுவை என்பது ஆகுபெயராகி உணவைக் குறிக்கும். எனவே சட்டச்சுவை. சிறப்புணவு என்பதாகும். திருமணம் முடிந்தவுடன் முதன் முதலாகத் தன் கணவனுக்கு மனைவி உணவு இடுவதை ஒரு சடங்காக வைத்துக் கொண்டனர் பார்ப்பனர். அவ்வாறு இடுவதற்கு அவர்கள் சட்டரசம் என்பார்களாம். இவ்வாறு கூறிய, விளம்பி ஆவணிக் கலைமகள் சட்டரசம் என்பதில் உள்ள சட்ட என்பது ஷட் என்ற வட சொல்லின் திரிபே சட்ட என்று கோணகோடு இழுக்கிறது. சட்டச் சுவையைச் சட்டரசம் ஆக்கி, அதன் பின் ஷட் ரசம் ஆக்கிக் காட்டும் கலைமகளின் போக்கு மானமற்ற போக்கே என்க. அது பொருள் கூறுகிறது ஷட் ரசத்துக்கு ஷட்ரசம் என்றால் அது சுவையாம். அறுசுவை என்று கூறிவிட்டால் சிறப்புணவைக் குறித்த தாகுமோ? உணவுக்கு அறுசுவை என்பது இயற்கை அடைமொழி என்பர். உணவில் அறுசுவைக்குத் தாழ்ந்த ஐஞ்சுவை நாற்சுவையும் உண்டோ? ஷட்ரசம் என்பதற்கு அறுசுவையுணவு என்று கலைமகள் கொண்ட பொருள் சிறவாமை என்க. சட்டச்சுவை, அல்லது சட்டரசம் என்பதில் உள்ள சட் என்பது தூய தமிழ்ச் சொல்லே என்க. செட்டி இது ரேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். சட்ட என்பது சகரம் தமிழில் மொழிக்கு முதலில் வரநேர்ந்த பின் தோன்றிய சொல். அதற்கு முன் இது செட்ட என்றே இருந்ததென அறிதல் வேண்டும். இந்த இடைச்சொல்லடியாகப் பிறந்ததே செட்டு, செட்டி, என்பன. நடுவுநிலை என்பதுதான் இதன் வேர்ச் சொல்லின் பொருள். தமிழில் பண்டு தொட்டு வழங்கும் செட்டு, செட்ட, செட்டி முதலிய சொற்களைப் பிறமொழி மாந்தரும் எடுத்தாண்டார்கள். சேட் என்ற சொல்லையும் நோக்குக. எனவே செட்டி தூய தமிழ்ச்சொல்லே! - குயில், 26.8.1958 14 முகம் இது வட சொல் என்று வம்பு புரிந்தார்கள் பல்லாண்டுகளின் முன்! அப்போது இது தூய தமிழ்ச் சொல்லே என்று பேராசிரியர் கா.சுப்பிரமணியப் பிள்ளை எம்.ஏ. எம்.எல். முதலியவர்கள் எடுத்துக்காட்டி மறுத்தார்கள். ஆயினும் ஏமாற்றும் பார்ப்பனரும், ஏமாறும் தமிழரும் மலிந்து வரும் இந்நாளில் மீண்டும் அதுபற்றி ஆராய்வது பொருத்தமேயாகும். முன் என்பதன் திரிபே முகம். எனவே முகம் என்பதற்கு முன் என்பதே பொருள் என்க. முகம் என்ற இச்சொல். நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்களின் உள்ளுறுப்பாகவே அமைந்திருப்பதும், பழங்காலந் தொட்டே அமைந்திருப்பதும் நோக்கற் பாலன. முகமன் - முன், சிறப்புக் கூறல், முகப்பு - ஆசை, வீடு இவற்றின் முன்னுறுப்பு, முகசு, முகசம், முன்னே சிறந்து காணப்படும் பல். முகதா - முன்னிலை. முகருதல் - முன்னாலிருந்து மணத்தை உட்கொள்ளல், முகவணை- முகவுரை முன்னால் உரைக்கும் உரை. இதை வடவர் எடுத்தாண்டார்கள் வழியின்மையால் போலும். எனவே, முகம் தூய தமிழ்ச் சொல் என்று முடிக்க. காரணம் இது தமிழ்ச் சொற்றொடர் கருமை+அணம்=காரணம் ஆயிற்று. மையீறு போதலும் ருகரத்தின் மேலுள்ள உகரம் போதலும், முதல் நீளலும் தமிழிலக்கணச் சட்டம். எனவே, கார் + அணம் = காரணம் ஆயிற்று. கருமையின் வேற்றுமையான் உற்ற கார் என்பதற்குப் பொருள் முதன்மை. அணம் அணுவுவது - அஃதாவது நெருங்குவது, முதன்மையை நெருங்குவது என்ற பொருளில் அமைந்ததாகும். காரியம் கார் + இயம் = காரியம். கார் முதன்மை. இயன்றது என்பது இயம் என வேறுபாடுற்றது. காரணத்தால் இயன்றது காரியம் என்க. காரணமே காரியம் என்னும் கபிலர் எண்ணூலையும் எண்ணுக. காரியம் தூயதமிழ்ச் சொற்றொடர். காரணம் காரியம் இரண்டை யும் வடமொழியாளர்கள் எடுத்தாண்டார்கள் வேறு வழியின்மையால். கடிகை இது கடிகா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு கூறுவார் பார்ப்பனரும் ஏய்ப்பனரும். கடி என்பதற்கு எத்தனை பொருள்கள் உண்டு? கடி-வியப்பு, அளர், அச்சம், அழகு, இடுப்பு, இரப்போர் கலம், இன்பம், சினப்பு, ஐயம், ஒழிக்கை, ஒளி, ஓசை கடிதழும்பு, கரிப்பு, திருமணம், களிப்பு, கால நுட்பம், காலம், காவல், கூர்மை, கைப்பற்றல், சிறப்பு, சிறுகொடி, விரைவு, ஓசை, பூங்கா, நீக்கல், பேய், பிணம், புணர்ப்பு, புதுமை, பொழுது, மிகுதி, மணம், விளக்கம். இங்குக் கடி என்பது கால நுட்பத்துக்கானது. கடி வினைத் தன்மையடைந்து கைத் தொழிற் பெயர் இறுதி நிலை பெற்றது. நாழிகை என்பது பொருள். எனவே கடிகை வடசொல் என்பது கரடி. அது தூய தமிழ்ச் சொல்லே. கடிகாரம் இது கடிகா யந்திரம் என்பதின் திரிபென்று கதைப்பர். கடிகை ஆர்வது - காட்டுவது - ஈற்று திரிவுற்றது. எனவே கடிகாரம் தூய தமிழ்ச் சொல்லே. - குயில், 2.9.1958 15 கற்பனை இது கல்பனா என்ற வட சொல்லின் சிதைவு என்பார் வடவர். ஆம் என்பார் தமிழறியாத தமிழர் சிலர். கற்பனை, கல்பனாவின் சிதைவு என்பவர், விற்பனையை வில்பனா என்பதன் சிதைவு என்பார் போலும். நகைப்புக் கிடமாகிறது. கல்+பு=கற்பு. அனைத்துமோர் முதல்நிலை என்க. இது கற்பனையின் முதனிலையாயிற்று. கற்பு+அன்+ஐ=கற்பனை என்க. அன் சாரியை. ஐ தொழிற் பெயர் இறுதி நிலை. முதனிலையாகிய கற்பு என்பதன் பொருள் தோண்டுதல் என்பது. ஆகுபெயராய் தோண்டுதலின் பயன், எண்ணத்தின் ஊற்று, புதுப்புது கருத்துக்கள் என்க. எனவே கற்பனை தூய தமிழ்ச் சொல் என்பது வெட்ட வெளிச்சம். கல்பனா என்பதொரு சொல் வடமொழியில் இருக்கலாம். அது தமிழில் கற்பனை என்றுதான் திரிக்கப்படும். திரிக்கப்படவே, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வடவர் சொல்லும் கற்பனைக்கும், தூய தமிழ்ச் சொல்லாகிய கற்பனைக்கும் தொடர்பில்லை என்பதாகும். அன்றித் தமிழின் கற்பனையையே வடவர் எடுத்தாண்டார்கள். எனினும் பொருந்துவதே. இந்த உலகில் சமக்கிருதம். தமிழுக்குப் பிந்தியது என்பதும், சமத்கிருதக்காரர் தமிழர்க்குப் பிந்திய நாகரிகம் உடையவர்கள் என்பதும் மறத்தற்குரியன அல்ல. வடிவு இது அம் சாரியை பெற்று வடிவம் என்றும் வரும். இச்சொல் வடசொல் என்று ஏமாற்ற வருவர்; ஏமாறற்க. வார்ப்படக்காரர் தொழிலிடத்தினின்று தோன்றிய பெயர்களில் ஒன்று. வடி+வு=வடிவு தொழிற்பெயர். தொழிலாகு பெயராக வடிவு செய்தலால் வரும் வடிவத்துக் காயிற்று. செம்பு முதலியவைகளைக் காய்ச்சி அச்சில் கசடு நீங்க வடித்தூற்றுதலின் ஆகும் வடிவம் எனக் காரணப் பெயராதல் காண்க. வார்ப்படம் என்பதும் இதே பொருளில் அமைந்த காரணப் பெயரே என ஒப்பு நோக்கித் தெளிக! படிவு இதுவும் அம் சாரியை பெற்றுப் படிவம் எனவரும், இதையும் வடசொல் எனக் கதைப்பாரும் உளர். படிவு, படிதல் என்ற பொருளுடைய தொழிற் பெயரே இதுவும், அச்சுக்குப் பெயர். அச்சிற் படிவு செய்யப்பெற்ற வடிவப் பொருளுக்கு ஆகு பெயர். படிமம் - வடிவம், படிவம் ஆயினவெனக் கூறுவர் ஏமாற்றுக் காரர்கள். அதற்கு ஒத்து ஊதுவார்கள் மீனாக்கி அழகு, சேது ஆகிய பிள்ளைகள், படிவு தூய தமிழ்க் காரணப் பெயர் என முடிக்க. - குயில், 9.9.1958 16 தாரம் தாரம், அரும்பண்டம், வெள்ளி, அதன் ஒளி, சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் என்பது திவாகரம். இதில் தாரம் என்பதற்கு நான்கு பொருள் காணப்படுவதைக் காண்க. வல்லிசைப் பெயரும், வாழ்க்கைத் துணைவியும், யாழின் நரம்பும், அரும்பண்டமும் வெண்தாதும் தராவும், நாவும், தாரம் என்ப என்பது பிங்கலந்தை. இதில் தாரம் என்பதற்கு, ஏழு பொருள் காணப்படுவது காண்க. தாரம், வல்லிசை, நா, வெள்ளி தலைவி, ஓரிசை, கண், என்ப. என்பது சூடாமணி நிகண்டு. இதில் கண் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்க! தாரம் என்ற இச் சொல் வடமொழியே என்று சொல்லுகின்ற வர்கள் அதற்கு எடுத்துக்காட்டாக என்ன சொல்லுகின்றார்கள் எனில், தாரம் ஏழிசையின் ஒன்று என்ற பொருள் வடமொழியில்தான் உண்டு என்கின்றார்கள். அரும்பண்டம் முதலிய பொருள் தரும்போது அது தமிழ்ச் சொல்லே என்பதை அவர்களே ஒத்துக்கொள்கின்றனர். நாம் கேட்கின்றோம், ஏழிசையில் ஒன்றைக் குறிக்கின்றபோது அது வடசொல் என்றால், ஏழிசை வடவர்க்கு எப்போது எங்கிருந்து கிடைத்தது? - ஏழிசை தமிழரிடமிருந்து வடவர் எடுத்தனர் என்பதை மறுக்கக் கூடியதா? இல்லவே இல்லை. ஆதலின் ஏழிசையின் ஒன்றுக்கு அமைந்த தாரம் என்பதையும் வடவர் தமிழினின்றே எடுத்தனர் அல்லவோ? இனி, அரும்பண்டம், ஏழிசையின் ஒன்று ஆகிய இரு பொருளிலும் வரும் தாரம் செந்தமிழ்ச் செல்வமே. ஆனால் நிகண்டு, பிங்கலம் முதலியவற்றில் பிற பொருளில் வரும் தாரம் என்ன மொழி? எனில், கூறுவோம். தாரம் என்பதை வடவர், வல்லோசையானும் மெல்லோசை யானும் சொல்லிக் கொண்டனர். ஆயினும் முதல் தாரம் என்பது தான் அது ஆகுபெயர் முதலிய சார்புப் பொருள் பெற்று வந்திருக்கலாம். அவையும் தமிழரால் வந்தனவே என்று உணர்தல் வேண்டும். எனவே, தாரம் என்பது தூய தமிழ்ச் சொல் என முடிக்க. இனியும் இசை இலக்கணம் தமிழினின்றே வடவர் எடுத்தார்கள் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:- 1. இன்றைக்கு ஆயிரத்து நானூறு யாண்டின் முன் வடமொழியில் இசை நூல் இயற்றிய பரதரும், அறுநூற்றெண்பது யாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்க தேவரும், தமிழிசையிலிருந்து எடுத்தே வடமொழிக்கண் இசை வகுக்கப்பட்டது எனக் கூறினார் என்பர், இவ்வாராய்ச்சிவல்ல விருதைச் சிவஞான யோகிகள். 2. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக் கண் சென்ற உண்மை, ஆபிரகாம் பண்டிதர் மிக விரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலில் நன்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது. - குயில், 16.9.1958 17 ஓரை இது தூய தமிழ்ச் சொல். இராசிகளின் பொதுப் பெயர். ஆனால் வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவார். அதற்குக் காரணம் இரண்டு: தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சி யில்லாமை மற்றொன்று. தொல்காப்பியத்துக் களவியல் 44-ம் நூற்பாவாகிய மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் என்பதன்கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் உண்டு. இதையே சிலர் வடசொல் என்று கூறிக் கொக்கரிப்பார்கள். ஓரை என்னும் இதுமட்டுமன்று; ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்றே ஏமாற்றித் திரிவார்கள். அவர்கள் யார்? தமிழ் மொழி கொண்டு தம் மொழி பெருக்கிய மொழிவெறியர். தொல்காப்பியத்துக்கு முற்பட்ட காலத்திலேயே ஓரை என்னும் சொல் வடமொழியிலேனும் கிரேக்க மொழியிலேனும் வழங்கப்பட்டிருக்கு மாயின் அது அப்பிறமொழிச் சொல் எனலாம். காட்டட்டுமே! மறைமலையடிகளார் கூறுகின்றார்; யாம் ஆராய்ந்த மட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலாதலால் அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க ஆரிய நூற்களில் ஓரை என்னும் சொல் வழங்குதலைக் காணேம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்த வராகமிகிரரால், கிரேக்கரின் வானநூல் ஆராய்ச்சியைத் தழுவி ஹோரா சாத்திரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப் பட்டிருக்கின்றது. அதுகொண்டு ஹோரா என்னும் சொல் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்தில் கிரேக்க மொழியில் வழங்கப்படாமை மட்டும் அறியப்படும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க ஆசிரியரான ஹிப்பார்க்க காலத்திலேதான், கிரேக்கரின், வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்கு பெறத் தொடங்கியது. அதன் பின் அது தாலமி என்பவரால் முற்றுப் பெறலாயிற்று. ஆகவே கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் ஹோரா என்னும் சொல் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டதாகிறது. அவ்வாறாகவே கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குமுன் கிரேக்க மொழியில் வழங்காத ஓரை என்னும் சொல்லை அக்கிரேக்க மொழிக்கே உரியதென்பது பொருந்துமா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகிய தொல்காப்பியத்தை அந்நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகிய அச்சொற்கொண்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகும் என்றல் பொருந்துமா? மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் ஓரை காணப்படு கின்றது. அக்காலத்தில் ஏற்பட்ட கிரேக்க, வடமொழி நூல்களில் ஓரை காணப்படவில்லை. தொல்காப்பியத்திற்கு மூவாயிரத்து ஐந்நூறாண்டுகட்குப் பிற்பட்ட - அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்துண்டான கிரேக்க - ஆரிய நூல்களில் மட்டும் ஓரை காணப்படுகின்றது. இந்தக் காரணங்களால் ஓரை தூய பழைய தமிழ்ச் சொல்லே என உணர்ந்துகொள்க. சரி இது இன்றும் தமிழ்நாட்டிற் பல பாங்கிலும் செறி என்று பேசப்படுகின்றது. நினைவு கொள்க. செறிவு என்பதன் முதனிலையே செறி, பொருத்தம் என்பதே இதன் பொருள். செறி என்பதுதான் சரி என மருவிற்று. ஆதலின் சரி என்பது தூய தமிழ்ச் சொல் என்று கடைப்பிடிக்க. - குயில், 23.9.1958 18 பரதர், பாரதர், பாரதம், பரதன் இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களேயாதல் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு:- நால்வகை நிலத்தும் மருவிய குலப் பெயர் ஆவன: முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர். நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர். இதனால் நாம் அறிய வேண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பியர் காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும். மீனெறி பரதவர் மடமகள் மானேர் நோக்கம் காணா ஊங்கே என்ற நற்றிணையிலும் காண்க. இதில் வரும் பரதவர்தானா பரதர் எனின் ஆம் என்க. பரதர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக. இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர் - பரதன், பாரதர், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம். தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள் - பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன் முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர். இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கும் தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர். பாரத மரபினரான தேவசிரவர், தேவவாதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு 3-23-2) ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு 6-16-4) இவ்வாறு இருக்குமறையில் பல இடத்தும் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும். தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்குமறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்! அன்றியும் செந்நிறக் கடவுள் என்ற காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கின்றது, இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம். தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி - தக்ஷிணாக்கினி என்று சொல்லப்படுகின்றது. இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின்கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந்த நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர். வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்து வரைதுறையின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர், என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து 33-ம் பதிகம் கூறுகின்றது. இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்குக் கூறியவற்றால் அறியலானவை எவை? ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால் தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகண்டம் என விரிந்தது. பரதர், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம். பரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க. - குயில், 30.9.1958 19 தாசர் தாஸ என்று வடமொழியில் சொல்லப்படினும் இது வடமொழி யன்று. தாஹி என்று பார்சி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிடாது. தாதர் என்ற தூய தமிழ்ச்சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டு களுக்கு முன் - அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழையுமுன் - வடவராலும், பார்சிக்காரராலும் தாஸ, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும். தாத்தல் - கொடுத்தல், இது தாத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பது காண்க. தா-கொடு, தாத்தல், தாத்து, தாதம், கொடுத்தல் கொடை என்க. எனில், தாசர் என்ற சொல்லுக்குக் கொடையாளிகள், வள்ளல்கள் என்று பொருளா என்று கேட்போரை நாம் வேறென்னதான் என்று கேட்கின்றோம். தாசர் என்றால் அடிமைகள் என்பதல்லவா பொருள் எனில், அது பின்னாளில் என்றும் எடுத்துக்காட்ட நம்மால் முடியும். ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டவர்கள், தமிழ்ச் சொல் ஒவ்வொன்றையுமே தலைகீழாக்கி வைத்தார்கள். அவர்களின் ஏமாற்று - விழிப்புற்ற - ஆராய்ச்சி மிக்க இக் காலத்தினும் செல்லுமோ! ஆரியர் - மிலேச்சர் என்பது பிங்கலந்தை. அதை அநாரியர் - மிலேச்சர் என்று இதே நூற்றாண்டில் உ.வே. சாமிநாத ஐயர் முயற்சியால் அகரவரிசை நூல் ஒன்றும் வெளிவந்திருப்பதை நாம் கண்டோம் அல்லோமோ? இருபது ஆண்டுகளின் நிலையே இப்படியானால், ஆயிரக் கணக்கான ஆண்டுகளின் முன்னிருந்த நிலைமை எவ்வாறு தலைகீழாக்கப் பட்டிருக்கும். பாலிமொழி ஆராய்ச்சியில் உலகப் புகழ் வாய்ந்த தருமானந்த கோசம்பி தம் பகவான் புத்தர் என்ற நூலில் அடியில் வருமாறு கூறுகின்றார்:- ஆரியர் வருமுன்பு சிந்து பஞ்சாப் பெருமாவட்டங்களில் தாசர்களின் ஆட்சி நிலவியிருந்தது. இப்போதுதான் தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள் ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஆரிய மறையில், தாஸ, தாச் என்ற இரண்டு வினைப் பகுதிகளுக்குக் கொடுத்தல் என்ற பொருளே அமைந்திருக்கின்றது. அண்மையில் வெளிவந்த அகரவரிசை நூல்களிலும் கொடுத்தல் என்ற பொருளிலேயே தாஸ, தாச் என்ற சொற்கள் அமைந்துள்ளன. எனவே தாசன் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள்கள் கொடை வள்ளல்; நாவலந்தீவின் உயர்குடித் தோன்றல்! என்பனவேயாகும். ஆவெதா வில் பர்வதின்யது என்ற வட்டாரத்தில் தாச நாட்டு பிதிரர்கள் வழிபாடு பற்றிய செய்தி வருகின்றது. அதில் அவர்களை தாஹி என்று குறித்துள்ளார்கள்:- தாஸ, தாச் என்ற தமிழ்ச் சொற்களை ஆரிய மறை எடுத் தாண்டதும் இங்கு நோக்கத்தக்கது. தாசன் - தமிழ்ச் சொல்லே என அறுதியிட்டுக் கூறுக! - குயில், 7.10.1958 20 வித்தகம் இது தூய தமிழ்ச் சொற்றொடர். இரு சொற்களால் அமைந்தது. வித்து + அகம். வித்தகம் என்பது பழந்தமிழ் நூற்களில் பல்லிடத்தும் எடுத்தாளப் பட்டிருக்கின்றது. நத்தம்போற் கேடும், உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது. - திருக்குறள் வித்தகப் பெண்பிள்ளை நங்காய். - ஔவையார் முதலியவை காண்க. வித்து எனில் முதன்மை: காரணம், அகம் எனில் மனம். எனவே வித்தகம் (வெற்றிக்குக்) காரணமாகிய மனம்; ஆற்றல்! அவ்வாற்றலும் தோல்வியடையாத ஆற்றல் ஆகும். மேற்படி குறளில் வரும் வித்தகர் என்பதற்கு பரிமேலழகரும் சதுரப்பாடு உடையவர் என்று பொருள் கூறினார். சதுரப்பாடு - ஆற்றல். வித்தகம் என்னும் இது, நாளடைவில் வித்துக்கும் வழங்க லாயிற்று. அதன் அருமை காட்ட உழவர்கள் வித்து என்ற சொல்லை வித்தகம் என்றே சொல்வதுண்டு. மணிமேகலையில் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 227-ம் அடி. நெல்வித் தகத்துள் நெல்முளை தோற்றும் என்பது. வித்தகம் தமிழ்ச் சொற்றொடர் என்பதில் ஐயப்பாடு அடையக் காரணமே இல்லையாகவும், தமிழ் மாணவர் நலம் கருதி நாம் இதற்கு விளக்கம் தர முன் வந்தோம், இது வடசொல் என்று ஒரு நண்பர் சொன்னதால். - குயில், 14.10.1958 21 மளிகை இது தமிழ்ச் சொல்லா? விளக்கித் தருக என ஓர் அன்பர் கேட்கின்றார். மலிகை என்ற தூய தமிழ்ச் சொல் மளிகை என்று மருவிற்று. ஆதலின் தமிழ்ச் சொல்லே. அன்றியும் ஒரு தமிழ்ச் சொல் சிறிது வேறுபாடுற மருவினாலும் அதன் தூய்மை கெடாது என்ற உண்மையை மனதிற் கொள்க. ஆகவே மளிகை என்பது தமிழ்ச் சொல், என்று மட்டும் சொல்லி அமையாமல், தூய தமிழ்ச் சொல் என்றே சொல்லுக. மலிகை - நிறைதல். பெருகல் இத்தொழிற் பெயர் மலிதல் எனத் தல் இறுதிநிலை பெற்றுவரும். இனி மளிகை எனில் பல்பொருள் நிறைதல் என்க. மளிகைக் கடை எனின் பல்பொருள் நிறைந்த விற்பனை இல்லம். பூ பூ என்பது