தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம் உரையாசிரியர் : நச்சினார்க்கினியர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 392 = 408 படிகள் : 2000 விலை : உரு. 380/- நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீ முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : கீழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை சார்ந்த தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி (EFEO) யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே ‘உயர்தனிச் செம்மொழி’ எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், ‘உலக முதன் மொழி தமிழே’ என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனையையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! “எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்” என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. “புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்” தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய ‘இலக்கண வரலாறு’ என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பையும் பெற்றுத்தந்த பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், ஆகியோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு அரசி. அரசியல் சருக்கம் எ., எழுத். எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது குறள். திருக்குறள் குறிஞ்சிப். குறிஞ்சிப்பாட்டு குறுந். குறுந்தொகை சிறுபாண். சிறுபாணாற்றுப்படை சிலம்பு. சிலப்பதிகாரம் சீவக., சிந்தா. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி திணைமாலை. திணைமாலை நூற்றைம்பது திரிகடு. திரிகடுகம் தூதுவிடு. தூதுவிடு சருக்கம் தொ.எ. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொ.சொ. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொ.பொ. தொல்காப்பியம் பொருளதிகாரம் நற். நற்றிணை நான்மணி. நான்மணிக்கடிகை நாலடி. நாலடியார் நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப்பாலை பதிற்று. பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பெரும்பா. பெரும்பாணாற்றுப்படை மணி. மணிமேகலை மதுரைக். மதுரைக்காஞ்சி முருகு. திருமுருகாற்றுப்படை முல்லைப். முல்லைப்பாட்டு வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு “தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்” இதனொடும் இணைக்கப்பட்டுளது! “வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே!” அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் ‘கருவிநூல் பதிப்பகம்’ என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள ‘மண்’ எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து ‘இந்தா’ என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் ‘தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை’ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் உள்ளடக்கம் தொல்காப்பியம் ... 01 எழுத்ததிகார இயலமைதி ... 21 எழுத்ததிகார வாழ்வியல் விளக்கம் ... 24 நச்சினார்க்கினியர் ... 46 பாயிரம் - தெளிவுரை ... 55 எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை பொதுப் பாயிரம் ... 57 சிறப்புப் பாயிரம் ... 62 1. நூன்மரபு ... 70 2. மொழிமரபு ... 95 3. பிறப்பியல் ... 121 4. புணரியல் ... 130 5. தொகைமரபு ... 156 6. உருபியல் ... 181 7. உயிர்மயங்கியல் ... 197 8. புள்ளிமயங்கியல் ... 243 9. குற்றியலுகரப் புணரியல் ... 296 பாயிர மேற்கோள் நிரல் ... 339 நூற்பா நிரல் ... 340 சொல் நிரல் (மேற்கோள்) ... 346 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) ... 358 செய்யுள் நிரல் (மேற்கோள்) ... 376 கலைச்சொல் நிரல் (நூற்பா வழி) ... 378 கலைச்சொல் நிரல் (உரை வழி) ... 383 தொல்காப்பியப் பதிப்புகள் - காலவரிசை நிரல் ... 389 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசை களையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசை களும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப் பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப ஙஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பி யன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம் ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லையாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர். (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை) இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் எழுத்ததிகார இயலமைதி தமிழ் முத்தலைவேல் போல முக்கூறுபட்டது. அது, இயல் இசை கூத்து (நாடகம்) என வழங்கப்பட்டது. ஆகலின், முத்தமிழ் எனப்படுவ தாயிற்று. தமிழின் முதற்பிரிவாம் இயலும் முக்கூறுபட்டு வழங்கியது. அம் முக்கூறும் எழுத்து சொல் பொருள் எனப்பட்டன. பின்னாளில் இலக்கணம் ஐந்தாகவும் ஆறாகவும் எண்ணப் பட்டவை இம் மூன்றன் விரிவாக்கமேயாகும். இன்னும் விரிவாக்கம் பெறவும் இடம்கொண்டவை இம்முப்பிரிவுகளும். ஆசிரியர் தொல்காப்பியர்க்கு முன்னரே எண்ணிலாத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் விளங்கின. பல்கியும், பலவாகவும் கிடந்த அவற்றைத் தொகுத்து முறைப்படுத்தித் தந்தவர் தொல்காப்பியரே. அச் செயலைக் குறிக்கும் வகையாலேயே தொன்மையான தமிழ் மரபுகளை யெல்லாம் காக்கும் நூல் என்னும் பெயரில் தம் நூலை யாத்து, அதனை யாத்தமையால் தாமும் அப்பெயர் கொண்டும் விளங்கினார். தொல் + காப்பு + இயம் = பழமையான மொழிமரபு காக்கும் நூல் தொல்காப்பியம் ஆயிற்று. உலகத் தோற்றத்தில் உயிர்களின் வாழ்விடமாக அமைந்தது மண். மண்வெளிப்பட்டு வாழும் வகைக்குத் தக அமைந்தபின் உயிர்கள் தோன்றின; ஆறாம் அறிவுடைய மாந்தனும் தோற்றமுற்றான். அவன் கூடிவாழும் இயல்புடையவனாக இருந்தமையால் தன் கருத்தைப் பிறர்க்கு அறிவிக்க முயன்றான். அம்முயற்சி முகம் கை வாய் கண் குறிகளாக அமைந்தன. அக்குறிகளின் அளவு போதாமையால் வாய்ச்செய்கை ஒலிகளை மேற்கொண்டு பெருக்கினான். அதுவும் போதாமையால் எழுத்துக் குறிகளை உருவாக்கிப் பெருக்கினான். இவ்வகையால் பொருள், பொருளைக் குறிக்கும் சொல், சொல்லின் உறுப்பாகிய எழுத்து என்பவை முறைமுறையே தோன்றின. அவ்வகையில் பொருள், சொல், எழுத்து எனப் படிமுறையில் அமைந்தாலும் எழுத்து, சொல், பொருள் என்றே அமைந்தன - வழக்குற்றன. கருத்தை வெளிப்படுத்துதலில் முகத்தோற்றம் அசைவு முதலிய மெய்ப்பாடுகளே முதன்மை பெற்றன. பின்னர் இசை வழியாகவும் அதன் பின்னர் உரையாடல் வழியாகவும் அமைந்தன. எனினும் இயல் இசை கூத்து என்றே அமைந்தன. மண் தோன்றிய பின்னர் மக்கள் தோன்றி மக்கள் தோன்றியபின் மொழி தோன்றினாலும் அம்மொழியின் பெயரே, அதனைப் பேசிய மக்களுக்கும், அம்மக்கள் வாழ்ந்த மண்ணுக்கும் பெயராயின. அதனால் தமிழ், தமிழர், தமிழகம் என்னும் பெயரீடுகள் எழுந்தன. இனி மக்கள் வாழ்வியல் அடிப்படையில் துய்ப்பாகிய இன்பமும், இன்பத்திற்குத் தேவையாம் பொருளும், பொருளின் பயனாம் அறமும் என்னும் இன்பம், பொருள், அறம் என்பனவும் அறம் பொருள் இன்பம் எனவே வழக்குற்றன. இவையெல்லாம் அடிப்படையும் நிலைபேறும் பயனும் கருதிய அமைப்புகளாம். தொல்காப்பிய முதற்பகுதி எழுத்ததிகாரம் எனப்பட்டது. எழுத்து இலக்கணத்தைப் பகுத்தும் விரித்தும் கூறும் பகுதி ஆதலின் எழுத்து அதிகாரம் ஆயிற்று. அதிகாரம் என்பதற்கு விரிவு, ஆட்சி, ஆணைமொழி எனப் பொருள்கள் உள. இவ்வெல்லாப் பொருள்களும் அமைய அமைந்தது இவ்வதிகாரம். அதிகாரத்தின் உட்பிரிவு இயல் எனப்பட்டது. எழுத்திலக்கணப் பகுதி ஒன்றன் இயல்பைக் கூறுவது ஆகலின் இயல் எனப்பட்டது. இயல் கூறுவது எதற்காக? செயற்பாட்டுக்காகவே இயல் கூறல் வழக்கம். ஆதலால் `இயல் செயல்' என இணைமொழி வழக்கில் உண்டாயிற்று. ஆதலால், ஒவ்வோர் இயலும் `இயல் செயல்' என்பவற்றை இணைத்தே கூறுகின்றன. ஒவ்வோர் அதிகாரமும் ஓர் ஒழுங்குபெற ஒன்பது ஒன்பது இயல்க ளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவ்வகையால் எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்களைக் கொண்டுளது. இவை திட்டமிட்டுக் கோக்கப்பட்ட கோவை போல் சங்கிலித் தொடர்போல் அமைந்தவை. எழுத்து என்பதன் முதனிலை எழு என்பது. எழு என்பது தோற்றம், எழுச்சி, உயர்ச்சி, அழகு, மிகுதி, உறுதி முதலிய பலபொருள் தரும் அடிச்சொல்லாகும். ஒலி எழுதலும், வரி எழுதலும் ஆகிய வகையாலும் எழுத்து ஒலி எழுத்து (ஒலி வடிவம்) வரி எழுத்து (வரி வடிவம்) என இருவகைக்கும் பொருந்தியது. அன்றியும் எழுத்தின் அளபு மிகுதற்கு அடையாளமாக வரும் அளபெடை என்பதையும் `எழூஉ'தல் என்பதற்கும் மூலமாயிற்று. எழுதுதல் பயன்பாடு எழுதலும் எழும்புதலும் எழுப்புதலும் ஆம் என்பதை விளக்கும் மூலமும் ஆயிற்று. இவ்வெழுத்து ஆராயப்பட்ட வகையை உரையாசிரியர் இளம் பூரணர் அருமையாக விளக்குவது இவண் அறியத்தக்கது. அதனை நூன்மரபு முதல் நூற்பாவின் தொடக்கத்தில் அவர் வரையும் உரையால் அறிக. - இரா. இளங்குமரன் எழுத்ததிகார வாழ்வியல் விளக்கம் பழந்தமிழர் மொழியியலை மட்டுமன்றி, நாகரிகம், பண்பாடு, கலை, வாழ்வியல் மரபுகளையும் தொகுத்து வைக்கப்பட்டுள்ள ‘வைப்புப் பெட்டகம்’ தொல்காப்பியமாகும். எழுவாய் முதல் இறுவாய் வரை ‘வாழ்வியல் வார்ப்’பாகவே அமைந்து, நம் முந்தையர் வாழ்வைக் காட்டுவதுடன், பிந்தை மாந்தர்க்கு வேண்டும் வாழ்வியல் கூறுகளையும் வகுத்துக் காட்டி உயிரோட்டமாகத் திகழ்வதும் தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் தம் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது போல், “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்” என்கிறார் (1021). செய்வன வெல்லாம் மாசுமறுவில்லாச் செயல்களாக இருத்தல் வேண்டும். இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக் காலமும் நுணுகி நோக்கிச் செய்வதாக இருக்க வேண்டும். அச்செயலையும் செய்யத் தக்க நெறிமுறை தவறாது செய்தல் வேண்டும். - இவற்றைத் தன்னகத்துக் கொண்டது எதுவோ அது, அறிவர் (சித்தர்) நிலை என்பது என்னும் பொருளது இந்நூற்பா. மேலும், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்” என்னும் நூற்பாவிற்கு (594) எடுத்துக்காட்டாக விளங்குவதும் தொல் காப்பியமாகும். “பிறரால் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தல் வேண்டும். அச்செயல்களை, ‘யாம் செய்தேம்’ என்னும் எண்ணம்தானும் தோன்றா தவராக இருத்தல் வேண்டும். அத்தகு மெய்யுணர்வு மிக்கோரால் செய்யப் பட்டது எதுவோ, அதுவே முதல்நூல் எனப்படும்” என்கிறார். முதல் முதல் என்பது பிற நூல்களுக்கு மூலமானது என்னும் பொருளது. மூலமாவது வித்து. ஒரு வித்து பல்வேறு வித்துகளுக்கு மூலமாவது போல் பல நூல்களுக்கு மூலமாக அமைந்த அருமையது அது. தொல்காப்பியம் தமிழ்ப்பரப்பில் முதல் நூல் அல்லது மூலநூல் அன்று. அதற்குரிய சான்று நூற்றுக்கணக்கில் அந்நூலிலேயே உண்டு. ஆனால், அந்நூல் வித்து நூல் எனப்படும் முதல் அல்லது மூலநூல் என்பதற்குரிய சான்றுகளோ அதனினும் மிகப்பலவாக உண்டு. என்ப, என்மனார் புலவர், என்மரும் உளரே என வருவன, தொல்காப்பியம் தனக்கு ‘முற்படு நூல்களைத் தொகுத்துக் காட்டும் பிற்படு நூல்’ என்பதற்குச் சான்றாம். ஆனால், தொல்காப்பிய வழியிலே தோற்ற முற்ற நூல்களைத் தொல்காப்பியமாகிய அளவுகோல் கொண்டு அளந்து பார்க்கும் போதுதான், அதன் ‘அளப்பரும் வளம் பெருங்காட்சி’ வெளிப்படும். முந்து நூல் தொல்காப்பியர்க்கு முந்துநூல்கள் மிகவுண்டு. இலக்கியம் இலக்கணம் துறைநூல் கலைநூல் என வகைவகையாய் உண்டு என்பதற்குச் சான்று தொல்காப்பியத்திலேயே உண்டு என்றோம். ஆனால், ‘அவற்றின் பெயர் என்ன?’ எனின் -‘தெரியாது’ என்பதே மறு மொழி. தொல்காப்பியம் அகத்தியத்தின் வழியது என்கின்றனரே; அஃது உண்மையா? உண்மை என்பதற்குச் சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆளும் வேந்தரைப் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர்” (1006) என்று சுட்டும் தொல்காப்பியர், தம் நூலுக்கு அகத்திய மென ஒரு முன்னூல் இருந்திருப்பின் அதனைச் சுட்டத் தவறியிரார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனாரும் குறிக்கத் தவறியிரார். ஏனெனில், அகத்தியர் மாணவருள் ஒருவர் பனம்பாரர் என்றும், தொல்காப்பியரின் ஒரு சாலை மாணவர் (உடன் பயின்றவர்) அவர் என்றும் சுட்டப்படுகிறார். ஆதலால், அவரேனும் பாயிரத்தில் சுட்டி யிருப்பார். அரங்கேற்றிய அவையம் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவை யம்’ என்றும், அதற்குத் தலைமை தாங்கியவர் ‘அதங்கோட் டாசிரியர்’ என்றும் கூறும் அவர், அகத்தியர் பெயரைச் சுட்டிக் காட்டாமல் விட்டிரார். இனி, அகத்தியர் என்னும் பெயர் தொகை நூல் எதிலும் காணப் படாத ஒரு பெயர். அகத்தியர் என்னும் பெயர் மணிமேகலையில் ஒரு விண்மீன் பெயராக வருவதே முதல் வரவு. தொல்காப்பியர்க்கு ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுக்குப் பிற்பட்டவர் சாத்தனார். அகத்தியர் புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள், பன்னிரு பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்கள், அகத்தியர் பெயரான் அமைந்த கணிய மருத்துவ நூல்கள், கம்பர் பரஞ்சோதியார் முதலோர் பாடல்கள் எல்லாம் பிற்பட இருந்த அகத்தியர் என்னும் பெயரினர் பற்றியும் அவர் தோற்றம், செயல்பற்றியும் புனைவு வகையால் கூறுவனவேயாம். ‘பேரகத்தியத் திரட்டு’ என்பதொரு நூல், முத்துவீரியம் என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கண நூலுக்குப் பிற்பட அகத்தியர் பெயரில் கட்டி விடப்பட்ட நூல் என்பது வெளிப்படை. ஏனெனில் முத்து வீரியத்தில் காணப்படாத அளவு வடசொற்பெருக்கம் உடையது அது. ஆதலால், தொல்காப்பியம், அகத்தியம் என்னும் நூலின் வழிநூல் அன்று. தமிழ் முந்து நூற்பரப்பெல்லாம் ஒரு சேரத் திரட்டிச் செய்நேர்த்தி, செம்மை, மரபுக் காப்பு, புத்தாக்கம் என்பவற்றை முன்வைத்துத் தொகை யாக்கப்பட்டதும் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் எல்லாம் முந்து நூலாக இருப்பதும் தொல்காப்பியமே ஆகும். பாயிரம் “ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே” என்னும் பாயிர இலக்கணச் சிறப்புக்கு, முழு முதல் மூலச் சான்றாக அமைந்தது தொல்காப்பியப் பாயிரமேயாம். அப்பாயிரம், நூலுள் நூலாக ஆய்வுசெய்யப்பட்டது உண்டு. நூலின் வேறாக நூலொடு சார்த்திச் சிவஞான முனிவராலும், அரசஞ் சண்முகனாராலும் ‘பாயிர விருத்தி’ எனச் சிறப்பொடு நுணுகி ஆயப்பெற்று நூலாயதும் உண்டு. அப்பாயிரம் ஒன்று மட்டுமேனும் தமிழ் மண்ணின் ஆள்வோர்க்கும் அறிவர்க்கும் ஊன்றியிருந்திருப்பின், பின் வந்துள்ள இழப்புகள் பற்பலவற்றை நேராமல் காத்திருக்க முடியும். நிலவரம்பு “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்று அது கூறும் நிலவரம்பு, இன்று தமிழர்க்கு உண்டா? தமிழரால் அதனைக் காக்க முடிந்ததா? தோல் இருக்கச் சுளை விழுங்கிய சான்று அல்லவா அது! வடவேங்கடம் மலைதானே. தென்குமரியும் மலையாகத்தானே இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள தென்குமரி எல்லை இல்லையே அது. “பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று சிலப்பதிகாரத்தால் அறியப்படும் குமரிக்கோடு அல்லவோ அத் தென்குமரி. வடவேங்கடம் மொழித் திரிபால் நம்மை விட்டுப் போயது என்றால், கடல் கோளால் போயது அல்லவோ குமரிக்கோடு! (கோடு-மலை). எப்பொழுது ஒரு மண் தன்மொழியை இழக்கின்றதோ அப்பொழுதே தன் மண்ணையும் இழந்து போகின்றது. அதனால்தான் பரிபாடல் என்னும் தொகை நூல், “தண்தமிழ் வேலித் தமிழ் நாட்டகம்” என்றது. அதனையே முற்படக் கூறியது தொல்காப்பியப் பாயிரம். “தமிழ் கூறு நல்லுலகம்” என்பது அது. தமிழ் கூறுதல் இல்லாத மண் எப்படித் தமிழ் மண்ணாக இருக்கும்? தமிழ் கூறும் மண்ணாக இருந்ததன் தடமும் தெரியாமல் அழிக்க அண்டை மாநிலங்களாகிய ஆந்திரம் கருநாடகம் கேரளம் ஆய மூன்றும் முன்னரே திட்டமிட்டுச் செய்த மண்பறிப்பு, மேலும் தொடர்வதை அன்றி மீட்கப் பெற்றது உண்டா? அண்டை அயலார், “எடுத்தவை எல்லாம் போகக் கிடைத்தவை எம்பேறு” என்று கொள்ளப்பட்டதுதானே இத் தமிழ்நாடு? மொழியின் உயிர்ப்பு ஒரு மொழியின் வளர்ச்சியும் வாழ்வும் அதன் நூல்களிலே மட்டுமோ உள்ளது? அதன் உயிர்ப்பும் உரனும் பொதுமக்கள் வாயில் அல்லவோ உள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளாத மண், அம்மொழி யின் மண்ணாக இராமல் நூலின் அகத்தும், நூலகத்தும் ஒடுங்கிப் போய் விடும் அல்லவோ! எத்தனை ஊர்ப் பெயர்களைத் தெலுங்காக மாற்றினர்! எத்தனை எத்தனை தமிழ் அலுவலர்களைச் சென்னை இராச்சியமாக இருந்த போதே திட்டமிட்டுத் தெலுங்கு அலுவலராக மாற்றினர்! எத்தனை தமிழ்ப் பள்ளிக் கூடங்களை ஒழித்துத் தெலுங்குப் பள்ளிகளை உண்டாக்கினர்! அப்பொழுது ஆட்சியில் இருந்தவர்கள், “செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்னும் இருவகைக் கேட்டுக்கும் சான்றாகத் தாமே இருந்தார்கள்! இன்று வரை அத்தடம் மாறாமல் தானே ஆட்சிக் கட்டில் ஏறியவர்கள் நடை முறைகள் உள்ளன! ஆயினும், ஆட்சிக் கட்டில் ஏறப் பொதுமக்கள் வாக்குகள் கிட்டுகின்றனவே ஏன்? பொதுமக்கள் வாழ்வுப் பொருளாக மொழி ஆக்கப்பட்டிலது. அதன் விளைவே இது என்பதை உணர்ந்து கடமை புரியாமல், வெறும் முழக்கத்தால் ஏதாவது பயன் உண்டா? ஆய்வு முறை தொல்காப்பியம், வழக்கு செய்யுள் என்னும் இரண்டு அடிப்படை களிலும் ஆய்ந்து செய்யப்பட்ட நூல் என்னும் பாயிரச் செய்தி, ஆயிரமுறை ஓதி உணர்ந்து செயற்படுத்த வேண்டிய செய்தி அல்லவா! தொல்காப்பியர் ஆய்ந்த முறையை, “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி” என்கிறது பாயிரம். எழுத்தும் சொல்லும் சொற்றொடர் ஆக்கமும் தாம் இலக்கணமா? எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருள் குறித்தது அல்லவோ! “பொருள் இல்லாக்கால் எழுத்தும் சொல்லும் ஆராய்வது எதற்கோ?” என்னும் இறையனார் களவியல் செய்தி பொருளின் மாண்பு காட்டும். பொருளிலக்கணமாவது வாழ்வியல் இலக்கணம்; தமிழ் மொழியில் மட்டுமே அமைந்த இலக்கணம்! பாயிரம் தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்தார். அவர் ஆய்ந்த வகை, 1. செந்தமிழ்நாட்டு மக்கள் வழக்கொடு ஆராய்ந்தார். 2. அவர்க்கு முன்னே ஆராய்ந்து நூலாக்கம் செய்த பெருமக்களின் நூல்களை ஆராய்ந்தார். 3. முறைமுறையே அவை ஒவ்வொன்றற்கும் முரணாவகையில் ஆராய்ந்தார். 4. புலமைத் திறத்தோடு ஆய்ந்து கொண்ட கருத்துகளை அடைவு செய்தார். 5. எவரும் குறை கூறா வகையில் யாத்தார். இவற்றைப் பனம்பாரனார் பாயிரம், “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்” என்கிறது. செந்தமிழ் வழக்கு இதனால், செந்தமிழ் வழக்கே வழக்காகக் கொண்டு அச் செந்தமிழ் வழக்கைக் காக்குமாறே தொல்காப்பியம் செய்யப்பட்டது என்றும், அஃது அயல்வழக்குக் கொண்டு அமைக்கப்பட்டது அன்று என்றும், உரை காண்பாரும், உளங்கொண்டு வாழ்வாரும் அச் செந்தமிழ் வழக்குக் கொண்டே உரை காணவும் வாழ்வியல் நடை கொள்ளவும் வேண்டும் என்றும் தெளிவித்தாராம். ஆதலால், தொல்காப்பிய இலக்கணத்தையோ, வாழ்வியலையோ அயன்மைப் படுத்துவார், ‘தமிழியல் கெடுத்துத் தாழச் செய்வார்’ என்றும், அவர்வழி நிற்பாரும் அவர் போல் கேடு செய்வாரே என்றும் கொள்ள வேண்டும் என்றும் தெளிவு ஏற்படுத்தினாராம். அரங்கேற்றம் ஒரு நாடு அயலாராலும் அயன்மையாலும் கெடாமல் இருக்க ஒருவழி, நூல் ஆக்கி வெளிப்படுத்துவாரைக் கண்ணும் கருத்துமாக நோக்கி யிருக்க வேண்டும். கற்பவன் ஒருவன் செய்யும் தவற்றினும், கற்பிப்பவன் செய்யும் தவறு பன்னூறு மடங்கு கேடாம்; அவன் செய்யும் கேட்டினும், நூலாசிரியன் ஒருவன் செய்யும் கேடு பல்லாயிர மடங்கு கேடாம். அக்கேடு நாட்டுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் எனின், நூலாய்த லில் வல்ல தக்கோர் அவையத்தில் அந்நூல் அரங்கேற்றப்பட்டு, அவ்வவையோர் ஏற்புப் பெற்று, அரசின் இசைவுடன் வெளியிடப்பட வேண்டும் என்னும் கட்டாயத்திட்டத்தை வைத்தாக வேண்டும்! இல்லாக்கால், ‘காப்பார் இல்லாக் கழனி’ என நாடு கேடுறும் என்று கூறி வழிகாட்டுகிறது அப் பாயிரம். அதுவுமன்றி அரங்கத் தலைவன், ஒருவனையோ ஒருவகைக் கருத்தையோ சாராமல் நடுவு நிலைபோற்றும் நயன் மிக்கோனாகத் திகழவும் வேண்டும் என்றும் கூறுகிறது. அதனை, “அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பில் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே” என்கிறது. ஒரு புலவரோ, சில புலவர்களோ கூடியமைத்த அமைப்பு அன்று; ஓரூர் அல்லது ஒரு வட்டார அமைப்பு மன்று; அது நாடளாவிய அமைப்பு என்பாராய், “நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து” என்கிறார். ‘நூல் தணிக்கைக் குழு’, என ஓர் அமைப்பு இக் குடியரசு நாளில் தானும் உண்டா? எல்லாரும் இந்நாட்டு மன்னர்; ஒத்த உரிமையர்; பிறப்பால் வேறுபாடு அற்றவர் என்னும் குடியரசு நாளில், பிறப்புவழி வேறுபாடு காட்டும் ‘வருணாசிரம’-‘மநுநெறி’ நூல்கள் நாட்டில் நடமாட விடலாமா? அந்நூல்களை நடையிட விட்டுவிட்டு, அத்தகு குலப்பிரிவு நூல்களை மறுத்து எழுதிய நூல்கள் “நாட்டுக்குக் கேட்டு நூல்கள்” என்று தடை செய்யப்படலாமா? தணிக்கை திரைப்படத் தணிக்கை என ஒரு துறை இருந்தும், குப்பை வாரிக் கொட்டியும் கோடரி கொண்டு வெட்டியும் அழிவு செய்யும் பண்பாட்டுக் கேட்டுப் படங்களையும் பளிச்சிட விடும் தணிக்கைத் துறைபோல் இல்லாமல், மெய்யான “நூல் தணிக்கைத் துறை” ஒன்று வேண்டும் என்பதைத் தொல்காப்பிய முகப்பே காட்டுவது தானே பனம்பாரர் பாயிரம்! இவையெல்லாம் தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்பதன் முத்திரைகள் அல்லவா! தீய நூல்களையும் வன்முறை நூல்களையும் வெறிநூல்களையும் உலாவவிட்டு விட்டு ‘ஐயோ! உலகம் கெட்டுவிட்டது; மக்கள் கெட்டு விட்டனர்’ என்னும் போலி ஒப்பாரி செய்தலால் என்ன பயன்? பண்படுத்தம் செய்ய விரும்புவார் சிந்திக்க வேண்டும் செய்தி இஃதாம். எழுத்து தமிழ்மொழியில் எழுத்துகள் எவ்வளவு? உயிர்-12, மெய்-18; உயிர்மெய்-216; ஆய்தம்-1 என்று 247 காட்டுவாரும்; அதற்கு மேலும் நடையிடுவாரும் உளரே! தொல்காப்பியர் என்ன சொல்கிறார்? “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே ” என எழுத்து 33 என்று தானே சொல்கிறார். இவ்வெழுத்து எண்ணிக்கை மிகையா? ஆங்கிலத்தைக் கொண்டு தானே தமிழ் எழுத்தின் எண்ணிக்கை ‘கூடுதல்’ எனப்படுகிறது. தமிழில் உள்ள குறில் நெடில் என்னும் இருவகையுள் ஒருவகை போதுமென ஆங்கிலம் போல் கொண்டால், ஆங்கிலம் போல் உயிரும் மெய்யும் தனித்தனியே எழுதினால் ஆங்கில எழுத்தினும் தமிழ் எழுத்து எண்ணிக்கை குறைந்து தானே இருக்கும். அன்றியும் ஆங்கிலம் 26 எழுத்துத்தானா? பெரிய எழுத்து, சின்ன எழுத்து , கையெழுத்து பெரியது சின்னது என எண்ணினால்! எண்ண வேண்டும் தானே! குறில் நெடில் என்னும் பகுப்போ, உயிர்மெய் என்னும் இணைப்போ இல்லாமையால், மூன்றெழுத்து நான்கெழுத்து என முடிவனவும் ஆறெழுத்து ஏழெழுத்து ஆகும் அல்லவோ! தமிழ் - Tamil, Thamil, Thamizh முருகன் = Murugan நெட்டெழுத்தெல்லாம் ‘சொற்கள்’ அல்லவா தமிழில்! ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ. கா, கீ, கூ, கே, கை,கோ. இவை பொருளமைந்த சொற்கள் அல்லவா! a, I என்னும் இரண்டையன்றி எழுத்துகள் சொல்லாதல் ஆங்கிலத்தில் உண்டா? எழுத்தைச் சொன்னால் சொல் வந்து நிற்குமே தமிழில்! எதனால்? ஓரெழுத்துக்கு ஓரொலியே உண்டு. எழுத்தொலிக் கூட்டே சொல்! அ-ம்-மா - அம்மா இந்நிலை ஆங்கிலத்தில் இல்லையே. எழுத்து வேறு; ஒலி வேறு; சொல் வேறு அல்லவா! F, X, Z இவற்றுக்கு, ஒலியெழுத்து இரண்டும் மூன்றும் நான்கும் அல்லவா! மெய்யியல் தமிழில் உள்ள எழுத்துகளின் பெயரே மெய்யியல் மேம்பாடு காட்டுவன! உயிர், மெய், உயிர்மெய், தனிநிலை, சுட்டு, வினா, குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் - இவை எழுத்தின் பெயர்கள் மட்டுமா? மெய்யியல் பிழிவு தானே! இவற்றைக் குறிக்கும் பகுதிதானே நூன்மரபு என்னும் முதலியல். தமிழ், முத்தமிழ் எனப்படுமே. இசைப்பா வகைக்கு, இங்குச் சொல்லப்பட்ட இயல் இலக்கணம் மட்டும் போதுமா? “இசை நூல் மரபு கொண்டே அதனை இசைக்க வேண்டும்; அதனை இந்நூலில் கூறவில்லை. அதனை இசைநூலில் காண்க ” என்கிறார் தொல்காப்பியர் நூன்மரபு நிறைவில். ஏன்? அந்நாளிலேயே இசைநூல்கள் இருந்தன; இசைக் கருவிகள் இருந்தன; இசை நூல்கள் ‘நரம்பின் மறை’ எனப்பட்டன. அவற்றைக் காண்க என்பாராய், “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்றார் (33). மொழி மரபில் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனப்படும் சார்பு எழுத்துகள் நிற்கும் வகை, ஒலி நிலை என்பவற்றைக் கூறுகிறார். சொல்லுக்கு முதலாம் எழுத்து இறுதி எழுத்து என்பவற்றையும் கூறுகிறார். க்+அ=க. ‘க்’ என்பதை ‘இ’ சேராமல் சொல்ல முடியுமா? ‘க’ என்பதை ‘இ’சேராமல் சொல்ல ஏன் முடிகின்றது? ‘க’ என்பதில் ‘அ’ என்னும் உயிரொலி சேர்ந்திருத்தலால் முன்னே ஓர் உயிர்ஒலி இல்லாமல் - சேராமல் - ஒலிக்க முடிகிறது. மெய்-உடல் - தனியே இயங்குமா? “செத்தாரைச் சாவார் சுமப்பார் ” என்பது வழங்குமொழி ஆயிற்றே. உயிர் நீங்கிய உடம்புக்குப் ‘பிணம்’ என்பது பெயராயிற்றே. “பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு” என்பது நம் மந்திரம் அல்லவோ! உயிர், கூத்தன்; உடலை இயக்கும் கூத்தன்; அக் கூத்தன் போகிய உடல் இயக்கமிலா உடல். இம் மெய்யியல் விளக்கம் எழுத்தியக்கத்திலேயே காட்டுவது தொல்காப்பியம். “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்பது அது (46). சிவணும் - பொருந்தும். மொழி மரபில் வரும் இயக்க இலக்கணம் இது. எழுத்துகளின் இயக்கம், இரண்டு புள்ளிகள் வருமிடம், ஒலி கூடுதல் குறைதல் என்பவற்றை மொழிமரபில் சுட்டிக் காட்டி எழுத்துகள் பிறக்கும் வகையைப் பிறப்பியலில் கூறுகிறார். நனிநாகரிகம் சகர உகரம் (சு) உசு, முசு என்னும் இரண்டிடங்களில் மட்டுமே சொல்லின் இறுதியாகவரும். பகர உகரம் (பு) தபு என்னும் ஓரிடத்து மட்டுமே சொல்லிறுதியாக வரும்; ஆனால் தன்வினை பிறவினை என்னும் இருவினைக்கும் சொல் முறையால் இடம் தரும். தபு - சாவு (தன்வினை) அழுத்திச்சொன்னால் , தபு - சாவச் செய் (பிறவினை) என்கிறார். சு, பு என்னும் எழுத்துகளை உச்சகாரம், உப்பகாரம் என்று குறிப்பிடுவது நாகரிகம் அல்லவோ! பீ என்பதையும் ஈகார பகரம் என்பது இதனினும் நனிநாகரிகம் அல்லவோ! (234) ‘பசு’ என்பது தமிழ்ச் சொல் அன்று என்றுணர, இடவரையறை செய்கிறாரே! மொழியியலாம் அசையழுத்தத்தைத் தபு என்பதன் வழியே காட்டுகிறாரே! எத்தகு நுண் செவியரும் நாகரிகருமாக நூல் செய்வார் விளங்கவேண்டும் என்பது குறிப்பாகும் அல்லவோ! (75, 76; 79, 80) உயிர்மெய் அல்லாத தனி மெய் எதுவும் எச்சொல்லின் முதலாகவும் வாராது என்பதை ஆணையிட்டுக் கூறுகிறார் தொல்காப்பியர்; ப்ரம்மரம் க்ரௌஞ்சம் - இச்சொற்கள் வேற்று மொழிச் சொற்கள். இவை தமிழியற்படி பிரமரம் கிரௌஞ்சம் என்றே அமைதல் வேண்டும். ‘ப்ரான்சு’ ‘ஷ்யாம்’ இன்னவாறு எழுதுவது மொழிக் கேடர் செயல் என மொழிக் காவல் கட்டளையர் ஆகிறார் தொல்காப்பியர். “பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்” “உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா” என்பவை அவர் ஆணை (59. 60). புள்ளி எழுத்துகள் எல்லாமும் சொல்லில் இறுதியாக வருமா? வாரா! ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொன்றுமே வரும் (78). க், ச், ட், த், ப், ற், ங் என்னும் ஏழும் சொல்லின் இறுதியில் வாரா! ஏன்? சொல்லிப்பார்த்தால் மூச்சுத் தொல்லை தானே தெரியும். ஆதலால், நெடுவாழ்வுக்குத் தமிழியல் உதவும் என்று ஒலியாய்வாளர் குறித்தனர். ‘மூச்சுச் சிக்கன மொழி தமிழ்’ என்பதை மெய்ப்பித்தவர் பா.வே.மாணிக் கர். தொல்காப்பியக் காதலர் மட்டுமல்லர் காவலரும் அவர். பாக் - பாக்கு பேச் - பேச்சு வேறுபாடு இல்லையா. நெல், எள் என்பனவற்றையே நெல்லு, எள்ளு என எளிமையாய் ஒலிக்கும் மண், வல்லின ஒற்றில் சொல்லை முடிக்குமா? மூல ஒலி தோன்றுமிடம் உந்தி. ஆங்கிருந்து கிளர்ந்த காற்று தலை, கழுத்து,நெஞ்சு ஆகிய இடங்களில் நின்று, பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் என்னும் உறுப்புகளின் செயற்பாட்டால் வெவ்வேறு எழுத் தொலியாக வரும் என்று பிறப்பியலைத் தொடங்கியவர் (83) வெளிப்படும் இவ்வொலியை யன்றி அகத்துள் அமையும் ஒலியும் உண்டு; அஃது அந்தணர் மறையின்கண் கூறப்படுவது. அதனைக் கூறினேம் அல்லேம் எனத் தமிழ்த்துறவர் ஓக நூன் முறையைக் கூறி அவண் கற்குமாறு ஏவுகிறார் (102). சொல்லின் முதலும் இறுதியும் இரண்டே என்பாராய், “எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீர் இயல” என்கிறார் (103). அ, ஆ; க, கா என்பவற்றை அகரம் ஆகாரம், ககரம், ககர ஆகாரம் எனச் சாரியை (சார்ந்து இயைவது) இட்டு வழங்குவதும், அஃகான், ஐகான் எனக் கான்சேர்த்து வழங்குவதும் மரபு என்கிறார் (134, 135). மணி + அடித்தான் = மணியடித்தான் அற + ஆழி = அறவாழி - இவற்றில் ய், வ் என்னும் இரண்டு மெய்களும் ஏன் வந்தன? நிற்கும் சொல்லின் இறுதியும் வரும் சொல்லின் முதலும் உயிர் எழுத்துகள் அல்லவா! இரண்டு உயிர்கள் இணைதல் வேண்டுமானால் இணைக்க இடையே ஒரு மெய் வருதல் வேண்டும். அம்மெய் உடம்பட- உடம்படுத்த- வருமெய் ஆதலால் உடம்படுமெய் என்றனர். மெய்யியற் சீர்மை, மொழிச் சீர்மை ஆகின்றதே! “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்” என்கிறார் (140). பொருள்தெரி புணர்ச்சி “மாடஞ் சிறக்கவே” என்பதொரு வாழ்த்து. இது “மாடம் சிறக்கவே” என்பது. இதனை, “மாடு அஞ்சு இறக்கவே” என்று பிரித்து உரைத்தால் ‘சாவிப்பு’ ஆகவில்லையா! இதனைக் கருத்தில் கொண்டு மறுதலைப் பொருள் வராவகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக, “எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையில் திரிதல் நிலைஇய பண்பே” என்கிறார் (141). எழுத்து ஒரு தன்மையதுதான்; ஆனால், சொல்லும் முறை யால் வேறு பொருள் தருகின்றமையைக் குறிப்பிட்டுத் தெளிவிக்கிறார். “பரிசாகப் பெற்றேன்; பரிசாகப் பெற்றேன்” என்றான் ஒருவன். அவன், பரிசாகப் பெற்ற பரி, சாகப் பெற்றதில் சொல் மாற்றம் இல்லையே; பொருள் மாற்றம் பெருமாற்றம் இல்லையா? அது, ‘நீர் விழும் இடம்’ என்றால் குறிப்பார் குறிப்புப் போல் இருபொருள் தரும் அல்லவோ! இதனையும் குறிக்கிறார் வாழ்வியல் வளம் கண்ட தொல்காப்பியர் (142). எழுத்து வரிசை “கண்ணன் கண்டான்” “தென்னங் கன்று” கண்ணன் என்பதில் ‘ண்’ என்பதை அடுத்து அதே எழுத்து (ண) வந்தது. கண்டான் என்பதில் ‘ண்’ என்பதை அடுத்து அதன் இன எழுத்து (ட) வந்தது. தென்னம் என்பதில் ‘ன்’ என்பதை அடுத்து அதே எழுத்து (ன) வந்தது. கன்று என்பதில் ‘ன்’ என்பதை அடுத்து அதன் இன எழுத்து (று) வந்தது. இவ்வாறே க,ங; ச,ஞ; ட,ண; த,ந; ப,ம; ற,ன ஒற்று வரும் இடங்களைக் காணுங்கள். அவ்வொற்று வரும்; அல்லது அதன் இன ஒற்று வரும். இத்தகு சொல்லமைதியைப் பொதுமக்கள் வாயில் இருந்து புலமக்கள் கண்டுதானே தமிழ் நெடுங்கணக்கும் குறுங்கணக்கும் வகுத்துளர். ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என அடுத்தடுத்து வைத்தது ஏன்? வல்லினமாகவே மெல்லினமாகவே இடையினம் போல அடுக்கி வைக்காமை வாழ்வியல் வளம்தானே! கங, சஞ என அடங்கல் முறையில் வல்லினத்தின்பின் மெல்லினம் வரினும்,சொல் வகையில் மெல்லினத்தின் பின் வல்லினம் வருதல் மக்கள் வழக்குக் கண்ட மாட்சியின் அல்லது ஆட்சியின் விளைவே ஆகும். ங்க, ஞ்ச (தங்கம், மஞ்சள்) என வருதலை யன்றி, க்ங, ச்ஞ எனவரும் ஒரு சொல்தானும் இல்லையே! இன்றுவரை ஏற்படவில்லையே! எழுத்து முறையை ஙக ஞச ணட என மாற்றிச் சொல்ல எவ்வளவு இடர்? இது பழக்கமில்லாமை மட்டுமா? இல்லை! இயற்கை யல்லாமையும் ஆம். தமிழின் இயற்கை வளம் ஈது! (143) அளவை தொல்காப்பியர் நாளில் ‘பனை’ என ஓர் அளவைப் பெயரும் ‘கா’ என ஒரு நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. அன்றியும் க ச த ப ந ம வ அ உ என்னும் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களால் அளவைப் பெயரும் நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. (169, 170) அவை: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டில் அகல் உழக்கு எனவும், கழஞ்சி சீரகம் தொடி பலம் நிறை மா வரை அந்தை எனவும் வழங்கின. இவையன்றி உரையாசிரியர்களின் காலத்தும் அதன் பின்னரும் வேறுவேறு அளவைகள் வழங்கியுள்ளன. இவையெல்லாம் நம்முந்தையர் வாழ்வியல் சீர்மைகள்! அளவுக்குப் பயன்பட்டது கோல். அக் கோல் அளவுகோல் எனப்பட்டது. அக் கோல் மாறாமல் செங்கோல், நிறைகோல், சமன்கோல், ஞமன்கோல், நீட்டல்கோல், முகக்கோல், எழுதுகோல், தார்க்கோல் என வழக்கூன்றின. அண்மைக் காலம்வரை கலம், மரக்கால், நாழி, உரிஉழக்கு, தினையளவு, எள்ளளவு, செறு, வேலி முதலாகப் பலவகை அளவை வழக்குகள் இருந்தன. பொதி, சுமை, கல், வண்டி, துலாம், தூக்கு என்பனவும் வழங்கின. இவையெல்லாம் நம்மவர் பல்துறை வளர்வாழ்வு காட்டுவன வாம் (170). யாவர் ‘யாவர்’ என்பது ‘யார்’ எனவும்படும். ‘யாது’ என்பது ‘யாவது’ எனவும்படும். இன்னவை வழக்கில் உள்ளவை கொண்டு ஏற்றுக்கொள்ளத் தக்கவை என மக்கள் வழக்கை மதித்து மொழிவளர்க்கச் செய்கிறார் (172). உரு உரு என்பது என்ன? வடிவு; உருபு என்பது வடிவின் அடையாளம். அதன் விளக்கமாவது உருபியல். அதிலே, அழன் புழன் என்னும் சொற்கள் சாரியை பெறுதல் பற்றிக் கூறுகின்றது ஒரு நூற்பா (193). அழன், புழன் அழலூட்டப்படுவதும் புதைக்கப்படுவதுமாகிய பிணம் முறையே அழன், புழன் எனப்படுகின்றன. “இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ” என்பது புறநானூறு. புறங்காடு எனப் பொதுப்பெயர் உண்டாயினும், இடுகாடு, சுடுகாடு என்னும் பெயர்கள் இன்றுவரை நடைமுறையில் உள்ளனவேயாம். இடுகாடு, புதைகாடு எனவும் சுடுகாடு, சுடலை எனவும் வழங்குதலும் உண்டு. அழன் புழன் என்பவற்றைச் சுட்டுகிறார் தொல்காப்பியர் (193). தொல்காப்பியர் உதி, ஒடு, சே என்னும் மரங்களைக் குறிக்கிறார். ஒன்றனைக் கூறி அதுபோல, அதுபோல எனத் தொடர்கிறார் (243, 262, 278). “உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே” “ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே” “சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே” என்பவை அவை. உதிங்கிளை, ஒடுங்கிளை, சேங்கிளை எனவருதலைக் குறிக்கிறார். ஏன் இப்படித் தொடரவேண்டும்? உதி (இ), ஒடு (உ), சே (ஏ) என, சொல் ஈறு வேறுவேறு இல்லையா? ஆதலால் அவ்வவ் விடத்து வைத்துச் சொல்கிறார். அவர் கையாண்ட அரிய நூன்முறை இது. வைத்த இடத்தை மாற்றாமை வைப்புமுறை என நம் வீட்டிற்கும் அலுவலகத் திற்கும் உரிய பொருள்களையும் கோப்புகளையும் ஒழுங்குற வைக்க வழிகாட்டும் வழிகாட்டுதல் எனக் கொள்ளலாம் அல்லவா! உதிமரம் ஒதியாக வழங்குகிறது. ஒதி பருத்து உத்திரத்திற்கு ஆகுமா என்பது பழமொழி. ஒதியனேன் என வள்ளலார் தம்மைத் தாமே சுட்டிக் கொண்டார்! அவர்க்கா அது? ஒடு என்பது உடை என்னும் மரம்; முள்மரம். ஒட்டரங்காடு, ஒடங்காடு என்பது பாஞ்சாலங்குறிச்சிப் பாட்டு. சேங்கொட்டை செந்நிறத்தது. தேற்றாங் கொட்டை என்பதும் அது. தொல்காப்பியர் மரநூல் வல்லார் என்பது மரபியலில் பெருவிளக்கமாம். பனம்பாளையைச் சீவி வடித்த நீரைக் காய்ச்சிப் பாகாக்கிப் பனை வட்டு (வட்டமாக்கிய திரளை) எடுத்தனர். அதனை பனை + அட்டு = பனாட்டு என்றனர். அப்பனாட்டு இது கால் பனை வட்டு என வழங்கப் படுதல் எவரும் அறிந்தது. அட்டு, வட்டு என்ற அளவில் நிற்கவில்லை. கட்டி எனவும் வழக்கூன்றியது. கருப்புக் கட்டி (கரும்பில் இருந்து எடுத்தது) சில்லுக் கருப்புக் கட்டி என்றும் ஆயிற்று. பனங்கட்டி,தென்னங்கட்டி இரண்டும் வெல்லக்கட்டி, சருக்கரைக் கட்டி என்றும் ஆயின. பனைக் கொடி சேரர் கொடி இல்லையா! ஏழ்பனை நாட்டையும் ஏழ்தெங்க நாட்டையும் இவை நினை வூட்ட வில்லையா! ஏழேழு நாடு என்பதன் எச்சமே ஈழ நாடு என்றும் ஏழ்பனை நாட்டின் சான்றே யாழ்ப்பாண நாடு என்றும் நம் வரலாற்றுப் பெருமக்களைத் தூண்டித் துலங்கச் செய்ததை நாம் அறியலாமே. கல்லாதவரும் புளிமரம் என்னார். புளியமரம் என்றே கூறுவார். புளியங்கொம்பு, புளியங்காய் என்றே வழங்குவார். புளிங்கறி, புளிங்குழம்பு, புளிஞ்சாறு என மெல்லெழுத்துவரக் கூறுவதும் வழக்கு. அன்றியும் புளிக்கறி, புளிக்குழம்பு, புளிச்சாறு என்பதும் வழக்கே. இவையெல்லாம் தொல்காப்பியர் காலம் தொட்டே வழங்கப்படுதல் வியப்பில்லையா? (244 - 246) குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ச் சொல்லுக்கு அம் என்பதே சாரியை என்று கூறும் ஆசிரியர் (கமுகங்காய், தெங்கங்காய்) மெல்லெழுத்து வல்லெழுத்தாகாத மரப்பெயரும் உண்டு என்கிறார் (416). வேப்பு வேம்பு கடம்பு என்பவை, ‘வேப்பு கடப்பு’ என்று வழக்கில் உண்மையை நாம் காண்கிறோம் (வேப்பங்காய், கடப்பங்கிளை). அதனால், உரையாசிரியர்கள், வலியா மரப் பெயரும் உள என்பதால், வலிக்கும் மரப் பெயரும் உண்டு என்று கொள்க என்கின்றனர். உரை கண்டார், நூல் கண்டார் நிலையை அடையும் இடங்கள் இத்தகையவை. பூங்கொடி எனலாமா? பூக்கொடி எனலாமா? இரண்டும் சொல்லலாம் என்பது தொல்காப்பியம் (296). ஊனம் உடல் இருவகையாகக் கூறப்படும். ஊன் உடல்; ஒளி உடல் என்பவை அவை. ஊன் உடலில் ஏற்படும் குறை ‘ஊனக் குறை’ எனப் பட்டது. இன்றும் ‘ஊனம்’ உடற்குறைப் பொருளில் வழங்குவதனை நாம் அறிய முடிகின்றதே (270). ஊனம் பற்றித் தொல்காப்பியர் கூறுவதால், அது தமிழ்ச் சொல் என்பதற்கு ஐயமில்லையே! கோயில் கோயில் என்று சிலர் வழங்குகின்றனர். கோவில் என்றும் வழங்குகின்றனர். இவற்றுள் எது சரியானது? இரண்டும் சரியானவைதாமா? “இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்” என நூற்பா அமைத்துளார் தொல்காப்பியர் (293). கோ என்பதன் முன் இல் என்னும் சொல் வந்தால் இயல்பாக அமையும் என்கிறார். முதல் உரையாசிரியர் இளம்பூரணர் ‘கோயில்’ என்கிறார். நச்சினார்க்கினியர் ‘கோவில்’ என்கிறார். அவ்வாறானால் இரண்டும் சரியா? நன்னூலார் உடம்படுமெய் வருவது பற்றிய நூற்பாவை, “இஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்” என்று அமைத்துளார். இதன்படி ஏனை உயிர்வழி வவ்வும் என்பது கொண்டு ‘கோவில்’ என்றனர். ய, வ இரண்டும் வருமென்றால் ‘ஏ’ என்பதற்குக் கூறியது போல் ஏ, ஓ முன் இருமையும் என்று நன்னூலார் சொல்லியிருக்க வேண்டுமே! முடிவு செய்தற்கு வழக்குகளை நோக்குதல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் கோவில் இடம் பெறுவதை அன்றி, அதற்கு முன்னை நூற்பெயர், செய்யுள் வழக்கு என்பவற்றில் ஓரிடத்துத் தானும் கோவில் இடம் பெறவில்லை. ஆதலால் ஆசிரியர் தொல்காப்பியர் ஆணைப்படி ‘கோஇல்’ என இயற்கையாகவே எழுத வேண்டும். இல்லையேல் வழிவழி வந்தவாறு கோயில் என்றே எழுத வேண்டும். “வாயில் வந்து கோயில் காட்ட” “கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி” (சிலப்பதிகாரம்) “கோயில் நான்மணிமாலை” (நூற்பெயர்) இன்னவை கொண்டு தெளிக. யகர உடம்படுமெய் இயல்பாக வருதலும், வகர உடம்படுமெய் சற்றே முயன்று வருதலும் நோக்கின் விளக்கம் ஏற்படும். காயம் ‘காயம்’ என்பது தொல்காப்பியத்தில் ‘விண்’ணைக் குறித்தது. “விண் என வரூஉம் காயப் பெயர்” என்றார் அவர் (305). இப்பொழுது ஆகாயம் என வழங்குகின்றது. அகம் அகம் என்னும் சொல்லின்முன் ‘கை’ சேர்ந்தால் அகம் + கை = அங்கை ஆகும் என்கிறார். அவ்விதிப்படி அகம் + செவி = அஞ்செவி என்றும் அகம்+கண் = அங்கண் என்றும் வழங்குகின்றன (310). அங்கை என்பது பொதுமக்கள் வழக்கில் ‘உள்ளங்கை’ என் றுள்ளது. ‘உள்ளங்கால்’ எனவும் ‘உள்ளகம்’ எனவும் வழங்குகின்றன. முறைப்பெயர் இன்னார் மகன் இன்னார் என்னும் வழக்கம் என்றும் உண்டு. கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று வெளிப்படுத்தியும் சேந்தங் கூத்தனார் என்று (சேந்தனுக்கு மகனாராகிய கூத்தனார்) தொகுத்தும் கூறுதல் வழக்கம். இன்னொரு வழக்கமும் தொல்காப்பியர் காலத்தில் பெருக வழங்கியது. அதற்கு விரிவாக இலக்கணம் கூறுகிறார் (347 - 350). பெரியவர்கள் பெயரைச் சொல்லுதல் ஆகாது என்பவர், ‘இன்னார் தந்தை’ என மகன் அல்லது மகள் பெயரைச் சுட்டி அவர்க்குத் தந்தை அல்லது தாய் என முறை கூறல் இக்கால வழக்கம். மணி அப்பா, மணி அம்மா (மணிக்கு அப்பா, மணிக்கு அம்மா) என வழங்கும் வழக்கம் தொல்காப்பியர் நாள் பழமையது. ஆதன் தந்தை (ஆந்தை) பூதன் தந்தை (பூந்தை) என்பன போல வழங்கப்பட்டவை. ஆதன் பூதன் என்பவை அந்நாள் பெருந்தக்க பெயர்கள். பிசிராந்தையார், பூதனார், பூதத்தார், நல்லாதனார், நப்பூதனார் என்றெல்லாம் புகழ் வாய்ந்தோர் பலர் ஆவர். வல் இந்நாள் பரிசுச் சீட்டுக்கு முன்னோடியான சூதாட்டத்தின் ‘அகவை’ மிகப் பெரியது. தொல்காப்பியர் நாளிலேயே சூதாட்டக் காய், ஆடும் அரங்கமைந்த பலகை என்பன இருந்தமையால் அவற்றின் இலக்கணத்தையும் கூறுகிறார் (374 - 375). ஆடு, புலி, குதிரை வைத்து ஆடும் ஆட்டங்களைப் போல் ‘நாய்’ வைத்து ஆடியுளர் என்பது நாயும் பலகையும் (கட்டமிட்ட அரங்கப் பலகை) என்பதால் தெரிகின்றது. சூதின் தன்மையை வள்ளுவம் “ஒன்று எய்தி நூறு இழக்கும் சூது” என்பதால் வெளிப்படுத்தும். அதன் கொடுமையை வெளிப்பட உணருமாறு ‘வல்’ என்று பெயரிட்டிருந்த ஆழ்ந்த சிந்தனையர், எண்ணத்தக்கார் (374). தமிழ் கதவு, தாழ் என்பவை வீடு தோன்றிய பாதுகாப்பு உணர்வு ஏற்பட்ட நாள் முதலே உண்டாகி யிருக்கும். “வழியடைக்கும் கல்” என்பது பாதுகாப்புத் தானே. தாழ் கதவொடு கூடியது. பூட்டு என்பது தாழ்க் கதவொடு இணைந் திருப்பதனை அன்றித் தனியே எடுத்து மாட்டுவதாகவும் அமைந்துளது. பாதுகாப்பில் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் தாழ்க் கோல், திறவுகோல், திறப்பான் குச்சி, திறவு என்னும் பழம் பெயராட்சிகள் வழக்கில் மறையாமல் வாழ்ந்துகொண்டுள்ளன. தாழைத் திறக்கும் கோல் தாழக் கோல் எனவும் தாழ்க் கோல் எனவும் வழங்கும் என்று கூறிய தொல்காப்பியர் தமிழ் என்பதை விட்டுவிடாமல், “தமிழென் கிளவியும் அதனோர் அற்றே” என்கிறார். தமிழ்த் தெரு, தமிழத் தெரு; தமிழ்க் கலை, தமிழக் கலை என வழங்கும் வகையை இதனால் காட்டுகிறார். திராவிடத்தில் இருந்து தமிழ் வந்தது என்பாரை இத் தொல்காப்பிய விளக்கம் தண்ணீர் தெளித்துக் கண் விழிக்கச் செய்ய வல்லதாம். எழுத்து எழுது, எழும்பு, எழுப்பு, எழூஉ, எழுச்சி என்பனவெல்லாம் எழு என்பதன் வழியாக வந்தவை. எழுத்து என்பதும் அவ்வாறு வந்ததே. எழூஉம் சீப்பும் உடைய அரணத்தைக் கொண்டிருந்தவர் தமிழர். அவர் எழுத் தழிவுக்கும் எழுத்துச் சிதைவுக்கும் இடந்தருதல் இன்றி மொழி காத்தல் கடமையாகும். மேலும், எழுத்தும் எண்ணும் இணைந்த மொழி தமிழ். எழுத்தே எண்ணாக இருந்தும் அவ்வெண்ணை ஏறத்தாழ மறந்தே போன மக்கள் தமிழ் மக்கள். தமிழெண் மீட்டெடுப்புச் செய்தலைத் தாமே உணரார் எனினும் அண்டை மாநிலங்களை எண்ணினாலும் தமிழர் புரிந்து கொள்ள முடியும். க, உ, ங, ச,ரு, சா, எ, அ, கூ, க0 என்பவை பழந்தமிழெண்கள். இத் தமிழெண்களின் வழிப்பட்டவையே 1,2,3 என வழங்கப் பெறும் எண்கள். பழந்தமிழர் உலக வணிகத்திற்குப் பயன்படுத்திய பொது எண்கள் இவை. எண் எண்கள் எழுத்துகள் என்பவை வேறு வேறாக இல்லாமல், எண்களே எழுத்தாக இருந்தமையால் “எண்ணும் எழுத்தும்” இணைந்தே வழங்கின. “எழுத்தறியத் தீரும் இழிதகைமை” என்றும், “எழுத்தறி வித்தவன் இறைவன்” என்றும் வழக்கூன்றின. இவ்வெண்களைச் சொல்லிப் பாருங்கள்; நூறுவரை சொல்லுங்கள்; எல்லாமும் உகரங்களாக - குற்றியலுகரங்களாக - முடிவதைப்பாருங்கள். (‘ஏழு’ என்பது முற்றியலுகரம்). ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு. இவற்றுள் ஒரே ஓர் எண் (ஒன்பது) தப்பி வந்தது போல் தோற்றம் தரவில்லையா? ஒன்பது என்னும் இடத்திலே ‘தொண்டு’ என்பதே இருந்தது. அது வழக்கு வீழ்ந்தும் வீழாமலும் இருந்த காலம் தொல்காப்பியர் காலம். அதனால் அவர் ஒன்பது என்பதுடன் தொண்டு என்பதையும் வழங்கி யுள்ளார் (445, 1358). அவ்வாறே பரிபாடலிலும் ஒன்பதும் தொண்டும் வழங்கப்பட்டுள. தொண்டு வழக்கிழந்து ஒன்பது வந்தமையால் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவையும் கீழே இறங்கிவிட்டன. தொண்பது என்னும் இடத்தில் தொண்ணூறும், தொண்ணூறு என்னும் இடத்தில் தொள்ளாயிர மும் வந்துவிட்டன. இந் நாளிலும் “தொன்னாயிரம் முறை சொன்னேன்” என்னும் பேச்சுமொழி உண்மை, பழமரபை உணர்த்துகின்றது. நூறுவரை உள்ள எண்கள் உகரத்தில் முடிதல் ஒலி எளிமை, ஒழுங்குறுத்தம் என்பவை கொண்டமையை உணரின் அவ்வமைப் பாளியரின் ஆழம் புலப்படும். ஆயிரம், இலக்கம், கோடி என்பவை வழங்கப்படவில்லையோ எனின் ஆயிரம் வழங்கப்பட்டது. அதனின் மேற்பட்டவை ஐ, அம், பல் என்னும் முடிபு கொண்ட சொற்களாக வழங்கப்பட்டன. தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலியவை அவை. ஆயிரம் அடுக்கிய ஆயிரம் என்பவை தாமரை எனவும் வெள்ளம் எனவும் ஆம்பல் எனவும் வழங்கப்பட்டன. திருவள்ளுவர், சங்கத்தார் ஆயோர் நாளிலேயே கோடி, அடுக்கிய கோடி என்பவை இடம் பெற லாயின. கோடி என்பது கடைசி என்னும் பொருளில் இன்றும் வழங்கப் படுவதே. கடைசி எண் கோடி எனினும், கோடி, கோடியை அடுக்கிய கோடி என்பதும் வழக்கில் இருந்துளது. கோடா கோடி, கோடானு கோடி என்பன அவை. ஊரறிய ஒளியுடைய செல்வர்கள் இருப்பின், அவர்கள் பெருமை யாகப் பேசப்பட்டனர். ஒளிக் கற்றையால் விளங்கும் கதிரவன் போலக் கருதப்பட்டனர். அதனால் அவர்கள் ‘இலக்கர்’களாகினர். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம் (754). விளங்கிய செல்வம் இலக்கம் ஆயது; எண்ணும் ஆயது. மக்கட்கை மக்கள் என்பதனுடன் கை சேர்ந்தால், ‘மக்கள் கை’ என்னும் இடமும் உண்டு; ‘மக்கட் கை’ என்னும் இடமும் உண்டு. உயிருடையவர் கை எனின் மக்கள் கை. உயிரற்றவர் கை எனின் மக்கட் கை. இதனைத் தொல்காப்பியர், “மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே” என்று கூறுகிறார் (405). மக்கள் என்பார் உயிருள்ளவர். அவர்தம் கை உயிரற்றால் - செயலற்றால் - தனித்துக் கிடந்தால் - ‘மக்கட் கை’ என மாற்றம் பெறும் என்பது இப் பரபரப்பான - அமைந்து எண்ண முடியாத - உலகியலில் வியப் பூட்டுவதில்லையா? பெண்டு மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண், ஆண் எனப் பால் பிரிவுடைமை எவரும் அறிந்ததே. பெண் என்பது பெண்டு என்றும் வழங்கப்பட்டது (420, 421). பெண்டிர் என்பதில் அது விளங்கி நிற்கிறது. பெண்டு என்பதைப் பொண்டு ஆக்கி ஆட்டி சேர்த்துப் ‘பொண்டாட்டி’ ஆக்கி மொழிக் கேட்டுடன் பண்பாட்டுக் கேடும் ஆக்கிவருதல் குறுந்திரை பெருந்திரைக் கொள்கையாகி விட்ட நிலையில், ‘பெண்டு’ என்னும் பண்பாட்டுப் பெயர் தலை வணங்க வைக்கிறது. பெண்டன் கை, பெண்டின் கை என வழங்கப்படுதலை, “வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்” என்றும், “பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்” என்றும் கூறுகிறார் (420, 421). திசை “தெற்கு வடக்குத் தெரியாதவன்” என்பது பழமொழி. தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு எனக் கோணத் திசைகளை வழங்கு கிறோமே! முழுத்திசையில் சுருங்காத முன் திசையைக் கோணத் திசைக்குக் குறுக்குவது நம் வழக்கா? நம் முந்தைத் தொல்காப்பியர் காட்டும் வழக்கே யாம். அவர்க்கு முன்னரே அவ்வழக்கு இருந்ததை என்மனார் புலவர் என்பதால் தெளிவிக்கிறார் (432). பன்னிரண்டு பத்துடன் மூன்று பதின்மூன்று பத்துடன் ஐந்து பதினைந்து இவ்வாறுதானே வரும். பத்துடன் இரண்டைப் ‘பன்னிரண்டு’ என்கிறோமே! எதனால்? “பத்தன் ஒற்றுக்கெட னகரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை” (434) என்கிறார். மேலும், “ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது” (435) என்பதால் பன்னீராயிரம் என்பதற்கு இலக்கணம் காட்டுகிறார். “பன்னீரி யாண்டு வற்கடம் சென்றது” என்பது களவியல் உரை. ‘முந்நீர்ப் பழந் தீவு பன்னீராயிரம்’ என்பது கல்வெட்டு. மொழிக்காவல் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் வழியாக அறியப் பெறும் வாழ்வியல் வளங்களுள் சில இவை. இவ்வதிகாரத்தைச் சொல்லி முடிக்கும் ஆசிரியர் சொல்லிய அல்லாத திரிபுகள் செய்யுள் வழக்கிலோ மக்கள் வழக்கிலோ காணக் கிடப்பின் அவற்றையும் உரிய வகையால் அமைத்துப் போற்றிக் கொள்க என்கிறார். தமிழ்மொழி வழக்கழிந்து படாமல் என்றும் உயிருடைய மொழியாகத் திகழவேண்டும் என்னும் மொழிக் காவல் உள்ளத்தின் வெளிப்பாடே இஃதாம் (483). இவ்வாறு இயல்களி லும் அதிகாரங்களிலும் கூறுவன மொழியின் விரிவாக்கத்திற்கு உடன்பட்டு வழிவகுப்பதாகும். (குறிப்பு: தொல்காப்பிய நூற்பா எண்களாகக் குறிக்கப்பட்டவை எல்லாமும் சை.சி. கழகத் தொல்காப்பிய மூலப்பதிப்பு எண்களாகும்.) - இரா. இளங்குமரன் நச்சினார்க்கினியர் தனிப்பெருஞ்சிறப்பு தமிழெனும் பெருங்கடற் பரப்பில் ஒரு கலஞ்செலுத்தி உலாக் கொண்டு, உயர்மணித் தொகுதிகளையெல்லாம் தொகுத்துப் பின்னவர்க்குக் கருவூலமென வைத்துச் சென்ற உரையாசிரியர் ஒருவர் உண்டென்றால் அவர் நச்சினார்க்கினியரே! அவரை அடுத்து எண்ணத்தக்க ஒருவர் யாப்பருங்கல விருத்தி உரைகாரரே! இன்னொருவர் அடியார்க்குநல்லார். எத்தனை நூல்களுக்கு உரை கண்டுள்ளார் நச்சினார்க்கினியர்! எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுளார்! வாழ்நாளை எல்லாம் முற்றாக உரை வரைதற்கெனவே பயன்படுத்திய பெருந்தகை நச்சினார்க்கினியரே. உரை கண்ட நூல்கள் “பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே” என்னும் வெண்பாவுரைக்குமாறு தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகியவற்றுக்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரை நமக்கு வாய்த்துள்ளது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் வரைந்த உரை அகப்படாமை போலவே நச்சினார்க்கினியர் வரைந்த 20 பாடல்களின் உரையும் அகப்பட்டிலது. தொல்காப்பியம் முழுவதற்கும் உரைகண்டிருப்பி னும் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல் ஆகிய மூன்றியல்களுக்கும் உரை கிடைத்திலது. `பாரத்தொல் காப்பியம்' என்னும் வெண்பா நச்சினார்க்கினியர் உரையை `விருத்தி' என்று கூறியிருப்பினும் தொல்காப்பியத்தில் காண்டிகை உரை என்னும் குறிப்பே உள்ளது. பத்துப்பாட்டு கலித்தொகை ஆகியவற்றி லும் `விருத்தி' என்னும் குறிப்பு இல்லை. ஆதலால் இவ்வெண்பாப் பாடியவர் விருத்தி என்று கருதினார் என்று கொள்ளலாம். நச்சினார்க் கினியர் கருத்து அஃதன்று என்றும் கொள்ளலாம். பெயரும் குடிவழியும் நச்சினார்க்கு (விரும்பினார்க்கு) இனியர் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று என்பர். “நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே” என்பது அப்பரடிகள் தேவாரம் (4.66:1). இதில் பெயராக வந்திலது. இறைவன் இயலாகவே வந்துளது என்பது எண்ணத்தக்கது. அப்பரடி களுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்ட சிவஞானமுனிவரர், "நச்சினார்க் கினியாய் போற்றி" என்றதும் இயல்விளிப் பெயரேயாம். பெயரன்று என்பதறிக. இவற்றால் இவர் இயற்பெயர் வேறொன்றாக இருந்து இவர்தம் உரைச் சிறப்பறிந்தவர்கள் இப்பெயரை வழங்கியிருத்தல் வேண்டும். அதுவே இயற்பெயர்போல அமைந்துவிட்டது எனலாம். `மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்' என்று தொல் காப்பியம், பத்துப்பாட்டு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதி நிறைவிலும் வருகின்றது. இக்குறிப்பை விளக்குவதுபோல், “வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்விப் பாரத்து வாசன் நான்மறை துணிந்த நற்பொருள் ஆகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன் நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்” என இவரைப் பற்றிய பாயிரப் பகுதி கூறுகின்றது. இவற்றால் இவர் மதுரையார் என்பதும் “பாரத்துவாச கோத்திரத்தார் ஆகிய பிராமணர் என்பதும் புலப்படும். பாரத்துவாச கோத்திரத்தினர் வைணவர், சுமார்த்தர், மாத்துவர் என முப்பிரிவினர் என்றும் அவருள் இவர் சுமார்த்தர் என்றும் அத்வைதக் கொள்கையர்” என்றும் கூறுவர் (உரையாசிரியர்கள். பக். 141; நச்சினார்க்கினியர் பக். 6, 7). சமயம் இவர் வேத வழிப்பட்ட நெறியினர் எனினும் `சிவச்சுடர்' எனப் பாயிரம் சொல்லுதலாலும் நூலில் வரும் சில குறிப்புகளாலும் சிவனெறிப் பற்றாளர் என்று கொள்ளலாம். எனினும் இவர்தம் சிந்தாமணி உரையைப் பயின்றாரும், அச் சிந்தாமணி யுரையை அச் சமய நோக்குக்கு முரணா வகையில் உரை வரைய வேண்டும் என்பதற்காகவே அச்சமயம் புகுந்து அழுந்தக் கற்று அதன் முன்னே தாம் எழுதிய உரையை விடுத்துப் புத்துரை செய்தார் என்று கூறப்படும் செய்தி அறிந்தாரும் நச்சினார்க்கினியர் சமயச் சால்பைப் போற்றாமல் இரார். ஒரு நூலுரை செய்தற்காகத் தம் வழிவழிச் சமயந் துறந்து வேறொரு சமயத்துப் புகுந்தார் என்பதினும், அக்கொள்கை களை அழுந்தக் கற்றார் என்பதே சிறக்கும். ஒருகால் அச்சமயத்தார்க் கன்றிப் பிற சமயத்தார்க்குக் கற்பித்தல் இல்லை என்னும் கடுநெறி ஒன்று இருந்திருக்குமானால் அச் சமயத்திற்கே புகழ் வருவதாக இல்லை. அதனை அச்சமயஞ் சார்ந்து பயின்று, பயின்று முடித்த பின்னர் அதனைத் துறந்து தம் சமயம் சார்ந்தார் நச்சினார்க்கினியர் எனின், இவர் சூழ்ச்சியாளர்; பயன்கருதிய இந்நாளைக் கட்சி மாறியர்போல் - சமய மாறியர் - என்ற பழியே இவர்க்கு எய்துவதாம். இவற்றின் இடையேயும் ஒரு பசுமையான செய்தி : ஒரு நூலுக்கு மரபு பிறழாமல் உரை வரைவதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார் என்பதே. இச்செயல் இந்நாளைக்கு மட்டுமன்று எதிர் நாளைக்கும் இனிய வழிகாட்டும் மாண்பினதாம். காலம் நச்சினார்க்கினியர் உரை வழியால் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கும், நன்னூல் பவணந்தியார், திருக்குறள் பரிமேலழகர், சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் ஆகியோர்களுக்கும் பிற்பட்டவர் இவர் என்பதற்குச் சான்றுகள் உண்மையால் 14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியினர் என்பது தெளி வாகும். தமிழ்ம்மை “தத்தம் புதுநூல் வரிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்றுணர்க” என்றும் (புறத். 35), “இனித் தேவர்க்குரியவாக உரிஞையிற் றுறைகள் பலருங் கூறுவரால் எனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன வாகலிற் றமிழ் கூறு நல்லுலகத்தன அல்லவென மறுக்க” என்றும் (புறத். 12), “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றா ரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார்” என்றும் (நூன். 1), “தானே என்று பிரித்தார், இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தான் பாட்டாகி அங்கதம் எனப்படுவன வுள, அவை நீக்குதற்கும் என்றுணர்க” என்றும் (செய். 178) இன்னவாறு கூறுமிடங்களில் தமிழ் வரம்புக்குரிய நூல் தொல்காப்பியம் என்பதை உணர்ந்து கூறுகின்றார். அதனைப் போற்றுதல் கடப்பாட்டையும் வலியுறுத்துகிறார். எதிரிடை “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (கற். 4) என்னும் நூற்பாவில், “ஈண்டு `என்ப என்றது முதனூலாசிரியரை யன்று; வடநூலோரைக் கருதியது” என்கிறார். இவ்வாறு எதிரிடைப் போக்கில் அல்லது வலிந்த நோக்கில் செல்வதால் தாம் சுட்டிய தமிழ் நெறியைத் தாமே சிதைப்பவராக உரை வரையத்துணிந்தார். அதனால், “அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார்” (கற்.1) என்றும் “முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது” (கற். 2) என்றும், “மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி; ஆன்றோராவார் மதியும் கந்தருவரும் அங்கியும்” என்றும் (கற். 5) கூறுவதும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்பதன் (புறத். 20) உரை விளக்கங் களும், “வேத முடிபு” (அகத். 5), “வேத நெறி அன்மை” (அகத். 11), “வேத நூலுள் இழைத்த பொருண் முடிபு” (அகத். 28), “வேதத்தையே” (அகத். 31), “வேதவிதி” (புறத். 2), “வேத முடிபு” (கள. 8) என நெடுகலும் கூறிச் செல்லுதலும் அவர் எடுத்துக்கொண்ட நூலின் தடத்தை மாற்றி எங்கோ இட்டுச் செல்லுதல் தெளிவாகின்றது. கந்தருவநெறிக்கும் களவுநெறிக்கும் உள்ள வேறுபாட்டை, “கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார்” என்று பிறர்க்கு இல்லாத் தெளிவு காட்டும் திறத்தார் நச்சினார்க்கினியர் (கள. 1) என்பதை மறக்க முடியாது. அறிந்தே செய்யும் பிழை காலம் உலகம் என்னும் சொற்களை வடசொற்களாகச் சேனா வரையர் கூற, “காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறாராகலின்” (சொல். 58) என்று ஆசிரியர் ஆணை கூறுபவர் நச்சினார்க்கினியர். இவர் “அகர இகரம் ஐகாரமாகும்”, “அகர உகரம் ஔகாரமாகும்” என்னும் நூற்பாக்களின் உரைகளில் “அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும்; அது கொள்ளற்க”; “அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம் போல இசைக்கும்; அது கொள்ளற்க” என்று எழுதுதல், நூலாசிரியர் கருத்துக்கு மாறுகொளல் என்பது தெளிவாகின்றது. மேலும், “ஆகும் என்றதனான் இஃதிலக்கணம் அன்றாயிற்று” என்றும் கூறுகிறார். இஃது இவர் அறியாமையால் செய்வதன்று என்பது விளங்குகின்றது. சில இடங்களில் வலிந்து சூத்திரங்களை நலித்துப் பொருள் கூறும் வழக்கினை இவர் மேற்கொண்டவர் என்பதும் அதையும் உணர்ந்து கொண்டே செய்தார் என்பதும் விளங்குகின்றது. “அளபிறந் துயிர்த்தலும்” எனவரும் நூன்மரபு நூற்பா (33) விளக்கத்தில், “சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே” என்னும் மரபியற் சூத்திரத்தானே (103) “இவ்வாறே சூத்திரங்களை நலித்துப் பொருளுரைப்பன வெல்லாம் கொள்க” என இவர் எழுதுதல் இவர் தம் உட்கோளைத் தெளிவாக்கும். “வரகு, கொற்றன் ஈரெழுத் தொருமொழி; அகத்தியனார் ஐயெழுத் தொருமொழி; திருச்சிற்றம்பலம் ஆறெழுத் தொருமொழி; பெரும்பற்றப் புலியூர் ஏழெழுத்தொருமொழி” என்று அவர் எழுத்தெண்ணிக் காட்டுதல் (குற்றியலுகரம், மெய்களை நீக்கி எண்ணிக் காட்டுதல்) செய்யுளியற் கோட்பாட்டை உரைநடைக் கோட்பாடாக்கிக் காட்டும் முறையல்லா முறையாகிவிடுகின்றது, கரணம் வடநூல் பற்றியது எனப் பல்கால் கூறும் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்களோ அகம் 86, 136 ஆம் பாடல்களாம். அவற்றில் அங்கியங் கடவுளோ அறிகரியாக மந்திர வகைக் கரணமோ ஒன்றும் இல்லாமை எவர்க்கும் வெளிப்பட விளங்கியும்கூட, “கரணங்கள் நிகழ்ந்த வாறும் தமர் கொடுத்தவாறும் காண்க” என்று துணிந்து கூறுகிறார். இந்நிலை நூற்கருத்துக்கோ நூலாசிரியர்க்கோ பெருமை தருவது இல்லை என்பது பற்றிக் கவலை கொண்டார் இல்லை எனலாமா? தம் கொள்கையை நூலாசிரியர் தலையில் கட்டிவிடுதல் எனலாமா? ழ, ள என்னும் இரண்டு எழுத்துகளும் பிறப்பு செய்கைகளில் ஒவ்வா என்பதை உணரும் நச்சினார்க்கினியர், “ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் `இடையெழுத் தென்ப யரல வழள’ (எழு. 21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயையுடைமை கருதிச் சேரவைத்தார் போலும்” என ஆசிரியர் வைப்பு முறைக்குச் சான்று தேடிக் காட்டிச் சிறப்புச் செய்கின்றாரே! (நூன். 1) ‘கண்ணிமை நொடியென’ ஆசிரியர் வைப்பு முறை செய்ததை, “நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமை யின்” என்று எவ்வளவு கூர்ப்புடன் உரைக்கிறார்! (நூன். 7). “இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணும் அன்றி ஒரு மொழிக் கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணம் இல்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று” என்று எவ்வளவு சால்புடன் கூறுகிறார்! (நூன். 24). ‘காரும் மாலையும் முல்லை’ என்னும் ஆசிரியர் நூற்பா நடைக்கு, “முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப் படுவது கார் காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன் விரைபரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களி சிறந்து மாவும் புள்ளும் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக் குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று” என்று எதுகை மோனை இயற்கையழகு கொஞ்சும் உரைப்பாட்டு இலக்கிய நடையில் எழுது கின்றார் நச்சினார்க்கினியர் (அகத். 6). நூலாசிரியரோடு ஒப்ப ஒரு நூலாசிரியராயன்றோ திகழ்கின்றார்! இவ்வாறாகவும், வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை - ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது இவர் கூறியுள்ள உரை - நடுவுள்ளங்கொண்டு நாடுவாரையும் வருத்தும். “இது போன்ற உரைகளையெல்லாம் தொல்காப்பியர் காண நேர்ந்தால் எத்துணை நொந்து போவார். இவற்றையெல்லாம் படித்துவிட்டு இத்துணைக் காலம் தமிழுள்ளம் மரக்கட்டையாகவே இருந்து வந்திருப்பது தான் வியப்பாகும்” என்றும் “நச்சினார்க்கினியர் பிற சமயங்களை வெறுத்துப் பேசாதவராயினும் வேத வைதிகப் பற்றுமிக்கவர். ஆனால் வேண்டாத இடங்களிலெல்லாம் `வேதம் வேதம்' என்று கூறிக் கொண்டே இருப்பதால் அவரது வேதப் பற்றைக் கண்டு நாம் சலிப்படைகிறோம்” என்றும், “அவருடைய காலத்தில் தமிழைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலவே விளங்கியிருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஜான்ஸன் காலத்தில் ஜான்ஸன்ஆங்கில மொழியின் சர்வாதிகாரியைப் போல விளங்கினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் நச்சினார்க்கினியரை அப்படி நினைத்துக்கொள்ளலாம். பாட்டின் சொல் லமைப்பை அவர் எப்படிச் சிதைத்தாலும் பண்டிதர் பரம்பரை வழிவழியாக அவரைப் போற்றி வந்திருக்கின்றமையும் நினைக்கத்தக்கது” என்றும் வருவன (நச்சினார்க்கினியர் - பேரா. மு. அண்ணாமலை) தெளிந்து கூறிய தேர்ச்சி யுரைகளாம். “உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்” என்பது முதுவோர் உரை! அவ்வுள்ளது சிதைப்பதை உணர வாய்த்திருந்தும், உணர்த்தக் கேட்டும் - கற்றும் - இருந்தும், இந்நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுக்கள மேலாண்மையரும் நச்சினார்க்கினியர் சிதைவுக்கு விளக்கங்கூறியே விழுப்பம் எய்தினர் என்னும்போது அக்காலச்சூழலில் நச்சினார்க்கினியர் சில இடங்களில் தடம் மாறி உரை வரைந்தது வியப்பும் இல்லை! பரியதோர் குறையும் இல்லை! நச்சினார்க்கினியர் புலமை, `ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் ஏமாப் புடைத்து' என்பதற்குச் சான்றாவது; எத்தனை உவமைகள்! எத்தனை எடுத்துக்காட்டுகள்! எத்தனை வரலாற்றுப் பின்னல்கள்! எத்தனை சிறப்புப் பெயர்கள்! “ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு `ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப” (நூன். 2). “கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறந்த செவ்வண்ணம் போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார்” (நூன். 6). “அகரந் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை யுடைத் தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல” (நூன். 8). “ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன (வாகிய உயிர் மெய்கள்) ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாரி யுப்பில் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெற்றி” (நூன். 10). இவை நூன்மரபில் நச்சினார்க்கினியர் காட்டும் உவமைகள். நச்சினார்க்கினியர் உரையால் மட்டுமே அறியப்படும் நூல்கள் சில உள. அவற்றுள் சீரிய ஒன்று `பெரும் பொருள் விளக்கம்' என்பது. அந்நூலைப் புறத்திரட்டு வழியால் பெயரறிந்து கொள்ளவும் ஒப்பிட்டுக் காணவும் வாய்க்கின்றது. புறத்திரட்டில் காணாத பாடல்கள் மிகப் பல புறத்திணை இயலில் இடம் பெற்றுத் தனி நூலாகி உள்ளன. களவியல் கற்பியல்களிலும் புறத்திணையியலில் காணப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக் களை அன்னவை, எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. அவற்றை நோக்க அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் கூடிய பொருளின் முழுப்பரப்பும் தழுவிய நூலாக அந்நூல் இருந்திருத்தல் கூடுமென எண்ண இடமா கின்றது. தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்பவற்றிலிருந்தும் அரிய பாடல்களைப் பரிசிலென வழங்குகின்றார் இனியர். வரலாற்றுச் செய்தி புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் காட்டும் வரலாற்றுச் செய்திகள் மிகப் பலவாம். “ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்” (புறத். 7). அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்களை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் பொன்முடியார் ஆகியோர் பாடிய தகடூர் யாத்திரைப் பாடல்களைக் குறிக்கிறார் (புறத். 8). பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி (நக்கண்ணையார்), ஒத்த அன்பினாற் காமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமுற்றுக் கூறியதை, காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் நூற்பாவில் (புறத். 28) எடுத்துக்காட்டுகிறார். தமிழகத்துச் செய்தியாம் இவையன்றி அக்காலத்தில் தமிழில் வழங்கிய இராமாயண பாரதப் பழநூல்களில் இருந்து (அவை அகவற் பாவால் இயற்றப்பட்டவை) மேற்கோளும் செய்திக் குறிப்பும் காட்டுகிறார். கொள்ளார் தேஎங் குறித்த கொற்றத்திற்கு (புறத். 12) “இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது” என்கிறார். “செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, ஒருவன் மண்டிய நல்லிசை நிலை” என்பதற்கு (17) “குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன” என்கிறார். இவ்வாறு இராமாயண பாரதச் செய்திகளை எடுத்துக்காட்டுவ துடன் தொன்ம (புராண)ச் செய்திகளையும் சுட்டுகிறார். “இரணியனைப் போல வலியானும் வருத்தத்தானும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று” என்பது ஒன்று (புறத். 19). `முழுமுதல் அரணம்' என்பதை விளக்கும் நச்சினார்க்கினியர் (புறத். 10), “முழு அரணாவது மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறி களும் ஏனைய பொறிகளும் பதணமு மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற்கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம்” எனச் செறிவு மிகக் கூறுகிறார். இனி இதே நூற்பாவில், “சிறப்புடை அரசியலாவன மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறாதோனையும், மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படை இழந்தோனையும், ஒத்தபடை எடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் முதலாயினவுமாம்” என்று சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்துடிப்பால் இயைத்துக் கூறுகின்றார். தெளிபொருள் ‘குற்றியலிகரம்’ உயிரா? ஒற்றா? இதனை இந்நாளிலும் ஒற்று என்பார் உளர். “ஊர்ந்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம். உயிர்க்கல்லது ஏறுதலின்மையின்” என்கிறார் (மொழி. 1). இராக் காக்கை, இராக் கூத்து எனவரின் இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து எனப் பொருள் தரும் என்றும், இராஅக் காக்கை, இராஅக் கூத்து எனவரின் இராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் என்றும் விளக்குகிறார் (உயிர். 25). இவ்வாறு மயக்கம் அறுக்கும் இடங்கள் பலவாம். “இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்” என்பதற்குக் ‘கோவில்’ என்று எடுத்துக்காட்டுக் கூறுகிறார் (உயிர். 91). அது ‘கோயில்’ என்றே இருந்திருக்கும். ‘படியெடுத்தோர் பிழையோ’ என எண்ண வேண்டியுளது. இளம்பூரணர் மரபு நிலை மாற்றாமல் ‘கோயில்’ என்றே கொண்டார் என்பது அறியத்தக்கது. ‘கோவில்’ என்பது 19ஆம் நூற்றாண்டு உரைநடைக் காலத்து வந்த தவறான புது வழக்கு. வழக்குகள் ‘புடோலங்காய்’ என்பதைப் புள்ளிமயங்கியல் புறநடையில்(110) எடுத்துரைக்கிறார் நச்சினார்க்கினியர். ‘புடலங்காய்’ என்பது அவர் காலத்தில் அவ்வாறு வழங்கிற்றுப் போலும்! “ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க” என்கிறார் (உயிர். 67). இவ்வாறு காலவழக்கு இடவழக்கு ஆகியவற்றைச் சுட்டுதலையும் இவர் வழக்காகக் காணலாம். மாட்டின் விளைவு `மாட்டு' என்பதோர் இலக்கணத்தைத் தொல்காப்பியர் செய்யுளிய லில் கூறுகின்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைப்பார் போல அவ்விலக்கணம் கொண்டு நச்சினார்க்கினியர் மாட்டிச் செல்லும் தனிச் செலவில் அவர்க்கு ஒப்ப ஒருவர் இதுகாறும் இருந்தார் இலர். அம் மாட்டுரையே, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலியவற்றுக்கு மறைமலையடிகளாரைப் புத்துரை காண ஏவிற்று. நெடுநல்வாடை, முருகாற்றுப்படை ஆகியவற்றுக்குக் கோதண்டபாணியாரை நயவுரை காணத் தூண்டிற்று! இவருரையில் அமைந்துள்ள சில நூற்பாக்களின் பொருட்போக்கே நாவலர் பாரதியாரைத் தொல்காப்பியப் புத்துரை காண அழுத்திற்று. இவையும் நச்சினார்க்கினியர் கொடையெனின் கொள்ளத் தக்கவாம். “ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?” என்னும் சாமிநாத தேசிகர் உரையே, “தனித்தமிழ் இயக்கம்”காண எதிரிடைத் தூண்டல் ஆயிற்று அல்லவோ! எதிரிடைப் பயனும் ஏற்புடைப் பயனாதல், எண்ணுவார் எண்ணத் திண்மையும் எழுச்சிச் செயற்பாடும் பற்றியவை. மற்றையரோ நீரில் கரைந்த மண்ணாகி நெளிந்து போய்விடுவர். பாயிரம் - தெளிவுரை வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரிமலை முடிய இடைப்பட்ட நிலம் தமிழ் வழங்கு நிலமாகும். இந்நிலத்தில் வழங்கும் மக்கள் வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுத்து, சொல், பொருள் என்பவற்றை ஆராய்ந்து செய்யப்பட்டது இத் தொல்காப்பிய நூல். இது, இச் செந்தமிழ் நாட்டின் இயல்பொடு பொருந்தச் செய்யப் பட்டது. இந்நாட்டில் பழங்காலம் தொட்டு வழங்கிவரும் நூல்களைக் கற்றும் அவற்றை முறையுற ஆராய்ந்தும் வாழ்வியலுக்கு இன்றியமையாத அறிவுச் செல்வங்கள் எல்லாமும் ஒருங்குறத் தொகுக்கப்பட்டது குற்றமற்ற இந்நூல். இது, நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் வேந்தன் அவையில் அரங்கேற்றப்பட்டது. அறம் உரைக்கும் நாவினையுடையவனும் நான்மறை வல்லானும் ஆகிய அதங்கோட்டு ஆசான் என்பான் தலைமை கொண்டிருந்தான். ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் கூடிய அவ்வவை யில் அவர்கள் குறைவற அறியவும் மயக்கமற உணரவும் நூன்முறை வழுவாமல் காட்டியவன் யாவனோ எனின், அவன் நீர் நிரம்பிய கடல் சூழ்ந்த உலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுறத் தோற்றுவித்த ஆற்றலாளன் எனப் பாராட்டப்பட்டவனும், தன்பெயரைத் தான் இயற்றிய நூல் வழியால் தொல்காப்பியன் என நிலைநிறுத்தியவனும், பல்வகைப் புகழுக்கும் இருப்பாகியவனும் சீரிய தவத்தவனும் ஆகிய பெரியோன். - இரா. இளங்குமரன் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை பொதுப் பாயிரம் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே என்பது பாயிரம். எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை? 'ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே ’ என்றாராகலின். பாயிரம் என்றது புறவுரையை. நூல் கேட்கின்றான் புறவுரை கேட்கிற் ‘ கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போல ’ அந்நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை? ‘பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும்’ என்றாராகலின். அப்பாயிரந்தான் ‘தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும்’, ‘அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும்’, நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றாயிருத்தலின், அது கேளாக்காற் ‘குன்று முட்டிய குரீஇப் போலவுங்’, ‘குறிச்சி புக்க மான் போலவும்’ மாணாக்கன் இடர்ப்படுமென்க. அப்பாயிரம் பொதுவுஞ் சிறப்பும் என இருவகைத்து. அவற்றுட் பொதுப் பாயிரம் எல்லாநூன்முகத்தும் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து: ‘ஈவோன் தன்மை ஈத லியற்கை கொள்வோன் தன்மை கோடன் மரபென ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே.’ என்னும் இதனான் அறிக. ஈவோர் கற்கப்படுவோருங் கற்கப்படாதோரும் என இருவகையர். அவருட் கற்கப்படுவோர் நான்கு திறத்தார்: ‘மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர் உலைவில் உணர்வுடை யோர்.’ இதனுள், ‘மலையே அளக்க லாகாப் பெருமையும் அருமையும் மருங்ககல முடைமையும் ஏறற் கருமையும் பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி.’ ‘நிலத்தி னியல்பே நினைக்குங் காலைப் பொறையுடை மையொடு செய்பாங் கமைந்தபின் விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை இடுதலும் எடுத்தலும் இன்னண மாக இயையக் கூறுப இயல்புணர்ந் தோரே.’ ‘பூவின தியல்பே பொருந்தக் கூறின் மங்கல மாதலும் நாற்ற முடைமையும் காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலும் கண்டோ ருவத்தலும் விழையப் படுதலும் உவமத் தியல்பின் உணரக் காட்டுப.’ ‘துலாக்கோ லியல்பே தூக்குங் காலை மிகினுங் குறையினும் நில்லா தாகலும் ஐயந் தீர்த்தலும் நடுவு நிலைமையோடு எய்தக் கூறுப இயல்புணர்ந் தோரே.’ என நான்குங் கண்டுகொள்க. இனிக் கற்கப்படாதோரும் நான்கு திறத்தார் : ‘கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.’ இதனுட் கழற்பெய்குடமாவது கொள்வோனுணர்வு சிறிதாயினுந் தான் கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். மடற்பனை என்பது பிறரான் கிட்டுதற்கு அரியதாகி இனிதாகிய பயன்களைக் கொண்டிருத்தல். முடத்தெங்கு என்பது ஒருவர் நீர்வார்க்கப் பிறர்க்குப் பயன்படுவது போல ஒருவர் வழிபடப் பிறர்க்கு உரைத்தல். குண்டிகைப் பருத்தி யென்பது சொரியினும் வீழாது சிறிது சிறிதாக வாங்கக் கொடுக்கும் அதுபோலக் கொள்வோ னுணர்வு பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல். இனி, ‘ஈத லியல்பே இயல்புறக் கிளப்பின் பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஓரையில் திகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக் கொள்வோ னுணர்வகை அறிந்தவன் கொள்வரக் கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்.’ இதனான் அறிக. இனிக் கொள்வோருங் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரும் என இருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோர் அறுவகையர். அவர்தாம், ‘தன்மகன் ஆசான் மகனே மன்மகன் பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளனோ டிவரென மொழிப.’ இவர் தன்மை, ‘அன்னங் கிளியே நன்னிறம் நெய்யரி யானை யானே றென்றிவை போலக் கூறிக் கொள்ப குணமாண் டோரே.’ இதனான் அறிக. இனிக் கற்பிக்கப்படாதோர் எண்வகையர்: ‘மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன் அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன் தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர் நெடுநூலைக் கற்கலா தார்.’ என இவர். இவர் தன்மை, ‘குரங்கெறி விளங்காய் எருமை யாடே தோணி யென்றாங் கிவையென மொழிப.’ இதனான் அறிக. இவருட் களங்கடியப்பட்டார்: ‘மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார் படிறு பலவுரைப்பார் பல்கால் நகுவார் திரிதரு நெஞ்சத்தார் தீயவை ஓர்ப்பார் கடியப்பட் டாரவையின் கண்.’ இனிக் கோடன் மரபு: ‘கோடன் மரபு கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடல் முனியான் முன்னும் பின்னும் இரவினும் பகலினும் அகலா னாகி அன்பொடு கெழீஇக் குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின் றாசற உணர்ந்தோன் வாவென வந்தாங் கிருவென இருந்தே டவிழென அவிழ்த்துச் சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று பருகுவ னன்ன ஆர்வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை வல்ல னாகிப் போற்றிக் கோடல் அதனது பண்பே.’ ‘எத்திறம் ஆசான் உவக்கும் அத்திறம் அறத்தின் திரியாப் படர்ச்சிவழி பாடே.’ ‘செவ்வன் தெரிகிற்பான் மெய்நோக்கிக் காண்கிற்பான் பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான் தெய்வத்தைப் போல மதிப்பான் திரிபில்லான் இவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே செவ்விதின் நூலைத் தெரிந்து.’ ‘வழக்கி னிலக்கணம் இழுக்கின் றறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தலென் றின்னவை கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்.’ ‘அனையன் நல்லோன் கேட்குவ னாயின் வினையின் உழப்பொடு பயன்றலைப் படுவான்.’ ‘அனையன் அல்லோன் அம்மர பில்லோன் கேட்குவ னாயிற் கொள்வோ னல்லன்.’ இவற்றான் உணர்க. இம்மாணாக்கன் முற்ற உணர்ந்தானாமாறு: ‘ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே.’ ‘முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.’ ‘ஆசா னுரைத்த தமைவரக் கொளினுங் காற்கூ றல்லது பற்றல னாகும்.’ ‘அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபால் செவ்விதி னுரைப்ப அவ்விரு பாலும் மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.’ ‘பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகுந் திறப்பட உணருந் தெளிவி னோர்க்கே.’ இவற்றான் அறிக. பொதுப் பாயிரம் முற்றிற்று. சிறப்புப் பாயிரம் இனிச் சிறப்புப்பாயிரமாவது தன்னான் உரைக்கப்படும் நூற்கு இன்றியமையாதது. அது பதினொரு வகையாம். ‘ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.’ ‘காலங் களனே காரணம் என்றிம் மூவகை யேற்றி மொழிநரும் உளரே.’ இப்பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெறப்பட்டன. இனிச் சிறப்புப்பாயிரத்திலக்கணஞ் செப்புமாறு: ‘பாயிரத் திலக்கணம் பகருங் காலை நூல்நுதல் பொருளைத் தன்னகத் தடக்கி ஆசிரிய மானும் வெண்பா வானும் மருவிய வகையான் நுவறல் வேண்டும்.’ இதனான் அறிக. நூல்செய்தான் பாயிரஞ் செய்தானாயின் தன்னைப் புகழ்ந்தானாம்; ‘தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந் தான்தற் புகழ்தல் தகுதி யன்றே’ என்பவாகலின். பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியருந், தன்னோடு ஒருங்கு கற்ற ஒருசாலை மாணாக்கரும், தன் மாணாக்கரும் என இவர். அவருள் இந்நூற்குப் பாயிரஞ்செய்தார் தமக்கு ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார். இதன் பொருள்: வடவேங்கடந் தென் குமரி ஆயிடை - வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமாகிய அவ் விரண்டெல்லைக் குள்ளிருந்து, தமிழ் கூறும் நல் உலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆ இரு முதலின் - தமிழைச் சொல்லும் நல்லாசிரியரின் வழக்குஞ் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினானே, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு - அவர் கூறுஞ் செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய செந்தமிழ் நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னையிலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக் கண்டு, முறைப்பட எண்ணி - அவ்விலக்கணங்களெல்லாஞ் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவி னோர்க்கு அறியலாகாமையின் யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவ லென்று அந்நூல்களிற் கிடந்தவாறன்றி அதிகார முறையான் முறைமைப் படச் செய்தலை எண்ணி, எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி - அவ்விலக்கணங்களுள் எழுத்தினையுஞ் சொல்லினையும் பொருளினை யும் ஆராய்ந்து, போக்கு அறு பனுவல் - பத்துவகைக் குற்றமுந் தீர்ந்து முப்பத்திரண்டுவகை உத்தியொடு புணர்ந்த இந்நூலுள்ளே, மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டிப் புலந் தொகுத்தோனே - அம்மூவகை இலக்கணமும் மயங்கா முறைமையாற் செய்கின்றமையின் எழுத்திலக் கணத்தை முன்னர்க் காட்டிப் பின்னர் ஏனை யிலக்கணங்களையுந் தொகுத்துக் கூறினான்; நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து - மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின்கண்ணே, அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு அரில் தபத் தெரிந்து - அறமே கூறும் நாவினை யுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த அதங்கோ டென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி - கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோன் எனத் தன் பெயரை மாயாமல் நிறுத்தி, பல்புகழ் நிறுத்த படிமையோனே - பல புகழ்களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை யுடையோன் என்றவாறு. இருந்து தமிழைச் சொல்லும் என்க; கொள்ளுகையினாலே பொருந்திய நாடு என்க; கண்டு எண்ணி ஆராய்ந்து தன்னூலுள்ளே தொகுத்தான்; அவன் யாரெனின் அவையின்கண்ணே கூறி உலகின் கண்ணே தன் பெயரை நிறுத்திப் புகழை நிறுத்திய படிமையோன் என்க. இப்பாயிரமுஞ் செய்யுளாதலின் இங்ஙனம் மாட்டுறுப்பு நிகழக் கூறினார். இதற்கு இங்ஙனம் கண்ணழித்தல் உரையாசிரியர் கருத்தென்பது அவருரையான் உணர்க. இனி மங்கல மரபிற் காரியஞ் செய்வார் வடக்குங் கிழக்கும் நோக்கியுஞ் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசையை முற்கூறினார்; இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி. தென்புலத் தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கிக் கருமங்கள் செய்வாராதலின் தென்திசையைப் பிற்கூறினார். நிலங்கடந்த நெடுமுடி யண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டனையுங் காலையே ஓதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும் அகப்பாட்டெல்லை யாயின; என்னை? குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்ட தாகலின். கிழக்கும் மேற்குங் கடலெல்லையாக முடிதலின் வேறெல்லை கூறா ராயினார். வேங்கடமுங் குமரியும் யாண்டைய என்றால் வடவேங்கடந் தென்குமரியென வேண்டுதலின் அதனை விளங்கக் கூறினார். உலகமென்றது பல பொருளொரு சொல்லாதலின் ஈண்டு உயர்ந் தோரை உணர்த்திற்று, உலகம் அவரையே கண்ணாக வுடைமையின்; என்னை? ‘வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான’ (மரபி. 92) என மரபியலுட் கூறுதலின். அவ்வுயர்ந்தோராவார், அகத்தியனாரும் மார்க்கண்டேயனாருந் தலைச்சங்கத்தாரும் முதலாயினோர். உலகத்து - உலகத்தினுடைய என விரிக்க. வழக்காவது, சிலசொற் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த்திற்று, இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது. செய்யுளாவது, ‘பாட்டுரை நூலே’ (செய். 78) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தாற் கூறிய ஏழு நிலமும் அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது. முதலின் என்றது முதலுகையினாலே என்றவாறு. எழுத்து என்றது யாதனை யெனின், கட்புலனாகா உருவுங் கட்புலனாகிய வடிவு முடைத்தாக வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம். கடலொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருளுணர்த்தாமையானும், முற்கு, வீளை, இலதை முதலியன பொருளுணர்த்தினவேனும் எழுத் தாகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளாராயினர். ஈண்டு உருவென்றது மனனுணர்வாய் நிற்கும் கருத்துப் பொருளை. அது செறிப்பச் சேறலானுஞ், செறிப்ப வருதலானும், இடையெறியப்படுதலானும், இன்பதுன்பத்தை யாக்கலானும், உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானும், உந்தி முதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து கட்புலனாந் தன்மை யின்றிச் செவிக்கட்சென்று உறும் ஊறுடைமையானும், விசும்பிற் பிறந்து இயங்குவதொரு தன்மை யுடைமையானுங் காற்றின் குணமாவதோர் உருவாம். வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவேயாயிற்று. இதனைக் காற்றின் குணமே யென்றல் இவ்வாசிரியர் கருத்து. இதனை விசும்பின் குணமென்பாரும் உளர். இவ்வுரு, ‘உரு வுருவாகி’ (எழுத். 47) எனவும், ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ (எழுத். 14) எனவும் காட்சிப் பொருட்குஞ் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வில்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங் காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. இதற்கு விதி ‘உட்பெறு புள்ளி உருவா கும்மே’ (எழுத். 14) என்னுஞ் சூத்திரம் முதலியனவாம். இவற்றாற் பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். ‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’ (எழுத். 16) என உயிர்க்குஞ் சிறுபான்மை வடிவு கூறினார். இனித் தன்னை உணர்த்தும் ஓசையாவது, தன் பிறப்பையும் மாத்திரையையுமே அறிவித்துத் தன்னைப் பெற நிகழும் ஓசை. சொற்கு இயையும் ஓசையாவது, ஓரெழுத்தொருமொழி முதலியவாய் வரும் ஓசை. இனிச் சொல் என்றது யாதனை யெனின், எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையையும் ஒருவன் உணர்தற்கு நிமித்தமாம் ஓசையை. இவ்வுரைக்குப் பொருள் சொல்லதிகாரத்துட் கூறுதும். ஈண்டு ‘டறலள’ (எழுத். 23) என்னுஞ் சூத்திர முதலியவற்றான் மொழியாக மயங்குகின்றனவும் அவ்வாக்கத்தின்கண் அடங்குமென்று உணர்க. எழுத்துச், சொற்கு அவயவமாதலின் அதனை முற்கூறி அவயவி யாகிய சொல்லைப் பிற்கூறினார். இனிப் பொருள் என்றது யாதனை யெனின், சொற்றொடர் கருவியாக உணரப்படும் அறம்பொருளின்பமும் அவற்றது நிலையும் நிலையாமையு மாகிய அறுவகைப் பொருளுமாம். அவை பொருளதிகாரத் துட் கூறுதும். வீடு கூறாரோ எனின், அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி வீட்டின் தன்மை இலக்கணத்தாற் கூறாரென்றுணர்க. அஃது, ‘அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப’ (செய். 106) என்பதனான் உணர்க. இக்கருத்தானே வள்ளுவனாரும் முப்பாலாகக் கூறி ‘மெய்யுணர்த’ லான் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறினார். செந்தமிழ் - செவ்விய தமிழ். முந்துநூல் - அகத்தியமும் மாபுராண மும் பூதபுராணமும் இசைநுணுக்கமும். அவற்றுட் கூறிய இலக்கணங் களாவன: எழுத்துச் சொற் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன இயலுஞ் சோதிடமுங் காந்தருவ முங் கூத்தும் பிறவுமாம். புலம் என்றது, இலக்கணங்களை. பனுவல் என்றது, அவ்விலக் கணங்களெல்லாம் அகப்படச் செய்கின்றதொரு குறியை. அதனை இதனுட் கூறுகின்ற உரைச்சூத்திரங்களானும் மரபியலானும் உணர்க. பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானா தலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவுமிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாங் குற்றந்தீர விடைகூறுதலின் ‘அரில்தப’ என்றார். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, ‘நீ தொல் காப்பியன் செய்த நூலைக் கேளற்க’ என்று கூறுதலானும், தொல் காப்பியனாரும் பல்காலுஞ் சென்று ‘யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்’ என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றங் கூறிவிடுவலெனக் கருதி அவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடை கூறுதலின், ‘அரில்தபத் தெரிந்து’ என்றார். அவர் கேளன்மின் என்றற்குக் காரணமென்னை யெனின், தேவரெல்லாருங் கூடி யாஞ் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரிய ரென்று அவரை வேண்டிக்கொள்ள, அவருந் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, பின்னர் யமதக்கினி யாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபாமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரை யுங் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித், திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, ‘நீ சென்று குமரியாரைக் கொண்டுவருக’ எனக்கூற, அவரும் ‘எம்பெருமாட்டியை எங்ஙனங் கொண்டு வருவல்’ என்றார்க்கு, ‘முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகலநின்று கொண்டுவருக’ வென அவரும் அங்ஙனங் கொண்டு வருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போகத், தொல்காப்பியனார் கட்டளை யிறந்து சென்று ஒரு வெதிர்ங்கோலை முறித்து நீட்ட, அதுபற்றி யேறினார்; அது குற்ற மென்று அகத்தியனார் குமரியாரையுந் தொல்காப்பியனாரையுஞ் ‘சுவர்க்கம் புகாப்பிர்’ எனச் சபித்தார். ‘யாங்கள் ஒரு குற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானுஞ் சுவர்க்கம் புகாப்பிர்’ என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் ‘அவன் செய்த நூலைக் கேளற்க’ என்றாரென்க. நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் ‘நான்மறை’ என்றார். அவை தைத்திரியமும் பௌடிகமுந் தலவகாரமுஞ் சாமவேதமு மாம். இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேத வியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின். முற்கூறிய நூல்கள்போல எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் மயங்கக் கூறாது வெவ்வேறு அதிகாரமாகக் கூறினார் என்றற்கு ‘எழுத்து முறைகாட்டி’ என்றார். வரைப்பின்கண்ணே தோற்றி நிறுத்த என்க. இந்திரனாற் செய்யப்பட்டது ஐந்திரம் என்றாயிற்று. பல்புகழாவன, ஐந்திரநிறைதலும், அகத்தியத்தின்பின் இந்நூல் வழங்கச்செய்தலும், அகத்தியனாரைச் சபித்த பெருந்தவத்தன்மையும், ஐந்தீநாப்பண் நிற்றலும், நீர்நிலை நிற்றலும், பிறவுமாகிய தவத்தான் மிகுதலும் பிறவுமாம். படிமை - தவவேடம். ‘வடவேங்கடந் தென்குமரி’ என்பது கட்டுரைவகையான் எண்ணொடு புணர்ந்த சொற்சீரடி. ‘ஆயிடை’ என்பது வழியசை புணர்ந்த சொற்சீரடி. ‘தமிழ்கூறு நல்லுலகத்து’ என்பது முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாய சொற்சீரடி. இங்ஙனஞ் சொற்சீரடியை முற்கூறினார், சூத்திர யாப்பிற்கு இன்னோசை பிறத்தற்கு; என்னை? ‘பாஅ வண்ணஞ், சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்’ (செய். 