பாவேந்தம் 18 பாட்டு இலக்கியம் - 4 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 18 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 432 = 464 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 290/- கெட்டி அட்டை : உருபா. 445/- படிகள் : 1000 நூலாக்கம் : வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  வாழ்வு தந்தோர் வாழ்வு! ‘மேடுபள் ளங்களைக் கண்டே - நலம் விதைக்க எழுத்துழு வோன்எழுத் தாளன்! (தொகுதி 15; பக். 359) எழுத்தாளருக்கு இப்படி இலக்கணம் கூறும் பாரதிதாசன், தாம் வகுத்த இலக்கணத்திற்குத் தாமே இலக்கியமாகவும் திகழ்ந்தார். மேடு பள்ளம் இல்லாத சமத்துவ நிலையை எல்லாத் துறையிலும் ஏற்படுத்த அவர் எழுதுகோல் இயங்கியது. தனக்குழைக்கும் எழுத்தாளர், பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் - என எழுத்தாளர்களை அவர் இருவகைப்படுத்தினார். ஏற்றத்தாழ் வான குமுக அமைப்பை மாற்ற முயலாமல், பழமைவாதப் பாதையில் தவழ்ந்தபடி, பணமும் புகழமே குறியாக இருப்பவர்கள் எழுத்தா ளராகவும் இருப்பார்கள். தனக்குழைக்கும் எழுத்தாளர் எனப் பாவேந்தர் அவர்களைத் தள்ளி நிறுத்தினார். எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்ப தான இடம்நோக்கி - (தொகுதி 15; பக். 186) நடைபோட்டபடி, எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் இழப்பையும் பொருட்படுத்தாமல் மானிட மேன்மைக்காக வாழும் எழுத்தாளர்களும் இருப்பார்கள். பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் என அவர்களைப் பெருமைப்படுத்தினார். இருக்கும்நிலை மாற்றுமொரு புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம் - (தொகுதி 15; பக். 92) என வரையறை வகுத்துக் காட்டினார் பாவேந்தர் பாரதிதாசன். பிறர்க்குழைக்கும் எழுத்தாளர்களைப் பாட்டுப் பூச் சொரிந்து பாராட்டினார். அவரால் பாராட்டப்பட்டோரின் பெயர்களில் பலவும் இன்றைய தலைமுறைக்குப் புதிதாக இருக்கலாம்; எதிர்காலத் தலைமுறைக்குப் புதிராகத் தெரியலாம்! பாவேந்தரால் பாராட்டப்பட்டுள்ள சான்றோர்களின் வரலாறுகளைத் தொகுத்தால், தமிழின மேம்பாட்டு வளர்ச்சி வரலாறு கிடைத்துவிடும். தமக்கு மூத்தோர், தம் வயதுடையோர், தமக்கு இளையோர் எனத் தாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, மொழி இன மேம்பாட்டுக்காக வாழ்ந்தோரைத் தம் பாடல்களில் வாழ வைத்துள்ளார் பாவேந்தர். பழமைக் குட்டையில் முப்பது வயது வரை தாமும் மூழ்கிக் கிடந்தமைக்கு வருந்துகிறார்: முப்பது ஆண்டுகள் முடியும் வரைக்கும்நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்! ( தொகுதி 15; பக். 4) தான் கரையேற உதவிய கைகளுக்குரிய பாரதியை நன்றியுடன் போற்றுகிறார். பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றிஎன் பாட்டிற்குப் புதுமுறை புதுநடை காட்டினான் (தொகுதி 15; பக். 4) தாம் பெற்ற பயனை எல்லோரும் பெறுவதற்குரிய வழியையும் சொல்கிறார். பகை நடுங்கச் செய்த பாரதி பாட்டை நீ பாராட்டு மறவனே! பார்ப்பான் உயர்வென்றும், பாட்டாளி தாழ்வென்றும் ஏற்பாடு செய்தநூல் இழிந்தநூல் என்றால் கூப்பாடு போட்டு நாட்டினை ஆயிரம் கூறாக்கித் தாம்வாழ எண்ணிடும் அந்தப் பகை நடுங்கச் செய்த பாரதி பாட்டை நீ பாராட்டு மறவனே! (தொகுதி 18; பக். 27) பாரதியைப் பக்கத்திலிருந்து பார்த்து, தம் அழுக்கை அகற்றிக்கொண்ட பாரதிதாசன், பழைய நிகழ்ச்சிகளைப் பாட்டால் அசைபோடுகிறார்: பொழுது விடிய புதுவையிலோர் வீட்டில் விழிமலர்வார் பாரதியார் காலை வினைமுடிப்பார் தாம்பூலம் தின்பார் தமிழ்ஒன்று சிந்திடுவார் போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம் (தொகுதி 18; பக். 19) பாரதியை அருகே சென்று பார்க்குமாறு பாவேந்தர் பாடலை நம்மை அழைத்துச் செல்கிறது. செந்தமிழ் நாடெனும் போதினிலே வேண்டுமடி எப்போதும் விடுதலை கரும்புத் தோட்டத்திலே முதலிய பாரதி பாடல்கள் தோன்றிய வரலாற்றைப் பாட்டால் படம் பிடித்துள்ளார் பாவேந்தர். சிலப்பதிகாரம் பற்றிப் பேசுவதற்குத் தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார் புதுவை சென்றுள்ளார். பேச்சைக் கேட்பதற்குப் பாரதியாரோடு பாரதிதாசனும் சென்றுள்ளார். இதுதான் பேச்சு எனப் பாராட்டியபடி பாரதிதாசன் பக்கத்தில் பார்க்கிறார். திரு.வி.க. பேச்சில் சொக்கிப்போன பாரதியார் நிலை கொள்ளாத மகிழ்ச்சியில் நின்றும், அமர்ந்து கைகொட்டியபடி இருக்கிறார். இந்தக் காட்சி பாரதிதாசனிடம் பாட்டாய் விரிகிறது: புதுவையிலே கலியாண சுந்தரனார் ஆற்றியசொற் பொழிவில், தூய மதுவையள்ளி மலர்தேக்கி வண்டுகட்கு விருந்தாக்கி மயக்கு தல்போல் பொதுவினர்க்குச் சிலப்பதிகா ரச்சுவையை நடையழகைப் புகலும் போதில் இதுவையா பேச்சென்பேன்; பாரதியார் கைகொட்டி எழுவார், வீழ்வார். (தொகுதி 18; பக். 92-93) பாரதி முதலிய பலதுறைச் சான்றோர்களையும் பாவேந்தர் பாட்டால் போற்றியுள்ளதை இத் தொகுப்பில் பார்க்கலாம். எளிய நடையில் தமிழ் எழுதக் காரணமானவர் பாரதி என்றும், தூய தமிழ் நடையில் எழுதக் காரணம் தமிழ்மறவர் வை. பொன்னம் பலனார் என்றும் - தமது எழுத்து நடை மாற்றத்திற்குக் காரணமான இருவரையும் நினைவு கூர்கிறார். முன்னை பழகுதமிழ் மூட்டியவர் பாரதியே பின்னை அழகுதமிழ் ஊட்டியவர் - கொன்னை வடசொற் கலப்பின்றி வண்டமிழ் இன்பம் இடச்செய்தார் பொன்னம் பலம். (தொகுதி 18; பக். 198) பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. சீவானந்தம் மக்களுக்காக ஊர் ஊராகச் சுற்றிவந்தவர். குழந்தைகளையும், குடும்பத்தையும் நினைக்காத அவருக்கு அழுக்குச் சட்டையை மாற்றவும் நினைவு இருக்காதாம்! எப்போது பெண்கொண்டார்? இல்லத்தில் மக்கள்தமை எப்போது கையில் எடுத்தணைத்தார்? - முப்போதும் மாசுடையும் மாற்றாத சீவாவுக்(கு) ஊர்ஊராய்ப் பேசுவது தானே பெரிது. (தொகுதி 18; பக். 177) குமுக மேம்பாட்டிற்காக எந்தவிரல் அசைந்தாலும், அந்த விரலுக்குப் பாட்டுக் கணையாழி போட்டு மகிழ்வது பாவேந்தர் இயல்பு. பகுத்தறிவாளராகிய பாவேந்தர் மற்றவர்களின் கடவுட் பற்றையோ சமயப் பற்றையோ பொருட்படுத்தாமல், தமிழ் மேம்பாடு தமிழினமேம்பாடு இவற்றுக்கான பணியையே அளவுகோலாக்கிக் கொண்டார். வ.உ. சிதம்பரனார், இ.மு. சுப்பிரமணியம் ந.சி. கந்தையா, (சந்திரசேகரப் பாவலர்) தண்டபாணி தேசிகர் பவானந்தம் பிள்ளை விபுலானந்தர் நீ. கந்தசாமி அவ்வைதுரைசாமி க. வெள்ளைவாரணனார் இப்படிப் பலரையும் அவர் பாராட்டிப் போற்றுவதற்கு இந்த அளவுகோலே காரணமானது. அம்பேத் காரின் எரிமலை எண்ணமும் எழும்புயல் செயலும் விரிவுல கத்தையே விழிப்புறச் செய்தன (தொகுதி 18; பக். 210) என்று அண்ணல் அம்பேத்காரை வியப்பார். தமிழ்முத லாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச்சீனி வேங்க டத்தின் கால்தூசும் பொறாதான் என்பேன். (தொகுதி 18; பக். 202) என மயிலை சீனி வேங்கடசாமியைத் தோளில் தாங்குவார். அறிஞர்களைப் போற்றும்போது அவரிடம் வெளிப்படும் நுட்பத் தமிழ், இளையோர்க்குப் பாடும்போது எளிமைத் தமிழ் ஆகிவிடுவதை இத் தொகுப்பில் பார்க்கலாம். கொய்யாப் பழத்துக்கு கொம்புண்டு காலுண்டு கூறும் எருதுக் கிரண்டும் இல்லை (தொகுதி 18; பக். 357) எருதுக்கு இல்லாத கொம்பும் காலும் கொய்யாப் பழத்துக்கு மட்டும் வந்தது எப்படி? எழுதிப் பார்த்தால்தான் பாரதிதாசனின் குறும்பு தெரியும். கணகண வென்று மணிய டித்தது காது கேட்கலையா? - பாப்பா காது கேட்கலையா? - தம்பி காது கேட்கலையா? - உன் கையிற் சுவடிப் பையை எடுக்க நேரம் வாய்க்கலையா? (தொகுதி 18; பக். 384) பள்ளிக்கூடம் புறப்படும் காலைநேரப் பரபரப்புக் காட்சியைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இளமைக் கால நிகழ்ச்சிகள் மனத்தில் புரளும். ‘btªÚ® C‰¿¢ br«ig it¤jhš v‹d ngh£L¡ Fo¥ghŒ? (தொகுதி 18; பக். 392) இந்தக் கேள்விக்குக் குழந்தை கூறுவது நாம் எதிர்பார்க்காத விடை: வெந்நீர் ஊற்றிச் செம்பை வைத்தால் விரலைப் போட்டுக் குடிப்பேன் (தொகுதி 18; பக். 392) சூடுமிகுந்த நீராயிருந்தால் தொண்டை புண்ணாகிவிடும். விரலை விட்டு வெப்பத்தை அளப்பது சரியான முறைதான்! நுண்ணுணர்வு, எளிமை, வாழ்க்கைப் பார்வை, வழிகாட்டும் தெளிவு முதலியவை பாரதிதாசன் எழுத்துகளின் பொதுப் பண்புகள். சான்றோர், இளையோர், வாழ்த்துகள் என்னும் முப் பகுப்பில் பாவேந்தர் பாடியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் இளங்கணி பதிப்பகம் வழி 25 தொகுப்புகளாக ஒரே நேரத்தில் வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியனின் முயற்சி மலைப்பானது! கடினமான பணியில் இறங்கியுள்ள இளந்தமிழனுக்குத் தமிழுலகம் கை கொடுக்கும் என்பதில் அய்யமில்லை. - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி – 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! 15. இதயம் எப்படியிருக்கிறது 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் – 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்... vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiv வாழ்வு தந்தோர் வாழ்வு! xvii சான்றோர் 1 இளையோர் 231 வாழ்த்துகள் 423 சான்றோர் 1. பாரதியார் பட்டினி உபதேசம் நிலைமண்டிலம் கேளென்று சொன்னாலும் கேளாத நெஞ்சத்தை வாளொன்று கொண்டு வருந்தாமல் நீ தம்பி தந்திரத்தா லேசரிப் படுத்தலாம் கண்டாய்! வந்த வறுமையிலே செம்மை வரச் செயலாம்: அந்த விவரம் அறைகின்றேன் நீ கேட்பாய் முந்தாநாள் நீ கண்ட மொச்சை விதைக்குழம்பு நேற்றுப் புசிப்பதற்கு நெஞ்சு கசந்திருக்கும் மாற்றிப் புசிக்க வழிதேடித் தானிருப்பாய் இன்று முருங்கைக்காய் இட்டுப் பருப்பிட்டு நன்று குழம்பிட்டு நாலுபிடி சோறுண்டால் நாளைக்குக் கத்தரிக்காய் நாளன்று பீர்க்கங்காய் வேளைக்கு மாங்காய் விடிந்தால் புடலங்காய் நித்தம் விதவிதமாய் நீ உண்பாய்; ஆனாலும் அத்தனையும் தெவிட்டும்; ஆசைவிடும் மேற்கொண்டே; அண்டை அயலகத்தில் ஆமைவடை மோர்க்குழம்பு கண்டால் அதுபோற் கறியுண்ண ஆசைவரும் ஆமைவடை மோர்க்குழம்புக்கு அப்பாலோ நாகரிகச் சீமை அவரைக்காய் சேமியாப் பாயாசம் வீட்டின் பதார்த்த விழாநடத்த ஆசையுண்டு மூட்டைப் பணம்வேண்டும் முள்ளங்கிப் பத்தையைப்போல் இட்டகூழ் இன்றைக்கு நன்றா யிராவிட்டால் பட்டினியாற் போட்டுவிடு; நாளைக்குப் பார்ப்பாய் நீ இட்டதொரு கூழில் இனிமை கிளம்புவதை! பட்டினியால் இலாபம் பல. - மகாகவி பாரதியார், ப.12, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-6, 1935, ப. 5 2. அலங்காரக் குறும்பு ஊராரே கேளுங்கள் இந்த ஒருசேதி பாரதியார் என்மகனைப் பார்த்துப் பரிகசித்தார் ஏன்பா ரதியாரே என்மகன்உம் காரியத்தில் தான் வந்து வீணில் தலையிட்டுக் கொண்டதுண்டா? இல்லையென்று சொல்கின்றீர் அவ்வா றிருக்கையிலே தொல்லை தரும்வார்த்தை என்மகனைச் சொன்னதேன்? ஏழ்மை கிழத்தன்மை நோய்கள் இவற்றை யெல்லாம் ஆழக் குழிதோண்டி அப்படியே புதைத்துத் தேசத்தை மேல்நிலையில் சேர்ப்பதெனும் உங்கள் ஆசையோ பேராசை! அப்படித்தான் ஆகட்டும்! அச்செயலை நான்ஒன்றும் ஆட்சேபம் பண்ணவில்லை கச்சைகட்டி ஆடுங்கள்! கைதட்டிக் கூவுங்கள்! எங்கள் செயலுண்டு யாமுண்டு மற்றவிதம் உங்களிடம் யாரையா ஓடிவந்தார்? சொல்லும்! இளமையிற் கல்இள மையிற்கல் என்றந்த இளம்பையன் வீதியிலே சொன்னான் எனில் நீர் முதுமையில் மண்முது மையில்மண் என்றே எதிர்வந்து சொன்னீரே! எல்லாரும் கேட்டுக் குலுங்க நகைத்தாரே! ஐயா குறும்பில் அலங்காரம் சேர்த்தீரோ அங்கு. - மகாகவி பாரதியார், ப.14-15, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-6, 1935, ப.6 3. பாரதியார் முன் இரு பிரசங்கங்கள் எண்சீர் விருத்தம் சமரச சன்மார்க்கக் கட்டி டத்தில் தகுதிரு வி கலியாண சுந்தரர் தாம் அமைவுடைய இளங்கோவின் கவிந யத்தை அமுதம் போல் எடுத்துரைத்தார் பிரசங் கத்தில்! தமைமீறிப் பொங்கியெழும் சந்தோ ஷத்தால் தடதட எனக்கர கோஷம் செய்தார் ஐயர்! நமதுதமிழ் இனிமைதனைக் கண்டு கொள்க நானிலமே என்றனதம் விழியும் மார்பும்! அடுத்தபடி வேறொருவர் பிரசங் கித்தார் அவர்கோணிக் குரங்குபோல் ஆடி ஆடி எடுத்தெடுத்துப் பாடினார் தாயுமானார்எழிற்பாட்டைஅழுகுரலில்!அவர்ச னத்தைப் படுத்தாத பாடில்லை! கோபத் தாலே பாரதியார் யாரடா இவன் என்றார். நான் தடுத்து விட்டேன் எழுந்திரென்றார்ததாது சென்னேன் சபைத்தலைவர், பிரசங்கி சபையில் மீந்தார் .- மகாகவி பாரதியார், ப.16, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-6, 1935, ப.7 4. சமத்துவ உள்ளம் அகவல் யானும் கோஷும் பேசி யிருந்தோம் என்றார் பாரதி யார்என் னிடத்தில் வெளியிற் சென்று வீடு வந்தவர் மேலுடை கழற்றவும் இல்லை, மேலும் ஐயர் கண்களில் அழகு குறைந்ததால் அங்கு நடந்ததைக் கேட்டேன் ஐயரை, எல்லாரும் சமமா இல்லையா என்றார் என்ன நடந்த தென்றேன். ஐயர், ஒன்றுமில்லை உட்கார் என்றார் உட்கார்ந் திட்டோம் ஐயரும் நானும் யானும் கோஷும் பேசி யிருக்கையில் எவனோ கோஷின் காலில் விழுந்தான் நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச் சீரும் சிறப்பும் தேட லாமே என்று சொன்னார் கோஷுஎன் னிடத்தில் மரியாதை எனல் உண்டு பெரியார் சிறியார் இல்லைஎன் றாரே. - மகாகவி பாரதியார், ப.17, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-6, 1935, ப.7 5. பாரதியாரும் நாடகமும் எண்சீர் விருத்தம் நற்சரிதை நற்கவிதை நல்ந டிப்பு நாடகத்தில் பாரதியார் அமைக்க எண்ணி முற்காலம் காளிதா சன்பு கன்ற சாகுந்த லம்நடத்த முடிவு செய்தார் உற்றநண்பர் சீனிவா சாச்சா ரிக்குச் சகுந்தலையின் வேடந்தான் உரிய தென்றார் பற்றறுவி சுவாமித்திரர் வாவே சுக்காம் பகரறிய துஷ்யந்தன் நான்தான் என்றார். தொண்டுசெயப் பலநண்பர் காத்தி ருந்தோம் துடைநடுங்கும் தமிழ்நாடு, தேச பக்தர் அண்டுமந்தக் காரியத்தில் அண்ட வில்லை அருங்கவியின் நாடகத்தை இழந்தார் மக்கள், வண்டிவண்டி யாய்க்குப்பை கூள மெல்லாம் வாரிப்போய்ப் பாரதியார் போட்டி ருப்பார் கொண்டுவந்து சேர்த்திருப்பார் நாட கத்தில் குளிர்நிலவை; ஒளிநிலவை; அற்பு தத்தை! - மகாகவி பாரதியார், ப.18, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-6, 1935, ப.7 6. ஸ்ரீ சி. சுப்ரமண்ய பாரதியார் புகழ் தில்லானா : மெட்டு இராகம் : நாட்டை தாளம் : ஆதி பல்லவி தோயுந்தேன் கவிதரு நம் சுப்ரமண்ய பாரதியைச் செப்புக தினம் - தோ அநுபல்லவி சுதை நிலாவை நாம் எலாம் மிக இன்பத்தால் சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில் சந்தித் தோமே - தோ சரணம் ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும் உலக மனிதர் சமம் என நிலை நாட்டும் தீய மறை வகற்றி அகத்தெழில் கூட்டும் செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும் தாகிட ஜெம் தாகிடஜெம் தகும் தரிகிடதக தத்தரிகிடதக தளாங்கு தகதிக தொக ததிங்கி ணத்தோம் - தளாங்கு ததிங்கிணத்தோம் ததிங்கிணத் தோம் - தோ - மகாகவி பாரதியார், ப.20, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-1, 1935, ப.8 7. பாரதியாரும் பையனும் கொஞ்ச வயதுடையான் - அவன் கூனற் கிழவனைப்போல் அஞ்சி நடந்து சென்றான் - ஐயர் ஆரடா தம்பி என்றார் அஞ்சலி செய்து நின்றான் - ஐயர் அவனிடம் உரைப்பார் நெஞ்சு நிமிர்ந்து நட! - உன் நேரில்அச் சேவலைப் பார்! சொன்ன சொல் பையனுளம் - தனில் சுடர் கொளுத்திடவே முன்னைய கூனல் நடை - தனை முற்றும் அகன்றவனாய்ச் சென்னி தனைநிமிர்த்திக் - கொஞ்சம் சிரிப்பையும் காட்டிச் சன்னத்த வீரனைப்போல் - அந்தச் சாலை வழிநடந்தான்! - மகாகவி பாரதியார், ப.19, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-6, 1935, ப.7 8. பாரதியார் நாமம் வாழ்க அறுசீர் விருத்தம் வாளேந்து மன்னர்களும் மானி யங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய்மொழியை உயிரை இந்த நாள்ஏந்திக் காக்குநர்யார்? நண்ணுநர்யார்? எனஅயலார் நகைக்கும் போதில் தோளேந்திக் காத்தஎழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! 1 கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்போல் நல்லின் பத்தை விளைத்திடுதீந் தமிழிருந்தும் வேறுமொழி யேவேண்டி வேண்டி நாளும் களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும் கனிந்தபடி தோலு ரித்துச் சுளைத்தமிழாற் கவியளித்த சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! 2 தமிழ்க்கவியில் உரைநடையில் தனிப்புதுமை சுவையூட்டம் தந்து சந்த அமைப்பினிலே ஆவேசம் இயற்கையெழில் நற்காதல் ஆழம் காட்டித் தமைத்தாமே மதியாத தமிழர்க்குத் தமிழறிவில் தறுக்குண் டாக்கிச் சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! 3 மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு விடுதலையை மறந்தி ருக்கும் துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப் பெண்மை தன்னில் தக்கதொரு தாய்த்தன்மை சமத்வநிலை காட்டிஉயிர் தளிர்க்கும் காதல் துய்க்கும்விதம் எழுத்தளித்த சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! 4 பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும் பெரியாரின் துணையும் வேண்டும் விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கே உறக்கமில்லை கட்டா யத்தால் வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற் சுவைக்கவியால் மனத்தை யள்ளித் தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! 5 நிதிபெருக்கும் மனிதர்களும் நெடுந்தேச பக்தர்களும் தலைவர் தாமும் கதிபெருக்க ஏடெழுதும் ஆசிரியர் என்பவரும் கவிதை என்றால் மிதிஎன்பார்! தமிழ்க்கவியைப் புதுவகையில் மேலெழுப்பிக் கவிகள் நம்மைத் துதிபுரியும் வகைதந்த சுப்ரமண்ய பாதியார் நாமம் வாழ்க! 6 பேசுகின்ற தமிழினிலே சுவைக்கவிதை தரவறியாப் பெரியோ ரெல்லாம் பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம் வேண்டுவன பெறுதல் வேண்டும் ஏசிநின்றார், அவர்நாணத் தமிழ்க்கவிதை உலகினிலே எசமான் ஆன தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! 7 அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங்கவிஞன் ஐரிஷ்மொழி வளரச் செய்தான் அயர்லாந்தில் அதன்பிறகே உணர்வுபெற லாயிற்றென் றறிஞர் சொல்வார் ... பெயர்பெற்ற சுடர்க்கவிஞர் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க. 8 எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும் இசைந்திருந்த ஷேக் பியரும் சொல்லும்விக் டர்யூகோவும் டால்டாயும் இரவீந்திரனும் சொந்த நாட்டில் நல்லசெயல் செய்தார்கள்! நடைப்பிணங்கள் மத்தியிலே வறுமை யென்னும் தொல்லையிலும் தொண்டுசெய்த சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! 9 வாழ்கஎழிற் பாரதியார் திருநாமம் வையமிசை எந்த நாளும் வாழ்கதமிழ்! தமிழ்க்கவிதை தமிழ்நாட்டார் மகாவீர ராக எங்கும் வாழ்கஅவர் வகுத்தநெறி வருங்கவிதா மண்டலமும் கவிஞர் தாமும் வாழ்கநனி சமத்துவநல் லுதயமதி வாய்ந்தபுகழ் நிலவும் நன்றே. 10 - மகாகவி பாரதியார் ப.21-24, 1948; புகழ் மலர்கள், ப.139, 1978 9. திருப்பள்ளி எழுச்சி (âU¥gŸË எழுச்சி என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்? ) நிலைமண்டிலம் நற்பெரு மார்கழி மாதமோர் காலை நமதுநற் பாரதி யாரோடு நாங்கள் பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப் போகும் வழியினில் நண்பர் ஒருவரைப் பெற்ற முதுவய தன்னையார், ஐயரே, பீடு தரும்திருப் பள்ளி யெழுச்சி தான் சொற்றிறத் தோடுநீர் பாடித் தருகெனத் தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே. நீல மணியிருட் காலை அமைதியில் நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின் கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால் கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில், காலை மலரக் கவிதை மலர்ந்தது; ககன முழுமையும் தேனலை பாய்ந்தது! ஞானப் பொழுது புலர்ந்ததென் றார்ந்த நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே! - மகாகவி பாரதியார், ப.10, 1948; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்-6, 1935 10. புதுநெறி காட்டிய புலவன் நிலைமண்டிலம் தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே! வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்! வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம் இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற் கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம் செய்தமைக் குநன்றி செலுத்து கின்றேன். உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும் வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்! இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம் எக்கா ரணத்தால்? என்பீராயின், ஊன்ஒன் றாகி, உணர்வொன் றாகி, நேர்ஒன்று பட்டு, நெடுநாள் பழகிய, இருவ ரிற்சுப் பிரமணிய னென்று சொற்பா ரதியைச் சோம சுந்தர நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்; அன்றியும் பாரதி அன்பர் பல்லோர் இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார். இங்குத் தலைமை ஏற்ற நானும் திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில கூறுவேன், முடிவுரை கூறுவேன் பின்பே: கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம் தாயகம் சமணமதம் தனைப்பெற்ற தன்றோ? முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடுதன் அருந்தவப் பயனாய் இராமா னுசனை ஈன்ற தன்றோ? துருக்கர் கிறித்தவர் சூழ்இந் துக்களென் றிருப்பவர் தமிழரே என்ப துணராது சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி இராம லிங்கனை ஈன்ற தன்றோ? மக்கள் தொகுதி எக்குறை யாலே மிக்க துன்பம் மேவு கின்றதோ அக்குறை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தோனைச் சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம். ஜாரின் கொடுமை தாங்கா உருசியம் ஏருற லெனினை ஈன்றே தீரும்! செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே எல்லா மக்களும் என்ற பிரான்சில் குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க விக்டர் யூகோ மேவினான் அன்றோ? தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால் இமைதிற வாமல் இருந்த நிலையில் தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்! பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! FÉ¡F« fÉij¡ FÆš!இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா! காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம்பட வந்த மறவன். புதிய அறம்பட வந்த அறிஞன். நாட்டிற் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்! என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன், தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ்,பா ரதியால் தகுதி பெற்றதும் எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்: கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும் பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும் கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங் கிடஎழு துவதும் ஏற்கா தென்றும் பொய்ம்மதம் பிறிதெனப் புளுகுவீர் என்றும் கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான் இந்த உலகமென் றெழுதுக என்றும் பழமை அனைத்தையும் பற்றுக என்றும் புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும் கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல் எள்ளத் தனைநிலை இல்லாத தென்றும் எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும் அழிவுபெண் ணால்என் றறைக என்றும் கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும் அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும் மாலை பார்த்தொரு மாலை தன்னையும் காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும் வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று விரைந்து தன்பேரை மேலே எழுதி இருநூறு சுவடி அருமையாய் அச்சிட் டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி வருவதே புலமை வழக்கா றென்றும் இன்றைய தேவையை எழுதேல் என்றும் முன்னாள் நிலையிலே முட்டுக என்றும் வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான் பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும் புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும் நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்! அந்தப் படியே அவரும் ஒழுகினர். தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால் தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்! செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல் செய்யா நிலையைச் சேர்ந்த துதீந்தமிழ் விழுந்தார் விழித்தே எழுந்தார் என அவன்மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்: வில்லினை யெடடா-கையில் வில்லினை எடடா-அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா என்று கூறி, இருக்கும் பகையைப் பகைத்தெ ழும்படி பகர லானான். பாருக்குள்ளே நல்லநாடு-இந்தப் பாரதநாடு என்பது போன்ற எழிலும் உணர்வும் இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்! இந்நாடு மிகவும் தொன்மை யானது என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்: தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய் மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும் மிக்குள பண்பையும் விளக்கு கின்ற கற்பனைத் திறத்தைக் காணுவீர்: முப்பதுகோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடை யாள் - அவள் செப்பும் மொழிபதி னெட்டுடையாள்-எனிற் சிந்தனை யொன்றுடை யாள். இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்: நீலத்திரைக் கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவம்செய் குமரி யெல்லை. கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்! சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்: இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதம்திரு இரண்டு மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் விதம்தரு கோடி இன்னல் விளைத்தெனை யழித்திட் டாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே. பாரதி பெரிய உள்ளம் பார்த்திடு வீர்கள்: எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு. விடுதலை! விடுதலை! விடுதலை! மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே- என்றறைந்தார் அன்றோ? பன்னீ ராயிரம் பாடிய கம்பனும் இப்பொழுது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை. செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான். செந்தமிழ் நாடென்னும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே- என்றான். சினம் பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை முனம் எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான். வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா-அங்கு வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா என்று கோலம் புதுக்கினான் பெண்உ தட்டையும் கண்ணையும் அழகுறச் சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்: அமுதூற்றினை யொத்த இதழ்களும்-நில வூறித் ததும்பும் விழிகளும் இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக் கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான். முனைமுகத்து நில்லேல்-முதியவள் சொல் இது. முனையிலே முகத்துநில்-பாரதி முழக்கிது! மீதூண் விரும்பேல்-மாதுரைத் தாள்இது. ஊண்மிக விரும்பு-என உரைத்தான் பாரதி. மேலும் கேளீர்- கோல்கைக் கொண்டுவாழ் குன்றென நிமிர்ந்து நில், நெற்றி சுருக்கிடேல் எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப் பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்! அன்னோன் கவிதையின் அழகையும் தெளிவையும் சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும் இங்கு முழுதும் எடுத்துக் கூற இயலா தென்னுரை இதனோடு நிற்கவே. - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.37-43, 1949 குறிப்பு : அனைத்திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் ஐந்தாவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டவை (1946). 11. தேன்கவிகள் தேவை பஃறொடை வெண்பா பொழுது விடியப், புதுவையி லோர்வீட்டில் விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து மாடிக்குப் போவார், கடிதங்கள் வந்திருக்கும் வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார். சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார். முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும் சரியாய்ப் படிந்ததுண்டா இல்லையா என்று வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை. அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்! நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி! கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்! என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்! பன்னத் தகுவதுண்டோ நாங்கள்பெறும் பாக்கியத்தை? வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம் போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்! தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்! காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப் பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார் மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட் டரைஇருக்கும் கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம். பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார் சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின் ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும். வாசித்தார் ஐயர், மலர்முகத்தில் வாட்டமுற்றார். என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார். பாட்டெழுத வேண்டாமாம் பார்த்தீரா அன்னவரின் பாட்டின் பயனறியாப் பான்மையினை என்றுரைத்தார். பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் சோர்வென்னும் காரிருளில் கால்வைத்தார், ஊக்கத்தால் மீண்டுவிட்டார். பாட்டின் பயனறிய மாட்டாரோ? நம்தமிழர்? பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்? என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார் நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை என்றார். நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின் பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார். ஆங்கிலம் வல்ல கசின்என்னும் ஆங்கிலவர் நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன், பாங்காய் எனக்குநல்ல பாட்டெழுதித் தாருங்கள், என்று வரைந்த கடிதத்தை எங்களிடம் அன்றளித்தார். எம்மை அபிப்பிரா யம்கேட்டார். வேண்டும் எழுத்தத்தான் வேண்டும் என்றோம். பாரதியார் வேண்டும்அடி எப்போதும் விடுதலைஎன் றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார். ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல் ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித் தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின் கண்ணைக் கவர்ந்து, கருத்தில் தமிழ்விளைத்தே எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற வீ.வீ. எ. ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து, பாவலராம் பாரதிக்கும் ஆர்ந்த கவித்தேனை வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத் தினசரியின் ஆசிரியர் தேவையினித் தேவை. இனியகவி நீங்கள் எழுதுங்கள் என்றுரைத்தார். தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர் தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார் தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச் சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர் பயன்தெரிந்தார் நம்தமிழர் என்றுரைத்தார் பாரதியார் நல்ல கவியினிமை நம்தமிழர் நாடும்நாள் வெல்ல வருந்திரு நாள்! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.44-46, 1949 12. பாரதி உள்ளம் சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று. பாதியை நாடு மறந்தால் - மற்றப் பாதி துலங்குவ தில்லை. சாதி களைந்திட்ட ஏரி - நல்ல தண்டமிழ் நீரினை ஏற்கும் சாதிப் பிணிப்பற்ற தோளே - நல்ல தண்டமிழ் வாளினைத் தூக்கும்! 1 என்றுரைப்பார் என்னிடத்தில் - அந்த இன்ப உரைகளென் காதில் இன்றும் மறைந்திட வில்லை - நான் இன்றும் இருப்பத னாலே! பன்னும்நம் பாரதி யாரின் - நல்ல பச்சைஅன் புள்ளத்தி னின்று நன்று பிறந்தஇப் பேச்சு - நம் நற்றமிழர்க் கெழில் மூச்சு! 2 மேலவர் கீழவர் இல்லை - இதை மேலுக்குச் சொல்லிட வில்லை. நாலு தெருக்களின் கூட்டில் - மக்கள் நாலா யிரத்தவர் காணத் தோலினில் தாழ்ந்தவர் என்று - சொல்லும் தோழர் சமைத்ததை உண்பார். மேலும் அப்பாரதி சொல்வார் - சாதி வேரைப் பொசுக்குங்கள் என்றே. 3 செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன் சீருக்கு நல்லதோர் தொண்டும் நிந்தை இல்லாதவை அன்றோ! - எந்த நேரமும் பாரதி நெஞ்சம் கந்தையை எண்ணுவ தில்லை - கையிற் காசை நினைப்பதும் இல்லை செந்தமிழ் வாழிய! வாழி - நல்ல செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார். 4 - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.47-48, 1949 13. மகா கவி பாரதியார் பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்! ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான ஒட்டைச்சாண் நினைப்புடையார் அல்லர். k‰W« åu® mt®!-k¡fËny மேல்கீழ் என்று விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்! சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம். 1 அகத்திலும் எண்ணங்கள், உலகின் இன்னல் அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம் திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார் தெளிவாக, அழகாக, உண்மை யாக! முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை முனைமுகத்தும் சலியாத வீர ராகப் புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப் புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில். 2 பழையநடை, பழங்கவிதை, பழந்த மிழ்நூல், பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை; பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம் பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள் அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில் அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்! 3 கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார். கீர்த்தியுறத் தேசியம் சித்தி ரித்தார். சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார். தங்குதடை யற்றஉள்ளம்; சமத்வ உள்ளம்; இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்! இன்புள்ளம், அன்புள்ளம், அன்னார் உள்ளம்! தராதலத்துப் பாஷைகளில், அண்ணல் தந்த தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி! 4 ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு நானிலத்தில் ஆளில்லை, கண்ணன் பாட்டுப் போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே? புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள் ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக் கூனர்களும் குவலயத்தை அவாவும் வண்ணம் கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்! 5 பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச் சேயென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள் வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்; வீணாக உலககவி அன்றென் பார்கள். ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய் உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள். 6 சாதிகளே இல்லையடி பாப்பா என்றார் தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம் என்றார். சோதிக்கின் சூத்திரற்கோர் நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொர் நீதி ஓதியதைப் பாரதியார் வெறுத்தார், நாட்டில் ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார். பாதிக்கும் படி பழமை பழமை என்பீர் பழமைஇருந் திட்டநிலை அறியீர் என்றார். 7 தேசத்தார் நல்லுணர்வு பெறும்பொ ருட்டுச் சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார். காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும் சிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார். பேசிவந்த வசைபொறுத்தார்; நாட்டிற் பல்லோர் பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால் முரசறைந்தார். இங்கிவற்றால் வறுமை ஏற்றார். 8 வையத்து மாகவிஞர் மறைந்து போனார்; வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும் செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்; சிலநாட்கள் போகட்டும் எனஇ ருந்தார் உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள் உலககவி அல்லஅவர் எனத்தொ டங்கி ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார் அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ? 9 - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.49-51, 1949 14. செந்தமிழ் நாடு (செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?) தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்உரைத்தார். தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று பலநண்பர் வந்து பாரதி யாரை நலமாகக் கேட்டார்; அதற்கு நம்ஐயர் என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார் புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார். போட்டால்தான் சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால் உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்! அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம். செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத் தேன்வந்து பாயுது காதினி லே என் றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்! காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் அஃதிந்நாள் மேதினியிற் சோதி விளக்கு! - ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம், 1935; பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.52, 1949 15. நாடக விமர்சனம் எண்சீர் விருத்தம் ஒருநாள் பாரதியார் நண்ப ரோடும் உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கே ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன் இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே வருகுதையோ எனும்பாட்டைப் பாட லானான்! வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்; மயக்கம்வந் தால்படுத்துக்கொள் ளுவது தானே வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்! தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம். சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை? மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான். மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும் முயற்சியிலும் ஈடுபட்டான், தூங்கி விட்டால் முடிவுநன்றா யிருந்திருக்கும் சிரம மும்போம்! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.54, 1949 16. பகை நடுங்கச் செய்த பாரதி பகை நடுங்கச் செய்த பாரதி பாட்டை நீ பாராட்டு மறவனே! நகைக்கத் தக்க நால்வகைச் சாதியாம் நச்சுப் பாம்பை நசுக்கிடச் சொன்னால் மிகுத்திட வேண்டும் மனுக்கொள்கை என்று வீறாப்புப் பேசி வெளிவரும் அந்தப் - பகை நடுங்கச் செய்த பாரதி பார்ப்பான் உயர்வென்றும், பாட்டாளி தாழ்வென்றும் ஏற்பாடு செய்தநூல் இழிந்தநூல் என்றால் கூப்பாடு போட்டு நாட்டினை ஆயிரம் கூறாக்கித் தாம்வாழ எண்ணிடும் அந்தப் - பகை நடுங்கச் செய்த பாரதி அனைவரும் சரிநிகர் அனைவர்க்கும் எல்லாம் அறுத் தெறியுங்கள் பூணூலை என்றால் தனிஒரு சட்டம் ஏமாற்றி வாழச் சாத்திரச் சழக்குக் காட்டிடும் அந்தப் - பகை நடுங்கச் செய்த பாரதி நாட்டுக்கு மறவரை நல்கும் அன்னைமார் நைய விடுவது நல்லதா என்றால், கூட்டிற் பறவைபோல் உரிமை இழப்பதும் குற்ற மில்லை என்றார்கள் அந்தப் - பகை நடுங்கச் செய்த பாரதி பண்டைய தமிழ்நடை இன்றைக்கு வேண்டாம் பலர்க்கும் புரியப் பாடுங்கள் என்றால் நொண்டி நடக்கும் பண்டிதர் நடைதான் நூலுக்கு வேண்டும் என்றார்கள் அந்தப் - பகை நடுங்கச் செய்த பாரதி - தேனருவி, ப.95 - 96, 1956 17. முனையிலே முகத்து நில் அகவல் வீரம் வளரப் போர் வரவேண்டும் பலநூற் றாண்டாய் பாரத நாட்டில் போரே இல்லை; அதனால் மக்கள்பால் அஞ்சாமை என்பதே இல்லாத மிழ்ந்தது; நாட்டன்பு காட்ட வாய்ப்பே இல்லை. கடமை உணர்ச்சி மடமையில் மாய்ந்தது; ஓவியம் காவியம் அனைத்தும் உளத்தில் பத்திமை ஒன்றையே பதிய வைத்தன. மறச்செயல் செய்ய வாய்ப்பே இல்லை வெட்டுக் கத்தி வீசிய தெலாம்போய் அட்டைக் கத்தி வீச லாயினர். கல்வியில் வீரம் கடுகும் இல்லை கூனிக் கொட்டாவி விட்டு விட்டுப் போன உயிர்போல் பொழுது போக்கினர் ஒழுக்கம் பழுத்தது விழுப்பம் வீழ்ந்தது. சைவம் வைணவம் முதலிய சமைய மெய்ம்முழக் கமெலாம் பொய்ம்மை முழங்கின தம்பிரான் மார்கள் தம்பிரான் அடியை நம்பினார்; நாட்டை எண்ணுவ தில்லை. வாலியை மறைந்திருந்து மாய்த்த இராமனை வீரன் என்று விளம்பினார் என்றால் படிப்படி யாகப் பாரத நாட்டின் அடிப்படை வீரமே அழுகிய துணர்க! திலகர் தொடுத்த போர் கரடியும் புலியும் இல்லாக் காடெனப் போரிலா திருந்த இந்த நாட்டில் திலகர் மக்களைப் போருக்குத் திரட்டினார். ஆங்கி லேயனை, அன்னவன் ஆட்சியை, ஆங்கில மொழியை, அன்னவன் சரக்கை அழிக்க வேண்டும் என்பன அனைத்தும் திலகர் அந்நாள் இட்ட திட்டம்! ஆங்கிலம் இதன்பால் அவிழ்த்து விட்ட அடக்கு முறையால் அந்தத் திட்டம் மக்கள்பால் மதிப்பைப் பெறுவ தானது. வீரர் எழுந்தனர் பாரதி தோன்றினார் புதைந்திருந்த வீரம் புறத்தே எழுந்தது ஆங்கி லேயனை அழித்தொ ழிக்க எங்கணும் வீரர்கள் எழுந்தனர்; அவர்களில் பாரதி ஓர்ஆள்! பாரத நாட்டில் எங்கணும் தலைவர்கள் எழுந்தனர்; அவர்களில் பாரதி பண்புறு தலைவர்! கவிஞர் சிற்சிலர் எழுந்தனர்; அவர்களில் பாரதி ஒருபெருங் கவிஞர்! உயிருள வரைக்கும், பாரதி பாரத நாட்டு வீரர்! பாரதி பாரத நாட்டுத் தலைவர்! பாரதி பாரத நாட்டின் கவிஞர்! இந்த நாட்டில் இருந்தபல் வீரர்க்கும் இந்த நாட்டில் இருந்த தலைவர்க்கும் இந்த நாட்டில் இருந்த கவிஞர்க்கும் பார திக்கும் வேற்றுமை பகர்வேன்; அவர்கள் எல்லாம் கொள்கை அகன்றனர் பாரதி பாரதி யாகவே இருந்தார் காந்தி கொள்கைக் கனல்இந் நாட்டில் நன்று பரவிய போதும் அக்கொள்கை வென்று முடித்த வேளை யதிலும் காந்தி யண்ணல் கழறி வந்த, பாரதி போர் நூல் ஊறிலாக் கொள்கையைப் பாரதி ஒப்பிலார்! ஊறிலாக் கொள்கை உலகை வளைத்து நாட்டை மீட்ட நாளி லேதான் போர்நூல் புதிதாய்ப் புகன்றார் பாரதி; அதுதான் புதிய ஆத்திசூடி ஆகும். காதல்நூல்-போர்நூல் பாரத நாட்டின் நூற்கள் பலவும் காதல் நூல்போர் நூல்என இருவகைப்படும் அவைகளைத் தமிழர் அகத்திணை புறத்திணை என்பார் அவற்றுள் ஐயனா ரிதனார் புறப்பொருள் வெண்பா மாலை விதைத்ததும் அறுக்கும் வீரப் பாடல்கள் படித்ததும் எழுப்பும் பழநாட் போர்நூல். ஆத்திசூடி முழக்கம் அதைத்தான் பாரதி அழகுறச் சுருக்கி அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி என்ற மூன்றால் தொடக்கம் செய்தார் தூயநூ லாகவே! போரினை விரும்பாப் புலமையோர் ஆன ஔவையார் முனைமுகத்து நில்லேல் என்றார் போரை விரும்பும் புலமை யாளர் பாரதி, முனையிலே முகத்துநில் என்றார் ஊண்மிக விரும்பு நாளும் என்றார் ஏறுபோல் நடஎன இயம்பிய அதுவும் கீழோர்க் கஞ்சேல் எனக்கிளத் தியதும் குன்றென நிமிர்ந்துநில் என்று கூறியதும் எண்ணுக எண்ணுக இந்நாட் டிளைஞர்கள். கேட்டினும் துணிந்துநில் என்று கிளத்தித் தேசத்தைக் காத்தல் செய்என்று செப்பினார். போர்த்தொழில் புரியேல் என்பதைப் புதைத்துப் போர்த்தொழில் பழகுநீ என்று புகன்றார் சீனனை வெருட்ட சீனன் இந்த நாட்டில் சிற்றடி வைத்தான் பாரதி இச்சொல் வைத்தார்! வெள்ளைக் காரனை வெருட்டச் சொன்னவர் கொள்ளைக் கார னான சீனனை எதிர்த்துப் போரிட இதனைச் சொன்னார்; இறக்கவில்லை பாரதி இருக்கின் றார்! அவர் சாவதற் கஞ்சேல் என்று சாற்றிப் புத்துயிர் நம்மிடம் புகுத்து கின்றார். சீனன் பெற்ற சிறிய வெற்றியைப் பெரிதென எண்ணிடேல் என்று பேசுவார் தோல்வியிற் கலங்கேல் என்று சொன்னார்: பாரத வீரரே பாரத வீரரே பாரதி பாரதப் படையின் தலைவர் என்று நீவிர் எண்ணுதல் வேண்டும் நல்வழி காட்ட வல்லவர் என்று நம்புதல் வேண்டும். நவிலக் கேளீர் கோல்கைக் கொண்டு வாழ்என்றார் வேல்கொண்டு சீனனை வெல்லச் செல்கவே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.203-207, 1977 18. அன்றொரு நாள் பாரதி ஆயிரத்துத் தொளாயிரத் தேழில்இந்து சீன அட்மினிட்ரேட் டர்சவரா, பாரீசு சென்றார்; தீயதொரு செய்தியினைக் கேள்வியுற்றார் அங்கே! திடுக்கிட்டார் புதுவைக்குத் தந்திகொடுத் திட்டார் தூய்பிரஞ்சிந் தியாவைஆங் கிலேயர்கொள் ளட்டும் அதற்காக ஆப்பிரிக்கத் துணைப்பகுதி ஒன்றை நேயமுறு ப்ராஞ்சியர்கள் கொள்ளட்டும் என்ற நேர்மையிலாத் தீர்மானம் பாராளும் மன்றில் வரும்; அங்கும் உறுதிபெறும் என்றுரைத்தார் சரவா! மனம்துடித்தார் பாரதியார், வாவேசு ஐயர் அரவிந்தர், சீனிவா சாச்சாரி முதலோர்! அழகுதமிழ் ஏடொன்றைப் பறக்கவிட்டார் கவிஞர் தெருவெல்லாம் சொற்பெருக்கைப் பாய்ச்சினார் அன்னார்! திரண்டெழுவீர் மக்களே, பிரஞ்சிந்தி யாவைத் தரப்போகும் பிரஞ்சியர்க்கு மறுப்பொன்று வரைவீர் என்றுரைத்தார் பாரதியார்! தந்திபறந்த தனவே! எட்டாநாள் பிரஞ்சியர்கள் பதில்தந்தி தந்தார் இந்துபிராஞ் சுத்தலத்தை விற்கும்நோக் கத்தை விட்டுவிட்டோம் என்பதுதான் அத்தந்திச் செய்தி விரைவாக அச்செய்தி அரவிந்தர் வீட்டில் எட்டியதும் பாரதியார் பூரித்தார் இங்கே எப்போதும் பிரஞ்சிந்தி யாஇருக்க வேண்டும் அட்டியின்றி இப்போதே ஆங்கிலே யர்கள் அகன்றுவிட வேண்டும்இந் நாட்டைவிட் டென்றார். - பழம் புதுப் பாடல்கள், ப.254, 2005; தினமணி, சுடர் பாரதி, அனுபந்தம், 5.9.54 19. புதுவையைப் பற்றி பாரதி அறிக்கை எண்சீர் விருத்தம் சைகோனில் அதிகாரி, சரவான் என்னும் தனித்தமிழர் புதுவையிலே பிறந்த செம்மல் பையவே விடுமுறையும் பெற்று நேரே பாரீசு சென்றங்கே இருக்கு நாளில் ஐயகோ புதுவைமுதல் ஐந்தூர் தம்மை ஆங்கிலர்பால் ஒப்படைக்கும் சட்ட மொன்று வையமுயர் பாரீசு சட்ட மன்றில் வரப்போவ தாய்அறிந்தார். மனம்பதைத்தார். ஆங்கிலவர் தமைஎதிர்த்துப் புதுவை வந்தார் அப்புதுவை ஆங்கிலவர் கைக்குப் போனால் தாங்குவரோ அரவிந்தர் ஐயர் என்றே தந்திஅர விந்தர்க்கே சரவான் தந்தார். ஈங்கதனைக் கண்ணுற்றார் அரவிந் தர்தாம் இருவிழியால் ஏற்றம்போட் டிறைத்தார் கண்ணீர் பாங்கிருந்த தோழரிடம் சேதி சொன்னார் பாரதியார், அரவிந்தர் அழுகை கண்டார். போங்காணும் அழுகின்றீர், என்று சொல்லிப் புறப்பட்டார் குருசாமி அச்ச கந்தான். வாங்கினார் தாள்ஒன்றை, இறகெ டுத்தார். வரைந்திட்டார் ஓர்அறிக்கை அச்ச டித்தார். யாண்டுமதை மக்களிடம் பரப்பச் சொன்னார் இருபதாயி ரம்படிகள் பறக்கக் கண்டார் பாங்குயர்ந்தார், பணக்காரார் கற்றார் மற்றோர் பாரீசுக் கேவரைந்தார் ஒருவிண் ணப்பம். பாரதியார் வரைந்தஅவ் விண்ணப் பத்தில் பத்தாயி ரம்பேர்கை யொப்ப மிட்டே புண்பட்ட நெஞ்சத்தின் மறுப திப்பைப் போக்கினார் பாரீசு சட்ட மன்றில் கண்பட்ட உடனேயே மன்றத் தார்கள் கைவிட்டார் ஐந்தூரை விற்கும் நோக்கம். அண்ணலார் பாரதியார் வரைந்த அந்த அறிக்கைதன் சுருக்கத்தை உரைக்கக் கேளீர்: பாரீசுக் குடியரசின் தலைவ ரேஎம் படைஅமைச்சே முதலமைச்சே சீரான புதுவைமுதல் ஐந்தூர் தம்மைத் திறமாக ஆளுகின்றீர் இருநூ றாண்டாய் ஈரமிலா நெஞ்சத்தார் ஆங்கி லர்பால் எமைஒப்ப டைப்பதையாம் விரும்ப வில்லை தூரத்தே ஆப்பிரிக்கக் காடு வாங்கத் தூயராம் எமைவிற்றல் சரியா காது. குடியரசின் தத்துவத்தை முதற்கண் யார்க்கும் கூறியே செயற்படுத்திக் காட்டி னீர்கள் இடிஇடிக்கும் மழைபெய்யும் அவற்றை முன்னே இங்குள்ளார் யாவரையும் கலப்ப தில்லை. முடியரசும் தன்குடியை விற்ற தில்லை. மூதறிஞர் மக்களன்பர் நடத்து கின்ற குடியரசே எம்கருத்தைக் கேளாமே குடியுரிமை பாராமே விற்க லாமோ. கொஞ்சநாள் இனியும்எமை ஆண்டி ருப்பீர் கொடுமைசெயும் ஆங்கிலரை இங்கி ருந்து கொஞ்சநா ளில்தொலைப்போம் அன்னார் ஆட்சி கூண்டோடு கைலாசம் போன பின்னர் நெஞ்சத்தில் அன்பிருந்தால் எம்மி டத்தில் நீணிலத்தை ஒப்படைத்தல் அறமே ஆகும். எஞ்சாமல் எம்கருத்தை இயம்பி விட்டோம். இப்படிக்குப் பிரஞ்சிந்தி யாவின் மக்கள். - பழம் புதுப் பாடல்கள், ப.255-256, 2005; பாட்டுப் பறவைகள், ப.307-309 குறிப்பு : இந்தப் பாடலையும் இதற்கு முந்தைய பாடலையும் தனது நூலில் (பாட்டுப் பறவைகள்) பதிவு செய்துள்ள மன்னர் மன்னன் இப்பாடலின் இறுதியில் இரண்டு பாடல்களுக்கும் பொதுவான குறிப்பாகப் பின்வரும் சிறுவிளக்கத்தை அளித்துள்ளார். முதல் உலகப்போர் முடிவை ஒட்டி பிரிட்டிஷ் அரசும் பிரெஞ்சு அரசும் ஓர் உடன்பாட்டுக்கு வந்து புதுவை பிரெஞ்சிந்தியப் பகுதிகளுக்கு மாற்றாக ஆப்பிரிக்கப் பகுதிச் சிறு தீவுகளை பிரான் ஏற்றுக் கொள்ளட்டும் என்று பிரிட்டிஷ் அரசு முன்மொழிந்தது. இதற்கான சட்ட வரைவு பிரான் நாட்டின் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டது. புதுச்சேரி பகுதிகளை பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளாக ஆக்கிவிட்டால் இங்கே அடைக்கலமாய் உள்ள பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. போன்றவர்களையும், சிறையிலிட்டுவிடலாம் என்ற தந்திரம் பலித்துவிடும் போல் இருந்த நிலையில் பாரதியார் வெகுண்டெழுந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க ஏற்பாடு செய்தார். புதுவையில் வாழ்ந்த புரவலர்கள், அரசின் முதன்மைப் பொறுப்பிலிருந்தவர்கள் பாரதியின் கருத்தை ஏற்று செயல்பட்டதையும் அறியலாம். 20. பாரதியின் விடுதலை வேட்கை எண்சீர் விருத்தம் விடுதலை எவர்க்கும் பயன்பட வேண்டும் விளைந்ததை முன்னின் றறுவடை செய்வோர் நடுநிலை பிறழா திருந்திடல் வேண்டும் நாடெலாம் வாழ்வதிற் கேடேதும் உண்டோ கெடுதலை சிலர்கொள ஆள்வதோர் ஆட்சி கீழ்என்றும் மேலேன்றும் உள்ளவேற் றுமையை முடுகிடச் செய்திடும் அதனால் அந்தோ முற்றாது முற்றாது விடுதலை நெற்கதிர் விடுதலை, விடுதலை, விடுதலை என்று விடுதலை வேட்கை முழக்கிய பாரதி கடையென உளறும் பறைய ருக்கும் கருத்திலார் இகழும் புலைய ருக்கும் விடுதலை விடுதலை விடுதலை என்றார் வேற்றுமை பார்ப்பது கெடுதலை அன்றோ வடுநீங்கு பாரதி விடுதலை வேட்கை மாசிலா உணர்வினில் எழுந்ததென் றுணர்க. சாதிகள் இல்லை என்றார் பாரதி தாழ்வுயர் வுரைத்தல் பாவம் என்றார் பாதிக்கு மேலுள தமிழர் நெஞ்சம் பஞ்சுப டாப்பாடு படுகின்ற தென்றால், தீதுக்குத் தானா இந்த விடுதலை? சிலர்க்கு மட்டுமா இந்த விடுதலை காதிலோர் நல்லிசை கேட்க வேண்டும் கைவிலங் ககன்றது தமிழ்த்தாய்க் கென்றே. விடுதலை எவர்க்கும் எதிலும் என்றார் வேம்பென் றார்சிலர் இந்த அமிழ்தை! வடவர் கண்ணுக்கு வெண்ணெயாம் தெற்கில் வாழ்வார் கண்ணுக்குச் சுண்ணாம்பாம் என்று தொடரும்ஓர் தீயசொல் மறைந்திட வேண்டும் தொட்ட இடமெலாம் நிகர் காண வேண்டும் அடிமைதீர் பாரதி விடுதலை வேட்கை அன்பினில் அறத்தினில் எழுந்ததென் றுணர்க. - பழம் புதுப் பாடல்கள், ப.272, 2005; கலைக்கதிர் விடுதலைப்போராட்ட மலர் ஆகடு, 1957 21. பெரியார் அறப்போர் அகவல் செயற்க ருஞ்செயல் செய்தல் வேண்டும்! பெறற்க ரும்புகழ் பெறுதல் வேண்டும்! பிறவியிற் சாதி உண்டெனப் பிதற்றியும், அறிவை அழித்தும் ஒற்றுமை அழித்தும், தமிழகம் உலகம் உமிழக மாகி ஒழியவும், நாடொறும் அழிவுசெய் துவரும் அயலான் அடியை அடையப் பெறுவது செயற்க ருஞ்செயல் செய்வ தாகுமோ? பெறற்க ரும்புகழ் பெறுவ தாகுமோ, தன்இனம், தன்மொழி, தன்நாடு, தன்கலை இன்ன வற்றின் உயர்வை இழிவெனப் பிறருளம் மகிழப் பேசி வாழ்பவன் துணைவேந்த னாயினும், தமிழன் துறைக்குத் தலைவ னாயினும் அந்தத் தமிழன் செயற்கரு மூறு செய்தவ னாவான், பெறற்க ரும்பழி பெற்றவ னாவான். ஆயிர மாயிரம் ஆண்டுக ளாகத் தீய சாதிஇந் நாட்டைத் தீய்ப்பதை ஆயிர மாயிரம் ஆண்டுக ளாகத் தூயவர் முயன்றும் தொலைத்தா ரில்லை! அதனால் இந்த அழகிய தமிழகம் மதிப்பற்று வாழ்வு மங்கி வருவதும் உலகம் அறிந்த ஒன்றாம்! இன்று நிலையிற் றமிழரை உயர்த்தவும், நீங்கா மாசு நீக்கவும் வந்த பெரியார் அறப்போர்ப் பறைமுழக்கு-அதோகேட் கின்றது! தொல்சீர்த் தமிழர்க்கு நல்ல வாய்ப்பிது! செயற்க ருஞ்செயல் செய்தல் வேண்டும் பெறற்கரும்புகழ் பெறுதல் வேண்டும்! கல்வி அமைச்சரோ செல்வ அமைச்சரோ இயன்ற மட்டும் பங்கை ஏற்க! அப்பெரும் போரில் அறப்படை அணியில் கடைசி வரிசையில் காணும் தொண்டனின் செருப்புத் துடைப்பதோர் செயலை யேனும் செய்க; அஃது செயற்கருஞ் செயலே! பெறுக அதனால் பெறற்கரும் புகழே! ஆலைக் காரர் ஆகுக, அவர்தம் தோலைக் காசுக்குத் தொலைப்பார் போலப் பெரியார் அறப்போர் பெரும திப்பினைச் சிறிதென இளிப்பது நீக்கித் திருந்தித் தொண்டரொடு தொண்டு செய்து கிடக்க! சட்டை மாட்டித் தலைக்கணி செய்து பட்டு டுத்துப் பகட்டுமோர் தமிழனும் என்னினும் தாழ்ந்தவன் என்னும் ஆரியன் தன்னினும் தாழ்ந்தவன் நான்நான் நான்எனும் மடமை மாய்வ தெந்நாள்? அந்நாள் இந்தநாள்: அரியது செய்க! நந்தம் பெரியார் படையொடு நடக்கவே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.305-306, 1964 22. எவர் பெரியார் அவர் வாழ்க அகவல் குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள் அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன! தமிழன் முதலில் உலகினுக் களித்த அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல் அமிழ்ந்தது; வடவரின் அறிவுக் கொவ்வாப் பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன! அகத்தியன் தொல்காப் பியர்முத லானவர் தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள் மறைந்தன! வடவர் தீயொழுக்க நூற்கள் நிறைந்தன, இந்த நெடும்புகழ் நாட்டில்! தீது செய்யற்க செய்யில் வருந்துக, ஏதும் இனியும் செய்யற்க வெனும் விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம் கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது. நல்குதல் வேள்வி என்பது நலியக் கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே! ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய ஐவருக் கொருத்தி எனும்அயல் நாட்டுக் குச்சுக் காரிக்குக் கோயிலும் கட்டி மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று. மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில் மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே! உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்! அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன். இப்படி ஒருநிலை காணு கின்றோம்! இப்படி எங்குண் டிந்த உலகில்? இறந்த காலத் தொடக்கத் திலிருந்து சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு இழிநிலை நோக்கி இறங்குந் தோறும் பழிநீக் கிடஎவன் பிறந்தான் இதுவரை? இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம் பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்! தமிழன் மானம்த விடுபொடி ஆகையில் வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில் ‘ஆ என்று துள்ளி மார்பு தட்டிச் சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று பார்ப்ப னக்கோட் டையை நோக்கிப் பாயுமிவ் அருஞ்செயல் செய்வார் அல்லால் பெரியார் எவர்?-நம் பெரியார் வாழ்கவே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.307-308, 1964; குயில் 8.6.58 23. ஞாலப் பெரியார் பாதை இசை: செஞ்சுருட்டி தாளம்: ஆதி விடுதலை இல்லாத போது - மொழி ஏது? - இனம் ஏது? - பண்டை மேலான வரலாறும் ஏது? - நீ விலக்கல் இலாத தமிழ் இலக்கியத் தின்சல்லி வேரும் சிறிதும் நிலைக் காது. கொடிநாட்டி வாழ்ந்தனை மண்ணி - லதை எண்ணித் - தமிழ் எண்ணி - அந்தக் கொடியவரை நடுங்கப் பண்ணி - கொடுங் கோலை முறித்த பின்புன் வேலை முடிந்ததென்று கொட்டடா முரசு நண்ணி! தாய்க்கு மகன் செய்யும் தொண்டும் - ஒன் றுண்டு - நன் றுண்டு - தாய் தளைநீக்க வேண்டும் வெ குண்டு - மேலும் தமிழன் நீ தமிழ்ப்பழங் குடிக்கோர் இழுக்கென்றால் சாக்காடும் உனக்குக் கற் கண்டு. பாக்கியம் பெற்றவன் நீதான் - புலி நீதான் - சிங்கம் நீதான் - இந்தப் பாராண்ட மறத்தி உன் தாய்தான் - தமிழ்ப் பண்பாட்டை மிதிப்பவன் பழிவாங்கப்பட வேண்டும் சும்மா இருந்தால் நீயோர் நாய்தான். தெற்கை வடக்காண்ட தெந்நாள்? - இல்லை முன்னாள் - அஃ திந்நாள் - கேள் சீர்பட வேண்டுமன்றோ உன் நாள்? - நல்ல திருவேண்டும் புகழ்வேண்டும் தமிழ்க்குரிமை வேண்டும் தீயர் தொலையும் நாளே பொன்னாள்! பொற்குவை தன்னைக் கரண்டி - யாற் சுரண்டிப் - பல வண்டி - ஏற்றிப் போனாள் நமக்கே திங்கே உண்டி? - உன் பொய்யாத வாழ்வெங்கே மெய்யான உணர்வெங்கே போயின வோஇருள் மண்டி? இன்றே உனதுமுதல் வேலை - இது காலை - கொடுங் கோலைத் - துண்டாய் ஒடிக்க வேண்டும் திறத் தாலே - பார் உன்படை! உன்னினம் நில்லதன் முன்னணி உனக்குப் பகைவர் எந்த மூலை? நன்று வாழ்ந்திட வேண்டும் - உரம் வேண்டும் - திறம் வேண்டும் - உன் நாட்டிற்கே நீவாழ வேண்டும் - நம் ஞாலப் பெரியார் செல்லும் பாதையினை விடாதே விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.240-241, 1964 24. கொடுங்கோல் முறிக்கும் பெரியார் வாழ்க சில கேள்விகளுக்கு விடை நிலைமண்டிலம் பன்னும் முகைமாப் பாண்டியன் காண்க. பாரதி தாசன் உரைப்ப திஃதே. மன்னு தமிழே திராவிடம் என்று திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை. அன்ன திராவிடம் என்ற பெயர்தான் ஆயிரம் ஆண்டுகள் முன்னமே நமது தென்பால் உள்ள ஐந்து நாட்டையும் தெரிவிப்ப தாயிற் றுலகுக் கெல்லாம். அதேகா லத்தில் தமிழ்நா டெனில்அவ் வைந்தில் ஒன்றையே குறித்த தாகும் இதனைக் கருதியே பெரியார் கண்ட இயக்கத் திற்குத் திராவிடர் கழகம் எதிரிக்கும் விளங்க எனப்பெய ரிட்டார். எதையும் எதிர்ப்பவர் இதையும் எதிர்த்தார்! எதையும் செய்யார் எதையும் மறுப்பார்! எதிர்ப்பும் மறுப்பும் நாட்டுத் தொண்டாக. திராவிட நாடா? திருத்தமிழ் நாடா? எதைமீட்க எண்ணம்? என்ப தான ஒருபெருங் கேள்வியைக் கேட்கின் றவர்கள் ஒருசின்ன உண்மையை மறக்கின் றார்கள் திராவிட நாடே தமிழ்நா டன்றோ! திருத்தமிழ் நாடே திராவிட மன்றோ! திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர். தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பார். திராவிட நாட்டினை ஒட்டி இருந்த தெலுங்கு, கன்னடம், கேரளம் போனபின் திராவிட நாடெனப் பெயர்கூறி இதனைப் பிரிப்போம் என்று செப்புவதா என்பர். கராவா விழுங்கிற்றுக் கேரள நாட்டையே? காக்கையா தூக்கிற்று தெலுங்கு நாட்டை? இராமல் எங்கே போயிற்று கன்னடம்? தில்லி இழுப்பு நோய்க்குள்ளே உள்ளன! மீதி யான திராவிட நாட்டை மேன்மை யான நம்தமிழ் நாட்டை ஓது மிந்தச் சென்னை அரசை ஒன்று பட்டுநாம் மீட்கும் ஓர்ஆற்றலைக் காதாற் கேட்கும் கேரளம் முதலன தில்லியின் காலை விடாதிருந் தாலும் ஏதும் செய்ய முடியாதா நம்மால் இன்றுள ஆற்றல் அன்றைக்கும் இருக்கும். நாவலந் தீவென நவிலும் படத்தை நம்சென்னை அரசினை நீக்கி எரிப்பதால் கூவுவார் தெலுங்கர் குதிப்பார் கேரளர், கொடும்பகை கொள்வார் கன்னடர் என்று நாவும் நோவ நவிலுகின் றார்சிலர் நாங்கள் எரிப்பது படத்தையே படத்தையே தீவில் உள்ள மக்களை அல்ல! சிறிதும் இதனை மறந்திட வேண்டாம். படத்தை எரிப்பினும் கேரளம் முதலன பகைக்கும் என்றால் பகைக்கட்டும் நன்றாய்ப் படம்எ ரிப்பதன் நோக்கத்தை எண்ணிப் பார்க்கட்டும்! காணட்டும்! பகைக்கட்டும் நன்றாய்த் தடங்கொள் தமிழகத் தாய்க்குத வாத தக்கைகள் பகைக்கட்டும் திருந்தட்டும் பின்பு! கொடும்பகைத் தில்லி ஏந்தி டுங்கொடுங் கோலை முறிக்கும் பெரியார் வாழ்கவே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.106-108, 1964 25. பெரியார் சொல் வெல்கவே காலையிலே உணவருந்தி வேலைக்குச் சென்றேன் கடைத்தெருமேற் செல்லுகையில் இருவர்எனை நோக்கி வேலெறிந்த தைப்போலே விட்டெறிந்த சொற்கள் விளைத்தமனத் தொல்லையினை என்னென்று சொல்வேன் சேலோடுவில் புலிஉயர்த்தோர் வழிவந்தேன் என்பான் செந்தமிழ்நாட் டடிமைஇவன் என்றுசொல்லிப் போனார் வேலைக்கு நேரந்தான் ஆயிற்றே என்று விரைவாக நான்நடந்தேன். குறுக்கிட்டான் ஓர்ஆள்! 1 காங்கிரசு மேன்மையினை மிகவாகச் சொன்னான் கதைமுடிந்த பின்என்றன் ஆதரவு கேட்டான் காங்கிரசை ஆதரித்தால் என்னவரும் என்றேன் கைநிறையச் செல்வம்வரும் என்றுரைத்தான். நானும் தீங்கரசை ஆதரித்தால் செருப்படியும் வருமே எனச்சொல்லிச் செல்லுகையில் ஒருநொண்டிப் பார்ப்பான் நாங்கள்தாம் சரியாக நடப்பவர்கள் என்றான் நகைக்காமல் மற்றவர்கள் நொண்டிகளோ என்றேன். 2 அனைத்துலகக் காட்சிஇது! மக்களெலாம், உடைமை அனைத்தையுமே பொதுவாக அடையவைக்கும் கட்சி! தினைத்துணையும் பொதுப்பணத்தை திருடாத கட்சி! தெரிந்தவரைத் தெரியாமற் கொலைசெய்யாக் கட்சி! மனைவிநீ! கணவன்நான் என்றுசோ றுண்டு மங்கையரை ஏமாற்றிப் பிள்ளைகொடுத் தோடும் புனைசுருட்டுக் காரரிலாப் பொன்னான கட்சி! போடிந்த உண்டியிலே பணம்என்றான் மேலும், 3 இவ்வூரார் நிலத்தையெலாம் வீடுகளை யெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்ததிலே உன்றன்விழுக் காடு நெய்வேலி சேர்ந்தாப்போல் நன்செய்ஒரு வேலி. நீஇருக்கும் கூரையண்டை மாடிவீ டொன்றும் இவ்வாரம் உன்பேருக் காக்குவதாய் எங்கள் ஊர்க்குழுவி னோரெல்லாம் தீர்மானம் செய்தார் உன்குடும்பம், நாளைவரும் தேர்தலிலே எம்மை ஒரேயடியாய் ஆதரிக்க வேண்டுமென்று சொன்னான். 4 விட்டாலே போதுமென்று விரைவாக நடந்தேன் விடமாட்டேன் உன்னைஎன மற்றொருவன் வந்தான் பட்டாளத் தலைமைமட்டும் தில்லிக்கு வேண்டும் பார்ப்பானை அணுவளவும் திட்டுவதே இல்லை ஒட்டாக மாகாண உரிமைமட்டும் தேவை உயர்தமிழும் தேவைஅதில் வடமொழியும் வேண்டும் தட்டாமல் எம்மைநீ ஆதரித்தால் போதும் தமிழரசுக் கழகத்தான் இவ்வாறு சொன்னான். 5 அரிவாளும் நெற்கதிரும் அடையாளங் காட்டி அடுத்தொருவன் வந்தென்னை நடுத்தெருவில் நிறுத்தி எரிவெய்யில் கால்களையும் தலையினையும் தீய்த்தே எரிக்கின்ற நேரத்தில் காதினையும் எரித்தான் தரவேண்டும் ஆதரவு தரவேண்டும் என்றான் சரிஎன்றேன் விடவில்லை ஒரேஓட்ட மாகத் தெருத்தாண்டிப் போகையிலே தோழரே என்று செப்பியது காதில்விழத் திரும்பினேன் அங்கே 6 திமுகவென்று சொன்னபடி சிரிக்குமுகக் குள்ளத் திருமேனி ஒன்றுநின்ற ததனைநான் கண்டேன் நமதுகழ கந்தனிலே நீசேர வேண்டும் நடிக்கவைப்போம் சினிமாவில் கதைஎழுதச் செய்வோம் கமழும்உன் பேர்இந்தக் கண்ணில்லா நாட்டில் கலைஞன்நீ கவிஞன்நீ ஆய்விடலாம் என்றான். எமதன்றோ இந்நாடு? சட்டசபை போக எண்ணமா அடுத்தநொடி பார்த்துக்கொள் என்றான், 7 ஓடத்தான் வழிபார்த்தேன் விட்டபா டில்லை உயர்சினிமாக் கம்பெனியாம் வாஎன்று சொன்னான் நாடகமாம்! கம்பெனியாம்! வாவென்று சொன்னான் நங்கைமார் அழகழகாய் உண்டென்றான் பாவி. போடாநீ என்றுரைத்தேன் போனபா டில்லை புறத்தினிலே இழுத்தெறிந்தேன் போகவழி பார்த்தேன் நாடோடி நாயொன்று குரைத்ததென்னைப் பார்த்து நடுங்கிநின்றேன் இதுவுமொரு கட்சியோ என்றே. 8 வேறு நேரந் தவறிநான் வேலைக்குச் சென்றதனால் வேலைக்கு வேண்டாம்நீ நாளைக்கு வாஎன்று நாரா யணசாமி ஐயர் நவின்றிடவே நாலைந்து பிள்ளைகள் பெண்டாட்டி ஒருத்தி தாரும்அரை நாள்வேலை சாகா திருப்பதற்கே என்றுபல வாறுநான் சாற்றவும் அக்கொடியன் ஊரில் இடமில்லா நேரத்தில் நீங்களெலாம் ஒழிந்தால்தான் என்ன முழுகிப்போம் என்றுரைத்தான். எனக்குப்பின் வந்த இரண்டுதடிப் பார்ப்பனர்க்கும் என்கண் எதிரினிலே வேலைதந்தான். ஒருபுறத்தில் நினைப்பினிலே ஆழ்ந்தவனாய் நீளப் படுத்துவிட்டேன் நெஞ்ச நெருப்புக்கு நல்லமழை வந்ததுபோல் சினக்கும் கடல்ஒலிபோல் சாதி ஒழிகஎன்று செப்பியது கேட்டேன் பெருங்கூட்டம் நான்கண்டேன். இனவெறியைக் கிளப்பிவிடும் இவைகளைத் தில்லி இன்றே சிறையிலிட வேண்டுமென்று சொல்லி நாரா யணசாமி நவின்றான் அதேநேரம் நம்தமிழ் நாட்டை விடுவிப்போம் என்றதொரு சீரான பேரொலியும் செவிக்கமுதாய்ச் சேர்ந்ததங்கே! தெருநோக்கி ஓடினேன் ஓடுகையில் என்கையை நாரா யணசாமி பற்றினான் வேலையைநீ ஒப்புக்கொள் என்று நவின்றான் என்நிலையதனை ஆராய்ந்தேன் நாட்டின் அடிமைநிலை ஆராய்ந்தேன் அழுதனவே என்கண்கள்! சுத்திதூக்கின கைகள்! சாதி ஒழிகஎன்றும் தமிழ்நாடு மீள்கஎன்றும் தத்தளிக்கும் என்னருமைத் தமிழர் கிளர்ச்சியினை மோதி அழிக்கஎண்ணும் கட்சிகளும் வாழ்வனவோ! முத்தாகப் பேசிப்பொய் மூட்டைகளை இங்கவிழ்க்கும் தீதான கட்சிகட்கும் ஆதரவு சேர்வதுண்டோ? செந்தமிழர் எல்லாரும் ஓர்குலமே! நம்நாடு போதிய நல்லுரிமை பூணாதா? என்னாத புழுக்களுக்கும் கட்சிஒன்றா? பெரியார்சொல் வெல்லுகவே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.301-304, 1964 26. பெரியார் போர் வெல்லும் சாதி ஒழிக எனக்கூவும் தாய்க் கோழி தானே பற்றுக இளந்தமிழ்ப் புள்ளினம் - சாதி ஆதிப் பெருமை பெரியாரை அல்லால் தமிழருக் களிப்பவர் வேறெவர் உள்ளார்? - சாதி ஏதடா கட்சிகள் இங்கே எவ்வெவர் மூச்சுக்கும் மூச்சாய் போதெல்லாம் தொண்டு செய்கின்றார் போம்வழி போதலே அல்லாமல் வேறு புகலிடம் தமிழருக் கெங்குண்டு தேறு - சாதி தீய பார்ப்புக்குப் படிந்த தேவடியாள் மக்கள் போலே ஆயாது தீதுநெறிச் சென்றாய் அம்மியா காவேரி ஆற்றுக்குத் தெப்பம்? பெரியார் அடிச்சுவடு நன்மை பயக்கும். - சாதி நாய்குலைத் தாநத்தம் பாழாம் நன்றறியாத உன்னால் என்ஆம்? தூய்குரல் எவரும்ஒன் றென்று தோன்றிற்று கேள்அது நாம்பெற்ற செல்வம் பெரியார் தொடங்கிய போர்ஒன்றே வெல்லும்! - சாதி - வேங்கையே எழுக, ப.54, 1978; குயில், 8.7.1958 27. பெரியார் இயக்கம் வாழ்க நரியார் கூட்டம் ஒழிக அறுசீர் விருத்தம் தமிழகம் மீள வேண்டும் தமிழர்கள் வாழ வேண்டும் அமிழ்தான இக்கொள் கைக்கே அருந்தொண்டு செய்ப வர்போல் தமைக்காட்டிக் கொண்டே சில்லோர் தமதுடல் வளர்க்கின் றார்கள்; இமைப்பினில் இவர்கள் எல்லாம் ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்! 1 மக்களை மீட்க நல்ல மனம்மொழி மெய்கள் வேண்டும். இக்கொள்கைக் கான தொண்டே எந்நாளும் செய்ப வர்போல் பொய்க்கோலம் காட்டிச் சில்லோர் பொதுப்பணம் கருது கின்றார் கைக்கூலி கள்தொ டர்பு கழன்றால்தான் இயக்கம் வாழும்! 2 ஆண்டாண்டு தோறும் மக்கள் ஆரியம் தனில்ஆழ் கின்றார் மீண்டாலே தமிழர் மீள்வார் எனுமிந்த மேன்மைக் கொள்கை பூண்டார்போல் காட்டித் தாங்கள் புதுக்கட்சி வளர்க்கும் புல்லர் வேண்டாத பெரியார் காலை விட்டால்தான் இயக்கம் வாழும். 3 தன்னலம் நீக்கி இன்பத் தமிழக நலமே காக்க என்னுமிக் கொள்கைக் காக என்றுதொண் டாற்று வார்போல், மின்னிடு வெண்பொற் காசு, நடிகர்பால் மின்னக் கண்டால் அன்னானின் அடிவீழ் வார்கள் அகன்றால்தான் இயக்கம் வாழும்! 4 அழியாத பார்ப்புக் கோட்டை அழித்திட வேண்டு மென்ற பழியாத கொள்கைக் காக உழைப்பதாய்ப் பசப்பிச் சில்லோர் செழியாதார் செழிப்பார் என்று சிபாரிசால் சுரண்டு வார்கள். அழையாதார் வீட்டில் உண்போன் அகன்றால்தான் இயக்கம் வாழும்! 5 பகலென்றும் இரவே என்றும் பாராது மக்கள் தம்மை அகலாது செய்வ தாமோர் அன்புத்தொண் டியற்று வார்போல் மிகக்காட்டிப் பெரியார் தம்மை வெருட்டவும் கனவு காண்பார் வகைகெட்டார் நாண மில்லார் ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்! 6 அவன்போனான் இவனும் போனான் அடுத்தொரு குள்ளன் போனான் எவன்போனான் எனினும் நாட்டில் இருக்கின்றார் பெரியார் என்றால் குவிந்தது தமிழர் கூட்டம் குலைந்தது பார்ப்பான் ஓட்டம்; நவிலும்இந் நிலையில் தீய நரிக்கூட்டம் ஒழிதல் நன்றே! 7 தானின்றேல் தலையே இல்லை என்றுபேன் சாற்றி னாற்போல் நானில்லை எனில்இ யக்கம் நடக்காதென் றானாம் ஓர்ஆள்! ஏன்என்று கேட்ட தற்கு யான்உழைப் பவன்என் றானாம், பூனை கண் மூடிக் கொண்டால் உலகமா இருண்டு போகும்? 8 உழைப்புக்குக் கூலி யாகப் பெரியாரை ஒழிப்ப துண்டோ? பிழைப்புக்கு வழிசெய் தாரே திருமணம் பெறச்செய் தாரே தழைப்பித்த நிலத்தைப் பைங்கூழ் தாக்கவா முடியும்? அன்னோன் கொழுப்பினை அடக்கு தற்குப் பெரியார்க்குக் கோலா வேண்டும்? 9 பெரியாரின் பேர்ஒ ழிக்க முதல்முழக் கம்செய் தோன்யார்? தெரியாதா? அந்த ஆளே திருத்தொண்டு செய்தோன் என்றும் பிரியாமல் இருந்தேன் என்றும் பேசிஆள் சேர்க்கின் றானாம் புரியாத இருளில் உள்ளான் விடிந்தபின் புரிந்து கொள்வான்! 10 பொன்கையில் இருந்த துண்டா? புகழ்தானும் இருந்த துண்டா? தன்கையை ஊன்றித் தானே எழுந்திடும் தகுதி உண்டா? முன்கைதந் தருளி னாரின் முழுதுடல் வெட்ட எண்ணும் புன்தொழில் உடையான் ஓடிப் போனால்தான் இயக்கம் வாழும்! 11 மிகுதியாய்த் தீமை செய்தோர் தில்லியார்! பெரியார்க் குள்ள தகுதியால் தமிழ கத்தைச் சாகுமுன் மீட்க வேண்டும் புகுந்தது தமிழ்ப்பட் டாளம் போர்ப்படைத் தலைவர் தம்மை இகழ்தலும் கவிழ்க்கும் வஞ்சம் இழைத்தலும் செய்வோன் யாவன்? 12 - தமிழுக்கு அமுதென்று பேர், ப. 29-32, 1978; குயில், 7.7.1959 28. பெரியார் வாழ்க அகவல் இன்றுள முதல்வர் இனியும் முதல்வராய் இருத்தல் வேண்டுமென் றுரைத்தார் பெரியார் இவ்வா றுரைத்ததில் தவறொன்றும் இல்லை. காம ராசர் கருத்து முழுதும் தமிழர் நலத்தையே தழுவிய தாகும் ஆதலால் அவரை ஆத ரிப்பது நம்மனோர் கடனெனப் பெரியார் இந்நாள் சாற்றும் மொழியில் என்ன தவறு? தமிழுக்குப் பகைவர் பச்சைத் தமிழராம் காம ராசர்க்குக் கடும்ப கைவர் என்னும் இந்தச் சூழ்நிலை தன்னில் காம ராசரின் காலை மிதிக்க எண்ணுவோர் தலைவர் பழியையே ஏற்கும் இவ்வாறு பெரியார் இயம்புதல் தவறா? தாழ்நிலை அகற்றித் தமிழர்க்கு வாழ்நிலை வகுக்கும் பெரியார் வாழ்கவே! - நாள் மலர்கள், ப.100, 1978, குயில், 25.01.1957 29. திராவிடர் புரட்சி அகவல் இன்று தமிழன் முன்னேற் றத்திற்கு குன்றளவு முள்ளாய்க் குறுக்கே நிற்பதும் முட்டுக் கட்டையாய் முரண்டுபட் டிருத்தலும் பத்தாம் பசலிகள் பழமைப் போற்றிகள். பெரும்பாலும் அவர்கருவுறு சாதி மதத்திலும் உருவாகி வந்த உதவாக் கரைகள் முந்திய மூத்த தலைமுறை யினரே. எந்தஓர் உண்மையும் எண்ணா மனத்தினர் இளந்தமிழ்த் தலைமுறை இன்றோ நாளையோ கிளர்ந்தெழப் போவதில் எரிமலை யாயினர் விரைந்தொரு புரட்சி பெரியார் அறைகூ வும்நா அசைவினால் உள்ளதே! - நாள் மலர்கள், ப. 87, 1978, தொண்டு, 1.8.1947 30. யாம் கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ? அறுசீர் விருத்தம் எங்களியக் கங்கண்டார் தமிழ்நாட்டிற் குத்தலைவர் இந்த லோகம் துங்கமுறும் வழிதேடித் துயரென்றும் மகிழ்ச்சியென்றும் எண்ணா மல்தம் அங்கத்தை ஆவியினை ஆம்பொருளைத் தாம்பாரா தளிக்கும் நல்ல கங்கைநிகர் உள்ளத்தார் இராமசாமிப் பெரியார் வரவு கண்டோம். 