பூமி. உலகத்தைக் குறிக்கும் போது அது வடசொல் அல்லவா என்றார் அன்பர். அன்று; அது தூய தமிழ்ச் சொல்லே. பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் என்பதற்கு மலர் மேவிய சோலையுள்ள புல்வயல் என்ற ஊர் என்று ஒரு புலவர் பொருள் கூறியிருந்ததும் நம் நினைவிற்கு வருகின்றது. அது பிழை. பூமேவு - உலகில் அமைந்த என்று தான் பொருள் கூற வேண்டும். பூ எனினும் மலர் எனினும் உலகையே குறிக்கும் என்பது எதனாற் பெறப்படும் எனிற் கூறுவோம்: இவ்வுலகுக்குத் தமிழர் கொடுத்த எண்ணூல் என்ற தத்துவ நூலில் (கபிலம், கபிலசாங்கியம்) ஆதி ஆகிய அதாவது முதன்மை (மூலப் பிரகிருதி)யை அரும்பு என்றும், தன் மலர்ச்சியை - மலரை இந்த உலகம், என்றும் சொல்லி வைத்தார் திருவாரூர்க் கபிலர். அன்று தொடங்கியே பூ உலகுக்கு வழங்கலாயிற்று. வடவரும் அதை அப்படியே எடுத்தாண்டார்கள். எண்ணூலையும் வடமொழியில் பெயர்த்தார்கள் அன்றோ! திருக்குறளில் வரும் மலர்மிசை ஏகினான் என்பதில் வரும் மலருக்கும், உலகு என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளத் தவறியதால் அதற்குப் பலவாறு பொருள் கூறியிருக்கிறார்கள் பலர். எனவே, பூ உலகைக் குறிக்கையிலும் அது தூய தமிழ்ச் சொல்லே என்க! - குயில், 21.10.1958 22 குடம் இது தூய தமிழ்ச் சொல். இதையும் வடசொல் என்று ஆக்கிவிட எண்ணினர் வடவர். குடாகாயம் என்ற ஒரு தொடரைக் கட்டித் தத்துவ நூற்களில் விட்டிருந்தார்கள். சிவஞான போதத்திற்கு உரை எழுதவந்த சிவஞான யோகிகள் அங்கு இந்தக் குடாகாயத்தைக் கண்டாராதலின் அது பற்றிய புனைசுருட்டை விளக்க எண்ணினார். குடம் என்ற தமிழ்ச் சொல்லும், ஆகாயம் என்னும் வடசொல்லும் புணரவேண்டுமானால், குடவாகாயம் என்று புணர வேண்டும்; ஆதலால் யோகிகள் குடா காயம் என்று புணர்ந்துள்ள இது மரூஉ என்று கூறி, குளம் ஆம்பல் என்பன குளாம்பல் என்று புணர்ந்துள்ளதையும் எடுத்துக் காட்டினார். இதனால் வடவர், குடம் என்பதற்கு வடமொழிச் சட்டை போட்டதும், அது தமிழ்ச் சொல்தான் என்று சிவஞான யோகிகள் அந்தச் சட்டையைக் கிழித்தெறிந்ததும் உலக வெளிச்சமாகிவிடவே வடவருக்கு வந்தது எரிச்சல், சிவஞான யோகிகள் மேல் படைஎடுக்கவேண்டும்; நேரடி நடவடிக்கையில் நுழைவாரா வடவர். அதுதானே இல்லை! கோடரிக் காம்பொன்று தேடினார்கள், சிவஞான யோகிகளைத் தொலைக்க. இதற்கு முன் வைத்தியநாத தேசிகர் என்ற ஒருவர் இலக்கண விளக்கம் என்பதொரு நூல் எழுதியிருந்தார். அந்நூல் வடமொழியி னின்றே தமிழ் வந்தது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைச் சிவஞான யோகிகள் இலக்கண விளக்கச் சூறாவளி என்ற நூலின் வாயிலாக மறுத்துச் சிதறடித்தார். உள்ளதைச் சொன்னால் நொள்ளையனுக்கு நோக்காடுதானே? வைத்தியநாத தேசிகர்க்குச் சிவஞான யோகிகள் மேல் பகை உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. குடம் தமிழ்ச் சொல்லே என்று எடுத்துக்காட்டியதற்காக அச்சிவ ஞான யோகிகள் மேல் ஏவினார்கள் வடவர், கோடாரிக் காம்பாகிய வைத்தியநாத தேசிகரை. எடுத்தார் தேசிகர் இறகை! குடம் என்பது வடசொல்லே! என்று - எழுதினார், இப்போது வண்ணாத்ரி தான் வண்ணாத்தி ஆயிற்று என்று தெ.பொ. மீ. சொன்னது போல. சிவஞான யோகிகளின் உண்மைக் கருத்தைத் தேசிகரின் இந்த மறுப்பு அசைத்துவிடவில்லை. ஆயினும், தமிழர்களுக்கு அது தமிழ்ச் சொல்லே என்பதை நன்றாக விளக்கவேண்டுமே என்ற அருள் உள்ளத்தால், சிவஞான யோகிகளின் மாணவராகிய சபாபதி நாவலர் தாம் எழுதிய, திராவிடப் பிரகாசிகை வாயிலாக ஒரு விளக்கம் தரலானார். அது வருமாறு: குடம் தமிழ்ச் சொல் ஆதல் குடந்தம்பட்டு, குடக்கூத்து, குடமுழா என்றற்றொடக்கத்தாற் பயின்றுவரும் தமிழ் வழக்குரைகளால் அறிக. இன்னும் குடம் தமிழ் இயற்சொல் என்பது குடந்தம்பட்டு எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடர்க்கு - வழிபட்டு என்றும், வணக்கம் பட்டு என்றும் உரைப்பர் என்றும், குட என்பது தட என்பது போல வளைவு உணர்த்துவதோர் உரிச்சொல் ஆதலின் அதனடியிற் பிறந்த பெயருமாம் என்றும் நச்சினார்க்கினியர் உரை கூறுதலால் அறிக. இதுவரைக்கும் கூறியவற்றால், சிவஞான யோகிகளும், நச்சினார்க்கினியரும், குடம் தமிழ்ச் சொல் என்பதையும், மேலும் காரணப் பெயர் என்பதையும் விளக்கியது அறிவிக்கப்பட்டது. அதுபற்றி இன்னும் சில கூற விரும்புகின்றோம். தட என்பது வளைவுக்குப் பெயர். அவற்றுள், தட என்கிளவி கோட்டமும் செய்யும் என்றது காண்க. அதுபோலவே குட என்பதும் வளைவுக்குப் பெயர் என்க. வளைவு பெற்றுள்ள காரணத்தால் குடம் காரணப் பெயர். குடம் போல் அதாவது உடல் வளைந்து வணங்குதற்கும் குடந்தம் என்பர் தமிழ்ச் சான்றோர் என்பது காட்டப்பட்டது. இனி, இவ்வாறு வளைவின் பெயரால் வணங்குதலைக் குறிப்பதென்பது தமிழ் நூற்களில் பெருவரவினதாகும். தோட்டி என்பது யானை செலுத்துவோன் வைத்திருக்கும் கருவி; அது வளைந்திருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. அதனால் வணங்குதலைத் தோட்டி என்ற பெயராலும் குறித்துள்ளார்கள் பழந்தமிழ்ச் சான்றோர். தோட்டியின் வணக்கம் வேட்டவன் விரும்பி என்று (பெருங்கதை, 1-45-64) வந்துள்ளதை நோக்குக. இதனால் வளைவுள்ள தோட்டி போல் வணங்குதல் என்பது ஏற்பட்டது. இன்னும் தோட்டி என்றே வணங்குதலைச் சொன்னதுண்டோ எனின், கேட்க; பதிற்றுப் பத்து 62-ஆம் பாட்டின் 10 ஆம் தடக்கையர் தோட்டி செப்பி என்று வந்துள்ளது. இதற்கு உரையாசிரியர். தோட்டி வளைந் திருத்தலின் வணக்கத்திற்குப் பெயராயிற்று என்றார். இந்நாளைய தமிழர்கள் குடம் என்பதை வடசொல் என்று பிழையாக நம்புகிறார்கள் என்று எண்ணி, நாம் இவ்வாறு - அது தமிழ்ச் சொல் என்பதற்குக் காரணங்காட்ட முன் வந்தோம் இல்லை. வேறு எதற்குக் கூறினோம் என்பதை நோக்குக. நம் தமிழ் அன்னை பகைவரால் பெருநாட்களாகவே எவ்வாறு அலக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றாள்! நோக்கு. நம் தமிழன்னை பகைவரால் அலக்கழிக்கப்படுவது மட்டும் அன்றி, அப் பகைவர்களின் அடிவீழ்வாராகிய தமிழர்களால் எவ்வாறு அலக்கழிக்கப் படுகின்றாள்! நோக்குக. பகைவர், நம் தமிழன்னையை ஒழித்துக் கட்டுவதில் எவ்வளவு பெருமுயற்சி கொள்ளுகின்றார்கள்? நோக்குக. அந்தப் பகைவர்கட்குத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அண்ணாத்துரைகள், மீனாக்கி அழகிகள், சேதுக்கள் எவ்வாறு ஒத்து வேலை செய்து வருகின்றார்கள். வந்துள்ளார்கள் நோக்குக! - குயில், 28.10.1958 23 வினயம் இது தூய தமிழ்ச் சொல். வினையம் என்பதையே இவ்வாறு திரித்து ஆண்டனர் வடவர். வினை என்பது அதன் பயனுக்கு; வினையம் ஈறு திரிந்து ஆகுபெயர் ஆயிற்று. வினை இரண்டு; நல்வினை, தீவினை, வினையம் இரண்டு; நல் வினையம், தீவினையம். ஆயினும் வினையம் என்பது, நல்வினையம் தீவினையம் என ஏற்றவாறு பொருள் கொள்ளவேண்டும். நல்வினையம் என்ற இடத்தில் வரும் வினையம் வணக்கம், அடக்கம், அறிவு, என்ற பொருள்களைத் தந்து நிற்கும். தீவினையம் என்ற இடத்தில் வரும் வினையம் அவற்றிற்கு மாறான பொருளைத் தந்து நிற்கும்! ஆயினும் புராண காலப் புயலில் சிக்குண்ட புலவர்கள் நல்ல பொருளில் எடுத்தாளும்போது இச்சொல்லை வினயம் என்றும் தீய பொருளில் கையாளும்போது இச் சொல்லை வினையம் என்றும் குறிக்கலாயினர். அதனால் அண்மைக் காலத்து அகரவரிசை நூற்களில், வினையம் - வணக்கம், அடக்கம், அறிவு என்று பொருள் காட்டினர். வினையம் - தீய வினைப்பயன் என்று கொண்டனர் புலவர். கம்பராமாயணச் செய்யுள்: இளையநற் காதை முற்றும் எழுதினோர் வியந்தோர்கள் அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்துக் கேட்டோர் கனைகடற் புடவிமீதே காவலர்க்கு அரசாய் வாழ்ந்து வினையம் அதுஅறுத்து மேலாம் விண்ணவன் பதத்திற்சேர்வார். என்பதில் வினையம் காண்க. எனவே வினயம் வினையமே தூய தமிழ்ச் சொல்லே. கவி இது கபி என்பதின் சிதைவானால் குரங்கு என்று பொருள்படும். அப்போது அது வடசொல் என்றால் நாம் ஏற்றுக் கொள்ளத் தடை யில்லை. பா என்னும் பொருளைத் தரும் போது அது (கவி) தூய தமிழ்ச் சொல்லேயாகும். கவிதல் என்பது தல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். கவிகை என்னும் போது, அது கை இறுதி நிலை பெற்ற தொழிற் பெயர். கவிதை என்பதில் அதுபோலவே தை இறுதிநிலை என்க; நடத்தை என்பதிற் போல. எனவே கவிதல், கவிகை, கவிதை இத் தொழிற் பெயர்கள். கவி என முதனிலைத் தொழிற் பெயராக வருவது உண்டு. இது பெரு வழக்கும் ஆகும். இனிக் கவி என்றால் மனம் ஒரு பொருளில் கவிவது, பா என்க. கவி என்பது பாட்டுக்குத் தொழிலாகு பெயராயிற்று. கவிதா என்கின்றார்களே வடவர் எனில், அது வடவர் இயல்பான சொல் என விடுக்க! கவிஞனின் உள்ளத்தில் உருவான நிலையில் வைத்து அதைக் கவி என்றான் தமிழன், அது வெளிப்பட்டுப் பரவி நடக்கும் (பரவி) நிலையில் அதைப் பா என்றான்! கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக் குவிப்பான் குருகைப் பிரான்சட கோபன் குமரி கொண்கன் புவிப்பா வலர்தம் பிரான்திருவாய் மொழி பூசுரர்தம் செவிப்பால் நுழைந்து புக்கு உள்ளத்திலே தின்று தித்திக்குமே. - சடகோபர் அந்தாதி 7. என்றதில் நோக்குக. இதில் கவி என்றது என்ன பொருளில் அமைந்தது! மனம் கவிதலால் உண்டான பா எனப் படவில்லையா? எனவே கவி தனியே நின்று ஆகுபெயராய்ப் பாவை உணர்த்துவதில் வியப்பென்ன? கவி என்ற தூய தமிழ்ச் சொல்லும், அது பாவை உணர்த்த வேண்டியதற்கான தமிழ்ச் சட்டமும் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மிடம் உண்டு! ஆட்சியில் உண்டு! அது போல இதை வடவர் 5000 ஆண்டுகளின் முன்னே ஏற்பட்டிருந்தால் அந்தக் காரணத்தைக் காட்டி இது வடசொல்லே தான் என்று மறுக்கட்டுமே! தமிழர் தம் தமிழ் உள்ளத்தை வடவரின் நச்சில் துவைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழில் உள்ள சொற்களிலெல்லாம் ஐயப்பாடுறு வானேன்? நாவலந்தீவு தமிழருடையது. அங்கு இயற்கை முறையில் முதற்காலத்திலே இருந்தது தமிழ். ஆரியர் வந்தவர். வந்தபின்தான் அவர்களின் மொழியைத் தமிழாற் பெருக்கினர். ஆரியர் வரும்போது அவர்கட்குச் சில சொற்களே தெரியும்! அவர்கட்கு நூற்களும் ஏற்பட்டன என்றால் தமிழாலேயே! சமகிருதம் என்பது சேர்த்துப் பொறுக்கிச் செம்மைப் படுத்தப்பட்ட ஒருகூட்டுக்கறி! தமிழ் அப்படியா? கருத வேண்டும். எனவே கவி தூய தமிழ்ச் சொல்லே என்று கடைபிடிக்க! - குயில், 4.11.1958 24 புருவம் புரை, புரைவு, புரைவம் அனைத்தும் உயர்வின் பெயர். இஃது புருவம் என மருவிற்று. உயர் இடம், மேடு என்பன கொள்க. முகத்தில் குறிப்பிடத்தக்கதாகிய கண்ணுறுப்பினும் உயர்ந்திருப்பது என்ற காரணம் பற்றி வந்த பெயர் புணர்ப் புள்ளுறுத்த புரைபதம் பெருங்கதை: இலாவண காண்டம் இதில் புரை உயர்வு குறித்ததைக் காண்க! விரைவிரியார் புரைவுறப் புணர்த்த பெருங்கதை: உஞ்சை இதில் புரைவு, உயர்வு குறித்தது காண்க. இனி, புரைவு அம்சாரியை பெற்றுவரும் மன்று மன்றம் என வந்தது போல். எனவே புரை, புரைவு, புரைவம் இவை உயர்ந்த இடத்துக்கு ஆம். போது ஆகுபெயர் எனப்படும். எனவே புருவம் தூய தமிழ்ச் சொல்லே எனக் கடைபிடிக்க. வாரி கம்பராமாயணத்துக்கு உரை எழுத வந்த வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரி தமிழ்ச் சொற்களையெல்லாம் வேண்டுமென்றே வடசொற்கள் என்று காட்டி மகிழ்பவர். அதில் வாரி என்பதும் ஒன்று. பாலகாண்டம் ஆற்றுப்படலம் 3-ம் செய்யுள் உரையிலும் மேலும் பல இடங்களிலும் வாரி, இலக்கனையாய்க் கடலை குறித்தது, ஆதலின் அது வடசொல் என்று கூறியுள்ளார். வார் என்றாலே தமிழில் நீருக்குப் பெயர். நீண்டு ஓடுதல் என்ற காரணப் பொருளுடையது. அதுவே வார்தல் வார்ந்தது என்றெல்லாம் வினைப்பெயர் முதனிலையாய் வரும். எனவே வார் என்ற முதனிலை தொழில் பெயருக்குப் பெருகுதல், ஒழுகுதல் என்ற பொருள் உண்டு. அந்த வார் என்பது வினைமுதற்பொருள். இறுதி நிலையாகிய இகரம் பெற்று வாரி என்றாயிற்று. வாரி என்பதற்கு நீர்ப்பெருக்கு, நீர் ஓட்டம், வெள்ளம் என்றெல்லாம் பொருள் பட்டுத் தமிழிலக்கியங்களில் வரும். இதுவே ஆகு பெயராய்க் கடலையும் உணர்த்தும், ஊர்வாரி நன்செய் எனப் பேச்சு வழக்கில் வருவதும் அனைவரும் அறிந்ததொன்றாம். எனவே வாரி என்பது தூய தமிழ்க் காரணப்பெயர் என்க. இனி, வாரிதி வார் என்பது முதனிலை, தி தொழிற் பெயர் இறுதி நிலை. இகரம் சாரியை. ஆகவே வார்தி ஆயிற்று. இது தொழிலாகுபெயராய்க் கடலை உணர்த்தும். வாரிதி என்பதை வடமொழி என்பவர், தமிழினின்று அது எடுக்கப்பட்டது என்று உணர வேண்டும். வாரி என்பதற்குக் கூறியது கொண்டு வாரிதியும் தூய தமிழ்க் காரணப் பெயரே என்று கடைப்பிடிக்க. தாமரை இதை தாமாசம் என்ற வடசொல்லின் சிதைவு என்று தமிழர்க்குக் குல்லாய் தைப்பர். மரு என்பது தமிழில் மணத்துக்குப் பெயர். அது ஐ என்ற பெயர் இறுதி பெற்று முற்றும் அற்று ஒரோ வழி என்ற சட்டத்தால் மரை என்றாயிற்று. இதுவும் முதலுக்கு ஆவதால் பண்பாகு பெயர் என்பர். இனி, மரை என்பது தாம்பு என்பதன் கடைக்குறையான தாம் என்பதை முன்னே பெற்றுத் தாமரை ஆனது. எனவே (தாம்+மரை) தாமரை என்பது நீண்டதும் மணமுடையது மான ஓர் கொடியின் பெயரைக் குறித்த காரணப் பெயர். இது தாமரை மலரைக் குறிக்கும் போது முதலாகு பெயர் ஆம். இது செம்மை அடை பெற்றுச் செந்தாமரை என்றும், வெண்மை அடைபெற்று வெண்டாமரை என்று வரும். தாமரை தூய தமிழ்க் காரணப் பெயர் என அறிந்து உவக்க. - குயில், 11.11.1958 25 பஞ்சம் பஞ்சின் தன்மை பஞ்சம் ஆயிற்று, ஈறுதிரிந்த ஓர் ஆகுபெயர் என்க. பஞ்சின் தன்மையாவது: எளிமை, நிறை இல்லாமை, அதனடியாகப் பிறந்த பஞ்சம் என்பதும் எளிமை, நுகர்ச்சி இல்லாமை, பொருளில்லாமை எனப்பொருள்படும். இன்னும் பஞ்சு என்பது ஐ இறுதி பெற்று ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய மூன்று பாற்கும் வரும். அவன் பஞ்சை, அவள் பஞ்சை, அது பஞ்சை என. அதுவே உயர்திணை அஃறிணையாகிய பலர் பாலுக்கும், பலவின் பாலுக்கும் அர், கள் பெற்று வரும். அவர் - பஞ்சையர், அவர்கள் - பஞ்சையர்கள், அவை- பஞ்சைகள், அவைகள் - பஞ்சைகள் என. அவை - பஞ்சை எனினும் இழுக்காகாது. பஞ்சம் என்பதைத் தமிழர் சிலர் வடசொல் என்று ஏமாறு கிறார்கள் என்பதறிந்து, ஐயம் நீக்குதற் பொருட்டே இவ்வாறு விளக்கப்பட்டது. பஞ்சம், பஞ்சை தூய தமிழ்ச் சொற்கள்! பனாதி இது தமிழ்ச் சொல்லே. பன் + அத்து + இ = பன்னத்தி. அத்துச் சாரியை. இ பெயர் இறுதி நிலை. பன் - ஒருவகைப் புல். அது பச்சென்றிருக்கை யிலும் கொளுத்தினால் காய்ந்தது போல் எரியும். பசையற்றது. பன்னத்தி என்பதே பனாதி என மருவிற்று. பனாதி-பசையற்றவன், வளமில்லாதவன். ஆதலின் அது தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும் என்க! வேந்தன் அயோத்தியா காண்டம் நகர் நீங்கு படலம் 185-ம் செய்யுளின் விரிவுரையில் வை.மு.கோ. வேந்தன் தேவேந்திரன் என்பதன் சிதைவு என்பர். என்று எழுதியுள்ளார். வேந்தன் மேய தீம் புனல் உலகமும் எனத் தொல்காப்பியத் தில் வருகின்றதென்றால் தொல்காப்பியர் காலத்திலேயே தேவேந் திரன் என்பது வேந்தன் என்று சிதைந்துவிட்டதா? வை.மு.கோ. என்னு மிவரைப் போன்ற தீநெறியில் அஞ்சாதுகால் வைத்திருப்பாரா தொல்காப்பியர்! தேவேந்திரன் என்பதே வேந்தன் என மாறிற்று என்பதை தொல்காப்பிய அடிக்குப் பொருள் கூறவந்த நச்சினார்க்கினியர் மனதில் கொண்டிருப்பார் எனில் வேந்தன் என்பதற்குத் தேவேந்திரன் என்றல்லவா உரை எழுதியிருப்பார் அப்படியும் இல்லையே. பின் எந்த அடிப்படையில் இவ்வாறு வை.மு.கோ. கூறி யிருப்பார் எனில், தமிழர் ஏமாந்தவர்கள், என்று அவர் எண்ணிய எண்ணத்தின் அடிப்படையில்தான் என்று ஐயமின்றிச் சொல்லலாம். வேந்து தூயதமிழ்க் காரணப் பெயராதலைக் காட்டுவோம். வெம்மை என்ற பண்புப் பெயர் விருப்பம் என்ற பொருளுடையது. வேந்தன் என்பது வெம்மை என்ற பண்பின் அடியாய்ப் பிறந்த தாதலின் மக்களைக் காப்பதோர் விருப்பம் உடையவன் என்ற பொருள் பெற்றுச் சிறந்தது என்க. வெம்மை என்ற பண்புப் பெயர் ஈறு போதலும் முதல் நீளலும் பெற்றுவேம் என நின்றுத் என்ற எழுத்துப் பேறும் அன் ஆண்பால் இறுதி நிலையும் பெற்று வேந்தன் என்று ஆயது காண்க. வேந்தன் - அரசன் இதுவே இறுதிநிலை பெறாது வேந்து என நின்றக்கால் ஆட்சி நிலையைக் குறிக்கும். ஆதலின் வேந்தன் தூய. தமிழ்க் காரணப் பெயர் என்று கடைப்பிடிக்க. கராம் முதலையின் பேராகிய கராம் என்பது வடசொல் என்றார் வை.மு.கோ. க்ராஹம் என்பதன் சிதைவாம். எல்லா உயிரையும் கொள்ளுவது என்பது பொருளாம். கரா என்ற (முதலையைக் குறிப்பது) தமிழ்ப் பெயர்ச்சொல் மகரமெய் பெற்று வருவதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு தொடங்குகிறார் தம் வேலைப்பாட்டை. சட்ட என்பது சட்டம் என்று வந்தது இழி வழக்கு என்று விளக்கினார் சிவஞானபோத உரையாசிரியர். அவ்வாறு கரா என்பது மகர மெய் பெற்றதென அறிதல் வேண்டும். இவ்வாறு காரம் என்பது வடமொழி என்றார் எனில். ஒன்று அவர் ஏமாற்ற எண்ணுகிறார் என்று கொள்ள வேண்டும் அல்லது தெரியாமல் கூறுகின்றார் எனல் வேண்டும். அஃது கருமை என்றதனடியாகப் பிறந்த பெயர் ஆதலின் தமிழ்க் காரணப் பெயரேயாம், முதலை கருநிறமுடையதன்றோ! சுண்ணம் இது சூர்ணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம். இவ்வாறு மேற்படியார் தாம் தமிழர்க்குக் கீழ்ப்படியாது கூறி வைத்தார் கம்பராமாயண உரைக்கிடையில். சுண்ணம் என்பது சுண்ணாம்பின் மரூஉ என நுணுகியறிதல் வேண்டும். சுள் என்பது வெப்பம். நாம்பு மெலிவு. வெப்பத்தால் மென்மை யடைந்தது அதாவது சுள்ளால் நாம்பியது சுண்ணாம்பு எனக் காரணப் பெயராகிய தூய தமிழ்ச்சொல். சுண்ணாம்பு என்பது சுண்ணம் என மருவிற்று என்பதைத் தமிழின் தொன்மையையும் அதன்மேல் எழுந்த தமிழிலக்கணத்தையும் ஆய்ந்தார் மறுக்க எண்ணார். அருமருந்தன்ன பிள்ளை என்பது அருமந்தபிள்ளை என வந்ததும் கண்டார் அன்றோ. சுண்ணம் என்றசொல் நாளடைவில் பொடி - மணப்பொடி, முதலியவற்றிற்கும் வழங்கியது, எனவே சுண்ணம் தமிழ்ச் சொல்லே. ஆணை இது ஆக்ஞா என்ற வடசொல்லின் சிதைவு என்று யார் 142-ஆம் செய்யுள் விரிவுரையிற் கூறி இழுக்கினார். ஆக்ஞா என்பதைத் தமிழர் ஆக்கினை என்று சொல்லுவார்கள். அந்த ஆக்கினையின் மேல் வை.மு.கோ. படை எடுத்தால் செல்லும், ஆணை என்பதன் அருகில்கூட அவர் நெருங்கியிருக்கக்கூடாது. முதற்கண் ஆண்மை என்ற பண்புப் பெயரின் பொருள் தெரிந்து கொள்ளவேண்டும் வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மை என்பது பிங்கலந்தை இப்பொருள் உள்ள ஆண்மை என்பது ஈறுபோய் முன்னின்ற மெய் திரிந்து ஐ வினை முதற்பொருள் இறுதிநிலை பெற்று ஆணையாயிற்று. பொருள்: வலியாதல், வென்றியாதல், வாய்மையாதல் என்பனவாம். ஆதலில் ஆணை தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. இனி, நச்சினார்க்கினியர் ஆணை என்பது வடசொல் என்றே கொண்டாரே எனில் அவர் தமிழின் பகைவர் ஆதலினால் அவர் சொல் ஏற்கத்தக்கது அன்று என விடுக்க. - குயில், 18.11.1958 26 ஆய்தம் தமிழரின் ஆய்தத்தை வடவர் பறித்துக்கொள்ளப் பெரிதும் முயன்றுள்ளனர். மு. இராகவையங்கார் இதை வடசொல்லாக்கத் தலைகீழ் நின்றார் என்பதை, அவர் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சித் தொகுதி கண்டார் அறிந்தாராவார். ஆய்தல் அகம், ஆயுதல் அகம், ஆயல் அகம், ஆய்தகம் என்பன அனைத்தும் பயிலிடத்துக்கு ஆன பெயர்கள். சிறப்பாக அது படைப்பயிற்சி செய்யுமிடத்துக்கு ஆம். இந்த ஆய்தகம் என்பது ஆய்தம் என ஈறு திரிந்த ஆகு பெயராய்ப் படைக்கு ஆயிற்று. இனி ஆய்தம் என்பது (ஃ) ஆய்தவெழுத்துக்கும் ஆம். அப்படி ஆம்போது அது உவமை ஆகு பெயர் என்க. ஆய்தம் என்பது (படை) தானேயன்றித் தான் மற்றொன்றை - தன்னை எடுத்தாள்வோனைச் சார்ந்து பயன்படுவது. ஆய்த எழுத்தும் வல்லெழுத்தைச் சார்ந்து பயன்படுவது. ஆய்த எழுத்து - சார்பெழுத்துக்களில் ஒன்று. சார்ந்துவரின் அல்லது தமக்கியல் பிலஎனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம்மியல் பியலும். என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக. எனவே ஆய்தம் வடமொழியன்று. தூய தமிழ்ச்சொல். - குயில், 25.11.1958 27 சிங்கம் இது ஹிம்ஸ என்ற வடசொல்லின் சிதைவாம். ஹிம்ஸ என்பது சிம்ஹ என்றாகிப் பின் சிங்கம் என்று ஆயிற்றாம். இவ்வாறு வடவர் கூறுவதோடு தமிழ்ப் புலவர் சிலரும் கூறுகின்றார்கள். சிலப்பதிகார பதிகம் 47-ம் அடியில் சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்து என்றதை உற்று நோக்குவார்க்கு உண்மைப் புலப்படாமற் போகாது. இது மட்டுமல்ல; கம்பராமாயணம் நாடுவிட்ட படலம் 40-ம் செய்யுளாகிய சிங்கல் இல் கூதாலி என்பதையும் நோக்குக. தமிழ்ச் செய்யுள்களில் பல இடங்களில் இவ்வாறு வந்துள்ளதென்பது தமிழறிந்தார் அறியாததன்று. சிங்கல் - கெடுதல் என்பது பொருள். எனவே பிற உயிர்கட்குக் கேடு சூழ்வது அதனால் தானும் கெடுவது சிங்கம் என்றாயிற்று. உயிர் நூற் புலவரும், சிங்கம் இந்நாட்டிலும் பிற நாட்டிலும் இல்லாது குறைந்து வருவதற்குக் காரணம் பிற உயிரை அரிப்பதுதான் என்று கூறுவார்கள். சிங்கத்துக்கு அரிமா எனவும் பெயருண்டு. சிங்கல் சிங்கத்திற்கு ஆனது ஆகுபெயர். எனவே சிங்கம் தூய தமிழ்ச் சொல்லே என்க. வரம் வரல் என்பது ஈறுதிரிந்த தொழிற்பெயராய் வருதலுற்ற பொருளைக் குறிக்கும். இந்த வரல் என்பது வரத்து என்றும் வழங்கும். அதனாலன்றோ கம்பராமாயணம் ஆரணிய காண்டம், விராதன் வதைப்படலம் 22-ம் செய்யுளில் வரத்தின் - வருதலினால் என்று பொருள் கொண்டதும் என்க. எனவே வரம் என்பது தூய தமிழ்ச் சொல்லே என்று கடைப் பிடிக்க. - குயில், 2.12.1958 28 பகுதி இஃது பகுரிதி என்ற வடசொல்லின் சிதைவென்று வை.