215) என்றலின். ஏனை அடிக ளெல்லாஞ் செந்தூக்கு. ‘வடவேங்கடந் தென்குமரி’ யெனவே எல்லையும், ‘எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ யெனவே நுதலிய பொருளும் பயனும் யாப்பும், ‘முந்துநூல் கண்’ டெனவே வழியும், ‘முறைப்பட எண்ணி யெனவே காரணமும், ‘பாண்டியன் அவையத் தெனவே காலமுங்களனும், ‘அரில்தபத் தெரிந்’ தெனவே கேட்டோரும், ‘தன்பெயர் தோற்றி’ யெனவே ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன. தொல்காப்பியம் என்பது மூன்று உறுப்படக்கிய பிண்டம். பொருள் கூறவே அப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமும் அடங்கிற்று; ‘நூறுகாணங் கொணர்ந்தானென்றால் அவை பொதிந்த கூறையும் அவையென அடங்குமாறுபோல.’ இனி, இவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழிவு கூறுவாரும் உளரா லெனின், வேங்கடமும் குமரியும் எல்லையாகவுடைய நிலத்திடத்து வழங்குந் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்கள் வழக்குஞ் செய்யுளும் என்றாற் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினும் வழங்குந் தமிழ்மொழியினைக் கூறுவாரை நன்மக்களென்றார் என்று பொருள் தருதலானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுங் கொண்டு எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்தல் பொருந்தாமையானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுமாகிய இருகாரணத்தானும் எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்தாரெனின் அகத்தியர்க்கு மாறாகத் தாமும் முதனூல் செய்தாரென்னும் பொருள் தருதலானும், அங்ஙனங் கொடுந்தமிழ் கொண்டு இலக்கணஞ் செய்யக் கருதிய ஆசிரியர் குறைபாடுடைய வற்றிற்குச் செந்தமிழ் வழக்கையும் முந்து நூலையும் ஆராய்ந்து முறைப்பட எண்ணினாரெனப் பொருள் தருதலானும் அது பொருளன்மை உணர்க. இன்னும் ‘முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி’ யென்றதனானே, முதல்வன் வழிநூல் செய்யுமாற்றிற்கு இலக்கணங் கூறிற்றிலனேனும் அவன் நூல் செய்த முறைமைதானே பின்பு வழிநூல் செய்வார்க்கு இலக்கணம் என்பது கருதி இவ்வாசிரியர் செய்யுளியலிலும் மரபியலிலும் அந்நூல் செய்யும் இலக்கணமும் அதற்கு உரையுங் காண்டிகையுங் கூறும் இலக்கணமுங் கூறிய அதனையே ஈண்டுங் கூறினாரென்று உணர்க. அவை அவ்வோத்துக்களான் உணர்க. ‘யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே சீய நோக்கே பருந்தின் வீழ்வென்(று) ஆவகை நான்கே கிடக்கை முறையே.’ ‘பொழிப்பே அகலம் நுட்பம் எச்சம்எனப் பழிப்பில் சூத்திரம் பன்னல் நான்கே.’ ‘அவற்றுள் பாடங் கண்ணழி வுதாரணம் என்றிவை நாடித் திரிபில ஆகுதல் பொழிப்பே.’ ‘தன்னூல் மருங்கினும் பிறநூல் மருங்கினுந் துன்னிய கடாவின் புறந்தோன்றும் விகற்பம் பன்னிய அகலம் என்மனார் புலவர்.’ ‘ஏதுவின் ஆங்கவை துடைத்தல் நுட்பம்.’ ‘துடைத்துக் கொள்பொருள் எச்சம் ஆகும்.’ ‘அப்புலம் அரில்தப அறிந்து முதனூற் பக்கம் போற்றும் பயன்தெரிந் துலகந் திட்ப முடைய தெளிவர வுடையோன் அப்புலம் படைத்தற் கமையும் என்ப.’ ‘சூத்திரம் உரைஎன் றாயிரு திறத்தினும் பாற்படத் தோற்றல் படைத்த லென்ப நூற்பயன் உணர்ந்த நுண்ணி யோரே.’ இவற்றை விரித்து உரைக்க. சிறப்புப் பாயிரம் முற்றிற்று. 1 நூன்மரபு எழுத்துக்களின் பெயரும் முறையும் தொகையும் 1. எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின், எழுத்திலக்கணம் உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்தை உணர்த்திய அதிகாரம் என விரிக்க. அதிகாரம்-முறைமை. எழுத்து உணர்த்துமிடத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோ வெனின், எட்டுவகையானும், எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினார் என்க. எட்டுவகைய என்பார் கூறுமாறு:- எழுத்து இனைய என்றலும், இன்ன பெயரின என்றலும், இன்ன முறையின என்றலும், இன்ன அளவின என்றலும், இன்ன பிறப்பின என்றலும், இன்ன புணர்ச்சியின என்றலும், இன்ன வடிவின என்றலும், இன்ன தன்மையின என்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும். எழுத்து இனைய என்றலைத் தொகை வகை விரியான் உணர்க. முப்பத்து மூன்று என்பது தொகை. உயிர் பன்னிரண்டும், உடம்பு பதினெட்டுஞ், சார்பிற்றோற்றம் மூன்றும் அதன் வகை. அளபெடை யேழும், உயிர்மெய் இருநூற்றொருபத்தாறும் அவற்றொடுங் கூட்டி இருநூற்றைம்பத்தாறெனல் விரி. இனி, எழுத்துக்களின் பெயரும் முறையுந் தொகையும் இச் சூத்திரத்தாற் பெற்றாம். வகை: ‘ஔகார இறுவாய்’ (எழுத். 8) என்பத னானும், ‘னகார இறுவாய்’ (எழுத். 9) என்பதனானும், ‘அவைதாங், குற்றியலிகரங் குற்றியலுகரம்’ (எழுத். 2) என்பதனானும் பெற்றாம். விரி: ‘குன்றிசை மொழிவயின்’ (எழுத். 4) என்பதனானும், ‘புள்ளியில்லா’ (எழுத். 17) என்பதனானும் பெற்றாம். அளவு, ‘அவற்றுள், அ இ உ’ (எழுத். 3) என்பதனானும், ‘ஆ ஈ ஊ’ (எழுத். 4) என்பதனானும், ‘மெய்யின் அளவே’ (எழுத். 11) என்பதனானும், ‘அவ்வியல் நிலையும்’ (எழுத். 12) என்பதனானும் பெற்றாம். பிறப்பு, பிறப்பியலுட் பெற்றாம். புணர்ச்சி, ‘உயிரிறு சொல்முன்’ (எழுத். 107) என்பதனானும், ‘அவற்றுள், நிறுத்த சொல்லின்’ (எழுத். 108) என்பதனானும், பிறவாற் றானும் பெற்றாம். இனி, எட்டிறந்த பல்வகைய என்பார் கூறுமாறு:- எழுத்துக்களின் குறைவுங், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலவாதலுந், திரிந்ததன்றிரிபு அது என்றலும், பிறிதென்ற லும், அதுவும் பிறிது மென்றலும், நிலையிற்றென்றலும், நிலையா தென்றலும், நிலையிற்றும் நிலையாதும் என்றலும், இன்னோரன்ன பலவுமாம். குறைவு, ‘அரையளபு குறுகல்’ (எழுத். 13), ‘ஓரளபாகும்’ (எழுத். 57) என்பனவற்றாற் பெற்றாம். கூட்டம், ‘மெய்யோ டியையினும்’ (எழுத். 10), ‘புள்ளியில்லா’ (எழுத். 17) என்பனவற்றாற் பெற்றாம். பிரிவு, ‘மெய்யுயிர் நீங்கின்’ (எழுத். 139) என்பதனாற் பெற்றாம். மயக்கம், ‘டறலள’ (எழுத். 23) என்பது முதலாக ‘மெய்ந்நிலை சுட்டின்’ (எழுத். 30) என்பது ஈறாகக் கிடந்தனவற்றாற் பெற்றாம். மொழியாக்கம், ‘ஓரெழுத் தொருமொழி’ (எழுத். 45) என்பதனாற் பெற்றாம், அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின். நிலை, ‘பன்னீருயிரும்’ (எழுத். 59), ‘உயிர்மெய்யல்லன’ (எழுத். 60), ‘உயிர் ஔ’ (எழுத். 69), ‘ஞணநமன’ (எழுத். 78) என்பன. இவற்றான் மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈறாமெழுத்தும் பெற்றாம். இனம், ‘வல்லெழுத்தென்ப’ (எழுத். 19), ‘மெல்லெழுத்தென்ப’ (எழுத். 20), ‘இடையெழுத்தென்ப’ (எழுத். 21), ‘ஔகார இறுவாய்’ (எழுத். 8), ‘னகார இறுவாய்’ (எழுத். 9) என்பனவற்றான் பெற்றாம். இவற்றானே எழுத்துக்கள் உருவாதலும் பெற்றாம். இவ்வுருவாகிய ஓசைக்கு ஆசிரியர் வடிவு கூறாமை உணர்க. இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே பெரும்பான்மையும் வடிவு கூறுமாறு உணர்க. ஒன்று பலவாதல், ‘எழுத்தோரன்ன’ (எழுத். 141) என்பதனாற் பெற்றாம். திரிந்ததன் றிரிபது என்றல், ‘தகரம் வருவழி’ (எழுத். 369) என்பதனானும், பிறாண்டும் பெற்றாம். பிறிதென்றல், ‘மகர இறுதி’ (எழுத். 310), ‘னகார இறுதி’ (எழுத். 332) என்பனவற்றாற் பெற்றாம். அதுவும் பிறிதுமென்றல், ‘ஆறனுருபின் அகரக் கிளவி’ (எழுத். 115) என்பதனாற் பெற்றாம். நிலையிற் றென்றல், ‘நிறுத்த சொல்லின் ஈறாகு’ (எழுத். 108) என்பதனாற் பெற்றாம். நிலையாதென்றல், நிலைமொழியது ஈற்றுக்கண்நின்றும் வருமொழியது முதற்கண்நின்றும் புணர்ச்சி தம்முள் இலவாதல். அது ‘மருவின் தொகுதி’ (எழுத். 111) என்பதனாற் பெற்றாம். நிலையிற்றும் நிலையாதும் என்றல், ‘குறியதன் முன்னரும்’ (எழுத். 226) என்பதனாற் கூறிய அகரம் ‘இராவென் கிளவிக்கு இல்லை’ (எழுத். 227) என்பதனாற் பெற்றாம். இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையும் என இரு வகைய. அவற்றுட் கருவி, புறப்புறக்கருவியும், புறக்கருவியும், அகப்புறக் கருவியும், அகக்கருவியும் என நால்வகைத்து. நூன்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி. மொழிமரபு புறக்கருவி. புணரியல் அகப்புறக்கருவி. ‘எகர ஒகரம் பெயர்க் கீறாகா’ (எழுத். 272) என்றாற் போல்வன அகக்கருவி. இனிச் செய்கையும், புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும், அகப்புறச் செய்கையும், அகச்செய்கையுமென நால்வகைத்து. ‘எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே’ (எழுத். 140) என்றாற் போல்வன புறப்புறச் செய்கை. ‘லனஎன வரூஉம் புள்ளி முன்னர்’ (எழுத். 149) என்றாற்போல்வன புறச்செய்கை. ‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி’ (எழுத். 163) என்றாற் போல்வன அகப்புறச் செய்கை. தொகைமரபு முதலிய ஓத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச் செய்கை. இவ்விகற்பமெல்லாம் தொகையாக உணர்க. இவ்வோத்து என்னுதலிற்றோ எனின், அதுவும் அதன் பெயர் உரைப்பவே அடங்கும். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், இத்தொல்காப்பிய மென்னும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் ‘நூன்மரபு’ என்னும் பெயர்த்தாயிற்று. நூலென்றது நூல்போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராம். அவ்வொப்பாயவாறு என்னை யெனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளை யெல்லாங் கைவன் மகடூஉத் தூய்மையும் நுண்மையு முடையவாக ஓரிழைப் படுத்தினாற் போல ‘வினையி னீங்கி விளங்கிய அறிவ’ னாலே (மரபு. 94) வழுக்களைந்து எஃகிய இலக் கணங்களை யெல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின்றியும், தொகை யினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங் குற்றமும் இன்றி ஈரைந்தழகும் பெற முப்பத்திரண்டு தந்திர உத்தியொடு புணரவும், ‘ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்’ (செய். 166) ஒரு நெறிப்படப் புணர்க்கப்படூஉந் தன்மை யுடைமையான் என்க. மரபு, இலக்கணம், முறைமை, தன்மை என்பன ஒரு பொருட்கிளவி. ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றதிகாரத்தினையும் அன்றே? இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கணமாயவா றென்னை யெனின், எழுத்துக்களின் பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்து மூன்றனைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகை கோடலின் தொகை வேறாம். அளவு, செய்யுளியற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்குங் கூறிய மாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு. ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளபு கோடற்கு ஈண்டைக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது, ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எழுத். 33) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியு மாற்றான் உணர்க. இன்னுங் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ்வதிகாரத்திற்கே உரியனவாகக் கூறியன. ‘அம்மூவாறும்’ (எழுத். 22) என்னுஞ் சூத்திரம் முதலியனவற்றான் எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணங் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப்பியம் என்னும் பிண்டத்தை. இவ் வோத்திலக்கணங்கள்தாம் எழுத்துக்களின் பெயரும் முறையுந் தொகையும் அளவுங் குறைவுங் கூட்டமும் பிரிவும் மயக்கமும் ஆம். ஏனைய இவ்வதிகாரத்துள் ஏனையோத்துக்களான் உணர்த்துப. அற்றேல் அஃதாக; இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், எழுத்துக்களின் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுத்தெனப் படுப - எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன, அகரமுதல் னகரஇறுவாய் முப்பஃ தென்ப - அகரம் முதல் னகரம் ஈறாகக் கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர்; சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே - சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் அல்லாத இடத்து எ-று. எனவே, அம்மூன்றுங் கூடியவழி முப்பத்து மூன்றென்ப. எ-டு: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ, க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் எனவரும். ‘எனப்படுப’ என்று சிறப்பித் துணர்த்துதலான் அளபெடையும் உயிர்மெய்யும் இத்துணைச் சிறப்பில. ஓசை யுணர்வார்க்குக் கருவியாகிய வரிவடிவுஞ் சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும். அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றாரென்பது உணர்தற்கு ‘னகர இறுவாய்’ என்றார். படுப, படுவ. ‘படுப’ வென்பது படுத்தலோசையான் தொழிற் பெயராகக் கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு நிற்றற்குத் தம்முள் ஒத்த உரிமையவேனும் ‘எழுத்தெனப்படுவ’ வெனத் தூக்கற்று நிற்குஞ் சொற்சீரடிக்குப் படுப என்பது இன்னோசைத்தாய் நிற்றலின் ஈண்டுப் ‘படுப’ என்றே பாடம் ஓதுக. இஃது அன் பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். அகரம் னகர மெனவே பெயருங் கூறினார். எழுத்துக்கட்கெல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் ‘மெய்யினியக்கம் அகரமொடு சிவணும்’ (எழுத். 46) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்துஞ் சிறப்பான் னகரம் பின் வைத்தார். இனி எழுத்துக்கட்குக் கிடக்கைமுறை ஆயினவாறு கூறுதும். குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த நெட் டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூறவேண்டுதலின். அன்றி இரண்டை முற்கூறினாலோ வெனின், ஆகாது; ஒன்று நின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டென்ப தொன்று இன்றாதலின். இதனான் ஒன்றுதான் பல கூடியே எண் விரிந்ததென்று உணர்க. இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் ‘அஇஉ அம்மூன்றுஞ் சுட்டு’ (எழுத். 31) எனச் சுட்டுப் பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி. அவை ஐம்பாற் கண்ணும் பெரும் பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்க ளொடு பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஔகாரங்கட்கு இனமாகிய குற்றெழுத்து இலவேனும் பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங்களின் பின்னர் ஐகார ஔகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யொடு கூடி நின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழியாகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின்பின் வைத்தார். அ இ உ எ என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன் என, மெய்யொடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும் பெயர்களொடு கூடிச் சுட்டுப் பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம் மெய்யொடு கூடியே தன் பொருள் உணர்த்துவதல்லது தானாகப் பொருளுணர்த்தா தென்று உணர்க. இன்னும் அ ஆ உ ஊ எ ஏ ஒ ஓ ஔ என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ ஈ ஐ தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை அளபெடுக் குங்கால் நெட்டெழுத்தொடு குற்றெழுத்துக்கு ஓசை இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்களாதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர் மயங்கியலுட் பெறுதும். இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க. இனிக் ககார ஙகாரமும் சகார ஞகாரமும் டகார ணகாரமும் தகார நகாரமும் பகார மகாரமும், தமக்குப் பிறப்புஞ் செய்கையும் ஒத்தலின், வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதல்நாவும் முதல் அண்ணமும் இடைநாவும் இடையண்ணமும் நுனிநாவும் நுனியண்ண மும் நுனிநாவும் பல் முதலும் இதழியைதலுமாகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக்களைக் க ச ட த ப, ங ஞ ண ந ம என இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த் திரிதலானும் றகாரமும் னகாரமுஞ் சேரவைத்தார். இவை தமிழெழுத் தென்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடையெழுத்துக்களில் யகாரம் முன்வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி அண்ணங் கண்ணுற்று அடையப் பிறத்தலின். ரகாரம் அதனொடு பிறப்பு ஒவ்வாதேனுஞ் செய்கை ஒத்தலின் அதன் பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்மிற் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும், கல் வலிது சொல் வலிது என்றாற்போலத் தம்மிற் சேர்ந்துவருஞ் சொற்கள் பெரும்பான்மை யென்பது பற்றி லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபிலவேனும் ‘இடையெழுத் தென்ப யரல வழள’ (எழுத். 21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேர வைத்தார் போலும். அகரம் உயிரகரமும் உயிர்மெய் அகரமும் என இரண்டு. இஃது ஏனை உயிர்கட்கும் ஒக்கும். எனவே, ஓருயிர் பதினெட்டாயிற்று. இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார். அதனை உருவென்றே கோடும். அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடை யெறியப்படுதலானும், செவிக்கட் சென்று உறுத லானும், இன்பதுன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங்கூடிப் பிறத்தலானும், தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப்பிறக் கும் என்றமையானும் உருவேயாம். அருவே யாயின் இவ்விடத்திற் கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம், வன்மை மென்மை இடைமை என்று ஓதினமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்தல் என்னும் இலக் கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்றதென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினாம். இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூறாராயினர், அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு உணர்த்துதற்கு அரிதென்பது கருதி. அவ்வடிவு ஆராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம்; ‘குழலகத்திற் கூறிற் குழல்வடிவும், குடத்தகத்திற் கூறிற் குடவடிவும், வெள்ளிடையிற் கூறின் எல்லாத் திசையும் நீர்த்தரங்கம் போல.’ ‘எல்லா மெய்யும் உருவுரு வாகி’ (எழுத். 17) எனவும், ‘உட்பெறு புள்ளி யுருவா கும்மே’ (எழுத். 14) எனவும், ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’ (எழுத். 15) எனவும் சிறுபான்மை வடிவும் கூறுவர். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். ‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’ (எழுத். 16) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறினார். (1) ‘சார்ந்து வரும்’ என்ற மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் 2. அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன. இது மேற் சார்ந்து வருமென்ற மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைதாம் - மேற் சார்ந்து வரும் எனப்பட்டவைதாம், குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் - குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தம் என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளிவடிவுமாம்; எழுத்தோரன்ன - அவையும் முற்கூறிய முப்பதெழுத்தோடு ஒரு தன்மையவாய் வழங்கும் எ -று. முற்கூறிய இரண்டும் உம்மை தொக்குநின்றன. இகர உகரங் குறுகி நின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின். இவற்றை இங்ஙனம் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. ‘சந்தனக்கோல் குறுகினாற் பிரப்பங்கோலாகாது’ அதுபோல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறு எழுத்தாக வேண்டினார். இவற்றுட் குற்றியலுகரம் நேர்பசையும் நிரைபசையுமாகச் சீர்களைப் பலவாக்குமாறு செய்யுளியலுள் உணர்க. ஆய்தம் என்ற ஓசைதான் ‘அடுப்புக்கூட்டுப் போல’ மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ‘ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும்’ என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப. இதற்கு வடிவு கூறினார். ஏனை ஒற்றுக்கள் போல உயிரேறாது ஓசைவிகாரமாய் நிற்பதொன்றாகலின், எழுத்தியல் தழா ஓசைகள் போலத் தோன்றினும் அவ்வாறு கொள்ளற்க என்றற்கு எழுத்தேயாம் என்றார். இதனைப் புள்ளி வடிவிற்றெனவே, ஏனை எழுத்துக்களெல்லாம் வரிவடிவினவாதல் பெற்றாம். முன்னின்ற சூத்திரத்தாற் ‘சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப’ எனவே, சார்ந்து வரன்மரபின் மூன்றுமே சிறந்தன, ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்தில வெனவும் பொருள்தந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்குமென்றற்கு ‘எழுத்தோரன்ன’ என்றார். இப்பெயர்களே பெயர். இம்முறையே முறை. தொகையும் மூன்றே. இம்மூன்று பெயரும் பண்புத்தொகை. ‘அவைதாம்’, ‘ஆய்த மென்ற’ என்பன சொற்சீரடி. (2) (உயிர்க்) குற்றெழுத்தின் அளவும் குறியும் 3. அவற்றுள் அ இ உ எ ஒ என்னும் அப்பா லைந்தும் ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. இது முற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு அளவுங் குறியும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய முப்ப தெழுத்தினுள், அ இ உ எ ஒ என்னும் அப்பாலைந்தும் - அகர இகர உகர எகர ஒகரம் என்று கூறப்படும் அப்பகுதிகள் ஐந்தும், ஓரளபு இசைக்குங் குற்றெழுத் தென்ப - ஒரோ வொன்று ஓரளபாக ஒலிக்குங் குற்றெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் எ -று. இக்காரணப்பெயர் மேல் ஆளுமாறு ஆண்டு உணர்க. தமக்கு இனமாயவற்றின்கணல்லது குறுமை நெடுமை கொள்ளப் படாமையின், ஒரு மாத்திரை அளவிற்பட்டு அமைந்தனவாங் குற் றெழுத்திற் குறுகி மெய் அரைமாத்திரை பெற்றதேனுங் குற்றெழுத்து எனப் பெயர் பெறாதாயிற்று, ஒரு மாத்திரை பெற்ற மெய் தனக்கு இனமாக இன்மையின். குற்றெழுத் தென்பது பண்புத்தொகை. இனி இசைப்பதும் இசையும் வேறாக உணரற்க, அது பொருட் டன்மை. ‘அவற்றுள்’, ‘அ இ உ’ என்பன சொற்சீரடி. (3) (உயிர்) நெட்டெழுத்தின் அளவும் குறியும் 4. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பால் ஏழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப. இதுவும் அது. (இ-ள்.) ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பால் ஏழும் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்று சொல்லப்படும் அக்கூற்றேழும், ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப - ஒரோவொன்று இரண்டு மாத்திரையாக ஒலிக்கும் நெட்டெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் எ -று. எனவே, அளபுங் காரணக்குறியும் இங்ஙனம் உணர்த்தி மேல் ஆளுப. ஐகாரஔகாரங்கள் குறிய எழுத்தின் நெடியவாதற்குக் குற்றெழுத் தாகிய இனந் தமக்கிலவேனும் மாத்திரை ஒப்புமையான் நெட்டெழுத் தென்றார். ‘ஆ ஈ ஊ’, ‘ஏ ஐ’ என்பனவற்றைச் சொற்சீரடி யாக்குக. (4) ஓரெழுத்து மூன்று மாத்திரை இசையாமை 5. மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே. இஃது ஐயம் அகற்றியது; ஓரெழுத்து மூவளபாயும் இசைக்குங் கொல்லோ வென்று ஐயப்படுதலின். (இ-ள்.) ஓரெழுத்து மூவளபு இசைத்தலின்று - ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையாக இசைத்தலின்று எ-று. எனவே, பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்றவாறு. (எனவே, பெரும்பான்மை மூன்று மாத்திரையே பெறும் என்றார் புலவர். பல எழுத்தெனவே, நான்கு மாத்திரையும் பெறுதல் பெற்றாம்.) (5) மாத்திரை நீளுமாறு 6. நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர். இது மாத்திரை நீளுமாறு கூறுகின்றது. (இ-ள்.) நீட்டம் வேண்டின் - வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவராயின், அவ்வளபு உடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் - தாங் கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டி அம்மாத்திரைகளை எழுப்புக என்று கூறுவர் ஆசிரியர் எ-று. கூட்டி யெழுப்புமாறு, ‘குன்றிசைமொழி’ (எழுத். 41) ‘ஐ ஔ என்னும்’ (எழுத். 42) என்பனவற்றான் எழுவகைத்தெனக் கூறுப. எ-டு: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ என வரும். இவை மூன்று மாத்திரை பெற்றன. இவைதாம் ‘நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி’ (எழுத். 43) என்ற அந்நெட்டெழுத்துக்களே அளபெடுத்தலிற் சொல்லாதல் எய்தின. இனி ‘அளபெடை யசைநிலை யாகலு முரித்தே’ (செய். 17) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தான் எழுத்தாந் தன்மையும் எய்திற்று. இதுதான் இயற்கையளபெடையுஞ் செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட செயற்கை யளபெடையுமாய்ச் சொற்றன்மை எய்தி நின்று அலகு பெறுமாறுங் குற்றியலிகர குற்றியலுகரங்கள் போல எழுத்தாந்தன்மை எய்தி அலகு பெறாது நிற்குமாறும் அச்சூத்திரத்தான் உணர்க. எனவே, எழுத்தாந் தன்மையும் உடைமையின் அளபெடையொடு கூடி எழுத்து நாற்பது என்றலும் பொருந்திற்று. ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின் ஈண்டுக் கூறாராயினர். ‘அவ்வளபுடைய’ எனப் பன்மையாகக் கூறியவதனான் இவரும் நான்கு மாத்திரையுங் கொண்டார்; என்னை? இவ்வாசிரியரை ‘முந்துநூல் கண்டு’ என்றாராகலின். மாபுராணத்து, ‘செய்யுட்க ணோசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்பா டின்றி யணையுமாம் - மைதீரொற் றின்றியுஞ் செய்யுள் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமே லொற்றளபுங் கொள்’ என்ற சூத்திரத்தான் அவர் கொண்ட நான்கு மாத்திரையும் இவ்வாசிரி யர்க்கு நேர்தல் வேண்டுதலின். அது ‘செறாஅஅய் வாழிய நெஞ்சு’ (குறள். 1200) ‘தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்’ (மலைபடு. இறுதிவெண்பா) ‘இலாஅஅர்க் கில்லை தமர்’ (நாலடி. 283) ‘விராஅஅய்ச் செய்யாமை நன்று’ (நாலடி. 246) ‘மரீஇஇப் பின்னைப் பிரிவு’ (நாலடி. 220) எனச் சான்றோர் செய்யுட்கணெல்லாம் நான்கு மாத்திரை பெற்று நின்றன. அன்றி மூன்று மாத்திரை பெற்றனவேல் ஆசிரியத்தளை தட்டுச் செப்ப லோசை கெடுமாயிற்று. இங்ஙனம் அளபெடாது நின்று ஆசிரியத்தளை தட்டு நிற்பன கலிக்கு உறுப்பாகிய கொச்சக வெண்பாக்கள்; இவை அன்னவல்ல என உணர்க. கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா வோசையை அளபெடையென்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழி யல்லது எண்ணெய் புலப்படாவாறு போல என்று உணர்க. இனி அளபெடை யல்லாத ஓசைக ளெல்லாம் இசையோசை யாதலின் அவற்றை ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எழுத். 33) என்னுஞ் சூத்திரத்தாற் கூறுப. (6) மாத்திரை எனப்படும் அளவு 7. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே. இது மாத்திரை என்ற அளவு கூறுகின்றது. (இ-ள்.) கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை - கண்ணிமை யெனவும் நொடியெனவும் அவ்விரண்டே எழுத்தின் மாத்திரைக்கு அளவு; நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே - நுண்ணிதாக நூலிலக்கணத்தை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி எ-று. ‘என’ எண்ணிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்று. கண்ணிமை, நொடி என்னும் பலபொருளொரு சொற்கள் ஈண்டுத் தொழின்மேலும் ஓசைமேலும் முறையே நின்றன. ஆசிரியர் எல்லாரும் எழுத்திற்கு இவையே அளவாகக் கூறலின் இவருங் கூறினார். இயற்கை மகன்தன் குறிப்பினன்றி இரண்டிமையும் ஒருகாற் கூடி நீங்கின காலக்கழிவும், ‘அ’ எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். இக்கண்ணிமையினது பாகம் மெய்க்குஞ் சார்பிற் றோற்றத்திற்கும் இதன் பாகம் மகரக் குறுக்கத்திற்கும் கொள்க. இக்கண்ணிமை இரட்டித்து வருதல் நெடிற்கும் அது மூன்றும் நான்குமாய் வருதல் அளபெடைக்கும் கொள்க. அது போலவே நொடித்தற் றொழிலிற் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ‘அ’ எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். ஏனையவற்றிற்குங் கூறியவாறே கொள்க. இனி அவ்வளவைதான் நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தி யளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகந்தளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைத்து. அவற்றுள் இது சார்த்தியளத்தலாம். கண்ணிமைக்கும் நொடிக்கும் அளவு ஆராயின் வரம்பின்றி ஓடுமென்று கருதி ‘நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறு’ என்று ‘முடிந்தது காட்டல்’ என்னும் உத்தியான் கூறினார். இஃது ஆணை கூறுதலுமாம். (ஆகவே, எழுத்திற்கே அளபு கூறி மாத்திரைக்கு அளவு கூறிற்றிலர்.) நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமையின். (7) உயிரெழுத்துக்களாவன 8. ஔகார இறுவாய்ப் பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப. இது குறிலையும் நெடிலையுந் தொகுத்து வேறொரு குறியீடு கூறுகின்றது. (இ-ள்.) ஔகார இறுவாய்ப் பன்னீரெழுத்தும் - அகரம் முதலாக ஔகாரம் ஈறாகக் கிடந்த பன்னிரண்டெழுத்தும், உயிரென மொழிப - உயிரென்னும் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் எ-று. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதொரு குறி. மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வரிவடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், மெய்யி னிற்கும் உயிருந் தனியே நிற்கும் உயிரும் வேறென உணர்க. என்னை? ‘அகர முதல’ (குறள்.1) என்புழி அகரந் தனியுயிருமாய்க் ககர வொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரந் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாகலின், ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதொரு தன்மையை யுடைத்தென்று கோடும்; ‘இறைவன் ஒன்றேயாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல’. அது அ என்றவழியும், ஊர என விளியேற்றவழியும், ‘அகர முதல் னகர’ என்றவழி மூவினங்களில் ஏறினவழியும், ஓசை வேறுபட்டவாற்றான் உணர்க. இங்ஙனம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது ஏனை உயிர்கட்கும் ஒக்கும். ‘ஔகார இறுவாய்’ என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. ‘அகரமுதல்’ என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு ஈறே கூறினார். (8) மெய்யெழுத்துக்களாவன 9. னகார இறுவாய்ப் பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப. இஃது உயிரல்லனவற்றைத் தொகுத்து ஒரு குறியீடு கூறுகின்றது. (இ-ள்.) னகார இறுவாய்ப் பதினெண் ணெழுத்தும் - ககாரம் முதல் னகாரம் ஈறாய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும், மெய்யென மொழிப - மெய் யென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் எ-று. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. என்னை? பன்னீருயிர்க்குந் தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்குந் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின். ‘னகார இறுவாய்’ என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. முன்னர் ‘னகார இறுவாய்’ என்புழி முப்பதெழுத்திற்கும் ஈறாமென்றார், ஈண்டுப் பதினெட்டெழுத்திற்கும் ஈறாமென்றா ராதலிற் கூறியது கூறிற்றன்று. (9) உயர்மெய்யினது அளபு 10. மெய்யோ டியையினும் உயிரியல் திரியா. இஃது உயிர்மெய்க்கு அளபு கூறுகின்றது. (இ-ள்.) உயிர் மெய்யோடு இயையினும் - பன்னீருயிரும் பதினெட்டு மெய்யொடும் கூடி நின்றனவாயினும், இயல் திரியா - தம் அளபும் குறியும் எண்ணுந் திரிந்து நில்லா எ-று. இது ‘புள்ளி யில்லா’ (எழுத். 17) என்பதனை நோக்கி நிற்றலின் எதிரது போற்றலாம். உயிரும் மெய்யும் அதிகாரப்படுதலின் ஈண்டு வைத்தார். அ என்புழி நின்ற அளபுங் குறியும் ஒன்றென்னும் எண்ணும், க என நின்ற இடத்தும் ஒக்கும். ஆ என்புழி நின்ற அளபுங் குறியும் ஒன்று என்னும் எண்ணும், கா என நின்ற இடத்தும் ஒக்கும் என்பது இதன் கருத்து. பிறவும் அன்ன. ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னையெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய் அரைநாழியுப்பிற் கலந்துழியுங் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதொரு பொருட்பெற்றி என்று கொள்வதல்லது காரணங் கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆணை என்பாரும் உளர். ‘விளங்காய் திரட்டினா ரில்லைக் களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்’ (நாலடி. 103) என்பதே காட்டினார் உரையாசிரியரும். (10) தனிமெய்யினது அளபு 11. மெய்யின் அளபே அரையென மொழிப. இது தனிமெய்க்கு அளபு கூறுகின்றது. (இ-ள்.) மெய்யின் அளபே அரையென மொழிப - மெய்யினது மாத்திரையினை ஒரோவொன்று அரைமாத்திரை யுடையது என்று கூறுவர் புலவர் எ-று. அவ்வரை மாத்திரையுந் தனித்துக் கூறிக்காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயருந் தன்மையாய் நிற்றலின். இனி அதனைச் சில மொழிமேற் பெய்து, காக்கை கொங்கு கவ்வை யெனக் காட்டுப. மெய்யென்பது அஃறிணை யியற்பெயராதலின் மெய்யென்னும் ஒற்றுமை பற்றி ‘அரை’ யென்றார். (11) சார்ந்து வரும் மூன்றனது அளபு 12. அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே. இது சார்பிற் றோற்றத்து மூன்றற்கும் அளபு கூறுகின்றது. (இ-ள்.) ஏனை மூன்று - சார்பிற் றோற்றத்து மூன்றும், அவ்வியல் நிலையும் - ஒவ்வொன்றும் முற்கூறிய அரை மாத்திரையாகிய இயல்பின் கண்ணே நிற்கும் எ-று. எ-டு: கேண்மியா, நாகு, எஃகு என வரும். (12) மகரம் குறுகிவரும் இடன் 13. அரையளவு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகுந் தெரியுங் காலை. இது மெய்களுள் ஒன்றற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) இசை இடன் மகரம் அரையளபு குறுகலுடைத்து - வேறோர் எழுத்தினது ஓசையின்கண் மகரவொற்றுத் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை பெறுதலையுடைத்து, தெரியுங்காலை அருகும் - ஆராயுங் காலத்துத் தான் சிறுபான்மையாய் வரும் எ-று. எ-டு: போன்ம், வரும் வண்ணக்கன் என ஒருமொழிக்கண்ணும் இருமொழிக்கண்ணுங் கொள்க. (13) மகரத்தின் வரிவடிவு 14. உட்பெறு புள்ளி உருவா கும்மே. இது பகரத்தொடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது. மகரம் அதிகாரப்பட்டு நிற்றலின் ஈண்டுக் கூறினார். (இ-ள்.) உட்பெறுபுள்ளி - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி, உருவாகும் - மகரத்திற்கு வடிவாம் எ-று. புறத்துப் பெறும் புள்ளியாவது மேற்சூத்திரத்தான் மெய்கட்குக் கூறும் புள்ளி. ஈண்டு ‘உரு’ என்றது காட்சிப்பொருளை உணர்த்தி நின்றது. எ-டு: கப்பி, கப்பி (கம்மி) எனவரும். இஃது ‘எதிரது போற்றல்.’ (14) தனிமெய் புள்ளிபெற்று நிற்றல் 15. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். இது தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் ஒப்புமைமேல் வேற்றுமை செய்தல் கூறுகின்றது; என்னை? உயிர்மெய்யான ககர ஙகரங்கட்குந் தனி மெய்யான ககர ஙகரங்கட்கும் வடிவு ஒன்றாக எழுதி யவற்றை ஒற்றாக்கு தற்குப் பின்பு புள்ளி பெறுக என்றலின். (இ-ள்.) மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் - பதினெட்டு மெய்களின் தன்மையானது புள்ளிபெற்று நிற்றலாம் எ-று. எனவே, உயிர்மெய்கட்குப் புள்ளியின்றாயிற்று. எ-டு: க் ங் ...... ற் ன் என வரும். இவற்றைப் புள்ளியிட்டுக் காட்டவே, புள்ளி பெறுவதற்கு முன்னர் அகரம் உடனின்றதொரு மெய்வடிவே பெற்று நின்றனவற்றைப் பின்னர் அப்புள்ளியிட்டுத் தனிமெய்யாக்கினர் என்பதூஉம் பெறுதும். இதனானே ககரம் ஙகரம் முதலியன புள்ளிபெறுவதற்கு முன்னர் இயல்பாக அகரம் பெற்றே நிற்கும் என்பதூஉம், புள்ளி பெறுங் காலத்து அவ்வகரம் நீங்கும் என்பதூஉம், பின்னர் அப்புள்ளி நீங்கி உயிரேறு மிடத்துத் தன்கண் அகரம் நீங்கியேபோக, வருகின்றதோர் உயிர் யாதானும் ஒன்று ஏறி நிற்கும் என்ப தூஉம் பெற்றாம். ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ (எழுத். 46) என்னுஞ் சூத்திரத்தானும் இதுவே இதற்குக் கருத்தாதல் உணர்க. (15) எகர ஒகரமும் புள்ளி பெறுதல் 16. எகர ஒகரத் தியற்கையும் அற்றே. இதுவும் அது. (இ-ள்.) எகர ஒகரத்து இயற்கையும் அற்றே - எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளிபெறும் இயல்பிற்று எ-று. எனவே, ஏகார ஓகாரங்கட்குப் புள்ளி யின்றாயிற்று. எ-டு: எ ஒ என வரும். இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும். மகரம் ஆராய்ச்சிப்பட்டது கண்டு, மகரத்திற்கு வடிவுவேற்றுமை செய்து, அதிகாரத்தான் மெய்யின் தன்மை கூறி, அதன் பின் மாட்டேற்ற லின் எகர ஒகரத்தையுங் கூறினார். (16) உயிர்மெய்யினது தோற்றம் 17. புள்ளி யில்லா எல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும் ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்த லாறே. இது மெய்யும் உயிருங் கூடிப் புணருமாறும் ஆண்டு அவை திரியாதுந் திரிந்தும் நிற்குமாறுங் கூறுகின்றது. (இ-ள்.) புள்ளி இல்லா எல்லா மெய்யும் - உயிரைப் பெறுதற்குப் புள்ளியைப் போக்கின எல்லா மெய்களும், உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும் - புள்ளி பெறுகின்ற காலத்து இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே தமக்கு வடிவாகி நின்று பின்னர் ஏறிய அகரத்தொடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் - ஒழிந்த பதினோருயிரொடுங் கூடி அவ்வடிவு திரிந்து ஒலித்தலும், ஆயீரியல உயிர்த்தலாறே - என அவ்விரண்டு இயல்பினையுடைய, அவை ஒலிக்கும் முறைமை எ-று. ‘புள்ளியில்லா மெய்’ யெனவே, முன் பெற்றுநின்ற புள்ளியை உயிரேற்றுதற்குப் போக்கினமை பெறுதும். ‘உருவுருவாகி’ யெனவே புள்ளி பெறுதற்காக இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே பின்னர் அகரம் பெறுதற்கு வடிவாமென்பது கூறினார். எ-டு: க ங ய என வரும். ‘உருவு திரிந்து உயிர்த்தலாவது’ மேலுங் கீழும் விலங்கு பெற்றும், கோடு பெற்றும், புள்ளி பெற்றும், புள்ளியுங் கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கி கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு கூ முதலியன கீழ்விலங்கு பெற்றன. கெ கே முதலியன கோடு பெற்றன. கா ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். கொ கொ ஙொ ஙொ முதலியன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன. இங்ஙனந் திரிந்து ஒலிப்பவே உயிர்மெய் பன்னிருபதினெட்டு இருநூற்றொருபத்தாறாயிற்று. ஆகவே உயிர்மெய்க்கு வடிவும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. இதனானே மெய் தனக்கு இயல்பாகிய அகரத்தை நீங்கி நிற்பதொரு தன்மையும் பிறிதோருயிரை ஏற்குந் தன்மையும் உடைய தென்பதூஉம், உயிர் மெய்க்கட் புலப்படாது இயல்பாகிய அகரமாய் நிற்குந் தன்மையும் மெய் புள்ளிபெற் றழிந்தவழி அவற்றிற்குத் தக்க உயிராய்ப் புலப்பட்டு வருந் தன்மையும் உடைய தென்பதூஉம் பெற்றாம். உயிர்மெய் என்பது உம்மைத் தொகை. (17) மெய்யோசையின் பின்னரே உயிரோசை தோன்றுதல் 18. மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. இது மெய்யும் உயிருங் கூடியவழி அவற்றின் ஓசை நிற்கும் முறைமை கூறுகின்றது. (இ-ள்.) மெய்யின் வழியது - மெய்யினது ஓசை தோன்றிய பின்னதாம், உயிர் தோன்று நிலையே - உயிரினது ஓசை தோன்று நிலை எ-று. முன்னின்ற சூத்திரத்தான் மெய் முன்னர் நிற்ப உயிர் பின் வந்து ஏறுமென்றார். அம்முறையே ஓசையும் பிறக்கு மென்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் ‘உப்பும் நீரும் போல’ ஒன்றேயாய் நிற்றலும், வேறுபடுத்துக் காணுங்கால் ‘விரலும் விரலுஞ் சேர நின்றாற் போல’ வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமேயாயவாறு போல, உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க. எ-டு: க ங ய எனக் கூட்டமும் பிரிவும் மூவகையோசையுங் காண்க. (18) வல்லெழுத்துக்கள் 19. வல்லெழுத் தென்ப கசட தபற. இது தனிமெய்களுட் சிலவற்றிற்கு வேறொரு குறியீடு கூறுகின்றது. (இ-ள்.) க ச ட த ப ற - க ச ட த ப ற என்னுந் தனி மெய்களை, வல்லெழுத்தென்ப - வல்லெழுத்தென்னுங் குறியினை யுடைய என்று கூறுவர் ஆசிரியர் எ-று. இஃது ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. ஒழிந்த மெல்லெழுத் தையும் இடையெழுத்தையும் நோக்கத் தாம் வல்லென்றிசைத்தலானும், வல்லென்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயின. (19) மெல்லெழுத்துக்கள் 20. மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. இதுவும் அது. (இ-ள்.) ங ஞ ண ந ம ன - ங ஞ ண ந ம ன என்னுந் தனி மெய்களை, மெல்லெழுத்தென்ப - மெல்லெழுத்தென்னுங் குறியினை யுடைய என்று கூறுவர் ஆசிரியர் எ-று. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. மெல்லென்றிசைத்த லானும், மெல்லென்ற மூக்கின் வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தாயின. (20) இடையெழுத்துக்கள் 21. இடையெழுத் தென்ப யரல வழள. இதுவும் அது. (இ-ள்.) ய ர ல வ ழ ள - ய ர ல வ ழ ள என்னுந் தனி மெய்களை, இடையெழுத்தென்ப - இடையெழுத்தென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் எ-று. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. இடை நிகரவாய் ஒலித்தலானும், இடைநிகர்த்தாய மிடற்றுவளியாற் பிறத்தலானும் இடை யெழுத்தாயின. வல்லினத்துக் க ச த ப என்னும் நான்கும், மெல்லினத்து ஞ ந ம என்னும் மூன்றும், இடையினத்து ய வ என்னும் இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைத்தார். இப்பெயரானே எழுத் தென்னும் ஓசைகள் உருவாயின. உயிர்க்குங் குறுமை நெடுமை கூறலின் அவையும் உருவாயின. இது சார்பிற் றோற்றத்திற்கும் ஒக்கும். (21) மெய்ம்மயக்கு, உயிர்மெய்ம்மயக்கு - இவற்றின் வகைகள் 22. அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் *மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை. இது தனிமெய் பிறமெய்யொடுந் தன் மெய்யொடும் மயங்கும் மயக்கமும், உயிர்மெய் உயிர்மெய்யொடுந் தனிமெய்யொடும் மயங்கும் மயக்கமுங் கூறுகின்றது. (இ-ள்.) அம்மூவாறும் - அங்ஙனம் மூன்று கூறாகப் பகுத்த பதி னெட்டு மெய்யும், வழங்கியன் மருங்கின் - வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் எழுத்துக்களைக் கூட்டி மொழிப்படுத்து வழங்குதல் உளதாமிடத்து, மெய் மயங்கும் நிலை - தனி மெய் தன் முன்னர் நின்ற பிற மெய்யொடுந் தன்மெய்யொடும் மயங்கும் நிலையும், உடன் மயங்கும் நிலை - அப் பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் நின்ற உயிர்மெய்யொடுந் தனி மெய்யொடும் மயங்கும் நிலையுமென இரண்டாம்; தெரியுங்காலை - அவை மயங்கும் மொழியாந்தன்மை ஆராயுங் காலத்து எ-று. எனவே, தனித்து நின்ற எழுத்துடன் முன்னின்ற எழுத்துக்கள் தாங் கூடுமாறு கூறினாராயிற்று. எ-டு: கட்க என்றால் இடை நின்ற டகர மெய் முன்னர் நின்ற தன்னின் வேறாய ககரவொற்றொடு மயங்கிற்று. காக்கை என்றால், இடைநின்ற ககரவொற்று முன்னர் நின்ற தன்னொற்றொடு மயங்கிற்று. கரு என ஈரெழுத்தொரு மொழியுங் கருது என மூவெழுத்தொரு மொழியும் உயிர்மெய் நின்று தம் முன்னர் நின்ற உயிர்மெய்யொடு மயங்கின. துணங்கை என உயிர்மெய் நின்று தன்முன்னர் நின்ற தனிமெய்யொடு மயங்கிற்று. கல் வில் என உயிர்மெய் நின்று தனிமெய்யொடு மயங்கிற்று. ‘தெரியுங்காலை’ என்றதனான், உயிர் முன்னர் உயிர்மெய்ம் மயக்கமும் உயிர் முன்னர்த் தனிமெய்ம் மயக்கமும் கொள்க. அவை அளை, ஆம்பல் என்றாற் போல்வன. இம் மயக்கங்களுள் தனிமெய் முன்னர்ப் பிறமெய் நின்று மயங்குதல் பலவாதலிற் பல சூத்திரத்தாற் கூறித் தன் முன்னர்த் தான் வந்து மயங்குதலை ஒரு சூத்திரத்தாற் கூறுப. அவை மயங்குங்கால் வல்லினத்தில் டகரமும் றகரமும், மெல்லினமாறும், இடையினமாறும் பிற மெய்யொடும் மயங்குமென்றும், வல்லினத்திற் கசதபக்கள் தம் மெய்யோடன்றிப் பிறமெய்யொடு மயங்கா வென்றும் உய்த்துணரக் கூறுமாறு உணர்க. மூவாறும் என்னும் உம்மை முற்றும்மை. இச்சூத்திரம் முதலாக ‘மெய்ந்நிலை சுட்டின்’ (எழுத். 30) ஈறாக மேற்கூறும் மொழிமரபிற்குப் பொருந்திய கருவி கூறுகின்ற தென்றுணர்க; எழுத்துக்கள் தம்மிற் கூடுமாறு கூறுதலின். (22) *(பாடம்) ‘மெய்ம்மயக் குடனிலை’ என்பது. வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆவன 23. டறலள என்னும் புள்ளி முன்னர்க் கசப என்னு மூவெழுத் துரிய. இது தனிமெய் பிறமெய்யொடு மயங்கும் மயக்கம் உணர்த்துகின்றது. (இ-ள்.) ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் - மொழியிடை நின்ற ட ற ல ள என்று கூறப்படும் நான்கு புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூவெழுத்து உரிய - க ச ப என்று கூறப்படும் மூன்றெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய எ-று. எ-டு: கட்க கட்சி கட்ப எனவும், கற்க முயற்சி கற்ப எனவும், செல்க வல்சி செல்ப எனவும் கொள்க நீள்சினை கொள்ப எனவும் தனிமெய் பிறமெய்யொடு மயங்கியவாறு காண்க. கட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலின் ஈண்டைக்காகா. (23) 24. அவற்றுள் லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய நான்கனுள், லளஃகான் முன்னர் - லகார ளகாரமாகிய புள்ளிகளின் முன்னர், யவவுந் தோன்றும் - கசபக்களே யன்றி யகர வகரங்களும் வந்து மயங்கும் எ-று. எ-டு: கொல்யானை, செல்வம், வெள்யாறு, கள்வன் என வரும். இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும், வெள்யாறு எனப் பண்புத்தொகையும் நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் ‘மருவின் பாத்திய’ (எழுத். 482) என்று கூறுவாராதலின் இவ்வாசிரியர் இவற்றை ஒருமொழியாகக் கொள்வரென்று உணர்க. இக்கருத்தானே மேலும் வினைத்தொகையும் பண்புத்தொகையும் ஒரு மொழியாகக் கொண்டு உதாரணங் காட்டுதும். அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண்ணு மன்றி ஒரு மொழிக்கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார்; அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதலே நன்றென்று கூறலும் ஒன்று. (24) 25. ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்த் தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே. இதுவும் அது. (இ-ள்.) ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் - ங ஞ ண ந ம ன என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், தத்தம் மிசைகள் - தமக்கினமாய் முன்னின்ற க ச ட த ப ற க்கள், ஒத்தன நிலையே - பின்னிற்றற்குப் பொருந்தின மயங்கி நிற்றற்கண் எ-று. எ-டு: கங்கன், கஞ்சன், கண்டன், கந்தன், கம்பன், மன்றன் என வரும். தெங்கு, பிஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று எனக் குற்றுகரமுங் காட்டுப. (25) 26. அவற்றுள் ணனஃகான் முன்னர்க் கசஞப மயவவ் வேழு முரிய. இதுவும் அது. (இ-ள்.) அவற்றுள் - மேற்கூறிய மெல்லொற்று ஆறனுள், ண னஃகான் முன்னர் - ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய - டறக்களே யன்றிக் க ச ஞ ப ம ய வ என்னும் ஏழெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய எ-று. எ-டு: எண்கு வெண்சாந்து வெண்ஞாண் பண்பு வெண்மை மண்யாறு எண்வட்டு எனவும், புன்கு புன்செய் மென்ஞாண் அன்பு வன்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும். எண்வட்டு - வினைத்தொகை. எண்கு, புன்கு - பெயர். (26) 27. ஞநமவ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே. இதுவும் அது. (இ-ள்.) ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் - ஞ ந ம வ என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே - யஃகான் நிற்றல் பொருண்மை பெற்றது எ-று. இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன. இனி, உரையாசிரியர் உரிஞ்யாது பொருந்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டினாரா லெனின், ஆசிரியர் ஒருமொழி யாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங்கூறி, அதன்கண் ‘மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும்’ (எழுத். 107) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் ‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி’ (எழுத். 163) என்றும், பிறாண்டும் ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர். ஆதலின் ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் ‘கூறியது கூறல்’ என்னுங் குற்றமாம். அதனான் அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க. (27) 28. அவற்றுள் மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) அவற்றுள் மஃகான் புள்ளிமுன் - முற் கூறியவற்றுள் மகர மாகிய புள்ளி முன்னர், வவ்வுந் தோன்றும் - பகர யகரமே யன்றி வகரமும் வந்து மயங்கும் எ-று. இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தது. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற் போல்வன காட்டின் ‘வகார மிசையும் மகாரங் குறுகும்’ (எழுத். 330) என்ற விதி வேண்டாவாம். (28) 29. யரழ என்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்தும் ஙகரமொடு தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) யரழ வென்னும் புள்ளி முன்னர் - யரழ என்று கூறப்படும் மூன்று புள்ளிகளின் முன்னர், முதலாகெழுத்தும் - மொழிக்கு முதலாமென மேற்கூறும் ஒன்பதெழுத்துக்களும், உம்மையான் மொழிக்கு முதலாகாத பிற எழுத்துக்களும், ஙகரமொடு தோன்றும் - ஙகாரமும் வந்து மயங்கும் எ-று. எ-டு: ஆய்க ஆர்க ஆழ்க, ஆய்தல் ஆர்தல் ஆழ்தல், ஆய்நர் ஆர்நர் ஆழ்நர், ஆய்பவை ஆர்பவை ஆழ்பவை, வாய்மை நேர்மை கீழ்மை, எய்சிலை வார்சிலை வாழ்சேரி, தெய்வம் சேர்வது வாழ்வது, பாய்ஞெகிழி நேர்ஞெகிழி வாழ்ஞெண்டு, செய்யாறு போர்யானை வீழ்யானை என மொழிக்கு முதலாம் ஒன்பதும் வந்து மயங்கின. செய்யாறு என யகரத் தின் முன்னர் யகரம் வந்தது தன்முன்னர்த் தான் வந்ததாம். இனி, உம்மையாற்கொண்ட மொழிக்கு முதலாகாதவற்றின் கண்ணுஞ் சில காட்டுதும்: ஓய்வு சோர்வு வாழ்வு, ஓய்வோர் சோர்வோர் வாழ்வோர், ஆய்ஞர் சேர்ஞர் ஆழ்ஞர் என வரும். பிற எழுத்துக்களொடு வருவன உளவேனும் வழக்குஞ் செய்யுளும் நோக்கிக் கூறிக்கொள்க. இனி, வேய்ங்ஙனம் வேர்ங்ஙனம் வீழ்ங்ஙனம் என்பன போல மொழிக்கு முதலாகாத ஙகரம் இடைவந்த சொற்கள் அக்காலத்து வழங்கின என்று உணர்க, ஆசிரியர் ஓதுதலின். இதனை ‘ஙகரமொடு தோன்றும்’ எனப் பிரித்தோதினார், அக்காலத்தும் அரிதாக வழங்கலின். இனி வேய்கடிது வேர்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என்பன காட்டின் அவை இருமொழியாக நிலைமொழி வருமொழி செய்து மேற்புணர்க்கின்றன ஈண்டைக்காகா என மறுக்க. (29) உடனிலை மெய்ம்மயக்கம் ஆவன 30. மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே. இது நிறுத்தமுறையானே தனிமெய் தன்னொற்றொடு மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) மெய்ந்நிலை சுட்டின் - பொருணிலைமையைக் கருதின், எல்லா எழுத்தும் - பதினெட்டு மெய்யும், தம்முன் தாம் வரூஉம் - தம் முன்னே தாம் வந்து மயங்கும், ரழ அலங்கடையே - ரகார ழகாரங்க ளல்லாத இடத்து எ-று. எ-டு: காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெந்நெய், அப்பு, அம்மை, வெய்யர், எல்லி, எவ்வி (ஒரு வள்ளல்), கள்ளி, கொற்றி, கன்னி என வரும். ‘மெய்ந்நிலை சுட்டின்’ என்றதனான் தனிமெய் முன்னர் உயிர்மெய் வருமென்று கொள்க. எல்லாம் என்றது ரகார ழகாரங்கள் ஒழிந்தனவற்றைத் தழுவிற்று. (30) சுட்டிடைச்சொற்கள் ஆவன 31. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு. இது குற்றெழுத் தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறொரு குறியீடு கூறுகின்றது. (இ-ள்.) அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு - அ இ உ என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியினையுடைய எ-று. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதொரு குறி, சுட்டி அறியப் படும் பொருளை உணர்த்தலின். ‘தன்னின முடித்தல்’ என்பதனான் எகரம் வினாப்பொருள் உணர்த்தலுங் கொள்க. எ-டு: அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன், எப்பொருள் என வரும். இவை பெயரைச் சார்ந்து தத்தங் குறிப்பிற் பொருள் செய்த இடைச்சொல். இச்சூத்திரம் ‘ஒருதலைமொழிதல்’ என்னும் உத்தி. இதுவும் மேலைச் சூத்திரமும் எழுத்தாந் தன்மையன்றி மொழிநிலைமைப்பட்டு வேறொரு குறிபெற்று நிற்றலின் மொழிமரபினைச் சேரவைத்தார். (31) வினா இடைச்சொற்கள் ஆவன 32. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினாஅ. இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறொரு குறியீடு கூறுகின்றது. (இ-ள்.) ஆ ஏ ஓ அம்மூன்றும் வினாஅ - ஆ ஏ ஓ என்று கூறப்பட்ட அம்மூன்றும் வினா என்னுங் குறியினை யுடைய எ-று. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி, வினாப்பொருள் உணர்த்தலின். எ-டு: உண்கா, உண்கே, உண்கோ என வரும். இவற்றுள் ஆகாரம் இக்காலத்து வினாவாய் வருதலரிது. நீயே நீயோ என்பன இக்காலத்து வரும். இவற்றுள் ஏ ஓ என்பன இடைச்சொல் லோத்தி னுள்ளுங் கூறினார், ஏகார ஓகாரங்கள் தரும் பொருட்டொகைபற்றி. இது ‘மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்’ என்னும் உத்திக்கு இனமாம், யகர ஆகாரமும் வினாவாய் வருதலின். (32) இசைநூல் இலக்கணத்தை இந்நூற்கும் கோடல் 33. அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். இது பிறன்கோட் கூறல் என்னும் உத்தி பற்றி இசைநூற்கு வருவ தோர் இலக்கணமாமாறுகூறி, அவ்விலக்கணம் இந்நூற்குங் கொள்கின்றது. (இ-ள்.) அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் நரம்பின் மறைய என்மனார் புலவர் - முற்கூறிய உயிரும் உயிர்மெய்யும் மாத்திரையை இறந் தொலித்தலும் ஒற்றெழுத்துக்கள் அரைமாத்திரையின் நீண்டொலித்தலும் யாழ்நூலிடத்தன என்று கூறுவர் புலவர்; இசையொடு சிவணிய உளவென மொழிப - அங்ஙனம் அளபிறந்தும் நீண்டும் இசைத்தல் ஓசையொடு பொருந்திய நால்வகைச் செய்யுள்களுக்கும் உளவென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையை இறந்தொலிக்குமாறு கண்டு, அவை இறந்தொலிக்கும் இடங்கூறினார், எழுத்துஞ் சொல்லும் பொருளுங் கிடக்கும் இடஞ் செய்யுளிடமாதலின். அது மிக்கு ஒலித்தலைச் செய்யுளிய லின்கண் ‘மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ’ (செய். 1) என இருபத்தாறு உறுப்பிற்குஞ் சிறப்புறுப்பாக முற்கூறிப் பின்னர், ‘மாத்திரை யளவு மெழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர்’ (செய். 2) என இச்சூத்திரத்தொடு மாட்டெறிந்து, பின்னும், ‘எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப’ (செய். 43) என்றுங் கூறினார். இது ‘எதிரது போற்றல்’ என்னும் உத்தியுங் கூறிற்று. எ-டு: ‘வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி’ (கலி. 11) என்புழி ழகர ஆகாரமும் ககர ஏகாரமும் மாத்திரை இறந்தொலித்தவாறு உணர்க. ‘பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவும் உரைத்தனரே’ (கலி . 11) என்புழி ஙகரவொற்று அளபிறந்தவாறு காண்க. ஒழிந்த மூவகைச் செய்யுள்கட்கும் இவ்வாறே தத்தமக்குரிய பா என்னும் உறுப்பினை நடாத்தி அளபு மிகுமாறு காண்க. ‘சிவணிய’ என்பது தொழிற்பெயர். ‘இசையொடு சிவணிய’ எனவே செய்யுளாதல் பெற்றாம். ‘நரம்பு’ என்றது ஆகுபெயராய் யாழினை உணர்த்திற்று. ‘மறை’ என்ற நூலை. ‘மொழிப’ என்றும், ‘என்மனார் புலவர்’ என்றும் இருகாற் கூறியவதனான், இங்ஙனம் பொருள் கூறலே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று; என்னை? செய்யுளியலுட் கூறிய ‘மாத்திரை யளவும்’ (செய். 2) என்னுஞ் சூத்திரத்தின் ‘மேற்கிளந்தன்ன’ என்னும் மாட்டேற்றிற்குர் ï›nth¤â னுள் வேறொரு சூத்திரம் இன்மையின். இவ்விலக்கணங் கூறாக்காற் செய்யுட்குப் பாவென்னும் உறுப்பு நிகழாது, அவை உரைச்செய்யுள் போல நிற்றலின் இவ்விலக்கணங் கூறவே வேண்டுமென்று உணர்க. ‘சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே’ (மரபு. 103) என்னும் மரபியற் சூத்திரத்தானே இவ்வாறே சூத்திரங்களை நலிந்து பொருளுரைப்பன வெல்லாங் கொள்க. (33) *(பாடம்) ‘இவ்வோத்தினுள் வேறோர் சூத்திரம் கூறவேண்டும் என உரைக்க’ என்பது. நூன்மரபு முற்றிற்று. 2 மொழிமரபு ஒருமொழிக் குற்றியலிகரம் 34. குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்கு ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே என்பது சூத்திரம். மேல் எழுத்து உணர்த்திய பின்னர், அவை தம்முள் தொடருமாறும் உணர்த்தி, அவ்வெழுத்தானாம் மொழியது மரபு உணர்த்துகின்றமையின், இவ்வோத்து ‘மொழிமரபு’ எனக் காரணப்பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம் முன்னர்ச் சார்ந்து வருமென்ற மூன்றனுள் ஒருமொழிக் குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடுங் கூறுகின்றது. (இ-ள்.) உரையசைக் கிளவிக்கு வரூஉம் - தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல்லிற்குப் பொருந்தவரும், ஆவயின் - அம் மியா என்னும் இடைச்சொல்லைச் சொல்லுமிடத்து, யாவென் சினைமிசை மகரம் ஊர்ந்து - யாவென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் நின்ற மகரவொற்றினை யேறி, குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் - குற்றியலிகரம் நிற்றலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: கேண்மியா, சென்மியா என வரும். கேள் என்றது உரையசைக் கிளவி. அதனைச் சார்ந்து தனக்கு இயல்பின்றி நின்றது மியா என்னும் இடைச்சொல். அவ்விடைச் சொல் முதலும், அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்புமாம் என்று கருதி ‘யாவென் சினை’ என்றார். மியா இடம்; மகரம் பற்றுக்கோடு. யாவும், இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு. இவ்விடைச்சொல் தனித்து நிற்றல் ஆற்றாமையிற் கேள் என்பதனொடு சார்ந்து ஒரு சொல்லாயே நின்றுழி இடைநின்ற இகரம் ஒருமொழியிடத்துக் குற்றியலிகரமாய் வருதலானும் ஆண்டு உணர்த்தற்குச் சிறப்பின்மையானும் ஈண்டுப் போத்தந்து கூறினார். ஊர்ந்து எனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம், உயிர்க்கல்லது ஏறுதலின்மையின். (1) புணர்மொழிக் குற்றியலிகரம் 35. புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென்கின்றது. (இ-ள்.) புணரியல் நிலையிடையும் குறுகல் உரித்தே - அக் குற்றியலிகரம் ஒரு மொழிக்கண்ணன்றிப் புணரியலுள் இருமொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைமைக்கண்ணுங் குறுகுதலுரித்து; உணரக்கூறின் முன்னர்த் தோன்றும் - அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத் தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும் எ-று. ‘குறுகலும்’ என்னுமிடத்து உம்மையை ‘நிலையிடையும்’ என மாறிக் கூட்டுக. ‘யகரம் வருவழி’ (எழுத். 410) என்னுஞ் சூத்திரத்து யகரம் இடம், உகரஞ் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எ-டு: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கி யாது, குரங்கியாது என வரும். இது ‘மொழிவாம்’ என்னும் உத்தி. (2) ஒருமொழிக் குற்றியலுகரம் 36. நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. இஃது ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துகின்றது. (இ-ள்.) குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே - குற்றியலுகரம் வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து, நெட்டெழுத்திம்பருந் தொடர் மொழி ஈற்றும் - நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியினும் நிற்றல் வேண்டும் ஆசிரியன் எ-று. நெட்டெழுத்தினது பின், தொடர்மொழியினது ஈறென்பன ‘நிலத்த தகலம் போல’ ஒன்றியற்கிழமைப்பட்டு நின்றன, அம் மொழியிற் றீர்ந்து குற்றியலுகரம் நில்லாமையின். வல்லாறு: பண்புத்தொகை. முற்றும்மை தொக்கு நின்றது. ‘அதிகார முறைமை’ என்னும் உத்தியான் ‘நிற்றல் வேண்டு’மென்பது வருவிக்க. எ-டு: நாகு, வரகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும். இவ் வாறு வகையும் இடம்; வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எனவே, மொழிக்கு ஈறாதலும் பெற்றாம். பெருமுரசு திருமுரசு என்பன இரு மொழிக்கண் வந்த குற்றுகரம். பரசு, இங்கு, ஏது என்னும் முற்றுகரங்கள், வடமொழிச் சிதைவு. தருக்கு, அணுகு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம். குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரை மாத்திரையாய் நிற்றலும், முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையுந் தம்முள் வேற்றுமை. (3) புணர்மொழிக் குற்றியலுகரம் 37. இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. இது குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகி வரும் என்கின்றது. (இ-ள்.) இடைப்படிற் குறுகும் இடனுமார் உண்டே - அவ்வுகரம் ஒருமொழியுளன்றிப் புணர்மொழி யிடைப்படின் தன் அரைமாத்திரையி னுங் குறுகும் இடனும் உண்டு; கடப்பாடு அறிந்த புணரியலான - அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப் பெறுவவெனின், அதன் புணர்ச்சி முறைமை அறியுங் குற்றியலுகரப் புணரியலுள் எ-று. ‘வல்லொற்றுத் தொடர்மொழி’ (எழுத். 409) என்பதனுள் வல் லெழுத்துத் தொடர்மொழியும் வல்லெழுத்து வரும் வழியும் இடம்; ஈற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எ-டு: செக்குக்கணை, சுக்குக்கொடு என வரும். இவை அரைமாத்திரையிற் குறுகியவாறு ஏனையவற்றொடு படுத்து உணர்க. ‘இடனும்’ எனவே இது சிறுபான்மையாயிற்று. (4) ஒருமொழி ஆய்தம் 38. குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. இது நிறுத்தமுறையானே ஆய்தம் ஒருமொழியுள் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஆய்தப் புள்ளி - ஆய்தமாகிய ஒற்று, குறியதன் முன்னர் உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்து - குற்றெழுத்தின் முன்னதாய் உயிரொடு கூடிய வல்லெழுத்துத்தாறன் மேலிடத்ததாய் வரும் எ-று. ‘வல்லாறன் மிசைத்து’ என்றதனானும், ஈண்டுப் ‘புள்ளி’ என்றத னானும், ‘ஆய்தத் தொடர்மொழி’ (எழுத். 409) என மேற்கூறுதலானும், உயிரென்றது ஈண்டுப் பெரும்பான்மையும் குற்றுகரமேயாம்; சிறுபான்மை ஏனை உயிர்களையுங் கொள்க. எ-டு: எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, அஃது, இஃது, உஃது என வரும். கஃறீது முஃடீது என்பனவற்றை ‘மெய்பிறிதாகிய புணர்ச்சி’ என்றதனானும், ஈண்டுப் ‘புள்ளி’ என்றதனானும் ஆய்தமும் மெய்யாயிற்று. அஃகாமை வெஃகாமை அஃகி வெஃகி அஃகம் எனப் பிறவுயிர்களொடும் வந்தது. கஃசியாது எனத் திரிந்ததுவுங் குற்றியலுகரத்தொடு புணர்ந்ததாம்.(5) புணர்மொழி ஆய்தம் 39. ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும். இஃது அவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஈறியல் மருங்கினும் - நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தும், இசைமை தோன்றும் - அதன் அரை மாத்திரையே இசைக்குந் தன்மை தோன்றும் எ-று. எ-டு: கஃறீது, முஃடீது எனவரும். இவ்வீறு இயலுமாறு புள்ளி மயங்கியலுட் (369, 399) பெறுதும். ஈண்டும் இடம், குற்றெழுத்துமேல் வரும் வல்லெழுத்து. (6) ஆய்தம் சுருங்காதவிடத்து அமையும் சொற்கள் 40. உருவினும் இசையினும் அருகித் தோன்றும் மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா ஆய்தம் அஃகாக் காலை யான. இஃது எதிரதுபோற்றல் என்னும் உத்தியாற் செய்யுளியலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்.) உருவினும் இசையினும் அருகித் தோன்றுங் குறிப்பு மொழியும் - நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தந் தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும், எல்லாமொழியும் - அவையொழிந்த எல்லா மொழிகளும், எழுத்தினியலா - ஒற்றெழுத்துக்கள் போல அரைமாத்திரையின்கண்ணும் சிறுபான்மை மிக்கும் நடந்து, ஆய்தம் அஃகாக் காலையான - ஆய்தஞ் சுருங்காத இடத்தான சொற்களாம் எ-று. எனவே, ஈண்டு ஆராய்ச்சியின்றேனுஞ் செய்யுளியலிற்கூறும், ‘ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப’ (செய். 18) என்னுஞ் சூத்திரத்துக் ‘கண்ண் டண்ணெனக் கண்டுங் கேட்டும்’ (மலைபடு. 352) என்புழிக் கண்ண்ணென்பது சீர்நிலை எய்தினாற் போலக் ‘கஃஃ றென்னுங் கல்லத ரத்தம்’ என நிறத்தின்கண்ணும், ‘சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை’ என இசையின்கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்திரை பெற்றுச் சீர்நிலை யெய்துங்கால், ஆண்டுப் பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு ஈண்டு எதிரது போற்றி விதி கூறினார், ஆய்தம் அதிகாரப்பட்டமை கண்டு. ‘எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர், வெஃஃகு வார்க்கில்லை வீடு’ என்று ஏனையிடத்தும் வந்தன. ஒற்றளபெடுக்குமாறு இவ்வதிகாரத்துக் கூறிற்றிலர், அஃது உயிரள பெடைபோலச் சீர்நிலை யெய்துதலும் அசைநிலையாந் தன்மையு முடையதாய்ச் செய்யுட்கே வருதலின். இதனானே ஒற்றளபெடையும் ஒரு மாத்திரை பெறுமென்பது பெற்றாம். ‘எழுத்தின்’ என்ற இன் உவமப்பொருள். ‘இயலா’ என்றது செய்யா வென்னும் வினையெச்சம். இவ்வாறன்றி இக்குறிப்புச்சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப் படா வென்று பொருள் கூறிற் செய்யுளியலொடு மாறுபட்டு ‘மாறு கொளக் கூறல்’ என்னுங் குற்றந் தங்குமென்று உணர்க. (7) உயிரளபெடை ஆமாறு 41. குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. இஃது எதிரது போற்றல் என்னும் உத்தி பற்றிச் செய்யுளியலை நோக்கி ‘நீட்டம் வேண்டின்’ (எழுத். 6) என முற்கூறிய அளபெடையாமாறு கூறுகின்றது. (இ-ள்.) குன்றிசை மொழிவயின் நின்று இசைநிறைக்கும் - அள பெடுத்துக் கூறாக்காற் குன்றுவதான ஓசையையுடைய அவ்வள பெடைச் சொற்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும்; அவை யாவையோ வெனின், நெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்தே - நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் எ-று. எ-டு: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ என வரும். ‘குன்றிசை மொழி’ என்றதற்கு இசைகுன்று மொழி என்றுமாம். இனமொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும் ஒத்தல். ஈண்டு ‘மொழி’ யென்றது ‘அளபெடை யசைநிலை’ (செய். 17) என்னுஞ் செய்யுளியல் சூத்திரத்து எட்டு இயற்சீரின்பாற் படுகின்ற எண்வகை அளபெடைச் சொற்களையும். அவை ஆஅ, கடாஅ, ஆஅழி, படாஅகை, ஆஅங்கு, ஆஅவது, புகாஅர்த்து, விராஅயது என்பனவாம். கட்டளை கொள்ளா ஆசிரியர் இவற்றைத் தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை யென்றும் அடக்குப. இனி ‘மொழி’ யென்றதற்குத் தனிநிலை ஏழனையுமே கொள்ளின், ஒழிந்த இயற்சீர்ப்பாற்படும் அளபெடை கோடற்கு இடமின்மை உணர்க. (8) ஐகார ஔகாரங்கட்கு அளபெடைக் குற்றெழுத்து ஆவன 42. ஐஔ என்னும் ஆயீ ரெழுத்திற் கிகர உகரம் இசைநிறை வாகும். இஃது ஒத்த குற்றெழுத்து இல்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது. இதுவும் எதிரது போற்றல். (இ-ள்.) ஐ ஔ என்னும் ஆயீரெழுத்திற்கு - தமக்கு இனமில்லாத ஐகார ஔகாரமென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கு, இகர உகரம் இசைநிறைவாகும் - ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைச் சார்த்திக்கூற, அவை அக்குன்றிசை மொழிக்கண் நின்று ஓசையை நிறைப்பனவாம் எ-று. ஐஇ, ஔஉ என நிரனிறையாகக் கொள்க. இவற்றை முற்கூறிய இயற்சீரெட்டிற்கும் ஏற்பனவற்றோடு உதாரணங் காட்டிக்கொள்க. இத்துணையும் நூன்மரபின் ஒழிபு. (9) உயிர்நெடில் ஓரெழுத்தொருமொழி ஆதல் 43. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி. இஃது ஓரெழுத்தொருமொழி உணர்த்துதல் நுதலியவற்றுள் நெட்டெழுத்தானாம் மொழியாக்கங் கூறுகின்றது. (இ-ள்.) நெட்டெழுத்து ஏழே - நெட்டெழுத்தாகிய உயிர்களேழும், ஓரெழுத்தொருமொழி - ஓரெழுத்தானாகும் ஒரு மொழியாம் எ-று. முற்றும்மை தொகுத்து ஈற்றசை ஏகாரம் விரித்தார். எ-டு: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ என வரும். ஔகாரம் உயிர்மெய்க்கண்ணல்லது வாராது. ஊ என்பது தசை. இஃது உயிர்க்கும் உயிர் மெய்க்கும் விதி. கா தீ பூ சே தை கோ கௌ என வரும். இவை தம்மை யுணரநின்றவழி எழுத்தாம்; இடைநின்று பொரு ளுணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத்தேறிய மெய் நெட்டெழுத் தாயுங் குற்றெழுத்தேறிய மெய் குற்றெழுத்தாயும் நிற்றலேயன்றி மெய்க்கு நெடுமையும் குறுமையும் இன்மை உணர்க. (10) உயிர்க்குறில் சில ஓரெழுத்தொருமொழி ஆதல் 44. குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே. இது குற்றெழுத்து ஐந்தும் மொழியாகா; அவற்றுட் சில மொழி யாகுமென்பது உணர்த்துகின்றது. (இ-ள்.) குற்றெழுத்து ஐந்தும் - குற்றெழுத்தாகிய உயிரைந்தும், மொழிநிறைபு இலவே - தாமே நிறைந்து நின்று மொழியாதல் இல; சில மெய்யொடுகூடி நிறைந்து நின்று மொழியாம் எ-று. எ-டு: து, நொ என வரும். இவை உயிர்மெய்க்கண்ணல்லது வாராமையானும், உயிர்க்கண் ணும், ஏனை அகர இகர உகரமும் எகரமும் அக்கொற்றன் இக் கொற்றன் உக்கொற்றன் எப்பொருள் எனத் தனித்து நின்று உணர்த்த லாற்றாது இடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்து நின்று சுட்டுப் பொருளும் வினாப்பொருளும் உணர்த்துதலானும், ‘நிறைபில’ வென்றார். முற்றும்மை ஈண்டு எச்சப்பட்டு நின்றதென்று உணர்க. (11) எழுத்தானாம் மொழியின் பெயரும் முறையும் தொகையும் 45. ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. இது முன்னர் மெய்ம்மயக்கம் உடனிலைமயக்கங் கூறலானும், ஈண்டு ‘நெட்டெழுத் தேழே’ (எழுத். 43) என்பதனானும், எழுத்தினான் மொழியாமாறு கூறினார். அம்மொழிக்கு இச்சூத்திரத்தாற் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றார். (இ-ள்.) ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண் டிறந்து இசைக்குந் தொடர்மொழி உளப்பட - ஓரெழுத்தானாகும் ஒரு மொழியும் இரண்டெழுத்தானாகும் ஒருமொழியும் இரண்டினை இறந்து பலவாற்றான் இசைக்குந் தொடர்மொழியுடனே கூட, மொழி நிலை மூன்றே - மொழிகளின் நிலைமை மூன்றேயாம், தோன்றிய நெறியே - அவை தோன்றிய வழக்குநெறிக்கண் எ-று. எ-டு: ஆ கா நா: ஓரெழுத்தொருமொழி. மணி வரகு கொற்றன்: ஈரெழுத்தொருமொழி. குரவு அரவு: மூவெழுத்தொருமொழி. கணவிரி: நாலெழுத்தொருமொழி. அகத்தியனார்: ஐயெழுத்தொருமொழி. திருச்சிற்றம்பலம்: ஆறெழுத்தொருமொழி. பெரும்பற்றப்புலியூர்: ஏழெழுத்தொருமொழி. ஓரெழுத்தொருமொழியுந் தொடர்மொழியும் என்னாது ஈரெழுத் தொருமொழியும் ஓதினார், சில பல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி. ஆசிரியர் ஒற்றுங் குற்றுகரமும் எழுத்தென்று கொண்டனராதலின், மா கா என நின்ற சொற்கள் மால் கால் என ஒற்றடுத்துழி ஒற்றினான் வேறுபொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழி யென்றும், நாகு வரகு என்னுங் குற்றுகர ஈற்றுச் சொற்களிற் குற்றுகரங்கள் சொல் லொடு கூடிப் பொருள் தந்து நிற்றலின் இவற்றை, ஈரெழுத்தொருமொழி மூவெழுத்தொருமொழி யென்றுங் கோடும் என்பார்க்கு, ஆசிரியர் பொருளைக் கருதாது மாத்திரை குறைந்தமை பற்றி ‘உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ’ (செய். 44) ‘குறிலே நெடிலே குறிலிணை’ (செய். 3) என்னுஞ் செய்யுளியற் சூத்திரங்களான் இவற்றை எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா என்று விலக்குவராதலின், அவற்றான் ஈண்டு ஈரெழுத் தொருமொழியும் மூவெழுத்தொருமொழியும் கொள்ளின் ‘மாறுகொளக் கூறல்’ என்னுங் குற்றந் தங்குமென்று மறுக்க. இனி ‘நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி’ (எழுத். 43) ‘குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே’ (எழுத். 44) என்பனவற்றான் மெய்க்குக் குறுமை நெடுமை யின்மையான் உயிரும் உயிர்மெய்யுமாகிய நெடிலுங் குறிலுமே மொழியா மென்று கூறி, மீட்டும் அதனையே இச்சூத்திரத்தான் ஓரெழுத்தொரு மொழி யென்றெடுத்து, அதனோடே ஈரெழுத்தையும் இரண்டிறந்தனையுங் கூட்டி மொழியாகக் கோடலின், ஒற்றினைக் கூட்டி எழுத்தாகக் கோடல் ஆசிரியர்க்குக் கருத்தன்மை யுணர்க. அன்றியும் ‘மொழிப்படுத் திசைப் பினும்’ (எழுத். 63) என்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்ற வாற்றானும் உணர்க. ‘அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃ தென்ப’ (எழுத். 1) என ஒற்றினை யும் எழுத்தென்றது எழுத்தின் தன்மை கூறிற்று. ஈண்டு மொழியாந் தன்மை கூறிற்று. (12) தனிமெய்களை அகரம் இயக்குதல் 46. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) மெய்யினியக்கம் - தனிமெய்களினது நடப்பு, அகரமொடு சிவணும் - அகரத்தொடு பொருந்தி நடக்கும் எ-று. எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப் பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும், கையாற் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தொடு பொருந்தி நடக்கும் எ-று. எ-டு: ‘வல்லெழுத் தென்ப கசட தபற’ (எழுத். 19) ‘ககார ஙகார முதனா வண்ணம்’ (எழுத். 89) என்றாற் போல்வன நாவான் இயக்கியவாறு காண்க. எழுதிக் காட்டுமிடத்துக் ககரம் முதலியன உயிர் பெற்று நின்ற வடிவாக எழுதிப் பின்னர்த் தனி மெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக் காட்டுகின்றவாற்றான் வடிவை இயக்குமிடத்தும் அகரங் கலந்து நின்றவாறு காண்க. இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்கு மென்பது ஆசிரியர் கூறா ராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க. இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணுந் தனிமெய்க்கண்ணுங் கலந்து அவற்றின் தன்மை யாயே நிற்கு மென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. ‘அகரமுதல’ என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே’ எனக் கூறியவாற்றானும், பிறநூல்களானும் உணர்க. இதனான் உண்மைத்தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. இதனை நூன்மரபிற் கூறாது ஈண்டுக் கூறினார், ‘வல்லெழுத் தென்ப கசட தபற’ (எழுத். 19) என்ற இடத்துத் தான் இடைநின்று ஒற்றென்பதொரு பொருளை உணர்த்தி மொழியாந்தன்மை எய்தி நிற்றலின். (13) மெய்யின் தன்மையில் உயிரது தன்மை மயங்குமாறு 47. தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை. இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்ற காலத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகின்றது. (இ-ள்.) எல்லா எழுத்தும் - பன்னீருயிரும், மெய்ந்நிலை தம் இயல் மயக்கங் கிளப்பின் - மெய்யின் தன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின், மானமில்லை - குற்றமில்லை எ-று. மெய்யின் தன்மையாவது வன்மை மென்மை இடைமை; தம்மியலாவது உயிர்த்தன்மை; என்றது, வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து என உயிர்மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று. அவை ‘வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே’ (எழுத். 296) எனவும், ‘மெல்லெழுத் தியையின் இறுதியோ டுறழும்’ (எழுத். 342) எனவும், ‘மென்மையும் இடைமையும்’ (எழுத். 130) எனவும், பிறாண்டும் ஆள்ப. எழுத்தை வன்மை மென்மை இடைமை யென விசேடித்த சிறப்பான் இப்பெயர் கூறினார். இஃதன்றிப் பதினெட்டு மெய்யுந் தம்மைக் கூறுமிடத்து மெய்ம் மயக்கங் கூறிய வகையானன்றி வேண்டியவாறு மயங்குமென்று கூறி ‘அவற்றுள் லளஃகான் முன்னர்’ (எழுத். 24) என்பதனைக் காட்டின், அஃது இருமொழிக்கண்ணதென மறுக்க. (14) ஈரொற்றுடனிலை ஆமாறு 48. யரழ என்னும் மூன்றும் ஒற்றக் கசதப ஙஞநம ஈரொற் றாகும். இஃது ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது. (இ-ள்.) ய ர ழ என்னும் மூன்றும் ஒற்ற - யரழவென்று கூறப்படும் மூன்று புள்ளியும் ஒற்றாய் நிற்ப, க ச த ப ங ஞ ந ம ஈரொற்றாகும் - க ச த ப க் களும் ங ஞ ந ம க்களும் வந்து ஈரொற்றாய் நிற்கும் எ-று. எ-டு: வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு எனவும், பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு எனவும், காய்ங்கனி தேய்ஞ்சது காய்ந்தனம் காய்ம்புறம் எனவும், நேர்ங்கல் நேர்ஞ்சிலை நேர்ந்திலை நேர்ம்புறம் எனவும் வரும். ழகாரத்திற்கு வாழ்ந்தனம் என இக்காலத்து நகரவொற்று வரும். ஏனைய மூன்றும் இக்காலத்து வழங்குமெனின் உணர்க. இனித் தாழ்ங்குலை தாழ்ஞ்சினை தாழ்ந்திரள் வீழ்ம்படை என அக்காலத்து வழங்குமென்று இத்தொகைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரையாசிரியர் இருமொழிக்கட் காட்டியவற்றிற்கு அவ்வீறுகடோறுங் கூறுகின்ற சூத்திரங்கள் பின்னர் வேண்டாமை உணர்க. இஃது ஈரொற்றுடனிலையாதலின் ஈண்டு வைத்தார். இனி நெடிற்கீழே யன்றிப் பல வெழுத்துந் தொடர்ந்து நின்றதன் பின்னும் ஈரொற்று வருதல் கொள்க. அவை வேந்தர்க்கு அன்னாய்க்கு என்றாற் போல்வனவாம். (15) குற்றொற்று ஆகாதன 49. அவற்றுள் ரகார ழகாரங் குற்றொற் றாகா. இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தல் கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய மூன்றனுள், ரகார ழகாரம் - ரகாரமும் ழகாரமும், குற்றொற்றாகா - குறிற்கீழ் ஒற்றாகா, நெடிற்கீழ் ஒற்றாம், குறிற்கீழ் உயிர்மெய்யாம் எ-று. கீழென்னும் உருபு தொகுத்துக் கூறினார். ஆகாதனவற்றிற்கு உதாரண மின்று. எ-டு: கார் வீழ் என நெடிற்கீழ் ஒற்றாய் வந்தன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் வந்தன. இவற்றை விலக்கவே, யகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டிடத்தும் ஒற்றாய் வருதல் பெற்றாம். புகர் புகழ் புலவர் என்றாற் போல்வனவோ வெனின், மொழிக்கு முதலாம் எழுத்தினைச் சேர்வனவற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சி யாதலான் அவை வேண்டியவாறே வருமென்று உணர்க. அன்றியுங் குற்றொற்றென்றே சூத்திரஞ் செய்தலிற் குறிலிணை யொற்றினைக் காட்டிக் கடாவலாகாமை உணர்க. இது வரையறையின்றி உயிர்மெய்யொடு தனிமெய் மயங்குவன வற்றிற் சிலவொற்றிற்கு வரையறை ஈண்டுக் கூறியது. (16) அளபெடைக்கண் நெட்டெழுத்தே மாத்திரை மிகுதல் 50. குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல. இஃது ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எழுத். 33) என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் நிகழ்வ தோர் ஐயம் அகற்றுகின்றது; என்னை? உயிரும் மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயம் அறுத்தலின். (இ-ள்.) குறுமையும் நெடுமையும் - எழுத்துக்களின் குறிய தன்மையும் நெடிய தன்மையும், அளவிற் கோடலின் - மாத்திரை யென்னும் உறுப் பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், தொடர்மொழி யெல்லாம் - அம்மாத்திரை தம்முள் தொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத் தியல - நெட் டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம் எ-று. எ-டு: ‘வருவர்கொல் வயங்கிழாஅய்’ (கலி. 11) எனவும், ‘கடியவே கனங்குழாஅய்’ (கலி. 11) எனவுங் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்தற்குக் கூடியவாறு உணர்க. ஏனைச் செய்யுட்களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக்குங்கால் நெட்டெழுத்தே மாத்திரை பெற்று மிக்கு நிற்கும் என்றமையான், ‘எதிரது போற்றல்’ என்னும் உத்தி பற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று. ஈண்டுக் கூறினார், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்து வரும் என்பது அறிவித்தற்கு. ‘அளபு’ என்று மாத்திரையைக் கூறாது ‘அளவு’ எனச் சூத்திரஞ் செய்தமையான் அளவு தொழின்மேல் நின்றது. அது செய்யுளியலுள் ‘மாத்திரையளவும்’ (செய். 2) என்பதனானும் உணர்க. ‘இயல’ வென்றதனைச் செயவெனெச்ச மாக்கிப் படுத்தலோசையாற் கூறுக. இனித் ‘தன்னின முடித்தல்’ என்பதனான், ஒற்றிற்கும் இவ்வாறே கொள்க. ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ (அகம். 4) என்ற குறுஞ்சீர்வண்ணத்திற்கு உரிய குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்தை மாத்திரை மிகுத்தற்குக் கூடிநின்றவாறு உணர்க. எனவே, குறறெழுத்துக்களெல்லாம் ஒற்றெழுத்துக்களொடும் நெட்டெழுத்துக்க ளொடுங் கூடி அவற்றையே ஓசை மிகுத்துநிற்கும் என்றவாறாயிற்று. இதனானே, ‘ஒற்றிசை நீடலும்’ (எழுத். 33) என்ற ஒற்றிசை நீளுங்காற் குற்றெழுத்தாய் நீளுமென்றார். இனி, உரையாசிரியர் புகர் புகழ் எனக் குறிலிணைக்கீழ் ரகார ழகாரங்கள் வந்த தொடர்மொழிகளெல்லாந் தார் தாழ் என்றாற் போல ஓசையொத்து நெட்டெழுத்தின் தன்மையவாம் என்றாராலெனின், புகர் புகழ் என்பனவற்றை நெட்டெழுத்தென்றே எவ்விடத்தும் ஆளாமை யானும், நெட்டெழுத்தாகக் கூறிய இலக்கணத்தான் ஒரு பயன் கொள்ளாமையானும், செய்யுளியலுள் இவற்றைக் குறிலிணை ஒற்றடுத்த நிரையசையாகவுந் தார் தாழ் என்பனவற்றை நெட்டெழுத்து ஒற்றடுத்த நேரசையாகவுங் கோடலானும் அது பொருளன்மை உணர்க. (17) னகார மகாரம் ஈரொற்றாம் இடன் 51. செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈரொற் றாகும். இது செய்யுட்கண் ஈரொற்றிலக்கணமாமாறு கூறுகின்றது. (இ-ள்.) செய்யுட் போலி மொழி இறுதிவயின் - செய்யுட்கண் போலுமென்னுஞ் சொல்லின் இறுதிக்கண், னகாரம் மகாரம் ஈரொற்றாகும் - னகாரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும் எ-று. எ-டு: ‘அந்நூலை, முந்நூலாக் கொள்வானும் போன்ம்’ (கலி. 103), ‘சிதையுங் கலத்தைப் பயினான் திருத்தித், திசையறி மீகானும் போன்ம்’ (பரி. 10:55) என வரும். ‘போலும்’ என்னுஞ் செய்யுமென்னும் முற்று ஈற்றுமிசை உகரம் மெய்யொழித்துக் கெட்டு லகாரந் திரிந்து நின்றது. இஃது இறுதியில் முற்று; இடையிற் பெயரெச்சமாகிய உவமவுருபு. ஈண்டு முற்றென்பார் ‘இறுதி மொழி’ என்றார். (18) அம்மகரம் குறுகுமாறு 52. னகாரை முன்னர் மகாரங் குறுகும். இஃது அரையளபு குறுகு மென்ற மகரத்திற்குக் குறுகும் இடம் இது வென்கின்றது. (இ-ள்.) னகாரை முன்னர் மகாரங் குறுகும் - முற்கூறிய னகாரத்தின் முன்னர் வந்த மகரந் தன் அரைமாத்திரையிற் குறுகி நிற்கும் எ-று. எ-டு: போன்ம் என முன்னர்க் (51) காட்டினாம். ‘னகாரை’யென இடைச்சொல் ஈறு திரிந்து நின்றது. இனித் ‘தன்னின முடித்தல்’ என்பதனான், ணகாரவொற்றின் முன்னும் மகாரங் குறுகுதல் கொள்க. ‘மருளினு மெல்லா மருண்ம்’ என வரும். (19) ஒற்றும் குற்றுகரமும் ஈரிடத்தும் எழுத்தாம் தன்மை திரியாமை 53. மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்தியல் திரியா என்மனார் புலவர். இஃது ஒற்றுங் குற்றுகரமும் ஈண்டு எழுத்துக்களொடு கூட்டி எண்ணப்பட்டு நிற்குமென்பதூஉஞ் செய்யுளியலுள் எண்ணப்படாது நிற்கு மென்பதூஉங் கூறுகின்றது. (இ-ள்.) தெரிந்து - ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தரு நிலைமையை ஆராய்ந்து, மொழிப்படுத்து இசைப்பினும் - சொல்லாகச் சேர்த்துச் சொல்லினும், வேறு இசைப்பினும் - செய்யுளியலுள் ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தருமேனும் மாத்திரை குறைந்து நிற்கும் நிலைமையை நோக்கி எழுத்தெண்ணப்படா வென்று ஆண்டைக்கு வேறாகக் கூறினும், எழுத் தியல் திரியா என்மனார் புலவர் - அவ்விரண்டிடத்தும் அரைமாத்திரை பெற்று நிற்கும் ஒற்றுங் குற்றுகரமும் முற்கூறிய எழுத்தாந் தன்மை திரியாவென்று கூறுவர் புலவர் எ-று. இதனான் ஒற்றும் குற்றுகரமும் எழுத்தாகி நின்று பொருள் தந்தும், எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா வென்பது கூறினாராயிற்று. தெரிந்து வேறிசைத்தல் குற்றுகரத்திற்கு இன்றாதலின் ‘ஏற்புழிக் கோடலான்’ ஒற்றிற்குக் கொள்க. எ-டு: அல் இல் உண் எண் ஒல் எனவும், கல் வில் முள் செல் சொல் எனவும், ஆல் ஈர் ஊர் ஏர் ஓர் எனவும், கால் சீர் சூல் தேன் கோன் எனவும் உயிரும் உயிர்மெய்யுமாகிய குற்றெழுத்தை யும் நெட்டெழுத்தையும் ஒற்றெழுத்துக்கள் அடுத்து நின்று பொருள்தந்தவாறு காண்க. கடம், கடாம், உடையான், திருவாரூர், அகத்தியனார் என ஈரெழுத்தையும் மூவெழுத்தை யும் நாலெழுத்தையும் ஐயெழுத்தையும் இறுதியிலும் இடையிலும் ஒற்றடுத்து நின்று பொருள்தந்தவாறு காண்க. எஃகு, தெள்கு, கொக்கு, குரங்கு என்பனவும் எழுத் தெண்ணவும் அலகிடவும் பெறாத குற்றுகரமும் அடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. ‘உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ, உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான’ (செய். 44) என்பது எழுத்து எண்ணப் பெறாமைக்கு விதி. இனி, இச்சூத்திரத்திற்கு எழுத்துக்களைச் சொல்லாக்கிக் கூறினும் பிறிதாகக் கூறினும் மாத்திரை திரியாதென்று பொருள் கூறி, அகரம் என்புழி யும் அ என்புழியும், ஆலம் என்புழியும் ஆ என்புழியும், ககரம் என்புழியும் க என்புழியுங், காலம் என்புழியும் கா என்புழியும் ஓசை ஒத்து நிற்கு மென்றால் அது முன்னர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயனில் கூற்றாமென்க. (20) எழுத்துப்போலி ஆமாறு 54. அகர இகரம் ஐகார மாகும். இது, சிலவெழுத்துக்கள் கூடிச் சிலவெழுத்துக்கள் போல இசைக்குமென எழுத்துப்போலி கூறுகின்றது. (இ-ள்.) அகர இகரம் ஐகாரம் ஆகும் - அகரமும் இகரமுங் கூட்டிச் சொல்ல, ஐகாரம் போல இசைக்கும், அது கொள்ளற்க எ-று. போல என்றது தொக்கது. எ-டு: ஐவனம், அஇவனம் என வரும். ‘ஆகும்’ என்றதனான் இஃது இலக்கணமன்றாயிற்று. (21) 55. அகர உகரம் ஔகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) அகர உகரம் ஔகாரம் ஆகும் - அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம்போல இசைக்கும், அது கொள்ளற்க எ-று. போல என்றது தொக்கது. எ-டு: ஔவை, அஉவை என வரும். (22) 56. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) அகரத் திம்பர் யகரப் புள்ளியும் - அகரத்தின் பின் இகரமே யன்றி யகரமாகிய புள்ளி வந்தாலும், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் - ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு பெறத் தோன்றும் எ-று. எ- டு: ஐவனம், அய்வனம் என வரும். ‘மெய்பெற’ என்றதனான் அகரத்தின் பின்னர் உகரமே யன்றி வகரப்புள்ளியும் ஔகாரம் போல வருமென்று கொள்க. எ-டு: ஔவை, அவ்வை என வரும். (23) ஐகார ஔகாரங்களது மாத்திரைச் சுருக்கம் 57. ஓரள பாகும் இடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான. இஃது அதிகாரத்தான் ஐகாரத்திற்கும் ஔகாரத்திற்கும் எதிரது போற்றல் என்பதனாற் செய்யுளியலை நோக்கி மாத்திரைச் சுருக்கங் கூறுகின்றது. (இ-ள்.) மொழிவயினான - ஒரு சொல்லிடத்தே நின்ற ஐகார ஔகாரங்கள், தேருங்காலை - ஆராயுமிடத்து, ஓரளபாகும் இடனு மாருண்டே - ஒரு மாத்திரையாய் நிற்கும் இடமும் உண்டு எ-று. உம்மையான் இரண்டு மாத்திரை பெறுதலே வலியுடைத் தாயிற்று. ‘இடனும்’ என்றது, ஒரு சொல்லின் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துங் குறுகும், அது செய்யுட்கண் ஓசை இடர்ப்பட் டொலிக்கு மிடத்துக் குறுகுமென்றற்கு. ‘உரையிற் கோடலான்’ ஐகாரம் முதலிடை கடை யென்னும் மூன்றிடத்துங் குறுகும்; ஔகாரம் முதற்கண் குறுகுமெனக் கொள்க. எ-டு: ஐப்பசி, கைப்பை, இடையன், குவளை என வரும். ‘அடைப்பையையாய் கோல்தா’ எனவும், ‘புனையிளங் கொங்கையையாய் வரும்’ எனவும் பிறவாறும் வருவன செய்யுளியலுட் காண்க. ஔவை, கெளவை என வரும். ஔகாரம் ‘கவ்வைநீர் வேலி’ (பு.வெ.மா. 4 - 23) எனத் தொடை நோக்கிக் குறுகினவாறுங் காண்க. ‘தேருங்காலை’ யென்றதனான் ஓரெழுத் தொருமொழியுங் குறுகும். எ-டு: கை, பை என வரும். (24) மொழியிறுதிக்கண் இகர யகரங்கள் ஓசை விரவிவருதல் 58. இகர யகரம் இறுதி விரவும். இதுவும் போலி கூறுகின்றது. (இ-ள்.) இகர யகரம் இறுதி விரவும் - இகரமும் யகரமும் ஒருமொழி யின் இறுதிக்கண் ஓசை விரவி வரும், அவ்விகரங் கொள்ளற்க எ-று. எ-டு: நாய், நாஇ என வரும். (25) உயிர் பன்னிரண்டும் மொழிமுதலாதல் 59. பன்னீ ருயிரும் மொழிமுத லாகும். இது மேல் எழுத்தினான் மொழியாமாறு உணர்த்தி அம் மொழிக்கு முதலா மெழுத்து இவையென்பது உணர்த்துகின்றது. (இ-ள்.) பன்னீருயிரும் - பன்னிரண்டு உயிரெழுத்தும், மொழி முதல் ஆகும் - மொழிக்கு முதலாம் எ-று. எ-டு: அடை, ஆடை, இலை, ஈயம், உளை, ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஓடம், ஔவியம் என வரும். (26) தனிமெய் மொழிமுதல் ஆகாமை 60. உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா. இஃது உயிர்மெய் மொழிக்கு முதலாம் என்கின்றது. (இ-ள்.) உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா - உயிரொடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா எ-று. எனவே, உயிரொடு கூடிய மெய்களே மொழிக்கு முதலாவன என்றவாறாம். ஈண்டு உயிர்மெய் யென்றது, வேற்றுமை நயங் கருதிற்று; ஒற்றுமை நயங்கருதின் மேலைச் சூத்திரத்து உயிரொடு கூடி ஆமென்றல் பயனின்றாம். (27) தனிமெய்கள் தமக்கேற்ற உயிரொடு கூடி முதலாமாறு 61. கதந பமஎனும் ஆவைந் தெழுத்தும் எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே. இது மேற் பொதுவகையான் எய்துவித்த இருநூற்றொருபத்தாறு எழுத்துக்களைச் சிறப்புவகையான் வரையறுத்து எய்துவிக்கின்றது. (இ-ள்.) கதநபம எனும் ஆவைந்தெழுத்தும் - க த ந ப ம என்று கூறப் பட்ட அவ்வைந்து தனிமெய்யும், எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே - பன்னிரண்டு உயிரொடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும் எ-று. எ-டு: கலை, கார், கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேழல், கைதை, கொண்டல், கோடை, கெளவை எனவும்; தந்தை, தாய், தித்தி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேன், தையல், தொண்டை, தோடு, தெளவை எனவும்; நந்து, நாரை, நிலம், நீலம், நுகம், நூல், நெய்தல், நேமி, நைவளம், நொச்சி, நோக்கம், நௌவி எனவும்; படை, பால், பிடி, பீடு, புகழ், பூமி, பெடை, பேடை, பைதல், பொன், போது, பௌவம் எனவும்; மடி, மாலை, மிடறு, மீளி, முகம், மூப்பு, மெலிவு, மேனி, மையல், மொழி, மோத்தை, மௌவல் எனவும் வரும். (28) 62. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐஔ எனும் மூன்றலங் கடையே. இதுவும் அது. (இ-ள்.) சகரக் கிளவியும் அவற்றோரற்றே - சகரமாகிய தனி மெய்யும் முற்கூறியவை (61) போல எல்லா உயிரொடுங் கூடி மொழிக்கு முதலாம்; அ ஐ ஔ எனும் மூன்றலங்கடையே - அகர ஐகார ஔகார மென்று சொல்லப்பட்ட மூன்று உயிரும் அல்லாத இடத்து எ-று. எ-டு: சாந்து, சிற்றில், சீற்றம், சுரை, சூரல், செக்கு, சேவல், சொல், சோறு என வரும். சட்டி, சகடம், சமழ்ப்பு என்றாற் போல்வன ‘கடிசொல் இல்லை’ (சொல். 452) என்பதனாற் கொள்க. சையம் சௌரியம் என்பவற்றை வடசொல்லென மறுக்க. (சமழ்ப்பு - நாணம்) (29) 63. உஊ ஒஓ என்னும் நான்குயிர் வஎன் எழுத்தொடு வருத லில்லை. இதுவும் அது. (இ-ள்.) உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர் - உ ஊ ஒ ஓ என்று சொல்லப்பட்ட நான்கு உயிரும், வ என் எழுத்தொடு வருதலில்லை - வ என்று சொல்லப்படுந் தனிமெய்யெழுத்தொடு கூடி மொழிக்கு முதலாய் வருதலில்லை எ-று. எனவே, ஒழிந்தன மொழிக்கு முதலாம் என்றவாறாயிற்று. எ-டு: வளை, வாளி, விளரி, வீடு, வெள்ளி, வேட்கை, வையம், வௌவுதல் என வரும். (30) 64. ஆ எ ஒஎனும் மூவுயிர் ஞகாரத் துரிய. இதுவும் அது. (இ-ள்.) ஆ எ ஒ என்னும் மூவுயிர் - ஆ எ ஒ என்று கூறப்படும் மூன்று உயிரும், ஞகாரத்து உரிய - ஞகார ஒற்றொடு கூடி மொழிக்கு முதலாதற்கு உரிய எ-று. எனவே, ஏனைய உரியவல்ல என்பதாம். எ-டு: ஞாலம், ஞெண்டு, ஞொள்கிற்று எனவரும். ‘ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பு’ (பெரும்பாண். 132) என்பது திசைச்சொல். ஞழியிற்று என்றாற் போல்வன இழிவழக்கு. (31) 65. ஆவோ டல்லது யகர முதலாது. இதுவும் அது. (இ-ள்.) ஆவோடு அல்லது யகரம் முதலாது - ஆகாரத்தொடு கூடி யல்லது யகரவொற்று மொழிக்கு முதலாகாது எ-று. எ-டு: யானை, யாடு, யாமம் என வரும். யவனர், யுத்தி, யூபம், யௌவனம் என்பன வடசொல்லென மறுக்க. (32) முதலாகா மெய்யும் உயிரும், தத்தம் பெயர் கூறுதற்கண் முதலாதல் 66. முதலா ஏன தம்பெயர் முதலும். இது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமென்கின்றது. (இ-ள்.) முதலாவும் - மொழிக்கு முதலாகா என்ற ஒன்பது மெய்யும், ஏனவும் - மொழிக்கு முதலா மென்ற ஒன்பது மெய்யும் பன்னிரண்டுயிரும், தம் பெயர் முதலும் - தத்தம் பெயர் கூறுதற்கு முதலாம் எ-று. ‘முதலாவும்’ ‘ஏனவும்’ என்ற உம்மைகள் தொக்கு நின்றன. எ-டு: ஙகரமும் டகரமும் ணகரமும் ரகரமும் லகரமும் ழகரமும் ளகரமும் றகரமும் னகரமும் என மொழிக்கு முதலாகாத ஒன்பதும் முதலாமாறு, ஙக்களைந்தார், டப்பெரிது, ணந்நன்று எனவரும், இவ்வாறே ஏனையவற்றையும் ஒட்டுக. இனி ‘ஏன’ என்றதனான் கக்களைந்தார் தப்பெரிது அக்குறிது ஆநெடிது என மொழிக்கு முதலாமவற்றையும் தம் பெயர் கூறுதற்கு முதலாமாறு ஒட்டிக்கொள்க. வரையறுக்கப்பட்டு மொழிக்கு முதலாகாது நின்ற மெய்க்கும் இவ்விதி கொள்க. அவை சகரத்து மூன்றும், வகரத்து நான்கும், ஞகரத்தொன்பதும், யகரத்துப் பதினொன்றுமாம். (33) மொழிமுதற் குற்றியலுகரம் 67. குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். இஃது எழுத்துக்களை மொழிக்கு முதலாமாறு கூறிய முறையே குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு கூறுகின்றது. (இ-ள்.) குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - குற்றிய லுகரமானது முன்னிலை முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் - தனிமெய்யாய் நின்ற நகரத்துமேல் நின்ற நகரத்தொடு கூடி மொழிக்கு முதலாம் எ-று. எ-டு: நுந்தை என வரும். இதனானே முறைப்பெயர் இடமும், நகரம் பற்றுக்கோடுமாயின. ஈண்டுக் குற்றியலுகரம் மெய்ப்பின்னர் நின்றதேனும் ஒற்றுமை நயத்தான் மொழிக்கு முதலென்றார். இது செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று. (34) அக்குற்றுகரம் முற்றியலுகரத்தொடு பொருள் வேறுபடாமை 68. முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது அப்பெயர் மருங்கின் நிலையிய லான. இது மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. (இ-ள்.) அப்பெயர் மருங்கின் நிலையியலான - அம்முறைப் பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம், முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது - இதழ் குவித்துக் கூறும்வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறு போல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது எ-று. எ-டு: காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல வேறுபடாது நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும், இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தாய் என்பதோ வெனின், அஃது இதழ் குவித்தே கூற வேண்டு தலிற் குற்றுகரமன்று. ‘இயல்’ என்றதனான் இடமும் பற்றுக்கோடும் இரண்டற்கும் வேறுபாடில என்று கொள்க. இதனானே, மொழிக்கு முதலாமெழுத்துத் தொண்ணூற்று நான்கு என்று உணர்க. (35) மொழிக்கு ஈறாம் உயிர்கள் 69. உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும். இஃது உயிர் மொழிக்கு ஈறாமாறு கூறுகின்றது. (இ-ள்.) உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும் - உயிர்களுள் ஔகாரம் ஒழிந்தன வெல்லாம் மொழிக்கு ஈறாம் எ-று. எனவே ஔகாரவுயிர் ஈறாகாதாயிற்று. இஃது உயிர்க்கும் உயிர் மெய்க்கும் பொது. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என இவை தாமே ஈறாயின. ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ எனக் குறிலைந்தும் அளபெடைக்கண் ஈறாயின. கா தீ பூ சே கை கோ எனவும், விள கிளி மழு எனவும் வரும். எகர ஒகரம் மேலே (71, 72) விலக்குப. ‘அளபெடை மிகூஉ மிகர விறுபெயர்’ (சொல். 127) என்பராதலின், அளபெடைப் பின் வந்த குற்றெழுத்துங் கொள்வர் ஆசிரியரென்று உணர்க. நெட்டெழுத்தேழும் முதன்மொழியாம் என்னுந் துணையே முன் னுணர்த்துதலின் ஈண்டு அவை ஈறாமென்றும் உணர்த்தினார். (36) ஔகாரம் கவ-வோடியைந்து ஈறாதல் 70. கவவோ டியையின் ஔவு மாகும். இஃது ஈறாகாதென்ற ஔகாரம் இன்னுழியாம் என்கின்றது. (இ-ள்.) ஔவும் - முன் ஈறாகாதென்ற ஔகாரமும், கவவோடு இயையின் ஆகும் - ககர வகரத்தோடு இயைந்தவழி ஈறாம் எ-று. எ-டு: கௌ, வௌ என வரும். எனவே, ஒழிந்த உயிரெல்லாந் தாமே நின்றும், மெய்களொடுங் கூடி நின்றும் ஈறாதல் இதனாற் பெற்றாம். இதனானே, ஔகாரம் ஏனை மெய்க்கண் வாராதென விலக்குதலும் பெற்றாம். உயிர் ஙகரத்தொடு கூடி மொழிக்கு ஈறா மென்பது இதனான் எய்திற்றேனும், அது மொழிக்கு ஈறாகாமை ‘தந்துபுணர்ந் துரைத்தலான்’ உணர்க. இது வரையறை கூறிற்று. (37) எகரம் மெய்யோடு ஈறாகாமை 71. எஎன வருமுயிர் மெய்யீ றாகாது. இஃது எகரந் தானே நின்றவழி யன்றி மெய்யொடு கூடினால் ஈறாகா தென விலக்குகின்றது. (இ-ள்.) எ என வரும் உயிர் மெய் ஈறாகாது - எ என்று கூறப்படும் உயிர் தானே ஈறாவதன்றி யாண்டும் மெய்களொடு இயைந்து ஈறாகாது எ-று. (38) ஒகரம் நகரமெய்யோடன்றி ஈறாகாமை 72. ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே. இது விலக்கும் வரையறையுங் கூறுகின்றது. (இ-ள்.) ஒவ்வும் அற்று - ஒகரமும் முன் சொன்ன (71) எகரம் போலத் தானே ஈறாவதன்றி மெய்களோடு இயைந்து ஈறாகாது, நவ்வலங்கடையே - நகரவொற்றோடு அல்லாத இடத்தில் எ-று. எ-டு: நொ கொற்றா, ‘நொஅலைய னின்னாட்டை நீ’ என வரும். (39) ஏகார ஓகாரங்கள் ஞகாரத்தோடு ஈறாகாமை 73. ஏஓ எனும்உயிர் ஞகாரத் தில்லை. இது சில உயிர் சில உடலோடேறி முடியாவென விலக்குகின்றது. (இ-ள்.) ஏ ஓ எனும் உயிர் ஞகாரத்தில்லை - ஏ ஓ என்று கூறப்பட்ட இரண்டுயிருந் தாமே நின்றும் பிற மெய்களொடு நின்றும் ஈறாதலன்றி ஞகாரத்தோடு ஈறாத லில்லை எ-று. எனவே, ஏனையுயிர்கள் ஞகாரத்தோடு ஈறாமென்றாராயிற்று. எ-டு: உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ இவை எச்சமும் வினைப்பெயரும் பற்றி வரும். அஞ்ஞை மஞ்ஞை இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப்பட்டன. உரிஞோ என்பது ‘கடிசொல் லில்லை’ (சொல். 452) என்பதனாற் கொள்க. (40) உகர ஊகாரங்கள் நகரவகரங்களோடு ஈறாகாமை 74. உஊ காரம் நவவொடு நவிலா. இதுவும் அது. (இ-ள்.) உ ஊகாரம் - உகர ஊகாரங்கள் தாமே நின்றும் பிற மெய்களொடு நின்றும் பயில்வதன்றி, நவவொடு நவிலா - நகர வொற்றொடும் வகர வொற்றொடும் பயிலா எ-று. எனவே, ஏனை யுயிர்கள் நகர வகரங்களொடு வருமாயின. எ-டு: நகரம், பொருந என வினைப்பெயராகியும், நா நீ நே எனப் பெயராகியும், நை நொ நோ என வியங்கோளாகியும் வரும். பொருநை என்றுங் காட்டுப. வகரம், உவ வே என வியங்கோளாயும், உவா செவ்வி வீ வை எனப் பெயராயும் வரும். ஒருவ ஒருவா ஒருவி ஒருவீ ஔவை என்றுங் காட்டுப. ஈண்டு விலக்காத ஏனை யுயிர்களொடு வந்த நகரவகரங்கள் அக்காலத்து வழங்கினவென்று கோடும் இவ்விதியான். இனி ‘நவிலா’ என்றதனானே, வகரவுகரம் கதவு, துரவு, குவவு, புணர்வு, நுகர்வு, நொவ்வு, கவ்வு எனப் பயின்று வருதலுங் கொள்க. (41) சகர உகரம் இருமொழிக்கே ஈறாதல் 75. உச்ச காரம் இருமொழிக் குரித்தே. இது சகார உகாரம் பலசொற்கு ஈறாய் வாராது இருசொற்கு ஈறாமென்று வரையறை கூறுகின்றது. (இ-ள்.) உச்சகாரம் - உகரத்தொடு கூடிய சகாரம், இரு மொழிக்கே உரித்து - இரண்டு மொழிக்கே ஈறாம் எ-று. எனவே, பன்மொழிக்கு ஈறாகாது என்றவாறாயிற்று. ‘உரித்தே’ யென்னும் ஏகாரம் ‘மொழிக்கே’ யெனக் கூட்டுக. எ-டு: உசு; இஃது உளுவின் பெயர். முசு; இது குரங்கினுள் ஒரு சாதி. பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு. கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இரு மொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறாமாயிற்று. உச, உசா, விசி, சே, கச்சை, சோ எனப் பெயராயும்; துஞ்ச, எஞ்சா, எஞ்சி, மூசி, மூசூ என எச்சமாயும் வரும். ‘அச்சோ’ என வியப்பாயும் வரும். இன்னும் இவை வழக்கின்கட் பலவாமாறும் உணர்க. (42) பகர உகரம் ஒருமொழிக்கே ஈறாதல் 76. உப்ப காரம் ஒன்றென மொழிப இருவயின் நிலையும் பொருட்டா கும்மே. இஃது ஒரு சொல் வரையறையும், அஃது ஓசை வேற்றுமையான் இரு பொருள் தருமென்பதும் கூறுகின்றது. (இ-ள்.) உப்பகாரம் ஒன்றென மொழிப - உகரத்தொடு கூடிய பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர்; இருவயினிலையும் பொருட்டாகும்மே - அதுதான் தன்வினை பிறவினை யென்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம் எ-று. எ-டு: தபு என வரும். இது படுத்துக் கூற, நீ சா எனத் தன்வினையாம். எடுத்துக் கூற, நீ ஒன்றனைச் சாவப்பண் எனப் பிறவினையாம். உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம். உகரத்தொடு கூடிய பகரம் ஒன்றெனவே, ஏனை உயிர்களொடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பல பொருள் தரும் என்றாராயிற்று. மறந்தப தப்பா என எச்சமாயும், நம்பி செம்பூ பே பெதும்பை எனப் பெயராயும், போ என ஏவலாயும் வரும். இவற்றைப் பிற சொற்களோடும் ஒட்டுக. ஏனை ஈகார பகரம் இடக்கராய் வழங்கும். (43) எஞ்சிநின்றனவும், மொழிக்கு ஈறாகா என்றவையும், தம்பெயர் கூறுதற்கண் ஈறாதல் 77. எஞ்சிய வெல்லாம் எஞ்சுதல் இலவே. இது முன்னர் மொழிக்கு ஈறாம் என்றவற்றுள் எஞ்சி நின்றன மொழிக்கு ஈறாமாறும், மொழிக்கு ஈறாகா என்றவை தம்பெயர் கூறுங்கால் மொழிக்கு ஈறாமாறுங் கூறுகின்றது. (இ-ள்.) எஞ்சியவும் எஞ்சுத லில - ‘கவவோ டியையின்’ (எழுத். 70) என்னுஞ் சூத்திரத்தாற் பதினோருயிரும் பதினெட்டு மெய்க்கண்ணும் வந்து மொழிக்கு ஈறா மென்ற பொதுவிதியிற் பின்னை விசேடித்துக் கூறியவற்றை ஒழிந்தனவும் மொழிக்கு ஈறாதற்கு ஒழிவில, எல்லாம் எஞ்சுதலில - மொழிக்கு ஈறாகா வென்ற உயிர்மெய்களுந் தம்பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிவில எ-று. ‘எல்லாம்’ என்றது ‘சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல்’ என்னும் உத்தி. உம்மை விரிக்க. ஈண்டு ‘எஞ்சிய’ வென்றது, முன்னர் உதாரணங் காட்டிய ஞகரமும் நகரமும் வகரமுஞ் சகரமும் பகரமும் ஒரு மொழிக்கும் ஈறாகாத ஙகரமும் ஒழிந்த பன்னிரண்டு மெய்க்கண்ணும், எகரமும் ஒகரமும் ஔகாரமும் ஒழிந்த ஒன்பதுயிரும் ஏறி, மொழிக்கு ஈறாய் வருவனவற்றை யென்று உணர்க. எ-டு: வருக புகா வீக்கி புகீ செகு புகூ ஈங்கே மங்கை எங்கோ எனவும், கட்ட கடா மடி மடீ மடு படூ படை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), மண்ண எண்ணா கண்ணி உணீ கணு நண்ணூ பண்ணை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), அத புதா பதி வதீ அது கைதூ தந்தை அந்தோ எனவும் (இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), கம நென்மா அம்மி மீ செம்மு கொண்மூ யாமை ‘காத்தும்வம்மோ’ (புறம். 281) எனவும் (இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), செய காயா கொய்யூ ஐயை ஐயோ எனவும் (இதற்கு இகர ஈகார உகர ஏகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), வர தாரா பரி குரீ கரு வெரூ நாரை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), சில பலா வலி வலீ வலு கொல்லூ வல்லே கலை எனவும் (இதற்கு ஓகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), தொழ விழா நாழி வழீ மழு எழூ தாழை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), உள உள்ளா வெள்ளி குளீ உளு எள்ளூ களை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), கற்ற கற்றா உறி உறீ மறு உறூ கற்றை எற்றோ எனவும் (இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), நன கனா வன்னி துனீ முன்னு துன்னூ என்னே அன்னை அன்னோ எனவும் வரும். இவற்றுட் பெயராயும் வினையாயும் வருவன உணர்க. இவற்றுட் ககர னகரங்கள் விலக்காத ஒன்பதும் வந்தன. ஆக ஈறு, நூற்று நாற்பத்து மூன்றும், உதாரணமில்லாத பதினெட்டும் ஆக நூற்றறுபத்தொன்று. ஙகரம் மொழிக்கு ஈறாகா தென்பது பெரும்பான்மையாதலிற் கூறிற்றிலர். இனி ஙகரமும், ஔகாரம் ஏறாத மெய் பதினைந்தும், எகரமும் ஒகரமும் ஏகாரமும் ஓகாரமும் உகரமும் ஊகாரமும் ஏறாத மெய்களுந், தம் பெயர் கூறுங்கால் மொழிக்கு ஈறாமாறு: ஙப்பெரிது, சௌ அழகிது, ஞௌதீது என வரும். ஏனையவற்றோடும் இவ்வாறே ஒட்டுக. கெக்குறைந் தது, கொத்தீது, ஞெவ்வழகிது, ஞொத்தீது, நுந்நன்று, நூப்பெரிது, வுச்சிறிது, வூப்பெரிது என எல்லாவற்றையும் இவ்வாறே ஒட்டுக. இன்னும் ‘எல்லாம்’ என்றதனானே, கந்நன்று ஆநன்று என மொழிக்கு ஈறாவனவுந் தம்பெயர் கூறும்வழி ஆமென்று கொள்க. (44) புள்ளியெழுத்துக்களுள் ஈறாவன 78. ஞணநம னயரல வழள என்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. இது முன்னர் உயிர் ஈறாமாறு உணர்த்திப் புள்ளிகளுள் ஈறாவன இவை யென்கின்றது. (இ-ள்.) ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப்பதினொன்றே புள்ளியிறுதி - ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள வென்று கூறப்பட்ட பதினொன்றுமே புள்ளிகளில் மொழிக்கு ஈறாவன எ-று. எ-டு: உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் என வரும். னகரம் ஈற்று வையாது மகரத்தொடு வைத்தது வழக்குப் பயிற்சியும் மயக்க இயைபும் நோக்கி. (45) நகரவொற்று இருமொழிக்கே ஈறாதல் 79. உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். இது மேற் பொதுவகையான் ஈறாவனவற்றுள் வரையறைப்படுவது இது வென்கின்றது. (இ-ள்.) உச்சகாரமொடு நகாரஞ் சிவணும் - உகரத்தொடு கூடிய சகரம் இருமொழிக் கீறாயவாறு போல (75) நகரவொற்றும் இருமொழிக்கல்லது ஈறாகாது எ-று. எ-டு: பொருந், வெரிந் என வரும். (46) ஞகரவொற்று ஒருமொழிக்கே ஈறாதல் 80. உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே அப்பொருள் இரட்டா திவணை யான. இதுவும் அது. (இ-ள்.) உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே - உகாரத்தொடு கூடிய பகரத்தொடு ஞகரமும் ஒத்து ஒரு மொழிக்கு ஈறாம்; இவணையான அப்பொருள் இரட்டாது - இவ்விடத்து ஞகாரத்தின்கண்ணான அப்பொருள் பகரம்போல இருபொருட்படாது எ-று. எ-டு: உரிஞ் என வரும். ஞகாரம் ஒரு மொழிக்கு ஈறாகலின் நகரத்தின் பின் கூறினார். ‘இவணை’ என்னும் ஐகாரம் அசை. (47) வகரமெய் நான்கு மொழிக்கண் ஈறாதல் 81. வகரக் கிளவி நான்மொழி ஈற்றது. இதுவும் அது. (இ-ள்.) வகரக் கிளவி நான்மொழி ஈற்றது - வகரமாகிய எழுத்து நான்கு மொழியின் ஈற்றதாம் எ-று. எ-டு: அவ், இவ், உவ், தெவ் என வரும். ‘கிளவி’ ஆகுபெயர், எழுத்துக் கிளவியாதற்கு உரித்தாமாதலின். (48) மகரஈற்றொடு மயங்கா னகரஈற்றுத் தொடர்மொழி அஃறிணைக்கண் ஒன்பது எனல் 82. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன. இதுவும் அது, வரையறை கூறுதலின். (இ-ள்.) புகரறக் கிளந்த அஃறிணை மேன - குற்றமறச் சொல்லப் பட்ட அஃறிணைப் பெயரிடத்து, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப - மகர ஈற்றுத் தொடர் மொழியொடு மயங்கா வென்று வரையறைப்பட்ட னகர ஈற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று கூறுவர் ஆசிரியர் எ-று. ஆய்தம் விகாரம். எ-டு: எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என வரும். எகின் எகினம் என்றாற்போல வேறொரு பெயராய்த் திரிவனவும் சந்தியான் திரிவனவுமாய இவற்றுள், திரிபுடையன களைந்து ஒன்பதும் வருமேற் கண்டு கொள்க. நிலம் நிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன், உலம் உலன், குலம் குலன், கடம் கடன், பொலம் பொலன், புலம் புலன், நலம் நலன், குளம் குளன், வளம் வளன் என இத்தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம், குட்டம், ஓடம், பாடம் இவை போல்வன மயங்காதன. வரையறை னகரத்தின்மேற் செல்லும். மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம். (49) மொழிமரபு முற்றிற்று. 3 பிறப்பியல் எழுத்துக்களது பொதுப்பிறவி : நிலைக்களனும் முயற்சியும் ஆமாறு 83. உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான என்பது சூத்திரம். இவ்வோத்து எழுத்துக்களினது பிறப்பு உணர்த்துதலிற் ‘பிறப்பியல்’ என்னும் பெயர்த்தாயிற்று. சார்பின் தோற்றத்து எழுத்துந் தனிமெய்யும் மொழியினன்றி உணர்த்தலாகாமையின், அவை பிறக்கும் மொழியை மொழிமரபிடை உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின், நூன்மரபின் பின்னர் வையாது இதனை மொழிமரபின் பின்னர் வைத்தார். இச் சூத்திரம் எழுத்துக்களினது பொதுப்பிறவி இத்துணை நிலைக்களத்து நின்று புலப்படுமென்கின்றது. (இ-ள்.) எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங்காலை - தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் ஆசிரியன் கூறிய பிறப்பினது தோற்றரவை யாங் கூறுமிடத்து, உந்தி முதலாத் தோன்றி முந்துவளி - கொப்பூழடியாகத் தோன்றி முந்துகின்ற உதானனென்னுங் காற்று, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின் கண்ணும் நிலைபெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று - பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமுமென்ற ஐந்துடனே அக்காற்று, நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையொடு கூடிய உறுப்புக்களோடு ஒன்றுற்று, அமைய - இங்ஙனம் அமைதலானே, வேறு வேறு இயல - அவ்வெழுத்துக்களது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலையுடைய, காட்சியான நாடி நெறிப்பட - அதனை அறிவான் ஆராய்ந்து அவற்றின் வழியிலே மனம்பட, திறப்படத் தெரியும் - அப்பிறப்பு வேறுபாடுகளெல்லாங் கூறுபட விளங்கும் எ-று. சொல்லுங்காலை வளி நிலைபெற்று உறுப்புக்களுற்று இங்ஙனம் அமைதலானே அவை வழங்குதலையுடைய; அவற்றின் வழக்கம் அவற்றின் வழியிலே மனம்படத் தெரியுமெனக் கூட்டி உரைத்துக் கொள்க. இங்ஙனம் கூறவே, முயற்சியும் முயலுங் கருத்தாவும் உண்மை பெற்றாம். (1) உயிரெழுத்தினது பொதுப்பிறவி : நிலைக்களன் 84. அவ்வழிப் பன்னீ ருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். இஃது உயிரெழுத்திற்குப் பொதுப் பிறவி கூறுகின்றது. (இ-ள்.) பன்னீருயிருந் தந்நிலை திரியா - பன்னிரண்டு உயிருந் தத்தம் மாத்திரை திரியாவாய், அவ்வழிப் பிறந்த - அவ்வுந்தியிடத்துப் பிறந்த, மிடற்று வளியின் இசைக்கும் - மிடற்றின்கண் நிலைபெற்ற காற்றான் ஒலிக்கும் எ-று. எனவே, குற்றியலிகரமும் குற்றியலுகரமுந் தந்நிலை திரியு மென்றாராயிற்று. அவ்வெழுத்துக்களைக் கூறி உணர்க. (2) உயிரெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு 85. அவற்றுள் அஆ ஆயிரண் டங்காந் தியலும். இஃது அவ்வுயிர்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள், அ ஆ ஆயிரண்டு - அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும், அங்காந்து இயலும் - அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும் எ-று. முயற்சி உயிர்க்கிழவன் கண்ணது. அ ஆ என இவற்றின் வேறுபாடு உணர்க. (3) 86. இஈ எஏ ஐயென இசைக்கும் அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன அவைதாம் அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய. இதுவும் அது. (இ-ள்.) இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப்பாலைந்தும் - இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்றோரன்ன - அகர ஆகாரங்கள் போல அங்காந்து கூறும் முயற்சியான் பிறக்கும்; அவைதாம் அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய - அவைதாம் அங்ஙனம் பிறக்குமாயினும் அண்பல்லும் அடிநா விளிம்பும் உறப் பிறக்கும் வேறுபாடுடைய எ-று. அண்பல்: வினைத்தொகை. எனவே, நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமான பல்லென்று அதற்கொரு பெயராயிற்று. இ ஈ எ ஏ ஐ என இவற்றின் வேறுபாடு உணர்க. (4) 87. உஊ ஒஓ ஔஎன இசைக்கும் அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும். இதுவும் அது. (இ-ள்.) உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் அப்பாலைந்தும் - உ ஊ ஒ ஓ ஔ என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும் - இதழ் குவித்துக் கூறப் பிறக்கும் எ-று. உ, ஊ, ஒ, ஓ, ஔ என இவற்றின் வேறுபாடு உணர்க. (5) உயிர்க்கும் மெய்க்கும் சிங்கநோக்காகப் பொதுவிதி 88. தத்தம் திரிபே சிறிய என்ப. இது முற்கூறிய உயிர்க்கும் மேற்கூறும் மெய்க்கும் பொது விதி கூறிச் சிங்கநோக்காகக் கிடந்தது. (இ-ள்.) தத்தம் திரிபே சிறிய என்ப - உயிர்களும் மெய்களும் ஒவ்வொரு தானத்துட் பிறப்பனவற்றைக் கூட்டிக் கூறினேமாயினும் நுண் ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய தம்முடைய வேறுபாடுகள் சிறியவாக உடைய என்று கூறுவர் புலவர் எ-று. அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் என்றவாற்றானுந் தலைவளி நெஞ்சுவளி மிடற்றுவளி மூக்குவளி என்றவாற்றானும் பிறவாற் றானும் வேறுபடுமாறு நுண்ணுணர்வுடையோர் கூறி உணர்க. ஐ விலங்க லுடையது. வல்லினந் தலைவளியுடையது. மெல்லினம் மூக்குவளி யுடையது. இடையினம் மிடற்றுவளியுடையது. ஏனையவுங் கூறிக் கண்டு உணர்க. (6) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு ககார ஙகாரம் 89. ககார ஙகார முதல்நா அண்ணம். இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) ககார ஙகாரம் முதல் நா அண்ணம் - ககாரமும் ஙகாரமும் முதல்நாவும் முதல்அண்ணமும் உறப் பிறக்கும் எ-று. உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினுந் தனிமெய்யாக் கூறிக் காண்க. முதலை இரண்டற்குங் கூட்டுக. க ங என இவற்றின் வேறுபாடு உணர்க. (7) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு சகார ஞகாரம் 90. சகார ஞகாரம் இடைநா அண்ணம். இதுவும் அது. (இ-ள்.) சகார ஞகாரம் இடைநா அண்ணம் - சகாரமும் ஞகாரமும் இடைநாவும் இடையண்ணமும் உறப் பிறக்கும் எ-று. இடையை இரண்டற்குங் கூட்டுக. ச ஞ என இவற்றின் வேறுபாடு உணர்க. (8) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு டகார ணகாரம் 91. டகார ணகாரம் நுனிநா அண்ணம். இதுவும் அது. (இ-ள்.) டகார ணகாரமும் நுனி நா அண்ணம் - டகாரமும் ணகாரமும் நுனிநாவும் நுனியண்ணமும் உறப் பிறக்கும் எ-று. நுனியை இரண்டற்குங் கூட்டுக. ட ண என இவற்றின் வேறுபாடு உணர்க. (9) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு ஐயம் அகற்றுதல் 92. அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின. இது மேலனவற்றிற்கோர் ஐயம் அகற்றியது. (இ-ள்.) அவ்வாறெழுத்தும் மூவகைப் பிறப்பின - அக்கூறப்பட்ட ஆறெழுத்தும் மூவகையாகிய பிறப்பினை உடைய எ-று. எனவே, அவை ககாரம் முதல் நாவினும், ஙகாரம் முதல் அண்ணத் தினும் பிறக்குமென்று இவ்வாறே நிரனிறைவகையான் அறுவகைப் பிறப்பின அல்ல என்றார். (10) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு தகார நகாரம் 93. அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி கூறுகின்றது. (இ-ள்.) அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் - அண்ணத்தைச் சேர்ந்த பல்லினது அடியாகிய இடத்தே, நாநுனி பரந்து மெய்யுற ஒற்ற - நாவினது நுனி பரந்து சென்று தன் வடிவு மிகவும் உறும்படி சேர, தகார நகாரந் தாம் இனிது பிறக்கும் - தகார நகாரம் என்றவைதாம் இனிதாகப் பிறக்கும் எ-று. த ந என இவற்றின் வேறுபாடு உணர்க. முன்னர் ‘உறுப்புற்று அமைய’ என்று கூறி, ஈண்டு ‘மெய்யுற ஒற்ற’ என்றார், சிறிது ஒற்றவும் வருடவும் பிறப்பன உளவாகலின். (11) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு றஃகான் னஃகான் 94. அணரி நுனிநா அண்ணம் ஒற்ற றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இ-ள்: நுனி நா அணரி அண்ணம் ஒற்ற - நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தை அழுத்தித் தடவ, றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் - றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் எ-று. இது முதலாக நெடுங்கணக்கு முறையன்றி நாவதிகாரம் பற்றிக் கூறுகின்றார். ற ன என இவற்றின் வேறுபாடு உணர்க. (12) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு ரகார ழகாரம் 95. நுனிநா அணரி அண்ணம் வருட ரகார ழகாரமா யிரண்டும் பிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) நுனி நா அணரி அண்ணம் வருட - நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் எ-று. ர ழ என இவற்றின் வேறுபாடு உணர்க. (13) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு லகார ளகாரம் 96. நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) நா வீங்கி விளிம்பு அண்பல் முதலுற - நா மேனோக்கிச் சென்று தன் விளிம்பு அண்பல்லின் அடியிலே உறாநிற்க, ஆவயின் அண்ணம் ஒற்ற லகாரமாய் - அவ்விடத்து அவ்வண்ணத்தை அந்நா அழுத்தித் தீண்ட லகாரமாயும், ஆவயின் அண்ணம் வருட ளகாரமாய் - அவ்விடத்து அவ்வண்ணத்தை அந்நாத் தடவ ளகாரமாயும், இரண்டும் பிறக்கும் - இவ்விரண்டெழுத்தும் பிறக்கும் எ-று. ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க. இத்துணையும் நாவதிகாரம் கூறிற்று. (14) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு பகார மகாரம் 97. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். இதுவும் அது. (இ-ள்.) இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - மேலிதழுங் கீழிதழுங் தம்மிற் கூடப் பகாரமும் மகாரமும் பிறக்கும் எ-று. ப ம என இவற்றின் வேறுபாடு உணர்க. (15) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு வகாரம் 98. பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும். இது வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் - மேற்பல்லைக் கீழிதழ் கூட வகாரமானது பிறக்கும் எ-று. வ என வரும். இதற்கும் இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர் வைத்தார். (16) மெய்யெழுத்துக்களது சிறப்புப்பிறவி : முயற்சி வேறுபாடு யகாரம் 99. அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். இது யகாரம் பிறக்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை - உந்தியிலெழுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை, அண்ணங் கண்ணுற்று அடைய - அண்ணத்தை அணைந்து உரலாணி இட்டாற்போலச் செறிய, யகாரம் பிறக்கும் - யகார ஒற்றுப் பிறக்கும் எ-று. ஆணி - மரம். ய என வரும். (17) மெல்லெழுத்து மூக்கின் வளியான் இசைத்தல் 100. மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். இது மெல்லெழுத்திற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் - மெல்லெழுத்துக்கள் ஆறுந் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலைபெற்றன வாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும் - ஓசை கூறுங்கால் மூக்கின்கண் உளதாகிய வளியின் இசையான் யாப்புறத் தோன்றும் எ-று. அவை அங்ஙனமாதல் கூறிக்காண்க. ‘யாப்புற’ என்றதனான் இடையினத்திற்கு மிடற்றுவளியும் வல்லினத் திற்குத் தலைவளியுங் கொள்க. (18) சார்பின் தோற்றத்து மூன்றும் பிறக்குமாறு 101. சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம்மியல் பியலும். இது சார்பின் தோற்றங்கள் பிறக்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) சார்ந்துவரின் அல்லது - சில எழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது, தமக்கு இயல்பு இல என - தமக்கெனத் தோன்றுதற்கு ஓரியல்பிலவென்று, தேர்ந்து வெளிப்படுத்த தம்மியல்பு மூன்றும் - ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றனையுங் கூறுங்கால், தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி இயலும் - தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப்பிடத்தே பிறத்த லொடு பொருந்தி நடக்கும்; ஏனை ஒத்த காட்சியின் இயலும் - ஒழிந்த ஆய்தந் தனக்குப் பொருந்தின நெஞ்சுவளியாற் பிறக்கும் எ-று. ‘காட்சி’ என்றது நெஞ்சினை. எ-டு: கேண்மியா நாகு நுந்தை எனவும், எஃகு எனவும் வரும். ஆய்தத்திற்குச் சார்பிடங் ‘குறியதன் முன்னர்’ (எழுத். 38) என்பதனாற் கூறினார். இனி ஆய்தந் தலைவளியானும் மிடற்றுவளியானும் பிறக்கு மென்பாரும் உளர். ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்’ என்பதனான், அளபெடையும் உயிர்மெய்யுந் தம்மை ஆக்கிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்று உணர்க. (19) பொருள்படும் ஒலிக்கே மாத்திரை கூறல் 102. எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே. இஃது எழுத்துக்கள்தம் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) எல்லா எழுத்துங் கிளந்து வெளிப்பட - ஆசிரியன் எல்லா எழுத்துக்களும் பிறக்குமாறு முந்துநூற்கண்ணே கூறி வெளிப்படுக்கையி னானே, சொல்லிய பள்ளி பிறப்பொடு விடுவழி - யானும் அவ்வாறே கூறிய எண்வகை நிலத்தும் பிறக்கின்ற பிறப்போடே அவ்வெழுத்துக்களைக் கூறுமிடத்து, எழுதரு வளியின் உறழ்ச்சிவாரத்தின் அளபு கோடல் - யான் கூறியவாறு அன்றி உந்தியில் தோன்றுங் காற்றினது திரிதருங்கூற் றின்கண்ணே மாத்திரை கூறிக்கோடலும், அகத்து எழு வளியிசை அரில்தப நாடிக் கோடல் - மூலாதாரத்தில் எழுகின்ற காற்றினோசையைக் குற்றமற நாடிக்கோடலும், அந்தணர் மறைத்தே - பார்ப்பாரது வேதத்து உளவே; அந்நிலைமை ஆண்டு உணர்க; அஃது இவண் நுவலாது - அங்ஙனம் கோடலை ஈண்டுக் கூறலாகாமையின் இந்நூற்கட் கூறாதே, எழுந்து புறத்து இசைக்கும் - உந்தியிற்றோன்றிப் புறத்தே புலப்பட்டு ஒலிக்கும், மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே - பொருள்தெரியுங் காற்றினது துணிவிற்கே யான் மாத்திரை கூறினேன்; அவற்றினது மாத்திரையை உணர்க எ-று. இதனை இரண்டு சூத்திரமாக்கியும் உரைப்ப. இது ‘பிறன்கோட் கூறல்’ என்னும் உத்திக்கு இனம், என்னை? உந்தியில் எழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூறிக் கோடலும், மூலதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும், வேதத்திற்கு உளவென்று இவ்வாசிரியர் கூறி அம்மதம்பற்றி இவர் கொள்வதொரு பயன் இன்றென்ற லின். உந்தியில் எழுந்த காற்று முன்னர்த் தலைக்கட் சென்று, பின்னர் மிடற்றிலே வந்து, பின்னர் நெஞ்சிலே நிற்றலை ‘உறழ்ச்சிவாரத்து’ என்றார். ‘அகத் தெழுவளி’ யெனவே மூலாதார மென்பது பெற்றாம். இன்சாரியையை அத்துச்சாரியையொடும் கூட்டுக. ஏகாரந் தேற்றம். ‘மெய்தெரி வளி’யெனவே, பொருள் தெரியா முற்கும் வீளையும் முயற்சியானாமெனினும் பொருள் தெரியாமையின் அவை கடியப் பட்டன. எனவே, சொல்லப் பிறந்து சொற்கு உறுப்பாம் ஓசையை இவர் எழுத்தென்று வேண்டுவரென உணர்க. ‘நிலையும் வளியும் முயற்சியும் மூன்றும் இயல நடப்ப தெழுத்தெனப் படுமே’ என்றாராகலின். (20) பிறப்பியல் முற்றிற்று. 4 புணரியல் ஈறும் முதலும் மெய்யும் உயிரும் 103. மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃது அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும் எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீ ரியல என்பது சூத்திரம். மொழிமரபிற் கூறிய மொழிகளைப் பொதுவகையாற் புணர்க்கும் முறைமை உணர்த்தினமையிற் ‘புணரியல்’ என்பது இவ்வோத்திற்குப் பெயராயிற்று. ஈண்டு முறைமை யென்றது மேற்செய்கை யோத்துக்களுட் புணர்தற்கு உரியவாக ஈண்டுக் கூறிய கருவிகளை. இச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், மொழிமரபிற் கூறிய மொழிக்கு முதலா மெழுத்தும் மொழிக்கு ஈறாமெழுத்தும் இத்தனை யென்றலும், எல்லா மொழிக்கும் ஈறும் முதலும் மெய்யும் உயிருமல்லது இல்லையென்று வரையறுத்தலும், ஈறும் முதலுமாக எழுத்து நாற்பத்தாறு உளவோ என்று ஐயுற்றார்க்கு எழுத்து முப்பத்து மூன்றுமே அங்ஙனம் ஈறும் முதலுமாய் நிற்பவென்று ஐயமறுத்தலும் நுதலிற்று. (இ-ள்.) முதல் இரண்டு தலையிட்ட இருபஃது ஈறு அறு நான்காகும் மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தினொடு - மொழிக்கு முதலா மெழுத்து இரண்டை முடியிலே யிட்ட இருபஃதும் மொழிக்கு ஈறா மெழுத்து இருபத்து நான்குமாகின்ற மூன்றை முடியிலே யிட்ட முப்பதாகிய எழுத்துக்களோடே, நெறிநின்று இயலும் எல்லா மொழிக்கும் - வழக்குநெறிக்கணின்று நடக்கும் மூவகை மொழிக்கும், மெய்யே உயிரென்று ஆயீரியல இறுதியும் முதலும் - மெய்யும் உயிருமென்று கூறப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய எழுத்துக்களே ஈறும் முதலும் ஆவன எ-று. இருபத்திரண்டு முதலாவன: பன்னீருயிரும் ஒன்பது உயிர்மெய்யும் மொழிமுதற் குற்றியலுகரமுமாம். இருபத்துநான்கு ஈறாவன: பன்னீருயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக் குற்றியலுகரமுமாம். மெய்யை முற்கூறினார் நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா வென்றற்கு. எ-டு: மரம் என மெய்ம்முதலும் மெய்யீறும், இலை என உயிர்முதலும் உயிரீறும், ஆல் என உயிர்முதலும் மெய்யீறும், விள என மெய்முதலும் உயிரீறுமாம். மொழியாக்கம், இயல்பும் விகாரமுமென இரண்டாம். உயிர் தாமே நின்று முதலும் ஈறுமாதல் இயல்பு. அவை மெய்யொடு கூடி நின்று அங்ஙனமாதல் விகாரம். (1) மொழிக்கு ஈறாம் மெய் புள்ளிபெற்று நிற்றல் 104. அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல். இது முற்கூறியவாற்றான் தனிமெய் முதலாவான் சென்றதனை விலக்கலின் எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய மெய்யும் உயிருமென்ற இரண்டனுள், மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல் - மெய் மொழிக்கு ஈறாயவை யெல்லாம் புள்ளி பெற்று நிற்கும் எ-று. எனவே, மொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளியிழந்து உயிரேறி நிற்கு மென்றாராயிற்று. இன்னும் ஈற்றுமெய் புள்ளிபெற்று நிற்கு மென்றதனானே, உயிர்முதல் மொழி தம்மேல் வந்தால் அவை உயிரேற இடங்கொடுத்து நிற்கு மென்பதூஉங் கூறினாராயிற்று. இவ்விதி முற்கூறியதன்றோ எனின், ஆண்டுத் தனி மெய் பதினெட்டும் புள்ளி பெற்று நிற்குமென்றும், அவைதாம் உயிரேறுங்காற் புள்ளி யிழந்து நிற்குமென்றுங் கூறினார்; ஈண்டு மெய்முதல் மெய்யீறெனப் பொருளுரைக்க வேண்டினமையின் மொழிமுதன் மெய்களும் புள்ளி பெறுமோ வென்று ஐயுற்ற ஐயம் அகற்றக் கூறினாரென்று உணர்க. மரம் என மெய்யீறு புள்ளி பெற்று நின்றது, அரிது என வந்துழி, மரமரிது என்று உயிர் ஏறி முடிந்தவாறு காண்க. (2) ஈற்றுக் குற்றுகரமும் மெய்போல உயிரேற இடங்கொடுக்கும் எனல் 105. குற்றிய லுகரமும் அற்றென மொழிப. இது முன்னர்ப் ‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது’ (எழுத். 138) என்று மெய்க்கு எய்துவிக்கின்ற கருவியை எதிரது போற்றி, உயிர்க்கும் எய்துவிக்கின்ற கருவிச் சூத்திரம். (இ-ள்.) குற்றியலுகரமும் அற்றென மொழிப - ஈற்றுக் குற்றிய லுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்குமென்று கூறுவர் புலவர் எ-று. இம்மாட்டேறு ஒருபுடைச் சேறல், புள்ளி பெறாமையின். அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரங் கெட்டுப்போக நின்ற ஒற்றின்மேல் உயிரேறிற்றென்று கொள்ளற்க. நாகரிது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடி நின்றல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின், இஃது உயிரொடுங் கூடி நிற்குமென்றார். (3) உயிர்மெய் ஈறு உயிரீறாயே அடங்கும் எனல் 106. உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே. இது ‘மெய்யே யுயிரென் றாயீ ரியல’ (எழுத். 103) என்ற உயிர்க்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றியது; உயிர்மெய் யென்பதோர் ஈறு உண்டேனும் அது புணர்க்கப்படாது, அதுவும் உயிராயே அடங்கு மென்றலின். (இ-ள்.) உயிர் மெய்யீறும் - உயிர்மெய் மொழியினது ஈற்றின்கண் நின்றதும், உயிரீற்றியற்றே - உயிரீற்றின் இயல்பை யுடைத்து எ-று. உம்மையான் இடைநின்ற உயிர்மெய்யும் உயிர் இயல்பையுடைத்து என்றாராயிற்று. உம்மை எச்சவும்மை. ஈற்றினும் இடையினும் நின்றன உயிருள் அடங்குமெனவே முதல் நின்றன மெய்யுள் அடங்கு மென்றார். இதனானே மேல் விள என்றாற்போலும் உயிர்மெய்களெல்லாம் அகர ஈறென்று புணர்க்குமாறு உணர்க. வரகு: இதனை மேல் உயிர்த்தொடர் மொழி யென்ப. முன்னர் ‘மெய்யின் வழியது’ (எழுத். 18) என்றது ஓரெழுத்திற் கென்று உணர்க. இத்துணையும் மொழிமரபின் ஒழிபு கூறிற்று. (4) நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் 107. உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று இவ்வென அறியக் கிளக்குங் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டே. இது மேற்கூறும் புணர்ச்சிகளெல்லாம் இருமொழிப் புணர்ச்சி யல்லது இல்லை என்பதூஉம், அஃது எழுத்துவகையான் நான்காமென்ப தூஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) உயிரிறு சொல்முன் உயிர் வருவழியும் - உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் உயிர் முதலாகிய மொழிவரும் இடமும், உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் - உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய் முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் - மெய் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் உயிர் முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும் - மெய் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய்முதலாகிய மொழி வரும் இடமும், என்று புணர்நிலைச் சுட்டு - என்று சொல்லப்பட்ட ஒன்றனோடொன்று கூடும் நிலைமையாகிய கருத்தின்கண், இவ்வென அறியக் கிளக்குங் காலை - அவற்றை இத்தனை யென வரையறையை எல்லாரும் அறிய யாங் கூறுங் காலத்து, நிறுத்த சொல்லே குறித்துவருகிளவி யென்று ஆயீரியல - முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லும் அதனை முடித்தலைக் குறித்து வருஞ் சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய எ-று. எனவே, நான்கு வகையானுங் கூடுங்கால் இருமொழிக்கண் அல்லது புணர்ச்சியின்று என்றாராயிற்று. எ-டு: ஆவுண்டு, ஆவலிது, ஆலிலை, ஆல்வீழ்ந்தது என முறையே காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழிச் சாரியையும் உருபும் நிலை மொழியாயே நிற்குமென்பது நோக்கி அதனை நிறுத்த சொல்லென்றும், முடிக்குஞ் சொல்லைக் குறித்துவருகிளவி யென்றும் கூறினார். இதனானே நிலைமொழியும் வருமொழியுங் கூறினார். முன்னர் ‘மெய்யே உயிர்’ (எழுத். 103) என்றது ஒருமொழிக்கு; இஃது இருமொழிக்கென்று உணர்க. (5) மொழிபுணர் இயல் : திரிபு மூன்றும் இயல்பு ஒன்றும் 108. அவற்றுள் நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே. இது முன்னர் எழுத்து வகையான் நான்கு புணர்ச்சி எய்திய இருவகைச் சொல்லுஞ் சொல்வகையானும் நான்காகு மென்பதூஉம், அங்ஙனம் புணர்வது சொல்லுஞ் சொல்லும் இன்றி, எழுத்தும் எழுத்தும் என்பதூஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) அவற்றுள் - நிலைமொழி வருமொழி யென்றவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத்து இயைய - முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லினது ஈறாகின்ற எழுத்தோடு அதனை முடிக்கக் கருதி வருகின்ற சொல்லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரைப் புணர்க்குங்காலும் - பெயர்ச்சொல்லொடு பெயர்ச் சொல்லைக் கூட்டும் இடத்தும், பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் - பெயர்ச்சொல்லொடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு பெயரைப் புணர்க்குங்காலும் - தொழிற் சொல்லொடு பெயர்ச்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு தொழிலைப் புணர்க்குங்காலும் - தொழிற் சொல்லொடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பென ஆங்கு அந்நான்கே - திரியும் இடம் மூன்று இயல்பு ஒன்று என்று முந்துநூலிற் கூறிய அந் நான்கு இலக்கணமுமே, மொழி புணர் இயல்பு - ஈண்டு மொழிகள் தம்முட் கூடும் இலக்கணம் எ-று. எ-டு: சாத்தன்கை, சாத்தனுண்டான், வந்தான் சாத்தன், வந்தான் போயினான் சாத்தன் என முறையே காண்க. இவை நான்கு இலக்கணத்தொடுங் கூடப் பதினாறாம். இடையும் உரியுந் தாமாக நில்லாமையிற் பெயர்வினையே கூறினார், இடைச் சொல்லும் உரிச்சொல்லும் புணர்க்குஞ் செய்கைப் பட்டுழிப் புணர்ப்புச் சிறுபான்மை. பெயர்ப்பெயரும் ஒட்டுப் பெயருமென இரண்டு வகைப் படும் பெயர். தெரிநிலைவினையுங் குறிப்புவினையுமென இரண்டு வகைப்படும் தொழில். நிலைமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப் பிறந்து கெட்டுப்போக வருமொழியின் முதலெழுத்துப் பின்பிறந்து கெட்டமையான் முறையே பிறந்து கெடுவன ஒருங்கு நின்று புணருமாறின்மையின் புணர்ச்சியென்பது ஒன்றின்றாம் பிறவெனின், அச்சொற்களைக் கூறுகின்றோருங் கேட்கின் றோரும் அவ்வோசையை இடையறவுபடாமை உள்ளத்தின் கண்ணே உணர்வராதலின் அவ்வோசை கேடின்றி உள்ளத்தின்கண் நிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவே, பின்னர்க் கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயாமென்று உணர்க. இனி, முயற்கோடு உண்டென்றால் அது குறித்து வருகிளவியன்மை யின் புணர்க்கப்படாது. அதுதான் இன்றென்றாற் புணர்க்கப்படுமென்று உணர்க. (6) மூன்று திரிபும் ஆமாறு 109. அவைதாம் மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்(று) இவ்வென மொழிப திரியு மாறே. இது முற்கூறிய மூன்று திரிபும் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவைதாந் திரியுமாறு - முன்னர்த் திரிபென்று கூறிய அவைதாந் திரிந்து புணரும் நெறியை, மெய் பிறிதாதல் மிகுதல் குன்ற லென்று இவ்வென மொழிப - மெய் வேறுபடுதல் மிகுதல் குன்றலென்று கூறப்படும் இம்மூன்று கூற்றையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் எ-று. இம்மூன்றும் அல்லாதது இயல்பாமென்று உணர்க. இவை விகற்பிக்கப் பதினாறு உதாரணமாம். மட்குடம், மலைத்தலை, மரவேர் இவை பெயரொடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு. மண்மலை என்பது இயல்பு. சொற்கேட்டான், பலாக்குறைத்தான், மரநட்டான் இவை பெயரொடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. கொற்றன் வந்தான்: இஃது இயல்பு. வந்தானாற் சாத்தன், கொடாப்பொருள், ஓடுநாகம் இவை தொழிலொடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு. வந்தான் சாத்தான்: இஃது இயல்பு. வந்தாற்கொள்ளும், பாடப்போயினான், சாஞான்றான் இவை தொழிலொடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. வந்தான் கொண்டான், இஃது இயல்பு. ‘மூன்று திரிபு’ என்னாது ‘இடன்’ என்றதனான் ஒரு புணர்ச்சிக்கண் மூன்றும் ஒருங்கேயும் வரப்பெறு மென்று உணர்க. மகத்தாற் கொண்டான்: இஃது அங்ஙனம் வந்தவாறு மகர ஈற்று ‘நாட்பெயர்க்கிளவி’ (எழுத். 331) என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. இரண்டு வருவனவுங் காண்க. (7) நிலைவருமொழிகள் அடையடுத்தும் நிகழ்தல் 110. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. இது நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் அவ்விருமொழியும் அடையடுத்தும் புணருமென எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) நிறுத்தசொல்லுங் குறித்துவருகிளவியும் - நிலை மொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்துவருஞ் சொல்லும், அடையொடு தோன்றினும் புணர்நிலைக்கு உரிய - தாமே புணராது ஒரோவொரு சொல் அடையடுத்து வரினும் இரண்டும் அடையடுத்து வரினும் புணர் நிலைமைக்கு உரிய எ-று. அடையாவன, உம்மைத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத் தொகையுமாம். எ-டு: பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது, பதினாயிரத் திருபஃது என வரும். இவ்வடைகள் ஒரு சொல்லேயாம். வேற்றுமைத்தொகையும் உவமத் தொகையும் பிளந்து முடியப் பண்புத்தொகையும் வினைத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒரு சொல்லேயாம். அன்மொழித்தொகையுந் தனக்கு வேறொரு முடிபின்மையின் ஒரு சொல்லேயாம். இத்தொகைச் சொற்களெல்லாம் அடையாய் வருங்காலத்து ஒருசொல்லாய் வருமென்று உணர்க. உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் ஒரு சொல்லேயாம். (8) மரூஉச்சொற்களும் புணர்ச்சி பெறுதல், பொருளியைபு இல்லவும் நிலைவருமொழியாதல் 111. மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே. இது மரூஉச் சொற்களும் புணர்ச்சிபெறு மென்பதூஉம், நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய்ப் பொருளியைபில்லனவும் புணர்ச்சி பெற்றாற்போல நிற்குமென்பதூஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) மரு மொழியும் - இருவகையாகி மருவிய சொற்களும், இன்தொகுதி மயங்கியன் மொழியும் - செவிக்கினிதாகச் சொற்றிரளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் ஒட்டினாற்போல நின்று பொருளுணர்த்தாது பிரிந்து பின்னர்ச் சென்று ஒட்டிப் பொருளுணர்த்த மயங்குதல் இயன்ற சொற்களும், புணர்நிலைச் சுட்டு உரியவை உள - புணரும் நிலைமைக் கருத்தின்கண் உரியன உள எ-று. ‘மொழியும்’ என்பதனை ‘மரு’ என்பதனோடுங் கூட்டுக. ‘இன் தொகுதி’ என்றார், பாவென்னும் உறுப்பு நிகழப் பொருளொட்டாமற் சான்றோர் சொற்களைச் சேர்த்தலின். எ-டு: முன்றில், மீகண் இவை இலக்கணத்தொடு பொருந்திய மரு. இலக்கணம் அல்லா மரு ‘வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்’ (எழுத். 483) என்புழிக் காட்டுதும். இனி, ‘இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரல்அவல் அடைய இரலை தெறிப்ப’ (அகம். 4) என்புழி மருப்பினிரலை யென்று ஒட்டி இரண்டாவதன் தொகையாய்ப் பொருள் தந்து ‘புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது’ (எழுத். 138) என்று உயிரேறி முடிந்து மயங்கிநின்றது. ஆயின் மருப்பிற்பர லென்று மெய் பிறிதாய் ஒட்டி நின்றவா றென்னை யெனின், மருப்பினை யுடைய பரலென வேற்றுமைத்தொகைப் பொருள் உணர்த்தாமையின், அஃது அச்செய்யுட்கு இன்னோசை நிகழ்தற்குப் பகரத்தின் முன்னர் நின்ற னகரம் றகரமாய்த் திரிந்து நின்ற துணையேயாய்ப் புணர்ச்சிப் பயனின்றி நின்றது. இங்ஙனம் புணர்ச்சி யெய்தினாற்போல, மாட்டிலக்கணத்தின் கண்ணும் மொழி மாற்றின்கண்ணும் நிற்றல் சொற்கு இயல்பென்றற்கு அன்றே ஆசிரியர் ‘இன்தொகுதி’ யென்றதென்று உணர்க. ‘கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினை’ (அகம். 3) என்புழி ஓமைச்சினை யென்று ஒட்டி ஓமையினது சினை யெனப் பொருள் தருகின்றது, இன்னோசை தருதற்குக் ககரவொற்று மிக்குக் காண்பின் என்பதனோடும் ஒட்டினாற்போல நின்றது. ‘தெய்வ மால்வரைத் திருமுனி யருளால்’ (சிலப். 3 : 1) என்புழித் தெய்வ வரை யென்று ஒட்டித் தெய்வத் தன்மையுடைய வரையெனப் பொருள் தருகின்றது, இன்னோசை தருதற்கு மாலென்பதனோடும் ஒட்டினாற் போலக் குறைந்து நின்றது. மூன்று திரிபும் வந்தவாறு காண்க. இனி எச்சத்தின்கண்ணும், ‘பொன்னோடைப் புகரணிநுதல் துன்னருந்திறல் கமழ்கடாஅத் தெயிறுபடையாக எயிற்கதவிடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கை யானைஇரும் பிடர்த்தலை யிருந்து மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயா’ (புறம். 3) என மாட்டாய் ஒட்டிநின்றது, கயிறு பிணிக்கொண்ட என்பதனோடும் ஒட்டினாற்போல நின்று ஒற்றடுத்தது, இன்னோசை பெறுதற்கு. பிற சான்றோர் செய்யுட்கண் இவ்வாறும் பிறவாறும் புணர்ச்சியில்வழிப் புணர்ச்சி பெற்றாற்போல நிற்பன எல்லாவற்றிற்கும் இதுவே ஒத்தாகக் கொள்க. (9) மிக்குப் புணரும் புணர்ச்சியின் இருவகை 112. வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காலை. இது மூவகைத் திரிபினுள் மிக்குப்புணரும் புணர்ச்சி இருவகைய என்கின்றது. (இ-ள்.) புணருங்காலை - நால்வகைப் புணர்ச்சியுள் மிக்க புணர்ச்சி புணருங் காலத்து, வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் - வேற்றுமைப் பொருண்மையினைக் குறித்த புணர்மொழியினது தன்மை யும், வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும் - வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புணரும் மொழியினது தன்மையும், எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய - எழுத்து மிகுதலுஞ் சாரியை மிகுதலு மாகிய அவ்விரண்டு குணத்தினானுஞ் செல்லுதலைத் தமக்கு வலியாக வுடைய எ-று. எனவே, ஏனைப் புணர்ச்சிகளுக்கு இத்துணை வேறுபாடு இன்றென உணர்க. எ-டு: விளங்கோடு: இஃது எழுத்துப் பெற்றது. மகவின்கை: இது சாரியை பெற்றது. இனி அல்வழிக்கண் விளக்குறிது: இஃது எழுத்துப் பெற்றது. பனையின்குறை: இது சாரியை பெற்றது. இதற்குப் பனையும் குறைந்ததும் என்பது பொருளாம். இஃது அளவுப்பெயர். ‘ஒழுக்கல் வலிய’ என்றதனான், இக்கூறிய இரண்டும் எழுத்துஞ் சாரியையும் உடன் பெறுதலுங் கொள்க. அவற்றுக்கோடென்பது வேற்றுமைக்கண் இரண்டும் பெற்றது. கலத்துக்குறையென்பது அல் வழிக்கண் இரண்டும் பெற்றது. இதற்குக் கலமுங் குறைந்ததும் என்பது பொருளாம். இயல்பு கணத்துக்கண் இவ்விரண்டும் உடன்பெறுதலின்று. அல்வழி முற்கூறாதது வேற்றுமை யல்லாதது அல்வழி யென வேண்டுதலின். எழுத்துப்பேறு யாப்புடைமையானும் எழுத்தினாற் சாரியை யாதலானும் எழுத்து முற்கூறினார். வேற்றுமை மேலைச் சூத்திரத்தே கூறுகின்றார். அல்வழியாவன, அவ்வுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாது புணர்வன. அவை எழுவாய்வேற்றுமை ஆறு பயனிலையொடும் புணர்ந்த புணர்ச்சியும், விளிவேற்றுமை தன் பொருளொடு புணர்ந்த புணர்ச்சியும், முற்று பெயரொடும் வினையொடும் புணர்ந்த புணர்ச்சியும், பெயரெச்ச மும் வினையெச்சமும் பெயரொடும் வினையொடும் புணர்ந்த புணர்ச்சி யும், உவமத்தொகையும், உம்மைத்தொகையும், இருபெயரொட்டுப் பண்புத்தொகையும், இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரொடும் வினையொடும் புணர்ந்த புணர்ச்சியும், அன்மொழித்தொகை பொரு ளொடு புணர்ந்த புணர்ச்சியும், பண்புத்தொகையும் வினைத்தொகையும் விரிந்து நின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியுமென உணர்க. (10) வேற்றுமையுருபின் பெயரும் முறையும் தொகையும் 113. ஐஒடு குஇன் அதுகண் என்னும் அவ்வா றென்ப வேற்றுமை யுருபே. இது மேல் வேற்றுமை யெனப்பட்ட அவற்றின் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. (இ-ள்.) வேற்றுமையுருபு - முற்கூறிய வேற்றுமைச் சொற்களை, ஐ ஒடு கு இன் அது கண் என்னும் அவ்வாறென்ப - ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும் அவ்வாறு உருபுமென்று சொல்வர் ஆசிரியர் எ-று. மேற் சொல்லதிகாரத்து எழுவாயையும் விளியையும் கூட்டி வேற்றுமை எட்டென்பாராலெனின், ஐ முதலிய வேற்றுமை யாறுந் தொக்கும் விரிந்தும் பெரும்பான்மையும் புலப்பட்டு நின்று பெயர்ப் பொருளைச் செயப்படுபொருள் முதலியனவாக வேறுபாடு செய்து புணர்ச்சி யெய்துவிக்கு மென்றற்கு ஈண்டு ‘ஆறு’ என்றார். ஆண்டு எழுவாயும் விளியுஞ் செயப்படுபொருள் முதலியவற்றினின்று தம்மை வேறுபடுத்துப் பொருள் மாத்திரம் உணர்த்திநின்றும் விளியாய் எதிர்முக மாக்கி நின்றும் இங்ஙனஞ் சிறுபான்மையாய்ப் புலப்பட நில்லா வேறுபாடு உடையவேனும், அவையும் ஒருவாற்றான் வேற்றுமையாயின வென்றற்கு ஆண்டு ‘எட்டு’ என்றாரென உணர்க. (11) ஒற்று இடைமிக்குப் புணரும் வேற்றுமையுருபுகள் 114. வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்(கு) ஒல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும். இது நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிய தொரு கருவி கூறுகின்றது. (இ-ள்.) வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு வல்லெழுத்து அடியாய் நின்ற நான்காவதற்கும் ஏழாவதற்கும், ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் - பொருந்தியவழி வல்லொற்றாயினும் மெல்லொற்றாயி னும் இடைக்கண் மிக்குப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் எ-று. வரையாது ஒற்றெனவே, வல்லொற்றும் மெல்லொற்றும் பெற்றாம். எ-டு: மணிக்கு மணிக்கண், தீக்கு தீக்கண், மனைக்கு மனைக்கண் எனவும், வேய்க்கு வேய்க்கண், ஊர்க்கு ஊர்க்கண், பூழ்க்கு பூழ்க்கண் எனவும், உயிரீறு மூன்றினும் புள்ளியீறு மூன்றினும் பெரும்பான்மை வல்லொற்று மிக்கு வரும். தங்கண் நங்கண் நுங்கண் எங்கண் என மெல்லொற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழி மகரக் கேடு உருபியலிற் கூறுப. ஆங்கண் ஈங்கண் ஊங்கண் என்பன சுட்டெழுத்து நீண்டு நின்றன. இவற்றிற்கு ஒற்றுக்கேடு கூறுதற்கு ஒற்றின்று. இனி, நான்கனுருபிற்கு மெல்லொற்று மிகாதென்று உணர்க. இனி, ‘ஒல்வழி’ என்பதனான் ஏழாமுருபின்கண் நம்பிகண் என இகர ஈற்றின்கண்ணும், நங்கைகண் என ஐகார ஈற்றின்கண்ணும், தாய்கண் என யகர ஈற்றின்கண்ணும், அரசர்கண் என ரகர ஈற்றின்கண்ணும், ஒற்று மிகாமை கொள்க. இனி, மெய்பிறிதாதலை முன்னே கூறாது மிகுதலை முற்கூறிய அதனானே, பொற்கு பொற்கண், வேற்கு வேற்கண், வாட்கு வாட்கண் எனத் திரிந்து முடிவனவுங் கொள்க. இதனானே, அவன்கண் அவள்கண் என உயர்திணைப் பெயர்க்கண் ஏழனுருபு இயல்பாய் வருதலுங் கொள்க. இவற்றிற்குக் குன்றிய புணர்ச்சி வருமேனுங் கொள்க. கொற்றிக்கு கொற்றிகண், கோதைக்கு கோதைகண் என விரவுப்பெயர்க்கும் இதனானே கொள்க. (12) ஆறனுருபின் அகரம் கெடுமிடன் 115. ஆறன் உருபின் அகரக் கிளவி ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும். இஃது ஆறாவதற்குத் தொகைமரபை நோக்கியதொரு கருவி கூறுகின்றது. (இ-ள்.) ஆறனுருபின் அகரக்கிளவி - அதுவென்னும் ஆறனுரு பின்கண் நின்ற அகரமாகிய எழுத்து, ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும் - நெடுமுதல் குறுகும் மொழிகட்கு ‘ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்’ (எழுத். 161) என விதித்ததனான் உளதாகிய அகரத்தின் முன்னர்த் தான் கெடுதலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: தமது, நமது, எமது, நுமது, தனது, எனது, நினது எனவரும். இது நிலைமொழிக்கு ஓர் அகரம் பெறுமென விதியாது உருபு அகரம் ஏறி முடியுமென விதித்தால் வருங் குற்றம் உண்டோ வெனின், ‘நினவ கூறுவ லெனவ கேண்மதி’ (புறம். 35) என்றாற்போல ஆறாவதற்கு உரிய அகர உருபின் முன்னரும் ஓர் அகர எழுத்துப்பேறு நிலை மொழிக்கண் வருதலுளதாகக் கருதினாராதலின், ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் பொதுவாக நிலைமொழிக்கண் அகரப்பேறு விதித்து, அதுவென்னும், ஒருமையுருபு வந்தால் ஆண்டுப் பெற்று நின்ற அகரத்தின் முன்னர் அது வென்பதன்கண் அகரங் கெடுக வென்று ஈண்டுக் கூறினா ராதலின் அதற்குக் குற்றம் உண்டென்று உணர்க. (13) பெயரின்பின் வேற்றுமை நிற்றல் 116. வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. இது வேற்றுமை பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமை பெயர்வழிய - வேற்றுமைகள் பெயரின் பின்னிடத்தனவாம், புணர்நிலை - அவற்றொடு புணரும் நிலைமைக்கண் எ-று. எ-டு: சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் என வரும். மற்று இது ‘கூறியமுறையின்’ (சொல். 69) என்னும் வேற்றுமை யோத்திற் சூத்திரத்தாற் பெறுதுமெனின், பெயரொடு பெயரைப் புணர்த்தல் முதலிய நால்வகைப் புணர்ச்சியினையும் வேற்றுமை அல்வழி என இரண்டாக அடக்குதலின், தொழிற்பின்னும் உருபு வருமென எய்தியதனை விலக்குதற்கு ஈண்டுக் கூறினாரென்க. ஆயின் இவ்விலக்குதல் வினையியல் முதற் சூத்திரத்தாற் பெறுதுமெனின், அது முதனிலையைக் கூறிற்றென்பது ஆண்டு உணர்க. (14) பெயர்நிலைச்சுட்டு இரண்டு எனல் 117. உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்(று) ஆயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. இது முற்கூறிய பெயர்கட்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு நிலைப்பெயர் - பொருளை ஒருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்களை, உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று ஆயிரண்டென்ப - உயர்திணைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும், அஃறிணைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் என்னும் அவ்விரண்டென்று கூறுவர் ஆசிரியர் எ-று. பெயரியலுள், அவன் இவன் உவன் என்பன முதலாக உயர்திணைப் பெயரும், அது இது உது என்பன முதலாக அஃறிணைப் பெயரும் ஆமாறு அவற்றிற்கு இலக்கணங் கூறுகின்றார், ஈண்டுக் குறியிட்டாளுதல் மாத்திரையே கூறினாரென்று உணர்க. இனிக் கொற்றன் கொற்றி என்றாற்போலும் விரவுப் பெயருங், கொற்றன்குறியன் கொற்றிகுறியள் கொற்றன் குளம்பு கொற்றி குறிது எனப் பின்வருவனவற்றான் திணைதெரிதலின், இருதிணைப் பெயரின்கண் அடங்கும். கொற்றன்செவி கொற்றிசெவி என்பனவும் பின்னர் வருகின்ற வினைகளான் திணை விளங்கி அடங்குமாறு உணர்க. இனி, ‘அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே’ (எழுத். 155) என்றாற் போலப் பிறாண்டும் ஓதுதல்பற்றி ‘நிலை’ என்றதனான், விரவுப் பெயர் கோடலும் ஒன்று. (15) அவற்றின்பின் சாரியை வருமாறு 118. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. இது சாரியை வரும் இடங் கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுவழி மருங்கின் - அச்சொல்லப்பட்ட இரு வகைப் பெயர்களின் பின்னாகிய இடத்தே, சாரியை வரும் - சாரியைச் சொற்கள் வரும் எ-று. எ-டு: ஆடூஉவின்கை, மகடூஉவின்கை, பலவற்றுக்கோடு எனப் புணரியனிலையிடைப் பொருணிலைக்கு உதவாது வந்தன. சாரியை என்றதன் பொருள், வேறாகி நின்ற இருமொழியுந் தம்மிற் சார்தற் பொருட்டு இயைந்து நின்றது என்றவாறு. (16) சாரியைகளின் பெயரும் முறையும் 119. அவைதாம் இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன்னென் கிளவி உளப்படப் பிறவும் அன்ன என்ப சாரியை மொழியே. இஃது அச்சாரியைகட்குப் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. (இ-ள்.) அவைதாம் - முன்னர்ச் சாரியை யெனப்பட்ட அவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன்னென் கிளவி உளப்பட அன்ன என்ப - இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன்னென்னுஞ் சொல்லொடு கூட ஒன்பதாகிய அத்தன்மையுடையனவும், பிறவுஞ் சாரியை மொழி என்ப - அவை யொழிந்தனவுஞ் சாரியைச் சொல்லாமென்பர் ஆசிரியர் எ-று. பிறவாவன: தம், நம், நும், உம், ஞான்று, கெழு, ஏ, ஐ என்பனவாம். இவற்றுள் ஞான்று ஒழிந்தன எடுத்தோதுவர் ஆசிரியர். ‘எடுத்த நறவின் குலையலங் காந்தள்’ (கலி. 40) இது வினைத்தொகை; சாரியை அன்று. ‘இன்’ சாரியை வழக்குப்பயிற்சியும் பலகால் எடுத்தோதப்படுதலும் பொதுவகையான் ஓதியவழித் தானே சேறலுமாகிய சிறப்பு நோக்கி முன் வைத்தார். ‘வற்றும்’ ‘அத்தும்’ இன் போல முதல் திரியுமாகலானுஞ் செய்கை யொப்புமையானும் அதன் பின் வைத்தார். ‘அம்’ ஈறு திரியு மாதலின் திரிபு பற்றி அதன்பின் வைத்தார். ‘ஒன்’ ஈறு திரியுமேனும் வழக்குப்பயிற்சி யின்றி நான்கா முருபின்கண் திரிதலின் அதன்பின் வைத்தார். ‘ஆன்’ பொருட் புணர்ச்சிக்கும் உருபு புணர்ச்சிக்கும் வரு மென்று அதன் பின் வைத்தார். ‘அக்கு’ ஈறு திரியுமேனும் உருபு புணர்ச்சிக் கண் வாராமையின் அதன்பின் வைத்தார். ‘இக்கு’ முதல் திரியுமேனுஞ் சிறுபான்மைபற்றி அதன்பின் வைத்தார். ‘அன்’ இன் போலச் சிறத்தலிற் பின் வைத்தார். ஆனுருபிற்கும் ஆன்சாரியைக்கும், இன்னுருபிற்கும் இன்சாரியைக் கும் வேற்றுமை யாதெனின், அவை சாரியையான இடத்து யாதானும் ஓர் உருபேற்று முடியும்; உருபாயின இடத்து வேறோர் உருபினை ஏலாவென்று உணர்க. இனி மகத்துக்கை என்புழித் தகரவொற்றுந் தகர வுகரமும் வரு மென்று கோடுமெனின், இருளத்துக் கொண்டானென்றால் அத்து எனவே வேண்டுதலின் ஆண்டும் அத்துநின்றே கெட்டதென்று கோடும். அக்கு இக்கு என்பனவும் பிரித்துக் கூட்டக் கிடக்கும். தாழக்கோலென அக்குப் பெற்று நிற்றலானும், ஆடிக்கு என்புழிக் குகரம் நான்கனுருபாகாமை யானும் இவை சாரியை யாமாறு உணர்க. (17) இன்சாரியை முதல் கெட்டு முடியும் இடன் 120. அவற்றுள் இன்னின் இகரம் ஆவின் இறுதி முன்னர்க் கெடுதல் உரித்து மாகும். இது முற்கூறியவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய சாரியைகளுள், இன்னின் இகரம்-இன்சாரியையது இகரம், ஆவின் இறுதி முன்னர் - ஆ என்னும் ஓரெழுத் தொருமொழி முன்னர், கெடுதல் உரித்துமாகும்-கெட்டு முடியவும் பெறும் எ-று. ‘உரித்துமாகும்’ என்றதனாற் கெடாது முடியவும் பெறும் என்றவாறு. இஃது ஒப்பக்கூறல் என்னும் உத்தி. எ-டு: ஆனை ஆவினை, ஆனொடு ஆவினொடு, ஆற்கு ஆவிற்கு, ஆனின் ஆவினின், ஆனது ஆவினது, ஆன்கண் ஆவின்கண் என வரும். இனி, ‘முன்னர்’ என்றதனானே, மாவிற்கும் இவ்வாறே கொள்க. மானை மாவினை, மானொடு மாவினொடு, மாற்கு மாவிற்கு என ஒட்டுக. இனி, ஆன்கோடு ஆவின்கோடு, மான்கோடு மாவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழியுங் கொள்க. (18) அச்சாரியை ஈறு திரியுமிடன் 121. அளவாகும் மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. இஃது அவ் வின் சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அளவாகும் மொழி - அளவுப் பெயராய்ப் பின்னிற்கும் மொழிக்கு, முதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் - முன்னர் நின்ற எண்ணுப் பெயர்களின் ஈற்று நின்ற குற்றுகரத்தின்மேல் வந்த இன்சாரியையது னகரம், றஃகானாகிய நிலைத்து - றகரமாய்த் திரியும் நிலைமையை யுடைத்து எ-று. எ-டு: பதிற்றகல், பதிற்றுழக்கு என வரும். இவற்றைப் பத்தென நிறுத்தி ‘நிறையுமளவும்’ (எழுத். 436) என்னுஞ் சூத்திரத்தான் இன்சாரியை கொடுத்துக், ‘குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே’ (எழுத். 433) என்றதனாற் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து, வேண்டுஞ் செய்கை செய்து ‘முற்றவின் வரூஉம்’ (எழுத். 433) என்பதனான் ஒற்றிரட்டித்து முடிக்க. ‘நிலைஇய’ என்றதனாற், பிறவழியும் இன்னின் னகரம் றகர மாதல் கொள்க. பதிற்றெழுத்து, பதிற்றடுக்கு, ஒன்பதிற்றெழுத்து, பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றொன்பது என எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்க. அச்சூத்திரத்திற் ‘குறையாதாகும்’ (எழுத். 436) என்றதனாற் பொருட் பெயர்க்கும் எண்ணுப் பெயர்க்கும் இன் கொடுக்க. (19) வற்றுச்சாரியை முதல் திரியுமாறு 122. வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் அஃகான் நிற்றல் ஆகிய பண்பே. இது வற்று முதல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டுமுதல் ஐம்முன் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சொன்முன் வற்று வருங்காலை, வஃகான் மெய்கெட அஃகான் நிற்றலாகிய பண்பு - அவ் வற்றுச் சாரியையினது வகரமாகிய ஒற்றுக்கெட ஆண்டு ஏறிய அகரம் நிற்றல் அதற்கு உளதாகிய குணம் எ-று. எ-டு: அவையற்றை, இவையற்றை, உவையற்றை என வரும். இவற்றை, அவை இவை உவை என நிறுத்திச் ‘சுட்டு முதலாகிய ஐயெ னிறுதி’ (எழுத். 177) என்றதனான் வற்றும் உருபுங் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்க. இவ்வாறே எல்லா உருபிற்கும் ஒட்டுக. அவையற்றுக் கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்ற வழியுங் கொள்க. ‘ஆகிய பண்பு’ என்றதனானே, எவனென்பது படுத்தலோசையாற் பெயராயவழி எவன் என நிறுத்தி, வற்றும் உருபுங் கொடுத்து, வற்றுமிசை யொற்றென்று னகரங் கெடுத்து, அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து, எவற்றை எவற்றொடு என முடிக்க. (20) சாரியைகளது னகர ஈறு திரியுமிடன் 123. னஃகான் றஃகான் நான்க னுருபிற்கு. இஃது இன் ஒன் ஆன் அன்னென்னும் னகர ஈறு நான்குந் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) னஃகான் நான்க னுருபிற்கு றஃகான் - னகார ஈற்று நான்கு சாரியையின் னகரமும் நான்காமுருபிற்கு றகாரமாய்த் திரியும் எ-று. எ-டு: விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும். இதனை ‘அளவாகு மொழிமுதல்’ (எழுத். 121) என்பதன் பின் வையாது ஈண்டு வைத்தது, னகர ஈறுகளெல்லாம் உடன் திரியுமென்றற்கு. ஆண்டு வைப்பின் இன் சாரியையே திரியுமென்பது படும். ‘ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉ, மெல்லா எண்ணும்’ (எழுத். 199) என்பதனான், ஒருபாற்கு என்பதனை முடிக்க. (21) ஆன் சாரியை பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஈறுதிரிதல் 124. ஆனின் னகரமும் அதனோ ரற்றே நாள்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே. இஃது ஆனின் ஈறு பொருட்புணர்ச்சிக்கண் திரியுமென்கின்றது. (இ-ள்.) நாள்முன் வரூஉம் வன்முதல் தொழிற்கு - நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக உடைய தொழிற்சொற்கு இடையே வரும், ஆனின் னகரமும் அதனோ ரற்று - ஆன் சாரியையின் னகரமும் நான்க னுருபின்கண் வரும் ஆன்சாரியை போல றகரமாய்த் திரியும் எ-று. எ-டு: பரணியாற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘நாள்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்கு’ (எழுத். 247) என்றதனான் ஆன் சாரியை கொடுத்துச் செய்கை செய்க. இனி, உம்மையை இறந்தது தழீஇயதாக்கி, நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் அதனோடு ஒக்குமெனப் பொருளுரைத்துப், பனியிற்கொண்டான், வளியிற்கொண்டான் என இன்னின் னகரமும் றகரமாதல் கொள்க. இனி, ஞாபகத்தான் தொழிற்கண் இன்னின் னகரந் திரியுமெனவே, பெயர்க்கண் இன்னின் னகரந் திரிதலுந் திரியாமையுங் கொள்க. குறும்பிற்கொற்றன், பறம்பிற்பாரி எனத் திரிந்து வந்தன. குருகின்கால், எருத்தின்புறம் எனத் திரியாது வந்தன. (22) அத்துச் சாரியை முதல் கெடுமிடன் 125. அத்தின் அகரம் அகரமுனை இல்லை. இஃது அத்து முதல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அத்தின் அகரம் - அத்துச் சாரியையின் அகரம், அகரமுனை இல்லை - அகர ஈற்றுச் சொன் முன்னர் இல்லையாம் எ-று. ‘அத்தவண் வரினும் வரைநிலை யின்றே’ (எழுத். 219) என்பதனான், மகப்பெயர் அத்துப்பெற்று நின்றது, மகத்துக்கையென அகரங்கெட்டு நின்றது. விளவத்துக்கண் என்புழிக் கெடாது நிற்றல் ‘அத்தேவற்றே’ (எழுத். 133) என்பதனுள் ‘தெற்றென் றற்றே’ என்பதனாற் கூறுக. (23) இக்குச்சாரியை முதல் கெட்டுமுடியும் இடன் 126. இக்கின் இகரம் இகரமுனை யற்றே. இஃது இக்கு முதல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) இக்கின் இகரம் - இக்குச் சாரியையினது இகரம். இகரமுனை அற்று - இகர ஈற்றுச் சொன் முன்னர் முற்கூறிய அத்துப் போலக் கெடும் எ-று. ‘திங்கள் முன்வரின்’ (எழுத். 248) என்பதனாற் பெற்ற இக்கு, ஆடிக்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என இகரங்கெட்டு நின்றது. இஃது இடப்பொருட்டு. (24) ஐவருவழியும் அது கெடுதல் 127. ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும். இதுவும் அது. (இ-ள்.) ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும் - இக்கின் இகரம் இகர ஈற்றுச்சொன் முன்னரன்றி ஐகார ஈற்றுச் சொன் முன்னரும் மேற்கூறிய கெடுதலியல்பிலே நிற்கும் எ-று. ‘திங்களு நாளு முந்துகிளந் தன்ன’ (எழுத். 286) என்பதனாற், சித்திரைக்குக் கொண்டான் என்புழிப் பெற்ற இக்கு ஐகாரத்தின் முன்னர்க் கெட்டவாறு காண்க. (25) அக்குச்சாரியை அகரம் ஒழிய ஏனைய கெட்டுமுடியுமாறு 128. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கின் இறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது. இஃது அக்கு முதல் ஒழிய ஏனைய கெடுமாறு கூறுகின்றது. (இ-ள்.) எப்பெயர் முன்னரும் - எவ்வகைப்பட்ட பெயர்ச் சொன் முன்னரும், வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து வருமொழியாய் வருமிடத்து, அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்றத் தோன்றாது - இடை நின்ற அக்குச் சாரியையின் இறுதி நின்ற குற்றியலுகரம் முடியத் தோன்றாது, மெய்ம்மிசையொடுங் கெடும் - அக்குற்றுகரம் ஏறி நின்ற வல்லொற்றுத் தனக்குமேல் நின்ற வல்லொற்றொடுங் கெடும் எ-று. ‘ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்’ (எழுத். 418) என்பதனான், அக்குப்பெற்ற குன்றக்கூகை மன்றப்பெண்ணை என்பனவும், ‘வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும்’ (எழுத். 329) என்பதனான், அக்குப்பெற்ற ஈமக்குடம் கம்மக்குடம் என்பனவும், ‘தமிழென் கிளவியும்’ (எழுத். 385) என்பதனான், அக்குப் பெற்ற தமிழக் கூத்து என்பதுவும், அக்கு ஈறும் ஈற்றயலும் கெட்டவாறு காண்க. இங்ஙனம் வருதலின் ‘எப்பெயர்’ என்றார். ‘முற்ற’ என்பதனான், வன்கணமன்றி ஏனையவற்றிற்கும் இவ்விதி கொள்க. தமிழநூல், தமிழயாழ், தமிழவரையர் என வரும். இன்னும் இதனானே, தமக்கேற்ற இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடித்துக் கொள்க. அன்றிக் கேடோதிய ககரவொற்று நிற்குமெனின், சகரந் தகரம் பகரம் வந்தவற்றிற்குக் ககர வொற்றாகாமை உணர்க. (26) க ச த வருவழி அம்முச்சாரியையது இறுதி ங ஞ ந-வாகத் திரியுமாறு 129. அம்மின் இறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ஙஞந ஆகும். இஃது அம் ஈறு திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அம்மின் இறுதி - அம்முச் சாரியையின் இறுதியாகிய மகரவொற்று, கசதக் காலை - கசதக்கள் வருமொழியாய் வருங்காலத்து, தன்மெய் திரிந்து ஙஞந ஆகும் - தன் வடிவு திரிந்து ஙஞநக்களாம் எ-று. எ-டு: புளியங்கோடு, செதிள், தோல் எனவரும். இது ‘புளிமரக் கிளவிக்கு’ (எழுத். 244) என்பதனான் அம்முப் பெற்றது. ‘கசதக்காலைத் திரியும்’ எனவே பகரத்தின்கண் திரிபின்றாயிற்று. ‘மெய்திரிந்து’ என்னாது ‘தன்மெய்’ என்றதனான், அம்மின் மகரமேயன்றித் தம் நம் நும் உம் என்னுஞ் சாரியை மகரமுந் திரிதல் கொள்க. எல்லார் தங்கையும், எல்லா நங்கையும், எல்லீர் நுங்கையும், ‘வானவரி வில்லுந் திங்களும்’ என வரும். (துறைகேழூரன், வளங்கேழூரன் எனக் கெழுவென் னுஞ் சாரியையது உகரக்கேடும், எகர நீட்சியுஞ் செய்யுண்முடிபு என்று கொள்க.) (27) மென்கணம் இடைக்கணம் வருவழி, அவ்விறுதி கெட்டுமுடிதல் 130. மென்மையும் இடைமையும் வரூஉம் காலை இன்மை வேண்டும் என்மனார் புலவர். இஃது அம்மீறு ஒருசார் இயல்புகணத்து முன்னர்க் கெடுமென்கின்றது. (இ-ள்.) மென்மையும் இடைமையும் வரூஉங்காலை - மென்கணமும் இடைக்கணமும் வருமொழியாய் வருங்காலத்து, இன்மை வேண்டும் என்மனார் புலவர் - அம்முச் சாரியை இறுதி மகர மின்றி முடிதலை வேண்டுமென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: புளியஞெரி, நுனி, முரி, யாழ், வட்டு என வரும். உரையிற்கோடல் என்பதனாற், புளியவிலை என உயிர் வருவழி அம்மின் ஈறு கெடுதலும், புளியிலை என அம்மு முழுவதுங் கெடுதலுங் கொள்க. புளியிலை என்றது ‘ஒட்டுதற் கொழுகிய வழக்கு’ (எழுத். 132) அன்று என்பதூஉமாம். மென்கணமும் இடைக்கணமும் உயிர்க்கணமுந் தம்முளொக்குமேனும் அம்மு முழுவதுங் கெட்டு வருதலும் உடைமையின் உயிரை எடுத்தோதாராயினர். புளிங்காய் என்பது மரூஉ முடிபு. (28) இன்சாரியை முழுதும் கெட்டுமுடியுமிடன் 131. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு இன்னென் சாரியை இன்மை வேண்டும். இஃது இன்சாரியை ஐந்தாமுருபின்கண் முழுவதுங் கெடும் என்கின்றது. (இ-ள்.) இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு - இன்னென்று சொல்ல வருகின்ற வேற்றுமை யுருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும் - இன் என்னுஞ் சாரியை தான் இன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: விளவின், பலாவின், கடுவின், தழூவின், சேவின், வௌவின் என வரும். இவற்றிற்கு வீழ்பழம் எனவும், நீங்கினான் எனவுங் கொடுத்து முடிவு உணர்க. ஊரினீங்கினான் என ஏனையவற்றோடும் ஒட்டுக. இனி, ‘அவற்றுள் இன்னின் இகரம்’ (எழுத். 120) என்றதன் பின் இதனை வையாத முறையன்றிக் கூற்றினான், இன்சாரியை கெடாது வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் நிற்றல் கொள்க. பாம்பினிற் கடிது தேள், ‘கற்பினின் வழாஅ நற்பல வுதவி’, (அக. 86) ‘அகடுசேர்பு பொருந்தி யளவினின் திரியாது’ (மலைபடு. 33) என வரும். இனி, இன்மையும் வேண்டு மென்னும் உம்மை தொக்கு நின்றதாக்கி அதனான் இவை கோடலும் ஒன்று. (29) சாரியைகள் புணர்மொழியுள் இடைநின்று இயலுதல், ஒடு உருபிடத்துச் சாரியை வருதலும் வாராமையும் 132. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை உருபு நிலைபெறு வழியுந் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது இடைநின் றியலுஞ் சாரியை இயற்கை உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும். இதுமுற்கூறிய சாரியைகளெல்லாம் புணர்மொழியுள்ளே வருமென்பதூஉம், அம்மொழிதாம் இவை யென்பதூஉம், அவை வாராத மொழிகளும் உளவென்பதூஉம் கூறுகின்றது. (இ-ள்.) பெயரும் தொழிலும் - பெயர்ச் சொல்லுந் தொழிற் சொல்லும், பிரிந்து இசைப்ப ஒருங்கு இசைப்ப - பெயருந் தொழிலுமாய்ப் பிரிந்திசைப்ப, பெயரும் பெயருமாய்க் கூடி யிசைப்ப, வேற்றுமை யுருபு நிலைபெறு வழியும் - வேற்றுமை செய்யும் உருபுகள் தொகாது நிலைபெற்ற இடத்தும், தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் - அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்க இடத்தும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி - தாம் பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கொடு பொருந்தி, சொற்சிதர் மருங்கின் - சாரியை பெறும் புணர்மொழிகளைப் பிரித்துக் காணுமிடத்து, சாரியை இயற்கை வழிவந்து விளங்காது இடை நின்று இயலும் - அச்சாரியையினது தன்மை அச்சொற்களின் பின்னே வந்து விளங்காது நடுவே நின்று நடக்கும், உடைமையும் இன்மையும் ஒடு வயின் ஒக்கும் - அச்சாரியை உண்டாதலும் இல்லையாதலும் ஒடுவுருபி னிடத்து ஒத்துவரும் எ-று. ஒடுவிற்கு ஒக்கும் எனவே, ஏனையவற்றிற்கு ஒவ்வாவாயின. எ-டு: விளவினைக் குறைத்தான், கூழிற்குக் குற்றேவல் செய்யும். இவை பிரிந்திசைத்து உருபு நிலைபெற்றன. ‘அன்னென் சாரியை’ (எழுத். 194) என்பதனொடு ‘குற்றியலுகரத் திறுதி’ (எழுத். 195) என்பதனைச் சேர வைத்ததனான், இன்சாரியை வருதல் கொள்க. இவ்விரண்டுருபுஞ் சாரியை நிற்பப் பெரும்பான்மையுந் தொகா என உணர்க. விளவினைக் குறைத்தவன், கடிசூத்திரத்திற்குப் பொன் - இவை ஒருங்கிசைப்ப உருபு நிலை பெற்றன. வானத்தின் வழுக்கி, வானத்து வழுக்கி எனச் சாரியை பெற்றுப் பிரிந்திசைத்து ஐந்தாமுருபு நிலைபெற்றும், நிலைபெறாதும் வந்தன. வானத்தின் வழுக்கல், வானத்து வழுக்கல் எனச் சாரியை பெற்று ஒருங்கு இசைத்து ஐந்தாம் உருபுநிலை பெற்றும் நிலைபெறாதும் வந்தன. வானத்து வழுக்கி, வானத்து வழுக்கல் இவை ‘மெல்லெழுத் துறழும்’ (எழுத். 312) என்னுஞ் சூத்திரத்து ‘வழக்கத்தான’ என்பதனான் அத்துக் கொடுத்து மகரங் கெடுக்க ஒருங்கிசைத்தன. விளவினது கோடு, விளவின் கோடு என ஒருங்கிசைத்துச் சாரியை பெற்றவழி ஆறனுருபு தொகாதுந் தொக்கும் நின்றது. இதற்குப் பிரிந் திசைத்தலின்று. மரத்துக்கட் கட்டினான், மரத்துக் கட்டினான் எனப் பிரிந்திசைத்தவழியும், மரத்துக்கட் குரங்கு, மரத்துக் குரங்கு என ஒருங் கிசைத்தவழியுஞ் சாரியை நின்றவழி ஏழனுருபு தொகாதுந் தொக்கும் நின்றது. ‘கிளைப் பெயரெல்லாம்’ (எழுத். 307) என்றதனுட் ‘கொள’ என்றதனான் ணகாரம் டகாரமாயிற்று. ‘நிலாவென் கிளவி யத்தொடு சிவணும்’ (எழுத். 228) என விதித்த அத்து, நிலாஅக்கதிர் நிலாஅமுற்றம் பெறாதாயிற்று, அஃது ‘ஒட்டுதற் கொழுகிய வழக்கு’ அன்மையின். நிலாத்துக் கொண்டான், நிலாத்துக் கொண்டவன் என்பன உருபு தொக்குழி இருவழியும் பெற்றன. எல்லார் தம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின் இடைநிற்றல் பெரும்பான்மை என்றற்கு ‘இயலும்’ என்றார். பூவினொடு விரிந்த கூந்தல், பூவொடு விரிந்த கூந்தல் என உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒத்தன. இனி ‘இயற்கை’ என்றதனான், ஒடு உருபின்கட் பெற்றும் பெறாமை யும் வருதலன்றிப், பெற்றே வருதலுங் கொள்க. எ-டு: பலவற்றொடு என வரும். (30) அத்தும் வற்றும் வருவழி, நிலைவருமொழிகளின் திரிபு 133. அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுதல் தெற்றென் றற்றே அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. இஃது அத்து வற்று என்பனவற்றிற்கு நிலைமொழியது ஒற்றுக் கேடும், வருமொழி வன்கணத்துக்கண் ஒற்றுப்பேறுமாகிய செய்கை கூறுகின்றது. (இ-ள்.) அத்தேவற்றே ஆயிரு மொழிமேல் ஒற்று - அத்தும் வற்றுமாகிய அவ்விரண்டு சாரியைமேல் நின்ற ஒற்று, மெய் கெடுதல் தெற்றென்றற்று - தன் வடிவு கெடுதல் தெளியப்பட்டது; அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே - அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும். ‘அத்திடை வரூஉங் கலமென் அளவே’ (எழுத். 168) ‘சுட்டு முதல் வகரம் ஐயு மெய்யும்’ (எழுத். 183) என்பனவற்றான் அத்தும் வற்றும் பெற்றுவரும் மகர வகர ஈறுகட்கு ஈற்று வல்லெழுத்துவிதி இன்மையின், ‘அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகு’மென்று சாரியை வல்லெழுத்து விதித்தார். வல்லெழுத்து இன்றித் திரிந்து முடிவன ணகாரமும், னகாரமும், லகாரமும், ளகாரமுமாம். மகர ஈற்றிற்கு அத்தும், வகர ஈற்றிற்கு வற்றும் வருமென்பது அவ்வச் சூத்திரங்களாற் பெற்றாம். ‘வற்றே அத்தே’ என்னாத முறையன்றிக் கூற்றினான், புள்ளியீற்றின் முன்னர் அத்தின்மிசை யொற்றுக் கெடாது நிற்றலுங் கொள்க. எ-டு: விண்ணத்துக் கொட்கும், வெயிலத்துச் சென்றான், இருளத்துக் கொண்டான் என வரும். ‘மெய்’ என்றதனான், அத்தின் அகரம் அகர முன்னரேயன்றிப் பிற உயிர் முன்னருங் கெடும் ஒரோவிடத்தென்று கொள்க. அண்ணாத்தேரி, திட்டாத்துக்குளம் என ஆகாரத்தின் முன்னரும் வரும் அத்தின் அகரங் கெட்டது. இவற்றை அகர ஈறாக்கியும் முடிப்ப. இனித் ‘தெற்றென்றற்றே’ என்றதனான், அத்தின் அகரந் தெற்றெனக் கெடாது நிற்கும் இடமுங் கொள்க. எ-டு: அதவத்துக்கண், விளவத்துக்கண் என வரும். (31) எழுத்துச்சாரியைகள் : கரம், காரம், கான் 134. காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை. இது மொழிச்சாரியை விட்டு, எழுத்துக்கட்கு வருஞ் சாரியைகளின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துகின்றது. (இ-ள்.) காரமுங் கரமுங் கானொடு சிவணி - காரமுங் கரமுங் கானொடு பொருந்தி, எழுத்தின் சாரியை நேரத் தோன்றும் - எழுத்தின்கண் வருஞ் சாரியையாதற்கு எல்லா ஆசிரியரானும் உடம்படத் தோன்றும் எ-று. ‘காரமும் கரமும்’ அடுத்துச் சொல்லியவழி இனிதிசைத்தலானும், வழக்குப்பயிற்சி யுடைமையானும், காரம் வடவெழுத்திற்கும் உரியதாத லானுஞ் சேரக் கூறினார். ‘கான்’ அத்தன்மை யின்மையினாற் பின் வைத்தார். ‘நேரத்தோன்றும்’ எனவே நேரத்தோன்றாதனவும் உளவாயின. அவை, ஆனம் ஏனம் ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடிய லாகாவாயின. (32) கரமும் கானும் நெட்டெழுத்துப் பெறாமை 135. அவற்றுள் கரமுங் கானும் நெட்டெழுத் திலவே. அஃது அவற்றுட் சில சாரியை சிலவெழுத்தொடு வாராவென எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறியவற்றுள், கரமுங் கானும் நெட்டெழுத் தில - கரமுங் கானும் நெட்டெழுத்திற்கு வருதலில எ -று. எனவே, நெட்டெழுத்திற்குக் காரம் வருமாயிற்று. ஆகாரம் ஈகாரம் என ஒட்டுக. ஐகாரம் ஔகார மெனச் சூத்திரங்களுள் வருமாறு காண்க.(33) குற்றெழுத்து இம்மூன்றும் பெறுதல் 136. வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. இஃது ஐயம் அகற்றியது; என்னை? நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினாற் போலக் குற்றெழுத்திற்கும் விலக்கற்பாடு உண்டோ வென ஐயம் நிகழ்தலின். (இ-ள்.) வரன்முறை மூன்றும் - வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியையும், குற்றெழுத்துடைய - குற்றெழுத்துப் பெற்று வருதலையுடைய எ-று. அகாரம் அகரம் மஃகான் என ஒட்டுக. ‘வகார மிசையும்’ (எழுத். 330) ‘அகர இகரம்’ (எழுத். 54) ‘வஃகான் மெய்கெட’ (எழுத். 122) எனவும் பிறவுஞ் சூத்திரங்களுட் காண்க. இஃகான் ஒஃகான் என்பன பெருவழக்கல்ல. ‘வரன்முறை’ என்றதனான், அஃகான் என்புழி ஆய்தம் பெறுதல் கொள்க. இது ‘குறியதன் முன்னராய்தப் புள்ளி’ (எழுத். 38) என்பதனாற் பெறாதாயிற்று, மொழியாய் நில்லாமையின். (34) ஐயும் ஔவும், கானும் பெறுதல் 137. ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும். இஃது ‘அவற்றுட் கரமுங் கானும்’ என்பதற்கொரு புறனடை கூறுகின்றது. (இ-ள்.) ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும் - நெட்டெழுத் துக்களுள் ஐகார ஔகாரங்கள் முன் விலக்கப்பட்ட கானொடுந் தோன்றும் எ-று. எ-டு: ஐகான், ஔகான் என வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று, காரத்தைக் கருதலின். (35) உடல்மேல் உயிர்வந் தொன்றுதல் 138. புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே. இது புள்ளி யீற்றுமுன் உயிர்முதன்மொழி வந்த காலத்துப் புணரும் முறைமை கூறுகின்றது. (இ-ள்.) புள்ளி யீற்றுமுன் உயிர் தனித்து இயலாது - புள்ளி யீற்றுச் சொன்முன்னர் வந்த உயிர்முதன்மொழியின் உயிர் தனித்து நடவாது, மெய்யொடுஞ் சிவணும் - அப்புள்ளியொடும் கூடும், அவ்வியல் கெடுத்து - தான் தனித்து நின்ற அவ்வியல்பினைக் கெடுத்து எ-று. எனவே, ‘நீரொடு கூடிய பால்போல’ நின்றதென்று ஒற்றுமை கூறினார், ஈண்டு. இதனானே உயிர்மெய்யெனப் பெயர் பெற்றது. எ-டு: பாலரிது, பாலாழி, ஆலிலை, பொருளீட்டம், வானுலகு, வானூடு, வேலெறிந்தான், வேலேற்றான், பொருளையம், பொருளொன்று, நாணோடிற்று, சொல்லௌவியம் என வரும். ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான் இயல்பல்லாத புள்ளி முன்னர் உயிர்வந்தாலும் இவ்விதி கொள்க. எ-டு: அதனை அதனொடு நாடுரி என வரும். இவற்றைச் ‘சுட்டுமுத லுகர மன்னொடு’ (எழுத். 176), ‘உரிவரு காலை நாழிக் கிளவி’ (எழுத். 240) என்பனவற்றான் முடிக்க. ‘புள்ளியீற்று முன்னும்’ என உம்மையை மாற்றி எச்சவும்மை யாக்கிக் குற்றியலுகரத்தின் முன்னரும் என அவ்விதி கொள்க. எனவே, ‘குற்றியலுகரமு மற்று’ (எழுத். 105) என்றதனொடும் பொருந்திற்றாம். எ-டு: நாகரிது, வரகரிது எனவரும். (36) புணர்ச்சியுள் உயிர்நீங்கியவழி உயிர்மெய்யது நிலை 139. மெய்உயிர் நீங்கின் தன்னுரு வாகும். இஃது உயிர்மெய், புணர்ச்சிக்கண் உயிர் நீங்கியவழிப் படுவதொரு விதி கூறுகின்றது. (இ-ள்.) மெய் உயிர் நீங்கின் - மெய் தன்னொடு கூடி நின்ற உயிர் புணர்ச்சியிடத்துப் பிரிந்து வேறு நின்றதாயின், தன் உருவாகும் - தான் முன்னர்ப் பெற்று நின்ற புள்ளிவடிவு பெறும் எ-று. எ-டு: ஆல் இலை, அதன் ஐ என வரும். உயிர் என்ன வடிவிற்றென்று ஆசிரியர் கூறாமையின், உயிர்க்கண் ஆராய்ச்சி யின்று. இனி, எகர ஒகரங்களைப் புள்ளியான் வேற்றுமை செய்தலின், தொன்று தொட்டு வழங்கின வடிவுடைய என்று கோடலுமாம். புணர்ச்சி யுள் உயிர்மெய்யினைப் பிரிப்பாராதலின், இது கூறாக்காற் ‘குன்றக் கூறலாம்’ என்று உணர்க. (37) உடம்படுமெய்த் தோற்றம் 140. எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார். இஃது உயிரீறும் உயிர்முதன்மொழியும் புணரும்வழி நிகழ்வதொரு கருவி கூறுகின்றது. (இ-ள்.) எல்லா மொழிக்கும் - நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணரும் எவ்வகை மொழிக்கும், உயிர் வருவழி - உயிர் முதன்மொழி வருமிடத்து, உடம்படு மெய்யின் உருவு கொளல் வரையார் - உடம்படு மெய்யினது வடிவை உயிரீறு கோடலை நீக்கார், கொள்வர் ஆசிரியர் எ-று. அவை யகரமும் வகரமும் என்பது முதனூல் பற்றிக் கோடும்; ‘உடம்படு மெய்யே யகார வகாரம் உயிர்முதன் மொழிவரூஉங் காலை யான’ எனவும், ‘இறுதியும் முதலும் உயிர்நிலை வரினே உறுமென மொழிப உடம்படு மெய்யே’ எனவுங் கூறினாராகலின். உயிர்களுள் இகர ஈகார ஐகார ஈறு, யகர உடம்படுமெய் கொள்ளும். ஏகாரம், யகாரமும் வகாரமுங் கொள்ளும். அல்லனவெல்லாம் வகர உடம்படுமெய்யே கொள்ளுமென்று உணர்க. எ-டு: கிளியழகிது, ‘குரீஇயோப்புவாள்’ (குறுந். 72), ‘வரையா மகளிர்’ (ஐங்குறு. 255) எனவும்; விளவழகிது, பலாவழகிது, பூவழகிது, கோவழகிது, கௌவடைந்தது எனவும் ஒட்டுக. ‘ஏஏ யிவளொருத்தி பேடியோ வென்றார்’ (சீவக. 612) ‘ஏவாடல் காண்க’ என ஏகாரத்திற்கு இரண்டும் வந்தன. ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், விகாரப்பட்ட மொழிக்கண் ணும் உடம்படுமெய் கொள்க. எ-டு: மரவடி, ஆயிருதிணை எனவரும். ‘வரையார்’ என்றதனான் உடம்படுமெய் கோடல் ஒருதலையன்று. எ-டு: கிளி அரிது, மூங்கா இல்லை எனவும் வரும். ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், ‘விண்வத்துக் கொட்கும்’ எனச் சிறுபான்மை புள்ளியீற்றினும் வரும். செல்வுழி உண்புழி என்பன வினைத் தொகை என மறுக்க. (38) எழுத்து ஒருதன்மைத்தான புணர்மொழி ஓசைவேற்றுமையான் புணர்ச்சி வேறுபடுதல் 141. எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையின் திரிதல் நிலைஇய பண்பே. இஃது எழுத்துக்கள் ஒன்று பலவாமென எய்தாதது எய்துவிக் கின்றது. (இ-ள்.) எழுத்தோரன்ன பொருள் தெரி புணர்ச்சி - எழுத்து ஒரு தன்மைத்தான பொருள் விளங்க நிற்கும் புணர்மொழிகள், இசையின் திரிதல் நிலைஇய பண்பு - எடுத்தல் படுத்தல் நலித லென்கின்ற ஓசை வேற்றுமையாற் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற குணம் எ-று. எ-டு: செம்பொன்பதின்றொடி, செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன்போத்து, தாமரைக்கணியார், குன்றேறாமா என இசையின் திரிந்தன. (39) அப்புணர்மொழிகள் குறிப்பான் பொருள் புலப்படுத்தல் 142. அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே. இது மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் - பலபொருட்குப் பொதுவென்ற புணர் மொழிகள்தாம், முன்னப்பொருள - குறிப்பான் உணரும் பொருண்மை யினையுடைய, புணர்ச்சிவாயின் இன்ன வென்னும் எழுத்துக்கடன் இல - புணர்ச்சியிடத்து இத்தன்மையவென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல எ-று. செம்பொன்பதின்றொடி என்புழிப் பொன்னாராய்ச்சி யுள்வழிப் பொன்னெனவுஞ், செம்பாராய்ச்சி யுள்வழிச் செம்பெனவுங் குறிப்பான் உணரப்பட்டது. ‘இசையின் திரிதல்’ என்றது ஒலியெழுத்திற்கெனவும், ‘எழுத்துக் கடனில’ என்றது வரிவடிவிற்கெனவுங் கொள்க. (40) புணரியல் முற்றிற்று. 5 தொகைமரபு க ச த ப - வருவழி, நிலைமொழி ங ஞ ந ம - மிகுதல் 143. கசதப முதலிய மொழிமேற் றோன்றும் மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னும் ஒற்றா கும்மே அன்ன மரபின் மொழிவயி னான என்பது சூத்திரம். உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக்கும்வழி ஈறுகடோறும் விரித்து முடிப்பனவற்றை ஈண்டு ஒரோவொரு சூத்திரத் தான் தொகுத்து முடிபு கூறினமையின், இவ்வோத்துத் ‘தொகைமரபு’ என்னும் பெயர்த்தாயிற்று. மேல் மூவகை மொழியும் நால்வகையாற் புணர்வுழி, மூன்று திரிபும் ஓரியல்பும் எய்தி, வேற்றுமை அல்வழி யென இருபகுதியவாகி, எழுத்துஞ் சாரியையும் மிக்குப் புணருமாறு இதுவென்று உணர்த்தி, அவைதாம் விரிந்த சூத்திரப் பொருளவன்றியுந் தொக்குப் புணருமாறு கூறுதலின், இவ்வோத்துப் புணரியலோடு இயைபுடைத் தாயிற்று. இத்தலைச்சூத்திரம் உயிர்மயங்கியலையும், புள்ளிமயங்கியலையும் நோக்கியதொரு வருமொழிக் கருவி கூறுகின்றது. (இ-ள்.) கசதப முதலிய மொழிமேற் றோன்றும் இயற்கை மெல்லெழுத்து - உயிரீறும் புள்ளியீறும் முன்னர் நிற்பக் கசதபக்களை முதலாகவுடைய மொழிகள் வந்தால் அவற்றிற்கு மேலே தோன்றி நிற்கும் இயல்பாகிய மெல்லெழுத்துக்கள், சொல்லிய முறையான் ஙஞநம என்னும் ஒற்றாகும் - நெடுங்கணக்கிற் பொருந்தக் கூறிய முறையானே கசதபக்களுக்கு ஙஞநம வென்னும் ஒற்றுக்கள் நிரனிறை வகையானாம்: அன்ன மரபின் மொழிவயினான - அத்தன்மைத்தாகிய முறைமையினை யுடைய மொழிக ளிடத்து எ-று. எ-டு: விளங்கோடு செதிள் தோல் பூ என வரும். இது ‘மரப்பெயர்க்கிளவி’ (எழுத். 217) என்பதனான் மெல்லெழுத்துப் பெற்றது. மரங் குறிது சிறிது தீது பெரிது என அல்வழிக்கண் திரியுமாறு ‘அல்வழியெல்லாம்’ (எழுத். 