1 பயிர்போன்றார் உழவருக்குப்! பால்போன்றார் குழந்தைகட்குப்! பசும்பாற் கட்டித் தயிர்போன்றார் பசித்தவர்க்குத்! தாய்போன்றார் ஏழையர்க்குத்! தகுந்த வாக்குச் செயிர்தீர்ந்த தவம்போன்றார், செந்தமிழ்நாட் டிற்பிறந்த மக்கட் கெல்லாம் உயிர்போன்றார் இங்குவந்தார், யாம்கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ? 2 கள்ளப்போக் குடையவரின் ஆட்சியினைக் கனமக்கள் மனவெ றுப்பாம் வெள்ளப்போக் கிற்கரைக்கும் வித்தாரப் பேச்சான முத்தா ரத்தைக் கொள்ளப்போ முன்இங்குக் கூடியுள்ள எம்தலைவர் தோளை எங்கள் உள்ளப்பூங் காடாக்கி உச்சியிலே கைகூப்பி உவகை கொள்வோம். 3 சமயவெறி தணிகஎன்றார் சாதிவெறி தணிகஎன்றார் சகோத ரர்போல் அமைகஎன அறிவித்தார்! பெண்களெலாம் நல்லுரிமை அடைக என்றார்! எமைஅகத்தும் புறத்தினிலும் திருத்துதற்கே எம்பெருமான் சொன்ன தெல்லாம் இமயமலை இல்லைஎன்று சொன்னதுபோல் எண்ணினோம் பின்தெ ளிந்தோம். 4 சிந்திக்க இராமசாமிப் பெரியார் சொன்னவண்ணம் செய்க, நாங்கள்! பந்தியிட்ட படைவீரர் தமிழ்நாட்டார்! அவர்தலைவர் பயமே இல்லை! இந்தியினை எதிர்க்கஎன்றார் விட்டோமா வரிச்சுமையை விட்டோ மாஎம் செந்திருவை இராமசாமிப் பெரியாரை வாழ்த்துகின்ற சிந்தை வாழ்க. 5 - நாள்மலர்கள், ப.88-89, 1978, போர்வாள், 13.11.1948 31. பெரியார் (áiw மீண்டார்க்குத் தில்லையில் வரவேற்பு பெரியார் நகர்வலக் fh£á) அவர்தாம் பெரியார் - பார் அன்பு மக்கள் கடலின் மீதில் அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்! - அவர்தாம் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியிருப்பு விடுதலைப் பெரும்படையின் தொடுப்பு! - அவர்தாம் தில்லி எலிக்கு வான்பருந்து தெற்குத் தினவின் படைமருந்து கல்லாருக்கும் கலைவிருந்து கற்றவர்க்கும் வண்ணச் சிந்து! - அவர்தாம் சுரண்டுகின்ற வடக்கருக்குச் சூள் அறுக்கும் பனங்கருக்கு! மருண்டு வாழும் தமிழருக்கு வாழவைக்கும் அருட்பெருக்கு - அவர்தாம் தொண்டுசெய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில்விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்! - அவர்தாம் தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்மானம் பாயும்தலை மேடை நமக்குத் தாண்டி சந்த வாட்படை நமைஅவரின் போருக் கொப்படை! - அவர்தாம் - புகழ்மலர்கள், ப.50, 1978; குயில், 26.8.1958 32. வாழ்க பெரியார் அகவல் வருக! வருக! வண்டமிழ் நாட்டின் பெருகுசீர்த் தந்தையே பெரியாரே வருக! சாதிக் காதரவு தரும்ஓர் ஏட்டினைத் தீக்கிரை செய்க என்றது தீதென்று திங்கள் ஆறு சிறையில் இட்டனர். அழிந்துகொண் டேவரும் நேருவின் அரசினர் தீயர் தீர்ப்புக்கு மகிழ்ந்தீர் ஆயினும், உங்கள் உயிர்நிகர் அன்புத் தொண்டர் நாலா யிரவரைச் சிறையில் நசுக்கி அவரில் எழுவரின் ஆவி குடித்ததை எண்ணி எண்ணி இருந்த சிறையெலாம் கண்ணீ ராக்கிக் கதறினீர், அதனையாம் நினையா திருக்க முடிய வில்லை, நினைதொறும் நெஞ்சு பொறுக்க வில்லை. வருக ஐயா! நன்றே வருக! நரிவட வர்க்கும் நமக்குமாம் தொடர்பைத் திருகிப் புய்க்கச் சிலநாள் செல்லும் வெட்டிப் பிரிக்க வேண்டும் நொடியில்! இருநூ றாயிரம் பேர்கள் இங்குளோம் நல்கும் திட்டப் படியே நடப்போம்! உயிர்பெரி தன்று, பெரிதன் றுடைமை, வெற்றி பெரிது! மனத்தில் உற்றது வெல்க! தமிழ்நாடு வாழ்கவே! - புகழ்மலர்கள், ப.18, 1978; குயில், 17.6.1958 33. பெரியார்க்கு வாழ்த்து! நேரிசை வெண்பா எண்பதாம் ஆண்டடைந்தும் என்தமிழ்நா டெய்துவதே பண்பதாம் என்றே பகைவடக்கர் - மண்புதைய வீழ்த்த எழும்பெரியார் வெல்கவே வெல்கஎன்று வாழ்த்தி மகிழ்கின்றோம் நாம். - பழம் புதுப் பாடல்கள், ப.299, 2005; குயில், 23.9.1958 34. பெரியாரைப் பின்பற்று அகவல் பெரியா ரிடத்தில் பிழைசெய் யாதே! பெரியா ரிடத்தில் பிழைசெய் தவர்கள் வாழ்கின் றார்என் றெண்ணுதல் மடமை! அவர்கள் வாழ்கிலர் மாய்கின் றார்கள் பெரியார் தம்மைப் பின்பற்ற வேண்டும் பெரியார் தம்மைப் பின்பற்று கின்றவர் மாய்கின் றார்என எண்ணுதல் மடமை அவர்கள் மாய்கிலர் வாழு கின்றனர். சாக வேண்டிய தமிழர் சாகிலர்! வீழ வேண்டிய தமிழர் வீழ்கிலர்! வறள வேண்டிய தமிழகம் வறண்டிலது காரணம் பெரியார் கண்கா ணிப்பே! அன்னார் நினைப்பெலாம் தமிழர்க் கேயாம் உரைப்பன தமிழர்க் குறுதி பயப்பன அவர்தாம் தமிழர்க்குத் தமிழகம் அளிப்பவர் அந்த முதியோர் ஆற்றலைத் தாண்டிநீ எங்கே ஓடி எதுபெற முடியும்? மலையுச்சிக் கப்பால் பிலத்தின் கீழ்ப்படி! புகழ்வேண் டாமா உனக்கு? மிகமிக அறம்வேண் டாமா உனக்கு? நிறம்பல கூறித் தமிழரைக் கொல்வார் குதிகால் நரம்பை வெட்டுதல் நல்லதொண் டல்லவா? என்செய வேண்டும் இதற்கெலாம் எண்ணுக! என்றும் பெரியார் நன்னெறி பற்றுக! தப்புக் கணக்குப் போடாதே செப்பேட்டில் உன்புகழ் செதுக்குக நீயே! - பழம் புதுப் பாடல்கள், ப.332, 2005; குயில், 17.2.1959 35. வடநாட்டில் பெரியார் முழக்கம் வெற்றிக் கும்மி கும்மி அடியுங்கள் பெண்களே - நல்ல செந்தமிழ் நாட்டின் கண்களே நம்மிடம் உண்டு வடக்கை வீழ்த்தும் நல்ல நல்ல தமிழ்ப் பண்களே - கும்மி தொடங்கும் போர்பு கன்றிடவே - தம் சொற்போர் கொண்டு வென்றிடவே நடந்தார் பகை நாடு நோக்கி நம் பெரியார் அருள் தேக்கி - கும்மி மக்கள் உயிர்க்குயிர் விடுதலை - அதை மறந்து வாழ்தல் கெடுதலை இக்கதை சொன்னபெ ரியார் காண்க எங்கும் புகழப் படுதலை - கும்மி நேருந மக்குப் பகையாளி - அவன் ஊரிற் புகுந்தநம் காப்பாளி சீரும் சிறப்பும் அடைந்ததை நோக்கினால் நேருவென்பான் ஒரு கோமாளி - கும்மி குடியர சுக்கட்சி என்ப தொன்றும் - முசிலீம் கூட்ட மென்று சொல்லும் மற்றொன்றும் ஒடிந்த உள்ளத்து மக்கள் தொகுதியும் ஒப்பினர் நம்தமிழ் அப்பர் கொள்கை - கும்மி ஐதரா பாத்து நாகபுரி - கான்பூர் இலக்கு மணபுரி வாழு மக்கள் கைதூக்கி வரவேற்றனர் தந்தையார் காட்டிய நன்னெறி கைப்பிடித்தார் - கும்மி நூற்றுக்கு மூன்று பார்ப்பனர் ஆள நோக்கிப் பெரும்பான்மை யோர்மாள ஆற்றிடும் இவ்வாட்சி காற்றிற் பறக்கட்டும்! அறமுழக் கினர்நம் பெரியார்! - கும்மி பவுத்தம் ஒப்பும் பெரியாரே - அந்தப் பவுத்தம் வன்செயல் ஒப்பவில்லை பவுத்தம் ஒப்பாத வன்செயலை - நீர் பற்றுவ தேன்என்று கேட்டாராம் - கும்மி இருண்ட நெஞ்சங்கள் இக்கேள்வி - தனை எழுப்பி நிற்கவும் நம் பெரியார் மருண்ட உலகம் உணர்வு பெற்றிட வழங்கிய விடை கேளீரோ - கும்மி என்னுரை தன்னையே பின்பற்ற வேண்டும் என்பதில்லை என்று புத்தர் சொன்னார் உன்னுடைய அறிவிற் பட்டதைச் செய்கென உரைத்த னர்அவர் கண்டீரோ - கும்மி எப்போது வன்முறை வேண்டுமோ நானதை அப்போது மேற்கொள்ள வேதுணிந்தேன் தப்பேது சொல்லுங்கள் என்று புகன்றனர் தக்கோர் வியந்திட நம் பெரியார் - கும்மி நேருவின் ஆட்சியின் வேரும் அதிர்ந்திட நீண்டவை பற்பல சொற் பெருக்காம் கோரிய கேள்விக்கு நல்ல நல்லவிடை கொட்டி முழக்கினர் நம்பெரியார் - கும்மி திக்கின்றி நேருவின் தீங்கில் நலிந்தவர் தென்னாட்டு வேங்கையின் வன்மை கண்டார் வெட்கினன் நேரு! வடக்கர் விலகினர் வேண்டினர் நம்பெரி யார்துணையே - கும்மி தில்லிக்குப் புறப்பட்டார் பின்னர் செந்தமிழ் நாட்டு மாமன்னர் தில்லித் தலைவர்கள் வந்து குழுமினர் நம் பெரியாரின் திருமுன்னர் - கும்மி சாதியைக் காக்கஓர் சட்டமிட்டார் - அது சட்டமா கட்டாயத் தூக்குமரம் - என மீதியும் சொல்லிய நம்பெரியார் நெறி வெல்க என்றார்களாம் தில்லி மக்கள் - கும்மி - பழம் புதுப் பாடல்கள், ப.333, 2005; குயில், 24.2.1959 36. வந்தனோபசாரப் பத்திரம் விருத்தம் வருகஉயர் இராமசாமிப் பெயர்கொள் அறிஞ! உன்றன் வரவால் இன்பம் பருகவரும் இந்நாளை வாழ்த்துகின்றோம் பனிபறக்கத் தகத்த காயம் பெருகவரும் செங்கதிர்போல் மடமைவழக் கம்பறக்கப் பீடை இங்கு மருவவைத்த பார்ப்பனியம் வடுவின்றிப் பறக்கஉனை வரவேற் போமால் 1 ஆதியிலே வாழ்வடைந்த பார தத்தார்க் கதன்பிறகு பிழைக்கவந்த பார்ப்ப னீயம் சோதியிலே வானத்தைக் கீறி நல்ல சுவர்க்கத்தைக் காட்டியது மெய்யா? பின்னைத் தேதியிலே eik¡fyªJ1 பெருமை பெற்றுச் சிலசிலவாய்த் தமதுநலம் தனைஉ யர்த்திச் சாதியிலே சமயத்தே சாத்தி ரத்தே தனையுயர்த்திக் கொண்டதுவும் மெய்யா? நாட்டிற் பாதியிலே பாதியதிற் பாதி தன்னைப் பணிவதுமுக் கால்இஃதோர் சமுகந் தானோ? 2 பார்ப்பனியம் மேலென்று சொல்லிச் சொல்லிப் பழயயுகப் பொய்க்கதைகள் காட்டிக் காட்டி வேர்ப்புறத்தில் வெந்நீரை வார்த்து வார்த்து மிகப்பெரிய சமுகத்தை இந்நாள் மட்டும் தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கி விட்ட செயல்அறிந்து திடுக்கிட்ட வீரா! நின்னை ஊர்ப்புறத்து மாந்தர்பலர் உணருங் காலை உவக்கின்றாய் உன்பணியில் ஓய்ந்தா யில்லை ஆர்ப்பரித்துப் பணிசெய்யும் தன்மை காண்போம் அரும்பணிக்கு யாங்களுனை வணக்கம் செய்தோம் 3 சமுகத்தில் தாங்களொரு சிறிய தான தனிச்சமுகம் என்றெண்ணி இருப்ப jhY«2 சமுகத்தில் தாமன் மற்றோர் யாரும் தாழ்ந்தோர்கள் என்றெண்ணி இருந்த தாலும் சமுகத்தில் தங்களது செல்வாக் கென்றும் தாழ்வடையப் பார்ப்பதில்லை பார்ப்ப னர்கள் சமுகத்தில் எத்துறைக்கும் தமையே கோரும் தாம்திருத்தும் சாத்திரங்கள் பொய்யென் பாரா? 4 காலமென்னும் சக்கரத்தின் சூழ்ச்சி தன்னில் கடுகளவும் நாம்கலந்து கொண்டோ மில்லை தூலமென இருந்திட்ட பிறநா டெல்லாம் சொல்வதுண்டோ என்னென்ன புதிய எண்ணம் ஞாலமெலாம் புதுவாழ்க்கை இன்ப வாழ்க்கை நடக்கையிலே நம்நிலையை எண்ணிப் பார்க்கில் மூலவயி றெரிவதல்லால் முன்னேற் றத்தின் முதற்படியை மிதித்தோமா இல்லை இல்லை 5 மேல்வருணம் கீழ்வருணம் வேண்டா மென்றால் மிகப்பொறுப்பு கொண்டவன்போல் பார்ப்பான் வந்து நால்வருணம் வேதத்தில் உண்டென் கின்றான் நாலுயுகத் தின்பின்னும் இதையே சொல்வான் பால்யமணம் நாட்டுக்குத் தீமை என்றால் பருவமணம் தீதென்று பகரு கின்றான் மேல்வரட்டும் அறுகோடிப் பறையர் என்றால் விரைந்தோடிப் பார்ப்பனியம் காலைக் கௌவும் 6 நாடுமுற்றும் கோயில்மய மாக்கு தற்கும் நாட்டிலுள்ள சாத்திரங்கள் சம்ம திக்கும் பாடுபட்டுப் பார்ப்பனர்கள் பார்த்தா லன்றோ பாரதத்தார் செல்வத்திற் பொறுப்பி ருக்கும்? பாடைநிறை யப்பிணங்கள் குவியும் போதும் பார்ப்பனர்க்குப் பணம்வாங்கித் தருவ தற்கு நாடுகின்ற மந்திரங்கள் நாட்டி லுண்டு நரிக்கெதிரே ஆடிறந்தால் நகைத்தல் போலே. 7 இளவிதவை மணம்பாவ மென்று சொல்லி எடுத்தெடுத்துக் காட்டுகின்றார் புண்ய rhÞ¤u«3 அளவற்ற மூடவழக் கங்கள் நம்மை ஆட்படுத்திக் கொள்ளுவதை எண்ணி வாழ்வை வளமாக எண்ணுங்கால் பார்ப்ப னீயம் மடையடைத்துப் புனல்இல்லை என்று சொல்லும் புளகாங்கி தம்மிகவும் உண்டு போலும் பொதுநலத்தில் நம்முடைய பார்ப்ப னர்க்கு 8 முப்பத்து முக்கோடி மக்கள் நாடு முடிபுனையும் நற்சமயம் பார்ப்ப னர்க்கு- க் கர்ப்பத்தில் சனியடையும் சமய மென்று கருதுவதால் அச்சிறிய தொகையி னார்கள் எப்போதும் இச்சமுகம் பிறனி டத்தே இருப்பதிலே அன்னவர்க்குக் கவலை யேது? பொய்பகட்டுப் பார்ப்பனரை நம்பு மட்டும் பொதுவாழ்வின் உள்ளீடு மாய்வ துண்மை. 9 பாரதத்தின் இன்றைநிலை என்ன வென்று பார்க்குங்கால் எவ்விடத்தும் எதிலும் நன்கும் வேர்விடுத்துப் பார்ப்பனரின் ஆதிக் கந்தான் மிகச்செழிப்பாய் இருப்பதனைக் காணு கின்றோம். சீரடைந்தான் பார்ப்பானே என்னும் செய்தி சிறுபிள்ளை முதலாக ஒப்புக் கொள்ளும் யார்சொல்வார் இந்நிலையில் பார தத்தார் இன்பநிலை யடைகுவது கூடு மென்று? 10 பார்ப்பனர்கள் புரிகின்ற பசப்பால் மற்ற(ப்) பார்ப்பனர்கள் அல்லாத பேரிற் சில்லோர் ஆர்ப்பதையும் பார்ப்பனரின் ஆதிக் கத்தில் அன்புசெலுத் திடுவதையும் காணுந் தோறும் வேர்க்கின்ற வெயர்வையெலாம் வெள்ள மாகி மிளிர்கின்ற சத்தியமே வித்தாய் இன்பம் சேர்க்கின்ற மனவுறுதி உழவாய்க் கொண்டு சின்னாளிற் பன்னாளின் வளப்பங் கண்ட 11 சுயமரியா தைப்பெயர்கொள் பயிர்செ ழிக்கத் தொண்டுசெய்யும் இராமசா மித்த லைவா! புயத்தெதிரே புவிபெயர்ந்து வருமப் போதும் புலன்அஞ்சாத் தன்மையுள்ள கர்ம வீரா செயற்கரிய செயப்பிறந்த பெரியோய்! இந்தச் செகத்துநிலை நன்கறிந்த அறிவு மிக்கோய்! வியப்புறுநின் இயக்கமது நன்றே வெல்க! மேன்மையெல்லாம் நீஎய்தி வாழ்க நன்றே. - பழம் புதுப் பாடல்கள், ப.106, 2005; குடிஅரசு, 10.2.1929 குறிப்பு : ஈரோடு திருவாளர் ஈ.வே. இராமசாமி நாயக்கரவர்கட்குப் புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் வாசித்துக் கொடுத்த வரவேற்பு எனும் குறிப்பு குடிஅரசு இதழில் பாடலுக்கு முன் இடம்பெற்றுள்ளது. இப் பாடலின் இரண்டு, மூன்றாம் விருத்தங்கள் ஐந்து அடிகளைப் பெற்றுள்ளன. கறுப்புக் குயிலின் நெருப்புக் குரலில் தரப்பட்டுள்ள பாடலில் தென்படும் வேறு வடிவங்கள் வருமாறு: 1. நமைகலந்து (க. F.); 2. ïU¥g jhD« (f.F.); 3. சாத்திரம் (க.கு.) 37. வாழ்க ஈ. வெ. ராமசாமிப் பெரியார் பியாக் - ஆலாபனை இமயமலை தென்குமரி எல்லை நீண்ட இயற்கைவளம் செறிந்திட்ட இந்து தானம் அமைவுற்ற முப்பதுகோ டிப்பேர் ஈன்றும் அடிமையுற்ற காரணத்தை எண்ணிப் பார்த்தால் பியாக் - ஏகம் அழிவைச் செய்யும் பேதப் பேய்கள் அவரது சிந்தைக் கெதிரில் தோன்றும் விழியால் அவைகள் வீழச் சுடும்அவ் வீரர் ராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க! வாழ்க!! பின்னெழுந்து பிழைப்படைந்து வீரங் காட்டிப் பிறநாடு முன்னேறக் காணுங் காலை, முன்னெழுந்த மக்களிங்கு முன்னேற் றத்தின் முனைகருகிப் போவதென்ன எனச்சிந் தித்தார் மூடக் கொள்கை மொய்க்கக் கண்டார் முழக்கு கின்றார் அறிவுச் சங்கம்! ஓடச் செய்தார் அவிவே கத்தை ஓதும் ராம சாமிப் பெரியார் வாழ்க! வாழ்க! வாழ்க!! தேசத்திற் பிறந்தவரில் அறுகோ டிப்பேர் தீண்டாமைப் பூதத்தின் வாயில் நைந்தார் கூசுகின்ற வீச்சினிலே விடுத லைபார் விழுங்கும்பூ தம்சாகும் விதம்பார் என்றார். வீர வாக்குக் கண்டீர்! - வைக்கம் வீரத் தமிழர் தோளை வாழ்த்தீர்! சாரத் தமிழில் அவரைப் பாடீர்! தகுமி ராம சாமிப் பெரியார் வாழ்க! வாழ்க! வாழ்க!! பெண்முழுதும் சிறப்படைதல் வேண்டு மென்பார் பிறப்பிடத்தைப் பேதையென்று சொல்லி - இந்த மண்முழுதும் எதிர்த்தாலும் பெரிதென் றெண்ணார் வாழியபெண் ணுலகமென வாழ்த்து கின்றார். வயதில், அறிவில், முதியோர் - நாட்டின் வாய்மைப் போருக் கென்றும் இளையார் உயர்எண் ணங்கள் மலரும் சோலை! ஓங்கு ராம சாமிப் பெரியார் வாழ்க! வாழ்க! வாழ்க!! நீதமற்ற கொள்கைகளை இனிக்கப் பேசி நிகழ்த்திவந்த தலைவர்களால் என்ன கண்டோம்! காதினிக்கப் பேசியதோர் நரியா ராவே காகத்தின் அப்பந்தான் பறிபோ யிற்று. கதையினில் வருமோர் கைலை வேண்டாம் கையால் தேடும் நொய்நன் றென்பார் எதிர்த்த வர்பால் அன்பும் கொண்டார் இனிது ராம சாமிப பெரியார் வாழ்க! வாழ்க! வாழ்க!! தன்னுழைப்பில் நம்பிக்கை செத்த திங்கே சாமிசெயல் என்றுசொலும் சோம்ப லுண்டு பன்னாளும் பேதங்கள்! மற்றும் மூடப் பழக்கவழக் கங்களெல்லாம் எரித்துத் தள்ளிப் பயனுற நாட்டை விடுதலை நோக்கிப் படுதுயர் நீங்க ஒன்றாய்க் கூட்டிச் சயமுற வைக்கும் சுயமரி யாதைத் தலைவர் ராம சாமிப் பெரியார் வாழ்க! வாழ்க! வாழ்க!!! - பழம்புதுப் பாடல்கள், ப.116, 2005 குறிப்பு : 8.8.1931, 9.8.1931 ஆகிய நாள்களில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில், புதுச்சேரி சுயமரியாதைத் தோழர்களால் வாசித்தளிக்கப்பட்ட பாரதிதாசன் எழுதிய பாடல் இது. 38. சோபன அறை அகவல் மாலைப் போதின் உச்சியில் மலர்ந்து குதித்த நல்ல குதூகல இரவில், துலங்குமோர் வீட்டின் சோபன அறையில் புதிய பெண்ணையும் புதுமாப் பிளையையும், உள்ளமும் உடலும் உயிரும் ஒருங்கே அள்ளி அள்ளி அருந்து கின்ற இன்ப உலகின் எல்லையிற் சேர்க்க அங்கும் இங்கும் மங்கையர் பறந்தனர். *** பெட்டி திறப்பார் பட்டாடை தூக்குவார். சிலபெண்கள் ஓடிக் குலமலர் ஏந்துவார். விரிந்த வானிலும் உளத்திலும் வீசும் பரிமளச் சாந்து பலபேர் அள்ளுவார் விசும்பு நிலாநிகர் வெள்ளிக் கிண்ணியில் பசும்பால் ஏந்தி ஓடுமோர் பசுங்கிளி. பழங்கொண்டு போகுமோர் தங்கப் பதுமை. தகதக வெனச்சிலர் சதிராடும் மயில்கள்போல் அதிரச பக்ஷணம் அள்ளிச் செல்லுவார். *** தாயொரு புறமும் தந்தையோர் புறமும் சுறுசுறுப் பாக விரைந்து தொடர்ந்து மேற்பார்வை பார்ப்பது தோற்பதுமைக் கூத்து. *** ஆநந்தப் பொருள்கள் அமைந்து சிறந்து நறும்புகை ததும்பும் அறையி னுள்ளே மஞ்சம் கெஞ்சிக் கெஞ்சி அழைக்கப் புதிய பெண்ணுடன் அந்நாள் புகுந்தஎம் இராம சாமி இளமாப் பிளைக்கு நவிலொணா மகிழ்ச்சியும் கொஞ்சம் நாணமும்! கலப்பற்ற மகிழ்ச்சி கண்டனன் இந்நாள். *** மக்கள் அடைந்த வறுமைக் கொடுமையை வண்மையிற் கரைக்கும் எண்ணத் தால்அவன் குடியரசு தன்னில் விடுதலை வாசகம் எழுதிய தன்மை பிழையென ஆங்கிலர் திறந்த கோவைச் சிறையில், இந்நாள் கலப்பற்ற மகிழ்ச்சியால் எங்கள் புலிக்கிழவன் போய்ப் புகுந்தனன் வெல்கவே! - பழம்புதுப் பாடல்கள், ப.138, 2005; நகர தூதன், 4.3.1934 குறிப்பு : 22ஆம் வெற்றியில் ஈ.வெ.ரா.வின் ஜெயில் பித்து என்னுந் தலைப்பில் கேசரியின் பேனா நர்த்தனத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்தத் தண்டனையை எந்தவிதமான மனோ பாவனையுடன் ஏற்றுக் கொண்டார் என்பதை பாரதிதாசன் கவிச் சித்திரம் வரைந்து கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறது. அந்த ஓவியமே இந்தச் சோபன அறை என்பது என்னும் பிற்குறிப்பு பாடலின் கீழ் தரப்பட்டுள்ளது. 39. திருமணத்தில் தலைமை வகித்த பெரியார்க்கு அளித்த வரவேற்பு அகவல் தமிழரின் மாபெருந் தலைவரே வருக! அமுத மழையே அன்பே வருக! திராவிடர் தலைமைப் பெரியீர் வருக! இராதிடர் அஞ்சேல் என்றீர் வருக! அறிஞர்க் கறிவை அளித்தீர் வருக! நெறிகளில் உயர்நெறி நிகழ்த்தினீர் வருக! பாவலர் இருட்குப் பகலே வருக! நாவலர் நல்வழி நவின்றீர் வருக! அரசியல் நிபுணர்க் கரசே வருக! சுரம்நிகர் ஏழையர் தொண்டரே வருக! தாழ்ந்தோம் என்று சலித்தநற் றமிழர் வாழ்ந்தோம் என்று மார்தட்டி எழ மக்கள் நிகர்என வண்முர சதிர்த்து மிக்கிருள் கடிந்த விரிகதிர் வருக! சாதிஎன்பதின் ršÈbt®1 அனைத்தும் தேதிக்கொன்றாய் தீர்த்தீர் வருக! அமியும் அடிமேல் அடிக்க நகருமாம் சமயம் நகரச் சாடினீர் வருக! கண்களும் வாழ்வின் கவிதையும் போன்ற பெண்களின் விடுதலை பேணினீர் வருக! பன்னூற் றாண்டுகள் இன்னலிற் கழிய இந்நூற்றாண்டின் இன்பே வருக! பன்னாடுக ளெமைப் பழிகூற நீவிர் இந்நா டெழில்பெற எய்தினிர் வருக! ஆத்தி கத்தையும் சாத்திரத்தையும் நாத்தி றத்தோரே fh¤âd®2 எனினும் மாந்தரின் அறிவினை மாய்க்குமேல் அவைகள் தீர்ந்தன எனச்செயல் செய்தீர் வருக! தரகரைக் கொண்டதும் தன்னலம் கொண்டதும் ஒருவனை ஏழையாய் ஒருவனைச் செல்வனாய்ப் படைத்ததாய்ச் சொல்லப் படுவதும் கடவுளின் அடையாளங்கள் ஆமோ என்று வறியர்க்குண்மை வகுத்தீர் வருக! அறிஞரின் சீற்றம் அடக்கினீர் வருக! பழநூற் பேரால் பாவலர் பண்டிதர் எழிலுறு புலவர் எனவெளி வருவோர் புதுநூற்செய்யும் புலமை இலாமையால் அதுநூல் அதுகலை அதனாற் பிழைப்பெனும் கூனல் உள்ளம் கொண்டவர்க் கெல்லாம் மானம் உணர்த்த வல்லீர் வருக! பயனுறு வாழ்வின் பாதை காட்டும் சுய மரியாதை சொன்னீர் வருக! நாவலந் தீவின் நற்பயன் ஆன ஈ.வே. ரா.எம் இறையே வருகவே. துன்புறு சுசீலா இராம மூர்த்தி m‹òJ3 திருமணத் தலைப்பினை ஏற்றுப் பலப்பல நாட்டுப் பணிகட் கிடையில் அலுப்பை நோக்கா தையா வந்தனிர் எங்கள் நன்றி எங்கள் வணக்கம் தங்கட் குரியன தமிழ் காத்தவரே மடமையும் மூட வழக்கமும் மக்களின் கடமையாய்க் கிடந்ததைக் கட்டொடு வேரோடு சில்லாண்டிற் சாய்த்த ராமசாமி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே! - பழம் புதுப் பாடல்கள், ப.211, 2005 குறிப்பு : மற்றவர்கட்காக வாழ்த்து முதலியன எழுதிக் கொடுக்கும் இயல்புடை யவர் கவிஞர். இப்பாடல் புதுவை கே. நாதமுனிக்காக எழுதப்பட்டது. பாடலின் இறுதியில் பாரதிதாசன் எழுதியது என்று குறிக்கப் பட்டுள்ளது. திருமண நாள் 16.9.1943. திருவளர் சுசீலா தேவி இராமமூர்த்தி திருமணத்தில் தலைமை வகித்த தமிழர் தலைவர் ஈ.வெ. ராமசாமிப் பெரியார்க்கு அளித்த வரவேற்பு என்பது வரவேற்பு இதழில் இடம்பெற்ற முழுத் தலைப்பு - புதுவை பாரதி தாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையத்தினின்று பெற்றது. 1. சல்லிவேர்; 2. காத்தனர்; 3. அன்புறு - என இருத்தல் வேண்டும். 40. உலகுக்கு மீட்சி உண்டா நிலைமண்டிலம் புத்தர் - பெரியார் - வள்ளுவர் கந்தை உடைஉடுத்துக் கைப்பிள்ளை தானேந்தி வந்தாள் ஒருத்தி வழியேதும் இல்லைஉங்கள் வீட்டில்இட்ட வேலைசெய்வேன் வேண்டிய தெல்லாம்என்றன் பாட்டுக்குத் தக்கபடி என்று சொன்னவுடன் சோறு தருவதென்றும் திங்கள் தொறும்வெள்ளி ஆறு தருவதென்றும் வேலைக் கமர்த்திடவே இட்டபணி செய்தாள் நடுப்பகலில் என்மனைவி வட்டிலிலே சோறுகறி வட்டித்தே உண்என்றாள். சாலையிலோர் வீட்டுக் குறட்டில்என் தாய்ஒருத்தி மேலும் இரண்டுபேர் தங்கையரை வெம்பசிதான் வாட்டி வருத்தும்இந்த வட்டிலொடு போய்அவர்க்கே ஊட்டி வரவேண்டும் என்றே உரைத்துநின்றாள். உண்ணாரோ? ஊட்டுவதேன்? என்றுரைத்தாள் என்மனைவி கண்ணில்லார் மூவரும்என் றாள்கலங்கும் கண்ணுடைய என்மனைவி நெஞ்சம் இரங்கியே நீஓடி அன்னவரை இங்கே அழைத்துவா என்றுரைத்தாள். சாய்வுநாற் காலியிலே சாய்ந்திருந்தேன் என்எதிரில் தாய்இரண்டு பெண்கள் தலைமகளின் கைபற்றி வந்து வரிசையாய் நின்றார்கள் பிள்ளைக்குக் குந்தியே பாலூட்டிக் கொண்டேவே லைக்காரி மூவர்க்கும் சோறூட்டி மூன்றுவிரல் தானுண்டு யாவர்க்கும் நெஞ்சில் இரக்கத்தை ஊட்டிநின்றாள், ஏழைப் பணிப்பெண்ணே இந்த நகரமன்றம் ஏழைகளுக் கேதேனும் ஏற்பாடு செய்கிலையோ என்றுநான் கேட்டவுடன் இந்த நகரமன்றம் ஒன்றுமில்லா எங்கட்கா ஒத்தாசை செய்யுமென்றாள் எண்ணக் கடலிலே நான் ஆழ்ந்தேன் இக்கிழவி கண்ணில்லாள் காமத்தை வென்றிருந்தால், இன்றிந்தப் பெண்ணிரண்டும் ஏழைப் பெரியபெண்ணும் பிள்ளையும் உண்ணுதற்கும் கட்ட உடைக்கும் சிறிதேனும் ஒத்தாசை யற்ற உலகில் பிறந்தழியார்! தொத்துநோய்க் காமம்வந்து தொட்டுவிட்ட போதிலுமே கற்றவர்கள் சொல்லும் கருத்தடைமு றைகளைப்பின் பற்றியிருந் தாலும் பழிநேர்ந்தி ராதன்றோ! கண்ணிலார் இம்மூவர் மட்டுமா? எண்ணிலார்! எண்ணிலார் காதிலார்! காலிலார், கையிலார் எண்ணிலார்! உண்ணிலார் எண்ணிலார்! ஏதிருந்தும் உள்நிறை வில்லார் உலகத்தில் எண்ணிலார் தப்ப முடியாத சாவுகள் மூப்புநோய் எப்புறமும் உண்டன்றோ, முப்போதும் துன்பன்றோ! புத்தர்பிரான் அன்றுகண்ட பொல்லா உலகென்முன் பொத்தெனக்கு தித்தது. நான் போ என்றேன் போகவில்லை எண்ணிப்பார் என்றுரைத்தான் எங்கிருந்தோ புத்தர்பிரான் எண்ணக் கடலினின் றேறவில் லைநானும் மக்களெலாம் காமத்தை மாய்க்கத்தான் வேண்டுமா? மக்கள்வரும் வாயில்களைச் சாத்தத்தான் வேண்டுமா? யாரும் பிறவாமை இன்ப நிலைதானா? பாரில் பிறப்புநிலை பட்டழிய வேண்டுமா? ஈரா யிரத்தைந்நூ றியாண்டின்முன் இவ்வுலகில் சீரார்ந்த புத்தர்நெறி இன்னும் சிறக்குமா? ஈரோட்டார் என்பெரியார் மக்களிலே தாழ்வுயர்வுப் போராட்டம் வேரற்றுப் போனால் உலகில் நலிவில்லை எய்தும் நலம் என்றருளி னாரே! தலையின்மேற் கொள்ளவே தக்கதன்றோ அன்னதுவும்? வள்ளுவனார் இப்பெரிய வையத்தைக் காப்பதற்கோர் தெள்ளு தமிழ்ப்பாட்டும் செப்பினர் - அஃது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.309-311, 1964 41. புத்தர் புகன்றார் அகவல் பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பி விடாதே உண்மை என்றுநீ ஒப்பி விடாதே! பெருநா ளாகப் பின்பற்றப் படுவது வழக்க மாக இருந்து வருவது என்பதால் எதையும் நீநம்பி விடாதே உண்மை என்றுநீ ஒப்பி விடாதே! பெரும்பான் மையினர் பின்பற்று கின்றனர் இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர் என்பதால் எதையும் நீநம்பி விடாதே! பின்பற் றுவதால் நன்மை யில்லை! ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர் இனிய பேச்சாளர் என்பதற் காக எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்! ஒருவர் சொன்னதை உடன்ஆ ராய்ந்துபார் அதனை அறிவினாற் சீர்தூக் கிப்பார் அறிவினை உணர்வினால் ஆய்க! சரிஎனில் அதனால் உனக்கும் அனைவ ருக்கும் நன்மை உண்டெனில் நம்ப வேண்டும் அதையே அயராது பின்பற்றி ஒழுகு! இவ்வுண் மைகளை ஏற்றுநீ நடந்தால் மூடப் பழக்க வழக்கம் ஒழியும் சமையப் பொய்கள் அறிவினாற் சாகும்! இவைகள் புத்தர் பெருமான் உவந்து மாணவர்க்கு உரைத்தவை என்பவே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.137-138, 1977 42. புத்தர் புகன்றார் இல்லை எண்சீர் விருத்தம் நோன்பென்றால் கொல்லாமை என்று புத்தர் நுவன்றுவந்தார்! கொன்றுண்ணும் மக்கள் யாரும் ஏன்றுகொண்டார்; நல்லொழுக்கம் பரவிற் றெங்கும்! இருள்உளங்கள் ஒளியாகும் நிலையில் ஓர்நாள் தேன்பொழியும் மலர்த்தாரான்; திருவார் மன்னன் சுதரிசனன், புத்தர்பிரான் திருத்தாள் நண்ணி ஊன்உண்ணும் வழக்கத்தை மறுக்கின் றீர்கள், ஊர்இதனை ஒப்பவில்லை! என்று சொன்னான். புத்தர்பிரான் சுதரிசற்குப் புகலு கின்றார்; பொன்னுயிர்கள் இன்னலுறப் புரிதல் வேண்டாம்! இத்தரையில் உனக்கூறு நேரும் போதில் எவ்வாறு துடித்திடுவாய்? அதுபோல் தானே அத்தனையாம் உயிருக்கும் இருக்கும்! நீயே அறிவிருந்தால் எண்ணிடுதல் வேண்டும், என்றார் அத்தனே, நான்கொல்லேன், பிறர்கொன் றீந்தால் அதையுண்பேன் அனுமதிப்பீர்! என்றான் மன்னன். எவன்கொன்று நினக்கீவான்? ஈவா னாயின் ஏற்றுண்பாய்! என்றுரைத்தார் அருளின் மிக்கார்! அவனுக்குக் கொன்றுவந்து கொடுத்தார் இல்லை! அம்மன்னன் மகிழ்ந்ததுவு மில்லை! ஆனால் தவப்பெருமான் இவ்வாறு சொன்ன சொல்லைச் சமணர்களும் சைவர்களும் தலையில் தூக்கி இவர்கண்டீர் மீனுண்ணச் சொன்னார்! ஆட்டை இழுத்தறுத்துக் கொலைபுரியச் சொன்னார்! என்றார்; பன்றிவெட்டச் சொல்லினார் புத்தர்! என்றார்; பசுவெட்டச் சொல்லினார் புத்தர்! என்றார்; இன்றுவரை புத்தர்மேற் பழிசு மத்த இடைவிடா மற்புளுகி வருகின் றார்கள்! தன்னேரி லாப்புத்தர் நெறியை வீழ்த்தித் தம்சமயம் மேலோங்கச் செய்யும் சூழ்ச்சி நன்றாமோ? உலகுக்குக் கொல்லா நோன்பை நடுவாய்ந்து முதற்புகன்றோர் புத்தர் தாமே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.175-176, 1977 43. எங்குற்றான்? g‹Ü®¢bršt«1 அறுசீர் விருத்தம் மார்புற அணைத்து நாதன் மங்கைக்குத் தந்த இன்பம் சார்புறத் தேகம் தன்னை மனத்தினைத் தழுவும் நேரம் நேரினில் இருந்த நாதன் மறைந்தனன் என்றால் நேயக் கார்குழல் மங்கை கொள்ளும் கடுந்துயர்க் களவு முண்டோ? 1 இறைந்தநற் றமிழர் தம்மை இணைத்தசீர் இராம சாமி அறைந்தநல் வழியே இந்தி அரவினைக் கொன்றான் செல்வன் நிறைந்தஅத் தேனை நாட்டார் நினைந்துண்ணும் போதே அன்னோன் மறைந்தனன் என்றால் யார்தாம் மனம்துடி துடிக்க மாட்டார்? 2 எல்லையில் தமிழர் நன்மை என்னுமோர் முத்துச் சோளக் கொல்லையில் பார்ப்பா னென்ற கொடுநரி உலவும் போது, தொல்லை நீக்கிட எழுந்த துயரினில் பன்னீர்ச் செல்வன் இல்லை யேல்படைத் தலைவன் இல்லைஎம் தமிழ்வேந் துக்கே 3 ஆங்கில நாட்டில் நல்ல இந்திய அமைச்ச னுக்குத் தீங்கிலாத் துணையாய்ச் சென்றான் சர்பன்னீர் செல்வன் தான்மேல் ஓங்கிய விண்வி மானம் உடைந்ததோ ஒலிநீர் வெள்ளம் தூங்கிய கடல்வீழ்ந் தானோ துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள். 4 பண்கெட்டுப் போன தான பாட்டுப்போல் தமிழர் வாழும் மண்கெட்டுப் போமே என்னும் மதிகெட்டு மானம் கெட்டும் எண்கெட்டும் தமிழர் பல்லோர் பார்ப்பனர்க் கேவ லாகிக் கண்கெட்டு வீழும் போதோ கடல்பட்ட தெங்கள் செல்வம்! 5 சிங்கத்தை நரிய டிக்கும் திறமில்லை எனினும் சிங்கம் பொங்குற்றே இறந்த தென்றால் நரிமனம் பூரிக் காதோ? எங்குற்றான் செல்வன் என்றே தமிழர்கள் ஏங்கும் காலை இங்குற்ற பூணூல் காரர் எண்ணம்பூ ரிக்கின் றார்கள். 6 j‹khd«* காத்த பன்னீர்ச் செல்வன்தான்! நடந்தான் தன்போல் பின்மானம் காக்கக் பல்லோர் பிறந்திடப் பயிற்சி தந்தான்! தன்மானம் காக்கும் ராம காழியின் புதுக் கொள்கைகள் சன்மாநம் பெற்ற நாடு தமிழ்நாடு! நன்று வாழ்க! 7 - பாரதிதாசன் கவிதைகள், முதற் பாகம் - மூன்றாம் பதிப்பு, குடிஅரசு பதிப்பகம்-1944, ப.190-192 *ãw பதிப்புகளில் இவ்விருத்தம் இடம்பெறவில்லை. 44. பன்னீர்ச் செல்வன் எடுப்பு ஆரியம் என்ற குறைகொள்ளிப் பிணமும் அற்றிருக்கும் அவன் இற்றைநா ளிருந்தால் - ஆரியம் என்ற ... உடன் எடுப்பு போரிலே தமிழர்க்குப் பன்னீர்ச் செல்வன் பொதுப்படைத் தலைவன் எதற்கும் அஞ்சாதவன் - ஆரியம் என்ற ... அடிகள் திராவிடந் தனில் திராவிட மொழியல்லால் எந்த மொழியும் தன்ஒரு காலை எடுத்து வைத்திடில் உரிப்பேன் தோலை, வாராதே இந்தியே என்றுதன் போர் வாளெடுத்த பன்னீர்ச் செல்வன் பேர் வாழ்க! - ஆரியம் என்ற ... அழுதுகொண் டிருந்த நம்தமிழ் அன்னை சிரித்தாள் என்றால் அவன் திறம் கண்டதால்! தொழுது பிறரடி தொடர்ந்த தமிழர்கள் தூய உணர்வு கொண்டிடச் செய்தவன் பழந்தமிழ்ப் பன்னீர்ச் செல்வன் பேர்வாழ்க! - ஆரியம் என்ற ... - தேனருவி, ப.95 - 96, 1956 45. தமிழ்நாட்டுத் தவக்கொழுந்தின் kiwî* எண்சீர் விருத்தம் நல்லதொரு நேரத்தில் பொல்லாச் சேதி நாம்கேட்க லாயிற்றா! தமிழர் தங்கள் வல்லஒரு படைத்தலைவன் அறத்தின் மிக்கான் மறத்தமிழன் சர்பன்னீர் செல்வன் இந்நாள் இல்லை;அவன் மறைந்துவிட்டான்; வரவே மாட்டான். மீளாத விடைபெற்றான் என்கின் றார்கள். சொல்வதுண்டோ தமிழர்படும் துன்பந் தன்னைத் தூர்ப்பதுண்டோ தமிழரது கண்ணீர் ஊற்றை! 1 நாட்டுரிமை யின்பேரால் தமிழர் தம்மை நச்சரவுக் கூட்டத்தார் காய்த்துக் கொண்டு கேட்டையெலாம் தமிழர்க்குத் தந்து, தங்கள் கிளையோடு நலத்தையெலாம் உறிஞ்சு தற்கே மாட்டவந்தார் இந்தியினைத் தமிழ ரெல்லாம், மறுத்துநின்று போரிட்டார்; வெற்றி கண்டார்! தேட்டமுதம் தமிழர்உணும் நேரம், பன்னீர் செல்வனையோ பிரிவுற்றுத் திகைக்க வேண்டும்! தமிழர்நலம் காப்பதற்கு நீதிக் கட்சி தமிழ்நாட்டில் தோற்றுவித்த அறிஞர்க் குப்பின் சமர்விளைக்கத் தலைவனின்றி யிருந்த காலை தனித்துவந்தோன், தமிழர்பிரான் இராம சாமி! நமரங்காள் அஞ்சாதீர் என்றெ ழுந்தான்! நன்றெனவே உடனெழுந்தான் பன்னீர் செல்வன்! தமிழர்பிரான் தன்னருமைப் படைத்த லைவன் தனையிழந்தால் சலியாதோ சலியா உள்ளம்! 2 ஆரியரின் சூழ்ச்சியினால் கனத்த மண்ணை ஆழஉழுது ஒற்றுமையை விதைத்தும், வாழ்வு ÚuˤJ¤* தமிழர்நலம் என்னும் வாழை நிலையுயர்ந்து பூத்துக்காய்த் திருக்கு மட்டும், சீரியநற் றொண்டுசெய்தான் பன்னீர் செல்வன்! செந்தமிழர் தமைஇந்நாள் பிரிந்தான்-அந்தோ! கோரியநற் பழம்பழுக்கும் தமிழ்நாட் டார்கள் கூடிஉண்பார் அவனைஎண்ணி இரங்கு வாரே! 3 இங்கிலாந்தில் இந்தியரின் அமைச்ச ரின்பால் இருந்துதவக் கோரியதால் பன்னீர் செல்வன் மங்கியுள்ள தமிழர்நலம் கோரிச் செல்ல மனங்கொண்டான்! தனதுநலம் மறுத்த செம்மல்! துங்கமுறு தமிழரது செல்வந் தன்னைச் சுமந்துசென்ற அனிபால்ஆ காய ஊர்தி இங்குள்ள படைச்சிறியர் களிப்புக் கொள்ள இட்டதுவோ நடுக்கடலில் துயர்தான் என்னே! 4 தமிழ்நாடு தமிழர்க்குத் தமிழர் நாட்டில் சனியாக வந்துள்ள ஆரி யர்கள் நமரல்லர் நம்பகைவர் அந்நாள் தொட்டே! நமதுகலை வாழ்க்கைமுறை வேறே உண்டு நமையேநாம் நம்பிடுவோம்! பிறரின் சூழ்ச்சி நஞ்சுதனை விலக்கிடுவோம்! என்று சொல்லும் அமுதான மொழிகளெல்லாம் பன்னீர் செல்வன் அழகியவாய் இருந்துவரக் கேட்ப துண்டே! 5 தஞ்சைபெற்ற தமிழ்நாட்டுத் தவக்கொ ழுந்து தமிழ்மொழியின் படையாட்சி யுடைய நம்பி நெஞ்சையள்ளும் பெருந்தன்மைச் செயல்ப டைத்தோன் நிறைசெல்வன் குறைவற்ற பன்னீர் செல்வன்! பஞ்சையுளத் தானல்லன்; கொள்கைக் காகப் பரிந்துபோ ராடும்அண்ணல் மறைந்தான் இங்கே! மிஞ்சுமவன் பெரியபுகழ் மறைவ தில்லை மிகுதமிழர் அவன்நன்றி மறப்ப துண்டோ? 6 - புகழ் மலர்கள், ப.72-74, 1978; நகரதூதன், 31.3.1940; குடிஅரசு, 14.04.1940 46. பிரிந்த பிரானைப் பெறமுடியும் பஃறொடைவெண்பா பூரிக்கும் தாரகைப் புள்ளிக் கருநீலச் சீரை உடுத்துச் சிரித்த நிலாமுகத்தைக் காட்டுகின்ற வானே! கலியாணம் பேசாமல் தோட்டப்பூ வாசத்துத் தோளால் எனைத்தழுவ வந்த பொதிகை மலைக்காற்றே! - மகிழ்கின்ற சந்தத்தால் நல்ல ஒளிஇரவைத் தாலாட்டி என்னை உனக்காக்க எண்ணும் பறவையே! தின்னக் கொடுத்தாலும் தேவையில்லை என்றுசொல்லி வேலையுள்ள போதுவந்து வேடிக்கைப் பாட்டுரைத்துக் கூலிக்குக் காசு கொடு என்று கூத்தாடும். ஆசைக் குழந்தைகளே! - அன்பு மனையாளே! ஓசைப் படாமல் இருப்பீர்; ஒதுங்கிநிற்பீர்; *** என்னுளத்தைத் தீண்டா திருக்கஉம்மைக் கெஞ்சுகின்றேன் இந்நிலத்தார்க் குள்ளதுபோல் என்நெஞ்சும் ஒன்றேதான் சந்தோஷம் துக்கம் இரண்டும் தனித்தனியாம்; சிந்தை ஒரேசமயம் இரண்டினையும் சேர்வதில்லை. துன்பத்தைக் கொஞ்சம் சுவைபார்க்கப் போகின்றேன். இன்பத்தை நீட்டாதீர் என்னிடத்தில்! போய்விடுங்கள். அந்த மனிதன்தன் ஆவி பிரிந்தநாள் இந்தநாள். கேட்டதும் நான்இந்த இரவில்தான். பன்னீர்ச்செல் வன்மறைந்தான் என்று பகர்ந்தமொழி இந்நேரத் â‰jh‹1 எனதுளத்தை வாட்டியது. *** கல்வி, அறிவொழுக்கம், சீதக் கடல்போன்ற நல்லன்பு, செந்தமிழர் மாட்டு நனிதயவு. நெஞ்சில் உறுதி, நினைப்பில் புதுத்தன்மை, வஞ்சகர் பேச்சில் மயங்காமை என்னும் குணம்செயல்கள் வாய்ந்தோன், குறைவொன்றில் லாத பணக்காரன், நல்ல பதவி தனிலிருந்தோன். *** இத்தகைய மாண்புகள் தன்பால் இருக்கையிலும் அத்தலைவ ராம்ராம சாமிப் பெரியார்பால் என்ன அடக்கம் தெரியுமா? அச்செல்வன் தன்னைத் தமிழர்க் குதாரணமாய்த் தானளித்தான். சென்னைமா நாட்டில்அச் செல்வன் தலைமைபெற்ற அன்று. பொதுமக்கள் சூடவந்த ஆரத்தைக் கையேந்தித் தன்னிரண்டு கண்ணிற் புனலேந்தி வையப் பெரியார் சிறைதனிலே வாழ்வதெண்ணித் தோளுக்குத் தந்தமலர் தூய பெரியாரின் தாளுக்குச் சூடுகின்றேன் என்றான் தகையுடையான்! ஏன்தமிழா என்றழைத்தால் அவ்வளவில் நாட்டுக்கே நான்தலைவன் என்று சுயநலத்தை நாடுகின்ற கூழைமட்டை, பேயத்திக் கொம்பு முருங்கைமிலார் தாழங்காய் எல்லாம் தலைதுள்ளிப் போகுமிந்நாள். தேசப் பொதுஒழுக்கம் காட்டவந்த சீமானை, நாசக் கொடியவரின் நாவடக்கும் நாவலனை. நம்தமிழர் நாடு நமக்கென்றும், ஆரியர்கள் சொந்தம்பா ராட்டுவது சூதென்றும் சொன்னவனை- ப் போக்கடித்த தெண்ணுகின்ற போதெல்லாம் கால்வாரித் தூக்கி அடிப்பதுபோல் ஆகிடுதே தொல்லைஎன்னே? *** செந்தமிழ் நாட்டார் எனது செழுந்தமிழர் அந்தப்பன் னீர்ச்செல்வன் ஆசையினை எண்ணட்டும்! நல்லொழுக்கம் எண்ணட்டும்! செந்தமிழ் நாட்டுக்கே அல்லும் பகலும் அநவரத மும்புரிந்த தொண்டு நினைக்கட்டும்! பேதமே சூழ்கின்ற முண்டங்க ளைத்திருத்தி, மூச்சுவிடு வேனென்று கொண்ட உறுதி தனிலுள்ள குட்டுதனைக் கண்டு தெளியட்டும்! தெளிந்தால் கடிதில் பிரிந்த பிரானைப் பெறமுடியும். நெஞ்சே புரிந்ததா என்சொற் பொருள்! - பாரதிதாசன் கவிதைகள்; மூன்றாம் பதிப்பு, ப.187-189, 1994; பழம் புதுப்பாடல்கள், ப.179, 2005. குறிப்பு : நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி. பன்னீர்ச்செல்வத்தின் மறைவுக்குப் - (1.3.1940) பின் ஈரோடு குடிஅரசு பதிப்பக வெளியீடாக வந்த பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதியின் மூன்றாம்பதிப்பு - 1944 இறுதியில் புதிதாக இணைக்கப்பெற்ற பாடல் இது. பின் வந்த பதிப்புகளில் இப்பாடல் இடம்பெறவில்லை என்பதும் பலரும் காணக் கிடைக்காத அரிய பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கன. 1. திற்றான் - அல்லது தில்தான் என்று இருத்தல் வேண்டும். 47. தேனருவி திரு. வி. க. தேனருவி திரு. வி. க. செந்தமிழ்ப் பேச்சும் எழுத்தும் இன்பத் - தேனருவி திரு.வி.க. கானல் நடுவில் மலர்ச்சோலை யாகக் காத்தார் தமிழ்மணம் காணாத நாளில் கூனிக் கிடந்த தமிழர் விழிக்க வானுயர் திறத்தால் வழங்கும் அனைத்தும் - தேனருவி திரு.வி.க. தெளியார்க் கொன்றை ஒளிமறை வின்றித் தெளிவு படுத்தும் அவர்க்குள்ள திறமை, துளியே னும்பிறர்க் கிருந்த தில்லை; இருக்கப் போவதும் இல்லை. தித்திக்கும் - தேனருவி திரு.வி.க. சமையம் இட்டுச் சாத்திய இயற்கையின் அமைவையும் அழகையும் ஆர வுண்டு நமையும் உண்ணீர்என நல்கும் தமிழ்நடை அமிழ்தன்று கனிபிழி ஆறன்று முத்தமிழ்த் - தேனருவி திரு.வி.க. வள்ளி முருகன் வாழ்க்கைக் கதையினைத் தள்ளி எழிற்குன்றம் மாலைவா னொளியின் வெள்ள நீராடும் வேடிக்கை கண்டே உள்ளம் பூரித்து முருகென் றுரைத்தது - தேனருவி திரு.வி.க. பெண்ணின் பெருமையைத், தொழிலாளி உரிமையைக் கண்ணான தமிழின் கவினார்ந்த உண்மையைப் புண்ணான இந்தி புகுத்தும் சிறுமையை எண்ணிய எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும் - தேனருவி திரு.வி.க. - தேனருவி, ப.93-94, 1956 48. திரு. வி. க. அறுபதாம் ஆண்டு நிறைவு வாழ்த்து மலிஇரு பத்தைந் தாண்டாய் வண்டமிழ் நாட்டி லேநம் கலியாண சுந்த ரர்தம் தொண்டுகள் கண்டு வந்தேன். எலி எனப் புலவர், வீட்டில் இருக்கையில் சுந்த ரர்தாம் புலிஎன வெளியிற் போந்தார் முதல்முதல் அரசி யற்கே! 1 தமிழறி விலாதார் செய்தித் தாள்எழு திடுவ தற்கும், தமிழுளார் எழுது தற்கும் வேற்றுமை இருந்த தன்மை தமிழ்நாடு கண்ட தந்நாள்; தமிழ்காணார் மீன்க டைக்குள் தமிழறி கலியா ணத்தார் தமிழேடு முல்லைக் காடே! 2 துடித்திடு தேச பக்தச் செய்தித்தாள் தொடக்கம் செய்தார்; பிடித்தன ஓட்டம் மற்றைப் பெரும்பெரும் தாள்கள் எல்லாம். படுத்தநம் செந்த மிழ்த்தாய் படிசிலம் படிபெ யர்த்தே எடுத்ததை அந்நாள் கண்டேன்; எழில்கூத்திந் நாள்காண் கின்றேன். 3 வேறு திரு.வி.கலி யாணசுந் தரனாரின் செந்தமிழ்க் கட்டுரைகள் என்னும் அருவிகளில் ஆடியநல் லறிஞர்களும் அறிவுபெற்றார், இளைய சிட்டுக் குருவிகளும் தமிழ்க்காதல் தலைக்கேறிக் குதித்தனவே! வடசொல் லின்கைக் கருவிகளும் தனித்தமிழின் கனிச்சுவையைக் கண்டுகளித் தனவே யன்றோ? 4 உணர்வெழுப்ப மெய்ப்பாடும் உடனிசையும் மொழிச்சிறப்பும் ஒன்றாய்த் தோன்றிக் கணகணெனக் கவிதைஒலி செயும்என்பார்; அஃதேபோல் மொழிபெ யர்ப்பும்; துணைநூலும் இல்லாமே தனிநூல்கள் கட்டுரைகள், புணர்ப்பார் தம்மில் மணவழகர் தமக்குநிகர் மணவழக ரேஎன்பேன் இந்நூற் றாண்டில். 5 காய்ச்சிவைத்த பசுப்பாலில் கழுநீரைக் கலந்ததுபோல் நன்றில் தீதைப் பாய்ச்சிவைத்துப் பிழைப்பாரும், பாழ்பட்ட தமிழர்களும் வாழும் நாட்டில், பேச்சுவைத்த தோடுகனி பிழிந்துவைத்துச் சுந்தரவாய் பேச வைத்து மூச்சுவைத்துத் தமிழர்களை முடுக்கியஇத் தலைமுறையை வாழ்த்து கின்றேன். 6 புதுவையிலே கலியாண சுந்தரனார் ஆற்றியசொற் பொழிவில், தூய மதுவையள்ளி மலர்தேக்கி வண்டுகட்கு விருந்தாக்கி மயக்கு தல்போல் பொதுவினர்க்குச் சிலப்பதிகா ரச்சுவையை நடையழகைப் புகலும் போதில் இதுவையா பேச்சென்பேன்; பாரதியார் கைகொட்டி எழுவார், வீழ்வார். 7 இத்துயர்கொள் தமிழ்நாட்டில் எனைமகிழச் செய்தனவாய் இருப்ப வற்றுள் முத்தமிழ்வாய், உழைப்பாளிக் குழைக்குந்தோள், அன்புள்ளம், தமிழ்எ ழுத்தை வித்தியுயிர் விளைக்கும்விரல்,, தமிழருக்கோர் தீமைஎனில் விரைந்தோ டுங்கால், இத்தனைகொள் கலியாண சுந்தரனார் என்றபொதுச் சொத்தும் ஒன்றே. 8 கலியாண சுந்தரனார் இருமுப்பா னாண்டுவிழாக் கண்டார்; ஆம்ஆம் மலிஅறுபான் ஆண்டாகித் திரும்பத்தன் மகனுக்கோர் முத்தம் ஈந்தாள்! பொலிவான நிலாக்காட்டிப் புதுவாழ்வுச் சோறூட்டிப் பொன்னே என்று மெலிஇதழால் அவள்,திரும்பத் திரும்பநனி முத்தமிட விரும்பு கின்றாள். 9 வாழியவே கலியாண சுந்தரனார் உறவினொடு மிகப்பல் லாண்டே! சூழியவே தோளுறுதி, பெருஞ்செல்வம், கடல்போன்ற நெடும்பு கழ்தான்! வாழியவே இனியதமிழ்! தமிழர்! தமிழ் நாடுதமி ழர்க்கே ஆகி வாழியவே எல்லாரும் எத்துறையும் நிகர்எய்தி வையம் நன்றே! 10 - புகழ் மலர்கள், ப.44-46, 1978, திரு.வி.க. மணிவிழா மலர், 26.08.1949 49. நாட்டுக்குத் தொண்டு நாட்டுக்குத் தொண்டு நமக்கு மகிழ்ச்சி! நடக்கட்டும் போர் என்றான் வாழ்க சிதம்பரன் பேர்! கேட்டுக்கும் வெள்ளையர் நீட்டுக்கும் துப்பாக்கி வேட்டுக்கும் வெஞ்சிறை வீட்டுக்கும் அஞ்சாமல் - நாட்டுக்குத் தொண்டு வீட்டுக்கு வீடு விளக்கேற்றினான் எங்கும் விடுதலை உணர்ச்சி உண்டாக் கினான், கூட்டுத் தொழில்களும் ஆக்க வேலைகளும் குற்றமென்று சொன்ன கொடியர்க்கும் அஞ்சாமல் - நாட்டுக்குத் தொண்டு தண்டா விளைச்சல்கள் தங்கச் சுரங்கங்கள் அண்டும் பெருநாடே எங்கள் உடைமை என்று தண்டோராப் போட்ட தமிழ னவனையே தாழ்த்த முயன்ற தக்கைகட் கஞ்சாமல் - நாட்டுக்குத் தொண்டு ஒப்போம் அயல்நாட் டுடைமைகள் என்றான், உரிமை எவற்றிலும் எமக்கென்று சொன்னான், கப்பல் கட்டி ஓட்டினான், வெள்ளையர் செக்கிழுக்க வைத்தார், அந்தக் கேட்டிலும். - நாட்டுக்குத் தொண்டு - தேனருவி, ப.97-98, 1956 50. மான வீரன் வ. உ. சிதம்பரன் அறுசீர் விருத்தம் வெள்ளையன் கப்ப லாலே விரிந்தஇந் நாட்டின் செல்வம் கொள்ளைகொண் டோடல் கண்டு, கொதிப்புற்ற சிதம்ப ரன்பேர் பிள்ளைதான் பேரூக் கத்தால் பிழைக்கவந் தடிமை கொண்ட நொள்ளையர் மாயச் செய்தான் நோன்மைசேர் கப்பல் விட்டான்! 1 கடல்பிறக் கோட்டிச் சென்ற கால்வழி வந்த எங்கள் அடல்மிகு விடுத லைப்போர் அரிமாக்கள் ஆயி ரத்தை தடந்தோளில் நெஞ்சில் சேர்த்த தமிழனை நினைக்கும் வெள்ளைக் குடலெலாம் கலங்கும்! தூத்துக் குடியதன் குடிமை காத்தான். 2 இந்தியத் தலைவர் எல்லாம் இந்திய வீரர் எல்லாம் செந்தமிழ்ச் சிதம்ப ரத்தின் செந்தணல் சிந்த னைக்கே, முந்தித்தம் செவிகொ டுப்பார்! முடிவினை எடுப்பார் வெல்வார். அந்தமிழ்ப் பார திக்கும் அவனன்றோ அரிய அம்மான். 3 பகைவனைப் பரங்கிப் பேயைப் பாரத நாட்டி ருந்து தகைப்பதும் உரிமை நாட்டில் தலைநிமிர்ந் துயர்ந்து வாழ்தல் வகையென வேங்கை யாகி வடக்கொடு தெற்க னைத்தும் தொகைதொகை மறவர் கூட்டம் தொகுத்தனன் வெடிம ருந்தாய்! 4 விடுதலை மறவனுக்கு வெள்ளையர் சுரண்டல் கூட்டம் கெடுதலை கோடி தந்தார்! உலகினைக் கெடுக்க வந்தார் படுகொலை வழக்கு நூறு பாய்ச்சினர்; சிறைக்கோட் டத்துள் கொடுதலை என்றார், வீரச் சிறுத்தையா கோழை யாகும்? 5 கல்லுடை என்றார் வெள்ளைக் காரரின் அதிகா ரத்தின் பல்லுடைப் பதனைப் போலப் பாறைகள் உடைத்தார்! நெஞ்சின் மல்லுடைந் திட்ட தில்லை! மறத்தமிழ் நெஞ்சம் இன்பச் சொல்லுடை படாத பாக்கள் சொல்லிடும் துயர்து டைக்கும்! 6 திக்கெலாம் திருட வந்த சிவந்ததோல் பரங்கி யர்கள், வெட்கிட புரட்சித் தீயின் வெடிகளாய்ச்சி தம்ப ரத்தின் சுக்குநூ றாக்கும் தோழர் தொல்லைகண் டிருந்த போது செக்கினை இழுக்கச் செய்தார். சிதம்பரப் பெரியோன் தன்னை. 7 எண்ணெயைப் பிழிவ தைப்போல் ஏவெள்ளைக் கார ரேநும் மண்டையைப் பிழிவோம் என்று மனத்தினில் எண்ணி எண்ணி கண்ணீரைப் பொழிந்தி டாமல் கடுந்துயர் உள்ளம் கொள்ளும்; திண்ணையில் பார்ப்ப னர்கள் தெருச்சோறுண் டுவகை பூப்பார்! 8 மூவாயுள் கடுஞ்சி றைக்குள் மூடினார் சிதம்ப ரத்தைச் சாவாயுள் விழுங்கு தற்கும் தவித்தது தமிழ்மா னத்தை! நோய்வாயில் புகுத்து தற்கும் தோற்றது சிறை நொடிப்பு. மாவாயில் திறந்த தோர்நாள் மானவேள் வெளியில் வந்தான். 9 உடல்பொருள் ஆவி யெல்லாம் உற்றநாட் டுரிமைப் போர்க்குக் கெடல்இல்லை எனஇ ழந்தோன்! கீழ்ப்பட்ட சிறையி ருந்து மடங்கலாய் வந்தான்! ஆனால் ஆரிய மடியில் வாழ்ந்தோர் அடடவோ சிதம்ப ரத்தை அணுகிடக் கூசி னார்கள். 10 நன்றிகெட் டுயிர்வாழ் கின்ற காங்கிர சியக்கத் தார்கள் பன்றிக்கும் கீழ்ப்பட் டோரே! பரங்கியன் சுரண்டற் குப்பின் வென்றி என்றுவப்ப தெல்லாம் வெற்றுவேட் டுரிமை யாகும் என்றிவர் வாழ்வார்? இல்லை இடியுண்ட மரம்போல் வீழ்வார். 11 - புகழ்மலர்கள், ப.85-88, 1978, தமிழ்நிலம், 1.8.1949; 51. இழந்த காந்திக்கு இரங்கல் காந்தியார் இறந்தார் என்று கழறினார் கலங்கிற் றுள்ளம்! ஏய்ந்தஇம் முப்பா னாண்டில் எழுந்தஅவ் வுணர்வின் ஊற்றால் மாந்தரின் வறண்ட நெஞ்ச வயலெல்லாம் விளைச்சல் கண்டோம்! வீழ்ந்தநாட் டெழுச்சி கண்டோம்! வையகம் வியக்கக் கண்டோம். 1 இறந்தனர் காந்தி யாரென் றியம்பினார் எரிந்த துள்ளம்! சிறந்தனர் எவரும் ஏத்தச் சிறந்தனர் நாம்சி றக்கப் பிறந்தனர்! வாழார் வாழும் பெருநெறி காணக் காட்டிப் பறந்தனர்; இசைமு ழக்கப் பறந்தது வானம் பாடி! 2 உயிர்நீத்தார் காந்தி யார்என் றுரைத்தனர் துடித்த துள்ளம்! துயர்நீக்கும் விடுத லைப்போர் தொடங்கிட வேண்டி நாட்டை நயமுற அழைத்தார் அன்றே நாற்பது கோடி மக்கள் புயலெனக் கிளம்பக் கண்டோம், தனித்ததோர் புலமை கண்டோம்! 3 சுடப்பட்டார் காந்தி யார்என் றுரைத்தனர், துயர்ந்த துள்ளம்! உடல்உயிர் பொருள்உ ழைப்பை நாட்டினுக் களித்தார்; நாட்டின் கடல்நிகர் அன்பை யேதம் காணிக்கை யாகப் பெற்றார் கெடல்உண்டோ அன்னார் கொள்கை? கிடைத்தது கேட்ட வெற்றி! 4 மாண்டனர் காந்தி யாரென் றுரைத்தனர் வருந்திற் றுள்ளம் ஈண்டெண்ணம் வேறு பட்டே இன்றுள தலைவர் தாமும் ஆண்டகை எனும்வி ளக்கில் ஏற்றிய அகல்வி ளக்கே! ஆண்டாண்டு தம்தோ ழர்க்கே ஆம்புகழ்க் கவர்ம கிழ்வார்! 5 வீடுற்றார் காந்தி யாரென் றுரைத்தனர் விம்மிற் றுள்ளம்! நாடுற்ற பழிக்குத் தம்மை நலிவுக்குள் ளாக்கும் செய்தி ஏடுற்ற கதையாய்க் கேட்டோம் இன்னார்பால் எளிதிற் கண்டோம் ஆடுவார் நெஞ்சந் தோறும் அவர்பெயர் வாழ்க நன்றே! 6 - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.167, 1964 52. கொன்றவன் பார்ப்பான் காந்தியைக் கொன்றவன் பார்ப்பான் - எங்கள் கண்ணை அவித்தவன் பார்ப்பான். வாய்ந்துள ஏழைக்கி ரங்கும் - அருள் வள்ளலைக் கொன்றவன் பார்ப்பான். தாழ்ந்தவர் மக்களில் இல்லை - எனில் யாவக்கும் மேசரி நீதி. ஈந்திட எண்ணிஉ ழைத்தான் - அந்த ஏந்தலைக் கொன்றவன் பார்ப்பான். வெள்ளையன் ஆட்சிதொ லைத்தோம் - இனி வேற்றுமை உற்றுக்கி டந்தால் எள்ளி நகைபுரி யாரோ - நமை இப்பெரும் வையத்தி லுள்ளோர்? கொள்கை திருந்திடு வீரே - உங்கள் குள்ள நினைப்பினை எல்லாம் தள்ளுக என்றனன் எங்கள் - அன்பின் தந்தையைக் கொன்றவன் பார்ப்பான். சட்டைகள் ஆகும் மதங்கள் - அந்தச் சட்டைக்குள் எல்லாரும் மக்கள் வெட்டி மடிந்திட வேண்டாம் - படு வீழ்ச்சியைத் தேடிக்கொள் ளாதீர். குட்டைக் கருத்துகள் ஏனோ - எனக் கூறிய எம்தவப் பேற்றைச் சுட்டுத் தொலைத்தவன் பார்ப்பான் - எங்கள் தூயனைக் கொன்றவன் பார்ப்பான்! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப. 172, 1964 53. அண்ணல் பெயர் வாழ்க எடுப்பு பிறந்தவர் யாவரும் பெற்றறி யாப்புகழ் பெற்ற காந்தி அண்ணலைப் பிரிந்தோம் உலகில் - பி உடன் எடுப்பு இறந்தார் அண்ணல் எங்கணும் பிறந்தார் ஈந்துவக் கும்அனைத்தும் உலகுக் கீந்தார் - பி அடிகள் அறிந்தோர் யாவரும் அறிஞரென் றேத்தினார் அருளே உருவென உலகினர் வாழ்த்தினார் திறந்தெறிந் தாங்கிலர் பிடிப்பையும் மாற்றினார் திருநாட் டுரிமைகண் டனைவரும் போற்றினார் - பி மதவெறி தன்னலம் மறைந்திட உழைத்தார் மாபெரு நிலைநோக்கி நாட்டினை அழைத்தார் உதவா வேற்றுமை அனைத்தையும் பழித்தார் உலகின் நினைவில்தன் பெயரைவைத் திழைத்தார் - பி வாழிய காந்தி அண்ணலின் நினைவே வாழிய வாழிய அன்னோர் பெயரே! ஆழிசூழ் உலகில் அவர்கண்ட பாதை அனைவரும் தொடர்க இன்புற்று வாழ்க! - பி - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.225, 1964 54. நெஞ்சுக்கு நீதி விருத்தம் போந்தது புதிய எண்ணம்! பொலிந்தது வீரம் எங்கும்! Ô®ªjJ bjhG«ò« ò¤â!1 செழித்தது நாட்டில் அன்பு தேய்ந்தது பகைவர் துள்ளல்! திருவெலாம் சேர்த்தான் காந்தி! காந்தியின் வழியை நெஞ்சே! fz¤bjhW«2 பாடு கண்டாய்! 1 மனிதரில் மிக்கோன் காந்தி மகாத்துமா சொன்ன தர்மம் கனவிலும் சாக்கி ரத்தும் கடலினுக் கெப்பு றத்து மனைதொறும் பாய்தல்; உன்றன் மனதுக்கு வீணை யின்பம் உனதுநற் காந்தி நெஞ்சே! உலகுக்கும் காந்தி கண்டாய்! 2 தனக்கென அன்றி நெஞ்சே! சகத்துக்கே வாழும் வீரன் மனத்தினில் தோன்றும் யாவும் மணிமுர சடித்து நின்றே இனைத்தினைச் செய்க! இன்ன விடுக்க! என் றிசைத்துப் பின்னும் தனிச்சிறை சென்றான். இந்த- ச் சகத்தை- க்காந் தியாக்க என்றே! 3 சிறையினிற் காந்தி யண்ணல்! செகமெலாம் அன்னோன் பேச்சு இறையவர் என்று தம்மை எண்ணிடும் சர்க்கார் மேலே தலையினி லுள்ளோர்க் கெல்லாம் சலிப்பின்மேல் சலிப்பு நெஞ்சே! மறைவினில் உள்ளோன் மூட்டும் மருக்கனல் தன்மை கண்டாய்! 4 சிறிதுமேல் வலிது பாயும் சின்னது வலிய தொன்றைப் பிறிதொரு நாட்டைக் கூட்டிப் பிடித்துநொக் கிடக்கி ளம்பும் குறுகிய செயலில் வையம் குதித்தது; கரைக்கு மீள இறையவன் அருளின் காந்தி எழுந்தது புவியில் நெஞ்சே! 5 - பழம் புதுப் பாடல்கள், ப.83, 2005; தேசசேவகன், 12.6.1923 1. தொழும்புப் புத்தி என இருப்பின் நன்று 2. கணந்தொறும் என இருப்பின் நன்று 55. காமராசர் வெற்றி ஈண்டுகாங் கிரகுழுவின் தலைமைக் காக இற்றைநாள் தேர்தலினை நடத்தி னாராம். தூண்டினராம் திராவிடரைப் பார்ப்ப னர்கள் தோற்கடிப்பீர் காமராஜ் தன்னை என்று! மாண்டதுவாம் அப்போட்டி! பார்ப்ப னர்கள் மண்கௌவிச் சாய்ந்தாராம். என்தோ ழர்கள் மீண்டும்உயர் காமராஜ் வென்றார் என்றார் வேறெவர்தான் வெற்றிபெற முடியு மென்றேன். அறிவுடையார் மானமுள்ளார் காம ராசர் அன்புடையார் திராவிடநன் மக்கள் மீதில்! நெறியறிந்து செலத்தக்க ஆற்றல் உள்ளார் நெஞ்சத்தில் தெளிவுடையார் தன்ன லத்தைச் சிறிதேனும் எண்ணாத பெரும்பண் புள்ளார் திராவிடத்தைக் காத்திடுமோர் உறுதி உள்ளார் பிறரிடத்தில் நமைவிற்றுப் பெருமை கேட்கும் ம.பொ.சி. டீ.கே.சி. போன்றார் அல்லர். தீதுசெய வடக்குவந்து செப்பி னாலும் சிறிதேனும் ஒப்பாமை அவர்பால் கண்டோம். வேதத்தைக் காட்டிஇது தணல்என் றாலும் வேகாது விருதுநகர் பருப்பாம் என்றே ஓதிடுமோர் ஆழ்ந்தபெருங் கொள்கை உள்ளார் உயர்நோக்கும் இனப்பற்றும் உயிராய்க் கொண்டார் சேதிஇனி ஒன்றுண்டு காம ராசர் திராவிடத்துத் திருமேனி இன்னும் என்ன? - பாரதிதாசன் பன்மணித் திரள், ப. 238, 1964 56. காமராசர் கருதவில்லை அகவல் வடக்கில் ஓர்ஊர் மண்ணில் அமிழ்ந்ததாய்த் திடுக்கிடும் செய்தி கேட்டோம் ஒருநாள் அப்படிப் பன்முறை அமிழ்ந்த துண்டாம்! அப்படி இனியும் அமிழ்தல் கூடும் ஏனெனில் காரணம் இயம்பு கின்றோம்! பெருநிலம் உட்புறம் அரிப்புக் கொள்ளவும் கருந்தரை சேறாய்க் கலங்கவும் - வெள்ளம் எந்த நேரமும் பாய்ந்துகொண் டிருந்தால் அந்த நாடே அரோகரா! அரோகரா! ஆடிப் பாடி அளவு மீறாமல் வருவதும் வரவு நிற்பதும் ஆன செம்புனல் ஆற்றைத் தெய்வம் என்று நம்பெரும் புலமைத் தமிழர் நவிலுவர் தேவைக்கு மேலும் திரளும் வெள்ளம் பேயென்று கூறுவர் தமிழ்ப் பெரியோர் பண்டை நாள்வட பாங்கில் வாழ்ந்த ஒண்டமிழ் மக்களும் ஒண்டுமா ரியரும் தெற்கு நன்றெனச் சேர்ந்தனர் என்றால் தெற்கில் பேயாற்றுத் தீமை இல்லை! காம ராசர் கருதா தொருநாள் வடக்கில் வற்றாக் கங்கை இருப்பதால், கிடப்போம் அவர்கீழ் என்று கிளத்தினார்! காவிரி ஊற்றின் கண்தூர்ந் தாலும் வைகை யூற்றின் வாய்திறந் தாலும் தமிழன் உரிமையோடு சாக வேண்டும்! அடிமையாய்க் கங்கை ஆறு பெற்றும் வாழ்வது மானம் இலாமை என்று பச்சைத் தமிழர் பகர்ந்தால் மெச்சுவோம் மீசை முறுக்கேறும் நமக்கே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.262 - 263, 1964 58. நாட்டின் முதலமைச்சர் - காமராசர் கோட்டைக் குப்பத்தில் வரவேற்பு வாழ்த்து அகவல் சீரார் சென்னை முதல மைச்சரே! பாரோர் போற்றும் பண்புடை யோரே! தென்னார்க் காட்டைச் சேர்ந்த பிர்க்கா கோட்டைக் குப்பம் வாழும் குடிகள்யாம் தங்கள் வருகையை எங்கள் பேறென எண்ணி வரவேற் கின்றோம் இந்நாள்! தாங்கள் மனமுவந்து யாங்கள் வாழ்விடம் வருகை தந்ததே மகிழ்ச்சிக் குரியது நன்றியும் வணக்கமும் நவிலுகின்றோம் நாட்டுக்கு மீட்சி வந்த நாள்முதல் இந்நாள் வரைக்கும் எங்கள் ஊர்நிலை இன்ன தென்று யாரும் நினைக்கிலர். பொன்விளை புழுதியைப் புனலால் நனைக்க மின்சார வசதி வேண்டும் அன்றோ! இன்று வரைக்கும் இம்மியும் இல்லை. வெயிலில் கிடக்கும் குயிலாப் பாளையம் தண்ணீர் வசதி இன்றித் தவித்தது பாதை வசதி ஏதும் இல்லை. சின்ன கோட்டைக் குப்பம் சிறிதும் பாதை யின்றிப் பள்ளமா கின்றது பத்தா யிரம்பேர் பஞ்சா யத்துக்கு மருத்துவ வசதி யில்லை! மாணவர்க்கு உயர்நிலைப் பள்ளி ஒன்றேனு மில்லை எழில்சேர் நன்செய் நிலங்கள் இருந்தும் குழாய்க் கிணறுஇல்லாக் குறையால் ஏதும் உழாத நிலைமை உடையன ஆயின. செந்தமிழ் நாட்டுக்குத் தந்தை யாரே இங்குயாம் இரங்கிக் கேட்பவை எல்லாம் எங்கட்கு இன்றி யமையா தனவே, ஆவன செய்ய வேண்டும் ஐயா! நீவிர் நீண்ட நாள்முத லமைச்சராய் இருக்க வேண்டும் என்பது என்அவா. நீடூழி வாழ வேண்டும் நாடு செழிக்க வேண்டும் நன்றே. - நாள் மலர்கள், ப.23, 1978; குயில், 30.8.1960 59. காமராசர்க்கு அஞ்சல் நிலைமண்டிலம் காம ராசரே! ஒருகா மாட்டி உங்க ளிடத்தில் ஒவ்வொரு நாளும் வந்து மக்கட்குச் சிபார்சு கேட்பான். அதற்கு அவரிடத்தில் ஐந்நூறு ஆயிரம் வாங்கிக் கொள்வான். அதுமட்டு மன்று! பெரியார் கேட்பதாய்ப் பெரிய தொகையும் உங்களைக் கேட்பான், ஒருதொகை கொடுத்தால் அவனே, அவுக்கென்று வாயிற் போட்டுக் கொள்வான். அப்பயல் பெரிய கள்வன்! எப்படி யாவது போகட்டு மென்றால் பெரியார் கட்சிக்குப் பெரிய தீமை ஏற்படு கின்றதே! எப்படி என்றால், அவனுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு செல்வாக் கினையும் தீய வழியில் செலவிடு கின்றான்! கலகக் காரன்! இயக்கந் தன்னில் இருக்கும் பொறுக்கிப் பசங்களை யெல்லாம் தன்பக் கத்திற்கு இழுத்துக் கொண்டே இருக்கின் றானே! வேறு கட்சியை அமைக்க விரும்பினான்! அன்றொரு குள்ளன் எப்படி? அப்படி! அமைச்சரே அவனுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு சலுகையும் இயக்க உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் அறுப்ப தாகும்! உலகினர் உள்ளம் எல்லாம் கவர்ந்த அலகில்சீர் திராவிடர் கழகம் அதனில் கலகம் புகுத்தக் கருதா நீங்கள் தீய நாயினைச் சேர்க்க லாகுமா? இப்படிச் சொல்லும் என்னை நோக்கி நீங்கள் ஒன்று கேட்க நினைக்கலாம். அவன்செயும் தீமையைப் பெரியார் அறிந்தும் ஏன்வைத் திருந்தார் என்று கேட்டால் வரட்டும் அவன்என்று இருப்பார் பெரியார் வருவாள் அவன்றன் மனைவி எதிரிலே! - நாள் மலர்கள், ப.27-28, 1978, குயில்; 25.10.1960 60. காமராசர்க்கு வரவேற்பு வாழ்த்திதழ் அகவல் செந்தமிழ் நாடு செய்த தவத்தால் வந்த வாய்மைசேர் முதல மைச்சரே, தாய்மை மிக்க காம ராசரே வருக தங்கள் வருகை நன்றாக! மட்டிலாக் காரியம் மலிந்திருக் கையிலும் எம் முட்டறாம் பட்டில் முகந்திருப் பியதை நாங்கள் மறவோம்! செய்த நன்றியை என்றும் நினைவோம் வணக்கம். ஏற்க முதுவிழுப் புரத்து முட்டறாம் பட்டு மண்ணுள் ஓடும் தண்ணீர் எடுக்கும் மின்சார வசதி இல்லை! விளைச்சல் மங்கி, வறுமை மிகுதியா யிற்றே! அழகு விக்கிர வாண்டி அணையினின்று எம்முட்ட றாம்பட்டின் ஏரிவரைக்கும் ஏறத் தாழ பதினா றேரிகள் ஆயினும், அங்குள மெயின் வாய்க்காலே, முப்ப தாண்டுகள் முடிந்தும் இன்றுவரை வெட்டப் பட்டதே இல்லை. மெய்இது! சூழ்ந்துள்ள நிலங்கள் வாழ்வ தெப்படி? உரைக்கும் இப் பிர்க்கா ஓரூரி னின்றே ஓரூர் செல்லப் பாதைகள் உண்டா? இல்லவே இல்லை. இன்னல் அடைகின்றோம் எங்கள் முதல்வராய் நீங்கள் இருக்கையில் இக்குறை தீர்க்கப் படாவிடில் இனியாம் திக்கி லாது திகைக்க வேண்டும் வாய்மைசேர் காம ராசரே வாழ்க! தூய்மை யுள்ளத் தோழரே வாழ்க! உங்கள் பெரும்புகழ் உயர்க! எங்கள் தந்தையே வாழ்கஎந் நாளுமே! - நாள்மலர்கள், ப.25, 1978, குயில், 30.8.1960 61. போர் தொடங்கு கழுகான தில்லியின் கண்ணைப் பிடுங்கு! காம ராசனே போரைத் தொடங்கு! முழுது தமிழகம் உனைஆ தரிக்கும் முத்தமிழ்க் கொடியினை வானில் விரிக்கும்! - கழுகான அழுதனர் உன்மக்கள் அரிசிக்குத் துடித்தார் அன்பிலா வடக்கர் பழம்பாடம் படித்தார் பழகினை பல்லாண்டு தில்லி யோடு பழிகாரரால் வாழுமா தமிழ் நாடு? - கழுகான ஆட்சியின் அடிப்படை பார்ப்பனர் தந்நலம்; ஆட்சியில் இருப்பதும் அதேபார்ப் பனகுலம் காட்டி வந்துள மனப்பான்மை யாவும் கருதும் நெஞ்சில் நெருப்பைத்தான் தூவும். - கழுகான நீட்டத் தமிழர் துடிக்கும் துடிப்பை நீக்குநீ நீக்குநீ வடவர் பிடிப்பை. ஆட்பட் டோரின் அமைச்சராய் இராதே ஆளும் தமிழரின் அரசென வாழ்கநீ! - கழுகான - வேங்கையே எழுக, ப.113, 1978 62. வெளிப்படை விண்ணப்பம் முதல் அமைச்சர் ஓமந்தூரார்க்கு எண்சீர் விருத்தம் நம்பெருமான் காந்தியினைக் கொலைபு ரிந்த கோட்சேக்கள் நாடெங்கும் இருக்கின் றார்கள்! வம்பகன்ற நம்மருமைத் திராவி டத்தும் மறைந்தேவாழ் கின்றார்கள்; அவர்கள் நோக்கம் உம்போன்ற திராவிடரின் மேன்மை தன்னை ஒழிப்பதுதான், விழிப்பாக இருத்தல் வேண்டும்! எம்பெரிய அண்ணலே அஞ்ச வேண்டா. இருக்கின்றோம் உங்களுடன் பிறந்தோம் நாங்கள். 1 ஓமந்தூர்த் திராவிடனா முதல்அ மைச்சன்? ஒழித்துவிட மாட்டோமோ எனநி னைக்கும் தீமாந்தர் இருக்கின்றார், இதுஉ மக்குத் தெரியாதா? தெரிந்திருக்கும் மிகநன் றாக! யாமுமக்குச் சொல்வதுதான் என்ன வென்றால் இப்பெரிய திராவிடத்தில் உம்மைக் கொல்லப் பாழ்மக்கள் கோட்சேக்கள் தூக்கும் கையைப் பல்கோடித் திராவிடர்கை முறித்துப் போடும்! 2 தென்னாப்பி ரிக்காவில் அண்ணல் காந்தி திருத்தொண்டு வெள்ளையர்க்கு வேம்பா யிற்று! சொன்னாலும் உளம்பதறும் காந்தி தன்னைச் சுட்டான்ஓர் கோட்சேஅக் குண்டு தன்னைத் தென்னாட்டுத் தமிழச்சி மார்பில் ஏற்றாள்; செத்தொழிந்தாள்; காந்தியினை உலகுக் கீந்தாள்! இன்னசெயல் அறிவீரோ? கோட்சே கூட்டம் இவ்விடத்தில் வாலவிழ்த்தால் வேர றுப்போம்! 3 எங்கேஎன்றால் நடுங்கும் கோட்சே கூட்டம் இதுநமக்குத் தெரிந்ததுதான், எனினும் நீங்கள் உங்களருஞ் செல்வாக்கை இந்த நாட்டின் உயர்வுக்கும் நன்மைக்கும் செலவ ழிப்பீர்! அங்கங்கே கோட்சேக்கள்! எதிலும் அன்னார்! அடக்கிடுக அவர்க்குள்ள அதிகா ரத்தைக்! கொங்குமலர்ச் சோலைசேர் திராவி டத்தில் கோட்சேக்கள் அதிகாரம் குறைதல் வேண்டும். 4 கும்பிட்டான் துப்பாக்கி தனைஎ டுத்தான் கோட்சேயை அங்கிருந்தோர் மறித்த துண்டோ? எம்அண்ணால் ஓமந்தூர் ராம சாமி இதைநினைத்தால் சிரிப்புவரும், அண்ணல் காந்தி இம்மண்ணில் சாய்ந்ததனை எண்ணும் போதே இனந்துடிக்கும் இனத்தாரின் மனம்து டிக்கும்! நம்பிடுக, வடநாட்டான் தன்மை வேறு; நாம்அவரின் ஒட்டுறவை அறுத்தல் வேண்டும். 5 எண்சீர் விருத்தம் பெருநிலையில் இருக்கின்றீர் காம ராசப் பெருந்தகையீர்! உம்பெருமை அவர்கள் கண்ணில் கருவேலின் முள்போல உறுத்தும், நீவிர் கடுகளவும் அஞ்சாதீர்! கோட்சே கூட்டம் திரைமறைவில் நோக்கத்தை வைத்தி ருக்கும் வெளிப்புறத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த விரிவுதனை நீர் அறிவீர், அஞ்ச வேண்டா கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும். 6 ஏழைக்கும் செல்வனுக்கும் பன்ம தத்தார் எல்லார்க்கும் எதிலும்நலம் புரிய எண்ணி வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல் மார்புபிளந் தார்;காம ராச ரோ,எம் தோழரே! திராவிடரே உமது மேன்மை தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்! ஆழ்ந்திதனை எண்ணிடுக கோட்சே கூட்டத் ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை! 7 - பாரதிதாசன் பன்மணித் திரள், 167-171, 1964; குயில், 1.3.1948 63. சென்னை முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி அகவல் சென்னை மாகாணத் தின்முத லமைச்சரும், தன்னல மில்லாத் தனிப்பெருந் தகையுமாம் ஓமந் தூர் இராம சாமியை நாம்உள மாரநனி வாழ்த்து கின்றோம். நல்லது செய்யும் நாட்டம் உடையவர், அல்லதை நாட்டினின் றகற்ற நினைப்பவர். வஞ்சச் செயலால் வாழுமோர் இனத்தவர் அஞ்சத் தகுமோர் சூழ்நிலை அமைத்தும், அறமே மறமென வாயடி அடித்தும், இறைமை தன்னை எடுத்தாண்டு கொள்ள நெருங்குவார் அவர்நெருப் பென்று மீள்வார். பொதுவில் வந்த அதிகா ரத்தைத் தனிமையில் விற்கும் தக்கைகள் ஒழியத் தாய்நிலம் தவம்செய்து கிடக்கும் இந்நாள் பணத்திற் சிறிதும் பற்றிலா ஏழையைத் தலைமை அமைச்சராய்ப் பெற்றது தாய்நிலம். அமைச்ச ரில்லம் ஆக்கித் தரும்படி நமதி னத்து ராம சாமியை அழைத்தனர் அரசினர். அன்பினால் ஒப்பினார். ஓமந் தூர்இ ராம சாமிபால் நாமும் இந்த ஞாலமும் வியக்க இருக்கும் ஒருபெரும் பண்புதான் என்னெனில், முதலமைச் சென்னும் இதுவெனக்கு வேண்டாம். என்னுமோர் பற்றிலாத் தன்மை - ஆதலால் அன்றோ வஞ்சகர் அஞ்சுகின் றார்கள். ஆதலால் அன்றோ அவரை எதிர்த்தவர் தூதூ என்று துப்பப் பட்டார். இராம சாமி இந்த நாட்டின் அமைச்சராய் வந்த அன்று தொடங்கி, இமைப்பொழு தேனும் சும்மா இராமல் ஆளத் தெரியுமா அவருக் கென்றும், என்ன தெரியும் இராமசாமிக் கென்றும், பேசத் தெரியாப் பித்தர் என்றும், எழுதத் தெரியா இனத்தவர் என்றும், ஆங்கிலம் சிறிதும் அறியார் என்றும், தீங்கு செய்யத் தெரிந்தவர் என்றும்,, பிரகா சந்தான் பெரியவர் என்றும், தெருவில் நடக்கையில் திண்ணையில் புரள்கையில் வண்டியிற் செல்கையில் வாயோ யாமல் குளறு கின்றார் குறுக்கு நூலினர். அலறு கின்றார் ஐயம் பெருமாள்கள். உள்ளதை இல்லதென் றுரைக்க நேர்கையில் முதலமைச் சென்னும் இதுஎனக்கு வேண்டாம் என்னுமோர் பற்றிலாத் தன்மை யாளரை என்ன செய்ய முடியும்? இதுவரை என்ன செய்ய முடிந்த தென்போம். எச்ச ரிக்கை இல்லை - இதுஎன் விண்ணப்ப மாகும் அண்ண லார்க்கே! திராவிடர் கழகச் செம்மை நிலையில் அரசினர் அழுக்கா றடைதல் உண்டா? இல்லை. சட்டமும் இருக்க வில்லை. மக்கள் கருத்தின் வளர்ச்சியைத் தடுப்பது தக்க தன்று. சழக்கரின் முறைஅது. திராவிடர் கழகம் சேர்ந்த சிலரை ஒரோவி டம்சில உலுத்தர் அடிப்பார்; அடிப்பது பேடிமை அல்லவா? சட்டம்அத் தடிப்ப யல்களால் தலைக விழ்வதா? ஊர்க்காப் பாளர் உள்ளப் போக்கே சட்டமா? சரிநீதி பட்டுப் போனதா? பார்ப்பார் தாமும், பார்ப்பார் கையைப் பார்ப்பார் தாமும் பழியிலாத் திராவிடர் கழகம் அழியக் கருதுகின் றார்கள். திராவிடர் கழகம் இராவிடில் தங்கள் நெடுநாள் நரிச்செயல் நிலைக்கும் என்கின்றார்; ஆதலால் தங்கள் அரசியல் செல்வாக்கைத் திராவிடர்க் கின்னல் செய்வதில் செலவிட்டுக் கலாம்வி ளைக்கின்றார், எலாம்இனி அடக்குக! அடித்தால் அடிக்க அறிவர் திராவிடர், அடிக்கும் திறத்தினர் ஆயினும் அடிக்கிலர். அரியஉம் ஆட்சியில் அமைதி கெடுக்கும் எண்ணம் திராவிடர்க் கில்லவே யில்லை கண்கள் திறக்க வேண்டும். மண்ணல்லர் திராவிடர் அண்ண லாரே. - புகழ் மலர்கள், ப.57-59, 1978, குயில், 15.6.1948 64. வள்ளல் சிவாசி கணேசனார் வாழ்க கட்டளைக் கலித் துறை அள்ளிக் கொடுத்தனர் ஓரிலக் கத்தை அறிவுதரும் பள்ளிக்குட் பிள்ளைகட் கெல்லாம் உணவு பரிந்தளிக்க; உள்ள முதலமைச்சர் காமராசர் உவந்து பெற்றார். வள்ளல் சிவாசி கணேசனார் வாழிய வாழியவே! ஓரிலக் கப்பணம் மாணவர் உண்ணக் கொடுத்ததன்றி வாரிப் பலவாம் நிறுவனங் கட்கும் வழங்குவதாய் ஊரினர் கேட்க உறுதி யளித்திட்ட உண்மைவண்மைச் சீரியர் ஆன சிவாசி கணேசனார் வாழியவே! ஊணுறக் கங்கொளார் உற்ற மனைவி யிடம்கிடவார் வீணர் வலைக்குட் படார்.மட மாதர் விழிக்குட்படார். வாணாளில் இந்நாள் வரைக்கும் இராப்பக லாய்உழைத்தே காண்நில வானார் கணேசனார் படக்கூத்தர் மீன்களுக்கே! அவர்இவர் என்னா துலகத்தி லுள்ளவர் உள்ளமெல்லாம் கவர்பவ ராய்ப்படக் கூத்தர் வானத்திற் கதிரவனாய் எவர்இது நாள்மட்டும் தோன்றினார் பொன்பெற்றார் ஈத்துவந்தார்? எவர்புகழ் ஏற்றார்? அவர்தாம் கணேசனார் வாழியவே! குணத்தால் அடித்தனர் குள்ளர் எதிர்ப்பைத் தமிழகத்தில் பணத்தால் அடித்தார் அறியாமைப் பேயைப்பார்ப் பார்மனத்தில் வணத்தால் அடித்தமுகம் நடிப்பால் அச்சடித்து வண்மை மணத்தால் அடித்தார் புகழைக் கணேசனார் வாழியவே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.248, 1964; குயில், 7.1.1959 65. சிவாசி கணேசன் கொள்ளை கொடுத்தார் ஐந்து இலக்கத்தை; கொள்ளையடித்தார் உலகப் புகழை கட்டளைக் கலித்துறை கிள்ளை படித்துக் கிளையூச லாடும்பம் பாய்த்தமிழர் பிள்ளை படிக்கப் பிடிப்பில்லை என்றனர்; ஐந்திலக்கம் கொள்ளை கொடுத்த சிவாசி கணேசன் குபீரெனவே கொள்ளை அடித்தார் உலகப் புகழைக் குறையறவே. - குயில், 1.11.1960 66. வள்ளல் சிவாசி கணேசனார் வாழ்க அறுசீர் விருத்தம் பள்ளியில் மாண வர்கள் பகலுண வுண்ணும் வண்ணம் அள்ளிஓர் இலக்கம் ஈந்த அண்ணல் கணேசர் இந்நாள், புள்ளினம் பாடும் சோலை மதுரையின் போடி தன்னில் உள்ளதோர் தொழிற்ப யிற்சிப் பள்ளிக்கும் ஈத்து வந்தார்! 1 இன்றீந்த வெண்பொற் காசோ, இரண்டரை இலக்க மாகும்! நன்றிந்த உலகு மெச்சும் நடிப்பின்நற் றிறத்தால் பெற்ற குன்றொத்த பெருஞ்செல் வத்தைக் குவித்தீந்த கணேச னார்போல் என்றெந்த நடிகர் ஈந்தார் இப்புகழ் யாவர் பெற்றார்? 2 தமதென்று வையம் ஆண்ட தமிழரின் தமிழ கத்தை எமதென்று பிறரு ரைக்கும் இழிநிலை போக்க எண்ணாத் தமிழக நடிக ருக்கும் தகுதிரைப் படக்கா ரர்க்கும் இமைதிறந் திடக்,க ணேசர் இரண்டரை கொடுத்தார் போலும்! 3 உரிமையும் உயர்வும் கொண்ட உலக நாடுகள் அனைத்தும் கருவியாய்க் கொண்ட ஒன்று: கல்வியே என்ப தெண்ணித் திரிபிலா அறிவின் மிக்க சிவாசிநற் கணேச னாரும் அருவியாய்ச் சொரிந்தார் செல்வம் அரும்பயிர்க் கல்வி வேரில் 4 தேவைக்கு மேற்கொண் டுள்ள செல்வம்தம் நாட்டு மக்கள் ஆவற்கே சேர்க்க வேண்டும்: அறம்அஃதே அறிவும் அஃதே நாவலர் கணேசர் இந்த நல்வழி கண்டு மற்றும் ஈவோர்க்கும் வழிகாண் பித்தார் எந்நாளும் வாழ்க நன்றே. 5 - பன்மணித்திரள், ப.248, 1964 குயில், 28.04.1959 67. நடிகர் திலகம் சிவாசி கணேசனுக்கு வாழ்த்து கட்டளைக் கலித்துறை அலரி நறுமுல்லை ஆம்பல் குருக்கத்தி அல்லிஎனும் மலரி லுயர்ந்த மலர்தா மரைஎனல் போலுலகில் சிலரி லொருவர் சிறந்த நடிகர் சிவாசிஎனப் பலரி லொருவன் பகர்ந்தேன் தமிழ்த்தாய் மகிழ்ந்தனளே. எகுபதி யர்க்கு விருந்தாய் நடிப்பின் இலக்கணத்தை மிகுபதி யாரும் வியக்க வியக்க விளக்கியவர் தகுபதி யான சிவாசி கணேசர்! தமிழகத்திற் பகுபதி னாயிரம் ஆண்டுக் கொருத்தர் பகர்ந்திடிலே. படிப்பென்று சென்றால் இலக்கம் பத்தாயிரம் பார்த்தளிப்பார்! துடிப்பென்று சென்றால் தூய்பசி நீக்கி உவப்புறுவார்! நடிப்பென்று சென்றால் அதற்குமே நற்புகழ் நம்மதென்பார்! மடியொன் றிலாது சிவாசி கணேசனார் வாழியவே! - புகழ் மலர்கள், ப.134, 1978 68. இல்லை, ஆனால் உண்டு நேரிசை வெண்பா நன்று சிவாசி கணேசன் நடிப்பதுபோல் இன்றுவரை யாரும் நடித்ததில்லை - வென்ற கலையாளி யின்சீர் கவிழ்க்கத் துடிக்கும் மலையாளி வாழ்வதும் உண்டு. - பழம் புதுப் பாடல்கள், ப.385, 2005; குயில், 5.7.1960 69. துணைவேந்தர் மணவாளரையே சென்னை மணக்க! அகவல் அண்ணா மலைப்பல் கலைக்கழ கத்தின் துணைவேந் தராக இருக்கையில் தூய மாணவ மகளிர்க்கு வாய்ந்த கற்பைச் சுவர்வைத்துக் காத்தார் அவர்யார் சொல்லுக! பல்கலைப் பலவகை மாண வர்க்கும் நல்கலை நன்று ணர்ந்த நல்லார் மணவாள ராமா நுசரே என்க. தமிழறம் ஒழுக்கம் கமழா வாழ்க்கை நமதன் றேநம தன்றே என்னும் மணவாள னாரைச் சென்னை மணக்க வேண்டும் வையம் மகிழவே. - புகழ்மலர்கள், ப.123, 1978 70. திரு. மணவாள ராமானுசர் வேண்டும் அகவல் சென்னைப் பல்கலைக் கழகம் சிறக்க என்னை உடைய எழிற்றமிழ் சிறக்கத் துணைவேந்தர் நல்லராய்த் தோன்றுதல் வேண்டும் மணவாள ராமா நுசர்போல் குணவாளர் உண்டோ கூறுக குயிலே. - புகழ் மலர்கள், ப.123, 1978; குயில், 12.7.1960 71. கல்விக்கரசு மணவாள ராமாநுசனார் கட்டளை நேரிசை ஆசிரியப்பா அங்குவைத்தார் ஐந்துபல்க லைக்கழகம் தில்லியார் இங்குவைத்த தேதொன்றும் இல்லையன்றோ! - சிங்கக் குணவாள ரேஎழுச்சி கொள்ளீரோ என்றார் மணவாள ராமா னுசர். 1 ஆண்டுக் கறுபது கோடியினைத் தில்லியார் ஈண்டிருந் தேப்பமிட்டார் என்தமிழீர் - வேண்டா தணலானார் வஞ்சத்தைத் தாக்குவீர் என்றார் மணவாள ராமா னுசர். 2 நல்ல மணவாள ராமா னுசனாரின் சொல்லை யுணர்ந்து துடித்தெழுக - கல்விக் கரசரவர்; நந்தமிழரின் அப்பனவர்; வெற்றி முரசறைந்து முன்னேறு வீர். 3 - பழம் புதுப் பாடல்கள், ப.296, 2005; குயில், 9.9.1958 72. ஈத்துவக்கும் செம்மல் ஏ. கே. வேலனார் வாழ்க கட்டளைக் கலித்துறை முன்னும் கொடுத்தார் கரந்தைக்கல் லூரிதான் முன்னுறவே பின்னும் கொடுத்தார் புலவர் குழுநலம் பெற்றிடவே மன்னும் தமிழ்க் கென்று வாய்மூடு முன்நிதி வைத்துவிட்டேன் என்னும்ஏ கேவேல னார்வாழ்க செந்தமிழ்க் கீத்துவந்தே! இருபத்தை யாயிரம் ஐயா யிரமென இன்றமிழுக் கருளிச் சிறந்தார் திரைப்பட வாணிகர்; ஆக்குநர்; ஆம் பெருமுத் தமிழிற் புலவர்; பிறர்நலம் பேணுநல்லார்; திருவுற்றே கேவேல னார்வாழ்க நானிலச் சீர்த்திபெற்றே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப. 257, 1964 73. அவன் புகழ் வாழ்க வி. பாலசுப்பிரமணியனார் எழுசீர் விருத்தம் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனும்உண்மை உணர்ந்தவன் தமிழைக் கொன்றே பிழைப்பவர் தமிழர்ஒற் றுமையைக் குலைத்துமே அவர்தம துடைமை தின்றே பிழைப்பவர் ஆகிய பார்ப்பன ஓநாய்கள் வெற்றியில் திரிந்த அன்றே எதிர்த்தவன்! அணிவீரன்! பால சுப்பிர kÂaid* இழந்தோம். 1 நாடுண்டு கூட்டத் தமிழர்கள் உண்டு நல்லவில் சண்டேஅப் சர்வர் ஏடுண்டு கூரம் பெழுத்துண்டு கையில் எங்கந்தப் பகையான நரிகள்? கேடுண்டு போகட்டும் எனத்தன துடம்பு கிழத்தனம் அடைந்திடும் வரைக்கும் பாடென்ப தெல்லாம் பட்டவன் பால சுப்பிர மணியனை இழந்தோம். 2 ஆங்கிலந் தன்னில் எழுத்தாளன் பேச்சாளன் ஐந்தாறு மொழியறி வுடையான்! தாங்காத வறுமைதான் தாக்கினும், பார்ப்பனர் தாக்கினும் தமிழர்க்கு நேர்ந்த தீங்கினைத் தீர்ப்பதில் தளர்கிலான் பால சுப்பிர kÂaid* இழந்தோம்! ஈங்கெவர் அவன்செய்து வந்தநற் றொண்டினுக் கீடுசெய் திடவல்லார் அறியோம்! 3 பாலனாம் குரிசிலை இழந்ததால் தமிழ்த்தாய் இழந்தனள் படைவீரன் தன்னை! ஏலாத துன்பத்தை ஏற்றது குடும்பம்! பெருமையை இழந்தனர் நண்பர்! மேலான பருவுடல் மறைந்தனன்; அன்னவன் மிகக்கொண் டபுக ழுடம்பு காலமெல்லாம் உள்ள தமிழர்க்கு நல்ல கருத்தினைத் தந்துவா ழியவே! 4 - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.260-261, 1964; குயில், 1.6.1954 74. அண்ணாமலை அரசு அகவல் தண்ணறுந் தாயகம் ஒண்மை எய்த அண்ணா மலைநகர் ஆக்கி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பண்ணி, எண்ணிலா நல்லா சிரியரை நயந்து பல்வகைத் துறைதொறும் வகுப்பு நிறைவுற மாணவர்க் கறிவுபெற வருகென அன்பழைப் பனுப்பிக் கழகம் தனது காலெடுத் தூன்றி நடக்கத் தொடங்கிற் றென்ற நன்னிலை அடைவித்தான் எழில் அண்ணாமலை அரசு! அந்நிலை அந்நாள் பல்கலைக் கழகம் அடைந்த தென்றால் அதற்குக் காரணம் கனிந்த உள்ளத்துக் காவலன் கைப்பொருள் இழப்பு மட்டுமா? அண்ணலின் இடையறா உழைப்பும் காரணம். தழைதமிழ் நாட்டில் உடைமை உடலுழைப் பிரண்டும் உதவிய கொடையிற் பெரிய கோமான் ஒருவனைக் காட்டெனில் செட்டி நாட்டானைக் காட்டுவோம்! காய்ப்பு நாளின்முன் காய்த்துப் பழுத்தமாந் தோப்புப் போன்ற தூய்கழ கத்தாய் அதற்குள் எத்தனை ஆயிரம் அறிஞரை எத்தனை ஆயிரம் முத்தமிழ்ப் புலவரை ஈன்று புரந்தந்தாள்! ஈடெடுப் பில்லா எழுத்தா ளர்களை எத்தனை பேர்களை அளித்தாள்! பொருளின் பெற்றி ஆயுநர் தமிழிசை வல்லுநர் அமிழ்தப் பாவலர் இந்தா இந்தா என்று தந்தாள்! ஒருநூற் றாண்டில் தரத்தகு பயனைக் கால்நூற் றாண்டில் தந்தது கழகம். அதற்கு வையம் அடிநாள் விழிபெற வண்தமிழ் வழங்கியார் வழிவழி வந்த பேரா சிரியரைக் கழகம் பெற்றதும் பாரா சிரியர் புகழும் பண்புறு சீபீ ராம சாமியை அடைந்ததும் கன்றினை ஆவெனக் கழகத்தை ஓம்பும் அறிஞன் முத்தையனை அண்ணலின் புதல்வனைப் பெற்றதும் அன்றோ உற்ற காரணம். வயலும் ஏரும் மழையும் எருவும் இருந்தும் என்ன செய்வேன் என்னுமோர் ஏழைக்கு விதைநெல் ஈந்தான் போல அரசன் அண்ணாமலை, திருநாட் டுக்குப் பண்டைப் பெருமையும் பதியும் நிதியும் இருந்தும் வருந்தும் நிலைமை எண்ணி அறிவின் ஊற்றுத் திறந்தான்; அப்பெரு நிறுவனம் வெல்க நீடு வாழியவே! அண்ணா மலைப்புகழ் விண்ணென விரிக! அன்னோன் மக்களும் சுற்றமும் மற்றும் கழகம்காக்கும் கணக்காயர்களும் மாணவர் தாமும் எழிலுறு சீபீ இராம சாமியும் வாழிய பைந்தமிழ் நாடு! வாழிய வாழிய வண்தமிழ் நன்றே! வேறு தேனூற்றும் பூவில் தமிழூற்றும் வண்டுதிகழ் பொதும்பர் வானூற்று நண்ணு தில்லைக்கண் அண்ணாமலை மன்னளித்த ஆனூற்றுப் பாலின் அறிவூற் றிடும்பல் கலைக்கழகம் கால்நூற்றாண் டுங்கண்டு பல்லூழி யுங்காண வாழியவே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.251, 1964 அண்ணாமலைப் பல்கலைக் கழக 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பாரதிதாசன் வாழ்த்துப் பாக்கள். 