மு. கோபாலகிருட்டிணமாச்சாரி முதலிய பார்ப்பனர் எழுதியுள்ளார்கள். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பானின் செய்கையை ஒப்ப தாகும். பகு என்ற முதனிலை அல் இறுதிநிலை பெற்றுப் பகல் என்று வரும், அப்பகல் என்பது வேறுபாட்டால் பால் எனவும் வரும். பால்வரு பனுவலின் (கம்ப.யுத்த. விபீ.78) என்பதிற்போல, அப்பகு என்பதே அகரச் சாரியையும், வு இறுதிநிலையும் பெற்றுப் பகவு என வரும். அதுவே பு இறுதிநிலை பெற்றும், தல் இறுதி நிலை பெற்றும், தி இறுதி நிலை பெற்றும் பகுப்பு, பகுதல், பகுதி எனவும் வரும். பகுதி முதலியவாக இங்குக்காட்டப்பட்ட அனைத்துக்கும் பிரிவு என்பதே பொருள். எனவே பகுதி என்பது தூய தமிழ்ச் சொல்லாதல் வெளிப்படை. இவ்வாறுள்ள தமிழ்ச் சொற்களையும் வட சொல் என்று கூறும் வடவர் எண்ணம் நாம் அறிந்ததேயாகும். தமிழையே வடமொழிச் சேற்றில் புதைத்து அதன் வாயிலாகத் தமிழரை ஒழித்துக் கட்டுவதே அவர் எண்ணம் என்பது தெளிவு. அவர்களின் இந்தத் தீய - கொடிய முயற்சியானது அவர்கட்குப் பயனளித்தே வந்துள்ளது. வண்ணாத்ரீ என்பது தான் வண்ணாத்தி என்றாயிற்று எனக் கூவுகின்ற மடையர்களையும் அவர்கள் உண்டாக்கிவிடவில்லையா? கடிகை கடிகா என்ற வடசொல்லினின்று கடிகை வந்தது என்று கூறி இழுக்குவார்கள் வடவர். கடி என்பது கடிகை எனத் திரிந்தது. கடி என் கிளவி விரைவை உணர்த்தும். அது நாட் காலத்தினும் விரைந்து தீர்வது என்ற பொருளில் அமைந்துள்ளது. இதனையும் கடிகைக் கிளவி நாழிகை கபாடத்திருதாள் கண்டமும் துண்டமும் இசைக்கும் என்ற பிங்கலந்தை நூற்பாவையும் நோக்குக. கடிகை என்பது நாட்காலத்தின் நுண் பகுதிக்கும் ஆகும் என்பதை இதனின்று அறியலாம். இனி, கடி என்பது கடிகை எனத் திரிதலுண்டா என்பார்க்கு தொல் 383-ம் நூற்பாவின் உரையே பதில் கூறும். எனவே கடிகை என்பது தூய தமிழ்ச் சொல்லே எனக் கடைபிடிக்க. - குயில், 9.12.1958 29 பிச்சை இது பிக்ஷா என்ற வடசொற் சிதைவென்று பார்ப்பனர் எழுதியும் பேசியும் வருகின்றார்கள்! பித்தை - ஊண்நிலையில் ஏற்பட்ட தவறுதலையும், மனநிலை யில் ஏற்பட்ட தவறுதலையும் குறிப்பது. பித்தை என்பது பிச்சை ஆனது போலி. ஆதலின் பிச்சை என்பது வந்தவர் மொழியன்று. தச்சன் இது தக்ஷன் என்ற வடசொல்லின் சிதைவென்று கம்பர் மாரீசன் வதைப்படலம் 2-ம் பாட்டின் விரிவுரையில் விரிக்கின்றார் வை.மு.கோ. தைத்து முதனிலைத் தொழிற்பெயர். அது தச்சு என்று ஆன போது, அன் ஆண்பால் இறுதிநிலை பெற்றுத் தச்சன் ஆனது. இனித் தச்சு = தைத்து - என்பது ஒன்று சேர்த்தல். பொருத்தல் என்னும் பொருளுடையது. ஓர் உருவின் பல்லுறுப்புக்களையும் சேர்ப்பது பொருத்துவது என்ற காரணத்தால் அப்பெயர் வந்தது. இதை வடசொல்லார் சிற்பம் என்பார். எனவே தச்சு, தச்சன் செந்தமிழ்ச் செல்வங்களே எனக் கடைப்பிடிக்க. பாக்கியம் இது வடசொல் அன்று! வடசொல் அன்று!! பயன்கொழிக்கும் நெய்தனிலத்தூரையும், பயன்கொழிக்கும் மருத நிலத்தூரையும் பாக்கம் என்னும் தமிழ்நூல். பாக்கம் என்பது அங்குத் தோன்றும் செல்வத்துக்கு ஆனது இடவாகு பெயர். பாக்கம், பாக்கியம் ஆனது. திரிதல்; ஓவம், ஓவியம் என்று திரிந்ததைப் போல. இனிப் பாக்கம் இடையில் இகரச் சாரியை பெற்றது ஆகு பெயர்க்குறி எனவும் ஆம். செல்வம், பேறு முதலியவற்றைக் குறிக்கும் பாக்கியம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர் என்று நினைவிற்கொள்க! - குயில், 16.12.1958 30 கோட்டி இதைக் கோஷ்டி என்ற வடசொற் சிதைவென்று தமிழர் பலர் எண்ணுவதாய்த் தெரிகின்றது. இது நேர்மாறான எண்ணம். கோட்டி என்ற தூய தமிழ்க் காரணப் பெயரை, வடசொற்காரர் கோஷ்டி என்று சொல்லி வருகின்றார்கள். வேட்டி, முட்டி என்ற தமிழ்ச் சொற்களை வேஷ்டி, முஷ்டி என்று சொல்லிக் கொள்வதுபோல. கோள் - கொள்கை: த் எழுத்துப் பேறும் இ வினை முதற்பொருள் இறுதி நிலையும் பெற்றுக் கோட்டி என முடிந்தது. கொள்கை உடையது, என்பதால் காரணப் பெயர். ஒரு கோட்பாட்டைக் கொண்ட கூட்டத்தைக் குறிப்பது. நாளடை வில் பொதுவாகக் கூட்டத்தையும் குறிப்பதாயிற்று. கருப்பம் இது கர்ப்பம் என்ற வட சொல்லின் சிதைவென்பார் வடசொல் வெறியர். கரு, கருப்பம், கார் என்பன கருமை எனப் பண்புப் பெயரடியாய் வந்தவை; காரணம் என்பது பொருள். கருப்பம் என்பது மை ஒழிந்த கரு, பம் என்ற பண்புப் பெயர் இறுதிநிலை பெற்றது. நன்மை என்பது நலம் ஆனது காண்க. கார் என்பது தனியாய் நின்று காரணப் பொருள் தருவதில்லை. காரணம் என்பதில் முதனிலையாய் நின்று அப் பொருளைத் தரும். - குயில், 23.12.1958 31 கூகை இது கூகம் என்ற வடசொல்லின் சிதைவென்று கூறி வருகின்றனர் வடவர். இது பொருந்தாப் புளுகாகும். கூகூ என்று கத்தலால் கூகை என்றும், கூகம் என்றும் சொல்லப்படும். தூய தமிழ்க்காரணப் பெயர். இதுபோலவே கா கா என்று கத்தலால் காகா, காக்கா, காக்கை, காகம் என்றெல்லாம் காரணப் பெயராக வழங்குவதையும் நோக்க வேண்டும். பேது இது பேதம் என்ற வடசொற் சிதைவென்று வை.மு.கோ. கம்பராமாயண உரையில் கூறியுள்ளார். பேதைமை என்பதன் அடியாக அமைந்த பெயர்ச்சொல் வேற்றுமையைக் குறிக்கும் போதும் என்க. இது பேதை என்றும் பேதைமை உடைய ஐம்பாற் பொருளையும் குறிக்கவரும். வடமொழியில் பேதம் என்பது தமிழினின்று அவர்கள் எடுத்துக் கொண்டதேயாகும். மாணவன் மாண் பெருமை. அகரச் சாரியையும் அன் ஆண்பால் இறுதி நிலையும் பெற்று மாணவன் ஆயிற்று. இதுவே மாணாக்கன் என்றும் மாண்+ஆக்கு+அன் பெருமையை உண்டாக்கிக் கொள்ளுபவன் என்று விரித்தும் பொருள் கொள்க. மாணவகன் என்றது வடசொல் என்றும், அதன் சிதைவுதான் மாணவன் என்றும் தமுக்கடிக்கின்றதாம் ஆக்காஷ்வாணிக் கூட்டம். - குயில், 30.12.1958 32 தறை இது தரா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு வை.மு.கோ. சடாயு உயிர் நீத்த படலம் 73-ம் செய்யுள் உரையில் கூறினார். இதில் வியக்கத்தக்கது, தரா என்பதை வடசொல் என்று இயம்பியதேயாகும். தரை என்பது தருதல் (ஈனுதல்) என்று பொருள்படும் தொழிற் பெயர். தா என்ற முதனிலை தரு என வேறுபாடுற்றது. வா என்ற முதனிலை வரு என வேறுபாடுற்றதுபோல. தரு என்ற முதனிலை ஐ என்ற தொழிற் பெயர் இறுதிநிலை பெற்றுத் தரை ஆயிற்று. தருதல் என்பது தல் இறுதிநிலை பெற்றது. தரை உயிர்த் தொகுதியை ஈனுவது தருவது ஆகிய நிலத்துக்கு ஆனது - தொழிலாகுபெயர். எனவே தரை தூய தமிழ்க் காரணப் பெயர். தறை என்ற சொல்லுக்கும் தரை என்ற சொல்லுக்கும் தொடர்பே இல்லை. தறை (தறு+ஐ) உறுதி பெறுதல் என்ற பொருளுடைய தொழிற் பெயரே. அத்தொழில் பொருளுக்காவதால் தறை தொழிலாகுபெயர் என அறிதல் வேண்டும். தரை என்ற தமிழ்ச் சொல்லையே வடவர் தரா என்று திரித்தார். மனிதர் இது மனுஷ்யர் என்பதன் திரிபாம். மனு என்பவரின் வழிவந்த காரணத்தால் அப் பெயர் வந்ததாம் எனப் பலவாறு கூறி இடர்ப்படுவார். மனு தோன்றுவதற்கு முன்னும் மன், மன்னுதல், மனம், மானம் என்று வேரும் வினையும் இருந்தன என்று தோன்றுகின்றது. ஆரியமறை தோன்றுமுன், மனு என்ற சொல்லே இல்லை என்பதால், தமிழின் மன் என்பதை வைத்தே மனுச்சொல் ஆக்கப்பெற்றது எனல் வேண்டும். மனிதன், மனுசன், மானுயன், மானிடன், மனித்தன் அனைத்தும் மன் என்பதன் அடியாகப் பிறந்தனவேயாகும். மன் என்பதற்கு, நிலைதல், உயர்வு என்பன பொருள், மனிதன் மற்ற விலங்கு பறவை முதலியவற்றினும் உயர்வுடையவன் என்பதன் காரணத்தால், மனிதன் எனப்பட்டான். மன் முதனிலை, இ சாரியை. த் எழுத்துபேறு. அன் ஆண்பாற் பெயர் இறுதி நிலை என்பது உறுப்பிலக்கணம். - குயில், 6.1.1959 33 விருத்தம் இதையும் வடமொழி என்றே பேசியும் எழுதியும் ஏமாற்றி வருகின்றார்கள் வடசொற்காரர்கள். புதுமை என்ற பொருளுடைய விருந்து விருத்து என இடை ந், த் என வலிந்து, அம் சாரியை பெற்று விருத்தம் ஆயிற்று. சங்க காலத்தில் விருத்தம் இருந்ததில்லை. அதன்பின் புதிதாக வந்ததால் விருத்தம் எனப்பட்டது. எனவே விருத்தம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. தூது இது வடசொல்லா என்று கேட்டு அஞ்சல் எழுதியுள்ளார் ஒரு தமிழத் தோழர். தூவல், தூதல், தூது இவையனைத்தும் தூ என்ற முதனிலை யுடைய தொழிற் பெயர்களே. முறையே இவற்றில் உள்ள அல், தல், து ஆகியவை தொழிற் பெயற் இறுதி நிலைகளே! தூது எனில் பொருள்? ஒருபாற் கருத்தை மற்றொரு பால், சென்று தூவுவது என்பதே. இது ஆண்பால் இறுதிநிலை பெற்றுத் தூதன், தூதுவன் என வரும். அம்சாரியைப் பெற்றுத் தூதம் எனவும் வருவதுண்டு. தூதி பெண் பால். எனவே தூது தூய தமிழ்க் காரணப் பெயர். சுவர்க்கம் இது துறக்கம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயர்ச் சொல்லின் சிதைவு. அவ்வாறு வடவர் சிதைத்து எடுத்தாண்டார்கள் நம் பழந்தமிழ் இலக்கியத்தினின்று. துறக்கம் - விட்டநிலை, உள்ளத்தின் நிலை. ஈதல்அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்துஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. என்ற நம் ஔவை மூதாட்டியார் அருளிய செய்யுட் பொருளை உற்றுக் காண்க. குடும்பத் தொல்லையைத் துறந்த உள்ளப் பாங்கே துறக்கம் என்றான் தமிழன். இந்திரன் முதலியவர்க்குக் கள்ளையும், ஆட்டையும், மாட்டையும் கொடுத்துப் பெறுவதோர் மேலுலகம் என்றும் அதைச் செத்தபிறகே அடைய முடியும் என்றும் கூறும் ஆரியர் புரட்டை ஒத்துக் கொள்ளாதவன் தமிழன். இன்னும் அறிய வேண்டுவது, அதாவது நினைவில் வைக்க வேண்டியது, தமிழன் இந் நாட்டில் என்றும் உள்ளவன். அவன் அன்றே நன்கு வாழ்ந்தவன். ஆரியன் தமிழினிடத்தினின்றே பிச்சை எடுத்திருக்க வேண்டும். ஏன் இதை இவ்வளவாய் விரித்தோம் எனின், கம்பராமா யணத்திற்குப் பொருள் கூற வந்த ஒரு பார்ப்பனப் பேதை, துறக்கம் சுவர்க்கம் என்ற வடசொல்லின் சிதைவு என்றான். பொந்து தேடி ஓடிவந்த ஆரியக் குரங்கு பொன்னாடை கட்டி வந்தது என்பதை நிகர்க்கும் இது. - குயில், 27.1.1959 34 தேவர் இது வடசொல் அன்று. தெவ்வுப் பகையாகும் என்ற (தொல். உரி.349 ) செய்யுளால் தெவ் என்பது பகை என்ற பொருளுடையது என்பதை அறிந்து கொள்க. தெவ் என்பது முதனீண்டு அர் இறுதிநிலை பெற்றது. எனவே தேவர் எனில் பகைவர் என்பதே பொருள். தெவ் என்பதே தே என்றும் தேவு என்றும் வருவதுண்டு. தேவன் என்பது ஆண்பால் ஒருமை, இதன் பெண்பாலே தேவி என்க. தேவி என்பது கூட வடமொழியென்றே ஏமாற்றுவர். தே என்பதும் அப்படித்தானாம்! தேவு என்பதும் அப்படித்தானாம். தேவன் பகைவனா - தேவர் பகைவரா என்ற வினாவுக்கு விடை காண்போம். அறிவு நிரம்பாத நாளில் மழையையும், வெயிலையும், காட்டாற்றையும், காட்டுக் கனலையும் தெவ் என்றும் தெய் என்றும் பெயரிட்டு அழைத்தான் தமிழன். அறிவு பெற்ற நிலையில் அவற்றின் அருமை தெரிந்து அவற்றை வாழ்த்தலானான். தெய் என்றும் தெவ் என்றும் கூறி வெறுத்த செங்கதிரையும் திங்களையும் செங்கதிர் போற்றுதும், திங்களைப் போற்றுதும் என்றெல்லாம் கூறியது கேட்டோ மன்றோ. தெவ் என்பதன் அடியாகப் பிறந்த தேவன், தேவர், தே, தேவு என்பன கண்ணையும் மனத்தையும் கவர்வனவற்றையும் பயன்படு பொருள்களையும் குறிப்பனவே என அறிக. எனவே இவை தூய தமிழ்க் காரணப் பெயர்கள். - குயில், 3.2.1959 35 அவி அவிதல், அவியல் என்பனவற்றின் முதனிலைத் தொழிற் பெயரே அவி என்பது. வேவுதல் என்பது அதன் பொருள். இனி, அவி என்றது தொழிலாகுபெயரால். வேவுதல் உடைய ஒரு பொருளைக் குறித்தது. அந்த வேவற் பொருள் ஏது? தேவர் உணவு என்று மழுப்பற் பொருள் கூறிக் கொண்டிருக்கின்றனர் ஆரியச் சார்பினர். ஆடுமாடுகளின் ஊன் என்றும் அவற்றின் நிணம் என்றும் வெளிப்படையாகவா கூறுவார்கள்? அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று, என்ற குறட்பாவுக்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர், அவி என்பதற்கு நெய் முதலியவைகள் என்று கூறி மழுப்புகின்றார். கொலை வேள்வியும், தம் இனத்தார்க்கு உள்ள புலால் வெறியும் பரிமேலழகர்க்கே நாணத்தை உண்டாக்குகின்றன. வெளிப்படை பொருளை அவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்! கா. சுப்பரமணியனார் (எம்.எல்.பிள்ளை) திருக்குறள் - பொழிப் புரையுள் அவி என்பதற்கு ஊன் என்றே பொருள் கூறியருளியுள்ளார். ஆட்டைப் பல பார்ப்பனர் அமிழ்த்திப் பிடித்துக் கொள்வார்கள். அதன் விதையைப் பிசைந்து உயிர் போக்குவார்கள். மற்றும் சில கொலைகாரப் பார்ப்பன பசங்கள் எதிரில் உள்ள தீயில் அதை எடுத்துப் போடுவார்கள். அந்த ஆட்டின் நிணமே - கொழுப்பே அத்தீயை மூண்டெழச் செய்கின்றது. அந்த நிணத்திலேயே அந்த ஆட்டுடல் வேகுகின்றது. இந்தத் திருப்பணியில் பெரிதாக எண்ணப்படுவன இவ் விரண்டுமே! ஒன்று தீ எரியச் செய்கின்றது நிணம். கறியை வேகச் செய்கின்றது நிணம் என்பது மற்றொன்று. இவைகளைக் கருதித்தான் அவி சொரிந்து என்றார் வள்ளுவர். இனி, அவி என்ற சொல்லை வடமொழி நூற்களிற் கண்ட சில தமிழ் விபூடணர், இது வடமொழிச் சிதைவென்று கூறி மானமிழப்பர். தமிழ் நூலில் தமிழ்நாட்டில் அவி எனக் காணும் தமிழர் தமிழிலக் கணத்தால் - தமிழ் மனத்தால் அச் சொல்லை நோக்க வேண்டுமே யன்றி ஆரிய மனத்தினின்று நோக்குவது என்ன காலக்கோளாறோ நாம் அறியோம். எனவே, அவி தூய தமிழ்க் காரணப்பெயர் எனக் கடைபிடிக்க. - குயில், 17.2.1959 36 நாகம் இது வடமொழியல்லவா? - இவ்வாறு தனி முறையில் கேட்கின்றார் ஓர் வடமொழி அன்பர். அதே நேரத்தில் அவர், தனி முறையில் கேட்கின்றேன். தனி முறையில் பதில் எழுதுங்கள். குயில் வாயிலாய்ப் பதில் தருவதாயிருந்தால் என் பெயரைக் குறிக்க வேண்டாம். என்றும் கூறுகின்றார். இவ்வளவு கட்டுப்பாடுகளை நமக்கு ஏற்படுத்துகின்றார்! காரணம் நண்பரின் தலைக்கொழுப்பேயாகும். நகு என்றதன் அடியாகத் தோன்றியது நாகம்: நகுதல் என்பதற்கு மகிழ்ச்சி, ஒளி சிறப்பு என்பன பொருளாகும். நகு என்பதன் அடியாகப் பிறந்த நாகம் என்ற சொல்லுக்கு நாளடைவில் விண், குரங்கு, புன்னை, தூசு, மலை, பாம்பு, யானை என்பன அனைத்தும் பொருளாயின. ஏன்? - இங்குக் கூறிய விண் முதலிய அனைத்தும் மகிழ்ச்சியை யும் ஒளியையும் சிறப்பையும் தரத்தக்கன ஆதலால், நகு முதல் நீண்டு நாகு என்றாயது இலக்கணப்படி! நாகு என்பது அம் சாரியை பெற்றது இலக்கணப்படியே. வடமொழி இலக்கியத்தில் நாகம் வருகின்றதே என்று கேட்பர் சில அறிவிலிகள், வந்தாலென்ன! தமிழ்ச் சொல்லைத் திருடாதவர்களா வடவர்? வடமொழி இலக்கியம் என்பதாக - தனித்தன்மையோடு -கலப்பில்லாமல் ஒன்று வாழ்கின்றதோ வடவருக்கு? நாகம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதை மீண்டும் வலியுறுத்தினோம். - குயில், 24.2.1959 37 பலி வாய் என்பதன் அடியாகப் பிறந்த வாய்மை போலவும், மெய் என்பதன் அடியாகப் பிறந்த மெய்ம்மை போலவும், உன் என்பதன் அடியாகப் பிறந்த உண்மை போலவும், கண் என்பதன் அடியாகப் பிறந்த கணம் போலவும், பல் என்பதன் அடியாகப் பிறந்தது பலி என்று அறிக. பலி- பல்லினால் வலிந்து உண்ணத் தகும் உணவுக்கும் நாளடைவில் பல்வகை உணவுப் படையலுக்கும் வழங்கிற்று. முதலில் விலங்கு முதலியவற்றை மூடவழக்கத்தால் தெய்வப் படிவங்களின் முன்வைத்து வெட்டிக் கொலை புரிந்தார்கள். அதைத் தெய்வங்களே நேரில் பல்லினால் கடித்து உண்டதாகச் சிறப்புறுத்தி னார்கள். பின்னர் நாகரிகமிக்க தமிழர்களின் வெறுப்புக்கு அஞ்சி, தெய்வத்திற்குத் தருவன எவற்றையும் பலி என்ற பெயராலேயே கூறத் தொடங்கினர் ஆரியப்பாவிகள். எனவே, பலி தூய தமிழ் காரணப் பெயர் என்று கடைபிடிக்க! - குயில், 3.3.1959 38 தாமரை இது தாமரசம் என்ற வடசொல்லின் சிதைவென்று ஏதுங் கெட்ட வடமொழியாளர் இயம்பி மகிழ்வர். மரு என்றால் தமிழில் மணத்திற்குப் பெயர். அது ஐ என்ற பெயர் இறுதி நிலையை முற்று அற்று ஒரோ வழி என்ற இலக்கணத்தால் மரையாயிற்று. மரை மணமுடையது. அதாவது மலர். அது இனம் விலக்க தாம் என்பதைப் பெற்றுத் தாமரை என வழங்கும் மரை என்றே வழங்குவதும் உண்டு. தாம் என்பதன் பொருள் என் எனில் அஃது தாவும் என்பதன் ஈற்றுயிர் மெய் கெட்ட பெயரெச்சம். கொடி நீண்டது அன்றோ தாமரை! கொடி நீட்சியால் அயலிடம் தாவுகின்ற பூ; எனவே தாமரை. தாமரை தூய தமிழ்க் காரணப் பெயர். இதைத் தாமரசம் என எடுத்தாண்டனர் வடவர் என அறிதல் வேண்டும். வாவி இது வாபீ என்ற வடசொல் என்று கதைப்பார். ஏமாறுகின்றவர் இருக்கும் வரை ஏமாற்றுகின்றவர் இருப்பர். வாவுதல் - பரவுதல்; தேங்குதல் என்க. வாவுதலையுடையது வாவி. எனவே வாவி தூய தமிழ்க் காரணப்பெயர் எனக் கடைப்பிடிக்க. துளசி இது துழாய் என்ற தூய தமிழ்ச் சொல்லின் சிதைவு. இவ்வாறு சிதைத்து எடுத்தாண்டனர் வடவர். இந்தத் திருட்டு அவர்களிடம் நிலைத்து விடவே, இன்று துழாய் என்பதே துளசியினின்று வந்தது என்கின்றனர். துழாய் இருக்க, அவர்களால் ஒலி மாற்றம் செய்யப்பட்ட துளசி என்ற சொல்லை நாம் எடுத்தாள வேண்டாம். துழா - பரவுதல். மணம் பரவுதல் என்க. ய். பெயர் இறுதிநிலை. - குயில், 10.3.1959 39 இலட்சம் இது இலக்கம் என்ற தூய தமிழ்ச் சொற் சிதைவு. ஒன்றினும் ஒளியுடையது பத்து: பத்தினும் ஒளியுடையது ஆயிரம். ஆயிரத்தினும் ஒளியுடையது பத்தாயிரம்; பத்தாயிரத்தினும் ஒளியுடையது நூறாயிரம். ஒளி - புகழ்; கவர்ச்சி அடையத்தக்கது. எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம். இலக்கம் என்பது அம் சாரியையின்றி இலக்கு என நிற்பதும் உண்டு. லட்சம் என்ற வடசொல்லினின்று இலக்கம் வந்தது என்று ஏமாற்றுவார் சொற்கள் கான்றுமிழத்தக்கவை. தமிழன் வடசொற்காரர் சிதைத்தபடி, லட்சம் என்றோ இலட்சம் என்றோ எழுதாமல், இலக்கம் என்ற சிதையா தூய தமிழ்க் காரணப் பெயரையே எழுதுக. பேசுக. கோடி இதையும் வடசொற்காரர் வடசொல் என்று கூறிப் பிழைப்பர். எண்ணின் உச்சி என்பது பொருள். ஆதலின் கோடி. (நூறு இலக்கம்) தூய தமிழ்க் காரணப் பெயரே என்று கடைப் பிடிக்க. - குயில், 17.3.1959 40 மலம் இது வடசொல் அன்று. மலமல என்பது ஒலிக்குறிப்பு. மலம் கழித்தற் காலத்தில் ஏற்படுவதன்றோ. மலமல என்பதன் அடியாகப் பிறந்த தூய தமிழ்க் காரணப்பெயரே மலம் என்பது. சலசல என்ற ஒலிக்குறிப்புச் சொல்லினடியாகச் சலம் தோன்றியதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. இதை வந்தவர் எடுத்தாண்டனர். ஆயுள் இது ஆயுசு என்ற வடசொல்லின் சிதைவென்று சொல்லி ஏமாற்றி வருகின்றனர் வடவர். அவ்வாறே ஏமாந்து கிடக்கின்றனர் தமிழர். ஆயுள் என்பது ஆவுள் என்பதன் மரூஉ. ஆவுள் - உள் என்னும் தொழிற் பெயர் இறுதி நிலை பெற்ற ஆதல் என்னும் பொருட்டாய தொழிற் பெயரேயாகும். இதை வந்தவர் எடுத்தாண்டனர். வாழ் நாள் ஆய்க்கொண்டே - கழிந்து கொண்டே போவது என்ற காரணம் பற்றி வந்தது ஆயுள் என்பது. எனவே, ஆயுள் தூய தமிழ்க் காரணப் பெயர் என்றுணர்க. பசு இதையும் வடசொல் என்றே நம்பி வருகின்றனர் படித்த தமிழரும், பசைதல் என்னும் சொல்லுக்கு அன்புறுதல், ஒட்டுதல், பொருளூட்ட முடைமை என்பனவெல்லாம் பொருள். பால் என்ற பொருளூட்ட முடையது பசு, பசை பண்புப் பெயர், அதன் முதனிலையாகிய பசு என்பதில் இறுதிநிலை. இ புணர்ந்து கெட்டதென்க. பசுவென்ற தமிழ்க் காரணப் பெயரை வந்தவர் எடுத்தாண்டனர். தட்டிக் கேட்க ஆள் இல்லாதபோது தம்பி! தடபுடல் செல்லுமன்றோ! - குயில், 24. 