314) என்பதனாற் பெறுதுமேனும், ஈண்டுத் ‘தோன்றும்’ என்றதனான், நிலைமொழிக்கண் தோன்றி நின்ற ஒற்றுத்திரிதல் கொள்க. ‘அன்ன மரபின் மொழி’ யன்மையின், விளக்குறுமை விளக் குறைத்தான் என்புழி மெல்லெழுத்துப் பெறாவாயின; இவை ஏழாவதும் இரண்டாவதுந் திரிதலின். இங்ஙனம் எழுத்துப் பெறுவனவுந் திரிவனவுமெல்லாம் வருமொழியேபற்றி வருமென்று உணர்க. (1) மென்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் வருவழி, இருவழியும் இயல்பாதல் 144. ஞநம யவவெனும் முதலாகு மொழியும் உயிர்முத லாகிய மொழியும் உளப்பட அன்றி யனைத்தும் எல்லா வழியும் நின்ற சொல்முன் இயல்பா கும்மே. இது முற்கூறிய நால்வகைப் புணர்ச்சியுள் இயல்பு புணருங்கால், இக்கூறிய பதினேழெழுத்தும் வருமொழியாய் வந்த இடத்து, இருபத்து நான்கீற்றின் முன்னரும் வேற்றுமையிலும் அல்வழியிலும் வருமொழி இயல்பாய் முடிகவென்கின்றது. (இ-ள்.) ஞநமயவ எனும் முதலாகு மொழியும் - ஞநமயவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்குஞ் சொற்களும், உயிர் முதலாகிய மொழியும் உளப்பட - உயிரெழுத்து முதலாய் நின்ற சொற்களுந் தம்மிற்கூட, அன்றியனைத்தும் - அப்பதினேழாகிய வருமொழிகளும், எல்லாவழியும் - வேற்றுமையும் அல்வழியுமாகிய எல்லா இடத்தும், நின்ற சொன்முன் - இருபத்துநான்கு ஈற்றவாய் நின்ற பெயர்ச்சொன்முன்னர், இயல்பாகும் - திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் எ-று. உயிரீற்றின்கண் எகர ஒகரம் ஒழிந்தன கொள்க. எ-டு: விள பலா கிளி குரீ கடு பூ சே கை சோ கௌ என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது என மெய்ம்முதன்மொழி வருவித்து, பொருள் தருதற்கு ஏற்பன அறிந்து கூட்டுக. சோ என்பது அரண். அதற்குச் சோஞொள்கிற்று எனக் கொள்க. கௌ வென்பதற்குக் கெளஞெகிழ்ந்தது, நீடிற்று என்க. இனி இவற்றின் முன்னர் உயிர்முதன்மொழி வருங்கால் அழகிது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊறிற்று எழுந்தது ஏய்ந்தது ஐது ஒன்று ஓங்கிற்று ஔவியத்தது என வரும். இவற்றுட் சோவுக்கு, இடிந்தது ஈண்டையது உள்ளது ஊறிற்று என்பனவற்றொடு முற்கூறியவற்றையும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கண் விள முதலியவற்றை நிறுத்தி, ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஆக்கம் இளமை ஈட்டம் உயர்வு ஊற்றம் எழுச்சி ஏற்றம் ஐயம் ஒழிவு ஓக்கம் ஔவியம் என ஒட்டுக. ஏலாதனவற்றிற்கு முற்கூறியவாறுபோல ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. இனிப் புள்ளியீற்று ணகாரமும் னகாரமும் மேற்கூறுப. ஏனைய ஈண்டுக் கூறுதும். எ-டு: உரிஞ் வெரிந் என நிறுத்தி, ஞெகிழ்ந்தது நீடிற்று அழகிது ஆயிற்று எனவும், ஞெகிழ்ச்சி நீட்டிப்பு அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. மரம் வேய் வேர் யாழ் என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது அழகிது ஆயிற்று எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள், மகர ஈறு வேற்றுமைக்கட் கெடுதல் ‘துவர’ (எழுத். 310) என்றதனாற் கொள்க. அல்வழிக்கட்கெடுதல் ‘அல்வழி யெல்லாம்’ (எழுத். 314) என்றதனாற் கொள்க. நிலைமொழித் திரிபு ஈண்டுக் கொள்ளாமை உணர்க. யகர ஈறு யகரத்தின் முன்னர் இரண்டிடத்துங் கெடுதல் ஈண்டு ‘எல்லாம்’ என்றதனாற் கொள்க. வேல் தெவ் கோள் என நிறுத்தி, ஏற்பன கொணர்ந்து இருவழியும் ஒட்டுக. ணகார லகார ளகார னகாரங்களின் முன்னர் நகரம் வருமொழியாக வந்துழி அந்நகரந் திரிதலின் அத்திரிந்த உதாரணங்கள் ஈண்டுக் கொள்ளற்க. இவற்றுள் திரிந்து வருவனவுள; அவை எடுத்தோத்தானும் இலேசானும் ஏனையோத்துக் களுள் முடிகின்றவாற்றான் உணர்க. இனி, ‘எல்லாம்’ என்றதனான் உயிர்க்கணமாயின் ஒற்றிரட்டியும் உடம்படுமெய் பெற்றும் உயிரேறியும் முடியுங் கருவித்திரிபுகள் திரிபெனப்படா, இவ்வியல்பின்கண்ண என்றுணர்க. வரகு ஞான்றது, வரகு ஞாற்சி எனக் குற்றுகரத்தின்கண்ணும் இவ்வாறே கொள்க. இருபத்துநான்கு ஈற்றிற்கும் வேற்றுமைக்கும் அல்வழிக்கும் அகத்தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவனவற்றை ஒரு சூத்திரத்தாற் றொகுத்து முடித்தார். மேலும் இவ்வாறே கூறுப. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறியதென்று உணர்க. இவ்வியல்பு புணர்ச்சி மெய்க்கண் நிகழுமாறு, உயிர்க்கண் நிகழாமையின் மெய் முற்கூறினார். (2) தொடர்மொழியீற்றின்கண் மெல்லெழுத்து உறழ்ந்தும் முடிதல் 145. அவற்றுள் மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி இறுதி யான. இது முற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்கிப் பிறிது விதி எய்துவித்தது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய மூன்று கணத்தினுள், மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் - மெல்லெழுத்து இயல்பாதலேயன்றி உறழ்ந்து முடியினும் நீக்கார்; சொல்லிய தொடர் மொழி இறுதியான - சொல்லப்பட்ட தொடர்மொழி யீற்றுக்கண் எ-று. உம்மை எதிர்மறை. எனவே, உறழாமை வலியுடைத் தாயிற்று. எ-டு: கதிர்ஞெரி கதிர்ஞ்ஞெரி நுனிமுரி எனவும், இதழ்ஞெரி இதழ்ஞ்ஞெரி நுனிமுரி எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனான், ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழிகளுள்ளுஞ் சில உறழ்ச்சிபெற்று முடிதல் கொள்க. எ-டு: பூஞெரி பூஞ்ஞெரி நுனிமுரி, காய்ஞெரி காய்ஞ்ஞெரி நுனி முரி என வரும். ‘சொல்லிய’ என்றதனான், ஓரெழுத்தொருமொழிகளுட் சில மிக்கு முடிதல் கொள்க. எ-டு: கைஞ்ஞெரித்தார், நீட்டினார் மறித்தார் என வரும். இன்னும் இதனானே, ஈரெழுத்தொருமொழிக்கண் மெய்ஞ்ஞானம் நூல் மறந்தோர் எனவரும். இவற்றை நலிந்து கூறப் பிறத்தலின் இயல் பென்பாரும் உளர். பூஞாற்றினார் என்றாற் போல்வன மிகாதன. (3) ணகர னகரங்களின் முன்னர் யாவும் ஞாவும் ஒருவினை வந்த தன்மை ஒத்தல் 146. ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் வினையோ ரனைய என்மனார் புலவர். இது, யகர ஞகர முதன்மொழி வந்த இடத்து நிகழ்வதொரு தன்மை கூறுகின்றது. இதுவும் புணரியலொழிபாய்க் கருவிப் பாற்படும். (இ-ள்.) ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் - ணகார னகாரமென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர்வந்த யாவும் ஞாவும் முதலாகிய வினைச்சொற்கள், வினையோரனைய என்மனார் புலவர் - ஒரு வினை வந்த தன்மையை ஒக்குமென்று சொல்லுவர் புலவர் எ-று. எ-டு: ‘மண்யாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே’ ‘மண்ஞாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே’ எனவும், ‘பொன்யாத்த தாரப் புரவி பரிக்குமே’ ‘பொன்ஞாத்த தாரப் புரவி பரிக்குமே’ எனவும் வரும். வினைக்கண் எனவே, மண்யாமை மண்ஞாமை எனப் பெயர்க்கண் வாராவாயின. ‘ஞா’ முற்கூறாது ‘யா’ முற்கூறியவதனான் ஞாச் சென்றவழி யாச் செல்லாது, யாச் சென்றவழி ஞாச் செல்லுமென்று கொள்க. மண்ஞான்றது என்றவழி மண்யான்றது என்று வாராமை உணர்க. (4) ணகர னகர ஈறுகள் அல்வழிக்கண் இயல்பாதல் 147. மொழிமுத லாகும் எல்லா எழுத்தும் வருவழி நின்ற ஆயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிடன் இலவே. இது, ணகார ஈறும், னகார ஈறும் அல்வழிக்கண் இயல்பாய் முடியுமென்கின்றது. (இ-ள்.) மொழி முதலாகும் எல்லா வெழுத்தும் வருவழி - மொழிக்கு முதலாமெனப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்து, நின்ற ஆயிரு புள்ளியும் - முன்னர்க் கூறிநின்ற ணகாரமும் னகாரமும், வேற்றுமை யல்வழித் திரிபிடன் இலவே - வேற்றுமை யல்லாத இடத்துத் திரியுமிடம் இல எ-று. எ-டு: மண் பொன் என நிறுத்திக், கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது அடைந்தது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊட்டிற்று எவ்விடத்தது ஏறிற்று ஐது ஒழுகிற்று ஓங்கிற்று ஔவையது என ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனான், ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண்டென்று கொள்க. எ-டு: சாட்கோல் என வரும். இதற்குச் சாணாகிய கோலென்க. இவை ‘நின்றசொன்முன் இயல்பாகும்’ (எழுத். 144) என்றவழி அடங்காவாயின, அது வருமொழிபற்றித் திரியாமை கூறியதாகலின். இது நிலைமொழிபற்றித் திரியாமை கூறியது. (5) அவ்வீறுகள் வேற்றுமைக்கண்ணும் இயல்புகணம் வருவழி இயல்பாதல் 148. வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி மேற்கூ றியற்கை ஆவயி னான. இது முற்கூறியவாற்றான் வேற்றுமைக்கண் திரிபு எய்தி நின்றவற்றை, ஈண்டு வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல்வழித் திரியாவென எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) ஆவயினான - அல்வழிக்கண் அங்ஙனந் திரியாது நின்ற அவ்வொற்றுக்கள், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யிடத்தும், வல்லெழுத் தல்வழி மேற் கூறியற்கை - வல்லெழுத்தல்லாத இடத்து மேற்கூறிய இயல்பு முடிபாம் எ-று. எனவே, வல்லெழுத்து வந்துழித் திரியு மென்றாராயிற்று. எ-டு: மண் பொன் என நிறுத்தி, ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை நுந்தையது அழகு ஆக்கம் இன்மை என ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. இதுவுஞ் செய்கைச் சூத்திரம். மேல் நான்கு சூத்திரத்தாற் கூறியன வல்லெழுத்து வந்துழித் திரியுமாறு தத்தம் ஈற்றுட் கூறுப. (6) ல ன - புள்ளி முன், த நக்கள் ற ன - ஆதல் 149. லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் தந எனவரிற் றனவா கும்மே. இது புள்ளிமயங்கியலை (368, 369ஆம் நூற்பா) நோக்கியதொரு வருமொழிக்கருவி கூறுகின்றது. (இ-ள்.) ல ன என வரூஉம் புள்ளி முன்னர் - லகார னகார மென்று சொல்ல வருகின்ற புள்ளிகளின் முன்னர், த ந எனவரின் - தகாரமும் நகாரமும் முதலென்று சொல்லும்படியாகச் சிலசொற்கள்வரின், றனவாகும் - நிரனிறையானே அவை றகார னகாரங்களாகத் திரியும் எ-று. எ-டு: கஃறீது கன்னன்று, பொன்றீது பொன்னன்று என வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. (369) (7) ண ள - புள்ளி முன், அவை ட ண எனத் திரிதல் 150. ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) ணளவென் புள்ளிமுன் - ணகார ளகார மென்று சொல்லப் படும் புள்ளிகளின் முன்னர் அதிகாரத்தான் தகார நகாரங்கள் வருமெனின், டண வெனத் தோன்றும் - அவை நிரனிறையானே டகார ணகாரங்களாய்த் திரிந்து தோன்றும் எ-று. எ-டு: மண்டீது, மண்ணன்று, முஃடீது முண்ணன்று என வரும். நிலைமொழித் திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப (399). (8) முன்னிலை ஏவலொருமைவினை வன்கணம் வருவழி முடியுமாறு 151. உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் இயல்பா குநவும் உறழா குநவுமென்(று) ஆயீ ரியல வல்லெழுத்து வரினே. இது முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் - உயிரீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும், புள்ளியிறுதி முன்னிலைக் கிளவியும் - புள்ளியீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும், வல்லெழுத்து வரின் - வல்லெழுத்து முதலாகிய மொழிவரின், இயல்பாகுநவும் உறழாகுநவு மென்று ஆயீரியல - இயல்பாய் முடிவனவும் உறழ்ந்து முடிவனவுமென அவ்விரண்டு இயல்பினை யுடைய எ-று. எ-டு: எறிகொற்றா கொணாகொற்றா உண்கொற்றா தின்கொற்றா சாத்தா தேவா பூதா என இவை இயல்பு. நடகொற்றா நடக்கொற்றா, ஈர்கொற்றா ஈர்க்கொற்றா சாத்தா தேவா பூதா என இவை உறழ்ச்சி. ‘ஈறு’ என்று ஓதினமையின் வினைச்சொல்லே கொள்க. இவை முன்னின்றான் தொழிலுணர்த்துவனவும், அவனைத் தொழிற் படுத்துவனவுமென இருவகைய. இ ஐ ஆய் முதலியன தொழிலுணர்த்துவன. நட, வா, உண், தின் முதலியன உயிரீறும் புள்ளியீறுந் தொழிற்படுத்துவன. நில்கொற்றா நிற்கொற்றா எனத் திரிந்து உறழ்ந்தனவும், ‘உறழா குநவும்’ என்னும் பொதுவகையான் முடிக்க. ‘இயல்பு முறழ்வுமென் றிரண்டியல்பின’ என்னாது ‘ஆகுநவும்’ என்றதனான், துக்கொற்றா நொக்கொற்றா ஞெள்ளா நாகா மாடா வடுகா என ஓரெழுத்தொருமொழி முன்னிலை வினைச் சொல் மிக்கே முடிதல் கொள்க. (9) மேலை முடிபுற்குப் பொருந்தாத முன்னிலை (ஏவலொருமை) வினை யீறுகள் 152. ஔவென வரூஉம் உயிரிறு சொல்லும் ஞநமவ என்னும் புள்ளி யிறுதியுங் குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. இஃது எய்தியது விலக்கிற்று; முற்கூறியவற்றுட் சில ஆகாதன வற்றை வரைந்து உணர்த்தலின். (இ-ள்.) ஔவென வரூஉம் உயிரிறு சொல்லும் - ஔவென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞநமவ என்னும் புள்ளியிறுதியும் - ஞநமவ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச் சொல்லும், குற்றிய லுகரத்து இறுதியும் - குற்றியலுகரத்தை இறுதியிலேயுடைய சொல்லும், முன்னிலை மொழிக்கு உளப்பட முற்றத் தோன்றா - முன்னர் முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியுமாகிய முடிபிற்கு முற்றத் தோன்றா எ-று. ‘முற்ற’ என்றதனான் நிலைமொழி உகரம் பெற்று உறழ்ந்து முடிதல் கொள்க. எ-டு: கௌவுகொற்றா கௌவுக்கொற்றா, வௌவுகொற்றா வௌவுக்கொற்றா, உரிஞுகொற்றா, உரிஞுக்கொற்றா, பொருநு கொற்றா பொருநுக்கொற்றா, திருமுகொற்றா திருமுக்கொற்றா, தெவ்வுகொற்றா தெவ்வுக்கொற்றா என வும் கூட்டுகொற்றா கூட்டுக்கொற்றா எனவும் வரும். (10) உயர்திணைப்பெயர் இருவழியும் இயல்பாதல் 153. உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும் எல்லா வழியும் இயல்பென மொழிப. இஃது உயர்திணைப்பெயர் வன்கணம், மென்கணம், இடைக் கணம், உயிர்க்கணமென்னும் நான்கு கணத்தினும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) உயிரீறாகிய உயர்திணைப் பெயரும் - உயிரீறாய் வந்த உயர்திணைப் பெயர்களும், புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும் - புள்ளியீற்றினையுடைய உயர்திணைப் பெயர்களும், எல்லா வழியும் - நான்கு கணத்து அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா இடத்தும், இயல்பென மொழிப - இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் எ -று. வன்கணம் ஒழிந்த கணங்களை ‘ஞ ந ம ய வ’ (எழுத். 144) என்பதனான் முடிப்பாரும் உளர். அது பொருந்தாது; இவ்வாசிரியர் உயர்திணைப் பெயரும் விரவுப் பெயரும் எடுத்தோதியே முடிப்பாராதலின். எ-டு: நம்பி அவன் எனவும், நங்கை அவள் எனவும் நிறுத்தி, அல்வழிக்கட் குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும்; குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும்; ஞான்றான் நீண்டான் மாண்டான் எனவும்; ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் எனவும்; யாவன் வலியன் எனவும்; யாவள் வலியள் எனவும்; அடைந்தான் ஆயினான் ஔவியத்தான் எனவும்; அழகியள் ஆடினாள் ஔவியத்தாள் எனவும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும்; ஞாற்சி நீட்சி மாட்சி எனவும்; யாப்பு வன்மை எனவும்; அழகு --- ஔவியம் எனவும் எல்லாவற்றோடும் ஒட்டுக. ஒருவேன் எனத் தன்மைப் பெயர்க்கண்ணுங் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் எனவும், கை செவி தலை புறம் எனவும் ஒட்டுக. நீ முன்னிலை விரவுப்பெயராதலின் ஈண்டைக் காகாது. இனி ‘உயிரீறு புள்ளியிறுதி’ என்ற மிகையானே, உயர்திணைப் பெயர் திரிந்து முடிவனவுங் கொள்க. எ-டு: கபிலபரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர் என னகர ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன. ஆசீவகப்பள்ளி, நிக்கந்தக்கோட்டம் என இவை அவ்வீறு கெட்டு ஒற்று மிக்கு முடிந்தன. ஈழவக்கத்தி, வாணிகத்தெரு, அரசக்கன்னி, கோலிகக்கருவி என இவை ஒருமை யீறும் பன்மை யீறுங் கெட்டு மிக்கு முடிந்தன. குமரகோட்டம் குமரக் கோட்டம், பிரமகோட்டம் பிரமக்கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்தன. வண்ணாரப்பெண்டிர்: இஃது ஈறுகெட்டு மிக்கு முடிந்தது. பல்சங்கத்தார், பல்சான்றோர், பல்லரசர் என்றாற் போல்வன ரகரவீறும் அதன் முன்னின்ற அகரமுங் கெட்டுப் பிற செய்கைகளும் பெற்று முடிந்தன. இனி, ‘எல்லா வழியும்’ என்றதனான், உயர்திணை வினைச்சொல் இயல்பாயுந் திரிந்தும் முடிவன எல்லாங் கொள்க. எ-டு: உண்கு உண்டு வருது சேறு உண்பல் உண்டேன் உண்பேன் என்னுந் தன்மைவினைகளைக் கொற்றா சாத்தா தேவா பூதா என்பனவற்றோடு ஒட்டுக. உண்டீர் சான்றீர் பார்ப்பீர் என முன்னிலைக்கண்ணும், உண்ப உண்டார் - சான்றோர் பார்ப்பார் எனப் படர்க்கைக்கண்ணும் ஒட்டுக. இவை இயல்பு. உண்டனெஞ்சான்றேம் உண்டேநாம் என்றாற் போல்வன திரிந்து முடிந்தன. பிறவும் அன்ன. (11) இகர ஈற்று உயர்திணைப்பெயர் திரிந்துமுடியுமாறு 154. அவற்றுள் இகர இறுபெயர் திரிபிட னுடைத்தே. இஃது உயர்திணைப் பெயருட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அவற்றுள் இகர இறுபெயர் - முற்கூறிய உயர்திணைப் பெயர்களுள் இகர ஈற்றுப்பெயர், திரிபிடனுடைத்து - இருவழியுந் திரிந்து முடியும் இடனுடைத்து எ-று. எ-டு: எட்டிப்பூ, காவிதிப்பூ, நம்பிப்பேறு என இவ்வுயர்திணைப் பெயர்கள் வேற்றுமைக்கண் மிக்கு முடிந்தன. எட்டி, காவிதி என்பன தேயவழக்காகிய சிறப்புப் பெயர். எட்டி மரம் அன்று. அஃது ‘எட்டி குமர னிருந்தோன் றன்னை’ (மணி. 4 : 58) என்றதனான் உணர்க. இவை எட்டியதுபூ எட்டிக்குப்பூ என விரியும். இனி, நம்பிக்கொல்லன் நம்பிச்சான்றான் நம்பித்துணை நம்பிப் பிள்ளை எனவும், செட்டிக்கூத்தன் சாத்தன் தேவன் பூதன் எனவும் அல்வழிக்கண் உயர்திணைப்பெயர் மிக்கு முடிந்தன. ‘இடனுடைத்து’ என்றதனான் இகர ஈறல்லாதனவும் ஈறு திரியாது நின்று வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. நங்கைப்பெண் நங்கைச்சானி என அல்வழிக்கண் சிறுபான்மை ஐகார ஈறு மிக்கன. இவ்வீற் றஃறிணைப் பெயர் மிக்கு முடிதல் உயிர் மயங்கியலுட் கூறுப. (12) விரவுப்பெயருள் சில இயல்பாய் முடிதல் 155. அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே. இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென்கின்றது. (இ-ள்.) அஃறிணை விரவுப்பெயர் - உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர், இயல்புமாருள - இயல்பாய் முடிவன வும் உள, உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள எ-று. உயர்திணைப் பெயரோடு அஃறிணை சென்று விரவிற்றென்றது என்னை? சொல்லதிகாரத்து ‘இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையின்’ (சொல். 174) என்று சூத்திரஞ் செய்வாரால் எனின், அதுவும் பொருந்துமாறு கூறுதும். சாத்தன் சாத்தி, முடவன் முடத்தி என வரும் விரவுப் பெயர்க்கண் உயர்திணைக்கு உரியவாக ஓதிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்ற ஈற்றெழுத்துக்களே அஃறிணை யாண்பாலும் பெண்பாலும் உணர்த்தின என்றல் வேண்டும்; என்னை? அஃறிணைக்கு ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறன்றி ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஓதாமையின். அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணையாண் பாலையும் பெண்பாலையும் உணர்த்துதலின், அஃறிணை உயர்திணை யொடு சென்று விரவிற்றென்று அவற்றின் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவான் ஈண்டுக் கூறினார். இவ்வாறே விளிமரபின்கட் ‘கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர்’ (சொல். 152) என்புழியும் ஆசிரியர் உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெய ரென ஆண்டும் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவார். மாணாக்கன் இனிது உணர்தற்கு இவ்வாறு விரவுப் பெயரினது உண்மைத் தன்மைத் தோற்றம் இரண்டு அதிகாரத்துங் கூறி, அவ்விரவுப்பெயர் வழக்கின்கண் இருதிணைப் பொருளும் உணர்த்தி இருதிணைச் சொல்லாய் நிற்றற்கும் ஒத்த உரிமையவாமெனப் புலப்பட நிற்குமாறு காட்டினாரென்று உணர்க. இனி, அவை அல்வழிக்கண் இயல்பாய் நிற்குமாறு:- சாத்தன் கொற்றன், சாத்தி கொற்றி என நிறுத்திக், குறியன் சிறியன் தீயன் பெரியன், குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும்; ஞான்றான் நீண்டான் மாண்டான் யாவன் வலியன், ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் யாவள் வலியள் எனவும்; அடைந்தான் ஔவித்தான், அடைந்தாள் ஔவித்தாள் எனவும், நான்கு கணத்தோடும் ஒட்டி உணர்க. இனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஔவியம் எனவும் ஒட்டுக. இவற்றுள் னகாரம் நிற்பத் தகார நகாரம் வந்துழித் திரியும் உதாரணம் ஈண்டுக் கொள்ளற்க. இனிச் சாத்தன்குறிது, சாத்திகுறிது என அஃறிணை முடிபேற் பனவுங் கொள்க. இவற்றொடு வினைச்சொல் தலைப்பெய்ய இவை இருதிணைக்கும் உரியவாம். (ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார். இஃது உயர்திணைக்கும் ஒக்கும்.) உம்மையான், இயல்பின்றி முடிவன னகார ஈற்றுட் காட்டுதும். (13) மூன்றாம் வேற்றுமைத் தொகையுள் இயல்பும் உறழ்வும் 156. புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின் மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும் அம்முறை யிரண்டும் உரியவை உளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இது மேல் உயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக்கட் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) தம்மினாகிய தொழிற் சொல் - மூன்றாவதற்கு உரிய வினை முதற் பொருளானுளவாகிய தொழிற்சொல், புள்ளி யிறுதி முன்னும் உயிரிறு கிளவி முன்னும் வரின் - புள்ளியீற்றுச் சொன் முன்னரும் உயிரீற்றுச் சொன் முன்னரும் வருமாயின், மெய்ம்மையாகலும் உறழத் தோன்றலும் அம்முறையிரண்டும் உரியவை உள - அவற்றுள் இயல்பாக லும் உறழத்தோன்றலுமாகிய அம் முறை யிரண்டும் பெறுதற்கு உரிய உளவாதலான், வேற்றுமை மருங்கிற் சொல்லிய முறையான் வேண்டும் வல்லெழுத்து மிகுதி - உயிர்மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லிய முறையான் விரும்பும் வல்லெழுத்து மிகுதியை, போற்றல் - ஈண்டுக் கொள்ளற்க எ-று. ‘மெய்ம்மை’ பட்டாங்காதலின் இயல்பாம். எ-டு: நாய் புலி என நிறுத்திக், கோட்பட்டான் சாரப்பட்டான் தீண்டப்பட்டான் பாயப்பட்டான் என வருவித்து இயல்பாய வாறு காண்க. சூர்கோட்பட்டான் சூர்க்கோட்பட்டான், வளிகோட்பட்டான் வளிக்கோட்பட்டான், சாரப்பட்டான், தீண்டப்பட்டான், பாயப்பட்டான் என இவை உறழ்ந்தன. ‘புள்ளியிறுதி உயிரிறுகிளவி’ என்றதனாற் பேஎய்கோட்பட்டான் பேஎய்க்கோட்பட்டான் என எகரப்பேறும் உறழ்ச்சிக்குக் கொடுக்க. ‘அம்முறை யிரண்டும் உரியவை உளவே’ என்றதனாற் பாம்பு கோட்பட்டான் பாப்புக்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலை மொழி யொற்றுத் திரிதலுங் கொள்க. இவ்வீறுகள் நாய்க்கால் தேர்க்கால் கிளிக்கால் என ஆண்டு வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுமாறு காண்க. (14) இரண்டாம் வேற்றுமைத் திரிபுகளாவன 157. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும் சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் சாரியை யியற்கை யுறழத் தோன்றலும் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் அஃறிணை விரவுப்பெயர்க் கவ்வியல் நிலையலும் மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும் அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப. இஃது இரண்டாம் வேற்றுமைத் திரிபு தொகுத்து உணர்த்துகின்றது. (இ-ள்.) மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் - ‘மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே’ (எழுத். 217) என்றதனான் விளங்குறைத்தானென மெல்லெழுத்து மிகுமிடத்து விளக்குறைத்தானென வல்லெழுத்துத் தோன்றுதலும், வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் - ‘மகர விறுதி’ (எழுத். 310) என்பதனான் மரக்குறைத்தான் என வல்லெழுத்து மிகுமிடத்து மரங்குறைத்தான் என மெல்லெழுத்துத் தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - ‘தாயென் கிளவி யியற்கை யாகும்’ (எழுத். 358) என்றவழித் தாய்கொலை என இயல்பாய் வருமிடத்துத் தாய்க்கொலை என மிகுதி தோன்றுதலும், உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் - ‘குறியதன் முன்னரும்’ (எழுத். 226) எனவுங், ‘குற்றெழுத் திம்பரும்’ (எழுத். 267) எனவும், ‘ஏயெ னிறுதிக்கு’ (எழுத். 277) எனவுங் கூறியவற்றான் உயிர்மிக்கு வருமிடத்துப் பலாக்குறைத்தான் கழுக்கொணர்ந்தான் ஏக்கட்டினான் என உயிர் கெட வருதலும், சாரியை உள்வழிச் சாரியைகெடுதலும் - ‘வண்டும் பெண்டும்’ (எழுத். 420) என்பதனாற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டு கொணர்ந்தான் எனச் சாரியை கெட்டு நிற்றலும், சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் - ‘வண்டும் பெண்டும்’ என்பதனாற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டினைக் கொணர்ந்தான் எனத் தன்னுருபு நிற்றலும் (இதற்கு வல்லெழுத்துப்பேறு ஈற்று வகையாற் கொள்க), சாரியை இயற்கை உறழத் தோன்றலும் - ‘புளிமரக் கிளவிக்கு’ (எழுத். 244) எனவும், ‘பனையுமரையும்’ (எழுத். 283) எனவும், ‘பூல்வே லென்றா’ (எழுத். 375) எனவும், பெற்ற சாரியை பெறாது இயல்பாய் நின்று புளிகுறைத்தான் புளிக்குறைத்தான், பனைதடிந்தான், பனைத்தடிந்தான், பூல்குறைத்தான் பூற்குறைத்தான் என மிக்குந் திரிந்தும் உறழ்ச்சியாகத் தோன்றுதலும், உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் - ‘உயிரீறாகிய உயர் திணைப் பெயரும்’ (எழுத். 153) என்பதனான், வேற்றுமைக்கண் இயல்பாய் வருமென்றவை நம்பியைக் கொணர்ந்தான் நங்கையைக் கொணர்ந்தான் என்றவழி இரண்டனுருபு தொகாதே வல்லொற்று மிக்கு நிற்றலும், ‘ஒழியாது’ என்றதனான், மகற்பெற்றான் மகட்பெற்றான் எனவும், ஆடூஉவறிசொல் (சொல். 2) ‘மழவரோட்டிய’ (அகம். 1) ‘அவற்கண் டெம்முள்’ (அகம். 48) எனவும் ஒழிந்தும் வருமென்று கொள்க. அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையலும் - உயர்திணை யோடு அஃறிணை விரவும் பெயர்க்குக் கொற்றனைக் கொணர்ந்தானென உருபு தொகாதே நிற்றலும், ‘அவ்வியல் நிலையலும்’ என்றதனானே, மகப்பெற்றேனென விரவுப்பெயர்க்கண்ணுந் தொகுதல் கொள்க. உருபியலுள், ‘தேருங்காலை’ (எழுத். 202) என்ற இலேசான் இதற்கும் முன்னையதற்கும் வல்லெழுத்துப் பேறுங் கொள்க. மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும் - புள்ளி மயங்கியலுள் ணகார னகார இறுதி வல்லெழுத்தியையின் மெய்பிறிதாமென்ற இடத்து மெய்பிறிதாகாது, மண்கொணர்ந்தான் பொன்கொணர்ந்தான் என இயற்கையாய் வருதலும், அன்ன பிறவும் - அவைபோல்வன பிறவும், அவை ‘எற்கண்டு பெயருங்காலை யாழநின் கற்கெழு சிறுகுடி’ (அகநா. 318) எனவும், ‘நப்புணர் வில்லா நயனில்லோர் நட்பு’ (நற். 165) எனவும் வருவழி, எற்கண்டு நப்புணர்வு என்னுந் தொடக்கங் குறுகும் உயர் திணைப் பெயர்கள் மெல்லெழுத்துப் பெறுதற்கு உரியன வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. இன்னுந் தினைபிளந்தான் மயிர்குறைத்தான் தற்கொண்டான் செறுத்தான் புகழ்ந்தான் என வரும். தன் இயல் மருங்கின் - தன்னையே நோக்கித் திரிபு நடக்குமிடத்து, மெய்பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் - பொருள்பெற எடுத் தோதப்பட்டு ஏனை வேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொது முடிபினைத் தான் நீக்கி வேறு முடிபிற்றாய் நின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப - இரண்டாம் வேற்றுமையது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர் எ-று. ‘மெய்பெற’ என்றதனானே சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது செய்யுட்கண் வருவனவும், பிறவற்றின்கண் உறழ்ந்து முடிவனவுங் கொள்க. ‘மறங்கடிந்த வருங்கற்பின்’ எனவும், ‘சில்சொல்லிற் பல்கூந்தல்’ (புறம். 166) எனவும், ‘ஆயிரு திணையினிசைக்குமன்’ (சொல். 1) எனவும், பிறாண்டும் பெரும்பான்மையும் வருமென்று கொள்க. மைகொணர்ந்தான் மைக் கொணர்ந்தான், வில்கோல் விற்கோள் என உறழ்ந்தும் வரும். இனி, இவ்வாறு திரியாது அகத்தோத்திற் கூறிய பொதுமுடிபே தமக்கு முடிபாக வருவனவும் கொள்க. அவை கடுக்குறைத்தான், செப்புக்கொணர்ந்தான் என்றாற் போல்வன. ‘தம்மினாகிய தொழிற்சொன் முன்வரின்’ (எழுத். 156) என்ற அதிகாரத்தான், வினைவந்துழியே இங்ஙனம் பெரும்பான்மை திரிவதென்று உணர்க. இனித் ‘தன்னின முடித்தல்’ என்பதனான் ஏழாவதற்கும் வினை யொடு முடிவுழித் திரிதல் கொள்க. அது ‘வரைபாய் வருடை’ (மலைபடு. 503), ‘புலம்புக் கனனே புல்லணற் காளை’ (புறம். 258) என்றாற்போல் வரும். (15) இகர ஐகார ஈற்றுப்பெயர்க்கு அல்வழி முடிபு 158. வேற்றுமை யல்வழி இஐ யென்னும் ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய அவைதாம் இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் என்மனார் புலவர். இஃது இகர ஈற்றுப் பெயர்க்கும் ஐகார ஈற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமை யல்வழி - வேற்றுமை யல்லா இடத்து, இ ஐ என்னும் ஈற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலைய - இ ஐ என்னும் ஈற்றை யுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபு நிலையையுடைய; அவைதாம் - அம்முடிபுகள்தாம், இயல்பாகுநவும் - இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்து மிகுநவும் - வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும் - உறழ்ச்சியாய் முடிவனவும், என்மனார் புலவர் - என இவையென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: பருத்தி குறிது, காரை குறிது சிறிது தீது பெரிது என இவை இயல்பு. மாசித்திங்கள், சித்திரைத்திங்கள், அலிக்கொற்றன், புலைக்கொற்றன், காவிக்கண், குவளைக்கண் என இவை மிகுதி. கிளிகுறிது கிளிக்குறிது, தினைகுறிது தினைக்குறிது என இவை உறழ்ச்சி. ‘பெயர்க் கிளவி மூவகை நிலைய’ எனவே பெயரல்லாத இரண்டீற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இயல்பும் மிகுதியுமாகிய இருவகை நிலையவாம். ஒல்லைக்கொண்டான் என்பது ஐகார ஈற்று வினைச்சொன் மிகுதி. ‘இனி யணி’ (எழுத். 236) யென்பதன்கண் இகரஈற்று வினையெச்சம் எடுத்தோதுப. இவற்றிற்கு இயல்பு வந்துழிக் காண்க. ‘சென்மதி பாக’ இஃது இகர ஈற்று இடைச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. ‘தில்லைச் சொல்லே’ (சொல். 253) இஃது ஐகார ஈற்று இடைச்சொன்மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. ‘கடிகா’ இஃது இகர ஈற்று உரிச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. பணைத்தோள் இஃது ஐகார ஈற்று உரிச்சொன் மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. (16) இகர ஐகார ஈற்று இடைச்சொல் முடிபு 159. சுட்டுமுத லாகிய இகர இறுதியும் எகரமுதல் வினாவின் இகர இறுதியும் சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் யாவென் வினாவின் ஐயென் இறுதியும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவுஞ் சொல்லியல் மருங்கின் உளவென மொழிப. இஃது ஏழாம் வேற்றுமை இடப்பொருளுணர்த்தி நின்ற இகர ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) சொல்லியல் மருங்கின் - இகர ஐகாரங்கட்கு முன்னர்க் கூறிய மூவகை இலக்கணங்களுள் இயல்பை நீக்கிச் சொல்லுமிடத்து, சுட்டு முதலாகிய இகர இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், எகர வினாவின் முதல் இகர இறுதியும் - எகரமாகிய வினாவினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச் சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் - சுட்டாகிய உறுப் பெழுத்து நீண்ட அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், யாவென் வினாவின் ஐயென் இறுதியும் - யாவென் வினாவினை முதற்கணுடைய அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகுநவும் - வல் லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும் - உறழ்ச்சியாய் முடிவனவும், உளவென மொழிப - உளவென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: அதோளிக்கொண்டான், இதோளிக்கொண்டான், உதோளிக்கொண்டான், எதோளிக்கொண்டான், சென்றான் தந்தான் போயினான் எனவும்; ஆண்டைக்கொண்டான், ஈண்டைக் கொண்டான் ஊண்டைக்கொண்டான், யாண்டைக்கொண்டான் எனவும் இவை மிக்கன. அதோளி அவ்விடமென்னும் பொருட்டு. அவ்வழிகொண்டான் அவ்வழிக்கொண்டான், இவ்வழிகொண்டான் இவ்வழிக் கொண்டான், உவ்வழிகொண்டான் உவ்வழிக்கொண்டான், எவ்வழிகொண்டான் எவ்வழிக் கொண்டான் என உறழ்ந்தன. சுட்டுச்சினை நீண்டதற்கும் யா வினாவிற்கும் வரும் ஐகார ஈற்றுக்கு உதாரணம் அக்காலத்து ஆயிடைகொண்டான் ஆயிடைக் கொண்டான் என்றாற்போல ஏனையவற்றிற்கும் வழங்கிற்றுப்போலும். இனி ஆங்கவைகொண்டான் ஆங்கவைக்கொண்டான் என்பன காட்டுவாரும் உளர். அவை திரிபுடையனவாம். ‘சொல்லியல்’ என்றதனாலே பிற ஐகார ஈறு மிக்கு முடிவன கொள்க. அன்றைக் கூத்தர், பண்டைச் சான்றோரெனவும், ஒருதிங்களைக்குழவி, ஒருநாளைக்குழவி எனவும் வரும். (17) நெடில்முன்னரும் தனிக்குறில்முன்னரும் நிலைமொழியீற்றுமெய் திரிதல் 160. நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் குறியதன் முன்னர்த் தன்னுருவு இரட்டலும் அறியத் தோன்றிய நெறியிய லென்ப. இது புள்ளிமயங்கியலை நோக்கியதொரு நிலைமொழிக் கருவி கூறுகின்றது. (இ-ள்.) நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் - நெட் டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதலும், குறியதன் முன்னர்த் தன் உருவு இரட்டலும் - குற்றெழுத்தின் முன் நின்ற ஒற்றுத்தன் வடிவு இரட்டித்தலும், அறியத் தோன்றிய நெறியியல் என்ப - அறியும்படி வந்த அடிப்பாட்டிய லென்று கூறுவர் ஆசிரியர் எ-று. இங்ஙனம் நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடுவன: ணகாரமும், னகாரமும், மகாரமும், லகாரமும், ளகாரமும் என ஐவகையவாம். எ -டு: கோணிமிர்ந்தது, தானல்லன், தாநல்லர், வேனன்று, தோணன்று என நகரம் வருமொழியாதற்கண் நெடியதன் முன்னர் ஒற்றுக்கெட்டது. கோறீது, வேறீது எனத் தகரம் வருமொழியாதற்கண் லகாரவொற்றுக் கெட்டது. ஏனைய வந்துழிக் காண்க. இவற்றை ‘லனவென வரூஉம்’ (எழுத். 149) ‘ணளவென் புள்ளிமுன்’ (எழுத். 150) என்பனவற்றான் முடித்துக் கெடுமாறு காண்க. ஒற்றிரட்டுவன, ஞகார நகார ரகார ழகாரம் ஒழிந்தன. கண்ணழகிது, பொன்னகல், தம்மாடை, சொல்லழகிது, எள்ளழகிது, நெய்யகல், தெவ்வலன் எனக் குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டின. மேலைச் சூத்திரத்து நான்கனுருபு பிற்கூறியதனான், ஒற்றிரட்டுதல் உயிர் முதன்மொழிக்கண்ணதென்று உணர்க. குறியது பிற்கூறிய முறையன்றிக் கூற்றினான் தம்மை எம்மை நின்னை என நெடியன குறுகி நின்றவழியுங் குறியதன் முன்னர் ஒற்றாய் இரட்டுதலும், விரனன்று குறணிமிர்ந்தது எனக் குறிலிணையின் முன்னர் வந்த ஒற்றுக்கெடுதலும், வராறீது நன்று எனக் குறினெடிற்கண் நின்ற ஒற்றுக்கெடுதலும், ‘அதுகொறோழி’ (குறுந். 5) எனவுங் குரிசிறீயன் எனவுந் தொடர்மொழியீற்று நின்ற ஒற்றுக் கெடுதலும், இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டு நிற்றலும், காற்றீது எனவும் விரற்றீது எனவும் ஒற்று நிற்றலுங் கொள்க. இனி ‘அறிய’ என்றதனான் தேன்றீது நாண்டீது, தேனன்மை நாணன்மை என்றாற்போல்வன கெடாமை நிற்றலுங் கெடுதலும் தகர நகரங்கள் வந்துழி யென்பதூஉங் கொள்க. ‘நெறியியல்’ என்றதனாற், சுட்டின்முன் உயிர் முதன்மொழி வந்துழி அவ்வடை அவ்வாடை என, இடை வகரவொற்று இல்வழியும் இரட்டுதல் கொள்க. (18) மேலைக் குற்றொற்று இரட்டாத இடன், அவ்வீறு அகரம் பெறுதல் 161. ஆறன் உருபினும் நான்கன் உருபினும் கூறிய குற்றொற் றிரட்ட லில்லை ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும் நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான. இஃது உருபியலை நோக்கியதொரு நிலைமொழிக்கருவி கூறுகின்றது. (இ-ள்.) நெடுமுதல் குறுகும் மொழிமுன் ஆன - நெடிதாகிய முதலெழுத்துக் குறுகி முடியும் அறுவகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த, ஆறனுருபினும் நான்கனுருபினும் - ஆறாம் வேற்றுமைக்கண்ணும் நான்காம் வேற்றுமைக்கண்ணும், கூறிய குற்றொற்று இரட்டலில்லை - முன்னர் நிலைமொழிக்கு இரட்டுமென்ற குற்றொற்று இரட்டி வருதலில்லை; ஈறாகுபுள்ளி அகரமொடு நிலையும் - நிலைமொழி யீற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம்பெற்று நிற்கும் எ-று. உருபியலில், ‘நீயெனொருபெயர்’ (எழுத். 179) எனவும், ‘தாம்நா மென்னும்’ (எழுத். 188) எனவும், ‘தான்யானென்னும்’ (எழுத். 192) எனவுங் கூறியவற்றாற் குறுகி ஒற்றிரட்டித் தம்மை நம்மை எம்மை தன்னை நின்னை என்னை என வருவன, இதனானே தமது நமது எமது தனது நினது எனது எனவும்; தமக்கு நமக்கு எமக்கு தனக்கு நினக்கு எனக்கு எனவும் ஒற்றிரட்டாது அகரம் பெற்றுவந்தன. நான்காவதற்கு ஒற்றுமிகுதல் ‘வல்லெழுத்து முதலிய’ (எழுத். 114) என்பதனாற் கொள்க. ஆறனுருபாகிய அகரம் ஏறி முடியாமைக்குக் காரணம் ‘ஆறனுருபி னகரக்கிளவி’ (எழுத். 115) என்புழிக் கூறினாம். ஒற்றிரட்டாமையும் அகரப்பேறும், இரண்டற்கும் ஒத்த விதி யென்று உணர்க. ‘கூறிய’ என்றதனான் நெடுமுதல் குறுகாத தம் நம் நும் என வருஞ் சாரியைகட்கும் இவ்விரு விதியுங் கொள்க. எல்லார் தமக்கும், எல்லா நமக்கும், எல்லீர் நுமக்கும், எல்லார் தமதும், எல்லா நமதும், எல்லீர் நுமதும் என வரும். (19) ‘நும்’ இறுதியும் அற்றாதல் 162. நும்மென் இறுதியும் அந்நிலை திரியாது. இது நெடுமுதல் குறுகாத நும்மென்கின்றதும் அவ்விதி பெறுமென் கின்றது. (இ-ள்.) நும்மென் இறுதியும் - நெடுமுதல் குறுகா நும்மென்னும் மகரவீறும், அந்நிலை திரியாது - முற்கூறிய குற்றொற்று இரட்டாமையும் ஈறாகுபுள்ளி அகரமொடு நிலையலும் எய்தும் எ-று. எ-டு: நுமது நுமக்கு என வரும். (20) யகரமும் உயிரும் வருவழி, நிலைமொழி யீறு உகரம் பெறாமை 163. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமும் உயிரும் வருவழி இயற்கை. இது புள்ளி மயங்கியலை நோக்கியதொரு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. (இ-ள்.) உகரமொடு புணரும் புள்ளி யிறுதி - உகரப் பேற்றொடு புணரும் புள்ளியீறுகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை - யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெறாது இயல்பாய் முடியும் எ-று. அவ்வீறுகளாவன, புள்ளி மயங்கியலுள் உகரம் பெறுமென்று விதிக்கும் பல ஈறுகளுமென்று கொள்க. உரிஞ் யானா அனந்தா ஆதா இலகா ஈந்தா உழுந்தா ஊரா எயினா ஏறா ஐயா ஒழுக்கா ஓதா ஔவியா எனவும், உரிஞ்யாது அழகு எனவும் ஒட்டுக. ஏனைப் புள்ளிகளோடும் ஏற்பன அறிந்து ஒட்டுக. ‘ஞகாரையொற்றிய’ (எழுத். 296) என்பதனானும், ‘ஞநமவ வியையினும்’ (எழுத். 297) என்பதனானும் யகரமும் உயிரும் வந்தால் உகரம் பெறாது இயல்பாமென்பது பெறுதலின் ஈண்டு விலக்கல் வேண்டா வெனின், எடுத்தோத்தில்வழியதே உய்த்துணர்ச்சி யென்று கொள்க. இது முதலாக அல்வழி கூறுகின்றார். (21) அளவு நிறை எண்ணுப்பெயர்கள் தம்மிற் புணருமாறு 164. உயிரும் புள்ளியும் இறுதி யாகி அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த தென்ப ஏயென் சாரியை. இஃது அளவும் நிறையும் எண்ணுமாகிய பெயர்கள் தம்மிற் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) உயிரும் புள்ளியும் இறுதியாகி - உயிரும் புள்ளியுந் தமக்கு ஈறாய், அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி உளவெனப்பட்ட எல்லாச் சொல்லும் - அளவையும் நிறையையும் எண்ணையுங் கருதி வருவன உளவென்று ஆசிரியர் கூறப்பட்ட எல்லாச் சொற்களும், தத்தங் கிளவி தம்மகப்பட்ட - தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த சொற்கள், முத்தை வரூஉங் காலந் தோன்றின் - தம் முன்னே வருங் காலந் தோன்றுமாயின், ஏயென் சாரியை ஒத்தது என்ப - தாம் ஏயென் சாரியை பெற்று முடிதல் பொருந்திற்றென்பர் ஆசிரியர் எ-று. ‘முந்தை’ முத்தை யென விகாரம். எ-டு: நாழியேயாழாக்கு, உழக்கேயாழாக்கு, கலனேபதக்கு என அளவுப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. தொடியேகஃசு, கழஞ்சேகுன்றி, கொள்ளேயையவி என நிறைப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. ஒன்றேகால், காலேகாணி, காணியேமுந்திரிகை என எண்ணுப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. அதிகாரம்பட்ட புள்ளியீறு முற்கூறாததனானே குறுணி நானாழி, ஐந்நாழியுழக்கு என ஏகாரமின்றி வருவனவுங் கொள்க. (22) ‘அரை’ வருவழி நிலைமொழி சாரியை பெறாமை 165. அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை யியற்கை. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) அரையென வரூஉம் பால்வரை கிளவிக்கு - அம்மூவகைச் சொன் முன்னர் வரும் அரை யென்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை உணரநின்ற சொல்லிற்கு, சாரியையியற்கை புரைவதன்று - ஏயென் சாரியை பெறுந்தன்மை பொருந்துவதன்று எ-று. ஆல் - அசை. எ-டு: உழக்கரை, செவிட்டரை, மூவுழக்கரை எனவும்; கஃசரை, கழஞ்சரை, தொடியரை, கொள்ளரை எனவும்; ஒன்றரை, பத்தரை எனவும் இவை ஏயென் சாரியை பெறாவாய் வந்தன. ‘புரைவதன்று’ என்றதனாற் கலவரை யென்பதனை ஒற்றுக் கெடுத்துச் செய்கை செய்து முடிக்க. இதனானே செவிட்டரை யென்புழி டகரவொற்று மிகுதலுங் கொள்க. ‘ஒட்டுதற் கொழுகிய வழக்கு’ (எழுத். 132) அன்மையிற் சாரியை பெறாவாயின என்றாலோவெனின், அவை பெற்றும் பெறாதும் வருவனவற் றிற்குக் கூறியதாகலானும், இது ‘தம்மகப் பட்ட’ (எழுத். 164) என வரைந்தோதினமையானும் விலக்கல் வேண்டிற்று. (23) ‘குறை’ வருவழி வேற்றுமைமுடிபு பெறுதல் 166. குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை. இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது; ஏயென் சாரியை விலக்கி வேற்றுமை முடிபினொடு மாட்டெறிதலின். (இ-ள்.) குறையென் கிளவி முன்வரு காலை - குறையென்னுஞ் சொல் அளவுப்பெயர் முதலியவற்றின்முன் வருங்காலத்திற்கு, வேற்றுமை யியற்கை - வேற்றுமைப் புணர்ச்சி முடிபிற்கு உரித்தாகக் கூறுந்தன்மை, நிறையத் தோன்றும் - நிரம்பத் தோன்றும் எ-று. எ-டு: உரிக்குறை கலக்குறை எனவும், தொடிக்குறை கொட்குறை எனவும், காணிக்குறை காற்குறை எனவும் வரும். உரிநெல்லுங் குறைநெல்லும் என்க. ‘வேற்றுமை யியற்கை’ எனவே இவை வேற்றுமை யல்லவாயின. எனவே, உரிக்குறை யென்பதற்கு உரியும் உழக்குமெனப் பொருளாயிற்று. ஏனையவும் அன்ன. ‘முன்வரு காலை’ என்றதனானே கலப்பயறு, கலப்பாகு என்றாற்போலப் பொருட்பெயரொடு புணரும்வழியும் இவ்வேற்றுமை முடிபு எய்துவிக்க. பாகு என்றது பாக்கினை. ‘நிறைய’ என்றதனானே உரிக்கூறு, தொடிக்கூறு, காணிக்கூறு எனக் கூறென்றதற்கும் இம்முடிபு எய்துவிக்க. (24) குற்றுகர ஈறு ‘குறை’ வருவழி இன்சாரியை பெறுதல் 167. குற்றிய லுகரத் தின்னே சாரியை. இது வேற்றுமை முடிபு விலக்கி இன் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. (இ-ள்.) குற்றியலுகரத்துச் சாரியை - குற்றியலுகர ஈற்று அளவுப் பெயர் முதலியவற்றிற்குக் குறையென்பதனொடு புணரும்வழி வருஞ் சாரியை, இன்னே - இன் சாரியையேயாம் எ-று. ‘குற்றியலுகரத்து’ இதற்கு அத்து விதித்து முடிக்க. ‘குற்றிய லுகரக் கின்னே’ என்பதும் பாடம். எ-டு: உழக்கின்குறை ஆழாக்கின்குறை எனவும், கழஞ்சின்குறை கஃசின்குறை எனவும், ஒன்றின்குறை பத்தின்குறை எனவும் வரும். இதற்கு உழக்குங்குறையும் என்பது பொருள். இது வேற்றுமைக் கண்ணாயின் உழக்கிற்குறையென நிற்கும். (25) ‘கலம்’ அத்துப் பெறுதல் 168. அத்திடை வரூஉங் கலமென் அளவே. இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, வேற்றுமை விதிவிலக்கி அத்து வகுத்தலின். (இ-ள்.) கலமென் அளவே - கலமென்னும் அளவுப்பெயர் குறை யொடு புணருமிடத்து, அத்து இடை வரூஉம் - அத்துச் சாரியை இடை வந்து புணரும் எ-று. எ-டு: கலத்துக் குறை என வரும். இதனை ‘அத்தே வற்றே’ (எழுத். 33) என்பதனான் முடிக்க. இதற்கு கலமுங் குறையும் என்பது பொருள். சாரியை முற்கூறியவதனானே, முன் இன்சாரியை கலம் பெற்றவழி வல்லெழுத்து வீழ்க்க. (26) ‘பனை’யும் ‘கா’வும் ‘இன்’ பெறுதல் 169. பனையென் அளவுங் காவென் நிறையும் நினையுங் காலை இன்னொடு சிவணும். இதுவும் அது, வேற்றுமைவிதி விலக்கி இன் வகுத்தலின். (இ-ள்.) பனையென் அளவுங் காவென் நிறையும் - பனையென்னும் அளவுப்பெயரும் காவென்னும் நிறைப்பெயருங் குறையென்பதனொடு புணருமிடத்து, நினையுங்காலை இன்னொடு சிவணும் - ஆராயுங்காலத்து இன்சாரியை பெற்றுப் புணரும் எ-று. எ-டு: பனையின்குறை, காவின்குறை என வரும். இவையும் உம்மைத்தொகை. ‘நினையுங்காலை’ என்பதனான் வேற்றுமைக்கு உரிய விதியெய்தி வல்லெழுத்துப் பெறுதலுஞ் சிறுபான்மை கொள்க. எ-டு: பனைக்குறை, காக்குறை என வரும். இத்துணையும் அல்வழி முடிபு. இவற்றை ‘வேற்றுமை யல்வழி இஐ’ (எழுத். 158) என்னுஞ் சூத்திரத்திற் கூறாது வேறோதினார், இவை அளவும், நிறையும், எண்ணுமாதலின். (27) அளவு நிறைப் பெயர்களுக்கு மொழிமுதலாம் எழுத்துக்கள் 170. அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே அவைதாம் கசதப என்றா நமவ என்றா அகர உகரமோ டவையென மொழிப. இது முற்கூறிய மூன்றனுள், அளவிற்கும் நிறைக்கும் மொழிக்கு முதலாமெழுத்து இனைய என்கின்றது. (இ-ள்.) அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே - அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் மொழிக்கு முதலாயுள்ளனவென்று கூறப்பட்டன ஒன்பதெழுத்துக்கள்; அவைதாம் கசதப என்றா நமவ என்றா அகரவுகரமோடு அவையென மொழிப-அவ்வெழுத்துக்கள்தாம் கசதபக்களும் நமவக்களும் அகர உகரமுமாகிய அவையென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு: இவை அளவு. கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை: இவை நிறை. நிறைக்கு உகர முதற்பெயர் வந்துழிக் காண்க. இனி, ‘உளவெனப்பட்ட’ என்றதனானே உளவெனப்படாதனவும் உள. அவை, இம்மி ஓரடை இடா என வரையறை கூறாதனவுங் கொள்க. இன்னும் இதனானே, தேயவழக்காய் ஒருஞார், ஒருதுவலி என்பனவுங் கொள்க. இங்ஙனம் வரையறை கூறினார், அகத்தோத்தினுள் முடிபு கூறியவழி அதிகாரத்தான் வன்கணத்தின்மேற் செல்லாது ஒழிந்த கணத்தினுஞ் செல்லுமென்றற்கு. எண்ணுப்பெயர் வரையறை யின்மையிற் கூறாராயினார். (28) இவ்வோத்துப் புறனடை 171. ஈறியல் மருங்கின் இவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே. இஃது இவ்வோத்திற்குப் புறனடை; எடுத்தோத்தானும் இலேசா னும் முடியாதனவற்றிற்கு இதுவே ஓத்தாகலின். (இ-ள்.) ஈறு இயல் மருங்கின்- உயிரும் புள்ளியும் இறுதியாகிய சொற்கள் வருமொழியொடு கூடி நடக்குமிடத்து, இவற்று இயல்பு இவையெனக் கூறிய கிளவிப் பல்லாறெல்லாம் - இம் மொழிகளின் முடிபு இவையெனக் கூறி முடிக்கப்பட்ட சொற்களினுடைய அவ்வாற்றான் முடியாதுநின்ற பலவகை முடிபுகளெல்லாம், மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி-உண்மையைத் தலைப்பட்ட வழக்கொடு கூடி, புணர்மொழிநிலை ஒத்தவை உரிய - புணரும் மொழிகளின் நிலைமைக்கட் பொருந்தினவை உரியவாம் எ-று. எ-டு: நடஞெள்ளா என உயிரீறாகிய முன்னிலைக் கிளவி மென்கணத்தோடு இயல்பாய் முடிந்தது. மண்ணுகொற்றா மண்ணுக்கொற்றா, மன்னுகொற்றா மன்னுக்கொற்றா, உள்ளுகொற்றா உள்ளுக்கொற்றா, கொல்லுகொற்றா கொல்லுக்கொற்றா என்பன புள்ளியிறுதி முன்னிலைக்கிளவி உகரம் பெற்றும் உறழ்ந்தும் முடிந்தன. உரிஞுஞெள்ளா : இஃது ‘ஔவென வரூஉம்’ (எழுத். 152) என்பதன் ஒழிபு. பதக்கநானாழி, பதக்கமுந்நாழி என இவை ஏயென்சாரியை பெறாது அக்குப் பெற்று அதன் இறுதி மெய்ம்மிசையொடுங் கெட்டுப் புணர்ந்தன. வாட்டானை தோற்றண்டை என்பன தகரம் வந்துழித் திரிந்து நெடியதன் முன்னர் ஒற்றுக் கெடாது நின்றன. சீரகரை என்பதனைச் சீரகம் அரை யென நிறுத்திக் ககர வொற்றின் மேலேறின அகரத்தையும் மகரவொற்றை யுங் கெடுத்து அரை யென்பதன் அகரத்தை யேற்றி முடிக்க. இது நிறைப் பெயர். ஒரு மாவரை யென்பதனை ஒரு மா அரை என நிறுத்தி, வருமொழி அகரங் கெடுத்து ஒருமாரையென முடிக்க. கலவரை யென்பதனைக் கலரை என முடிக்க. அகர மகரங் கெடுத்து ‘நாகணை’ (சீவக. 287) யெனப் பிறவும் வருவனவெல்லாம் இச் சூத்திரத்தான் முடிக்க. (29) யாவர், யாது என்பவற்றின் மரூஉ முடிபு 172. பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வகரங் கெடுதலும் ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. இது மரூஉச்சொன் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) பலரறி சொன்முன் யாவரென்னும் பெயரிடை வகரங் கெடுதலும் - பலரை யறியும் அவர் முதலிய சொல்லின் முன்னர் வருகின்ற யாவரென்னும் பெயர் இடையில் வகரங் கெடுதலும், ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினா இடை ஒன்றிய வகரம் வருதலும் - ஒழிந்த ஒன்றனை அறியும் அது முதலிய சொல்லின் முன்னர் வருகின்ற யாதென்னும் வினாச்சொல் இடையிலே உயிரொடு பொருந்திய வகரம் வருதலும், இரண்டும் - ஆகிய அவை யிரண்டும், மருவின் பாத்தியின் மன் பயின்று திரியும் - மருமுடிபின் பகுதியிடத்து மிகவும் பயின்று திரியும் எ-று. எ-டு: அவர் யார் எனவும், அது யாவது எனவும் வரும். அவர் யாவரென்பது வகரங் கெட்டு அவர் யாரென நின்றவழி, ‘யாஅ ரென்னும் வினாவின் கிளவி’ (சொல். 210) என்ற வினையியலுட் கூறும் வினைக்குறிப்புச் சொல்லாம் பிறவெனின், ஆகாது; அவ்வகரங் கெட்டா லும் ஈண்டு யாவரென்னும் பெயர்த் தன்மையாயே நிற்றலின். அது பெற்றவா றென்னை யெனின், ஈண்டுப் பலரறி சொன்முன் வந்த யாவரென்பதன் வகரம் கெடுமெனவே, ஏனை அவன் அவள் என்னும் இருபால் முன்னும் யாவரென்பது வாராதென்றும் அது திரிந்து மருவாய் நிற்கு மென்றுங் கூறுதலானும், ‘யாவரென்னும் பெயரிடை’ என்பதனானும் பெற்றாம். இதனானே அவன்யாவர், அவள்யாவர் என்றாற் பால்வழுவா மென்பது பெற்றாம். இதனை ‘யாவன் யாவள் யாவரென்னு, மாவயின் மூன்றோடு’ (சொல். 162) எனப் பெயராக ஓதியவாற்றான் உணர்க. அன்றியும் யாரென்னும் வினாவின் கிளவி முப்பாற்கும் உரித்தென்று யாரென்னும் வினா வினைக்குறிப்பினை அவன்யார், அவள்யார், அவர்யார் என முப்பாற்கும் ஒப்ப உரிமை கூறுதலானும் அது வேறென்பது பெற்றாம். அது வினையியலுள் ஓதினமையானும் ‘வினாவிற்கேற்றல்’ (சொல். 66) எனப் பயனிலையாக ஓதினமையானும் வேறாயிற்று. இனி ‘யார்யார்க் கண்டே யுவப்பர்’ எனப் பலரறி சொல் முன்னரன்றி இயல்பாக வந்த யாரென்பது யாண்டு அடங்குமெனின், அதுவும் யாரை யாரைக்கண்டென உருபு விரிதலின் யாவரை என்னும் வகரங்கெட்ட பெயரேயாம். அங்ஙனம் நிலைமொழி வருமொழியாய் நிற்றல் ‘பயின்று’ என்றதனாற் கொள்க. இதனானே, ‘யாவது நன்றென வுணரார் மாட்டும்’ (குறுந். 78) என ஏனை ஒன்றறிசொல்லும் நிலைமொழியாய் நிற்றல் கொள்க. இன்னும் இதனானே, யாரவர், யாவதது என இவ்விரு சொல்லும் நிலைமொழியாய் வருதல் கொள்க. (30) தொகைமரபு முற்றிற்று. 6 உருபியல் இன்ன ஈறுகளின் முன்னர் வேற்றுமையுருபு இன்சாரியை பெறும் எனல் 173. அஆ உஊ ஏஔ என்னும் அப்பா லாறன் நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை என்பது சூத்திரம். உருபுகளொடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின், இவ்வோத்து ‘உருபியல்’ என்னும் பெயர்த்தாயிற்று. மேல் தொகுத்துப் புணர்த்ததனை ஈண்டு விரித்துப் புணர்க்கின்றாராகலின், இவ்வோத்துத் தொகைமரபோடு இயைபுடைத்தாயிற்று. இச்சூத்திரம் அகர முதலிய ஈற்றான் வரும் ஆறு ஈற்றுச் சொற்கள் நின்று இன் பெற்று உருபினொடு புணருமாறு கூறுகின்றது. உருபின் பொருள்பட வரும் புணர்ச்சி மேற்கூறுப. (இ-ள்.) அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர் - அ ஆ உ ஊ ஏ ஔ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஆறனையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற, வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை - வேற்றுமையுருபுகட்கு இடையே வருஞ் சாரியை இன் சாரியையே எ-று. எ-டு: விளவினை விளவினொடு விளவிற்கு விளவினது விளவின்கண் எனவும், பலாவினை பலாவினொடு பலாவிற்கு பலாவினது பலாவின்கண் எனவும், கடுவினை கடுவினொடு கடுவிற்கு கடுவினது கடுவின்கண் எனவும், தழூஉவினை தழூஉவினொடு தழூஉவிற்கு தழூஉவினது தழூஉவின்கண் எனவும், சேவினை சேவினொடு சேவிற்கு சேவினது சேவின்கண் எனவும், வௌவினை வௌவினொடு வௌவிற்கு வௌவினது வௌவின்கண் எனவும் வரும். இவ்வாறே செய்கை யறிந்து ஒட்டுக. ‘இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்(கு) இன்னென் சாரியை யின்மை வேண்டும்’ (எழுத். 131) எனவே, ஏனைய இன் பெறுமென்றலின், ‘ஞநமயவ’ (எழுத். 144) என்பதனான் இயல்பென்றது விலக்கிற்றாம். (1) உருபுபுணர்ச்சிக்கண் வற்றுச் சாரியை பெறும் பெயர்கள் 174. பல்லவை நுதலிய அகர இறுபெயர் வற்றொடு சிவணல் எச்ச மின்றே. இஃது இன்சாரியை விலக்கி வற்று வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) பல்லவை நுதலிய பெயரிறு அகரம்-பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி நின்ற அகரம், வற்றொடு சிவணல் எச்சமின்று-வற்றுச் சாரியையொடு பொருந்துதலை ஒழிதலில்லை எ-று. எ-டு: பல்லவற்றை பல்லவற்றொடு, பலவற்றை பலவற்றொடு, சில்லவற்றை சில்லவற்றொடு, சிலவற்றை சிலவற்றொடு, உள்ளவற்றை உள்ளவற்றொடு, இல்லவற்றை இல்லவற் றொடு என ஒட்டுக. ‘எச்சமின்று’ என்றதனானே, மேல் இன் பெற்றன பிற சாரியையும் பெறுதல் கொள்க. எ-டு: நிலாத்தை, துலாத்தை, மகத்தை என வரும். இன்னும் இதனானே, பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாமுருபு வற்றுப் பெற்றே முடிதல் கொள்க. (2) ‘யா’ வினாப்பெயரும் வற்றுப் பெறுதல் 175. யாவென் வினாவும் ஆயியல் திரியாது. இஃது ஆகார ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) யாவென் வினாவும் - யாவென்று சொல்லப்படும் ஆகார ஈற்று வினாப்பெயரும், ஆயியல் திரியாது - முற்கூறிய வற்றுப் பேற்றின் திரியாது எ-று. எ-டு: யாவற்றை யாவற்றொடு என வரும். (3) சுட்டுமுதல் உகரம் அன்சாரியை பெற்றுமுடிதல் 176. சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே. இஃது உகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச்சொல் அன் சாரியையொடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரங் கெடும் - தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரங் கெடும் எ-று. எ-டு: அதனை அதனொடு, இதனை இதனொடு, உதனை உதனொடு என வரும். அதினை அதினொடு என்றாற் போல்வன மரூஉ முடிப்புழி முடிந்தன. ‘ஒட்டிய’ என்றதனாற், சுட்டுமுதல் உகரமன்றிப் பிற உகரமும் உயிர் வருவழிக் கெடுவன கொள்க. அவை கதவு, களவு, கனவு என நிறுத்தி, அழகிது இல்லை என வருவித்து உகரங் கெடுத்து முடிக்க. இவற்றை வகர ஈறாக்கி உகரம் பெற்றனவென்று கோடுமெனின், வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் பயின்று வரும் வகர ஈறுகளை ஒழித்து ஆசிரியர் ‘வகரக் கிளவி நான்மொழி யீற்றது’ (எழுத். 81) என்றாற் போல வரைந்தோதல் குன்றக் கூறலாம். ஆதலின், அவை உகர ஈறென்றே கொள்க. அவை, செலவு வரவு தரவு உணவு கனவு என வழக்கின்கண்ணும், ‘புன்க ணுடைத்தாற் புணர்வு’ (குறள். 1152), ‘பாடறியா தானை யிரவு,’ ‘கண்ணாரக் காணக் கதவு’ (முத்தொள். 42) எனச் செய்யுட்கண்ணும் பயின்று வருமாறு உணர்க. (4) சுட்டுமுதல் ஐகாரம் வற்றுப் பெற்று முடிதல் 177. சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. இஃது ஐகார ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதலாகிய ஐயெ னிறுதி - சுட்டெழுத்தினை முதலாக வுடைய ஐகார ஈற்றுச்சொல், வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து - வற்றுச் சாரியையொடு பொருந்தி நிற்றலும் உரித்து எ-று. உம்மையான் வற்றொடு சில உருபின்கண் இன் சாரியை பெற்று நிற்றலும் உரித்து எ-று. எ-டு: அவையற்றை அவையற்றொடு, இவையற்றை இவையற் றொடு, உவையற்றை உவையற்றொடு என ஒட்டுக. இங்ஙனம் ஐகாரம் நிற்க, வற்று வந்துழி ‘வஃகான் மெய்கெட’ (எழுத். 122) என்பதனான் முடிக்க. இனி, உம்மையான் அவையற்றிற்கு, அவையற்றின்கண் என நான்காவதும் ஏழாவதும், வற்றும் இன்னும் பெற்று வந்தவாறு காண்க. இனி, ‘ஒன்றென முடித்தல்’ என்பதனாற் ‘பல்லவை நுதலிய அகர’ (எழுத். 174) ஈற்றிற்கும் இவ்விரண்டு உருபின்கண் வற்றும் இன்னும் கொடுத்துப் பலவற்றிற்கு, பலவற்றின்கண் என முடிக்க. இதுமேல் வருவன வற்றிற்கும் ஒக்கும். (5) ‘யாவை’ வற்றுப்பெற்று முடியுமாறு 178. யாவென் வினாவின் ஐயென் இறுதியும் ஆயியல் திரியா தென்மனார் புலவர் ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே. இதுவும் அது. (இ-ள்.) யாவென் வினாவின் ஐயென் இறுதியும் - யாவென்னும் வினாவினையுடைய ஐகார ஈற்றுச் சொல்லும், ஆயியல் திரியாது என்மனார் புலவர்-முற்கூறிய சுட்டு முதல் ஐகாரம் போல் வற்றுப்பெறும் அவ்வியல்பின் திரியாதென்று சொல்லுவர் ஆசிரியர்; ஆவயின் வகரம் ஐயொடுங் கெடும்-அவ்வீற்றிடத்து வகரம் ஐகாரத்தொடு கூடக் கெடும் எ-று. எ-டு: யாவற்றை, யாவற்றொடு என ஒட்டுக. வகரம் வற்றுமிசை யொற்றென்று கெடுவதனைக் கேடு ஓதிய மிகையானே, பிற ஐகாரமும் வற்றுப்பெறுதல் கொள்க. கரியவற்றை கரியவற்றொடு, நெடியவற்றை நெடியவற்றொடு, குறியவற்றை குறியவற்றொடு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இவை கருமை நெடுமை குறுமை என்னும் பண்புப்பெயரன்றிக் கரியவை நெடியவை குறியவை எனப் பண்புகொள் பெயராய் நிற்றலின், வகர ஐகாரம் கெடுத்து வற்றுச்சாரியை கொடுத்து முடிக்கப்பட்டன. இவை ‘ஐம்பாலறியும் பண்பு தொகுமொழி’ (எழுத். 482) அன்மை உணர்க. (6) நீ ‘நின்’ ஆகி உருபேற்றல் 179. நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயின் னகரம் ஒற்றா கும்மே. இஃது ஈகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது. (இ-ள்.) நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் - நீயென்னும் ஒரு பெயர் தன்மேல் நின்ற நெடியதாகிய ஈகாரங் குறுகி இகரமாம்; ஆவயின் னகரம் ஒற்றாகும் - அவ்விடத்து வரும் னகரம் ஒற்றாய் நிற்கும் எ-று. எ-டு: நின்னை நின்னொடு நினக்கு எனச் செய்கையறிந்து ஒட்டுக. நினக்கு என்பதற்கு, ‘ஆற னுருபினும் நான்க னுருபினும்’ (எழுத். 161) ‘வல்லெழுத்து முதலிய’ (எழுத். 114) என்பன கொணர்ந்து முடிக்க. நினது என்பதற்கு, ‘ஆற னுருபி னகரக் கிளவி’ (எழுத். 115) என்பதனான் முடிக்க. நின் என்பது நீ என்பதன் வேறொரு பெயரோ எனக் கருதுதலை விலக்குதற்கு ‘ஒரு பெயர்’ என்றார். ‘பெயர் குறுகும்’ என்னாது ‘முதல் குறுகும்’ என்றது, அப்பெயரின் எழுத்தின்கண்ணது குறுக்கமென்றற்கு. ‘நெடுமுதல்’ எனவே நகரங்குறுகுதலை விலக்கிற்று. உயிர்மெய் யொற்றுமை பற்றி நெடியது முதலாயிற்று. ‘உடைமையு மின்மையு மொடுவயி னொக்கும்’ (எழுத். 123) என்றதனை நோக்கி ஒடுவிடத்துச் சாரியை பெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற்குச் சாரியைப் பேற்றிடை எழுத்துப் பேறு கூறினார். (7) ஓகார ஈறு ஒன்சாரியை பெறுதல் 180. ஓகார இறுதிக்(கு) ஒன்னே சாரியை. இஃது ஓகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது. (இ-ள்.) ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை-ஓகார ஈற்றிற்கு இடைவருஞ் சாரியை ஒன்சாரியை எ-று. எ-டு: கோஒனை, கோஒனொடு என ஒட்டுக. ‘ஒன்னே’ என்ற ஏகாரத்தாற் பெரும்பான்மையாக வருஞ் சாரியை ஒன்னே; சிறுபான்மை இன் சாரியை வருமென்று கொள்க. ‘ஒன்றாது நின்ற கோவினை யடர்க்க வந்து’ (சீவக. 316) எனவும், கோவினை கோவினொடு, சோவினை சோவினொடு, ஓவினை ஓவினொடு எனவும் வரும். ஓ என்பது மதகுநீர் தாங்கும் பலகை. (8) அ ஆ ஈற்று மரப்பெயர் அத்துப் பெறுமிடன் 181. அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு அத்தொடுஞ் சிவணும் ஏழ னுருபே. இஃது அகர ஆகார ஈற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு - அஆ வென்று சொல்லப்படும் மரத்தை உணர்த்துகின்ற பெயராகிய சொல்லிற்கு, ஏழனுருபு அத்தொடுஞ் சிவணும் - ஏழாமுருபு இன்னோடன்றி அத்தோடும் பொருந்தும் எ-று. எ-டு: விளவத்துக்கண், பலாவத்துக்கண் எனவரும். ‘வல்லெழுத்து முதலிய’ (எழுத். 114) என்பதனான் வல்லெழுத்துக் கொடுத்துத் ‘தெற்றென் றற்றே’ (எழுத். 133) என்பதனான் ‘அத்தினகரம் அகரமுனை’க் (எழுத். 125) கெடாமைச் செய்கை செய்து முடிக்க. (9) ஞ ந - ஈறுகள் இன்சாரியை பெறுதல் 182. ஞநஎன் புள்ளிக்கு இன்னே சாரியை. இது புள்ளியீற்றுள் ஞகர ஈறும் நகர ஈறும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஞந என் புள்ளிக்கு இன்னே சாரியை - ஞநவென்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வருஞ்சாரியை இன் சாரியை எ-று. எ-டு: உரிஞினை உரிஞினொடு, பொருநினை பொருநினொடு என ஒட்டுக. (10) சுட்டுமுதல் வகரஈறு வற்றுப் பெறுதல் 183. சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யுங் கெட்ட இறுதி யியல்திரி பின்றே. இது நான்கு மொழிக்கு ஈறாம் வகர ஈற்றுட் சுட்டுமுதல் வகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதல் வகரம்-அவ் இவ் உவ் என்னுஞ் சுட்டெழுத் தினை முதலாகவுடைய வகர ஈற்றுச் சொல், ஐயும் மெய்யுங் கெட்ட இறுதி யியல் திரிபின்று-ஐகாரமும் ஐகாரத்தான் ஊரப்பட்ட மெய்யுங் கெட்டு வற்றுப் பெற்று முடிந்த ‘யாவை’ (எழுத். 178) என்னும் ஐகார ஈற்றுச் சொல்லியல்பின் திரிபின்றி வற்றுப்பெற்று முடியும் எ-று. எ-டு: அவற்றை அவற்றொடு, இவற்றை இவற்றொடு, உவற்றை உவற்றொடு என ஒட்டுக. (11) ‘தெவ்’ இன்சாரியை பெறுதல் 184. ஏனை வகரம் இன்னொடு சிவணும். இஃது எய்தாதது எய்துவித்தது; பெயர்க்கே யன்றி உரிச்சொல் வகரத்திற்கு முடிபு கூறுதலின். (இ-ள்.) ஏனை வகரம் இன்னொடு சிவணும் - ஒழிந்த உரிச்சொல் வகரம் இன்சாரியையொடு பொருந்தி முடியும் எ-று. எ-டு: தெவ்வினை, தெவ்வினொடு என ஒட்டுக. இஃது உரிச்சொல்லாயினும் படுத்தலோசையாற் பெயராயிற்று. (12) மகர ஈற்றுப் பெயர் அத்துப் பெறுதல் 185. மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை. இது மகர ஈறு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை - மகரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் வருஞ் சாரியை அத்துச் சாரியை எ-று. எ-டு: மரத்தை மரத்தொடு, நுகத்தை நுகத்தொடு என ஒட்டுக. ‘அத்தே வற்றே’ (எழுத். 133) ‘அத்தி னகரம்’ (எழுத். 125) என்பனவற்றான் முடிக்க. (13) அவற்றுட் சில இன்சாரியை பெறுதலும் உள எனல் 186. இன்னிடை வரூஉம் மொழியுமா ருளவே. இது மகர ஈற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. (இ-ள்.) இன்னிடை வரூஉம் மொழியுமா ருள - மகர ஈற்றுச் சொற்களுள் அத்தே யன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள எ-று. ஆர்: அசை. எ-டு: உருமினை உருமினொடு, திருமினை திருமினொடு என ஒட்டுக. (14) ‘நும்’ ஈறு சாரியை பெறாமை 187. நும்மென் இறுதி இயற்கை யாகும். இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) நும்மென் இறுதி இயற்கை யாகும் - நும்மென்னும் மகர ஈறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாக முடியும் எ-று. எ-டு: நும்மை, நும்மொடு, நுமக்கு, நும்மின், நுமது, நுங்கண் எனவரும். நுமக்கு நுமது என்பனவற்றிற்கு ‘ஆற னுருபினும் நான்க னுருபினும்’ (எழுத். 161) ‘நும்மென் இறுதியு மந்நிலை’ (எழுத். 162) ‘வல்லெழுத்து முதலிய’ (எழுத். 114) ‘ஆற னுருபி னகரக் கிளவி’ (எழுத். 115) என்பன கொணர்ந்து முடிக்க. நுங்கண் என்பதற்கு மேலைச் சூத்திரத்து ‘மெய்’ என்றதனான் மகர வொற்றுக் கெடுத்து, ‘வல்லெழுத்து முதலிய’ (எழுத். 114) என்பதனான் மெல்லொற்றுக் கொடுக்க. ‘இயற்கை’ என்றார் சாரியை பெறாமை கருதி.(15) தாம் நாம் யாம் - முறையே தம் நம் எம் - ஆதல் 188. தாம்நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அதனோ ரன்ன ஆஎய் யாகும் யாமென் இறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும். இது மகர ஈற்றின் முற்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அதனோரன்ன - தாம் நாம் என்று கூறப்படும் மகர ஈறும் யாம் என்னும் மகர ஈறும் நும் என்னும் மகர ஈறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய; யாமென் இறுதி ஆ எ ஆகும் - யா மென்னும் மகர ஈற்றுச் சொல்லின் ஆகாரம் எகாரமாம்; ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற யகரமாகிய மெய் கெடுதலை விரும்பும் ஆசிரியன்; ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும் - ஒழிந்த தாம் நாம் என்னும் இரண்டும் நெடியவாகிய முதல் குறுகித் தம் நம் என நிற்கும் எ-று. எ-டு: தம்மை தம்மொடு, நம்மை நம்மொடு, எம்மை எம்மொடு என ஆறு உருபோடும் ஒட்டுக. ஆறனுருபிற்கும் நான்க னுருபிற்குங் கருவி யறிந்து முடிக்க. ‘மெய்’ என்றதனாற் கண்வரின் பிறவயின் மெய்யும் கெடுக்க. தங்கண் நங்கண் எங்கண் என ஏழனுருபின்கண் மகரங் கெடுத்து ‘வல்லெழுத்து முதலிய’ (எழுத். 114) என்பதனான் மெல்லெழுத்துக் கொடுக்க. (16) ‘எல்லாம்’ வற்றுப் பெற்று (உருபின் பின்னர்) ‘உம்’மொடு இறுதல் 189. எல்லா மென்னும் இறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையும் இறுதி யான. இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) எல்லா மென்னும் இறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் - எல்லா மென்னும் மகரஈற்றுச் சொன் முன்னர் அத்தும் இன்னும் இன்றி வற்றென்னுஞ் சாரியை முடியத் தோன்றி முடியும்; உம்மைநிலையும் இறுதியான - ஆண்டு உம்மென்னுஞ் சாரியை இறுதிக்கண் நிலைபெறும் எ-று. மகரம் வற்றின்மிசை யொற்றெனக் கெடுக்க. எ-டு: எல்லாவற்றையும், எல்லாவற்றினும், எல்லாவற்றுக்கண்ணும் எனவரும். ‘முற்ற’ என்றதனான் ஏனை முற்றுகரத்திற்கு உம்மின் உகரங் கெடுத்துக் கொள்க. எ-டு: எல்லாவற்றொடும், எல்லாவற்றுக்கும் எல்லாவற்றதும் என வரும். முற்றுகரமாதலின் ஏறி முடியாது. (17) இச்சொல் உயர்திணையாயின் முடியுமாறு 190. உயர்திணை யாயின் நம்மிடை வருமே. இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) உயர்திணையாயின் - எல்லாமென நின்ற மகர ஈற்று விரவுப் பெயர் உயர்திணைப் பெயராமெனின், நம் இடைவரும் - நம் மென்னுஞ் சாரியை இடை நின்று புணரும் எ-று. மகர ஈற்றினை மேல் வற்றின்மிசை யொற்றெனக் கெடுத்த அதிகாரத் தாற் கெடுக்க. எ-டு: எல்லா நம்மையும், எல்லா நம்மினும், எல்லா நங்கணும் என உகரம் பெற்றும்; எல்லா நம்மொடும், எல்லா நமக்கும், எல்லா நமதும் என உகரங் கெட்டும் மகரம் நிற்கும். இவற்றிற்கு நம் எல்லாரையும் நம் எல்லாரொடும் என்பது பொருளாக ஒட்டுக. இதற்கு நம்மு வகுத்ததே வேறுபாடு. ‘ஈறாகு புள்ளி அகரமொடு நிற்றல்’ (எழுத். 161) நான்காவதற்கும் ஆறாவதற்குங் கொள்க. (18) எல்லாரும் எல்லீரும் என்பன முடியுமாறு 191. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும் ஒற்றும் உகரமுங் கெடுமென மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி உம்மை நிலையும் இறுதி யான தம்மிடை வரூஉம் படர்க்கை மேன நும்மிடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. இது மகரஈற்று உயர்திணைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் - எல்லாரு மென்னும் மகர ஈற்று உயர்திணைப் படர்க்கைப் பெயரும், எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும் - எல்லீரு மென்னும் மகர ஈற்று உயர்திணை முன்னிலைப்பெயரும், ஒற்றும் உகரமுங்கெடுமென மொழிப - மகர வொற்றும் அதன்முன்னின்ற உகரமுங்கெட்டு முடியுமென்று சொல்லுவர் புலவர்; ரகரப் புள்ளி நிற்றல் வேண்டும் - அவ்வுகரம் ஏறி நின்ற ரகர ஒற்றுக்கெடாது நிற்றலை விரும்பும் ஆசிரியன்; இறுதியான உம்மை நிலையும்-அவ்விரு மொழியினிறுதிக்கண்ணும் உம்மென்னுஞ் சாரியை நிலைபெறும்; படர்க்கை மேன தம் இடை வரூஉம் - படர்க்கைச் சொல் லிடத்துத் தம்முச்சாரியை இடைவரும்; முன்னிலை மொழிக்கு நும் இடை வரூஉம் - முன்னிலைச் சொற்கு நும்முச் சாரியை இடை வரும் எ-று. எ-டு: எல்லார்தம்மையும், எல்லார் தம்மினும், எல்லார் தங்கணும் என உகரம் பெற்றும், எல்லார்தம்மொடும், எல்லார்தமக்கும், எல்லார் தமதும் என உகரங் கெட்டும், மகரம் நிற்கும். எல்லீர்நும்மையும், எல்லீர் நும்மினும், எல்லீர்நுங்கணும் என உகரம் பெற்றும், எல்லீர்நும்மொடும், எல்லீர்நுமக்கும், எல்லீர்நுமதும் என உகரங் கெட்டும் மகரம் நிற்கும். முன்னர் ‘மெய்’ (எழுத். 188) என்ற இலேசாற் கொண்ட மகரக்கேடு இவற்றிற்கும் மேல்வருவனவற்றிற்குங் கொள்க. படர்க்கைப் பெயர் முற்கூறிய வதனானே, ரகர ஈற்றுப் படர்க்கைப் பெயரும் முன்னிலைப்பெயரும், மகரஈற்றுத் தன்மைப் பெயரும், தம் நும் நம் என்னுஞ் சாரியை இடையே பெற்று இறுதி உம்முச்சாரியையும் பெற்று முடிவன கொள்க. கரியார்தம்மையும் சான்றார்தம்மையும் எனவும், கரியீர் நும்மையும் சான்றீர்நும்மையும் எனவும், கரியேம்நம்மையும் இருவேம் நம்மையும் எனவும் எல்லாவுருபொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. ‘உகரமும் ஒற்றும்’ என்னாததனான், இக்காட்டியவற்றிற்கெல்லாம் மூன்று உருபின்கண்ணும் உம்மின் உகரங்கெடுதல் கொள்க. ‘நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி’ என்றதனானே, தம்முப் பெறாமை வருமவையும் கொள்க. எ-டு: ‘எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை’ (குறள். 582) எனவரும்.(19) தான் யான் - முறையே தன் என் - ஆதல் 192. தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும் மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. இது னகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) தான் யான் என்னும் ஆயீ ரிறுதியும் - தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகர ஈறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இலவே-மேல் மகர ஈற்றுட் கூறிய மூன்று பெயரொடும் வேறுபாடின்றித் தானென்பது குறுகியும் யானென்பதன்கண் ஆகாரம் எகரமாய் யகர வொற்றுக் கெட்டும் முடியும் எ-று. எ-டு: தன்னை என்னை என எல்லாவுருபோடும் ஒட்டுக; செய்கை யறிந்து. ஒற்றிரட்டுதல் ‘நெடியதன் முன்னர்’ (எழுத். 160) என்பதனுள் இலேசாற் கொள்க. (20) அழன் புழன் - என்பன முடியுமாறு 193. அழனே புழனே ஆயிரு மொழிக்கும் அத்தும் இன்னும் உழறத் தோன்றல் ஒத்த தென்ப உணரு மோரே. இதுவும் அது. (இ-ள்.) அழனே புழனே ஆயிரு மொழிக்கும் - அழன் புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும், அத்தும் இன்னும் உறழத்தோன்றல் ஒத்த தென்ப - அத்துச் சாரியையும் இன்சாரியையும் மாறி வரத் தோன்றுதலைப் பொருந்திற் றென்பர், உணருமோர் - அறிவோர் எ-று. எ-டு: அழத்தை அழனினை, புழத்தை புழனினை எனச் செய்கை யறிந்து எல்லாவுருபினோடும் ஒட்டுக. னகரத்தை அத்தின் மிசை ஒற்றென்று கெடுத்து ‘அத்தி னகரம்’ (எழுத். 125) என்பதனான் முடிக்க. ‘தோன்றல்’ என்றதனான், எவன் என நிறுத்தி வற்றுக் கொடுத்து வேண்டுஞ்செய்கை செய்து எவற்றை, எவற்றொடு என முடித்ததனை எல்லாவுருபினோடும் ஒட்டுக. எற்றை என்புழி நிலைமொழி வகரம் இதனாற் கெடுக்க. இனி ‘ஒத்தது’ என்றதனான் எகின் என நிறுத்தி, அத்தும் இன்னுங் கொடுத்துச் செய்கை செய்து எகினத்தை, எகினினை என ஒட்டுக. ‘அத்து’ இனிது இசைத்தலின் முற்கூறினார். (21) ‘ஏழ்’ ‘அன்’ பெற்று முடிதல் 194. அன்னென் சாரியை ஏழ னிறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப. இஃது ஏழென்னும் எண்ணுப் பெயர் அன்சாரியை பெற்றுப் புணர்க என்றது. (இ-ள்.) அன்னென் சாரியை ஏழனிறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப - அன்னென்னுஞ் சாரியை ஏழென்னும் எண்ணுப் பெயரின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எ-டு: ஏழனை, ஏழற்கு, ஏழனின் என்க. ஏனை உருபுகளோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. சாரியை முற்கூறியவதனாற், பிறவும் அன்பெறுவன கொள்க. பூழனை, யாழனை என ஏனையவற்றோடும் ஒட்டுக. மேல் வருகின்ற இன்சாரியையைச் சேரவைத்தமையான், இவை யெல்லாம் இன்சாரியை பெற்று வருதலுங் கொள்க. ஏழினை, பூழினை, யாழினை என வரும். (22) குற்றுகர ஈறு ‘இன்’ பெறுதல் 195. குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத் தோன்றும் இன்னென் சாரியை. இது குற்றுகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) குற்றியலுகரத்து இறுதி முன்னர் - குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர், முற்றத்தோன்றும் இன்னென் சாரியை - முடியத் தோன்றும் இன்னென்னுஞ் சாரியை எ-று. எ-டு: நாகினை நாகினொடு, வரகினை வரகினொடு எனவரும். ஏனையவற்றொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. ‘முற்ற’ என்றதனானே பிற சாரியை பெறுவனவுங் கொள்க. எ-டு: வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் எனவும், கரியதனை எனவும் வரும். (23) ஈரெழுத்தொருமொழிக் குற்றுகரவீற்று டறவொற்று இரட்டுதல் 196. நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும் அப்பால் மொழிக ளல்வழி யான. இஃது அக்குற்றியலுகரங்களுட் சிலவற்றிற்கு இனவொற்று மிகுமென்கின்றது. (இ-ள்.) நெட்டெழுத்திம்பர் ஒற்று மிகத்தோன்றும் - நெட்டெழுத் தின் பின்னர் வருகின்ற குற்றுகரங்கட்கு இனவொற்று மிகத்தோன்றா நிற்கும்; அப்பால் மொழிகள் அல்வழி ஆன - ஒற்று மிகத்தோன்றாத கசதபக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாத இடத்து எ-று. எனவே, டகார றகாரங்கள் ஈறான சொல்லிடைத் தோன்றுமாயிற்று. எ-டு: யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது யாட்டுக்கண் எனவும், யாற்றை சோற்றை எனவும் இன வொற்று மிக்கன. இவை அப்பால் மொழிகள் அல்லன. நாகு, காசு, போது, காபு என்றாற் போல்வன அப்பால் மொழிகள்; அவை இனவொற்று மிகாவாயின. (24) ஆண்டுச் சாரியைப் பேறின்மை 197. அவைதாம் இயற்கைய வாகுஞ் செயற்கைய என்ப. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) அவைதாம் இயற்கைய ஆகுஞ் செயற்கைய என்ப - அங்ஙனம் இனவொற்று மிகுவனதாம் இன்சாரியை பெறாது இயல்பாக முடியுஞ் செய்தியையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எ-டு: முன்னர்க் காட்டியனவே கொள்க. ‘செயற்கைய’ என்ற மிகையானே, உயிர்த்தொடர் மொழிகளில் ஏற்பனவற்றிற்கும் ஒற்று மிகத்தோன்றுதல் கொள்க. எ-டு: முயிற்றை முயிற்றொடு முயிற்றுக்கு முயிற்றின் முயிற்றது முயிற்றுக்கண் என வரும். இன்னும் இதனானே, யாட்டினை முயிற்றினை என விலக்கிய இன்பெறுதலுங் கொள்க. (25) குற்றுகரஈற்று எண்ணுப்பெயர் அன்சாரியை பெறுதல் 198. எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். இது குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் - எண்ணுப் பெயர்களினது குற்றுகர ஈறு அன்சாரியையொடு பொருந்தும் எ-று. எ-டு: ஒன்றனை இரண்டனை என எல்லா எண்ணினையும், எல்லா உருபினொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. முன்னர்ச் ‘செயற்கைய’ என்ற இலேசானே, ஒன்றினை இரண்டினை என இன் சாரியையுங் கொடுக்க. (26) ஒருபஃது முதலாய பெயர்கள் ஒருபான் முதலாகத் திரிந்து முடிதல் 199. ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉம் எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை ஆனிடை வரினும் மான மில்லை அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. இஃது ஒன்று முதலாக எட்டு இறுதியாக நின்ற குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் ஏழினோடும், பத்தென்னும் எண்ணுப்பெயர் வந்து புணர்ந்து ஒன்றாய் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும் - ஒன்றுமுதலாக எட்டீறாக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும், சொல்லுங்காலை - முடிபு கூறுங் காலத்து, ஆன் இடைவரினும் மான மில்லை - முற்கூறிய அன் சாரியையே யன்றி ஆன் சாரியை இடையே வரினுங் குற்றமில்லை; ஆவயின் அஃதென் கிளவி கெடும் - அவ் ஆன் பெற்றுழிப் பஃதென்னும் எண்ணிடத்து அஃதென்னுஞ் சொற் கெட்டுப் போம்; பஃகான் மெய் உய்தல் வேண்டும் - அவ்வகரத்தான் ஊரப்பட்ட பகரமாகிய ஒற்றுக் கெடாது நிற்றலை ஆசிரியன் விரும்பும் எ-று. ‘நின்ற பத்தனொற்றுக்கெட வாய்தம், வந்திடை நிலையும்’ (எழுத். 437) என்பதனான் ஆய்தம் பெற்றது. எ-டு: ஒருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது எண்பஃது எனக் குற்றியலுகரப் புணரியலுள் விதிக்குமாறே நிறுத்தி, அஃதென்பதனைக் கெடுத்துப் பகரவொற்றை நிறுத்தி, ஆன்சாரியை கொடுத்து, ஒருபானை இருபானை என எல்லா எண்ணொடும் எல்லா உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உம்மை எதிர்மறையாதலின் ஒருபஃதனை இருபஃதனை என எல்லாவற்றோடும் ஒட்டுக. ‘சொல்லுங் காலை’ என்றதனான், பத்தூர் கிளவியே யன்றி ‘ஒன்பான் முதனிலை’ (எழுத். 463) ‘ஒன்பாற் கொற்றிடை’ (எழுத். 475) என்றாற்போல வருவனவற்றின்கண்ணும் பகரத்துள் அகரம் பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன் கொடுக்க. (27) ‘யாது’, ஆய்தம் இடை வந்த சுட்டுமுதல் உகரஈற்றுப் பெயர்கள் - முடியுமாறு 200. யாதென் இறுதியுஞ் சுட்டுமுத லாகிய ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும் ஆய்தங் கெடுதல் ஆவயி னான. இஃது எண்ணுப் பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) யாது என் இறுதியும் - யாதென வருங் குற்றுகர ஈறும், சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன்னொடு சிவணும் - அன்சாரியை யொடு பொருந்தும்; ஆவயின் ஆன ஆய்தங் கெடுதல் - அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும் எ-று. எ-டு: யாதனை யாதனொடு எனவும், அதனை அதனொடு, இதனை இதனொடு, உதனை உதனொடு எனவும் வரும். (28) திசைப்பெயர் ஏழனுருபொடு முடியுமாறு 201. ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி இயற்கையு மாகும் ஆவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே. இதுவுங் குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு ஏழனுருபொடு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) திசைப் பெயர் முன்னர் ஏழனுருபிற்கு - திசைப் பெயர்களின் முன்னர் வந்த கண்ணென்னும் உருபிற்கு முடிபு கூறுங்கால், சாரியைக் கிளவி இயற்கையுமாகும் - முன்கூறிய இன் சாரியையாகிய சொல் நின்று முடிதலே யன்றி நில்லாது இயல்பாயும் முடியும்; ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடும் - அங்ஙனம் இயல்பாயவழித் திசைப்பெயரிறுதிக் குற்றுகரந் தன்னான் ஊரப்பட்ட மெய்யொடுங் கெடும் எ-று. எ டு: வடக்கின்கண் கிழக்கின்கண் தெற்கின்கண் மேற்கின்கண் எனவும், வடக்கண் கிழக்கண் தெற்கண் மேற்கண் எனவும் வரும். இன்பெறுவழி உகரங் கெடாதென்று உணர்க. ‘ஆவயின்’ என்றதனாற் கீழ்சார் கீழ்புடை, மேல்சார் மேல்புடை, தென்சார் தென்புடை, வடசார் வடபுடை எனச் சாரியையின்றிப் பல விகாரப்பட்டு நிற்பனவுங் கொள்க. இன்னும் இதனானே, கீழைக்குளம் மேலைக்குளம் கீழைச்சேரி மேலைச்சேரி என ஐகாரம் பெறுதலுங் கொள்க. (29) இவ்வோத்துப் புறனடை 202. புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் சொல்லிய அல்ல ஏனைய வெல்லாம் தேருங் காலை உருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பா டிலவே. இஃது இவ்வோத்தினுள் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற் கெல்லாம், இதுவே ஓத்தாயதோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) சொல்லிய அல்ல புள்ளியிறுதியும் உயிரிறு கிளவியும் - முற்கூறிய புள்ளியீறும் உயிரீறும் அல்லாத புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், ஏனையவுமெல்லாம் - முற்கூறிய ஈறுகள் தம்மு ளொழிந்து நின்றனவுமெல்லாம், தேருங் காலை உருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பாடு இல - ஆராயுங் காலத்து உருபுகளொடு பொருந்திச் சாரியை நின்று முடியும் முறைமையை உடையவல்ல, நின்றும் நில்லாதும் முடியும் எ-று. ‘ஏனையவும்’ என உம்மை விரிக்க. கூறாத புள்ளி யீறுகள் ஐந்து. அவை ணகர, யகர, ரகர, லகர, ளகரங்களாம். மண்ணினை மண்ணை, வேயினை வேயை, நாரினை நாரை, கல்லினை கல்லை, முள்ளினை முள்ளை என வரும். உயிரீற்றுள் ஒழிந்தது இகரம் ஒன்றுமேயாதலின், அதனைப் பிற்கூறினார். கிளியினை கிளியை என வரும். இனித் தான் யான் அழன் புழன் என்னும் னகர ஈற்றினும், ஏழென்னும் ழகர ஈற்றினும் ஒழிந்தன, பொன்னினை பொன்னை, தாழினை தாழை என்றாற்போல வருவன பிறவுமாம். இனி, ஈகார ஈற்றுள் ஒழிந்தன தீயினை தீயை, ஈயினை ஈயை, வீயினை வீயை என்றாற்போல்வன பிறவுமாம். ஐகார ஈற்றுள் ஒழிந்தன, தினையினை தினையை, கழையினை கழையை என்றாற் போல்வன பிறவுமாம். ஏனை ஈறுகளிலும் வருவன உணர்ந்து கொள்க. மேலே பெயரீற்றுச் செய்கையெல்லாந் தத்தம் ஈற்றின்கண் முடிப்பாராதலின் அவை ஈண்டுக் கூறல் வேண்டா. இனித் ‘தேருங்காலை’ என்றதனானே, உருபுகள் நிலைமொழியாக நின்று தம்பொருளொடு புணரும்வழி வேறுபடும் உருபீற்றுச் செய்கை யெல்லாம் ஈண்டு முடித்துக் கொள்க. எ-டு: நம்பியைக் கொணர்ந்தான், மண்ணினைக் கொணர்ந்தான், கொற்றனைக் கொணர்ந்தான் என மூவகைப் பொருளொடுங் கூடி நின்ற உருபிற்கு ஒற்றுக்கொடுக்க. மலையொடு பொரு தது, மத்திகையாற் புடைத்தான், சாத்தற்குக் கொடுத்தான், ஊர்க்குச் சென்றான், காக்கையிற் கரிது, காக்கையது பலி, மடியுட் பழுக்காய், தடாவினுட் கொண்டான் என்னுந் தொடக்கத்தன உருபு காரணமாகப் பொருளொடு புணரும் வழி இயல்பாயும் ஈறுதிரிந்தும் ஒற்றுமிக்கும் வந்தன கொள்க. இனிக், கண் கால் புறம் முதலியன பெயராயும் உருபாயும் நிற்கு மாதலின், அவை உருபாகக் கொள்ளும்வழி வேறுபடுஞ் செய்கைக ளெல்லாம் இவ்விலேசான் முடிக்க. இஃது உருபியலாதலின் ‘உருபொடு சிவணி’ என வேண்டா, அம்மிகையானே உருபுபுணர்ச்சிக்கட் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப் பொது முடிபு உள்வழிப் பொருட்புணர்ச்சிக்குங் கொள்க. விளவின்கோடு, கிளியின்கால் என எல்லா ஈற்றினுங் கொள்க. நம்பியை, கொற்றனை என உயிரீறும் புள்ளியீறுஞ் சாரியை பெறாது இயல்பாய் முடிவனவும் ஈண்டே கொள்க. (30) உருபியல் முற்றிற்று. 7 உயிர்மயங்கியல் அகர ஈற்றுப்பெயர் வன்கணம் வருவழி அல்வழிக்கண் முடியுமாறு 203. அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே என்பது சூத்திரம். உயிரீறு நின்று வன்கணத்தொடுஞ் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தினமையின், இவ்வோத்து ‘உயிர்மயங்கியல்’ என்னும் பெயர்த்தாயிற்று. மேற் பெயரோடு உருபு புணருமாறு கூறிப் பெயர்வருவழி உருபு தொக்கு நின்ற பொருட் புணர்ச்சி கூறுகின்றமையின் உருபியலோடு இயைபுடைத் தாயிற்று. இச்சூத்திரம், அகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் - அகரமாகிய இறுதியை யுடைய பெயர்ச்சொன் முன்னர், வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் - வேற்றுமையல்லாத விடத்துக் கசதப முதன்மொழிகள் வருமொழியாய்த் தோன்றுமாயின், தத்தம் ஒத்த ஒற்று இடை மிகும் - தத்தமக்குப் பொருந்திய அக் கசதபக்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் எ-று. எ-டு: விளக்குறிது, நுணக்குறிது, அதக்குறிது, சிறிது, தீது, பெரிது என ஒட்டுக. இவை அஃறிணை இயற்பெயராகிய எழுவாய் வினைக்குறிப்புப் பண்பாகிய பயனிலையொடு முடிந்தன. ‘ஒத்த’ என்றமையாது ‘தத்தம் ஒத்த’ என்றதனான், அகர ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கும், மெல்லெழுத்து மிக்கும் முடியும் முடிபும், அகரந்தன்னை உணர நின்றவழி வன்கணத்தொடு மிக்கு முடியும் முடிபும் கொள்க. எ-டு: தடக்கை தவக்கொண்டான் ‘வயக்களிறு’ (புறம். 100) ‘வயப்புலி’ (அகம். 22) குழக்கன்று எனவும், தடஞ்செவி ‘கமஞ்சூல்’ (முருகு. 7) எனவும், அக்குறிது சிறிது தீது பெரிது எனவும் வரும். இனி, இடைச்சொல் வல்லொற்றுப் பெற்று வருவன உளவேல் அவற்றையும் இவ்விலேசினான் முடித்துக் கொள்க. (1) அகர ஈற்றுள் வல்லெழுத்து மிக்கு முடிவன 204. வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும் ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. இஃது அகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) வினையெஞ்சு கிளவியும் - வினையை ஒழிபாகவுடைய அகர ஈற்று வினைச்சொல்லும், உவமக் கிளவியும் - உவமவுருபாய் நின்ற அகர ஈற்று இடைச்சொல்லும், எனவென் எச்சமும் - எனவென்னும் வாய்பாட் டான் நின்ற அகர ஈற்று இடைச்சொல்லும், சுட்டின் இறுதியும் - சுட்டாகிய அகர ஈற்று இடைச்சொல்லும், ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் - ஆங்க வென்னும் அகர ஈற்று உரையசை யிடைச்சொல்லும், ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும் - முன்னர்க் கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: உண தாவ சாவ என நிறுத்திக், கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இவ்வினையெச்சம் ஒழிந்தன எல்லாம் இடைச்சொல் லென்று உணர்க. புலிபோலக் கொன்றான் சென்றான் தாவினான் போயினான் எனவும், கொள்ளெனக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், அக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும், ஆங்கக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான், ‘ஆங்கக் குயிலு மயிலுங் காட்டிக், கேள்வனை விடுத்துப் போகி யோளே’ எனவும் வரும். ‘உவமம்’ வினையெச்ச வினைக்குறிப்பேனும், ஒன்றனொடு பொருவப்படுதல் நோக்கி உவமவியலின்கண் ஆசிரியர் வேறுபடுத்திக் கூறினார். ‘எனவென்னும் எச்சமும்’, இருசொல்லையும் இயைவிக்கின்ற நிலைமையான் இடைச்சொல்லோத்தினுள் வேறோதினார். ‘ஆங்க’ என்பது, ஏழனுருபின் பொருள்பட வந்ததல்லாமை ‘ஆங்க வென்னு முரையசை’ என்றதனானும் ‘ஆங்க வுரையசை’ (சொ. 279) என்னும் இடையியற் சூத்திரத்தானும் உணர்க. இவை இயல்புகணத்துக்கண் முடியும் முடிபு ‘ஞநமயவ’ (எழுத். 144) என்புழிக் கூறியதேயாம். அவை, தாவ புலிபோல கொள்ளென ஆங்க என நிறுத்தி, ஞநமயவ முதலிய மொழி ஏற்பன கொணர்ந்து புணர்த்து இயல்பாமாறு ஒட்டிக் கொள்க. சுட்டு மேற்கூறுப. (2) அகரச்சுட்டின் முன்னர் மென்கணம் முடியுமாறு 205. சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும். இது ‘ஞநமயவ’ (எழுத். 144) என்னுஞ் சூத்திரத்தான் மென்கணம் இயல்பாகும் என முற்கூறியதனை விலக்கி மிக்கு முடிக என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் - அகரச்சுட்டின் முன்னர் ஞநமக்கள் முதலாகிய மொழிவரின், ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும் - தத்தமக்குப் பொருந்தின ஒற்று இடைமிகுதலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: அஞ்ஞாண், அந்நூல், அம்மணி என வரும். ‘ஒட்டிய’ என்றதனான் அஞ்ஞெளிந்தது, அந்நன்று, அம்மாண்டது என அகரந் தன்னை யுணர நின்றவழியும் மிகுதல் கொள்க. (3) அதன் முன்னர் இடைக்கணம் முடியுமாறு 206. யவமுன் வரினே வகரம் ஒற்றும். இதுவும் அது. (இ-ள்.) யவ முன் வரின் - யகர வகர முதன்மொழி அகரச் சுட்டின் முன்னே வரின், வகரம் ஒற்றும் - இடைக்கண் வகரம் ஒற்றாம் எ-று. எ-டு: அவ்யாழ், அவ்வளை என வரும். வருமொழி முற்கூறியவதனான், அகரந் தன்னை யுணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும். (4) உயிர்க்கணம் முடியுமாறு 207. உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. இதுவும் அது. (இ-ள்.) உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது - உயிர்கள் அகரச் சுட்டின் முன் வரினும் முற்கூறிய வகரம் மிக்கு வரும் இயல்பின் திரியாது எ-று. எ-டு: அ என நின்ற சுட்டின் முன்னர் அடை முதலியன வருவித்து வகரம் ஒற்றித் தன்னுரு இரட்டி உயிரேற்றி, அவ்வடை அவ்வாடை அவ்விலை அவ்வீயம் அவ்வுரல் அவ்வூர்தி அவ்வெழு அவ்வேணி அவ்வையம் அவ்வொழுக்கம் அவ்வோடை அவ்வௌவியம் என ஒட்டுக. ‘நெடியதன் முன்னர்’ (எழுத். 160) என்பதனுள் ‘நெறியியல்’ என்றதனான் இரட்டுதல் கூறினமையின், அது நிலைமொழித் தொழிலென்பது பெறப்பட்டது. வருமொழி முற்கூறியவதனான், அகரந் தன்னை உணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வழகிது என வரும். ‘திரியாது’ என்றதனான், மேற் சுட்டு நீண்டவழி வகரக்கேடு கொள்க. (5) செய்யுட்கண் அகரச்சுட்டு நீடல் 208. நீட வருதல் செய்யுளுள் உரித்தே. இஃது எய்தியது விலக்கிச் செய்யுட்கு ஆவதொரு விதி கூறுகின்றது. (இ-ள்.) நீட வருதல் செய்யுளுள் உரித்து - அகரச்சுட்டு நீடவருதல் செய்யுளிடத்து உரித்து எ-று. எ-டு: ‘ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே’ (சொல். 1), ‘ஆயிருபாற்சொல் (சொல். 3) என வரும். இது, வருமொழி வரையாது கூறலின் வன்கணம் ஒழிந்த கணம் எல்லாவற்றொடுஞ் சென்றது. அவற்றிற்கு உதாரணம் வந்தவழிக் காண்க. இந்நீட்சி இருமொழிப் புணர்ச்சிக்கண் வருதலின் ‘நீட்டும்வழி நீட்டல்’ (சொல். 403) ஆகாமை உணர்க. (6) ‘சாவ’, வன்கணம் வருவழி முடியுமாறு 209. சாவ என்னுஞ் செயவென் எச்சத்து இறுதி வகரங் கெடுதலும் உரித்தே. இதுமேல் ‘வினையெஞ்சு கிளவி’ என்ற எச்சத்திற்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) சாவ என்னுஞ் செயவென் எச்சத்து இறுதி வகரம் - சாவ வென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சத்து இறுதிக்கண் நின்ற அகரமும் அதனாற் பற்றப்பட்ட வகரமும், கெடுதலும் உரித்து - கெட்டு நிற்றலும் கெடாது நிற்றலும் உரிய எ-று. எ -டு: கோட்டிடைச் சாக்குத்தினான் என வரும். சீறினான் தகர்த்தான் புடைத்தான் என ஒட்டுக. கெடாதது முன்னர் முடித்தாம். இதனை ‘வினையெஞ்சு கிளவி’ (எழுத். 204) என்றதன்பின் வையாதத னான், இயல்புகணத்தும் இந்நிலைமொழிக்கேடு கொள்க. சாஞான்றான் நீண்டான் மாண்டான் யாத்தான் வீழ்ந்தான் அடைந்தான் என ஒட்டுக.(7) அகர ஈற்றுள் இயல்பாய் முடிவன 210. அன்ன வென்னும் உவமக் கிளவியும் அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும் ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் பலவற் றிறுதிப் பெயர்க்கொடை உளப்பட அன்றி அனைத்தும் இயல்பென மொழிப. இஃது அகர ஈற்றுள் ஒருசார் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன்னெய்தியது விலக்கியும், எய்தாதது எய்துவித்தும் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) அன்ன என்னும் உவமக் கிளவியும் - அன்ன என்று சொல்லப் படும் உவமவுருபாகிய அகர ஈற்று இடைச்சொல்லும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் - அணியாரைக் கருதின விளியாகிய நிலைமை யினையுடைய அகர ஈற்று உயர்திணைப் பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும் - செய்ம்மன என்று சொல்லப்படுந் தொழிற்சொல் பொருள் தருங்கால் உம் ஈற்றான் இறுஞ் சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் - ஒருவரான் ஏவற்றொழின்மை கருதிக் கூறப்பட்ட ஏவற் பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகர ஈற்று வினைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் - செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் - செய்யிய என்று சொல்லப் படும் வினையெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் - அம்ம என்று சொல்லப்படும் எதிர்முகமாக்கிய அகர ஈற்று இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட - பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தனையும் முற்கூறியவற்றொடு கூட்டிக் கொடுத்தல் உள்ளிட்டு, அன்றி அனைத்தும் இயல்பென மொழிப - அவ் வெட்டுச் சொல்லும் இயல்பாய் முடியுமென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எ-டு: பொன்னன்ன குதிரை, செந்நாய், தகர், பன்றி என, இது ‘வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்’ (எழுத். 