75. வ. சுப்பையன் அறுசீர் விருத்தம் திருநெல்வே லிச்சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் போலும் ஒருநல்ல தமிழ்வளர்க்கும் நிறுவனமும் கண்டதில்லை உலகில்! அந்த உரைமல்கு நிறுவனமும் முப்போதும் தமிழுக்கே உழைக்கத் தக்க பெருநல்லான் தமிழ்ப்புலவன் சுப்பையன் போற்பிறரைப் பெற்ற தில்லை. நூலெல்லாம் விளையுமங்கே நூறாயி ரக்கணக்கில்! நூல்ஒவ் வொன்றின் மேலெல்லாம் அழகுசெயும் சுப்பையன் மிகுதிறமை! அதுவு மின்றிக் காலெல்லாம் சிலம்பொலிக்கத் தமிழரசி உலகரங்கு காணும் வண்ணம் தோலெல்லாம் சுளைப்பயன்கொள் புதுப்புதுநூல் தோற்றுவிப்பான் அந்த மேலோன். - புகழ் மலர்கள், ப.104, 1978; குயில், 15.5.1948 76. பாண்டித்துரைத் தேவன் இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன் இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே எனச்சொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை! - இனியுமோர் தமிழ்ச் சங்கம் வியந்தது வையம் சென்றநாள் சிலவே, விரிந்தது மதுரைத் தமிழ்ச் சங்க நிலவே; அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே! - இனியுமோர் தமிழ்ச் சங்கம் புலவர் வகுப்பு மூன்று படைத்தான், புன்மையின் மடமையின் என்பை உடைத்தான், பலதமிழி லக்கிய மாசு துடைத்தான், பாண்டித் துரைத் தேவன் புகழ்க்கொடி எடுத்தான்! - இனியுமோர் தமிழ்ச் சங்கம் - தேனருவி, ப.108, 1956 77. தியாகராசன் தியாக ராசனால் திராவிடம் விழித்தது தீயவர் அஞ்சினர் கொட்டடா முரசம்! உய்யாத தமிழர்கள் உய்ந்திட லானார் ஒடுங்கினர் ஆரியர் கொட்டடா முரசம்! அவிந்த உளத்தில் உணர்வு கொளுத்தினான் ஆரியம் வெளுத்தது கொட்டடா முரசம்! கவிழ்ந்த கேடயம் இடக்கையில் ஏறிடக் கத்தி நிமிர்ந்தது கொட்டடா முரசம்! தீயகாங் கிரசை அன்றே சிரித்தான் தியாக ராசன் கொட்டடா முரசம்! தூயகாங் கிரசென அன்று புகழ்ந்தவர் துப்பினர் இன்று கொட்டடா முரசம்! தமிழர் இயல்பின் தகுதி காட்டி அமிழ்தை ஊட்டினான் கொட்டடா முரசம்! நமதடா இத்தி ராவிடம் என்று நன்றுசொன் னானென்று கொட்டடா முரசம்! மாப்பெருந் திராவிட இயக்கஆ யிரக்கால் மண்டபம் கண்டோம் கொட்டடா முரசம்! காப்புள இந்தக் கட்டடம் தனக்குக் கடைக்கால் அவனென்று கொட்டடா முரசம்! பெரும்புகழ் நாட்டிப் பருவுடல் மறைந்தான் பெரிது வாழ்த்திக் கொட்டடா முரசம்! அரும்புகழ் இளையர் வீரச் சிரிப்பினில் அவனைக் கண்டோ மென்று கொட்டடா முரசம்! - தேனருவி, ப.105-106, 1956 78. சவுந்திர பாண்டியன் பாண்டியன் பேர் வாழ்கவே-சவுந்தர பாண்டியன் பேர் வாழ்கவே! வேண்டிய செல்வம் விலகும் போதும் விலகிய செல்வம் அணுகிடும் போதும் மாண்டிடத் தக்க நோய்வந்த போதும் மட்டிலா உடல்நலம் வளர்ந்த போதும் யாண்டும் எப்போதும் சுயமரி யாதை இயக்கம் பேணத் தயக்கம் கொள்ளாப் - பாண்டியன் கயவர் கத்தி உருவும் போதும் கற்றவர் புகழ்ந்து பேசும் போதும் அயலவர் சூழ்ச்சி வலுத்திடும் போதும் ஆரியம் வணங்கி அழைத்திட்ட போதும் இயலும்முப் போதும் சுயமரி யாதை இயக்கம் பேணத் தயக்கம் கொள்ளாப் - பாண்டியன் தோழர்கள் எல்லாம் தொகை வேண்டும் போதும் தொகைபெற்ற தோழர் பகைகாட்டும் போதும் தாழ்வுறத் தலைவர் ஒதுக்கிடும் போதும் தலைவர்கள் தலைமேல் தூக்கிடும் போதும் ஏழ்மையை வெருட்டும் சுயமரி யாதை இயக்கம் பேணத் தயக்கம் கொள்ளாப் - பாண்டியன் - தேனருவி, ப.107, 1956 79. வாழ்த்தாத நாளில்லை வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறவாத் திருப்பெயர் - வாழ்த்தாத நாளில்லை வையகம் ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார்போல் அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும் வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை - வாழ்த்தாத நாளில்லை வையகம் தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம் திரைகடல் மறைத்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குப் புலவனைப் பொழுதெலாம் தமிழுக் குழைத்த தலைவனை - வாழ்த்தாத நாளில்லை வையகம் மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல் மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல், முறையாய் இவைகட்குச் சான்று காட்டி முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை - வாழ்த்தாத நாளில்லை வையகம் ஆரியச் சொற்கள் இந்நாட்டில் உற்றதும், அந்தமிழ்ச் சொற்களின் உதவி பெற்றதும் வாரியுண்ண ஆராய்ந்த உண்மையை வழங்கிய திருக்கை சிவந்த வள்ளலை. - வாழ்த்தாத நாளில்லை வையகம் - தேனருவி, ப.91-92, 1956 80. பரிதிமாற் கலைஞன் இந்த நூற்றாண்டில் இருவர் பார்ப்பனர் செந்தமிழ்ப் பற்றுடை யார்கள். - இந்த நூற்றாண்டில் முந்து பாவலன் பாரதி, மற்றவன் முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்! - இந்த நூற்றாண்டில் நாடகத் தமிழ் இலக்கணம் மறைந்ததே நாடகத் தமிழ் இலக்கியம் மறைந்ததே ஈடுசெய் வேனோ என்று துடித்தான், இயன்ற மட்டும் சிற்சில கொடுத்தான். - இந்த நூற்றாண்டில் சூரியநா ராயண சாத்திரி என்ற தூய்மை யற்றதன் ஆரியப் பெயரை ஏர்பெறு தமிழாற் பரிதிமாற் கலைஞன் என்று மாற்றிய நற்றமிழ் அறிஞன்! - இந்த நூற்றாண்டில் வாழிய பரிதிமாற் கலைஞன் எனும்பெயர்! வாழிய அன்னோன் வாழிய பெரும்புகழ்! ஊழிபெ யரினும் தன்சீர் பெயரா உயர்தனிச் செந்தமிழ் அன்னைவா ழியவே! - இந்த நூற்றாண்டில் - தேனருவி, ப.99, 1956 81. மனோன்மணீயம் சுந்தரனார் ஒன்று சொன்னாள் தமிழன்னை - என்னிடம் ஒன்று சொன்னாள் தமிழன்னை அன்றொருநாள் மாலைப் போதினிலே ஆரும் அறியாமல் என் காதினிலே - ஒன்று சொன்னாள் மன்றப் புலவரில் கைகாரன்-தமிழ் மனோன்ம ணீயம் செய்த சுந்தரன் பன்றிகள் உறுமின ஆரியம் உளதென்று பளீரென்று சுந்தரன் செத்த தென்றான்-இந்த - ஒன்று சொன்னாள் நான் பெற்ற மக்களில் சுந்தரன் சிறந்தவன், நற்றமிழ் காக்கத் தன்னலம் துறந்தவன், தேன்போன்ற தமிழை வளர்க்கப் பிறந்தவன், செந்தமிழ்க் குழைத்தே இறந்தவன்-இந்த - ஒன்று சொன்னாள் - தேனருவி, ப.100, 1956 82. ஆர். கே. சண்முகன் நிதித்துறை அறிஞன் ஆர்.கே. சண்முகன் நீணிலத் தலைவரில் ஒருவன்! - நிதித்துறை அறிஞன் மதித்திடும் வண்ணம் தமிழ்த்தொண்டு செய்தோன், மதியா ஆரியர் வாலினைக் கொய்தோன். - நிதித்துறை அறிஞன் வையக் கணக்கர்பால் தம்கணக் குரைப்பான் கையொலி செய்வார் வையக் கணக்கர், செய்வன திருந்தச் செய்எனும் அறம் தெரிந்தோன்! செந்தமிழ் நாட்டுக்கே அன்பு புரிந்தோன்! - நிதித்துறை அறிஞன் கல்விப் பொருளும், செல்வப் பொருளும் கடலெனப் பெற்றோன்; உடலும், உயிரும் எல்லார்க்கும் பயன்பட இனிதில் உழைத்தோன்; என்றும் வாழ்க அவன்புக ழுடம்பே! - நிதித்துறை அறிஞன் - தேனருவி, ப.101, 1956 83. பா. வே. மாணிக்க நாய்க்கர் ஒளியின் முதன்மை செங்கதிர் அதுபோல் ஒழுக்க முதன்மை தமிழகம் என்றே தெளிவித் தோன்பா வேமாணிக்க நாய்க்கன் அன்னவன்பேர் வாழ்கஇந் நிலத்தே! - ஒளியின் முதன்மை வரைவின் துறையில் அலுவல் வல்லான், வள்ளுவன் நிகர்த்த கல்வி வல்லான், புரையிலா அவைப்பெருஞ் சொல்லான், பொய்யர்க் கஞ்சுதல் சிறிதும் இல்லான்! - ஒளியின் முதன்மை ஒலிவடி வினுக்கும் வரிவடி வினுக்கும் ஓம்எனும் தமிழ்எழுத் தேமுதல் என்று வலிவுற விளக்க நூல்பல செய்தான் மாணிக்க நாய்க்கன் மாப்புகழ் ஓங்கவே. - ஒளியின் முதன்மை - தேனருவி, ப.102, 1956 84. உமா மகேச்சுரன் வான விரிவைக் காணும்போ தெல்லாம் - உமா மகேச்சுரன் புகழேஎன் நினைவில் வரும் - வான விரிவை ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் - மக்கள் அன்பினோன், அறத்தினோன், ஆன்ற அறிவினோன். - வான விரிவை பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய் பெருக அழைக்கவும் நேரமே யில்லை; உற்றார் உறவினர்க் காக உழைக்க ஒருநாள், ஒருநொடி இருந்ததே இல்லை; கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை காண வேண்டி இல்லந் துறந்து முற்றுங் காலத்தை தமிழ்த்தொண் டாக்கினோன்! வாழ்க! தமிழ் முனிவன் திருப்பெயர்! - வான விரிவை - தேனருவி, ப.109, 1956 85. அமைச்சன் முத்தையன் அமைச்சன் முத்தையப்பேர் வாழ்க! - அந்நாள் அவன் காட்டிய வழி மீள்கவே. தமிழரின் காப்பாளன் நல்வழக் கறிஞன் தன்னலம் கருதாத் தன்மையன் அந்த - அமைச்சன் முத்தையப்பேர் தமிழர்தம் உடைமை இத்தமிழ் நாடு! தமிழர்க் குரியவை தமிழ்நிலை நலங்கள்! சுமக்காத மாட்டுக்குச் செல்வத்தில் பங்கா? என்று சொன்னவன் முத்தையன் அந்த - அமைச்சன் முத்தையப்பேர் அதிகாரி கால்நக்கும் பார்ப்பனர் தமக்கே அலுவல்கள் என்ற நிலைமையைப் போக்கிச் சதுர்கொண்ட தமிழர் விழுக்காடு நோக்கும் சட்டத்தைச் செய்தான் முத்தையன் அந்த - அமைச்சன் முத்தையப்பேர் - தேனருவி, ப.111, 1956 86. ம. சிங்காரவேலர் சிங்கார வேலனைப்போல் சிந்தனைச் சிற்பி எங்கேனும் கண்டதுண்டோ? - சிங்கார வேலனைப்போல் பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால் பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால் சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால் தமிழர்க்குப் புத்தெண்ணம் புகுந்ததும் அவனால்! செங்கதிர் ஒளிபோல் அறிவில் தெளிந்தவன் திங்களின் ஒளிபோல் அன்பில் குளித்தவன்! - சிங்கார வேலனைப்போல் நாடு விடுதலை பெற்றதும் அவனால் நாத்திகக் கருத்தனல் கனன்றதும் அவனால் பாடுபடுவார்க் குரிமை உயிர்த்ததும் அவனால் பழமையில் புதுமை மலர்ந்ததும் அவனால்! ஓடும் அருவியைப்போல் உண்மையில் தெளிந்தவன் உறுதியில் எஃகினுக்கும் ஊட்டம் அளித்தவன்! - சிங்கார வேலனைப்போல் மூல தனத்தின் பொருள் புரிந்ததும் அவனால் புதுவுலகக் கனா முளைத்ததும் அவனால் கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால் கூடின அறிவியல், அரசியல் அவனால்! கடல்வான் ஆழ்அகலக் கல்வியைக் கற்றவன் கண்ணாய் உயிராய்த் தமிழர்க் குற்றவன்! - சிங்கார வேலனைப்போல் தோழமை உணர்வு தோன்றிய தவனால் தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால் ஏழ்மை இலாக்கொள்கை எழுந்ததும் அவனால் எல்லோருக்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்! போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி! - சிங்கார வேலனைப்போல் - தேனருவி, ப.119-120, 1978 87. இசைப் புலவன் இலக்குமணன் நிலைமண்டிலம் இயலிசை வல்ல இலக்கு மணனை இனிய தமிழகம் இழந்துவருந் துங்கால் அயலுள பார்ப்பனர் அகமகிழ்ந் தார்கள்! ஆதலாற் பகைவரைக் கான்று மிழ்ந்துநீ மூதறி வாளர்க்குக் கல்நாட்டு தமிழா! பாழுங் கிணற்றில் பதுக்கிய தமிழிசை மீளும் வகையை மேற்கொண்ட அறிஞன், வாழ்விழந் தானென்று மகிழ்ந்தார் பார்ப்பனர் கோழைப் பகைவரைக் கான்றுமிழ்ந் தேநீ ஏழிசை வல்லவர்க்கே கல்நாட்டு தமிழா! - தேனருவி, ப.103, 1956; தமிழ்நிலம், 15.10.1949 88. *mH»Ç அழகிரி பெரும்புகழ் வாழ்க! - பகுத் தறிவின் மணிவிளக் காகத் திகழ்ந்த - அழகிரி வழிவிட்டு விலகுக மடமைகளே - எமை வாழவிட்டு வெளியேறு பார்ப்பானே! வழிவிட்டு மறைகசிறு தெய்வங்களே! வெற்றுவேட் டினிவேண்டாம் என்ற - அழகிரி திராவிட நாடு திராவிடர்க் காகுக, ஆரியர் நாட்டில் ஆரியர் வாழ்க, ஒரே நாடுதான் இருநாடும் என்றே ஒட்டாரம் பேசினால் கெட்டுப் போவீர் என்ற - அழகிரி - தேனருவி, ப.104, 1956 * பின்வந்த பதிப்புகளில் ஊர்ப் பெயரும், சேர்த்துப் பட்டுக்கோட்டை அழகிரி எனத் தலைப்பு இடம்பெற்றுள்ளது. 89. அஞ்சா நெஞ்சன் அழகிரி நேரிசை ஆசிரியப்பா ஆரியக் காசநோய் அரிஅரி என்று சீரிய திராவிடர் செந்தமிழ் வாழ்வைக் கண்ணில் புலப்படா நுண்ணுயிர்க் கூட்டம் புண்ணில் புரையோடிப் பொசுக்கையில், புண்ணைப் புண்ணுறச் செய்யும் புரட்சி வேங்கை! பகுத்தறி வியக்கப் பாயும் சிறுத்தை! பெரியார் கொள்கையின் எரிமலை யான அரிமா நெஞ்சன்! ஆரிய வேரில் கொதிநீர்ப் பேச்சைக் கொட்டி முழக்கினோன்! எதிரிகட் கெல்லாம் எரிவெறிக் குண்டு! நோய்வாய்ப் பட்டுச் சாவாய் வீழ்ந்ததே! காய்ச்சல் விட்டதாய்க் கருதலாம் ஆரியர்; இனவெறி பிடித்த இட்லரின் உறவுகொள்பார்ப் பனவெறிச் சொறிக்கவன் படைமருந் தானவன். பட்டுக் கோட்டை அழகிரி சாமி அஞ்சா நெஞ்சன், அதிர்இடி போன்றவன் பேச்சொவ் வொன்றும் பெருங்காட்டு வெள்ளம்! கூட்டத்துப் பேச்சு கோடை மாரி! காரண காரியம் வாரணப் படைபோல் ஓரணி யாகி உலுக்கிடும் பகைவரை! பெரியா ரிடத்தில் உரிய மரியாதை தருவார்; தலைவர் என்றழையார் எவரையும், தோழரே என்று துணிந்து விளித்துத் தீவிழித் ததுபோல் சிந்தனைச் சொல்எழும்! அச்சத் தினையவன் அணுவும் அறியான்; கலக நரிகளின் சலசலப் பெவற்றையும் அலைக்க ழித்திடும் சூறா வளியவன்; எனக்கொரு மனக்குறை அழகிரி தனக்கொரு தம்பிடி சேர்த்தா னிலையே! - புகழ்மலர்கள், ப.99-100, 1978 90. நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நேரிசை வெண்பா ஒற்றைக்கால் மன்றம் கலைக்கழகம்! உள்ளிருந்தேன் கற்குமணிக் கோயில்கள் கண்டுமகிழ் - வுற்றேன்,பின் அண்ணா மலைப்பல் கலைக்கழகம் அன்றளித்தார் எண்ணத்தை எண்ணினேன் நான். தஞ்செல்வம் எண்ணிய அண்ணலார் தண்ணருள்சேர் நெஞ்சினில் நாட்டின் நிலைகண்டார் - பஞ்சம் அலைக்கா தறிவுபெற அண்ணா மலைப்பல் கலைக்கழகம் கண்டார் இனிது. வழுத்தவும் வாழ்த்தவும் வண்டமிழர் நாப்பண் பழுத்த பழமர மாக - இழைத்துயர்ந்த அண்ணா மலையார் அறத்தை நொடிதோறும் எண்ணாம லாஇருக்கும் நாடு? அண்ணா மலைப்பல் கலைக்கழகக் கட்டடத்துக் கெண்ணா யிரந்தொழில் வல்லவர் - நண்ணினார் சுண்ணம்மரம் கோடிவண்டி தூய்கடைக்கால் ஒன்றேஅஃது அண்ணா மலையரசர் அன்பு. இலைஎன்றார்க் கீதல் அறிவுக்கண் ணான கலைஈதலே என்றுகண்ட - நல்மனிதர் அண்ணா மலையரசர் அன்னார் வழிகாட்டும் புண்ணியமும் பெற்றது நாடு. அங்கங்குக் கல்வி அறஞ்செய்தார் உண்டெனினும் திங்கள்விண் மீன்களிடைச் சேராமை - இங்கற்றப் பல்கலையை மாணவர்கள் மொண்டுண்ணப் பாற்கடலை நல்கலுக்கும் ஈடுண்டோ நாடு. அந்தஅண் ணாமலைக்கும் மக்களின் அன்பரசர் இந்தஅண் ணாமலைக்கும் வேற்றுமைஎன்? - அந்தமலை நாளைக்கே செத்தால் நலம்செய்யும், இஃதிந்த வேளைக்கே கல்வி விளக்கு. அண்ணா மலைக்கழகம் அன்றவர்தாம் நாட்டிலரேல் இந்நாள் தமிழர் நிலைஎன்னாம்? - திண்மை நெறியேது? நெஞ்சில் உரமேது? நாட்டார் அறிவோ உலக்கைக் கொழுந்து. மனிதரில் நல்ல மனிதர், மதிக்கின் புனிதரில் மிக்க புனிதர் - இனிதாக நல்கலில் நல்கல் அறிவென்றார், அண்ணலார் பல்கலை மன்றம் படைத்து. இங்கு விடுதலை! இங்கின்பம்! அல்லாமல் அங்கென்ன என்றே அறிவிப்பார் - செங்கதிர் காணவர்! அண்ணா மலைப்பல் கலைக்கழகம் மாணவர் வாழ்வின் பயன். - புகழ் மலர்கள், ப.22-23, 1978; குயில், 05.07.1960 91. செட்டிநாட்டரசர் முத்தையா நேரிசை வெண்பா துப்பாக்கி யின்வயிற்றில் பீரங்கி தோன்றியது மெய்ப்பாக்கி வேந்தரண் ணாமலையார் - இப்பார்க்கு முத்தையா வைத்தந்தார் மூத்தோரும் எம்அறிவின் சொத்தையா என்னும் படி. செட்டிநகர் வேந்தர் அறிவுநீர்த் தேக்கத்தை எட்டி நகராமல் இயற்றினார் - ஒட்டி அரசர் முத்தையா அதுகாப்பா ரானார் இருவிழியைக் காக்கிமை போல். அண்ணா மலைப்பல் கலைக்கழகம் அன்றளித்த அண்ணா மலையரசர் ஆசையினைக் - கண்ணாகக் கொண்டுநிறை வேற்றிவரும் கோமகன், முத்தையாவின் தொண்டென்றும் தூண்டா விளக்கு. தமிழிசைஇ ராசாசர் அண்ணா மலையார் அமிழ்திவர் ஆயினும் நாட்டில் - கமழும் கலைத்தோட்டக் காரர்; கருங்குளவிச் சாதி அலைத்தோட்ட அஞ்சா தவர். வாணிகத்தில் எவ்வெத் துறைகள்? to¤jjÄœ khzt®¡ bf›bt¤ JiwfŸ?எலாம் - பேணுகென்றே அப்பா உரைத்தார், அதனைமுத் தையாவோ முப்பதுபங் காக்கினார் மூத்து. துணைவேந்தர், தூய இணைவேந்து யார்க்கும் அணைவேந்தி ஆட்சியைக் காக்கத் - துணையேந்தும் வில்லுக்கும் வேந்தர், பொருள்வேந்தர், முத்தையா கல்விக்கும் வேந்தரே காண். கடுநிலைமை எத்தனை அத்தனை யுள்ளும் நடுநிலைமை நல்லுயிரே என்பர் - வடுவற்ற இன்சொல் உடையார்; எழிலரசர் முத்தையா வன்சொல் வழங்கலறி யார். பயிரும் பயனுழவும் போல்முத்தை யாதம் உயிரும் தமிழ்மொழியும் ஒன்றென் - றயராது நாளும் உழைப்பவர்; நம்தமிழர் எல்லாரும் கேளும் கிளையுமே என்று. தங்கா தியங்கியிலே தம்துறைத்த னப்பணியாய் எங்கே பறந்தாலும் இங்கிருப்பார் - மங்காத அண்ணா மலைப்பல் கலைக்கழகம் முத்தையா எண்ணாத நேரமி ராது. செட்டிநாட் டண்ணல் திருமகனார் முத்தையச் செட்டிநாட் டண்ணல் திறம்வாழ்க - அட்டியின்றிப் பல்லாண்டு வாழ்கவே; பன்மக்கள் பேரர்கள் செல்வம் புகழிற் சிறந்து. - புகழ் மலர்கள், ப.24-25, 1978; குயில், 12.07.1960 92. துணைவேந்தர் நாராயணசாமி நேரிசை வெண்பா சோரா துழைக்கும் துணைவேந்தர்; நம் தமிழர் நாரா யணசாமி நல்லவர்; - பாரினிலே அண்ணா மலைப்பல் கலைக்கழக அன்னைக்குக் கண்ணாவார் கல்விக் கடல். அண்ணா மலைப்பல் கலைக்கழகத் துக்கும் அதில் நண்ணினார்க்கும் நாரா யணசாமி - வண்டமிழ்க்கும் பண்டைக்குப் பண்டைத் தமிழர்க்கும் ஆற்றுவதோர் தொண்டுக்கும் வாய்த்த சுடர். பெரிய நிறுவனங்கள் மன்றங்கள் பேணி அரியசெயல் செய்த ஆற்றல் - தெரியுங்கால் நாரா யணசாமிக்கு அண்ணா மலைக்கழகம் ஓர்ஏர் ஒருநாள் உழவு! அண்ணா மலைப்பல் கலைக்கழக நல்லாட்சி பண்ணினார் பல்லோர் எனினுமே - அண்ணலார் நாரா யணசாமி நல்லுளத்தின் அன்பாற்றல் பாரறிந்த பச்சை விளக்கு. அண்ணா மலைக்கழகம் ஆளும் நாராயணனார் எண்ணமும் ஆற்றலும் ஈடிலவாம் - எண்ணத்தில் பள்ளம் படுகுழி இல்லை; பணியாற்றும் உள்ளம் உறங்காப் புலி. சினந்தாரை அன்பால் திருத்துவார்; இன்சொல் மனந்தூய்மை வாய்ந்தவர்; கோளால் - தினைபனையாம் காட்டுக்கும் காதுகொடார்; நாராயணசாமி நாட்டுக்கும் நல்ல துணை வகுப்புப் பெறவந்த மாணவரில் சில்லோர் புகப்பெற்றார் மற்றுப் புகாத - மிகப்பலரின் கண்ணீரைக் கண்டழுத நாராயணசாமி கண்ணீரும் காவிரி ஆறு. கலைத்துறைவ குப்புகள் காணின் சிலவே புலவர் திருக்கூட்டம் போதா - நிலைபெருக்கல் எந்நாளோ என்றழுத நாராயணசாமி இந்நாளை எண்ணிநகைத் தார். அல்லலிலா தண்ணா மலைப்பல் கலைக்கழகம் சில்லாண்டு காத்த திறம்போலப் - பல்லாண்டு காக்க நாராயணனார் என்பது நம்கருத்து நோக்க இதை நூறுமுறை வேந்து. துணைவேந்தர் நாரா யணசாமி தொண்டே இணையற்ற தாகி இனியும் - அணையா விளக்காக; அண்ணா மலைப்பல் கலையின் ஒளிக்காக வாழ்க உயர்ந்து. - புகழ்மலர்கள், ப.26-27, 1978; குயில், 16.7.1960 93. *துணைவேந்தர்க்கு விண்ணப்பம் அகவல் தமிழ்மொழி ஆயும் தமிழ்ப்புல வர்தாம் தமிழகம் காக்கும் தகுதி வாய்ந்தவர். என்பது தமிழ்ச்சான் றோரின் எண்ணம்! அண்ணா மலைப்பல் கலைக்கழ கந்தான் பண்ணிய தவத்தின் பயனே யாகத் தேவ நேயப் பாவாண னாரும் வி.மு.சோ மசுந்தர னாரும் அமைந்தனர் கழக அரசு நிழலில் நேற்றுச் சோமசுந் தரனார் தூய்மை கண்டேன் அன்னார் நாட்டு மக்களின் அன்பர். சிறிய பூனை அன்று பெரிய வேங்கை அவர்எனல் விளக்கம் ஆனதே! இந்நாள் தமிழர் பசிபசி என்று தரக்கேட் கின்றனர். சோமசுந் - தரனார் சரக்கு மாளிகை திறக்கத் தக்கது. மொழிஅறி யாமை மூடத் தக்கது. தமிழ்மொழி ஆய்வுக் கென்றே தக்க துறைத்தனம் அமைப்பதால் தொல்லை தொலையும், துணைவேந் தர்தம் தூய முயற்சியால் இணைய வேண்டும் இந்த நிறுவனம் மனம்வைக்க வேண்டும் ஐயா! இனம்தன் மேன்மை எய்தும் பொருட்டே. - நாள்மலர்கள், ப.35, 1978; குயில், 2.8.1960 *Jizntªj® வி.மு. சோமசுந்தரனார் சிறப்பு எடுத்துரைக்கிறது 94. நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் நேரிசை வெண்பா ஆயிரம்பேர் என்ன அலைகட் கிடையிலும் தாயினும் அன்பு தவழ்மொழியே - வாய்உகுக்கும் பண்பார் பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் அண்ணா மலைஅடைந்த பேறு. எண்ணம், இயக்கம், செயல்முடிபெல் லாம்பதிவு பண்ணும் பரந்த துறைத்தலைவர் - நண்பார்ந்த மீனாட்சி சுந்தரனார்க் கீடுவிளம் பில்அந்த மீனாட்சி சுந்தரனார் தாம். அண்ணா மலைப்பல் கலைக்கழக ஆக்கத்திற்கு - உண்ணாதும் சற்றேனும் ஓய்வுபெற - எண்ணாதும் முப்போது மேஉழைக்கும் மீனாட்சி சுந்தரத்தை எப்போதும் ஏத்தும் உலகு. தமிழ்மூன்றும் ஆங்கிலம் ஒன்றும், தமிழர் நமர்என்னும் நண்பும்அவர் உள்ளம்! - கமழும் பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் பாரில் மதியாளர் மொய்க்கும் மலர். தலைவர் வலக்கை! தமிழ்படை வீடு! கலைஞர்க்கும் மாணவர்க்கும் காவல் - புலன்களெல்லாம் மெய்த்த பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் பத்தரைமாற் றுப்பசும் பொன். எந்நாள் பதிவாள ராகி இவண்வந்தார், அந்நாள் தொடங்கிற்றாம் அந்தமிழர் - பொன்னாள்! பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் பாரோர்க்கு - உதவிசெயும் உள்ளத் தவர். அறத்தாற்றில் செல்லும் அடியைப் பெயர்த்துப் புறத்தாற்றில் வையாப் புனிதர் - இறப்பினும் அண்ணா மலைப்பல் கலைக்கழ கஅன்னைதான் எண்ணாநாள் இல்லாத நாள். வாழவைக்கும் அண்ணா மலைப்பல் கலைக்கழகம் வாழவைக்க வந்த மருந்தனையார் - வாழவைக்கும் செந்தமிழ்ச் செல்வர் பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் அன்பின் சுரப்பு. அண்ணா மலையரசர் பேர்வாழ்க! அன்பளிப்பாம் அண்ணா மலைப்பல் கலைக்கழகம் - நண்ணுகலைத் தேனாக்கும் ஆசிரியன் மார்வாழ்க! வாழ்கவே! மீனாட்சி சுந்தர னார்! என்றும் மனைமக்கள் சுற்றத்தி னோடுதாம் நன்று புகழ்ஏந்தி நானிலத்தின் - முன்தோன்றும் செந்தமிழ்க்குத் தொண்டுசெய்து சீர்ஆர்ந்து மீனாட்சி சுந்தரனார் வாழ்கநலம் தோய்ந்து! - புகழ்மலர்கள், ப.28-29, 1978; குயில், 2.8.1960 95. நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதர் நேரிசை வெண்பா பேரா சிரியர் இராமநா தஞ்செட்டி யார்என்றால் யார்என்று கேட்பார்யார்? - பாரினிலே பூவென்றால் தாமரைதான், பொன்னென்றால் தங்கம்தான்; யாவர் லெ.ப.கரு. வென்னார்? தமிழாற் பிறந்து தமிழால் வளர்ந்து தமிழாற் சிறந்து தமிழர் - தமிழ்ப்புலமை நண்ணீரோ என்னும் இராமநாதன் தொண்டே அண்ணா மலைக்கு விளக்கு. மாற்றவர் நெஞ்ச வயலும், தமிழ்விளைத்தல் காற்றும் கடும்புனலும் சாய்க்காமே - ஆற்றலால் என்புரிந்தும் காக்கும் இயல்புடையார், செந்தமிழ் அன்பர் இராமநா தர். குரங்கிருக்கும் குள்ள நரியிருக்கும் சான்றோர் அரங்கிருக்கும் மாணவர் ஆர்க்கும் - இரங்கியருள் பேரா சிரியர் லெபகருஅண் ணாமலைக்கே ஓரா சிரியர்; உயிர்! கழுக்கம்பம் ஏற்றப் படினும், கடுகும் ஒழுக்கம் பிழையா ஒருத்தர் - கொழுக்கத் தமிழ்மேய்க்கும் சான்றோர் இராமநா தர்தாம் தமக்கன்று; வாழ்வுதமி ழர்க்கு. தழையும் தமிழ்த்துறை சார்புலவர் சீர்க்கு மழையும் வளர்ப்பும் எனவாழ் - உழவர் இராமநா தச்செம்மல் என்பதில் உண்மை இராமலா இந்தப் புகழ்! இருக்கும் இடந்தெரி யாதிருப்பார் என்றால் இருக்கும் புகழை அதுதான் - பெருக்கும்! தமிழ்கொல்லத் தக்கதமிழ் ஆள்பிடிக்கும் நாட்டில் தமைக்காத்தார் தமிழ்காத்த வாறு. தமிழ்விளக்கை எங்குமே தட்டி எரிக்கும் குமிழ்தட்டும் கூட்டத் தொருவர் - அமைதியைக் கோடி கொடுத்தேனும் கொள்வர் லெபகரு வேடிக்கைக் காரர்அல் லர். இன்பத் தமிழுக்கி ராமநா தர்போல்ஓர் அன்பர் இருப்பின் அதுபோதும்! - பொன்போலும் அண்ணா மலைப்பல் கலைக்கழகம் ஆக்கமுறும் மண்ணாளும் வாய்மைத் தமிழ். வாழ்க லெபகருஇ ராமநா தர்தாம் வாழ்கஅவர் சுற்றமும் நட்பினரும் - வாழ்கவே அண்ணா மலைப்பல் கலைக்கழகம்! நன்றாகத் தண்டமிழர் வாழ்க தழைந்து. - புகழ்மலர்கள், ப.30, 1978; குயில், 9.8.1960 96. நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புலவர் வெள்ளைவாரணனார் நேரிசை வெண்பா மல்கு புகழ்வெள்ளை வாரணனார் மாணவர்க்கு நல்கு தமிழ்எல்லாம் நல்லதமிழ்! - பல்குசீர் அண்ணா மலையில் அயலார் நெறிதழுவ எண்ணாத் தமிழ்ப்புலவர் ஏறு. இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆன வலக்கணும் மற்றது மாகத் - துலக்கமுறும் வாரணம், வஞ்சகர்க்கே அஞ்சாமை கொண்டதுதான் காரணம் கண்ட புகழ்க்கு. தந்தமிழ்த் தொண்டுண்டு தாமுண்டென் றெண்ணாதார் செந்தமிழ் மேன்மை திரிக்கின்ற - எந்த நரிக்கும், புலிவெள்ளை வாரணனார் நன்கு விரிக்கும் விரிவுரை வேந்து. அண்ணா மலைப்பல் கலைக்கழகத் தொண்டாற்ற நண்ணிய நாள்முதல் இன்றுமட்டும் - கண்ணான மாணவர்தம் நெஞ்சத்தை, நம்வெள்ளை வாரணனார் கோணவைத்தார் என்பதுபொய்க் கூற்று. எப்பேடு பண்டைத் தமிழை இழித்துரைக்கத் தப்பேடு காட்டினும் தாக்குமவர் - செப்பேடு! மாசறுக்கும் நம்புலவர் அண்ணா மலையென்னும் பாசறைக்கு யானைப் படை. யார்எனினும் நேர்வருக என்தமிழே வையத்தின் காரணம் என்றெடுத்துக் காட்டென்பால் - வாரணத்தின் தெம்புண்டு! வாயடி செய்வார்க்கு வாரணத்தின் கொம்புண்டு குத்தும்ஒரே குத்து. இவர்போன்றார் ஏழெட்டுப் பேரிருந்தால் என்றன் கவலை ஒழியுமென்று காட்டி - நுவலும் அவள்தானே நம்தமிழ்த்தாய்! அன்பால் குறிக்கும் அவர்தாமே வெள்ளானை யார்! சீரகம் பூண்டு சிறுகடுகும் இக்காயம் தீர்வெந் தயங்கோமம் செந்தமிழ்க்கே - பார்என்று நெஞ்சுக்கு நீயு மிளகென்னும் வாரணம் மஞ்சட்கண் ணுக்குமஞ் சள். இருக்கும் மனையார் இருப்பார் இளையர் இருப்பார், எனில்உலகும் வானும் - இருக்குமட்டும்! வல்வெள்ளை வாரணனார் நீடூழி வாழ்கவே செல்வச் செழுந்தமிழ் போல். மண்ணும் மலையாகும். வாழ்வார்க் குணர்வளிக்கும் அண்ணா மலைப்பல் கலைக்கழகம் - எந்நாளும் வாழுமடா மாணவர்க் கின்னும் பெரிதாகிச் சூழுமடா தூய நலம். - புகழ்மலர்கள், ப.31-32, 1978; குயில், 16.8.1960 97. நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேவநேயப் பாவாணர் நேரிசை வெண்பா செந்தமிழ்ச் செல்வச் சிறப்பும், திருநாட்டில் வந்தேறி கள்அடிக்கும் வாய்ப்பறையும் - இந்தாபார் என்னும்பா வாணர், எவன்எவ் விடர்செயினும் இன்னும்பார் என்னுமடல் ஏறு. ஆதி மொழிஎன் அருமைத் தமிழ்என்றே ஓதி உலகுக் குணர்த்திடவே - தீதின்றி ஆவன செய்பே ரறிஞர்அண் ணாமலையின் தேவநே யப்பாவா ணர். தமிழில் தமிழ்சார்ந்த கன்னடந்தெ லுங்கில் அமைகே ரளந்துளுவில், ஆர்வம் - கமழ்கின்ற ஆங்கிலத்தில் ஏனை அயல்மொழியில் வல்லுநர்எப் பாங்கிலுளார் பாவாணர் போல்? வடமொழியும் இந்தியும் மற்றும் வடக்கிற் படுமொழிகள் என்ற பலவும் - தடவியே அந்தமிழே ஆதிஎன் னும்தேவ நேயர்தாம் எந்தமிழர் எல்லார்க்கும் வேந்து. என்தமிழிற் கொஞ்சம் இருந்ததெலுங் கிற்கொஞ்சம் பின்ஆங் கிலத்திலே பீஏயும் - நன்குடையேன் என்று மொழிவார்போல் இல்லைநம் பாவாணர் பன்மொழிவல் லார்இந்தப் பார்க்கு. பன்மொழியில் வல்லரென்று பைந்தமிழர் நாவினிலே இன்னும் சிலபேர் இருக்கின்றார் - அன்னவர்கள் நாட்டுக்குச் செய்ததென்ன? நம்தமிழை மாற்றார்க்குக் காட்டிக் கொடுக்கும் கயவு. வீணாள்ப டாதுதமிழ் மேன்மையினைக் காட்டுவதில் வாணாளை ஆக்கும்பா வாணர்க்கு - நாணாமல் அல்லல் விளைக்கும் அயலார்க் கடியார்கள் இல்லாம லில்லை இவண். நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர் யாவர்க்கும் செய்வதே யாம். திக்கற்ற செந்தமிழ்த்தாய் வெல்கவே வெல்கென்று மெய்க்குழைக்கும் தொண்டர்மனம் வேகவே வைக்கும் தடிப்பயல் யாவனே தப்புவான்? அன்னோன் நடுத்தெருவில் நாறும் பிணம். புண்ணானால் நெஞ்சம் தமிழுலகு பொன்றுமென்று அண்ணா மலைப்பல் கலைக்கழகம் - இந்நாளில் தேவநே யர்க்குந் திருத்தொண்டு செய்ததென்க யாவரும் ஏத்தும் படி. வாழ்ந்தாலே நாம்வாழ்வோம் வாழாளேல் நாம்வாழோம் தாழ்ந்த தமிழகத்தில் செந்தமிழ்த்தாய் - ஆழ்ந்தாழ்ந்து பாராது பாவாணர்க் கின்னல் புரிவதனால் வாராது வாழ்விற் புகழ்! எந்தமிழ் மேலென்று உண்மை எடுத்துரைப்போன் செந்தமிழன்! செந்நெற் பயன்மழை! - நந்தமிழின் கீழறுப்போன் கீழோனே! தேவநே யர்வாழ்க! வாழிய செந்தமிழ் மாண்பு. - புகழ்மலர்கள், ப.33-34, 1978; குயில், 23.8.1960 98. நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இசையரசு தண்டபாணி தேசிகர் நேரிசை வெண்பா அண்ணா மலைப்பல் கலைக்கழக அன்னைக்கே எண்ணில் துறையில் இசைத்துறையே - கண்ணாகும்! ஆசிரியர், நற்றலைவர் ஆம்தண்ட பாணிஎனும் தேசிகர் தீந்தமிழ் ஊற்று. இசைத்துறையார் காப்பார் இவரல்லார் என்றே இசைத்துறையார் ஏனியம்ப மாட்டார்? - இசைத்துறையும் வாய்ப்பாட்டுக் காரரெலாம் தேசிகர் வாய்மலர்ந்தால் போய்ப்பாட்டுக் கேட்டுவரும் போது. தமிழர் தமிழால் தமிழ்பாடல் வேறு தமிழரலார் தாம்பாடல் வேறு - நமக்கான தேசிகர் பாட்டுச் செவிக்கமுது! மற்றவர்சொல் ஊசி உறுத்தல் செவிக்கு. சொல்லின் எழுத்தொன்றும் சோராமல் பண்எழுப்பும் நல்ல முகம்வாய் நலியாமல் - தொல்லையின்றித் தோலை யுரித்துச் சுவையளிக்கும் தேசிகரின் வேலை வியப்பைத் தரும். அண்ணா மலையரசர் அன்னை தமிழ்மேன்மை எண்ணாதார் தாமும் இனிமேலே - பண்ணார் தமிழிசையே பாடுகென்றார், தேசிகர் தந்த தமிழிசையால் உள்ளம் தளிர்த்து. வந்தேறி கட்கும் இசையின் வகைபயிற்றும் செந்தமிழ்ப் பண்ணின் திறமறிந்த - ஐந்தாறு பேருக்குள் தேசிகரும் பேரா சிரியரெனல் பாருக் கறைந்த பறை. கருநா டகஇசைக்குத் தென்பாங்கே ஆதி இருநாடும் எந்தமிழ் நாடே - தெரிந்துகொள்க என்ற இசைப்புலவர் தம்மில்நம் தேசிகரும் வென்ற இசைப்புலவர் வேந்து. இடரில் தமிழிசைஏ தென்ற புலியைப் பிடர்சிலிர்த்துப் பாய்ந்து பெரிய - குடர்கிழித்த சிங்கங்கள் தம்மில் ஒருசிங்கம் நம்தேசிகர் எங்கும் இசைபொழியும் வான். படிமிசைஓர் அண்ணா மலைக்கழக அன்னை மடிமிசை யேந்தி மகிழும் - நெடிதிசை சேர்தண்ட பாணிஎனும் தேசிகர் வாழ்க! சீர்பெருக செந்தமிழ்த் தாய். அண்ணா மலையரசர் பேர்வாழ்க! அன்னாரின் கண்ணான முத்தையக் காவலனார் - எந்நாளும் வாழ்கவே! அண்ணா மலைப்பல் கலைக்கழகம் வாழ்கவே வண்தமிழ் நாடு! - புகழ்மலர்கள், ப.35-36, 1978; குயில், 30.8.1960 99. நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மருத்துவப் புலவர் நாதன் அகவல் வாழும்அண் ணாமலைப் பல்கலைக் கழகம் சூழும் மாணவர் அலுவலர் பிணிகள் போக்க மருத்துவ மனையும் ஆக்கி நாதன் எனும்ஒரு நன்மருத் துவரையும் தேடி அமைத்தது, பிணிப்பேய் திடுக்கிட! நாதனார் மேனாட்டு மருத்துவ நற்கடல் துறைகள் பலவும் தோய்ந்த நுண்கலைஞர், ஒருபெரும் குடித்தனம் அவருக் குண்டு, மக்கள் உள்ளனர், உறவினர் வாழ்ந்தனர், ஆயினும் அன்னவர் உலகுக்கு வாழ்பவர். பெரிய தான மருத்துவ மனையில் ஒருநல் லழகிய உயர்ந்த மனிதரின் இருகைநோ யாளிக்கு மருந்துள் அடக்கிய ஊசி ஏற்றிக் கொண்டே இருக்கும். இருவிழி எண்ணிலாது வரும்பிணி யாளரை வருகென மகிழ்ந்து வரவேற் றிருக்கும். ஒருநாள் ஒருமகள் கண்மருத் துவத்தில் நாதனார்க் கேஇணை நாதனார் என்றனள். அவளை நீயார் என்றேன். அதற்கவள் நான்தான் உலகம் என்று நவின்றாள். அம்மா என்று மகளிர் கைதொட்டு நன்மருந் தளிக்கும் பொன்னான தந்தையை நாதனார் உளத்தில் நன்கு காணலாம். பச்சைநீர் ஓட்டம் பார்ப்பவர் போல நச்சினார்க் கினியராய் நோயினை நன்காய்ந்து இறந்தவன் பிழைத்தான் எனச்செயும் மருத்துவப் புலவர் மீன்களின் நடுத்துலங்கும் நிலவு! நாதனார் உறவொடு வாழ்க ஈதவர் புகழா வானமா எனவே! - புகழ்மலர்கள், ப.37-38, 1978; குயில், 6.9.1960 100. தமிழ்ப் பேராசிரியர் சதாசிவப் பண்டாரத்தாரின் புகழ் வாழ்த்து அறுசீர் விருத்தம் சதாசிவப் பண்டாரத்தார் இதோஇருக் கின்றார்எங்கள் தமிழைக் காக்க! எதோபார்ப்பான்? எதோதருமைத் தம்பிரான்? மீனாக்கி எனத்த மிழ்த்தாய் அதேநினைப்பாய் அதேமகிழ்வாய் இருக்கையிலே ஐயையோ இறந்தார் என்றால் இதேகணத்தில் தமிழ்த்தாயின் பகைவர்இன்னும் இரண்டுபடி ஏறு வாரே! 1 உருப்படியா வரலாற்றை உருப்படச்செய் தார்!ஈன்ற தமிழ்த்தாய் கோயிற் றிருப்படியில் தொட்டதாள் எழுதுகோல் கடைசிவரை தீர்ந்த துண்டா? விருப்படியில் மிகும்ஆற்றல் போயிற்றே பகைக்கவர்தாம் தரவி ருந்த செருப்படியும் போயிற்றே சிரிப்பெல்லாம் தமிழ்மணக்கும் திறம்போ யிற்றே! 2 மொண்டார மாணவர்கள் பருகுவதோர் முத்தமிழின் பொய்கை! யாவும் கொண்டாரும் கொளவிரும்பும் அருங்குணங்கள், தமிழ்ப்பற்றுக் கொண்ட மேலோர் அண்டாரும் அண்டும்வகை அன்பினொரு குழந்தைவர இனிது பேசும் பண்டாரத் தார்போன்றார் பண்டில்லை, இன்றில்லை இனியும் அஃதே. 3 செந்தமிழ்ப்பே ராசிரியர்; வரலாற்றின் ஆய்வாளர்; புலவர் சென்றே எந்தஇடம் கேட்டாலும் அந்தஇடம் இந்தஇடம் என்று காட்டும் முத்து;பேர் இலக்கியத்து முழங்குகடல்; ஒழுக்கத்தின் எடுத்துக் காட்டு! நத்துதமிழ்ப் புலவர்குழு மணிவிளக்குச் சதாசிவனார் மாண்டார் என்னே! 4 மறைமலையைப் பறிகொடுத்தும் மணவழகைப் பறிகொடுத்தும் வருந்தும் நாளில், துறைபலவும் ஆய்ந்ததமிழ்ச் சோமசுந் தரத்தையும்நாம் பறிகொ டுத்தோம்! இறைவர்அவர் இருந்தஇடத்து இவர்இருந்தார் என்றுநாம் எண்ணும் போது, சிறியதொரு சாவுவந்து பெரியசதா சிவனாரைத் தீர்த்த தேயோ! 5 கற்றில்லார், ஆங்கிலத்தை கற்றதனால் கற்றாராய்த் தமிழன் னைக்கு மற்றில்லா இடர்விளைத்தும் மாற்றலரின் மொழிக்கடிமை யுற்றும் தம்மை விற்றுஇலார், தமைவளர்த்தும் வீறார்ப்புக் காட்டுகையில் செந்த மிழ்மேற் பற்றன்றி ஒருபற்றும் பற்றாத சதாசிவத்தார் பறந்தா ரேயோ! 6 பண்பாட்டுத் தமிழர்க்கு நான்விடுக்கும் விண்ணப்பம்; சதாசி வத்துப் பண்டாரத் தார்க்கும்;ஒரு மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள் கொண்டாடும் சோமசுந் தரபார திக்கும்,நம் கொள்கை தோன்றக், கண்டார்க ளிக்கும்வகை உருவக்கல் நாட்டுவது கடமை யாகும். 7 துய்ப்புக்கும் அரசினரின் தொடர்புக்கும் தமிழர்நலம் துடைப்ப தற்கும் எய்ப்புக்கும் காத்திருக்கும் இனத்துக்கும் பாடுபடும் பார்ப்ப னர்தம் பொய்ப்புகழை மெய்ப்புகழ்போல் ஆக்குகையில் பண்டாரத் தார்போன் றாரின் மெய்ப்புகழைப் பொய்ப்புகழாய்ப் பகைவரெலாம் விளம்பும் வகை செய்தல் நன்றா? 8 சீனர்களால் நாட்டுக்குத் தீமைஎன எதிர்க்கின்றோம்! நன்றே! ஆனால் ஊனுறையும் தமிழ்க்குருதி அற்றார்போல் தமிழ்நலத்தை ஒழித்து நிற்கும் கூனர்களின் தீமையினை எதிப்பதுவும் முதல்வேலை என்று கொண்டால் வானநிகர் அவர்புகழே வாழ்கென்று வாழ்த்துவது மறக்கொண் ணாதே! 9 தாயினையும் புணர்ந்தாற்குச் சிவனடியைச் சிவனே வந்தளித்தான் என்றால் தூயதெனச் சிவனடியைச் சொல்லுவதும் சரியில்லை! பண்டா ரத்தார் போயடைந்தார் சிவபெருமான் திருவடியை என்றுரைத்தார்; பொய்யு ரைத்தார்! தீயர்களின் ஓர்ஆளும் தீண்டாத புகழுலகில் பண்டா ரத்தார் ஓயாது தமிழ்ப்பொருளே நமக்கெல்லாம் நினைவூட்டி உள்ளார் அன்றோ? 10 - புகழ்மலர்கள், 39-41, 1978; குயில், 12.1.1960 101. பசுமலைத் தமிழன் சோமசுந்தர பாரதி அறுசீர் விருத்தம் பொய்ப்பாட்டி யலைவையா புரிபோன்றோர் விரைவாகப் புரியுங் காலை மெய்ப்பாட்டி யலைத்தொல்காப் பியத்தின்நல் புத்துரையால் மிகவி ளக்கிக் கைகாட்டினான். தென்மொழிக்கும் இனத்திற்கும் பெருமிதத்தின் கனல்உ ணர்வில் நெய்யூட்டினான், சோமசுந்த ரன்என்னும் பைந்தமிழ் நேர்மை நெஞ்சன். 1 ஆரிய வாயிலிலே வீழ்ந்திருந்த அந்தமிழை அழியா வண்ணம் மாரிவாயில் என்றொருநூல் மதுத்தமிழால் காளிதாசன் மாழ்கும் வண்ணம் சீரியநூல் தந்தானைத் தனித்தமிழின் செம்மையினைத் திராவி டர்க்கு வீரியநூல் கூரியநூல் ஆரியமே வெட்கமுற விளக்கி னானே 2 இந்தியநாட் டுரிமைக்கும் விடுதலைக்கும் ஈடிணையற் றெவர்க்கும் மேலாய்ச் செந்தமிழன் வ.உ.சி. செலுத்தியநற் கப்பற்குச் செயலா ளன்காண்! வெந்தணலாய் வெள்ளைநாய் எதிர்ப்புக்கும் அஞ்சாத வேங்கை என்றன் சிந்தனைக்கும் செயலுக்கும் தென்பூட்டும் செம்மாந்த சிங்கம் போன்றோன் 3 பார்ப்பனரின் புகழ்க்கடிமை ஆகாமல் பகைக்குன்றைப் பாம லைத்தேர் ஆர்ப்புறவே ஓட்டினவன், பழந்தமிழை, பண்பாட்டை அழிப்ப தென்றே வேர்ப்புறத்தில் ஆராய்ச்சி எனும்பேரால் பொய்யுரைகள் வெளியிட் டாரைப் போர்க்களத்தில் புறங்காணச் செய்தனன் எம் அகப்புறத்தைப் புதுக்கி னோனே . 4 எட்டைய புரத்துதித்த முத்தமிழ்ப் பாரதியார் இருவர் தாமும் அட்டைகளாய் இருந்துதமிழ் அழித்தார்க்குச் சுடுநெருப்பாய் ஆனார், பார்ப்பின் முட்டையெலாம் மலைமோதி உடைந்தாற்போல் மூக்குடைந்தார். குழம்பிப் போனார் குட்டைமன நரித்தனங்கள் பலிக்கவில்லை வெற்றியெலாம் கோள ரிக்கே . 5 சொல்வேறு செயல்வேறு படாத்தமிழன். இந்திப்பேய்த் துரத்தி னோன்காண்! கொல்லேறு; சமயமெனும் குட்டையினில் வீழாத குணத்தின் ஆறு! வல்லூறு போல்நெஞ்சம், கூர்பார்வை தன்மானம் வாய்த்த சான்றோன்! பன்னூறு காலமும் பசுமலைநீர் பாரெல்லாம் பாய்க! வாழ்க! 6 - புகழ்மலர்கள், ப.42-43, 1978 102. சீபால் அகவல் உருவிலா ஒன்றுக் குருவ மைத்தது பெரியதோர் மடமை, அவ்வுருவங் கட்கு விலங்கு பறவைகள் வெட்டுவ தென்பது கலப்பட மற்ற கயமை யாகும். மடமையை நாட்டில் மலிவு செய்தால் உடைமையை லேசாய் உறிஞ்சலாம் என்பது பூசாரி எண்ணமும் ஆசாரி எண்ணமும்! இந்து வேதம் என்பதி லிருந்தே இந்தக் கொலைகள் இவ்வாறு பரவின; யாகப் பேரால் வேக வைத்தே ஆடு மாடுகளை அவர்கள் உண்பார்! தெய்வத் திற்குத் தீக்கொலை விலக்குமோர் செய்தி அந்தணர்க்குச் சிறிதும் பிடிக்காது. காந்தி அண்ணலார் கடவு ளுக்கு விலங்கு பறவைகள் வெட்டவேண்டா என்று சொன்னார் அவரைச் சுட்டுக் கொன்றவன் இன்னான் என்பதை யாரும் அறிவார். அறிஞர் ஆதித்தர் அன்பு கூர்ந்தே பலிவிலக்கு மசோதா பகரும் சென்னைச் சட்ட சபையில் சட்ட மாக்கிட இட்டார் நாட்டின் எண்ணம் அறிந்தே சட்டம் ஆக்குதல் சரியே என்போம். அந்தச் சட்டம் அந்தணர் யாகச் செந்தீ உயிர்களைத் தீயவைப் பதையும் தடுக்க வேண்டும்! தடுக்க வேண்டும்!! பலியிட் டுயிர்களை நலிவுசெய் யாதீர் என்ற கருத்தை இத்தென் னாட்டில் நாடோறும் நாடோறும் ஏடுகள் விடுத்தும் வீடுகள் தோறும் விழாக்கள் தோறும் சிற்றூர் தோறும் செழுநகர் தோறும் சென்று பரப்பினோன் சீபால்! அடடா! என்னென்ன இன்னல் ஏற்றான்; அவற்றை இன்னல் என்னான் இன்பமென் றெண்ணினான். தன்னல மற்ற பெருந்தகைக்கு நன்றி நவிலுக சீபால் வாழ்கவே! - புகழ்மலர்கள், 1978 103. பேரறிஞர் சர். ஏ. இராமசாமி பேச்சு நிலைமண்டிலம் அறிவுத் துறைஒரு சாரார்க் கேஎனில் அதுநாட்டின் அழிவை யேஉண் டாக்கும் அன்பரே நேற்றுப் பச்சை யப்பன் அறநிலை நிறுவன நூற்றாண்டு விழாவில் சர். ஏ. ராம சாமியின் தலைமைச் சொற்பெருக் கின்நற் பயன்நு கர்ந்திரோ! அப்பே ரறிஞர் அறைந்தவை கேளீர். எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் தேவை. எவர்க்கும் தாங்கள் ஈடான வர்என ஏற்பட வேண்டும் என்றனர் இளைஞர். கற்கும் துறையில் பிற்பட்ட தான ஒருபகுதி, நாட்டில் உண்டு. நமக்கிது பெருங்குறை. இதனைப் பெயர்த்தெ றிந்து யாவரும் கல்வி ஏற்கும் வண்ணம் அரசினர் ஆவன செய்ய வேண்டும். திருநாடு முதுகெலும்பாய்த் திகழ்பெரு மக்கள், கற்கும் துறையில் முற்போக் குண்டா? என்றுகேட் கின்றேன். இந்த நாட்டில் முன்னேற்றம், உண்மை முன்னேற்றந் தானா? இல்லை! கல்வித் துறையை இழந்த வகுப்பினர் அதனை அடையும்வண்ணம் ஆக்குதல் வேண்டும்; நிகர்வாய்ப் பேஅதன் நேரான, வழியாம் அறிவின் நற்றுறை, ஒருசா ரார்க்கே அமைந்தால் நாட்டுக் கழிவு நேரும். வையகம் புகழும் மாப்பேர றிஞர், நாம் உய்யு மாறே உரைத்த இவற்றை ஆளவந் தாரும் அன்புநாட் டாரும் நாளும் எண்ணுக நாட்டுக செயலிலே! - புகழ் மலர்கள், ப.60-61, 1978; குயில், 15.08.1948 104. நடிகமணி விசுவநாததாசு எண்சீர் விருத்தம் கொக்குப் பறக்குதடி பாப்பா என்று கொடுத்தஅடி ஆங்கிலனைத் துடிக்க வைத்து, மக்களையும் எழுப்பிற்று விசுவ நாத தாசென்னும் பாவாணன் வரைந்த பாட்டு! வைக்கோலைத் தின்னுகின்ற மாடும், அன்னோன் வாய்ப்பாட்டில் சொக்கிவிடும்! நடிப்பில் வல்லோன் தெற்கிலும் ஓர் நடிகமணி இருந்தான் என்று செப்பிற்று வடநாடும் அந்த நாளில்! 1 செக்கென்றும் சிவலிங்கம் என்றும் காணாச் சிறுநாய்போல் ஆங்கிலவர் விசுவ நாத மக்கள்கவிக் குச்சிறையும் தந்தார்! ஆனால் மகிழ்ச்சியுடன் வரவேற்றார் அதையும் தாசர்! கொக்குப் பறக்குதடி என்றார் பின்னும் கொடிக்கப்பல் தோணுதேஎனத் தொ டர்ந்தார். திக்கற்ற தமிழர்க்கு நாட்டின் அன்பு சேர்த்தவிசு வநாததா செனும்பேர் வாழ்க! 2 இறந்தநாள் என்னுமொரு பழங்க ணக்கில் எழுந்ததுதான் இந்நாளின் புதிய வாழ்வு! மறப்பதும்உண் டோவிசுவ நாதர் பேரை மறந்திட்டால் கலையுணர்வு வாழ்வ துண்டோ? சிறந்திருக்க வேண்டுமெனில் அன்னார் கீர்த்தி செழித்திருக்க வேண்டுமவர் குடும்பம் நன்றே! அறம்செய்வோம் செய்நன்றி மறக்க மாட்டோம் ஆண்டுதொறும் நினைவுவிழா நடத்த வேண்டும். 3 - புகழ்மலர்கள், ப.64, 1978; பாரதிதாசன் குயில், 10.7.1967 105. வ. வே. சு. அய்யர் கேட்டீரோ தமிழர்களே, நம்மில் மிக்க கீர்த்திகொண்ட தமிழன்உயிர் நீத்த செய்தி. ஆட்பணிதல் கடவுள்ஒரு வனுக்கே யன்றி அத்தனைபே ரும்சமமே ஆகும் என்னும் மாட்சிமிகும் எண்ணத்தை நாட்டில் மீண்டும் மலர்வித்த வீரர்க்குள் வீரன் கண்டீர்! தாட்டிகஞ்சேர் சுப்ரமண்ய ஐயன் இந்தச் சகம்நீத்தால் தமிழர்மனம் சகிப்ப துண்டோ? 1 பருவமயக் கத்தாலே ஆங்கி லத்தில் பல்கலைவல் லானாகி, இன்னும் கற்கக் கருதி அந்த ஆங்கிலநா டேக, அங்குக் கண்ணெதிரே நகைகாட்டிக் கருத்திற் பாய்ந்த திருநுதலைச் சுந்தரநற் றெய்வந் தன்னைச் செங்கைகள் கூப்பித்தன் தெய்வ நாட்டை ஒருநொடியில் விடுவிப்பேன், ஒன்றும் வேண்டேன் உறுவனவந் துறுகவெனும் உணர்ச்சி யாலே! 2 காய்தன்னை வியந்துகனி வெறுப்போ ராகும் கடும்பகையால் கண்டதுயர் கொஞ்ச மன்று; தாய்நாடு திரும்பிவரும் போதில் அந்தச் சமுத்திரத்துக் கப்பலில்ஓர் சமுத்தி ரம்போல் பாயுந்தன் எண்ணங்கள் முன்னும், தோள்கள் பாரதத்திற் பின்னருமாய்த் தொடர வந்து காயத்தை நற்பொருளை உயிரை நாட்டின் கதிக்களித்தோன் கதிநினைத்துக் கலங்கா ருண்டோ? 3 நன்னாட்டிற் கவன்தொண்டு பெரிது; வேரில் தண்புனலைப் பாய்ச்சிடுமோர் தியாகம் எண்ணில் அன்புடையது; இருள்கொண்ட நெஞ்சம் தன்னில் அணைகடந்த வெள்ளம்போல் தேச பக்தி நன்றுவளர் விப்பது,நாம் என்செய் வோமால்! நலம்விளைக்கும் கற்பகத்தைப் புதுநி னைப்புக் குன்றத்தைக் குன்றஞ்சார் குளிர்பு னல்தான் கொண்டதுவோ? பகைவருளம் குளிர்ந்த தேயோ. 4 - புகழ்மலர்கள், ப.65-66, 1978; வராஜ்யா, குரோதன - ஆனி-3 106. தோழர் வல்லத்தரசு எண்சீர் விருத்தம் கேளாயோ பார்ப்பனீயம் என்னும் குன்றே! கீர்த்தியுள்ள புதுக்கோட்டை உனது கோட்டை! ஆளுகின்ற மக்களெல்லாம் உனது மக்கள்! அறமும்நீ! சத்தியம்நீ! தெய்வி கம்நீ! தோளுயர்ந்த வீரரெல்லாம் அறிஞ ரெல்லாம் துணையுனக்காய் மீசைதனை முறுக்கு கின்றார்! நாளன்று! மாசமன்று! வருட மன்று! நானூறு கோடியுகம் வயது னக்கு! 1 வானத்தை வில்லாக வளைப்பாய். இங்கே மணலையெலாம் கயிறாகத் திரிப்பாய்! ஆனால் மானத்தன், இளவீரன் முத்துச் சாமி வலத்தரசன் பகுத்தறிவுக் கச்சை கட்டி ஆனசுய மரியாதைக் கூர்வாள் தன்னை அரைக்கசைத்து நின்றதனைக் கண்ட அன்றே ஏனப்பா புதுக்கோட்டைப் போர்க்க ளத்தில் இறங்கப்பா என்றேநீ சொல்ல வில்லை. 2 மகத்வமுறு பார்ப்பனீய மலையே! எங்கள் வலத்தரசன் எதிர்நின்று வாதம் செய்து சகத்தினிலே உன்புகழை நிலைநாட் டாமல் சர்க்காரின் காலடியை நக்கி நக்கிப் பகுத்தறிவன், இளஞ்சிங்கன் உனைத்தொ லைத்துப் பழிதீர்க்கும் ஆயத்தன் குன்றத் தோளன், நகும்படிக்குச் சிறையாக்கு வித்தாய்! பின்பு நாடுகடத் தச்செய்தாய் நாயே! நாயே! 3 - புகழ்மலர்கள், ப.71, 1978 107. தமிழுக்கு உயிர்தந்த நடராசன் எண்சீர் விருத்தம் இந்திஎதிர்ப் புப்போரில் சிறைக்குச் சென்றான். இளங்காளை நடராசன்; சென்னை வாசி; அந்தமுறும் இலக்குமணன் அம்மாக் கண்ணாம் அருந்தமிழர் பெற்றெடுத்த மருந்து போல்வான்! செந்தமிழிற் பற்றுடையான்; உத்தி யோகச் சிறுவாழ்வில் வெறுப்புடையான்; கைத்தொ ழில்மேல் சிந்தைவைத்தான்; பயின்றுவந்தான்; திறமை யுள்ளான். 1 தமிழ்நாட்டில் இந்தியினைக் கட்டா யத்தால் சாரவிட்டால் தமிழ்சாகும் எனநி னைத்தான். அமுதொத்த தன்தமிழின் நிலைக்கு நொந்தான்! அண்டைஅயற் பெரியார்பால் தனக்கேற் பட்ட சமுசயத்தைத் தெரிவித்தான். உணவு நீத்தான். சதாகாலும் இதேநினைவாய் இருந்து வந்தான். தமிழகத்தார் எல்லார்க்கும் உணர்வு காட்டித் தன்உருவம் காட்டிவிட்ட தமிழ்ப்பி ராட்டி! 2 நடராசன் எதிரேயும் வந்து நின்று, நானில்லா விடில்நீயும் இல்லை என்று; படபடத்த இதழாலும் துயர்க்கண் ணாலும் பகர்ந்துசென்றாள். வாழ்கதமிழ் வாழ்க வாழ்க இடரான இந்திமொழி வீழ்க வீழ்க என்றுரைத்தான்; தமிழரிடம் தமிழ்நாட் டின்கண்! அடாதசெயல் இதுஎன்றார் இந்திச் சர்க்கார். அழகியோன் தான்தன்னைச் சிறையிற் கண்டான். 3 நெஞ்சத்தில் வீற்றிருந்த தமிழ்த்தா யோடு நெடுஞ்சிறையில் நடராசன் இருந்தான். அன்னோன் கொஞ்சுமொழி தனைநினைத்துப் பெற்றோர் உற்றோர், கொடுஞ்சிறைக்கு வெளியினிலே இருந்தார், மற்ற வஞ்சமில்லாத் தமிழரெலாம் நடரா சன்பேர் வாழ்த்திக்கொண் டிருந்தார்கள் சிலநா ளின்பின் வெஞ்சுரந்தான் கண்டதுவாம், அதுநாள் தோறும் மேலோங்க லாயிற்றாம் மெலிவுற் றானாம். 3 சாக்காட்டின் ஒட்டினிலே தவிக்கும் போது, தமிழ்நாட்டைத், தமிழர்களைப் பெற்றோர் தம்மைப் பார்க்குமோர் ஆசைவந்து படுத்தும் போது, பழியேற்க அஞ்சாத சிறைத்த லைவர் ஆக்கினைஒன் றிட்டாராம்! நடரா சாநீ அரசினரை மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், பாக்கியனாய் விடுதலையைப் பெறுவாய் என்றார். பைந்தமிழன் தன்நிலையை எண்ண லானான். 4 மன்னிப்புக் கேட்டிடுவாய்; தமிழர்க் குள்ள மானத்தை இழந்திடுவாய் என்று கூறிச் சின்னபுத்தி அதிகாரி கேட்டு நிற்கச், செந்தமிழ்த்தாய் உன்அன்பின் அடையா ளத்தை இந்நிலையிற் காட்டுகநீ மைந்தா, மைந்தா என்றேதன் தாமரைக்கை ஏந்தி நின்றாள். மன்னாதி மன்னர்களின் வழியில் வந்த மாத்தமிழர் பழம்பெருமை பறிபோ காமே. 5 காக்கஎன்று நின்றிருந்தார் கூட்ட மாகக் கண்ணாலும், சிரிப்பாலும் தனது காதற் போக்குணர்த்தி வந்தஓர் இளைய நங்கை பூமானை, அன்புதர வேண்டி நின்றாள். வாய்க்குமிவை அத்தனையும் நடரா சன்தன் மனோலோக நடைமுறையாம். என்ன செய்வான். ஆர்க்கும்முர சம்போல்மன் னிப்புக் கேளேன் அருங்சிறையில் சாதற்கும் அஞ்சேன் என்றான். 6 தனைத்தந்தான் எனக்கென்றாள் செந்த தமிழ்த்தாய்! தகதகெனக் களியாட்டம் ஆடா நின்றாள்! தனக்கென்று வாழாத தமிழா என்று தமிழரெலாம் அவன்பேரைப் பாடா நின்றார்! தனிப்புகழ்சேர் நடராசன் தன்னைப் பெற்றோர் தமிழுக்குப் பெற்றோம்என் றகம கிழ்ந்தார்! நனித்தநறுங் காதலிதான் தேம்பி நின்றாள்! தமிழ்வீரன் நடராசன் இறந்து போனான். 7 அன்னவனின் புகழ்இந்தத் தமிழ்நாட் டின்கண் ஆர்ந்ததற்குக் காரணத்தை அறிவிக்கின்றேன். சின்னதொரு கல்வியினால் தருக்குக் கொண்டு, தீமையெலாம் மக்களுக்குச் செய்து கொண்டு, தன்னலத்தை எண்ணி எண்ணித் தமிழர் நாட்டைத் தரைமட்ட மாக்குகின்றார். அவர்போ லின்றி இன்தமிழிற் கல்விகற்றான் நடரா சச்சேய் எழில்பெற்றான் புகழ்பெற்றான் எல்லாம் பெற்றான். 8 - புகழ்மலர்கள், ப.75-76, 1978; தமிழரசு, 15.2.1939 108. சீவானந்தம் புகழுடம்பிற்குப் புகழ்மாலை நேரிசை வெண்பா சீவானந் தத்தின் தமிழ்த்தொண்டு செப்புகிற நாஆனந் தத்தை நணுகுமன்றோ - பாவாணர் நல்லாரைப் பாடியன்றோ நல்லின்பத் தைப்பெற்றோர் பொல்லாரைப் பாடுவரோ போய்? 1 சீவா வெனவறிந்த நாள்முதல் செந்தமிழ்ச்சீர் காவாத நேரத்தைக் கண்டவர்யார்? - நாவாரச் சொற்பெருக்காற் றாத துறையுண்டா? யார்க்குமவர் பொற்பெருகச் சீறும் புலி. 2 பாட்டெழுதக் கேட்டிடுவார் பன்னாளும், ஓர்நாள்நீர் பாட்டெழுதும், என்று பகர்ந்திட்டேன் - கேட்டஅவர் ஏழைநிலை எண்ணி எழுதியபாட் டொவ்வொன்றும் வாழவகை செய்யும் மருந்து. 3 இறைக்கஞ்சி ஏங்கும் தலைவர்போல் அன்றிச் சிறைக்கஞ்சாச் சிங்கத்தைச் சாவு - மறைத்ததனை எண்ணினால் நெஞ்சம் இரங்கும், தமிழின்நிலை எண்ணினால் கண்ணீர் வரும்! 4 எப்போது பெண்கொண்டார்? இல்லத்தில் மக்கள்தமை எப்போது கையில் எடுத்தணைத்தார்? - முப்போதும் மாசுடையும் மாற்றாத சீவாவுக் கூர்ஊராய்ப் பேசுவது தானே பெரிது. 5 தாமரைக்கோர் ஆசிரியர் தாய்மொழிக்கோர் ஆய்வாளர்! ஊமரையும் பேசவைக்கும் உண்மையிதழ்த் - தாமரையோ கல்விப் பசிக்குநல் கட்டமுது! கற்றாரை வெல்விக்கும் வெற்றி முரசு. 6 நாட்டுக்குப் பேசித்தன் நாட்டுக் கெழுதிஉயிர் நாட்டுக்கே நல்கிய சீவாவை - நாட்டில் இருக்கும் படிசெய்வோம்! கல்நாட்டிச் சீர்த்தி பெருக்கும் படிசெய்வோம் நாம்! 7 இருந்தும் வரைந்தார் இறந்தும் வரையத் திருந்து புலவரையும் செய்தார்! - விருந்தினரைத் தாமரை என்றும் தழுவவைத்தார் ஆதலினால் நாமவரை நாளும் மறவோம். 8 தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார் தீங்குவரக் கண்டும் சிரித்திடுவார் - யாங்காணோம் துன்பச் சுமைதாங்கி! சீவானந் தம்போன்ற அன்புச் சுமைதாங்கும் ஆள். 9 சீவா புகழ்காப்போம்! செம்மல் மனைமக்கள் மூவா மகிழ்ச்சியினில் மூழ்கவைப்போம் - சீவா தொடங்கிய வற்றைத் தொடர்ந்து முடிப்போம் நடுங்கோம் தமிழ்மீட்க நாம்! 10 - புகழ்மலர்கள், ப.78-80, 1978; தாமரை 19.1.1963 109. எ. இராமநாதன் உரைமுழக்கம்: நெல்வேலிச் சில்லாவில் ஆண்டு தோறும் நிகழுசுய மாரியாதைப் பெரிய கூட்டம் சொல்வாய்ந்த தூத்துக்கு டிக்கண் இன்று தொடங்கினார் என்பதையும் அவ்வி டத்தில் வல்லாளர், நல்லறிஞர், செல்வர் யாரும் வந்திருந்தார் என்பதையும் அக்கூட் டத்தில் எல்லாரும் எராம நாதன் தன்னை எழிற்றலைவ னாய்க்கொண்டார். இதையும் கூறி, 1 சிறப்பாய்இந் நாட்டினுக்கும் பொதுவாய் மற்றத் தேசத்து மக்களுக்கும் இராம நாதன் அறப்பாதை இதுவென்றே கூறி விட்டார், அம்மொழியை நன்றாக எடுத்துக் காட்டி நிறப்பேச்சை மதப்பேச்சைச் சாதிப் பேச்சை நிறுத்துங்கள் வாழுங்கள் என்றார் அந்தத் திறப்பேச்சைக் குறிப்பாகச் சொல்லிக் காட்டிச் செகமதிர வீராநீ முரச றைவாய்! 2 மதங்களெனும் படுகுழிகட் கப்பா லன்றோ மக்களது முன்னேற்றம் உண்டென் கின்றார்! இதங்கனிந்த நெஞ்சத்தால் இராம நாதன் இசைக்கின்றார் ஓகோகோ வீரா! இந்நாள் மதங்கொண்ட யானையின்மேல் முரசம் ஏற்றி வையத்தார் எழுச்சியுறக் குணிலை ஓச்சிச் சதங்கூறி முழக்கஞ்செய்! மக்கள் யாரும் சமம்என்று முழக்கஞ்செய்! முழக்கஞ் செய்நீ! 3 கொடுமையெலாம் உறைவிடத்தைக் கோயி லென்றும் கொடுமைகளின் பொக்கிஷத்தை நூற்க ளென்றும் வடுமொழிகள் பேசுவதும், தீண்டோ மென்றும் மக்களைவி லக்குவதும் அறிவுக் கொவ்வா நெடுமூடப் பழக்கவழக் கங்கள் கொண்டு நிலஞ்சிரிக்க வாழ்வதுண்டோ என்று சொன்னார்! விடுதலைகொள் நெஞ்சத்தால் இராம நாதன் விளம்பியதை விளம்பிமுர சறைவாய் நன்றே! 4 விடுதலைப்பெண் மக்களினை நமது நாட்டில் வெற்றடிமைப் பெண்மக்க ளாக்கி விட்டார்! கெடுதலையை நீக்குங்கள்! tWik¥ ngia¡ »Ê¤J¥ngh L§fŸ!விஞ் ஞானத் தேர்ச்சி அடையுங்கள் எத்தொழிற்கும் ஆலைக் கூட்டம் அமையுங்கள்! அழையுங்கள் புதிய வாழ்வைக் கொடையன்பர் இராமநாதர் தன்சொல் வாழ்த்திக் கொட்டடா முரசத்தை! அன்னார் வாழி! 5 - புகழ்மலர்கள், ப.81-82, 1978 110. இ. மு. சுப்பிரமணியம் சந்திரசேகரப் பாவலர் அறுசீர் விருத்தம் நேர்மை நீதி அஞ்சாமை நிறைந்த பன்னூல் தேர்புலமை சீர்மை கணிய நூலறிவு சித்தாந் தத்தில் பேரறிவுக் கூர்மை, ஆர்யக் கூட்டத்தைக் குப்பை கூளப் புராணத்தைத் தீர்ப்பு ரைக்கும் திறனாய்வால் தெளியச் செய்தான் தமிழ்நிலமே! 1 செந்தமி ழுக்குத் தீதென்றால் சிறுகு றும்புப் பார்ப்பனர்கள் முந்து வார்கள். அவர்கள்தம் மூக்க றுக்கும் படிசெய்யும் தந்தை பெரியார்க் கொருதுணைவன்! தமிழன்! குடியர சேடுதனில் சந்திர சேகரப் பாவலனாய்ச் சாய்த்தான் பார்ப்பார் கொட்டத்தை! 2 இராமா யணத்தின் இழிவெல்லாம் எத்துப் புலவர் கூற்றெல்லாம் பராவி வணங்கும் வால்மீகி பல்லைப் பிடித்துக் காட்டியவன்! வராத தீமை வந்ததெல்லாம் வழிபட் டேற்ற கம்பனவன் திராவி டத்தில் செயும்தீமை தெரியச் செய்தான் இ.மு.சு. 3 பார தத்தின் பார்ப்பனரின் பழக்க வழக்க ஒழுக்கமன்றி வீரம் நீதி ஒன்றுமில்லை வெட்கம் கெட்ட குடும்பத்தின் சோரம் போன கதையென்று தோலு ரித்துக் காட்டியதார்? சாரம் மிகுந்த எங்களுயர் சந்திர சேகரப் பாவலனே! 4 - புகழ்மலர்கள், ப.83-84, 1978; தமிழ்நிலம், 15.4.1948 111. பவானந்தம் பிள்ளை பஃறொடை வெண்பா ஆங்கில மொழியின் அறிவிருந் தாலே தாங்கள் உயர்ந்தவர் தமிழுக்குத் தாம்செயும் தொண்டு பெரிதென்று சொல்லிப் பார்ப்பன நண்டுகள் வளையிலே நாடகம் நடத்தும் பண்பிலாச் செயலில் பலர்இங் கிருக்கையில், கண்இழக் காத கற்றவர் சான்றோர்! சிவானந் தத்திலே சிந்தை செலுத்தா பவானந் தத்தின் பணியை எண்ணினால் உண்மை அறிஞனின் உழைப்பை எழுதிடும் வண்மை தமிழுக்கு வரவில்லை. என்பேன். சொல்லும் செயலும் ஒழுக்கத் திணைய, மெல்லிதழ் முறுவல் முகத்தில் மிதக்கப் பழைமையில் பழுத்தவன்; புதுமையில் மலர்ந்தவன்; புலமையில் சீர்த்த தெளிவு பெற்றவன்; இலக்கியம் இலக்கணம் எண்ணிக் கற்றவன்; அன்பில் விளைவதே அறமெனக் கொண்டவன்; தென்பில் செந்தமிழ்க் குழைப்பதில் தேர்ந்தவன்! ஒருநாள் நீலப் பட்டாடை உடுத்தே அரும்பொன் வேலைப் பாடுக ளுடனே தொழில்திறம் காட்டி விழிமுன் ஆடினாள்! அழகிநீ யாரென அந்தமிழ் என்றாள். புத்தக வடிவிலே பொலிந்த நூல்மகள் பிள்ளை பவானந்தம் பெற்றவள் என்றாள். அன்னைநீ அன்னைநீ கன்னித் தமிழுனை மடங்களின் சோற்றால் வயிறு வளர்ப்பவர் கிடங்கி லிருந்து கிளர்த்தெழு ஞாயிறாய் அனைவர்க் கும்உன் அருமை விளங்க ஒளியை உண்ண வெளிப்படுத் தியவன்! தெளிந்தவன்! சிறந்த கல்வியில் தேர்ந்தவன்! பதிப்பித் தீந்தான்! மதிப்பித் தீந்தான்! வாழிய அவன்திறம்! வண்டமிழ்த் தாயினைத் தந்த தமிழனே வாழ்க! - புகழ்மலர்கள், 1978; தமிழ்நிலம், 15.10.1949 112. முத்தமிழ் இலக்குவன் இசையால் எனைக் கவர்ந்தான், வீணை இசையால் எனைக் கவர்ந்தான்! நசைத்தமிழ்ப் பாடல்கள் நமக்களித்தான் - புது நாடகக் கடலுக்குள் முக்குளித்தான்! - இசையால் எனைக் நினைவாட்சி என்றொருநூல் நிறைவாட்சி நெஞ்சை நெகிழ்ந்துருக்கும் தமிழ்மாட்சி பூரித்தேன் புலமைத்தேன் வினைமாட்சி! - இசையால் எனைக் இசைத்தமிழ் மாலை தமிழ்த்தாய் கழுத்தில் விழும் ஏழிசை வண்டுகள் சென்றுசென்று தொழும் அசையா என்மனத்தை அசைத்துவிடும் அற்புதக் கலைஞன் இலக்குமணன் உழும் - இசையால் எனைக் - புகழ்மலர்கள், ப.89-90, 1978; தமிழ்நிலம், 1.2.1948 113. நீ கந்தசாமி அறுசீர் விருத்தம் எந்தசாமிப் பிள்ளையும் ஈடிணையற் றுயர்ந்தொருவன் எனைக்க வர்ந்த சொந்தசாமி தலைச்சாமி வியப்புறுவீர்; மருண்டிடுவீர் தூய்த மிழ்த்தாய் தந்தசாமி தலைச்சாமி பழந்தமிழும் புதுத்தமிழும் தரமாய்க் கற்ற கந்தசாமிப் பிள்ளையவன் கடலாழம் விரிவானக் கல்வி யாளன். 1 பொறியியலில் பேரறிஞன்! புலமையிலோ நுண்ணறிஞன்! புதும லர்ச்சி அறிவியலில் கரைகடந்த அறிவாளன்! செந்தமிழ்க்கே அவற்றைக் கொண்டு நெறியியலில் திறனாயும் நெஞ்சுடையான்! நிறைநூற்கள் நினைந்து கற்பான்! வெறியியலில் நிற்காத வீரனவன் வீழ்தவனே விரித மிழ்க்கே! 2 கட்டடத்தின் ஒப்பந்தம் ஒவ்வொன்றும் கண்டுமுதல் காண்ப தெல்லாம் கொட்டிடுவான் கரந்தைதமிழ்ச் சங்கத்தின் கடைக்காலாய், கலைம லிந்த கட்டடமும் அவனாவான் தமிழ்ப்பொழிலின் கடிமணமும் கவின்வ னப்பும் உட்சுவையும் அவனாவான் உணர்வெல்லாம் உணர்ச்சியெலாம் உயிர்த்த மிழ்தான். 3 இலக்கியமும் இலக்கணமும் கல்வெட்டாய்ச் செப்பேடாய் இருந்தி னிக்கும்! வலக்கண்ணாய் இடக்கண்ணாய் வாங்குவளி நுரையீரல் வகைப டல்போல் துலக்கமுறும் எந்நாளும் துல்லியமாய் மிகத்தெளிவாய்த் துய்த்த வற்றைச் சொலத்தெரிந்த மிகச்சிறந்த காவிரிபோல் தலைச்சுரப்பு சொரியும் குன்றம் 4 எள்ளிநகை யாடுவதில், இலக்கணத்தில் சொக்கட்டான் இடுவான் வெல்வான். வெள்ளிமின்னல் போல்சிரிக்க விளையாட்டாய்த் தமிழ்கற்கும் வேலை யற்றோர். கொள்ளிவைக்கும் கோடரிக்காம் பானசில வழக்கறிஞர் கூட்டந் தன்னைப் பள்ளியகரப் பழங்கதைபோல் பலகூறி பழைமைப்பித் தறுப்பான் பாய்ந்தே! 5 மொழிபெயர்ப்பில் ஈடில்லான் மேனாட்டு மொழிப்புலவர் முதுநூல் கண்டு தொழிலாகக் கொள்ளாமல் தொண்டாக்கும் பேருள்ளம் தூய உள்ளம். ÉÊahth‹ vªjÄG¡ F!சங்கநூற் சொல்லடைவு விரிவ னைத்தும் பொழிகின்ற குற்றாலத் தைந்தருவி பெரும்புலமை பொருநை ஆறே! 6 வேறு வெண்பா எத்தனைநூல் வாங்கிடுவான்! எத்துணைநூல் கற்றிடுவான் அத்தனையும் தன்னலத் தாழியின் - முத்தல்ல; எண்டிசைக்கும் ஏருழவன்! ஈந்த உணவாகும் ஒண்டமிழ்க் கான உரம். - புகழ்மலர்கள், ப.92-94, 1978; தமிழ்நிலம், 12.10.1949 114. டாக்டர் சுப்பராயன் நேரிசை ஆசிரியப்பா பிறர்க்குநலம் செய்வதிலே தனக்குண் டான பெரும்பற்றால் வீழ்ச்சியுற்றான் சுப்ப ராயன்! அறத்தினிலே தவறுகிலான் பிறர்செல் வத்தை அணுவளவும் தானடைய எண்ண மாட்டான். திறத்தினிலே எவனுக்கும் இளைத்தா னில்லை, செய்கையிலே உறுதியுள்ளான், தன்மா னத்தைக் குறைத்துக்கொண் டுயிர்வாழான்; அலுவல் ஒன்றே குறியென்று நினைக்கும்ஒரு குள்ளன் அல்லன். சாதியினை நம்புகிலான்; சமயப் போர்வை தானணிந்து வாழும்ஓர் சழக்கன் அல்லன். நீதியிலே பற்றுடையான்; திராவி டத்தின் நிலைமையிலே கருத்துடையான்; தோழ ரேநாம் பாதியிலே அவன்செயலை அளக்க வேண்டா பயனுண்டு சுப்பரா யன்தன் னாலே, மீதியுள்ள நாள்களிலே சுப்ப ராயன் மிகுதிறமை திராவிடர்க்கே நன்மை யாகும். - பன்மணித்திரள், ப.227, 1964; குயில், 15.5.1948 115. யாழ் நூல் தந்த விபுலானந்தன் நேரிசை வெண்பா எத்தமிழால் வையம் இறும்பூது கொண்டிடுமோ அத்தமிழால் வாழ்வை அகப்படுத்தி - முத்தமிழால் தொன்மொழிக்குத் தோலா துழைத்துயர்ந்தோன் சொல்லருமை தென்மொழிக்கு யாழிசைத் தோன். 1 அறிவறிந்த நாள்முதலாய் அந்தமிழும் தொண்டும் நெறியறிந்த நீர்மையன்; நேர்மைக் - குறியறிந்து முத்தமிழ்க்குப் பண்ணானான் முச்சங்க யாழ்கண்டான் எத்தமிழ்க்கும் ஈந்தான் இலக்கு! 2 பாழ்நூலே செய்து பதிப்பித்துப் பைந்தமிழைக் கூழ்நூலே என்று கொடுக்கையில் - யாழ்நூலை இந்தா எனக்கொடுத்தான் எண்ணரிய ஆய்வின்பின் சிந்தா மணிச்சிலம்பில் தேர்ந்து. 3 பெருங்கதையால் வாழ்வைப் பெருக்காமல், வையப் பெருந்தகைக்கே வாழ்வைத் துறந்த - அருந்தகையன் தாயைத் துறந்தாலும் தண்டமிழைத் தான்துறவாத் தூயவனை வாழ்த்தல்என் தொண்டு. 4 சங்கநூல் விற்பனையில் சாரும் மடச்சோற்றில் தங்கநூற் காகத் தனையடகாய் - எங்குமே வைக்காமல் அண்ணா மலைப்பல் கலைக்கழகம் கைக்கொடுத்தான் யாழ்நூலைக் கொண்டு. 5 எங்கே இசைநுணுக்கம்? எங்கே பெருநாரை? எங்கேநம் சிற்றிசை, பேரிசை - பொங்கிசைநூல்? எங்கே எனக்கேட்டார்க் கெல்லாம் இசையாழ்நூல் இங்கே எனவீந்தான் ஏந்து. 6 ஏழிசையும் செந்தமிழே ஏமமுற வையத்து வாழிசை எல்லாம் வழங்குதமிழ்ச் - சூழிசையே காணுங்கள் என்றான் கலைவிபு லானந்தன் பூணுங்கள் என்றான் புரிந்து. 7 சீர்செழித்த செங்கோட்டு யாழுடன் செந்தமிழ் பேர்செழித்த பேரியாழ் சீறியாழ் வில்யாழ்நூல் எத்தனை உண்டோ இசைக்கருவி யாழ்வகைகள் அத்தனையும் காட்டினான் ஆழ்ந்து. 8 ஆங்கிலமும் ஆரியமும் நன்கே அறிந்திருந்தும் பாங்கிருக்கும் பைந்தமிழ்க்கே தன்வாழ்வை - ஓங்கிருக்கச் செய்விபு லானந்த செம்மைத் துறவியினைக் கைகுவித்து வாழ்த்தும்என் வாய். 9 செம்மை நலங்கனிந்த செய்யுளைத் தீட்டுங்கை; மும்மைத் தமிழை முழக்கும்வாய் - அம்மம்ம! தெற்கே இலங்கைமுதல் செல்லும்இம யம்வரை பற்றே படரும் தமிழ். 10 - புகழ்மலர்கள், 1978; தமிழ்நிலம், 96-98, 1.11.1948 116. அண்ணல் தங்கோ நேரிசை ஆசிரியப்பா நீண்ட நெடுந்தோற்றம் நேர்மை தவறாதான் பாண்டிய நாட்டுப் பழந்தமிழே - யாண்டும் மொழிவான்; மொழிப்போரில் மூத்தோன் பகைக்குப் பொழிவான் இடியின் புயல். 1 தமிழர் திருநாளைத் தன்பொருள் ஈந்தே தமிழறிஞர் தம்மை அழைத்துத் - தமிழுணர்வை ஊட்டுவான்அண் ணல்தங்கோ ஆரியரை ஊரறிய ஓட்டுவான் ஓடுஓ டென்று. 2 செந்நீரை இந்திய நாட்டிற்குச் சிந்தினான் கண்ணீரைத் தந்ததிந்தக் காங்கிரசு - வெந்நீரைச் செந்தமிழ் வேருக்குப் பாய்ச்சியதும், போராட அந்தமிழ்க் கானான் அரண். 3 தமிழ்நிலத்தை மீட்கத் தமிழ்நில ஏட்டைத் தமிழ்நலத்தோ டீந்தான் தமிழர் - தமிழ்மொழி தாய்நாட்டுக் கென்றே தனையீந்தான்; ஈந்தானே நோய்நாட்டுக் கேற்ற மருந்து! 4 - புகழ்மலர்கள், ப.101, 1978; தமிழ்நிலம், 1.6.1949 117. உடையார்பாளையம் வேலாயுதம் நேரிசை ஆசிரியப்பா உடையார் பாளைய வேலா யுதத்தை மடையர்கள் மரத்தில் கொன்று தூக்கினராம்! கொடுமைகள் செய்யும் கூட்டமே ஆரிய எடுபிடி களாநீர்? எச்சிற் பொறுக்கிகள். பெரியார் இயக்கச் சுயமரி யாதை புரியா திருக்கும் போக்கிலி களேநீர் யாரைக் கொன்றீர், யாரைத் தூக்கினீர்? வேரையும் விழுதையும் வெட்டிச் சாய்த்தால் திராவிட ஆலே செத்து விடாதா? தங்களைத் தாங்களே தற்கொலைக் காக்கும் தகாத செயலைத் தமிழரே செய்வதா? ஆரிய மதத்தின் அடிமை ஆனீர்! ஆரியச் சாதியால் அவதிப் பட்டீர்! ஆரியக் கொடுமையால் அல்லல்கள் கொண்டீர்! ஆரியச் சுரண்டலுக் கழிந்து கெட்டீர்! இன்றுநீர் கோடரிக் காம்பாய் இயங்கினீர்! பழியும் இழிவும் பச்சைத் தமிழரே! அழிவுக் குழியில் ஒழிப்ப தறிகிலீர்! இரக்கப் படுவதா எரிச்சல் கொள்வதா? உரத்த சிந்தனை கொள்ளடா திராவிடா! நன்றுசுய மரியாதை என்று நவின்று வென்றிடும் உலகில் வீரியம் மிக்க பகுத்தறிவு வாளராய்ப் பண்பா டடைந்திட விழிப்படை யீரோ, வெல்லும் திராவிட மொழிப்போர் இனப்போர் மூடநம் பிக்கையின் அழிவுப் போரினில் அனைவருக் காகத் தொண்டு செய்த தோழனைத் தூக்கில் கொண்டு சேர்த்தீர்; கொன்றுங் களையே ஆரிய நரிக்கே அரும்பசி தீர்த்தீர். ஓர்நாள் உணர்வீர்! வெட்கம் உங்களைப் பிணம்தின்னிக் கழுகாய்ப் பிடுங்கித் தின்னும், அன்றுநீர் ஆரிய அடிமை விலங்கினைக் கொன்று போட்டுக் கொதிப்புற் றெழுவீர்! உடையார் பாளைய வேலா யுதத்தின் படையினி லிருந்து, பெரியார் இடுங்கட் டளைக்கே முடுகுவீர் அறிவனே. - புகழ்மலர்கள், ப.102-103, 1978; திராவிடம், 1.12.1948 118. ந. சி. கந்தையா நேரிசை ஆசிரியப்பா தென்னிலம் இதனின் தொன்மை என்ன? செந்தமிழ் தோன்றிய காலம் செப்பெனில் முந்து நாகரிக முளைகண்ட தெவ்வினம்? தமிழரின் தோற்றமும் பரவலும், தரையினில் குமரிக் கண்டநாள் கூறுக என்றால் வையா புரியின் கைகளா எழுதும்! பொய்புரட் டாரியர் கையடை யாகிய ஆங்கிலர்க் குண்மை பாங்கு தெரியுமா? ஓங்கி யேஅவர் உண்மை காணினும் நீலகண் டங்களின் நீளப் பரம்பரை காலங் காலமாய்க் கண்வைத் தழிக்கையில் மடக்குக் கத்தி விரிவது போலும் எரிமலை யின்வாய் வெடித்தது போலும் முத்தமிழ் நிலையப் புத்தகப் பண்ணையில் வித்திய விளைவில் கண்டுமுத லானவன் ந.சி.கந்தை யாஎனும் நல்லவன், வல்லவன், தமிழ்,தமி ழினவர லாறனைத் தையும் தொல்பொருள் ஆய்வின் தொகைவகை விரித்து நிலநூல் கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ்நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையம் வியக்க வரலா றெழுதினான் - பொய்அகன் றுமெய்க் கைஉ யர்ந்தது. குமரி நாட்டின் தமிழினப் பெருமை நிமிரச் செய்தான், நேற்று வரையிலும் கரடி விட்டவர் கண்முன் காண்கிலோம். வளைகிற மரமெலாம் முறிவ துண்டோ? நோய்ப்படு வோரெலாம் சாவதும் உண்டோ? முகில்மறைப் பதனால் மலைமுக டழியுமோ? உண்மை ஒளியின்முன் பொய்யிருள் வாழுமோ? கந்தை யாவின் சிந்தையும் செயலும் செந்தமிழ்க்குச் சேர்த்தநூல் ஒன்றா இரண்டா? ஈட்டிய அறிவெலாம் ஊட்டினான் காட்டுவோம் அவர்க்கு நன்றிக் கடனையே. - புகழ்மலர்கள், ப.105-106, 1978; முத்தமிழ் மலர், 14.1.1947 119. முத்தமிழ்ச் சக்கரவர்த்தி அறுசீர் விருத்தம் வாருங்கள் வாருங்கள் எனஅழைப்பார் வாய்மணக்க வணங்கி, வந்துட் காருங்கள் எனமுகத்தா மரைமலர்கள் பலமலரும்! களிக்கும் கண்கள் கோருங்கை இருக்கைஎடுத் துவந்தளிக்கும் குடிப்பதற்குக் குளிர்நீர் வெட்டி வேருங்கை மணக்குவணம் எனக்கீயும் ஒருகுடும்பம் விருந்தால் துள்ளும். 1 வீட்டுக்குள் மனைமக்கள் சுற்றமுடன் மகிழ்ச்சியினில் விம்மி மெச்சி பாட்டுக்குள் பெற்றசுவை கற்றசுவை பேரின்பம் பெரிது வப்பார் தேட்டுக்குள் காண்பரிதாம் செந்தமிழ்ப் பண்பாடு செழித்தி ருக்கும். கூட்டுக்குள் அடைபடுவேன் கூர்ந்ததமிழ்ச் சக்ரவர்த்தி குடும்பத் தாழ்வேன்! 2 அன்பார்ந்த அன்னையவர் அழகின்சிரிப் பொருபாட்டின் பெருமை சொல்வார். இன்பார்ந்த மனைக்கிழத்தி எனக்குரிய சுவையமுதை இட்டு வப்பார். தென்பார்ந்த இருமக்கள் புரட்சிப்பாட் டினும்எழுத வேண்டும் என்பார். நன்காய்ந்து வெளியிடும்நூல் கருத்துக்களைச் சக்கரவர்த்தி நயினார் கேட்பார் . 3 பொலிவுடனும் பொருளுடனும் புலமைநல மிகுநூற்கள் பொருள்முட் டின்றி மலிவுடனே வாங்குதற்கு மனம்திருப்பித் தமிழ்மக்கள் மனைகள் தோறும் புலிக்குட்டி கள்போன்ற புரட்சிசெயும் புதுநூற்கள் அனுப்பி வைப்பார் வலிவுடனே தமிழிளைஞர் தமிழறிஞர் விழிப்பெய்த வகைசெய் கின்றார். 4 கைத்தொழில்நூல் ஒவ்வொன்றும் கற்றார்க்கும் கல்லார்க்கும் கைகொ டுக்கும். பொய்த்தொழிலைச் செய்துஉழையாப் பார்ப்பனர்போல் தமிழ்க்குடும்பம் போகா வண்ணம். செய்தொழிலில் சீரடைவாய் பிறர்உழைப்பில் உயிர்வாழ்தல் சிறவா தென்று. மெய்த்தொழிலைச் செயத்தூண்டும் மேன்மையுள சக்ரவர்த்தி வெல்க வாழ்க! 5 வேறு இன்னிசை வெண்பா இரண்டணா நாலணா எட்டணா என்று திரண்டநல் நூலைத் திராவிடர் வாழ்வில் புரட்சிக்கு வித்தூன்றும் போக்கில் திருநூல் வறட்சிக்கு வாய்த்த மழை. - புகழ்மலர்கள், ப.107-109, 1978; முத்தமிழ் மலர், 1.4.1952 120. அவ்வை துரைசாமி நேரிசை வெண்பா அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின் செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வையம் எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள் சிக்கலின்றித் தந்தான் தெளிந்து! 1 புறத்தின் உரைகள் புலமைத் திறமை வரலாறு பேசும் மகிழ - உறவாடும் பாட்டின் குறிப்பெல்லாம் பண்பாட்டுச் சங்கத்தேன் கூட்டில் விளையும் கொடை. 2 நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும், உண்மை உழைப்பாளன், அள்ளக் குறையாத ஆறு. 3 இரவுபகல் தாணறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு. 4 கல்லாத் துறையில்லை கற்றதைச் சொல்லிப்பகை வெல்லாத் துறையில்லை வெற்றிமிகும் - எல்லாத் துறைக்குமவன் தொல்லறிவும் துய்ப்பறிவும் தூய்அக் கறைக்குரிய நல்ல கரை. 5 முத்தமிழ் மாநாட்டில் மூண்டெழும் கோளரிமுன் எத்தமிழன் ஈடும் இணையானான் - எத்திசையும் பார்ப்பனர்கள் செத்தார் பழந்தமிழ்ச் சான்றுகளால் வேர்த்தனர் வீச்சறிவி னால். 6 சைவத்தில் பற்றுடையான் சார்ந்த உரைநூலில் கைவைத்து நூலைக் கறைசெய்யான் - பொய்வைத்த பார்ப்பனச் சாமிநாத பார்ப்பின் பதிப்புகளை நேர்ப்படுத்து வான்நடு நின்று. 7 முன்னாள் உரையா சிரியர் முளைக்கவிட்ட இந்நாள் களைகள் எடுத்தெறிவான் - பன்னாள் பழகியது போல்தமிழைப் பாருக் களிப்பான் அழகியது அன்னோன் அறிவு. 8 பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை - வெள்ளத்தேன் பாயாத ஊருண்டா உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்! 9 - புகழ்மலர்கள், ப.110-112, 1978; தமிழ்நிலம், 14.01.1950 121. பொன்னம்பலனார் நேரிசை வெண்பா முன்னை பழகுதமிழ் மூட்டியவர் பாரதியே, பின்னை அழகுதமிழ் ஊட்டியவர் - கொன்னை வடசொற் கலப்பின்றி வண்டமிழ் இன்பம் இடச்செய்தார் பொன்னம் பலம். 1 திரைப்படத் தேவைக்குச் சேலம் சென்றால்அக் கறைகொண்டு காணுங்கா லத்தில் நுரைபடப் பால்பொங்கல் போலே தனித்தமிழ்ப் பற்றைஎன் பால்பொங்கும் பொன்னம் பலம். 2 தூய மறைமலையார் தொண்டறிவேன்; ஆனாலும் ஏயதன் மான இயக்கத்தின் - தாயாகக் கொங்குநாட் டெல்லையிலே கொள்கையுடன் கூடிஎனில் பங்குறுவார் பொன்னம் பலம். 3 விற்கத் தமிழ்கற்கா வீரர், விழைகல்வி கற்கவரும் மாணவர்க்குக் கண்ணாவார் - கற்கக் கனித்தமிழ்ப் பாலடைகள் தாம்தருவார், எற்கும் பனிமலர்த்தேன் பொன்னம் பலம். 4 தெள்ளறிவி னாலே தெளிவிப்பார் யாவரையும் வெள்ளறிவைப் பேசி விரட்டிடுவார் - உள்ளறிவைத் தேனாக்கி வைப்பார் செழுந்தமிழை என்னுயிர் ஊனாக்கி வைப்பார் உவந்து. 5 மகிழ்வித்தே என்னை மணக்குமலர்த் தென்சொல் அகழ்வித்தே ஆன்ற தமிழ்ச்சொல் - முகிழ்வித்தே இங்கடடா இஃதே தமிழ்ப்பாட் டெனப்புகழ்வார் பொங்குற்றே பொன்னம் பலம்! 6 பாடுபடா துள்ளுணர்வைப் பச்சைக் களிமண்ணாய் ஓடுபடச் செய்தல் ஒழுங்கன்று - சூடுபடா மண்பானை மாயும் தனித்தமிழ் மாண்பீந்தார் பொன்பானைப் பொன்னம் பலம்! 7 - புகழ்மலர்கள், ப.113-114, 1978; தமிழ்நிலம், 15.9.1956 122. செகவீர பாண்டியனார் எண்சீர் விருத்தம் செகவீர பாண்டியனார் என்னும் வேந்தர் தென்பாண்டித் தமிழ்க்குரிய சிறப்பு மிக்கார்! அகமார முப்பாலின் குறள்க ளுக்கே அணியணியாக் கதைகூறி, மேற்கோள் கூட்டி, மிகமாறு தல்காட்டி மேலை நாட்டார் மெய்ப்பொருளை, சிந்தனையை வெல்லு மாறு, பகலேறு ஞாயிறுபோல் பொருள்வி ளக்கும் பாண்டியனார் பெரும்புலமைப் பயனைக் கொள்க. 1 முத்தமிழில் ஒருதமிழும் முறையாய்க் கல்லா மூடரெலாம் தமிழ்த்துறைக்கு முன்னே நின்று சத்தமுடன் ஏதேதோ பிதற்று வார்கள் தப்பில்லா தொருதொடரை எழுதார் பேசார் இத்தகைய இழிஞரிடை ஈடில் லாத இலக்கியநூல் இலக்கணநூல் எல்லாம் கற்ற வித்தகன்போல் அடக்கமுடன் வினைசெய் வார்யார்? 2 எழுத்தெல்லாம் பாட்டாக இசைம ணக்கும்! எண்ணஎண்ணத் தித்திக்கும் இனிமை பொங்கும்! முழுப்புலமை முச்சங்க முதிர்ச்சி காட்டும் மொழிப்புலமை வேர்ப்பலாவாய்த் தேனைக் கொட்டும்! அழுக்காறி லாஅறிஞன்! ஆரிய யர்க்கோ அண்டமுடி யாநெருப்பு! தமிழ்மக் கட்கு விழுமருவித் தென்றலிசை விருந்தை ஒப்பார்! ... 3 குறள்வெண்பா செய்யும்நூல் ஒவ்வொன்றும் செந்தமிழர் வாழ்ந்திருக்கப் பெய்யும் பெருவான் அமிழ்து! - புகழ்மலர்கள், ப.115-116, 1978; தமிழ்நிலம், 15.7.1953 123. கா. அப்பாத்துரை நேரிசை வெண்பா எப்பாத் துறைக்கும் இவனோர் பழம்புலவன் அப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற - முப்பால்போல் நூலறிவு! நூறு புலவர்கள் சேரினிவன் காலறிவு காணார் கனிந்து. 1 ஆங்கிலத்தை அண்டை மொழிகளினைப், பண்டைநாள் பாங்குற வாழ்ந்த பலமொழியை - ஈங்கிவனே செந்தமிழ்க்குச் சேர்க்கும் குருதியெனச் சேர்க்கின்றான் சிந்தனையில் யாவும் செரித்து. 2 விருந்தெனும் நூலை வெளிநாட் டமிழ்தை அருந்தெனத் தந்தான் அருந்திச் - செருக்குற்றேன் எத்தனை எத்தனை எண்ணித் தொகுத்தீந்தான் அத்தனையும் முத்தமிழர்க்குச் சொத்து! 3 சின்னஞ் சிறுவர்முதல் சிந்தனையில் தோய்ந்தாயும் பென்னம் பெரியர்வர்க்கும் பித்தாக்கும் - வண்ணம் அருநூல்கள் ஈவான் கலைக்களஞ்சி யம்போல் வருநூலைப் பாத்துவப்பேன் நான் ! 4 ஆங்கிலத்தில் என்பாட்டை ஆரும் வியக்குவணம் பாங்குறச் செய்தான் படித்தவர் பாராட்டி வைய இலக்கியத்தில் வாழும்என் பேரென்றார் ஐயமில்லை அப்பாத் துரை! 5 குறள்வெண்பா அப்பாத் துரைகொண்டே ஆயிரம்நூல் செய்க தப்பா துயரும் தமிழ்! - புகழ்மலர்கள், ப.117-118, 1978; தமிழ்நிலம், 14.6.1952 124. மயிலை சீனி வேங்கடசாமி அறுசீர் விருத்தம் தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட லாற்றா அண்ணல் வேங்கட சாமி என்பேன் விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணி யாகக் கொண்டோன்! வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விழைதல் இல்லான். 1 தமிழுக்குத் தொண்டு செய்வோர் தலைச்சங்க முதலாய் இன்றும் தமிழுக்குத் தொண்டர் யார்க்கும் தலைத்தொண்டன்; அடிமை அல்லன்! குமிழ்பகுத் தறிவி யக்கக் கொள்கையில் அசைக்கொ ணாத இமயமும் தோற்கும் அண்ணல் ஈடிலாத் திறமை ஆற்றல்! 