3.1959 41 பதம் இது வடசொல்லன்று. பகுதலின் மரூஉவாகிய பதல் என்பதன் அடியாகிய பது, அம்முச்சாரியை பெற்றுத் தகரத்தொகுத்தல் உற்றது. பதம் சிறப்பாய் உயர்பதத்தைக் குறிக்கும் - ஒரு நிலையினின்று மற்றொரு நிலையடைந்த ஒன்றையும் குறிக்கும். பதம் சோற்றுக்கும் பெயர். சோறு நிலைதிரிந்ததன்றோ. மற்றும் இடம் இன்பம் முதலியவைகளைக் குறிக்கும்போதும் இவ்வாறே காரணம் அறியப்படும். எனவே பதம் தூய தமிழ்க் காரணப் பெயர். இதை வடவர் தமிழினின்று எடுத்தாண்டனர். கலசம் கலயம் என்ற தமிழ்ச்சொல் கலசம் என வடவரால் திரிக்கப் பட்டது. எனவே கலயம் என்பதினின்று கலசம் தோன்றியது. கல்+அகம் = கல்லகம். இதன் மரூஉ கலம். கல்+அகடு கலடு. கன்னிலம் ஆனது நோக்குக. கலம் இடையகரம் பெற்றுக் கலயம் ஆனது. கல்லைக் குழிவு செய்தது கலம், கலயம் என்று காரணம் கண்டுகொள்க. குழிசி கல்லைக் குழிவு செய்தது என்ற இடத்துப் போல, கல்லை என்பதும் கல்லியது என்ற பொருளில் அமைந்ததே ஆகும். வடவர் திரித்ததால் நாம் அதை மேற்கொள்ள வேண்டா. கலயம், கலம் என்றே எழுதுக. குண்டம் தூய தமிழ்க் காரணப்பெயரே; தமிழினின்று வடவர் எடுத் தாண்டனர்; ஓமகுண்டம் என்பதில் காண்க. குண்டு - குளம் அதுபோல அமைந்தது; குண்டை - குண்டு சட்டி, குண்டான், குண்டம்! குண்டம் - ஆழக் கல்லிய இடம். - குயில், 31.3.59 42 சூது இது வடசொல் அன்று. தூயதமிழ்க் காரணப் பெயர். சூழ் வினை முதனிலை, தல் என்ற தொழில் இறுதிநிலை பெற்றுச் சூழ்தல் என்றும், அல் என்ற தொழில் இறுதிநிலை பெற்றுச் சூழல் என்றும், வு என்ற தொழிலிறுதி நிலைபெற்றுச் சூழ்வு என்றும், து என்ற தொழிலிறுதி நிலை பெற்றுச் சூழ்து என்றும் வரும். எனினும் சூழ்தல், சூழல், சூழ்வு, சூழ்து அனைத்தும் பொருளால் ஒன்றே. சூழ்து - விரகு (உபாயம் என்பர் வட சொல்லார்) சூது: இடைக்குறை. எனவே சூது விரகால் பிறர் பொருள் பறித்தல் என்பது. சூது, அம்சாரியைப் பெற்றுச் சூதம் எனவும் வருவதுண்டு. குன்று குன்றம், மன்று மன்றம் என்பவற்றிற் போல. இனிச் சூழ்து என்பது சூது என இடையிலுள்ள ழ் இல்லா தொழிந்தது எப்படி எனில், அது இடைக்குறை என்னும் தமிழிலக்கணம். போழ்து என்பது போது என்று ஆனது போல. எனவே சூது தூய தமிழ்க் காரணப் பெயர். வடநூலில் வரும் த்யூத் என்பதன் திரிபல்லவா சூது என்று கேட்பது முடிச்சுமாறித்தனம் என விடுக்க. விஞ்சை இதை விந்த்யா என்பதன் திரிபு என்பார் தமிழறியார். விஞ்சுதல் (மிஞ்சுதல்) என்ற சொல் தமிழில் தான் உண்டு. வித்யா என்பதோ விந்த்யா என்பதோ விஞ்சை என வராது; வரத் தேவையுமில்லை. விஞ்சுதல், விஞ்சை, விஞ்சு என்பவை முதனிலையாகக் கொண்ட தொழிற் பெயர்களே. பொருளும் ஒன்றுதான். சடை இதைப் பலர் ஜடை என்று கூறி இழுக்குவர். இது மட்டுமன்று. அவர்கள் சகரத்தையெல்லாம் ஜ என்றே வாய்படுத்து மகிழ்ந்து கொள்வர். இது பிழை என்பதும், மானக்கேடான செயல் என்பதும் அவர் அறியார். இந்தப் பிழையுணர்ச்சி எங்கிருந்து தோன்றியது எனில், சடை என்பது ஜடா என்ற வடசொல்லின் சிதைவென்று கூறித் திரியும் ஆரியச் சார்பினரிடமிருந்தே என அறிதல் வேண்டும். சடை தூய தமிழ்க் காரணப் பெயர். திரித்துவிட்ட தலை மயிரைக் குறிக்கும் சடை என்ற இச்சொல், முதலில் ஆலின் விழுதையும், வேரை யும் குறித்தது. இது பின்னர் விழுது, வேர், போன்றதான மயிர்த்திரிக்கு உவமை ஆகு பெயராயிற்று. வடசொல் அன்று. வடநூற்களில் அச் சொல் உள்ளதே எனின் தமிழினின்று எடுத்தாண்டனர் எனத் துணிக. - குயில், 7.4.59 43 மேதை இதை வடசொல்லா, தமிழ்ச் சொல்லா என்று கேட்கின்றார் ஒரு புலவர். அவர் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. காரணம் அச்சம் போலும்! மேதை மட்டுமன்று; மேதாவி, மேது, மேதகு, மேதகை இவை அனைத்தும் தூய தமிழ்க் காரணப் பெயர்களே. மேதக்க சோழவளநாடு என்பதில், மேதக்க என்பதை நோக்குக: இதில் மேன்மை என்பதன் அடியாகிய மே என்பதை ஊன்றி அறிவார்க்கு, இச்சொற்கள் அனைத்தும் வடவருடையன அல்ல என்பதை அறிந்து கொள்வது எளிதாகும். மீ என்பது மீது என வந்ததுபோல, மே என்பது மேது எனவந்து, மேன்மையை விளக்கியது காண்க! மேதை என்பதில் ஐ பெயர் இறுதிநிலை: ஒருமைக்குரியது. மேதகு மேன்மைத் தகுதி உடைமை. எனவே இவை தூய தமிழ்க் காரணப் பெயர்கள் என்று தெளிக. கம்பலம் - கம்பளம் இது தூய தமிழ்க் காரணப் பெயர். விளக்கிக் காட்டி, படிப்போருக்குத் தமிழின் தொன்மை உணர்த்தப்படும். செந்நெ ருப்புணும் செவ்வெ லிம்மயிர் அந்நெருப் பளவு ஆய்ப்பொற் கம்பலம் இச் சீவகசிந்தாமணி மேற்கோளை (2686) நுணுகி ஆராய்ந்தால் செவ்வெலி மயிர்கொண்டு நெய்ததே கம்பலம் - கம்பளம் என விளங்கும். இவ்வடிகட்கு நெருப்பைத் தின்னும் எலிமயிர்க் கம்பலம் என்று நச்சினார்க்கினியார் பொருள் கொண்டது பொருந்தாது. செந்நிறம் ஏறிய எலி மயிர் என்பதே அதன் பொருளாகும். இனி முதலாவதாகக் கம்பலம் என்னும் சொல் எதனின்று தோன்றியது என்பது ஆராயப்பட வேண்டும். சொல்லாராய்ச்சி இல்லாதவர் இதனை ஒரு வடசொல் என்று கூறிவிடுவர். அவ்வாறா னால் வடமொழியில் அதற்குப் பொருத்தமான அடிச்சொல் கூற முடியுமா? வாசசுப் பத்தியம் முதலிய அகரவரிசை நூலோர், ஆசைப்படுதல் என்னும் பொருளுள்ள கம் என்ற அடியினின்று இது பிறந்தது என்பர். அது பொருந்தாது. அன்றியும் கம்பலம் என்ற சொல், கிரேக்கர், இலத்தீனியம், பழைய ஆங்கிலம் முதலிய பிற ஆரியமொழிகளுள்ளும் இல்லை. வடமொழியில் இச்சொல் ஒருவகை மானின் பெயராய் வழங்குவதுண்டு. கம்பளி என்னும் சொல்லுருவம் காலத்தால் மிக முற்பட்டது என்று மோனியர் உ.வில்லியம்சு, தம் அகரவரிசை நூலில் கூறியுள்ளதும் நினைவிற் கொள்ளத்தக்கதாகும். அவர் சொல்லியபடியே காலத்தால் முற்பட்ட நாகரிகம் வாய்ந்த தமிழில் இக் கம்பலம் ஆடு என்று கூறிற்றுப் பிங்கலந்தை. மேழகம் கம்பளம் தகரே திண்ணகம் ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே - (8-2482) என்பதால் அறிக! இதனால் கம்பலம் - கம்பளம் ஆட்டின் பெயர். இனி, எலி மயிர் என்று வந்துள்ளதை ஆட்டு மயிரால் அன்றோ ஆனது கம்பளம் என ஐயுறுவர். எலி மயிர் என்பதில் உள்ள எலி என்ற சொல் ஆடு என்பதே என்பதை மேஷம் என்பதுபற்றி விளக்கும் போது விளக்கப்படும்.* - குயில், 14.4.1959 44 அவிசு அவிசு, அவிது, அவிதல் ஒரே பொருளில் அமைந்த தொழிற் பெயர்கள். சு, து, தல் தொழிற் பெயர் இறுதி நிலைகள். வேகவைத்தல் என்பது பொருள். இது அவி என முதனிலைத் தொழிற் பெயராகவே நிற்பதும் உண்டு. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று என்ற குறட்பாவில் நோக்குக! அவிசு, அவிது, அவிதல், அவி இவை தொழிலாகு பெயராய், அவிக்கப் போகும் ஆடுமாடுகளின் தசையையும் அவித்த, அதாவது வெண்ணெயை அவித்த - வேகவைத்த- காய்ச்சிய நெய்யையும் குறிக்கும். வேள்வியின் பெயரால் ஆடுமாடுகளைப் தீயிலிட்டு வேக வைத்துத் தின்னும் ஆரியர், இத்தமிழ்ச் சொல்லை எடுத்தாண்டனர். அவர் அவி என வாயாடுவர். எனவே அவி, அவிசு தூய தமிழ்க் காரணப் பெயர்கள். அவை, சவை அவை என்னும் தூய தமிழ்க் காரணப்பெயர். ஆரியரால் சவை, சபை, சபா என்றெல்லாம் வாயாட்டுப் பெற்றது. பெறவே இடைக் காலத்தில் அவை வேறு, சபை வேறு என்று ஆக்கப்பட்டது. அவை சவை குழாம்விற் பந்நர் அஃறிணைப் பன்மைச் சுட்டாம் சவைவீடு அம்பலம் தக்கோரின் சமூகம்பண் டிதன் சூது என்ப. என்னும் நாநார்த்த தீபிகை (902) யிற் காண்க. அவ்வுதல் என்பதும் அவ்வை என்பதும் தொழிற் பெயர்களே. அழுந்துதல், வீழ்தல் என்பன இவற்றின் பொருள். மனம் நன்னெறிக் கண் அழுந்துதல், வீழ்தல் என்று பொருள் கொள்க. வீழ்தல் - மனஞ் செலுத்தல், மனம் ஆழ்தல் என்க! வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி என்ற குறட்பாவில் நோக்குக. அவ்வை என்பது வகரத் தொகுத்தல் பெற்று அவை என ஆயிற்று. எனவே அவை தூய தமிழ்க் காரணப் பெயராதல் காண்க. இனி அவையினின்று தோன்றிய சவை, சபை, சபா என்பன தமிழ் வேர்ச்சொல் பெற்றவையேனும் அவைகளைத் தமிழர் எடுத்தாளல் சிறப்பன்று. சவையை எடுத்தாளுவதில் குறைவு இன்று. சங்கமே கணைக்கால் ஓரம் சவை சங்கு புலவர் நெற்றி என்ற நிகண்டாசிரியர் சவை என்பதை எடுத்தாளல் நோக்குக! - குயில், 21.4.1959 45 மேஷம் இது மேழகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் திரிபு. இவ்வாறு திரித்து மேற்கொண்டனர் ஆரியர். மேழகம் கம்பளம் தகரே திண்ணகம் ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே - பிங்கலந்தை 172 இதில் மேழகம் ஆட்டின் பெயராதலை அறிக! மே அல்லது மேழ் என்று கத்துதலைக் கொண்டுள்ளதால் மேழகம் என்பது காரணப் பெயர் என்பதை அறிதல் வேண்டும். வடவரால் திரிக்கப்பட்டதால் மேஷம் என்பதைத் தமிழர்கள் மேற்கொள்ளுவது சிறப்பில்லை. இதுவே mfu¤* தொகுத்தல் பெற்று மேழம் என்றும் வரும். மேடம் என்றும் வரும். இவைகளையெல்லாம் தள்ளுக! மேழகம் என்பதைமட்டும் கொள்ளுக! - குயில், 28.4.1959 46 சாரீர வீணை இதில் உள்ள வீணை என்பது வினை என்பதன் திரிபு. இவ்வாறு ஆரியர் திரித்தனர்.இதனைக் கீழ்வரும் தமிழ்ப் பொழில் (துணர் 35; மலர்-1) இசைப் புலவர் ப. சுந்தரேசன் குடந்தை எழுதியுள்ள குரல் வினை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையால் அறிக! குரல் வினை நமது இசைத் தமிழில் பல்வேறு (செய்கைகள்) வினைகள் உண்டு. அவற்றுள் முதன்மையானது குழற் கருவி வினைகள். அடுத்தது யாழ்க் கருவி வினைகள். மூன்றாவது குரல் வினைகள் என்பதாம். இக்குரல் வினைகள், மக்கள் தமது குரல் (சாரீரம்) ஒன்றினால் மட்டும் வினை (பாடுதல்) செய்து தொழில் புரிவது எனப்படும். இவ் வினைகளிலும் பல்வேறு பிரிவுகள் உண்டு. பாண் என்ற சொல், பாட்டு என்ற பொருளையே சிறப்புறத் தரும். அத் தொழிலைப் புரிபவர் பாணர் எனப் பண்டைய காலத்தில் வழங்கப்பட்டனர். அப் பாணர்களுள்ளும் பெரும் பாணர்கள் எனவும், சிறு பாணர்கள் எனவும் இருவேறு பிரிவினர் இருந்தனராம். இவர்கள் தங்கள் தொழிலுக்கேற்ற வகையில் பேரியாழ்க் கருவியையும், சீறியாழ்க் கருவியையும் வைத்திருந்தனர். பாடற் தொழிலையே தங்களின் குலத் தொழிலாகக் கொண்ட இம் மரபினர் யாவருக்கும், இசைத்தமிழே முதன்மையாகக் கொள்ளக் கிடந்தது. இசைத் தமிழினையொட்டிய இயற்றமிழும், நாடகத்தமிழும் இவர்கள் தொழிலோடு ஒன்றிக் கிடந்தது எனலாம். தொழில் முறைகள் எதுவாயினும் அதனைத் தொழிற்படுத்தும் முறைகளை, வினைபுரிதல் அல்லது வினைசெய்தல் எனப்பட்டு, அதனைத் தெளிவாக அச்சொல்லோடு அம் விகுதி சேர்த்து வினையம் எனவும் கூறப்பட்டது. இம்முறையில் குழல்வினை, யாழ்வினை, குரல்வினை எனப்பட்டும் குழல் வினையம், யாழ் வினையம், குரல் வினையம் என வழங்கியிருத்தல் கூடும். இவ் வினைகள், குழலாசிரியர்களுக்கும், யாழாசிரியர்களுக்கும் அவரவர்கள் கைக்கொள்ளும் கருவிகளைப் பற்றியே நிகழ்வதாகும். ஆயினும் இசையாசிரியர்களுக்கோ (கண்டப் பாடல்) மிகமிக (ஒரே குரலில்) இன்றியமையாததாக இவ்வினைகள் உணரப்பட்டன. ஏனெனில் - கருவியாளர்கள் யாவரும் தனது கைவிரல்களால் குழற் கருவியில் துளையை அடைத்துவிடுவதால் வினைகள் புரியக்கூடும். யாழ்க்கருவியில் விரல்களால் நரம்புகளைத் தெறிக்கும் முறைமையில் வினைகள் புரியக்கூடும். அத்தகைய எல்லா வினைகளும் ஒருவர் தனது ஒரே குரலினால் (கண்டத்தால்) காட்டுவது என்பது மிகவும் இன்றியமையாததல்லவா? இதனை, மிகப் பழங்காலத் தமிழ்மக்கள் நன்கு நிரம்ப உணர்ந்திருந்தமையினாலேயே, சிலப்பதிகாரத்தில் இசையாசிரியனமைதி பகர வந்த நம் இளங்கோவடிகளும்: யாழுங் குழலுஞ் சீரு மிடறுந் தாழ்குரற் றண்ணுமை யாடலொ டிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து வரிக்கு மாடற்கு முரிப்பொரு ளியக்கித் தேசிகத் திருவி னோசைகடைப் பிடித்து தேசிகத் திருவி னோசை யெல்லா மாசின் றுணர்ந்த வறிவின னாகிக் கவியது குறிப்பு மாடற் றொகுதியும் பகுதிப் பாடலுங் கொளுத்துங் காலை வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசையோன்... எனத் தெளிவு பெறுமாறும், உய்த்துணருமாறும் மிக்க ஆழ்ந்த கருத்தோடு கூறிப் போந்தார். இப் பதினொரு அடிகளையும் உணர்ந்த அரும்பத உரைகாரர் கூறுவது. யாழ்ப்பாடலும் வங்கியப் பாடலும் இருவகைத் தாளக் கூறுபாடு களும் மிடற்றுப் பாடலும் மந்தமாகிய சுரத்தினையுடைய தண்ணுமை யும், அகக்கூத்தும் புறக்கூத்தும் பதினோராடலென்னுங் கூத்துக்களும் வல்லனாய், இவற்றுடனே சேரச்செய்த உருக்களை இசை கொள்ளும் படியும், இரதம் பொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லனாய் இருவகைப்பட்ட பாடல்களுக்கும் இயக்கம் நான்கினையு மமைத்துத் தேசாந்தரங்களிற் பாடைகளையும் அறிந்து, அந்தப் பாடைகள் இசை பூணும் படியையுமறிந்து இயற் புலவனினைவும், நாடகப் புலவன் ஈடும் வரவுகளும், இவற்றுக்கடைத்த பாடல்களும் தம்மிற் சந்திக்குமிடத்துக் குற்றந் தீர்ந்த நூல் வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் தொகுக்கவும் வல்லவனாயுள்ள இசைப் புலவன்.... என்பதாம் மேலும் இதனை, இது பொழிப்புரை எனவும் கூறிவிட்டார். இதே பொழிப்புரையை அடியார்க்கு நல்லார் என்பார் அப்படியே எடுத்துக் கொண்டு கையாளுகின்றார். இவர் உரையைப் பதிப்பாசிரியர் பதிப்பிக்குங் காலத்து, தொகுக்கவும் என்ற சொல் விடுபட்டுவிட்டது. சிலப்பதிகார முதற்பதிப்பில் அரும்பதவுரையில், தொகுக்கவும் என்ற சொல் இருப்பது மிகவும் சிறப்புடையதாகும். நிற்க, சிலப்பதிகாரம் ஆறாம் பதிப்பில் அரும்பத உரையிலும், தொகுக்கவும் என்ற இச்சொல்லை விட்டுவிட்டனர். ஆக தொகுக்கவும் என்ற முதற்பதிப்புச் சொல் மிகவும் இன்றியமையாததாகும் என்பதனை மட்டும் இங்கே வற்புறுத்துகின்றோம். இவ்வாறு சில ஏடுகள் செல்லச் செல்ல சரீரவீனை என்ற சொல், அத்துணைப் பொருத்த முடையதாகத் தோன்றாத காலத்தில், மெல்ல னை என்ற இருசுழினைகாரம் முச் சுழி ணை காரமாயிற்று. இப்பொழுது சரீரவீணை என்ற அளவிற்கு, ஒரு உடம்பையே வீணையாகக் கொள்ளத்தக்க பொருளில் அமைந்துவிட்டது. என்னே விந்தை! குரல்விணை என்ற சொற்களைத் தெளிவுறுத்த வேண்டி எளிய முறையில் அடியார்க்கு நல்லாரால் சாரீரவினை என்று கூறப்பட்ட பகுதி, சரீரவீணை என்று மாறுபாடு கொண்டது. சில ஏடுகளில் மட்டுமே இம் மாறுபாடு இருந்து வந்ததால் (அல்லது ஒரு ஏட்டுப் பிரதியில் மட்டும் இவ்வாறு இருந்திருக்க கூடும்) பதிப்பித்த ஐயரவர்கள் இதனை விடாது சரீரவீணை என்றும் பிரதிபேதமுண்டு என உடுக் குறியிட்டு எடுத்துக் காட்டினார்கள். இவ்வாறு பிரதிபேதம் காட்டினமையினாலே நாம் ஓர் ஒப்பற்ற உண்மையை நன்கு சிந்தித்து உணரமுடிந்தது. இஃதிவ்வாறிருக்க சிலப்பதிகார ஆறாம் பதிப்பில் சாரீரவினை என்ற மூலத்தையே சாரீரவீணையாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இத்தகைய சிறு பகுதிகள் யாவும் நன்கு ஊன்றி உணரப் படாது வருவதும் நம் பண்டைய தமிழின்னீர்மை கெடுவதற்கு வழிகோலிவிடுவதாகின்றது. ஆக, குரல் வினை படாத பாடுபட்டு ஓரளவு தனது பழமையையும் திரிபையும் காட்டி ஒட்டிக் கொண்டிருப்பதனை நாமும் ஓரளவு உணர்வோமாக! குரல்வினை என்ற சாரீர வினை என்பது, மிகப் பழைய காலத்தும் வாய்ப்பாட்டினையே குறித்ததாகும். வாய்ப்பாட்டு பகுதிகள் பல உண்டு. அவற்றைப் பொதுவாகக் கண்டப்பாடல் எனக் குறிப்பதும் பண்டைய வழக்கே. இவ்வழக்கு சிறப்பாகக் குரலினால் (செய்யப்படும்) புரியப்படும் வினைவகையில் ஆளத்தி முறையையே குறிக்கப்படுவ தாயிற்று (இதன் பகுதிகள் யாவும் நாம் எழுதும் ஆளத்தி, என்னும் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.) நிற்க, இப் பகுதிகளில் வரும் சீரிய தமிழ்ச் சொல்லாம் மிடறும் என்ற இளங்கோவடிகளின் சொல்லிற்கு, வாய்ப்பாட்டு என்று இக்காலம் பொருள் கொள்ளக் கிடக்கின்றது. இவ்வாய்ப்பாட்டு வினைதான் குரல்வினை எனக் கூறப்பட்டது. இச்சொல்லிற்கு அரும்பதவுரைகாரர் மிடறுமென்றது, மூலாதாரந் தொடங்கிய மூச்சைக் காலாற் கிளப்பிக் கருத்தாலியக்கி, ஒன்றெனத் தாக்கி, இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பிக்கப்பட்ட பாடலியலுக்கு அமைந்த மிடற்றுப் பாடலுமென்றவாறு என ஆழ்ந்ததொரு பொருளினை விளக்கித் தந்தருளினார். அடியார்க்கு நல்லாரே மிடறுமென்பது சாரீர வினையுமென்ற வாறு எனக் குறித்தார். சாரீரம் என்றால் குரல் என்பது இக்கால மக்களும் நன்கறிந்தேயுள்ளனர். குரல்வினை என்ற சொல்லின் பகுதியினை நன்கு சிந்தித்துணர்ந்த அடியார்க்குநல்லார், ஏழிலிசைகளில் குரல் என்னும் இசையொன்று உள்ளதையும் உள்ளத்திற்கொண்டு, குரல் வினை எனக் கூறினால், அது குரல் என்ற இசைக்குரிய ஏதோ ஒரு வினையாகக் கருதிவிடாதிருக்க வேண்டி குரல் என்பதனை, இடத்திற் கேற்றவாறு சாரீரம் எனத் தெளிவுபடுத்துவான் வேண்டி, இவ்விடத்தில் குரல்வினை என்பதைச் சாரீரவினை எனக் கூறிவைத்தார். சாரீரவினை என்ற இச்சொல்லும் ஏடெழுதுவோரால் சா வன்னா ச னாவாகி வி னா வீ யன்னாவாகி னையன்னா ணையன்னாவாகி, நாளடைவில் சாரீரவினை சரீரவீணை ஆயிற்று. அதாவது சாரீர வினை என்ற சொற்களின் முதலெழுத்து சா என்ற நெடில், குறிலாக ச ஆனால் சரீரவினையாகும். பின் வி என்ற குறில் நெடிலாக வீ என மாறினால் சரீரவீணை ஆகும். - குயில், 5.5.1959 47 சென்ற குயிலிதழில் சாரீரவீணை பற்றிய விளக்கம் நீண்டு விட்டது என்று படிப்போர் எண்ணியிருப்பார்கள்; அப்படி அன்று! சமகிருதத்தினின்றே தமிழ் வந்தது, சமகிருதச் சொல் இல்லாத தமிழ் நூலே கிடையாது என்றும் பலவாறு புளுகும் புளுகுக் குட்டை யில் விழாத தமிழர்கள் இல்லை எனும்படி இருக்கிறது நிலைமை! அவர்களை - அப்படிப்பட்ட தமிழர்களைத் தமிழின்றேல் ஆரியமில்லை என்னும் அறிவுக் கரையேற்றுவது பெருந்தொல்லை தருவதாய் உள்ளது. சென்ற குயிலிதழில் சாரீரவீணை விளக்கத்தால், தமிழ்ச் சொல்லை வடசொல்லாக்கும் முடிச்சுமாறித்தனத்தில், எத்தனை பார்ப்பனர்கள், எவ்வளவு சுறுசுறுப்பாய் வேலை செய்கின்றார்கள் என்பதைக் காட்ட முடிந்தது. குரல் வினை சாரீரவிணை ஆயிற்று. அவ்வளவு இடம் கிடைத்தால் போதாதா? வினையை வீணையாக்கி விட்டார்கள். இது போலத்தானே எல்லாம்? பிச்சை எடுக்கவந்தவன் கச்சையில் இலக்கம் பொன்னிருந்தது என்றால் எவர் ஒப்புவார்? தமிழகத்தில் ஏதுங்கெட்டுப் புகுந்த ஓர் லம்பாடி கூட்டத்திற்கு இலக்கியமும் ஒரு கேடா? மொழியும் ஒரு கேடா? அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்; எங்கள் சமகிருதத்தி னின்று தான் தமிழ் வந்தது. இதை நம்பலாமா தமிழர்கள்? பல்காலும் புளுகினால் இல்லதை உண்டு என்று ஆக்கினான் கோயபல் என்பர்: அவர் அறியார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இந்தப் பாழான நாட்டில் நிறைய கோயபல்சுகள் இருந்தார்கள் - இருக்கின்றார்கள். தூரம் இது ந்தூர என்னும் வடசொல்லின் சிதைவென்று கூறுவர் வடவர். உனாதி சூத்திரக்காரர் இது இ என்னும் அடியினின்று பிறந்ததென்று கூறிப் பிழைத்தார். உண்மையில் அது துலை என்ற நம் தமிழடியையே அடியாகக் கொண்டு தோன்றிய தூய தமிழ்க் காரணப் பெயர்; சேய்மையைக் குறிப்பது. (விரிவைச் சென்ற குயிலிதழ் இதழ் தலையங்கத்தில் காண்க.) (5.5.1959 இதழ் தலையங்கம், தொன்மை ஆராய்ச்சி IV) காட்டம் இது காஷ்டம் என்ற வடசொல்லின் சிதைவு என்பர். காட்டம் விறகுக்குப் பெயர். காட்டுப் பொருள் காட்டம் எனக் காரணங் காண்க. இதன் வேர்ச் சொல் காடு என்பது. இது போலவே. கோட்டம் என்பது கோஷ்டம் என்ற வடசொற் சிதைவென்பர். கோளுதல், கோடுதல், கோட்டம் அனைத்தும் ஒரே அடியிற் பிறந்த தூய தமிழ்க் காரணப் பெயர்கள். கொட்டம் என்பது இதையே சார்ந்தது. - குயில், 12.5.1959 48 கூகம், கூகை இதனை கூஹம் என்ற வடசொல்லின் சிதைவென்றார் ஐயங்கார் தம் சடாயு காண்ட உரையில்! இது தூய தமிழ்க் காரணப் பெயரே, கூ கூ என்ற ஒலிக் குறிப்பின் அடிப்படையாகப் பிறந்தது. காகா என்று கத்துவதால் காகம் ஆனது போல, சலசல என்று பாய்வதால் சலம் ஆனது போல. கூகை - கோட்டான். கலுழன் இது கருடன் என்ற வடசொல்லால் வந்தது என்றார் மேற்படியார். கலுழன் என்பது தூய தமிழ்க் காரணப் பெயராதலை அவர் மறைக்க ஆசைப்படுகின்றார். கலுழ்தல் கண்ணீர் கசிவதெனக் கொள்க! கலுழன் - கருடன், கண்கலங்கிய வண்ணம் தோற்றமளிக்கக் காணலாம். கலுழன் என்ற தமிழ்ச் சொல்லையே கருடன் எனச் சொல்வறிய ராகிய வந்தவர் எடுத்தாண்டார் என அறிதல் வேண்டும். இராகு இதை ராஹு என்ற வடசொல்லின் சிதைவென்று புரட்டுப் பேசுவர் வடவர். ரா, அர, அரவு இம் மூன்றும் பாம்புக்குப் பெயர், தமிழில், இவற்றில் அரா என்றதையே ராஹு என்று சிதைத்து எடுத்தாண் டார்கள் வடவர் என்பதில் எவர்க்கும் ஐயப்பாடு இருந்திராது. இராகு வந்தவர் மொழியன்று; செந்தமிழ்ச் சொல்லே. - குயில், 19.5.1959 49 அகளம் இச் சொல்லொலி கேட்ட அளவிலே இதை வடசொல் என்று தமிழரே