204) என்பதனான் மிக்கு முடிதலை விலக்கிற்று. ஊர கேள், செல், தா, போ என ‘உயிரீறாகிய வுயர்திணை’ (எழுத். 153) என்னுஞ் சூத்திரத்தான் இயல்பாய் முடிவது ஈண்டு னகரங் கெட்டு அகர ஈறாய் விளியேற்று முடிந்தமையின் எய்தாதது எய்துவித்தது. உண்மன குதிரை செந்நாய் தகர் பன்றி என்பனவற்றிற்கு உண்ணு மென விரித்தும், யானுண்மன நீயுண்மன அவனுண்மன என நிறுத்திக், கூழ் சோறு தேன் பால் என வருவித்தும் முடிக்க. இவற்றிற்கும் அவ்வாறே விரித்துக் கொள்க. இங்ஙனஞ் செய்யுமென்பதன் எச்சப் பொருட்டாகிய மனவெ னிறுதிச்சொல் அக்காலம் வழங்கியதாதலின் ஆசிரியர் அதனையும் வேறாக எடுத்தோதினார். யானும் நின்னோடுடன் வருக, அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க என நிறுத்திக், காட்டின்கண் செருவின்கண் தானைக்கண் போரின்கண் என வருவித்து முடிக்க. இவை ஏவற் பொருண்மையை முற்ற முடித்தன. ‘ஏவல் கண்ணிய’ எனவே ஏவல் கண்ணாதனவும் உளவாயின; அவை நீ செல்க அது செல்க அவை செல்க என நிறுத்தி, முற்கூறிய காடு முதலிய வற்றை வருவித்து முடிக்க. இவை ஏவற் பொருண்மையை முற்ற முடியாதன. அஃறிணை ஏவற் பொருண்மையை முற்ற முடியாமை, வினையியலுள் (சொல். 228) வியங்கோட்கண்ணே பொருளியலுஞ் செய்யுளியலும் பற்றிக் கூறுதும். ‘மனவும்’ ‘வியங்கோளும்’ எய்தாதது எய்துவித்தது. உண்ட குதிரை செந்நாய் தகர் பன்றி - இதுவும் அது. இதற்கு உரிய உண்ணாத குதிரை யென்னும் எதிர்மறையும், நல்ல குதிரை யென்னும் குறிப்புங் கொள்க. உண்ணிய கொண்டான் சென்றான் தந்தான் போயினான்; இது முன்னர் வினையெச்சம் வல்லெழுத்துப் பெறுக என்றலின் எய்தியது விலக்கிற்று. அம்ம கொற்றா சாத்தா தேவா பூதா என்பது இடைச்சொல்லாத லின் எய்தாதது எய்துவித்தது. இது கேளாய் கொற்றனே என எதிர்முக மாக்கியவாறு காண்க. பல்லகுதிரை, பலகுதிரை, சில்லகுதிரை, சிலகுதிரை, உள்ளகுதிரை, இல்ல குதிரை, செந்நாய் தகர் பன்றி என ஒட்டுக. இக்காலத்துப் பல்ல சில்ல என்பன வழங்கா. இதுவும் விளக்குறிது என்றாற் போலப் பலக்குதிரையென வல்லெழுத்து எய்தியதனை விலக்கிற்று. விளிநிலைக் கிளவியாகிய பெயர் முற்கூறாததனானே, செய்யுமென் பதன் மறையாகிய செய்யாத வென்பதற்கும் இவ்வியல்பு முடிபு கொள்க. அது வாராத கொற்றன் என வரும். இவ்வியல்பு முடிபிற்குச் செய்ம்மன சிறத்தலின், வியங்கோட்கு முன் வைத்தார். ‘ஏவல் கண்ணிய’ என்பதனான் ஏவல் கண்ணாததும் உளதென்று கூறி ‘மன்னிய பெரும நீ’ (புறம். 91) என உதாரணங் காட்டுகவெனின், அது பொருந்தாது; கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல் கண்ணிற்றேயாம். எல்லாவற்றினுஞ் சிறந்த ‘பலவற்றிறுதி’ முற்கூறுகவெனின், அது வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேறு வேறு முடிபுடைத் தென்றற்குஞ், செய்யுண் முடிபு இவ்வியல்புபோற் சிறப்பின்றென்றற்கும், அகர ஈற்றுள் முடிபு கூறாது நின்ற முற்றுவினையும் வினைக்குறிப்பும் இவ்வியல்பு முடிபு பெறுமென்றற்கும் பின் வைத்தார். உண்டன குதிரை இது முற்றுவினை. கரியன குதிரை இது முற்று வினைக்குறிப்பு. இஃது இயல்புகணத்து முடிபு. ‘ஞநமயவ’ (எழுத். 144) என்புழிப் பொருந்துவன வெல்லாங் கொள்க. (8) ‘வாழிய’ இறுதி யகரம் கெடுதலும் உண்மை 211. வாழிய என்னுஞ் செயவென் கிளவி இறுதி யகரங் கெடுதலும் உரித்தே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. (இ-ள்.) வாழிய என்னுஞ் செய என் கிளவி - வாழுங்காலம் நெடுங் காலமாகுக என்னும் பொருளைத் தரும் வாழிய வென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சக்கிளவி, இறுதி யகரங் கெடுதலும் உரித்து - இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட யகரவொற்றுங் கெட்டு முடிதலும் உரித்து எ-று. ‘கெடுதலும்’ எனவே, கெடாது முடிதலே பெரும்பான்மை என்றவாறு. எ-டு: வாழி கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வரும். வாழிய என்பதே பெரும்பான்மை. வாழிய யான் நீ அவன் அவள் அவர் அது அவை என இது மூன்றிடத்துஞ் சேறலின் ‘உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும்’ (எழுத். 151) என்புழி முன்னிலை யியல்பாம் என்ற தன்கண் அடங்காதாயிற்று. இது குறிப்பு வியங்கோள். ‘ஒன்றென முடித்தலான்’ இஃது இயல்புகணத்துங் கொள்க. எ-டு: வாழி ஞெள்ளா எனவரும். இது வாழ்த்தப்படும் பொருள் வாழவேண்டுமென்னுங் கருத்தின னாகக் கூறுதலின் ஏவல் கண்ணிற்றேயாம். அல்லாக்கால் ‘வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே’ (செய். 109) என்பதற்கும், வாழ்த்தியலாகச் சான்றோர் கூறிய செய்யுள்களுக்கும் பயனின்றாமென்று உணர்க. (9) ‘அம்ம’ இறுதி அகரம் நீடலும் உண்மை 212. உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். இஃது அம்ம வென்பதற்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) உரைப்பொருட் கிளவி - எதிர்முகமாக்கும் பொருளை யுடைய அம்மவென்னுஞ் சொல், நீட்டமும் வரையார் - அகரமாகி நிற்றலேயன்றி ஆகாரமாய் நீண்டு முடிதலையும் நீக்கார் எ-று. எ-டு: அம்மா கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வரும். உம்மையான், நீளாமையே பெரும்பான்மையாம். வரையாது கூறினமையின் இந் நீட்சி இயல்பு கணத்துங் கொள்க. அம்மாஞெள்ளா, நாகா, மாடா, வடுகா, ஆதா என ஒட்டுக. (10) ‘பலாஅஞ் சிலாஅம்’ நிலைவருமொழிகள் 213. பலவற் றிறுதி நீடுமொழி உளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. இது முற்கூறிய பலவற்றிறுதிக்கண் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) பலவற்று இறுதி நீடும் மொழி உள - பலவற்றை உணர்த்தும் ஐவகைச் சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியும் மொழிகளுஞ் சில உள; செய்யுள் கண்ணிய தொடர்மொழி ஆன - யாண்டுளவெனிற் செய்யு ளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப்படுஞ் செய்யுண்முடி புடைய மொழிகளின்கண் எ-று. ‘உடைத்து’ என்னாது ‘உள’ என்ற பன்மையான், வருமொழிக்கண் சில என்பது வந்து நீடு மென்று கொள்க. ‘செய்யுளான’ என்னாது ‘செய்யுள் கண்ணிய தொடர்மொழியான’ என்றதனான், பல என்பதன் இறுதி அகரம் நீண்டுழி நிலைமொழி அகரப் பேறும் வருமொழி ஞகரமாகிய மெல்லெழுத்துப் பேறும், வருமொழி யிறுதி நீண்டவழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. எ-டு: ‘பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்’. இதன் சொன் னிலை பல சில என்னுஞ் செவ்வெண். (11) பல, சில - தம்முன் தாம் வந்து முடியுமாறு 214. தொடரல் இறுதி தம்முன் தாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே. இது பல சில என்பனவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென, எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) தொடர் அல் இறுதி - தொடர்மொழி யல்லாத ஈரெழுத் தொருமொழியாகிய பல சில என்னும் அகர ஈற்றுச் சொல், தம்முன் தாம்வரின் - தம்முன்னே தாம் வருமாயின், லகரம் றகர வொற்று ஆகலும் உரித்து - தம் ஈற்றின் நின்ற லகர வொற்று றகரவொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து எ-று. உம்மையான் திரியாமையும் உரித்தென்றார். எ-டு: பற்பல கொண்டார், சிற்சில வித்தி என வரும். அகர ஈற்றுச் சுட்டல்லாத குற்றெழுத்து ஓரெழுத்தொரு மொழியாதல் இன்மையின் ‘தொடரலிறுதி’ யெனவே ஈரெழுத்தொரு மொழியே உணர்த்திற்று. ‘தன்முன்’ என்னாது ‘தம்முன்’ என்ற பன்மையாற் பல சில என நின்ற இரண்டுந் தழுவப்பட்டன. ‘தம்முன்வரின்’ என்னாது ‘தாம்’ என்றதனாற் பலவின்முன் பல வருதலுஞ் சிலவின் முன் சில வருதலுங் கொள்க. லகரம் றகர வொற்றா மென ஒற்றிற்குத் திரிபு கூறி அகரங் கெடுதல் கூறிற்றிலரெனின், அது வாராததனான் வந்தது முடித்தலென்னும் உத்திபெற வைத்ததென்று உணர்க. இதனை ஞாபகமென்பாரும் உளர். அருத்தாபத்தியான் ‘தம்முன் தாம்வரின்’ லகரம் றகர ஒற்றாம். எனவே, தம்முன் பிறவரின் லகரம் றகரவொற்றாகாது அகரம் கெடுமென்று கொள்ளப்படும். எ-டு: பல்கடல் சேனை தானை பறை எனவும், ‘பல்யானை’ (புறம். 63) பல்வேள்வி எனவும், சில்காடு சேனை தானை பறை எனவும், சில்யானை சில்வேள்வி எனவும் வரும். ‘உரித்து’ என்றது அகர ஈற்றொருமை பற்றி. (12) ஆண்டு வல்லெழுத்து உறழ்ந்து தோன்றல் 215. வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும். இது முற்கூறிய இரண்டற்கும் உள்ளதொரு முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) வல்லெழுத்து இயற்கை - முற்கூறிய பல சில வென்னும் இரண்டற்கும் அகர ஈற்றுப் பொதுவிதியிற் கூறிய வல்லெழுத்துமிகும் இயல்பு, உறழத்தோன்றும் - மிகுதலும் மிகாமையுமாய் உறழ்ந்துவரத் தோன்றும் எ-று. எ-டு: பலப்பல பலபல, சிலச்சில சிலசில என வரும். ஈண்டுந் ‘தம்முன் தாம்’ வருதல் கொள்க. ‘இயற்கை’ என்றதனான், அகரங் கெட லகரம் திரிந்துந் திரியாதும் உறழ்ந்து முடிதலுங் கொள்க. எ-டு: பற்பல பல்பல, சிற்சில சில்சில எனவரும். ‘தோன்றும்’ என்றதனான், அகரங் கெட லகரம் மெல்லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்து முடிதலுங் கொள்க. எ-டு: ‘பன்மீன் வேட்டத்து’ (குறுந். 123), பன்மலர், பஃறாலி, பஃறாழிசை, சின்னூல், சிஃறாழிசை என வரும். இவை முன்னர்த் ‘தோன்றும்’ என்று எடுத்தோதிய மிகையான் அகரங் கெட நின்ற லகரவொற்றின் முடிபாகலின் ‘தகரம் வருவழி ஆய்தம்’ (எழுத். 369) ‘மெல்லெழுத்து இயையின்’ (எழு. 367) என்பவற்றான் முடியா. (13) அகர ஈறு, வன்கணம் வருவழி வேற்றுமைக்கண் முடியுமாறு 216. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே. இஃது அகர ஈற்றிற்கு அல்வழி முடிபு கூறி, வன்கணத்தொடு வேற்றுமை தொக்கு நின்ற முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்று - அகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் முற்கூறிய அல்வழியோடு ஒரு தன்மைத்தாய்க், கசதப முதன் மொழி வந்துழித் தத்தம் ஒத்த வொற்று இடைமிக்கு முடியும் எ-று. எ-டு: இருவிளக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என வரும். இருவிளக்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குண வேற்றுமைக் கண்ணுங் கொள்க. ‘இருவிள’ என்பது ஓலை; வேணாட்டகத்து ஓரூர்; கருவூரினகத்து ஒரு சேரியு மென்ப. இருவிளவிற் கொற்றன் என விரிக்க. (14) இவ்வீற்று மரப்பெயர் மெல்லெழுத்து மிகுதல் 217. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இஃது அகர ஈற்று மரப் பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) மரப் பெயர்க்கிளவி மெல்லெழுத்து மிகும் - அகர ஈற்று மரப் பெயராய சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: அதங்கோடு விளங்கோடு செதிள் தோல் பூ என வரும். இது ‘கசதப முதலிய’ (எழுத். 143) என்பதனான் முடியும். (15) ‘மக’ இன்சாரியை பெறுதல் 218. மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. இஃது அகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை - அகர ஈற்று மக என்னும் பெயர்ச்சொல்லிற்கு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருஞ்சாரியை இன் சாரியை எ-று. எ-டு: மகவின்கை, செவி, தலை, புறம் என வரும். சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக்கண்ணுஞ் செல்லுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாகலின், மகவின் ஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை என ஒட்டுக. மேல் ‘அவண்’ என்றதனான், இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (16) அஃது அத்துப் பெறுதலும் உளதாதல் 219. அத்தவண் வரினும் வரைநிலை இன்றே. இஃது ஈற்று வல்லெழுத்தோடு அத்து வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) அவண் - முற்கூறிய மகவிடத்து, அத்து வரினும் வரைநிலை இன்று - இன்னேயன்றி அத்துச் சாரியையும் ஈற்று வல்லெழுத்தும் வந்து முடியினும் நீக்கும் நிலைமையின்று எ-று. எ-டு: மகத்துக் கை செவி தலை புறம் என வரும். ‘அவண்’ என்றதனான், மகப்பால்யாடு என வல்லெழுத்துப்பேறும், மகவின்கை என மேல் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், விளவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. ‘நிலை’ யென்றதனான், மகம்பால்யாடு என மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. (17) பலவற்றிறுதி வற்றுப் பெறுதல் 220. பலவற் றிறுதி உருபியல் நிலையும். இஃது அதிகாரத்தான் இயைபு வல்லெழுத்தொடு வற்றும் வகுத்தலின், எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) பலவற்றிறுதி - பல்ல பல சில உள்ள இல்ல என்னும் பலவற்றை யுணர்த்தும் அகர ஈற்றுச் சொற்களின் இறுதி, உருபியல் நிலையும் - உருபியற்கண் வற்றுப் பெற்றுப் புணர்ந்தாற் போல உருபினது பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுப் பெற்றுப் புணரும் எ-று. இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க. எ-டு: பல்லவற்றுக்கோடு பலவற்றுக்கோடு சிலவற்றுக்கோடு உள்ளவற்றுக்கோடு இல்லவற்றுக்கோடு, செதிள் தோல் பூ என ஒட்டுக. உருபு விரிந்துழி நிற்குமாறு போலன்றி, அவ்வுருபு தொக்கு அதன் பொருள் நின்று புணருங்கால் வேறுபாடு உடைமையின், அவ்வேறு பாடுகள் ஈண்டு ஓதினார் இத்துணையுமென்று உணர்க. (18) ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் (மிக்கு) முடியுமாறு 221. ஆகார இறுதி அகர இயற்றே. இஃது ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஆகார இறுதி அகர இயற்று - ஆகார ஈற்றுப் பெயர் அல் வழிக்கண் அகர ஈற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழித் தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் எ-று. எ-டு: மூங்காக்கடிது, தாராக்கடிது, சிறிது, தீது, பெரிது என ஒட்டுக. (19) ‘செய்யா’ வாய்பாட்டு வினையெச்சமும் அற்றாதல் 222. செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் அவ்வியல் திரியா தென்மனார் புலவர். இஃது ஆகார ஈற்று வினைச்சொன் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் - செய்யா வென்னும் வினையெச்சமாகிய சொல்லும் உம்மையாற் பெயரெச்ச மறையாகிய சொல்லும், அவ்வியல் திரியாது என்மனார் புலவர் - வல்லெழுத்து மிக்கு முடியும் அவ்வியல்பு திரியாதென்று சொல்லுவர் புலவர் எ-று. எ-டு: உண்ணாக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், உண்ணாக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். (20) உம்மைத்தொகைக்கண் நிலைமொழி ஆகார ஈறு முடியுமாறு 223. உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக அகரம் மிகுமே. இஃது ஆகார ஈற்று அல்வழிக்கண் உம்மைத்தொகை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி - உம்மை தொக்கு நின்ற இருபெயராகிய தொகைச் சொற்கள்; மெய்ம்மையாக அகரம் மிகும் - மெய்யாக நிலைமொழி யீற்றகரம் மிக்கு முடியும் எ-று. எ-டு: உவாஅப்பதினான்கு, இராஅப்பகல் என வரும். ‘மெய்ம்மையாக’ என்பதனான், வல்லெழுத்துக் கொடுக்க. இஃது எழுவாயும் பயனிலையுமன்றி உம்மைத் தொகையாதலின் மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாதாயிற்று. ‘உம்மை தொக்க’ என்னாது ‘எஞ்சிய’ என்ற வாய்பாட்டு வேற்றுமை யான், அராஅப்பாம்பு எனப் பண்புத்தொகைக்கும், இராஅக்கொடிது என எழுவாய் முடிபிற்கும், இராஅக்காக்கை எனப் பெயரெச்ச மறைக்கும் அகரப்பேறு கொள்க. வருமொழி வரையாது கூறினமையின், இயல்புகணத்துக்கண்ணும் அகரப்பேறு கொள்க. இறாஅவழுதுணங்காய் எனவரும். இஃது உம்மைத் தொகை. அராஅக்குட்டி என்பது பண்புத்தொகையும் வேற்றுமைத் தொகையுமாம். உவாஅப் பட்டினி என்பது வேற்றுமைத் தொகை. (21) ஆகார ஈற்றுள் இயல்பாய் முடிவன 224. ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியும் ஏவல் குறித்த உரையசை மியாவும் தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோ(டு) அன்றி அனைத்தும் இயல்பென மொழிப. இஃது எய்தியது விலக்கலும் எய்தாதது எய்துவித்தலும் உணர்த்துகின்றது. (இ-ள்.) ஆவும் - ஆவென்னும் பெயரும், மாவும் - மாவென்னும் பெயரும், விளிப்பெயர்க் கிளவியும் - விளித்தலையுடைய பெயராகிய உயர்திணைச் சொல்லும், யாவென் வினாவும் - யாவென்னும் வினாப் பெயரும், பலவற்று இறுதியும் - பன்மைப் பொருளை உணர்த்தும் ஆகார ஈற்றுப் பெயரெச்ச மறையாகிய முற்றுவினைச்சொல்லும், ஏவல் குறித்த உரையசை மியாவும் - முன்னிலை யேவல் வினையைக் கருதிவரும் எதிர்முகமாக்குஞ் சொல் லினைச் சேர்ந்த மியாவென்னும் ஆகார ஈற்று இடைச்சொல்லும், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோடு - தனது தொழிலினைச் சொல்லும் ஆகார ஈற்றுத் தன்மையாகிய வினாச் சொல்லொடு கூட, அன்றி யனைத்தும் - அவ்வெழுவகையாகிய சொல்லும், இயல்பென மொழிப - இயல்பாய் முடியு மென்று சொல்லுவர் புலவர் எ-று. எ-டு: ஆகுறிது மாகுறிது சிறிது தீது பெரிது; குறிய சிறிய தீய பெரிய என ஒட்டுக. இவை ஆகார ஈற்றுப் பெயராகலின், மிக்கு முடிவன மிகாவென எய்தியது விலக்கிற்று. ஊராகேள் செல் தா போ என இஃது இயல்பாமென்ற உயர்திணைப் படர்க்கைப் பெயர் திரிந்து முன்னிலையாய் விளியேற்றலின் எய்தாதது எய்துவித்தது. யா குறிய சிறிய தீய பெரிய என இதுவும் பெயராகலின், எய்திய இயைபு வல்லெழுத்து விலக்கியதாம். உண்ணா குதிரைகள் செந்நாய்கள் தகர்கள் பன்றிகள் என இஃது எய்தியது விலக்கிற்று; ‘செய்யா’ என்னுஞ் சூத்திரத்துப் (எழுத். 222) பெற்ற வல்லெழுத்தினை விலக்கலின். கேண்மியா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், இவ்விடைச் சொற்கள் முடியாமையின் எய்தாதது எய்துவித்தது. உண்கா என்பது, யானுண்பேனோ என்னும் பொருட்டு. இயல்பு கணத்துக்கண்ணாயின் ‘ஞ ந ம ய வ’ (எழுத். 144) என்பதனான் முடிபெய் தும். (22) ஆகார ஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு 225. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே. இஃது ஆகார ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைக் கண்ணும் - ஆகார ஈற்றுப் பெயர் அல் வழிக்கண்ணே யன்றி வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக் கண்ணும், அதனோரற்று - அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: தாரா மூங்கா வங்கா என நிறுத்திக், கால் செவி தலை புறம் என வருவித்து வல்லெழுத்துக் கொடுத்து ஒட்டுக. (23) இவ்வீற்றுள் அகர எழுத்துப்பேறு எய்தி முடிவன 226. குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்றும் அகரக் கிளவி. இஃது அவ்வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது; அகரமும் வல்லெழுத்தொடு பெறுதலின். (இ-ள்.) குறியதன் முன்னரும் - குற்றெழுத்தின் முன்னின்ற ஆகார ஈற்றிற்கும், ஓரெழுத்து மொழிக்கும் - ஓரெழுத்தொருமொழியாகிய ஆகார ஈற்றிற்கும், அகரக்கிளவி அறியத் தோன்றும் - நிலைமொழிக்கண் அகரமாகிய எழுத்து விளங்கத் தோன்றும் எ-று. எ-டு: பலாஅக்கோடு செதிள் தோல் பூ எனவும் காஅக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ‘ஓரெழுத்தொருமொழி’ அகரம்பெறுதல் சிறுபான்மையென்றற்கு அதனைப் பிற்கூறினார். இது நிலைமொழிச் செய்கையாதலிற் பலாஅ விலை பலாஅநார் என இயல்புகணத்துங் கொள்க. ‘அறிய’ என்றதனான் அவ்வகரம் ஈரிடத்தும் பொருந்தினவழிக் கொள்க. இன்னும் இதனானே, அண்ணாஅத்தேரி திட்டாஅத்துக்குளம் என அத்துக் கொடுத்தும், உவாஅத்துஞான்று கொண்டான் என அத்தும் ஞான்றுங் கொடுத்தும், உவாஅத்தாற் கொண்டான் என அத்தும் ஆனுங் கொடுத்தும், இடாவினுட் (இறைகூடை) கொண்டான் என இன்னும் ஏழுனுருபுங் கொடுத்துஞ் செய்கை செய்து முடிக்க. இன்னும் இதனானே, மூங்காவின்கால் மூங்காவின்றலை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்துக் கேடுங் கொள்க. (24) ‘இரா’ வேற்றுமைக்கண் அகரம் பெறாமை 227. இராவென் கிளவிக்கு அகரம் இல்லை. இஃது ஆகார ஈற்றுப் பெயர்க்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது. (இ-ள்.) இராவென் கிளவிக்கு - இராவென்னும் ஆகார ஈற்றுச் சொல் லிற்கு, அகரம் இல்லை - முற்கூறிய அகரம் பெறுதலின்றி வல்லெழுத்துப் பெற்று முடியும் எ-று. எ-டு: இராக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். இராஅக்காக்கை இராஅக்கூத்து எனப் பெயரெச்ச மறைப்பொருள் தாராது, இராவிடத்துக்காக்கை இராவிடத்துக்கூத்து என வேற்றுமை கருதியவழி, இராக்காக்கை இராக்கூத்து என அகரம் பெறாதென்று உணர்க. (25) ‘நிலா’ அத்துப்பெற்று முடிதல் 228. நிலாவென் கிளவி அத்தொடு சிவணும். இஃது அகரம் விலக்கி அதிகார வல்லெழுத்தினோடு அத்து வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) நிலாவென் கிளவி அத்தொடு சிவணும் - நிலாவென்னுஞ் சொல் அத்துச்சாரியையொடு பொருந்தி முடியும் எ-று. எ-டு: நிலாஅத்துக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். நிலைமொழித்தொழில் நிலைமொழித்தொழிலை விலக்குமாதலின், அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது. இதற்கு ஏழனுருபு விரிக்க. நிலாஅக்கதிர் என்பது ‘வேற்றுமைக் கண்ணும்’ (எழுத். 225) என்பதனான் இயைபு வல்லெழுத்துப் பெற்றது. நிலாஅமுற்றம் என்பது ‘ஒட்டுதற் கொழுகிய வழக்கு’ அன்மையின் அத்துப் பெறாதாயிற்று. ஈண்டு வருமொழி வரையாது கூறினமையின், நிலாஅத்து ஞான்றான் என இயல்பு கணத்துக் கண்ணும் ஏற்பன கொள்க. (26) யா, பிடா, தளா - இவை மூன்றும் முடியுமாறு 229. யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும் ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. இது வருமொழி வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) யாமரக் கிளவியும் - யாவென்னும் மரத்தை உணர நின்ற சொல்லும், பிடாவும்- பிடாவென்னுஞ் சொல்லும், தளாவும் - தளாவென் னுஞ் சொல்லும், ஆம் முப்பெயரும் மெல்லெழுத்து மிகும் - ஆகிய மூன்று பெயரும் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளாஅங்கோடு, செதிள் தோல் பூ என வரும். வருமொழித் தொழிலாகிய மெல்லெழுத்து வகுப்பவே, வல்லெழுத்து விலக்கிற்றாம். இதற்கு விலக்காமையின் அகரம் பெற்றது.(27) இவை வல்லெழுத்துப்பேறும் எய்துதல் 230. வல்லெழுத்து மிகினும் மான மில்லை. இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது, அகரத்தொடு மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறுமென்றலின். (இ-ள்.) வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - முற்கூறிய மூன்று பெயர்க்கும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை எ-று. எ-டு: யாஅக்கோடு, பிடாஅக்கோடு, தளாஅக்கோடு, செதிள் தோல் பூ என வரும். ‘மானமில்லை’ என்றதனான், இம்மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி, இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாவின் கோடு, பிடாவின்கோடு, தளாவின்கோடு என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது. இன்னும் இதனானே, யாஅத்துக்கோடு, பிடாஅத்துக் கோடு, தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலுங் கொள்க. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின், ‘யாமரக் கிளவி’ (எழுத். 229) என்பதனைக் ‘குறியதன் முன்னரும்’ (எழுத். 226) என்பதன்பின் வையாதவதனான், இராவிற்கொண்டான் நிலாவிற் கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (28) மாமரக் கிளவியும் ஆவும் மாவும் முடியுமாறு 231. மாமரக் கிளவியும் ஆவும் மாவும் ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன அகரம் வல்லெழுத் தவையவண் நிலையா னகரம் ஒற்றும் ஆவும் மாவும். இஃது எய்தியது விலக்கி எய்தாதது எய்துவித்தது. இம் மூன்றும் வல்லெழுத்துப் பெறா என்றலின் எய்தியது விலக்கிற்று. மாமரத்துக்கு அகரமும் ஙஞநம ஒற்றும், ஏனையவற்றிற்கு னகர ஒற்றும் எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) மாமரக் கிளவியும் ஆவும்மாவும் ஆம் முப்பெயரும் அவற்றோரன்ன - மாமரமாகிய சொல்லும் ஆவென்னுஞ் சொல்லும் மாவென்னுஞ் சொல்லுமாகிய மூன்று பெயரும் யாமரம் முதலிய மூன்றோடும் ஒரு தன்மையவாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும், ஆவும் மாவும் அகரம் அவண் நிலையா னகரம் ஒற்றும் - அவற்றுள் ஆவும் மாவும் புணர்ச்சியிடத்து அகரம் நிலைபெறாவாய் னகர ஒற்றுப் பெற்று முடியும், எனவே அருத்தாபத்தியான் மாமரத்திற்கு அகரம் நிலைபெற்று ஙஞநம ஒற்றும் பெறுமாயிற்று, அவை வல்லெழுத்து அவண் நிலையா - அம்மூன்று பெயரும் முற்கூறிய வல்லெழுத்துப் புணர்ச்சியிடத்து நிலைபெறாவாய் வரும் எ-று. ‘அவண் நிலையா’ என்றதனை இரண்டிடத்துங் கூட்டுக. எ-டு: மாஅங்கோடு செதிள் தோல் பூ, ஆன்கோடு மான்கோடு செவி தலை புறம் என வரும். ‘மாமரக் கிளவியும் ஆவும் மாவும் அவற்றோரன்ன’ என்று ஞாபகமாகக் கூறியவதனான், மாங்கோடென அகரமின்றியும் வரும். இனி, ‘அவண்’ என்றதனாற் காயாங்கோடு நுணாங்கோடு ஆணங் கோடு என்றாற் போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும், அங்காக் கொண்டான் இங்காக்கொண்டான் உங்காக்கொண்டான் எங்காக் கொண்டான் என இவற்றுள் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்று இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதலும், ஆவின்கோடு மாவின்கோடு எனச் சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றுழி வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. மாட்டேற்றான் மூன்று பெயரும் வல்லெழுத்துப் பெறாது மெல்லெழுத்துப் பெற்றவாறும், மாமரம் அகரம் பெற்றவாறும் இச் சூத்திரத்தின் கண்ணழிவான் உணர்க. (29) மேலை விதியான் முடிந்த ‘ஆன்’ அகரமும் பெறுதல் 232. ஆனொற் றகரமொடும் நிலையிடன் உடைத்தே. இஃது அவற்றுள் ஆன் என்றதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) ஆனொற்று - ஆவென்னுஞ் சொன் முன்னர்ப் பெற்றுநின்ற னகரவொற்று, அகரமொடும் நிலையிடன் உடைத்து - அகரத்தொடு கூடி நிற்கும் இடனும் உடைத்து எ-று. ‘இடனுடைத்து’ என்றவதனான், வன்கண மொழிந்த கணத்தது இம்முடிபெனக் கொள்க. எ-டு: ‘ஆனநெய் தெளித்து நான நீவி’, ‘ஆனமணி கறங்கும் கானத் தாங்கண்’ என வரும். ‘அகரமொடும்’ என்ற உம்மையான், அகரமின்றி வருதலே பெரும்பான்மை. ஆனெய் தெளித்து, ஆன்மணி, ஆன்வால் என வரும்.(30) ‘ஆன்’ முன் பகர ஈகாரம் முடியுமாறு 233. ஆன்முன் வரூஉம் ஈகார பகரந் தான்மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே. இஃது ஆன் என்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்.) ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் - ஆனென்னுஞ் சொன் முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தொடு கூடிய பகரமாகிய மொழி, தான் மிகத் தோன்றி - அப் பகரமாகிய தான் மிக்கு நிற்ப நிலைமொழி னகரத்திற்குக் கேடு தோன்றி, குறுகலும் உரித்து - ஈகாரம் இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து எ-று. எ-டு: ஆப்பி என வரும். உம்மை எதிர்மறை யாகலான், ஆன்பீ என்றுமாம். (31) இவ்வீற்றுட் சில செய்யுட்கண் முடியுமாறு 234. குறியதன் இறுதிச் சினைகெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே. இஃது ஆகார ஈற்றுட் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) குறியதன் இறுதிச் சினைகெட - குற்றெழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்திரையின் ஒரு மாத்திரை கெட்டு அஃது அகரமாய் நிற்ப, உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்து - ஆண்டு உகரம் புலப்பட வருதல் செய்யுளிடத்து உரித்து எ-று. எ-டு: ‘இறவுப்புறத் தன்ன பிணர்ப்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை’ (நற். 19) ‘புறவுப்புறத் தன்ன புன்கா யுகாய்’ (குறுந். 264). என வரும். ‘உகரம்’ வகுப்பவே நிலைமொழி அகரங் கெட்டது. அதிகார வல்லெழுத்து விலக்காமையின் நின்று முடிந்தது. இனி, நிலைமொழித்தொழில் வரையாது கூறினமையின், இயல்பு கணத்திற்கும் இவ்விதி எய்திற்றாகலின், ஆண்டுவரும் உகரம் புலப்பட வாராமையும் உணர்க. சுறவுயர்கொடி, ‘அரவுயர்கொடி’, முழவுறழ்தோள் என இவை குறியதனிறுதிச் சினைகெட்டு, வருமொழி உயிர் முதன் மொழியாய் வருதலின் வகர உடம்படுமெய் பெற்று, உகரம் பெறாது முடிந்தன. இவற்றிற்கு இரண்டா முருபு விரிக்க; மூன்றாவதுமாம். (32) இகர ஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் வலி மிகல் 235. இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. இஃது இகர ஈற்றுப் பெயர்க்கு அல்வழி முடிபு தொகைமரபிற் கூறி ஈண்டு வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் - இகர ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன் மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: கிளிக்கால் சிறகு தலை புறம் என வரும். புலி நரி என்றாற் போல்வனவும் அவை. இனி, கிளிகுறுமை கிளிக்குறுமை எனக் குணம்பற்றி வந்த உறழ்ச்சி முடிபு மேல் ‘வல்லெழுத்து மிகினும்’ (எழுத். 246) என்னும் சூத்திரத்து ‘ஒல்வழி யறிதல்’ என்பதனாற் கொள்க. (33) இவ்வீற்று இடைச்சொற்களும், வினையெச்சமும் அன்னவாதல் 236. இனிஅணி என்னுங் காலையும் இடனும் வினையெஞ்சு கிளவியும் சுட்டு மன்ன. இஃது எய்தாதது எய்துவித்தது, இவ்வீற்று இடைச்சொற்கும் வினைச்சொற்கும் முடிபு கூறுதலின். (இ-ள்.) இனிஅணி என்னுங் காலையும் இடனும் - இனியென்றும் அணியென்றுஞ் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத்தையும் உணரநின்ற இடைச்சொல்லும், வினையெஞ்சு கிளவியும் - இவ்வீற்று வினையெச்சமாகிய சொல்லும், சுட்டும் - இவ்வீற்றுச் சுட்டாகிய இடைச் சொல்லும், அன்ன - முற்கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: இனிக்கொண்டான் அணிக்கொண்டான் தேடிக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், இக் கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். இவ்விடைச் சொல் மூன்றும் இப்பொழுது கொண்டான், அணிய இடத்தே கொண்டான், இவ்விடத்துக் கொற்றன் என உருபின் பொருள்பட வந்த வேற்றுமையாதலின் வேறோதி முடித்தார். (34) ‘இன்றி’யது இகரம் உகரமாய்த் திரியும் செய்யுள்முடிபு 237. இன்றி என்னும் வினையெஞ் சிறுதி நின்ற இகரம் உகர மாதல் தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே. இஃது இவ்வீற்று வினையெச்சத்துள் ஒன்றற்குச் செய்யுண்முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் - இன்றியென்று சொல்லப்படும் வினையெச்சக் குறிப்பின் இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாகத் திரிந்து முடிதல், தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்து - பழக நடந்த கூற்றையுடைய செய்யுளுள் உரித்து எ-று. எ-டு: ‘உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே’ என வரும். ‘நின்ற’ என்றதனான், வினையெச்சத்திற்கு முன் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. ‘தொன்றியன் மருங்கின்’ என்றதனான், அன்றி என்பதூஉஞ் செய்யுளில் இம்முடிபு எய்துதல் கொள்க. ‘இடனன்று துறத்தல் வல்லி யோரே’, ‘வாளன்று பிடியா வன்கணாடவர்’, ‘நாளன்றுபோகி’ (புறம். 124) என வரும். முற்றியலிகரந் திரிந்து குற்றியலுகரமாய் நின்றது. (35) இகரச்சுட்டின் இயல்பு அகரச்சுட்டு போறல் 238. சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. இஃது இகர ஈற்றுச் சுட்டுப் பெயர் இயல்பு கணத்தொடு முடியுமாறு கூறுதலின் எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) சுட்டின் இயற்கை - இகர ஈற்றுச் சுட்டின் இயல்பு, முன் கிளந்தற்று - முன் அகர ஈற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம் எ-று. என்றது, ‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்’ (எழுத். 205 - 208) என்பது முதலிய நான்கு சூத்திரத்தானுங் கூறிய இலக்கணங்களை; அவை மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும், இடைக்கணத்தும் உயிர்க்கணத் தும் வகரம் பெறுதலுஞ், செய்யுட் கண் வகரங் கெட்டுச் சுட்டு நீடலுமாம். எ-டு: இஞ்ஞாண் நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு எனவும், இவ்வடை இவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வுரல் இவ்வூர்தி இவ்வெழு இவ்வேணி இவ்வையம் இவ்வொடு இவ்வோக்கம் இவ்வௌவியம் எனவும், ‘ஈவயினான’ எனவும் வரும். ‘ஈதுகாண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே’ என்றதும் ‘கள்வனோ வல்லன் கணவனென் காற்சிலம்பு, கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே யீதொன்று’ (சிலப். ஊர்சூழ்வரி) என்றதும் இதுவென்னுஞ் சுட்டுமுதல் உகர ஈறாதலின், அது செய்யுளகத்தது; புறனடையான் முடியுமென உணர்க. (36) ‘தூணி’ பதக்கொடு முடிதல் 239. பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. இஃது இவ்வீற்று அல்வழிகளுள் அளவுப் பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் எய்திய ஏயென் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) தூணிக் கிளவி முன் பதக்கு வரின் - தூணியாகிய அளவுப் பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அளவுப்பெயர் வருமாயின், முதற் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று - முன்பு விதந்தெடுத்த வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: தூணிப்பதக்கு என வரும். இஃது உம்மைத் தொகை. வருமொழி முற்கூறியவதனான் அடையொடு வந்துழியும் இவ்விதி கொள்க. இருதூணிப் பதக்கு முத்தூணிப் பதக்கு என ஒட்டுக. ‘கிளந்தெடுத்த’ என்றதனான் தூணிக்கொள் சாமை தோரை பாளிதம் எனப் பொருட்பெயர் முன் வந்துழியும், இருதூணிக் கொள் என அதுதான் அடையடுத்துழியுந், தூணித்தூணி தொடித்தொடி காணிக்காணி பூணிப் பூணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ்விதி கொள்க. இன்னும் இதனானே தன் முன்னர்த் தான் வந்துழியும் அதுதான் அடை யடுத்து வந்துழியும் இக்குச் சாரியை பெறுதலுங்கொள்க. தூணிக்குத் தூணி இருதூணிக்குத் தூணி எனவரும். இவற்றுட் பண்புத் தொகையும் உள.(37) ‘நாழி’ முன் ‘உரி’ வந்து முடியுமாறு 240. உரிவரு காலை நாழிக் கிளவி இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே டகர மொற்றும் ஆவயி னான. இதுவும் அது. (இ-ள்.) உரிவருகாலை - நாழி முன்னர் உரி வருமொழியாய் வருங் காலத்து, நாழிக் கிளவி - அந்நாழி என்னுஞ் சொல், இறுதி இகரம் மெய் யொடுங் கெடும் - தன் இறுதியினின்ற இகரந் தானேறிய மெய்யொடுங் கெடும், ஆவயினான் டகரம் ஒற்றும் - அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும் எ-று. எ-டு: நாடுரி என வரும். இதனான் ஏகாரம் விலக்குண்டது. வருமொழி முற்கூறிய வதனான், இருநாடுரி முந்நாடுரி எனவும் ஒட்டுக. ‘இறுதி யிகரம்’ என முன்னும் ஓர் இகரம் உள்ளது போலக் கூறியவத னான், ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலை மொழிகளாய் நின்று பிறபொருட்பெயரொடு வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. நாழிக்காயம் உரிக்காயம், சுக்கு தோரை பாளிதம் எனவரும். (38) ‘பனி’ அத்தும் இன்னும் பெற்றுமுடிதல் 241. பனியென வரூஉங் கால வேற்றுமைக்(கு) அத்தும் இன்னும் சாரியை யாகும். இஃது இகர ஈற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினொடு சாரியை பெறுமென எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) பனியென வரூஉங் கால வேற்றுமைக்கு - பனியென்று சொல்ல வருகின்ற நோயன்றிக் காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு, அத்தும் இன்னும் சாரியை ஆகும் - அத்தும் இன்னும் சாரியையாக வரும் எ-று. எ-டு: பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என வரும். ‘வேற்றுமை’ யென்றதனான், இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (39) ‘வளி’ எனும் பெயரும் அற்றாதல் 242. வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. இதுவும் அது. (இ-ள்.) வளியென வரூஉம் பூதக் கிளவியும் - வளியென்று சொல்ல வருகின்ற இடக்கரல்லாத ஐம்பெரும் பூதங்களின் ஒன்றை உணர நின்ற சொல்லும், அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப - முன்னர்க் கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண் நிற்றல் செவ்விதென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: வளியத்துக்கொண்டான், வளியிற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். ‘செவ்விது’ என்றதனான், இன் பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (40) ‘உதி’ மரப்பெயர் மெலி மிகல் 243. உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இது மரப்பெயரின் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதிக்கின்றது. (இ-ள்.) உதிமரக் கிளவி - உதித்த லென்னுந் தொழிலன்றி உதி என்னும் மரத்தினை உணர நின்ற சொல், மெல்லெழுத்து மிகும் - வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: உதிங்கோடு செதிள் தோல் பூ என வரும். அம்முச்சாரியை விதிக்கின்ற புளிமரத்தினை இதன்பின் வைத்தமையான், உதியங்கோடு என இதற்கும் அம்முப்பெறுதல் கொள்க. இஃது இக்காலத்து ஒதியென மருவிற்று. (41) ‘புளி’ மரப்பெயர் அம்முச்சாரியை பெறுதல் 244. புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. இது வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை - சுவையன்றிப் புளியென்னும் மரத்தினை உணர நின்ற சொல்லிற்கு அம்மென்னுஞ் சாரியை வரும் எ-று. எ-டு: புளியங்கோடு செதிள் தோல் பூ என வரும். சாரியைப் பேற்றிடை முன்னர்ச் சூத்திரத்து எழுத்துப்பேறு கூறியவதனான், அம்முப்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (42) சுவைப்புளி மெல்லெழுத்து மிக்கு முடிதல் 245. ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும் - அம் மரப் பெயரன்றிச் சுவைப்புளி உணர நின்ற பெயர் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: புளிங்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். பாளிதம் - பாற்சோறு. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க. (43) அப்பெயர் வலிமிக்கும் முடிதல் 246. வல்லெழுத்து மிகினும் மான மில்லை ஒல்வழி யறிதல் வழக்கத் தான. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) வல்லெழுத்து மிகினும் மானமில்லை - சுவைப்புளி மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றமில்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்து ஆன - பொருந்தும் இடம் அறிக வழக்கிடத்து எ-று. எ-டு: புளிக்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். ‘ஒல்வழி’ என்றதனாற், புளிச்சாறு போல ஏனைய வழக்குப் பயிற்சி இலவென்று கொள்க. ‘வழக்கத்தான’ என்றதனான், இவ்வீற்றுக்கண் எடுத்தோத்தும் இலேசுமின்றி வருவன எல்லாவற்றிற்கும் ஏற்குமாறு செய்கையறிந்து முடித்துக்கொள்க. அவை, இன்னினிக் கொண்டான் அண்ணணிக் கொண்டான் என்பன அடையடுத்தலின் ‘இனியணி’ (எழுத். 236) என்றவழி முடியாவாய் வல்லெழுத்துப் பெற்றன. கப்பிதந்தை சென்னிதந்தை என்பன, ‘அஃறிணை விரவுப் பெயர்’ (எழுத். 155) என்பதனான் இயல்பெய்தாது, ஈண்டு வருமொழித் தகர அகரங் கெட்டுக் கப்பிந்தை சென்னிந்தை என முடிந்தன. கூதாளி கணவிரி என்பனவற்றிற்கு அம்முக் கொடுத்து இகரங் கெடுத்துக் கூதாளங்கோடு கணவிரங்கோடு செதிள் தோல் பூ என முடிக்க. ‘கூதள நறும்பூ’ எனக் குறைந்தும் வரும். இனி, இவை மகர ஈறாயும் வழங்கும். அது ‘வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்’ (பட்டி. 85) என அத்துப் பெற்று மகரங் கெட்டும், ‘கணவிர மாலை யிடூஉக் கழிந்தன்ன’ (அகம். 31) என மகரங் கெட்டும், கணவிரங்கோடு என மெல்லெழுத்துப் பெற்றும் நிற்கும். கட்டி என நிறுத்தி, இடி அகல் எனத் தந்து டகரத்தின் இகரங் கெடுத்துக் கட்டிடி கட்டகல் என முடிக்க. பருத்திக்குச் சென்றானென இயைபு வல்லெழுத்தும் இக்குங் கொடுத்து முடிக்க. துளியத்துக் கொண்டான் துளியிற் கொண்டான் என அத்தும் இன்னும் கொடுத்து முடிக்க. ‘புளிங்காய் வேட்கைத் தன்று’ (ஐங்குறு. 51) எனவும், புளிம்பழம் எனவும் அம்முப்பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிதலுங் கொள்க. இன்னும் இதனானே, உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கெடுத்துக் கிளியின் கால், புளியின் கோடு, உதியின் கோடு என முடிக்க. (44) இவ்வீற்று நாட்பெயர் ஆன் சாரியை பெறுதல் 247. நாள்முன் தோன்றுந் தொழில்நிலைக் கிளவிக்கு ஆன்இடை வருதல் ஐய மின்றே. இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி, ஆன் சாரியை விதிக்கின்றது. (இ-ள்.) நாள் முன் தோன்றுந் தொழில் நிலைக் கிளவிக்கு - இகர ஈற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றுந் தொழிற்சொற்கு, ஆன் இடை வருதல் ஐயமின்று - ஆன் சாரியை இடை வந்து முடிதல் ஐயமின்று எ-று. எ-டு: பரணியாற் கொண்டான், சோதியாற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். ‘ஐயமின்று’ என்றதனான் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இதற்குக் கண்ணென் உருபு விரிக்க. (45) திங்கட்பெயர் இக்குச் சாரியை பெறுதல் 248. திங்கள் முன்வரின் இக்கே சாரியை. இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்கு வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி வகுத்தது. (இ-ள்.) திங்கள் முன்வரின் இக்கே சாரியை - திங்களை உணர நின்ற இகர ஈற்றுப் பெயர்களின் முன்னர்த் தொழினிலைக் கிளவி வரின் வருஞ் சாரியை இக்குச் சாரியையாம் எ-று. எ-டு: ஆடிக்குக்கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்கும் கண்ணென் உருபு விரிக்க. (46) ஈகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு 249. ஈகார இறுதி ஆகார இயற்றே. இஃது ஈகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஈகார இறுதி ஆகார இயற்று - ஈகார ஈற்றுப் பெயர் அல் வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: ஈக்கடிது, தீக்கடிது, சிறிது, தீது, பெரிது என வரும். (47) இவ்வீற்றுப்பெயருள் இயல்பாய் முடிவன 250. நீஎன் பெயரும் இடக்கர்ப் பெயரும் மீஎன மரீஇய இடம்வரை கிளவியும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது எய்தியது விலக்கலும், எய்தாதது எய்துவித்தலுங் கூறுகின்றது. (இ-ள்.) நீ என் பெயரும் இடக்கர்ப்பெயரும் - நீ யென்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய ஈகார ஈற்றுப் பெயரும், மீ என மரீ இய இடம்வரை கிளவியும் - மீ என்று சொல்ல மருவாய் வழங்கின ஓரிடத்தை வரைந்து உணர்த்துஞ் சொல்லும், ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - புணரு மிடத்து முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் எ-று. எ-டு: நீ குறியை சிறியை தீயை பெரியை எனவும், பீகுறிது சிறிது தீது பெரிது எனவும் இவையிற்றுக்குப் பொதுவான் எய்திய வல்லெழுத்து விலக்குண்டன. மீகண் செவி தலை புறம்; இஃது இலக்கணத்தொடு பொருந்திய மருவாதலின் எய்தாதது எய்துவித்தது. நீ என்பது ‘அஃறிணை விரவுப்பெயருள்’ (எழுத். 155) அடங்காதோ வெனின், மேல் நின்கை யெனத் திரிந்து முடிதலின் அடங்காதாயிற்று. மீகண் என்பது மேலிடத்துக் கண்ணென வேற்றுமை எனினும், இயல்பு பற்றி உடன் கூறினார். (48) அவற்றுள், ‘மீ’ வல்லெழுத்து மிகுதலும் பெறுதல் 251. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் உடனிலை மொழியும் உளவென மொழிப. இது வல்லெழுத்து மிகுக என்றலின் எய்தியது இகந்து படாமற் காத்தது. (இ-ள்.) இடம் வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் - இடத்தை வரைந்து உணர்த்தும் மீயென்னுஞ் சொல்லின் முன்னர் இயல்பாய் முடிதலே யன்றி வல்லெழுத்து மிக்கும் முடியும், உடனிலை மொழியும் உள என மொழிப - தம்மில் ஓசையியைந்து நிற்றலையுடைய மொழிகளும் உளவென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எ-டு: மீக்கோள், மீப்பல் என வரும். ‘உடனிலை’ என்றதனான் மீங்குழி மீந்தோல் என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவுங் கொள்க. (49) இவ்வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு 252. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே. இஃது ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று - ஈகார ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக் கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: ஈக்கால் சிறகு தலை புறம், தீக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (50) ‘நீ’ நின் ஆதல் 253. நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது; வல்லெழுத்து விலக்கி னகரவொற்றே பெறுக என்றலின். (இ-ள்.) நீ என் ஒரு பெயர் உருபியல் நிலையும் - நீயென்னும் ஓரெழுத்தொருமொழி உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகரம் ஒற்றி நின்றாற்போல ஈண்டுப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடியும், ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - அவ்வாறு முடிபுழி இயைபு வல்லெழுத்து மிகாது எ-று. எ-டு: நின்கை செவி தலை புறம் என வரும். இஃது ஈகார ஈறு இகர ஈறாய், இகர ஈறு னகர ஈறாய் நின்றுழியும் ‘நீயெனொருபெயர்’ என்றலின் திரிந்ததன் திரிபதுவேயாயிற்று. ‘இயற்கையாகும்’ எனவே நிலைமொழித்தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று. (51) உகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு 254. உகர இறுதி அகர இயற்றே. இஃது உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) உகர இறுதி அகர இயற்று - உகர ஈற்றுப் பெயர் அல் வழிக்கண் அகர ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல் லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும். (52) உகரச்சுட்டும் வன்கணம் வருவழி வலிமிகுதல் 255. சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும். இஃது உகர ஈற்றுச் சுட்டு வன்கணத்தொடு முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும் - உகர ஈற்றுச் சுட் டின் முன்னும் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: உக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். (53) பிறகணம் வரின், அகரச்சுட்டின் இயல்பிற்றாதல் 256. ஏனவை வரினே மேல்நிலை இயல. இஃது உகர ஈற்றுச் சுட்டு ஒழிந்த கணங்களொடு முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஏனவை வரின் - உகர ஈற்றுச் சுட்டின்முன் வல்லெழுத் தல்லாத மென்கணம் முதலிய மூன்றும் வரின், மேல்நிலை இயல - அகர ஈற்றுச் சுட்டு முடிந்தாற்போல ஞநமத் தோன்றின் ஒற்றுமிக்கும் யவவரினும் உயிர்வரினும் வகரம் ஒற்றியுஞ் செய்யுளில் நீண்டும் முடியும் எ-று. எ-டு: உஞ்ஞாண் நூல் மணி எனவும், உவ்யாழ் உவ்வட்டு எனவும், உவ்வடை உவ்வாடை எனவும், ஊவயினான எனவும் வரும். (54) சுட்டுமுதல் உகரம் இயல்பாக முடிதல் 257. சுட்டுமுதல் இறுதி இயல்பா கும்மே. இஃது இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதல் இறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுப் பெயர், இயல்பாகும் - முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் எ-று. எ-டு: அது குறிது, இது குறிது, உது குறிது, சிறிது தீது பெரிது எனவரும். முற்கூறியவை சுட்டுமாத்திரை, இவை சுட்டுப்பெயராக உணர்க.(55) அதன்முன்னர் ‘அன்று’ வருவழியும், ‘ஐ’ வருவழியும் செய்யுள்முடிபு 258. அன்றுவரு காலை ஆவா குதலும் ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப. இஃது இவ்வீற்றுச் சுட்டுமுதற்பெயர்க்கு ஒரு செய்யுண் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அன்று வருகாலை ஆ ஆகுதலும் - அதிகாரத்தான் நின்ற சுட்டுமுதல் உகர ஈற்றின் முன்னர் அன்றென்னும் வினைக்குறிப்புச் சொல் வருங்காலத்து அத்தகரவொற்றின்மேல் ஏறி நின்ற உகரம் ஆகாரமாய்த் திரிந்து முடிதலும், ஐவருகாலை மெய்வரைந்து கெடுதலும் - அதன் முன்னர் ஐயென்னுஞ் சாரியை வருங்காலத்து அத்தகரவொற்று நிற்க அதன் மேல் ஏறிய உகரங் கெடுதலும், செய்யுண் மருங்கின் உரித்தெனமொழிப - செய்யுட்கண் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. எ-டு: அதாஅன்றம்ம, இதாஅன்றம்ம, உதாஅன்றம்ம, ‘அதா அன்றென்ப வெண்பா யாப்பே’ (செய். 82) எனவும், அதை மற்றம்ம, இதைமற்றம்ம, உதைமற்றம்ம எனவும் வரும். ‘மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்றி முடித்தல்’ என்பதனான், அதன்று இதன்று உதன்று என உகரங் கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க. (56) உகர ஈற்றுப் பெயரது வேற்றுமைமுடிபு 259. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே. இஃது இவ்வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் - உகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: கடுக்காய் செதிள் தோல் பூ எனவும், கடுக்கடுமை எனவும் வரும். (57) எரு, செரு - என்பவற்றின் முடிபு 260. எருவும் செருவும் அம்மொடு சிவணித் திரிபிட னுடைய தெரியுங் காலை அம்மின் மகரம் செருவயின் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. இஃது அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும், ஒன்றற்கு வல்லெழுத்தினொடு சாரியை விதியும், சாரியை பெறாதவழி வல்லெழுத்து மெல்லெழுத்துப் பேறும் கூறுகின்றது. (இ-ள்.) எருவும் செருவும் அம்மொடு சிவணி - எருவென்னுஞ் சொல்லும் செருவென்னுஞ் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருந்தி, திரிபு இடனுடைய தெரியுங் காலை - அதிகார வல்லெழுத்துப் பெறாமல் திரியும் இடனுடைய ஆராயுங்காலத்து; அம்மின் மகரஞ் செருவயிற் கெடும் - ஆண்டு அம்முச்சாரியையினது ஈற்றின் மகரஞ் செருவென்னுஞ் சொல்லிடத்துக் கெட்டு முடியும்; வல்லெழுத்து மிகூஉம் - ஆண்டு செருவின்கண் வல்லெழுத்து மிக்கு முடியும்; இயற்கைத் தம் ஒற்று மிகூஉம் - அம்முப் பெறாதவழி இரண்டற்குந் தமக்கு இயற்கையாகிய வல்லொற்றும் மெல்லொற்றும் மிக்கு முடியும் எ-று. எ-டு: எருவென நிறுத்திக், குழி சேறு தாது பூழி எனத் தந்து, அம்முக்கொடுத்து ‘அம்மினிறுதி கசதக்காலை’ (எழுத். 129) என்பதனான், எருவங்குழி சேறு தாது பூழி என முடிக்க. செருவென நிறுத்திக் களம் சேனை தானை பறை எனத் தந்து இடை அம்முக்கொடுத்து மகரங் கெடுத்து வல்லெழுத்துக் கொடுத்துச் செருவக்களம் சேனைதானை பறையென முடிக்க. இனி அம்முப் பெறாதவழி எருக்குழி எருங்குழி என வல்லெழுத்தும் மெல்லெழுத்துங் கொடுத்து முடிக்க. இனிச் செருவிற்கு ஏற்புழிக் கோடல் என்பதனான்செருக்களமென வல்லெழுத்தே கொடுத்து முடிக்க. ‘தெரியுங் காலை’ என்றதனான், எருவின்குறுமை செருவின் கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும், எருவஞாற்சி செருவஞாற்சி என இயல்புகணத்துக்கண் அம்முப் பெறுதலும் கொள்க. மகரம், ‘மென்மையு மிடைமையும்’ (எழுத். 130) என்பதனாற் கெடுக்க. ‘தம்மொற்று மிகூஉம்’ என உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தலின், உகரம் நீடவருதலுங் கொள்க. எ-டு: வரூஉம், தரூஉம், படூஉம் என வரும். (58) ழகர உகர ஈற்றுச்சொல் முடியுமாறு 261. ழகர உகரம் நீடிடன் உடைத்தே உகரம் வருதல் ஆவயி னான. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது; வல்லெழுத்தினோடு உகரம் பெறுதலின். (இ-ள்.) ழகர உகரம் நீடிடன் உடைத்து - உகர ஈற்றுச் சொற்களுள் ழகரத்தொடு கூடிய உகர ஈற்றுச்சொல் நீண்டு முடியும் இடனுடைத்து; ஆவயினான் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வந்து முடியும் எ-று. எ-டு: எழூஉக்கதவு சிறை தானை படை எனவரும். ‘நீடிடனுடைத்து’ என்றதனான், நீளாதும் உகரம் பெறாதும் வருமாயிற்று. எ-டு: குழுத்தோற்றம் என வரும். இன்னும் இதனாற் பழுக்காய் என அல்வழிக்கண்ணும் இவ் விதியின்றி வருதல் கொள்க. ‘ஆவயினான’ என்றதனாற், பெரும்பான்மை செய்யுட்கண் நீண்டு உகரம் பெற்று, ‘எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர் குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்’ (புறம். 97) எனவும், ‘பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி’ (குறுந். 180) எனவும் வருதல் கொள்க. (59) ‘ஒடு’ மரப்பெயர் மெல்லெழுத்து மிகுதல் 262. ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே. இஃது அவ்வீற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. (இ-ள்.) ஒடு மரக் கிளவி - ஒடுவென்னும் மரத்தினை உணர நின்ற சொல், உதிமர இயற்று - உதியென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல் லெழுத்துப் பெற்று முடியும் எ-று. எ-டு: ஒடுங்கோடு செதிள் தோல் பூ என வரும். ‘மரம்’ என்றார், ஒடு வென்னும் நோயை நீக்குதற்கு. முன்னர் உதிமரத்தின் பின்னர் அம்முப் பெறுகின்ற புளிமரம் வைத்த இயைபான், இதற்கும் அம்முப் பேறு கொள்க. எ-டு: ஒடுவங்கோடு எனவரும். (60) சுட்டுமுதல் உகரம் (வேற்றுமைக்கண்) முடியுமாறு 263. சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும் ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை. இது சுட்டுப் பெயர்க்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது. (இ-ள்.) சுட்டு முதல் இறுதி உருபியல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச் சொற்கள் பொருட் புணர்ச்சிக்கண்ணும் உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரங்கெட்டு முடியும், வல்லெழுத்து இயற்கை ஒற்று இடை மிகாஅ-வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா எ-று. எ-டு: அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு, செதிள் தோல் பூ என வரும். ‘ஒற்றிடை மிகா’ எனவே, சாரியை வகுப்ப வல்லெழுத்து வீழா வென்பது பெற்றாம். ‘வல்லெழுத் தியற்கை’ என்றதனான், உகர ஈற்றுள் எருவுஞ்செருவும் ஒழித்து ஏனையவற்றிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை, ஒடுவின்குறை, எழுவின்புறம், கொழுவின் கூர்மை என வரும். இன்னும் இதனானே, ‘உதுக்காண்’ (அகம். 4) என்ற வழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க. (61) ஊகார ஈற்றுப்பெயரது அல்வழிமுடிபு 264. ஊகார இறுதி ஆகார இயற்றே. இது நிறுத்த முறையானே ஊகார ஈறு அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஊகார இறுதி ஆகார இயற்று - ஊகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்குமுடியும் எ-று. எ-டு: கழூஉக்கடிது, கொண்மூக்கடிது சிறிது தீது பெரிது எனவரும். (62) இவ்வீற்று வினையெச்சமும் ஏவலொருமையும் அன்னவாதல் 265. வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை அவ்வகை வரையார். இஃது இவ்வீற்று வினையெச்சத்திற்கு மிக்கு முடியும் என்றலின், எய்தாதது எய்துவித்ததூஉம், முன்னிலை வினைக்கு இயல்பும் உறழ்பும் (151) மாற்றுதலின் எய்தியது விலக்கியதூஉம் நுதலிற்று. (இ-ள்.) வினையெஞ்சு கிளவிக்கும் - ஊகார ஈற்று வினையெச்ச மாகிய சொற்கும், முன்னிலை மொழிக்கும் - முன்னிலை வினைச்சொற்கும், நினையுங்காலை அவ்வகை வரையார் - ஆராயுங் காலத்து அவ்வல் லெழுத்து மிக்கு முடியுங் கூற்றினை நீக்கார் எ-று. எ-டு: உண்ணூக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், கைதூக்கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் வரும். ‘நினையுங்காலை’ என்றதனான், இவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கும் அல்வழிக்கண் வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. ஆடூஉக் குறியன் மகடூஉக் குறியள் என வரும். உயர்திணைப்பெயர் எடுத்தோதியே முடிப்பாராதலின் அம்முடிபு பெறாமையின், ஈற்றுப் பொதுவிதியான் முடியாது இலேசான் முடித்தாம். (63) இவ்வீற்று வேற்றுமைமுடிபு 266. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே. இஃது ஊகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைக் கண்ணும் அதனோரற்று - ஊகார ஈறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஆகார ஈற்று அல்வழி போல வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: கழூஉக் கடுமை சிறுமை தீமை பெருமை, கொண்மூக் குழாம் செலவு தோற்றம் பறைவு என வரும். (64) உகர எழுத்துப்பேறு தோன்றுமிடன் 267. குற்றெழுத் திம்பரும் ஓரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டும் உகரக் கிளவி. இஃது இயைபு வல்லெழுத்தினோடு உகரம் வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) குற்றெழுத்து இம்பரும் - குற்றெழுத்தின் பின் வந்த ஊகார ஈற்று மொழிக்கும், ஓரெழுத்து மொழிக்கும் - ஓரெழுத்தொருமொழியாகிய ஊகார ஈற்று மொழிக்கும், உகரக்கிளவி நிற்றல் வேண்டும் - உகரமாகிய எழுத்து நிற்றலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: உடூஉக்குறை செய்கை தலை புறம் எனவும், தூஉக் குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ‘நிற்றல்’ என்பதனான், உயர்திணைப் பெயர்க்கும் வல்லெழுத்தும் உகரமும் கொடுக்க. ஆடூஉக்கை மகடூஉக்கை செவி தலை புறம் என வரும். இவை தொகைமரபினுள் இயல்பாதல் எய்தியவற்றை (153) ஈண்டு இருவழிக்கண்ணும் முடித்தார்; ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு. (65) ‘பூ’ மேலைவிதி பெறாமை 268. பூஎன் ஒருபெயர் ஆயியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. இஃது ஊகார ஈற்றுள் ஒன்றற்கு உகரமும் இயைபு வல்லெழுத்தும் விலக்கிப், பெரும்பான்மை மெல்லெழுத்துஞ் சிறுபான்மை வல்லெழுத் தும் பெறுமென (எய்தியது விலக்கி)ப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) பூவென் ஒரு பெயர் அ இயல்பு இன்று - பூவென்னும் ஊகார ஈற்றையுடைய ஒரு பெயர் மேற்கூறிய உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அவ்வியல் இன்மையை உடைத்து, ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்விடத்து மெல்லெழுத்து மிக்கு முடிதலே யன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து எ-று. எ-டு: பூங்கொடி சோலை தாமம் பந்து எனவும், பூக்கொடி செய்கை தாமம் பந்து எனவும் வரும். ‘பூ’ வென்பது, பொலிவென்னும் வினைக்குறிப்பை உணர்த்தாது நிற்றற்கு ‘ஒரு பெயர்’ என்றார். (66) ‘ஊ’ எனும் பெயர் னகர ஒற்றுப் பெற்று முடிதல் 269. ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும். இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, உகரமும் வல்லெழுத்தும் விலக்கி னகரம் விதித்தலின். (இ-ள்.) ஊவென் ஒரு பெயர் - ஊவெனத் தசையை உணர்த்தி நின்ற ஓரெழுத்தொருமொழி, ஆவொடு சிவணும் - ஆகார ஈற்றில் ஆவென்னுஞ் சொல் வல்லெழுத்துப் பெறாது னகர ஒற்றுப் பெற்று முடிந்தாற்போல னகர ஒற்றுப் பெற்று முடியும் எ-று. எ-டு: ஊவென நிறுத்தி னகர ஒற்றக் கொடுத்து, ஊன் குறை செய்கை தலை புறம் என முடிக்க. ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு, ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க. (67) அப்பெயர் னகர ஒற்றோடு அக்கும் பெறுதல் 270. அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே தக்கவழி அறிதல் வழக்கத் தான. இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) அக்கென் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத்தான் நின்ற ஊ வென்னும் பெயர் முற்கூறிய னகரத்தோடு அக்கென்னுஞ் சாரியை பெற்று முடிதலும் உரித்து, வழக்கத்தான தக்கவழி அறிதல் - அம்முடிபு வழக்கிடத்துத் தக்க இடம் அறிக எ-று. ‘தக்கவழி அறிதல்’ என்றதனாற், சாரியை பெற்றுழி னகரம் விலக்குண்ணாது நிற்றலும், முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலுங் கொள்க. எ-டு: ஊனக்குறை செய்கை தலைபுறம் என வரும். ‘வழக்கத்தான’ என்றதனான், ஊகார ஈற்றுச் சொல்லிற்கு உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கெடுக்க. எ-டு: கொண்மூவின் குழாம், உடூஉவின்றலை, ஊவின்குறை என வரும். (68) ஆடூஉ மகடூஉப் பெயர்கள் இன் சாரியை பெறலுமாம் எனல் 271. ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் இன்இடை வரினும் மான மில்லை. இது ‘குற்றெழுத்திம்பரும்’ (எழுத். ) என்பதனுள் ‘நிற்றல்’ என்ற இலேசான் எய்திய வல்லெழுத்தேயன்றிச் சாரியையும் வகுத்தலின் எய்தியதன்மேல் சிறப்பு விதி உணர்த்தியது. (இ-ள்.) ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் - ஆடூஉ மகடூஉவாகிய உயர் திணைப்பெயர் இரண்டற்கும், இன்இடை வரினும் மானம் இல்லை - முன்னெய்திய வல்லெழுத்தே யன்றி இன் சாரியை இடையே வரினும் குற்றமில்லை எ-று. எ-டு: ஆடூஉவின்கை, மகடூஉவின்கை, செவி தலை புறம் என வரும். ‘மானமில்லை’ என்றதனான், இன்பெற்றுழி மேல் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. (69) எகரமும் ஒகரமும் ஈறாக வருமிடன் 272. எகர ஒகரம் பெயர்க்கீ றாகா முன்னிலை மொழிய என்மனார் புலவர் தேற்றமும் சிறப்பும் அல்வழி யான. இஃது எகர ஒகரம் ஈறாம் இடம் உணர்த்துகின்றது. (இ-ள்.) தேற்றமும் சிறப்பும் அல்வழி ஆன - தெளிவுப் பொருளுஞ் சிறப்புப் பொருளும் அல்லாத வேற்றுமைப் பொருண்மையிடத்து அளபெடுத்துக் கூறுதலின் உளவாகிய, எகர ஒகரம் பெயர்க்கு ஈறாகா - எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈறாய் வாரா, வினைக்கு ஈறாய் வரும், முன்னிலை மொழிப என்மனார் புலவர் - அவைதாந் தன்மையினும் படர்க்கையினும் வாரா, முன்னிலைச் சொல்லிடத்தனவாமென்று கூறுவர் புலவர் எ-று. எனவே, தெளிவுப் பொருளினுஞ் சிறப்புப் பொருளினும் முறையே வந்து பெயர்க்கு ஈறாம் இடைச்சொல்லாகிய எகர ஒகரம் மூன்றிடத்திற்கும் உரியவாமென்று பொருளாயிற்று. என, இங்ஙனம் அருத்தாபத்தியாற் கொண்டதற்கு இலக்கணம் மேலைச் சூத்திரத்தாற் கூறுப. எ-டு: ஏஎக்கொற்றா, ஓஒக்கொற்றா, சாத்தா தேவா பூதா என வரும். இவை, எனக்கு ஒரு கருமம்பணி எனவும், இங்ஙனஞ் செய்கின்ற தனை ஒழி எனவும் முன்னிலையேவற் பொருளவாய் வந்தன. இதற்கு வல்லெழுத்துப் பெறுமாறு மேலே கூறுப. (70) தேற்ற எகரமும் சிறப்பின் ஒகரமும் வலி மிகப்பெறாமை 273. தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா. இஃது எய்தியது இகந்துபடாமற் காத்து எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) தேற்ற எகரமுஞ் சிறப்பின் ஒவ்வும் மேற்கூறு இயற்கை - முன்னர் அருத்தாபத்தியாற் பெயர்க்கண் வருமென்ற தேற்றப் பொருண்மையின் எகரமுஞ் சிறப்புப்பொருண்மையின் ஒகரமும் மூன்றிடத்தும் வருமென்ற இலக்கணத்தனவாம்; வல்லெழுத்து மிகா - அவை வல்லெழுத்து மிக்கு முடியா; எனவே முன்னிலைக்கண் வருமென்ற எகர ஒகரங்கள் வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: யானேஎகொண்டேன், நீயேஎகொண்டாய், அவனேஎ கொண்டான் எனவும்; யானோஒகொடியேன், நீயோஒ கொடியை, அவனோஒகொடியன் எனவும் பெயர்க்கண் ஈறாய் இயல்பாய் வந்தவாறு காண்க. இது முன்னர் எய்திய இலக்கணம் இகவாமற்காத்தார். முன்நின்ற சூத்திரத்தின் முன்னிலைக்கும் வல்லெழுத்து மிகுத்து எய்தாதது எய்துவித் தார். இச்சூத்திரத்திற்கு அளபெடுத்தல் ‘தெளிவினேயும்’ (சொல். 261) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. எனவே, முடிவு பெற்றுழி இங்ஙனம் இடைச்சொல்லும் எடுத்தோதிப் புணர்ப்ப ரென்பதூஉம் பெற்றாம். (71) ஏகார ஈற்றுப்பெயரது அல்வழிமுடிபு 274. ஏகார இறுதி ஊகார இயற்றே. இது நிறுத்தமுறையானே ஏகார ஈறு அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஏகார இறுதி - ஏகார ஈற்றுப்பெயர் அல்வழிக் கண், ஊகார இயற்று - ஊகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: ஏக்கடிது, சேக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (72) இவ்(வீற்று) இடைச்சொற்கள் இயல்பாய் முடிதல் 275. மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும் கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும். இஃது இடைச்சொற்கள் இயல்பாய்ப் புணர்கவென எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) மாறுகோள் எச்சமும் - மாறுகோடலை யுடைய எச்சப் பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச்சொல்லும், வினாவும் - வினாப் பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச்சொல்லும், எண்ணும் - எண்ணுப் பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்று இடைச் சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத் துப் பெறாது இயல்பாய் முடியும் எ-று. எ-டு: யானேகொண்டேன் சென்றேன் தந்தேன் போயினேன் என்புழி, யான்கொண்டிலேனென மாறுகொண்ட ஒழிவுபட நின்றது. நீயே கொண்டாய் சென்றாய் தந்தாய் போயினாய் எனவும், நிலனே நீரே தீயே வளியே, கொற்றனே சாத்தனே எனவும் வரும். ‘கூறிய’ என்றதனான், பிரிநிலை ஏகாரமும் ஈற்றசை ஏகாரமும் இயல்பாய் முடிதல் கொள்க. அவருள் இவனே கொண்டான் எனவும், ‘கழியே, சிறுகுர னெய்தலொடு பாடோ வாதே; கடலே, பாடெழுந் தொலிக்கும்’ (அகம். 150) எனவும் வரும். (73) இவ்வீற்றுப் பெயரது வேற்றுமை முடிபு 276. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே. இஃது இவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் - ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - ஊகார ஈற்று அல்வழி போல வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: ஏக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், வேக்குடம் சாடி தூதை பானை எனவும் வரும். வேக்குடம் - வேதலையுடைய குடமென விரியும். (74) ஏ என்னும் இறுதி எகரம் பெறுமாறு 277. ஏயென் இறுதிக்கு எகரம் வருமே. இது வல்லெழுத்தினோடு எகரம் விதித்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) ஏயென் இறுதிக்கு எகரம் வரும் - அவ்வேற்றுமைக்கண் ஏயென்னும் இறுதிக்கு எகரம் வரும் எ-று. எ-டு: ஏஎக்கொட்டில் சாலை துளை புழை என வரும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்புகணத்துக்கண்ணும் வருமெனக் கொள்க. எ-டு: ஏஎஞெகிழ்ச்சி நேர்மை என வரும். ‘உரையிற் கோடலான்’ எகரம் ஏற்புழிக் கொள்க. (75) சே எனும் மரப்பெயர் மெலி மிகுதல் 278. சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே. இஃது அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. (இ-ள்.) சே என் மரப்பெயர் - பெற்றமன்றிச் சேவென்னும் மரத்தினை உணரநின்ற பெயர், ஒடுமர இயற்று - ஒடுமரம் போல மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: சேங்கோடு செதிள் தோல் பூ என வரும். (76) அப்பெயர் பெற்றமாயின் இன்சாரியை பெறுதல் 279. பெற்றம் ஆயின் முற்றஇன் வேண்டும். இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தது. (இ-ள்.) பெற்றம் ஆயின் - முற்கூறிய சேவென்பது பெற்றத்தினை உணர்த்திய பொழுதாயின், முற்ற இன் வேண்டும் - முடிய இன் சாரியை பெற்று முடியவேண்டும் எ-று. எ-டு: சேவின்கோடு செவி தலை புறம் என வரும். ‘முற்ற’ என்றதனானே, முற்கூறிய சேவென்னும் மரப்பெயர்க்கும் ஏவென்பதற்கும் உருபிற்கு எய்திய சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்தல் கொள்க. எ-டு: சேவின்கோடு செதிள் தோல் பூ எனவும், ஏவின் கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்தும் இன்பெறுதல் கொள்க. எ-டு: சேவினலம் மணி வால், சேவினிமில், சேவினடை, சேவினாட்டம் என வரும். இன்னும் இதனானே, இயல்புகணத்துக்கண் இன் பெறாது வருதலுங் கொள்க. எ-டு: செய்யுட்கண் ‘தென்றற்கு வீணைக்குச் சேமணிக்குக் கோகிலத்திற்கு, அன்றிற்கு’ என வரும். (77) ஐகார ஈற்றுப் பெயரது வேற்றுமை முடிபு 280. ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. இஃது ஐகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. தொகைமரபினுள் ‘வேற்றுமையல்வழி இஐ யென்னும்’ (எழுத். 158) என்பதன்கண் அல்வழி முடித்தார். (இ-ள்.) ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஐகார ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: யானைக்கோடு செவி தலை புறம் என வரும். ‘வேற்றுமையாயின்’ என்றதனான், உருபுபுணர்ச்சிக்கண்ணும் யானையைக் கொணர்ந்தானென வல்லெழுத்து மிகுதல் கொள்க. (78) சுட்டு முதல் ‘ஐ’ ஈறு வற்றுப்பெற்று முடிதல் 281. சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும். இது வல்லெழுத்தினொடு வற்று வகுத்தலின், எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதல் இறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப்பெயர், உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பு போலப் பொருட்புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியும் எ-று. எ-டு: அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு, உவையற்றுக் கோடு செவி தலை புறம் என வரும். இதனை ‘வஃகான் மெய்கெட’ (எழுத். 122) என்பதனான் முடிக்க.(79) விசை, ஞெமை, நமை - இம்மரப்பெயர்கள் மெலி மிகுதல் 282. விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் ஆமுப் பெயரும் சேமர இயல. இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) விசைமரக் கிளவியும் - விசைத்தற்றொழிலன்றி விசை யென்னும் மரத்தை உணரநின்ற சொல்லும், ஞெமையும் - ஞெமை யென்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும், நமையும் - நமை என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லும் ஆமுப் பெயரும் - ஆகிய அம்மூன்று பெயரும், சேமர இயல - வல்லெழுத்து மிகாது சேமரம் போல மெல் லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: விசைங்கோடு, ஞெமைங்கோடு, நமைங்கோடு, செதிள் தோல் பூ என வரும். இவை, ‘கசதப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து’ (எழுத். 143) என்று உணர்க. (80) பனை, அரை, ஆவிரை - இப்பெயர்கள் முடியுமாறு 283. பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் நினையுங் காலை அம்மொடு சிவணும் ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே மெய்அவண் ஒழிய என்மனார் புலவர். இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தது. (இ-ள்.) பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் - பனையென்னும் பெயரும் அரையென்னும் பெயரும் ஆவிரையென்னும் பெயரும், நினையுங்காலை அம்மொடு சிவணும் - ஆராயுங் காலத்து வல்லெழுத்து மிகாது அம்முச் சாரியையொடு பொருந்தி முடியும்; ஐயென் இறுதி அரை வரைந்து கெடும் - அவ்விடத்து ஐ யென்னும் ஈறு அரையென்னுஞ் சொல்லை நீக்கி ஏனை இரண்டற்குங்கெடும்; மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் - தன்னான் ஊரப்பட்ட மெய்கெடாது அச்சொல் லிடத்தே நிற்க என்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: பனை ஆவிரை என நிறுத்தி, அம்மு வருவித்து ஐகாரங் கெடுத்து ஒற்றின்மேலே அம்மின் அகரமேற்றிப், பனங்காய் ஆவிரங்கோடு செதிள் தோல் பூ எனவரும். அரையென நிறுத்தி அம்முக் கொடுத்து ஐகாரங் கெடாது, அரையங் கோடு செதிள் தோல் பூ என முடிக்க. வல்லெழுத்துக் கேடு மேலே ‘கடிநிலையின்று’ (எழுத். 285) என்றத னாற் கூறுதும். ‘நினையுங்காலை’ யென்றதனான், தூதுணை வழுதுணை தில்லை ஓலை தாழை என நிறுத்தி, அம்முக்கொடுத்து ஐகாரங்கெடுத்துத் தூதுணங்காய் வழுதுணங்காய் தில்லங்காய் ஓலம்போழ் தாழங்காய் என முடிக்க. (81) பனையின் முன்னர் ‘அட்டு’ப் புணருமாறு 284. பனையின் முன்னர் அட்டுவரு காலை நிலையின் றாகும் ஐயென் உயிரே ஆகாரம் வருதல் ஆவயி னான. இது நிலைமொழிச் செய்கை நோக்கி எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) பனையின் முன்னர் அட்டுவரு காலை - முற்கூறிய வாறன்றிப் பனையென்னும் சொன்முன்னர் அட்டென்னுஞ் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையின்று ஆகும் ஐயென் உயிர் - நிற்றலில்லையாகும் ஐயென்னும் உயிர்; ஆவயினான் ஆகாரம் வருதல் - அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம்மேலேறி முடிக எ-று. எ-டு: பனாஅட்டு என வரும். இதற்கு மூன்றாவதும் ஆறாவதும் விரியும். ‘ஆவயினான’ என்றதனான், ஓராநயம் விச்சாவாதி என்னும் வேற்றுமை முடிபும், கேட்டாமூலம் பாறாங்கல் என்னும் அல்வழி முடிபுங் கொள்க. இவற்றுள் வடமொழிகளை மறுத்தலும் ஒன்று. (82) ‘கொடி’ வந்து புணருமாறு 285. கொடிமுன் வரினே ஐயவண் நிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. இதுமேல் ஐகாரங் கெடுத்து அம்முப்பெறுக என்றார்; ஈண்டு அது கெடாது நிற்க வல்லெழுத்துப் பெறுக என்றலின் எய்தியது இகந்து படாமற் காத்தது. அம்மு விலக்கி வல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்ததுமாம். (இ-ள்.) பனைமுன் கொடி வரின் - பனையென்னுஞ் சொன் முன்னர்க் கொடியென்னுஞ் சொல் வரின், ஐ அவண் நிற்ப - கேடு ஓதிய ஐகாரம் ஆண்டுக் கெடாது நிற்ப, வல்லெழுத்து மிகுதி கடிநிலையின்று - வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு நிலைமையின்று எ-று. எ-டு: பனைக்கொடி என வரும். இதற்கு இரண்டாவதும் மூன்றாவதும் விரியும். ‘கடிநிலையின்று’ என்றதனான், ஐகார ஈற்றுப்பெயர்களெல்லாம் எடுத்தோத்தானும் இலேசானும் அம்முச்சாரியையும் பிறசாரியையும் பெற்றுழி அதிகார வல்லெழுத்துக் கெடுத்துக் கொள்க. இன்னும் இதனானே, உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. பனையின் குறை அரையின் கோடு ஆவிரையின் கோடு விசையின் கோடு ஞெமையின் கோடு நமையின் கோடு எனவும், தூதுணையின் காய் வழுதுணையின் காய் உழையின் கோடு வழையின் கோடு எனவும் வரும். பனைதிரள், பனைத்திரள், என்னும் உறழ்ச்சிமுடிபு தொகை மரபினுட் புறனடையாற் கொள்க; அல்வழியு மாதலின். அன்றி, ஈண்டு ‘அவண்’ என்றதனாற் கொள்வாரும் உளர். (83) இவ்வீற்றுத் திங்கட்பெயரும் நாட்பெயரும் முடியுமாறு 286. திங்களும் நாளும் முந்துகிளந் தன்ன. இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்குச் சாரியையும், வல்லெழுத்து விலக்கி ஆன் சாரியையும் வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்புவிதியும், எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது. (இ-ள்.) திங்களும் நாளும் - ஐகார ஈற்றுத் திங்களை உணர நின்ற பெயரும் நாளை உணரநின்ற பெயரும், முந்து கிளந்தன்ன - இகர ஈற்றுத் திங்களும் நாளும்போல இக்கும் ஆனும் பெற்று முடியும் எ-று. எ-டு: சித்திரைக்குக் கொண்டான், கேட்டையாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். சித்திரை நாளாயின் ஆன் சாரியை கொடுக்க. வல்லெழுத்துக்கேடு முன்னர்க் ‘கடிநிலையின்று’ (எழுத். 285) என்றதனாற் கொள்க. திங்கள் முற்கூறிய முறையன்றிக் கூற்றினான், உழைங்கோடு அமைங்கோடு உடைங்கோடு என மெல்லெழுத்துக் கொடுத்தும், கலைங் கோடு கலைக்கோடு என உறழ்ச்சி எய்துவித்தும், கரியவற்றுக்கோடு குறியவற்றுக்கோடு நெடியவற்றுக்கோடு என ஐகார ஈற்றுப் பண்புகொள் பெயர்க்கு வற்றுக்கொடுத்து ஐகாரங் கெடுத்து வற்றுமிசை யொற்றென்று ஒற்றுக் கெடுத்தும், அவையத்துக் கொண்டான் அவையிற் கொண்டான் என அத்தும் இன்னும் கொடுத்தும், பனையின்மாண்பு கேட்டையி னாட்டினானென இயல்புகணத்துக்கண் இன் சாரியை கொடுத்தும் முடிக்க. ஐகார ஈறு இன்சாரியை பெறுதல் தொகை மரபினுட் கூறாமையின் ஈண்டுக் கொண்டாம். (84) ‘மழை’ அத்தும் இன்னும் பெற்றுமுடிதல் 287. மழையென் கிளவி வளியியல் நிலையும். இது வல்லெழுத்தினோடு அத்து வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதியும், இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது. (இ-ள்.) மழையென் கிளவி - மழையென்னும் ஐகார ஈற்றுச் சொல், வளியியல் நிலையும் - வளியென்னுஞ் சொல் அத்தும் இன்னும் பெற்று முடிந்த இயல்பின்கண்ணே நின்று முடியும் எ-று. எ-டு: மழையத்துக்கொண்டான், மழையிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். ஈண்டு இன்பெற்றுழி வல்லெழுத்துக்கேடு ‘கடிநிலையின்று’ (எழுத். 285) என்றதனாற் கொள்க. சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக்கண்ணுங் கொள்க. மழையத்து ஞான்றான், மழையின் ஞான்றான் நிறுத்தினான் மாட்டினான் வந்தான் அடைந்தான் என ஒட்டுக. (85) ‘வேட்கை’ முன்னர் ‘அவா’ப் புணரும் செய்யுள்முடிபு 288. செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் இறுதி அவாமுன் வரினே மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் டகாரம் ணகார மாதல் வேண்டும். இது வேற்றுமைக்கண் செய்யுண் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் இறுதி - செய்யுளிடத்து வேட்கையென்னும் ஐகார ஈற்றுச் சொல், அவா முன்வரின் - அவா வென்னுஞ் சொற்கு முன்னர் வரின், மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் - அவ்வைகாரம் தான் ஊர்ந்த மெய்யொடுங்கூடக் கெடுமென்று கூறுவர் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற டகார ஒற்று ணகார ஒற்றாய்த் திரிதல் வேண்டும் எ-று. எ-டு: ‘வேணவா நலிய வெய்ய வுயிரா’ (நற். 61) என வரும். வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது, அப்பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை, எனவே, வேட்கையா லுண்டாகிய அவாவென மூன்றனுருபு விரிந்தது. இதனை வேட்கையும் அவாவுமென அல்வழி யென்பாரும் உளர். இங்ஙனங் கூறுவார் பாறங்கல் என்பதனை அம்முக் கொடுத்து ஈண்டு முடிப்பர். (86) ஓகார ஈற்றுப் பெயரது அல்வழி முடிபு 289. ஓகார இறுதி ஏகார இயற்றே. இஃது ஓகார ஈற்று அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஓகார இறுதி ஏகார இயற்று - ஓகார ஈற்றுப் பெயர்ச்சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: ஓக்கடிது, சோக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (87) இவ்வீற்று இடைச்சொல் இயல்பாய் முடிதல் 290. மாறுகோள் எச்சமும் வினாவும் ஐயமும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது இடைச்சொல் முடிபு கூறலின், எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) மாறுகோள் எச்சமும் - மாறுகோடலை உடைய எச்சப் பொருண்மையை ஒழிபாகவுடைய ஓகாரமும், வினாவும் - வினாப் பொருண்மையையுடைய ஓகாரமும், ஐயமும் - ஐயப் பொருண்மையை யுடைய ஓகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் எ-று. எ-டு: யானோ கொண்டேன் எனவும், நீயோ கொண்டாய் எனவும், பத்தோபதினொன்றோ, புற்றோபுதலோ எனவும் வரும். ‘கூறிய’ என்றதனான், ‘யானோ தேறே னவர்பொய் வழங்கலரே’ (குறுந். 21) எனப் பிரிநிலையும், நன்றோ தீதோ கண்டது எனத் தெரிநிலை யும், ஓஒகொண்டான் எனச் சிறப்பும், ‘குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ’ (புறம். 387) என எண்ணுநிலையும் வல் லெழுத்து மிகாது இயல்பாய் முடிதல் கொள்க. இதனானே ஈற்றசை வருமேனும் உணர்க. (88) 291. ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே. இதுவும் அது. (இ-ள்.) ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்று - ஒழியிசை ஓகாரத்தினது நிலையும் முற்கூறிய ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய் முடியும் எ-று. எ-டு: கொளலோ கொண்டான், செலலோ சென்றான், தரலோ தந்தான், போதலோ போயினான் என ஓசை வேற்றுமையான் ஒருசொல் தோன்றப் பொருள் தந்து நிற்கும். (89) ஓகார ஈற்று வேற்றுமை முடிபு 292. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே ஒகரம் வருதல் ஆவயி னான. இஃது ஓகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று - ஓகார ஈறு வேற்றுமைக்கண்ணும் அவ்வேகார ஈற்று அல்வழியோடு ஒத்து வல்லெழுத்து மிக்கு முடியும்; ஆவயினான் ஒகரம் வருதல் - அவ்விடத்து ஒகரம் வருக எ-று. எ-டு: ஓஒக்கடுமை, கோஒக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (90) ‘கோ’ ‘இல்’லொடு புணரும்வழி இயல்பாதல் 293. இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும். இஃது எய்தியது விலக்கிற்று; என்னை? முன்னர் வன்கணம் வந்துழி ஒகரம் பெறுக என வரைந்து கூறாதும், நிலைமொழித் தொழில் வரையாதுங் கூறலின் நான்கு கணத்துக்கண்ணுஞ் சேறலின். (இ-ள்.) இல்லொடு கிளப்பின் இயற்கையாகும் - ஓகார ஈற்றுக் கோவென்னும் மொழியினை இல்லென்னும் வருமொழியொடு சொல்லின் ஒகரம் மிகாது இயல்பாய் முடியும் எ-று. எ-டு: கோவில் என வரும். கோவென்றது உயர்திணைப் பெயரன்றோ வெனின், கோவந்த தென்று அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற்பட்டதென்க. (91) இவ்வீற்றுப்பெயர் ஒன்சாரியை பெற்றும் முடிதல் 294. உருபியல் நிலையும் மொழியுமா ருளவே ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இது வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) உருபியல் நிலையும் மொழியுமாருள - ஓகார ஈற்றுச் சில பொருட்புணர்ச்சிக்கண் உருபு புணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன் சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள, ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் எ-று. எ-டு: கோஒன்கை செவி தலை புறம் என வரும். சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்தை விலக்காமை இதனானும் பெற்றாம். (92) ஔகார ஈறு இருவழியும் முடியுமாறு 295. ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே அவ்விரு வீற்றும் உகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசி னோரே. இஃது ஔகார ஈறு இருவழியும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஔகாரம் இறுதியாகிய பெயர்ச்சொன்முன்னர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின், அல்வழியானும் வேற்றுமைக் கண்ணும் - அல் வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்று - வல்லெழுத்து மிக்குமுடிதல் நீக்கு நிலைமையின்று, அவ்விரு வீற்றும் உகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசினோர் - அவ்விரு கூற்று முடிபின்கண்ணும் நிலைமொழிக்கண் உகரம் வந்து முடிதல் செவ்வி தென்று சொல்லுவர் சிறந்தோர் எ-று. எ-டு: கௌவுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். ‘செவ்விது’ என்றதனான், மென்கணத்தும் இடைக்கணத்தும் உகரம் பெறுதல் கொள்க. கௌவுஞெமிர்ந்தது ஞெமிர்ச்சி எனவும், வௌவுவலிது வலிமை எனவும் வரும். ‘நிலை’ யென்றதனாற், கௌவின் கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. இன்னும் இதனானே, ஐகாரமும் இகரமும் வேற்றுமைக்கண் உருபு தொகையாயுழி இயல்பாதலுங் கொள்க. (93) உயிர் மயங்கியல் முற்றிற்று. 8 புள்ளிமயங்கியல் ஞகார ஈறு இருவழியும் வன்கணத்தொடு புணர்தல் 296. ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே உகரம் வருதல் ஆவயி னான என்பது சூத்திரம். நிறுத்த முறையானே உயிரீறு புணர்த்துப் புள்ளியீறு வன்கணத் தொடுஞ் சிறுபான்மை ஏனைக் கணத்தொடும் புணருமாறு கூறலின் இவ்வோத்துப் ‘புள்ளிமயங்கியல்’ என்னும் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம் ஞகார ஈறு வன்கணத்தோடு இருவழியும் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம் ஈற்றின்கண் ஒன்றாக நின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமையைச் சொல்லுமிடத்தும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்துமிகும்-வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின் அவ்வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயினான் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக எ-று. எ-டு: உரிஞுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், உரிஞுக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (1) ஞ ந ம வ வருவழியும் இவ்வீறு உகரம் பெறுதல் 297. ஞநமவ இயையினும் உகரம் நிலையும். இஃது அவ்வீறு மென்கணத்தொடும் இடைக்கணத்து வகரத் தொடும் முடியுமென எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) ஞநமவ இயையினும் உகரம் நிலையும் - அஞ்ஞகர ஈறு வன்கணமன்றி ஞநமவ முதன்மொழி வருமொழியாய் வரினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும். எ-று. எ-டு: உரிஞுஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். யகரத்தோடும் உயிரொடும் புணருமாறு தொகைமரபினுள் ‘உகர மொடு புணரும்’ (எழுத். 163) என்பதனாற் கூறினார். (2) நகார ஈறும் உகரம் பெற்று முடிதல் 298. நகர இறுதியும் அதனோ ரற்றே. இது நகர ஈறு முற்கூறிய கணங்களோடு அல்வழிக்கண் முடியுமாறு கூறி எய்தாதது எய்துவிக்கின்றது. (இ-ள்.) நகர இறுதியும் - நகர ஈற்றுப்பெயரும் முற்கூறிய கணங்க ளொடு புணரும்வழி, அதனோரற்று - அஞ்ஞகர ஈற்றுத் தொழிற் பெயர் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வெழுத்து மிக்கு உகரம் பெற்றும் ஞநமவ வந்துழி உகரம் பெற்றும் முடியும் எ-று. எ-டு: பொருநுக்கடிது வெரிநுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். முடிபு ஒப்புமை நோக்கி நகரஈறு ஈண்டுப் புணர்த்தார். ஈண்டு வேற்றுமை யொழித்து மாட்டேறு சென்றதென்று உணர்க. (3) இவ்வீறு வேற்றுமைக்கண் அகரம் பெற்றுமுடிதல் 299. வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும். இது நிலைமொழி உகரம் விலக்கி அகரம் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) வேற்றுமைக்கு - அந்நகர ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கு, உக்கெட அகரம் நிலையும் - மேலெய்திய உகரங் கெட அகரத்தொடு நிலைபெற்றுப் புணரும் எ-று. எ-டு: பொருநக்கடுமை வெரிநக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை என வரும். ‘அகரநிலையும்’ என்னாது ‘உகரங்கெட’ என்றதனான் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்வுஞ் சிறுபான்மை உகரப்பேறுங் கொள்க. எ-டு: வெரிநின்குறை பொருநின்குறை உரிஞின்குறை எனவும், ‘உயவல் யானை வெரிநுச் சென்றன்ன’ (அகம். 168) எனவும் வரும். யானையினது முதுகின்மேற் சென்றன்ன என விரிக்க. பொருந் என்பது ஒரு சாதிப்பெயரும், பொருநுதல் என்னும் வினைப்பெயருமாம். (4) ‘வெரிந்’ நகரம் கெட்டு மெலிமிக்கு முடிதல் 300. வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை. இஃது அந்நகர ஈற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) வெரிந் என் இறுதி - வெரிந் என்று சொல்லப்படும் நகர ஈற்றுமொழி, முழுதுங் கெடுவழி - தன்ஈற்று நகரம் முன்பெற்ற உகரத்தோடு எஞ்சாமைக் கெட்ட இடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்து முடியும் இடனுடைத்து எ-று. எ-டு: வெரிங்குறை செய்கை தலை புறம் என வரும். மெல்லெழுத்து வருமொழி நோக்கி வந்தது. ‘வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை’ (அகம். 37) என்பதில் நகர இகரமே இட்டெழுதுப. (5) அச்சொல் வலிமிக்கு முடிதலும் உடைமை 301. ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. இஃது அதற்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) ஆவயின் - அவ்வெரிந் என்னுஞ் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்ற இடத்து, வல்லெழுத்து மிகுதலும் உரித்து - மெல் லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து எ-று. எ-டு: வெரிக்குறை செய்கை தலை புறம் என வரும். (6) ணகார ஈற்றுப் பெயரது வேற்றுமை முடிபு 302. ணகார இறுதி வல்லெழுத் தியைபின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. இது நிறுத்த முறையானே ணகார ஈறு வேற்றுமைப் பொருட்கண் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ணகார இறுதி - ணகார ஈற்றுப்பெயர், வல்லெழுத்து இயையின் - வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், டகாரமாகும் வேற்றுமைப் பொருட்கு - டகாரமாகத் திரிந்து முடியும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் எ-று. எ-டு: மட்குடம் சாடி தூதை பானை என வரும். மண்கை புண்கை என்பன இரண்டாவதன் திரிபின் முடிந்தன. கவண்கால் பரண்கால் என்பன மேல் முடித்தும். (7) ‘ஆண்’, ‘பெண்’ இயல்பாய் முடியுமாறு 303. ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. இஃது இவ்வீற்று விரவுப்பெயருள் சிலவற்றிற்கு, எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) ஆணும் பெண்ணும் - ஆணென்னும் விரவுப்பெயரும் பெண்ணென்னும் விரவுப்பெயரும், அஃறிணை இயற்கை - தொகை மரபினுள் ‘மொழி முதலாகும்’ (எழுத். 147) என்பதன்கண் அஃறிணைப் பெயர் முடிந்த இயல்புபோலத் தாமும் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும் எ-று. எ-டு: ஆண்கை பெண்கை செவி தலை புறம் என வரும். இது தொகைமரபினுள் ‘அஃறிணை விரவுப்பெயர்’ (எழுத். 155) என்பதனுள் முடிந்த இயல்பன்றோவெனின், இவை ஆண்டு முடிந்தன போலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப் படுவன அன்றி இரு திணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின், அஃறிணைப் பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தாரென்க. ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழி முடிபு ‘மொழி முதலாகும்’ (எழுத். 147) என்பதன்கண் வருமொழி முற்கூறிய வதனான் முடிக்க. (8) ‘ஆண்’ மரப்பெயர் அம்முச்சாரியை பெறுதல் 304. ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. இது திரிபு விலக்கிச் சாரியை வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) ஆண்மரக் கிளவி - ஆண்பாலை உணர்த்தாது ஆணென்னும் மரத்தினை உணரநின்ற சொல், அரை மர இயற்று - அரையென்னும் மரம் அம்முப்பெற்ற இயல்பிற்றாய்த் தானும் அம்முப் பெற்று முடியும் எ-று. எ-டு: ஆணங்கோடு செதிள் தோல் பூ என வரும். ‘ஒன்றென முடித்தலான்’ இயல்புகணத்துங் கொள்க. ஆண நார் இலை என வரும். விரவுப்பெயரன்றென்றற்கு ‘மரம்’ என்றார். (9) ‘விண்’ எனும் பூதக்கிளவியது செய்யுள் முடிபு 305. விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் உண்மையும் உரித்தே அத்தென் சாரியை செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை. இது செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தது. (இ-ள்.) விண் என வரூஉங் காயப் பெயர்வயின் - விண்ணென்று சொல்லவருகிற ஆகாயத்தை உணர நின்ற பெயர்க்கண், அத்து என் சாரியை உண்மையும் உரித்து - அத்தென்னுஞ் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து; செய்யுள் மருங்கின் தொழில் வருகாலை - செய்யுளிடத்துத் தொழிற்சொல் வருங்காலத்து எ-று. எ-டு: ‘விண்ணத்துக் கொட்கும் வண்ணத் தமரர்’ ‘விண்ணத்துக் கொட்கும் விரைசெல லூர்தியோய்’ எனவும், ‘விண்குத்து நீள் வரை வெற்ப களைபவோ’ (நாலடி. 