2 ஒன்றினும் திரியா துள்ளம் ஒண்டமிழ்க் குழைப்ப தொன்றே! நன்றினும் நன்று என்று துறவினை நயந்த மேலோன் நன்றிகெட் டதிகா ரத்தை நாடும்எவ் வரசும் அன்னார் குன்றினும் மிகுந்த சீர்த்தி கொண்டுயர் வளித்தார் இல்லை. 3 தமிழையே வணிக மாக்கித் தன்வீடும் மக்கள் சுற்றம் தமிழிலே பிழைப்ப தற்கும் தலைமுறை தலைமு றைக்குத் தமிழ்முத லாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச்சீனி வேங்கட டத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன். 4 அஞ்சுதல் அறியா நெஞ்சன் அகல்வர லாற னைத்தும் மிஞ்சுதல் இன்றிக் கற்றோன் மேம்படும் நூலா ராய்ச்சி கெஞ்சிடும் தனைத்து லக்கத் கேண்மையோ டுயர்வு செய்வான் எஞ்சுவ துமக்கொன் றுண்டோ இவனைநீர் மறந்துவிட்டால்? 5 - புகழ்மலர்கள், ப.119-120, 1978; தமிழ்நிலம், 14.10.1952 125. பாரி செல்லப்பன் நேரிசை வெண்பா வாரி வழங்குகின்ற வள்ளன்மை பண்டைய பாரிக்கு மட்டுமே பண்பன்று! - நேரிலே பாரி நிலையப் பழகுதமிழ்ச் செல்லப்பன் கோரிப் பெறாதீவான் கொண்டு. 1 என்னுடைய நூற்களினை விற்கின்ற போதெல்லாம் தன்னுடை தாய்த்தமிழ் வையத்தில் - முன்னடையும் ஆக்கமே பார்ப்பான் அரும்பொருள் எண்ணிடான் ஊக்கமே ஆனான் உரு. 2 பெண்ணீர்மை தோற்கும் பிறைச்சிரிப்பு அன்புள்ளம் தண்ணீர்மை தோற்கும் தலைப்பணிவு - கண்ணீர்மை காட்சியிலே கொண்ட சினமடங்கும் கற்றவரின் மாட்சியிலே கொள்வான் மகிழ்வு. 3 பிணக்குவியல் ஊடும் பிழித்துப் பிடுங்கிப் பணக்குவியல் தேடும் பதராய்க் - கணக்கெழுதும் கொல்லப்பன் அல்லன், குழந்தைமன நல்லப்பன் செல்லப்பன் செந்தமிழின் சொத்து. 4 - புகழ்மலர்கள், ப.122, 1978 126. நாமக்கல் இராமலிங்கம் நேரிசை வெண்பா நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை நலிவின்றி மாமக்கள் காண வரைந்தளித்தான் - ஆம்,அத் தமிழன் இதயம் மலைக்கள்ளன் சங்கத் தமிழன்பில் உள்ளம் தளிர்த்து. இன்னலுறும் செந்தமிழ்க் கிந்நாள் புரிகின்ற சின்ன பணியும் திருப்பணியாம் - என்னில்நம் நாமக்கல் ராமலிங்கம் நாட்டும் நறும்பணியை நாமிகவும் போற்றுகிறோம் நன்று. - புகழ்மலர்கள், ப.1925, 1978 127. கலைவாணர் எண்ணும் கருத்தினர்க் கெல்லாம் - தன் ஏற்ற நடிப்புத் திறத்தால் நண்ணும் நகைச்சுவையோடு - பல நல்ல கருத்துகள் ஈவான்! பண்ணும் குறும்புகள் எல்லாம் - சொலும் பகுத்தறி வூற்றைச் சுரக்கும்! பெண்ணும் மதுரநல் பேச்சால் - இதழ்ப் பேழை நகைமுத் துதிர்க்கும். 1 கோணலை மாணலைக் காட்டி - வெறும் கூத்தடிக்காக் கலைவாணன் காணக்கண் கூசும் கதைக்கும் - நகை காட்டும் விருந்திசை கூட்டி வீணடா என்று சொலாமல் - சிறு வேடத்தும் வெற்றி பொறிப்பான் நாணிட வைக்கும் வகையில் - கதை நாயகனை விஞ்சும் நடிகன். 2 சிரித்த முகத்தில் அழகும் - இன்பம் செருக்கோ டிருந்திசை பாடும் அரிப்புகள் நெஞ்சிருந்தோடும் - நன்று அன்பின் நெருக்கம் பிறக்கும் தெரிந்திருந்தான் கலைவாணன் - தன் திரைப்பட நாடகத் தெல்லாம் பரிசுகள் தந்தான் நகைத்தே - நம் பகுத்தறி வெண்ணத்தின் நாற்று! 3 வகைவகையாச் சுவைகாணும் - வெறும் வாய்ச்சுவை மாந்தருக் கெல்லாம் பகைக்சுவை என்பதில் லாமல் - வாழப் பண்ணும் சுவைநலம் காட்டி நகைச்சுவை மட்டுமா தந்தான் - வள்ளல் நாடக மாடிய தில்லை தொகைதொகை யாகக் கொடுத்தான் - புகழ்த் தோளுக் குயிரைக் கொடுத்தான்! 4 - புகழ்மலர்கள், ப.126-127, 1978; கலைச்செல்வி, 15.1.1958 128. தமிழ்வாணன் வாழ்க நேரிசை வெண்பா நல்லொழுக்கம் நாணயம் நேர்மை நடுநிலைமை எல்லா மிருக்கும் எழுத்தாளன் - சொல்வேன் அமிழ்தான சொல்லிட்டுக் கற்கண்டை ஆக்கும் தமிழ்வாணன்! என்ன தடை? தன்னலமோ வேம்பு? தமிழ்நலமே கற்கண்டு! தன்மானக் கொள்கை தழுவுகின்ற - நண்பன் தமிழ்வாணன் வாழ்க! தமிழ்வாழ்க! தாயாம் தமிழ்நாடு வாழ்க தழைத்து! - புகழ்மலர்கள், ப.128, 1978; குயில், 28.6.1960 129. ஜி. டி. நாயுடு எழுசீர் விருத்தம் கொங்குநா டென்றால் தமிழர்தம் வாழ்வின் கொள்கைகள் மேம்படச் செய்த சிங்கமே என்றன் சிந்தையில் தோன்றும் செய்தொழில் சாலைகள் தோன்றும் தங்கமாய் விளங்கும் பொருளியல் அறிஞன் சண்முகம் இன்முகம் தோன்றும், பொங்குமாங் கடல்மேல் ஞாயிறு போலத் தோன்றுவார் ஜி.டி. நாயுடுவே. எண்ணமும் சொல்லும் இரண்டிலா வாழ்க்கை எழுதரும் தொழிலியல் அறிவு உண்மையின் உழைப்பு திண்ணிய பொறுமை ஒவ்வொரு நாளுமே உலகம் ஒண்மைகொள் புதுமை உண்டிடும் பழம்,காய் உயர்ச்சிசேர் பயிர்கள் யாவும் நுண்மைசார் தன்றன் அறிவியல் மக்கள் நுகர்ந்திட அளிக்கும் ஓர் அறிஞன். செயப்படும் பொருளின் செம்மைகள் புதுமை செந்தமிழ் அறிவியல் திறமை வயப்படும் வண்ணம் வாழ்ந்திடும் ஒருவன் வண்டமி ழகத்துளான் என்னே! வியப்பிது வெற்றி விளைவுகள் எல்லாம் விருப்பமாய் மக்களுக் கீந்தால்! பயப்படு மாறு தொல்லைகள் செய்தால் பாழ்படும் அல்லவோ நாடு? உயர்ச்சியை எய்த ஒவ்வொரு நாளும் உண்மையின் உழைப்பினால் தேடும் முயற்சியில் ஆய்வு முன்னிலைப் பொருள்கள் முளைவிடும் அறிவியல் விளைவை அயர்ச்சியால் வீழ்த்தும் அரசும்ஓர் அரசா? ஐயகோ பார்ப்பனன் ஒருவன் பயிற்சியில் காலை வைத்ததும் புகழ்வார்! பயன்கொளார் தமிழனை ஆள்வோர். நமக்கென நாடு வாய்த்திடில் கோவை நல்கிய அறிஞனின் திறமை, நமக்கும்இவ் வுலக நாடுகட் காகும் நலம்பல எய்துவோம் அன்றோ? சுமந்திடும் வடக்கின் ஆட்சியை ஒப்பும் துப்பிலா அடிமைகள் வீழ இமைப்பினில் நாட்டை நமக்கென ஆக்கும் ஏறுகள் படையுடன் எழுக! - புகழ்மலர்கள், ப.129-130, 1978 130. அம்பேத்கார் வாழ்க அவர் வழி செல்க நிலைமண்டிலம் ஒருவனால் உலகு பாழ்படும் எனில் அவ் ஒருவனை ஒழித்தல் உலகின் கடமை! ஒருசம யத்தால் ஓரினத் தவரின் இருட்டெண் ணத்தால் என்றோ வகுத்த சாதி மதத்தால் தகாவிதி முறைகளால் மோதி யழியும் இவ்வுலகெனில் அவற்றை மோதி மிதித்தல் அழித்தல் முதற்கடன்! நிறத்திமிர் கொண்டு நிலத்தில் புகுந்தவர் நிறவெறி யாலே கொலைத்திரு விழாவினை நடத்தியோர் நாகரிக மிலாத ஆரியர், கடந்த காலக் கதைத்தொ டர்ச்சியை வேற்றுமை உணர்ச்சியை, வெற்றித் திமிரினைக் காட்ட நினைப்பது கயமைத் தனமே! சூழ்ச்சியால், மூட நம்பிக் கையை வீழ்ச்சிக் குரியதாய் வேட தாரிகள் காலம் காலமாய்க் காட்டிக் கொடுத்தே இருபதாம் நூற்றாண் டிலும்இனப் போர்க்குரிய கருத்து நஞ்சினைக் கலப்பதும் விளைப்பதும் நாட்டை உலகை நலிவிப்ப தாகும். இரண்டா யிரமாண் டில்லா திருந்த திரண்ட நாகரிகத் திராவிடர்க் கிடையில் பொல்லாங் கனைத்தையும் புகுத்தி வெளியுள எல்லா நாட்ட வரையும் இங்கே பாய்விரித் தழைத்த ஒரேஒரு பரம்பரை பார்ப்பனப் பரம்பரை! ஆரியப் பதர்களே! ஆரியர் என்ன தூய்மை யானவரா? பூரித் துவக்கும் இந்திய ஆரியர் அனைவரும் திராவிட அணைப்பில் பிறந்தவர்; தினையள வும்இதில் ஐயம் இல்லை; மாந்தநூல் இயலார் இதனையே ஒப்புவர். தீண்டாமைக் கொடுமை தீய்த்த பாடெலாம் ஆண்டாண்டு தோறும் அழுதும் தீராது. கொடுமையை நினைக்க நெஞ்சம் குமுறும். பாரதி யார்முதல் பாரத நாட்டின் காந்தி அண்ணலார், பெரியார் வரையிலும் தீண்டா மைநோய் தீண்டா வண்ணம் பணியாய்க் கொண்டனர் - பணியில் எவர்க்கும் அணியில் முன்நின்ற அமபேத் காரின் எரிமலை எண்ணமும் எழும்புயல் செயலும் விரிவுல கத்தையே விழிப்புறச் செய்தன. ஆரியக் கொட்டம் அடியோ டழிய வீரியங் கொண்ட வெஞ்சின வேங்கைமுன் மதத்திமிர் அழிந்தது. சமயம் மடிந்தது. அதற்கொரு வழிஅவர் கண்டார் இந்திய நாட்டின் உரிமைப் பேரேட்டின் சட்டம் அமைத்தவர் ஆதலின் சாதி வேற்றுமை குமையத் தானே குலம்உயர் வென்ற ஆரியப் பெண்ணை மணந்தார். அதனால் ஓர்இனம் தனிஇனம் ஒட்டோம் என்னும் தடையுடை படுவதால் உடைமையுடை படுமே. உடைமையால் அல்லவோ உயர்வும் தாழ்வும்; அம்பேத் கார்போல் ஆரியப் பெண்களை நம்மவர் மணக்க நாடுருப் படுமே! - புகழ்மலர்கள், ப.130-131, 1978; தொண்டு, 1.2.1952 131. மாட்டை நினைத்தவன் மனிதனை நினைக்கவில்லை பாரதிப் பாட்டில் வீரியம் ஏற்றிய நேரிய நெஞ்சும் கூரிய அறிவும் கொண்ட பெண்ணின் பெருந்தகை, ஈடிலா நிவேதிதா போற்றிய விவேகா னந்தரைப் பார்க்கச் சென்றனர் பார்ப்பனர் ஐவர் பசுப்பாது காப்பு சங்கத் தினராம் விசும்பி லிருந்து விழாத மழையினால் பசுமாடுகள் எலாம் பட்டினி ஆயின பசுவினைக் காப்பது பரமனைக் காப்பதாம் என்றொரு விளம்பரத் தாளினை எடுத்தே அன்புடன் நன்கொடை அருளுக என்றனர். அறிஞரின் விழிகள் நெருப்புக் பொறிகளைத் தெறித்தன; சினத்தினை அடக்கிய வாறு நாட்டிலே எங்கும் வாட்டிடும் வறுமை வானம் மழையை வழங்கா ததினால் கானல் பரந்து கருகின யாவும் தண்ணீர் இல்லை தகுஉண வில்லை கண்ணீர் விட்டுக் கவல்கிறார் மக்கள் கொடிய வறுமை குழந்தைகள் தம்மை மடியவைக் கின்றது; மக்கள் படும்துயர் நோயிலும் நொடியிலும் கோயிலின் இறைவனைக் கூவிக் கூவிப் பாவிஎன் றேசினர். பசிப்பிணி யாலே பரிதவிக் கின்ற நசிவினை எண்ணும் நல்லுளம் இல்லையா? உடன்பிறந் தவர்கள் உயிருடன் சாகையில் கடமை கருதி அவர்கள் உயிரினைக் காக்க ஒருபிடி சாப்பாடு கொடாமல் நோக்கம் இலாமல் ஊக்கம் இலாமல் மாந்தர்மேல் பரிவு ஏந்திடா மல்நீர் கறவை கட்கும் பறவை கட்கும் சங்கம் வைத்துச் சாதிப்ப தென்ன? உயிர்களில் மனித உயிர்உயர் வில்லையோ? பயிர்பாது காப்பு சங்கம் இல்லைஏன்? என்று துறவியார் சொன்னதும், ஆங்கொரு நன்று கொழுத்துப் பன்றிபோல் இருந்த ஊர்ப்பொருள் விழுங்கும் ஒருவன் சொன்னான். பூர்வ ஜன்மத்தின் பாவ கருமமே பஞ்சமாய் மனிதரைப் படுத்திய தென்றான். குணக்குன் றானவர் கணத்துள் சினமிகு தணல்பொழி எரிமலை யாக எழுந்தார் பறவையும் கறவையும் பாவ கருமத்தில் உறவுற வில்லையோ? உடன்பிறந் தோருக்கு இரங்கா நெஞ்சுள அரக்கர் உங்களை மனிதர் என்பதும் மனிதர்க் கிழிவு. நாளும் நாளும் ஆடும் மாடும் கசாப்புக் காரன் கையிலகப் பட்டு வெட்டப் படுவதும் அவற்றின் கருமமே என்றுநீர் சும்மா இருங்களேன் என்றதும் குன்றினர் ஏற்கவந் தோரே. - ஒருதாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.111-112, 1978 132. போர் தொடங்கு கழுகான தில்லியின் கண்ணைப் பிடுங்கு! காம ராசனே போரைத் தொடங்கு! முழுது தமிழகம் உனைஆ தரிக்கும் முத்தமிழ்க் கொடியினை வானில் விரிக்கும்! - கழுகான அழுதனர் உன்மக்கள் அரிசிக்குத் துடித்தார் அன்பிலா வடக்கர் பழம்பாடம் படித்தார் பழகினை பல்லாண்டு தில்லி யோடு பழிகாரரால் வாழுமா தமிழ் நாடு? - கழுகான ஆட்சியின் அடிப்படை பார்ப்பனர் தந்நலம்; ஆட்சியில் இருப்பதும் அதேபார்ப் பனகுலம் காட்டி வந்துள மனப்பான்மை யாவும் கருதும் நெஞ்சில் நெருப்பைத்தான் தூவும். - கழுகான நீட்டத் தமிழர் துடிக்கும் துடிப்பை நீக்குநீ நீக்குநீ வடவர் பிடிப்பை. ஆட்பட் டோரின் அமைச்சராய் இராதே ஆளும் தமிழரின் அரசென வாழ்கநீ! - கழுகான - வேங்கையே எழுக, ப.113, 1978 133. தமிழ் வீரன் தமிழுக்குத் தொண்டுசெய்து சிறைக்குச் சென்றோன், தலைசிறந்த பேச்சுவல்லோன், தமிழ வீரன்; தமர்என்றும் தான்என்றும் நினைப்ப தன்றித் தமிழ்நாட்டின் நலத்தினுக்கே உயிர்உ டல்கள் அமைகஎன இரவுபகல் உழைக்கும் மேலோன். அன்புள்ள தோழன்அண்ணாத் துரைஇக் காலை நமதகத்தே சிறைநீங்கி வருதல் கேட்டோம் நாமடையும் மகிழ்ச்சிக்கோர் எல்லை உண்டோ - பாரதிதாசன் கவிதைகள் உயர்ந்தோர், ப.176, 1992; திராவிடப் பாசறை, மார்ச் 1948 குறிப்பு : பூம்புகார் பதிப்பகம் - பாரதிதாசன் - உயர்ந்தோர் - கவிதைகள் வெளியீட்டில் முதல் ஐந்து வரிகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. பாரதிதாசன் இலக்கியம் அறியப்படாத படைப்புகள் - என்னும் ய. மணிகண்டன் நூலில் அறிஞர் அண்ணா என்னும் தலைப்பில் இறுதி மூன்று வரிகளும் இணைக்கப்பட்டு முழு விருத்தமும் உள்ளது. இப் பாடல் 22.1.39 நகரதூதன் இதழில் பேனா நர்த்தனம் பகுதியில் தமிழரின் தவப் புதல்வனான பாரதிதாசன் பாடுகிறார் எனக் குறிக்கப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 134. நாவேந்தர் பற்றிப் பாவேந்தர் எண்ணாத் துறைநாடி எண்ணிப் பிறர்நலம் ஏற்பச் செய்தான் அண்ணாத்துரை, அறிஞன் சொற்றொடரில் நற்றொடர்கள் ஆய்ந்தெ டுத்துப் பண்ணாத் துறை என்ன? வீழ்ந்த புகழ் மீட்டான் பார்ப்ப னத்தீ நண்ணாமற் செய்தான் திராவிடர்க்கு வாழ்வளித்தான் நன்றே நன்றே. - பழம் புதுப் பாடல்கள், 2005; நாவேந்தர் கண்ட பாவேந்தர், ப. 9 குறிப்பு : எண்ணாத்துறை நாடி என்று முந்தைய இரண்டு பாடல்களைப் போலவே தொடங்கும் இப்பாடல் பாவேந்தர், நாவேந்தரான அண்ணாவைப் பற்றிப் பாடியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாவேந்தரால் எப்போது பாடப்பெற்றது? எந்த இதழில் அல்லது நூலில் இடம்பெற்றது? என்பன பற்றிய எக்குறிப்பும் நூலாசிரியரால் தரப்பட வில்லை இந்நூலின் பதிப்பாசிரியர் பாவலர் த. கோவேந்தன். பாடலின் மெய்ம்மை ஆராயத்தக்கது. 135. பாவலர்க்குப் பண உதவி செய்க அகவல் பாவலர் பால சுந்தர னாரைக் காவலர் ஒழித்துக் கட்ட எண்ணிப் பற்பல வழக்குகள் பதிவு செய்தனர். நடந்துகொண் டிருக்கும் வழக்குகள் நான்காம் நடக்க இருப்பவை நாற்பத்து நான்காம் இவ்வாறு கோட்டை ஏரியிற் பறக்கும் மீன்கொத்தி ஒன்று விளம்பிற்று நம்மிடம். பெரியார் கருத்தைப் பெருந்தமி ழகத்தில் உரிய வகையில் உணர்த்தும் பாவலர் நல்ல பேச்சாளர்! நடுங்கா நெஞ்சினர். அவர்மேல் அறனிலா அரசினர் எய்யும் வழக்குக் கணைகளை மறுக்க எண்ணிய பாவலர் முயற்சி பலநலம் விளைக்கும். எதிர்வழக் காட இரண்டுமூன் றாயிரம் வெண்பொற் காசுக ளேனு ம் வேண்டும்! வறுமை என்னும் முதலையின் வாய்க்குள் குறுகக் குடித்தனம் செய்பவர் பாவலர்! திராவிடர் கழகத் திருத்தகு கொள்கை இராவிடம் எட்டி அன்றோ பாவலர்க்கு! நம்மைத் தாம்அவர் நணுக முடியும் நாம்தாம் அவர்க்கு நல்க வேண்டும். ஆவலொடு தமிழர் இயன்றவாறு பாவலர் முகவரிக்குப் பணம்அனுப் புகவே! - பழம் புதுப் பாடல்கள், ப.301, 2005; குயில், கிழமை இதழ், 30.9.1958 136. ஆசிரியர் பு. அ. பெரியசாமிப் பிள்ளைக்கு இரங்கற்பா பூமியை மறந்துவிட் டீரே எமக்கிங்கோர் போக்கிலா தாக்கினீ ரெம் புன்மதி விளக்குமதி காரத்தை நீரிங்குப் பொற்கதிர்க் களித்திரேனும் யாமதைப் புதுமையாய்க் கொள்வதுண் டோதினம்! எங்கள்பாற் காட்டுமன்பை ஈன்றதாய்க் கீந்துசென் றீரெனினு மன்னதால் இதயத்து ளமுத முறுமோ! தாமமில் லாதுகவி பாடிடுந் தன்மையைச் சமுத்திரத் தீந்தி ரதுதான் சாற்றுவது மற்றோர் முறைசாற்றுமோ கீர்த்தியைச் சாரிமய மலையில் வைத்துச் சாமியும் பொறுமையைப் பூமிக் களித்துச் சகக்கடை வரைபெரிய சாமியிடம் நிறுவி ... ... தாணுவடி வெய்தினீரே! - பழம் புதுப் பாடல்கள், ப.42, 2005 குறிப்பு : இறுதியடி சிதைந்துள்ள இந்த இரங்கற்பா, சுப்புரத்தினத்தின் ஆசிரியர் சாரம் மகா வித்வான் பு.அ. பெரியசாமிப்பிள்ளை 24.01.1920இல் மறைவுற்றயொட்டி எழுதப் பட்டது. பாரதிதாசன் இறுதிக்காலத்தில் எழுதிய தன்வரலாற்றுக் கவிதையில், புலவர்க்குப் புலமை ஈந்து, நிலவு பெரும்புகழ்ப் பெரியசாமிப் பிள்ளை என்று இவரைப் போற்றுவார். 137. ஸ்ரீ லாலா லஜபதிராய் பிணிக்கிரங்கல் எண்சீர் விருத்தம் இன்றைக்கே லஜபதிநோய் தீர்ந்த தென்றே யாருரைப்பார் என்காதில்? அந்தோ நாட்டின் நன்மைக்கே வினவறிந்த நாளாய் இந்த நாள்வரைக்கும் உழைத்தவனை மறப்ப துண்டோ? குன்றைப்போல் கலங்காத வீரன்! gšfhš1 கொடுஞ்சிறையில், பிறநாட்டில் கொண்டு சேர்த்தும் அன்றுபோல் சுதந்திரப் போர் இன்றும் நீங்கா அருந்துணையைப் பிணிநலித்தால் நலியா ருண்டோ? நாளைதரும் வெற்றியெலாம் நன்றோ இன்று நலிந்தவனை மாசத்தி தேற்றா விட்டால் வேளையறிந் தாதரிப்பாய் வெற்றித் தேவி! விண்தேவி! cÆuid¤J«2 வேண்டுந் தேவி! காளை, இளங் கன்னியர்க்குத் தோளுங் கற்பும் கதியற்ற நாட்டினுக்குக் கண்ணும் போன்றான் தாளுக்குத் தலைவணங்காப் பேயர் எண்ணம் தவிர்க்கநோய் தவிர்ப்பாய்நீ லஜப திக்கே! இன்னதுசெய் கென்றுரைப்பான் பாஞ்சா லக்கோன் ïu©o‹¿¢3 செய்திருந்தார் நாட்டா ரெல்லாம் அன்னைதுயர் தீர்ப்பனென அவன்சொற் பேச்சின் அமுதத்தில் விஷமிருப்ப தாகச் சர்க்கார் பின்னொருத்தர் காணாமல் நாட்டை விட்டுப் பிறிதொருநா டேற்றிவிட்டார் பன்னாள் சென்று சின்னாளின் முன்வந்தான் சிறையே சென்றான் திருவடியை நீசூழ்ந்தாய் போபோ நோயே! - பழம் புதுப் பாடல்கள், ப.89, 2005; தேசசேவகன், 10.7.1923 1. gyfhš (f.F.), 2. cÆÇid¤J« (f.F.), 3. ஒற்று ச் விடுபாடு (க.கு.) 138. பாலசுப்பிரமணிய நாயகர் இரங்கற் பாக்கள் எண்சீர் விருத்தம் ஞாலமிக்க கீர்த்திதனைக் கசந்தோ? வான நாடுதரும் இன்பமதை வியந்தோ? தீய காலனுக்கு நெஞ்சீர மில்லாச் செய்தி கடலுலகு கண்டறிவு காணத் தானோ? சீலமிக்க தன்நண்பர் தனைப்பி ரிந்தால் செயலிழப்பர் எனப்புவிக்குக் காட்டு தற்கோ? பாலசுப்ர மணியனெமைத் துயரிற் சேர்த்துப் பரனடியிற் சேர்ந்திட்ட பான்மை என்னே! 1 வாளெடுத்துப் போர்செய்யும் கலைவ ளர்த்தும் வண்தமிழ்நா டோங்கவைத்த தமிழர் மாண்பை நாளெடுத்து விழுங்கிற்றே! தமிழ்ச்சிங் கங்கள் நலிந்தனரே! தமிழ்நாட்டைத் தமிழ்நா டாக்கத் தோளெடுத்துத் தொண்டுசெய்யும் இளைய வீரர் தோன்றுவரா! என்றுநாம் எண்ணும் இந்நாள் தாளெடுத்து வீரம்எழுந் தகத்த காயத் தமிழ்எழுதும் தமிழனைஇன் றிழந்தோ மந்தோ 2 உரஞ்சுமந்த மணிக்கவசம் ஒளிம ழுங்க ஓய்ந்தனபோல் முப்பத்து மூன்று கோடி கரஞ்சுமந்தும் பிறநாட்டான் இங்கு வைத்த காலைமுறிக் காதிருக்கும் பார தத்தாய் சிரஞ்சுமந்த தன்னுரிமை மகுடம் பூண்டு செகத்தின்கோல் தன்கோலாய் ஆள்க என்றே இரஞ்சிதபோ தினித் தலைமை ஏற்று யர்ந்த இளையானைப் பாரதத்தாய் இழந்தா ளந்தோ. 3 பாரதமைந் தன்மரண சாச னப் பேர்ப் பயன்மிக்க ஒருநூலைப் பாலன் தந்தான் பாரதமைந் தர்களதைப் பார்க்குந் தோறும் பாரதத்தின் விடுதலையில் ஊக்கங் கொள்வார் பாரதமைந் தன்மரண சாசனத்தைப் பார்க்கின்ற பொழுதெல்லாம் எங்கட் கந்தோ சீருடைய அவன்முகமும் எழுதும் கையும் திடுக்கிடவைக் கின்றனவே கண்முன் தோன்றி. 4 புதியனவாய் நெஞ்சத்தில் அரும்பும் எண்ணம் பூக்குமுன்னே கிள்ளஎண்ணும் ஆங்கி லர்கொள் அதிகாரம் செல்லுபடி ஆகா வண்ணம் அழகுடைய பிரான்சியர்நூல் பிரான்செல் லைக்குள் கொதிக்கின்ற விடுதலைப்பே ராவல் கொண்டு குளிர்தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்குங் காலை விதிதோன்றி ஆங்கிலரின் விண்ணப் பத்தால் விழுங்கிற்றோ பாலசுப்ர மணியன் தன்னை. 5 பெண்கொடுத்த மாதுலனாய்க் கணமும் நீங்காப் பிரியமிகு வளர்ப்புத்தந் தைதா யாகி விண்கொடுத்த கொடைபோலே கல்விக் காக வெகுபொருளும் செலவிடும்ஆ றுமுகப் பேரான் கண்கொடுத்து வைக்கவில்லை என்று நையக் கதியழிந்தேன் எனமனைவி கண்ணீர் கொள்ளப் பண்கொடுக்கும் அவனிளஞ்சேய் அப்பா என்னப் பரகதிக்குப் பாலசுப்ர மணியன் சென்றான் 6 சோதரிசோ தரர்கொண்ட துயரும், மற்றும் சொந்தக்கா ரர்துயரும், நண்பர் கொண்ட ஓதரிய துயரும்கா ணாது சென்றவ் வுயர்வுடைய பொன்னாட்டில் எம்பி ரானின் பாதநிழற் குளிர்கொண்டு வீற்றி ருக்கும் பாலசுப்ர மண்யனுக்கு, வீர னுக்கு, நீதனுக்கு நிறைகல்வி வாய்ந்தோ னுக்கு நிகழ்த்துகின்றோம்; அவனென்றும் அடைக சாந்தி. 7 - பழம் புதுப் பாடல்கள், ப.103, 2005 குறிப்பு : பாரதிதாசனின் தலை மாணாக்கரும், கவிஞரும், பாரதிதாசனோடு இணைந்து புதுவைமுரசு இதழில் பணியாற்றியவரும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ச. சிவப்பிரகாசத்தின் உறவினரே பாலசுப்பிரமணிய நாயகர், அவர்மீது பெருமதிப்புடைய பாரதிதாசன் அவர் மறைவுக்கு ஆற்றாது எழுதிய இரங்கற்பாக்களே இவை. ïit jÅ btËplhf tªjnghJ “ïit ‘ïuŠáj nghâÅ! பத்திராசிரியரும் ஓர் பாரத மைந்தனின் மரணசாசனம், பகவத் கீதை ஆங்கிலேயர்களின் அமானுஷீகத் தன்மை என்னும் நூல்களின் ஆசிரியருமாகிய புதுவை, திரு. சு. பாலசுப்பிரமணிய நாயகர் அவர்கள் விபவ வருடம், ஆடி மாதம் 12 ஆம் நாள் (27.7.1928)இல் தேக வியோகமடைந்ததை முன்னிட்டு ஆசிரியர் கனகசுப்புரத்தினம் அவர்களால் இயற்றியதை மேற்படியார் மைத்துனர் புதுவை முத்தியால் பேட்டை எ. சிவப்பிரகாச நாயகரால் வெளியிடப் பட்டது. ஜெகநாதம் பிர, புதுவை 1928 என்ற குறிப்பு முதலில் இடம்பெற்றுள்ளது. 139. புதுவைமுரசு ஆசிரியர் திரு. எ. குருசாமி, பி. ஏ. , அவர்கட்கு ஸமர்ப்பணம் கலிவெண்பா நயமறியா மக்கள்நலம் நாடி இனிய சுயமரியா தைக்கொள்கைத் தூய்மையினைத் தன்அருமைப் பாரதநா டெங்கும் பரப்பும் திருப்பணியில் நேரடைந்த நல்லுணர்வு நித்தங் கனிந்துயர்ந்தே, ஆங்கில ரிவோல்ட்டுக்கும் ஆசிரிய னாய்உழைத்தே, ஈங்குரைப்பேன் மற்றும் உரைத்தபடி யான்நடப்பேன் என்ற நிசத்தைத்தான் எண்பிக்கக் காத்திருந்து, கன்னற் பிழியொன்றைக் காதல் மணம் பூண்டு, சமத்துவத்தின் சாரதியாய்த் தாக்குநரைத் தாக்கிச் சுமக்கின்ற அன்பராய்ச், சொல்லால் எழுத்தால் சகம்எதிர்த்த போதும் தனித்தெதிர்க்கும் சேயாய் அகம்கிடந்த வெள்ளத்தால் ஆரார்க்கும் அன்பனாய்த் தன்நலங்கா ணக்கண் தவிர்ந்தவராய்த் தாரணியோர் இன்னலத்தைக் காக்க இருநூறு தோளராய் எங்கயோ சத்தம்! எதுதான் முழங்கிற்றோ இங்கே நமக்கென்ன என்னாமல், பூவின் மதுவைக் கவனிக்கும் வண்டுபோல் அந்தப் புதுவை முரசுநிலை பொன்போல் அறிந்து திருவாரூர்த் தேரைத் தெரிசித்துப் போக வருவார் கழுத்து வளைக்கவளை யாததுபோல் நட்ட தலைநிமிர்த்தும் நம்பிக்கை யில்லாமல் தொட்ட எழுதுகோல் தொட்ட படியுழைக்கும் ஆசிரிய ராக அமர்ந்த குருசாமி பேசரிய வாய்மையன் என்நண்பன் அன்னோன் உயர்முன் சமர்ப்பித்தேன்! உரைத்த இதன்பேர் சுயமரி யாதைச் சுடர்! - பழம் புதுப் பாடல்கள், ப.114-115, 2005 குறிப்பு : 1931இல் பாரதிதாஸன் கிண்டற்காரன் என்னும் புனை பெயரில் 10 பாடல்கள் அடங்கிய சுயமரியாதைச் சுடர் எனும் நூலை 3 பைசா விலையில் வெளியிட்டு அதனை அப்போது புதுவை முரசு ஆசிரியராக இருந்த (குத்தூசி) சு. குருசாமி அவர்கட்குக் காணிக்கையாக்கிய பாடல் இது. பின்னர் வெளிவந்த பாடல் தொகுப்புகளில் இடம்பெறாதது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னிலும் பதினாறு அகவை இளையவ ராகிய குருசாமியைப் பாரதிதாசன் போற்றும் முறை தனித்துச் சுட்டத்தக்கது. 140. வண்மைத் தமிழர் தம்புசாமி ... ... ... ... தமிழ்க்கவி தைக்கெனத் தனிப்பத் திரிகை அமைப்போம் என்றே ஆண்டுபல சென்றன; தமிழ்ப்பற் றுடையார், தம்பு சாமிஎன்று அமைந்த சீமான் அன்புறு தோழர் ஸ்ரீசுப்ர மண்ய பாரதி திருப்பெயர் வாய்ந்த கவிதா மண்டலம் எனுமிதை ஆய்ந்த அறிஞர் கவிஞரால் ஆக்கி வெளியிட முன்வந் தொளிரு கின்றார் தெளியுளப் பெரியார் செய்த நன்றி மறப்பதற் கில்லை வண்மைத் தமிழர்! அறப்பெருஞ் செயலை, அரும்பெருஞ் செயலைத் தமிழர் ஆனோர் தோள்தந்து தாங்குக! அமுதம் பெருக்குதல் அனைவர்க்கு மன்றோ? ... ... ... ... - இசையமுது - 2, ப.26 - 27, 1948; முல்லைக்காடு, ப.19 - 20; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்; 1935. 141. சமர்ப்பணம் பஃறொடை வெண்பா நல்ல குணம்செயல்கள் நன்கமைந்தார்! கல்வியிலே வல்ல எவர்க்கும் மகிழ்ந்தா தரவளிப்போர்; தற்பெருமை யற்றார்! தமிழப் பெருமக்கள் முற்பெருமை காக்கஎனில் முன்னேறும் போர்வீரர்; செந்தமிழே யாண்டும் சிறக்கச் செழுந்தமிழர் செந்தமிழால் யாண்டும் சிறப்புப் பெறுகஎன்று செல்வத்தால் நல்லுடலால் தீந்தமிழ்க்குத் தொண்டேதான் அல்லும் பகலும் அநவரத மும்புரிவார்; சைவப் பெரியாரின் சங்கத்தின் அங்கத்தார்; நைவர்க் கிரங்கி நலம்புரியும் நோன்புடையார்; வாராச்சீர் கோவிலூர்க் ÑH1 மருதூரார் நாரா யணசாமி நாயடுகார் அன்னவர்க்கே. என்னூல் சமர்ப்பித்தேன்! ï‹ndh¡f«2 என்னூலைப் பொன்னூலாய்ச் செய்யும் பொருட்டு! - பாரதிதாஸன் கவிதைகள் முதற்பதிப்பின் - 1938, சமர்ப்பணப்பாடல், பழம் புதுப் பாடல்கள், ப.170, 2005. F¿¥ò : ešy üšfŸ btËp£L¡F ehS« cjÉ, ïWâ¡ fhy« tiu mikâahfî« ml¡fkhfî« jÄG¡F mUª bjh©lh‰¿a rh‹nwh® kUö® â.கி. நாராயணசாமி நாயுடு ஆவார். அவரின் பொருளுதவி பாரதிதாஸன் கவிதைகள் தொகுப்பாக முதலில் வெளி வரத் துணைசெய்தது. அந்த நன்றிப் பெருக்கின் விளைவே மேற் குறித்த பாடற்படையல், இப்பாடல் இக்கவிதைத் தொகுதியின் முதல் மூன்று பதிப்புகளில் மட்டுமே - 1938, 1940, 1944 இடம்பெற்றிருந்தது. பின்னர் நீக்கப்பெற்று விட்டது. 1. ‘Ñœ’ (f.F.), 2. இந்நோக்கம் என இருப்பின் நன்று 142. அரவிந்தர் - யோகம் எண்சீர் விருத்தம் ஓதுகின்ற யோகத்தால் பயன்கண் டாலும் ஒருவர்க்கே பயன்அன்றிப் பிறருக் கில்லை! மோதுகின்ற அறியாமை மிகுந்த நாட்டார், யோகம் எனும் மொழியினிலோர் மோகம் கொள்வார் ஆதலினால், நீஇறத்தல் இல்லை; தேகம் அழிவதொன்றே என்னும்ஒரு சொல்லை மட்டும் கீதையிலே இருந்தெடுத்துத் திலகன் காட்டிக் கிளம்புங்கள் பணிக் கென்று முழக்கம் செய்தான். கேட்டெழுந்தார் நாட்டார்கள், கேட்ட தன்றிக் கிளர்ந்தெழுந்தார் உணர்ந்தெழுந்தார் என்ப தில்லை போட்டதிட்டம் விடவில்லை திலகன் மட்டும் பொழுதெல்லாம் பொதுவுக்கே உழைத்தான்! அந்நாள் ஆட்டின் மேல் விழிவைத்த இடைய னைப்போல் அரவிந்த இளஞ்சிங்கம், அறிஞர் கோமான்; நாட்டுநிலை தனைக்கண்டான் ஒன்று செய்தான்; நடுவிலது முறிந்ததனால் புதுவை வந்தான்! ஆங்கிலத்துப் பெருங்கவிஞன் அரவிந் தற்கோ, அணிநாட்டின் பிணிநீக்கும் கவலை யல்லால் தீங்கியலும் சிறுசெயலில், பணத்தில், காசில் சிறிதேனும் கவலையுறக் கண்ட தில்லை; பாங்கன்ஒரு வன்கிடைத்தான் அரவிந் தற்கே; பாரதிஓர் தமிழ்க்கவிஞன்; நாட்டின் அன்பன்! தூங்கியது நாடந்நாள்! இரண்டு பேரும், சொல்லாலே உணர்வுதந்தார்; ஏடும் தந்தார்! வங்காளச் சிங்கமவன், எண்ணம் செய்வான்; வரிப்புலிப்பா ரதிஅதனைத் தமிழாய்ச் செய்வான்; வங்காளச் சிங்கமவன் ஆங்கி லத்தில் வழங்குவதும் வழக்கந்தான்! ஏடு கள்போய் எங்கெங்கும் முழக்கமிடும்! அவர்கள் சொன்ன இறவாத மொழிகளிலே ஒன்றைக் கேளீர்; உங்களுக்கே யோகத்தின் உண்மை சொல்வோம்; ஊருக்கு ழைப்பதுதான் யோகம் என்றார்! ஊருக்கு ழைப்பதுயோ கம்தான் என்றே உரைத்திட்ட பாரதியின் பாட்டை, வாழ்வின் வேருக்கு நீரென்று சொல்வார் அந்நாள்! விழலுக்கு நீர்பாய்ச்சும் இளைஞர் இந்நாள், பேருக்கும் பெருமைக்கும் யோகம் பேசிப் பெரும்பணத்தை இழக்கின்றார்! அறிஞர் சொன்ன ஊருக்கு ழைப்பதுதான் யோகம் என்னும் உண்மையிலே யோகத்தின் உயிரைக் காண்பீர்! - பழம் புதுப் பாடல்கள், ப.190-191, 2005; சக்தி, 1942 143. திருவரங்கனார்க்கு இரங்கல் எண்சீர் விருத்தம் திருவரங்கம் தமிழர்அங்கம் துடிதுடிக்கச் சீர்இயற்கை யாம்அரங்கம் சேர்ந்திட் டாரோ! பெருவரங்கம் தமிழ்க்கென்று பேசும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நாடி வருவர்அங்கம் என்படுமோ! வையம் வாடி வண்தமிழ்நா டுற்றமறை மலைஎம் அண்ணல் ஒருவர்அங்கம் தம்மருகர்க் காக நொந்தால் உயர்தனிச்செந் தமிழணங்கும் உயிர்நை வாளே! மலைவிளக்காய்த் தமிழகத்து வீற்றி ருக்கும் மறைமலைப்பே ரடிகட்கு மகளா ராய். நற் கலைவிளக்காய்த் தனித்தமிழே இயங்கும் என்னும் காட்டுக்கோர் அணையாத விளக்காய் எங்கள் நிலைவிளக்க உடன்பிறந்தா ராய்அ மைந்த நீலாம்பி கையாரின் உளத்தில் இந்நாள் இலைவிளக்கென் றாயிற்றோ திருவ ரங்கர் இருப்பரெனில் இறப்புலகு சிறப்பெய் தாதோ? கமழ்சைவ சித்தாந்த நூற்ப திப்புக் கழகத்தின் கண்ணான திருவ ரங்கர் அமிழ்வித்து நமைத்துயரில் சென்றார் ஆதல் அருந்துணையைப் பெருந்தமிழ்த்தாய் இழந்தாள். மேலும் திமிர்இந்தி போக்கற்குச் சிறையும் சென்ற செழியுமறைத் திருநாவுக் கரச ரென்னும் தமிழ்காத்தார், மைத்துனரை இழந்தார் நாமும் தலைசிறந்த தோழரையே இழந்தோம் அன்றோ! செந்தேனும் பொற்குடமும் எனமேல் நாட்டார் திகழ்நூலும் அழகுமென வெளியிட் டார்கள் நந்தமிழ்நூல் அதனினும்பன் மடங்காய் தோன்ற நன்றழைக்கும் கழகத்தின் முகவ uhd1 Kªj¿P®2 சுப்பைய னாரோ, தம்மில் மூத்தவராம் திருவரங்கர் தமைஇ ழந்து பைந்தமிழ்நூற் கழகத்தின் அமைச்சை யுந்தாம் பறிகொடுத்தால் அவர்நெஞ்சு பதைத்தி டாதோ? வெல்வேலும் மறைவதுவோ! படைவீ டிந்நாள் வில்லைத்தான் இழப்பதுவோ! தமிழ்எ திர்ப்போர் சொல்வேலி னால்எதிர்த்துச் சோர்வு பெற்றும் சூழ்ச்சிவேல் எறிகின்ற இந்நாள், எங்கள் நெல்வேலித் திருவரங்க மறவர் தம்மை நெடுந்தமிழ்நா டிழப்பதுவோ! mtÇ‹3 உற்றார் பல்லோர்க்கும் யாம்கொண்ட உடன்துன் பத்தைப் பகர்கின்றோம்! திருவரங்க னார்பேர்வாழி! - பழம் புதுப் பாடல்கள், ப.217-218, 2005 குறிப்பு : மறைமலையடிகளின் மருகரான வ. திருவரங்கனார் 1944 ஏப்ரல் திங்கள் 28ஆம் நாள் மறைவுற்றார். அவரின் தமிழ்த் தொண்டினை எண்ணிப் பாவேந்தர் எழுதிய இரங்கற்பா. 1. Kjštuhd (f.F.); 2. _j¿P® (f.F.); 3. இவரின் (க.கு.) 144. ஓவியர்க்கு வாழ்த்து அகவல் என்னையான் இனிது கண்டு வியந்தேன்! கண்ணாடி யிலன்று; கருநிழற் படத்தில் அன்று; பலர்புகழ் இன்ப ஓவியப் புலவன் பெனடிக்ட் எழுதுகோல் புனைந்த நிலவு வெண்படந் தன்னில் நலமுடன் என்னைநான் இனிது கண்டு வியந்தேன். என்னைநான் எதிரிற் காண எழுதிய வன்மைப் பெனடிக்ட் தன்னை நானும் பார்த்தேன் அன்னோன் பருவுட லினையும் பாரளவு விரிந்த உள்ளப் பரப்பையும் ஓவியத் தாலதை உரைத்தேன் ஆயினும் பாவின் திறத்தால் பகரு கின்றேன். இற்றைக் கெல்லாம் கேட்பினும் இனிப்புக் குன்றாத் தமிழில் அன்பு குழைந்த பேச்சினில் - பெனடிக்ட் பிறர்நலத் தவாவின் வீச்சினைக் கண்டு வியந்துளேன் பன்முறை நாட்டு நலத்தை நல்லிசை கூட்டிப் பாட்டுப் பாடினான் ஒருமுறை நானதைக் கேட்டு நல்லின்பக் கேணியிற் குளித்தேன் பைந்தமிழ் இலக்கியச் சோலையிற் பறித்த செந்தேன் மலர்சில என்முன் சேர்த்தான் தமிழறிவு கண்டுநான் அமிழ்திற் குளித்தேன். பயனுறு மகன்இப் பாருக்குப் பெனடிக்ட் அந்தப் பெரியோன் அரிய உள்ளம் கலைவாழ் வதனில் உலகைச் சேர்த்து நல்லதோர் அமைதியை நாட்டலாம் என்பதாம் இவ்வருந் தொண்டினை இலங்கையில் தொடங்கி இலங்கையின் குருதியோ டிணைந்த தான நாவலம் பொழில்வரை நன்றாற்றி யுள்ளான். அயல்நாடு களெல்லாம் அக்கலை வல்லனை அழைத்திடும் என்பதை இன்றுநான் அறிவேன் தழைத்திட வேண்டும் அன்னோன் தனிப்புகழ்! அறிஞன் பெனடிக்ட் ஆர்வம் நிறைவு பெறுக! நீடு வாழியவே! - 2.5.1957; பழம் புதுப் பாடல்கள், ப.270-271, 2005 குறிப்பு : இப்பாடல் பாவேந்தரோடு மூன்றுமாதக் காலம் பழகி அவர் உருவத்தை அவரது வேண்டுகோளின்படி இரண்டாம் முறையாக 02.0 5.1957 அன்று வரைந்து காட்டிய இனவுணர்வு மிக்க இலங்கை ஓவியர் ச. பெனடிக்ட் அவர்களைப் பாராட்டி அப்பொழுதே பாவேந்தர் மகிழ்வுடன் எழுதியளித்தாகும். ஓவியப்பாவலர் மு. வலவன் நடத்திய வண்ணச் சிறகு - அக்டோபர் - நவம்பர் 1975, ப. 18 - 19 இதழில் இப்பாடல் அளிக்கப்பட்டுள்ளது. 1. மழை மழையே மழையே வா வா! - நல்ல வானப் புனலே வா வா! - இவ் வையத் தமுதே வா வா! தழையா வாழ்வு தழைக்கவும் - மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் உழுவா ரெல்லாம் மலைபோல் எருதை ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் - மழையே தகரப் பந்தல் தணதண வென்னத் தாழும் குடிசை சளசள என்ன நகரப் பெண்கள் செப்புக் குடங்கள் நன்றெங் குங்கண கணகண வென்ன - மழையே ஏரி குளங்கள் வழியும்படி, நா டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி வாரித் தூவும் பூவும் காயும் மரமும் தழையும் நனைந் திடும்படி - மழையே இல்லாருக்கும், செல்வர்கள் தாமே என்பாருக்கும், தீயவர் மற்றும் நல்லாருக்கும் முகிலே சமமாய் நல்கும் செல்வம் நீயே யன்றோ? - மழையே - இசையமுது, முதற் பகுதி, ப.25, 1942 குறிப்பு :நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு - குறள். - இக் குறட்பாவின் கருத்து: எவர்க்கும் நீரில்லாவிடில் வாழ்க்கை நடவாது, அந்த நீரோட்டமோ மழையில்லாவிடில் ஏற்படாது. 2. நிலா முழுமை நிலா! அழகு நிலா! முளைத்தது விண் மேலே - அது பழைமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற் போலே! அழுதமுகம் சிரித்ததுபோல் அல்லிவிரித் தாற்போல், - மேல் சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டு தொத்திக் கிடந்தாற்போல் - முழுமை குருட்டு விழியும் திறந்ததுபோல் இருட்டில் வான விளக்கு! - நம் பொருட்டு வந்தது பாடி ஆடிப் பொழுது போக்கத் தொடங்கு! மரத்தின் அடியின் நிலவு வெளிச்சம் மயிலின் தோகை விழிகள்! - பிற தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும் சேர்ந்து மெழுகும் வழிகள்! - முழுமை - இசையமுது, முதற் பகுதி, ப.26, 1942 குறிப்புரை: மரத்தின் அடியில் நில வெளிச்சம் மயிலின் தோகை விழிகள் என்பது, நிலாவின் ஒளி மரத்தின் அடியில் - தரையில் மயில் தோகையில் உள்ள கண்போலத் தோன்றும் என்றபடி. நில - நிலா. 3. நாய் என்றன் நாயின் பேர் அப்பாய்! அட முன்றில் காக்கும் சிப்பாய்! ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக் கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை! - என்றன் அதன் இனத்தை அதுவே பகைக்கும்! - எனில் அதுதான் மிகவும் கெட்டவழக்கம்! - அது முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது; மூன்றாண் டாயினும் செய்த நன்றி மறவாது - என்றன் நாய் எனக்கு நல்லதோர் நண்பன் - அது நான் அளித்ததை அன்புடன் உண்ணும் - என் வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும் வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும் - என்றன் - இசையமுது, முதற்பகுதி, ப.30, 1944 குறிப்புரை :அப்பாய் - சிப்பாய் திசைச் சொற்கள் யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - என்பது நாலடியார் இதன் கருத்து: யானை போன்ற பண்புடையவரின் நட்பை நீக்குக. நாய் போலும் பண்புடையவரின் நட்பைக் கொள்ளுக என்பதாம். 4. சிட்டு இத்தனைச் சிறிய சிட்டு! - நீ பார்! எத்தனை சுறுசுறுப்பு! - தம்பி - இத்தனைச் குத்தின நெல்லைத் தின்று நம் வீட்டுக் கூரையில் குந்தி நடத்திடும் பாட்டு - இத்தனைச் கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு! கொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும் கூட்டை நீ கலைத் தாலது திட்டும். - இத்தனைச் மல்லி பிளந்தது போன்ற தன் கண்ணை வளைத்துப் பார்த்த ளாவிடும் விண்ணைக் கொல்லையில் தன்பெட்டை அண்டையில் செல்லும் குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும். - இத்தனைச் - இசையமுது, முதற்பகுதி, ப.28, 1942 குறிப்புரை : மல்லி - கொத்துமல்லி, பார்த்தளாவிடும் - பார்த்து அளாவிடும் என்று பிரிக்க. இதனால் பிள்ளைகள் சுறுசுறுப்புடன் தம் கடமையைச் செய்யவேண்டும் என்பது விளக்கப்படுகிறது. 5. காக்கை காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு - நீ வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு - காக்கை ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக்கிடக்கும்! - காக்கை அழைத்துத்தன் இனத்தோடு குந்திப் பொறுக்கும். - காக்கை காக்கையை ஒருபையன் கொன்றுவிட்டதால் - அதைக் காக்கைகள் அத்தனையும் கண்டுவிட்டதால் கூக்குரல் இட்டபடி குந்திவருந்தும் - அதைக் கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும். - காக்கை வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எல்லாம் - நல்ல வரிசைகெட்ட மக்களின் வாழ்க்கை நிலையைப் பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும் - அதன் பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும். - காக்கை - இசையமுது, முதற்பகுதி, ப.29, 1942 குறிப்புரை : மதம் என்றும் சாதி என்றும் ஏற்பட்டுள்ள வேற்றுமையால் மக்கள் வாழ்க்கை நிலை கேலிக்குரியதேயாகும். காக்கைகள் ஒற்றுமை யுடையவை. 6. இன்பம் பசி என்று வந்தால் ஒருபிடி சோறு புசி என்று தந்துபார் அப்பா! - பசி என்று வந்தால் பசையற்ற உன்நெஞ்சில் இன்பம் உண்டாகும் பாருக் குழைப்பதே மேலான போகம்! - பசி என்று வந்தால் அறத்தால் வருவதே இன்பம் - அப்பா, அதுவலால் பிறவெலாம் துன்பம்! திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று! - பசி என்று வந்தால் மனுவின்மொழி அறமான தொருநாள் - அதை மாற்று நாளே தமிழர் திருநாள்! சினம், அவா, சாதி, மதம் புலைநாறும் யாகம் தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்! - பசி என்று வந்தால் - இசையமுது, முதற்பகுதி, ப.18, 1942 குறிப்புரை : செப்பு நூல் அந்தந்த நாளைக்கு நன்று - அந்தந்தக் காலத்திற்கு ஏற்றவாறு நூல்கள் திறம்பட இயற்று! 7. சிறார் பொறுப்பு இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்! - இன்று குழந்தைகள் நீங்கள் நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்! ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்! - இன்று குழந்தைகள் நீங்கள் குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்! கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்! தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல் அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்! - இன்று குழந்தைகள் நீங்கள் பல்கலை ஆய்ந்து தொழில்பல கற்றும் பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும் அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்! அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்! - இன்று குழந்தைகள் நீங்கள் - இசையமுது, முதற்பகுதி, ப.19, 1942 குறிப்புரை : தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல் - பழமையையே பாராட்டி அலுத்துப் போகாமல் என்றபடி. 8. தூய்மை தூய்மை சேரடா தம்பி - என் சொல்லை நீ பெரிதும் நம்பித் - தூய்மை சேரடா தம்பி வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத் தூய்மை உண்டாகும் மேலும் மேலும்! - தூய்மை சேரடா தம்பி உடையினில் தூய்மை - உண்ணும் உணவினில் தூய்மை - வாழ்வின் நடையினில் தூய்மை - உன்றன் நல்லுடற் றூய்மை - சேர்ப்பின் தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம் தரும்நாள் ஆகும் நீ என்றும் - தூய்மை சேரடா தம்பி துகளிலா நெஞ்சில் - சாதி துளிப்பதும் இல்லை - சமயப் புகைச்சலும் இல்லை - மற்றும் புன்செயல் இல்லை! - தம்பி! அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய அச்சம் போகும்! நீ எந்நாளும் - தூய்மை சேரடா தம்பி - இசையமுது, முதற்பகுதி, ப.20, 1942 குறிப்புரை :புறந் தூய்மை நீரான் அமையும் அகந் தூய்மை வாய்மையாற் காணப்படும் - என்பது குறள். 9. அன்பு அன்பை வளர்த்திடுவாய் - மெய் யன்பை வளர்த்திடுவாய்! கூடப்பிறந்த குழந்தை யிடத்தினில் கொஞ்சுதல் அன்பாலே! உற வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும் அன்பின் திறத்தாலே! தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு சின்னவனுக்குத் தர - நீ ஓடுவதுண்டெனில் கண்டிருப்பாய் உன் உள்ளத் திருந்த அன்பை! கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது கருத்தில் அன்பன்றோ? உன்னையும் உன்னரும் தோழர்கள் தன்னையும் ஒட்டிய தன்பன்றோ? சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும் சிட்டுப் பறந்ததுபோல் - நீ முன்னுற ஓட உன் உள்ளம் பறந்ததும் முற்றிலும் அன்பன்றோ? - இசையமுது, முதற்பகுதி, ப.21, 1942 குறிப்புரை : கறவை - கறவை மாடு. கருதில் - எண்ணினால். உயிர் இருக்கும் உடம்பு அன்பு நெறியில் இயங்குவது. அன்பிலார் உடல் தோலால் மூடப்பெற்ற எலும்புக்கூடே என்றார் திருவள்ளுவர். 10. மெய் மெய் சொல்லல் நல்லதப்பா, தம்பி! மெய் சொல்லல் நல்லதப்பா! கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் - நீ உண்டதைச் சொல்லென்று சொன்னாலும், மண்டை யுடைத்திட வந்தாலும் - பொருள் கொண்டுவந் துன்னிடம் தந்தாலும். - மெய் சொல்லல் நல்லதப்பா பின்னவன் கெஞ்சியும் நின்றாலும், அன்றி முன்னவன் அஞ்சிட நின்றாலும், மன்னவரே எதிர் நின்றாலும், - புலி தின்னவரே னென்று சொன்னாலும் - நீ - மெய் சொல்லல் நல்லதப்பா - இசையமுது, முதற்பகுதி, ப.22, 1942 குறிப்புரை : பின்னவன் - தம்பி, முன்னவன் - அண்ணன். உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். இக் குறளின் கருத்து: ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய் சொல்லாது நடப்பானாயின் அவன் உயர்ந்தோர் எல்லாருடைய உள்ளத்திலும் இருப்பான். 11. பொறுமை பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப் போற்றலே கடமை! பொறுமையாற் கழியும் நாளிலே புதுவன்மை சேருமுன் தோளிலே! - பொறுமைதான் உன்றன் உடைமை! பொறுமையுடைய ஏழையே கொடையன்! பொறுமையிலாதவன் கடையன்! இறைவனே எனினும் பிழை செய்தோன்! ஏதுமற்றவனாகி நைவான்! - பொறுமைதான் உன்றன் உடைமை! பலமுறை பொறுப்பாய் வேறு பழுதும் நேருமெனில் சீறு! நிலைமை மிஞ்சுகையில் பகைவனை நீறாக்கலே பொறுமையின் பயன் - பொறுமைதான் உன்றன் உடைமை! - இசையமுது, முதற்பகுதி, ப.23, 1942 குறிப்புரை :உடைமை - செல்வம்; இறைவன் - அரசன். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. - குறள் 12. சினம் சினத்தை யடக்குதல் வேண்டும், சினம் உனக்கே கெடுதியைத் தூண்டும்! - சினத்தை யடக்குதல் வேண்டும் சினத்தினை யடக்கிட முடியுமா? என்று செப்புகின்றாய் எனில் கேள் இதை நன்று! - சினத்தை யடக்குதல் வேண்டும் வலிவுள்ளவன் என்று கண்டு - சினம் வாராமலே யடக்கல் உண்டு; வலிவிலான்மேல் அன்புகொண்டு - அதை மாற்றாதான் பெரிய மண்டு! நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும் நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும் - சினத்தை யடக்குதல் வேண்டும் அடங்கா வெகுளிமண் மேலே, - காட் டாறுபோய்ச் சிதறுதல் போலே, தொடர்ந்தின்னல் செய்யுமத னாலே - அதைத் தோன்றாமலே செய்உன் பாலே! கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும் கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும். - சினத்தை யடக்குதல் வேண்டும் - இசையமுது, முதற்பகுதி, ப.24, 1942 குறிப்புரை : சினம் - வெகுளி. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம்என்னும் ஏமப்புணையைச் சுடும்; (குறள்) இதன் கருத்து : தன்னைச் சேர்ந்தவரைக் கொல்லும் சினம் என்னும் நெருப்பானது, தொல்லை தந்தால் காப்பாற்றுகின்ற தம் இனத்தாராகிய தெப்பத்தையும் பொசுக்கிவிடும். 13. கறவை நிறையப் பால்தரும் கறவை - நீ மறவேல் அதன் உறவை! குறைவிலாது வைத் திடுக தீனியைக் குளிப் பாட்டிவா நாளும் மேனியை! - நிறையப் பால்தரும் கறவை நோய் மிகுத்து மாளும் - கொட்டில் தூய்மைசெய் எந்நாளும்! தோய்வு குப்பை கூளம் - இன்றித் துடைக்க ஏன் ஓக்காளம்? வாய் மணக்கவே, உடல் மணக்கவே, வட்டில் நெய்யோடு கட்டித் தயிர்ஏடு - நிறையப் பால்தரும் கறவை ஈக்கள் மொய்த்தல் தீது! - கூடவே எருமை கட்டொ ணாது! மேய்க்கப் போகும் போது - மேய்ப்போன் விடுக பசும்புல் மீது! நோக்கும் கன்றினும், நமது நன்மையைக் காக்கும் தாயடா! காக்கும் தாயடா! - நிறையப் பால்தரும் கறவை - இசையமுது, முதற்பகுதி, ப.27, 1942 குறிப்புரை : கறவை - கறக்கும் ஆ; மறவேல் - மறக்காதே. தோய்வு - சிறுநீர் முதலியவை அது உற்றுப் பார்த்தபடி இருக்கும் தன் கன்றைவிட நம் நன்மையைக் காக்கும் தாய் போன்றது என்பது கடைசி இரண்டு வரிகளின் கருத்து. 14. பூனை பூனை வந்தது பூனை! இனிப் போனது தயிர்ப் பானை! தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் - நெய்யைத் திருடி உண்டபின் நக்குந்தன் கையைப் - பூனை வந்தது பட்டப் பகல்தான் இருட்டும் - அது பானை சட்டியை உருட்டும்! சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும் சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும் - பூனை வந்தது எலிகொல்லப் பூனை தோது - மெய்தான் எங்கள் வீட்டில் எலி ஏது? தலைதெரியாத குப்பை இருட்டறை தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை - பூனை வந்தது - இசையமுது, முதற்பகுதி, ப.31, 1942 குறிப்புரை : எலியைக் கொல்லப் பூனையை வளர்ப்பார். பிறகு அப் பூனையின் தொல்லையை விலக்க முயலுவார். வஞ்ச நெஞ்சம் உடையது பூனை. எக்காரணத்தாலும் அதை வளர்க்க எண்ணலாகாது. 15. காப்பி காப்பி எதற்காக - நெஞ்சே? காப்பி எதற்காக? கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில் - காப்பி எதற்காக தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இனிப்புக்கு வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டில் - காப்பி எதற்காக ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப் பூப்போட்ட மேல்நாட்டு சிப்பம் வியந்தாய் போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட - காப்பி எதற்காக திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும் சிவந்து தித்திப்பைச் சுமந்து விளைந்தும் கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும் கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத - காப்பி எதற்காக - இசையமுது, முதற்பகுதி, ப.32, 1942 குறிப்புரை : பூப் போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய் - ஓவியம் தீட்டிய மேல்நாட்டுச் சரக்குக் கட்டுகள் மேலானவை என்று ஒப்பினாய். 16. புகைச் RU£L* புகைச் சுருட்டால் இளமை பறிபோகும் பொல்லாங் குண்டாகும் - புகைச் முகமும் உதடும் கரிந்துபோகும் முறுக்கு மீசையும் எரிந்துபோகும் - புகைச் மூச்சுக் கருவிகள் முற்றும் நோய் ஏறும் - பிள்ளை முத்தம் தருநேரத்தில் வாய் நாறும் ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும் - நல் ஊரோ உன்னைச் சீ என்றே கூறும் பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும் பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும் - புகைச் காசு பணத்தால் தீச்செயலை வாங்கிப் - பின் கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி - நீ எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி மாசில்லாத செந்தமிழ் நாடு வறுமை நோய்பெற ஏன் இக்கேடு? - புகைச் - இசையமுது, முதற்பகுதி, 1942 *பின்னர் வந்த இசையமுது பதிப்புகளில் இப் பாடல் இடம்பெறவில்லை. 17. கல்வி (மகாவதி குணமாதரே வேகமாய் என்ற மெட்டு) தந்தை தனயனுக்குரைத்தல் கல்வியின் மிக்கதாம் செல்வமொன் றில்லையே கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறர்க்குநாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும். கல்வியுள்ளவரே கண்ணுள்ளார் என்னலாம் கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம் கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை! கற்பதுவே உன் முதற் கடமை. இளமையிற் கல்லென இசைக்கும் ஔவையார் இன்பக் கருத்தைநீ சிந்திப்பாய் செவ்வையாய்! இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்? இப்பொழு தேயுண் இனித்திடும் தேன். - கல் - முல்லைக்காடு, ப.42, 1948; ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதாமண்டலம், வெ.1, ப.18, 1935 18. பிள்ளைக்கு நீதி ஆனந்தக் களிப்பு மெட்டு சோம்பிக் கிடப்பது தீமை - நல்ல தொண்டுசெயாது கிடப்பவன் ஆமை! தேம்பி அழும் பிள்ளைபோல - பிறர் தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை! புதுமையிலே விரைந்தோடு - ஒன்று போனவழிச் செல்லும் மந்தையில் ஆடு! எதிலும் நிசத்தினைத் தேடு - பொய் எவர்சொன்ன போதிலும் நீ தள்ளிப்போடு. தேகத்திலே வலி வேற்று - உன் சித்தத்திலே வரும் அச்சத்தை மாற்று! ஊக்கத்திலே செயல் ஆற்று! - தினம் உன்னருமைத் தமிழ் அன்னையைப் போற்று. பசிவந்த போது ணவுண்ணு - நீ பாடிடும் பாட்டினி லேசுவை நண்ணு! வசித்திடும் நாட்டினை எண்ணு - மிக வறியவர்க்காம் உபகாரங்கள் பண்ணு. பொய்யுரைப் போன் பயங்காளி - பிறர் பூமி சுரண்டிடு வோன் பெருச்சாளி வையக மக்கள் எல்லோரும் - நலம் வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி. - முல்லைக்காடு, ப.43, 1948; ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், வெ.6, ப.33, 1935 19. வறுமையிற் செம்மை (jhŒ - மகள் r«ghõiz) மகள் சொல்லுகிறாள்: அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு! சும்மா இருக்க முடி யாது - நான் சொல்லிவிட்டேன் உனக்கிப் போது! - அம் தாய் சொல்லுகிறாள்: காதுக்குக் கம்மல் அழ கன்று - நான் கழறுவதைக் கவனி நன்று நீநன் மொழியை வெகு பணிவாய் - நிதம் நீ கேட்டு வந்து காதில் அணிவாய்! - கா மகள் மேலும் சொல்லுகிறாள்: கைக் கிரண்டு வளையல் வீதம் - நீ கடன்பட்டுப் போட்டிடினும் போதும்! பக்கியென் றென்னை யெல் லோரும் - என் பாடசாலையிற் சொல்ல நேரும்! - கைக் தாய் சொல்லும் சமாதானம்: வாரா விருந்து வந்த வேளையில் - அவர் மகிழ உபசரித்தல் வளையல்! ஆராவமுதே மதி துலங்கு - பெண்ணே அவர் சொல்வ துன்கைக்கு விலங்கு! - வாரா பின்னும் மகள்: ஆபர ணங்கள் இல்லை யானால் - என்னை யார் மதிப்பார் தெருவில் போனால்? கோபமோ அம்மா இதைச் சொன்னால் - என் குறை தவிர்க்க முடியும் உன்னால். - ஆப அதற்குத் தாய்: கற்பது பெண் களுக்கா பரணம் - கெம்புக் கல்வைத்த, நகை தீராத ரணம்! கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு! - கற் - முல்லைக்காடு, ப.44-45, 1948; ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், வெ.3, ப.29, 1935 20. மாணவர்க்கு எழுச்சி கல்யாணம் செய்துக்கோ என்ற மெட்டு நிற்கையில் நிமிர்ந்து நில்! நடப்பதில் மகிழ்ச்சி கொள்! சற்றே தினந்தோறும் விளையாடு பற்பல பாட்டும் பாடிடப் பழகு! - நீ பணிவாகப் பேசுதல் உனக் கழகு! - நிற் கற்பதில் முதன்மை கொள் காண்பதைத் தெரிந்து கொள் எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே சுற்றித் திரிந்திடுத் துட்டர் சிநேகம் தொல்லை என்பதி லென்னை சந்தேகம் - நீ - நிற் சித்திரம் பயின்று வா தேன் போன்ற கதை சொல் முத்தைப் போலே துவைத்த உடையணிவாய் புத்தகம் உனக்குப் புத்துயிர் அளிப்பதாம்; போக்கடிக்காதே இதை நான் சொல்லவோ - நீ - நிற் பத்திரி கைபடி பலவும் அறிந்து கொள் ஒத்துப் பிறர்க்கு நலம் உண்டாக்கு! நித்தமும் திரவிடநாடு தன்னை நினைத்துப் பொதுப் பணிசெய் அவளுனக் கன்னை. - நிற் - முல்லைக்காடு, ப.44-45, 1948; ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், வெ.1, ப.20, 1935 21. நல்லினஞ் சேர்தல் பட்சமிருக்க வேணும் மன்னனே என்ற மெட்டு சேரிடம் அறிந்துசேர் எந்நாளும் - மைந்தா தீயரை அணுகிடிற் பழி மூளும்! சீரிய ஒழுக்கம் சிறந்தநூற் பழக்கம் ஆரிடம் உள்ளதோ அன்னவரிடமே - சினேகம் ஆகுதல் அல்லவோடா உன் கடமை! மண்ணின் குணம் அங்குள்ள நீருக்குண்டு - மைந்தா மாலையில் மலர்மணம் நாருக்குண்டு. திண்ணம் பன்றியொடும் சேர்ந்த கன்றும் கெடும் கண்செய்த குற்றம் தீயர் தமைக்காண்டல் - மைந்தா கை செய்த நலம் நல்லார் அடி தீண்டல். சடுதியிலே தீயர் சகவாசம் - பிராண சங்கடம் உணர் இந்த உபதேசம் தடையிதில் ஏது தாய்எனக் கோது!? சுடுநெருப் பானவரின் குணம் தெரிந்து - மைந்தா சுப்புரத்தினம் சொல்லும் அமுதருந்து - சேரிடம் - முல்லைக்காடு, ப.47, 1948; ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், வெ.1, ப.20, 1935 22. வழி நடத்தல் சென்று கனிபறித்துக் கொண்டு என்ற மெட்டு மரங்கள் அடர்ந்திருக்கும் காடு - கரு வானில் உயர்ந்த மலை மேடு - தம்மில் பிரிந்து பிரிந்து செல்லும் வழியாய் - நாம் பிரியத்துடன் நடப்போம் விரைவாய் பெருங் குரலில் பாட்டும் பேச்சும் விளையாட்டும் - நம்மை விரைவில் அவ்விடம் கொண்டு கூட்டும்! இளமை தன்னில் வலிமை சேர்ப்போம் - நாம் எதிலும் தைரியத்தைக் காப்போம் - நாம் அளவில் லாத நாள் வாழ - உடல் அழகும் உறுதியு முண்டாக, ஆசை கொண்டு நடப்போம் அச்சமதைத் தொலைப்போம் - நம் நேசர் பலரும் மனங் களிப்போம். - மரங்கள் - முல்லைக்காடு, ப.48, 1948; ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், 1-1, ப.19, 1935 23. சுகாதார வாழ்வு மாமயிலேறிநீ வா மகாநுபாவா என்ற மெட்டு எடுப்பு நோயினைப் போய் அழிப்பாய் நூறாண்டு வாழ்வாய் - நோ உடனெடுப்பு ஆயநன் னெஞ்சில் வேண்டும்நல் வீரம் தேயத்தில் தேகத்தில் வேண்டும்சுகா தாரம் - நோ அசுத்தமும் இருட்டும் புறத்தும் நல் லகத்தும் அகற்றுக நீ தமிழா ஆநந்தம் உனை நத்தும் - நோ வாழ்க்கையின் நடுவே வரஎண்ணும் சாவைப் போக்கிட நோய்களில் அசுத்தத்தில் தீ வை! - நோ அயர்வினில் தொடரும் துயரெனும் சேதி அறிவுலகினில் இல்லை; ஏறடா அதன் மீதில்! - நோ - முல்லைக்காடு, ப.23, 1948 இயற்கை 24. மழைக்காலம் வானிருண்டது மின்னல் வீசிற்று மடமடவென இடித்து - பயிர் வளர்த்தது மழை பிடித்து. ஆனது குளிர் போனது வெப்பம் அங்கும் இங்கும் பெருவெள்ளம் - அட அதிலும் மீன்கள் துள்ளும். பூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும் பொடிக் குருவிகள் நடுங்கும் பூக்களில் ஈக்கள் அடங்கும். சீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச் சிவப்பு சால்வை போர்த்தான் - அவன் தெருவில் வேடிக்கை பார்த்தான். - இளைஞர் இலக்கியம், ப.15, 1958 25. மழை வானத்திலே பிறந்த மழையே வா - இந்த வையத்தை வாழவைக்க மழையே வா சீனிக் கரும்பு தர மழையே வா - நல்ல செந்நெல் செழிப்பாக்க மழையே வா கானல் தணிக்க நல்ல மழையே வா - நல்ல நாடு செழிக்க வைக்க மழையே வா ஆன கிணறுகுளம் ஏரி எல்லாம் - நீ அழகு படுத்த நல்ல மழையே வா. - இளைஞர் இலக்கியம், ப.15, 1958 26. கோடை சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும் சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும் மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே வழிந்து கொண்டே இருக்கும் வியர்வை நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும் நொக்கும் வெயிலால் உருகும் இலாடம் அண்டிக் கொண்டே இருக்கும் சூடும் அழுது கொண்டே திரியும் ஆடும். கொட்டிய சருகு பொரித்த அப்பளம் கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்! தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர் சோலை மலர்ந்த மலரும் உலரும். கட்டி லறையும் உரொட்டி அடுப்பே கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே! குட்டை வறண்டது தொட்டது சுட்டது. கோடை மிகவும் கெட்டது கெட்டது. - இளைஞர் இலக்கியம், ப.16, 1958 27. குளம் குடிக்கும் தண்ணீர்க் குளமே - என் குடத்தை நிரப்பும் குளமே படித்துறையில் எங்கும் - ஒரு பாசி யில்லாக் குளமே. துடித்து மீன்கள் நீரில் - துள்ளித் துறையில் ஆடுங் குளமே எடுத்துக் கொண்டோம் தண்ணீர் - போய் இனியும் வருவோம் குளமே. - இளைஞர் இலக்கியம், ப.17, 1958 28. குட்டை சின்னஞ் சிறு குட்டை - அதில் ஊறுந் தென்னை மட்டை! - அதோ கன்னங் கரிய அட்டை! - எதிர் காயும் எரு முட்டை! - அதோ இன்னம் சோளத் தட்டை! - அந்த எருமைக் கொம்பு நெட்டை - அதோ பின்னால் எருது மொட்டை - நான் பேசவாப கட்டை?* - இளைஞர் இலக்கியம், ப.17, 1958 29. தாமரைக் குளம் முழுதழகு தாமரைக் குளம்! எழுத வருமா ஓவியப் புலவர்க்கும்? - - முழு அழும் உலகை உவகையிற் சேர்ப்பது அழகு சிரித்ததை ஒப்பது எழுந்த செங்கதிர் ஏன் என்று கைநீட்ட தேன்கொண்டு செந்தாமரை விரிந்தது. - முழு செம்பும் தங்கமும் உருக்கி மெருகிட்டது இதழ் ஒவ்வொன்றும் ஒளிபெற்றது அன்பு kjiy1 முகமென மலர்ந்தது Fjiy2 வண்டு வாய் மொழிந்தது. - முழு மிதக்கும் பாசிலைமேல் முத்து மிதக்கும் நம்விழி மகிழ்ச்சியில் குதிக்கும் கொதிக்கும் செங்கதிர் மேற்கில் நடந்தது கூம்பிடும் தாமரையின் முகம் அதோ. - முழு - இளைஞர் இலக்கியம், ப.18, 1958 *பகட்டு - அழகு 1. குழந்தை, 2. மழலைச் சொல் 30. ஏரி மாரி வந்தால் நீரைத் தேக்கும் ஏரி - அது வயலுக் கெல்லாம் நீர் கொடுக்கும் ஏரி ஊரில் உள்ள மாடு குடிக்கும் ஏரி - அங் குள்ளவரும் தண்ணீர் மொள்ளும் ஏரி ஏரிக்கரை எல்லாம் பனை தென்னை - அதன் இடையிடையே அலரி நல்ல புன்னை சார்ந்தவர்கள் எனக்குத் தந்தார் தொன்னை - பனஞ் சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை. - இளைஞர் இலக்கியம், ப.19, 1958 31. ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி விரைந்து வந்தாய் ஆறே விதவிதப்பூப் பெரும்பெ ருங்கிளை அடித்து வந்தாய் ஆறே தேற்ற வந்தாய் எங்கள் ஊரும் சிறக்க வந்தாய் ஆறே செழிக்க உங்கள் நன்செய் என்று முழக்கி வந்தாய் ஆறே நேற்றிருந்த வறட்சி எலாம் நீக்க வந்தாய் ஆறே நெளிந்து நெளிந்து வெள்ளி அலை பரப்பி வந்தாய் ஆறே காற்றோடும் மணத்தோடும் கலந்து வந்தாய் ஆறே கண்டுமகிழக் கெண்டவிழி காட்டி வந்தாய் ஆறே. - இளைஞர் இலக்கியம், ப.20, 1958 32. கடற்கரை கடலைச் சுண்டல் விற்கின்றார் - அவர் கடலோரத்தில் நிற்கின்றார் கடலைச் சுண்டல் வா என்றேன் - புதுக் காசு கொடுத்துத் தா என்றேன் கடலைச் சுண்டல் கொடுத் தாரே - அவர் கையில் கூடையை எடுத்தாரே கடலைச் சுண்டல் விற்கின்றார் - பின்னும் கடலோரத்தில் நிற்கின்றார். - இளைஞர் இலக்கியம், ப.21, 1958 33. கடல் முத்துக் கடலே வாழ்க - இசை முழங்கும் கடலே வாழ்க தத்தும் அலைகள் கரையை - வந்து தாவும் கடலே வாழ்க மெத்தக் கப்பல் தோணி - மேல் மிதக்கும் கடலே வாழ்க ஒத்துப் பறவைகள் பாடி - மீன் உண்ணும் கடலே வாழ்க. வண்ணம் பாடிப் பொழியும் - நல்ல மழையும் உன்னால் அன்றோ! தண்என்று வரும் காற்றை - நீ தந்தாய் கடலே வாழ்க கண்ணுக் கடங்க வில்லை - நான் காணும் போதுன் பரப்பு மண்ணிற் பெரிதாம் கடலே - நீ வாழ்க வாழ்க வாழ்க! நீலக் கடலே வாழ்க - ஒளி நெளியும் கடலே வாழ்க மாலைப் போதில் கடலே - வரும் மக்கட் கின்பம் தருவாய் காலைப் போதில் கதிரோன் - தலை காட்டும் கடலே வாழ்க ஏலேலோப் பண்ணாலே - வலை இழுப்பார் பாடும் கடலே. - இளைஞர் இலக்கியம், ப.22, 1958 34. வயல் மலர் மணக்கும் தென்றல் காற்றில் மாமன் வயற் சேற்றில் சலசல என ஏரை ஓட்டித் தமிழ் பாடினன் நீட்டி! மலைகள் போல இரண்டு காளை மாடுகள் அந்த வேளை தலைநிமிர்ந்து பாட்டுக் கேட்டுத் தாவும் ஆட்டம் போட்டு. - இளைஞர் இலக்கியம், ப.23, 1958 35. சோலை பச்சைமணிப் பந்தலல்ல சோலை - பசும் பட்டுமெத்தை அல்ல புல்த ரைதான்! நொச்சிச்செடிப் பாப்பாவை அணைத்துத் - தரும் நூறுதரம் முல்லைக்கொடி முத்து! மச்சி வீட்டை விடஉயரம் தென்னை - மிக மணம்வீசும் அங்கே ஒரு புன்னை உச்சிக்கிளை மேற்குயிலும் பாடும் - பார் ஒருபுறத்தில் பச்சைமயில் ஆடும். மணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்கள் - அங்கு வகைவகையாய்ச் சிந்து பாடும் ஈக்கள் தணிக்கமுடி யாவியர்வை 1fGî« - நல்ல rªjd¤J¤2 தென்றல் வந்து தழுவும்! இணைக்கிளிகள் மரக்கிளையில் கொஞ்சும் - மிக இடிக்கும் பலா மரத்திற் பிஞ்சும் பிஞ்சும் பிணிபோகும் மறைந்து போகும் துன்பம் பெருஞ்சோலை அளிப்பதெலாம் இன்பம்! - இளைஞர் இலக்கியம், ப.24, 1958 குறிப்பு : 1. கழுவும் - தென்றல் என இயையும், கழுவுதல் - நீக்குதல் வியர்வையை நீக்கும் தென்றல் என்க. 2. சந்தனத்துத் தென்றல் - சந்தன மணத்துடன் வருந்தென்றல். 36. தோட்டம் மாமரமும் இருக்கும் - நல்ல வாழைமரம் இருக்கும் பூமரங்கள் செடிகள் - நல்ல புடலை அவரைக் கொடிகள் சீமைமணற்றக் காளி - நல்ல செம்மாதுளை இருக்கும் ஆமணக்கும் இருக்கும் - கேள் அதன் பேர்தான் தோட்டம். - இளைஞர் இலக்கியம், ப.25, 1958 37. தோட்டம்* ஊருக்குப் போய்வரும் நாளையிலே - மிக உரத்திடும் வெய்யில் வேளையிலே. ஆருக்கும் தாங்காத பசிகொண்டு - நான் அங்கொரு தோட்டத்தில் புகக் கண்டு பழங் கொடுத்தது மாமரம் - என் பசி தொலைத்தது மாமரம் நிழல் கொடுத்தது மாமரம் - துயர் நீங்க வைத்து மாமரம் தாகம் தணித்தது தென்னைமரம் - மணம் தந்து மலர்ந்தது புன்னைமரம் - உற் சாகம் பிறந்தது வீடுவந்தேன் - மரம் உதவி செய்ததை நான் நினைந்தேன். - இளைஞர் இலக்கியம், 1958; ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், 3, ப.28, 1935 *$ சுப்ரமணிய பாரதி கவிதாமண்டலம் இதழில் பயன்மரம் என்னும் தலைப்பு மாற்றம் பெற்றுள்ளது. 38. தோப்பு எல்லாம் மாமரங்கள் - அதில் எங்கும் மாமரங்கள் இல்லை மற்ற மரங்கள் இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் - அதில் எங்கும் தென்னை மரங்கள் இல்லை மற்ற மரங்கள் இது தென்னந் தோப்பு. எல்லாம் 1fKf மரங்கள் எங்கும் கமுக மரங்கள் இல்லை மற்ற மரங்கள் இது கமுகந் தோப்பு. எல்லாம் புளிய மரங்கள் எங்கும் புளிய மரங்கள் இல்லை மற்ற மரங்கள் இது புளியந் தோப்பு. - இளைஞர் இலக்கியம், ப.26, 1958 1. கமுக - கமுகு - பாக்கு மரங்கள். 39. மலை அண்ணாந்து பார்த்தாலும் மலையே - உன் அடிதான் தெரியும்என் கண்ணில் மண்மேலே உட்கார்ந்த மலையே - நெடு வானத்தில் இருக்கும்உன் தலையே! எண்ணாயி ரம்மரங்கள் இருக்கும் - அந்த இலைபள பளவென்று சிரிக்கும் பண்ணாயிரம் கேட்கும் காதில் - அங்குப் பல்லோரும் பாடுகின்ற போதில். வற்றா அருவிதரும் மலையே - இங்கு வாழ்வோர்க்கு நலம் செய்யும் மலையே சிற்றாடை கட்டிப்பல பெண்கள் - பூச் செண்டாடிக் கொண்டிருக்கும் மலையே பற்றாக் குறை நீக்கக் குரங்கு - தன் பல்லால் பலாப்பழத்தைக் கிழிக்கும் - நல்ல தெற்குத் தமிழ்பாடிப் பெண்கள் - பெருந் தினைப்புனம் காக்கின்ற மலையே. - இளைஞர் இலக்கியம், ப.27, 1958 40. விண்மீன் மின்னாத வானில் மின்னுகின்ற மீன்கள் சின்ன சின்ன வயிரம் தெளித்த முத்துக்கள் புன்னையின் அரும்பு பூக்காத முல்லை என்ன அழகாக இருந்தன மீன்கள். - இளைஞர் இலக்கியம், ப.28, 1958 41. கதிரவன் தங்கத் தட்டே வாவா - ஒரு தனித்த அழகே வாவா பொங்கும் சுடரே வாவா - பசும் பொன்னின் ஒளியே வாவா எங்கும் இருப்பாய் வாவா - நீ எவர்க்கும் உறவே வாவா சிங்கப் பிடரைப் போல - பிடர் சிலிர்த்த கதிரே வாவா. கடலின் மேலே தோன்றி - நீ காலைப் பொழுதைச் செய்வாய் நடுவா னத்தில் நின்று - நீ நண்பகல் தன்னைச் செய்வாய் கொடிமேல் முல்லை மணக்கும் - நல் குளிர்ந்த தென்றல் வீசும் படிநீ மாலைப் போதைப் - பின் பரிவாய்ச் செய்வாய் வாழ்க. - இளைஞர் இலக்கியம், ப.28, 29, 1958 42. நிலவு சொக்க வெள்ளித் தட்டு - மிகத் தூய வெண்ணெய்ப் பிட்டு தெற்கத்தியார் சுட்டு - நல்ல தேங்காய்ப் பாலும் விட்டு வைக்கச் சொன்ன தோசை - அது வயிர வட்ட மேசை பக்க மீன்கள் பலவே - ஒரு பட்டத் தரசு நிலவே. - இளைஞர் இலக்கியம், ப.29, 1958 43. நிலவு வட்ட நிலவே வாடாப் பூவே சட்டி நிலாவே தாமரைப் பூவே தொட்டிப் பாலே சோற்றுத் திரளே எட்டி இருந்தாய் இனிய விருந்தாய். வெள்ளித் தட்டே விண்ணுக் கரசே பிள்ளை முகமே பேசுந் தமிழே உள்ளக் களிப்பே உலக விளக்கே அள்ளிப் புரிந்தாய் அழகு விருந்தே. - இளைஞர் இலக்கியம், ப.30, 1958 44. நிலா பள்ளியை விட்டு வந்தேனா? பட்டப் பகலும் மங்கினதா? உள்ளே வீட்டில் நுழைந்தேனா? உள்ள சுவடியை வைத்தேனா? பிள்ளைகள் எல்லாம் வந்தாரா? பெரிய தெருவில் சேர்ந்தோமா? வெள்ளி நிலாவும் வந்ததே! விளையா டும்படி சொன்னதே! ஓடித் தொட்டோம் ஓர் ஆளை! ஒளியும் ஆட்டம் ஆடினோம்! பாடி நடந்தோம் எல்லோரும்! பச்சைக் கொடிக்கு நீர்விட்டோம்! தேடிக் கள்ளனைப் பிடித்தோம்! சிட்டாய்ப் பறந்தோம் வீட்டுக்கே ஆடச் செய்தது வெண்ணிலா அழகைச் செய்தது வெண்ணிலா. - இளைஞர் இலக்கியம், ப.31, 1958 45. நிலவு வானத் தூரார் வந்தார் - அவர் மத்தாப் பைப்போல் நின்றார் மீனுக் கெல்லாம் சொன்னார் - மேல் மினுக்க வேண்டும் என்றார் நானும் அவரைப் பார்த்தேன் - அவர் தாமும் என்னைப் பார்த்தார் ஏனோ வந்து குலவார்? - கீழ் இறங்கு வாரா நிலவார்? - இளைஞர் இலக்கியம், ப.32, 1958 46. நிலவு வில்லடித்த பஞ்சு விட்டெறிந்த தட்டு முல்லைமலர்க் குவியல் முத்தொளியின் வட்டம் நல்லவயிர வில்லை நானில விளக்கு மெல்ல இங்கு வாராய் வெண்ணிலாவே நேராய்! வீற்றிருக்கும் அன்னம் வெள்ளைத்தா மரைப்பூ ஊற்றிய பசுப்பால் உண்ண வைத்த சோறு ஆற்று நடுப் பரிசல் அழகுவைத்த தேக்கம் மாற்றமில்லை வாராய்! வானிலவே நேராய்! - இளைஞர் இலக்கியம், ப.36, 1958 47. வெண்ணிலா அல்லி மலர்ந்தது வெண்ணிலாவே - நல்ல அழகு செய்தது நீ வந்ததால் கொல்லை குளிர்ந்தது வெண்ணிலாவே - கொடுங் கோடை தணிந்தது நீ வந்ததால் சில்லென் றிருந்தது வெண்ணிலாவே - எம் செந்தமிழ்நாடு நீ வந்ததால் தொல்லை தணிந்தது வெண்ணிலாவே - உடல் சூடு தணிந்தது நீ வந்ததால். ஒளி பிறந்தது வெண்ணிலாவே - நல்ல உள்ளம் பிறந்தது நீ வந்ததால் களி பிறந்தது வெண்ணிலாவே - முக் கலை பிறந்தது நீ வந்ததால் எளிமை போனது வெண்ணிலாவே - நெஞ்சில் இன்பம் பிறந்தது நீ வந்ததால் நெளியும் கடலும் வெண்ணிலாவே - அலை நீள முழங்கிற்று நீ வந்ததால். - இளைஞர் இலக்கியம், ப.33, 1958 48. மூன்றாம் பிறை முல்லைக் காட்டின் அடைசலில் - ஒரு முல்லை யரும்பு தெரிந்ததே வில்லேதான் மூன் றாம்பிறை - அது விண்ணில் அதோதான் தெரிந்ததே சொல்லிச் சொல்லிக் காட்டினேன் தொலைவில் விரலை நீட்டினேன் இல்லை இல்லை என்றாரே - பின் இதோ இதோ என்றுரைத் தாரே. - இளைஞர் இலக்கியம், ப.34, 1958 49. அவன் வந்தால் உனக்கென்ன அழகிய நிலவு வந்தா லென்ன? அதுதான் கண்டு சிரித்தா லென்ன? பழகிட எண்ணிப் பார்த்தா லென்ன? பால்போல் மேனி இருந்தா லென்ன? முழுதும் குளிரைச் செய்தா லென்ன? முத்துச் சுடரைப் பொழிந்தா லென்ன? ஒழுகும் தேனிதழ்த் தாமரைப் பெண்ணே உன்முகம் கூம்பக் காரணம் என்ன? 1 - இளைஞர் இலக்கியம், ப.34, 1958 50. முகிலைக் கிழித்த நிலா பகல் இருண்டது கண் இருண்டது பழகிய என்னைத் தெரியவில்லை கிளிக்கே - உடன் பளபள வென்று வந்தது நிலா விளக்கே. பகலைப் போல இரவிருந்தது பார்த்த தெல்லாம் நன்கு புரிந்தது கண்ணில் - உடன் நிலவை வந்து முகில் மறைத்தது விண்ணில்! முகத்துக்கு முகம் தெரியவில்லை மூலை முடுக்குப் புரியவில்லை பின்பே - அந்த முகிலைக் கிழித்து நிலவு வந்தது2 முன்பே. தகத்தக என்று வெளிச்சம் வந்தது தகத்தகத் தகத்தகத் தகவென ஆடி - யாம் மகிழ்ந்தோமே சங்கத் தமிழ் பாடி. - இளைஞர் இலக்கியம், ப.35, 1958 1. நிலவைக் கண்டால் தாமரை கூம்பும் 2. முன்பே - கண் முன்பு 51. கொய்யாப் பூ கொல்லையிலே கொய்யாப் பூ - அது கொண் டையிலே வையாப் பூ நல்ல வெள்ளைத் தாமரை - அது நன்றாய் மலர்ந்த தாமரை கல்லையிலே* தேங்காய்ப் பால் - அது காண இனிக்கும் கட்டிப் பால் எல்லாம் என்றன் கண்ணிலா! - மிக எழிலைத் தந்தது வெண்ணிலா! - இளைஞர் இலக்கியம், ப.37, 1958 * šiy - fதொன்னை 52. சிற்றூர் சின்னப் பள்ளி ஒன்றுண்டு பெரிய கோவில் பலஉண்டு நன்செய் புன்செய் நாற்புறமும் நடவும் உழவும் இசைபாடும் தென்னையும் பனையும் பலமரமும் செடியும் கொடியும் அழகுதரும் நன்னீர் வாய்க்கால் ஏரிகுளம் நலம் கொழிப்பது சிற்றூராம். மச்சு வீடு ஏழெட்டு மாடி வீடு நாலைந்து குச்சு வீட்டு வாயில்கள் குனிந்து போகப் பலவுண்டு தச்சுப் பட்டறை ஒன்றுண்டு தட்டார் பட்டறை ஒன்றுண்டு அச்சுத் திரட்டும் கருமாரின் பட்டறை உண்டு சிற்றூரில். காக்கா ஒருபுறம் கா கா கா குருவி ஒருபுறம் கீ கீ கீ மேய்க்கும் ஆடு மே மே மே மின்னும் கோழி கோ கோ கோ பார்க்கும் பூனை மீ மீ மீ பசுவின் கன்றும் மா மா மா ஆக்கும் இந்தச் கச்சேரி அங்கங் குண்டு சிற்றூரில். கம்பும் தினையும் கேழ்வரகும் கட்டித் தயிரும் சம்பாவும் கொம்பிற் பழுத்த கொய்யா மா குலையிற் பழுத்த வாழையுடன் வெம்பும் யானைத் தலைபோல வேரிற் பழுத்த நல்லபலா நம்பிப் பெறலாம் சிற்றூரில் நாயும் குதிரை போலிருக்கும். - இளைஞர் இலக்கியம், ப.37, 38, 1958 53. பேரூர் நிற்க வரும் புகை வண்டி நிலையம் உள்ள பேரூர்! விற்கத் தக்க விளைவை எல்லாம் வெளியில் ஏற்றும் பேரூர் கற்கத் தக்க பள்ளிக்கூடம் கச்சிதமாய் நடக்கும் உற்றுப் பார்க்கக் கோவில் - மட்டும் ஊரிற் பாதி இருக்கும்! பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள் பவனிவரும் எங்கும் முத்து வெள்ளைச் சுவர் வீட்டின் முன்னால் 1பொறியியங்கி! கத்தும் இரிசு கட்டைவண்டி கடைச் சரக்கை ஏற்றி ஒத்து நகரை நோக்கி ஓடும் உள்ளூ ரைஏ மாற்றி! செட்டுத் தனம் இல்லை பல தேவை யற்ற உடைகள் பட்டணம் போகா தவர்கள் பழங் காலத்து மக்கள் கட்டு டம்பு வற்றிப் போகக் கையில் வெண்சு ருட்டுப் பெட்டி யோடும் உலவ வேண்டும் இதன் பேர்தான் பேரூர். - இளைஞர் இலக்கியம், ப.39-40, 1958 1. பொறியியங்கி - கார் 54. பட்டணம் பல்கலைக் கழகம் உயர்நிலைப் பள்ளி செல்வச் சிறுவர் செல்லும் பள்ளிகள் நல்ல நூல்கள் படிக்கப் படிப்பகம் எல்லாம் இருக்கும் அமைதி இராது. பாட்டை நிறையப் பலவகை வண்டிகள் காட்டுக் கூச்சல் கடமுடா முழக்கம் கேட்டால் காதே கெட்டுப் போகும் ஈட்ட ஆலைகள் இருபது கூவும். தூய ஆடைத் தோகை மாரும் ஆய உணர்வின் ஆடவர் தாமும் ஓயா துழைக்கும் பலதுறை மக்களும் தேய வழிகள் செல்வார் வருவார். வெள்ளி மலையும் தங்க மலையுமாய் உள்ள வீடுகள் வானில் உயரும் அள்ளும் அழகுடை அலுவல் நிலையம் கொள்ளா வணிகம் கொண்டது பட்டணம் நாடக சாலைகள் நற்படக் காட்சிகள் ஆடல் பாடல் அமையும் அவையும் ஈடிலாப் புலவர் பேச்சுமன் றங்கள் காடுகள் சோலைகள் கவிந்தது பட்டணம். - இளைஞர் இலக்கியம், ப.40, 41, 1958 55. பூச்செடி மாடு குடிக்கும் தொட்டி அல்ல மண்நிறைந்த தொட்டி வாடி மரத் தொட்டி அல்ல மண்ணாற் செய்த தொட்டி வேடிக்கையாய்த் தொட்டியிலே விதைகளை நான் நட்டேன் ஆடிப்பாடிக் காலை மாலை அன்பாய்த் தண்ணீர் விட்டேன். ஒருமாதம் சென்றவுடன் நிறநிறமாய் அரும்பி விரைவாகப் பூத்த பூக்கள் பெரியபெரிய பூக்கள் கருநீலச் சாமந்தி வெண்ணிறச் சாமந்தி வரகுநிறம் சிவப்பு நிறம் மணத்தை அள்ளி வீசும். - இளைஞர் இலக்கியம், ப.42, 1958 56. முக்கனி குண்டுபலா குலைவாழை மண்டுசுவை மாம்பழங்கள் கொண்ட மூன்றும் முக்கனி யாம் உண்டு மகிழ்வர் தமிழர். - இளைஞர் இலக்கியம், ப.42, 1958 57. வாழை மலைவாழை செவ்வாழை வங்காள வாழைபார் வளர்ந்த நல்ல பேயன்வாழை பச்சை வாழை பார்பார் பலவாழை மரங்க ளுண்டு பழம்பழுப்ப துண்டு பலவாழைப் பழங்களுமே இனிக்கும்கற் கண்டு. குலைகொடுக்கும் வாழைமரம் இனிக்கும்பழம் கொடுக்கும் மலிவாக வாழைக்கச்சை வாழைத்தண்டு கொடுக்கும் கலையாமல் வாழைப்பூவும் கறிசமைக்கக் கொடுக்கும். - இளைஞர் இலக்கியம், ப.43, 1958 58. தென்னை தென்னைமரம் கண்டேன் - பல தேங்காய்க்குலை கண்டேன் தென்னை ஓலை இட்டு - அதில் பின்னுவார்கள் கீற்று தென்னம்பாளைச் சாறு - மிக்க தித்திக்குந்தே னாறு தென்னைமரம் பிளந்து - செற்றி வாரை செய்வார் அளந்து. இளந் தேங்கா யின்பேர் நல்ல இளநீர்க்காய் என்பார் இளந்தேங்காய் முற்றும் - அதில் இருந்த நீரும் வற்றும் பிளந்த தேங்காய் தன்னை நல்ல செக்கில் ஆட்டிய பின்னை தெளிந்த எண்ணெய் எடுப்பார் - நல்ல தேங்காய் எண்ணெய் அதன்பேர். - இளைஞர் இலக்கியம், ப.44, 1958 அறிவு 59. நேர்பட ஒழுகு தரையிலே உட்கார வேண்டாம் - ஒரு தடுக்குமா இல்லைஉன் வீட்டில்? கரியாகிப் போகும்உன் சட்டை - நீ கண்ட இடத்திலே புரண்டால் சரியான வழியில் நடப்பாய் - நீ தண்ணீரில் ஆடக்கூ டாது எரிந்திடும் நெருப்புமுன் னாலே - கேள் என்கண்ணே உனக்கென்ன வேலை? - இளைஞர் இலக்கியம், ப.47, 1958 60. நேர்பட ஒழுகு சுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே - நல்ல சுவரிலும் கதவிலும் கிறுக்காதே கண்ணாடி எடுத்தால் மெதுவாய்வை - அது கைதவறி விட்டால் உடைவதுமெய் பண்ணோடு பாடநீ கூசாதே - உன் பள்ளியில் எவரையும் ஏசாதே மண், ஓடு, ஆணி, துணி கடிக்காதே - கேள் மற்றவர் பொருளை நீ எடுக்காதே. - இளைஞர் இலக்கியம், ப.47, 1958 61. நேர்பட ஒழுகு கண்ட இடத்திலே துப்பாதே காலிலே சேற்றை அப்பாதே துண்டு துணிகளைக் கிழிக்காதே துடுக்காய் எவரையும் பழிக்காதே பண்டம் எதையும்பா ழாக்காதே பாலைத் தலையிலே வார்க்காதே நொண்டியைக் கண்டு சிரிக்காதே நொளநௌப் பழத்தை உரிக்காதே. - இளைஞர் இலக்கியம், ப.47, 1958 62. நேர்பட ஒழுகு எழுதிமு டித்தபின் உன்பலபம் - அதை எடுத்துப்பை யில்வைப் பதுசுலபம் புழுதியில் எறிவது சரியில்லை - இனிப் புதிதாய் வாங்கிடு வதுதொல்லை அழகாய் இருந்திடும் உன்சுவடி - அதை அழுக்காக் காமல் எடுத்துப்படி வழவழப் பான உன்இறகு* - அது மண்ணில் விழுந்தால் கெடும்பிறகு. - இளைஞர் இலக்கியம், ப.48, 1958 •இதை - பேனா 63. நேர்பட ஒழுகு நாயை அடித்தால் அதுகடிக்கும் - ஒரு நல்லபூனை எலிபிடிக்கும் தாயைப் பிரியா மல்செல்லும் - என் தங்கக் கோழிக் குஞ்செல்லாம் ஓயா மற்பா டும்குருவி - மேல் உயரம் பறந்து வரும் காக்கை ஆயா கண்டால் சோறிடுவார் - பிறர் அடிப்பது கண்டால் சீறிடுவார். - இளைஞர் இலக்கியம், ப.49, 1958 64. நேர்பட ஒழுகு படுக்கைவிட் டெழுந்தால் பாயைச் சுருட்டு - நீ பானையிலே பாலைக் கண்டால் நாயை வெருட்டு - சுவர் இடுக்கினிலே தேளைக் கண்டால் கொடுக்கை நசுக்கு - நீ இருட்டறையில் போகுமுன்னே விளக்கினை ஏற்று. மடார் என்று வெடிவெடித்தால் வாய் திறந்து நில் - நீ மழைவரும்முன் காயவைத்த வற்றலை எடுப் பாய் கொடியவர்கள் தாக்க வந்தால் தடியினைத் தூக்கு - வெறும் கோழைகளை ஏழைகளை வாழவைப்பாய் நீ. - இளைஞர் இலக்கியம், ப.50, 1958 65. நேர்பட ஒழுகு அலைகடலின் தண்ணீரிலே ஆடக்கூடாது - நீ அங்கும் இங்கும் தண்ணீரிலே ஓடக்கூடாது தலைமேலே மண்ணை அள்ளிப் போடக்கூடாது - நல்ல தாய்தடுத்தால் மலர்ந்த முகம் வாடக்கூடாது. ஆழக்கடல் மேலேகப்பல் அழகாயிருக்கும் - பார் அங்கே தோணி மிதப்பதுவும் அழகாயிருக்கும் ஏழைமக்கள் இழுத்த வலையில் மீனாயிருக்கும் - அவர் இழுக்கும் போது பாடும் பாட்டு தேனாயிருக்கும். கடல்தண்ணீர் அதிகசிலுசி லுப்பாயிருக்கும் - அதைக் கையால் அள்ளி வாயில்வைத்தால் உப்பாயிருக்கும் கடகடென்றே அலைபுரளும் கரைக டவாது - அந்தக் காற்றினிலே குளிர் இருக்கும் புழுக்கம் இராது. - இளைஞர் இலக்கியம், ப.51, 1958 66. நேர்பட ஒழுகு கடன்வாங்கக் கூடாது தம்பி - மிகக் கருத்தாய்ச் செலவிட வேண்டும் உடம்பினைக் காப்பாற்ற வேண்டும் உணவினில் நல்லுணவை உண்பாய் உடைந்திடக் கூடாது நெஞ்சம் - நீ உண்மைக்குப் பாடுபடும் போதில்! அடைந்ததைக் காப்பாற்ற வேண்டும் - நீ அயல்பொருள் பறிக்க எண்ணாதே. - இளைஞர் இலக்கியம், ப.52, 1958 67. இயல்பலாதன செயேல் அழுமூஞ்சி என்று சொல்வார் அழுது கொண்டே இருந்தால் கழுதையே என்று சொல்வார் கத்திக் கொண்டே இருந்தால் எழுதாமல் நீயி ருந்தால் இடக்குத்தனம் என்பார் கொழுத்துக் குறும்பு செய்தாலோ கொழுத்ததனம் என்பார். 