நம்பிவிடுகின்றன)ர். அந்தப் பேதமையைப் பயன்படுத்திக் கொண்டு வடவர் இதை வடசொல் என்று உறுதிப்படுத்துகின்றனர். அகலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் திரிபே அகளம் என்பதாகும். அகளம் - அகலம் என்ற சொல்லுக்கு மிடா (திவாகரம்) என்பதும் நீர்ச்சால் (மலை படு கடாம் - 104) என்பதும் யாழில் பத்தல் (சிறுபாணாற்றுப் படை 224 ) என்பதும் பொருளாகும். அங்கம் இது வட சொல்லன்று. அசை + அம் திரண்டு நீண்டது. உறுப்பு (பிங்கலந்தை) உடம்புக்கும் பெயர். (கம்பராமாயணம் தாடகை 2) மரத்துக்கு உதவியாய் அமைந்த கிளைக்கும் பெயர். அங்கி பிங்கலந்தை அங்கி, நெருப்பு என்னும்! கந்தபுராணம் (பாயிரம் 13) அக்கினி தேவன் என்னும்! திருக்காளத்திப் புராணம் (30 - 14) சூரியன் என்னும்! பரிபாடல் கார்த்திகை நட்சத்திரம் என்னும்! இத்தனைப் பொருள் அமைந்தது அங்கி என்பது, அஃகு + இ என ஆய்தம் மெல்லினமாகிப் புணர்ந்த தூய தமிழ்ப்பெயரே என அறிதல் வேண்டும். இதை வடசொல் என்று ஏமாற்றுவர். அஃதல் - விரிதல். அங்கத்தையுடையது அங்கி என்னும்போது நீண்ட சட்டையை யும் குறிக்கும். இது அங்கிகை என வந்து பெண்களின் மார்பின் சட்டை (இரவுக்கை, ஜாக்கெட்) யையும் குறிக்கும். அங்குடம் இது திறவுகோலுக்குப் பெயர். வடசொல் என்று கூறி ஏமாற்றி வருகின்றார்கள். வடவர். அங்குசம் என்பதன் திரிபே. எனவே அங்குடம் என்பது தூயத் தமிழ்க் காரணப் பெயர். அங்குரம் இது தூய தமிழ்க் காரணப்பெயர். அஃகு + உரவம். உரவம் - கூடு, கொத்து, அங்குரவம், அங்குரமானது தொகுத்தல் முனை என்பது பொருள். இதையும் வடசொல் என்று பிதற்றுவர் வடவர். பெரிய புராணம் திருஞானசம்பந்தர் (53) பார்க்க. இந்த அங்குரம் என்பது மற்றும் திரிந்து அங்குலம் என வரும் விரல் அகலம் என்பதே இதன் பொருள். அசடு கம்பராமாயணம் பார்ப்பனர் உரையில் சடு - அறிவுடமை, அசடு - அறியாமை என்று பொருள் கூறி, இது வடசொல் என்று புளுகி வைத்தார். அசடு என்ற சொல் அயறு, அசறு என்பதன் திரிபு ஆதலால் தூய தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும். அடவி இது வடசொல்லன்று. அடர்வி என்பதன் இடைக் குறையாய் அடர்தல் எனப் பொருள் தருவது. ஆகுபெயர் அடவி - சோலை, கூட்டம். - குயில், 26.5.1959 50 அம்பரம் ஆடைக்கும், வானுக்கும், திசைக்கும், கடலுக்கும், மன்றத்துக்கும், துயிலிடத்திற்கும், உதட்டுக்கும் பெயராகிய அம்பரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர். அம்முவது என்றால் சூழ்ந்திருப்பது. அரம் உறுவது என்ற பொருள்பட்டு வருவதோர் கடைநிலை. இடையில் ப் விரித்தல். இந்தக் கடைநிலை ப கரத்தையும் இழுத்துக் கொண்டு (பரம்) கடை நிலையாய் வருவதும் உண்டு. விளம்பரம் என்பதிற் காண்க. எனவே அம்பரம் சூழ்ந்திருப்பது. ஆடை உடலைச் சூழ்ந்திருப்பது காண்க. ஆகாசம் - உலகைச் சூழ்ந்திருப்பது காண்க. திசையும் அவ்வாறே. கடலும் அவ்வாறே. மன்றம் அமைந்திருப்பாரைச் சூழ்ந்திருப்பது காண்க! துயிலிடமும் அவ்வாறே! உதடு உள்வாயைச் சூழ்ந்திருத்தல் காண்க! இவ் வம்பரமே அம்பலம் என வேறுபட்டு வரும். அம்பா என்பதும் வடசொல் என எண்ணா தொழிக! அம்மா என்பதின் திரிபே அம்பா. பரிபாடல் ச. 11.81-ல் அம்பா வருகின்றது. இஃது அம்மை என்றும் வருவதுண்டு. அம்மன் அம்மன் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. அம்மனை என்பதன் கடைநிலை கெட்டது. அமர் இது வட சொல்லன்று. அமர் - போர், போர்க்களம் (புறப். வெண். மா. 85) விருப்பம் (அகம் 23) கோட்டை மதில் எனப் பல பொருள் குறிக்கும் ஒரு சொல் என அறிக! போர்வீரர் என்பது பொருள். விருப்பமுடையவர் என்ற காரணம் கூறித் தேவர்க்குப் பெயராக எடுத்தாண்டனர் வட மொழியாளர். - குயில், 2.6.1959 51 ஆகுலம் ஆகுல நீரபிற என்ற குறளடியில் வரும் ஆகுலம் வடமொழி என்று என் நண்பர் கூறுகிறார். அதுபற்றி விளக்கியுதவுக என நமக்கு ஓர் அஞ்சல் கிடைத்துள்ளது. ஆகுலச் சொல்பற்றி முன்னொரு முறை* (*தொடர் எண் 11ஐப் பார்க்க) விளக்கினேன் ஆக நினைக்கிறேன். இருப்பினும் தெளிவுறுத்த எண்ணுகிறேன். அகங்கலித்தல், அங்க லித்தல், அங்காலித்தல், அங்கலாய்ப்பு, ஆகலித்தல், ஆகுலித்தல், ஆகுலம் அனைத்தும் ஒரு பொருளுடையவை. அகம் கலித்தலின் மரூஉக்களே. உள்ளக் கருத்தே வெளியில் ஒலிப்பது என்பது பொருள். ஆகுலம் ஒலி என்பது காண்க. வருத்தமுமாம். எனவே ஆகுலம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைபிடியுங்கள். ஆகுலம் வருத்தம் ஓசை நாநார்த்ததீபீகை 55: இதன் உரையில் ஆகுலம் என்ற சொல் வடமொழியில் இல்லாமை குறிக்கப்பட்டதும் காண்க. மங்களம், மங்கலம் மங்களம் என்பது மங்கலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயர். வடவரால் திரிக்கப்பட்ட சொல். மங்கு+அலம்; மங்குதல் அல்லாத நிலை என்பது பொருள்; இலம் - வறுமை! இல்லாத நிலை என்பதிற்போல. எனவே மங்கலம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதும், மங்களம் அதன் திரிபு என்பதும் நினைவிற்கொள்க. உஷ்ட்ர இது வடமொழியில் ஒட்டகத்தின் பெயர். இப்பெயர் வடவர்க்கு எங்கிருந்து கிடைத்தது? தமிழில் இருந்த ஒட்டகத்தையே இவ்வாறு திரித்து மேற்கொண்டனர். ஒட்டகம் குளிர்ந்த நாடாகிய வடநாட்டில் இல்லை. பொருளில்லாதபோது பெயருமிராதன்றோ! தமிழில் ஒட்டகம் உண்டா? ஒட்டகம் என்ற பெயரால் குறிக்கப்படும் பொருள் தமிழகத்தில் உண்டா? இரண்டும் உண்டு. ஒட்டகம் அவற்றோடு ஒரு வழிநிலையும் என்பது தொல் காப்பிய மரபியல் நூற்பா. இதனால் ஆறாயிரம் ஆண்டுகட்குமுன் தோன்றிய தொல் காப்பியத்தில் ஒட்டகம் என்ற சொல் காணப்படுகின்றதல்லவா? இனி, ஒட்டகம் தமிழகத்தில் இருந்ததா எனில், கூறுவோம். இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் கடலால் விழுங்கப் பட்ட தென் தமிழ்க் குமரி நாட்டினிடையில் இருந்த பாலை நிலத்தைக் கடக்க உதவும் பொருட்டு இயற்கை தர இருந்தது ஒட்டகம்! இதன் விரிவை மறைமலை அடிகளார் அருளிச் செய்த மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்ற நூலின் 762,763,764-ம் பக்கங்களில் கண்டு மகிழ்க. எனவே உஷ்ட்ர என்பது ஒட்டகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் சிதைவே என்பது பெறப்பட்டது. ஒட்டகம், ஒட்டு + அகம் எனப் பிரிந்து, உதவும் உள்ளமுடையது எனப் பொருள் பயப்பது. இது - ஒட்டை எனவும் வழங்கும். அது இழிவழக்கு. - குயில், 9.6.1959 52 தூலம் தூலம் என்ற வடசொல்லுக்கும், தூலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயருக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணுவோரும் இருக்கின்றார்கள். சுலவு என்ற சொல்லடியாகத் தோன்றிய பல சொற்களில் தூலமும் ஒன்று என்று உணர்தல் வேண்டும். தூலம், சுற்றி நீண்டது, காரணப் பெயர். இலேசு இது இளை து என்றதன் மரூஉ. இளைதாக முண்மரம் கொல்க என்ற குறளடி காண்க. இளைது, இளைப்பம், இளப்பம், இளசி என்பன ஒரு பொருளன. முதுமையால் பெறப்படும் வன்மை இலாதது. இது புலன்களுக்குப் புலப்படுவதில் அரிதின்மையையும், தூக்குவதற்குத் தொல்லையின்மையையும் குறித்து வழங்குகிறது. பலபம் பலகை என்ற சொல் ஈறு திரிந்த ஓர் ஆகுபெயர். பலகை - கற்பலகை; அதன் துகள் குழைத்துச் செய்த கற்குச்சி பலபம். எனவே பலபம் வந்தவர் மொழியன்று. சுலபம் இது சுளுவு என்றும் மருவி வழங்கும், சுலவு என்பதினின்று தோன்றியது. புலன்களுக்கு அண்மையானது. இதை வடசொல் என்று எண்ணி மலைத்தல் வேண்டாம். இது செந்தமிழ்ச் செல்வமே. - குயில், 16.6.1959 53 தாளம் தாள் - ஒட்டு; இசையில் கால அளவுடைய ஓர் அசையும் மற்றோர் அசையும் ஒட்ட வைப்பதோர் ஒட்டு, ஆகுபெயர். அம் சாரியை குன்றம் என்பதிற் போல. இதை வடசொல் என்று காட்டும் வடவரைப் பின்பற்றித் தமிழரும் அவ்வாறே எண்ணியிருக்கின்றனர். எனவே தாளம் வந்தவர் மொழியன்று, செந்தமிழ்ச் செல்வமே. மேளம் இது வடசொல் அன்று. மேழம் என்பதின் திரிபு. மேழம் - ஆடு. ஆட்டுத் தோலால் ஆனது மேழம், மேளம் ஆகுபெயர். எனவே மேளம் தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க. அருச்சனை இது வடசொல் என்று மயங்கற்க! அருத்தனை என்பதின் போலி. அருத்து முதனிலை. அன் சாரியை. ஐ தொழிற் பெயர் இறுதிநிலை. அருத்துதல் என்பதில் அருத்து முதனிலை. தல் தொழிற் பெயர் இறுதி நிலை. எனவே அருத்தனை அருத்துதல் ஒன்றே. உண்பித்தல் என்பது பொருள். அருந்துதலின் பிறவினை இது. அருத்தனை, பொருத்தனை என்பது சொல் வழக்கு. இவற்றில் பொருத்தனை என்பது பொறுப்பேற்றல் எனப் பொருள்படும். விரதம் என்னும் வடசொல் இதே பொருள் உடையது. வேண்டிக் கொள்ளுதல் என்றும் கூறுவதுண்டு. அறுத்தல் பெருத்தல் என்பன வேறு பொருளில் அமைந்தவை. - குயில், 23.6.1959 54 புதன் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்பன கிழமையின் ஏழு நாட்களின் பெயர்கள். இவற்றில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய நான்கு பெயர்களும் வெளிப்படை யாகவே தமிழ்ச்சொற்கள் என்று காட்டிக் கொள்கின்றன. மற்ற புதன், சனி, வியாழன் ஆகிய மூன்றும் இவ்வாறு காட்சியளிக்கவில்லை. ஆயினும் புதன் என்பது தூய தமிழ்க்காரணப் பெயரின்றி வடசொல்லன்று என்று உணர வேண்டும். புதுமை என்ற பண்புப் பெயரின் மை கெட்டது. ஈறு போதல் என்ற முறைமையால். எஞ்சியுள்ள புது என்பதோடு அன் ஆண்பால் இறுதிநிலை. முற்றும் அற்று என்ற முறையால் புணர, புதன் ஆயிற்று. புதன், புதியவன், வியாழன் வெள்ளி என்பவைகளுக்கும் பிற்காலத்தில் தோன்றியவன் என அறிக. திங்களின் அண்மை யில் இருத்தல் கொண்டு, திங்களுக்கும், தாரை என்பவளுக்கும் பிறந்த பிள்ளை என்றே கதை கட்டினார்கள் வடநூற்காரர். எனவே புதன் வந்தவர் மொழியன்று; செந்தமிழ்ச் செல்வமே! வியாழன் இது வயவாளன் என்பதன் திரிபு. வயம் - வல்லமை. ஆளன் - உடையவன், வல்லமை உடையவன் என்பது பொருள். எனவே வியாழன் என்பது தூய தமிழ்க் காரணப் பெயரே. இதைத் திரிபு பெற்ற நிலையில் வியாழன் என்றோ திரிபுபெறாத நிலையில் வைத்து வளவாளன் என்றோ எழுதுவதில் எப்பிழையும் நேராது. ஏழு நாட்களின் பெயர்களில் சனி என்பதைப் பழந்தமிழ் நூற்கள் காரி என்ற தூய தமிழ்ச் சொல்லால் வழங்குகின்றன. ஆதலின் சனிக்குக் காரியையே தமிழர்கள் எடுத்தாள வேண்டும். காரிக்கிழமை என்று வாய் மகிழச் சொல்க-கை மகிழ எழுதுக. - குயில், 30.6.1959 55 இலம்பாடி (லம்பாடி) இது லம்பாடி என்று வழங்குகின்றது. லகரத்தை முதலாகக் கொண்டு தமிழ்ச் சொல் வராது. ஆதலின் இலம்பாடி என்றே எழுதுக; பேசுக. இலம்பாடி - வறியவள். இலம்பாடு உடைய ஒரு கூட்டம். வறியவனைக் குறிக்கும்போது இலம்பாடு அனைத்து மோர் முதனிலை. இ பெண்பால் இறுதிநிலை என்க. ஒரு கூட்டத்தைக் குறிக்கும் போது, இலம்பாடி ஆகுபெயரால் இலம்பாடுடைய கூட்டத்தைக் குறித்தது அவ்விடத்து இகரம் அஃறிணை ஒருமை இறுதிநிலை என்க; நாற்காலி என்பதிற் போல. எனவே இலம்பாடி தூய தமிழ்க் காரணப் பெயர் என உணர வேண்டும். இலகு(லகு) இலகல் என்பதன் முதனிலையாகிய இலகு என்பது லகு என்று வழங்கப்படுகின்றது. லகு வடசொல் என்று எண்ணிப் பிழை செய்ய வேண்டாம். இலகு - முயற்சியாலன்றி எளிதாகப் புலன்கட்கு எட்டுவது. அதைச் சார்ந்தே நாளடைவில் கனமின்மை முதலியவற்றையும் குறிக்கின்றது. மற்றும், இது இழிவழக்காக இலேசு எனவும் வழங்கும். எனவே லகு என்பது இலகு என்பதன் மரூஉ. அது வடசொல் அன்று, ஆயினும் லகு என்று எழுதற்க, பேசற்க. இலகு என்றே எழுதுக; பேசுக. - குயில், 7.7.1959 56 கேரளம் மு.இராகவையங்கார் தம் சேரன் செங்குட்டுவன் முன்னுரையில். இவர்கள் சேரர் - சேரலர் எனத் தமிழினும், கேரளர் என வடமொழியினும் வழங்கப்படுவர். என்று எழுதும் வாயிலாகக் கேரளர் என்பது வடசொல் என்று தமிழர் எண்ணுமாறு செய்கின்றார். கேரளம் வடசொல் அன்று, சேரலம் என்பதன் மரூவு என்று சொல்லுவதும் கூடாது. அது தூய தமிழ்ச் சொல்லேயாகும். சே என்பது - கே எனத் திரிந்ததுகூட வடவர் நெறி பற்றியதன்று. அவ்வாறு சே, கே ஆவது தமிழியல்பே! செம்மனி கெம்பானது நோக்குக. காவிரி (fhntÇ) இது வடமொழித் தத்திதப் பெயர் என்று கூறி, அதற்காகவே ஒரு பொய்க் கதையும் கட்டிவிட்டனர். கவேரன் மகள் ஆதலின் காவிரி யாயிற்றாம் இது மட்டுமன்று. அகத்தியன் தூக்குக் குவளையில் இருந்த நீரை, இந்திரன் வேண்டுகோளால், யானைமுகன் காக்கை உருக் கொண்டு கவிழ்க்க, அது ஆற்றின் உருவாய்ப் பரவிற்றாம். இவ்வாறு அதன் தோற்றத்தைக் கூறி - தமிழகத்தின் நாகரிகத்துக்கே அகத்தியன் காரணம் என்ற பொய்ம் மூட்டைக்கு அரணாக்குவர்... காவிரி, காவேரி என்பன தூய தமிழ்க் காரணப் பெயர்கள். கா - சோலை. விரி - விரிந்தது. சோலை சூழ்ந்து விரிந்து நடப்பது. காட்டாறு அன்று. காவேரி - கா - ஏரி சோலையின் வளமுள்ள ஏரி போன்றது மற்றும் பல பொருளில் வரும் காவேரி, காவிரி என்ற சொற் களில் குறிக்கப்படும் ஆறானது ஆரியரும் ஆரியமும் இத் தென் னகத்தில் கால் வைக்குமுன் - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னமே இருந்ததென்று தமிழ்த் தொன்னூல்களால் அறிகின்றோம். ஆதலின் காவிரி, காவேரி தூய தமிழ்க் காரணப் பெயர்கள். ஏளனம் ‘ïJ tlbrhšyh? - என்றோர் அஞ்சல் கிடைத்துள்ளது நமக்கு. தூய தமிழ்ச் சொல்லாகும். எள்ளல் எனில் இகழ்தல், கேலி செய்தல் என்பன பொருள்! எள்ளலின் முதனிலையாகிய எள் என்பது முதல் நீண்டு அன், அம், சாரியைகள் பெற்றது. இதுவே ஏளிதம், ஏக்கை என்றெல்லாம் மருவி வழங்கும். ஏளனம் என்பதன் மரூஉவே கேலி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. எனவே ஏளனம், ஏளிதம், ஏக்கை, கேலி அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே! - குயில், 14.7.1959 57 ஆலாபனம் - ஆலாபனை என்பவை வடசொற்கள் அல்ல; தமிழ்ச் சொற்களே. ஆளத்தி என்பது ஆலாபனம் ஆலாபனை என மருவிற்று. ஆளத்தி - இசைகளை ஆளும் முறை. காரணப் பெயர். ஆளத்தியை வக்காணம் என்றும் கூறுப. வக்கணை இழி வழக்கு. உவணம் அவண் இவண் உவண் என்பவற்றில் உவண் என்பது உயரத்தைக் குறிப்பதோர் சுட்டுப் பெயர். இது அம்சாரியை பெற்று உவணம் என வழங்கும். உவணம் உயரத்திற்குப் பெயராகவே பின் அது உயரத்திற் பறக்கும் பருந்துக்கும் ஆகு பெயராயிற்று. உவணம் - உயரம், பருந்து. இதை வடவர் வடமொழி என்று ஏமாற்றுவர். தூய தமிழ்க் காரணப் பெயராதல் அறிந்து உவக்க. ஈமம் இது தமிழ்ச் சொல்; வடசொல் அன்று. இது ஈம் எனவும் தொல்காப்பியத்தில் வந்துள்ளது. ஈமம்- சுடு காடு. ஏமம் இது வடசொல் அன்று; தூய தமிழ்ச் சொல். ஏமம் - நள்ளிரவு. பொன், இன்பம், காவல், பொருள், ஏமம் என்பதை ஹேம ஆக்கி அதைப் பொன்னுக்கு இட்டழைத்தார்கள் சொல்வறியராகிய வடவர்! தடம் இதை வடசொல் என்று புளுகினர் வடவர். இது தூய தமிழ்ச் சொல்லாதலை - தடவும் கயவும் நளியும் பெருமை என்ற தொல் காப்பியத்தாலறிக. தடம் - குளம். கயம் - குளம். தடம் - அகலமுடையது. - குயில், 1.9.1959 58 யாமம் இது வடமொழி அன்று; தூய தமிழ்க் காரணப் பெயர்; யா - கட்டு; அதனடியாகப் பிறந்த தொழிற் பெயர் யாமம். யா என்ற அடி ம் என்ற சாரியையும், அம் என்ற தொழிற் பெயர் இறுதிநிலையும் பெற்றது. உமை இது உமா என்ற வடசொல்லின் திரிபு என்பர் தமிழின் தொன்மை நிலை தோன்றப் பெறாதவர். அம்மை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே உமை என்பது. ஆணவம் வடசொல் அன்று; தூய தமிழ்க் காரணப் பெயர். அது ஆளுதல் என்பதன் அடியாகப் பிறந்தது. உயிரைத் தன் வழிப்படுத்தி ஆளுவதோர் ஆற்றலின் பெயர் ஆட்சி. ஆளுதல், ஆண்மை, ஆட்கொளல் ஆகியவற்றை நோக்குக. ஆணவம் என்னும் சொல்லுக்கு, ஆணவ மலம் என்னும் பொருள் பழைய வடநூல்களில் யாண்டும் வழங்கப்படவில்லை என்று பன்மொழிப் பேராசிரியர் மறைமலையடிகள் அருளிச் செய்தமையும் இங்கு நோக்கத்தக்கது. ஆண்+அ+அம் =* (= ஆணவம். என்று வந்திருக்கவேண்டும்.) ஆண் - ஆள். அ சாரியை, அம் பண்புப் பெயர் இறுதிநிலை. சேது அணைக்கும் செய்கரைக்கும் சிவப்புக்கும் பெயர். செம்மையின் அடியாகப் பிறந்த தூய தமிழ்க் காரணப் பெயர். தேக்கம் சிதையாமல் செம்மைப்படுத்தப்பட்டது என அணைக்குச் சேது என்ற பெயர் வந்ததை நோக்குக. செய்கரைக்கும் அவ்வாறு. செம்மை சிவப்பு ஆதல் தெளிவு. இதை யறியாது சேது என்பது, வடசொல் என்பர். சொல்லுவார் சொல்லினும் கேட்பார்க்கு மதியிருத்தல் வேண்டுமே. - குயில், 8.9.1959 59 திருடன் இது த்ருஷ்டி, அதாவது பிறர் பொருளில் கண் வைப்பவன் என்று காரணம் கூறி, திருஷ்டி என்றதன் அடியாகப் பிறந்து திருடன் ஆதலால் அது வடசொல் என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவர் வடவர். திரு - செல்வம்; பிறர் செல்வமே கருதி வாழ்வோன் திருவன். திருவன் என்பதே திருடன் எனத் திரிந்தது என அறிதல் வேண்டும். தமிழ்ச் செய்யுட்களில் திருவன் என்று வருவதே பெருவழக்கு. மூலம் வடசொல்லன்று; மூ - மூத்த தன்மை. காரணம் மூ என்பதன் அடியாக மூலம் என்ற சொல் தோன்றிற்று. மூ + அம் = மூவம். தமிழில் வகரம் லகரமாக வழங்கும்; ஆவம், ஆலம் என வழங்கியது போல. ஆலம், ஆவம், அம்பின் கூடு. வேர் என்பது மரத்தின் காரணம் ஆம்போது வேர் மூலமாம். மற்றும் பிற. - குயில், 15.9.1959 60 அருச்சனை அருந்தல் - உண்ணல், உட்கொள்ளல், மனநிறைவு பெறல்; இது தன்வினை. அருத்தல் - உண்ணச் செய்தல், உட்கொள்ளச் செய்தல், மன நிறைவு பெறச் செய்தல். இது பிறவினை. இந்த அருந்தல் என்பது அருந்து + அன்+ஐ என இடையில் அன்சாரியையும் ஐ தொழிற் பெயர் இறுதி நிலையும் பெற்று வருதல் தமிழில் பெருவழக்கு: பொருத்தனை என்பது காண்க. இனி அருத்தளை என்பதன் போலி அருச்சனை என்பது; இது இளைஞரும் அறிந்ததே. பொரித்து - பொரிச்சு, விரித்து - விரிச்சு என்பவற்றையும் நோக்குக. அருச்சனை எங்கள் வடசொல் என்று எவன் சொல்வான்; எவன் கேட்பான். எனவே அருச்சனை தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைபிடிக்க. வண்ணம் இது வர்ணம் என்ற வடசொல்லின் சிதைவாம். வர்ணம் சிதைந்தால் வருணம் என்றல்லவா வரவேண்டும். அப்படித்தானே வந்தும் உளது. சமநிலைக்கு மேல் ஏற்படும் சிறப்பு நிலையை வளமை என்பர் தமிழர். வண்மை என்ற சமநிலைக்கு மேல் ஏற்பட்ட அழகு, நிறம் இவற்றை வண்ணம் என்றனர். வண்மை - வண்ணம்; வண்ணம் என்பதில் அம் பண்புப் பெயர் இறுதி நிலை; சிவப்பு என்பதிற் போல. வண்ணம் - தூய தமிழ்க் காரணப் பெயர். அலாதி பிறமொழிச் சொல்லன்று. வடசொல்லும் அன்று. அலாதது - அல்லாதது என்பதன் தொகுத்தல். இருப்பு முறை அல்லாதது, தனி என்பன அதன் பொருள்கள். அலாதது என்பதன் மரூஉ அலாதி என்பது. எனவே அலாதி தூய தமிழ்க் காரணப் பெயர் என்று தெளிக. ஏளனம் எள்ளுதல் - இகழ்தல். அதனடி எள். அது முதனீட்சி பெற்று அன்சாரியையும் அம் தொழிற் பண்பு இறுதி நிலையும் பெற்று ஏளனம் ஆயிற்று. இந்த ஏள் என்பதே கேள் - கேளி - கேலி என மருவிற்று. அவலல் - கவலல் ஆனதும் காண்க. எனவே ஏளனம் கேலி தூய தமிழ்க் காரணப் பெயர்களே என்க. - குயில், 22.9.1959 61 முந்திரிகை - முந்திரி முந்திரிகை என்பதை வடசொல் என்று நம்பும் தமிழர்களும் இருக்கிறார்கள் இந்த இரங்கத்தக்க தமிழகத்தில். இது கீழ்வாய் இலக்கத்துள் ஒன்று. அதாவது ஒன்றை முந்நூற்றிருபது பங்காக்கியதில் அவற்றிலொரு பங்கின் பெயர். முந்திரிகை என்னும் தொடர் மொழியில் முந்து இரிகை என்ற இரு சொற்கள் உள்ளன. முந்து என்பது காலமுறையில் வைத்து எண்ணினால், கீழ் என்பது பொருளாகும். இரிதல் -சாய்தல், ஒன்று என்பது தன் கீழ்நோக்கிச் சாய்ந்த பகுதி அதாவது கீழ் வாயிலக்கத் தொன்று என்று பொருள் கொள்க. எனவே முந்திரிகை தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. இதுவே முந்திரி என்றும் ஈறு கெட்டு வழங்குவதுண்டு. கீழ் நோக்கிச் சாய்ந்துள்ள முந்திரிப் பழத்தையும் அவ்வழியே அதன் முதலாகிய முந்திரியையும் குறிக்கும் என்பதும் ஈண்டு அறியத்தக்கது. கதை இது கதா என்ற வடசொல்லின் சிதைவு என்று வடவர் கூறுவதும், அதைத் தமிழர் நம்புவதும் ஆகிய இரண்டுமே மொழியாராய்ச்சி யில்லாமையினின்று தோன்றியவை. கதுவல் - பற்றுவது: தொழிற் பெயர். கது என்பது முதனிலைத் தொழிற் பெயர். இதுவே முதனிலைத் திரிந்த தொழிற் பெயராகக் காது என வரும். காது - ஒலியைப் பற்றுவது. இக் கது - ஐ தொழிற் பெயர் இறுதிநிலை பெறின் கதையாம். கதையை அனைத்துமொரு முதனிலையாகக் கொண்டு கதைத்தல் என்றும் வரும். கதை - நடந்த, கேட்கப்பட்ட கருத்தைப் பற்றுவது என்று பொருள் கொள்க. எனவே, கதை தூய தமிழ்க் காரணப் பெயர். வடசொல் அன்று. தமிழ்ச் சொல்லையே வடவர் எடுத்தாண்டனர். - குயில் , 29.9.1959 62 மது மதுகை