பாவேந்தம் 17பாட்டு இலக்கியம் - 3 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 17 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 336 = 368 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 230/- கெட்டி அட்டை : உருபா. 340/- படிகள் : 1000 நூலாக்கம் : ர்மநிர் வ. மலர், நிழூட்குகஒகூஹி சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  இலக்கியப் பெரியார் பாவேந்தர்! பஞ்சிலிருந்து திரியையும் உருவாக்கலாம்; திரையையும் உருவாக்கலாம்! விளக்கின் வெளிச்சத்தைக் கூடுதலாக்கத் திரி உதவும்; வெளிச்சத்தை மறைக்கத் திரை உதவும். படைப்பாற்றலும் அறிவும் பஞ்சு போன்றவை. அவை எந்த நோக்கத்திற்குப் பயன்படுகின்றன என்பதைப் பொறுத்தே திரியா, திரையா என்னும் தெளிவு கிடைக்கும். சிந்திக்கவும் ஏற்றத் தாழ்வைச் சீர்படுத்தவும் உதவும் எழுத்து வாசிப்போர் மனத்தை வெளிச்சமாக்கும், அது திரி! மூடத்தனத்தைச் சுமந்துவரும் எழுத்து, வாசிக்கும் மனத்தை இருட்டாக்கிவிடும், அது திரை! இத்தகைய எழுத்தாளர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்று எச்சரிப்பார் பாவேந்தர் பாரதிதாசன். பழமை வாதத்தைத் தாங்குவோர் அவருக்குப் பழிகாரராகவே தெரிவார். அழியாத மூடத் தனத்தை - மிக அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதல்எழுத்(து) ஓதினும் மதிஇருட் டாகும் (பக். 7) வழக்கம் என்பதற்காக எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர் பாவேந்தர். வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ள வேண்டாம் (பக். 92) புதிய சிந்தனைகளால் மாந்த மனத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு எத்தனையோ இடையூறுகள் முளைத்தபடி இருக்கும். பழமைவாதம் குறுக்கே பாயும். பணப் பெட்டிகள் ஆசை காட்டும். அடக்குமுறை அச்சுறுத்தும். முற்போக்குச் சிந்தனை யோடு எழுந்தோர், தொடர்ந்து தடுமாறாமல் நடைபோடுவது கடினம்! குறிக்கோளில் உறுதியும் தெளிவும் இருப்போரிடம் மட்டுமே, நிலையான கொள்கைப் பயணம் தொடர்ந்தபடி இருக்கும். அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ பெற்றதன் கொள்கையைப் பிறர்கை மாற்றுவோன் உற்றது உரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன் கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன் மனிதருள் வாய்ந்த மனித விலங்கு. (தொகுதி 15; பக். 337) மனிதர், மனித விலங்கு - இருபிரிவும் நம்மைச் சுற்றி உண்டு. உருவத்தால் எல்லோரும் மாந்தரே. உள்ளத்தாலும் செயலாலும் மாந்தர் களாவதற்குத் தடுமாறாத குமுகாயச் சிந்தனை வேண்டுமென்கிறார் பாவேந்தர் எழுதும் முறைக்கும் அவர் வழிகாட்டுவார். சிறிதளவே எழுதி னாலும் நிறையப் படிக்கவேண்டும் என்பார். பிறரை நகலெடுப்பது அறிவு வறுமையின் அடையாளமாம்! புதிய அறிவையும் புதிய மனத்தை யும் பெறத் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று அறிவுறுத்துவார். சிறிதெழுதத் தேடி நிறையப் படிப்பாய்! பிறர்அடி பார்த்துப் பிழைப்போன் - வறியன்! கருவி விருப்பாய் அறிவுநிலம் கல்லி வருவி புதிய மனம். (பக். 334) புதிய மனம் பெற்றிருந்த பாவேந்தர் நீண்ட வாழ்நாளையும் பெற்றிருந்தார். குமுக மாற்றத்திற்கான எல்லாத் துறைகளையும் சிந்தித்தார். அவற்றை எழுத்தாக்கினார். தமக்குப் பின் பெரிய எழுத்தாளர் படையை பாவேந்தர் பரம்பரை எனத் திரளச் செய்தார். கடவுள் சிந்தனையோடு எழுந்து, காந்தியச் சிந்தனையால் வளர்ந்து, பெரியாரியச் சிந்தனையாளராக மலர்ந்தார். கடவுளை மதங்களைக் காப்பவர் என்போர் கருணை யிலாநிலம் பொருள்நனி கொண்டோர் உடைமை பறித்தஇக் கொடியரில் கொடியர் ஒழிந்தபின் பேநலம் உறுவர்இவ் வுலகோர் முதுகில் அமர்ந்த முதலாளி மூளையில் அமர்ந்த மதவாதி (பக். 347) இரு தரப்பையும் துடைத்தெறிவதன் மூலமாக உலகம் நலமடை யும் என்பதை இவ்வரிகளால் பாரதிதாசன் தெளிவுபடுத்துகிறார். மக்கள் வாழ்வைப் பின்னோக்கி இழுக்கும் ஒவ்வொன்றையும் பாரதிதாசன் கேள்விக்கு உள்ளாக்கினார். கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே கூலிமக்கள் அதிகரித்தார் ... (பக். 14) என்று உழைப்போரின் வறுமைக்குக் காரணம் கூறினார். பாதிக்கு nதபசிvன்றுரைத்jல்செய்தgவத்தைக்fரணம்fட்டுவார்- kதtதத்தைcம்மிடம்Úட்டுவார்- gதில்Xதிநின்wல்படைTட்டுவார்(பக்.73) தலையெழுத்தையும் பாவத்தையும் காரணமாகக் காட்டி, வறுமையைச் சுமக்கச் சொல்லும் மதவாத ஏமாற்றைத் தோலுரித்தார். நன்றிக்கு வாழ்ந்திட வேண்டும் - உரம் வேண்டும் - திறம் வேண்டும் - உன் நாட்டிற்கே நீவாழ வேண்டும் - நம் ஞாலப் பெரியார் செல்லும் பாதை யினை விடாதே விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்! (தொ. 18; பக். 47) காரணம் கேட்டுக் கடைபிடிக்கச் சொல்லும் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் அணிவகுக்குமாறு வலியுறுத்தினார். வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற் கேஅடை யாளம் - வாய் விட்டிசைப் பீர்கள்சுயமரி யாதைஎக் காளம். (பக். 160) தன்மான இயக்கத்தின்கீழ் தமிழர்களை ஒன்றுகூடச் சொன்ன பாரதிதாசன், தாமும் ஒருவராய் நின்று வாழ்நாள் இறுதிவரை பணி யாற்றினார். பகுத்தறிவுத் துலாக்கோலில் பழந்தமிழ் இலக்கியங்களையும் எடைபோட்டுக் காட்டியது பாவேந்தர் செய்த புதுமை! திருமூலர் பாடியவை 3000 பாடல்கள் எனச் சேக்கிழார் பாடி யுள்ளார். திருமந்திரத்தில் இப்போது 47 பாடல்கள் கூடுதலாக உள்ளன. அவை இடைச் செருகல்தானே என்று அவர் வினா எழுப்பினார். ‘மூவா யிரம்சொன்னார் மூலன்என்றார் சேக்கிழார் பாவேது மேல்நாற்பே னேழ்? (பக். 176) திருமந்திரத்தின் முதற்பாடல் ஒன்றவன்தானே எனத் தொடங்கும் என்கிறார் சேக்கிழார்! ஐந்து கரத்தனை என இப்போதுள்ள முதற் பாடல் இடைச்செருகல் அல்லவா! திருமூலர் காலத்தில் விநாயகர் வணக்கம் ஏது? இலக்கிய உலகிற்குப் பாவேந்தர் புதுக் குருதி பாய்ச்சினார். ஒன்றவன் தானே எனல்என்று சேக்கிழார் நன்று நவின்றாரன் றோ? ஐந்து கரத்தனை ஆனதொரு செய்யுள்செய்து முந்தவைத்தார் மூலன்நூ லில் (பக். 176) எல்லோரையும் படைத்தவர் கடவுள் என்றால், கோவிலுள் நுழையும் வலிமையும் எல்லோருக்கும் உண்டு! நாயும் காக்கையும் நுழையும் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதைத் தடுக்கிறார் களே! நாயை விடவா அவர்கள் கேவலம்? என பாவேந்தர் கேட்டார். குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? (பக். 139) தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு எனத் தனிநூலே படைத்தார். அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் (பக். 83) பெண்களைப் புதுமைப் பெண்களாக்க விரும்பினார் பாவேந்தர். தொழிலாளர், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் என எந்தப் பிரிவினர் ஒடுக்கப்பட்டாலும் பாவேந்தர் பாடல் உரிமைக் கனல் கக்கியது. ஒடுக்குமுறை உலகத்தின் எந்த மூலையில் எழுந்தாலும் பாவேந்தர் எதிர்ப்புக் குரல் பாட்டாய்க் கனன்றது. வியத்நாமில் அமெரிக்கா நடத்திய அட்டூழியமும், பாவேந்தரின் எதிர்ப்புக்குத் தப்பவில்லை. அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள் ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை (பக். 313) இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா - பாவேந்தருக்கு வேடனாகத் தெரிந்தார். திபேத்து வேடனார் இந்தியா வந்தார் (பக். 380) என்று குருவிகளை எச்சரித்தார். உண்மையை உணர்த்துவதும் பரப்புவதும் கடினம் என்பதை உணர்ந்த அவர், போகும் போக்கில் கூறினார். பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு (பக். 308) காலால் நடக்கும் உண்மையைவிட, சிறகாய் பறக்கும் பொய் விரைவாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்! உண்மையைச் சார்ந்து நிற்போருக்கு, உழைக்கும் நெருக்கடி கடுமையாய் இருப்பது இயற்கை! சமுதாயம் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்ற முனையும் வேகத்துடன் வெளிப்பட்டவை பாவேந்தர் பாடல்கள்! அதற்காக அவர் ஏற்ற எதிர்ப்பும் இழப்பும் ஏராளம். அவற்றை இத் தொகுப்பில் ஒன்றுதிரட்டி பார்ப்பது இதுவரை கிடைக்காத வாய்ப்பு. தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியன் பாவேந்தரின் படைப்புகள் அனைத்தையும் பாவேந்தம் என 25 தொகுப்புகளாக இளங்கணி பதிப்பகம் வழி வழங்க முன்வந் திருப்பது தமிழுலகம் பெற்ற பேறு! சமுதாயம் சார்ந்த பாவேந்தரின் பாடல்கள் அடங்கிய இத் தொகுப்பு புதிய உலகை உருவாக்கும் சிந்தனையைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும்! - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கிநூழீஞ் றீஜீஹமூர்ஙூ குமீக்ஷீயுகூந்) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (ஸசுஙிபீகுளிட்கி ஹகுமூர்கூயு) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! (கீகுட் கிகுதீநூக்ஷி-ஸநூணீபிகீகுங் கீநூட்க்ஷி) 15. இதயம் எப்படியிருக்கிறது? (யகூஏகிஞ் ரூபுமீக்ஷீஹிகுதுகிஞ்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (நிகுங்கிணூங் ஸ்ஙீரகூநி கிதீக ப்ஙுரூ றுஹிஷீந்ஒ) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்...vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiii இலக்கியப் பெரியார் பாவேந்தர்! xv சமுதாயம் 1. உலக ஒற்றுமை 3 2. பேரிகை 4 3. தளை அறு 5 4. வாழ்வில் உயர்வு கொள் 6 5. மாண்டவன் மீண்டான் 8 6. ஆய்ந்துபார் 10 7. மானிட சக்தி 12 8. முன்னேறு 13 9. உலகப்பன் பாட்டு 14 10. உலகம் உன்னுடையது 16 11. சாய்ந்த தராசு 18 12. சகோதரத்வம் 20 13. சேசு பொழிந்த தெள்ளமுது 22 14. புத்தகசாலை 25 15. வாளினை எடடா 27 16. வீரத்தமிழன் 28 17. சைவப் பற்று 29 18. எமனை எலி விழுங்கிற்று 31 19. ஏசுநாதர் ஏன் வரவில்லை 33 20. கடவுள் மறைந்தார் 34 21. உன்னை விற்காதே 35 22. பத்திரிகை 37 23. யாத்திரை போகும் போது 39 24. பூசணிக்காய் மகத்துவம் 39 25. சுதந்தரம் 40 26. பெண்களைப் பற்றிப் பெர்னார்ட்ஷா 41 27. கைம்மைப் பழி 42 28. கைம்மைக் கொடுமை 44 29. மூடத் திருமணம் 46 30. எழுச்சியுற்ற பெண்கள் 48 31. குழந்தை மணத்தின் கொடுமை 50 32. பெண்ணுக்கு நீதி 51 33. கைம்பெண் நிலை 53 34. இறந்தவன்மேற் பழி 54 35. கைம்மைத் துயர் 55 36. கைம்மை நீக்கம் 56 37. தவிப்பதற்கோ பிள்ளை? 57 38. ஆண் குழந்தை தாலாட்டு 60 39. நம் மாதர் நிலை 62 40. பெண் குழந்தை தாலாட்டு 63 41. கூடித் தொழில் செய்க 64 42. தொழிலாளர் விண்ணப்பம் 66 43. வியர்வைக் கடல் 68 44. நீங்களே சொல்லுங்கள் 70 45. புதிய உலகு செய்வோம் 72 46. பலிபீடம் 73 47. பெற்றோர் ஆவல் 74 48. பெண் கல்வி 75 49. தந்தை - பெண்ணுக்கு 76 50. தாலாட்டு 77 51. வெற்றிலை வேண்டுமா? 80 52. ஆண் பெண் நிகர் 81 53. பெண்கள் கடன் 82 54. அச்சந்தவிர், மடமை நீக்கு 83 55. பறக்கும் மிளகு 84 56. கொசு! உஷார் 85 57. சென்னையில் வீட்டு வசதி 86 58. ஏற்றப்பாட்டு 87 59. அம்மானை ஏசல் 88 60. அண்ணியை ஏசல் 89 61. பழய நினைப்பு 90 62. சிறுத்தையே வெளியில் வா 91 63. தீவாளியா? 92 64. அறம் செய்க 93 65. கற்பனை உலகில் 94 66. குழந்தை 96 67. குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை 97 68. கடவுளுக்கு வால் உண்டு 98 69. மலையிலிருந்து 99 70. எந்த நாளும் உண்டு 100 71. தலையுண்டு செருப்புண்டு 101 72. எண்ணத்தின் தொடர்பே 102 73. சங்கங்கள் 103 74. குடியானவன் 106 75. வாழ்வு 110 76. கொட்டு முரசே 111 77. மடமை ஓவியம் 112 78. நாடகம், சினிமா நிலை 113 79. படத்தொழிற் பயன் 115 80. பெண்குரங்குத் திருமணம் 117 81. கற்பின் சோதனை 118 82. அன்னையின் ஆவல் 119 83. பூத்தொடுத்தல் 120 84. புறாவே 121 85. பந்தாடல் 122 86. தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு 123 87. ஆலய உரிமை 137 88. ஞாயமற்ற மறியல் 141 89. திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் (el¤J« Kiw) 144 90. ஒழுக்கம் இலாதவர் அவர்கள் 151 91. நீ ஏன் வீணான பாதையில் 152 92. அறிவு கெட்டவன் 153 93. காதலர்க்கு நான் 154 94. துணைபிரிந்த பெண்ணாள் 155 95. ஆளனில்லாத வேளையில் 156 96. இறந்தார் கணவர் 157 97. வாணிகத்தை அரசினரே நடத்த வேண்டும் 158 98. குரங்காட்டி 159 99. சுயமரியாதை எக்காளம் 160 100. அமைதி யுலகம் 161 101. மதம் எதற்கு? 163 102. சாதிகள் இல்லை 164 103. அரசியல் வகையின் அயல்மொழிப் பெயர்கள் 165 104. நாத்திகன் 166 105. நல்ல மாமி 168 106. பாரதிதாசன் நல்வழி 169 107. தச்சுக்காரனும் பிச்சைக்காரனும் 171 108. உலகம் உன்உயிர் உன் உயிர் இவ்வுலகம் 172 109. உழவன் முதற்கேள்வி 174 110. யானைமுகன் 175 111. துணைவர் இலக்கணம் 177 112. திருவரங்கப்பெருமாள் செத்த பத்து 180 113. எட்டி கரும்பாகாது 182 114. பெண் 184 115. சாதி புதைந்த மேட்டில் மாது புதைந்தாள் அழகன் மார்பிலே 185 116. அன்புத் திருமணம் 188 117. பெண்கள் பாட்டு 189 118. தறித் தொழிலாலே 191 119. அன்னை 192 120. மக்கட் பிறப்பு 193 121. கைத்தறி ஆடை 194 122. உங்கள் தெரு கெட்ட தெரு 195 123. கலை எது? கலைப்பொருள் எது? 196 124. குரங்கிலிருந்து மனிதனா? மனிதனிலிருந்து குரங்கா? 197 125. புதுப்படைப்பு 199 126. மாடு மக்கள் ஊர்தி 200 127. வீட்டுத் தோட்டப் பூங்கா 202 128. ஏழையின் குடிசை 203 129. இரட்டைப் பேறு 204 130. குவட்டாவில் கூட்டக் கொலை 205 131. அதிட்டம் பார்ப்பானுக்கு 209 132. மூட நம்பிக்கை 210 133. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது 212 134. எது கலை 213 135. ஒழுக்கம் விழுப்பந்தரும் 214 136. நிலையானது புகழ் ஒன்றே 215 137. கையேந்துவார் மகிழ்ச்சி கடவுள் மகிழ்ச்சி 216 138. நம்பிக்கை வைத்தான் 218 139. எவர்சில்வர் ஏனம் 220 140. ஏய்க்கின்றாரே 221 141. சாவதற்கு மருந்து உண்டோ 222 142. நலம் தேடு 224 143. ஒற்றுமைப் பாட்டு 225 144. கருத்தடை மருத்துவமனையில் ஒருத்தியின் வேண்டுகோள் 226 145. பாரிசு விடுதலை விழா 227 146. தொழில் 230 147. மிடிமை தீரக் கடமை புரிவீர் 231 148. மக்கள் நிகர் 232 149. உழைப்பவரும் ஊராள்பவரும் 233 150. புத்துணர்வு பெறுவீர் 234 151. சீனாக்காரன் தொலைந்தான் 235 152. அழைப்பு 236 153. குடியரசில் இதுவோ கதி 238 154. இராசாசி வயிற்றெரிச்சல் 239 155. வலை விரித்தான் ஆச்சாரி 241 156. வறுமை ஒழிப்பு 242 157. வீடுண்டு விளக்கில்லை 243 158. சாதி உண்டு 244 159. படித்தவன் அழுகை 245 160. தீமை தீமை 246 161. தொண்டர் படைப்பாட்டு 248 162. அன்னை திருமுடி வாழ்க 249 163. வெளியேறு 250 164. குல்லாய் போட்டான் தில்லிக்காரன் 251 165. எல்லாம் ஆரியர் கரடிகள் 253 166. முதலையோடு பார்ப்புகளும் வந்தனர் கெட்டது பிரஞ்சிந்தியா 255 167. உருசியாவிலும் - இந்தியாவிலும் 256 168. அன்னை குழந்தைக்கு 257 169. கல்வி பயில் 259 170. நானடா 260 171. தீர்த்துக்கட்டு 262 172. மக்கள் உணர்வு பெற வேண்டும் 263 173. பசுத்தோல் போர்த்த புலி 265 174. கட்டாயக் கல்வி 266 175. கிழிந்த விண்ணப்பம் 267 176. கெட்ட மாணவரிடம் ஒற்றுமையா? 268 177. காதலர்க்கு நான் 269 178. பெண்டாட்டி நான் 270 179. பெண்கள் காமம் கழிக்கும் கலயமா? 271 180. முதலாளி 272 181. தொழிலாளி 273 182. தொழிலே எழில் 274 183. பொதுவுடைமைக்கு நான் பகைவன்? 276 184. தமிழர்க்கே சலுகை வேண்டும் 278 185. சீனாவை எதிர்ப்பது தமிழர் கடன் 279 186. வருக போரே 281 187. சூயென் லாய் சீனரின் நோய் 282 188. லம்பாடி வேண்டாம் 283 189. தொட்டிலிற் பிள்ளை 284 190. அன்னை மகிழ்ச்சி 285 191. வெள்ளாட்டில் சிவம் இல்லையா? 286 192. முடியரசு வீழ்ந்து குடியரசெழுந்தது 287 193. பெரியார் முன் சிறியார் பெற்ற பரிசு 290 194. எதற்கும் உதவாதவன் அரசியலுக்கு 292 195. ஞானியின் திண்டாட்டம் 294 196. வரிசை கெட்ட உருசிய நாடு 296 197. செய்தித்தாள் ஆசிரியர் கூட்டம் 298 198. கோட்சே கூட்டத்தின் கூற்றுக்கு மாற்று 299 199. சம்பத்து முயற்சி 301 200. விடியா விடுதலை விடிவ தெந்நாள் 302 201. ஆளவந்தார் 304 202. மான மறத்தி 305 203. யாருக்கு வாக்குச் சீட்டு? 307 204. பொய்க்குச் சிறகுண்டு 308 205. கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார் 309 206. ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் 311 207. வியத்நாமிலிருந்து விலகுக எச்சரிக்கை 313 208. பெற்றவள் மகிழ்வு 315 209. வலியார் இளையாரை வாட்டுவ தெங்கே 316 210. வீதிக் கழகு வீட்டிற் கழகு 317 211. வெண்ணிலாவில் தமிழப்பெண் 318 212. தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை 319 213. அத்தர் வணிகர் 322 214. அலுவலாளர் வேலை நிறுத்தம் 322 215. சென்னையும் வேலை நிறுத்தமும் 323 216. இரிசன் அழகன் 323 217. கும்பகோண மகாமகம் 324 218. உடைத் திருத்தம் 326 219. தெய்விகத் தாய்நாடு 327 220. பெண்களே! 330 221. பெருமாள் கோயில் தெருவில் அலார் 332 222. அமரிக்கரைப் பார்! உருசியரைப் பார் 332 223. முலிம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் 333 224. அறிவை ஆசையால் தோண்டினால் புதிய மனம் உண்டாக்கும் 334 225. நீ ஒரு பாவாணன் 334 226. மாணவர்க்கு உறங்கும் நேரந்தான் ஓய்வு நேரம் 335 227. ஆளவந்தார் முதற்கடன் கல்வி அளிப்பது 335 228. நினைவாற்றல் வேண்டும் 336 229. எழுத்தை அழகாய் எழுது 336 230. கம்மாளன் பிள்ளை 337 231. செத்த பிள்ளையை ஆற்றில் எறிவது! 337 232. மகளிர் ஒழுக்கம் 338 233. மானம் மறையா மெல்லுடை 339 234. சாராய விற்பனை 340 235. தச்சுக் கலைத்திறம் 340 236. நல்லவர் ஆண்ட புதுவையிலே நரிகளுக்கே இன்னும் நாட்டாண்மையா 341 237. உருசி உதைப்பும், அமரிக்கா அதைப்பும் 342 238. உருசிக்கும் அமெரிக்காவுக்கும் - நாம் கூறும் அமைவு 342 239. மக்கட்குத் தொல்லையில்லாத வழி 343 240. உலகப்போர் மூட்டலின் உயிர்விடுதல் நன்று 343 241. சாகாமைக்கு ஒழுக்கம் காரணம் 344 242. சமூகத் திருத்தம் 345 243. கல்வி நீரோடை 346 244. தொழிலாளர் தோழமைப் பயன் 347 245. பிழைப்புக்கு வழி 348 246. தொழிலாளர் கேள்வி 349 247. தறிநெய்வோர் தவிப்பு (1) 351 248. தறிநெய்வோர் தவிப்பு (2) 352 249. தொழிற்கல்வி வேண்டும் 354 250. நண்பனுக்குக் கடன்படும் தீமையுணர்த்தல் 355 251. படியாமை நினைந்து வருந்தல் 356 252. இனாம் ஜோதிஷம்! 357 253. உலகின் இலக்ஷியம் 358 254. அமுதூட்டி அறிவூட்டும் கோயில் 359 255. அழகப்பர் அழகுரை 361 256. எதற்கெடுத்தாலும் சும்-மா எதிர்ப்பாம் எதிலும் கலகம் செய்யும் பும்-ம புனை சுருட்டு 362 257. மனத்துக்கண் மாசிலன் 363 258. இந்நாள் காங்கிரசு 368 259. நீவிர் எந்தக் கட்சி? 369 260. மறைப்பதென்ன? 371 261. ஓவியக் கலைத்திறம் 372 262. பம்பாய் ஆர்ச் பிஷப்புக்கு! 372 263. நேரு 373 264. கண்ணதாசர் கவலை 373 265. பெரியாரின் (gŠrÓy«) ஐந்தொழுக்கம் 374 266. அவர் யாவர்? 375 267. கலியபெருமாள் எழுந்தருளிய பெரமலூர் பெற்ற பேறு! 378 268. திபேத்து விடுதலை 380 269. அறிவும் கலையும் 382 270. ஏடும் எண்ணமும் 382 271. சொத்தும் சுவடியும் 382 272. பேறும் வேறும் 382 273. தன்னலம் 383 274. அறமும் திறமும் 383 275. ஐந்தறிவும் மெய்யுணர்வும் 383 276. உலக்கைக் கொழுந்தே 384 277. நன்னெறியில் வளர்வது திறமை 384 278. சின்ன பீடி 384 279. குழந்தைத் திருமணம் 385 280. பொருள் வரிசை 386 281. ராஜா நலங்கிடவா 387 282. பாரத தேவியிடம் குடியர் தம் தெளிவு கூறல் (1) 389 283. பாரத தேவியிடம் குடியர் தம் தெளிவு கூறல் (2) 391 284. இயற்கைத் தேவியின் கோபம் 393 285. தாயைப் பிரிந்திருந்த குழந்தை! 395 286. யுத்த ஆயத்தம் 396 287. தாய் தனயனுக்குரைத்தல் 397 288. பாம்புப் பாட்டு 398 289. பாரதிதாசன் ஆத்திசூடி 400  சமுதாயம் 1. உலக ஒற்றுமை தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண் டேன்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்! தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச் சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்! ஆயுதங்கள் பரிகரிப்பார் அமைதி காப்பார் அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க வாயடியும் கையடியும் வளரச் செய்வார்! மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்! தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே. - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.121, 1938; சுதந்தரச் சங்கு, 15.12.1933 2. பேரிகை (நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும் - என்ற பாரதியார் பாட்டிற் சிறிது பேதம்) துன்பம் பிறர்க்கு! நல்இன்பம் தமக் கெனும் துட்ட மனோபாவம் அன்பினை மாய்க்கும்; அறங்குலைக் கும்;புவி ஆக்கந் தனைக்கெடுக்கும்! வன்புக் கெலாம்அது வேதுணை யாய்விடும் வறுமை யெலாம் சேர்க்கும்! இன்பம்எல் லார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை எங்கும் முழுக்கிடுவாய்! தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத் தாரணி என்றஎண்ணம் தீமைக் கெல்லாம் துணையாகும்; இயற்கையின் செல்வத் தையும்ஒழிக்கும்! தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும் சித்தத் திலேசேர்ப்போம்! க்ஷேமம்எல் லார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை செகம்மு ழக்கிடுவாய்! நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும் நச்சு மனப்பான்மை, தொல்புவி மேல்விழும் பேரிடி யாம்; அது தூய்மை தனைப் போக்கும்! சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம் சூழத் தகாதுகண்டாய்! செல்வங்கள் யார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை திக்கில் முழக்கிடுவாய்! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப. 122, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், யுவ ஆனி - ஆடி, 1935 3. தளை அறு (ஏற்ற ராகத்தைச் சேர்த்துப் பாடுக) கடவுள்கடவுள் என்றெதற்கும் கதறுகின்ற மனிதர்காள்! கடவுள்என்ற நாமதேயம் கழறிடாத நாளிலும் உடைமையாவும் பொதுமையாக உலகுநன்று வாழ்ந்ததாம் கடையர் செல்வர் என்றதொல்லை கடவுள்பேர் இழைத்ததே! 1 உடைசுமந்த கழுதைகொண் டுழைத்ததோர் நிலைமையும் உடைமைமுற்றும் படையைஏவி அடையும்மன்னர் நிலைமையும் கடவுளாணை யாயின், அந்த உடைவெளுக்கும் தோழரைக் கடவுள்தான்முன் னேற்றுமோ? தன் கழுதைதான் முன்னேற்றுமோ? 2 ஊரிலேனும் நாட்டிலேனும் உலகிலேனும் எண்ணினால் நீர்நிறைந்த கடலையொக்கும் நேர்உழைப் பவர்தொகை! நீர்மிதந்த ஓடமொக்கும் நிறைமுதல்கொள் வோர்தொகை நேரிற்சூறை மோதுமாயின் தோணிஓட்டம் மேவுமோ? 3 தொழிலறிந்த ஏழைமக்கள் தொழில்புரிந்து செல்வர்பால் அழிவிலாமு தல்கொடுக்க அம்முதற்ப ணத்தினால் பழிமிகுந்த அரசமைத்துப் படைகள்தம்மை ஏவியே தொழில்புரிந்த ஏழைமக்கள் சோற்றிலேமண் போடுவார்! 4 நடவுசெய்த தோழர்கூலி நாலணாவை ஏற்பதும் உடலுழைப்பி லாதசெல்வர் உலகைஆண் டுலாவலும் கடவுளாணை என்றுரைத்த கயவர்கூட்ட மீதிலே கடவுள்என்ற கட்டறுத்துத் தொழிலுளாரை ஏவுவோம். 5 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி ப. 123, 1938; குடிஅரசு, 15. 1. 1933 4. வாழ்வில் உயர்வு கொள் பல்லவி ஆனந்தக் களிப்பு சுயமரியாதைகொள் தோழா! - நீ துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! - சுய சரணங்கள் உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய் துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்! அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர் ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப் பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர் பழமை சொன்னால் புதுநிலைநலம் காட்டு. - சுய சேசு முகம்மது என்றும் மற்றும் சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென்றும் பேசி வளர்க்கின்ற போரில் - உன் பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்! காசைப் பிடுங்கிடு தற்கே - பலர் கடவுளென் பார்! இரு காதையும் மூடு! கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட கோயிலென் றால்ஒரு காதத்தி லோடு! - சுய கோயில் திருப்பணி என்பர் - அந்தக் கோயில் விழாவென்று சொல்லியுன் வீட்டு வாயிலில் வந்துனைக் காசு - கேட்கும் வஞ்சகமூடரை மனிதர் என்னாதே! வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ தாயென்ற பாவனை யோடும் - உன் சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். - சுய கடவுள் 1bjhl§»¡ கொடுத்த - பல கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள், கடவுள் புவிக்கவ தாரம் - அந்தக் கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள் 2flîË‹Ãf® தம்பிரான்கள் - ஜீயர் கழுகொத்த பூசுரர், பரமாத்து மாக்கள் கடவுள் அனுப்பிய தூதர் - வேறு கதைகளினாலும் சுகங்கண்ட துண்டா? - சுய அடிமை தவிர்ந்ததும் உண்டோ? அன்றி ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும் மிடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ? குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக் கூட்டத்தை எண்ணாமல், கொடுந்தடி யர்க்கு மடங்கட்டி வைத்த தனாலே - தம்பி! வசம்கெட்டுப் போனது நமது நன்னாடு! - சுய உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ? விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில் விளையாடும் திருடரைச் சாமி என்கின்றார்! அழியாத மூடத் தனத்தை - ஏட்டில் அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்! - சுய - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.129, 1938; புதுவை முரசு, 8.12.1930; 1. துவக்கிக் - பு. மு. இதழில்; 2. கடவுள் - பு. மு. இதழில் 5. மாண்டவன் மீண்டான் ஆற்றோரம் தழைமரங்கள் அடர்ந்தஒரு தோப்பில் அழகான இளமங்கை ஆடுகிறாள் ஊஞ்சல் சேற்றுமண்ணால் திண்ணையிலே உட்கார்ந்து பொம்மை செய்துவிளை யாடுகின்றான் மற்றுமொறு பிள்ளை! ஏற்றிவைத்த மணிவிளக்கின் அண்டையிலே பாயில் இளஞ்சிசுவும் பெற்றவளும் கொஞ்சுகின்றார்! ஓர்பால் ஏற்றகடன் தொல்லையினால் நோய்கொண்ட தந்தை ஏ! என்று கூச்சலிட்டான்; நிலைதவறி வீழ்ந்தான்! 1 அண்டைஅயல் மனிதரெல்லாம் ஓடிவந்தார் ஆங்கே அருந்துணைவி நாயகனின் முகத்தில்முகம் வைத்துக் கொண்டைவிழிப் புனல்சேர அழுதுதுடித் திட்டாள் கீழ்க்கிடந்து மெய்சோர்ந்த நோயாளி தானும் தொண்டையிலே உயிரெழுப்பும் ஒலியின்றிக் கண்ணில் தோற்றமது குறைவுபடச் சுவாசம்மேல் வாங்க மண்டைசுழ லக்கண்ணீர் வடித்துவடித் தழுதான் மனமுண்டு வாயில்லை என்செய்வான் பாவம்! 2 பேசாயோ வாய்திறந்து பெற்றெடுத்த உன்றன் பிள்ளைகளைக் கண்கொண்டு பாராயோ என்றன் வீசாத மணிஒளியே, என்றுரைத்தாள் மனைவி விருப்பமதை இன்னதென விளம்பிடுக, என்று நேசரெல்லாம் கேட்டார்கள்: கேட்டநோ யாளி நெஞ்சினையும் விழிகளையும் தன்னிலையில்ஆக்கிப் பேசமுடி யாநிலையில் ஈனசுரத் தாலே பெண்டுபிள்ளை பெண்டுபிள்ளை என்றுரைத்தான் சோர்ந்தான்! 3 எதிர்இருந்தோர் இதுகேட்டார்; மிகஇரக்கங் கொண்டார்; இறப்பவனைத் தேற்றவெண்ணி ஏதேதோ சொன்னார் இதுதேதி உன்கடனைத் தீர்க்கின்றோம் என்றார் இருந்தநிலை மாறவில்லை, மற்றொருவன் வந்து மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க்கா ருக்கு மக்களுக்குப் புவிப்பொருள்கள் பொது வென்று சர்க்கார் பதிந்துவிட்டார். இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றிப் பயமில்லை! கவலையிலை! மெய்யண்ணே! மெய்மெய்!! 4 என்றுசொன்னான் தேற்றுமொழி,இறக்கின்wமனித‹ இறக்குங்காšகவலையின்¿இறக்கட்டு«என்று! நன்றிந்த வார்த்தை அவன் காதினிலே பாய்ந்து நலிவுற்ற உள்ளத்தைப் புலியுளமாய்ச் செய்து சென்றஉயிர் செல்லாமல் செய்ததனால் அங்குச் செத்துவிட்ட அம்மனிதன் பொத்தெனவே குந்தி இன்றுநான் சாவதற்கே அஞ்சவில்லை என்றான்! இறப்பதெனில் இனியெனக்குக் கற்கண்டென் றானே! 5 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.131 1938; efuöjன்8.4.1934 6. ஆய்ந்துபார் (காந்தியோ gரமஏழைrªயாசி எ‹wமெ£டு)rhªâahš உலகம் தழைப்பது நன்றா? சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா? மாந்தரிற் சாதி வகுப்பது சரியா? மக்கள்ஒரே குலமாய் வாழ்வது சரியா? 1 வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா? மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா? ஆய்ந்துபார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா? அண்டை வீட்டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா? 2 காணுமா னிடரைக் கனம்செயல் முறையா? கடவுள்எனும் மயக்கில் கவிழ்ப்பது முறையா? மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா? வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா? 3 வீணரைப் பணிவது மக்களின் கடனா? மேவும் உழைப்பினிலே ஏவுதல் கடனா? நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா? நல்லறி வென்னும்வழிச் செல்லுதல் பெரிதா? 4 கோயிலுக் கொன்று கொடுத்திடல் அறமா? கோடிகொடுக்கும் கல்வி தேடிடல் அறமா? வாயிலில் வறியரை வளர்த்திடல் அன்போ? மடத்தில் வீணிற்பொருளைக் கொடுத்திடல் அன்போ? 5 நாயிலுங் கடையாய் நலிவது மேலா? நல்லகூட்டுத் தொழில்கள் நாட்டிடல் மேலா? ஓய்வறியார் உறங்க இடந்தரல் உயர்வா? ஊரை வளைக்கும்குரு மார்செயல் உயர்வா? 6 மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா? மாதர் முன்னேற்றத்தால் மகிழ்வது மாண்பா? மேதினி துயர்பட விரும்புதல் இதமா? விதவைக்கு மறுமணம் உதவுதல் இதமா? 7 கோதையர் காதல்மணம் கொள்வது சீரோ? குழந்தைக்கு மணஞ்செய்து கொல்வது சீரோ? போதனையாற் பெண்கள் பொதுவெனல் கனமோ? பொட்டுக்கட்டும் வழக்கம் போக்குதல் கனமோ? 8 பாழ்படும் பழமை சூழ்வது திறமா? பகுத்தறி வால்நலம் வகுப்பது திறமா? தாழ்பவர் தம்மைத் தாழ்த்துதல் சால்போ? தனம்காப்பவர் தங்கள்இனம் காத்தல் சால்போ? 9 ஆழ்வுறும் ஆத்திகம் வைதிகம் சுகமா? அகிலமேற் சமதர்மம் அமைப்பது சுகமா? சூழும் நற்பேதம் தொடர்வது வாழ்வோ? சுயமரி யாதையால் உயர்வது வாழ்வோ? 10 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப. 133, 1938; குடிஅரசு, 26.2.1933 7. மானிட சக்தி (ஆனந்தக் களிப்பு முதலிய மெட்டுகள்) மானிடத் தன்மையைக் கொண்டு - பலர் வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு மானிடத் தன்மையை நம்பி - அதன் வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி! மானிடம் என்றொரு வாளும் - அதை வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும் வானும் வசப்பட வைக்கும் - இதில் வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும். - மானிட மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த வையத்திலே அவன்செய்த வரைக்கும் மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு வல்லமை கேட்டிருந் தால்அதைக் கூறாய்! மானிட மென்பது புல்லோ? - அன்றி மரக்கட்டையைக் குறித்திட வந்த சொல்லோ! கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! - மானிட மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும் மானிடம் என்கின்ற குன்று - தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று மானிட ருக்கினி தாக - இங்கு வாய்ந்த பகுத்தறி வாம்விழி யாலே வான்திசை எங்கணும் நீபார்! - வாழ்வின் வல்லமை மானிடத் தன்மை என்றேதேர்! - மானிட - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.138, 1938; புதுவை முரசு, 7.12.1931 8. முன்னேறு (எண் சீர் விருத்தம்) சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள் தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்! பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப் பேசுசுய மரியாதை உலகுஎனப்பேர் வைப்போம்! ஈதேகாண்! சமூகமே,யாம் சொன்ன வழியில் ஏறுநீ! ஏறுநீ!! ஏறுநீ!!! ஏறே! 1 அண்டுபவர் அண்டாத வகைசெய் கின்ற அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ? கொண்டுவிட்டோம் பேரறிவு, பெருஞ்செ யல்கள் கொழித்துவிட்டோம் என்றிங்கே கூறு வார்கள், பண்டொழிந்த புத்தன், ராமாநு ஜன்,மு கம்மது,கி றீது - எனும் பலபேர் சொல்லிச் சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை! சமூகமே, ஏறுநீ, எம்கொள் கைக்கே! 2 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.136, 1938; புதுவை முரசு, 1.12.1930, 9. உலகப்பன் பாட்டு எண் விருத்தம் பகுத்தறிவு மன்றத்தில் உலகம் என்ற பழையமுத லாளியினை நிற்க வைத்து மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய் யாவும் வெகுகாலத் தின்முன்னே, மக்கள் யாரும் சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்ட துண்டோ? brhš!என்றேன்; உலகப்பன் ஆம்ஆம் என்றான். வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டு முண்டோ வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன்; வாய்ச்சொல் என்றான். 1 குத்தகைக்கா ரர்தமக்குக் குறித்த எல்லை குறித்தபடி உள்ளதுவா என்று கேட்டேன். கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே கூலிமக்கள் அதிகரித்தார், என்ன செய்வேன்! பொத்தல்இலைக் கலமானார் ஏழை மக்கள் புனல்நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்! 2 அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வ மெல்லாம் அடுக்கடுக்காய்ச் சிலரிடம்போய் ஏறிக் கொண்டு சதிராடு தேவடியாள் போல்ஆ டிற்று! தரித்திரரோ புழுப்போலே துடிக்கின் றார்கள் இதுஇந்நாள் நிலைஎன்றான் உலகப் பன்தான்! இந்நிலையி லிருப்பதனால் உலகப் பாநீ புதுக்கணக்குப் போட்டுவிடு பொருளை எல்லாம் பொதுவாக எல்லார்க்கும் குத்த கைசெய்! 3 ஏழைமுத லாளியென்ப தில்லா மற்செய் என்றுரைத்தேன் உலகப்பன் எழுந்து துள்ளி ஆழமப்பா உன்வார்த்தை உண்மை யப்பா அதற்கென்ன தடையப்பா இல்லை யப்பா ஆழமப்பா உன்கருத்து மெய்தா னப்பா அழகாயும் இருக்குதப்பா நல்ல தப்பா தாழ்வுயர்வு நீங்குமப்பா என்று சொல்லித் தகதகென ஆடினான் நான்சி ரித்து 4 ஆடுகின்றாய் உலகப்பா! யோசித் துப்பார்! ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பா ரப்பா! தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன் செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான். ஓடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர் உதையப்ப ராகிவிட்டதால் ஓர்நொ டிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப் பாநீ! 5 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.137, 1938; புதுவை முரசு, 26.10.1931 10. உலகம் உன்னுடையது அகவல் பள்ளம் பறிப்பாய். பாதா ளத்தின் அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக! பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து! தோளையும் உதட்டையும் தொங்கவை; ஈன உளத்தை, உடலை உயிரைச் சுருக்கு! e¡»¡ Fo!அதை நல்ல தென்றுசொல்! தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்துபோ! குனிந்து தரையைக் கௌவி ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு! bgh£L¥ ó¢ána ò‹ik¤ njiuna mG!இளி! அஞ்சு! FÅ!பி தற்று! கன்னங் கருத்த இருட்டின் கறையே தொங்கும் நரம்பின் தூளே, இதைக்கேள்; மனிதரில் நீயுமோர் மனிதன்! மண்ணன்று; இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்! தோளை உயர்த்துச் சுடர்முகம் தூக்கு! மீசையை முறுக்கி மேலே ஏற்று! விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்! நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை! உன்வீடு - உனது பக்கத்து வீட்டின் இடையில் வைத்த சுவரை இடித்து, வீதிகள் இடையில் திரையை விலக்கி நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு! வானை இடிக்கும் மலைமேல் ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்! ஏறி நின்று பாரடா எங்கும்; எங்கும் பாரடா இப்புவி மக்களைப் பாரடா உனது மானிடப் பரப்பை! பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்! என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்! அறிவை விரிவுசெய் அகண்ட மாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை! அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு. மானிட சமுத்திரம் நானென்று கூவு! பிரிவிலை எங்கும் பேத மில்லை உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்! புகல்வேன்; உடைமை மக்களுக் குப்பொது! புவியை நடத்து, பொதுவில் நடத்து! வானைப் போல மக்களைத் தாவும் வெள்ள அன்பால் இதனைக் குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.139, 1938 11. சாய்ந்த தராசு (தேவகி மைந்தனான கண்ணனை என்ற மெட்டு) பல்லவி வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி மக்களெல்லாம் ஒப்புடையார்! அநுபல்லவி ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ? - வா கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ? - வா சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத் தீர்கஎனும் இந்த லோகமே - உரு அற்றொழிந் தாலும்நன் றாகுமே! - வா காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன் காணத்தகுந்தது வறுமையாம் - அவன் பூணத் தகுந்ததும் பொறுமையாம்! - வா அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத வன்மை வளர்த்தனர் பாரிலே - அதன் பின்புகண் டோம்இதை நேரிலே - வா மக்கள் பசிக்க மடத்தலை வர்க்கெனில் வாழை யிலைமுற்றும் நறுநெய்யாம் - இது மிக்குயிர் மேல்வைத்த கருணையாம். - வா கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும் கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு நோயினிலே மக்கள் மாய்கின்றார். - வா கோரும் துரைத்தனத்தாரும் பெரும்பொருள் கொண்டவர்க் கேநலம் கூட்டுவார் - உழைப் போரிடமே கத்தி தீட்டுவார். - வா மக்களெல்லாம் சமமாக அடைந்திட மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி மிக்கவரின் தொகை கொஞ்சமோ? - வா - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.141, 1938 12. சகோதரத்வம் பல்லவி மகாகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி அருளிய அன்னை அன்னை அன்னை - ஆடுங்கூத்தை நாடச் செய்தாள் என்னுடன் என்ற பாட்டின் மெட்டு உறுதி உறுதி உறுதி ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கே - இறுதி! - உறுதி அநுபல்லவி உறவினர் ஆவார் ஒருநாட்டார் - எனல் - உறுதி சரணங்கள் பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப் பிழைநீக்குவதே உயிருள்ளாரின் கடமை நம்மிற் குறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங்குங்கள் - உங்கள் குகையினை விட்டே வெளிவருவீர்சிங் கங்காள்! - உறுதி நாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை - நாமே நம்பித் தேடிக் கொண்டோம் மீளாப் பழியை - நாட்டின் கோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக் குற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள். -உறுதி வாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே - நம்மில் வஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை - புவியில் வாழ்வோ ரெல்லாம் சமதர் மத்தால் வாழ்வோர் மற்றும் வரிதிற் றாழ்வோர் பேதத்தாலே தாழ்வோர். - உறுதி தேசத்தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத் தெளியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் - மிகவும் நேசத்தாலே நாமெல்லோரும் ஒன்றாய் - நின்றால் நிறைவாழ் வடைவோம் சலியாவயிரக் குன்றாய்! - உறுதி பத்துங் கூடிப் பயனைத் தேடும் போது - நம்மில் பகைகொண் டிழிவாய்க் கூறிக் கொள்ளல் தீது - நம் சித்தத்தினிலே இருளைப் போக்கும் சொல்லைக் - கேளீர் செனனத் தாலே உயர்வும் தாழ்வும் இல்லை. - உறுதி - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.151, 1938 13. சேசு பொழிந்த தெள்ளமுது ஆதிக்கு முன்னம் அநாதியும் என்னடி சிங்கி! அந்தக் கருக்குழி இருளறை சிங்கா - என்ற பாட்டின் மெட்டு மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி தோழி - முன்பு வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர் காதினிக்கும்படி சொன்னசொல் ஏதடி? தோழி - அந்தக் கர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி தோழா - அந்தப் பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி - இந்தப் பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர் ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி - இங்கு ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி? தோழி - அந்த இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன் நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி - சட்டம் நால்வரு ணத்தில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின் ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ? தோழி - அவர்க் கங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் - தோழா. *** சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி - அந்தத் தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப் புல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி - அதைப் போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா - அடி எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்? தோழி - அட இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா - முன்பு வல்லவர் சேசு வகுத்ததுதான் என்ன? தோழி - புவி மக்கள் எல்லாம் சமம் என்று முழக்கினர் தோழா *** ஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர் தோழி - அவர் ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி வேண்டவரும் திருக்கோயில் வழக்கென்ன? தோழி - அட மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா - விரல் தீண்டப் படாதவர் என்பவர் யாரடி? தோழி - இங்குச் சேசு மதத்தினைத் தாபித்த பேர்கள்என் தோழா - உளம் தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி - அவர் சோதரர் யாவரும் என்று முழங்கினர் தோழா. பஞ்சமர் பார்ப்பனர் என்ப தெல்லாம் என்ன? தோழி - இவை பாரத நாட்டுப் பழிச்சின் னத்தின் பெயர் தோழா - இங்குக் கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக் கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி-தினம் நேர்மையில் கோயில் யாபாரம் செய்வது தோழா - இந்த வஞ்சகர்க் கென்ன வழுத்தினர் சேசுநல் தோழி - இன்ப வாழ்க்கை யடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார். நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி - அங்கு நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா - அந்த ஆலயம் சாமி அமைத்தவர் யாராடி? தோழி - மக்கள் அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா - மக்கள் மாலைத் தவிர்த்து வழிசெய்வரோ இனித் தோழி - செக்கு மாடுக ளாக்கித்தம் காலைச் சுற்றச் செய்வர் தோழா - அந்தக் கோலநற் சேசு குறித்ததுதா னென்ன? தோழி - ஆஹா கோயி லென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா. *** M©ikbfhŸ nrR òÉ¡F¥ òǪjbj‹?தோழி - அவர் அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா - அந்தக் கேண்மைகொள் சேசுவின்கீர்த்தி யுரைத்திடு தோழி - அவர் கீர்த்தி யுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா - நலம் தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்? தோழி - அன்று தன்னைப் புவிக்குத் தரும் பெருமானவர் தோழா - அந்த ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில் அன்னியர் தான் என்ற பேத மிலாதவர் தோழா. - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.152, 1938 14. புத்தகசாலை எண்சீர் விருத்தம் தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும் சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில், இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்; இசைகேட்டேன்! மணம்மோந்தேன் சுவைகள் உண்டேன்! மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின் மகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சம்! சனித்ததங்கே புத்துணர்வு! ò¤j f§fŸ jUKjÉ bgÇJ!மிகப் பெரிது கண்டீர்! 1 மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும் மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச் சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும், இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம் இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை; புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில் புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும். 2 தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும். தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும், அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள், அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள், சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்க லைசேர் துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும். 3 நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம் நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும். நூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து நொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும். மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின் முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும். 4 வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும் மரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும், ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள் அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம் நினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும் மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதா யச்சீர் மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்! 5 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.158, 1938; மணிக்கொடி, 8.7.1934 15. வாளினை எடடா (வண்ணம்) வலியோர்சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும்நினைவா? உலகாளஉ னதுதாய்மிக உயிர்வாதை யடைகிறாள்; உதவாதினி ஒருதாமதம் உடனேவிழி தமிழா! கலையேவளர்! தொழில்மேவிடு! கவிதைபுனை தமிழா! கடலேநிகர் படைசேர்கடு விடநேர்கரு விகள்சேர்! நிலமேஉழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்; நிதிநூல்விளை! உயிர்நூல்உரை நிசநூல் மிகவரைவாய்! அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே அவைஏறிடும் விதமேயுன ததிகாரம்நி றுவுவாய்! கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே குகைவாழ்ஒரு புலியேஉயர் குணமேவிய தமிழா! தலையாகிய அறமேபுரி சரிநீதி யுதவுவாய்; சமமேபொருள் ஜனநாயகம் எனவேமுர சறைவாய்! இலையேஉண விலையேகதி இலையேஎனும் எளிமை இனிமேலிலை எனவேமுர சறைவாய் முரசறைவாய்! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.160, 1938 16. வீரத்தமிழன் எண் சீர் விருத்தம் தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா! அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்! குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான் குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்! என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான் இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்! வஞ்சகவி பூஷணனின் அண்ணனென்று தன்னை வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும் நெஞ்சகனை, நல்யாழின் நரம்பதனைத் தடவி நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும் சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர் தமிழரென்பேன் மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்! வேறு வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்! விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்! சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும் காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்! கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்! கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தான் கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.162, 1938 17. சைவப் பற்று (ஏற்ற ராகம் ஏற்றிப் பாடுக) இரும்புப் பெட்டியிலே - இருக்கும் எண்பது லக்ஷத்தையும், கரும்புத் தோட்டத்திலே - வருஷம் காணும் கணக்கினையும், அருந்துணை யாக - இருக்கும் ஆயிரம் வேலியையும், பெரும்வரு மானம் - கொடுக்கும் பிறசொத்துக் களையும், 1 ஆடை வகைகளையும் - பசும்பொன் ஆபரணங்களையும், மாடு கறந்தவுடன் - குடங்கள் வந்து நிறைவதையும், நீடு களஞ்சியங்கள் - விளைந்த நெல்லில் நிறைவதையும், வாடிக்கைக் காரர்தரும் கொழுத்த வட்டித் தொகையினையும், 2 எண்ணி எண்ணி மகிழ்ந்தே - ஒருநாள் எங்கள் மடாதிபதி வெண்ணிறப் பட்டுடுத்திச் சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் - அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பலபேர்கள் - குலவிப் பின்வர முன் நடந்தார்! 3 பட்டு மெத்தை தனிலே - மணமே பரவும் பூக்களின்மேல் தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச் சைவத்தை ஆரம்பித்தார்; கட்டிக் கரும்பினங்கள் - சகிதம் கண்கள் உறங்கிவிட்டார்; நட்ட நடுநிசியில் - கனவில் நடந்தது கேளீர். 4 நித்திரைப் பூமியிலே - சிவனார் நேரில் எழுந்தருளிப் புத்தம் புதிதாகச் - சிலசொல் புகல ஆரம்பித்தார்; இத்தனை நாளாகப் - புவியில் எனது சைவமதை நித்த நித்த முயன்றே - புவியில் நீளப்பரப்பி விட்டாய். 5 மடத்தின் ஆதியெல்லாம் - பொதுவில் மக்களுக் காக்கிவிட்டேன்! திடத்தில் மிக்கவனே - இனிநீ சிவபுரி வாழ்க்கை நடத்துக! என்றே - சிவனார் நவின்றுபின் மறைந்தார். இடிமுழக்கமென்றே - தம்பிரான் எண்ணம் கலங்கிவிட்டார்! 6 தீப்பொறி பட்டதுபோல் - உடலம் திடுக்கிட எழுந்தார்! கூப்பிடு காவலரை - எனவே கூச்சல் கிளப்பி விட்டார். காப்பளிக்க வேண்டும் - பொருள்கள் களவுபோகு மென்றார் மாப்பிளை என்றனுக்கே - இத்ததி மரணம் ஏதுக் கென்றார். 7 சொப்பனத்தை நினைத்தார் - தம்பிரான் துள்ளிவிழுந் தழுதார்! ஒப்பி உழைத்ததில்லை - சிறிதும் உடல் அசைந்ததில்லை! எப்படி நான் பிரிவேன் - அடடா! இன்பப் பொருளையெல்லாம்; தப்பிப் பிழைப்பதுண்டோ - எனது சைவம் எனத் துடித்தார்! 8 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.163, 1938 18. எமனை எலி விழுங்கிற்று அகவல் சர்க்கா ருக்குத் தாசன்நான்! ஓர்நாள் பக்கத் தூரைப் பார்க்க எண்ணி விடுமுறை கேட்டேன். விடுமுறை இல்லை! விடுமுறை பலிக்க நோயை வேண்டினேன். மார்புநோய் வந்து மனத்தில் நுழைந்தது! *** மலர்ந்தஎன் முகத்தினில் வந்தது சுருக்கம்! குண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன. என்பெண் டாட்டி என்னை அணுகினாள். எதிரில் பந்து மித்திரர் இருந்தார். தூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக் காயம் அநித்தியம் என்று கலங்கினார். எதிரில் நிமிர்ந்தேன்; எமன்! எமன்! எமனுரு!! இரு கோரப்பல்! எரியும் கண்கள்!! சுவாசமும் கொஞ்சம் சுண்டுவ தறிந்தேன். சூடு மில்லை உடம்பைத்தொட்டால்! கடிகா ரத்தின் கருங்கோடு காணேன்; கண்டது பிழையோ, கருத்தின் பிழையோ, ஒன்றும் சரியாய்ப் புரிய வில்லை, என்ற முடிவை ஏற்பாடு செய்தேன்! என்கதி என்ன என்று தங்கை சொன்னதாய் நினைத்தேன் விழிகள் சுழன்றன! பேசிட நாக்கைப் பெயர்த்தே Åல்லை. பச்சடங் கிற்றெனப் bபருந்துயர்bகாண்டேன்!இருப்புத் öண்போல்vமன்கைïருந்ததே!எட்டின கைகள் என்னுயிர் பிடிக்க! உலகிடை எனக்குள ஒட்டுற வென்பதே ஒழிந்தது! மனைவி ஓயா தழுதாள்! எமனார் ஏறும் எருமைக் கடாவும் என்னை நோக்கி எடுத்தடி வைத்தது. மூக்கிற் சுவாசம் முடியும் தருணம் நாக்கும் நன்கு நடவாச் சமயம், சர்க்கார் வைத்தியர் சடுதியில் வந்து பக்குவஞ் சொல்லிப் பத்துத் தினங்கள் விடுமுறை எழுதி மேசைமேல் வைத்து வெளியிற் சென்றார். விஷய முணர்ந்தேன். அண்டையூர் செல்ல அவசியம், மாட்டு வண்டி கொண்டுவா என்றேன்! மனைவி எமனிழுக் கின்றான் என்றாள். அத்ததி, சுண்டெலி ஒன்று துடுக்காய் அம்மி யண்டையில் மறைந்ததும் அம்மியை நகர்த்தினேன்! இங்கு வந்த எமனை அந்த எலிதான் விழுங்கி யிருக்கும் என்பதை மனைவிக் குரைத்தேன். வாதவம் என்றாள்! மாட்டு வண்டி ஓட்டம் பிடித்தது! முன்னமே லீவுதந் திருந்தால், இந்நேரம் ஊர்போய் இருக்க லாமே! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.166, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் 1935 19. ஏசுநாதர் ஏன் வரவில்லை தலை, காது, மூக்குக், கழுத்துக், கை, மார்பு, விரல், தாள்என்ற எட்டுறுப்பும் தங்கநகை, வெள்ளிநகை, ரத்தின மிழைத்தநகை, தையலர்கள் அணியாமலும், விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர வேண்டுமென்றே பாதிரி விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை வெறுத்தார்கள் பெண்கள்,புருஷர்! நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப்பே யன்றி நீள்இமைகள், உதடு, நாக்கு நிறையநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க நிலைக்கண் ணாடியும் உண்டென இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள் எல்லாரும் வந்துசேர்ந்தார்; ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே, இனியபாரத தேசமே! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.170, 1938 20. கடவுள் மறைந்தார் மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று வழிநடைச் சிரமம் இன்றி மாபெரிய சிந்தனா லோகத்தை அணுகினேன். வந்தனர் என்எதிரில் ஒருவர். எனைஅவரும் நோக்கியே நான்கடவுள் நான்கடவுள் என்று பலமுறை கூறினார். இல்லைஎன் பார்கள்சிலர்; உண்டென்று சிலர்சொல்வர் எனக்கில்லை கடவுள் கவலை எனவுரைத்தேன். அவர், எழுப்புசுவர் உண்டெனில் எழுப்பியவன் ஒருவனுண்டே இவ்வுலகு கண்டு நீ நானும் உண்டென அறிக என்று ரைத்தார். அவரை நான் கனமாக கடவுளே உமைச்செய்த சிற்பிஎவன்? காட்டுவீர் என்ற வுடனே கடவுளைக் காண்கிலேன்! அறிவியக்கப் புலமை கண்ட பாரத தேசமே! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.171, 1938; சுயமரியாதைச் சுடர், 1931 21. உன்னை விற்காதே (இராகம் : சஹானா ஆதி : தாளம்) கண்ணிகள் தென்னி லங்கை யிராவணன் தன்னையும் தீய னென்னும் துரியனை யும்பிறர் என்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும் இன்று நானவர் ஏற்றத்தைப் பாடுவேன்; இன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில் எத்தனை துரியோதனர் வாழினும் அன்னவர் தம்மைக் கொல்ல முயன்றிடும் அந்தகன் தனைநான் கொல்ல முந்துவேன்! 1 நெஞ்சி லுற்றது செய்கையில் நாட்டுதல் நீச மன்று; மறக்குல மாட்சியாம்! தஞ்ச மென்று பிறன்கையில் தாழ்கிலாத் தன்மை யாவது வீரன் முதற்குணம்! நெஞ்சி லூறிக் கிடந்ததம் பூமியை நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும் பஞ்சை யன்று, துரியன் இராவணன் பார தக்குலம் வேண்டிடும் பண்பிதே! 2 தன்கு லத்தினைத் தூக்கிடும் தாம்பெனச் சகம்சி ரிக்கப் பிறந்தவி பீஷணன் நன்ம னத்தவன் ராமனைச் சார்ந்ததை நல்ல தென்பது ராமன் முகத்துக்காம்! இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும் துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறுவேன்! 3 பாரதத் திருத் தாயெனும் பேச்சிலே பச்சை யன்பு பொழிந்திடு கின்றவர் வீரத் தால்உள மேசெய லாயினோர் விழியி லாதவர் ஊமைய ராயினும் கோரித் தாவுமென் னுள்ளம் அவர்தம்மைக் கொள்கை மாற்றல் திருட்டுத் தனங்காண்! ஓரி போலப் பதுங்கும் படித்தவர் ஊமை நொள்ளை செவிடென்று சொல்லுவேன்! 4 இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில் ஈனர் அஞ்சிக் கிடக்கின்ற நேரத்தில் ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின் உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்வதால், என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே! அன்பி ருந்திடில் நாட்டின் சுகத்திலே ஆயி ரம்கதை ஏன்வளர்க் கின்றனர்? 5 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.172, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் 1935 22. பத்திரிகை அறுசீர் விருத்தம் காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான்! ஊரினை நாட்ட இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறி வாளர் நெஞ்சிற் பிறந்தபத் திரிகைப் பெண்ணே. அறிஞர்தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிக் குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்! நறுமண இதழ்ப்பெண் ணேஉன் நலம்காணார் ஞாலம் காணார். கடும்புதர் விலக்கிச் சென்று களாப்பழம் சேர்ப்பார் போலே நெடும்புவி மக்கட் கான நினைப்பினிற் சென்று நெஞ்சிற், படும்பல நுணுக்கம் சேர்ப்பார் படித்தவர், அவற்றை யெல்லாம் கொடும் என அள்ளி உன்தாள் கொண்டார்க்குக் கொண்டு போவாய்! வானிடை நிகழும் கோடி மாயங்கள், மாநி லத்தில் ஊனிடை உயிரில் வாழ்வின் உட்புறம் வெளிப்பு றத்தே, ஆனநற் கொள்கை, அன்பின் அற்புதம் இயற்கைக் கூத்துத், தேனிதழ் தன்னிற் சேர்த்துத் தித்திக்கத் தருவாய் நித்தம்! சிறுகதை ஒன்று சொல்லிப் பெருமதி யூட்டும் தாளே! அறைதனில் நடந்த வற்றை அம்பலத் திழுத்துப் போட்டுக் கறையுளம் தூய்மை செய்வாய்! களைப்பிலே ஊக்கம் பெய்வாய்! நிறைபொருள் ஆவாய் ஏழை நீட்டிய வெறுங்க ரத்தே. ஓவியம் தருவாய்! சிற்பம் உணர்விப்பாய்! கவிதை யூட்டக் காவியம் தருவாய்! மக்கள் கலகல வெனச்சி ரிப்பு மேவிடும் விகடம் சொல்வாய்! மின்னிடும் காதல் தந்து கூவுவாய் வீரப் பேச்சுக் கொட்டுவாய் கோலத் தாளே! தெருப்பெருக் கிடுவோ ருக்கும் செகம்காக்கும் பெரியோர்க் கும்,கை இருப்பிற் பத்திரிகை நாளும் இருந்திடல் வேண்டும்! மண்ணிற் கருப்பெற் றுருப்பெற் றிளநடை பெற்றுப் பின்னர் ஐந்தே ஆண்டு வரப்பெற்றார், பத்திரிகை நாளும் உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.174, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம் 1935 23. யாத்திரை போகும் போது சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய் சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்கு கூஜா தாள்பென்சில் தீப்பெட்டி கவிகை சால்வை செருப்பு கோவணம் படுக்கை காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்தி ரைக்கே. - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.176, 1938 24. பூசணிக்காய் மகத்துவம் மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்; செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய்நீ! பொய்வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச்செய் துண்டேன்;உன் கைவண்ணம் அங்குக்கண்டேன்; கறிவண்ணம் இங்குக்கண்டேன்! - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.176, 1938 25. சுதந்தரம் தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்குப்; பொன்னே மணியே என்றுனைப் புகழ்வார்; ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்! உன்னுடன் பிறந்த சின்ன அக்கா, வான வீதியில் வந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச் சோலை பயின்று சால காலையில் மேய்ந்தது. வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்! தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்தரம் கிளியே? - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.168, 1938 26. பெண்களைப் பற்றிப் பெர்னார்ட்ஷா எண்சீர் ஆசிரிய விருத்தம் புவிப்பெரியான் ஜார்ஜ்பெர்னார்ட் ஷாவு ரைத்த பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்! உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்ந டத்த உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்! அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்; அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்! குவியுமெழிற் பெண்களுக்கே ஊறு செய்யும் குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை! அவனியிலே ஒருவனுக்கு மனைவி யின்றேல் அவனடையும் தீமையையார் அறியக் கூடும்? கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும் கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த நவையற்ற பெண்களன்றோ விலக்கு கின்றார்! நானிலத்தில் மார்தட்டும் ஆட வர்கள் சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்க தான சூக்ஷுமமும் பெண்களிடம் அமைந்த தன்றோ! கல்வியில்லை உரிமையில்லை பெண்க ளுக்குக் கடைத்தேற வழியின்றி விழிக்கின் றார்கள்! புல்லென்றே நினைக்கின்றீர் மனைவி மாரைப் புருஷர்களின் உபயோகம் பெரிதென் கின்றீர்! வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தை கேட்டீர். மனோபாவம் இனியேனும் திருந்த வேண்டும். இல்லையெனில் எதுசெயலாம் பெண்ஆண் என்ற இரண்டுருளை யால்நடக்கும் இன்ப வாழ்க்கை! - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.197, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 வெளியீடு 3 27. கைம்மைப் பழி (ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு) கோரிக்கைஅற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா! சீரற் றிருக்குதையோ குளிர் தென்றல் சிறந்திடும் பூஞ் சோலை - சீ சீஎன் றிகழ்ந்திடப் பட்டதண்ணே நறுஞ் சீதளப் பூ மாலை! நாடப்படா தென்று நீக்கி வைத்தார்கள் நலஞ்செய் நறுங் கனியைக் - கெட்ட நஞ்சென்று சொல்லிவைத் தார் எழில் வீணை நரம்புதரும் தொனியை! சூடப் படாதென்று சொல்லிவைத் தார் தலை சூடத்தகும் கிரீ டத்தை - நாம் தொடவும் தகாதென்று சொன்னார் நறுந்தேன் துவைந்திடும் பொற்கு டத்தை! இன்ப வருக்கமெல் லாம்நிறை வாகி இருக்கின்ற பெண்கள் நிலை - இங் கிவ்விதமாக இருக்குதண்ணே! இதில் யாருக்கும் வெட்க மிலை! தன்கண வன்செத்து விட்டபின் மாது தலையிற்கைம் மைஎன ஓர் - பெருந் துன்பச் சுமைதனைத் தூக்கிவைத் தார்; பின்பு துணைதேட வேண்டாம் என் றார். துணைவி இறந்தபின் வேறு துணைவியைத் தேடுமொர் ஆடவன் போல் - பெண்ணும் துணைவன் இறந்தபின் வேறு துணை தேடச் சொல்லிடு வோம்புவி மேல். கணை விடு பட்டதும் லட்சியம் தேடும் நம் காதலும் அவ் வாறே - அந்தக் காதற் கணைதொடுக் காத உயிர்க்குலம் எங்குண்டு சொல் வேறே? காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி காதலினால் நடக்கும்! - பெண்கள் காத லுளத்தைத் தடுப்பது, வாழ்வைக் கவிழ்க் கின்றதை நிகர்க்கும் காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட கைம்மையைத் தூர்க்கா தீர்! - ஒரு கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்கா தீர்! - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.98, 1938; புதுவை முரசு, 2.11.1931; 28. கைம்மைக் கொடுமை கண்கள் நமக்கும் உண்டு - நமக்குக் கருதும் வன்மை யுண்டு மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலே எண்ண இயலாத - புதுமை எதிரிற் காணுகின்றோம் கண்ணிருந்தென்ன பயன்? நமக்குக் காதிருந் தென்ன பயன்? வானிடை ஏறுகின்றார் - கடலை வசப்படுத்து கின்றார் ஈனப் பொருள்களிலே - உள்ளுறை இனிமை காணுகின்றார் மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை வேடிக்கை பார்ப்பதல்லால் ஊன்பதைத்தே அவைபோல் - இயற்ற உணர்ச்சி கொள்வதில்லை. புழுதி, குப்பை, உமி - இவற்றின் புன்மைதனைக் களைந்தே பழரசம் போலே - அவற்றைப் பயன்படுத்து கின்றார்! எழுதவும் வேண்டா - நம்நிலை இயம்பவும் வேண்டா! அழகிய பெண்கள் - நமக்கோ அழுகிய பழத்தோல்! கைம்மை எனக்கூறி - அப்பெரும் கையினிற் கூர்வேலால் நம்மினப் பெண்குலத்தின் - இதய நடுவிற் பாய்ச்சுகின்றோம். செம்மை நிலையறியோம் - பெண்களின் சிந்தையை வாட்டுகின்றோம்; இம்மை இன்பம் வேண்டல் - உயிரின் இயற்கை என்றறியோம். கூண்டிற் கிளிவளர்ப்பார் - இல்லத்தில் குக்கல் வளர்த்திடுவார், வேண்டியது தருவார்; - அவற்றின் விருப்பத்தை யறிந்தே! மாண்டவன் மாண்டபின்னர் - அவனின் மனைவியின் உளத்தை ஆண்டையர் காண்பதில்லை - ஐயகோ, அடிமைப் பெண்கதியே! - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.100, 1938; 29. மூடத் திருமணம் (அகவல்) முல்லை சூடி நறுமணம் முழுகிப் பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள் ஏந்திய வண்ணம் என்னரு மைமகள் தனது கணவனும் தானு மாகப் பஞ்சணை சென்று பதைப்புறு காதலால் ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும், முகமல ரோடு முகமலர் ஒற்றியும், இதழோடு இதழை இனிது சுவைத்தும், நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும் பிணங்கியும், கூடியும் பெரிது மகிழ்ந்தே இன்பத் துறையில் இருப்பர் என்று எண்ணினேன் இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு! பாழும் கப்பல் பாய்ந்து வந்து என்மகள் மருகன் இருக்கும் நாட்டில் என்னை இறக்கவே, இரவில் ஒருநாள் என்மகள் - மருகன் இருவரும் இருந்த அறையோ சிறிது திறந்து கிடந்ததை நள்இராப் பொழுதில் நான்கண்ட போதில் இழுத்துச் சாத்த என்கை சென்றது; கழுத்தோ கதவுக்கு உட்புறம் நீண்டது! கண்களோ மருகனும் மகளும் கனிந்து காதல் விளைப்பதைக் காண ஓடின! வாயின் கடையில் எச்சில் வழியக் குறட்டை விட்டுக், கண்கள் குழிந்து நரைத்தலை சோர்ந்து, நல்லுடல் எலும்பாய்ச் சொந்த மருகக் கிழவன் தூங்கினான்! இளமை ததும்ப, எழிலும் ததும்பக் காதல் ததும்பக், கண்ணீர் ததும்பி என்மகள் கிழவ னருகில் இருந்தாள். சிவந்த கன்னத்தால் விளக்கொளி சிவந்தது! கண்ணீர்ப் பெருக்கால் கவின்உடை நனைத்தாள். தொண்டு கிழவன் விழிப்பான் என்று கெண்டை விழிகள் மூடாக் கிளிமகள் காதலும் தானும் கனலும் புழுவுமாய் ஏங்கினாள்; பின்பு வெடுக்கென்று எழுந்தாள், சர்க்கரைச் சிமிழியைப் பாலிற் சாய்த்தாள் செம்பை எடுத்து வெம்பி அழுதாள். எதையோ நினைத்தாள்! எதற்கோ விழித்தாள்! உட்கொளும் தருணம் ஓடிநான் பிடுங்கினேன். பாழுந் தாயே! பாழுந் தாயே! என்சா வுக்கே உனைஇங்கு அழைத்தேன்! சாதலைத் தடுக்கவோ தாய்எமன் வந்தாய்? என்று - எனைத் தூற்றினாள். இதற்குள் ஓர்பூனை சாய்ந்த பாலை நக்கிக் தன்தலை சாய்ந்து வீழ்ந்து செத்தது கண்டேன். மண்ணாய்ப் போக! மண்ணாய்ப் போக! மனம்பொருந் தாமணம் மண்ணாய்ப் போக! சமூகச் சட்டமே! சமூக வழக்கமே! நீங்கள், மக்கள் அனைவரும் ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே! - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.102, 1938; புதுவை முரசு, 17.11.1930 30. எழுச்சியுற்ற பெண்கள் எண்சீர் ஆசிரிய விருத்தம் மேற்றிசையில் வானத்தில் பொன்னு ருக்கு வெள்ளத்தில் செம்பரிதி மிதக்கும் நேரம்! வேற்கண்ணி யாளொருத்தி சோலை தன்னில் விளையாட நின்றிருந்தாள் மயிலைப் போலே! காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக் கனியடித்துக் கொண்டுசெலும் செல்வப் பிள்ளை ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட அவளிடத்தே சிலசொன்னான் பின்னுஞ் சொல்வான்; 1 விரிந்தஒரு வானத்தின் ஒளிவெள் ளத்தை விரைந்துவந்து கருமேகம் விழுங்கக் கூடும்! இருந்துவெயில் இருளாகும் ஒருக ணத்தில்! இதுஅதுவாய் மாறிவிடும் மறுக ணத்தில், தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றே யொன்று! தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்த காதல் பருந்துவந்து கொத்துமென்றும் தணிவ தில்லை; படைதிரண்டு வந்தாலும் சலிப்ப தில்லை! 2 கன்னத்தில் ஒருமுத்தம் வைப்பாய் பெண்ணே, கருதுவதிற் பயனில்லை தனியாய் நின்று மின்னிவிட்டாய் என்மனத்தில்! பொன்னாய்ப் பூவாய் விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னான் கன்னியொரு வார்த்தையென்றாள் என்ன வென்றான்; கல்வியற்ற மனிதனைநான் மதியேன் என்றாள். பன்னூற்பண் டிதனென்று தன்னைச் சொன்னான். பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்; 3 பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர் கேள்வி; பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள். தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான். தராவிடில்நான் மேற்கொண்டால் என்ன வென்றாள் திருமணமா காதவள்தன் பெற்றோ ரின்றிச் செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான் மருவஅழைக் கின்றாயே, நானும் என்றன் மாதாபி தாவின்றி விடைச்சொல் வேனோ? 4 என்றுரைத்தாள். இதுகேட்டுச் செல்வப் பிள்ளை என்னேடி, இதுஉனக்குத் தெரிய வில்லை, மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில் மட்டும் மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான். என்மனது வேறொருவன் இடத்தி லென்றே இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள். உன்நலத்தை இழக்கின்றாய் வலிய நானே உனக்களிப்பேன் இன்பமென நெருங்க லானான்! 5 அருகவளும் நெருங்கிவந்தாள், தன்மேல் வைத்த ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்கு முன்னே ஒருகையில் உடைவாளும் இடது கையில் ஓடிப்போ! என்னுமொரு குறிப்பு மாகப் புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்; புனிதத்தால் என்காதல் பிறன்மே லென்று, பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல் படைதிரண்டு வந்தாலும் சலியா தென்றாள். 6 ஓடினான் ஓடினான் செல்வப்பிள்ளை ஓடிவந்து மூச்சுவிட்டான் என்னி டத்தில், கூடிஇரு நூறுபுலி எதிர்த்த துண்டோ? கொலையாளி யிடமிருந்து மீண்ட துண்டோ? ஓடிவந்த காரணத்தைக் கேட்டேன், அன்னோன் உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டு விட்டேன் கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சி தாங்கக் குலுங்கநகைத் தேயுரைத்தேன் அவனி டத்தில்; 7 bršt¥ãŸ shŒ!இன்று புவியின் பெண்கள் சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்! கொல்லவந்த வாளைநீ குறைசொல் லாதே! கொடுவாள்போல் மற்றொருவாள் உன்ம னைவி மெல்லிடையில் நீகாணாக் கார ணத்தால், விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப்பெண் கள்மேல்! பொல்லாத மானிடனே, மனச்சான் றுக்குள் புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான், 9 - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.104, 1938 31. குழந்தை மணத்தின் கொடுமை ஏழு வயதே எழிற்கருங் கண்மலர்! ஒருதா மரைமுகம்! ஒருசிறுமணியிடை!! சுவைத்தறி யாத சுவைதருங் கனிவாய்! இவற்றையுடையஇளம்பெண் –அவள்தான்,. கூவத்தெரியாக்குயிலின்குஞ்சு தாவாச்சிறுமான்,மோவாஅரும்பு! தாலி யறுத்துத் தந்தையின் வீட்டில் இந்தச் சிறுமி யிருந்திடு கின்றாள்; இவளது தந்தையும் மனைவியை யிழந்து மறுதார மாய்ஓர் மங்கையை மணந்தான் புதுப்பெண் தானும் புதுமாப் பிளையும் இரவையே விரும்பி ஏறுவர் கட்டிலில் பகலைப் போக்கப் பந்தா டிடுவார்! இளந்தலைக் கைம்பெண் ïவைகளைக்fண்பாள்!தனியாய் ஒருநாள் தன்பாட் டியிடம் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் ஏழு வயதின் இளம்பெண் bசால்லுவாள்;‘ என்னைவிலக்கிஎன்சிறுதயிடம்தந்தைbகாஞ்சுதல்தகுமோ?தந்தை ‘அவளை விரும்பி, அவள்தலை மீது பூச்சூடு கின்றார்; புறக்கணித் தார்எனைத்!’ ‘தாமும் அவளும் தனியறை செல்வார்; நான்ஏன் வெளியில் நாய்போற் கிடப்பது? அவருக்கு நான்மகள்! அவர்எதிர் சென்றால், நீபோ! என்று புருவம் நெறிப்பதோ? பாட்டி மடியிற் படுத்துப் புரண்டே இவ்வாறு அழுதாள் இளம்பூங் கொடியாள். இந்நிலைக்கு இவ்வாறு அழுதாள் - இவளது பின்நிலை எண்ணிப் பாட்டி பெரிதும் அழுத கண்ணீர் வெள்ளம், அந்தக் குழந்தை வாழ்நாட் கொடுமையிற் பெரிதே. - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.107, 1938 32. பெண்ணுக்கு நீதி (ஆனந்தக் களிப்பு மெட்டு) கல்யாணம் ஆகாத பெண்ணே! - உன் கதிதன்னை நீநிச் சயம் செய்க கண்ணே! - கல் வல்லமை பேசியுன் வீட்டில் - பெண் வாங்கவே வந்திடு வார்கள் சில பேர்கள்; நல்ல விலை பேசுவார்கள் - உன்னை நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள், கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில் கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்; வல்லி உனக்கொரு நீதி - இந்த வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம் - கல் பெற்றவ ருக்கெஜ மானர் - எதிர் பேசவொண் ணாதவர் ஊரினில் துஷ்டர் மற்றும் கடன் கொடுத்தோர்கள் - நல்ல வழியென்று ஜாதியென் றேயுரைப் பார்கள்; சுற்றத்திலே முதியோர்கள் - இவர் சொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்பார், கற்றவளே ஒன்று சொல்வேன் - ‘உன் கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்! - கல் தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில் தள்ளி யடைக்கப் படுங்குதி ரைக்கும் கனைத்திட உத்தர வுண்டு - வீட்டில் காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்; கனத்த உன்பெற் றோரைக் கேளே! - அவர் கல்லொத்த நெஞ்சை யுன் கண்ணீரி னாலே நனைத்திடுவாய் அதன் மேலும் - அவர் ஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள்! - கல் மாலைக் கடற்கரை யோரம் - நல்ல வண்புனல் பாய்ந்திடும் மாநதிதீரம் காலைக் கதிர் சிந்து சிற்றூர் - கண் காட்சிகள் கூட்டங்கள் பந்தாடு சாலை வேலை ஒழிந்துள்ள நேரம் - நீ விளையாடுவாய் தாவி விளையாடு மான்போல்! கோலத்தினைக் கொய்வ துண்டோ? - பெண்கள் கொய்யாப் பழக்கூட்டம் என்றே உரைப்பாய். - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.108, 1938 33. கைம்பெண் நிலை (செந்தூர் வேலாண்டி என்ற மெட்டு) பல்லவி கண்போற் காத்தேனே - என்னருமைப் - பெண்ணை நான்தானே - கண் அநுபல்லவி மண்ணாய்ப் போன மாப் பிள்ளை வந்ததால் நொந்தாள் கிள்ளை மணமக னானவன் - பிணமக னாயினன் குணவதி வாழ்க்கை எவ் - வணமினி ஆவது - கண் செம்பொற் சிலை, இக் காலே கைம் பெண்ணாய்ப் போன தாலே திலகமோ, குழலில் - மலர்களோ அணியின் உலகமே வசைகள் - பலவுமே புகலும் - கண் பொன்னுடை பூஷ ணங்கள் போக்கினாளே என் திங்கள்! புகினும் ஓர் அகம் - சகுனம் தீதென முகமும் கூசுவார் - மகளை ஏசுவார்! - கண் தரையிற் படுத்தல் வேண்டும் சாதம் குறைத்தல் வேண்டும் தாலி யற்றவள் - மே லழுத்திடும் வேலின் அக்ரமம் - ஞாலம் ஒப்புமோ? - கண் வருந்தாமற் கைம்பெண் முகம் திருந்துமோ இச் சமூகம்? மறுமணம் புரிவது - சிறுமை என்றறைவது குறுகிய மதியென - அறிஞர்கள் மொழிகுவர் - கண் - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.110, 1938 34. இறந்தவன்மேற் பழி (இராகம் : காபி தாளம் : ஆதி) கற்பிற் சிறந்த என்றன் கனியே என்ற மெட்டு பல்லவி அந்திய காலம் வந்ததடியே! - பைந்தொடியே! - இளம்பிடியே! - பூங்கொடியே! சிந்தை ஒன்றாகி நாம் இன்பத்தின் எல்லை தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தத் தொல்லை வந்ததே இனிநான் வாழ்வதற் கில்லை மனத்தில் எனக்கிருப்ப தொன்றே - அதை - இன்றே - குணக்குன்றே! - கேள் நன்றே! - அந்திய கடும்பிணி யாளன்நான் இறந்தபின், மாதே கைம்பெண்ணாய் வருந்தாதே, பழிஎன்றன் மீதே! அடஞ் செய்யும் வைதிகம் பொருள்படுத் தாதே ஆசைக் குரியவனை நாடு - மகிழ்வோடு - தார்சூடு - நலம்தேடு! - அந்திய கற்கண்டு போன்றபெண் கணவனை இழந் தால் கசந்த பெண் ஆவது விந்தைதான் புவி மேல்! சொற் கண்டு மலைக்காதே உன் பகுத் தறிவால் தோஷம், குணம் அறிந்து நடப்பாய் - துயர் கடப்பாய் - துணைபிடிப்பாய் - பயம் விடுப்பாய். - அந்திய - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.111, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 வெளியீடு 3 35. கைம்மைத் துயர் (இராகம் : இந்துதான்தோடி தாளம் : ஆதி) பல்லவி பெண்கள் துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ! கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீரோ! - பெண் அநுபல்லவி பெண்கொடிதன் துணையிழந்தால் பின்பு துணை கொள்வதிலே மண்ணில் உமக் காவதென்ன வாழ்வறிந்தோரே! வாழ்வறிந்தோரே! மங்கை மாரை ஈன்றோரே! - பெண் தொகையறா மாலையிட்ட மணவாளன் இறந்து விட்டால் மங்கைநல்லாள் என்னசெய்வாள்? அவளை நீங்கள் ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம் அணுவளவும் அடையாமல் சாகச் செய்தீர்! பெண்டிழந்த குமரன்மனம் பெண்டு கொள்ளச் செய்யும் எத்தனம் கண்டிருந்தும் கைம்பெண் என்ற கதை சொல்லலாமோ? கதைசொல்லலாமோ? பெண்கள்வதை கொள்ளலாமோ? - பெண் தொகையறா துணையிழந்த பெண்கட்குக் காதல் பொய்யோ? சுகம்வேண்டா திருப்பதுண்டோ அவர்கள் உள்ளம்? அணையாத காதலினை அணைக்கச் சொன்னீர் அணைகடந்தால் உங்கள்தடை எந்த மூலை? பெண்ணுக்கொரு நீதிகண்டீர் பேதமெனும் மதுவை யுண்டீர் கண்ணிலொன்றைப் பழுதுசெய்தால் கான்றுமி ழாதோ? கான்றுமி ழாதோ? புவிதான் பழியாதோ? - பெண் - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, 1938; புதுவை முரசு, 19.10.1931 36. கைம்மை நீக்கம் (இராகம் : தேசிகதோடி தாளம் : ரூபகம்) (தேடி வந்தேனே வள்ளி மானே என்ற மெட்டு) பல்லவி நீ எனக்கும், உனக்கு நானும் - இனி நேருக்கு நேர் தித்திக்கும் பாலும், தேனும் - நீ அநுபல்லவி தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம் நேய மாக அமைவுற உறுதிசொல்! அடி! - நீ சரணங்கள் கைம்பெண் என்றெண்ணங் கொண்டே கலங்கினா யோ கற் கண்டே? காடு வேகு வதை ஒரு மொழியினில் மூடு போட முடியுமோ உரையடி? ததி - நீ பைந்தமி ழைச்சீ ராக்கக் கைம்மைஎன்னும் சொல் நீக்கப் பறந்து வாடி அழகிய மயிலே! இறந்த கால நடைமுறை தொலையவே, - நீ பகுத்தறிவான மன்று பாவை நீ ஏறி நின்று பாரடீ உன் எதிரினிற் பழஞ் செயல் கோரமா அழிந்தொழி குவதையே - நீ கருத்தொரு மித்த போது கட்டுக்கள் என்ப தேது? கைம்மை கூறும் அதிசய மனிதர்கள் செம்மை யாகும் படிசெய மனதுவை! அடி! - நீ - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.113, 1938; புதுவை முரசு, 26.10.1931 37. தவிப்பதற்கோ பிள்ளை? கர்ப்பத் தடை எண்சீர் விருத்தம் விளக்குவைத்த நேரத்தில் என்வேலைக் காரி வெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து களிப்புடனே பிரசவந்தான் ஆய்விட்டதென்றாள்! காதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்! உளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத் தாலே உயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன் நன்றாய் வளர்த்துவரக் குழந்தைக்கு வயதுமூன் றின்பின் மனைவிதான் மற்றுமொரு கருப்பமுற லானாள். 1 பெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று பிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்! கண்ணழகும் முகஅழகும் கண்டுகண்டு நாள்கள் கழிக்கையிலே மற்றொன்றும் பின்ஒன்றும் பெற்றாள்! எண்ணுமொரு நால்வரையும் எண்ணியுழைத் திட்டேன். எழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்! உண்ணுவதை நானுண்ண மனம்வருவ தில்லை; உண்ணாமலே மனைவியவள் பிள்ளைகளைக் காத்தாள். 2 வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்! வாராத நினைவெல்லாம் வந்துவந்து தோன்றும்! துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால் தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டால் தொல்லை! அரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேப மில்லை; ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி? இரும்பாநான்? செத்துவிட்டால் என்பிள்ளை கட்கே என்னகதி? ஏன்பெற்றேன்? எனநினைக்கு நாளில், 3 ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில் உணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கித் தெருத்திண்ணை மேல்இட்டேன்! நித்திரையும் போனேன்! சிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன் அருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள். அயர்ந்தீரோ என்றுரைத்தாள்! மலர்க்கரத்தால் தொட்டாள்! தெருவினிலே பனி என்றாள். ஆமென்று சொன்னேன்; தெரிந்துகொண்டேன் அவள்உள்ளம் வார்த்தையென்ன தேவை? 4 மனையாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம் மவுனத்தில் ஆழ்ந்திருந்தோம். வாய்த்ததொரு கனவு; கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ! கதியற்ற குழந்தைகளோர் கோடானு கோடி மனம்பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம் வந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்; இனத்தவரின் குழந்தைகளோ, ஏ!என்று கெஞ்ச, ஏறிவந்த சீமான்கள் சீ! என்று போனார். 5 கனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்; காதல்எனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோம். மெய்யாய்த் தினம்நாங்கள் படும்பாட்டை யாரறியக் கூடும்? சீ!சீ!!சீ!!! இங்கினியும் காதல்ஒரு கேடா? எனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம். இன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ! தனியறையில் கண்ணொடுகண் சந்தித்த ஆங்கேதடுக்கிவிழுந்nதாம்காதல்bவள்ளத்தின்உள்ளே! 6 பத்துமாதம்bசல்லஅந்தப்பகற்போதில்ஓர்நாள், பட்டகடன்கரர்வந்துபடுத்துகின்றnநரம்,சித்தமெலாம்மூத்தபெண்ணின்சுரநோயைஎண்ணித் திடுக்கிடுங்கால்,ஒருகிழவிஎன்னிடத்தில்வந்து முத்தாலம்kவைத்த கிருபையினால்நல்ல முகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளை பெற்றாள்என்றாள்! தாத்துநோயும், ஏழ்மை, பணக்காரர் தொல்லை தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை! 7 காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்? சாதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை? சந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ? காதலுத்துக்கண்ணலுத்து¡கைகள்mலுத்து¡ கருத்தலுத்துப் போனோமே! கடைத்தேற மக்கள் ஓதலுக்கெல் லாம்மறுப்பா? என்னருமை நாடே, உணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே. 8 - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.114, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 வெளியீடு 3 38. ஆண் குழந்தை தாலாட்டு நீலாம்பரி ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே! ஒசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! உள்ளம் எதிர்பார்த்த ஒவியமே என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனலேற்ற வந்த களிறே; எனது மனமேறுகின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில், பொன் முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்! அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக் கொள்ளைநோய் போல்மதத்தைக் கூட்டியழும் வைதிகத்தைப் போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா! வாடப் பலபுரிந்து வாழ்வை விழலாக்கும் மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும் மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு! எல்லாம் அவன்செயலே என்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும், காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும் வேர்ப்பீர் உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும், மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என்செந்தமிழே கண்ணுறங்கு! - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.117, 1938 39. நம் மாதர் நிலை பழங்கல அறைக்குளே பதினைந்து திருடர்கள் பதுங்கிடவும் வசதி யுண்டு. பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும் பதிந்திடவும் வசதி யுண்டு. முழங்கள்ப தினெட்டிலே மாற்றமில் லாவிடினும் முன்றானை மாற்ற முண்டு. முடுகிவரும் நோய்க்கெலாம் கடவுளினை வேண்டியே முடிவடைய மார்க்க முண்டு. தொழுங்கணவன் ஆடையிற் சிறுபொத்தல் தைக்கவும் தொகைகேட்கும் ஆட்கள் வேண்டும். தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ சுவருண்டு வீட்டில், இந்த ஒழுங்கெலாம் நம்மாதர் வாரத்தின் ஏழுநாள் உயர்விரதம் அநுஷ்டிப் பதால் உற்றபலன் அல்லவோ அறிவியக் கங்கண் டுணர்ந்த பாரத தேசமே! - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, ப.169, 1938; சுயமரியாதைச் சுடர், 1931 40. பெண் குழந்தை தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே! காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே! வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே! நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத் தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே! வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும் கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்! அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே! மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே! கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே! மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி! புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக் கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே! தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே! எல்லாம் கடவுள்செயல் என்று துடைநடுங்கும் பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே! வாயில் இட்டுத்தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைத் கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே! சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு! - பாரதிதாசன் கவிதைகள், முதல் பகுதி, 1938 41. கூடித் தொழில் செய்க கூடித் தொழில்செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார் வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே! நாடியஓர் தொழில் நாட்டார் பலர் சேர்ந்தால் கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே! சிறுமுதலால் இலாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர் உறுமுதலால் இலாபம் உயருமன்றோ தோழர்களே! அறுபதுபேர் ஆக்கும் அதனை ஒருவன் பெறுவதுதான் சாத்தியமோ பேசிடுவீர் தோழர்களே! பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும்; செய்தொழிலில் முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே! ஒற்றைக் கைதட்டினால் ஓசை பெருகிடுமோ மற்றும் பலரால் வளம்பெறுமோ தோழர்களே! ஒருவன் அறிதொழிலை ஊரார் தொழிலாக்கிப் பெரும்பே றடைவதுதான் வெற்றி என்க தோழர்களே! இருவர் ஒருதொழிலில் இரண்டுநாள் ஒத்திருந்த சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே! நாடெங்கும் வாழ்குவதிற் கேடொன்று மில்லைஎனும் பாடம் அதைஉணர்ந்தாற் பயன்பெறலாம் தோழர்களே! பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெலாம் கூடித் தொழில்செய்யும் கொள்கையினால் தோழர்களே! ஐந்துரூபாய்ச் சரக்கை ஐந்துபணத்தால் முடித்தல் சிந்தை ஒருமித்தால் செய்திடலாம் தோழர்களே! சந்தைக் கடையோநம் தாய்நாடு? இலக்ஷம்பேர் சிந்தை வைத்தால்நம் தொழிலும் சிறப்படையும் தோழர்களே! வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம் கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே! கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை மூடிய தொழிற்சாலை முக்கோடி! தோழர்களே! கூடுவதும் கூடிப் பிரியாமையும் கொண்டு நாடும் தொழிலால்நம் நாடுயரும் தோழர்களே! கூடைமுறம் கட்டுநரும் கூடித் தொழில்செய்யின் தேடிவரும் இலாபம் சிறப்புவரும் தோழர்களே! - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் 1935, வெளியீடு 4-5; பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதி, ப.125, ப.125, 1938 42. தொழிலாளர் விண்ணப்பம் பிலகரி - கண்ணி காடு களைந்தோம் - நல்ல கழனிதிருத்தியும் உழவுபுரிந்தும் நாடுகள் செய்தோம் - அங்கு நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம் வீடுகள் கண்டோம் - அங்கு வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம் பாடுகள் பட்டோம் - புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம். 1 மலையைப் பிளந்தோம் - புவி வாழவென்றேகடல் ஆழமும் தூர்த்தோம் அலைகடல் மீதில் - பல் லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம் பலதொல்லை யுற்றோம் - யாம் பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம் உலையில் இரும்பை - யாம் உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம். 2 ஆடைகள் நெய்தோம் - பெரும் ஆற்றை வளைத்து நெல்நாற்றுக்கள் நட்டோம்; கூடை கலங்கள் - முதல் கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம் கோடையைக் காக்க - யாம் குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம் தேடிய பண்டம் - இந்தச் செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம். 3 வாழ்வுக் கொவ்வாத - இந்த வையத்தை இந்நிலை எய்தப் புரிந்தோம் ஆழ்கடல்,காடு, - மலை அத்தனையிற்பல சத்தை யெடுத்தோம், ஈழை, அசுத்தம் - குப்பை இலை என்னவே எங்கள் தலையிற் சுமந்தோம். சூழக்கிடந்தோம் - புவித் தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்! 4 கந்தை யணிந்தோம் - இரு கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம் மொந்தையிற் கூழைப் - பலர் மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம் சந்தையில் மாடாய் - யாம் சந்தகம் தங்கிட வீடுமில்லாமல் சிந்தை மெலிந்தோம் - எங்கள் சேவைக்கெலாம் இதுசெய் நன்றி தானோ? 5 மதத்தின் தலைவீர்! - இந்த மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே! குதர்க்கம் விளைத்தே - பெருங் கொள்ளை யடித்திட்ட கோடீசுரர்காள்! வதக்கிப் பிழிந்தே - சொத்தை வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே! நிதியின் பெருக்கம் - விளை நிலமுற்றும் உங்கள் வசம் பண்ணிவிட்டீர். 6 செப்புதல் கேட்பீர்! - இந்தச் செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின், சுப்பல்களாக - இனித் தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்! இப்பொழுதே நீர் - பொது இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை ஒப்படைப் பீரே - எங்கள் உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே - ஒப்படைப்பீரே! 7 - பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதி, ப.127, 1938 43. வியர்வைக் கடல் அகவல் அதிகாலை கிழக்கு வெளுக்குமுன் வெளியிற் கிளம்பினேன் ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி, நிசப்தம், இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி! உத்ஸாகம் எனைத் தூக்கி ஓடினது! இயற்கை குன்றம் இருக்கும் அக்குன்றத் தின்பால் குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும் அழகு செய்யும்! அவ்விடத் தில்தான் என்றன் சொந்த நன்செய் உள்ளது. பகல் கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர் வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்! புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது இயற்கை தந்த எழிலிடை நடந்தேன். வயல் வளம்பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை மரகதம் குவிந்த வண்ணம் ஆயிற்று; மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி காணக்கண் கூசும் வயிரக் களஞ்சியம்! பரந்தஎன் வயலைப் பார்த்துக் கொண்டிருந்தேன் மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்! உழைப்பு களையினைக் களைவது கருதி, எனது பண்ணை ஆட்கள் பலபேர் வந்தனர். என்னை வணங்கினர்; வயலில் இறங்கினர் வில்லாய் வளைந்தது மேனி; அவர்தோள் விசையாய்க் களைந்தது களையின் விளைவை! முகவிழி கவிழ்ந்து வயலில் மொய்த்தது. நடுப்பகல் காலைப் போதினைக் கனலாற் பொசுக்கிச் சூரியன் ஏறி உச்சியிற் சூழ்ந்தான் சுடுவெயில் உழவர் தோலை உரித்தது; புதுமலர்ச் சோலையில் போய்விட் டேன்நான். வெயில் குளிர்புனல் தெளிந்து நிறைந்த மணிக்குளம்! நிழல்சேர் கரையில் நின்று கொண்டிருந்தேன். புழுக்கமும் வியர்வையும் எழுப்பி என்னை நலிவு செய்த நச்சு வெய்யில், வானி லிருந்து மண்ணிற் குதித்துத் தேன்மலர்ச் சோலைச் செழுமை கடந்தென் உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை! குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன். வெள்ளப் புனலும் கொள்ளிபோல் சுட்டது! உழைப்புத் துன்பம் காலைப் போதினைக் கனலால் பொசுக்கிச் சோலையும் கடந்து சுடவந்த வெய்யில் விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன். எண்ணும் போதென் கண்ணின் எதிரில் வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள் வந்து நின்று வணக்கம் செய்தனர் ஐயகோ நெஞ்சமே, இந்த ஆட்கள் தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்? வியர்வைக் கடலின் காட்சி களைபோக்கு சிறுபயன் விளைக்க இவர்கள் உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுல குழைப்பவர்க் குரியதென் பதையே! - பாரதிதாசன் கவிதைகள் முதல் பகுதி, ப.143, 1938 44. நீங்களே சொல்லுங்கள் (ஆறுமுக வடிவேலவனே கல்யாணம் செய் - என்ற மெட்டு) சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப் பாரினிலே - முன்னர் எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தன ரோ! உங்கள் வேரினிலே. நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு நெல்விளை நன்னிலமே! - உனக் கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே. தாமரை பூத்த தடாகங்களே! உமைத் தந்தஅக் காலத்திலே - எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே. மாமிகு பாதைகளே! உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார் - அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட அந்தியெலாம் உழைத்தார். ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள் ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ? கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன் கீழிருக்கும் கடைக்கால் - எங்கள் சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்! நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென நின்ற இயற்கைகளே! - உம்மைச் சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழிலாளர் தடக்கைகளே! தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச் சாட்சியும் நீயன்றோ? - பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ? எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப் புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும் புதரினில் தூங்கிடுமோ? கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக் கெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த வார்த்தைக்கு மோசமில்லை. - பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதி, ப.146, 1938 45. புதிய உலகு செய்வோம் புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். - புதிய பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம். - புதிய இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் இதுஎன தென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். - புதிய உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ஒருபொருள் தனிஎனும் மனிதரைச் சிரிப்போம்! - புதிய இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். - புதிய - பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதி, ப.148, 1938; 46. பலிபீடம் (ஜய - ராமமூர்த்திக்கிணையானவர் என்ற மெட்டு) மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி பீடத்திலே சாய்ந்தீரே! பாடுபட்டீர்கள் பருக்கை யில்லாதொரு பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக் கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட வீடுமில்லாமலே தாழ்கின்றீர்! - மத பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில் ஓதி நின்றால் படை கூட்டுவார். - மத வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ சோதனை என்றவர் சொல்லுவார் - பணச் சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட போதனையால் தினம் கொல்லுவார். - மத பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக்கும் பல பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி சாதியென்றால் எதிர்ப்பீர்களோ? - செல்வர் வீதியைத் தான் மிதிப்பீர்களோ? - மத கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர் கூழை நினைத்திடும் போதிலே - கோயில் வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர் வாடிக்கை ஏற்பீரோ காதிலே? - - மத தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர் அட்டகாசத்தினுக் கேதெதிர்? - மத மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர் மூலப்படுத்தக் கை ஓங்குவீர் - பலி பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ நாடு நமக்கென்று வாங்குவீர். - மத - பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதி, ப.149, 1938 47. பெற்றோர் ஆவல் துன்பம் நேர்கையில் யாழ்எ டுத்துநீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? - துன்பம் வன்பும் எளிமையும் சூழும், நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க - எம் வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? - துன்பம் அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே அறிகி லாத போது - யாம் அறிகி லாத போது - தமிழ் இறைவ னாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? - துன்பம் புறம்இ தென்றும் நல் லகம்இ தென்றுமே புலவர் கண்ட நூலின் - தமிழ்ப் புலவர் கண்ட நூலின் - நல் திறமை காட்டிஉனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆக மாட்டாயா? - தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா? - துன்பம் - பாரதிதாசன் கவிதைகள், இசையமுது, ப. 49, முதற் பகுதி, 1942 48. பெண் கல்வி பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந் நாடும்! கண்களால் வழிகாண முடிவதைப் போலே! கால்களால் முன்னேற முடிவதைப் போலே! - பெண்களால் முன்னேறக் கூடும் படியாத பெண்ணினால் தீமை! - என்ன பயன்விளைப் பாளந்த ஊமை? நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி! - பெண்களால் முன்னேறக் கூடும் பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள்1 பெண் கல்வி யாலே, - முன் னேறவேண் டும் வைய2 மேலே! - பெண்களால் முன்னேறக் கூடும் - இசையமுது, முதற்பகுதி, ப.51, 1942 1. இற்றைநாள் - இன்றை நாள்; 2. வையம் - உலகம் 49. தந்தை - பெண்ணுக்கு தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோலே ஏனங்கு நின்றாய்? - நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி வேளைதோ றும்கற்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி? - நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! படியாத பெண்ணா யிருந்தால், - கேலி பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால் கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என் கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்க ளோடு கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது! கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு, - பெண் கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு. - இசையமுது, முதற்பகுதி, ப.52, 1942 குறிப்புரை : கடிகாரம் ஓடுமுன் ஓடு என்பது கடிகாரத்தின் முள் எட்டு என்ற எண்ணை நோக்கி ஓடி நிற்குமுன் நீ பாடசாலையை நோக்கி ஓடு என்ற கருத்தை விளக்குவது. 50. தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ சீரோடு பூத்திருந்த செந்தா மரைமீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச் செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை அவ்இமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு! கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில் மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி சின்ன இமையைத் திறந்ததேன் நீயுறங்கு; கன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு! குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரல்கள்போல் துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு! வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு! கன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச் சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே? அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச் சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு! நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக் கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீகேட்டால் ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித் தேனில் துவைத்தெடுத்துத் தின்என்று தாரேனா? கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில் பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா? குப்பை மணக்கக் குடித்தெருவெல் லாம்மணக்க அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா? மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல் தேன்குழல்தான் நான்பிழிந்து தின்னத் தாரேனா? விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத் ததைப்போல் உழுந்துவடை நெய்யொழுக உண்ணென்று தாரேனா? தாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா ஆழ உரலில் இடித்த அவலைக் கொதிக்கும்நெய் தன்னில்நான் கொட்டிப் பொரித்துப் பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே ஏலத்தைத் தூவி எதிர்வைக்க மாட்டேனா? ஞாலத் தொளியே நவிலுவதை இன்னுங்கேள்; செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக் கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும், செதில்அறுத்தால் கொப்பரையில் தேன்நிறைந் ததைப்போல் எதிர்தோன்றும் மாம்பழமும், இன்பப் பலாப்பழமும், வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்துவிடும்! பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே! நெருங்க உறவுனக்கு நீட்டாண்மைக் காரர்! அறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே! எட்டும் உறவோர்கள் எண்ணறுதி ராவிடர்கள் வெட்டிவா வென்றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்! என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்? முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை ஓர்குடைக் கீழ்ஆண்ட உவகை உனக்குண்டு! சேரனார் சோழனார் சேர்த்தபுகழ் உன்புகழே! காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர் ஓவியக் கரைக்கண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார் உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்? பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு! கற்சுவரை மோதுகின்ற கட்டித் தயிரா, நற் பொற்குடத்தில் வெண்ணெய்தரும் புத்துருக்கு நெய்யா, நல் ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப் போல்நிறைத்த பாலைப் புளியங்கொட்டை தான்மிதக்கும் இன்பநறும் பாலா, என்னஇல்லை? கண்ணுறங்காய். அன்பில் விளைந்தஎன் ஆருயிரே கண்ணுறங்கு! காவிரியின் பாதாளக் காலில் சிலம்பொலியும், பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும், கேட்ட உழவர் கிடுகிடென நல்விழாக் கூட்டி மகிழ்ச்சி குறிகொள்ளத் தோளில் அலுப்பை அகற்றி அழகுவான் வில்போல் கலப்பை எடுத்து, கனஎருதை முன்னடத்திப் பஞ்சம் தலைகாட்டப் பாராப் படைமன்னர், நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார். வித்துநெல் வித்தி விரியும் களையெடுத்துக் கொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை மாற்றியடித்து மறுகோலம் செய்த நெல்லைத் தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள் கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே! ஞாலம் புகழும் நகைமுகத்தோய் கண்ணுறங்கு! செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர் கொம்புத்தேன் பெய்து குளிர்முக் கனிச்சுளையோ டள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யொழுக உள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே! கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக் கொத்தும் மரங்கொத்தி தாளங் குறித்துவரத் தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க மின்னும் பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே பன்னும் படம்விரித்துப் பச்சைமயி லாடுவதும், பிள்ளைக் கருங்குயிலோர் பின்பாட்டுப் பாடுவதும், கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய்நீ! குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற் கப்பும் கழுவடையில் கண்மணியும் பொன்மணியும்! ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்! சூடா மணிவரிசை தூண்டாச் சரவிளக்காம்! எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில் கொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ? ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும் வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி, ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில், உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா? மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும் பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள் எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக் கண்ணுங் கருத்தும் கவருமோர் அன்புநகர், ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரிபங்கென் றோரும்நகர், நோக்கி ஓடுந் தமிழ்நாடு நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு பொன்னான தொட்டிலில்இப் போது! - இசையமுது முதற்பகுதி, ப.53, 1942 51. வெற்றிலை வேண்டுமா? ஒருவேளை அல்ல திருவேளை வெற்றிலை போடு! - போடா தொதுக்கலும் நல்லஏற் பாடு! சுரந்திட்ட எச்சிலை வாயினில் தேக்குதல் போலே - வேறு தூய்மையில் லாச்செயல் கண்டதில் லைவைய மேலே - ஒருவேளை கரியாகுமே உதடு! கோவைக் கனியை நீ காப்பதும் தேவை தெரியாத ஆடவர் வாய்நிறைய எச்சிலின் சேறு தேக்கியே திரிவார்கள், அவருக்கும் நீஇதைக் கூறு! - ஒருவேளை பூவைமார் நல்லிதழை நல்ல புன்னகை சிந்திடும் பல்லை நாவினால் யாம் சொல்வ தில்லை - அவை நன் மணத் தாமரை! முல்லை! பாவைமார் வாயினில் இயல்பான மணமுண்டு பெண்ணே பாக்குவெற் றிலைதனை நீக்கலே மிகநன்று கண்ணே - ஒருவேளை - இசையமுது, முதற்பகுதி, ப.58, 1942 52. ஆண் பெண் நிகர் ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும் நீணிலத் தெங்கணும் இல்லை வாணிகம் செய்யலாம் பெண்கள். . . நல் வானூர்தி ஓட்டலாம் பெண்கள்! - ஆணுயர் ஏணை அசைத்தலும் கூடும்; - அதை யார் அசைத் தாலுமே ஆடும்! வீணை மிழற்றலும் கூடும்; - அது மெல்லியின் விரலுக்கா வாடும்? நாணமும் அச்சமும் வேண்டும் - எனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும். - ஆணுயர் சேயிழை மார்நெஞ்ச மீது - நாம் சீறுபுலி யைக்காணும் போது தீயதோர் நிலைமைஇங் கேது? - நம் தென்னாட்டில் அடிமைநில் லாது தூயராய்த் தொண்டாற்ற வேண்டும் - பல தொழிற்கல்வி யுங்கற்க வேண்டும். - ஆணுயர் - இசையமுது, முதற்பகுதி, ப.60, 1942 53. பெண்கள் கடன் மேகலையும் நற்சிலம்பும் பூண்டு - பெண்ணே வீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு! போகவில்லை அகம்புறமும், நாலிரண்டும்; நெஞ்சம் புகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற்கொஞ்சும். - மேகலை தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் - பெண்ணே தமிழரின் மேன்மையைக் காப்பாய் தமிழகம் நம்மதென் றார்ப்பாய் தடையினைக் காலினால் தேய்ப்பாய்! கமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய் தமிழர் மரபினை உன்னுயிர், என்பதைக் கண்டாய். - மேகலை மூவேந்தர் கொடி கண்ட வானம் - இன்று முற்றிலும் காண்கிலாய் ஏனும் ஓஓஎ னப்பகை தானும் ஓடவே காத்திடுக மானம்! காவெலாம் தென்றலும் பூக்களும் விளையாடும் நாட்டில் கதலியும் செந்நெல்லும் பயனைப் புரிந்த மணி வீட்டில். - மேகலை - இசையமுது, முதற்பகுதி, ப.62, 1942 54. அச்சந்தவிர், மடமை நீக்கு அச்சமும் மடமையும் இல்லாத - பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் உச்சி இருட்டினில் பேய்வந்த தாக உளறினால் அச்சமா? பேய் என்பதுண்டா? - அச்சமும் முச்சந்தி காத்தானும் உண்டா - இதை முணுமுணுப்பது நேரில் கண்டா? பச்சைப் புளுகெலாம் மெய்யாக நம்பிப் பல்பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி - அச்சமும் கள்ளுண்ணும் ஆத்தாளும் ஏது? - மிகு கடியசா ராயமுனி ஏது? விள்ளும்வை சூரிதான் மாரியாத் தாளாம் வேளைதோறும் படையல்வேண்டும் என்பாளாம் - அச்சமும் மடமைதான் அச்சத்தின் வேராம் - அந்த மடமையால் விளைவதே போராம் கடமையும் அறமுநல் லொழுக்கமும் வேண்டும் கல்வி வேண்டும் அறிவு கேள்வியும் வேண்டும். - அச்சமும் - இசையமுது, முதற்பகுதி, ப.63, 1942 55. பறக்கும் மிளகு பூமியில் மிளகு புள்போல் பறக்குமா? புதுவை மிளகோ புள்ளாய்ப் பறக்கும்! சீர்ப்புதுச் சேரியில் தெரிந்த வீடு சென்றேன் சென்ற மாதக் கடைசியில்! கூடம் நிறையக் கொட்டியிருந்த கொட்டை மிளகைக் கூட்டிவார எண்ணினேன், வீட்டார் இல்லை யாதலால்! எழுந்து துடைப்பம் எடுத்து நாட்டினேன். பூமியில் மிளகு புள்போற் பறக்குமா? புதுவை மிளகு புள்ளாய்ப் பறந்ததே! எனக்கும் ஆயுள் எண்பது முடிந்ததாம்; இந்த அதிசயம் எங்கும் கண்டிலேன்! பூமியில் துடைப்பம் போட்டு நின்றேன்; போன மிளகு பூமியில் வந்தது! கூட்டப் போனேன் கூட்டமாய்ப் பறந்தது! கூட்டாப் போது பூமியில் குந்தும்! வீட்டுக் காரி வந்து பாட்டாய்ப் பாடினாள் ஈப்படுத்து வதையே! - முல்லைக்காடு, ப.37, 1948; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 வெளியீடு 3 56. கொசு! உஷார் கும்மி மெட்டு கும்ப கோணத்திற்குப் போக வேணும் - அங்குக் கும்பலிற் சேர்ந்து நடக்க வேணும் சம்பள வீரர் பிடிக்க வேணும் - அங்குச் சாவுக்கும் அஞ்சாத தன்மை வேணும்! கும்பலும் வீரரும் ஏதுக்கென்பீர்? - நல்ல கும்ப கோணத்தினில் என்ன என்பீர்? அம்பு பிடித்த கொசுக் கூட்டம் - அங்கே ஆட்களை அப்படியே புரட்டும்! - முல்லைக்காடு, ப.38, 1948 57. சென்னையில் வீட்டு வசதி ஒருவரம் தேவை! உதவுவீர் ஐயா! திருவ ரங்கப் பெருமாள் நீரே! சென்னையில் உங்கள் சிறந்த நாமம் தெரியா தவர்கள் ஒருவரு மில்லை! பிச்சை எடுத்துப் பிச்சை எடுத்துநான் பெற்ற பொருளில் மிச்சம் பிடித்துத் தேன்போட் டுண்ணத் தினையில் ஒருபடி சேக ரித்தேன்! ஆகையால் அதனை வீட்டில் வைத்து வெளியிற் சென்று விடிய வந்து எடுத்துக் கொள்கிறேன். வீட்டுக் காரன் கேட்டுத் துடித்தான்! பாட்டுப் பாடும் பராபர வதுவே! படித்தினைக் கிடமி ருந்தால், குடித்தனத் துக்கிடம் கொடுத்திருப் பேனே!!! - முல்லைக்காடு, ப.39, 1948 58. ஏற்றப்பாட்டு ஆழ உழுதம்பி அத்தனையும் பொன்னாம்! அத்தனையும் பொன்னாம் புத்தம்புது நெல்லாம்! 