1 பள்ளி செல்லா விட்டாலோ பழித்துப் பேசு வார்கள் துள்ளிப் பொருளை உடைத்தாலோ துடுக்குத்தனம் என்பார் அள்ளி அரிசி தின்றாலோ அறிவில்லையா என்பார் கொள்ளி அருகிற் போனாலோ குரங்கா நீ என்பார். 2 - இளைஞர் இலக்கியம், ப.53, 1958 68. நைவன நணுகேல் இன்னது வேண்டும் என்றுகேள் எதற்கும் அழுவது சரியில்லை சொன்னது கேட்டால் மகிழ்வார்கள் தொல்லை கொடுத்தால் இகழ்வார்கள் அன்னை தந்தை நல்லவர்கள் அன்பை உன்மேல் வைத்தவர்கள் என்ன கேட்டா லும்தருவார் இன்னது வேண்டும் என்றுகேள்! குளிக்க அழைத்தால் உடனேபோ கொட்டம் செய்வது சரியில்லை விளக்கை எடுத்தால் தடுப்பார்கள் வீண் ஒட்டாரம் பண்ணாதே வெளிக்கு வந்தால் உள்ளேபோ வெளியில் போவது சரியில்லை கிளிக்குச் சொல்வது போற்சொல்வார் கெட்டுப்போக வாசொல்வார்? - இளைஞர் இலக்கியம், ப.54, 1958 69. நைவன நணுகேல் கண்ணன் திண்ணன் என்றே அண்ணன் தம்பி இருவர்! திண்ணன் ஏணி ஏறிச் சின்னப் பரணில் உள்ள உண்ணும் பண்டம் எடுத்தே உண்டு வேலை முடித்தே எண்ணிக் கீழே இறங்க ஏணி பார்த்தான் இல்லை. திண்ணன் மனம் நலிந்தான் அண்ணன் அங்கே ஒளிந்தான் திண்ணன் அண்ணே என்றான் கண்ணன் மறைந்து நின்றான் கண்ணெதிர் வந்தார் அம்மா திண்ணன் அழுதான் சும்மா அண்ணன் கண்டு சிரித்தான் அம்மா கண்டு முறைத்தார். - இளைஞர் இலக்கியம், ப.138, 1958 70. ஏமாறாதே ஆரஞ்சிப் பழத்தையும் தம்பி - நீ ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு நீர்சுண்டி இருக்கவும் கூடும் - அது நிறையப் புளிக்கவும் கூடும் ஓர்ஒன்றை உண்டுபார் தம்பி - உனக்கு உகந்த தென்றால் அதை வாங்கு பாரெங்கும் ஏமாற்று வேலை - மிகப் பரவிக் கிடக்கின்றது தம்பி. அழுகிய பழத்தையும் தம்பி - அவர் அன்றைக்குப் பழுத்ததென் றுரைப்பார் புழுக்கள் இருப்பதுண்டு தம்பி - உள் பூச்சி இருப்பதுண்டு தம்பி கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே - வெறும் கோது நிறைந்திருக்கும் தம்பி அழுத்தினா லும்தெரி யாது - அதை அறுத்துக் காட்டச் சொல் தம்பி. நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார் - அதை நேரில் காய்ச்சிப்பார் தம்பி துய்ய பயறுகளில் எல்லாம் - கல் துணிக்கை மிகவும் சேர்ப்பார்கள் மையற்ற வெண்ணெயென்றுரைப்பார் - அதில் மாவைக் கலப்பார்கள் தம்பி ஐயப்பட வேண்டும் இவற்றில் - மிக ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு. வகுத்து வகுத்துச்சொல் வார்கள் - அதன் வயணத்தை ஆராய வேண்டும் பகுத்தறி வழியாச் சொத்தாம் - அதைப் பாழாக்கக் கூடாது தம்பி நகைத்திட எதையும்செய் யாதே - மிக நல்லொழுக் கம்வேண்டும் தம்பி தகத்தகப் புகழினைத் தேடு - நீ தமிழரின் வழியினில் வந்தாய். - இளைஞர் இலக்கியம், ப.55, 56, 1958 71. களவு கூழ்நிறைந்த குண்டான் - அதைக் குப்பன் கண்டு கொண்டான் ஏழு குவளை மொண்டான் - மிக இன்பமாக உண்டான் வாழைத் தோட்ட முத்து - முன் வந்து நாலு வைத்து சூழ்ந்த நிழலில் படுத்தான் - அவன் பசியால் நெஞ்சு துடித்தான். - இளைஞர் இலக்கியம், ப.56, 1958 72. வீண் வேலை மாமரத்தின் கிளையி லொரு மாங்காய் தொங்கக் கண்டேன் மாங்காயின்மேல் கல்லை விட்டேன் மண்டை உடை பட்டேன். பூமரத்தில் ஏறி ஒரு பூப்பற்றிக்கப் போனேன் பூப்பறிக்கத் தாவுகையில் பொத்தென்றுவிழ லானேன். ஊமையைப்போல் இருந்த நாயை உதைக்கத் காலை எடுத்தேன் உயரத் தூக்கிய வலதுகாலைக் கடித்து விட்டது மாலை. தீமையான செய்கைகளைச் செய்யவுங்கூ டாது செய்வோரிடம் எப்போதும் சேரவும்கூ டாது. - இளைஞர் இலக்கியம், ப.57, 1958 73. ஏமாற்றாதே கடைக்காரரே கடைக்காரரே கற்கண்டு வேண்டும் என்றான் கடைக்காரர் உள்ளே சென்றார் கடுகை அள்ளி மறைத்தான். கடைக்காரரே கடைக்காரரே கற்பூரம் வேண்டும் என்றான் கடைக்காரர் உள்ளே சென்றார் மிளகை அள்ளி மறைத்தான். கடைக்காரரே கடைக்காரரே வெல்லம் வேண்டும் என்றான் கடைக்காரர் உள்ளே சென்றவர் கடியத் திரும்பிப் பார்த்தார். கடையில் மல்லி அள்ளும் குப்பன் கையோ டுபிடி பட்டான் கடுகளவு களவாடல் மலையளவு குற்றம். - இளைஞர் இலக்கியம், ப.57, 1958 74. மறதி கெடுதி கண்ணாடிப் பெட்டியில் ஊசியிருக்கும் - அக் கண்ணாடிப் பெட்டியில் அதை எடுத்தால் எண்ணப்படி வேலை முடிந்த உடன் எடுத்த இடத்திலே ஊசியை வை. எண்ணெய் இருக்கும் இருட்டறையில் - அந்த எண்ணெய்யை அங்கிருந்தே எடுத்தால் எண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின் எடுத்த இடத்திலே புட்டியை வை. கண்ணாடிப் பெட்டியில் ஊசி கண்டான் கண்ணப்பன் அந்த ஊசி எடுத்தான் எண்ணப்படி வேலை முடிந்தபின் - அவன் எங்கோ வைத்தான் அவ்வூசியை. எண்ணெய் இருக்கும் இருட்டறையில் - அந்த எண்ணெய்யைக் கண்ணப்பனே எடுத்தான் எண்ணெய் இட்டுத்தலை வாரிக்கொண்டபின் எங்கேயோ புட்டியை வைத்துவிட்டான். கண்ணாடிப் பெட்டியில் ஊசி இருப்பதாய்க் கண்ணப்பன் மறுநாள் தடவிப் பார்த்தான் கண்ணாடிப் பெட்டியில் ஊசியே இல்லை கையிலே தேள்ஒன்று கொட்டிவிட்டது. எண்ணெய் இருந்த இருட்டறைக்குள் - அந்த எண்ணெய்யைத் தேடிடும் கண்ணப்பனைப் பிண்ணாக்குத் தின்னும் பெருச்சாளி - மிகப் புண்ணாக்கி விட்டது கைவிரலை. - இளைஞர் இலக்கியம், ப.59, 60, 1958 75. நோய் மருத்துவர் தருவார் மருந்து மகிழ்ச்சி யாக அருந்து வருத்தப் படுதல் ஆகுமோ வந்த நோய்தான் போகுமா? திருத்த மாக நடப்பாய் தீண்டுமா சொல் ஒரு நோய் கருத்தாய் நடப்போர் வாழ்வார் கருத்தில் லாதவர் வீழ்வார். - இளைஞர் இலக்கியம், ப.59, 1958 76. எண் வேலா எவர்க்கும் தலை ஒன்று மெய்யாய் எவர்க்கும் கண் இரண்டு சூலத்தின் முனையோ மூன்று துடுக்கு நாயின் கால் நான்கு வேலா உன் கைவிரல் ஐந்து மின்னும் வண்டின்கால் ஆறு வேலா ஒருகைவிர லுக்கு மேலே இரண்டு விரல் ஏழு. சிலந்திக் கெல்லாம் கால் எட்டே! சிறுகை விரலும்நால் விரலும் கலந்தால் அதன்பேர் ஒன்பது! காண்பாய் இருகை விரல் பத்தே! பலபல என்றே உதிர்ந்தபூ! பத்தும் ஒன்றும் பதினொன்று பலபல என்றே உதிர்ந்த பூ பத்தும் இரண்டும் பன்னிரண்டு. பத்தும் மூன்றும் பதின்மூன்று பத்தும் நான்கும் பதினான்கு பத்தும் ஐந்தும் பதினைந்து பத்தும் ஆறும் பதினாறு பத்தும் ஏழும் பதினேழு பத்தும் எட்டும் பதினெட்டு பத்தும் ஒன்பதும் பத்தொன்பது பத்தும் பத்தும் இருபதே. - இளைஞர் இலக்கியம், ப.61, 62, 1958 77. வாரம் வாரமுதல் நாள் ஞாயிறு மங்கா மறுநாள் திங்கள் சேரக் கௌவும் செவ்வாய் சேர்ந்து வருமாம் ஒரு புதன் பாராய் அதன்பின் வியாழன் பளிச்சென் றடிக்கும் வெள்ளி நேரில் மறுநாள் ஒருசனி நிறைந்த வார நாள் ஏழாம். - இளைஞர் இலக்கியம், ப.62, 1958 78. திங்கள் பனிரண்டு சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி - பு ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி ஒத்துவரும் தைமாசி பங்குனி எல்லாம் - இவை ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர். கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே கூவும்குயில்! மழை பெய்யும் கார்த்திகையிலே மெத்தகுளி ராயிருக்கும் மார்கழியிலே - மிக வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே. - இளைஞர் இலக்கியம், ப.63, 1958 79. திசை கதிர் முளைப்பது கிழக்கு - அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமையம் வடக்கு - அதன் எதிர் குமரி தெற்கு. - இளைஞர் இலக்கியம், ப.63, 1958 80. நிறம் வானம் நீலம் மல்லிகை வெண்மை ஆனை கறுப்பே அலரி சிவப்பே ஏன் இதில் ஐயம்? இலைதான் பச்சை தேன்மா அரைக்கும் தினைதான் மஞ்சள். - இளைஞர் இலக்கியம், ப.64, 1958 81. கிழமை ஞாயிறுதான் ஒன்று - பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று - பின் வந்த புதன் நான்கு தூய்வி யாழன் ஐந்து - பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும் சனி ஏழு - இதைத் தவறாமற் கூறு. - இளைஞர் இலக்கியம், ப.64, 1958 82. விருந்து விருந்து வருவது கண்டால் - மிக விரும்பி எதிர் கொண் டழைநீ இருக்க இருக்கை காட்டி - அதில் இருக்க வேண்டிக் கொள்வாய் அருந்தச் சுவைநீர் தருவாய் - நீ milfhŒ¤1 தட்டும் வைப்பாய் பரிந்து சிலசில பேசிப் - பின் பசியை நீக்க முயல்வாய். குளிக்கத் தனியறை காட்டு - அதில் குட்டை வேட்டி மாட்டு குளிப்புத் தொட்டியின் அண்டை - ஒரு FË¥ò¡2 கட்டியும் வைப்பாய் குளித்த பின்கண்ணாடி - நல் எண்ணெய் சீப்புவை தேடி அளிப்பாய் கறியும் சோறும் - மிக அன்பாய் மிளகின் சாறும். - இளைஞர் இலக்கியம், ப.65, 1958 1. வெற்றிலைப் பாக்கு, 2. சோப் 83. உயிர் எழுத்துகள் அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான் ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ ஔவையார் முதலெழுத்தே ஔவாகும் பாராய். - இளைஞர் இலக்கியம், ப.62, 1958 84. மெய்யெழுத்துகள் செக்குக்கு நடுவெழுத்தே க் சங்குக்கு நடுவெழுத்தே ங் உச்சிக்கு நடுவெழுத்தே ச் பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ் தட்டுக்கு நடுவெழுத்தே ட் கண்ணுக்குப் பின்னெழுத்தே ண் சித்திக்கு நடுவெழுத்தே த் பந்துக்கு நடுவெழுத்தே ந் சீப்புக்கு நடுவெழுத்தே ப் பாம்புக்கு நடுவெழுத்தே ம் நாய் என்றால் பின்னெழுத்தே ய் தேர் என்றால் பின்னெழுத்தே ர் வேல் என்றால் பின்னெழுத்தே ல் செவ்வை என்றால் நடுவெழுத்தே வ் யாழ் என்றால் பின்னெழுத்தே ழ் புள்ளி என்றால் நடுவெழுத்தே ள் ஏற்றமென்றால் நடுவெழுத்தே ற் மான் என்றால் பின்னெழுத்தே ன் - இளைஞர் இலக்கியம், ப.67, 1958 85. உயிர்மெய் க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும் க் மேலே ஆ ஏற இரண்டும் மாறிக் கா ஆகும் க் மேலே இகரம் ஏற இரண்டும் மாறிக் கி ஆகும் க் மேலே ஈ ஏற இரண்டும் மாறிக் கீ ஆகும் க் மேலே உகரம் ஏற இரண்டும் மாறிக் கு ஆகும் க் மேலே ஊ ஏற இரண்டும் மாறிக் கூ ஆகும் க் மேலே எ ஏற இரண்டும் மாறிக் கெ ஆகும் க் மேலே ஏ ஏற இரண்டும மாறிக் கே ஆகும் க் மேலே ஐ ஏற இரண்டும் மாறிக் கை ஆகும் க் மேலே ஒ ஏற இரண்டும் மாறிக் கொ ஆகும் க் மேலே ஓ ஏற இரண்டும் மாறிக் கோ ஆகும் க் மேல ஔ ஏற இரண்டும் மாறிக் கௌ ஆகும். - இளைஞர் இலக்கியம், ப.68, 1958 ஊர்தி 86. வண்டிகள் பெரிய கட்டை வண்டி - அதன் பின்னா லேவில் வண்டி முருகன் மொட்டை வண்டி - பின்னும் முனியன் கூண்டு வண்டி கரிய னின்கை வண்டி - அது காளை மாட்டு வண்டி தெரியும் குதிரை வண்டி - அதோ சீனன் இழுப்பு வண்டி. உள்ளி ருப்ப வர்கள் - எந்த ஊருக் குப்போ கின்றார்? உள்ளி ருக்கும் பண்டம் - எந்த ஊரைச் சேர வேண்டும்? பிள்ளைத் தோட்டத் திற்கே - கேள் பிடிக்க வேண்டும் ஓட்டம் வள்ளி திரு மணமே - ஒரு மணிநே ரத்தில் தொடக்கம். - இளைஞர் இலக்கியம், ப.751, 1958 87. இரட்டை மாட்டு வண்டி எங்கள் வண்டி மாடு - கேள் இரண்டு வெள்ளை மாடு தங்க வண்டியில் பூட்டி - நல்ல தருமன் சென்றான் ஓட்டி எங்கே வண்டி போகும்? - அது இரிசன் பாளையம் போகும் அங்கே என்ன வேலை? - எனில் ஆடல் பாடல் மாலை. - இளைஞர் இலக்கியம், ப.72, 1958 88. குதிரை வண்டி ஓடும் நன்றாய் ஒருகுதிரை உதைக்கும் கடிக்கும் ஒருகுதிரை ஓடையில் தள்ளும் வண்டியையே உயிரை வாங்கும் ஒருகுதிரை nrhL* தவறும் ஒருகுதிரை சும்மா படுக்கும் ஒருகுதிரை வாடப் பின்னோ டேதள்ளும் வாலால் அடிக்கும் ஒருகுதிரை. நல்ல குதிரை பூட்டியதாய் நல்ல ஆளே ஓட்டுவதாய் எல்லா வண்டியும் இருக்குமா? இருந்தால் உலகம் சிரிக்குமா? பொல்லாங் கெல்லாம் நேருமா? போக்கில் மூலை வாருமா? நல்ல குதிரை வண்டியிலே நாம்உட் கார்ந்தால் நலிவில்லை. - இளைஞர் இலக்கியம், ப.73, 1958 *சோடு - சுவடு 89. மாட்டு வண்டி கலகலத்தது வண்டி - அந்தக் காளைமாடும் நொண்டி பொலபொலத்தது கூரை - மட்கிப் பொடியைச் சிந்தும் ஆரை வலிய அதட்டும் சீனன் - அந்த வண்டிக்காரன் கூனன் குலைந டுங்கிட உள்ளே - வந்து குந்தி யவளும் நொள்ளை. ஏரிக் கரை மேலே - அதை இழுத்துப் போன தாலே ஆரை ஒடிய பாரும் - அப் படியே உட்காரும் பாரும் எருதும் புரள - ஏரிப் பள்ளத்திலே உருள ஊரில் யாரும் இல்லை - அவர் உதிர்த்தனர் பல பல்லை. - இளைஞர் இலக்கியம், ப.74, 1958 90. ஒற்றை மாட்டு வண்டி ஒற்றை மாடு கட்டி - அதோ ஓடினது வண்டி ஒற்றை மாட்டு வண்டி - அது உயர்ந்த கூட்டு வண்டி ஒற்றை மாட்டு வண்டி - தனில் உள்ளே சிலர் குந்திச் சிற்றூருக்குப் போனார் - அவர் திரும்பி நாளை வருவார். - இளைஞர் இலக்கியம், ப.75, 1958 91. மக்கள் இயங்கி* மக்கள் ஏறும் இயங்கு வண்டி வழியே போகும் - பின் வழியே மீளும் மக்கள் அதிலே நிறைந்திருப்பார் வழியே போகும் - பின் வழியே மீளும். மக்கள் இடையில் ஏறிக் கொள்வார் வழியே போகும் - தன் வழியே மீளும். மக்கள் இடையில் இறங்குவார்கள் வழியே போகும் - பின் வழியே மீளும். வண்டியோட்டி சுக்கான் பிடிக்க வழியே போகும் - பின் வழியே மீளும். வண்டிக் கணக்கர் மேற்பார்வையில் வழியே போகும் - பின் வழியே மீளும். வண்டி கெட்டால் தள்ளிவிட்டால் வழியே போகும் - பின் வழியே மீளும். வண்டியிலே வசதி உண்டு வழியே போகும் - பின் வழியே மீளும். - இளைஞர் இலக்கியம், ப.75, 76, 1958 **பஸ் 92. பொறிமிதி வண்டி* பொறிமிதி வண்டி படபட என்று போவதைப் பாருங்கள் குறுகிய இடத்தில் ஒருவர் உட்கார்ந்து போவதைப் பாருங்கள் பிறைபோல் வளைபிடி இருமுனை பிடித்துப் போவதைப் பாருங்கள் பொறிமேல் நினைவொடு மிதிமேல் காலொடு போவதைப் பாருங்கள் பொறிதான் இழுக்கச் சுக்கான் திருப்பப் போவதைப் பாருங்கள் பொறிபழு தானது சுக்கான் உடைந்தது விழுவதைப் பாருங்கள் நெறிதவ றிட்டார் நினைவு மறந்தார் விழுவதைப் பாருங்கள் முறையே கருவிகள் முற்றும் கெட்டன விழுவதைப் பாருங்கள். - இளைஞர் இலக்கியம், ப.77, 1958 * ஈருருளை வண்டி (மோட்டார் சைக்கிள்) 93. மிதிவண்டி1 மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமி - கடு வெய்யிலிலே நீந்துகின்றார் கந்தசாமி மிதிவண்டியில் போவதற்கே கந்தசாமி - அந்த மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமி மிதிவண்டியில் போகத்தக்க வேலையேயில்லை - அந்த வெய்யிலிலே நீந்துகின்றார் கந்தசாமி மிதிவண்டியும் கல்லில்பட்டு வீழ்ந்துவிட்டதால் - அவர் மிதிவண்டிமேல் வீழ்ந்துவிட்டார் கந்தசாமி. - இளைஞர் இலக்கியம், ப.78, 1958 94. சரக்கேற்றும் பொறி இயங்கி2 அறுசீர் விருத்தம் சரக்கேற்றும் பொறிஇயங்கி பார்பார் தடதடென்றே ஓடுவதைப் பார்பார் சரக்கெல்லாம் சத்தத்துக்கே ஏற்றுவர் தடதடென்றே ஓடுவதைப் பார்பார் சரக்குக்கே உடையவரின் வீட்டில் சரக்குகளை இறக்குகின்றார் பார்பார் சரக்கேற்றிப் போனதற்கே சத்தம் தருகின்றார் எண்ணிஎண்ணிப் பார்பார். - இளைஞர் இலக்கியம், ப.78, 1958 1. சைக்கிள் 2. லாரி 95. பரிசல் ஆற்றில் பரிசல் அழகாய் ஓடும் அக்கரை இருந்தும் இக்கரை சேரும் நேற்றுப் பரிசலில் பத்துப் பேர்கள் நின்றிருந்தார் உட்கார்ந்திருந்தார் காற்றைப் போலக் கரையை நோக்கிக் கையிற் றுடுப்பை இருபுறம் வலிக்க ஊற்றுக் கோலால் ஒருவன் உந்த ஒருநா ழிகையில் அக்கரை சேர்ந்தது. பரிசல் ஓட்டும் மூன்று பேரும் பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும் கிருகிரு வென்றே ஆற்று வெள்ளம் கிழக்கை நோக்கி இழுத்துப் போய்விடும் ஒருகால் அந்த வட்டப் பரிசலை உருட்டி விட்டுப் போகக் கூடும் பரிசல் ஓட்டும் மூன்று பேரும் பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும். - இளைஞர் இலக்கியம், ப.79, 1958 96. கப்பல் சிங்கப் பூரின் கப்பல் - அது சிட்டாய்ப் பறக்கும் கப்பல் எங்கள் ஊரி லிருந்தே - அங் கெட்டு நாளில் சேரும் தங்கி யிருக்க அறையும் - அதில் சாப்பிட நல்ல அறையும் அங்கும் இங்கும் சர்க்கரை - மிக அடுக்க இடமும் உண்டு. கப்பல் ஓட்டும் அறிஞர் - அவர் கையாட்கள் பலர் உண்டு கப்பல் மேலே நின்றால் - பெருங் கடலின் அழகு தெரியும் எப்பக்கத்திலும் தண்ணீர் அதை எடுத்துக் குலுக்கும் காற்று தப்பு வழிசெல் லாமல் - அதைத் தடுப்பது தான் திசை காட்டி. - இளைஞர் இலக்கியம், ப.80, 1958 97. புகைவண்டி ïG¥ã1 வண்டி இழுத்தோடும் இருபது பெட்டிகள் இணைந்தோடும் வழியில் ஓடும் மரவட்டை மாதிரி ஓடும் புகைவிட்டே! இழுப்பி வண்டியை ஓட்டுபவர் இரண்டு மூன்று கையாள்கள் விழிப்போ டிருக்கத் தான் வேண்டும் இல்லா விட்டால் பழி நேரும். இணைந்த பெட்டி வண்டிகளில் இருப்பார் அவர்பேர்2 கண்காணி மணியோ டும்சரி வகையோடும் வண்டி புறப்பட லாம்என்று அணியாய்ப் பச்சைக் கொடி அசைப்பார் அழிவுக்குச் செங்கொடி அசைப்பார் அணைந்து போகும் நல்வாழ்வே அறிவும் விழிப்பும் குறைவானால். - இளைஞர் இலக்கியம், ப.81, 1958 1. எஞ்சின், 2. கார்ட் 98. புகைவண்டி போனது புகைவண்டி வரும்நேரம் ஆனதே பொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே. நகை எங்கே எனப் பதைத்தாள் நாராயணன் பெற்ற பெண்ணாள் தகதகஎன் றாடு கின்றாள் சரிகைச் சேலை தடவுகின்றாள் முகத்தின் எதிரில் இருக்கும் பெட்டியை முன்னறையில் தேடுகின்றாள் மிகமிகமிகப் பரபரப்பாய் வேலைக்காரி யிடம் சொல்வாள்; புகைவண்டி வரும்நேரம் ஆனதே பொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே கூசா எங்கே சீசா எங்கே குங்குமச் சிமிழ் போன தெங்கே தோசை எங்கே நேற்றிடித்த தூளெங்கே தூக்கெங்கே மேசையிலே பணமெங்கே வெள்ளிப் பெட்டியிற் சீப்பெங்கே? ஆசை வண்டி ஓசையுடன் அடுத்த நிலையம் போன பின்பும் புகைவண்டி வரும்நேரம் ஆனதே பொட்டு வைக்க எனக்கு மறந்து போனதே. - இளைஞர் இலக்கியம், ப.82, 1958 99. வானூர்தி வான ஊர்தி வான ஊர்தி எங்கே போகின்றாய்? - நான் வாடிக்கையாய்ப் போவதே இ லங்கை மாநகர். பானை ஒன்று குறுக்கில் கண்டால் என்ன செய்குவாய்? - அட பானை ஏது சட்டி ஏது வானவெளியிலே ஆனை ஒன்று குறுக்கில் வந்தால் என்ன செய்குவாய்? - அட ஆனை ஏது பூனை ஏது வானவெளியிலே கானலுக்கே இளைப்பாற எங்கே தங்குவாய்? - நான் போனவுடன் கீழிறங்கிப் பொழுது போக்குவேன். எத்தனைபேர் இருக்கின்றார்கள் வானஊர்தியே? - ஆம் இருபதுபேர் இருக்கின்றார்கள் என்வயிற்றிலே. மெத்தஉயரத் தேயிருந்து விழுந்திடுவாயோ? - என் மேல் இருக்கும் பொறிகெட்டால் விழுந்திடுவேனே. மொய்த்துப்புயல் வந்து விட்டால் என்ன செய்குவாய்? - அந்த மொய்த்த புயல் தாண்டுவது ஓட்டுவார் திறம். - இளைஞர் இலக்கியம், ப.83, 84, 1958 100. மின்னாற்றல் மின்னாற்றல் ஆக்கும் நிலையம் - அது மிகமிகப் பெரியது பாராய் சின்ன பல கம்பிகள் வழியால் - அது செலுத்திடும் மின்னாற்றல் ஒளியை என் வீட்டில் எரியும் விளக்கும் என் ஊரில் எரியும் விளக்கும் மின்னாற்ற லால்எரியும் அந்த மின்னாற்றல் வராவிடில் அவியும் என்வீட்டில் ஒவ்வோர் விளக்கும் எரிவது மின்னாற்ற லாலே என்வீட்டுச் சுவரிலொரு பெட்டி இருக்கும்அப் பெட்டியில் முளைகள் ஒன்றினைத் தாழ்த்தினால் எரியும் உடனே அழுத்தினால் அவியும் முன்விளக் கின்வசதி குறைவே மின்விளக் கின்வசதி மிகுதி. - இளைஞர் இலக்கியம், ப.84, 1958 தொழில் 101. குயவர் தரையோடு தரையாய்ச் சுழலும் உருளை! அதிலே குயவர் செய்வார் பொருளை! கரகர வென்று சுழலும் அதன்மேல் களிமண் வைத்துப் பிடிப்பார் விரலால்! விரைவில் சட்டி பானைகள் முடியும் விளக்கும் உழக்கும் தொட்டியும் முடியும் சுருக்காய்ச் செய்த பானை சட்டி சூளை போட்டுச் செய்வார் கெட்டி. உரித்த மாம்பழத் தோலைப் போலே உருக்கள் மண்ணாற் செய்யும் வேலை இருக்கும் வேலை எதிலும் பெரிதே! இப்படிச் செய்தல் எவர்க்கும் அரிதே! சிரிப்ப துண்டு மண் பாண்டத்தைச் சிறுமை என்று நினைப்ப துண்டு பெருத்த நன்மை மண்பாண்டத்தால் சமையல் செய்து சாப்பிடு வதனால்! - இளைஞர் இலக்கியம், ப.87, 88, 1958 102. தட்டார் தோடிழைப்பார் தட்டார் தொங்கல் செய்வார் தட்டார் ஆடி அசைக்கும் கைக்கு - நல்ல அழகு வளையல் செய்வார் போடப் போட ஆசை - தரும் புதிய சங்கிலி செய்வார். ஓடைத்தா மரைபோல் - தலை உச்சி வில்லை செய்வார். தங்க நகை செய்வார் - அவர் வெள்ளி நகை செய்வார் வங்கி நல்ல மாலை - கெம்பு வயிரம் வைத்துச் செய்வார் எங்கள் ஒட்டி யாணம் - அதை இன்னும் திருத்த வேணும் எங்கும் புகழப் பட்டார் - நல்ல இழைப்பு வேலைத் தட்டார். - இளைஞர் இலக்கியம், ப.89, 1958 103. கொத்தனார் கடைக்கால் எடுத்துக் கல்லை அடுக்கி இடையிடைச் சேற்றை இட்டுப் பரப்பி நொடியில் லாமல் நூலைப் பிடித்து மடிவில்லாமல் மட்டம் பார்த்துத் தரையில் தொடங்கினார் சுவரை! முன்பு பெரிய தாக வளர்ந்தது பின்பு தெருவில் வீடுகள் கொத்தனார் வேலை தெருவும் ஊரும் கொத்தனார் வேலை. - இளைஞர் இலக்கியம், ப.90, 1958 104. கருமார் கடமட என்று பட்டறை அதிரக் கருமார் வேலை செய்வார் குடமும் குண்டானும் குண்டும் கெண்டியும் கூசா தவலை செய்வார் நெடுவடி தட்டும் நிறமாய்ச் செம்பும் நீண்ட விளக்கும் செய்வார் ஒடியாச் செம்பால் பித்தளை யாலே உயர்ந்த பொருள்கள் செய்வார். - இளைஞர் இலக்கியம், ப.90, 1958 105. தச்சர் மரத்தைச் செற்றுவார் மரத்தை அறுப்பார் மரத்தில் பெட்டி செய்வார். சரத்தைச் செய்வார் சன்னல் செய்வார் சாய்வுநாற் காலியும் செய்வார். அரத்தை எடுப்பார் வாள் அராவுவார் அலகைத் தீட்டி முடிப்பார். துரப்ப ணத்தைச் சுழற்றிப் பார்ப்பார் தூக்கி மரத்தைத் துளைப்பார். பாரும் செய்வார் படியும் செய்வார் தேரும் செய்வார் தச்சர். ஏருஞ் செய்வார் ஏற்றம் செய்வார் யாரும் விரும்பும் தச்சர். ஊருக் கெல்லாம் உலகுக் கெல்லாம் உயிராகிய தொழில் தச்சு. சீருக் கொல்லாம் சிறப்புக் கெல்லாம் செம்மையில் உரியவர் தச்சர். - இளைஞர் இலக்கியம், ப.91, 92, 1958 106. கொல்லர் நிலத்தை வெட்டி எடுப்பார் - அதில் நிறைய இரும்புத் தூளே கலந்திருக்கும் அதையே - பின் காய்ச்சிக் காய்ச்சி வார்ப்பார் வலுத்த கம்பி வார்ப்பார் - அதில் வலுத்த தகடும் வார்ப்பார் மெலுக்கு வளையம் வார்ப்பார் - மிகு மிடுக்கு வளையம் வார்ப்பார். ஆணி வகைகள் செய்வார் - அதில் அரங்கள் எல்லாம் செய்வார் ஏணி வகைகள் செய்வார் - அதில் ஏரின் முனையும் செய்வார் தோணி தூக்கும் கருவி - கப்பல் தூக்கும் கருவி செய்வார் வாணல் சட்டி வண்டி - பெரு வான ஊர்தி செய்வார். இரும்பே இல்லா விட்டால் - இங் கென்ன வேலை நடக்கும்? கரும்பு வெட்டும் கொடுவாள் - பெருங் காடு வெட்டும் கத்தி திரும்பு கின்ற பக்கம் - எங்கும் தெரியும் பொருள்கள் எல்லாம் இரும்பு கொண்ட பொருள்கள் - அவை விரும்பத் தக்க பொருள்கள். இரும்பு வேலை செய்வோர் - அவர் எல்லாம் கொல்லர் ஆவார் இருந்து வேலை செய்யும் - அவர் இடமே உலைக்கூடம் திருந்திய தென்றால்ஊர் - அவர் செய்த தொண்டா லேதான் வருந்தித் தொழில் செய்வார் - அவர் வாழ்க வாழ்க வாழ்க. - இளைஞர் இலக்கியம், ப.93, 94, 1958 107. இலை தைத்தல் வேலை யில்லா நேரம் வீட்டில் உள்ளோர் யாரும் ஆலிலையைத் தைப்பார் அதைக் கடையில் விற்பார் மூலையிலே குந்தி இருப்பவ ளோர் மந்தி வேலை செய்யும் பெண்கள் வீட்டின் இரு கண்கள். - இளைஞர் இலக்கியம், ப.94, 1958 108. கூடை முறம் கட்டுகின்ற குறத்தி கூடே மொறே கட்டலியே என்று குளறிக் கொண்டு வருவாள் - அந்தக் குறத்தியிடம் கூடை முறம் கொடுத்துக் கட்டச் சொல்வோம். கூடை களில் மூங்கிற் கூடை கசங்கு, பிரப்பங் கூடை - அவை கூட்டு விட்டால் கட்டு விட்டால் கொடுத்துத் திருத்தச் சொல்வோம். மாடு தவிடு தின்னுங் கூடை மற்ற இறை கூடை மாவு சலிக்கும் சல்லடைகள் வட்டத் தட்டும் உண்டு. பாடு பட்டு வாங்கி வைத்த கூடை முறம் எல்லாம் பாணி கெடா திருக்க வேண்டும் சாணி மெழுக வேண்டும். - இளைஞர் இலக்கியம், ப.95, 1958 109. குடை பழுது பார்ப்பவர் மழைக்கும் குடை வேண்டும் - நல்ல வெய்யி லுக்கும் வேண்டும் - குடை ஒழுக்கிருந்தால் உடைந்தி ருந்தால் என்ன செய்ய வேண்டும்? அழைக்க வேண்டும் உடனே - குடை பழுது பார்க்கும் அவரை கிழிந்த துணியை மாற்றா விட்டால் கேட்பதுதான் எவரை? கிழிந்த துணியைப் புதுக்கு - கம்பிக் கீல் உடைந்தால் பொருத்து வழியில் போவார் கூவிக் கொண்டே வரவழைத்துத் திருத்து. கழி உடைந்தால் மாற்று - தடி கழன்றி ருந்தால் மாட்டு பழுதில் லாமல் அழுக்கில் லாமல் அதை நீ காப்பாற்று. - இளைஞர் இலக்கியம், ப.96, 1958 110. சாணை பிடிக்கவில்லையா? சாணை பிடிக்க வில்லையா? சாணை பிடிக்க வில்லையா? சரசர என்று பொரி பறக்கச் சாணை பிடிக்க வில்லையா? வீணாய்க் கிடக்க விடுவதா? வீணாய்க் கிடக்க விடுவதா? வீர வாளும் கூர் மழுங்கி வீணாய்க் கிடக்க விடுவதா? ஆணி கெட்டுப் போனதா? அரிய முடிய வில்லையா? அரியும் கத்தி அரிவாள் மணை ஆணி கெட்டுப் போனதா? ஏணி வைத்த சாணைக்கல் எடுத்துக் கொண்டு போகின்றார் இட்டுக் கொண்டு வந்து நீங்கள் சாணை பிடிக்க வில்லையா? - இளைஞர் இலக்கியம், ப.97, 1958 111. பெட்டி பூட்டுச் சாவி பூட்டுக்குச் சாவி போட வில்லையா? வீட்டுக்குப் பூட்டு தைக்க வில்லையா? கேட்டுக் கொண்டே போகின்றார் இப்படியே! நாட்டுக்கு நல்ல ஒரு பாட்டாளி அவர்! கதவின் பூட்டைக் கழற்றிப் பார்த்தார் அதை அராவிப் பழுது பார்த்தார். புதிய சாவி காணாமற் போனதால் அதற்கும் ஒன்று செய்து கொடுத்தார். நாலு பணம் வேண்டும் கூலி என்றார் நாலுபணம் இந்தா கூலி என்றோம் வேலை முடிந்ததும் பெட்டி எடுத்தார் மேலும் அப்படியே கூவி நடந்தார். - இளைஞர் இலக்கியம், ப.98, 1958 112. வடை தோசை அண்டை வீட்டு நடையில் அழகாய்ச் சுட்ட வடையில் துண்டாய் இரண்டு வாங்கித் தோசை நாலு வாங்கிக் குண்டா னுக்குள் வைத்துக் கொடுப்பேன் காசை எடுத்து அண்டை வீட்டார் உதவி அடட மிகவும் பெரிது. - இளைஞர் இலக்கியம், ப.99, 1958 113. எண்ணெய் எள்ளை நன்றாய்க் கழுவி எடுத்து வெயிலில் துழவி அள்ளிப் புடைத்துச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுப்பார் தெள்ளத் தெளிந்த எண்ணெய்க்கே சேர்ந்த திப்பி பிண்ணாக்கே உள்ள எண்ணெய் வீட்டுக்குப் பிண்ணாக் கெல்லாம் மாட்டுக்கு. - இளைஞர் இலக்கியம், ப.99, 1958 114. அப்பளம் சப்பளம் போட்டுக் குந்தி அம்மா அப்பளம் போட்டார் சும்மா சும்மா கொப்புளம் காணப் பொரித் தெடுத்தார் கொம்மாளம் போட்டுத் தின்னக் கொடுத்தார் ஒப்பனை யாக உளுத்த மாவை உருட்டி உருட்டி வைப்பது தேவை அப்பள மணையில் எண்ணெய் தடவி அதில் உருட்ட உருளும் குழவி. - இளைஞர் இலக்கியம், ப.100, 1958 உயிர்கள் 115. உயிர்கள் பிளவு பட்ட குளம்புடையது மாடு பிளவு படாக் குளம்புடையது குதிரை முளைக்கும் இருகொம் புடையது மாடு முழுதுமே கொம்பில் லாதது குதிரை. பளபளென்று முட்டையிடும் பறவை பட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு வெளியில் வராக் காதுடையது பறவை வெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை நீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம் நீர்நிலையில் குட்டிபோடும் விலங்கு நிறை மீன்கள் முட்டைஇடும் நீரில். நீரிலுமே பாம் பிருப்பதுண்டு நிலத்திலும் பாம் பிருப்ப துண்டு ஊரிலுள்ள பாம்போடும் குட்டி உள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை. - இளைஞர் இலக்கியம், ப.103, 1958 116. உயிர்கள் காகா என்று கத்தும் காக்கா கோ கோ என்று கூவும் கோழி வள்வள் என்று குரைக்கும் நாய்தான் உள்ளூர்ப் பன்றி உர் உர் என்னும் குக்கூ என்று கூவும் குயில்தான் தக்கத் தாஎன ஆடும் மயில்தான் கறுகுறு என்று கொஞ்சும் புறாவே கிறுகீர் என்று சுற்றும் செக்கு தளபள என்று கொதிக்கும் சோறு மளமளா என்று வருமே மழைதான் தடாதடா என்றே இடிக்கும் இடிதான் கடபடா என்று கதறும் கடலே அம்மா என்றே அழைக்கும் கறவை தும்தும் என்று தும்முவர் மக்கள் ஒய்ஒய் என்றே ஊதும் வண்டே ஞைஞை என்று நவிலும் பூனை அக்கக் காஎன அழைக்கும் கிளிகள் தெற்குத் தமிழ்தான் யாழின் துளிகள். - இளைஞர் இலக்கியம், ப.104, 1958 117. நாய் வளர்த்தல் நாயும் நல்ல நாய்தான் - அது நன்றி யுள்ள நாய்தான் வாயும் தூய்மை இல்லை - அது வள்வள் என்று குரைக்கும் பாயில் கழிவு கழிக்கும் - அது பல்லால் வேட்டியைக் கிழிக்கும் நாய் வளர்ப்பதை விட்டு - மிக நலமடைந்தான் கிட்டு. - இளைஞர் இலக்கியம், ப.104, 1958 118. நாய் நன்றி யுடைமை, நம்பினோர் வாழத் தன்னுயிர் மாய்க்கவும் தயங்காப் பண்பு கண்ணிமை போலக் காத்தற் றொழில்செயல், மண்மிசை உயிருள வரையிலுந் திரிதல், ஆதரிப் போனிடம் அன்புணா உண்ணுதல், அவனையே சூழ்தல், அவன்நலம் நாடுதல், அனைத்தும் நாயின் அருங்குண மாமே. - இளைஞர் இலக்கியம், 1958 119. பசுப் பயன் பசுவே கறக்கும் பாலை - அந்தப் பாலைத் துவைத்தால் தயிராம் விசையாய்த் தயிரைக் கடைந்தால் - நல்ல வெண்ணெய்யும் மோரும் கிடைக்கும் கசக்கா வெண்ணெய்யைக் காய்ச்சி - மணம் கமழும் நெய்யை எடுப்பார் பசுவின் பால்தயிர் வெண்ணெய் - மோர் பசுநெய் எல்லாம் உணவே. - இளைஞர் இலக்கியம், ப.105, 1958 120. வண்டு பாடிக் கொண்டே பறக்கும் வண்டு பறந்து கொண்டே பாடும் வண்டு தேடிக் கொண்டே திரியும் வண்டு தேனைக் குடிக்கப் பறக்கும் வண்டு சாடிக் குள்ளே நுழைவது போல தாமரையில் நுழையும் வண்டு மாடிக் குள்ளே விருந்து போல மலரில் தேனை உண்ணும் வண்டு. தங்கப் பொடியில் ஆடும் வண்டு சங்கத் தமிழைப் பாடும் வண்டு செங்குத் தாகப் பறக்கும் வண்டு செந்தாள் எங்கும் சிதறும் வண்டு எங்கும் மணத்தைப் பரவச் செய்யும் இனிய தொண்டு புரியும் வண்டு மங்குவ தில்லை வண்டும் தேனும் மணமும் பாட்டும் அந்தக் குளத்தில். - இளைஞர் இலக்கியம், ப.106, 1958 121. பறவைகள் மாடத்தில் தங்குவது மாடப் புறா - நல்ல மரத்தினில் தங்குவது மணிப்புறா கூடத்தில் உலவிடும் சிட்டுக் குருவி - ஏரி குளத்தில் முழுகிவரும் பட்டுச் சிரவி கூடு துலங்க வைக்கும் கொஞ்சும் கிளி - வீட்டுக் கொல்லையில் காக்கைகருங் கொட்டாப்புளி ஆடப்பிறந்ததொரு சோலைமயில் - பண் பாடப் பிறந்ததொரு நீலக் குயில். கரிய படம்விரிக்கும் வான்கோழி - அதி காலை இசைத்திடும் தேன் கோழி தரையிலும் நீரிலும் உள்ள வாத்து - நாம் கண்டால் சிரிப்புவரும் குள்ள வாத்து ஒருவெண் தாழம்பூ வுக்கு - நிகர் உரைத்திடத் தக்கதொரு வெண்கொக்கே தெருவிலும் வீட்டிலும் காட்டிலுமாய் - அவை திரிந்திடும் பலபல அழகழ காய். - இளைஞர் இலக்கியம், ப.107, 1958 122. சிச்சிலி நேரில் சிச்சிலி பறக்கும் - குள நீரில் மீன் சிறக்கும் நீரில் மீனை விழுங்கிப் - பின் நேரில் சிச்சிலி பறக்கும் ஈயும் வந்து மேயும் - அதை மாயப் பல்லி பாயும் வாயின் ஈரம் காயும் - முன்ஓர் ஈயும் வந்து மேயும். - இளைஞர் இலக்கியம், ப.108, 1958 123. கோழி வளர்த்தல் பண்ணையிலே கோழி - மிகப் பரிந்து வளர்க்க வேண்டும் திண்ணையிலே கோழி - வந்து திரிந்தாலும் ஓட்டு. கண்ணுக்கும் பிடிக்காது - அது கழிக்கும் கழிவைக் கண்டால் - அது மண்ணும் குப்பையும் சீய்க்கும் - எங்கும் மட்டத் தூசி ஆக்கும். - இளைஞர் இலக்கியம், ப.108, 1958 124. கிளி வளர்த்தல் பச்சைக் கிளியை வளர்த்து வந்தான் பழங்கள் எல்லாம் கொடுத்து வந்தான் குச்சிக் கூட்டைத் திறந்து விட்டான் கூட்டில் அடைக்க மறந்து விட்டான். நச்சுப் பூனை பிடித்துத் தின்றது நாயும் அங்கே குலைத்து தின்றது பிச்சை முத்துப் பட்டான் தொல்லை பிறகு கிளிகள் வளர்ப்ப தில்லை. - இளைஞர் இலக்கியம், ப.109, 1958 125. சிட்டுக் குருவி கெட்டிக் காரச் சிட்டுக் குருவி நெட்டைத் துடைப்பக் கட்டை உருவிப் பட்டுச் சேலை இழையைச் சேர்த்தும் கொட்டிய பஞ்சில் கொஞ்சம் கோத்தும் எட்டாச் சுவரை ஒட்டிய வாரையின் முட்டு முடுக்கின் நட்ட நடுவில் கட்டிய கூட்டில் முட்டையும் இட்டது ஒட்டிக் காத்துக் குஞ்சும் பொறித்தது. - இளைஞர் இலக்கியம், ப.110, 1958 126. காக்கை ஓயாத நாக்கா? ஓய்ந்திருப்பாய் காக்கா? வாயில் என்ன பாக்கா? வாழைக் கச்சை மூக்கா? ஆயாவைத்த தட்டை அதிலி ருக்கும் பிட்டை நீபண்ணாதே சட்டை நினைக்காதே திருட்டை. - இளைஞர் இலக்கியம், ப.111, 1958 127. ஆட்டப் புறா ஆடும் புறா - பார் ஆடும் புறா - தன் அழகு சிறகுவிரித் தாடும் புறா. வேடிக்கை பார் - நல்ல வேடிக்கை பார் - முத்து வெள்ளைப் புறா காட்டும் வேடிக்கை பார். தேடாச் செல்வம் - அது தேடாச் செல்வம் - அதன் சின்னக் காலும் மின்அடகும் தேடாச் செல்வம் மேடைப் புறா - மணி மேடைப் புறா - படம் விரித்துக் களித்தாடும் மேடைப் புறா! - இளைஞர் இலக்கியம், ப.112, 1958 128. எலிப்பொறி எலிப்பொறியில் போளி - அதை இழுத்தது பெருச் சாளி எலிப் பொறியின் கதவு - தான் சாற்றிக் கொண்டது பிறகு. ஒளிந்தது பார் உள்ளே - அது வரப் பார்த்தது வெளியே வலியக் கோணியில் பிடித்தார் - அதை மாண்டு போக அடித்தார். - இளைஞர் இலக்கியம், ப.113, 1958 129. வேப்பமரத்திற்குக் குடிக்கூலி வீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா வேப்ப மரத்தில் தன் மூக்கால் கூட்டைக் கட்டித் தீர்த்தவுடன் குப்பன் அதையே பார்த்தவுடன் கூட்டைக் கலைக்க வேண்டினான் குடியைக் கெடுக்கத் தூண்டினான் வீட்டுக் காரர் சீறினார் வேண்டாம் என்று கூறினார். அரிதாய் முட்டை இட்டது அப்புறம் குஞ்சு பொறித்தது பெரிதாய்க் குஞ்சு பறந்தது பிறந்த இடத்தை மறந்தது சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள் சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள் சரியாய் நூறு ரூபாயின் தாளும் கண்டு மகிழ்ந்தார்கள். - இளைஞர் இலக்கியம், ப.114, 1958 தாலாட்டும் துயிலெழுப்பும் 130. தாலாட்டு (M©) யானைக் கன்றே தூங்கு - நீ யாதும் பெற்றாய் தூங்கு தேனே தமிழே தூங்கு - என் செங்குட்டு வனே தூங்கு வானவ ரம்பா நீயே - மிக வளைத்துப் பார்க்கின் றாயே ஆனஉன் விழியை வைத்தே - உன் அழகிய இமையால் சாத்து. - இளைஞர் இலக்கியம், ப.117, 1958 131. தாலாட்டு (bg©) பட்டுப் பாப்பா தூங்கு - நீ பாலும் குடித்தாய் தூங்கு மொட்டில் மணக்கும் முல்லை - என் முத்தே என்ன தொல்லை? சிட்டாய் ஆடிப் பறந்தாய் - உன் சிரிப்பால் எங்கும் நிறைந்தாய் பிட்டும் தருவேன் தூங்கு - என் பெண்ணே கண்ணே தூங்கு. - இளைஞர் இலக்கியம், ப.117, 1958 132. தாலாட்டு (bghJ) தொட்டிலில் ஆடும் கிளியே - என் தூய தமிழின் ஒளியே கட்டிக் கரும்பே தூங்கு - முக் கனியின் சாறே தூங்கு தட்டிற் பாலும் சோறும் - நான் தந்தே னேநாள் தோறும் சுட்டப் பத்துடன் வருவேன் - நீ தூங்கி எழுந்தால் தருவேன். - இளைஞர் இலக்கியம், ப.118, 1958 133. பள்ளி எழுச்சி (bg©) இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல் லாமே மாறிப் போனதே - இன்னந் தூக்கமா... காலைக் கடனை முடிக்க வேண்டும் கடியக் கொஞ்சம் படிக்க வேண்டும் நீளக் கூந்தல் வார வேண்டும் நினைத்தது போல் உடுத்த வேண்டும் - இன்னந் தூக்கமா... நேரத் தோடு போகின்றார் நிறையப் பெண்கள் தெருவில் பார் காரியத்தில் கண்ணாயிரு கைகாரப் பெண்ணாயிரு. - இன்னந் தூக்கமா... - இளைஞர் இலக்கியம், ப.119, 1958 134. பள்ளி எழுச்சி (M©) இன்னந் தூங்கு தம்பி - நீட்டி இழுத்த இரும்புக் கம்பி. சின்னக் குளத்தில் மட்டை போல செற்றிப் போட்ட கட்டை போலத் தன்னை மறந்து தலைய ணைமேல் ஒட்டிக் கொண்ட அட்டைபோல - இன்னந் எழுந்த வெய்யிலை எண்ண வேண்டாம் என்னைச் சட்டை பண்ண வேண்டாம் பழந்த மிழ்த்தேன் குடிக்க வேண்டாம் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டாம். - இன்னந் - இளைஞர் இலக்கியம், ப.122, 1958 135. கை வீசல் கைவீ சம்மா கைவீசு கடலை வாங்கலாம் கைவீசு நெய் உருண்டை கைவீசு நிறைய வாங்கலாம் கைவீசு பொய்யா சொல்வேன் கைவீசு போளி வாங்கலாம் கைவீசு வெய்யில் போகும் கைவீசு வெளியில் போகலாம் கைவீசு. - இளைஞர் இலக்கியம், ப.120, 1958 136. தட்டாங்கி தட்டாங்கி தட்டாங்கி தலைமேலே தாழம்பூ பட்டாலே சட்டை பஞ்சாலே சல்லடம் செட்டாக அணிந்து சீராக முந்தி தட்டுநீ தட்டு தட்டாங்கி தட்டாங்கி. - இளைஞர் இலக்கியம், ப.121, 1958 சிரிப்பு 137. மின்விளக்கு நின்றது சாப்பிடும் போது விளக்கு நின்றது சட்டிப் பொரியலைப் பூனை தின்றது கூப்பிடக் கேட்ட அம்மா வரும்போது கொம்பினில் மோதக் காதுகி ழிந்தது காப்பைக் கழற்றினான் ஐயோ என்று கதறினான் தம்பி தெருவில் நின்று கோப்பை உடைந்தது பானை உருண்டது கொட்டாப் புளிஎலி மேலேபு ரண்டது. அறைவிட்டு வந்த அப்பாவின் பல்லை அக்கா தலைஉடைத் திட்டது தொல்லை குறைநீக்க வந்த என் கூனிப் பாட்டி குந்தாணி மேல்உருண் டாள்தலை மாட்டி உறைவிட்டு நீங்கிய கத்தியைப் போல ஒளிமின்விளக்குமுன் போல்வந்த தாலே நிறைவீட்டில் எல்லார்மு கத்திலும் மகிழ்ச்சி நிறைந்தது நிறைந்தது பறந்ததே இகழ்ச்சி. - இளைஞர் இலக்கியம், ப.125, 1958 138. நெருப்புக்குச்சிப் பெட்டி நெருப்புக் குச்சிப் பெட்டி - அதில் நெருப்புக் குச்சியைத் தட்டி இருக்கும்விழல் தட்டி - மேல் எறிந்தான் ஒரு மட்டி இருக்கும்விழல் தட்டி - பற்றி எரிந்ததனால் bjh£o* இரட்டைப்பூனைக் குட்டி - எல்லாம் எரிய என்ன அட்டி? - இளைஞர் இலக்கியம், ப.126, 1958 139. சிரித்த பொம்மைகள் அம்மா முறுக்குச் சுடும் போதே அழகன் ஒன்றைத் தெரியாமல் கைம்மேல் வைத்து மறைவினிலே கடித் திருந்தான் அறையினிலே சும்மா இருந்த அவன் அக்கா சுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா கைம்மேல் வைத்தே எடுத்தோடி அதே அறை புகுந்தாள் இடந்தேடி. சொல்லா தேஎன் றான் அழகன் சொல்லா தேஎன் றாள் அக்கா தில்லு முல்லுக் காரர்கள் தின்று முடித்து விட்டவுடன் எல்லா முறுக்கையும் சுட்டே எடுத்து வந்தம்மா வைத்தார் கொல்லென்று சிரித்தனர் இரு பொம்மை கொட்ட மறிந்தார் அவர் அம்மா. - இளைஞர் இலக்கியம், ப.127, 1958 * தொட்டி - மரத்தொட்டி 140. பெருமாள் மாடு தவிடா வேண்டும் புரும் புரும் புரும் புரும் தலையை அசைத்தது பெருமாள் மாடு - அவலா வேண்டும் புரும் புரும் புரும் புரும் தலையை அசைத்தது பெருமாள் மாடு - சுவரா வேண்டும் புரும் புரும் புரும் புரும் துரத்தி வந்தது பெருமாள் மாடு - துவரை வேண்டுமா புரும் புரும் புரும் புரும் தலையை அசைத்தது பெருமாள் மாடு - சல்லி வேண்டுமா புரும் புரும் புரும் புரும் தலையை அசைத்தது பெருமாள் மாடு - வெல்லம் வேண்டுமா புரும் புரும் புரும் புரும் தலையை அசைத்தது பெருமாள் மாடு - புல்லா வேண்டும் புரும் புரும் புரும் புரும் தலையை அசைத்தது பெருமாள் மாடு - பல்லக்கு வேண்டுமா புரும் புரும் புரும் புரும் பாய வந்தது பெருமாள் மாடு - மாப்பிள்ளை போல புதிய வேட்டி கேட்பாயா நீ புரும் புரும் புரும் புரும் கீழே குனிந்தது பெருமாள் மாடு - சோப்ப ளாங்கியா புரும் புரும் புரும் புரும் துரத்தி வந்தது பெருமாள் மாடு - பாப்பா போட்டுக் கிழித்த சட்டை கேட்பாயா நீ புரும் புரும் புரும் புரும் தலையை அசைத்தது பெருமாள் மாடு - - இளைஞர் இலக்கியம், ப.128-130, 1958 141. குடுகுடுப்பைக்காரன் குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நல்ல காலம் பிறக்கும் குடுகுடு எல்லா நலமும் ஏற்படும் குடுகுடு பொல்லாங் கெல்லாம் போனது குடுகுடு தொல்லை கொடுத்தவர் தொலைந்தார் குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு காணி விளைச்சல் காணும் குடுகுடு தோணியில் சரக்கு துறையில் குடுகுடு மாணிக்கம் போல் வாழ்வீர் குடுகுடு நாணித் தொலைவர் எதிரிகள் குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு கிழந்த சட்டை கொடுப்பீர் குடுகுடு குழந்தை பிறக்கும் குண்டாய்க் குடுகுடு பழஞ்சிற் றாடை போடுவீர் குடுகுடு தழைந்து தழைந்து வாழ்வீர் குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு. - இளைஞர் இலக்கியம், ப.130, 1958 சிறுகதைப் பாட்டு 142. சிறுகதைப் பாட்டு பால்கறந்தான் முத்தன் - அந்தப் பாலை அங்கே வைத்தான் மூலையிலே தானே - ஒரு முழுத்திருட்டுப் பூனை பாலையெல்லாம் நெட்டி - அந்தப் பாற்செம்பை உருட்டிக் கோலெடுத்த கைம்மேல் - அது குதித்தேறிடும் சுவர்மேல். - இளைஞர் இலக்கியம், ப.133, 1958 143. காக்கை எறும்பு எருமைக் கொம்பில் ஒருகாக்கா ஏறிக் கொண்டதாம் எறும்பை அது கூவிப் பெருமை காட்டிச் சிரித்ததாம். எருமைக் காதில் அந்த எறும்பு புகுந்து கொண்டதாம் எருமை காது வலியால் தன் தலையை அசைத்ததாம். இருந்த காக்கா விரைவாகப் பறந்து விட்டதாம். எறும்பதனைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்ததாம். பெருமை பேசித் திரிந்திடுவார் அது சரியில்லை பின்னால் சிறுமை யடையக் கூடும் அது பெருந் தொல்லை. - இளைஞர் இலக்கியம், ப.134, 1958 144. ஏழ்மை தென்னந் தோப்புக் குள்ளே - அதில் சிறிய குடிசைக் குள்ளே ஒன்றல்ல இரண்டல்ல - மிக ஒழுங்காய் ஏழு பிள்ளை அன்னையோ நோயாளி - நல் அப்பன் தொழிலாளி இன்றைக் கெல்லாம் தொல்லை - அவர் எவரும் சாப்பிட வில்லை. வேலை கிடைக்க வில்லை - தம் வீட்டில் அரிசியும் இல்லை பாலுக் கழும்ஓர் பிள்ளை - நல்ல பருக்கைக் கழும்ஓர் பிள்ளை ஓலைக் குடிசையில் எங்கும் - வாய் ஓயா அழுகை பொங்கும் காலை கிடைத்தது வேலை - பின் கண்டார் கூழை மாலை. - இளைஞர் இலக்கியம், ப.135, 1958 145. நல்ல பாட்டி சின்னஞ் சிறிய தங்கை தெருவில் போன நுங்கை அன்னையிடம் கேட்டாள் அன்னை மறுத்துத் தீர்த்தாள். சின்னஞ் சிறிய தங்கை தெருவில் ஓடி நுங்கை என்னிடத்தில் வாவா என்று கூவி அழைத்தாள். எட்டச் சென்ற பாட்டி கிட்டச் சுமந்து வந்தார் பொட்டும் வேண்டாம் நுங்கே போபோ என்றாள் தங்கை. எட்டச் சென்ற என்னை இதற்கா அழைத்தாய் என்று கொட்டிக் கொண்டே போனார் குலுங்கும் சிரிப்பைப் பாட்டி. - இளைஞர் இலக்கியம், ப.136, 1958 146. குரங்காட்டி கோலை வைத்துக் குதிரை ஏறும் குரங்கு - நல்ல குல்லாய் போட்டு வில்லாய் வளையும் குரங்கு தாலி கட்டிய பெண்ணாய் வரும் குரங்கு - தன் தலை கீழாய் மேல் சுழலும் குரங்கு நீலச் சட்டை போட்டுவரும் குரங்கு - அது நிறையக் காசு கேட்டுவரும் குரங்கு சோலி விட்டுக் குந்திவிடும் குரங்கு - அவன் கோல் எடுத்தால் பின்னும் ஆடும் குரங்கு. - இளைஞர் இலக்கியம், ப.137, 1958 147. பாம்பாட்டி பட்டுச் சட்டைக் காரன் - ஒரு பாம்பாட்டி வந்தான் பெட்டியைத் திறந்தான் - அவன் பெரிய மகுடி எடுத்தான் பட்டி மாட்டுத் jh«ò* - தன் படமெடுத்தது பாம்பு எட்டிக் காசு கொடுத்தேன் - பாம்பைப் பெட்டிக்குள்ளே அடைத்தான். - இளைஞர் இலக்கியம், ப.137, 1958 * தாம்பு - கயிறு 148. பூதம் பூதம் பூதம் பூதம் - அதோ போவது பார் பூதம் பூதம் என்றால் பூதம் - அது புதுமையான பூதம் காத மிருந்து வந்தார் - அவர் கையாற் செய்த பூதம் தோது பட்ட கொம்பைக் - கொண்டு தொகுத்துக் கட்டிய தொம்பை. மாடிக்கு மேல் உயரம் - அது மலையை விட உப்பல் ஆடி வரும் பூதம் - உள் ஆளிருப்ப தாலே ஓடி வரும் பூதம் - ஆள் உள் இருப்ப தாலே வேடிக்கையாய் நடக்கும் - அது வேறொருவன் காலால். கோழி முட்டைக் கண்கள் - பெருங் குந்தாணிபோல் கழுத்தே ஏழுமுழம் கைகள் - ஓர் எருமுட்டை போல் காது கூழைமட்டை மூக்கு - நீள் கொல்லூறுபோல் நாக்கு போழ்தெலாம் இவற்றால் - இங்குப் பூச்சி காட்டும் பூதம். கூடாய்ச் செய்த பூதம் - அந்தக் கூட்டிற் புகுந்த ஒருவன் மாடாய்ச் சுமக்கும் பூதம் - அவன் வந்தால் வரும் பூதம் ஆட ஆடும் பூதம் - அவன் ஆட்டி வைக்கும் பூதம். சோடித்த ஒரு பொம்மை - வந்து தொடுவ துண்டா நம்மை. - இளைஞர் இலக்கியம், ப.139, 140, 1958 149. கெட்ட பொன்னன் ஆட்டி விட்ட ஏணையில் அழகுக் குழந்தை தூங்கையில் பாட்டுப் பாடிக் கதவையே படபட என்று குலுக்கினான் போட்டு டைத்தான் பெட்டியைப் பொத்த லிட்டான் சட்டியை நீட்டுக்கழி தூக்கியே நின்றடித்தான் தகரத்தை. ஆட்டி விட்ட ஏணையில் அழகுக் குழந்தை அலறியே நீட்டி நீட்டி அழுததே நிறையக் கண்ணீர் வடித்ததே கேட்டு வந்தார் அம்மாவும் கிளம்பி வந்தார் அப்பாவும் போட்ட ஓசை யார் என்றார் பொன்ன னைத்தான் சீ என்றார். - இளைஞர் இலக்கியம், ப.141, 1958 150. வாழ்க தமிழ் மொழி வாழ்க! தமிழர் வாழ்க! நமது தாய்நாடு நற்றமிழ் நாடு தமிழரின் கலைகள் தமிழர்நா கரிகம் தமிழர் பண் பாடு தழைத்து வாழியவே! - இளைஞர் இலக்கியம், ப.142, 1958 151. இளையார் ஆத்திசூடி 1. அழுபவன் கோழை 2. ஆவின் பால் இனிது 3. இரவினில் தூங்கு 4. ஈவது மகிழ்ச்சி 5. உள்ளதைப் பேசு 6. ஊமைபோல் இராதே 7. எதையும் ஊன்றிப் பார் 8. ஏசேல் எவரையும் 9. ஐந்திற் கலை பயில் 10. ஒற்றுமை வெல்லும் 11. ஓரம்போ தெருவில் 12. ஔவை தமிழ்த்தாய் 13. கணக்கில் தேர்ச்சிகொள் 14. சரியாய் எழுது 15. தமிழ் உன் தாய்மொழி 16. நல்லவனாய் இரு 17. பல்லினைத் தூய்மை செய் 18. மற்றவர்க் குதவி செய் 19. வண்டி பார்த்து நட 20. கல்வி கற்கண்டு 21. கால் விலங்கு கல்லாமை 22. கிழிந்தாடை தீது 23. கீரை உடற்கினிது 24. குப்பை ஆக்காதே 25. கூனி நடவேல் 26. கெட்ட சொல் நீக்கு 27. கேலி பண்ணாதே 28. கைத்தொழில் பழகு 29. கொடியரைச் சேரேல் 30. கௌவி உமிழேல் 31. சமமே அனைவரும் 32. சாப்பிடு வேளையொடு 33. சிரித்துப் பேசு 34. சீறினாற் சீறு 35. செக்கெண்ணெய் முழுகு 36. சேவல்போல் நிமிர்ந்து நில் 37. சை என இகழேல் 38. சொல்லை விழுங்கேல் 39. சோம்பல் ஒரு நோய் 40. தந்தை சொற்படி நட 41. தாயைக் கும்பிடு 42. தின்பாரை நோக்கேல் 43. தீக் கண்டு விலகி நில் 44. துவைத்ததை உடுத்து 45. தூசியாய் இராதே 46. தென்னையின் பயன்கொள் 47. தேன் ஈ வளர்த்திடு 48. தைப் பொங்கல் இனிது 49. தொலைத்தும் தொலைத்திடேல் 50. தோற்பினும் முயற்சி செய் 51. நரிச் செயல் கான்றுமிழ் 52. நாட்டின் பகை தொலை 53. நினைத்ததை உடன் முடி 54. நீந்தப் பழகு 55. நுணல் வாயாற் கெடும் 56. நூல் பயில் நாடொறும் 57. நெல் விளைத்துக் குவி 58. நேரம் வீணாக்கேல் 59. நைந்த தறுந்திடும் 60. நொய்யும் பயன்படும் 61. நோய் தீயொழுக்கம் 62. பனைப்பயன் பெரிது 63. பாட்டிக்குத் தொண்டு செய் 64. பிறர்நலம் நாடு 65. பீளை கண்ணிற் கொளேல் 66. புற்றிற் கை விடேல் 67. பூச்செடி வளர்த்திடு 68. பெற்றதைக் காத்தல் செய் 69. பேராசை தவிர் 70. பையும் பறிபோம் 71. பொய் பேசாதே 72. போர்த் தொழில் பழகு 73. மாடாடு செல்வம் 74. மிதியொடு நட 75. மீன் உணல் நன்றே 76. முத்தமிழ் முக்கனி 77. மூத்தவர் சொற்கேள் 78. மெத்தெனப் பேசு 79. மேலவர் கற்றவர் 80. மையினம் காத்தல் செய் 81. மொழிகளில் தமிழ் முதல் 82. வள்ளுவர் நூல் பயில் 83. வாழ்ந்தவர் உழைத்தவர் 84. விடியலிற் கண்விழி 85. வீரரைப் போற்று 86. வெல்லத் தமிழ் பயில் 87. வேர்க்க விளையாடு 88. வையநூல் ஆய்வு செய். - இளைஞர் இலக்கியம், 1958 152. தாய் தன் குழந்தைக்கு ... ! கூடுகட்டி முடிக்க - ஓடிப் பாடு பட்டுக் கோட்டுப் புன்னை அரும்பு - போல முட்டை இட்டு மூடிஅடை காத்து - முழுவே லையும் கெட்டு முந்திரிக் கொட்டையைப்போல் - குஞ்ச பொறித்தது சிட்டு. காடும் வீடும் சென்று - கம்போ நொய்யோ தேடிக் காலை மாலை தோறும் - குஞ்சு வயிற்றை மூடிக் கேடு செய்யும் காக்கை - கிட்டா வண்ணம் நாடிக் கிட்ட இருந்து படிப்புக் - கற்றுக் கொடுக்கும் பாடி. சிட்டுக் குஞ்சு படிக்கும் - பள்ளிக் கூடம் கூடு சின்ன குழந்தை படிக்கும் - பள்ளிக் கூடம் வீடு சிட்டுக் குஞ்சுக் கெல்லாம் - தாய்ச்சொல் தானே ஏடு? சின்ன குழந்தாய் நீயும் - தாயின் சொல்லை நாடு. போகா இடங்கள் போனால் - பொல்லாங் கெல்லாம் நேரும் பொல்லா ரோடு சேர்ந்தால் - பொய்யும் புரட்டும் சேரும் கூகூ என்றே அழுதால் - குரலோ மிகவும் சோரும் கொட்டம் செய்யா திருந்தால் - பெற்றோர் எரிச்சல் தீரும்! தூசித் தரையில் குந்தி - துணியைப் பாழாக் காதே துள்ளிக் குதித்து வீழ்ந்தே - பல்லை இழக் காதே பேசுந் தமிழை நன்றாய்ப் - பேசமற வாதே பெற்ற தமிழ் நாட்டின் - பெருமை குறைக் காதே பெரியோர் பேசும் போது - குறுக்கில் பேசல் தொல்லை பிஞ்சில் பழத்திற் குள்ள - சுவையி ருப்ப தில்லை தெரியா விட்டால் கேட்பாய் - தெரிந்தார் சொல்லும் சொல்லைத் திரியா தேநீ காடு - மேடு பள்ளம் கொல்லை! எரியும் விளக்கை வாயால் - என்றும் ஊதல் தீமை இனிதாய்த் தமிழில் பேசத் - தெரியா தவன் ஊமை மரியா தைகாட் டாமை - வணங்கு வானோர் ஆமை வாழ்த்துக எந்நாளும் - வளர் தமிழ்ச் சீமை. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.312, 1964; குயில் மாத இதழ், 1.9.1947 153. தாயும் சேயும் அகவல் அன்னைதன் பிள்ளையை அணைத்தாள் - அதனால் கோடையிற் குளிர்புனல் ஓடையிற் குளித்தாள் குழந்தை அசைத்த குளிர்மலர்க் கையவள் உடலிற் படுமவள் உயிரே சிலிர்க்கும்! அன்னை சுவைத்தஅச் சின்னஞ் சிறுகால் வடியும் சாற்றுக் கொடிமுந் திரிக்குலை! செந்தா மரையின் சிற்றிதழ் போன்ற இமையிடை உலவும் எழிற்கரு வண்டெனும் கண்ணும் கண்ணிற் கலந்த ஒளியும், உண்ண உண்ண உளந்தெவிட் டாது! பின்னிய தடுக்கில் வண்ணத் துகில்மேல் சின்னதாய் அமுதச் சேற்றால், திருந்திய அச்சிற் பதித்தெடுத்- து ஆவியும், சேர்த்த பச்சைக் குழந்தை பால்ஒழுகு வாயொடு கால்கை அசைத்துக் கருமயிர் அசைய மேற்செலும் பார்வை மின்னிக் கிடப்பதை பெற்றவள் அன்பு பெருகப் பெருக உற்றுப் பார்ப்பாள் உவப்பாள்; சிரிப்பாள்! தன்னரும் உடலைத் தரையில் தாழ்த்துவாள் அன்புறு குழந்தையின் அழகு முகத்தொடு தன்முகம் சேர்ப்பாள்; தாங்கா மகிழ்ச்சியில் தன்னிதழ் பொன்னிதழ் மேல்வைத் தன்பி லுரிஞ்சுமுத்தம்அனைத்துலகு விலைபெறுமே. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.313, 1964 154. அன்னையின் அன்பு தூங்கா விடிற்பிள்ளை, தூங்காள்! பிணிவகையால் தீங்காயின் தீங்குறுவாள் ஊண்எதுவும் - வாங்காள்! சமைப்பதற் கோதையல்? மக்க ளுலகை அமைப்பதற்கே! அவ்வன் பரிது. படிப்பாள் பயன்நுகர்வாள் பாங்காகச் சோறு வடிப்பாள் வரும்விருந்தை ஓம்பத் - துடிப்பாள் எதுசெயினும் கைப்பிள்ளை எண்ணம் மறவாள் அதுவும் உலகில் அரிது. பால்குடிக்கும் பிள்ளை பதறாமல் ஓர்கையை மேல்வளைத்தொ ருக்கணித்து, மேனியோ - கால்கையோ சற்றா யினும்அசையா தவ்விரவைத் தான்கழிக்கும் நற்றாய்சீர் ஞாலத் தரிது. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.314, 1964; குயில், 1.2.48 155. குழந்தைக்கு அழைப்பு தாய் தந்தை போட்டி தோழியிடம் இருக்கும் குழந்தையை நோக்கித் தாய் தன் கையேந்தியபடி தாய் : என்னிடம் வா சின்னப்பா! தந்தை : என்னிடம் வா பொன்னப்பா! தாய் : பால் கொடுப்பாள் அன்னை படுத்த ணைப்பாள் அன்னை தாலாட் டுவாள் அன்னை - நீ தாவிடுவாய் என்னை என்னிடம் வா சின்னப்பா கருநாடக தேவகாந்தாரி தந்தை : அம்மா ஒரு வம்பி அவளையே நீ நம்பிச் செம்மை யாய்வி ரும்பி - நீ செல்ல வேண்டாம் தம்பி. என்னிடம் வா பொன்னப்பா வலச்சி தாய் : அப்பா தாம் அடிப்பார் அம்மாதான் அணைப்பாள் இப்போதென்மேல் தப்பா - உனக் கென்மேல் வெறுப்பா? என்னிடம் வா சின்னப்பா காப்பி தந்தை: ஆசையுன்மேல் இல்லை அவள் கடிப்பாள் பல்லை - அவள் ஏசுகின்ற சொல்லை - நீ ஏற்காவிட்டால் தொல்லை என்னிடம் வா பொன்னப்பா சிந்து பைரவி தாய் : காதலோஎன் மீது கடுகடுப்புன் மீது - உனக் கேதுதுணை ஓது - தம்பி யானுனக்கே தோது என்னிடம் வா பொன்னப்பா பியாக் தந்தை: உன்தாயைம றந்தேன் - அவள் உதவியும்து றந்தேன் - நீ இன்பமென்ற றிந்தேன் - உனை ஏந்தநான்ப றந்தேன் என்னிடம் வா பொன்னப்பா கமா தாய் : பிள்ளைக்கான வாய்ப்பே - தன் பெற்றதாயின் காப்பே - இங் குள்ளவரின் ஏய்ப்பே, உயிர் உருக்கும்வேலந் தோப்பே. என்னிடம் வா பொன்னப்பா சுருட்டி தந்தை: அன்னைகெட்டிக் காரி - அவள் அதிகப்பேச்சுக் காரி என்னையேநீ கோரி - வா! எடுத்தணைப்பேன் வாரி. என்னிடம் வா பொன்னப்பா - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.315-316, 1964; குயில், 7.10.58 156. துடைப்பிள்ளைக்குத் தொடக்கக் கல்வி அப்பா என்றுசொல் - எங்கே? அப்பா என்றுசொல் அப்பா அப்பா, அப்பா அப்பா என்றுசொல் - எங்கே? அப்பா என்றுசொல். திப்பி வடித்த தேனைப் போலச் சிப்பி உடைத்த முத்தைப் போல - அப்பா முப்பெரு வேந்தர் வழிவந்தவனே, முத்தமி ழேஉயி ராய்வந் தவனே அப்பாவும் நானும் செய்தவ நிலத்தில் அன்பு விளைக்க விளைந்தாய் மகனே - அப்பா குறள் படித்தால் அறம்பு கட்டும் - என் கொம்புத்தே னேஅது நாளைக்கா கட்டும் நிறைமூன் றெழுத்தே இன்பம் கொட்டும் நேரே உன்வாய் இன்றுதிறக் கட்டும் - அப்பா அம்மா என்றாய் பாதி தானே? அப்பா என்பது மீதித் தேனே செம்மை யாய்ச்சொல் அதனைத் தானே செவிநான் பெற்ற பேறென் பேனே - அப்பா - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.317, 1964; குயில், 7.10.58 157. இளைய மாணவர் திருநாள் அகவல் காலை காலையில் எழுந்து வயிறு கழித்துப் பாலைப் போலப் பல்லைத் துலக்கிப் பட்டுப் போல உடம்பு குளித்துச் சிட்டுப் போலத் தலையை வாரித் தடுக்கில் குந்திக் தந்ததை உண்டும் உடுப்பை உடுத்திச் சுவடி எடுத்தும் துள்ளிக் கூடம் விட்டுப் பள்ளிக் கூடம் பறக்குமாம் கிளியே! பள்ளிக்கூடம் நல்லா சிரியர் பாடம் சொல்வார்: எல்லா ரும்தாம் இருந்து கேட்பார், கெட்ட பிள்ளைகள் கேட்க மாட்டார். நல்ல பிள்ளைகள் நன்றாய்க் கேட்பார்! அண்டையில் இருக்கும் பிள்ளைக ளோடு சண்டை யிடுவது சரியே இல்லை. நத்தை போல எழுதலா காது: முத்தைப் போல எழுத வேண்டும் கணகண வென்று வீட்டு மணி அடித்ததும் வருமாம் கிளியே! நடுப்பகல் நடுப்பகல் உணவு நன்றாய் உண்டு படிப்பதை எல்லாம் நன்றாய்ப் படித்து முழுதும் கணக்கைப் போட்டு முடித்தும் எழுதச் சொன்னதை எழுதி முடித்தும் தப்பா சரியா என்று சொல்ல அப்பா இடத்தில் அதையே காட்டித் தெருவோ ரம்பள் ளிக்கு விரித்த குடையுடன் போகுமாம் வெல்லமே வழியில் பள்ளிக் கூடம் போகும் போது துள்ளிக் குதிப்பார் துடுக்குப் பசங்கள்: ஓட்ட மாக ஓடக் கூடாது! வீட்டுத் திண்ணையில் ஏறக் கூடாது! வேகும் வெய்யிலில் விளையா டாதே: போகும் போது வம்பு கூடாது: நேராய்ப் பள்ளிக் கூடம் சீராய்ப் போகுமாம் செல்வக் கிளியே! மாலை மாலை வேளையில் பள்ளிக் கூட வேலை முடித்து வீட்டுக்கு வந்து பழமோ பயறோ அம்மா கொடுத்ததை அழாமல் வாங்கி அமைவாய் உண்டு தெருவோ ரத்தில் சிரித்து விளையாடி விருவி ரென்று வீட்டுக்கு வந்து விளக்கின் அருகில் சுவடி விரித்துப் பளிச்சென்று மனத்திற் படியப் படித்துச் சோறுண்டு தூங்கும் பிள்ளைபோல் வேறுண்டா வீடு நிறைந்த செல்வமே? - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.318-319, 1964 158. எலிக்குஞ்சும் பூனைக் குட்டியும் பானை இடுக்கில் எலிக்குஞ்சு - தனைப் பார்த்து விட்டது பூனைக் குட்டி! நான்நான் என்றது பூனைக்குட்டி - அங்கு ஞைஞை என்றதே எலிக்குஞ்சு! போன தப்புறம் எலிக்குஞ்சு - நேர் போன தங்கும் பூனைக் குட்டி ஏன்ஏன் என்றது பூனைக்குட்டி - பானைக் கிப்புறம் வந்ததே எலிக்குஞ்சு! பானை மேலே எலிக்குஞ்சு - தொத்தப் பார்த்து விட்டது பூனைக் குட்டி பானை மேலும் பூனைக் குட்டி - வரப் பாய்ந்த துள்ளே எலிக்குஞ்சு! பானை எண்ணெயில் எலிக்குஞ்சு - கூடப் பதை பதைத்தது பூனைக் குட்டி தானே செத்தது பூனைக் குட்டி - தான் தன்னால் செத்ததே எலிக்குஞ்சு! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.329, 1964; குயில் 1.43 - 31.3.59 159. திருடாதே குருடன் இடத்திலும் திருடாதே ஒன்று! கொல்லுமே உன்னை உன்நெஞ்சே நின்று - குருடன் திருடன் ஒருதரம் தப்பிவிட் டாலும் திருடித் திருடித் திருடிமேன் மேலும் பெரிய திருடனாய் பல ஆண்டின் காலம் பெறுவான் தண்டனை! சிரிக்குமே ஞாலம்! - குருடன் பசித்த போதிலும் பொறுப்பது பாங்கு பருக்கை ஒன்றைத் திருடலும் தீங்கு பிசைந்த கூழுக்கும் பிறர்உப்பு வேண்டாம் பிழை செய்யும் நண்பனை யும்விட்டு நீங்கு - குருடன் நீபடி! நீயுழை! நீபிழை நன்றாய் நீபிறர்க் குதவிசெய் நற்குணக் குன்றாய் நீபடி செந்தமிழ் நூலெலாம் ஒன்றாய் நீ தமிழ்க் குள்ள பகைஎல்லாம் வென்றாய் - குருடன் - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.325, 1964 160. பார்த்து நட தெருவோரம் இடது பக்கம் செல்லும் நல்ல பிள்ளை! வருபவர்மேல் இடித்துக் கொள்ளும் பிள்ளை ஒரு நொள்ளை. மாடு வரும் குதிரை வரும் வருமல்லவா வண்டி? வரக்கண்டும் விலகாமல் இருப்பவன் ஓர் நொண்டி. ஆடுவரும் எருமை வரும் முன்னே போனால் மிதிக்கும்! அழுக்கு மூட்டைக் கழுதை வரும் பின்னே போனால் உதைக்கும். மணி அடிக்கும் ஊது கேட்கும் ஏமாறக் கூ டாது வண்டி வந்தால் தீமை யல்ல வா? செவிடா காது? கல்லிருக்கும் முள்ளிருக்கும் காலிற்பட்டால் தொல்லை கண்ணிருந்தும் காணாதவன் போல முட்டாள் இல்லை. புல்லிருக்கும் அதற்குள்ளே பூச்சிப்பொட்டு கிடக்கும் புற்றிருக்கும் அதற்குள்ளே பாம்பிருந்து கடிக்கும்! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.320, 1964 161. தேர்வு கொய்யாப் பழத்துக்கு கொம்புண்டு காலுண்டு கூறும் எருதுக் கிரண்டும் இல்லை கையால் எழுதிய எழுத்திலே நீயேஉன் கண்ணினால் பார்த்துச் சொல் பிள்ளாய்! மெய்யென்று சொல்வதைப் பொய்யென்று சொல்வார்கள் வேடிக்கை யாயிது பிள்ளாய்! ஐயா ஒருவரிடம் சென்று கேள் இதை அவர் மெய்யும் பொய்யாக லாமா? - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.336, 1964; குயில், 1. 1. 1948 162. விண்மீன் வானத்து நீலப்பட் டாடை - அதில் வாரி இறைத்த முத்துகள் மேனி சிரித்திடும் கண்டால் - அவை விண்மீன்கள் என்றுசொல் வார்கள். மீன்என்று சொல்லுவ தேனோ - அவை மின்னிடும் காரணம் தானோ; நீர்நிலை மீன்கள்நம் மீன்கள் - அவை நீல வானக் கடல் மீன்கள். - இளைஞர் இலக்கியம், 1958 163. பிள்ளைப் பாட்டு - நிலா துருக்கச் சிறுவன்: நிலவே நிலவே நிற்பாய் நிலவே! மெருகு கொடுத்த வெள்ளி நிலவே! நாங்கள் உன்னை நாயம் கேட்போம் கூறவேண்டும் குளிர்ந்த நிலவே! மூன்றாம் பிறையாய்த் தோன்றுங் காலை என்கூட் டத்தார் உன்னைத் தொழுவார் ஆதலாலே அழகு நிலவே! துருக்கருக்குச் சொந்தப் பொருள்நீ! கத்தோலிக்கச் சிறுவன்: கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள் ஆதலாலே அழகு நிலவே! கத்தோலிக்கர் சொத்து நீதான்! இந்துச் சிறுவன்: எங்கள் சிவனார் முடியில் இருப்பாய் ஆதலாலே அழகு நிலவே! இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ! மூவரும்: மூன்று பேரும் மொழியக் கேட்டாய் யார்க்குச் சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்? சு. ம. சிறுவன், மற்றப் பிள்ளைகளைக் குறித்து உன்தகப்பன் உளறு வாயன் துருக்கனென்று சொன்னான் உன்னை. உன்தகப்பன் உளறு வாயன் கத்தோலிக்கப் பட்டம் கட்டினான். உன்தகப்பன் உளறு வாயன் இந்து என்றான் ஏற்றுக் கொண்டாய்! துருக்கன் என்ற சொல்லை நீக்கு! கத்தோலிக்கப் பித்தம் தொலைப்பாய்! இந்து என்ற சிந்தனை வேண்டாம்! யாவரும் மனிதர் என்பது தெரிந்தால் நிலவும் பொதுவே என்பது தெரியும் அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே. - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.148-149, 1977 164. குட்டி நிலாவும் வட்ட நிலாவும் வட்ட நிலா: குட்டி நிலாவே குட்டி நிலாவே எங்கே வந்தாய் குட்டி நிலாவே? குட்டி நிலா: வட்ட நிலாவே வட்ட நிலாவே வந்தேன் உன்னிடம் வட்ட நிலாவே கெட்ட உலகம் வாழும் வழியைக் கேட்க வந்தேன் வட்ட நிலாவே. வட்ட நிலா: எட்ட இருக்கும் வட்ட நிலா நான் எனக்கா தெரியும் குட்டி நிலாவே? குட்டி நிலா: வளர்ச்சி பெற்றாய் குளிர்ச்சி பெற்றாய் வட்ட நிலாவே வாய்திற வாயோ? வட்ட நிலா: தளர்ச்சி பெற்றது தட்டை யுலகம் சண்டை பிடித்தது குட்டி நிலாவே! குட்டி நிலா : களைப்பு நீங்க உலகம் ஒருவன் கைக்குள் வருமோ வட்ட நிலாவே? வட்ட நிலா : இருப்பு மிகவும் இருக்கும் ஊரில் அரிசி உண்டோ குட்டி நிலாவே? குட்டி நிலா: ஆயிரங் கோடிச் செலவில் வந்தேன் அறிவைக் கொடுப்பாய் வட்ட நிலாவே! வட்ட நிலா: ஆயிரங் கோடியை அரிசிக் காக அளித்த துண்டா குட்டி நிலாவே? போய்விடு போய்விடு குட்டி நிலாவே - போய்விடு - என்றது வட்ட நிலாவே தீயில் எரிந்தது குட்டி நிலாவே; தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே. - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.148-149, 1977 165. பிறந்தநாள் இந்நாள் பிறந்தநாள் இந்நாள் பேறெல்லாம் பெற்று நீ வாழ்க பன்னாள் - பிறந்த சிறந்த நாள்கள் ஆயின சென்ற நாளெல்லாம் செந்தமிழ்த் தொண்டுநாள் ஆகட்டும் இனியெலாம்நீ - பிறந்த பட்டிலோர் பாவாடை கட்டிக் கொண் டாயா? - நன்று பால் நுரை போற் சட்டை இட்டுக் கொண் டாயா? நன்று ஒட்டுமாம் பழமிதோ ஆப்பிள், ஆரஞ்சி பிட்டுமாப் பண்ணியம் உண்ணுவாய் கெஞ்சி - நீ - பிறந்த அனைவரும் இங்கே உனை ஒன்றேஒன்று பாடென்றார் இலையா? ஆமாம் கனிஒன்று தோலுரித்துச் சுளையோடு கன்னல் கலந்ததாய்ப் பாடம்மா பாடு!நீ - பிறந்த பெரிய பெண்ணானால் ஆடவா சொல்வார் ஊஃஊஃ அரிய தமிழ்பாடி ஆடவேண்டாமா? ஆமாம் திருவோங்கு செந்தமிழ்ப் பாண்டியன் மாட்டுச் செப்பிய வண்ணமே ஆடிக்காட்டு நீ - பிறந்த - தேனருவி, ப.138, 1978 166. பெண் பெற்ற பயனைப் பெற்றேன் அன்னையின் மகிழ்ச்சி இன்றுதான் உனைப் பெற்றபயன் பெற்றேன் நன்று கற்றவள் உன் மகள் எனக் கேட்ட - இன்றுதான் குன்றாப் பெருமை உடைய நிறைமொழி ஒன்றே என்றால் அதுஎன் தமிழ்மொழி என்றே பற்பல சான்றுகள் காட்டி மன்று மகிழவைத் தாயாம் என் கண்ணாட்டி - இன்றுதான் தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழர் வாழ்வார் தமிழ்மொழி வீழ்ந்தால் தமிழர் வீழ்வார் இமைப்பில் செயத்தக்க செய்கென்று சொல்லி அமிழ்தைப் பொழிந்தா யாமே என் செல்வி. - இன்றுதான் ஆளப் பிறந்தவர் தமிழர்என் றாயாம் ஆண்ட வரலாற்றை நீபுகன் றாயாம் தோளில் தமிழர்க்கும் பலவீரம் திரும்பத் துளிர்க்கச் செய்தாயாம் என்கட்டிக் கரும்பே - இன்றுதான் வீரம் உடையது செந்தமிழ் நாடு மேன்மை யுடையது தமிழர் பண்பாடு நேர்மையோ டிவற்றை விளக்கினை என்றே நிகழ்த்தக் கேட்டேன் என்குணக் குன்றே. - இன்றுதான் - குயில், 10. 11. 1959; தேனருவி, ப.139, 1978 167. பொன் அஞ்சல் பேரன் தன் தாத்தாவுக்கு எண்சீர் விருத்தம் அன்புள்ள தாத்தாஎன் வணக்கம்! நீங்கள் ஐந்தெட்டு நாற்பத்தெட் டினில்வ ரைந்த பொன்னஞ்சல் பெற்றுமிக மகிழ்ச்சி கொண்டேன். புதுசைக்கிள் பற்றி,அதில் பேச்சே யில்லை தின்பண்டப் பெட்டியினைப் பெற்றுக் கொண்டேன். தேங்காய்போட் டிருந்ததனால் ஊசிப் போன மென்போளி உண்ணவில்லை. முறுக்கு நன்று மேனாட்டு ரொட்டியினில் சுவையே இல்லை. 1 அப்பாவுடன் புதுவை வந்தேன். அங்கே அன்புள்ள தங்களிடம், சிற்றன் னைமார் ஒப்பரிய என்மாமா இடத்தி லெல்லாம் உயர்வாக நான்நடக்க வில்லை என்று செப்பினார், தந்தையார் அன்னை யார்பால். சீறிவிழு கின்றார்என் தாயார் என்மேல்! அப்படிநான் தப்பிழைக்க வில்லை என்றே அன்னையார்க் கோர்அஞ்சல் எழுது வீர்கள்! 2 வீட்டருகிற் காவிரியின் கரைக்கு நான்போய் விளையாடல் தங்கட்குப் பிடிக்க வில்லை; பாட்டையிலே இருந்தபடி ஆற்றின் தோற்றம் பார்த்திடலா மா? காற்றை நுகர லாமா? தோட்டத்து வீட்டினிலே ஓர்ஆ டுண்டு; சொல்லுவது பொய்யில்லை ஆந்த ஆடு போட்டதுதாத் தாநன்றாய் ஐந்து குட்டி புதுமையா? இல்லையா? இதுபோ கட்டும். 3 தங்கள்மகள் - என்தாயார் உடல்ந லத்தைத் தவறாமல் எழுதென்று சாற்றி னீர்கள்! பொங்கத்தான், பொரிக்கத்தான், குழம்பி டத்தான், புடைக்கத்தான், கொழிக்கத்தான், இட உண்ணத்தான், தங்கத்தான் தம்பிக்கும் எனக் மேதான். தக்கவெலாம் செய்யத்தான் எவருள்ளார்கள்? இங்கிவையும் பிறவும்என் தாயார் வேலை! இந்நிலையில் தாயார்உடல் நிலைஎன் னாகும்? 4 வீட்டெதிரில் ஒருநாளும் உண்மை யாய்நான் வெளிக்குப்போ கின்றதில்லை; என்மா னத்தைப் போட்டுநலி செய்யாமை வேண்டு கின்றேன். இருட்டியபின் வெளியினிலே போவ தில்லை; மாட்டண்டை எனக்கென்ன வேலை? பாலை வார்த்தளித்தால் நான்அதனைக் குடிப்ப தல்லால்! காட்டூரான் குருடாயில் தன்னிற் செய்த கடைமுறுக்கை நான்வாங்கித் தின்ப தில்லை. 5 தெருவினிலே ஒருதிண்ணைப் பள்ளி யுண்டு தெரிந்திருக்கும் உங்கட்கும், அதனை ஊரார் பெரிதாக நினைப்பதில்லை, வாத்தி யாரைப் பிள்ளைகளும் மதிப்பதில்லை. ஆனால் இன்றோ தெருத்திண்ணைப் பள்ளிக்கும் வாத்தி யார்க்கும் செப்பமுடி யாப்பெருமை! பள்ளி தன்னில் இருநூறு மாணவர்கள் சேர்ந்து விட்டார். எள்விழவும் இடமில்லை பள்ளி தன்னில்! 6 நாள்ஒன்றின் வருமானம் வாத்தி யார்க்கு நாலைந்து ரூபாயாம். வாத்தி யாரின் தோளின்மேல் விளக்கமுறும் சரிகைப் போர்வை, துண்டொன்று, குடை,செருப்பு, பட்டு வேட்டி ஆளைப்பார்த் தால்இன்று புதுமாப் பிள்ளை! அத்தனைக்கும் காரணந்தான் என்ன வென்றால், பாளையத்தில் அரசினரின் பள்ளி நீங்கிப் பசங்களெல்லாம் என்பள்ளி தன்னிற் சேர்ந்தார். 7 அரசினரின் பள்ளியிலேயே இந்தி யென்னும் அசல்கழுதை மொழிதன்னை வைத்திட் டாராம்! புரியாத பிறமொழியைப் பயனில் லாத புன்மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்; சரியென்று சொல்லுபவர் வரலாம். இந்தி தகாதென்போர் வரவேண்டாம் என்கின் றாராம். அரசினரின் பள்ளியிலே பசங்கள் இல்லை. அங்கங்கே தெருத்திண்ணைப் பள்ளி கொண்டார். 8 என்சின்ன மாமார்க்கும் மாமா பாட்டி எல்லார்க்கும் என்வணக்கம் தெரிவி யுங்கள். என்தந்தை யார்நலத்தோ டிருக்கின் றார்கள். இன்னும்ஒரு வாரத்தில் நாங்கள் அங்கே சொன்னபடி தவறாமல் போவோம் என்று சொல்லுகின்றார் தந்தையார். அங்கு வந்தால் முன்போல ஏமாற்ற வேண்டாம்; சைக்கிள் முன்னமே வாங்கிவைக்க. தங்கள் பேரன். 9 - குயில், 15.8.1948; ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.122-124, 1978 168. அழகழகாய் அழகழகாய் எழுது ஆணிமுத்து போலே எழுதும் எழுத்துன்றன் இயல்பைக் காட்டுமன்றோ? தெளிவடைந்த அறிவு சிந்தனைப் படத்தை எளிமையான முறையில் எழுதிக் காட்டுமன்றோ? ஏட்டில் உள்ள பாட்டை இசைத்துப்படி புரியும்! காட்டும் உரை நடையைக் கலந்துபடி தெரியும்! செந்தமிழ்க்குத் தொண்டு செம்மையான வாழ்க்கை முந்த வேண்டும் உண்மை முத்தமிழ்க்கதே அன்பு! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.53, 1978 169. இந்த நூற்றாண்டு எந்த நூற்றாண்டும் இல்லா முன்னேற்றம்; இந்த நூற்றாண்டில் எழுந்ததே ஏற்றம்; 1 கால விரைவினைக் கடக்கும் வானூர்தி ஞாலப் பரப்பினைச் சுருக்கிற்றுப் பார்நீ! 2 தொலைபேசித் தொடர்பு தோழமை நட்பு! அலைகடல் மலையை அறிந்தது பெட்பு! 3 வானொலி யாலே வைய மொழிகள் தேனொலி யாயின திக்கெலாம் கனிகள்! 4 ஏவுகணைகள் கோள்விட்டுக் கோளைத் தாவின எங்குமே நாம் செல்வோம் நாளை! 5 ஒற்றுமை அமைதி ஓங்கிடத் தம்பி முற்றும் அறுத்தெறி வேற்றுமை முட்கம்பி! 6 - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.57, 1978 170. ஊஞ்சலாடு ஊஞ்சலாடு ஊஞ்சலாடு உயிரின் செல்வமே! ஊஞ்சலாடு ஊஞ்சலாடு உணர்வின் கோலமே! ஓங்கும் காற்றின் திசையில் ஆடி ஊஞ்சல் ஆடுவாய்! மாங்கு யில்கள் பாடக் கேட்டு மகிழ்வில் ஆடுவாய்! இளமைக் கால்கள் உந்தி உந்தி ஊஞ்சல் ஆடுவாய்! வளமை சேரும் வலிவும் பொலிவும் வளரும் ஆடுவாய்! உணர்வு பொங்க உயிர்க ளிக்க ஊஞ்சல் ஆடுவாய்! உணர்ச்சி உந்த ஊக்கம் பெருக ஊஞ்சல் ஆடுவாய்! குழல்ப றக்கக் கொன்றை மணக்க ஊஞ்சல் ஆடுவாய்! அழகு மயிலின் ஆட்டம் போல ஊஞ்சல் ஆடுவாய்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.65, 1978 171. எவன் நல்லவன்? அனலன் தன்கிளியை நோக்கி ஆரடா திருட்டுப் பையா எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். அங்கு வந்த இரிசப்பன் இவ்வாறாய் உன் இனிதான கிளி பயின்றால் எவரையும் திருட்டுப் பையா எனுமன்றோ என்றான்; நல்லவன் எவன் என்றான் இரிசன் தானே - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.90, 1978; குயில், 15.5.1962 172. என் பேரன் அழுக்குப் புழுதியில் ஆட லாமா? வழுக்கு வழியில் ஓட லாமா? என்றேன்! எதிரில் நின்ற பேரனை! அடிக்கக் கோலை எடுத்தேன்! அவனோ வில்லுக்கட்டஅக் கோலை வேண்டினான் கோலையும் கொடுத்துக் கட்ட நூலையும் கொடுத்தேன் நாலுமுழத்திலே - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.43, 1978; குயில், 6.9.1960 173. ஏன் அப்படி? அறுசீர் விருத்தம் எழுந்தி ரென்றால் காலையிலே இருகண் நன்றாய் மூடிடுவான் கழிந்த தென்றால் மிகநேரம் கல்லைப் போல் உட்கார்ந்திருப்பான் அழுந்தப் பேசி அனுப்பிடிலோ அழுதே காலைக் கடன்முடிப்பான் உழுந்து வடைஅப் பந்தந்தால் உண்டு கழிப்பான் அரைநாளை. 1 பள்ளிக் கூடம் போஎன்றால் பட்டுச் சட்டை கொடு என்பான் வெள்ளைச் சட்டை பட்டென்றால் வேண்டும் வண்டி என்றிடுவான் தள்ளும் வண்டி தந்தாலோ சம்பளம் கேட்பார் அவர்என்பான் உள்ளது தந்தால் சுவடிக்கே ஓலைப் பைவேண் டாம்என்பான். 2 எழுதச் சொன்னால் சட்டத்தை இறகே இல்லை யேஎன்பான் அழகாய் இறகைத் தந்தாலோ அங்கே மைக்கூ டேதென்பான் ஒழுங்கா மைக்கூ டீந்தாலோ உள்ளே மைதான் ஏதென்பான்; பழுதில் லாத மைதந்தால் பச்சைத் தண்ணீர் இது என்பான். 3 இரவில் பாடம் படி என்றால் இங்கு விளக்கில் லைஎன்பான் அருகில் விளக்கை வைத்தாலோ அந்தச் சுவடி ஏதென்பான்; இருக்கும் படியே செய்தாலும் ஏடு கிழிந்த தேஎன்பான்; ஒருநல் சுவடி தந்தாலோ உடனே இருமல் துவங்கிடுவான். 4 படிப்ப தென்றால் எட்டிக்காய், பள்ளிக் கூடம் வேப்பங்காய், விடிந்தால் அச்சம் வாத்தியினால் விளக்கு வைத்தால் பெற்றோரால் விடுமுறை வந்தால் மகிழ்வான் ஏன்? மேன்முறை யில்லை பள்ளியிலே நடைமுறை மாறிக் கல்விமுறை நன்முறை யானால் நலமுறலாம். 5 - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.51-52, 1978; குயில், 1.12.1947 174. கண்ணுண்டு கல்வியில்லை பெரிய தருமனுக்கு மணி பார்க்கத் தெரியவில்லை மணிப் பொறி காட்டி என்னமணி என்று தாயார் பெரிய தருமனைக் கேட்டாள் பெரிய தருமன் பெரிய கண்ணால் பார்த்தான் பார்த்தான் தெரிய வில்லை அண்டையில் இருந்த ஆனை யப்பன் பெரிய தருமனுக்குப் பெரியகண் ணிருந்தும் தெரிய வில்லையே என்று சிரித்தான் தாயார் சாற்றுகின்றாள் கண்ணுண்டு பெரிதாய்க் கல்வி இல்லையே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.79, 1978; குயில், 25.8.1959 175. கணக்கு கொள்ளை வனப்பு கூடிய குழந்தைகள் குள்ள வாத்துகள் கிள்ளைக் கூட்டம்! பள்ளி வகுப்பில் பிள்ளை கட்குக் கணக்குப் பாடம் விளக்கினார் ஆசிரியர். ஒன்றும் ஒன்றும் இரண்டாகும் இரண்டும் ஒன்றும் மூன்றாகும் ஒன்றும் மூன்றும் நான்காகும் நான்கும் ஒன்றும் ஐந்தாகும் ஐந்தோடு ஒன்றைக் கூட்டினால் என்ன? ஐந் தருவிபோல் இசைத்த பிள்ளைகள் வினாப் புலி முன்னர் மான்குட்டி யாயினர் மீண்டும் ஆசிரியர் விளக்கம் உரைத்தார் ஈண்டொரு தெளிவால் இயம்புவீர் விடையை; உங்கள் இடத்தில் உங்களைப் போன்ற மயிற்புறா ஐந்தினை முதலில் தருகிறேன் மயிற்புறா மற்றொன்று மீண்டும் தருகிறேன். இப்பொழு தெத்தனை புறாக்கள் செப்புவீர் ஏழு என்றான் யாழ்ஒலி எழுந்தே. எப்படி என்றார் வியப்புடன் ஆசிரியர் ஐந்து புறாக்களை முதலில் தந்தீர் அடுத்தொரு புறாவினை அதனுடன் தந்தீர் எங்கள் வீட்டில் ஏற்கென வேஒரு புறா இருக்கின்றது இராதா ஏழு என்றதும் வகுப்பாம் வானில் இடிஒலி போலச் சிரிப்பொலி வெடித்ததே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.119, 1978 176. கதைப் பாட்டு சின்ன தம்பி : காக்கா காக்கா கத்திரி மூக்கா தூக்கா தேஎன் சுற்று முறுக்கை அதற்குக் காக்கா சொல்லிற்று காக்கா : நாய்க்கா நரிக்கா எனக்குத் தானே நறுக்கா முறுக்கை எடுத்திட் டேனே இதைக்கண்ட சின்னதம்பி சொன்னான் சின்ன தம்பி : ஏய்க்கா தேநீ முறுக்கைக் கொடுப்பாய் எங்கப்பாவிடம் சொன்னால் துடிப்பாய் இதுகேட்ட காக்கை சின்னதம்பியை நோக்கிச் சொல்லிற்று காக்கா : காக்கா தூக்கிப் போனால் அப்பா கழியால் உன்னை அடிப்பார் தப்பா? - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, 1978 177. காலம் என்பது காலம் என்பது மணியா தாத்தா? காலம் என்பது நாளா தாத்தா? காலம் என்பது திங்களா தாத்தா? காலம் என்ப தாண்டா தாத்தா? காலம் என்பதைக் காணோம் பாப்பா பொருள்களின் நிகழ்ச்சி உண்டு பாப்பா செங்கதிர் என்ப தொருபொருள்! அதுதான் திரிந்து வருவது செங்கதிர் நிகழ்ச்சி! இன்னும் இதனைக் கேட்பாய் பாப்பா மேற்கில் புதைந்தது செங்கதிர் முன்பு கிழக்கில் எழுந்தது செங்கதிர் பின்பு! கோழி விழித்தது கொக்கோ என்றது மேழி சுமந்து விரைந்தான் உழவன் அப்பம் சுட்டுக் கொடுத்தாள் அம்மா பள்ளிக் கூடம் பறந்தாய் நீ தான்! இதுதான் விடியற் காலமா தாத்தா? கிழக்கு காலமா? செங்கதிர் காலமா? கோழி காலமா? கொக்கோ காலமா? மேழி காலமா? உழவன் காலமா? அப்பம் காலமா? அம்மா காலமா? பள்ளி காலமா? பாப்பா காலமா? நிகழ்த்தும் இப் பொருள்களின் நிகழ்ச்சி கண்டோம் காலம் என்பதைக் காணோம் பாப்பா காலம் வந்த தெப்படித் தாத்தா? காலம் எனும்பெயர் கற்பனை பாப்பா ஏய்ப்பையும் தன்ன லத்தையும் பார்ப்பான் என்று பகர்ந்தது போலவே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.40, 1978 178. கேட்பேனா? காண்பேனா? அறிவொளி ஏற்றும் அறிஞன் என்னும் மொழியைக் கேட்பேனா? வெறித் தனம் மாய்க்கும் அறிவியல் புலமை வியப்பைக் கேட் பேனா? இருள் உலகத்தை மாற்றினாய் என்றே இயம்பக் கேட்பேனா? பொருள் உலகத்தைப் பொதுமை செய்த புரட்சியைக் கேட்பேனா? மடமை ஒழித்து மக்களை உயர்த்தும் மாண்பைக் கேட்பேனா? கடமைக் கென்றே வாழ்க்கைச் செயல்கள் கனியக் காண்பேனா? கள்ளம் குள்ளம் கயமையை நாட்டில் களையக் காண்பேனா? உள்ளம் உயரும் கொள்கைக் காக உழைக்கக் காண்பேனா? பெற்றோர் தம்மைப் பேருல குவக்கப் பென்னம் பெருஞ் செயல்கள் கற்ற வரேஎம் கண்ணின் மணிகாள் களிக்கச் செய்வீரே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.66-67, 1978 179. சிறந்த விளையாட்டுக்கள் விளையாடு! மெல்ல ஓடி னால் ஒலிக்கும் தண்டை - நீ விரைந் தோடி னால் உடையும் மண்டை - மெல்ல செல்வ மேநீ ஆடவேண்டாம் காற்றில் - நீ செல்ல வேண்டாம் நொள நொள நொளச் சேற்றில் - மெல்ல கும்மி யடிப்பாய் பூக் கொய்வாய் அம்மி அரைப்பாய் ஆடை நெய்வாய் அம்மா விளையாடு தெரு ஓரம் - கேள் ஆடுமாடு வண்டி வந்து சேரும் - மெல்ல குடத்தைத் தூக்கி இடுப்பில் இடுக்கி தண்ணீர் ஊற்று பூஞ் செடிக்கு! படித்திருந்த பள்ளிக் கூடப்பாட்டு - நீ பாடி வரிசை யாய்நடந்து காட்டு! - மெல்ல தமிழ்நாட்டில் சீனர்வந்தார் என்று - நீ தமுக்கடிப் பாய் ஊர்நடுவில் நின்று. அமைப்பாகத் துப்பாக்கியை நீட்டு - நீ அவரை அவர் நாட்டினுக்கே ஓட்டு - மெல்ல இந்தி வேண்டும் என்று சொல்வார் சொல்லை ஏற்காதே; உடைப்பாய் அவர் பல்லை! செந்தமிழே வாழ்க என்று பாடு - மிகச் சிறந்த விளையாட்டை விளை யாடு - மெல்ல - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.33, 1978 180. சிறுவனின் கனவுகள் வண்ணச் சிறகுகள் வாய்த்தமீன் கொத்தியாய் விண்ணில் பறந்திடுவேன் - நீரில், வித்தைகள் காட்டிடுவேன். எண்ணில் மலர்களின் இன்ப நிறம் கொண்டு மண்ணில் மலர்ந்திடுவேன் - மக்கள், மனத்தினில் நிறைந்திடுவேன். நன்செயில் புன்செயில் நானிலம் காத்திடும் அன்பின் விளைவாகுவேன் - உழைப் பாளர் துணையாகுவேன். தென்புறு ஞாயிற்றின் தேன்ஒளிக் கதிர்களாய் என்றும்நான் காய்ந்திடுவேன் - இருள், இல்லாமல் பாய்ந்திடுவேன். பழமைக் கழனியில் புதுமை விளைத்திடும் எழுத்தின் மலையருவி - மனம், இசைக்கும் கலைக்கருவி! முழுமை வடிவினை முற்றுகை இட்டிடும் எழுதும் இலக்கியம் நான் - கால, எதிரொலிக் கிலக்கணம் நான்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.100, 1978 181. தந்தை மகனுக்கு பாரோர் உன்தமிழ் ஆராய்ச் சிதனைப் பாராட்ட வேண்டும் - தம்பி நேரே உன்தமிழ் உலகில் மேலென நீ நாட்ட வேண்டும். ஆரா னாலும் உன் தமிழே அமிழ் தென வேண்டும் - தம்பி பேராசிரியர் புகழ்ந்திடநீ பேசுதல் வேண்டும். எம்மொழிக்கும் தமிழ்ச் செம்மொழி வேரென எண்பிக்க மாட்டாயா - தம்பி நம் அடுக்களையில் நாய்பு குந்ததை நவின்று காட்டாயா? பொய்ம்மறை ஆட்சியைப் போட்டுப் புதைத்திடப் போரொன்று காணாயா? - தம்பி மெய்ம்மறை வென்றது வென்றது நாடெனும் மேன்மையும் பூணாயா? தமிழ்மொழி எனஒன் றிலையாம் - தமிழ் நாடென ஒன்றிலையாம் உமிழத் தக்க சழக்கர் சழக்கை ஒழித்திட வேண்டுமடா நமத டாஇந்த நாவலந் தீவு நம் தமி ழேஎங்குமாம் தமிழ் நினைக்கையில் பகையை வேரொடு தாக்கிடத் தூண்டுமடா. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.32, 1978 182. நலத்திற்காக நலம் தெய்வம் தொழ வேண்டா - அது தீது செய்யத் தூண்டும் பொய்புகல் வார் ஆன்மா - அது புரட்டர்களின் கோட்டை! உன்னுடைய காலில் - நீ ஊன்றி நிற்க வேண்டும் இன்புறு மா றென்றும் - நீ ஏற்ற நலம் செய்ய! நலத்தினை முன்னிட்டு - நீ நலம் புரிய வேண்டும் மலங்கழிப் பதைப்போல் - உள மடமையினைப் போக்கு! மறுமை உலகம் என்று - நீ மயக்க முற வேண்டா சிறுமை மதம் சாதி - இழி சீழ் பிடித்த எண்ணம்! தன்னலம் துறப்பாய் - உலகத் தாயின் மக்கள் யார்க்கும் மன்னலத்தைச் சேர்ப்பாய் - தமிழ் மகிழ்ச்சி முரசார்ப்பாய்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.54, 1978 183. பஞ்சம் போனால் படிப்பு வரும் இரண்டு தங்கை ஒருதம்பி ஏணையிலே கைக்குழந்தை இருங்கள் என்று சென்றுவிட்டார் எம்மைப் பெற்ற அருமை அம்மா அரங்க சாமி வீட்டினிலே அப்பா வேலை செய்திருந்தார் அவர் கொடுக்கும் கூலியிலே ஆறு பேரும் பிழைக்க முடியுமா? சிரங்கு வந்தால் மருந்துக் கில்லை செலவுக் கொரு காசும் இல்லை இருந்திருந்தும் அப்பா போடும் இரவுணவோ இஞ்சிப் பச்சடி! இருக்கும் குடிசை சொந்தமில்லை எடுக்கும் தண்ணீர் வசதி இல்லை இரண்டு மரத்தில் ஒன்று மொட்டை இன்னொன்றில் நிழலில்லை! வெள்ளத்தில் மிதக்கும் குடிசை வெளிக்கதுவோ தென்னங் கீற்று வள்ளியம்மா மொத்தக் குத்தகை வாடகையோ நாலு வெள்ளி! உள்ளே வந்தார் சட்டமன்ற உறுப்பினராம் ஒரு மனிதர் ஓடிடுவீர் பள்ளிக் கூடம் உணவுண்டு பகலில் என்றார். பள்ளிக் கூடம் வைத்தவரே படிக்கும் படி செய்தவரே படித்து விட்டுத் திரும்பிவந்து படுக்க வீடு வைத்தீரா? பள்ளிக் கூடம் வைத்தவரே படிக்கும்படி செய்தவரே பஞ்சம் போக்கும் நெஞ்சமுண்டோ? பகரும் என்றேன் நகர்ந்து விட்டார். - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.109-110, 1978 184. பிள்ளைக்குச் சோறூட்டல் காக்கா காக்கா காக்கா - பார் கையில் நெய்யும் சோறும், வாய்க்குள் இட்டால் பிள்ளை - அதை வாங்கேன் என்றா சொல்லும்? கேட்கா தேநீ எங்கள் - பைங் கிளிக்கே வேண்டும் போபோ! தாய்க்கா மீறும் பிள்ளை - அது தானே உண்ணும் சோறு! ஒட்டாரம் பண்ணாமல் - சோறு உண்ணும் பார்நீ இங்கே, தட்டா தெங்கள் பேச்சை - அது தங்கம் தங்கம் தங்கம். ஒட்டா துண்ணும் சோற்றை - பார் உமிழா தெங்கள் பிள்ளை மட்டாய்க் குடிக்கும் தண்ணீர் - அது வயிரம் வயிரம் வயிரம். கொஞ்சம் தருவேன் உனக்கே - எம் கொடிமுல் லைக்கே வேண்டும் நெஞ்சம் புண்ணா காதே - நீ நேராகப் பார் காக்கா! கொஞ்சும் கிளிதான் உண்ணும் - அது கொட்டம் செய்யா தன்றோ? நஞ்சா வேம்பா கூறு - நல் நறுநெய் கலந்த சோறு! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.50, 1978; குயில், 1.12.1947 185. புரட்சி செய் புரட்சி செய் புரட்சிசெய் தம்பி புதிய நல் வாழ்வினை நம்பி! புரட்சியி னாலன்றி நாடு பொதுமை கொள்ளாதுயர் பீடு! பழமைகள் யாவுமே சாவும் பண்பாட்டுப் புதுமையே மேவும்! கிழமான சாதி மதங்கள் கிளர்ச்சிக் குதவாத பதங்கள்! சீர்திருத்தம் என்னும் பரிதி - ஒளிச் சிந்தனை யாலே உன் குருதி சேர்த்தது வேமாற்றம் கருதி - நீ செயல்படுவாய் வெற்றி உறுதி! அறிவியல் புகுந்ததே எங்கும் - அட அறியாமை யின்இருள் நடுங்கும்; முறிந்தது முடியர சாட்சி - நீ முழங்குக குடியரசு மாட்சி! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.55, 1978; புரட்சி, 1.2.1950 186. பேசு பாப்பா பேசு கணகண வென்று மணியடித்தது காது கேட்கலையா? - பாப்பா காது கேட்கலையா? - தம்பி காது கேட்கலையா? - உன் கையிற் சுவடிப் பையை எடுக்க நேரம் வாய்க்கலையா? முணுமுணு வென்று மூலையிலே நின்றால் என்னவரும்? - பாப்பா நின்றால் என்னவரும்? - தம்பி நின்றால் என்னவரும்? - என் முன்னே வந்து சொன்னால் வாயின் முத்தா சிந்திவிடும்? பலகை இல்லையா எழுதப் பலபம் இல்லையா? - பாப்பா பலபம் இல்லையா? - தம்பி பலபம் இல்லையா? - வீட்டுப் பாடம் எழுத மறந்த துண்டா? அந்தத் தொல்லையா? சலவை செய்து வந்த சட்டை வேண்டும் என்றாயா? - அழுக்கு வேண்டா என்றாயா? - தம்பி வேண்டா என்றாயா? - இதோ சலவைச் சட்டை போட்டுக் கொண்டாய் சிரித்துக் கொண்டாயா? மனத்தில் உள்ளதை எடுத்துச் சொல்ல வாயும் இல்லையா? - பாப்பா வாயும் இல்லையா? - தம்பி வாயும் இல்லையா? - நீ வாய்திறந்தால் கொடுக்கத் தந்தை தாயும் இல்லையா? தனித்தமிழில் கலகல என்று தட்டாமல் பேசு - பாப்பா தட்டாமல் பேசு - தம்பி தட்டாமல் பேசு - நீ சாலை ஓரம் நடக்க வேண்டும் எங்கே கை வீசு. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.36-37, 1978 187. பொய்த் தோற்றங்கள் உணர்வு வேண்டும்! ஒற்றுமை வேண்டும்! ஓடும் புகைவண்டி தம்பி - அது நிற்பது போல் தோன்றக் கூடும் ஓடாத மரம்அந்த நேரம் - நமக்கு ஓடுதல் போல் தோன்றும் தம்பி கூட வருவதைப் போலே - நடந்தால் குளிர் நிலவு தோன்றும் தம்பி நாடு சுரண்டிடும் பார்ப்பான் - மிக நல்லவன் என்பதும் பொய் தம்பி. நடக்கும் மணிப் பொறியின் முள்ளும் - அது நடந்து கொண்டேயிருக்கும் தம்பி நடப்பதை நாம் பார்ப்ப தில்லை - அது நமது பிழையன்றோ தம்பி கெடுக்கும் பார்ப்பனன் நம்மைத் - தம்பி கெடுத்துக் கொண் டிருப்பதும் மெய்யே அடுத் திருந்தும் காண்ப தில்லை - நாம் அறிவு பெற வேண்டும் தம்பி. வாழ்வது போலிருக்கும் தமிழர் - வாழ்வு வறண்டு போவதை உணரோம் தாழ்வது போலிருக்கும் பார்ப்பான் - வாழ்வு தழைத்து வருவதை உணரோம் நாழிகை ஒன்றுக்குத் தமிழர் - தொல்லை நாலாயிரம்படுதல் உணரோம் சூழ்ச்சி நடத்தும் பார்ப் பானால் - நாம் தொலைந்து வருவதை உணரோம். சாதி வலையினை அறுப்போம் - இனித் தமிழர்கள் ஒற்றுமை கொள்வோம் மோதி மிதித்துவிட வேண்டும் - இங்கு முட்டி எடுக்கவந் தோனை காது பொறுக்க வில்லை தம்பி - அந்தக் கயவன் சொன்னதைக் கேட்பாய் பாதியில் வந்த நரிப் பார்ப்பான் - தமிழ்ப் படைக்குத் தலைவன் என்று சொன்னான். - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.41-42, 1978; குயில், 22.9.1959 188. மகளே! மகனே! வளரும் என்றன் மகளே, - என் வாழ்வு யர்த்தும் மகனே, தளரும் தமிழ கத்தை - நீர் தாங்க வேண்டும் அறிக. நல்ல வற்றைக் காண்பீர் - நீர் நல்ல வற்றைக் கேட்பீர் நல்ல வற்றைக் கற்பீர் - நீர் நல்ல வற்றை நினைப்பீர்! ஒழுக்கம் ஓம்ப வேண்டும் - நீர் உயர்க கல்வி யாலே விழுப்பந் தானே தூண்டும் - நம் விரிந்த உலகில் யாண்டும்! நாளை நீங்கள் நாட்டின் - மக்கள் நட்பு றவுப் பாலம் ஆளைச் சுரண்டி உண்ணும் - கீழ் அரசியலே வேண்டா. பொதுமை உலகம் வேண்டும் - நீர் பொய்பு ரட்டுத் தீயர் முதுகொ டிக்க வேண்டும் - நம் முன்னேற்ற மிதுவாகும் இன்று சிறுவர் நீங்கள் - புகழ் என்றும் அழியாத நன்று செய்யும் வாழ்க்கை - நீர் நடை முறையில் கொள்க! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.62, 1978 189. மாணவர் கேள்வி இத்தனை சிறுவயதில் எத்தனை மொழிகற்பது கல்வியமைச்சே - உமக் கிந்தமதி வாய்த்ததென்ன கல்வியமைச்சே? முத்தனை எம் அருமை முத்தமிழ் பயில்கையில் கல்வியமைச்சே - இந்தி மூதேவி பயில்வதோ கல்வியமைச்சே? மோசடியில் காசடிக்க மொத்தடி கொள் வடமொழி கல்வியமைச்சே - கற்றுப் பூசாரி ஆகுவதோ கல்வியமைச்சே? ஊசிய வடசொல்லை ஒருசிலர் மகிழ்ந்திடக் கல்வியமைச்சே - கற்கக் கூசாமல் வைத்த தென்ன கல்வியமைச்சே? இந்தி தமிழ் ஆங்கில இ லக்கணங்கள் மூன்றினையும் கல்வியமைச்சே - ஒன்றாய் எப்படித்தான் கற்பதினிக் கல்வியமைச்சே? செந்தமிழை ஒழித்திட இந்தி வடமொழி கல்வியமைச்சே - கொண்டு வந்ததுவும் மெய்யலவோ கல்வியமைச்சே? பைந்தமிழ் மொழி கலை ஒழுக்கங்கள் அழித்திடக் கல்வியமைச்சே - நீர் இந்தியினைக் கொண்டுவந்தீர் கல்வியமைச்சே. தந்த பொருள் வாங்க, இதைச் சந்தைக் கடையாக்கிடக் கல்வியமைச்சே - இவண் இந்திமொழி பயில்வதோ கல்வியமைச்சே? இப்பெருநா வலத்தீவில் இன்பத் திராவிட நாடு கல்வியமைச்சே - இணை செப்பரிய தனிநாடு கல்வியமைச்சே. ஒப்புவதோ அயலார் இந்திபொது மொழிஎனின் கல்வியமைச்சே - இங்கு மிக்கபொருள் இந்திக் கென்ன கல்வியமைச்சே? மக்கள் தமிழைப் பரப்ப வகுப்பில்லை வாத்தி யில்லை கல்வியமைச்சே - இங்கு மிக்க பொருள் இந்திக் கென்ன கல்வியமைச்சே? தக்க செயல் இருக்கத், த காச் செயலைச் செய்திடநீர் கல்வியமைச்சே - மிக்க கொக்கரித்தல் நல்லதல்ல கல்வியமைச்சே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.80-81, 1978; குயில், 15.8.1948 190. விடுதலை தாத்தா : பள்ளிக் கூடம் போனால் படிக்கலாம் பேரன் : படிப்பும் எதற்குப் பகர்வீர் தாத்தா தாத்தா : அறிவுண் டாகும் அறிவாய் தம்பி பேரன் : அறிவும் எதற்கோ அன்புத் தாத்தா தாத்தா : சரிவழி தெரியும் தங்கத் தம்பி பேரன் : சரிவழி எதற்குச் சாற்றுவீர் தாத்தா தாத்தா : ஒற்றுமை தெரியும் உணர்வாய் தம்பி பேரன் : ஒற்றுமை எதற்கோ உரைப்பீர் தாத்தா தாத்தா : கெடுதலை நீங்கித் தமிழக விடுதலை விரைவில் பெறலாம் தம்பியே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.98, 1978; குயில், 6.10.1950 191. வீறுடன் நில் விழுவது இயல்பு வெட்கப் படாதே வீறுடன் நின்றிடுவாய்! அழுபவன் கோழை அச்சத் தியல்பு தாழ்வை அகற்றிடுவாய்! தொழுவதும் யாரை? சோம்பல் பார்ப்பையா? தொழிலாளியைத் தொழுவாய்! முழுமையாம் உலகை முன்னேறச் செய் முரண்களை வென்றிடுவாய்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.63, 1978 192. வெந்நீரில் விரல் செங்கதிர் : வெந்நீர் ஊற்றிச் செம்பில் வைத்தால் என்ன போட்டுக் குடிப்பாய்? இளம் பிறை : வெந்நீர் ஊற்றிச் செம்பில் வைத்தால் விரலைப் போட்டுக் குடிப்பேன். செங்கதிர் : வெந்நீர் ஊற்றிச் செம்பில் வைத்தால் விரலைப் போடு வானேன்? இளம் பிறை : வெந்நீரிலே விரலைப் போட்டால் வெப்ப நிலை தெரியும். செங்கதிர் : வெந்நீரை நீஅப் படியே குடித்து விட்டால் என்ன? இளம் பிறை : வெந்நீரிலே சூடிருந்தால் வெந்து போகும் குடலே - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.89, 1978; குயில், 15.5.1962 193. இடுப்பில் குழந்தை! அன்னையின் கொஞ்சல் இசை: சிந்து பைரவி தாளம்: ஆதி இடுப்பிலே உன்னைஎடுத் தேஎனே - நீ இனிக்கின்ற தேன்குடந் தாஅனே! அடுப்பிலே காய்ச்சிய பாலோ - என் அருமைத் திருக்குறள் நூலோ செடியில் பறித்தெடுத்த பூவோ - தமிழ்ச் சிலப்பதி காரஇளங் கோவோ குடிக்கின்ற இளநீர்க் காயோ - என் குழந்தையாய் வந்ததும் நீயோ கொடுப்பாய் தமிழிசை மொண்டே - என் கொட்டிக் குவித்தகற் கண்டே கடலிலே கண்டெடுத்த சங்கே - பனங் காட்டிலே கொண்டஇள நுங்கே கொடிமுல்லை ஊதுகின்ற வண்டே - நீ கொத்தாகக் கட்டியபூச் செண்டே குடித்தனம் காக்கவந்த தங்கம் - என் குழந்தையாய் வந்த இளஞ் சிங்கம். - பழம் புதுப் பாடல்கள், ப.307, 2005; குயில், 14.10.1958 194. சோம்பித் திரியேல் பள்ளிக் குப்போய் பத்துநாள் இருக்கும்! உள்ளே அறையில் உட்கார்ந் திருந்த சோம்பே றிக்கு மாம்பழம் கொடுத்தேன்; உரிக்க வில்லை உண்ணவில் லைஅவன்! பள்ளம் பறித்துத் தூங்கும் நாய்போல் உள்ளம் சோம்ப லுக்குள் புதைந்தது! சொல்லிக் கொடுத்த பாட்டைச் சொல்லென்று சொன்னேன் நாளைக்குச் சொல்வதாய்ச் சொன்னான் மறுபுறம் திரும்பினேன் எறும்புகள் கண்டேன்! குறுநொய் தலைக்கொன்று தூக்கிக் கொண்டு காட்டிய சுறுசுறுப் புள்ள மெல்லாம் காட்டுப் புலிகள்! படையின் நாட்டுப் பாட்டொன்று கேட்டதென் காதிலே! - பழம் புதுப் பாடல்கள், ப.325, 2005; குயில், 23.12.1958 195. தாய்சொல் தட்டேல் பட்டுக் குஞ்சுகள் எட்டைக் கோழி இட்டுக் கொண்டே போகும் எட்டுக் குஞ்சும் தாய்சொல் லுக்குக் கட்டுப் பட்டே மேயும் தட்டுக் கெட்டுப் போனால் ஒன்று தட்டிப் போகும் பருந்தே விட்டுத் தப்பி னாலும் பூனை விட்டுவி டாது விருந்தே. - பழம் புதுப் பாடல்கள், ப.277, 2005; குயில், 17.6.1958 196. தாய் பிள்ளைக்குச் சோறூட்டல் இசை: சங்கராபரணம் தாளம் : ஆதி ஓடி வருமாம் - பிள்ளை சோற்றை உண்ணுமாம். ஆடி வருமாம் - பிள்ளை அழுவ தில்லையாம் தேடி வருமாம் - பிள்ளை சோற்றைச் சிந்தாதாம். பாடி இருந்தால் - பிள்ளை பாட்டுக் கேட்குமாம். இன்னு ஓர் உண்டை - பிள்ளை வேண்டும் என்னுமாம் வெந்நீர் கேட்குமாம் - பிள்ளை விக்கல் கொள்ளாதாம் முன்னே ஓடுமாம் - பிள்ளை முத்தம் கொடுக்குமாம். பின்னும் ஓர் உண்டை - பிள்ளை தன்னால் உண்ணுமாம். பருப்புச் சோறென்றால் - பிள்ளை சிரிப்புக் கொள்ளுமாம் உருக்கு நெய்விட்டால் - பிள்ளை ஓடி வாங்குமாம். இருப்பது மட்டு - பிள்ளை இதை உண்டுவிட்டுத் திரும்பச் சோறிட்டுக் - கொடுப்பேன் மிளகின் சாறிட்டு. காக்கா வந்ததே - சிட்டுக் குருவி வந்ததே நாக்கை நீட்டியே - குச்சு நாயும் வந்ததே தூக்கிப் போகுமோ - இந்தச் சோற்றை எல்லாமே வாய்க்குள் வாங்குமாம் - பிள்ளை மகிழ்ச்சி தாங்குமா! - பழம் புதுப் பாடல்கள், ப.364, 2005; குயில், 16.12.1958 197. தாயும் பிள்ளையும் கிச்சி . . . கிச்சி . . . அழுத பிள்ளை சிரிக்குமாம் அக்குளைக் காட்டு; கிச்சி கிச்சி கிச்சி - அழுத பொழுது போனதே அடுப்பில் உலை பொங்கி வந்ததே கிச்சி கிச்சி கிச்சி ஒழித்துப் போட்ட ஏன மெல்லாம் துலக்க வேண்டும் கிச்சி கிச்சி கிச்சி - அழுத குப்பை கூளம் கூடமெல்லாம் கூட்ட வேண்டும் கிச்சி கிச்சி கிச்சி சுப்பாய் போல அப்பா வருவார் சுவை நீரும் கொடுக்க வேண்டும் - அழுத மந்தை மாடு வரும் வேளை வைக்கோல் அள்ளிப் போடவேண்டும் குந்தியிருக்கச் சரிப்படுமா கொஞ்சும் கிளியே கிச்சி கிச்சி கிச்சி - அழுத கிலு கிலுப்பை இந்தா உனக்குக் கலகலென்று நீ குலுக்கே! அலுவலை நான் பார்ப்ப தற்கே எனைஅனுப்பு - கிச்சி கிச்சி கிச்சி - அழுத - பழம் புதுப் பாடல்கள், ப.314, 2005, குயில், 28.10.1958 198. நன்றாயில்லை கழுதைப் பாட்டு நன்றா யில்லை காக்கைப் பாட்டு நன்றா யில்லை தொழுகை யிலே வட மொழியால் சொல்லும் பாட்டு நன்றாயில்லை அழுது கொண்டிருக்கும் போதும் சிரித்துக் கொண்டிருக்கும் போதும் குழந்தை குரல் கேட்கக் கேட்கக் காது குளிரும் இனிய பாட்டு! - பழம் புதுப் பாடல்கள், ப.364, 2005; குயில், 7.7.1959 பயிற்சி : பொருள் விளங்காத வடமொழிப்பாட்டு, கழுதைப் பாட்டுக்கும் காக்கைப் பாட்டுக்கும் ஒப்பாயிற்று. இதனால் இளைஞர் உணர்ந்து கொள்ள வேண்டியது பிள்ளை அழுதாலும் சிரித்தாலும் கேட்க ஆசையாய் இருக்கும். அருஞ்சொற்கள் : தொழுகை, வடமொழி கேள்வி : கேட்கக் கேட்கக் காதுகுளிரும் என்பதன் எதிர்மறையாக வழங்குகின்ற சொற்றொடர் எது? (கேட்கக் கேட்கக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருக்கும்) 199. படிப்பை இகழலாமா? பாடம் சொல்லிக் கொடுப்பேன் வாவா பண்ணியம் எல்லாம் கொடுப்பேன் வாவா ஆடும் குதிரையும் கொடுப்பேன் வாவா அட்டைப் பெட்டியும் கொடுப்பேன் வாவா ஓடி அழைத்தாள் அக்கா! வந்தே உட்கார்ந் திட்டாள் தங்கப் பாப்பா பாடம் சொல்லத் தொடங்கும் முன்னே பண்ணியம் எல்லாம் வாங்கிக் கொண்டாள். பண்ணியம் எல்லாம் உண்டாள் பாப்பா பாடம் வேண்டாம் என்றாள் பாப்பா எண்ணிய எல்லாம் பெற்றாள் பாப்பா ஏனோ பாடம் என்றாள் பாப்பா பெண்ணா குரங்கா இந்தப் பாப்பா பிழைசெய் தாளே இந்தப் பாப்பா கண்ணை இகழ்ந்தாள் இந்தப் பாப்பா கல்வி இகழ்ந்தாள் இந்தப் பாப்பா. - பழம் புதுப் பாடல்கள், ப.348, 2005; குயில், 28.4.1959 200. பள்ளிக்குப் போ இசை : பிலஹரி தாளம் : ஆதி ஸஸரீக பா. பபாப. பள்ளிக் கூட முதல்மணி - கேள் பதஸ. நீ த. பதப. மகரிகாரி. பறந்துபோ என் கண்மணி நீத. பதபமகம துள்ளி ஓடு சுவடிப் பையைத் தநித. ப. த. ப. மபமக ரிஸஸ தூக்கி ஓடு மகிழ்ச்சி யோடு - பள்ளி அறிவைக் கொடுக்கும் கல்வி - நல் லழகைக் கொடுக்கும் கல்வி பொறுமை கொடுக்கும் கல்வி - நீ போபோஎன் அருமைச் செல்வி - பள்ளி பெருமை சேர்க்கும் கல்வி - பெறும் பொருளைச் சேர்க்கும் கல்வி தருமம் சேர்க்கும் கல்வி - கற்கத் தாவிடுவாய் என் புதல்வி பாடவைக்கும் கல்வி - கொண்ட பசியைப் போக்கும் கல்வி நாடு காக்கும் கல்வி - நீ நடநடநட என் புதல்வி - பள்ளி நாள்தோறும் போய்ப் போய் - நீ படிக்க வேண்டும் நன்றாய் - ஒரு நாள் நின்றாலும் மறப்பாய் - நீ நடநடநட மிகவிரைவாய் - பள்ளி தமிழைக் கற்க வேண்டும் - நீ தமிழை மீட்க வேண்டும் தமிழ கந்தான் உன்தாய் - அவள் தளையறுக்க வேண்டும்! செல்வாய் - பள்ளி - பழம் புதுப் பாடல்கள், ப.326, 2005; குயில், 6.1.1959 201. அன்னை தன் மகளுக்கு கல்விநலம் அறியாத சின்னஞ் சிறுகிளிக்குப் - படிப் பல்லவோ நல்லறிவு விளக்கு. - யாதும் அறியாத குறியாகப் பள்ளிசெல்ல வேண்டும் - நீ குறையாத செல்வம் பெறவேண்டும். - யாதும் அறியாத கற்றவர் விழிகளே விழிகள் - கல்வி கல்லாதவர் விழிகள் குழிகள் பெற்றிடுவார் நல்ல வழிகள் - கல்லாப் பேதைகளுக் குண்டாகும் பழிகள் - யாதும் அறியாத மாணிக்க உதடுகள் திறக்கும் - மலர் வாயில் தமிழ்முத்துக்கள் பிறக்கும் கோணல் வழக்கமெல்லாம் பறக்கும் - கற்றுக் கொண்டாலன்றோ வாழ்வு சிறக்கும் - யாதும் அறியாத நல்லதென்றும் கெட்டதென்றும் தெரியும் - கற்றால் நம்குறள் உண்மைப் பொருள்புரியும் இல்லற விளக்கு நன்றாய் எரியும் - கல்வி இருந்தால்தான் புகழ்உலகில் விரியும். - யாதும் அறியாத இருட்டில் இருப்பதிந்த உலகம் - கால் இட்ட இடத்திலெல்லாம் கலகம் கருத்தாய் இருந்தால் தீமை விலகும் - நல்ல கல்வியினால் வாழ்க்கை இலகும் - யாதும் அறியாத - பழம் புதுப் பாடல்கள், ப.309, 2005; குயில், கிழமை இதழ், 21.10.1958 202. அன்னையின் பூரிப்பு சின்ன சின்ன சின்ன குறட்பா - நீ பன்னப் பன்னப் பன்ன இனிப்பதப்பா. அன்னை தமிழ்உன் தந்தை தமிழ்அத னால்உன் வாயும் மனமும் செந்தமிழ் - சின்ன பிள்ளை என்றுநீ பிறந்தாய், கிள்ளை என்றுவாய் திறந்தாய்! குள்ள நினைப்பே துறந்தாய் வள்ளுவர் உள்ளங்கண்டே சிறந்தாய் - சின்ன ஈன்றவர் பெற்ற பேறு - நின் இதழ்தரும் தமிழ்ச் சாறு! சான்றோ ரின்ஒரு கூறு - நீ தமிழ்ப் பயிருக்குக் காவிரி யாறு - சின்ன நின்னாடு பொன்னாடு நீணிலம்புகழ் தமிழ்நாடு முன்னோரின் தமிழ்ஏடு மொழியக் கண்டாய் தமிழ்ப்பண்பாடு - சின்ன இன்பமும் அறம்பொருளும் இந்நாஎன் றேஅருளும் அன்பு வந்தே திரளும் அறநூலுன் நாவில் வளரும் - சின்ன இசை : ரஞ்சனி தாளம் : ஆதி சின்ன சின்ன சின்ன குறட்பா நீ ச்ச் ச்ச் ச்ச் பதசா. ரீ. ச்ரித பன்னப் பன்னப் பன்ன இனிப்பதப்பா தச் ரிக் கக் ரிக்ச்தச்ரீ அன்னை தமிழ்உன் தந்தைதமிழ் அத ரி. க்ம்க் ரிரிக்ச் தத னால்உன் வாயும் மனமும் செந்தமிழ் - சின்ன ரீ. . த ச்ச் ரி. ச்தா பம. பத பிள்ளை என்று நீ பிறந்தாய் ததத த தா பமபதா. கிள்ளை என்று வாய் திறந்தாய் சரி. கம. கா. ரிகச. குள்ளநினைப் பே துறந்தாய். பதச்ச் ரீ. ரிசத தச்ரிக்கா பதச்ச் ரீ. ரிசத தச்ரிக்கா வள்ளுவர் உள்ளங் கண்டே சிறந்தாய் - சின்ன ம்க்ரி க்ச்தரிச்த பம. பத. - பழம் புதுப் பாடல்கள், ப.323, 2005; குயில், 23.12.1958 203. சிட்டுக்களும் பூனையும் மெய்ம் மூவாறு ஙஞணநமண ஙஞணநமன இருகுருவிகள் கூட்டுக்குள் இப்படிப் பாடின பாட்டுக்கள்! யரலவழள யரலவழள என்றொரு பூனை தூலத்தில் மெதுவாய் ஏறிய காலத்தில் கசடதபற கசடதபற எனப் பறந்தன சிட்டுக்கள் எதிரில் சன்னல் வெட்டுக்குள். - பழம் புதுப் பாடல்கள், ப.347, 2005; குயில், 28.4.1959 204. நமக்குள் சண்டை ஏன்? சிட்டுக் குருவிக்கும் சிட்டுக் குருவிக்கும் சண்டை! சிச்சி புச்சியென்று கொத்தக் கிழிந்தது மண்டை! பட்டுப் படாலென்று எட்டிஅ டித்தஇ றக்கை, பட்டுப் பட்டாகப் பறந்தது வீட்டைம றைக்க- த் தட்டிஇ டுக்கிற்பு ரட்டிய தேஒரு குருவி ஒட்டிஎ ழுந்துக டித்தது மற்றொரு குருவி தட்டிக்கொண் டுபோக வந்தது காக்கைக் கூட்டம் சண்டையை விட்டேஇ ரண்டும் எடுத்தன ஓட்டம்! - பழம் புதுப் பாடல்கள், ப.354, 2005; குயில், 12.5.1959 205. என் நூல் அருமை எனக்கே தெரியும் தாத்தா சாற்றுகின்றார் கலைப்பேழை ஆகிய கண்ணகி சிலம்பை - என் நிலை- ப்பேழை தனிலிருந் தெடுப்பாய் - உடன் நீஎன்றன் கையிற் கொடுப்பாய் - கலைப்பேழை கையிலே அழுக்குச் சிறிது கண்டாலும் சுவடிக் கிழுக்கு! புய்யாமல் தவறியே புழுதியில் விழாமல் புத்தகத்தை எடுத்திட வேண்டும் - கலைப்பேழை ஒருநூல் தெரியும் - எடுத்தால் ஒன்றின்மேல் ஒன்று சரியும் வரிசை கெடாமல் மற்றவை விடாமல் மனம்சோராமல் எடுத்திட வேண்டும் - கலைப்பேழை உன்னால் முடியாது - வேண்டாம் நானே எடுத்தால் பிழைநேராது என்நூல் அருமை எனக்கே தெரியும் பொன்னான சுவடிகள் எந்நாளும் வாழ்க! - கலைப்பேழை பயிற்சி: கலைநிறைந்த பெட்டி போன்றதான சிலப்பதிகாரத்தை என் நிலைப் பேழை - அலமாரியினின்று எடு என் கையிற் கொடு! புத்தகம் புய்ந்து விடாமல் புழுதியில் விழுந்து விடாமல் எடுக்க வேண்டும். அடுக்கிலிருந்து ஒரு நூலை எடுக்கையில் இந்தண்டை அந்தண்டை களிலுள்ள நூல்கள் சரியும். சரியாமல் வரிசையினின்று விழாமல் மனம் சோர்வு கொள்ளாமல் எடுக்க வேண்டும். வேண்டாம்; அது உன்னால் முடியாது, நானே எடுத்துக் கொள்வதால் பிழை ஏற்படாது. அருஞ்சொல் விளக்கம்: கலை - பாட்டின் சுவைப்பகுதி, பேழை - பெட்டி, நிலைப்பேழை - அலமாரி, சிலம்பு - சிலம்பு பற்றிய நூல் - அதாவது சிலப்பதிகாரம், உடன் - உடனே, இழுக்கு - கெடுதி, புய்யாமல் - பிய்யாமல் - என்று வழங்கு கின்றது அது பிழை, சோர்வு - மறதி. கேள்விகள்: சுவடியை எடுக்கவேண்டிய முறைகளை எல்லாம் சொல்லி எடு என்ற தாத்தா பிறகே எடுக்க வேண்டாம் நானே எடுத்துக்கொள்கிறேன் என்று ஏன் சொன்னார்? பாடம் : பெரியவர்களின் நூற்களின் தூய்மை கெடும்படி நடந்து கொள்ளக் கூடாது. - பழம் புதுப் பாடல்கள், ப.365, 2005; குயில், 7.7.1959 206. ஒற்றுமை ஈயைப் பார்த்தது பல்லி! பல்லியை இருந்து பார்த்தது பாம்பு! பாம்பைப் பாயப் பார்த்தது கோழி! கோழியைப் பசிக்குப் பார்த்தது காட்டுப் பூனை ஈயைப் பல்லி விழுங்கி விட்டது இருந்த பல்லியைப் பாம்பு கொன்றது தீய பாம்பைக் கோழி கொன்றது திருட்டுக் கோழியைப் பூனை கொன்றது வாயில் லாத உயிர்இ னங்கள் பெரிது சின்னதை விழுங்கி வாழும் தூய மனிதர்; அறிவு பெற்றவர், தோற்றங் களில் உயர்ச்சி என்பவர் நாய மின்றி வலுத்த வர்கள் இளைத்த வர்களை நசுக்குவதா? நேயம் கொண்டே இளைத்த வர்கள் நெஞ்சில் ஒற்றுமை கொள்ள வேண்டும் பயிற்சி: விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, மரஞ்செடி கொடிகள் ஆகிய இவ்வுயிரினங்கள் மனிதரைவிட அறிவு குறைந்தவை என்றும், அவைகட்கு மனிதருக்கு இருப்பது போலக் கைகால் பேச்சு முதலிய கருவிகள் இல்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறு கூறித் தாங்களே அதாவது மனிதர்களே எல்லா உயிர்களை யும் விட உயர்ந்தவர்கள் என்றும் கூறிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு கூறிக் கொள்ளும் மனிதர்களே, தங்களில் இளைத்தவர்களை வலுத்தவர்கள் அடிமைப்படுத்தலாமா சுரண்டலாமா துன்பப் படுத்தலாமா? அறிவுடையவன் தங்களைப்போல் பிறனையும் எண்ணுவானே! எங்கே எண்ணுகின்றான்? இதனால் இளைத்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒற்றுமையடைய வேண்டும். இதனால் இளைஞர்கள் உணரவேண்டியது ஒன்றுபட்டால் உண்டுவாழ்வே என்பது. அருஞ்சொற்கள்: தூய தோற்றங்கள், - பல்வகைப் பிறப்புக்கள் : விலங்கு, பறவை முதலியவை உயர்ச்சி. கேள்வியும் பதிலும்: விலங்கு முதலியவைகள் ஒன்றை ஒன்று தின்றுதானா வாழ வேண்டும்? ஆம் அவைகளுக்குப் பயிரிடமுடியாது சமைக்க முடியாது. இளைத்தவரை வலுத்தவர்கள் விழுங்குவதற்குச் சில எடுத்துக்காட்டுக்கள் உண்டா? உண்டு. தமிழரை வடவர் அடிமைப்படுத்திச் சுரண்டித் துன்பப்படுத்துகின்றார்கள். தமிழரின் தாய் மொழியிலேயே கையை வைத்துவிட்டார்களே! பார்ப்பனர்கள் வலுத்துவிட்டார்கள். அவர்கள் இளைத்துள்ள தமிழர்களை நசுக்குகின்றார்கள். ஒற்றுமையுற்றால் இளைத்தவர் அடையும் பயன் என்ன? வலுத்தவர்களை எதிர்த்து நிற்கமுடியும். எடுத்துக்காட்டு தமிழகத் தமிழர் பெரியாரால் ஒற்றுமை அடைந் துள்ளார்கள். பார்ப்பனர் நடுங்கவில்லையா? - பழம் புதுப் பாடல்கள், ப.365, 2005; குயில், 7.7.1959; 207. மாணவர்க்கு உறங்கும் நேரந்தான் ஓய்வுநேரம் வெண்பா cw§F«ne uªjh‹ xÊîne u«!பின் அறம்பொருள் இன்பம் அளிக்கும் - புறம்அகம் ஆன பழந்தமிழ்நூல் ஐயம்அறக் கற்க மானமுறு மாணவர் ஈங்கு. - பழம் புதுப் பாடல்கள், ப.387, 2005; குயில், 26.7.1960 208. நீ ஒரு பாவாணன் வெண்பா பாப்புலவர் பாட்டும், பயனும் புணர்ச்சியும் யாப்பும் பயில்க! எழில்ஒன்றைப் - பார்ப்பாயேல் ஆர்க்கும் அதுசொல்ல ஆசைகொள் வானுள்ளம் வார்க்குமே செய்யுள் மழை. - பழம் புதுப் பாடல்கள், ப.387, 2005; குயில், 26.7.1960 209. அறிவை ஆசையால் தோண்டினால் புதிய மனம் உண்டாகும் வெண்பா சிறிதெழுதத் தேடி நிறையப் படிப்பாய்! பிறர்அடி பார்த்துப் பிழைப்போன் - வறியன்! கருவி விருப்பாய் அறிவுநிலம் கல்வி வருவி புதிய மனம். - பழம் புதுப் பாடல்கள், ப.387, 2005; குயில், 26.7.1960 210. எழுத்தை அழகாய் எழுது வெண்பா மட்டுப் படாத இலக்கியச்சீர் வாய்த்தாலும் நட்டு நடுமுதுகு வில்லாக்கப் - பட்டுக் கழுத்தை வளைக்காமல் கைச்சோர்வில் லாமல் எழுத்தை அழகாய் எழுது. - பழம் புதுப் பாடல்கள், ப.388, 2005 குயில், 26.7.1960 211. நினைவாற்றல் வேண்டும் வெண்பா தேடல் தமிழ்ச்செல்வம்! சேர்த்தல் தமிழ்ஒழுக்கம்! நாடல் தமிழர்நலம் நன்றென்க - பாடல் புனைவாற்றல் உண்டான போதும் எவர்க்கும் நினைவாற்றல் வேண்டும் நிலத்து. - பழம் புதுப் பாடல்கள், ப.388, 2005; குயில், 26.7.1960 212. வேலன் பாட்டு வேலன் உடம்பைச் சொறிகின்றானே எதனால் - அவன் காலையிலே குளிக்கவில்லை அதனால்! மூலையிலே தூங்குகின்றான் எதனால் - அவன் காலைப் பாடம் படிக்கவில்லை அதனால்! கண்ணைக்கசக்கிக் கொள்கின்றானே எதனால் - அவன் மண்ணைத் தூற்றி ஆடினானே அதனால்! திண்ணையிலே சுவடி வைத்தான் எதனால் - அவன் எண்ணிப்பார்க்க நேரமில்லை அதனால்! அழுக்குச்சட்டை போட்டானே எதனால் - அவன் புழுதியிலே புரண்டானே அதனால்! எழுத்தைக்கிறுக்கி எழுதுகின்றான் எதனால் - அவன் உழைக்கவில்லை திருந்தவில்லை அதனால்! கண்டதெல்லாம் கேட்கின்றானே எதனால் - அவன் சண்டித்தனம் போகவில்லை அதனால்! சண்டை பிடிக்கின்றானே எதனால் - அவன் மண்டையிலே மூளையில்லை அதனால்! நாயை அடிக்கின்றானே எதனால் - அவன் தாய் சொல்லைக் கேட்பதில்லை அதனால்! வாயடக்கம் இல்லாததும் எதனால்? - தன்னைப் போயடக்க ஆளில்லையே அதனால்! தெருநடுவில் நடக்கின்றானே எதனால் - தன்னை ஒரு வண்டியும் மோதவில்லை அதனால் எருமை வந்தால் விலகவில்லை எதனால் - அவன் கருத்தாக நடப்பதில்லை அதனால்! குஞ்சுக் கோழியை அடிக்கின்றானே எதனால் - அவன் கொஞ்சிக் குலவ அன்பில்லையே அதனால்! அஞ்சிக் குனிந்து நடக்கின்றானே எதனால் - அவன் நெஞ்சத்திலே வீரமில்லை அதனால்! நீயென்றான் பெரியவரை எதனால் - அவன் நீங்களென்னத் தெரியாதவன் அதனால்! நாயென்றான் நண்பர்களை எதனால் - நல்ல நேயமில்லை நெஞ்சத்திலே அதனால்! - பழம் புதுப் பாடல்கள், ப.398, 2005; வானம்பாடி; சிறுவர் வார இதழ், 3.4.1962 213. யார் நல்லவன்? தாய் : ஒரே ஒரு கொய்யாப் பழம் எடுத்துக் கொள் சின்னப்பா சின்னப்பன்:ஐந்து கொய்யாப்பழம் இருக்குதே அம்மா! தாய் : ஐந்து கொய்யாப்பழம் இருக்கிறது பொன்னப்பா பொன்னப்பன் :ஒன்று எடுத்துக் கொள்ளட்டுமா அம்மா இருவரில் எவன் நல்லவன்? தாய் : உன் நாக்கில் புண் எப்படி இருக்கிறது சின்னப்பா! சின்னப்பன் :கொஞ்சம் பிண்ணாக்குக் கேட்கிறது அம்மா தாய் : பிண்ணாக்குத் தின்னாதே பொன்னப்பா பொன்னப்பன் :உன் நாக்கில் புண் ஆகிவிட்டாலும் நான் பிண்ணாக்குத் தின்ன மாட்டேன் அம்மா! இருவரில் எவன் நல்லவன்? தாய் : பாட்டி பட்டணம் போகிறார்கள் நீ பாடசாலைக்குப்போ சின்னப்பா சின்னப்பன் : நானும் பட்டணம் போவேன் அம்மா தாய் : பாட்டி பட்டணம் போகிறார்கள் உனக்குப் பள்ளிக் கூட நேரமாகிறது பொன்னப்பா! பொன்னப்பன் : பட்டணம் போய் வாருங்கள் பாட்டி - நான் பள்ளிக் கூடம் போகிறேன். இருவரில் எவன் நல்லவன்? தாய் : பள்ளிக்கூடம் போ பலாச்சுளையை வந்து உண்ணலாமே சின்னப்பா! சின்னப்பன் : பலாச் சுளையை உண்டபிறகு பள்ளிக்கூடம் போகிறேன் அம்மா! தாய் : பொன்னப்பா பள்ளிக்கூடம் போகப் போகின்றாயா? பலாச்சுளையை உண்ணப் போகின்றாயா? பொன்னப்பன் : பள்ளிக்கூடம் போய்வந்து பலாச்சுளையை உண்ணுவேன் அம்மா இருவரில் நல்லவன் யார்? - பழம் புதுப் பாடல்கள், ப.400, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 13.4.1962 214. பூனைக்குட்டியும் மண்ணாங்கட்டியும் பாலைக் குடிக்கையில் பூனைக்குட்டி - அதன் வாலை இழுத்தானாம் மண்ணாங்கட்டி! வாலை இழுத்ததால் மண்ணாங்கட்டி - அவன் காலைக் கடித்ததாம் பூனைக்குட்டி! கோலை எடுத்தானாம் மண்ணாங்கட்டி - ஒரு வேலிமேல் பாய்ந்ததாம் பூனைக்குட்டி! வேலிகள் பொத்திடப் பூனைக்குட்டி - அதை- க் கேலி செய் தான்கண்ட மண்ணாங்கட்டி! - பழம் புதுப் பாடல்கள், ப.402, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 23.4.1962 215. பெயர் தெரியாத மணமலர் அண்டைவீட்டுக் கொல்லையிற் கண்ட வண்டுபடா நிறமிலா மலர் மரம் காலையில் என்விழி கவரவில்லை மாலையில் வீட்டு வெளியில் வந்தேன் உடலை உளத்தை உயிரை இன்பக் கடலில் ஆழ்த்திய மணம்அது மலர்மணம்! எங்கே அம்மலர் எங்கே அம்மரம்! இங்கே இதோஎன் நண்பர் கொணர்ந்தார் மல்லிப் பிளவளவு மலர்கள் நிறைந்த கொத்துக் கண்டேன் அம்மலர்க்கு வைத்த பெயரை நான் காணவில்லையே? - பழம் புதுப் பாடல்கள், ப.402, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 23.4.1962 216. கெட்டபையன் சாமந்தியின் பூவின்முகம் மஞ்சள் சம்பங்கியின் பூவின்முகம் மஞ்சள் பூமாதுளைப் பூவின்முகம் சிவப்பு பூத்திருக்கும் அலரிமுகம் சிவப்பு தாமரைப்பூ வெள்ளை! அல்லது சிவப்பு சாதிமல்லிப் பூவின்நிறம் வெள்ளை போமடயா பள்ளிக்கூடம் என்றால் போகாத பை யன்முகந்தான் கறுப்பு சாலையிலே சேவற்கோழி கூவும் தனதனனா சிட்டுக்குருவி பாடும் மூலையிலே கூண்டுக்கிளி பேசும் முற்றத்திலே காக்கை வந்து கரையும் சோலையிலே வண்டுகுழல் ஊதும் தோட்டப் பசு அம்மா என்று சொல்லும் காலையிலே பள்ளிக்குப்போ என்றால் கட்டாயமாய்க் கெட்டபையன் அழுவான் - பழம் புதுப் பாடல்கள், ப.406, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 21.5.1962 217. அழகாய் எழுது முத்துக் கோத்தாற் போலே - எ ழுத்தெழுதி னாலே - உனை அத்தனைபே ரும்புகழ் - வார் அலுவல் தருவார்! கோணல்வரி வேண்டாம் - தலை குனிந்தெழுத வேண்டாம்! மாணவனே, உன் இறகு மாட்சி யடையும் எங்கிருந்தோ நிலவும் - நம் இருகண்ணையும் கவரும்! இங்கே உன் கைவரிசை எடுக்கும் முதற் பரிசை! - பழம் புதுப் பாடல்கள், ப.407, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 28.5.1962 218. நல்ல பிள்ளை அம்மாவுக்கு நல்ல பிள்ளை அப்பாவுக்கு நல்ல பிள்ளை ஐயாவுக்கும் நல்ல பிள்ளை ஆனான் - அவன் அதனாலேயே பணக்காரன் ஆனான் பள்ளியிலே நல்ல பிள்ளை படிப்பிலே நல்லபிள்ளை பலருக்கும் நல்லபிள்ளை ஆனான் - அவன் பட்டங்கள் பல பெற லானான் மாணவர்க்கும் நல்ல பிள்ளை வாணிகர்க்கும் நல்லபிள்ளை நாணயத்தில் நல்லபிள்ளை ஆனான் - அவன் மனிதர்க்குள் உயர்ந்தவன் ஆனான் வீரத்தில் நல்லபிள்ளை வீட்டுக்கு நல்லபிள்ளை போருக்கு நல்லபிள்ளை ஆனான் - அவன் புகழாற் சிறப்படைய லானான் நல்லபிள்ளை நல்லபிள்ளை என்றுசொல்லும் படிநட இல்லாவிட்டால் மரமா - மாடா - நீ எக்கேடு கெட் டாகிலும் போடா - பழம் புதுப் பாடல்கள், ப.408, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 4.6.1962 219. படிப்பு இருக்கும் அல்லிப் பூவில் தேனிருக்கும் ஆழக் குளத்தில் மீனிருக்கும் முல்லைப் பூவில் மணமிருக்கும் முத்துக் கொட்டையில் குணமிருக்கும் கொல்லை மரத்தில் கிளையிருக்கும் கொஞ்சிப் பேசக் கிளியிருக்கும் நல்லபிள்ளை நெஞ்சத்திலே நாளும் படிப்பு நினைப்பிருக்கும் - பழம் புதுப் பாடல்கள், ப.409, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 11.6.1962 220. படியாதவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் ஒரே பிள்ளை அவன் மேலே இருவருக்கும் ஆசை கொள்ளை கொள்ளை! குப்பா என்று கூப்பிடுவார் கொடுப்பார் ஒரு தட்டு கொடுத்த அந்த தட்டு நிறை இருக்கும் வெண்ணெய்ப் பிட்டு தப்பாமலே விழுங்குவான் தருவார் ஒரு வடையும் தந்த வடை ஒரு நொடியில் அவன் வயிற்றை அடையும் எப்போதுமே குப்பனிடம் இரண்டு மூன்று பந்தும் இருக்கும் நாலு பிள்ளைகளும் ஆடிடுவார் வந்து. எட்டுமணி ஆவ தற்குள் ஏழுதரம் கெஞ்சி எங்கண்ணே எம் பொன்னே என்றெல்லாம் கொஞ்சி பட்டுச்சராய் பட்டுச் சட்டை பட்டுக் குல்லாய் போட்டு- ப் பள்ளிக்கூடம் போஎன்றால் புரண்டழுவான் கேட்டு அட்டைப் படிப்பும் படிக்கவில்லை அம்மா அப்பா அழுதார் ஆள் மட்டும் வளர்ந்துவிட்டான் தென்னைமரம் போலே பட்டிமாட்டுச் சாணிஅள்ள வேண்டும் காலைமாலை படிக்காத முட்டாளுக்கே அதுதகுந்த வேலை - பழம் புதுப் பாடல்கள், ப.411, 2005; வானம்பாடி; சிறுவர் வார இதழ், 16.7.1962 221. ஆலமரத்துக் கிளிக்கு அழைப்பு பழம் வேண்டு மாஉனக்குப் பச்சைக் கிளியே - பசும் பால் வேண்டு மாஉனக்குப் பச்சைக் கிளியே கிழங்கு வேண்டு மாஉனக்குப் பச்சைக் கிளியே - நீ கீழே வந்து சொல்லவேண்டும் பச்சைக் கிளியே அழகு தமிழ்ப் பேச்சினிலே பச்சைக் கிளியே - நீ அக்கக்கா என்பாயோ பச்சைக் கிளியே பிழிந்தபழச் சாறுதான் பச்சைக் கிளியே - நீ பேசுகின்ற பேச்செல்லாம் பச்சைக் கிளியே கரும்புபி டிக்குமா பச்சைக் கிளியே - உனக்குக் கட்டிவெல்லாம் வேண்டுமா பச்சைக் கிளியே பருந்துவந்து கொத்திவிடும் பச்சைக் கிளியே - பெரும் பாம்புவந்து சீறக்கூடும் பச்சைக் கிளியே இருந்திருந்தும் ஆலமரம் பச்சைக் கிளியே - இந்த ஏற்றஇடம் அல்லவே பச்சைக் கிளியே விருந்துண்ண வந்துவிடு பச்சைக் கிளியே - இந்த வெள்ளிக்கம்பிக் கூட்டினிலே பச்சைக் கிளியே - பழம் புதுப் பாடல்கள், ப.413, 2005; வானம்பாடி சிறுவர் வார இதழ், 29.7.1962 222. நல்லபிள்ளை வில்லாதி வில்லனடா என்பிள்ளை - அவன் வேளைதோறும் பள்ளி செல்வான் என்பிள்ளை பொல்லாத பையனில்லை என்பிள்ளை - பள்ளி போகாத பையனில்லை என்பிள்ளை - அவன் எப்போதும் படித்திடுவான் என்பிள்ளை சொல்லுவதைக் கேட்டிடுவான் என்பிள்ளை - யார்க்கும் தொல்லை ஒன்றும் செய்வதில்லை என்பிள்ளை பள்ளிக்குப் போவதென்றால் என்பிள்ளை - கொஞ்சம் பாசாங்கு செய்வதுண்டா சேச்சேசே வெள்ளையாய் உடுத்திடுவான் என்பிள்ளை - அழுக்கு வேட்டியையா கட்டிடுவான் சேச்சேசே துள்ளிக் குதிப்பதுண்டோ போகும்வழியிலே - கல்லைத் தொடுவானா கையாலே சேச்சேசே உள்ளபடி சொல்லப்போனால் என்பிள்ளை - இந்த ஊருக்கெல்லாம் நல்லபிள்ளை என்பிள்ளை - பழம் புதுப் பாடல்கள், ப.420, 2005; வானம்பாடி; சிறுவர் வார இதழ், 10.9.1962 1. பொங்கல் வாழ்த்து அறுசீர் விருத்தம் தைத்திங்கள் முதல்நாள் என்றார்! தமிழர்கள் திருநாள் என்றார்! புத்தமு தாக வந்த பொங்கல்நாள் என்றார்க் கின்றார்! கைத்திற ஓவி யங்கள் காட்டுக வீட்டில் என்றார்! முத்தமிழ் எழுக என்றார்! முழங்குக இசைகள் என்றார்! 1 கொணர்கவே புதிய செந்நெல் குன்றாக என்றார்! பெண்கள் அணிகள், பொன் னாடை யாவும் அழகாகக் குவிக்க என்றார்! மணமலர் கலவை கொண்டு மலைஎனக் குவிக்க என்றார்! கணுவகல் கரும்பும் தேனும் கடிதினிற் கொணர்க என்றார்! 2 எழுத்தாளர் பொங்கல் வாழ்த்தே எழுதுக ஏட்டில் என்றார்! பழச்சுமை வருக என்றார்! பட்டியல் எழுதிச் சென்று வழக்கத்துக் கடைச்ச ரக்கு வாங்கிவந் திடுக என்றார்! முழுக்குலை வாழை மாவின் தோரணம் முடிக்க என்றார் 3 எழுந்தது கீழ்க்க டல்மேல் இளங்கதிர், மூசைத் தங்கம் பொழிந்தது! விண்ணும் மண்ணும் பொலிந்தது தமிழர் நாடு! வழிந்தது பொங்கல் பொங்கி! வாழ்த்தினர் பரிதி தன்னைத் தழைந்தது நெஞ்சில் இன்பம், தமிழர்கள் பொங்கல் உண்டார். 4 வாழிய பொங்கல் நன்னாள்! வாழிய திராவி டந்தான்! வாழிய புதுமை நூற்கள்! வாழிய தமிழ்க் கலைகள்! சூழிய மணிமு கில்கள்! துலங்குக நன்செய் யாண்டும் ஆழ்கடல் மிசைஎ ழுந்த அழகிய பரிதி வாழ்க. 5 - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.1-2, 1954; பொன்னி, 14.1.1948 2. முரசொலி திரைகடல் மீது பரிதி எழுந்தே அரசு வீற்றிருந்தான அழகொளி வீசி! வாழிய பரிதி, வண்மைத் திருநாள்! இந்நாள் பொங்கல் இட்டு மகிழும் தென்னாட்டு மக்களின் திருவென ஓங்கி முரசொலி நாளும் முன்னேற்றம் எய்திட என்மன மாரயான் வாழ்த்து கின்றேன் என்றும் முரசொலி இனிது வாழியவே! வாழிய திராவிட மக்கள் நன்றே! - முரசொலி, 14.01.1948 குறிப்பு : பொங்கல் திருநாள், 1948இல் கலைஞர் மு. கருணாநிதி அளித்த முரசொலி எனும் கிழமை இதழ்ப் பொங்கல் வாழ்த்து இது. 3. புது வாழ்வு புதுவாழ்வு வந்ததுகாண் பொங்கல் நாளில் புன்வாழ்வு தீர்ந்ததுகாண் திராவி டத்தில்! எதுவாழ்வு? மேற்கொள்ளும் நெறிதான் என்ன? என்பவற்றை அழகாக விளக்க மாக இதுநாளில் எழுதவந்த அறிஞன் தன்னை என்நாவால் மனமார வாழ்த்து கின்றேன். புதுவாழ்வு திராவிடர்கள் கைகள் தோறும் பொலிக; அதுஎன்றென்றும் வாழ்க நன்றே! திராவிடரின் நன்மைக்கே உழைப்பேன்; எந்தத் தீமைக்கும் உளம் அசையான்; அறிவு மிக்கான்; ஒருவ(ன்)னால், தைப்பொங்கல் பொங்கும் நாளில் ஊரெல்லாம் மகிழ்ச்சிவிழா எடுக்கும் நாளில் வருகின்ற புதுவாழ்வை நாட்டார் எல்லாம் வருக என வரவேற்க! ஆதரிக்க! திரு எய்த, அறம் ஓங்க, உரிமை எய்தித் திராவிடர்கள் பல்லாண்டு வாழ்க நன்றே!! - புதுவாழ்வு, சனவரி, 1948 குறிப்பு : சனவரி, 1948இல் பேராசிரியர் க. அன்பழகன் அளித்த புதுவாழ்வு எனும் திங்களிதழ்ப் பொங்கல் வாழ்த்து இது. 4. நாமெதற்கு வாடுவது? முத்துமல்லி கை பறிக்க மொய்க் குழல் வராததினால் சிற்றெறும்பு மொய்த்திடுதே பொன்னான அண்ணா - அவள் செய்யுந் தொழில் வேறு முண்டோ கண்ணான அண்ணா கொத்துகிளி தான் மகிழக் கோவைக்கனி ஊட்டுவதால் முத்துமல்லி கைமறந்தாள் பொன்னான தம்பி - இன்னும் மற்றபடி வேலையில்லை கண்ணான தம்பி. நல்லகுளிர்த் தென்றலது நங்கையும் வராததினால் புல்லிதழைத் தாலாட்டுதே பொன்னான அண்ணா! - இந்தப் போகமதை ஏன் மறந்தாள் கண்ணான அண்ணா! கொல்லிமலைச் சாரலிலே கோமானைக் கண்டதினால் நல்ல தென்றலை மறந்தாள் பொன்னான தம்பி - இதில் நாமெதற்கு வாடுவது கண்ணான தம்பி? - பொன்னி பொங்கல் மலர், 1948 5. பொங்குக பால் பொங்குக பால், பொங்கல் பெருக! திராவிட நா டெங்கும் மகிழ்ச்சி இலங்கிடுக! - திங்கள் முக மாதர், தந் துணைவர் மக்கள் முறையோர் அகமார்ந்த அன்பால் இலையில் - மிகப் படைத்த நன்றான பொங்கல் நனியுண்டு தாமகிழ்ந்தார் இன்றுபோல என்றும் மகிழ்ந்திருக்க! - தென்றல் பழகுதமிழ் நாடென்றும் தமதோர் அழகு திராவிடத்தின் ஆட்சி முழுதும் தமதாக்கித் தம் கலை யொழுக்கம் அனைத்தும் அமைவாக வாழ்க புகழ் ஆர்த்து! - பொன்னி பொங்கல் மலர், 14.01.1950 188. திருமண வாழ்த்து ஒருமன தாயினர் தோழி - இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி! பெருமன தாகி இல்லறம் காக்கவும் பேறெனப் படும்பதி னாறையும் சேர்க்கவும் - ஒருமன தாயினர் தோழி! மருமலர்த் தார்புனை மார்ப னோடும் மழைபோற் கூந்தல் அழகன்னப் பேடும் வருவார்என அந்தப் பஞ்சணை தேடும்! வந்து வரைவார் இன்ப இலக்கிய ஏடும்! - ஒருமன தாயினர் தோழி இந்தநாள் போலே எந்தநூற் றாண்டும் இன்பம் எனவே ஒவ்வோர் இமைப்போதம் தாண்டும்! செந்தமிழ் நாட்டிடைத் தொண்டுகள் யாண்டும் செயத்தக்க மக்களை இவர்பெற வேண்டும் - ஒருமன தாயினர் தோழி - இசையமுது, இரண்டாம் பகுதி, 1952 6. பொங்கல் வாழ்த்து அகவல் பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே, உண்ணும் விழிகள் உவக்கும்ஓ வியமே, முன்னைக்கு முன்னர் முளைத்தமூ தொளியே, இந்நாள் மட்டும் இளைமைமா றாமல் புதிது புதிதெனப் போற்றும் பரிதியே, இந்நாள் புதுமையிற் புதுமை இயற்றினாய். காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக் கோலக் கதிர்கள் குலுங்க, நீலக் கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே, ஆடல்வா ழியநின் அழகு வாழிய! புத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து தித்திக் கும்பால் செம்மையின் அளாவ அலரிச் செவ்விதழ் அவிழ்ந்தன போல இலகெரி அடுப்பில் ஏற்றிய பானை, பொங்கிடப், பொங்கலோ, பொங்கலென் றார்த்தே புரைதீர் வெல்லம், புலிப்பல் போன்ற ஏலம், பருப்புச் சேலத்து நறுநெய் நன்று சேர்த்துக் குன்றென இறக்கித் தேன்பெய்து, முக்கனி சேர்த்து விருந்துடன் ஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந் திருள்நீக்கி எழுநின் எழுச்சி வாழ்த்தி அருள்தேக் குழவர் வாழ்த்தி அந்தமிழ் வாழ்வினை வாழ்த்தி வாழ்த்தி மூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.3, 1954 7. திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து எண்சீர் விருத்தம் அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்! அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்! மிகுத்தகடல், குமரியினை மறைக்கு முன்னர்! விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிரு முன்னர்ப் பகுத்தறிவின் துணையாலே அரசி யற்றிப் பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துத் திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில் திராவிடநா டெனப்போற்றும் என்றன் அன்னாய். 1 பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள், போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச் செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம் செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்! பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும் பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற் றில்லை. 2 தெலுங்குமலை யாளங்கன் னடமென் கின்றார் சிரிக்கின்றாய் அன்னாய்நின் மக்கள் போக்கை! நலங்கெட்டுப் போனதில்லை, அதனா லென்ன? நான்குபெயர் இட்டாலும் பொருள் ஒன்றன்றோ? கலங்கரையின் விளக்குக்கு மறுபேர் இட்டால், கரைகாணத் தவறுவரோ மீகாமன்கள்? இலங்குதிரு வே,வையம் செய்த அன்னாய் எல்லாரின் பேராலும் உனக்கென் வாழ்த்தே! 3 தமிழகமே, திராவிடமே, தைம்மு தல்நாள் தனிலுன்னை வாயார வாழ்த்து கின்றேன். அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்; எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார் இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை, இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச் சல்ல. 4 அன்றொருநாள் வடபுலத்தைக் குட்டு வன்போய் அழிக்குமுனம் தன்வீட்டில் இலையி லிட்ட இன்பத்துப் பொங்கலுண்டான், அதைப்போ லத்தான் இன்றுண்டேன்; அன்றுன்னை வாழ்த்தி னான்போல் நன்றுன்னை வாழ்த்துகின்றேன் எனைப்பெற் றோயே நல்லுரிமை உன்மூச்சில் அகன்ற தில்லை. பொன்னேஎன் பெருவாழ்வே அன்பின் வைப்பே புத்தாண்டு வாழ்த்துரைத்தேன் நன்று வாழ்க. 5 - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.4-5, 1954 8. பொங்கல் பொங்கிற்றா? கலிவெண்பா உலகு நலம்காண உழவன் விதைத்தும், இலகு மணிக்கதிர் ஏறப் - பொலிதோள் கவிழக் கதிரடித்துச் சேர்த்திட்ட செந்நெல் குவித்து நிமிர்ந்தான்! குளிரில் - அவிழ்த்த கதிர்ச்செல்வன் தானும் கடல்மேல் நிமிர்ந்தான்; இதுகேள் உழவனே, இந்த - முதுவையத் தாட்சிஉனக் காகுக என்று கதிரவன் மாட்சியுடன் வாழ்த்தி மகிழ்கின்றான் - கேட்ட உழவன், நிறைநாளின் செல்வனே உன்றன் எழில்வாழ்க, என்னுமோர் வாழ்த்தை மொழி கின்றான். துய்ய உடம்புதான் சோர்வதே இல்லாமல் வையகம் வாழ்ந்திட வாழும்அம் - மெய்யுழவன், பொன்னின் புதுப்பரிதி வாழ்த்தியுளம் பூரித்துச் செந்நெல்கொண் டில்லத்தே சேர்த்திட்டான் - என்னே! உயர்நெல்லைத் தீட்டும் உலக்கைப்பா டல்கள்! அயில்விழி மாதர் அடுப்புயர்த்த பானைப் - பெயலான பாலோடு முத்தரிசி மேலெழுந்து பாடிவர ஏலங்கற் கண்டுநெய் இட்டபடி - மேலும் துழவித், தேன்பன்னீர் சுளைக்கனி யாவும் இழைய இழையத், தமிழால் - அழகுறவே பொங்கலோ பொங்கலென ஆர்த்தார்த்துச் செங்கரும்பும் தங்கம்நேர் மஞ்சள் விளைச்சலும் - எங்கணும் மாவிலைத் தாரும் மலியக், குருத்திலையைத் தாவி விரித்திட்ட தையலர்கள் - ஆவலொடும் அள்ளிவட் டித்திட்ட பொங்க லமிழ்தத்தைப் பிள்ளைகள் பேரர், பெருமான்கள் - உள்அன்பார் அன்னைமார் எல்லாரும் ஆரஉண் டார்கள்! ஒருவீடு போலத் தெருவீ டுகளும், தெருவீ டுகள்போலத் தென்னாட் - டிருக்கின்ற வீடெல்லாம் இன்ப விளையாட்டாம், வீட்டிலுள்ள மாடுகன் றுக்கெல்லாம் மாச்சிறப்பாம்! - சோடிப்பாம்! மங்காத செந்தமிழீர் வாரீர்நும் வீட்டிற்பால் பொங்கிற்றா? வாழ்க பொலிந்து. - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.6-7, 1954 9. பொன்னாடு வெல்கவே எண்சீர் விருத்தம் உண்டாயா நீபொங்கல்? வீட்டிற்பால்பொங் கிற்றா? உட்காரப் பாஉட்கார்! உற்றுக்கேள்! இங்கோர் பண்தழைந்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலிஅதுதான் தம்பி! பண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று பகர்ந்துயர்ந்த விந்தியத்தின் இப்புறத்தி லுள்ள எண்தவிர்ந்தார் எல்லாரும், எங்கள்திராவி டந்தான் என்றுவிடு தலையடையும் என்கின்றார் அன்றோ! 1 பனியில்லை; குளிரில்லை; இருள்கிழித்துக் கொண்டு பகலவன்தான் தலைகாட்டப் பல்காட்டி வாழ்த்தி இனியில்லை மடமைஎன ஆர்த்தாயே தம்பி இரு! பார்இ தோஅறிவுக் கண்ணாடி பூண்பாய்! முனைக்குமரி விந்தியத்தின் இடைப்பாங்கு வாழும் முத்தமிழர் எல்லாரும், இத்திராவி டந்தான் இனியடிமைத் தளையறுத்து விடுதலையே கொள்ள ஏற்றசெயல் செய்கின்றார் தெரிகின்ற தன்றோ! 2 தைத்திங்கள் முதல்நாளின் திருவிழா, உன்றன் தனிமையினை நீக்கித், திராவிடரெல் லாரும் எத்தாலும் ஒன்றென்று காட்டிற்றுக் கண்டாய்! இனத்துநினை வெல்லாம்உன் மனத்தளவே அன்றோ? முத்துநிறை கீழ்க்கடல்,மேற் கடல்,தெற்கே குமரி, முன்வடக்கில் விந்தியமாம் மேவுதிராவி டர்கள் ஒத்திந்த நாட்டினது விடுதலைக்கே என்றும் உழைக்கின்றார் நிலங்குலுங்க! உற்றறிநீ தம்பி! 3 என்நாடு பிரிகஎனப் பணிசெய்கின் றாய்நீ! எதிர்ப்போனும் அதைத்தானே செய்கின்றான் தம்பி! பொன்னாடு திராவிடமாம் என்கின்றாய் அஃது புன்நாடென் றுரைப்பானும் பொன்னாடென் போனே! தென்னாட்டிற் கிளர்ச்சியினைச் செய்கின்றாய் நீதான். சிரித்தபடி நிற்பானும் அதைத்தான்செய் கின்றான் இன்னதனை நீயுணர மாட்டாயா தம்பி? இனிவெற்றிக் கொடியேற்றல் ஒன்றுதான் பாக்கி! 4 மடமைஎன ஒன்றுண்டு! வாய்பெரிது! ifÆš thŸx‹W it¤âU¡F« áiwå£L thƉ goÛJ ÉF«!பல் லாற்பல்லை மெல்லும்! பார்என்று கூச்சலிடும்! போர்நிறுத்தக் கெஞ்சும்! விடேன்என்று மேற்செல்வாய்! விடுதலையைச் செய்வாய்! வீறிட்டுப் பாயும்உன் உடற்குருதி யால்உன் கடமைசெய்வாய்! அம்மடமை தலைகவிழ்ந்து போகும் கண்மூடி யிருந்திட்டால் மண்மூடும் உன்னை! 5 உன்நாட்டை மீட்கநீ உயிர்நீக்கப் பெற்றால் உயிர்நீங்கச் சேய்தானும் உன்நாட்டை மீட்டோன்! தென்னாட்டிற் பிறந்தாயா? இல்லையா? நீஇத் திருநாட்டின் மறவனா? இல்லையா? வீரர் கல்நாட்டிக் கல்நாட்டிக் காலமெலாம் குருதிக் கடலேமுக் கடலாகப் புகழ்நாட்டி னார்இப் பொன்னாடு வெல்கவே பொங்கலோ பொங்கல்! புதியதிரா விடம்வாழ்க பொங்கலோ பொங்கல்! 6 - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.8-9, 1954 10. தைத்திருநாளே மகிழ்ச்சி கொண்டுவா எண்சீர் விருத்தம் அரிசியில்லை விறகில்லை கறியில்லை நல்ல அரசில்லாக் காரணத்தால் இவ்வளவு தொல்லை! வரிசையொடு வாழ்ந்தார்கள் தமிழ்நாட்டு மக்கள்! மன்னவர்கள் அந்நாளில் முறைசெய்த தாலே! பரிசில்பெறும் தமிழ்ப்புலவர் அந்நாளில் வாழ்ந்தார் பைந்தமிழ்வாழ்ந் ததுவாழ்ந்த திப்பெரிய வையம்! வருவாய்நீ தைப்பொங்கல் திருநாளே வாவா! வறுமைஅறத் துன்பமற மகிழ்ச்சிகொண்டு வாவா! 1 வெட்டவெளி வானத்தை மாணிக்கம் ஆக்கும் செங்கரும்பு நாட்டினிலே வெல்லமில்லை; வாழ்வை எட்டிக்காய் ஆக்கிவிட்டார் ஆளவந்தார்! மானம் இருப்பதாய்ச் சொல்கின்றார் அறிவற்ற பேச்சே! எட்டுகின்ற பாங்கெல்லாம் தமிழர்புகழ் அன்றி இல்லாமை என்னுமொரு பேச்சிருந்த தில்லை மட்டற்ற செல்வமே தைப்பொங்கல் நாளே வறுமையறத், துன்பமற நீவந்தாய் வாவா! 2 தமிழ்இகழ்ந்தார் கல்சுமக்கும் படிசெய்த இந்தத் தமிழ்நாட்டில் தமிழர்க்கோர் ஆதரவும் இல்லை; தமிழறியார் ஆளுகின்றார் அதனாலித் தொல்லை, தமிழ்அறிந்தார் ஆட்சியினைக் கண்டார்அந் நாளில்! கமழ்கின்ற கருத்துண்டா இந்நாளில்? இன்று கண்குழிந்த ஆளவந்தார், வடநாட்டின் அடியார்! அமிழ்தேவா! தைப்பொங்கல் திருநாளே வாவா, அகமகிழ்ச்சி கொண்டுவா எல்லார்க்கும் இங்கே! 3 ஏர்தட்டா துழுதுழுது பயன்விளைக்கும் உழவர் எழில்நாட்டின் முகத்தினிலே அழகில்லை, நாட்டை ஓர்தட்டாய்த் தட்டிப்போய்த் தாம்வாழ எண்ணும் ஆளவந்தார் செய்கையினால் உற்றதிந்தத் தொல்லை போர்தட்டும் முரசொலிக்கத் தமிழ்நாட்டில் இந்நாள் பொதுத்தொண்டு வெல்கவே வெல்கவே என்று மார்தட்டி வந்தாய்நீ தைப்பொங்கல் நாளே வறுமையறத் துன்பமற மகிழ்ச்சிகொண்டு வாவா! 4 இருட்கடலும் ஒளிக்கடலே! புதுப்பரிதி, முகத்தை எதிர்காட்டி ஆயிரம்செங் கதிர்கைகள் நீட்டி அருட்பெருக்கால் வருகின்றாய் ஆண்டுக்கோர் நாளே! அன்னையே தமிழரெல்லாம் உன்னருமை மக்கள்! பிரிக்கின்றார் எம்மையெல்லாம் யாம்பிரிய மாட்டோம் பிழைசெய்தார் யாம்சிறிதும் பிழைசெய்ய மாட்டோம் உருப்பட்டோம் உன்வரவால்! பொங்கலோ பொங்கல்! உயர்வாழ்வு நிலைநிற்க! வாழியநீ வாழி. 5 - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.10-11, 1954 11. பொங்கலோ பொங்கல் வண்ணம் தந்தாந தந்த - 9 தந்தந்தத் தானா - 1 பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்றுபா டுங்கள் மன்றிலா டுங்கள் எங்கள்நா டெங்கள் அன்புநா டென்று நன்றுபா டுங்கள். பொங்கியா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! 1 தங்கமே தங்கம் மண்டுநீ ரெங்கும் இங்கும்வா னெங்கும் நன்றுகா ணுங்கள் மங்கைமார் மைந்தர் நண்பரோ டன்பு மிஞ்சியா டுங்கள் சிந்துபா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! 2 எங்கும் ஆதந்து வந்தபா லுங்க ரும்பினோ டும்க லந்துமே பொங்க நைந்தவா கும்ப ழங்கள்தே னுங்க லந்துவா னுங்க மகிழ்ந்தவா றுண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே. 3 இங்குநா மின்று கண்டபே ரின்பம் என்றுமே கொண்டி லங்குவோம் நம்,பி றந்தநா டும்,கி டந்த சீரும்பொ ருந்தவே நன்று முந்தையோர் கண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! 4 - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.12-13, 1954 12. வாழ்க தமிழர் திருநாள் வண்ணம் தனனதந்த தத்தத்தனந்த தனதானா தனனதந்த தத்தத்தனந்த தனதானா தனனதந்த தத்தத்தனந்த தனதானா தனதானா தளையவிழ்ந்து செக்கச்சிவந்த மலர்போலே தமிழ்நிலஞ்சி றக்கப்புரந்த இறைபோலே தலைசிறந்த முத்தைச்சொரிந்த அலைமேலே கதிர்காணீர்! தவழ்குழந்தை கொட்டிப்புரிந்த நகைதானோ! அழகுமங்கை நெற்றிக்கிருந்த ஒளிதானோ! தகதகென்று பொற்றட்டெழுந்த வகையாதோ? அறிவீரோ? இளையசெங் கதிர்க்குப்பரிந்து தொழுவாரே இதுவிதெங்கள் தைக்குச்சிறந்த முதல்நாளே எனவிளைந்த நெற்குத்திஎங்கும் மகிழ்வரே மடவாரே! இலைமாங்கு ருத்துக்கள்தெங்கு கமுகாலே எழிலுறும் செழிப்புற்றஎங்கள் தமிழ்நாடே இசைஎழுந்து திக்கெட்டுமுந்தும் அதனூடே மகிழ்வோடே! வளமிகும்பு லத்திற் றிரிந்து வருமாடே வகையொடுங்க லத்திற் கறந்து தருபாலோ டரிசியும்சு வைப்புக்கரும்பு பிழிசாறோடோ டனலாலே! இனிதுபொங்க வைத்துக்கமழ்ந்த பொடியோடே மலிவொடும்ப ருப்புச்சொரிந்த கனிதேனோ அளவநன்றி றக்கிருந்திருந்தும் இளவாழை இலைமேலே! உளவிருந்தி னர்க்குப்பகிர்ந்து பரிவாலே உடனிருந்து ணப்பெற்றடைந்த சுவையாலே உளமகிழ்ந்த தைச்சற்றியம்ப முடியாதே ஒருநாவால்! உழவரன்பு ழைப்பிற்பிறந்த பெருவாழ்வே தழைகநன்றெ மைப்பெற்று வந்ததமிழ்தானே தழைகஎங்கள் வெற்றிக்குகந்த பெருநாளே திருநாளே! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.14-15, 1954 13. உழவர் திருநாள் கலிவிருத்தம் உழவே தலை என் றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர் முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்து வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின் றாரே! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற் பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் நாங்கள் உழவரே என்றுவிழா ஒப்பிமகிழ்ந் தாரே! உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஓட்டிவந்த தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல் கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று செய்யே தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே! தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம் ஓரிழுப்பு நோய் - பொதுவின் உள்ளவிழை வேவிழா! ஏரெழுப்பும் புத்தம், புதுச்செல்வம் இட்டபால் பாரழைக்கப் பொங்கற் பயன்மணக்க வைத்தனரே! mH»‹ gÇâ cÆ®;m› cÆiu KGJ« ÃW¤J« mÄœJjh‹ K¤J kiH!உ லகுதாய்! ts®¥ò¥ ghny ga‹!நெய் ஒழுகஉண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே! ஆடைஎல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்! ஓடைஎனப் பாலும், உயர்குன் றரிசியும் வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே! இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப் புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுகஉண்ட மகிழ்ச்சியே இந்நாள்போல் எந்நாளும் மல்க மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.16-17, 1954 14. பொங்கல் நாளில் அவர் சிந்து கண்ணிகள் செங்கதிர் எழுந்ததடி எங்கும்ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி - அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி. தெங்கில்இளம் பாளையைப்போல் செந்நெல்அறுத் தார்உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர் சங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி. கொட்டுமுழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாதரெல்லாம் பட்டுடை இழுத்துக்கட்டி என்னருந் தோழி - பாடும் பாட்டெல்லாம் வெல்லமடி என்னருந் தோழி. முத்தமிழ் முழக்கமடி எங்கணும் இசைக்கருவி முத்தரிசி பாலில் இட்டார் என்னருந் தோழி - வெல்லக் கட்டியுடன் நெய்யுமிட்டார் என்னருந் தோழி. தித்திக்கும்தே னும்பலாவும் செவ்வாழையும் மாம்பழமும் ஒத்துக்கலந் துண்டாரடி என்னருந் தோழி - அவர் ஒக்கலும் மக்களுமாக என்னருந் தோழி. எங்கணும் மகிழ்ச்சியடி எவ்விடத்தும் ஆடல்பாடல் பொங்கலோ பொங்கல்என்றார் என்னருந் தோழி பொங்கிற்றடி எங்குமின்பம் என்னருந் தோழி. திங்களிது தையடியே செந்தமிழ ரின்திருநாள் இங்கிதுபோல் என்றைக்குமே என்னருந் தோழி இன்பம்நிலை கொள்ளவேண்டும் என்னருந் தோழி. - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.18-19, 1954 15. தங்கக் கதிர் வாழ்க சிந்து கண்ணிகள் கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி தங்கவெய்யில் கண்டது கிழக்கிலே - நம் கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடி காடெங்கும் கன்னல்ப ழக்குலை - நல்ல களந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர் கங்குல் பறந்ததடி எங்கும் வெளுத்ததடி தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே கட்டாக ஏருழவர் பட்டாளம் கிளம்பிற்றே - கட கடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! - கங் எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு மங்கையர்கள் செந்தமிழில் பாடினார் - நல்ல திங்கள் கிடந்ததுபோல் எங்கும் அரிசியடி தீம்பாலில் இட்டதனை மூடினால் - மிகு தித்திப்பிற்கொ தித்த அந்த முத்துக்கடல் பொங்கிற்றடி எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு மங்கையர்கள் செந்தமிழில் பாடினார்! தென்னா டெல்லாம் பொங்கல் பொன்னாய் விளைந்ததுவே பல தெருவிலுந் தமிழிலும் கருவிகள் தருமிசை. - கங் அங்கங்கு வந்திடும்வி ருந்தும்க லந்தபடி அன்பும்சி றந்தபடி உண்டனர் - நமை அண்டும் பகைவறுமை கண்டு நடுங்கும்படி யான மனமகிழ்ச்சி கொண்டனர் - அவர் ஆடுவதும் பாடுவதும் அரங்கினிற் றென்பாங்கே அங்கங்கு வந்திடும்வி ருந்தும்க லந்தபடி அன்பும்சி றந்தபடி உண்டனர் தெங்கு கமுகு வாழை சிறப்பினைச் செய்தன இளஞ் சிறுவர்கள் சிறுமியர் நெறிதோறும் மகிழுவர்! - கங் மங்கா மகிழ்ச்சியாலே மாடுகன்று கழுவிப் பொங்கல்வி ருந்தளித்த அன்பிலே - அவை அங்கு மிங்கும் ஓடக் கொங்குமலர் மாலை ஆடிக் குலுங்கும் அவைகொம்பிலே இன்று வாய்ந்த மகிழ்ச்சி என்றும் வாய்ந்தபடியே யிருக்க மங்கா மகிழ்ச்சியாலே மாடுகன்று கழுவிப் பொங்கல்வி ருந்தளித்த அன்பிலே நம் வளநாட்டில் செந்தமிழே வாழ்கவே வாழ்கவே மிகு மனநல மொடுதமி ழர்கள் நலமுறவே! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.20-21, 1954 16. புது நாளில் புது வாழ்வு சிந்து கண்ணிகள் பகற்பொழுதிற் பொங்கற் புதுப் பானை வாங்கி வருகையிலே நகைத்தபடி என்னை அவன் பார்த்தான் - நான் நாணத்தினால் உள்ளமெல்லாம் வேர்த்தேன். முகமறியாப் பெண்முகத்தில் முத்துநகை வந்து மொய்த்தால் மகளிரெல்லாம் என்ன நினைப்பார்கள்? - என் மனநிலையில் ஐயமுங் கொண்டார்கள். சேவல்கூவக் - கீழ்க்கடலில் செம்பரிதி தோன்ற - அந்த நாவற்குள நீரெடுக்கச் சென்றேன் - அங்கு நம்திருநாள் இன்றல்லவோ என்றான். காவலுண்டு பற்பலபேர் காணலுண்டு காளையின் மேல் - ஆவலுண்டு காட்டிக்கொள்ள வில்லை - அவன் அகம்புகுந்தான் அதுமட்டுந்தான் தொல்லை. நாட்டிலெங்கும் பொங்கல் வாழ்த்து நடப்பதெல்லாம் தைத்திருநாள் வீட்டினில்நான் பொங்கலுண்ணும் வேளை - அதில் வெல்லமாய் விளைந்தான் அந்தக் காளை. தோட்டத்திலோர் ஊஞ்ச லிட்டுத் தோகையரோ பாடுகையில் பாட்டினில்ஓர் செந்தமிழும் ஆனான் - அந்தப் பண்ணிலெல்லாம் நல்லிசையாய் ஆனான். ஆடலிலும் பாடலிலும் அன்னவனே என்நினைவில் கோடைமழை போற்குளிரச் செய்தான் - என் கொள்கையிலே காதலினைப் பெய்தான். ஆடியபின் வீடுவரும் அவ்விருண்ட தோப்பினிலே ஓடிவந்தே கட்டிமுத்தம் தந்தான் - அது பொங்கல்திரு நாள்அளித்த செந்தேன். - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.22-23, 1954 17. அன்பர் வருநாள் அறுசீர் விருத்தம் பொங்கல்நாள் வருக! கீழ்ப்பால் புதுக்கதிர் எழுக! வாழ்க! இங்கெனைத் தனிவி டுத்தே ஏகினார் வருவா ரன்றோ? அங்கையிற் பெட்டி தூக்கி ஆளிடம் மூட்டை தந்து பெங்களூர்த் தெருக்க டந்து பெருவண்டி நிலையம் சேர்வார்! 1 தைவிழா வருக! கீழ்ப்பால் புதுக்கதிர் தளிர்க்க! வாழ்க! மெய்இங்கே உயிர்அங் கென்றே சென்றவர் மீள்வார் அன்றோ? உய்என்று சீழ்க்கை காட்ட உட்கார்ந்த படிஎன் அன்பர் தையலை எண்ண, மெல்லத் தவழ்ந்திடும் புகைத்தல் வண்டி! 2 தமிழர்நாள் வருக! கீழ்ப்பால் புதுக்கதிர் தழைக! வாழ்க! அமிழ்தூறத் தழுவுந் தோளார் அகன்றனர் வருவா ரன்றோ? சுமைஎரி மலைஒன் றங்குத் தொடர்மலை இழுத்த தென்ன இமைப்பிற்பக் கத்தூரில் வண்டி இச்சிச் சென்றோடி நிற்கும்! 3 தைப்பொங்கல் வருக! கீழ்ப்பால் தனிக்கதிர் எழுக! வாழ்க! ஒப்பிலா அன்பர் என்றன் உயிர்காக்க வருவா ரன்றோ? இப்பக்கம் வரும்அவ் வண்டி எதிர்ப்பக்கம் ஓடும் காடு உட்பக்கம் பார்த்தால் வண்டி ஓடும்! ஓடாது காடு! 4 உழவர்நாள் வருக! கீழ்ப்பால் ஒளிச்செல்வன் எழுக! வாழ்க! வழங்காமற் சென்றார் இன்பம் வழங்கிட வருவா ரன்றோ? முழங்கியே நிற்கும் வண்டி முறுக்கோமப் பொடிஆ ரஞ்சிப் பழம்விற்பார் செய்தித் தாள்தான் பசிதீர்க்கும் அத்தா னுக்கே! 5 பாற்பொங்கல் வருக! கீழ்ப்பால் பகலவன் எழுக! வாழ்க! வேற்றாள்போல் சென்றார் அன்பு விளக்காக வருவா ரன்றோ? நேற்றேறி இருப்பார்! இவ்வூர் நிலையத்தை அடைவார் இன்று! நூற்றைந்து கூலி யாட்கள் நுழைவார்கள் கூலி என்றே! 6 பெரும்பொங்கல் வருக! கீழ்ப்பால் புதுக்கதிர் பிறக்க! வாழ்க! இரும்புநெஞ் சத்தார் சென்றார் இன்புற வருவா ரன்றோ! திரும்பிய பக்க மெல்லாம் தெரிந்தவர் காண்பார்! அத்தான் பதிந்துகட் டணச்சீட் டீந்து பின்புற முகப்பில் நிற்பார். 7 திருவிழா வருக! கீழ்ப்பால் செங்கதிர் எழுக! வாழ்க! உருமறைத் துறைவார் என்றன் உளம்பூக்க வருவார் அன்றோ? தெருவெலாம் வண்டி நிற்கும் நல்லதாய்த் தெரிந்து சத்தம் ஒருரூபாய் பேசி, மூட்டை யுடன்ஏறி அமர்வார் அத்தான்! 8 பொன்விழா வருக! கீழ்ப்பால் புதுக்கதிர் எழுக! வாழ்க! அன்பிலார் போற்பி ரிந்தார் ஆர்வத்தால் வருவா ரன்றோ? முன்னோக்கி வாஎன் பார்வண் டிக்காரர்! முன்ந கர்ந்தால் பின்னோக்கிக் குதிரை போகும் பிழைசெய்தார் நெஞ்சம் போலே! 9 இனிக்கும்நாள் வருக! கீழ்ப்பால் இளங்கதிர் எழுக! வாழ்க! தனியாக்கிச் சென்றார் உள்ளம் தவிர்த்திட வருவார் அன்றோ? புனையப்பொங் கற்புத் தாடை வாங்கிடப் போவார் அன்பில் நனையத்தான் வேண்டும் என்பேன் நன்மாலை வந்த தாலே! 10 - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.24-25, 1954 18. வாழிய செந்தமிழ் எண்சீர் விருத்தம் சிரித்தபடி புறப்பட்டான்! அவன்சி ரிக்கச் சிரித்தனவே மலரெல்லாம்! சோலை யெல்லாம்! ஒருத்தனவன்! அன்றன்று புதியன்! இந்நாள் உவகைதரும் தைப்பொங்கல் நாளைச் செய்தான்! விரித்தபடி புறப்பட்டான் ஒளியை; வாழ்வை விளைத்தபடி எழுந்திட்டான் கடலின் மேலே! தெருத்தோறும் தமிழர்விழா விளைக்க வந்த சீரானை வாழ்த்திநாம் நீரா டோமோ! 1 வானெல்லாம் ஒளியாக்கி வையத் துள்ள மலையெல்லாம் கடலெல்லாம் வயல்க ளெல்லாம் கானெல்லாம் மூவேந்தர் வழியில் வந்த கடும்போரில் இடம்பெயராத் தமிழ மக்கள் ஊனெல்லாம் உள்ளத்தின் உள்ள மெல்லாம் ஒளியாக்கி உயர்ந்தானை வாழ்த்தி வாழ்த்தித் தேனெல்லாம் வண்டுண்டு யாழ்மி ழற்றும் செந்தாம ரைக்குளத்தில் நீரா டோமோ. 2 அறுசீர் விருத்தம் செங்கதிர் வாழ்த்தி மாதர் செழும்புன லாடு கின்றார்! அங்கோர்பால் நன்செய்ச் செல்வம் அறுவடை செய்த டித்து வங்காளக் கோணி யிட்டு மலைநிகர் மாடி ணைக்கப் பொங்கல்நாள் வாழ்க என்று புறப்படும் புதுநெல் வண்டி. 3 இன்புறக் கூடந் தன்னில் இறக்கிய மூடை கொட்டி அன்புடன் பொங்கற் கென்றே அளந்திடும் மணாளர் தோள்கள்! மன்னுந்தோள் வாழ்த்தி அள்ளும் மங்கைமார் மலர்ச்செங் கைகள்! தென்பாங்கு பாடு கின்றார் நெற்குற்றும் சேயி ழைமார்! 4 பஃறொடை வெண்பா விந்தியத்தின் தென்பால் விரிமுக் கடல்முழங்கும் முந்தைத் தமிழர் முதுநா டணிநகர்கள், சிற்றூர் தெருக்கள் திகழ்இல்லந் தோறுமே குற்றிய தும்பைப்பூப் போல்அரிசி கொண்டமட்டும் ஆப்பயந்த பாலில் அமிழ்தாகப் பொங்கிவரப் பூப்பயன்வாய் மாதர்கள் பொங்கலோ பொங்கலென்று வெல்லம் நறுநெய் விரைப்பொடியோ டிட்டிறக்கி நல்லதேன் முப்பழங்கள் நல்கி விருந்தோடும் உள்ளம் மகிழத்தாம் அள்ளூர உண்பவர் வாழியர் எங்கள் வளநாட்டுச் செந்தமிழர்! வாழிய செந்தமிழ் என்றார்! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.27-29, 1954 19. செங்கதிர் வாழ்க கலிவிருத்தம் பொங்கற் புதுநாள் முகமலர்த்திப் பொன்னான செங்கதிர்ச் செல்வன் திரைகடலின் மேலெழுந்தான்; எங்கட்குப் புத்துயிரும் நல்கிப் பெருவாழ்வு தங்கப் புரிந்த தகைமையினை வாழ்த்துவமே! மூடு பனிவிலக்கி மொய்த்த குளிர்விலக்கி நாடு நினைத்தஎலாம் நன்கு தொழிற்படுத்தித் தோடவிழ்த்துச் செம்பரிதி பொன்வெய்யில் தூவுகின்றான் வீடுமலி பொங்கல் விழாப்பாடி வாழ்த்துவமே! சேற்றிற்செந் தாமரைபோல் செங்கதிர்க் கருங்கடலில் தோற்றஞ்செய் தான்எங்கள் தோகையர்கள் நீராடி மாற்றுப்பொன் னாடை மடிப்பு விரித்துடுத்தே ஊற்றியபாற் பொங்கல் உவந்துவந்து வாழ்த்துவமே! அரும்பும் இளநகையார் அங்கங்கே செந்நெல், கரும்பு, கனிவாழை, தேன்நெய், தயிர்பால் தரும்பயன்மேற் பொங்கும் தைப்பொங்கல் உண்ண வரும்பரிதி நாம்பாடி வாயார வாழ்த்துவமே! காடெல்லாம்; நாடுநகர், வீடெல்லாம், வீட்டுமேல் ஓடெல்லாம் பொன்னாக்கி ஆர்கலிமேல் உற்றகதிர், ஆடலினால் பாடலினால் ஆர்த்த பெரும்பொங்கல் கோடல் மகிழ்ச்சியினால் கூடிநாம் வாழ்த்துவமே! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.30, 1954 20. வருவாய் கதிரே! வருவாய் வருவாய் கதிரே - தைம் மதியே ஒளியே வருவாய் திருவே உணர்வே வருவாய் - எம் செயலின் தெளிவே வருவாய் இருளும் பனியும் குளிரும் - பல இடரும் தொடரா வகையே புரிவாய் சுடரே வருவாய் - எம் பொங்கற் புதுநாள் வருவாய்! 1 விலகாப் பாசிப் பொய்கை - மிசை விரியும் செந்தா மரைபோல் அலைசேர் நீலக் கடல்மேல் - கதிர் அவிழும் பகலே வருவாய் கலையின் முதலே வருவாய் - எம் கண்ணின் மணியே வருவாய் மலையும் காடும் தெருவும் - ஒளி மருவப் புரிவாய் வருவாய்! 2 காவிரி ஆற்றுத் தண்ணீர் - எம் கழனிகள் தோறும் பாய்ச்சி ஆவலின் நாட்டைப் பாடி - நல் அடைவுறும் எருதால் உழுதே தூவிய விதையும் காத்தோம் - வயல் சுற்றிலும் வேலி அமைத்தே! ஆவன செய்தோம் மடைநீர் - வடி வாக்கித் தேக்கியும் வந்தோம்! 3 ஆழக் கிடங்கெ டுத்தே - நிறை வாகத் தண்ணீர் தேக்கி வாழை, கரும்பு, நட்டோம் - கால் வைத்தே சாரம் செய்தோம் தாழப் புதைத்த மஞ்சட் - பயிர் தழையத் தழையக் காத்தோம்; வாழ்வின் பயனைக் கோரி - உன் வரவை நோக்கி யிருந்தோம்! 4 வருவாய் வருவாய் சுடரே - பனி மாற்றித் தோன்றிய மணியே புரைதீர் வாழ்வின் பயனே - யாம் புதுநெல் அறுவடை செய்தோம் கரும்பு வெட்டிச் சேர்த்தோம் - செங் கனியொடு வாழை சாய்த்தோம் திரும்பும் இடம்எங் கெங்கும் - நல் திருவே புரிவாய் வருவாய்! 5 எருமைக் கண்போல் நாவற் - கனி, இலந்தை, மாதுளை, கொய்யா, பெருமுந் திரியின் பருப்பும் - தேன் பிழிவும் யாண்டும் கொழியும்! மருவின் கொழுந்தும் மலரும் - மணம் மருவத் திருவே வருவாய் வருவாய் வெயிலே அழகே - எம் வாழ்த்துக் குரியோய் வருவாய்! 