எனினும் மடுகை எனினும் பொருள் ஒன்றே. மெய்வழி ஊற்றை அகப்படுத்தலும், வாய் வழிச் சுவையை அகப்படுத்தலும், கண்வழி ஒளியை அகப்படுத்தலும், மூக்கு வழி நாற்றத்தை அகப்படுத்தலும் காது வழி ஒலியை அகப்படுத்தலும் ஆகிய ஓர் ஆற்றல் மதுகை மடுகை என்பவற்றின் பொருள். மது என்பது மதுகை என்பதன் முதனிலைத் தொழிற் பெயர். அகப்பத்தால் உண்டாகும் இனிமைக்குத் தொழிலாகு பெயர். மடுகை என்பதும் இவ்வாறே. மடுகை மடுத்தல் எனவும் வரும். மது, தேன், கள், இனிமை, தித்திப்பு முதலியவற்றைக் குறிக்கும். மது என்பதை வடசொல் என்று வடவர் கூறிப் பொய்ப்பார். மொழி ஆராய்ச்சி இல்லாத நம் தமிழர்களிற் சிலரும் ஆமாம்: ஆமாம் இது வடமொழி தான் என்று கூத்தாடுவர். மது தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைப்பிடிக்க. மடுகை மதுகை என்பவற்றில் எது முன்னையது எனின், மடுகையே முன்னதாதல் வேண்டும். எனவே மடுகையே மதுகை ஆயிற்று என அறிதல் வேண்டும். - குயில், 6.10.1959 63 சாரம் சார்தல், சார்கை, சாருதல், சாரம் அனைத்தும் ஒரே பொருள் உள்ள தொழிற் பெயர்கள். சார் + அம். அம்தொழிற் பெயர் இறுதிநிலை. சாரம் ஒன்றைச் சார்ந்தது, சார்வது. ஒன்றை வடித்ததும் சாரம் எனப்படும். ஒன்றைச் சார்ந்து நிற்பதும் சாரம் எனப்படும். சுக்குநீர்ச் சாரம் என்பதில் சக்கை போகச் சார்ந்து மிகுந்தது எனப் பொருள்படுதல் காண்க. நூற்சாரம் என்பதில் நூலின் இன்றியமையாக் கருத்தை வடித்ததும், வேண்டாக் கருத்துக்களை விடுத்ததும் காண்க! மற்றும் கட்டுச் சுவர் எழும் வரைக்கும் அதைச் சார்ந்து நிற்கும் சாரக்கட்டை உணர்த்தலும் காண்க. மேற்காட்டிய பொருளில் சாரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயரே என்க. சுரம் சுரம் என்ற ஒலி வடமொழியிலும் இருக்கலாம். அதற்கும் தமிழ்ச் சுரத்திற்கும் தொடர்பே இல்லை. சுரம் என்பது வடமொழி அன்று என்றும், அது தமிழ்ச் சொல்லே என்றும் துணிக. சுர் என்பது விரைவையும் ஒலியையும் குறிக்க வருவதோர் குறிப்பிடைச் சொல் - இதனால் அது தீய சுவையின் தாக்குதலையும், தீய ஒளியின், தீய ஊற்றின், தீய ஓசை தீய நாற்றம் இவற்றின் தாக்குதலையும் குறிப்பதாயிற்று. சுர் என்பது அம் சாரியை பெற்றுச் சுரம் ஆனது. அருநெறி, கள், காடு, காய்ச்சல், பாலை நிலம், நெடுவழி இவற்றைக் குறிக்கத் தமிழில் சுரம் என்றால் பிழையாகாது. அது வடசொல்லன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். இதை சுவரம் என்றுகூறிக் காய்ச்சலைக் குறிப்பவர் பிழை செய்தவராவார்கள். காய்ச்சலைக் குறிக்கும் போதும் சுரம் தூய தமிழ்க் காரணப் பெயரே. ஆனால் சுவரம் என்றதோர் வடமொழி உண்டு. அதற்கும் சுரம் என்பதற்கும் தொடர்பே இல்லை. சுவரம் என்ற வட சொல்லுக்கு இசை என்பது பொருள். - குயில், 13.10.1959 64 பாலன், பாலியன் இந்தச் சொல் காதில் விழுந்ததும் தமிழனுக்கு எத்தகைய நினைவு தோன்றவேண்டும்? பால் குடிக்கும் பருவமுள்ள ஒரு குழந்தை நினைவல்லவா வரவேண்டும்! ஏன்? அந்தச் சொல் பால் என்றதிலிருந்தல்லவா துவங்குகின்றது! அவன் பாலன் என்ற தொடரில் அவன் எழுவாய், பாலன் பயனிலை, எனவே, இங்கு பால் முதனிலை! அன் ஆண்பால் ஒருமைக் குறிப்பு வினைமுற்று. பாலை உடையவனாய் இருக்கிறான் என்பது பொருள். பாலன் வந்தான் என்ற விடத்தில் பாலன் குறிப்பு வினையாலணையும் பெயராகும். பாலை உடையவன் அல்லது பால் குடிப்பவன் என்று பொருள் படுவதால். இவ்வாறெல்லாம் இல்லாமல் பாலன் என்பது இளம் பருவ முடையவன். பிள்ளை என்ற பொருளில் வழங்கும் போது பால் என்று தூய - தெரிந்த - தமிழ்ப் பெயர் நமக்குக் காட்சியளிக்கிறது. அது கொண்டு பாலன் என்பது பால் குடிக்கும் இளையவன் என்ற பொருள் நமக்குத் தோன்ற வேண்டாமா? அதில் உள்ள தமிழ்த் தன்மை மட்டும்தானே நமக்குப் புலனாக வேண்டும். இவைகளை எல்லாம் விட்டு விட்டுப் பாலன் என்பது ஒரு வடசொல் என்ற இருள் நம்மை வந்து சூழ்ந்து கொள்வானேன்? பாலன் என்பது குழந்தை என்று பொருள்படும்போது அஃது ஓர் ஆகுபெயராகும். பால் என்பது பால் குடிக்கும் பருவத்துக்கு ஆவதால். இனி, பால் என்பதே பாலம் பாலியம் என அம்முச்சாரியையும் அம்மோடு இகரச் சாரியையும் பெற்று, இளம் பருவத்தைக் குறிக்கும். ஓவம் ஓவியம் காண்க. பாலன், பாலியன் என்பவை வடசொற்கள் என்று வடசொற்காரர் ஏய்ப்பர். ஏமாறாதிருக்கவே இவ்வாறு ஆராயப் பெற்றது. பாலன், பாலியன் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று தெளிதல் வேண்டும். நீதி இது வடசொல் அன்று. நீப்பு, நீத்தல், நீங்கல், நீதல், நீதி அனைத்தும் தொழிற் பெயர்கள். நீதி என்பதில் நீ முதல் நிலை! தி, தொழிற்பெயர் இறுதிநிலை! தி. தொழிற்பெயர் இறுதி நிலையாய் வருதலைச் செய்தி, உய்தி, ஆதி என்பவற்றில் காண்க. நீதி என்பதன் நேரான பொருள், மனம், புலன்களின் மேல் செல்லுவதினின்று நீங்கி இருப்பது; அது பற்றின்மையைக் குறித்தது. அப்பற்றின்மை ஒருபால் கோடாமையாகிய ஓர் ஆற்றலுக்கு ஆனது; ஆகுபெயர்! நீதிநூல் அறநூல் இயற்றுவாரும் தமிழரசர் காலத்தில் பற்றற்ற துறவிகளே. இவர்களை நீத்தார் என்ற பெயராற் குறித்தார் வள்ளுவரும். நீதி என்ற சொல்லே நமக்குப் பல உண்மைகளைக் காட்டி நிற்கின்றது. மேலும் பழந்தமிழர் பண்பாட்டையும் அது விளக்குகின்றது அன்றோ! நீதி, வடசொல் என்று கதைப்பதும், அதை மதிப்பதும் அறிவு மதுகை அற்றார் செயல் என விடுக்க, நீதி தூய தமிழ்க் காரணப் பெயர். - குயில், 20.10.1959 65 சேட்டு இது தூய தமிழ்க் காரணப் பெயர். வடமொழியின் கிளைமொழி என்று எண்ண வேண்டாம். தமிழ்ச் சொற்கள் பண்டு பிறமொழியாளர் பலரால் எடுத்தாளப்பட்டன. அவற்றில் இதுவும் ஒன்று என உணர்தல் வேண்டும். நடுவு நிலைப் பொருட்டாகிய செம்மை என்ற பண்புப் பெயரினின்று தோன்றிய செட்டு என்பது முதல் நீண்டு சேட்டு ஆனது. செட்டி என்பதும் செம்மையிற் தோன்றியதே. இனிச், செட்ட என்பதன் திரிபாகிய சட்ட என்ற சொல் பற்றிச் சிவஞானபோத உரையாசிரியர் செம்மைப் பொருட்டாவதோர் அகர வீற்றிடைச் சொல் என்று சொல்லியுள்ளதும் இங்கு நினைவு கொள்ளத் தக்கது. சேட்டு, நடுவு நிலைமைக் கொள்கையின் அடிப்படையில் ஆவ தோர் வாணிகம். வாணிகனை உணர்த்தும்போது ஆகுபெயர் என்க. திருமதி சீமதி என்ற வடசொற்றொடரிலுள்ள மதிக்கும், திருமதி என்ற தொடரிலுள்ள மதிக்கும் தொடர்புண்டா? மதி என்ற சொல் தமிழிலக்கியங்களில் தனக்கென ஒரு பொரு ளில்லாத இடைச் சொல்லாகவும் - அசைச் சொல்லாகவும், தனக்கென ஒரு பொருள் கொண்ட தனிச் சொல்லாகவும் வரக் காணுகின்றோம். கேண்மதி, இறக்குமதி என்பவற்றிற் காண்க. மதிப்பு என்பதன் முதனிலையாகிய மதி என்பதைக் காண்க. மதி என்பது பற்றிப் பேராசிரியர் மறைமலையடிகளார் இது தமிழ்ச் சொல்; அளப்பது, காலத்தை வரையறுப்பது என்பன அச் சொல்லின் பொருள்கள் என்று கூறியிருக்கின்றார்கள். அளப்பதும் வரையறுப்பதும் மதிப்பு என்பதுதான். இது ஆகுபெயராய் மதிப்புடைய திங்களையும் குறிக்கும். மதித்தல் ஆகிய ஓர் அறிவையும் குறிக்கும். எனவே திருமதி என்பதற்குத் திருவால் மதிப்புடைய ஒரு பெண் எனப் பொருள் கொள்ளுதலிலும், திருவும் அழகும் உடைய ஒரு பெண் என்று பொருள் கொள்ளுதலிலும் இழுக்கென்னை? அவ்வாறு பொருள் கொள்ளுங்கால் முன்னது மூன்றாவதன் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்றும், பின்னது உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்றும் ஆகும். எனவே திருமதி என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்று கடைப்பிடிக்க. - குயில், 3.11.1959 66 விகுதி இது விகுரிது என்ற வடசொல்லின் சிதைவென்று வடசொல்காரர் சொல்லி ஏமாற்றுவர். தமிழரும் ஆராய்ச்சி இல்லாமையானும், கண்ணை மூடிக் கொண்டு பார்ப்பனரைப் பின்பற்றுவதோர் நோயுடைமையானும் ஏமாறுவர். விகுதல், விகல், விக்கல், விக்குள், விகுதி அனைத்தும் இறுதிநிலை வேறுபடினும் ஒரே பொருளைத் தரும்தொழிற் பெயர்கள். உள்நின்ற புனலின் அளவு இறுதிபடுதலே விக்குள் ஆம். அதே பொருளுடையனவே பிறவுமாம். விகுதி - விகு முதனிலைத் திரிந்த தொழிற் பெயர் இறுதிநிலை என உணர்க. எனவே, விகுதி தூய தமிழ்க் காரணப் பெயர் என்க அச்சாரம் ஓர் ஒப்பந்தம் பற்றி எழும் அச்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்கான முற்பணம் என்பது இதன் பொருள். இது முதலில் அச்சவாரம் என இருந்தது. பின்னர் அகரம் கெட்டு அச்சாரம் என்றாயிற்று. அச்சம் - அஞ்சுதல், வாரம் - பங்கு பகுதி, அச்சப் பகுதி ஆகிய இது, பணத்திற்கானது ஆகு பெயர். எனவே அச்சாரம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. பெட்டி இது பேட் என்ற வடசொல்லின் சிதைவென்று ஒரு பன்மொழிப் புலி, சொல்லித் திரிவதாக, மற்றொரு பன்மொழிப் புலி நம்மிடம் கூறக் கேட்டு நகைத்தோம், அந்தப் பன்மொழிப் புலி, இந்தப் பன்மொழிப் புலியிடம் ஏன் சொல்லும்? இந்தப் புலி ஏன் கேட்டுக் கொண்டிருக்கும்? இல்லாததைச் சொன்னால் முகத்தில் உமிழ்வானே என்று நினைத்தால் அப்புலி இப் புலியிடம் சொல்லத் துணியுமா? பெட்டு, பெட்டல் இரண்டுக்கும் ஒன்றே பொருள் பேணுதலும் விரும்புதலும் பெட்டலின் அடியாகிய பெட்டு என்பது இ பெயர் - இறுதிநிலைப் பெற்று பெட்டியை உணர்த்திற்று. எனவே பெட்டி - விருப்பத்தைப் பெற்றிருப்பது. பெட்டி என்பது தூய தமிழ்க் காரணப் பெயரன்றோ. இதனைப் பிணையும் பேணும் பெட்பின் பொருள் என்ற தொல்காப்பிய நூற்பாவாலும். பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் காய்தலும் உலத்தலும் பிரித்தலும் பெட்டலும் என்ற கற்பியல் அடியாலும், நம் தமிழ்ப் புலவர்கள் உணர்ந்து வைத்தும், வடநாட்டானிடம் ஓடிப் பெட்டி என்றதற்கு ஒத்த ஒலி வடமொழியில் ஏதாவது உண்டா; தமிழைத் தாழ்த்திக் கூறவேண்டும் என்று கேட்டு அங்கிருந்து ஓடிவந்து தமிழரை நோக்கிப் பெட்டி என்பது பேட் என்ற வடசொல்லின் சிதைவென்று மானமற்ற வகையில் சொல்லித் திரிவது ஏன்? காட்டிக் கொடுத்து வயிற்றை வளர்க்கத்தானே! - குயில், 17.11.1959 67 காந்தி இது வடசொல்லே என்று வடவர் கூறினாலும் தமிழுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று எவராலும் சொல்ல முடியாது. காந்துதல், காந்தல், காந்தி அனைத்தும் ஒளிபடுதல் என்ற பொருளுடைய தொழிற் பெயர்கள். எனவே காந்தி ஒளி செய்தல் என்ற பொருள்படும் தூய தமிழ்க் காரணப் பெயரேயாகும். இது ஒரு பொருளுக்கு ஆகும் போது ஆகுபெயராம். காந்தி என்ற ஒலி வடமொழியில் இருக்கலாம். அது இதுவல்ல. ஆயுள் ஆயுசு என்பது வடசொல் என்றும், ஆயுள் அதன் திரிபு என்றும் கூறுவர் வடவர். ஆயுசு, ஆயுக, ஆயுள் என்பன அனைத்தும் தூய தமிழ்க் காரணப் பெயர்களேயாகும். ஆய்+உ+சு = முதனிலை சாரியை தொழிற் பெயர் இறுதிநிலை. ஆயுது என்பதும் அது; ஆயுள் என்பதும் அது! அதில் உள் இறுதிநிலை! இது தல் இறுதி நிலை ஏற்று ஆய்தல் என வருதலும் காண்க. ஆயுள் என்பதற்கு ஆராய்தல் என்பன பொருள்கள் என்க. மக்களுக்கு உண்டான ஆண்டு வாழ்நாளின் இடை யிடையே ஆராயப்படுவது அன்றோ? ஆயுள் செயப்பாட்டு வினை செய்வினையாய் வந்தது என உணர்க. எனவே ஆயுள் (ஆயுசு) வடசொல் அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். - குயில், 24.11.1959 68 ஒருவந்தம் இது வள்ளுவர் வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்தில் வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லை கெடும். என்ற குறட்பாவில் வந்துள்ளது. இக் குறட்பாவிற்கு உரை கூறவந்த பரிமேலழகர். ஒருவந்தம் - (அரசன்) ஒருதலையாக என்று கூறி அவரே, விரிவுரையில் ஒருவந்தம் ஏகாந்தம் என்பன ஒரு பொருட் கிளவி என்று குறித்தார். ஏகாந்தம் என்பதிலுள்ள ஒரு என்பதை ஏகம் என்றும் அந்தம் எனப் பிரித்துக் கொண்டதை வடசொல் என்றும் அவர் நம்மை எண்ணச் செய்கின்றார். ஒருவந்தம் என்பதை ஒரு + அந்தம் என்று பிரித்த இவர் ஒரு என்பதன் முன் உயிர் வந்தால், அந்த ஒரு ஓர் என்றாகி அந்தம் என்பதனோடு சேர்ந்து ஓராந்தம் என ஆகும் என்ற இலக்கணச் சட்டத்தையும் எண்ணவில்லை. தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொல் என்று காட்டி வடமொழியினின்றே தமிழ் வந்தது என்ற பொய்க் கொள்கையை நிலை நாட்டுவதிலே தம் கண்களையும் கருத்தையும் செலுத்துகின்றார். இச்செயல் அல்ல புரிவதாகும். ஆதலின் மேல் அறமும் தோன்றாது போனதில் வியப்பொன்றுமில்லை. ஒருவந்தம் என்பதை ஒரு+வந்தம் என்றே பிரிக்கவேண்டும் என்பதையும் வந்தம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதையும் ஈண்டு விளக்கப்படும். வெருவந்த செய்தொழுகும்... என்று தொடங்கும் குறட் பாவின் ஒருவந்தம் என்பதை நோக்குமுன் மேல் வந்திருக்கும் வெருவந்த என்பதையும் நோக்க வேண்டும். வெரு+அச்சம், வந்த பலவின்பால் வினையாலணையும் பெயர். அச்சம் அமைந்தவை (அஞ்சத் தக்க செயல்கள்) என்பது அதன் பொருள். அதிகாரம் ஒன்பதாம் குறட்பாவிலும் வெருவந்து வெய்து கெடும் என வந்திருப்பதும் நோக்குக. இங்கு வெருவந்து - அஞ்சுதல் அமைந்து, (எனவே அஞ்சி) என்பது பொருள். இதில், வந்து வினையெச்சம். எனவே இதன் தொழிற் பெயர் எது? வெருவந்தம் அன்றோ? ஒருவந்தம் என்பது போலவே நமக்கு வெருவந்தம் என்ற தொடரும் கிடைக்கின்றது. எரிவந்தம் என்பதும் ஒன்று. எனவே ஒருவந்தம் வெருவந்தம், எரிவந்தம், என்பனவற்றை நோக்குங்கால் வந்தம் என்பதே அன்றி அந்த அந்தம் என்பதை நாம் வலிந்து இழுத்துப் போர்த்துத் தொல்லையுற வேண்டாம். இனி வந்தம் என்பதைப் பற்றி ஆராயப்படும். வா என்ற முதனிலை வந்தான் என்னும் போது வ எனத் திரியும். வருகின்றான் என்னும் போது வரு எனத் திரியும். அதுபோல வந்தம் என்னும் தொழிற்பெயரில் வா என்பது வந்து எனத் திரிந்தது என உணர்தல் வேண்டும். இதில் அம் தொழிற்பெயர் இறுதிநிலை ஆட்டம் என்பதிற்போல. இனி வெருவந்தம் ஒருவந்தம். எரிவந்தம் என்பவற்றில் வெருவரல். ஒருவரல், எரிவரல் (எரிவுவரல்) என்பவை காண்க. எனவே வெருவரல் - அஞ்சத் தகுந்தது. ஒருவரல் - தனித்தோற்றம் புகழ், உறுதி; எரிவரல்- எரிச்சல் அடைதல் என்பன பொருளாகக் கொள்க. எனவே ஒருவந்தம் என்பதைப் பரிமேலழகர் ஒரு அந்தம் எனப் பிரித்தது பிழை என்பதும், ஒருவந்தம் என்பதில் உள்ள வந்தம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதும் பெற்றாம். புத்தகம் புதகம் வடமொழி என்றும் அதன் சிதைவே புத்தகம் என்றும், ஆதலால் புத்தகம் வடசொல்லே என்றும் கூறி மகிழ்வர் வடசொல் காரர். அவரடி நத்தும் தமிழர்களும் அப்படி! புத்தகம், புதுமை அகம் எனும் இரு சொற்கள் சேர்ந்த ஒருசொல், புதுமையின் மை இறுதி நிலை கெடப், புது என நின்று, அதுவும் தன்னொற்றிரட்டல் என்ற சட்டத்தால் புத்து என ஆகி அகம் சேர - உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்பதால் புத்தகம் ஆயிற்று. புத்தகம் - புதுமைக்கு இடமானது. புதுமையான உள்ளிடம். அந்நாளில் ஒலி வடிவை வடிவிற் கொணர்ந்தார் எனில் அது புதுமை அன்றோ. எனவே புத்தகம் தூய தமிழ்க் காரணப் பெயர். புத்தகத்தை புதகம் என்றது வடவர் செயல். வேட்டியை வேஷ்டி என்றும், முட்டியை முஷ்டி என்றும் அவர்கள் கூறவில்லையா? - குயில், 8.12.1959 69 மேகம் இது வடசொல் அன்று. தூய தமிழ்க் காரணப் பெயர். மேகு - மேல் அம் சாரியை. மேக்கு, மேற்றிசை, மேலும் பேர் என்ற நிகண்டு காண்க. மேலே தவழும் முகிலுக்கு ஆகுபெயர். மேல் என்பதே மேற்கு, மேக்கு, மேகு எனத்திரியும். இதை வடவர் வடசொல் என்று கூறி மகிழ்வர். அது கடைபட்ட முடிச்சுமாறித்தனம், என்க. திசை, திக்கு இவை திகழ்ச்சி என்பதன் அடியாகப் பிறந்த திகை என்பதன் திரிபுகள் திகை - திசை. திசை, திக்கு ஆகிய இரண்டும் வடசொற்கள் என்பர் திசை தெரியாது திக்கற்றுத் திகைத்த ஆரியர். சொத்து இது வடமொழியா என்று ஒரு தோழர் கேட்கின்றார். கேட்க வேண்டிய கேள்வி! ஏனெனில் சிறந்த பொருள் மறைந்துள்ள ஒரு சொல். இது தூய தமிழ்க் காரணப் பெயர். என்னை? சொல் + து = சொற்று; து ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று இறுதிநிலை. சொல் - புகழ். புகழுடையது என்ற காரணத்தால் சொற்று என்றனர் முன்னைத் தமிழர்கள். சொற்று என்பது சொத்து என மருவியது. ஒருவனுக்குள்ள செல்வமுழுவதையும் சொத்து என்பார்கள். எனவே அது புகழுக்குரியது. ஆதலால் சொத்து எனப்பட்டது ஆகு பெயர். - குயில், 15.12.1959 70 வேகம் இது வடசொல் அன்று. வேகுதல், வேவுதல், வேதல், வேக்காடு முதலியவை போலவே வேகம் என்பது தொழிற்பெயரே. வே. முதனிலை, கு. சாரியை. அம் தொழிற்பெயர் இறுதிநிலை. தீயிற்படுதல் என்பது பொருள். தீப்பட்டான் மீள விரைதல் இயல்பு. அது பற்றி வேகம் விரைவை யும் குறிப்பதாயிற்று. மனம் வேதலைக் குறிக்கையில் துன்பத்தையும் குறிக்கும். எனவே வேகம் தமிழ்க் காரணப் பெயரே என்க. வேதனை இதை வடசொல் என எண்ணுவோரும் உளர். இதுவும் தமிழ்க் காரணப் பெயரே. வே. முதனிலை! த் எழுத்துப் பேறு! அன் சாரியை! ஐ தொழிற் பெயர் இறுதிநிலை, மனவேக்காடு பற்றிவரும், துன்பம் என்பது பொருள். பொருத்தனை, கொடுப்பனை என்பவற்றை ஒப்பு நோக்குக! சொந்தம் இது வடசொல் அன்று. தொன்மை, தொன்று, தொண்டு, தொந்து, தொந்தம், அனைத்தும் ஒரு பொருள் உடைய சொற்கள். தொன்மையி னின்றே மற்றவை தோன்றின. தொந்தம் என்பது சொந்தம் என்று மருவிற்று. தகரம், சகரமாதல் தமிழியற்கையேயாகும். பழமை என்பதற்குச் சொந்தம் என்ற பொருள் உண்டா எனில் ஆம், ஒருவனிடத்தில் ஒரு பொருள் பழமை தொட்டு இருந்தது எனில் அது அவனுக்கு உரியது ஆயிற்றன்றோ! ஆதலின் சொந்தம் தமிழ்ச் சொல்லே என உணர்க! - குயில், 22.12.1959 71 படித்தல் கற்றல் என்ற பொருளில் படித்தல் என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் ஓரிடத்தும் காண இயலாது என்றும், பட் என்ற வடமொழி வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்ததே அச்சொல் என்றும், இலக்கணச் சிந்தனை என்ற நூலின் 101-ம் பக்கத்தில் திரு.எ. வையாபுரிபிள்ளை எழுதி உள்ளார். இதைத் தயை கூர்ந்து விளக்குக! என்று திருமதிக் குன்றம் திரு.அ. கணபதி அவர்கள் நமக்கு எழுதுகின்றார்கள். படித்தல் என்பது கற்றல் என்ற பொருளில் அமைந்திருப்பதாக வையாபுரியார் எண்ணினார். ஆயினும் அதன் நேர் பொருளை அவர் உணர்ந்திருந்தார் என்று எண்ண முடியவில்லை. அதன் மேல் அவர் பட் என்றதன் அடியாகவே படித்தல் வந்தது என்றார். செய்தி முதற்கோணல் முற்றும் கோணலாக முடிந்தது. படித்தல் என்பதன் பொருள் ஒன்றுகண்டு, அவ்வொன்றைக் கொள்ளல் என்பதேயாகும். எனவே படி என்றால், ஒன்றுகண்டு அவ்வொன்றைக் கொள் என்பது பொருள். நீ அந்நூலைப் படி என்றால், நீ அந்நூலிலிருந்து ஒன்றைக் கண்டு அவ்வொன்றைக் கொள் - மனத்துள் வை - என்பது அன்றோ பொருள்? இதில் வரும்படி வடசொல்லடியா? - அன்று. தூய தமிழ்ச் சொல்லே. இதுவன்றி மிதித்தேறும்படி ஒன்று இருக்கிறது. அதுவும் ஒன்று கண்டு அவ்வொன்றை (அதாவது அதே போன்ற மற்றொன்றை) அடைதல் என்ற தொழிலே ஆகுபெயராயிற்று. அவ்வாறு வரும் படியும் வடசொல்லாகிய பட் என்றதன் தோற்றமா? அன்று, அது தூய தமிழ்க் காரணப்பெயரே. இனியும், படி என்பது உலகுக்குப் பெயராய் வரும், காரணம்? ஒருபால் ஒருவன் நடத்தலை - இருத்தலை மற்றொருவன் காணுகின்றான். அம் மற்றொருவன் அது கண்டு நடத்தலை, இருத்தலை மேற்கொள்ளு கின்றான். இதுவும் ஒன்று கண்டு அதைக் கொள்வது என்பதுதான். இத் தொழிலும் ஆகுபெயராயிற்று. மேலும், படிவம் என்றதில் வரும் படியை நோக்குக. இதில் படி என்றதே வேர்ச்சொல். ஒன்றைப் பார்த்து வார்ப்படம் செய்த மற்றோர் உருவம் என்பது அதனால் பெறப்படும் பொருள் இதுவும் ஒன்றுகண்டு அவ்வொன்றைக் கொள்வதுதான். மற்றும், அப்படி இப்படி எனச் சுட்டை அடுத்து வருவனவும், எப்படி என வினாவை அடுத்து வருவனவும், வரும்படி இருக்கும்படி என வினையை அடுத்து வருவனவும் ஆகிய எப் படியும் மேற்சொன்ன பொருளிலேயே அமைந்திருப்பதைக் கூர்ந்து நோக்குக! கீழ்ப்படிதல் என்பதிலுள்ள படி, எப்படி? என்று கேட்பின்-அதுவும் அப்பொருளிலேயே அமைந்திருக்கின்றது. என்னை? ஆணையிட்டானிடம் ஒன்று கண்டு (அவன் படிந்து போதலை விரும்புகின்றதை) அதை மேற்கொள்ளுவதே கீழ்ப்படிதல் ஆகும் என்க. படி என்பவை அனைத்தும் ஒரே பொருள் உடையவை என்பது கண்டோம். காணவே படி என்ற சொல், தமிழ் தோன்றிய நாள் தொட்டே தமிழிலக்கியங்களில் உண்டு என்பதும் கண்டோம். வையாபுரியார் தம் வாழ்வையே பார்ப்பனர் மெச்சிச் சலுகை தரவேண்டும் என்ற பிச்சைக்காரத்தனத்துக்கு அடகு வைத்தவர். இந்தப் படி என்பதையே வடவர் ப்ரதி என்றார்கள். படி என்பது மட்டுமன்று. தமிழே வடமொழியினின்று வந்தது என்று கூறித் தமிழர்களால் கான்று உமிழப்பட்டவர் அவர். இலக்கணச் சிந்தனை - சிந்தனை ஒன்று வையா புரியார்க்குத் தனியாக உண்டோ? இல்லவே இல்லை. ஆனால் வையாபுரியாரிடம் ஓராற்றல் அமைந்திருந்தது. அது என்ன தெரியுமா? தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் ஆரியர்களுக்குக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் ஒரு கீழ்மைச் செயலைப் பின்பற்றவும் அவர் ஆட்களைத் தோற்றுவித்தார். தெ.