1 செட்டிமகள் வந்தாள் சிரித்துவிட்டுப் போனாள்! சிரித்துவிட்டுப் போனாள் சிறுக்கி துரும்பானாள்! 2 ஆற்றுமணல் போலே அள்ளி அள்ளிப் போட்டாள் அத்தனையும் பொன்னாம் அன்புமனத் தாண்டி! 3 கீற்று முடைந்தாளே கிளியலகு வாயாள் நேற்றுச் சிறுகுட்டி இன்று பெரிசானாள்! 4 தோட்டங் கொத்தும் வீரன் தொந்தரவு செய்தான் தொந்தரவுக் குள்ளே தோழிசுகம் கண்டாள்! 5 - முல்லைக்காடு, ப.40, 1948 59. அம்மானை ஏசல் (எல்லாரும் போனார் போலே என்ற மெட்டு) மந்தை எருமைகளில் வளர்ந்திருந்த காரெருமை இந்தவிதம் சோமன்கட்டி மாப்பிள்ளையாய் இங்கு வந்தீர்! மாமா - எங்கள் இன்ப மயிலை நீர் மணக்க லாமா? ஆந்தை விழி என்பதும் அம்மி போன்ற மூக்கென்பதும் ஓந்தி முதுகென்பதும் உமக்கமைந்து கிடப் தென்ன! மாமா - எங்கள் ஓவியத்தை நீர் மணக்க லாமா? கோடாலிப் பல்திறந்து குலுங்கக் குலுங்க நகைக்கையிலே காடே நடுங்கிடுமே கட்டை வெட்டக் கூடுமென்று! மாமா - எங்கள் வாசமலரை நீர் மணக்க லாமா? வெள்ளாப்பம் போலுதடு வெளுத்திருக்கும் வேடிக்கையில் சொள்ளொழுகிப் பாய்வதுதான் சொகுசு மிகவும் சொகுசு சொகுசு! மாமா - எங்கள் சுந்தரியை நீர் மணக்க லாமா? ஆனைக்குக் காதில்லையாம் அளிப்பதுண்டோ நீர் இரவல்? கூன் முதுகின் உச்சியிலே கொக்குக் கழுத்து முளைத்ததென்ன! மாமா - எங்கள் கொஞ்சுகிளியை நீர் மணக்க லாமா? எட்டாள் எடுக்க ஒண்ணா இரும்புப் பிப்பாய் போலுடம்பு கொட்டாப்புளிக் கால்களால் குள்ளவாத்துப் போல் நடப்பீர்! மாமா - எங்கள் கோகிலத்தை நீர்மணக்க லாமா? - முல்லைக்காடு, ப.41, 1948 60. அண்ணியை ஏசல் (கத்தாழம் பழமே உனை நத்தினேன் தினமே என்ற மெட்டு) அண்ணி வந்தார்கள் - எங்கள் அண்ணாவுக்காக - நல்ல - அண்ணி கண்ணாலம் பண்ணியாச்சு கழுத்தில் தாலி கட்டியாச்சு! பிண்ணாக்குச் சேலை பிழியப் பெரிய குளமும் சேறாய்ப் போச்சு! - அண்ணி எட்டிப் பிடித்திடலாம் இரண்டங்குலம் ஜடைநுனிதான் பட்டி வெள்ளாட்டு வாலைப் போல மேலே பார்க்கும்படி! - அண்ணி நத்தைப்பல் சொட்டைமூக்கு நாவற்பழ மேனியிலே கத்தாழை நாற்றம் எங்கள் கழுத்தை நெட்டித் தள்ளிடுதே! - அண்ணி அழுக்குச் சுமந்துசெல்லும் அழகு வெள்ளை முகக்குதிரை வழுக்காது நடப்பதுபோல் வாய்த்தநடை என்ன சொல்வேன்! - அண்ணி கோல்போல் இடுப்புக்கொரு கோல ஒட்டியாணம்செய்யப் பேல்கட்டு வாங்கவேண்டும் பிரித்துத் தகட்டை எடுக்க வேணும்! - அண்ணி பக்குவமாய்ப் பேசும்போது பாய்ந்துவரும் குரல்ஒலிதான், செக்காடும் சங்கீதமே செவியில்வந்து துளைத்திடுதே! - அண்ணி - முல்லைக்காடு, ப.42, 1948 61. பழய நினைப்பு நேற்றவன் சேவகனாம் - இன்று நீங்கிவந் திட்டாண்டி! ஏற்றம் இறைத்திடவே - உச்சி ஏறி மிதித்தாண்டி! சேற்று நிலத்தினிலே - ஒரு சின்னஞ் சிறு குறும்பன் தோற்றி மணியடித்தான் - அந்தத் தொல்லை மணிஓசை. பழைய சேவகனின் - காதிற் பட்டதும் வண்டி என்றே பழைய ஞாபகத்தில் - செல்லும் பாதை குறிப்பதற்கு, முழுதும் கைதூக்க - அவன் முக்கரணம் போட்டு விழுந்து விட்டாண்டி! - அவன் வீணிற் கிணற்றினிலே! - முல்லைக்காடு, ப.38, 1948 62. சிறுத்தையே வெளியில் வா அகவல் பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகை விரி,எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம் திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித்து வந்த கயவர் நம்மிடைப் பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென் பார்எனில், வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக! இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும் வையம் ஆண்ட வண்டமிழ் மரபே கையி ருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு! நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு! பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக! கைக்குள திறமை காட்ட எழுந்திரு வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்! வாழ்க திராவிட நாடு! வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.90, 1949 63. தீவாளியா? நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன் என்றவனை அறைகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? - இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! உனக்கெது தெரியும்; உள்ளநா ளெல்லாம் நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? என்றுகேட் பவனை: ஏனடா குழந்தாய்! உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள்; அறிவை ஊட்டும்நாள், மானம் உணரும்நாள் இந்நாள்; தீவா வளியும் மானத் துக்குத் தீ - வாளி ஆயின், சீஎன்று விடுவிரே? - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.92, 1949 64. அறம் செய்க அகவல் தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை கடலிலும், வானிலும் கவினுறு நிலத்திலும், வாழ்வுயிர் அனைத்தும், மக்கள் கூட்டமும் வாழுமாறு - அன்பு மணிக்குடை யின்கீழ் உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்! புலவர்கள் உலகப் பொன்னி லக்கியம் ஆக்கினார்! மறவரோ, அறிவு - அறி யாமையைத் தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக் கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும் வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும் அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்! தொடங்குக பணியை! அடங்கல் உலகும் இடும்நம தாணை ஏற்று நடக்கவும் தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும் தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால் தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை இந்த உலகின் எண்ணிலா மதங்கள் கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்! சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர் தமிழகம் வையத் தலையாய் அமையத் தொடங்கு அறம்இன்பம் என்றே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.95, 1949 65. கற்பனை உலகில் எண்சீர் விருத்தம் தெருப்பக்கக் கூண்டறையில் இருந்தேன்; மேசை சிறியதொரு நாற்காலி, தவிர மற்றும் இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி, எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று வருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக; மாலைமணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி ஒருதடவை வெளியினிலே பார்த்தேன்; அங்கே ஒருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்! நெஞ்சத்தில் அவள்வந்தாள்; கடைக்கண் ணால்என் நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர் கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம் காட்டினாள்! பூமலர்ந்த கூந்தல் தன்னில் மிஞ்சும்எழில் காட்டினாள்! அவள்தன் கோபம் மிகலாபம் விளைத்ததன்றோ என்ற னுக்கே! அஞ்சுகமே வா என்று கெஞ்சி னேன்நான்! அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள். இவ்வுலகம் ஏகாந்தத் தின்வி ரோதி! இதோபாராய் பிச்சைஎன ஒருத்தி வந்தாள், திவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித் தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க! வவ்வவ்வென் றொருகிழவி வருவாள். உன்றன் மணநாளில் என்னைஅழை என்று சொல்வாள். ஒவ்வொன்றா? - என்செயலாம்! நீயும் நானும் உயர்வானில் ஏறிடுவோம் பறப்பாய் என்றேன். மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல மாணிக்கக் காலும், மணி விழியும், பால்போல் துல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த் துலங்கினாள் நானும்ஆண் புறாவாய்ப் போனேன். அல்லலற வான்வெளியில் இருவர் நாங்கள். அநாயாச முத்தங்கள்! கணக்கே யில்லை; இல்லைஎன்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி அவைசாய்த்த அமுதுண்போம்; இன்னும் போவோம். பொன்னிறத்துக் கதிர்பாயும் முகிலிற் பட்டுப் புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல் மின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து விரிக்கும்இருள்! இருள்வானம் ஒளிவான் ஆகச் சென்னியைஎன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே சிறகினொடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்! v‹idm¿ na‹!தன்னை அறியாள்! பின்னர் இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்! பாரதநாட் டாரடிநாம் வாவா என்றேன். பழஞ்சாமான் சிறுமேசைக் கூண்ட றைக்குள் ஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல் உட்கார்ந்த படியிருந்தேன். பின்னும் உள்ளம் நேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை நெடியபல தொந்தரைகள், நியதி அற்ற பாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம் பதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே. - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.90, 1949 66. குழந்தை அகவல் மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச் செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ? குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால் முதுவை யத்தின் புதுமை கண்டதோ? என்னவோ அதனை எவர்தாம் அறிவார்? தங்க மாதுளைச் செங்கனி பிளந்த மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு! வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ! பாரீர் அள்ளிப் பருகமாட் டோமோ? செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச் சிரித்தது; பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.99, 1949 67. குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை அகவல் கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு வீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது. யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக் கீச்சுக் கீச்சென்று கூச்ச லிட்டது. கடுகு விழியால் தடவிற்றுத் தாயை தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே! தும்பைப் பூவின் துளிமுனை போன்ற சிற்றடி தத்தித் திரிந்து, சிறிய இறக்கையால் அதற்குப் பறக்கவோ முடியும்! மின்இயக்க விசிறி இறக்கையால் சரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது. கல்வி சிறிதும் இல்லாத் தனது செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி, இப்படி வா என இச்இச் என்றதே! அப்படிப் போவதை அறிந்து துடித்ததே! காக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன! தாக்கலும் கொலையும் தலைவிரித் தாடின; அல்லல் உலகியல் அணுவள வேனும் கல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம் என்றது! துடித்த தெங்கணும் பார்த்தது! மேலிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப் பஞ்சுபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே! எழுந்து லாவும் இளங்குழந் தைகளை இழந்து போக நேரும்; குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.103, 1949 68. கடவுளுக்கு வால் உண்டு காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும், கருங்கு ரங்கின் வாலிலே கட்டிவளையந் தொங்க, அதிலேயும் மதம்என்ற கழுதைதான் ஊச லாட வீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலே வெறிகொண்ட சாதி யென்னும் வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கி மேதினி கலங்கும் வண்ணம் வாணங் கொளுத்துகின் றான்என் பதும்வயிறு வளர்க்கும் ஆத்திகர் கருத்து. மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக் குத்தொங்கும் வாலை யடியோ டறுத்தால் சோணறு கடவுளுக் கும்சுமை அகன்றிடும் தீராத சாதி சமயத் தீயும்விழுந் தொழியும் எனல்என் கருத்தாகும் திருவார்ந்த என்றன் நாடே. - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.106, 1949; சுயமரியாதைச் சுடர், 1931 69. மலையிலிருந்து சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச் சுப்பனைக் காண லானேன்; தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லை என்றுநான் சொன்ன வுடனே, கோபித்த மாப்பிள்ளை மதம்என்னல் மலையுச்சி நான்அ தில்கொய் யாப்பழம் கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால் கோட்டமே என்று சொன்னான். தாபித்த அந்நிலையில் அம்மாப்பிள் ளைக்குநான் தக்கமொழி சொல்லி அவனைத் தள்ளினேன் மலையுச்சி மீதே யிருந்தவன் தன்புதுப் பெண்டாட் டியின் சோபனக் கட்டிலில் தொப்பென்று விழுந்தனன் துயரமும் மனம கிழ்வும் சுப்பனே அறிகுவான் நானென்ன சொல்லுவேன் தூயஎன் அன்னை நாடே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.108, 1949 70. எந்த நாளும் உண்டு மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம் மறிக்கின்ற இந்து மதமும், மசூதியின் பக்கமாய் மேளம் வாசித்திடினும் வாள்தூக்கும் மகமதி யமும் வாடவரு ணாச்சிர மடமைக் கொழுந்தினை மகாத்மீயம் என்னும் நிலையும், வழிபறிக் கும்தொல்லை இன்றியே பொதுமக்கள் மதிப்பைப் பறித்தெ றிந்து பாடின்றி வாழ்ந்திட நினைத்திடும் பாதகப் பார்ப்பனர், குருக்கள், தரகர், பரலோகம் காட்டுவார்என்கின்ற பேதமையும் பகைமிஞ்சு கடவுள் வெறியும். ஆடாமல் அசையாமல் இருந்திடக் கேட்கின்ற அவ்வுரிமை நாளும் இங்கே அமைந்திருக் கின்றதே அறிவியக் கங்கண்ட அழகுசெந் தமிழ்வை யமே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.109, 1949; சுயமரியாதைச் சுடர், 1931 71. தலையுண்டு செருப்புண்டு நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனது நேரான சொற்கள் கேட்பீர்! நீர்மொள் ளவும், தீ வளர்க்கவும் காற்றுதனை நெடுவெளியை அடைவ தற்கும். பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோ பணக்காரர் நன்மை யெல்லாம்? பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு! பறித்துத் தொலைத்து விட்டால் நலமுண்டு! பணக்காரர் வயிறுண்டு! தொழிலாளர் நஞ்சுண்டு சாகட் டுமே! நற்காற்று, வானம், நீர், அனல்பொது வடைந்ததால் நன்செய்யும் பொதுவே எனத் தலையற்ற முண்டங்கள் சொன்னாற் பெரும்பெரும் தலையெலாம் உம்மில் உண்டு! தாழ்ந்தவர்க் கேதுண்டு, காற்செருப் பேஉண்டு! தகைகொண்ட அன்னை நிலமே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, 1949; சுயமரியாதைச் சுடர், 1931 72. எண்ணத்தின் தொடர்பே குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால் கொலையுண்ட தமிழர் நெஞ்சும்: குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக் கொல்வித்த தமிழர் நெஞ்சும்; படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப் பார்ப்பனன் சூழ்ச்சி செய்து படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட பண்புசேர் தமிழர் நெஞ்சும்; கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும் கொள்கையால் வேத நூலின் கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம் கொலையுண்ட தமிழர் நெஞ்சும்; துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே தூயசுய மரியா தையாய்ச் சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத் தூயஎன் அன்னை நிலமே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.113, 1949; சுயமரியாதைச் சுடர், 1931 73. சங்கங்கள் சங்கங்களால் - நல்ல சங்கங்களால் - மக்கள் சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம். சிங்கங்கள்போல் - இளம் சிங்கங்கள்போல் - பலம் சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே. பொங்கும் நிலா - ஒளி பொங்கும் நிலா - எனப் பூரிக்கும் நெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை மங்கிடுமோ? - உள்ளம் மங்கிடுமோ? - என்றும் மங்காது நல்லறி வும்தெளி வும்வரும். - சங்கங் சங்கங்களை - நல்ல சங்கங்களை - அந்தச் சட்டதிட் டங்களை மூச்சென வேகாக்க. அங்கம் கொள்க! - அதில் அங்கம் கொள்க! - எனில் அன்பினை மேற்கொண்டு முன்னின் றுழைத்திட எங்கும் சொல்க! - கொள்கை எங்கும் சொல்க! - இதில் ஏது தடை வந்த போதிலும் அஞ்சற்க! தங்கத்தைப் போல் - கட்டித் தங்கத்தைப் போல் - மக்கள் தங்களை எண்ணுக! சங்கங்க ளிற்சேர்க்க! - தங்கத்தைப் போல் கொள்கை இல்லார் - ஒரு கொள்கை இல்லார் - மக்கள் கூட்டத்தில் இல்லை! சங்கங்களின் சார்பினைத் தள்ளுவதோ? - மக்கள் தள்ளுவதோ? - சங்கத் தாய்வந்து தாவும் தளிர்க்கையைத் தீதென்று விள்ளுவதோ? - மக்கள் விள்ளுவதோ? - மக்கள் வெற்றியெல் லாம்சங்க மேன்மையி லேஉண்டு. கொள்ளுகவே - வெறி கொள்ளுகவே - சங்கம் கூட்டிட வும்கொள்கை நாட்டிடவும் வெறி கொள்ளுகவே. - கொள்ளுகவே சாதி மதம் - பல சாதி மதம் - தீய சச்சர வுக்குள்ளே பேதவுணர்ச்சிகள் போதத்தையே - மக்கள் போதத்தையே - அறப் போக்கிடும் மூடவ ழக்கங்கள் யாவும்இல் லாத இடம் - தீதி லாத இடம் - நோக்கி யேகிடு தேஇந்த வைய இலக்கியம்! ஆதலினால் - உண்மை ஆதலினால் - சங்கம் அத்தனை யும்அதை ஒத்து நடத்துக! உள்ளத்திலே - நல்ல உள்ளத்திலே - எழுந் தூறி வரும்கொள்கை யாகிய பைம்புனல் வெள்ளத்திலே - இன்ப வெள்ளத்திலே - இந்த மேதினி மக்கள் நலம்பெறு வாரென்று தள்ளத் தகாப் - பல தள்ளத் தகா - நல்ல சங்கங்கள் எங்கணும் நிறுவுவர் சான்றவர்; பள்ளத்திலே - இருட் பள்ளத்திலே - வீழ்ந்த பஞ்சை கட்கும்சங்கம் நெஞ்சிற் சுடர்கூட்டும் - சங்கங்களால் தாய் தந்தையர் - நல்ல தாய் தந்தையர் - மண்ணில் தாம் பெற்ற பிள்ளைகள் சங்கத்திற்கே என்ற நேயத்தினால் - மிக்க நேயத்தினால் - நித்தம் நித்தம் வளர்க்க! நற்புத்தி புகட்டுக! ஆயபொருள் - உண் டாய பொருள் - முற்றும் அங்கங் கிருந்திடில் சங்கங்களுக் கென்ற தூய எண்ணம் - மிகு தூய எண்ணம் - இங்குத் தோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில். - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.116, 1949 74. குடியானவன் (வையப் போரில் ரஷியாவை ஜெர்மனி தாக்கத் துவங்கியபோது எழுதியது) அகவல் ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை, நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில் முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி, வழங்கு தமிழரசு வளைந்த வில்லெனக் கிடப்பவன், பகலெல்லாம் கடுக்க உழைப்பவன் குடியான வன் எனக் கூறு கின்றனர் முடிபுனை அரசனும், மிடிஇலாச் செல்வரும்! *** அக்குடி யானவன், அரசர் செல்வ ரோடு! இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை! அழகிய நகரை அவன்அறிந்த தில்லை அறுசுவை உணவுக்கு - அவன்வாழ்ந் ததில்லை அழகிய நகருக்கு - அறுசுவை உணவை வழங்குதல் அவனது வழக்கம்; அதனை விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்! *** சமைத்தல் உழைத்தல் சாற்றும் இவற்றிடை இமைக்கும் நேரமும் இல்லை ஓய்வு - எனும் குடியா னவனின் குறுகிய காதில் நெடிய ஓர்செய்தி நேராய் வந்தது; உலகிற் பெரும்போர்,, உலகைப் பெறும்போர் உலகில் உரிமை உறிஞ்சும் கொடும்போர் மூண்டது மூண்டது மூண்டது - ஆகையால் ஆண்தகை மக்கள் அனைவரும் எழுக - *** அந்த ஏழையும் ஆண்தகை தானாம்! *** ஒருவன் ஆண்தகையை உற்றறி யத்தகும் திருநாள் வாழ்க - எனச் செப்பினான் அவனும்! *** அருமை மகளுக்கு - ஒருதாய் சேர்த்தல்போல், பெருங்கடல் அளக்கும் பெரும்போர்க் கப்பல், குண்டுகள், கொடி வண்டிகள், சாப்புகை, வண்டெனப் பறக்கும் வான ஊர்திகள், அனைய அனைத்தும் அடுக்கடுக் காக மறைவினில் சேர்த்து வைத்த இட்லர், இறைமுதல் குடிகள் யார்க்கும் போர்வெறி முடுக முடுக்கித் திடீரென எழுந்தான்! *** பெல்ஜியம் போலந்து முதல்நல்ல நாடுகள் பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான் முடியரசு நாடு, குடியரசு கொள்ள முடியும் என்பதை முடித்த பிரான்சை வஞ்சம், சூழ்ச்சியால் மடக்கி ஏறி அஞ்சாது செல்வம் அடியொடு பறித்தான். இத்தாலி சேர்த்தே இன்னல் சூழ்ந்தவன், கொத்தாய் ஆசியாக் கொள்கையை நாடும் ஜப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான். ஆங்கில நாட்டையும் அமெரிக் காவையும், எரிக்க நினைத்த இட்லர் என்னுங் குருவி நெருப்புக் குழியில் வீழ்ந்தது! *** எத்தனை நாட்டின் சொத்துக் குவியல்! எத்தனை நாட்டில் இருந்த படைகள்! எத்தனை நாட்டில் இருந்தகா லாட்கள் அத்தனையும் சேர்த்து - அலைஅ லையாக உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்! உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்! பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்! மக்கள் வாழ்வின் மதிப்பு - இன்னதென, ஒக்க வாழும் உறுதி இதுவென முதிய பெரிய முழுநிலத் திற்கும் புதிய தாகப் புகட்டிய நாட்டில் செலுத்தினான் இட்லர், தீர்ந்தான்; முற்றிற்று! *** உருசிய நாட்டின் உடைமையைக் கடமையை மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை உடலில் வைத்தே உயிரினால் காக்கும் உருசி யத்தை இட்லர் உணர்கிலான்! *** ஜப்பான் காரன் தன்கொடி நாட்ட இப்பெரு நாட்டின் எழில்நக ரங்களில் குண்டெறி கின்றான்; கொலையைத் தொடங்கினான் பண்டை நாள்மறத் தொண்டுகற் கண்டென நாய்க்குட்டி நாடுகள் நன்று காணக் காட்டிய தமிழகம் கைகட்டி நிற்குமா? ஊட்டற் றோளை ஓலைத்தோ ளென்னுமா? *** இந்த நாட்டின் இருப்பையும், மூச்சையும், வந்துள பகையை வாட்டும் படையை மாற்றி அமைத்து வைத்தனர் அன்றோ! முகத்தைப் பின்னும் முன்னும் திருப்பாது விடியுமுன் எருதின்வால் அடிபற் றிப்பகல் முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து வருங்குடி யானவன் அருகில்இச் செய்தி வலியச் சென்று வாயைத் திறந்தது! *** எழும்அரசர் செல்வர், எதிரிஇம் மூன்றுக்கு - உழைக்க வேண்டும் அவ்வோலைக் குடிசை, உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ் வைச்ச கனலும் மலைமேல் வழிதல்போல் அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன் குவியப் புதைந்து அவியா மறக்கனல், அக்குடி யானவன் அழகிய தோளிலும், விழியிலும் எழுந்து மின்ன, அவ்வேழை எழுந்தான்; அவனுக்கு - இதற்குமுன் வைத்த இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை இவை,அவன் காலை இழுத்தன கடித்து! *** மெத்தை வீடு, மேன்மை ஆப்பிள், முத்தரிசி பாலில் முழுகிய சோறு, விலைதந்து தன்புகழ் விதைக்கும் ஆட்கள், இவற்றி னின்றுதான் இன்பமும் அறமும், துவங்கும் என்று சொல்லல் பொய்ம்மை! *** இதைஅவன் கண்ட தில்லை, ஆயினும் அக்குடி யானவன் எழுந்தான் நிற்க வில்லை! நிறைந்தான் போரிலே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.118, 1949 குறிப்பு: சக்தி இதழ் வெளியிடாமல் திருப்பியது. 75. வாழ்வு அச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல் லன்பின் விளைவது வாழ்வு மச்சினில் வாழ்பவ ரேனும் - அவர் மானத்தில் வாழ்வது வாழ்வு! உச்சி மலைவிளக் காக - உல கோங்கும் புகழ்கொண்ட தான பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ் பாய்ந்திட வாழ்வது வாழ்வு! மூதறி வுள்ளது வாழ்வு! - நறும் முத்தமிழ் கற்பது வாழ்வு! காதினில் கேட்டதைக் கண்ணின் - முன் கண்டதை ஓவியம் ஆக்கும் பாதித் தொழில்செய லின்றி - உளம் பாய்ச்சும் கருத்திலும் செய்கை யாதிலும் தன்னை விளக்கும் - கலை இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு! ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி அன்னவர் காலிடை வீழ்ந்து நாய்களைப் போல் நமக்குள்ளே - சண்டை நாளும் வளர்க்கும் மதங்கள் தூயன வாம்என்று நம்பிப் - பல தொல்லை யடைகுவ தின்றி நீஎனல் நானெனல் ஒன்றே - என்ற நெஞ்சில் விளைவது வாழ்வு! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.135, 1949 76. கொட்டு முரசே எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்த தென்று கொட்டு முரசே! - வாழ்வில் கட்டுத் தொலைந்த தென்று கொட்டு முரசே! இல்லாமை என்னும் பிணி இல்லாமல் கல்விநிலம் எல்லார்க்கும் என்று சொல்லிக் கொட்டு முரசே! - வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்த தென்று கொட்டு முரசே! சான்றாண்மை இவ்வுலகில் தோன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்த தென்று கொட்டு முரசே - வாழ்வில் ஊன்றிய புகழ் சொல்லிக் கொட்டு முரசே! ஈன்று புறந் தருதல் தாயின் கடன்! உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டு முரசே! - வாழ்வில் தேன்மழை பெய்த தென்று கொட்டு முரசே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.136, 1949 77. மடமை ஓவியம் பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும் படத்தின் நோக்கமெனில் போர்த்த அழுக்குடை மாற்றமும் வேறு புதுக்கலும் தீதாமோ? காத்தது முன்னைப் பழங்கதை தான்எனில் கற்பனை தோற்றதுவோ? மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதை பார்க்க மறுத்தார்கள்? 1 பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல் படங்களின் நோக்கமெனில், நாமம் குழைத்திட வோஅறி வாளர்கள் நற்கலை கண்டார்கள்? தூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில் தொடங்கையில் செல்வரெலாம் தாமறிந் துள்ள தமிழ்ப்புல வோர்களைச் சந்திப்ப தேனும்உண்டோ? 2 நேர்மை இலாவகை இத்தனை நாளும் நிகழ்ந்த படங்களெல்லாம் சீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத் திறத்திற் பிறந்திருந்தால், ஓர்தமிழ் நாட்டில் உருசிய நாட்டையும் உண்டாக்கித் தீர்த்திடலாம் ஆர்செயும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்? அடிமையும் தீர்ந்திடலாம்! 3 - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.122, 1949 78. நாடகம், சினிமா நிலை எண்சீர் விருத்தம் சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச் சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும் கோரிக்கை பணம்ஒன்றே என்று சொன்னால் கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும் பழமைநிலை நீங்கிநலம் சேர்ப்ப தற்கும் ஆராய்ந்து மேல்நாட்டார் நாட கங்கள் அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின் றார்கள். 1 ஒருநாட்டின் வேரிலுற்ற பகைமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும் பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப் பிடித்தபிடி யிற்பிடித்துத் தீர்ப்ப தற்கும் பெருநோக்கம் கொள்வதற்கும் பிறநாட் டார்கள் நாடகங்கள், சினிமாக்கள் செய்வார்; என்றன் திருநாட்டில் பயனற்ற நாட கங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும். 2 தமிழ் நாட்டில் நாடகத்தால் சம்பா திப்போர் தமிழ்மொழியின் பகைவரே! கொள்கை யற்றோர்! இமயமலை யவ்வளவு சுயந லத்தார்! இதம்அகிதம் சிறிதேனு மறியா மக்கள்! தமைக்காக்கப் பிறர்நலமும் காக்க என்னும் தருமகுண மேனுமுண்டோ? இல்லை. இந்த அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள் அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை! 3 முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில் மூளிசெயல் தாங்காத நல்ல தங்கை தானேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர் இந்நிலையில் நாடகத்தில் தமிழோ, காதை இருகையில் மூடிக்கொள் என்று சொல்லும், தென்னாட்டின் நிலைநினைத்தால் வருந்தும் உள்ளம் செந்தமிழர் நிலைநினைத்தால் உளம்வெ டிக்கும்! 4 - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.124, 1949 79. படத்தொழிற் பயன் கேள்வி நூறா யிரக்கணக் காகச்செல விட்டு நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர் மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை மக்களுக் கீந்தனர் அண்ணே - அது தக்கது வோபுகல் அண்ணே. விடை கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர் கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது! ஏறாக் கருத்தை இங்கில்லாக் கதைகளை ஏற்றின ரோஅவர் தம்பி? - இது மாறாதி ருக்குமோ தம்பி? கேள்வி தன்னருந் தொண்டினில் தக்கதோர் நம்பிக்கை, தாங்கருந் தீங்கினில் நீங்கிடும் நல்லாற்றல் என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை என்றைக்கு வந்திடும் அண்ணே? - இங் கெழுத்தாள ரேஇல்லை அண்ணே. விடை சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்ஒரு செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள் நன்னெறி காணாத மூதேவி தன்னையும் நான்முகன் பெண்டென்பர் தம்பி - தொலைந் தேன்என்னும் பொய்க்கதை தம்பி. கேள்வி செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்! தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக? வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார் வளர்ந்திடு மோகலை அண்ணே? - இங்கு மாயும் படக்கலை அண்ணே. விடை அந்தத் தெலுங்கு மலையாளம் கன்னடம் அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ வாழ்த்துகநீ யிதைத் தம்பி - இதைத் தாழ்த்துதல் தீயது தம்பி. கேள்வி அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி அங்கங் கிருப்பவர் பேசும் மொழிப்படி செங்கைத் திறத்தால் திரைப்படம் ஆக்கிடில் தீமை ஒழிந்திடும் அண்ணே - நம் செந்தமிழ் நேருறும் அண்ணே. விடை கங்குல், பகல், அதி காலையும் மாலையும் காலத்தின் பேராய் விளங்குதல் போலே இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெனல் எல்லாம் திராவிடம் தம்பி - இதில். பொல்லாங் கொன் றில்லையே தம்பி. - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.126, 1949 80. பெண்குரங்குத் திருமணம் பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி பெண்வேண்டும் மகனுக் கெனப் பெற்றபெண் ணைக்கொடேன் வளர்க்கின்ற பெண்ணுண்டு பேச்செலாம் கீச் சென்றனன். இருந்தால் அதற்கென்ன எனவே, எனதுபெண் இரட்டைவால் அல்ல என்றான். ஏழையண் ணாசாமி மகிழ்ச்சிதான் என்றனன், என்றன்பெண் கால்வரைக்கும் கருங்கூந்தல் உண் டென்ன ஏழையண் ணாசாமி கடிதுமண நாள்கு றித்தான். கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்தபெண் கழுதையா? அல்லஅதுதான். பெரும்பணக் காரன் வளர்த்திட்ட ஒற்றைவாற் பெட்டைக் கருங்குரங்கு! பீடுசுய மரியாதை கண்டுநல முண்டிடும் பெரியஎன் அன்னைநாடே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.110, 1952; சுயமரியாதைச் சுடர், 1931 81. கற்பின் சோதனை கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க் கருதியே கைம்மைகொண்ட கண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும் கணவனின் வைப்பாட்டியும் ஒப்பியே வந்தார்கள்; கண்ணம்மை நோக்கினாள் உடன்இப்பெண் யார் என்றனள். உன்சக்க ளத்திதான் என்றனன், கண்ணம்மை உணவுக்கு வழிகேட்டனள். இப்பத்து மாதமாய்க் கற்புநீ தவறாமல் இன்னபடி வாழ்ந்துவந்தாய் என்பதனை எண்பிக்க எங்களிரு வர்க்கும்நீ ஈந்துவா உணவெ ன்றனன். அப்படியும் ஒப்பினாள் கண்ணம்மை; ஆயினும் அடிமையாம் பலிபீடமேல் அவள்உயிர் நிலைக்குமோ? அறிவியக்கங் கண்ட அழகுசேர் அன்னைநாடே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.111, 1952; சுயமரியாதைச் சுடர், 1931 82. அன்னையின் ஆவல் காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து கையில் விரித்தகுடை தூக்கி - நல்ல கல்விக் கழகமதை நோக்கிக் - காய்ச்சும் பாலுக்கு நிகர்மொழிப் பாவைநீ செல்லுவதைப் பார்க்கும் இன்பந்தானடி பாக்கி. மேலுக்குச் சட்டையிட்டு மெல்லியசிற் றாடைகட்டி வீட்டினின்றும் ஆட்டமயில் போலே - கைம் மேற்சுவடி யோடுதெரு மேலே - கூர் வேலுக்கு நிகர்விழி மெல்லிநீசெல் வதைக்காண வேண்டுமே இப் பெற்றவள் கண் ணாலே. ஓவியம்கற் றாள்உன்மகள் காவியம்கற் றாளெனவே ஊரார் உன்றனை மெச்சும் போது - கண்ணே உவகைதான் தாங்குமோஎன் காது? - நீஓர் பாஎழு தும்திறத்தால் ஊர்அமைதி கொண்டதென்று பாரோர் புகழ்வ தெந்நாள் ஓது? மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியேநீ மங்கை எனும்பருவம் கொண்டு - காதல் வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு - காட்டித் “தேவை இவன்” எனவே செப்பும் மொழிஎனக்குத் தேன்! கனி! தித்திக்குங்கற் கண்டு. பூவும் நறுமணமும் ஆவியும் உடலும்போல் பொன்னெஉன் அன்பனொடு சேர்ந்து - சிறு புன்மையும் இல்லாமல் அறம் சார்ந்து - பூங் காவில் உலவுவது காணக் கிடைத்திடுமோ கண்ணே சொல்லடி அன்பு கூர்ந்து. சேவல் எனநிமிர்ந்து சிறுத்தையெனப் பகையைச் சீறும் குழந்தைகளைப் பெற்றே - நீ செல்வம் பலவும் மிக உற்றே - நல்ல காவல் இருந்துவளந் தாவும் திராவிடத்தைக் காப்பது காண வேண்டும் சற்றே. - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.31, 1952; குயில், 1. 3. 1948 83. பூத்தொடுத்தல் தலைவி: விருந்து வரக் கண்ட மெல்லி முகம்போல், முல்லை யரும்பு மலர்ந்த தென்ன - வேடிக்கை தோழி: தெரிந்தவரைக் கண்டாலும் தெரியாதாரைக் கண்டாலும் சிரிப்பதுதான் இதன் - வாடிக்கை தலைவி: தங்கத்தில் அச்சிட்டுச் சரிபார்த்து மெருகிட்டு மங்கா இயற்கை தந்த - சாமந்தி தோழி: இங்கே இதுவுந்தான் மஞ்சளுக் கவளப்பன் சரக் கொன்றை பார்இ - தைமுந்தி தலைவி: அரளி மாணிக்கம் போன்ற அலரி மருக் கொழுந்தும் அடுக்கடுக்காய் வைத்துத் - தொடுப்போம் தோழி: ஒரு விரற் கடை பச்சை ஒரு விரற் கடை வெள்ளை இப்படியே தொடுத்து - முடிப்போம். - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.34, 1952; குயில், 1. 3. 1948 84. புறாவே தன்போல் மற்றொன்றைத் தான்உண் டாக்குதல் மன்னுயிர்க் கெல்லாம் இயல்போ புறாவே? இன்பம், குழந்தையைப் பெறுவது தானோ? வளர்ப்பதும் இன்பமோ மாடப் புறாவே? உயிரில் கலந்த உணவையும் கக்கியே ஊட்டிடு கின்றதும் இன்பமோ புறாவே? மயல்தீர் வாழ்வில் இன்பத்தின் அடிப்படை மக்களைப் பெறுவதோ மாடப் புறாவே? மக்களின் மலருடல் தொடுவதும் இன்பமோ? மழலை மொழியும், குழலோ புறாவே? மக்களில் லாதார் வாழ்க்கை விழலோ மனநலம் வாய்ந்த மாடப் புறாவே? - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.35, 1952; குயில், 1. 3. 1948 85. பந்தாடல் தலைவி: அடித்த பந்தினை மறித்துப் பிடிக்க ஆகாதடி மாதே ஆகாதடி தோழி: பிடித்துப் பந்தினைத் திருப்பினேன் அடி நீபாரடி மாதே நீ பாரடி தலைவி: அங்குவந்த பந்துன் திங்கள் முகத்தொடு போராடுதே மானே போராடுதே தோழி: மங்கை என்பந்து பறந்துன் மார்புக்கு நேராகவே மானே நேராகவே தலைவி: தாக்கிடும் என்பந்து பார்த்துத் தடுத்துக்கொள் நேராகவே தோழி நேராகவே தோழி: தூக்கி அடித்தேனே பூப்பந்து பாரடி தோள் மீதிலே தோழி தோள் மீதிலே. - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.36, 1952; குயில், 1. 3. 1948 86. தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு (குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு) புவியிற் சமூகம் இன்பம் பூணல் சமத்துவத்தால் கவிழ்தல் பேதத்தாலடி - சகியே கவிழ்தல் பேதத்தாலடி! 1 புவிவேகம் கொண்டு செல்லும் போதில் உடன் செல்லாதார்! அவிவேகம் கொண்டாரடி - சகியே அவிவேகம் கொண்டாரடி 2 தாழ்வென்றும் உயர்வென்றும் சமூகத்திற் பேதங்கொண்டால் வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே வாழ்வின்பம் உண்டாகுமோ? 3 தாழ்ந்தவர் என்று நீக்கிச் சமுதாயச் சீர்தேடி வாழ்ந்தது காணேனடி - சகியே வாழ்ந்தது காணேனடி! 4 பிறப்பி லுயர்வுதாழ்வு பேசும் சமூகம் மண்ணில் சிறக்குமோ சொல்வாயடி - சகியே சிறக்குமோ சொல்வாயடி? 5 பிறந்த முப்பது கோடிப் பேரில் ஐங்கோடி மக்கள் இறந்தாரோ சொல்வாயடி - சகியே இறந்தாரோ சொல்வாயடி? 6 இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் நல்ல சுதந்தரம் உண்டாகுமோ - சகியே சுதந்தரம் உண்டாகுமோ? 7 பதம்பெறப் பணிசெய்வோர் பகைகொண்டார் எனில்எந்த விதம்அஃது கொள்வாரடி - சகியே விதம்அஃது கொள்வாரடி? 8 சோதர பாவம் நம்மில் தோன்றாவிடில் தேசத்தில் தீதினி நீங்காதடி - சகியே தீதினி நீங்காதடி! 9 பேதம் பாராட்டி வந்தோம் பிழைசெய்தோம் பல்லாண்டாக மீதம் உயிர்தானுண்டு - சகியே மீதம் உயிர்தானுண்டு! 10 அற்பத் தீண்டாதார் என்னும் அவரும் பிறரும் ஓர்தாய் கர்ப்பத்தில் வந்தாரன்றோ! - சகியே கர்ப்பத்தில் வந்தாரன்றோ? 11 பொற்புடை முல்லைக்கொத்தில் புளியம்பூ பூத்ததென்றால் சொற்படி யார்நம்புவார் - சகியே சொற்படி யார்நம்புவார்? 12 தீண்டும் மக்களின் அன்னை தீண்டாரையும் பெற்றாளோ? ஈண்டிதை யார்நம்புவார்? - சகியே ஈண்டிதை யார்நம்புவார்? 13 தீண்டாமை ஒப்புகின்றார் தீண்டாரிடம் உதவி வேண்டாமல் இல்லையடி - சகியே வேண்டாமை இல்லையடி! 14 அடிமை கொடியதென்போர் அவர்சோத ரர்க்கிழைக்கும் மிடிமையை எண்ணாரடி - சகியே மிடிமையை எண்ணாரடி 15 கொடியோர் பஞ்சமர் என்று கூடப் பிறந்தோர்க்கிவர் சுடும்பேர் வைத்திட்டாரடி! - சகியே சுடும்பேர் வைத்திட்டாரடி! 16 தீண்டாதார் பழங்கீர்த்தி தெரிந்தால் தீண்டாமைப்பட்டம் வேண்டாதார் இல்லையடி - சகியே வேண்டாதார் இல்லையடி! 17 ஆண்டார் தமிழர்இந்நா டதன்பின் ஆரியர் என்போர் ஈண்டுக் குடியேறினார் - சகியே ஈண்டுக் குடியேறினார்! 18 வெள்ளை யுடம்புகாட்டி வெறும்வாக்கு நயம்காட்டிக் கள்ளங்கள் செய்தாரடி - சகியே கள்ளங்கள் செய்தாரடி! 19 பிள்ளைக்குக் கனிதந்து பின்காது குத்தல்போல்தம் கொள்கை பரவச் செய்தார் - சகியே கொள்கை பரவச் செய்தார்! 20 கொல்லா விரதம் கொண்டோர் கொலைசெய்யும் ஆரியர்தம் சொல்லுக் கிசைந்தாரடி - சகியே சொல்லுக் கிசைந்தாரடி! 21 நல்ல தமிழர் சற்றும் நலமற்ற ஆரியர்தம் பொல்லாச்சொல் ஏற்றாரடி - சகியே பொல்லாச்சொல் ஏற்றாரடி! 22 ஏச்சும் எண்ணார் மானம் இல்லாத ஆரியர் மிலேச்சர்என் றெண்ணப்பட்டார் - சகியே மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! 23 வாய்ச்சாலத் தால்கெட்ட வஞ்சகத்தால் கலகத்தால் ஏய்ச்சாள வந்தாரடி - சகியே ஏய்ச்சாள வந்தாரடி! 24 மன்னர்க் கிடையில் சண்டை வளர்த்தார்தம் வசமானால் பொன்னாடுசேர்வார் என்றார் - சகியே பொன்னாடுசேர்வார் என்றார்! 25 பொன்னாட்டு மாதர் போலும் பூலோகத் தில்லை யென்று மன்னர்பால் பொய்கூறினார் - சகியே மன்னர்பால் பொய்கூறினார்! 26 வான்மறை எனத்தங்கள் வழக்கம் குறித்தநூலைத் தேன்மழை என்றாரடி - சகியே தேன்மழை என்றாரடி! 27 ஏன்மறை எங்கட்கென்றே இசைத்தால் ஆரியர் நீங்கள் வான்புகத் தானென்றனர் - சகியே வான்புகத் தானென்றனர்! 28 மேலேழு லோகம் என்றார் கீழேழு லோகம் என்றார் நூலெல்லாம் பொய்கூறினார் - சகியே நூலெல்லாம் பொய்கூறினார்! 29 மேலும் தமை நிந்திப்போர் மிகுகஷ்டம் அடைவார்கள் தோலோதோல் கூடாதென்றார் - சகியே தோலோதோல் கூடாதென்றார்! 30 சுவர்க்கத்தில் தேவர் என்போர் சுகமாய் இருப்பதுண்டாம் அவர்க்குத்தாம் சொந்தம்என்றார் - சகியே அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! 31 துவக்கத்தில் ஆரியரைத் தொழுதார் இறந்தபின்பு சுவர்க்கஞ்செல் வார்என்றனர் - சகியே சுவர்க்கஞ்செல் வார்என்றனர்! 32 தம்சிறு வேதம்ஒப்பாத் தமிழரை ஆரியர்கள் நஞ்சென்று கொண்டாரடி - சகியே நஞ்சென்று கொண்டாரடி! 33 வெஞ்சிறு வேதம்ஒப்பா வீரரை ஆரியர்கள் வஞ்சித்துக் கொன்றாரடி - சகியே வஞ்சித்துக் கொன்றாரடி! 34 அழிவேதம் ஒப்பாதாரை அரக்கரென் றேசொலிப் பழிபோட்டுத் தலைவாங்கினார் - சகியே பழிபோட்டுத் தலைவாங்கினார்! 35 பழிவேதம் ஒப்போம்என்ற பண்டைத் தமிழர்தம்மைக் கழுவேற்றிக் கொன்றாரடி - சகியே கழுவேற்றிக் கொன்றாரடி! 36 ஆரியர்தமை ஒப்பா ஆதித் திராவிடரைச் சேரியில் வைத்தாரடி - சகியே சேரியில் வைத்தாரடி! 37 சேரிப் பறையர்என்றும் தீண்டாதார் என்றும்சொல்லும் வீரர்நம் உற்றாரடி - சகியே வீரர்நம் உற்றாரடி! 38 வெஞ்சமர் வீரர்தம்மை வெல்லாமற் புறந்தள்ளப் பஞ்சமர் என்றாரடி - சகியே பஞ்சமர் என்றாரடி! 39 தஞ்சம் புகாத்தமிழர் சண்டாளர் எனில்தாழ்ந்து கெஞ்சுவோர் பேரென்னடி - சகியே கெஞ்சுவோர் பேரென்னடி! 40 மாதர் சகிதம் தங்கள் மதத்தைத் தமிழ்மன்னர்க்குப் போதனை செய்தாரடி - சகியே போதனை செய்தாரடி! 41 சூதற்ற மன்னர் சில்லோர் சுவர்க்கக் கதையை நம்பித் தீதுக் கிசைந்தாரடி - சகியே தீதுக் கிசைந்தாரடி! 42 உலகம் நம்மைப் பழிக்க உட்புகுந் தாரியர்கள் கலகங்கள் செய்தாரடி - சகியே கலகங்கள் செய்தாரடி! 43 கொலைக்கள மாக்கிவிட்டார் குளிர்நாட்டைத் தம்வாழ்வின் நிலைக்களம் என்றாரடி - சகியே நிலைக்களம் என்றாரடி! 44 சாதிப் பிரிவு செய்தார் தம்மை உயர்த்துதற்கே நீதிகள் சொன்னாரடி - சகியே நீதிகள் சொன்னாரடி! 45 ஓதும் உயர்வுதாழ்வை ஆரியர் உரைத்திட்டால் ஏதுக்கு நாம்ஏற்பதோ - சகியே ஏதுக்கு நாம்ஏற்பதோ? 46 ஊர்இரண்டு படுங்கால் உளவுள்ள கூத்தாடிக்குக் காரியம் கைகூடுமாம் - சகியே காரியம் கைகூடுமாம்! 47 நேர்பகை யாளிஎன்னை நீசனென்றால் என்சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி - சகியே சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி! 48 வீரமில் ஆரியரின் வீண்வாக்கை நம்பினால்நம் காரியம் கைகூடுமோ? - சகியே காரியம் கைகூடுமோ? 49 ஆரியர் சொன்னவண்ணம் ஆண்டுபல கழித்தோம் காரியம் கைகூடிற்றா? - சகியே காரியம் கைகூடிற்றா? 50 எத்தால் வாழ்வுண்டாகும்! நாம் ஒத்தால் வாழ்வுண்டாகும் இஃது சத்தான பேச்சல்லவோ? - சகியே சத்தான பேச்சல்லவோ? 51 எத்தான பேச்சைநம்பி இரத்தக் கலப்பைநீக்கிச் சத்தின்றி வாழ்வாருண்டோ - சகியே சத்தின்றி வாழ்வாருண்டோ? 52 ஆரியப் பேர்மறைந்தும் அவர்வைத்த தீண்டார் என்ற பேர்நிற்றல் ஏதுக்கடி - சகியே பேர்நிற்றல் ஏதுக்கடி? 53 ஆரியர் பார்ப்பாரானால் அவர்சொன்ன தீண்டாதார்கள் சேரியில் ஏன்தங்கினார்? - சகியே சேரியில் ஏன்தங்கினார்? 54 ஊர்தட்டிப் பறித்திட உயர்சாதி என்பார்இஃதை மார்தட்டிச் சொல்வேனடி - சகியே மார்தட்டிச் சொல்வேனடி! 55 ஓர்தட்டில் உயர்ந்தோர்மற் றொன்றில் தாழ்ந்தோரை இட்டுச் சீர்தூக்கிப் பார்ப்போமடி - சகியே சீர்தூக்கிப் பார்ப்போமடி! 56 தீண்டாதார் சுத்தமற்றோர் என்றாலச் சுத்தத் தன்மை தாண்டாதார் எங்குண்டடி? - சகியே தாண்டாதார் எங்குண்டடி? 57 தீண்டாதார் ஊனுண்டால் தீண்டு மனிதர்வாய்க்குள் மாண்டன பல்கோடியாம் - சகியே மாண்டன பல்கோடியாம்! 58 பறவை மிருகமுண்டோர் பறையர் என்றால் மனுநூல் முறையென்பார் பேரென்னடி? - சகியே முறையென்பார் பேரென்னடி? 59 வெறிமது உண்போர்நீசர் என்றால் பிறர்க்கிருட்டில் நிறைமுக்கா டேதுக்கடி? - சகியே நிறைமுக்கா டேதுக்கடி? 60 சீலம் குறைந்தோர் என்றால் சீலமிலாச் சிலரை ஞாலத்தில்ஏன் தீண்டினார் - சகியே ஞாலத்தில்ஏன் தீண்டினார்? 61 மேலைவழக்கங் கொண்டு மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக் காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே காலத்தில் தாழ்ந்தாருண்டோ? 62 சாத்திரம் தள்ளிற்றென்றால் சற்றும் அதுதான் எங்கள் கோத்திரத் தார்செய்ததோ? - சகியே கோத்திரத் தார்செய்ததோ? 63 வாய்த்திறம் கொண்ட மக்கள் வஞ்சம் யாவையும் நம்பி நேத்திரம் கெட்டோமடி - சகியே நேத்திரம் கெட்டோமடி. 64 மனிதரிற் றாழ்வுயர்வு வகுக்கும் மடயர் வார்த்தை இனிச்செல்ல மாட்டாதடி - சகியே இனிச்செல்ல மாட்டாதடி! 65 கனிமா மரம் வாழைக்காய் காய்க்காதெனில் இரண்டும் தனித்தனிச் சாதியடி - சகியே தனித்தனிச் சாதியடி! 66 எருமையைப் பசுச்சேர்தல் இல்லை; இதனாலிவை ஒருசாதி இல்லையடி! - சகியே ஒருசாதி இல்லையடி! 67 ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை ஒப்பக் கருக்கொள்ளுங்கால் இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே இருசாதி மாந்தர்க்குண்டோ? 68 உழைப்பால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றன்னோர் பிழைப்பைக் கெடுத்தாரடி - சகியே பிழைப்பைக் கெடுத்தாரடி! 69 தொழிலின்றிச் சோறுண்ணாச் சுத்தர் அசுத்தர்என்ப தெழிலற்ற வார்த்தையடி - சகியே எழிலற்ற வார்த்தையடி! 70 உடல்நோய்கள் அற்றபேரை ஒழுக்கமில்லார் என்பவர் கடலையைஉளுந் தென்பரோ? - சகியே கடலையைஉளுந் தென்பரோ? 71 தடையற்ற அன்பினரைச் சண்டாளர் என்றுசொல்லும் கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே கடையர்க்கு வாழ்வேதடி? 72 பழிப்பவர்க்கும் உதவும் பாங்கர் பறையர் என்பார் விழித்துத் துயில்வாரடி - சகியே விழித்துத் துயில்வாரடி. 73 தழைக்கப் பிள்ளைபெறுவோர் தாழ்வாம்! பிள்ளைக்கையரை அழைப்போர்கள் மேலோர்களாம் - சகியே அழைப்போர்கள் மேலோர்களாம்? 74 தோள்தான் பொருள் என்போர்கள் தாழ்வாம்; துரும்பெடுக்கக் கூடாதோர் மேலென்பதாம் - சகியே கூடாதோர் மேலென்பதாம்! 75 மாடா யுழைப்பவர்கள் வறியர்; இந்நாட்டுத் தொழில் நாடாதோர் செல்வர்களோ? - சகியே நாடாதோர் செல்வர்களோ? 76 ஏரிக்கரையினில் வாழ்ந் திருந்து பிறரைக் காக்கும் சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே சேரியர் தாழ்ந்தார்களோ? 77 ஊருக்கி ழிந்தோர் காவல் உயர்ந்தோர் இவர்கள் வாழ்வின் வேருக்கு வெந்நீரடி - சகியே வேருக்கு வெந்நீரடி! 78 அங்கம் குறைச்சலுண்டோ ஆதித் திராவிடர்க்கே? எங்கேனும் மாற்றமுண்டோ; - சகியே எங்கேனும் மாற்றமுண்டோ? 79 புங்கவர் நாங்கள்என்பார் பூசுரர் என்பார்நாட்டில் தங்கட்கே எல்லாம்என்பார் - சகியே தங்கட்கே எல்லாம் என்பார் 80 ஆதிசைவர்கள் என்பார்; ஆதிக்குப் பின் யார்? என்றால் காதினில் வாங்காரடி! - சகியே காதினில் வாங்காரடி! 81 சாதியில் கங்கைபுத்ரர் என்பார்கள் சாட்சி, பத்ரம் நீதியில் காட்டாரடி - சகியே நீதியில் காட்டாரடி! 82 வேலன்பங் காளியென்பார் வெறுஞ்சேவ கனைக்கண்டால் காலன்தான் என்றஞ்சுவார் - சகியே காலன்தான் என்றஞ்சுவார்! 83 மேலும் முதலி; செட்டி, வேளாளப் பிள்ளைமுதல் நாலாயிரம் சாதியாம் - சகியே நாலாயிரம் சாதியாம்! 84 எஞ்சாதிக் கிவர்சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போனாரடி! - சகியே பஞ்சாகிப் போனாரடி! 85 நெஞ்சில் உயர்வாய்த் தன்னை நினைப்பான் ஒருவேளாளன் கொஞ்சமும் எண்ணாததால் - சகியே கொஞ்சமும் எண்ணாததால்! 86 செட்டி உயர்ந்தோன் என்பான் செங்குந்தன் உயர்வென்பான் குட்டுக்கள் எண்ணாததால் - சகியே குட்டுக்கள் எண்ணாததால்! 87 செட்டிகோ முட்டிநாய்க்கன் சேணியன் உயர்வென்றே கட்டுக் குலைந்தாரடி - சகியே கட்டுக் குலைந்தாரடி! 88 சேர்ந்துயர் வென்றிவர்கள் செப்பினும் பார்ப்பனர்க்குச் சூத்திரர் ஆனாரடி - சகியே சூத்திரர் ஆனாரடி! 89 தூற்றிட இவ்வுயர்ந்தோர் சூத்திரர் என்றுபார்ப்பான் காற்றினில் விட்டானடி - சகியே காற்றினில் விட்டானடி! 90 தம்மை உயர்த்தப் பார்ப்பார் சமூகப் பிரிவுசெய்தார் இம்மாயம் காணாரடி - சகியே இம்மாயம் காணாரடி! 91 பொய்ம்மை வருணபேதம் போனால் புனிதத்தன்மை நம்மில்நாம் காண்போமடி - சகியே நம்மில்நாம் காண்போமடி! 92 நான்கு வருணம் என்று நவிலும் மனுநூல்விட்டு ஏனைந்து கொண்டாரடி - சகியே ஏனைந்து கொண்டாரடி? 93 நான்கு பிரிவும் பொய்ம்மை நான்குள்ளும் பேதம் என்றால் ஊனத்தில் உள்ளூனமாம் - சகியே ஊனத்தில் உள்ளூனமாம்! 94 சதுர்வர்ணம் வேதன் பெற்றான் சாற்றும் பஞ்சமர் தம்மை எதுபெற்றுப் போட்டதடி - சகியே எதுபெற்றுப் போட்டதடி! 95 சதுர்வர்ணம் சொன்னபோது தடிதூக்கும் தமிழ்மக்கள் அதில்ஐந்தாம் நிறமாயினார் - சகியே அதில் ஐந்தாம் நிறமாயினார்! 96 மனிதரில் தீட்டுமுண்டோ? மண்ணிற் சிலர்க்கிழைக்கும் அநீதத்தை என்சொல்வதோ - சகியே அநீதத்தை என்சொல்வதோ? 97 புனிதர்என் றேபிறத்தல் புல்லர்என் றேபிறத்தல் எனுமிஃது விந்தையடி - சகியே எனுமிஃது விந்தையடி! 98 ஊரிற் புகாதமக்கள் உண்டென்னும் மூடரிந்தப் பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நாமேயடி! 99 நேரிற்பார்க் கத்தகாதோர் நிழல்பட்டால் தீட்டுண்டென்போர் பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நாமேயடி! 100 மலம்போக்கும் குளம்மூழ்கா வகைமக்களை நசுக்கும் குலமாக்கள் நாமேயடி - சகியே குலமாக்கள் நாமேயடி! 101 மலம்பட்ட இடம் தீட்டாம் மக்கள் சிலரைத் தொட்டால் தலைவரைக்கும் தீட்டாம் - சகியே தலைவரைக்கும் தீட்டாம்! 102 சோமனைத் தொங்கக்கட்டச் சுதந்தரம் சிலர்க்கீயாத் தீமக்கள் நாமேயடி - சகியே தீமக்கள் நாமேயடி! 103 தாமூழ்கும் குளம் தன்னில் தலைமூழ்கத் தகாமக்கள் போமாறு தானென்னடி? - சகியே போமாறு தானென்னடி? 104 பாதரட்சை யணிந்தாற் பழித்துச் சிலரைத் தாழ்த்தும் காதகர் நாமேயடி - சகியே காதகர் நாமேயடி. 105 ஓத வசதியின்றி உலகிற் சிலரைத் தாழ்த்தும் சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே சூதர்க்கு வாழ்வேதடி? 106 தீராப் பகையு முண்டோ திருநாட்டார்க் குள்ளும் நெஞ்சம் நெராகிப் போனாலடி - சகியே நேராகிப் போனாலடி? 107 ஓரைந்து கோடி மக்கள் ஓலமி டுங்கால் மற்றோர் சீராதல் இல்லையடி - சகியே சீராதல் இல்லையடி! 108 தாழ்வில்லை உயர்வில்லை சமமென்ற நிலைவந்தால் வாழ்வெல்லை காண்போமடி - சகியே வாழ்வெல்லை காண்போமடி! 109 சூழ்கின்ற பேதமெல்லாம் துடைத்தே சமத்துவத்தில் வாழ்கின்றார் வாழ்வின்பமாம் - சகியே வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! 110 - பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் தொகுதி, ப.181, 1955 குறிப்பு: 1930இல் தனி நூலாக வெளிவந்துள்ளது. 87. ஆலய உரிமை (ஆறுமுக வடிவேலனே - கலியாணமும் செய்யவில்லை என்ற காவடிச் சிந்தின் மெட்டு) கண்ணிகள் எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென் றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில் அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம் அழகிய நேத்திரங்கள்? 1 திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்று சேர்த்திடலாகும் அன்றோ? - எனில் அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில் அத்தனை பேரும் ஒன்றே? 2 ஏக பரம்பொருள் என்பதை நோக்க எல்லாரும்உடன் பிறப்பே - ஒரு பாகத்தார் தீண்டப்படாதவர் என்பதி லேஉள்ளதோ சிறப்பே? 3 தேகம்சுமை நமைச் சேர்ந்ததில்லை என்று செப்பிடும் தேசத்திலே - பெரும் போகம் சுமந்துடற் பேதம் கொண்டோம்; மதி போயிற்று நீசத்திலே. 4 என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி தன்னை விலக்கிடுமோ இதை யோசிப்பீர் சமூகநிலை புரியும். 5 என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும் ஏழையர்க் கோர் கடவுள் - எளிதில் முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள் முளைக்கும் பொதுக் கடவுள். 5 உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென்பீர் மிகத் தாழ்ந்தது தாழ்ந்த தென்பீர் - இவை பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப் பேசிடுவீர் அன்பீர். 6 உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி ஒளி மறைவில் தரத்தான் - மிகப் பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம் பண்ணினதோ அறியேன். 7 சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற் சூழ்வது பூசனையோ - ஒரு சாதியை நீக்கினார்; தலையையும் வாங்கிடச் சதியா லோசனையோ? 8 ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர் என்று மதித்ததுவோ - சாமி நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல் நீரிற் குதித்ததுவோ? 9 மாலய மாக வணங்கிடச் சாமி வந்திடுவார் என்றீரே - அந்த ஆலயம் செல்ல அநேகரை நீக்கி வழிமறித்தே நின்றீரே. 10 ஆலயம் செல்ல அருகரென்ற சிலர் அங்கம் சிறந்தாரோ? - சிலர் நாலினும் கீழென்று நாரி வயிற்றில் நலிந்து பிறந்தாரோ? 11 தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச் சாமி மலைப்பதுண்டோ? - இங்கு வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி வருத்தித் தொலைப்பதுண்டோ? 13 தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் சாமிக்குச் சத்திலையோ - எனில் வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட மேலும் சமர்த்திலையோ? 14 தன்னை வணங்கத் தகாதவரை அந்தச் சாமி விழுங்கட்டுமே - அன்றி முன்னை யிருந்த கல்லொடு கல்லாகி உருவம் மழுங்கட்டுமே. 15 இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி இனத்தினில் பல்கோடி - மக்கள் தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற் சாவதுவோ ஓடி? 16 குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? 17 â¡bf£Lnk xU nfhÆy‹nwh?அதில் சேரி அப்பால் இல்லையே - நாளும் பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர் நம்புவதோ சொல்லையே? 18 தாழ்ந்தவர் என்பவர் கும்பிடுதற்குத் தனிக் கோயிலில் காட்டுவதோ? - அவர் வாழ்ந்திடுதற்கும் தனித்தேசம் காட்டிப்பின் வம்பினை மூட்டுவதோ? 19 தாழ்த்தப் பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச் சாற்றிடும் தேசமக்கள் - அவர் வாழ்த்தி அழைக்கும் சுதந்தரம் தன்னை மறித்திடும் நாசமக்கள். 20 தாழ்ந்தவருக்கும் உயர்ந்தவருக்கும் இத் தாழ்நிலம் சொந்தம் அன்றோ? - இதில் சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று சொல்லிடும் நீதி நன்றோ? 