6 புதுநெல் லரிசியி னோடு - பால் பொங்கல் பொங்கிட எங்கும் அதிர்வளை மங்கை மார்கள் - தம் அன்பும் தேனும் கலந்து முதிரா வழுக்கை இளநீர் - நனி முற்றற் கழையின் சாறும் உதிர்மா துளையின் முத்தும் - தந் துவக்க உவக்க நின்றார்! 7 பொன்வண் ணப்புத் துருக்கு - நெய் புறங்கை ஒழுகப், பொங்கல் இன்பம் பெறுமா றுண்போம் - எம் இனிதாம் பொழுதே வருவாய் சொன்னோம் பொங்கல் வாழ்த்தே - எம் தூய்மைத் தமிழால் நாங்கள் தென்பாங் கடைந்த செல்வம் - எம் திரவிடம் வாழிய நன்றே! 8 - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.31-33, 1954 21. பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர் பொன்னூசல் பொன்னூசல் எல்லோரும் ஆடுவமே - நல்ல பொங்கற் புதுநாளைப் பாடுவமே தென்னாடு வாழிஎன் றாடுவமே - நல்ல செம்பரிதி வாழிஎன் றாடுவமே! - பொன் கன்னடம் தெலுங்குமலை யாளம் துளுவம் - நல்ல கன்னல்நிகர் செந்தமிழும் ஒன்றென்றே மன்னிய திராவிடர்கள் எல்லோரும் - பிறர் வந்தசைக்க ஒண்ணாத குன்றென்றே! - பொன் சந்தனப் பொதிகைமலை எங்கள் உடைமை - வெண் சங்கெறியும் தென்குமரி எங்கள் உடைமை வந்தசைக்க ஒண்ணாத மறவர் நிலம் - நல்ல வங்கம்வரை எங்கள்நிலம் வாழிய என்றே! - பொன் முத்தெடுக்கும் மூன்றுகடல் நட்டநடுவில் - நல்ல முல்லைமரு தம்குறிஞ்சி நெய்தல் கிடந்தே மெத்தநலம் செய்திடும் திராவிடநிலம் - நன்கு வெல்கவெல்க வெல்கவெல்க வெல்கஎனவே! - பொன் - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.34, 1954 22. பந்தாடல் எடுப்பு பொங்கல் திருநாளில் பூப்புனை பந்தாடிச் செங்கதிர் வாழ்த்திடுவோம் - நாம் செங்கதிர் வாழ்த்திடுவோம். - பொங்கல் உடனெடுப்பு தங்கவெயில் ஒளிதன்னில் குளிப்போம் - செந் தமிழில் பாடி உள்ளம் களிப்போம் - பொங்கல் அடிகள் அங்கங்குப் பாடல்களும் அங்கங்கு நல்லிசையும் அள்ளூறச் சொல்லுகின்ற போது - இங் கெங்கும் நறும்புகையும், பூவுங் கலவையும் ஏறிக் கமழும்விண் மீது சங்கை அலையெறியும் தண்கடல் நாட்டிலே தாம்தாம் தாம்என்றே நாமும் குதித்தே. - பொங்கல் விட்டெறிந்த பூப்பந்து சிட்டாய்ப் பறந்ததுகண் எட்டாத உயரத்தில் சென்றே - நம் பட்டாடை பறக்கக் கூந்தல் பறக்கமுற் பட்டுப் பிடிப்போம் அதைநன்றே. கட்டாணி முத்துநகை மங்கையரே கைப்பந்து கட்டுத் தளரும்வகை விட்டடிப்போம் தொடர்ந்து. - பொங்கல் - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.35, 1954 23. பொங்கல் விளையாட்டு தையும் பிறந்தது நன்றாம் - நாம் தைதை தைஎன்றாடு கின்றோம் வைஇங்குப் பொங்கலை என்றோம் - நாம் வாயார அள்ளி உண்கின்றோம். நெய்யில் மிதக்கின்ற பொங்கல் - பால் நிறைய வார்த்த புதுப் பொங்கல் செய்யில் விளைந்த முத்தரிசி - நறுந் தேனாய் இனிக்கின்ற பொங்கல். முந்திரிப் பருப்புமிட்ட பொங்கல் - கொடி முந்திரிப் பழங்களிட்ட பொங்கல் சிந்தாமல் கையில் அள்ளும் போதே - வாய் தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல். இந்த மட்டுந்தானா சேதி? - பார் இவ்வளவு செங்கரும்பு மீதி. முந்தி இதில் நீயும் ஒருபாதி - எடு மொய்த்திருக்கும் எறும்பினை ஊதி. - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.36, 1954 24. திராவிடர்க்குப் பொங்கல் வாழ்த்து எழுசீர் விருத்தம் பொங்கிற்றுப் பால்இனிது! குழைந்தது முத்தரிசி புத்துருக்குநெய் புறங்கை ஒழுகத் தங்கத்தைத் தூவுகதிர் வாழ்த்தியே பாற்பொங்கல் தைத்திருநாளில் உறவுடன் உண்பீர் இங்கிந்த நாள்போல என்றுந் திராவிடர் இடர்கள் நீங்கி விடுதலைஎய்தி வங்கத்தை முக்கடலை மறவர்தோள் காத்திட வந்திடும்புகழ்க் குலமகிழ்ந்து வாழியவே! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.37, 1954 25. திராவிடர் மீட்சி எழுசீர் விருத்தம் ஒன்றுநம் உள்ளம்; ஒன்றுநம் மகிழ்ச்சி; ஒன்றுநாம் உண்டதீம் பொங்கல்; ஒன்றுநாம் அனைவரும்; ஒன்றுநம் உறவும் உணர்ந்தனம் பொங்கல்நன் னாளில்! இன்றுபோல் என்றும் இன்பம் ஓங்கிடுக! இன்பத் திராவிட நாட்டை நன்றுநாம் மீட்க உறுதிமேற் கொள்வோம்! நனிவாழ்க திராவிட நாடே! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.38, 1954 26. ஐந்தாம்படை அழிக நேரிசை வெண்பா அமிழ்தென்று தைப்பொங்கல் உண்டோம்இந் நாளே தமிழென்று போர்தொடுப்போம் தாவி - நமைநலிப்பார் உள்ள பகைவரல்லர்; உட்பகையே ஆம்என்றே உள்ளுக வாழ்க உயர்ந்து. - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.38, 1954 27. வாழிய பொங்கல் நற்றிருநாள் எழுசீர் விருத்தம் வாழிய வாழிய திராவிட மக்களே! வாழிய பொங்கல்நற் றிருநாள்! வாழிய தமிழாம் திராவிட நன்மொழி! வாழிய திராவிடர் உரிமை! ஏழியல் நரம்பின் யாழுநல் லிசையும் என்னவே தலைவியர் தலைவர் சூழுறு காதல் இன்பத் தியைந்த தூயவாழ் வோங்குக நன்றே. - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.39, 1954 28. வெண்பா வாழ்த்து வெல்க தமிழர்! மிகஓங்க செந்தமிழ்தான்! வெல்க தமிழர் விடுதலை! - பல்க தமிழர் அறமே! தனித்துயர்க யாண்டும் தமிழர்நல் வாழ்வு தழைத்து. - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.40, 1954 29. பொன் கொடிக்குப் பொங்கல் வாழ்த்து எடுப்பு திராவிட நாட்டு மணிக்கொடிக்கே நாம் பெரும் பொங்கல் வாழ்த்துரைப்போம். - திராவிட உடனெடுப்பு கருமுகில் கருங்கடல் பரப்பினில் மாணிக்கப் பரிதி முழுவட்டம் ஒளிசெய்தல் போன்ற - திராவிட அடிகள் திருவும் அரிய செயல்களும் ஓங்குக திராவிட நாட்டினில் எங்கும்! அருவியைப் போலும் அறிஞரின் உள்ளம் அழகிய நூல்பல நல்க! திரைகடல் மூன்றொடு வங்க வடக்கெல்லை சேரும் திராவிடநாடு செழித் தோங்க. - திராவிட பொங்கற் புதுநாளைத் தோற்றி எழுந்த பொன்வெயில் வாழிய நன்றே! தெங்கு, கமுகு, செங்கரும்பும் விளைக! நன் செய்யும் வளங் கொழிக்க என்றும் எங்கள் விடுதலை மறுப்பவர் ஒழிக இன்பத் திராவிடம் வாழிய நன்றே! - திராவிட - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.41, 1954 30. பொங்கற் பாட்டு பொன்னோ, பொன்ஏ டவிழ்ந்த பூவோ எழுந்தகதிர் தென்னாடு பூரித்தது தோழி - இருள் சென்றே மறைந்த தென்ன தோழி! இன்னாத ஆட்சி எனில் வாழாது வாழியநம் தென்னாட்டு விடுதலை தோழா - புதுச் செம்பரிதி பூரித்தது தோழா. தைப்பொங்கல் இன்பம் தரும்பொங்கல் உண்டாடப் பொற்பந்தல் வானோடு தோழி - கதிர் போடும் வியப்பென்ன தோழி? முப்பாங்கும் ஆழாழி முன்விந் தியக் குன்றின் இப்பாங்கு நம்ஆட்சி தோழா - கதிர் இட்டான் விழாப் பந்தல் தோழா. செந்நெல் அடித்ததுவும் செங்கரும்பு வெட்டியதும் பொன்னங் கதிர் விளைவு தோழி - பால் பொங்கிவரும் பொங்கலென்ன தோழி? தன்னலம் நீக்கி! நல்ல தைப் பொங்கல் இட்டே வரும் தென்பாங்கு பாடுவதில் தோழா - இன்று சேர்ந்தின்பம் எய்திடுவர் தோழா. மூடுபனிப் பகையின் மூட்டறுத்துக் கீழ்க்கடலில் பாடி எழும்பரிதி தோழி! - அந்தப் பாட்டுக்குப் பொருளென்ன தோழி! கூடு திறந்திடவும் கொஞ்சு தமிழ்க் கிளிகள் காடு பழம்பழுக்கத் தோழா - மிகக் கிண்ணா யிருக்க என்னும் தோழா! ஆவின் நறும்பால், நெய் யாழியுள் முத்தரிசி தூவும் பருப்பேலம் தோழி - வெல்லம் தோய்ந்த சுவைப் பொங்கலென்ன தோழி? நாவலந் தீவினிலே நம்கல்வி நம்ஒழுக்கம் தேவைசிறந்த வென்று தோழி - நன்கு செப்புவது தைப்பொங்கல் தோழா! தேனோடு முக்கனிகள் தென்னாட்டுப் பண்ணியங்கள் ஏனோடி பொங்கலுடன் தோழி - சுவை ஏற்றி நுகர்ந்தார்கள் தோழி? மீனோடு வில் புலியும் மேவு கொடி மூவரசின் மேனாள் சுவையுணரின் தோழா - நமை விட்டுப் பிரிந்திடுமோ தோழா! எல்லார்க்கும் நல்லாடை எல்லார்க்கு மே பொங்கல் இல்லாமையே இல்லை தோழி - எனில் என்றைக்கும் வாய்க்குமோ தோழி? பொல்லாத ஆட்சியினைப் போக்கித் திராவிடரின் செல்வாக்கில் இற்றைநிலை - தோழா தேயாது செய்திடுவோம் தோழா. எங்கும் மகிழ்ந்தாடி இன்பத் தமிழ்பாடி மங்கையர் ஆடவர் தோழி - இன்ப வாழ்விற் பொலிந்தனர் என்தோழி? அங்கங்குப் பொன்னூசல் அங்கங்குக் கச்சேரி பொங்கலோ பொங்கல் என்தோழா - பாற் பொங்கல் நாள் வாழ்க என்தோழா! - பொங்கல் வாழ்த்துக் குவியல், ப.42-44, 1954 31. வாழிய பொங்கல் வாழிய பொங்கல் நந்நாள் வண்டமிழ் வையம் வாழி வாழிய தமிழ், நற் செந்நெல் மடுப்போலக் கறக்கும் மாடு வாழிய ஆடல் பாடல் மகிழ்ச்சியிற் குளிக்கும் மாதர் வாழிய தமிழர் யாண்டும் விடுதலை வாய்க்கப் பெற்றே. - பொங்கல் வாழ்த்து இலக்கியம், ப. 1954 32. தமிழர் திருநாள் விடிந்தது தைம்முதல்! தொடங்கிற்றுத் திருநாள்! விண்ணெலாம் மண்ணெலாம் தங்கத் கதிர்த்திரள்! வடிந்தது வடிந்தது காரிருள் வெள்ளம்! மாயமாய் மறைந்தது கொடும்பனிக் காற்றே. படிந்தது தமிழர்கள் முகமெலாம் உணர்வும் பத்தரை மாற்றுத் தங்கத்துப் பூச்சும்! ஒடிந்தது பகைவர் ஆட்சியின் அச்சும்! உலகம் மகிழ்ந்தது தமிழக மகிழ்ச்சியால். 1 புதுநெல் லறுத்த உழவர்கள் பாட்டும், பூவைமார் குற்றும் உலக்கைப் பாட்டும், இதுஎங்கள் தமிழகம் வெல்க வெல்கவே என்று பாடும் இளைஞர்கள் பாட்டும், முதியவர் மீசையில் இடதுகை யிட்டு முறுக்கேற்றி வடவரை நொறுக்கடா என்னும் எதிர்ப்புப் பாட்டும் கடற்பின் அணியுடன் எழுந்தன உலகெலாம் இசைத்தமி ழாக்கியே. 2 இல்ல முகப்பெலாம் வாழையும், பாக்கும் இளங்குருத் தோலையும், தெங்கின் குலைகளும், சொல்லும் மாவிலைத் தொங்கலும் கூடியே சோலை யாக்கின தமிழரின் தெருக்களை! முல்லைச் சிரிப்பினர் செங்காந்தள் விரல்களால் முன்றிலை வீட்டினை மாக்கோலம் ஆக்கினார்! செல்வ இளைஞர்கள் அள்ளூறப் போயினார் செங்க ரும்பு வண்டிகள் சேர்வதால்! 3 மலையுடைத் தால்என பலாப்பழம் உடைத்தே மாற்றுயர் பொற்கட்டி போல்சுளை பெற்றனர் தலைச்சுமை வாழைத் தேன்குவ ளைப்பழத் தாறு வாங்கிச் சீப்பாடி வைத்தனர். வலக்கை தாங்காச் சேலத்துக் குண்டு மாம்ப ழங்கள் வீடெலாம் கமழ்ந்தன. விலக்கொ ணாக்கொடி முந்திரி கிச்சிலி விளவன் னாசி விருப்பம் விளைத்தன. 4 நாழி அரிசிக்கு நானாழிப் பாலாக நல்ல விழுக்காட்டுப் புத்துருக்கு நெய்பெறத் தாழா நெருப்பின் அடுப்புத் தலைசுமக்கத் தங்கப் புதுப்பானை செங்கரும்பின் சாற்றோடும் ஏழு நரம்பு சரிபார்க்கும் வல்லவனின் யாழ்த்தெறிப்புப் போலும் பொங்கி எழுந்தொலிக்க வாழியோ வாழிஎன மங்கைமார் வாழ்த்த மங்காத் தமிழர் பொங்கலோ பொங்கலென்றார். 5 இறக்கிய பானையில் ஏலம் கமழ்ந்ததே! எதிர்காண முந்திரிப் பருப்புச் சிரித்தன! குறைப்பின்றி இடைக்கிடை கொம்புத்தேன் முக்கனி கூட்டக் கண்டதும் இதுதமிழ் என்றனர்! சிறுத்த இடைச்சியர் வலிய அணைத்தஎம் திருவாளர் தருமின்பம் இதுவாகும் என்றனர். சிறார்எலாம் வரப்படுத் தியபாடம் என்றனர் சேயிழை தேனிதழ் இதுஎன்றார் காளையர். 6 முகந்தெரிந் திடும்இள வாழைக் குருத்து முழுவீடு நிறைய வரிசையின் விரித்துத் தகுந்தார் தமிழர் வருகென அழைத்துத் தள்ளு கடைஆ ரியனையும், ஆரியன் மகனெனும் கலப்பட மகனை ஒழித்து வானப் பருதிக்கு வாழ்த்துக் கொடுத்து வகைசேர் தமிழக அன்னைசீர் நினைத்து வயிறு புடைக்க உண்டனர் பொங்கலே! 7 பொன்னாடை கட்டி நல்ல இழையணிந்த பூவைமார் சோலையெலாம் தாவிய ஊஞ்சல்கள் முன்னோடப் பின்னோடக் குலுங்கு நகைப்பான முத்தோடு முத்தமிழ் செவிக்கமு தாமாறும் தென்னாடு மற்றுள்ள எந்நாடும் காணாத செங்கைத் தறியாடை தையற் கலைசிறக்க மின்னும் பலசட்டை மேலாடை வேட்டியுடன் வேலோடு வாளெடுத்துப் போரிட்டார் ஆமாறும். 8 பட்டுச் சிறாய்நல்ல பாவாடைப் பூவாடைப் பசங்கள் தெருவழகு படைக்கின்றார் ஆமாறும் கொட்டும் முழக்கம் கூத்தாட்டும் வாய்ப்பாட்டும் கூடத்தும் மாடத்தும் கும்மாளம் ஆமாறும் கட்டுமுளைக் காம்பவிழ்த்துக் கையிற் குடப்பாலைக் காண உதவுகின்ற கறவை மலைஎருது சொட்டுந்தேன் பூமாலை சூடித் தெருவெல்லாம் சுவடு பொடிதுள்ளத் துள்ளுவன ஆமாறும். 9 பொங்கற் பெருநாள் பொன்னாம் தமிழ்த்திருநாள் பொலிவும் மகிழ்ச்சி மலிவும் புகல்வதுண்டோ! எங்கும் மகிழ்ச்சியாம் எப்பாங்கும் ஆர்ப்பாகும் இலங்கைத் தமிழர்களும் நலங்கொள் மலையர்களும் அங்கங்குப் பொங்கல் அழகு விழாக்கண்டார் அங்கிருந்தார் ஆனாலும் இங்கிருந் தாரானார்கள் எங்கள் தமிழ்வெல்க எங்கள் தமிழகந்தான் எம்மாட்சி கொள்க! இன்பம் மலிகவே! 10 - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.193-195, 1964; குயில், 14.1.1960 33. தோழனே, உன்னிடம் சொல்வேன்! நேரிசை ஆசிரியப்பா அமிழ்தென்று சொன்னால் இனிமையைக் குறிக்கும் அந்த இனிமை செந்தேன், கரும்பு முப்பழம் முதலிய இயற்கையில் தோன்றும். ஆயினும், ஆடவர் உழுது வித்தி விளைத்தது மலைபோல் குவித்த நெல்லைத் தூய மாதர் தமிழ்ப்பண் சொல்லிக் குத்திய அரிசி பாலிற் குழையப் புத்துருக்கு நெய்யும் வெல்லமும் புணர ஏலமும் பருப்பும் ஞாலம் மணக்கத் தோலுரித் திட்ட பழத்தொடும் அன்பொடும் இலையி லிட்ட பொங்கலில் இனிமை அலைய டிக்கும்! அதனைத் தமிழர் அமிழ்தென் றுண்பர் தமிழென்று பாடுவர். அதென்ன மோஎன் அகத்தில் இந்நாளில் புதிய மகிழ்ச்சி கண்டேன்; அதுபோல் உனக்கும் உண்டே அன்புறு தமிழனே! என்னிடம் தீய நினைவுகள் இல்லை உன்னையும் அவைகள் ஒட்ட வில்லை தன்னல மில்லை உனக்கும் அஃதில்லை. உறவினர் தமிழர் உரக்கப் பாடினார் மகிழ்ச்சியால் ஆடினார் நாமும் அப்படி! என்றன் நெஞ்சை இதோபார், தோழனே ஒன்றை உன்னிடம் சொல்ல எண்ணிற்று. நீஒரு நீளத் திரைப்படம் எழுதுவோன் நீயே எண்ணி நீயே எழுதுக. உள்ள மதனை உறுதியால் தோண்டினால் வெள்ளப் புதுக்கருத்து விரைந்து பாயும். அயலார் பாட்டின் அடியைத் தொடாதே அயலார் பாட்டின் சிலசொல் அகற்றி உன்பாட் டென்று உரைக்க வேண்டாம் பிறரின் கருத்தைப் பெயர்த்தெழு தாதே. பிறரின் பேச்சின் சொல்தொட வேண்டாம். அடியைத் திருடிச் சொல்லைத் திருடிப் படிந்த வழக்கம் அயலார் படைத்த நூலையே திருடும் நோயும் ஆனதே! அதனால் அயலார் தமிழ கத்தை மதியார் அன்றோ? பொங்கல் புதுநாள் போற்றடா வாழ்த்தடா மகிழ்ந்தே. - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.135-136, 1977; குயில், 24.1.1961 34. தமிழர்க் கொரு திருநாள் தமிழர்க் கொரு திருநாள் - அது தைத்திங்கள் முதல் நாள் சமையத்துறை அறவே - உயர் தமிழ் வாழ்த்தும் பெருநாள் நமை ஒப்பர் யாவர்? - நம் தமிழ் ஒப்பாது யாது? கமழ் பொங்கல் நன்னாள் - புதுக் கதிர் கண்ட பொன்னாள்! ஏரோட்டும் இருதோள் - ஒரு சீர் போற்றும் திருநாள். ஆரோடும் உண்ணும் - நெல் அறுவடை செய் பெருநாள் போராடும் கூர்வாள் - பகை போக்குவ தோர் பெருநாள் ஊரோடும் உறவோ - டும் உளமகிழும் திருநாள் மாடுகளும் கன்று - களும் வாழியவே என்று பாடுகின்ற நன்னாள் - கொண் டாடுகின்ற பொன்னாள் வீடுதெரு வெங்கும் - எழிற் சோடனை விளங்கும் நீடுதமிழ் நாடு - புகழ் நீட்டுகின்ற திருநாள். - தேனருவி, ப.150-151, 1978; குயில், 12.1.1960 35. தமிழர் திருநாள் நேரிசை ஆசிரியப்பா தைம்மதி பிறக்கும்நாள்; தமிழர் தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்புநெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! புதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி இதுதான் வல்லான் எழுதிய தமிழோ எனும்படி இறக்கிய இளஞ்சூட் டின்சுவைப் பொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி செங்க ரும்பின் சாறும் சேர்த்தே அள்ளூற அள்ளி அள்ளிப் பிள்ளைகள் தெள்ளுதமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர் தலைவரொ டுண்ணும் தமிழர் திருநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும்நாள்! இருளும் பனியும் ஏகின பரிதி அருளினால் எங்கணும் அழகு காண்கிறோம்! கலக்கம் தீர்ந்தது! கருத்திடை அனைத்தும் விளக்கம் ஆயின! மேன்மைத் தமிழைப் போற்றுதல் வேண்டும்; வண்மைத் தமிழர் திராவிடர் என்று செப்பும் இனத்தின் பெரும்பகை ஆரியர், வரம்பு மீறாது மறச்செயல் தொடங்க மறத்தல் வேண்டா. ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன! ஊடலிற் கூடலில் உவந்தனர் மடவார்! தெருவெலாம் இளைஞர் திறங்காட்டு கின்றனர் சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள் பிரித்துச் சிறுவர் பெருமகிழ் வுற்றனர் எங்கணும் தங்கம் இறைத்தொளி தன்னைப் பொங்கு விக்கும் புதிய கதிரும் அறஞ்செயச் சாதல் அணுகுங் காலும் புறங்கா ணாத புலமைத் தமிழரும், தமிழும் பொங்கல் நாள்எனும் தமிழர் திருநாள் தானும் வாழியவே! - நாள் மலர்கள், ப.78-79, 1978; திராவிட நாடு, 13.1.1947 36. பொங்கல் வாழ்த்து பஃறொடை வெண்பா இனிமைப் பசுப்பாலில் யாம்பொங்கும் பொங்கல் தனிமைப் புதுப்பரிதி தங்கத்து நாவுண்ண யாமும் எம்இன்ப மகளிரொடும் மக்களொடும் தீமை புறங்காட்டச் செந்தமிழில் அன்பிட்டுப் பாடி மகிழ்ந்து பழம்பிசைந் தருந்துகின்றோம் ஆடி மகிழ்ந்ததெம் அன்பின் தமிழகந்தான்! இந்நாள் எம் உள்ளத் தெழுமோர் புதுப்பரிதி! பொன்னாங் கருத்துகள் தென்னாட்டு வான்தழுவும் எம்மைப் புதுவாழ்வில் ஏற்றும்! தமிழ்வாழ்க! செம்மைநெறி வாழி செழித்து! - நாள்மலர்கள், ப.108, 1978 37. பொங்கல் நாள் செய்தி தொழிலாளி கட்குப் பொங்கல் நாளிலே சொல்வ தொன்று; எழிலாளி யாக வையம் இன்புறச் செய்ப வர்நீர் தொழில்வேறு வேறா னாலும் தொழிலாளி எனும்பொ துப்பேர் வழிநாளாய்க் காலந் தோறும் வகுப்பதேன், சிறப்பு மக்கே! 1 கொழித்திடும் செல்வ மெல்லாம் கோலங்கொள் நாக ரீகம் விழித்திடச் செய்வ தெல்லாம் வியர்வையும் உழைப்பும் அன்றோ? வழித்தடம் மானு டத்தின் வாழ்வெலாம் உம்மா லன்றோ! செழித்திடப் பிறர்க்கு ழைக்கும் செல்வர்நீர்! வாழ்வில் ஏழை! 2 இதற்குள கார ணத்தை எண்ணிடா துழைப்ப தாலே முதுகினில் ஏறி ஏய்ப்போர் முற்றுமே சுரண்டி வாழ்ந்தார் முதலாளி நிலக்கி ழார்கள் முற்றுமை ஒற்று மைக்கண் முதுகெலும் பாகச் செய்யார் முரண்பட அனைத்தும் செய்வார். 3 உழைப்பவன் ஒருவ னுக்கே வாழ்ந்திட உரிமை உண்டாம்; உழைப்பிலார் அட்டை; உண்ணி, புல்லுரு விக்கூட் டத்தார்! அழையுன்றன் தொழிற்கூட் டத்தை அனைவரும் ஒற்று மைக்குள் தழைத்திடும் வாழ்வு காண்பீர்! பொருளாளி தரையில் வாழான். 4 - நாள்மலர்கள், ப.118-119, 1978; புரட்சி, 14.1.1958 38. மகிழ்ச்சி என்னே அறுசீர் விருத்தம் பொற்றா மரைஒன்று பூத்தது கீழ்க்க டல்மேல் புதுநாள் பெற்றோம் தைத்திங்கள் முதல்நாள்பெற் றோம்நல்ல பேறு பெற்றோம் உற்றார் தமிழர் ஒரேநிகர் என்ப துணரப் பெற்றோம், முற்றா இளங்கதிர் கண்டிந்த வண்ணம் மொழிந்த னரே! 1 நத்தை இருட்டை நறுக்கி எடுத்திட நாட்டி லெங்கும் முத்தொளி வந்து தமிழர் இனத்தின் முகம்வி ளக்க ஒத்தவர் யாரும் உயர்வுதாழ் வில்லை எனஅ றிந்தே தத்தம் வினையிலும் ஒத்தனர் பொங்கற் சமைப்ப தென்றே! 2 ஆப்பால் அரிசி அரைப்பால் கழைதரும் வெல்லக் கட்டிச் சேர்ப்பால் தளதள என்று நெருப்பில் சிறந்து பொங்க, ஊர்ப்பால் எழுந்து பொங்கலோ பொங்கல் ஓசை யது வாய்ப்பாட் டா? வான் பாட்டா? வார்கடற் பாட்டா? மகிழ்சிஎன்னே! 3 நன்றே தமிழர்கள் பொங்கிற்றுப் பால் என நாவி னிக்க ஒன்றா மகிழ்ச்சியில் ஒன்றினமே இதை ஒப்ப என்றும் குன்றா மகிழ்ச்சியால் வாழியர் வாழி யர்வா ழியரே! வென்றார் தமிழர் தமிழ்வென்ற தென்ற சொல்மே வுகவே. 4 - நாள் மலர்கள், ப.109-110, 1978; பொன்னி, 14.1.1951 39. நல்ல பொங்கல் பொங்கல் விளையாட்டு தையும் பிறந்தது நன்றாம் - நாம் தை தை தை என் றாடுகின்றோம்! வை இங்குப் பொங்கலை என்றோம் - நாம் வாயார அள்ளி உண் கின்றோம். நெய்யில் மிதக்கின்ற பொங்கல் - பால் நிறைய வார்த்த புதுப் பொங்கல் செய்யில் விளைந்த முத்தரிசி - நறுந் தேனாய் இனிக்கின்ற பொங்கல். முந்திரிப் பருப்பிட்ட பொங்கல் - கொடி முந்திரிப் பழங்களிட்ட பொங்கல்! சிந்தாமல் கையில் அள்ளும் போதே - வாய் தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்! இந்த மட்டும் தானா சேதி! - பார் இவ்வளவு செங்கரும்பு மீதி! முந்தி இதில் நீயும் ஒரு பாதி - எடு மொய்த் திருக்கும் எறும்பினை ஊதி - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.94, 1978; குயில், 1.1.1948 40. தை நேரிசை ஆசிரியப்பா பரிதி கண்டோம்! பரிதி கண்டோம்! பலபல கோடியாய்ப் பல்கிய கதிர்கள் உலகினைத் தழுவி ஒளிபெறச் செய்வன; உயிர்க்குலம் அதனால் உணர்வு பெறுவன! *** கருமழை தந்த பெருமழை வெள்ளம் கழனி தோறும் அலைக்கரம் தாவிப் பண்ணொன்று பாடிப் பாயுங் காலைப் பொன்னேரு பூட்டிப் புவியெலாம் உழுதும், செந்நெல் விதைத்தும், செழுங்களை போக்கியும் தோளும் மனமும் சோர்ந்து போனோம்! பனியே வெளியாய்ப் பகலே இரவாய்த் துன்பினால் உயிரே சுருங்கினோம்! பின்இதோ விளைத்த செந்நெல் விளைந்தது; கிழக்கில் விரிகதிர் தங்கச் சலாகை பீறிட்டது. *** பனி, இருள், பிணி, துயில், பயம்அயர்வுகளெல்லாம் பறந்தன. பறந்தது படமுடியாக் குளிர்! பரிதி கண்டோம்! பரிதி கண்டோம்! ஆண்டில் ஓர்கெட்ட அவதிப் பகுதி அகன்றோம்! புதியநாள் - புதுவாழ் வாரம்பம்! *** உயிரினில் உடலினில் ஒவ்வோ ரணுவிலும், வெயிலைப் பாய்ச்சினான் விரிகதிர்த் தந்தை! பனிப்புகை பிணிவகை பயங்காட்டு சாக்காடு இனியில்லை! பகைக் கினிமேல் உதைவிழும்! எமையாள நினைப்பவன் எந்தப் பயல்அவன்? அயர்வு போக எரியினை ஏற்றுவோம் அன்பு சேரப், புத்தரிசி கொண்டு புதுப்பரிதி வாழ்த்திப் புதுநறும் பொங்கள் குடமடிப் பசும்பால் பொங்கப் பொங்க நடமிட் டுப் பாடி, நாம்உ றவோடு, வறுமையும், துன்பமும், நாணும் சிறுமையும் தீரச் சேர்ந்துண் போமே! - பழம் புதுப் பாடல்கள், ப.172-173, 2005; மணிக்கொடி, 1.2.1938 41. பொங்கல் வாழ்த்து அகவல் பொங்கல் பொங்கிற்று பொழியும் நிலவுபோல்! மங்கல வாழ்த்து வழங்குவோம் தமிழால்! தித்தித் திருக்கும் செழும்பாற் பொங்கல், வட்டித்து மலர்புனைந்து, மகிழ்ந்து மனைவியும் மக்களும் உறவும் ஒக்க இருந்து புதுப்பரிதி கண்டு வெயில் அரங்கில் உண்போம்; தமிழர் உயர்வுகொண் டாடுவோம் தமிழ்நாடு முற்றும் தமிழே ஓங்கித் தகையிலாப் பகைவர் தறுக்கு போக அன்பும் அறமும் ஆர்ந்தே இன்புற்று வாழ்க. - பழம் புதுப் பாடல்கள், 2005 குறிப்பு : சென்னை அன்புப்பழம்நீ அவர்களின் குடும்பத்தாரின் வேண்டு கோளின்படி பாரதிதாசன் எழுதியனுப்பிய பொங்கல் வாழ்த்து. நேரிசை அகவற்பா அமைப்பிலான இப்பாடலில் ஈற்றடியின் இறுதியில் இரண்டு சீர்கள் விடுபட்டுள்ளன. 42. பொங்கல் வாழ்த்து! கடல்மேல் எழும்பரிதித் தங்கக் கதிர்கள் உடல்மேல் ஒளியாய் உயிர்மேல் உணர்வாகிப் போந்தாள், பொங்கற் புதுநாள் நனிவாழி! ஆர்ந்தபாற் பொங்கல் அருந்திஎம் பொன்னுடை கட்டுமணிச் சிற்றிடையார் காளையரும் ஆந்தமிழர் மட்டற்ற செல்வம், உயர் மக்கள், உற வோடுநலம் பெற்றுப் பெருவாழ்வும் பேருலகின் மாப்புகழும் உற்றுநனி வாழ்க உவந்து! - பழம் புதுப் பாடல்கள், 2005 குறிப்பு : திரு. மா.சு. சம்பந்தம் அவர்களின் வேண்டுகோட்கிணங்கிப் பாரதிதாசன் எழுதிய வாழ்த்து. அழகிய அட்டையில் அச்சிட்டு வெளியிட்ட மா.சு. சம்பந்தம் பதிப்பாசிரியரிடம் நேரில் அளித்தது. 43. வாழ்த்துப்பா சீரதிகத் திண்டுக்கல் இராமலிங்கம் பதியென்று யாரும் செப்பும் ஊரதனில் தமிழறிஞன் ஆறுமுகன் உதவியினால் தோன்றிப் பல்லோர் நேரிதென உவந்திடவே நிலவிவரும் படிப்பகத்தை இன்றுதொட்டுப் பாரதி படிப்பகமென்றே அழைப்போம் பைந்தமிழைப் பருகி வாழ்வோம். பாரதி படிப்பகம் நன்றாகுக. பல்லாயிரம் நூல் பாங்கிற் சேர்க ஈரவுளம் நற்செல்வம் உயிரனைத்தும் எந்தமிழ்க்கே என்று நாளும் ஊரிலுள்ள தமிழரெலாம் உணர்ந்திடுக தமிழர் வாழ்வு சீருயர்ந்து பாரதி படிப்பகமே என்னாளும் சிறந்து வாழ்க. குறிப்பு : கலைமாமணி க.அ. ஆறுமுகனார், இராமலிங்கம் பட்டியில் (1944இல்) தொடங்கிய நூலகத்திற்குப், பாரதி படிப்பகம் என்று பெயர் சூட்டிப் பாவேந்தர் வழங்கிய வாழ்த்துப்பா பாவேந்தர் படைப்பிலக்கியம் பக்கம் 140 ஆசிரியர் ஓவியப் பாவலர் மு.வலவன் சேகர் பதிப்பகம், சென்னை -78. 44. வாழ்த்துப்பா விருந்து முருகு வள்ளி திருமண நினைவாய் அரிதின் இயன்ற விருந்தெனும் கவிதைநூல் கண்டேன்; மகிழ்ச்சி கொண்டேன்; என் எனின் தண்டமிழ் அன்னை தன்னை வாழ்த்தியும் பகலவன் வரவு பகர்ந்தும் மற்றவன் அகலும் அழகை அறைந்தும் தோழர் நாச்சியப்பர் நனிசிறக் கின்றார் தாமரைக் குமரியில் தனிச்சிறப் படைந்து மாமலர் வண்டின் வகையுரைத்தலில் இளங்கவி தானென இலகுகின்றார். * * * சிரித்த முல்லை விரித்த பண்பினால் பெருத்த காவிரி பேசிய பண்பினால் அன்னை நாட்டை அழகு செய்யுமோர் தென்னை எழிலைப் பன்னிய பண்பினால் கடலின் காட்சியைக் கழறிய பண்பினால் கடிதில் தோழர் கண்டார் சிறப்பே! அன்னார் பெயர்தான் என்னெனில் அறைவேன் நன்னர் அண்ணாமலை என்று நவின்றேன் * * * இளங்கவிஞர்தாம் இருவரும் உளம் பெரிதாகி உவப்புற வாழ்கவே! ஆத்தங்குடி 30.10.1945 பாரதிதாசன் குறிப்பு : கவிஞர் நாரா நாச்சியப்பனும், கவிஞர் மு.அண்ணாமலையும் கவிஞர் முருகு சுப்பிரமணியம் திருமண நாளில் அச்சிட்டு வெளியிட்ட விருந்து என்ற தலைப்புள்ள சிறு கையடக்கப் பதிப்புக்கு பாவேந்தர் வழங்கிய வாழ்த்துப்பா. 45. பொங்கல் வாழ்த்து உழவர் அன்புழைப் பிற்பிறந்த பெருவாழ்வே தழைக! நன்றெமைப் பெற்றுவந்த தமிழ்தானே தழைக! எம்புகழ்க் குகந்த பெருநாளே திருநாளே! குறிப்பு : அன்புப் பழம்நீ அவர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பொங்கல் வாழ்த்து 1950 கோவையில் விளம்பி ஆவணி 30இல் நடந்த உஷா - நாராயணசாமி 1. திருமண வாழ்த்துப் பா தமிழகம் போற்றும் நாரா யணசாமி தகுதி மிக்க அமிழ்துநேர் மொழிஉ ஷாவை அடைந்ததால் எலாம்அ டைந்தான் கமழ்மலர்க் குழலி நல்ல கற்புடை உஷாஆம் நங்கை அமைந்தநற் சீர்த்தி நாரா யணன்பெற்றாள் எல்லாம் பெற்றாள்! 1 பண்பமைந் திட்ட நல்யாழ் பாணன்கைப் பதிந்த வாறும் தெண்ணிறை வண்ணத் தும்பி தேன்மலர் படிந்த வாறும் வெண்ணிலா முகத்து ஷாவும் நல்லிடம் மேவ லானாள் அண்ணலும் அவ்வா றேயாம் அவள்அவன் தமிழும் பாட்டும்! 2 தேசிய சேமிப் பென்னும் திருநாட்டுப் பெருமன் றத்தின் மாசிலாத் தலைவ னான வரதரா ஜுலுவும், மிக்க தேசுறு சந்தி யாவும் செய்தவத் தாற்பி றந்து பேசுமாங் கிலத்தும் தேர்ந்த உஷாவின்சீர் பெரிதே அன்றோ! 3 பன்னுமல் லேக வுண்டன் பாளையத் திராம கிருஷ்ணன் அன்னபூ ரணம வர்தம் அன்பினிற் பிறந்த மேலோன் பொன்னிறை கோவை தன்னில் பொறியியல் கல்லூ ரிக்கு மன்விரி வுரைசெய் நாரா யணசாமி மாட்சி என்னே! 4 ஒரேகாதல் பாட்டுப் பாடும் இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று சரேலெனத் தழுவக் கண்டோம் தங்கத்து மணவ றைக்குள்! வராஇன்பம் வரப்பெற் றார்கள் மணமக்கள் குறைவோ ஒன்றும் இராஇல்ல றத்தேர் தன்னை இழுப்பார்கள் புகழூர் நோக்கி! 5 மேற்றோளில் மாலை சூட்டிக் கீழ்க்கண்ணால் நோக்கி னாள்பெண்! கோற்றோளில் மாலை சூட்டிக் குறுநகை புரிந்தான் ஆளன்! ஆற்றோரப் புனலி ருந்தும் அவாமிக இருந்தும் இன்றும் நேற்றேபோல் இருந்தோம் என்று நினைந்தன இருநெஞ் சங்கள்! 6 தமிழிசை வடவர்க் கெல்லாம் தந்தநற் கருவி தந்த அமிழ்திசை மழையும், வானில் அவிழ்மலர் மழையும், மேலோர் கமழ்வாழ்த்து மழையும், பன்னீர் கைம்மாற்று மழையும், கூடி அமைமண மக்கள் நெஞ்சத் தன்பினை நனையச் செய்யும்! 7 திருமண மக்கள் நல்ல திருவேந்திப் புகழு மேந்திப், பருதியும் நிலவும் வாழும் பல்லாண்டு வாழ்வும் ஏந்திக் கருவிலே தமிழ்ப்பண் பாடு கமழ்மக்கள் பேரர் ஏந்திப் பெருவாழ்வு வாழ்க உற்றார் பெற்றோரும் தமிழும் வாழ்க! 8 - பன்மணித்திரள், ப.244-246, 1964 திருநிறைசெல்வர் பத்மதிலகம் - வேலாயுதனார் 2. திருமண வாழ்த்துப் பா அறுசீர் விருத்தம் வாழ்கநீ செல்வி பத்ம திலகமே வாழ்க வாழ்க ஆழ்கடற் புவியில் வாழ்வின் அறம்வகுத் தவ்வ றத்தைத் தாழ்விலா தியற்று தற்குத் திருமணம் தக்க தென்றார் சூழ்மண மன்றில் நீயும் தூயனும் துலங்கக் கண்டேன்! 1 மங்கல இசைத தும்ப மலர்மணம் ததும்ப பன்னீர்த் திங்கள்வெண் கலசந் தன்னிற் சில்லென்று குளிர்த தும்பத் தங்குறா திரண்டுள் ளத்திற் றதும்பிட அன்பு வெள்ளம் மங்கையுன் எழில்த தும்பத் ததும்பிற்றுன் மணாளன் ஆசை! 2 மறைவிலா தெவர்க்கும் நன்மை வாய்ந்திடப் பொதுத்தொண்டாற்றும் துறைவலார் செல்வ னாருன் தந்தையார் தூய செல்வத் திறையனார் வேலா யுதனார் மணாளர்உன் இன்ப வாழ்விற் குறைவிலாக் குறையே யன்றிக் குதூகலம் உனக்கே பத்மா! 3 jÅ¥bgU« flš!த மிழ்ச்சேய்! சொக்கலிங் கனார்த வத்தால் சனப்பெருங் கடலிற் றோன்றும் சந்திரன்! குணத்தின் குன்று இனப்பெருங் கடலின் வேலா யுதனெனும் அமுத ஊற்றை மனப்பெருங் கடல ளாவ இன்பத்தில் வதிக பத்மா! 4 வில்லாண்மைத் தமிழர்க் கின்ப விடுதலை மறிக்கும் பேதப் புல்லாண்மைச் சுயந லத்தார் புலன்மாற்றி இனங்காக் கின்ற நல்லாண்மை மக்கள் பெற்று நற்பேரர் பேரர்கண்டு பல்லாண்டு மணாள னோடு பாரில்நீ டூழி வாழி! 5 - பன்மணித்திரள்,ப.247, 1964 3. ஞாயிறு வாழ்க அகவல் வருக ஞாயிறு! வருக ஞாயிறு! விரிதிரைத் தமிழகப் பெருங்கடல் மீதில் அறிவொளி பெருக்கி நிறைவாழ் வளிக்க வருக ஞாயிறு! வருக ஞாயிறே! பனிமலை வடக்கில் புனலுள் கிடக்கையில் இனிது யர்ந்த தனிப்பெரும் சீர்த்தித் தமிழர்கள் இந்நாள் தந்நிலை தளர்ந்தார்; மடமையில் ஆழ்த்தப் பெற்றனர்; அடிமை நன்றென ஒப்பினார்; நலிந்தனர் அன்னார் இன்று புத்தொளி எய்திவாழ் வெய்த ஞாயிறு வருக! ஞாயிறு வருக! முத்தமிழ் வல்லவன்; தித்திக் கும்படி செய்யுள் செய்யும் திறத்தினன்; திராவிடர் இனநலம் காத்தலே இன்பெனக் கொண்டவன்; ஏ. கே வேலன் எழுத்தில் எழுந்தனை அன்னவன் நெஞ்சத் தருளில் வாய்த்தனை; ஞாயிறே, நற்றமிழ் ஏடே நீஇதோ இன்பத் தமிழர் இருகை ஏந்தப் புகழ்ச்சிறகு கொட்டிப் போந்தனை! நன்றே வருக ஞாயிறே, விடுதலை திருநாடு பெற்றிட வருக! வாழியவே! - ஞாயிறு, 1.4.1957; குயில் பாடல்கள், ப.64, 1977 4. சிவாசி கணேசனார் வீட்டுத் திருமண வாழ்த்து நேரிசை அகவல் மாணவ நிலையில் வாழ்ந்தனர் அந்த ஆண ழகனும் அழகிய மயிலும் இந்நாள் அன்பினால் இணைந்தா ராகி இல்லறம் எனும்நிலை எய்து கின்றனர். மாணவ நிலையோ அறிவை வளர்க்கும் இல்லற நிலையோ இன்பம் பயக்கும். பண்புறு சண்முகன் தானும் பணிமொழிச் சகுந்தலைக் கிளியும் அறிவு சான்றவர். இன்பத் துறையில் இறங்குமுன், பெரியோர் அன்பு வாழ்த்தை அடைய எண்ணி அணிபெறு மணவறை அதனில் இருவரும் அருகருகு குந்தி அழகு செய்வார்; எழுந்திடும் வாழ்த்தொலி! - இதுதான் திருமணம். பந்த லுக்குள் பார்ப்பனன் இடும்வாய்ப் பந்தலில் நடப்பதே மணம்எனப் பகர்வது சரிக்கருத் தன்று நரிக்கருத் தாகும். தின்பண் டங்கள் செறிந்த அறைக்குள் புகும்சிறார் போலத் திருமண மக்கள் இன்பங் காணுமிவ் வின்பச் செய்தியே எனக்கின் பத்தை ஈந்ததேன் என்றால் வெள்ளம் ஆகத் தமிழர்க்கு வெள்ளியை அள்ளிக் கொடுக்கும் வள்ளல் சிவாசி கணேசனார் கண்ணான தம்பிதான் மணமகன், அன்னார் அருமைக் கொழுந்தினாள் மணமகள். தமிழர் உள்ளத்துள் எல்லாம் வாழும். பெரிய வீட்டுத் திருமணம் அல்லவா? எட்டி போலவா கசக்கும் எனக்கது? சண்முகன் சகுந்தலை வாழ்க எண்மிகு பேறெலாம் எய்தி இனிதே! - நாள் மலர்கள், ப.102, 1978; குயில், 23.6.1959 5. காதணி விழா வாழ்த்து நேரிசை அகவல் அரசுபெறு தமிழகம் அதற்கென்று பெற்ற சரசுவதி நாவரசு - என்னுமிவர் தந்த அறிவுடை நம்பி, அமுத வல்லி பாண்டியன் என்னும் பசுங்கிளி கட்குக் காதணி விழாஒன்று காணும் இந்நாள் எனக்குப் பெரியதோர் இன்ப நாளாகும்! ஏனெனில், பெற்றோர் இருவரும் பெற்ற மூவரும் என்றன் பேரர் ஆவர்! இன்று வரைக்கும் யான்இந்நாட் டுக்குப் பதினான்கு பேரரைப் படைத்துளேன் தொண்டராய்த் தமிழகம் மீண்டபின் தமிழர் காணும் படையில் பதினான்கு வீரர்என் அருமைப் பச்சைத் தமிழர் பட்டா ளத்தார்! இதனை எண்ணும்என் முதுமை இந்நாள் இளமையா கின்றது; மகிழ்வெய்து கின்றேன்! காதணி பெறுக! கல்வி நிறைக! இல்லறம் காண்க! செல்வம் பெறுக! குமரித் தமிழர் வாழ்வில் குறுக்கிடும் பார்ப்பை விடாமல் பதற டித்துப் பெறும்புகழ் பெறுக! அறிவுடை நம்பி அமுத வல்லி பாண்டியன் தமரொடு தமிழொடு வாழ்க தழைத்தே! - நாள் மலர்கள், ப.101, 1978; குயில், 12.5.1991 6. சென்னை மாகாணத் தமிழாசிரியர் மூன்றாவது மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்து தமிழா சிரியர் மாநாடு வாழ்க! தகுமவர் நோக்கங்கள் வெல்க! அமுதே நிகர்த்த தீந்தமிழ் தன்னை இளைஞருக் கருத்துவார் தம்மை நமதா ளவந்தார் மதிப்பதே இல்லை நன்றான ஒற்றுமை பெற்றே எமதா ணையேற்பீர் ஆளவந் தாரே இல்லையேல் வீழ்விரெ ன் றுரைக்க. 1 உரிய தாய்மொழி மக்களுக் கீவோர் நாட்டினுக் குயிரினை ஒப்பார் அரிய நற்செயல் செய்பவர் மக்கட் கறிவினை யூட்டுவா ராவார் பிரித லின்றி ஆசிரி யர்கள் ஒற்றுமைப் பேற்றினை எய்திப் பெரியர் என்று தாம்தமை எண்ணும் பிற்போக் காளரை வீழ்த்த! 2 தமிழர் நாட்டைத் தமிழரே ஆள்க தமிழரால் வணங்கிடத் தக்கோர் தமிழா சிரியரே! இந்நிலை இந்நாள் தளரினும், தழைத்திடும் நாளை! இமய வெற்பில் தம்பெயர் பொறித்த இனத்தார் நாமென உணர்க அமைதி மாய்க்கும் வடவர் தம்,பிடி அகலுக நாளும்வா ழியவே. 3 - பன்மணித்திரள், ப.254, 1964 7. போர்வாள் நாடகம் கதைஅ மைப்பில் கடல்அலை போன்ற தொடர்பும், விறுவிறுப்பும் தோன்றுதல் கண்டேன். கதையு றுப்பினர் பேச்செலாம் காணில், புதிய இலக்கியப் பூக்கா டென்னலாம். தேனீக் கூடுபோல் நானில மக்களின் உளந்தொறும் புகுந்தே உருவழித் துவரும் மடமை வழக்கம், வஞ்சம் இவைகளை இடந்தொறும் தேடி எடுத்துக் காட்டியும், கடிந்தும், உண்மை இதுவெனக் கழறியும் நல்லதோர் உலகுக்கு மக்களை நடத்திச் செல்லு கின்றார் தோழர் சிற்றரசு போர்வாள் இயற்றிய புலமை ஒன்றினால்! சிற்றரசு மேலும் திராவிடர்க்கு நற்றமிழ் நாடகம் நல்குக வாழியே! - நாள்மலர்கள், ப.142, 1978; குயில், 15.5.1948 8. போர்வாள் அறுசீர் விருத்தம் போர்வாள் நமக்க ளித்தோன் பொங்கல் மலரும் கொடுத்தான் பார்மேல் திராவி டர்நாம் பாய்ந்து பகைஎ திர்ப்போம் தார ணிவோம் வெற்றித் தனிமுர சம்ஆர்த் திடுவோம் வார்புகழ் கொள்மா ணிக்க வாச னார்வா ழியவே! வேறு கலிவிருத்தம் பொங்கல் மலரில் புதிய கருத்துகள் செங்கரும்பு போலும் தெவிட்டாத பாட்டுகள் அங்கங் கிருந்தே அழகுசெயும் ஓவியங்கள் இங்கு நமக்கின்பம் விளைத்தன வாழியவே! - நாள் மலர்கள், ப.138, 1978; குயில், 1.3.1948 9. நவீனம் அகவல் நவீனம் என்னும் நல்லிதழ் பார்த்தேன் சுவையுறு கருத்துகள் தூய கதைகளும் அறிஞர் கட்டுரைகளும் அழகுற நிறைந்தன அதனில் நீடு வாழியவே. - நாள் மலர்கள், ப.142, 1978; குயில், 1.4.1948 10. தனித்தமிழ்க் கிளர்ச்சி எழுசீர் விருத்தம் தனித்தமிழ், கிளர்ச்சி எனுமொரு நூலைத் தனித்தமிழ்ச் செய்யுளால் உள்ளம் இனித்திடத் தந்தார் புலவர்சண் முகனார் இத்தமிழ் நாட்டினில் இதனில் மனைக்கொரு படிஎன வாங்குக! நாளும் மணிக்கொரு முறைஅதைப் படிக்க! தினைத்துணை உழைப்பில் பனைத்துணை பயனைச் சேர்க்கும்இந் நூல்எனல் மெய்யே! - குயில், 15.5.1948; நாள் மலர்கள், ப.139, 1978 11. ஆட்சிச்சொல் அகரவரிசை அறுசீர் விருத்தம் திருநெல்வே லிச்சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் போலும் ஒருநல்ல தமிழ்வளர்க்கும் நிறுவனமும் கண்டதில்லை உலகில்! அந்த உரைமல்கு நிறுவனமும், முப்போதும் தமிழுக்கே உழைக்கத் தக்க பெருநல்லான் தமிழ்ப்புலவன் சுப்பையன் போற்பிறரைப் பெற்ற தில்லை. 1 நூலெல்லாம் விளையுமங்கே, நூறாயி ரக்கணக்கில்! நூல்ஒவ் வொன்றின் மேலெல்லாம் அழகுசெயும் சுப்பையன் மிகுதிறமை! அதுவு மின்றிக் காலெல்லாம் சிலம்பொலிக்கத் தமிழரசி உலகரங்கு காணும் வண்ணம் தோலெல்லாம் சுளைப்பயன்கொள் புதுப்புதுநூல் தோற்றுவிப்பன் அந்த மேலோன். 2 அவ்வகையில், ஆட்சிச்சொல் அகரவரி சை என்னும் நூலும் ஒன்று செவ்வையுற ஆங்கிலத்தில் பெயர்காட்டித் தனித்தமிழில் பொருளும் காட்டி இவ்வகையில் இவ்வாட்சிச் சொல்கு றிப்ப தேற்றதெனும் தெரிவைச் செய்தான். எவ்வெவர்க்கும் பயன்விளைக்கும் இந்நூலை ஆதரிப்பார் எவரும் நன்றே. 3 - நாள் மலர்கள், ப.141, 1978; குயில், 15.5.1948 12. இல்லப் பெயர் அகரவரிசை கலிவிருத்தம் கனித்தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தார் வெளியிட்டுள்ள இனிதான இல்லப்பேர் அகரவரி சைநூல் கண்டேன். தனதுபேர்க் கொத்தவாறு நூலில்லை சமையப் பேர்கள் நனிஉள, இதனால் நாட்டுமக்கட்கு நன்மை இல்லை. - நாள் மலர்கள், ப.139, 1978; குயில், 15.6.1948 13. இராவணன் பகுத்தறிவுக் கொத்தபடி இராவணநா டகமதனைப் பகர்ந்தான் கண்டீர்! மிகுந்த அழகான தமிழ்மி டுக்குநடை யாற்கரந்தை வேலன் அன்னோன், தொகுத்தபுகழ் சிறிதன்று அளித்தநலம் சிறிதன்று தூயத மிழ்க்கும் புகுத்தரிய புகழ்தனையும் புகுத்திவிட்டான் திராவிடர்கள் புகன்றார் நன்றி. பழம்பெரிய திராவிடத்தைப் பறித்தார்வேர் பறிப்பதற்கோர் வழிதா னுண்டு வழங்கிதிகா சப்பெயரால் திராவிடர் சீர்மறுத்தார் சொல்மறுக்கும் வண்ணம் முழங்குதல்வேண் டும்பண்டைத் திராவிடர் தம்பழம்பெருமை புதிய நூலில் எழுந்த உணர்வாற் புதிய இராவணன் தந்தான் வேலன் என்றும் வாழி! - குயில், 14.10.1947, நாள் மலர்கள், ப.140, 1978 14. பொன்னி நேரிசை ஆசிரியப்பா பொன்னியின் அழகிய பொங்கற் புதுமலர் என்னுள் ளத்தில் இன்பம் பெய்ததே! இராத தொன்றைத் திராவி டர்பால் இருப்ப தாக்குவ திந்தப் பதிப்பாம்! உயர்கருத்து நல்கும் ஓவியம் கண்டேன் அயர்வ கற்றும் அறிஞர் கட்டுரைகள்! கண்டேன்! கவிதைக் கனிகள் கண்டேன்! எங்கணும் பொன்னி எவர்நி னைவிலும் பொன்னி என்னும் புகழ்க்குக் காரணம் தமிழ்மாட் டன்பும், தகுதிரா விடரின் இழிவை எதிர்க்கும் எண்ணமும், கலையில் ஆர்வமும் தெளிந்த அறிவும் உடைய பெரியண்ணன் முருகு பெரிதுழைப் பாகும் அவர்கள் நீடு வாழ்க! சுவைதரு பொன்னிச் சுவடி வாழியவே! - நாள் மலர்கள், ப.135, 1978; குயில், 1.2.1948 15. மன்றம் நேரிசை ஆசிரியப்பா மன்றம் என்பதோர் மாத இதழை இன்றெம் தோழர் எழில்நெடுஞ் செழியனார் எழுதி வெளியிட இசைந்ததைப் போற்றுதும் எழுது புலமை முழுதுளார் ஆதலின். அன்னார்கருத்தை அமுதாக் கொள்ளுதும் பன்மொழிப் புலமை படைத்தார் ஆதலின் மன்றம் நன்று வாழ்க என்றும் நெடுஞ்செழியனார் இனிது வாழியவே! - நாள் மலர்கள், ப.136, 1978; குயில், 1.3.1948 16. நிலவு நேரிசை ஆசிரியப்பா நிலவின் பொங்கல் மலரொன்று வந்தது பலரின் கட்டுரை, பலரின் கவிதைகள் அழகு செய்வன அறிவை வளர்ப்பன ஏடெழு தும்தமிழ் எழுத்தா ளர்க்குள் பீடெலாம் கணேசன் பெற்றிருக் கின்றான்; அன்னோன் செந்தமிழ் ஆய்ந்தவன்; நிலவு தன்னை நடாத்தத் தகுதிறன் உடையான்; தோழன் கணேசன் வாழ்க! வாழ்க நிலவு! திராவிடம் வாழ்கவே. - நாள் மலர்கள், ப.136, 1978; குயில், 1.3.1948 17. பலசரக்கு மூட்டை நிலைமண்டிலம் பலசரக்கு மூட்டைஎனக் குத்தூசித் தோழர் விடுதலையிற் பன்னாளாய் வரைந்தவற்றை எல்லாம் இலகுதனிச் சுவடிஎன அச்சியற்றி யுள்ளார் எல்லாரும் வாங்கிடுக இன்பமிகக் கொள்க. விலைசிறிதும் பெறுதலிலாப் பார்ப்பனரின் மூட்டை வெறும்பதரே என்பதனைக் குத்திவெளிப் படுத்திச் சலசலப்புக் கஞ்சாதீர் திராவிடரே என்று சாற்றுமிதைப் படிக்காமல் தள்ளிடுவார் உண்டோ? - நாள் மலர்கள், ப.143, 1978; குயில், 15.6.1948 18. கார்ல் மார்க்சு அகவல் கார்ல்மார்க் என்னும் கவினுறு நூலை அழகிய முறையில் அளித்தோன் சதாசிவம் இன்ப வாழ்வுப் பதிப்பகம் இதனை நன்று வெளியிட்டு நமக்குத வியது. அனைவரும் இதனை ஆதரிக்க மனவிருள் அதனை மாற்றுதற் கென்றே. - நாள் மலர்கள், ப.137, 1978; குயில், 1.3.1948 19. ஈரோட்டுத் தாத்தா கொய்யாக் காதல் வெண்பா ஈரோட்டுத் தாத்தா எனும் திராவி டர்கழகத் தேரோட்டு வார்பற்றிச் செய்யுள்நூல் - சீரோட்டத் தோதிருக்கச் செய்தளித்தான் நாச்சியப்பத் தோழனதை ஆதரிக்க ஐயமில்லை நாடு. மேலும்கொய் யாக்காதல் விண்டான் அவனேமேன் மேலுமது வெல்க இனிது. - நாள் மலர்கள், ப.137, 1978; குயில், 15.6.1948 20. பகுத்தறி வியக்கத்தின் பழைமை நிலைமண்டிலம் பகுத்தறி வியக்கத்தின் பழைமை என்னும் பனுவலினைச் சீவபந்து சீபால் தந்தே மிகுந்தநலம் விளைத்துள்ளார் திராவி டர்க்கே! மேனாளில் திராவிடரின் மேன்மை, சீர்த்தி வகுக்கரிய நுண்ணறிவு வாழ்வின் நேர்மை இவற்றையெலாம் பழநுலின் வாயி லாகத் தொகுத்தளித்த அறிஞர்க்கு நன்றி! சீபால் தூயவர்தாம் பல்லாண்டு வாழி நன்றே. - நாள் மலர்கள், ப.143, 1978; குயில், 15.8.1948 21. ராஜி நாமா மிகநன்று மிகநன்று இராஜி நாமா மிக்கஇனி தானநடை! கதைய மைப்பால் தகும்ராச வேல் அலுவ லகப் ப டத்தைத் தருகின்றார் நாடகத்து விருந்தி னர்க்கு நகைச்சுவையாம் பொரிக்கறிக ளோடு; நெஞ்சம் நடுக்கமுறும் இரக்கத்தை ஊட்டு கின்றார் அகம்தெளிந்த எழுத்தாளர் இராச வேலர் அத்தமிழ்நாட் டார்நன்றிக் குரியா ரானார். - நாள் மலர்கள், ப.144, 1978 22. ஆணையேற்போம் அகவல் ஆணை யேற்போம் ஆகுமோர் அரசியல் பாடல்நூல் தன்னைப் பகர்ந்தார் தோழர் நாரா யணசாமி! ஊராள வந்த காங்கிர ஆட்சியில் தாங்குயிர் நீத்த தோழர்க் கிரக்கம் சொல்லும் வகையால் மக்களை எழுச்சி தன்னில் உய்க்கும் கருத்தால் உற்ற திந்நூலே. - நாள் மலர்கள், ப.144, 1978; குயில், 15.8.1948 23. காமராசர்க்கு வரவேற்புப் பா நேரிசை ஆசிரியப்பா அமிழ்து பசித்தோர்க் ககப்பட் டதுபோல் தமிழர்க்குக் கிடைத்த தகுகாம ராசரே! தமிழகம் நிறவெறித் தலைவனால் தொல்லை சுமந்து துடிப்பது நீங்க, நீவிர் அமைச்சுப் பதவிக் கொப்பிய அருட்டிறம் தமிழர் பலபல தலைமுறை மறப்பரிது. குமரி தொடங்கி இமையம் வரையுள பெருநிலம் ஒருநா டெனும்பே ராட்சி ஒருபுறம் உங்களை இழுக்க, மறுபுறம் அலுவல் அனைத்தும் தமக்கே என்னும் தலைகொ ழுத்த சாதி இழுக்க நொடிப்பொழு தேனும் நுண்முறை வழாமல் அடிப்படை நலங்கள் தமிழகம் அடைய உள்ளத்தால் பொய்யா துழைக்கும்நீர் தமிழர்கள் உள்ளத்துள் எல்லாம் உள்ளீர் ஐயா புதுவையிற் புலவர் குமார சாமிக்கு நிதிதந்து பொன்னாடை போர்த்த நீவிர் வருதல் வேண்டும் என்றே மாகப் பெரும்பணிக் கிடையிலும் வருதல் ஒப்பினீர் செய்த நன்றி சிறிதும் மறவோம் வாழ்க காம ராசரே! வாழ்கநும் ஆட்சி தமிழ்வாழ்தற் பொருட்டே! - பன்மணித்திரள், ப.255, 1964; குயில், 10.2.1959 24. மறைமலையடிகளார் நூலகம் வாழ்க! வெண்பா எல்லா வரம்பெற்ற பார்ப்பனர்கள் எங்களிறை பல்லா வரத்து மறைமலை நூல் - கல்லா வரம் பெற்ற தில்லை, மறைவாகக் கற்பார் உரம்பெற்ற தில்லை உளத்து எவ்வெத் துறைநூல்கள் எங்கே வெளிவரினும் அவ்வத் துறைநூலை ஆய்ந்தாய்ந்து - செல்வி நலங்கொண்டு சேர்த்தநூல் நாலா யிரமும் வலங் கொண்டு வந்ததமிழ்ச் சொத்து நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாம் அளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழைக் காக்கும் படை. அடிகளார் பேரால் அமைந்தநூல கத்தால் விடியலாய் வையம் விழிக்கும் - கொடிபறக்கும் வாபகையே என்றழைத்து வாகை மலர்சூடும் நாமடைவோம் வெற்றி நடை. - புகழ்மலர்கள், ப.133, 1978 25. பிறந்தநாள் விழாவில் பெண்ணழகி வணக்கமும் வாழ்த்தும் எடுப்பு அம்மா அப்பா ஐயா வணக்கம்! உம்மால் பிறந்தேன் வளர்ந்தேன் அறிவடைந்தேன்! - அம்மா அப்பா ஐயா வணக்கம்! உடனெடுப்பு கைம்மா றறியேன் பதின்மூன் றாண்டு கடந்தேன் நன்றி நவின்றேன் ஈண்டு! - அம்மா அப்பா ஐயா வணக்கம்! அடிகள் உற்றார் என்னைக் காப்பது பாரம்! உள்ள நாட்டார் என்வாழ்வுக்கா தாரம்! கற்று வல்ல புலவர் எல்லாரும் கடுகள வருள்வைத்தால் நலமெல்லாம் சேரும்! - அம்மா அப்பா ஐயா வணக்கம்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழ்! மழையே செந்நெல் வயலே வாழ்க! வாழ்ந்தால் அல்லது காப்பவர் யாவர்? வாழ்கவே என்றன் இயல்புடை மூவர்! - அம்மா அப்பா ஐயா வணக்கம்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.44, 1978; குயில், 1.11.1960 26. வாழ்க பாலசுப்பிரமணியனார்! அகவல் என்று பெரியார் அறத்துறை இறங்கினார் - அன்று தொட்டே அவரடிச்சுவட்டை அகலா மேதொண் டாற்றி வருபவர்; தமிழ்வாழ்ந் தால்தான் தமிழர் வாழ்வார் என்று தமிழுக் கென்றும் தொண்டு நன்று புரியும் நல்லவர் வல்லவர் ஆரியச் சேற்றில் அழுந்தும் தமிழரை வாரி அணைத்துநல் வழிப்ப டுத்தும் வள்ளுவம் எவர்க்கும் அள்ளி வழங்கும் வள்ளல்; தமிழாய்வு வாய்க்கப் பெற்றவர்; அவர்தாம் யார்எனில் அறையக் கேண்மின் திருச்சி திருமகள் முகத்த அச்சி ஆலைப் பால சுப்பிர மணியனார்! நம்குயில் நாளை வருமென நவின்றதும் இன்றே இந்தா நூறுவெண் பொற்காசு என்றே வாழ்நாட் கட்டணம் ஈந்தவர் பாரதி தாசன் பாட்டுப் போட்டி பாரினர் பாட்டுப் பயன்பெற எண்ணி ஏற்பாடு செய்தார் என்றால், பொதிகை மேற்படு சந்தனம் விரைகெடல் உண்டா? அயற்கை எதிர்பா ராதவர் இயற்கை அறப்பண்பு வாழ்கஎந் நாளுமே! - உலகம் உன் உயிர், ப.65, 1994 27. சுயமரியாதைத் திருமணத்தில் வாழ்த்து நேரிசை அகவல் உலகினிற் பழஞ்சீர் இலகிய இந்தியா விழிமூ டிற்றெனும் பழிமூடா வண்ணம் மக்களே எழுக வாழ்வினில் உயர்க என்றுணர் வளிக்க எழுந்ததென் இயக்கம் அவ்வியக் கத்தின் அருமை கூறிடில் இருளிற் சுடராய் எழுந்த தென்போம் வற்றிய நெஞ்சில், வற்றிய தோளில் வயிரத் தன்மை வழங்குவ தென்போம் பாரத நாட்டை வீரர்தம் நாடாய் புரியுந் தன்மை பூண்ட தென்போம் நயங்கொள் அவ்வியக்கம் தன்னை நாங்கள் சுயமரி யாதை இயக்கமெனச் சொல்வோம் *** அந்த இயக்கம் அறைவ தென்னவெனில் எல்லாரும்1 ஓர்குலம் எனப்படல் வேண்டும் எல்லாரும்2 இந்தியர் எனப்படல் வேண்டும் எல்லாரும் 3 பொதுவாய் இன்புறல் வேண்டும் உயர்வு தாழ்வுகள் ஒழிந்திட வேண்டும் பெண்கள் விடுதலை பெற்றிட வேண்டும் கைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும் காதல் மணமே காணுதல் வேண்டும் பகுத்தறி வுச்செயல் பரவுதல் வேண்டும் மூடச் செயல்கள் முறிபடல் வேண்டும் யார்க்கும் கல்வி ஈந்திடல் வேண்டும் தொழிற்கல்வி எங்கும் தோன்றிடல் வேண்டும் ஒருவனை ஏய்த்து மற்றொருவன் உண்ணும் இருதயந் தன்னில் எரிமூட்ட வேண்டும் சுதந்தரம் சமத்துவம் சகோதரத் துவமெனும் இதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும் எழுபது கோடித் தடக்கைகள் இருந்தும் எழுபது கோடிச் சுடர்விழி யிருந்தும் குளிர்முப் பத்தைந்து கோடிமுகம் பூண்டும் நீடுமுப் பத்தைந்து கோடிவாய் நிறைந்தும் பாரத நாடெனும் பழம்பெருந் தேவிதான் ஒற்றுமை உணரா ஒரேகா ரணத்தால் அங்கம் áij¥g£4 டழிதல் நன்றா? என்றுதான் சொல்லிற் றெங்கள் இயக்கம். இயக்கம் சொன்ன இவற்றை யெல்லாம் மயக்கம் கொண்டு மறுப்பது தகுமா? கடவுளின் பெயரால் கடிவது முறையா? மதப்பெயர் சொல்லி kW¥gJ5 சரியா? சாதியைச் சொல்லித் தவிர்ப்பது நன்றா? வழக்கம் எண்ணி ஒழிப்பது நெறியா? சடங்கைச் சொல்லித் தடுப்பது நீதியா? குருக்கள் சூழ்ச்சியால் குலைப்பது ஞாயமோ? ஆச்சாரி மெச்ச அழிப்பது தர்மமா? பார்ப்பனர் தூண்டலால் பகைப்பது பெருமையா? மகந்துகள் சூழ்ச்சியால் மாய்ப்பது வண்மையா? *** உயர்ந்தஎம் இயக்க உண்மை கண்டு தெளிந்த சிந்தையோர் நன்றென ஒப்பினர் பகுத்தறி வாளர்கள் மகிழ்ச்சியோ டேற்றனர் நாட்டிலன் புடையார் கேட்டு வியந்தனர் ஆயிர மக்கள் அறிவியக்கம் என்றனர் பல்லா யிரவர் பயனுடைத் தென்றனர் இலச்சக் கணக்கினர் பட்சத்தால் ஆர்த்தனர் ஆயினும் சிலபேர் தீயதென் கின்றனர் சிற்சில பேர்கள் சிந்தை நொந்தனர் இன்னும் சிலபேர் எதிர்த்திடு கின்றனர் மற்றும் சிலபேர்வைதிடு கின்றனர் அன்பற்ற சிற்சிலர் அடிக்கவும் செய்தனர் எம்மியக் கத்தை எதிர்த்திடு வோரை நாமின் றுசில ஞாயங் கேட்போம். உங்கள் ஆத்திகம் உங்கள் வைதீகம் உங்கள் கடவுள் உங்கள் கோயில் உங்கள் குருக்கள் உங்கள் ஐயர் உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம் உங்கள் யோகம் உங்கள் யாகம் உங்கள் விரதம் உங்கள் பூசனை உங்கள் சடங்குகள் உங்கள் மடங்கள் இவைகள் இதுவரை என்ன செய்தன? ஆயிரம் ஆண்டாய் அசைத்த தென்ன? இலட்சம் ஆண்டாய் ஈந்த தென்ன? ஓர்யுக மாக உருட்டிய தென்ன சதுர்யுக மாகச் சாய்த்த தென்ன? பசியால் மக்கள் பறக்கின் றாரே நோயால் மக்கள் beho¡»‹7 றாரே தொழிலின்றி மக்கள் சோர்கின் றாரே வாணிபம் கெட்டு வதைகின் றாரே கல்வி யின்றி கலங்குகின் றாரே ஆடை யின்றிக் அலைகின் றாரே வீடின்றி மக்கள் bt¿¡»‹8 றாரே பரதேசம் சென்று பதைக்கின் றாரே அண்டை வீட்டினர் அரிப்பார் என்றும் பக்கத் துள்ளார் பழிப்பார் என்றும் எதிர்த்த வீட்டினர் இளிப்பார் என்றும் பின்வீட் டார்கள் பிதற்றுவார் என்றும் சாதியார் சனங்கள் சபிப்பார் என்றும் நாட்டாண்மைக் காரர் கேட்பார் என்றும் பெரியதனக் காரர் பேசுவா ரென்றும் பாவம் வந்து பாயும் என்றும் நாகம் வந்து நலிக்கும் என்றும் சனியன் வந்து சாரும் என்றும் தோஷம் வந்து தொலைக்கு மென்றும் குருக்கள் வந்து கூவுவா ரென்றும் கிழவர் வந்து கேட்பா ரென்றும் பொன்னியக் கத்தைப் பின்பற்றா திருப்பதா? இதோ பாருங்கள் எமது தோழர் மன்னும் பெருமைப் பொன்னு சாமியின் செல்வ ரான சிவசங் கரனும் கதாதர் வேலை எதார்த்த வாதி கோபாலன் பெற்ற குணவதி யான âUÃiw10 செல்வி கிருஷ்ண வேணியும் உருவோங் கியசீர்த் திருவேங் கடனார் பண்புசேர் செல்வி gîdh«11 பாளும் கோபாலன் பெற்ற பூபாலன் ஒத்த நேச மிக்க கேசவன் தானும் சுயமரி யாதைத் தூய இயக்கத் திருமணம் கண்டு பெருமக்க ளுக்கு நன்னெறி காட்ட முன்வந் தார்கள் வீரப் பெண்கள் வீரக்கு மாரர்கள் ஆரும் இன்பால் அகிலத்தில் வாழ்க! மணமக்கள் பெற்ற குணமிக்க சுற்றத்தார் உயர்வுற வந்தவர் தூய சுயமரியாதை இயக்கம் வாழியவே! - பழம் புதுப் பாடல்கள், ப.120-123, 2005; குடிஅரசு, 9.10.1932 குறிப்பு : முனைவர் ச.சு. இளங்கோ எழுதிய குடியரசு இதழில் பாரதிதாசனின் பாடல்கள் என்னும் நூலில் இப்பாடல் சில வேறுபாடுகளுடன் தரப்பெற்றுள்ளது. அவ்வேறுபாடுகள்: 1, 2, 3 - எல்லோரும், 4. சிறைப்பட், 5. மறப்பது, 6. ஞாயமோ, 7. நொடிசின், 8. வெளிக்கின், 9. சபிப்பார், 10. திருநிறைச், 11. படினாம் 28. எட்டாவது ஆண்டிற் குடிஅரசு எண்சீர் விருத்தம் ஏழாண்டி னின்றுநீ எட்டாம் ஆண்டின் எழிற்பீடம் ஏறிவிட்டாய் வெல்க! வெல்க! பாழாண்ட படிவிட்டே அறிவி யக்கப் படியேற்றிப் படியேற்றி நாங்கள் கொண்ட வாழாதநிலை நீக்கி வாழ்நி லைக்கு வரச்செய்யப் பணியாற்றும் நன்மை தன்னில் சூழ்கின்ற குடிஅரசே! வெல்க! உன்றன் சுயமரியாதைக் கொள்கை வெல்க நன்றே! 1 எட்டாண்டின் எழிற்பீடம் வெற்றி கொள்க! ஏறிநின்ற உனதுநிலை ஏற்றம் கொள்க! வெட்டாத கத்தியினை வீசாக் கையால் வெடுக்கென்று தாக்கிஎமை வீழ்த்தப் பார்க்கும் முட்டாள்கள், வைதிகர்கள், குருக்கள், சூழ்ச்சி, முளையழிய நடமாடி நாட்டு மக்கள் கட்டோடு சமத்துவத்தைத் தாவும் இன்பக் கருத்தளிப்பாய் குடிஅரசே! வெல்க நன்றே! 2 ஏழ்ஆண்டும் உன்நிலையும் உறையும் வாளும் எட்டாவ தாண்டுதான் உனது வீச்சு! கூழ்ஆண்டே கூழ்ஆண்டே என்று கூவும் கொடும்ஏழ்மைத் தன்மையினை நீக்க வேண்டும் வீழ்நிலையில் நாட்டினரை வீழ்த்தும் தீய வெம்பணக்காரத் தன்மை தொலைய வேண்டும் சூழ்கின்ற பகுத்தறிவின் இயக்கங் கண்ட தூயகுடி அரசேநீ என்றும் வாழி! 3 - பழம் புதுப் பாடல்கள், ப.119, 2005; குடிஅரசு, 1.5.1932 குறிப்பு : ஆக்கியோன் புதுவை பாரதிதாசன் என்னும் குறிப்போடு குடிஅரசு இதழில் முகப்புப் பாடலாக இப் பாடல் இடம்பெற்றது. 29. கவிதை மலர்கள் - நூலுக்கு வாழ்த்து நேரிசை வெண்பா கவிதை மலர்க ளெனக் கன்னற் றமிழால் உவகைபெற நாட்டுக் குதவி - யவரென் பழநாளின் தோழர் பழநிவேல் என்னும் எழிலார் எனஅறிக இன்று. 1 எளியநடை நல்ல கருத்துகள் ஏற்றே ஒளியால் வெளிவந்த ஒண்மைத் - தெளிதமிழ்நூல் நாட்டார்எல் லார்க்கும் நலம்புரிந்து விட்டதென்று நாட்டுவேன் உண்மையிலே நான். 2 பழநிவேல் சிங்கையில் பன்னாளாய்த் தங்கித் தழையத் தமிழரைப் பேணி - உழைக்கின்றார் நன்றிந வில்கின்றேன் நற்றமிழர் சார்பாக என்றுமவர் வாழ்க இனிது. 3 - பழம் புதுப் பாடல்கள், ப.227, 2005 குறிப்பு : பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த திரு. ந. பழநிவேல் அவர்களின் கவிதைத் தொகுதி எனும் குறிப்போடு சிங்கப்பூர் தமிழ்முரசு காரியாலயம் மே 1947இல் முதற்பதிப்போடு வெளியிட்ட கவிதை மலர்கள் நூலுக்கு வாழ்த்து. 30. சங்கொலி - இதழ் மதிப்புரை பஃறொடை வெண்பா சங்கொலி என்ற தமிழ்இதழ் வாழ்க! திங்கள் இருமுறை செவ்வனம் வெளிவரும் தனிஇதழ் தன்விலை எட்டுக்காசே அதற்குச் சாக்கியன் ஆசிரி யர்எனில் மதிக்கப் பெறும்என வரைய வேண்டா அன்றியும் இந்நாள் அடையத் தகுவது நாட்டின் விடுதலை என்று நவிலும் திராவிடர் கொள்கையைத் தாங்கித் திகழ்வேன் என்று சங்கொலி இயம்புதல் காண்க இதழுக் குடையார் கொள்கை இதுவெனில் மகிழ்ச்சிக் குரியது மற்று முண்டோ சங்கொலித் தமிழ்நடை நன்று! இங்கது பெரும்புகழ் எய்துக இனிதே! - பழம் புதுப் பாடல்கள், ப.191, 2005; குயில், 14.05.1959 31. திருமணச் சிறப்பு திருவளர் வெற்றிச் செல்வி - வேங்கடாசலன் அகவல் நற்றமிழ் பயின்ற வெற்றிக் கொடி எனும் பாவை, ஆநந்தப் படையாட்சி யான குறுநில மன்னரின் பேர்த்தி, குறைவிலாச் செக்கடிப் பட்டித் திருமலி இராமச் சந்திரன் தவத்தில் வந்த புதல்வி, கொட்ட வாடிக் கொற்றவன் நிகர்த்த பூமாலைப் படையாட்சி புதல்வன் மேன்மைக் குணமுறும் வேங்கடாசலன், இருவர் தாமும் திருமணம் பெற்றனர்! இந்தத் திருமணம் செந்தமிழ் நாட்டின் தலைவர் பெரியார் தலைமையில் நடந்ததால் அதன் சிறப்பை அறையவும் வேண்டுமோ! மணவறை யதனில் மணமக்கள் தமக்குப் பாரதி தாசனார் வாழ்த்துரை பகர்ந்தனர் புலவர் ஏறு பொன்னம் பலனார் ஏந்து புகழ்ச் சாந் தாநந்தம் முதலியோர் வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தனர் பல்லா யிரவர் மக்கள் நல்லுரை நவின்றனர்! மணமக்கள் வாழ்கவே! - பழம் புதுப் பாடல்கள், ப.342, 2005; குயில், 14.4.1959 32. தினத்தந்தி தினத்தந்தி பற்றி உங்கள் கருத்தென்ன என்றார்க்கு: வெண்பா மனத்தந்த வான்மீன்கள் செய்யும் மகிழ்ச்சி! தினத்தந்தி ஓர் இலக்கம் சென்னை - வனத்தினின்று மாடப் புறாக்களென வையம்அளக் கும்தமிழ் நாடெப் படிநீ நவில். - பழம் புதுப் பாடல்கள், ப.384, 2005; குயில், 5.7.1960 33. நல்லறம் வாழ்க! அகவல் கொல்லாமை ஒன்று! கொல்லல் ஒன்று! முன்னதே நன்றென முதன்முதல் சொன்னவன் நானில நாக ரகம்தொடங் கியவன் அறநெறி ஒன்று பாவம் ஒன்று முன்னதால் மன்னுயிர்க் கின்னாசெய் யாமையை உலகிற்கு முதற்கண் உரைத்தவன் எவனோ அவன்நாக ரிகத்தைத் தொடங்கிய அறவோன் இரக்கம் ஒன்றுமற் றிரங்காமை ஒன்று முன்னதால் உயிர்க்கெலாம் இன்னல்செய் யாமையை வையத்து முதலில் வழுத்திய மேலோன் நாகரிக வித்து நாட்டிய பெரியோன் உடலால் சொல்லால் உளத்தால் உயிர்கட்குக் கெடுதல்செய் யாமையை முதன்முதற் கிளத்தியோன் சமணத் தலைவனே யாயின் அன்னோன் இவணுறும் உயிர்க்கெலாம் அருள்தந்தை ஆவான் இன்னுயிர்க் கின்னா செய்தலே அறமென முன்னர் ஆரிய நான்மறை மொழிந்தோர் மக்கட் கருவழி நச்சுப் பூச்சிகள் என்பதை எண்ணுங் காலை மன்னுயிர்க் கின்னாசெய் யாமையை இனிதுரைத் தவனை என்னென்று போற்றுதும் என்னென்று போற்றுதும் சமணறம் தமிழால் தமிழர்க்கு நல்க நல்லறம் என்னும் நல்லிதழ் வந்தது நாம்அதை வரவேற் கின்றோம் பூமிசை வாழ்க என்று புகன்றே. - பழம் புதுப் பாடல்கள், ப.273, 2005; குயில், 1.6.1958 34. மனத்துணை நாதர்க்கு வாழ்த்து கட்டளைக் கலித்துறை திருவார்ந்த தஞ்சை மனத்துணை நாதனே! செந்தமிழா! ஒருமூன்றி லக்கம் தொழிற்கல்விக் காக உதவிசெய்தாய் பெருநன்றி! வாழ்க! பிழைசெய்து நாளும் பிழைத்துவரும் ஒருசின்ன பார்ப்பும் நிறுவனம் சேரின் உடன்கெடுமே. - பழம் புதுப் பாடல்கள், ப.285. 2005 35. அப்போசி மாரம்மாள் திருமண வாழ்த்துப்பா வெண்பா எப்போதும் செந்தமிழ்க்கே தொண்டு செய்வார்: என்தோழர் அப்போசி மாரம்மை யன்னம் இவர் - இப்போது வள்ளல் இளமுருகு வாழ்த்தி மணமுடிக்க அள்ளினார் வாழ்க்கை அமுது! ஆரம்மா என்பார்க்கு நான் என்று சோறளிக்கும் மாரம்மா அப்போசி வாழ்முறையைப் - பாரம்மா என்று பலரும் இயம்பிடவே பல்லாண்டு நன்றுவாழ் வார்கள் நயந்து! - பழம் புதுப் பாடல்கள், ப.346, 2005; குயில், 28.4.1959 36. திருமண வாழ்த்து விநாயகர் காப்பு பூக்கும் புதுவையினிற் பொன்னிநிகர் காசியம்மா பாக்கியனி ராமசாமிக் கென்ன - ஆக்குமணம் சொல்லிப் புவிக்குச் சுவைப்படைக்க என்மீது வல்லபைநா தாகிருபை வை. இராகம் : அமிர்தவாஹினி தாளம் : ஆதி பல்லவி வானோர் ரவீமதீ தாமுள்ள நாள்வரை வாழ்க சதீபதீயர் அனுபல்லவி மானமும் குலசந்தான சம்பன்னராய் மாசிலாவி வாசமொடு காசினிதன்னில் சரணம் சீலன் செங்கழனி செம்மலும் தாயாம் திருநிகர் பொன்னம் மாவும் சேயாம் கோலமார் ராமசாமி சற்குணனை- க் கோதையோடு பூவும்வாச மாமணம் முடித்தார் - வா பூமிமெச்சும் குப்புசாமி தாயம்மை புரிதவக் குமரி காசியம்மையாம் தேமலர்க் கொடிபோய்ச் செழித்திடும் தருவைச் சேர்ந்தவாறு தோய்ந்த அன்பிலே மணம்ஆர்ந்தார் - வா அறநெறி கடவா தனைத்துயிர் மேலும் அன்பொடு பழகித் துன்பெலாம் விலகி உறவினிற் கலந்தும் உண்மையை நயந்தும் ஓசையொடு தேச ஆணை மீறுதலன்றி - வா - பாவேந்தர் உள்ளம், ப.43 - 44; பழம் புதுப்பாடல்கள், ப.99, 2005 குறிப்பு: சரவதி மனோகர சபை எனும் அமைப்பின் உறுப்பினர் இராமசாமி என்பாரின் திருமணத்தின் போது 27.8.1924இல் புதுவை சரவதி மனோகர சபையாரால் வெளியிடப்பெற்ற திருமண வாழ்த்துப்பா. 1. ஒற்றுப் மிகை. 37. திருமண வாழ்த்து இராகம்: இராகமாலிகை தாளம்: ரூபகம் மணக்கோலம்தான் நீடூழி வாழி - மண இதனைக் கேதாரந்திகழ் மார்பினர் - மண துணைப் பெருவாழ்வில் தோய்பல் காலும் துங்கம் கொளங்கம் விளங்கும் நிஷ்களங்க - மண சகத் தோடி யைந் தாலெனத் தழைத்துவேர் நல்ல Ubfd1 மிகுத்து thœfbt2 செழித்து மின்னுடற் கோதையும் அன்பனும் இன்புற - மண nj‹wW3 மலர்வேணி சேல்விழி கொளும் கல்யாணி தோன்றல் பாலே அன்பு பேணிச் சுகுண புத்ர பௌத்ரர் அடைக - மண புவன மோஹன வான்உள நாளும் புனித வதூவரர் ஆயுளும் நீளும் பொன்னேர் ஆரோக திடகாத்ரம் மன்ன புவிக்குட் பிரபல்யர் v‹dhS«4 பன்ன - மண சகமென்னும் பெருந்தேவி ஷண்முகப்ரியை மேவி அகமெனும் தானம் தன்னில் அமர்த்தி அன்பில் அருள இன்பம் - மண - பாவேந்தர் உள்ளம், 1930; பழம் புதுப் பாடல்கள், ப.112, 2005 குறிப்பு: 1930ஆம் ஆண்டு சரவதி மனோகர சபையினர், பார்த்த சாரதி - கிருஷ்ணவேணி ஆகியோர்க்குத் திருமண வாழ்த்தாக வழங்கி யது. இவ்வாழ்த்துப்பா இராகமாலிகை எனக் குறித்ததற்கேற்ப இராகங்களின் பெயர்கள் இடம்பெறுமாறு இயற்றப்பட்டுள்ளது. அப்பெயர்கள் தடித்த எழுத்துகளில் தரப்பெற்றுள்ளன. 1. நல்லறுகென; 2. வாழ்கவே; 3. தேன்றரு; 4. எந்நாளும் - என இருத்தல் வேண்டும் 38. குடிஅரசு ஒன்பதாம் ஆண்டு வாழ்த்து எண்சீர் விருத்தம் பயன்விளைக்கும் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய்ப் பழம்பழுக்கும் சோலையிலே எமைஅ ழைத்து நயன்விளைத்தாய் முதலாண்டில்! இரண்டாம் ஆண்டில்! நாங்கள்எலாம் எங்கள்நிலை அறியச் செய்தாய்! வயன்விளைக்கும் மலையுச்சி வருக என்றாய்; மக்கள்எலாம் சமம் எனலை அங்குக் கண்டோம்! வியன்விளைத்த பூங்காவில் பெண்கள் மேன்மை வீணைஒலி பருகவைத்தாய்! வேறோர் ஆண்டில், 1 வெள்ளத்தைப் போல்அன்பும், விரிந்த மார்பும், விழித்தவிழி யும், கோரிக்கும் வீரப் பேச்சும், உள்ளத்தில் பெருங்களிப்பும், குன்றைப் போலே உயர்நோக்கும் சுடர்முகமும், கருங்கற் றோளும், உள்ளிட்ட புவிமக்கள் இயற்கை தன்னை ஒன்றுக்கும் ஆகாமல் ஆக்கு கின்ற குள்ளக் கருத்துமதம் கடவுட் பித்தம் கொடிதென்றே எக்காளம் கேட்டோம் பின்னே 2 உன்தோழ ராம்எம்மை மற்றோர் ஆண்டில் ஒலிமுழக்கும் திரைக்கடலின் ஓரம் சேர்த்தாய்; கன்னத்தில் அறைந்ததுபோல் எங்கள் முன்னே கடற்பறவை கூடிவந்து மக்காள்! மக்காள்!! சின்னப் புரோகிதர்,பண்டிதர்,குருக்fள் திருடரtர்,முழுத்திருlர்vன்றுமெய்iமச் சொன்ன¤தைநினைக்கைÆலேநகை¥புக்கூ£lம் தோன்றுதுfண்குடிஅuசேவhழ்கநன்nw! 3 உலகியலின் பலஉண்மைக் காட்சிக் bகம்மை cŸsh¡»¥பகுத்தறிவி‹ xளியிற்சேர்¤தாய்! கலகம்வரும்fhuz¤â‹ வேரைக் கல்லிக் கண்கலங்கும் ஏழ்மைக்கு விடைகொ டுக்கத் தலைநிமிர்ந்து சமதர்மப் போரில் ஏறிச் சகமுழங்கும் குடிஅரசே நீயும் உன்றன் உலவுசுய மரியாதைப் புலிக்கு ழாமும் ஒன்பதாம் ஆண்டினிலே வெல்க நன்றே! 4 போர்முகத்தில் அணிவகுக்க இன்ற ழைத்தாய்! பொதுஉடமை முரசறையக் கோலெ டுத்தாய்! ஓர்முகத்தில் சந்தோஷம் ஒன்றில் வாட்டம் உண்டாக்கும் அரசியலை விழிநெ றித்தே ஊர்முகத்தில் நிற்காதே எனமு ழக்க ஒன்பதாம் ஆண்டினிலே உயர்ந்தாய் இந்நாள் பார்முகத்தைச் சமப்படுத்த ஓகோ கோகோ பறந்தேறு கின்றாய்நீ வாழி நன்றே! 5 - பழம் புதுப் பாடல்கள், ப.127-128, 2005; குடிஅரசு, 30.4.1933 39. தமிழ்த்தாய் - இதழ் மதிப்புரை இணைக்குறள் ஆசிரியப்பா தமிழ்த்தாய் வந்தாள்! சென்னை மாகாணத் தமிழ்ச்சங் கத்தி னின்று பெரியார் கண்ட கனவின் சித்திரம் விரியுரை வியாசம் அணிகலம் பூண்டு தமிழகம் நோக்கி வந்தாள்! தருசிவ ஞான யோகியார் ஒப்பில் ராவ்சாகிப் சுப்பிர மணியனார், ஓது வேங்கட ராமையர் செய்யி தப்துல், காதிர்வேள், திரு.வே. நெல்லையப்பர், இரத்தி னேச்சுரர் பெரிய சாமியார், கவிஞர்கள் திசைமுகம் கவிய வாழ்த்தவும் தாளா சிரியர் தமிழின் தொண்டர் வேள்சுப்ர மணியனார் முதற்றமிழ் வீரர் திருச்சங் கூதவும் சின்ன மெடுப்பவும் விருப்பொடு பராக்கு விளம்பவும், சயசய அமிழ்தொலி ஆர்ப்ப ஆர்ப்பத் தமிழ்த்தாய் வந்தாள் சகம்எதிர் கொள்கவே. - பழம் புதுப் பாடல்கள், ப.153, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 குறிப்பு : சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தின் முத்திங்கள் வெளியீடாகத் தனியிதழ் நான்கணா விலையில் திருநெல்வேலியிலிருந்து வெளி வந்தது தமிழ்த்தாய். 40. புது உலகம் - இதழ் மதிப்புரை எண்சீர் விருத்தம் நல்லறிவும் பெருநோக்கும் கேட்பி ராயின் நம்தோழன் சிங்கார வேலன் கண்ட வெல்லுதமிழ்ப் புதுஉலகம் என்னும் மாத வெளியீட்டை வாசித்தல் வேண்டும் என்போம்! புல்லறிவில் தூக்கத்தில் சேர்க்கும் பேச்சுப் புதுவுலகில் எவ்விடத்தும் கண்டோ மில்லை இல்லைஎனல் இந்நாட்டில் விஞ்ஞா னந்தான். புதுஉலகில் விஞ்ஞானம் எதேஷ்டம் கண்டீர்! 1 புதுவுலகம் மாதமொரு முறைகி டைக்கும் புலன்அடைந்த மாசையெலாம் அதுது டைக்கும்; இதுஉண்மை உபசார வார்த்தை அல்ல! எல்லாரும் வாங்கிவா சித்தல் வேண்டும், அதுஎன்ன இதுஎன்ன என்று தேடி ஆயிரம்ஆ யிரநூற்கள் உண்மை கண்ட சதுருளத்தி னின்றுவரும் சரக்கை வாங்காத் தமிழருண்டோ? கரும்புதின்னக் கூலி ஒன்றா? 2 - பழம் புதுப் பாடல்கள், ப.155, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 குறிப்பு: தோழர் மா.சிங்காரவேலரை ஆசிரியராகக் கொண்டு தனியிதழ் இரண்டணா விலையில் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ்க்கு மதிப்புரை. 41. வழிகாட்டி - இதழ் மதிப்புரை அறுசீர் விருத்தம் கல்லூரு ணித்தோழர் புன்னைமுத்தைக் கவினாசி ரியராய்க் கொண்டே எல்லோரும் பின்பற்றி முன்னேற வழிகாட்டி என்னும் பேரால் நல்லமதிக் கொருமுறையாய் வெளிவருமாம் அதுகண்டோம். மிக்க நன்று! சொல்லெல்லாம் நல்லோர்சொல்! பகுத்தறிவுச் சுடர்கொளுத்தும் சொல்லே கண்டீர் - பழம் புதுப் பாடல்கள், ப.158, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 குறிப்பு: அருப்புக்கோட்டை கல்லூருணியிலிருந்து தோழர் புன்னை முத்துவை ஆசிரியராகக் கொண்டு, தனியிதழ் ஒன்றரை அணா விலையில் வெளிவந்த மாத இதழ் வழிகாட்டிக்கான மதிப்புரை இது. 42. பகுத்தறிவு - இதழ் மதிப்புரை பகுத்தறிவீ னத்தைப் புதைக்கப் புவியில் பகுத்தறிவு வந்ததுநாம் பார்த்தோம் - தொகுத்திருக்கும் கட்டுரைகள் யாவும் அறிஞர் கவின்கனவாம் அட்டுழியக் காரர்வாய் ஆப்பு. தேசப் பகுத்தறிவின் ஆசிரியர் செப்புகின்றோம்; வீசப் பிறக்கும் விரிகதிர்போல் - காசினியில் ஆமிருளைப் போக்கும் அறிஞர் ஈ.வீ.ராம சாமி அவர் உள்ளம் சகம். வையம் பகுத்தறிவை வாசிக்க! வாசித்து மெய்யை அறிக! வெறும்பொய்யை - வைதொதுக்க! நல்ல சமத்துவத்தை நாடுக! இன்பத்தை எல்லாரும் துய்க்க இனிது. - பழம் புதுப் பாடல்கள், ப.159, 2005; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 குறிப்பு: ஈரோட்டிலிருந்து பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தனியிதழ் ஒன்றரை அணா விலையில் வெளிவந்த இதழுக்கான மதிப்புரை 43. சங்கு சுப்பிரமணியன் திருமண வாழ்த்து அறுசீர் விருத்தம் சொல்லறங்கள் சிறந்திருந்த நமதருமைத் தமிழ்நாட்டின் தூய்மை காக்கப் பல்லறங்கள் நாடிடுவோர் தமிழரிடைத் தமிழொளியைப் பரப்பல் என்ற நல்லறத்தைச் செய்திடுக என்றுசுதந் திரசங்க நாதஞ் செய்தோன் இல்லறமும் காக்கமணந் தான்! சுப்ர மணியன்சர சுவதி வாழ்க! வெள்ளைநிலா, விரிநதிகள், மணித்தடங்கள், சோலையெல்லாம் வீழ்ந்த நெஞ்சை அள்ளுவது காணீரோ அமுதுநிகர் தென்தமிழால் அவைபா டீரோ நொள்ளைகளாய் இருப்பதுண்டோ என்று தின மணி வாயில் நுவல்வோன் வீரப் பிள்ளைகளைப் பெறமணந்தான்! சுப்ரமணியன் சரசுவதி bgUeh‹1 வாழ்க! தன்பற்று நீக்கிநிறை தமிழர்க்குப் பெரிதுழைப்போன் தக்கோர் தம்மைப் பின்பற்றும் பெருங்குணத்தோன் எழுத்தினிலே கவிதைரசம் பெய்வோன் நாட்டின் துன்பத்தை யுணர்ந்தபடி தமிழருளம் சுருக்கேற்றிக் கைதேர்ந் தோன், பின் இன்பமுணர்ந் திடமணந்தான்! சுப்ரமணியன் சரசுவதி என்றும் வாழ்க! தேரழுந்தூர்த் திருவாளர் சுந்தரமை யர்முதல்வன் திண்மைத் தோளன் ஆரிழந்தார் எவனுரைத்தான் அன்னைசுதந் திரதேவி வா, இங் கென்றே போரிழந்த அமைவுளத்தால் கூப்பிடுங்கால் அடடாவோ அவள்தான் வந்து தாரிழந்த நிலாமுகத்து சரவதியாய்ச் சுப்ரமணியன் கரந்தொட் டாளோ! இதந்தருநற் கோயில்வாழ் புவனேவ ரையர்தவத் தீன்ற பெண்ணாள் சுதந்திரநல் லினிமையிலும் இனிமைதரும் தூயசர வதி தன்னை பதம்பெறுசீர்ச் சுப்ரமணியன் பயனுறவே மணந்திட்டான் பல்லா குக்கண் நிதம்வதூ வரர்ஆயுள் பேறுபதி னாறுபெற்று நிலைக நன்றே. - பழம் புதுப் பாடல்கள், ப.164-165, 2005; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம், ஜூன் 1983 குறிப்பு : பாரதிதாசன் இயற்றி, ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலப் பொறுப்பாசிரியர் அ.ம. தம்புசாமி முதலியார் 29.6.1936 அன்று சங்கு சுப்பிரமணியன் அவர்களின் திருமணத்தின்போது வாசித்தளித்த வாழ்த்துப்பா. 44. தி. க. வில் சேர்ந்த திருவாளர்க்கு வாழ்த்துப்பா நேரிசை வெண்பா தீர்த்தகிரி நல்லதம்பி சித்தனொடு சின்னகண் சீர்த்தி இராசு நடேசனும் - ஆர்த்தகுணச் சின்னப்பன் வெள்ளையன் சிங்கார வேல்கதிர் தன்னோர் இராமசா மியெனும் - இன்னர் பெரியார் பெருங்கொள்கைப் பெற்றி வியந்து திருவாரூர் தி.க. வினிற் சேர்ந்தார் - அரிதுசெய்த நுண்ணறி வாளர்கள் நூறாண்டு வாழ்கவே வண்மை புகழ்எல்லாம் வாய்ந்து - 15.7.1958; பழம் புதுப் பாடல்கள், ப.282, 2005; குயில்; கிழமை இதழ், 45. கொம்புத்தேன் - நாடக வாழ்த்து கொம்புத் தேன்படித் தேன், மகிழ் கொண்டேன்; செந்தமி ழர்க்கிது செப்பு கின்றேன் நாவரசு நாடகம் நல்ல நாடகம் கதையின் போக்கில் புதுமை கண்டேன் பேச்சு நடையில் கூத்தர் பேசினர் மிக்க இனிமை! மிக்க இனிமை! அறமி தென்றும் மறமி தென்றும் அறியார் எழுதுவார்; அவ்வா றின்றி- க் காண்பார்க்கு நன்னெறி காட்டிச் செல்லும் மாண்பு மகிழ்ச்சிக் குரிய தாகும். இலக்கணம் என்பது வடசொல் என்பதா? அஃது தூய தமிழே ஆம்என எடுத்துக் காட்டிய இவர்தம் திறமை புலவர் மறதியில் நினைவு புகட்டியது! படித்தவர் எழுதினால் பழுது நேராது; நாவரசு நன்கு படித்தவர் என்க. நகைச்சுவைப் பகுதி நவையற்ற தாகும், பிறசுவை அனைத்தும் அறம்தவ றாதன! தேவைக் கினிது நல்கிய நாவரசு நற்புகழ் எய்திவா ழியவே! - பழம் புதுப் பாடல்கள், ப.297, 2005 குறிப்பு : பாரதிதாசனின் மடல்தாளில் 10.9.1958 என நாள்குறித்து எழுதிய கையெழுத்து வடிவில் அமைந்த இப்பாடல் அவர் ஒப்பத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 46. தி. க. வில் சேர்ந்தார் வாழ்க! சாவும் இனிதென்று, தாய்மீளத் தொண்டுசெய், தி ராவிடர் நற்கழகம் சேர்ந்தார்கள் - யாவர்அவர்? சீர்ப.ம. ஆறுமுகன் செம்மை மருதையா! வாரிர்என்றோம் வாழ்கஎன்றோம் நாம். - பழம் புதுப் பாடல்கள், ப.302, 2005; குயில், 30.9.2958 47. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திருமண வாழ்த்து நிலைமண்டிலம் இளமை வளமையை விரும்பும் என்பர் இளமை எளிமையை விரும்பிய புதுமையை வீர மணியிடம் நேரில் கண்டுளேன்! பாடிக் கைவீசிப் பலருடன் உலவி வேடிக்கை வேண்டும் வாடிக் கைதனை அவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்! உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும் நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்! தொண்டுமனப் பான்மை அந்தத் தூயனைக் கொண்டது குழந்தைப் பருவத்தி லேயே! தமிழன் அடிமை தவிர்ந்து குன்றென நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும் பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கருதிய கருத்து வீர மணியை வீண்செயல் எதிலும் வீழ்த்த வில்லை! அண்டிப் பிறரை அழிக்க அல்ல; உண்டிக் கல்ல உயர்வுக் கல்ல; தொண்டுக் காகக் கல்வித் துறையிற் சேர்ந்தோன் எம்.ஏ. தேர்விலும் தேர்ந்தோன்! நினைவின் ஆற்றல் நிறைந்த வீரமணி, படிக்கும்நே ரத்திலும் பார்ப்பனர் கோட்டையை இடிக்கும் நேரம் எட்டுப்பங் கதிகம்! விட்டே னாபார் தமிழரின் பகைவரைக் கட்டாயம் தொலைப் பேனெனக் கழறும் எட்டாம் பத்தாண் டாசிரி யர்க்கொரு சட்டாம் பிள்ளை என்னத் தகுந்தோன்! பெருங்கூட் டத்துப் பெரியரும் பிள்ளையும் விரும்பப் பேசும் ஆற்றல் மிக்கோன், கல்வியும் செல்வமும் கனக்க உடைய அரங்கம் மைசிதம் பரனார் அளித்த கற்றார் வியக்கக் கலையினால் விரிந்த தோகை மயில்நிகர் மோகனா இந்நாள் பெற்ற பேறு யாவர் பெறுவார் தமிழர் தமக்கும் தமிழ்மொ ழிக்கும் உழைப்பதே உயர்ந்த செல்வமாக் கொண்ட மாண்பார் வீர மணியும்அம் மணியும் ஒருமனம் ஆனதை உறுதி செய்யும்இத் திருமண நன்னாள் தென்னாட்டுத் திருநாள்! வாழ்க வீர மணியோடு மோகனா! இன்னுடல் இருவர்க் கிரும்பின் குண்டென எய்தும் இன்பம் கரும்பின் சாறென மற்றவும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! மணமகட்கு நான் வழுத்துவ தொன்று தகுதி சேர்குரு சாமி மணந்த குஞ்சிதம் அம்மையார் கொண்ட உழைப்பும் பெரியார் மணந்த திருமணி அம்மையார் அளவிடற் கரிதெனக் கொண்ட உழைப்பும் மன்னுசீர் சனார்த்தனம் மனோரஞ் சிதமெனும் அம்மையார் கொண்ட அரிய உழைப்பும் சிறியவை என்று செப்பும் வண்ணம் திருநாட் டுக்குப் பெரிதும் உழைக்க! மணமகன் தனக்குநான் வழுத்துவ தொன்று பெரியா ரிடத்துப் பேரன்பு, வாய்மை அடக்கம், செயல்செயும் ஆற்றல் வாய்ந்த வேதா சலனார் போல் விளங்குக! திருமண மக்கள் பெரும்புகழ் எய்துக! தமிழ்தழைத் தினிதின் ஓங்குக! தமிழ்நாடு விடுதலை தாங்குக! வெல்கவே! - பகுத்தறிவாளர் நாட்குறிப்பு, கையேடு - 1989; பழம் புதுப் பாடல்கள், ப.319-320, ப.369, 2005 இப் பகுதி ய. மணிகண்டனின் பாரதிதாசன் இலக்கியம் - அறியப்படாத படைப்புகள் நூலில் இடம்பெற்றிருந்தது. குறிப்பு : 7.12.1958 ஞாயிறு, மாலை 5 மணிக்குத் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற கி. வீரமணி, எம்.ஏ. - மோகனா திருமணத்தின்போது மணமக்களைப் பாராட்டிப் புரட்சிக் கவிஞர் பாடியது. 48. பொன்முடியார் - புலவர் திருஞானம் திருமண வாழ்த்து வாழுமா றமைந்த கீழ மாளிகை தமிழ்மற வர்செந் தமிழ்ப்பெரும் புலவர் பொன்னம் பலனார் அவர்மேல் அன்பினில் பிறந்து கல்வியில் சிறந்துள கற்புப் பொன்முடியார் எனும் பூங்கொடிக்கும் நந்தியன் குடிக்காடு தந்த நற்புகழ் மேவு மாணிக்கம் வேலா யுதம்தரு திருஞானம்எனும் செம்மல் தனக்கும் உள்ளம் அன்பினால் ஒன்று பெற்றதை வெள்ளத் தமிழர் தலைவர் பெரியார் மன்னு சதாசிவப் பண்டா ரத்தார் உற்றார் பெற்றார் மற்றையோர் அனைவரும் வாழ்க வாழ்க என்று வாழ்த்தினார் அந்த வாழ்த்தொலி அருளுளத் தெழுந்து ஏழிசை யோடும் நாள்மலர் மணத்தொடும் தேனினும் இனிதென வானே நிறைந்தது திருஞானம் பொன்முடி இருவர் தாமும் எந்த நாளும் இன்பமே எய்தி செந்தமிழ்த் தாய்க்குத் திருத்தொண்டு செய்து புகழுலகு தமக்கெனும் பேறு பெற்று மக்கள் செல்வம் ஆயுள் தக்கவா றெய்தி வாழியர் தழைந்தே. - தன்மானத் தமிழ் மறவர் கீ.வை. பொன்னம்பலனார் அவர்களின் வரலாறு, ப.57 - 58; பழம் புதுப் பாடல்கள், 369, 2005 குறிப்பு : தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் அவர்களின் மகள் பொன்முடி யாருக்கும் புலவர் திருஞானம் அவர்களுக்கும் தந்தை பெரியார் தலைமையில் 14.7.59இல் நடைபெற்ற திருமணத்தில் பாவேந்தர் படித்தளித்த வாழ்த்துக் கவிதை இது. 49. தமிழக முதலமைச்சர் காமராசர் ஐம்பத்தேழாவது ஆண்டுவிழா வேண்டினோர்க்கு நன்றி பஃறொடை வெண்பா ஊமைத் தமிழரெலாம் பார்ப்பானால் ஓய்கையிலே தீமை தவிர்த்திடுவேன் தீயர்திறம் நான்காண்பேன் என்று முதலமைச்சுப் பதவியை ஏற்றுமே நன்று கடனாற்றும் நம்காம ராசர்க்கே அண்டும்ஐம் பத்தேழாம் ஆண்டு பிறந்தவிழாக் கொண்டாட வந்த கோதிலா நாமக்கல் ஊருக்கு நன்றி! உயர்விழா என்பதொரு தேருக்கச் சாணிச் சிவஞானச் செம்மற்கும் ஆன செயலாளர் கருப்பையா அன்பர்க்கும் ஏனைய ஒத்துழைப்பார் எல்லார்க்கும் நன்றி ஏனெனில், ஏதும் இனப்பற்றி லாமல்தன் மானமிலா மாந்தர்கள் வாழும்இந் நாட்டில் திகழ்ந்தான் ஒருதமிழன் மற்றத் தமிழர் மகிழ்ந்தார் எனலும் அரிது. முதல்வர் காமராசர் ஐம்பத்தேழாவது பிறந்தநாள் வாழ்த்து! அகவல் தமிழரை விழுங்கத் தயங்காப் பார்ப்பனப் பாம்பின் திறந்தவாய்; இந்தப் பழநாடு! தமிழன் ஒருவன் தலைகிளப் புவது தாழப் பறக்கும் பருந்தெதிர் தவளை வாழப் பறந்து மாய்வ தாகும்! இந்த நிலையில் இத்தமிழ் நாட்டில் இந்தத் தலைமுறை தன்னில்ஓர் இளைஞன் வந்த ஆங்கிலன் அடிக்கீழ் மடியுமோர் தாயகம் பூண்ட தளையில் கண்ணும் உரிமை காப்பதில் உள்ளமும் ஆகத் தொண்டு செய்து கொண்டி ருந்தான் நண்டு நரிக்கெதிர் வலம்வரு தல்போல்! விடுதலைக் கிளர்ச்சி தம்மின வளர்ச்சிக்கு - என்னும் பார்ப்பனர் இந்த இளைஞனின் வளர்ச்சியோ நமது வாணிக வீழ்ச்சியே என்று நடுங்கினர். அவர்கள் எய்யும் நச்சுக் கணைகட் கிடையிலும் நமது பச்சைப் பசுங்கிளி பணிநிற்க வில்லை. ஐம்பத் தேழாண் டிந்நாள் அடைந்துள அமைச்சர் காம ராசர் அந்நாள் எஞ்சாப் பொதுத்தொண்டார்வம் எவ்வளவோ அஞ்சாமை தானும் அவ்வளவு கொண்டவர் ஆங்கிலன் நாட்டன்பு - அழிக்க அளித்த சிறையறை காம ராசர்க்கு மணவறை! பெருமா வட்டப் பெருமக் கட்கெலாம் அன்புக்குத் தாய்போல் அறத்திற்கு வேந்துபோல் துன்புக்குத் தோழன்போல் காம ராசர் வளர்ந்த வளர்ச்சி, பகைவர், தமக்கு விளைந்த வீழ்ச்சி என்று புலம்பினர். காம ராசன் கவினுறு புகழ்விளக்கு மாமலைத் தலைமேல் ஏற்றுமோர் வாய்ப்பு நேர்ந்தது, நிகழ்த்துவேன் சுருக்க மாக! மக்கள் மன்றத் துக்கொரு தலைவன் வேண்டுமென்று - ஒருநாள் நாடு விரும்பியது நாமே அதனை நண்ணுவோம் என்று பார்ப்பனர் பறந்தனர் இறக்கை கட்டி வேட்டியை இறுக்கிக் கட்டி வீடுதொறும் காம ராசனை ஆதரிக் காதீர் பார்ப்பனர் தம்மை ஆத ரிப்பீர் என்று கரடியாய்க் கத்தினான் அன்று தனியதி காரனாம் பார்ப்பனத் தலைவனும்! அந்த முழக்கம் அவர்கட்குத் தீங்கையும் செந்தமி ழர்க்கு நலத்தையும் செய்தது தமிழன் வேண்டாம் என்று சாற்றுவோன் பார்ப்பனன் அன்றோ, இருட்டறை நீங்கி உணர்ச்சியின் உச்சி ஏறினர் தமிழர் தமிழரில் பத்தரை மாற்றுத் தங்கம், காமராசன் என்றனர்; தலைவராய்க் கண்டனர் நாளின் இருபத்து நான்கு மணியும் தூங்கித் தொலைத்தே ஏங்கிக் கிடக்கும் தமிழகத் திற்குப் பார்ப்பனத் தக்கை முதல மைச்ச னாகினான். முதல்நாள் தொடங்கி அன்னவன் பதவி தொலையுமட்டும் தமிழர் பட்டது தளைநாய் படாது படியாப் பொறுக்கிப் பார்ப்பன னைவிட படித்த பார்புகழ்த் தமிழன் மட்டம் என்பது பார்ப்பனர் எண்ணம் அன்றோ இனத்தை முறைமை எண்ணா துயர்த்தினான் தமிழரைத் தரம்எண் ணாது தாழ்த்தினான் கொதிப்பைத் தமிழுக் காக்கக் குதித்தான் மதிப்பைச் செத்த மொழிக்கே வைத்தான் இந்தஆள் இன்பத் தமிழ கத்தின் அமைச்ச னானது வியப்பே அன்று மற்றும் ஒருமுறை கொல்லை வாயிலாய் அமைச்சர் தலைவன் ஆனதே வியப்பு! வெறியன் மருந்து கிடங்கில் தீயிட விரும்பினான்; ஒப்பினார் தமிழ வீணர்! அவனே தமிழைக் கொல்ல ஆரிய இந்தியைத் திணித்த இருளன். மேலும் தமிழர்கள் படிக்கத் தலைப்பட் டுள்ளார் ஆரியர் நிலைமை என்ன ஆவது கல்வியை அழிப்பதே கண்ண விப்பதாம் என்றே எண்ணிக் குலக்கல் வியினைச் சட்ட மாக்க முனைந்தான் இருந்த பள்ளிகள் ஆயிரம் பதைப்புற மூடினான் நாடு நலிந்தது காடாகு முன்பு நரியின் முடியைப் பெரியார் நறுக்கினார் திருவளர் காம ராசர் செந்தமிழ் நாடு காக்க நன்முத லமைச்சுப் பதவியை மறுக்காது பழியிலா தொப்பினார் குலக்கல்வி பற்றிய சட்டம் கொன்று மூடிய பள்ளிகள் முழுதும் திறந்து மேலும் ஆயிரம் ஆயிரம் விளைத்து, மாண வர்க்கு மாணுற உணவும் உதவி, நாட்டுக் குயிரையும் உதவினார் இந்த நாட்டின் அடிப்படை இன்னல் கல்வி இன்மை என்பது கருதி உள்ளம் உருகிய மேலோர் ஒருவரே; அன்னவர், காம ராச அறிஞரே! இந்த நாட்டின் அடிப்படை நன்மை நீர்வளம் ஆக்குதல்! நெடிய அணைகள் பலப்பல பாங்கின் அருளியோர் அவரே. தில்லியின் உளத்தைத் திருப்பியும், தில்லி திரும்பா விட்டால் விருப்பம் நோக்கியும் தன்தமிழ் மக்கட்கு நன்மை புரிவதே மூச்சும் பேச்சு மாக முயல்பவர் இந்நாள் ஐம்பத் தேழாண் டடைந்ததை எண்ணுந் தோறும் மனமெலாம் இனிக்கும் இன்னும் அந்த மேலோர் எண்ணிலா ஆண்டுகள் வாழ வேண்டினர் ஆகத் தமிழர் வாழ்த்தல் சரியே அதைநான் அமிழ்தெனக் கொள்ளுதல் அதனிலும் சரியே வாழ்க தமிழ்மொழி வாழ்க வாழ்க காம ராசர் வண்புகழே! - பழம் புதுப் பாடல்கள், ப.370-373, 2005 குறிப்பு : நாமக்கல் இளைஞர் காங்கிர கமிட்டி அமைப்பாளர் வி.கே. கருப்பையா வெளியிட்ட திரு. காமராஜ் 57 - ஆவது பிறந்த தின விழா மலர், 25, 26.07.1959. 50. ஆசிரியர் வாழ்த்து துடிப்பகத்தால் தோன்றுமலை யத்தமிழர் தூய படிப்பகம் வாழ்கபல் லாண்டு - பழம் புதுப் பாடல்கள், ப.376, 2005; குயில், 22.09.1959 குறிப்பு : மலேயாத் தமிழர்கள் பாரதிதாசன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். அவர் பெயரில் பல அமைப்புகளைக் கண்டவர்கள் அங்குள்ள தமிழர்கள். பாரதிதாசன் பெயரில் படிப்பகம் திறந்த நிகழ்ச்சிச் செய்தியை அவர்க்கு அறிவித்து வாழ்த்து வேண்டினர். வாழ்த்தாக விடுக்கப்பெற்ற குறள் வெண்பாவே இது. 51. கலை - இதழ் தீபாவளி மலர் கவிஅரங்க வாழ்த்து - வெண்பா கவிஞர் வாணிதாசன்: எல்லாரும் நல்லவஎன் றெண்ணுவார் இன்றமிழ் வல்ல கவிவாணி தாசனார் - அல்லும் பகலும் தமிழர்தம் பண்பாடு பற்றிப் புகலும்பாட் டொவ்வொன்றும் பொன். சார்நிகழ் காலத் தமிழகம் g‰¿1 யாரும் தெளிய இனிதுரைத்தார் - பாரில் கலையின் கவியரங்கின் மேன்மையைக் காத்தார் நிலையுணர்ந்து வாழ்க நிலத்து. கவிஞர் சிவனடியான்: சிவனடியார் செந்தமிழ்ச் சீரடியார் ஆனால் எவன்அடியான் எவனாண்டான் நாட்டில் - எவனும்மொழி காக்க எழுந்த கறுஞ்சிறுத்தை நம்மாசு நீக்க எழுந்த நெருப்பு. கவிஞர் சிவனடியார் கண்ணாம் கலையின் கவியரங்கிற் கற்கண்டு தந்து - கவிஞர் இவர்என்றே எல்லாரும் வாழ்த்துதலை ஏற்றார் அவர்வாழ்க கீர்த்தி அடைந்து. கவிஞர் மருதகாசி கவிஞர் மருதநற் காசி கலையின் கவியரங்கில் நாடகச்சீர் காட்டி - அவியாப் புகழ்விளக்கை ஏற்றுகின்றார் போந்தென் உளத்தில் மகிழ்விளக்கை ஏற்றினார் மற்று. சுமைசுமையாய்த் தங்கம் சுமந்து தரினும் தமிழர்பண் பாடு தவறார் - தமிழ்க்கவிஞர் சீர்மருத காசி திறம்வளர்க மேன்மேலும் பேர்பெறுக வாழ்க பெரிது. கவிஞர் கண்ணதாசன்: தமிழ்பாடும் நம்கண்ண தாசனார் வாழ்ந்தால் தமிழ்வாழும் அந்தத் தமிழாம் - அமிழ்தூறும் ஊற்றை ஒழிக்கஎண்ணுங் கூட்டம் அதுசூறைக் காற்றில் கலந்த துரும்பு. கலையின் கவியரங்கிற் கண்ணதா சர்தாம் தலையாம் தமிழ்வணக்கந் தந்தார் - நிலையுணர்ந்து வாழ்ந்தோர்வாழ் கின்றார் இனியுந்தாம் பல்லாண்டு வாழ்வார் புகழால் மகிழ்ந்து. - பழம் புதுப் பாடல்கள், ப.391-392, 2005; கலை, தீபாவளி மலர், 1961 குறிப்பு : கவியரங்கில் கலந்துகொண்ட கவிஞர்களை வாழ்த்திப் பாரதிதாசன் பாடிய வெண்பாக்களே இவை. கலை இதழ் 1961 தீபாவளி மலரில் இவை இடம்பெற்றுள்ளன. திரு. பி.எல். ராஜேந்திரன் தனது பாரதியாரும் பாவேந்தரும் என்னும் நூலில் இப்பாடல்களைத் தந்திருப்பதோடு இவை கலை பொங்கல் மலர்க் கவியரங்கில் பாடப்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 1. தளை தட்டுமிடும் 52. கலைவிருந்து வாழ்க! இருப்பவர் பொருளை இல்லா தவர்கள் பறிக்கும் முயற்சிகள் பைந்தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் உண்டு! சிவத்தைக் காட்டியும் திருமால் காட்டியும் தவத்தைக் குறிக்கும் யோகம் சாற்றியும் மக்கள் தலையை மழுங்கச் சிரைப்பவர். இந்த நாட்டில் எண்ணற் றவர்கள். சமயத் தலைவர் அவர்கள் பட்டமாம்! அடுத்த பிறப்பில் அரசராய்ப் பிறக்க இந்தப் பிறப்பில் இருப்பதைப் பறிப்பவர் கீழோர் அல்லராம் மேலோர் ஆவராம்! இறந்த முன்னோர் தெரியா இடத்தில் இருப்ப தாகவும், அரிசியும் பருப்பும் கேட்ப தாகவும், தம்மிடம் கொடுத்தால் சேர்ப்ப தாகவும் செப்பி மக்களின் ஈரலைத் தின்றே ஏப்ப மிடுபவர் இருக்கின் றார்கள் ஏராள மாக இவர்கள் மனிதராம் இவருக்குப் பட்டம் குருக்கள் என்பதாம் நல்ல கூத்து! வேறு வேறு பெயர்கள் கூறி- ச் சாறு பிழிந்து சக்கையை உதறுவோர் மிகப்பலர் மிகப்பலர் விரிக்கிற் பெருகும்! சிலஆண்டு களாகச் செந்தமிழ் நாட்டில் இருப்பவர் தம்மையும் இல்லா தவரையும் ஒட்டச் சுரண்டும் வகையில் ஒருபெரும் மாற்றம் ஏற்பட் டுள்ளது. மக்களின் நன்மை நாடி உழைப்பதாய் நவின்று கட்சி கூட்டி- க் காச டிப்பது இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும் கட்சியின் தலைவர் என்று கழறும் ஆட்கள் தாமும் அறங்கொல் பவரே! தமிழ கத்தின் தலைவர் என்பர் தமிழை- ச் சாக டிக்கப் பின்னிடார்! தமிழ்தொலைப் பார்க்கே தாளம் போடுவார்! பொழுது விடிந்து பொழுது போனால் காசு பறிப்பதே கடனாக் கொள்வார். இந்த நிலையில் கலைவிருந்து வந்தது. செந்தமிழ் நாட்டுக்கு நல்லது! இந்தி ஒழிக. செந்தமிழ் வெல்கவே! - பழம் புதுப் பாடல்கள், ப.393-394, 2005; கலைவிருந்து, திங்கள் இருமுறை பொங்கல் சிறப்பிதழ், 14.1.1962 53. பாவேந்தர் பாரதிதாசனார் வாழ்த்து செந்தமிழில் அன்புடைய மன்னர் மன்னன் செல்வர்களின் ஆதரவால், புலமை மிக்க அந்தமிழர் ஆதரவால் பாவேந் தர்கள் ஆதரவால் தமிழகத்து மக்கள் யாரும் நொந்தவுளம் மகிழ்ந்திடவும் வீழ்ந்த தோள்கள் நோயகன் றுயர்ந்திடவும் இறகு தூக்கி வந்துவிட்டார் வந்ததுத மிழ்க்கு வெற்றி! வாழியவே தமிழ்பாடும் வானம் பாடி! விடாமுயற்சிச் சிறகுதனை விரித்துக் கொண்டு விண்ணான தமிழர்களின் உள்ளம் ஏறித் தொடாதபல புதுக்கருத்தைத் தமிழால் ஆக்கிச் சுவையாகப் பாடிவரும் வானம் பாடி! இடார்தமையும் ஆதரவை இடவே செய்யும்! இருப்பவரை நிதிஅள்ளி ஈயச் செய்யும்! மடார்என்று பகைவர்களை வீழச் செய்யும்! வையத்தில் அறிவுமழை பெய்யச் செய்யும்! தமிழ்என்றால் தமிழர்தம் உயிர்என் கின்றார் தமிழ்வாழ்ந்தால் தமிழர்வாழ் வார்என் கின்றார் உமிழ்கின்றார் தமிழ்எதிர்க்கும் மாக்கள் தம்மை! உண்டாகி இருக்கின்ற தமிழு ணர்ச்சி அமியல்ல உரலல்ல குன்றம் ஒக்கும் அவ்வுணர்வை முன்னின்று பயன்ப டுத்தத் தமிழ்மறவர் வேண்டுமெனில் மன்னர் மன்னன் தமிழ்மறவர்! வெல்க அவர் வானம் பாடி! - பழம் புதுப் பாடல்கள், ப.397, 2005; வானம்பாடி, சிறுவர் வார இதழ், 16.3.1962 54. சிறப்புக் கவிகள் 1 குடம்பத்தூர் தேன்கவிகள் கொட்டினோன் வாழ்க கடம்பத்தூர் தேவரா சன் 2 குருடீ எனும்பெயர் கொண்ட கவிஞர் இருள்தீர்ந்த நெஞ்சத் தவர். 3 குவியிதழ்ம லர்ந்தான் குத்தேனே அந்தக் கவியழகன் தந்த கவி. 4 கோவேந்தன் பாடிக் குவிக்கின்றான் நாளடைவில் பாவேந்தன் ஆயவிடுவான் பார். 5 நாகமுத் தையா நவின்றதும் பாட்டுக்கென் பாகமுத் தையா பரிசு 6 தமிழன்பன் நல்ல தமிழ்க்கவிஞர் வாழ்க தமிழன்பு மேலும் தழைத்து. 7 சீபோ என்றேன் கவிஞர் சிலரை வாவா என்று புகழ்ந்தேன் வா - பா - கணேச சுந்தரன் தன்னையே 8 சேலம் கருணா கரன்புகன்ற செந்தமிழை ஞாலம் புகழ்ந்திடும் நன்று. 9 எழில்முதல்வன் நல்லநல்ல செய்யுள் எழுதும் தொழில்முதல்வ னாகின்றான் சூழ்ந்து 10 தெருட்டினன் எண்ணம் செறிந்த நற்பாடல் கிருட்டினன் வாழ்கதமிழ் கேட்டு 11 அமுதத்தை அள்ளியே தந்ததுபோல் தந்தான் தமிழன்பன் பாக்கள் தமை 12 பறம்பைப்பிர காசம் பகர்ந்தநற் பாட்டுத் திறம்பெரிது வாழ்க சிந்து 13 தமிழோ வியப்புலவர் தந்த கவிதை அமிழ்தோதே னோஅறிகி லேன் 14 பாவேந்தர் மெச்சவே பாடிய ghlš1 கோவிந்த ராசன் கொடை 15 நெல்லைத் தமிழ்க்கவிஞன் கந்தசா மிக்குநிகர் இல்லை எவருமென்பேன் யான். 16 தஞ்சைமுத்துத் தாசன் தமிழ்பாட்டுக் கென்பரிசு கொஞ்சமுத்தா கோடிமுத்துக் கள் 17 நாமுகுக்கும் நன்மகிழ்ச்சிக் கண்ணீர் எதுகண்டு? காமுசுவின் தீம்பாடல் கண்டு 18 நான்செய் தமிழ்ப்பாட்டை நல்லதோர் ஆங்கிலத்தில் தான்செய் தளிக்கும் தகுதியிலே - வான்போன்றான் வாழ்கவே நன்முருகு சுந்தரந்தான் வண்மையெல்லாம் சூழ்கவே சீர்த்தி தொடர்ந்து - சென்னையிலிருந்து சிந்து பாடிய குயில் - க, நினைவலைகளில் பாவேந்தர்-நூ ப.207; பழம் புதுப் பாடல்கள், ப.417-418, 2005 குறிப்பு : சென்னையிலிருந்து வெளியான குயில் திங்களிருமுறை 01.08.1962 இதழில் நெஞ்சில் நிறுத்துங்கள் - ப.3 எனக் கட்டம்கட்டி வெளியிடப் பெற்ற செய்தியில் இளம் கவிஞர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டி, பாவேந்தர் அவர்கள் இந்த இதழிலிருந்து ஒவ்வொரு கவிதைக்கும், சிறப்புக்கவி குறள் வெண்பா பரிசிலாக அளிக்கிறார்கள்! இது இளம் கவிஞர்கட்கு நற்பேறு! நலம்தரும் நல் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிப் பெரும்பாலும் குறள்வெண்பாக்களாகவும் ஓர் அகவல், ஓர் நேரிசை வெண்பாவாகவும் சிறப்புக் கவிகள் இவ்விதழில் தரப்பெற்றுள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் பாரதிதாசன் எனும் பெயர்குறித்தே இதழில் வெளி வந்தன. ஆனால் கவிஞர் பொன்னடியான் இவற்றிற் சில பாடல்களே பாரதிதாசனால் எழுதப்பட்டவை என்கிறார். அவரின் கருத்து: குயில் ஏட்டின் செலவைக் குறைக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டசிறப்புக் கவிதைகளுக்குக் கீழ், கவிஞர்களுக்கு நம்பிக்கை யூட்டுவதற்காக பாரதிதாசன் என்று கவிஞரின் பெயரையும் குறிப்பிட்டோம். கவிஞர்கள் நாக. முத்தையா, முருகுசுந்தரம், எழில்முதல்வன், தமிழன்பன் - இருவேறு கவிஞர்கள் போன்றார்க்குப் புரட்சிக் கவிஞரே சிறப்புக்கவிதைகள் எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது. 55. வணக்கமும் வாழ்த்தும் பல்லவி அம்மா அப்பா தமிழையா வணக்கம் - உங்கள் அன்பை வாழ்த்தும் வாய்மணக்கும் உள்ளம் மணக்கும் அனுபல்லவி அம்மா அப்பா நீங்கள் என்னைப் படைத்தீர்! - தமி ழையா நீங்கள் எனக்கு அறிவைக் கொடுத்தீர் இம்மா நிலத்தினில் நான்பதினா றாண்டும் எய்தினேன் செய்நன்றி மறவாமை வேண்டும் சரணம் தேனே தித்திக்கும் - அள்ளி உண்ணும் பொழுதே - நல்ல செந்தமிழ் இனிக்கும் அதை எண்ணும் பொழுதே மானத் தமிழர்களே - சொந்தக் காரரே வாழியவே வாழியவே மாவீரரே தமிழ் வாழ்க தமிழர் வாழ்க - பழம் புதுப் பாடல்கள், ப.426, 2005 குறிப்பு : பாடலின் முன்குறிப்பாகக் கையெழுத்தில் பாகேடீ திரம் என்னும் இசைக் குறிப்பும் பாவேந்தரின் பாடல்கள் - திரைப்படம் எடுக்கப்போவதாயிருந்ததற்கு எழுதப்பட்டது நேரில் தந்தது என்பன இடம்பெற்றுள்ளன. இப்பாடலைக் கவிஞர் பொன்னடியான் பதிப்பாசிரியரிடம் வழங்கினார். 56. நிலவுப்பூ - அணிந்துரை எண்சீர் விருத்தம் அண்ணா மலைப்பல் கலைக்கழகப் பேராசான் அண்ணா மலையென் அரியதமிழ் மாணவனின் கண்ணான மாணவன்நான் என்று கழறித்தம் கையெழுத் துப்படியைக் கண்ணுக் கெதிர்வைத்தே அண்டியசீர்ப் பொள்ளாச்சிக் கல்லூரி ஆசான்நான் அரிய நிலவுப்பூக் கவிதைநூல் நான்செய்தேன் கண்செலுத்த வேண்டுமென்றார்; மாட்டெனென்றா சொல்வேன் கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான்கண்டேன் பாட்டுத் திறம்கண்டேன் பாலசுப் பிரமணியப் பாவாணர் செய்தஅப் பச்சைத் தமிழ்நூலில் நாட்டுத் திறம்என்னே நாற்கவியும் முத்தமிழும் நல்கும் பயன்என்னே நாவூறிப் போனேன்நான் வீட்டிற் குறட்டைவிட்ட செந்தமிழர் கண்விழிக்க வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல் பாட்டை திறக்கவந்த பாலசுப் பிரமணியப் பைந்தமிழ்ப் பாவாணர் புகழ்பெற்று வாழியவே! - பாவேந்தர் ஒரு நினைவுச்சரம் - க, புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்-நூ, ப.85-86; பழம் புதுப் பாடல்கள், ப.433, 2005 குறிப்பு : கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதிதாசனிடம் தனது நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுதிக்குக் கேட்டுப்பெற்ற அணிந்துரைப் பாடல் இது. நம்ம சாயல் ... ... கவியிலே இருக்கு இன்னும் நீட்டா - நீளமாக எழுதணும் என்றார் பாவேந்தர். பிறகு ஒரு தாளை எடுத்து, என் கையெழுத்து சரியா இருக்காது... இதை நீயே பிரதி செய்... என்று அணிந்துரைக் கவிதையைக் கொடுத்தார். கவிதையை நான் பிரதி யெடுத்தேன். கவிதை இது என்னும் முன்குறிப்புடன் இப்பாடலைப் பதிவு செய்துள்ளார் சிற்பி. 57. குபேர்க்கு வாழ்த்து நிலைமண்டிலம் பல்கலைப் பயிற்சியும் நல்லுடற் பயிற்சியும் பெரியோர் கண்ட அரசியற் பயிற்சியும் ஆகிய மூன்றும் சமஎடை யாக இளமை தொடங்கிநம் குபேரிடம் வளர்ந்தன! குபேருக்கு அவைகளும் மூன்று கொடுத்தன: அறநெறி என்ப தொன்று; கீழோர்க்கு அஞ்சா நெஞ்சம் ஒன்று; தீயரால் அசைக்க ஒண்ணாத ஆட்சித் திறம்ஒன்று! தமிழர்கள் நன்மை தழுவ வேண்டித் தமிழ்நெறி தாங்கிச் சென்ற குபேரை வாய்மை காணாதவர் வழி மறித்தனர்; குண்டெ றிந்து கொல்ல நினைத்தவர், கண்டனர் கண்க லக்கமும் பழியும்! நல்ல குபேரைக் கொல்ல நீட்டிய தீய துப்பாக்கிகள், நடுங்கிச் சிதைந்தன! இந்நாள் வரைக்கும் எந்தச் சூழ்ச்சியும் அசைக்க வில்லை குபேர் அறவழியை! நண்பர் தந்தது நஞ்சே ஆயினும் உண்பர் பண்புள்ளோர் என்பதற்கு ஒப்பத் தம்பேர் சாற்றிப் பொதுநலம் கெடும்படி நண்பர் செய்தது நான்செய்த தென்று சாற்றி, வரும்பழிக்குத் தம்தலை நீட்டினார்! சழக்கர் கூட்டம் குபேரைத் தழுவிக் கொழுக்க நினைக்கும்; குபேர்அதற்கு ஒப்பார்! குபேர் பேசிய ஒருகூட்ட நடுவில் வெடிகுண் டொன்று வீசப் பட்டது சிரித்தார் குபேர்; அவர் சிரிப்பின் அதிர்ச்சி, குண்டெறிந் தவரையும், அவர் கொள்கைக்கே அண்டையில் நின்ற அதிகாரி களையும் நடுங்க வைத்ததை நானிலம் அறியும்! புதுவை வரலாறு குபேரைப் போன்றஓர் கைகாரத் தலைவரைக் கண்டதே இல்லை. இப்படி ஒருவரே எமக்குத் தேவைஎன்று குபேரைத் தமிழர் கூறுநாள் இந்நாள் இந்நாள் புதுவை எய்திடுதம் நலங்கள் எல்லாம் குபேரால் எய்திய நலங்கள்! புதுவை காரை மாகி ஏனம் ஆகிய நாலூர் மக்களின் அன்பை ஒருங்கே பெற்ற ஒருவர்; மக்கள்பால் அன்பு கொண்ட குபேரே ஆவார். அறுபத் தொன்ப தாண்டு பெற்றார் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நன்னர் வாழ்க! வாழ்க குபேரே! - எங்கள் தலைவர் திரு. குபேர் 70வது பிறந்தநாள் விழாமலர், 1963; பழம் புதுப் பாடல்கள், ப.435-436, 2005 58. தெவ்வரை வீழ்த்தித் தெசிணி வாழ்க! குவிதைப்பொங் கல்வி ழாவில் கவிதைக்கு வாழ்த்துச் சொன்னேன்! எவிடத்தும் எவரில் லத்தும் எவர்மாட்டும் கவிதை ஏடு தவழுக! தமிழர்க் கெல்லாம் தமிழன்பு பெருகச் செய்க! அவரவர் மொழியே நாட்டின் ஆட்சியை அடையச் செய்க! 1 இந்தியே பேசும் நாட்டை இந்தியே ஆள வேண்டும்! செந்தமிழ் பேசும் நாட்டைச் செந்தமிழ் ஆள வேண்டும்! இந்தியே பேசும் நாட்டில் தமிழ்வேண்டாம்; அதுபோல் இந்தச் செந்தமிழ் பேசு நாட்டில் இந்தியும் நுழைதல் வேண்டாம்! 2 தாய்மொழி வாயி லாகத் தாயகம் அறிவைக் கொள்ளும் பாய்பிற மொழியால் நாடு பயன்பெறல் முயற்கொம் பாகும்; நோய்வேண்டும் மக்கள் இல்லை; நுணற்பறை கேட்பா ரில்லை; தூய்திலா இந்தி நம்மைத் தொடுவதை நாம்வி ரும்போம்! 3 இவ்வகை உணர்வு தந்தே இழிவினை நீக்கி நாளும் செவ்விய கவிதை ஏடு சிறந்தினி தாக- ச் சீர்த்தி எவ்வள வடைதல் வேண்டும் அவ்வள வடைந்து வாழ்க! தெவ்வரை வீழ்த்தி ஆசான் தெசிணியும் வாழ்க நன்றே! 4 - கவிதை இதழ், 15.1.64, ப.1; பழம் புதுப் பாடல்கள், ப.442, 2005 59. மாணவர் பாட்டு - நூற்சிறப்புரை அகவல் எளிய நடையில், இளைஞர் உளத்தைத் தெளிய வைக்கும் தேர்ந்த கருத்தொடு மாணவர் பாட்டு வழங்கினார் நற்கலை வாணர் நன்கு மகிழும் வகையில். பொன்னம் பலனார் என்னருந் தோழர்! இன்னம் பலநூல் இயற்றி மக்களின் தேவையை நிறைவு செய்து தாவுக தனிப்புகழ்! நன்று வாழியவே! - பழம் புதுப் பாடல்கள், ப.444, 2005; புதுவைப் பொழில், ப.32 குறிப்பு : கவிஞர் வ. பொன்னம்பலம் எழுதிய மாணவர் பாட்டு நூலுக்குக் கவிஞர் அளித்த சிறப்புரைப் பா. இப்பாடல் கவிஞர் கையெழுத்துப் படப்படி வடிவில் வழங்கப் பட்டுள்ளது. 60. சூழ்நிலை நாடக மன்றத்திற்கு வாழ்த்து அகவல் சூழ்நிலை நாடக மன்றம் துலங்குக! வாழ்க நாளும் மக்கள்ஆ தரவால்! நாடகம் இந்நாள் நன்னிலை அடைந்ததாய் எண்ணு கின்றனர். அவ்வா றில்லை; நாடகம் நன்னிலை அடைதல் வேண்டும். சூழ்நிலை மன்றம் தொடர்ந்தாற்றும் தொண்டால் நாடகம் நன்னிலை அடையும் என்று நம்பு கின்றேன். நம்புவ தேன்எனில், இந்நிறு வனத்தில் இருப்பார் அனைவரும் நாடக ஆர்வமும், நாட்டில் அன்பும் உடையவர் ஆவார். உவகை தரும்இது! படித்தவர், இசையறிவு வாய்ந்திடப் பட்டவர் எழுத்தா ளர்கள், எடுத்ததை முடிக்கும் ஆற்ற லுடையவர்! அகலா ஒற்றுமைப் பண்பு மிக்கவர். ஆதலின் நண்பர் நிறுவனம் நனிஓங் கிடுமே! - பாரதிதாசன் இதழ்ப்பணிகள், ப.414; பழம் புதுப் பாடல்கள், ப.448, 2005 61. மங்கையர்க்கரசி - சாம்பசிவன் மணவாழ்த்து எண்சீர் விருத்தம் பொன்னொளிசேர் மகரந்தப் பொடிபோய் மற்றோர் பொழில்மலரைத் தழுவும்கீழ்க் கடலில் தோன்றி மின்னிடுசெங் கதிர்ஓடி மேற்குக் கோடி விண்ணுயர்ந்த மலைதழுவி மகிழ்ச்சி செய்யும் தன்னைநிகர் காவிரிதன் தோளை நீட்டித் தடவயலின் இடையினிலே படியும் நல்ல கன்னிநறுந் தமிழ்சிரிக்கும் உயிர்ச்சி லிர்க்கும் கவின்உயிரும் செந்தமிழும் வாழ்வைச் செய்யும். 1 செல்வன்உயர் சாம்பசிவம் உள்ளம் சென்று செல்விமங்கை யர்க்கரசி உள்ளம் சேர வல்லியுளம் அவ்வுணர்வால் மலரப் பின்னர் மலர்மணம்போல் யாழ்இசைபோல் வான்க திர்போல் முல்லைமலர் நறுந்தேனும் இனிமை யும்போல் முழுத்திங்க ளும்கசியும் நிலவும் போலே நல்லஇரண் டுள்ளமும்ஒன் றாய்ம லர்ந்த நறுமணமே திருமணமாம், இன்னும் கேளீர்! 2 இரண்டுளத்தின் கட்டினிலே தட்டுப் பட்ட இன்பத்தேன் கடலினது கரையோ ரத்தில் புரண்டுவரும் அலையின்முதற் றுளியின் பேர்தான் புதியமணம் கேளுங்கள், இன்னும் சொல்வேன் ஒருவன்வழி தன்காதல் உரைக்கும். கண்ட ஒருத்திவிழி ஆம்ஆம்என் றுரைக்கும் ஆங்கே இரண்டுளத்தில் எழும்இன்பக் கவிதை தன்னில் இருக்கும் முதலெழுத்து மணம்! பிறிதோ வாழ்வு! 3 - பாவேந்தரில் அகமும் புறமும், ப.106; பழம் புதுப் பாடல்கள், ப.450, 2005 62. மூத்தவரின் வாழ்த்து அறுசீர் விருத்தம் முன்னணி வாழ வேண்டும் முழுவெற்றி எய்த வேண்டும் என்அணி வலிய தென்றே இந்தியைப் புகுத்து வோனைத் தன்னணி ஆன இன்பத் தமிழணி யால்அ டக்கித் தென்னணி உயர்வை வையம் தெரிந்திடச் செய்தல் வேண்டும். 1 இன்புறு தமிழார் வத்தார் முன்னணி எழுத்தா ளர்கள்! துன்புறு தமிழர்க் கெல்லாம் துணைசெய்யும் வன்மை மிக்கார் அன்புறு நாட்டு மக்கள் அனைவரும் முன்ன ணிக்கே பொன்தந்து புகழைச் செய்து தம்கடன் புரிதல் வேண்டும்! 2 - பாரதிதாசன் இதழ்ப்பணிகள், ப.407; பழம் புதுப் பாடல்கள், ப.453, 2005 குறிப்பு : பாரதிதாசன் அளித்துள்ள இதழ் மதிப்புரைகளில் பொத்தாம் பொதுவாக இது அமைந்துள்ளது. இதழை நடத்துவோர், இதழ் வெளிவருங்காலம், இதழின் தன்மை பற்றிய எக்குறிப்புமின்றி அமைந்துள்ளது. பாரதிதாசனோடு தொடர்புடையவரான ம.ரா. தேவராசன் அறுபதுகளின் தொடக்கத்தில் ஆசிரியராக இருந்து நடத்திய முன்னணி இதழுக்கு அனுப்பியதாகக் கருதலாம். 63. இராவண காவியச் சிறப்புப் பாயிரம் பாவண மல்குமி ராவண காவியம் நாவண மல்கிய நல்லா சிரியனும் நலமலி ஓல வலசுவாழ் முத்துச் சாமிசின் னம்மை காமுறு செல்வ மைந்தனும் ஆய செந்தமிழ்க் குழந்தை செப்பினான் அறிவுலக கொப்பு மாறே. 1இப்பெரு நூற்பயன் எவரும் எய்தும் விருப்பூர்த் தானாய்த் திருப்பூர் வள்ளல் நப்புகழ் எ.ஆர். சுப்பிர மணியம் களித்துமே பதிக்கக் காண்பொருள் முழுதும் அளித்துபே ருதவி யதுமறப் பரிதே. இராவண காவியம் எனுமிது தமிழகத் திராவிடம் இவையெனத் திராவிடர் புரிக. ஆக்கியோன் குழந்தையும்2 அச்சிடப் பொருளைத் தூக்கியே தந்த சுப்பிர மணியமும் ஆழிசூ ழுலகில் என்றும் வாழிய நன்றே வாழிய நன்றே. - இராவண காவியம், முதற்பதிப்பு 1946; பழம் புதுப் பாடல்கள், 2005 1. இப் பத்திகள் இரண்டாம் பதிப்பில் நீக்கப்பட்டுள்ளன. 2. அச்சிடப் பொருளை - என்னும் சீர்களுக்குப் போக்கறு பனுவலும் என்னும் சீர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 64. ‘தமிழ்மகள் தந்த செய்தி! நூல் சிறப்புரைப் பா விருத்தம் நந்தமிழ் நாட்டு மக்கள் நலமெய்தி வாழ்வ தற்குச் செந்தமிழ் ஓங்க வேண்டும்; செறுபகை வீழ வேண்டும், இந்தியைக் கட்டா யத்தால் ஏற்படுத் திடநி னைந்தோர் மந்திபோல் விழிகள் வைக்க, மறுத்ததை ஒழிக்க வேண்டும். தமிழர்கள் நாட்டில் வேற்றோர் தலைமைகொள் ளுவது தீமை, தமிழரைத் தமிழர் ஆள்க என்பன தமிழ வீரன், அமுதுநேர் மொழியான் அண்ணல் தங்கோவின் எண்ண மாகும், அமைதிசேர் நல்லோன் கொண்ட அன்புசேர் கொள்கை கண்டீர்! கருத்தறிந் திட்டநாளாய்க் கணந்தொறும் தமிழர் தம்மைத் திருத்தவும் அன்னோர் வாழ்விற் செம்மைசேர்த் திடவும் எண்ணிப் பெருத்ததொண் டிழைப்போன் நல்ல பெரும்பெரும் செயல்கள் செய்வோன் பொருத்தமாம் குணங்கள், கல்வி, பொறையெலாம் அமைந்தோன் கண்டீர்! அரசினர் சிறைப்ப டுத்த அதனையும் தமிழர்க் காகப் பரிசெனக் கொண்ட மேலோன் பன்னாட்பின் வெளியில் வந்தும் முரசினை முழக்கி வெற்றி மேவுக தமிழர் என்னும் பெரியதோர் மனத்தாள்! அன்னோன் நூலொன்று பேச லுற்றான் தமிழ்மகள் தந்த செய்தி தன்னைநந் தமிழரெல்லாம் தமதென அமுத மென்னத் தாங்கிவா சித்தல் வேண்டும் அமைவுற வாசித் துப்பின் அதுசொலும் வண்ண மாக இமையள வும்வ ழாமே இயற்றவும் வேண்டும் நன்றே. - பழம் புதுப் பாடல்கள், ப. 177-178, 2005 குறிப்பு : கு.மு. அண்ணல்தங்கோ அக்கால மரபைத் தழுவி, தமிழ் மகன் தந்த செய்தி அல்லது சிறையில் யான் கண்ட கனவு என இரண்டு பெயர்களைச் சூட்டியுள்ள ஒரு இனிய கவி நூலுக்குப் பாரதிதாசன் சென்னையிலிருந்து 9.1.1939 அன்று எழுதி விடுத்த பாடல் இது. நூலாசிரியர் பாரதிதாசனை இயற்கைக் கவிஞாயிறு புதுவை புதுமைக்கவி தோழர் பாரதிதாசன் அவர்கள் அன்பு கூர்ந்தளித்த சிறப்புரைப்பா என இப்பாடலுக்கு முன் போற்றியுரைத்துள்ளார். இருவரும் நெருங்கிய தொடர்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 65. ராஜா சர் அண்ணாமலை வள்ளலார் வாழ்த்து அகவல் மலர்தலை யுலகிற்கு வான்பெரு நாடு பலர்புகழ் ஞாயிறு படைத்தது போன்று பண்ஆர் தமிழ்நாடு பகர்ரா ஜாசர் அண்ணா மலைச்செட் டியாரை இந்தத் தமிழர் இழைத்த தவத்தின் பயனாய் அமிழ்தம் போல அளித்த தன்றோ! *** அருளினால் அக்கதிர் அம்புலி தன்னை இருளினால் படாமை இழைத்தது போல நல்கலை நயந்த அண்ணா மலையார் பல்கலை மதிக்கு - ஒளி பாய்ச்சி அருளினார் விண்ணுக்கு அத்திங்கள் விளக்கா வதுபோல் மண்ணுக்கு அக்கழகம் மணிவிளக் கன்றோ! *** நிலவு பொழிந்து நிலவு பொழிந்து குலவும் அத்திங்கள் குளிர்செய் வதுபோல் நண்ணாப் பெரும்பேறு நண்ணு ராஜாசர் அண்ணா மலைக்கலைக் கழக மோவெனில் அறம்பொருள் இன்பம் ஆம்வீட் டறிவின் திறம்பொழிந்து திறம்பொ ழிந்து மடமையாம் வெப்பினை வறுமையாம் பிணியினை நடமின் என்று நடத்தித் தீர்த்துக் குளிரினைப் பெரிதும் கொழிக்கின் றதுவே! பன்னரும் புகழினைப் பாரெலாம் செலுத்திய மன்னரும் அறிஞரும் வாழ்ந்தஇத் தமிழ்நாடு இனிப்புறுங் கரும்பின் நுனிப்புறம் சுவைதேய்ந்து போதல் போலப் புனிதம் தேய்ந்தும் சாதல் போலத் jË®¢á1 எய்தியும் குழிவுறும் கண்ணும் குனிவுறும் njhYkhŒ2 அழிவுறக் கண்ட அண்ணா மலையார் அருளும் அம்பலத் தருகில் மக்கட்குத் தெருளும் அம்பலம் தேடி அண்ணாமலை நகர் எனப் பேரிட்டு நாவலர் உள்ளமே நிகர்எனப் பெரிதாய், நேயர்போல் நல்லதாய்(ப்) பெருந்தமிழ் வேந்தர் பேழைபோல் கண்ணால் அருந்தமிழ் தாக அமைத்த நிலையத்துப் பாவிரி புலவர் பலரையும் கூட்டிக் காவிரிப் பெருக்கெனக் கல்விப் பெருக்கைத் தென்னாட் டுளந்தொறும் சேர்த்துத் தென்னாடு பொன்னா டாகப் புரிந்த நன்றியால் அண்ணா மலைப்பேர் அதனை நாடொறும் எண்ணாத் தமிழர் எங்கணு மில்லை! தெங்கிளங் காய்தொறும் தித்திக்கும் நீர்போல் இங்குளார் உளந்தொறும் இனிக்கின்ற தப்பெயர்! *** அனைவரும் அவ்வாறு - அப்பெரு வள்ளலை நினைவ தோடு நிற்ற லின்றி உண்ணிலவும் அந்நினைப்பு - உவகையொடு புணர்ந்து தண்ணிலவு புணர்ந்த வண்கடல் போலப் பொங்கிட இங்கொரு புதுநாள் வந்தது புதுநாள் என்எனில் புகல்வேன் nfË®:3 நாள்ஒவ் வொன்றும் நன்மதி எதுவும் வேள்இந்த நாட்டுக்கு விளைத்த அறங்கண்டு வாழ்த்திச் சென்றன; வாளா கழிந்தில ஆண்டு - ஒவ்வொன்றும் அண்ணா மலையார் ஈண்டு மக்கட்கு - இழைத்த நன்மைக்கு நன்றி கூறாது நடந்த தில்லை! அண்ணா மலையார் அருங்கொடை வாழ்வில் எண்ணா வெறுநாள் எதுவும் இல்லை அன்னார் கண்டஅவ் - அறநாட்கள் எனும் மின்னார் பவள மெல்லிதழ்ப் பெண்கள் பற்பலர் அரசரைப் பரவிப் போனபின் அற்புதப் பெண்ணாம் அறுபதாம் ஆண்டு மான்போல் வந்து மலர்போற் சிரித்துத், தேன்போல் பேசிச் சேல்போல் விழியால், மங்குல் போலும் வள்ள லாரின் தொங்கல் மார்பைச் சுவைத்து நிற்க. அவர்அவ் வறுபதாம் ஆண்டை அணைந்தனர். *** இருமுப்பான் - ஆண்டு எய்திய அண்ணலார் வருநூற் றாண்டையும் மணக்கத் தக்க குன்றத் தோளையும் குளிர்மலர் விழியையும் அன்றலர் மலர்முகத் தழகையும் கண்ட அவர்மனை - என்னரும் அன்னையா ரோவெனில் புதுமணம் கண்ட போதுதம் காதலர் மதுமணம் கண்ட மலர்க்கை நீட்டி அங்கம் சிலிர்க்க அணிசெய் திட்ட மங்கல நாணையும், மணாளர் தம்மையும் கிள்ளை முதிரை கொள்ளு வதுபோல் அள்ளி முத்தம் அளித்து மகிழ்ந்தார் *** அன்பொடு செட்டிநாட் டரசர் அரசியார் மன்றினில் திருமுக மலர்ந்துவீற் றிருக்கப், பொதிகைத் தென்றல் புதுமணம் புரிந்தது! வதிகைப் பரிதி மணிவிளக் கெடுத்தது! முழங்கு தென்கடல் முரசம் ஆர்த்தது! *** பழங்குடி மக்கள் இழந்தவை அனைத்தும் இவைஎன்று கொணர ஈன்றதம் மக்கள் அவையினில் இளவர சழகு செய்தனர். பாருக்குள் பற்பல கோடி மாந்தரின் வேருக்கு வித்தாய் விளைத்த தொன்மைச் செந்தமிழ் மக்கள் திசைய டங்கலும் தந்தமிழ் மொழியால் தாம்தாம் வாழ்த்திய வாழ்த்தொலி அனைத்தும் மகர வீணைதான் வீழ்த்திய அமுத வெள்ளமோ! தாமரை விரிந்த வாய்தொறும் விண்ணை நனைக்கச் சொரிந்த தேனூற்றுத் தொடர்போ! வேய்ங்குழல் இசையின் பிழம்போ! இன்தமிழ்ப் பாட்டொடு பிசைந்து கிடக்கும் பெரும்பயன் தானோ! அதிர்த்த தென்கடல் அகடு பூரித்து உதிர்த்த முத்தமோ! உலக மெல்லாம் அகில்கமழ் குன்றின் அணித்து - உளார் கேட்கும் முகில்கமழ் ஓசையோ! மொய்த்த தமிழர்க்கு நண்ணாப் பேறு - என நண்ணு ராஜாசர் அண்ணா மலையார், அரசியார், மக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க சுற்றம் வாழ்க, என்று வாழ்த்திய வாழ்த்தும், வெல்க அன்னார் விரிந்த கொள்கை வெல்கஎன் றுரைத்த வெற்றி மொழியும், பல்குக செல்வம் பல்குக இன்பம் பல்குக என்று பகர்ந்த மொழியும் உண்மை ஞாயிற்று நிலைபோல் திண்மை உடையன ஆகுக சிறந்தே! - அண்ணாமலை அரசரின் 61ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழா மலர், செப்டம்பர், 1941; பழம் புதுப் பாடல்கள், ப. 184-187, 2005 குறிப்பு : அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனரும் இணைவேந்தருமாகிய இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் உயர் கல்விக்கு ஆற்றிய தொண்டை நன்றியுடன் நினைவுகூர்ந்து பாராட்டும் வகையில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு அவரின் 61ஆம் பிறந்த நாளின் போது வெளிக்கொணர்ந்த விழாமலரில் இடம்பெற்ற பாடல் இது. 1. தளர்ச்சி என இருத்தல் வேண்டும் 2. தோளுமாய் என இருத்தல் வேண்டும் 3. கேளீர் என இருத்தல் வேண்டும் 66. திரு அரங்கம் திராவிட வாலிபர் கழகம் அறிவுலகம் - வாழ்த்து அறுசீர் விருத்தம் அனைவரும் தமிழைக் கற்க அனைவரும் தமிழ்ஆ ராய்க! அனைவரும் தமிழைப் பெய்க அனைவரும் கவிதை செய்க! அனைவரும் தமிழர் நாட்டுக் காவன அறங்கள் செய்க! தினைப்பொழு தேனும் வீணில் திரிபவன் தமிழன் அல்லன்! தன்னலம் மறுக்க நாளும் பிறர்நலந் தனக்கு ழைக்க! பொன்நலம் பெரிதே இல்லை; புதுநாளைக் காண வேண்டும் இன்னன வெல்லம் என்க! இரவினில் தூங்கு முன்னே என்நலம் தமிழர்க் கிந்நாள் இழைத்தோம் என் றெண்ணிப் பார்க்க. ஆயினும் தீமை செய்யும் தமிழனைப் பொறுக்க; ஆனால் சீஎன்று பகைவன் சொன்னால் வேரினில் தீயைப் பெய்க தூயராய்த் தமிழ ரெல்லாம் ஒற்றுமை சூழ்க! சிங்கச் சேயராய்ப் பொதுமைத் தொண்டு கற்கண்டாய்ச் செய்து வாழ்க! திராவிடர் கழகம் நல்ல திருவரங் கத்தில் வெல்க! இராவிடம் இல்லை என்ன எங்கணும் தமிழ்மு ழங்க! அராவுக மடமை தன்னை அறிவுல கம் சிறந்த திராவிடர், தமிழர் யாண்டும் பல்லாண்டு சிறந்து வாழ்க! - கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் 285-286; பாட்டுப்பறவைகள், 1942; பழம் புதுப் பாடல்கள், ப. 195-186. அன்புள்ள தோழர் சுப்பையா அவர்கட்கு, நலம் உண்டாக, இதுபோலப் பல கழகங்கள் - கையெழுத்துச் செய்தித் தாள் நடத்துவதாக எழுதுவதுண்டு. நானும் கேட்டபடி அனுப்பியதுண்டு ஒன்றை யேனும் நான் கண்டதில்லை. அனுப்புவதில்லை போலிருக்கிறது. குருபிச்சர் லிமிடெட் பிரஞ்சிந்தியா என இங்கு நிறுவப் பெற்றிருக்கும் சினிமா கம்பெனி பாரதி வாழ்க்கையைப் படம் எடுக்க முயற்சி நடக்கிறது. ஷேர் கம்பெனி ஷேர் ஒன்று 100 ரூபாய். நடிப்புத் தெரிந்த - நாட்டியம் தெரிந்த (இதுவரை நடித்திராத) ஆடவர் பெண்டிர் தேவை. எவ்வகையிலாவது சேர்ந்து ஆதரவு தர உங்கள் கழகத்தின் வாலிபர் இருந்தால் எழுதுங்கள். கம்பெனி, சட்ட திட்டங்கள் தேவை யிருந்தால் கேளுங்கள். திராவிட வாலிபர் தோழர்கள் அனைவரும் வாழ்க. அனைவர்க்கும் இதைக் கூறுக. பாரதிதாசன் குறிப்பு : புதுவை பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் ஆய்வு மையத்தில் கவிஞரின் கையெழுத்து வடிவில் இப் பாடலும், இதனை அடுத்து வரும் மடலும் இடம் பெற்றுள்ளன. வாலிபர் கழகத்தாரின் அறிவுலகம் என்னும் கையெழுத்து இதழுக்குப் பாரதிதாசன் விடுத்த வாழ்த்துப்பா இது என அறிய முடிகிறது. மடல் எழுதிய நாள் குறிப்பிடப்படாத மடலில் 1942இல் பாரதியின் வாழ்க்கையைப் படமாக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியச் செய்திகள், குறிப்பாகக் குரு பிக்சர் பற்றிய குறிப்புகள் காணப்படுவதால் இவை எழுதப்பட்ட காலம் 1942 எனத் துணியலாம். 67. மாட்சிமிக்க ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் சொற்பொழிவாளர் திருவாளர் N. தண்டபாணி அவர்கட்கும் வாழ்த்து எண்சீர் விருத்தம் அமுதச்சொற் பெருக்காற்றும் தண்ட பாணி! அறிவுப்பைங் கூழ்வளர்க்கும் பெரியோய்! இந்தத் தமிழ் நாட்டில் நினது புகழ் விண்ணின் மிக்க சாலவுமே பெரிதாகும். இந்நாள் மட்டும் இமைப்போதும் நீங்காது பிறர் நலத்தை எண்ணிநீ ஆற்றிவந்த பொதுமைத் தொண்டு தமிழ்நாடு மறந்துவிடத் தக்க தன்று தமிழ் நாட்டில் உனையறிவார் பிறந்தா ரெல்லாம் எதற் கிவற்றைச் சொல்ல வந்தேன் என்று கேட்பாய் இரிசுநாட் டினரைநாம் எல்லாம் கூடி உதைகொடுக்க வேண்டியதன் அவசி யத்தை ஊரார்க்கு விளக்கிவைக்க அரசாங் கத்தார் மதித்துன்னை நியமித்தார் வாழ்த்து கின்றேன் மதிபெற்ற அரசினரை வாழ்த்து கின்றேன் சதிருடைய நல்தண்ட பாணி செம்மால் தயையுடையாய் வாழி நீ வாழி வாழி - பாரதிதாசன் இதழ்ப்பணிகள், 1942 குறிப்பு : பாரதிதாசன் பெயர் அச்சிடப்பட்ட மடல்தாளில் 25.6.1942 அன்று எழுதி விடுத்த வாழ்த்து இது. 68. திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்திற்கு வாழ்த்து தண்பொழிலில் குயில்பாடும் திருவா ரூரில் தமிழ்நாடு, தமிழ்மாண வர்மன் றங்கான்! வண்மையொடும் உண்மையொடும் வாழ்ந்தி டுங்காண்! மக்களிடை எழுச்சிக்கு மருந்தா குங்காண்! கண்மூடிக் குறிமறந்து தமிழர் தங்கள் கலைமறந்த நெஞ்சத்தில் ஒளியெய் துங்காண்! புண்வாய்ந்தோர் அல்லர்காண்! திருவா ரூரின் புலிஇளைஞர் காண்! தோள்கள் பூரித் தார்காண்! எழில்மன்றச் சட்டத்தை உயிரைப் போலே எண்ணிஅந்த வண்ணமே நடப்பார் கள்காண்! ஒழித்தார்காண் அயர்வுதனை! அவர்கள் நாளும் உயர்கவிதைச் சுவைதன்னில் தோய்ந்திட் டார்காண்! மொழியினிலே தமிழ்மொழியே உயர்ந்த தென்றும் மூச்செல்லாம் தமிழுக்கே என்றும், நல்ல வழியறிந்து விட்டார்காண்! முத்தமிழ்க்கு மடைகோலி விட்டார்காண் உலகில் பாய்ச்ச! கிளம்பிற்று காண்தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட் டத்தை! வளம்பெரிய தமிழ்நாட்டில் தமிழ ரல்லார் வால்நீட்டி னால்உதைதான் கிடைத்தி டுங்காண்! தளும்புதுபார் பத்தியென்றும் யோக மென்றும் சாமிஎன்றும், முழமிஎன்றும், எழுதிப் பேசிப் புளுகிடுதல் இனிப்பலிக்க வழியில் லைகாண்! புதுவாழ்வு மலர்ந்ததுகாண் தமிழ்நாட் டில்காண்! - கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல், 20.11.1942; பழம் புதுப் பாடல்கள், ப.192, 2005 குறிப்பு : 16.11.1942இல் பள்ளி மாணவராக இருந்த மு. கருணாநிதி பிற மாணவர் களையும் சேர்த்துத் திருவாரூரில் நிறுவிய தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் அதன் திறப்பு விழாவையொட்டித் தங்களது கவி ஒன்று வெளியிடத் தீர்மானித்துள்ளோம். தயவுசெய்து எங்களை அலட்சியம் செய்யாமல் ஒன்று அனுப்பவும் என்று பாரதிதாசனுக்கு எழுதிய மடலுக்கிணங்கி 20.11.1942இல் பாரதிதாசன் அனுப்பிய பாடல். இது பல இடங்களில் பலரால் பன்முறை எடுத்துக்காட்டப்பட்டாலும் இதுவரை கவிதைத் தொகுப்பு எதிலும், இடம்பெறவில்லை. 69. திரு. வி. க மணிவிழா வாழ்த்து பழகுதென் புதுவைப் பாலைய சாமி அழகு மடத்தில் அறிஞர் திரு.வி.க சொற்பெருக் கிடையில் சொன்ன தாவது. நான்ஓர் முசிலிம் நண்பர் வீட்டில் ஆன்நெய் மணக்க அறுசுவை யுணவை உண்டேன். மக்களில் உயர்வு தாழ்வுகள் எண்டிசை யுலகில் எங்கும் இல்லை *** மற்றும், அறிஞர் வண்டமிழ்ச் சிலம்பின் சொற்சுவை தன்னைச் சுளைசுளை யாகச் செவியினில் ஊட்டினர் கவிதை உரித்தே. *** இச்சொற் பெருக்கை இனிதுகேட் டிருந்த வா.வே.சு. சீனி வாசாச் சாரியார் பக்கத் திருந்த பாரதி யார்உளம் கண்ட மகிழ்ச்சிக்குக் கரையே இல்லை. எழுந்தெழுந்து விழுந்துகை தட்டினார் செந்தமிழ் உணர்வும் சீர்தி ருத்தமும் இந்த நாட்டுமுன் னேற்றத் திற்குஉயிர் இது பாரதியார் என்ன மன்றோ? *** மணவழக னார்க்கு வண்டமிழ் நாட்டில் இணையென எவரும் இல்லை என்று பாரதியார் இருபத்தைந் தாண்டுமுன் ஊர திர்ந்திட உரைத்தார் புதுவையில் *** ஏழெட் டாண்டுமுன் என்தலைவராம் ஈ.வே.ரா. அமர்ந்திருந்த வீட்டில் கலியாண சுந்தரக் கவிஞர் வந்தார் காதற் புறாக்கள் கனிந்துண்ட தீனியை மாற்றிக் கொள்ளும் வழக்கம் போலப் பன்மொழி மாற்றிப் பருகினார் இருவரும் கலியாண சுந்தரர் கழறினார் அப்போது நாத்தீகத்தை நல்ல சைவம் எதிர்க்க வில்லை; எண்பிப் பேனிதை! தெளிந்த அறிஞர் திரு.வி.க. என்பதை உளங்கை நெல்லிபோல் உணர்ந்தேன் அன்றுநான் நாவினாற் புதுமை நடாத்துவார் கோவையிற் கோவாப் பண்டிதக் குறுமணிகள் போல் இளைஞர் முற்போக்கை எரிக்க நினைக்கும் களிமுகம் கலியாண சுந்தரர்க் கில்லை. மைந்தர் முற்போக்கைத் தந்தை மகிழ்தல்போல் இளைஞர் முன்னோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் உவகை கொள்ளுவார்! *** கம்பனை நெருங்கும் கையிருப் பின்றிக் கம்பன்நூல் மாற்றியும், கவிதை நீக்கியும் நற்புகழ் தேடும் நரிபோ லன்றிக் கலியாண சுந்தரர் கட்டுரை வன்மையால் புலிஎன்று புலவரால் புகழப் பெற்றார். *** செல்வ ரிடத்தில் செந்தமி ழிசைதான் வல்ல தென்று வாலைக் குழைத்தும், தில்லையில், தமிழிசை இல்லை என்றும் சொல்லும் வஞ்சகர் சூழுமிந் நாட்டில் மணவ ழகனார் வண்டமிழ் நாட்டின் துணையாய்ப் பற்பல துறைகளில் மிகுதியும் நேர்மையாய் உழைக்கும் சீர்மை யுடையவர். *** நல்வினவு தெரிந்த நாள்முதல் இதுவரை அல்லும் பகலும் ஆவி. உடல்பொருள் நாட்டுக் கென்று நல்கும் நோக்கொடும் ஈட்டுதல் அறத்தால் எய்தும் இன்பமென்றும் அறிஞர் இருமுப் பானாண் டாயுள் நிறையப் பெற்றார் நீடு வாழ்க! தமிழரின் பேரால் சாற்று கின்றேன். கலியாண சுந்தரர் கடிமண நாளில் மலர்நிறை கட்டிலில் மங்கையின் புதுச்சுவைக்குத் துடித்த இளமை, சேரனின் படைக்கலம் போல்அவர் படைத்து வாழ்கவே. - பழம் புதுப் பாடல்கள், ப.208-210, 2005 குறிப்பு : செந்தமிழ்த் திருவாரூர் - மடப்புரத்தில் நிகழ்வுற்ற திரு.வி.க. அறுபதாண்டு நிறைவு மணிவிழாவன்று புதுவை வாழ் புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் அன்பால் அளித்த இருமுப்பானாண்டு நிறைவு வாழ்த்து என்று தலைப்பிடப்பட்டு வாழ்த்துப் பா வழங்கப்பட்டுள்ளது. பாடலின் இறுதியில் மடப்புரம் - திருவாரூர் 28.8.1943 இடமும் நாளும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாழ்த்து புதுவை பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையத்தில் உள்ளது. 70. கானாடுகாத்தான் வை. சு. ஷண்முகம் மஞ்சுளாபாய் அவர்கட்கு வரவேற்பு நயனுறும் ஈ.வெ.ரா. இந் நாட்டில் சுயமரி யாதைத் தூய்இயக் கத்தை வித்திய நாளே விளைந்தநற் றொண்டரே அத்திரு இயக்க அங்கத் தினரே! போன இந்நாட்டுப் புலமையைக் கொணர ஞான சூரியன் நல்கிய பெரியீர்! செட்டிமார் நாட்டில் சேர்புத் தொளிக்கு மட்டிலா துழைத்த வை.சு.ஷண்முகத் தறுகணாளரே தமிழன் துணையே! உறுபுகழ் செல்வம் உடையீர் வருக உலப்புறும் இந்நா டுலகில் முன்னேறக் கலப்பு மணமே கடிதினில் தேவை என்று தாங்கள் எண்ணி உலகுக்கு நன்று வழிகாட்ட நாடி, அழகிய பஞ்சுறு மெல்லடிப் பாவை யான மஞ்சுளா பாயை மணந்து வாழ்கின்றீர் எத்தனை தொலைவு! மற்றெத்தனை தொல்லை அத்தனைக்கும் அழியா உளத்தொடும் எழில் சுசீலைக்கும், இராம மூர்த்திக்கும் இயலும் மணத்தில் எழிலைச் செய்ய எம்அழைப் பினையும் ஏற்று வந்தீர்! நன்றி யன்புசேர் ஐய நன்றி! நீங்கள் இருவரும் இன்பம் தாங்கி மக்கள் பெற்று வாழியவே! - பழம் புதுப் பாடல்கள், ப.213, 2005 குறிப்பு : முந்தையப் பாடலைப் போலவே புதுவை கே. நாதமுனிக்காகப் பாரதிதாசன் எழுதியது இப்பாடல். உயர்திரு சுசீலாதேவி இராமமூத்தி திருமணத்தில் சொற்பெருக் காற்றிய கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் மஞ்சுளாபாய் அவர்கட்கு அளித்த வரவேற்பு என்பது வரவேற்பு இதழில் இடம்பெற்ற முழுத்தலைப்பு - 16.3.49 திருமண நாள் புதுவை பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையத்தில் பெற்றது. 71. தமிழ்வாழ்க - நூற் சிறப்புரை தமிழ்வாழ்க என்னுமோர் நூலை ஈண்டுத் தமிழரெலாம் வாழுமா றியற்றித் தந்தார் தமிழ்வாழ்க என்னுமிதைத் தமிழர் யாரும் தம்பழமை தம்பெருமை தமதோர் ஆட்சி அமைப்புமுறை எலாம் அங்கை நெல்லி போல அறிந்துய்ய வேண்டுமெனும் அருள்மேற் கொண்டார் தமிழர்பெருங் குடிவந்தார் நாகர் கோயில் தரும்அப்பாத் துரையெனும் பே ரறிஞர் கண்டீர் இந்தியென்றும் தெலுங்கென்றும் ஆரியந்தான் இங்கிருக்க வேண்டுமென்றும் பலபேர் இங்கே மந்தியென்றும் சும்மாவி ராமைபோலே வாய்பதைத்துக் கிடக்கின்ற இந்த நாளில் குந்தியென்றும் தூங்காமல், தமிழ், தெலுங்கு, கூறும்வட மொழிஆங்கி லத்தோ டிந்தி முந்தியென்றும் இவர்போலே இல்லை என்ன முழுதாய்ந்த திருஅப்பாத் துரைந மக்கே ஆய்ந்தளித்த தமிழ்வாழ்க எனும்நூ லுக்கோ அகம்கனிந்து வாழ்த்திடுவோம் அவர்வாழ் கென்றே ஓய்ந்தலுத்த தமிழர்க்கும் தமிழுண் ணாமல் உயிர்சுமக்கும் மனிதருக்கும், இந்த நாட்டில் சாய்ந்திளிக்கும் நரிகட்கும் இந்நூற்றாண்டு தந்தஅப் பாத்துரையார் தந்த நூலால் வாய்ந்தளிக்கும் நல்லுணர்வு1 மெய்யே! மெய்யே! வாழ்ந்ததுசெந் தமிழ்! தமிழர் வாழ்ந்தார் நன்றே. - பழம் புதுப் பாடல்கள், ப.214, 2005 குறிப்பு : பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரைப் பிள்ளையின் தமிழ் வாழ்க என்னும் நூலுக்கு 15.12.1943 அன்று பாரதிதாசன் நல்கிய சிறப்புரைப் பா. 72. புத்தாண்டு வாழ்த்து சுபானு சித்திரை (V¥uš 1943) அன்பு பெருகவும் அறம்பல ஓங்கவும் இன்பப் புதிய யாண்டுநீ வருக! வருக! எம் வாழ்வில் வன்மை சேர்க்க வருக புதிய வாழ்வு மல்க! தமிழிசைச் சிலம்பின் அமுது பாய்ச்சி இமைதொறும் கயல்விழி இன்பம் பெருக்கிக் கொடியிடை அசையக் கூத்துத் தமிழால் அடியெடுத் தூன்றி அழகின் கலையாய்ச் சுபானு என்று தோன்றினை - ஓடி வருக! ஓடி வருக! வாழி! முந்நூற் றறுபதுன் முத்துச் சிலம்படி ஒவ்வொன் றாக ஊன்றிநீ உமக்குச் செம்மை, செம்மை செம்மை என்று நடத்துவர் எம்மனோர் நல்வாழ்வு தொடங்கும் வண்ணம் தூயோய் வாழியே! - பாவேந்தருக்குப் புகழ் அஞ்சலி, ஏப்ரல்-1943; - பழம் புதுப் பாடல்கள், ப.204, 2005 குறிப்பு : 1944 தொடங்கிப் பாரதிதாசன் நூல்களை வெளியிட்டும் பாரதிதாசனை ஆதரவாளர்: கவியரசர் பாரதிதாசன் அவர்கள் எனக் குறிப்பிட்டு முல்லை இதழ் (1946) நடத்தியும் பெருமை சேர்த்த முல்லை முத்தையா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து அச்சிட்டு வழங்கக் கருதிப் பாரதிதாசனிடம் கேட்டுப் பெற்ற பாடல் இது. 73. அண்ணாவின் உவமைகள் - நூலுக்குச் சிறப்புரை எண்ணாத் துறைநாடி எண்ணிப் பிறர்நலம் ஏற்பச்செய்தான் அண்ணாத் துரைஅறிஞன் சொற்பெருக்கில் நற்றொடர்கள் ஆய்ந்தெடுத்துப் பண்ணாத் துறைஎன்ன நூல்யாத்தார் நல்லன்புப் பழநிச்செம்மல் நண்ணார் புகழ்வீர ராகவனார்! இவர்தொண்டு நன்றே! நன்றே! - நூல் : அண்ணாவின் உவமைகள், சூலை 1949; பழம் புதுப் பாடல்கள், ப.240, 2005 74. அன்பழகன் - வெற்றிச்செல்வி திருமண வாழ்த்து நன்றாண்ட மூவேந்தர் நாகரிக மேமாற்றி வென்றாண்ட ஆரியத்தை வென்றாளத் தோன்றியவர், குன்றா மறவக் குரிசிலார் அன்பழகர் என்றோழர் என்னல் எனக்குப் பெருமையதே! திருநின்ற என்றன் தமிழகத்துச் சீர்த்தி உருநின் றழியாமே ஓம்புபடை கூட்டி வருகின்றார் அன்பழகர் என்றொருநாள் கேட்டு! விரிகின்ற செந்தமிழ்க்கு வெற்றிஇனி என்றேனே! மண்டு புதுநினைவு வாயூறும் மாப்புலவர் கண்டதமிழ் நாட்டில் கருத்திருண்டு கெட்டொழியும் நொண்டிப் பசங்களின் நோக்கழிக்க அன்பழகர் தண்டமிழ் பேசித் தமிழர்நலம் காத்தாரே! பாடுந் தமிழ்மகளைப் பார்ப்பனற்குக் கூட்டிவைத்த பேடியினைக் கம்பன், கலைஞன் என்று பேசுமிந்நாள் நாடு முழுதும் உரைபெருக்கும் அன்பழகர் பீடுபிறர் பேசநான் பெற்றமகிழ் சொல்லரிதே! பன்மொழியில் பல்கலையில் ஆய்வும் பழந்தமிழாம் பொன்மொழியைத் தம்முயிராய்ப் போற்றும் பெருமாண்பும் இன்மொழியில் நாட்டின் இருளகற்றும் நற்றிறனும் என்மொழிவேன்! அன்பழகர் இந்நாட்டின் பொன்னணியே! பற்றலரை வீழ்த்தும் பகுத்தறிவார் அன்பழகர் பெற்றி யறிந்து. பிழிந்தபழச் சாற்றுமொழி வெற்றி மகளார் விரும்புவதும் மேவுவதும் முற்றுமியல் பென்று முழங்கும்என் முத்தமிழே! வெல்லும் பகுத்தறிவும் காதல் விளைமணமும், நல்லவெனக் காட்டிவைத்த நம்பெரியார் நாட்டினிலே கல்வி அழகோடு கட்டழகும் வாய்ந்தவெற்றிச் செல்வியரின் விண்ணப்பம் அன்பழகின் தேனன்றோ. வாழியவே வாழியவே வெற்றியினார்! அன்பழகர்! வாழியவே இந்நாள்போல் என்றும் மணமக்கள்! ஆழிநேர் அன்னாரின் அன்புநனி வாழியவே சூழியவே நல்லறமே தோய்கநல் லின்பமே! திருப்பும் முகத்தினுக்குக் காத்திருந்து சிந்தும் சிரிப்பைச் சிரிப்பால் வரவேற்போர், காதற் கருப்பஞ்சா றுண்ணக் கருதின், நடுவில் இருப்புச் சுவரும் தடையாவ தில்லையே. பொன்பழகும் செம்மணிநேர் வெற்றியெனும் பூவையரும் அன்பழகும் காதல் அழகுமணம் பெற்றஇந்நாள் இன்பழக பெற்ற திளமை அழகுபெற்ற(து) என்பழ நாடும் அழகுபெற்ற தென்பேனே! ஒத்த உளமுடையார் வெற்றியினார் அன்பழகர் முத்தமிழ் வையத்து முன்வைக்கப் பிள்ளைகளும் புத்தம் புதுக்கொள்கை பூரிக்கப் பேரரர்களும் மெத்தவும் பெற்றுநனி மேன்மையுற்று வாழியவே. - பழம்புதுப் பாடல்கள், 5.220-221, 2005 குறிப்பு : திரு. க. அன்பழகன் 21.2.1945 ஆம் நாள் நடைபெறவுள்ள தனது திருமணத்துக்கு வாழ்த்தனுப்ப வேண்டுமென்றும் அதனை அச்சிட்டு வழங்கும் வகையில் முன்னரே அனுப்பித்தர வேண்டுமென்று 15.2.1945ஆம் நாள் எழுதிய மடலுக்கிணங்கிப் பாரதிதாசன் விருப்புடன் விடுத்த வாழ்த்துப்பாடல். இவ்வாழ்த்துக் கவிதை முதலில் திராவிட நாடுஇதழிலும் (ஞாயிறு வெளியீடு, 18.3.1945) அடுத்துக் கறுப்புக் குயிலின் நெருப்புக் குரலிலும் (ப.381, 382), அடுத்து, பேராசிரியர் பவளவிழா மலரிலும் (1997), பின்னர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் பவழமாலைத் (1998) தொடக்கத்திலும் இடம்பெற்றுள்ளது. நான்கிலும் பாக்கள் சில விடப்பட்டுள்ளன. அவை: பாடுந் தமிழ்மகளை, வெல்லும் பகுத்தறிவும், வாழியவே வாழியவே, திருப்பும் முகத்தினுக்கு,பொன்பழகும் செம்மணிநேர் எனத் தொடங்கும் ஐந்து பாக்களும் கறுப்புக் குயிலின் நெருப்புக் குரலிலும் பவழமாலையிலும் இடம்பெறவில்லை. திருப்பும் முகத்தினுக்கு, பொன்பழகும் செம்மணிநேர், ஒத்த உளமுடையார் ஆகிய மூன்று பாக்களும் திராவிடநாடு இதழில் இடம்பெறவில்லை. பாடுந் தமிழ்மகளை, வாழியவே வாழியவே எனத் தொடங்கும் இருபாக்களும் பேராசிரியர் பவளவிழா மலரில் இடம்பெறவில்லை. 75. சுடாத நெருப்பு - நூல் மதிப்புரை திருத்திப் படித்துத் திரவியத்தின் நூலின் கருத்திப் படிஎன்று கண்டால் - பெருத்த மகிழ் வுற்றிடுவார், செந்தமிழில் உள்ள சுவையனைத்தும் பெற்றிடுவார் என்னகுறை பின்பு? காவியமாம், தென்றல், வான் காலைமுத லாம்காட்சி ஓவியமாம், இந்தி ஒழிப்பாம், இங்-காவன சொன்ன திரவியத்தின் சொல்லரிய தாம்தொண்டுக் கென்னகைம் மாறறிவோம் யாம்? - பழம் புதுப் பாடல்கள், ப.240, 2005 குறிப்பு : தலைப்பெதுவுமின்றி இவ்விரண்டு நேரிசைவெண்பாக்களும் அளிக்கப் பெற்று இவற்றின் கீழ் வலப்பகுதியில் பாரதிதாசன் எனப் பெயரும் இடப்பகுதியில் 21.10.1949 என நாளும் குறிக்கப்பெற்றுள்ளன. 76. திருமண வாழ்த்து எண்சீர் விருத்தம் திருவுடையார்; பொறையுடையார்; செந்த மிழ்க்கண் தீராத பற்றுடையார்; பண்பே ஆன உருவுடையார்; நல்லொழுக்கம் உடையார்; வாய்மை உடையவராம் கந்தசா மிப்பெ யர்கொள் ஒருபெரிய அறுவைவணி கத்தார் சென்னை ஓங்குபுகழ் உடையாரின் நீங்கா அன்புக் குரியசேய் பட்டாபி ராமன் கண்டீர் ஒண்டொடியார் அண்மையிலே அமைதல் கண்டோம். விண்மணியும் நாணுமோர் மேன்மை வாய்ந்த பெங்களூர்க் கனகசபா பதியார் பெற்ற கண்மணிகாண் சரசுவதிதான் நிறைந்தி லங்கும் கற்புக்கோர் அணிமணிதான் அவனுக் கேற்ற பெண்மணிதான் மணவறையில் மணவா ளன்தன் பெருந்தோளிற் படர்முல்லை யாய்அ மைந்தாள் ஒண்மணிசேர் இல்லறமாம் உயர்ம ணித்தேர் ஓட்டஇவர் பெறாநின்றார் திருமண ணந்தான். சரசுவதி, பட்டாபி ராமன் ஆன தமிழ்ப்பெண் மாப்பிள்ளை இருவர் தாமும் கருத்தொருமித் தாதரவு கொண்டார் இந்தக் கடிமணத்தை வாயார வாழ்த்தும் வையம்! வருமகளிர் ஆடவர்கள் அவையில் உள்ள மதிநுட்பத் தமிழ்நூலோ டுடைய சான்றோர் தரும்வாழ்த்தும், மங்கலமா இசையும் ஓங்கத் தடங்கைகள் மலர்பொழியக் காணு கின்றோம். குயில்மொழியாள் சரசுவதி, தான்அ டைந்த கொழுநனோ டின்புறுக! அன்பு வாழ்வின் வெயில்முகத்துப் பட்டாபி ராமன் தானும் மெல்லியுடன் இன்புறுக! இருவர் தாமும் பயில்மும்மைத் தமிழ்மன்னன் மன்னிபோலும் பயன்பெறுக! வாழ்வுயர்க! புகழ டைக முயன்றாராய் நிறைபொருளைக் குவிக்க! வாழ முடியார்க்கு முடிந்தவரை ஈந்து வக்க! வாழியவே பல்லாண்டு பல்லாண் டன்பு மணமக்கள் மாமலரும் மணமும் போலே! யாழோடு குழல்நிகர்த்த மழலை பேசும் எழில்மக்கட் பேறடைக! குடும்ப மேன்மை வாழையடி வாழை என வந்த வாறு மாண்புறுபே ரர்கண்டு மகிழ்ச்சி கொள்க! வாழியவே மணமக்கள் பெற்றோர் சுற்றம் வாழியவே தமிழுலகம் வாழ்க நன்றே. - பழம் புதுப்பாடல்கள், ப.245-245, 2005 குறிப்பு : பாரதிதாசன் இதழ்ப்பணிகள் நூலில் விக்ருதி ஆண்டு, வைகாசித் திங்கள், 20ஆம் நாள் 02.06.1950 வெள்ளிக்கிழமை சென்னைத் தியாகராச நகர் திருவாளர் ஆ.கந்தசாமி முதலியார் மகன் திருவளர்செல்வன் பட்டாபிராமன், பெங்களூர், கனகசபாபதி முதலியார் மகள் திருவளர்ச்செல்வி சரசுவதி (ப.404-405) என்னும் மணநாள், மணமக்களைப் பற்றிய முன்குறிப்போடு இப்பாடல் இணைக்கப் பெற்றுள்ளது. 77. சிவாஜி இதழின் 17-ஆம் ஆண்டு வாழ்த்து எழுத்தெல்லாம் புதியநடை எண்ணமெலாம்1 தன்னுடைமை எனவே நாட்டின் பழுத்தபொதுத் தொண்டுசெய்வான் திருலோக சீத்தாராம்2 பரப்பும்ஏடு வழுத்துமோர் சிவாஜியெனல் வண்தமிழ்நா டறியும்அந்த மைந்த னுக்க3 தழைத்ததுவாம் பதினேழான் டென்றுரைத்தால் மகிழாத தமிழ ருண்டோ? இவனுயர்ந்தான் அவன்தாழ்ந்தான் என்னுமின வேற்றுமையோர் அணுவும் இல்லான் எவன்பொதுமைக்4 கிடர்சூழ்ந்தான் அவன்தாழ்ந்தான் அஃதில்லான் உயர்ந்தா னென்று நுவல்வதிலே திருலோகம்5 அஞ்சா நெஞ் சன்;தக்க நூற்கள் ஆய்ந்தான்6 அவனெழுதி டூம்சிவா7 சிவாஜி7 வாரத்தாள் வாரியபல் வாண்டு நன்றே பல்லேடும் கூடிஒரு பழந்தமிழன்8 சீர்த்தியினை மறைக்கு மாயின் வில்லோடும் அம்போடும் வரும்பகையைத் தனிநின்று வீழ்த்து வான்போல் சொல்லோடும் பொருள்சிறக்கத் தூய்தமிழின் சீர்சிறக்க எழுது கின்ற நல்லேடாம் சிவாஜிக்கு நல்லாசான் திருலோகன் நாளும் வாழ்க. - சிவாஜி, 17ஆவது ஆண்டு மலர், 21.10.1951; பழம் புதுப் பாடல்கள், ப.249-250, 2005 குறிப்பு : சிவாஜி இதழாசிரியர் திருலோக சீதாராம் கவியரசு பாரதிதாசன் என்னும் தலைப்பில் பின்னர் (1980) எழுதிய கட்டுரை ஒன்றில் (அரும்புகள் மொட்டுகள் மலர்கள் ப.139-152) இப்பாடலை முழுமையாக எடுத்துக்காட்டியுள்ளார். இரு பதிவுகளுக்குமிடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. கட்டுரைப்பதிவில் காணப்பெறும் வேறுபாடுகள் கீழே குறிக்கப்பெற்றுள்ளன. nt.: 1. எண்ணமெல்லாம், 2. சீதாராம், 3. ஒற்று த் மிகல் வேண்டும், 4. எவன்பொதுவுக், 5. திருலோகன், 6. ஆய்ந்தோன், 7. அவனெழுதும் சிவாஜியெனும், 8. பழந்தமிழின். 78. புலவர் வேணுகோபாலனார் வாழ்க! தமிழரெலாம் அறிவுடைய ராதல் வேண்டும்; தமிழ்என்றால் அவ்வறிவு பெறுதல் கூடும்; ‘தமிழ்கற்றல் என்பதுதான் என்ன? என்றால் தமிழ்ச்சான்றோர் அருளியநூல் கற்ற லாகும். தமிழ்நூற்கள் கற்பதெனில், நூலைச் செய்த தமிழ்ச்சான்றோர் உளமறிய முயல்வ தாகும் தமிழ்நூல்கட் கமைந்துள்ள உரையைக் கொண்டே தக்கபடி பொருள்தெரிதல் அருமை யாகும். தொல்காப்பி யர்தமிழர் என்பார்; அன்னார் சொன்னநூல் தமிழர்நெறி சொல்லிற் றென்பார் தொல்காப்பி யத்திலுள செய்யுள் கட்கும் தூய்மையிலா உரைசெய்து பொருள்ம றைப்பார் பல்லோரும் புகழ்கின்ற திருக்கு றட்குப் பரிமீதில் அழகிரியார் செய்த தொன்றே நல்லஉரை என்றுரைப்பார்; வருண பேதம் நல்காத குறள், அதனை நல்கிற் றென்பார் பெருநூற்கள் உரைபலவும் திருந்த வேண்டும்; பிழைபாடு நீங்காக்கால் அறந்தோன் றாது; பெரியவர்கள் எதிரிருந்து பொருளைக் கேட்கப் பிழைநீங்கும்; நல்லறிவு பெறுதல் கூடும். திருத்தக்க தேவனார் அருளிச் செய்த சீவகசிந் தாமணியாம் பெரிய நூலின் உரைகூறி யருளினார் மூன்றாண் டாக உயர்புலவர் வேணுகோ பால னாரே! ‘அப்பெரியார் யார்? என்னில் சைன மென்னும் அருள்நெறியால் எழுந்ததமிழ் நூற்கள் மற்றும் செப்பரிய சங்கநூல் அனைத்தும் ஆய்ந்து சிறந்தாரிற் சிறந்தவரே! அவரை இவ்வா றொப்பரிய பணியாற்றக் கேட்டார் யாவர்? உயர்காஞ்சிச் சைனஇலக் கியமன் றத்தார்; இப்போதும் சீவபந்து சீபால், தென்னாட் டிளஞ்சினதே வனுடைய தந்த மன்றம்! சீவகனைப் பாராதே; சேக்கி ழாரின் திருத்தொண்டர் புராணம்பார் என்று கூறும் நாவகரும் இருக்கின்றார், அவரை யெல்லாம் நல்லரென்று சொல்வாரும் வாழ்கின் றார்கள்; சீவகன்போல் வீரத்தைக் காதல் தன்னைச் செப்புவதோர் நூலுண்டோ? தமிழர் நாட்டின் பாவகன்ற இலக்கியத்தின் அரசு சிந்தா மணிஎன்று பகர்ந்திடுதல் மிகையே இல்லை. தமிழ்த்தொண்டு செய்துவரும் வளஞ்சேர் காஞ்சிச் சைன இலக்கியமன்றம் தழைத்து வாழ்க! அமிழ்திருந்த படிகாட்டும் சீவ கன்றன் அழகிருந்த படிபொருளை ஊட்டி, இந்த இமிழ்கடல்சேர் தமிழ்நாட்டார்க் கினிய செல்வம் ஈத்துவந்த வேணுகோ பால னார்தாம் தமர்நண்பர் மக்களொடு செல்வம் சீர்த்தி தனித்தபெரும் புகழ்ஓங்கி வாழ்க நன்றே! - சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவு மலர், 1952; பழம் புதுப் பாடல்கள், ப.251-252, 2005 79. சரசுவதி - கண்ணப்பர் செல்வி மல்லிகை வாழ்க! கலைச்செல்வி கண்ணப் பர்க்குப் கண்ணொக்கும் பெண்ணே ஆன நிலைச்செல்வி மல்லிகைதான் ஓராண்டு நிறைவு பெற்றாள்! மலைச்செல்வம் நாட்டுச் செல்வம் மாநகர் கானச் செல்வம் அலைகடற் செல்வம் கல்வி அடைந்துபல் லாண்டு வாழ்க! பழனிபா ரதிதா சர்க்குப் பேர்த்தியாய், அன்பு யிர்க்குக் கழனியாய் மல்லி கைதான் ஓராண்டு காணப் பெற்றாள். எழில்நனி பெற்று நன்றே பெண்களின் உலகம் ஏத்தித் தொழுவணம் புகழும் பெற்றுத் துயரின்றி நீடு வாழ்க. - பழம் புதுப் பாடல்கள், ப.253, 2005 குறிப்பு : புதுவை பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையத்தில் கவிஞரின் கையெழுத்து வடிவத்தில் இவ் வாழ்த்து இடம்பெற்றுள்ளது. 80. எண்ணருங் கலைகள் ஆய்ந்த அறிஞர் பறந்தபல் லாயிரம் பறவைகள்; சனார்த்தனம் உறையும் உறையுள் உற்றன; அவைகள் அறைந்தன. அறிஞரே தோழனாம் இதழை மறந்தோம் இல்லை. மறந்தாலும் அரிதே! மீண்டும் வெளிவர வேண்டும் என்றன. நாட்டு மக்கள் தீட்டிய அஞ்சற் கூட்டம் கூறியது கேட்ட சனார்த்தனம் தோழன் தனது தொண்டு தொடங்குவான் என்ற உறுதி ஈந்தார் வாழ்க! தோழன் திராவிடம் வாழும் வகையில் பாங்குயர் கருத்துத் தாங்கி எழுவான். ஏனெனில் சனார்த்தனம் எண்ணருங் கலைகள் ஆய்ந்த அறிஞர் அன்றோ? தோய்ந்தின் புறுக திராவிடர்! வாழ்கவே! - நூல்: பெரியாரே என்தலைவர், 25.12.1955; பழம் புதுப் பாடல்கள், ப.258, 2005 குறிப்பு : தோழன் என்னும் பெயரில் டார்ப்பிடோ ஏ.பி. சனார்த்தனம் நடத்திய இதழில் (25.12.1955) வெளியான கவிதை இது. 81. நேரு ஆட்சி யாருளார் என்னைவிட என்னும் மனப்பான்மை நேருவிடம் காண்பதாய் நேருறவே - மோரார்சி தேசாய் எனும்அமைச்சர் செப்பினார் இவ்வாட்சி மாசாய் மறைவதன் முன்பு. - குயில் கிழமை இதழ், 9.9.1958; பழம் புதுப் பாடல்கள், ப.213, 2005 82. கொய்யாக்கனி - நூல் மதிப்புரை கள்ளம் எப்படி அப்படிக் கடுகளவும் இலாதநெஞ் சினார்முக் கனிகள் எப்படி அப்படிப் போன்றமுத் தமிழின்மே லன்பர் குள்ளம் எப்படி அப்படி இலாப்பெருங் கொள்கை யுடையார் குரைகடல் எப்படி அப்படிக் குணநிறை துரைமா ணிக்கனார் வெள்ளம் எப்படி அப்படிச் செந்தமிழ்ச் சொற்பெருக் கேற மேன்மை எப்படி அப்படிப் பட்டதோர் நடையிற்றம் நல்ல உள்ளம் எப்படி அப்படித் தந்ததோர் உயர்தமிழ் நூல்தான் உலகம் எப்படி அப்படிப் பட்டதோர் நிலைகொள்கொய் யாக்கனியே! - பழம் புதுப் பாடல்கள், ப.259, 2005 குறிப்பு : பாவலர் துரைமாணிக்கத்தின் (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) தொடக்கக்காலப் படைப்பாகிய கொய்யாக்கனி (சனவரி 1956) காவியத்திற்குக் கவியரசர் பாரதிதாசனார் உவந்து அளித்த மதிப்புரை. 83. கொட்டடா பறை! இசை : மோகனம் தாளம் : ஆதி நற்றவம் பலித்ததே ஒற்றுமை பெற்றோம் அற்றதே பகைஎன்று கொட்டடா பறை உற்றதே விடுதலை கொட்டடா பறை! அற்றைநாள் இப்பெரும் தமிழுலகம் ஆண்டோம் இற்றைக்கும் நாம்அந்த நிலையினைப் பூண்டோம் வெற்றி முற்றுமே பெற்றோம் நாம் தமிழர் வியப்பில்லை என்று கொட்டடா பறை! புகழ்க்கெல்லை இல்லை கொட்டடா பறை! நாம்பெற்ற விடுதலை மணிக்கொடி காப்போம் நானிலம் காப்போம் கெடுதலைத் தீர்ப்போம் தேம்பலா வாழை மாவெனும் முத்தமிழ்ச் செழுங்கனி வழங்குவோம் கொட்டடா பறை முழுதுலகும்பெறக் கொட்டடா பறை! ஒருவன் நாட்டை ஒருவன் பறிக்கும் உள்ளப் போக்கைத் தமிழன்கை நறுக்கும் அருள்ஒன்றே சட்டம்! மக்கட்கே ஆட்சி! அமைதி நிலைஎன்று கொட்டடா பறை! தமிழர் கொடைஎன்று கொட்டடா பறை! - பழம் புதுப் பாடல்கள், ப.309, 2005; குயில், கிழமை இதழ், 14.10.1958 85. பிள்ளைக்கு காலையில் கண்விழிக்க வேண்டும் - பின்பு காலைக்கடன் முடிக்க வேண்டும் ஓலைத்தடுக்கில் குந்த வேண்டும் - அம்மா உண்ணச் சொன்ன தைஉண்ண வேண்டும் மூலையிலே போய்ப்பதுங் காதே - நீ முன்னே பள்ளிக்குப் போகவேண்டும் சாலையிலே ஓரமாய் ஒதுங்கி - நீ சட்டமாய் நடந்துபோக வேண்டும் கருத்தாய்ப் படித்துவர வேண்டும் - தமிழ்க் கல்வியிலே தேர்ச்சிபெற வேண்டும் இருக்கும் நமது தமிழ் நாட்டை - நாம் எப்போதும் வாழ்த்திட வேண்டும் ஒருத்தர்க்கும் தீங்கு நினையாதே - நீ உண்மைக்குப் பாடுபட வேண்டும் சருக்கி வீழுகின்ற போதும் - நம் தமிழை வாழ்த்திடுதல் வேண்டும். - பழம் புதுப் பாடல்கள், ப. 404, 2005; வானம்பாடி சிறுவர் வார இதழ், 7.5.1962 86. கவிஞர் கண்ணதாசர்க்கு நன்றியும் வாழ்த்தும் கட்டளைக் கலித்துறை நன்று கவிகளிந் நாட்டுக் களித்துக் கவிஞர்பெரு மன்றுக்கும் நன்கொடை யாகவெண் பொற்காசு மற்றிருநூற் றொன்றும் அளித்தனர்! நம்கண்ண தாசர்க்கு நாமளிக்கும் நன்றிபெற் றேஅவர் வாழிய வாழிய நானிலத்தே! - பழம் புதுப் பாடல்கள், ப. 410-2005; குயில் திங்கள் இருமுறை இதழ், 1.7.1962 87. தையற்கலை வாழ்க! உணவு தடைப்படின் உயர்வு தடையப்பா உடை தடைப்படின் உயர்வு தடைப்படும் நல்லுண விலாவிடில் நாணுவா ரில்லை நல்லுடை யிலாவிடில் நாணும் நெஞ்சம் எழிலுடை உணவிலும் இன்றியமை யாதது வழுவினால் உடனே மானம் கெடுதலால் வையகத்தில் நெய்யும் உடையெலாம் தையல் Ãw¤jhš1 தகுதி யடையும் இயற்கையில் அழகிலார் எனினும் அவர்க்கெலாம் செயற்கை அழகு செயும் தை யற் bjhÊš2 தையல் அருந்தொழில் தழையத் தழைய உய்யும் தமிழர்பால் உயர்வு தழையும்! தையற் கலை என்னும் துய்ய ஏட்டைத் தையற் கலைஞர் சாமிஎன் தோழர் வெளியிட் டுதவினார் வெல்க! ஒளிர்க தையற்கலை ஓங்குக நன்றே! - பழம் புதுப் பாடல்கள், ப.239, 2005; பாரதிதாசன் குயில் சுவடி, 6 ஆனி 1984 குறிப்பு : பாரதிதாசன் குயில் (ஆனி 1984) இதழில் 1948ஆம் ஆண்டில் சென்னையில் வெளிவரத் தொடங்கிய தையற்கலை இதழுக்குப் பாவேந்தர் அளித்த இந்தப் பாடலை பண்ணுருட்டி தியாகச்செம்மல் எம்.ஆர். பாண்டுரங்கனார் வழங்கி யிருக்கிறார். என்னும் முன் குறிப்போடு இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 1. திறத்தால் என இருப்பின் நன்று 2. தையற்றொழில் என இருத்தல் வேண்டும். 88. சரசுவதி - இராசவேல் திருமண வாழ்த்து நன்று வாழிய இன்றுபோல் என்றும் ஒன்றிய காதல் உள்ளம் உடையீர்! தேசுறு சென்னைக் கேசவ னாரின் அருமை மகளே சரசு வதியே கைம்மை முதலைவாய் கடிந்த உள்ளச் செம்மை வாய்ந்த திராவிடப் பொன்னே! வழிகாட்டி அன்பனின் விருப்பம் கவர்ந்து வழிகாட் டினைஇப் பழிநாட் டிற்கே! தண்புனல் வளவயல் பண்ணு ருட்டி நாம நாராயண சாமி யவர்களின் இனிமைப் புதல்வ! இராசவேல் செம்மால்! துணையிழந் தாரை மணப்ப தறமெனும் இணையிலாத் துணிவுடை எதிரிலா ஆற்றலோய் இயலிசை நாடகம் என்ன முத்தமிழ் உடையாய்; திராவிடர் உயர்வுக்கு வாய்த்தோய் நீவிர் நாளும் பூவும் மணமும் பாவும் பொருளும் என்னப் பாரோர் வாழ்வுக்கு இலக்கியம் வகுத்தும் திராவிடர் வாழ்வுக்கு நல்ல மக்களைப் பெற்றும் திருவெலாம் பெற்றும் உலகின் பெரும்புகழ் பெற்றும் பெரிது வாழியவே! - பழம் புதுப் பாடல்கள், ப.241, 2005 குறிப்பு : இதழாசிரியர், நாடக ஆசிரியர், நூலாசிரியர் இவற்றிற்கு மேலாகப் பாரதிதாசனின் அணுக்கத் தொண்டர் என்னும் சிறப்புகளுக்குரியவர் பண்ணுருட்டி நா.இராசவேல். கைம்பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்ற அவரின் மணவிழா புரட்சிக் கவிஞரின் தலைமையில் நிகழ்ந்தது. இந்த மணவாழ்த்துப்பாடல் அவர்களிடையே அமைந்திருந்த நெருக்கத்தைப் புலப்படுத்தும். இராசவேல் அவர்களைச் சென்னையில் சந்தித்தபோது (1974) சட்டம் போட்டு வைத்திருந்த இத்திருமண வாழ்த்தைப் பார்த்தெழுதப் பதிப்பாசிரியர்க்கு அளித்துதவினார். பாரதிதாசன் இதழ்ப் பணிகள் (ப.403) நூலிலும் இப்பாடல் இணைக்கப் பெற்றுள்ளது. 89. திரு. வி. க. பாடல் திருத்தம் எண்ணாத் துறைநாடி ஏந்து புகழ்நட்ட அண்ணாத் துரையண்ணல் ஆய்ந்து தமிழ்செழிக்கப் பண்ணாத் துறையுண்டோ? பைந்தமிழர் ஏனிவனைக் கண்ணாகக் கொள்ளார் கனிந்து. - புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள், ப.153-154; பழம் புதுப் பாடல்கள், ப. 431-2005 குறிப்பு : இந்த நேரிசை வெண்பாவின் தோற்றம் பற்றிப் பாரதிதாசனிடம் மிக நெருக்கமாகப் பழகிய கவிஞர் முருகுசுந்தரம் தனது பாவேந்தர் பாதையில்... சில சுவடுகள் என்னும் கட்டுரையில் குறிப்பிடுவது: அடுத்த நாள் காலை நான் தி. நகர் இராமன் தெருவில் இருந்த பாவேந்தர் இல்லத்துக்குச் சென்றேன்... திரு.வி.க.வின் கவிதையாற்றல் பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது அவர் கீழ்க்கண்ட கருத்துக்களை வெளியிட்டார். திரு.வி.க. சிறந்த தமிழறிஞர். அவர் உரைநடையில் சாதித்ததை இன்னும் எந்தத் தமிழனும் சாதிக்கவில்லை. என்றாலும் அவர் கவிதை யின் பக்கம் சென்றிருக்கக் கூடாது. அண்ணாவைப் பற்றி அவர் பாடிய பாடல் கவிதைத் துறையில் அவர் அடைந்த தோல்விக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அண்ணாத் துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டின் வண்ணான் அழுக்கெடுப்பில் வாய்மொழியில்-பண்ணாவான் சிற்பன்எழுத் தோவியத்தில் செல்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென் றாடு. இந்த வெண்பா அண்ணாவைப் பாராட்டித் திரு.வி.க. எழுதியது. வண்ணான் என்ற உவமை, இடத்திற்கும், தகுதிக்கும் ஏற்பப் போடப் பட்ட நாகரிகமான உவமையன்று. இந்த உவமையால் அண்ணாவுக்கும் பெருமையில்லை; வண்ணானுக்கும் பெருமையில்லை. எதுகை சரியாக விழவேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு எந்தச் சொல்லை வேண்டு மானாலும் போடக்கூடாது. பொறுமையாகச் சிந்தித்து நல்ல உவமையாகப் போடவேண்டும். திரு.வி.க. கவிஞராக இருந்திருந்தால் இப் பாட்டின் அடிகளை அவர் இப்படி அமைத்துப் பாடியிருப்பார் என்று சொல்லி அவரே ஒரு வெண்பாவை உடனே சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எழுதி, அவரிடமே காட்டித் திருத்திக் கொண்ட பாடல் பின்வருமாறு என்று குறிப்பிட்டு இப்புதிய வெண்பாவை அளித்துள்ளார். 90. பெரியார் துணை சமய மீதே என்ற மெட்டு கௌரி மனோஹரி ஆதி பல்லவி பெரியார் துணை எங்கள் ராமசாமித் தெரியாத மார்க்கம் தெரியச் செய்தார் அனுபல்லவி விரிவாம் சுய மரியாதையை விழலாக் கிடேல் என்று கூவிய சரணம் ஈர்ங்கையையும் இனத்தார்க்கன்றி வீசிறாத ஓர் ஈனக் கூட்டத்தைத் தாங்கிவந்த இத்தமிழர் நிலை சஞ்சலமன்றோ என்று கூவிய (பெ) மதம் என்பது விலங்கல்லவோ வருணாரமம் உனைக் கொல்லவோ இதம் செய்யுமோ பேதச் செயல் எவரும் சமம் என்றே சொல்வாய் (பெ) தமிழ்நாடு நந்தமிழர்க்கென்றே சாற்றினார் தமைப் போற்ற வேண்டும் நாம் அமிழ்தம் தந்தார் அனைத்தும் தந்தார் ஆவியுடல் பொருள் நமக்கே தந்த (பெ) உறிவெண்ணையை உயர வைத்தே ஒரு பூனையை அதன்மேல் விடேல்! திருடர்குலம் உனைக் காக்குமே தேவர்குலம் ஏதடா என்ற (பெ) குறிப்பு : ஓரிதழில் வெளியிட்டதாகப் புரட்சிக் கவிஞரின் புதல்வர் மன்னர்மன்னன் தெரிவித்துள்ளார். 91. திருமண வாழ்த்து முருகு சுப்பிரமணியன் திருவளர் செல்வன் முருகென அழைக்கும் மருவுசீர்ச் சுப்பிர மணியன், குமரனாம் கவிதைகள் உதவிக் கணக்காயன், பேர் நவிலினும் உள்ளம் நனி உவப் புறுமோர் புகழும், நல் ஒழுக்கமும், புதியன போற்றும் தகைமையும், எழுத்திலொரு தனித்த வன்மையும் அமைந்தோன், தன் பேரன்பினை இந்நாள் அமிழ்துமொழி வள்கி களிக்க லுற்றான்! புள்ளிமான் நிகர்ந்த வள்ளிதானும் கொள்ளும் உள்ளன்பை அள்ளி முருகினில் சேர்க்க லானாள்இத் திருமணச் செய்தியைக் கேட்கலானோம். கிளர்ந்தது மகிழ்ச்சி! தெள்ளியதமிழ், இசை சேர்ந்தென மணங்கொள் வள்ளியும் முருகும் பிள்ளைகள் பெற்றும் பெருவாழ்வுற்றுப் பேரின் பெய்துக! திருவோங்கு தமிழர் வாழிய உருவோங்கு செந்தமிழ் உயர்ந்து வாழியவே! குறிப்பு : தமிழகத்தில் பொன்னி இதழ் நடத்தி காவிரிபோல் புகழ்படைத்தவர் முத்தமிழ் வித்தகம் முருகு.சுப்பிரமணியம். பாரதிதாசன் பரம்பரை பகுதியைத் துவக்கி பல கவிஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை முருகு. சுப்பிரமணியத்திற்கு உண்டு. மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் மன்னராகத் திகழ்ந்த முருகுவின் திருமணத் திருநாளில், கவிமன்னன் பாரதிதாசன் வாழ்த்துப்பா வழங்கியது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் பாரதிதாசன் என்னும் நூற்றாண்டு விழா மலரில் இவ்வாழ்த்துக் கவிதை இடம் பெற்றுள்ளது. மலேசியாவில், சிரம்மான் நகரில், டேஃப் கல்லூரியில் 22.09.1991 நடைபெற்ற விழாவில் இம்மலர் வெளியிடப்பட்டது. 92. வாய்மையாள் வாழ்க! வண்டாரும் சோலை வளருப்பளம் பேட்டில் கண்டார்கள் மெச்சும் கசேந்திரரும் - தண்தாரின் தூய தமிழன் தொடுகலைகள் கற்றுணர்ந்த வாய்மையாள் வாழ்க வளர்ந்து. - பாவேந்தரிடம் பயின்ற நாள்கள், பக்.224; ஆசிரியர்: பாவலர்மணி சித்தன் குறிப்பு : உப்பளம் தன் மதிப்புக் கழகம் 1951 முதல் 1959 வரை இயங்கியது. அதில் பங்கு பெற்றவர்களுள் கசேந்திர பாலுகரரும் ஒருவர். பாவேந்தர்க்குத் தொண்டராய் இருந்தவர். அவரைப் பாராட்டி பாவேந்தர் பாடிய வெண்பா இது. * * * வித்வான் புதுவைச் சித்தர் இராதா இந்நேர மிங்கே நத்துவார்க் கெலாம் இனிக்க நறுங்குறிஞ் தித்தேன் பெய்தார்! அத்தவக் கவிஞர் நன்னூல் ஆய்ந்தவர்; தமிழ்க்காப் பாளர்; முத்தமிழ்ச் செல்வர் வாழி! மொழிகின்றோம் அவர்க்கு நன்றி. குறிப்பு : பாவலர்மணி சித்தன் குறிஞ்சி என்னும் தலைப்பில் பாடியபோது, பாட்டரங்கத் தலைவர் பாவேந்தர் மேற்கண்ட வாழ்த்துப்பா ஒன்று பாவலர்மணி சித்தனுக்கு வழங்கினார். 93. அண்ணாமலை நனிவாழி சரோஜ தளநேத்ரி மெட்டு சங்கரா பரணம் ஆதி பல்லவி நமதன்பைத் தனதாக்கும் செந்தமிழ்த்தாய்க்குத் (துயரேன்) இனி நாமே உடலுயி ரினாற் செய்வோமே தொண்டு நலிவேனோ? நமதன்னைக்கே அனுபல்லவி செம்மல் அண்ணாமலை பொருளாகிய நீர் பாய்ச்ச இசைசேர் தமிழா கியசெம் பயிர் ஓங்கினதேடி அன்புறு தோழி அண்ணாமலை நனி வாழி. சரணம் ஆரியத்தினில் ஆழ் தெலுங்கினில் பாடுகின்றார் பொருளறியார் துன்பம் (ஆயின்) அவர்யார் என்று கேட்டபோது இந்நாட்டின் தமிழர்தாம் என்று கூறினார். 94. புதுச்சேரியின் கடைசிப்புலி வருக வருக வளர்புதுவை தன்னில் பெருகு தொழிலாளர் பெற்ற பெரும் ngnu1 பொய்யை அநீதியைப் போக்கப் பணிசெய் சுப்பையா பேர்கொள் சுகிர்தரே மக்கள் இதம்பெறுதல் வேண்டுமென சுதந்திரம் ஆம் பத்திரிகையைத் தோற்றுவித்தும் தொண்டும் செய்தும் சிங்கமென வாலிபர்கள் தீவிரம் கொண்டேற சங்கம் அமைத்தும் தலைமை நின் றுழைத்தும் அழிவார்கள் என்றிருந்த அவலநிலை நீக்கி தொழிலாளர் என்ற நிலைக்குக் கொண்டு வந்தீர் பத்தும் புரிந்தீர் பாரீசுக்கும் சென்றீர் இந்நாள் தொழிலாளர் நலம் காண... - கவிதா சரண், ஜனவரி - ஜுலை, 2007 குறிப்பு : புதுச்சேரியில் முதன் முதலாக தொழிலாளர் இயக்கத்தைத் தோற்று வித்தவர் புதுச்சேரிப் புலி என்று போற்றப்படும் பொதுவுடைமை இயக்க முன்னோடி திரு.வ. சுப்பையா அவர்கள். தலைவர் சுப்பையா மீதும், அவரின் தொண்டின்மீதும் பாரதிதாசன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர் உரிமைகள் யாவற்றையும் பெற்று பிரான்சிலிருந்து புதுவைக் கடற்கரையில் அவர் வந்திறங்கியபோது இலட்சக் கணக்கான மக்கள் அணிதிரண்டு வந்து அவரை அன்போடு வரவேற்றார்கள். அந்த நிகழ்ச்சியில் பாரதிதாசனும் கலந்துகொண்டார். அப்போது அவர் மேற்கண்ட வரவேற்புக் கவிதை வாசித்தார். பாரதி வசந்தன் எழுதிய புதுச்சேரியின் கடைசிப் புலி என்னும் கட்டுரையில் பாவேந்தரின் இந்தப் பாடல் காணப்படுகின்றது. 1. பெரும் பேறே - என்று இருக்கவேண்டும். 