பொ. Û.க்fŸ முதலிய எத்தனை பேர்கள் இந்த நாட்டில் இருக் கின்றார்கள் - பாருங்கள். இது செயற்கரிய செயல்தானே! படி என்பது தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதில் எட்டுணையும் ஐயுற வேண்டா. - குயில், 5.1.1960 72 அனுப்புதல் இதில் உள்ள வேர்ச் சொல்லாகிய அனு என்பது வடமொழியா என்று புலவர் ப. முத்து கேட்கின்றார். அது வடசொல் அன்று, தூய தமிழ்ச் சொல்லே. விளக்கம் கீழ் வருமாறு: ஒருவனிடம் ஒரு வேலைக்காரன் இருக்கிறான். மற்றொருவன் அவனுக்குச் செய்தி அனுப்பு என்று சொல்கிறான். அப்படி என்றால் என்ன பொருள்? நீ கொண்டிருக்கும் வேலைக்காரனை அன்மையாக்கு. அதாவது அவனை இழந்துவிடு என்பதேயாகும். ஒருவனிடமுள்ள ஆயிரம் வெள்ளியை அனுப்புக என்று மற்றொருவன் சொன்னால் அதன் பொருள் என்ன? நீ கொண்டிருக்கும் ஆயிரத்தை (என்னிடம் சேர்ப்பதன் மூலம்) வெறுமையாகிவிடு, ஆயிரத்தை உள்ளவனாய் இராதே: அல்லாத வனாய் விடு என்பதேயாகும். இவ்வாறு அனுப்புதல் என்பதன் பொருளை அறிந்தபின், அனு என்பதை தெரிந்து கொள்வது முடியும். அன்மை என்பதன் மை கெட்டு மேலும் அடைந்த திரிபே அனு. அனுவும் ப் என்ற எழுத்துப் பேறும் மற்றும் ப் என்ற இணைப்பும், உ என்ற சாரியையும் ஆக அனைத்துமோர் முதனிலையே அனுப்பு என்பது. அனுப்பு என்ற முதனிலை தல் என்ற தொழிற் பெயரின் இறுதிநிலை பெற்று அனுப்புதல் என்றாயிற்று. அனு-அன்மை, இன்மை - இல்லாமை. எனவே அனுப்பு என்பதிலுள்ள அனு வட சொல்லன்று, தூய தமிழ்ச் சொல்லே என்பது பெற்றாம். அனுபோகம் இது அநுபவம் என்ற வடசொற்றிரிவு என்று கூறுவார் கூற்று அறியார் கூற்றே. அனு அன்மையின் திரிபு. போகம், போதல் போ+கு+அம்; முதனிலை இறுதிநிலை இடையில் சாரியையும் என உணர்க. அனுபோகம் அன்மை அதாவது ஒன்றை உடையவனாயிருந்த நிலை ஒழிந்தது. அனுபோகம் - இல்லாமை தீர்ந்தது, ஒன்றின்மேல் தொடர்பு ஏற்பட்ட நிலை. ஆதலின் இது தூய தமிழ்க் காரணப் பெயரே என்று கடைப் பிடிக்க. உத்தரவு, உத்தரம், உத்தாரம் இவைகள் வடசொற்கள் அல்ல. தூயத் தமிழ்க் காரணப் பெயர்களே. உம் என்பது ஆடுமாடு மேய்ப்பவர்களிடம் கேட்கின்றோம். உம் என்பதன் பொருள் என்ன? செல். அதாவது ஓரிடத்தினின்று மற்றோரிடம் செல், ஏறு, உயர்வு, கொள் என்பன. ஆடு மாடு மேய்ப்பவர்களிடம் கேட்கப்படுவதால் உம் என்பதைப் பற்றி இங்கு நாம் எடுத்துச் சொல்கிறோம் என்பதில்லை. பழங்காலத்தில் மேற்சொன்ன பொருளில் உம் என்பதைத்தான் மேற்கொண்டார்கள் சொற்கள் பெருகாத காலமாதலால். உம் என்ற பிறகு உந்து எனத் திரிந்தது. திரிந்தாலும் பொருள் மாறாது; மேற்சொல்லிய பொருள்கள்தான். உந்து - என்பதிலிருந்து உந்தி என்பது தோன்றிற்று. இது வந்து என்பதன் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். இதில் இ.பெயர் இறுதிநிலை. பொருள் உந்தப்படுவதாகிய ஆள்கூட்டம். மற்றும் உந்தி என்பது உயிர்ப்பினை உந்தும் இடமாகிய கொப்பூழ் மற்றும் உந்தி உந்துதலால் பெற்ற இடமாகிய உயர்ச்சியையும் குறித்தது. பிறவும் உண்டு. உந்து என்பதனடியாகப் பிறந்தது உந்தல். உந்துதல் தொழிற் பெயர். இனி. உந்து, - உத்து என வலித்தல் பெற்றது என்ன பொருள் முன் சொன்னதே. உத்து - உத்தரவு. உத்து x அரவு. அரவு தொழிற் பெயர் இறுதி நிலை பெற்று உத்தரவு ஆயிற்று. அரவு தொழிற் பெயர் இறுதி நிலையாய் வருவதைத் தேற்றரவு முதலியவற்றிற் காண்க. உத்தரவு என்ன பொருள்? ஒருவன் தன் ஆணையை மேற் செல்ல வைப்பது. உத்தரம் - (உத்து+அர்+அம்) இதில் அரவு என்ற இறுதிநிலை அர் எனத் திரிந்து அம் முச்சாரியைப் பெற்றது. உத்தாரம் (உத்து+ஆர்+அம்) இதில் அரவு என்ற இறுதிநிலை ஆர் எனத் திரிந்து அம்முச் சாரியை பெற்றது. உத்தரவு, உத்தரம், உத்தாரம் இது சார்ந்த பிற பொருளிலும் வரும். ஆயினும் அப் பிற பொருள்களும் மேலே சொல்லிய பொருளுக்கு அப்பாற் செல்லமாட்டா. எனவே, இவை தூய தமிழ்க் காரணப் பெயர்கள் ஆதல் அறிக. இன்னும் உத்து என்பதன் அடியாக உத்தித்தல், உத்துதல் என்றும் என்பனவும் வருவதுண்டு. உச்சரித்தல் இதை வடசொல் என்று (வடவர்) பார்ப்பனர் சொல்லுகின்றார்கள். ஆதலால் இது பற்றியும் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. உம் x உந்து x உத்து x உச்சு, உச்சு உத்து என்பதன் போல! உச்சு x அரித்தல் = உச்சரித்தல் அரவு அரி எனத் திரிந்து தல் இறுதிநிலை பெற்றது. உச்சரித்தல் என்பதன் பொருள் எழுத்தொலியை வெளியிற் செலுத்துதல். மேலே உம் - உந்து, உத்து, உச்சு பொருளில் மாற்றமில்லை. எனவே உச்சரித்தல் தூய தமிழ்க்காரணப் பெயர் ஆதல் அறிக. - குயில், 12.1.1960 73 கண்ணியம் இது கண்யம் என்ற வடசொல்லின் சிதைவென்பர் வடசொற் பற்றாளர். வடசொல் என்ற எண்ணத்தால் எடுத்தாள்வாரும் உளர். இஃது தூய தமிழ்க் காரணப் பெயர் ஆதலை அவர் அறியார். கண்ணல், கண்ணம் - கருதுதல், குறித்தல், மகித்தல் என்றும் பொருளுடையவை. கண்ணம் என்பது கண்ணியம் ஆனது. ஓவம் ஓவியம் ஆனதுபோல என்க. கொடிநிலை வள்ளி கந்தழி என்ற, வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் காண்க. கண்ணியம் - கருதத் தக்கது, மேன்மை ஆதலின் கண்ணியம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைப்பிடிக்க. கவனம் இது வடசொல் அன்று; கவற்சி - விருப்பம், கவல், விருப்பம் கெடுதலினால் ஆகும் வருத்தம். அதனடியாகப் பிறந்ததே கவனம்; கவல் கவன் எனத் திரிந்து அம்முச்சாரியை பெற்றதென்க. கவனம் - கருத்து, விருப்பம், கண்காணிப்பு. எனவே கவனம் தூய தமிழ்க் காரணப் பெயர் ஆதல் உணர்க. - குயில், 26.1.1960 74 கண்டம் இது வடசொல் என்கின்றனர் வடமொழியைத் தாய் மொழியாய்க் கொண்டவர்கள். வடமொழிப் பற்றுள்ளவர்களும் அப்படி. இடைக்காலப் புலவர்களும் இதை வடசொல்லென்றே வைத்துச் செய்யுள் செய்தார்கள். இனிக் கண்டம் என்பதைக் கண்டேம் என்று உச்சரிப்பது தான் நாகரிகம் என்று எண்ணி அவ்வாறு சொல்லுகின்றார்கள் சிலர் இந்தத் திக்கில்லாத தமிழகத்தில். கண் என்பதின் பொருள் என்ன? இதை அணுகி ஆராய்தல் வேண்டும். கண் என்பதன் பொருள் இடம் என்று சிலர் பொருள் சொல்லிவிடுகிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் மட்டும் போதாது. கண் பொதுவிடத்தை நீக்கிய சிறப்பிடம் என்று பொருள் காண வேண்டும். இது விழியைக் குறிக்கும்போது உடம்பாகிய பொது விடத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய விழியைக் குறிப்பது காண்க. கண் என்பது பொது நீக்கிச் சிறப்பைக் குறிப்பதால், அது பொது விடத்தை விடக் கவர்ச்சியுள்ளதாக - சிறப்பிடமாகக் கண்ணை வுணர்த் திற்று. கண் எங்கு வந்தாலும் அது கவர்ச்சிப் பொருளைக் குறிப்பதாகும். கண் என்பதன் அடியாகக் கண, கண, கணீர், கண் என்று ஒலித்தது என்பன வரும். பொதுவிடமாகிய ஒலியினத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய (ஒலியில்) கண கண என்பன முதலியவைகளைக் குறித்தது காண்க. கண் என்பதன் அடியாகக் கணம் வரும் பொதுவாகிய நேரத்தை நீக்கிக் கைந்நொடிப்பாதைக் குறித்தது காண்க. கணிதம், கண்ணல் அனைத்தும் அவ்வாறே. கண் என்பது கண்டு எனத் திரிந்துவரும். வேர்ச்சொல் கண் என்பதுதான். கண்டு என்றால் என்ன? தளை நூலாகிய பொது இடத்தை நீக்கி நாணற் குழலின்மேல் சுற்றப்படும் சிறப்பிடத்தைக் குறிப்பது காண்க. கண்டு-நூல் சுற்றப் பெற்ற நாணற் குழை; இதைத் தார் என்றும் சொல்லுவர். இனி, கண்டு உடலாகிய பொதுவிடத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய கழுத்தைக் குறித்தது காண்க. கண்டு - கழுத்து; நஞ்சுண்டு கறுத்த கண்டி (சிலம்பு: வேட்டுவ வரி) என்பதில் கண்டு என்பதை அதாவது கழுத்துடையவள் கண்டி; இதில் இ பெண்பால் இறுதிநிலை. இனி, இக் கண்டு என்பது கண்டம் என அம் சாரியை பெற்று வரும். மன்று - மன்றம், கூற்று - கூற்றம் - வேடு, வேட்டம் என்பவற்றிற் போல. இனியும் கண்டம் துணிக்கைக்குப் பெயர். மரத்துணிக் கையில் வைத்து நோக்குக. பொதுவிடமாகிய மரத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய துண்டத்தை, துணிக்கையை கண்டத்தைக் குறிப்பது காண்க. கண்டம் என்பதை அடியாகக் கொண்டு, கண்டித்தான் முதலிய வினைகள் தோன்றும். அங்கும் அப் பொருளே காண்க. எனவே, கண்டம், கழுத்து, துண்டம், நூற்கண்டு, பெருநிலம் பரப்பு முதலியவற்றைக் குறிக்கையில் அது தூய தமிழ்க் காரணப் பெயர் ஆதல் மறுக்கக் கூடியதன்று. கண்டம்: நம் செந்தமிழ்ச் செல்வம். - குயில், 2.2.1960 75 கொஞ்சம் இது கிஞ்சித் என்ற வடசொற் சிதைவென்று வாய் புளித்ததோ - மாங்காய் புளித்ததோ என ஆராயாது கூறுவோர் இருக்கின்றார் போலும். கொஞ்சுதல் - என்பது நிரம்பாப் பேச்சு; சிறிது பேசுதல் இதன் முதனிலை கொஞ்சு; இது சிறிது, குறைந்த அளவு என்ற பொரு ளுடையதே. இக் கொஞ்சு என்பதுதான் அம்முப் பெற்றுக் கொஞ்சம் ஆயிற்று. மிஞ்சு, மிஞ்சல், மிச்சம் என்றதிற் போல. எனவே கொஞ்சம் தூய தமிழ்க் காரணப் பெயராதல் பெறப்படும். பாடம் இது போன்ற ஒலி வடவரிடமும் இருக்கலாம். வடவர் பாடத் திற்கும், தமிழ்ப் பாடத்திற்கும் தொடர்பில்லை. தானம் என்பது போல. பாடு என்றால் பெருமை; அப் பாடு என்ற நெடிற்றொடர்க் குற்றுகர முதனிலை, அம் என்ற இறுதிநிலை பெற்றுப் பாடம் ஆயிற்று. பாடம் பெருமைப்படுவது. ஆசிரியர் சொல்வதை மனத்தில் கொள்வது. பாடம்: பெருமை, இது பிறவற்றிற்கும் வரும். எனவே பாடம் தூய தமிழ்க் காரணப் பெயர்! படம் இதையும் வடசொல் என்பர்; எதையும் வடசொல் என்று கூறி மகிழும் ஒரு கூட்டத்தார். படு என்ற முதனிலைக்கு ஓவியன் மனத்துள்ளது ஏட்டில் படுவது என்ற பொருள் ஆவது காண்க. படு + அம் = படம் முற்றும் அற்று ஒரோ வழி என்பதால் இவ்வாறு புணர்ந்தது. படம், படல் - இது தொழிற் பெயர், தொழிலாகு பெயராய்ப் படமாகிய பொருளை உணர்த்தியது. எனவே படம் தூய தமிழ்க் காரணப் பெயர். இலேசு லேசு: தமிழினின்று வந்ததல்லவாம் - வேறு எதிலிருந்து குதித்து விட்டதோ தெரியவில்லை. இலது என்ற தமிழ்ச் சொல்லாகிய குறிப்பு வினைப் பெயர் தெலுங்கரால் லேது என்று வழங்கப்படுதல் காணுகின்றோம். இலது - இல்லாதது, சிறியது. இது போலவே அரிது - அருமையாக வழங்குவது; இல்லாதது என்று வழங்குவது காண்க. இந்த இலது தெலுங்கில் லேது என்றும், வடமொழியில் லேசு என்றும் வழங்கும். எனவே இலேசு, இலது என்பதன் திரிபுதானே. இலேசு தமிழ்க் காரணப் பெயர் என்க. - குயில், 16.2.1960 76 கன்னி கன்யா என்பது வடமொழியில் இளம் பெண்ணுக்கு வழங்கு கின்றது. அதே வட சொற் சிதைவே கன்னி என்பதும் என வட மொழி யாளர் சொல்லுவார்கள். கன்யாவுக்கும் கன்னி என்பதற்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. கன்யா என்பது தமிழில் கன்னியை, கன்னிகை என்றெல்லாம் வந்திருக்கவேண்டும். ஆங்கு அது வடசொல் எனின் ஒக்கும். கன்னி என்பது இளமை குறித்துத் தமிழிலக்கியங்களில் பெரிதும் பயின்று வந்துள்ளது. கன்றுக்குட்டி என்பதன் வேர்ச்சொல்லையும் நோக்குக. நோக்கவே கன்றுதல் கன்னுதல் என்றால் இளமை, வளர்ச்சியின்மை, அழிவு பெறுதல் என்று பொருள்படும். கன்னுதலின் வேர்ச் சொல்லாகிய - முதனிலையாகிய கன்னு, இகரப் பெயர் இறுதிநிலை பெற்றதே கன்னி என உணர்தல் வேண்டும். கன்னு என்ற முதனிலை இகரப் பெண்பால் இறுதி பெற்று இளம் பெண்ணுக்கு ஆகும். கன்னு என்பது அஃறிணை ஒன்றன் பால் இறுதி பெற்று இளமை உடையது என அஃறிணை ஒன்றன் பெயராகும். கன்னி என்பது தென்பால் உள்ள ஓர் ஆற்றைக் குறித்ததும் காண்க. கன்னி என்பது தென்பால், ஆற்றுக்கு, முளைக்கு ஆகும்போது அழிந்தது, அழிவு பெற்றது என்ற பொருளில் அமைந்ததாகும். இனிக் கன்னியா குமரி என்று வழங்கும் ஒரு தொடரைக் காட்டி அதில் கன்னியா என நிற்பது வடசொல் என்பாரும் உளர். அஃது அவ்வாறன்று. கன்னி குமரி என்பதன் இடை ஆகாரம் சாரியை. ஆடு தொடாஇலை என்பதில் உள்ள ஆடு ஆடா என ஆகாரச் சாரியை பெற்றது போல. இவ்வாறு ஆகாரம் சாரியையாக வருவது தமிழில் பெருவழக்கே. எனவே கன்னி தூய தமிழ்க் காரணப் பெயர் என உணர்க. குமரி குமைதல் எனில், அழிதல், உரி எனல் உரு உடையது. உரு என்ற முற்றுகரம் இகரத்தை முற்றும் அற்று என்ற இலக்கணச் சட்டத்தால் உரி எனப் புணர்ந்தது. குமை + உரி = குமையுரி. இது குமரி என வேறுபாடுற்றது. எனவே குமரி என்பதன் பொருள் குமரி முனைக்கு ஆகும்போது அழிவை அடைந்தது என்ற பொருளை அடையும். குமரி என்பது சிறுமை, நிரம்பாமையுடைய பெண்ணுக்கு ஆவதும் காண்க. எனவே, குமரி தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. - குயில், 23.2.1960 77 கொட்டாரம் இது வடசொற் சிதைவென்று நம் தோழரிடம் பார்ப்பனர் ஒருவர் கூறினாராம். அவர் தம் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. அது மட்டுமல்ல, பார்ப்பனர் பேரையும் வெளிப்படுத்த அவர் விரும்ப வில்லை. நம் தோழருக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது. இப்படிக் கலகக்காரப் பசங்கள் இல்லாததும் பொல்லாததும் சொல்லிவிட்டு மகிழ்ச்சியடைந்து கொள்வதுண்டு. அப்படி நடந்துகொண்டால் இவர் நம்மை உதைப்பாரே என்று அவர்கள் நினைக்கும்படி நம்மைக் காட்டி வைக்க வேண்டும். கொட்டரவு என்றால் கொட்டுதல், குவித்தல் சேர்த்தல் என்பது பொருள். கொட்டரவு என்பதில் அரவு தொழிற் பெயர் இறுதிநிலை, தேற்றரவு என்பதிற் போல! அந்த அரவு என்ற இறுதிநிலை திரிபு பெற்றுக் கொட்டாரம் ஆயிற்று. கொட்டாரம், கொட்டுதல் என்பதே. இது தொழிலாகு பெயராய் நெல் முதலிய கொட்டிவைக்கும் ஒரு பெரும் பேழையை உணர்த்தும் அல்லது கொட்டிவைக்கும் தனியிடத்தைக் குறிக்கும். எனவே கொட்டாரம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று உணர்க. பந்து என்பது பந்தம் என்ற சொல்லினின்று வந்ததென்று சடகோப ராமாநுசர் சாற்றி மகிழ்ந்தார். பை என்பது தமிழில் பொட்டணத்துக்குப் பெயர். அந்தப் பை என்பதனடியாகப் பிறந்த பெயரே பந்து என்பது. பைந்து என்றே முதலில் வழங்கிற்று. பின்னர் போலியாகப் பந்து ஆயிற்று. தாரகம் புதைத்த தண்மலர்ப் பைந்து (பெருமக காண்டம்) நொம்பைந்து புடைத்து ஒல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் (தே.ஞா) பொட்டணம் போல் கட்டிப் பெண்கள் விளையாடுவதினின்று தோன்றியது பைந்து, பந்து என்ற பொருளே உடையது. ஆதலின் பந்து, வந்தவர் மொழியன்று; செந்தமிழ்ச் செல்வமே என்க. - குயில், 12.4.1960 78 சிப்பம் இதைச் சிப்பம் என்ற வடசொற் சிதைவு என்பர் ஏமாற்றுகின்றவர். இது சிம்பு என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல். சிம்பு - மூங்கில் முதலியவற்றின் சிறு பிளவு. சிம்புதல் என்றால் இழுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. பிரம்பு + காடு = பிரப்பங்காடு இரும்பு + ஆணி = இருப்பாணி கரும்பு + சாறு = கருப்பஞ்சாறு மருந்து + பை = மருத்துப் பை. என்பவற்றில் மெல்லெழுத்து வல்லெழுத்தானது போல சிம்பு என்பதும் சிப்பு ஆயி அம்மீறு பெற்று சிப்பம் ஆனது. சிப்பம் - கட்டு; சிம்பு வைத்துக் கட்டுவது என்க. எனவே, சிப்பம் தூய தமிழ்க் காரணப் பெயர். வந்தவர் மொழியன்று. தீந்தா இது இறகு தொட்டு எழுதுவதற்கான வண்ணநீர், இதை இக்காலத்தார் ஆங்கிலத்தில் இங்க் என்பர். தீந்தா என்னும் இப்பெயர் வடசொல் என்று எண்ணுவாரும் உளர். அன்று, இது தீண்டு என்பதன் திரிபாகத் தீந்தா ஆனது. தீண்டு - இறகால் தீண்டப்படுவது; எனவே தீந்தா தமிழ்க் காரணப் பெயர். - குயில், 31.5.1960 79 கன்னம் கன்னம் - தட்டு, தட்டுப் போன்ற கன்ன உறுப்பு. கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றை ஒட்டி இடப்படும் கோட்டுக்கு நடுப்பகுதி தட்டுப் போல் அமைந்திருப்பதை நோக்குக. கன்னம் என்ற உறுப்பு தட்டுப் போல் அமைந்திருந்ததால் அவ்வுறுப்பை கன்னம் என்றனர் பண்டைத் தமிழர். கன்னம் தராசுத் தட்டுக்குப் பெயராகும். கன்னப் பொறி என்பது காதுக்கும் பெயர். அது கன்னத்தின் அருகு அமைந்திருப்பதால் அப் பெயர் பெற்றது. கன்னம் என்பது கர்னம் என்ற வட சொல்லின் சிதைவென்று கூறுவோர் அறியாதாரும், திருடரும் ஆவார் என்க. காதை ஒட்டி இது (கன்னம்) அமைந்திருக்கும் காரணத்தால், காதையும் கன்னம் என்று கூறுவரன்றோ? இவ்வாறு கூறுவதும் பிழை அன்று. காதின் பெயராகக் கன்னம் என்று கூறும் போதும், கன்னம் வட சொல் அன்று; அதாவது கர்னத்தின் சிதைவாகிய சொல்லன்று. எனவே கன்னம் என்ற தூய தமிழ்ச் சொல்லானது, கன்ன உறுப்பைக் குறிக்கும்போதும், கன்னம் இடுதலைக் குறிக்கும்போதும், தராசுத் தட்டைக் குறிக்கும்போதும், கன்னக்கோலைக் குறிக்கும் போதும், யானைச் செவியைக் குறிக்கும்போதும் அருகைக் குறிக்கும்போதும், நரம்பைக் குறிக்கும்போதும் வடசொற் சிதைவன்று; தூய தமிழ் காரணப் பெயரே என்று கடைபிடிக்க, கதுப்பு என்பதும் கன்னத்தின் பெயர் என அறிக. கன்னம் செந்தமிழ்ச் செல்வமே! பாது பாதுகாத்தல் என்ற தொடரில் உள்ள, பாது என்பதைத் தமிழ் அல்லாது வேறு சொல் என்று, தமிழ் மாணவரிற் சிலர் எண்ணுவதாகத் தெரிகிறது. பகுத்தல், பகுதல், பாதல், பார்த்தல், பாத்தீடு, என்பவை நோக்குக. பாதல் என்றதில் தல் என்ற இறுதி நிலை இல்லை. முதனிலை மட்டும் நின்றது. பாது என்ற சொல்லின் பொருள் பங்கு, பகுதி என்பன. அது நாளடைவில் அது தன்னை அடுத்து வரும் வினையைச் சிறப்புறுத்துவதோர் சொல்லாய் வழங்குகின்றது. பாதுகாத்தல் என்றால், நன்கு காத்தல் என்பது பொருள் என்க. பாது தூய தமிழ்க் காரணப் பெயர். வந்தவர் மொழியன்று. - குயில், 7.6.1960 80 சக்கரம் இது வடசொல் என்பார் உரை பொருந்துவதன்று. அவ்வாறு செப்புவோர் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் வடமொழியினின்றே வந்தவை என்று கூறும் முந்தா நாளைய விருந்தினர். செம்மை என்பதன் அடியாகப் பிறந்த செக்கு என்ற முதனிலையும், அரவு என்ற தன் திரியாகிய அரம் என்ற இறுதி நிலையும் சேர்ந்தது செக்கரம் என அறிக. செக்கரம் என்பது சக்கரம் ஆகியது எப்படி எனின், கூறுவோம். தமிழில் முதல் நாளில் மொழி முதலில் சகரம் வராது. பிற்காலத்தில்தான் சகரம் மொழிக்கு முதலில் வருவதாயிற்று. அவ்வாறு வரத்தலைப்பட்டபோதுதான் செக்கரம் சக்கரம் ஆயிற்று. செம்மையின் அடியாகச் செக்கு வருமா எனின், செம்மையின் அடியாக - செவப்பு, சிவப்பு, சிவம், செவ்வனம், செக்கார், செம்பு முதலிய சொற்கள் வந்தது அறிக. எனவே செக்கு என்பதும் செம்மையின் அடியாகப் பிறந்த சொல்லே என்க. இனி, செம்மை என்ற சொற்பொருள்: செந்நிறம், நடுவு நிலை, வட்டம். சக்கரம் வட்டமாக இருத்தல் நோக்குக. எனவே சக்கரம் - வந்தவர் மொழியன்று; செந்தமிழ்ச் செல்வமே யாகும். - குயில், 14.6.1960 81 அகராதி அகரம் x ஆதி = அகரவாதி என வேண்டிய இத்தொடர் அகரத் தொகுத்தல் பெற்று அகராதி என ஆயிற்று. இதில் ஆதி என்பது தமிழ் அன்று என்பார் உரை சரி அன்று. ஆதல் என்ற தொழிற் பெயர் போன்றதே ஆதி, ஆ என்ற வினை முதனிலையுடன் தி என்ற தொழிற் பெயர் சேர்ந்தது. ஆதி, ஆ என்ற வினை முதனிலையோடு தல் என்ற தொழில் இறுதி நிலை சேர்ந்தது ஆதல். எனவே இரண்டும் தொழிற் பெயர்களே. ஆதல் அல்லது ஆதி என்றால் முதலிடம் முதற்காலம் என்பதுதான் பொருள். அகராதி என்றால் அகரத்தை முதலிடத்திற் கொண்ட நூல் என்பதுதான் பொருள். இதை அன்மொழித் தொகை என்பர் இலக்கணத்தார். சிலர் அகராதி என்பதற்கு அகர வரிசை என்று எழுதி வருகின்றனர். அவர்கள் அகராதி என்ற சொல், வடசொல் என்று பிழையாக எண்ணினார்கள். ஆதலால், அகரத்தை ஆதியாக, முதலாகக் கொண்ட நூல் என்றால் ஆகாரம் முதலியவற்றை அண்டையில் வரிசையாகக் கொண்டது என்ற கருத்தும் தோன்றும். அகர வரிசை என்பது அவ்வகையில் பொருள் சிறவாமையை அவர்கள் நோக்கினாரில்லை. அகரம் என்பதில் அ என்ற எழுத்து கரம் என்ற சாரியை பெற்றது. அதுவும் தூய தமிழே. எனவே, அகராதி வந்தவர் மொழியன்று, செந்தமிழ்ச் செல்வமே. - குயில், 12.7.1960 82 கண்டை அடிக்கும் மணியின் பெயர். டண் என்பது ஒலிக்குறிப்பு. இந்த டண் என்பது கண்ட் என எழுத்துநிலை மாறிற்று. ஐ என்ற பெயர் இறுதிநிலை பெற்றுக் கண்டை என்றாயிற்று. எனவே கண்டை தூய தமிழ்க் காரணப் பெயர். இது கண்டா மணி என்றும் வழங்கும். இது கண்டா என்ற வடசொல்லின் சிதைவென்று சடகோப இராமானுசர் கூறுவது பொருந்தாது. கிண்கிணி காலணியின் பெயர். கிண் கிண் என ஒலிப்பது, இது வடசொல் என்ற சடகோபர் கூற்றுச் சரியானதன்று. எனவே கிண்கிணி வந்தவர் மொழி அன்று செந்தமிழ்ச் செல்வமே. நுகம் இது எருது பூட்டப்படுவதற்கான நுகத்தடி. இதைச் சடகோபர், யுகம் என்ற வடசொற் சிதைவென்றார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோட்டவாறு. நுகத்தல் என்பது ஒன்றின் முரட்டுத் தனத்தினின்று இளக்கிக் கொணர்வது என்ற பொருளுடையது. நுகு முதநிலை, அம் தொழில் இறுதிநிலை. தொழிலாகு பெயராய் நுகத்தடியை உணர்த்தியது. எனவே நுகம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. வண்ணம் மேலும் ஆச்சாரி, வண்ணம் என்பது வர்ணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று மாணவர்களிடம் போடுகின்றார். வண்ணம் என்பது ஒரு பொருளின் மிகுதியும் சிறப்பும் ஆகும். இந்த வகையால் நிறம் என்றும், ஓவம் என்றும் பொருள் தருவதாயிற்று. வண்ணக்கன் சாத்தனார், வண்ணான் முதலியவற்றில் ஓவியம் சிறப்பு என்ற பொருள்தந்து நிற்பது உணரப்படும். வர்ணம் என்ற சொல்லும் வடசொல் அன்று. வண்ணம் என்ற தமிழ்ச் சொல்லை ஆரியர் பிழைபட உச்சரித்ததேயாகும். எனவே வண்ணம் தூய தமிழ்க் காரணப் பெயர். மண்டலம் இதை மண்- தலம் என்று யார் பிரித்தது சரி. அதன் இறுதியாகிய தலம் என்பது தலம் என்ற வட சொற் சிதைவு என்று கூறியது அடாதது. இடம் என்று பொருள் படும் தலை என்பது தொடர் மொழியின் இறுதிச் சொல்லாய் வரும்போது தலம் எனத் திரிந்து வரும். அவ்வாறு வந்ததே மண்டலம் என்பது. எனவே தலம் தூய தமிழ்க் காரணச் சொல்லேயாகும். - குயில், 16.8.1960 83 படித்தல் அன்புகூர்ந்து விளக்குக என்று அ. கணபதி (திருமதிக்குன்றம்) நமக்கு எழுதியுள்ளார். கற்றல் என்ற பொருளில் அடி என்ற சொல் பண்டைத் தமிழ் நூற்களில் காணவியலாது என்றும், பட் என்ற வடமொழித் தாதுவின் அடியாகப் பிறந்ததே இச் சொல் என்றும் (இலக்கணச் சிந்தனைகள்) என்ற நூலின் 101ஆம் பக்கத்தில் எழுதி யுள்ளார் திரு.