21 தாழ்ந்தவர் என்றொரு சாதிப்பிரிவினைச் சாமி வகுத்ததுவோ? - எனில் வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த வம்பு புகுத்தியதோ? 22 முப்பது கோடியார் பாரதத்தார் இவர் முற்றும் ஒரே சமூகம் - என ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும் ஒப்பாவிடில் என்ன சுகம்? 23 இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும் யார் என்று தற்புகழ்ச்சி - சொல்வர் இப்புறம் வந்ததும் கோயிலில் நம் இனத்தைச் செய்வார் இகழ்ச்சி. 24 மாடுண் பவன்திருக் கோயிலின் வாயிலில் வருவதற்கில்லை சாத்யம் - எனில் ஆடுண்ணுவோனுக்கு மாடுண்ணுவோன் அண்ணன் அவனே முதற் பாத்யம். 24 நீடிய பக்தியில் லாதவர் கோயில் நெருங்குவதால் தொல்லையே! - எனில் கூடிஅக் கோயிலில் வேலை செய்வோருக்கும் கூறும் பக்தி இல்லையே. 25 சுத்தமில்லாதவர் பஞ்சமர்! கோயிற் சுவாமியைப் பூசிப்பரோ - எனில் நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது யாதுக்கு யோசிப்பிரே. 27 நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி நேரில்அக் கோயிலிலே - கண்டும் ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள் கோயிலின் வாயிலிலே. 28 கூறும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பவர் கோயிலின் செய்திவிட்டுப் - புவி காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை? காட்டுவீர்ஒன்று பட்டு. 29 வீறும் உயர்ந்தவர் கோயில் புகுந்ததில் வெற்றிஇந் நாட்டில் உண்டோ - இனிக் கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில் தீதெனல் யாது கொண்டோ? 30 - பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் தொகுதி, ப.197, 1955; தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு 1930 88. ஞாயமற்ற மறியல் (நொண்டிச் சிந்து) என்றுதான் சுகப்படுவதோ? - நம்மில் யாவரும் சமானம் என்ற பாவனை இல்லை - அந்தோ ஒன்றுதான் இம் மானிடச் சாதி - இதில் உயர்பிறப் பிழிபிறப் பென்பதும் உண்டோ? - நம்மில் அன்றிருந்த பல தொழிலின் - பெயர் அத்தனையும் சாதிகள் என்றாக்கி விட்டனர் - இன்று கொன்றிடுமே பேதம் எனும் பேய்! - மிகக் கூசும்இக் கதை நினைக்கத் தேசமக்களே! என்று இத்தனை பெரும் புவியிலே - மிக எண்ணற்ற தேசங்கள் இருப்ப தறிவோம் அத்தனை தேசத்து மக்களும் - தாம் அனைவரும் மாந்தர் என்று நினைவதல்லால் - மண்ணில் இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம் எட்டுலக்ஷம் சொல்லிமிகக் கெட்டலைவாரோ! - இவர் பித்துமிகக் கொண்டவர்கள்போல் - தம் பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல் நன்றோ? என்று தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத் தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் - எனில் ஈண்டு பிறநாட்டில் இருப்போர் - செவிக் கேறியதும் இச்செயலைக் காறி யுமிழ்வார் - பல் ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம் அறிவற்ற மக்கள் எனக் கருதப் பட்டோம் கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக் காணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை நாம். என்று ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த நாற்றிசைக்கும் ஞானப்புனல் ஊற்றிவந்தவர் - மிகு மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த மேதினியில் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - இந்த வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில் மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு யானிவரைக் கேட்கப் புகுந்தால் - இவர் இஞ்சிதின்ற குரங்கென இளித்திடுவார் - நாம் என்று உயர்மக்கள் என்றுரைப்பவர் - தாம் ஊரை அடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப் பெயர்வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள் பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம் வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல வாகனங்கள் போகப்பொருள் அநுபவிக்க - மிக முயல்பவர் தம்மிற் சிலரை - மண்ணில் முட்டித்தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம் என்று உண்டி விற்கும் பார்ப்பன னுக்கே - தான் உயர்ந்தவன் என்ற பட்டம் ஒழிந்துவிட்டால் - தான் கண்டபடி விலை உயர்த்தி - மக்கள் காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? - சிறு தொண்டு செய்யும் சாதி என்பதும் - நல்ல துரைத்தனச் சாதியென்று சொல்லிக் கொள்வதும் - இவை பண்டிருந்த தில்லை எனினும் - இன்று பகர்வது தாங்கள் நலம் நுகர்வதற்கே - நாம் என்று வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த மேதினியை ஆளுபவன் க்ஷத்திரியனாம் - மிக நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை நியமித்த வைசியனென் றுயர்வு செய்தார் - மிக நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி ஆதியினில் மநுவகுத்தான் - இவை அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம் - நாம் என்று அவனவன் செய்யும் தொழிலைக் - குறித் தவனவன் சாதியென மநுவகுத்தான் - இன்று கவிழ்ந்தது மநுவின் எண்ணம் - இந்தக் காலத்தினில் நடைபெறும் கோலமும் கண்டோம் - மிகக் குவிந்திடும் நால்வருணமும் - கீழ்க் குப்புறக் கவிழ்ந்ததென்று செப்பிடத்தகும் - இன்று எவன்தொழில் எவன் செய்யினும் - அதை ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே-நாம் என்று பஞ்சமர்கள் எனப்ப டுவோர் - நற் பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ - இனித் தஞ்சமர்த்தை வெளிப்படுத்தித் - தம் தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ - இது வஞ்சத்திலும் வஞ்சமல்லவோ - பொது வாழ்வினுக்கும் இதுமிகத் தாழ்வேயல்லவோ - நம் நெஞ்சத்தினில் ஈரமில்லையோ? - அன்றி நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ- நாம் என்று கோரும் இமயாசல முதல் - தெற்கில் கொட்டுபுனல் நற் குமரி மட்டும் இருப்போம் - இவர் யாருமொரு சாதியெனவும் - இதில் எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம் பாரதநற் றேவி தனக்கே - நாம் படைமக்கள் எனவும் நம்மிடை இக்கணம் - அந்த ஓருணர்ச்சி தோன்றியஉடன் - அந்த ஒற்றுமை அன்றோநமக்கு வெற்றியளிக்கும் - நாம் என்று - பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் தொகுதி, 1955; தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 89. *திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் நடத்தும் முறை (திராவிடர் புரட்சித் திருமணம், இந்நாளில் முன்னாளிற் போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கு-அன்றன்று, திராவிடர் புரட்சித் திருமணங்கள்; சில அல்ல; மிகப்பல! மணம் நடத்துவோர் சிற்றூராயினும்-தம் ஊரில் உள்ளவர் களைக் கொண்டே நடத்திக்கொள்வதால் செலவு குறையும்; தலைவர்கட்கும் தொல்லை இராது. ) 1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார். 2. இசை: வாழ்க வாழ்கவே, வளமார் எமது திராவிட நாடு, வாழ்க வாழ்கவே! (திராவிட நாட்டுப்பண், பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி.) 3. மணமக்கள் அவைக்கு வருதல். 4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, அவைத் தலைமை தாங்கி இத்திருமணத்தை முடித்துத் தரும்படி இன்னாரை வேண்டிக் கொள்கிறேன் என்று முன் மொழிதல். 5. அவையத்தாரின் சார்பில் ஒருவர், அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று வழி மொழிதல். 6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்துவந்து, சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல். 7. அவைத் தலைவர் முன்னுரை. 8. திருமணம் நடத்தல்: மணப்பெண் இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன் என்று சொல்லல்; மணமகனும் அவ்வாறு சொல்லல். அதன்மேல் இருவரும் மாலை மாற்றுதல்; கணை யாழி மாற்றுதல்; வாழ்க என முழங்குதல். 9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல். 10. வரிசை: அவையத்தார்க்கு வெற்றிலை பாக்கு முதலியவை வழங்குதல். இந்த நடைமுறைக்கு முதல் நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வதுண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம். இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில் ஈண்டு எழுதியுள்ளேன். இங்குக் காட்டிய திட்டம் பெரும்பாலும் நடைபெறு கின்றது என்பது தவிர, இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்திய தாகாது. இதனினும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம். ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்! - பாரதிதாசன் 1. அவையத்தார் அகவல் வருக வருகென மலர்க்கை கூப்பித் திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத் திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள் அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே! குழலும் முழவும் பொழிந்த இன்னிசை மழையை, நிறுத்திஓர் மறவன் எழுந்துதேன் மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத் திராவிட நாட்டுப்பண் பாடினான் ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே. 1 மணமக்கள் வருகை மணமகள் தோழிமார் சூழவும், மணமகன் தோழர் சூழவும் தோன்றி, அவைதொழுது இருக்க என்று தோழர் இயம்ப இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர். 2 2. முன்மொழிதல் மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில் முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்; திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே, அருமைத் தோழியீர், தோழரே, அறிஞரே, என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள் இன்று நடைபெற விருக்கும்இத் திராவிடர் புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத் தலைமை தாங்கவும், நிலைமை உயர மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம் நிறைவேற் றவும் பெரி யாரை முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே. 2 வழிமொழிதல் அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர் முன்மொழிந் தாரின் பொன்மொழி நன்றொப்பு கின்றோம் என்றார் இனிதே. 3 வேண்டுகோள் முன்மொழிந் தாரும் வழிமொழிந் தாரும்; பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி, எழுந்தருள் கென்றே இருகை கூப்பி மொழிந்து சீர்பெய்து முன்னுற அமைந்த இருக்கை காட்டத் தமிழ்ச்சொற் பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே: - 4 3. அவைத் தலைவர் சேர சோழ பாண்டியர் வழிவரு திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே, அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே, தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து - ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்; ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர் ஆதலால், அவரின் வேத மந்திரம் தீது பயப்பன ஆதலால், திராவிடர் வாழு மாறு மனங்கொளார் என்பதும், தாழ இன்னலே சூழுவார் என்பதும் அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால், நம்மொழி, நம்கலை, நம்ஒ ழுக்கம் நம்பேர் ஒட்பம், நடைமுறை மாய்க்கவே தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை மணமுதல், திராவிடர் வாழ்க்கை முறைகளில் இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால், ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ? அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு தொடங்கையில் நடுவிற் சுடுநெ ருப்பா? தாய்தந் தையர் தவஞ்செய்து பெற்றனர் தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர் ஒருமனப் பட்ட திருமண மக்களைப் பெரிதின்பம் பெறுக பெறுக என்று, வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில், ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை? ஊழி தொடங்கையில் ஒளிதொ டங்கு மூவேந்து வாழையடி வாழையாய் வந்த திராவிடர் சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி ஏதுங் கெட்ட பார்ப்புக்கிங் கென்ன வேலை? நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக் கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்? மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில் கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ? தீதிலா மிகப்பல திராவிடர் மறவர் ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன? கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன? மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத் தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்! இரண்டா நாளில் இன்பச் செல்வியைக் கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்! தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில் தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்! நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்! திராவிட மக்களின் செவிஏற் குமோஇதை? வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில் தமிழர் பண்பு தலைசா யாதோ? தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை எனப் பேசும் திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ? திராவிடர் புரட்சித் திருமணம் புரிந்தின் புறுக திருமண மக்களே! 4. வாழ்க்கை ஒப்பந்தம் பஃறொடை வெண்பா திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள் இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக - நீவிர்சான் றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான். “ ghitp nu!உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக் கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள உறுதி உரைப்பீரோ! என்று வினவ உறுதிஅவ் வாறே உரைத்தார் மகளாரும். “ njhHnu!1 பாங்கிலுள்ள தோழியரை2த் தேர்ந்தீரோ வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ? ஆயின் உறுதி அறிவிக்க! என்னவே தூயர்அவ் வாறே உறுதியும் சொல்லிட, வாழிய நீவிர் எனப்பெரியார் வாழ்த்தினார்! வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்! தாரொன்றைத் தாங்கித் தம்கொழுநர்க் கேசூட்ட நேரிழை யார்க்கும் நெடுந்தார வர்சூட்டக் கையிற் கணையாழி கட்டழகி யார்கழற்றித் துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும் தம்ஆழி மங்கையர்க்குத் தந்துமகிழ்ந் தமர்ந்தார்! செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்; 5. அறமொழிகள் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்றார் வள்ளுவனார் இல்வாழ்வில் அன்பும் அறமும் இருக்குமெனில் நல்லதன்மை நல்லபயன் நாளும் அடையுமன்றோ? மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை, என்றார் வள்ளுவனார் வாழ்க்கைத் துணைவி மனைக்குரிய மாண்புகொண்டு வாழ்வில் அவனின் வருவாய் அறிந்து செலவுசெய் யவேண்டும் என்பது மன்றியும், தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்று சொல்லுகின்றார். தன்னையும் தக்கபடி காத்துக் கொளல்வேண்டும் தன்கொழு நன்தன்னையும் காத்திடல் வேண்டும் சீர்சால் திராவிடர் பண்பு சிதையாமல் நிற்பவளே பெண்ணாவாள் மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு பெறுக வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இல் மற வாதீர். இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு தெளிக மணமக ளாரே, மணமக னாரே, இணைந்தின் புற்றுநன் மக்களை ஈன்று பெரும்புகழ் பெற்றுநீ டூழி இருநிலத்து வாழ்கஇனிது. 6. நன்றி கூறல் அறுசீர் விருத்தம் மணமக்கட் குரியர் ஆங்கு வாழ்த்தொலிக் கிடைஎ ழுந்தே மணவிழாச் சிறக்க ஈண்டு வந்தார்க்கு நன்றி இந்த மணஅவைத் தலைமை தாங்கி மணமுடித் தருள்பு ரிந்த உணர்வுடைப் பெரியார்க் கெங்கள் உளமார்ந்த நன்றி என்றே கைகூப்பி, அங்கெ வர்க்கும் அடைகாயும் கடிது நல்கி வைகலின் இனிதின் உண்ண வருகென அழைப்பா ரானார்! பெய்கெனப் பெய்த இன்பப் பெருமழை இசையே யாக உய்கவே மணமக் கள்தாம் எனஎழும் உள்ளார் வாழ்த்தே. - பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் தொகுதி, ப.213, ப.213, 1955 90. ஒழுக்கம் இலாதவர் அவர்கள் ஒழுக்கம் இலாதவர் அவர்கள் ஒழுக்கம் இலாதவர் குழப்பம் விளைப்பவர் குள்ளக் கருத்தினர் செழிக்கும் நாட்டின் ஒற்றுமை சிதைப்பவர் - ஒழுக்கம் இலாதவர் அவர்கள் ஒன்றே தெய்வம் என்றால் - ஆயிரம் உள்ளன உள்ளன என்பார்; ஒன்றே குலமும் என்றால் உலகில் ஒன்பதி னாயிரம் என்பார்; என்றும் உள்ளது தெய்வம் என்றால் இறக்கும் பிறக்கும் தெய்வம் என்பார் - ஒழுக்கம் இலாதவர் அவர்கள் உருவம் இல்லாத தென்றால் - உருவம் உண்டு பலப்பல என்பார்; ஒருபெயர் இல்லாத தென்றால் - அவர் ஒன்பதி னாயிரம் பெயர்க ளுரைப்பார்; தெருவெல்லாம் ஊரெல்லாம் நகரெல்லாம் வீட்டின் இருளறை எல்லாம் கோவில் வேண்டுமென்பார் - ஒழுக்கம் இலாதவர் அவர்கள் எப்பற்றும் இல்லாத தென்றால் - தெய்வம் வைப்பாட்டி வேண்டிடு மென்பார்; முப்பழம் உண்டிடு மென்பார் - தெய்வம் முக்காலும் நீராடும் என்பார்; அப்பங்கள், பிட்டுகள், ஆடுமாடு , கோழி, கொப்பரைக் கள்ளும் விரும்பிடும் என்பார் - ஒழுக்கம் இலாதவர் அவர்கள் பன்றி யுண்ணும் தெய்வம் - மீனைப் பழுக்க உண்ணும் தெய்வம்; ஒன்று கேட்கும் தெய்வம் - தந்தால் ஒன்று நல்கும் தெய்வம்; கொன்ற பிள்ளைக்கறி குழம்பு வேண்டும் தெய்வம் என்ற இவைஎலாம் நன்றெனச் சொல்லுவார். - ஒழுக்கம் இலாதவர் அவர்கள் - தேனருவி, ப.28, 1956 91. நீ ஏன் வீணான பாதையில் - நீ ஏன் வீணான பாதையில் சென்றாய் என்னெஞ்சே உலகில் - நீ ஏன் வீணான பாதையில் ஓயாக் கலகமெலாம் உற நலிந்தாய் சீராதல் எந்நாள்? - நீ ஏன் வீணான பாதையில் வீழாதே மதமெனும் ஒரு தீமைமிகு பாழ்குழியில் போய்த் தீரவேண்டும் சாதி எனுமொரு பொல்லாத நோய்! அறநெறியில் நட - நீ ஏன் வீணான பாதையில் நீ ஏன் கோயில் உருவந் தொழுதாய்? நீ ஏன் உனதறி வினை இழந்தாய்? நீ ஏன் குறள் சொன்னதை மறந்தாய்? நீ வாழ வேண்டு மெனில் இதைக் கேள்; தீயும் நீரும் நிலமும் வெளியும் காற்றும் கலகக் கோயில் உருவமும் கடவுளல்ல உணர்வு தான்கடவு ளென்று நாளும் வாழ்த்து வாய் மனமே, வாழ்த்து வாய்! - நீ ஏன் வீணான பாதையில் - தேனருவி, ப.122, 1956 92. அறிவு கெட்டவன் அறிவு கெட்டவன் பணம் படைத்தால் அணுக்குண்டு செய்வான் - நல்ல நெறியுணர்ந்தவன் பணம் படைத்தால் பொதுத்தொண்டு செய்வான். குறி கெட்டவன் பணம் படைத்தால் கொடும்படை சேர்ப்பான் - நல்ல நிறை மனத்தவன் பணம் படைத்தால் படுந்துயர் தீர்ப்பான். கன்மனத்தான் பணம் படைத்தால் கலகத்தைச் சேர்ப்பான் - மிக நன்மனத்தான் பணம் படைத்தால் உலகத்தைக் காப்பான். தன்மை கெட்டவன் பணம் படைத்தால் சாதியை நயப்பான் - நல்ல பொன்மனத்தான் பணம் படைத்தால் நீதியை மதிப்பான். - தேனருவி, ப.127, 1956 93. காதலர்க்கு நான் காதலர்க்கு நான் வேம்பானேன் காண அஞ்சுமோர் பாம்பானேன் - நான் தீது சிறிதும் செய்தறியேன் - இன்று தீராப் பழியை நான்சுமந்தேன். அன்பு வாழ்வை மறந்தாரே அறத்தின் மேன்மை இகழ்ந்தாரே - இந்தத் துன்ப வாழ்க்கை எனக்கேனோ? - என் துணைவரை இனி அடைவேனோ? ஒட்டிக் கிடந்த இரண்டுள் ளத்தை வெட்டிப் பிரிக்கவும் செய்தாரே - நல்ல கட்டிக் கரும்பைக் கசந்தாரே - என்னைக் கைவிட்டுப் போகவும் இசைந்தாரே. - தேனருவி, ப.49, 1956 94. துணைபிரிந்த பெண்ணாள் மீளா விடைபெற்று விட்டு மறைந்தீரோ அத்தானே! ஆளான நாள்முதல் அன்பு மறவாத அத்தானே! தோளோடு நீங்காத தோளும் பிரிந்ததோ அத்தானே! கேளாத செந்தமிழ் கேட்பதும் போனதோ அத்தானே! ஆடலும் பாடலும் ஆழப் புதைந்ததுவோ அத்தானே! ஊடலும் புணர்தலும் ஓடி மறைந்ததுவோ அத்தானே! தேடாத செல்வம் எனக்கென்று நம்பினேன் அத்தானே! வீடு குலையவே விளக்கும் அவிவதோ அத்தானே! - தேனருவி, ப.51, 1956 95. ஆளனில்லாத வேளையில் ஆளனில்லாத வேளையில் வந்தீர் அடுக்காத சொல் அடுக்குகின்றீர் தாளமுடியுமா சொல்வீர்? நீவிர் சற்றே வெளியில் செல்வீர், செல்வீர் - ஆள தேளாய்க் கடுக்கும் சொல்லையும் சொன்னீர், செந்தமிழ்க்கே அதனால் கெட்ட பேர்; மாள நேர்ந்தாலும் என் கற்புத் - துளி மாறிடும் என்பது மிகவும் தப்பு. - ஆள சமயம் சாய்ந்தது, சாதி மறைந்தது சாயா மடமைகள் சாய்ந்தன, ஆயினும், அமையும் மாதர்க்குத் தொல்லை கொடுத்திடும் ஆடவர் மட்டுமே ஒழிய வில்லையே! - ஆள தமிழ்ப் பெண்ணின் படைஒன்று வேண்டும், தக்கைகள் உள்ளத்தைத் திருத்த வேண்டும், உமியல்ல மாதர் வலக்கை - தீயர் உயிரை இடிக்கும் உலக்கை - ஐயா - ஆள - தேனருவி, ப.52, 1956 96. இறந்தார் கணவர் இறந்தார் கணவர், அன்றைக்கே நீயும் இறந்தாய் மகளே, இறந்தாயே. பிறந்திருக் கின்றாய் மீண்டுமிந் நாட்டில், பிறந்திருக் கின்றான் அவனுமோர் வீட்டில்! மணம்செய்து கொள்வதில் வெறுப்பென்ன? இங்கு வாழ்வாங்கு வாழ மறுப்பென்ன? குணமொன்று பொருளுள்ள மட்டும் இருப்பதுபோல மணம்தன் உயிருள்ள மட்டும் இருந்தாக வேண்டும். மறுமணம் புரிவதால் வராதொரு கேடு, மறுமணமிலாத பெண் கெடுவதும் கூடும்; குறைபாட்டைத் திரைபோட்டு மறைத்திட வேண்டாம். கூறினேன் நீஇதை எண்ணிட வேண்டும். - தேனருவி, ப.53, 1956 97. வாணிகத்தை அரசினரே நடத்த வேண்டும் எவ்வகை எதிர்ப்புக்கும் அஞ்சுதல் கூடாது தனியா ரிடத்தில் வாணிகம் இருந்தால் சரிவி லைக்குச் சரக்ககப் படுமா? - தனியா ரிடத்தில் ... இனியும் அரசினர் கண்மூடி இருத்தல் ஏழை மக்களை மண்ணிற் புதைத்தலே - தனியா ரிடத்தில் ... எள்முதல் அரசினர் கொள்முதல் செய்க எப்பாங்கும் கடைவைத்து விற்பனை செய்க கண்ப டாது சரக்கைப் பதுக்கிடும் கயவர் எதிர்ப்பைக் கான்றுமிழ்ந் திடுக. - தனியா ரிடத்தில் ... வாங்கிய தொருவெள்ளி ஒரு தூக்குப் புளி மறுகிழமை மூன்று வெள்ளி என்பான் அதே புளி பாங்கி ரக்கம் இருக்கா தொருதுளி! பஞ்சைகள் உயிரைக் கழற்றும் திருப்புளி! - தனியா ரிடத்தில் ... பெருங்காயம் ஒரு பெட்டி வைத்தி ருப்பான் பிள்ளை பெற்றவளுக்கும் இல்லையே என்பான் ஒரு கிழமை போனால் விலைஏறிற் றென்பான் ஒழிய வேண்டும் தனித்துறை வாணிகம். - தனியா ரிடத்தில் ... - தேனருவி, ப.131, 1978 98. குரங்காட்டி சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு எசமான் கொஞ்சம் இங்கே பாருங்கோ, கடிக்காதுங்க காட்டுக் கொருங்கு படிக்கத் தெரிஞ்சும் பயந்த கொருங்கு நல்ல நல்ல நாடகம் எசமான் நாலணா குடுங்க நடத்றே எசமான்! (வீட்டுக்காரர் நாலணா கொடுக்கிறார்) சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு மொட்டே கொருங்கு கிட்டே எழுந்துவா. வெள்ளக் காரனே மெதுவா புடிச்சி கொள்ளே அடிக்கற கோலே வாங்கி வடக்கத்தி ஆளுவ வந்து கூடி ஒங்க ஊரே உறிஞ்ச வந்தா எப்படி சலாம்நீ இடுவே அவன்கி? (குரங்கு சலாம் போடுகிறது) ஓகோ பலேபா ஓகோ பலேபா. சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு வடக்கத்தி ஆளு வாங்கன ஊட்டே ஒடனே ஒழிச்சி குடுக்கச் சொன்னதும் சர்க்கார் சட்டம் தலைகவுந் தாப்லே கர்ணம் போடு கழுதே கொருங்கு. (கரணம் அடிக்கிறது) சடுகுடு பலேபா சடுகுடு பலேபா கண்ணான எனத்தே காட்டிக் குடுத்து ஜல்தி வடக்கன் பக்கம் பல்டி அடி நீ பலேபலே பலேபலே. (பல்டி அடிக்கிறது ) - பாரதிதாசன் பன்மணித்திரள், ப. 153; குயில், 25.8.1957 99. சுயமரியாதை எக்காளம் நெருப்பில் துடித்திடும் மக்கட்கெல்லாம் நல்லகாப்பு - நல்கும் நீதச்சுயமரி யாதைஎனும் குளிர்தோப்பு - அங்குச் சுரப்பதெல்லாம் இன்ப மாகிய வண்புனல் ஓடை - நீவீர் சுகித்திடவோ அறிவான இயக்கத்தின் வாடை - இங்கு விருப்ப மெலாம்விழ லாக்கிய வாழ்க்கையின் கோணை - அங்கு விளையும் கருத்துகள் காதிலினித்திடும் வீணை - இங் கிருப்பதெலாம் ஒருவர்க்கொரு வர்செயும் சேட்டை - அங் கெழுப்பி யிருப்பது சமத்துவ மானகற் கோட்டை! உப்பினை உண்டு கரிப்புக் கழும்சிறு பிள்ளை - வாழ்வில் ஊமைக் கடவுள் எதற்குத்தொட்டீர் அந்த முள்ளை - தேயம் முப்பத்து முக்கோடி மக்களி னால்பெற்ற பேறு - இங்கு மூச்சுவிடக்கூட மார்க்கமில்லா மதச் சேறு - மண்ணில் எப்பக்கங் காணினும் இன்பத்தி லேறுமுன் னேற்றம் - இங் கீன மதப்பலி பீடத்தி லேமுடை நாற்றம் - சொல்வீர் எப்பதம் பெற்றனிர் இந்நாள் வரைக்கும் மண்மேலே - நீர் எதற்கும் உமக்குள் உதிக்கும் மதக் கொள்கை யாலே! தாழ்ந்தவர் என்பர் உயர்ந்தவர்க் கிம்மொழி இன்பம் - இந்தச் சாத்திரத்தால் இந்த நாள்வரைக் கும்துன்பம் - மண்ணில் தாழ்ந்தவ ரென்றொரு சாதியுரைப்பவன் தீயன் - அவன் தன்னுடலைப்பிறர் சொத்தில்வளர்த்திடும் பேயன் - நீர் தாழ்ந்து படிந்து தரைமட்டமாகிய நாட்டில் - இனிச் சாக்குரு விச்சத்தம் நீக்கிடுவீர்மன வீட்டில் - இன்று வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற்கே அடையாளம் - வாய் விட்டிசைப் பீர்சுயமரி யாதைஎக் காளம். - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.129, 1964 100. அமைதி யுலகம் உறங்கிட இடமும் தந்தோம் உணவிட்டோம் உடைய ளித்தோம் திறன்மிகு பணிப்பெண் ணே நீ செய்திடும் வீட்டு வேலை அரை குரை யாவ தல்லால் அழகில்லை திருத்த மில்லை பொறுப்பில்லை என்று சொன்னாள் பொறுப்புள்ள வீட்டுக் காரி! நானென்ன செக்கு மாடா? நாள்தோறும் வேளை தோறும் ஊனெல்லாம் சோர்ந்து போக உழைப்பதால் குறைகள் சொல்ல லானதென் றுரைத்தாள் வேலைக் கமர்ந்தவள். வீட்டுக் காரி யானும்அவ் வாறே நாளும் உழைத்திட விலையோ என்றாள். தீயினை முகத்திற் கொட்டிச் சென்றனள் வேலைக் காரி. ஆயஇச் செய்தி தன்னை அணங்குதன் மணவா ளன்பால் போயுரைத் திட்டாள். பெண்ணே புதல்வர்க்கும் கணவ னுக்கும் நீயுழைக் கின்றாய், அன்னாள் நிறைகூலிக் கேயு ழைத்தாள்! ஒருத்திக்கும் ஒருவ னுக்கும் வாழ்க்கையின் உடன்பாடென்னும் திருமணம் ஒழிய வேண்டும். தெரிந்தவர் கூடி அன்பு புரிவதால் தோன்றும் மக்கள் பொதுமக்கள் ஆதல் வேண்டும். அருந்துதல் உறைதல் எல்லாம் பொதுவென அமைதல் வேண்டும். கட்டாய வேலை வேண்டும் கட்டாய கல்வி வேண்டும் மட்டான அறிவு கொண்ட வையகம் நான்கு றிந்த தெட்டிலா அமைதி நோக்கிச் செல்வதே; சென்ற பின்னர்த் தட்டில்லை எவ்வே லைக்கும் தடையொன்றும் இருக்கா தென்றான். - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.145, 1964 101. மதம் எதற்கு? எடுப்பு இராமல் ஒழிக மதப்பேய் என்றார் இராம லிங்க அடிகள் - இராமல் உடனெடுப்பு வராத தென்ன இம்மதி அவரை மதிக்கும் அடியார்க் கே - இராமல் அடி ஒரே ஒருகடவுள் எவர்க்கும் என்றால் உலக மதங்கள் ஏனோ இரவு பகலாக மதமே பேசுவோன் அதன்படி நடப் பானோ! பெரியதோர் அன்பும் வாய்மையும் உடையோர் பேரின்பம் எய்துதல் திண்ணம். - இராமல் - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.147, 1964 102. சாதிகள் இல்லை கானாறு கடலில்தான் விழவேண்டும்! மக்கள் நிகர்என்று மாநிலம் அதிர எக்காளம் ஊதடா மறவா - நீ எக்காளம் ஊதடா ஊது! பொய்க்கூற்று வஞ்சம் ஏமாற்று யாவும் புதைந்தன யார்க்கும் எதிலும் ஒரேநிலை - மக்கள் நிகர் கைக்குள் ஆட்சி வந்ததாய் எண்ணிய கானாறு சாதியாம் கீழ்நோக்கி ஓடினும் மக்கட் பெருங்கடல் தனில்அது வீழும் வாய்மைக் கழிவில்லை சாதிகள் இல்லை! - மக்கள் நிகர் - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.148, 1964 103. அரசியல் வகையின் அயல்மொழிப் பெயர்கள் சோசலிசம் இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால் அண்டைவீட் டானுக்கொன் றளித்தல் சோசலிசம்! காப்டலிசம் கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக் காளை வாங்குவது காப்டலிச மாம்! கம்யூனிசம் ஆவிரண் டனையும் ஆள்வோர்க்கு விற்றுத் தேவைக்குப் பால்பெறச் செப்பல் கம்யூனிசம்! பாசிசம் பகரிரு கறவையைப் பறித்தஆள் வோரிடம் தொகைதந்து பால்பெறச் சொல்வது பாசிசம் நாசிசம் உரியவன் தன்னை ஒழித்தே அவனின் கறவை இரண்டையும் கைப்பற்றல் நாசிசம் நியூடிலிசம் இரண்டு கறவையால் திரண்டபால் அனைத்தையும் சாக்கடைக் காக்குவது தான் நியூ டிலிசம் எதனை இவற்றில் ஏற்பாய்? அதனைஉன் நாட்டுக் காக்குக தோழனே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.149, 1964; குயில், 1. 7. 1947 104. நாத்திகன் பன்றியை வெட்டிப்ப டைத்தாயே - கடைப் பட்டைச்சா ராயம்கொ டுத்தாயே! தின்றுகு டித்துந லம்செய்யு மாவென்று தெய்வத்தின் மேன்மைகெ டுத்தாயே! மின்திகழ் கோழிய றுத்தாயே - கரு மேதியின் வாழ்க்கைஒ றுத்தாயே! கொன்றால் நலஞ்செய்யு மென்றெண்ணியே தெய்வக் கொள்கையை முற்றும்வெ றுத்தாயே! பெண்டாளக் கேட்டது தெய்வமென்றும் - தன் பெண்டினைத் தந்தனன் மன்னனென்றும் கண்டார் நகைக்கப்பு ராணங்கள் போற்றிக் கசப்பாக்கி னாய்கட வுட்சிறப்பை! அண்டும் குடல்தன்னைக் கவ்வவைத்தாய் - அதற் கங்கா ளம்மைப்பட்டம் ஒவ்வவைத்தாய்! தொண்டிது தெய்வத்துக் கென்றெண்ணியே - அதன் தூய்மையும் வாய்மையும் நீஅவித்தாய்! குழந்தையைக் கேட்டது தெய்வமென்றாய் - அதைக் கொன்று சமைத்திட்ட தாய்ப்பு கன்றாய் தழைந்த அருட்பெரும் தந்தையை இவ்வண்ணம் தாழ்வுப டுத்திம கிழ்ந்து நின்றாய்! எவ்வுயிரும் கடவுட் கோயி - லெனும் எண்ணத்தை நீஒப்பு வாயாகில் - ஓடிக் கவ்வவரும் வெறி நாய்போலே சாதிக் கட்டுக்கள் ஏன்வரும் உன்வாயில்? அவ்வவர் எண்ணுக அன்பேசிவம் - எனில் அன்புக்குப் பெண்டாட்டி பிள்ளைமணம் ஒவ்வாத செய்கைகள் உண்டாக்கி யேதெய்வ உண்மை மறுப்பது வாஉன்தவம்? கொழுந்தனை யாளிடம் தூதாக - உருக் கொள்ளாப் பெரும்பொருள் சென்றதெனில் ஒழிந்ததன் றோஉன்றன் உள்ளத்தி லேபொருள் உண்டெனும் கொள்கைசொல் வாயாக! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.151, 1964 105. நல்ல மாமி பஃறொடை வெண்பா மகனுக்கு வாய்த்த மணியே; மயிலே ஆகமொத்த அன்பின் அழகு மருமகளே உன் அத்தான் உன்னை விரும்பத்தான் நாளும் பொன்னைத்தான் ஆடையைத்தான் பூணத்தான் வேண்டுமெனில் வீட்டிற்றான் மெல்லிநீ மாமனைத்தான் மாமியைத்தான் கேட்டுத்தான் செய்வதென எண்ணாதே, கிட்டத்தான் பெட்டியுண்டு நீதிறந்து பெண்ணே எடுத்துக்கொள் அட்டியுண்டோ? இல்லை! அனைத்தும் உனதுடைமை நீயும்என் மைந்தனும் நெஞ்சால் உயிரால்ஒன் றாயினீர் ஆதலால் அன்னோன் விருப்பம் உனக்குத் தெரியும் உடனே முடிப்பாய் எனக்கிட்ட வேலையைநான் இன்பமெனச் செய்திடுவேன் வானூர்தி ஓட்டுவதோ? வாட்போர் பயிலுவதோ? ஊனூர் உழைப்போ, அரசின் அலுவலோ, வாணிகமோ, நல்ல மருத்துவமோ ஓவியமோ மாணவர்க்குக் கண்ணளிக்கும் மாண்பு வினையோ வேண்டுமெனில் வீட்டுச் சமையலுக்கு நானுள்ளேன் ஈண்டுச் சமையல் இலக்கியம்உண் டாக்க விரும்புவை யாயின் அதுசெய்க; வெல்லக் கரும்பேஉன் அத்தா னிடத்தில் கடுகளவு தீய நடத்தை தெரிந்தால் திருந்தச்செய் தூயவள்நீ நானுனக்குச் சொல்லல் மிகையாம்! எனக்குமுன் மாமனுக்கும் என்ன இனிவேண்டும்? உனக்குமுன் அத்தான் தனக்கும் உளகாதல் ஆர்ப்பதும் இன்பத்தில் ஆடுவதும் பாடுவதும் பார்ப்பதெம் வாழ்வின் பயன்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப. 154, 1964 106. பாரதிதாசன் நல்வழி வெண்பா மனுமுதலோர் முன்னாள் வகுத்ததற மென்னில் இனியதை மாற்றலும் அஃதே - மனுதான் பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசலற மாஅஃ தறுப்ப தறமா 1அறை! ஒன்றுக்கு வாங்கியதை ஒன்பதுக்கு விற்பவன் நன்றதனைச் செய்தான்2சீர் நாடானேல் - இன்றே இமைதிறக்க ஒண்ணா திடுக்கணுறும் மக்கள் அமைதி அடைதலெவ் வாறு. கற்கண்டு பொன்னாக்கும்3 நல்லுழைப்புக் காரர்நலம் கற்கண்டு போற்சுவைக்கக் கற்றவர் - கற்றிலரே பாடுதான் செல்வம் பணமோ அதுகுறிக்கும் ஏடுதான் என்னும் இது. மணந்தான் இறந்தானேல் மற்றொரு சேய்க்கே இணங்கும்பெண் எண்ணம் மறுக்கும் - பிணங்காள் நல்லறிஞர் மாமறவர் நல்குதலும் கூடுமவள் வல்லகரு மாய்த்தலோ மாண்பு? ஒருவன் ஒருத்தியுளம் ஒத்தல் மணமாம் இருவரை முன்னின் றிணைத்தல் - மணமென்று கொட்டு முழக்குவது கோடேறி4 ஓர்முதியோன் எட்டுகனி 5என்னப் படும் சக்கிலியை ஓர்பறையன் தன்பறையை வேளாளன் தக்கவே ளாளனையே சார்பார்ப்பான் - மிக்கஇழி வாய்நடத்தல் போகாதேல்6 தாய்நாட்டின் ஆட்சியைஓர் நாய்நடத்த நாடல்வியப் பன்று. மாதிடத்தில்7 அன்புபெற மாட்டான் மகள்தேடிச் சோதிடத்தில் காட்டென்பான் தூய்மையிலான் - சோதிடமாம் பேரும் தமிழன்று பேறும்8 முயற்கொம்பே ஆரும் அறிவிழக்கா தீர். - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.155, 1964 1. கூறு, 2. தொழிலாளி, 3. கல்லைத் தேர்ந்தெடுத்து அதை உருக்கிப் பின் பொன்னாக்கல், 4. கிளையில் ஏறி, 5. எட்டுகின்ற கனி, 6. போகாவிட்டால், 7. பெண்ணிடம், 8. பயன் 107. தச்சுக்காரனும் பிச்சைக்காரனும் அரிஅரி அரிஅரி அரிசி போடுங்க அரிசி போடுங்க அம்மா அம்மா என்று சொல்லி என்வீ டேறினான் தின்று கொழுத்தஓர் திருநாமக் காரன்! வீட்டுக் குறட்டில் வேலைசெய் திருந்த தச்சன் அவனைத் தடுத்து நிறுத்திப் போடுவா ரில்லை போஎன் றுரைத்தான். கொஞ்சம் போட்டால் குறைந்தா போகும் என்றான் பிச்சைக் காரன் கொஞ்சம் அளவு குறையு மல்லவா என்றான் தச்சன் பிடிக்குப் பிடியளவு புண்ணியம் பெருகும் என்றான் இரப்பவன். ஊருக்குத் தொல்லை உண்டாக்கி உழைக்காது வயிறு வளர்த்து வருவோய் உனக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பிடியும் நாட்டைப் பின்னே நகர்த்தும் என்று தச்சன் சாற்றினான்; நாமக் காரன் நவிலு கின்றான் வேதத்தி னின்றும் விரிந்த ஆகம பாதத்தி னின்றும் பற்பல புராண நூற்களி னின்றும் நுண்ணிதி காசப் பாக்களி னின்றும் பகருவேன் காரணம். அவைகள் எல்லாம் அறிந்திருக் கின்றேன் விளங்குமா உனக்கு வெறுந்தச் சுத்தொழில் செய்பவன் நீஎன்று செப்பிய அளவில் தச்சன் சாற்றுவான்: வேதாக மங்கள்உன் வெள்ளைப் புராணம் எல்லாம் என்ன பயன்வி ளைத்தன? தச்சுத் தொழிலினேன் உன்போல் பிச்சை எடுத்துப் பிழைப்பே னில்லையே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.163, 1964 108. உலகம் உன்உயிர் உன் உயிர் இவ்வுலகம் அறுசீர் விருத்தம் ஒவ்வொரு நினைவும் உன்றன் உலகிற்கே! செயல்ஒவ் வொன்றும் இவ்வைய நன்மைக் கே என் றெண்ணுதல் பெற்றா யாகில் செவ்வையாம் நினைவுண் டாகும் செயலெல்லாம்,நல்ல வாகும்! அவ் வானின் நோக்கம் காண்பாய்! அதன்பெருஞ் செயலைக் காண்பாய்! உன்வீட்டைப் போற்று கின்றாய் ஆயினும் உன்றன் வீட்டின் பின்வீட்டைக் கெடுக்க எண்ணல் பேதைமை யாகும் அன்றோ? உன்வீட்டுக் குப்பை தன்னை அயல்வீட்டில் ஒதுக்க வேண்டா! பொன்என்றே உன்றன் ஊரைப் புகல்வதில் பிழையே இல்லை. ஆயினும் அயலூர் தன்னை அழித்திட எண்ண வேண்டா! தூயஉன் வாய்க்கால் நீரைத் துய்ப்பாய்நீ! அயலூர் நோக்கிப் பாயும்நீர் அதிலே நஞ்சு கரைப்பது பழுதே யன்றோ? தீயன தவிர்த்த நெஞ்சம் வையகம் செழிக்கும் வித்து! உன்பிரஞ் சிந்தி யாநல் உணர்வுக்கும் ஒழுக்கத் திற்கும் தன்மானத் திற்கும் ஏற்ற தன்மையில் இருப்ப தாயின் அன்புகொள், நாளும் போற்று மற்றுமுன் அணித்தா யுள்ள பொன்நகர் எதிர்த்தல் வைய முற்போக்கை எதிர்த்தல் போலாம்! அயலூர்ச்சட் டத்திற் கேநீ ஆட்பட வேண்டும் என்று மயலூர்ந்த நெஞ்சத் தார்கள் வாய்ப்பறை அடிப்பா ராயின் துயிலாதே அவர்கள் சட்டம் துன்பத்தை விளைப்ப தாயின் நயம்பட உரைஉன் அன்பின் நானில நன்மை எண்ணி. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.236, 1964 109. உழவன் முதற்கேள்வி விடியற் காலை வேளை - தனில் விரிந்த தென்னம் பாளை கடலி லெல்லாம் காட்டி லெல்லாம் தூவிற்றுப் பொன் தூளை. கடிய நடந்து கொண்டு - கையில் காளை மாடி ரண்டு - கூட்டிக் கழனியிலே ஏரிற் பூட்டி தொடங்கினேண்டி தொண்டு. இப்போது மணி ஒன்று - நான் ஏரைக் கட்டி நின்று - நல்ல கொப்புக் காரி எதிர்பார்த்தேன் நீவருவாய் என்று. பப்பளி வன்னச் சேலை - இரு காதில் இழைத்த ஓலை இப்படி அப்படிப் பளபளத்ததைக் கண்டேன் எதிர் மூலை. கொண்டு வந்தாய் சோறு - மீன் குழம்பு மிளகின் சாறு - நீ அண்டை யில்வை நம்தெருவில் நடந்த தென்ன கூறு. தண்டமிழர் ஆள - நம் தமிழ்நாடு மீள - நல்ல தொண்டு செய்தவ ரைச்சிறைக்குக் கொண்டா போனார் நீள? - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.274, 1964 110. யானைமுகன் செந்தமிழர் கான்றுமிழ்ந்த தீச்சரக்கு வினா விடை வெண்பா ஆனபல் லாயிரம் ஆண்டறிந்த தென்னாட்டில் யானை முகம்புகுந்த தெவ்வாறு? - மானே, அடக்கமிலா ஆரியரால் ஆறாம்நூற் றாண்டில் வடக்கினின்று வந்த சரக்கு. 1 ஆறாம் நூற்றாண்டு - கி. பி. ஆறாம் நூற்றாண்டு. திருவாத வூரார் திருவாச கத்தில் ஒருயானை மூஞ்சிதான் உண்டா? - கருங்குயிலே கூனாம் கொடும்பல்லன் வந்திடுமுன் வந்ததே தேனாம் திருவா சகம். 2 கூனாம் கொடும்பல்லன் - யானை முகன் கலைகண்ட முன்னைக் கழகத்தார் யானைத் தலைகண்ட துண்டா தமிழில்? - கொலைவழியே அன்னை குளித்தாள் அழுக்கெடுத்துப் பிள்ளைசெய்தாள் இன்னவெலாம் அந்நாளில் ஏது? 3 கழகம் - தமிழ்ச் சங்கம், சங்க நூல்களில் பிள்ளையார் பேச்சே இல்லை என்றபடி. பாலில்வரு நஞ்செனவே யானைமுகன் பைந்தமிழ் நூலில் நுழைந்தவகை எவ்வாறு? - வாலிழையே பல்லவர் புத்தர் படைஎடுத்தார், செந்தமிழில் வல்லவர் வாயடைத் தார் 4 வால்இழை - தூய அணி அணிந்தவள். அடுத்துக் கெடுத்தார்கள் அந்தமிழை என்றால் எடுத்துக்காட் டேதேனும் உண்டோ? - வடுக்கண்ணாய் மூவா யிரம்சொன்னான் மூலன்என்றார் சேக்கிழார் பாஏது மேல்நாற்பா னேழ்? 5 திருமூலர், மூவாயிரம் பாடல்களே சொன்னதாகச் சேக்கிழார் சொல்ல அதற்குமேல் 47 செய்யுட்கள் எங்கிருந்து வந்தன என்றபடி. நாற்பத்தேழ் செய்யுளையும் நல்லதிரு மந்திரத்தில் ஏற்பத் திணித்தார் எதைஎண்ணி? - வேற்கண்ணாய், ஐந்து கரத்தனை ஆனதொரு செய்யுள்செய்து முந்தவைத்தார் மூலன்நூ லில். 6 - திருமூலர் திருமந்திரத்தில் ஐந்து கரத்தனை என்ற யானை முகன் பாட்டைச் செய்து முதலில் செருகினார் என்றபடி. தூயதிரு மூலனார் சொன்னதொடக் கச்செய்யுள் ஆய அதுதான் எதுபுகல்க? - நேயையே ஒன்றவன் தானே எனல்என்று சேக்கிழார் நன்று நவின்றாரன் றோ? 7 திருமந்திரத்தின் முதற்செய்யுளாக ஒன்றவன் தானே என்று தொடங்கும் முழுமுதற் கடவுள் பற்றிய செய்யுளையே சொல்லி வைத்தார் என்க. ஆத்திகர் என்ற அறிவிலிகள் இவ்வாறு நாத்திகம் யாதுக்கு நாடினார்? - ஏத்தழகே செல்லாத யானைமுகன் செல்லுபடி ஆக்கஇந்தப் பொல்லாங்கு சூழ்ந்தார் புகுந்து. 8 வந்த சிறுசரக்கு வாங்குநர்இ லாச்சரக்குச் செந்தமிழர் கான்றுமிழ்ந்த தீச்சரக்கு - முந்தவிடும் பானைவயிற் றுச்சரக்குப் பல்நீண்ட கைச்சரக்கு யானைமுகன் என்னும் சரக்கு. 9 - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.288, 1964 111. துணைவர் இலக்கணம் அகவல் மாலை ஏழு மணிக்கு வெள்ளையன் வேலை யாக வெளியிற் சென்றவன் மிதிபறக் கமிதி வண்டி பறக்க, அதிவி ரைவாய் வீட்டை அடைந்து கிள்ளையே கிள்ளையே கேள்செய்தி என்று துள்ளிய வண்ணம் சொல்ல லானான்: அழகரும் அம்மையும் மூன்று மக்களும் காற்றுக் குக்கடற் கரையில் இருந்தனர் ஏழரை மணிக்கெலாம் இங்கு வருவார் எட்டு மணிக்கெலாம் புகைவண்டி ஏறி ஊருக்குப் போவதாய் உரைத்தனர் அவர்கள் இங்குண வுண்பதாய் ஏற்றுக் கொண்டனர் எங்கே எழுந்திரு! சரியாய் இடையில் அரைமணி தானுண்டு - அதற்குள் சமையல் முடிய வேண்டும் இந்தா மூன்றுகுடம் தண்ணீர், குண்டான், தட்டு முட்டுகள் என்றே எதிரில் வைத்தான்! கிள்ளை சின்னபடி ஒன்றரை கழுவிச் சேர்த்தே வெள்ளையன் மூட்டிய அடுப்பின் மேல்உள பானையில் இட்டு, வற்றற் பானையும் எண்ணெயும் புளியும் உப்பும் இட்டு சட்டியும் வட்டிலும் தான்தொட் டிருக்கையில் மிளகாய்த் தூள்மேல் வெள்ளையன் ஓட்டிய குழவி குருகுரு வென்றது! குழம்பு சோற்றை இறக்கிய அடுப்புமேல் சொளசொள என்றே வற்றல் நன்று மணக்கக் கொதித்தது! கிள்ளைகை கொத்த வரையையும், வெள்ளை யன்கை வெண்டைக் காயையும், ஆய்ந்தன குழம்பை அங்ஙனே இறக்கிப் பொன்னெனக் கொத்தவரைப் பொரியல் இறக்குமுன் வெள்ளையன் வாழை இலையினை வெடுக்கென அறுத்துத் திருத்திக் கழுவிஅப் படியே கூடம் பெருக்கிக் கூடப் பாய்இட்டு நீடுசால் நிறைய நீர்நி றைத்துச் செம்பும், துடைக்கத் துணியும் வைத்துத் தன்னனா தான தான தானனா என்று பாடிக் கொண்டே என்ன என்று கூவினான். எல்லாம் ஆயிற்று என்று மறுமொழி எழுப்பினாள் கிள்ளை. மணிப்பொறி டிங்கென ஏழரை வகுத்தது நடுக்கட் டினிலே நாற்கா லிகளும் விரிப்புப் பெட்டிமேல் வெற்றிலைத் தட்டும் அழகின் சிரிப்பென அமைத்து முடித்து வெள்ளையன் கைகூப்பி வேண்டக் கிள்ளைவாய் மலர்தூய் வருக வருக என்ன அழகர் வந்தார் அம்மை வந்தாள் மழலை பேசி மக்கள் வந்தனர் இருக்கை காட்ட இருந்தனர். உங்கள் சிரிக்கும் சிறுவர் எங்கென்று கேட்க வீட்டுப் பாடம் விரும்பி அங்கொரு வீட்டுக் கேகினர் என்றது கேட்டுக் கைய லம்பத் திரும்பினர் கண்டனர் இருகையில் தண்ணீர் ஏந்தி நிற்கும் தமிழச்செல் வத்தைப் பாண்டியப் பையனை! வாழ்த்தினர் வியந்தனர் செம்புநீர் வாங்கிக் கைகால் முகம்கழீஇக் கடிதிற் சென்றே எட்டுமணி கிட்டிற் றெனஉட் கார்ந்தனர் ஐவர்க்கு நால்வர் அருந்தொண் டாற்ற விருந்துண்டு வெற்றிலை கைக்கொண்டு தெருவில் வந்தனர், மாட்டு வண்டி வந்தது வணக்கம் வாழ்த்து நன்றி வழங்கச் சலசலச் சலங்கை மாடுகள் சரேலென விரைந்தன. வெள்ளையன் உடன்வி ரைந்தான் புகைச்சல் வண்டி போனதோ கிடைத்ததோ என்று கிள்ளை வீட்டுக் கேகினள். இரண்டு கடிகை ஏகின! அந்தப் புகைவண் டியது பூ வென் றூதிற்று வெள்ளையன் கிள்ளையே என்றழைத் தபடி வண்டி கிடைத்ததே வண்டி கிடைத்ததே அரைமணி அளவில் சோறுகறி ஆக்கிய உன்றன் திறமை உவமை யிலாதது என்றான் வெள்ளையன்; கிள்ளை இசைப்பாள் ஆடவர் உலகே ஆடவர் உலகே எனக்கென் துணைவர் போலநின் மனைமார்க்கு நீதுணை புரிந்து வாழ்கவே. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.291, 1964 112. திருவரங்கப்பெருமாள் செத்த பத்து வெண்பா திருவரங்கத் தார்தீய்ந்தார் அன்னார் மனைமார், இருவரங்குத் தீய்ந்தார்கள் இந்தப் - பெருநாள் ஓர்விளம்பிப் பங்குனியின் ஒன்பதாம் நாள்! இதுபார்ப் பார்விளைத்த தன்றிவே றார். 1 மேம்பட் டுலகளந்தார் வேகையிலே தாம்கிடந்த பாம்புப் படுக்கையும் வெந்ததுவாம் - சாம்பலாய்ப் பூண்ட மணியெல்லாம் போனதுவாம்! பொன்னெல்லாம் நீண்டோடிற் றாம்உருகி நேர். 2 கருவறையில் உற்றதீக் காட்டை அவிக்கப் பெருமாளால் ஆமோ? பெருமாள் - திருவடியால் ஊர்ப்பானை எல்லாம் உருட்டி உயிர்வாழும் பார்ப்பாரால் ஆமோ? பகர். 3 மலரவனை யும்சிவனை யும்படைத்த மாயன் சிலர்வைத்த தீயணைத்த லின்றிக் - கலகலென அத்தீயில் வேகையிலே ஆன திருச்சியினோர் அத்தீ அணைக்கவந் தார். 4 வருவதற்குள் மண்ணுண்டான் தீயுண்டான் மற்றும் கருவறையில் எல்லாம் கரியாய்க் - கரிந்தனவாம் நெட்டைக் கருங்கல்லே நீறாகும் போதுவண்ணப் பட்டாடை என்ன படாது. 5 கரிய பெருமாள் அடியார் முகத்தில் கரியைத் தடவிக் கரியாய்க் - கரிந்தானாம் தானிருந்தும் பார்ப்பனரைத் தாங்கினான் தான்செத்தும் தானம் தரும்படிவைத் தான். 6 கருங்கல் எரிந்ததென்று கண்ணீர் சொரிந்தார் திருந்தா மடையர்! சிரித்தே - இருந்தார்கள் பார்ப்பார்! திருமால் படிவம் புதுக்கையிலே ஊர்ப்பணத்தை உண்ணலாம் என்று. 7 ஆயிரம் ஆண்டாய்ப்பல் லாயிரம் கோடிஎன்று தீயாப் பணம்பறித்தான் தீயானான்! - தாய்நாடே செல்வத் திருக்கோயில், நீபெற்ற மாணவரின் கல்வித் திருக்கோயி லாக்கு. 8 நடமாடக் கோயில்ஆம் நம்பர்க்கொன் றீயில் படமாடக் கோயிற் பரமர்க் - குடன்ஆகும்! என்றார் திருமூலர்! நெய்வடையை ஈந்தாரே தின்றாரா கல்லார் சிறிது? 9 ஆளவந்தீர் மக்கட் கறிவைப் பெருக்காமல் மாளுகின்றீர் மாளுங்கள்! மாளுங்கள்!! - நாளும் உருவணக்கத் தாலே திருவழியும்! உள்ளப் பெருவணக்கத் தால்பெருகும் பேறு! 10 - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.294, 1964 113. எட்டி கரும்பாகாது எண்சீர் விருத்தம் மீனாட்சி எனும்பெயரை மாற்றிக் கொண்டாள் கயற்கண்ணி எனும்பெயரை மேவ லானாள் ஏன்என்றார் உறவினர்கள். தமிழாற் கொண்ட என்விழியை என்அன்பர் இனிதாய் உண்பார்! ஆனதனால் என்றுரைத்தாள்! தீர்த்தம் என்னும் அதைவிட்டு நீர்என்றாய் ஏனோ என்றார் தேனாகப் பருகுவர்என் இதழ்நீ ரைத்தான். தீர்த்தமெனில் அணுகாரே என்று சொன்னாள். 1 கயற்கண்ணி தமிழ்மகளாய்க் காட்சி தந்தாள். கருப்பனுக்கு! விருப்பமெலாம் அவள்தான் என்றான் அயலெவரும் அறியாமே ஒருநாட் காலை ஐந்துமணிப் புகைவண்டி ஏற லானார் வெயிலப்பன் இது கண்டான். கருப்பா இஃது மேன்மையோ எனக்கேட்டான். கருப்பன்சொல்வான்; இயல்பாக நான்பெற்ற எதிர்காலத்தின் இன்பெனும்நாட் குறிப்பவளின் முகக்கண் ணாடி! 2 வண்டியும்போய் அயல்நிலையம் நின்ற போது மங்கையுடன் கருப்பன்தான் இருந்த பெட்டி கண்டதிலே இருமாதர் ஏறி னார்கள்; கைப்பிள்ளை புனற்செம்பு துணிமு டிப்புக் கொண்டொருத்தி குந்தஇடம் பார்த்து நின்றாள் கொழுமொட்டைத் தலைஒருத்தி அவள்பின் நின்றாள் திண்டாட்டம் நீக்கிடுவாய் கயற்கண் ணாளே சிறுகுழந்தை யொடுதாய்பார் என்றார் அன்பன். 3 அன்னையையும் பிள்ளையையும் கைவி லக்கி அடுத்துநின்ற மொட்டையினை இருங்கோஎன்றே தன்னிடத்திற் சரிபாதி ஒதுக்கித் தந்தாள் தமிழினத்தின் மேல்வெறுப்பை ஒதுக்கா மங்கை! இன்னலுற்றான் அன்னைக்கும் பிள்ளைக் குந்தன் இருப்பிடத்தைத் தந்துதான் எழுந்து நின்றான்! சென்னைபோய்ச் சேர்ந்ததுவாம் புகைச்சல் வண்டி சேரவில்லை அவ்விரண்டு கசப்புள் ளங்கள். 4 நல்லுணவு விடுதிஒன்றில் தங்கி னார்கள். நாள்போகும்; கிழமைபோம்: திங்கள் செல்லும் அல்லல்மட்டும் அணுவளவும் நீங்க வில்லை அவளுக்கும் அவனுக்கும்! ஒருநாள் அங்கே நல்லதொரு வெயிலப்பன் வந்து சேர்ந்தான்; நலந்தானா? எனக்கேட்டான், கருப்பன் சொன்னான் தொல்லையண்ணே! நான்பெற்ற எதிர்கா லத்தின் துன்பெனும்நாட் குறிப்பவளின் முகக்கண் ணாடி! மெல்லிஅவள் படக்கூத்த னொடுதொ லைந்தாள் மீட்சிபெற்றேன் எனக்கருப்பன் வீடு சேர்ந்தான். 5 - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.299, 1964 114. பெண் எடுப்பு பெண்ணென்றால் அவளல்லவோ பெண்? - உலகில் - பெண் உடனெடுப்பு கண்ணவள் மாமியர்க்கே காப்பவள் மாமனார்க்கே உண்மையில் வாழ்க்கையிலே உயிராவாள் கணவனுக்கே - பெண் அடிகள் பொன்னான குணமுடையாள் பொய்யில்லா மணமுடையாள் முன்னான அறமுடையாள் முத்தான சொல்லுடையாள் தென்னாட்டின் பண்பாட்டில் தீராத பற்றுடையாள் தன்வீட்டு விருந்தினர்மேல் தாய்போன்ற அன்புடையாள் - பெண் மாண்புடைய தமிழ்நெறிக்கு மாத்தமிழர் புகழ்ஒளிக்குக் கோணல்வந்தால் ஒருதுளிக்கு நாணம்வரும்அந் தக்கிளிக்கு காணநல்ல நகைவேண்டாம் கற்பொன்றே அவள்பூண்டாள் ஆணழகன் வீட்டினுக்கே அறம்வளர்க்கும் திருவிளக்கே - பெண் காலையிலே தான்எழுவாள் கன்னித்தமி ழைத்தொழுவாள் வேலைஎதிலும் வழுவாள் வீணர்நிலைக் கேஅழுவாள் ஏலாத சாதிமுறை எள்ளளவும் அவள்தழுவாள் ஞாலத்து வள்ளுவனார் நன்னெறிவிட் டேநழுவாள் - பெண் பெண்டிர்க்குப் பெருமாட்டி பிள்ளைகட்கு வழிகாட்டி அண்டிடும் ஏழைகளை ஆதரிப்பாள் அமுதூட்டி! வண்டமிழ்த் தாயான வையத்து மூதாட்டி தொண்டுக்கே அன்புகாட்டித் தொழுவாள்மண மலர்சூட்டி - பெண் - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.14, 1964 115. சாதி புதைந்த மேட்டில் மாது புதைந்தாள் அழகன் மார்பிலே அகவல் 1. அன்புடை அழகர்க்கு வரையும் அஞ்சல்: நீர்ஒரு சாதி! நான்ஒரு சாதி! ஆயினும் அன்பால் இருவரும் ஒருவர். நம்மைப் பெற்றவர் நச்சுச் சாதியாம் பாழுங் கிணற்றில் வீழ்ந்தி ருப்பவர், அம்மணல் தவளைகள் நம்மணம் ஒப்பார்! எனைப்பிரிந் திருப்ப துமக்கெப் படியோ, உமைப்பிரிந் திருப்பதென் உயிர்பிரிந் திருப்பதே. இன்றே இருவரும் எங்கேனும் ஓடலாம் ஒன்றாய் - உயிரும் உடலுமாய் வாழலாம். எழுதுக உடன்பதில்! இங்ஙனம் அன்றில் 2. இனிய காதல் அஞ்சலை எழுதினாள். எழுதிய அதனை எவர்கொண்டு போவார்? என்று நன்று கருதி யிருந்தாள். 3. அழகன் அழகுடல் அங்குவைத் தழகனின் அன்பு நெஞ்சை அன்றில்பால் வைத்தான். அவளுடல் தழுவி இவண்வரும் தென்றலைத் தழுவலால் சாகா திருந்தேன் ஆயினும் நாணிக் குனிந்தொரு நாள்அவள் சிரித்த மாணிக்கச் சிரிப்புத் தென்றலில் வருமா? ஐயோ என்றே அலறினான் அழகன்! சாதி முடிச்சு மாறித் தனத்தை நம்புவார் பிடிக்குத் தப்பிநான் அவளொடு கம்பி நீட்டினால் கனிகசந் திடுமோ! என்றே அழகன் எதிர்நோக் குகையில் இந்தா அஞ்சல் என்றொரு கிழவர் தந்தார்! அழகன் சடுதியிற் படித்தான். அவன் எழுதிய பதில்: அன்புடைய அன்றிலே! இன்றே இரவே இரண்டு மணிக்கே இரண்டு பேரும் பரங்கிப் பேட்டைக் கோடி விடலாம்! உறங்கி விடாதே! மெலுக்காய் எழுந்து வளையலைக் குலுக்காது நடந்துதாழ் திறந்து குறட்டை நண்ணுக, வாழைக் குலையை *ntH« தூக்கல்போல் எடுத்துச் செல்வேன். இங்ஙனம் அழகன் 4. எழுதி முடித்த இந்த அஞ்சலைக் கிழவ ரிடத்தில் அழகன் கொடுக்க அஞ்சினான்! அவன்பா டையப்பா டானதே! தவறா தவளிடம் தருதல் வேண்டுமே என்றான் அழகன். இணங்கினார் கிழவர். எவரும் அறியா திருக்க வேண்டுமே என்றான் அழகன். எவரும் அறியார் என்றார் கிழவர். என்னஇது என்று பிடுங்கினால் பெருங்கே டன்றோ என்றான். நெடுமூச் செறிந்து கிழவர் நீர்இவ்வா றையப் படுதல் அடுக்குமோ என்றார். இவ்வா றிருவர் பேச்சும் நீண்டது. 5. அழகன் தந்தை அறையின் சன்னலின் வழியாய் இந்த வழக்கறிந் தவனாய்க் கொல்லையால் குடுகுடு வென்றே ஓடி அன்றிலின் தந்தையை அழைத்து வந்தான். பதுங்கி இருந்து பார்த்திருந் தார்கள். 6. கெட்டவர் அஞ்சலைக் கேட்கவும் கூடுமே என்றான் அழகன். இரார்என் றார்அவர். உம்மை நம்ப ஒண்ணுமோ என்றான் என்னை நம்புக என்றார் கிழவர் இதற்குமுன் உம்மை யானறி யேனே என்றான் அழகன் எதிரில் கிழவன் அன்றிலாய் நின்றே யான்தான் அத்தான் அன்றில் நாழிகை ஆயிற் றென்றாள். ஒருவெண் பொற்காசுக் கிரண்டுபடி அரிசி கண்டநல் லாட்சி கண்டான் போல மகிழ்ச்சி மனத்திற் றாண்டவ மாடக் கொடிய சாதிநாய் குலைக்கு முன்னே நடந்துவா அன்னமே விரைந்துவா மானே தொத்தடி கிளியே தோளில்! என்றான் 7. அழகனும் அன்றிலும் வியக்கும் வண்ணம் இருவரின் தந்தைமார் எதிரில் வந்தனர். இருவரும் திருமண மக்கள் என்றனர் சாதி புதைந்த மேட்டில் மாது புதைந்தாள் அழகன் மார்பிலே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.27, 1964; குயில் கிழமை இதழ், 23.9.1958 116. அன்புத் திருமணம் ஓட்டிப் போகமறந் தானா - நம்மை ஒன்று சேர்க்கநினைத் தானா மாட்டுக் காரன்வந்து நம்மை - இடை மறிக்கு முன்னர்இரு நெஞ்சும் கூட்டி அன்புபரி மாறி - இன்பம் கொள்க என்றுவெள்ளைக் காளை பாட்டுப் பாடிநின்ற போது - விடை பகரும் நல்லதொரு கறுப்பு. 1 நாளும் பார்த்துவரு கின்றோம் - நம் நாட்டு மனிதர்மன அழகை மேள தாளத்துடன் ஐயர் - மேல் வெள்ளைக் கயிற்றினொடு குந்தி ஆள னிடத்துமொரு கயிற்றைக் - கொடுத் தவளின் கழுத்திலிடச் செய்வார் காளையே அருமை மாமா - அந்தக் கயிற்று மணம்புரிந்து கொள்வோம். 2 உள்ளம் ஒப்புவது மணமாம் - இந்த உண்மை தனைஅந்த மனிதர் எள்ளத் தனையும்உணர்ந் திலரே - நம் இனத்தைக் கண்டுமவர் திருந்தார்! தள்ளி விடடிஅதை மச்சி - என்று சாற்றி நின்றதுநற் காளை. வெள்ளப் புனல்நடக்கும் ஓடை - கரை வீசிநடக்கும் குளிர் காற்றில் அள்ளி இரண்டும்நுகர்ந் தனவே - பேர் அன்புத் திருமணத்தின் பயனை. 3 - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.53, 1964 117. பெண்கள் பாட்டு எடுப்பு (ஆருக்குப் பொன்னம்பலக் கிருபை இருக்குதோ அவனே பெரியவனாம் என்ற மெட்டு) எறிந்தஎன் பூப்பந்தை எடுக்கமுடியுமோ இசைப்பீர் தோழியரே உடனெடுப்பு அறிந்த வரைக்கும்பந்து வானை அளாவிப்பின் ஆத்திகன் நடுவீட்டில் போய்ச் சேர்ந்த தாலே! - எறிந்த அடிகள் பார்ப்பனன் கால் மாடு - தலையைவைத்துப் படுக்கும் அப்புல்ல னோடு - முட்கள் செறிந்து மூர்க்கமாய் வளர்ந்திடும் மூடவழக்கக் காடு மொய்க்கும் ஆத்திகன் வீடுமுடைநாற்றச் சுடுகாடு. - எறிந்த அகத்தில் ஆணவம் கொழுக்கும் - பொய்வஞ்சப் பாசை அணுக வும்கால் வழுக்கும் - ஏழைக்குமட்டும் இகசுகம் பொய்மைஎன்னும் இதயத்தின் அழுக்கும் இழுக்க மெல்லாம் மறைக்க முகத்திற்குறி பழுக்கும். - எறிந்த கடவுள்கள் என்னும் உலையே - மூட்டிவைத்த கடுமத வாள்கொள் நிலையே - நிலையாய் நின்று படியில்தாழ்ந்தோர் என்போரைப் பண்ணும்படு கொலையே பாங்கிய ரேஅதனைப் பார்க்கசகிக் கலையே. - எறிந்த ஏழைஅறிவை வேட்டை - இட்டதினாலே இழிகோயி லென்னும் காட்டை - விழியிற் காட்டிப் பாழாக்கச் சொல்லியதிற் பறித்திடும் பணமூட்டை! பார்க்கவும் சகியேன் ஆத்திகன் வீட்டை! - எறிந்த பொய்மைப் புராணப் பேச்சில் - மக்களறிவைப் புதைக்கும் அவனின் மூச்சில் - வெளிமயங்க மொழிக்கும் விருதா பக்திமொழிந்திடும் கைவீச்சில் முகம்கருகி யிருக்கும் என்பந்து சீச்சீ! - எறிந்த - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.131, 1964 118. தறித் தொழிலாலே எடுப்பு தறித் தொழிலாலே - கைத் தறித் தொழிலாலே . . . உடனெடுப்பு தமிழ்த் திருநாடே - என் தமிழ்த் திருநாடே தழைத்து வருகின்றாய் - வறுமையைத் தணித்து வருகின்றாய் வாழ்க! - தறித் தொழிலாலே அடிகள் பறிக்கும் பட்டாடை! - கண்ணைப் பறிக்கும் பட்டாடை! - ஒளி பாய்ச்சும் நூலாடை! சிறக்கும் வானும் கதிரும் நிலவும் சேர்த்து நெய்த பொன்னாடை செந்தமிழ் நாடே தந்தாயே! சிறுமையைத் தவிர்த்தாய் நாட்டின் பெருமையை வளர்த்தாய் வாழ்க! - தறித் தொழிலாலே அழகு செய்வ தெல்லாம் - அழகுக் கழகு செய்வ தெல்லாம் கைத்தறி ஆடைகள் அல்லவோ? இழைகள் எல்லாம் பால் நுரையாய்ப் பழந்தமிழ் நாடே அளித்தாய் பாவையரின் ஆடவரின் ஆவலைத் தவிர்த்தாய் வாழ்க! - தறித் தொழிலாலே - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.258, 1964 119. அன்னை கண்காக்கும் இமைபோல என்னைக் காத்தவள் அன்றோ எனைஈன்ற அன்னை! எண்ணும் எண்ணங்கள் இழைக்கும் செயலெல்லாம் எனக்கே ஆக்கி ஈ எறும் பணுகாமல் - கண்காக்கும் ... பொன்னல்ல அவளாசை பூணல்ல அவளாசை புத்துருக்கு நெய்ஒழுகும் உணவல்ல அவளாசை என்நல்ல வாழ்வை அவள்காணும் இன்பம் எப்போதெப்போ தென்ப தவள்ஒரே ஆசை - கண்காக்கும் ... அன்பு மணாளன் காதலைத் தள்ளி ஐந்தாண்டு வரைஎனை அமிழ்தாய் அள்ளிப் பொன்முலை யூட்டிச் செந்தமிழ்ப் பள்ளி புகுத்தும் வரைக்கும்என் மேல்ஒரே புள்ளி - கண்காக்கும் ... வாழ்ந்தநாள் என்றால் தனக்கென்றா வாழ்ந்தாள்? வருந்தினாள் என்றால் தனக்கென்றா வருந்தினாள் தாழ்ந்தாள் மேனி! தனக்கென்றா தாழ்ந்தாள்? தன்னுடல் பொருள்ஆவி எனக்கன்றோ ஈந்தாள்? - கண்காக்கும் ... உரையினை ஈன்றவள் செந்தமிழ் அன்னை உறைவிடம் ஈன்றவள் தமிழக அன்னை கருவிலே இவையெல்லாம் அடையவே முன்னைக் கனிவயி றேந்தினாள் அவளேமுதல் அன்னை. - கண்காக்கும் ... - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.286, 1964 120. மக்கட் பிறப்பு பிறவியில் என்னென்ன புதுமை - மக்கட் பிறவியில் என்னென்ன புதுமை? நறுமலர் சூடிய மங்கைஒ ருத்தியும் நானிலம் மெச்சிடும் செம்மல்ஒ ருத்தனும் சிறிதன்பு செய்குவர் சேயிழை ஈவாள் சிப்பிமுத்துக் கிணை பச்சைக் குழந்தையை - பிறவி பால்குடிக்கும் சிரிக்கும் சிறுகால்கைகள் பார்த்திட ஆட்டும் தலைநிலை நின்றிட ஏலும்பின் னேதவ ழும்பிற குட்கார்ந்து எழுந்து நடக்கும் குழந்தைப் பருவத்தில் - பிறவி அஞ்சொல் பயின்றுநற் பாவை விரும்பிஆண் டைந்தாகப் பள்ளிக் கலைந்துகலை கற்று மிஞ்சுபத் தாறினில் மெல்லியைக் கூடிப்பின் மெய்தளர் வாரிந்த வையக மீதினில். - பிறவி - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.150, 1964 121. கைத்தறி ஆடை ஆடையிற் சிறந்தது கைத் தறிஆடை - மக்கள் அனைவர்க்கும் நல்லதந்தத் தேனோடை ஓடையில் தேனைஅள்ளி உண்ண வாரீர் - அள்ளி உண்டுகைத் தறிக்குதவி பண்ண வாரீர்! சேலையிற் சிறந்தது கைத்தறிச் சேலை - அது தேவைக் குரிய வண்ண மலர்ச் சோலை - குளிர் சோலை வண்ணமலர்கள் வாங்க வாரீர் - நம் தூய கைத்தறித் தொழிலைத் தாங்க வாரீர்! வேட்டியிற் சிறந்தது கைத்தறி வேட்டி - கலை வெற்றிக் கெல்லாம் அதுவேவழி காட்டி - புகழ் காட்டும் கலைக்குநலம் காட்ட வாரீர் கைத்தறித் தொழிலை நிலைநாட்ட வாரீர்! எந்நாட்டினும் தென்னாட்டுக் கைத்தறித்தொழில் - திசை எட்டும் பரப்பியது தன்பே ரெழில் - நம் தென்னாட்டுக் கைத்தறித் தொழில் ஓங்க - ஓங்கச் செல்வநிலை யும்கலையும் செழித்தோங்கும்! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.259, 1964 122. கலை எது? கலைப்பொருள் எது? அகவல் சேற்றிலே தூரியம் செலுத்தி, அள்ளி வீட்டுக் குறட்டில் விளையாட் டாகக் கலைஞனாம் ஒருவன் கடிதொன்று வரைகையில், அடடே, தூய்மை அழிந்ததே என்றே எரிச்ச லோட அவனிடம் ஏக, அக் குறட்டில் குச்சுநாய் வாலைக் குரங்குபற்றி இழுப்பதைக் கண்டேன். எழுதியோன் இழிசெயல். சேறு, தூரியம், செறிந்தஎன் எரிச்சல், இவைஅ னைத்தும் என்நினைவில் இல்லை. எதுஎனை இவற்றை மறக்கச் செய்தது? குரங்கா? நாயா? அல்ல; இவற்றை ஆக்கிய திறம்அது வேகலை! பார்க்கும் குரங்கு,நாய் பகர் கலைப் பொருள்களே - குயில், 21.6.1960; குயில் பாடல்கள், ப.45, 1977 123. குரங்கிலிருந்து மனிதனா? மனிதனிலிருந்து குரங்கா? அகவல் ஆயிரம் ஆண்டின்முன் இருந்த மனிதனின் உயரமும் பருமனும் உரமும் வரவரக் குறைந்து வருகிறது கொஞ்சமும் பொய்யன்று! உடற்ப யிற்சி உள்ளறைச் சுவரில் அந்நாள் கையால் அறைந்த சுவடுதொட, இந்நாள் மனிதன் ஏணிகேட் கின்றான்: ஓரடிக் கொன்றாய்க் கம்பி அடைத்த பலகணி இந்நாள் படைநுழை வாயில்! இந்நாள் மனிதனுக் கிருக்கும் உள்ளுரம் அந்நாள் பொட்டுப் பூச்சிக் கமைந்தது. மலைப டைத்த கனிகொண்டு காலையில் இலைப டைத்தான் இதற்குமுன் இருந்தவன்! குளிக்கஆள் வேண்டும் இந்நாள் குள்ளனுக்கு; வெளிக்குப் போகக் குடுவை வேண்டும்! ஏறு குதிரையை இருகால் இறுக்கி ஆலினைப் பற்றித் தூக்கினான் அந்நாள்! இருகையால் சிறுகுண்டு தூக்கி எறிந்துதன் வீரத்தைத் தானே மெச்சுவான் இந்நாள்! வாயிற் படிக்கு மலைக்கல் கொணர்ந்தவன், அம்மி நகர்த்த ஐந்தாள் கேட்டனன். போருக்குப் போந்த ஆயிர மறவரின் நேருக்கு நேர்நின் றான்அந் நாளில்! இந்நாள் எறிகுண்டு செய்யும் ஆளின் பொன்ன டிக்குப் பொன்னையும் தந்து புலம்பு கின்றான் புதிய மெட்டில்! ஒழுக்கம் விழுப்பம் உண்டாக்கு மன்றோ! ஒழுக்கம் இந்நாள் உருப்பட்ட துண்டோ? சோறு தந்தார்க்கு மாறு கொண்டாரை எதிர்க்கத் தன்னுயிர் ஈந்தான் அந்நாள்! உப்பிட் டாரை உள்ளளவும் மறவான்; தினைநலம் செய்யினும் பனைஎனக் கொள்வான்; இந்நாள் மனிதன் எப்படி? சோறிட்டுக் கல்வி தந்து கரையேற் றியதன் குருவின் வழியில் கொடியமுள் இட்டான்! ஏனெனில் - கட்சிக் கொள்கை என்பான். கவிஞன் விளைத்த கவிஞர்கள், கவிஞனின் ஒளிவிளக் கவிக்க உயர்தவம் புரிவர்; ஏனெனில் - கட்சிக் கொள்கை என்பார். நன்றி நினைத்தலால் சிறந்த முன்ஞாலம் நன்றி மறத்தலால் நனிசாய்ந் திட்டது. இன்னா செயினும் இனியவே செய்வர் முன்னாள் மனிதர்! இந்நாள் அஃதிலார்! நல்லார் உறவு நாடுவர் முன்னாள், அல்லார் தன்னையே அடுப்பார் இந்நாள். அரசியல் ஒழுக்கம் அரோகரா! தனிமுறை முழுதொ ழுக்கமும் முற்றிற்று - இந்நாள். எல்லா வகையிலும் இந்நாள் வரைக்கும் தேய்ந்து தேய்ந்து வரும்இம் மனிதனை ஆய்ந்து ணர்க! ஆய்ந்து ணர்க! மனிதன் தேய்ந்து மாண்பிலா விலங்கு, பறவை, பாம்பு, பூச்சி, புல்என ஆகின் றான்என ஐயுறு கின்றேன். குரங்கி னின்றும் மனிதன் வந்தானா? மனிதனி லிருந்து குரங்கு வந்ததா? வைய கத்தை வைகிலேன், ஐயப் பட்டேன்! ஆய்க அறிஞரே. - குயில் பாடல்கள், ப.47, 1977; குயில், 25.8.1959 124. புதுப்படைப்பு அகவல் என்வீட் டிற்கும் எழிற்கடற் கரைக்கும் இடையில் அரைக்கல் தொலைவே இருக்கும். மிதிவண்டி பொருத்திய புதுவண்டி ஒன்றில்நான் ஏறினேன்; கடலின் கரையை எய்தினேன். எடுத்துக் குலுக்கியது என்னை ஒன்றே; அங்கே அழகுற என்னைக் கண்டேன்! பலரும் இரண்டு பாரதி தாசனைக் கண்டு வியந்து கொண்டி ருந்தனர். என்னிடம் இருந்தது பொன்னாடை ஒன்றே; இரண்டு பொன்னாடை இருக்கக் கண்டேன்! புறப்படும் போதெனைப் புகைப்படம் எடுத்ததும் திறம்செய்து கடற்கரை சேர்த்ததும் வியப்பே. உலகின் நலத்தைக் கருதி யுழைப்பவர், அறிவை நாளொடு கலந்தனர்! அதனுள் நன்று குளிக்கும் கலைஞன், இன்று புதுமை படைத்தல் எளிதே! - குயில் பாடல்கள், ப.80, 1977; குயில், 16.6.1960 125. மாடு மக்கள் ஊர்தி வெண்பா* மனிதனைப் பார்த்துச் சிவனைச் செய்தபின், மாட்டில் இனிதமர்ந் தூரும் இடையன் - தனைப்பார்த்து வாய்ந்த சிவனேற மாட்டை இயற்றினான், ஆய்ந்தகற் றச்சன்அந் நாள்! கற்றச்சன் செய்த கடவுள், உலகத்தில் பெற்றசெல் வாக்கால் பெருந்தீங்கு - பெற்றோம்; சிவனுமா டேறினான், சிற்றறிவி னால்வாழ் பவனும்மா டேறுவதா என்று. ஏறிச் செலுத்தஎன்றே ஏறென்றார், மாட்டினையே பேறொன்று பெற்றும் பிழைப்பறியோம் - ஏறி இளமுதுகிற் குந்தி இருபுறங்கால் இட்டே உளமகிழ ஓட்டலாம் மாடு. உழவுக்கும், வண்டி உழைப்புக்கும், அம்மி குழவிக்குத் தானா, குணமும் - அழகும் செறிந்திட்ட மாடு? செழுந்தே ரதுஎன் றறிந்திட்டால் மிக்கபயற ஆம். செல்லுகின்ற செல்வத்தை மாடென்பார், நாம்ஏறிச் செல்லாத மாடும்ஒரு செல்வமா? - இல்லை! கடைக்கேறிப் போகலாம்; காப்பாகச் சேர்க்கும், மடைக்கேறு மண்டுபுனல் போல். என்செல்வம், என்னூர்தி என்றே எவனும்நற் பொன்போலக் காக்கப் புறப்படுவான் - நன்மாட்டின் மாசெலாம் போகும்; மனம்வளரும்! மற்றும்அது பேசலாம் நாளடைவில் பேச்சு! வறியார்க்கு நல்லூர்தி மாடு! கழகச் சிறியார்க்கும் நல்லுதவி செய்யும் - குறியாய் நடக்கும்பண் பாடுண்டு, நாட்செலவும் மட்டே இடக்கும்பண் ணாதன்றோ மாடு? மாடு கழிக்கும் கழிவும் மருந்தன்றோ? நாடு கழித்தொதுக்க வேண்டாமே? - கேடுகெட்ட குள்ளக் கழுதையும் ஊர்தியாய்க் கொள்ளுகின்றார் வெள்ளிமலை ஏற வெறுப்பா? மாட்டுக்குக் கொம்புநல்ல வாய்ப்பாகும், நாமேறி ஓட்டுகையில் நம்மை ஒழிக்கவரும் - கோட்டானைக் குத்திக் கொலைசெய்யும்! கொண்ட தலைவனையோ, நத்திப் பணிபுரியும் நன்று. நெருங்கிப் பழகாமை யால்மாட்டின் நீர்மை சுருங்கிற்று! வீழ்ந்தது தோற்றம்! - கருங்கலும்தான் கைவைத்தால் கண்ணாடி யாகும். ஓர் ஆள்கொண்டு செய்வித்தால் தீரும் எழில். முன்நாட்டு மக்களெல்லாம் மாடூர்ந்தார், முன்நாள் போல் பின்நாட்டு மக்களும் பேரூர்தி - நன்மாடாய்க் கொண்டு களிக்கவே! கொள்ளாரும் நல்லவழி கண்டு களிக்கும் படி! - குயில் பாடல்கள், ப.51, 1977; குயில், 30.6.1959 * குதிரை, ஏறிச் செலுத்தப் பயன்படுத்திக் கொள்வதுபோல மாட்டையும் பயன்படுத்தலாம் என்பன இவ்வெண்பாக்கள். 126. வீட்டுத் தோட்டப் பூங்கா அகவல் தஞ்சையை விட்டுத் தண்வயல் வடவார்ப் புகைவண்டி நிலையம் போந்ததென் வண்டி. வண்டி நிலையத் தலுவலன் வாழும் தனிவீ டொன்றை இனிதுநான் கண்டேன். நாலைந்து வாழைகள் நறுநிழல் தந்தன; அகத்தி யொன்றும் அழகொடு நின்றது; இளைய மாமரம் தளிர்த்தி ருந்தது; புடலை, அவரை, பூசணி எல்லாம் கொடிநீண்டு குளிர்இலை யோடு படர்ந்தன; பன்னிற நன்மலர் படைத்தன செடிகள்! ஐம்பது சதுர அடிஅள வுள்ள தரையில் இந்தப் பச்சைத் தழையிடை, செந்நிற ஓட்டு வீடு திகழ்ந்ததால், நீல மாமுகில் நீங்கா நிலையில் செம்பருதி தன்னொளி சிறிது சிறிது காட்டிய தேபோற் காட்சி தந்தது. வீட்டின் கொல்லைப் புறத்தில் விரிபுனல் வாய்க்கால் ஒன்று வாய்த்தி ருந்தது. ஒருத்தி; என்மகள்; மரங்கொடி, செடிக்கெலாம் அன்னை போல்வாள்; அவள்ஒரு வாளிகொண்டு செல்வாள்; நீர்மொண்டு மீண்டு, தன்னருஞ் செல்வர் உண்ணச் சேர்ப்பாள்! காண்கையில் எனது வண்டி எடுத்தது நடையை, இனிய காட்சியை இழந்தன கண்கள். அரசினர்க் கொன்று சொல்ல ஆசை, வீட்டுத் தோட்டப் பூங்கா நாட்டு வார்க்குத் தேவைநற் பரிசே! - குயில் பாடல்கள், ப.55, 1977; குயில், 11.10.1960 127. ஏழையின் குடிசை பானையில் நற்சிலந்திக் கூடு பழஅடுப்பில் பூனையின் தூக்கம், பொலிஎருமை மாட்டின் முதுகெலும்பு போலும் முருங்கைக்காய் காய்க்கும், அதுவும் தலைமொட்டை. அன்னை கிழவி மணைக்கட்டை மேல்தனது மண்டை உறுத்தக் கணுக்கால் வயிறெட்டக் கட்டிச் சுருட்டிப் படுத்த படுக்கை, பசிக்கோ குடல்தான் கடித்துண்ணத் தக்க கறியுணவு, பச்சை மயிலடியைப் போன்ற இளநொச்சி மண்டும் அயலிடத்தில் நின்றபடி அம்மே எனக்கதறும் வற்றல் பசுமாட்டின் வாய்க்கதறல். காற்றைசைவைச் சற்றும் பொறுக்காமல், தள்ளாடும் மேற்கூரை, ஆன இவையும் அடுக்காய் அமைந்தது தான் கூனக் கிழவர் குனிந்து புகும்குடிசை ... - குயில் பாடல்கள், ப.58, 1977; ஏர் உழவன் 1939; 128. இரட்டைப் பேறு அகவல் பொன்முகம் மலர்விழி கருங்குஞ்சி பொலியும் என்மக னின்மகன் ஒருவன் இதழால் விரலைச் சுவைத்தே ஒருபெருந் தடுக்கில் கிடந்தான். அயலூர்க் கிழவி ஒருத்தி நேரில்அக் குழந்தையைக் கண்டாள்; நெடுஞ்சுவர் ஓரமும் அவள்அவ் வோவியம் கண்டாள்! திடுக்கிட்டுக் கிழவி செப்பு கின்றாள்: சுவர்க்கண் ணாடியே சுவர்க்கண் ணாடியே பிள்ளை உருக்காட்டும் பெருங்கண் ணாடியே என்னுருக் காட்டா திருந்த தென்ன? முதுமையும் சாவும் ஒன்றெனும் முடிபா? என்று துடிக்கையில் ஈன்றவள் வந்தே இரண்டும் என் உடைமை என்றெ டுத்தாள். எதிரில் நின்ற கிழவி, முதுமையும் சாவும் எனக்கென் றாளே. - குயில் பாடல்கள், ப.63, 1977; குயில், 22.9.1959 129. குவட்டாவில் கூட்டக் கொலை எந்த நிமிஷத்திலும் - சாதல் ஏற்படக் காரணங்கள் ஐந்து லட்சம் உளவாம் - இதில் ஐயமுற வேண்டாம். இந்த உலகத்திலே - நீ இருத்தல் என்பதெலாம் வந்த விபத்தினையே - கொஞ்சம் மறந்த காரணத்தால்! 1 வானமும் மண்ணகமும் - உண்டு மத்தியில் நீயிருந்தாய் வானிடைக் கோடிவகை - நிலை மாற்றம் நிகழ்வ துண்டாம். ஆனஇம் மண்ணகத்தே - பதி னாயிரம் உற்பாதம்! பானை வெடிக்கையிலே - அதில் பருக்கை தப்புவதோ! 2 நாளைய காலையிலே - இந்த ஞாலம் உடைவதெனில் வேளை அறிந்ததனை - நீ விலக்கல் சாத்தியமோ? ஆளழிக்கும் விபத்தோ - முன் அறிக்கை செய்வதில்லை. தூளிபடும் புவிதான் - இயற்கை சுண்டுவிரல் அசைத்தால்! 3 மானிடர் மானிடரைக் - கொல்லும் வம்பினை மானிடர்கள் ஆனபடி முயன்றால் - பகை அத்தனையும் விலகும். மானிடன் கொன்றிடுவான் - எனில் மந்த மனிதனைத்தான்! மானிடன் மானிடனின் - உயிர் மாய்ப்பதும் மிக்கருமை! 4 நல்ல குவட்டாவில் - உன் நல்ல உறவினர்கள் இல்லம் தெருக்களுடன் - அவர் இல்லை எனக்கேட்டோம். சொல்லத் துடிக்குதடா - உடல் தூய வடநாட்டார். அல்லற் பெருஞ்சாவின் - வயிற்றில் அகப்பட் டறைபட்டார். 5 ஆகும் ஐம்பத்தாறா - யிரம் அன்பு மனிதர்களைப் பூகம்ப உற்பாதம் - மண்ணில் போட்டு வதைத்ததுவாம் சோகம் புலம்புமடா - இந்தத் தொல்லைச் செயல் கண்டால் ஊகத்தில் இக் கோரம் - தோன்றி உள்ளம் அறுக்குதடா! 6 மாடம் இடிந்தனவாம் - அவை மண்ணில் புதைந்தனவாம் ஆடும் தரையோடும் - மெத்தை அடுக் கொடிந்தனவாம்! கூடத்து மக்களெலாம் - எழில் கொஞ்சிப் பழம்போல, வாட நசுங்கினவாம் - ரத்த வாடை எடுத்ததுவாம். 7 பெற்ற குழந்தைகளைத் - தினம் பேணிவரும் தாய்மார், சிற்றெறும்புக் கடிக்கே - அழும் திவ்விய அன்புடையார், வெற்றிக் குவட்டாவை - இயற்கை வேரறுக்கும் சமயம் பெற்ற பிள்ளைத் துடிப்பும் - பிள்ளை பேணும் அன்னைத் துடிப்பும். 8 எண்ணச் சகிக்கவில்லை - நகர் எங்கும் சுடுகாடாம் கண்டவர் செத்திருப்பார் - இந்தக் கஷ்ட நிஷ்டூரமெலாம்! அண்டை அயலிருப்பார் - அவர் அன்பினில் செத்திருப்பார்! எண்டிசை கேட்டிருக்கும் - இதை ஏக்கம் அடைந்திருக்கும். 9 இன்றிரவே நமது - நிலைமை ஏதுகொல் என்றெண்ணும் தின்று படுக்குமுனம் - உயிர் தீரும் என நடுங்கும்! நன்று புவிவாழ்வு - மிக. நன்று மிகநன்று மென்று விழுங்கும் புலிப் - பெருவாய் மேதினி என்று பொருள். 10 தம்பி உனக்குரைப்பேன் - நீ சஞ்சலம் கொள்ளுகின்றாய் வெம்புகின்றாய் உளந்தான் - அந்த வேதனைச் செய்தியினால் அம்பு தொடுக்காமல் - கால் ஆட்படை ஏவாமல் கும்பலில் சாகும்வகை - இயற்கை கோடி வகைபுரியும். 11 பூகம்ப லோகத்திலே - தீயும் புனலும்வாழ் புவியில் வேகும் எரிமலைகள் - நல்ல வேட்டையிடும் புவியில் போகும்படி தோன்றிக் - கொல்லும் நோய்கள் ஒருகோடி ஆகும் இப் பூமியிலே - நீ அன்புறு வாழ்க்கையுற 12 மனமிருந்தாலே - ஒரு மருந்துனக் களிப்பேன் தினம்இரு வேளை - அதைத் தின்றுவர வேண்டும் எனை வெறுக்காதே - மருந் தின்னதெனச் சொல்வேன் தினையள வேனும் - அதைச் சீஎன் றொதுக்காதே. 13 சாவது நிச்சயமாம் - நான் சாவது நிச்சயமாம் சாவது நிச்சயமாம் - என்ற சத்திய வார்த்தையினைக் கூவு தம்பி, கூவு - இந்தக் குவலயம் கேட்கக் கூவுக லட்சமுறை - உன் கொச்சை மனந்தெளியும். 14 அந்தத் தெளிவினிலே - உனக் காண்மை உதித்துவிடும் சொந்த உலகினிலே - என்றும் தொல்லை விளைத்துவரும் எந்த மனிதனையும் - நீ ஏறிக் கலக்கிடுவாய் சந்ததம் இன்பத்திலே - புவி சாரும் வகைபுரிவாய். 15 மக்களுக் கிங்குழைப்பாய் - இங்கு வாழ்ந்திடும் நாள்களெல்லாம் தக்கன செய்வதற்கே - மனம் சலித்தல் விட்டொழிப்பாய் அக்கினி மத்தியிலும் - நீ அஞ்சுதல் நீக்கிடுவாய் புக்க மனிதரெலாம் - ஒற்றைப் போகமுற உழைப்பாய். 16 - குயில் பாடல்கள், ப.90, 1977; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு - III, 1935 130. அதிட்டம் பார்ப்பானுக்கு கூட்டிய குப்பையில் தங்க மணியைப் போட்டுப் போனான் மடமைப் பொன்னன்! அப்பக் கத்தில் அலைந்து திரிந்து குப்பை கிளறிய கோழியதை விழுங்கிற்று! விலைக்கு விற்கப் பட்டஅக் கோழியைக் கொலைக்குக் கொண்ட லையன் வாங்கிச் சமையல் அறையில் தனியே குந்தி, அமிழ்த்திக் கொன்றே அரிந்த சதையைச் சட்டியில் இட்டுத் தங்க மணியை இடுப்பில் ஏற்றினான்! தங்க மணியை அடைந்ததைப் பார்ப்பான் அதிர்ஷ்டம் என்பான். அதிட்டம் ஒப்பாத் தமிழன் அதுதான் மடமைமேல் வாய்த்த வெற்றி ஆதலால் உடைமையை உடையனுக் காக்குவான் உடனே. - குயில் பாடல்கள், ப.112, 1977; குயில், 21.6.1960 131. மூட நம்பிக்கை (காக்கை சொல் நம்பிக் காசை மட்டும் போக்கடிக்காதே!) அகவல் காக்கை இறைப்பில் கத்திக் கிடந்தது வீட்டுக் காரன் கேட்டு வருந்தினான் பறந்தது காக்கை சிறிதுநே ரத்தில் மறந்த நண்பன் வந்தான் விருந்தாய்! மற்றும் ஒருநாள் வந்து காக்கை கத்திக் கிடந்தது - கடிதத்தில் ஒருவன் விருந்தாய் வந்தான் வீட்டுக் காரன் தெரிந்து கொண்டான் காக்கையின் திறமையை! ஒருநாள் விருந்தினர் ஒன்பது பேர்கள் வரலா னார்கள் வருவதன் முன்பு காக்கை எதுவுமே கத்தவே யில்லை காக்கை மறந்ததாய் கருதினான் வீட்டினன் ஒருநாள் காக்கை ஓயாது கத்தவே வரும்விருந் தென்று வழிபார்த் திருந்தான் அஞ்சு மணிவரை ஆருமே வருகிலர் அஞ்சல் வந்த தயலூரி னின்றும் ஒருவன் வருவதும் ஓலை வருவதும் சரிநிகர் என்று தான்நினைத் திருந்தான்! நாளை வருவதாய் நண்பன் ஒருவன் ஆள்ஒரு வனிடம் அஞ்சல் அனுப்பினான். மறுநாள் காக்கையும் வாய்ப்பறை அறைய அறிவித் தபடி அவனும் வந்தான். மாரி யம்மன் தேருக்கு நண்பன் காரூரி னின்று கடிது வருவான் என்று நினைத்துகொண் டிருந்தான் வீட்டினன். அன்று காக்கையின் அறிக்கை தன்னை நோக்கி யிருந்தான் காக்கையும் வந்தது. காக்கா காக்கா என்றுகத் தியது. மனைவியை அழைத்து வருபவ னுக்குத் தனியே ஒருபடி சமைஎனச் சொன்னான். காக்கை மேலும் கத்தியே கிடந்தது நோக்கி யேதுப் பாக்கியோ டொருவன் அண்டைவீட் டின்மேல் அமைவாய் வந்து குண்டு பாய்ச்சிக் கொன்றான் காக்கையை! கரிய காக்கை கழறிய வண்ணம் மனையாள் சமைத்தாள் - வந்தவன் உண்டான். வீட்டுக் காரனே விளம்புவேன் கேட்பாய்! மோட்டுக் காக்கை முழங்குவ துண்டு. மக்கள் விருந்தாய் வருவ துண்டு மும்முறை அன்று முந்நூ றுதரம் இம்முறை சரியாய் இயலுவ துண்டு காக்கைசொல் நம்பிக் காசை மட்டும் போக்கடிக் காதே புகல்வேன் இன்னும் தன்பின் தொடரும் சாவை அறியாக் கன்னங் கரிய காக்கையா அறியும் இல்லிடை விருந்து வருவதை? நல்லதா மூட நம்பிக் கையதே? - குயில் பாடல்கள், ப.107, 1977; குயில், 15.5.1948 132. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது எடுப்பு பேறெல்லாம் பெற்றேன் மகனே - உன்னைப் பெற்றதால் பெறாத பேறெல்லாம் பெற்றேன். தொடுப்பு சீரெல்லாம் பெற்றேன் மகளே - உன்னைப் பெற்றதால் செந்தமிழ்ச் சீரெல்லாம் பெற்றேன். அடிகள் ஒருமகன், ஒருமகள் என்னிரு கண்கள் உறவன்புக் காதலில் பிறந்தசீர்ப் பண்கள் அருந்தமிழ் நாட்டுக்கு அளித்த நன்கொடை அனைத்துல கொன்றாக்கும் தொண்டுக் கின்படை வள்ளுவர், இரண்டடி எம்இரு பிள்ளை வாழ்வார்க்கு இலக்கணம் கற்பிக்கும் கிள்ளை! அள்ளூறிப் போகின்றேன் மக்களால் யானே அன்பின் வழியினர் அமிழ்திவர் தேனே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.17, 1977 133. எது கலை எண்சீர் விருத்தம் கலைஎனும் செந்தமிழ்ச்சொல் கலைஆ யிற்றாம் கலை தன்னைக் கலா என்றார் வடவர் பின்நாள்! கல்லைஎனல் நற்றிறத்தின் பயனாம், மற்றும் கலைஎன்று சொன்னாலும் அதேபொ ருள்தான். கல்விஎனல் அறிவாகும்; அறிவே கல்வி கலைஎன்றால் கல்வியல்ல; ஒருவற் குள்ள வெல்அறிவின் தனிஆற்ற லால்பி றக்கும் வியத்தகுமோர் பொதுச்செல்வம், இன்பப் பேறு! கலைதோன்றும் வகைதன்னை விளக்க மாகக் கழறுகின்றேன் கருத்தாகக் கேட்க வேண்டும் அலைதோன்றும்; ஆழ்புனலின் நெளிவி லெல்லாம் அசைகின்ற ஒளிதோன்றும் ஆங்கே வானில் விலையில்லா மாணிக்கப் பரிதி தோன்றும்; விழிகொண்டு பருகுகின்ற கவிஞன் நெஞ்சில் மலிமகிழ்ச்சி தோன்றும்; அம் மகிழ்ச்சி தன்னில் மாபடைப்புத் திறந்தோன்றும்! கவிஞன் ஆங்கே படைத்திட்டான் சிலசொல்லாற் கவிதை ஒன்று படித்திட்டோம் அதனைநாம்; அறைவீட் டுக்குள் கடல்கண்டோம், கதிர்கண்டோம்; அழகு கண்டோம். கசப்புலகை மறந்திட்டோம் அன்றோ? நம்மைக் கடிதுலகை மறக்கச்செய் ததுதான் யாது? flÈ‹gª jʼnnr®¤j bjJ?வையத்து நடைமுறையின் சொல்லல்ல; சொல்லு கின்ற நல்லாற்ற லின்வினைவு! கலைஅஃ தாகும். என்நண்பர் பகவதியாம் நடிகர் ஓர்நாள் எழிலுறும்நா டகஅரங்கை அடைந்தார் ஆங்கே என்நண்பர் அடையாளம் மறந்தே னில்லை இடர்சூழ்ந்தா னைநோக்கி அறம்வி ளக்கும் சொல்மழையைச் சினங்கூட்டி, மெய்ப்பா டேற்றித் தொடங்கினார்; விழிப்புற்ற ஏழைத் தோழன் தனைக்கண்டேன் பகவதியை மறந்தேன் என்னை மறக்கவைத்த தெது? அதுதான் கலையாம் அன்றோ! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.141, 1977 134. ஒழுக்கம் விழுப்பந்தரும் நன்றியறிதல்: என்றுமே ஒருவர் செய்த நன்றியை மறக்காதே இந்நாட்டின் பண் பாட்டைத் துறக்காதே! பொறையுடைமை: உன்னைப் பிறர் வைதாலும் உன் பொறுமை கெடவேண்டாம் உனக்கொரு தீங்கு செய்தால் விடவேண்டாம். இன்சொல்: தமிழ் மொழியைப் பழிப்பவனைத் தாக்காமல் விடாதே தனிமுறையில் கடுமொழியைத் தொடாதே! இன்னா செய்யாமை: தீயவர்க்கும் ஒரு தீங்கும் செய்யாமல் விலக்குவாய் தாய் நாட்டை வருத்துவோரைக் கலக்குவாய்! கல்வி: தமிழ்க்கல்வி கற்க வேண்டும் அமிழ்தாக நன்றன்றோ அயல் மொழியை ஆதரித்தல் தீ தன்றோ? ஒப்புரவு: நமக்கென்ன என்றிராதே நமில் ஒருவன் நைகையில் நறுக்கு வாய்பகைவர் தீங்கு செய்கையில். அறிவுடைமை: சாதியால் சமையங்களால் அறிவு தழைக்காது தமிழ் நூலில் மடமையே இருக்காது. மெய்ந்நெறி: ஆதியில் இருந்ததில்லை ஆரியப் பொய்ந்நெறி ஓதும் தமிழ் காட்டுவதே மெய்ந்நெறி! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.144, 1977; குயில் கிழமை இதழ், 16.6.1959 135. நிலையானது புகழ் ஒன்றே அகவல் கணக்கன் சொல்லோ வியமே கடவுள்! இன்றைக் கொன்று நாளைக் கொன்றென ஒருவன் குறித்ததை மற்றவன் ஒப்பான் ஆதலின் தெய்வம் நிலையிலது ஆகும். தேடத் தக்கது தெய்வமா? எண்ணுக! ஆயிரம் வேலி நன்செய் ஆயினும் தாயக ஏழைகள் தலைக்கொன் றாக அடைவர், அவையும் நிலையில வாகும் தேடத் தக்கது செழுநில மன்று! பணத்தாள் பத்துக் கோடி சேர்க்கலாம் கருவூலம் தங்கக் கட்டியை இழந்தால் பணத்தாள் குப்பை மேட்டுக்குப் பயன்படும் தேடத் தக்கது செல்வ மன்று! காதலி இருக்கும் மாளிகைக் கற்சுவர் காதலன் கால்வைத்து ஏறிக் குதிக்க வளைந்து கொடுத்த தொருநாள்! முதுமையில் அவளால் அண்டையில் அணைக்க வருங்கை. உலக்கை என்றே அவன்ஒதுங்குவான் பின்னாள்! இளமையில் இனித்ததே முதுமையில் கசந்தது தேடத் தகுந்தது சேயிழை இன்பமா? பொன்றாது நிற்பது புகழே, புகழே! அப்புகழ் வருவ தெப்படி என்னில் செப்புவேன் கேட்க, தாயகம் தீயரால் அடைந்த அடிமை நீக்க உடல்பொருள் ஆவி உதவிட வருமே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.155, 1977 136. கையேந்துவார் மகிழ்ச்சி கடவுள் மகிழ்ச்சி (பட்டணத்து முதலியார் கோயிலுக்குப் போகின்றார். அவரைப் பின்தொடர்ந்து பாற்குடங்கள், தேன் குடங்கள், பல சரக்குக் கூடைகள், பழத்தட்டு, தேங்காய்த் தட்டு, வெற்றிலைத் தட்டுப் பாக்குத் தட்டுகள் போகின்றன. கோயிலின் வாயிலில் வரிசையாகக் குந்திக்கிடக்கும் முடவர், குருடர், நோயாளிகள் ஆகிய பிச்சைக்காரர்கள் முதலியாரை நோக்கிக் கெஞ்சிக் கை யேந்துகிறார்கள். முதலியார் திரும்பியும் பார்க்காமல் போகும்போது பெரியார் ஒருவர் முதலியாரை நோக்கிக் கூறியது இது. ) கண்ணிகள் முறிந்த உள்ளங்கள்! ஏந்தும் கைகளைத் திரும்பிப் பாரப்பா - கெஞ்சுவதை விரும்பிக் கேளப்பா - அந்தக் கருங்கற் கோயில் கேட்டதா உனைக் காசு பணம் அப்பா - மனத்தின் மாசு தவிர் அப்பா! பசிக்குமா கல்லுக்கும் செம்புக்கும் பாலொடு பழமா? - கொடுக் காவிடில் அழுமா? - அவற்றைப் புசிக்குமா? பொன்னான மக்கள் புலம்புகின்றாரே - இங்குக் கண் கலங்கு கின்றாரே! நடமாடும் கோயில்கட்கே நாமொன்று தந்தால் - இரங்கி நலமொன்று புரிந்தால் - அதுதான் உடனே போய்ப் பரமனுக்கே உவப்பைச் செய்யுமப்பா - பெரியார் உரைத்ததும் தப்பா? பஞ்சமிலாக் கோயிலுக்குப் பஞ்சாமிர்தமா? - g டையல் அஞ்சாறு தரமா - இங்கே கெஞ்சுகின்ற தெய்வங்கட்குக் கிண்டலா - அப்பா? கெஞ்சுவதைக் கேட்பது கசப்பா? செல்வக் குழந்தை தாய்ப்பால் இன்றித் திடுக்கிடும் போதே - அப்பனே துடித்தழும் போதே - கோயிலின் கல்லின் தலையில் பாலூற்றினால் உலகம் ஒப்பாதே - திருந்திடு வாயோ இப்போதே! எங்கும் நிறைந்ததே கடவுள் எண்ணிப் பாரப்பா - பெரியாரும் சொன்னா ரப்பா - நீதான் இங்கி வர்க்கே ஒரு தருமம் பண்ணிப் பாரப்பா - பசி இவர் கண்ணில் பாரப்பா! எவ்வுயிரும் பராபரன் சந்நிதி அப்பா - பெரியார் சொன்னது தப்பா - அப்பனே அவ்வுயிர்தான் கல்லில் செம்பில் இருக்குமோ செப்பாய் - நெஞ்சை உருக்குமோ செப்பாய்! மெய்யறிவே கடவுள் என்று விளம்ப வில்லையா? - வள்ளுவர் விளக்க வில்லையா? - கருமான் செய்து வைத்த உருவங்கட்குச் செலவுத் தொல்லையா? - இதெல்லாம் கலகம் இல்லையா? - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.157, 1977; குயில், 9.8.1960 137. நம்பிக்கை வைத்தான் நம்பிக்கை வைத்தான் - அவள்மேல் நம்பிக்கை வைத்தான் கம்மாளன் திறம்என் றாலும் கற்பாவை அதுவென் றாலும் அம்மையே உன்னை அல்லால் அணுவும் அசையா தென்றே - நம்பிக்கை வைத்தான் ... கைகூப்பி நிற்பான் - அவன் கண்ணீர் உகுப்பான் கொய்தோடி மலர்கள் - அவள் கோயிலுக் களிப்பான். வையமெல்லாம் பார்க்க வாயார அவனை வாழ்த்த உய்விக்க வேண்டும் இன்றே உன்னடியே துணை என்றே. - நம்பிக்கை வைத்தான் ... நீஇருக்கையிலே என் தாய் எதற்கென்பான் - உன் கோயில் இருக்கையில் என் குடிசை ஏன் என்பான் கோயிலிற் போய்ப் படுத்தான் குடும்பத்தையும் விடுத்தான் ஆய பண்ணே படித்தான் அன்னையே துணை என்றே. - நம்பிக்கை வைத்தான் ... இரவினில் எழுந்தான் கோயில் எங்கும் திரிந்தான் கருவறை நுழைந்தான் - நகை கண்டே விழைந்தான் திருத்தாலி கழுத்தில் கண்டான் திருமணி முடியும் கண்டான் திருப்பதக்கம் புரளும் திருமார்பின் ஒளியும் கண்டான். - நம்பிக்கை வைத்தான் ... தன்- வேட்டியை அவிழ்த்தான் எதிர் போட்டு விரித்தான் பூட்டிய நகைகள் - கழற்றிப் போட்டுக் குவித்தான் காட்டுக் கேன் மலர் ஓடை? கல்லுக் கேன் பொன் னாடை? கேட்டுக் கொண்டே நொடிக்குள் கேளாத அவள் இடுப்பில் - நம்பிக்கை வைத்தான் ... நம்பிக்கை வைத்தார் என்று நம்பிக் கைவைத்தான் தம்பி கைவைத்தான் எனினும் தாய் கண்வைத்தாளா? கம்பிநீட் டினான் அன்றோ கைவைத்த இடம் ஒன்றோ? நம்பாதார் நம்பிக் கையில் நம்பிக்கை வைத்தல் நன்றோ? - நம்பிக்கை வைத்தான் ... - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.160, 1977; குயில், 7.10.1958 138. எவர்சில்வர் ஏனம் ஏனமெல்லாம் எவர்சில்வர் இருந்து விட்டால் அவர்செல்வர் ஏழைப் பெண்களும் வேண்டும் என்று சொல்வர் - கணவர் இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர். எவர்சில்வர் என்று கூவி இல்லாதவரிடம் உலாவித் தவறாமல் சொக்குப் பொடி தூவிக் - கேட்பான் தட்டைக் கொடுத்துப் பட்டுச் சேலையைப் பாவி. சரிகைச் சேலையைச் சுரண்டித் தரவருவான் சிறு கரண்டி அரசே அத் திருடர்களை அண்டி - நீ ஐந்தாறுநாள் சிறைக்குப் போகத் தண்டி. - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.163, 1977 139. ஏய்க்கின்றாரே அறிவு வளர வளரத் தருமம் அரோகரா - ஒழுக்கம் அரோகரா! பிறர்பொருளைப் பறிப்பதற்குப் பெருமாளுண்டு - பொருளைப் பின்னின்று பங்குபோடக் குருமார் உண்டு நிறுப்பதிலே அளப்பதிலே கடைக்காரர்கள் நினைத்தபடி ஊரை ஏய்க்க நெஞ்சம் உண்டு - அறிவு வளர வளர பாலென்றால் படிக்குப் பாதி நீர்தானுண்டு பாட்டென்றால் பிறர் எழுதிய படிதானுண்டு நூல் என்றால் தமிழிற்பிழை நூற்றுக் கைம்பதாம் நொடிக்குநொடி விலையேற்றம் நூற்றுக் கெண்பதாம் - அறிவு வளர வளர அரிசி என்றால் கல்லும் புழுவும் அளந்து கொடுப்பார் அவிந்த காயைக் கனிந்த வாழை என்று கொடுப்பார் வருந்துவரை படிக்குப்படி மண்ணு ருண்டைதான் மடிந்த வெல்லத்தின் இளகலின்பேர் மருந்து குழைக்கும் தேன். - அறிவு வளர வளர - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.164, 1977 140. சாவதற்கு மருந்து உண்டோ அகவல் அடிகளே என்று வணங்கினான் அரங்கன்! நெடுநாள் வாழ்க என்று நிமிர்த்தினேன் விரைவில் சாக வேண்டும் என்னைப் பெருநாள் வாழ வைப்பது சரியா? என்றான் - ஏனப்பா என்று கேட்டேன்! அரைப்படி அரிசி அரைரூ பாய்விலை, ஒருபடி உப்போ பதினெட்டுப் புதுக்காசு, தண்ணீர் இலவச மாயினும், மனிதன் உண்ணீர் அல்ல! வேட்டி ஒன்றை ஏழு ரூபாய் என்றான் வணிகன் ஏழு பணத்துக்குக் கேட்டேன், எனைஅவன் வண்டி கொண்டு வந்தாயா என்றான். ஆள்மேல் ஆளை அடுக்க இடமிலாத் - தேள்மேல் விழும்ஒரு சிறுகுடி சைக்கும் அறுபது ரூபாய் வாடகை ஆகுமாம் நகராட் சிவரி நாலு ரூபாயாம் ஐந்து கட்சிகளின் ஆண்டு விழாவுக்கு ஐந்தோ பத்தோ அதுவோர் இழவு! குழந்தை படிக்கக் கொடுக்கச் சொல்லி முழநீ ளத்தில் சுவடிமுன் வைப்பதும் நாரா யணகோ பாலம் நவில்வதும் இருக்கும் பிள்ளைகட்கு ஏதேனும் கேட்பதும் சுருண்டு படுப்பினும் தூங்க விடுமா? எதிர்பா ராமல் இலேசாய்த் திடீரென்று சாகும் வழியொன்று சாற்றுக என்றான். அப்பனே இங்குவா, இப்படி அமர்வாய் இருக்க வழிதான் இல்லையே தவிர இறக்க வழிகள் எத்தனை வேண்டும்? வான ஊர்தி வரும்அதில் ஏறு கானமோ கடலோ மலையோ எங்கோ துணிந்து விழுந்திடும்; தொல்லை இல்லைஉன் பிணமும் கிடைத்த தென்ற பேச்சே இல்லை - இதுவுனக்குப் பிடிக்கா விட்டால், அதோபார் சுங்கான் புகைவிட்டு அதிரத் தடதடா என்று சாவுக்கு வழிகாட்டி வந்ததே அதனை ஆங்கில வல்லவர் இண்டியன் ரெயில்வே இஞ்சின் என்பர் முப்பது மூடு பல்லக்கை அதுதான் இழுத்து வந்ததே! ஏறு! சாவு!! இதற்கேன் இத்தனை தொல்லை? ரூபாய் ஒன்று கொடு - உணவு விடுதி உள்போ உண்! நீ திரும்புவது உன்செய லல்ல! அதும ருத்துவ விடுதியார் அறக்கடன்! இறுதி விடைபெற்றுச் சென்றான் இறந்த செய்தி கிடைத்தது மறுநாளே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.165, 1977 141. நலம் தேடு நலம் தேடுவோம் உடலோம்புவோம் நரம்போடு தசைநாளும் வன்மை ஏறி நாம் வாழ - நலம் தேடு கலங்காத நெஞ்சமே பெற்றாலென்ன கற்றூண் நிகருடல் பெற வேண்டியே இலங்கு புனல்குளிர் தென்றலும் இல்லமும் அமைவுணவும் நிறைவு பெறுமாறே நாம். - நலம் தேடு - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.174, 1977 142. ஒற்றுமைப் பாட்டு (ஆனந்தக் களிப்பு மெட்டு) மக்கள் நலத்துக்கு மதமா? - அன்றி மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர்! - மக்கள் நலத்துக்கு திக்கெட்டும் உள்ளவர் யாரும் - ஒன்று சேராது செய்வதே மதமாகு மானால் பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் - அப் பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும். எக்கட்சி எம்மதத் தாரும் - இங் கெல்லாரும் உறவினர் என்றெண்ண வேண்டும். - மக்கள் நலத்துக்கு எல்லா மதங்களும் ஒன்றே - அவை எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே சொல்லால் முழங்குவது கண்டீர் - அவை துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ எல்லாரும் மக்களே யாவர் - இங் கெல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர் எல்லாரும் ஒரு தாயின் செல்வர் - இதை எண்ணாத மக்களை மாக்களென் போமே! - மக்கள் நலத்துக்கு வழிகாட்டும் மதமெலாம் இங்கே - நல் வழிகாட்டியான பின் வழிகாட்டிடாமல் பழிகூட்ட வைத்திருப் பீரோ? - நீர் பகைகூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ? பிழியாக் கரும்பினிற் சாற்றை - நீர் பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? - நல் அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை. - மக்கள் நலத்துக்கு - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.180, 1977; பாரதிதாசன் குயில், 10.5.1967 143. கருத்தடை மருத்துவமனையில் ஒருத்தியின் வேண்டுகோள் இருக்கும் பிள்ளைகள் எனக்குப் போதும் அம்மா - என் கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா, அம்மா! - இருக்கும் பிள்ளைகள் ... பெருத்தவரு மானம் எனக்கில்லை - இனிப் பிள்ளைபெறும் வலிவும் உடம்பில் இல்லை. வருத்தில் ஏதும் மீதம் ஆவதும் இல்லை - அடகு வைத்து வாங்க மூக்குத் திருகும் இல்லை. - இருக்கும் பிள்ளைகள் ... மக்கள் தொகைபெருத்தால் வரும் பஞ்சம் - இங்கு வரும் பஞ்சத்தால் ஒழுக்கக் கேடே மிஞ்சும் தக்கோர் இவ்வாறு சொன்னார்- என் நெஞ்சும் தாங்குவதோ அருள் புரிவீர் கொஞ்சம். - இருக்கும் பிள்ளைகள் ... தாய்மொழிமேல் அன்பிராது நாட்டில் தன்னலமாம் அவரவர்கோட் பாட்டில் தூய்மையே இராது நெஞ்ச வீட்டில் தொகைப் பெருக்கம் ஏன் இந்தக் கேட்டில்? - இருக்கும் பிள்ளைகள் ... தோன்றியுள்ள மக்கள்நலம் யாவும் - இங்குத் தோன்றாத மக்கள் தந்த தாகும்! தோன்றாமை இன்பம் என்று சொன்னார் - மிகத் தூயரான புத்தர் ஐயாவும். - இருக்கும் பிள்ளைகள் ... - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.152, 1977 144. பாரிசு விடுதலை விழா* அறுசீர் விருத்தம் வெண்ணிலா, முகிலி னின்று மீண்டது போலே மீண்டாய் எண்ணிலா மகிழ்ச்சி யூட்டும் எழில்பரீ நகரே நீதான்! கண்ணிலா இட்லர் நின்பால் கால்வைத்தான்! தோல்வி பெற்றான்! மண்ணுளார் துயரி னின்று மீண்டனர். மகிழ்ச்சி யுற்றார். 1 தனித்தாளும் ஆட்சி என்னும் தவிர்ப்பதற் கரிய நோயை இனித்தாளோம் எனக்கி டந்த வையத்துக் கிரத்தம் சிந்தி மனித்தரே ஆள்வ தென்ற மாண்புறு மருந்தின் நுட்பந் தனைக்காட்டிப், பிராஞ்சு நாடே சாற்றரும் பெருமை பெற்றாய். 2 பிறப்புரி மைகாண் பார்க்கும் விடுதலை எனப்பி ழிந்த நறுந்தேனை எங்கும், பெய்தாய்! நால்வகைச் சாதி யில்லை; தருக்குறும் மேல், கீழ் இல்லை சமம்யாரும் என்றாய்! வானில் அறைந்தனை முரசம் மக்கள் உடன்பிறப் பாளர் என்றே! 3 கல்வியைப் பொதுமை யாக்கிக், காட்டினாய் நல்வே டிக்கை! செல்வரின் இல்லத் துள்ளும் வறியரின் சிறுவீட் டுள்ளும் நல்லறி வென்னும் பெண்ணாள் மாறின்றி நண்ண லுற்றாள் வல்லிருள் புறங்காட் டிற்று வையகம் அறிந்த தன்றோ! 4 வையத்து மக்கள் உன்சீர் மறக்கிலார்! அவர்கள் நீண்ட கையெலாம் உன்னைக் காக்கக் கவிந்திடும் என்ற செய்தி, பொய்யெலாம் உருக்கொண் டுள்ள பகைவர்க்குப் புரிய வில்லை! மெய்! பாரிசு மீண்ட திந்நாள்! நாளைமீள் வாய்பி ரான்சே! 5 இலைமறை காயோ? இல்லை! இவ்வையம் அறியும்; போரின் கலைமுறை பிறழா வண்ணம் பகைவரைக் கலக்கும் வீரர் தலைமுறை யுடையாய்! மாண்பின் தக்காரைப் பெற்றுள் ளாய்நீ! நிலைகலங் காத்தெ கோல்சீர் நிகழ்த்தவோ பிராஞ்சு நாடே? 6 வழிஉண்டாம்; நண்பு கொள்ள நாடுகள் வந்து சேரும்; விழியுண்டாம்; வன்மை உண்டாம் மீட்போம்நாம் என்று போரின் தொழில்கண்ட தெகோல்இ ருந்தார் தூய்நாடே மீட்சி கண்டாய் பழிகாரர் பட்ட பாடு கொஞ்சமா ரஷிய ராலே? 7 தொல்லையை ஒருகை தாங்க மற்றோர்கை சுறுசு றுப்பால் வல்லபோர்க் கருவி செய்து வரும்பகை மறுத்து, நின்பால் நல்லுளம் காட்டும் இங்கி லாந்துக்கு நன்றி சொல்வோம் வெல்லும்ஆ யுதம்க டல்போல் அமெரிக்கா தருதல் வீணோ! 8 சீனத்தின் ஒத்து ழைப்பும் தெரிந்துள்ளோம், பிராஞ்சு நாடே மானத்தை உயிராய்க் கொண்ட நின்மக்கள், பகைவர் என்னும் கானத்து விலங்கி னத்தைக் கடிந்ததில் வியப்பும் உண்டோ! தேனொத்த தமிழ ரின்போர்ச் செயலையும் மறக்க வேண்டா!. 9 குடியேற்ற நாடு தோறும் நீவெற்றி கொள்ளத் தொண்டு முடியேற்றுச் செய்தார் உன்றன் முழுதன்பர் என்றால் இங்குக் கொடிதோறும் நோற்ற நல்லார் போன்வேனே சிறந்தார் என்போம் கொடியேற்றுப் பிரஞ்சு நாடே முழுவெற்றி கொண்டு வாழ்க! 10 - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.229, 1977 145. தொழில் விரலே நாணுதே அண்ணா என் வாழ்வும் விழலோ! உரமிழந்ததோ எனதொரு மார்பும்! ஓது நாட்டில் ஏது தொழிற் புலமை? தமிழர் நாட்டினில் பலபல பொருள்கள் சார்ந்திட்டதில் என்ன பயன்? சுமைகொள் தேவைகள் ஒரு நொடியில் பெறத் தோன்ற வேண்டும் நாட்டிலே தொழில் ... - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.173, 1977 146. மிடிமை தீரக் கடமை புரிவீர் எண்சீர் விருத்தம் காலை மலர்ந்தது செங்கதிர் எழுந்தான் கண்மலர் வீரே உலகில் மாந்தரே! வேலை தொடங்குவீர் மெய்யான வழியில் விருப்பமும் குறிப்பும் அறம்எனக் கொள்வீர் ஆலையிற் கரும்புபோல் வாடினர் பல்லோர் அவர்களை மீட்டல் அறத்தின் முதன்மையாம் சோலையில் குயில்கள் பாடி நலம்செயும் துளிரன்றி ஆயிரம் தேடுவ தில்லையே! மக்களை நடத்தும் சட்டமும் நடப்பும் மாய்த்திடும் பசிநோய் வளர்த்திடல் அறிந்தீர்! தக்கது நாடி ஒற்றுமை வலியினால் தகர்த்திட வேண்டிக் கொடுத்திடு வீர்கள் கொக்கும் இரைபெற இருந்திடும்; வந்தால் கொத்திடத் தயங்கிப் பசித்திடல் உண்டோ? கைக்குள் கொண்டுளீர் மீட்சி மருந்தினை கடமை புரிவீர் எழுக தொண்டரே. - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.183, 1977 147. மக்கள் நிகர் தொழிலெல்லாம் நின்று விட்டால் எழிலெல்லாம் பறிகொடுக்கும் இந்தவுலகம் தொழிலாளர் மகிழ மகிழப் பழியில்லை பகையில்லை இல்லை கலகம்! முதலாளி இருக்கு மட்டும் தொழிலாளிக் கேற்படுமோ முன்னேற்றமே? முதலெல்லாம் பொதுவானால் தொழிலாளிக் கேற்படுமோ ஏமாற்றமே! உண்டான தொழிலெல்லாம் கொண்டாளா ஆட்சியுமோர் ஆட்சி யாகுமா? பண்டான முதலெல்லாம் பற்றாத ஆட்சியிலே கலகம் போகுமா? எல்லாரும் தொழிலாளர் எல்லாரும் ஆளவந்தார் என்றாக்குவோம் பொல்லாதார் இல்லை! தமிழ் கல்லாதார் இல்லாநிலை உண்டாக்குவோம்! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.168, 1977; குயில், 9.6.1959 148. உழைப்பவரும் ஊராள்பவரும் மாடாய் உழைப்பார்க்கு வீடில்லை சோறில்லை நாடோறும் அங்கம் வளையல் - ஆண்டை மனைவி போடமட்டும் தங்க வளையல். பாடே படுவார்க்குக் காடோ கரிக்கலோ கண் மூடாமல் களம் காப்பே - ஆண்டை மனைவி போடமட்டும் பவுன் காப்பே. சாகுபடி தீர்ந்த தென்று போகும்படி யாட்களுக்கு நோகும்படி தொண்டைக் கம்மல் - ஆண்டை மனைவிக் காகமட்டும் கெம்புக் கம்மல். பாதிரத்தம் சுண்டுமட்டும் பாடுபட்டுச் சாடுமக்கள் மீதிவைக்க ஏது காசு - நல்லாண்டையரின் மோதிரமெல்லாம் நகாசு. தூசின்றி நெல்மணியைத் தூற்றித்தரும் தோழர்கட்குக் காசில்லை கட்டத் துணியில்லை - ஆண்டையார்க்கு வேசு கிட்டப்பா புகையிலை. கையலுத்துக் காலலுத்துக் காலமெல்லாம் உழைப்பவர் கண்டதில்லை ஒரு தானம் - ஆண்டைகள் வீட்டில் ஐயருக்கோ கோதானம். - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.169, 1977 149. புத்துணர்வு பெறுவீர் மேகம் பொழிவதற்குள் வியர்வை பொழிந்து, மண்ணை வெட்டி வரப்பெடுத்திரே நீரே தோழரே. காகமும் அஞ்சும் அதி காலைமுதல் முள்வேலி கட்டிக்காவலும் செய்திரே நீரே தோழரே. உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற உளைச் சேற்றையே உழுது பயிரும் இட்டிரே நீரே தோழரே. வெள்ளம் மறித்துக் களை போக்கிக் கொடு வெய்யில் மேனி இளைத்து நொந்திரே நீரே தோழரே. கண்மணிபோற் பயிரைக் காத்தும் தண்ணீர் இறைத்தும் கையறுவடை செய்திரே நீரே தோழரே. பெண்மணியுடன் ஆணும் ஆகக் களம் அடித்து நெல்மணியை எடுத்திரே நீரே தோழரே. இத்தனை பட்டும் ஊசி குத்த நிலமு மின்றிக் கொத்தடிமையும் பட்டிரே நீரே தோழரே. ஒத்து விவசாயிகள் உரிமையை நிலைநாட்டப் புத்துணர்வு பெறுவிரே நீரே தோழரே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, 171, 1977 150. சீனாக்காரன் தொலைந்தான் சீனாக்காரன் தானே வந்தான் போருக்கு - நம் சிறுத்தைக் கூட்டம் வேறே இங்கே யாருக்கு? போனால் கிடைக்கும் போரில் - அந்தச் சீனாக் காரன் ஈரல்! போர்க்களத்தில் சீனனுக்கா எக்காளம்? - உடன் புறப்படட்டும் அங்கே வேங்கைப் பட்டாளம்! பார்க்கட்டும் அக் கொதுகு - நன்றாய்ப் பழுக்கட்டும் அவன் முதுகு! சீனனுக்கே இங்கே என்ன வேலை? - நம் சிங்கப்படை கிழிக்கட்டும் அவன் தோலை தானே வந்தான் கொழுத்து - தன் தலை இழந்தான் கழுத்து! தேனாய்ப் பேசித் திடீரென்று பாய்ந்தான் - நம் ஆனைப்படை கண்டுமனம் ஓய்ந்தான் சீனா இனி இல்லை - இனிப் போன தவன் தொல்லை. நாடு பிடிக்கச் சீனாசெய்த வஞ்சகம் - மிக நன்றாகவே தெரிந்து கொண்டது வையகம் கோடு தாண்டப் பார்த்தான் - தன் கொடியை எரித்துத் தீர்த்தான். - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, 198, 1977 151. அழைப்பு கட்டாயம் வீட்டுக்கொரு சிங்கம் புறப்படட்டும் கொட்டடா வெற்றிமுர செங்கும் - அச்சமில்லாமல் இட்டான் எல்லையிற் காலைத் தொட்டான் துப்பாக்கிக் கோலைச் சுட்டான் சீனன்தன் னாலே கெட்டான் கெட்டான் என்று - கட்டாயம் வீட்டுக்கொரு நட்டாரைப் போலவேந டந்தான் - அதன்பிறகு நாட்டைப் பிடித்திடமு னைந்தான் - நாணயமின்றிப் பட்டாளம் சேர்த்திடமு னைந்தான் - நம் பாரதந்தன் பாட்டன் நிலமென்று பகர்ந்தான் - உணர்ந்தெழுந்து சுட்டுத் தொலைக்கத் திட்டம் போட்டோம் - அடுத்தபடி தொல்லுல காதரவைக் கேட்டோம் - கிடைத்தபின்பு மட்டிப்பய லைவிட மாட்டோம் - எனத்தெளிந்து வண்டியைத் திருப்பினான் இன்னமா நடமாட்டம்! - கட்டாயம் வீட்டுக்கொரு சொல்லாமல் எல்லைபுக லாமா - புகுந்தபின்பு சோதாவாய்ப் பின்வாங்க லாமா - பின்வாங்கியவன் எல்லையில் இடம்கேட்க லாமா - தராததாலே எத்துக்கள் செய்தால்விடு வோமா - இன்னமும் சீனன் பொல்லாங்கை விலைபேசு கின்றான் - எல்லைப்புறத்தில் போராயுதங்கள் குவிக்கின்றான் - உலகிலுள்ள எல்லாப் பழியும் சுமக்கின்றான் - இந்த நிலையில் இந்நாட்டைச் சுரண்டியே தின்னக் குதிக்கின்றான்! - கட்டாயம் வீட்டுக்கொரு காலத்தைக் கருதிட வேண்டும் - நமது மானம் கட்டாயம் காக்கப்பட வேண்டும் - கொடுஞ்சீனனின் மூலக்கருத்தை எண்ண வேண்டும் - இதேநொடியில் முன்னேறித் தாக்கிடுதல் வேண்டும் - விடாது மேலும் மேலும் நாயைத் துரத்திச் சென்று - சீனத்துக் கோட்டை மேலே நம்மறவர்கள் நின்று - நம் வெற்றிக்கொடி கோலம்பு ரியவைத்தல் நன்று - சூள் இதென்று கொன்றோம் சீனப்படையை வென்றோம் எனப்புகன்று. - கட்டாயம் வீட்டுக்கொரு - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.199, 1977 152. குடியரசில் இதுவோ கதி கூவாயோ கருங்குயிலே யாவரும் ஒன்றென்றே - கூவாயோ ஏவலர் இந்தியர்கள் இரண்டாம் தொகுதி என்றார் இக்குறை நீங்கிற்றென்றே இனிதாய் நன்றே - கூவாயோ குவலயத்தில் சமத்வநிலை காட்டவந்த பிரஞ்சுக் குடிஅரசின் நிழலில், இவனுயர்ந்தோன் இவன் தாழ்ந்தோன் என்றுரைத்தால் யார்சகிப்பார் அந்த அழலை? கவிந்திருக்கும் ஒரு குடைக்கீழ் உள்ளவரில் சிலர்க்குநிழல்; சிலர்க்கு வெயிலோ? குவிந்த பொருளோ விஷமோ சமமாக அடையாத தெவ்வகையிலோ? மேலவர் என்றோர் தொகுதி மீதிப்பெயர்க் கோர் தொகுதி! மேன்மைக் குடியரசில் இதுவோ கதி? - கூவாயோ - வேங்கையே எழுக, ப.57, 1978 (1931-இல் ழூல் பேரி (Jules Ferry) நூற்றாண்டு விழாவின்போது சிந்தாமணி நாடகத்தில் பிரெஞ்சுத் தேர்தலில் 3 இலக்கம் தமிழர் கீழோராகவும், பிரஞ்சினம் கலப்பினத்தை மேலினமாகவும் ஆக்கும் சட்டத்தைச் சாடிப் பாடியது. ) 153. இராசாசி வயிற்றெரிச்சல் உம் நாடகம் செல்லுமா நரியாரே? அகவல் சென்னை விலங்கு மருத்துவம் செய்முறைக் கல்லூரி யின்தமிழ்க் கழகந் தன்னைத் தொடக்கம் செய்த இராசாசி சொன்னார்: வெறுங் கூச்சலிடுவதால் சாதிவேர் அறாது பெரியார் தாமும், பெரியார் கொள்கைக் குரியார் தாமும், சாதிக் கொள்ளைநோய் ஒழிக்கும் பணியில் ஓய்விலா துழைப்பது வையம் அறியும்! மறுக்க ஒண்ணாது! வெறுங் கூச்ச லிடுவதாய் இராசாசி விளம்பினால் ஆரைப் பற்றி விளம்பிய தாகும்? வெல்லும் பெரியார் வெறும் பேச்சுக் காரரா? வீரத் தமிழர் வெறும்பேச்சுக் காரரா? முன்னாள் நீர்ஒரு முதல மைச்சராய் இருந்தீர் இந்தியைக் கொண்டு வந்தீர்! உமது வாலை ஒட்ட அறுத்தது பெரியார் வெறும் பேச் சுத்தானா? பேசுக. அமைச்சுக் கட்டிலும் அரோகரா ஆனதே, பெரியார் வெறும்பேச்சுக் காரரா? பேசுக! சாதி கனவிலும் தலைகாட் டாமல் காதிலும் சாதிக் கதைகே ளாமல் ஒழிக்கப் படுவதை உணர எண்ணினால் விழிக்குக் கறுப்புப் கண்ணாடி வேண்டாம் ஒருவர் மேல்அன் புவைத் தால்தான் ஒழியும் சாதி வெறுப்பால் ஒழியாது அடியோடு மரத்தை அகற்ற எண்ணுவோன் ஆணி வேர்மேல் அன்பு வைப்பானோ? வன்பு மிக்க சோறு விற்பான்மேல் அன்பு வைத்த பெரியார் அறிவுரை என்னா யிற்று? நன்று கருதுக! பார்ப்பான் என்ற பேர்ப்பல கைதான் போனதா புகலுக! இல்லையே! இல்லையே! ஆயிரம் தமிழர், அன்புப் போரில் புழுவாய்த் துடித்தனர், போனதா பலகை? எப்போது பலகை எடுக்கப் பட்டது? தப்பேது மின்றி எண்ணுக சற்றே! விரிவாய்ப் படித்ததாய் விளம்பி நிற்பீர், அரிய அலுவல் பார்த்ததாய்ப் பேசுவீர், ஆண்டில் முதுமை அடைந்தேன் என்பீர், மக்கள் நிகர் எனும் மிக்க சிறிய பாடமும் அறியாக் குள்ள நாடகம் செல்லு மோநரி யாரே? - வேங்கையே எழுக, ப.66, 1978 154. வலை விரித்தான் ஆச்சாரி போகாதே சாகாதே வலைவிரித்தான் பார்ப்பானடா மக்களெலாம் வருகஎன்பான் கலையழித்தான் கண்ணிவைத்தான் போகாதே - நாம் கண்டபயன் போதுமினிச் சாகாதே! நலிவுசெய்வான் பார்ப்பானடா நாலுசாதி வாழ்க என்பான் புலியடிப்பான் கறிக்காகப் போகாதே - நீ போனமட்டும் போதும் இனிச் சாகாதே! பள்ளிஇரு பத்தாயிரம் படிப்பவர்கள் படிக்காமல் கொள்ளி வைத்தான் ஆச்சாரிதான் போகாதே - அக் கொள்ளை நோய்க்கு மருந்துமில்லை சாகாதே! மதிதமிழர் ஒழியவேண்டும் மடப்பார்ப்பான் வாழவேண்டும் இதுதான் ஆச் சாரிஎண்ணம் போகாதே - நீ இதுவரைக்கும் பார்த்துவிட்டாய் சாகாதே! பன்னாடைக் கட்சிகளும் பழிவாங்கும் சின்னவரும் என்கூட்டம் என்றுரைப்பான் போகாதே - அவ் வெறிமூட்டும் கூட்டத்தினாற் சாகாதே! - வேங்கையே எழுக, ப.87, 1978; குயில், 16.2.1960 155. வறுமை ஒழிப்பு வீட்டுத் தெருக்கதவைச் சாத்தியவுடன் - வந்து வெளித்திண்ணை மேலுறங்கும் ஏழைமக்களும் மாட்டுத் தொழுவத்தினில் கொசுக்கடியில் - எரு மண்ணில் உறங்குகின்ற எண்ணற்றவரும், பாட்டை இருபுறத்தும் நாய் விலக்கியே - அங்குப் படுத்திரவைக் கழிக்கும் பாழ்மக்களும், கேட்கும் அறிவுமில்லை ஒண்டஇடந்தான் - எனில் கெட்டதென்ன உங்கள்வழி ஆளவந்திரே! போக்கு வரவகன்ற பொட்டல்களிலும் - புழு பூச்சி உலவுகின்ற சாலைகளிலும், சாக்கடை, கழிவன போக்கறையிலும் - பெற்ற தாய்மடியில் பிள்ளையழக் கல்லடுக்கியே ஆக்கி வடித்தெடுக்க அடுப்பெரிப்பார் - உண வருந்தி அவ்விடம் துயில் புரிந்திடுவார் நீக்கத் தெரிந்ததில்லை தங்கள் குறையை - எனில் நீங்கள் புரிந்ததென்ன ஆளவத்திரே? ஒண்ட இடம் இன்றி இவர் துன்பமுறுங்கால் - நீவிர் உற்றுதவி செய்வதன்றி என்ன செய்கின்றீர்? கொண்ட பணக் காரர்களின் குறைகேட்டே - அவர் கொள்ளை இன்னும் அடித்திட அழைத்தீரோ? எண்டிசையும் தாயகத்தில் ஏழைகளழும் - கண்ணீர் ஈட்டி ஒக்கும் என்னுமொழி கேட்டதில்லையோ? தொண்டு புரிந்தின் பமுற எண்ணமிருந்தால் - நீவிர் துன்பமுறும் ஏழையர்க்கும் தொண்டு செய்கவே! - வேங்கையே எழுக, ப.103, 1978; குயில், 1.2.1949 156. வீடுண்டு விளக்கில்லை விடுதலையால் பயனில்லை கல்வியின்றேல் எண்சீர் விருத்தம் வையப்போர் நடக்கையிலே ஒருநாள் காலை வடிவேலன் வீட்டுக்கு முத்தன் வந்தே, ஐயாஉம் இல்லத்தை நீரே ஆள்க அரசினர்க்குத் தேவையில்லை என்று சொன்னான். துய்யநடுப் பகல்தனிலும் முத்தன் வந்து சொன்னான் உம்மின்னியக்க வண்டி தன்னை மெய்யில்அர சினர் வேண்டாம் என்றார் என்றே விளக்குவைக்கும் வேளையிலும் மீண்டும் வந்தான். உம் வீட்டு நெல்லெல்லாம் உமக்கே ஆகும் ஒரு நெல்லும் அரசினர்க்கு வேண்டாம் என்றான் இம்மொழிகள் கேட்டவடி வேலன் ஐயா இல்லும்பெற் றேன் நெல்லும் பெற்றேன் எண்ணெய் இம்மியில்லை, விளக்கில்லை வெளிச்ச மில்லை; எனக்குரிமை இருந்துபயன் என்ன? என்றான், மெய்ம்மைஅது; வடிவேலன்நன்று சொன்னான் விடுதலையாற் பயனில்லை கல்வி இன்றேல்! - வேங்கையே எழுக, ப.104, 1978; குயில், 1. 7. 1948 157. சாதி உண்டு ஒட்டாரம் செய்வதென்ன தங்கச்சி - நீ உன் கணவன் வீட்டுக்குப் போ தங்கச்சி வட்டாரம் சிரிக்கும்படி தங்கச்சி - உனை வாழாவெட்டி என்று சொல்லும் தங்கச்சி. கட்டினான் தாலியடி அக்கச்சி - என் கைதொட்டதில் குறைச்சலில்லை அக்கச்சி தட்டினான்அவன் உறுதி அக்கச்சி - என்னைத் தாழ்ந்த சாதியென்று சொன்னான் அக்கச்சி! இழிந்த வேலை செய்திருக்கத் தங்கச்சி - நீ ஏற்றுக் கொண்டால் வாழமுடியும் தங்கச்சி ஒழிந்தநேரம் உனை அழைத்தால் தங்கச்சி - நீ ஒழித்துக் கொண்டால் வாழ முடியும் தங்கச்சி! தழைத்திருந்த தமிழ்நாட்டிலே அக்கச்சி - இந்தச் சாதி உண்டோ சொல்லேடி அக்கச்சி? வழங்கிவரும் ஆட்சியிலே அக்கச்சி - நான் வழக்குப்போடப் போகின்றேன் அக்கச்சி. என்ன சொல்லி வழக்கிடுவாய் தங்கச்சி? - சாதி இல்லை என்று வழக்கிடுவேன் அக்கச்சி தன்னரசு போனதடி தங்கச்சி! - நம் தலையரசும் போனதுண்டோ? அக்கச்சி. என்ன தீர்ப்பைக் கோருகின்றாய் தங்கச்சி? - சாதி இல்லை என்ற தீர்ப்பு வேண்டும் அக்கச்சி! உன்னரசின் தன்மையைக்கேள் தங்கச்சி - சாதி உண்டென்னும் சட்டமுண்டு தங்கச்சி! - வேங்கையே எழுக, ப.105, 1978 158. படித்தவன் அழுகை அகவல் உலகு தொடங்க உடன்தொடங் கியதாம் இலகு தமிழர் வாழ்வுதான் இந்நாள் ஆற்றல் இருந்தும் அறிவி ருந்தும் வேற்றுமைப் பெரும்புயற் காற்றிற் சிக்கிய சருகெனக் வாழ்வு சரிந்து கிடக்கும் பழுதினைச் சுவடியிற் படித்தவன் அழுத கண்ணீர் அருவியிற் பெரிதே. - வேங்கையே எழுக, ப.106, 1978; குயில், 21.6.1960 159. தீமை தீமை வேற்றுமைக்குக் காரணங்கள் நிறங்கள் தாமா? வேற்றுமைக்குக் காரணங்கள் மொழிகள் தாமா? வேற்றுமைக்குக் காரணங்கள் இனங்கள் தாமா? வேற்றுமைக்குக் காரணங்கள் இவைதாம் என்றால். போற்றுகிற மானுடமும் மனிதன் என்னும் பொருள் மொழிகள் பொருளற்றுப் போய்வி டாதா? வேற்றுமைக்குக் காரணங்கள் இரண்டே - ஒன்று வியப்பூட்டும் கல்வி; மற்றொன் றுபணம் என்பேன். கல்வியினால் மனிதரெலாம். நிறம்ம றப்பார்; கல்வியினால் மனிதரெலாம் மொழிம றப்பார்; கல்வியினால் மனிதரெலாம் இனம்து றப்பார் கல்வியினால் நாகரிக வளர்ச்சி யுண்டு கல்வியினால் பண்பாட்டின் வாழ்வும் உண்டு கல்வியினால் பணம்கூட கால்தூ சாகும். கல்வியினால் மனிதமனம் ஒருமை காணும் கல்வியதும் தாய்மொழியில் ஆழ்தல் ஒன்றே. தாய்மொழியைக் கல்லாத ஒருவன் வேறு தரைமொழிகள் கற்பதெல்லாம் வெறும்கூத் தாகும். தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற் றாகும் தாய்மொழியாம் தமிழ்மொழிவிட் டாள வந்தார் பாய்மரமே இல்லாத படகில், உள்ள பயன்படுநல் துடுப்பெறிந்து பயணம் செய்ய ஓய்வின்றி எல்லோரும் உகந்து செல்வோம் ஒப்புகநீர் பொதுப்படகு நமக்கென் கின்றார். இந்தியா ஒருநாடு நாமெல் லோரும் இந்தியர்கள் என்பதை ஒப்பா மக்கள் இந்திஎனும் தனிமொழிக்குப் பகைவர் அல்லர் இந்தியர்நாம் எனச்சுரண்டும் வடக்குத் தெற்கு விந்தியத்திற் கிருபாங்கும் நடக்கும் சூழ்ச்சி வேற்றுமைகள் வெறுக்கின்றோம்! ஒருமைப் பாட்டை; எந்தமிழர் போலெவர்தாம் உலகில் சொன்னார்? இந்திதிணிப் பிருதிசைக்கும் தீமை தீமை! செந்தமிழைப் பொதுமொழியாய் ஆக்கு தற்குச் சிந்தித்த துண்டாநீர் சீர்த மிழ்போல் எந்தமொழி எளிதிங்கு? வேர்ச்சொல் மிக்க எளியமொழி அரிய மொழி தமிழே ஆகும். தந்தடிமை யாய்நிற்கும் ஆள வந்த தமிழ்நாட்டுத் தலைவர்இதைத் துணிந்து சொல்லார்; எந்தவகை யேனும்தம் பதவி காக்கும் எண்ணத்தார்க் கேதறிவு? மொழியின் பற்று? முந்துவட வாரியத்தை முறித்த வர்யாம் மூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம்! இந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை, இந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை. அந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம் ஆளுவார் பக்கத்தில் இருப்ப துண்மை, வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம். விடுதலையால் கெடுதலையா தீமை தீமை! - வேங்கையே எழுக, ப.116, 1978; இனமுழக்கம், 5.7.1948 160. தொண்டர் படைப்பாட்டு வாரீர் தொண்டர் படைக்கெல்லோரும் - விரைந்து சேர வாரீர் தொண்டர் படைக்கெல்லோரும். பாரீர் நமது தமிழ்க் கன்னல் - உயிர்ப்பயிரை வேரோடு சாய்க்க வரும் இன்னல் - களைந்தெறிய - வா சீரோடி ருந்த தமிழ்நாடு - தந்தருளிய செம்மைப் புலவர் தந்த ஏடு - பலப்பலவும் பேரே இலாதொழித்த தோடு - நமதொழுக்கம் பேணா தகற்றிவிட்ட கேடு - பொறுத்ததனால் - வா பாரோர் புகழ்தமிழ்ப் பண்பாடு - தனையழிக்கப் பார்க்கும் பகையின் நரிக் காடு - தனை எதிர்க்க ஊரார் தம் வீட்டுக்கு வீடு - சிறுத்தை நிகர் ஒற்றைத் தமிழர்விழுக் காடு - வெயில் வந்து போராடுவோம் மகிழ்ந்து நேரோடியே விரைந்து. - வா - தமிழுக்கு அமுதென்று பேர், ப.25, 1978 161. அன்னை திருமுடி வாழ்க அறத்தை வடவன் செய்யும் படுகொலை - தெற்கில் அனைவர்க்கும் ஏற்பட்ட விடுதலை. திறத்தை உடையவன் அல்லன் வடக்கன் - தெற்கின் சிக்கலால் கொழுத்தான் அவ் விடக்கன். புறத்தைச் சாதிச் சேற்றினால் மூடித் - தமிழர் புலத்தைக் கெடுத்தானப் பேடி பறக்க வேண்டும் பார்ப்பனன் சூழ்ச்சி - கடிது படைக்க வேண்டும் தமிழர் ஆட்சி. அன்னை கண்ணீர் நம்மவர் உணர்ச்சி - நம்மில் ஆருக் கில்லை போர் முயற்சி? சின்னமனிதர் தமிழர்போல் நடிப்பினும் - பார்ப்புச் செம்பாம்பு கூடிக் கடிப்பினும் தென்னவன் ஒருவன் உள்ள வரைக்கும் - தோள்கள் தீய ஆட்சியை எரிக்கும்! மன்னி உயர்க அன்னை மணிக்கொடி - வாழிய வாழிய அன்னைத் திருமுடி! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.43, 1978; குயில், 6.10.1959 162. வெளியேறு அகவல் இன்று காணும் தென்பெ ருங்கடல் முன்னாள் முதற்றமிழ்க் கழகம் இருந்த குமரி நாடு! இன்னும் கூறுவேன்; இந்நாள் ஆரியர் இருக்கும் நாடு முன்னாள் தமிழ்கமழ் முல்லைக் காடு! தெலுங்கு கன்னடம் கேரளம் வங்கம் எனும்பெயர் உடையவை எல்லாம் தமிழகமே! கொடுங்கடல் கொண்ட குமரி தொடங்கி பனிவரை வரைக்கும் பரந்த தமிழகம் உமதெனில், நாட்டில் உமக்குள உரிமையும் உமக்குள பொறுப்பும் ஒருவர்க்கும் இல்லை. உணர்வினால் உம்மை நோக்குக! நீவிர் மாடோட்டி வந்த நாடோ டிகளா? ஒருகுடிக் குரிய வாழ்வின் உட்புகுந்து கலகம் விளைத்துப் பிழைக்கும் கயவரா? இல்லை, இல்லை இம்மியும் இல்லை! என்கீழ் தமிழகம் இருக்க வேண்டும் என்னும் கீழ்மகன் தன்னை, அவனின் காலடி நத்தும் கடைய னோடு வெளியேறு நாட்டை விட்டென்று பளீர்என்று சொல்லுவீர் பச்சைத் தமிழரே! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.45, 1978; குயில், 17.6.1958 163. குல்லாய் போட்டான் தில்லிக்காரன் கல்வி கற்றவரே - மிகுந்த செல்வம் பெற்றவரே - உமக் கெல்லா மிருந் தென்னபயன்? குல்லாய் போட்டான் தில்லிக்காரன். சமையத் தலைவரே - நல்ல தமிழப் புலவரே - ஊர்க் 1குமுக்குச் சொல்லித் தமுக்கடிப்பீர், அமுக்கிப் போட்டான் தில்லிக்காரன். ஆலைக் காரரே - பெரிய வேலைக் காரரே - நீங்கள் மேலிருக்கும் சோலி பெற்றீர் வாலறுத்தான் தில்லிக்காரன் அலுவல் காரரே - பண வலிவுக் காரரே - நீங்கள் மலிய உண்டு சலுகை என்றீர் தலைகவிழ்த்தான் தில்லிக்காரன் ஆள வந்தவரே - கை நீள வந்தவரே - நீங்கள் தூளாக்குவோம் பகையை என்றீர் ஆளாக்கினான் தில்லிக்காரன். நிலம் படைத்தோரே - உடல் நலம் படைத்தோரே - நல்ல 2குலம்புடைக்க வாழுமுங்கள் எலும்புடைத்தான் தில்லிக்காரன். 1ஊர்ப்படி யாரே - நல்ல தீர்ப்புடை யாரே - உங்கள் மேற்படிக்கும் வீம்படிக்கும் ஆப்படித்தான் தில்லிக்காரன். உடைமைக் காரரே - மக்கள் கடமைக் காரரே படைமலிந்த குடிகள் என்பீர் அடிமை என்றான் தில்லிக்காரன். - தமிழுக்கு அமுதென்று பேர் 1978; குயில், 5. 8. 1958 1. ஊர்ப்படியார் - ஊராரின் பிரதிநிதி 164. எல்லாம் ஆரியர் கரடிகள் பொன்னப்பன் சின்னப்பன் வினா விடை இந்திரனார் இயற்றியதோர் ஐந்திரத்தி லேயிருந்து செந்தமிழ் பிறந்ததென்றார் பொன்னப்பா - அது வந்தவரின் வாய்ப்பந்தலே சின்னப்பா. செந்தமிழும் வடமொழியால் வந்ததென்று சொல்லுகிறார் அந்தப் பேச்சில் மெய்யுண்டோ பொன்னப்பா? அது பொந்தில் நுழைந்த கரடியடா சின்னப்பா? ஆரியர்களின் நான்மறையே ஆதியிலே கடவுள் சொன்ன சீரியநூல் என்று சொன்னார் பொன்னப்பா - அது வாரிக் குவித்த குப்பைமேடு சின்னப்பா. ஆரியரும் தமிழரைப்போல் ஆதிமுதல் இங்கிருந்து காரியங்கள் பார்த்தாராம் பொன்னப்பா? - அவர் ஊர்திருட வந்தவரே சின்னப்பா பச்சென்று வாழ்ந்தவராம் பழநாட்டில் நாகரிகம் வைச்சவராம் ஆரியர்கள் பொன்னப்பா - ? அவர் பிச்சைக்காரப் பசங்களடா சின்னப்பா. கச்சைகட்டி ஆண்டவராம் கண்டநான்கு சாதியிலே உச்சிக்காரர் ஆரியராம் பொன்னப்பா? - அவர் குச்சிக்காரி மக்களடா சின்னப்பா. குவித்ததெல்லாம் அவர்பொருளாம் கொண்டதெல்லாம் அவர்புகழாம் கவித்ததெல்லாம் அவர்முடியாம் பொன்னப்பா? - அவர் அவிழ்த்த முடிச்சு நிலைத்தவரைக்கும் சின்னப்பா. அவிழ்த்துப்போட்டுத் தமிழ்விளக்கை ஆண்டிடுவார் தமிழகத்தை. எவர்க்கென்ன செய்யமுடியும் பொன்னப்பா? - நம்மால் கவிழ்த்துப்போட்டு மிதிக்க முடியும் சின்னப்பா. தமிழரெல்லாம் சூத்திரராம் தாம் எவர்க்கும் உயர்ந்த வராம் எமைஎதிர்க்க முடியாதாம் பொன்னப்பா? - கல் அமிபறக்கையில் உமிபறக்கும் சின்னப்பா. தமக்குள்ளே ஒற்றுமையாம் தமிழரிடம் அஃதிலையாம் எமைஅசைப்பார் யார்என்றார் பொன்னப்பா? - செந் தமிழில் தமிழர் ஒன்றுபட்டார் சின்னப்பா. அதுவடசொல் ஆதலினால் அஃதிருக்க வேண்டுமென்றார் மதிப்பதில்லை தமிழரையே பொன்னப்பா? - அவர் முதுகின்தோலில் ஊறல் உண்டு சின்னப்பா. மதத்தலைவர், உச்சிக்குடுமி, தமிழமைச்சன், தில்லிக்காரன் மதியில்லாத மடயர்சிலர் பொன்னப்பா? - அவர் குதிப்படங்கும் நேரம்வரும் சின்னப்பா. சிவம் காக்கும் தம்பிரான்கள் செந்தமிழை எதிர்க்கின்றார் அவர் எல்லாம் திருந்துவரோ பொன்னப்பா? - குட்டிச் சுவர்திருந்தப் போவதில்லை சின்னப்பா அவர்களில் ஒருதம்பிரான் அரைத்தமிழன் போலிருந்தான் அவன்செயலை நம்புவதோ பொன்னப்பா? - அட அவனின் நடை விலங்குநடை சின்னப்பா. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.116, 1978; குயில், 5.1. 1960; 165. முதலையோடு பார்ப்புகளும் வந்தனர் கெட்டது பிரஞ்சிந்தியா பிரஞ்சிந் தியாஎனும் பெயருள குளத்தில் இருந்த கொடிய முதலையை எடுத்து யூனியன் ஆற்றில் போட்டனர்! அவ்ஆறு தீதுறு முதலை போதா தென்று ஆயிரம் பார்ப்பொடு திரும்பிப் பாய்ந்து கெடுத்தது பள்ளக் குளத்தையே! - நாள் மலர்கள், ப.29, 1978 166. உருசியாவிலும் - இந்தியாவிலும் தாளரிய அரிவாளாம் அந்தஉருசி யாவில் தலையரியும் அரிவாளாம் இந்த இந்தி யாவில் - தாளரிய ஆளும் தொழி லாளி சுத்தி அங்கே இரும் படிக்கும்; நீளச் சுத்தி இங்கெல்லாம் பிறர் பெட்டியை உடைக்கும்! - தாளரிய அத்த னையும் பொது வுடைமை அங் கெல்லாம்! இங்கே? - ஏ ழைத் தொழிலாளிக்கு வரும் இரண்டில் ஒன்று பங்கே! - தாளரிய ஒருவன் மனைவி மற்ற வனை உவப்ப தங்கே தப்பே - பெருத் திருக்கும் தலைவன் மனையை இங்கே இருவர் உவத்தல் கற்பே! - தாளரிய ஆன மட்டும் அங் கெல்லாம் அறம் செயலே கருமம்! சீனாவுக்குக் காட்டி கொடுத்தல் இந்த நாட்டின் தருமம்! - தாளரிய அங்கெல்லாம் ஒருவன் தொண்டு மற்றவனின் பொருட்டே - கேள் இங்கெலாம் பொதுத் தெண்டோ இரும்பு, சிமிட்டி திருட்டே. - தாளரிய - நாள் மலர்கள், ப.42, 1978 167. அன்னை குழந்தைக்கு பெற்றத னாலே - கண்ணே உனைநான் பெற்றத னாலே எல்லாம் பெற்றேன் மண்மேலே பெற்றத னாலே - கண்ணே உனைநான் பெற்றத னாலே! மழலைமொழிக் கல்லூரி புல்லாங்குழற் கச்சேரி பழகப்ப ழக உடல் பூமாரி தேன்மாரி பெற்றத னாலே - கண்ணே உனைநான் பெற்றத னாலே! உன்தந்தை என்மீதில் வருத்தம்கொள்ளும் போதில் என்இடுப்பில் இருந்து தாவி எழச்செய்வாய் எமக்குக் காதல் பெற்றத னாலே - கண்ணே உனைநான் பெற்றத னாலே! காம்பேறும் கனியே - உமைக் காப்பாற்ற இனியே - எம் சோம்பேறி வாழ்க்கை போகும் தொட்டதெலாம் பொன்னாகும் பெற்றத னாலே - கண்ணே உனைநான் பெற்றத னாலே! தேனூறும் கழகம் உண்டு சீரடையும் உனைக் கொண்டு நீ நடத்தும் தமிழ்த் தொண்டு பெற்றத னாலே - கண்ணே உனைநான் பெற்றத னாலே! நான்பெற்ற ஆணி, முத்து நாட்டுக்கே மூலச் சொத்து மேன்மக்கள் சொல்ல வைத்து மிகமகிழ்வேன் அதை நினைத்து. பெற்றத னாலே - கண்ணே உனைநான் பெற்றத னாலே! (தோழர் பாலு - தோழியர் துளசியம்மாள் இவர்கட்குக் கடந்த (29. 04. 1960) அன்று பிறந்த பெண் மகவின் நினைவாக எழுதப்பட்ட பாடல்) - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.142, 1978; குயில், 10.5.1960; 168. கல்வி பயில் வெண்பா சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையிலொரு துட்டுக்கும் கண்ணயர்ந்து தூங்குதற்கும் - கட்டத் துணிக்கும் துடிக்கின்ற ஏழையை யும்நல்ல பணக்கார னாக்கும் படிப்பு. படிக்கையிலே தொல்லை இருக்கும் படித்து முடிக்கையிலே முற்றும் மகிழ்ச்சி - முடித்தபின் தொட்டதெலாம் வெற்றி! துயரின்றி வாழலாம் கட்டாயம் கல்வி பயில்! கல்லாத மூடனை வாஎன்பர் கற்றவனை எல்லோரும் வாருங்கள் என்றழைப்பார் - செல்வம் படிப்பானைச் சேரும். படியான்கூழ்ப் பானை அடிப்பானை யும்வெறும் பானை. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.99, 1978; குயில், 28.6.1960 169. நானடா இல்லை என்பேன் நானடா! - அத் தில்லை கண்டு தானடா! - இல்லை என்பேன். . . பல்லோர் பணம் பறித்துப் பாடுபடாதார்க் களிக்கும் கல்லில் செம்பில் தீட்சிதர்கள் சொல்லில் செயலில் உண்மைப் பொருள் - இல்லை என்பேன் ... இல்லை உருஅப் பொருளுக் கென்பதை மறப்ப தோடா? கல்லைச் செம்பைக் காட்டுதற்குக் கட்டணம் பறிப்ப தோடா? - இல்லை என்பேன் ... பல்லைக் காட்டும் ஏழைமுகம் பார்க்கவும் வெறுப்பதோடா! பால்பருகத் தீட்சிதர் ஊர்த் தாலியை அறுப்பதோடா? - இல்லை என்பேன் ... காட்டும்சிலை கடவுள்எனில் காசுவாங்கச் சொல்லுமோடா? கையுழைப் பிலாதவரின் பொய்நடத்தை செல்லுமோடா? - இல்லை என்பேன் ... தேட்டைக்காரர் சொற்கள் பண மூட்டைதன்னை வெல்லுமோடா? தீட்சிதராம் தேவர்களை வாந்திபேதி கொல்லுமோடா? - இல்லை என்பேன் ... தொத்துநோய் அகற்றும் வன்மை அச் சிலைக் கிருந்ததோடா? தோள்எடுத்த அரசினரின் சொல்லுக்கஞ்சி வாழுமோடா? பத்துநாள் விழா நிறுத்தச் செப்பினால் பொறுக்குமோடா? பட்டம்பகல் கொள்ளைக்கென்றே திட்டம் செய்த சிலையிலே உயிர் - இல்லை என்பேன் ... தட்டான் மணிக்கோவையும் ஓர் சாத்தானி பூமாலைகளும் சிட்டா நாதசுரங்களும் ஓர் சேணியன் பட்டுடை அழகும் கட்டான தோள் கன்னான் அன்று காய்ச்சி வார்த்த திறமையதும் எட்டாப் பொருள் என்றுரைக்கும் முட்டாள்தனம் தன்னில் உண்மை. - இல்லை என்பேன் ... - தேனருவி, ப.125, 1978; குயில், 1.12.1947 170. தீர்த்துக்கட்டு வறுமையில் செம்மை வாய்ப்பேச்சு வல்லவர் சுரண்டிடும் பிழைபேச்சு! பெருமையைப் பிடுங்கிடும் வறுமை, பெரும்பேர் ஆற்றலைக் கெடுத்திடும் சிறுமை! அருமை அருமை அதனுடன் வாழ்தல், ஆண்டவன் விதி எல்லாம் தாழ்தல்! தீமைக் கெல்லாம் தீமை வறுமை, தீர்த்துக் கட்டுவதே மக்கள் பெருமை; ஆமை எனவாழ்தல் வீணான குறுமை ஆக்குக தேக்குக பொருள் பொதுவுடைமை! உடையவன் இல்லான் என்பதை நீக்கி உழைப்பினை அனைவர்க்கும் பொதுமை யாக்கி உழைப்புக் கேற்ற ஊதியம் தேக்கி உலகம் நடத்துக ஓரர சாக்கி! - வறுமையில் செம்மை - தேனருவி, ப.132, 1978; பொதுநலம், 1. 2. 1954, 171. மக்கள் உணர்வு பெற வேண்டும் கலகத்துக்கெல்லாம் படிப்பாளிகள் காரணம் முதலாளி எவ்வாறு முளைத்துவந்தான் அண்ணே? முதலாளியைப் படிப்பாளி முளைக்கவைத்தான் தம்பி மதியாளி படிப்பாளி இரண்டுமொன்றா அண்ணே? மதியாளி பிறர்நலத்தை மதிப்பவனாம் தம்பி எதனாலே படிப்பாளி இகழ்ச்சியுற்றான் அண்ணே? இழிந்ததனை உயர்ந்ததென்றும் இயம்பிடுவான் தம்பி பதைபதைக்கும் கலகமெலாம் யாராலே அண்ணே? படிப்பாளி யால்வந்த பாழும்நிலை தம்பி. படிப்பாளர் என்பவர்யார் பகரவேண்டும் அண்ணே? படியாளும் அரசனொரு படிப்பாளி தம்பி. உடனிருக்கும் அமைச்சனொரு படிப்பாளி தம்பி, ஊர்ச்சட்டம் அமைப்பவனும் படிப்பாளி தம்பி, கடிதாகக் கருத்துரைப்போன் படிப்பாளி தம்பி, கைச்சரக்கே அறம்என்பான் படிப்பாளி தம்பி. படிப்பாளி படுத்தியுள்ள பாடென்ன அண்ணே? பாரிலுள்ள துன்பமெல்லாம் சட்டமென்றான் தம்பி. மக்கள் சமம் என்பதற்குச் சட்டமுண்டோ அண்ணே? மதமிருக்க வேண்டுமென்ற சட்டமுண்டு தம்பி. தக்கபடி வாழ்ந்திருக்கச் சட்டமுண்டோ அண்ணே? சண்டையிடும் சாதிவெறிச் சட்டமுண்டு தம்பி. ஒக்கஎலாம் வாழ்வதற்குச் சட்டமுண்டோ அண்ணே? ஓரினமே வாழ்வதற்குச் சட்டமுண்டு தம்பி. திக்கற்றார் காப்புக்குச் சட்டமுண்டோ அண்ணே? தீதற்றார் சாவுக்கே சட்டமுண்டு தம்பி. தன்நாட்டை அயல்நாட்டின் தாய்என்றா சொன்னான்? தன்நாடே பிறநாடாம்; சட்டமிதே என்றான். தன்மொழியை அயல்மொழியின் தாய்என்றா சொன்னான்? தன்மொழியை உலகமொழி; சட்டமிதே என்றான். தன் இனத்தைப் பிறர்பொருளால் காப்பதவன் கருத்தா? தன்நலத்துக் காகப்பிறர் சாகவேண்டும் என்றான். இன்னலெல்லாம் படிப்பாளி ஏற்பாடா அண்ணே? ஏழைகளை ஏய்ப்பவனே படிப்பாளி தம்பி. படிப்பாளிக் கெதிர்ப்பாளி இருப்பதுண்டோ அண்ணே? படிப்பாளி எதிர்ப்பாளி கொள்கைஒன்றே தம்பி. படிப்பாளி உழைப்பாளிக் கெதிரிஅன்றோ அண்ணே? படிப்பாளிக் கெதிர்ப்பாளி அப்பன்தான் தம்பி. அடிப்பாளி படிப்பாளி கட்சியுண்டோ அண்ணே? அவற்றோடும் ஆச்சாரி கட்சிஒன்று தம்பி. படிப்பாளி கொட்டமெலாம் பறப்பதுண்டோ அண்ணே? பறக்கடிக்க மக்களெலாம் உணர்ச்சிபெற வேண்டும். - தேனருவி, ப.134, 1978; குயில், 22.9.1959; 172. பசுத்தோல் போர்த்த புலி கடின உழைப்புத் தொழிலாளி கடைவிரித்தான் முதலாளி, மடையன் என்று உனைநினைப்பான் நிற்காதே - உன் மாண்புழைப்பை அவனிடத்தில் விற்காதே! ஒன்றிரண்டு உதவி செய்வான் உடலுழைப்பை உறிஞ்சிடுவான் கொன்றழித்துத் தான்கொழுப்பான் போகாதே - பொருள் கொலைகாரத் தொழிற்சூளையில் வேகாதே! எண்ணங்கெட்ட பொருளாளி இழிவுக்கெல்லாம் முதலாளி தொண்டுறிஞ்சும் புல்லுருவி வெம்பாதே! - பசுத் தோலைப் போர்த்த புலியவனே நம்பாதே! - தேனருவி, ப.143, 1978; தொண்டு, 14.1.1957 173. கட்டாயக் கல்வி கண்திறக் காதபோது விடுதலை வாழ்வின் கதவு திறந்தால் பயன் ஏது? எண்ணும் எழுத்துமிரு கண்எனத் தெரிந்தும் இன்தமிழ்க் கட்டாயக் கல்வியால் மக்களின் - கண் திறக்காத போது ... மண்ணுளார்க் கெல்லாம் அழியாத செல்வம் மன்னிய கல்வியே ஆகும் - நம் வண்டமிழ் நாட்டில் கட்டாயக் கல்வி இல்லையேல் உள்ளதும் போகும். புண்ணே கல்லார் கண்எனத் தெரிந்தும் புகல்தமிழ்க் கட்டாயக் கல்வியால் மக்களின் - கண் திறக்காத போது ... மதம்எனும் முள்ளுப்புதர் அடர்ந்திருக்கும் வழிக்கெல்லாம் கல்வியே விளக்கம் - இங்கு மண்டிடும் சாதிச் சண்டைக்குக் காரணம் மனஇருளால் வரும் சுளுக்காம். எதற்கும் கல்வியே வேர்எனத் தெரிந்தும் இன்தமிழ்க் கட்டாயக் கல்வியால் மக்களின் - கண் திறக்காத போது ... - தேனருவி, ப.143, 1978; குயில், 1. 4. 1948 174. கிழிந்த விண்ணப்பம் அறுசீர் விருத்தம் அவன்கட்சி தோற்பதற்கும் என்கட்சி வெல்வதற்கும் அரசே! நீவீர் தவணையின்றித் தமிழர்க்கு நன்மைஎலாம் செய்கஎன்று தமிழன் கேட்டான். எவன்கட்சி தோற்றாலும் எவன்கட்சி வென்றாலும் கவலை இல்லை! நவில் பார்ப்பார் நன்மைகெடக் கூடாதென் றேஅரசன் நாட்ட லானான். அவன்வென்றால் தமிழர்க்கும் அரசர்க்கும் தீமையே ஆகும்! முன்னர் அவன்ஆண்டான் தமிழரெலாம் அல்லலுற்றார் ஆதலினால் வெறுத்தொ ழித்தார். அவன்வென்றால் தமிழ்சாகும் தமிழரெங்கே? எனத்தமிழன் அழுதல் கேட்டே அவன் என்றால் யார்என்று மன்னர்கேட் கத்தமிழன் அறிவிக் கின்றான்; ஆச்சாரி தான்கெட்ட ஆச்சாரி தான்தமிழர் அழிவை நாடும் ஆச்சாரி தான்எனவே ஆச்சாரி மேற்பழியை அடுக்க லானான். ஆச்சாரி ஆச்சாரி யேஅவர்மேல் அடைமொழிக்குப் பொருளே இல்லை. ஆச்சாரி வெற்றிஎன் வெற்றிஎன் றார்பூணூல் அரசர் தாமே. - நாள் மலர்கள், ப.60, 1978; குயில், 3. 1. 1961 175. கெட்ட மாணவரிடம் ஒற்றுமையா? ஆரிய ஆசான் பேரைச் சொல்லி அழைக்க அதற்குத் தமிழ்மா ணாக்கன் உள்ளேன் ஐயா என்றே உரைத்தான் அப்படிச் சொல்லல் தப்படா என்ற இழிஞனை எதிர்த்த துண்டா மாணவன்? தாயாம் தமிழில் கையெழுத் திடும்படி சேயாம் மாணவன் தெரிவித்த போது வடமொழி யிற்றான் கையெழுத்து வைப்பேன் என்று பலபடி இழித்துப் பேசிய மாபாவி தன்னை அந்த மாணவன் எதிர்த்த துண்டா? இல்லவே இல்லை. எதுதான் வடசொல்? எதுதான் தமிழ்ச்சொல்? என்று வினாவிய எளியமா ணவனை எதிர்த்த இழிஞனை அந்த மாணவன் எதிர்த்த துண்டோ? இல்லவே இல்லை! வடமொழி உயர்ந்தது தமிழ்மொழி தாழ்ந்ததே என்ற பள்ளி ஆசிரி யன்தனை எந்த மாணவன் எதிர்த்தான் இதுவரை? வடசொலி னின்றே தமிழ்ச்சொல் வந்ததாம் என்ற மடையனை எந்த மாணவன் எதிர்த்தான் இதுவரை? இல்லவே இல்லை! தம்மி னத்தைத் தம்தாய் மொழியை தாக்கினோ னுக்கும் அவனைத் தாங்கிய தலைமை ஆசான் தனக்கும் அஞ்சும் மாணவர் எல்லாம் மான மிழந்தவர்! ஆனால் அந்த மாணவர் இந்நாள் ஒற்றுமை பெறுவதை ஊக்க வேண்டும்! பச்சை யப்பன் பள்ளி மாணவர் ஒன்றுபட்டுக் கேட்ட வசதியை இன்றே செய்து தருவது சிறந்ததே! - நாள் மலர்கள், ப.58, 1978; குயில் கிழமை இதழ், 27.12.1960 176. காதலர்க்கு நான் காதலர்க்கு நான் வேம்பானேன் காண அஞ்சுமோர் பாம்பானேன் - நான் தீது சிறிதும் செய்தறியேன் - இன்று தீராப் பழியை நான்சுமந்தேன். அன்பு வாழ்வை மறந்தாரே அறத்தின் மேன்மை இகழ்ந்தாரே - இந்தத் துன்ப வாழ்க்கை எனக்கேனோ? - என் துணைவரை இனி அடைவேனோ? ஒட்டிக் கிடந்த இரண்டுள் ளத்தை வெட்டிப் பிரிக்கவும் செய்தாரே - நல்ல கட்டிக் கரும்பைக் கசந்தாரே - என்னைக் கைவிட்டுப் போகவும் இசைந்தாரே. - தேனருவி, ப.49, 1956 177. பெண்டாட்டி நான் பெற்ற மகனுக்குப் பெண்டாட்டி நான் - என்றும் அத்தை கருதவே இல்லை - அன்றோ ஆதலினால் இந்தத் தொல்லை. குற்றம் ஒன்றுமே செய்யாத போதும் கூந்தலைப் பற்றி இழுத்தார், - அத்தை குப்புறத் தள்ளி மிதித்தார். அத்தையின் தொல்லை நான்பொறுத் தாலும் அவரும் பொறுக்கவா முடியும்? - அதை எண்ணினால் என்நெஞ்சம் ஒடியும். முத்தம் கொடுக்க அத்தான்எனைத் தாவும் முகத்திற் புண்கண்டு துடிக்கும், - அத்தை அடித்தார் என்றால் என்ன நடக்கும்? - தேனருவி, ப.50, 1956 178. பெண்கள் காமம் கழிக்கும் கலயமா? பெண்கள் பற்றி நீபேசும் பேச்செல்லாம் முடை வீசும் எண்ணங் கெட்ட உருசியனே ஏதுங் கெட்ட உருசியனே - பெண்கள் பற்றி காமம் கழிக்கும் கலயம் என்றாய் காதற் பெண்கள்! நிலை மறந்தாய்! தாய்மை என்னும் பண்பு கொன்றாய்! தலை கொழுத்தே கெடுகின்றாய்! - பெண்கள் பற்றி ஒருவனுக் கொருத்தி வேண்டும்; ஒருத்திக் கொருவன் வேண்டும், இருவர்தாமும் ஒன்று பட்டே இன்பத்தை அடைய வேண்டும் - பெண்கள் பற்றி ஆடவன் தனிஇருத்தல்; அது,தான் தனைவருத்தல்! பேடை அன்னம் இணைபிரிதல் பெற்றஉயிர் பிரிதல் அன்றோ - பெண்கள் பற்றி மணவாழ்க்கை வேண்டாம் என்றாய் மாட்டு வாழ்க்கை வேண்டும் என்றாய் கணந்தோறும் இருட்ட றைக்குக் கட்டுச் சோறு கட்டுகின்றாய் - பெண்கள் பற்றி - நாள் மலர்கள், ப.43, 1978; குயில், 15.3.1960 179. முதலாளி முதலாளி, முதலாளி, முதலாளி! முட்டை போலத் தலையுமக்குச் சிறுத்தி ருப்பதேன்? மூட்டைபோல வயிறுமட்டும் பெருத்தி ருப்பதேன்? குட்டைக் கைகள், குட்டைக் கால்கள் குறுகி இருப்பதேன்? குறுகி யிருப்பதேன்? முதலாளி, முதலாளி, முதலாளி! கண்கள் இரண்டும் தீப்பிழம்பாய்ச் சிவந்திருப்பதேன்! களிப்பிலாது கடுகடுப்பு பரந்திருப்பதேன்? திண்டிரண்டு பக்கத்திலே திரண்டிருப்பதேன்? திருட்டுக்கணக்குப் புத்தகங்கள் தெய்வத்தின் பின்ஏன்? முதலாளி, முதலாளி, முதலாளி! கழுத்துமுதல் கால்வரை கதராடைஏன்? கட்டிய மனைவி பிள்ளைகட்குப் பட்டாடைகள்ஏன்? கொழுத்த ஆட்டுக் கிடாவைப்போல் கூத்தியாரும்ஏன்? குளிர்அறைவிட் டகலாமல் குடியிருப்பதேன்? முதலாளி, முதலாளி, முதலாளி! உடலுழைப்பு என்பதையே அறியாததும் ஏன்? உலகறிவைப் பெறுவதிலே நாட்டமில்லையேன்? கடலில் செல்லும் கப்பலைப் போல் நெய்வண்டி ஏன்? கள்ளச் சந்தை கணக்கனைத்தும் அதில் சுமத்தல் ஏன்? முதலாளி, முதலாளி, முதலாளி! ஆளும் கட்சி எதுவந்தாலும் அதில்இணைவதேன்? ஆளும் மன்ற மேலவையில் இடம்பெறுவதேன்? மாளுகின்ற தொழிலாளியைக் காண மறுப்பதேன்? வள்ளலாரை வள்ளுவரை வாழ்த்தும் விழா ஏன்? - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.75, 1978 180. தொழிலாளி தொழிலாளி, தொழிலாளி, தொழிலாளி! தூங்கிஎழுந்த இரவுவரை வேலைசெய்வதேன்? துன்பமெலாம் தனியுடைமை யாகக் கொண்டதேன்? மூங்கைபோல நீஉழைத்து முணுமுணுப்பதேன்? முப்போதும்நீ முதலாளிக்கே அடிமை ஆவதேன்? தொழிலாளி, தொழிலாளி, தொழிலாளி! தோள்உழைப்பில் நாடோறும்நீ செல்வம் சேர்ப்பினும் சுரண்டப்பட்டுச் சாகின்றாய் சோறில்லையே ஏன்? மாள்வதற்கா செல்வர்களின் ஆலை சாலையில் மார்ஒடிய தொல்லையுற்றுப் பாடுபடல் ஏன்? தொழிலாளி, தொழிலாளி, தொழிலாளி! துணியுமில்லை இடமுமில்லை அதன் காரணங்கள் ஏன்? தோன்றவில்லை துலங்கவில்லை சோர்வடைவதேன்? மணிமணியாய் நெல்விளைத்தாய் மகிழ்ச்சி இல்லைஏன்? மற்றவர்க்கு மாடாய்உழைத்து மாளுவது ஏன்? தொழிலாளி, தொழிலாளி, தொழிலாளி! புத்துணர்வு பெறுவதெந்நாள்? புரட்சிக்குயிர் தருவதெந்நாள்? புயலாக எழுவதெந்நாள்? புரட்டுலகைத் தீர்ப்பதெந்நாள்? புத்துலகுப் பொதுவுடைமை புதுக்கும் நாள்எந்நாள்? புரட்டுமுத லாளியத்தைப் போக்கிடும்நாள் எந்நாளோ? - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.76, 1978 181. தொழிலே எழில் அகவல் தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ எழிலை உலகம் தழுவும் வண்ணம் ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத் தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ! இந்தவான், மண்,கனல், எரி,வளி தோன்றா அந்தநாள் எழுந்தஓர் அசைவினால் வானொடு வெண்ணி லாவும், விரிகதிர் தானும், எண்ணிலா தனவும் எழுந்தன வாகும். அணுத்தொறும் இயங்கும்அவ் வசைவியக் கத்தைத் துணிப்பிலா இயற்கையின் தொழிலெனச் சொல்வர். அழியா தியங்கும் அவ்வசைவே மக்களின் தொழிலுக்கு வேரெனச் சொல்லினும் பொருந்தும் ஆயினும் உன்னினும் அதுசிறந்த தன்று தாயினும் வேண்டுவது தந்திடுந் தொழிலே! மக்களின் தேவை வளர்ந்திடும் அளவுக்குத் தக்க வாறு தளிர்த்திடு கின்ற அறிவிலே தோன்றுவை; அறத்தோள் தழுவுவை; மறுவிலாக் கருவியில் வாய்விட்டுச் சிரிப்பை; பொருள்பல நல்கிஅப் பொருள்தொறும் கலைத்திறம் அருள்புரிந்து குறைபா டகற்றுவை தொழிலே! பசித்தவன் புசித்திடப் பறப்பது போன்றஓர் அசைப்பிலா ஆவலும் அசைப்பிலா ஊக்கமும் அடைந்தோர் உனைத்தம் ஆயிரம், ஆயிரம் தடந்தோள் தழுவியே கடந்தனர் வறுமை! தொழிலே காதுகொடு! சொல்வேன்! எங்கள் அதிர்தோள், உன்றன் அழகிய மேனி முழுதும் தழுவ முனைந்தனர் பார்நீ! அழகிய நாட்டில் அந்நாள் இலாத சாதியும் மதமும் தடைசெய்யும் வலியிலே மோதுதோள் அனைத்தும் மொய்த்தன ஒன்றாய்க் கெண்டை விழியாற் கண்டுகொள் தொழிலே வாராய் எம்மிடை வாராய் உயிரே வாராய் உணர்வே வாராய் திறலே! அலுப்பிலோம் இருப்புக் கலப்பை துடைத்தோம் மலையெனச் செந்நெல் வழங்க தோளில்வா! கரும்பா லைக்குக் கண்ணெலாம் நெய்யிட் டிரும்பா லைக்கு வரும்பழு தகற்றினோம். பண்டம்இந் நாட்டிற் பல்க மகிழ்ந்துவா! சூட்டி ரும்பும் துளியும் போலஎம் தோட்கூட் டத்தில் தொழிலுன் வல்லமை சேர்வது நாங்கள் விடுதலை சேர்வதாம்! யாமும் நீயும் இரண்டறக் கலப்பின் தூய்மை மிக்க தொழிலாளி கள்யாம்; சுப்பல் முடைவோம் கப்பல் கட்டுவோம் பூநாறு தித்திப்புத் தேனாறு சேர்ப்போம் வானூர் தியாலிவ் வையம் ஆள்வோம்! ஐயப் படாதே! அறிவு புகட்டும் வையநூல் பலஎம் மனத்தில் அடுக்கினோம்! மாசு தவிர்த்தோம்! மாசிலா மணியே பேசு! நெருங்கு! பிணைதோ ளொடுதோள்; இன்பம்! இன்பம்!! இதோபார் கிடந்த துன்பம் தொலைந்தது! தொலைந்தது மிடிமை! வாழிய தொழிலே, செந்தமிழ் வாழிய! வாழிய வண்டமிழ் நாடே! - நாள் மலர்கள், ப.93, 1978; முல்லை, 12.2.1946 182. பொதுவுடைமைக்கு நான் பகைவன்? பொதுவுடை மைக்குப் பகைவ னா?நான் பொதுவுடைமைக் காரர் எனக்குப் பகைவரா? இல்லவே இல்லை; இரண்டும் சரியில்லை. பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத்தீ என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து கொழுந்துவிட் டெரிந்து தொழிலாள ரிடத்தும் உழைப்பாள ரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில் மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரே? சிங்கார வேலர்முதல் சீவா வரையில் அங்காங் திடுவர்என் பாட்டி னுக்கே. சுப்பை யாவின் தொடர்பும் தோழமையும் எ. ஆர். சுப்பிர மணியம் இணைப்பும் பிணைப்பும் எப்பொழு தும்எனை லெனினால் டாலினால் புதுமை கொணர்ந்த பொதுமை நாட்டை மதுத்தமி ழாலே மடுக்கும்என் பாட்டு. இதுஅறிவெனத் தெரிந்த நாள்முதல் புதுவையில் சுதந்தரம் சமத்துவம் சகோத ரத்துவம் மூன்றும் என்னுயிர் உணர்வில் ஊறியவை. என்பாட் டாலே வளர்ந்த இயக்கம் தன்பாட் டுக்குத் தப்புத் தாளம் பின்பாட்டுப் பாடும் பிழைப்புக் கெல்லாம் என்னைவிற் காததால் ஏதும் அறியாத கொன்னைப் பயல்களைக் கொண்டேசு கின்றனர். இவர்கள் யாரென எனக்குத் தெரியும். புரட்சியின் பேரால் புரட்டுசெய் பவர்கள், தொழிற்சங் கத்தால் தோழர்கள் உழைப்பை வழிப்பறி செய்யும் வலஇட சாரிகள். தாய்மொழிப் பற்றும் தன்இனப் பற்றும் தாய்நாட்டுப் பற்றும் சற்றும் இலாதவர், முடிந்த வரைக்கும் முந்நூல் கொள்கையில் அடிதொழு திருக்கும் அடிமைகள்; மார்ச்சுலெனின் நூல்களை எல்லாம் நுனிப்புல் மேய்ந்து கால்படித் தமிழால் மேற்படி யாரின் விளக்கெண்ணெய் மொழியால் விளங்காது செய்பவர். உருசியன் ஒதுக்கும் ஒருகோடிப் பணத்தையும் வரிசையாய்ப் பகுத்து வாழ்வு நடத்திடும் பொறுக்கி களாகப் போனதி னாலே குறிக்கோள் உயர்ந்த பொதுமைக் கொள்கை வெறிச்சென்று போனது; வெற்றியில் தாழ்ந்தது, பாட்டா ளிகளின் கூட்டம் குறைந்தது, மூட்டிய போர்க்குணம் முடம்கொண் டழிந்தது. கண்டிதனைக் கழறுவ தாலே அறிவிலா முண்டங் கள்எனை முழுக்க முழுக்கப் பொதுவுடைமைக் கெதிரி என்று முழக்குவர். உண்மையைப் பற்றி ஒருவன் உரத்துப் பேசும் போதும் எழுதும் போதும் பொறுப்பு ணர்ச்சி வெறுப்பு ணர்ச்சியைக் காட்டுவது தானே கடமை; இல்லையேல் நாட்டில் விளைவது நலிவும் கேடுமே! நக்கிப் பொறுக்கிகள் நன்றி மறப்பதில் அக்கறை கொள்ளாது அன்புடை உலகே! - நாள் மலர்கள், ப.65, 1978; புரட்சி, 1. 1. 1963 183. தமிழர்க்கே சலுகை வேண்டும் தமிழர்க்கே சலுகை காட்ட வேண்டும் தமிழகத்தினரைப் படங்களில் நடிப்ப தற்குத் - தமிழர்க்கே சலுகை தமிழ்த் திரைப்படம் உடையவர் யாரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் யாரும் தமிழர்க்கே சலுகை காட்ட மறுத்தால் தவிர்க்க முடியாதவை மறியலும் போரும்! - தமிழர்க்கே சலுகை கன்னட நடிகரைக் கன்னட நாடு கட்டிக் காக்கட்டும். இது தமிழ் நாடு பொன்னான தமிழ் நடிகரை இகழ்ந்தால் போர்! போர்! இதே எங்கள் ஏற்பாடு! - தமிழர்க்கே சலுகை தமிழ்நடிகையர் குச்சுக் காரித்தனம் காட்டுவ தில்லை அதுமட்டும் மெய்தான். உமிஇல்லை என்பதால் அரிசியை இகழ்வதா? உறங்கினோம் நேற்றுவரை என்பது மெய்தான். - தமிழர்க்கே சலுகை விழிப்புற்றது தமிழகம் தமிழர்க்குச் சலுகை வேண்டும் இதனை மறவாமை வேண்டும் பழிப்புற நடக்க வேண்டாம் நடந்தால் பார்க்கத்தான் நேரும் அயலாரை ஒருகை! - தமிழர்க்கே சலுகை - தமிழுக்கு அமுதென்று பேர், ப.105, 1978; குயில், 16.6.1962 184. சீனாவை எதிர்ப்பது தமிழர் கடன் எண்சீர் விருத்தம் அடிவைத்த இடத்தினிலே சீனர் தம்மை அடித்துவிரட் டுதல்வேண்டும்! விடக்கூ டாது! படிவைத்த புகழுடைய தமிழ்ப்பண் பாட்டைப் பண்டுமுதல் எதிர்ப்பதுசீ னர்பண் பாடு! வெடிவைப்பான் தமிழர்பண் பாட்டி னுக்கே மேலும்அவன் பொதுவுடைமைக் காரன் அன்றோ! குடிவைத்த வீட்டுக்கே தீயை வைக்கும் கொள்கையினோன் பொதுவுடைமைக் கார னாவான். 1 நன்றியிலான் பொதுவுடைமைக் காரன்! இந்நாள் நாடுபிடிக் கும்கொள்கை அவனின் கொள்கை! புன்தொழிலே அவன்தொழிலாம்! அவனு ரைக்கும் பொதுவுடைமைப் பண்பாடு அவன்பால் இல்லை கொன்றுகுவிப் பான்மக்கள் தம்மை! ஆடு கோழிகளும் மாந்தர்களும் அவனுக் கொன்றே, வம்பனைப்போய் வெல்லுவது தமிழர் வேலை வடநாட்டு நரிக்கூட்டம் போர்செய் யாது; 2 சீனனால் வருந்தொல்லை தில்லிக் காரத் தீயருக்கு மட்டுமன்று; நமக்குந் தானே? ஆனதனால் தமிழர்எலாம் போருக் கான ஆயத்தம் செய்திடுக! எழுக இன்றே தான்நினைக்கும் காரியத்தை நாட்டு மக்கள் தடுக்கின்றார் ஆனதனால் சீனாக் காரன் தானுழைந்து கொள்ளட்டும்! என்னை அன்னோன் தலைவனாய்ச் செய்திடுவான் என்று நேரு. 3 சும்மா இருந்தாலும் இருக்கக் கூடும் தூய்தமிழர் தூங்காமல் இருக்க வேண்டும்! இம்மண்ணைப் பகைக்குக்காட் டிக்கொ டுத்தே இனிதாகத் தாம்வாழ்ந்த பார்ப்ப னர்கள் அம்மம்மா ஒருவரா? பலபேர் அன்றோ! ஐயரென்றால் ஐயமேஎ டுப்போர் ஆவார். எம்மண்ணை எப்பார்ப்பான் போரால் வென்றான்? எத்துக்கள் செய்வதவர் வித்தும் வேரும். 4 தமிழர்கடன் எது? அதனைச் சாற்றக் கேளீர் தலைகொழுத்த சீனரைப்போய்த் துரத்த வேண்டும் இமைக்குமுன்னம் இங்குள்ள பொதுவு டைமை என்பவரைச் சிறைக்குள்ளே தள்ள வேண்டும் சமயத்தில் காட்டிக்கொ டுக்கும் பார்ப்புத் தலைக்கொருவர் மேற்பார்வை போட வேண்டும் அமைவாகப் போர்ப்படையின் தலைமை தன்னை ஐயரின்றித் தமிழர்களே ஏற்க வேண்டும் 5 - வேங்கையே எழுக, ப.83, 1978; குயில், 29.12.1959 185. வருக போரே முந்நூ றாண்டின் பின்னே - யாம் முதலிற் காணும் போரே தின்பாய் நல்ல கொலைகள் - அந்தச் சீனாக் காரர் தலைகள். இந்நாட் டாரின் வீரம் - பார் என்று காட்டும் போரே செந்நாய் இதைக் கருதிக் - குடிக்கும் சீனாக் காரன் குருதி. போருக்குத்தான் தோளை - அவன் பழைய வீர வாளை பாருக் கெல்லாம் காட்டப் - பண் பாடி வந்த போரே! ஊராசையால் வந்தான் - அவன் உண்மையை மறந்தான் சீரழிந்தான் கள்ளன் - அந்தச் சீனக் காரக் குள்ளன். இமையத்துக்கே வெற்றி - தென் குமரிக்கு நல்வெற்றி! கமழும் காவேரிக்கும் - நற் கங்கைக்குமே வெற்றி! சுமை சுமையாய் வெற்றி - யாம் சுமக்க எண்ணி வந்தாய், அமைதி காக்கும் போரே - நல் அறத்துக் குத்தான் வெற்றி! - வேங்கையே எழுக, ப.85, 1978; இனமுழக்கம், 30.11.1962 186. சூயென் லாய் சீனரின் நோய் சீன மக்களுக் கேற்பட்ட ஒருநோய் சூயென் லாய் சீர்பட்டு வருகின்றாள் உலகத்தாய் குரைத்தது நாய்! பூனைக்குட்டி வரிப்புலியின் வாய்ப்புகுந்தது போய் - எம் பொன்னாட்டுத் திறம் எண்ணாத ஒருசேய் சூயென் லாய்! மலையில் முட்டத் தலைமை பெற்றானா வெல்வானா? வாழ்விற்கலை வாழ்வு பெற்றது சீனா வாழவைப்பானா! வலைவீசிப் பிடிக்க வந்தானா நாங்கள் மீனா? மண்ணாய்ப் போகும் நாளிது தானாசெஞ் சீனா! புறமுதுகு காட்டாத நாடு - பாரத நாடு பூவுலகில் முதலில் வாளோடு பிறந்த நாடு! அறங்காக்க வாழ்ந்திடு நாடு பொன்னாடு - நல் அறிவில்லாத சீனனை உயிரோடு புதைக்கும் நாடு! - வேங்கையே எழுக, ப.86, 1978 187. லம்பாடி வேண்டாம் நாட்டியப் பாட்டு கணவன் : பார்ப்பானைக் கூப்பிடு! பஞ்சாங்கம் பார்த்திடு மனைவி : ஏய்ப்பானைக் கூப்பிடுவ தேதுக்கு? கெட்ட கூப்பாடு வேம்புதான் காதுக்கு! கணவன் : தாழ்ப்பாள்தி றந்திடு! சண்டை மறந்திடு! மனைவி : தீர்ப்பாகச் சொல்லிவிட்டேன் உன்னிடம் - அந்தப் பார்ப்பானைச் சொல்லாதே என்னிடம்! கணவன் : பெண்எந்த ஊரிலே? கேட்போமே நேரிலே! மனைவி : மண்ணாந்தைக் காதெரியும் மட்டியே வாராய்இங் கேசிங்கக் குட்டியே மனைவி : கண்ணுண்டு பையனுக்குக் காலுண்டு தேடுதற்கு - கணவன் : தொண்ணூறு சாதியடி நாட்டிலே - அவன் தொலைவானே தாழ்ந்தவரின் வீட்டிலே மனைவி : எல்லாம் ஒரேசாதி எல்லாம் தமிழ்ச்சாதி கணவன் : இல்லையாடி ஊருக்குள்ளே லம்பாடி? என்பிள்ளை கைக்காப்புச் செம்பாடி? மனைவி : பால்லாத சாதிஏது? போகாத சாலைஏது? கணவன் : கொல்லவந்த பார்ப்பனத்தி கூடுமோ? பெட்டைக் கோழிவந்து நம்வீட்டில் ஆடுமா? மனைவி : நல்லதொரு சாதிதான் நம்தமிழ்ச் சாதிதான் கணவன் : கொல்லுவது பாப்பாரச் சாதியே - இங்குக் கூறாதே நீஅந்தச் சேதியே இருவரும்: லல்லல்ல லாலலா லல்லல்ல லாலா லல்லல்ல லாலலலா லாலலலா - நமக் கெப்போதும் லம்பாடி கூடாது - காதல் பாடல்கள், ப.91, 1978; குயில் 12.7.1960 188. தொட்டிலிற் பிள்ளை கோணைக் கொண்டை எனக்குப் போட்டு கோலம் செய்யும் மாமி - என் ஓணான் மீசைக் காரரான உண்மை யுள்ள மாமன் பேணிக் கையில் ஏந்த ஒரு பேரன் வேண்டும் என்றார் மாணிக்க மாய் வந்த வனே மகிழ்ந்து தொட்டில் ஆடு - மிகப் புகழ்ந்ததடா நாடு என்னைப் பெற்ற அப்பா அம்மா ஏழாந் திங்கள் என்னை - நற் பொன்னியங்கி வண்டி யேற்றிப் போனார் கள்தம் வீடு பன்னலமும் செய்து வந்தார் பத்தாந் திங்கள் ஒன்றில் - என் தென்னவனே நீ பிறந்தாய் தேனே தொட்டில் ஆடு - மிகச் செழித்ததடா நாடு சின்ன கண்ணே மகிழ்ச்சியாக உன்னைத் தூக்கி வந்தேன் - தம் கன்னத்திலே முத்த மிட்டுக் கையேந்தினார் பாட்டி பொன்வண்டைப் போலே மாமன் பூவே உன்மேல் மொய்த்தார் - மிகு தன்மானப் பொன் விளக்கே தங்கத் தொட்டில் ஆடு - புகழ் சாற்று தடா நாடு. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.24, 1978; குயில், 20.9.1960 189. அன்னை மகிழ்ச்சி போன உயிர் திரும்பி வந்தது பொன்னம்மா - என் பொல்லாங் கெல்லாம் பறந்து போனதே - என்னம்மா தேனே என் செங்கரும்பே - பொன்னம்மா திகைக்க வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா? வானுக்கொரு முழுநிலவே பொன்னம்மா - என் வாழ்வுக் கொரு பெரு மகிழ்வே என்னம்மா. மானே என் இளமயிலே பொன்னம்மா - எனை வாடவைத்தே எங்கே சென்றாய் என்னம்மா? கட்டியதை விட்டதில்லை பொன்னம்மா - உனைக் காணும் கண் சிமிழ்ததுண்டோ என்னம்மா? கொட்டி வைத்த மாணிக்கமே பொன்னம்மா - மனம் கொதிக்க வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா? தொட்டிலிலே போட்டதில்லை உன்னை நான் - நீ தொடையை விட்டுப் பெயர்த்ததுண்டோ என்னம்மா சுட்டுவைத்த பண்ணியமே பொன்னம்மா - எனைத் துடிக்க வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா? ஓடிவா ஒன்றுகொடு பொன்னம்மா -நீ ஒட்டிக் கொள்வாய் என் உயிரில் என்னம்மா, பாடிவரும் தங்கவண்டே பொன்னம்மா - எனைப் பதைக்க வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா? தேடினேன் கூடமெல்லாம் பொன்னம்மா - உனைத் தெருவினிலே கூவி நின்றேன் என்னம்மா ஆடி வந்த பொன் மயிலே பொன்னம்மா - எனை அழ வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா? அமுதுக் கென்ன தமிழுக் கென்ன பஞ்சமா? - நீ அண்டை வீடு செல்ல என் மேல் வஞ்சமா? சமயச் சண்டை சாதிச் சண்டை இங்குண்டா? - ஒரு சமம் எல்லாரும் எனும் அமைதி அங்குண்டா? சுமந்து பெற்றவள் நானிருக்கையில் வேறுதாய் - உனைத் தூக்கித் தூக்கிச் சுவையடைந்திட ஏன் நின்றாய்? இமைக்கதவைத் திறந்து வைப்பேன் பொன்னம்மா - உள்ளே ஓடி வாடி மூடிக் கொள்வேன் பொன்னம்மா! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.140, 1978 190. வெள்ளாட்டில் சிவம் இல்லையா? மீன்வளர்த் தார் ஆள வந்தார் - நல்ல வெள்ளாட்டைக் கொல்லமு னைந்தார் ஏன் இது? ஏன் இது? நண்பா - சொல் இதுவும் அவர்க்குள்ள பண்பா ஊன்தந்து காக்கும் வெள் ளாடு - பால் உதவிபு ரியும்அன் போடு ஆன காந்திஅவர் தலைவர் - வெள் ளாட்டுப் பாலருந்தி வாழ்ந்தார். சைவம் என்று பெயர் சொல்லிப் - பல தவறு செய்துவாழ் கின்றார்; கை வைத் திருக்கும் இட மெல்லாம் - மிகு காமக் கிழத்தியரின் மார்பே பொய்யும் புலையும்அவர் வாழ்க்கை - ஒரு பொதுந லத்தில் மனம் இல்லை ஐயகோ தம்பி ரான்கள் - வெள் ளாட்டில் சிவத்தையா காண்பார்? காட்டை அழிக்குமாம் ஆடு - நம் கையள வுள்ளதா காடு? பாட்டை ஓரமுள்ள புதர்கள் - அவர் பார்வை தன்னிற் பெருங் காடு நாட்டை ஆள வந்து விட்டார் - அவர் நல்ல செயலில்மனம் ஒட்டார் மாட்டைக் கட்டி ஏர் உழுவோர் - வெள் ளாட்டை எருவுக்குத் தொழுவார். - நாள் மலர்கள், ப.37, 1978; குயில், 27.9.1960 191. முடியரசு வீழ்ந்து குடியரசெழுந்தது பார சீகத் தொருமன்னன் பாரின் செல்வம் எலாம்பெற்றுப் பேரின் பத்தின் உச்சியிலே பித்துப் பிடித்துச் செருக்குற்றான். ஒருநாள் மாந்தன் ஒருவனிடம் ஒப்பில் லாத பெருவாழ்வு திருநாள் இந்நாள் வாழ்நாளில் திகட்டா இன்பத் துள்ளேன்நான். என்னை இன்பத் தாழ்த்துகிற இறைவன் வாழ்க! என்னோடு முன்னை யோரின் ஆட்சியினும் முழுமை பெற்றது கருவூலம்! படைகள் எந்தப் பக்கத்தும் பகைப்பூண் டழிக்க மிகவுண்டு புடைசூழ் கோட்டை மாளிகைகள் புகழும் புலவர் பலருண்டு. இதற்கு மேலே உலகத்தில் என்ன உண்டு சொல்லுகநீ! பதக்குப் பொன்னைத் தருவேன்நான் பகர்வாய் என்றான் மாமன்னன். மன்னன் பெருமை மொழிகேட்ட மாந்தன் புகல்வான் அன்பரசே என்னென் பேன்யான் அனைத்திலுமே ஈடும் இணையும் அற்றவன்நீ! துன்பம் என்ற சொல்லறியாய், துயரம் என்ற பொருளறியாய், இன்பம் இன்பம் பேரின்பம், எங்கோ எங்கட் கப்பாலே. வாழ்கின் றாய்நீ கோவேந்தே வாழும் இந்த நாட்டினிலே சூழும் வறுமை சிறிதளவும் தொலையா மக்கள் எண்ணிலவாம். உன்னைப் பொறுத்த வரையினிலே உனக்கின் பந்தான், மக்களைப்பார், தொன்னைக் கூழுக் குப்பில்லை தூங்கக் குடிசைக் கூடில்லை. மாடாய் நாளும் உழைக்கின்றோம் மண்ணாய்ப் பலனை அளிக்கின்றோம் ஓடாய்ப் போனோம்; வறுமைக்கே உறவாய்ப் போனோம் எங்களினைச் சுரண்டிச் சுரண்டிக் கொழுப்பதுயார்? தொல்லைப் படுத்தி நலம்பெறல்யார்? அரசி யல்பேர் அதிகார அட்டைகள் என்ப தறிவீரா? பாடே படாத படைவீரர், பத்தாம் பசலி மதத்தலைவர், போடா வாடா எனச்சொல்லும், போக்கில் லாத அலுவலர்கள் இவர்கள் எல்லாம் எங்களினை இறுக்கிப் பிழித்துச் சுரண்டியதன் குவியல் அன்றோ நின்செல்வம் கூத்தாட் டன்றோ நின்வாழ்வு. உனக்குத் துயரம் தெரியாது, வறுமை, உழைப்பு புரியாது, எனக்கும் என்னைச் சேர்ந்தோரும் இப்படி யேவா இருந்திடுவோம். அதிகா ரிகளின் கொட்டங்கள் அலுவ லாளர் கங்காணிக் குதிர்கள் சாயும் நாள்விரைவில் கூடி வருவ துரைக்கின்றேன். இளைத்த உடம்பில் ஒற்றுமையின் எழுச்சித் தீக்கோல் உழல்கிறது. திளைக்கும் இந்தப் பேரின்பம் திக்கு முக்கா டிப்போகும். ஒருதாய் மண்ணின் மக்கள்நாம், ஒருபால் இன்பம், மற்றொருபால் வறுமை என்றால் என்னாகும் வருநாள் அதனைப் புகட்டிவிடும்! என்று ரைத்தான்; மாமன்னன் இமைப்பில் முடியை எடுத்தெறிந்தான், என்போல் இன்பம் பெறவேண்டும் எழுக என்றான் குடியரசே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.106, 1978 192. பெரியார் முன் சிறியார் பெற்ற பரிசு நிலைமண்டிலம் வந்தே றிகளால் வாழ்நாள் எல்லாம் அறியாமை இருட்டில் ஆழ்ந்திய தமிழர்க்கு அறிவொளி கூட்டிய அன்புடை பெரியார் சீர்த்திருத் தத்தால் செம்மை நெறியினை ஆர்வத்தோடும் மக்கள் அணைக்கையில் சாதி என்னும் சழக்கு தகர்ந்தது; சமயம் என்னும் தடைச்சுவர் இடிந்தது; மதத்தின் நரித்தனம் மடிந்தொ ழிந்தது. இவற்றைத் தாங்கிய என்றும் இலாத கடவுள் என்னும் கயமையும் மறைந்தது. அறியா மைக்கெலாம் அரணாய் இருந்த வெறித்தனம் மிகுந்த சாதியும் சமயமும் மதமும் கடவுளும் மண்ணில் உண்டாக்கிக் கதைகளை வளர்த்தவர் - உழைக்கா துண்ணும் சோற்றால் அடித்த சோம்பே றிகள்எலாம், ஆட்டம் கண்டனர் அறிஞர் பெரியாரால். உண்மை ஒளியினை மக்களுக் கூட்டிய பெரியார் தம்மை ஏசினர் பேசினர். குட்டி நாய்கள்போல் குரைத்துப் பார்த்தனர்; மோழை நரிகள்போல் ஊளை இட்டனர். நெருப்பின் முன்னர்ப் பருத்திப் பொதியா? வெள்ளத் தின்முன் உப்பு மூட்டையா? ஊற்றை மண்ணால் அடைக்க முடியுமா? புல்லேந்து கையால் வில்லேந் துவதாய்ச் சொல்லேந்திப் பார்த்துச் சோர்வ டைந்தனர் பீடண மரபில் பிறந்த ஒருவனைக் கேடய மாக்கிக் கீழ்அறுப் பவர்கள் ஒருமுறை பெரியார் திருமுன் சென்றனர். உழைக்கா துண்டு பிழைக்கும் வாழ்வினில் மண்ணைப் போட்டதால், மக்கள் கண்ணைத் திறந்ததால், தீண்டா மைத்தீ அவித்ததால், சுரண்டலை, திருட்டு வழிகளை அடைத்ததால் தாக்கு தாக்கெனத் தாக்கிப் பேசினர். பூசனை மொழியால் ஏசிச் சலித்தனர் இன்னாச் சொற்களை இன்புடன் கேட்டுப் புன்னகை பூத்தார் நன்னலப் பெரியார். ஏசு கின்ற என்னுடைய நண்பர்காள் கூசுகின் றமொழி கொஞ்சம் இருப்பின் அதனை யும்நீர் அர்ச்சனை செய்க; எதற்கு நிற்கிறீர் எதிரில்வந் தமருக என்ன குறையின்னு எடுத்துச் சொல்லுக என்று கேட்டதும், நின்றவர் வேர்த்தனர். பக்கத் தழைத்தே உட்கார வைத்தார். யாரை யாவது காணச் சென்றால் ஆர்வத் துடன்நீர் அங்கையில் என்ன எடுத்துச் செல்வீர், இயம்புவீர் என்றார். குழந்தைகள் இருந்தால் பழங்க ளுடனும் நண்பர்கள் என்றால் தின்பண்டங் களுடனும் மாண்பினர் என்றால் மாலை யுடனும் காணச் செல்வோம் என்று கூறினர். காணச் சென்றவர் ஏற்க மறுத்தால் மாண்புப் பரிசினை என்னசெய் வீர்கள்? என்று கேட்டார், ஈடிலாப் பெரியார். திருப்ப எடுத்து வீடு திரும்புவோம் இழப்பிலா நாள்என எண்ணி மகிழ்வோம். அதுபோ லத்தான் ஐயா, உங்கள் ஏச்சையும் பேச்சையும் ஏற்க வில்லைநான், பரிசுப் பொருள்களைத் திருப்பக் கொண்டே இழப்பிலா மகிழ்வில் எடுத்துச் செல்லுவீர் என்று பெரியார் இயம்பினார்; ஏசினோர் எரிமலை வீழ்ந்த சருகாயினரே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.115, 1978 193. எதற்கும் உதவாதவன் அரசியலுக்கு தசரதன் மகன் வந்தான் தலைக்கலைஞன் என்றான் விசிறித் தலையைச் சீவி மேடை ஏறி விட்டான். வசனம் பேசலுற்றான் வந்தது கல்மாரி விசனப் பட்டான் வேறு வேலை தேடிக் கொண்டான். ஏமாளிகள் நாட்டில் எங்கும் இருக்கின்றார் காமா சோமா என்று கதைகள் எழுதிப் பார்த்தான். பேமானிகள் பலரும் பிடித்துக் கொண்ட இடத்தைக் கோமாளி போய் அங்கே குட்டுப்பட்டு மீண்டான். வட்டக் காட்சி சென்றான் வாகாய் வித்தை செய்தான்; கொட்டாப்புளி உடம்பைக் கொழுக்க வைத்துக் கொண்டான். பெட்டைக் குதிரை ஏறி பின்முன் காலை மாற்றி கொட்ட மடித்த போது குதித்தான் முறிந்தது காலே. காலைத் தேற்றிக் கொண்டான் கட்சிக் குள்ளே சென்றான் மாலை தோறும் கூட்டம் மாலை மரியாதை! வேலைக் குதவா ஆள்கள் வீராப்புகள் பேச சாலை தோறும் கொடிகள் தலைமை தாங்கி நட்டான். நாட்டில் வறுமை ஐயோ நடக்க லாமா ஆட்சி? வீட்டில் பெண்டு பிள்ளை வேலை இல்லை கொடுமை. போட்டி டுங்கள் வாக்கை புரட்சி செய்வேன் என்றான் போட்டார், வாக்கால் வென்றான், புதுமை ஏதும் இல்லை. உதவாக் கரைகள் எல்லாம் ஊரில் நாட்டில் உலகில் பதவி பெற்றால், மக்கள் பரிதவிப்பார் அன்றோ? - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.120, 1978 194. ஞானியின் திண்டாட்டம் அறுசீர் விருத்தம் பூரியில் ஒருநாள் நானக் பூதேவர் என நடக்கும் ஆரியன் ஒருவன் தன்றன் அகல்விழி மூக்கை மூடி நேரிலே வருதல் கண்டார் நேர்படும் கோலத் திற்குக் கோரினார் கார ணத்தைக் கூறினான் அந்தப் பார்ப்பான். 1 கண்ணையும் மூக்கை யும்நான் கட்டுவ தாலே சிந்தை எண்ணங்கள் அடங்கி, நெஞ்சம் இரண்டற ஒருமை கொள்ளும் உண்மை ஒன் றுரைப்பேன் கேளீர்; ஊனக்கண் உணரா ஞானக் கண்ணினால் உலகம் மூன்றின் காட்சிகள் காண்கின் றேன்நான். 2 குருநானக் இதனைக் கேட்டு குமிண்சிரிப் புற்ற வண்ணம் திருவாளர் கமண்ட லத்தைத் திருவாளர் பின்ம றைத்தார். பெருஞானக் கண்ணால் யாதும் பார்த்திடும் பெருமை கொண்டீர் ஒருவாறு சொல்வீர் எங்கே கமண்டலம் உள்ள தென்றார்? 3 மூன்றுல கத்தைக் காணும் முனிவனால் கமண்ட லத்தை யாண்டுள தென்ப தைத்தான் இயம்பிட முடிய வில்லை. சான்றவர் நானக் சொன்னார் சார்ந்தஉம் பின்பு றத்தில் தோன்றிடும் கமண்ட லத்தை துலக்காத உமது ஞானக் 4 கண்ணென்ன கண்ணோ? வீணாய்க் கண்கட்டி வாயைப் பொத்தி மண்ணுள்ள மனிதர் தம்மை மருட்டிட வேண்டாம் என்றார். மண்கவ்விப் போனான்; நாணம் மண்டிற்று முகப்ப ரப்பில் திண்டாடிப் போனான் ஞானி செய்தவக் கோலம் தீர்த்தான். 5 - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.133, 1978 195. வரிசை கெட்ட உருசிய நாடு அகவல் உருசிய நாட்டில் ஒருதொழி லாளி பொதுவுடை மைத்தாள் ஒன்றில் புகல்வான்; உருசிய நுண்ணுணர் வுடையவர் இந்நாள் எழில்நிலவு நோக்கி ஏவு கணைகள் ஏவுகின்றதால் என்னைப் போன்ற ஏழைகட்கு என்னகி டைக்கக் கூடும் என்றான். உருசியில் ஏழைகள் இல்லை என்று கூறும் இழிந்த அறிவினர் இதனை எண்ணி அடங்க வேண்டும். மேலும் அன்னவன் விளம்பு கின்றான்; வீட்டு வசதியை ஏவுகணை கூட்டுமா? உருசிய நாட்டில் உள்ள மக்கள் மச்சு வீட்டுக்கு வௌவால் அடிப்பதை எச்சில் இலைகள் அறிய வேண்டும். அணிபெற இன்னும் அவன்சொல் கின்றான்; பணிமனைப் பெண்களின் பாதுகாப் பிற்கும் பறக்கும் நிலவு பண்ணிய தென்ன? என்று நன்றாய்க் கேட்டான் எளியவன்! உருசிய நாட்டில் உள்ளபெண் கட்குத் திருமணம் தேவை இல்லை என்று கூறி அவர்களைக் குச்சுக் காரிகள் ஆக்க ஆடவர் அலையும் கொடுமையை ஆத ரிக்கும் அழுகிய தோல்கள் ஈது கண்டு திருத்தம் எய்துக! அந்த ஏழை மேலும் அலறினான்; இந்த நாட்டில் இன்றி அமையாப் பொருள்கள் எல்லாம் போதிய அளவில் இல்லா நாளில் குருசேவ் விளம்பர நாடகம் ஆடுவது நல்லது தானா? கேடுசெய் யாதா என்று கேட்டான் இரஷ்யத் தலைவர் சிஷ்யர் உணர்க! அவனே மேலும் அறிவு றுத்துவான்: ஏவுகணை ஒன்றை இயற்று தற்குச் செலவிடும் பெருந்தொகை இருந்தால் உலவும் ஏழை மக்களுக் குதவுமே. - நாள் மலர்கள், ப.40, 1978; குயில், 21.1.1960 196. செய்தித்தாள் ஆசிரியர் கூட்டம் பஃறொடை வெண்பா சீ. பீ. க்குப் புகழ்மாலை ஏன்? ஏடு நடத்துகின்ற ஆசிரியர் என்றுசிலர் கூடினார்; சீ. பீ. யைக் கொண்டாடி ஆர்ப்பரித்தார். பார்ப்பனனைப் பார்ப்பனர்கள் பாராட்டிப் பேசியதை ஆர்ப்பாட்டம் என்றே அறைவதிலே என்னபயன்? ஏனிந்தச் சீ. பீ. யை இந்நாள் திடீரென்று வானம் அளாவத்தம் வாயாற் புகழ்கின்றார் என்பதை அல்லவா எண்ணுதல் வேண்டும்நாம். வன்மனத்து ராஜாஜி வைசிராய் அவ்விடத்தில் இவ்விடத்தில் ஏற்றவகை ஓர்பார்ப்பான் வேண்டுமே. வேலையின்றி வாழ விடலாமோ சீ. பீ. யை மூலையிலே தூங்காமல் முன்னே இழுத்துவைத்து மக்க ளிடம்பகட்டி வைத்தல் நலமன்றோ? தக்கஓர் ஓமந்தூர் காமராஜ் தம்மை ஒழித்துப்பின். சீ. பீ. யை ஊராள வைத்தால் செழிப்படைய லாமன்றோ பார்ப்பார் திருக்கூட்டம்? வைத்திய நாதன்கள் வாய்ப்பற்றுப் போனார்கள் கைத்திறமை அத்தனையும் காட்டி அலுத்தார்கள் அன்னாரின் சூழ்ச்சிகள் அம்பலமே! மேலுமவர் மின்னியமேற் போர்வை கிழிந்ததினி வேகாது. நாட்டிலினிச் சீ. பீ. யை நல்லவர் என்பார்கள் கூட்டத்தில் சீ. பீ. யைக் குற்றமிலார் என்பார்கள், ஏடெல்லாம் சீ. பீ. யைக் ஏற்றவரே என்றுரைக்கும் வீடெல்லாம் சீ. பீ. யை மேன்மை புரிவார்கள் வல்லவர் என்று வழுத்துவார் பார்ப்பனர்கள் எல்லாம்சீ. பீ. தான் அவர்க்கு. - நாள் மலர்கள், ப.52, 1978; குயில், 15.5.1948 197. கோட்சே கூட்டத்தின் கூற்றுக்கு மாற்று எண்சீர் விருத்தம் சூன்மாதம் பதின்மூன்றில் இளைஞர் சங்கத் தொடக்கத்தில் சுப்பாராவ் தலைமைப் பேச்சில் நான்சொல்வேன் சாதிஎனும் பாகு பாடு தவிர்த்தெவர்க்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று மேன்மையுறு நேருரைத்தான் என்று நன்றாய் விளம்பிடுவார் ஏனென்றால் நேரு பார்ப்பார்! ஊன்நலங்கா துழைக்காமல் தம்மி னத்தார் உயர்நிலையை எய்திவிட்ட தறியார் அன்னார். 1 ஏமாற்றப் பட்டுள்ள ஏழை மக்கள் இனியேனும் தலைதூக்க விட்டு விட்டால் தீமையன்றோ தம்கோட்சே கூட்டத் திற்கே? நேருசொல்வார் செவ்வையாய்ச் சொல்லு வாரே! தூய்மையுறு திராவிடர்கள் விழித்துக் கொண்டார் பார்ப்பனர்கள் சொன்னபடி இந்தச் சர்க்கார் தாமடங்க வேண்டுமோ! ஆண்மை யுண்டேல் அசைக்கட்டும் திராவிடரை இச்சர்க் காரே! 2 சுப்பாராவ் மேலும்அம் மாநாட் டின்கண் சொல்லுகின்றான் வேற்றுமைக ளைம றந்தே இப்பெரிய சமூகத்தை நாம்ஒன் றாக்க முயற்சித்து வருகின்றோம் என்ப தாக! சுப்பாராவ் என்னும்கோட் சேகூட் டத்தார் சொல்வதுபோல் முயலுவது மெய்ம்மை தானா? எப்போதா கிலும்நினைத்த தேனு முண்டா? எரிநெஞ்சைக் குளிர்மொழியார் மறைக்கின் றாரா? 3 சாதிகளை மறந்துவிட வேண்டாம் என்று சென்னைவாழ் சர்க்காரே சொல்வ தாக ஓதுகின்றார் சுப்பாராவ். அதுவெ றும்பொய் சாதியினை ஒழிப்பாரோ காந்தி என்று தாதுகலங் கியகோட்சே கூட்டம் அந்தத் தக்கானைக் கொன்றதுதான் மெய்ம்மை யாகும் சாதியினால் வாழ்வதெனும் கொள்கை இந்தச் சர்க்காருக் கில்லை! சுப்பா ராவுக் குண்டு. 4 - நாள் மலர்கள், ப.55, 1978; குயில், 15.7.1948 198. சம்பத்து முயற்சி அகவல் தெம்பிலாத் தில்லு முல்லுக் கழகம் சம்பத்தால் இனித்த லைதூக் கிடுமா? இந்தியை வடவர் செந்தமிழ் நாட்டில் குந்தி இருக்கக் கொடுஞ்செயல் தொடங்கினர் மொழிவழி மாநிலம் ஆக்கி, மொழிவளர் மாநிலம் அனைத்தையும் மகிழ வைப்பதால் நாவலந் தீவுக்கு நன்மை யாகும். ஏவல ராக்கி மாநிலத் தாரைச் சுரண்ட நினைப்பவன் தூய்மை அற்றதன் னினமொழி பரப்ப எண்ணி அழிவான்; செந்தமிழ்ப் பற்றும் செந்தமிழ் மக்களும் பிரிக்க முடியா ஒன்று! பிரிப்பவன் இருக்க முடியாக் கல்லறை இருப்பே. இந்தி இங்கு வருவதைத் தடுப்பது செந்தமிழ் மக்களின் சிறந்த கடமை! சம்பத் திதனை உணர்ந்தது சரியே ஆயினும் அதனை அன்பிலா ரிடத்தில் இயம்பி அவரிடம் இந்தி எதிர்ப்பை எதிர்பார்த் திடுவது சரியா? அன்று! காசறை கட்டு கின்றவர் பாசறை காண்பர் என்பது பசப்பே! - நாள் மலர்கள், ப.67, 1978; குயில், 21.6.1960 199. நிமிர்ந்து நட கொஞ்ச வயதுடையான் - அவன் கூனற் கிழவனைப் போல் அஞ்சி நடந்து சென்றான் - ஐயர் ஆரடா தம்பி என்றார்! அஞ்சலி செய்து நின்றான் - ஐயர் அவனிடம் உரைப்பார்: நெஞ்சு நிமிர்ந்து நட! - உன் நேரில் அச் சேவலைப் பார்! சொன்ன சொல் பையனுளம் - தனில் சுடர் கொளுத்திடவே முன்னைய கூனல் நடை - தனை முற்றும் அகன்றவனாய்ச் சென்னிதனை நிமிர்த்திக் - கொஞ்சம் சிரிப்பையும் காட்டிச் சன்னத்த வீரனைப்போல் - அந்தச் சாலை வழி நடந்தான். - நாள் மலர்கள், ப.70, 1978; ஹிந்துதான், 10.9.1939 200. விடியா விடுதலை விடிவ தெந்நாள் நிலைமண்டிலம் இனிஇந் நாட்டில் இங்கிலாந்தின் கொடி பறக்காது கோலோச்சாது. எண்ணிலா வீரர்கள் எண்ணிலாத் தீரர்கள் கண்ணீர் செந்நீர் களங்கண்டதன்பின் வந்தது விடுதலை, உரிமை பெற்றது. உடல்பொருள் ஆவி உவந்தீந் தவரின் ஈகத்தி னால்தான் எய்தினோம் விடுதலை. ஈவதும் பெறுவதும் இல்லை விடுதலை. சாவு ஆயிரத்தைத் தந்து பெற்றது. வ. உ. சி. , வாஞ்சி, வ. வே. சு. , பாரதி போன்ற கிளர்ச்சியின் புரட்சி யாளர்கள், மானம் மிகுந்த வாழ்வினர், திலகர் காந்தி, பகத்சிங் சரோஜினி குடும்பம் ஈ. வே. ரா. , சிங்கார வேலனார், ஜீவா இன்னும் உயிரை எண்ணாக் கடமையர் ஆயிரம் ஆயிரம் பேரை அளித்துப் பெற்ற விடுதலை பித்தர்தம் கையில் சிக்கிக் கொண்டது! திராவிடம் அழியும்! சாதி மதத்தின் சழக்குகள் மிகுந்திடும்! இனவெறி யாட்டம் பிணம்தின்னி யாகும்! மொழிப்போர் மூளலாம், சமதரு மத்தின் விழிதிற வாது, வேற்றுமைச் சிக்கல் மாநிலம் தோறும் வெறுப்பும் பகையும் கால்கொளும்; ஏழை எளியவர் கடுந்துயர் உள்நாட் டவரால் கொள்ளைநோய் ஆகும். இவற்றை எப்படி இப்பொழு தேநீர் செப்பலாம் என்று சினப்பின், ஆட்சி ஒப்பின வரையும் உட்கார்ந்த வரையும் நாற்ப தாண்டாய் நான்நன் கறிவேன். அறியா மையும் செருக்கும் கைகோத்து அரியணை அமர்கையில் அண்ணலே ஒதுங்கினார். உழுதவன் இல்லை விதைத்தவன் இல்லை மக்களுக் குள்ள சிக்க லறுக்காமல் எல்லார்க்கும் எல்லாம் என்னும் உரிமை சொல்லால் செயலால் தொடவும் எண்ணிடார் இரவில் வாங்கும் இந்திய விடுதலை என்று விடியுமோ யார் அறி குவரே. - நாள் மலர்கள் ப.83, 1978; பொதுநலம், 15.1.1947 201. ஆளவந்தார் ஆட்பட்டிருந்தவர் ஆளவந்தார் - நல்ல ஆட்சி நடத்துவர் என்றிருந்தோம் - எம்மைக் கேட்பவர் இல்லை இனத்தின் எழுச்சியைக் கிள்ளிடுவோம் என்று துள்ளுகின்றார். வறுமை உணர்ந்தவர் ஆளவந்தார் - இனி வயிற்றுக்குக் கஞ்சியுண் டென்றிருந்தோம் - உங்கள் சிறுமையை நீக்க முறையிட்டுக் கொண்டாலும் சிறையிடுவோம் என்று செப்பிவிட்டார். ஏழையர் தோழர்கள் ஆளவந்தார் - கொண்ட ஏக்கத்தை நீக்குவார் என்றிருந்தோம் - இனி வாழவிடோம் தொழிலாளரை, ஒற்றுமை மாய்க என்றார் தலைசாய்க என்றார். நல்லறம் கேட்டவர் ஆளவந்தார் - இனம் நாலும் ஒன்றாய்விடும் என்றிருந்தோம் - எம்மைக் கொல்லும் அவர்கள்கை, இல்லை என்னும் நாக்குக் கூசாது பொய்சொல்லும் தேசியத்தாள்! உள்ளம் உயர்ந்தவர் ஆளவந்தார் - இனி உண்மை சிறந்திடும் என்றிருந்தோம் - எங்கும் கள்ள வணிகர்க்குக் காப்பளிக்கக் கச்சை கட்டி விட்டார் மானம் விட்டு விட்டார்! நிறத்திமிர் அற்றவர் ஆளவந்தார் - துயர் நீங்கிடும் நாட்டினில் என்றிருந்தோம் - ஏதும் அறச்செயல் காணாத ஆங்கிலே யர்க்குயாம் அப்பன்கள் என்றிங்குச் செப்பிவிட்டார்! கல்வி நிறைந்தவர் ஆளவந்தார் - தமிழ் கட்டாயம் ஆக்குவர் என்றிருந்தோம் - அதைக் கொல்வதற் கென்றிந்திச் சாணியைக் கட்டாயம் கொள்என்று நாட்டினிற் கொள்ளி வைத்தார். - நாள் மலர்கள், ப. 85, 1978 202. மான மறத்தி திருப்பத்தூர்க் கடுத்த சிற்றூர் ஒன்றில் விருப்புற்று மணந்த கணவன், வெறிநாய் தெருத்தொறும் சுற்றிச் சீரழி தல்போல் பொருளை விரும்பும் ஒருசில குச்சுக் காரிகள் பின்னால் கழித்தான் பலஇரா. ஓரிரா வீட்டுக்கு வந்தான், மனைவியை வேண்டினான்; விரும்பி மணந்தவன் தன்மனை தாண்டினான் கட்சிவிட் டோடும் தலைவன்போல். தப்பினை ஒப்பாத் தமிழச் சிஅவள் கண்டதைக் கேட்டதைச் சொல்லிக் காட்டித் தான்அப்படித் தவறு செய்து மீண்டால் ஊனில் உயிர்ஒட்டி யிருக்குமா என்றாள். உரிய மனைவியின் உரிமைக் குரலோ விரியும் மின்னல் வெட்டெனக் கேட்டது. கேட்டதும் கீழிருந்த விறகுக் கட்டையை ஓட்டினான் மங்கைமேல், ஒதுங்கினாள் மனைவி. வீசிய கட்டை வாசலில் தூங்கிய ஓராண்டுக் குழந்தையின் உயிரைக் குடித்தது. பேராற் றைப்போல் பேசிட வில்லை எறிந்த கட்டையை எடுத்துக் கணவனைக் குறிபார்த் தடித்தாள், தப்பவில் லைகுறி! வழக்கு மன்றில் வந்து நிறுத்தினர்; ஒழுக்கம் தவறினான் ஒரேஒரு மகனையும் சாக டித்தான் சாகடித் தானைச் சாகடித் தேன்நான் சாகடிக்கும் சட்டம் உங்கட் கிருப்பதை ஒப்பு கின்றேன்; எங்கோ எவனோ எப்பொழு தோதன் கங்குல் மனத்துக் கருஞ்சட் டம்அது. எங்கள் வழக்கு தீர்ந்து முடிந்தது; உங்கட் கென்ன உரிமைஇருக் கின்றது? கொலைக்கும் உமக்கும் தொடர்பில்லை, ஆனால் கொலைபுரிந் திடநீர் கொடுக்கும் தண்டனை கூலிக் குரியது; இருகொலை முடிந்தது; மற்றொரு கொலையைச் சட்டம் குற்றமாய்ச் செய்தல்ஏன் என்றாள், மறத்தியே! - நாள் மலர்கள், ப.115, 1978; பொது வாழ்வு, 15.10.1959 203. யாருக்கு வாக்குச் சீட்டு? அகவல் உழைக்கும் மக்களே ஆட்சிக் குரியவர் அழைப்பீர் அவர்களைத் தேர்ந்தெடுத் தனுப்புவீர் அரசியலை யேதொழில் ஆக்கிக் கொண்டவர் சுரண்டல் பேர்வழிகள், நாட்டின் துரோகிகள். அனைத்து டைமையும் மக்களுக் காமெனும் நினைப்பில் லாதவர் நேற்றே இறந்தவர். கண்ட இடமெங்கும் செத்த கொள்கைகள் உண்டு கொழுக்க ஊரை ஏய்க்க எத்தனை கட்சிகள் எத்தனை கொள்கைகள் அத்தனையும் இந்நாட்டுக் குழைத்திடும் எண்ணம் அணுவள விருப்பினும் அனைவரும் ஒன்றாய் இணைவது தானே இயல்பு, சிறப்பு! வேற்றுமை எந்த உருவில் விளையினும் வேற்றுமை தானே ஒற்றுமை ஏது? தேர்தலில் நிற்கும் தில்லு முல்லுக் காரர் அனைவரும் காசு பதவி அதிகாரத் திற்கே ஆலாய்ப் பறப்பவர், குதிக்கும்இக் கொண்டான் மார்களை நாட்டில் தேர்ந்தெடுத் தனுப்புதல் திருடரைத் தேர்ந்தெடுத் தனுப்பும் தீமை ஆகுமே! - தொண்டு, 1. 4. 1952; நாள் மலர்கள், ப. 117, 1978 204. பொய்க்குச் சிறகுண்டு பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு - நான் புகன்றேன் பொறாமைப் புலவனைக் கண்டு! - பொய்க்குக் ஐயோ இவனும்ஓர் தமிழுக்கு மகனாம் அயோத்தி இராமனுக்குக் கிடைத்த வீடணனாம்! பொய்க்குக் கிடைத்ததாம் உட்காரும் இருக்கை போய்அவிழ்ப் பான்இனி பொறாமைச் சரக்கை! - பொய்க்குக் உண்மை வெளியாகும் நாள்ஒன்றும் உண்டு உயிரோ டிருக்குமா பொய்எனும் மண்டு? கண்கெட்டுப் போகுமுன் களவாளி நண்டு காலைக் கடித்திடும் ஆக்குக துண்டு! - பொய்க்குக் நாய்தன் வாயிலே தந்தம் உண்டாம் நம்பினானே அதையொரு முண்டம்! நோய்செய் புலவர் தமிழுக்குத் தண்டம் நூறுபொய் நூறுபொய் தாங்குமா அண்டம்! - பொய்க்குக் - தேனருவி, ப.145, 1978; தமிழணங்கு, 1. 6. 1958 205. கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார் அகவல் ஊர்ஊ ருக்கும் ஊரில் உள்ள ஒவ்வொரு தெருக்கும் உருப்ப டாதவர் கடவுளை நம்பினோர் கைவிடப் படார்என்று கோயிலை எழுப்பிக் கும்பிட் டலைகிறார். வாயிலில் பார்ப்பான் வயிற்றுப் பிழைப்புக்கு கல்தச்சுக் கேற்ற சொல்தச்சு செய்கிறான். காலங் காலமாய்க் கடவுளை வணங்கியும் வயிற்றுக் கிலாது வறுமையில் வாழ்பவர் வாழ்க்கையின் வசதி சிறிதும் இலாதவர் தொழில்இல் லாதவர், தொழில்செய் தாலும் மனித உழைப்பே மலிவாய்ப் போய்விடும்; நோய்நொடி நூறு நொறுக்கித் தின்றிடும்; இத்தனை பேரும் கடவுளை நம்பினோர் ஆனால் அவர்கள் கைவிடப் பட்டார். கடவுள் நம்மைக் கைவிடுவ தேனோ? கும்பிட்டுக் கடவுளை நம்பி னோர்தமை உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி விரட்டு கின்றதே. நம்மைத் தாழ்த்தி நசுக்கி ஒடுக்கிச் செம்மையாய்ப் பிழிந்து சுரண்டும் செல்வர்க்கு மட்டும் கடவுள் வாரி வழங்குதோ? இருப்பவன் இல்லான் என்னும் இரண்டினம் தெருத்தொறும் ஊர்தொறும் வெறுப்பை வளர்த்து நாட்டினில் மக்களை நலிவிக் கின்றதே. ஏழையை அழித்துச் செல்வரை வளர்க்கும் ஓர வஞ்சனை உள்ளதோ கடவுட்கு? ஒருநாள் ஓர்உந்து வண்டி முரண்டு தெருநடைப் பாதை சேர்ந்த கடவுட் கோயிலில் மோதிட குமைந்தது கடவுள், வண்டியில் வந்த ஒருபது மக்கள் திண்டி வனத்துத் தெருவில் இறந்தனர். மற்றவர்க்குக் கைகால் மண்டையி லேஅடி. தன்னைக் காக்கத் தெரியாக் கடவுள் தன்னை நம்பிய மக்களைக் காத்ததா! இன்றைய அரசியல் எத்தர்க ளைப்போல் அன்றைய ஆரிய எத்தர்கள் தந்த பிணக்கேற் படுத்தும் கடவுளைக் கணக்குத் தீர்த்தல் மனிதர்தம் கடமையே. - நாள் மலர்கள், ப.120, 1978; சீர்திருத்தம், 1. 8. 1956 206. ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் அறுசீர் விருத்தம் இரோஷிமா நாக சாகி எனும்இரு ஊரில் வைய விரோதிகள் வீசி னாராம் வெடிகுண்டை; எரிம லைத்தீ சரேலெனக் கவிழ்ந்த தைப்போல் சாவில்பல் லாயி ரம்பேர் ஒரேவிஷப் புகைநெ ருப்பால் உருவிலா தழிந்தா ராமே. 1 நானிலம் அனைத்தும் உள்ள நச்சுப்பாம் பனைத்தும் கூட்டி வானில்ஓர் அணுக்குண் டாக வன்பகை நெருப்ப ழுத்தித் தான்பொழிந் தானோ பாவி? அமெரிக்கக் கொலைப்ப டைக்குத் தான்தோன்றித் தனத்துக் கெல்லாம் ஜப்பானில் தானா ஆட்டம்? 2 இன்னும்ஓர் நூறாண் டுக்கும் இரண்டூரின் சுற்றுப் பக்கம் ஒன்றுமே முளையா தாமே வாழ்தலும் ஒண்ணா தாமே. ஒன்றுகேள், முதலா ளித்துவம் உலகினை அழிக்கும் முன்னம் நன்றுநாம் செய்தல் எல்லாம் நாமதை ஒழித்தல் வேண்டும். 3 பராபரக் கண்ணி பாடி பனிமலை குமரி எல்லைத் திராவிட நாட்டில் மேனாள் தீயெனப் பாய்ந்த பார்ப்பார் ஒரேஇனம் என்று சொல்லும் அமெரிக்கர் உருவி னுக்குள் இரோஷிமா நாக சாகி எரிந்ததே; இடிந்த துள்ளம். 4 வந்தேறி கண்டம் தோறும் வாயினில் விழுங்கிக் கொல்லும் அந்தோபாழ் அழிவுக் கஞ்சா அமெரிக்கச் சுரண்டல் காரர் நொந்தேநாம் அழிவ தற்குள் நொறுக்கிட வேண்டும் அன்றோ! செந்தேனைப் பொழிவ தைப்போல் செந்நீரைப் பொழிவோம்; வெல்வோம். 5 ஒருசிலர் அதிகா ரத்தின் வல்லர சுரிமை காக்க உலகமே தீக்கா டாக்கி உயிர்க்குலம் அழிக்கும் ஈனர் பலத்தினை ஒடுக்க வேண்டும்; வையப்பா ராளு மன்றம் புலம்பலில் பயனே இல்லை பொசுக்குக போர்மூ லத்தை! 6 உலகநா டெங்கும் உள்ள உழைப்பாளர்க் கென்விண் ணப்பம் உலகத்தில் அமைதி வேண்டின் அனைவரும் ஒருசி லர்க்காய்ப் பலம்தரும் படையில் சேரப் படாதுநாம் விலக வேண்டும் இலகுவில் வையப் போரின் இழிவெண்ணம் மடிந்து போகும்! 7 ஜப்பானில் வீழ்ந்த குண்டு சர்வாதி கார ஆட்டம் இப்பாரை இனிக்க லக்கி இனிவருங் கால மின்றித் தப்பாது செயினும் செய்யும், தறுதலை முதலா ளித்வம் எப்போதும் நமைவி டாது செய்வன இன்றே செய்க. 8 - நாள் மலர்கள், ப.122, 1978; பகுத்தறிவு மலர், 1942 207. வியத்நாமிலிருந்து விலகுக எச்சரிக்கை அறுசீர் விருத்தம் வையப்போர் முடிந்ததென நினைக்கும் நாளில் வல்லரசின் திமிரொடுங்க வில்லை! கீழே கைவைத்த பிரான்சுநாட் டடியி ருந்து கடுமைமிகு விடுதலைப்போர் வியத்நாம் கண்டு மெய்யுயர்த்தி மேம்பாட்டிற் குழைக்கும் வேளை வீடிழந்தார் விளைவிழந்தார் உறவி ழந்தார் கையுழைப்பால் தலைதூக்க நினைக்கும் காலை கயமைமிகும் அமெரிக்கா கால்நீட் டிற்றே. 1 மனவலிமை குன்றாத வியத்நாம் மக்கள் மறுவாழ்வில் ஊடுருவும் முதலா ளித்துவ மனப்போக்கை முறியடித்தல் உலக நாட்டு மன்றத்தின் முதற்கடமை ஆகும். ஒவ்வோர் இனமக்கள் வாழ்நாடும் அவ்வ வர்க்கே எனுமுணர்வு விழிப்புணர்ச்சி இயற்கை; எந்த இனமற்ற அமெரிக்க வெறிநாய் கட்கே இனமேது? ஏதுமொழி எச்சிற் சோறே. 2 அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள் ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை; திமிருற்ற ஏகாதி பத்தி யத்தைத் திசைதோறும் எதிர்க்கின்றார்; அவர்நாட் டாரே குமுறுகிறார். கோணல்மன அமெரிக் காவே குடியரசின் பேராலே அடிமை கொள்ளல் இமயத்தின் எல்லையிலே காலை நீட்டும் சீனரைப்போல் இழிவெதற்கு? படைவி லக்கு! 3 சான்றோர்கள் உன்முகத்தில் காரித் துப்பும் சாய்க்கடையாய் அமெரிக்க அரசி யல்சீர் தான்றோன்றித் தனமாக நடப்ப தெல்லாம் தரங்கெட்டுப் போவதையே காட்டும்; நாட்டில் ஊன்றிஎழும் நிறவெறிப்போர் களைய வில்லை; உலகமக்கள் உறவென்னும் அன்பும் இல்லை; ஈன்றவரும் வெறுக்கும்வண்ணம், வியத்நாம் வீரம் இடுப்பொடித்துப் போடும்உனை, எச்ச ரிக்கை! 4 - நாள் மலர்கள், ப.125, 1978; புத்தறிவு, 1. 8. 1961 208. பெற்றவள் மகிழ்வு சாதி ஒழித்தல் ஒன்று மதத்தைச் சாய்த்தல் ஒன்று ஓதிடும் என்மகன் இன்று - போரில் ஒன்றுபட் டானாம் நன்று - என் உள்ளம் மகிழ்வுக் குன்று. தமிழை அழிக்கும் மொழியை தறுதலையின் கைக் கழியைத் தமிழ்க்கு வரும் பழியைப் - புறம் தள்ளக் கொடுத்தான் விழியை - மகன் தரைக் கெல்லாம் ஒரு வழியைத் தந்தான் என் சொல்வேன் மகிழ்வை! வ. உ. சி. போல் வீரன் - வல்ல வாஞ்சி யைப்போல் தீரன் பாரதி போல் சூரன் - எம் பள்ளிக் குள்ளே மாறன் - போர்ப் படையில் சேர் தமிழ்ப் பேரன் - வெற்றி படைத்தான் சங்கக் கீரன்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.101, 1978 209. வலியார் இளையாரை வாட்டுவ தெங்கே நேரிசை ஆசிரியப்பா தாய்இடை சுமந்த சேய்தன் தந்தையை விட்டான் ஓர்அறை! கட்டி அணைத்து மகிழ்ந்த கணவனை மங்கை நோக்கி இளையார் வலியார்க் கின்னல் செய்யினும் வலியார் இளையாரை வாட்டிடார் என்பது கலக உலகிற் காணோம் நிலவக் கண்டோம் நம்இல் என் றாளே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.27, 1978; குயில், 29.9.1959 210. வீதிக் கழகு வீட்டிற் கழகு வான மீனின் ஒளிம ழுங்க வைக றைத்தாய் எழுந்தாள் போன வாழ்வு மீண்டதுபோல் புலர்ந்தது கீழ்த் திசையே! மானம் அழியாத் தமிழாய் ஞாயி றொளி தந்தான். கூட்டி மெழுகிக் கோலம் போட்டு வீட்டைக் கோலம் செய்வோம்; ஊட்டிய தாய்ப் பாலுடனே உவந்த தமிழ்ப் பாடி ஏட்டில் இலாக் கோலங்களை யாம் இழைப் போம் வாரீர்! வீதிக் கழகு செய்வ தெல்லாம் வீட்டிற் கழகு ஆமே; ஓதி உணராக் கல்வி தாயின் உடன் பிறந்த கலைகள் காதலுடன்கை வளரும் காண்பார் கண் மனமும் களிக்கும்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப. 56, 1978 211. வெண்ணிலாவில் தமிழப்பெண் நிலவில் மாந்தர் இறங்கும்நாள் நெடுநாள் ஆகா தென்கிறார்: குலவும் மகளே! விரைவினில் குடியே றினாள்எம் தமிழ்மகள் நிலவில் என்று பாரெலாம் நெடுகப் பேசச் செல்லுவாய். வெண்ணி லாவில் இறங்கிநீ வெற்றி கொடுக்கும் அறிவியல் தண்ட மிழ்ப்பெண் கொண்டதாய்த் தரையில் புகழும் வண்ணமே எண்ணற் கரிய உடுக்களின் இயல்ப றிந்து வருகநீ! மக்கள் வாழும் உலகினில் மதங்கள் சாதி வேற்றுமை சுக்கு நூறாய் ஆக்கிய தூய பெரியார் முகமென அக்க ரைக்கண் தோன்றிடும் அழகு நிலாவில் இறங்குவாய்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.58, 1978 குறிப்பு : நிலவுப் பயணத்துக்கு எதிராக பாவேந்தர் குட்டி நிலாவும் - வட்டநிலாவும் என்ற பாடல் இயற்றியுள்ளார். அப் பாடல் கருத்துக்கு, இங்கு வரும் பாடல் கருத்து மாறுபட்டு உள்ளது. 212. தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை பஃறொடை வெண்பா காலை விழித்தெழுந்தாள் கைம்மலரால் கண்துடைத்தாள் கோல மலர்கமழும் கூந்தல் திருத்தினாள் காந்தி முகம்கழுவிக் கைவிளக்கை ஏற்றி, மிகு சாந்த உரைபேசிப் பிள்ளைகளைத் தானெழுப்பி, வீணை எடுத்தாள் விளைத்தாள் அமுதத்தை! ஆணழகன் தன்நாதன் அவ்வமுதம் கேட்டெழுந்தான்! காதற் கணவன், கனியன்புப் பிள்ளைகள் சோதித் தமிழ்க்கவிதை சுருதியொடு கலக்கப் பாடினார் பாடிப் பனிக் காலைப் போதுக்குச் சூடி அழைக்கச் சுடரும் கிழக்கினிலே செம்மை ஒளியிற் சிரித்துத் தலைநிமிர்ந்தான்! அம்மை குடித்தனத்தை ஆளும் அரசியிவள் பிள்ளைகளைக் கூட்டிப்போய்ப் பீடத்தி லேயமைத்துப் பள்ளிக்கு வேண்டியநற் பாடங்கள் சொல்லிவிட்டு, நல்ல கதையுரைத்து ஞாலப் புதுமைகளைச் சொல்லி மகிழ்வித்தாள் தோயன்பு நாதன்முதல் எல்லாரும் இன்ப உணவுண்டார் மக்களெலாம் கல்விச்சாலை செல்லக் கட்டும் உடைப் பொத்தலெல்லாம் இல்லக் கிழத்தி எழில்தையற் காரியாய்த் தைத்துடுத்தி விட்டாள்: தனது கணவனிடம் அத்தினத்தில் ஆன பல ஆலோசனை பேசி நாதன் வெளிச்செல்ல நங்கை இனிதிருந்த போதில் வெளியூர்ப் புறத்தி லிருந்துதன் வீட்டுக்கு வந்த விருந்தாளி வீதியிலே போட்டிருந்த கல்தடுக்கப் பொத்தென்று வீழ்ந்ததனால் மண்டை யுடைத்துவந்தான்; வஞ்சி இரக்கத்தால் அண்டையிலே கட்டில் அதில்வளர்த்தி நற்சிகிச்சை தக்க படிபுரிந்தாள் தன்நாதன் வீடுவந்தான் ஒக்க இருந்தான். உடலும் நலமாச்சு. நல்ல சுகாதாரம் நாடிச் சமைத்திருந்த பல்லுணவும் இட்டாள்! பகல்கணக்கும் தான் எழுதிச் சித்திரத்தில் மக்கள் திருந்தப் படமெழுதி வைத்திருந்த நூலை மணவாள னோடிருந்து வாசித் தாள் நல்ல வடிவழகன் பேச்சமுதை ஆசித் தாள் இன்பம் அடைந்தாள்: சிறிதயர்ந்தாள்: பக்கத்து வீட்டுப் பருவதத்தாள் தான்வந்து சொக்கர் திருவிழாச் சோபிதத்தைச் சொல்லி, வருவாய்நாம் போய்வருவோம் மாலை திரும்பி வரு வோம் என்றாள்! இந்த வார்த்தைகளைக் கேட்ட இல்லக் கிழத்தியவள் சும்மா இருந்துவிட்டாள் நல்ல விழாவைத் தன் நாவால் மறுப்பாளா? வந்த விருந்தாளி பருவதத்தின் வார்த்தைக்குத் தந்த பதில்இதுவாம்: தையலரே கேளுங்கள்! சங்கீதக் கோகிலத்தைத் தாவும் கிளையினின்று அங்கு விழாவுக் கழைத்தால் வருவதுண்டோ? மக்களுக்கு வாத்தியென வாய்ந்த மருக்கொழுந்தைக் கக்கும் அனலில் கசக்க அழைப்பீரோ? தையற் றொழில்அன்னம் தாமரைப்பூ வைமறந்து வெய்யிற் சுரத்திடையே வீழ்த்த அழைப்பீரோ? வீட்டுக் கணக்கெழுதும் வித்தகத்தை அவ்விழாவில் போட்டுக் குலைக்கப் பொறாமை உமக்காமோ? காவியங்கள் கற்றுக் கவிசெய்து நல்லநல்ல ஓவியங்கள் தீட்டும் உயர்புலமைத் தேவியினை வம்புக் கிழுக்க வசமாமோ சொல்லிடுவீர் அம்மையீர், நல்ல அறிவும் திருவுமுறும் சீமாட்டி தன்னைத் திருவிளக்கைக் கல்வியெனும் மாமேட்டில் வீற்றிருக்கும் மங்கைக் கரசிதனைச் சொந்தக் கணவனுடன் சேய்கள் தொடர்பறவே எந்தநிமிஷமும் பிரிதல் ஏற்றதல்ல என்றுரைப்பேன். நிர்மலமாம் கல்வி நிறைந்தாள் இருந்தகுடி சர்வகலா சாலை எனத்தகுமே! அவ்வம்மை ஊமையென இருந்தாள் உங்கள் அழைப்புக்கே தீமை புரியாதீர் என்று தெரிவித்தான். இல்லக் கிழத்தி எதிரிருந்த மங்கைதனை முல்லை மலர்ந்த சிரித்த முகம்காட்டி, தோழி விழாவுக் கழைத்தாய், அதுவேண்டாம்; வாழி உலகென்றாள் வாய்ந்து. - முல்லைக்காடு, ப.24, 1948; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 வெளியீடு 3 213. அத்தர் வணிகர் அகவல் அரையணாக் காசில் இரசம் பூசி அண்ணே ஒரு ரூபாய்க்கு அத்தர் கொடு என்றான் கடைக்காரன் அத்தர் கடிதில் கொடுத்தான். காலையில் பார்த்தான் கடைக்காரன் ஆள் அதை! மூலையில் இருந்த முதலாளி கையில் அரையணாக் காசை அளித்தான். ஐயோ ஒரு ரூபாய் அத்தர் ஒழிந்ததே என்றான் எசமான் பார்த்தான் இதிலும் நமக்கு பதினைந்தணா இலாபம் பாரடா வேலையை என்று காசை எறிந்தான் பெட்டியில் போருக்குப் பின் வணிகர் யாரும் அத்தர்க் காரர் ஆனாரே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.82, 1978; குயில், 15.6.1948 214. அலுவலாளர் வேலை நிறுத்தம் அனைத்துநாட் டலுவலர் அலுவல் நிறுத்தம் பனையளவு இருக்கும் என்றனர் தினையள வாகச் சிறுத்தது வியப்பே. - நாள் மலர்கள், ப.36, 1978 215. சென்னையும் வேலை நிறுத்தமும் அகவல் அலுவல் நிறுத்தம் அப்படி இப்படி என்றனர் சென்னைக் கிளர்ச்சி எலிகளோ காம ராசர் காணி யாட்சியில் நெல்லொன்று பல்லொன்று பட்டதும் இல்லை. வால்அறுத் தோடின அவைகளே. - நாள் மலர்கள், ப.36, 1978; குயில், 26.7.1960 216. இரிசன் அழகன் நிலை மண்டிலம் படம் பிடிப்போனுக்குத் தொழில் திறம் இல்லை இரிசனை எடுத்த புகைப்ப டத்தால் இரிசன் எருமை போல இருந்தான் இரண்டாவ தெடுத்த புகைப்ப டத்தால் இரிசன் யானை போல இருந்தான் மூன்றாம் முறையாய் எடுத்த படத்தால் இரிசன் கிழவன் போல இருந்தான் படம் பிடிக்கும் தொழிலினன் தொழில்திறம் இலாததால் அன்றோ இந்த வேற்றுமை இரிசன், ஒருபடித் தான அழகியோன்; உரிய மனைக்கும் உலகி னுக்குமே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.97, 1978; குயில், 25.8.1959 217. கும்பகோண மகாமகம் (தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே-என்ற மெட்டு) கும்பலுண்டு கும்பகோண மாமகத்திலே - கும்பல் வெம்பலுண்டு வேகலுண்டு மாமகத்திலே நம்பலுண்டு தெய்விகத்தை மாமகத்திலே - நம்பி நக்கலுண்டு வெறுங்கையை வீடுவந்தபின் அம்பலத்திற் பெண்டுபிள்ளை அல்லலுறுங்கால் - ஓம் அரஹர என்பதுண்டு மாமகத்திலே சம்ப்ரமசங் கீதமுண்டு மாமகத்திலே - மக்கள் தாகமுற்று மாய்வதுண்டு மாமகத்திலே! தண்ணருட் கடவுளுண்டு மாமகத்திலே - வந்த சனங்களைக் காக்குமென்று சாத்திரமுண்டு கண்ணெதிரிற் பேதிவந்து தூக்குகையிலே - பாடை கட்டவும் சலிப்பதுண்டு மாமகத்திலே எண்ணிறந்த வசதிகள் அன்ன சத்திரம் - இவை எங்கணும் இருப்பதுண்டு மாமகத்திலே கண்பிதுங்கப் பார்ப்பனர்கள் உண்டுகளிப்பார் - நெட்டும் கைகளற்ற ஏழைமக்கள் ஏங்கி விழிப்பார்! சாத்திரங்கள் சொல்லுமந்த க்ஷேத்திரத்திலே - மோக்ஷம் தருகின்ற தீர்த்தமுண்டு சனங்களுக்கே ஆத்திரத்திற் குளக்கரை செல்லுவதுண்டு - சென்ற ஆளையே வெருட்ட அதில் நாற்றமுமுண்டு தோத்திரங்கள் செய்தபடி விஷசுரத்திலே - சிலர் தொத்திமுத்தி சேர்வதுண்டு மாமகத்திலே நேத்திரங்கள் உள்ளவர்கள் தீர்த்தகுளத்தில் - மக்கள் நெளிவதைக் கண்டுமனம் நெளிவதுண்டு! வர்த்தகமும் இன்றித்தொழில் வசதியின்றி - மக்கள் வாடுகின்ற தருணத்தில் மகமெனவும் முத்தியென்றும் பக்தியென்றும் மூலைமுடுக்கில் - பொய்ம் மூட்டைகளை விட்டுமக்கள் மூளைதனிலே பித்தமதை வளர்த்திடும் சுயநலத்தால் - பெரும் பீடைகளும் வறுமையும் பெருகுமன்றோ? மொத்தமழிந் திட்டபணம் கோடியினிலோர் - எள் மூக்கத்தனை பயனும் விளைவ துண்டோ? வானரத மேலிருந்து விளம்பரமாம் - ரயில் வர்த்தகர்க்கும் இதில்மிகக் கவலையுண்டோ? ஈனநிலையில் வருந்தும் மக்கள் பணத்தை - இதில் இழுத்துச்சுகம் பெருக்கும் எண்ணமல்லவோ? தானதருமங் களென்று சாற்றிடுவதும் - பல சாமிக்கென ஊர் மக்களை ஏய்த்திடுவதும் பானை ஒத்த வயிற்றினர் செல்வர்களுக்கும் - வஞ்சம் பார்ப்பனர்க்கும் புரோகிதர்க்கும் பசப்பர்கட்கும் இலாபம் வருவதன்றி ஏழைகளுக்கே - ஒரு நன்மை கிடைக்குமென்று யாவனுரைப்பான்? தீபமெடுத் திதன்உண்மை தேடுவதுண்டோ? - நாளும் தெளிந்து தெளிந்துரைக்கும் சேதியல்லவோ! கோபமிகப் பெருகி ஆத்திகமென்னும் - நாய் குரைக்கின்ற அளவினிற் குறைச்சலில்லை ஆபத்தில் வாழுகின்ற பொதுமக்கள்பால் - துளி அன்பும் செலுத்துவதில் எண்ணமில்லையே! - பாரதிதாசன் கவிதைகள், சமுதாயம் 1992; குடிஅரசு, 5. 3. 1933 218. உடைத் திருத்தம் உப்பு விற்கும் குப்பு - நீ ஒழுங்கை விட்டது தப்பு! செப்புப் போல்உ றுப்பு - வெளித் தெரிவதேந கைப்பு - தலையில் - உப்பு விற்கும் குப்பு! விற்குமே அ ரைக்கை - உள்ள மேலுக்கிர விக்கை? - ஊர் ஒப்பவேஉ டுக்கை - அன்றோ ஒழுங் கானந டத்தை - தலையில் - உப்பு விற்கும் குப்பு! தமிழ்ப் பெண்ணின் துப்பு - நீ தவறுவதா செப்பு அமைவானஉ டுப்பு - நீ அணிவது தான் கற்புத் - தலையில் - உப்பு விற்கும் குப்பு! சார்ந்த நாக ரீகம் - நம் தமிழர் கண்ட தாகும் மார்பு தெரிய விடுதல் - தமிழ் மாண்பினைக் கைவிடுதல் - தலையில் - உப்பு விற்கும் குப்பு! - பாரதிதாசன் கவிதைகள், சமுதாயம், ப.182, 1992 219. தெய்விகத் தாய்நாடு நாதந்தி னாதந்தி நாதந்தி னாதந்தி நாதந்தி னாதந்தி - தந்தி னாதந்தி நாதந்தி னாதந்தினா கலைகற்ற தாய்செல்வ நிலைபெற்ற தாய்நாடு மலைபெற்றதாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் புலையற்ற தெய்விகத்தாள். யோகத்தின் தாய்கொள்கை வேகத்தின் தாய்செய்யும் யாகத்தின்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் ஏகத்தின் தெய்விகத்தாள். சாந்தத்தின் தாய்நல்ல மாந்தர்க்குத் தாய்நீதி வேந்தர்க்குத் தாய்எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் வாய்ந்திட்ட தெய்விகத்தாள். அன்புக்குத் தாய்தோளின் வன்புக்குத் தாய்வேண்டும் இன்பத்தின்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் சம்பத்தின் தெய்விகத்தாள். வென்றிக்குத் தாய்கீதத் தென்றற்குத் தாய்நீத மன்றுக்குத்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் தன்னொத்த தெய்விகத்தாள். அமருக்குத் தாய்வெற்பின் இமயத்தின் தாய்ஆறு சமயத்தின்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் நமையீன்ற தெய்விகத்தாள். தீரர்க்குத் தாய்ஞான வீரர்க்குத் தாய்கற்பின் நாரீயர்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் சீருள்ள தெய்விகத்தாள். நீதத்தின் தாய்தெய்வ கீதத்தின் தாய்நாலு வேதத்தின்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் போதங்கொள் தெய்விகத்தாள். நீதிக்குத் தாய்நாலு சாதிக்குத் தாய்உண்மை போதிக்குந்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் காதல்செய் தெய்விகத்தாள். சீதைக்குத் தாய்இவர் மாதுக்குத் தாய்நல்அ சோதைக்குத்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் நீதங்கொள் தெய்விகத்தாள். புத்தர்க்குத் தாய்தேர்ந்த பக்தர்க்குத் தாய்கோடி சித்தர்க்குத்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் வித்தகத் தெய்விகத்தாள். வங்கர்க்குத் தாய்சீனச் சிங்கர்க்குத் தாய்வன்தெ லுங்கர்க்குத்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் இங்குற்ற தெய்விகத்தாள். நாரதன் தாய்நற்ப கீரதன் தாய்சோழ சேரனின்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் வீரங்கொள் தெய்விகத்தாள். கம்பற்குத் தாய்காளி நம்பற்குத் தாய்மற்ற சம்பத்தின்தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் இம்பர்க்குத் தெய்விகத்தாள். விசயர்க்குத் தாய்கண்ணன் இசைபெற்ற தாய்கீதை ராசமுற்றதாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் வசையற்ற தெய்விகத்தாள். அணிபெற்ற தாய்பொன்னின் மணிபெற்ற தாய்அத்தன் துணைபெற்றதாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் இணையற்ற தெய்விகத்தாள். குறிப்பு : யாகத்திலே - தவ வேகத்திலே எனத் தொடங்கும் பாரதியின் பாரதநாடு பாடலின் சாயலை இதில் காணலாம். - பழம் புதுப் பாடல்கள், ப. 45, 2005; தேச சேவகன், 7.11.1992 220. பெண்களே! பெண்களே உலகப் பெண்களே! பிழைகள் செய்பவர் ஆண்கள் அன்றோ? அழிவை அடைபவர் நீங்கள் அன்றோ? - பெண்களே உலகப் பெண்களே! அன்பு மனைவியைப் பிரிய நேர்ந்தால் அன்றிற் பறவையும் உயிரை விடுமே அதுவி மிலையே ஆடவரிடமே. - பெண்களே உலகப் பெண்களே! என்னுடம்பில் நான்பாதி மனைவி பாதி என்று சொல்லும் ஆடவர்கள் மறுவினாடி தன்மையிலா கோவலன்களாகின்றார், என்ன நீதி? துன்பம் எல்லாம் மாதருக்கோ? இன்பம் எல்லாம் ஆடவர்க்கோ? என்று தொலையும் இந்த ஆட்சி? - பெண்களே உலகப் பெண்களே! காதல் உணர்வோ உயிரின் இயற்கை, மாதர் மட்டும் சூளைக் கல்லோ? - பெண்களே உலகப் பெண்களே! பெண்களிடம் கற்பைஎதிர் பார்க்கும் ஆண்கள் பெண்களையே கற்பழித்துத் திரியலாமோ? பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்பு பொதுவன்றோ? மாதருலகை ஆளவந்தார் மமதையால் இரு கண்ணவிந்தார் மனவிளக்கும் அவியலாகுமோ? ஆடவர்க்கொரு நீதியோ - எழில் மாதர்கட்கொரு நீதியோ? - பெண்களே உலகப் பெண்களே! யாமரத்தின் தோலுரித்துப்பெண் யானைக்கே ஆண்யானை நீரூட்டும் இயற்கை அன்பும் தாமணந்த மனைவியர்மேல் காட்டுவாரோ? நங்கைமார்க்கிடர் செய்யும் ஆடவர் நாட்டில் வாழ்வது தீமையே. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்றார் வள்ளுவனார். இக்கால ஆடவர்கள் பெண்ணுயர்வை எண்ணுவரோ? - பெண்களே உலகப் பெண்களே! - பாரதிதாசன் கவிதைகள், சமுதாயம், ப.106, 1992 221. பெருமாள் கோயில் தெருவில் அலார் பெருமாள்கோ யில்தெருவில் பேரிடிமு ழக்கம் இரவு முழுதும் இருக்கும் - இருபது கொங்கம்பட் டார்வண்டிக் கூட்டம் பழுதானால் இங்கென்ன இந்த அலார்? இரவெல்லாம் பகள் இருபதை வைத்துத் தெருவார்க்குத் தூக்கம் சிறிதும் - வராதபடி கொங்கம்பட் டார்செய்தார் என்றால் அவருக்கே எங்கும் பட்டாவா இயம்பு. - பழம் புதுப் பாடல்கள், ப.385, 2005; குயில், 5.7.1960 222. அமரிக்கரைப் பார்! உருசியரைப் பார் வெண்பா காட்டுப் புலிமகிழும்! காண்பார்க்கும் வீரம்வரும்! ஆட்டப் புலிசாம்; அடிமைநினை - வூட்டும்! அமரிக்க ரைப்பார்! உருசிய ரைப்பார்! அமிழ்துண்டார்! நஞ்சை யுண்டார்! - பழம் புதுப் பாடல்கள், ப.386, 2005; குயில், 5.7.1960 223. முலிம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் எண்சீர் விருத்தம் ஒன்றுசேர் உயர்வுசெய் உன்இ னத்தை! ஒன்றுகொடு விரோதிகளின் உரத்தின் மேலே! நன்றுசெய் அஞ்சாதே! வெற்றி நோக்கி, நடத்து! முன் வைத்தகால் பின்வைக் காதே! இன்றிந்த நாட்டினிலே பிறந்தோர்க் கெல்லாம் எதுவேண்டும்? போராடும் சக்தி வேண்டும், சென்றிடுமோ உன்னுரிமை? விடாதே! முசுலிம் சேனாதி பதியேநீ ஏறுமேன் மேலே! இந்தியர்கள் யாரும் எனும் நோக்க மின்றி இம்மியள வேபேதம் கொண்டிட் டாலும் அந்தநெடும் பாம்பினத்தின் விஷப்பல் லைப்போய் அடியோடு பெயர்த்துவிடு! இரக்கம் வேண்டாம்! சிந்துபொழி யும்தேசம் கேட்ப தெல்லாம் திறல்பொழியும் வீரனைத்தான் நாயை யன்று! சிந்துமெனில் உன்மானம் சாதல் நன்று! செல்விகத்து முசுலிம்நற் சிங்கக் கன்றே! - பழம் புதுப் பாடல்கள், ப.171, 2005; குடிஅரசு, 5.3.1938; 224. அறிவை ஆசையால் தோண்டினால் புதிய மனம் உண்டாக்கும் வெண்பா சிறிதெழுதத் தேடி நிறையப்படிப்பாய்! பிறர்அடி பார்த்துப் பிழைப்போன் - வறியன்! கருவி விருப்பாய் அறிவுநிலம் கல்லி வருவி புதிய மனம். - பழம் புதுப் பாடல்கள், ப.387, 2005; குயில், 26.7.1960 225. நீ ஒரு பாவாணன் வெண்பா பாப்புலவர் பாட்டும், பயனும், புணர்ச்சியும் யாப்பும் பயில்க! எழில்ஒன்றைப் - பார்ப்பாயேல் ஆர்க்கும் அதுசொல்ல ஆசைகொள் வானுள்ளம் வார்க்குமே செய்யுள் மழை. - பழம் புதுப் பாடல்கள், ப.387, 2005; குயில், 26.7.1960 226. மாணவர்க்கு உறங்கும் நேரந்தான் ஓய்வு நேரம் வெண்பா உறங்கும்நே ரந்தான் ஒழிவுநே ரம்! பின் அறம்பொருள் இன்பம் அளிக்கும் - புறம்அகம் ஆன பழந்தமிழ்நூல், ஐயம் அறக்கற்க மானமுறு மாணவர் ஈங்கு. - பழம் புதுப் பாடல்கள், ப.387, 2005 227. ஆளவந்தார் முதற்கடன் கல்வி அளிப்பது வெண்பா பகுத்துணர்ந்து கல்வி பயிலவந் தார்க்கு வகுப்பில்லை என்ற வறுமை - நகைப்பளிக்கும்! மண்கொடுத்தென்? பொன்கொடுத்தென்? மாந்தர்க்கு வாழ்வளிக்கும் கண்கொடுத்தல் அன்றோ கடன். - பழம்புதுப் பாடல்கள், ப.386, 2005; குயில், 12.7.1960 228. நினைவாற்றல் வேண்டும் தேடல் தமிழ்ச்செல்வம்! சேர்த்தல் தமிழ்ஒழுக்கம்! நாடல் தமிழர்நலம் நன்றென்க - பாடல் புனைவாற்றல் உண்டான போதும் எவர்க்கும் நினைவாற்றல் வேண்டும் நிலத்து. - பழம்புதுப் பாடல்கள், ப.388, 2005; குயில், 26.7.1960 229. எழுத்தை அழகாய் எழுது மட்டுப் படாத இலக்கியச்சீர் வாய்த்தாலும் நட்டு நடுமுதுகு வில்லாக்கப் - பட்டுக் கழுத்தை வளைக்காமல் கைச்சோர்வில் லாமல் எழுத்தை அழகாய் எழுது. - பழம்புதுப் பாடல்கள், ப.388, 2005; குயில், 26.7.1960 230. கம்மாளன் பிள்ளை கீரிப்பிள் ளைக்குக் கிளிப்பிள்ளை கீச்சிடுதல் நேரிலே கண்டுநெடு வேற்பிள்ளை - ஓர்மயில்மேல் கும்மாளம் போட்டான்; குறிகெட்டான் வார்ப்படத்துக் கம்மாளன் கைப்பிள்ளை தான். - பழம்புதுப் பாடல்கள், ப.389, 2005; குயில், 16.8.1960 231. செத்த பிள்ளையை ஆற்றில் எறிவது! கற்பு நிலையறியார் கண்டவரைத் தாம்கூடிப் பெற்ற குழந்தைகளைப் பேராற்றில் - எற்றும் வடக்கர் வழக்கம் அடக்க நினைத்தால் நடக்கா துலகமன்றில் நாட்டு. - பழம் புதுப் பாடல்கள், ப.289, 2005; குயில், 26.8.1958 232. மகளிர் ஒழுக்கம் காலிற் செருப்பணிய வேண்டும் - பெண்கள் கையிற் குடைபிடிக்க வேண்டும் மேலுக்குத் துவைத்தநல் லாடை - அது மிகவும் அழகு செய்யப் போதும் சோலை மலரணிதல் நன்று - உடல் தூய்மை காத்திடுதல் வேண்டும் மாலை உலவிடுதல் வேண்டும் - பெண்கள் மார்பும் தோளும் மறை வாக்கி 1 உடம்பு தெரியும்மெல் லாடை - பெண்கள் உடுத்தல் நாகரிகம் அன்று! படத்தில் நடிக்கவரும் பெண்கள் - மக்கள் பணத்தைப் பறிப்பதற் காக உடுக்கை இலாதும்நடிப் பார்கள் - அதை ஒப்பி மேற் கொள்ள லாமா? நடக்கும் திரைப்படங்கள் தம்மில் - பெண்கள் நல்லதை ஆதரிக்க வேண்டும். 2 ஆள், ஒரு பெண்ணைவிலை கொள்ள - முதல் அச்சாரம் கேட்பதவள் சிரிப்பே! காளை கதைதெரிந்த பின்னர் - அவள் கண்ணும் கருத்தும் உடன் பட்டால் பாளை பிளக்கும் ஒருகோடி - பெறும் பல்லென்ற முத்துப் பிறக்கும்! வேளுக் கடிமையல்லர் பெண்கள் - பெண்கள் மேன்மைக் கடிமை அந்த வேட்கை! 3 தக்கவன் மீதில்வைத்த அன்பை - ஒரு சாதி விலக்கிடுதல் இல்லை இக்காலம் தமிழர்கள் சாதி - என்ற இழுக்கினில் வழுக்கியும் வீழார் எக்காலும் தமிழினப் பெண்கள் - தமிழ் இனத்தவ னைமணக்க வேண்டும் தெற்கே உரிமைவர வேண்டும் - இதைத் தெரிந்து நடந்திடுதல் வேண்டும். 4 - பழம் புதுப் பாடல்கள், ப.379, 2005; குயில், 17.11.1959 233. மானம் மறையா மெல்லுடை அகவல் இம்முறை புதுமுறை என்றே எண்ணி மெய்ம்மானம் மறையா மெல்லுடை பூண்டு கண்ணாடி தன்னெதிர் நின்றுடல் கண்டே உள்நிலை ஒடிய ஒதுங்கும் ஒண்டொடி என்மகளே என் றெதிரில் வந்ததன் அன்னை காணவும் நாணிப் பொன்னுடல் போர்த்தனள் கைகால் கொண்டே! - பழம் புதுப் பாடல்கள், ப.328, 2005; குயில், பொங்கல் மலர், 13.1.1959 234. சாராய விற்பனை ஊர்ச்சாரா யக்கடை ஒன்றிரண்டு முன்பெல்லாம் காய்ச்சா இடமிந்நாள் கண்டதில்லை - காய்ச்சியதை அப்பன் விற்பான் பிள்ளைவிற்பான் அம்மைவிற்பாள் போலீசுச் சிப்பன்1 விற்பான் சேர்ந்து விற்பான் 2சீப்பு. - பழம் புதுப் பாடல்கள், ப.286, 2005; குயில், 12.8.1958 235. தச்சுக் கலைத்திறம் அகவல் அழகிய கருங்கல் பாவை என்றன் கண்ணில் அழகெலாம் காட்டிப் பண்ணொன்று காதிலும் பாடிய தென்னே! - பழம் புதுப் பாடல்கள், ப.283, 2005; குயில், 15.7.1948 1. சிப்பந்தி, 2. (சீஃப்) தலைவன் 236. நல்லவர் ஆண்ட புதுவையிலே நரிகளுக்கே இன்னும் நாட்டாண்மையா நல்லவர் ஆண்ட புதுவையிலே - இந்த நரிகளுக் கேஇன்னும் நாட்டாண்மையா மிக - நல்லவர் கல்லடி பட்டது போதாதா? மக்கள் கத்தியால் வெட்டுண்டு செத்தது போதாதா? பொல்லாத மாமாக்கள் ஆலைக்குள் புகுந்து பூவைமாரைக் கூட்டிப் போனது போதாதா - நல்லவர் கையிற் பணமெடுத்து வெளிவர முடிந்ததா? கண்ணீர் விடாமல் உயிர் வாழ்ந்திட முடிந்ததா? ஐயோ ஐயோ என்றே அலறாத மக்களை அந்த நாளில் நாம் காண முடிந்ததா? - நல்லவர் அடியுதை பட்டவர் அழத்தான் முடிந்ததா? அதிகாரியிடம் சொல்ல எண்ணத்தான் முடிந்ததா? கடையைத் திறந்தவர் விற்கத்தான் முடிந்ததா? கண்ணான மாணவர்கள் கற்கத்தான் முடிந்ததா? - நல்லவர் அரசினர் பொருளெலாம் அவர்கள் பொருளே அன்றியும் ஊரார் பொருள் அவர் பொருளே இருந்தவர் பிழைத்தார் எனில் அவர் அருளே எரிந்த விளக்குண்டோ வீடெல்லாம் இருளே - நல்லவர் தோன்றுவான் ஒருவன் ஆள்வோர் காலை வருடுவான் தொழிலாளர் தலைவன் என்பான் பச்சையாய்த் திருடுவான் ஈன்றதாய் தடுத்தாலும் ஊரை வாழவிடான் இரக்கம் காட்டமனம் ஒப்பிடான் ஒப்பிடான் - நல்லவர் - பழம் புதுப் பாடல்கள், ப.361, 2005; குயில், 7.7.1959 237. உருசி உதைப்பும், அமரிக்கா அதைப்பும் குமாய்த்தீவு மேற்சீனர் குண்டுமேற் குண்டு டமார்டமார் என்றுபோட் டார்கள் - சமாய் சமாய் என்றே உருசி1 இயம்ப, அமெரிக்கா இன்றே கிளம்பிற் றெதிர்த்து! 238. உருசிக்கும் அமெரிக்காவுக்கும் - நாம் கூறும் அமைவு அரிசிஎலாம் ஆயுதமாய் மாற்றி யமைத்த உருசிஅம ரிக்காவில் உள்ள - அரசினரே, கண்ணடியில் மக்கள்மேல் காட்ட அருளுண்டா மண்ணடியில் வீழ்கஉம் வாழ்வு. - பழம் புதுப் பாடல்கள், ப.303-304, 2005; குயில், 30.9.1958 1. ரஷ்யா 239. மக்கட்குத் தொல்லையில்லாத வழி ஐசன் அவரும், குருசேவும் போர்க்களத்தில் கைசலிக்கச் சண்டையிட்டுக் காட்டப்பட்டும் - மெய்யாய் அவர்வென்றால் வென்ற தவர்நாடாம் அன்றி இவர்வென்றால் வென்றதவர் நாடு. 240. உலகப்போர் மூட்டலின் உயிர்விடுதல் நன்று எத்தனை ஆயிரங் கோடி இழக்கின்றார் ஒத்துலக மக்கள்எலாம் உங்களால் - பித்தர்களே வீம்புண்டு சண்டை விளைக்கின்றீர் வீட்டில் முழத் தாம்புண்டு சாதலே நன்று. - பழம் புதுப் பாடல்கள், ப.303-304, 2005; குயில், 30.9.1958 241. சாகாமைக்கு ஒழுக்கம் காரணம் அகவல் அசையா துயர்பனி அடுக்கல் போல விசுவேசு ரையா மிகுநாள் வாழ்வதற்கு உள்ள காரணம் அவன் ஒழுக்கமே யாகும்; கடவுள் பிள்ளை என்று கழறும் ஞானசம் பந்தன் இளமையிற் போனதற்கு உள்ள காரணம் அவன் தீய ஒழுக்கமே! கோயில் உருவம் குருக்கள் படையல் வாயில் ஆகா வாழ்நாள் மிகுதிக்கு! நாட்டு மக்களே நவிலுதல் கேட்பீர் ஒழுக்கம் ஓம்புக! வாழலாம். உங்கள் மக்களை நீணான் வாழ வைக்கலாம் தமிழகம் வாழும் நன்றே! - பழம் புதுப் பாடல்கள், ப.378, 2005; குயில், 6.10.1959 242. சமூகத் திருத்தம் சுற்று மதிற்சுவரின் உட்புறத்திலே - பெரும் சோதி தெரிந்ததொரு ராத்திரியிலே, உற்று- க் கவனிக்கையில் சாமியெழுந்தே - அங் குலவி வருவதென்ற சேதியறிந்தார். பற்றித் தொடர்ந்த சிலபறையர் உள்ளம் - தங்கள் பாழும் உடலிருக்கத் தலையைமட்டும் சற்றந்தக் கோயிலுக்குள் நுழைத்துவிட்டார்; இதைச் சாமிக் குடையவர்கள் அறிந்துவிட்டார். அச்ச மிகுந்ததந்தப் பறையருக்கே! - எனில் ஆசை யிருக்குதந்தத் தரிசனத்தில் உச்சி தனிற்பறக்க இறக்கையில்லை - அங் குயர்ந்த மரக்கிளையில் தொத்தமுயன்றார். கச்சை தனைவரிந்து சாமிக்குடையோர் - அங்குக் காணப் பறையர்களைத் தொடர்ந்துவந்தார் பச்சைக் கிளியினொடு பறையரெலாம் - மண்ணில் பதிய விழும்படிக்கு நொறுக்கப்பட்டார். வீழ்ந்து குலைந்தவரை மேலும்மடித்தார் - இந்த வெற்றி கிடைத்தற்கு மகிழ்ச்சிகொண்டார்! வாழ்ந்து மதியிழந்த மனிதர்களே மனத்தில் உயர்த்தியென நினைப்பரே! தாழ்ந்த குலம்தமக்குள் உயர்ந்திடவே - சென்று தாவும் கிளையினையும் முறிப்பதுண்டோ? தாழ்ந்த குலம்மென இங்கு உரைப்பீரேல் - இந்த சமூகம் இழிந்ததென்று நானுரைப்பனே. - பழம் புதுப் பாடல்கள், ப.95, 2005; ஆத்மசக்தி, அக்டோபர் 1923; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், மார்ச்-ஏப்ரல், 1935; 243. கல்வி நீரோடை வறியோர்க்1 கெல்லாம் கல்வியின் வாடை வரவிட வில்லை மதக்குருக்களின்2 மேடை நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை நாடெல்லாம் பாய்ந்தது கல்விநீ ரோடை - பழம் புதுப் பாடல்கள், ப.118, 2005 குறிப்பு : பிரெஞ்சு நாட்டில் மதக் குருமார்களின் கையில் இருந்த கல்வியை மக்களுக்கு உரியதாகப் போராடி மாற்றிய கல்விச் சீர்திருத்தத் தந்தை எனக் கருதப்பட்டவரும் குடியரசுத் தலைவராக இருந்தவருமாகிய ழுய்ல் பெரி (Jules Ferry) யின் நூற்றாண்டு விழா புதுவையில் கொண்டாடப்பட்டபோது பாரதிதாசன் இயற்றி அரங்கேற்றப்பட்ட பாடலின் ஒரு பகுதி. இப் பகுதியைப் போல ஆறு பகுதிகளைக் கொண்டதான முழுப் பாடலைப் பாடிக் கவிஞர் நிறைவு செய்தார் (இரா. நெடுஞ்செழியன், 1994) என்று குறிக்கப்பட்டதுள்ளது. இப்பாடலை விழாவில் கவிஞரே பாடினார் என்றும் (இரா. நெடுஞ்செழியன், 1946) (மன்னர் மன்னன் 1985) மாணவர்களால் பாடப்பட்டது என்றும் (முருகுசுந்தரம் 1979) இருவேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 1. வறியவர்க்கு (க. F.), 2. மதகுருக்களின் (பா. நி.) (க. கு.) 244. தொழிலாளர் தோழமைப் பயன் (ஆருக்குத்தான் தெரியும் அவர்மகிமை என்ற மெட்டு) பல்லவி ஏழமை1 என்பதேது? தொழில் மக்கள்பால் தோழமை உணர்ச்சிதான் தோன்றிடும் போது - ஏ2 சரணம் வாழும் நினைப்புடைய மாந்தரின் கூட்டம் வசிக்க இடமோ இந்த மண்ணில் எதேஷ்டம் சூழும் திசைமுழுதும் விளைபயி ரூட்டம் சோற்றுக்குப் போதுமிதில் ஏனினி வாட்டம்? - ஏ கையினை விரித்துத்தம் மெய்யினை மூடும் கணக்கற்ற கோடிமக்கள் கவலையும் ஓடும் நெய்யும் உடையனைத்தும் யாரும்அன் போடும் நித்தம் உடுத்திமீதம் வைத்தலும் கூடும்! - ஏ காலுக்குச் செருப்புண்டு கவிகைகள் கிடைக்கும் கால்நடை மிகஉண்டு பால்தயிர் கொடுக்கும் மேலுக்கு மிகுசுகா தாரம்வந் தடுக்கும் வெம்மைநோய் அசுத்தங்கள் விரைந்தோட்ட மெடுக்கும் - ஏ எலும்பு முறியும்படி உழைப்பது தீரும் எந்திர உதவிகள் மிகுதியும் சாரும் பொலிந்து புதுத்தொழில்கள் புலன்களிற்சேரும் பொதுவில் நலமடைவர் புவியிலெல் லோரும் - ஏ கடவுளை மதங்களைக் காப்பவர் என்போர் கருணையி லாதநிலம் பொருள்நனி வாய்ந்தோர் உடைமை பறித்தஇந்தக் கொடியரிற் கொடியோர் ஒழிந்தபின்பே நலம்உறுவர் இவ்வுலகோர் - ஏ - பழம் புதுப் பாடல்கள், ப.124, 2005; குடிஅரசு, 19.3.1933 1. ஏழ்மை, 2. கண்ணிதோறும் மறித்துவரும் முதற்சொல் ஏழ எனக் குறிக்கப்பட்டுள்ளது. 245. பிழைப்புக்கு வழி (கந்தா காருண்யனே - என்ற மெட்டு) தேவா ராதனைக்கே - தெய்வ பூசனைக்கே - தேவா கோவில் கோபுரம் கட்டவே - மத குருக்கள் வீட்டினிற் கொட்டவே பாவம் போக்க என்றே - கைகள் கூப்பி நின்றே - பாவம் தாவியே பொருள் தேடியே - இதில் தந்ததோ சத கோடியே வீட்டுக்கோர் குருக்கள் - அதன் மேற்கடவுள் - வீட்டு நாட்டுக் கோயிலிற் பஞ்சமோ - இதில் நடந்த செலவுகள் கொஞ்சமோ மூட்டை முடிசுமந்தே - நதி மலை கடந்தே - மூட்டை தேட்டம் ஒழித்ததிற் கணக்கில்லை - செய்த தீர்த்த யாத்திரைக் கேதெல்லை பக்தி மேவலினால் - முக்தி ஆவலினால் - பக்தி இத்தனை நாள் இத்தனைப்பேர் - இத்தனை பொருள் போக்கியும் செத்தால் புதைத்தற்கே - இங்குச் செலவுக் கில்லை - செத்தால் பித்தச் செலவுகள் நீக்குவோம் - நாம் பிழைப்புக்கே அதை ஆக்குவோம். - பழம் புதுப் பாடல்கள், ப.126, 2005; குடிஅரசு, 16.4.1932 246. தொழிலாளர் கேள்வி (சகானா கண்ணிகள்) காடு மலைகள் உண்டு புவியில் - பெருங் கடலும் வயலும் மிகஉண்டு ஓடை நதிகள் சுனை ஏரி - இவை உண்டு புவி முழுதும் உண்டு நாடி அறியும் அறிவுண்டு - நன்று நடத்தத் தெரியும் எங்கள் வாழ்வைப் பாடு படமுடியும் எம்மால் - அதன் பயனை அடைந்திடவும் தெரியும் 1 மண்ணின் பரப்பு மிகப்பெரிது - மற்றும் வாழ்வுக் குரிய பொருள்மிகுதி. எண்ணிக் கணக்கெடுத்த போது - மக்கள் இருக்கப் படுக்க இடம்போதும் கண்ணை மிகத்திறந்து பார்த்தோம் - பஞ்சுக் காடு துணிகளுக்குப் போதும் வண்ண முடையஇந்த லோகம் - எங்கள் மனத்தில் இனிமைதனைச் சேர்க்கும் 2 கடலை அடைப்பதெங்கள் தோள்கள் - மலை கடுகென நொறுக்குவம் நாங்கள் கடலை இருந்தஇடம் மறுநாள் - மதிற் சுவர்கள் எழுப்பும் எங்கள் விரல்கள். உடலை அசைத்தஓர் அசைப்பால் - இந்த உலகம் தாழும் அன்றி உயரும் மடையைத் திருத்துவதும் நாங்கள் - உயர் வானை அளப்பதுவும் நாங்கள். 3 உலகம் இருக்க அதில்எங்கள் - நல்ல உழைப்பும் மிகஇருக்க இடையில் கலகம் என்ன? மதம் என்ன? - ஒரு கடவுள் என்ன? மதம் என்ன? அலையும் வேட்டை நாய்போலே - உள்ள ஆட்சி என்ன? வெறி என்ன? வலுவில் யுத்த உலைமூட்டி - எம்மை வருத்த எண்ணிடுதல் என்ன? 4 - பழம் புதுப் பாடல்கள், ப.140, 2005; நகரதூதன், 11.3.1934 247. தறிநெய்வோர் தவிப்பு (1) தறிநெய்வோர் பரிதவித்தார் பல்லாயி ரம்பேர் ஊண்வேண்டித் தொழிலாளர் உழைக்கும் போதில் உயர்லாபம் முதலாளி அடைய வேண்டி நாணயமில் லாவகையில் நடந்த தாலே நல்லவியா பாரம்ந சிந்த தென்றார் ஒருசிலரின் செய்கையினால் ஊர்மக்கள் துடிதுடித்தார் உதவுவீர் ஏழைகட்கே முதலாளிகள்! - தறிநெய்வோர். . . உழவற்ற நேரத்தில் உழவன் மாட்டை உணவுதந்து காத்திடுதல் நீங்கள் கண்டீர் தொழிலற்ற நேரத்தில் தொழிலா ளர்க்குச் சோறிட்டுக் காத்திடுதல் உங்கள் கடனன்றோ! ஊரைவிட்டு ஓடுவதோ உணவின்றி ஏழைமக்கள் உதவுவீர் ஏழைகட்கே முதலாளிகாள்! ஊரார் உழைப்பினிலே திருவிழாவிலே பெட்டிவாணங் கொளுத்த ஏழைமக்கள் எத்தனைநாள் சகித்திருப்பார்? - பழம் புதுப் பாடல்கள், ப.144, 2005 248. தறிநெய்வோர் தவிப்பு (2) காலை தொடங்கியவர் காட்டும் தறித்தொழில் மாலை வரைக்கும் உடல்வாட உழைத்துழைத்து நாலைந்து பணம்பெற்று நாளைக் கடந்திவந்தோம் பாலுண்ண எண்ணவில்லை. பழமுண்ண எண்ணவில்லை சாலில் பழங்கூழைத் தகுதியென் றெண்ணிவந்தோம் மேலுக்கு நல்லதொரு வேட்டி தரித்ததில்லை வேலைத் தறிவேலையே யன்றி வேறொரு வேலையும் -கண்டதில்லை நாளெல்லாம் தறித்தொழிலை நாங்கள் நடத்துகையில் தோளும் மெலிந்ததுண்டு துடையும் மெலிந்ததுண்டு ஆளும் முதலாளிகள் எங்கள் அவதியைப் பார்ப்பதில்லை மாளுமட்டும் அவர் வழிசெய்வா ரென்றிருந்தோம் தேளும் மணிக்கொடுக்கைத் திருப்பிக் கொட்டியதைப்போல் நீளும் சுடர்விளக்கு திடுக்கென்று நின்றதைப்போல் மூளும் தறிவேலைக்கு இன்றுதொடங்க முற்றென்று விட்டார் தொழிலில்லை இல்லையென்று முதலாளி சொன்னதுண்டு வழியுமக் கென்னவென்று அவர்எம்மைக் கேட்கவில்லை விழிதனில் நீர்பெருக எம்வீடு போனவுடன் அழுகின்ற பெண்டுபிள்ளை அலறும் குழந்தைகளும் பொழுதெல்லாம் பசிவாதை போக்க வகையுமின்றிப் புழுவாய்த் துடிதுடித்துப் புரளுகின்ற கோலத்தில் கழுதை மகனே கண்ணாடி விமானம் காட்ட நினைக்கின்றனை ஊர்பெற்ற ஏழைமக்கள் உழைத்த உழைப்பினிலே பேர்பெற்ற பிள்ளைபெற்றுப் பெருத்த செல்வமும்பெற்றுப் போர்வைக்குப் பட்டணிந்து பொழுதைப் போக்குதற்குத் தேர்செய்து வாகனங்கள் திருவிழாக்கள் கொண்டாடுவர் ஆர்க்க உழைத்தவரின் அவதியைப் பார்ப்பதில்லை மார்பில் சந்தனம் பூசி மகா தர்மகர்த்தர் என்பர் வேர்க்குதடா பணக்காரனின் கொழுத்த விளையாட்டைக் - காண்பதற்கு! - பழம் புதுப் பாடல்கள், ப. 145, 2005 குறிப்பு : முதல் 15 வரிகள் வேறுபட்ட தனியமைப்பினவாக உள்ளன. அவை தறி நெய்வோர் தவிப்பு எனத் தனிப் பாடலாய்த் தரப்பட்டுள்ளன. யாப்பு அமைப்பிலும் படர்க்கை இடத்தில் தறிநெய்வோர் குறிக்கப்படுவதிலும் பின்னர் வரும் பகுதிகளிலிருந்து இவை வேறுபட்டுள்ளன. முன்பகுதி 15 வரிகளையடுத்து, புதுவையில் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் முதன்முதலாக நிறுவிய திரு. நடேச முதலியார் நினைவுகூர்ந்த பாடல்கள் இவை என்னும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. (க. கு. ப. 216) அரிமா நோக்கில் இரண்டு பகுதிகளும் திரு. நடேசனாரால் நினைவுகூரப் பட்டவை யாகக் கொள்ளலாமா என்பதும் இரண்டு பாடல்களாக இவற்றைக் கொள்ள முடியுமா என்பதும் எண்ணத்தக்கன. நினைவிலிருந்து கூறப்பட்டவையாதலால் பல இடங்களில் யாப்புச் சீர்மை குறைந்துள்ளது. 249. தொழிற்கல்வி வேண்டும் (வேலவா எனை ஆளாக்கித் தருணம் என்ற மெட்டு) தொழிற்கல்வி வேண்டு துயர்க்கடல் தாண்டு தொழிற்கல்வியாலே சுகப்படும் தேசம் தொண்டு படிப்பினிலே விளைந்தது மோசம் தொழிற்பொருள் மிகுதி தொழில்செயத் தகுதி தொழிற்சாலை எங்கெங்கும் தோன்றிடச் செய்வாய் துன்பக் கடல்கடந்த நீஇனி துய்வாய் தொழில்முதல் மேவும் தோன்றும்பின் யாவும் தொழிலறி யாதவர் இருப்பது விரசம் தொழில்தொழில் என்றுசொல்லி முழக்குக முரசம் - பழம் புதுப் பாடல்கள், ப.147, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935, வெளியீடு 1 250. நண்பனுக்குக் கடன்படும் தீமையுணர்த்தல் (ஐயா ஒருசேதி ஐயா ஒருசேதி என்ற லாவணி மெட்டு) அந்தோ கடன்தீதே அந்தோ கடன்தீதே அந்தோ கடன்தீதே என்நேசா வாங்கொணாதே! நொந்து பிறரிடம்போய்க் கடனென்று கேட்டு நூற்றுக் கிரண்டானாலும் எழுதுவார் சீட்டு சிந்தனை இன்றியதில் கையொப்பம் போட்டுத் தெருச்சிரிக் காதவரைக் காட்டு - அந் வாங்கும் பொழுதுகடன் மிகவும் கொண்டாட்டம் வைத்த கெடுக்கடந்தால் அதிக திண்டாட்டம் ஈங்குவை பணம் என்றால் கால்கைகள் ஆட்டம் எடுப்பார்பின் அயலூர் ஓட்டம் - அந் கடன்தரு வானோர் கசடனா னாலும் கடன்தரும் போதவன் துரையினைப் போலும் திடமொடு பேசுவான் அவனிடம் மேலும் சிக்கினால் மானமே நிர்மூலம் - அந் கடன்பட்டுக் கடன்பட்டுக் கெட்டவர் தொகையே கணக்கிட முடியுமோ அப்பெரும் பகையே விடுவது மேலென்று நான்சொல்லல் மிகையே விளம்புதல் கேள்பெருந் தகையே - அந் வரவுக்குத் தக்கபடி செலவிடல் வேண்டும் வட்டிக்கு வாங்குவது தொலைந்திட வேண்டும் சிரமத்தை விளைவிக்கும் டாம்பிகம் தூண்டும் செலவை நிறுத்துதலும் வேண்டும். - அந் - பழம் புதுப் பாடல்கள், ப.148, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935, வெளியீடு 1 251. படியாமை நினைந்து வருந்தல் (திருக்கடையூர் தனிலே என்ற மெட்டு) எப்படி நான் பிழைப்பேன் - நாளை எவ்விதத்திற் கழிப்பேன் - என் அப்பா இறந்தபின் ஆதிவிற்றுத் தின்றேன் அருமைப் பிள்ளை பசி கண்டிதோ துடிக்கின்றேன் வயது முதிர்ந்த அன்னை - தின்ன வாங்கிவா என்றாள் என்னை - மிக நயந்து மனைவியோர் நல்ல தொழில்செய்து நாற்பது ரூபாய் சம்பாத்தியம் தேடென்றாள் அந்தோ படிப்பில்லையே - எனக் கதனாலிந்தத் தொல்லையே - என் தந்தை கல்விச் சாலை போடா என்றப்போது சாற்றினார் கேட்டேனா? அழுகின்றே னிப்போது மாத மிரண்டொருநாள் - நான் மாணவரோடு செல்வேன் - அன்று பாதிவழிச் சென்று வீட்டிற்குத் திரும்பிப் பள்ளிக்கூடம் இல்லைஅப்பா என்பேன் இன்று - என் பெண்டு பிள்ளை அன்னைநான் - உண்டு கண்டோர் நகைத்திடத்தான் - நான் அண்டியபேர் உனக்குண்டா படிப்பென்றார் ஆகையினாற் கூலிவேலை இனிச்செய்தே - எப் - பழம் புதுப் பாடல்கள், ப.149, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935, வெளியீடு 1 252. இனாம் ஜோதிஷம்! அகவல் உண்மைப் பலனை உணர வேண்டுமா? நன்மை தீமை யறிய வேண்டுமா? அப்படி யானால் இப்பொழு தேநீர் அடியில் காணும் கூப்பனை நிறைத்துக் கடிதம் எழுதும் நேரம், அல்லது ஜென்ம நக்ஷத்ரம் எழுதி, அதனுடன் அனுப்புவீர் இரண்டணா டாம்பும் வைத்து மூன்று கேள்விகள் கேட்க வேண்டும் மூன்றின் விடையும் இனாமாய்க் கிடைக்கும் நவில்வ தெதற்கெனில் நீங்கள் கவிதா மண்டலம் நேயர் தாமே! குறிப்பு: ஜோதிஷம் C/o எனக் குறிப்பிட்டு, கவிதாமண்டலம் ஆபீசிற்கு அனுப்பவும். கூப்பன் கடிதம் எழுதும் நேரம் அல்லது ஜென்ம நக்ஷத்திரம் பெயர் முழுவிலாசம் - பழம் புதுப் பாடல்கள், ப.150, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935, வெளியீடு 1 குறிப்பு : கவிதா மண்டலம் இதழை வளர்க்கும் நோக்கத்தில் அதன் நேயர் களுக்குப் பணமின்றிப் பலன்சொல்லப்படும் என்னும் இவ் விளம்பரப் பாட்டு முதல் வெளியீடு தொடங்கிப் பலவற்றிலும் இடம்பெற்றுள்ளது. இப்பாட்டின் ஈற்றடிகள் இரண்டும் பாரதிதாசனின் பாடுமுறை - கருத்து விளக்க முறையைக் காட்டு கின்றன. மேலும் கவிதா மண்டலத்தில் பாரதி தாசன் படைப்புகள் பல ஆசிரியர் பெயர் குறியாது வெளியிடப்பட்டுள்ளன என்பது மனங்கொள்ளத்தக்கது. 253. உலகின் இலக்ஷியம் தாய்க்கும் சேய்க்கும் சம்பாஷணை இடம் : ஆனந்த பைரவி தாளம் : ஆதி பல்லவி ஏடி மாநிலத் தேவி - விடை சொல்லாயோ எங்கேடி செல்கின்றனை? அநுபல்லவி நாடும் அறிவை நோக்கி நான்பறந்தோடு கின்றேன் நலக்கம் உடையார்க் கெல்லாம் இலக்ஷியம் அதுவாகும் - ஏடி சரணம் தேடும் அறிவுப் பூமி சேர்வதில் என்ன லாபம்? செறிந்த இருளை யெல்லாம் போக்குமடா அத்தீபம், மூடும் இருள் ஒழிந்தால் என்னேடி காணக் கூடும்? மொய்த்த பேதம் அறுத்தெவற்றிலும் மக்கள் ஏக சமத்துவத்தொடு முகமிலங்கிட அகமகிழ்ந்திடுவார் - நிதியால் சதியால் விளைந்திடும் பகைமறைந்திடும்! வகைமிகுந்திடுமே - வறியோர் பொருளாளர் ஆ மெனப் புகல்வதும் கெடும் - சகலமும் சுகமாம் - வருணம் பல சாதியாகிய புகைய டங்கிடும் தகைமை மிஞ்சிடுமே - மதப் புன்மை தீர்ந்துவிடும் - அகத் தன்பு சார்ந்து விடும் பொய்ம்மை தீர்ந்திடும் மெய்ம்மை நேர்ந்திடும்! பொதுமை நிலவிடை எவையும் இலகிடும்! புதிய வாழ்வெனும் மதுவின் ஓடையில் பொலியும் மானிடம்! பொழியும் விடுதலை! - ஏடி - பழம் புதுப் பாடல்கள், ப.157, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935, வெளியீடு 1; 254. அமுதூட்டி அறிவூட்டும் கோயில் எண்சீர் விருத்தம் இரவினிலே உணவருந்தி நாற்காலி யிற்சாய்ந் திருந்தேன்இத் தமிழ்நாட்டின் எளிமைதனை எண்ணி! மரவேரிற் புழுப்போலே தீமைபல செய்து மாய்கின்றார் பொதுநலத்தில் நாட்டமில்லை மற்றப் பரதேச மக்களையும் பார்க்கின்றோம் அங்குப் படிப்புக்கு வசதியுண்டு பிள்ளைகளைப் பெறுவார் குரலுடையார் இங்கெல்லாம் வெறுங்கூச்ச லிடுவார் பெருஞ்செல்வர் இருக்கின்றார் கொடைக்குணந்தா னில்லை என்றுநான் பலவாறு நினைத்திருக்கும் நேரம் என்மனைவி வெற்றிலையும் கையுமாய் வந்தே என்னயோ சனைஎன்றாள் என்னேடி மாதே இராக்காலம் தருவதோர் இன்பத்தை இந்த சின்னநிலைத் தமிழ்மக்கள் அடைவதில்லை அறிவின் திறமற்ற மக்களுக்கு காதல்ஒரு கேடா அன்புள்ள பிள்ளைகட்கோ அருங்கல்வி வசதி அணுவளவும் இல்லையன்றோ என்று நான் சொன்னேன். தன்னலமே அறியாதார் வாழ்ந்திருந்த இந்தத் தமிழ்நாட்டின் வீழ்ச்சியினை நிலையெனவே எண்ணி இன்னலுற்றீர் சரியன்று முன்னாளில் உழவர் இட்டவிதை ஒன்றிருக்க முளைப்பதுவே றாமா கன்னல்நறுஞ் சாற்றைப்போல் இந்தஇராப் போதில் கலைநுணுக்கம் பேசுகின்றார் மாணவர்கள் கேளீர் அன்னதுதான் ராஜாசர் அண்ணாம லைப்பல் கலைக்கழகம் அமுதூட்டி அறிவூட்டும் கோயில் திருக்கோயில் பலகண்டும் சத்திரங்கள் கண்டும் தென்னாட்டில் வாழ்கின்ற அருமைத்தாய் மார்கள் கருக்கோயில் விட்டுவந்த முருகப்பிள் ளைகள் கலைக்கோலம் பெறப்பலவாம் நிலைக்கழகம் கண்டும் இருக்கும்அவர் பிறசெல்வர் ஈந்துவக்கும் வழியை இன்னதென்றும் காட்டிவிட்டார் இன்னமென்ன தேவை! உருக்காதீர் நெஞ்சத்தை என்றுரைத்தாள் மனைவி ஓகோகோ ஓகோகோ அப்படியா செய்தி. ஓரிரவில் ஒருதுளியும் இனிமேல்வீ ணாக்கும் உத்தேசம் எனக்கில்லை வித்தார மயிலே பாராள ஒருபிள்ளை, படைநடத்தப் பசங்கள், பைந்தமிழ்க்குத் தொண்டுசெய்ய நல்லநல்ல மக்கள் ஏராள மாய்வேண்டும், தவம்புரிவோம். கல்வி ஈயத்தான் அண்ணாம லைக்கழகம் உண்டே பாராயோ என்றுரைத்தேன் காத்திருக்க பாவை பறந்துவந்தாள் ஆநந்த வெள்ளத்திற் பாய்ந்தோம் - பழம் புதுப் பாடல்கள், ப.188, 2005; அண்ணாமலை அரசரின் 61ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர், செப்டம்பர் 1941 255. அழகப்பர் அழகுரை பார்ப்பனீயத்தை நம்பாதவர்களை வளரவிடக் கூடாதாம் இறையை, அவன் குரலான மறைகள் தம்மை எவனொருவன் நம்பாமல் இருக்கின் றானோ முறையாக அன்னவனைச் சமுகந் தன்னில் முளைக்கவிடு வதுமிகவும் ஆபத் தென்று நிறைவான பணக்காரன் அழகப் பன்தான் நிகழ்த்தினான்! நான்நினைப்ப தவ்வா றன்று. மறைவான வழியாலே பணம்பெ ருக்கும் வஞ்சகர்க்குப் பார்ப்பனரின் உறவு தேவை! பார்ப்பனரின் கூட்டுறவைக் கோரு வோன்தான் பார்ப்பனரின் மறைதன்னை நம்ப வேண்டும். சீர்ப்பெரிய திராவிடர்க்கு மறைகள் உண்டு சிறப்புண்டு கலைநாக ரிகங்க ளுண்டு. ஆர்ப்பாட்டக் காரராம் அழகப் பர்க்கோ அவைதெரியா திருக்கவழி யில்லை! நன்றாய் ஊர்ப்பணத்தைக் கையாடா துண்மை யாக உழைப்பானுக் கிறை, பார்ப்பான் மறைகள் வேண்டாம்! - பழம் புதுப் பாடல்கள், ப.236, 2005; குயில், 15.7.1948 256. எதற்கெடுத்தாலும் சும்-மா எதிர்ப்பாம் எதிலும் கலகம் செய்யும் பும்-ம புனை சுருட்டு எதற்குமே சும் - ம, எதிர்த்திடும் என்று பிதற்றிடும் பும் - ம பிழைப்போய்! இதைக்கேள், தமிழ்பேசி, எங்கள் தமிழாற் பிழைத்தும் தமிழ்அழித்தல் உன்நோக்கம் தான். எதிலும் கலகம் இழைப்பது பும் - ம, தொதிபோல் இருக்குமோ சும் - ம - ? - அதனை எதிர்ப்பது பும் - ம வெனும் என்பகைமை தன்னை எதிர்ப்பதாம் ஈதறியா யா? - பழம் புதுப் பாடல்கள், ப.237, 2005; குயில், 15.8.1948 குறிப்பு : சங்கு சுப்பிரமணியன் திருச்சி வானொலியில் சும் - ம எனச் சுயமரியாதை இயக்கத்தாரைத் தாக்கிப்பேசியதைக் கேட்டவுடன் பாடியது என்று இப்பாடலின் பின்புலத்தை மன்னர்மன்னன் பதிப்பாசிரியரிடம் (நேருரை 1. 6. 94 காலை) குறிப்பிட்டார். 257. மனத்துக்கண் மாசிலன் குறள் வெண்பா: அன்பார் அரங்கின் தலைவரே! தோழரே! என்பா இயம்புவேன் இங்கு. எண்சீர் விருத்தம் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீரபிற என்றார் தேவர் எனக்கந்தப் பாட்டின் பொருளின்ன தென்றே இயம்புகஎன் றாள்தோழி. இத் தென்பாங் கினத்துக்கோர் நற்றிரு நாளில் மகிழ்ச்சி என்னுமோர் தீம்பால் மனப்பானை தன்னில் இனித்திடப் பொங்கி வழியுமிந் நாளில் இன்பத்தைக் கேட்டனை நன்றென்றான் தோழன். ஆசிரியப்பா ஒண்டொடி! பொய்யன் மனமாசு உடையான். பொய்யினாற் போந்த அம், மன மாசுதான் உய்யொணாத் துன்பம் உண்டாக்கும். ஆனால் மெய்யினை அன்னவன் மேற்கொள் வானெனில் அம்மன மாசும் அகலும் அதனால் அந்த அளவவன் அறத்தைப் பெறுவான் அவ்வறத் தளவவன் இன்பம் அடைவான் ஒருபண்பு ஒருபடி அறத்தைச் சேர்க்கும் ஒருபடி அறம்ஒரு படிஇன்பம் ஊட்டும் தோழியே! இன்னும் சொல்லக் கேட்பாய்! அழுக்கா றுடையான் இழுக்கே அடைவான். அன்னவன் மனமா சுடையவன் அன்றோ? பிறர்நலம் கண்டு மகிழ்வதோர் பேறு பெறுவா னாயின் அறம்வரும் அதனால் அந்த அளவவன் இன்பம் அடைவான். பொன்வண்டு விழியாய்! இன்னும் கேட்பாய் மேலே நான்தான் விளம்பிய வாறே மெய்ம்மை தன்னை மேற்கொளல் ஒன்றும் பிறர்நலம் கண்டு மகிழ்வதோர் பெற்றியும் ஆகிய இரண்டுபடி அறத்தைச் சேர்த்தவன் இரண்டுபடி இன்பம் அடைய லாகும் பண்பெத் தனைத்தோ அறம்அத் தனைத்தே ஆதலா லன்றோ அறிஞர்க் கறிஞன் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்றான். அனைத்தெனல் அத்தனைத் தின்மரூஉ. ஒவ்வொரு பண்பினால் ஒவ்வோ ரறம்வரும் ஒவ்வோ ரறத்தால் ஒவ்வோரின்பமாம் அன்றோ? ஆயின் எல்லாப் பண்பும் நன்றாக் கொள்ளின் அறமெலாம் நணுகும் இன்பம் முற்றும் எய்தலாம் அன்றோ என்றித் தோழன் இயம்பிய அளவில் தோழி மலைப்புடன் சொல்லு கின்றாள்; எத்தனைப் பண்புகள் இருப்பவை உலகில் அத்தனை யும்பெற ஆரால் முடியும்? இன்பம் முழுவதும் எய்துவ தெப்படி! என்று கேட்ட தோழிக்கு நன்றே தோழன் இசைப்பான்; வாழிஎன் தோழியே! தவமெனும் தக்கதோர் பண்பா டுண்டே எப்பண் புகளும் இருப்பன அதனில் அறக்கூ றெல்லாம் அதற்குள வேர்கள் இன்பம் அனைத்தையும் எய்தலாம் தவத்தால்! தவமெனல் இன்னதென்று சாற்றுவேன் கேள்நீ! தவஎன் பதற்கு மிகுதிஎன் பதுபொருள்! அருளின் மிகுதிதான் அதுவென அறிவாய். தவச்சொல் இழிவழக் காகத் தனக்கோர் மகர இறுதி பெற்றது மயிலே! இன்னும் தவத்தைப் பற்றி இசைப்பேன் அருள்மிகக் கொண்டே இருள்மிகு மக்கட்குத் தன்னலம் நீக்கிப் பிறர்நலம் காக்கும் தொண்டு செய்வதோர் தூய தன்மையாம். அத்தகு தவத்தைச் செய்தல் அரிதென எண்ணுதல் வேண்டா இத்தமிழ் நாட்டில் அத்தகு பெரியார் உள்ளார் அன்றோ! இல்லை என்றால் இத்தமிழ் மக்கள் இல்லா தொழிந்திருப் பார்கள் அன்றோ? தவத்தை இல்லற நிலையி னின்றும் துறவு நிலையிலும் தூயதிற் செயலாம் தவத்தின் ஆற்றல் சாற்றஒண் ணாதது எண்ணிய எண்ணியாங் கெய்துவர் தவத்தினர் கூற்றம் குதித்தலும் கூடும் தவத்தோர்க்கு நிலமிசை நீடு வாழ்வார் தவத்தினர் இன்ப மன்றித் துன்பம் சேரா! இனிமேல் இரண்டாம் அடியைப் பற்றி மகளிர் விளக்கே! விளக்கம் உரைப்பேன்; ஆகுல நீர பிறஎனில் இதன்பொருள் மாசு படிந்த மனங்கா ரணமாய்த் தோன்றும் ஒருவனின் சொல்லும் நடிப்பும் விளம்பரத் தன்மை கொண்டவை என்பதாம். மனத்தது மாசாக மாண்பினர் போல இனத்தவர் தம்மை ஏமாற்று வாரவர் உலகுக்கு ஒழுக்கம் பயிற்றிய நாட்டில் சிலர்இவ் வாறு திரிவதும் உண்டோ என்று கேட்க எண்ணுகின் றனையா? ஆம்எனில் நீஓர் அடுக்களைப் பூச்சி! அதோபார் அடாச்செயல் கூட்டம் ஒன்றை கேள்அக் குரலின் கீழ்மைக் குரலை! பல்லாண் டின்பின் பைந்தமி ழர்க்குச் செல்வமாய்க் கிடைத்த செம்மைத் தமிழனை, தாழ்த்தப் பட்டுள தமிழர்க் குழைப்பதே வாழ்க்கைப் பயனென மதிக்கும் தமிழனை, நற்றமிழ் மக்களை நம்பி மறைந்துவாழ் புற்றுப் பாம்பைப் புதைக்கஎண் ணியவனை- த் தோள்வலி மிக்க தூயனை, நாட்டில் ஆள்வலி மிக்க அன்பனைச் சற்றும் அறந்தவ றாத ஆட்சி யாளனை மறந்து எதிர்ப்பது மாண்பா குவதா? யாமே நல்லவர் யாமே வல்லவர் எமையே தமிழர் ஏற்க வேண்டும் ஆதர வெமக்கே அளிக்க வேண்டும் என்று கலகம் இழைப்பது மேன்மையா? இன்பத் தமிழர் நோக்கம் என்ன? பல்லாண் டாய்நாம் பண்ணிய தவந்தான் நல்ல தமிழனை நமக்கீந்த தென்றே அன்னவன் வெல்கஎன் றார்க்கின் றாரே. கழுகின் எஃகுவிரல் கடிந்து தமிழரை முழுது காத்த முதன்மைத் தமிழன் இனியும் ஆட்சி எய்துக! v§fŸ Mju btšyh« mtD¡ nf!என அவன்தோட் புறத்தை ஆரமொய்த் தனரே! தீர வேண்டிய குறைபல! தீந்தமிழ் வேரில் மொய்த்த பூச்சிகள் மிகப்பல! தன்மேனி பெற்ற புழுதி தவிர்ந்து பொன்மேனி பெற்றான் பொய்யில்லாத் தமிழன் என்று வையம் இயம்பவைக் கும்பெருந் தகையினை நிலைபெறச் செய்வதா? தமிழர் பகையினை நிலைபெறச் செய்வதா பகர்வாய்! தவத்திறம் கொள்ளுதல் வேண்டும் தமிழர்கள்! தமிழன் ஒருவனின் தகுதி கண்டால் அமிழ்துண் டதுபோல் மகிழ்தல் வேண்டும்! தமிழர்பால் ஒற்றுமை தழைக்க வேண்டும்! தமிழ்வாழ்ந் தால்தான் தமிழர் வாழ்வார்! தமிழ்மீண் டால்தான் தமிழர் மீள்வார்! அறமே ஓங்குக! இன்பம் ஓங்குக! மறமே வீழ்க! மங்கையர்க் கரசியே! தமிழர் யாவ ரும்தனிப் பொங்கல் நன்னா ளிதனில் மகிழ்ச்சி நண்ணினார் இந்நாள் போலத் தமிழர் என்றுமே வாழ்க! செந்தமிழ் வாழ்க! வாழ்க தமிழகம் வளமெலாம் பெற்றே! - பழம் புதுப் பாடல்கள், ப.265, 2005 குறிப்பு: 14. 01. 1957 பொங்கல் விழா நாளில், திருச்சி வானொலியில் புரட்சிப் பாவேந்தர் நிகழ்த்தியது என்னும் குறிப்புடன் தமிழ் முரசு கிழமை இதழின் (புதுவை) 14. 01. 1960 ஆம் நாளிட்ட ஆண்டு மலரில் (ப. 5 - 8) இப்பாடல் வெளியிடப் பெற்றுள்ளது. 258. இந்நாள் காங்கிரசு அகவல் பாடும் கடலும் படுவெயி லால்அழும் கோடைக் கொடுமை பொறாமல் ஓடிடும் ஓநாய்க் கூட்டம் உண்ணும் சேற்றுக் காட்டுக் குட்டை இந்நாள் காங்கிரசு! நல்ல வர்க்கதில் இடமே இல்லை. தீய எண்ணம் மனத்தைத் தீய்த்தலால் சுரண்டும் எண்ணம் தூண்டுதல் செய்ததால் இரும்ப கப்பையும் கையு மாக நிறைந்தனர் தீயர்காங் கிரசில் வறண்டது குட்டையும்! தமிழகம் வாழ்கவே. - பழம் புதுப் பாடல்கள், ப.275, 2005; குயில், 1.6.1958 259. நீவிர் எந்தக் கட்சி வினா : எந்தக் கட்சி ஐயா? - நீவிர் எந்தக் கட்சி ஐயா? விடை :எந்தக் கட்சியில் நல்ல கொள்கை இருக்கின்றதோ மெய்யா அந்தக்கட்சி ஐயா நான் அந்தக்கட்சி ஐயா! வினா : காங்கிரசு நன்றா? - ஐயா காங்கிரசு நன்றா? விடை :காங்கிரசு காரர் எல்லாம் காசடிக்கப் பார்ப்பார்! காங்கிரசு கட்சிஎல்லாம் தீங்கரசு கட்சி! வினா : சுத்திஅரி வாள்கட்சியை நத்துவிரோ நீவிர்? விடை :நத்துவாரை ஆசைகாட்டி நயவஞ்சகம் செய்யும் எத்தர்களின் கட்சியிலே வேலைஇல்லை எமக்கே. வினா : ஏர்காட்டும் கட்சியிலே இருந்ததுண்டோ நீவிர்? விடை :இருந்ததுண்டு மறுநாளே பிரிந்துபோன துண்டு. ஆர்போவார் தமிழன்னை சீர்அறியாக் கட்சி வினா : மா. போ. சீ. கட்சியிலே மகிழ்ச்சியுண்டோ உமக்கே? விடை :தாய்பேரைச் சொல்லிக்காசு தட்டுகின்ற கட்சி! மா. போ. சீ. என்றாலே சீ! போ! சீ என்பார்! வினா : பார்ப்பனாரின் கட்சியிலே பற்றுண்டோ உமக்கே? விடை :காப்பான தம்தமிழை இன்பத் தமிழ்நாட்டைத் தீர்ப்பாரை நத்துபவர் செந்தமிழர் ஆகார்! வினா : நல்லதிரா விடர்கழகம் பிடிப்பதுண்டோ உமக்கே? விடை :நல்லதிரா விடர்கழகம் மிகநல்ல இயக்கம்! எல்லோரும் ஒன்றென்று தொண்டுசெயும் இயக்கம்! வாழ்க திராவிடர் கழகம்! வாழ்க தமிழ்நாடு! யாழும் ஒரு பாய்புலியும் இவள் என்னும் தமிழ்தான் வாழ்க! அறம்வாழ்க! பெரி யார் கொள்கை வெல்க! - பழம் புதுப் பாடல்கள், ப.279, 2005; குயில், 24.6.1958 260. மறைப்பதென்ன? பழங்க லத்தில் பழங்களைத்தான் பார்த்துத்தேடி(ப்)1 பயல்களைத்தான் கிழங்களைத்தான் உதைக்கவேண்டும் கெடுநினைப்பே2அதிகமப்பா ஒழுங்குபட வாழைச்சீப்பில் ஒன்றுவிழுக் காடுதந்தாள் விழுங்கிடவே அண்ணாவுக்கு மீத்துக்கொடுக்க மறைப்பதென்ன? - கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல், பழம் புதுப் பாடல்கள், 2005 குறிப்பு : கனக சுப்புரத்தினம் 13ஆம் அகவையில் இயற்றிய பாடல் இது. (அவரின் பெரியம்மா வாழைச்சீப்பு ஒன்றை வாங்கி வந்து சுப்புரத்தினத்திற்கும் வேறு சிலர்க்கும் ஆளுக்கு ஒரு பழம் தந்துவிட்டு மீதிப் பழங்களை யெல்லாம் அண்ணன் சுப்பராயனை எடுத்துக்கொள்ளும்படிக் குறிப்புக் காட்டியபின் பழங்கல அறைக்குள் ஒளித்துவைத்தாள். பிறர் அறியாமல் கனக சுப்புரத்தினம் அப்பழங்களைத் தின்றதோடு அதனை அறிந்த தன் தந்தையிடம் பெரியம்மாவின் முறையற்ற செயலைக் கண்டித்து எழுதிக் கொடுத்த பாடல் இது. இதில் பயல்களைத்தான், உதைக்க வேண்டும் எனும் தொடர்களில் பாரதிதாசனின் எதிர்ப்புக்குரல் பதிவாகியுள்ளது.) 1. பார்த்துத் தேடும் (க,கு. ) 2. கெடுநினைப்போ (க. கு) 261. ஓவியக் கலைத்திறம் அகவல் பற்கொம்பு மென்று கரிதொட்டுப் பண்ணிய வெயிற்சுவர்க் கடற்கரைக் கலைத்திறம் இயற்கைக் கடலினும் இனிதாயிற் றெனக்கே. - பழம் புதுப் பாடல்கள், ப.283, 2005; குயில், 15.7.1958 262. பம்பாய் ஆர்ச் பிஷப்புக்கு! வெண்பா பம்பாய் பிஷப்பாரே பாழ்மதங்கள், இங்குள்ள கம்யூனி சத்தால் கரையுமென்றா - வெம்புகின்றீர் பார்ப்பான் தலைவன்! படிதாண்டார் மற்றவரும்! பார்ப்பனர் பாழ்க்க மதம்? (மதம் பாழாகப் பார்ப்பானா? என்பது நான்காவது அடியின் பொருள்) - பழம் புதுப் பாடல்கள், ப.289, 2005; குயில், 26.8.1958 263. நேரு வெண்பா நிலைகெட்ட பாகித்தான் மக்கட்கு நேரு மலைஒத்த பொன்னை வழங்கி - நிலைகெட் டிலங்கைவிட்டு வந்த தமிழர்களை எல்லாம் கலங்கவிட்டார் கையை விரித்து. - பழம் புதுப் பாடல்கள், ப.295, 2005; குயில் , 9. 9. 1958 264. கண்ணதாசர் கவலை வெண்பா ஆசை விழாஎடுத்தார் பாரதிக்கே அன்பர்க ணேசர்எனில் கூத்தரெலாம் ஏன்போனார்? - காசுதண்டும் எண்ணம்மண் ணாயிற்றே என்றுகண் ணீர்த்துளியாம் கண்ணதா சர்கவன்றார் காண். - பழம் புதுப் பாடல்கள், ப.303, 2005; குயில், 30.9.1958 265. பெரியாரின் (பஞ்சசீலம்) ஐந்தொழுக்கம் வெண்பா 1சாதிஒழிப்2 பாரியார் சாற்றுமத நூலொழிப்பே 3கோதுமனப் பார்ப்புக் குடிஒழிப்பே - 4ஓதற் கரியதன் மானம்5 தமிழ்நா டடைதல் பெரியாரின் ஐந்தொழுக்கம் பேசு. (அடைதல் என்பதைத் தன்மானம் என்பதனோடும் சேர்க்க) - பழம் புதுப் பாடல்கள், ப.312, 2005; குயில், 21.10.1958 குறிப்பு : இப்பாடலின் முன்னர், 12. 10. 1958 சீர்காழியில் சொற்பெருக்காற்றிய தோழர் எ. டி. விவேகியவர்கள் குறிப்பிட்ட பெரியார் பஞ்ச சீலத்தைத் தமிழர் நினைவில் பதியுமாறு வெண்பா ஆக்கப் பட்டது எனும் குறிப்பு இதழில் இடம் பெற்றுள்ளது. 266. அவர் யாவர்? நல்லவர் என்பவர் யாவர்? - அவர் நல்லது செய்பவர் ஆவர் அல்லவர் என்பவர் யாவர்? - அவர் அறம் மறந்தவர் ஆவர். வல்லவர் என்பவர் யாவர்? - அவர் வம்பர்க்கஞ் சாதவர் ஆவர். இல்லவர் என்பவர் யாவர்? - அவர் எத்தர்க்குத் தந்தவர் ஆவர்! 1 அறம் உடையவர் யாவர்? - அவர் அகம் தூயார் ஆவர். திறம் உடையவர் யாவர்? - அவர் செந்தமிழ் காப்பவர் ஆவர். நிறம் உரைப்பவர் யாவர்? அவர் நெஞ்சற்ற பார்ப்பனர் ஆவர். மறம் உடையவர் யாவர்? - அவர் மாற்றாரை மாய்ப்பவர் ஆவர்! 2 காதல் உடையவர் யாவர்? - தமிழ் காணத் துடிப்பவர் ஆவர். சாதல் அடைபவர் யாவர்? - அவர் தமிழ் மறந்தவர் ஆவர். ஈதல் உடையவர் யாவர்? - தமிழ் ஏற்றத்துக் கீபவர் ஆவர். மோதல் உடையவர் யாவர்? பகை முன்சென்று தாழ்பவர் ஆவர்! 3 ஆத்திகர் என்பவர் யாவர்? - அவர் அறிவு கெட்டவர் ஆவர். நாத்திகர் என்பவர் யாவர்? - அவர் நல்லறி வாளர்கள் ஆவர். சீர்த்தியர் என்பவர் யாவர்? - அவர் செந்தமிழ் மாந்தர்கள் ஆவர். தீத்தொழில் கொண்டவர் யாவர்? - இங்குச் சேர்ந்துள ஆரியர் ஆவர்! 4 கொன்றவர் என்பவர் யாவர்? இனக் கொள்கையைக் கொன்றவர் ஆவர். வென்றவர் என்பவர் யாவர்? - பகை வென்றதை வென்றவர் ஆவர். சென்றவர் என்பவர் யாவர்? - தொண்டு செய்யாமல் செத்தவர் ஆவர். ஒன்றி உழைப்பவர் யாவர்? - தமிழ் ஒன்றுக் குழைப்பவர் ஆவர்! 5 நலம் விளைவிப்பவர் யாவர்? - தமிழ் நாட்டினை மீட்பவர் ஆவர். குலம் கெடுப்பவர் யாவர்? - பகைக் கூட்டத்தை நத்துவர் ஆவர். நிலம் புரப்பவர் யாவர்? - சிறை நெருப்பும் நீர்என்பர் ஆவர் புலம் பழுத்தவர் யாவர்? - பிறர் புன்மறை வெறுத்தோர் ஆவர்! 6 பணம் படைத்தவர் யாவர்? - வட பாங்கில் இருப்பவர் ஆவர். குணம் படைத்தவர் யாவர்? - தென் கோடியில் உள்ளவர் ஆவர். மணம் படைத்தவர் யாவர்? - தமிழ் வாழத் தந்தவர் ஆவர். பிணம் நிகர்த்தவர் யாவர்? - தமிழ் பேண ஒப்பாதவர் ஆவர்! 7 ஒற்றுமை உள்ளவர் யாவர்? - வந்த ஓரிகள் ஆரியர் ஆவர். கற்றும்கல் லாதவர் யாவர்? - தத்தம் கட்சியால் வாழ்பவர் ஆவர். குற்றம் இழைப்பவர் யாவர்? - இனக் கொள்கையை விற்பவர் ஆவர். சுற்றம் குலைப்பவர் யாவர்? - இனத் தூய்மை இல்லாதவர் ஆவர்! 8 தென்மொழிப் புலவர் யாவர்? - நாளும் செத்துப் பிழைப்பவர் ஆவர். பன்மொழிப் புலவர் யாவர்? - இனப் பகைவர்க் குத்துணை ஆவர். நன்மொழிப் புலவர் யாவர்? - அவர் நாலைந்து பேர்மட்டும் ஆவர்! இன்னல் தவிர்ப்பவர் யாவர் - ஓர் ஈ. வே. ரா. என்பவர் ஆவர். 9 தமிழைக் காப்பவர் யாவர்? - ஒரு தாடி நரைத்தவர் ஆவர். தமிழர் தலைவர் யாவர்? - அத் தந்தை பெரியார் ஆவர். சுமைக் கஞ்சாதவர் யாவர்? - அவர் துன்பம் எண்ணாதவர் ஆவர். அமைவு செய்பவர் யாவர்? - நம் அடிமை கொய்பவர் ஆவர். 10 - பழம் புதுப் பாடல்கள், ப.338, 2005; குயில், 24.3.1959 267. கலியபெருமாள் எழுந்தருளிய பெரமலூர் பெற்ற பேறு! அகவல் பெரமலூர் என்பது கலிய பெருமாள் திருக்கோ யில்கொண் டிருக்கும் திருவிடம். *** ஆண்டு தோறும் விழாவரும். அதனில் ஆண்டவன், கோழிமீன் அரிசிநெல் கீரை கிழங்குமுதல் கீழென்று மேலென்று பாராது பெற்றுப் பார்ப்பனர்க் கருளுவான் விழாவில் ஆண்டு வருமானம் எண்ணினால் ஐந்திலக்கம் ஆகும்! என்னே அன்புதான். ஆனால் இந்த வருமானம் வரவர இளைப்புப் பெற்றதன் காரணம்: பெரியார் இயக்கமாம்! *** அன்பர்கள் தம்நலம் அகற்றிப், பெருமாள் இன்பம் ஒன்றையே எண்ணும் திறமே வியப்புக் குரிய தாகும். விளம்புவேன்: - கோயிலில் தனியொரு குறிப்பிடம் உண்டு குறிப்பிட மதனில் கோவிந்த னேபோல் முறுக்கு மீசை முரடன் ஒருவன் கட்டிலில் குந்திக் காத்தி ருப்பான் அவனோ அவ்வூர் அரச னாவான் வட்டிலில் பண்ணியம் மலர்க்கை ஏந்தி நாளுக் கொருத்தியாய்ப் பார்ப்பன நங்கை வருவாள். வழக்கப் படியே நடக்கும் பசகோ விந்தம் பசகோ விந்தம்! *** பெருமாள் இவ்வாறு பெரமலூர்ப் பார்ப்பனர்க்- கு அருளிய செல்வம் அளவிடற் கரிதாம். *** எம்பெரு மான்செயல் இதுமட்டு மன்று. கலிய பெருமாள் கட்டழகி மாரைத் திருமணம் புரிந்து தேவடி யார்என ஆக்கி ஆக்கி ஆக்கி இன்று பாக்கி எவரும் இல்லாது செய்தார். உலகப் பற்றை ஒழிக்க எண்ணிய கலிய பெருமாள் பெரமலூர்க் காசை ஒட்ட உறிஞ்சி ஓட்டாண்டி ஆக்கினார்! பட்டினிப் படையும், நீக்கிலா வெட்ட வெளியுமின்று பெரமலூர் என்பதே. - பழம் புதுப் பாடல்கள், ப.343, 2005; குயில், 21. 4. 1959 268. திபேத்து விடுதலை அகவல் கொஞ்சும் புறாக்களை ஒன்று தவறாது வஞ்ச வலைக்குள் கட்டி ஆண்ட திபேத்து வேடனார் இந்தியா சேர்ந்தார். . அந்த நாட்டினர் அனைவ ருக்கும் அவரே கடவுள்! அவரே தலைவர் ஆயி ரத்துத் தொளாயி ரத்தின் ஐம்பத் தொன்பதாம் ஆண்டிலும் இந்நிலை! திபேத்திய மக்கள் திகைத்தனர். அண்டையில் உலாவும் சீனச் சிட்டுக் குருவிகள் விடுதலை அமிழ்தம் உண்ணும் வேடிக்கை அவர்களின் நெஞ்சை அள்ளிய தாலே சீனாக் காரா சீனாக் காரா எமக்கும் விடுதலை வேண்டும் என்றனர். சீனாக் காரச் சிங்கம் பூனைபோல் திபேத்துச் செய்தியில் மெல்லடி வைக்கவே கடவுள் கிடுகிடாய்த்துக் கடிது பறந்து நேருவின் அடியில் நெடுஞ்சாண் கடையாய் விழுந்தார். நேரு விருந்தளிக் கின்றார். காட்டு மிராண்டி காட்டுமிராண் டிக்குக் காட்டும் சலுகைக்குக் கணக்கா? வழக்கா? திபேத்து மக்களின் தீமை தீர்வதா? தலைலா மாவால் சாவை உண்பதா என்பது நேருவின் இரண்டு கையில் அடங்கி விட்டதாய் அனைவரும் எண்ணுவர். சீனாக் காரன் திபேத்தைக் காப்பது தன்னிடம் உளதென்று தானினைக் கின்றான் அந்தத் திபேத்தின் ஆச்சாரி களையும் அந்தத் திபேத்தின் அண்ணாக் களையும் அங்குள்ள பெரியார் தாமும் தொண்டரும் முற்றும் அடக்கும் உணர்ச்சி பெற்றுத் திபேத்தில் விடுதலை பெய்கவே! - பழம் புதுப் பாடல்கள், ப.356, 2005; குயில், 26.5.1959 269. அறிவும் கலையும் அறிவெனப் படுவ தறிந்ததை விடாதது கலைஎனல் கண்டோர் வியப்ப தொன்றே! - பழம் புதுப் பாடல்கள், ப.374, 2005; குயில், 8.9.1959 270. ஏடும் எண்ணமும் ஏட்டை நிரப்ப எண்ணம் தேடேல்; எண்ணம் பொங்கினால் ஏட்டில் ஏந்து. - பழம் புதுப் பாடல்கள், ப.374, 2005; குயில், 8.9.1959 271. சொத்தும் சுவடியும் சொத்தைப் பெருக்கச் சுவடி எழுதேல் சுவடி சிறந்தால் தூய புகழ்கொள். - பழம் புதுப் பாடல்கள், ப.374, 2005; குயில், 8.9.1959 272. பேறும் வேறும் பேறுஎனல் அறத்தாற் பெறுவ தாகும் வேறுஎலாம் எளியரை வென்றதன் விளைவே! - பழம் புதுப் பாடல்கள், ப.374, 2005; குயில், 8.9.1959 273. தன்னலம் தகுபுகழ் தேடல் தன்னலம் அன்று தன்னலம் என்பது பிறர்நலம் சாய்ப்பதே! - பழம் புதுப் பாடல்கள், ப.375, 2005; குயில், 8.9.1959 274. அறமும் திறமும் அறம்தனக் கின்பம் பெறுவதோர் ஆற்றல் திறம்எனப் படுவது ஆற்றலின் சிறப்பே! - பழம் புதுப் பாடல்கள், ப.375, 2005; குயில், 8.9.1959 275. ஐந்தறிவும் மெய்யுணர்வும் ஐந்தறிவு பருப்பொருள் மேலன ஆகும் மெய்யுணர்வு நுண்பொருள் மேல தாகும் - பழம் புதுப் பாடல்கள், ப.375, 2005; குயில், 8.9.1959 குறிப்பு : குறள்வெண்செந்துறை அமைப்பில் ஈரடிப் பாடல்களாக எழுதப்பட்டுள்ள இவை தனித் தலைப்பின்றி இதழ்களின் பக்கங்களில் அங்கங்கே இடம்பெற்றுள்ளன. பாடற் கருத்தை அடியொற்றிப் பதிப்பாசிரியரால் தலைப்புகள் தரப்பெற்றுள்ளன. 276. உலக்கைக் கொழுந்தே நேரிசை வெண்பா அண்ணா மலைசென்னை ஆர்பல் கலைக்கழகம் நண்ணா திருந்தால் நமக்குரிமை - எண்ணம் எழுந்தா இருக்கும்? அறிவே உலக்கைக் கொழுந்தா யிருக்கும்எனக் கூறு - பழம் புதுப் பாடல்கள், ப.376, 2005; குயில், 8.9.1959 277. நன்னெறியில் வளர்வது திறமை நேரிசை வெண்பா இரவில் இருகண்ணும் நன்றாய்த் தெரியும் திரியும்பூ னைக்கல்ல; தேர்ந்த - திருடனுக்கே தீநெறியிற் சேர்ந்த திறமை பெரிதெனினும் ஆனைஅடிக் கீழ்த்தவளை ஆம்! - பழம் புதுப் பாடல்கள், ப.403, 2005; குயில், 8.9.1959 278. சின்ன பீடி அகவல் மார்புநோய் வருத்தப் புதுவைக் கிண்ணித் தேர்போல் கணீர்கணீர் என்று சீறி விடாது நூறுமுறை விக்கும் இருமலுக்கு என்ன செய்வேன் உலகமே சின்ன பீடியால் பெரிய தொல்லை! - பழம் புதுப் பாடல்கள், ப.403, 2005; குயில், 8.9.1959 279. குழந்தைத் திருமணம் சின்ன குழந்தைக்குத் திருமணம் செய்வ தென்ன மதியீனம்? தெருவில் புழுதி அளைந்தே விளையா டுகின்ற ஒரு - சின்ன குழந்தைக்கு நல்ல இளவயதில் அறிவைத் தரும் கல்விதர வேண்டும் தொழில்கள் பல சொல்லித் தரவேண்டும் வல்லியானவள் காதல் உளந்தெரிந் தல்லவோ மணம் செய்ய வேண்டும் சின்ன குழந்தைக்கு - பழம் புதுப் பாடல்கள், ப.447, 2005 280. பொருள் வரிசை என்னா வென்றெடுத் துரைப் பேன் நான் இந்தக் கடைதனிலே இருக்கும் பொருள் வரிசை என்னா வென்றெடுத் துரைப் பேன் பலவித வாழைப் பழமொடு கொய்யா பலாவிளா பேரீச்சை மாம்பழம் சிலவகைக் கிச்சிலி பொம்பளிமாசும் சீத்தாப் பழமுடன் ஆத்தாப் பழமும் குலை குலையாகக் கொடிமுந்திரியும் குண்டு நீட்டுமாய் வெள்ளரிப் பழமும் ஈரநொங்கும் இளநீர்த் தேங்காய்களுடனே - நான் சின்ன மல்லிகை சிவந்த ரோஜா சிறந்த வாசத் தாழம் பூவும் பன்னீர் மலருடன் படர் சம்பங்கி வன்னத் தாமரை வாசக் கதிர்காள் புன்னகை அலரியும் புரிபுரியாகக் குருவேருடனே இன்னும் பலபல வித மலருடனே - நான் லட்டு ஜிலேபி மைசூர் பாகு பூந்தி பகோடா அல்வா கெஜுர் தட்டில் ஓமப் பொடியொடு சேவு தகுந்த காராப் பூந்தி கவாப்பு பிட்டு மசால்வடை இட்டலி அப்பம் கொழுக் கட்டையுடன் வட்டத் தோசை சட்டில் அப்பம் மபம் பிகோத்து களுடனே - நான் - பழம் புதுப் பாடல்கள், ப.445, 2005 குறிப்பு : பாவேந்தரின் முதன்மகள் திருமிகு சரசுவதி கண்ணப்பர் சேமிப்பில் கையெழுத்து வடிவில் இருந்த இப்பாடலை அவரின் முதன் மகன் க. புகழேந்தி 28.07.2004 முற்பகல் நேரில் அளித்தார். 281. ராஜா நலங்கிடவா ராஜா நலங்கிடவா, நடராஜா நலங்கிடவா அந்தி மந்தாரை ரோஜா அரவிந்த மலர்களை செண்டுகள் கட்டிய தேவி மனம் மகிழ - ராஜா மல்லிகைப்பூ, பாரிஜாதம் ரோஜா மருக்கொழுந்து பந்துகள் கட்டிய பாவை மனமகிழ - - ராஜா தங்கக் கயிறெடுத்து தாழம்பூ செண்டுகட்டி கண்ணூஞ்சல் ஆடிவரும் கண்மணியாளுடன் கூடி - ராஜா முப்பத்து முக்கோடி தேவர் மனம் மகிழ அப்பாவு - பொற்பாதம் தப்பாமல் எப்போதும் - - ராஜா நலங்கிட வருவாய் பெண்ணே, நங்கையே கண்ணே - நலங்கிட அலங்கார ஊஞ்சலில் அமர்ந்த சுந்தரர்க்கு - நலங்கிட மஞ்சள் கதம்பம் பன்னீர் மைசூர் சந்தனத்தோடு கொஞ்சம் அட்சதை கொண்டு குணமுள்ள மன்னருக்கே - நலங்கிட மல்லிகை முல்லையோடு இருவாட்சி செண்பகம் நல்லதோர் சாமந்தி நாகரீக ரோஜா கொண்டு - நலங்கிட நலங்கிடவே ... ... வோ வாரும் ராஜா இந்த வேளையில் தாமதமாக ... ... க - நலங்கிட மல்லிகை, முல்லை, ரோஜா புஷ்பங்களை செண்டுக ... ட்டி வைத்திரு ... க்கு ஜாலம் செய்யாமல் எழுந்திருமே மன்னனே நீர் துரிதா ... க ... மாக... - நலங்கிட பரிமளமான வாசனை வீசும் மன்னனேநீ®நேர்த்தியாf Ú... ர் - நலங்கிட - பழம் புதுப் பாடல்கள், ப.454,2005 குறிப்பு : மனோபாரதி அளித்த தகவல் என்ற குறிப்போடு 07.12.1986 சாவி இதழில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பாவேந்தரின் பேரன் கோ. பாரதி தொகுத்தளித்துள்ள பலகணியில் பாவேந்தர் என்னும் நூலில் சாவி இதழ் பற்றிய குறிப்போடு மீண்டும் இப் பாடல் அச்சிடப்பட்டுள்ளது. இடைச்சிதைவுகளுடன் அமைத் துள்ள இப் பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள முன்குறிப்பில் தியாகி செல்லான் நாயக்கர் பாண்டிச்சேரியில் பிரபல வக்கீலாக இருந்தவர். அவரது பெண்களான பத்மதிலகமும் கமலாதேவி யும் எக்கோல் பிரிமியர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களது தமிழாசிரியர் சுப்புரத்தின வாத்தியார் செல்லான் நாயக்கரின் நெருங்கிய நண்பருங்கூட! பத்மதிலகத்துக்குத் திருமணம் நிச்சயமானது. ஒரு நலங்குப் பாட்டு எழுதித் தரும்படி சுப்புரத்தின வாத்தியாரை நச்சரித்தனர் இரண்டு பெண்களும், அவரும் எழுதிக்கொடுத்தார். பாரதிதாசன் என்ற பெயரில் பிரபலமான சுப்புரத்தின வாத்தியார் எழுதிக் கொடுத்த அந்த நலங்குப் பாட்டை இப்போதும் ஒரு பொக்கிஷம் போலப் பாதுகாக்கிறார் திருமதி கமலாதேவி முனுசாமி. பிரசுரமாகாத அந்த நலங்குப் பாடல் இதுதான் என்னும் செய்தி இடம்பெற்றுள்ளது. 282. பாரத தேவியிடம் குடியர் தம் தெளிவு கூறல் (1) கண்ணிகள் (பராபரக்கண்ணி போற் பாடுக) அம்மா இனிக்குடிக்க மாட்டோம் அதன்தீமை கைமேற் கண்போலக் கண்டுவிட்டோம் ஏழைகள். பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்ததுபோல் இம்மதுவின் மாயங்கண் டிடறித் தலைகவிழ்த்தோம். நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமழிந்து நெஞ்சி லுரமிழந்து நிதியிழந்தோ மெந்தாயே. பஞ்சத்தைத் தேசத்தைப் பாபத்தைப் பெண்டாட்டி நெஞ்சத்தை எண்ணு1 விஷப்புனலை நீக்கிவிட்டோம். அறிவு விளக்கை அவிக்கும் மதுக்குடத்தை மறுபடியும் காசுதந்து வாங்கோம் மறந்துவிட்டோம். அறமுணர்ந்து கொண்டோம் கடைவைத் ததைவிற்கும் குறிப்பினையும் மாற்றிவிட்டோம் கொற்றத் தனித்தேவி ஈன்றாள் வெறுக்க இல்லாள் நடுநடுங்கச் சான்றோர் அவமதிக்கச் சம்மதித்தோம் இம்மதுவால் ஊன்வேண்டும் கள்வகைக்கே யுரைக்கு மதுவெனும்பேர் தேனுக்கு மிட்டழைத்தால் செம்மலர்தான் நாணாதோ? கள்என்னும் தாயோடு காமம் கொலைகளவுப் பிள்ளைகளும் பெண்டுமாய்ப் பின்தொடர்தல் கண்டுகொண்டோம் தள்ளாப் பெரியோர் சமுகமெனை யேவெறுத்துத் தள்ளவைத்த தீமதுவைத் தள்ளிவிட்டோம் எந்தாயே சோர்வு மதிமயக்கம் துன்பமெல்லாம் ஒன்றாக்கி ஆர்அனுப்பி னார்மதுவென் றறியோம் அருந்தேவீ. நேரில்விட்டால் இப்பேயை ஏமாற்ற நேருமென்று நீரிற் கலந்தனுப்பும் கலிக்கொடியன் நேர்மைகண்டாய் கொள்ளிப் பிசாசென்னும் கொள்கையினை நம்பாதார் கள்ளைப் பிசாசென்றால் காரணமும் கேட்பாரோ? நள்ளிருள்தான் கண்கள் நாணுமை உள்ளமெனில் கள்ளுண்டான் சேதியெல்லாம் துஷ்டக் கனவன்றோ? பருந்துபோல் ஊன்அனைத்தும் தின்னவைக்கும் பாழ்மதுவை மருந்துக்கும் வேண்டோமே எங்கள் மலர்த்தேவீ அரும்பாடு பட்டனம்என் றிம்மதுவை யுண்டதனால் துரும்பாகிப் போனதுண்டு தூய்மைத் திருநாடே உடலுறுதி வீரமிவை உண்டாக்குங் கள்ளென்று மடையர்சிலர் கூறுவது வஞ்சமடி எந்தாயே. குடிக்கும்போ தேயுயிர்போம் கூத்தாடும் போதுயிர்போம் இடித்துவிழுந் தாலுமுயிர்போம் இம்மதுவால் நன்மையுண்டோ? முனிவர்க்குத் தாய்என்னும் முன்னைத் திருநாடு சனிமதுவை ஒப்புமெனிற் சகந்தான் சிரிக்காதோ? நினைத்தால் அறிவூறும் ஞானிகட்கு நீதான் தனித்தாய் உனக்கெம்மால் சஞ்சலந்தான் வேண்டாவே அன்னைநீ வாழ்க அறமே வளர்கஇங்குத் தன்னுரிமை யாகிய ஓர் இன்பந் தழைத்தோங்க. கன்னி குமரிமுதல் கங்கைஇம யம்வரைக்கும் உன்னரசே ஆகுகஎம் உரிமைத் திருநாடே. வந்தே மாதரம் - தேச சேவகன், 21. 11. 1922; பழம் புதுப் பாடல்கள், ப. 50-51, 2005 எண்ணி - என இருப்பின் நன்று முன்தொடர்ச்சி 283. பாரத தேவியிடம் குடியர் தம் தெளிவு கூறல் (2) பருந்துபோல் ஊன்அனைத்தும் தின்னவைக்கும் இஃதை1 மருந்துக்கும் வேண்டோமே எங்கள் மலர்த்திருவே. 2 அரும்பாடு பட்டதனால்3 இம்மதுவை உண்டாற்4 துரும்பாகிப் போவதெனிற் சூதோசொல் எந்தாயே. 5 உடலுறுதி வீரமிவை உண்டாக்கும் என்று6 மடையரிதைக்7 கூறுவது வஞ்சமடீ எந்தாயே. குடிக்கும்போ தேயுயிர்போம் கூத்தாடும் போதும்8 இடித்துவிழுந் தாலுயிர்போம்9 இம்மதுவால் நன்மையுண்டோ? முனிவர்க்குத் தாயென்னும் முன்னைக்கு மூத்தாள்10 கனிமதுவை ஒப்பின்11 சகந்தான் சிரிக்காதோ? நினைத்தால் அறிவூறும் ஞானிகட்கு நீதான் தனித்தாய் உனக்கெம்மால் சஞ்சலந்தான் வேண்டாவே. அன்னைநீ வாழ்க! mwnk ts®fbt‹W«!12 தன்னுரிமை யாகியஓர் இன்பம் தழைத்தோங்க! கன்னிக்13 குமரிமுதல் கங்கையிம யம்வரைக்கும் உன்னரசே யாகுகவெம் முரிமைத் திருநாடே. - தேச சேவகன், 27.2.1923; பழம் புதுப் பாடல்கள், ப. 52-53 குறிப்பு : இதற்குமுன் இடம்பெற்றுள்ள பாடலின் (21. 11. 1922) பிற்பகுதி. பருந்துபோல் தொடங்கி முடியும் இறுதி எட்டுக் கண்ணிகள் - மீண்டும் பல மாற்றங்களுடன் இப் பாடலாக வடிவெடுத்துள்ளன. முன் தொடர்ச்சி எனும் குறிப்போடு மூன்று மாதங்களின் பின்னர் அதே இதழில் வெளியிடப்பெற்ற இப்பாடற் பகுதி செப்பம் குறைந்துள்ளது. இவ்வெட்டுக் கண்ணிகளும் இவற்றிலும் செப்பமாக முன்னரே வெளியிடப்பெற்றன என்னும் ஓர்மையின்மையால் மறு அச்சீடு நேர்ந்திருக்கலாம். படைப்பொருமை கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1. பாழ்மதுவை; 2. மலர்த்தேனீ; 3. பட்டனம் என்(று); 4. யுண்டதனால்; 5. துரும்பாகிப் போனதுண்டு தூய்மைத் திருநாடே; 6. உண்டாக்கும் கள்ளென்று; 7. மடையர்சிலர்; போதுயிர்போம்; 9. தாலுமுயிர்போம்; 10. முன்னைத் திருநாடு; 11. சனிமதுவை ஒப்புமெனிற்; 12. வளர்க இங்குத்; 13. கன்னி 284. இயற்கைத் தேவியின் கோபம் எரிபோல் விழியும் இடிபோல் மொழியும் உடையாள் இதயத்திலே முதிரும் கோபப் படையாள் விரியும் வண்மை இயற்கைப் பெண்ணெனும் அன்னாள் வெறியும் தயையும் கொண்டென் னிடமிது சொன்னாள் தெரியும் வழியிற் செல்லா உலகத் தோரே செப்பக் கேளீர் அவளின் சொல்லை நீரே! உரிமை! உரிமை! யார்க்கும் எதிலும் எங்கும் உணரச் சொன்னாள் இதனால் இன்பம் பொங்கும் மனித குலமும் வாழ்வுப் பொருளும் தந்தேன் மடியில் தோளில் அவரைத் தாங்கியும் வந்தேன் புனிதம் புனிதம் எங்கும் எதிலும் யார்க்கும் புன்மை கண்டால் என்னுள் ளந்தான் வேர்க்கும் தனமும் கனமும் பலவும் என்றன் தேகம் தாயின் பாலில் தனயர்க் கெல்லாம் பாகம் இனியும் பேதம் வேண்டாம் வேண்டாம் இந்நாள் என்றே அன்னை கோபத் தோடே சொன்னாள். மாந்தர் யாரும் வாழ்க்கை முறையில் ஒப்பே வகையில் நிறையிற் பேதம் காணல் தப்பே சேர்ந்தோன் உணவைத் தன்சொத் தென்றே சொன்னால் துயரம்! துயரம்! ஒப்பத் தகுமோ என்னால்? ஏந்தும் தயவால் இதனைச் சொன்னாள் முன்னர் இதையே எண்ணிக் கனலாய் நின்றாள் பின்னர் தீர்ந்திட் டதுவோ புவியென் றச்சம் கொண்டேன் திண்மைத் தாயின் தேகம் அதிரக் கண்டேன். கிடுகிடு வென்றே அவள்தோள் அதிரக் கண்டேன் கேளீர் கேளீர் பீகார் வீழக் கண்டேன்1 குடமும் புனலும் நிலையிற் சாய்தல் போலே குடிலும் ஏழைக் குலமும் சாயுங் காலே படையால் மாளும் பகைபோல் மாளக் கண்டேன் பணமும் பிணமும் மண்ணில் புதையக் கண்டேன் குடமும் வீடும் சமமே யாதல் கண்டேன் சதையும் மண்ணும் இரத்தக் குமிழும் கண்டேன். மாங்கீர் சீதா மார்முகி சபர்புரி ஊரும் மதுபான் மோத்கிரி சுமசுதகிரி என் றாரும் ஆங்கே பற்பல ஆயிர மைல்களின் எல்லை அழகும் பொழிலும் தெருவும் வீடும் இல்லை ஏங்கிய மைந்தர் தாயொடு வெளியில் நின்றார் எத்தனை ஆயிர மக்கள் மண்ணிற் சென்றார்! தாங்கிட வாரீர் பீகார் மக்கள் தம்மைத் தாரீர் பொருளை எதிர்பார்க் கின்றார் உம்மை! - மணிக்கொடி, 18.2.1934; பழம் புதுப் பாடல்கள், ப.136, 2005 குறிப்பு : 1934 சனவரி 15ஆம் நாள் பீகாரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் பற்றிய கவிஞரின் பாடல். 1. கிடுகிடு எனத் தொடங்கும் ஓரடி பாரதிதாசன் பார்வையில் பாரதி நூலில் விடுபட்டுள்ளது. 285. தாயைப் பிரிந்திருந்த குழந்தை! ஜன்னலுக்குள் தலையை விட்டுத் தயிரை நக்கும் நாயின் தடித்து நீண்ட வாலை எலி பிடித்துக் கொண்டு வாயின் சின்ன பல்லால் கடிக்கப் போகும் தெரிந்து கொண்ட பூனை திடுக்கெனப்பாய்ந் திடுகையிலே சாய்ந்ததொரு பானை அன்னதிலே இருந்த உப்பும் அடுப்பினிலே விழுமே அதுவெடிக்கக் குழந்தையின்மேல் படமிகவும் அழுமே! அன்னை வந்தாள்! பூனை, எலி இல்லை அந்த நாயை ஆதரித்தாள்! தனிக்குழந்தை அடைந்ததுதன் தாயை. - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், யுவ-சித்திரை (1935) வெளியீடு; பழம் புதுப் பாடல்கள், ப.154, 2005 286. யுத்த ஆயத்தம் அரசன் சேனாபதியை ஏவுதல் அடாணா : ராகம் ஆதி : தாளம் பல்லவி துட்டப் பகைவரை வெட்டித் தள்ளப் படைவீடு - நோக்கி இஷ்ட சேனா பதியே விரைந்தோடுநீ ஓடு! அநுபல்லவி (முடுகு) எட்டுத்திசை எட்டப்பறை கொட்டிச்செய முற்றுப்பெற எப்பக்கமும் உற்றுச்சரம் விட்டுத்ததி யுத்தத்தினில் (துட்டப்) சரணம் கட்கம் குத்துக் கத்தி கட்டும் அம்புப் புட்டில் கச்சம் விற்கோல் திறம்நோக்கி - நல்ல முட்கம்பம் நற்குந்தம் முக்கிளைச் சூலங்கள் அட்டகா சத்தொடு தூக்கிக் கட்டுக் காலாட்படை காணும் பரிப்படை மட்டற்றதேர்ப்படை யானைப் படையொடு (துட்டப்) - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், யுவ-ஆவணி (1935) வெளியீடு; பழம் புதுப் பாடல்கள், ப.161, 2005 287. தாய் jdaD¡Fiu¤jš1 (நாத சங்கீதப் பொன் மணிமண்டபம் என்ற மெட்டு) தங்கை jka«2 அக்கை இடம்வெதும்பி - நீ சண்டை யிடாதிருப்பாய் தம்பி! உங்கள் நலத்தையே நான்விரும்பி - மிக உரைத்தேன் கேட்பாய் இதைநம்பி உண்மை! நீயே யோசிப் பாயே ஒத்திருந்தால் நீயோர் தங்கக் கம்பி சின்ன வயதி லொற்றுமைப் பழக்கம் - அது தேசத்துக் கும்பின் நலம்கொழிக்கும்! என்னைப்போல்3 பிறரை எண்ணும் வழக்கம் உண்டானால் அதுதான் நல்லொழுக்கம் உன்னை அக்கா வைது விட்டால் உளம்பொறுப்பாயவளை ஊர்பழிக்கும்! - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், யுவ-ஆவணி (1935) வெளியீடு; பழம் புதுப் பாடல்கள், ப.162, 2005 1. தனையனுக்குரைத்தல் என இருப்பின் நன்று 2. தமையன் என இருப்பின் நன்று 3. உன்னைப்போல் என இருப்பின் நன்று 288. பாம்புப் பாட்டு ஆடு பாம்பே எழுந்தாடு பாம்பே அன்னை துயில்நீங்கி நலம்துன்னப் பாம்பே! 1. உண்மைநிலை கண்டுறங்கும் யோகப் பாம்பே - இந்த உலகத்தைச் சமன்செய்ய எண்ணு பாம்பே! திண்மைநிலை கொண்டிருக்கும் தெய்வப் பாம்பே! - உன் தெய்வீகத்தைக் காட்டுதற்குத் தீவிரம் கொள்வாய்! (ஆடு) 2. பாரதத்தி லேபிறந்த பன்னகப் பிள்ளாய்! - இந்தப் பாரதத்தில் அன்பு வைத்த நல்லபாம்பே! பாரதத்தை விடுவிக்கும் வழிநினைந்தே - நல்ல பக்குவ மிகுந்திருக்கும் படப்பாம்பே! (ஆடு 3. ஆடிவரும் விதந்தெரிந் தூதி வருவேன் - இங் கனைவரும் தகத்தகத் தாளமிடுவார் மோடியிசை பாடுதற்குக் காந்தி யொருவன் - இங்கு மொய்த்திருக்கும் தொண்டரிடை ஆடுபாம்பே! 4. செம்மை அறம் ஞானமிவை செகத்திலெல்லாம் - இனித் திகழ்ந்திடச் செய்வதுன்றன் மணித்தலையே பொய்ம்மை கொண்ட பகைவர்கள் புலையமக்கள் பொசுங்கிட விஷஞ் சொரிந்தாடு பாம்பே! (ஆடு) 5. பாரதர்க்குப் பாரதத்தில் உரிமையில்லை - இந்தப் பாவனையைத் தீர்க்கநல்ல காலமுமில்லை சீர்கெடுக்க நினைத்திடும் பகைக்குலத்தை - நீ சீறிப் படத்தை விரித்தாடு பாம்பே! (ஆடு) 6. ஆதிசிவன் மேலிருந்த நாகப் பாம்பே - எங்கள் அரவிந்தப் பேர்புனைந்த அன்புப் பாம்பே! ஜோதிப் படந்தூக்கி நடமாடி வருவாய் - அந்தச் சோலைநிழா லால்எமது துன்ப மொழிவோம். (ஆடு) - கறுப்புக் குயிலின் நெருப்புக்குரல், ப. 96; பழம் புதுப் பாடல்கள், ப. 168, 2005 குறிப்பு : 1938இல் வெளிவந்த பாரதிதாஸன் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு என்னும் பகுதியில் பாரதிதாசன் அவர்கள் எழுதிய பாம்புப் பாட்டை பாரதியாரின் நண்பரான ஒரு ஆசிரியரே பாரதியார் பேரால் தம் பத்திரிகையில் வெளியிட்டது சிலருக்கேனும் ஞாபகமிருக்கலாம் எனும் குறிப்பு காணப்படுகிறது. (ப. 7). இதிலிருந்து பாரதிதாசனின் பாம்புப் பாட்டு 1938க்கு முன்னரே பாரதியார் பெயரில் வெளியிடப்பட்டது என்பதும் அதற்கு முன்னரே அது எழுதப்பட்டது என்பதும் தெரியவருகின்றன. மன்னர்மன்னன் புதுவையிலிருந்து வெளிவந்த கற்பகம் இதழில் இப் பாம்புப் பாட்டு முதலில் வெளிவந்ததாகவும் இதனைக் கலைமகள் (சென்னை) 1942ஆம் ஆண்டுப் பொங்கல் இதழில் சி. சுப்பிரமணிய பாரதி எழுதியது. பெ. தூரன் தேடி உதவியது என்னும் குறிப்போடு வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டு இப்பாடலை முழுமையாகத் தமது நூலில் பதிவு செய்துள்ளார். இதிலிருந்து பாரதியார் பெயரில் மீண்டும் மீண்டும் இப்பாடல் வெளியிடப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. சுத்தானந்த பாரதியாரின் கவிக்குயில் பாரதியார் எனும் நூலிலும் (ப. 50-51, 1945) எம். எ. சுப்பிரமணிய ஐயரின் தேசீயக் கவிராஜசிங்கம் சுப்பிரமணிய பாரதியார் (ப. 38, 1962) என்னும் நூலிலும் இப்பாம்புப் பாட்டின் முதல், இறுதிக் கண்ணிகளாகிய இரண்டு மட்டும் தரப்பட்டுப் பாரதியார் பாடலென விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. 1987இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட பாரதியார் பாடல்கள் ஆய்வுப் பதிப்பில் முன்னூல்களில் குறிக்கப்பட்டவாறே முதல், இறுதிக் கண்ணிகள் மட்டும் அரவிந்தப் பாம்பு என்னும் தலைப்பின்கண் (ப. 385) சேர்க்கப்பட்டுள்ளன. 289. பாரதிதாசன் ஆத்திசூடி பாயிரம் நவில்இனப் பற்றும், நாட்டுப் பற்றும் வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன இல்லை யாயின் இன்றிவ் வுலகில் தொல்லை அணுக்குண்டு, தொகு கொலைக் கருவி பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை அகற்றல் எப்படி? அமைதி யாங்ஙனம்? உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல் ஆத்தி சூடி போறலின் ஆத்தி சூடிஎன் றடைந்தது பெயரே. உரை : நவில் - சிறப்பித்துச் சொல்லுகின்ற, இனப் பற்றும் - தன் இனப்பற்றும், நாட்டுப் பற்றும் - தன் நாட்டின் மேல் உண்டாகிய பற்றும், வையப்பற்றை - உலகின் மேல் வைக்கும் பற்றை, வளர்க்கும் நோக்கத்தன - வளர்க்கும் நோக்கமுடையவை, இல்லை ஆயின் - இல்லாவிட்டால், இன்று இவ்வுலகில் - இந்நாளில் இந்த உலகில், தொல்லை அணுக்குண்டு - தொல்லை தரும் அணுக்குண்டும், தொகு கொலைக் கருவி - சேர்க்கின்ற துப்பாக்கி முதலிய ஆயுதங்களும், பொல்லா நச்சுப் புகைச்சல் - பொல்லாதன ஆகிய நச்சுப் புகையும், இவற்றை - ஆகிய இவற்றை, அகற்றல் எப்படி - உலகை விட்டு ஒழிப்பது எப்படி முடியும்? அமைதியாங்ஙனம் - உலக அமைதி எவ்வா றேற்படும்? உலகில் பொது வாட்சி ஒன்றே ஒன்று - உலகில் ஒரு தனிப் பொதுவான ஆட்சி, நிலவுதல் கருதி - நிலை பெறவேண்டும் என்பதை எண்ணி, நிகழ்த்திய இந்நூல் - சொல்லிய தான இந்த நூல், ஆத்திசூடி போறலின் - ஔவை, ஆத்திசூடி போன்று இருத்தலால், ஆத்திசூடி என்று - ஆத்திசூடி என, அடைந்தது பெயரே - பெயர் அடைந்தது. கருத்துரை : உலகுக்கு ஒரேயொரு தனியாட்சி ஏற்பட வேண்டும் என்ற கருத்தில் இயற்றிய இந்த நூல், ஔவை ஆத்திசூடிபோல் இருத்தலால் ஆத்திசூடி என்னும் பெயரை அடைந்தது. ஆய்வுரை : பெயரே - ஏ ஈற்றசை, இந்நூல் - எழுவாய், அடைந் தது - பயனிலை, பெயர் - செயப்படுபொருள். 1. அனைவரும் உறவினர் உரை : அனைவரும் - உலகிலுள்ள எல்லோரும், உறவினர் - உறவினராவார். கருத்துரை உலகிலுள்ள மக்கள் யாவரும் உறவினர். ஆய்வுரை: அனைவரும் எழுவாய், உறவினர் பயனிலை. இதில் செயப்படுபொருள் இல்லை. 2. ஆட்சியைப் பொதுமை செய் உரை : ஆட்சியை - பல நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள ஆட்சி அனைத்தையும், பொதுமைசெய் - பொதுவான ஒரே ஆட்சி ஆக்கு. கருத்துரைஉலகுக்கு ஒரே ஆட்சி வேண்டும். ஆய்வுரை நீ - தோன்றா எழுவாய். செய் - பயனிலை, ஆட்சி - செயப்படுபொருள். 3. இசை மொழி மேலதே உரை : இசை - இசை(இராகம்), மொழி - அது வரும் மொழி யினால், மேலதே - மேன்மையடைவது. கருத்துரை: இசையானது அது பெற்று வரும், சொற்களினால் தான் மேன்மையடையும். ஆய்வுரை: ஏ - ஈற்றசை; இசை - எழுவாய்; மேலது - பய னிலை; மொழி - மூன்றாம் வேற்றுமைத் தொகை. சிலர் குழல் யாழ் முதலியவற்றின் இசையில் மொழி யில்லாவிடினும் அவ்விசையே தனியாக மக்கட்கு இன்பந் தரவில்லையா என்று கேட்பார்கள். முதலில் சொல்லொடு தோன்றிச் செல்வாக்குப் பெற்றால்தான், பின்னர் அவ்விசை மட்டும் குழலில் வெளிவந்து முன் பெற்ற சொற்களை நினை வுறுத்தி இனிமை செய்கிறது. இசை தனியே இனிமை பயக்கும் எனில், இசைத் தட்டில் கேட்கப்படும். சீனர் இசை நமக்கேன் எளிமை செய்ய வில்லை. அது தொல்லை நமக்கு நினைவு படுத்தவில்லை யாதலால்தானே. 4. ஈதல் இன்பம் உரை : ஈதல் - (பொருளையோ உழைப்பையோ) பிறர்க்குக் கொடுப்பது, இன்பம் - ஈந்தோர்க்கு இன்பமாகும். கருத்துரை : பொருளையோ உழைப்பையோ பிறர்க்குக் கொடுத்தல் இன்பம். ஆய்வுரை : ஈதல் - எழுவாய், இன்பம் - பயனிலை, செயப்படு பொருள் இல்லை. ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் என்றார் வள்ளுவர். 5. உடைமை பொதுவே உரை : உடைமை - உலகின் நிலையில் பொருள், இயங்கியல் பொருள், மக்கள் உழைப்பின் பயன் ஆகிய உடைமை அனைத்தும். பொதுவே - உலக மக்கட்குப் பொதுவே. கருத்துரை : உலகப் பொருளும் உலக மக்களின் உழைப்பின் பயனும் எல்லார்க்கும் பொதுவாக்கப்படுதல் முறை. ஆய்வுரை : ஏ - தோற்றம், உடைமை எழுவாய்; பொது - பயனிலை. நூறு காணி உண்டு. அந்நிலத்தில் நூறு வீடுகள் மக்கள் உழைப்பின் பயனாய் ஏற்பட் டவை. நூறு கலம் நெல் விளைவுண்டு. எனவே, ஒருவனுக்கு ஒரு வீடும் ஒரு கலம் நெல்லும் உட்பட ஒரு காணி நிலம் விழுக்காடு பெற உரிமையுண்டு. 6. ஊன்றுளம் ஊறும் உரை : ஊன்று - தான் பெற்ற கல்வியிலேனும் தனக்குள்ள அறிவி லேனும் ஊன்றுகின்ற, உளம் - உள்ள மானது, ஊறும் - கருத்துகளைப் பொழியும். கருத்துரை ஊன்றி நினை; கருத்துக்கள் தோன்றும். ஆய்வுரை : உளம் - எழுவாய், ஊறும் - பயனிலை. செயப்படு பொருள் இல்லை. ஊன்று உளம் - வினைத் தொகை. 7. எழுது புதிய நூல் உரை : புதிய நூல் - கருத்திலே புதியதான நூற்களை, எழுது - நீயாக எழுது. கருத்துரை : இருக்கும் வைணவம், சைவம்,முதலியவை பற்றி நூற்களின் கருத்தை அமைத்தே நூல் இயற்றுவது பயனற்ற வேலை. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், இதில் நீ என்ற சொல் தோன்றி யிருக்க வில்லையல்லவா? எழுது - பயனிலை, நூல் - செயப்படு பொருள். எழுது புதிய நூல் என்பதைப் புதிய நூல் எழுது என்று பொருள் சொல்லும்போது மாற்றிச் சொல்வது, மொழி மாற்றுப் பொருள் கோள் எனப்படும். 8. ஏடு பெருக்கு உரை : ஏடு - நாள், கிழமை, திங்கள்தோறும் வரும் செய்தி, கட்டுரைத் தாள்களை, பெருக்கு - மிகுதியாக்கு. கருத்துரை : வெளிவரும் ஏடுகள் மிகுதியடைய வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய். பெருக்கு - பயனிலை, ஏடு - செயப்படுபொருள். 9. ஐந்தொழிற்கிறை நீ உரை : நீ - நீதான், ஐந்தொழிற்கு - இயற்கையில் அமைந்த வற்றைக் கொண்டு இயற்றப்படும் ஆக்கல், காத்தல், இயற்றல், மாற்றல், அருளல் ஆகிய ஐந்து தொழில்கட்கும், இறை - உடையவன். கருத்துரை ஆவதும் அழிவதும் உன்னால் ஆம். ஆய்வுரை : நீ - எழுவாய்; இறை - பயனிலை, செயப்படு பொருள் இல்லை. ஆக்கல் முதலிய ஐந்தும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றில் அடக்கலும் உண்டு. ஆக்கல் - தாயின் துணையால் தந்தை மக்களை ஆக்கலும் தந்தையின் துணையால் தாய் மக்களை ஆக்கலும், பொருள் ஆக்கலும் ஆம். காத்தல் - மக்களை ஓம்புதலும்; பொருளைக் கெடா திருத் தலும், அழித்தல் - அனைவரும் உறவினர், ஆட்சியைப் பொதுமை செய் முதலியவற்றிற்கு அப்பாலாகிய கொள்கைகளை அறிவுரையால் இயலாது செய்வது. 10. ஒற்றுமை அமைதி உரை : ஒற்றுமை - உலக மக்களிடம் ஏற்படும் மன வொற்றுமைதான், அமைதி - அமைதி எனப்படும். கருத்துரை: மன வொற்றுமைதான் உலக அமைதியாகும். ஆய்வுரை: ஒற்றுமை - எழுவாய், அமைதி - பயனிலை. 11. ஓவியம் பயில் உரை : ஓவியம் - ஓவியத் தொழில், பயில் - நீ பயின்று கொள். கருத்துரை ஓவியப் பயிற்சி பெறு. ஆய்வுரை : ஓவியம் - சித்திரம், நீ - தோன்றா எழுவாய்; பயில் - செயப்படு பொருள். 12. ஔவியம் பெருநோய் உரை : ஔவியம் - ஒருவனுக்குள்ள பொறாமை, பெருநோய் - அவனுக்குத் தொழுநோய் போல் துன்பந் தருவது. கருத்துரை பொறாமை துன்பந் தருவதாகும். ஆய்வுரை : ஔவியம் - எழுவாய், பெருநோய் - பயனிலை, பெருநோய் - குட்டநோய். 13. கல்லார் நலிவர் உரை : கல்லார் - படிக்காதவர், நலிவர் - நலிவடைவார்கள். கருத்துரை : கல்வி வேண்டும். ஆய்வுரை : கல்லார் - எழுவாய், நலிவர் - பயனிலை. படிப்பதால் மடமை போம். மடமை போகவே நல்லதன் நலமும் தீயதன் தீமையும், உலகின் உண்மையும் ஏற்படும். 14. காற்றினைத் தூய்மை செய் உரை : காற்றினை - உன்னை அணுகும் காற்றை, தூய்மை செய் - நீ தூய்மையாக்கிக்கொள். கருத்துரை : காற்றைத் தூய்மைப்படுத்து. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், தூய்மை செய் - பயனிலை, காற்று - செயப்படுபொருள், காற்றைத் தூய்மை செய்வதாவது, தான் வாழும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக அழுகியவை, கழிவடை சேராது காத்தல். 15. கிழிப்பொறி பெருக்கு உரை : கிழி - துணி நெய்யும், பொறி - பொறிகளால் ஆன ஆலைகளை, பெருக்கு - பெருகச் செய். கருத்துரை : துணி ஆலைகளைப் பெருக்கு. 16. கீழ்மகன் உயர்வெனும் உரை : கீழ்மகன் - அறிவில்லாதவன், உயர்வு எனும் - தான் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்வான். கருத்துரை : பிறப்பில் உயர்வு பேசுவோன் அறிவிலி. ஆய்வுரை : எனும் - என்னும் என்பதன் தொகுத்தல். 17. குள்ள நினைவு தீர் உரை : குள்ள நினைவு - குறுகிய நினைவுகளை, தீர் - நீக்கு. கருத்துரை : குறுகிய நினைவு வேண்டாம். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், தீர் - பயனிலை, நினைவு - செயப்படு பொருள், குறுகிய நினைவானது உலகில் மதம், சாதி வளர்வதற் குரிய தாழ்ந்த கருத்து. 18. கூன் நடை பயிலேல் உரை : கூன் - கூனிய, நடைபயிலேல் - நடக்கப் பழகாதே. கருத்துரை :நிமிர்ந்து நடக்க வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய். பயிலேல் - பயனிலை, நடை செயப்படுபொருள். 19. கெடு நினைவகற்று உரை : கெடு - பிறர் கெட்டுப் போவதற்குக் காரணமான, நினைவு அகற்று - நினைப்பை நீக்கு. கருத்துரை : பிறரைக் கெடுக்க எண்ண வேண்டாம். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், அகற்று - பயனிலை. கெடு நினைவு - செயப்படுபொருள். 20. கேட்டு விடை இறு உரை : கேட்டு - உன்னிடம் பேசுவோரின் பேச்சை வாங்கிக் கொண்டு, விடை இறு - பதில் கூறு. கருத்துரை : பிறர் சொல்லை முழுவதும் வாங்கிக் கொண்டு விடை கூறு. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய். இறு - பயனிலை. விடை - செயப்படு பொருள். 21. கைம்மை அகற்று உரை : கைம்மை - கொழுநன் இறந்தால் பெண் வேறொரு வனை மணந்து கொள்ளாமல் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற நிலைமையை, அகற்று - நீ நீக்கி அவள் மறுமணம் செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்து. கருத்துரை : கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய். அகற்று - பயனிலை. கைம்மை - செயப்படுபொருள். 22. கொடுத்தோன் பறித்தோன் உரை : கொடுத்தோன் - தனக்கு உள்ளதுபோக, மிகுதியாய் உள்ளதைப் பிறருக்குக் கொடுத்தவன். பறித்தோன் - பிறர்க்குரிய பொருளை வாணிகத்தாலும் வஞ்சத் தாலும் முன்பு பறித்தவனே. கருத்துரை :உடையாரின் பெருஞ்செல்வம் இல்லாருடையது. ஆய்வுரை : கொடுத்தோன் - எழுவாய், பறித்தோன் - பய னிலை. வாணிகம் என்பது, ஒரு வகைச் சுரண்டல்; மக்கள் நிகர் என்னும் குடியாட்சியில் இது இராது. 23. கோனாட்சி வீழ்த்து உரை : கோனாட்சி - ஒருவன் தான் விரும்பியபடி ஆளும் ஆட்சியை, வீழ்த்து - வீழ்த்திக் குடியாட்சியாக்கு. கருத்துரை :குடியாட்சி வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், வீழ்த்து - பயனிலை, கோனாட்சி - செயப்படுபொருள். 24. சதுர் பிறர்க்குழைத்தல் உரை : பிறர்க்கு உழைத்தல் - பிறர் நலத்திற்கு உழைப்பது, சதுர் - சதுர்ப்பாடாம். கருத்துரை : பிறர்க்குழைக்கும் ஆற்றல் பெற வேண்டும். ஆய்வுரை :உழைத்தல் - எழுவாய், சதுர் - பயனிலை. 25. சாதல் இறுதி உரை : சாதல் - உடல் உயிர் பிரிதல், இறுதி - ஒருவனின் முடிவு. கருத்துரை : ஒருவனுயிர் உடல் பிரிந்தபின் அவன் மற்றும் ஏதோ நிலைமைக்குள்ளாகிறான் எனல் இல்லை. ஆய்வுரை : சாதல் - எழுவாய், இறுதி - பயனிலை, மறு பிறப்பு இல்லை என்பது, இதனால் பெறப்பட்டது. 26. சிறார் நலம் தேடு உரை : சிறார் நலம் - ஆண் பெண் ஆகிய குழந்தைகளின், நன்மையை, தேடு - ஏற்படுத்து. கருத்து : குழந்தைகளின் பிற்கால நன்மையைத் தேடு. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், தேடு - பயனிலை, நலம் - செயப்படு பொருள். சிறார் நலம் தேடுவது, அவர்க்குக் கல்வி நலம் கிடைக்கச் செய்வதும், பின்னாளில் செல்வம் முதலிய எவற்றிலும் நிகர் உரிமை இருக்குமாறு உலக நிலையை மாற்றி யமைக்கப் போராடுவதும் ஆகும். 27. சீர்பெறல் செயலால் உரை : சீர்பெறல் - ஒருவன் சீரடைவது, செயலால் - தன் செயலால் ஆம். கருத்துரை : ஒருவன் சீர் அடைவதற்கு முற்பிறப்பு நல்வினையும், தெய்வமும் காரணம் என்ற மடமை ஒழிய வேண்டும். ஆய்வுரை : சீர்பெறல் - எழுவாய், ஆம் என ஒரு பயனிலை வருவிக்க. 28. சுவையுணர் திறங்கொள் உரை : சுவை உணர் - சுவை உணர்கின்ற, திறம் கொள் - திறமை பெறு. கருத்துரை : சுவையுணர்வு தேவை. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், கொள் - பயனிலை, உணர்திறம் - செயப்படுபொருள். உலக நிகழ்ச்சியிலும், கவிதையிலும் மேம்பட்டு வரும் நகை முதலிய ஒன்பது சுவையும் உணர் திறம் இன்றேல் கற்றதனால் ஆயபயன் என்ன? 29. சூழ்நிலை நோக்கு உரை : சூழ்நிலை - வினை செய்வதற்கு, அன்றுள்ள நிலைமையை, நோக்கு - ஆராய்ந்து தொடங்கு. கருத்துரை : வினை செய்ய அன்றைய நிலை ஆராயப்பட வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், நோக்கு - பயனிலை, சூழ் நிலை - செயப்படுபொருள். 30. செல்வம் நுண்ணறிவாம் உரை : நுண்ணறிவு - நுண்ணறிவால், செல்வம் ஆம் - செல்வம் தழைக்கும். கருத்து :நுட்ப அறிவு பெற வேண்டும். ஆய்வுரை : செல்வம் - எழுவாய், ஆம் - பயனிலை. 31. சேய்மை மாற்று உரை : சேய்மை - விரிந்த உலகில் உனக்கும் பிறர்க்கும் உள்ள தொலைவை, மாற்று - புதுமை ஊர்தி, தொலையறிகருவி ஏற்படுத்துவதால் இல்லாமற் செய். கருத்துரை : புதிய ஊர்திகள், தொலையறி கருவிகள் உண்டாக்க வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், மாற்று - பயனிலை, சேய்மை - செயப்படுபொருள். 32. சைகையோ டாடல்தேர் உரை : சைகையோடு - அபிநயத்தோடு கூடிய, ஆடல் - ஆடற் கலையை, தேர் - பயில். கருத்துரை : அபிநயத்துடன் ஆடல் தேர் - பயனிலை, ஆடல் - செயப்படு பொருள். 33. சொற்பெருக்காற்றல் கொள் உரை : சொற்பெருக்காற்றல்-சொற்பெருக்காற்றும் ஆற்றலை, கொள் - அடை. கருத்துரை : சொற் பெருக்காற்றும் திறன் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், கொள் - பயனிலை. ஆற்றல் - செயப்படுபொருள். 34. சோர்வு நீக்கு உரை : சோர்வு - உன் சொல்லிலும் செயலிலும் பிழைபாடு, நீக்கு - ஏற்படாமல் விழிப்போடிரு. கருத்துரை : சொல்லிலும் செயலிலும் பிழைநேரல் ஆகாது. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், நீக்கு - பயனிலை, சோர்வு -செயப்படு பொருள். 35. தளையினைக் களைந்துவாழ் உரை : தளையினை - மதம், சாதி, பிறர் ஆட்சி ஆகிய அடிமைத் தனத்தை, களைந்து - நீக்கி, வாழ் - நல்வாழ்வை நிலை நிறுத்து. கருத்துரை : அடிமைநிலை நீக்க வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், வாழ் - பயனிலை. 36. தாழ்வடிமை நிலை உரை : தாழ்வு - மற்றவரைவிடச் செல்வ நிலையில் உனக்கு ஏற்பட்டுள்ள தாழ்வானது, அடிமை நிலை - உனக்கு உள்ள அடிமை நிலையேயாம். கருத்துரை : முழுவிடுதலை பெற்றவன் தாழ்வு அடைய மாட்டான். ஆய்வுரை : தாழ்வு - எழுவாய், அடிமை நிலை - பயனிலை. 37. திருஎனல் உழு பயன் உரை : திருஎனல் - செல்வம் என்று சொல்லப்படுவது, உழுபயன் - உழுவதன் விளைவுதான். கருத்துரை : உழவால் பெறும் செல்வமே செல்வம். ஆய்வுரை : எனல் - எழுவாய்; பயன் - பயனிலை. உழுவார் உலகத் தார்க்கு ஆணி என்பதறிக. 38. தீங்கனிவகை விளை உரை : தீங்கனி - மா, பலா, வாழை ஆகிய முக்கனியும், வகை - இனிமையும் பயனும் தருவதில் அவற்றின் இனமாகிய விளா, கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள் முதலியனவும், விளை - உண்டாக்கு. கருத்துரை : பயன் மரங்களை உண்டாக்குதல் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், வினை - பயனிலை, தீங்கனி வகை - செயப்படுபொருள். 39. துன்பம் இன்பத்தின் வேர் உரை : துன்பம் - கோணிய அரசியல் காரணமாக உனக்கேற் பட்ட துன்பமே, இன்பத்தின் வேர் - அக்கோணிய அரசியலை மாற்றி அதனாற் பெறப்போகும் இன்ப வாழ்வுக்குக் காரணம் ஆகும். கருத்துரை : துன்பம், எழுச்சி தருவதால் அத் துன்பம் இன்பத் துக்குக் காரணமாகிறது. ஆய்வுரை : துன்பம் - எழுவாய், வேர் - பயனிலை. 40. தூய நீராடு உரை : தூய - தூய்மையான (அழுக்கற்ற), நீர் - நீரில், ஆடு - உடல் தூய்மை செய். கருத்துரை : அழுக்குத் தண்ணீரில் மூழ்குதல் கூடாது. ஆய்வுரை : நீ - எழுவாய், ஆடு - பயனிலை. 41.bjUbtyh« மரம் வளர் உரை : தெருவெலாம் - தெருக்கள்தோறும் (இருபாங் கிலும்), மரம் வளர் - பழம் தரும் மரம், தேன் மலர் தரும் மரம் அல்லாத நிழல் தரும் மரங்களை உண்டாக்கு. கருத்துரை : நிழல் தரும் உயர் மரங்களைத் தெருந் தோறும் வளர்க்க வேண்டும். ஆய்வுரை : நீ - எழுவாய், வளர் - பயனில்லை, மரம் - செயப்படு பொருள், உயர் மரங்கள் அடர்வதால் மழை குன்றாது என்பது நுண்ணுணர்வுடையார் கருத்து. தேன் மலரும் பழங்களும் பூச்சிகளை அண்டுவிக்கும். 42. தேன் எனப் பாடு உரை : தேன் என - நாவுக்கினிதாவதுபோல் செவிக்கினிய தாகிய தேனோ இது எனும்படி, பாடு - பாடல் திறம் பெறு. கருத்துரை : பாடும் திறம் பெற வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், பாடு - பயனிலை. பாடுவோ ரால் பாடல் வளரும்; பாடலால் மொழி வளரும்; மொழி வளர்ச்சியே நல்வாழ்வாம். 43. தைக்க இனிதுரை உரை : தைக்க - கேட்போர் உள்ளத்தைக் கவருமாறு, இனிது - இனிதாக, உரை - உன் கருத்தைச் சொல்லுக. கருத்துரை : மனத்தைக் கவரும்படி இனிதாகப் பேசுதல் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், உரை - பயனிலை. 44. தொன்மை மாற்று உரை : தொன்மை - இன்றைய நிலைக்கு ஒத்துவராத பழைய பழக்கங்களையும், பழங்கொள்கைகளையும், மாற்று - முன்னேற்றத்துக்கு உரிய வகையில் மாற்றியமைத்துக் கொள். கருத்துரை: ஒத்து வராத பழமையை மாற்ற வேண்டும். ஆய்வுரை: நீ - தோன்றா எழுவாய், மாற்று - பயனிலை, தொன்மை - செயப்படுபொருள். 45. தோல்வி ஊக்கந்தரும் உரை : தோல்வி - உடையானுக் கேற்படும் தோல்வியானது. ஊக்கந் தரும் - அவன் அவ்வினையை மீண்டும் செய்தற் குரிய மனந் தளராமையை உண்டாக்கும். கருத்துரை : விடா முயற்சி உடையானுக்குத் தோல்வி ஊக்கத்தையே உண்டாக்கும். ஆய்வுரை : தோல்வி - எழுவாய், தரும் - பயனிலை, ஊக்கம் - செயப்படுபொருள். 46. நடுங்கல் அறியாமை உரை : நடுங்கல் - அஞ்சத்தகாத இடத்து அஞ்சுதல், அறியாமை - பேதமையாகும். கருத்துரை : அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். ஆய்வுரை : நடுங்கல் - எழுவாய், அறியாமை - பயனிலை. 47. நால்வகைப் பிறவி பொய் உரை : நால்வகைப் பிறவி - மக்களிடை உண்டெனக் கூறும் நால்வகையான நிலை, பொய் - பொய்யாகும். கருத்துரை : நான்கு சாதி உண்டெனல் பொய்யாகும். ஆய்வுரை : பிறவி - எழுவாய், பொய் - பயனிலை, பிறவி - பிறப்பு, நிலை. இரு பிறப்பாளர் என்பதிலும் பிறப்பு என்பது நிலை என்று பொருள்படல் காண்க. இனி, இறப்பும் நிலைமிகல் என்க. 48. நினைவினில் தெளிவுகொள் உரை : நினைவினில் - எண்ணியவற்றில், தெளிவு - தெளிந்தவற்றை மட்டும், கொள் - மேற்கொள். கருத்துரை : தெளிந்த கருத்தைச் செயற்படுத்து. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், கொள் - பயனிலை. தெளிவு - செயப்படுபொருள். தெளிந்த கருத்தாவது - மாறுகொளக் கொள்ளாமை யும், ஐயம் அறுத்ததும் ஆகும். 49. நீணிலம் உன்இல்லம் உரை : நீணிலம் - இவ்வுலகம், உன்இல்லம் - உன் இல்லமே. கருத்துரை : இவ்வுலகம் உன்னுடையது ஆதலின் உன்னுடன் பிறந்தா ராகிய உலக மக்களொடு உனக்கு அதில் நிகர் உரிமை உண்டு. ஆய்வுரை : நீணிலம் - எழுவாய், உன் இலம் - பயனிலை. 50. நுண்ணிதின் நுண்மைதேர் உரை : நுண்ணிதின் - நுண்ணிய பொருளிலுமுள்ள, நுண்மை - அமைப்பின் நுட்பத்தை, தேர் - அறிந்து கொள்ள முயல். கருத்துரை : சிறிய பொருளில் உள்ள அமைப்பின் நுட்பத்தை யும் அறிய முயற்சி செய்ய வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய்; தேர் - பயனிலை, நுண்மை - செயப்படு பொருள். அணுவில் அமைந்திருக்கும் அமைப்பின் நுட்பத்தைத் தெரிந்ததன் பயன் அணுக்குண்டு. அதை நல்வழியிற் பயன் படுத்தினால் நலம் விளையும். 51. நூலும் புளுகும். உரை : நூலும் - உண்மை கூறும் என்று பொதுவாக நம்பப் படுகின்ற நூற்களும், புளுகும் - பொய்மை கூறும். கருத்துரை : எல்லா நூற்களும் உண்மை கூறும் என்று நம்பி விடாதே. ஆய்வுரை : நூலும் - எழுவாய், புளுகும் - பயனிலை, புளுகு நூற்கள் மனுநூல், புராணம் முதலியவை. 52. நெடுவான் உலவு உரை : நெடுவான் - விரிந்த வானத்தின்கண் எங்கும், உலவு - அங்குள்ள நுண்ணியல் அறியவும், விரை வாக வழிச் செல்லப் பயிலவும் உலவும் திறம்பெறு. கருத்துரை : வானிடை உலவும் திறம் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், உலவு - பயனிலை. 53. நேர்பயில் ஆழ்கடல் உரை : நேர் - கண்கூடாக, ஆழ்கடல் - ஆழமுடைய கடலின் உள்ளும் புறமும் ஆகிய நிலையை, பயில் - அறி. கருத்துரை : கடலின் உள்வெளி நிலையை அறிதல் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய்; பயில் - பயனிலை, ஆழ் கடல் - செயப்படுபொருள். 54. நைந்தார்க்கு உதவிசெய் உரை : நைந்தார்க்கு - உலகின் உரிமை இழந்த நாட்டார்க்கு, உதவி செய் - படை முதலியவற்றால் உதவி செய்து அவர்கட்கு உரிமை நிலை உண்டாக்கு. கருத்துரை : உரிமை இழந்த நாட்டிற்கு உதவி செய்தல் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், செய் - பயனிலை, உதவி - செயப்படு பொருள். 55. நொடிதொறும் புதுமைதேர் உரை : நொடிதொறும் - ஒவ்வொரு நொடிப்போதிலும், புதுமை - கருத்துப் புதுமையையும், பொருட் புதுமை யையும், தேர் - அறி. கருத்துரை : புதுமை அறிதலில் நொடிதோறும் முன்னேறுதல் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய்; தேர் - பயனிலை, புதுமை - செயப்படு பொருள். 56. நோய் தீ ஒழுக்கம் உரை : நோய் - உனக்குற்ற நோயின் காரணம், தீ ஒழுக்கம் - உன் பெற்றோரேனும் நீயேனும் முன்னர் மேற்கொண்ட கெட்ட நடத்தையாம். கருத்துரை : கெட்ட நடத்தை கூடாது. ஆய்வுரை : நோய் - எழுவாய், தீயொழுக்கம் - பயனிலை. 57. பல்கலை நிறுவு உரை : பல்கலை - பல்கலைக் கழகங்களை, நிறுவு - எங்கணும் ஆக்கு. கருத்துரை : எங்கணும் எவர்க்கும் பல்கலைக் கழகங்கள் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய். நிறுவு - பயனிலை. பல்கலை - செயப்படுபொருள். 58. பார்ப்பு பொதுப்பகை உரை : பார்ப்பு - மதம் பரப்பு நோக்கினர், பொதுப் பகை -உலகினர் முன்னேற்றத்திற்குப் பகைவர் ஆவார். கருத்துரை : பார்ப்பனீயம் தொலைதல் வேண்டும். ஆய்வுரை : பார்ப்பு - எழுவாய், பகை - பயனிலை. 59. பிஞ்சு பழாது உரை : பிஞ்சு - பருவம் நிரம்பாத பிஞ்சானது அந்நிலை யில், பழாது - பழுக்காது. கருத்துரை : கல்வியறிவில்லாதவன் உலகுக்குப் பயன் பட மாட்டான். ஆய்வுரை : பிஞ்சு - எழுவாய், பழாது - பயனிலை, பிஞ்சு பழாது பிறிது மொழிதல். 60. பீடு தன் மானம் உரை : பீடு - பெருமை என்பது, தன்மானம்-தன் நிலை யில் தாழாமையும், தாழ்ந்தால் உயிர் வாழாமையும் ஆகும். கருத்துரை : தன்மானம் காத்தல் வேண்டும். ஆய்வுரை : பீடு - எழுவாய், தன்மானம் - பயனிலை. இளிவரின் வாழாத மானம் உடையார், ஒளி தொழுது ஏத்தும் உலகு. (குறள் - 2. மானம் 10) 61. புதுச்சுவை உணவுகாண் உரை : புதுச்சுவை - சுவையிற் புதிது புதிதாமாறு; உணவு காண் - உணவு ஆக்கு. கருத்துரை : உணவிற் புதிய புதிய சுவை உண்டாக்க வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய். காண் - பயனிலை. உணவு - செயப்படுபொருள். உணவில் புதுப் புதுச்சுவை ஆமாறு உணவாக்கா விடில் ஊண் அளவு குறையும்; அதனால் உடல் நலம் குன்றும். 62. பூப்பின் மணங்கொள் உரை : பூப்பின் - பூத்தபின், மணம் - மணப் பொருளான பூச்சுவகை, கொள் - ஆக்கிக்கொள். கருத்துரை : மங்கைப் பருவம் அடைந்தவளே மணந்துஇன் புறந்தக்கவள். இது பிறிதுமொழிதல். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், கொள் - பயனிலை. மணம் - செயப்படுபொருள். இதனால் குழந்தை மணக் கொடுமை விளக்கப் பட்டது. 63. பெண்ணொடாண் நிகர் உரை : பெண்ணோடு-பெண்ணும், ஆண்-ஆணும் நிகர் - நிகராவர். கருத்துரை : கல்வி, மணம், சொத்துரிமை முதலியவற்றில் இரு பாலாரும் நிகராவர். ஆய்வுரை : பெண் - ஆண் - எழுவாய்கள், நிகர் - பயனிலை. 64. பேய்இலை மதமல்லால் உரை : மதமலால் - மதமான பேய் என்பதொன்றிருப்ப தல்லது, பேய்இலை - தனியே பேய்என்பதொன்று கிடையாது. கருத்துரை : மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும். ஆய்வுரை : பேய் - எழுவாய், இலை - பயனிலை, இலை, அலால் என்பன இல்லை அல்லால் என்பவற்றின் தொகுத்தல். மதமான பேய்ப் பிடியாதிருத்தல் வேண்டும் - வள்ளலார். 65. பைந்தமிழ் முதன்மொழி உரை : பைந்தமிழ் - சுவையூட்டமுள்ள தமிழானது, முதன் மொழி. ஆரியமாகிய சார்புமொழி போலல்லாது முதன்மையான மொழியாகும். கருத்துரை : தமிழ் முதல் மொழி. ஆய்வுரை : பைந்தமிழ் - எழுவாய், முதன் - பயனிலை. ஆரியம் சார்பு மொழி என்பது என்ன? நாவலந்தீவு முழுதும் தமிழரே மக்களாகவும், தமிழே மொழி யாகவும் இருந்தகாலை, ஈண்டுக் குடியேறிய ஆரிய மொழியானது தமிழைச் சார்ந்தே வாழ்ந் தது. முத்து என்னும் தமிழ் மொழியைச் சார்ந்து முக்தா என்ற வடமொழி தோன்றியது. தன்மையின் அடியாகிய, தன் என்பதைச் சார்ந்தே தத்துவம் என்ற வடசொல் தோன்றியது. பிறவும் இவ்வாறே 66. பொழுதென இரவுகாண் உரை : பொழுதென - பகற்பொழுதைப்போல, இரவு காண் - இரவைச் செய். கருத்துரை : இரவில் மூலை முடுக்கெல்லாம் விளக்கெரிய வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், காண் - பயனிலை, இரவு - செயப்படு பொருள். இரவில் விளக்கொளி இல்லாத இடத்து கழிவு கழித்தலும், நச்சுப் பூச்சி அண்டலும், கரவினர் அண்டலும் கூடும். 67. போர்த்தொழில் பழகு உரை : போர்த்தொழில் - தரை, கடல் வான் ஆகிய இடத்து நிகழும் போர்த்தொழில், பழகு - பயிற்சி பெறு கருத்துரை : எவ்வகைப் போர்த்தொழிலிலும் பயிற்சிபெற வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், பழகு - பயனிலை. 68. மறைஎனல் சூழ்ச்சி உரை : மறைஎனல் - மறைந்த பொருள் உடைய தென்றோ பிறர் அறியக் கூடாமல் மறுக்கப் பட்டதென்றோ கூறப்படும் நூல், சூழ்ச்சி - ஒரு கூட்டத்தின் தந்நல ஏற்பாட்டுத் திட்டமே. கருத்துரை: ஆரியர் மறையை ஒப்பலாகாது. ஆய்வுரை: எனல் - எழுவாய், சூழ்ச்சி - பயனிலை. 69. மாறுவ தியற்கை உரை : மாறுவது - பொருள் நிலை, மக்களின் தேவை காலத்தா லும், இடத்தாலும், சூழ்நிலையாலும் மாறுபடுவது, இயற்கை - இயல்பாகும். கருத்துரை : மாறுவது இயற்கையாதலின் எதிர்க்காதே. ஆய்வுரை : மாறுவது - எழுவாய், இயற்கை - பயனிலை. 70. மிதியடியொடு நட உரை : மிதியடியொடு - செருப்பணிந்து, நட நடப்பாயாக. கருத்துரை : வெறுங்காலொடு நடக்கலாகாது. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், நட - பயனிலை. 71.Û¢bryî தவிர் உரை : மீச்செலவு - வரவுக்கு மேற்படவும், டாம்பீகம் தோன்ற வும் செலவு செய்தல், தவிர் - நீக்கு. கருத்துரை : பெருஞ்செலவு செய்தலாகாது. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், தவிர் - பயனிலை, செலவு - செயப்படு பொருள். 72.Kf¢ru¡fhŒ வாழ் உரை : முகச்சரக்காய் - மக்கள் வாழ்க்கையில் நீ ஓர் எடுத்துக் காட்டாகி, வாழ் - புகழொடு வாழ்க. கருத்துரை : எடுத்துக் காட்டும்படி வாழ்க. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், வாழ் - பயனிலை. முகச்ச ரக்கு - எடுத்துக் காட்டும் சிறந்த சரக்கு. 73. மூப்பினுக் கிடங்கொடேல் உரை : மூப்பினுக்கு - முதுமைக்கு, இடங்கொடேல் - நெஞ்சத் தயர்வையும், நோய்வரும் செயலையும் மேற்கொள் ளாதே. கருத்துரை : இளமையோடிருக்க வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், கொடேல் - பயனிலை, இடம் - செய்யப்படு பொருள். 74. மெய்க்கழி வயற்கின்னா உரை : மெய்க்கழிவு - தெருவிலும், மக்கள் அண்டுமிடங் களிலும் கழிக்கப்படும் மெய்க்கழிவு - (மலம், சிறுநீர், சளி, எச்சில்) அயலார்க்கு, இன்னா - துன்பம் தருவன. கருத்துரை : பிறர்க்குத் துன்பம் தரும்படி மெய்க் கழிவு கழிக்க லாகாது. ஆய்வுரை : மெய்க்கழிவு - எழுவாய், இன்னா - பயனிலை. 75. மேலை உன் பெயர் பொறி உரை : மேலை - எதிர்காலம் என்னும் செப்புத் தகட்டில், உன் பெயர் பொறி - உன் புகழை எழுது. கருத்துரை : புகழைத் தேடவேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், பொறி - பயனிலை. பெயர் - செயப்படுபொருள். புகழை எழுதுவதாது - புகழுக்குரிய செயல் செய்தல். 76. மையம் பாய்தல் தீர் உரை : மையம் பாய்தல் - மாறுகொண்ட இருபுறமும் சேராம லிருந்து, வென்றவர் புறத்திற்சேரும் தாழ் நடையை, தீர் - நீக்கு. கருத்துரை : வென்றாருடன் சேர்ந்து தோல்வியுற்றாரை நலிவு செய்தல் தாழ் செயலாகும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், தீர் - பயனிலை, மையம் பாய்தல் - செயப்படு பொருள். 77. மொடு மாற்றுப் பொது வின்னா உரை : மொடு மாற்று - கொள்ளை இலாப விற்பனை, பொது இன்னா - பொது மக்களுக்குத் துன்பன் ஆம். கருத்துரை : வாணிகத்தில் கொள்ளை இலாபம் அடிக்கலாகாது. ஆய்வுரை : மொடு மாற்று - எழுவாய், இன்னா - பயனிலை. 78. மோத்தலிற் கூர்மை கொள் உரை : மோத்தலில் - மோந்து பொருளின் நாற்றமறிதலில், கூர்மை கொள் - மிக்குணர்வு பெறு கருத்துரை: மூக்குணர்வை இழத்தல் கூடாது. மூக்குத்தூள் போடுவதாலும், சளி நோய் தேடிக் கொள்வ தாலும் மூக்குணர்வு கெடுகிறது. 79. *வறுமை ஏமாப்பு உரை : வறுமை - இல்லாமைக்குக் காரணம், ஏமாப்பு - பொதுவான உலகின் செல்வத்தைப் பிறர் மிகுதியாகப் பெற விட்டு ஏமாந்ததுதான். கருத்து : ஏமாந்தான் ஏழை; ஏற்றமுற்றான் பணக்காரன். ஆய்வுரை : வறுமை எழவாம், ஏமாப்பு பயனிலை. 80. வாழாட்கு வாழ்வு சேர் உரை : வாழாட்கு - துணைவனை இழந்து வாழா நிலையுற்ற பெண்ணுக்கு, வாழ்வு சேர் - மறு மணம் செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்து. கருத்துரை : பெண்கட்கு மறுமணம் வேண்டும். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், சேர் - பயனிலை. வாழ்வு - செயப் படுபொருள். 81. விடுதலை உயிர்க்கு உயிர் உரை : விடுதலை - மதம், சாதி, சடங்கு முதலிய கட்டுகளி னின்று விடுபடும் நிலை, உயிர்க்கு உயிர் - உன் உயிர்க்கு உயிராகும். கருத்துரை : விடுதலை வேண்டும். ஆய்வுரை : விடுதலை - எழுவாய், உயிர் - பயனிலை. 82. வீடெனல் சாதல் உரை : வீடு எனல் - உயிர் விடுதல், மோக்ஷம், முத்தி என்பன அனைத்தும், சாதல் - அதன் பின் எந்த நிலைமைக்கும் உரிமையற்ற சாக்காடாகும். கருத்துரை : ஆத்மா இருப்பதும். உடல் நீங்கிய பின் அது வேறு நிலையை அடைவதென்பதும் இல்லை. ஆய்வுரை : எனல் - எழுவாய், சாதல் - பயனிலை, 83. வெறும் பேச்சுப் பேசேல் உரை : வெறும் பேச்சு - பயனில்லாத பேச்சுகளை, பேசேல் - பேசாதே. கருத்துரை : பயனற்ற பேச்சுப் பேசுதல் வேண்டாம். ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், பேசேல் - பயனிலை, பேச்சு - செயப்படுபொருள். 84. வேளையோடு ஆர உண் உரை : வேளையோடு - முன் உண்டது அற்றபின், ஆரஉண் - வேண்டுமட்டும் உணவு உண். கருத்துரை : பசி எடுத்த பின் வேண்டுமட்டும் புசி. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், உண் பயனிலை. 85. வையம் வாழ வாழ் உரை : வையம் - உலக மக்கள், வாழ - நல்வாழ்வு பெறுவதற்காக, வாழ் - தொண்டாற்றி வாழ்க. கருத்துரை : பிறர்க்கென வாழ்க. ஆய்வுரை : நீ - தோன்றா எழுவாய், வாழ் - பயனிலை. 