226) எனவும் வரும். விண்ணென்னும் குறிப்பினை நீக்குதற்குக் ‘காயம்’ என்றார். விண்வத்துக் கொட்கும் என உடம்படுமெய் புணர்ந்து நிற்றலுங் கொள்க. அதிகார வல்லெழுத்தின்மையிற் சாரியை வல்லெழுத்துக் கொடுக்க. (10) இவ்வீற்றுத் தொழிற்பெயர் உகரம் பெற்று முடிதல் 306. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் விதிக்கின்றது. (இ-ள்.) தொழிற்பெயர் எல்லாம் தொழிற் பெயர் இயல - ணகார ஈற்று முதனிலைத் தொழிற்பெய ரெல்லாம் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகார ஈற்றுத் தொழிற் பெயரது இயல்பினவாய் வன்கணம் வந்துழி வல்லெழுத்தும் உகரமும் பெற்றும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும் எ-று. எ-டு: மண்ணுக்கடிது பண்ணுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மண்ணுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். ‘எல்லாம்’ என்றதனால் தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இன்சாரியை பெற்றும் புணர்வன கொள்க. எ-டு: வெண்ணுக்கரை, ‘தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து’ (மதுரைக். 560) எண்ணுப்பாறு, வெண்ணின்கரை என வரும். (11) இவ்வீற்றுக் கிளைப்பெயர் இயல்பாய் முடிதல் 307. கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே. இஃது இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. (இ-ள்.) கிளைப் பெயரெல்லாம் - ணகார ஈற்றுள் ஓரினத்தை உணரநின்ற பெயரெல்லாம், கொளத் திரிபு இல - திரிபுடைய வென்று கருதும்படியாகத் திரிதலிலவாய் இயல்பாய் முடியும் எ-று. எ-டு: உமண் என நிறுத்திக் குடி சேரி தோட்டம் பாடி எனத் தந்து முடிக்க. இனி, ‘எல்லாம்’ என்றதனான், பிற சாரியை பெற்று முடிவனவும், இயல்பாய் முடிவனவும் கொள்க. மண்ணப்பத்தம் எண்ணநோலை எனவும், கவண்கால் பரண்கால் எனவுங் கொள்க. ‘கொள’ என்றதனான், ஏழாம் வேற்றுமை இடப் பொருண்மை உணர நின்ற இடைச்சொற்கள் திரிந்து முடிவனவும் கொள்க. அங்கட் கொண்டான் இங்கட்கொண்டான் உங்கட்கொண்டான் எங்கட்கொண்டான் எனவும், ஆங்கட்கொண்டான் ஈங்கட்கொண்டான் ஊங்கட்கொண்டான் யாங்கட் கொண்டான் எனவும், அவட்கொண்டான் இவட்கொண்டான் உவட்கொண்டான் எவட்கொண்டான் எனவும் ஒட்டுக. (12) ‘எண்’ எனும் உணவுப்பெயரது அல்வழிமுடிபு 308. வேற்றுமை யல்வழி எண்ணென் உணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. இஃது அவ்வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபு போலத் திரிந்து முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமை அல்வழி - வேற்றுமையல்லாத இடத்து, எண்ணென் உணவுப்பெயர் - வரையறைப் பொருண்மை உணர்த்தாது எண்ணென்று சொல்லப்படும் உணவினை உணர்த்தும் பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து - வேற்றுமையது திரிந்து முடியும் இயல்பின் நிற்றலும் உரித்து எ-று. எ-டு: எட்கடிது சிறிது தீது பெரிது என வரும். உம்மையான், தொகைமரபினுள் ‘மொழிமுதலாகும்’ (எழுத். 147) என்றதனாற் கூறிய இயல்பு பெரும்பான்மையாயிற்று. அஃது எண்கடிது என வரும். (13) ‘முரண்’ எனும் தொழிற்பெயர் இயல்பாய் முடிதல் 309. முரணென் தொழிற்பெயர் முதலியல் நிலையும். இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற் பெயர்க்கு எய்திய உகரமும் வல்லெழுத்தும் விலக்கி இவ்வீற்று அல்வழி முடிபும் வேற்றுமைமுடிபும் எய்துவித்தது. (இ-ள்.) முரண் என் தொழிற்பெயர் - மாறுபாடு உணர்த்தும் முரணென்னுந் தொழிற்பெயர், முதலியல் நிலையும் - தொகை மரபிற் கூறிய அல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண்ணும் (147) ஈண்டு வேற்றுமைக்கண் திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்று முடியும் எ-று. எ-டு: முரண்கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது வலிது எனவும், முரட்கடுமை சேனை தானை பறை எனவும், முரண்ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். இதனைத் ‘தொழிற்பெயரெல்லாம்’ (எழுத். 306) என்றதன் பின் வையாத முறையன்றிக் கூற்றினான், முரண்கடுமை முரட்கடுமை, அரண்கடுமை அரட்கடுமை என்னும் உறழ்ச்சியுங் கொள்க. (14) மகர ஈற்றுப்பெயரது வேற்றுமைமுடிபு 310. மகர இறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. இது முறையானே மகர ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) மகர இறுதி வேற்றுமை ஆயின் - மகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணாயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் - அந்நிலைமொழி மகரம் முற்றக் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: மரக்கோடு செதிள் தோல் பூ என வரும். ‘முண்டகக்கோதை’ எனவும் வரும். ‘துவர’ என்றதனான், இயல்புகணத்துக்கண்ணும் உயர்திணைப் பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்க. மரஞாண் மரநூல் இவற்றிற்கு நான்கனுருபு விரிக்க. மரமணி யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக. நங்கை எங்கை செவி தலை புறம் எனவும், தங்கை செவி தலை புறம் எனவும் வரும். ஈண்டு மகரக்கேடே கொள்க; முடிபு மேற்கூறுப (எழுத். 320). (15) இவ்வீற்றயல் அகரம் நீடலும் நீடாமையும் உளவாம் இடன் 311. அகரம் ஆகாரம் வரூஉங் காலை ஈற்றுமிசை அகரம் நீடலு முரித்தே. இஃது அவ்வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுகின்றது. (இ-ள்.) அகர ஆகாரம் வரூஉம் காலை - அகர முதன்மொழியும் ஆகார முதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஈற்று மிசை அகரம் நீடலும் உரித்து - மகர ஒற்றின் மேல் நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து நீடாமையும் உரித்து எ-று. எ-டு: மரம் குளம் என நிறுத்தி, மகரங்கெடுத்து, அடி ஆம்பல் எனத் தந்து, ரகர ளகரங்களின் நின்ற அகரம் ஆகாரமாக்கி, மராஅடி குளாஅம்பல் என முடிக்க. மேற் ‘செல்வழி யறிதல் வழக்கத் தான’ (எழுத். 312) என்பதனாற், குளாஅம்பல் என்புழி ஆம்பல் என்பதன் ஆகாரத்தை அகரமாக்குக. உம்மையான், மரவடி குளவாம்பல் என நீடாமையுங் கொள்க. வருமொழி முற்கூறியவதனான், இவ்வீற்றுப் பிறவும் வேறுபட முடிவன கொள்க. எ-டு: கோணாகோணம் கோணாவட்டம் என வரும். இவற்றிற்கு உள்ளென்னும் உருபு விரிக்க. கோணாகோணத்திற்கு வல்லெழுத்துக்கேடு மேலைச் சூத்திரத்து இலேசாற் கொள்க. (16) இவ்வீறு கெட்டு மெல்லெழுத்து உறழ்ந்துவரலுமாம் எனல் 312. மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே செல்வழி அறிதல் வழக்கத் தான. இது மகரங்கெட்டு வல்லெழுத்து மிகுதலொடு மெல்லெழுத்தும் உறழ்க என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) மெல்லெழுத்து உறழும் மொழியுமாருள - மகர ஈற்றுள் வல்லெழுத்தினொடு மெல்லெழுத்துப் பெற்று உறழ்ந்து முடியும் மொழி களும் உள, வழக்கத்து ஆன செல்வழி அறிதல் - வழக்கத்தின் கண் வழங்கும் இடம் அறிக எ-று. எ-டு: குளங்கரை குளக்கரை சேறு தாது பூழி என வரும். இவற்றுட் குளங்கரை குளக்கரைபோல அல்லன ஒத்த உறழ்ச்சியாய் வழங்கா வென்றற்குச் ‘செல்வழியறிதல்’ என்றார். ‘வழக்கத்தான’ என்றதனான், குளத்துக்கொண்டான் ஈழத்துச்சென்றான் குடத்துவாய் பிலத்துவாய் என்றாற்போல்வன, மகரங் கெட்டு அத்துப்பெற்றன. (இவை ‘அத்தே வற்றே’ (எழுத். 133) என்பதனான் ஒற்றுக் கெடாவாயின, அஃது அல்வழிக்குக் கூறுதலின்.) மழகளிறு என்பது ‘மழவுங் குழவு மிளமைப் பொருள’ (சொல். 312) என்ற உரிச்சொல். அது மகர ஈறன்று. சண்பகங்கோடு என்பது வழக்கிடத்துச் செல்லாது. இன்னும் இதனானே, மகரங்கெடாது நிற்பனவுங் கொள்க. ‘புலம்புக் கனனே’ (புறம். 258) ‘கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ’ (மலைபடு. 50) என வரும். (17) இல்லம் எனும் மரப்பெயர் மெலி மிகல் 313. இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே. இஃது இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. (இ-ள்.) இல்ல மரப்பெயர் - புக்கு உறையும் இல்லன்றி இல்ல மென்னும் மரத்தினை உணரநின்ற சொல், விசை மர இயற்று - விசை யென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: இல்லங்கோடு செதிள் தோல் பூ என வரும். மேலைச் சூத்திரத்து ‘வழக்கத்தான’ (எழுத். 312) என்றதனான், மகரக்கேடு கொள்க. (18) இவ்வீற்றுப்பெயரது அல்வழி முடிபு 314. அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும். இது மகரம் அல்வழிக்கண் திரிக என முற்கூறாமையின் எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் - மகர ஈறு அல்வழிக்க ணெல்லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும் எ-று. எ-டு: மரங்குறிது சிறிது தீது பெரிது என வரும். மரம் பெரிது என்புழித் திரிபின்றென்பது ‘ஆணைகூற’லென்னும் உத்தி. இனி ‘எல்லாம் என்றதனான், அல்வழிக்கண் மகர ஈறு பிறவாற்றான் முடிவனவெல்லாம் முடிக்க. வட்டத்தடுக்கு, சதுரப் பலகை, ஆய்தப் புள்ளி, வேழக்கரும்பு, கலக்கொள், சுக்கு, தோரை, பயறு; நீலக்கண் என்னும் பண்புத் தொகைக்கண் மகரங் கெட்டு வல்லெழுத்து மிக்கு முடிந்தன. ஆயுத வுலக்கை, ‘அகர முதல’ (குறள். 1): இவை இயல்புகணத்துக்கண் மகரங் கெட்டு முடிந்தன. எல்லாருங் குறியர் நாங்குறியேம்: இவை உயர்திணைப் பெயர் மகரந் திரிந்து மெல்லெழுத்தாய் முடிந்தன. கொல்லுங் கொற்றன், உண்ணுஞ் சாத்தன், ‘கவள மாந்து மலைகெழு நாடன்’, பொரு மாரன், தாவுபரி, பறக்குநாரை, ஓடுநாகம், ஆடுபோர், வருகாலம், கொல்லும் யானை, பாடும்பாணன் என இவை மகரந் திரிந்தும் கெட்டும் நிலை பெற்றும் வந்த பெயரெச்சம். இன்னும் இதனானே, இயல்புகணத்துக்கண்ணும் மகரங் கெடுதலுங் கெடாமையுங் கொள்க. மரஞான்றது நீண்டது மாண்டது எனவும், மரம்யாது வலிது அடைந்தது எனவும் வரும். இன்னும் இதனானே, ‘பவளவாயென’ (சீவக. 141) உவமத்தும், நிலநீரென எண்ணிடத்தும் கேடு கொள்க. (19) ‘அகம்’ முன்னர்க் ‘கை’ முடியுமாறு 315. அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாவ யினான. இது மகர ஈற்று அல்வழிக்கண் இம்மொழி இம்முடிபு எய்துக என்றலின், எய்தாததெய்துவித்தது. (இ-ள்.) அகம் என் கிளவிக்குக் கை முன்வரின் - அகமென்னுஞ் சொல்லிற்குக் கையென்னுஞ் சொல்முன்னே வருமாயின், முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன்னின்ற அகரங் கெடாது நிற்ப அதன் முன் நின்ற ககரமும் மகரவொற்றுங் கெட்டு முடிதலும் கெடாது நின்று முடிதலும், வரை நிலை இன்றே யாசிரியர்க்க - நீக்கு நிலைமையின்று ஆசிரியர்க்கு, ஆவயினான் மெல்லெழுத்து மிகுதல் - அவை கெட்டவழி மெல்லெழுத்து மிக்கு முடிக எ-று. எ-டு: அங்கை என வரும். அகங்கை எனக் கெடாது முடிந்தவழி ‘அல்வழி எல்லாம்’ (எழுத். 314) என்றதனான், மகரந் திரிந்து முடிதல் கொள்க. இது பண்புத்தொகை. அதிகாரத்தானும் பொருணோக்கானும் வேற்றுமைத் தொகையன்மை உணர்க. (20) ‘இலம்’ முன்னர்ப் ‘படு’வின் செய்யுள்முடிபு 316. இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளான. இஃது இலமென்பது முற்றுவினைச் சொல்லாகாது குறிப்பாகிய உரிச்சொல்லாய் நிற்குங்கால் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) இலம் என் கிளவிக்கு - இல்லாமை என்னும் குறிப்பாகிய உரிச்சொற்கு, படு வரு காலை - உண்டாதலென்னும் பொருள்படும் வினைக் குறிப்பு வருமொழியாய் வருங்காலத்து, செய்யுளான நிலையலும் உரித்து - செய்யுளிடத்து மகரம், கேடும் திரிபுமின்றி நிற்றலும் உரித்து எ-று. எனவே, உம்மையாற் பிறசொல் வருங்காலத்துக் கேடுந் திரிபும் பெற்று நிற்றலும் உரித்தெனக் கொள்க. எ-டு: ‘இலம்படு புலவ ரேற்றகை நிறைய’ (மலைபடு. 576) என வரும். இதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவரெனப் பொருள் கூறுக. ‘இலம்பாடு நாணுத் தரும்’ (சிலப். 9 : 71) என்கின்றதோ வெனின், இல்லாமை உண்டாதல் நாணுத்தருமென்று பொருள் கூறுக. இதனை நெற்பாடு பெரிதென்றாற்போலக் கொள்க. இது பொருளிலமென முற்றுவினைச் சொல்லாமாறும் உணர்க. இலநின்றதெனக் கெட்டவாறும், இலங்கெட வியந்தான் இலஞ்சிறிதாக இலந்தீதென்று எனக் கசதக்கள் வரும்வழித் திரிந்தவாறுங் காண்க. ‘எல்லாம்’ (எழுத். 314) என்றதனான் இலம் வருவது போலும், இலம் யாரிடத்து என வகர யகரங்களின் முன்னர்க் கெடாது நிற்றல் கொள்க. இதனை இலத்தாற் பற்றப்பட்ட புலவரென வேற்றுமை யென்றா ரால் உரையாசிரியர் எனின், பற்றப்பட்ட புலவரென்பது பெயரெச்சமாத லிற் பற்றவென்னுந் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றிலராதலானும், படுவென்பது தானும் புலவரென்னும் பெயரொடு முடியுங்கால் காலம் காட்டும் ஈறுகள் இரண்டும் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றலின், அதனை எடுத்தோதி னாராதலானும், ஆசிரியர்க்கு அங்ஙனம் கூறுதல் கருத்தன்மை உணர்க. அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலை கூடி ஒன்றாய் நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாராமையானும், அல்வழி யதிகாரமாதலானும் அது பொருளன்மை உணர்க. (21) ‘ஆயிரம்’ ஒத்த எண் வருவழி அத்துப்பேறு 317. அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி ஒத்த எண்ணு முன்வரு காலை. இஃது இவ்வீற்று எண்ணுப் பெயருள் ஒன்றற்குத் தொகை மரபினுள் ‘உயிரும் புள்ளியும் இறுதி யாகி’ (எழுத். 164) என்பதனான் எய்திய ஏயென் சாரியை விலக்கி அத்து வகுக்கின்றது. (இ-ள்.) ஆயிரத்து இறுதி - ஆயிரமென்னும் எண்ணுப்பெயரின் இறுதி மகரம், ஒத்த எண்ணு முன்வருகாலை - தனக்கு அகப்படும் மொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன் முன் வரும் காலத்து, அத்தொடு சிவணும் - தொகைமரபிற் கூறிய ஏயென் சாரியை ஒழித்து அத்துச் சாரியையொடு பொருந்தி முடியும் எ-று. எ-டு: ஆயிரத்தொன்று, ஆயிரத்தொன்பது என ஒன்று முதல் ஒன்பதின்காறும் ஒட்டுக. மகரத்தை அத்தின்மிசை யொற்றென்று கெடுத்து ‘அத்தினகர மகரமுனை யில்லை’ (எழுத். 125) என்று முடிக்க. ஆயிரத்தொருபது என்றாற்போல்வனவற்றிற்கும் ஒட்டுக. நிலைமொழி முற்கூறாததனான், ஆயிரத்துக்குறை கூறு முதல் என்பனவுங் கொள்க. இன்னும் இதனானே, ஆயிரப்பத்தென்புழி மகரங்கெடுத்து வல்லொற்று மிகுத்து முடிக்க. (22) ‘ஆயிரம்’ அடையொடு புணரினும் அற்றாதல் 318. அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே. இஃது ‘அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய’ (எழுத். 110) என்றமையின், அவ்வெண்ணுப் பெயரை அடையடுத்து முடிக்கின்றது. (இ-ள்.) அடையொடு தோன்றினும் - அவ்வாயிர மென்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியொடு வரினும், அதனோ ரற்று - முற்கூறியதனோடு ஒருதன்மைத்தாய் அத்துப் பெற்று முடியும் எ-று. எ-டு: பதினாயிரத்தொன்று இரண்டு, இருபதினாயிரத்தொன்று, ஆறாயிரத்தொன்று, நூறாயிரத்தொன்று, முந்நூறாயிரத் தொன்று, ஐந்நூறாயிரத்தொன்று என ஒட்டுக. முன்னர் இலேசினான் முடிந்தவற்றையும் அடையடுத்து ஒட்டுக. பதினாயிரத்துக்குறை கூறு முதல் எனவும், நூறாயிரப்பத்து எனவும் வரும். (23) அளவும் நிறையும் வருவழி ஆயிரம் முடியுமாறு 319. அளவும் நிறையும் வேற்றுமை யியல. இஃது அவ்வெண்ணின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்தால் முடியுமாறு கூறுதலின், எய்தாததெய்துவித்தது. (இ-ள்.) அளவும் நிறையும் - அதிகாரத்தான் ஆயிரந்தானே நின்றுழியும் அடையடுத்து நின்றுழியும் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வந்தால், வேற்றுமை இயல - மகர ஈற்று வேற்றுமையோடு ஒத்து வல்லெழுத்து வந்துழி மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கும், இயல்புகணம் வந்துழி ‘துவர’ (எழுத். 310) என்னும் இலேசான் எய்திய மகரங்கெட்டும் புணரும் எ-று. எ-டு: ஆயிரம் பதினாயிரம் நூறாயிரம் என நிறுத்திக், கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், கஃசு கழஞ்சு தொடி துலாம் பலம் எனவுந் தந்து ஒட்டுக. ‘வேற்றுமை யியல’ எனவே, தாம் வேற்றுமையல்லவாயின. (24) இவ்வீற்றுப் படர்க்கை முன்னிலைப் பெயர்களும், தாம்-நாம்-யாம்-என்பனவும் முடியுமாறு 320. படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை யாயின் உருபியல் நிலையும் மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் உருபியலுள் முடிந்தவாறே ஈண்டுப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடிகவென எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் - எல்லாருமென்னும் படர்க்கைப் பெயரும் எல்லீருமென்னும் முன்னிலைப் பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் - கிளைத் தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகி முடியுந் தாம் நாம் யாமென்னும் பெயராகிய நிலைமையுடைய சொல்லும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணாயின் உருபு புணர்ச்சிக்குக் கூறிய இயல்பின்கண்ணே நின்று முடியும், ஆவயினான் மெல்லெழுத்து மிகுதல் - மேல் நெடு முதல் குறுகும் மொழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: எல்லாரும் என்பதனை மகர ஒற்றும் உகரமுங் கெடுத்து, ரகரப் புள்ளியை நிறுத்திக், கை செவி தலை புறம் எனத்தந்து, இடையிலே தம்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரி யையும் கொடுத்து, எல்லார்தங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. இதற்கு, ‘அம்மினிறுதி’ (எழுத். 129) என்னும் சூத்திரத்துள் ‘தன்மெய்’ என்றதனாற் ‘பிற சாரியைக்கண் மகர ஒற்றுத் திரிந்து ஙஞநவாகும்’ எனச் செய்கை செய்து முடிக்க. எல்லீரும் என்பதற்கு, இடையிலே நும்முச் சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையும் கொடுத்து, முற்கூறிய செய்கைகளெல்லாஞ் செய்து, எல்லீர் நுங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. தாம், நாம் என்பனவற்றை ‘ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும்’ (எழுத். 188) எனக் குறுக்கி, ‘மகரவிறுதி’ (எழுத். 310) என்பதன்கண் ‘துவர’ என்பதனான் மகரங்கெடுத்துத், தங்கை நங்கை செவி தலை புறம் என முடிக்க. யாம் என்பதனை ஆகாரத்தை எகரமாக்கி யகர ஒற்றைக் கெடுத்து ‘மகரவிறுதி’ (எழுத். 310) என்பதன்கண் ‘துவர’ என்றதனான் மகரங் கெடுத்து, எங்கை செவி தலை புறம் என முடிக்க. தொடக்கங் குறுகுவன வற்றிற்கு இச்சூத்திரத்தான் மெல்லெழுத்து மிகுக்க. ‘உருபியல் நிலையும்’ என்பதனான் வேற்றுமையாதல் பெறா நிற்கவும், பின்னும் ‘வேற்றுமையாயின்’ என்ற மிகையானே, படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் இயல்பு கணத்து ஞகாரமும் நகாரமும் வந்துழித் தம்முச் சாரியையும், நும்முச் சாரியையும் பெறுதலும், ‘ஆவயினான’ என்றதனான், மகரங்கெட்டு உம்முப் பெறுதலும் ஒற்று இரட்டுதலும் கொள்க. எ-டு: எல்லார் தஞ்ஞாணும், எல்லீர் நுஞ்ஞாணும் நூலும் என வரும். இனித் தொடக்கங் குறுகுவனவற்றிற்கும் அவ்விரண்டு இலேசானும் மகரங்கெடுதலும் ஒற்று இரட்டுதலும் கொள்க. எ-டு: தஞ்ஞாண், நஞ்ஞாண், எஞ்ஞாண் நூல் என வரும். இன்னும் ‘ஆவயினான’ என்றதனானே, எல்லார்தம் எல்லீர்நும் என நின்றவற்றின் முன்னர், ஏனை மணி யாழ் வட்டு அடை என்பன வந்துழி மகரங் கெடாமையும் உம்முப்பெறுதலுங் கொள்க. இன்னும் இதனானே, தொடக்கங் குறுகுவனவற்றிற்குந் தம்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையுங் கொள்க. இன்னும் இதனானே, தமகாணம் நமகாணம் எமகாணம் நுமகாணம் என உருபீற்றுச் செய்கைகளுங் கொள்க. இன்னும் இதனானே, நும் என்பதற்கு மகரத்தை மெல்லொற்றாக்கி நுங்கை செவி தலை புறம் என வருதலும், நுஞ்ஞாண் என ஒற்றிரட்டுதலும், நும்வலி என மகரம் கெடாது நிற்றலுங் கொள்க. இன்னும் இதனானே, எல்லார்கையும் எல்லீர்கையும் எனத் தம்மும் நும்மும் பெறாது நிற்றலுங் கொள்க. (25) அப்பெயர்கள் அல்வழிக்கண் முடியுமாறு 321. அல்லது கிளப்பின் இயற்கை யாகும். இது முற்கூறிய மூன்று பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அல்லது கிளப்பின் இயற்கையாகும் - அம்மூன்று பெயரும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும் எ-று. ஈண்டு ‘இயற்கை’ யென்றது சாரியை பெறாமை நோக்கி. இவற்றின் ஈறுதிரிதல் ‘அல்வழி யெல்லாம்’ (எழுத். 314) என்பதனுள் ‘எல்லாம்’ என்றதனாற் கொள்க. எ-டு: எல்லாருங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், எல்லீருங் குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் எனவும், தாங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், தாங்குறிய சிறிய தீய பெரிய எனவும், நாங்குறியம் சிறியம் தீயம் பெரியம் எனவும், யாங்குறியேம் சிறியேம் தீயேம் பெரியேம் எனவும் வரும். இன்னும் ‘எல்லாம்’ என்றதனானே, இவற்றின் முன்னர் ஞகார நகாரம் வந்தால் அவை அவ்வொற்றாய்த் திரிதல் கொள்க. எல்லாருஞ் ஞான்றார் நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர் நீண்டீர் எனவும், தாஞ்ஞான்றார் நீண்டார் எனவும், நாஞ்ஞான்றாம் நீண்டாம் எனவும், யாஞ் ஞான்றேம் நீண்டேம் எனவும் வரும். இனி, எல்லாரும் வந்தார் யாத்தார் அடைந்தார், எல்லீரும் வந்தீர் யாத்தீர் அடைந்தீர் எனவும், தாம் வந்தார் யாத்தார் அடைந்தார் எனவும், நாம் வருதும் யாத்தும் அடைதும் எனவும், யாம் வருவேம் யாப்பேம் அடைவேம் எனவும் ஏனைக்கணங்களின் முன்னர் மகரந்திரியாது நிற்றல், உயிரீறாகிய உயர்திணைப் பெயரும்’ (எழுத். 153) என்பதனான் முடியும். (26) ‘எல்லாம்’ இருவழியும் முடியுமாறு 322. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. இஃது இவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் உருபியலொடு மாட்டெறிந்து எய்தாததெய்து வித்தது. (இ-ள்.) அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் - அல்வழிக்கட் சொல்லினும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கட் சொல்லினும், எல்லாமெனும் பெயர் உருபியல் நிலையும் - எல்லாமென்னும் விரவுப் பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று முடியும், வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது - அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியல்லாத இடத்து வற்றுச் சாரியை நில்லாதாய் முடியும் எ-று. ‘உருபியல் நிலையும்’ என்ற மாட்டேறு, அல்வழிக்கண் உம்முப் பெற்று நிற்றலும், பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்மும் பெற்று நிற்றலும் உணர்த்திற்று. உம்முச்சாரியை ஒன்றுமே பெற்று முடிகின்ற அல்வழியினையும், வற்றும் உம்மும் பெற்று முடிகின்ற வேற்றுமையோடு உடனோதி, அதுவும் வற்றுப் பெறுமாறு போல மாட்டெறிந்த மிகையானே, வன்கணத்து அல்வழிக்கண் நிலைமொழி மகரக்கேடும், வருமொழி வல்லெழுத்துப் பேறும், ஈற்றும்மைப் பேறும், மென்கணத்து மகரங் கெட்டு உம்முப் பெற்றும் பெறாதும் வருதலும், ஏனைக்கணத்து மகரங்கெட்டு உம்முப் பெற்றும், மகரங் கெடாது உம்முப் பெறாதும் வருதலுங் கொள்க. எ-டு: எல்லாக்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் எனவும், எல்லா ஞாணும் நூலும் மணியும் எனவும், எல்லா ஞான்றன நீண்டன மாண்டன எனவும், எல்லா யாழும் வட்டும் அடையும் எனவும், எல்லாம் வாடின ஆடின எனவும் வரும். இனி, வேற்றுமைக்கண் எல்லாவற்றுக்கோடும் செவியும் தலையும் புறமும் என இவை வற்றும் உம்மும் பெற்றன. இவற்றிற்கு மகரம் வற்றின் மிசை யொற்றென்று கெடுக்க. இனி, மென்கணத்துக்கண் எல்லாவற்று ஞாணும் நூலும் மணியும் எனவும், ஏனைக்கணத்துக்கண் எல்லாவற்றியாப்பும் வழியும் அடையும் எனவும் வரும். ஏனைக் கணமும் வற்றும் உம்மும் பெற்றன. (27) அப்பெயர் அல்வழிக்கண் மெலியும் மிகப்பெறுதல் 323. மெல்லெழுத்து மிகினும் மான மில்லை. இஃது ஒருசார் வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்தும் விதித்தலின், எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) மெல்லெழுத்து மிகினும் மான மில்லை - அவ்வெல்லா மென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை எ-று. எனவே, வல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மையாயிற்று. முற் கூறிய செய்கைமேலே இது கூறினமையின், மகரக் கேடும் உம்முப்பேறுங் கொள்க. எ-டு: எல்லாங் குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும். ‘மானமில்லை’ என்றதனான், உயர்திணைக்கண் வன்கணத்து மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப் பெற்று முடிதலும், இயல்பு கணத்துக்கண் மகரங்கெட்டு உம்முப் பெற்று முடிதலுங் கொள்க. எ-டு: எல்லாக் கொல்லரும் சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் எனவும், எல்லா ஞான்றாரும் நாய்கரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும். இன்னும் இதனானே, உயர்திணைக்கண் எல்லாங்குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என மகரங்கெட்டு மெல்லெழுத்து மிக்கு உம்முப் பெறுதலும், எல்லாங் குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், குறியீர் குறியம் எனவும் உம்முப் பெறாது வருதலுங்கொள்க. இன்னும் இதனானே, இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் மகரங் கெடாது உம்மின்றி வருதலுங் கொள்க. எல்லாம் வந்தேம் அடைந்தேம் என வரும். (28) அப்பெயர் உயர்திணைக்கண் வேற்றுமையில் முடியுமாறு 324. உயர்திணை யாயின் உருபியல் நிலையும். இஃது எல்லா மென்பதற்கு உயர்திணை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) உயர்திணையாயின் உருபியல் நிலையும் - எல்லா மென்பது உயர்திணையாய் நிற்குமாயின் உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் இடைக்கண் நம்மும் இறுதிக்கண் உம்மும் பெற்று முடியும் எ-று. உருபியலில் ‘எல்லா மென்னு மிறுதி முன்னர் - வற்றென் சாரியை’ (எழுத். 189) வகுத்ததனான், வற்றின்மிசை யொற்றென்று மகரங் கெடுத்த அதிகாரத்தான் ‘உயர்திணை யாயி னம்மிடை வரும்’ (எழுத். 190) என நம்மின் முன்னும் மகரங் கெடுத்தார்; அதனோடு ஈண்டு மாட்டெறிதலின். அது கொண்டு ஈண்டும் மகரங் கெடுக்க. ‘அம்மினிறுதி’ (எழுத். 129) என்புழித் ‘தன்மெய்’ என்றதனான் நம்முச்சாரியையினது மகரந் திரிதல் கொள்க. எ-டு: எல்லா நங்கையும் செவியும் தலையும் புறமும் என ஒட்டுக. வருமொழி வரையாது கூறலின், எல்லா நஞ்ஞாற்சியும் நீட்சியும் என ஏற்பனவற்றொடு முடிபு அறிந்து ஒட்டுக. (29) ‘நும்’ ஈறுகெட மெலி மிகுதல் 325. நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே. இது நும் என்பதன் மகர ஈற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. (இ-ள்.) நும்மென் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகும் - நும்மென்று சொல்லப்படுகின்ற விரவுப்பெயர் பொருட்புணர்ச்சிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: நுங்கை செவி தலை புறம் என வரும். ‘மகரவிறுதி’ (எழுத். 310) என்பதன்கண் ‘துவர’ என்பதனான், மகரங்கெடுக்க. ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், உங்கை என வருவதூஉங் கொள்க. ‘துவர’ (எழுத். 310) என்றதனான், ஞகர நகரங்கள் வந்துழி மகரம் கெடுதலும், ‘ஒரு பெயர்’ என்றதனான், ஒற்று மிகுதலுங் கொள்க. எ-டு: நுஞ்ஞாண் நூல் என வரும். இன்னும் ‘ஒரு பெயர்’ என்றதனான், நும்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையும் கொள்க. (30) அதன் அல்வழி முடிபு 326. அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர இயிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பான் மொழிவயின் இயற்கை யாகும். இது நும்மென்பதற்கு அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அல்லதன் மருங்கிற் சொல்லுங்காலை - நும்மென்பதனை அல்வழிக்கண் கூறுமிடத்து, உ கெட நின்ற மெய்வயின் ஈ வர - நகர வுகரத்துள் உகரங்கெட்டுப் போக ஒழிந்து நின்ற நகர வொற்றிடத்தே ஈகாரம் வந்து நிற்ப, இ இடைநிலைஇ ஈறுகெட - ஓர் இகரம் இடையிலே வந்து நிலைபெற்று மகரமாகிய ஈறு கெட்டுப்போக, புள்ளியொடு புணர்ந்து ரகரம் நிற்றல் வேண்டும் - ஆண்டுப் புள்ளி பெற்று ஒரு ரகரம் வந்து நிற்றலை விரும்பும் ஆசிரியன், அப்பால் மொழிவயின் - அக் கூற்றினையுடைய நிலைமொழியிடத்து, இயற்கை யாகும் - வருஞ்சொல் இயல்பாய் முடியும் எ-று. எ-டு: நீயிர் குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் என வரும். ‘சொல்லுங்காலை’ என்றதனானே, நீயிர் ஞான்றீர்; நீண்டீர், மாண்டீர், யாத்தீர், வாடினீர், அடைந்தீர் என ஏனைக்கணத்திலும் ஒட்டுக. (31) இவ்வீற்றுத் தொழிற்பெயர் பிற ஈற்றுத் தொழிற்பெயர் போல முடிதல் 327. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இது வேற்றுமைக்கண் மகரம்கெட்டு வல்லெழுத்து மிக்கும் அல்வழிக்கண் மெல்லெழுத்தாய்த் திரிந்தும் வருமென எய்தியதனை விலக்கி ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் போல நிற்குமெனப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) தொழிற்பெயரெல்லாம் - மகர ஈற்றுத் தொழிற் பெயரெல் லாம், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் போல அல்வழியினும் வேற்றுமையினும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் எ-று. எ-டு: செம்முக் கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், செம்முக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். ‘தும்முச் செறுப்ப’ (குறள். 1318) என்பதும் அது. இவை ‘குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டல்’ (எழுத். 160) என்பதனான் இரட்டின. ‘எல்லாம்’ என்றதனான், உகரம் பெறாது நாட்டங்கடிது ஆட்டங் கடிது என மெல்லெழுத்தாய் அல்வழிக்கண் திரிதலும், நாட்டக்கடுமை ஆட்டக்கடுமை என வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுதலுங் கொள்க. (32) ஈம் கம் உரும் - இம்மூன்றும் அத்தொழிற்பெயர் அனையவாதல் 328. ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன. இது மகர ஈற்றுப் பொருட்பெயருட் சில, அவ்வீற்றுத் தொழிற் பெயரோடு ஒத்து முடிக என எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் அ முப்பெயரும் - ஈமென்னுஞ் சொல்லுங் கம்மென்னுஞ் சொல்லும் உருமென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், அவற்றோரன்ன - முற்கூறிய தொழிற் பெயரோடு ஒரு தன்மையவாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் எ-று. ஈம் என்பது சுடுகாடு; கம் என்பது தொழில். எ-டு: ஈமுக்கடிது, கம்முக் கடிது, உருமுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஈமுக்கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை, சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் ஒட்டுக. ‘கிளவி’ என்றதனான், வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் உயிர் வருவழி உகரம் பெறாது, ஈமடைவு, ஈமடைந்தது என நிற்றலுங் கொள்க. ‘தன்னினமுடித்தல்’ என்பதனான், அம்மு தம்மு நம்மு எனச் சாரியைக் கண்ணும் உகரம் வருதல் கொள்க. (33) ஈமும் கம்மும் அக்குப்பெற்று முடியுமாறு 329. வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை. இது மேல் முடிபு கூறிய மூன்றனுள் இரண்டற்கு வேற்றுமைக்கண் வேறொரு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமையாயின் - வேற்றுமைப்பொருட் புணர்ச்சி யாயின், ஏனை இரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை - இறுதியின் உருமொழிந்த இரண்டும் அக்கென்னுஞ் சாரியை தோன்றி முடிதலை வேண்டும் ஆசிரியன் எ-று. எ-டு: ஈமக்குடம் கம்மக்குடம் சாடி தூதை பானை எனவும், ஞாற்சி நெருப்பு மாட்சி விறகு எனவும் ஒட்டுக. ‘அக்கு’ வகுப்பவே, நிலைமொழித் தொழிலாகிய உகரங் கெட்டு, முற்கூறிய வல்லெழுத்து விலக்கப்படாமையின் நின்று முடிந்தது. வன்கணத்திற்கு முன்னின்ற சூத்திரத்திற் கூறியது குணவேற்றுமைக் கென்றும், ஈண்டுக் கூறியது பொருட்புணர்ச்சிக் கென்றுங் கொள்க. (34) புணர்மொழிக்கண் வகாரம் வருவழி மகரஈறு குறுகுதல் 330. வகார மிசையும் மகரங் குறுகும். இது முன்னர் ‘அரையளவு குறுகல்’ (எழுத். 13) எனவும் ‘னகாரை முன்னர்’ (எழுத். 52) எனவும் கூறிய மகரம் இருமொழிக்கண்ணும் குறுகு மென, அதன் ஈற்றகத்து எய்தாதது எய்துவிக்கின்றது. (இ-ள்.) வகாரமிசையும் மகாரங் குறுகும் - மகாரம் ஒரு மொழிக் கண்ணேயன்றி வகாரத்தின் மேலுங் குறுகும் எ-று. எ-டு: நிலம் வலிது, வரும் வண்ணக்கன் என வரும். (35) இவ்வீற்று நாட்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு 331. நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர். இஃது இவ்வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) நாட்பெயர்க்கிளவி மேற் கிளந்தன்ன - மகர ஈற்று நாட்பெயர் இகர ஈற்று நாட்பெயர்போல ஆன் சாரியை பெற்று முடியும், அத்து ஆன்மிசையும் வரைநிலை இன்று - அத்துச் சாரியை ஆன்சாரியை மேலும் பிற சாரியை மேலும் வருதல் நீக்கு நிலைமையின்று, ஒற்று மெய்கெடுதல் என்மனார் புலவர் - ஆண்டு நிலைமொழி மகர ஒற்றுக் கெடுக என்று கூறுவர் புலவர் எ-று. உம்மையை ‘ஆன்மிசையும்’ என மாறுக. எ-டு: மகத்தாற் கொண்டான், ஓணத்தாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என்க. ஏனை நாள்களோடும் ஒட்டுக. மகர ஒற்றுக்கெடுத்து ‘அத்தி னகர மகரமுனை யில்லை’ (எழுத். 125) என அகரங்கெடுத்துக், ‘குற்றிய லுகரமு மற்றென மொழிப’ (எழுத். 105) என ஆனேற்றி, ஆனி னகரமும், (எழுத். 124) என்றதனான் றகரமாக்கி முடிக்க. மகத்துஞான்று கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என ஞான்றெனுஞ் சாரியைமேல் அத்து வந்தது. வரையாது கூறினமையின், இம்முடிபு நான்கு கணத்துங் கொள்க. எ-டு: மகத்தான் ஞாற்றினான் நிறுத்தினான் மாய்ந்தான், வந்தான், அடைந்தான் என வரும். (36) னகார ஈற்றுப் பெயரது வேற்றுமை முடிபு 332. னகார இறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. இது நிறுத்த முறையானே னகார இறுதி வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) னகார இறுதி வல்லெழுத்து இயையின் றகார மாகும் - னகார ஈற்றுப் பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் னகாரம் றகாரமாகும், வேற்றுமைப் பொருட்கு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் எ-று. எ-டு: பொற்குடம் சாடி தூதை பானை என வரும் (37) ‘மன்’ முதலிய ஏழும் அன்ன இயல்பினவாதல் 333. மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர். இஃது அவ்வீற்று அசைநிலை இடைச்சொற்களும், ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர நின்ற இடைச்சொற்களும், வினையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) மன்னும் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் - மன்னென்னுஞ் சொல்லும் சின்னென்னுஞ் சொல்லும் ஆனென்னுஞ் சொல்லும் ஈனென்னும்சொல்லும் பின்னென் னுஞ் சொல்லும் முன்என்னும் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர் - முற்கூறிய இயல்பினை யுடையவாய் னகரம் றகரமாய் முடியுமென்று சொல்லுவர் புலவர் எ-று. எ-டு: ‘அதுமற் கொண்கன் றேரே’ ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகம். 7) எனவும், ஆற்கொண்டான் ஈற்கொண் டான் பிற்கொண்டான் முற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், வரிற் கொள்ளும் செல்லும் தரும் போம் எனவும் வரும். பெயராந்தன்மையவாகிய ஆன் ஈன் என்பனவற்றை முற் கூறாததனான், ஆன் கொண்டான் ஈன் கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க. பின் முன் என்பன, பெயரும் உருபும் வினையெச்சமுமாய் நிற்றலின் பெயர் ஈண்டுக் கூறினார். ஏனைய, உருபியலுள்ளும் வினை யெஞ்சு கிளவி யென்பதன்கண்ணும் முடியும். அப்பெயரை முற்கூறாத தனாற், பின்கொண்டான் முன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க. ‘இயல’ என்றதனான் ஊன் என்னுஞ் சுட்டு ஊன் கொண்டானென இயல்பாய் முடிதல் கொள்க. (38) அவ்வயின் முதலிய மூன்றும் ‘எவ்வயினு’ம் அன்ன முடிபினவாதல் 334. சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப. இஃது இவ்வீற்றுள் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதல் வயினும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய வயினென்னுஞ் சொல்லும், எகரமுதல் வயினும் - எகரமாகிய முதல் வினாவினையுடைய வயினென்னுஞ் சொல்லும், அப்பண்பு நிலையும் இயற்கை என்ப - மேல் னகரம் றகரமா மென்ற தன்மை நிலைபெற்று முடியும் இயல்பையுடைய வென்று கூறுவார் ஆசிரியர் எ-று. எ-டு: அவ்வயிற்கொண்டான், இவ்வயிற்கொண்டான், உவ்வயிற் கொண்டான், எவ்வயிற்கொண்டான்; சென்றான் தந்தான் போயினான் என வரும். ‘இயற்கைய’ என்றதனான், திரியாது இயல்பாய் முடிவனவுங் கொள்க. (39) ‘குயின்’ இயல்பாதல் 335. குயினென் கிளவி இயற்கை யாகும். இது னகரந் திரியாது இயல்பாக என்றலின் எய்தியது விலக்குகின்றது. (இ-ள்.) குயினென் கிளவி இயற்கையாகும் - குயினென்னுஞ் சொல் திரியாது இயல்பாய் முடியும் எ-று. எ-டு: குயின்குழாம் செலவு தோற்றம் பறைவு என வரும். குயின் என்பது மேகம். அஃது அஃறிணைப் பெயர். தொகை மரபினுள் உயர்திணைப் பெயரும் விரவுப்பெயரும் இயல்பாக வென்றார். குயின் வினையுமாம். ‘இயற்கை’ என்றதனாற், கான்கோழி கோன்குணம் வான்கரை என வருவனவுங் கொள்க. (40) ‘எகின்’ மரப்பெயர் அம்முப் பெறுதல் 336. எகின்மர மாயின் ஆண்மர இயற்றே. இது திரிபு விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) எகின் மரமாயின் - எகினென்பது புள்ளன்றி மரப் பெய ராயின், ஆண்மர இயற்று - ஆண்மரத்தின் இயல்பிற்றாய் அம்முப்பெற்று முடியும் எ-று. எ-டு: எகினங்கோடு செதிள் தோல் பூ என வரும். (41) ஏனை எகின் முடியுமாறு 337. ஏனை எகினே யகரம் வருமே வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். இதுவும் அது, திரிபு விலக்கி அகரம் விதித்தலின். (இ-ள்.) ஏனை எகினே அகரம் வரும் - மரமல்லாத எகின் நிலை மொழிக்கண் அகரம்பெற்று முடியும், வல்லெழுத்தியற்கை மிகுதல் வேண்டும் - ஆண்டு வருமொழி வல்லெழுத்தியல்பு மிக்கு முடிதலை வேண்டும் ஆசிரியன் எ-று. எ-டு: எகினக்கால் செவி தலை புறம் என வரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனான், இயல்பு கணத்தும் அகரப்பேறு கொள்க. எ-டு: எகினஞாற்சி நீட்சி மாட்சி வலிமை யாப்பு அடைவு என வரும். ‘இயற்கை’ என்றதனான், அகரத்தொடு மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. எ-டு: எகினங்கால் செவி தலை புறம் என வரும். இனிச் சிறுபான்மை எகின்சேவல் எகினச்சேவல் பெடை என்பன ஆறனுருபு விரிவுழி ஈண்டை இலேசான் முடிக்க. பண்பு கருதிய வழி இவ்வோத்தின் புறனடையான் முடிக்க. (42) இவ்வீற்றுக் கிளைப்பெயர் இயல்பாய் முடிதல் 338. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. இது னகரந் திரிதலை விலக்கி இயல்பாக என்றலின் எய்தியது விலக்குகின்றது. (இ-ள்.) கிளைப் பெயரெல்லாம் - னகர ஈற்றுக் கிளைப்பெய ரெல்லாம், கிளைப்பெயர் இயல - ணகர ஈற்றுக் கிளைப்பெயர் போலத் திரியாது இயல்பாய் முடியும் எ-று. எ-டு: எயின்குடி சேரி தோட்டம் பாடி என வரும். எயின் வந்தது என்று அஃறிணைக்கும் எய்துதலின், தொகை மரபினுள் முடியாதாயிற்று, ஆண்டு உயர்திணைக்கே கூறுதலின். இனி ‘எல்லாம்’ என்றதனானே, எயினக்கன்னி பிள்ளை என அக்கும் வல்லெழுத்தும் பெறுதலும், எயின வாழ்வு என வல்லெழுத்துப் பெறாமையும் கொள்க. இன்னும் இதனானே, பார்ப்பனக் கன்னி குமரி சேரி பிள்ளை என ஆகாரம் குறுக்கி அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும், பார்ப்பன வாழ்க்கை என வல்லெழுத்துக் கொடாதும் முடிக்க. இன்னும் இதனானே நான்கு கணத்துக்கண்ணும் வெள்ளாளனென நின்றதனை அன்கெடுத்துப் பிரித்து ளகார வொற்றினை ணகார வொற்றாக்கி, வெள்ளாண் குமரி பிள்ளை மாந்தர் வாழ்க்கை ஒழுக்கம் என முடிக்க. இன்னும் இதனானே, முதலெழுத்தை நீட்டி ளகார வொற்றினைக் கெடுத்து வேளாணென முடிக்க. இதனானே, பொருந வாழ்க்கையும் முடிக்க. வேட்டுவக் குமரி என்பது மரூஉ வழக்கு. (43) ‘மீன்’ இறுதி வல்லெழுத்தோடு உறழ்தல் 339. மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே. இதுவும் அது, தன் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்க என்றலின். (இ-ள்.) மீனென் கிளவி வல்லெழுத்து உறழ்வு - மீனென்னுஞ் சொல் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும் எ-று. எ-டு: ‘மீன்கண்’ (சீவக.54) மீற்கண், மீன்சினை மீற்சினை, மீன்றலை மீற்றலை, மீன்புறம் மீற்புறம் என வரும். (44) ‘தேன்’ முடியுமாறு 340. தேனென் கிளவி வல்லெழுத் தியையின் மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை. இதுவும் அது, மேலதனொடு மாட்டெறிதலின். (இ-ள்.) தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் - தேனென்னுஞ் சொல் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின், மேல்நிலை ஒத்தலும் - மீனென்பதற்குக் கூறிய திரிபுறழ்ச்சி நிலை ஒத்து முடிதலும், வல்லெழுத்து மிகுதலும் - வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுமாகிய, ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்து - அம்முறைமையினையுடைய இரண்டனையும் உரித்தாதலையும் உடைத்து, வல்லெழுத்து மிகுவழி இறுதியில்லை - வல்லெழுத்து மிக்கு வருமிடத்து இறுதியில் நின்ற னகரங் கெடும் எ-று. ‘உரிமையும்’ என்னும் உம்மை, ‘மெல்லெழுத்து மிகினும்’ (எழுத். 341) என மேல்வருகின்றதனை நோக்கிற்று. எ-டு: தேன்குடம் தேற்குடம், சாடி தூதை பானை என மேனிலை ஒத்தன. தேக்குடம் சாடி தூதை பானை என னகரங் கெட்டு வல்லெழுத்து மிக்கன. (45) அப்பெயர் னகரம் கெட்டு மெலிமிகவும் பெறுதல் 341. மெல்லெழுத்து மிகினும் மான மில்லை. இதுவும் அது; உறழ்ச்சியும் வல்லெழுத்தும் அன்றி மெல்லெழுத்தும் விதித்தலின். (இ-ள்.) மெல்லெழுத்து மிகினும் மானமில்லை - முற்கூறிய தேனென் கிளவி வல்லெழுத்து வந்தால் அவ்வல்லெழுத்து மிகுதலேயன்றி மெல் லெழுத்து மிகினுங் குற்றமில்லை எ-று. னகரக்கேடு அதிகாரத்தாற் கொள்க. எ-டு: தேங்குடம் சாடி தூதை பானை எனவரும். (46) அப்பெயர் மென்கணம் வருவழி முடியுமாறு 342. மெல்லெழுத் தியையின் இறுதியோ டுறழும். இது தொகை மரபினுள் ‘வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்தல் வழி’ (எழுத். 148) என்பதனாற் கூறிய இயல்பை விலக்கி உறழுமென்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் - அத்தேனென் கிளவி மெல் லெழுத்து முதன்மொழி வந்து இயையின், இறுதியோடு உறழும் - நிலை மொழி யிறுதியின் னகர வொற்றுக் கெடுதலுங் கெடாமையுமாகிய உறழ்ச்சி யாய் முடியும் எ-று. எ-டு: தேன்ஞெரி தேஞெரி, தேனுனி தேநுனி, தேன்மொழி தேமொழி என வரும். மேல் ‘ஆமுறை’ (எழுத்.. 340) என்றதனான், தேஞெரி தேஞ்ஞெரி, தேநுனி, தேந்நுனி, தேமொழி தேம்மொழி என னகரங் கெட்டுத் தத்தம் மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் முடிந்தனவுங் கொள்க. இனி மேல் ‘மானமில்லை’ (எழுத். 341) என்றதனான், ஈறு கெட்டு மெல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிவனவுங்கொண்டு தேஞெரி தேநுனி தேமொழி என்பன காட்டின் அவை முற்கூறியவற்றுள் அடங்கு மென்க. (47) அப்பெயர் ‘இறால்’ வருவழி முடியுமாறு 343. இறாஅல் தோற்றம் இயற்கை யாகும். இஃது அத்தேனென்பதற்கு உயிர்க்கணத்து ஒருமொழி முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) இறாஅல் தோற்றம் - தேனென்னுஞ் சொல் இறாலென்னும் வருமொழியது தோற்றத்துக்கண், இயற்கையாகும் - நிலைமொழியின் னகரங் கெடாதே நின்று இயல்பாய் முடியும் எ-று. (48) எ-டு: தேனிறால் என வரும். அது ‘தேத்திறால்’ எனவும் முடிதல் 344. ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே. இதுவும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்து - அத்தேனென்பது இறாலொடு புணருமிடத்துப் பிறிதுமொரு தகரத்தொடு நின்று முடிதலும் உரித்து எ-று. ‘வல்லெழுத்து மிகுவழி யிறுதியில்லை’ (எழுத். 340) என்றதனான், நிலைமொழி ஈறு கெடுக்க. ‘தகரம்மிகும்’ என்னாது ‘ஒற்றுமிகு தகரம்’ என்றதனான், ஈரொற்றாக்குக. எ-டு: தேத்திறால் என வரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை யொன்றாக ஓதாததனாற், பிற வருமொழிக்கண்ணும் இம்முடிபு கொள்க. எ-டு: தேத்தடை, தேத்தீ என வரும். ‘தோற்றம்’ என்றதனான், தேனடை, தேனீ என்னும் இயல்புங் கொள்க. (49) மின் முதலிய நாற்சொல்லும் இருவழியும் முடியுமாறு 345. மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல. இஃது அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் வருக என எய்துவித்த முடிபை விலக்கித் தொழிற்பெயரியல்பா மெனப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் - மின்னென்னுஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் பன்னென்னுஞ் சொல்லும் கன்னென்னுஞ் சொல்லுமாகிய அந்நான்கு சொல்லும், தொழிற்பெயர் இயல - அல்வழியினும் வேற்றுமையினுங் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர்போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத் தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் எ-று. எ-டு: ‘மின்னுச்செய் விளக்கத்து’ (கலி. 41: 6) ‘பின்னுப் பிணி யவிழ்ந்த’ எனவும், பன்னுக்கடிது கன்னுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மின்னுக்கடுமை பின்னுக் கடுமை பன்னுக்கடுமை கன்னுக் கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். ‘தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல’ என்று ஓதாது கிளந் தோதினார், இவை தொழினிலைக்கண்ணன்றி வேறு தம் பொருளுணர நின்றவழியும் இம்முடிபு எய்து மென்றற்கு. ‘மின்’ என்பது மின்னுதற்றொழிலும், ‘மின்னுநிமிர்ந் தன்ன’ (புறம். 57) என மின்னெனப்படுவதொரு பொருளும் உணர்த்தும். ஏனைய வும் அன்ன. (50) அவற்றுள் ‘கன்’ வேற்றுமைக்கண் முடியுமாறு 346. வேற்றுமை யாயின் ஏனை யெகினொடு தோற்றம் ஒக்கும் கன்னென் கிளவி. இது நிலைமொழிக்கண் உகரம் விலக்கி அகரம் வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) வேற்றுமையாயின் ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும் - வேற்றுமைப்பொருட் புணர்ச்சியாயின் ஒழிந்த மரமல்லாத எகினொடு தோற்றம் ஒத்து அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும், கன் என் கிளவி - கன்னென்னுஞ்சொல் எ-று. எ-டு: கன்னக்குடம் சாடி தூதை பானை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என வரும். கன்னக்கடுமை எனக் குண வேற்றுமை யுஞ் சிறுபான்மை கொள்க. ‘தோற்றம்’ என்றதனான், அல்வழிக்கண் வன்கணத்து அகரமும் மெல்லெழுத்தும் ஏனைக்கணத்து அகரமுங் கொள்க. கன்னங்கடிது சிறிது தீது பெரிது எனவும், கன்னஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். கன்னங்கடுமை எனக் குண வேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க. ‘பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி’ (ஐங்குறு. 247) என்பதோ வெனின், அது மகர ஈற்றுப் பொருட் பெயர். (51) இவ்வீற்று இயற்பெயர் முன்னர்த் ‘தந்தை’ புணருமாறு 347. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே. இஃது ‘அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே’ (எழுத். 155) என்றதற்கு ஈண்டுத் திரிபு கூறலின், எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் - இவ்வீற்று விரவுப்பெயருள் இயற்பெயரின் முன்னர்த் தந்தையென்னும் முறைப்பெயர் வருமொழியாய் வருமாயின், முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் - அத்தந்தை யென்பதன் முதற்கணின்ற தகரவொற்றுக்கெட அதன்மேலேறி நின்ற அகரங்கெடாது நிற்கும், அவ்வியற்பெயர் மெய்யொழித்து அன்கெடும் - அந்நிலைமொழியாகிய இயற்பெயர் அன்னென்னுஞ் சொல்லின் அகரம் ஏறிநின்ற மெய்யை ஒழித்து அவ்வன்தான் கெட்டு முடியும் எ-று. எ-டு: சாத்தந்தை, கொற்றந்தை என வரும். ‘முதற்கண்மெய்’ யென்றதனான், சாத்தன்றந்தை கொற்றன்றந்தை என்னும் இயல்பு முடிபுங் கொள்க. (52) ‘ஆதன்’, ‘பூதன்’ முன்னர் அம்முறைப்பெயர் புணருமாறு 348. ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு பெயரொற் றகரம் துவரக் கெடுமே. இது மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) ஆதனும் பூதனும் - முற்கூறிய இயற்பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள் தந்தை யென்னும் முறைப்பெயரொடு முடியுங்கால், கூறிய இயல்பொடு - முற் கூறிய நிலைமொழி அன் கெடுதலும் வருமொழித் தகர வொற்றுக் கெடுதலுமாகிய செய்கைகளுடனே, பெய ரொற்று அகரந் துவரக்கெடும் - நிலைமொழிப் பெயரின் அன்கெட நின்ற தகரவொற்றும் வருமொழியின் தகர வொற்றுக்கெட நின்ற அகரமும் முற்றக் கெட்டு முடியும் எ-று. எ-டு: ஆந்தை, பூந்தை என வரும். ‘இயல்பு’ என்றதனாற், பெயரொற்றும் அகரமும் கெடாதே நிற்றலுங் கொள்க. எ-டு: ஆதந்தை பூதந்தை என வரும். இனித் ‘துவர’ என்றதனான், அழான் புழான் என நிறுத்தித் தந்தை என வருவித்து, நிலைமொழி னகரமும் வருமொழித் தகரமும் அகரமுங் கெடுத்து, அழாந்தை புழாந்தை என முடிக்க. (53) இயற்பெயர் அடையடுத்துழி இயல்பாய் முடிதல் 349. சிறப்பொடு வருவழி இயற்கை யாகும். இஃது எய்தியது விலக்குகின்றது. (இ-ள்.) சிறப்பொடு வருவழி - அவ்வியற் பெயர் பண்பு அடுத்து வரும்வழி, இயற்கையாகும் - முற்கூறிய இருவகைச் செய்கையும் தவிர்த்து இயல்பாய் முடியும் எ-று. எ-டு: பெருஞ்சாத்தன்றந்தை, பெருங்கொற்றன்றந்தை என வரும். கொற்றங்கொற்றன்றந்தை, சாத்தங்கொற்றன்றந்தை என்றாற் போல்வன பண்பன்றி அடை அடுத்தனவாதலின் புறனடையான் முடிக்க. (54) இயற்பெயர் முன்னர் மகனாகிய முறைப்பெயர் வருவழி முடிபு 350. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் நிற்றலு முரித்தே அம்என் சாரியை மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான. இது மேலதற்கு வேறொரு வருமொழிக்கண் எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அப்பெயர் மக்கள் ஆன முறை தொகூஉம் மருங்கினும் - அவ்வியற்பெயர் முன்னர்த் தந்தையன்றி மகனாகிய முறைப் பெயர் வந்து தொகுமிடத்தினும், மெய்யொழித்து அன் கெடுவழி அம்மென் சாரியை நிற்றலும் உரித்து - அவ்வியற்பெயரின் தான் ஏறிய மெய் நிற்க அன் கெட்டு அம்முச்சாரியை வந்து நிற்றலும் உரித்து எ-று. ‘ஆன’ என்பதனை மக்களோடும், ‘உம்’மையை மருங்கினொடுங் கூட்டுக. ‘முறை தொகூஉ மருங்கின்’ என்றது, இன்னாற்கு மகனென்னும் முறைப்பெயராய்ச் சேருமிடத்து என்றவாறு. எ-டு: கொற்றங்கொற்றன், சாத்தங்கொற்றன் என நிலைமொழி அன் கெட்டு அம்மு வந்தது. இவற்றிற்கு, அதுவெனுருபு விரியாது அதன் உடைமைப் பொருள் விரிக்க. இது முறைப்பெயர். இனி உம்மையாற், கொற்றங்குடி சாத்தங்குடி எனப் பிற பெயர் தொக்கனவுங் கொள்க. ‘மெய்யொழித்து’ என்றதனானே, கொற்றமங்கலம் சாத்தமங்கலம் என்பனவற்றின்கண் அம்மின் மகரங் கெடுதலும், வேட்ட மங்கலம், வேட்டன்குடி என்பனவற்றின் நிலைமொழியொற்று இரட்டு தலுங் கொள்க. (55) இயற்பெயர் சில ‘தந்தை’யும் மகன்முறையும் வருவழி இயல்பாதல் 351. தானும் பேனும் கோனும் என்னும் ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே. இது மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது. (இ-ள்.) தானும் பேனும் கோனும் என்னும் அ முறை இயற்பெயர் - அவ்வியற்பெயருள் தானும் பேனும் கோனுமென்னும் அம்முறையினை யுடைய இயற்பெயர்கள், தந்தையொடும் மக்கள் முறைமையொடும் புணரும் வழி, திரிபிடனில - முற்கூறிய திரிபுகளின்றி இயல்பாய் முடியும் எ-று. எ-டு: தான்றந்தை பேன்றந்தை கோன்றந்தை எனவும், தான்கொற் றன் பேன்கொற்றன், கோன்கொற்றன் எனவும் வரும். பேன் கோன் என்பன முற்காலத்து வழக்கு. இவை தொகைமரபினுள் ‘அஃறிணை விரவுப்பெயர்’ (எழுத். 155) என்புழி இயல்பாயினவேனும் ஈண்டு இவ்வீற்றிற்குத் திரிபு கூறுதலின், அதனை விலக்கி இயல்பாமென்ப தூஉங் கூறினார். (56) தான், யான் எனுமிவை தன், என் எனத் திரிதல் 352. தான்யா னெனும்பெயர் உருபியல் நிலையும். இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, தொகை மரபினுள் ‘அஃறிணை விரவுப் பெயர்’ (எழுத். 155) என்பதனானே இயல்பாய் நின்ற தான் என்பதனையும், ‘உயிரீறாகிய’ (எழுத். 153) என்பதனான் இயல்பாய் நின்ற யான் என்பதனையும் அவ்வியல்பு விலக்கி உருபியலொடு மாட்டெறிதலின். (இ-ள்.) தான் யான் எனும் பெயர் - தான் என்னும் விரவுப் பெயரும் யான் என்னும் உயர்திணைப் பெயரும், உருபியல் நிலையும் - உருபியலிற் கூறிய இயல்பிலே நிலைபெற்றுத் தான் என்பது நெடுமுதல் குறுகித் தன் என்றும், யான் என்பது ஆகாரம் எகரமாய் யகரங் கெட்டு என் என்றும் முடியும் எ-று. எ-டு: தன்கை, என்கை செவி தலை புறம் என வரும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்துக்கண்ணுந் தன்ஞாண் என்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வரும். (57) அல்வழிக்கண் அவை இயல்பாய் முடிதல் 353. வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலுந் தோற்ற மில்லை என்மனார் புலவர். இஃது அல்வழிக்கண் இயல்பாக என்றலின் எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) வேற்றுமை அல்வழி - முற்கூறிய தான் யான் என்பன வேற்றுமைப் புணர்ச்சி யல்லாதவிடத்து, குறுகலுந் திரிதலுந் தோற்ற மில்லை என்மனார் புலவர் - தான் என்பது நெடுமுதல் குறுகுதலும் யான் என்பது அவ்வாறு திரிதலுந் தோற்றமின்றி இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: தான்குறியன் சிறியன் தீயன் பெரியன் ஞான்றான் நீண்டான் மாண்டான் வலியன் எனவும்; யான் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் ஞான்றேன் நீண்டேன் மாண்டேன் வலியேன் எனவும் வரும். ‘தோற்றம்’ என்றதனான், வேற்றுமைக்கண் அவ்வாறன்றி னகரம் திரிதலுங் கொள்க. எ-டு: தற்புகழ் தற்பாடி, எற்புகழ் எற்பாடி என வரும். (58) ‘அழன்’ வேற்றுமை முடிபு 354. அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே. இது வேற்றுமைக்கண் னகரந் திரியாது கெடுக என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) அழன் என் இறுதிகெட - அழனென்னுஞ் சொல் தன் ஈற்று னகரங் கெட, வல்லெழுத்து மிகும் - வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: அழக்குடம் சாடி தூதை பானை என வரும். அழக்குட மென்பது பிணக்குடத்தை. (59) ‘முன்’, ‘இல்’லொடு புணர்வழி இலக்கணமரூஉமுடிபு 355. முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை றகர மொற்றல் தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே. இது ‘மருவின்றொகுதி’ (எழுத். 111) என்பதனாற் கூறிய இலக்கண மரூஉக்களின் ஒன்றற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவி மிசை - முன்னென்னுஞ் சொல்லின் முன்னே வரும் இல்லென்னுஞ் சொல்லின் மேலே, றகரம் ஒற்றல் - ஒரு றகர வொற்று வந்து நின்று முடிதல், தொல்லியல் மருங்கின் மரீஇய மரபு - பழையதாகிய இயல்பினையுடைய வழக்கிடத்து மருவி வந்த இலக்கண முடிபு எ-று. எ-டு: முன்றில் என வரும். ‘இல்முன்’ என நிற்கற்பாலது, முன்றில் என்று தலைதடுமாறுதலின் மரூஉவாயிற்று. முன்னென்பதற்கு ஒற்றிரட்டுதல் இலக்கணமேனும், அஃதன்றித் தனக்கு இனமாயதொரு றகர வொற்றுப் பெறுதலின் வேறு முடிபாயிற்று. (60) ‘பொன்’ செய்யுள்முடிபு பெறுமாறு 356. பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரிய லான. இஃது அவ்வீற்றுப் பெயரொன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதலின் எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) பொன் என் கிளவி ஈறு கெட - பொன் என்னுஞ் சொல் தன் ஈறாகிய னகரங் கெடாநிற்க, முன்னர் லகார மகாரம் முறையில் தோன்றும் - அதன்முன்னர் லகரமும் மகரவொற்றும் முறையானே வந்து நிற்கும், செய்யுள் மருங்கின் தொடரியலான - அங்ஙனம் நிற்பது செய்யுளிடத்துச் சொற்கள் தம்முள் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண் எ-று. ‘முறையின்’ என்றதனான், மகரம் ஒற்றாதல் கொள்க. எ-டு: ‘பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ (மலைபடு. 574) என வரும். ‘தொடரியலான’ என்றதனானே, வன்கணத்துக்கண்ணும் லகரம் நிற்க, மகரம் வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிதல் கொள்க. ‘பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை’ (அகம். 16), ‘பொலஞ்சுட ராழி பூண்ட தேரே’, ‘பொலந்தார்க் குட்டுவன்’ (புறம். 343) என வரும். இன்னும் இதனானே, ‘பொலநறுந்தெரியல்’ (புறம். 29) ‘பொலமல ராவிரை’ (கலி. 138) என்றாற் போல மகரங் கெட்டுப் பிறகணத்து முடிதலுங் கொள்க. (61) யகர ஈற்றுப்பெயரது வேற்றுமை முடிபு 357. யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே. இது முறையானே யகர ஈற்றிற்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் - யகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகும் - வல்லெழுத்து முதன் மொழி வந்து இயையின் அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: நாய்க்கால் செவி தலை புறம் என வரும். (62) ‘தாய்’ இயல்பாய் முடிதல் 358. தாயென் கிளவி யியற்கை யாகும். இது விரவுப்பெயருள் ஒன்றற்கு எய்திய வல்லெழுத்து விலக்கிற்று. (இ-ள்.) தாயென் கிளவி இயற்கையாகும் - தாயென்னுஞ் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் எ-று. எ-டு: தாய்கை செவி தலை புறம் என வரும். மேலைச் சூத்திரத்தான் மிகுதியுங் கூறுதலின், ‘அஃறிணை விரவுப் பெயருள்’ (155) அடங்காதாயிற்று. (63) ‘மகன்தாய்’ மகன்வினை வருவழி முடியுமாறு 359. மகன்வினை கிளப்பின் முதனிலை இயற்றே. இஃது எய்தாதது எய்துவித்தது; தாயென்பது அடையடுத்துழி வல்லெழுத்து மிகுக என்றலின். (இ-ள்.) மகன் வினை கிளப்பின் - தாயென்னுஞ் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின்னாக ஒருவன் கூறுமிடத்து, முதல் நிலை இயற்று - இவ்வீற்றுள் முதற்கட் கூறிய நிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: மகன்றாய்க்கலாம் செரு துறத்தல் பகைத்தல் என வரும். மகன் தாயொடு கலாய்த்த கலாம் என விரியும். ஏனையவற்றிற்கும் ஏற்கும் உருபு விரிக்க. வினை, ஈண்டுப் பகைமேற்று. (64) இவ்வீற்றுப்பெயர் மெல்லெழுத்தோடு உறழ்வனவும் உளவாதல் 360. மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே. இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) மெல்லெழுத்து உறழும் மொழியுமாருள - யகர ஈற்றுள் அதிகார வல்லெழுத்தினொடு மெல்லெழுத்து மிக்கு உறழ்ந்து முடிவனவும் உள எ-று. எ-டு: வேய்க்குறை வேய்ங்குறை செய்கை தலை புறம் எனவரும்.(65) இவ்வீற்றது அல்வழிமுடிபு 361. அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப. இஃது அவ்வீற்று அல்வழிக்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அல்வழி எல்லாம் இயல்பென மொழிப - யகர ஈற்று அல்வழி எல்லாம் இயல்பாய் முடியும் என்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: நாய்கடிது சிறிது தீது பெரிது என வரும். ‘எல்லாம்’ என்றதனான், அவ்வாய்க்கொண்டான் இவ்வாய்க் கொண்டான் உவ்வாய்க்கொண்டான் எவ்வாய்க்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என உருபின் பொருள்பட முடிவனவும், தாய்க் கொண்டான் தூய்ப்பெய்தான் என்றாற்போலும் வினையெச்சமும், பொய்ச்சொல் மெய்ச்சொல் எய்ப்பன்றி என்றாற்போலும் பண்புத் தொகையும், வேய்க்கடிது வேய்கடிது என்னும் அல்வழி யுறழ்ச்சி முடிவுங் கொள்க. (66) ரகார ஈற்றுப் பெயரது வேற்றுமை முடிபு 362. ரகார இறுதி யகார இயற்றே. இது நிறுத்த முறையானே ரகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ரகார இறுதி - ரகார ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், யகார இயற்று-யகார ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: தேர்க்கால் செலவு தலை புறம் என வரும். இம்மாட்டேற்றினை, யகர ஈற்று வேற்றுமை அல்வழி யென்னும் இரண்டையும் கருதி மாட்டெறிந்தாரென்பர், அல்வழி முடிபும் ஈண்டுக் காட்டுவர். யாம் இவ்வோத்தின் புறனடையாற் காட்டுதும். இது ழகர ஈற்றிற்கும் ஒக்கும். மாட்டேற்றான் உறழ்ச்சியுங் கொள்க. வேர்க்குறை வேர்ங்குறை என வரும். (67) ஆர் முதலிய நான்கும் மெலி மிகப்பெறுதல் 363. ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும். இஃது இவ்வீற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் - ஆரென்னுஞ் சொல்லும் வெதிரென்னுஞ் சொல்லும் சாரென்னுஞ் சொல்லும் பீரென்னுஞ் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் - மெல்லெழுத்து மிக்கு முடிதல் மெய்ம்மை பெறத் தோன்றும் எ-று. எ- டு: ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பீர்ங்கொடி, செதிள் தோல் பூ என வரும். பீர் மரமென்பார் பீர்ங்கோடென்பர். ‘பீர்வாய்ப் பிரிந்தநீர் நிறை முறை செய்து’ என்றாற்போலச் சான்றோர் பலருஞ் செய்யுள் செய்தவாறு காண்க. ‘மெய்பெற’ என்றதனான், ‘ஆரங் கண்ணி யடுபோர்ச் சோழர்’ (அகம். 93) என ஆர் அம்முப்பெறுதலும், ‘மாரிப் பீரத் தலர்சில கொண்டே’ (குறுந். 98) எனப் பீர் அத்துப் பெறுதலுங் கொள்க. இதனை அதிகாரப் புறனடையான் முடிப்பாரும் உளர். இன்னும் இதனானே, கூர்ங்கதிர்வேல் ஈர்ங்கோதை என்றாற்போலவும், குதிர்ங்கோடு விலர்ங் கோடு அயிர்ங்கோடு துவர்ங்கோடு சிலிர்ங்கோடு என்றாற் போலவும் மெல்லெழுத்து மிகுவன கொள்க. இன்னும் இதனானே, துவரங்கோடு என அம்முப் பெறுதலுங் கொள்க. (68) ‘சார்’, ‘காழ்’ வருவழிப் புணருமாறு 364. சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. (இ-ள்.) சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும் - சார் என்பது காழ் என்பதனொடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும் எ-று. எ-டு: சார்க்காழ் என வரும். சாரினது வித்தென்பதே பொருள். இதனை வயிரமெனிற் கிளந் தோதுவாரென்று உணர்க. (69) ‘பீர்’ அம்முச் சாரியையொடும் முடிதல் 365. பீரென் கிளவி அம்மொடுஞ் சிவணும். இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. (இ-ள்.) பீர் என் கிளவி அம்மொடுஞ் சிவணும் - பீர் என்னுஞ் சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முப் பெற்றும் முடியும் எ-று. எ-டு: பீரங்கொடி செதிள் தோல் பூ எனவும், ‘பொன் போற் பீரமொடு பூத்த புதன்மலர்’ (நெடுநல். 14) எனவும் வரும்.(70) உம்மை இறந்தது தழீஇயிற்று. லகார ஈற்றுப்பெயரது வேற்றுமை முடிபு 366. லகார இறுதி னகார இயற்றே. இது முறையானே லகார ஈற்றை வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் புணர்க்கின்றது. (இ-ள்.) லகார இறுதி னகார இயற்று - லகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்துழி னகார ஈற்று இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடியும் எ-று. எ-டு: கற்குறை சிறை தலை புறம், நெற்கதிர் சோறு தலை புறம் எனவரும். (71) இவ்வீறு இருவழியும் மென்கணம் வருவழித் திரிதல் 367. மெல்லெழுத் தியையின் னகார மாகும். இது னகாரமாம் என்றலின் அதற்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் னகார மாகும் - அவ்வீறு மென்கணம் வந்து இயையின் னகரமாகத் திரிந்து முடியும் எ-று. எ-டு: கன்ஞெரி நுனி முரி என வரும். இச்சூத்திரத்தினை வேற்றுமை யிறுதிக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் சிங்கநோக்காக வைத்தமையான், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. எ-டு: கன்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (72) இவ்வீற்று அல்வழிமுடிபு 368. அல்வழி யெல்லாம் உறழென மொழிப. இஃது அவ்வீற்று அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அல்வழியெல்லாம் உறழென மொழிப - இவ்வீற்று அல்வழிகளெல்லாம் தந்திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியுமென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: கல்குறிது கற்குறிது சிறிது தீது பெரிது என வரும். ‘எல்லாம்’ என்றதனாற், கல்குறுமை கற்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குணம்பற்றிவந்த வேற்றுமைக்கும் உறழ்ச்சி கொள்க. இன்னும் இதனானே வினைச்சொல்லீறு திரிந்தனவும் உருபு திரிந்தனவுங் கொள்க. எ-டு: வந்தானாற்கொற்றன் பொருவானாற்போகான் எனவும் அத்தாற்கொண்டான் இத்தாற்கொண்டான் உத்தாற் கொண்டான் எத்தாற்கொண்டான் எனவும் வரும். அக்காற் கொண்டான் என்றாற்போலப் பிறவும் முடிபு உள்ளன வெல்லாம் இதனான் முடித்துக் கொள்க. (73) லகரம் ஆய்தமாகவும் திரிந்துநிற்குமிடன் 369. தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே. இது லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகவும் திரியுமென்ற லின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் - தகரம் முதலாகிய மொழி வந்தால் லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்து நிற்றலும், புகர் இன்று என்மனார் புலமையோர் - குற்றமின்றென்று சொல்லுவார் ஆசிரியர் எ-று. எ-டு: கஃறீது கற்றீது என வரும். ‘புகரின்று’ என்றதனான், ‘நெடியதனிறுதி’ (எழுத். 370) என்பதனுள் வேறீது வேற்றீது என்னும் உறழ்ச்சி முடிபுங் கொள்க. (74) தனிநெடிலொற்று(த் திரிந்து உறழ்தலேயன்றி) இயல்பாதலும் உண்மை 370. நெடியதன் இறுதி இயல்புமா ருளவே. இஃது ‘அல்வழியெல்லாமுறழ்’ (எழுத். 368) என்றதனோடு இயல்பாக என்றலின், எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தது. (இ-ள்.) நெடியதன் இறுதி இயல்புமாருள - நெட்டெழுத்தின் ஈற்று லகார ஈறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம் போலத் திரிந்து உறழ்தலே யன்றி இயல்பாய் முடிவனவும் உள எ-று. எ-டு: பால்கடிது தீது பெரிது எனவரும். இயல்பாகாது திரிந்தன வேற்கடிது என்றாற்போல்வன. (75) நெல் முதலிய நாற்சொல்லும் அல்வழிக்கண் முடியுமாறு 371. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல. இஃது அல்வழிக்கண் உறழ்ந்து முடிக என்றதனை வேற்றுமை முடிபைப் பெறும் என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் - நெல்லென் னுஞ் சொல்லும் செல்லென்னுஞ் சொல்லும் கொல்லென்னுஞ் சொல்லும் சொல்லென்னுஞ் சொல்லுமாகிய இந் நான்கு சொல்லும், அல்லது கிளப்பி னும் வேற்றுமை இயல - அல்வழியைச் சொல்லுமிடத்துந் தாம் வேற்றுமை முடிபின் இயல்பினவாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடியும் எ-று. உம்மை சிறப்பு. எ-டு: நெற்காய்த்தது. செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது; சிறிது தீது பெரிது என வரும். (76) ‘இல்’ எனும் வினைக்குறிப்பு முடிந்து நிற்குமாறு 372. இல்லென் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐயிடை வருதலும் இயற்கை யாதலும் ஆகாரம் வருதலும் கொளத்தகு மரபின் ஆகிட னுடைத்தே. இஃது இவ்வீற்று வினைக்குறிப்புச் சொல்லுள் ஒன்றற்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) இல்லென் கிளவி இன்மை செப்பின் - இல்லென்னுஞ் சொல் இருப்பிடமாகிய இல்லை உணர்த்தாது ஒரு பொருளினது இல்லாமையை உணர்த்தும் இடத்து, வல்லெழுத்து மிகுதலும் - வல்லெழுத்து முதன் மொழி வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடிதலும், ஐ இடை வருதலும் - ஐகாரம் இடையே வருதலும், இயற்கையாதலும் - இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், ஆகாரம் வருதலும் - ஆகாரம் வந்து முடிதலுமாகிய இந் நான்கு முடிபும், கொளத்தகு மரபின் - சொற்குமுடிபாகக் கொளத்தகும் முறையானே, ஆகிடனுடைத்து - தன் முடிபாம் இடன் உடைத்து எ-று. ‘கொளத்தகு மரபின்’ என்றதனான் வல்லெழுத்து முதன்மொழி வந்துழி ஐகாரம் வருதலும், ஐகாரம் வந்துழி வல்லெழுத்து மிகுதலும் மிகாமையும், ஆகாரம் வந்துழி வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. எ-டு: ‘இல்’ என நிறுத்திக், கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் எனத் தந்து வல்லெழுத்தும் ஐகாரமுங் கொடுத்து இல்லைக் கொற்றனென ஏனையவற்றோடும் ஒட்டுக. இன்னும் அவ்வாறே நிறுத்தி, ஐகாரமே கொடுத்து இல்லைகொற்றன், சாத்தன் தெளிவு பொருள் என வல்லெழுத்து மிகாது முடிக்க. இன்னும் ‘கொளத்தகு மரபின்’ என்றதனான், ஏனைக்கணத்தின் முன்னும் ஐகாரமே கொடுத்து இல்லை ஞாண் நூல் மணி வானம் ஆடை என ஒட்டுக. இஃது, இல் என்பதொரு முதனிலை நின்று வருமொழியோடு இங்ஙனம் புணர்ந்ததென்பது உணர்தற்கு ‘இல்லென்கிளவி’ என்றும், ‘இயற்கையாதலும்’ என்றும் கூறினார். இம்முடிபு வினையியலுள் விரவு வினைக்கண் ‘இன்மைசெப்பல்’ என்புழி ‘இல்லை இல்’ (சொல். 222) என்று உரை கூறியவதனானும், ‘அவனில்லை’ என்றாற்போல்வன உதாரணமாக எல்லா ஆசிரியருங் காட்டியவாற்றானும் உணர்க. இதனானே, இங்ஙனம் புணர்த்த சொல்லன்றி ‘இல்லை’ என ஐகார ஈறாய் நிற்பதொரு சொல் இன்மையும் உணர்க. ஆயின், இன்மை முதலியவற்றையும் இவ்வாறே புணர்க்க எனின், அவை வருமொழியின்றி ஒரு சொல்லாய் நிற்றலின் புணர்க்காராயினார். இனி, இயல்பு வருமாறு:- எண்ணில்குணம் செய்கை துடி பொருள் எனவும், பொய்யில்ஞானம், ‘மையில்வாண்முகம்’ (கலி. 7) எனவும் வரும். இனி, ஆகாரம் வருமாறு:-இல்லாக்கொற்றன் சாத்தன் தேவன் பொருள் என ஆகாரம் வல்லெழுத்துப் பெற்று வரும். பிற்கூறிய இரண்டும் இல்லென்னும் வினைக்குறிப்பு முதனிலை யடியாகத் தோன்றிய பெயரெச்ச மறை தொக்கும் விரிந்தும் நின்றன. இயல்பு முற்கூறாததனான், இம்முடிபிற்கு வேண்டுஞ் செய்கை செய்க. தாவினீட்சி என்றாற்போல் வேறுபட வருவனவற்றிற்கும் வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. (77) ‘வல்’ தொழிற்பெயர்போல உகரம் பெற்று முடிதல் 373. வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. இஃது இருவழியுந் திரிந்தும் உறழ்ந்தும் வருமென எய்தியதனை விலக்கித் தொழிற்பெயரொடு மாட்டெறிதலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) வல் என் கிளவி - வல்லென்னுஞ் சொல் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும், தொழிற்பெயர் இயற்று - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத் தும் இடைக் கணத்து வகாரத்தும் உகரமும் பெற்று முடியும் எ-று. எ-டு: வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். (78) ‘நாய்’ ‘பலகை’ வருவழி, ‘வல்’ முடியுமாறு 374 நாயும் பலகையும் வரூஉங் காலை ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே உகரங் கெடுவழி அகரம் நிலையும். இஃது எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) நாயும் பலகையும் வரூஉங் காலை - வல்லென்பதன் முன் நாயென்னுஞ் சொல்லும் பலகையென்னுஞ் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, ஆவயின் உகரங் கெடுதலும் உரித்து - அவ்விடத்து உகரம் கெடாது நிற்றலேயன்றிக் கெட்டு முடியவும் பெறும், உகரங்கெடுவழி அகரம் நிலையும் - அவ்வுகரங் கெடுமிடத்து அகரம் நிலைபெற்று முடியும் எ-று. எ-டு: வல்ல நாய், வல்லப்பலகை என வரும். உம்மை எதிர்மறையாகலான் உகரங் கெடாதே நின்று, வல்லுநாய் வல்லுப்பலகை என வருதலுங் கொள்க. ‘அகரம் நிலையும்’ என்னாது ‘உகரங் கெடும்’ என்றதனாற் பிற வருமொழிக்கண்ணும் இவ்வகரப்பேறு கொள்க. எ-டு: வல்லக் கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (79) ‘பூல்’ முதலிய மூன்றும் அம்முப் பெறுதல் 375. பூல்வே லென்றா ஆலென் கிளவியோடு ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே. இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) பூல் வேல் என்றா ஆலென் கிளவியோடு ஆ முப்பெயர்க்கும் - பூலென்னுஞ் சொல்லும் வேலென்னுஞ் சொல்லும் ஆலென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயர்க்கும், அம் இடை வரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடைவந்து முடியும் எ-று. எ-டு: பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு, செதிள் தோல் பூ என வரும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்புகணத்தும் ஒட்டுக. எ-டு: பூலஞெரி, வேலஞெரி, ஆலஞெரி, நீழல் விறகு எனவரும். ‘என்றா’ என எண்ணிடை யிட்டமையாற், பூலாங்கோடு பூலாங்கழி என ஆகாரம் பூலுக்குக்கொள்க. (80) இவ்வீற்றுத் தொழிற்பெயர் பிற ஈற்றுத் தொழிற்பெயர் அனையவாதல் 376. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணுந் திரிபும் உறழ்ச்சியும் விலக்கி ஞகாரஈற்றுத் தொழிற் பெயரொடு மாட்டெறிதலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) தொழிற்பெயரெல்லாம் - லகார ஈற்றுத் தொழிற் பெய ரெல்லாம், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற்பெயரின் இயல்பினவாய் இருவழியும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்றுமுடியும் எ-று. எ-டு: புல்லுக்கடிது, கல்லுக்கடிது, வல்லுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். இவற்றிற்குப் புல்லுதல், கல்லுதல், வல்லுதல் எனப் பொருளுரைக்க, இனி, ‘எல்லாம்’ என்றதனான், தொழிற்பெயர்விதி எய்தாது பிறவிதி எய்துவனவுங் கொள்க. எ-டு: கன்னல்கடிது, பின்னல்கடிது, கன்னற்கடுமை, பின்னற் கடுமை எனவும் வரும். இதனானே, மென்கணம் வந்துழிப் பின்னன் ஞான்றது நீண்டது மாண்டது, பின்னன் ஞாற்சி நீட்சி மாட்சி என ஒட்டுக. இனி, ஆடல் பாடல் கூடல் நீடல் முதலியனவும் அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் முடிதல் இதனாற் கொள்க. (81) ‘வெயில்’ அத்தும் இன்னும் பெற்று முடிதல் 377. வெயிலென் கிளவி மழையியல் நிலையும். இது திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) வெயில் என் கிளவி மழையியல் நிலையும் - வெயிலென்னுஞ் சொல் மழையென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்று முடியும் எ-று. மழை என்பதனை ‘வளியென வரூஉம்’ (எழுத். 242) என்பதனுடனும், வளியென்பதனைப் ‘பனியெனவரூஉம்’ (எழுத். 241) என்பதனுடனும் மாட்டெறிந்தவாறு காண்க. எ-டு: வெயிலத்துக்கொண்டான் வெயிலிற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். இஃது, அத்துமிசை யொற்றுக் கெடாது நின்ற இடம். இஃது, ‘அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து’ (எழுத். 133) மிக்கது, அதிகார வல்லெழுத்தின்மையின். இயல்பு கணத்துங் கொள்க, சாரியை வருமொழி வரையாது கூறினமையின். (82) சுட்டு முதல் வகரம் வற்றொடு சிவணி முடிதல் 378. சுட்டுமுத லாகிய வகர இறுதி முற்படக் கிளந்த உருபியல் நிலையும். இது முறையானே வகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதலாகிய வகர இறுதி - வகர ஈற்றுப் பெயர் நான்கனுள் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுப் பெயர் மூன்றும், முற்படக் கிளந்த உருபியல் நிலையும் - முற்படக் கூறிய உருபு புணர்ச்சியின் இயல்பினவாய் வற்றுப் பெற்று முடியும் எ -று. எ-டு: அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு, செவி தலை புறம் என வரும். ‘முற்படக் கிளந்த’ என்றதனானே, வற்றினோடு இன்னும் பெறுதல் கொள்க. அவற்றின் கோடு இவற்றின் கோடு உவற்றின் கோடு செவி தலை புறம் என ஒட்டுக. இஃது ஏனைக் கணத்தோடும் ஒட்டுக. (83) அவ்வகரம் அல்வழிக்கண் ஆய்தமாதல் 379. வேற்றுமை யல்வழி ஆய்த மாகும். இது மேலனவற்றிற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமை யல்வழி ஆய்த மாகும் - அச்சுட்டுமுதல் வகரம் வன்கணத்துக்கண் வேற்றுமை யல்லாத இடத்து ஆய்தமாய்த் திரிந்து முடியும் எ-று. எ-டு: அஃகடிய இஃகடிய உஃகடிய சிறிய தீய பெரிய என வரும். இவ்வழக்கு இக்காலத்து அரிது. (84) அவ்வகரம், மென்கணத்தொடு முடியுமாறு 380. மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும். இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத்தாகும் - அவ்வகர ஈறு மென்கணம் வந்து இயையுமாயின் அவ்வகரவொற்று அவ்வம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும் எ-று. எ-டு: அஞ்ஞாண் இஞ்ஞாண் உஞ்ஞாண், நூல் மணி எனவரும்.(85) ஏனை இடை உயிர்க்கணங்கள் வருவழி இயல்பாதல் 381. ஏனவை புணரின் இயல்பென மொழிப. இதுவும் அது, அவ்வீறு ஏனைக் கணங்களொடு புணருமாறு கூறுதலின். (இ-ள்.) ஏனவை புணரின்-அச்சுட்டுமுதல் வகர ஈற்றோடு இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணருமாயின், இயல்பென மொழிப - அவ்வகரந் திரியாது இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ், வட்டு அடை ஆடை என ஒட்டுக. ஈண்டுக் கூறியது நிலைமொழிக்கென்றும், ஆண்டு ‘நின்ற சொன்மு னியல் பாகும்’ (எழுத். 144) என்றது வருமொழிக் கென்றும் உணர்க. (86) ‘தெவ்’ தொழிற்பெயர் போல உகரம் பெற்று முடிதல் 382. ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) ஏனை வகரம் - ‘வகரக்கிளவி நான்மொழி யீற்றது’ (எழுத். 81) என்றதனுள் ஒழிந்து நின்ற உரிச்சொல்லாகிய வகரம் இருவழியும், தொழிற்பெயர் இயற்று - ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் எ-று. எ-டு: தெவ்வுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், தெவ்வுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். ‘உரையிற் கோடல்’ என்பதனான், தெம்முனை என வகரவொற்று மகர வொற்றாகத் திரிதல் கொள்க. (87) ழகார ஈற்றுப்பெயரது வேற்றுமை முடிபு 383. ழகார இறுதி ரகார இயற்றே. இது நிறுத்த முறையானே ழகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ழகார இறுதி ரகார இயற்று - ழகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார ஈற்றின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: பூழ்க்கால், சிறகு தலை புறம் என வரும். (88) ‘தாழ்’, ‘கோல்’ உருவழி முடியுமாறு 384. தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருதல் உரித்து மாகும். இஃது இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, வல்லெழுத்தினோடு அக்கு வகுத்தலின். (இ-ள்.) தாழ் என் கிளவி கோலொடு புணரின் - தாழென்னுஞ் சொல் கோலென்னுஞ் சொல்லொடு புணரும் இடத்து, அக்கு இடைவருதலும் உரித்தாகும் - வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடையே வந்து நிற்றலும் உரித்து எ-று. உரித்துமாகும் என்ற உம்மையை வருதலும் என மாறுக. எனவே, அக்குப்பெறாது வல்லெழுத்து மிகுதல் வலியுடைத் தாயிற்று. எ-டு: தாழக்கோல், தாழ்க்கோல் என வரும். இது தாழைத் திறக்குங்கோல் என விரியும். (89) ‘தமிழ்’ அக்கும் பெற்று முடிதல் 385. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. இதுவும் அது. (இ-ள்.) தமிழ் என் கிளவியும் - தமிழென்னுஞ் சொல்லும், அதனோ ரற்று - வல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி அக்குச்சாரியை பெற்றும் முடியும் எ-று. ‘அதனோரற்றே’ என்றதனான், இதற்குத் தமிழ்க்கூத்தென வல்லெழுத்து மிகுதலே வலியுடைத்து. எ-டு: தமிழக்கூத்து, சேரி தோட்டம் பள்ளி என வரும். தமிழையுடைய கூத்து என விரிக்க. தமிழவரையர் என்றாற்போல, வல்லெழுத்துப் பெறாது அக்குப் பெற்றன, ‘உணரக்கூறிய’ (எழுத். 405) என்னும் புறனடையாற் கொள்க. தமிழநாடு தமிழ்நாடு என ஏனைக் கணத்து முடிபு, ‘எப்பெயர் முன்னரும்’ (எழுத். 128) என்பதனுள், ‘முற்ற’ என்றதனான் முடித்தாம். (90) ‘குமிழ்’ மரப்பெயர் மெல்லெழுத்துப் பெற்றுமுடிதல் 386. குமிழென் கிளவி மரப்பெய ராயின் பீரென் கிளவியோ(டு) ஓரியற் றாகும். இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்தும் அம்மும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. (இ-ள்.) குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - குமிழ் என்னும் சொல் குமிழ்த்தல் என்னுந் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியோடு ஓர் இயற்று ஆகும் - பீர் என்னும் சொல்லோடு ஓரியல்பிற்றாய் ஒருவழி மெல்லெழுத்தும் ஒருவழி அம்மும் பெற்று முடியும் எ-று. எ-டு: குமிழ்ங்கோடு, குமிழங்கோடு, செதிள் தோல் பூ என வரும். ‘ஓரியற்று’ என்றதனான், பிறவற்றிற்கும் இம்முடிபு கொள்க. மகிழ்ங்கோடு, மகிழங்கோடு என ஒட்டுக. (91) ‘பாழ்’ வேற்றுமையுள் முடியுமாறு 387. பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே. இது வல்லெழுத்தினொடு மெல்லெழுத்துப் பெறுக என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு - பாழென்னுஞ் சொல்லீறு வல்லெழுத்தினொடு மெல்லெழுத்துப் பெற்று உறழ்ந்து முடியும் எ-று. எ-டு: பாழ்க்கிணறு பாழ்ங்கிணறு சேரி தோட்டம் பாடி என ஒட்டுக. இது பாழுட்கிணறு என விரியும், பாழ்த்தகிணறு என வினைத் தொகை முடியாமையின். (92) ‘ஏழ்’ அன்சாரியை பெற்று முடிதல் 388. ஏழென் கிளவி உருபியல் நிலையும். இஃது எண்ணுப்பெயர் இவ்வாறு முடிக என்றலின், எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) ஏழ் என் கிளவி - ஏழென்னும் எண்ணுப்பெயர் இறுதி, உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சிக்கண் கூறிய இயல்பின்கண்ணே நிலைபெற்று அன்பெற்று முடியும் எ-று. அஃது ‘அன்னென் சாரியை யேழ னிறுதி’ (எழுத். 194) என்பதாம். எ-டு: ஏழன்காயம், சுக்கு தோரை பயறு என வரும். இயைபு வல்லெழுத்து ஓத்தின் புறனடையான் வீழ்க்க. இஃது ஏழனாற்கொண்ட காயம் என விரியும். (93) ‘ஏழ்’, அளவு நிறை எண்ணுப் பெயரொடு புணருமாறு 389. அளவும் நிறையும் எண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க. இது மேலதற்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அளவும் நிறையும் எண்ணும் வருவழி - அவ்வேழென்பதன் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் வருமொழியாய் வருமிடத்து, நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் கடிநிலையின்றே ஆசிரியர்க்க - முன்னின்ற நெட்டெழுத்தின் மாத்திரை குறுகுதலும் ஆண்டு உகரம் வருதலும் நீக்கு நிலைமையின்று ஆசிரியர்க்கு எ-று. எ-டு: எழுகலம், சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும்; எழுகழஞ்சு, தொடி பலம் எனவும், எழுமூன்று எழுநான்கு எனவும் வரும். ‘நிலை’ என்றதனான், வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம்முடிபு கொள்க. எழுகடல், சிலை திசை பிறப்பு எனவரும். (94) அப்பெயர் பத்து என்பதனொடு முடியுமாறு 390. பத்தென் கிளவி ஒற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி. இது மேலதற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தது, வருமொழி நோக்கி விதித்தலின். (இ-ள்.) பத்து என் கிளவி ஒற்றிடை கெடுவழி - அவ்வேழனொடு பத்தென்பது புணருமிடத்து அப்பத்தென் கிளவி இடையொற்றுக் கெடுவழி, ஆய்தப்புள்ளி நிற்றல்வேண்டும் - ஆய்தமாகிய புள்ளி நிற்றலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: எழுபஃது என வரும். (95) ‘ஆயிரம்’ வருவழி ‘ஏழ்’ முடியுமாறு 391. ஆயிரம் வருவழி உகரங் கெடுமே. இது நெடுமுதல் குறுகி நின்று உகரம் பெறாது என்றலின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தது. (இ-ள்.) ஆயிரம் வருவழி-ஏழென்பதன் முன் ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வருமொழியாய் வருமிடத்து, உகரங் கெடும்-நெடு முதல் குறுகிநின்று உகரம்பெறாது முடியும் எ-று. எ-டு: எழாயிரம் என வரும். (96) ‘நூறாயிரம்’ வருவழி, ‘ஏழ்’ இயல்பாய் முடிதல் 392. நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. இஃது எய்தியது முழுவதூஉம் விலக்கிற்று, உகரங்கெட்டு அதன் மேலே நெடுமுதல் குறுகாது என்றலின். (இ-ள்.) நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்கு - அவ்வேழென்பது நூறென்னுஞ் சொல்மேல் வரும் ஆயிரமென்னுஞ் சொல்லிற்கு, கூறிய நெடுமுதல் குறுக்கமின்று - முற்கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலின்று எ-று. எ-டு: ஏழ் நூறாயிரம் எனவரும். ‘கூறிய’ என்றதனான், நெடுமுதல் குறுகி உகரம் பெற்று எழு நூறாயிரம் எனவும் வரும். இதனானே, ஏழாயிரம் என மேல் முதனிலை குறுகாமையுங் கொள்க. இதனானே, எழுஞாயிறு எழுநாள் எழுவகை என இயல்புகணத்து நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலுங் கொள்க. (97) தாமரை முதலிய பேரெண்ணுப்பெயர் வருவழியும் அற்றாதல் 393. ஐஅம் பல்லென வரூஉ மிறுதி அல்பெய ரெண்ணினும் ஆயியல் நிலையும். இதுவும் அது. (இ-ள்.) ஐ அம் பல் என வரூஉம் இறுதி - அவ்வேழன் முன்னர் ஐயென்றும் அம்மென்றும் பல்லென்றும் வருகின்ற இறுதிகளையுடைய, அல்பெயர் எண்ணினும் - பொருட்பெயரல்லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன வந்தாலும், ஆ இயல் நிலையும் - நெடுமுதல் குறுகி உகரம் பெற்று வாராது அவ்வியல்பின் கண்ணே நின்று முடியும் எ-று. எ-டு: ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் என வரும். (98) உயிர்க்கணம் வருவழியும் இயல்பாதல் 394. உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. இதுவும் அது. (இ -ள்.) உயிர்முன் வரினும் - அவ்வேழென்பதன் முன்னர் அளவுப் பெயரும் எண்ணுப் பெயருமாகிய உயிர்முதன்மொழி வரினும், ஆ இயல் திரியாது - நெடுமுதல் குறுகி உகரம் பெற்று வாராது முடியும் இயல்பின் திரியாது முடியும் எ-று. எ-டு: ஏழகல், ஏழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு என வரும். (99) ‘கீழ்’ இயல்போடு உறழ்தல் 395. கீழென் கிளவி உறழத் தோன்றும். இஃது இவ்வீற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் உறழ்ச்சி கூறுகின்றது. (இ-ள்.) கீழ் என் கிளவி உறழத் தோன்றும் - கீழென்னுஞ் சொல் உறழ்ச்சியாய்த் தோன்றி முடியும் எ-று. ‘தோன்றும்’ என்றதனான், நெடுமுதல் குறுகாது வல்லெழுத்துப் பெற்றும் பெறாதும் வருமென்ற இரண்டும் உறழ்ச்சியாய் வருமென்று கொள்க. இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க. எ-டு: கீழ்க்குளம் கீழ்குளம், சேரி தோட்டம் பாடி என வரும். (100) ளகார ஈற்றுப்பெயரது வேற்றுமைமுடிபு 396. ளகார இறுதி ணகார இயற்றே. இது நிறுத்தமுறையானே ளகார ஈற்றுச்சொல் வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ளகார இறுதி ணகார இயற்று - ளகார ஈற்றுப் பெயர் ணகார ஈற்றின் இயல்பிற்றாய் வன்கணம் வந்துழி ளகாரம் டகாரமாய்த் திரிந்து முடியும் எ-று. எ-டு: முட்குறை, சிறை தலை புறம் என வரும். (101) மென்கணம் வருவழி இருவழியும் ளகரம் ணகரமாதல் 397. மெல்லெழுத் தியையின் ணகார மாகும். இது மேலதற்கு மென்கணத்து முடிபு கூறுகின்றது. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் ணகாரமாகும் - ளகார ஈறு மெல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் ணகரமாய்த் திரிந்து முடியும் எ-று. எ-டு: முண்ஞெரி, நுனிமரம் என வரும். இதனை வேற்றுமையிறுதிக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் ‘சிங்கநோக்காக’ வைத்தலின், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. எ-டு: முண்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (102) இவ்வீறு திரியாதும் திரிந்தும் உறழ்ந்துவரும் அல்வழி முடிபு 398. அல்வழி யெல்லாம் உறழென மொழிப. இது மேலதற்கு அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அல்வழியெல்லாம் - ளகார ஈறு அல்வழிக்கணெல்லாம், உறழென மொழிப - திரியாதும் டகாரமாய்த் திரிந்தும் உறழ்ந்து முடியு மென்று சொல்லுவர் புலவர் எ-று. எ-டு: முள்கடிது முட்கடிது, சிறிது தீது பெரிது என வரும். ‘எல்லாம்’ என்றதனான், குணவேற்றுமைக்கண்ணும் இவ்வுறழ்ச்சி கொள்க. முள்குறுமை முட்குறுமை, சிறுமை தீமை பெருமை எனவும், கோள்கடுமை கோட்கடுமை வாள்கடுமை வாட்கடுமை எனவும் ஒட்டுக. இதனானே, அதோட்கொண்டான் இதோட்கொண்டான் உதோட் கொண்டான் எதோட்கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என உருபு வாராது உருபின் பொருள்பட வந்தனவும் கொள்க. (103) தகரம் வருவழி ஆய்தமாகவும் திரிந்து நிற்கும் முடிபு 399. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான. இது மேலதற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தது, தகரம் வருவழி உறழ்ச்சியேயன்றி ஆய்தமாகத் திரிந்தும் உறழ்க என்றலின். (இ-ள்.) தகரம் வரூஉங் காலையான - தகர முதன்மொழி வருமொழி யாய் வருங்காலத்து, ஆய்தம் நிலையலும் வரைநிலையின்று - ளகாரம் டகாரமாகத் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்து நிற்றலும் நீக்கும் நிலைமையின்று எ-று. எ-டு: முஃடீது, முட்டீது என வரும். (104) தனிநெடிலிறுதி ளகரம் இயல்பாதலும், குற்றொற்று வேற்றுமைமுடிபு பெறுதலும் 400. நெடியத னிறுதி இயல்பா குநவும் வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே. இது மேலதற்கு, எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும் - அவ்வீற்று நெடியதன் இறுதி திரியாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும் - வேற்றுமையல்லாத விடத்து வேற்றுமையின் இயல்பை உடையனவாய்த் திரிந்து முடிதலையும், போற்றல் வேண்டும் மொழியுமாருள - போற்றுதல் வேண்டுஞ் சொற்களும் உள எ-று. எ-டு: கோள்கடிது, வாள்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும், ‘புட்டேம்பப் புயன்மாறி’ (பட்டினப்பாலை. 89) எனவும் வரும். ‘போற்றல் வேண்டும்’ என்றதனான், உதளங்காய் செதிள் பூ தோல் என அம்முப் பெறுதலுங் கொள்க. உதள் என்பது யாட்டினை உணர்த் துங்கால் முற்கூறிய முடிபுகள் இருவழிக்கும் ஏற்றவாறே முடிக்க. உதட் கோடு, உதள்கடிது, உதணன்று என ஒட்டுக. ‘மோத்தையுந் தகரும் உதளு மப்பரும்’ என்றார் மரபியலில் (47). (105) இவ்வீற்றுத் தொழிற்பெயர் முடிபு 401. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு இருவழியும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) தொழிற் பெயரெல்லாம் - ளகார ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம் இருவழியும், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் எ-று. எ-டு: துள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், துள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். ‘எல்லாம்’ என்றதனானே, இருவழியுந் தொழிற்பெயர்கள் உகரமும் வல்லெழுத்தும் பெறாது திரிந்துந் திரியாதும் முடிவனவுங் கொள்க. கோள்கடிது கோட்கடிது, கோள்கடுமை கோட்கடுமை என்பன போல்வன பிறவும் வரும். இனி, வாள்கடிது வாட்கடிது, சிறிது தீது பெரிது எனவும், வாள்கடுமை வாட்கடுமை எனவுங் காட்டுக. வாள் - கொல்லுதல். (106) ‘இருள்’ அத்தும் இன்னும் பெறுதல் 402. இருளென் கிளவி வெயிலியல் நிலையும். இது திரிபு விலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) இருள் என் கிளவி - இருளென்னுஞ் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், வெயிலியல் நிலையும் - வெயிலென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்று முடியும் எ-று. எ-டு: இருளத்துக் கொண்டான் இருளிற்கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என வரும். சாரியை வரையாது கூறினமையின், இயல்புகணத்தும் ஒட்டுக. எ-டு: இருளத்துஞான்றான், நீண்டான் மாண்டான்; இருளின் ஞான்றான் நீண்டான் மாண்டான் என வரும். (107) ‘புள்’, ‘வள்’ - இரண்டும் இருவழியும் உகரம் பெறுதல் 403. புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, திரிபும் உறழ்வும் விலக்கித் தொழிற்பெயர்விதி வகுத்தலின். (இ-ள்.) புள்ளும் வள்ளும் - புள்ளென்னும் சொல்லும் வள்ளென் னும் சொல்லும் இருவழிக்கண்ணும், தொழிற் பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத் தும், இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் எ- று. எ-டு: புள்ளுக்கடிது வள்ளுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், புள்ளுக்கடுமை வள்ளுக் கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். இதனைத் ‘தொழிற் பெயரெல்லாம்’ (எழுத். 401) என்பதன்பின் வையாததனான், இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவுங் கொள்க. எ-டு: புட்கடிது வட்கடிது சிறிது தீது பெரிது எனவும், புட்கடுமை வட்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், புண் ஞான்றது நீண்டது மாண்டது எனவும், புண்ஞாற்சி நீட்சி மாட்சி எனவும் வரும். புள்ளுவலிது புள்வலிது, புள்ளுவன்மை புள்வன்மை என வகரத்தின் முன்னர் உகரம் பெற்றும் பெறாதும் வருதலின், ‘நின்ற சொன்மு னியல் பாகும்’ (எழுத். 144) என்றதனான் முடியாமை உணர்க. இது வள்ளிற்கும் ஒக்கும். (108) ‘மக்கள்’ ஈற்று ளகரம் டகரமாகும் இடன் 404. மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி தக்கவழி அறிந்து வலித்தலு முரித்தே. இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, ‘உயிரீறாகிய உயர்திணைப்பெயர்’ (எழுத். 153) என்பதனுட் கூறிய இயல்பு விலக்கித் திரிபு வகுத்தலின். (இ-ள்.) மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி - மக்களென்னும் பெயர்ச்சொல் இறுதி இயல்பேயன்றி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து - தக்க இடம் அறிந்து வல்லொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து எ-று. ‘தக்கவழி’ யென்றார், பெரும்பான்மை மக்கள் உடம்பு உயிர் நீங்கிக் கிடந்த காலத்தின் அஃது இம்முடிபுபெறும் என்றற்கு. எ-டு: மக்கட்கை, செவி தலை புறம் என வரும். ‘இக்கிடந்தது மக்கட்டலை’ என்பதனுள் அவ்வாறாதல் கொள்க. மக்கள்கை, செவி, தலை, புறம் எனத் திரியாது நின்றது, உயிருண்மை பெற்றது. இனிச் சிறுபான்மை, மக்கட்பண்பு, மக்கட்சுட்டு எனவும் வரும். (109) இவ்வோத்துப் புறனடை 405. உணரக் கூறிய புணரியல் மருங்கிற் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே. இஃது இவ்வோத்தின்கண் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொண்டு, சாரியை பெறுவனவற்றிற்குச் சாரியையும், எழுத்துப் பெறுவனவற்றிற்கு எழுத்துங் கொடுத்து முடித்துக்கொள்க என்கின்றது. (இ-ள்.) உணரக் கூறிய புணரியல் மருங்கின் - உணரக்கூறப்பட்ட புள்ளியீறு வருமொழியொடு புணரும் இயல்பிடத்து, கண்டு செயற்கு உரியவை - மேல் முடித்த முடிபன்றி வழக்கினுட் கண்டு முடித்தற்கு உரியவை தோன்றியவழி, கண்ணினர் கொளல் - அவற்றையுங் கருதிக் கொண்டு ஏற்றவாறே முடிக்க எ-று. எ-டு: மண்ணப்பத்தம் என அல்வழிக்கண் ணகர ஈறு அக்குப் பெற்றது. மண்ணங்கட்டி என அம்முப்பெற்றது. பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது. பொன்னங்கட்டி என அம்முப் பெற்றது. கானங்கோழி என வேற்றுமைக்கண் அம்முப் பெற்றது. மண்ணாங்கட்டி கானாங்கோழி என்பன மரூஉ. வேயின்றலை என யகர ஈற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்துக் கெடுக்க. நீர்குறிது என ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பாயிற்று. வேர்குறிது வேர்க்குறிது இது ரகர ஈறு அல்வழி உறழ்ச்சி. வடசார்க்கூரை மேல்சார்க் கூரை இவை வல்லெழுத்து மிக்க மரூஉ முடிபு. அம்பர்க்கொண்டான் இம்பர்க்கொண்டான் உம்பர்க்கொண்டான் எம்பர்க்கொண்டான் என இவ்வீறு ஏழனுருபின் பொருள்பட வந்தன வல்லொற்றுப்பெற்றன. தகர்க்குட்டி புகர்ப்போத்து என்பன பண்புத்தொகை கருதிற்றேல் ஈண்டு முடிக்க; வேற்றுமையாயின் முன்னர் முடியும். விழலென்னும் லகர ஈறு வேற்றுமைக்கண் றகரமாகாது னகரமாய் முடிதல் கொள்க. விழன்காடு; செறு தாள் புறம் எனவரும். கல்லம்பாறை, உசிலங்கோடு, எலியாலங்காய், புடோலங்காய் என அவ்வீறு அம்முப் பெற்றது. கல்லாம்பாறை என்பது மரூஉ. அழலத்துக் கொண்டான் என அவ்வீறு அத்துப் பெற்றது. அழுக்கற்போர், புழுக்கற்சோறு என்பன அவ்வீற்று அல்வழித்திரிபு. யாழ்குறிது என்பது ழகர ஈற்று அல்வழி யியல்பு. வீழ்குறிது வீழ்க்குறிது என்பன அவ்வீற்று அல்வழியுறழ்ச்சி. தாழப்பாவை என்பது அவ்வீற்று அல்வழி அக்குப் பெற்றது. யாழின்கோடு செய்கை தலை புறம் என அவ்வீற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்க்க. முன்னாளைவாழ்வு, முன்னாளைப்பரிசு, ஒரு நாளைக்குழவி, ஒரு திங்களைக்குழவி என்றாற் போல்வன ளகார ஈறு ஐகாரமும் அதனோடு வல்லெழுத்தும் பெறுதல் கொள்க. பிறவும் இவ்வோத்தின் வேறுபட வருவன வெல்லாம் கொணர்ந்து இதனான் முடிக்க. குளத்தின் புறம், மரத்தின்புறம் என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலுங்கொள்க. இனிக் ‘கடிசொல் லில்லை’ (சொல். 452) என்பதனான், வழக்கின்கண் ணுஞ் செய்யுட்கண்ணும் வந்து திரிந்து முடியுஞ் சொற்களும் உள. அவற்றைக் ‘கண்ணினர் கொளலே’ என்பதனான், மண்ணுக்குப் போனான், பொன்னுக்கு விற்றான், பொருளுக்குப் போனான், நெல்லுக்கு விற்றான், கொள்ளுக்குக் கொண்டான், பதினேழு என்றாற்போல ‘வழக்கின்கண்’ உகரம் பெறுவனவும்; ‘விண்ணுக்குமேல்’, ‘மண்ணுக்கு நாப்பண்’ (திருக். 162), ‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள் சொல்லுக்குத் தோற்றின்னுந் தோற்றிலவால்-நெல்லுக்கு நூறோஒஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கு மாறோமா லன்றளந்த மண்’ என்றாற்போலச் செய்யுட்கண் உகரம்பெறுவனவும், பிறவும் முடிக்க. பற்கு நெற்கு என்பன முதலியனவுங் கொள்க. இவை உருபின் பொருள்படவாராது உருபின்கண் வந்தனவேனும் ஈண்டுக் காட்டினாம்; ஆண்டுப் ‘புள்ளியிறுதியும்’ (எழுத். 202) என்னும் உருபியற் சூத்திரத்து இலேசு கோடற்கு இடனின்றென்று கருதி. இனி, அச்சூத்திரத்துத் ‘தேருங் காலை’ என்றதனான் முடித்தலும் ஒன்று. (110) புள்ளிமயங்கியல் முற்றிற்று. 9 குற்றியலுகரப் புணரியல் குற்றியலுகரத்தின் பெயரும் முறையும் தொகையும் 406. ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொட ரிடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன். என்பது சூத்திரம். இவ்வோத்துக் குற்றியலுகரமென்று கூறப்பட்ட எழுத்துப் பொருட்பெயரோடும் எண்ணுப்பெயர் முதலியவற்றோடும் புணரும் முறைமை உணர்த்தினமையிற் ‘குற்றியலுகரப் புணரியல்’ என்னும் பெயர்த் தாயிற்று. இது ‘மெய்யே யுயிரென் றாயீ ரியல’ (எழுத். 103) என்றவற்றுள், உயிரினது விகாரமாய் நின்ற குற்றுகரத்தை இருவழிக்கண்ணும் புணர்க் கின்றமையின், மேலை ஓத்தினோடு இயைபுடைத்தாயிற்று. இத்தலைச் சூத்திரம், மொழிமரபினகத்து இருவழிய (36) என்ற குற்றுகரம், இதனகத்து இனைத்து மொழியிறுதி வருமென்று அவற்றிற்குப் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. அப்பெயர் பெயர், அம்முறை முறை, அத்தொகை தொகை. ‘தொடர்மொழி யீற்று’ (எழுத். 36) வருமென்று ஆண்டுக் கூறியவதனை ஈண்டு ஐந்து வகைப்படுத்தி, அதனொடு ‘நெட்டெழுத் திம்பரும்’ (எழுத். 36) என்றது ஒன்றே யாதலின் அதனையுங் கூட்டி அறுவகைத்தென்றார். (இ-ள்.) ஈரெழுத்தொருமொழி - இரண்டெழுத்தானாகிய ஒரு மொழியும், உயிர்த்தொடர் - உயிர்மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், இடைத்தொடர் - இடையொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆய்தத் தொடர்மொழி-ஆய்தமாகிய எழுத்து மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், வன்றொடர்-வல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், மென்றொடர் - மெல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆயிரு மூன்றே-ஆகிய அவ்வாறு சொல்லுமே, உகரங் குறுகு இடன் - உகரங் குறுகிவரும் இடம் எ-று. எ-டு: நாகு, வரகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும். இதனை ஏழென்று கொள்வார்க்குப் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க. (1) ஈரொற்றுத் தொடர்மொழி வன்தொடரும் மென்தொடரும் ஆதல் 407. அவற்றுள் ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொட ராகா. இஃது அவ்வாறனுள் ஒன்றற்கு, எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) அவற்றுள்-அவ்வாறனுள், ஈரொற்றுத் தொடர் மொழி-இரண்டொற்று இடைக்கண் தொடர்ந்து நிற்குஞ் சொல்லிற்கு இடையின ஒற்று முதல் நின்றால், இடைத் தொடராகா - மேல் இடையினந் தொடர்ந்து நில்லா, வல்லினமும் மெல்லினமுந் தொடர்ந்து நிற்கும் எ-று. எ-டு: ஆர்க்கு, ஈர்க்கு, நொய்ம்பு, மொய்ம்பு என வரும். (2) ஆறு ஈற்றினும் இருவழியும் உகரம் அரைமாத்திரையே பெறுதல் 408. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகர நிலையும். இஃது ‘இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே’ (எழுத். 37) என்றதனாற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறுகுமென எய்தியதனை விலக்கி ‘அவ்வியல் நிலையு மேனை மூன்றே’ (எழுத். 12) என்ற விதியே பெறுமென்கின்றது. (இ-ள்.) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லுமிடத்தும், வேற்றுமைக் கண்ணும் - வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும், எல்லா இறுதி யும் உகரம் நிலையும் - ஆறு ஈற்றின்கண்ணும் உகரந் தன் அரை மாத்திரை யைப் பெற்று நிற்கும் எ-று. வருமொழியானல்லது அல்வழியும் வேற்றுமையும் விளங்காமை யின், ‘அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்’ எனவே இருமொழிப் புணர்ச்சி என்பது பெற்றாம். இவ்விருமொழிக்கட் பழைய அரைமாத்திரை பெற்றே நிற்குமென்றார். அன்றி இருமொழிப் புணர்ச்சிக்கண் ஒரு மாத்திரை பெறுமென் றார்க்குப் பன்மொழிப் புணர்ச்சியாகிய செய்யுளிலக்கணத்து குற்றுக ரத்தான் நேர்பசை நிரைபசை கோடலும், அவற்றான் அறுபது வஞ்சிச்சீர் கோடலும், பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடை கோடலும் இலவாய் முற்றியலுகரமாகவே கொள்ள வேண்டுத லின் மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று உணர்க. எ-டு: நாகுகடிது, வரகுகடிது, நாகுகடுமை, வரகுகடுமை என வரும். இவை தம் அரைமாத்திரை பெற்றன. ஏனையவற்றோடும் ஒட்டுக. இனி, இது ‘மால்யாறுபோந்து கால்சுரந்துபாய்ந்து’ எனத் தொடர்மொழிக்கண்ணும் அரைமாத்திரை பெற்றது என்னாக்கால் வஞ்சிச்சீரின்றாமாறு உணர்க. (3) குற்றுகரம் அரைமாத்திரையினும் குறுகிநிற்குமிடன் 409. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே. இது முன்னின்ற சூத்திரத்தான் அரைமாத்திரை பெறும் என்றதனை விலக்கி ‘இடைப்படிற் குறுகு மிடனும்’ (எழுத். 37) என்றதனான் அரை மாத்திரையினும் குறுகுமென்று ஆண்டு விதித்தது ஈண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென்கின்றது. (இ-ள்.) வல்லொற்றுத் தொடர் மொழி - வல்லொற்றுத் தொடர் மொழிக்குற்றுகரம், வல்லெழுத்து வருவழி-வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து- ‘இடைப்படிற் குறுகும்’ (எழுத். 37) என்பதனாற் கூறிய அரைமாத்திரை யினுங் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து எ-று. உம்மை எதிர்மறை. எ-டு: கொக்குக்கடிது கொக்குக்கடுமை என அரை மாத்திரையிற் குறைந்தவாறு, குரங்குகடிது என்பது முதலியவற்றொடு படுத்துச் செவிகருவியாக உணர்க. முன்னின்ற சூத்திரத்து ‘உகர நிறையும்’ என்று பாடம் ஓதி, அதற்கு உகரம் அரைமாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி, இச்சூத்திரத்திற்குப் பழைய அரைமாத்திரை பெற்று நிற்குமென்று கூறுவாரும் உளர். (4) குற்றியலிகரம் புணர்மொழிக் கண்ணும் வருமாறு 410. யகரம் வருவழி இகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. இது குற்றியலிகரம் புணர்மொழியகத்து வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) யகரம் வருவழி உகரக்கிளவி துவரத் தோன்றாது - யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகர வெழுத்து முற்றத் தோன்றாது, இகரங் குறுகும் - ஆண்டு ஓர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் எ-று. எ-டு: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது எனவரும். ‘துவர’ என்றார், ஆறு ஈற்றின்கண்ணும் உகரங் கெடுமென்றற்கு. (5) ஈரெழுத்துமொழி உயிர்த்தொடர்மொழிக் குற்றுகரங்கள் வேற்றுமைக்கண் டறவொற்று இரட்டுதல் 411. ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. இது முற்கூறிய ஆறனுள் முன்னர் நின்ற இரண்டற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் - ஈரெழுத் தொருமொழிக் குற்றுகர ஈற்றிற்கும் உயிர்த்தொடர்மொழிக் குற்றுகர ஈற்றிற்கும், வேற்றுமையாயின் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், இனஒற்று இடைமிக - இனமாகிய ஒற்று இடையிலே மிக, வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும் - வல்லெழுத்து மிகுதி தோன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: யாட்டுக்கால், செவி தலை புறம் எனவும், முயிற்றுக் கால் சினை தலை புறம் எனவும் வரும். கயிற்றுப்புறம், வயிற்றுத்தீ என்பனவுமாம். ‘தோற்றம்’ என்றதனான், ஏனைக்கணத்தும் இம்முடிபு கொள்க. எ-டு: யாட்டுஞாற்சி நிணம் மணி வால் அதள் எனவும், முயிற்று ஞாற்சி நிணம் முட்டை வலிமை அடை ஆட்டம் எனவும் வரும். (6) அவற்றுள் ஒற்றிடை மிகாதனவும் உளவாதல் 412. ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. இஃது எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. (இ-ள்.) ஒற்று இடை இனம் மிகா மொழியுமாருள - முற்கூறிய இரண்டனுள் இனவொற்று இடை மிக்கு முடியாத மொழிகளும் உள, வல் லெழுத்து மிகல் அத்திறத்தில்லை - வல்லொற்று மிக்கு முடிதல் அக்கூற்று ளில்லை எ-று. எ-டு: நாகுகால் செவி தலை புறம் எனவும், வரகுகதிர் சினை தாள் பதர் எனவும் வரும். ‘அத்திறம்’ என்றதனான், உருபிற்கு எய்திய சாரியை பொருட்கட் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்க்க. எ-டு: யாட்டின்கால், முயிற்றின்கால், நாகின்கால் வரகின்கதிர் என வரும். ‘அத்திறம்’ என்றதனான் ஏனைக்கணத்தும் ஒற்றிடை மிகாமை கொள்க. நாகுஞாற்சி; நீட்சி, மாட்சி, வலிமை என ஒட்டுக. (7) இடையொற்று ஆய்தத் தொடர்க் குற்றுகர ஈறுகள் இயல்பாய் முடிதல் 413. இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் நடையா யியல என்மனார் புலவர். இஃது இடைநின்ற இரண்டற்கும் (406) முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இடையொற்றுத் தொடரும் ஆய்தத்தொடரும் - இடை யொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும், நடை ஆ இயல என்மனார் புலவர் - நடைபெற நடக்கு மிடத்து முற்கூறிய அவ்வியல்பு முடிபினையுடைய என்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: தெள்குகால், சிறை தலை புறம் எனவும், எஃகு கடுமை, சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (8) வன்தொடர் மென்தொடர்க் குற்றுகர ஈறுகள் வலி மிகலும், மென்தொடர்க் குற்றுகரச் சொல்லின் மெலி வலியாகத் திரிதலும் 414. வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் றாகும். இது பின்னின்ற இரண்டற்கும் (406) முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர்மொழிக் குற்றுகரஈறும், மென்றொடர்மொழிக் குற்றுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடைமிகும் - வருமொழியாய் வந்த வல்லெழுத்தினது ஒற்று இடையிலே மிக்கு முடியும், மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்றெல்லாம் - அவ்விரண்டனுள் மெல் லொற்றுத் தொடர்மொழிக்கண்நின்ற மெல்லொற்றெல்லாம், இறுதி லல்லொற்று இறுதிக்கண் நின்ற வல்லொற்றும் கிளையொற்றுஆகும் - கிளையாகிய வல்லொற்றுமாய் முடியும் எ-று. இறுதி வல்லொற்று வருதலாவது, குற்றுகரம் ஏறிநின்ற வல்லொற் றுத்தானே முன்னர்வந்து நிற்றலாம். கிளைவல்லொற்று வருதலாவது, ணகாரத்திற்கு டகாரமும், னகாரத்திற்கு றகாரமும், புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாமாதலின், அவை முன்னர் வந்து நிற்றலாம். எ-டு: கொக்குக்கால் சிறகு தலை புறம், குரங்குக்கால் செவி தலை புறம், குரக்குக்கால் செவி தலை புறம், எட்குக்குட்டி செவி தலை புறம், எற்புக்காடு சுரம் தலை புறம் என வரும். அற்புத்தளை என்பது, அன்பினாற் செய்த தளையென வேற்றுமையும், அன்பாகிய தளையென அல்வழியுமாம். ‘வந்த’ என்றதனான், இவ்விரண்டற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. எ-டு: கொக்கின்கால், குரங்கின்கால் என வரும். ‘எல்லாம்’ என்றதனாற் பறம்பிற்பாரி, குறும்பிற்சான்றார் என மெல்லொற்றுத் திரியாமையுங் கொள்க. ‘ஒற்றென்ற’ மிகுதியான், இயல்புகணத்துக்கண்ணும் குரக்கு ஞாற்சி நிணம் முகம் விரல் உகிர் என மெல்லொற்றுத் திரிந்து வருமாறு கொள்க. சிலப்பதிகாரம் என்பதும் அது. வன்றொடர்மொழி இயல்புகணத்துக்கண் வருதல், ‘ஞநமயவ’ (எழுத். 144) என்பதனான் முடியும். (9) குற்றுகர ஈற்று மரப்பெயர் அம்முச்சாரியை பெறுதல் 415. மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை. இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது; வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தலின். (இ-ள்.) மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை - குற்றியலுகர ஈற்று மரப்பெயர்க்கு வருஞ் சாரியை அம்முச் சாரியை எ-று. எ-டு: தேக்கங்கோடு, செதிள், தோல், பூ என வரும். கமுகங்காய், தெங்கங்காய், சீழ்கம்புல், கம்பம்புல், பயற்றங்காய் என்றாற் போலும் புல்லினையும் மரமென அடக்கி, மாறுகொளக் கூறலெனத் தழீஇக்கொண்ட சிதைவென்பதாம் இச் சூத்திரமென்று உணர்க. (10) சில மரப்பெயரது மெல்லொற்று வலியாமை 416. மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. இது மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது. (இ-ள்.) மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள - மெல்லொற்று வல் லொற்றாகத் திரியாது மெல்லொற்றாய் முடியும் மரப்பெயரும் உள எ-று. எ-டு: புன்கங்கோடு செதிள் தோல் பூ எனவும், குருந்தங்கோடு செதிள் தோல் பூ எனவும் வரும். ‘வலியா மரப்பெயருமுள’ எனவே, வலிக்கும் மரப்பெயரும் உளவென்று கொள்க. எ-டு: வேப்பங்கோடு, கடப்பங்காய், ஈச்சங்குலை என வரும். (11) அம்முச்சாரியை பெறும் குற்றுகர ஈறுகள் 417. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அம்மிடை வரற்கு முரியவை உளவே அம்மர பொழுகும் மொழிவயி னான. இஃது ஈரெழுத் தொருமொழிக்கும் வன்றொடர்மொழிக்கும் எய்தாதது எய்துவித்தது, முன்னர் எய்தியதனை விலக்கி அம்மு வகுத்தலின். (இ-ள்.) ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் - ஈரெழுத் தொருமொழிக் குற்றியலுகரஈறும் வன்றொடர்மொழிக் குற்றியலுகரஈறும், அம் இடை வரற்கும் உரியவை உள - முன் முடித்துப் போந்த முடிபுகளன்றி அம்முச்சாரியை இடையே வந்து முடிதற்கு உரியனவும் உள; யாண் டெனின், அம்மரபு ஒழுகும் மொழிவயினான - அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து எ-று. எ-டு: ஏறங்கோள் (சீவக. 485), சூதம்போர், வட்டம்போர், புற்றம் பழஞ்சோறு என வரும். உம்மை எதிர்மறையாதலின், அம்முப்பெறாதன நாகுகால், கொக்குக்கால் என முன்னர்க் காட்டினவேயாம். ‘அம்மரபொழுகும்’ என்றதனான், அரசக்கன்னி, முரசக்கடிப்பு என அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும்; அரசவாழ்க்கை, முரச வாழ்க்கை என அக்குக் கொடுத்தும் முடிக்க. இன்னும் அதனானே இருட்டத்துக் கொண்டான், விளக்கத்துக் கொண்டான் என அத்தும் வல்லெழுத்துங் கொடுத்தும்; மயிலாப்பிற் கொற்றன், பறம்பிற்பாரி என இன் கொடுத்தும்; கரியதன்கோடு, நெடியதன் கோடு என அன்கொடுத்தும் முடிக்க. (12) அக்குச் சாரியை பெறும் குற்றுகர ஈறு 418. ஒற்றுநிலை திரியாது அக்கொடு வரூஉம் அக்கிளை மொழியு முளவென மொழிப. இது மென்றொடர்மொழியுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. (இ-ள்.) ஒற்று நிலை திரியாது அக்கொடும் வரூஉம் - ஒற்று முன்னின்ற நிலைதிரியாது அக்குச்சாரியையோடும் பிற சாரியையொடும் வரும், அக்கிளை மொழி உள என மொழிப - அக்கிளையான சொற்கள் உள என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. இதற்கு உம்மையை அக்கொடும் என முன்னர் மாறுக. எ-டு: குன்றக்கூகை, மன்றப்பெண்ணை எனவரும். உம்மையாற் கொங்கத்துழவு, வங்கத்துவாணிகம் என அத்தும் பெற்றன. ‘நிலை’ என்றதனான், ஒற்று நிலைதிரியா அதிகாரத்துக்கண் வருஞ் சாரியைக்கு இயைபு வல்லெழுத்து வீழ்க்க. ‘அக்கிளை’ யென்றார், இரண்டு சாரியை தொடர்ந்து முடிவனவும் உளவென்றற்கு. பார்ப்பனக்குழவி, சேரி, தோட்டம், பிள்ளை என அன்னும் அக்கும் வந்தன. இவற்றிற்கு உடைமை விரிக்க. பார்ப்பினுட்குழவி என்றுமாம். பார்ப்பானாகியகுழவி என்றால் ஈண்டு முடியாதென்று உணர்க. பார்ப்பன மகன், பார்ப்பன வனிதை என்பனவும் பார்ப்பான் சாதி உணர்த்தின. (13) குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர் அன்சாரியை பெறுமாறு 419. எண்ணுப்பெயர்க் கிளவி உருபியல் நிலையும். இது குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரொடு பொருட்பெயர் முடிக்கின்றது. (இ-ள்.) எண்ணுப் பெயர்க் கிளவி - எண்ணுப்பெயராகிய சொற்கள் பொருட்பெயரொடு புணருமிடத்து, உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்றுப் புணரும் எ-று. எ-டு: ஒன்றன்காயம், இரண்டன்காயம், சுக்கு, தோரை பயறு என ஒட்டுக. ஒன்றனாற்கொண்ட காயமென விரியும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்துக்கண்ணுங் கொள்க. ஒன்றன்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை என வரும். மேலைச் சூத்திரத்து ‘நிலை’ (எழுத். 418) என்றதனான், இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (14) ‘வண்டு’, ‘பெண்டு’ இவற்றின் சாரியைப்பேறு 420. வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும். இது மென்றொடர் மொழியுட் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் - வண்டென்னுஞ் சொல்லும் பெண்டென்னுஞ் சொல்லும் இன்சாரியையொடு பொருந்தி முடியும் எ-று. எ-டு: வண்டின்கால் பெண்டின்கால் என வரும். இதற்கு முற்கூறிய நிலை (418) என்ற இலேசினால் வல்லெழுத்து வீழ்க்க. (15) ‘பெண்டு’ அன்னும் பெறுதல் 421. பெண்டென் கிளவிக்(கு) அன்னும் வரையார். இது மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்.) பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் - பெண்டென் னுஞ் சொற்கு இன்னேயன்றி அன்சாரியை வருதலையும் நீக்கார் ஆசிரியர் எ-று. எ-டு: பெண்டன்கை, செவி தலை புறம் என வரும். (16) ‘யாது’, சுட்டுமுதல் ஆய்தத்தொடர்க் குற்றுகர ஈறுகளின் முடிபு 422. யாதென் இறுதியுஞ் சுட்டுமுத லாகிய ஆய்த இறுதியும் உருபியல் நிலையும். இஃது ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரத்துள் ஒன்றற்கும், சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரத்திற்கும் வேறுமுடிபு கூறுகின்றது. (இ-ள்.) யாது என் இறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் - யாதென்னும் ஈறுஞ் சுட்டெழுத்து முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபியல் நிலையும் - உருபுபுணர்ச்சியின் இயல் பின்கண்ணே நின்று அன் பெற்றுச் சுட்டு முதலிறுதி ஆய்தங் கெட்டு முடியும் எ-று. எ-டு: யாதன்கோடு, அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு; செவி, தலை, புறம் என வரும். ஆய்தங்கெடாமுன்னே அன்னின் அகரத்தைக் குற்றுகரத்தின் மேல் ஏற்றுக; ஆய்தங்கெட்டால் அது முற்றுகரமாய் நிற்றலின். (17) உயிர்வருவழி, சுட்டுமுதல் ஆய்தத்தொடர்க் குற்றுகரத்தின் அல்வழிமுடிபு 423. முன்உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டும் அல்வழி யான. இது முற்கூறியவற்றுட் சுட்டு முதலாகிய ஆய்த இறுதிக்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) முன்உயிர் வருமிடத்து - சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர் மொழிக் குற்றுகர ஈற்றின்முன்னே உயிர்முதன்மொழி வருமிடத்து, ஆய்தப் புள்ளி மன்னல் வேண்டும் - ஆய்தவொற்று முன்போலக் கெடாது நிலை பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன், அல்வழியான - அல்வழிக்கண் எ-று. எ-டு: அஃது, இஃது, உஃது என நிறுத்தி; அடை ஆடை இலை ஈயம் உரல் ஊர்தி எழு ஏணி ஐயம் ஒடுக்கம் ஓக்கம் ஔவியம் என ஒட்டுக. ‘முன்’ என்றதனான் வேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க. அஃதடைவு, அஃதொட்டம் என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க. இன்னும் இதனானே, ஏனை இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க. (18) ஏனைக்கணம் வருவழி அதன் முடிபு 424. ஏனைமுன் வரினே தானிலை இன்றே. இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஏனை முன்வரின் - முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க்கண மல்லன வருமாயின், தான் நிலையின்று - அவ்வாய்தங்கெட்டு முடியும் எ-று. எ-டு: அதுகடிது இதுகடிது உதுகடிது, சிறிது, தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என ஒட்டுக. (19) குற்றுகர ஈறுகள் அல்வழிக்கண் முடியுமாறு 425. அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ் சொல்லிய பண்பின் இயற்கை யாகும். இஃது ஆறு ஈற்றுக்குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லுமிடத்து, எல்லா மொழியும் - ஆறு ஈற்றுக் குற்றுகரமும், சொல்லிய பண்பின் இயற்கை யாகும் - மேல் ஆசிரியன் கூறிய குணத்தையுடைய இயல்பாய் முடியும் எ-று. எ-டு: நாகுகடிது, வரகுகடிது, தெள்குகடிது, எஃகுகடிது, குரங்கு கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். ஏனைக்கணத்துக் கண் ‘நின்ற சொன்மு னியல் பாகும்’ (எழுத். 144) என்றதனாற் கொள்க. ‘எல்லாமொழியும்’ என்றதனான், வினைச்சொல்லும் வினைக் குறிப்புச் சொல்லும் இயல்பாய் முடிதல் கொள்க. எ-டு: கிடந்தது குதிரை, கரிது குதிரை என வரும். ‘சொல்லிய’ என்றதனான், இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவொற்றுமிக்கு வல்லெழுத்துப் பெற்று முடிதலும், இயல்புகணத்துக்கண் இனவொற்று மிக்கு முடிதலும் கொள்க. எ-டு: கரட்டுக்கானம், குருட்டுக்கோழி, திருட்டுப்புலையன், களிற்றுப்பன்றி, வெளிற்றுப்பனை, எயிற்றுப்பல் எனவும்; வறட்டாடு, குருட்டெருது எனவும் வரும். ‘பண்பின்’ என்றதனான், மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாகாது ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும் கொள்க. எ-டு: ஓர் யாட்டை யானை, ஐயாட்டை யெருது எனவும்; அற்றைக் கூத்தர், இற்றைக்கூத்தர் எனவும்; மன்றைத்தூதை மன்றைப் பானை, பண்டைச் சான்றார் எனவும் வரும். (20) அவற்றுள் வன்தொடர் ஈறு வலி மிகுதல் 426. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. இஃது அவ் வாறு ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) வல்லொற்றுத் தொடர் மொழி வல்லெழுத்து மிகும் - வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறு வல்லெழுத்து வருவழி வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. எ-டு: கொக்குக்கடிது, பாக்குக்கடிது, பட்டுக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (21) வல்லெழுத்து மிகப்பெறும் மென்தொடர்க் குற்றுகர மொழிகள் 427. சுட்டுச்சுனை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை. இஃது அவ் வாறு ஈற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர நின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும் - சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர்க் குற்றுகர ஈறும், யாவினா முதலிய மென்றொடர் மொழியும் - யாவென்னும் வினா முதலாகிய மென்றொடர் மொழிக் குற்றுகர ஈறும், வல்லெழுத்தியற்கை ஆ இயல் திரியா - வல்லெழுத்துப் பெற்று முடியுந் தன்மையாகிய அவ்வியல்பின் திரியாது முடியும் எ-று. எ-டு: ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக்கொண் டான், யாங்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயி னான் என வரும். ‘இயற்கை’ என்றதனான், மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாயும், வன்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் மிக்கும் முடிவன கொள்க. எ-டு: இருந்துகொண்டான், ஆண்டுசென்றான், தந்துதீர்ந்தான், வந்துபோயினான் எனவும்; செத்துக்கிடந்தான், செற்றுச் செய்தான், உய்த்துக்கொண்டான், நட்டுப்போனான் எனவும் வரும். (22) இயல்புமுடிபு பெறும் மென்தொடர் ஈறு 428. யாவினா மொழியே இயல்பு மாகும். இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, வல்லெழுத்துப் பெறுதலே அன்றி இயல்பா மென்றலின். (இ-ள்.) யாவினா மொழியே இயல்புமாகும் - அவற்றுள் யாவென்னும் வினாவையுடைய சொல் முற்கூறியவாறன்றி இயல்பாயும் முடியும் எ-று. எ-டு: யாங்குகொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும். இஃது எப்படியென்னும் வினாப்பொருளை உணர்த்திற்று. உம்மையான் மிக்குமுடிதலே வலியுடைத்து. ஏகாரம் பிரிநிலை. (23) மெல்லொற்று வலியாக் குற்றுகர ஈற்று மொழிகள் 429. அந்நான் மொழியுந் தந்நிலை திரியா. இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. (இ-ள்.) அந்நான்மொழியும் - சுட்டுமுதன் மூன்றும் யாமுதன் மொழியு மாகிய அந்நான்கு மொழியும், தம் நிலை திரியா - தம் மெல்லொற்றாய தன்மை திரிந்து வல்லொற்றாகாது முடியும் எ-று. எ-டு: முற்காட்டியவே. ‘தந்நிலை’ என்றதனான், மெல்லொற்றுத் திரியாது வல்லெழுத்து மிக்கு முடிவன பிறவுங் கொள்க. எ-டு: அங்குக்கொண்டான், இங்குக்கொண்டான், உங்குக்கொண் டான், எங்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயி னான் என வரும். இனி முன்னர் யாமொழி என்னாது வினா என்றதனான், ஏழாவதன் காலப் பொருட்டாகிய பிறவும் இயல்பாய் முடிவன கொள்க. எ-டு: முந்து கொண்டான், பண்டு கொண்டான், இன்று கொண் டான், அன்று கொண்டான், என்று கொண்டான் என வரும். (24) உண்டு எனும் வினைக்குறிப்பு முடியுமாறு 430. உண்டென் கிளவி உண்மை செப்பின் முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும் மேனிலை யொற்றே ளகார மாதலும் ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே வல்லெழுத்து வரூஉங் காலை யான. இது மென்றொடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்றதொரு சொற்பண்பை உணர்த்துங்கால் வேறுமுடிபு பெறுதல் கூறுகின்றது. (இ-ள்.) உண்டென் கிளவி உண்மை செப்பின் - உண்டென்னுஞ் சொல் வினைக்குறிப்பை யுணர்த்தாது ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மையாகிய பண்பை உணர்த்தி நிற்குமாயின், முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும் - முன்னர் நின்ற குற்றுகரம் தான் ஏறி நின்ற மெய்யொடுங் கெடுதலும், மேனிலை ஒற்றே ளகார மாதலும் - அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகார ஒற்றாதலுமாகிய, ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்து-அம்முறை யினையுடைய இரண்டு நிலையும் உரித்து; அஃது உரித்தன்றி முன்னர் நின்ற நிலையிலே கேடுந் திரிபும் இன்றி நிற்றலும் உடைத்து, வல்லெழுத்து வரூஉங் காலையான - வல்லெழுத்து முதன் மொழியாய் வருங்காலத்து எ-று. வல்லெழுத்து அதிகாரத்தான் வாரா நிற்ப ‘வல்லெழுத்து வரூஉங் காலை’ என்றதனான், அவ்விருமுடிபும் உளவாம் பண்பை யுணர்த்தும் பகரம் வருமொழிக்கண்ணே வரின் என்பதூஉம், ஏனைக் கசதக்களிலும் இயல்புகணத்திலும் உண்டென நின்று வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நிற்குமென்பதூஉங் கொள்க. எ-டு: உள்பொருள், உண்டுபொருள் என வரும். இது பொருளைச் சுட்டாது உண்மைத் தன்மைப் பண்பை ஈண்டு உணர்த்திற்று. இனி, உண்டுகாணம், உண்டுசாக்காடு, உண்டு தாமரை, உண்டுஞானம்; நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை என வருவனவெல்லாங் கேடுந் திரிபுமின்றி வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நின்றன. இவற்றின் வேறுபாடு வினையியலுள் வினைக்குறிப்பு ஓதும்வழி உணர்க. உள்பொருளென்பது பண்புத்தொகை முடிபன்றோவெனின், அஃது ஓசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியது போலும். இஃது ஓசை இடையறவுபடச் சொல்லும் வழியதென்க. (25) இருபெருந்திசை அல்வழிக்கண் முடியுமாறு 431. இருதிசை புணரின் ஏயிடை வருமே. இது குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இரு திசை புணரின் - இரண்டு பெருந்திசையுந் தம்மிற் புணரின், ஏ இடை வரும் - ஏயென்னுஞ் சாரியை இடை நின்று புணரும் எ-று. எ-டு: தெற்கேவடக்கு, வடக்கேதெற்கு இவை உம்மைத் தொகை. (26) பெருந்திசைகளொடு கோணத்திசை புணர்தல் 432. திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் உகரமுங் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான. இது பெருந்திசைகளொடு கோணத்திசைகளைப் புணர்த்தலின், எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) திரிபு வேறு கிளப்பின் - அப்பெருந் திசைகளொடு கோணத் திசைகளை வேறாகப் புணர்க்கு மிடத்து, ஒற்றும் உகரமுங் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் - அவ்வுகரம் ஏறி நின்ற ஒற்றும் அவ்வீற்று உகரமுங் கெட்டுமுடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு புணருங்காலை - அவை தெற்கென்னுந் திசையொடு புணருங்காலத்து, ஆன ஒற்று மெய் திரிந்து னகாரமாகும் - அத்திசைக்குப் பொருந்தி நின்ற றகர ஒற்றுத் தன் வடிவுதிரிந்து னகர ஒற்றாய் நிற்கும் எ-று. ‘திரிந்து’ என்றதனான், வடக்கு என்பதன்கண் நின்ற ககர ஒற்றுக் கெடுத்து முடித்துக் கொள்க. எ-டு: வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என வரும். ‘வேறு’ என்றதனான், திசைப்பெயரொடு பொருட்பெயர் வரினும் இம்முடிபு கொள்க. எ-டு: வடகடல், வடசுரம், ‘வடவேங்கடம், தென்குமரி’ (பாயிரம்), தென்சுரம், தென்னிலங்கை என வரும். ‘மெய்’ என்றதனான், உயிர் கெட்டுந் திரிந்தும் மெய் கெட்டும் முடிவனவும் உள, திசைப்பெயர் முன்னர்ப் பொருட்பெயர் வந்துழி யென்று உணர்க. கிழக்கு என்பது, கரை கூரை என்பவற்றொடு புணருமிடத்துக் கீழ்கரை கீழ்கூரை என நிலைமொழியிறுதி உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல் நின்ற ககர ஒற்றும் ழகரத்தின் அகரமுங்கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தன. மேற்குகரை, கூரை, மீகரை மீகூரை என நிலைமொழி ஈற்று உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல் நின்ற றகர ஒற்றுங் கெட்டு ஏகாரம் ஈகாரமாகி முடிந்தன. இன்னும் இதனானே. மேன்மாடு மேல்பால் மேலைச்சேரி என்றாற் போல்வனவுஞ் செய்கையறிந்து முடிக்க. (27) பத்து, முதல் எட்டு எண்களொடு புணருமாறு 433. ஒன்றுமுத லாக எட்ட னிறுதி எல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற் குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே. நிறுத்தமுறையானே ஆறு ஈற்றுக் குற்றுகரமும் பொருட் பெயர்க்கண் புணருமாறு உணர்த்தி, இனி அவ்வீற்று எண்ணுப்பெயர் முடிக்கின்றார். இஃது அவற்றுட் பத்தென்னும் எண்ணுப் பெயரோடு எண்ணுப்பெயர் வந்து புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஒன்று முதலாக எட்டன் இறுதி எல்லா எண்ணும் - ஒன்றென்னும் எண் முதலாக எட்டென்னும் எண்ணீறாயுள்ள எல்லா எண்ணுப் பெயர்களும், பத்தன்முன் வரின் - பத்தென்னும் எண்ணுப் பெயரின் முன்வரின், குற்றியலுகரம் மெய்யொடுங் கெடும் - அப்பத் தென்னுஞ் சொல்லிற் குற்றியலுகரந் தான் ஏறி நின்ற மெய்யொடுங் கெடும், இரண்டலங்கடை முற்ற இன்வரூஉம் - ஆண்டு இரண்டல்லாத எண்ணுப் பெயர்களிடத்து முடிய இன்சாரியை இடைவந்து புணரும் எ-று. எ-டு: பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு என வரும். நிலைமொழி முற்கூறாததனான், பிறவெண்ணின் முன்னர்ப் பிற பெயர் வந்துழியும் இன்பெறுதல் கொள்க. எ-டு: ஒன்பதின்கூறு, ஒன்பதின்பால் என வரும். ‘முற்ற’ என்பதனாற், பதினான்கென்புழி வந்த இன்னின் னகரம் வருமொழிக்கட் கருவிசெய்து கெடுத்து முடிக்க. (28) அவ்வெண்ணுப்பெயர் ‘இரண்டு’ வருவழி முடியுமாறு 434. பத்தனொற் றுக்கெட னகாரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை. இது மேல் இன் பெறாதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்.) பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல் - பத்தென்னுஞ் சொல்லில் நின்ற தகர ஒற்றுக்கெட னகர ஒற்று இரட்டித்து வருதல், இரண்டு வருகாலை ஒத்ததென்ப - இரண்டென்னும் எண் வருங்காலத்திற் பொருந்திற் றென்பர் ஆசிரியர் எ-று. எ-டு: பன்னிரண்டு என வரும். ‘குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடும்’ (எழுத். 433) என்ற விதி இதற்கும் மேலனவற்றிற்குங் கொள்க. (29) ‘ஆயிரம்’ வருவழி, அது முடியுமாறு 435. ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது. இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வரின் வரும் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது - முற்கூறிய பத்தன் முன்னர் ஒன்று முதலியனவேயன்றி ஆயிரமென்னு மெண் வந்தாலும் ஈறுகெட்டு இன்பெற்று முடியும் இயல்பின் திரியாது எ-று. எ-டு: பதினாயிரம் என வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (30) நிறையும் அளவும் வருவழி, அது முடியுமாறு 436. நிறையு மளவும் வரூஉங் காலையும் குறையா தாகும் இன்னென் சாரியை. இஃது எண்ணுப்பெயரொடு நிறைப்பெயரும் அளவுப்பெயரும் புணர்கின்ற புணர்ச்சி கூறுகின்றது. (இ-ள்.) நிறையும் அளவும் வரூஉங் காலையும் - முற்கூறிய பத்தென் பதன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருங்காலத்தும், இன்னென் சாரியை குறையாதாகும் - அவ்வின்னென்னுஞ் சாரியை குறையாது வந்து முடியும் எ-று. எ-டு: பதின்கழஞ்சு, தொடி, பலம் எனவும்; பதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; பதிற்றகல், பதிற்றுழக்கு எனவும் வரும். ‘குறையாதாகும்’ என்பதனாற், பொருட்பெயரும் எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் வந்துழியும் இன் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. எ-டு: பதிற்று வேலி, யாண்டு, அடுக்கு, முழம் எனவும், பதின் திங்கள் எனவும், பதிற்றுத்தொடி எனவும் வரும். பதிற் றொன்று என்பதுபோல இரண்டுமுதற் பத்தளவும் ஒட்டுக. இவ்வீற்றின் னகரம் றகரமாதல் ‘அளவாகுமொழிமுதல்’ (எழுத். 121) என்பதனுள் ‘நிலைஇய’ என்றதனான் முடிக்க, இவற்றிற்கு ஒற்றிரட்டுதலும் உகரம் வருதலும் வல்லெழுத்துப் பெறுதலும் ‘ஒன்று முதலாக’ (எழுத். 433) என்பதனுள் ‘முற்ற’ என்றதனாற் கொள்க. (31) ஒன்றுமுதல் ஒன்பான் எண்ணுப் பெயர், ‘பத்து’ வருவழி முடியுமாறு 437. ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர் நின்ற பத்த னொற்றுக்கெட ஆய்தம் வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப கூறிய இயற்கை குற்றிய லுகரம் ஆற னிறுதி அல்வழி யான. இஃது ஒன்று முதல் ஒன்பான் எண்ணுப்பெயரொடு பத்தென்னும் எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஒன்றுமுதல் ஒன்பான் இறுதிமுன்னர் - ஒன்று முதல் ஒன்பது ஈறாகக் கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், நின்ற பத்தன் ஒற்றுக்கெட - வருமொழியாக வந்துநின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகர ஒற்றுக்கெட, ஆய்தம் வந்து இடை நிலையும் இயற்கைத் தென்ப - ஆய்த மானது வந்து இடையே நிலைபெறும் இயல்பை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர், ஆறன் இறுதி அல்வழியான - அவற்றுள் ஆறென்னும் ஈறல்லாத விடத்து, குற்றியலுகரம் கூறிய இயற்கை - குற்றியலுகரம் முற்கூறிய இயற்கையாய் மெய்யொடுங்கெட்டு முடியும் எ-று. இங்ஙனம் வருமாறு மேற்சூத்திரங்களுட் காட்டுதும். ‘வந்து’ என்றதனான், ஆய்தமாகத் திரியாது தகர ஒற்றுக் கெட்டு ஒருபது என்று நிற்றலுங் கொள்க. (32) ஒன்று இரண்டு, ஒரு இரு - எனத் திரிதல் 438. முதலீ ரெண்ணினொற்று ரகர மாகும் உகரம் வருதல் ஆவயி னான. இது மேற்கூறியவற்றின் சிலவற்றிற்கு நிலைமொழிச்செய்கை கூறுகின்றது. (இ-ள்.) முதலீ ரெண்ணின் ஒற்று ரகரம் ஆகும் - அவற்றின் முதற்கண் நின்ற இரண்டெண்ணினுடைய னகர ஒற்றும் ணகர ஒற்றும் ரகர ஒற்றாகத் திரிந்து நிற்கும், ஆவயினான உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக எ-று. எ-டு: ஒருபஃது இருபஃது என வரும். ஒன்றென்பதன் ஈற்றுக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து, னகர ஒற்றினை ரகர ஒற்றாக்கி, உகரமேற்றி, ஒருவென நிறுத்தி, நின்ற பத்தென்பதன் தகர ஒற்றுக் கெடுத்து, ஆய்தமாக்கிப், பஃதென வருவித்து, ஒருபஃது என முடிக்க. இருபஃதையும் இவ்வாறே முடிக்க. மேல் வருவனவற்றிற்குஞ் சூத்திரங்களாற் கூறுஞ் சிறப்புவிதி ஒழிந்தவற்றிற்கு இதுவே முடிபாகக் கொள்க. (33) 439. இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு நடைமருங் கின்றே பொருள்வயி னான. இதுவும் அது. (இ-ள்.) இரண்டென் எண்ணிற்கு இடைநிலை ரகரம் - இரண் டென்னு மெண்ணிற்கு இடைநின்ற ரகரம், பொருள்வயினான - அம்மொழி பொருள்பெறும் இடத்து, நடைமருங்கின்று - நடக்கும் இடமின்றிக் கெடும் எ-று. எ-டு: இருபஃது என வரும். இதற்கு ரகர உயிர்மெய் இதனாற்கெடுத்து ஏனைய கூறியவாறே கூட்டி முடிக்க. ‘பொருள்’ எனவே, எண்ணல்லாப் பெயருங் கொள்க. எ-டு: இருகடல், இருவினை, இருபிறப்பு என வரும். (34) மூன்றும் ஆறும், முன் அறு - எனத் திரிதல் 440. மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும். இதுவும் அது. (இ-ள்.) மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் - மூன்றென்னும் எண்ணும் ஆறென்னும் எண்ணும் நெடுமுதல் குறுகி முடியும் எ-று. எ-டு: அறு எனக் குறுக்கிப் பஃது என வருவித்து, அறுபஃது என முடிக்க. (35) மூன்றன் னகாரம் பகாரம் ஆதல் 441. மூன்ற னொற்றே பகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) மூன்றன் ஒற்றே பகாரமாகும் - மூன்றென்னும் எண்ணின்கண் நின்ற னகார ஒற்றுப் பகர ஒற்றாய் முடியும் எ-று. எ-டு: முப்பஃது என வரும். (36) நான்கன் னகாரம் றகாரம் ஆதல் 442. நான்க னொற்றே றகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) நான்கன் ஒற்றே றகாரமாகும் - நான்கென்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று றகர ஒற்றாய் முடியும் எ-று. எ-டு: நாற்பஃது என வரும். (37) ஐந்தன் நகாரம் மகாரம் ஆதல் 443. ஐந்த னொற்றே மகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) ஐந்தனொற்றே மகாரமாகும் - ஐந்தென்னும் எண்ணின்கண் நின்ற நகர ஒற்று மகர ஒற்றாய் முடியும் எ-று. எ-டு: ஐம்பஃது என வரும். ஏழு குற்றியலுகர ஈறன்மை உருபியலுட் காண்க. (38) எட்டன் டகாரம் ணகாரம் ஆதல் 444. எட்ட னொற்றே ணகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) எட்ட னொற்றே ணகாரமாகும் - எட்டென்னும் எண்ணின்கண் நின்ற டகர ஒற்று ணகர ஒற்றாய் முடியும் எ-று. எ-டு: எண்பஃது என வரும். (39) ஒன்பஃது ‘பத்து’ வருவழி முடியுமாறு 445. ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை யொற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகர மாகும். இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் - ஒன்பது என நிறுத்திப் பஃது என வருவித்து முடிக்குங்கால், நிலைமொழியாகிய ஒன்பதென்னும் எண்ணினது ஒகரத்திற்கு முன்னாக ஒரு தகர ஒற்றுத் தோன்றி நிற்கும், முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் - முன் சொன்ன ஒகரத்திற்கு முன்னர் நின்ற னகர ஒற்று ணகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட - வருமொழியாகிய பஃதென்னுஞ் சொல் தன்கண் ஆய்தமும் பகரமுங் கெட்டுப்போக, ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் - நிலை மொழியின் இரட்டிய ணகரத்தின் பின்னர் ஊகாரமாகிய எழுத்து வந்து நிற்றலை ஆசிரியன் விரும்பும், ஒற்றிய தகரம் றகர மாகும் - வருமொழியாகிய பத்தென்பதன் ஈற்றின்மேலேறிய உகரங் கெடாது பிரிந்துநிற்ப ஒற்றாய் நின்ற தகரம் றகர ஒற்றாய் நிற்கும் எ-று. எ-டு: தொண்ணூறு என வரும். இதனை ஒற்றாய் வந்து நின்ற தகர ஒற்றின்மேல் நிலைமொழி ஒகரத்தை ஏற்றித் தொவ்வாக்கி, ணகர ஒற்று இரட்டி அதன்மேல் வருமொழிக்கட் பகரமும் ஆய்தமுங்கெட வந்த ஊகாரமேற்றித் தொண்ணூ றாக்கிப், ‘பகரவாய்தம்’ என்னாத முறையன்றிக் கூற்றினான், நிலைமொழிக் கட் பகரமும் ஆய்தமுங் கெடுத்துக், குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து, வருமொழி இறுதித் தகர ஒற்றுத் திரிந்து நின்ற றகர ஒற்றின்மேல் நின்ற உகரமேற்றித் தொண்ணூறென முடிக்க. (40) ஒன்றுமுதல் ஒன்பான் எண்களோடு அளவுநிறைப்பெயர்கள் முடியுமாறு 446. அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியும் கிளந்த இயல தோன்றுங் காலை. இது, மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப் பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுந் தோன்றுங் காலை - முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வந்து தோன்றுங் காலத்து, கிளந்த இயல-ஆறன் ஈறு அல்வழிக் குற்றுகரம் மெய்யொடுங் கெட்டு, முதலீரெண்ணினொற்று ரகாரமாய் உகரம் வந்து, இடைநிலை ரகர மிரண்டிற்குக் கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி, நான்கனொற்று வன்கணத்து றகரமாய், எட்டனொற்று ணகரமாய் முடியும் எ-று. எ-டு: ஒருகலம், இருகலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; ஒருகழஞ்சு, இருகழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன முன்னர் முடித்தும். இவை முதலீரெண்ணின் செய்கை. ‘தோன்றுங் காலை’ என்றதனான், இவ்வெண்ணின் முன்னர் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்ற எண்ணுப் பெயர்க ளெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்துவித்து முடித்துக் கொள்க. ஒரு மூன்று ஒருநான்கு, இருமூன்று இருநான்கு, ஒருகால் இருகால், ஒரு முந்திரிகை இருமுந்திரிகை, ஒருமுக்கால் இரு முக்கால் என்பன பிறவுங் கொணர்ந்து ஒட்டுக. இனிப் பிறவிதி எய்துவன: ஓரொன்று, ஓரிரண்டு, ஓரைந்து, ஓராறு, ஓரேழு, ஓரெட்டு, ஓரொன்பது எனவும்; ஈரொன்று, ஈரிரண்டு, ஈரைந்து, ஈராறு, ஈரேழு, ஈரெட்டு, ஈரொன்பது எனவும்; மூவொன்று, மூவிரண்டு, மூவைந்து, மூவாறு, மூவேழு, மூவெட்டு, மூவொன்பது எனவும்; ‘முதலீ ரெண்ணின்முன் உயிர்’ (எழுத். 455) என்னுஞ் சூத்திரத்தான் உயிர்க்கு எய்திய பிறவிதியும், ‘மூன்றன் முதனிலை நீடலு முரித்து’ (எழுத். 457) என்ற பிறவிதியும் பெற்றுப், பிறசெய்கைகளும் பெற்று முடிந்தன. நாலொன்று, நாலிரண்டு, நாலைந்து, நாலாறு, நாலேழு, நாலெட்டு, நாலொன்பது என்பன ‘நான்க னொற்றே லகார மாகும்’ (எழுத். 453) என்ற விதிபெற்று முடிந்தன. பிறவும் இவ்வாறேயன்றி அளவும் நிறையுமன்றி வருவனவெல்லாம் இவ்விலேசான் முடிக்க. (41) மூன்றன் னகாரம் வந்த வல்லொற் றாதல் 447. மூன்ற னொற்றே வந்த தொக்கும். இது மேல் மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) மூன்றனொற்றே வந்ததொக்கும் - மூன்றாமெண்ணின்க ணின்ற னகர ஒற்று வருமொழியாய் வந்த அளவுப் பெயர் நிறைப்பெயர் களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து முடியும் எ-று. எ-டு: முக்கலம், சாடி, தூதை, பானை எனவும்; முக் கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும். ‘நான்க னொற்றே றகார மாகும்’ (எழுத். 442) என்ற முன்னை மாட்டேறு நிற்றலின், நாற்கலம், சாடி, தூதை, பானை எனவும்; நாற் கழஞ்சு, தொடி, பலம், எனவும் வரும். (42) ஐந்தன் நகாரம், வந்த வல்லொற்றிற்கேற்ற மெலியாகத் திரிதல் 448. ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும். இதுவும் அது. (இ-ள்.) ஐந்தனொற்றே மெல்லெழுத்தாகும் - ஐந்தாவதன்கண் நின்ற நகர ஒற்று வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் எ-று. எ-டு: ஐங்கலம், சாடி, தூதை, பானை எனவும்; ஐங்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். ஏகாரம் ஈற்றசை. (43) இத்திரிபுகள் வன்கணம் வருவழியே என்றல் 449. கசதப முதன்மொழி வரூஉங் காலை. இது முற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக் கின்றது. (இ-ள்.) கசதப முதன்மொழி வரூஉங் காலை - மூன்றனொற்று வந்ததொப்பதூஉம் ஐந்தனொற்று மெல்லெழுத்தாவதூஉம் அவ்வளவுப் பெயர் நிறைப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழி யாய் வந்த இடத்து எ-று. அது முன்னர்க் காட்டினாம். ‘ஆறு நெடுமுதல் குறுகும்’ (எழுத். 440) என்ற மாட்டேற்றானே ஆறு நெடுமுதல் குறுகி நின்றது. எ-டு: அறுகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; அறுகழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன மேற் காட்டுதும். ஏழ் குற்றுகர ஈறன்மையின் மாட்டேறு ஏலாதாயிற்று. (44) மென்கணமும் இடைக்கணமும் வரும்வழியும், ‘எட்டு’ எண் - எனவே நிற்றல் 450. நமவ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் எட்டன்மு னியல்பே. இது வேண்டாது கூறி வேண்டியது முடிக்கின்றது, ‘ஞநமயவ’ (எழுத். 144) முதலிய சூத்திரத்துட் கூறியவற்றைக் கூறுதலின். (இ-ள்.) எட்டன்முன் - எட்டென்பதன் முன்னர், நமவ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் - அளவுப்பெயர்களின் முன்னர் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய நமவ என்னும் மூன்றனொடு பொருந்தி உயிர்க்கணத்து அகரம் வரினும், உம்மையான் உயிர்க்கணத்து உகரம் வரினும் கூறாத வல்லெழுத்துக்கள் வரினும், இயல்பு - முற்கூறியவாறே டகாரம் ணகாரமாய் வேறொரு விகாரமின்றி இயல்பாய் முடியும் எ-று. நமவவென்னும் மூன்றும் வந்தாற்போல, அகரம் வரினும் என்பது பொருள். எ-டு: எண்ணாழி, மண்டை வட்டி எனவும்; எண்ணகல், எண் ணுழக்கு எனவும், எண்கலம், சாடி தூதை பானை எனவும் வரும். ‘ஒன்றென முடித்தலான்’ வன்கணத்து நிறைப்பெயருங் கொள்க. எண்கழஞ்சு; தொடி, பலம் என வரும். இவ்வேண்டா கூறலான், எண்ணகல் எனக் குற்றுகர ஈறாய்க் கேடுந்திரிவும் பெற்று உயிர்வருமொழியான தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. (45) நம - வருவழி, ஐந்து மூன்று இவற்றின் ஒற்று, வந்த ஒற்றாதல் 451. ஐந்தும் மூன்றும் நமவரு காலை வந்த தொக்கும் ஒற்றியல் நிலையே. இதுவும் மேல் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஐந்தும் மூன்றும் நம வருகாலை - ஐந்தென்னும் எண்ணும் மூன்றென்னும் எண்ணும் நகர முதன்மொழியும் மகர முதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஒற்றியல் நிலை - நிலைமொழிக்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமை கூறின், வந்தது ஒக்கும் - மேற்கூறியவாறே மகரமும் பகரமும் ஆகாது வருமொழி முதல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும் எ-று. எ-டு: ஐந்நாழி, ஐம்மண்டை, முந்நாழி, மும்மண்டை என வரும். ‘மூன்றும் ஐந்தும்’ என்னாத முறையன்றிக் கூற்றினான், நானாழி நான்மண்டை என்புழி நிலைமொழி னகரம் றகரமாகாது நின்றவாறே நின்று முடிதலும், வருமொழி முதனின்ற நகரம் னகரமாய்த் திரிய நிலைமொழி னகரங் கெடுதலுங் கொள்க. (46) வகரம் வருவழி, மூன்றன் னகாரம் வகாரமாதல் 452. மூன்ற னொற்றே வகரம் வருவழித் தோன்றிய வகரத் துருவா கும்மே. இதுவும் அது. (இ-ள்.) மூன்றனொற்று - மூன்றாம் எண்ணின்கணின்ற னகர ஒற்று, வகரம் வருவழி - வகரமுதன்மொழி வருமிடத்து, தோன்றிய வகரத்து உருவாகும் - அவ்வருமொழியாய்த் தோன்றிய வகரத்தின் வடிவாய் முடியும் எ-று. எ-டு: முவ்வட்டி என வரும். ‘தோன்றிய’ என்றதனானே, முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். (47) நான்கன் னகாரம் லகாரமாதல் 453. நான்க னொற்றே லகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) நான்கனொற்று - நான்காம் எண்ணின்கணின்ற னகர ஒற்று, லகாரமாகும் - வகர முதன்மொழி வந்தால் லகர ஒற்றாகத் திரிந்து முடியும் எ-று. எ-டு: நால்வட்டி என வரும். (48) ஐந்தன் நகாரம் கெடுதல் 454. ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. இதுவும் அது. (இ-ள்.) ஐந்தனொற்று-ஐந்தாம் எண்ணின்கணின்ற நகர ஒற்று, முந்தையது கெடும்-வகர முதன்மொழி வந்தால் முன்னின்ற வடிவு கெட்டு முடியும் எ-று. எ-டு: ஐவட்டி என வரும். ‘முந்தை’ யென்றதனான், நகர ஒற்றுக் கெடாது வகர ஒற்றாகத் திரிந்து ஐவ்வட்டியெனச் சிறுபான்மை வரும். (49) உயிர் வருவழி, முதல் ஈரெண்ணும் ஓர், ஈர் - ஆதல் 455. முதலீ ரெண்ணின்முன் உயிர்வரு காலைத் தவலென மொழிப உகரக் கிளவி முதனிலை நீட லாவயி னான. இது மாட்டேற்றான் எய்திய உகரத்திற்குக் கேடு கூறி முதல் நீள்க என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. (இ-ள்.) முதலீரெண்ணின்முன் உயிர் வருகாலை - ஒரு இரு என முடிந்து நின்ற இரண்டெண்ணின் முன்னர் உயிர் முதன்மொழி வருமொழி யாய் வருங்காலத்து, உகரக்கிளவி தவலென மொழிப - நிலைமொழியுகர மாகிய எழுத்துக் கெடுதலாமென்று சொல்லுவர் புலவர், ஆவயினான முதனிலை நீடல் - அவ்விரண்டெண்ணின்கணின்ற முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் எ-று. எ-டு: ஓரகல், ஈரகல், ஓருழக்கு, ஈருழக்கு என வரும். (50) மூன்று நான்கு ஐந்து இவற்றின் ஒற்று, வகரம் வருவழிக் கூறிய இயல்பின ஆதல் 456. மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் தோன்றிய வகரத் தியற்கை யாகும். இதுவும் அது. (இ-ள்.) மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் - மூன்றென்னும் எண்ணும், நான்கென்னும் எண்ணும் ஐந்தென்னும் எண்ணும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் - முன்னர்த் தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகர ஒற்றாயும், நான்கின்கண் லகர ஒற்றாயும், ஐந்தின்கண் ஒற்றுக்கெட்டும் முடியும் எ-று. எ-டு: முவ்வகல், முவ்வுழக்கு என வரும். இதற்குத் ‘தோன்றிய’ என்றதனான், ஒற்றிரட்டுதல் கொள்க. நாலகல், நாலுழக்கு, ஐயகல், ஐயுழக்கு என வரும். ‘தோன்றிய’ என்றதனான், மேல் மூன்றென்பது முதல் நீண்ட இடத்து நிலைமொழி னகர ஒற்றுக் கெடுத்துக்கொள்க. ‘இயற்கை’ என்றத னான், தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. ‘மூன்றனொற்றே’ (எழுத். 452) முதலிய மூன்று சூத்திரமும் கொணர்ந்து முடிக்க. (51) ‘உழக்கு’ வருவழி, நெடுமுதல் குறுகிய ‘மூன்று’ நீண்டு முடிதல் 457. மூன்றன் முதனிலை நீடலு முரித்தே உழக்கென் கிளவி வழக்கத் தான. இது முன்னர்க் குறுகுமென்றதனை நீண்டு முடிக என்றலின் எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) மூன்றன் முதன்நிலை நீடலும் உரித்து - மூன்றென்னும் எண்ணின் முதனின்ற எழுத்து நீண்டு முடிதலும் உரித்து, அஃதியாண் டெனின், உழக்கு என் கிளவி வழக்கத்தான - உழக்கென்னுஞ் சொல் முடியும் வழக்கிடத்து எ-று. எ-டு: மூவுழக்கு என வரும். ‘வழக்கத்தான’ என்பதனான், அகலென் கிளவிக்கு முதனிலை நீடலுங் கொள்க. மூவகல் என வரும். இன்னும் அதனானே, நிலைமொழி னகர ஒற்றுக் கெடுக்க. மூழக்கு மூழாக்கு என்னும் மரூஉமுடிவு இவ்வோத்தின் புறனடை யான் முடிக்க. (52) நெடுமுதல் குறுகிய ‘ஆறு’ நீண்டு முடிதல் 458. ஆறென் கிளவி முதல்நீ டும்மே. இதுவும் அது. (இ-ள்.) ஆறென் கிளவி - ஆறென்னும் எண்ணுப்பெயர் அகல் உழக்கு என்பன வரின், முதல் நீடும் - முன்னர்க் குறுகி நின்ற முதலெழுத்து நீண்டு முடியும் எ-று. ‘அறு’ என்னாது ‘ஆறு’ என்றார், திரிந்ததன்திரிபது என்னும் நயத்தால். எ-டு: ஆறகல், ஆறுழக்கு என வரும். (53) அளவு நிறைப்பெயர் வருவழி, ‘ஒன்பது’ ‘இன்’ பெறுதல் 459. ஒன்பா னிறுதி உருவுநிலை திரியா(து) இன்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. இது குற்றுகரம் மெய்யொடுங் கெடாது நின்று இன் பெறுக என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) ஒன்பான் இறுதி உருவுநிலை திரியாது - அளவும் நிறையும் வருவழி ஒன்பதென்னும் எண்ணின் இறுதிக் குற்றுகரந் தன் வடிவு நிலை திரியாது நின்று, சாரியை மொழி இன்பெறல் வேண்டும் - சாரியைச் சொல்லாகிய இன்பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: ஒன்பதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். ‘சாரியை மொழி’ என்றதனான், இன்னோடு உகரமும் வல்லெழுத் தும் கொடுத்துச் செய்கை செய்து முடிக்க. ஒன்பதிற்றுக்கலம், சாடி என எல்லாவற்றோடும் ஒட்டுக. ‘உருவு’ என்பதனான், ஒன்பதிற்றென ஒற்றிரட்டுதல் எல்லாவற் றிற்கும் கொள்க. இன்னும் இதனானே, ஒன்பதினாழி யென்புழி வந்த இன்னின் னகரக் கேடுங் கொள்க. ‘அளவாகு மொழி முதல்’ (எழுத். 121) என்பதன்கண், ‘நிலைஇய’என்னும் இலேசான் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. (54) ஒன்று முதல் ஒன்பான் எண்களொடு ‘நூறு’ புணருமாறு 460. நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே. இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களொடு நூறென்பதனைப் புணர்க்கின்றது. (இ-ள்.) முன் - ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர், நூறுவரினும் - நூறென்னும் எண்ணுப்பெயர் வந்தாலும், கூறிய இயல்பு - மேற் பத்தென்பதனொடு புணரும்வழிக் கூறிய இயல்பு எய்தி முடியும் எ-று. அது குற்றுகரம் மெய்யொடுங் கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி, முதலீரெண்ணி னொற்று ரகரமாய் உகரம் பெற்று, இடைநிலை ரகரம் இரண்டன்கட் கெட்டு முடிதலாம். எ-டு: ஒருநூறு, இருநூறு, அறுநூறு, எண்ணூறு என வரும். இவை மாட்டேற்றான் முடிந்தன. மாட்டேறு ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப. (55) மூன்றன் னகாரம் நகாரமாதல் 461. மூன்ற னொற்றே நகார மாகும். இது மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறுமுடிபு கூறுகின்றது. (இ-ள்.) மூன்ற னொற்றே நகாரமாகும் - மூன்றாம் எண்ணின்கணின்ற னகரவொற்று நகரவொற்றாகும் எ-று. எ-டு: முந்நூறு என வரும். (56) நான்கு ஐந்து - இவற்றின் ஒற்றுத் திரியாமை 462. நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா. இதுவும் அது. (இ-ள்.) நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா-நான்கென்னும் எண்ணும் ஐந்தென்னும் எண்ணும் தம்மொற்றுக்கள் நிலை திரியாது முடியும் எ-று. எ-டு: நானூறு, ஐந்நூறு என வரும். ‘மெய்’ என்றதனான், நானூறு என்புழி வருமொழி நகரத்துள் ஊகாரம் பிரித்து, ‘லன வென வரூஉம்’ (எழுத். 149) என்பதனான் னகர வொற்றாக்கி, ஊகாரமேற்றி, நிலைமொழி னகரங்கெடுத்துக் கொள்க. (57) ஒன்பது ‘நூறு’ வருவழி முடியுமாறு 463. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை யொற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகர மொற்றும். இதுவும் அது. (இ-ள்.) ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்று - ஒன்பதென்னு மெண்ணின் முதனின்ற ஒகரம் மேற் பத்தென்பதனொடு புணரும்வழிக் கூறியவாறு போல ஒரு தகரம் ஒற்றி அதன்மேல் ஏறிமுடியும், முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் - அவ்வொகரத்தின் முன்னின்ற னகர ஒற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், நூறென்கிளவி நகார மெய்கெட ஊ ஆவாகும் இயற்கைத் தென்ப - வருமொழியாகிய நூறென்னும் எண்ணுப் பெயர் நகாரமாகிய மெய்கெட அதன்மேல் ஏறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்பையுடைத்தென்பர் புலவர், ஆயிடை இகார ரகாரம் வருதல் - அம்மொழியிடை ஓர் இகரமும் ரகரமும் வருக, ஈறு மெய் கெடுத்து மகரம் ஒற்றும் - ஈறாகிய குற்றுகரத்தினையும் அஃது ஏறிநின்ற றகர ஒற்றினையும் கெடுத்து ஒரு மகர ஒற்று வந்து முடியும் எ-று. ‘மெய்’ என்பதனான், நிலைமொழிக்கட் பகரங் கெடுக்க. எ-டு: தொள்ளாயிரம் என வரும். இதனை ஒன்பதென்னும் ஒகரத்தின் முன்னர் வந்த தகர ஒற்றின் மேலே ஒகரத்தையேற்றிப், பகரங் கெடுத்துக் குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து, நின்ற னகர ஒற்றினை இரண்டு ளகர ஒற்றாக்கி, நூறென்பதன் நகரங்கெடுத்து, ஊகாரம் ஆகாரமாக்கி ளகரத்தின் மேலேற்றி, இகரமும் ரகரமும் வருவித்து, விகாரப்பட்ட உயிராகிய ஆகாரத்தின்முன் உடம்படு மெய் யகாரம் வருவித்து, றகர உகரங் கெடுத்து, மகர ஒற்று வருவித்து முடிக்க. (58) ஒன்று, இரண்டு - எண்களொடு ‘ஆயிரம்’ முடியுமாறு 464. ஆயிரக் கிளவி வரூஉங் காலை முதலீ ரெண்ணின் உகரம் கெடுமே. இஃது அவ்வொன்றுமுதல் ஒன்பான்களோடு ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஆயிரக்கிளவி வரூஉங் காலை - ஆயிரமென்னுஞ் சொல் ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன் வருங்காலத்து, முதல் ஈரெண்ணின் உகரம் கெடும் - ஒரு இரு என்னும் இரண்டெண்ணின்கட் பெற்று நின்ற உகரங் கெட்டு முடியும் எ-று. ‘உகரங் கெடும்’ எனவே, ஏனையன முன்னர்க் கூறியவாறே நிற்றல் பெற்றாம். எ-டு: ஒராயிரம், இராயிரம் என வரும். (59) அவை ஒர், ஈர் - என உயிர் நீடலும் ஆதல் 465. முதனிலை நீடினும் மான மில்லை. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) முதனிலை நீடினும் மானமில்லை - அம்முதலீரெண்ணின் முதற்கணின்ற ஒகார இகாரங்கள் நீண்டுமுடியினுங் குற்றமில்லை எ-று. எ-டு: ஓராயிரம், ஈராயிரம் என வரும். (60) மூன்றன் னகாரம் வகாரமாதல் 466. மூன்ற னொற்றே வகார மாகும். இது மூன்றென்னும் எண் ஆயிரத்தொடு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) மூன்றனொற்றே வகாரமாகும் - மூன்றென்னும் எண்ணின் கணின்ற னகர ஒற்று வகர ஒற்றாகத் திரிந்து முடியும் எ-று. எ-டு: முவ்வாயிரம் என வரும். முன்னர்ச் சூத்திரத்து ‘நிலை’ என்றதனான், இதனை முதனிலை நீட்டி வகர ஒற்றுக் கெடுத்து மூவாயிரம் எனவும் முடிக்க. (61) நான்கன் னகாரம் லகாரமாதல் 467. நான்க னொற்றே லகார மாகும். இது நான்கென்னும் எண் அதனொடு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) நான்கனொற்றே லகாரமாகும் - நான்கென்னும் எண்ணின் கணின்ற னகர ஒற்று லகர ஒற்றாகத் திரிந்து முடியும் எ-று. எ-டு: நாலாயிரம் என வரும். (62) ஐந்தன் நகாரம் யகாரமாதல் 468. ஐந்த னொற்றே யகார மாகும். இஃது ஐந்தென்னும் எண் அதனொடு புணருமாறு கூறுகின்றது. இ-ள்: ஐந்தனொற்றே யகாரமாகும் - ஐந்தென்னும் எண்ணின் கணின்ற நகர ஒற்று யகர ஒற்றாகத் திரிந்து முடியும் எ-று. எ-டு: ஐயாயிரம் என வரும். (63) முதல் குறுகி நின்ற ‘ஆறு’ ஈற்று முற்றுகரம் கெட்டு முடிதல் 469. ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும். இஃது ஆறென்னும் எண் அதனொடு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் - ஆறென்னும் எண்ணின் கணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நிற்றலின், மெய் ஒழிய ஈறுகெடுதல் வேண்டும் - அது தானேறிய மெய்யாகிய றகர ஒற்றுக்கெடாதுநிற்ப முற்றுகரமாகிய ஈறு தான் கெட்டுப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: அறாயிரம் என வரும். முன்னர் ‘நெடுமுதல் குறுகும்’ (எழுத். 440) என்றவழி அறுவென நின்ற முற்றுகரத்திற்கே ஈண்டுக் கேடு கூறினாரென்பது பெற்றாம். என்னை? குற்றியலுகரமாயின் ஏறிமுடிதலின். இது குற்றுகரந் திரிந்து முற்றுகரமாய் நிற்றலின் ஈண்டு முடிபு கூறினார். முற்றியலுகரம் ‘ஈறுமெய்யொழியக் கெடும்’ எனவே, குற்றுகரங் கெடாது ஏறிமுடியு மென்பது அருத்தாபத்தியாற் பெறுதும். எ-டு: ஆறாயிரம் என வரும். ‘மருங்கு’ என்றதனாற் பிற பொருட்பெயர்க்கண்ணும் நெடுமுதல் குறுகாது நின்று முடிதல் கொள்க. எ-டு: ‘ஆறாகுவதே’ (சொல். 80) என வரும். (64) ‘ஒன்பது’ இன்சாரியை பெறுதல் 470. ஒன்பா னிறுதி உருவுநிலை திரியா(து) இன்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. இஃது ஒன்பதென்னும் எண் அதனொடு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஒன்பான் இறுதி - ஒன்பதென்னும் எண்ணின் இறுதிக் குற்றுகரம், உருவுநிலை திரியாது - தன் வடிவுநிலை திரிந்து கெடாதே, சாரியை மரபு இன் பெறல் வேண்டும் - சாரியையாகிய மரபினையுடைய இன்பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் எ-று. எ-டு: ஒன்பதினாயிரம் என வரும். ‘உருவு’ என்றும் ‘நிலை’ என்றும் ‘சாரியைமரபு’ என்றும் கூறிய மிகையான், ஆயிரமல்லாத பிறவெண்ணின்கண்ணும் பொருட் பெயரிடத் தும் இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் முடிபு கொள்க. எ-டு: ஒன்பதிற்றுக் கோடி, ஒன்பதிற்றொன்பது, ஒன்பதிற்றுத் தடக்கை (பரி. 3 : 39), ஒன்பதிற்றெழுத்து என வரும். இன்னும் இவ்விலேசானே, வேறொரு முடிபின்மையிற் கூறா தொழிந்த எண்ணாயிரம் என்றவழி ஒற்றிரட்டுதலும், ஈண்டுக் கூறிய வற்றிற்கு ஒற்றிரட்டுதலுங் கொள்க. ‘அளவாகு மொழி முதல்’ (எழுத். 121) என்பதனுள், ‘நிலைஇய’ என்றதனான் னகரம் றகரமாதல் கொள்க. (65) ஒன்று முதல் ஒன்பான் எண்களொடு ‘நூறாயிரம்’ முடியுமாறு 471. நூறா யிரமுன் வரூஉங் காலை நூற னியற்கை முதனிலைக் கிளவி. இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களொடு நூறென்னும் எண் அடையடுத்த ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) நூறாயிரம் முன் வரூஉங் காலை - நூறாயிரம் என்னும் அடையடுத்தமொழி ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன் வருமொழியாய் வருங் காலத்து, முதனிலைக் கிளவி நூறன் இயற்கை - ஒன்றென்னும் முதனிலைக்கிளவி ஒன்றுமுன் நூறென்னு மெண்ணொடு முடிந்தாற் போல விகாரமெய்தி முடியும் எ-று. எனவே வழிநிலைக் கிளவியாகிய இரண்டு முதலிய எண்கள் விகாரமெய்தியும், எய்தாது இயல்பாயும் முடியும் எ-று. எ-டு: ஒரு நூறாயிரம் என வரும். ஏனையன இருநூறாயிரம் இரண்டுநூறாயிரம், முந்நூறாயிரம் மூன்றுநூறாயிரம், நானூறாயிரம் நான்குநூறாயிரம், ஐந்நூறாயிரம் ஐந்து நூறாயிரம் அறுநூறாயிரம் ஆறுநூறாயிரம், எண்ணூறா யிரம் எட்டுநூறாயிரம், ஒன்பது நூறாயிரம் என வரும். இவ்விகாரப்பட்டனவற்றிற்குக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து, முதலீரெண்ணி னொற்று ரகரமாக்கி உகரம் வருவித்து, மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுக்கி, மூன்றனொற்று நகாரமாக்கி, நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா வாக்கி, எட்டனொற்று ணகாரமாக்கி, இலேசுகளாற் கொண்ட செய்கைகளில் வேண்டுவனவுங் கொணர்ந்து முடிக்க. ‘ஏற்புழிக்கோடல்’ என்பதனான், தொள்ளாயிரமென்ற முடிபி னொடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியாதென்று கொள்க. ‘முன்’ என்பதனான், இன்சாரியை பெற்று ஒன்பதினூறாயிரம் என்றுமாம். ‘நிலை’ என்பதனான், மூன்றும் ஆறும் இயல்பாக முடிவுழி நெடுமுதல் குறுகாமை கொள்க. (66) ஒன்று முதல் ஒன்பான் எண்ணுப்பெயர் வருவழி, ‘நூறு’ முடியுமாறு 472. நூறென் கிளவி ஒன்றுமுதல் ஒன்பாற்கு ஈறுசினை யொழிய இனவொற்று மிகுமே. இது நூறென்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. (இ-ள்.) நூறு என் கிளவி - நூறென்னும் எண்ணுப் பெயர், ஒன்று முதல் ஒன்பாற்கு - ஒன்றுமுதல் ஒன்பான்களொடு புணருமிடத்து, ஈறு சினையொழிய - ஈறாகிய குற்றுகரந் தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடுங் கெடாதுநிற்ப, இன ஒற்று மிகும் - அச்சினைக்கு இனமாகிய றகர ஒற்று மிக்கு முடியும் எ-று. எ-டு: நூற்றொன்று என வரும். இரண்டு முதல் ஒன்பது அளவுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. ‘ஈறுசினை’ என்று ஓதிய மிகையான், நூறென்பதனொடு பிற எண்ணும், பிறபொருட்பெயரும், இவ்விதியும், பிறவிதியும் எய்தி முடிதல் கொள்க. நூற்றுப்பத்து, நூற்றுக்கோடி, நூற்றுத் தொண்ணூறு எனவும்; நூற்றுக்குறை, ‘நூற்றிதழ்த்தாமரை’ (ஐங்குறு. 20), நூற்றுக்காணம், நூற்றுக்கான்மண்டபம் எனவும் இன ஒற்று மிக்கன கொள்க. இன்னும் இதனானே, இருநூற்றொன்று இரண்டுநூற்றொன்று என நூறு அடை யடுத்த வழியுங்கொள்க. (67) ஒருபஃது முதலியன வருவழியும், ‘நூறு’ அற்றாதல் 473. அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும். இஃது அந்நூறு என்பதனோடு ஒன்றுமுதல் எட்டு எண்கள் அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவை ஊர்பத்தினும் - அந்நூறு என்பது நின்று முற்கூறிய ஒன்றுமுதல் எட்டு எண்களை ஊர்ந்து வந்த பத்தென்பதனொடு புணரு மிடத்தும், அத்தொழிற்றாகும் - ஈறு சினையொழிய இன ஒற்று மிக்கு முடியும் எ-று. எ-டு: நூற்றொருபஃது; இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது என வரும். மற்று, நூற்றொன்பது அவை ஊரப்பட்டு வந்தது அன்மை உணர்க. ‘ஆகும்’ என்றதனான், ஒருநூற்றொருபஃது இருநூற்றொருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்க. (68) அளவு நிறைப்பெயர் வருவழியும் அற்றாதல் 474. அளவும் நிறையும் ஆயியல் திரியா குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். இது நூறு என்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அளவும் நிறையும் ஆயியல் திரியாது - நூறென்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமிடத்து முற்கூறிய இயல்பின் திரியாது இன ஒற்று மிக்கு முடியும், குற்றியலுகரமும் வல்லெழுத் தியற்கையும் - அவ்விடத்துக் குற்றியலுகரங் கெடாமையும் இன ஒற்று மிக்கு வன்றொடர்மொழியாய் நிற்றலின் வருமொழி வல்லெழுத்து மிகும் இயல்பும், முற்கிளந்தன்ன என்மனார் புலவர் - ‘வல்லொற்றுத் தொடர் மொழி வல்லெழுத்து மிகுமே’ (எழுத். 426) என வன்றொடர் மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: நூற்றுக்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். ‘திரியா’ என்றதனான், நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க. அஃது ஒருநூற்றுக்கலம் இருநூற்றுக்கலம் என வரும். (69) ஒருபஃது முதலிய எண்கள், ஒன்று முதல் ஒன்பானொடு புணர்தல் 475. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு ஒற்றிடை மிகுமே நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும். இஃது ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. (இ-ள்.) ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி - ஒன்று முதல் எட்டு ஈறாகப் பத்தென்னும் எண் ஏறி ஒருசொல்லாகி நின்ற ஒருபஃது முதலிய எண்கள், ஒன்றுமுதல் ஒன்பாற்கு - ஒன்றுமுதல் ஒன்பான்கள் வரு மொழியாய் வந்து புணரும் இடத்து, நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்-பஃதென்பதன்கண் நின்ற ஆய்தங் கெட்டு முடிதலை விரும்பும் ஆசிரியன், ஒற்று இடைமிகும் - ஆண்டு இன ஒற்றாகிய ஒரு தகர ஒற்று இடைமிக்கு முடியும் எ-று. எ-டு: ஒருபத்தொன்று, இருபத்தொன்று, ஒருபத்திரண்டு, இருபத் திரண்டு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள் ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதிகாரத்தால் நின்ற நூறென்பதனோடு அடுத்து வருமென்று உணர்க. (70) ‘ஆயிரம்’ வருவழி, அவ்வெண்கள் ‘இன்’ பெறுதல் 476. ஆயிரம் வரினே இன்னென் சாரியை ஆவயி னொற்றிடை மிகுத லில்லை. இஃது ஒருபஃது முதலியவற்றோடு ஆயிரத்தைப் புணர்க்கின்றது. (இ-ள்.) ஆயிரம் வரின் இன்னென் சாரியை - அவ்வொன்று முதலாகிய பத்து ஊர் கிளவி ஆயிரத்தொடு புணரும் இடத்து இன் சாரியை பெறும், ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை - அவ்விடத்துத் தகர ஒற்று இடை வந்து மிகாது எ-று. எ-டு: ஒருபதினாயிரம் இருபதினாயிரம் என எண்பதின்காறும் ஒட்டுக. இவை நூற்றொருபதினாயிரம் எனவும் வரும். ‘ஆவயின்’ என்றதனான், நூறாயிரத்தொருபத்தீராயிரம் என்றாற் போல அத்துப் பெறுதலும் பிறவுங் கொள்க. (71) அளவும் நிறையும் வருவழியும் ‘இன்’ தோன்றுதல் 477. அளவும் நிறையும் ஆயியல் திரியா. இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் புணர்க்கின்றது. (இ-ள்.) அளவும் நிறையும் ஆயியல் திரியா - ஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடைமிகாது இன்சாரியை பெற்று முடியும் எ-று. எ-டு: ஒருபதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; ஒருபதின்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். இவற்றிற்கு நூறு அடையடுத்து ஒட்டுக. ‘திரியா’ என்றதனான், ஒருபதிற்றுக்கலம் இருபதிற்றுக்கலம் என்னுந் தொடக்கத்தனவற்றின்கண் இன்னின் னகரம் றகரமாகத் திரிந்து இரட்டு தலும், உகரமும் வல்லெழுத்துப் பெறுதலுங் கொள்க. இன்னும் இதனானே, ஒருபதினாழி என்றவழி வருமொழி நகரந் திரிந்துழி நிலைமொழி னகரக்கேடுங் கொள்க. ‘அளவும் நிறையும் அதனோ ரன்ன’ என்று பாடம் ஓதுவார், முன்னர்ச் சூத்திரத்து ‘ஆவயின்’ என்றதனானும், அதன் முன்னர்ச் சூத்திரத்து ‘நின்ற’ என்றதனானும் இவற்றை முடிப்பார். (72) வன்கணம் மென்கணம் இடைக்கணம் வருவழி, ஒன்று ‘ஒரு’ ஆதல் 478. முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞநமத் தோன்றினும் யவவந் தியையினும் முதனிலை யியற்கை என்மனார் புலவர். இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களொடு பொருட் பெயரைப் புணர்க்கின்றது. (இ-ள்.) முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் - ஒன்றென்னும் எண்ணின்முன் வல்லெழுத்து முதன்மொழி வரினும், ஞநம தோன்றினும் - ஞநமக்களாகிய மெல்லெழுத்து முதன்மொழிவரினும், யவ வந்து இயையினும் - யவக்களாகிய இடையெழுத்து முதன்மொழி வரினும், முதனிலை இயற்கை என்மனார் புலவர் - அவ்வொன்று முதல் ஒன்பான்கள் முன்னெய்திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர் புலவர் எ-று. எனவே, வழிநிலையெண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம்மூன்று கணமும் முதன்மொழியாய்வரின், முதனிலை முடிபாகி விகாரம் எய்தியும், எய்தாது இயல்பாயும் முடியும். எ-டு: ஒருகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும்; இருகல், இரண்டுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும் ஒட்டுக. இவ்வெண்களிற் குற்றியலுகரம் மெய்யொடுங் கெட்டு, முதலீரெண்ணின் ஒற்று ரகாரமாக உகரம் வந்தது. இருகல் முதலியவற்றிற்கு இடைநிலை ரகாரங் கெடுக்க. முக்கல் மூன்றுகல்; சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக. இதற்கு நெடு முதல் குறுக்கி ‘மூன்ற னொற்றே வந்த தொக்கும்’ (எழுத். 447) என்பதனான் முடிக்க. முன்னர், எண்ணுப்பெயரும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வருவழிக்கூறிய விகாரங்களிற், பொருட்பெயர்க்கும் ஏற்பன கொணர்ந்து முடித்து, எல்லாவற்றிற்கும் ‘நிலை’ என்றதனான், ஒற்றுத்திரித்து முடிக்க. அவை, மூன்றற்கும் ஐந்தற்கும் ஞகரம் வருவழி ஞகர ஒற்றாதலும், மூன்றற்கு யகரம் வருவழி வகர ஒற்றாதலுமாம். எ-டு: நாற்கல் நான்குகல் சுனை துடி பறை; நான்ஞாண் நான்குஞாண் நூல் மணி யாழ் வட்டு; ஐங்கல் ஐந்துகல் சுனை துடி பறை; ஐஞ்ஞாண் ஐந்துஞாண் நூல் மணி; ஐயாழ் ஐந்துயாழ் ஐவட்டு ஐந்துவட்டு; அறுகல் ஆறுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு; எண்கல் எட்டுக்கல் சுனை துடி பறை; எண்ஞாண் எட்டுஞாண் நூல் மணி யாழ் வட்டு; ஒன்பதுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக. ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக்கின்மையின் ஒழிக்க. இன்னும் மாட்டேறின்றி வருவனவற்றிற் கெல்லாம் முடிபு ‘நிலை’ யென்றதனான் முடிக்க. (73) உயிர்க்கணமும் யாவும் வருவழி, அஃது ‘ஓர்’ ஆதல் 479. அதனிலை உயிர்க்கும் யாவரு காலை முதனிலை ஒகரம் ஓவா கும்மே ரகரத் துகரந் துவரக் கெடுமே. இஃது ஒன்று முதல் ஒன்பான்களோடு, பொருட்பெயருள் உயிர் முதல்மொழி முடியுமாறும், மேற்கூறிய யகாரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது. (இ-ள்.) முதனிலைக்கு - ஒன்றென்னும் எண்ணின் திரிபாகிய ஒரு என்னும் எண்ணிற்கு, உயிரும் யாவும் வருகாலை - உயிர் முதன்மொழியும் யாமுதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, அதன் நிலை - அம்முதனிலையின் தன்மை இவ்வாறாம்; ஒகரம் ஓவாகும் - ஒகரம் ஓகாரமாய் நீளும்; ரகரத்து உகரந் துவரக் கெடும் - ரகரத்து மேனின்ற உகரம் முற்றக் கெட்டு முடியும் எ-று. நான்காவதனை முதனிலையோடு கூட்டி, அதன்கண் நின்ற உம்மையை உயிரொடும் யாவொடுங் கூட்டுக. எனவே வழிநிலையெண்கள் உயிர் முதன்மொழி வந்த இடத்து முற்கூறியவாறே இருவாற்றானும் முடியும். எ-டு: ஓரடை, ஓராகம், ஓரிலை, ஓரீட்டம், ஓருலை, ஓரூசல், ஓரெழு, ஓரேடு, ஓரையம், ஓரொழுங்கு, ஓரோலை ஓரௌவியம் என வரும். குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து, முதலெண்ணினொற்று ரகரமாக்குக. ஓர்யாழ், ஓர்யானை என வரும். ‘துவர’ என்றதனான், இரண்டென்னும் எண்ணின் இகரத்தை நீட்டி, ரகரத்துள் உகரத்தைக் கெடுத்து, ஈரசை ஈர்யானை எனவும், மூன்றென்னும் எண்ணின் னகரவொற்றுக் கெடுத்து, மூவசை மூயானை எனவும் முடிக்க. இவை செய்யுண் முடிபு. இன்னும் இதனானே, இங்ஙனம் வருவன பிறவும் அறிந்து முடித்துக் கொள்க. (74) ‘மா’ வருவழி, இரண்டு முதல் ஒன்பான் எண்கள் திரியுமாறு 480. இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர் வழங்கியல் மாவென் கிளவி தோன்றின் மகர அளவொடு நிகரலு முரித்தே. இஃது இரண்டு முதல் ஒன்பான்களின் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உரிய மாவென்பது புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண்டென்னு மெண் முதலாக ஒன்பதென்னுமெண் ஈறாக நின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் - வழக்கின்கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்கு உரிய மா வென்னுஞ் சொல் வருமொழியாய் வரின், மகர அளவொடு நிகரலும் உரித்து - அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டையென்னும் அளவுப் பெயரோடு ஒத்து விகாரப்பட்டு முடிதலும் உரித்து; உம்மையான் விகாரப்படாது இயல்பாய் முடிதலும் உரித்து எ-று. ‘வழக்கியல்’ வழங்கியலென விகாரம். ‘மகரஅளவு’ மகர முதன் மொழியாகிய அளவுப் பெயரெனப் பண்புத்தொகை. அஃது ‘அளந்தறி கிளவியும்’ (எழுத். 446) என்பதனுள், ஒரு மண்டை என முடித்ததாம். எ-டு: இருமா, மும்மா, நான்மா, ஐம்மா, அறுமா, எண்மா, ஒன்பதின்மா என முன்னர்க் கூறிய சூத்திரங்களான் விகாரப் படுத்தி முடிக்க. இனி, உம்மையான் விகாரப்படுத்தாது இரண்டுமா மூன்றுமா நான்குமா ஐந்துமா ஆறுமா எட்டுமா ஒன்பதுமா எனவும் முடிக்க. புள்ளிமயங்கியலுள் ‘அளவு நிறையும்’ (எழுத். 389) என்னுஞ் சூத்திரத்தான், ஏழ்நெடுமுதல் குறுகி உகரம் வந்து புணருமாறு கூறினார். அதனான், ஈண்டு எழுமா என முடிக்க. ஏழ்மாவென முடிதல் வழக்கின்று. ‘இரண்டுமுதல் ஒன்பான்’ என்று எடுத்தோதினமையின், ஒன்றற்கு ஒருமாவென்னும் முடிபேயன்றி, ஒன்றுமா வென்னும் முடிபு இல்லை யாயிற்று. ‘வழங்கியன்மா’ என்றார், விலங்கு மாவை நீக்குதற்கு. (75) புள்ளிமயங்கியலுள் எஞ்சி நின்ற செய்யுள்முடிபு 481. லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் உம்முங் கெழுவும் உளப்படப் பிறவும் அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் செய்யுள் தொடர்வயின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயி னான. இது புள்ளிமயங்கியலுள் ஒழிந்து நின்ற செய்யுண்முடிபு கூறு கின்றது. (இ-ள்.) லன என வரூஉம் புள்ளியிறுதி முன் - லகார னகார மென்று கூற வருகின்ற புள்ளி ஈற்றுச் சொற்களின் முன்னர், உம்முங் கெழுவும் உளப்பட - உம்மென்னுஞ் சாரியையும் கெழுவென்னும் சாரியையும் உட்பட, பிறவும் அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி - பிறசாரியையும் அப்பெற்றிப்பட்ட மரபினையுடைய மொழியிடத்தே தோன்றி, செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும் - செய்யுட் சொற்களைத் தொடர்பு படுத்திக் கூறுமிடத்துப் பொருள்பட நிற்கும், வேற்றுமை குறித்த பொருள் வயினான - வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண் எ-று. எ-டு: ‘வானவரி வில்லுந் திங்களும் போலும்’. இதற்கு உம்மென்னுஞ் சாரியையின் மகரத்தை ‘அம்மினிறுதி’ (எழுத். 129) என்னுஞ் சூத்திரத்துள் ‘தன்மெய் என்றதனாற் பிற சாரியையுந் திரியுமென நகர ஒற்றாக்கி நிலைமொழி லகர ஒற்றின் மேல் உயிரேற்றி முடிக்க. வில்லுந் திங்களும் போலுமென்பதற்கு, வில்லிடைத்திங்கள் போலுமென ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க. ‘கல்கெழு கானவர் நல்குறு மகளே’ (குறுந். 71); இதற்குக் கல்லைக் கெழீஇயின என உரைக்க. ‘மாநிதிக்கிழவனும் போன்ம்’ (அகம். 66); இதற்குக் கிழவனைப் போன்மென உரைக்க. இவ்வும்மை சிறப் பன்று.‘கான்கெழுநாடன்’ (அகம். 98) இதற்குக் கானைக்கெழீஇய என உரைக்க. இனி ‘அன்னமரபின் மொழியிடை’ என்றதனாற், ‘கெழு’ என்றது பிற சொல்லிடத்தே ‘பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர்’ (மதுரைக். 234), ‘துறைகெழு மாந்தை’ (நற். 35) என இயல்பாக வருவனவும்; ‘வளங்கெழு திருநகர்’ (அகம். 17) ‘பயங்கெழு மாமழை’ (புறம். 266) என நிலைமொழி யீற்றெழுத்துத் திரிய வருவனவுங் கொள்க. இன்னும் இதனானே, இச்சாரியையது உகரக்கேடும் எகர நீட்சியுங் கொள்க. ‘பூக்கேழ் தொடலை நுடங்க வெழுந்து’ (அகம். 28) ‘துறை கேழூரன் கொடுமை நாணி’ (ஐங்குறு. 11) இவற்றிற்கு, இரண்டாவதும் ஏற்புழி மூன்றா வதும் விரிக்க. ‘செங்கேழ் மென்கொடி’ (அகம். 80) என்புழிக் கெழு வென்னும் உரிச்சொல் ‘எழுத்துப் பிரிந்திசைத்தல்’ (சொல். 395) என்பதனான் நீண்டதென்று உணர்க. ‘மெய்’ என்றதனான், ‘பூக்கேழென்’ (நற். 10) புழி வல்லொற்று மிகுதல் கொள்க. இன்னுஞ் சான்றோர் செய் யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற்கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க. (76) இவ்வதிகாரத்துப் புணர்க்கப்படாத சொற்கள் இவை எனல் 482. உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும் செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழில்தொகு மொழியும் தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம் எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய புணரியல் நிலையிடை உணரத் தோன்றா. இஃது இவ்வதிகாரத்தாற் புணர்க்கப்படாத சொற்கள் இவையென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது. (இ-ள்.) உயிரும் புள்ளியும் இறுதியாகி - கூறுங்கால் உயிரும் புள்ளியும் ஈறாக நிற்கும் சொல்லாகி, குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி - குறிப்பினானும் பண்பினானும் இசையினானும் பிறந்து, நெறிப் பட வாராக் குறைச் சொற்கிளவியும் - ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் - உயர்திணை அஃறிணையென்னும் அவ்விரண்டிடத்தும் உளவாகிய, ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் - ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலினையும் அறிதற்குக் காரணமாகிய பண்பு கொள்பெயர் தொகுந் தொகைச்சொல்லும், செய்யுஞ் செய்த என்னும் கிளவியின் - செய்யும் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய, மெய் ஒருங்கு இயலுந் தொழில் தொகுமொழியும் - காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒரு சொற்கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு நிற்குஞ் சொற்களும், தம் இயல் கிளப்பின்-தமது தன்மை கூறுமிடத்து, தம்முன் தாம்வரூஉம் எண்ணின் தொகுதி உளப்பட - நிறுத்த சொல்லுங் குறித்துவருகிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப் பெயரினது தொகுதியும் உளப்பட, அன்ன பிறவும் எல்லாம் - அத்தன்மையாகிய பிறவுமெல்லாம், மருவின் பாத்திய - உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தம் இலக்கணமாகவுடைய, புணரியல் நிலை இடை யுணரத் தோன்றா - ஒன்றனோடொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்றா எ-று. எ-டு: கண் விண்ண விணைத்தது, விண்விணைத்தது இவை குறிப்புரிச்சொல்; ஆடை வெள்ளவிளர்த்தது, வெள்விளர்த் தது இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல வொலித்தது, ஒல்லொலித்தது இவை இசையுரிச்சொல். ‘ஒல்லொலிநீர் பாய்வதே போலுந் துறைவன்’ என்றார் செய்யுட்கண்ணும். இவை உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றன்கண் அடக்க லாகாமையின் ‘நெறிப்படவாரா’ என்றார். விண்ணவிணைத்தது தெறிப்புத்தோன்றத் தெறித்ததென்றும், விண்விணைத்தது தெறிப்புத் தெறித்ததென்றும் ஆம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ஙனம் நிற்றலின் தன்மை குறைந்த சொல்லாயிற்று. ‘வினையே குறிப்பே’ (சொல். 258) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய ‘என’ என்பதனை இவற்றொடு கூட்டியவழி இடைச்சொல்லாதலின், விண்ணென விணைத்தது எனப் புணர்க்கப்படு மாறு உணர்க. இனிக் கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார், கருங் குதிரை, கருங்குதிரைகள் என வரும். இவற்றுட் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்பு கொள்பெயர் தொக்கவாறு காண்க. இவற்றுட் கருமை என்னும் பண்புப் பெயர் தொக்கதேற் கருமையாகிய பார்ப்பானென விரித்தல் வேண்டும்; அங்ஙனம் விரியாமையிற் பண்புகொள்பெயர் தொக்கதென்று உணர்க. வெற்றிலை, வெற்றுப்பிலி, வெற்றடி, வெற்றெனத்தொடுத்தல் என்றாற்போல்வனவற்றுள், வெறுவிதாகியஇலை யென்பது, பாக்குங் கோட்டுநூறுங் கூடாததாய பண்புணர்த்திய ஈறு தொகுதலின் மருவின் பாத்தியதாய் நின்று ஒற்றடுத்தது. வெறுவிதாகிய உப்பிலி யென்றது, சிறிதும் உப்பிலியென நின்றது. ஏனையவும் அன்ன. இங்ஙனம் ஐம்பாலுந் தொகுத்தற்கு உரிய முதனிலையாதலிற் புணர்த்தலாகாமை கூறினார். இனி, ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல் யானை, செல்செலவு என, நிலம் முதலாகிய பெயரெச்சந் தொக்க வினைத் தொகைகளை விரிக்குங்கால், ஆடினவரங்கு எனச் ‘செய்த’ என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்பு உணர்த்தியும், ஆடா நின்றவரங்கு, ஆடுமரங்கு எனச் ‘செய்யும்’ என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்மீறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும், அவற்றானாய புடை பெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒரு சொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின், அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்க்கலாகாமையிற், புணர்க்கலாகாதென்றார். உம்மிறுதி நிகழ்வும் எதிர்வும் உணர்த்துமாறு, ‘வினையின் தொகுதி’ (சொல். 415) என்னும் எச்சவியற் சூத்திரத்துட் கூறுதும். இவ் உம் ஈறு இரண்டு காலமும் ஒருங்குணர்த்துதற் சிறப்பு நோக்கிச் ‘செய்த’ என்பதனை ஆசிரியர் முற்கூறாராயினர். இனிப் பத்து என நிறுத்திப், பத்தெனத் தந்து புணர்க்கப்படாது, பப்பத்தெனவும், பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவொன் றென்பதும் அது. அதுதானே ஓரொன்றோரொன்றாகக் கொடு என்றாற் புணர்க்கப்படும். இனி ‘அன்னபிறவும்’ என்றதனானே, உண்டான் என்புழி உண் என்னும் முதனிலையுங், காலங்காட்டும் டகரமும், இடனும் பாலும் உணர்த்தும் ஆனும் ஒன்றனோடொன்று புணர்க்கப்படா, அவை நிறுத்தசொல்லுங் குறித்துவருகிளவியும் அன்மையின். கரியன் என்புழிக், கரு என நிறுத்தி அன் எனத் தந்து புணர்க்கப்படாது, அஃது இன்ன னென்னும் பொருள் தருதலின். ஏனை வினைச்சொற்களும் இவ்வாறே பிரித்துப் புணர்க்கலாகாமை உணர்க. இன்னும் அதனானே, கொள்ளெனக் கொண்டான் என்புழிக் கொள் என்பதனை என என்பதனொடு புணர்க்கப் படாமையும், ஊரன் வெற்பன் முதலிய வினைப்பெயர்களும், பிறவும் புணர்க்கப்படாமையும் கொள்க. இவ்வாசிரியர் புணர்க்கப்படா வென்ற இச் சொற்களையும், வடநூற்கண் முடித்த அனகன் அனபாயன் அகளங்கன் முதலிய வடசொற் களையும் பின்னுள்ளோர் முடித்தல் முதனூலொடு ‘மாறுகொளக் கூறலாம்’ என்று உணர்க. (77) அதிகாரப் புறனடை 483. கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கி னுணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். இஃது இவ்வதிகாரத்து எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றை யெல்லாம் இதனானே முடிக்க என அதிகாரப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் - முன்னர் எடுத்தோதப் பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத் திரிந்து முடிவனவும், வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்-நால்வகை வழக்கும் நடக்கு மிடத்து மருவுதலொடு திரிந்து முடிவனவும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்-முன்னர்க் கூறிய இலக்கண முறைமையினின்றும் வேறுபடத் தோன்றுமாயின் அவற்றை, நன்மதி நாட்டத்து-நல்ல அறி வினது ஆராய்ச்சியானே, வழங்கியன் மருங்கின்-வழக்கு முடிந்து நடக்கு மிடத்தே, உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனார் புலவர்-முடிபு வேறு பாடுகளை அறிந்து நடாத்துக என்று கூறுவர் புலவர் எ-று. எ-டு: ‘தடவுத்திரை’ என உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் ‘தடவுநிலை’ (புறம். 140) என உகரம் பெற்றும் அகர ஈற்று உரிச்சொல் வந்தது. அதவத்தங்கனி என வேற்றுமைக்கண் அகர ஈறு அத்துப் பெற்றது. ‘கசதபத் தோன்றின்’ என அகர ஈற்றின் முன்னர்த் தகரங் கொடுக்க. ‘நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன் குரவ நீடிய கொன்றையங் கானல்’ என ஆகார இறுதி குறியதனிறுதிச் சினைகெட்டு இருவழியும் அம்முப் பெற்றன. ‘முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவைப் பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ’ (மலைபடு. 