எ. வையாபுரி பிள்ளையவர்கள். கற்றல் என்ற பொருளில் படி என்ற சொல் பண்டைத் தமிழ் நூற்களில் காணவியலாது என்றும், பட் என்ற வடமொழித் தாதுவின் அடியாகப் பிறந்ததே இச் சொல் என்றும் (இலக்கணச் சிந்தனைகள்) என்ற நூலின் 101ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார். திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள். அன்பு சார்ந்து விளக்குக என்று அ. கணபதி திருமதிக்குன்றம், நமக்கு எழுதியுள்ளார். பண்டைத் தமிழ் நூற்களில் படித்தல் என்ற சொல் காணப்படா விடில் அதன் பிற்காலத்தில் படித்தல் என்ற சொல் ஏற்பட்டிராதா? பண்டைக்காலம் போனால் அதன் அண்டைக் காலத்தில், பட் என்ற வடசொல் அடியை வைத்துத்தான் தமிழறிஞர்கள் ஆக்கியிருப் பார்கள் என்பதற்கு வையாபுரிகள் என்ன ஆதாரம் காட்டுகிறார். பட் என்ற வேர்ச்சொல் இங்கு வழக்கத்தில் இல்லாததும், தமிழறிஞர்களால் அறியப்படாததும் ஆகுமன்றோ! கற்றல் என்ற வடசொல் வேரையா தேடிக்கொண்டு போயிருப்பார்கள். அந்நாளிலும் தமிழைக் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகள் இருந்தார்கள் என்று சொல்லவே முடியாது. புதிதாக வந்து நுழைந்த வடசொற்களைக் கையாண்ட தமிழர்கள், அந்நாளில் இருந்தார்கள் என்பதை மறுக்கவில்லை. கற்றல் இருக்கும் போது அதற்குப் போட்டியாக வடசொற் குறுங் காட்டில் புகுந்து பட், என்பதை தேடிப் பிடித்தவர்கள் அந்த நாளில் இருந்தால் அந்த நாளிலேயே தமிழ் அடியோடு மறைந்திருக்குமே? இனி, படி என்பதை ஆராய்வோம். படி என்றால் ஆழ்தல் என்பது பொருளன்றோ? நீரிற் படிந்தான், குளத்திற் படிந்தான் என்ற சொல் வழக்குப் பண்டைத் தமிழில் உண்டு அன்றோ? இதனால் படி என்ற சொல் அப்பொருளில் வழங்கியதென்பது பெருவழக்கேயன்றோ? இதனடியாகப் பண்டை காலத்தின் அண்டைக் காலத்தவர், படி என்பதன் அடியாகப் படித்தல் என்பதை வழக்கத்திற் கொண்டுவர வையாபுரிகளையா உத்தரவு கேட்க வேண்டும்? பண்டைக் காலத்தில் படிதல் இருந்திருக்கவும் இல்லை என்று சொல்லுவோன் ஆராய்ச்சி யுள்ளவன் என்றும் எப்படிச் சொல்ல முடியும்? படிதலும், படித்தலும் ஒன்றேயாகும் என்பதையும் நோக்குக. இனி, படித்தல், படிதல் கற்றலாகுமா என்று கேட்கலாம். இவ்வாறு கேட்பவர் கற்றல் என்பதன் பொருளையும் நோக்கவேண்டும். கற்றலின் முதனிலை கல். கல் என்றால் கல்லுதல், எதைக் கல்லுதல்? அறிவு என்னும் கல்லை சிரத்தையால் கல்லுதல்! அது போல் படி, அறிவு, என்னும் வெள்ளத்தில் உள்ளம் படிதல் என்று இங்கு ஆவதும் காண்க. படிதல் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இருக்கையிலும், படித்தலும் இருக்கிறதா என்று கேட்பவன் தமிழறிஞனாயிருக்க முடியாது; ஆரியர் அடிவருடியாகத்தான் இருக்கமுடியும். வையாபுரி எப்படி? தமிழே வட மொழியினின்று வந்தது என்ற மானமிலி அன்றோ? அறிவிலி அன்றோ! படிதல் என்பதில் படி என்ற முதனிலையும் தல் என்ற தொழிலிறுதி நிலையும் அடங்கின. படித்தல் என்பதில் படி என்பதும், த் என்பதும், தல் என்பதும் அடங்கின. த் என்பது எழுத்துப் பேறு. இடைவரும் எழுத்து என்பது தமிழிலக்கணம், படிதல் என்பதற்கும் படித்தல் என்பதற்கும் வேறுபாடு இருப்பதாக எண்ணற்க. - குயில், 13.9.1960 பண்டைய இலக்கியத்தில் காணப்படாமல் இடைக்காலத்தில் அல்லது இன்று காணப்படுகின்ற சொற்கள் அனைத்தும் வட சொற்களா? முட்டி என்ற சொல், பண்டை தமிழிலக்கியத்தில் காணப் படவில்லை. அதனால் அது முஷ்டி என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறிவிடுவதா? வேட்டி என்பது முன் இல்லை, அதனால் அது வேஷ்டி என்பதன் சிதைவு என்று சொல்லிவிடுவதா? முண்டு பழந் தமிழில் காணப்படுகின்றது. அது கொண்டு முட்டி பிற்காலத்தில் தோன்றியது எனில் வையாபுரிகள் மன மெரிந்து போவாரா? வெட்டல் என்பது பண்டைத்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. அதனின்று வேட்டி தோன்றுவதற்கு வையாபுரியை உத்தரவு கேட்க வேண்டுமா? இன்று வரை இருந்துவரும் தமிழ்ப்புலவர் இடையில் ஒழிந்தா போய்விட்டார்கள். தமிழறிவின் வாழையடி வாழைகட்கு வெட்டுவதினின்று வேட்டியை ஆக்கும் ஆற்றல் இல்லை எனல், மொழிவளர்க்கும் ஒரு கால இயற்கையும் செத்துப் போய் விட்டதா? வேட்டியை வேஷ்டி என்று கூறி, அதன் பிறகு வேஷ்டியின் சிதைவுதான் வேட்டி என்பது என்றும் வடவர் சார்பில் இன்றும் கூறப்படுவதுண்டு. இப்படியெல்லாம் தாய்மொழிக்கு மாசுபடச் செய்து விட்டனர் வையாபுரியும், இன்று அவர் வழி பற்றி ஒழுகும் சில பாவிகளும், இதில் நமக்கு வியப்பு இல்லை. அந்தப் பாவிகளைப் பாராட்டிப் பெருமைப்படுத்திவிடவும் தமிழ் ஏடுகள், நாளிதழ்கள் இருக்கின்றன என்பதுதான் நமக்கு வியப்பை உண்டாக்குகின்றது. எனவே படித்தல் என்பதன் அடியாகிய படி என்பது பட் என்ற வேர்ச்சொல் அன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கடைப்பிடிக்க. - குயில், 20.9.1960 84 தானம் பாடினான் என்பதில் உள்ள தானம் வடசொல் என்றார் ஒரு புலி. தானம் என்பது வடசொல்லில்தான் மிகுதியாகக் காணப்படுகின்றது. தானம் பாடினான் என்பதில் உள்ள தானம் என்ன பொருளில் அமைந்திருக் கிறதோ, அதே பொருளில் பண்டைத் தமிழில் நாம் எங்கும் ஒரு சிறிதும் கண்டிலோம் என்றார் அந்தப் புலி. ஆ ஓ என்று வெற்றிசை பாடும் இசைப்புலவர்கள் தானம், தனம், ந்தனம் என்று இசைப்பது எவரும் அறிந்தது. தானம் என்று சொல்லிப் பாடுவதைத் தானம் பாடுவது என்றே கூறினார்கள். தமிழிசைப் புலவர்கள். இந்தத் தானம் என்பது பண்டைத் தமிழிலக்கியத்தில் இல்லை; ஆனால் தானம் பாடினான் என்பதிலுள்ள தானம் வடசொல்லல்ல. என்னடா வேலையைப் பார்க்காமல் தந்தனத் தான் பாட்டுப்பாடுகின்றாய் என்று ஒருவனைக் கேட்கின்றான். இந்தத் தந்தனத்தான் என்பது பண்டைத் தமிழில் இல்லை. ஆதலால் இது தமிழல்ல என்று சொல்கின்றவன் படித்தவனா என்று நோக்குக. எனவே தானம் பாடுதல் என்பதிலுள்ள தானம் என்பது செந்தமிழ்ச் செல்வமே என்க. சிரத்தையா சீர்த்தையா? சிரத்தை என்பது பிறவியிலேயே ஆரியம் அன்று. அது சீர்த்தை என்பதைத் திருடி மாற்றியமைத்தது. சீர் என்ற தமிழ்ச் சொல்லுக்குச் சிறப்பு என்பது பொருள். சீர் என்பதன் அடியாகச் சீர்த்தை தோன்றியது. சீர்த்து, குறிப்பு வினையால ணையும் பெயர். ஈற்று ஐ காரம் சாரியை, சீர்த்தை என்றால் பொருள் என்ன பொதுவன்றிச் சிறப்பாக ஒன்றில் மனம் செலுத்துதல் என்பது. உலகம் தோன்றிய நாளில் தோன்றியதும், தமிழகத்தில் வழங்குவதுமான தமிழ்ச்சொல் தமிழாகத்தான் நமக்குக் காட்சியளிக்க வேண்டும். கெட்ட காலத்தால், திருட்டுப் பசங்கள் சேர்க்கையால், காட்டிக் கொடுக்கும் கயவர் ஒத்தூதலால் தமிழர் கண்ணுக்கும் எல்லாம் வடமொழியாகத் தோன்றுகின்றன. யாரை நோவது! சிரத்தை வடசொல்லன்று, செந்தமிழ்ச் செல்வந்தான். கவளம் இது வடசொல் அன்று. கவுள் என்பதன் அடியாகப் பிறந்த தூய தமிழ்க் காரணப் பெயர். கவளம் - ஒருவாய் உணவு. கவுள் - கவ்வி வாங்கப் பெற்ற இடத்தை நிறைத்த உணவு, இரண்டிற்கும் உள்ள கருத்தொற்றுமை காண்க. கவளத்திற்கும், கவுளுக்கும் கவ் என்பதே வேர்ச்சொல் என உணர்தல் வேண்டும். கவ் - அளம், கவ் - உள். எனவே கவளம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைப்பிடிக்க. செந்தூரம் இது வடசொற் சிதைவென்று ஏமாற்றுவாரும் உளர். செம்மை - சிவப்பு. செம்மை - ஈறுபோகவே செம் என நிற்க. அதன்பின் தூரம் வந்தது. தூரம் - நிறைவு. செம்மை நிறைந்தது செந்தூரம். எனவே செந்தூரம் தூய தமிழ்க் காரணப் பெயர். - குயில், 20.9.1960 85 தரை இது தராதலம் என்பதில் வரும் தரா என்ற வடசொற் சிதைவே என்று கூறித் திரிவர் வடமொழிச் சார்பினர். இவ்வாறு கூறுவோர் தூங்குகின்றான் துடையில் கயிறு திரிக்க எண்ணுகின்றவர்களே. தருதல் என்பதன் அடியாகிய தரு என்பதும், ஐ என்ற தொழில் இறுதி நிலையும் முற்றும் அற்று ஒரோ வழி என்ற இலக்கணச் சட்டத்தால் தரை என்று ஆனது. ஆகு பெயராக எவையும் தருவதோர் நிலத்திற்கு ஆனது. கம்பராமாயணம் முதலிய தமிழ் நூற்களில் வந்துள்ள தறை என்ற சொல்லுக்கு வன்னிலம் என்பது பொருள். தரை என்ற தூய தமிழ்க் காரணப் பெயரை, சொற்பஞ்ச முடைய வந்தேறிகள் எடுத்தாண்டனர். அவர்கள் ஐயீற்றை ஆவாக வாய் வழக்கஞ் செய்வார்கள். எனவே தரை செந்தமிழ்ச் செல்வம். மாயை இதை மாயா என்ற வடசொல்லின் சிதைவென்பர் மேற்படியார் மாய்தல் என்ற தொழிற்பெயரில் தல் தொழில் இறுதிநிலை மாயையில் ஐ இறுதி நிலை. மாய்தல் என்பதே இதன் பொருள். எவற்றின் மாய்தலையும் தன்னிடம் கொள்வது என்று பொருள் கொள்க. மாயை என்பதையே மாயா என்றனர். மேலே கூறியபடி மறைமலை யடிகளாரும் மாயை தமிழ்ச் சொல் என்றமை இங்கு நினைவுகொள்க எனவே மாயை வந்தவர் மொழியன்று; செந்தமிழ்ச் செல்வமே. - குயில், 4.10.1960 86 கல்லூரி: கலாசாலை என்பது வடமொழித்தொடர். அதைத்தான் தமிழர்கள் கல்லூரி என்று சொல்லித் திரிகிறார்கள் என்று என் பார்ப்பன நண்பர்கள் சொல்லுகிறார்கள். எப்படி? கலாசாலை என்பது கலப்பில்லாத வட சொற்றொடரா? என்பதும் ஆராய்ச்சிக்குரியது. அதுகிடக்க ... கல்லூரி என்பது பற்றிப் பார்ப்பன நண்பர்கள் கருத்துரைத்தார்கள் எனில், அவர்கட்கும் தமிழுக்கும் என்ன தொடர்பிருக்கமுடியும் தமிழாராய்ச்சியேனும் அவர்கட்கு உண்டா? என்று நாம் கருதிப் பார்த்து, அவர் உரை கரடி என்று தள்ள வேண்டும். ஈண்டு நாம் எடுத்துக்காட்டும் செய்யுளை உற்று நோக்குக: கலத்தற் காலம் கல்லூரிநற் கொட்டிலா முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா இலக்கம் என்னுயி ராஎய்து கற்குமால் அலைக்கும் வெஞ்சரம் ஐந்துடை யானரோ. என்னும் சிந்தாமணிச் செய்யுளில் கல்லூரி பயிலும் இடம் என்று பொருள் தரல் கண்டு மகிழ்க. - குயில், 8.6.1958 தத்துவம்: அடிகள் என்று பெரியோர்களையும் கடவுளரையும் சொல்லு கிறார்கள். ஒன்றும் விளங்கவேயில்லை. விளக்க வேண்டுகிறேன்? தோழருக்கு மட்டுமா விளங்காமலிருக்கிறது! தமிழ்ப் புலமைமிக்க புலவர் பலர்க்கு விளங்கவில்லை என்று நினைக்க வேண்டியதாகிறது. அடி தாள் என்பன ஒருபொருட் சொற்கள். அடி, தாள் என்றால் மக்கள் உறுப்பாகிய காலையே குறிப்பதாகக் கொள்ளக்கூடாது. வேறு பொருளும் உண்டு. அதுதான் தத்துவம் என்பது. இனி, அடிகளே என்று பெரியோர்களைச் சொன்னால், தத்துவ உணர்வு உடையவரே என்று பொருள். அடிகளே என்று கடவுளைக் கூறினால் தத்துவனே என்று பொருள். அடிகள் என்னும் வழக்குத் திருவாரூர்க் கபிலர் தொகுத்த எண்ணூல் அதாவது சாங்கிய நூல் வழக்கு. அனைத்தும் இருபத்தைந்து தத்துவத்துள் அடங்கின என்று சாங்கிய நூல் சாற்றுகின்றது. அதுவேயுமன்றி, அனைத்தும் இருபத்தைந்து தத்துவமாம் என்றுணர்ந்த நிலையே விடுதலை என்றும் அச் சாங்கிய நூல் உறுதி செய்கின்றது. அடிகள் என்ற சொல் சமணசமயத்தாருடையது என்றும், சைவ சமயத்தாருடையது என்றும் கூறிக்கொள்வது பொருத்தமன்று. திருக்குறளில் தாள் என்றும் அடி என்றும் வருமிடங்களில் இவ்வாறே பொருள் காண வேண்டும். திருக்குறள் மடத்துப் பதிப்பில் நற்றாள் என்பது சிவபெருமான் சீபாதம் என்று பொருள். சொல்லப்பட்டிருப்பது கலப்பற்ற பிழையேயாம். திருக்குறளில் அடி என்றும் தாள் என்றும் வந்துள்ளதால், திருவள்ளுவர் உருவ வணக்கத்தை ஒப்புகின்றார் என்று வேறு சிலர் எண்ணுகின்றார்கள். அதுவும் மேற்கூறியவாறு பிழையேயாம். ஏன் எனில், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு என உருவ வணக்கத்தை மறுக்கும் வள்ளுவரே அதை ஏற்பாரா? ஏற்கமாட்டாரன்றோ? இனித் தத்துவம் என்ற சொற்பற்றியும் சில கூறுவோம். தத்துவம் வடமொழியன்று. தன்மையின் அடியாகிய தன் துவம் பெற்று வடமொழிச் செய்கைக்கு உட்பட்டது. துவம் நீக்கி தன்மை என்று சொன்னாலே தத்துவம் அடி தாள் என்று சொன்னதேயாகும் என அறிதல் வேண்டும். தத்துவம் என்ற சொல்லுக்கு நாம் கொள்ளும் பொருளை வடசொல் கொள்ளவில்லை என்பது ஆராயற்பாலது. - குயில், 17.6.1960 சிக்கி-முக்கி: சிக்கி - முக்கி இரும்புத் துண்டில் மோதித் தீ உண்டாக்கும் ஒருவகைக் கல்லின் பெயர். இந்தப் பெயர் அக்கல் மோதுகையில் சிக்கு முக்கு என்ற ஒலி உண்டாவதால் வந்தது என்பர். இது தூய தமிழ்ச் சொல்! ஆனால் கலைமகளுக்கு இது தமிழ்ச்சொல் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. சக் மக் என்ற உருதுச்சொல் இது என்கின்றது! சிக்கி முக்கி என்றதை உருதுகாரர் சக் மக் என்றனர் என்றால் வரும் இழுக்கென்ன? - குயில், 9.9.1958 கொத்துதல்: கொத்துதல் என்பது தான் குத்துதல் என்று திரிந்தது என்று கலைமகள் சொல்வது பிழை. கொத்துதல் வேறு குத்துதல் வேறு. கொந்துதல் என்பதின் வலித்தலே கொத்துதல் என்க. - குயில், 9.9.1958 சடை: ஜாப் என்னும் கிறித்துவ ஆகமத்தில் இறைவனுக்கு உரிய இயற்பெயராக முப்பத்தொரு முறை காணப்படுகின்றது. சடை என்றும் பெயர். இன்னும் கிறித்துவ சமயத்துக்குரிய முதலாகமத்தில் இறைவன் ஆபிரகாமுக்கு எதிரே தோன்றி அருள் செய்தபோது தன்பெயர் எல்சடை என மொழிந்தான் என்பது சொல்லப்பட்டிருக்கின்றது. சிவனைச் சடையன் என்று தமிழிற் சொல்லியதை அப்படியே கபர்திந் என்று மொழிபெயர்த்து அச்சொல் இருக்கு வேதத்தில் பல்காலும் சொல்லப்பட்டிருக்கின்றது. இது நாலாயிரத்து நூறு ஆண்டுகட்கு முன்னரே இயற்றப்பெற்றது. அதன் பிற்காலத்தில் வடவர், சடையை ஜடா என்றே சொல்லத் தொடங்கினர். உலகாண்டது தமிழ் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. மறைமலையடிகள் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் நூலின் 703-ஆம் பக்கம் காண்க. - குயில், 30.8.1960 காரீயம் - எழுதுகோல்: தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே காரீயத்தை எழுதுகோலாக எடுத்தாண்டனர். அதை வாணிகத்தின் நிமித்தம் தமிழகம் வந்த அராபியர் மேற்கொண்டனர். அவர்களால் தெரிந்து கொண்டனர் பிரன்சுக்காரர். இன்றும் காரீயம் என்ற அது கிரியம் என்று தமிழகத்தில் வழங்குவதுண்டு. இதைப் பிரான்சுக்காரர் கிரையம் என்பர். ஆங்கிலத்தில் இதற்குப் பென்சில் என்று பெயர். - குயில், 29.7.1959 மேசை: மேசை தமிழ்ச் சொல்லா? மேசை என்பது இத்தாலி மொழி என்று சிலர் கூறுகிறார்கள். நமக்கு அது உடன்பாடில்லை. உதட்டின் மீது அமைந்திருப்பதனால் மீதை அல்லது மீசை என்ற பெயர் உண்டாயிற்று. அது போலவே மீது என்ற சொல் மேது என்று ஆகும். மேது மேசை ஆதலுக்கும் வழி உண்டு. உயர்ந்திருக்கும் பெட்டிக்குத் தமிழில் மேசை என்ற பெயர் உண்டானதில் தவறு ஒன்றும் இல்லை. தமிழ் நாட்டில் வழங்கும் தமிழ்ப்பெயரைத் தமிழ் இலக்கண வகையில் ஆராய வேண்டியது முதல்வேலை. மேசை என்பது பற்றி ஆராய இத்தாலிக்குப் போவது வீண் வேலை. கவிதை: கவிதை தமிழ்ச் சொல்லா? கவி முதனிலை. த் எழுத்துப் பேறு. ஐ தொழிற் பெயர் இறுதி நிலை. கவிகை என்பது போல. கவிகை ஓர் இடத்தை நோக்கிக் கவிந்திருப்பது. குடையைக் குறித்தது. கவிதை என்பது மனம் ஒரு பொருள் நோக்கி கவிவது அல்லது சூழ்வது. ஆராய்வது என்பனவும் பொருளாகக் கொள்க. எனவே கவிதை தூய தமிழ்ச் சொல். கவிஞர் என்பதில் கவி முதனிலை. அர் பலர் பால் இறுதிநிலை. ஞ் பெயர் இடைநிலை. இதை வடவர் கவிக்ஞர் என்பர். க் என்ற எழுத்தை அவர் உடன் சேர்த்ததால் அது வடசொல்லாய் விடாது. மலைக்குத் திருநாமம் போட்டுவிட்டால் அது வைணவச் சொத்தாகிவிடுமா? - குயில், 15.4.1962 சொல்லகராதி அகராதி 161 அகளம் 106 அங்கம் 106 அங்கி 106 அங்குடம் 107 அங்குரம் 107 அச்சாரம் 132 அசடு 107 அடவி 107 அதி 25 அந்தணர் 32 அம்பரம் 108 அம்பா 108 அம்மன் 108 அமர் 108 அமிழ்து 20 அரங்கு 27 அருச்சனை 113 அருச்சனை 121 அலாதி 122 அவி 82 அவிசு 95 அவை 95 அனுப்புதல் 144 அனுபோகம் 145 ஆகுலம் 35 ஆகுலம் 110 ஆசாரம் 25 ஆசிரியர் 26 ஆசை 9 ஆனை 66 ஆணவம் 119 ஆதி 15 ஆய்தம் 68 ஆயுள் 89 ஆயுள் 134 ஆலயம் 21 ஆலாபனம் 118 ஆலாபனை 118 ஆலாபனை 118 இமையம் 14 இராகு 105 இலக்கணம் 115 இலகு 115 இலட்சம் 88 இலம்பாடி 115 இலேசு 112 இயேசு 152 ஈமம் 118 உச்சரித்தல் 146 உத்தரவு 145 உத்தரம் 145 உத்தாரம் 145 உலகம் 34 உவணம் 118 உவமை 20 உமை 119 உஷ்ட்ர 111 ஏமம் 118 ஏளனம் 117 ஒருவந்தம் 135 ஓம் 29 ஓரை 46 கங்கை 17 கடிகாரம் 41 கடிகை 41 கண்டம் 149 கண்ணியம் 28 கணம் 4 கதை 123 கம்பலம் 93 கம்பளம் 93 கருப்பம் 75 கல்லூரி 171 கலசம் 90 கலுழன் 105 கலை 31 கவளம் 168 கவனம் 148 கவி 60 கவிதை 172 கற்பனை 42 கன்னம் 158 கன்னி 34 கன்னி 153 காட்சி 3 காட்டம் 104 காந்தி 134 காமம் 29 காரணம் 40 காரியம் 41 காரீயம்- எழுதுகோல் 173 காலம் 34 காவியம்-காப்பியம் 13 காவிரி-காவேரி 116 கிண்கினி 162 குண்டம் 90 குடம் 56 குமரி 154 குலம் 31 கூகம், கூகை 105 கூகை 76 கேரளம் 116 கொஞ்சம் 151 கொட்டாரம் 155 கொத்துதல் 173 கோட்டம் 104 கோட்டி 75 கோடி 88 சக்கரம் 160 சங்கம் 29 சட்டச் சுவை 38 சடை 172 சரி 47 சலம் 19 சடை 92 சவை 95 சாரம் 126 சாரீர வீணை 98 சிக்கிமுக்கி 173 சிங்கம் 69 சிப்பம் 157 சிரத்தையா 167 சீர்த்தையா 167 சிவம் 36 சுரம் 126 சுலபம் 112 சுவர்க்கம் 79 சூது 91 செட்டி 39 செந்தூரம் 168 சேட்டு 130 சேது 119 சொத்து 138 சொந்தம் 139 தச்சன் 73 தடம் 118 தத்துவம் 170 தண்டை 162 தரை 169 தறை 77 தாசர் 51 தாமரை 63 தாரம் 44 தாளம் 113 தானம் 5 திசை, திக்கு 138 திராவிடம் 23 திருடன் 120 திருமதி 130 தீந்தா 157 துளசி 87 தூது 79 தூரம் 104 தூலம் 112 தெய்வம் 11 தேவர் 81 நாகம் 84 நாகரிகம் 22 நாடகம் 10 நீதி 129 நுகம் 162 நேயம் 8 பகவன் 15 பகுதி 71 பசு 89 பஞ்சம் 64 படம் 151 படித்தல் 141 படிவு 43 பதம் 90 பதி 30 பந்து 155 பரதர் 48 பரதன் 48 பலபம் 112 பலி 85 பனாதி 64 பாக்கியம் 73 பாடம் 151 பாது 159 பாரதம் 48 பாரதர் 48 பாலன்-பாலியன் 128 பிச்சை 73 பிணம் 33 பிலம் 31 புத்தகம் 137 புதன் 114 புருவம் 62 பூ 54 பூசை 9 பெட்டி 132 பேது 76 மங்கலம் 110 மங்களம் 110 மடம் 26 மண்டலம் 163 மது 125 மலம் 89 மளிகை 54 மனம் 33 மனிதர் 77 மா 28 மாணவன் 76 மாயை 169 மானம் 14 மீன் 8 முகம் 40 முட்டி 25 முந்திரி-முந்திரிகை 123 முரலி 27 முரலை 27 மூலம் 120 மேகம் 138 மேசை 172 மேதை 93 மேளம் 113 மேஷம் 97 யாமம் 119 வடிவு 42 வண்ணம் 121 வண்ணம் 163 வரம் 69 வாரி 62 வாரிதி 63 வாவி 86 விகுதி 132 விஞ்சை 91 வித்தகம் 53 வியாழன் 114 விருத்தம் 79 வினயம் 59 வேகம் 139 வேட்டி 24 வேதம் 14 வேதனை 139 வேந்தன் 65