176) என அவ்வீறு அல்வழிக்கண் அம்முப் பெறாத முடிபுபெற்றன. ‘திண்வார் விசித்த முழவொ டாகுளி’ (மலைபடு. 3), ‘சுறவெறி மீன்’, ‘இரவழங்கு சிறுநெறி’ (அகம். 318) இவை உகரம் பெறாமல் வந்தன. ‘கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை’ (அகம். 97) என இகரஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. ‘தீயினன்ன வொண்செங் காந்தள்’ (மலைபடு. 145) என ஈகார ஈறு வேற்றுமைக்கண் இன் பெற்றது. ‘நல்லொழுக்கங் காக்குந் திருவத்தவர்’ (நாலடி. 457) என உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. ‘ஏப்பெற்ற மான்பிணை போல்’ (சீவக. 2945) என ஏகார ஈறு வேற் றுமைக்கண் எகரம் பெறாது வந்தது. ‘கைத்துண்டாம் போழ்தே’ (நாலடி. 19), ‘கைத்தில்லார் நல்லர்’ (நான்மணிக். 69) எனவும், ‘புன்னையங்கானல்’ (அகம். 80), ‘முல்லையந் தொடையல்’ எனவும், ஐகார ஈறு வேற்றுமைக்கண் அத்தும் அம்மும் பெற்றன. ‘அண்ணல் கோயில் வண்ணமே’ (சீவக. 126) என ஓகார ஈறு யகர உடம்படுமெய் பெற்றது. இனி ‘அஞ்செவி நிறைய வாலின’ (முல்லைப். 89) என அல்வழிக்கட் ககரமும் அகரமுங்கெட்டன. ‘மரவம் பாவை வயிறாரப் பருகி’ ‘மரவநாகம் வணங்கி மாற்கணம்’ என இருவழியும் மகரம் விகாரப்பட்டு அம்முப் பெற்றன. ‘காரெதிர் கானம் பாடினேமாக’ (புறம். 144), ‘பொன்னந் திகிரி முன்சமத் துருட்டி’ (புறம். 368) ‘பொன்னங் குவட்டிற் பொலிவெய்தி’ என னகர ஈறு இருவழியும் அம்முப்பெற்றன. ‘வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை’ (நற். 62) என ரகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது. ‘நாவலந் தண்பொழில்’ (பெரும்பாண். 465), ‘கானலம் பெருந்துறை’ (ஐங்குறு. 158) என லகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. ‘நெய்தலஞ் சிறுபறை’ இஃது அல்வழிக்கண் அம்முப் பெற்றது. ‘ஆயிடை யிருபே ராண்மை செய்த பூசல்’ (குறுந். 43) என்புழி ஆயிடை யென்பது உருபாதலின் ‘நீடவருதல்’ (எழுத். 208) என்பதனான் முடியாது நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது. தெம்முனை எனத் தெவ்வென்புழி வகரங் கெட்டு மகர ஒற்றுப் பெற்று முடிந்தது. ‘அ’ என்னுஞ் சுட்டு ‘அன்றி யனைத்தும்’ எனத் திரிந்தது. ‘முதிர்கோங்கின் முகை’ (குறிஞ்சிக்கலி. 20) எனவும், ‘காய்மாண்ட தெங்கின் பழம்’ (சீவக. 31) எனவும், குற்றுகர ஈறு இன் பெறுதலுங் கொள்க. ‘தொண்டுதலையிட்ட பத்துக்குறை’ (தொல். பொருள். 413) என ணகரம் இரட்டாது தகர ஒற்று டகர ஒற்றாய்க் குற்றியலுகரம் ஏறி முடிந்தது. இங்ஙனஞ் செய்யுளுட் பிறவும் திரிவன உளவேனும் இப் புறனடையான் முடிக்க. அருமருந்தானென்பது ரகரவுகரங் கெட்டு அருமந்தானென முடிந்தது. சோழனாடு சோணாடு என அன் கெட்டு முடிந்தது. பாண்டி நாடும் அது. தொண்டைமானாடு தொண்டை நாடு என ஈற்றெழுத்துச் சில கெட்டு முடிந்தது. மலையமானாடு மலாடு என முதலெழுத்தொழிந்தன பலவுங் கெட்டு முடிந்தது. பொதுவில் என்பது பொதியிலென உகரந் திரிந்து இகரமாய் யகர உடம்படுமெய் பெற்று முடிந்தது. பிறவும் இவ்வாறே திரிந்து மருவி வழங்குவன எல்லாம் இப்புறனடையான் அமைத்துக் கொள்க. (78) குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று. எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை முற்றிற்று. எழுத்ததிகார இயல்களின் அமைப்பு ‘நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு மேலைப் புணர்ச்சி தொகைமரபு - பாலாம் உருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கம் தெரிவரிய குற்றுகரஞ் செப்பு.’ எழுத்ததிகார நூற்பாக்களின் தொகை ‘எழுத்ததி காரத்துச் சூத்திரங்கள் எல்லாம் ஒழுக்கிய ஒன்பதோத் துள்ளும் - வழுக்கின்றி நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கள் மேனூற்று வைத்தார் விரித்து.’ பாயிர மேற்கோள் நிரல் அப்புலம் அரில்தப அவ்வினை யாளரொடு அவற்றுள், பாடம் கண்ணழிவு அன்னம் கிளியே அனையன் அல்லோன் அனையன் நல்லோன் ஆக்கியோன் பெயரே ஆசான் உரைத்தது ஆயிர முகத்தான் ஈதல் இயல்பே ஈவோன் தன்மை எத்திறம் ஆசான் ஏதுவின் ஆங்கவை ஒருகுறி கேட்போன் கழற்பெய் குடமே காலம் களனே குரங்கெறி விளங்காய் கோடல் மரபு சூத்திரம் உரையென செவ்வன் தெரிகிற்பான் தன்மகன் ஆசான் தன்னூல் மருங்கினும் துடைத்துக் கொள்பொருள் துலாக்கோல் இயல்பே தோன்றாதோற்றி நிலத்தின் இயல்பே பருப்பொருட் டாகிய பாயிரத் திலக்கணம் பிறர்க்குஉரை இடத்தே பூவினதியல்பே பொழிப்பே அகலம் மடிமானி பொச்சாப்பன் மலைநிலம் பூவே மலையே, அளக்கலாகா முக்கால் கேட்பின் மொழிவது உணராதார் யாற்றது ஒழுக்கே வழக்கின் இலக்கணம் நூற்பா நிரல் (எண்: நூற்பா எண்) அஆ உஊ 173 அஆ என்னும் 181 அஇ உஅம் 31 அஃறிணை விரவுப்பெயர் 155 அக்கென் சாரியை 270 அகமென் கிளவிக்கு 315 அகர ஆகாரம் 311 அகர இகரம் 54 அகர இறுதி 203 அகர உகரம் 55 அகரத் திம்பர் 56 அடையொடு தோன்றினும் 318 அண்ணம் சேர்ந்த 99 அண்ணம் நண்ணிய 93 அணரி நுனிநா 94 அத்தவண் வரினும் 219 அத்திடை வரூஉங் 168 அத்தின் அகரம் 125 அத்தே வற்றே 133 அத்தொடு சிவணும் 317 அதனிலை உயிர்க்கும் 479 அந்நான் மொழியுந் 429 அப்பெயர் மெய்யொழித் 350 அம்மின் இறுதி 129 அம்மூ வாறும் 22 அரையளவு குறுகல் 13 அரையென வரூஉம் 165 அல்லதன் மருங்கிற் 326 அல்லது... இறுதியும் 408 அல்லது கிளப்பின் இயற்கை 321 அல்லது கிளப்பின் எல்லா 425 அல்லது... மெனும் 322 அல்வழி... இயல்பென 361 அல்வழி... உறழென 368, 398 அல்வழி... மெல்லெழுத் 314 அவ்வழிப் பன்னீருயிரும் 84 அவ்வா றெழுத்தும் 92 அவ்வியல் நிலையும் 12 அவற்றுவழி மருங்கிற் 118 அவற்றுள், அஆ ஆயிரண் 85 அவற்றுள் அஇ உஎ 3 அவற்றுள், இகர இறுபெயர் 154 அவற்றுள், இன்னின் இகரம் 120 அவற்றுள், ஈரொற்றுத் தொடர் 407 அவற்றுள், கரமுங் கானும் 135 அவற்றுள், ணனஃகான் 26 அவற்றுள், நிறுத்த சொல்லின் 108 அவற்றுள், மஃகான் 28 அவற்றுள், மெய்யீ றெல்லாம் 104 அவற்றுள், மெல்லெழுத் 145 அவற்றுள், ரகார ழகாரங் 49 அவற்றுள், லளஃகான்முன்னர் 24 அவைதாம், இயற்கைய வாகும் 197 அவைதாம், இன்னே வற்றே 119 அவைதாம், குற்றிய லிகரம் 2 அவைதாம், முன்னப் பொருள 142 அவைதாம், மெய்பிறி தாதல் 109 அவையூர் பத்தினும் 473 அழனென் இறுதிகெட 354 அழனே புழனே 193 அளந்தறி கிளவியும் 446 அளபிறந் துயிர்த்தலும் 33 அளவாகும் மொழி 121 அளவிற்கும் நிறையிற்கும் 170 அளவும்... ஆயியல் திரியா 477 அளவும்... ஆயியல் திரியாது 474 அளவும்... எண்ணும் 389 அளவும்... வேற்றுமை 319 அன்றுவரு காலை 258 அன்ன வென்னும் 210 அன்னென் சாரியை 194 ஆஈ ஊஏஐ 4 ஆஎ ஒஎனும் 64 ஆஏ ஓஅம் 32 ஆகார இறுதி 221 ஆடூ மகடூ 271 ஆண்மரக் கிளவி 304 ஆணும் பெண்ணும் 303 ஆதனும் பூதனும் 348 ஆய்தம் நிலையலும் 399 ஆயிரக் கிளவி 464 ஆயிரம் வரினும் 435 ஆயிரம் வரினே 476 ஆயிரம் வருவழி 391 ஆரும் வெதிரும் 363 ஆவயின் வல்லெழுத்து 301 ஆவும் மாவும் 224 ஆவோ டல்லது 65 ஆறன் உருபின் 115 ஆறன் உருபினும் 161 ஆறன் மருங்கிற் 469 ஆறென் கிளவி 458 ஆன்முன் வரூஉம் 233 ஆனின் னகரமும் 124 ஆனொற் றகரமொடு 232 இஈ எஏ 86 இக்கின் இகரம் 126 இகர இறுதிப் 235 இகர யகரம் 58 இடம்வரை கிளவிமுன் 251 இடைநிலை ரகரம் 439 இடைப்படிற் குறுகும் 37 இடையெழுத் தென்ப 21 இடையொற்றுத் தொடரும் 413 இதழியைந்து பிறக்கும் 97 இயற்பெயர் முன்னர்த் 347 இரண்டுமுத லொன்பான் 480 இராவென் கிளவி 227 இருதிசை புணரின் 431 இருளென் கிளவி 402 இல்ல மரப்பெயர் 313 இல்லென் கிளவி 372 இல்லொடு கிளப்பின் 293 இலமென் கிளவிக்கு 316 இறாஅல் தோற்றம் 343 இன்றி என்னும் 237 இன்னிடை வரூஉம் 186 இன்னென வரூஉம் 131 இனிஅணி என்னும் 236 ஈகார இறுதி 249 ஈமுங் கம்மும் 328 ஈரெழுத்து... உயிர்த்தொடர் 411 ஈரெழுத்து... வல்லொற்று 417 ஈரெழுத் தொருமொழி 406 ஈறியல் மருங்கின் 171 ஈறியல் மருங்கினும் 39 உஊ... என்னும் 63 உஊ... ஔஎன 87 உஊ காரம் 74 உகர இறுதி 254 உகரமொடு புணரும் 163 உச்ச காரம் 75 உச்ச காரமொடு 79 உட்பெறு புள்ளி 14 உண்டென் கிளவி 430 உணரக் கூறிய 405 உதிமரக் கிளவி 243 உந்தி முதலா 83 உப்ப காரம் 76 உப்ப காரமொடு 80 உம்மை எஞ்சிய 223 உயர்திணைப் பெயரே 117 உயர்திணை யாயின் உருபியல் 324 உயர்திணை யாயின் நம்மிடை 190 உயிர்ஔ எஞ்சிய 69 உயிர்முன் வரினும் 207,394 உயிர்மெய் அல்லன 60 உயிர்மெய் ஈறும் 106 உயிரிறு சொல்முன் 107 உயிரீ றாகிய உயர்திணை 153 உயிரீ றாகிய முன்னிலை 151 உயிரும்... அளவும் 164 உயிரும்... குறிப்பினும் 482 உரிவரு காலை 240 உருபியல் நிலையும் 294 உருவினும் இசையினும் 40 உரைப்பொருட் கிளவி 212 ஊஎன் ஒருபெயர் 269 ஊகார இறுதி 264 எஎன வருமுயிர் 71 எகர ஒகரத் 16 எகர ஒகரம் 272 எகின்மர மாயின் 336 எஞ்சிய வெல்லாம் 77 எட்ட னொற்றே 444 எண்ணின் இறுதி 198 எண்ணுப்பெயர்க் கிளவி 419 எப்பெயர் முன்னரும் 128 எருவும் செருவும் 260 எல்லா எழுத்தும் 102 எல்லா மென்னும் 189 எல்லா மொழிக்கும் 140 எல்லாரு மென்னும் 191 எழுத்தெனப் படுப 1 எழுத்தோ ரன்ன 141 ஏஓ எனும் 73 ஏகார இறுதி 274 ஏயென் இறுதிக்கு 277 ஏழ னுருபிற்கு 201 ஏழென் கிளவி 388 ஏனவை புணரின் 381 ஏனவை வரினே 256 ஏனை எகினே 337 ஏனைப் புளிப்பெயர் 245 ஏனைமுன் வரினே 424 ஏனை வகரந் 382 ஏனை வகரம் 184 ஐஅம் பல்லென 393 ஐஒடு குஇன் 113 ஐஔ என்னும் 42 ஐகார இறுதி 280 ஐகார ஔகாரம் 137 ஐந்த... மகாரமாகும் 443 ஐந்த... முந்தையது 454 ஐந்த... மெல்லெழுத் 448 ஐந்த... யகாரமாகும் 468 ஐந்தும் மூன்றும் 451 ஐயின் முன்னரும் 127 ஒடுமரக் கிளவி 262 ஒவ்வும் அற்றே 72 ஒழிந்ததன் நிலையும் 291 ஒற்றிடை இனமிகா 412 ஒற்றுநிலை திரியா 418 ஒற்றுமிகு தகரமொடு 344 ஒன்பான் ஒகரமிசை 445 ஒன்பான் முதனிலை 463 ஒன்பா னிறுதி... மரபே 470 ஒன்பா னிறுதி... மொழியே 459 ஒன்றுமுத லாக எட்டன் 433 ஒன்றுமுத லாகப் 199 ஒன்றுமுத லாகிய 475 ஒன்றுமுத லொன்பான் 437 ஓகார இறுதி 289 ஓகார இறுதிக்கு 180 ஓரள பாகும் 57 ஓரெழுத் தொருமொழி 45 ஔகார இறுதி 295 ஔகார இறுவாய் 8 ஔவென வரூஉம் 152 ககார ஙகாரம் 89 கசதப முதலிய 143 கசதப முதன்மொழி 449 கண்ணிமை நொடியென 7 கதந பமஎனும் 61 கவவோ டியையின் 70 காரமுங் கரமும் 134 கிளந்த அல்ல 483 கிளைப்பெய... கிளைப் 338 கிளைப்பெய... கொளத் 307 கீழென் கிளவி 395 குமிழென் கிளவி 386 குயினென் கிளவி 335 குற்றிய லிகரம் 34 குற்றிய லுகரத் திறுதி 195 குற்றிய லுகரத் தின்னே 167 குற்றிய லுகரம் 67 குற்றிய லுகரமும் 105 குற்றெழுத் திம்பரும் 267 குற்றெழுத் தைந்தும் 44 குறியதன் இறுதி 234 குறியதன் முன்னர் 38 குறியதன் முன்னரும் 226 குறுமையும் நெடுமையும் 50 குறையென் கிளவி 166 குன்றிசை மொழிவயின் 41 கொடிமுன் வரினே 285 ஙஞண நமன 25 சகரக் கிளவியும் 62 சகார ஞகாரம் 90 சார்ந்துவரி னல்லது 101 சாரென் கிளவி 364 சாவ என்னும் 209 சிறப்பொடு வருவழி 349 சுட்டின் முன்னர் 205 சுட்டின் முன்னரும் 255 சுட்டி னியற்கை 238 சுட்டுச்சினை நீடிய 427 சுட்டுமுதல்... இயல்பா 257 சுட்டுமுதல்... ஒற்றிடை 263 சுட்டுமுதல்... நிலையும் 281 சுட்டுமுதல் வகரம் 183 சுட்டுமுதல் வயினும் 334 சுட்டுமுத லாகிய இகர 159 சுட்டுமுத லாகிய ஐயென் 177 சுட்டுமுத லாகிய வகர 378 சுட்டுமுத லுகரம் 176 செய்யா என்னும் 222 செய்யுள் இறுதிப் 51 செய்யுள் மருங்கின் 288 சேஎன் மரப்பெயர் 278 ஞகாரை ஒற்றிய 296 ஞணநம என்னும் 78 ஞநஎன் புள்ளிக் 182 ஞநம யவவெனும் 144 ஞநமவ இயையினும் 297 ஞநமவ என்னும் 27 டகார ணகாரம் 91 டறலள என்னும் 23 ணகார இறுதி 302 ணளவென் புள்ளி 150 ணனவென் புள்ளி 146 தகரம் வருவழி 369 தத்தம் திரிபே 88 தம்மியல் கிளப்பின் 47 தமிழென் கிளவி 385 தாம்நாம் என்னும் 188 தாயென் கிளவி 358 தாழென் கிளவி 384 தான்யான் என்னும் 192 தான்யா னெனும்பெயர் 352 தானும் பேனுங் 351 திங்கள் முன்வரின் 248 திங்களும் நாளும் 286 திரிபுவேறு கிளப்பின் 432 தேற்ற எகரமும் 273 தேனென் கிளவி 340 தொடரல் இறுதி 214 தொழிற் பெயரெல்லாம் 306, 327, 376, 401 நகர இறுதியும் 298 நமவ என்னும் 450 நாட்பெயர்க் கிளவி 331 நாயும் பலகையும் 374 நாவிளிம்பு வீங்கி 96 நாள்முன் தோன்றும் 247 நான்க னொற்றே லகார 453, 467 நான்க னொற்றே றகார 442 நான்கும் ஐந்தும் 462 நிலாவென் கிளவி 228 நிறுத்த சொல்லுங் 110 நிறையு மளவும் 436 நீஎன் ஒருபெயர் உருபியல் 253 நீஎன் பெயரும் 250 நீயென் ஒருபெயர் நெடுமுதல் 179 நீட்டம் வேண்டின் 6 நீட வருதல் 208 நும்மென் இறுதி 187 நும்மென் இறுதியும் 162 நும்மென் ஒருபெயர் 325 நுனிநா அணரி 95 நூறா யிரமுன் 471 நூறுமுன் வரினும் 460 நூறூர்ந்து வரூஉம் 392 நூறென் கிளவி 472 நெட்டெழுத் திம்பர் 196 நெட்டெழுத் திம்பரும் 36 நெட்டெழுத் தேழே 43 நெடியதன் இறுதி இயல்புமா 370 நெடியதன் முன்னர் 160 நெடியத னிறுதி இயல்பா 400 நெல்லுஞ் செல்லுங் 371 படர்க்கைப் பெயரும் 320 பத்தனொற் றுக்கெட 434 பத்தென் கிளவி 390 பதக்குமுன் வரினே 239 பல்லவை நுதலிய 174 பல்லிதழ் இயைய 98 பலரறி சொல்முன் 172 பலவற் றிறுதி உருபியல் 220 பலவற் றிறுதி நீடுமொழி 213 பன்னீ ருயிரும் 59 பனியென வரூஉங் 241 பனையின் முன்னர் 284 பனையும் அரையும் 283 பனையென் அளவும் 169 பாழென் கிளவி 387 பீரென் கிளவி 365 புணரியல் நிலையிடை 35 புள்ளி ஈற்றுமுன் 138 புள்ளி யில்லா 17 புள்ளி யிறுதியும்... சொல்லிய 202 புள்ளி யிறுதியும்... வல்லெழுத் 156 புள்ளும் வள்ளும் 403 புளிமரக் கிளவிக்கு 244 பூஎன் ஒருபெயர் 268 பூல்வே லென்றா 375 பெண்டென் கிளவி 421 பெயருந் தொழிலும் 132 பெற்றம் ஆயின் 279 பொன்னென் கிளவி 356 மஃகான்... அத்தே 185 மக்க ளென்னும் 404 மகப்பெயர்க் கிளவி 218 மகர இறுதி 310 மகரத் தொடர்மொழி 82 மகன்வினை கிளப்பின் 359 மரப்பெயர்க் கிளவிக் கம்மே 415 மரப்பெயர்க் கிளவி மெல் 217 மருவின் தொகுதி 111 மழையென் கிளவி 287 மன்னுஞ் சின்னும் 333 மாமரக் கிளவியும் 231 மாறுகொள் எச்சமும் 290 மாறுகோள் எச்சமும் 275 மின்னும் பின்னும் 345 மீனென் கிளவி 339 முதலா ஏன 66 முதலீ ரெண்ணின்முன் 455 முதலீ ரெண்ணினொற்று 438 முதனிலை எண்ணின் 478 முதனிலை நீடினும் 465 முரணென் தொழிற்பெயர் 309 முற்றிய லுகரமொடு 68 முன்உயிர் வருமிடத் 423 முன்னென் கிளவி 355 மூவள பிசைத்தல் 5 மூன்றன் முதனிலை 457 மூன்ற னொற்றே நகார 461 மூன்ற னொற்றே பகார 441 மூன்ற னொற்றே வகரம் 452 மூன்ற னொற்றே வகார 466 மூன்ற னொற்றே வந்த 447 மூன்று தலையிட்ட 103 மூன்றும் நான்கும் 456 மூன்று மாறும் 440 மெய்உயிர் நீங்கின் 139 மெய்ந்நிலை சுட்டி 30 மெய்யின் அளபே 11 மெய்யின் இயக்கம் 46 மெய்யின் இயற்கை 15 மெய்யின் வழிய 18 மெய்யோ டியையினும் 10 மெல்லெழுத் தாறும் 100 மெல்லெழுத் தியையின் அவ் 380 மெல்லெழுத் தியையின் இறுதி 342 மெல்லெழுத் தியையின் ணகார 397 மெல்லெழுத் தியையின் னகார 367 மெல்லெழுத்து மிகினும் 323, 341 மெல்லெழுத்து மிகுவழி 157 மெல்லெழுத் துறழும்... உளவே 360 மெல்லெழுத் துறழும்... செல்வழி 312 மெல்லெழுத் தென்ப 20 மெல்லொற்று வலியா 416 மென்மையும் 130 மொழிப்படுத் திசைப்பினும் 53 மொழிமுத லாகும் 147 யகர இறுதி 357 யகரம் வருவழி 410 யரழ என்னும் புள்ளி 29 யரழ என்னும் மூன்றும் 48 யவமுன் வரினே 206 யாதென்... அன்னொடு 200 யாதென்... உருபியல் 422 யாமரக் கிளவியும் 229 யாவினா மொழியே 428 யாவென் வினாவின் 178 யாவென் வினாவும் 175 ரகார இறுதி 362 லகார இறுதி 366 லனவென... முன்னர் 149 லனவென... யிறுதி 481 வஃகான் மெய்கெட 122 வகரக் கிளவி 81 வகார மிசையும் 330 வடவேங்கடந் தென்குமரி சிறப்புப் பாயிரம் வண்டும் பெண்டும் 420 வரன்முறை மூன்றும் 136 வல்லெழுத் தியற்கை 215 வல்லெழுத்து... மில்லை 230 வல்லெழுத்து... மில்லை ஒல்வழி 246 வல்லெழுத்து முதலிய 114 வல்லெழுத் தென்ப 19 வல்லென் கிளவி 373 வல்லொற்றுத்... மிகுமே 426 வல்லொற்றுத்... வருவழி 409 வளியென வரூஉம் 242 வன்றொடர் மொழியும் 414 வாழிய என்னும் 211 விசைமரக் கிளவியும் 282 விண்ணென வரூஉம் 305 வினையெஞ்சு கிளவிக்கும் 265 வினையெஞ்சு கிளவியும் 204 வெயிலென் கிளவி 377 வெரிந்என் இறுதி 300 வேற்றுமைக்கண்... ஒகரம் 292 வேற்றுமைக் கண்ணும் 216, 225, 252, 259, 266, 276, வேற்றுமைக் கண்ணும் வல் 148 வேற்றுமைக்கு உக்கெட 299 வேற்றுமை குறித்த 112 வேற்றுமை யல்வழி ஆய்த 379 வேற்றுமை யல்வழி இ ஐ 158 வேற்றுமை யல்வழி எண்ணென் 308 வேற்றுமை யல்வழிக் குறுகலு 353 வேற்றுமை யாயின்... தோற்றம் 329 வேற்றுமை யாயின்... யெகினொடு 346 வேற்றுமை வழிய 116 ழகர உகரம் 261 ழகார இறுதி 383 ளகார இறுதி 396 னஃகான் றஃகான் 123 னகார இறுதி 332 னகார இறுவாய்ப் 9 னகாரை முன்னர் 52 சொல் நிரல் (மேற்கோள்) (எண்: நூற்பா எண்) அ அஃகம் 38 அஃகாமை 38 அஃகி 38 அஃது 38 அகங்கை 315 அகத்தியனார் 45 அங்கை 315 அச்சோ 75 அஞ்ஞாண் 205, 380 அஞ்ஞை 73 அடை 59, 320, 352 அடைந்தார் 321 அடைந்தான் 155 அடைந்தீர் 321, 326 அடைதும் 321 அடையும் 322 அடைவு 337 அடைவேம் 321 அத 77 அதவத்துக்கண் 133 அதள் 411 அதன்று 258 அதனை 176 அதினை 176 அது 77 அந்தை 170 அந்தோ 77 அப்பு 30 அம்மி 77 அம்மு 328 அம்மை 30 அரசரும் 323 அரவு 45 அவ் 81 அவற்றை 183 அவன் 117 அவன்கண் 114 அவையற்றிற்கு 177 அவையற்றை 122, 177 அழக்குடம் 354 அழகு 144, 155 அழத்தை 193 அழன் 82 அழாந்தை 348 அன்னை 77 அன்னோ 77 அனந்தா 163 அனை 22 ஆ ஆஅ 6 ஆஅங்கு 41 ஆஅவது 41 ஆக்கம் 144 ஆங்கண் 114 ஆடிக்கு 119 ஆடை 59 ஆதா 163 ஆந்தை 348 ஆப்பி 233 ஆம்பல் 22 ஆமணக்கு 406 ஆய்க 29 ஆய்ஞர் 29 ஆய்தல் 29 ஆய்நர் 29 ஆய்பவை 29 ஆயிற்று 114 ஆர்க்கு 407 ஆர்க 29 ஆர்தல் 29 ஆர்நர் 29 ஆர்ப்பு 48 ஆர்பவை 29 ஆல் 53, 103 ஆவிற்கு 120 ஆவின்கண் 120 ஆவினது 120 ஆவினின் 120 ஆவினை 120 ஆவினொடு 120 ஆழ்க 29 ஆழ்ஞர் 29 ஆழ்தல் 29 ஆழ்பவை 29 ஆறாயிரம் 469 ஆன்கண் 120 ஆனது 120 ஆனின் 120 ஆனெய் 232 ஆனை 120 ஆனொடு 120 இ இஃகடிய 379 இஃது 38 இகலா 163 இங்கு 36 இடா 170 இடையன் 57 இதன்று 258 இதனை 176, 200 இது 117 இரவு 176 இருநூற்றொருபஃது 473 இருநூற்றொன்று 472 இருநூறாயிரம் 471 இருநூறு 460 இருபஃது 199 இருபத்திரண்டு 475 இருபத்தொன்று 475 இருபதினாயிரத்தொன்று 318 இருபதினாயிரம் 476 இல் 53 இல்லவற்றை 174 இல்லை 144 இலை 59, 103 இவ் 81 இவற்றை 183 இவன் 117 இவையற்றை 122, 177 இளமை 144 ஈ ஈஇ 6 ஈங்கண் 114 ஈங்கே 77 ஈட்டம் 144 ஈண்டிற்று 144 ஈயம் 59 ஈயினை 202 ஈர் 53 ஈர்க்கு 407 ஈராயிரம் 465 உ உஃது 38 உகிர் 414 உங்கை 325 உசா 75 உசு 75 உடையான் 53 உண் 53 உண்கா 32 உண்கு 153 உண்கே 32 உண்கோ 32 உண்டீர் 153 உண்டு 144, 153 உண்டேன் 153 உண்ணும் 33 உண்பல் 153 உண்புழி 140 உண்பேன் 153 உணவு 176 உணீ 77 உதன்று 258 உதனொடு 176, 200 உப்பு 76 உயர்வு 144 உரிஞ் 78, 80 உரிஞ 73 உரிஞா 73 உரிஞி 73 உரிஞினை 182 உரிஞீ 73 உரிஞு 73 உரிஞோ 73 உருமினை 186 உவ் 81 உவ 74 உவற்றை 183 உவன் 117 உவா 74 உவையற்றை 122, 177 உழக்கு 170 உழுந்தா 163 உள்ளவற்றை 174 உள்ளா 77 உள 77 உளு 77 உளை 59 உறி 77 உறீ 77 உறூ 77 ஊ ஊக்கத்தது 144 ஊங்கண் 114 ஊர்க்கண் 114 ஊர்க்கு 114 ஊர்தி 59 ஊர 210 ஊரா 163 ஊராகேள் 224 ஊவின்குறை 270 ஊற்றம் 144 ஊறிற்று 144 எ எஃகு 406 எகின் 82 எகினத்தை 193 எங்கண் 114, 188 எங்கை 310, 320 எங்கோ 37 எங்ஙனம் 30 எஞ்சா 75 எஞ்சி 75 எண் 53 எண்கு 26 எண்ணா 77 எண்ணாயிரம் 471 எண்ணூறு 460 எண்பஃது 444 எம்மை 161, 188 எயினா 163 எல்லார்க்கும் 191 எல்லாவற்றையும் 189 எல்லி 30 எவ்வி 30 எவற்றை 122 எவற்றொடு 122 எழு 59 எழுச்சி 144 எழுந்தது 144 எழுநூறாயிரம் 392 எழுபஃது 390 எள்ளூ 77 எற்றோ 77 என்னே 77 என்னை 161, 192 எனது 115 ஏ ஏஎ 6 ஏணி 59 ஏது 36 ஏய்ந்தது 144 ஏர் 53 ஏழாயிரம் 391, 392 ஏறா 63 ஐ ஐஇ 6 ஐது 144 ஐந்நூறு 462 ஐநூறாயிரம் 471 ஐப்பசி 57 ஐம்பஃது 443 ஐயம் 144 ஐயா 163 ஐயை 77 ஐயோ 77 ஒ ஒருபஃதனை 199 ஒருபஃது 438 ஒருபது 437 ஒருவர் 74 ஒருவா 74 ஒருவி 74 ஒருவீ 74 ஒருவேன் 153 ஒல் 53 ஒழிவு 144 ஒழுக்கா 163 ஒளி 59 ஒன்றனை 198 ஒன்று 144 ஓ ஓஒ 6 ஓக்கம் 144 ஓங்கிற்று 144 ஓடம் 59, 82 ஓதா 163 ஓய்வு 29 ஓய்வோர் 29 ஓர் 53 ஔ ஔஉ 6 ஔவித்தான் 155 ஔவியம் 59, 144, 155 ஔவியா 163 ஔவை 55, 57, 74 க கஃசு 38 கஃடு 38 கஃது 38 கஃபு 38 கஃறு 38 கங்கன் 25 கச்சு 75 கச்சை 75 கஞ்சன் 25 கட்க 23 கட்சி 23 கட்ட 77 கட்ப 23 கடம் 53, 82 கடா 77 கடாஅ 41 கடாம் 53 கடான் 82 கடிகா 158 கடு 144 கடுக்காய் 259 கண்டன் 25 கண்ணி 77 கணு 77 கத்து 68 கதவு 74, 176 கந்தன் 25 கப்பி 14 கம்பன் 25 கம்பி 14 கம்பு 25 கம 77 கரியதனை 195 கரியவற்றை 178 கரு 22, 27 கருது 22 கல் 53 கல்லை 202 கலம் 82; 120 கலரை 171 கலை 61, 77 கவ்வு 74 கழஞ்சு 170 கழையினை 202 கள்வன் 74 கள்ளி 30 களை 77 கற்க 23 கற்ப 23 கற்றா 77 கற்றை 77 கன்று 25 கன்னி 30 கனவு 176 கனா 77 கா 43, 69 காக்கை 22 காசு 196 காட்டின்கண் 210 காது 68 காய்ந்தனம் 48 காயா 77 கார் 49,61 கிழக்கின் 201 கிழக்கின்கண் 201 கிளி 69 கீரி 61 கீழ்மை 29 குச்சு 75 குட்டம் 82 குடி 161 குயின் 82 குரங்கு 406 குரவு 45 குரீஇ 77, 144 குலம் 82 குவவு 74 குவளை 57 குளம் 82 குறியரும் 323 குறியவற்றை 178 கூடு 61 கூழ் 210 கெண்டை 61 கேண்மியா 12, 34 கேழல் 61 கேள் 210 கை 57, 69, 144 கைதை 61 கைப்பை 57 கொக்கு 406 கொண்டல் 61 கொண்மூ 77 கொய்யூ 77 கொல்லூ 77 கொள்க 23 கொற்றன் 45, 17 கொற்றி 30, 117, 155 கொற்றிக்கு 114 கொற்றிகண் 114 கோ 43, 69 கோஒனை 180 கோடை 61 கோதைக்கு 114 கோதைகண் 114 கோள் 144 கோன் 53 கௌ 43, 70, 144 ச சகடம் 62 சட்டி 62 சமழ்ப்பு 62 சாடி 170 சாத்தற்கு 116 சாத்தன்கண் 116 சாத்தன்கை 108 சாத்தனது 116 சாத்தனின் 116 சாத்தனை 116 சாத்தனொடு 116 சாத்தி 155 சாந்து 62 சாமை 239 சாலை 273 சாறு 245 சான்றார் 153 சான்றீர் 353 சில 77 சிலச்சில 215 சிலசில 215 சிலப்பதிகாரம் 414 சிறிது 143 சிறியர் 323 சிறியரும் 323 சிறியவும் 233 சிறியன் 155 சிறியீர் 326 சிறியேன் 353 சிறுமை 296, 327, 368 சிறை 261, 366 சீரகம் 170 சீற்றம் 62 சுக்கு 240 சுண்ணாம்பு 406 சுரை 62 சூரல் 62 சூழ் 53 செக்கு 62 செகின் 82 செகு 77 செதிள் 129, 143 செம்மு 77 செய 77 செரு 359 செல் 53 செல்க 23 செல்ப 23 செல்லும் 333 செல்வம் 24 செலவு 176 செவ்வி 74 செவி 155 செவியும் 324 செறுத்தான் 157 செறுவின்கண் 210 சென்மியா 34 சென்றான் 287, 331, 334 சே 43, 69, 75, 144 சேர்ஞர் 29 சேர்வது 29 சேரி 338 சேவல் 62 சேவின் 131 சேறு 153 சேனை 214, 260 சொல் 53 சோ 75, 144 சோர்வு 9 சோர்வோர் 29 சோலை 268 சோறு 62 ஞ ஞாட்சி 144, 155 ஞாலம் 64, 382, 476 ஞாற்சி 298, 299, 329, 346 ஞான்றது 144 ஞான்றாள் 155 ஞான்றான் 155 ஞான்றேன் 353 ஞெகிழ்ந்தது 144 ஞெண்டு 64 ஞெள்ளா 151 ஞொள்கிற்று 64, 144 த தகர் 210 தகர்த்தான் 209 தங்கண் 114 தங்கை 310, 320 தச்சரும் 323 தத்தை 30 தந்தான் 187, 331, 334, 402 தந்தை 61,77 தம்மை 161, 188 தமது 115 தமிழ்நாடு 385 தயிர் 245 தரவு 176 தருக்கு 36 தரும் 333 தரூஉம் 260 தலை 115 தலையும் 322, 324 தழூஉவின் 131 தன்னை 161, 192 தனது 115 தா 210 தாது 260 தாமம் 268 தாய் 61 தார் 50 தாரா 77 தாழ்ச்சி 48 தாழ்த்தல் 48 தாழ்ப்பு 48 தானை 260, 261, 309 திருச்சிற்றம்பலம் 45 திரும் 78 திருமினை 185 திருவாரூர் 53 தினையினை 202 தீ 43, 69 தீக்கு 114 தீண்டப்பட்டான் 156 தீது 143 தீமை 61 தீய 321 தீயர் 321 தீயரும் 323 தீயவும் 322, 323 தீயள் 155 தீயன் 155 தீயினை 202 தீயீர் 321, 326 தீயேன் 353 து 44 துஞ்ச 75 துடி 372, 478 துணங்கை 22 துணி 61 துப்பா 76 துரவு 74 துலாத்தை 174 துலாம் 319 துளை 277 துறத்தல் 359 துன்னூ 77 துனீ 7 தூஉக்குறை 267 தூணி 61 தூதுணங்காய் 283 தூதை 170 தெங்கங்காய் 415 தெங்கு 25 தெய்வம் 29 தெருட்டு 68 தெவ் 78, 81, 144 தெள்கு 406 தெற்கண் 201 தெற்கின்கண் 201 தெற்றி 61 தென்கிழக்கு 432 தென்குமரி 432 தென்சுரம் 432 தென்புடை 201 தென்மேற்கு 432 தென்னிலங்கை 432 தேக்குடம் 340 தேங்குடம் 341 தேஞ்ஞெரி 342 தேஞெரி 342 தேத்தடை 344 தேத்திறால் 344 தேத்தீ 344 தேநுனி 342 தேமொழி 342 தேய்ஞ்சது 48 தேர்க்கால் 156 தேவன் 255 தேவா 151 தேற்குடம் 340 தேன் 53, 61 தேன்குடம் 340 தேன்ஞெரி 342 தேனடை 344 தேனிறால் 343 தேனீ 344 தை 43 தையல் 61 தொடி 170 தொண்டை 61 தொண்ணூறு 445 தொழ 77 தொள்ளாயிரம் 463 தோட்டம் 338, 395 தோடு 61 தோரை 239, 240, 314 தோல் 143 தோற்றம் 266, 335 தெளவை 61 ந நங்கண் 158 நங்கை 320 நண்ணூ 77 நந்து 61 நப்புணர்வு 157 நம்பி 76 நம்மை 161, 188 நமது 115 நலம் 82 நன 77 நா 45, 74 நாகணை 171 நாகா 151 நாகினை 195 நாகு 12 நாய் 58 நாரினை 202 நாரை 61, 77, 202 நாலாயிரம் 467 நாழி 77, 170 நாற்பஃது 472 நானூறாயிரம் 471 நானூறு 451 நிணம் 411 நிலம் 61 நிலாத்தை 174 நிறுத்தினான் 287, 331 நிறை 170 நின்கை 253 நின்னை 161, 179 நீட்சி 144 நீட்சியும் 324 நீட்டிப்பு 144 நீடிற்று 144 நீண்டது 344 நீண்டாம் 321 நீண்டார் 321, 326 நீண்டாள் 155 நீண்டான் 153 நீண்டீர் 321, 326 நீலம் 61 நுகத்தை 185 நுகம் 61 நுங்கண் 114, 187, நுங்கை 320, 325 நுந்தை 67 நுந்தையது 144 நும்மை 187 நுமக்கு 162 நுமது 115, 162 நுனி 130, 145 நூல் 61 நூலும் 322 நூற்றுத்தொண்ணூறு 472 நூற்றுப்பத்து 472 நூற்றொருபஃது 473 நூற்றொருபதினாயிரம் 476 நூற்றொன்று 472 நூறாயிரத்தொருபத்தீராயிரம் 476 நெடியவற்றை 178 நெய்தல் 61 நெய்யகல் 160 நெருப்பு 329 நெற்கதிர் 366 நே 74 நேர்மை 29 நைவளம் 61 நொ 44 நொச்சி 61 நொவ்வு 74 நோ 74 நோக்கம் 61 நௌவி 61 ப பகைத்தல் 359 பச்சை 30 பசு 75 பட்டை 30 படாஅகை 41 படூ 77 படூஉம் 260 படை 61, 77 பண்பு 26 பதி 77 பதிற்றொன்று 436 பதின்மூன்று 443 பதினாயிரத்திருபஃது 110 பதினாயிரத்தொன்று 110 பதினாயிரம் 485 பதினாறு 433 பதினான்கு 433 பதினெட்டு 433 பதினேழ் 433 பதினைந்து 433 பதினொன்று 433 பந்து 25 பப்பத்து 482 பயற்றங்காய் 415 பயறு 314 பயின் 82 பரசு 36 பரி 77 பருத்தி 158 பல்பல 215 பல்லவற்றிற்கு 177 பல்லவற்றின்கண் 177 பல்லவற்றை 174 பலப்பல 215 பலபல 215 பலம் 170 பலவற்றோடு 132 பலா 77, 144 பலாவினை 173 பற்பல 215 பறை 260, 309, 478, 214 பறைவு 335 பன்றி 210 பனங்காய் 283 பனாஅட்டு 284 பாடம் 82 பாடி 338 பாய்த்தல் 48 பாயப்பட்டான் 156 பார்ப்பார் 153 பார்ப்பாரும் 323 பார்ப்பீர் 153 பால் 61 பாலாழி 138 பாழ்க்கிணறு 387 பாழ்ங்கிணறு 387 பாளிதம் 239 பாளை 70 பிஞ்சு 25 பிடி 61 பிண்ணாக்கு 406 பிள்ளை 338 பீடு 61 பீர்க்கு 48 புகா 77 புகழ் 49, 61 புகாஅர்த்து 41 புகீ 77 புகூ 77 புடைத்தான் 209 புடோலங்காய் 405 புண்கை 302 புணர்வு 74, 176 புலம் 82 புலவர் 49 புலைக்கொற்றன் 158 புழுங்கற்சோறு 465 புழன் 82 புழனினை 193 புழாந்தை 348 புழை 277 புளியிலை 130 புன்கு 26 புன்செய் 26 புன்வரகு 26 பூக்கொடி 268 பூங்கொடி 268 பூ 43, 69 பூதன் 255 பூந்தை 348 பூமி 61 பூழ்க்கு 114 பூழனை 194 பூழி 260 பெடை 61 பெரிது 143 பெரிய 321 பெரியர் 321 பெரியரும் 323 பெரியவும் 322, 323 பெரியள் 155 பெரியன் 155 பெரியீர் 321, 326 பெரியேன் 353 பெருமை 296, 299, 327, 328 345, 368, 373, 374 376, 382, 398, 401 பே 76 பேடை 61 பைதல் 61 பொருள் 372 போது 61 போம் 333 போயினான் 287, 331, 334, 377, 402 போரின்கண் 210 போன்ம் 13, 51 பௌவம் 61 ம மகத்தை 174 மங்கை 77 மட்குடம் 109 மடி 61, 77 மடீ 77 மடு 77 மண் 78, 147 மண்டை 170 மண்ணினை 202 மண்ணை 30 மணி 45 மணிக்கண் 114 மணிக்கு 114 மணியகாரர் 323 மணியகாரரும் 323 மணியும் 322 மரத்தை 185 மரம் 103, 144 மழகளிறு 312 மன்றன் 25 மா 170 மாட்சி 297, 299, 328, 329 337, 345, 346, 373 376, 382, 401, 403 மாட்டினான் 287 மாடா 151 மாண்டது 144 மாண்டான் 155 மாண்டீர் 326 மாண்டேன் 353 மாந்தர் 338 மாய்ந்தான் 331 மாலை 61 மாவிற்கு 120 மாவின்கோடு 120 மாவினை 120 மாவினொடு 120 மாற்கு 120 மான்கோடு 231 மானை 120 மிடறு 61 மீ 77 மீளி 61 முகம் 61 முசு 75 முந்நூறாயிரம் 471 முந்நூறு 461 முப்பஃது 441 முயிற்றை 197 முரி 130, 145 முருக்கு 68 முவ்வாயிரம் 466 முள் 53 முள்ளினை 202 முன்றில் 111, 355 முன்னு 77 மூசி 75 மூசூ 75 மூப்பு 61 மூழக்கு 457 மூழாக்கு 457 மெலிவு 61 மேனி 61 மையல் 61 மொய்ம்பு 407 மோத்தை 61 மௌவல் 61 ய யவனர் 65 யாட்டை 196 யாடு 65 யாத்தார் 321 யாத்தான் 209 யாத்தீர் 326 யாதன்கோடு 422 யாதனை 200 யாது 144 யாப்பு 144, 155 யாமம் 65 யாமை 77 யாவது 172 யாவற்றோடு 230 யாவன் 155 யாழ் 130 யாழனை 194 யாழின்கோடு 405 யாற்றை 196 யானை 65 யுத்தி 65 யூபம் 65 வ வட்டம் 82 வட்டி 170 வட்டில் 319 வட்டு 130 வடக்கண் 201 வடக்கின்கண் 201 வடசார் 201 வடுகா 151 வண்டு 25 வதீ 77 வந்தான் 287, 331 வயான் 82 வர 77 வரகினை 195 வரகு 45 வரவு 176 வருக 77 வருது 153 வரூஉம் 260 வரை 170 வல்சி 23 வல்லே 77 வலம் 82 வலி 77 வலிது 144 வலிமை 328, 337, 345, 346 வலியன் 353 வலியேன் 353 வலீ 77 வலு 77 வழீ 77 வழுதுணை 285 வளம் 82 வளை 63 வன்மை 26 வன்னி 77 வாட்கு 114 வாடினீர் 326 வாய்ச்சி 48 வாய்ப்பு 48 வாய்மை 29 வார்த்தல் 48 வாழ்க்கை 48 வாழ்ந்தனம் 48 வாழ்வது 29 வாழ்வோர் 29 வாளி 63 வானம் 372 விரற்றீது 160 விராஅயது 41 வில் 22, 53 விழன் 82 விழன்காடு 405 விழா 77 விள 103, 144 விளரி 63 வீ 74 வீடு 63 வீழ் 49, 78 வீழ்ங்ஙனம் 29 வீழ்ந்தான் 209 வெஃகாமை 38 வெஃகி 38 வெண்மை 26 வெந்நெய் 30 வெய்யர் 30 வெரிந் 79, 144 வெரூ 77 வெள்ளி 63, 77 வெற்றடி 482 வெற்றிலை 482 வே 74 வேட்கை 63 வேய் 78, 144 வேய்க்கு 114 வேயை 202 வேர் 78, 144 வேல் 78, 144 வேளாண் 338 வேற்கு 114 வை 74 வையம் 63 வௌவின் 131 வௌவினை 173 வௌவுதல் 63 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) (எண்: நூற்பா எண்) அ அஃகடிய 379 அஃதடைவு 423 அஃதொட்டம் 423 அக்காற் கொண்டான் 368 அக் குறிது 203 அக்கொற்றன் 31 அங்கட் கொண்டான் 307 அங்காக் கொண்டான் 231 அங்குக் கொண்டான் 429 அண்ணணிக்கொண்டான் 246 அண்ணாஅத்தேரி 133 அணிக்கொண்டான் 236 அத்தாற்கொண்டான் 368 அதக் குறிது 203 அதங்கோடு 217 அதன்கோடு 263, 422 அதுகடிது 424 அதுகுறிது 257 அதுசெல்க 210 அதோட்கொண்டான் 398 அதோளிக்கொண்டான் 159 அந்நூல் 205 அம்பர்க்கொண்டான் 405 அம்மகொற்றா 210 அம்மணி 205 அமைங்கோடு 286 அயிர்ங்கோடு 363 அரசக்கன்னி 153 அரட்கடுமை 309 அரண்கடுமை 309 அரவுயர்கொடி 234 அராஅப்பாம்பு 223 அராக்குட்டி 223 அரையங்கோடு 283 அலிக்கொற்றன் 158 அவ்யாழ் 206, 381 அவ்வடை 160, 207 அவ்வயிற்கொண்டான் 334 அவ்வழகிது 207 அவ்வழிக்கொண்டான் 159 அவ்வழிகொண்டான் 159 அவ்வளை 206 அவ்வளைந்தது 206 அவ்வாடை 160, 207 அவ்வாய்க் கொண்டான் 361 அவ்விலை 207 அவ்வீயம் 207 அவ்வுரல் 207 அவ்வூர்தி 207 அவ்வெழு 207 அவ்வேணி 207 அவ்வையம் 207 அவ்வொழுக்கம் 207 அவ்வோடை 207 அவ்வௌவியம் 207 அவட்கொண்டான் 307 அவர்செல்க 210 அவர்யார் 172 அவர்யாவர் 172 அவருள் இவனேகொண்டான் 275 அவள்செல்க 210 அவற்றின்கோடு 378 அவற்றுக்கோடு 112, 133, 378 அவன் அழகியன் 153 அவன் ஆடினான் 153 அவன் உண்மன 210 அவன் ஔவியத்தான் 153 அவன் சிறியன் 153 அவன் செல்க 210 அவன் ஞான்றான் 153 அவன் நீண்டான் 153 அவன் பெரியன் 153 அவன் மாண்டான் 153 அவன் யாவன் 153 அவன் வலியன் 153 அவனில்லை 372 அவனோஓகொடியன் 273 அவைசெல்க 210 அவையத்துக்கொண்டான் 286 அவையற்றுக்கோடு 281 அவையிற்கொண்டான் 286 அழகிது 144 அழலத்துக்கொண்டான் 405 அளவினிற்றிரியாது 131 அற்றைக்கூத்தர் 425 அறாயிரம் 469 அறுகல் 478 அறுகலம் 449 அறுகழஞ்சு 449 அறுநூறாயிரம் 471 அறுநூறு 460 அறுமா 480 அன்றுகொண்டான் 429 அன்றைக்கூத்தர் 159 ஆ ஆகுறிது 224 ஆங்கட்கொண்டான் 307 ஆங்கவைக்கொண்டான் 159 ஆங்கவைகொண்டான் 159 ஆங்குக்கொண்டான் 427 ஆசீவகப்பள்ளி 153 ஆடரங்கு 482 ஆடிக்குக்கொண்டான் 126 ஆடுபோர் 314 ஆடூஉக்கை 267 ஆடூஉவின்கை 118 ஆடைவெள்ளவிளர்த்தது 482 ஆண்கடிது 303 ஆண்கை 303 ஆண்டுசென்றான் 427 ஆண்டைக்கொண்டான் 159 ஆணங்கோடு 231, 304 ஆணநார் 304 ஆதந்தை 348 ஆய்தப்புள்ளி 314 ஆய்தவுலக்கை 314 ஆயிடைக்கொண்டான் 159 ஆயிடைகொண்டான் 159 ஆயிரங்கலம் 319 ஆயிரத்துக்குறை 317 ஆயிரத்தொருபஃது 110 ஆயிரத்தொன்று 317 ஆயிரப்பத்து 317 ஆயிருதிணை 140, 208 ஆயிருபால் 208 ஆரங்கண்ணி 363 ஆல்வீழ்ந்தது 107 ஆலங்கோடு 375 ஆலஞெரி 375 ஆலிலை 107, 138 ஆவலிது 107 ஆவிரங்கோடு 283 ஆவிரையின்கோடு 285 ஆவின்கோடு 120 ஆழாக்கின்குறை 167 ஆறகல் 458 ஆறாகுவதே 469 ஆறுகல் 478 ஆறு நூறாயிரம் 471 ஆறுமா 480 ஆன்கொண்டான் 333 ஆன்கோடு 120 ஆன்பி 233 ஆன்மணி 232 ஆன்வால் 232 இ இஃதடை 423 இக்கிடந்தது மக்கட்டலை 404 இக்கொற்றன் 31 இங்கட்கொண்டான் 307 இங்காக்கொண்டான் 231 இங்குக்கொண்டான் 429 இஞ்ஞான்று 238 இடாஅவினுட்கொண்டான் 226 இத்தாற்கொண்டான் 368 இதழ்ஞெரி 145 இதன்கோடு 263, 422 இதுகடிது 424 இதுகுறிது 257 இதைமாற்றம் 258 இதோட்கொண்டான் 398 இதோளிக்கொண்டான் 159 இம்பர்க்கொண்டான் 405 இரண்டன்காயம் 419 இரண்டு நூற்றொன்று 472 இரண்டு நூறாயிரம் 471 இரண்டுமா 480 இராஅக்காக்கை 223, 227 இராஅக்கூத்து 227 இராஅக்கொடிது 223 இராஅப்பகல் 223 இராக்கொண்டான் 227 இராவிற்கொண்டான் 230 இருகடல் 439 இருகலம் 446 இருகழஞ்சு 446 இருகால் 446 இருந்துகொண்டான் 427 இருநாடுரி 240 இருநான்கு 446 இருநூற்றுக்கலம் 474 இருபதிற்றுக்கலம் 477 இருபிறப்பு 439 இருமா 480 இருமுக்கால் 446 இருமுந்திரிகை 446 இருமூன்று 446 இருவிளக்குறுமை 216 இருவிளக்கொற்றன் 216 இருவினை 439 இருவேநம்மையும் 191 இருளத்துக்கொண்டான் 133 இருளத்துஞான்றான் 402 இருளிற்கொண்டான் 402 இருளின்ஞான்றான் 402 இல்லகுதிரை 210 இல்லங்கோடு 313 இல்லாக்கொற்றன் 372 இல்லைக்கொற்றன் 372 இல்லைகொற்றன் 372 இல்லைஞாண் 372 இலம் யாரிடத்தது 316 இலம் வருவது போலும் 316 இவ்யாழ் 381 இவ்வயிற்கொண்டான் 334 இவ்வாய்க்கொண்டான் 361 இவட்கொண்டான் 307 இவற்றின்கோடு 378 இவற்றுக்கோடு 378 இவையற்றுக்கோடு 281 இற்றைக்கூத்தர் 425 இறவுப்புறம் 234 இறாஅ வழுதுணங்காய் 223 இறைவநெடுவேட்டுவர் 153 இன்யாழ் 26 இன்றுகொண்டான் 429 இன்னினிக்கொண்டான் 246 இனிக்கொண்டான் 236 ஈ ஈக்கடிது 249 ஈக்கால் 252 ஈங்கட்கொண்டான் 307 ஈங்குக்கொண்டான் 427 ஈச்சங்குலை 416 ஈண்டைக்கொண்டான் 159 ஈமக்குடம் 128 ஈமடைந்தது 328 ஈமடைவு 328 ஈர்க்கொற்றா 151 ஈர்கொற்றா 151 ஈர்ங்கோதை 363 ஈரகல் 455 உ உஃகடிய 379 உஃதடை 423 உக்கொற்றன் 31 உங்கட்கொண்டான் 307 உங்காக்கொண்டான் 231 உங்குக்கொண்டான் 429 உசிலங்கோடு 405 உஞ்ஞாண் 256, 380 உடூஉக்குறை 267 உடூஉவின்றலை 270 உடைங்கோடு 286 உண்காகொற்றா 224 உண்டகுதிரை 210 உண்ட சாத்தன் வந்தான் 110 உண்டனகுதிரை 210 உண்டனெஞ்சான்றேம் 153 உண்டுசாக்காடு 430 உண்டுஞானம் 430 உண்டுதாமரை 430 உண்டுபொருள் 430 உண்டு வந்தான் சாத்தன் 110 உண்டேநாம் 153 உண்ணாக்கொண்டான் 222 உண்ணாக்கொற்றன் 222 உண்ணாகுதிரைகள் 224 உண்ணாதகுதிரை 210 உண்ணியகொண்டான் 210 உண்ணுஞ்சாத்தன் 314 உண்ணூக்கொண்டான் 265 உண்மனகுதிரை 210 உணச்சென்றான் 204 உதட்கோடு 400 உதணன்று 400 உதள்கடிது 400 உதன்கோடு 263 உதுக்காண் 263 உதுகடிது 424 உதுகுறிது 257 உதைமற்றம்ம 258 உதோட்கொண்டான் 398 உதோளிக்கொண்டான் 159 உந்நூல் 256 உம்பர்க்கொண்டான் 405 உம்மணி 256 உமண்குடி 307 உய்த்துக்கொண்டான் 427 உரிக்காயம் 240 உரிக்குறை 166 உரிக்கூறு 166 உரிஞ் அடைவு 144 உரிஞ் அழகிது 144 உரிஞ் ஆக்கம் 144 உரிஞ் ஆயிற்று 144 உரிஞ்ஞெகிழ்ச்சி 144 உரிஞ்ஞெகிழ்ந்தது 144 உரிஞ் நீட்டிப்பு 144 உரிஞ் நீடிற்று 144 உரிஞ் யாது 163 உரிஞுக்கடிது 296 உரிஞுக்கடுமை 296 உரிஞுகொற்றா 152 உரிஞுஞான்றது 296 உரிஞுஞெள்ளா 171 உருமுக்கடிது 328 உருமுக்கடுமை 328 உவ்யாழ் 256, 381 உவ்வட்டு 256 உவ்வடை 256 உவ்வயிற்கொண்டான் 334 உவ்வாடை 256 உவ்வாய்க்கொண்டான் 361 உவட்கொண்டான் 307 உவற்றின்கோடு 378 உவற்றுக்கோடு 378 உவாஅத்துஞான்று கொண்டான் 226 உவாஅப்பட்டினி 223 உவாஅப்பதினான்கு 223 உவாஅதாற்கொண்டான் 226 உவையற்றுக்கோடு 281 உழக்கரை 165 உழக்கிற்குறை 167 உழக்கின்குறை 167 உழக்கேயாழாக்கு 164 உழைங்கோடு 286 உழையின்கோடு 285 உள்பொருள் 430 உள்ளகுதிரை 210 உள்ளுக்கொற்றா 171 உள்ளுகொற்றா 171 ஊங்கட்கொண்டான் 307 ஊங்குக்கொண்டான் 427 ஊண்டைக்கொண்டான் 159 ஊர்க்குச்சென்றான் 202 ஊன்குறை 269 ஊனக்குறை 270 எ எஃகியாது 35 எஃகுகடிது 425 எஃகுகடுமை 413 எகின்சேவல் 337 எகினக்கால் 337 எகினங்கால் 337 எகினங்கோடு 336 எகினச்சேவல் 337 எகினஞாற்சி 337 எங்கட்கொண்டான் 307 எங்காக்கொண்டான் 231 எங்குக்கொண்டான் 429 எஞ்ஞாண் 320 எட்கடிது 308 எட்குக்குட்டி 414 எட்டிப்பூ 154 எட்டுக்கல் 478 எட்டுஞாண் 478 எட்டுநூறாயிரம் 471 எட்டுமா 480 எண்கலம் 450 எண்கழஞ்சு 450 எண்ஞாண் 478 எண்ணகல் 450 எண்ணநோலை 307 எண்ணாழி 450 எண்ணில்குணம் 372 எண்ணுப்பாறு 306 எண்ணுழக்கு 450 எண்மா 480 எத்தாற்கொண்டான் 368 எதோட்கொண்டான் 398 எதோளிக்கொண்டான் 159 எப்பொருள் 31 எம்பர்க்கொண்டான் 405 எயின்குடி 338 எயின்வந்தது 338 எயினக்கன்னி 338 எயினவாழ்வு 338 எருக்குழி 260 எருங்குழி 260 எருவங்குழி 260 எருவஞாற்சி 260 எருவின்குறுமை 260 எல்லா அடையும் 322 எல்லாக்குறியவும் 322 எல்லாக்கொல்லாரும் 323 எல்லாங்குறியம் 323 எல்லாங்குறியர் 323 எல்லாங்குறியரும் 323 எல்லாங்குறியவும் 323 எல்லாங்குறியீர் 323 எல்லாஞாணும் 322 எல்லாஞான்றாரும் 323 எல்லாநங்கணும் 190 எல்லாநஞ்ஞாற்சியும் 324 எல்லாம்வந்தேம் 323 எல்லாம்வாடின 322 எல்லாயாழும் 322 எல்லார்கையும் 320 எல்லார்தங்கையும் 320 எல்லார்தஞ்ஞாணும் 320 எல்லார்தம்மணியும் 320 எல்லார்தம்மையும் 191 எல்லார்தமக்கும் 161 எல்லார்தமதும் 161 எல்லார்நமக்கும் 161 எல்லாருங்குறியர் 321 எல்லாருஞ்ஞான்றார் 321 எல்லாரும்வந்தார் 321 எல்லாவற்றுக்கோடும் 322 எல்லாவற்றுஞாணும் 322 எல்லாவற்றுயாப்பும் 322 எல்லீர்கையும் 320 எல்லீர்நுங்கையும் 320 எல்லீர்நுஞ்ஞாணும் 320 எல்லீர்நும்மணியும் 320 எல்லீர்நும்மையும் 191 எல்லீர்நுமக்கும் 161 எல்லீருங்குறியீர் 321 எல்லீருஞ்ஞான்றீர் 321 எல்லீரும்வந்தீர் 321 எலியாலங்காய் 405 எவ்வயிற்கொண்டான் 334 எவ்வாய்க்கொண்டான் 361 எவட்கொண்டான் 307 எழுகடல் 389 எழுகலம் 389 எழுகழஞ்சு 389 எழுஞாயிறு 392 எழுநாள் 392 எழுநான்கு 389 எழுமூன்று 389 எழுவகை 392 எழுவின்புறம் 263 எள்ளழகிது 160 எற்பாடி 353 எற்புக்காடு 414 எற்புகழ் 353 எற்புத்தலை 414 ஏ ஏஎக்கொட்டில் 277 ஏஎக்கொற்றா 272 ஏஎஞெகிழ்ச்சி 277 ஏக்கட்டினான் 157 ஏக்கடிது 274 ஏக்கடுமை 276 ஏவாடல் 140 ஏழகல் 394 ஏழன்காயம் 388 ஏழாம்பல் 393 ஏழிரண்டு 394 ஏழுமா 480 ஏழுழக்கு 394 ஏழொன்று 394 ஐ ஐங்கலம் 448 ஐங்கழஞ்சு 448 ஐந்துகல் 478 ஐந்துஞாண் 478 ஐந்துநூறாயிரம் 471 ஐந்துமா 480 ஐந்துயாழ் 478 ஐந்துவட்டு 478 ஐந்நாழி 451 ஐந்நாழியுழக்கு 164 ஐம்மண்டை 451 ஐம்மா 480 ஐயகல் 456 ஐயாட்டை எருது 425 ஐயாழ் 478 ஐயுழக்கு 456 ஐவ்வட்டி 454 ஐவட்டி 454 ஐவட்டு 478 ஐவனம் 54, 59 ஒ ஒடுங்கோடு 262 ஒடுவங்கோடு 262 ஒடுவின்குறை 263 ஒருகல் 478 ஒருகலம் 446 ஒருகழஞ்சு 446 ஒருகால் 446 ஒருஞார் 170 ஒருதிங்களைக்குழவி 159 ஒருதுவலி 170 ஒருநாளைக்குழவி 159 ஒருநான்கு 446 ஒருநூற்றுக்கலம் 474 ஒருநூற்றொருபஃது 473 ஒருநூறாயிரம் 471 ஒருநூறு 460 ஒருபத்திரண்டு 475 ஒருபத்தொன்று 475 ஒருபதிற்றுக்கலம் 477 ஒருபதின்கலம் 477 ஒருபதினாயிரம் 476 ஒருபதினாழி 477 ஒருபானை 199 ஒருமா 480 ஒருமுக்கால் 446 ஒருமுந்திரிகை 446 ஒருமூன்று 446 ஒல்லைக்கொண்டான் 158 ஒல்லொலித்தது 482 ஒல்லொலிநீர் 482 ஒன்பதிற்றுக்கோடி 470 ஒன்பதிற்றுத்தடக்கை 470 ஒன்பதிற்றெழுத்து 470 ஒன்பதிற்றொன்பது 470 ஒன்பதின்கூறு 433 ஒன்பதின்பால் 433 ஒன்பதின்பானை 459 ஒன்பதின்மா 480 ஒன்பதினாழி 459 ஒன்பதுகல் 478 ஒன்பது நூறாயிரம் 471 ஒன்பதுமா 480 ஒன்றன்காயம் 419 ஒன்றன்ஞாண் 419 ஒன்றின்குறை 167 ஓ ஓஒக்கடுமை 292 ஓஒக்கொற்றா 272 ஓக்கடிது 289 ஓடுநாகம் 109 ஓணத்தாற்கொண்டான் 331 ஓமைச்சினை 111 ஓர்யாட்டையானை 425 ஓர்யாழ் 479 ஓர்யானை 479 ஓரகல் 455 ஓரடை 170, 479 ஓராகம் 479 ஓராநயம் 284 ஓராயிரம் 465 ஓராறு 446 ஓரிரண்டு 446 ஓரீட்டம் 479 ஓரூசல் 479 ஓரெழு 479 ஓரெட்டு 446 ஓரேடு 479 ஓரேழு 446 ஓரைந்து 446 ஓரையம் 479 ஓரொழுங்கு 479 ஓரோலை 479 ஓரௌவியம் 479 ஓர்யாட்டையானை 425 ஓர்யாழ் 479 ஓர்யானை 479 ஓலம்போழ் 283 க கஃசரை 165 கஃசின்குறை 167 கஃறீது 38, 149 கட்சிறார் 23 கட்டகல் 246 கட்டிடி 246 கடப்பங்காய் 416 கடல் ஒல்லவொலித்தது 482 கடிசூத்திரத்திற்குப் பொன் 132 கடுக்குறிது 254 கடுக்குறைத்தான் 157 கடுவின் குறை 263 கடுவினை 173 கண்ணழகிது 160 கணவிரமாலை 246 கணவிரி 45 கதவு அழகிது 176 கதிர்ஞ்ஞெரி 145 கதிர்ஞெரி 145 கபிலபரணர் 153 கம்பம்புல் 415 கம்மக்குடம் 128, 329 கம்முக்கடிது 328 கம்முக்கடுமை 328 கமஞ்சூல் 203 கமுகங்காய் 415 கயிற்றுப்புறம் 411 கரட்டுக்கானம் 425 கரிது குதிரை 425 கரியதன்கோடு 417 கரியவற்றுக்கோடு 286 கரியன குதிரை 210 கரியார்தம்மையும் 191 கரியீர் நும்மையும் 191 கரியேம் நம்மையும் 191 கருங்குதிரை 482 கருங்குதிரைகள் 482 கரும்பார்ப்பனி 482 கரும்பார்ப்பார் 482 கரும்பார்ப்பான் 482 கல்குறிது 368 கல்குறுமை 368 கல்லம்பாறை 405 கல்லாம்பாறை 405 கல்லுக்கடிது 376 கலக்குறை 166 கலக்கொள் 314 கலத்துக்குறை 133, 168 கலப்பயறு 166 கலப்பாகு 166 கலனேபதக்கு 164 கலைக்கோடு 286 கலைங்கோடு 286 கவண்கால் 307 கவளமாந்தும் 314 கழஞ்சரை 165 கழஞ்சின்குறை 167 கழஞ்சேகுன்றி 164 கழுஉக்கடிது 264 கழுக்கொணர்ந்தான் 157 கழூஉக்கடுமை 266 களவில்லை 176 களிற்றுப்பன்றி 425 கற்குறுமை 368 கற்சிறார் 23 கற்றீது 369 கன்ஞெரி 367 கன்ஞெரிந்தது 367 கன்னக்கடுமை 346 கன்னக்குடம் 346 கன்னங்கடிது 346 கன்னங்கடுமை 346 கன்னஞான்றது 346 கன்னன்று 149 கன்னுக்கடிது 345 கன்னுக்கடுமை 345 கனங்குழாஅய் 50 காஅக்குறை 226 காக்குறை 169 காக்கையிற்கரிது 202 காணிக்காணி 239 காணிக்குறை 166 காணிக்கூறு 166 காணியேமுந்திரிகை 164 காய்ம்புறம் 48 காயாங்கனி 48 காயாங்கோடு 231 காலேகாணி 164 காவிதிப்பூ 154 காவின்குறை 169 காற்குறை 166 கான்கோழி 335 கானங்கோழி 405 கானாங்கோழி 405 கிளிக்கால் 156 கிளிக்குறிது 158 கிளிக்குறுமை 235 கிளியரிது 140 கிளியழகிது 140 கிளியின்கால் 246 கீழ்க்குளம் 395 கீழ்கரை 432 கீழ்க்குளம் 395 கீழ்கூரை 432 கீழ்சார் 201 கீழ்புடை 201 கீழைக்குளம் 201 குடத்துவாய் 312 குதிர்ங்கோடு 363 குமரகோட்டம் 153 குமிழ்ங்கோடு 386 குரக்குக்கால் 414 குரங்கியாது 35 குரங்குகடிது 409 குரங்குஞாற்சி 414 குரிசிறீயன் 160 குரீஇயோப்புவாள் 140 குருட்டுக்கோழி 425 குருட்டெருது 425 குருந்தங்கோடு 416 குவளைக்கண் 158 குழக்கன்று 203 குழுத்தோற்றம் 261 குழூஉக்களிற்று 261 குளக்கரை 312 குளங்கரை 312 குளத்தின்புறம் 405 குளத்துக்கொண்டான் 312 குளவாம்பல் 311 குளாஅம்பல் 311 குறணிமிர்ந்தது 160 குறுணிநானாழி 164 குறும்பரம்பு 141 குறும்பிற்கொற்றன் 124 குறும்பிற்சான்றார் 414 குன்றக்கூகை 128 குன்றேறாமா 141 கூட்டுக்கொற்றா 152 கூட்டுகொற்றா 152 கூதளநறும்பூ 246 கூதாளங்கோடு 246 கூர்ங்கதிர்வேல் 363 கூழிற்குக் குற்றேவல் செய்யும் 132 கேட்டையாற்கொண்டான் 286 கேட்டையினாட்டினான் 286 கேண்மியாகொற்றா 224 கைதூக்கொற்றா 265 கொக்கியாது 410 கொக்கின்கால் 414 கொக்குக்கடுமை 409 கொக்குக்கால் 414, 417 கொங்கத்துழவு 418 கொட்குறை 166 கொடாப்பொருள் 109 கொண்மூக்கடிது 264 கொண்மூக்குழாம் 266 கொண்மூவின்குழாம் 270 கொணாகொற்றா 151 கொல்யானை 24 கொல்லுகொற்றா 171 கொல்லுங்கொற்றன் 314 கொல்லும்யானை 314 கொழுவின்கூர்மை 263 கொள்ளரை 165 கொள்ளுக்குக்கொண்டான் 405 கொள்ளெனக்கொண்டான் 204 கொள்ளேயையவி 164 கொளலோகொண்டான் 291 கொற்கடிது 371 கொற்றங்குடி 350 கொற்றங்கொற்றன் 350 கொற்றங்கொற்றன்றந்தை 349 கொற்றந்தை 347 கொற்றமங்கலம் 350 கொற்றன்குளம்பு 117 கொற்றன்குறியன் 117 கொற்றன்செவி 117 கொற்றன்வந்தான் 109 கொற்றனைக்கொணர்ந்தான் 202 கொற்றிகுறிது 117 கொற்றிக்குறியன் 117 கொற்றிசெவி 117 கோஒக்கடுமை 292 கோஒன்கை 294 கோட்கடிது 401 கோட்கடுமை 398, 401 கோணிமிர்ந்தது 160 கோவந்தது 293 கோவழகிது 140 கோள்கடிது 401 கோள்கடுமை 401 கோறீது 160 கோன்குணம் 335 கோன்கொற்றன் 351 கோன்றந்தை 351 கௌவடைந்தது 140 கௌவுக்கடிது 295 கௌவுகொற்றா 152 கௌவுஞெமிர்ந்தது 295 ச சதுரப்பலகை 314 சாஞான்றான் 209 சாட்கோல் 147 சாத்தங்குடி 350 சாத்தங்கொற்றன் 350 சாத்தங்கொற்றன்றந்தை 349 சாத்தந்தை 347 சாத்தமங்கலம் 350 சாத்தன்உண்டான் 108 சார்க்காழ் 364 சார்ங்கோடு 363 சாரப்பட்டான் 156 சாவப்போயினான் 204 சித்திரைக்குக்கொண்டான் 127 சித்திரைத்திங்கள் 158 சில்காடு 214 சில்கேள்வி 214 சில்யானை 214 சில்லகுதிரை 210 சிலகுதிரை 210 சிலிர்ங்கோடு 363 சின்னூல் 215 சீரகரை 171 சீழ்க்கம்புல் 415 சுக்குக்கொடு 37 சுறவுக்கோடு 234 சுறவுயர்கொடி 234 சூதம்போர் 417 செக்குக்கணை 37 செட்டிக்கூத்தன் 154 செத்துக்கிடந்தான் 427 செந்நாய் 210 செம்பருத்தி 141 செம்பூ 76 செம்பொன்பதின்றொடி 141 செம்முக்கடிது 327 செம்முக்கடுமை 327 செய்குன்று 482 செய்யாறு 29 செருக்களம் 260 செருவக்களம் 260 செருவஞாற்சி 260 செருவின்கடுமை 260 செல்செலவு 482 செல்வுழி 140 செலலோசென்றான் 291 செவிட்டரை 165 செற்கடிது 371 செற்றுச் செய்தான் 427 சென்மதிபாக 158 சென்னிதந்தை 246 சேக்கடிது 274 சேங்கோடு 278 சேமணிக்கு 279 சேவின்கோடு 279 சேவினடை 279 சேவினலம் 279 சேவினிமில் 279 சேவினை 173 சேவினோட்டம் 279 சொல்லழகிது 160 சொல்லௌவியம் 138 சொற்கடிது 371 சொற்கேட்டான் 109 சோக்கடிது 289 சோதியாற்கொண்டான் 247 சோவினை 180 ஞ ஞெமைங்கோடு 282 ஞெமையின்கோடு 285 த தகர்க்குட்டி 405 தடக்கை 203 தடஞ்செவி 203 தடவுமுதல் 234 தடாவினுட்கொண்டான் 202 தந்துதீர்ந்தான் 427 தம்மணி 320 தம்மாடை 160 தமகாணம் 320 தமிழக்கூத்து 385 தமிழநூல் 128 தமிழயாழ் 128 தமிழவரையர் 128 தரலோதந்தான் 291 தவக்கொண்டான் 203 தழூஉவினை 173 தளாஅக்கோடு 230 தளாஅங்கோடு 229 தளாஅத்துக்கோடு 230 தற்பாடி 353 தற்புகழ் 353 தன்கை 352 தன்ஞாண் 352 தாங்குறிய 321 தாங்குறியர் 321 தாஞ்ஞான்றார் 321 தாநல்லர் 160 தாம்வந்தார் 321 தாமரைக்கணியார் 141 தாய்க்கொண்டான் 361 தாய்க்கொலை 157 தாய்கை 358 தாராக்கடிது 221 தாராக்கால் 225 தாவத்தந்தான் 204 தாவினீட்சி 372 தாவுபரி 314 தாழக்கோல் 384 தாழங்காய் 283 தான்குறியன் 353 தான்றந்தை 351 தானல்லன் 160 தானைக்கண் 210 திருட்டுப்புலையன் 425 திரும்யாது 27 திருமுகொற்றா 152 திருமுரசு 36 தில்லங்காய் 283 தில்லைச்சொல் 158 தினைக்குறிது 158 தீக்கடிது 249 தீக்கடுமை 252 தீக்கண் 114 துக்கொற்றா 151 துவர்ங்கோடு 363 துவரங்கோடு 363 துள்ளுக்கடிது 401 துள்ளுக்கடுமை 401 துளியத்துக்கொண்டான் 246 தூணிக்குத்தூணி 239 தூணிக்கொள் 239 தூணித்தூணி 239 தூணிப்பதக்கு 239 தூதுணையின்காய் 285 தூய்ப்பெய்தான் 361 தெய்வவரை 111 தெவ்வலன் 160 தெவ்வுக்கொற்றா 152 தெவ்வுகொற்றா 152 தெவ்வினை 184 தெவ்வுக்கடிது 382 தெவ்வுக்கடுமை 382 தெள்கியாது 35 தெள்குகடிது 425 தெள்குகால் 413 தெற்கேவடக்கு 431 தேக்கங்கோடு 415 தேன்றீது 160 தொடிக்குறை 166 தொடிக்கூறு 166 தொடித்தொடி 239 தொடியரை 165 தொடியேகஃசு 164 தோணன்று 160 தோற்றண்டை 171 ந நங்கைச்சானி 154 நங்கைதீயள் 153 நங்கைப்பெண் 154 நட்டுப்போனான் 427 நடக்கொற்றா 151 நடகொற்றா 151 நடஞெள்ளா 171 நம்பிகுறியன் 153 நம்பிச்சான்றார் 154 நம்பித்துணை 154 நம்பிப்பிள்ளை 154 நம்பிப்பேறு 154 நம்பியைக்கொணர்ந்தான் 157, 202 நமகாணம் 320 நமைங்கோடு 282 நமையின்கோடு 285 நல்லகுதிரை 210 நன்றோ தீதோ கண்டது 290 நாகரிது 138 நாகன்றேவன்போத்து 141 நாகியாது 35 நாகின்கால் 412 நாகுகடிது 408, 425 நாகுகடுமை 408 நாகுகால் 412, 417 நாகுஞாற்சி 412 நாங்குறியம் 321 நாங்குறியேம் 314 நாஞ்ஞான்றாம் 321 நாட்டக்கடுமை 327 நாட்டங்கடிது 327 நாடுரி 240 நாண்டீது 160 நாணோடிற்று 138 நாம்வருதும் 321 நாய்க்கால் 156 நாய்கடிது 361 நாய்கோட்பட்டான் 156 நாலகல் 456 நால்வட்டி 453 நாலாறு 446 நாலிரண்டு 446 நாலுழக்கு 456 நாலெட்டு 446 நாலேழு 446 நாலைந்து 446 நாலொன்பது 446 நாலொன்று 446 நாழிக்காயம் 240 நாழியேயாழாக்கு 164 நாளன்றுபோகி 237 நாற்கல் 478 நாற்கலம் 447 நாற்கழஞ்சு 447 நான்குகல் 478 நான்குஞாண் 478 நான்குநூறாயிரம் 471 நான்குமா 480 நான்மண்டை 451 நான்மா 480 நானாழி 451 நிக்கந்தக்கோட்டம் 453 நில்கொற்றா 151 நிலநீர் 314 நிலம்வலிது 330 நிலாஅக்கதிர் 228 நிலாஅத்துக்கொண்டான் 228 நிலாஅமுற்றம் 228 நிலாத்துக்கொண்டவன் 132 நிலாத்துக்கொண்டான் 132 நிலாஅத்து ஞான்றான் 228 நிலாவிற்கொண்டான் 230 நிற்கொற்றா 151 நீகுறியை 250 நீசெல்க 210 நீயிர் குறியீர் 326 நீயிர் ஞான்றீர் 326 நீயேகொண்டாய் 275 நீயோஒகொடியை 273 நீயோகொண்டாய் 290 நீலக்கண் 314 நீள்சினை 23 நுஞ்ஞாண் 320, 325 நுணக்குறிது 203 நுணாங்கோடு 231 நும்மடை 325 நும்மணி 325 நூற்றிதழ்த்தாமரை 472 நூற்றுக்கலம் 474 நூற்றுக்காணம் 472 நூற்றுக்குறை 472 நூற்றுக்கோடி 472 நெடியதன்கோடு 417 நெடியவற்றுக்கோடு 286 நெல்லுக்குவிற்றான் 405 நெற்காய்த்தது 371 நேர்ங்கல் 48 நேர்ஞ்சிலை 48 நேர்ஞெகிழி 29 நேர்ந்திலை 48 நேர்ம்புறம் 48 நொக்கொற்றா 151 ப பஃறாலி 215 பஃறாழிசை 215 பட்டுக்கடிது 426 பண்டுகொண்டான் 429 பண்ணுக்கடிது 306 பண்ணுப்பெயர்த்து 306 பண்டைச்சான்றோர் 159 பணைத்தோள் 158 பதக்கநானாழி 171 பதிற்றகல் 121, 436 பதிற்றுழக்கு 121, 436 பதிற்றுத்தொடி 436 பதிற்றுவேலி 436 பதின்கலம் 436 பதின்கழஞ்சு 436 பதின்திங்கள் 436 பதினாயிரத்துக்குறை 318 பத்தின்குறை 167 பத்தோ பதினொன்றோ 290 பரண்கால் 307 பரணியாற்கொண்டான் 124 பரணியிற்கொண்டான் 124 பருத்திக்குச்சென்றான் 246 பல்கடல் 214 பல்சங்கத்தார் 153 பல்சான்றோர் 153 பல்யானை 214 பல்லகுதிரை 210 பல்லரசர் 153 பல்லவற்றுக்கோடு 220 பல்வேள்வி 214 பலகுதிரை 210 பலவற்றுக்கோடு 118, 220 பலாஅக்கோடு 226 பலாஅநார் 226 பலாஅவிலை 226 பலாக்குறைத்தான் 109, 157 பலாவின் நீங்கினான் 131 பவளவாய் 314 பற்பலகொண்டார் 214 பறக்குநாரை 314 பறம்பிற்பாரி 124 பன்மலர் 215 பன்மீன்வேட்டத்து 215 பன்னுக்கடிது 345 பனந்திரள் 285 பனியத்துக்கொண்டான் 241 பனியிற்கொண்டான் 241 பனைக்குறை 169 பனைக்கொடி 285 பனைத்தடிந்தான் 157 பனைத்திரள் 285 பனையின்குறை 112, 169 பனையின்மாண்பு 286 பாக்குக்கடிது 426 பாடப்போயினான் 109 பாடும்பாணன் 314 பாம்பினிற்கடிதுதேள் 131 பாம்புகோட்பட்டான் 156 பாய்ஞெகிழி 29 பார்ப்பனக்கன்னி 338 பார்ப்பனக்குழவி 418 பார்ப்பனமகன் 418 பார்ப்பன வனிதை 418 பார்ப்பனவாழ்க்கை 338 பால் கடிது 370 பாலரிது 138 பாழ்க்கிணறு 387 பாழ்ங்கிணறு 387 பிடாஅக்கோடு 230 பிடாஅங்கோடு 229 பிடாஅத்துக்கோடு 230 பிடாவின்கோடு 230 பிலத்துவாய் 312 பிற்கொண்டான் 333 பின்கொண்டான் 333 பின்னல்கடிது 376 பின்னற்கடுமை 376 பின்னுக்கடுமை 345 பீகுறிது 250 பீர்ங்கோடு 363 புகர்ப்போத்து 405 புட்கடிது 403 புட்கடுமை 403 புண்ஞாற்சி 403 புண்ஞான்றது 403 புணர்பொழுது 482 புல்லுக்கடிது 376 புலிபோலக்கொன்றான் 204 புள்வலிது 403 புள்வன்மை 403 புள்ளுக்கடிது 403 புள்ளுக்கடுமை 403 புள்ளுவலிது 403 புள்ளுவன்மை 403 புளிக்குறைத்தான் 157 புளிக்கூழ் 246 புளியங்கோடு 129 புளியஞெரி 130 புளியின்கோடு 246 புற்றம்பழஞ்சோறு 417 புற்றோ புதலோ 290 புறவுப்புறம் 234 புன்கங்கோடு 416 பூஞாற்றினார் 145 பூணிப்பூணி 239 பூதந்தை 348 பூலங்கோடு 375 பூலஞெரி 375 பூலாங்கழி 375 பூவழகிது 140 பூவினொடு விரிந்த கூந்தல் 132 பூவொடு விரிந்த கூந்தல் 132 பூழ்க்கண் 114 பூழ்க்கால் 383 பூற்குறைத்தான் 157 பெண்டன்கை 421 பெண்டின்கால் 420 பெரும்பற்றப்புலியூர் 45 பெருமுரசு 36 பேன்கொற்றன் 351 பேன்றந்தை 351 பொய்ச்சொல் 361 பொய்யில்ஞானம் 372 பொருநக்கடுமை 299 பொருநின்குறை 299 பொருநுக்கடிது 298 பொருமாரன் 314 பொருவானாற்போகான் 368 பொருளுக்குப்போனான் 405 பொன்னங்கட்டி 405 பொன்னுக்கு விற்றான் 405 போதலோ போயினான் 291 போர்யானை 29 ம மக்கட்கை 404 மக்கட்சுட்டு 405 மக்கட்பண்பு 405 மகடூஉக்குறியள் 265 மகடூஉக்கை 267 மகடூஉவின்கை 118 மகத்தாற்கொண்டான் 109 மகத்தான் ஞாற்றினான் 331 மகத்துக்கை 125 மகத்துஞான்றுகொண்டான் 331 மகப்பால்யாடு 219 மகம்பால்யாடு 219 மகவின்கை 112 மகன்றாய்க்கலாம் 359 மகிழ்ங்கோடு 386 மடியுட்பழுக்காய் 202 மண்கை 302 மண்ஞாத்த 146 மண்ஞான்றது 146 மண்டீது 150 மண்ணங்கட்டி 405 மண்ணப்பத்தம் 307, 405 மண்ணன்று 150 மண்ணினைக்கொணர்ந்தான் 202 மண்ணுக்கடிது 306 மண்ணுக்கடுமை 306 மண்ணுக்குநாப்பண் 405 மண்ணுக்குப்போனான் 405 மண்ணுக்கொற்றா 171 மண்ணுகொற்றா 171 மண்மலை 109 மண்யாத்த 146 மண்யாமை 146 மண்யாறு 26 மத்திகையாற்புடைத்தான் 202 மயிலாப்பிற்கொற்றன் 417 மரக்கோடு 310 மரங்குறிது 143 மரங்குறைத்தான் 157 மரஞாண் 310 மரஞான்றது 314 மரத்துக்கட்கட்டினான் 132 மரத்துக்கட்குரங்கு 132 மரநட்டான் 109 மரநூல் 310 மரம்யாது 314 மரமணி 310 மரவடி 140 மரவேர் 109 மராவடி 311 மருத்துவமாணிக்கர் 153 மலைத்தலை 109 மலையொடு பொருதது 202 மழையத்துக்கொண்டான் 287 மழையத்துஞான்றான் 287 மழையிற்கொண்டான் 287 மழையின்ஞான்றான் 287 மன்றப்பெண்ணை 128, 418 மன்றைத்தூதை 425 மன்றைப்பானை 425 மன்னுக்கொற்றா 171 மன்னுகொற்றா 171 மாஅங்கோடு 231 மாகுறிது 224 மாசித்திங்கள் 158 மீக்கோள் 251 மீகண் 111 மீகரை 432 மீகூரை 432 மீப்பல் 251 மீற்கண் 339 மீற்சினை 339 மீற்புறம் 339 மீற்றலை 339 மீன்கண் 339 மீன்சினை 339 மீன்தலை 339 மீன்புறம் 339 முஃடீது 38, 150 முக்கலம் 447 முட்குறை 396 முட்டீது 399 முண்ஞெரி 397 முண்ஞெரிந்தது 397 முண்ணன்று 150 முந்துகொண்டான் 429 முந்நாடுரி 240 முந்நாழி 451 மும்மண்டை 451 மும்மா 480 முயிற்றின்கால் 412 முயிற்றுக்கால் 411 முயிற்றுஞாற்சி 411 முரசக்கடிப்பு 417 முரசவாழ்க்கை 417 முரட்கடுமை 309 முவ்வகல் 456 முவ்வட்டி 452 முவ்வுழக்கு 456 முள்கடிது 398 முள்குறுமை 398 முற்கொண்டான் 333 முன்கொண்டான் 333 முன்னாளைப்பரிசு 405 முன்னாளைவாழ்வு 405 மூங்கா இல்லை 140 மூங்காக்கால் 225 மூங்காவின்கால் 226 மூயானை 479 மூவகல் 457 மூவசை 479 மூவட்டி 452 மூவாறு 446 மூவிரண்டு 446 மூவுழக்கரை 165 மூவுழக்கு 457 மூவெட்டு 446 மூவேழு 446 மூவைந்து 446 மூவொன்பது 446 மூவொன்று 446 மூன்றுகல் 478 மூன்று நூறாயிரம் 471 மூன்றுமா 480 மெய்ச்சொல் 361 மென்ஞாண் 26 மேல்சார் 201 மேல்சார்க்கூரை 405 மேல்பால் 201 மேலைச்சேரி 201 மேற்கண் 201 மேற்கின்கண் 201 மேன்மாடு 432 ய யாஅக்கோடு 230 யாஅங்கோடு 229 யாஅத்துக்கோடு 230 யாகுறிய 224 யாங்கட்கொண்டான் 307 யாங்குக்கொண்டான் 427 யாங்குறியேம் 321 யாட்டின்கால் 412 யாட்டுக்கால் 411 யாட்டுஞாற்சி 411 யாரவர் 172 யாவதது 172 யானும் நின்னொடு உடன்வரும் 210 யானேஎகொண்டேன் 273 யானேகொண்டேன் 275 யானைக்கோடு 280 யானையைக்கொணர்ந்தான் 280 யானோஒகொடியன் 273 யானோகொண்டேன் 290 வ வங்காக்கால் 225 வட்கடிது 403 வட்கடுமை 403 வட்டத்தடுக்கு 314 வட்டம்போர் 417 வடகடல் 432 வடசுரம் 432 வடவேங்கடம் 432 வண்டின்கால் 420 வண்டுகொணர்ந்தான் 157 வண்ணாரப்பெண்டீர் 153 வந்தாற்கொள்ளும் 109 வந்தான்சாத்தன் 108,109 வந்தான்போயினான் 108 வந்தானாற்கொற்றன் 368 வந்தானாற்சாத்தன் 109 வந்துபோயினான் 427 வயக்களிறு 203 வயப்புலி 203 வயிற்றுத்தீ 411 வரகரிது 138 வரகியாது 35 வரகின்கதிர் 412 வரகுகடிது 408 வரகுகடுமை 408 வரகுகதிர் 412 வரகுஞாற்சி 144 வரகுஞான்றது 144 வராறீது 160 வரிற்கொள்ளும் 333 வருகாலம் 314 வரும் வண்ணக்கன் 13 வரைபாய் வருடை 157 வல்லக்கடுமை 374 வல்லநாய் 374 வல்லப்பலகை 374 வல்லுக்கடிது 373, 376 வல்லுக்கடுமை 374, 376 வல்லுநாய் 374 வல்லுப்பலகை 374 வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் 195 வழுதுணையின்காய் 285 வழையின்கோடு 285 வள்ளுக்கடிது 403 வள்ளுக்கடுமை 403 வளங்கேழூரன் 129 வளிக்கோட்பட்டான் 156 வளியத்துக்கொண்டான் 242 வளியிற்கொண்டான் 124 வாட்கடிது 401 வாட்கடுமை 398, 401 வாட்கண் 114 வாட்டானை 171 வாணிகத்தெரு 153 வார்சிலை 29 வாராதகொற்றன் 210 வாழ்சேரி 29 வாழிகொற்றா 211 வாழிஞெள்ளா 211 வாள்கடிது 400, 401 வாள்கடுமை 401 வான்கரை 335 வானத்தின்வழுக்கல் 132 வானத்தின்வழுக்கி 132 வானத்துவழுக்கல் 132 வானத்துவழுக்கி 132 வானுலகு 138 வானூடு 138 விண்ணத்துக்கொட்கும் 305 விண்ணுக்குமேல் 405 விண்வத்துக்கொட்கும் 140 விண்விணைத்தது 482 விரனன்று 160 விளக்கத்துக்கொண்டான் 417 விளக்குறிது 203 விளக்குறுமை 143 விளக்குறைத்தான் 143 விளவத்துக்கண் 133 விளவழகிது 140 விளவின்கோடு 132 விளவின்வீழ்பழம் 131 விளவினதுகோடு 132 விளவினைக்குறைத்தான் 107, 132 வீழ்குறிது 405 வீழ்யானை 29 வெண்சாந்து 26 வெண்ஞாண் 26 வெண்ணின்கரை 306 வெண்ணுக்கரை 306 வெயிலத்துச்சென்றான் 133 வெரிங்குறை 300 வெரிஞ்செய்கை 300 வெரிநக்கடுமை 299 வெரிநின்குறை 299 வெரிநுக்கடிது 392 வெள்யாறு 24 வெள்விளர்த்தது 482 வெளிற்றுப்பனை 425 வெற்றுப்பிலி 482 வேக்குடம் 276 வேட்டங்குடி 350 வேட்டமங்கலம் 350 வேப்பங்கோடு 416 வேய்ங்ஙனம் 29 வேயின்றலை 405 வேர்க்குறிது 405 வேர்க்குறை 362 வேர்கடிது 29 வேர்குறிது 405 வேர்ங்குறை 362 வேர்ங்ஙனம் 29 வேலங்கோடு 375 வேலஞெரி 375 வேற்றீது 369 வேறீது 369 வேனன்று 160 வௌவு கொற்றா 152 வௌவு வலிது 295 செய்யுள் நிரல் (மேற்கோள்) (எண்: நூற்பா எண்) அகடு சேர்பு... (மலைபடு. 33) 131 அஞ்செவி... (முல்லைப். 89) 483 அண்ணல் கோயில்... (சிந்தா-நாமகள் 126) 483 அந்நூலை, முந்நூலாக்... (கலித். 103) 51 ஆயிடையிருபேராண்மை... (குறுந். 43) 483 ஆரங் கண்ணி... (அகம். 93) 363 இலம்படு புலவ... (மலைபடு. 576) 316 இலம்பாடு நாணுத்... (சிலப். 9-71) 316 இலாஅஅர்க்... (நாலடி. 283) 6 இறவுப்புறத் தன்ன... (நற். 19) 234 எழூஉத்தாங்கிய... (புறம். 97) 261 ஏப்பெற்ற மான்பிணை (சிந்தா. 2965) 483 ஒன்றாது நின்ற... (சிந்த. 316) 180 கணவிரமாலை... (அகம். 31) 246 கல்கெழு கானவர்... (குறுந். 71) 481 கலம்பெறு கண்ணுள... (மலைபடு. 50) 312 கள்ளியங் காட்ட (அகம். 97) 483 கற்பினின் வழாஅ... (அகம் 86) 131 காய்மாண்ட தெங்கின் பழம்... (சிந்தா. 31) 483 காரெதிர் கானம்... (புறம். 145) 483 கானலம் பெருந்துறை (ஐயங்குறு. 158) 483 குன்றுறழ்ந்த களிறென்கோ... (புறம். 387) 290 கைத்தில்லார் நல்லர்... (நான்மணிக். 69) 483 கைத்துண்டாம்... (நாலடி. 19) 483 கெளவைநீர் வேலி... (பு.வெ.மா. - 23) 57 சிதையுங் கலத்தைப்... (பரி. 10-55) 51 சுறவெறிமீன்... இறவழங்கு... (அகம். 318) 483 செங்கேழ் மென்கொடி... (அகம். 80) 481 செறா அ அய்... (குறள். 1200) 7 தடிவுநிலை... (புறம். 140) 483 திண்வார் விசித்த... (மலைபடு. 3) 483 தீயினன்ன வொண்செங்... (மலைபடு. 145) 483 தும்முச் செறுப்ப... (குறள். 1318) 327 துறைகெழு... (நற். 35) 481 துறை கேழூரன்... (ஐங்குறு. 11) 481 நல்லொழுக்கங் காக்குந்... (நாலடி. 457) 483 நாவலந்தண் பொழில் (பெரும்பாண். 465) 483 பயங்கெழு... (புறம். 266) 481 பல்லுக்குத் தோற்ற... 405 பழூஉப்பல்... (குறுந். 59, 180) 261 பாடறியாதானையிரவு... கண்ணாரக் காணக்கதவு... (முத்தொள். 42) 176 புண்கண்... (குறள். 1152) 176 புலம்புக் கனனே... (புறம். 258) 157, 312 புறவுப் புறத்தன்ன... (குளிர். 264) 234 புன்னையங்கானல்... (அகம். 80) 483 பூக்கேழ் தொடலை... (அகம். 28) 481 பொலங்கலஞ் சுமந்த... (அகம். 16) 356 பொலஞ்சுட ராழி... பொலந்தார்க் குட்டுவன்... (புறம். 343) 356 பொலநறுந்தெரியல் (புறம். 29) 356 பொலம்படைப் பொலிந்த... (மலைபடு. 574) 356 பொலமல ராவிரை... (கலி. 138) 356 பொன்போற் பீரமொடு... (நெடுநல். 14) 365 பொன்னகர் வரைப்பிற்... (ஐங்குறு. 247) 346 பொன்னந் திகிரி... (புறம். 368) 483 பொன்னோடைப்... (புறம். 3) 111 மண்ணுக்கு நாப்பண்... (திருக்கோவை. 162) 405 மன்னிய பெரும நீ... (புறம். 91) 210 மாநிதிக்கிழவனும் போன்ம்... (அகம். 66) 481 மாரிப் பீரத்... (குறுந். 98) 363 மின்னுச் செய்... (கலி. 41) 345 மின்னுநிமிர்ந் தன்ன... (புறம். 57) 345 முதிர்கோங்கின் (குறிஞ்சிக்கலி. 20) 483 யாவது நன்றெனவுணரார்... (குறுந். 78) 172 யானோ தேறே... (குறுந். 21) 290 வரைபாய் வருடை... (மலைபடு. 503) 157 வளங்கெழு திருநகர்... (அகம். 17) 481 விண்குத்து நீள்வரை... (நாலடி. 226) 305 விளங்காய் திரட்டினா... (நாலடி. 103) 10 வெண் கூதாளத்து... (பட்டி. 85) 246 வெடிகொண் டெழுந்த... (திருநாட்டுப்படல்) 213 வேர்பிணிவெதிரத்துக்... (நற். 62) 483 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) (எண்: நூற்பா எண்) அ அஃதென் கிளவி 199 அஃறிணை 82 அஃறிணை இயற்கை 303 அஃறிணைப் பெயர் 117 அஃறிணை விரவுப்பெயர் 155, 157 அக்கென் சாரியை 270, 329 அகத்தெழு வளி 102 அகமென் கிளவி 315 அகர இறுதிப் பெயர் 203 அகர இறுபெயர் 174 அகரமுனை 115 அண்ணம் 96 அத்தென் சாரியை 305 அம்மென் சாரியை 350 அரை 283 அரையளபு 13 அளபிற் கோடல் 102 அளபிறந்துயிர்த்தல் 33 அன்னென் சாரியை 194 ஆ ஆண்மரக் கிளவி 304 ஆய்த இறுதி 200, 422 ஆய்தத் தொடர் 413 ஆய்தத் தொடர்மொழி 406 ஆய்த நிலையல் 399 ஆய்தப் புள்ளி 38, 390, 423 ஆய்தம் 2 ஆய்தம் நிலையல் 369 ஆயிரக் கிளவி 392, 464 ஆவிரைக் கிளவி 283 ஆறன் உருபு 161 இ இசைநிறை 42 இசையின் திரிதல் 141 இடக்கர்ப் பெயர் 250 இடம்வரை கிளவி 250 இடைத்தொடர் 406 இடைநிலை ரகரம் 439 இடையெழுத்து 21 இடையொற்றுத் தொடர் 413 இயற்கை ஆதல் 372 இயற்பெயர் 347, 351 இராவென் கிளவி 227 இருபெயர்த் தொகைமொழி 223 இருளென் கிளவி 402 இல்ல மரப்பெயர் 313 இல்லென கிளவி 372 இலமென் கிளவி 316 இன்னென் சாரியை 131, 195, 436, 476 ஈ ஈரெழுத்து ஒருமொழி 45, 406 ஈரெழுத்து மொழி 411,417 ஈரொன்று 48 ஈரொன்றுத் தொடர்மொழி 407 உ உச்சகாரம் 75, 79 உட்பெறுபுள்ளி 14 உடம்படு மெய் 140 உடன்நிலை 22 உண்டென் கிளவி 430 உதி 243, 262 உந்தி 83 உப்பகாரம் 76, 80 உம்மை நிலை 189, 191 உயர்திணைப் பெயர் 117, 153 உயிர்கெட வருதல் 157 உயிர்த்தொடர் 406 உயிர்த்தொடர் மொழி 411 உயிர்தோன்றும் நிலை 18 உயிர்மெய் ஈறு 106 உயிர்வரு வழி 107, 140 உயிரிறு கிளவி 156, 202 உயிரிறு சொல் 107, 152 உருபியல் நிலை 263, 294 உரைப்பொருட் கிளவி 210, 212 உரையசை 224 உரையசைக் கிளவி 34, 204 உவமக் கிளவி 204, 210 உழக்கென் கிளவி 457 உறழத்தோன்றல் 156 எ எகின் மரம் 336 எண்ணின் இறுதி 198 எண்ணுப்பெயர்க் கிளவி 419 எண்ணென் உணவுப் பெயர் 308 எல்லாம் எனும் பெயர் 322 எழுத்தின் சாரியை 134 எழுத்துக்கடன் 142 எனவென் எச்சம் 204 ஏ ஏயென் சாரியை 164 ஏழன் உருபு 181 ஏழென் கிளவி 388 ஐ ஐகார வேற்றுமை 157 ஐந்தென் கிளவி 456 ஒ ஒருபெயர் உருபியல் நிலை 253 ஒடு மரக்கிளவி 262 ஒல்வழி 114 ஒல்வழி அறிதல் 246 ஒற்றிடை இனமிகா மொழி 412 ஒற்றிடை மிகுதல் 114 ஒற்றியல் நிலை 451 ஒற்றுமெய் கெடுதல் 160 ஒன்பான் இறுதி 459 ஒன்பான் முதனிலை 463 ஒன்றறி சொல் 172 ஓ ஓரெழுத்து ஒருமொழி 43, 45 ஓரெழுத்து மொழி 226 க கண்ணிமை 7 கலம் 168 கலமென் அளவு 168 கன்னென் கிளவி 346 கா என் நிறை 169 கால வேற்றுமை 241 கிளைப் பெயர் 307, 338 கிளைமொழி 418 கீழென் கிளவி 395 குமிழென் கிளவி 386 குயினென் கிளவி 335 குற்றியலிகரம் 2, 34 குற்றியலுகரத்திறுதி 152 குற்றியலுகரம் 2, 67, 128, 105, 167 195, 433, 437, 469, 474 குற்றெழுத்து 3,41, 44,136, 267 குற்றொற்று 49 குற்றொற்று இரட்டல் 161 குறித்துவரு கிளவி 107, 110 குறுகும் மொழி 161 குறைச்சொற் கிளவி 482 குறையென் கிளவி 166 குன்றிசை மொழி 41 ச சாரியை 112, 118, 157, 165, 173, 180, 182, 185, 189, 201, 202, 218, 241, 248, 270, சாரியை இயற்கை 132 சாரியை கெடுதல் 157 சாரியை மரபு 470 சாரியை மொழி 119, 459 சாரென் கிளவி 364 சுட்டின் இயற்கை 238 சுட்டு 31, 122 சுட்டுச்சினை 159 செய்யுள் மருங்கு 356 செய்யுள் கண்ணிய தொடர்மொழி 213 செயவென் எச்சம் 209 செயவென் கிளவி 211 செல்வழி அறிதல் 312 த தம்மினாகிய தொழிற்சொல் 156 தமிழென் கிளவி 385 தன்னுருபு இரட்டல் 160 தன்னுருபு நிலையல் 157 தாயென் கிளவி 358 தாழென் கிளவி 384 திசைப்பெயர் 201 திறப்படத் தெரியும் காட்சி 83 தூணி 239 தேனென் கிளவி 340 தொடர்மொழி 36, 45, 50, 145 தொல்லியன் மருங்கு 355 தொல்லை இயற்கை 409 தொழில்நிலைக் கிளவி 247 தொழிலிறு சொல் 210 ந நாட்பெயர்க் கிளவி 331 நாழிக் கிளவி 240 நான்கன் உருபு 161 நிலாவென் கிளவி 228 நிலைமொழி 173 நிறுத்த சொல் 107, 108, 110 நிறையென் கிளவி 446 நீடுமொழி 213 நீயென் ஒரு பெயர் 179 நும்மென் இறுதி 162 நூறென் கிளவி 463 நெட்டெழுத்து 4, 36, 41, 43, 50, 135, 196 நெடுஞ்சினை 56 நெடுமுதல் குறுக்கம் 392 நொடி 7 ப பஃதென் கிளவி 445 படர்க்கை இறுதி 191 படர்க்கைப் பெயர் 320 பண்புதொகு மொழி 482 பத்தென் கிளவி 390 பதக்கு 239 பதினெண் எழுத்து 9 பலரறி சொல் 172 பன்னீரெழுத்து 8 பனை என் அளவு 169 பால்வரை கிளவி 165 பாழென் கிளவி 387 பிறப்பின் ஆக்கம் 83 பீரென் கிளவி 365, 386 புணர்நிலைச் சுட்டு 107, 111 புணர்மொழி நிலை 112, 171 புணரியல் நிலை 35 புள்ளியிறுதி 156, 202 புள்ளியொடு நிலையல் 104 பூதக் கிளவி 242 பெண்டென் கிளவி 421 பெயர்க் கொடை 210 பெயர்நிலைக் கிளவி 320 பெயர்நிலைச் சுட்டு 117 பெயர்புணர் நிலை 116 பெயரெஞ்சு கிளவி 210 பொருள்தெரி புணர்ச்சி 141 பொன்னென் கிளவி 356 ம மகப்பெயர்க் கிளவி 218 மகரத்தொடர்மொழி 82 மயங்கியல் மொழி 111 மரப்பெயர்க் கிளவி 181, 217, 415 மருவின் தொகுதி 111 மழையென் கிளவி 287 மாத்திரை 7 மாமரக் கிளவி 231 மாவென் கிளவி 480 மாறுகொள் எச்சம் 290 மானம் 246 மிகற்கை தோன்றல் 157 மீனென் கிளவி 339 முத்தை வரூஉங் காலம் 164 முதலாகு எழுத்து 29 முதலாகு மொழி 144 முதலெழுத்து 108 முதன்மொழி 449 முதனிலை 316 முதனிலை இயற்கை 478 முதனிலை எண் 478 முதனிலைக் கிளவி 471 முதனிலை நீடல் 455, 465 முப்பாற்புள்ளி 2 முப்பெயர் 192 முரணென் தொழிற்பெயர் 309 முற்றியலுகரம் 68 முறைப்பெயர் 67 முன்னிலை இறுதி 191 முன்னிலை கிளவி 151 முன்னிலைப் பெயர் 320 முன்னிலை மொழி 152,191, 265 மெய் கெடுதல் 133 மெய்த்தலைப்பட்ட வழக்கு 171 மெய்ந்நிலை 30 மெய்ந்நிலை மயக்கம் 47 மெய்பிறிதாதல் 109 மெய்ம்மையாகல் 156 மெய்மயங்கு 22 மெய்யிறு சொல் 107 மெய்யின் இயற்கை 15 மெய்யுயிர் 139 மெய்வருவழி 107 மெல்லெழுத்து 157, 20 , 100, 217, 229, 243, 245 மெல்லெழுத்து இயற்கை 143, 145, 300 மெல்லெழுத்து உறழும் மொழி 360 மெல்லெழுத்து மிகுதல் 315 மெல்லெழுத்து மிகுதி 320 மெல்லொற்றுத் தொடர்மொழி 414 மெலிப்பொடு தோன்றல் 157 மென்றொடர் மொழி 414, 427 மொழிக்குறிப்பு 40 மொழி நிறைபு 44 மொழிபுணர் இயல்பு 108 ய யா 175, 178, 235 யாதென் இறுதி 200 யாதென் வினா 172 யாவென் வினா 159 வ வல்லெழுத்து 19, 114, 128, 133, 148, 151, 156, 157,158, 159, 204, 246, 215, 231, 235, 246, 250, 253, 260, 268, 273, 275, 280 வல்லெழுத்து இயற்கை 253, 260, 263 290, 294, 337, 427, 474 வல்லெழுத்து இயைபு 302 வல்லெழுத்து மிகுதல் 295, 301, 340 வல்லெழுத்து மிகுதி 285, 411 வல்லென் கிளவி 373 வல்லொற்றுத் தொடர் 417 வல்லொற்றுத் தொடர்மொழி 409, 426 வலிப்பொடு தோன்றல் 157 வழங்கியன் மருங்கு 22 வளியிசை அளபு 102 வன்முதல் தொழில் 124 வன்றென் சாரியை 189 வன்றொடர் 406 வன்றொடர் மொழி 414 விசைமரக் கிளவி 282 விசைமரம் 313 வியங்கோட் கிளவி 210 விளிநிலைக் கிளவி 210 விளிப் பெயர்க் கிளவி 224 வினா 32 வினாவின் கிளவி 224 வினையெஞ்சு இறுதி 237 வினையெஞ்சு கிளவி 204, 210,222, 236, 265, 333 வெயிலென் கிளவி 377 வேற்றுமை 156 வேற்றுமை இயற்கை 166 வேற்றுமை உருபு 173, 131, 132 வேற்றுமைப் பொருள் 302, 332, 357 வேற்றுமையுருபு 113, 114 னகரத்தொடர்மொழி 82 கலைச்சொல் நிரல் (உரைவழி) (எண்: நூற்பா எண்) அ அஃறிணை இயற்பெயர் 203 அஃறிணை விரவுப்பெயர் 358 அகர ஈற்றிற்கு அல்வழி முடிபு 216 அகர ஈற்று உரிச்சொல் 203 அகர ஈற்றுச் சுட்டல்லாத குற்றெழுத்து 214 அகர ஈற்றுப்பெயர் 203 அகர ஈற்றொருமை 214 அகர எழுத்துப்பேறு 115 அகச் செய்கை 1 அகப்புறக் கருவி 1 அகப்புறச் செய்கை 1 அகரப்பேறு 223, 337 அடுத்துச் சொல்லியவழி இனிதிசைத்தல் 134 அணுகுதற்குக் காரணம் 86 அதிகார முறைமை 36 அதிகார வல்லெழுத்து 285 அம்முச் சாரியை 243, 285 அம்முப் பெறுதல் 363 அருத்தாபத்தி 214 அருத்தாபத்தியாற் கொண்டதற்கு இலக்கணம் 272 அரை மாத்திரை 408 அல்வழிக்கட் கெடுதல் 144 அளபெடையல்லாத ஓசை 6 அளவுங் குறியும் உணர்த்துதல் 3 அளவுப்பெயர் 112, 436 அற்புத்தளை 414 அன்மொழித் தொகை ......... புணர்ந்த புணர்ச்சி 112 ஆ ஆகார ஈற்றுப்பெயர் 224 ஆகார ஈற்று வினைச்சொன் முடிபு 222 ஆசிரியத்தளை 6 ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு 269 ஆசிரியன் ஆணை 10 ஆட்சியுங் காரணமும் நோக்கியதொரு குறி 8, 9, 31 ஆணை கூறுதல் 7 ஆய்தத் தொடர்மொழி 422 ஆரியச் சிதைவு 75 ஆறெழுத்தொருமொழி 45 ஆன் சாரியை 119, 247, 286 இ இக்குச் சாரியை 239, 286 இகர ஈற்றுச் சுட்டுப்பெயர் 238 இசைகுன்று 41 இசை நூற்கு வருவதோர் இலக்கணம் 33 இசையோசை 6 இடப்பொருள் உணர நின்ற சொற்கள் 333 இடைக்கணம் 130, 153, 295, 297 இடைச்சொல் மிகுதி 158 இடைச்சொல்லியல்பு 158 இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதல் 231 இடை நிகர்தாய மிடற்று 21 இடையறவுபடாமை 108 இடையினத்திற்கு மிடற்றுவளி 100 இடை யெறியப்படுதல் 1 இதழ் இயைதல் 97 இயங்கு திணை 46 இயல்பு கணம் 226, 228, 234, 238, 260, 279, 286, 287, 304, 314, 319, 352, 375, 419 இயற்கை மகன்தன் குறிப்பினன்றி இரண்டிமையும் ஒருகாற் கூடி நீங்கின காலக்கழிவு 7 இயற்கையளபெடை 6 இயற்சீரின்பாற்பாடுகின்ற எண்வகை அளபெடைச் சொற்கள் 41 இயைபு வல்லெழுத்தினோடு இக்கு வகுத்தல் 248 இயைபு வல்லெழுத்து 220, 224, 228, 230, 241, 244, 246, 247, 267, 270, 279, 283, 285, 286, 295 299, 395, 412, 414, 419 இயைபு வல்லெழுத்துக் கேடு 226 இயைபு வல்லெழுத்து வீழ்வு 219 இரண்டாம் வேற்றுமைத்திரிபு 157 இருதிணைச் சொல் 155 இருதிணைப் பெயர் 117 இருதிணைப் பொருள் 155 இருபத்தாறு உறுப்பிற்குஞ் சிறப்புறுப்பு 33 இருபெயரொட்டுப் பண்புத் தொகை 424 இருமொழிக்கண் வந்த குற்றுகரம் 36 இருமொழிப் புணர்ச்சி 107, 208 இருவழியும் வேற்றுமைத்திரிபு 403 இல்லென்னும் வினைக்குறிப்பு 372 இலக்கணத்தொடு பொருந்திய மருவு 250 இலக்கண மரூஉ 355 இழிவழக்கு 64 இறந்தொலிக்கும் இடம் 33 இன் சாரியை 102, 119, 120, 123, 174, 286 இன்பதுன்பத்தை ஆக்குதல் 1 இன்ன அளவின என்றல் 1 இன்ன தன்மையின என்றல் 1 இன்ன பிறப்பின என்றல் 1 இன்ன புணர்ச்சியின என்றல் 1 இன்ன பெயரின என்றல் 1 இன்ன முறையின என்றல் 1 இன்ன வடிவின என்றல் 1 இன்னோசை 111 இன்னோசைத்தாய் நிற்றல் 1 இனமொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும் ஒத்தல் 41 இனிது இசைத்தல் 193 ஈ ஈரெழுத்தொருமொழி 145, 214, 417, 422 ஈரொற்றிலக்கணம் 51 ஈரொற்றுடனிலை 48 உ உகர ஈற்றுச் சுட்டு 256 உகரப்பேறு 299 உகரம் விலக்கி அகரம் 346 உடம்படுமெய்கோடல் 140 உடம்பொடு புணர்த்தல் 1 உம்முச்சாரியை 322 உம்முப்பேறு 323 உம்மைத்தொகை முடிபு 223 உம்மையாற் கொண்ட மொழி 29 உயர்திணைப் பெயர் 153, 154, 310, 314, 321, 335 உயர்திணை வினைச்சொல் 153 உயிர்க்கணம் 130, 153 உயிர்க்கிழவன் 85 உயிர்க்கு எய்திய பிற விதி 446 உயிர்த்தொடர் மொழி 197 உயிர்முதன் மொழி 144, 234 உயிர்மெய்க்கு அளபு 10 உயிர்மெய்ம் மயக்கம் 22 உயிர்மெய்யொற்றுமை 179 உயிரது குறுக்கம் 2 உயிரீறு நின்று வன்கணத்தொடுஞ் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் மயங்கிப் புணரும் இயல்பு 203 உயிரெழுத்திற்குப் பொதுப் பிறவி 84 உயிரோசை 105 உருபியலை நோக்கியதொரு கருவி 114 உருபியலை நோக்கியதொரு நிலை மொழிக் கருவி 161 உருபிற்கு எய்திய சாரியை 412 உருபிற்குச் சென்ற சாரியை 120, 226, 230, 246, 270, 299, 405, 414 உருபின் பொருள்பட வந்த வேற்றுமை 236 உருபின் பொருள்பட வரும் புணர்ச்சி 173 உருபு புணர்ச்சிக்கட் சென்ற சாரியை 202 உருவும் உருவுங்கூடிப் பிறத்தல் 1 உரைச் செய்யுள் 33 உரையாசிரியர் 50 உரையிற்கோடல் 57, 130 எ எண்ணியளத்தல் 7 எண்ணுப் பெயர் 317, 436 எதிரது போற்றல் 10, 33, 40, 41, 42, 50 எய்தாதது எய்துவித்தல் 224 எய்தியதன்மேற் சிறப்புவிதி 211, 219, 220, 241, 246, 270, 271, 277, 281, 312, 323, 348, 369, 384, 399, 465 எய்தியதனை விலக்கித் தொழிற் பெயரொடு மாட்டெறிதல் 373 எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி 374 எய்தியது விலக்கல் 224 எய்தியது விலக்கிச் செய்யுட்கு ஆவதொரு விதி 208 எய்தியது விலக்கிப் பிறிதுவிதி 205, 217, 218, 244, 245, 253, 282, 285, 303, 304, 336, 352, 354, 371, 375, 377, 376, 400, 407, 415, 418, 426 எழுத்தியல் தழா ஓசைகள் 2 எழுத்தினாற் சாரியை யாதல் 112 எழுத்து இனைய என்றல் 1 எழுத்துக்கட்கு கிடக்கைமுறை 1 எழுத்துக்கட்குவருஞ் சாரியை 134 எழுத்துகளினது பிறப்பு உணர்த்துதலிற் பிறப்பியல் 83 எழுத்துப்பேறு 112, 244 எழுத்துப்போலி 54 ஏ ஏயென் சாரியை 166, 171, 239, 317 ஏழெழுத்தொருமொழி 45 ஏற்புழிக் கோடல் 53, 260 ஐ ஐயெழுத்தொருமொழி 45 ஒ ஒப்பக்கூறல் 120 ஒப்புமைமேல் வேற்றுமை செய்தல் 15 ஒருதலைமொழிதல் 31 ஒரு திங்களைக் குழவி 159 ஒருநாளைக்குழவி 159 ஒருபுடைச் சேறல் 105 ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி 300 ஒருமொழிப் புணர்ச்சி 27 ஒற்றிரட்டுதலும் உகரம் வருதலும் 436 ஒற்றிற்குத் திரிபு 214 ஒற்று கெடாது நின்ற இடம் 377 ஒற்றுநிலை திரியா அதிகாரத்து 418 ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி 421 ஒன்றற்கு எய்தியது விலக்குதல் 13 ஒன்றென முடித்தல் 138, 140, 211 ஓ ஓகார ஈற்று வேற்றுமை 292 ஓசை நிற்கும் முறைமை 18 ஓசை வேற்றுமை 291 ஓதியவழித் தானே சேறல் 119 ஓமைச்சினை 111 ஓராநயம் விச்சாவாதி 284 ஓரெழுத்தொருமொழி 1, 43, 45, 57, 145, 151, 214 க கட்டுமுதலாகிய ஆய்த இறுதி 423 கருவிச் சூத்திரம் 105 காட்சிப் பொருள் 14 காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கம் 46 காரணக்குறி 4 காரணப்பெயர் 3 கிடந்த காலம் 404 கீழ் விலங்கு 17 குணஞ்சீர் வண்ணம் 50 குணவேற்றுமை 329, 346 குற்றியலுகரங்களுட் சிலவற்றிற்கு இனவொற்று 196 குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் 199, 419 குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர் 431 குற்றுகர வோசை 105 குற்றெழுத்துமேல் வரும் வல்லெழுத்து 39 குறித்துவருகிளவி 111 குறிப்பு வியங்கோள் 211 குறுமை நெடுமை கொள்ளப்படாமை 3 குன்றக் கூறல் 139 கூறியது கூறல் 27 கொச்சக வெண்பா 6 கோட்டுநூறு 6 கோணத்திசை 432 ச சந்தவின்பத்திற்கு இயைபுடைமை 1 சாதிப்பெயர் 299 சார்த்தியளத்தல் 7 சார்பின் தோற்றங்கள் 101 சார்பின் தோற்றத்து எழுத்து 83 சாரியைக்கு இயைபு 418 சாரியைப் பேற்றிடை எழுத்துப் பேறு 179 சாரியைப் பேறு 218, 244, 279, 287, 294 சாரியை வருமொழி 377 சாரினது வித்து 364 சான்றோர் செய்யுள் 6 சிங்கநோக்கு 88, 367, 397 சிதைந்த வழக்கு 134 சிறப்புப் பிறவி 85 சுட்டு நீண்டவழி வகரக்கேடு 207 சுட்டுப் பெயர் 257 சுட்டு மாத்திரை 257 சுட்டு முதற்பெயர் 258 செப்பலோசை 6 செம்பாராய்ச்சி 142 செய்கைச் சூத்திரம் 148 செய்யுட்கு அளபு கோடல் 1 செய்யுளிலக்கணம் 408 செயற்கை யளபெடை 6 செவிக்கட் சென்று உறுதல் 1 செறிப்பச் சேறல் 1 செறிப்ப வருதல் 1 சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல் 77 ஞ ஞாபகம் 214 த தந்துபுணர்ந்துரைத்தல் 70 தம்முச்சாரியை 320 தம்மை யுணரநின்றவழி எழுத்து 43 தமிழெழுத்து 1 தலைதடுமாறுதல் 355 தன்வினை 76 தன்னின முடித்தல் 31, 50, 52 தனிமெய் பிறமெய்யொடு மயங்கும் மயக்கம் 23 தனிமெய்ம் மயக்கம் 22 தனிமெய் முன்னர்ப் பிறமெய் நின்று மயங்குதல் 22 திசைச்சொல் 64 திசைப்பெயர் 432 திரிந்ததன் றிரிபது என்றல் 1 திரிபு விலக்கி அகரம் விதித்தல் 337 திரிபு விலக்கி இயல்பு கூறுதல் 307 திரிபு விலக்கிச் சாரியை வகுத்தல் 304 தெய்வத் தன்மையுடைய வரை 111 தெறித்தளத்தல் 7 தேங்க முகந்தளத்தல் 7 தேய வழக்கு 154, 269 தொகைச் சொற்கள் காட்டல் 48 தொடர்மொழி 408 தொழிற்பெயர்விதி 376 தொன்றுதொட்டு வழங்கின வடிவு 139 ந நால்வகைப் புணர்ச்சி 103, 116 நாவதிகாரம் 94, 96 நான்கு புணர்ச்சி எய்திய இரு வகைச் சொல் 108 நான்கு மாத்திரை 5 நிரனிறை 42 நிரனிறை வகை 92 நிலைத் திணை 46 நிலைமொழி உகரம் 299 நிலைமொழி உகரம் பெற்று உறழ்ந்து முடிதல் 152 நிலைமொழிக்கேடு 209 நிலைமொழிச் செய்கை 226, 284, 438 நிலைமொழித் திரிபு 144, 149, 150 நிலைமொழித் தொழில் 207, 228, 234, 253, 293, 329 நிலைமொழியது ஒற்றுக் கேடு 133 நிலைமொழியொற்று இரட்டுதல் 350 நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமை 24 நிலையாதென்றல் 1 நிலையிற்றும் நிலையாதும் என்றல் 1 நிலையிற்றென்றல் 1 நிறுத்தசொல் 111 நிறுத்தளத்தல் 7 நிறைப்பெயர் 436 நீட்டியளத்தல் 7 நெடுங்கணக்கு 94 நொடித்தற்றொழிலிற் பிறந்த ஓசை 7 ப படுத்தலோசையாற் பெயர் 184 பண்டைச் சான்றோர் 159 பண்புகொள் பெயர் 178 பலகால் எடுத்தோதிப்படுதல் 119 பலரறி சொல் 172 பலவற்றிறுதிக்கண் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு 213 பழைய அரைமாத்திரை 408, 409 பன்மொழி 75 பன்மொழிப் புணர்ச்சி 408 பார்ப்பான் சாதி 418 பிளந்து முடியாமை 110 பிளவுபடாவோசை 6 பிறப்பிற்குப் புறனடை 102 பிறப்பு ஒப்புமை 1 பிறவினை 76 பிறன்கோட் கூறல் 33, 102 புணர்ச்சி வேற்றுமை 2 புறக்கருவி 1 புறச்செய்கை 1 புறப்புறக் கருவி 1 புறப்புறச் செய்கை 1 பெய்தளத்தல் 7 பெயர்க்கு ஈறாம் இடைச்சொல் 272 பெயர்பெயர் 406 பெயரீற்றுச் செய்கை 202 பெயரெச்ச மறை 223, 372 பெயரெச்ச மறைப்பொருள் 227 பெயரெச்சமாகிய உவமவுருபு 51 பெருந்திசை 432 பொருட்புணர்ச்சி 320 பொருட்பெயர் 436 பொருட்பெயரோடும் எண்ணுப் பெயர் முதலியவற்றொடும் புணரும் முறைமை 406 பொருள்வேற்றுமை 2 பொருளொடு புணர்ந்த புணர்ச்சி 112 பொருளொடு புணரும்வழி வேறுபடும் உருபீறு 202 பொன்னாராய்ச்சி 142 ம மகப்பெயர் 125 மகர ஈற்றுப் பொருட்பெயர் 328, 346 மகர ஈறு வேற்றுமைக்கட்கெடுதல் 144 மகரக் கேடு 323 மகரங்கெட்டுப் பிறகணத்து முடிதல் 356 மகரத்திற்கு வடிவுவேற்றுமை 16 மஞ்சள் 6 மரூஉச் சொற்கள் 111 மரூஉச்சொன் முடிபு 172 மரூஉ முடிவு 457 மரூஉ வழக்கு 338 மனவெனிறுதிச் சொல் 210 மாட்டிலக்கணம் 111 மாட்டேற்றல் 16 மாட்டேறு 105, 298, 322, 446, 449, 459, 461 மாத்திரை என்ற அளவு 7 மாத்திரை கூறிக் கோடல் 102 மாத்திரைச் சுருக்கம் 57 மாபுராணம் 6 மாறுகொளக் கூறல் 40, 45 மிக்குப் புணரும் புணர்ச்சி 112 முடிந்தது காட்டல் 7 முதனிலைச் சொல் 316 முதனூல் 140 முப்பத்திரண்டு தந்திர உத்தி 1 முற்றுப் பெயர் 112 முற்றுவினை 210 முற்றுவினைக் குறிப்பு 210 முறைப்பெயர் 67, 350 முன்னர் எய்திய இலக்கணம் 273 முன்னிலையேவற் பொருள் 272 முன்னிலை விரவுப்பெயர் 153 முன்னிலை வினைச்சொல் 151 மூக்கின் வளியாற் பிறத்தல் 20 மூலாதாரம் 102 மூவெழுத்தொருமொழி 45 மூன்று மாத்திரை 5 மெய்கட்கு இசைந்த ஓசை 8 மெய்பிறிதாதல் 114 மெய்யின் தன்மை 47 மெல்லெழுத்திற்குச் சிறப்புவிதி 100 மெல்லெழுத்துப் பேறு 213, 219 மெல்லென்றிசைத்தல் 20 மென்கணம் 130, 153, 205, 297, 376, 397 மென்றொடர்மொழி 420, 430 மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் 427 மேல்விலங்கு 17 மொழிக்கு ஈறாமெழுத்து 103 மொழிக்கு முதலாகாது நின்றமெய் 66 மொழிக்கு முதலாமெழுத்து 103 மொழிச்சாரியை 134 மொழிந்த ....... முட்டின்று முடித்தல் 32, 101, 258 மொழிமாற்று 111 மொழி முடிபு வேற்றுமை 343 மொழியாக்கம் 1, 103 ய யாப்புடைமை 112 வ வடமொழிகளை மறுத்தல் 284 வடமொழிச் சிதைவு 36 வரிவடிவினவாதல் 2 வரிவடிவு 142 வரிவடிவு வேற்றுமை 14 வருமொழிக் கருவி 143, 149 வருமொழித் தொழில் 229 வருமொழி வன்கணத்துக்கண் ஒற்றுப்பேறு 133 வல்லெழுத்தினொடு சாரியை விதி 260 வல்லெழுத்தினொடு வற்று வகுத்தல் 281 வல்லெழுத்துக் கேடு 283, 286, 311 வல்லெழுத்துத் தொடர்மொழி 37 வல்லெழுத்துப் பெறுதல் 154 வல்லெழுத்துப் பேறு 219, 322 வல்லெழுத்து மிகுதல் 323, 372, 384 வல்லெழுத்து முதன்மொழி 372 வல்லெழுத்து விலக்கி இயல்பு 257 வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதி 260 வல்லெழுத்து விலக்கி மெல் லெழுத்தும் அம்மும் வகுத்தல் 386 வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் 282 வல்லெழுத்து வீழ்தல் 260 வல்லென்ற தலைவளியாற் பிறத்தல் 19 வல்லென்றிசைத்தல் 19 வல்லொற்றுத் தொடர்மொழி 409 வழக்குப் பயிற்சி 119 வழக்குப் பயிற்சியுடைமை 134 வற்றுப்பெற்று முடிதல் 183 வன்கணத்து நிறைப்பெயர் 450 வன்கணத்துப் பொருட்பெயர் 389 வன்கணத்தொடு வேற்றுமை தொக்கு நின்ற முடிபு 216 வன்கணம் 153, 170, 255, 296 வன்கணமொழிந்த கணம் 232 வன்றொடர்மொழி 414, 417 வன்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் 427 வாராததனான் வந்தது முடித்தல் 214 வாழ்த்தப்படும் பொருள் 211 விகாரப்பட்ட உயிர் 463 விகாரப்பட்ட மொழி 140 விரவுப் பெயர் 117, 153, 155, 310, 335 விலக்கிச் சாரியை வகுத்தல் 294 விளிநிலைக் கிளவி 210 வினாப்பொருள் 31 வினைக்கண் வந்த முற்றுகரம் 36 வினைக்குறிப்பு 430 வினைக்குறிப்புச் சொல் 172 வினைப்பெயர் 299 வினையெச்ச வினைக்குறிப்பு 204 வினையெஞ்சு கிளவி 333 வினையொடும் புணர்ந்த புணர்ச்சியும் பெயரெச்சமும் வினையெச்சமும் பெயரொடும் வினையொடும் புணர்ந்த புணர்ச்சி 112 வேற்றுமைக்கண் உறழ்ச்சி 395 வேற்றுமைக்கண் வேறொரு முடிபு 329 வேற்றுமைப் பொருட்புணர்ச்சி 411 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1847 ஆக. எழுத்து. நச்சர் மழவை. மகாலிங்கையர் (பிலவங்க, ஆவணி) 2. 1858 தொல். நன். மூலம் சாமுவேல் பிள்ளை 3. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 4. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 5. 1868 நவ. எழுத்து. இளம். சுப்பராய செட்டியார் 6. 1868 சூத்திர விருத்தி - சிவஞானமுனிவர் ஆறுமுக நாவலர் 7. 1885 பொருள். நச்சர். பேரா. சி.வை.தா. 8. 1891 சூன் எழுத்து. நச்சர்* ” (கர, வைகாசி) 9. 1892 சொல். நச்சர் ” 10. 1905 பாயிரம். சண்முக விருத்தி அரசன் சண்முகனார் 11. 1916 பொருள் (1, 2) நச்சர் பவானந்தம் பிள்ளை 12. 1916 பொருள் (3, 4, 5), நச்சர் ” 13. 1917 பொருள். பேரா. ” 14. 1917 பொருள் (8) நச்சர் ரா. ராகவையங்கார் 15. 1920 பொருள் (1, 2), இளம். கா. நமச்சிவாய முதலியார் 16. 1921 ” வ.உ. சிதம்பரம் பிள்ளை 17. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 18. 1922 மே தொல். மூலம் புன்னைவனநாத முதலியார் 19. 1922 பாயிரங்கள்* கா. நமச்சிவாய முதலியார் 20. 1923 பொதுப்பாயிரம்* சதாசிவ பண்டாரத்தார் 21. 1923 எழுத்து. நச்சர் கனகசுந்தரம் பிள்ளை 22. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 23. 1924 பொருள். மூலம் கா. நமச்சிவாய முதலியார் 24. 1927 சொல். இளம். ” 25. 1928 எழுத்து. இளம். வ.உ.சி. 26. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 27. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 28. 1930 எழுத்து (மொழி) ” 29. 1933 பொருள் (3, 4, 5) இளம். வ. உ. சி. 30. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 31. 1934 பொருள். நச்சர் எ. கனகசபாபதிப்பிள்ளை 32. 1935 பொருள். பேரா. ” 33. 1935 பொருள்-மேற்கோள் விளக்க அகராதி ம. ஆ. நாகமணி 34. 1935 பொருள் (6-9) இளம் வ.உ.சி., எ. வை. பிள்ளை 35. 1935 பொருள். இளம்* வ.உ.சி., எ.வை. பிள்ளை 36. 1937 எழுத்து. நச்சர் யாழ்ப்பாணம் கணேசையர் 37. 1937 எழுத்து. குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 38. 1937 சொல் (1, 2, 3) (மொழி) ” 39. 1938 சொல். சேனா. கணேசையர் 40. 1938 ஏப்ரல் பொருள் (1) விளக்கம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 41. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 42. 1942 பொருள் (1) சோமசுந்தர பாரதியார் 43. 1942 பொருள் (2) ” 44. 1942 பொருள் (6) ” 45. 1943 மார்ச் தொல் - மூலம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 46. 1943 பொருள். பேரா. கணேசையர் 47. 1944 அக். எழுத்து. ஆராய்ச்சி வேங்கடராஜூலு ரெட்டியார் 48. 1944 எழுத்து. நச்சர் தேவநேயப் பாவாணர் 49. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாதிரியார் 50. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 51. 1947 பொருள் (1, 2 நச்சர்) கழகம் 52. 1948 பொருள். நச்சர் கணேசையர் 53. 1948 பொருள் (1, 3) (மொழி) ஈ.எ. வரதராஜ ஐயர் 54. 1948 பொருள் (4, 5) (மொழி) ” 55. 1949 பொருள் (1, 2) (மொழி) பி.சா.சு. சாதிரியார் 56. 1950 பொருள் (3-5) நச்சர் கழகம் 57. 1951 பொருள். பேரா. ” 58. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 59. 1952 பொருள் (1, 2) இளம். கழகம் 60. 1952 பொருள் (3, 4, 5) மொழி பி.சா.சு. சாதிரியார் 61. 1953 பொருள். இளம். கழகம் 62. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 63. 1955 எழுத்து. இளம். சுந்தரமூர்த்தி 64. 1956 பொருள் (6-9) மொழி பி.சா.சு. சாதிரியார் 65. 1960 தொல். மூலம் பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்) 66. 1961 தொல். முழுவதும் புலியூர் கேசிகன் 67. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 68. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 69. 1962 தொல். நன். எழுத்து வெள்ளைவாரணனார் 70. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 71. 1963 சொல். தெய்வ. ” 72. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 73. 1963 தொல் (மொழி)* இலக்குவனார் 74. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 75. 1965 எழுத்து - நச்சர்* ” 76. 1965 தொல். பொருள் (8) நச்சர் ” 77. 1966 சொல். சேனா. ” 78. 1967 எழுத்து. நச்சர் இராம. கோவிந்தசாமி 79. 1967 இ. தொகை (எழுத்து) ச.வே. சுப்பிரமணியன் 80. 1968 தொல். பொருள் புலவர் குழந்தை 81. 1968 சூத்திரவிருத்தி தண்டபாணி தேசிகர் 82. 1968 பொருள் (8) ஆபிரகாம் அருளப்பன் 83. 1969 தொல். (வளம்) வடலூரனார் 84. 1969 எழுத்து. இளம். அடிகளாசிரியர் 85. 1970 சொல். சேனா. கு.மா. திருநாவுக்கரசு 86. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 87. 1971 சொல். கல். பழைய தெ. பொ. மீ. 88. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 89. 1972 தொல். நன். ரா. சீனிவாசன் 90. 1974 பொருள் (8)* வடலூரனார் 91. 1975 தொல். பொருள் (1) உ. வ. மு. அருணாசலம் பிள்ளை 92. 1975 தொல். களஞ்சியம் அறவாணன், தாயம்மாள் அறவாணன் 93. 1975 தொல். ஒப்பியல் அறவாணன் 94. 1977 தொல். சொல் அ.கு. ஆதித்தர் 95. 1978 இ. தொகை (யாப்பு, பாட்டியல்) ச. வே. சு. 96. 1979 எழுத்து. இளம். கு. சுந்தரமூர்த்தி உரைவளம் 97. 1980 செப். சிறப்புப் பாயிரம் ஆ. சிவலிங்கனார் 98. 1980 டிச. நூன்மரபு ” 99. 1981 சூன் மொழி மரபு ” 100. 1981 மரபியல் கு. பகவதி 101. 1981 டிச. பிறப்பியல் ஆ. சிவலிங்கனார் 102. 1982 மார்ச் புணரியல் ” 103. 1982 மே தொகைமரபு ” 104. 1982 சூலை கிளவியாக்கம் ” 105. 1982 நவ. உருபியல் ” 106. 1982 டிச. உயிர் மயங்கியல் ” 107. 1983 ஏப். புள்ளி மயங்கியல் ” 108. 1983 செப். குற்றியலுகரப் புணரியல் ” 109. 1983 அக். வேற்றுமையியல் ” 110. 1983 புறம் வெள்ளைவாரணனார் 111. 1983 களவு ” 112. 1983 கற்பு ” 113. 1983 பொருள் ” 114. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 115. 1984 மே விளிமரபு ” 116. 1984 சூலை பெயரியல் ” 117. 1984 செப். வினையியல் ” 118. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 119. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 120. 1985 பொருள். பேரா. கு. சுந்தரமூர்த்தி 121. 1985 செய்யுளியல். இளம். அடிகளாசிரியர் 122. 1985 உவமவியல் வெள்ளைவாரணனார் 123. 1986 மெய்ப்பாடு ” 124. 1986 சூலை இடையியல் ஆ. சிவலிங்கனார் 125. 1986 பொருள். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 126. 1987 அக். உரியியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 127. 1988 செப். சொல். இளம். அடிகளாசிரியர் 128. 1988 செப். எழுத்து பாலசுந்தரம் 129. 1988 அக். சொல் ” 130. 1988 டிச. எச்சவியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 131. 1989 சொல். ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 132. 1989 செய்யுளியல் (உ.வ.) க. வெள்ளைவாரணனார் 133. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி 134. 1989 அக். பொருள் (3-7) பாலசுந்தரம் 135. 1989 நவ. பொருள் (1, 2) ” 136. 1989 எழுத்து (பேருரை) இராம. சுப்பிரமணியன் 137. 1989 அகம் (மொழி) நிர்மல் செல்வமணி 138. 1991 மார்ச் அகத்திணையியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார்  FootNotes இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார்