பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 52 பாவாணர் கடிதங்கள்- பாடல்கள் ஸந்குஊயிகீகுரூபுஹது ஓஒஓகூக்ஷபீது இரா. இளங்குமரன் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 408 = 416 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 260/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். பாவாணர் கடிதங்கள் - பாடல்கள் இதற்குமுன் எம் பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் இடம் பெறாதவை. இவற்றைத் தொகுத்து உதவிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கு நன்றி. உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை ..iii பாவாணர் கடிதங்கள் நூல்வரு நிலையும் நன்றியுரையும் 3 நட்புக் கடிதம் (Friendly Letter) 10 கடிதம் உதவியோர் 17 பெயர்களின் சுருக்க விளக்கம் 17 பாவாணர் கடிதங்கள் 18 1. தேடிச் சேர்த்த திரு 19 2. பன் மொழிப் பயிற்சி 23 3. தொண்டின் உறைப்பு 25 4. பாவாணர் வீறு 30 5. மொழிநூல் முதன்மையும் தமிழியக்கமும் 35 6. வேர்ச்சொல் போலிகை (மாதிரி) 38 7. சொல்லாக்க விளக்கங்கள் 42 8. மொழியாக்கம் 51 9. பிழையும் திருத்தமும் 61 10. தனித்தமிழ் கழகம் 66 11. தனித்தமிழ்ப் பெயரீடு 68 12. திருச்சித் தமிழ்ப்புலவர் கழகம் 72 13. வாசகர் பணி 78 14. உலகத் தமிழ்க் கழகம் 82 15. அகரமுதலி ஆக்கமும் திருத்தமும் அமர்த்தமும் 86 16. தொல்காப்பியச் சீர்மை 91 17. விளம்பரம் விலக்கல் 93 18. இஞ்சி முரப்பு 96 19. ஊறுகாயும் பிறவும் 99 20. கிழங்கு வகைகள் 101 21. பார்ப்பனர் குலப் பாவாணர் 104 22. மனைவி மக்கள் 112 23. மகளார்க்காக வாங்கிய மான்குட்டி 117 24. நோய், நொடி, நொம்பலம் 120 25. சிதறிய மணிகள் 130 26. முத்துமாலை 154 27. வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் 170 28. சில கடிதங்கள் 172 பாவாணர் மடல்கள் பாவாணர் மடல்கள் 186 தொகுப்பாளர் தொகையுரை 187 பாவாணர் மடல்பெற்றவர் பெயர்க் குறுக்க விளக்கம் 190 1. வாழ்வும் வரலாறும் 192 2. உடலும் உள்ளதும் 200 3. அன்பும் நண்பும் 207 4. ஆய்வும் அறிவுறுத்தமும் 216 5. உ.த.க.வும் பணியும் 231 6. அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் 242 7. நூலார்வமும் நூலாக்கமும் 249 8. அச்சீடும் மெய்ப்பும் பார்த்தலும் 261 9. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலிப்பணி 266 10. சொல்வளம் 279 திரு. குமார. சுப்பிரமணியம்அவர்களுக்கு எழுதியவை 296 என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்? 300 பாவாணர் பாடல்கள் தொகுப்பாளர் தொகையுரை 321 முந்தைக்கொடை முறை 337 சுருக்க விளக்கம் 338 1. பாயிரம் 339 2. கடவுள் வாழ்த்து 339 3. இரங்கல் 353 4. நன்றி 357 5. ஐந்தகம் 365 6. பதிகம் 367 7. வரலாறு 380 8. கதை 382 9. பலவகை 385 10. முடிநிலை 394 11. பாடல் அகரவரிசை பாடல் எண் 398 12. இணைப்பு 403 சிறப்புப் பாயிரம் 404 பாவாணர் (கடிதங்கள் - பாடல்கள்) நூல்வரு நிலையும் நன்றியுரையும் கடிதம் இலக்கியமாகக் கருதப்படுதல் புகழ்வது அன்று. அஃது உலகெலாம் பரவியுள்ள பழமை வழிப்பட்டதே! வாழ்வியலில் இயல்பாக ஊன்றியுள்ள கடித வரைவு. வனப்புகளிலும் (இலக்கியங்களிலும்) இடம்பெற்று இன்பஞ் சேர்ப்பது ஆர்வலர்கள் அறிந்த செய்தியே. மாதவியார் கோவலனுக்கு வரைந்த கடிதம் தனிப் பெருமைக்குரியது! தன் காதற் கிழவனுக்குக் காதலி விடுத்த அக் கடிதம், அக் காதற் கிழவன், தன் அப்புப் பெற்றோர்க்கு விடுக்கும் கடிதமாகவும் அல்லவோ பொருள் பொதிந்து வாய்த்திருந்தது! ஒரு கல்லிலே இரு மாங்காய் வீழ்த்துதல் திறமாகலாம். ஆனால், ஒரு சொல்லிலே இருவேறு செய்திகளை உரைப்பதாக அமைத்தல் அருமையன்றோ! அடிகளார் திறம் இருந்தவண்ணம் அதுவே என்க. ஓலையும் ஆணியும் அல்லது இதழும் தூரிகையும் இல்லாமல், நெற்றிப் புனைகோலத்திலேயே உள்ளக் குறிப்பை எழுதிக் காட்டி, அதற்கு அவ்வண்ணமே மறுமொழியும், மறுமொழிக்கு மறுமொழியும் பெற்றுக்கொண்டமை, அதிலும் அக் காதல் தூதாகத் தன் மனைவியையே ஆட்படுத்திக் கொண்டமை - கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதைப் பெருஞ் செய்தியாம். இலக்கிய நூல்களில் இடம்பெற்ற கடித அமைப்பைச் சீட்டுக் கவியாக்கி நடைமுறைப்படுத்தியமை ஒரு வளர்ச்சி நிலையாகும். தமிழிலுள்ள சீட்டுக் கவிகளைத் தொகுத்தாலே ஒரு பெருந்திரட்டாகவும், பல்வேறு வரலாற்றுப் பொருளாகவும் அமையும் என்பது அறியத்தக்கவையாம். பெருமகனார் நேரு தம் மகளார்க்கு வரைந்த கடிதம், உலக வரலாறாக உலவுதல் உலகறிந்த செய்தி. தவத்திரு மறைமலையடிகளாரின் கோகிலாம்பாள் கடிதங் கள் புனைகதையாய்ப் புகழ் பெற்றது! அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என அறிஞர் மு.வ. இந்நூற்றாண்டில் எழும் சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை நோக்கில் வரைந்த கடிதங்கள் தமிழிலக்கிய வகையுள் ஒன்றாகித் தளிர்ப்புறுத்துவன. அறிஞர் அண்ணா அவர்கள், தம்பிக்கு வரைந்த தகவார்ந்த கடிதங்கள் இளைஞர்களைத் தட்டியெழுப்பிய தனிப்பெருமை வாய்ந்தது என்பதை எவரும் ஏற்கத் தவறார். இனிக் கடித இலக்கியமாக்காமல், கடிதமாக - இயல்பாக எழுதப்பட்டவையும் தனிப் பேரிலக்கியமாகத் திகழும் சிறப்பு வாய்த்தமை நாடுகண்டதேயாம். வள்ளலார் கடிதங்களையெல்லாம் அரிதின் முயன்று தொகுத்த பெருந்தொண்டு பேராளர் பாலகிருட்டிண முதலியார், வள்ளலார் திருப்பெயரை நினைவார் உள்ளகத்தெல்லாம் ஒன்றி உறைவோராம்! தவத்திரு மறைமலையடிகளார் கடிதங்கள் அனைத்தும் தொகுத்து வெளியிடப்படவில்லை எனினும், தொகுத்த அளவுக்குப் பாராட்டும் பான்மையயே! காந்தியடிகளார் கடிதங்களையும், விவேகானந்தர் கடிதங் களையும் தொகுத்து எழிலுற வெளியிட்ட, அவர்கள் திருப் பெயர் தாங்கும் அமைப்புகளை, எத்துணையளவு பாராட்டினும் தகும்! மு.வ.வின் கடிதங்களைத் தொகுத்து வெளிப்படுத்திய முயற்சியை - அவர் துணைவேந்தராகச் சிறப்புறுத்திய - மதுரை - காமராசர் - பல்கலைக் கழகமே மேற்கொண்டது மதிப்பரிய நினைவுக்குறியாம்! இப் பாவாணர் கடிதத் தொகுப்போ இவ்வகையில் தனி யொரு வகையதாம். இத்தொகுப்பில் அவர்தம் கடிதங்களுள் முற்றாக இடம் பெற்றவை ஒரு சிலவே. எஞ்சியவை, வேண்டும் கருத்தை வேண்டும் இடத்து எடுத்து இணைத்து வைக்கப் பெற்றவையாம். ஒரு கடிதத்திலுள்ள பல செய்திகள், பொருள் கருதிப் பிரிக்கப்பெற்று வெவ்வேறிடங்களில் இடம் பெற்றுள்ளன என்க. தமிழர் வைப்பாகப் போற்றத் தக்கனவும், மொழிவழியால் நலங்காண விழையும் முழுதுணர்வாளர்க்குள் முட்டுதல் - பிரித்தல் - பிளத்தல் - பிணங்கல் - இன்னவற்றுக்கெல்லாம் இடந்தராதனவுமாகிய பகுதிகள் மட்டுமே இத்தொகுப்புப் பொருளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன! ஒரு பொருட்டொடர்பற்றி வரையும் கடிதம் எனின், திட்டமிட்டுக்கொண்டு நூலுருவாதலை நெஞ்சில் பதித்துக் கொண்டு, கட்டுக்கோப்போடு கருதிச் செய்யப்பெற்றதாக அமைந்திருக்கும். ஓர் உணர்வு வழிப்பட்ட நிலையில் ஒருவர்க்கு எழுதும் கடிதம், மற்றோர் உணர்வு வழிப்பட்ட நிலையில் எழுதும் கடிதத்தோடும் முரணாகி முற்றிலுமே எதிரிடையாகி முனைப்பின் வீறிக் காட்சி தருதலும் வழக்கே! அந்நிலை, உணர்வுடையார் எவர்க்கும் தவிர்க்க வொண்ணா நிலைமையதாம். அதற்குப் பாவாணரும் விலக்குடையர் அல்லர்! ‘ஓஓ!’ என்று பாராட்டப்பட்ட ஒருவரையே ஒருவர் கோளால் உருத்திரிந்து ‘ஆஆ’ ‘இப்படிப்பட்டவரா? என்று பழித்து ஒதுக்கித் தள்ளுதற்கு இடனாகி இடராகிவிடுதல் காணக் கூடியவையே! அவ்வுணர்வுநிலை, உலகியல் பொதுநிலை! நம்பிக்கையில் ஒரு சொல்லும், நம்பாமை தலை தூக்கியதால் ஒரு சொல்லும் சொல்லுதல் உலகியல் பொதுநிலையே! மொழி ஞாயிறு பாவாணர் நிலை, தனித்தமிழ்க் குறிக்கோள்நிலை; தமிழ் திரவிடத்திற்குத் தாய் என்னும் நிலை; ஆரியத்திற்கு மூலம் என்னும் நிலை. மாந்தன் முதல் தோற்றம் குமரிக் கண்டமே என்னும் நிலை; உலக முதல்மொழி தமிழே என்னும் நிலை ஆகியவே! இவற்றில் காணும் பாவாணர் என்றும் ஒரே நிலையரே! நோயிடையில் நொம்பலப்பட்டாலும், இழப்புகளில் இடருற்றாலும், பழிச்சொற்களுக்கு இடையே பதைப்புற்றாலும், திடுவிளைவுக் குட்பட்டுத் தெருமந்தாலும் - அப்பொழுதும் எப்பொழுதும் மாறாத் தனிப்பெரும் பொருள், தித்திக்கத் தித்திக்கத் தீந்தமிழே வடிவமாகிய - வாழ்வாகிய - தேவநேயம் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தனித் தேவநேயமேயாம்! இவற்றை, ஒன்றோடு ஒன்று பிணைத்துப், பிணங்குதல் அவர்தம் தந்நலப் பார்வையின் தளிர்ப்பும் - தழைப்பும் - தடிப்புமே - யன்றிப் பிறிதொன்றன்றாம்! பாவாணர் கடிதத்தில் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ள வேண்டுவது ஏன்? அப்படி அப்படியே அமைத்துக் காட்டினால் என்ன? என்னும் வினாக்கள் கிளர்தல் இயல்பே! கட்சி, சமய, இன நிலை கடந்தும் தமிழால் ஒன்றுபட வேண்டும்; தமிழ் பிணைக்குமே யன்றிப் பிரிக்காது; கருத்து வேறு பாட்டையும் மறந்து தனித்தமிழ் உணர்வால் கலந்துறைதல் வேண்டும் எனபனவெல்லாம் தேவநேயர் கடைப்பிடிகள்; அவரால் ஆங்காங்குச் சுட்டப்பெற்ற குறிப்புகள்! இவற்றைக் கருதுதல், இத்தொகுப்பாளர் உணர்வோடும் ஒன்றியவை! பிளந்து பிளந்து, பிரிந்து பிரிந்து, பாழாய்ப் போகும் தமிழர் நிலை - நான்கு பேர் - இருவராய் - இருவரும் ஒருவராய் - அதற்கு மேல் பிரிய முடியாத அல்லது பிரிக்க முடியாத நிலைமை யாலேயே அவ்வொருவராய்ப் போய்க் கொண்டிருக்கும் போக்கைக் காணுங்கால், அதற்குக் களைவெட்டி - உரமிட்டு - நீர்விட்டு - வளர்தல் அறக்கொடுமை என்னும் உணர்வே, மாறுபட்ட எக்கருத்தும் - எவர் மனத்தையும் புண்படுத்தும் எக்கருத்தும் - இயையாமல் விலக்கப்பட்டதற்குக் கரணியமாம்! ஒன்றிரண்டு குறிப்புகள் - சுட்டுகள் - இடம் பெற்றிருத்தல், தவிர்க்க வொண்ணாமையாலும், மேலே பாவாணர் வரலாறு வரை தற்குக் கருவியாக அமைந்து கிடக்கும் தன்மையாலுமேயாம்! ஏறத்தாழ 50 ஆண்டுகளில் பாவாணரால் எழுதப்பட்ட கடிதங்கள், ஏறத்தாழ 1520 இத்தொகுப்புக்கு மூலப்பொருளாக வாய்ந்தன. இதே அளவு எண்ணிக்கையுள்ள கடிதங்கள் அன்பர்கள் ஆர்வலர்கள் ஆகியோரிடத்தே இன்னும் இருத்தல் கூடும்! அவற்றையும் தொகுத்து நோக்கும் வாய்ப்பும் கை கூடின், இன்னும் எத்துணையோ அரிய கருத்துக்களைத் தமிழுலகம் பெறக்கூடும்! இத்தொகுப்பைக் காணும் அளவிலேனும் அவர் கள் உள்ளம் இத்தொண்டுக்குத் தலைப்பட்டு உதவ முந்துமாக! அவற்றைப் பெறும் வாய்ப்புக்கிட்டின் மற்றொரு கடிதத் தொகுப்பும் கட்டாயம் வெளிப்படுமாம்! நூல் அச்சீடு முடிந்த நிலையில், பேரா. மதிவாணர் அவர்கள் வழியே கடிதங்கள் பத்து வரப் பெற்றமை அடுத்த தொகுப்பின் அடிக்களமாம். சென்னை இலிங்கிச் செட்டித் தெரு மறைமலையடிகள் நூல்நிலையம், தமிழ்நூல் வைப்பகம் மட்டுமன்றித் தமிழறிஞர் கடித வைப்பமாகவும் திகழக் கருத்து வைத்தவர்கள், தாமரைச் செல்வர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள். கழகத் தோற்ற நாள் தொட்டு அதன் வளர்ச்சிப்படி ஒவ்வொன்றிலும் தம் முத் திரையைப் பதித்து முழுமையாக்கி வைத்த பெருமகனார் அவர்! கழகஞ்சார்ந்த புலவர்கள் கடிதங்களையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் போற்றிப் பேணிக் காத்து வரலாற்றுக் கருவூலமாகத் திகழும் வகையில் ஒட்டுக்கோப்பில் ஒட்டி அட்டை கட்டி ஆவணமாக்கி வைத்துள்ளார்! அதில் பாவாணர் கடிதங்கள் மட்டும் ஆயிரத்தைத் தாண்டும் அளவில் உள. அவையெல்லாம் இத்தொகை நூலுக்குப் பெரிதும் பயன் பட்டுள. மேலும், சேலம், அரிமாப் புலவர் மி.மு. சின்னாண்டார், வெங்காலூர் பேரா. கு. பூங்காவனர், திருத்துறைப்பூண்டிப் பெரும்புலவர் வி. பொ. பழனிவேலனார், ஆற்றூர் பெரும் புலவர் பா. நாராயணர், நெய்வேலி, பாவாணர் தமிழ்க் குடும் பஞ்சார் அன்பர், ஆ. கருப்பையா, பேரா. ந. எழில் மகிழ்நர், மதுரை, தமிழ்ப்பாவை ஆசிரியர் வி.அ. கருணைதாசர், பேரா. மு. தமிழ்க் குடிமகனார், பேரா. வீ.ப.கா. சுந்தரனார், எழுத்தாளர் மன்றத் தலைவர் பு. மனோகரனார், பொறியர் க.சி. அகமுடை நம்பி, ஆகியோர் கடிதங்களும் என்வயமிருந்தனவுமாக 1520 கடிதங்கள் இத்தொகுப்பிற்குப் பயன்பட்டுள்ளன. என் வேண்டுகோளை ஏற்ற அளவில் தம்மிடம் இருந்த கடிதங்களை மட்டிலும் விடுப்பதுடன் அமையாமல் பாவாணர் கடிதம் இருக்கும் பிறரிடத்தும் தாமே முயன்று விடுத்த பெருநோக்கப் பேராளர் இருவர். ஒருவர் மீட்போலை ஆசிரியர் பேரா. கு. பூங்காவனர்; மற்றொருவர் நெய்வேலி உ.த.க. அமைப் பாளர் திரு. ஆ. கருப்பையா! பொதுப்பொருள் என்னும் பொருளும், தம்கைவயம் உள்ளமையால் தம் பொருளே என்பார், தாமும் பயன் கொள்ளார்; பொதுவுக்கும் பயன் செய்யார்! ஆனால், மேலே சுட்டிக் காட்டிய பெரு மக்கள் கேட்ட அளவில் கடிதங்களை வழங்கினர்! தடையொன்றும் இன்றி உள்ளம் தளிர்க்க வாழ்த்துடன் உதவினர்! அதனினும் நினைக்கு நெக்குருகும் வண்ணம் தாமே தேடிவந்து உள்ளார்ந்த அன்பால் உதவினர்! இவ்வுதவுதல்களில் அடிக்களம் என்ன? பாவாணர் பொருள் பைந்தமிழ்ப் பொருளே! அவர் திருப்பெயர் நிலைக்கத் தொடரும் பணிக்கு எம் உதவி முதற்படி உதவியாக இருக்க வேண்டுமேயன்றி, இரண்டாம் இடத்திற்கும் செல்லுதல் கூடாது! ஆக்கப் பணிகள் தேக்கமின்றி நடக்க வேண்டுமானால், ஊக்குவார் பங்கும் அதற்கு உறுதுணை என்றும் பெருநோக்கப் பெற்றிமையில் அவர்கள் பிறங்கியமையே அடிக்களமாம்! இனிப், பாவாணர் கடிதங்கள் பற்றியும் சில குறிப்புகளைச் சுட்டுதல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியனார் மெய்ப்பாடு எட்டு என்று, தமக்கு முன்னோர் காலத்திலேயே உணர்ந்து எண்ணியவற்றை எண்ணி, அவற்றின் நிலைக்கள விளக்கத்தையும் மெய்ப்பாட்டியல் என்னும் தனியியலில் விரித்துள்ளார். அம்மெய்ப்பாடுகளே பாடல், இசை, பாவிகம், நாடகம், சிறுகதை, தொடர்கதை ஆகிய எவற்றுக்கும் இன்றியமையாச் சுவைப்பொருள். ஒருவர் தாம் உணர்ந்த உணர்வை, அதனைக் காண்பார் கேட்பார் தாமும் அப்படி அப்படியே உணர வைப்பது கலைத்திறம் வல்லார்க்கு இயற்கைக் கொடையாம். அக்கொடைப் பேற்றாளர் களுள் தலைப்பேற்றாளராகத் தழைத்தவர் தமிழ்த் தேவநேயர். ஆதலால், அவர் எழுதிய கடிதங்களிலே எண்பான் சுவை களாகிய - மெய்ப்பாடாகிய - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன விரவிக் கிடக்கின்றன! விளங்கிக் கிடக்கின்றன. இக் கடிதத் தொகுப்பைக் காண்பார் ஒவ்வொன்றிற்கும் பல பல எடுத்துக்காட்டுகளைத் தாமே கண்டு திளைப்பர். தனித்தனி எடுத்துக்காட்டுகளை விரித்தெழுதின் கடிதத் தொகுப்பின் அளவுக்கே இம் முன்னுரையும் நீளுமெனும் நினைவால் இதனைக் கற்பார் ஆய்வுக்கே ஆட்படுத்தி அடுத்த பகுதியைக் காணலாம். பாவாணர், உயர்தரக் கட்டுரை இலக்கணம் என இரு தொகுதிகள் இயற்றியுள்ளார். அவற்றுள் கடிதம் வரைவதைப் பற்றிய விளக்கம் உண்டு; எடுத்துக்காட்டும் உண்டு. அவற்றுள் சிலவற்றை அறிந்துகொள்ளுதல் அவர் கூறும் அமைப்பு முறைக்கு அவரே இலக்கியமாதலை அறிந்து கொள்ளவும் வாய்க்கும். கடித வரைவு முறையைச் சிலர் முக்கியமாகக் கருதுவ தில்லை. வேலைப் பேற்றிற் கேதுவான விண்ணப்பமும் பரிந் துரையும் பேரூதியத்திற்கேதுவான வணிக எழுத்துப் போக்கு வரத்தும் நெருநன்மைக்கேதுவாக எழுதப்பட்ட முறையீடும் பிறவேண்டுகோளும் கடித வகைகளே. ஆங்கிலம் போன்ற அயன்மொழியிற் கடிதம் வரையும் முறையை எவ்வளவு கருத்தாகக் கவனிக்கின்றோமோ அவ்வளவு கருத்தாகத் தாய்மொழியாகிய தமிழில் வரையும் முறையையுங் கவனித்தல் வேண்டும். ஒரு வகையில் கடிதம் என்பது எழுதப்படும் பேச்சே, ஒருவருக்கு முன்னிலையிலிருந்து திறமையாகவும் தெளிவாகவும் முறையாகவும் இனிமையாகவும் பேசுவதாற் பெறக்கூடிய பயன்களைத் தொலைவிலிருந்து அங்ஙனம் எழுதுவதாலும் பெறுதல் கூடும். சொல்வன்மை, கன்மனத்தையும் கனிய வைத்து ஆகாத காரியங்களையும் ஆக்குவிக்கும். அங்ஙனமே எழுத்து வன்மையும். கடித வரைவு சிலரால் ஒரு கம்மியமாகவும் (Air) வளர்க்கப் பெற்றுள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் சிசரோ என்னும் அறிஞர் வரைந்த இலத்தீன் கடிதங்கள் இன்று கற்றோர் உள்ளத்திற்கு இன்ப விருந்தாக வுள்ளன. ஆதலால், இலக்கியம்போற் போற்றப்பட்டு வருகின்றன. கற்றாரெல்லாம் இத்தகைய கடிதம் வரையப் பயிலவும் முயலவும் வேண்டும் என்று கடிதங்களைப் பற்றிக் கூறும் பாவாணர் கடித உறுப்பு களைப் பற்றியும் கூறுகின்றார் : 1. தலைப்பு (heading), 2. கொளு, 3. விளி (Greeting or Salutation), 4. செய்தி (Communication or Message), 5. உறவுத் தொடர் மொழி (Subscription or leave - taking), 6. கைந்நாட்டு (Signature), 7. முகவரி (Address or Superscription on the envelope) இவ்வேழும் கடித உறுப்புகளாகும். தலைப்பு : எழுதப்பட்ட இடமும் நாளும் குறித்தல் கடிதத் தலைப் பாகும். உறவும், நட்பும், வணிகமும் பற்றியெழுதும் கடிதங் களிலெல்லாம் முதற்பக்க வலப்புற மேன்மூலையில் இடம் மேலும், நாள் கீழுமாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும். கொளு : தலைப்பிற்குச் சற்று கீழாக, இன்னாரிடமிருந்து இன்னாருக்கு என்றாவது இன்னார் இன்னாருக்கு எழுதுவது என்றாவது செய்தி தொடங்கும்முன் வரையப்பெறும் முகவுரை கொளுவாகும். விளி : கொளுவிற்குக் கீழாக இடப்புறத்தில், தனியாய், கடிதம் விடுக்கப்படுவோரை விளிப்பது விளியாகும். செய்தி : விளிக்குக் கீழாக வரையப்படுவது செய்தி.. அது நீண்ட தாயின் பல பாகிகளாகப் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். எழுதப்படுவார் எழுதப்படும் செய்தி ஆகியவற்றுக்கு ஏற்ற நடைச் சிறப்புடையதாக இருத்தல் வேண்டும். கடிதச் செய்தி நிறைவுற்றதாகவும், எழுதும் கருத்தும் செவ்வையானதாகவும், நிறுத்தக் குறிகள் அமைந்தவையாகவும் இருத்தல் வேண்டும். உறவுத் தொழில் : கடிதம் விடுக்கப்படுவோர்க்கும் விடுப்போர்க்கும் உள்ள உறவை அல்லது தொடர்பைக் குறிக்கும் தொடர்மொழி உறவுத் தொடர்மொழியாகும். இது செய்திக்குக் கீழாக வலப்புறத்தில் வரையப்பெறும். கைந்நாட்டு : உறவுத் தொடர்மொழிக்குக் கீழாக அதனினும் சற்று வலமாக, கடிதம் விடுப்போரின் பெயர், தந்தை பெயரின் முதலெழுத்துடன் தெளிவாக வரையப்படுதல் வேண்டும். அறிமுகமாகாதவர்க்கு எழுதுங் கடிதங்களில் அது மிகத் தெளி வாக இருத்தல் வேண்டும். முகவரி : கடிதவுறையின் பின்புறத்தில் அல்லது மடித்த கடிதத்தின் பின்புறத்தில், கடிதம் விடுக்கப்படுவோரின் முழு முகவரியும் தெளிவாய் வரையப்படுதல் வேண்டும். இவற்றை உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் கட்டுரையியலில் விரிவாக வரைந்துள்ளார் பாவாணர். அவர்தம் புனைவுக் கடிதப் போலிகைக்கு ஒரு சான்று : நட்புக் கடிதம் (Friendly Letter) போலிகை (ஒரு மாணவன் தன் பள்ளிக்கும் வேறோரு பள்ளிக்கும் நடந்த காற்பந்துப் பந்தயத்தைப்பற்றித் தன் நண்பனுக்கு வரைவது.) 6, வேளாளத் தெரு, மன்னார்குடி, 8-2-49 அருமை நண்ப, நலம். உன் நலத்தை இன்று உன் கடிதத்தால் அறிந்து கொண்டேன். நேற்று மாலை எங்கள் பள்ளிக்கும் இவ்வூரிலுள்ள தேசிய உயர்நிலைப் பள்ளிக்கும் ஒரு காற்பந்துப் பந்தயம் நடந்தது. அது, முதலிலிருந்து முடிவு வரை உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியாயிருந்தது. முதலாவது, எங்கள் கல்விச் சாலைக் கட்சியார் வினையாட்டு நிலத்தின் கீழைப் புறத்திலும் எதிர்க் கட்சியார் மேலைப் புறத்திலும் நின்று விளையாடினார்கள். காற்று மிக வேகமாகக் கிழக்கு நோக்கியடித்துக் கொண்டிருந்தது. இது எதிர்க்கட்சிக்குச் சார்பாகவும் எங்கள் கட்சிக்கு மாறாகவும் இருந்ததனால், எதிர்க்கட்சியார் மிக விரைவில் கோல் போடத் தொடங்கி, அரைமணி நேரத்திற்குள் ஆறு கோல் போட்டுவிட்டார்கள். எங்கள் கட்சியார் கோல் வாங்கினார்களே யொழிய, ஒன்று கூடப் போட முடிய வில்லை. பின்பு, அரை வேளை வந்தது. பிற்பாதியில் காற்றடிக்கும் பக்கத்திற்கு எதிர்க்கட்சியார் போனபின் எங்கள் கட்சியார் கடனையுங்கழித்து மேற்கொண்டும் கோல் போடுவார்கள் என எண்ணி ஐந்து நிமையம் ஒருவாறு மகிழ்ந்திருந்தோம். ஆயின், மீண்டும் விளையாட்டுத் தொடங்கியவுடன் காற்று நின்றுவிட்டது. அப்போதே எங்கட்குக் கலக்கம் பிறந்துவிட்டது. அதோடு, பத்து நிமையங்கழித்து, பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்னும் பழ மொழிப்படி, எங்கள்கட்சித் தலைவனும் தேர்ச்சிபெற்ற காற்பந்தாடகனுமாகிய ஆளவந்தான் அண்மையில் கடு நோய் பட்டுத் தெளிந்தவனாதலால், திடுமென்று மயங்கிக் கீழே விழுந்துவிட்டான். அன்றே எங்கள் அரை நம்பிக் கையும் போய்விட்டது. அவனுக்குப் பதிலியாக (Subsitute) வந்த வெற்றிவேலோ, நேற்று வரை எந்தப் பந்தயத்திலும் விளையாடினதுமில்லை; விளையாடத் தக்கவன் என்று கருதப்பட்டதுமில்லை. நேரம் கால் மணிதான் இருந்தது. எங்கட்கு ஏக்கமும் முன்னினும் பன்மடங்கு மிகுந்துவிட்டது. ஆயினும் காரிருளில் பளீர் என ஒளி வீசும் மின்னல்போல் ஒரு நிமையத்திற்குள் வெற்றிவேல் ஒரு கோல் போட்டான். எங்கட்குக் கலக்கம் முற்றும் தீரவில்லையாயினும் எங்கள் நம்பிக்கை எழத்தொடங்கிற்று. பின்பு, வெற்றிவேல் மிகவூக்கங் கொண்ட மின்னல் வேகத்தில் விளையாட, எதிர்க்கட்சியார் மருள் கொண்டார் போல் மனந்தடு மாறவும், கண்டாரெல்லாம் இடைவிடாது ஆரவாரித்துக் கை தட்டவும் எதிர்க் கட்சிக்கோல் காப்போன் பந்தை எற்ற எற்ற உடனுடன் திருப்பியெற்றி, பத்து நிமையத்திற்குள் ஐந்து கோல் போட்டது மந்திரமோ மாயமோ என்று எண்ணுதற் கிடமாயிருந்தது. இந்த ஆட்டத்தை நீ பார்க்கவில்லையே என்பதுதான் என் வருத்தம். இங்ஙனம் ஆறுகோல் போட்டுக் கடனை முற்றும் கழித்துவிட்டது மட்டுமா? விளையாட்டு முடிவதற்கு ஒரு நொடியிருந்தபோது மீண்டுமொரு கோல் போட்டுத் தன் பெயரை மெய்ப்பித்துவிட்டான் வெற்றிவேல். எங்கட் குண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஊராரெல்லாம் விளையாட்டு முடிந்தவுடன் ஓடிவந்து வெற்றிவேலைச் சூழ்ந்து கொண்டு, நீண்ட நேரம் நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தினர். சிலர் அவன் வீடு வரை அவனைத் தொடர்ந்து சென்றனர். இன்று இவ் வூரெல்லாம் அவனைப் பற்றித்தான் பேச்சு. இஃது உனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் விளைக்கு மென்று கருதுகின்றேன். பிறபின், நண்பன், ஆடவல்லான் மாணவர்க்கு எழுதப்பட்ட - கட்டுரைப் பயிற்சிப் புத்தகத்திலே எழுதப்பட்ட - போலிகையாக இட்டுக் கட்டி எழுதப்பட்ட - கடிதத்திலே, எத்தனை வகை உணர்ச்சிகள்? ஆனால் உணர்வுகளின் உந்துதலால் அவ்வப்போதில் அவ்வுணர்வுடையார்க்கோ, எதிரிடையார்க்கோ எழுதப்பட்ட கடிதம் எப்படி இருக்கும்? ஆகலின் பாவாணர் கடிதப் பொருள் பயன் மிக்கதாகவும், சுவை மிக்கதாகவும் இருத்தல் ஒருதலை என்பதை ஆயவே வேண்டிய தில்லையாம்! பாவாணர், மன்னார்குடியில் இருந்த 1931 ஆம் ஆண்டில், எழுதிய கடிதங்களில் கல்லூரிப் பெயரும் (Findlay College) ஊர்ப்பெயரும் (Mannargudi) ஆங்கிலத்திலே எழுதப்பட்டன. ஆனால் அடுத்த ஆண்டே தமிழில் எழுதலாயினார். அந்நாளில் இருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆங்கில ஆண்டு மானத்தையே குறிப்பிட்டுள்ளார்! பின்னர்த் தி.பி; கி.பி. ஆகிய இரண்டையும் பயன்படுத்துதலும், தி.பி.யை மட்டும் பயன்படுத்துதலும், கி.பி.யை மட்டும் பயன்படுத்துதலும் ஆகிய முந்நெறிகளையும் மேற்கொண்டார். â.ã.க்F தமிழ் எண்ணில் நாளும் ஆண்டும் அமையும். திங்கள் முழுப் பெயராக இருக்கும். (எ-டு) 2004 துலை 24. (9-11-73) பாவாணர் பெரும்பாலும் அட்டைகளையே பயன்படுத்துவார். உள்நாட்டுறையோ, உறையோ பயன்படுத்துதல் அருமையாம், அட்டை, உறை ஆகிய எவையாயினும், அவரே தமக்கென முகவரி அச்சிட்டு வைத்துக்கொண்டு பயன் படுத்தியது இல்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழக வாசகராக இருந்த காலத்தில் மட்டும் பல்கலைக்கழகம் அச்சிட்டுத் தந்த கடிதங்கள் சிலவற்றைப் பயன்படுத்தியுள்ளார். ஆதலால், ஒவ்வொரு கடிதத்திலும் தம்கைப்படவே இடம் நாள் முகவரி குறித்துள்ளார். (எ-டு) பி (ஆ) 969, 5ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு. வ.ஆ. மாவட்டம் 15, கும்பம், 1995. ஐயா, அன்பார்ந்த ஐயா, அன்பார்ந்த ஐயன்மீர், அன்பரீர், பேரன்பரீர், அருந்தமிழ் அன்பீர், அருந்தமிழ்ப் புலவீர் இன்ன விளிப்புகளைப் பாவாணர் ஆண்டுள்ளார். வணக்கம்; நலம்; நலமாக; தங்கள் கடிதம் கைவயம் என்பனவும் விளிப்பினை அடுத்து இடம்பெறுவன. பின்னே செய்திகள் தொடரும். ஓரட்டையில் எழுதும் செய்தி. அதற்குச் செலவிட்ட தொகையில் எள்ளளவும் வீணாயதாகக் கருத வொண்ணா வகையில் அல்லது ஓர் உறையில் பல பக்கங்களில் எழுதும் செய்தியை ஓரட்டையில் எழுதிவிட்ட நிறைவகையில் அமைந்திருக்கும். மழுங்கிய பார்வையர்க்குப் பெருக்காடித் துணைகொண்டுதான் பார்க்க வேண்டிய நுணுக்கத்தையுடைய தாகக் கடிதம் அமைந்திருக்கும். பேரா திரு. கு. பூங்காவனர்க்கு 1-11-78இல் பாவாணர் வரைந்த கடிதத்தில் முந்தி விடுத்த அஞ்சலுறையை நெடுஞ்செய்திக்கு வைத்திருக்கின்றேன் என்றுள்ள குறிப்பு. பூங்காவனர் விடுத்த உறையையே, அச்செய்திக்கு அவ்வுறை வேண்டுவதில்லை என்னும் எண்ணத்தால் அதனைச் சேமத்தில் வைத்து விட்டுச், செய்திக்கு ஏற்ற அளவில் ஓர் அட்டையை எடுத்துப் பாவாணர் பயன்படுத்துகின்றார் என்பது புலப்படுத்துகின்றது. இக்குறிப்பு சிக்கனத்தை மட்டுமன்றிப், பயனீட்டையும் விளக்குவதாம். செய்திகளைப் பாகி (பத்தி)யாகப் பிரித்துக்கொண்டு எழுதுவார். எழுத இடமில்லாதபோது ஓரத்திலும், உச்சியிலும், இடைமடுத்தும் எழுதுவதும் உண்டு. எந்நிலையில் எழுதினாலும் பாவாணர் கடிதங்களில் எப் பிழையைக் காணவும் இயலாது, சந்திப் பிழையோ வாக்கிய அமைப்புப் பிழையோ எழுத்துப் பிழையோ அவர்தம் கடிதங்களில் ஒன்றிற் கூடக் காணற்கு இயலாது. அவரே எழுதமுடியாத நிலையில் - தம் கண்ணுறுவை செய்யப்பட்டபோது - பிறிதொருவரைக் கொண்டு எழுதுவித்த இரண்டு கடிதங்களில் மட்டுமே சில பிழைகளைக் கண்டதன்றி அவர்தம் கடிதத்தில் பிழை கண்டதே இல்லை! ஏனெனில், விரைவு, கவனக் குறைவு, மயக்கம், ஐயம் இவற்றால் கடிதங்களில் பிழை நேர்தல் கண்கூடாகக் காண்கின்றோம் அல்லமோ! இந்நிலை பாவாணரிடத்துத் தலைகாட்டியதே இல்லை என்க. தொடக்க நாள் கடிதங்களில் ஓரிரு வடசொற் கலப்பும் ஆங்கிலச் சொல் பெய்வும் இருந்தன. ஆனால் அவை சில்லாண்டுகளில் இருந்த இடமும் தெரியாமல் மறைந்தன. ஆகலின், கடிதக் கால உணர்வும் கற்பார் கருதத்தக்கதாம். பாவாணர் கையெழுத்து, பயிற்சியுடையாரால் மிக எளிமையாக அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய அமைப்பினது. என்றும் ஏறத்தாழ ஒரே தன்மையதாக அமைந்தது. அவ்வெழுத்து முத்துக் கோத்து வைத்தாற் போன்றது என்று கூற முடியாததுபோலப், படிக்க முடியாதது, படிக்கப் படும் பாடு படுத்துவது என்ற கூறவும் முடியாதது. பொதுவில் எவரும் படித்து அறிந்துகொள்ளத்தக்க பொது நிலை எழுத்து என்பது தகும். கடிதத்தின் முடிவில் கையெழுத்திற்கு முன்னே மிக அரிதாக அன்பன் என்பதை எழுதிக் கையெழுத்திடுவார். பெரும்பாலான கடிதங்களில் அன்பன் என்ற குறிப்பும் பொறிப்பதில்லை. ஞா. தேவநேயன் என்று முழுக் கையெழுத்துப் போடுதல், ஞா.தே. எனச் சுருக்கக் கையெழுத்திடுதல் என இரு முறைகளையும் பாவாணர் கையாண்டுள்ளார். செய்திகளுக்கு இடம் போதாத கடிதங்களில் ஞா.தே என்பதையும் வடவிடுத்துள்ளமை சில கடிதங்களில் காண இயல்கின்றது. பிள்ளை, முதலியார், நாள், மாதம் என்பவற்றைப் பாவாணர் சுருக்கெழுத்தில் எழுதுவதே பெருவழக்கு. இணைப்பெழுத்து களையோ (க்கு; த்து என்பவற்றை இணைத்து எழுதும் எழுத்து) சீர்திருத்த எழுத்து என்று இந்நாள் சொல்லப்படுகின்ற எழுத்துக் களையோ பாவாணர் கையாண்டதில்லை. அதனைக் கண்டித்தும் எழுதியுள்ளார். பெரியார்க்கே இச் சீர்திருத்த எழுத்தில் ஆர்வம் இல்லை என்றும், சிக்கனம் கருதிய கருத்தால் பயன்படுத்தினார் என்றும், தமக்கு வழங்கிய பட்டம் ஒன்றில் சீர்திருத்த எழுத்தைக் கையாளாமலே எழுதியளித்துள்ளார் பெரியார் என்றும் கூறுகிறார் பாவாணர். இக் கடிதங்களால் அறியப்படும் செய்திகள் இவையென முதற்கண் சுட்டப்பட்டது. இச்செய்திகளின் பயன் இவையெனவும் சொல்லப்பட்டது. அவற்றோடு, உணர்ந்து கொள்ள வேண்டிய செய்திகளும், பாவாணர் உள்ளத்தைத் தெள்ளென வெளிப்படுத்தும் குறிப்புகளும் பலப்பல இத்தொகையில் இடம் பெற்றுள என்பதை ஆர்வலர்கள் நன்கனம் அறிந்துகொள்வர்; அவர்க்கு, இத்தொகுப்பு அறுசுவை விருந்தென அமைதலையும் கண்டுகொள்வர். இது சிறிய அளவிலேனும் பாவாணரைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியாகக் கருதப்படும் என்பது எளியேன் நம்பிக்கையாகும். எளிய நிலையில் இருப்பவனும், முகமன் கூறிப் பிறரைப் புகழும் இயல்பில்லாதவனும், புலவரும் விரும்பாத தனித்தமிழ் நடையினனும், ஆரியத்தை வன்மையாய் எதிர்ப்பவனும் ஆகிய என்னை என்று பாவாணர் தம்மைத் தாமே படம் பிடித்துக் காட்டும் இக் காட்சி அவர் கடிதத்தால் அன்றி எப்படிப் பெற முடியும்? “அருணாசலம், எனக்கு ஒன்றும் தெரியாதென்றும், அவன் எனக்குக் கற்பித்து எம்.ஏ., பி.ஓ.எல்., பட்டங்கள் வாங்கிக் கொடுத்தாகவும் அவன் பொத்தகங்களிற் சிலவற்றை நான் திருடியதாகவும், அச்சகத்திற் சொல்லியிருக்கிறான். இது எத் துணை நகைச்சுவையும் வேடிக்கையுமான செய்தி என்று தம்மேல் சுட்டப்பட்ட பழிகளைத் தாமே நகைத்துப் புறத்தே ஒதுக்கித் தள்ளுதலை அவர் கடிதத்தால் அன்றிப் பெறுதற்கு இயலாதே! இப்படி எத்தனை எத்தனை பாவாணர் ஓவியக் காட்சிகள்! இத்தொகை நூல் உருவாக்கம் என்னுள் உருவாகிய காலையில், என் உணர்வை மதித்துக் கடிதங்கள் உதவிய சான்றோர் களையெல்லாம் சுட்டியுள்ளேன். அவர்களுக்கெல்லாம் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். பாவாணர் கடிதத் தொகுப்புகளை யெல்லாம் நன்கனம் பயன்படுத்திக் கொள்ள உதவியதுடன், அந்நூலை வெளியிடும் பொறுப்பையும் மேற்கொண்ட பெருமகனார் கழக ஆட்சியாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி எம்.ஏ., பி.லிப்., அவர்கள் ஆவர். அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன்! அச்சூர்தி ஏறாத அஞ்சல்கள் அச்சூர்தி ஏறிக் கருவிநூற் பெருமையும் பெறுகின்றதேயன்றோ! இத் தொகுப்பைச் செய்து வரும்போதே பாவாணர் வரலாறு வரைதற்கும், வேறிரு நூல்கள் எழுதுதற்கும் வேண்டும் குறிப்புகளையெல்லாம் தொகுத்து வைத்துள்ளேன். அவையும் விரைவில் ஒவ்வொன்றாய் வெளிவரும் என்பதையும் முந்துற உரைத்து நிறைவிக்கின்றேன். 1940இல் வேர்ச்சொல் சுவடி என ஒரு சிறுநூல் எழுதி முடித்தார் பாவாணர். அந்நூல், இதுகாறும் அச்சிடப் பெற்றிலது. பாவாணர் கடிதங்களைத் தொகுக்கும் முயற்சியில் தலைப்பட்டு, கழக மேனாள் ஆட்சியாளர் தாமரைச் செல்வர் அவர்களின் காப்பகப் பேழையுள் தேடுங்கால் வேர்ச் சொல் சுவடி கிடைக்கப்பெற்றுக் கழிபேரின்பம் நல்கிற்று! அது, கிழங்கு தோண்டி எடுத்தற்கு முனைந்த வறிஞன் ஒருவன் கையில், வளமார்ந்த வைப்புப் புதையல் வாய்த்ததாயிற்று! அயரா முயற்சி மேற்கொண்டால், பாவாணர் வரைந்து முடித்துப் பெயர் சுட்டும் அளவில் நின்றுபோன சுவடிகளும் கட்டுரைகளும் கிடைக்கக் கூடும் என்னும் ஆர்வமும் தளிர்ப்ப தாயிற்று! பாவாணர் பற்றுமையர் ஒருங்கொத்து உதவத் தலைப்படின், எய்தாதவை யெல்லாம் எய்தி இணையிலா நலப்பாடாம் என்பது உறுதியாம். திருவருள் கூட்டிவைப்பதாக! தமிழ்ச்செல்வம் பாவாணர் ஆராய்ச்சி நூலகம் திருநகர், மதுரை - 625 006. தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன் 14-1-85 கடிதம் உதவியோர் பெயர்களின் சுருக்க விளக்கம் க.சி.அ. - க.சி.அகமுடைநம்பி இரா. இ. - இரா. இளங்குமரன் நா.எ.ம. - நா. எழில் மகிழ்நர் வி.அ.க. - வி.அ. கருணைதாசன் ஆ.க. - ஆ. கருப்பையா மி.மு.சி. - மி.மு. சின்னாண்டார் வீ.ப.கா.சு. - வீ.ப.கா. சுந்தரனார் வ.சு. - வ. சுப்பையா பிள்ளை மு.த.கு. - மு. தமிழ்க்குடிமகனார் பா.நா. - பா. நாராயணர் வி.பொ.ப. - வி.பொ. பழனிவேலனார் கு.பூ. - கு. பூங்காவனர் பு.ம. - பு. மனோகரனார் பாவாணர் கடிதங்கள் 1. தேடிச் சேர்த்த திரு எதை எதையோ தேடித் தேடித் திரிந்தலையும் உலகத்தே, எய்ப்பினில் வைப்பாய் என்றும் இருக்கும் நுண்மாண் நுழை புல நூல்களைத் தேடித் தேடித் தொகுத்துத் தெளித்து ஆய்ந்த ஏந்தல் பாவாணர்! தக்கார் தகவிலர் என்ப தவரவர், எச்சத்தாற் காணப்படும் என்பதற்கு ஏற்ப, நூலெச்சத்தை நுனித்துணர் வால் தொகுத்து வைத்த நூலறி புலவர் பாவாணர்! அவர் அரும்பெரும் தட்டுப்பாடும். முட்டுப்பாடுமே பெட்டிப் பொரு ளெனக் கொண்டிருந்த நாளிலும், கடன் கொண்டும் செய்வர் கடன் என்னும் பொன்மொழிக்கு ஏற்பத் தொகுத்துவைத்தவை விலைமதிக்க வொண்ணா விழுப்பொருள் நூற்பொருளேயாம்! அதுபற்றிய செய்திகளை அவர் கடிதங்கள் பரக்க விரித்துரைக்கின்றன. பொது : என் சொத்தெல்லாம் என் நூல்நிலையமும் ஆராய்ச்சியுமே1 என் ஒரே உடமையாய் இருக்கின்ற ஆராய்ச்சி2 என் நூலகம் மட்டும் 7 நிலைப்பேழைகள் கொண்டது3 எனக்கு வீடுமில்லை; காடுமில்லை; இருப்புமில்லை; எடுப்புமில்லை; நாற்பானாண்டாக இரவு பகல் அரும்பாடுபட்டு ஆய்ந்த ஆராய்ச்சிதான் என் முழுவுடைமை4 நூல் : வருண சிந்தாமணி ஒருபடி உங்கள் புத்தக சாலையிற் கண்டேன். அதே எனக்கு வைத்திருங்கள்5 முத்து வீரியம் முக்கியம், வருகிற விடுமுறைக்குள் எனக்கு ஒன்று வாங்கி வையுங்கள். தேம்பவாணியும் ஒரு தொகுதி வேண்டும்.6 தயைசெய்து கீழ்க்கண்ட இலக்கண நூல்களை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க, அவை என் நூலாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டுவனவாய் இருக்கின்றன. என் புத்தகங் களை அச்சிடாவிட்டாலும் 3 மாதத்திற்குள் பணம் கட்டி விடுகிறேன். 1. இறையனார் அகப்பொருள் 2. தொல்காப்பியம் (நமச்சிவாய முதலியார்) மூலம் 3. தொல்காப்பியம் பொருளதிகாரம் 4 Vol. நச்சினார்க் கினியம், பேராசிரியம் (பவானந்தர் கழகம்). 4. நன்னூல் மூலம் 2 5. நன்னூல் விருத்தி - சங்கர நமச்சிவாயர் 6. சிதம்பரப்பாட்டியல் 7. தண்டியலங்காரம் அ. குமாரசாமிப் பிள்ளை 8. முத்துவீரியம் 9. பன்னிருபாட்டியல் பன்னிரு பாட்டியல் கிடையாதிருக்கலாம். முத்துவீரியம் கிடையாவிட்டால் உங்களதை அனுப்பி வையுங்கள்7 ஒன்பது இலக்கணநூல்கள் அனுப்பும்படி வேண்டி யிருக்கிறேன். தயவுசெய்து ஜூலை 15-ம் உக்குள் அவற்றை அனுப்பி வைக்க. என் புத்தகக் கணக்கில் அவற்றைக் கேட்கவில்லை. ஏனென்றால் ஒன்றையாவது வெளியிடுமுன் அதிகமாகக் கேட்க விருப்பமில்லை. என் புத்தகங்களில் ஒன்றையாவது வெளி யிடாமற்போனாலும் அவற்றின் விலையை 3 மாதத்திற்குள் கொடுத்துவிடுவேன். சுமார் 30 ரூக்குப் புத்தகங்களைக் குறித் திருக்கிறேன். இலக்கண நூல்களில் எனக்கு எல்லையில்லாத பைத்திய முண்டு. குமாரசாமி நாயுடு கம்பெனியில் தொல்காப்பியச் சொல்லதிகாரமும் பேராசிரியமும் கல்லாடமும் மூன்றாண்டு கட்கு முன்னமே அச்சில் இருந்தன. அவை வெளியேறியிருப்பின் அவற்றிலும் ஒவ்வொன்று வாங்கி உடன் சேர்த்து அனுப்புக. நான் கேட்ட நூல்கள் எல்லாம் என்னிடத்தில் இல்லை. முத்து வீரியம் கிடைக்கு மட்டும் உங்களதை அனுப்பி வையுங்கள் மிகப்பத்திரமாய் வைத்திருப்பேன்.8 “History of Pallavas by Gopalan “The Nayaks of Madura என்ற இரு University வெளியீட்டு நூல்கள் எனக்கு வேண்டும். நான் வரும்போது ஏதாவது ஒரு கணக்கில் வாங்கிக் கொடுத்தீர் களானால் பேருபகாரமாயிருக்கும். அவை என் பரீட்சைப் பாடப் புத்தகங்கள்9 அன்புகூர்ந்து உடனே பண்டாரகர் (Dr.) சேதுப்பிள்ளை அவர்களிடம் ஆளனுப்பி ஒரு தொகுதி பல்கலைக் கழக அகராதியும் குண்டர்ட் மலையாள ஆங்கில அகராதியும் வாங்கி வைக்க, வேனிலுக்கு ஏர்க்காடு போவதாகச் சொன்னார்கள். ஆங்குப் போகுமுன் வாங்கி வைத்து விடுக. கால்டுவெல் 3ஆம் பதிப்பும் (இங்கிலாந்து) படியொன்று எடுத்து வைக்க, சாமவேதம் ஒரு தொகுதி மறவற்க. The Holy Shank பொருட்காட்சி சாலையில் கிடைக்காவிடின் முர் அங்காடியில் வாங்கிவைக்க.10 எனக்குத் தேம்பாவணி உரை, வருண சிந்தாமணி, அமிர்த கவிராயர் இயற்றிய ஒருதுறைக்கோவை, மிருதங்க சுயபோதினி (பவழக்காரத் தெருவில் உள்ள ஓர் ஐயர் வெளியிட்டது) இவற்றில் ஒவ்வோர் படி தவறாது வாங்கி வருக11 தண்டிகைக் கனகராயன் பள்ளும், பறளை விநாயகர் பள்ளும் பிற பள்ளுகளும் வேண்டும். “Peeps at Many Lands-Australia முர் அங்காடிப் பழங் கட்டிடத்தில் ஒரு நடுக்கடையிலுளது. விலை 8 அணா சொன்னான் வாங்கி வைக்க.12 ஆதிரேலிய மிகத்தேவை, வாங்கி வைக்க13 நேற்றுக் கொடுத்தனுப்பிய சாம்பசிவம் பிள்ளை அகர முதலி அடிகள் நூல் நிலையத்தைச் சேர்ந்ததா? நுங்களதா? இன்று புதுப்படியேனும் பழம்படியேனும் விலைக்குக் கிடைக்குமா? நூறு ரூபா வரை கொடுக்கலாம். எனக்கொன்று மிக்கத்தேவை இயன்றவரை முயன்று பார்க்க14 சங்கத் தமிழகர முதலி ஏனையிரு பகுதிகளும் கிடைப்பின் மிக நன்றாம். பன்மடங்கு விலையேற்றினாலும் கொடுத்து விடுவேன்15 ஆக்கசப் போர்டு ஆங்கிலப் பேரகரமுதலியை (14 மடலம்) உடனே வாங்கும்படி திரு. சுப்பையா பிள்ளைக்கு எழுதி விட்டேன். ஆதலால் 1300 உரூபாவிற்குக் காசோலை உடனே அவருக்கு அனுப்பிவிடுக.16 பாவாணர் தேடிச் சேர்த்த திரு. இன்னதென வெளிப் படுத்தத்தக்க சில குறிப்புகள் இவை. கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் தானே திரு என்பது! அத்திரு பாவாணரிடத்து எத்தகு நிலையில் அமைந்து ஆக்கம் சேர்த்தது! அவ்வாக்க விளைவுதானே அவராக்க விளைவு! 2. பன் மொழிப் பயிற்சி ஆர்வமும் அக்கறையும் உடையவர்களும், மொழிப் புலமைக்குரிய கூர்த்த மூளை அமைந்தவர்களும் ஐம்பது மொழி களைக் கூட கற்றுக்கொளள முடியும் எனச் சுட்டுவார் பாவாணர்! அஃதவர் படிப்பறிவை மட்டுமன்றிப் பட்டறிவும் இயைந்து கண்ட முடிவு என்பது வெள்ளிடையாம். ஆய்வு நெறிப்பட்ட தொடக்க நாள் முதல் அறிவில் தலைநின்ற இறுதிக் காலம்வரை பலப்பல மொழிகளைப் பயின்று வந்தவர் பாவாணர் என்பதற்கு, அவர்தம் கடிதங்கள் சான்று பகர்கின்றன. அவற்றுள் வரும் குறிப்புகளுள் சில : மூர் அங்காடியில் பழைய கட்டிடத்திலுள்ள புத்தகக் கடை வரிசையில் வட பகுதியில் ஒரு கடையில் மலையாள இலக்கணப் புத்தகம் ஒன்று கண்டேன். பொருளல்லாமல் வந்துவிட்டேன். 5 அணாவிற்குக் கேட்டேன். இசையவில்லை 8 அணாவிற்கு இசைவான். எங்ஙனமும் ரூ. 1க்கு மேற்படாது. இசையுமாயின் வாங்கிச் செல்வியொடு சேர்த்தனுப்பு.1 புதுக் கட்டடத்தில் கீழ் வரிசையில் கீழே ஒருவன் சில அரசாங்க வெளியீட்டுப் பழம் புத்தகங்களை விற்றுக் கொண் டிருந்தான். Arabic English Vocobulary ஒன்று எட்டணாவிற் கிசைந்தான் பொருளில்லாது வந்துவிட்டேன்.2 ஹிந்தி பயில்கின்றேன்3 “French grammer, German grammer இவ்விரண்டும் சென்னை மூர் அங்காடியில் கிடைக்கும். சென்ற கமலநாதன் முதலியார் அவர்களை அங்குப்போய் விசாரித்து எழுதச் சொன்னேன். அவர்கள் போய் Germen grammer இருக்கிறதென்றும் 1 ரூ. விலையென்றும் எழுதினார்கள். உடன் பணம் அனுப்ப முடிய வில்லை. தயவுசெய்து உடனே முதலியார் அவர்களிடம் பணம் கொடுத்து வாங்குவித்து, கோபால் பிள்ளை ஆள்மூலம் அனுப்பிவிடுக4 தயவு செய்து உடனே Arabic grammer, Hebrew grammer, chinese Self-taught&grammer Higginbothams வாயிலாய் வருவித்துத் தருக. அதே கழகத்து அல்லது பிறவெளியீட்டு French grammer, German grammer இவ்விரண்டும் சென்னை மூர் அங்காடியில் கிடைக்கும்.5 ஆதிரேலியம் மிகத் தேவை. சீனம் (china) மலேயம் (Malaya) என்பவற்றிற்குக் கிடைத்தாலும் வாங்கிவைக்க.6 ஆங்கிலச் சொற்பொழிவுகளுக்குப் பயின்று வருகிறேன். சில நூல்களும் எழுதிவருகிறேன்7 கருநாடக இலக்கியக் கழகம் அரசின் உதவிகொண்டு ஒரு கன்னட அகரமுதலி வெளியிட்டு வருகின்றது. மொத்தம் 5 மடலம். 3 வெளிவந்துள்ளன. எஞ்சியவை இனி வெளிவரும். மொத்த விலை 120 உரூபா. அதைக் கட்டிவிட்டால், பதிவு செய்துகொண்டு மும்மடலத்தையும் உடனே கொடுத்துவிடுவர். ஏனையிரண்டையும் வெளிவந்தபின் பெற்றுக்கொள்ளலாம். பணம் கையில் உள்ளது. முகவரி : Secretary, Kannada Sahitya Parisat Mahakavi Road, Bangalore-18 அன்பு கூர்ந்து உடனே சென்று வினவியறிக. கிடைக்கு மாயின் நீங்கள் இங்கு 5 அல்லது 6 வந்தபின் நேரில் தருவேன். பின்னர் திரு. தமிழ்க் குடிமகனோடு இங்கு வரும்போது வாங்கிக் கொண்டு வரலாம்.8 1934 இல் கிளர்ந்த ஆர்வம் வாழ்வின் நிறைவு வரை குறைந்ததோ! என்றும் புதுமொழி பயிலும் மாணவராக அன்றோ அவர் இருந்தார்! எட்டணாவுக்கு இசையும் நூலையும் அத் தொகை தந்து வாங்கமுடியாத வறுமை, அஞ்சற் செலவும் இருப்புப்பாதைச் செலவும் நீங்குதற்குரிய சிக்கன நடவடிக் கையைத் தூண்டும் முட்டுப்பாடு இருந்தும் நூல்களைத் தேடித் தேடி வாங்கிக் கற்கும் தேர்ச்சிக்குக் குறைவொன்றும் இருந்த தில்லையே! இவ்விழுமிய பன்மொழி வேட்கையால்தானே, தமிழ் வரலாற்றில் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஒப்புமை காட்டிப் பட்டியலிட்டு வைக்க வைத்தது! 3. தொண்டின் உறைப்பு பாவாணர் தம் நூல் வெளியீட்டுக்குப் பலர் உதவியை நாடியதுண்டு; சிலர் தாமே நாடிவந்து நயந்து அவாக்கு உதவியதும் உண்டு; நூல்களை விற்றுப் பணம் தண்டித் தந்து உதவியர்களும் உண்டு. அவ்வுதவிகள் பாராட்டுக்கு உரியவை. ஒவ்வொரு நன்றியையும் உள்ளாரச் சொல்லியும், எழுதியும், நெஞ்சார நினைந்தும் போற்றிய பெருந்தகையர் பாவாணர். குமணன் தந்த கொடைக் களிற்றைத், தம் கொடையாக விடுத்த கழகக் காலப் புலவர் பெருஞ்சித்திரனார் பெரு மிதம்போலப் பெருமிதமும், எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே என்பது போன்ற பெருந்தகைமையால் தம் கைப்பொருள் செலவழித்துக் கொண்டு சென்றும் தொண்டு செய்ய முந்தும் முனைப்பும் அவர்தம் கடிதங்களில் ஆங்காங்கே மின்னொளி செய்கின்றன! அவற்றுள் சிலவற்றைக் காண்க. 8-3-64இல் நடக்க இருப்பது குறைந்த சம்பளத் தமிழா சிரியர் வகுப்பாதலால் ஒருவரையும் வற்புறுத்தவோ இடர் படுத்தவோ வேண்டேன். பெற்றது கொண்டு பொந்திகை (திருப்தி) யடைவேன். தங்கற்கும் அறையமர்த்த வேண்டிய தில்லை. என் உறவினர் வீட்டில் தங்கிக்கொள்வேன். வழிச் செலவுப் பணமும் வந்தபின் வாங்கிக் கொள்கிறேன்1 மதுரை மாணவர் அனைவரும் ஓரிடத்திற் கூட இயலின் நான் வந்து மொழிச்சிக்கல் பற்றி விளக்கமாய்ப் பேச அணிய மாயிருக்கிறேன். போகவரப் பேரியங்கிக் கட்டணம் கொடுத்தாற் போதும். அதுவும் இல்லாக்காலும் வருவேன்2 தொண்டு கருதி (தகடூர்க்கு)ச் செல்லக் கருதினும் அங்குக் கூட்டம் சேர்வதில்லை. திரு.செல்லையாவும் சொற்பொழி வாளரும் தான் பெரியோர். அவையோரெல்லாம் தெருவில் விளையாடும் சிறுவர் சிறுமியரே3 நான் சென்ற 19, 20, 21, ஆம் களில் நெல்லை சென்று திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலுமாக 3 இந்தி யெதிர்ப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். பயன்படா விடினும் முதல் உழவென்று நினைக்க வேண்டியிருக்கிறது. முதலாவது, கூட்டத்திற்கே நம்மவர் வரவிடாதபடி தந்திரமாகக் கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள். வந்தாலும் தூர நின்று கேட்பதே யொழியக் கிட்ட வருவதில்லை. அதுவுங்கூட நான் காங்கிரசில் சேர்ந்திருப்பதினால். இப்போது நாம் தமிழைக் காக்க வேண்டுமானால் முதலாவது காங்கிரசில் சேர்ந்து கதருடுத்த வேண்டும். சுயராஜ்யத்திற்கு ஒன்று சேர்ந்து இந்திக்கு உள்ளிருந்தே எதிர்க்க வேண்டும். மற்றபடி நம்மவரைச் சேர்க்க முடியாது. நம் சொல்லும் பயன்படாது. இந்த ஞாயிறு 10ம் சென்னையில் கூட்டமென்று பத்திரிகையிற் பார்த்தேன். 2 வாரமாய் இந்தியால் வருங்கேட்டை முற்றுமாராய்ந்து இன்று தமிழ் அடியோடு தொலைவதற்கு ஒப்பானதைக் கண்ணுறுகிறேன். எவரும் ஏற்கும்படி தக்க நியாயங் களும் விடைகளும் கண்டுள்ளேன். தயவுசெய்து அங்குப் போக வர முழுச் செலவு 7 ரூ கொடுக்க முடியாவிட்டாலும் அரைச் செலவிற்காவது ஒழுங்கு செய்க. அருமையான 30 பாட்டுகள் அச்சாகின்றன இவ் வெள்ளி வெளிவரும். அதனுடன் வருவேன் ஞா.தே. ஓர் அனுபவசாலி சத்யாக்ரக முறை நன்றென்றார். நாம் கூடி ஆராயவேண்டும்4 உடனே 500 செந்தமிழ்ச் சின்னங்கள் தபாலில் விடுக்க எனது மாணவர் ஆவலாய் எதிர்ப்பார்க்கின்றனர். வரும் சனிக் கிழமை சேலம் அல்லது நாகை செல்வேன். இந்தியெதிர்ப்புச் சொற்பொழிவுக்கு. பாலக்காட்டு ஆறுமுக முதலியார் M.A.,L.T., (govt college) கொடுமுடி எனது அத்தான் அ.எ. சீநிவாசகம் பிள்ளை (Drawing master SSV High School bfhLKo) என்னும் இவ்விருவருக்கும் ஒவ்வோர்படி செந்தமிழ்க் காஞ்சி விடுக்க. 2ம் பாகம் அடுத்த வாரம் வெளியாகும். அச்சுக் கூடத் திற்குக் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து விரைந்து விலையாக்கி அனுப்பிவிடுங்கள். யாராவது ரூ. 20க்குக் குறையாமல் கொடுப்பார்களானால் அவர்கள் பேரில் ஒரு பாட்டுப்பாடிச் சேர்த்துக் கொள்வேன். 10 ரூ கொடுத்தாலும் போதும். இசைக் கருவிகள் வாங்கிக் கொண்டு ஊரூராய்ச் சென்று பஜனை செய்ய ஏற்பாடாகிறது. அன்று நான் வேண்டுமென்றுதான் என் ஆராய்ச்சியின் அடிப்படைக் கொள்கையைச் சற்று வெளியிட்டேன். அவைத் தலைவர் என் கட்டுரைகளைப் பற்றிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. எந்தக் கூட்டத்திற்கு எப்படிப் பேச வேண்டும் என்றும் என்னென்ன விதமாய் இந்தி நியாயத்தை மறுக்கலாம் என்றும் எனக்குத் தெரியும். நான் எல்லாவற்றையும் பேசுவேனா னால் பிந்தினோர் பேச்செல்லாம் கூறியது. கூறலாகவே முடியும் ஆயினும் இன்னோர் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்க்கிறேன். நம் உயிர் உள்ள வரையில் தமிழ் கெடவிடக்கூடாது. முடிவான வழி நாம் பேசியதே.5 தயவுசெய்து நகர்வலம் வருவதற்காக ஒரு பெரிய துணிக் கொடி (Banner) அனுப்புக. அடுத்த வாரம் இங்கு இந்தியெதிர்ப்பு வாரம் கொண்டாடத் தீர்மானித்திருக்கிறோம். இந்த வாரம் இந்தி வாரம். ஆதலால் இதற்கு மாறாக அது நடக்கும். ஒரே வாரத்தை நாம் தமிழ் நாடெங்கும் கொண்டால் நண்பர் அண்ணாதுரை, பாரதியார் போன்றவர்கள் ஒரே சமயத்தில் பலவிடங்களுக்குச் செல்ல முடியாது. ஆகையால் முதலாவது இங்கு நடத்திப் பிறவிடங்களுக்கு வழிகாட்டுவோம். நீங்களும் அங்கு நடத்த வேண்டும்.6 மாநாட்டுச் செய்தி என்ன? இங்கு தமிழ் மாகாணப் பிரிவினை மாநாடொன்று தமிழ்நாட்டுப் பல் கட்சித் தலைவர் களையும் கூட்டி நடத்த எங்கள் தலைவர் கருதுகிறார்.7 தெலுங்கு மாகாணம் பிரிந்துபோய் விட்டதானாலும் சென்னையைத் தெலுங்கர் வேண்டாமையாலும் வடவெல்லை யின்று காரியமின்று. தமிழ் மாகாணப் பிரிவினை மாநாடே, அதுவும் சூலையிலன்று; ஏப்பிரல் இறுதிக்குள் கூட்டத்தக்கது என்பதை முதன்மையாகத் தெரிவிக்கிறேன். ஏனோதானோ வென்றிரற்க.8 காலை சென்று மாலை திரும்பிவிட்டேன். கூட்டம் முடிந்தபின் கழகம் செல்லலாமென்றிருந்தேன். விளைவு நன்றா யில்லாமையால் கழகஞ் செல்லவில்லை. யான் என் கடமையைச் செவ்வனே செய்துவிட்டேன். யாரை வேண்டுமாயினும் கேட்டுப் பார்க்கலாம். வேறெதற்குத் தடை நேரினும் மறைமலையடிகள் தடையுண்ணா தென்றிருந்தேன். ஆயினும் அடிகள் தமிழ்ப் புலவரிடையும் சு.ம. பண்டிதரானார். இத்துணை அண்மைக் காலத்திலேயே அவர் மறக்கப்படுவார் அல்லது புறக்கணிக்கப் படுவார் என்று கனவிலும் கருதவில்லை. மலை சாய்ந்ததென்று புகழ்ந்தவரெல்லாம் அலையோய்ந்ததென்று மகிழ்கின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தலைமை தாங்கி வழிகாட்ட எங்ஙனம் ஒருவரில்லையோ அங்ஙனமே புலமைத் துறையிலு மல்லை. தக்காரொருவர் தலையெடுக்காவிடின் தமிழ்நாடு அமிழ் நாடே9 கல்வியமைச்சர் எங்கள் கல்லூரியில் ஏரணம் வரலாறு ஆகிய இரு பாட நூல்களையும் தமிழில் கற்பிக்கப் பணித் திருப்பதால் அவற்றுள் ஆங்கிலம் மட்டும் கற்ற ஆசிரியர்கள் கற்பித்தற்கு அரிதான ஏரணத்தை இரவு பகலாய் மொழி பெயர்த்து வருகின்றோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்து விடும். குறியீடுகள் பெரும்பாலும் தனித்தமிழில் அமையப் பெறுகின்றன.10 இற்றைச் செய்திகளையும் நிலைகளையும் நோக்கும் போது இம்மாத இறுதிக்குள்ளேயே எல்லை மாநாட்டை வைத்துக் கொள்வது நலமென்று தோன்றுகின்றது. பாராளு மன்றத் தூதுக் குழு 15ம் வரை லாகூரிலிருக்கிறது. பின்பு இரு பகுதிகளாய்ப் பிரிந்து பெஷாவருக்கும் அமிருதசாருக்கும் செல்கிறது. வடக்கேயே இத்துணை நாள் தங்கினால் தெற்கே பம்பாய் பார்க்கவும், திருவாங்கூர் செல்லவும் சென்னை வரவும் இம் மாத இறுதியாகிவிடும். பெப்ரவரித் தொடக்கத்தில் நடக்கும் கூட்டத்தை இம்மாத இறுதியில் வைத்துக் கொள்வது இயலாத தன்று. பா.தூ. குழு அதிகார முறையில் வராவிட்டாலும் இந்தியா வின் பின்னிலை அமைப்பிற்குப் பெரிதும் காரணமாயிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. தூதுக் குழு சென்னைக்கு வரும்போது அவர்கள் கண்ணாரக் காண்பது போல, பின்னர் நடக்கும் எம் முயற்சியும் வலியுறாதென்பது தேற்றம். குழு டில்லிக்குத் திரும்பியவுடன் ஆந்திர மகாசபைத் தலைவராய் விஜயா என்பவர் காணச் செல்கிறார். நாம் இன்று தூங்கிக்கொண்டும் நீட்டிக்கொண்டும் இருந்தோமாயின் நம் காரியம் கைகூடுவது அரிது. மாநாட்டிற்கு வேண்டியவை முன்னர் 1 சுவடியும் பின்னர் 1 புத்தகமுமாக 2 சுவடியில் வேங்கட எல்லைக்குச் சான்றுகளையெல்லாம் சுருக்கமாய்க் கூறி அச்சிட்டுப் பெருமக்கட்கெல்லாம் அனுப்பிவிடலாம். பொங்கல் விடுமுறைக் குள்ளேயே பண்டிதர் ஆனந்தத்தையும் இராசமாணிக்கம் பிள்ளை அவர்களையும் கொண்டு எழுதுவித்து உடனே அச்சிட்டு விடவும். நாய்க்கர் ஈரோட்டில் இருக்கிறார். எழுதிக் கேட்க.11 எங்கள் கல்லூரி நகராண்மையைச் சேர்ந்ததாதலால் அரசியல் திட்டம் எதையும் மறுக்கக் கூடாதென்றும் மறுப்பின் வேலை போய்விடுமென்றும் எங்கள் கல்லூரித் தலைவர் சொல்லி விட்டார். கூட்டத்திற்குச் சென்று மீளலாமென்றாலும் 7ம் எங்கள் கல்லூரித் திறப்பாதலாலும் விடைத்தாள் திருத்தி அன்று கட்டாயம் கொடுத்துவிட வேண்டுமாதலாலும் வேலை நெருக்கடி பெருந்தடையாயுள்ளது. அன்று கூட்டத்தில் என்ன முடிவு செய்யினும் எனக்குடன்பாடே. ஆயின் வெளிப்படை யாய் எம் முயற்சியிலும் கிளர்ச்சியிலும் கலந்து கொள்ள இயலாதவாறுளது, என் அலுவல். இதற்கென் செயலாமென் றெண்ணிக் கொண்டிருக்கிறேன்.12 சங்கரலிங்க நாடார் வடக்கிருந்தென்ன? சின்னச்சாமி தீக்குளித்தென்ன? தமிழன் திருந்துவதாயில்லை?13 பேரியங்கிக் கட்டணம் இல்லாக்காலும் மாணவர் ஒருங் கிணைந்த கூட்டத்தில் உரையாற்றுதற்குப் பாவாணர் வரு வாராம்! கைம்முதல் பெருக்கமா, இவ்வுணர்வை எழுப்பியது? தொண்டின் உறைப்பே எழுப்பியதாம்! நகராண்மைக் கல்லூரிப் பணி, பொதுப்பணிக்கு இடராக இருப்பதால், என் செயலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாராம்! மாகாணப் பிரி வினைக் கருத்திலே அந்நாளில் பாடுபட்டுப் பணிசெய்த தூண்டு தலாய் நின்ற - தமிழ்ப் பேராசிரியர் பாவாணரைப் போல் எத்தனை பேர் இருப்பர்? 4. பாவாணர் வீறு சிலர் நகையாட்டாகச் சொல்வதாகவோ நயமாக நவில் வதாகவோ எண்ணிக்கொண்டு, நெஞ்சில் கை வைத்துப் பார்த்தேன்; கொதிப்புண்டாகியது; சற்றே கையைக் கீழே இறக்கினேன்; வயிற்றில் கைபட்டதும் கொதிப்பு அடங்கிப் போயிற்று என்பர். வயிற்றுப் பாட்டை நோக்கிச், செம்மாந் தெழும்பிய உணர்வை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அடங்கி விட்டாராம்! உண்மையான உணர்வாளராயின் அவரால் அடங்கியிருக்க முடியாது! போலிமை புகுந்த உணர்வின் புகலு கையே ஈது! பாவாணர் சொன்னார்; எனக்கு நெஞ்சும் உண்டு; வயிறும் உண்டு; இவற்றுக்கு மேலே தன்மானமும் உண்டு. இத்தகைய பாவாணர் வீறு அவர்க்கு அலைவையும், கலைவையும் ஆக்கியிருக்கலாம்; அவ்வலைவாலும் கலைவாலும் தமிழும் தமிழினமும் பெற வேண்டும் பேறுகளை முற்றாகப் பெறவொண்ணாமை நேர்ந்ததேயன்றி, அவரைப் பொறுத்த அளவில் கேடு செய்துவிடவல்லன அல்லவாம்! கேடு என்று எண்ணும் உணர்வாளக்கு, வீறு எங்கே இருந்து வீறும்? பாவாணர் வீறு பற்றிக் கடிதங்களால் அறியப்படும் செய்திகளைக் காண்போம். கழகம் கைகொடுப்பின் நான் கிளர்ந்தெழுவது தேற்றம்1 சிறு நூல்களையெல்லாம் இந்த ஆண்டில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டில் எத்துணையோ பெரு நூல்களை எழுதக் கருதுகின்றேன்2 தமிழின் தொன்மையை எடுத்துக்காட்டும் நூல் அஃதொன்றே (முதற்றாய் மொழி) என்பது அச்சிடும்போது தெரியவரும்3 கழகம் என் நூல்களை வெளியிட்டு என்னை ஆதரிக்கு மாயின் அடுத்த ஆண்டுக்குப்பின் ஆசிரியர் வேலையைக் கூட விட்டு எழுத்து வேலை செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன்.4 எனது மொழிநூலைத் திரு.சுப்பிரமணிய பிள்ளை போல்வாரே பார்க்கத்தக்கார். பெரிய ஆங்கில இலக்கணங்களை ஆதாரமாகக் காட்டியிருப்பதால் ஏனையோர்க்கு விளங்கா.5 என் முதற்றாய் மொழியை அச்சிட வேண்டும். அதன் பிறகுதான் எங்கள் பிரின்ஸிபாலுக்கு என் அறிவு வெளியாகும்.6 கட்டுரையில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஒவ்வொரு பகுதியும் ஆராய்ச்சி முடிவென்பது ஒருமுறை வாசித்தால் தெரியவரும்.7 நான் அனுப்புவதில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஏதேனும் பிறர்க்கு உடன்பாடன்றாயினும் அவர் கூறும் தடை கட்கெல்லாம் தகுந்த விடை கூறச் சித்தமாயிருக்கிறேன்8 அகத்தியரும் தொல்காப்பியரும் ஆரியர் அல்லர் என்னும் திரிபுணர்ச்சி நமக்கு இன்னும் இருப்பதுபற்றி வருந்துகிறேன். செல்வியில் வெளியிடாவிடின் மட்டும் அவ்விருவரும் தமிழர் ஆய்விடுவரா? ஆரியர் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் இருக்கின்றன. என் கட்டுரைக்கு எவரேனும் மறுப்பெழுதினால் விடையளிக்கத் தயாராயிருக்கிறேன்9 திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் பொருள் பற்றிய எனது இடு நூலை (Thesis)¥ பல்கலைக்கழகம் தள்ளிவிட்டது. இது எனக்கு வியப்பாக இல்லை. இவற்றைத் தமிழ்நிலை என்ன என்பதை மட்டும் தெரிவிக்கின்றது; இனி மேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை. ஆகையால் எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன்.10 நான் ஒரு பல்கலைக் கழகத் தமிழ் துறைத் தலைவனாயின் தமிழ் விரைந்து ஆக்கம் பெறும்.11 மறைமலையடிகள்போல் வாய்மையும் பெருந்தன்மையும் வாய்ந்த புலவர் ஒருவரேனும் இன்றிலர். அமுக்கலும், தற் பெருமையும், குறுநோக்கும் சான்ற புலவரிடம் (பழந்தமிழாட்சி நூலைக்) காட்டிப் பயனில்லை12 மறைமலையடிகட்குப் பின் தமிழ்த் தூய்மைபேணும் பேராசிரியன் யான் ஒருவனே என்பது தங்கட்குத் தெரியும். தமிழ்ப்பற்று என்பது தமிழ்த் தொண்டனைப் போற்றுவதே.13 இனிமேல்தான் என் மொழியாராய்ச்சி உலகிற்கு வெளி யாகும். அதனால் தமிழ் ஓங்கும், கழக நூல் விற்பனையும் உயரும்.14 என் புலமையைப் பொறுத்த வரையில் மறைமலையடிகள் ஒருவரே மதிப்புரையோ முன்னுரையோ வழங்கத் தக்கவர்15 என் ஆராய்ச்சி முடிந்து விட்டதனால், இனிமேல் என் வாழ் நாளெல்லாம் இடைவிடாது நூல் எழுதிக்கொண்டே இருப்பேன். யான் எழுதியவை பிறரால் எழுதப் பெறும் திறத் தனவல்ல16 என் காலத்திற்குப்பின் வேறெவரும் என்போல் எழுதவும் முடியாது17 சிலப்பதிகாரச் சிறப்பு என்னும் என் ஆராய்ச்சி நூலில் எல்லாம் வெள்ளிடைமலையாய் இருக்கும். அதன்பின் மாற்றுக் கருத்திற்கு இடமேயிராது18 உண்மையில் அயலிடத்திற் பெருங்கூட்டத்திற் காத் திருந்து கல்வி அறிவில் தாழ்ந்த அமைச்சரைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அம்மையாருக்காகத்தான் பார்க்க விரும்பு கிறேன். அதுவும் வீணாயின் எனக்கு மனவருத்தம் மிகுதி யாயிருக்கும். மானக்கேட்டுணர்ச்சியும் தோன்றும்19 தமிழ்ப் பற்றுள்ளவர்தான் என் நூல்களை வாங்க முடியும்20 அரசு (அகர முதலிக்கு) முதலில் 50 பக்கம் போலிகை (மாதிரி) எழுதி அனுப்புக என்று சொல்லிப் பயனில்லை. அது என்மீது நம்பிக்கை இன்மையைக் காட்டுவதாயும், அவமதிப்ப தாயும் இருக்குமாதலால் அது நான் செய்யேன். அமைச்சர் கலந்து கொண்டால் மாநாடு சிறக்குமென்றோ மாபெருங் கூட்டஞ் சேருமென்றோ கருதுபவருள் நான் ஒருவன் அல்லேன்.21 என் திருக்குறள் தமிழ் மரபுரை ஒன்றே என் தகுதியைக் காட்டப்போதுமே22 மறைமலையடிகள் ஒருவரே என்னைப் பாராட்டத் தக்கவரும் என் பெருமதிப்பிற்குரியவரும் ஆவர்23 பல்கம்மிய மாணவரிடம் (பாலிடெக்னிக்) நம் மானம் கடுகளவும் கெடாத வகையில் (கூட்டத்திற்கு) ஏற்பாடு செய்க. இன்றேல் வேண்டேன்24 யான் இன்று எழுதிவரும் மொழியாராய்ச்சி நூல்கள் முந்தி எழுதியவை போல் கருத்து வேறுபாட்டிற் கிடந்தரு வனவல்ல. நடுநிலையும் பகுத்தறிவுமுள்ள எல்லவரும் ஒப்புக் கொள்ளும்தரத்தன வாதலால் புத்தாண்டில் தமிழுக்குப் புத்து யிரும் பேராக்கமும் அளிப்பனவாகும் முதல் தாய்மொழி அல்லது தமிழ்மொழி என்னும் நூல் பொங்கலுக்குள் வரும். நூல்கள் வரவர உடனுடன் அச்சிடுக. கோவையிலும் உயர்திரு சண்முகஞ் செட்டியாரவர்கள் தலைமையில் சொற்பொழிவாற்றக் கேட்டிருக்கிறார்கள். இன்னும் முந்நூல்கள் முடியும் வரை வெளியூர் செல்லவோ வேறு கரு மத்தைக் கவனிக்கவோ முடியாது25 இனிமேல் வருகின்றவை இறைவன் வெளிப்படுத்திய உண்மைகள் ஒத்தவை. வேலையை விட்டு விட்டு நாலாண்டுகள் தொடர்ந்து எழுதக்கூடிய அத்துணை நூல்கள் என்னிடமுள்ளன. எழுத எழுத விரைந்து வெளியிடுவது தங்கள் கடமை எனக்குச் செய்வதெல்லாம் தமிழுக்குச் செய்வதென்று கருதிக்கொள்க. எனக்குப்பின் என்னைப் போல் ஆய்பவர் தோன்ற ஒரு நூற்றாண்டாவது செல்லுமாதலால் யாக்கை நிலையாமை நோக்கி இதுவரை முடிந்த முடிவாகக் கண்ட வற்றையெல்லாம் விரைந்தெழுதுவதில் இறங்கிவிட்டேன்.26 இந்தப் புத்தகம் வந்துவிடும். இனிமேல் யான் எழுதப் போகும் புத்தகங்கட்கெல்லாம் அதுவே அடிமணையாகும்27 முதல் தாய்மொழி உலக முழுதும் பரவ வேண்டிய நூல்களுள் ஒன்று. அதை ஒருமுறை முழுதும் படித்துவிட்டு உடனே அச்சிடுக. சுட்டு விளக்கம் எழுதும்போது ஆராய்ச்சிக் குறைவினால் சில அடிப்படையுண்மைகளைக் கண்டுபிடிக்க இயலாமற் போயிற்று. இன்று கண்டுபிடித்துவிட்டேன். ஆகை யால் இனிமேல் காலந்தாழ்க்காமல் என் வாழ்நாளெல்லாம் ஒவ்வொன்றாய் எழுதிக்கொண்டிருப்பேன்.28 வடமொழி வரலாறு வரையப்பட்டு வருகின்றது. அதன் பின் தலைநாகரிகம் எழுதப்படும். தலைநாகரிகம் முற்றும் வரலாற்று நூல் Wren & Martin நன்றாய் படித்திருக்கிறேன். தங்கள் விருப்பப்படி ஒரு நூல் எழுதவொண்ணும். ஆயின் தலைநாகரிகம் முடிந்தபின் தான் என்மனம் வேறொன்றிற் பதியும். பொறுக்க.29 வடமொழி வரலாறும், தலைநாகரிகமும் 30 புகழ்வேண்டி எழுதுபவையல்ல. தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை இத்துணைக் காலமும் (20 ஆண்டுகளாக) இதே நோக்குடன் கற்றும் ஆராய்ந்தும் இருக்கிறேன். ஆராய்ச்சி முடிந்தது. உண்மையும் கண்டுவிட்டேன். இதற்கென்றே கடவுள் என்னை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எனது உணர்ச்சி. அந்த இரு நூல்களும் கண்டால்தான் தங்கட்கு இவ்வுண்மை விளங்கும்31 என் படிப்பும் ஆய்வும் முற்றும். இனி மாதம் 1 நூல் எழுத முடியும். அதற்குரிய ஓய்வும் இங்குண்டு32 கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே என்று பெருமிதத்தின் நிலைக்களம் நான்கினைச் சுட்டும் தொல்காப்பியம். அந்நான்கனுள் தலையிடத்தைத் தலைமை யிடத்தாகத் தாங்கியவர் பாவாணர். அவர்தம் கல்வித் திறத்தை யும் ஆய்வு நுணுக்க அருமையையும் அறியாதார், தாம் எண்ணி யாங்குரைத்துத் தமக்குள் உவகையும் கொண்டனர். இந்நிலை யில் பாவாணர் வீறு எழுதல் இயல்பாயிற்று. தன்னுடை ஆற்றல் உணராரிடை வீறு மொழிதல் தகும் என்பது இலக்கண நெறியன்றோ! 5. மொழிநூல் முதன்மையும் தமிழியக்கமும் பாவாணர் மொழிநூல் திறம் தனி மாண்பினது. அவர்தம் மொழிநூல் திறம், அவர் இயற்றிய அனைத்து நூல்களிலும் பளிச்சிட்டாலும் முதல் தாய்மொழி, ஒப்பியன் மொழிநூல் பற்றிய பாவாணர் உட்கிடை, கடிதங்களிடையும் திகழ்தல் இறும்பூது பயப்பதாம். அவற்றுள் கிடைப்பன பல இவண் அறிவன சில எனது மொழிநூல் தமிழின் தமிழரின் சரித்திரத்தையே தொடக்க முதல் இறுதிவரை விளக்கமாய் எடுத்துரைப்பது. உங்கள் செல்விக்கு வற்றாத கட்டுரைக்கேணி. ஆரிய திராவிட வேறுபாடு, தமிழர் நாகரிகம். தமிழின் தாய்மை, ஆரியர் தமிழையும் தமிழரையும் கெடுத்த வழிகள், இனிமேல் தமிழை வளர்க்கும் முறைகள் முதலியன செவ்வனே விளக்கப்பட்டுள. இது வெளிவருமாயின் தமிழ்நாட்டில் ஒரு புத்துணர்ச்சியும் புதுக்கிளர்ச்சியும் தோற்றுவித்துக் காங்கிர தமிழரின் கண்ணைத் திறக்கும். ஆகையால் இதற்கு இயன்றவரை முயன்று பல்வகை உதவுக1 யான் இன்று முதற்றாய் மொழி வடமொழி வரலாறு என்ற இரு முதன்மையான நூல்களை எழுதுவதில் அழுந்தி யிருப்பதால் எங்கும் எதற்கும் வரமுடியாது. இவற்றை எழுதி முடித்தபின் தெரிவிப்பேன்2 முதல்தாய் மொழி, வெளிவந்தபின் எல்லாப் புலவரும் சொல்லாராய்ச்சி செய்யவொண்ணும்3 இனிமேல் எந்நாட்டிலும் எழுதப்படும் மொழிநூலுக்கும் இதுவே அளவையும் அடிப்படையுமாகும். இது இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது.4 முதல் தாய்மொழி எதிர்காலத் தமிழ்நிலைக்கு அரணான அடிப்படை.5 முதல் தாய்மொழி என் முப்பதாண்டு ஆராய்ச்சியின் விளைவு அது. அதனால்தான் எதிர்காலத் தமிழுக்கு ஆக்கம் உண்டாகும். இதுவரை எழுதப்பட்ட சொல்லாராய்ச்சி மொழி யாராய்ச்சிநூல் போன்றதன்று! தமிழ்ப் பகையையெல்லாம் தலைமடக்குவது6. முதல் தாய்மொழி என்பது தமிழுக்கு உயிர் நாடி என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். அதைப் பார்த்த பின்பு தான் தங்கட்கு அதன் அருமை பெருமை புலனாகும். 20 ஆண்டு ஆராய்ச்சியின் விளைவு அது. இதற்காகவே என் பிற முயற்சிகளையெல்லாம் இதுகாறும் நிறுத்திவைத்திருந்தேன். இதுவும் Origin of Culture என்னும் ஆங்கிலப் புத்தகமும் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வகை செய்யும் என்பதற்கு ஐயமில்லை7 ஒரு வீட்டின் உரிமையைக் காப்பது ஆவணம், ஒரு நாட்டின் உரிமையைக் காப்பது உண்மை வரலாறு. நம் நாட்டு வரலாறு மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் இருக்கின்றது. இவற்றை ஆளுங் கட்சி ஆரியச் சார்பானது. தமிழுக்கும் தமிழர்க் கும் மாறானது. ஒரு நாட்டிற் பல நூற்றாண்டாகக் குவிந்து கிடக்கும் குப்பைக் கூளங்களை ஆறுதான் அடித்துக்கொண்டு போகும். அதுபோல் நீண்டகாலமாகக் குவிந்து கிடக்கும் ஆரியக் குப்பைகளை வரலாறுதான் அடித்துக்கொண்டு போக வேண்டும். மேனாட்டார் இந்திய நாகரிகம் ஆரியரது என்றும் தமிழ் சமற்கிருதத்தால் வளப்படுத்தப்பட்டதென்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். கால்டுவெலும் அதைத் தான் வலியுறுத்தி யிருக்கிறார். தமிழ் வடமொழித் துணையின்றித் தழைத்தோங் கும் என்று ஓரிடத்துக் கூறியிருப்பது முரணானது. நம்மவர் இன்னும் அவர் நூலைச் சரியாகப் படிக்கவில்லை. மேனாடு இக்காலத்து அறிவியல் ஊற்றுக் கண். ஆயின் மொழிநூற்கு அடிப்படை தமிழாதலின் அதைமட்டும் மேனாட்டார் அறிந்திலர். அவர் ஒப்புமாறு தமிழ்த் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமைகளை நாட்டிவிடின் இங்குள்ள அறியாமையும் ஏமாற்றும் தாமாக நீங்கிவிடும். இப்பயன் நோக்கியதே என் The Primary Clacical Language of the World என்னும் ஆங்கில நூல். அதுவும் தமிழ் வரலாறும் இந்தியெதிர்ப்புப் பாட்டுக்கள் அடங்கிய இசைத் தமிழ்க் களஞ்சியமும் முந்தி வெளிவரும். அதன்பின் தமிழியக்கம் தொடங்கும்.8 என் ஆராய்ச்சி நூல்களையும் இந்தியெதிர்ப்புப் பாடலையும் வெளியிட்டுத் தமிழியக்கம் தொடங்கி ஆரியரையும் ஆரிய அடிமைப் பேராசிரியரையும் அம்பலத்திற் கிழுத்துத் தோற் கடித்தும் மேனாட்டார்க்கு ஒப்பத் தமிழ் திராவிடத் தாயும் ஆரிய மூலமும் என்பதை நாட்டியும் குமரிமுதல் சென்னை வரை நாளுக்கொரு நகரில் தங்கிப் பொதுமக்கட்கு உண்மை வரலாற்றையெடுத்து விளக்கியும்தான் தமிழைக் காக்க முடியும். இத்திட்டத்தை முப்பதாண்டுகட்கு முன்பே விடுத்தேன். ஆயின் என் நூல்களை வெளியிடப் பொருளுதவுவார் ஒருவருமில்லை.9 என் தமிழ்ப் போராட்டம் அண்மையில் தொடங்கும் எனக்குப் பின் தமிழையும் உண்மையான மொழிநூலையும் வளர்க்கப் பன்னிரு மாணவரை அமர்த்துவேன்.10 பாவாணரே ஓர் இயக்கமாக இருந்தவர், அவர் இயக்கம் தமிழியக்கம். அவர் பேச்சும் எழுத்தும் முறையே தமிழியக்கப் போர்ப்பறையும், வெற்றிப் பறையுமாம். குமரிமுதல் சென்னைவரை நாளுக்கொரு நகரில் தங்கிப் பொதுமக்கட்கு உண்மை வரலாற்றை எடுத்து விளக்கும் நோக்கம், அறிஞர் கால்டுவெல் வரலாற்றுப் பதிவாக இருக்கலாம்! எனக் குப் பின் தமிழையும் உண்மையான மொழிநூலையும் வளர்க்கப் பன்னிரு மாணவரை அமர்த்துவேன் என்னும் எண்ணமும் எண்ணிக்கையும், தொல்காப்பியரின் ஒரு சாலை மாணவர் பற்றிய செய்தியடிப்படையில் நேர்ந்தவை ஆகலாம். 6. வேர்ச்சொல் போலிகை (மாதிரி) வேர்ச்சொல் வரிசை சிலவற்றை எழுதி வெளியிட விரும் பினார் பாவாணர். அவர்தம் விருப்பத்தைக் கழக ஆட்சியாளர்க் குத் தெரிவித்தார். கழக ஆட்சியாளர் வேர்ச் சொல் வரிசைக்குப் போலிகை வரைந்து அனுப்புமாறு கேட்டார். அதற்குப் பாவாணர் விடுத்த மறுமொழியும் போலிகையும் வருமாறு. 8, புத்தூர் மந்தை, திருச்சி 31-7-40 ......வேர்ச்சொல் வரிசையைப்பற்றி நீங்கள் மாதிரி கேட்பது வியப்பாயிருக்கிறது. உங்கள் ஐயத்தையும் குறிக்கிறது. அறிஞரை நம்பி அவர்வயின் நல்ல வினையை ஒப்புவிக்கும் திறன் இன்னும் நம்மவர்க்கு ஏற்படவில்லை. ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் மாதிரி தருகிறேன் இறு-இறுதல் வளைதல், முடிதல், மடிதல், சூரியன், பயிர்கள்: வளைவதையும் பின் முடிவதை அல்லது மடிவதையும்; வளைவதையும் முடிவதையும் அது மடிதல் போல்வதையும் நோக்கு. ஒ.நோ : சாய்தல் - வளைதல், இறத்தல் சாயும்காலம் Eve-Evening சாய் -சா-இறு-இற. முடம்-வளை, முட-முடி-மட(ங்கு) மடி. இறு+ஐ இறை-வளைந்த முன்கை. ஒ.நோ : elbow. இறு+ஆ=இறா-இறால் இறாட்டு=வளைந்த கூனி ஒ.நோ. கூன்+இ=கூனி குனி-கூன்=வளைவு. இறால்=தேன் கூடு (வளைந்தது வட்டமானது). இறாட்டி = எரு (தேன் கூடு போன்றது) வறட்டி என்றும் சொல்லலாம். இறுத்தல் = சூரியன் மேற்கே அடைதல் அல்லது தங்குதல் இறு+ஐ=இறை, கடவுள் அரசன் (எங்கும் தங்கியிருப்பவன்) இறை+அன் = இறையன் இறுத்தல்=தங்குதல், பாளையமிறங்கல். இறுதல்=முடிதல், இறு+உ அல்லது வு - இறவு. இறுதல்=வளைதல் சாய்தல். இறப்பு, இறவாணம், சாய்ந்த தாழ்வாரம். இன்னும் விரிக்கிற் பெருகும். இறு என்னும் சொல் இற(ங்கு) என்பதினின்றும் பிறந்தது. இறத்தல்-இறங்குதல். இற-இறகு-இறங்கு. இற என்பது அண்மையும் கீழ்நிலையும் குறிக்கும். இகரச் சுட்டடியாய்ப் பிறந்தது. சூரியன் கீழேயிறங்கும் போது வளைவதனால் இறங்கற் கருத்தில் வளைவுக் கருத்தும் முடிவுக் கருத்தும் தோன்றின வென்றறிக. -இங்ஙனம் எத்தனை சொற்களுக்கு வேண்டுமானாலும் எழுதலாம். யான் விரிவாயும் விளக்கமாயும் எழுதினால் நீங்கள் உங்கட்கு வேண்டியவாறே சுருக்கிக் கொள்ளலாம். என்ற வரைந்தார் பாவாணர். வேர்ச் சொல்லாய்வு புலமக்கட்குரியது, புலமக்களுள்ளும் அதன்பால் ஆர்வமிக்கார்க்கும் அதன் பயனுணர்ந்து அறிந்து கொன்ன விழைவோர்க்குமே இன்பம் சேர்ப்பது. அதனை ஐயமறத்தெள்ளத் தெளிவாக்கிக் கொள்ளல் அச்சீட்டுக்கு வாய்ப்பாம் என்று கருதினார் கழக ஆட்சியாளர் வ.சு. ஆதலால் மீண்டும் வேர்ச்சொல் பற்றி விளக்கம் வேண்டினார். மீண்டும் வேண்டிய வேர்ச்சொல் விளக்கத்திற்கு 29-8-40இல் மறுமொழி விடுத்தார் பாவாணர். வேர்ச்சொல் வடிவைப்பற்றி விளக்கி எழுதியும் நீங்கள் இன்னும் தெளியாதிருப்பது ஐயத்திற்கிடமாயிருக்கிறது. ஒரு பக்கத்திற்குள் 4 வேர்ச் சொற்றிரிபுகள் அடங்கமளவு (25 பக்கம் வருமாறு) 100 முக்கியமான வேர்களைப்பற்றி எழுதியனுப்புவேன். (உ-ம்.) வேள்-வேண் (வேண்+அவா=வேணவா). வேள்+து=வேண்டு. வேள்+வி=வேள்வி. வேள்+கை=வேட்கை. வேள்+தம்=வேட்டம். வேள்(பெ). வேள்+ஆண்=வேளாண். வேள்+ஆண்மை=வேளாண்மை. வேள்+ஆன்=வேளான். வேள்+ஆளன்=வேளாளன். வேள்+கோ=வேட்கோ. வேட்டம்+அன்=வேட்டுவன், வேடுவன், வேடன், யான் விரிவாக எழுதினால் நீங்கள் வேண்டாததை விலக்கிக் கொள்ளலாம். இனிமேல் இதைப்பற்றி எழுத முடியாது. பாவாணர் தாம், அறிஞரை நம்பி அவர்வயின் நல்ல வினையை ஒப்புவிக்கும் திறன் வேண்டும் என்று முன்னமே தெரிவித்து விட்டாரே! அதனால், இனிமேல் இதைப்பற்றி எழுத முடியாது என்று சொல்லிவிட்டார். 14-9-40இல் வேர்ச்சொல் சுவடி எழுதி முடிந்தது என்று எழுதுகிறார். 25-9-40 இல், வேர்ச்சொற் சுவடியில் இறு என்னும் வேரின் கீழ், இறாட்டி = வட்டமான எரு என்பது ஓர் உன்னிப்புத் தான். வறட்டி என்ற உலக வழக்குச் சொல் வல் என்னும் வேரடியாயும் வறள் என்னும் பகுதியடியாயும் வந்தது. வறள்+து=வறட்டு. பிறவினை. வறட்டி=காயவைத்த எரு. இதைக் குறித்துக் கொள்க என்று குறிக்கிறார். மேலும், கீழ்மேல் முதலிய சொற்களுடன் கீழோர், கீழை, கிழக்கத்திய, மேலோர், மேலை, மேற்கத்திய முதலிய சொற்களை வேண்டுமாயின் சேர்த்துக்கொள்ளலாம். இங்ஙனமே பிற பெரு வழக்குச் சொற்களும். வணங்கு என்பதன் கீழ் வாங்கு = வளை என்பதையும் சேர்த்துக் கொள்க என்கிறார். சொல்வேர்காண் வழிகள் என்னும் கட்டுரை ஒன்று சிலம்பு 41 பக்கம் 316 இல் உள்ளது. சிலம்பு 39 இல் அம், உல் என்னும் வேர்ச்சொல் விளக்கங்களை விரிவாகத் தொடங்கி, அதன்பின் வந்த சிலம்புகளில் வேர்ச்சொற் கட்டுரைகளே பெரும்பாலும் வரைகின்றார். வேர்ச் சொற் கட்டுரைகள் என்னும் நூல் அவற்றைத் தொகுத்து வெளிவந்தது. மேலும் தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள் என்னும் தலைப்பிலும் 25 கட்டுரைகள் வெளிவந்தன. நாற்பது ஆண்டு களுக்கு முன்னே சிற்றருவியாக வழிந்த வேர்ச் சொல்லாய்வு, பின்னே பொங்குமா கடலினின்று பொழியும் பேரருவியாக விளங்கித் தோன்றியமையைப் பாவாணரைப் பயின்றார் அனைவரும் அறிந்துகொள்வர். 7. சொல்லாக்க விளக்கங்கள் பாவாணர் தொடர்பாளருள் பலரும், புலமைத் தொடர் பாளரே. அன்றியும், அவர் வழங்கும் ஒவ்வொரு சொல்லையும் முத்தென மணியெனப் போற்றி அவர் வழிப்பட்டு அவரை வீர வழிபாடு செய்வதில் விழுமிய இன்பம் காணும் பேற்றாளர் களே! ஆதலால், அவர்தம் சொல்லாய்வு பொருளாய்வு விளக்கங் களை வேண்டி வேண்டி அஞ்சல் வழியே பயன்கொண்ட வர்களே! அவருள் தம் பொருள் தமிழ்ப் பொருளாம் என்னும் உணர்வாளர் உதவிய கொடையே இப்பகுதிக்கு மூலமாம், இவை பயன்பாடு கருதி அகர முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. பொருளுக்கு உடையாரைச் சொல்தோறும் சுட்டக் கூடாமை யால் பொதுச் சுட்டின் அளவு அமைகின்றதாம். ஆதி : ஆதல் = உண்டாதல், ஆ-ஆதி = தோற்றம், தொடக்கம் எனலாம். தி ஈறு. இலக்கம் : இலக்கம் சாய்ந்தது என்னும் தொடர் குறிஞ்சிக் கலி மூலத்தில் உள்ளதாக எனக்கு நினைக்கவில்லை எக்கலியில் என்று திட்டமாய்த் தெரிவித்தால் பார்த்துச் சொல்கின்றேன். சமற்கிருதத்தில் நாரத்தைக்கு லக்ஷ என்றொரு பெய ருண்டு. அது தமிழில் இலக்கம் என்றுதானிருக்கும். எல்லேயிலக்கம் என்று தொல்காப்பியத்திலிருப்பதால் இலக்கம் சாய்ந்தது என்னும் பொருள்படும், எல்=கதிரோன். உத்தரம், தக்கணம் : உ+தரம்=உத்தரம். உயர்ந்த வடக்கு தக்கு=தாழ்வு. தக்கு - தக்காணம், தாழ்ந்த தெற்கு உரு : உருத்தல் = அழலுதல் (புற 25. 10). உரு-குரு=வெப்பத்தால் தோன்றும் சிறு கொப்புளம். கரம் (இந்தி)-சூடு. கிரீஷ்ம (வடசொல்)=கோடை. சாணைக்கல்லில் நெருப்புத் தோன்றும். கபடு, என்று நீருயிரி ஒன்றுமில்லை. கமட(ம்)(வ) = ஆமை. இச்சொல் கமடு என்று வரலாம். குஞ்சு தின்னிக் காற்று = இச்சொல் உலக வழக்காயிருத்தல் வேண்டும். நூலாசிரியரின் சொந்த ஊர்ப்பக்கம் கேட்கச் சொல்க. கிறுபம்=இச் சொல்லும் தமிழகர முதலிகளில் இல்லை. கிருத்திரிமம் (வ) குறும்பு. கிறாம்-குறும்பன் (யாழ்ப்பாண வழக்கு). ஊழ் : ஊழ்தல்=முதிர்தல், பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பன போல் (சீவக.1560) ஊழ்த்தல்=முதிர்தல், காந்தளூழ்த்துச் சொரிவதுபோல் (சீவக. 1742) ஊழ் =1. பழமை - ஊழ்படு காதலாளை (சீவக.1452) 2. பழவினை - ஊழிற் பெருவலி யவுள (குறள். 380) 3. முதிர்வு - பயம்புக் கூழுற்றலமரும் (மலைபடு. 133) ஊழ்-உழுவல்=பழமையாக அமைந்த வினை, செய்தான் அதன் பயன் நுகர வேண்டும் என்பது முறைமையாதலால் முறை என்பது ஊழ் என்பதற்கு வழிப் பொருளாயிற்று. முறை=ஊழி, ஒழுங்கு, தடவை, செங்கோன்மை, அடைவு வரிசை (Turn) பழமை=முறை, யாழ்வழிப்படூஉம் முன்வினை முன்னும் பின்வினை பின்னும் வருவதனாலும் ஊழ் முறை எனப்படும். எரியம் : நரகத்திற்குள்ள தமிழ்ச் சொற்கள் அளறு, எரி, நிரயம் முதலியன. அளறு திருவள்ளுவர் ஆண்ட சொல். அது, சேறு என்பதை அடிப்படைப் பொருளாகக் கொண்டது. எரி - நெருப்பு, அதை அம் ஈறு சேர்த்து எரியம் என்று வழங்குவது தெளிவாயிருக்கும். நிரயம் என்பது நரகம் என்னும் வடசொல்லின் திரிபாகச் சொல்லப்படுகின்றது. ஆதலால் அதை விட்டுவிட வேண்டும். கும்பி, புலவு, ஊழ்த்தல், அள்ளல், அருஞ்சிறை, இருள் என்று வேறு சில சொற்களும் பிங்கல நிகண்டில் நரகப் பெயரா கக் கூறப்பட்டுள. இவற்றுள் கும்பி வடமொழியிலுமிருப்பினும் கொள்ளத் தக்கதே, கும்புதல்=தீய்ந்து போதல். சோறு கும்பி விட்டது என்னும் வழக்கை நோக்குக. புலவு = வெறுப்பு, ஊழ்த்தல் = கெடுதல், அள்ளல் = சேறு. ஏரிக்காடு என்று யார் சொன்னது! ஏட்டுச் சான்றுண்டா ஏர்க்காடு, கொத்துக்காடு எனக் காடு இருவகை. முன்னது உழுவது, பின்னது மண்வெட்டியாற் கொத்துவது. 15-4-68 மலையடிவாரத்தில் ஏர்க்காடு இருந்தாலும் அப்பெயர் பெறும். ஏறைக்கோன் என்றொரு சிற்றரசன் புறநானூற்றிற் பாடப்பெற்றுள்ளான். ஏறைக்குட்டி என்று பெயர் கொண்டார் குமாரசாமிப் பட்டியிலுண்டு. ஏறைக்காடு என்பதும் ஏற்காடு என மருவியிருக்கலாம். ஏரிக்கரையூர் எங்குமுளது. கோடைக் கானல் நீலமலை முதலிய இடங்களிலுமுண்டு. காடு என்னும் சொல் கவனிக்கத்தக்கது. ஏர்க்காட்டிலுள்ள முதியோரையும் வினவியறியலாம். கண்டகம் : கண்டகம் என்பது ஒரு முகத்தலளவை. சேலம் மாவட்டத் திலுளது. அது 2கலமா4 கலமா என்று தெரியவில்லை. உடனே மூத்தோரைக் கேட்டுத் தேரிவிக்க. என் இசைத் தமிழ்க் கலம்பகத் தில் அது வருகின்றது. அதற்குப் பொருளும் அளவும் குறித்தல் வேண்டும். கண்டகம் எவ்வளவென்று தாங்கள் முன்பு எழுதி விடுத்த அட்டை காட்டுப்பாடியிலுள்ளது. அது நூலில் வருகின்றது, அளவை மறந்து போனேன். இங்கொருவர் 40 மரக்கால் என்று சொன்னார், சரிதானா! உடனே உழவரையும் கூல வணிகரையும் கேட்டுத் தெரிவிக்க. கவி : கவி என்ற வட சொற்கு வடமொழி அகர முதலியில் சரியாக மூலம் காட்டப்படவில்லை. கூ (கூவு) என்றும் கவ (கஞ்சத்தனமான) என்றும் இரு மூலங்கள் காட்டப்பட்டுள. தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் மேற்கணக்குப் (பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்) பாடல்களிலும் கவி என்ற சொல் இல்லை. கி.மு. 1300 போல் பாடப்பட்ட இருக்கு வேதத்தில் அச்சொல் உள்ளது. வடசொற்கள் தமிழில் மிகுதியாகக் கலக்கத் தொடங்கிய பின்னரே கவி என்னுஞ் சொல் இலக்கியத்திற் புகுந்தது. கவிகைக் கொடுப்ப என்று சிலப்பதிகாரத்தில் வருவதால் (3.135) எ-ஆம் நூற்றாண்டினதான திவாகரத்தில் அச்சொல் குறிக்கப்பட்டுள்ளது. இந்தியும் சமற்கிருதமும் அடர்த்து வரும் இக் காலத்தில் வடசொற்களை அறவே களைந்து தமிழை முழுத் தூமைப்படுத்தல் வேண்டும். அல்லாக்கால் தமிழில் செய்யுளை அல்லது பாவைக் குறிக்கச் சொல்லில்லை யென்றே இந்தியரும் வடவரும் கருதி இகழ்வர். கிழக்கு மேற்கு : கீழ்-கீழ்க்கு-கிழக்கு. மே-மேல்-மேற்கு. குமுகாயம் : கும்முதல்=கூடுதல் குமுகம்-சமூகம்(வ) ஆயம்=பெருங் கூட்டம் குமுகம்+ஆயம் = குமுகாயம் (மரூஉப்புணர்ச்சி) சமுதாயம்(வ) குரு : குருவிக் கோல் என்ற சொல் அகர முதலியில் இல்லை. இலக்கியத்திலும் வந்துளதாகத் தெரியவில்லை. குருவிக்கல்=செம்மண், செந்நிறக்கல். குரு=செந்நிறம், அரத்தம். குருவெறும்பு=செவ்வெறும்பு குருவிந்தக்கல்=மாணிக்கம், சாணைக்கல், காவிக் கல். கேடட் : Cadet என்னுஞ் சொற்குப் படைப் பயிற்சி மாணவன் என்பது மிக நீண்டுள்ளது. அதைப் படைமாணி என்று குறுக்க வேண்டும். மாணி=மாணவன். Student in naval or military nor airforce college என்பதே ஆக்கசுப் போர்டு சிற்றகராதி கூறும் பொருள். மூலப் பொருள் சிறு தலைவன் என்பதே. Cadet (French) அம்மான் = அம்மையின் உடன் பிறந்தவன் (தாய்மாமன்) அந்தன் = தந்தை. அத்தன் > அத்தை = தந்தையின் உடன் பிறந்தவள். அண்ணாமலை நகர் 6.11.59 வான், ஒலி இரண்டும் தொன்றுதொட்டு வழங்கிவரும் தூய் தென் சொற்கள். Radio என்னும் ஆங்கிலச் சொற்கு நேர் தென்சொல்லாக அவை இரண்டையும் இணைத்தது சில்லாண்டுகட்கு முன்தான். சமற்கிருத தேவமொழி என்றும், பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் நம்பித் தமிழர் பகுத்தறிவிழந்து விட்டதனால் ஆரியச் சார்பான கட்சிக்காரர் எதைவேண்டுமெனினும் சொல்லலாம். வானொலி வடசொல்லென்று சொல்லக் கேட்ட அவையோர் அமைதியாயிருந்ததே அவரின் பகுத்தற் வின்மைக்குப் போதிய சான்றாம். வான், ஒலி இரண்டும் தொல்காப்பியத்திலும் உள்ளன. வான் + அம் = வானம். வான் முகிலையும் மழையையும் வானத்தையும் குறிக்கும் தெலுங்கரும் மழையை வானம் என்பர். அண்ணாமலை நகர் 19.8. 59 இன்று என் சம்பள வேலையும் வேறு வருவாயும் இன்றி யிருப்பதால் குறைந்த பக்கம் இருபது உருவா வேனும் விடுத்தால் தான் கட்டுரை யனுப்ப முடியும். காட்டுப்பாடி 10.10. 65 வெளிவரவேண்டி என் நூல்கள் ஏறத்தாழ முப்பது. அடுத்து வரவேண்டியவை : தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, திருக்குறள் தமிழ் மரபுரை என்பன. இவற்றுள் ஏதேனும் ஒன்றுக்குத் தங்கள் களக்காட்டு நண்பர் உதவலாம். ஆங்கில நூல் வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்கின்றார். பர்.மெ. சுந்தரம் அவர்கள். சில மாதங்கட்கு முன் சொன்னார்கள். அது தாங்கள் குறித்துள்ள கொடைவள்ளல் நினைவு மலர்க்குக் கருத்தின் போலும். கொடைவள்ளல் அரிராம் சேட்டு முக்கூடல் செக்கலால் ராம் சேட்டுக் குழும்பின் உரிமையாளர் என்று நினைக்கின்றேன். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதுபோல் இறந்தும் ஈந்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. காட்டுப்பாடி 13.11. 65 நாளை நின்று சென்னை சென்று பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலை அச்சிற்குக் கொடுக்கப் போகிறேன். பொருள் அதற்குதவியவர் திருச்சி மாவட்டத் தமிழன்பர். காட்டுப்பாடி 13.11. 65 The Primary Classical Language of the world (முதல் இலக்கியச் செம்மொழி) என்னும் ஆங்கில நூல் கால்டுவெலார் ஒப்பியல் இலக்கணம்போல் உலக முழுதும் பரவும். கொடை வள்ளல் சேட்டு புகழும் பரவும். நினைவு நூல் என்று குறிப்பது மட்டுமன்றி அவர் படமும் பொறிக்கப்பெறும். அவர் சிறப்புப் பண்புகளை எடுத்துக் காட்டும் ஓர் (தென்மொழி) மன்னைக் காஞ்சிப் பாவும் இயற்றிச் சேர்க்கப்படும். நூல் நூற்பதாண்டு ஆராய்ச்சியின் விளைவு. வரலாறு மொழிநூல் மாந்தனூல் ஆகிய முந்நூற் சான்றுகளொடு கூடியது. புதைந்து கிடக்கும் ஓர் அரும் பேருண்மையை உலகிற் கெடுத்துக் காட்டுவது. குல மத கட்சிச் சார்பற்றது. எவரும் மறுக்கொணாதது. தமிழின் தொன்மையையும் தமிழின் பெருமையையும் முதன் முதலாய் உலகுக்கறிவிப்பது. சுருங்கச் சொல்லின் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை நாட்டுவது. முடிக்கல் (Crown) அளவில் 500 பக்கமும் பகுதி அளவில் (Deny) 400 பக்கமும் வரும். ஈராயிரம் உருபாவிற்கு மேற்படாது. எவ்வகையிலும் ஈராயிரத்திற்கு மேற்செல்லாதவாறு பார்த்துக்கொள்வேன். இயலுமாயின் ஆயிரத்தைந்நூற்றிற்குள் முடிக்கப் பார்க்கிறேன். பொத்தக அளவு (Demy) அல்லது அரைய (Rayal) அளவாயிருக்கும். முடிக்கல் (Crown) அளவாயிருக்காது. அது மிகச் சிறிது. எழுத்து 10 அல்லது 11 புள்ளியாயிருக்கும். தாள் மேல்கரை (West Coast)26 சேர் (Pound) கொண்டது நல்லது. இவையெல்லாம் அச்சகத்தாருடன் கலந்து முடிவு செய்தல் வேண்டும். காட்டுப்பாடி 22.11. 65 இலத்தீன் கிரேக்கம் முதலிய ஆரிய மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற்களைத் துல்லியமாய்க் காட்டுதற்கு (ய.i.ர.ஐ.டி ஆகிய)நெடிற்குறியெழுத்துக்களும் ர ஃ n n ட எ n h அல்லது ம ச, ள, b, ., ., -, -, -, -, முதலிய) மெய் வேறுபாட்டுக் குறியெழுத்துக்களும் வேண்டும். இவை திரு. பூபதியார் அச்சகத்தில் இருப்பதும் இன்மை யும் தெரியவில்லை. இல்லாவிடின் உடனே சென்னை வார்ப் பகங்களில் வாங்கிக் கொள்ளல் வேண்டும். அதற்கிசையாவிடின் சென்னை அச்சகங்களுள் ஒன்றைத்தான் நாடவேண்டும். கூலி அதிகமாயினும் வேலை விரைந்து நடக்கும் அதற்குச் சின்னராசு அவர்கள் இசைவார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் தேர்விற்குப் பணம் கட்டிவிட்டதனால் ஒரு கவனமாய்ப் பழத்தலே நலம். தென்மொழியாசிரியர் துரை மாணிக்கத்திற்கு இந்தி யெதிர்த்தது பற்றி 4 மாதம் கடுங்காவல் இங்குள்ள சிறைக் கோட்டத்திலிருக்கிறார். காட்டுப்பாடி 30.11. 65 திரு. கா. அப்பாத்துரை என் நெருங்கிய நண்பர்; என் னோடு ஒத்த கருத்தினர்; சிறந்த தமிழன்பர். இரு கிழமைக்குமுன் இங்கு என் அறைக்கு அவரை வர வழைத்திருந்தேன். வந்தார். நம் ஆங்கில நூல் மெய்ப்புத் திருத்து மாறு கேட்டேன். இணங்கினார். ஆயின், அவர் தேனாம் பேட்டையில் இருப்பதாலும், இங்கு நாள்தொறும் வர உடல்நிலை இடந்தராமையாலும், நானே திருத்தின் சில சிறு மாற்றங்கள் அவ்வப்போது செய்ய வாய்ப்பிருப்பதனாலும் அவ்வேற்பாடு விடப்பட்டது. நூல் வெளியிட இறந்த நாளினும் பிறந்த நாளே சிறந்ததாகும். ஆதலால் அம்முடிவு மிகப் பாராட்டத் தக்கதே. சென்னை 8 சுறவம் (தை) 1997 என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்? (ஞா. தேவநேயன்) நான் வடார்க்காடு மாவட்ட ஆம்பூரில் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியிற் படிப்பு முடிந்தபின், நெல்லை மாவட்டப் பாளையங் கோட்டையில் திருச்சைவ விடையூழியக் கூட்டரவு (C.M.S) உயிர்நிலைப்பள்ளியிற் பள்ளியிறுதிக் கடவைக்குச் சேர்ந்து, 4ஆம் படிவத்தில் பூத நூல் உடல் நூல் நிலைததிணை நூல் (Botany) தொகுதியையும், 5-ஆம் படிவத்தில் சுருக்கெழுத்து தட்டச்சு கணக்கு வைப்பு (Book-keeping) த் தொகுதியையும், 6-ஆம் படிவத்தில் வரலாறு தமிழ்த் தொகுதியையும், சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். அன்று ஆங்கிலப் பற்றாள னாகவும் பேச்சாளனாகவும் மாணவர் (ஆங்கில) இலக்கிய மன்றச் செயலாளனாகவும் இருந்ததனால், ஆங்கில இலக்கியத்தைக் கரை காணவும், ஆக்கசுப் போர்டு (Oxford) என்னும் எருதந்துறையிற் பணி கொள்ளவும் விரும்பினே னாயினும்; இறுதியில் தமிழ் கற்றதினாலும், இசைப்பாட்டும் செய்யுளும் இயற்றி வந்ததனாலும், இசைத் தமிழ்ப் பித்தனான தனாலும் நான் அறியாவாறு இறைவன் என் மனப்பாங்கை மாற்றியதானாலும், நான் கற்ற ஆம்பூர்ப் பள்ளியிலேயே. அது உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியுற்றிருந்தபோது, உதவித் தமிழாசிரியனாக 1921 ஆம் ஆண்டில் அமர நேர்ந்தது. அதன் பின், அப்பதவிற்கும் தலைமைத் தமிழாசிரியப் பதவிக்கும் முழுத்தகுதி பெறுமாறு, 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழச்சங்கப் பண்டிதத் தேர்வெழுதித் தேறினேன். அதனால் எழுந்த செருக்கினாலும் தமிழ்வெறியினாலும், ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து நான் ஆங்கிலம் பேசக் கூடாதென்றும் பிறர் பேசின் செவி மடுக்கக் கூடாதென்றும், சூளிட்டுக் கொண்டேன். அம்மயக்குப் பத்தாண்டு தொடர்ந்தது. அதனால், தமிழாராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டேனாயினம், ஆங்கிலப் பேச்சாற்றலை இழந்து விட்டத னால், ஆங்கிலப் பட்டம் பெறும்வரை கல்லூரியுட் கால் வைக்க முடியாது போயிற்று. அதனாற் பதவியுயர்வும் பொருளியல் முன்னேற்றம் இல்லாதுபோயின. 1938இல் நான் திருச்சிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் (Bishop Heber) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரிய னாக இருந்தபோது திரு. (C) அரசகோபாலச்சாரியார் தமிழ் நாட்டு முதலமைச்சராகி இருநூறு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார். உடனே தமிழர் எதிர்ப்பு எழுந்தது. இந்தி புகுத்தப்பட்ட பள்ளிகட்கு முன் மறியல் செய்த தமிழ்த் தொண்டர் சிறையிடப்பட்டனர். பெரியாரும் அதற்காளாயினர். முறைப்பட்ட தமிழ்க் காப்பு வகுப்பு வேற்றுமையக் கிளர்ச்சியாகத் திரிக்கப்பட்டது. சிறைத் தண்டனையுற்ற தமிழ்த் தொண்டரின் தற்காப்பிற்காக ஒப்பியன் மொழிநூல் - முதற்புத்தகம் - முதற் பாகம் என்னும் நூலை எழுதினேன். ஆயின், அதனை வெளியிடத் தமிழ்ச் செல்வரும் தமிழ்க் கட்சித் தலைவரும் முன்வரவில்லை; சிறு தொகையும் உதவவில்லை. அதனால், என் அடங்காத் தமிழ்ப்பற்றும் மடங்காத் தன்மானம், என் கைப்பொருள் கொண்டு அதை வெளியிட்டு ஓராயிரம் ரூபாஇழக்கச் செய்தன. அங்ஙனந் தாங்கொணாச் சூடு கண்டதினால் அதன்பின் என் சொந்தச் செலவில் எத்தகை நூலையும் வெளியிட மிகவும் அஞ்சினேன். துணிந்து வெளியிடப் பொருளும் என்னிடமில்லை. அந்நிலையில், இலக்கணம்., சொல்லாராய்ச்சி, மொழி யாராய்ச்சி, அரசியல், வரலாறு, விளையாட்டு முதலிய இலக்கியப் பொருள் பற்றியனவும், புலமக்களன்றிப் பொதுமக்கள் ஒவ்வாதனவும், விரைந்து விலையாகாதனவும், ஆரிய வெறியர்க்கு மாறானவும், வெளியீட்டிற்குப் பெருஞ் செலவு செய்ய வேண்டியனவும், சிறியவற்றோடு பெரியனவுமான இயற்றமிழ் இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத் தாய், சுட்டுவிளக்கம், முதற்றாய் மொழி, பழந்தமிழாட்சி, மாணவர் உயர்தரக் கட்டுரை யிலக்கணம் (2 பாகம்) என்னும் எண்ணூல்களொடு, நான் ஏற்கெனவே வெளியிட்ட கட்டுரை விரைவியல் என்னும் நூலையும், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக ஆட்சி மேலாளரான தாமரைத் திரு.வ.சுப்பையாப் பிள்ளை அவர்கள் வார முறையில் (Royalty System) ஒவ்வொன்றாக வெளியிட்டு, விற்பு விலையில் நூற்றுமேனி 15 விழுக்காடு உரிமைத் தொகையும் ஆண்டிற்கிரு முறை கணித்து ஒழுங்காக அனுப்பி வந்திருக்கின்றார்கள். இதனால், நான் ஒருபோதும் வெளியிட்டிருக்க முடியாத பல அரிய நூல்கள் வெளிவந்து என்பெயர் உண்ணாடும் வெளிநாடும் பரவியதுடன். என் தமிழ்த் தொண்டும் பன்மடங்கு சிறந்து வந்திருக்கின்றது. அவர்கள் ஒப்பந்தப்படி விடுத்துவந்த அரையாட்டைத் தொகை, என் குறைந்த சம்பளக் காலத்தும் வேலையில்லாக் காலத்தும் பெரிதும் உதவியதென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை. அதோடு, அவ்வப்போது நான் செந்தமிழ்ச் செல்விக்கு, விடுத்த வேர்ச்சொல் பற்றிய என் உரிமைக் கட்டுரைகட்கும், அவர்கள் அளித்து வந்த அன்பளிப்புத் தொகை எனக்குப் பேருதவியாயிருந்ததென்பதைச் சொல்லாமலிருந்ததற்கில்லை. இனி, அவர்கள் என் சொந்த வெளியீடான தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழி நூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் நூல்கள் அச்சானபோதும், எனக்கு மறைமலையடிகள் நூல் நிலையத்தில் தங்க இடந்தந்தும், இறுதிப் படிவ மெய்ப்புக்களையெல்லாம் மூலத்துடன் ஒப்பு நோக்கிப் பொறுத்தமையாகவும் செவ்வையாகவும் திருத்திக் கொடுத்தும், அச்சானவுடன் அழகாகக் குறித்த காலத்திற்குள் கட்டடம் செய்வித்தும். அனுப்பச் சொன்ன இடங்கட்கெல்லாம் தப்பாது அனுப்புவித்தும், வேண்டும் போதெல்லாம் வேண்டிய அளவு கடன் தந்துதவியும், பல்வேறு வகையிற் செய்துவந்த உதவியும் வேளாண்மையும் முற்றச் சொல்லுந் திறத்தவல்ல. அவற்றுள் சிறப்பாக, அண்மையில் வெளிவந்த திருக்குறள் தமிழ் மரபுரைக்கு அவர்கள் திருத்தம், அச்சீடு, கட்டடம், விடுக்கை, கடன் கொடுப்பு ஆகிய ஐவகையிற் செய்த அரும் பேருதவிக்குத் தமிழுலகனைத்தும் என்றும் கடப்பாடுடைய தாகும். தங்கள் பல்துறைப் பணிகட்கிடையே இறுதிப்பதின் படிவங்களையும் மெய்ப்புத் திருத்தியதுடன், ஈற்றிருபடிவங் களைத் தங்கள் சொந்தப் பணியாட்களைக் கொண்டும் அடுக்குவித்து, ஒரு கிழமை வினையை ஒருநாட்குள் முடித்துப் பறம்புக்குடி உலகத்திழ்க் கழகத் திருவள்ளுவர் ஈராயிர ஆட்டை விழாவிற்கு நூறு படிகள் விடுத்துதவியது ஓரளவு இறும்பூதுச் செயலேயாகும். சுருங்கச் சொல்லின், 1968 நவம்பர் முதற்பகல் பாரி அச்சகத்தில் அச்சிடக் கொடுத்த என் திருக்குறள் தமிழ் மரபுரை, 1969 திசம்பர் 24ஆம் பக்கல் வெளிவரச் செய்தவர்கள் திரு. வ. சுப்பையாப்பிள்ளை அவர்களே. அவர்கள் தலையிட்டிரா விடின், அவ்வுரை குறைந்த பக்கம் ஆறு மாதம் பொறுத்தே வெளிவந்திருக்கும். அதனால் எனக்குப் பெரும் பொருளிழப்பும் நேர்ந்திருக்கும். இனி, அண்மையில் நான் என் வலக்கண் படல அறுவை செய்து கொண்டபோது, இருகிழமை படுக்கையும் உணவும் மருந்தும் விடுத்தும் ஊர்தியனுப்பியும் உதவியதை ஒருபோதும் மறவேன். என் நூல் வெளியீட்டிற்கு என் உடல் நலமும் இன்றி யமையாதலின், இதையும் இங்கே கூற வேண்டிதாயிற்று. இங்ஙனம் பல்வகையிலும் என் தமிழ்த் தொண்டை இயல் வித்து, மும்மொழிப்புலமை செம்மையிற் பெற நிறைபுல முடியாம் மறைமலையடிகளும் என்னை உளமுவந்து பாராட்டு மாறு செய்த திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கட்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு, உலகத் தமிழ்க் கழக உறுப்பினரையும் ஏனைத் தமிழன்பரையும், என்றும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளையே வாங்கியும் வாங்குவித்தும், அவர்கள் வெளியீட்டுக் கலை வெற்றியை வியந்தும் நயந்தும், இன்னும் கழிபல்லாண்டு கட்டுடம்புடன் வாழ்ந்து அவரவர்கள் தங்கள் செந்தமிழ்த்தொண்டைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கிவர வேண்டுமென்று, ஆர்வத்துடன் வேண்டிக் கொள்வதேயன்றி வேறன்று. சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத் திருவள் ளுவம்வாழி- செய்வெற்றச் சுப்பையா வாழி சொரிமுகில் நீடுழி தப்பாது வாழி தமிழ். செய்-செயல்; வெற்றம்- வெற்றி. இணைப்பு தமிழர் மதம் பிள்ளையார் வணக்கம் தமிழரதன்று. கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்குப்பின் ஆரியர் புதிதாகப் படைத்தது. ஓ என்ற மூலமந்திர வாக்கு யானை வடிவொத்திருத்தல் பற்றி யானை முகத்தெய்வமென்று தோற்றி, சேயோன் அல்லது சிவன் என்று ஒரு தெய்வமாக இருந்ததை வேறு தெய்வமாக வகுத்துத் தந்தையும் மக்களுமாகக் கட்டிப் புராணங்களும் வரைந்து, தமிழரின் உயர்ந்த கடவுள் மதத்தைச் சிதைத்து ஆரியப் படுத்திவிட்டனர். மாந்தன் முகத்திலேயே கடவுள் இல்லை. அங்ஙன மிருக்க யானை முகத்தில் எங்ஙனம் இருக்க முடியும்? சிவவணக்கம் அல்லது கடவுள் வணக்கம் இருந்தாற் போதும். இதன் விரிவான விளக்கத்தை என் தமிழர்மதம் என்னும் நூலில்தான் காணமுடியும். மணமக்கள் பிள்ளைகளைப் பெற்றுக் குடும்பம் பெருகி வழிவழி தொடர்ந்து வருவது அருகம்புல் வேரூன்றல் போல் இருத்தலால் அறுகையும் உணவுத் தட்டில்லாமல் வாழவேண்டு மென்று அரிசியையும் அடையாளமாகத் தூவி வாழ்த்தினர் முன்னோர். இக்காலத்தில் அவ்வடையாளமின்றியும் வாழ்த்த லாம். ஐம்பூதங்களுள் நீ தெய்வத் தன்மையுள்ளதென்று தெய்வச் சான்றாக விளக்கேற்றி மணமக்கள் சூளிட்டனர். கடவுளை உள்ளத்திலேயே தொழலாம். ஆரியர் கடவுள் வணக்கமாகத் தீயையே வணங்கி வந்ததால் தீவலம் வருவதைச் சடங்காகக் கொண்டிருந்தனர். அது தமிழர் வழக்கமன்று. கடவுள் எங்கும் நிறைந்திருப்பதால் உள்ளத்திலேயே எண்ணிச் சூளிடலாம். க.பெ.சி.க. ஆடவை 2000 சிவநெறி கிறித்தவ நெறியிற் பிறந்து வளர்ந்தே னாதலால் சிவ நெறியாரின் இறுதிச் சடங்குகள் பற்றி ஒன்றும் அறிந்திலேன். அக்கம் பக்கத்திலுள்ள முதியரை வினவித் தெரிந்து கொள்க. வாழைக்கு என்றும் ஈரம் இருக்க வேண்டும். இறைவன் போதிய மழை அருள வேண்டுகிறேன். க.பெ. சி. 6.12.74 சிவநெறி கணவன் மனைவியர் இல்லற வாழ்க்கை இருபகட்டொரு சகடு போன்றது. அதாவது இரட்டை மாட்டு வண்டியை ஒத்தது. இரு காளைகளும் ஒரு முகமாக இழுத்தால்தான் வண்டி செல்லும். அதுபோல் கணவன் மனைவியர் இருவரும் எல்லா வற்றிலும் கருத்தொத்தே இல்லறம் நடத்த வேண்டும். காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமஞ் செய்பவே - ஓதுகலை எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டும் ஒன்றையே காண் என்பது நன்னெறி. க.பெ.சி: 28 சிலை 2000 அனுப்ப வேண்டா அறுவை மருத்துவச் செலவிற்கு வேண்டிய 300 உருபாவுள் நூற்றை முந்தியே அனுப்பிவிட்டீர். இனி 200 தான் தேவை. அதில் ஒரு நூற்றை முன்பணமாக அஞ்சல் வாயிலாக அனுப்பி விட்டு ஒரு நூற்றை நேரில் தரலாம். செலவு முன் போன்றே யிருப்பின் தரும் பணம் 50 உருபாத்தானிருக்கும். திருமணத்திற்கு நான் உறவு முறையில்தான் வந்தேன். ஆதலாற் போகவரச் செலவிற்குக் கொடுத்த 50 உருபா போதும். அன்றனுப்பிய நூறு ரூபாவை என் மருத்துவச் செலவிற்கு விடுத்த முன்பணமாகவே கருதி வைத்திருக்கின்றேன். அத் தொகை இன்னும் என் கையிலுள்ளது. ஆதலால் இனி அஞ்சல் வாயிலாக இம்மாத இறுதியிலேனும் அடுத்த மாதத் தொடக்கத்திலேனும் நூறு ரூபா அனுப்பினாற் போதும். மீண்டும் பணம் வேண்டியிருப்பின் அனுப்ப வேண்டேன். நான் எங்கேனும் கடன் வாங்கிக் கொள்வேன். அதைப் பின்னர் வெள்ளாமைப் பணம் வந்தபின் அனுப்பலாம். அதற்கு ஓராண் டாயினும் குற்றமில்லை. கடன் வாங்கியேனும் இடர்ப்பாட் டேனும் பணம் அனுப்பவே வேண்டேன். நான் கடன் கொள்வ தென்பது பொத்தகப் பணத்திலிருந்து எடுத்துக் கொள்வதே யன்றி வேறன்று. அது எளிதாய் இயல்வது. பயிர்த்தொழில் இம்மியும் பணத் தட்டியின்றி நடைபெறல் வேண்டும். கடனில்லாச் சோறு கால்வயிறு போதும்! எனக்குப் பணம் அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டதனால், கடன்பாட் டுணர்ச்சியுடன் காலம் கழிக்கவேண்டன். முழுவுரிமையுள்ளத் துடன் இல்லறம் நடத்துக. க.பெ.சி. ச. மடல்கல் 2000 வேண்டேன் பணம் அனுப்பவேண்டேன். இறைவன் வேறொரு வழியில் எனக்குதவி யிருக்கின்றான். மேலைத் தாம்பரத்தில் 2 மாதம் திரு. முத்துக்கிருட்டிணார் வீட்டில் தங்கி நேற்றுத்தான் இங்கு (காட்டுப்பாடி) வந்தேன். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்தேவிட்டார். என்னை விருந்தோம்பின் செலவு 250 உருபா இருக்கும். அங்குத்தான் திருக்குறள் உரையெச்சம் முற்றும் எழுதப்பட்டது. க.பெ.சி. 13 துலை 6.12.74 வாய்ப்பு இழப்பு நும்மிடம் என்றும் உதவிபெறலாம். பிறரிடம் பெற முடியாது. நும் அன்புப் பெருக்கத்தாலும் ஆர்வமிகுதியாலும் பறம்புக்குச் செட்டியார் ஒருவர் கொடுக்க விருந்த பணத்தை நீரே கொடுக்க ஏற்றுக்கொண்டீர். அதனால் அவரிடம் பெறும் வாய்ப்புப் போய்விட்டது. இதைத்தான் அன்று கருதி வருந்தினேன். க.பெ.சி; 2 மடங்கள் 2001 இசைந்து வாழ்தல் இனிமேல் உங்கள் இருவரள் யார் எழுதினாலும் சரி; நாங்கள் இருவரும் இசைந்து வாழ்கின்றோம் என்றே தொடங்க வேண்டும். க.பெ.சி. 20 துலை 2001 பெரிய பேறு பெண்களுக்குச் சமவுரிமை நம்நாட்டில் இல்லாததனாலும் அதிகாரம் செல்வம் வலிமை ஆகிய மூன்றும் ஆடவ ரிடத்திலேயே இருப்பதானாலும் பொதுவாகப் பெண்களின் குற்றங் குறைகளையே எடுத்துக் கூறுவார்கள். கணவன் மனைவியைக் கவனிக்காவிடின் கண்டிப்பாரில்லை. உனக்கோ உனக்குச் சமவுரிமை அளிக்கின்ற காதற்கணவனைக் கடவுள் அளித்திருக்கின்றார். இது பெறற் கரிய பேறு. உன் இல்லற வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தையும் இறைவன் தந்திருக் கின்றார். இந்நிலையில் உனக்கொரு குறையுமில்லை. கவலைக் கிடமில்லை. மண்ணுலகிலே விண்ணுலக இன்பம் பெற்று மகிழலாம். தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்று திருவள்ளுவர் கூறுகிறபடி முதலில் உன்னைப் பேணி உன்முழு வலிமையாலும் உன் கணவனைப் பேணிப் பிறர் புகழுமாறு நடந்து கொள்வாயாக. கணவனிடத்தில் என்றும் இன்சொல் சொல்லி அன்பாக இரு. அன்னகாமு க.பெ.சி. 20 துலை 2001 மனக்கவலை மாற்றல் அரிது கரை கடந்து கடன்கொண்ட வெட்டியும் கிணற்றில் நீரின்மையும் மழையும் பொய்யாமையும் துன்பமானவையே, ஆயினும் அவை நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை யாதலால் கவலைப்பட்டும் உடல் நலக்கேடன்றிப் பயனில்லை. எல்லாம் வல்ல இறைவனை நோக்கி உருக்கமாகத் தொடர்ந்து வேண்டுக. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது க.பெ.சி; 16.8.77 கவலைக் கேடு என்னையும் நுங்கள்குடும்பத்தில் ஒருவனாக் கருதுவதால், நுங்கள் திறமைக்கு மிஞ்சிச் சிறப்பாக அல்லது மிகையாக எனக்கொன்றும் விடுக்க வேண்டேன். கடுகளவுங் கவலைக்கிடமான எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. கவலை கறியைத் தின்னும்; பேராசைப்படவுங் கூடாது, போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து.... உள்ளதே போதுமென்று பெற்றதுகொண்டு பொந்திகைப் படவேண்டும். வருவாய்க்குத் தக்கவாறே செலவு செய்ய வேண்டும். வளவன வாயினும் அளவறிந் தளித்துண் என்பது ஔவையார் பொன்மொழி வளவன் - வளநாடுடைய சோழன். கடந்து போனதை நினைத்து கவலைப்படக் கூடாது. போனதை நினைப்பார் புத்தி கெட்டவர். இறைவன் துணையைத் தேடி இயன்றவரை முயன்று கூழானாலும் தன் உழைப்பால் வந்ததைக் குடித்து மகிழ்ச்சியா யிருந்தால் நீடு வாழலாம். க.பெ.சி; 2 சுறவம் 2001 ஒரு விளக்கம் முந்தின அட்டையில் பேராசை கூடாதென்று கூறினேன். ஆயின், அதற்குச் சில விலக்குகளுண்டு. பிறர் பொருளைக் கவர்தற்கும் பிறர்க்குதவாது வைத்துக் காத்ததற்கும் வாழ்நாள் குன்றுமளவு உடலை வருத்துவதற்கும் பேராசை கூடாது. இங்ஙனமன்றி இயனற அளவு பொருளீட்டுதல் எல்லார் தலை மீதும் விழுந்த கடமையாம். அருளில்லார்க்... யாங்கு பொருளல் லவரை... பொருள் எண்பொருள் ... ஒருங்கு செய்க பொருளைச்... இல் க.பெ.சி. 28 சுறவம் 2001 வேலையை விட்டு வரவேண்டேன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு ஓரதிகாரமும் இல்லை. அதில் இன்று பயிற்றப்படும் பாடத்திட்டங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. அதன் இற்றைத் துணைவேந்தர் எனக்கு மாறானவர். ஆதலால் குறித்த செய்தியில் நான் உதவுவதற்கில்லை. சென்னை மாநிலக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பர்.மெ. சுந்தரம் என் நண்பர். அவருக்கு இது பற்றித் தெரிந்திருக்கலாம். இங்குவரின் அவருக்குக் கடிதம் கொடுக்கிறேன். போய்ப் பார்க்க ஆயின் இதற்காக தோட்ட வேலையை விட்டுவிட்டு இங்குவர நேரின் கல்லுப்பட்டிக்கும் வருவேன். க.பெ.சி; 12.3.75. முழு முயற்சி செய்க அடுத்த வீட்டுக்காரர் வாயிலாக அனுப்பிய தூய தேனுக்கு நன்றி. கொடி முந்திரித் தோட்டத்தைப் பற்றிச் சொன்னார். பேரளவாகப் பயிரிடப்பட்டிருப்பதால் கடன்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. பயன்பெறும்வரை முழுக்கவனமும் முழு முயற்சியும் தோட்டத்தைப் பற்றியதாகவே இருக்க. சனுவரி முதற்கிழமை அல்லது சிலையிறுதி, இங்குச் சென்னையில் உ.த.க. மாநாடு நடைபெறும். அதற்கு வர வேண்டியதில்லை. கும்பம் மீனம் ஆகிய மாதங்களில் தோட்டம் மழைச் சேதமின்றிச் செழிப்பாயிக்க இறைவன் அருள் புரிக. பயன்பெற்ற பின் கடனை அடைக்க. அதன்பின் மறு வேளாண்மைக்குரிய பெருந்தொகையை வைப்பகத்தில் இட்டு வைக்க. ஐயாயிரம் உருபாவாவது எப்போதும் இருப்பில் இருத்தல் வேண்டும். இனிமேல் கடன் வாங்கும் வழக்கத்தை விட்டுவிடுக. இரு பிள்ளைகள் ஆகிவிட்டன. அவர்கள் படிப் பிற்கு வேண்டிய தொகையை இப்போதே சேர்த்து வைக்க. அகர முதலி யுரவாக்கத்தை அரசு மேற்கொண்டு விட்டதனால், அதற்குப் பணமனுப்ப வேண்டேன். பெருஞ்சித்திரனார் இங்குக் குடியமர்ந்து ஒரு மாதத் திற்கு மேலாகின்றது (1, லால் பேகம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5.) தென்மொழி அச்சக வேலை நடக்கிறது. நாங்கள் இருவரும் ஒரே யிடத்தில் இருப்பதால் தேன் அனுப்பின் இருவர்க்கும் அனுப்பவேண்டும். எனக்கனுப்பா விடின் குற்றமில்லை. க.பெ.சி. 25.5.77 நீலமலை ஆட்சிக்குழுக் கூட்டம் முடிந்த பின் நான் திரு. இளமாற னுடன் இன்று இங்கு வந்து (நீலமலை) குளிர்ச்சிக்காகத் தங்கியிருக்கின்றேன். இன்னும் ஒரு கிழமை இங்கிருப்பேன். அதற்கள்காட்டுப்பாடியிலும் வெப்பந் தணிந்துவிடும். க.பெ.சி; 10 அலவன் 2000 பாராட்டு மாநாட்டில் உங்கட்குப் பாராட்டும் பட்டாடை போர்ப்பும் ஒரு நிகழ்ச்சியாகும். அது நிகழ்ச்சி நிரலிலும் குறிக்கப்பட்டு விட்டது. அது அச்சானவுடன் உங்கட்கு ஒருபடி வரும். இர.மு.கி; 15.12.69 கற்றதன் விளைவு நும் அன்பான திருமுகம் பெருவண்மைப் பணவிடையும் பெற்றேன் நன்றி. எனக்கு மூப்பைப் பற்றிக் கவலையில்லை. இறைவனருளால் என் நூல்களெல்லாம் வெளிவரும்வரை இவ்வுலகத்திலிருப் பேன். வடமொழியினின்று தமிழை மீட்கும் என் வாழ்க்கைக் குறிக்கோளும் இன்னும் மூவாண்டிற்குள் முற்றும் நிறை வேறிவிடும். இன்று என் கண்ணறுவை பற்றித்தான் கவலை. கடந்த அரைநூற்றாண்டாக அல்லும் பகலும் பல்துறை நூல்களைக் கற்று வந்ததன் விளைவு இது. ஈராண்டிற்கு முன் சென்னைத் தங்கசாலைத் தெருவிலுள்ள கண்ணறுவையர்சுப்பிரமணிய னாரிடம் இடக்கண் படல அறுவை செய்து கொண்டேன். இன்று வலக்கண்ணிற்கும் அவரிடம்தான் செய்து கொள்ள வேண்டும். முந்தின அறுவைக்கு 250 உருபா சென்றது. இன்றும் அவ்வளவுதான் செல்லும். ஒருகால் மருந்து கூடியிருப்பினும் 50 இதற்குமேற் போகாது. வலக்கண் படலம் பழுத்து வருகின்றது. இன்னும் ஒரு மாதத்திற்குள் பழுத்துவிடும். அதன்பின் உடனே அறுவை செய்து கொள்வேன். க.பெ.சி; 16 விடை 2000 மருத்துவம் 22 ஆம் பக்கல் ஆட்சிக் குழுக்கூட்டத்திற்கு வரவேண்டிய தில்லை. இதை நானே எழுதுவதற்கு இருந்தேன். வேனில் இன்னும், கழியாமையாலும் மழை பெய்யாமை யாலும் திருக்குறள் தமிழ் மரபுரை இன்னும் 400 குறளுக்கு எழுத வேண்டியிருப்பதானலும் கண்ணறுவையை ஒரு மாதம் பொறுத்துச் செய்து கொள்ள விரும்புகிறேன். நுமக்கும் தேன் மதி கழியட்டும். வெப்பநாளில் கண்ணறுவை செய்து கொள்ளின் எரிச்சல் எடுக்கும். நீர்வளமில்லாக் காலத்திற் சென்னை விடுதியில் தங்குவதும் ஏந்தாக விராது. நீர் இன்று என்மகன் போலிருப்பதால் திருமணத்திற்கு வருகின்றேன். குறுக்கு அல்லது சுருக்கு வழி எது? எந்தப் புகைவண்டி நிலையத்தில் இறங்கவேண்டும்? இரவில் வழங்கு வதற்குப் போதிய கண்ணொளியின்மையாலும் தூக்கம் கெடாமைப் பொருட்டும் பகலில்தான வழிப்போக்கு வைத்துக் கொள்ளவேண்டும். ஆதலால் அரசினர்பேரியங்கியே. புகை வண்டியிலும் ஏந்தாகவிருக்கும். மதுரைப்பேரியங்கி யேறி அம்மை நாயக்கனூரில் இறங்கலாமா? அங்கிருந்து அரசினர் பேரியங்கியில்லாவிடினும் தனியார் பேரியங்கியாவது வத்தலக் குண்டிலாவது என்னை வரவேற்கத் தெரிந்த ஆள் காத்திருக்க வேண்டும். 19ஆம் பக்கல் வருவேன். 21 ஆம் பக்கல் திருச்சிக் கூட்டத் திற்குத் திரும்புவேன். ஒரு மாதங்கழித்துக் கண்ணறுவையரைச் சென்னையில் கண்டு நாள் திட்டமானபின் அங்கிருந்து நுமக்குக் கம்பிச் செய்தி விடுப்பேன். நீர் உடனே வரலாம். உடன் மறுமொழி விடுக்க. க.பெ.சி. 9 ஆடவை 2000 மருத்துவம் கண்ணில் வலியிருக்கும்போது படிக்கக்கூடாது. இது வேனிற்கால மாதலால் வெயில் நேரத்தில் வெளியே செல்லவுங் கூடாது. விளக்கொளியைப் பார்ப்பதும் நீண்ட நேரம் கண் விழித்திருப்பதும் கூடா. திரைப்படத்தைப் பார்க்கவே கூடாது. சூடும் பித்தம் ஊதையும் (வாயுவும்) விளைக்கும் உணவுப் பொருள்களை முற்றும் விலக்கி விடவேண்டும். நாள்தொறும் தண்ணீற் குளித்து அறிவன் காரிய நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் குளித்திட வருக. குளம்பியை (காப்பியை) நிறுத்தி விட்டு மோர், பதநீர், இளநீர் முதலிய தன்குடியையே பருகி வருக. பழையதம் தயிர்ச்சோறும் உண்டு வருவது நன்று. எலுமிச்சஞ் சாற்றைக் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். சீனி சேர்த்துக் குடிக்கலாம். நுங்கு, கொடிமுந்திரி, வெள்ளரிப்பழம் முதலியன உண்ணலாம். காலிமுள்ளங்கி (Carrot) கண்ணிற்கு நன்றென்பர். அதை அடிக்கடி சமைத்துண்க. ‘Optrex என்றொரு கண்கழுவி நீர் ஆங்கில மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி நாள்தொறும் இருவேளை கண்கழுவி வரலாம். நண்பகலில் தலையை (மண்டையை)க் குளிர்ந்த துணியால் மூடிக் கொள்க. தமிழர் வரலாறு எழுதி வருகின்றேன். எதற்கும் வீண் கவலை கொள்ளற்க. க.பெ.சி; 10 மீனம் 2001 நாட்பட்ட புண்ணை நாட்டு மருத்துவக் களிம்பே விரைந்தாற்றும். க.பெ.சி; 20 கன்னி 2002 குழந்தை நலம் குழந்தைகள் மேனி மென்மையாயும் உடம்பு நொய்ம்மை யாயும் இருப்பதால், தட்ப வெப்ப நிலை மாறினும், தாயுணவு தகாவிடினும், நெடுந்தொலைவழிச் செல்லினும், தீய நாற்றம் வரினும், முரட்டுத்தனமாய்த் தூக்கினும் நெடுநேரம் உடம்பு அசைவுறினும் ஊட்டக்குன்றினும், உடைகாலநிலைக்கொவ்வா விடினும் எளிதாய்நோய் தாக்கும். குழந்தை நலம் பேணுவதில், பின் மருந்தினம் முன்தடுப்பே எல்லா வகையிலும் ஏற்றதாகும். தாய்ப்பாலுண்ணும் குழவிக்கும், குழந்தைக்கும் தாய் தன் உணவைச் சரிப்படுத்திக் கொள்வதே நோய் தடுக்கும் சிறந்த முறை. குழவிக்கு மார்ச்சளியிருக்கும்போது தாய் குளிர்ச்சியான உணவை உண்ணக்கூடாது. முந்திரிச்சாறு (பிராந்தி) ஒரு சில துளிகளில் நீர்கலந்து உறை மருந்துபோல் கொடுக்கலாம். குழந்தை மருத்துவத்தில் அல்லது வளர்ப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டியார் அல்லது மருத்துவர் ஒருவரைத் துணைக் கொள்வது நல்லது. இறைவன் திருவருளை வேண்டுவதும் இன்றியமையாதது. ஆறு மாதம் முடியும் வர மிகக் கண்ணுங் கருத்துமாகப் பேணிக்காத்தல் வேண்டும். பூவைப்போல் தொடவும் பொன்னைப் போற் போற்றவும் புத்தேள் (தெய்வம்) போல் தூய இடத்தல் வைக்கவும் வேண்டும். வருகின்ற வேனிற்கு நானும் பெருஞ்சித்திரனாரும் வால் பாறை செல்வோம். திரும்புகாலில் இயலுமாயின் கல்லை வருவோம். செ.சொ.பி.பே.அ. வேலை தொடங்கிவிட்டேன். கல்லைப் பக்கம் சிறப்பாக ஏதேனும் சொல்வழங்கின் பொருளுடன் தெரிவிக்க. க.பெ.சி. ; மீனம் 2002 (18.3.71) மருத்துவம் திரு. நித்தலின்பனார் நுங்கள் அன்பளிப்பு முடங்கல் திணர் ஆறு கொண்டு வந்து கொடுத்தார். நன்றி. மஞ்சட் காமாலைக் காக்கை கறி நன்மருந்தென்பர். அதை மறைவாகச் சமைத்துக் கொடுத்தல் வேண்டும். திருச்சித் திரு. வெள்ளிமலையாரம் சென்ற ஆண்டு அந்நோயால் வருந்திப் பின்னர் மருத்துவம் பெற்று நலமடைந்தார். அவரையம் வினவி யறிதல் வேண்டும். நோய் நீக்கத்தினும் நோய்த் தடுப்பே சிறந்ததாதலின் நோய் முதல் நாடி அது மீண்டும் நேராதவாறு முதற்காப்பாயிருந்து கொள்க. அடுப்பெரிக்கவும் அம்மியரைக்கவும் உடனே ஒரு தக்க பெண்ணை அமர்த்திக் கொள்க. காயச்சரக்கு (மல்லி சீரகம்) அரைப்பதும் மாவாட்டுவதும் கடிய வேலை. மாலை 8 மணிக்கு நீங்கள் திரும்பாவிடினும் தப்பாது உண்டு விடச் சொல்க. ïuh.K.கி; 30.1.70. குறிஞ்சி குறிஞ்சியில் ஈராண்டிற் கொருமுறையும், நாலாண்டிற் கொருமுறையும் ஆறாண்டிற்கொருமுறையும் பன்னீராண்டிற் கொருமுறையுமாகப் பூக்கும் நால்வகை யுண்டெனச் சென்ற ஆண்டு ஏர்க்காட்டுப் பயிர்த்தொழில் அலுவலர் சொல்ல அறிந்தேன். பத்தாண்டிற்கொருமுறை பூப்பதும் உண்டெனின், மொத்தம் ஐவகை உண்டெனக் கொள்ளல்வேண்டும். குடந்தை விழாப்போல் பன்னீராண்டிற்கொருமுறை பூக்கும் வகையொன்று இருத்தலாலேயே, அது மாமாங்கம் (மகாமகம்) செடி என்ற பெயர் பெற்றுள்ளது அப்பெயரே ஏர்காட்டுப் பொதுமக்களிடம் வழங்குகின்றது. முந்தின பூப்பு 12 ஆண்டிற்கு முன் நிகழ்ந்ததாகச் செய்தித்தாளிலும் ஒருவர் எழுதியிருந்தார். மாறாட்டுச் சமையத்தில் ஒரு செடி பூப்பதாயிருந்தாலும் பார்த்தல் நன்றே. எனக்கு நாற்புதல்வரும் ஒரு புதல்வியும் ஐவர் மக்கள். மூத்தவன் கொடுமுடியிலும் அடுத்தவன் சேலத்திலும் மூன்றாமவன் சென்னையிலும் கடையன் காட்டுப்பாடியிலும் இருக்கின்றனர். மகள் இங்கிருக்கிறாள் (சென்னை.) க.பெ.சி; நளி 2000 எருதந்துறை நன்றியுரைப் பாட்டில் யோமண, தேய என்பவற்றை யேர்மண, நேய என்று திருத்திக் கொள்க. தான் இதனினும் பெரிய பொத்தகம் எழுதத்தக்க பெரியோனாவான் என்று நக்கீரனுக்குச் சொல்க. எருதந்துறை வாணர் வியக்குமாறு ஆங்கிலப் பேச்சில் தேர்ச்சி பெற வேண்டு மென்று ஊக்குக. அம்மையார் நாள்தொறும் பன்மடி உயிரியல் மாத்திரை உட்கொண்டு வருகின்றாரா? நன்கொடையாகவும் வந்ததனால் அதன் அருமையை அறியாதிருக்கலாம். தி.த.ம. உரையை ஒழுங்காகப் படித்து வரச்சொல்க. நாள்தொறும் பிற்பகலில் படிப்பிற்கென்று ஒருமணி நேரம் ஒதுக்கி வைக்கவேண்டும். மெய்வருத்த வினைகட்கெல்லாம் வேலைக்காரி அமர்த்திக் கொள்க. நீங்களும் இனிமேல் பிற்பகல் வேலை முடிந்தவுடன் வீடு திருப்பி விடுவது நன்று. மாலை 8 மணிக்கே அம்மையாரும் நுங்களுடன் மேசைப் படைப்புண்டு பழகவேண்டும். எருதந் துறையில் சமையற்காரன் அல்லது பரிமாறி மேசைமேற்படைக்க நாம் ஐவோமும் ஒருங்கே தான் உண்ணவேண்டியிருக்கும். இற்றையுலகியலறியாமை, அடிமைத்தனவுணர்ச்சி, கூச்சம், வாய்வாளாமை ஆகிய குற்றங் குறைகள் படிப்படியாக நீங்கிடவேண்டும். அடுத்த ஆண்டு திடுமென்று புறப்பட நேரலாம். அதற்குள் முழுத் தகுதிப் படுத்திக் கொண்டு அணியமாயிக்க. நக்கீரனுக்குச் சொன்னதே இறைவிக்கும். எதுவும் நிகழும் வரை முழுவுறுதியன்றாகலானும் அன்பிலார் அறியின் அழுக்காறு கொள்ள நேருமாதலானும் நம் கனவு நனவாகும் வரை அடக்கவொடுக்கமாகவும் இருக்க. இறைவன் அருள்க. ïuh.K.கி. 7 சுறவம் 2000 பேராயம் இந்தியப் பேராயம் (Indian National Congress) இயூம் (A.O. Hume) என்னும் ஆங்கிலப் பெருமானால் 1885 டிசம்பர் 28ஆம் பக்கல், நண்பகல் 12 மணிக்குப் பம்பாயில் கோகுலதாசு தேசுப் பால் சமற்கிருதக் கல்லூரிக் கூடத்தில் கூட்டப்பட்டது. பொன்னர்சி (W.C. Bonnerjee) என்னும் வங்க இந்தியர் தலைமை தாங்கினன். இயூம் என்பவர் சிமிலாவில் (Simila) இருந்த ஓர் அரசியல் அதிகாரி. வங்கம், பம்பாய், சென்னை ஆகியமும் மண்டலங்களினின்றும் ஆங்கில மறிந்த இந்தியப் பெருமக்கள் கூடினர். இந்தியத் தேசிய முன்னேற்றத்தில் நன்னோக்கங்கொண்ட இந்தியப் பெருமக்களெல்லாம் ஆண்டிற்கொருமுறை ஒரு பெருநகரிற் கூடி, இந்தியர் முன்னேற்றம் ஆட்சியில் திருத்தம் ஆகியவற்றிற்கு விதிவகைகளை வகுத்து அவற்றை நிறைவேற்று வதே பேராயத்தின் குறிக்கோளாக முதற்கண் இருந்தது. இதற்கு அக்காலத்துத் துணையரையர் (Viceray) டப்பெரின் பிரபுவும் (Marquis of Dufferin) இசைவும் வாழ்த்தும் அளித்திருந்தார். ஆயின் நாளடைவில் பல இந்தியர்க்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்னும் ஆசை உண்டாய்விட்டது. அதனாலேயே ஆங்கில அரசு இவ்வியக்கத்திற்குப் பகை யாயிற்று. முதலில் மட்டாளரும் (Moderates) முனைவாளரும் (Extremists) இருசார் பேராயத்தார் இருந்தனர். சாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடந்த பஞ்சாபுப் படுகொலையின் பின் மட்டாளரும் முனைவாளாராகிவிட்டனர். பேராய எதிர்ப்பு வலுத்தது. தமிழ்நாட்டில் நயன்மைக் கட்சி (Justice Party) தோன்றிப் பதினோராண்டு ஆண்டது. நூற்றிற்கு மூவரான பிராமணர்க்கு நூற்றிற்கு மூன்றே அரசியல் அலுவல் என்று சட்டமானபின் பிராமணரெல்லாரும் ஒன்றுகூடி எல்லா வகுப்பாரையும் படிக்க வைத்து முன்னேற்றிப் பதவியளித்த ஆங்கில அரசை நீக்கினா லன்றி நயன்மைக் கட்சியை வீழ்த்த முடியாதென்று கண்டு பேராய இயக்கத்தைத் தமிழ்நாட்டிற் புகுத்தி முனைந்து வளர்த்தனர். நயன்மைக் கட்சித் தலைவர் நாட்டு மொழிகளைப் புறக்கணித்து, ஆங்கிலத்தையே போற்றியதாலும் பொதுமக்கள் தொடர்பு இன்மையாலும் ஆங்கிலவரைச் சார்ந்ததனாலும் இறுதியில் தோல்வியடைந்தார். பேராயத்தில் தமிழர் பெரும்பான்மையராயிருந்தாலும் தலைவர் பிராமணராகவே யிருந்ததனால் தமிழர் தலைவர் காட்டிக் கொடுக்கும் தனனலக்காரராகவேயிருந்து விட்டனர். ஆங்கிலத்தை ஒழித்து இந்தியைத் திணிப்பதில் இருவகைப் பேராயமும் ஒன்றே. ஆதலால் இரண்டும் தமிழகத்திற்குக் கேடு விளைவிக்கும். க.பெ.சி. 30 சுறவம் 2002 (12.2.71) அச்சகம் திருக்குறள் தமிழ் மரபுரை மெய்ப்புத் திருத்தப் பெரும் புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களைத் தம் சொந்தச்செலவில் அமர்த்துவதாகவும் அவர் இசையா விடின் தாமே அவ்வேலையை மேற்கொள்வதாகவும் பேரா. கோ. நிலவழகனார் (இராமச்சந்திரன், எம்.ஏ., தலைமைத் தமிழாசிரியரும் துணைவேந்தரும், பச்சையப்பன் கல்லூரி, காஞ்சி) எழுதியிருக்கின்றார். நானும் உடம்பட்டேன். நானே திருத்தின் புதிதாய்த் தோன்றும் கருத்துக்களையும் சேர்க்கலாம் என்பது மெய்யே. ஆயின் இன்னம் 400 குறள்கட்கு உரை 5 வரையை வேண்டியுள்ளது. அதை யெழுதுவதில் ஈடுபட்டுள்ளேன். அதற்கு வேண்டிய நூல்கள் இங்குத்தான் உள்ளன. சென்ற பனிக்காலத்தில் ஈமுளை தாக்கியிருந்ததால் உரைமுன்பே முடியாது போயிற்று. இன்னும்., முதுவேனில் வெப்பத்தால் விரைந்து வேலை செய்ய முடியவில்லை. வலக்கண் படலம் பழுத்து வருகின்றது. விரைந்து அறுவை செய்து கொள்ளவேண்டும். சிறந்த அச்சகமெல்லாம் ஆரியரிடம் உள்ளன. ஆயின், ஆரியத்தை யெதிர்க்கும் நம் நூல்களை அவரிடம் கொடுக்க அச்சமாயிருக்கின்றது. கூலி போனாலும் போகின்ற தென்று தீ வைத்து விட்டால் என்ன செய்வது? ஓராண்டு அரும்பாடு பட்டுச் செய்த வேலை வீணாய்ப் போம். மீண்டும், எழுதுவதும் அத்துணை எளிதன்று. ஆகவே, ஆரியர் அச்சகமெல்லாம் நமக்கு அச்சகமே. பெருக்குவில்லை கூடிய கண்ணாடித் துணையால் எழுதியதால் இத்துணைச் சிறிதாக எழுத முடிந்தது. இரா.மு. கி; 2000 21.6.99 புதுமெய்ப்பு முந்தா நாள் தான் 21 ஆம் படிவத்தைத் திருத்தி யனுப்பினேன். நேற்று அச்சகம் சேர்ந்திருக்கும். ஆயின், இன்றைக்கும் அதே படிவம் ஒரு பிழையும் திருத்தப் பெறாமலும் சில புதுப் பிழைகளுடனும் புதுமெய்ப்பாக வந்துள்ளது. இது காலத்தைக் கடத்தும் சூழ்ச்சியாகவோ மூளையில்லாத அச்சுக் கோப்பாளரின் வேலையாகவோ இருத்தல் வேண்டும். முந்தாநாள் விடுத்தது சேராவிடினும் முந்தியெடுக்கப்பட்டிருந்த தொடர் இப்புது மெய்ப்பில் நீக்கப்பட்டிருப்பதற்குக் கரணியம் தெரியவில்லை. ïuh.K.கி; 8.8.69 முடங்கல் திணர் அறத்திற்குக் கொடுத்த ஆவைப் பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாது அங்ஙனமே. அன்பளிப்பாகத் தந்த முடங்கல் திணரைக் குறை கூறக்கூடாது. ஆயினும் நட்புக் கடமை பற்றியும் நன்னோக்கங் கொண்டும் இரு பிழைகளைக் குறிக்கின்றேன். 1. Professor என்ற சொல்லிற்கு f தான் உண்டு. 2. Linguistics என்னும் சொல் எல்லா மொழிக் குடும்பங்களையும் தழுவும். Comparative Dravidian Philology என்பது மிகை படக்கூறல். Dravidian Philology என்றிருந்தால், Linguistics என்பது தேவை யில்லை. Descriptive Linguistics என்று வரையறுத்தால் Comp Dravidian Philology என்று சேர்த்துக் குறிப்பது குற்றமாகாது. இங்கத்து வீடு தாவறையுடன் பெரியதாயிருப்பது மட்டு மன்று; இரு பரணுங்கொண்டது. பரணிலும் பண்டங்களை வைத்திருக்கின்றோம். மேலைத் தாம்பர வீடு ஈரறைகளும் ஒரு பரணுமே கொண்டது. ஆதலால் பரணும் எங்கட்கு இன்றியமையாததாகும். மேலும் முழு வீட்டையும் வாடகைக்கு எடுக்கும்போது வீட்டுக்காரர் அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்துவது முறையன்று. வீடு பெரிதுமன்ற. ஆதலால் கதவுகளை மலைச் சாலை வீட்டிற்கே கொண்டு போகச் சொல்க. அல்லது முன்னால் ஒரு கொட்டகை போட்டுக் கொள்ளச் சொல்க. ïuh.K.கி; 21 சுறவம் 2001 திருத்தம் இன்று நடப்பது துலை (மாதம்) சிலையன்று. துலை = ஐப்பசி; சிலை = மார்கழி வடசொல் - தென்சொல் பிரியம் - அன்பு சனி - காரி தினம் - நாள் தாமதம் - காலத்தாழ்ப்பு, பாணிப்பு. புரிதல் (விரும்புதல்) என்பது தமிழ்ச்சொல். புரிவு என்று வேண்டுமாயின் சொல்லலாம். பதில் என்பது உருதுச்சொல். மறுமொழி என்பதே தமிழ்ச் சொல். அரிதல் = காய்களைச் சிறுதுண்டுகளாக அறுத்தல். அறிதல் = தெரியாதததைத் தெரிந்து கொள்ளுதல் மற்றவை தங்கள் என்னும் இரு சொற்கு இடையில் மற்றவைத் தங்கள் என்று வல்வெழுத்து(த்) மிகாது. இவற்றைக் கவனித்து வந்தால் விரைவில் பிழையின்றி யெழுதக் கற்றுக் கொள்ளலாம். க.பெ.சி.20 துலை 2001 பெயர் மாற்றம் என் மருமகன் (இராபின்சன்) பெயரை இனிமேல் அறவாணன் என்று மாற்றவேண்டும். மு.ஆ. 18 மேழம் 2002 (1.5.71) புதிது பிசகு, பிசுக்கு, அரவம் அடங்கல், அதைத்தல் என்பன நெல்லை மாவட்டத்திலும் பொது வழக்கு. சொரிவாய் என்பதுதான் எனக்குப் புதிது. க.பெ.சி. 20 கன்னி 2002 பெயரீடு செந்தமிழ் பரப்பும் செல்வன் பிறந்ததும், தாயும் சேயும் நலமாயிருப்பதும் பெருமகிழ்ச்சி. தமிழழகன் என்று பெயரிடுக. சுருக்கம் பற்றி அழகன் என்றும் விளிக்கலாம் (அழக, அழகா - விளிவடிவம்) க.பெ.சி. 30 நாள் 2001 முற்றும் பாவாணர் பாடல்கள் பாவாணர் பாடல்கள் தொகுப்பாளர் தொகையுரை பாவாணர் பாடல்கள் என்னும் இச்சுவடி இதன் பாடு பொருளுக்கு ஏற்பப் பத்துப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. நூன்முறையில் பாயிரம் என்பதொன்று; அது முதன்மை யானது; இடத்தால் மட்டுமன்றிப் பொருளாலும் முதன்மை யுடையதே. ஆகலின், மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் போல்வது என முன்னையோர் கூறினர். அதற்கு, முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் எனப் பல்வேறு பெயர்களைக் குறியீடும் செய்தனர். பின்னே வரும் யானையை முன்னே மணியொலியால் காட்டுவது போல்வதும், பறையறைதலால் யானை வரவை உரைப்பது போல்வதும் பாயிரம்எனினும் தகும். வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச் சிறப்பென்னும் பாயிர மாம் என்பது சிறப்புப் பாயிர இலக்கணம். அவ்வகையில் இப்பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்து (2) பாயிரம் (7) அவையடக்கம் (2) அவையடக்கப் பாடல் படிமாற்றம் (1) ஆகப் பன்னிரு பாடல்கள் உள. (1-12) இவற்றுள் நேரிசை வெண்பா (2) குறள் வெண்பா (3) கலிவிருத்தம் (7) என்னும் பாவகைகள் இடம் பெற்றுள. இவை இசைத்தமிழ்க் கலம்பகம், தமிழர்மதம், பழந்தமிழாட்சி, தமிழ் இலக்கிய வரலாறு, வடமொழி வரலாறு, முதல் தாய்மொழி என்பவற்றுள் உள்ளன. இதன் இரண்டாம் பகுதி வாழ்த்து என்பது. இதில் திருமண இறைவணக்கம் (1) இறைவேண்டல் (1) இசையாசிரிய வணக்கம் (1) திருமண வாழ்த்துப்பா (15) மங்கல நீராட்டுவிழா வாழ்த்து (1) மக்கள் வாழ்த்து(3) பெருமக்கள் வாழ்த்து (10) அமைப்புகள் இதழ்கள் நூல்கள் ஆகியவற்றுக்கு வாழ்த்து (16) என்பவை (48) இடம் பெற்றுள்ளன (13; -60). இவற்றுள் நேரிசை வெண்பா (29) குறள் வெண்பா (1) ஆசிரியப்பா (5) கலிவிருத்தம் (8) கலித்தாழிசை (2) கட்டளைக் கலித்துறை (2) எண்சீர் ஆசிரிய விருத்தம் (1) என்னும் பாவகைகள் உள (48). இவற்றுள் அச்சில் வெளியிடப்பட்டவை 29; அச்சில் வெளிப்படாது முதன் முதலாக அச்சில் வருவன 19. மறைமலை என்னும் மறையாமலையின் என்னும் வெண்பா தமிழ்வரலாறு, தமிழர் வரலாறு என்னும் இரண்டு சுவடிகளிலும் இடம் பெற்றுள (பக்.295; 334) மூன்றாம் பகுதி இரங்கல் ஆகும். இதில் அறுவர் இரங்கல் பாக்கள் உள. இதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் 23 (61-63). இவற்றுள் கலிவிருத்தம் 10. கலித்தாழிசை 3. அறுசீர் ஆசிரிய விருத்தம் 10; இவற்றுள் இதழ்களில் அச்சிடப்பட்டவை 18; பாவாணர் கடிதங்கள் என்னும் நூலில் அச்சிடப்பட்டவை 5. நான்காம் பகுதி நன்றி என்பதாம். இதில் 47 பாடல்கள் உள (84-130). இவற்றுள் வெண்பா 40; அகவற்பா 2; கட்டளைக் கலித்துறை 5. நூல்வெளியீட்டு உதவி, நூல் வெளியீட்டுக்குழு உதவி, மணவிழாக் கொடை , மணிவிழாக் கொடை உதவி, மெய்ப்புப் பார்த்த உதவி என்பவற்றுக்கு விடுத்த நன்றிப் பாடல்கள் இவை. நூல்களிலும் இதழ்களிலும் வெளிவந்தவை. இதன் ஐந்தாம் பகுதி ஐந்தகம் என்பது. இதில் ஈர் ஐந்தகங்கள் உள. பத்துப்பாடல்கள்; இதழில் இடம் பெற்றவை. அறுசீர் விருத்தம் முன்னது; பின்னது வெண்பா. ஐந்து என்பது தலைப்பு பதிகம், பத்தாவது போல் ஐந்து ஐந்தகம் என ஆளப்பெற்றதாம் (131-140). ஆறாம் பகுதி பதிகம். இதன்கண் ஒன்பது பதிகங்கள் உள (141-232). திருக்குறளைப் பற்றியது ஒன்று; வெள்ளக் கொடுமை பற்றியது ஒன்று; வங்க வாகை பற்றியது ஒன்று; எஞ்சிய ஆறும் பெருமக்களைப் பற்றியவை. பெரியார், சிதம்பரனார், மறைமலையார், பாரதிதாசனார், சேலம் இராம சாமியார், சிங்கபுரி கோவலங்கண்ணனார் என்பார் அவர். பாரதிதாசனாரைப் பற்றிய பதிகமும், வெள்ளச் சேதவிளரிப் பதிகமும் பதினொரு பாடல்களையுடையவை. எஞ்சியவை பத்துப்பாடல்களே. இவ்வொன்பது பதிகங்களுள் வெண்பா 6; கலிவிருத்தம் 1; அறுசீர் அகவல் விருத்தம் 1; எழுசீர்ச் சந்தவிருத்தம் 1. இலக்குவனாரைப் பற்றியதொரு பதிகம் இரங்கல் பற்றியது. ஆகலின், அப்பகுதியில் இடம் பெற்றது; இப்பகுதியில் இடம் பெற்றிலது. இவையெல்லாமும் நூல்களிலாதல் இதழ்களிலாதல் அச்சிடப்பெற்றவை. இப்பகுதியிலுள்ள பாடல்கள் 92. ஏழாம் பகுதி வரலாறு பற்றியது. இதில் இடம்பெற்றவை இரண்டே (233, 234). இரண்டும் அகவற்பா. இரண்டும் உயர் தரக்கட்டுரை இலக்கணம் இரண்டாம் பகுதியில் வெளி வந்தவை. ஒன்று சாமிநாதர் பற்றியது; மற்றொன்று அவர் எழுதிய வரலாற்றைப் பற்றியது. எட்டாம் பகுதி கதை. இதில் இரண்டு கதைகள் இடம் பெற்றுள (235-253). பள்ளிக் கணக்கு புள்ளிக்குதவாது என்பது ஒன்று; நன்றியுள்ள சேவகன் என்பது மற்றொன்று. முன்னதில் அறுசீர் அகவல் விருத்தம் 11. பின்னதில் கலித்தாழிசை 8. ஆகப் பத்தொன்பது பாடல்கள். இவையும் உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றவையே. ஒன்பதாம் பகுதியில் பலவகைப் பொருள்கள் இடம் பெற்றுள. திருவள்ளுவர் ஈராயிர ஆட்டை விழாச் செய்தி என்பது தொட்டுத் தலையாய தமிழர் என்பது ஈறாக ஒன்பது உட்பகுதிகளைக் கொண்டது. மொத்தப் பாடல்கள் 21 (254-274) இவற்றுள்அகவல் 3, குறள் வெண்பா 6, கலிவிருத்தம் 5, அறுசீர் விருத்தம் 2. எண் சீர் விருத்தம் 1, இசைப்பா 2. கும்மிப்பா 1 நூற்பா 1, இவற்றுள் போலிகைப்பாடல் என்னும் இறுதிப்பகுதி குறளும் சிவஞான போதமும் நாவுக்கரசர் தாண்டகமும் கொண்டு எழுந்தவை. ஒன்று நூற்பா; மற்றிரண்டு புதுநூற்பா. அனைத்தும் அச்சில் வந்தவை. திருவள்ளுவர் ஈராயிர ஆட்டைவிழாச் செய்தி பற்றிய அகவல் 108 அடிகளைக் கொண்ட நெடியது. நூற்பா ஓரடியால் ஆய சிறியது. முடிநிலை என்னும் பத்தாம் பகுதி 23 பாடல்களையுடையது (275-297). நூல்களின் முடிவுகளாகவும் வாழ்த்துகளாகவும் இடம் பெற்றவை. வெண்பா 22. அகவல் ஒன்று; அவ்வொன்றும் சிவஞான போதப்போலிகை. அது பிறிதிடத்தும் பிற வடிவிலும் வந்துள்ளது (254-273) இப்பத்துப் பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள பாடல்கள் 297. இவற்றுள் நேரிசை வெண்பா 159, கலிவிருத்தம் 40, அறுசீர் அகவல் விருத்தம் 39, அகவற்பா 13, கலித்தாழிசை 13, குறள் வெண்பா 10, சந்தவிருத்தம் (ஏழுசீர்) 10, கட்டளைக் கலித்துறை 7, எண்சீர்விருத்தம் 2, கும்மி 1, இசைப்பா 2, நூற்பா. குறிப்புகள் சில: பாயிரப்பகுதியில் தமிழைக் குமரிநிலத்தெழுந்த கோமொழி என்கிறார். கோ தலைமை, தெய்வம் இவ்விரு பொருளும் தருவதுடன் ஆன் என்னும் பொருளும் தருவது. கன்றீனும் கறவை என்னப்பன்மொழிக்குத் தாயாகத் திகழும் வரவு நோக்கிக் கோமொழி என்றமை பாவாணர் தம் ஆய்வுப் பொருளை அப்படியே முழுதுறத் திரட்டி வைத்ததாம். பாவாணர் கொண்ட இறைமை அழுத்தமும் சொல்லாய்வுத் தெளிவும் ஒருங்கு வெளிப்படுவது, கடவுள் என்னும் பெயர்ப் பொருளை அறிந்துகொண்டால் நாடாமல் உண்டென நம்பு என்பதில் இருந்து வெளியாகின்றது. இழுக்குடைய பாட்டுக்கு இசைநன்று என்றொரு கருத்து இடைக்காலத்தே சில புலவர்களிடம் இருந்தது. ஆயின் இசைத் திறம் நன்குணர்ந்த பாவாணர் குறையும் எழுத்தினால் கூடுவ தினிமையே, அறையும் அளபெடை ஆக்கியே எழுத்தொலி, நிறையும் அளவுற நீட்டுக என்று சொல்வதுடன் தம் இசைத் தமிழ்க் கலம்பகத்திலே ஆட்சியும் செய்துள்ளமையைச் சுட்டுகிறார். அன்றியும், தீந்தமிழைத் தெருவெலாம் பரப்புதற்குப் பாடற்குழாம் ஒன்று ஏற்படுத்துக என்று கட்டளையிடுகிறார். துறைவல்ல அறிஞர்கள் கூறும் திருத்தத்தை ஏற்றுப் போற்றுவதற்குத் தாம் அணியமாக உண்மையை, என்றும் திருத்தம் இயம்பும் அறிஞரின், நன்றி அறிவேன் நனி என்பதால் மெய்ப்பிக்கிறார். கல்வி கண்மூடித்தனத்தைக்கொண்டு கண் மூடித்தனத்தை வளர்ப்பதற்கு அன்று என்பதையும் பகுத்தறிவை ஆக்குவதற்கே என்பதையும் ஒரு முறைக்கு இருமுறை தெளிவு செய்கிறார். மணமக்கள் இணைந்து இன்பந்துய்த்தலைப் புலியாணம் ஒன்றாகிப் பொருவரிய இன்பந்துய்த்து என்பது புதுமையான ஆட்சி. அருமையான ஆட்சி. உண்ணாக்கும் அண்ணாக்கும் போல ஒன்றுபட்டுச் சுவைக்கும். இணைப்பை எண்ணின் பொருள் விளக்கமாம். புலி, ஆணம், உண்ணாக்கும் அண்ணாக்கும் .அண் - மேல். புலி - புல்லி, தழுவிக்கிடப்பது. எதுகை நோக்கி வறிதே சொல்லாட்சி புரியாது வளமைசெய்தது பாவாணர் திறம். இவ்வாறே உலண்டு என்பதும் பொருள் செறிந்ததே. திருக்குறளை முப்பால் என்னும் வழக்கு நாடறிந்தது. அதனை முப்பொருள் என்பது போற்றத்தக்கது. செம்புலப் பெயல் நீரை அன்புடை நெஞ்சத்திற்கு உவமை காட்டி உரைத்த புலவர் பெயரையே செம்புலப்பெயல்நீரார் எனக்கொண்டது பண்டைத்தமிழகம். அவ்வுவமை நயத்தை விரும்பிய பாவாணர். சிவல்நீர் எனச்சுருக்கியும் செம்புலம் பெய்த நீரியல்நேய நீர்மிகு நெஞ்சம் எனப் பெருக்கியும் உரைக்கிறார். தம்மில் இருந்து தமது பாத் துண்டற்றால்என்னும் திருக்குறளில் தோய்ந்த பாவாணர், தமது பாத்துணுந் தம்மில் வாழ்வு எனவும், தம்முடைப் பள்ளியிருந்துணாப் பகிர்ந் துண்டு எனவும் அமைத்துக் கொள்கிறார். இன்னும் இப்பகுதியில் கேளாரும் கேட்ப எனவும் சுழன்றும் ஏர்ப்பின்னது எனவும் வரும் குறள்களைத் தக்காங்கு நினைவுகூருமாறு இயைக்கிறார். திருவள்ளுவர் அறம் தோற்பதன்று; என்றும் வென்றே தீரும் என்னும் திண்ணிய கருத்தால் திருவள்ளுவ அறம் என்னாமல் திருவள்ளுவ வாகை அறம் என்பது திருக்குறள் மரபுரை கண்ட பாவாணர் பார்வையை வெளிப்படுத்த வல்லது. நூல் வனப்புகளுள் அம்மை என்பதொன்று; அஃது அடிபெருகாத குறுகிய பாடலாக அமைவது. அவ்வனப்புச் செவ்வனம் அமைந்த நூல் திருக்குறள். இதனைப் பாராட்டும் பாவாணர் திருவள்ளுவரை எம்மை என்கிறார். எம் தலைவர் என்பது எம்மைப் பொருள். எம் குருவர் எம்கோ எம் தலைவர் என வள்ளுவரைக்குறிக்கும் இவ் எம்மைக்கு முன்னோடி எம்மடிகள் என்னும் சிவப்பிரகாச அடிகள் ஆகலாம். ஊழிற் பெருவலி யாவுள என்னும் குறளுக்கு ஒரு சான்று போலத் தம் பார்வையில் பாவாணர் இலக்குவனாரைக் காண்கிறார். பாவேந்தர் எனின், இற்றைநாளில் பாரதிதாசன் எனச் சொல்லாமலே பலரும் அறிவர். 1959ஆம் ஆண்டிலேயே பாவேந்தன் பாரதிதாசன்என்கிறார் பாவாணர். அன்றியும், நம் புதுவைப் பாவேந்தன் என்கிறார். இன்னும், நாவேந்தரான புலவர்க்கு வேலன்றோ நம்புதுவைப் பாவேந்தன் பாரதிதாசன் என்கிறார். அடுக்கடுக்காக உயர்த்தி அரவணைக்கும் அருமை, பாவேந்தரைப் பாவாணர் புரிந்துகொண்ட அருமையின் விளைவே என்க. கூற்றம் குதித்தாலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்னும் திருக்குறள் வழிப்பாட்டு நண்ணூற்றைத் தாண்டவரும் பெரியாரைக் காண்கிறார், பாவாணர். பெரியார், தாம் பட்ட கல்லடி சொல்லடிகளை வசையாகக் கொள்ளாமல், இசையாகக் கொண்டதையும், சிற்றாற்றில் பேரோடம் செலுத்துவதுபோல் பெரியார் செயலாற்றிய திறத்தையும் எளிய அரிய சொற்களால் சுருக்கத்தால் பெருக்கமாக உரைக்கும் பாவாணர் பாவாணரே என்பதை மெய்ப்பிக்கிறார். சாணத்தைக் கொண்டு எறிந்து உளப்புண்படுத்த நினைவார் உள்ளமிலாத் தன்மையை உரைப்பார் போலச் சாணக்குண்டு என்று ஆளும் ஆட்சி நெஞ்சுவிட்டகலாதது. வீட்டுரிமைக்கு ஆவணம் போல்வது நாட்டுரிமைக்கு வரலாறு எனப் பல இடங்களில் சுட்டுவார் பாவாணர். அதனை நற்கலையின் வென்விழா முதற்பாட்டிற் காட்டுகிறார். வெற்றி விழாவை வென்விழா என்பதும் வெற்றியை வெற்றம் என்பதும், புதுப்பொங்கலைப் புதிரி என்பதும் கதிரோனை விண்மணி என்பதும் பூப்பு நீராட்டை மண்ணுதல் மங்கலம் என்பதும், தமிழை முல்லைத்தமிழ் என்பதும் இப் பகுதியில் அமைந்துள்ள நயமிக்க சொல்லாட்சிகளாம். இரங்கல் பகுதியில் பாவாணர் உருக்கம் தெற்றென வெளிப்படுகின்றது. அதேபொழுதில் உலகியல் தெளிவும் பளிச்சிடுகின்றது. இரங்கல் இரங்கலாக அமையாமல் இதற்குத் தீர்வு இன்னது என்னும் வழிகாட்டுதலும் புரிகின்றது. சொல் தொடர் பொருள் ஆகியவற்றின் நயங்கள் உணர்வின் ஆழத்தில் இருந்து வருவதால் மிகச் சிறக்கின்றன. பட்டகாலிலே படுமெனும் பழமொழியை நினை கின்றார். திருவரங்க நீலாம்பிகையார் குடும்பத்துப் பட்ட துயர்களெல்லாம் பாவாணர்க்குத் தட்டுப்படுகின்றன. பட்ட அரங்கனார்; பிள்ளைமைப்பட்ட எண்மர்; உண்மை கைப் பட்டது; அவர் பட்டது - ஆயபட்டவைகள் அணிவகுக்கின்றன. அதுபோல், செல்வமேயெனும் செல்வஞ்சென்றதைச் செல்வி வாயிலாய் என்பதிலும் சொன்மீட்சி தவழ்கின்றது. புதுவதே யன்றுயிர் போவ தியல்பு அன்னையிற் சிறந்தவர் ஆரும் இன்மையின் கூரியல் குன்று மோதான் கோளரி குருளை யேனும் என்பவை பழமை வழிப்பட்டவை எனினும் நூற்பா அன்ன அமைதியவை. செந்தமிழ்ப் புலவன் என்கோ? சிறந்தவா சிரியன் என்கோ? என ஒரு பாடலில் வரும் ஆறு என்கோவும் நம்மை எங்கோ தொடர ஏவுகின்றன. காதல் ஐயத்தில் பிறந்த என்கோ சிலம்பில் பிறந்தது என்றால் கலங்கல் ஐயத்தில் பிறக்கின்றது இவ் என்கோ மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர் கோனோ என ஒருவரை மூவேந்தர்க்கு ஒப்பிடல், ஆறடி வளர்ந்த தோற்றம் கூறல், நீள்மேலாடை வீசுகை முழந்தாள் தோய்தல், ஏற்போல் நிமிர்ந்து செல்லல் என்பன பல்கால் கண்டு பசுமையாக உளத்தில் பதித்துக் கொண்டிருந்த பதிவின் முத்திரை. உணர்விலாப் புலவரை ஏட்டுப்புலவர் என்பதும் உணர்வுப் புலவரை மானச் செம்மல் என்பதும், பிறரை அச்சுறுத்தும் உடலைச் சூருடல் என்பதும், விரைவைக் கதுமென என்பதும், செயல் திறவோரைச் சொல்லோவியர்போலச் செயலோவியர் என்பதும், பத்மஸ்ரீயைத்(தா)மரைத் திரு என்பதும் வருந்து பவரைப் பனிப்பவர் என்பதும் அருகிய வழக்குகளையும் எளிமையாக எடுத்தாளுதலுக்குச் சான்றாவன. உவப்பவே தலைக்கூடிப்பின் உள்ளவே பிரியுமுன்னர்த் தவப்பல நாளும் ஒக்கத் தனிச்சுவை விருந்தின் ஓம்பி என்னும் அடிகள் உவப்பத் தலைக்கூடி என்னும் குறளில் இருந்து கிளர்ந்து மேலேறி நிற்பதாம் சிறப்பினது. பெண்ணினற்றுணை பிறிதொன் றின்மை என்பது அழுந்திய பட்டறிவு. கணவன் கண்முனே கண்ணை மூடுதலை, நன்மனைவி விரும்புதலை உரைத்தல் தமிழ்ப் பெண்டிர் தகைமையுரைப்பு. துணையற்ற காலைத் தீந் தமிழ்த்துணையே துணையெனக் கோடல் வேண்டும் என்பது அறிவறிந்து கூறும் மருத்துவக்கூறு. கொல்வ கையெனும் குறிப்பி லாமையாற் சொல்வி னைக்குமைச் சூழ்ந்த மர்த்தினேன் என்பது தாமுறும் கையறவு; யானும் கையறவுக்குத் துணையாகி நின்றேனோ என்னும் கனிவுச் சுரப்பின் வெளியீடு. சொல்வினை யாவது சொல்லாராய்ச்சித் துறையாம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்துறை. இருந்தநாள் ஒன்றும் ஈயா திறந்தபின் இரங்கல் கூறல் வருந்தவே தானிந் நாட்டு வழக்கமாய்ப் போயிற் றந்தோ என்பது நூற்றுக்கு நூறு செவ்விய முடிவு என்பதை மறுக்கச் சான்று உண்டோ? பாவாணரே இக்கூற்றுக்கு விலக்குப் பெற்றாரல்லரே! நூல் வெளியீட்டுக்கு உதவி பற்றியது இந்நன்றிப் பகுதி என்க. üš வெளியீட்டுக்குத் தனிப்படச் செய்த உதவி., குழுவாக அமைந்து செய்த உதவி, மணிவிழா வெடுத்துப் பணந் தண்டித் தந்த உதவி, நூல்களை அச்சிட்டு மெய்ப்புப் பார்த்த உதவி என்பவற்றுக்கு எழுந்த நன்றிப் பாடல்களே இவை. தமிழ் இலக்கியவரலாறு, வடமொழி வரலாறு, மண்ணில் விண், தமிழர் மதம், திருக்குறள் மரபுரை என்பவை இவ் வகையால் வெளிப்பட்டவையாம். செட்டிகுளம் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு, செங்காட்டுப் பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு, நெய்வேலி பாவாணர் தமிழ்க் குடும்பம், மதுரை பாவாணர் மணிவிழாக் குழு என்பவை சுட்டப்படும் குழுக்கள். சிங்கபுரி (சிங்கப்பூர்) அன்பர்கள் சிறந்த கொடை இவண் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கொடுத்த கொடையாளர் பெயர்களை நன்றிப் பகுதியில் கண்டு கொள்க. சிங்கபுரி அன்பர் பதினெண்மரைப் பதினாறடி அகவலுள் செறித்து வைத்துளார் பாவாணர். இந்நன்றிப் பாடற்பகுதியில் இடம்பெறாத நன்கொடையாளர் பட்டியும் தனியே உண்டு. இது பாடல் தொகுப்பு ஆகலின் இடம்பெற்றில. மொழிநூல் மாணவன் எனத் தம்மைக் குறிக்கிறார் பாவாணர். அடுத்த இருசீர்களிலேயே முதுதேவ நேயன் என முதுமையும் பெயரும் முறையே தொடர அமைந்து மின்னுகிறார்; ஏடது கைவிடாது ஏந்திய கொள்கையர் முது மாணவர் தாமே ! அரசு தன்கடன் ஆற்றவில்லை; பல்கலைக் கழகம் பரிந்து உதவவில்லை. ஆந்நிலையில் ஆர்வலர் முந்துவந்து உதவினர். ஆகலின், ஆளும் அரசும் அமைபல்கலைக்கழகமும் நீள்கையற உதவினராம். கோடிக் கணக்கில் குவித்துத் தமிழ்பேணாப் பேடிக் கயவர் பெயர்கருக்க உதவினராம். பல்லா யிரம்வேலிப் பண்ணைப் பெருமடங்கள் எல்லாம் இருள உதவினராம். கையற, கருக்க, இருள நேராதிருந்தால் நிலைமை எவ் வளவோ மாறியிருக்குமே? அவர்கள், தாம் கண்டு கொள்ளக் கூடாது. என்றே கண்ணை மூடிக் கொண்டவர்கள் அல்லரோ? திருவிளையாடலில் தருமிக்குப் பொற்கிழியளித்த செய்தி யுண்டு. அதனைத் தமக்களித்த கொடைவிஞ்சியதெனக் குறிக்கிறார் பாவாணர். தருமிக்குத் தந்தது தாராத் தமிழின் பெருமை வரலாறு பெற்று என்பது அது. மேலும்., சடையன் கொடையை எண்ணவும் அதனை விஞ்சியதாகக் கொள்ளவும் ஏவுகின்றது. பணத்திற்கு மூன்றுபடிவிற்ற காலை பரிந்துகம்பன் உணத்தந்த வள்ளல் சடையன் உதவிய தோவியப்போ கிணற்றிற்குட் கேணியும் ஊறாநாள் முத்துகிருட்டிணன்தான் குணத்திற்கீ டின்றிக் கொடுத்தனன் யாவும் குறிப்பறவே பிசிராந்தையார் நட்பு, கிளியீடு (பாரி பறம்பில் கிளிகள் தொகுத்த கதிர்), கார்பணி கற்பு (மழையையும் ஏவல் கேட்கச் செய்யும் கற்புடைமை) என்பவற்றை ஆங்காங்கு ஆள்கிறார்.) செட்டிகுளம், செந்தமிழ் அன்னை என்னும் பெயர்களை நினைக்கவும் சீரிய கற்பனையில் திளைக்கிறார். அதனால், செந்தமிழ் அன்னை செழியன் தமிழ்நாடும் வெந்தழல் ஆரிய வெம்மையால் -வந்தே குளிர்ச்சிபெறத் தோழியொடு கூடி மகிழ்ந்து குளிப்பது செட்டி குளம் என்றார். அச் செட்டிகுளம் போலவே செங்காட்டுப் பட்டியிலும் பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு உண்டாகியமையால், செட்டிகுளத் திற்குளித்த செந்தமிழ்த்தாய் செங்காட்டுப் பட்டியிலே வந்து பருகப்பால் -அட்டியது போல்வதே மீண்டும் பொலிந்தெழுந்த பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு என்றார். சிங்கபுரியில் ஆட்சிமொழிகளுள் தமிழ் ஒன்றாக இருத் தலை அறிந்து மகிழும் பாவாணர். இலங்கரச மும்மொழியுள் ஒண்டமிழும் ஒன்றாம் இலங்கையிலும் இல்லாத ஏண் என்று பாராட்டுகிறார். நடுவண் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகத் தமிழும் இல்லையே என்னும் எண்ணத்தின் வெளிப்பாடு இது. ஐந்தாவதாம் ஐந்தகம் பத்தே பாடல்களையுடையது. செந் தமிழ்ச் செல்வி மாதிகை பற்றியது முன்னது. அது போற்றத் தக்க பொற்பேழை என்றும், அது தமிழ வாகைப் போர் செய்து பாடாண் பாடுவது என்றும், இவ்வவைந் தகத்துப் பாராட்டுகின்றார். அடுத்த ஐந்தகம் திருக்குறளின் சிறப்புப் பற்றியது. வள்ளுவர் வகுத்த அறம் நடுவறம் என நயக்கின்றார். பதிகம் ஒன்பதுண்மை அறிந்துள்ளோம்; அஃதாறாம் பகுதி. உலக முழுமைக்கும் ஒத்த மறைநூல் திருக்குறள் என்றும், ஊரும் பிறப்பும் உறுதொழிலும் உற்றோரும் பேரும் தெரியாப் பெரும்புலவர் திருவள்ளுவர் என்றும், ஒழுக்கம் உயர்குலம்; ஒன்றே பிறப்பாம்; இழுக்கம் இழிகுலம் என்ப தென்றும், பொய்மையும் வாய்மை இடத்த என்னும் பொய்யா மொழி என்றும், இல்லறத்தாலும் இறையடி எய்தலாம் என்பதென்றும், அது புரட்டை வாரிய சூறாவளி என்றும், பல்லுரை கண்டும், முடிவாகக் கண்டார் இலர் என்றும் அது மாமலைக்குச் செல்லாமல் யாரகத்தும் அமர்ந்துதவும் அரு மருந்து என்றும் தமிழர்க்கு உய்வைத் தந்தது என்றும் பொது மறைப் பதிகம் புகல்கின்றது. செயற்கரிய செய்வார் பெரியர் என்பதற்கு எடுத்துக் காட்டு பெரியார் என்றும், தமிழினத்திற்கெனவே உழைக்க வந்தவர் அவர் என்றும், எதிர்ப்புக் கஞ்சாது தாங்கும் சூர வாழ்க்கையர் என்றும், இந்தியெதிர்ப்பில் தலைசிறந்தவரும், குடி செய்வாராய் மடி செய்யாது மானங்கருதாது தொண்டு பூண்டவரும் பெரியாரே என்றும், கண்மூடி வழக்கங்கள் மண் மூடிப்போக உழைப்பவரும்., பட்டபடிப்புகள் பயனில் குப்பையாக இருப்பதை மெய்ப்பிப்பவரும் அவரே என்றும், பெரியார்தன்மான இயக்கப் பதிகத்துப் பாடுகிறார். சீரிய கொள்கைச் சிதம்பரப் பதிகம் வ.உ.சி.யைப் பற்றியதாம். நாட்டுப்பற்றால் முன்னே நாய்படாப்பாடுபட்ட ஒட்டப்பிடார ஒளிர்மறவன் எனப்பதிகத்தைத் தொடங்குகிறார். மாடுபோற் செக்கிழுத்து, மட்டிபோற் கல்லுடைத்து, வேடுபோற்கேடாய் உடையுடுத்துப்- பாடுபட்டோன், கேழ்வரகுக் கூழுண்டு கீழ் விலங்கிற் கீழ்விலங்கில், தாழ்வுறுதற்கே சிதம்பரம் என வெதும்புகிறார். mt®j« நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு, நன்றிமறவாமை என்பவற்றை விரிக்கிறா.ர். மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகத்தில் அவரைப் பேராசிரியர், பெரும்புலவர், பாவலர், ஆராய்ச்சியாளர், மும்மொழிப்புலவர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், பல்கலைச் செல்வர், தனித்தமிழ்த் தந்தையார் எனப்பதின்வகையிற் காண்கிறார். மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் - என முடிக்கிறார். பாரதிதாசன் பண்பாட்டுப் பதிகத்தில், ஆனை நடையும் அரிமாப் பெருமிதமும் கோனையும் சாடிக் குமுறுரையும் - தானையே தாக்கினும் அஞ்சாத் தறுகண்ணும் மேலாடைச் சேக்கையும் பாரதிதா சன் என்பது அருமையான ஓவியக் காட்சி, அவர்தம் பாடலைத் தெளிதேனில் தீன்கலந்த தெண்ணீர்ப் பதம்போல் வது என்கிறார் (185) இக்குறிப்பு குலோப்சாமூன் என்பதாகலாம்! பாலை நிலத்தில் பழம்படு பன்மரப்பைஞ் சோலையே பாரதி தாசன் என்கிறார். சேலம் நகராண்மைக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர். பாவாணர் வாழ்வில் பசுஞ்சோலை எனத்தக்க காலம் இராமசாமியார் அரவணைப்பில் அவர் இருந்த பன்னீராண்டுக் காலமே . தமிழ்ப் பற்றே வடிவெடுத்தாற் போன்றவரும், தமிழ்ப் பண்பாட்டில் தலைசிறந்தவரும் என்மொழி நூலாராய்ச்சி முற்றுதற்கு ஒரு பெருந்துணையாய் இருந்தவரும், ஒப்புயர் வற்ற முதல்வருமான பேராசிரியர் அ.இராமசாமிக் கவுண்டர் எனத்தம் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தில் பாராட்டுவார் பாவாணர். சேலங்கல் லூரி சிறந்திராம சாமியின்றேல் ஞாலம் பரவுதமிழ் ஆராய்ச்சி - நூலியற்றும் தேவநே யன்எங்கேதென்மொழித் தொண்டெங்கே பாவுதமிழ் மீட்பெங்கே பார் என்னும் பாடலால் பாவாணர் உள்ளகம் தெள்ளென விளங்கும். சிங்கபுரி வணிகவியற் கல்லூரி முதல்வர் கோவலங் கண்ணனார். கோபாலகிருட்டிணனாம் அவர் தனித்தமிழ்ப் பற்றாலும் பாவாணர் தொடர்பாலும் கோவலங்கண்ணராயவர். அவர்தம் நயத்தகு நயங்களை உன்னிப் பண்டை முறையில் பாடாண்பதிகம் பாடினார். ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும் அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று என்பது பாடாண் இலக்கணம் (புறப்பொருள் வெண்பாமாலை 189). அறிவொழுகுகண்; அமர்தமிழ்நோக்கு; செழிம்பு; கோவீறு நெஞ்சு: பொற்கோல வளருடம்பு இவை கோவலங் கண்ணர்: என்கிறார். தமிழே கருதித் தகுந்தாரைத் தள்ளா நமர்எனக் கோவலங்கண்ணர் பெருநோக்கைக் குறிக்கிறார். முந்திப் பொருளளித்தார், பிந்திப் புகழ்ந்துரைத்தேன் எனப் புகழ் கருதாப் புகழ்க்கொடையைப் புரிந்து பாடுகிறார் பாவாணர். எட்டாம் பதிகம் வெள்ளச் சேத விளரிப்பதிகம். விளரி என்பது இரங்கற்பண். விளரியுறுதருந்தீந் தொடை என்பது புறநானூறு (260). வெள்ளத்தால் உண்டாகிய அழிபாட்டுக்கு வருந்திப் பாடுகின்றாராகலின் இப்பெயரிட்டார். ஆருயிர் அனைய என்றன் அன்பனை இழந்தேன் என்பார் கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி இழந்தேன் என்பார் சீரியஅறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார் ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என்பார் என்றும், நீர்மிகின் சிறையு மில்லை நீளியின் வலியு மில்லை கார்மிகின் உறையுளில்லை கனல்மிகின் அணைப்பு மில்லை பார்மிகும் பரிசொன்றில்லை பரவெளி மனை யெழுப்பிக் கூர்மதிக் குடும்பத் திட்டங் கொண்டினி தொழுகுவோமே என்றும் வரும் பாடல்களின் எளிமையும் உணர்வும் விளரி யை வெளிப்படச் செய்யும். இது நாகைப் பகுதியைத் தாக்கிய கடும்புயல் வெள்ள அழிபாட்டைப் பற்றியது. ஒலிக்குறிப்பை எதுகையாக்கி உணர்வை உருக்குவதைப் பத்தாம் பாடலிற் காண்க. இறுதிப் பதிகம் படைமற வாகை என்பது. ஊனரத்தம் துளியு டம்பில் உள்ள வரையும் பொருமினே வான வர்பூச் சிந்தி வாழ்த்த வாகை சூடி யாடுவீர் என்பதில் (6) தலைப்புச் செய்தி சுட்டப்படுகின்றது. வங்கப்போர் வெற்றி பற்றியது இது. இளைதாக முள்மரம் கொல்லல் எலிப்பகை நாகம் உயிர்ப்பக்கெடும், நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும் என்னும் குறள்களும் பழமொழிகளும், வரலாற்றுக் குறிப்புகளும் இப்பதிகத்தில் இடம் பெற்றுள. வெற்றி மாளிகையில் போர்ப்பாடகராகப் பணியாற்ற வேண்டும் என்று ஒரு காலத்தில் அவாவியவர் பாவாணர் என்பது இவண் எண்ணத்தக்கது. வரலாறு என்னும் ஏழாம் பகுதியில் சாமிநாதையர் தமிழ்த் தொண்டு என்னும் பகுதி முதற்கண் உள்ளது. அதில் “கொலம்பசு முதலோர் கொடுங்கடலோடி, நிலம்பல கண்டிலராயினும் நீங்காப்., பின்னோர் அவற்றைப் பின்னே காண்பர் ஆனால், சாமிநாதையன் சார்ந்திலனாயின், இற்றைத் தொன்னூல் என்னாகியிருக்குமோ? என்னும் அரிய செய்தியும், விறகுத் தலையன் முறையில் ஏடு கொண்டு தொகுத்து வெளியிட்ட பெரிய செய்தியும் இடரிலா நடையில் தடையறச் செல்கிறது. அவ்வாறே சாமிநாதர் மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர்க்கு உதவிய வெங்களப்ப நாயகர் பற்றி எழுதிய செய்தியைக் கொண்டு இயற்றப்பட்டதே வழிமுறைப்பண்பு (வழிமுறை - பரம்பரை). வெங்களப்ப நாயகர் கொடையில் வாழும் செய்தியை மிதிலைப் பட்டியார் உரைக்க, வண்டியோட்டியாக இருந்த நாயகர் வழிமுறையார் வாடகையும் கொள்ளாது உணவும் பெறாது விடைபெற்றபோது என் எனக் கவிராயர் வினவக் கொடுத்ததை வாங்கும் குணமெமக்கில்லை என்று கூறிச் சென்ற அருமைச் செய்தி அது. இவ்விரண்டும் மாணவர் கட்டுரைப் பயிற்சிக் கென வரையப்பட்டவை எனினும் பொன் போற்போற்றத் தக்க புகழ்வாய்ந்தவையாயின. எட்டாம் பகுதியாம் கதையில் முன்னதில் பள்ளிக் கணக்கு புள்ளிக் குதவாது என்பது. உலகியல் அறியார் அறிவு அறிவாகாது என்பதைப் பற்றியது அது. இலக்கணம், தருக்கம், இசை, கணியம் (சோதிடம்) மருத்துவம் வல்ல ஐவர் சமையல் செய்யப் புகுந்த கதை இது. சொல்லிய கதைதான் நம்பும் தோரணையற்ற தேனும்; பள்ளியின் கல்வியெல்லாம் பயன்படா புள்ளிக் கென்பது தெளிதற்கு உதவும் என்று முடிக்கிறார். நன்றியுள்ள சேவகன் என்னும் கதை மேலை நாட்டுக் கதையின் செய்யுளாக்கம்.. ஒரு செல்வன் ஒரிடங்காணுதற்கு நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் சென்றான். வழியில் ஓநாய்கள் வளைக்க அவற்றில் இருந்து தப்புவதற்கு ஒரு குதிரையை அவிழ்த்து விடுத்தான் வண்டியோட்டி. அதனைத் தின்று முடித்து மேலும் ஓநாய்கள் தொடர ஒவ்வொன்றாக நான்கு குதிரைகளையும் அவிழ்த்து விடுத்துத் தன்னையும் இரையாக்கித் தலைவனைத் தப்பிச் செல்ல விடுகிறான். இக்கதை மாணவர் உரைநடை ஆக்கப்பயிற்சிக்காக வரையப்பட்டதாகும். ஒன்பதாம் பகுதி பலவகைப்பாடல்களைக் கொண்டது. தமிழினத்தீரே; தமிழினத்தீரே என விளித்துத் தமிழின உயர்வும், அதன் தாழ்வு நிலையும், அந்நிலை மாறுதற்காம் வழியும், திருக்குறட் சிறப்பும் விரித்து முதலகவலில் ஓதப்படுகின்றன. திருப்போராட்டக் காலத்தில் எழுந்த திருப்பாட்டும், இருமொழிக் கொள்கைப் பாட்டும் படைகொண்டார் மனம் நன்றூக்காமைப்பாட்டும், நீர்க்குமிழி நிலைய வாழ்க்கைப் பாட்டும், தமிழன் தாழ்நிலைப்பாட்டும், வள்ளுவரைப் பற்றிய இசைப்பாட்டும், கும்மியடி பெண்ணே கும்மியடி என இரு கும்மிப்பாட்டும், எஞ்சிய போலிகைப் பாடல்களும் இப் பகுதியில் இடம்பெற்றுள தமிழ் ஆட்சி மொழியாதல் வேண்டும்; ஆங்கிலம் ஆட்சி மொழியாதல் கேடு எனக்கும்மிப்பாட்டில் பாடுகிறார். தலையாய தமிழர் எனவரும் இறுதிப் பாட்டு தனித்தமிழை விரும்புவாரே தலையாய தமிழர் என்கிறார். சங்கநிதி பதும நிதி என்னும் அப்பரடிகன் தாண்டகப் போலிகை அது படை கொண்டார் மனம் பற்றிய பாட்டு நெஞ்சை நெகிழச்செய்வது. இறுதிப்பகுதியில் வண்ணனை நூலின் வழுவியல், வட மொழி வரலாறு என்பவற்றின் முடிநிலைப் பாடல்கள் இடம் பெற்றுள. மொழியியல் சிந்தனை மிக்கவை. வழிபாட்டு மொழி தமிழே என்பதொரு பாட்டு. வான்வாழி என்பது நிறைவுப் பாட்டு. திருக்குறட்கு வடசொல் தேவையின்மையை நிலைநாட்டு மாறு பொருள் கெடாவாறு வடசொல்லமைந்த குறள்களை மாற்றியமைத்துக் காட்டிய பாடல்கள் திருக்குறள் மரபுரையில் 23 இடம் பெற்றுள. அவை ஆய்வு வகையில் நிலைநாட்டுதற் கெனக் காட்டிய சொன்மாற்றாகலின் பாட்டோ போலிகைப் பாட்டோ, ஆகாமையால் அவை இணைத்துக் காட்டப் பட்டில. இத்தொகை யாக்கத்தின் பின்னர்க் கிடைத்த பாடல்கள் 5 திருமண வாழ்த்து 2. பொங்கல் வாழ்த்து 2. பாணர் கைவழி என்னும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் 1. ஆக 5 இவற்றுள் வெண்பா 3. அகவல் 1. கலித்தாழிசை 1. இவை இணைப்பாக அமைக்கப்பட்டவை. பாவாணர் மடல்கள் வெளியீட்டு வகையால் கிடைத்த வருவாய் கொண்டு பாவாணர் பாடல்கள் வெளிவருகின்றது. ஆதலால் பாவாணர் மடல்களுக்கு உதவிய புலமைத் தோன்றல்கள் திரு. தமிழ்நேயர், செம்பியர் என்பார்க்கும், இப்பாடல்களை வெளியிட்ட நூல்கள் இதழ்கள் ஆகியவற்றுக்கும், தம்மிடம் இருந்த பாடல்கள் தமிழ் வளம் ஆகும் வகையில் உதவிய அன்பர்களுக்கும் நன்றியன். பாவாணர் நூற்றாண்டின் தொடக்க நாளன்றே இதனை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்த தனித் தமிழ்ச் செம்மல் முனைவர் கு. திருமாறனார்க்கும் பாவாணர் தமிழியக்கத்திற்கும், வெளியீட்டு நிகழ்வுப் பொறுப்பு ஏற்கும் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியன். தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச்சாலை அல்லூர் 620 101. திருச்சி மாவட்டம் முந்தைக்கொடை முறை பாவாணர் என்னும் பனிமலையின் பாடல்கள் நாவாணர் துய்க்கும் நறுந்தேனாம் - காவாணர் செந்தமிழ் நேயரும் செம்பியரும் சேர்ந்தளித்த முந்தைக் கொடையின் முறை. விற்ற தொகையும் விரும்புகொடையென்று சொற்றநம் பாவாணர் சொல்போலப் - பெற்ற மடல்தொகையால் பாவாணர் மாண்பாடல் நூலை உடன்பதிக்க வாய்த்த துளம். நூல்வாங்கும் உள்ளத்தை நூற்றுவரில் ஓரொருவர் பால்வாய்க்கப் பார்ப்பினும் பாற்பெருக்காம் - மேல்வாய்க்கும் நூலுக்கு நல்லகொடை நூல்விற்றல் என்பதுதான் ஆலுக்கு வீழ்தென்னல் ஆம். சுருக்க விளக்கம் இ.த.எ.கெ. - இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ? இ.த.க. - இசைத்தமிழ்க் கலம்பகம் உ.க.இ. - உயர்தரக் கட்டுரை இலக்கணம் கட். - கட்டுரை செ.செ. - செந்தமிழ்ச் செல்வி செ.ப.க.க. அ.மு.சீ.- சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியின் சீர்கேடுகள் த.இ.வ. - தமிழ் இலக்கிய வரலாறு த.நா.வி. - தமிழ் நாட்டு விளையாட்டுகள் த.வ. - தமிழ் வரலாறு த.தி - தமிழர் திருமணம் த.ம. - தமிழர் மதம் தமிழர்வ. - தமிழர் வரலாறு தி.ம. - திருக்குறள் தமிழ் மரபுரை தெ.மொ - தென்மொழி ப.த - பழந்தமிழாட்சி ம.வி - மண்ணில் விண் மு.தா.மொ - முதல் தாய்மொழி வ.மொ.வ. - வடமொழி வரலாறு வ.வ - வண்ணணை மொழிநூலின் வழுவியல். பாவாணர் பாடல்கள் 1. பாயிரம் கடவுள் வாழ்த்து 1. குமரி நிலத்தெழுந்த கோமொழி யேனும் தமிழர் அடிமைத் தனத்தால் - சிமிழ்த்திருக்கும் ஆரிய ஞாட்பின் அருந்தமிழை மீட்கவொரு சீரிய மீட்பன் துணை. -இ.த.க. கோமொழி தலைமையான மொழி; சிமிழ்த்திருக்கும் கட்டுண்டிருக்கும்; ஞாட்பு போர்; மீட்பன் மீட்பாளன். இறைவன். 2. எண்ணிற்கு மெட்டா இடங்காலந் தேங்காவி கண்ணிற்கோ எட்டுங் கனப்பொருளாம் - வண்ணிக்கக் கூடாமல் அன்றோ குறித்தார் கடவுளென நாடாமல் உண்டென நம்பு. -த.ம. 3. மறைமலை யடிகளும் மாமதி யழகரும் கறையுறும் இந்தியைக் கடிந்தும் தொண்டர்பின் சிறையுழந் தின்னுயிர் சிந்தியும் வடவர்தாம் இறையுமெ ணாதிவண் இந்தியைப் புகுத்தினர். 4. இந்நில வரலாறும் இன்றமிழ்ப் பெருமையும் என்னுமே யறியாமல் இறைமை தாங்கிய தன்னல வடிவெனும் தமிழப் போலியர் கன்னலந் தமிழையும் காட்டிக் கொடுத்தனர். 5. தமிழ லாதுயிர் தமிழனுக் கின்மையின் தமிழன் தன்னிலம் தன்னுயிர் தாங்கவே இமையுந், தாழ்விலா தியன்ற யாவையும் அமையச் செய்குவிர் அயன்மொழி யொழியவே. 6. தன்மையிழந்து தவிக்கின்ற தமிழன்தன் முன்மை யுணர்ந்து முன்னேறிச் சென்றிட உண்மை வடிவெனும் ஒருவன் உணர்த்தவும் இன்னி திசைத்தேன் இசைத்தமிழ்க் கலம்பகம். 7. குறையும் எழுத்தினால் கூடுவ தினிமையே அறையும் அளபெடை யாக்கியே யெழுத்தொலி நிறையும் அளவுற நீட்டுக இதற்கேஇம் முறையும் சிலவிடம் முதன்மையாய் ஆண்டுளேன். 8. பாடற் குழாம்ஒன்றேற் படுத்துக; ஊர்தொறும் கூடற் குரியவாய்க் குறித்திட்ட நாட்களில் தேடற் கரியதாம் தீந்தமிழ் தெருவெலாம் பாடிப் பராவுக பயிற்சியைப் பெற்றபின். 9. இந்தி யொழிந்தபின் இருமொழிக் கொள்கையே செந்தமிழ் நாட்டிலே சீராக வேரூன்றி வந்தவ ருந்தமிழ் வாணரும் வாழ்ந்திட முந்திய இறைவனும் முழுமையும் அருளவே. -இ.த.க. 1. மதியழகர் - சோமசுந்தரபாரதியார்; இறையும் - சிறிதும்; 2. என்னும் - சிறிதும்; கன்னல் - கரும்பு 3. இமையும் - இமைப்பொழுதும்: 4. இன்னிசைத்தேன் - இனிது பாடினேன்; இப்பொழுது பாடினேன் 5. பராவுக - வாழ்த்துக 6. வந்தவர் - அயலார். அவையடக்கம் 10. என்றும் திருத்தம் இயம்பும் அறிஞரின் நன்றி அறிவேன் நனி ப.த.ஆ முகவுரை சேலம் 13.12.51. 11. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் உண்டோ பயன்? - ப.த.வ;நூ. முகவுரை 30.11.73 வ.மொ.வ.முகவுரை 28.8.68 12. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் ஏது பயன்? - மு.தா. மொ: முகவுரை 6. 21.2.49 2. வாழ்த்து திருமண இறைவணக்கம் 13. துங்க இல்லறத் துணையை நாடியே இங்க மர்ந்துள இம்மண மக்களை மங்க லம்மிகு மணவினைப் படுத்தவே எங்குந் தங்கிய இறையடி பணிகுவாம் அங்க - உயர்ந்த. -த.தி. 74 இறைவேண்டல் 14. தாயும் தந்தையும் தானெனும் தம்பிரான் சேயைக் காத்தருள் சீரென இன்னினே தாயும் நோயுறத் தண்ணருள் பொழிகென ஆயி ரம்மவன் அடியிணை வீழ்ந்தனம். -திரு. மி.மு. சின்னாண்டார்க்கு எழுதியது இன்னினேஇப்பொழுதே.7.1.65 15. இன்னிசை யாழ்வல்லான் இன்சொல் எழில்முகத்தான் என்னிடை யன்பால் இசைநுவன்ற - இன்னியலான் மன்னார் குடியிராச கோபாலன் மாணடிகள் மன்னுக என்றன் மனத்து. - இ.த.க. திருமண வாழ்த்துப்பா (நேரிசையாசிரியம்) 16. மங்கலந் தங்கும் மனையறம் மருவும் .............................................. ஓருயி ரெனவே ஒன்றிய காதலில் பல்வகைச் செல்வமும் பாங்கா யுதவ இம்மையின் இன்பத் தெல்லை கண்டே ஏனையர்க் கெல்லாம் இயல்வரை உதவி உற்றோர் மகிழவும் மற்றோர் புகழவும் வள்ளுவன் நெறியும் தெள்ளிய தமிழும் kநிலம்vங்கணும்gரவ thழியர்ந‹குtயகம்eடிதே-j,தி.80 மங்கலம் 17. போற்றும் தமிழ்க்காவற் பொன்னுச் சுவாமியரும் ஆற்றுஞ் சகுந்தலை அம்மையரும் - ஏற்ற நகர்க்காவ லோடு நலவறங் காத்து நிகர்க்காமல் நீட நிலம். ...........k§fyம்1. 4. 45 திரு. பொன்னுச்சாமி அவர்கள்காவல்துறை. நலவறம் - நலம்பயக்கும் அறங்கள்; நிகர்க்காமல் - ஒப்பு இல்லாமல் கலியாண சுந்தரம் வடிவழகி திருமண வாழ்த்து 18. கலியாண சுந்தரஞ்சேர் காதல்வடிவழகியம்மை புலியாணம்ஒன்றாகிப்பொருவரியஇன்பந்துய்த்தொலியானநன்மக்கள் cலகுவப்பப்bபற்றுமனை kலியாணர்tரநீடுkநிலத்துtழியரோ.br. செ. 30: 506 11.6.56òÈahz« ஒன்றாகி - உண்ணாக்கும் மேல்நாக்கும் போல் ஒன்றுபட்டு; ஒலியாணம் - புகழும் mழகும்;kலியாணர்- Äகுந்தòதுவருவாய்.âUts® முருக லலிதையர் திருமண வாழ்த்து 19. முருக லலிதாவர் முத்தமி ழின்பம் பெருகு திருவாழ்வு பெற்று -முருகுமண மங்கலம் நீடி மனமொன்றிப் பார்புகழத் தங்குக மேன்மேல் தழைத்து. - 20 மீனம் 2000 3.4.69 முருகு எழுச்சி. திரு. பி. கணேசன், இரணியல் சேலம் நகராண்மைக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் மகனார், திருச்செல்வர் இரா. வேங்கடேசன் பொறி. இ.க. சென்னிமலைசிங்காரவேலர் திருச்செல்வி சகுந்தலா எம்.பி.பி. எசு. திருமண வாழ்த்து 20. தேங்கு முப்பொருள் திருநடம் புரிந்திட வேங்க டேச சகுந்த லாவர் ஓங்கி வாழியர் உலகில் நீடியே! - 24.12.71 முப்பொருள் - அறம், பொருள், இன்பம். வாழ்த்துப்பா 21. நாவை சிவதா மரையர் தமிழ்க்கதிரோன் மூவர் மகிழ்க முழுவாழ்வு - மேவுமணி செந்தா மரைமலர்த்துஞ் செங்கதிர் போற்குரவர் சிந்தா முகமலர்த்தச் சேர்ந்து. - உச மீனம் 2002 புலவர் நாவை. சிவம். சிந்தா - கெடாத. வாழ்த்து 22. நாவை சிவமினியும் நாடும் நிலையெல்லாம் மேவி யுயர்ந்து மிகநீடி - யாவும் தமிழெனத் தோன்றுந் தகைமையில் வாழ்க இமிழ்கடல் வையம் இனிது. - புலவர் நாவை. சிவம். 7.7.78 வாழ்த்து 23. நாவைசிவ தாமரையார் நாற்றிசையுந் தமிழ்மணக்கப் பாவையெனப் பூத்ததமிழ்ப் பண்புமிகுந் தமிழ்மலர்தான் நாவையுறுங் கலைகளெல்லாம் நயமுற்றத் துறைபோகி மாவுலகும் பெற்றோர்போல் மகிழ்தூங்க மன்னுகவே. (21.12.72) - உ00ங, சிலை, எ.புலவர் நாவை. சிவம். மங்கலத்திரு. பரமசிவ ஐந்தருவியர் திருமண வாழ்த்து 24. பரம சிவவைந் தருவியர்நற் பாலின் விரவு சிவல்நீர் விழையப் - பரவுதமிழ் இன்பம் வளர இலகுக நீடுமனை அன்பும் அறனும் அமைந்து. -26.1.75 திருமண வாழ்த்து மங்கலத்திரு. குமுதபாண்டியர் 25. தமது பாத்துணுந் தம்மில் வாழ்வினிற் குமுத பாண்டியர் குலவி நீடியர் தமிழ நன்மணந் தழுவு வோர்தமை நிமிருந் தலையுடன் நிலத்தில் ஓங்கவே. - பாவலர் முடியரசனார்க்கு 9.6.75 தமது பாத்துணும் தம்மில்வாழ்வு என்பது, தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. என்னும் குறளைத் தழுவியது. மங்கலத் திருவளர் செந்தாமரை கணபதியர் திருமண வாழ்த்து 26. இறையருள் பாங்கா யில்லறம் புகூஉம் திருவுறை செந்தா மரைகண பதியர் ஒருமன வாழ்வில் உலகிய லின்பம் நிறைவுற வாழ்க நிலமிசை நெடிதே. - 15.1.76. மங்கலத் திரு. இளங்கோ இராசேசுவரியார் திருமண வாழ்த்து 27. இளங்கோ விராசே சுவரியர் நல் லின்ப வளங்கோள் வகைநீடி வாழ்க - விளங்கியினி வண்டமி ழோங்குதிரு வள்ளுவ வாகையறம் எண்டிசை யேந்த வினிது. - 18.5.76 புலவர் இளங்குமரனார்க்கு வாகை - வெற்றி மங்கலத் திரு. மெய்கண்டான் சீதாவர் திருமணவாழ்த்து 28. மெய்கண்டார் காணன்பு மெய்யன் திருவருளால் மெய்கண்டார் சீதையர் மேவிநிலை - மெய்கண்டு மெய்யின்பந் துய்க்க மிகுநாள் மனையறமும் மெய்யின்பப் பண்பு மிக. -25.10.78. மெய்யன் - இறைவன்; உரைவேந்தர் பேரா. ஔவை.சு.து. அவர்களுக்கு விடுத்தது. மேவி - அடைந்து; நிலைமெய்- நிலைத்த மெய்ம்மை, மெய்யின்பம் - உடலின்பம். மங்கலத்திரு. பாரதிஞானசோதியர் திருமணவாழ்த்து 29. நேரிய தமிழ்மறை நெறியுற வகுத்த சீரிய மனையறம் செம்புலம் பெய்த நீரியல் நேய நீர்மிகு நெஞ்சம் பாரதி ஞான சோதியர் கலந்து பார்மிசை நீடு வாழியர் ஈரறி மகவர் இன்பந் திளைத்தே. -புலவர் இளங்குமரனாருக்கு 25.5.79 தமிழ்மறை - திருக்குறள்; செம்புலம் பெய்தநீரியல் நேயம் என்பது செம்புலப் பெயல்நீர்போல அன்புடைநெஞ்சம் தாம் கலந்தனவே என்னும் குறுந்தொகைவழியது. நீர் - வளம்; ஈரறிமகவர். அறிவறிந்த மக்கள் இருவர். மங்கலத்திற்கு இலட்சுமி நாராயண கண்மணியர் திருமண வாழ்த்து 30. கண்மணி லட்சுமி நாரா யணர்காதல் விண்மணி யேபோல் விளங்கியொன்றாய் - ஒண்மணி மக்கள் தகவுணர்த்த மாநிலத்து நீடியரோ தொக்க நலமெலாந் தோய்ந்து. - 31.5.79 சு. பொன்னுச்சாமி எல் - கதிரோன்; தொக்க - நிரம்பிய. திருவளர் சங்கரி மங்கலநீராட்டு விழா 31. எங்கணும் தங்கும் இறைவன் திருவருளால் மங்கையாம் சங்கரி மண்ணுநீர் - மங்கலந்தான் பொங்கபின் பெற்றோர் புகலும் பெருமகனின் துங்கநல் வாழ்க்கைத் துணை. - 12.8.80 பாவலர் இ. முத்துராமலிங்கம் மண்ணு மங்கலம் - பூப்பு நீராட்டு; பொங்க - பொலிக; புகலும் - சொல்லும்; துங்கம் - உயர்வு. மக்கள் வாழ்த்து 32. தேவ மொழியேனும் தெட்டை நீக்கியே ஏவருந் தமிழ் எமது மொழியென மேவி வாழியர் மேலை மறந்தபின் தாவில் நல்லிசைத் தமிழம் ஓங்கவே. 33. உள்ள நற்றொழில் உஞற்றித் தம்முடைப் பள்ளி யிருந்துணாப் பகிர்ந்துண் டின்பமாய்த் தெள்ளு கற்புடைத் தேவி யோடறம் வள்ளு வர்மதி வகுத்த வாழ்வரோ. 34. மிக்க பிறப்பினை மிண்டித் தடுத்தபின் தக்க அறிஞரைத் தலைவ ராக்கியே ஒக்க ஒன்றிய உலக ஆட்சியில் மக்கள் வாழியர் மண்ணில் விண்ணதே. 1. தெட்டு - வஞ்சம்; ஏவருந்தமிழ் - தொல்பழந்தமிழ்; மேவி - அமைந்து; மேலை - மேற்கூறிய வஞ்சம்; தா - குற்றம். 2. உஞற்றி - செய்து; பள்ளி - இல்லம்; உணா - உணவு; தேவி - மனையாள்; மதிவகுத்த - மதித்து அமைத்த. அறிவால் அமைத்த. 3. மிண்டி - நெருங்கி. உறுதி புலவர் முடியரசனார்க்கு வாழ்த்து 35. வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்கும் தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுண் முறை. - 15.8.55 வேத்தவை - அரசவை; முடியரசர் - மூவேந்தர். 36. தேவேந்தர் பேசும் மொழியெனத் தெட்டித் திருவினொடு மூவேந்தர் மாய முதுதமிழைக் கொல் மொழியொழிக்கும் நாவேந்த ரான புலவர்க்கு வேலன்றோ நம்புதுவைப் பாவேந்தன் பாரதி தாசன் புரட்சிப் பனுவல்களே - 15.4.59 - பாவேந்தர் சிறப்பிதழ் (தமிழ் முரசு) சி. இலக்குவனார் 55 ஆம் பெருமங்கல நாள் வாழ்த்து 37. இலக்குவனார் செய்யும் இருந்தமிழ்த் தொண்டை விலக்குவான் செய்த வினையே - துலக்கியதே ஊழின் வலியதொன் றின்மையால் மற்றொன்று சூழினும் முந்துறும் சொல். - 25.10.65 ஓவியர் செல்லத்துரைக்கு வாழ்த்து 38. சித்திரமோ கைப்பழக்கம் செல்லத் துரையோய்வில் ஒத்த வகையின்ப ஓவியற்ற - எத்திறமும் ஓவியத்தால் அன்றி உணர முடியாத ஆவியுற்றான் செய்க அருள். -14.11.73 ஓய்வில் பணியிடைப் பணியாக ஓவியம் வரைதலைக் கொண்டமையால் ஓய்வில் என்றார். ஓவு - ஓவியம்; ஆவியுற்றான் - ஆவிவடிவமான இறைவன் (கிறித்து) திருவள்ளுவர் திருவிழா வாழ்த்து 39. அம்மை வனப்பினில் அன்புறு வாய்மையாம் செம்மை யுலகறம் செப்பிய தேவனை எம்மை யென்றுகொண் டிப்பெரு விழவினில் வெம்மை மொழிப்பகை விட்டினி வாழ்மினே -செ. செ. 43. 194 அம்மை - அடிநிமிர்ப்பில்லாச் சின்மென்மொழிச் செய்யுள் எம்ஐ - எம் தலைவன். மறைமலையடிகளுக்கு வாழ்த்து 40. மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும் தமிழன் வடமொழியால் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம். - த.வ. 295; தமிழர்வ. 334 வாரம் - அன்பு; இறையும் - சிறிதும் இமிழும் - ஒலிக்கும் ; இகம் - இவ்வுலகில் பெரியார் பிறந்தநாள் வாழ்த்து. 41. புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும் பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற் கொண்டு கண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய் கைபோற் கைதூக்கித் தென்னவரைக் கரையி லேற்றித் தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்த பின்னும் துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால் நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்ற லாற்றன் நானிலத்துப் பெரியாரை வாழ்த்து வோமே. - முதன்மொழி 1.31 புண் + ஊறு. நண் + நூறு எனப் பிரிக்க திரு.வ.சு. மணிவிழா வாழ்த்து 42. சுழன்றும் தமிழுலகம் சுப்பையாப் பிள்ளை முழங்கும் தமிழ்ப்பற்றின் மூள - வழங்கும் பலபல வூழியவன் பைந்தமிழுக் கென்று நிலவுக நின்று நிலத்து. -செ. செ. 32: 73. பேர்வேண்டாப் பெரும்புகழளாளன் - ஆண்டியப்பனார்க்கு மணிவிழா வாழ்த்து 43. பாண்டிய ரில்லாப் பைதறு காலை பாலவ நத்த வேளென வுற்ற பாண்டித் துரையெனும் பைந்தமிழ்த் தேவர் நாட்டிய நாலாம் நற்றமிழ்க் கழகம் வாயில் கொண்டு வண்டமிழ்த் தொண்டு முப்பா னைந்தாண் டொப்புர வாற்றி இல்லாண்மை யானே நல்லாண்மை பூண்டு முதுகுடி யுயர்த்தும் முக்குலச் செம்மல் தன்னலங் கருதா மன்னலக் குருசில் பேர்புகழ் வேண்டாப் பெரும்புக ழாளன் மணிவிழாக் கொள்ளும் பணிவிழா நல்லோன் ஆண்டி யப்பத் தேவர் வாழி வேண்டியாங் கெய்தி விழுமிய நெடிதே உலகத் தமிழ்க் கழக உறுப்பினர்க்குப் பொங்கல் வாழ்த்து 44. தகைசால் உலகத் தமிழ்க்கழ கத்தீர் நகைசேர் முகத்தொடு நலமாய் வாழ்க! புத்தாண்டாகும் பொங்கல் நன்னாள்! கொத்தாம் மஞ்சட் கொழுங்கிழங்கு கமழ்க! வெண்ணெலும் கரும்பும் வீடுதொறும் பொலிக! பாலொடு சோறும் பாற்படப் பொங்குக! புத்தாடை யணிந்து புதிரியுண்க! இல்லார் மகிழ்க! இயன்றவை ஈக! மறைமலை யடிகள் நிறைமொழி வள்ளுவர் மலர்முகப் படங்கள் மனைதொறும் நாற்றுக! தமிழ்ப்பெயர் தாங்குக! தனித்தமிழ் பேசுக தென்மொழி படிக்க! தீந்தமிழ் பொழிக! உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி இலகு தமிழெனல் எதிர்நோக்கி இனியே -தெ. மொ. 7. 9. 48 நற்கலையில் வென்விழா 45. வீட்டுரிமைக் காவணம் வேண்டும் வரலாறு நாட்டுரிமைக் காகும் நவையின்றேல் - ஏட்டுரிமை பெற்றார் திருவரங்கம் பின்னிளவல் சுப்பையா உற்றார் வெளியிட வோர்ந்து. 46. சிவநெறிக் கொண்முடிபும் செந்தமிழும் போற்றும் உவமனிலா நூற்பதிப்பில் ஊன்றி - நிவந்தோங்கிப் பொன்விழா வைத்தமிழ்ப் பொத்தகஞ்செய் நற்கலையின் வென்விழா வென்றே விளம்பு. 47. நாடும் மொழியும் நலஞ்செய்பல் வேறறிஞர் பாடும் அரசும் பகர்நூல்கள் - கேடின்றிச் செந்தமிழ் ஆங்கிலம் சேரவிலை கொள்ளுமிடம் அந்தமிழ் அப்பரச்ச கம். 48. ஆயிரத்தெண் ணூறாண்டின் முன்னைத் தமிழரெனும் நேயமிக்க நூற்கறு நூறுரூபா - சேயொருத்தர் பெய்தார்வே றெங்கும் பெறலின் றெனமயங்கி நொய்தாங் கழகவிலை நோக்கு. 49. பாட்டும் உரையும் பதவிதரு நற்சான்றும் காட்டும் படங்கடிதம் கையெழுத்தும் - கூட்டிப் புலவர் வரலாற்றைப் போற்றுங் கலையில் வலவன்யார் சுப்பையாவல் லால். 50. வெண்டாளில் முத்துப்போல் வேண்டும் பலவடிவில் பண்டார் தமிழ்நூல் பதிப்பித்தார் -கண்டாரின் கண்ணைக் கவரும் கவின்கட் டடஞ்செய்தார் எண்ணில் பிறர்வே றெவர். 51. சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத் தமிழ்ச்செந் திறம்வாழி - கைவந்த ஆட்சிமே லாளன் அருந்திறலோன் சுப்பையா மாட்சியில் வாழி மழை! -கழகப் பொன்விழாமலர். சை. சி. கழகத்திற்கு வாழ்த்து 52. சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத் திருவள் ளுவம்வாழி - செய்வெற்றச் சுப்பையா வாழி சொரிமுகில் நீடுழி தப்பாது வாழி தமிழ். செய் - செயல். வெற்றம் - வெற்றி. என்தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்? - செ.செ. 444: 220 சிவஞான முனிவர் நூல் நிலையத்திற்கு வாழ்த்து 53. நெல்லைத் திருநகர் நீள்கிழக்குத் தேர்மறுகில் முல்லைத் தமிழின் முதிர்புலவர் - ஒல்லையி.ல் மொய்சிவ ஞான முனிவர்கோன் நூல்நிலையம் எய்துக நீடி இனிது - செ.செ. 40: 297 மறைமலை மன்றத்திற்கு வாழ்த்து 54. குமரி மலைப்பிறந்த கோமொழி - வாழி - திமிர மறை மலைசீர் வாழி - அமரும் மறைமலை மன்ற மதன்வாழி வாழி மறைமலை யச்சு மனை. - தமிழர்வ. இலண்டன் தமிழ்ச் சங்க ஆண்டுமலர் வாழ்த்து-1976 55. உலண்டின் கூடும் உயர்ந்தோர் உவக்கும் உடைக்குதவும் இலண்டன் தமிழ்ச்சங் கமதின் இவ்வாண் டியல்மலரே இலொண்டுங் குடிபோ லிங்கிலாந் தில்தமிழ் இருந்திடினும் சொலண்டும் ஆங்கில இனமுத லெனுமெய் சொலித்திடவே. மணிவாசகர் நூலகர் மன்றம் 56. மணிவா சகர்நூ லகமன்றம் நீட மணிவா சகநூல்கள் மன்னி - அணியோசைச் சிற்றம் பலமுஞ் சிறந்தபே ரம்பலமும் மற்றம் பலமாய் மலிந்து. முதன்மொழி வாழ்த்துப்பா 57. உலகத் தமிழ்க்கழகம் ஒன்றையே பற்றி இலகப் பரவும் இயம்பி - நீலவுகவே பேரா சிரியப் பெருமகன் சொக்கப்பன் நேராம் முதன்மொழி நீடு. -முதன்மொழி 1. 11: 13.12.70 அறிவு - திங்கள் இருமுறை வாழ்த்துரை 58. இழந்த உரிமைகளை எய்த அறியா துழந்த தமிழ்நிலை ஓர்ந்து - துழந்துவழி காட்டி அறிவு கனிந்த தனித்தமிழை நாட்டி நிலவுக நன்கு. -அறிவு1.1:1 தமிழ்நிலை - தமிழர்நிலை. துழத்தல் - ஆராய்தல். அருட்குறள் அணிந்துரை (1954) 59. கிறித்தவ உண்மைகளைக் கேளாரும் கேட்பக் குறித்த அருட்குறள் கொள். பேரா. வீ. ப. கா. சந்தரர் இயற்றிய இறையிசைப் பாமலர் என்னும் நூலுக்குப் பாராட்டு 1971 60. தாய்மொழிப்பற் றில்லாத் தமிழக் கிறித்தவர் வாய்மறை வாசக வாயில்நல் - நேயமுறப் பாவலன் சுந்தரம் பாடல் இறையிசைப் பாமலர்ப் பல்வண்ணம் பார்த்து. 3. இரங்கல் திருவாட்டி திருவரங்க நீலாம்பிகையார் மறைவுக்கு இரங்கல் 61. பட்ட காலிலே படுமெனும் பழமொழிப் பட்ட வரங்கனார் பத்தினி பிள்ளைமைப் பட்ட வெண்மரை விட்டிறந் துண்மைகைப் பட்ட போதியான் பட்டதை யென்சொல்வேன்! 62. தனித்தமிழ் இயக்கினைத் தாங்குவார் தம்மையே தனிப்பட்ட வளைத்தனன் தகையில் கூற்றுவன் இனித்தமிழ் என்னிலை எய்து மோவெனப் பனிப்பவர் தீக்குறி பார்ப்ப தற்கிதோ! 63. புதுவதே யன்றுயிர் போவ தியல்பென முதுவரும் முன்னரே மொழிந்த துண்மையால் இதுவரை இருந்ததற் கிறையை யேத்தியே கதுமென யாஞ்செயும் கடமை முற்றுவோம். திருவாட்டி வ. சுந்தரத்தம்மையார்க்கு - இரங்கலுரை 64. இந்நிலை எண்பானால் ஏற்ற மாயினும் அன்னையிற் சிறந்தவர் ஆரும் இன்மையின் எந்நிலை இறப்பினும் ஈன்ற தாய்மகன் துன்னுறு துயர்பிறர் துய்க்க வல்லரோ. - செ. செ. 27: 81 நாவலர் பாரதியார் மறைவுக்கு இரங்கல் 65. காமு றத்தமிழ் காத்தபண் டாரகன் சோம சுந்தர பாரதி சூருடல் ஈம மெய்தினும் இந்நிலம் நிற்பனே ஏம நல்லுரை ஏறென வென்றுமே - செ. செ. 34. 205 ஔவை தி.க. சண்முகனார்க்கு இரங்கற் பாக்கள் என் செய்வோம் ! 66. இலக்கியமும் வரலாறும் எல்லாரும் இன்பமிகத் துலக்கமுடன் கண்டறிந்து தொல்பெரியார் வாழ்ந்தபொது நலக்குறிக்கோள் கொண்டொழுக நடித்தகலைச் சண்முகனார் கலக்கமுற நமைப்பிரிந்த கடுந்துயருக் கென்செய்வோம்! 67. செவ்வை நடிப் புடனிசையும் சேர்தமிழ ரில்லையெனும் கவ்வையற எவ்வகையும் களங்கொண்ட முத்தமிழர் அவ்வையடைச் சண்முகனார் அரியசெய லோவியனார் எவ்வமுற நமைப்பிரிந்தார் இணையில்லார் என்செய்வோம். 68. தமிழ்நாடு தமிழாட்சி தான்பெறவே காலமெலாம் தமிழோடு தமிழாகித் தமிழரசுத் தூணாகி நிமிரோசை மரைத்திருவாம் நெடுமொழிசேர் சண்முகனார் அமிழ்தான தமிழ்கவல அகன்றுவிட்டார் என்செய்வோம்! பண்டாரகர் சி. இலக்குவனார் மறைவுபற்றி இரங்கல் பதிகம் 69. முந்திவா ளோடு மூத்த முதுகுடிப் பிறந்து கல்வி தந்தையர் தமிழ்ப்பா லூட்டத் தறுகணர் புலமை முற்றி இந்தியை எதிர்க்கு முன்பே ஏனைய மொழிக் கலப்பைச் சிந்திய தமிழ்வ ளர்ப்புச் செயலிலக் குவனார்க் காணோம். 70. நீரணை திருவை யாற்று நேரிரு மொழிக்கல் லூரி ஆரியர் முதல்வ ராகி அருந்தமிழ் பழித்த காலைச் சீரிதின் மறுத்து வந்தார் செறிந்திலக் குவனார் தாமே கூரியல் குன்று மோதான் கோளரி குருளை யேனும். 71. ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சும் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர் கோனோ வீறுடன் நீண்மே லாடை வீசுகை முழந்தாள் தோய ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனாரைக் காணோம். 72. உவப்பவே தலைக்கூ டிப்பின் உள்ளவே பிரியு முன்னர்த் தவப்பல நாளும் ஒக்கத் தனிச்சுவை விருந்தின் ஓம்பி எவர்க்குமுள் அழுக்கா றின்றி இயல்திறம் புகழ்ந்துபோற்றி நிவப்புறும் புலவர் செய்கை நிகழிலக் குவனார்க்காணோம். 73. பகலெல்லாம் மாண வர்க்குப் பகுத்தறி வுடன்கற் பித்து மிகலுள வொழிவு நேரம் மிளிர்குறள் நெறிநடாத்தித் தகுமொரு கைம்மா றின்றித் தமிழ்வளர் கழகம் நாட்டித் திகழ்வுறு தமிழ்த்தொண் டிற்குத் தினையுமோர் பாராட் டுண்டோ? 74. செந்தமிழ்ப் புலவன் என்கோ சிறந்தவா சிரியன் என்கோ செந்திற ஆய்வன் என்கோ செழுந்தமிழ் காத்தோன் என்கோ இந்தியை எதிர்த்து வேலை இழந்துசெல் சிறையன் என்கோ முந்துதொல் காப்பி யத்தை மொழிபெயர்த் தீந்தோன் என்கோ. 75. பல்கலைக் கழக ஆட்சிப் பதவியின் தகுதி யெல்லாம் மல்கிய புலவ ரேனும் மதுரையில் ஏமா றுண்டார் புல்கியோர் வாய்மைஏட்டுப் புரவல ராகா மையின் ஒல்கியே உள்ளம் விண்டார் ஓய்ந்திலக் குவனார் சென்றார். 76. எந்தையை இழந்தோம் என்பர் இன்னுயிர் இழந்தோம் என்பர் முந்தையை இழந்தோம் என்பர் முறைபிற சொல்வர் நாமோ இந்தியை எதிர்த்து வீழ்த்தி இருந்தமிழ் மீட்டுக் காக்கும் செந்தமிழ்ப் படையின் மானச் செம்மலை இழந்தோம் என்பேம். 77. தன்னலம் ஒன்று மின்றித் தமிழ்க்கென வாழ்க்கை ஏற்ற மன்னலப் புலவர் தேரின் மருவுபண் டார கர்தான் இந்நிலை ஒருவர் உண்டோ இலக்குவ னாரை ஒப்பார் இன்னலே தமிழ்க்கு நேரில் இன்னுடல் ஈய வல்லார். 78. இருந்தநாள் ஒன்றும் ஈயா திறந்தபின் இரங்கல் கூறல் வருந்தவே தானிந் நாட்டு வழக்கமாய்ப் போயிற் றந்தோ திருந்திய உண்மை அன்பர் தீர்ந்தவர் குடும்பத் திற்குப் பெருந்தொகை தண்டி யீக பெரிதொரு கழுவா யாகும். - செந்தமிழ். இலக்குவனார் நினைவுமலர். வள். ஆண்டு 2004; பிரமாதீச மார்கழி 1973 திசம்பர் செல்வத்தம்மையார்க்கு இரங்கல் 79. செல்வ மேயெனும் செல்வஞ் சென்றதைச் செல்வி வாயிலாய்த் தெரிந்து வருந்தினேன் கொல்வ கையெனும் குறிப்பி லாமையாற் சொல்வி னைக்குமைச் சூழ்ந்த மர்த்தினேன். 80. புற்று நோயினாற் போன என்மனை பற்றி நீடியே பரிந்தொ ரீளையைப் பெற்று ழந்தபின் பிழையை நோக்கியே முற்று நீக்கினென் முதல்வன் அருளினால். 81. பெண்ணி னற்றுணை பிறிதொன் றின்மையால் நண்ணி வாழ்வதே நாயன் விரும்பினும் கண்ணி னன்மனை கணவன் கண்முனே கண்ணை மூடுதல் கருதின் நன்றரோ. 82. ஆற்று மளவிறந் தவல நேரினும் போற்றும் வகையிலாப் புல்லென் னிம்மையில் நோற்று மக்களை நோக்கி யேதமைத் தேற்றிக் கடமைகள் தீர்த்தல் நன்றரோ. 83. இன்ப மொருதுளி இடையில் நேரினும் துன்ப மேமிகும் தொல்லை யுலகினில் தென்பு தந்திடும் தீந்த மிழ்த்துணை நன்பெ னக்கொளல் நம்ப னருளதே. - புலவர் இரா. இளங்குமரனார்க்கு 4. நன்றி வடமொழி வரலாறு - நன்கொடையாளர்க்கு 84. ஆளும் அரசும் அமைபல் கலைக்கழகும் நாளும் திரள்செல்வ நாயகரும் - நீள்கையறத் தாய்மொழிக் கென்றுருபா தண்டினான் நாகராசன் ஆயிரம் நான்கென் றறி. 85. ஒன்றும் பலவும் ஒருநூ றளவுருபா ஒன்றி யளித்தவெலா வொண்மையர்க்கும் - நன்றி தமிழன்னை கூறுகின்றாள் தப்பாமற் கொள்ள இமிழ்திரை ஞாலம் இசை. தமிழர் மதம் - நன்கொடையாளர்க்கு 86. கடவு ளுண்மையைக் கண்ட குமரித் தமிழர் மதநூல் தன்னை வெளியிட முன்னோர் தகவோர் என்னும் உண்மை பின்னோர் காட்டும் பெற்றியில் வாழும் முல்லை வாண முல்லைச் செல்வியர் திருமலை குமணன் திகழ்நன் முல்லை திருவர் வெ.நா. சுப்பை யாமகார் இளங்கண் ணன்செம் பொன்தமிழ் முல்லை மானி மீன்கொடி யாம்அருண் முல்லை அமல தாசன் சிதம்பரம் பெருமாள் வரதன் மனோகரன் மூர்த்திகண் ணையா சண்முகம் கணேசன் சிவசாமி யென்னும் பண்புறு சிங்கைப் பதினெண் தமிழர் அன்புரு பாமூ வாயிரத்து நூறு இன்றமி ழன்னை இணையடிக் கையுறை என்றும் தமிழுல கேத்துதல் கடனே. 23.9.72 தமிழர் மதம் வெளியீட்டுதவி 87. திருமுல்லை வாயில் திகழ்முல்லை வாணன் மருவில்லான் முல்லை மறவன் - திருமுல்லை மூவா யிரமேலும் மொய்த்தவொரு நூறுருபா தூவா தளித்தான் தொகுத்து. 88. எங்கே யுமாறா இயன்முல்லை வாணன்சேர் சிங்கைத் தமிழன்பர் செய்கைகாண் - அங்கே இலங்கரச மும்மொழியுள் இன்றமிழும் ஒன்றாம் இலங்கையிலு மில்லாத ஏண்? 89. அரிமா புரமென்னும் அத்திருத் தீவில் அரிமா நிகர்முல்லை வாணன் -வரிமான் தமிழருவி பாடித் தமிழருவி பாய இமிழிசையிற் செய்தான் இனிது. 90. மதத்தை மதியாது மாய்க்கவெனும் இக்கால் மதர்த்த தமிழர் மதநூல் - பதிக்கவெனத் தானாகத் தண்டித்தந் தான்முல்லை வாணன்தான் ஏனோரைக் காணாத இன்று. 91. தமிழே உயிராகத் தாமுட லாக இமிழும் கடல்சூழ் இகமேல் - தமிழர் இருக்கின்றார் இன்றும் இதுமுல்லை வாணன் தருக்கொன்றும் வாழ்வின் தகை. 92. காண்மணியும் பாடுங் கடிகாரம் வான்சுவரில் நாண்மணியாய் ஆடி நளியிருளும் - கேண்மணியாய் இன்னிசையின் முந்தி யெழுவிக்க ஈந்தான்தான் முன்னியவா முல்லைவா ணன். தமிழ் இலக்கிய வரலாறு 93. உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி இலகும் நிலமெனும் இன்றமிழ் நாட்டில் இராம நாத புரநற் கோட்டம் திருப்பத் தூரெனத் திகழும் வட்டம் இரண சிங்க புரஞ்சேர் பெருமகன் இராம பெரிவெள்ளைச் சாமியும் துணையாம் கார்பணி கற்பின் கருப்பா யம்மையும் பேர்பெறப் பெற்ற பெருந்தமிழ்க் குருசில் சிங்கை வணிகச் செழுங்கலைச் சாலை உரிமை யாளர் உயரிய முதல்வர் கோபால கிருட்டிணர் குலமொழிக் குதவிய அன்புறு வெண்பொன் ஐயா யிரத்தால் ஆரியர் தாறுமாறுகள் நீக்கியும் வையா புரியர் பொய்யுரை தவிர்த்தும் மொழிநூல் மாணவன் முதுதேவ நேயன் எழுதிய தமிழிலக் கியவர லாறு நேச மணிபதிப் பகவெளி யீடா ஆசிரி யன்மகன் மணிமன்ற வாணன் காட்டுப் பாடி விரிவின் மேற்பால் தன்முழு வுரிமைத் தென்குமரி அச்சகம் பெயர்பெற அச்சிட் டனனே மயர்வறத் தமிழின் மாண்பு விளங்கவே. பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு - செங்காட்டுப்பட்டி 94. செட்டிகுளத் திற்குளித்த செந்தமிழ்த்தாய் செங்காட்டுப் பட்டியில் வந்து பருகப்பால் - அட்டியது போல்வதே மீண்டும் பொலிந்தெழுந்த பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு. 95. பாங்கா யமர்தலைமைப் பச்சைமுத்து நாகமுத்து ஓங்கும் இராமுபுல வேணுகோபால் - தாங்கும் பொதுமது செல்வராசன் போற்றும்பா வாணர் புதுமுது நூல்வெளியீட் டார். 96. செங்காட்டுப் பட்டிச் செழுமுத் தமிழ்க்கழகன் தென்காட்டுஞ் செந்தமிழ்ச் செல்வராசன் - நன்கீட்டி நாலா யிரம்வெண்பொன் நற்றமிழ்த் தாய்க்களித்தான் நூலாய் வெளிவரல் நோக்கு. 97. முந்தியே ஆரியத்தால் மொய்ம்பழிந்த செந்தமிழ் பிந்திய இந்தியால் பேருமற - நைந்தழியும் எல்லைவரு முன்னே இடுக்கண் களைந்தமகன் செல்வராசன் என்றுயர்த்திச் செப்பு. 98. ஆங்கிலத்தோ டாசிரியம் ஆன்ற கலையிளைஞன் ஓங்குமுளச் செல்வராசன் ஒண்டமிழைத் - தாங்கினான் தந்நலமே கொண்ட தனித்தமிழ்ப்பே ராசிரியர் வின்னமுறத் தம்மையும்தாம் விற்று. 99. கோடிக் கணக்கிற் குவித்துந் தமிழ்பேணாப் பேடிக் கயவர் பெயர்கருக்க - நாடித் துளிகூடு வெள்ளம்போல் தொக்கதுசெங் கையில் கிளியீடு வாய்த்த கிழி. 100. இரப்ப திகழா தினிய தமிழ்த் தாயைப் புரக்கவெழுந் தான்செல்வ ராசன் - புரக்கும் தமிழும் எவற்கும் தனித்தமுறை யன்றித் தமிழர் அனைவருக்கும் தாய். 101. குன்றக் குடியடிகள் குன்றா அருட்கையால் ஒன்றிக் கொடுத்தகிழி ஓங்கியதே - அன்று தருமிக்குத் தந்தது தாராத் தமிழின் பெருமை வரலாறு பெற்று. 102. பல்லா யிரம்வேலிப் பண்ணைப் பெருமடங்கள் எல்லாம் இருள எழுந்தமதி - நல்லொளிபோன்ம் கூர்த்தவரு ளாலெனக்குக் குன்றக் குடியடிகள் போர்த்திய பொற்கரைவெண் பட்டு. 103. தீவம் பலசென்று தேடிய பஃறாரம் நாவாய் ஒருதுறையில் நல்கியதே - மேவர் உறையூர் பலதந்த ஒண்பொருள் எற்குத் துறையூரில் தந்த தொடர்பு. பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு - செட்டிகுளம் 104. மறைமலை மாணடிகள் மாசில் தமிழன் நிறையொளித் தீவம் நிறுவும் - பொறையன்றோ சேல்விழி போற்பிறழும் செட்டிகுளப் பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு. 105. செந்தமிழ் அன்னை செழியன் தமிழ்நாடும் வெந்தழல் ஆரிய வெம்மையால் - வந்தே குளிர்ச்சிபெறத் தோழியொடு கூடி மகிழ்ந்து குளிப்பது செட்டி குளம். 106. ஓவிய நல்லாடை ஒண்மானங் காத்தல்போல் மேவிய செட்டிகுள மேற்பள்ளி - ஓவ நறாஅவனும் நெய்வாசான் நாகமுத்தும் காத்தார் குறாவுதமிழ் மானங் குறித்து. பாவாணர் மணிவிழாக்குழு - மதுரை 107. கருமுத்து சுந்தரம் செட்டியார் கூடல் திருவொத்த தந்தை திறத்தில் - மருவுற்றென் மன்னும் மணிவிழாக்கோள் மன்னா யளித்தார்வெண் பொன்னு மரையா யிரம். 108. மாநிலக் கல்லுரி மன்னுந் தமிழ்த்தலைவர் நாநலச் சுந்தரம் நற்கருணை - வானிரும்பொன் வாணிகம னோகரனார் வாய்ந்துறுப்பாய் வந்தவிழா ஏணுருபா ஏழா யிரம். 109. அத்தொகையி லீரா யிரத்தைந்நூ றாங்கிலத்தில் உற்ற உலகமுதற் செம்மொழிக் - கற்றதே எச்சமிந் நூலிற் கிசைந்ததிந் நற்றொண்டை மெச்சுந் தமிழுலகம் மேல். 110. பண்டா ரகர்ப்பட்டப் பல்லோருட் சுந்தரமே கண்டார் தமிழகக் கண்ணாகக் -கொண்ட பிறவித் தமிழ்ப்பற்றாற் பேணினார் என்னை யுறவிற் பிசிராந்தை யொத்து. 111. தன்கரும மென்றுபெருந் தாளாண்மை யோடுதமிழ் அன்பரிட மெல்லாம் அலைந்தோடி - நன்பொருளை ஈட்டினார் தம்மை இணைச்செயல ரென்றுசெயல் காட்டினார் நங்கருணை காண். 112. தொங்கல் விழுங்காற் றொகையெது வானாலும் தன்கைப் பொருள்கொடுக்குந் தாராளச் - செங்கை இரும்பு வணிகரென ஏந்துபொரு ளாளர் விரும்பும் மனோகரனார் வீறு 113. பாவாணன் பேரிற் பணைத்த மணிவிழாப்பொன் மூவோர் தொகுப்பு மொழியனைக்கும் - மேவினுமே நாவார வாழ்த்தி நவையின் றவர்ப்புகழ்தல் காவாவே னோர்க்குக் கடன். - தமிழர்வ.5 திருக்குறள் மரபுரை 114. ஆரா யணியன்னத் தாளக ஆசிரி யன்முருகன் நேரா யுரைவள் ளுவன்குற ளுற்றிட நீணிலத்தில் சீரார் தமிழ்ப்புல வன்கந்த சாமியும் சேர்துணையால் ஈரா யிரத்தின் மிகவெண்பொன் தான்தொகுத் தீந்தனனே. 115. தொடைகெழு பாபுனை காவிரி துள்ளுந் திருச்சிநகர் இடையொரு சாலைகல் லூரிமெய் யன்பர் விடுத்தபண விடைவழு வாது மதிதொறும் வந்து விழுக்குறள்தென் நடைகொழு மிவ்வுரை யச்சீடு நன்றாய் நடந்ததுவே. 116. பத்திற் குறையா மதிபல் லகஞ்சென்றும் பாகமன்றி மெத்தக் கவன்றும் முடியாவிம் மெய்ந்நூல் மரபுரைதான் தித்தித் தொழுகிந் தியநாட்டு வைப்பகத் தின்கணக்கன் முத்துக் கிருட்டிணன் இல்லம் புகுந்ததும் முற்றியதே. 117. பணத்திற்கு மூன்று படிவிற்ற காலை பரிந்துகம்பன் உணத்தந்த வள்ளல் சடையன் உதவிய தோர்வியப்போ கிணற்றிற்குட் கேணியும் ஊறாநாள் முத்துக் கிருட்டிணன்தான் குணத்திற்கீ டின்றிக் கொடுத்தனன் யாவும் குறிப்பறவே 118. நாவிரும் பின்சுவை யோமண நல்லுணா நாளுமுண்ணத் தேவனின் தேவ வெனவென்னைத் தீதற வைகுவித்தே ஆவியன் முத்துக் கிருட்டிணன் என்னுரை அச்சகத்தை மேவுவித் தேயதன் மெய்ப்புத் திருத்தினன் மேதகவே. மண்ணில்விண் 119. நெய்வேலி உ.த.க. நேயர் தமிழ்காக்கும் மெய்வேலி யாகி மிளிர்ந்தனர்காண் - மொய்வேலின் மண்ணில்விண் ணிற்கு மகிழ்ந்தளித்த வெண்பொற்கா செண்ணின்முன் மூவா யிரம். பு. மனோகரனார் கொடை 120. திருமணம் என்மகட்குத் தென்பாய் நிகழ ஒருநூ றுரூபா வுகுத்த - பெருமான் மனங்கவர்ந்தார் தண்டமிழ் மாண்புற வாழ்க இனங்கவர்ந்து நீடி யினிது. - 24.4.65 தமிழ் வரலாறு அச்சீடு 121. சீராய்ப் பிழையின்றிச் செந்தமிழ்நூ லச்சிட்டு நேராய்த் தருபவர் நீணிலத்தில் - ஆராய்ந்து பாராய் பெருவழிப் பாரிப்பேர் அச்சகத்தார் நாரா யணன்செட்டி யார். 122. எத்தனை மெய்ப்பேனும் இந்நூற் கிடரின்றி உய்த்தவை தாமும் உடன்திருத்தி - அச்சும் அகனமர்ந் திட்டார் அவருக்குக் கைம்மா றெவன்புரி கிற்பார் எமர். 24.2.1967 இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் - அச்சீடு 123. ஒருமுறையே நான்திருத்தி யுய்த்தவஞ்சல் முன்னே இருமுறையும் பின்னே இறுதி - ஒருமுறையும் ஆராய்ந்து பார்த்ததை அச்சிட்ட செந்தமிழன் நாரா யணன்செட்டி நம்பு. - 29.2.68 வண்ணனை மொழிநூலின் வழுவியல் - அச்சீடு 124. முன்னூல்போல் இந்நூலும் முத்தாம் எழுத்தடுக்கி நன்னூலாய் அச்சிட்டு நல்கினன்காண் - இந்நாளும் பேரான பாரி பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்செட்டி நன்கு. - 28.8.1968 நாராயணன் வாழி நன்கு 125. முப்பால் தமிழ்மரபு முன்னிய விவ்வுரையை எப்போதும் போல இனிதாகத் - தப்பாமல் அச்சிட்டுத் தந்தான் அழகிய பாரிப்பேர் அச்சகத்தான் நாரா யணன். 126. கார்வாழி ஏர்வாழி கன்னித் தமிழ்வாழி சீரார்பல் செல்வர் சிறந்துதவப் - பார்நீடு பேரோங்கப் பாரிப் பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்வாழி நன்கு. - 4.10.69 வடமொழி வரலாறு - அச்சீடு 127. தாய்மொழிப் பற்றினால் தானும் பிழைதிருத்தி வாய்மொழிக் கேற்ப வடித்தெழுத்தும் தேமொழிப்பேர் ஆரிய வாற்றையும் அச்சிட் டுதவினன்காண் நாரா யணஞ்செட்டி நன்கு. - 6.12.67 அருணாசலர்க்கு - மெய்ப்பு நன்றி 128. அல்லும் பகலும் அருணா சலமென்னும் நல்லிறையன் மெய்ப்பு நவைநீங்க - ஒல்லும் வகையால் திருத்திய வாறன்றோ இந்நூல் தகையால் விளங்குந் தகை. - க. சுறவம், 1997 (தி.பி.) மெய்ப்புப் பார்த்த மேலோன் 129. தாமரைச் செல்வன் தமிழ்நூல் உலகெங்கும் காமரு கட்டடங் கண்குளிரப் - போமுறை யச்சிட்ட சுப்பையா யாய்ந்தேயிம் மெய்ந்நூற்கும் மெச்சுற்றுப் பார்த்தனன் மெய்ப்பு. 130. இவ்வுரை யச்சீட் டிறுதி தனிநின்று செவ்வகை பார்த்த செயல்நோக்கின் - எவ்வண் சுழன்றுந் தமிழுலகம் சுப்பையாப் பின்னாம் உழந்தும் அவனே தலை. - திருக். மர. முக. 8 5. ஐந்தகம் செந்தமிழ்ச் செல்வி ஐந்து 131. பலதுறை யாய்வுச் செல்வம் பண்டிதர் புலமை நுட்பம் மலர்தலை யுலகச் செய்தி மகிழ்நனின் நகைய ரங்கம் புலவரின் வரலா றெல்லாம் போற்றிவைத் திருக்கும் பேழை சிலநல பட்டி மன்றம் செந்தமிழ்ச் செல்வி அன்றோ! 132. பிறமொழி தமிழைத் தாக்கிப் பெருந்துயர் செய்ய நேரின் அறநிலைப் போரைத் தூண்டி அணியிழை யாருஞ் சேர மறமிகு முரச றைந்து மானநல் வாகை யின்பின் செறலறு பாடாண் பாடும் செந்தமிழ்ச் செல்வி அன்றோ. 133. மொழியின முன்னோ ரெல்லாம் முற்றவும் மறந்து வேற்று மொழியொலித் தம்பேர் சொல்வார் முதற்றமிழ் வழியா ரெல்லாம் விழியுறச் சென்று சேண்பல் விரிகடல் நாடும் தீவும் செழியதாய் நாட்டோ டார்க்கும் செந்தமிழ்ச் செல்வி அன்றோ. 134. கறுவுகொள் மனத்தார் கூடிக் காணுமா நாட்டில் நூற்றிற் கறுபதின் மேலும் பல்வே றயன்மொழிச் சொல்லே கொண்டும் உறுதமிழ் ஆர்வந் தம்மில் ஊற்றெடுத் தோடு மென்னும் செறுவரைச் சுட்டிக் காட்டுஞ் செந்தமிழ்ச் செல்வி யன்றோ. 135. பேணிய குலமு மன்றும் பெரும்பகை மொழியு நன்மை காணுதல் குறிக்கோ ளாகக் கழிபல ஆண்டு நீண்ட மாணுறுங் கொள்கை யில்லா மாதிகை பலவு மாயச் சேணுறுங் காலும் நீடும் செந்தமிழ்ச் செல்வி அன்றோ! திருக்குறள் ஐந்து 136. எம்மதநூ லென்றே எவரும் வினவினுடன் எம்மதநூ லென்றே எவருந்தான் - செம்மனமாய்ச் சொல்லும் படியமைந்த சொற்பொருட் சீர்நிரம்ப ஒல்லுங் குறளென் றுரை. 137. தொல்காப் பியம்போலத் தொன்மொழியாம் செந்தமிழின் ஒல்காப் பெருமை உலகிற்குச் - சொல்வதற்கே உள்ள இலக்கியத்துள் ஓங்கும் ஒருதலையாம் வள்ளுவர் நூலென்ப வாய்த்து. 138. முன்னோர் பொருளும் மொழியும் முழுமணிசேர் பொன்னேபோற் போற்றுகெனப் பொற்குறளை - அந்நாள் இளங்கோ வடிகளுடன் எல்லாருங் கொண்டார் வளம்பெற நீடுவா ழி. 139. நடுநிலை யில்லாத நால்வே றொறுப்பு வடுமிகக் கூறும் வடநூற் - கெடுதிகண்டு வள்ளுவன் நன்கு வகுத்த நடுவறத்தைக் கொள்ளுக எங்கும் குறித்து. 140. இம்மையுள் இன்பமும் இல்லறத்தால் வீடுறவும் செம்மையால் எப்பாற்கும் செப்பிய - அம்மைதான் தேவன் தமிழத் திருவள் ளுவன்குறளே மேவ நிலமிசையே மிக்கு. -திருவள்ளுவர் திருநாள் விழா மலர், பக். 53. 6. பதிகம் பொதுமறைப் பதிகம் 141. உலக முழுமைக்கும் ஒத்த மறைநூல் இலகுந் திருக்குறள் என்பர் - விலகிச் சிறுதெய்வ வேதம் சிவணும் எனும்சொல் அறிவுடையார் கொள்ளார் அறி. 142. மூவா யிரமொழியுள் மூலமுதல் முத்தமிழே மூவா மொழியதனுள் முப்பாலே - தாவா அறம்பொரு ளின்பம்வீ டாகுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பும் தெளிவு. 143. ஊரும் பிறப்பும் உறுதொழிலும் உற்றோரும் பேருந் தெரியாப் பெரும்புலவன் - தேரின் உலகப் பொதுவன் ஒருவள் ளுவனாம் கலகப் பிணக்கிற் கடந்து 144. ஒழுக்கம் உயர்குலம்; ஒன்றே பிறப்பாம்; இழுக்கம் இழிகுல மாகும் - இழுக்கின் நிலத்தேவ னுந்தன் நிலைகெடு மென்ற புலத்தோன் திருவள் ளுவன். 145. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயப்பி னெனமொழிந்து - மெய்ம்முரணிற் பொய்யையும் மெய்யாப் புனைந்த பெருமகன்நூல் பொய்யா மொழியென்று போற்று. 146. இல்லறத் தாலும் இறையடி சேருண்மை நல்லறத் தால்முன் நவின்றதிரு - வள்ளுவநூல் ஆரியனே வீட்டிற் கமைந்தா னெனும்புரட்டை வாரிய சூறா வளி. 147. எல்லாரும் எக்காலும் எந்நிலத்தும் செந்நிலையில் நல்லாராய் வாழ்ந்து நலநுகரச் - சொல்லாய்ந்து வள்ளுவ னன்றி வகுக்க நடுநிலையன் புள்ளவன் யாரே யுரை. 148. தொட்டனைத் தூறும் துரவுபோல் முப்பாலும் கற்றனைத் தூறும் கலையறிவுக் - கொட்டாரம் நூற்றுக் கணக்கில் நுவலுரை கண்டாலும் ஈற்றைக் கணித்தார் இலர். 149. ஆரிய நஞ்சிற் கருமருந்தாய் வந்தகுறள் சீரிய மாமலைக்குச் செல்லாது -யாரகத்தும் அல்லும்பகலும் அமர்ந்துதவும் மூலிகையாம் ஒல்லும் இருமைநல் வாழ்வு. 150. ஆரியன் தேவென் றறிவிழந்து மூவேந்தும் பூரிய தாழ்விற் பொருந்தியகால் - சீரிய தெய்வப் புலவன் திருவள் ளுவன்தந்தான் உய்வைத் தமிழர்க் குவந்து. - கழக ஆட்சியர் வ.சு. பவளவிழா மலர் : 27. பெரியார் தன்மான இயக்கம் 151. தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள் அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர் தமியின் மொழியினர் தவநன் மறைமலை இமிழ்தன் மானியர் இராம சாமியார். 152. அரிய செயல்களை ஆற்று வார்தமைப் பெரியார் எனச்சொலும் பிறங்கு திருக்குறள் உரியர் இப்பெயர்க் கொருவர் நேரிலே இரியீ ரோடையர் இராம சாமியார். 153. இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுறும் செல்வச் சிறப்பினிற் சிறிதும் வேட்டிலர் வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார் ஒல்லும் வகையெலாம் உழைக்க இனவர்க்கே. 154. மல்லைப் பதவிகொள் மாட்சி யிருப்பினும் அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம் கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ் சொல்லிற் படும்பொறைச் சூர வாழ்க்கையர். 155. மலையெ னும்மறை மலையென் அடிகளும் தலையென் சோமசுந் தரபா ரதியும்பின் தொலையும் இந்தியைத் தொடர்ந்தெ திர்க்கினும் நிலைசி றந்ததி ராம சாமியால். 156. குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே மடிசெய் தேயவர் மானங் கொளக்கெடும் இடிசெய் உடம்புபல் இடும்பைக் கலமெனத் துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார். 157. தான மிட்டதன் தலைவன் நிலைகெட ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை வானங் காட்டென வணங்குந் தமிழன்தன் மானங் கெட்டுவாழ் வழமை கடிந்துளார். 158. படிமை மேல்மிகு பாலை யூற்றலும் குடுமி மலையெரி கோநெய் கொட்டலும் கடவுள் தேரினைக் கடத்த லும்முனோர் கொடமை மடம்பகுத் தறிவில் கோளென்றார். 159. கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப் பிட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை வெட்ட வெளிச்சமாய் விளக்கி னார்முனம் பட்டப் படிப்பெல்லாம் பயனில் குப்பையே. 160. அடருந் தமிழரோ டணையுந் திரவிடர் மடமை தவிர்ந்துதன் மான வாழ்வுற இடர்கொள் ஆர்வலர் இராம சாமியார் கடவுள் இலையெனக் கழறும் எல்லையே. -த.இ.வ 257 சீரிய கொள்கைச் சிதம்பரப் பதிகம் 161. நாட்டுப்பற் றால்முன்னே நாய்படாப் பாடுபட்ட ஒட்டப் பிடார ஒளிர்மறவன் - மாட்டன்று நன்றிபா ராட்டாத நாடொரு நூற்றாண்டு சென்றபின் செய்யும் சிறப்பு. 162. ஆலைத் தொழிலாளர் ஆற்றும் பணிக்கேற்ற கூலித் திறம்பெறுங் கொள்கையின் - மேலும் அடிமைத் தனமில்லா ஆட்சிதன் மானக் குடிமை சிதம்பரத்தின் கோள். 163. ஆங்கிலர்நா வாய்க்குழும்பின் ஆவுருபா ஒரிலக்கம் வாங்க மறுத்து வருந்தொல்லை - ஓங்கினுமே கொள்கை விடாது குடிமாண் சிதம்பரம்தன் உள்கை சிறந்தான் உயர்ந்து. 164. தனக்குச் சமமாகத் தன்மனைவி வாழ்ந்து மனக்கினிய மந்திரியாய் மாணுங் - கணக்காக இல்லறம் ஆற்றினான் ஈகைச் சிதம்பரம்தான் வள்ளுவன் கண்ட வகை. 165. பிறப்பால் சிறப்பில்லை என்னும் பெருநூல் அறப்பால் மனையோ டணைந்து - பிறப்பிழிந்தான் என்னும் ஒருவனை இல்லம்வைத் துண்பித்தான் மன்னும் சிதம்பரத்தின் மாண்பு. 166. தாய்நாடே போற்றியெனுந் தக்கவங் கத்தொடரை வாய்மொழியாற் கண்டித்த வன்தண்டல் - நாயகற்கே வாயுள்ள நாளும் வலித்துரைப்பே னென்றுரைத்தான் பாயும் சிதம்பரவேங் கை. 167. மாடுபோற் செக்கிழுத்து மட்டிபோற் கல்லுடைத்து வேடுபோற் கேடாய் உடையுடுத்துப் - பாடுபட்டான் கேழ்வரகுக் கூழுண்டு கீழ்விலங்கிற் கீழ்விலங்கின் தாழ்வுறுதற் கோசிதம்ப ரம் 168. கொலையுங் கடுஞ்செயலும் கூடாது வேற்றார் குலையும் வகையெதிர்க்கும் கொள்கை - தலையாகக் கொண்டான் சிதம்பரம் கூற்றாலும் ஆசுகொலை கண்டோம் அவன்கண்ட னம். 169. ஆற்றும் பணிமீட்டான் ஆங்கில னேனுமவன் வேற்று மொழிப்பெயரை வேட்புடன்தன் - பேற்றுமகன் பேராக இட்ட பெருந்தன்மை பாராட்டும் சீராம் சிதம்பரம் செப்பு. 170. தொல்காப் பியப்பகுதித் தொல்லுரையும் ஒண்குறளின் மல்கா வுரையொன்றும் மாண்டமிழ்க்கே - அல்காத்த இன்னிலைப் புத்துரையும் ஏனைப் பதிப்புகளும் துன்னிய வ.உ.சி. தொண்டு. - வ.உ. சிதம்பரனார் நூற்றாண்டு விழா மலர் -செ.செ. 47: 40 மறைமலையடிகள் பல்துறை யாற்றற் பதிகம் 1. பேராசிரியர் 171. நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதழும் சமமாக - மேலுயர்வுப் பேரா சிரியர் பெரும்பேர் மறைமலையார் நேரா ருளரிந் நிலத்து. 2. பெரும்புலவர் 172. தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும்புலவ ருக்கும் பெரியார் தனியே அரும்பொன் மறைமலை யார். 3. பாவலர் 173. உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த விரைவுடையார் சில்லோர் வியன்பார் - மறைமலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி மும்மணிக் கோவை முறை. 4. ஆராய்ச்சியாளர் 174. நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார் பாலையும் முல்லையும் பார். 5. மும்மொழிப்புலவர் 175. மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச் சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டதும் இல். 6. மொழிபெயர்ப்பாளர் 176. வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளுஞ் சாகுந் தலம். 7. சொற்பொழிவாளர் 177. இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரு முண்ணாளும் பன்னாளும் வேட்கும் வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு 8. எழுத்தாளர் 178. கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோ ருரைமறுப்பும் மன்னும் புதினவரை வுற்றார் மறைமலை யார். 9. பல்கலைச் செல்வர் 179. தோற்றுந் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணுங் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு. 10. தனித்தமிழ்த் தந்தையார் 180. மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கோண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார். மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர். பாரதிதாசன் பண்பாட்டுப் பதிகம் 181. நாட்டு விடுதலைக்கு நன்றாகப் பாடுவான் ஈட்டு தமிழர்க்குள் இல்லெனலை - வீட்டக் கனகசுப்ப ரத்தினப்பேர்க் கார்முகில் தோன்றி மினுமினுத்துப் பெய்ததுபா மேல். 182. பாரதிமேற் பற்றினாற் பாரதி தாசனென்று பேர்தனக் கிட்டாலும் பேணாமல் - ஆரியத்தைச் சாடினான் வல்லாங்கு சாராரும் பாராட்டச் சூடினான் வாகையென்று சொல். 183. ஆனை நடையும் அரிமாப் பெருமிதமும் கோனையும் சாடிக் குமுறுரையும் - தானையே தாக்கினும் அஞ்சாத் தறுகண்ணும் மேலாடைச் சேக்கையும் பாரதிதா சன். 184. ஆரிய ராட்சியிலும் அன்னார்க் கடிமையராம் பூரிய ராட்சியிலும் புல்லாது - சீரிய செந்தமிழைப் போற்றிச் செழும்பல் பனுவல்களைத் தந்தனன் பாரதிதா சன். 185. தெளிதேனில் தீன்கலந்த தெண்ணீர்ப் பதம்போல் எளிதாம் இனிய எழில்கொள் - களிநடையிற் செம்பொற் கருத்துக்கள் சேர வழங்கினான் இம்பர்க்குப் பாரதிதா சன். 186. இருபதாம் நூற்றாண்டிடை யிணையே யில்லாப் பெருமைசேர் பாரதி தாசன் - ஒருமையுடன் வாழ்நாள் முழுதும் வளரடக்கங் கொண்டுற்றான் வீழ்நாள் விண்ணவனாம் வீறு. 187. தன்னலமும் தன்குடும்பத் தின்னலமும் பேணாது மன்னலமே என்றும் மதித்தொழுகித் - தன்னினமாம் செந்தமிழ் மக்கள் சிறந்தோங்கி வாழ்வதற்கே வந்தனன் பாரதிதா சன். 188. இம்மியே கூடிடினும் இன்றமிழை விற்றுவிடும் தெம்மானப் போலித் திரிதமிழர் - கும்மிடையே பாலை நிலத்திற் பழம்படு பன்மரப்பைஞ் சோலையே பாரதிதா சன். 189. நண்பன் புறத்திருக்க நல்வான் அமுதெனினும் உண்ப திலையென் றுயர்தமிழப் - பண்பதனைத் தன்னகத்தும் வேற்றகத்துந் தப்பாது கைக்கொண்ட தென்னகத்தான் பாரதிதா சன். 190. புரட்சிப்பா வேந்தனென்று போற்றும் புகழில் முரட்சிக் கிடமின்றி முற்றி - வறட்சியால் வாடி வருந்தினும் வண்டமிழைக் கைவிடான் வீடினான் பாரதிதா சன். 191. ஆண்டாண்டு தோறும் அவனை நினைவுகூர்ந் தாண்டாண்டு கொண்டாடும் ஆர்வவிழா - வேண்டா அவனுரையைக் கையாண் டடிமைத் தனத்தின் இவண்விலகக் கண்ணா விடத்து. சேக்கை - சிவப்பு. தெவ்+மானம் - தெம்மானம் தெவ் - பகை. கும் - கூட்டம். கும்முதல் - கூடுதல். ஆண்டாண்டு - ஆங்காங்கு. கண்ணா - கருதா. சுப்பு - அரத்தினம் - சுப்புரத்தினம் . பதிகம் பதினொரு பாட்டுங்கொள்ளலாம். சேலம் நகராண்மைக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் 192. எத்தனைய ரோதமிழர் இந்நாட்டிற் கல்லூரி ஒத்த முதல்வராய் உற்றிருந்தும் - முத்தமிழ்ப் பற்றால் எனையமர்த்தப் பண்பா டிராமசாமி கற்றான் ஒருவனே காண். 193. உயர்நிலைப் பள்ளிகளில் ஓவா துழந்தே அயர்நிலை என்னை அழைத்தன் - றுயர்வளித்தான் சேலங்கல் லூரிச் சிறந்த தமிழ்த்தலைமை மேலான் இராமசாமி. 194. தொல்காப் பியமும் துணையாம் திருக்குறளும் பல்காற் பயின்று பயன்கண்ட - ஒல்காப் பெருந்தமிழ வாழ்வு பெயர்பெற வாழ்ந்தான் விருந்திராம சாமி விழைந்து. 195. வீட்டிற்கும் தான்பிறந்த வெள்ளாண் குடியினுக்கும் நாட்டிற்கும் செந்தமிழ் நல்லறிஞர் - கூட்டிற்கும் சேலங்கல் லூரிக்கும் சீரார் இராமசாமி சாலுங் கவுண்டனெனச் சாற்று. 196. மூவுலகும் ஆளும் முதல்வனே வந்திடினும் பாவுலவும் பைந்தமிழ்ப் பண்டிதன் - மேவுவதை இம்மியதும் தள்ளா இராமசா மிக்கவுண்டன் செம்மனிகர் வேறியார் செப்பு. 197. இந்நூலும் ஏனை எழில்மொழி யாராய்ச்சி நன்னூலும் நன்கிருந்து நான்செய்தேன் - எந்நாளும் ஏராள ஓய்வும் இணங்கும் இராமசாமி தாராளம் தந்ததனால் தான். 198. சேலங்கல் லூரி சிறந்திராம சாமியின்றேல் ஞாலம் பரவுதமிழ் ஆராய்ச்சி - நூலியற்றும் தேவநே யன்எங்கே தென்மொழித் தொண்டெங்கே பாவுதமிழ் மீட்பெங்கே பார். 199. வள்ளுவர் மன்றமென்று வைத்தும் உரைநடைநூல் தெள்ளு தமிழ் வரைந்தும் சொற்பொழிந்தும் - ஒள்ளிய ஆங்கிலச் சொற்பெயர்த்தும் ஆராய்ந் திராமசாமி தாங்கினன் செந்தமிழைத் தான். 200. வேலை யினிதியல வேண்டும் உதவிசெய்து மாலையுங் கூடிமகிழ்ந்துலவி - மேலுந்தான் இன்னுரை யாடியெனக் கின்ப வுணவளித்தான் மன்னே இராமசா மி. 201. இராமசா மிக்கவுண்டன் இன்புகழ் வாழி பராவு கனகம்மை வாழி - விராவி அவர்நன்னான் மக்களும் வாழி வழியும் இவரின்னார் என்ன இனிது. -த.வ. 297.298. சிங்கபுரி வணிகக் கல்விச்சாலை உரிமை முதல்வர் உயர்திரு கோபால கிருட்டிணனார் மீது நூலாசிரியன் ஞா. தேவநேயன் பாடிய பாடாண் பதிகம். 202. அறிவொழுகு கண்ணும் அமர்தமிழின் நோக்கும் செறிவுடைய நாவும் செழிம்பும்- பொறிநிலவும் கோவீறு நெஞ்சுபொற் கோல வளர்வுடம்பும் கோபால கி(ரு)ட்டிணர் கூறு. 203. வடமொழியை வாழ்த்தி வழங்குதமிழ் தாழ்த்தும் திடமுடையர் தென்னாட்டுச் செல்வர் - கடல்கடந்து சிங்க புரித்தீவிற் சேர்ந்த கிருட்டிணனார். தங்கு தமிழ்ப்பணி செய் தார். 204. கடையெழு வள்ளலர்பின் கானக் குமணன் நடையுயர் நல்லியக் கோடன் - கொடைமிகு சீதக்கா திக்குப்பின் சேது ரகுநாதன் ஈதற்கின் றோகிருட்டினர். 205. கால்கடுத்துக் கொப்புளிக்கக் காதம் பலநடந்து நூல்வடித்துச் சொல்லினும் நொய்தரார் - பாலெடுத்து வேறொருவர் கூறினாலும் வெண்படத்தும் கண்டிரார்க்கு மாறிலாதீந் தார்கிருட்டிணர். 206. முன்னாட் கொடையாளர் முந்திப் புகழ்பெற்றார் செந்நாப் புலவர் செயற்பாவால் - இந்நாளில் முந்திப் பொருளளித்த முன்பிற் கிருட்டிணர்க்குப் பிந்திப் புகழ்ந்துரைத்தேன் பேர்ந்து 207. கோடிக் கணக்கிற் குவித்திருந்தும் செந்தமிழை நாடித் தனியிதழ்க்கும் நல்காதார் - நாடிதிலே செந்தமிழ்ச் செல்விக்கும் தென்மொழிக்கும் வாழ்நாட்குத் தந்தவர் கிருட்டிணனார் தான். 208. அன்னை யெனவே அறிவுடம்பை முன்வளர்த்துப் பின்னும் பலவாய்ப் பெரிதுதவும் -முன்னை முகனை மொழித்தாயின் முட்டறுத்த செல்வ மகனார் கிருட்டிணரே மற்று 209. குப்பை யுயர்ந்தது கோபுரம் தாழ்ந்ததெனச் செப்பா வடமொழி சீர்த்ததெனும் - தப்பறவே இன்னே எழுந்தார் இணையில் கிருட்டிணனார் முன்னோர் மறமானம் மூண்டு 210. நாடுங் குலவினமும் நம்பும் மதவகைகோட் பாடுந் தொழிற்றுறையும் பாராது - நீடும் தமிழே கருதித் தகுந்தாரைத் தள்ளா நமரே கிருட்டிணனார். 211. கோளாண்மை மிக்குக் குறித்த கலைதேர்ந்து தாளாண்மை யாற்சொம் தகவீட்டி - வேளாண்மை செய்யும் நிறைதமிழர் சிங்க புரிவாழும் செய்ய கிருட்டிணரே சீர்த்து வெள்ளச்சேத விளரிப் பதிகம் 212. எத்தனை வெள்ள மோநாம் இதுவரை கதையி;ற்கேட்டோம் இத்தனை கொடுமையாக எவருமே கண்டதில்லை அத்தனார் கோயிலுள்ளும் அனைவரும் நசுங்கிச் சாகப் பித்தமா வெறியின் வேகம் பிடித்தது காற்றுப் பூதம் 213. வெள்ளமென் றறிவிப் பின்றி வீட்டினுள் உறங்கும் வேளை கொள்ளையர் வருதல் போலக் கூடிய இரண்டு பூதம் பொள்ளெனக் கேடு செய்யப் பொடித்தன பணிச்சா லைகள் நள்ளிர வன்றே நாகை நத்தப்பா ழாயிற் றந்தோ 214. கண்ணினுக் கெட்டு மட்டும் கண்டது வெள்ளக் காடு மண்ணியல் ஊர்தியொன்றும் மற்றவூர் சென்ற தில்லை உண்ணவோர் உணவு மில்லை உரைக்கவோர் வழியும் இல்லை விண்ணவர் உதவி போலூண் வீழ்ந்தது மூன்றாம் நாளே 215. தமிழ்நிலத் தலையாஞ் சென்னை தாவியே தெலுங்க நாட்டில் இமிழ்கடல் எரியுந் தோன்ற எழுமலை யலைக ளாலே அமிழ்கரை யூர்கள் மாய்ந்தார் ஆயிரம் பத்தோ டைந்தும் குமிழ்நுரை வெள்ளம் வந்து குடிகொண்ட தூர்கள் எல்லாம். 216. ஆருயிர் அனைய என்றன் அன்பனை இழந்தேன் என்பார் கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி இழந்தேன் என்பார் சீரிய அறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார் ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என்பார் 217. இரவிலே தந்தை தாயை இழந்தபிள் ளைகள் காலை அருவிபோல் கண்ணீர் சிந்தி அம்மையப் பனையே கூவி வெருவியே யழுது தேம்பி வெந்தழல் மெழுகுபோல உருகியுள் வெந்த கோலம் உள்ளுவார் குலையும் வேகும் 218. அருந்தலாய் விற்ற காலை அரும்பெரும் பாடு பட்டு வருந்தியே தேடிப் பெற்ற வளப்படு பொருளும் வீடும் பருந்தடி குஞ்சு போலப் பசக்கென மறைந்து போக இருந்துபின் அழுது நைந்தார் எத்தனைபேர்கள் அம்மா! 219. அரசனே கொடுமை செய்யின் ஆரிடம் சொல்வ தென்பார் பரசுறு கடவுள் காப்பும் பறந்திடின் நாமென் செய்வாம் துருசினில் மாயும் மக்கள் தொல்லைகள் தீரும் வண்ணம் கரிசொடு செருக்கொழிந்து காவல்பூண் அமைச்சர் ஆள்க 220. நன்செயும் புன்செ யாகி நாற்புற வரம்ப ழிந்து முன்செயல் யாவும் கெட்டு முதிர்ந்தநெற் பயிரு மற்று வன்செயல் வெள்ளக் காலாய் வதிந்தது வடிந்த பின்னும் என்செய வுணவிற் கென்றே இரங்கினர் உழவ ரெல்லாம் 221. சடசட வென்று கொட்டிச் சாடும்வன் புயலாற் செத்த படபட வென்ற டித்துப் பண்ணை இற் கோழி யெல்லாம் கடகட வென்று மாய்ந்த கால்நடை கணக்கி லாத மடமட வென்று சாய்ந்த மரங்களே சாலை சோலை 222. நீர்மிகின் சிறையு மில்லை நீளியின் வலியு மில்லை கார்மிகின் உறையு ளில்லை கனல்மிகின் அணைப்பு மில்லை பார்மிகும் பரிசொன் றில்லை பரவெளி மனையெழுப்பிக் கூர்மதிக் குடும்பத் திட்டங் கொண்டினி தொழுகு வோமே நீளி-காற்று செ.செ. 52:196:197 257;258 படைமறவாகை 223. என்ன இந்த நாட்டில் அமைதி இன்னும் நிலவ வில்லையே பென்னம் பெரிய பிரித்தா னீயப் பேர ரசையும் வென்றனம் பொன்ன கர்நல் வாழ்வு வந்து புகுந்த தென்றுமகிழ்ந்தனம் பின்னர் நம்மிற் பிரிந்த சின்னப் பித்தர்க் கஞ்சிப் பணிவதோ 224. இந்தி யாவின் இரும ருங்கும் .இருபெ ரும்புண் போலவே அந்த நாளில் வெறிம தத்தால் ஆன பாக்கித் தானையே வந்து றாமல் தடுத்த லின்றி வாயி ழந்து விட்டனர் இந்த நாளில் கையைக் கொல்ல எழுந்த தேமுள் பெருமரம் 225. பூனை போற்சி றுத்த நாட்டுப் பொறியி லாத மூடர்தாம் யானை போற்பெ ருத்த இந்தி யாவை யேயெ திர்க்கின்றார் தானை தாவு மக்கள் வலிமைத் தரத்தை எண்ணிப் பார்த்திலர் போன மூன்று போரில் தோற்றுப் போன தும்ம றந்தனர் 226. அமெரிக் கர்நம் மவருக் குதவி யளித்த லின்றி மழுப்பினும் அமெரிக் கையா யிராது பகைவர்க் கான வுதவி செய்கின்றார் தமருக் குந்தாய் நாட்டிற் கும்வரிதராது பொருது விலகினர் எமுனைக் குந்தொ டர்பி லாத ஈரினங்களை இணைக்கின்றார் 227. மறும னத்தில் இன்றி ஏழை மாந்தர்க் குற்ற துணைவராய் உறும னத்த ராய்க்கி ளர்ந்தே உவமை இல்லான் துணைபெறின் செறும னத்தார் படைதி ரண்டு சீறி வஞ்சினங் கூறினும் அறுபு னத்திற் கதிர்கள் போல அறுத லைகள் ஆகுவர் 228. மானங்கெட்ட வாழ்வு யர்ந்த மக்கள் திணையில் இல்லையே சீன ருக்குஞ் சோன கர்க்குஞ் சிறிதும் அச்சம் இன்றியே ஊன ரத்தம் துளியு டம்பில் உள்ள வரையும் பொருமினே வான வர்பூச் சிந்திவாழ்த்த வாகை சூடி யாடுவீர் 229 வலியப் போர்க்குச் செல்வ தில்லை வந்த போரை விடுவதோ எலிகள் வெள்ள மேனும் நாகம் இரையின் மாய்ந்து சாய்ந்திடும் மெலியர் என்று நம்மைப் பகைவர் மெத்த அவமதித்தனர் புலிகள் போலப் பாய்ந்து பொருது புகழை உலகில் நாட்டுவீர் 230. கேட்டின் முன்னர்க் கூர்ந்த மதியும் கெட்டு மழுங்கிப் போகுமே நீட்ட மாகப் பிரிந்த நாடு நீணி லத்திற் புதுமையே ஓட்டெ டுத்த பின்னும் இட்ட ஊளை என்ன பொருளதோ பூட்டோ திறப்ப தின்றி நாட்டைப் பூட்டி யெங்கும் போகுமோ 231. கோடிச் செல்வர் பணத்தை இன்று குன்று போற்கு வித்திடும் கூடிப் பற்பல வெள்ளமாகக் குமரர் போரிற் குதித்திடும் ஓடிச் செய்யும் ஆற்ற லில்லார் ஊன ரத்தம் உதவுவீர் பேடிக் கியாசு டின்கி ளைஞர் பேரை வேர றுத்திடும் 232. எத்தனைநாள் இருப்பி னும்நாம் இறப்ப துண்மை திண்ணமே நத்தம் போலக் கேடும் உண்டாம் நல்ல சாக்கா டும்இன்றே முத்த மிழ்மூ வேந்தர் முன்னம் முனைந்து நாவல் காத்தனர் அத்த கப்போர் முரச றைந்தே யமர்வென் றடலை யாடுவோம் *கியாசுடின் - Chiyazuddin (1341 -4 மதுரையில் சுலுத்தானாக (Sultan) விருந்து மாபெரும் கொடுமைகள் செய்தவன்) -போர் வெற்றி முரசு மலர் செ. செ. 46;270-271 7. வரலாறு சாமிநாதையர் தமிழ்த்தொண்டு 233. ஊட்டில் லாமல் உள்ளது நோவ இறந்த குழவியை எண்ணி அழல்போல் ஆடிப் பெருக்கில் அளவறுந் தமிழ்நூல் ஓடிச் சென்றதை உணராத் தமிழர் ஏரண முதலிய எண்ணறுங் கலைநூல் வாரணங் கொண்டதை வழிவழி சொல்லிக் கொன்னே புலம்புதல் என்னே மடமை? கொலம்பசு முதலோர் கொடுங்கட லோடி நிலம்பல கண்டில ராயினும் நீங்காப் பின்னோர் அவற்றைப் பின்னே காண்பர் மன்பே ராசான் தென்கலைச் செல்வன் பண்டா ரகனாம் பைந்தமிழ்ப் பெரியோன் சாமிநா தையன் சார்ந்தில னாயின் இற்றைத் தொன்னூல் என்னா யிருக்குமோ? தமிழ வணங்குத் தமிழ்ப்பெரும் பித்தால். விடுமுறை யெல்லாம் விடுமுறை யின்றி ஊர்தொறும் மனைதொறும் ஓயா தேகித் தானாய் வேண்டியும் தக்கார் துணையொடும் பற்பல வகத்திற் பாழ்படக் கிடந்த தொன்னூ லெல்லாம் பொன்போற் சேர்த்து விறகுத் தலையன் முறையிற் சுமந்து வீட்டை யடைந்ததும் ஏட்டைப் பிரித்துச் சிதலரித் தனவும் சிதர்ந்து போனவும் மங்கி யிருந்தவும் மாறிக் கிடந்தவும் பூச்சி துளைத்தவும் புலனா காதவும் பொறையும் பொறுமையும் புரிவிற் பொலியக் கங்குல் பகலாய்க் கண்ணொளி மழுங்கப் படித்துப் படிகள் எடுத்துத் திருத்தி அருஞ்சொற் பொருளும் ஆராய்ச்சிக் குறிப்பும் முதற்குறிப்பு ரையுடன் முறையாய் அச்சிட் டுதவி யிலனேல் இதுகால் நாமும் பத்துப் பாட்டைப் பார்த்த லொண்ணுமோ? எட்டுத் தொகையும் எய்தல் இயலுமோ? சிந்தா மணியொடு சிலம்பு மேகலை சிந்தை யிலேனும் சேரல் ஆகுமோ? பிறபல நூலும் பெறுதல் கூடுமோ இத்தகை யோனை அத்தக நினைய ஊர்தொறும் உடவள வொண்பொற் சிலையும் உள்ளந் தோறும் உயிருடைச் சிலையும் நிறுவி யவன்வழி நிற்றல் தகுவதே யன்றோ தமிழகத் தோரே உ.க.இ. 2, பக். 244-5. வழிமுறைப் பண்பு 234. செந்தமிழ் நாட்டுச் சிவகங் கைசேர் மிதிலைப் பட்டி மேதக வாழ்ந்தே அழகிய சிற்றம் பலக்கவி ராயன் உறவினர் மணத்திற் கோரூர் சென்று மீண்ட காலை மூன்றுரு பாவும் பழையதுந் தரவே பாங்கா யிசைந்து வண்டி யொன்றை வாடகை பேசி இரவில் ஏறி விரைவில் வருகையில் வண்டிக் காரன் வாயிசை கேட்டு நன்றெனப் புகழ வண்டிக் காரனும் உன்றன் குடும்ப வரலாறியாதென என்றன் முன்னோர் எல்லாரும் புலவர் அவருள் என்பே ருடையார்க்கேயெம் மிதிலைப் பட்டியை மானிப மாக வெங்க ளப்ப நாயக்கன் விட்டனன் அவனுண வேயின் றார அருந்துவம் பிரிவினை யாலவன் பின்னோர் தாழ்ந்தனர் அவன்வழி யினர் இன் றாருளர் கொல்லோ எங்கண் உளரோ? எந்நிலை யினரோ? என்றே இரங்கி இருந்துயில் மூழ்கினன் விடிந்ததும் வண்டி மிதிலை சேர்ந்தது கவிரா யன்தன் களிமனை புகுந்ததும் பழஞ்சோ றுண்ணப் பகர்ந்தனன் ஆயினும் வண்டிக் காரன் உண்டி மறுத்தனன் வாடகை யும்பின் வாங்க மறுத்தனன் விடையே வேண்டினன் காரணம் வினவ வெங்க ளப்ப நாயக்கன் வழியேன் ஊழ்வினை யாலித் தாழ்நிலை யடையினும் கொடுத்ததை வாங்கும் குணமெமக் கில்லை இன்றுனக் குதவிய தென்பெரும் பேறே என்றனன் வண்டி இயக்கினன் சென்றான் கண்துளி கொளக் கவி ராயன் பண்புறு வழிமுறைப் பாங்கை நினைந்தே -உ.க.இ.2.249 - 50 8.கதை பள்ளிக்கணக்கு புள்ளிக்குதவாது 235. இலக்கணம் தருக்கம் நல்ல இசையொடு கணியம் நோய்கள் விலக்கிடு மருந்திவ் வைந்து வித்தையொன் றொன்றே கற்றுத் துலக்குறும் உலகப் போங்கு துளியதும் அறியா ஐவர் புலக்கலை காணத் தக்க புரவலர் பரிசை நாடி 236. வடபுலம் நீங்கித் தெற்கில் வளமுறு வேலூர் ஆங்கண் திடமிக அரையன் முன்னே திறமைகள் எல்லாம் காட்ட விடலரு விருப்பின் மன்னன் வியந்துபா ராட்டும்போது மடவரிவ் வுலக வாழ்வில் மன்றவென் றமைச்சன் சொன்னான் 237. எத்திறம் அறிதி என்றே இறைமகன் வினவ இன்னே அத்தனை பேரும் சென்றூண் அருந்தியே மீளச் சொன்னால் மெய்த்திறங் காண்பாய் என்று மேதகை யமைச்சன் கூற உத்தர வாகி யன்றே உண்ணுதற் கவருஞ் சென்றார் 238. தங்கிய மனைக்குச் சென்று தம்முணாச் சமைத்தற் கென்றே அங்கவர் ஒவ்வோர் வேலை ஆற்றிட இசையில் வல்லோன் வெங்கழி நெருப்பை மூட்டி வேவுறும் உலையும் ஏற்றிப் பொங்கியே கொதித்தல் கண்டு பொருந்திடத் தாளம் போட்டு 239. இன்னிசை பாடிக் கொண்டே இன்பமுற் றிருந்தகாலை முன்னுற இசைந்து பின்னர் முடுகியே உலையுஞ் செல்லத் தன்னையும் அவமதித்துத் தாளமும் தப்பிற் றென்று கொன்னுறு சினத்திற் சோற்றுக் குழிசியை உடைத்துப் போட்டான் 240. தயிர்க்கெனச் சென்ற நல்ல தமிழிலக் கணியும் ஆய்ச்சி உயிர்க்குறில் நெடிலை நீட்டி ஒலித்ததைத் திருத்திக் கூறிச் செயிர்த்ததன் பின்னுஞ் சற்றும் செவிக்கொளா திருந்த தாலே வயிர்த்ததோர் வெறுப்புக் கொண்டு வாங்குத லின்றி மீண்டான் 241. காய்கறி வாங்கற் கென்று கடைக்குப்போய் மருத்துவன்தான் நோய்தரு குறைகள் கூறி நுகருதற்குரிய தேதும் வாய்பட லின்மை கண்டு வாங்குத லொழிந்து வந்தான் வேய்தர அமைச்சன் விட்ட வினைஞரும் மகிழ்ந்து கண்டார் 242. நெய்யினை வாங்கச் சென்ற நெடுமொழித் தருக்கி வாங்கிக் கையினிற் கொணரும் போதே கருதிய நிலைக்க ளத்தின் ஐயம தொழிக்கத் தொன்னை அடிமிசை யாகச்சாய்த்தான் ஒய்யெனச் சிந்தி நெய்யும் ஒழிந்ததால் உண்மை மீண்டான் 243. இலையது பறிக்கச் சென்றோர் எழில்மர மேறப் பாதி நிலையினிற் பல்லி சொன்ன நிமித்தமோ தீதா மென்று கலையுறு கணியன் ஆங்கே கைசலித் திருந்து பின்னும் மலைவுதீ ராமை யாலே மரத்தினின் றிறங்கி வந்தான் 244. ஒற்றரால் அமைச்சன் இந்த உறுசுவைத் செய்தி யெல்லாம் உற்றபின் அரைய னின்பால் உரைத்தனன்அவனு அந்தக் கற்றவர் சொல்லால் உண்மை கண்டவர்க் குரிய ஐந்து நற்றிற உழையன் சொல்லை நம்பியே நாட்டை ஆண்டான் 245. சொல்லிய கதைதான் நம்பும் தோரணை யற்ற தேனும் ஒள்ளிய புலமைக்கிந்த உலகியல் அறிவும் வேண்டும் பள்ளியின் கல்வியெல்லாம் பயன்படா புள்ளிக் கென்னும் தெள்ளிய உண்மை யேனும் தேற்றுதற் குதவு மன்றே நன்றியுள்ள சேவகன் 246. தரையுலகில் இருகண்டம் தழுவு பேரிசியாவில் உரைபலநற் செல்வமெலாம் ஒருங்குடைய நற்பேற்றுத் துரையொருவன் ஐங்காதத் தொலைவிலுள்ள உறவினரைக் கரையறுமெய்க் காதலினால் கண்டுவரக் கருதினனால் 247. நாற்கலிமா வையமதில் நாயகன்தன் குடும்பமுடன் ஏற்கமிக வசதியாய் ஏறியிருந் தமர்ந்ததற்பின் கோற்கையனாய்ச் சேவகனுங் குதிரைகனை வியங்கொண்டான் நூற்படுபேர் நளனென்று நோக்கியவர் வியப்புறவே 248. நாடிறந்து காடுதனை நண்ணியபின் ஓநாய்கள் ஓடிவந்து நெருங்கியதும் ஒருகுதிரை அவிழ்த்துவிட்டுச் சாடியதைக் கொன்றவையும் சதைமுழுதுந் தின்னுமுனம் கூடியதோர் நெடுந்தூரம் கொடுவுய்த்தான் சேவகனும் 249. தின்றவுடன் ஓநாய்கள் திரும்பவும்வந் ததுகண்டு பின்னுமொரு குதிரையினைப் பிணியவிழ்த்து விட்டவுடன் என்றுமிலா வேகத்தில் இயக்கிவிட்டான் சேவகன்தான் அன்றவனின் அகநிலையை ஆண்டவனே அறிந்தவனாம் 250. பேயுற்ற கொடுமையொடும் பெயராத யானைத்தீ நோயுற்ற பசியினொடும் நொடியில்மீண் டோநாய்கள் ஏயுற்ற கடிதில்வந் தெய்தியதைக் கண்டுமனம் தேயுற்ற சேவகனும் திரும்பவுமொன் றவிழ்த்துவிட்டான் 251. விட்டவுடன் வையத்தின் வேகத்தை யாரறிவார் பட்டறிந்த நிகழ்ச்சிகளின் பயனாகச் சேவகனின் மட்டறியா வேகமுள மனமேபூண் டுய்த்திடினும் சட்டமுடன் ஓநாய்கள் சார்ந்தனநா லாமுறையும் 252. செலவரிய கடறுமிகச் சென்றுவிட்ட நிலைமையதும் பலவுயிருக் கோருயிரே படுவதுநன் றெனுநெறியும் தலைவனது நன்றியையும் தகவெண்ணிச் சேவகனே விலகருமோ நாய்கட்கு விருந்தானான் விரைகவென்றே 253. சேவகனை ஓநாய்கள் தின்றிடுமுன் ஒருமாவின் தாவரிய கான்கடந்து தலைவனொடும் பிறருய்ந்தார் ஏவினவை செய்துணவிற் கீடுசெய்தும் தலைவருக்கே ஆவியதும் அளித்திடுவோர் அரியவுயி;ர்க் கொடையரம்மா - உ.க. இ.2.246-7. 9. பலவகை திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாச் செய்தி 254. தமிழினத் தீரே தமிழினத் தீரே குமரிநன் னாட்டிற் குணிப்பில் காலமுன் நுமருயர் நாக ரிகந்தனைக் கண்டும் ஞமலியின் இழிந்த நிலைமையர் ஆகி மாந்த னுண்ணியும் மதிகிளர் காலம் தாழ்ந்து நின்றீர் தமிழினத் தீரே பகுத்தறி வடிப்படை பொருள்களைப் பகுத்தே முதற்றனித் தாய்மொழி வளர்த்தனர் யாரே பல்துறை இலக்கியம் பாவின் இயன்றபின் பொருளவிலக் கணமும் புணர்த்தவர் யாரே: முத்தமிழ் எனவே இயலிசை கூத்துடன் ஒத்தமும் மடிமொழி யுணர்த்தினர் யாரே. சோவென் அரண்மேற் சொல்லரும் பல்பொறிக் காவல் முதன்முதற் கண்டவர் யாரே மகனைமுறை செய்தும் பகையை விருந்தோம்பியும் நடுநிலை சால்பு நாட்டினர் யாரே கையுங் காலுமாய்க் கரவர் வந்தே வெள்ளை நிறத்தினும் வெடிப்பொலிச் சொல்லினும் விண்ணவர் நிலையை விளம்பி யேமாற்ற. பகுத்தறி வைப்பயன் படுத்தாது வைத்தே மதவியற் பித்தமும் மடவியற் கொடையும் பழங்குடிப் பிறப்பொடு பேதைமை யூட்ட நிலத்தேவ ரென்னும் நெடும்பொய் நம்பி அடிமைப் பட்டும் மிடிமைப் பட்டும் அஃறிணை யாயினீர் அனைத்தும் இழந்தீர். எஞ்சி யிருப்பது செஞ்சொல் தமிழே அதனை யேனும் அழியாது காப்பீர் முதலிரு கழக நூல்களுள் எதுவும் இதுபோ துண்டோ ஏனிலை ஆய்மின் ஆரிய மொழியில் அனைத்துமொழி பெயர்த்தபின் அருந்தமிழ் முதனூல் அழியுண் டனவே ஆங்கில அரசும் அம்மொழிக் கல்வியும் நயன்மைக் கட்சியும் மறைமலை யடிகளும் அறிவுறுத் தியபினும் சிறிதும் திருந்தீர் அறுப்பானை நம்பும் ஆடுகள் போல வெறுப்பானை யின்றும் விரும்பித் தொழுதீர் புறநாட் டகத்தே வேர்ப்பான் பகைமை வெளியிட் டுடனே வேறாதல் வேண்டும் இதுதமி ழகமே இதில்கலை தமிழே ஆரிய மென்னும் பூரிய மொழியை அகற்றித் தமிழை அரியணை ஏற்றுவீர் கோயில் வழிபாடும் கொண்டாடு மனமும் வாயில் மொழிதமிழ் வழங்குதல் வேண்டும் விண்ணக மொழியும் விண்ணக மாந்தரும் மண்ணகம் வழங்கும் முறைமை இல்லை சிவனியம் மாலியம் எனுமிரு மதங்களும் செந்தமி ழோரே கண்ட நெறியாம் என்ன பெயரும் இன்றமி ழாக்கிக் கன்னித் தமிழின் கற்பைக் காமின் உங்கள் போன்றே உடலும் உறுப்பும் உள்ள அமெரிக்கர் வெள்ளிடை நீந்தித் திங்கள் சென்று திரும்பினர் பன்முறை அடுத்த மனையுளும் அடியிட லின்றி அடிநிலைத் தாழ்வில் அமிழ்ந்துளீர் நீரே முதன்முதற் பொறிவினை முகிழ்த்தனர் நும்முனோர் மதிநீர் முதற்சென் றிருத்தல் வேண்டும் திருவள் ளுவரீ ராயிர வாண்டைப் பெருவிளம் பரமாய்ப் பேணிக்கொண் டாடினிர் அதனால் எதும்பய னானது முண்டோ எள்ளள வும் அவர் சொல்லேற் றீரோ பிறப்பொடு தொடுத்த குலப்பிரி வினையால் கூண்டுள் விலங்குகள் போன்றடை பட்டே ஒற்றுமை குலைந்தும் உரனை இழந்தும் இனவுணர் வழிந்து மொழியுணர் வின்றிச் சிறுமை நிலையிற் பெருமை கொண்டீர் ஆரியன் பிறப்பால் உயர்ந்தான் அல்லன் அவனிலும் வெள்ளையர் ஐரோப் பியரே தட்ப வெப்பந் தன்னால் நாட்டு மக்கள் நிறமும் மாறுவ தியற்கை ஒன்றே குலமும் உடன்பிறப் பனைவரும் நிலத்தேவ ரென்றொரு குலத்தோரிங் கில்லை குடிமதிப் பிலும்பிற குறிப்புக் களிலும் தமிழன் என்றே தன்குலம் குறிக்க வடமொழி தேவ மொழியு மன்றாம் அதனினும் மூச்சொலி யடைந்தது காளவாய் முழக்கும் மூச்சும் மொழியொலி பெறுகை வழக்கில் நேர்ந்த வழிநிலைத் திரிபே திரவிடத் தாயும் ஆரிய மூலமும் தெரியிடத் தேநம் தென்மொழி யாகும் இந்திய நாகரி கந்தமிழ் ஆகும் பகுத்தறி வைப்பயன் படுத்தி யின்னே நிறந்துப் பரவு நிலைநீர் முத்திறம் ஆயினும் ஒரின மாத லறிக அரசியற் கட்சி பலவா யிருப்பினும் ஆங்கிலர் போன்மொழி யணைமின் ஒருங்கே தாழ்த்தப் பட்ட தம்மினத் தோரை உயர்த்தப் பெற்றோர் உயர்த்தல் கடனே பிரித்தா னியத்தினும் பிராம ணீயம் பன்மடி கொடிதே பகரவுங் கொடிதே முன்ன தொருவன் உடலையே பிணித்தது. பின்னதோ பிறங்கடை யுளத்தையும் பிணிக்கும் கல்வியும் செல்வமும் கட்டாண் மையும் கணக்கின் பெருமையும் கரையற் றிருந்தும் சூத்திரர் சற்சூத் திரனெனத் தம்மைத் தாழ்த்திய தமிழர் வீழ்ச்சியை நோக்கின் அரிமா வரிமா கரிமா அனைத்தும் நீல நிறங்கொள் கோலங் கண்டே நரிமா விற்கு நடுங்கிய தொக்கும் உள்ளந் தமிழனுக் குயரா வாறு பெருங்கலா யிழுப்பது பிராமணர்க் கஞ்சுதல் ஆரிய வடிமை யகன்றா லொழியத் தேறும் வழியே தென்னவர்க் கில்லை ஆரிய வேடரின் அயர்ந்தனிர் மறந்தனிர் சீரிய மொழிநூல் செம்மையின் உணர்ந்தே ஓரின மாகி உலகத் துயர்க பசியும் பிணியும் பகையும் நீங்கி இருதிற உடைமை ஆட்சியும் ஒருகுடை நீழல் ஓங்குக உலகே. -திருக்குறள் மரபுரை. 790-2. திரு 255. மருவ லர்கொள மன்பொரு னற்றபின் மரபி னாருளர் மைந்திலர் வாயிரு திருவி ழந்தபின் திருவெனுஞ் சொல்லையும் ஒருவ நின்றவன் தமிழன் ஒருவனே -செ.செ.20:243 முதுமொழியும் பொதுமொழியும் 256. முதுமொழி யொருதனி முத்தமிழ் முகிழ்த்தன புதுமொழி பலவுளும் பொலியும் ஆங்கிலம் பொதுமொழி யுலகெலாம் புகலும் அறிவியல் பொதுமொழி இந்தியாற் செறிவ தடிமையே -இ.த.எ.கெ. 89. படைகொண்டார் நெஞ்சும் உடல்உண்டார் மனமும் 257. கதறினும் தொண்டை நீளக் கந்தினும் புள்ளும் மாவும் பதறினும் நெஞ்ச மெல்லாம் பக்கமுந் தலையுங் காலும் உதறினும் அங்கும் இங்கும் ஓடினும் அரத்தம் பீறிச் சிதறினும் இரக்கங் கொள்ளார் சிதைத்துடல் சுவைக்க வுண்டார் -திருக். மர. 253. குமிழியை ஒத்த வாழ்வு 258. இமிழ்கட லுலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினினும் இனிய பாவின் அருமறை பலவுஞ் சான்ற தமிழினை இழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை யொத்த வாழ்வே குலவிய மாநி லத்தே. -இ.த.எ.கெ.முக. 111 தமிழன் நிலை 259. கெடுக வுள்ளம் கேடிவன் கொள்கை தமிழன் எனவே தகவெதும் இலனே உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி நமிழென விளக்கினுந் தாழ்மொழி என்பான் பொன்னார் மேனிப் பொலிமுகம் வாய்ந்து நன்னீராடி நல்லுடை யணிந்து கல்வி தேர்ந்து கனம்பதம் பெற்று நாகரி கத்தின் நன்கனம் வாழும் நெல்லைச் சிவவூண் வெள்ளாண் குலவனும் பிறப்பில் இழிந்தோன் பெயரிற் சூத்திரன் இறக்குந் துணையும் இழிவின் நீங்கான் இருமுறை குளிக்கினும் இவன்துப் புரவிலன் இவன்கை யுண்ணல் இழிவென் றதன்மேல் கல்வி நிரம்பாக் கரியவ னேனும் இருகை யேந்தி இரப்பவ னேனும் அருந்தமி ழறியா அயலா னேனும் கொள்வான் விழுவான் கும்பிட் டெழுவான் அவனொரு தேவன் அருளிமண் வந்தோன் வழங்கா தெவர்க்கும் விளங்கா தெனினும் அவன்வாய் மொழியே ஆகுக வழிபட அவன்கை பட்டது அமுதே இங்ஙனம் இனியெந் நாளும் இருக்க எனுமே - ம.வி.119 குறள் இசைப்பாக்கள் பல்லவி 260. இந்த உலகமெங்கும் செந்தமிழின் குறள்போல் எந்த மொழியினும் உண்டோ? அனுபல்லவி சொந்தமா கவேபிறர் தந்தம் மொழியிற்பெற முந்தி விரைகுவரே விந்தை இதுவேயன்றோ (இ) சரணம் புந்தியிற் புதுமலர் சிந்திய மதுநிகர் தந்திடும் சுவையுறவே வந்தனை சிரஞ்செய வாழ்த்திட வாயது சிந்தனை மனமுறச் சிரவணம் செவிபெற (இ) -திருவள்ளுவர் திருநாள்விழா மலர் பக்.126 இராகம் - தன்யாசி; தாளம் - ஆதி. பல்லவி 261. வள்ளுவரே - திரு-வள்ளுவரே வாழிவாழி தேவ - ரீர்நாமம் (வள்) அனுபல்லவி வெள்ளிய ஞானத் -தீம்பால் தருங்காம தேனு வேவிவேக - பானுவேதிரு (வள்) சரணம் வண்ணமுடன் சொன்னீர் - சம்மதபோதம் மனதுகுளிரும் குறள் - மதுரசங் கீதம் தண்ணந்தமிழ் மணக்க - உண்ணும்ப்ரசாதம் தலமுழுவதும் புகழ் - உலவுமெய்வேதம் (வள்) (2) இராகம் -ஆரபி தாளம் - ஆதி. - திருவள்ளுவர் திருநாள்விழா மலர் பக். 127 கும்மி 262. கும்மியடி பெண்ணே கும்மியடி - நல்ல கொன்றை மலர்சூடிக் கும்மியடி நம்மையாளும் தனிநாயகம் நம்மிடம் நண்ணிய தென்றுநீ கும்மியடி ஆட்சிமொழி யிங்கே ஆங்கிலமாய் - என்றும் ஆகிவிடின் அது கேடாகும் மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை மாதரசேவரக் கும்மியடி. -த.நா.வி. 133 எடுத்துக்காட்டில் பெயரில்லை போலிகைப் பாடல்கள் 263. அங்கணத்து ளுக்க அமிழ்ததனால் தங்கணத்தர் அல்லார்முற் கோட்டி கொளல் 264. தங்கணத்தார் அல்லார்முன் சொல்லல் சொலினஃதாம் அங்கணத்துள் உக்க அமிழ்து. -திருக். மர. 720 265. தாழ்வுணர்ச்சி நீங்கும் தகைமைக்கண் தங்கிற்றே வாழ்வுணர்ச்சி காணும் வழி. -முதன்மொழி 1.3;2. மக்கள் வாழ்வில் குறள் மாறியமைதல் 266. போகா றளவிட்டி தாயினுங் கேடில்லை ஆகா றகலாக் கடை என்று மக்கள் வாழ்விற்குகுறள் மாறியமையும்- ம.வி.110. 267. புக்கில் அமைந்தின்று கொல்லோ சிலரிடைத் துச்சல் இருந்த தமிழ்க்கு -செ.ப.க.க.அ.மு. சீர்கேடு 3 20.8.61. 268. ஆய்விலா தாரும் அறிவுடையார் ஆய்ந்தார்முன் வாய்திறவா துள்ள விடத்து -செ.ப.சீ.27. கண்ணகி செய்தியைச் சீத்தலைச் சாத்தனார் சொல்லக் கேட்டவுடன், இளங்கோ வடிகட்கு மூவுண்மைகள் தோன்றின. அங்ஙனமே சென்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டுப் பேராயம் படுதோல்வியுற்றவுடன் நடுநிலையாளர்க்கெல்லாம், மூவுண்மைகள் தோன்றின. அவை, 269. தமிழ்பிழைத் தோர்க்குத் தமிழ்கூற் றாவது, ஏமாற் றென்றும் இயலா திருப்பது, தன்வினை பின்னே தன்னைச் சுடுவது என்பன. புதிய முத்தமிழ் - மு. ரா. பெருமாள் முதலியார் இயற்றிய புதுநூற்பாக்கள் நிலைமொழி யீற்றில் மெய்யெழுத் திருப்பின் வருமொழி ரலவில் தொடங்கா தென்க; அண்ணன் இராமன் என்றே எழுதுக: அண்ணன் ராமன் எனவன் றுணர்க நிலைமொழி யீற்றில் உயிரெழுத் திருப்பின் வருமொழி ரலவில் தொடங்கலா மென்க தம்பி லக்குவன் என்பதே சாலும் தம்பி இலக்குவன் என்ப தெதற்கு? - செ.செ. 52 : 550 இவற்றை மறுத்துப் பாவாணர் பாடியவை 270. நிலைமொழி யீற்றில் நிற்பது மெய்யேல் வருமொழி ரலமுன் வாரா வென்க கலைமான் இரண்டு கண்டே விலக்கில் எனவுரைத் தெழுதுக இதுமுது நெறியே 271. நிலைமொழி யீற்றில் உயிரொலி நிற்பின் வருமொழி ரலமுன் வரலா மென்க கலைமா ரெண்டுகாணுக லெக்கில் எனவுரைத் தெழுதுக இதுபுது நெறியே என்று புணர்ச்சி யிலக்கணத்தை மாற்றவும் நேரும். இதன் தீங்கை அறிஞர் கண்டு கொள்க. -செ.செ. :586 ஒரு நூற்பா - வண்ணனை நூலின் வழு 272. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியே -செ.செ. 50:90 அடிமையை அகற்றுக 273. ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தனை சீரிய மொழிநூல் செவ்விதின் உணர்த்தலின் மூரிய பெருமையை முற்று முணர்ந்தினே பூரிய அடிமையைப் போக்குவை தமிழனே -த.ம. 193 தமிழர்வ.358 தலையாய தமிழர் 274. பெருமையெனப் புன்செருக்கிற் பிரிந்து வாழ்ந்து பிறருக்கொன் றீயாத புல்ல ரேனும் எருமையொடு குரங்கரவம் தவளை தின்பார் இரவெடுப்பார் தீயதொழு நோய ரேனும் கருமைமிகும் ஆப்பிரிக்கர் முண்ட மெய்யர் காடுறையும் விலங்காண்டி மாந்த ரேனும் அருமையுறுந் தனித்தமிழை விரும்பு வாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர். -தமிழர் வ. 352. 10. முடிநிலை வண்ணனை மொழிநூலின் வழுவியல். முடிபு 275. ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தெனச் சீரிய மறைமலை செந்தமிழ் உணர்த்தலிட் டோரின மாயர சுறுந்தமி ழினமே 276. குமரி நிலமொழியைக் கூறுந் தமிழன் குமரி வரலாறு கொண்டே - குமரித் தமிழையும் தன்னையுந் தாங்கித்தற் காக்கும் அமரிலும் வெல்லும் அறி 277. பண்பட்ட செந்தமிழாற் பைந்தமிழா முன்னேறக் கண்கொட்டுங் காலும் கவலையறேல் - புண்பட்டும் மாறா யிருப்பவெலாம் மாற்றிப் புரட்சிசெயச் சூறா வளிபோற் சுழன்று 278. வண்ணனைக் கூற்று வழூஉ மொழியியலை விண்ணவர் போற்றினும் வேண்டற்க - எண்ணிப் பகுத்தறிவால் அந்நூல் செய் பைந்தமிழ்க் கேட்டை வகுத்தவர லாற்று வழி 279. முப்பல் கலைக்கழக முட்டாத் தமிழ்த்துறையும் செப்புந் தனித்தமிழர் சேர்ந்திடுக - தப்பின் அடியோடு முக்கழகும் ஆரியம் நீங்கி முடிசூட முத்தமிழ் முந்து. முடிபு 280. தேவ மொழியென்று தேரின் உலகிலில்லை யாவும் நிலமக்கள் யாத்தனவே - சாவினால் தெய்வ நிலைமையெனின் தேவர் உலகினையே எய்தி விடுதல் இயல்பு 281. ஆரியம் தேவமொழி யாகு மெனின்மேலை ஆரிய மெல்லாம் அதுவாகும் - ஆரிய நான்மறை தெய்வமெனின் நானிலத் தேனைமொழி நூன்மறை மேலாம் நுவல் 282. இந்திய ஐரோப் பியமென்னும் மாமரத்தின் முந்திய ஆணிவேர் முத்தமிழாம் - பிந்திய உச்சாணிக் கொம்பே உரப்பும் வடமொழியாம் அச்சேது மின்றி அறை. 283. இயல்பே திரிபே எனுந்தமிழன் பாங்கில் இயல்பே தமிழாகும் என்க - அயலாம் திரிபே திரவிடமாம் தேரினதன் முற்றே மருவும் வடமொழி மாண்பு 284. வடமொழியே தெய்வ வகைமொழியேல் அந்த மடமொழியின் மூலத் தமிழாம் -திடமொழி தெய்வத்தின் தெய்வத் திருமொழி யென்றின்றே உய்வுற்றுச் சீராக ஓம்பு 285. சொற்பொருள் யாப்பும் சுவையாம் அணியியலும் நற்புல நூலுமே நல்வளமாம் - வற்பொலியின் மூச்சும் கனைப்பும் மொழியின் சிறப்பாயின் ஓச்சுங் கழுதை உலகு 286. எல்லா வகையாலும் எண்ணினால் இவ்வுலகில் எல்லேர் தமிழுக் கிணையில்லை - அல்லாச் சிறந்த மொழியெல்லாம் செந்தமிழ் போலன்றி இறந்த மொழியாம் இன்று 287. ஆரிய ஏமாற்றிற் காளாய் அடிமைமடப் பூரிய வாழ்வழுந்திப் போந்தமிழர் - சீரிய செந்தமிழ் மானஞ் சிறந்துரிமை பெற்றுயர்க முந்திய தென்னோர் முறை 288. ஒருமுறை ஏமாறின் ஏமாற்றி குற்றம் மறுமுறை ஏமாறி குற்றம் -பலமுறையும் ஏமாறும் பேதை இயல்பின் தமிழனெனின் ஆமாறே இல்லை அறி 289. மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க - பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்காண் முன்போல் தமிழுயரத் தானுயர்வான் தான் 290. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் இல்லையொரு மேன்மை - வகுத்தநன்னூற் கற்றைகளைத் தின்றாலும் காளவாய் நல்லறிவு பெற்றிடுமோ எத்துணையும் பேசு 291. உடம்பளவில் மாந்தர் உயர்திணை யராகார் மடந்தவிரும் நல்லறிவு மானம் - திடம்பெறவே தாழ்வுணர்ச்சி நீங்கித் தகுநற் றொழிலொழுக்கம் வாழ்வுயர்ச்சி காணும் வழி 292. அடிமைத் தனத்தின் அடிநீக்கி இன்றே குடிமைத் தனந்தமிழா கொள்க - மடிமை இருக்குந் தமிழையும் இல்லா தாக்கும் தருக்கும் பெயருந் தப. 293. செங்கதிரின் நீண்மறைவிற் செந்தமிழும் ஆரியத்தால் மங்கி மறைந்தநிலை மாய்ந்ததினால் - எங்குமினி மூல மொழியென முத்தமிழே ஆளுகின்ற காலம் அணுகியதே காண். 294. குப்பை உயர்ந்தது கோபுரந் தாழ்ந்ததெனத் தப்பி வடமொழி தான்கவர்ந்த - செப்பத் தமிழனையை விட்டினித் தானதற்குத் தாழ்க குமரியனை யென்றதைக் கொண்டு. 295. மறை மலை மாணடிகள் மாபெயர் வாழி நிறைமொழி முத்தமிழ் வாழி - இறைமொழியாம் என்னும் வடமொழியும் ஏமாற்றா தெந்நிலத்தும் மன்னுக நூன்மொழி மற்று. வழிபாட்டு மொழி 296. ஆரியம் முந்தி அருந்தமிழைத் தாழ்த்தியதால் நேரெதிர் இந்திவந்து நின்றதுகாண் - ஓரடியாய் ஆரியம் இந்தி அகல வழிபாடு சீரிய செந்தமிழில் செய். -இ.த.எ.கெ.55 வாழ்த்து 297 வான்வாழி வாய்மை வளமுத் தமிழ்வாழி ஆன்வாழி அன்போ டறம்வாழி - கான்வாழி நூல்வாழி நல்லறிவு நுண்புதுமை ஆய்வுசெங் கோல்வாழி பல்லரசுக் கூட்டு. -த.இ.வ.326 11. பாடல் அகரவரிசை பாடல் எண் அங்கணத்துள் 263 அடருந் 160 அடிமை 292 அத்தொகை 109 அம்மை 39 அமெரிக்கர் 226 அரசனே 219 அரிமாபுரம் 89 அரிய 152 அருந்தலால் 218 அல்லும் 128 ஆங்கிலத்தோ 98 ஆங்கிலர் 163 ஆண்டாண்டு 191 ஆய்விலா 268 ஆயிரத்தெண் 48 ஆராவணி 114 ஆரிய 149 ஆரிய ஏமாற் 287 ஆரியராட்சி 184 ஆரியம் 281, 275 ஆரிய வேடரின் 273, 275 ஆரியன் 150 ஆருயிர் 216 ஆலைத் 162 ஆளும் 84 ஆற்றும் 82, 169 ஆறடி 71 ஆனை நடை 183 இந்த உல 260 இந்தி 9 இந்திய 282 இந்தியா 224 இந்நிலை 4, 64 இந்நூலும் 197 இம்மியே 188 இம்மை 140 இமிழ்கடல் 258 இயல்பே 283 இரப்ப 100 இரவிலே 217 இராமசாமி 201 இருந்த நாள் 78 இருபதாம் 186 இல்லத் 153 இல்லறத் 146 இலக்கண 235 இலக்கியமும் 66 இலக்குவனார் 37 இலையது 243 இவ்வுரை 130 இழந்த 58 இளங்கோ 27 இறையருள் 26 இன்குரலும் 177 இன்பம் 83 இன்னிசை 239 உடம்பளவில் 291` உயர்நிலை 193 உரைநடை 173 உலகத்தமிழ் 57 உலகமுதல் 93 உலகமுழுமை 141 உலண்டின் 55 உவப்பவே 72 உள்ளநற் 33 ஊட்டில் 233 ஊரும் 143 எங்கணும் 31 எங்கேனும் 88 எண்ணிற்கு 2 எத்தனை 122 எத்தனை நாள் 232 எத்தனைய 192 எத்திறம் 237 எந்தையே 76 எம்மதமு 136 எல்லாச் 272 எல்லாமும் 147 எல்லாவகை 286 என்றும் 10 என்ன இந்த 223 ஒருமுறை 288 ஒருமுறையே 123 ஒழுக்கம் 144 ஒற்றரால் 244 ஒன்றும் 85 ஓவிய 106 கட்டுக்கதை 159 கடவுள் 86 கடிதமும் 178 கடையெழு 204 கண்ணினுக் 214 கண்மணி 30 கதறினும் 257 கருமுத்து 107 கலியாண 18 கறுவுகொள் 134 காமுறத் 65 காய்கறி 241 கார்வாழி 126 கால்கடுத்து 205 கான்மனி 92 கிறித்தவ 59 குடிசெய்வார் 156 குப்பை உயர்ந் 209, 294 குமரிநிலை 1, 276 குமரிமலை 54 குறையும் 7 குன்றக்குடி 101 கெடுக 259 கேட்டின் 230 கொலையும் 168 கோடிக் 99, 207 கோடிச் 231 சடசட 221 சித்திரமோ 38 சிவநெறி 46 சுழன்றும் 42 சீராய் 121 செங்கதிரின் 93 செங்காட்டுப் 96 செட்டிகுளத் 94 செந்தமிழ் 105, 234 செந்தமிழ்ப் 74 செல்வமே 79 செலவரிய 252 செவ்வை 67 சேலங் 198 சேவகனை 253 சைவசித்தாந்த 51, 52 சொல்லிய 245 சொற்பொருள் 285 தகைசால் 44 தங்கணத்தர் 264 தங்கியமனை 238 தமதுபாத் 25 தமிழ்நாடு 68 தமிழ் நிலத் 215 தமிழ்பிழைத் 269 தமிழலாது 5 தமிழன் 151 தமிழினத்தீரே 254 தமிழே 91 தயிர்க்கென 240 தரையுலகில் 246 தன்கருமம் 111 தன்மை 6 தன்னலம் 77 தன்னலமும் 187 தனக்குச் 164 தனித்தமிழ் 62 தாமரை 129 தாய்நாடே 166 தாய்மொழி 32, 127 தாயும் 14 தாழ்வுணர்ச்சி 265 தானமிட்ட 157 திருமணம் 120 திருமுல்லை 87 தின்றவுடன் 249 தீவம் 103 துங்கஇல் 13 தெளிதேனில் 185 தேங்குமுப் 20 தேவமொழி 32, 280 தேவேந்தர் 36 தொங்கல் 112 தொட்டனைத் 148 தொடைகெழு 115 தொல்காப்பியப் 170 தொல்காப்பியம் 137 தொல்காப்பிய முதல 172 தோற்றுந் 179 நடுநிலை 139 நண்பன் 189 நன்செயும் 220 நாட்டுப்பற் 161 நாட்டுவிடு 181 நாடிறந்து 248 நாடுங்குல 210 நாடும்மொழியும் 47 நாவிரும்பின் 118 நாவை சிவதா 21-23 நாற்கலிமா 247 நிலைமொழி 270, 271 நீர்மிகிள் 222 நீரணை 70 நுண்மதி 174 நூலும் 171 நெய்யினை 242 நெய்வேலி 119 நெல்லைத் 53 நேரிய 29 பல்லெல்லாம் 73 பகுத்தறிவை 11, 12, 290 பட்ட 61 படிமைமேல் 158 பண்டாரகர் 110 பண்பட்ட 277 பணத்திற்கு 117 பதத்திற் 116 பரமசிவ 24 பல்கலைக் 75 பல்லாயிரம் 102 பலதுறை 131 பாங்கா 95 பாட்டும் 49 பாண்டியர் 43 பாரதிமேல் 182 பாவாணன் 113 பிறப்பால் 165 பிறமொழி 132 புக்கில் 267 புண்ணூற்று 41 புதுவதே 63 புரட்சிப்பா 190 புற்று 80 பூனைபோற் 225 பெண்ணின் 81 பெருமை 274 பேணிய 135 பேயுற்ற 250 பொய்மையும் 145 போகாறள 266 போற்றும் 17 மங்கலந் 16 மணிவாசகர் 56 மதத்தை 90 மருவலர் 255 மல்லைப் 154 மலையெனும் 155 மறுமனத்தில் 227 மறை மலை 2, 40, 104, 295 மாடுபோல் 167 மாநிலக் 108 மானங்கெட்ட 228 மிக்கபிறப் 34 முதுமொழி 256 முந்தியே 97 முந்திவாளோடு 69 முப்பல்கலைக் 279 முப்பால் 125 முருகலலிதா 19 முன்னாட் 206 முன்னூல் 124 முன்னோர் 138 மூவாயிர 142, 180 மூவுலகும் 196 மெய்கண்டார் 28 மொழியின் 133 மொழியும் 175 வடபுலம் 236 வடமொழியே 284 வடமொழியை 203 வண்ணனைக் 278 வலியப் 229 வள்ளுவரே 261 வள்ளுவன் 199 வான்வாழி 297 விட்டவுடன் 251 வீட்டிற்கும் 195 வீட்டுரிமை 45 வெண்டாளில் 50 வெள்ளமென் 213 வேத்தவை 35 வேலையின் 200 வேற்றுமொழி 176 12. இணைப்பு பொங்கல் 1 பொங்கலோ பொங்கலென்று பொங்குக பொங்கலதை நுங்கலோ நுங்கலென்று நுங்குக - மங்கலப் புத்தாண்டு நெல்லின் புதிருண்டு பேரனுடன் ஒத்தீண்டு நீட வுயர்ந்து 2. செந்தமிழ் போன்றினிய செந்தேனும் சீடையும் எந்தம் நினைவில் இருக்குமே - முந்தியே கண்ணறுவை செய்வித்த காசுபோல் இம்மையெலாம் எண்ணரிய காலும் இனித்து. 2002 சிலை ங0 (13.1.73) (கல்லைப் பெருஞ்சித்திரன்) மங்கலத் திரு. தமிழ்த்தென்றல் செல்வநாயகியர் திருமண வாழ்த்து 3. எங்கணும் நிறைந்த இறைவ னருளால் செந்தமிழ்த் தென்றல் செல்வநா யகியர் இல்லறம் நன்றென எவரும் புகழ நல்லற வின்பம் நன்பொருள் உதவத் தென்றலும் தமிழும் போல ஒன்றியே வாழ்க உலகினில் நெடிதே. 200அ மடங்கல் உங (8.9.77) மங்கலத் திருமிகு எ.சு. பி (S.P)க..f. நகர் ஆறுமுக மரகதவர் சென்னை - 78. 2020 துலைஉக (7.11.79) திருமண வாழ்த்து 4. தேறுமுக மாகவிணை திருமணவின் புறுதுணையர் ஆறுமுக மரகதவர் அன்பு அறம் நல் வாழ்வறிவுப் பேறு மிகு மகவளவு பெற்றுயருந் தமிழகத்தில் நூறுபுக இசைபரவ நுவல் தமிழ் பார் முழங்கிடவே. சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் ஞா. தேவநேயப் பாவாணர், B.O.L., இயற்றிய சிறப்புப் பாயிரம் 5. kலர்தலை உலகில் மாந்தர் இனத்தின் மலர்க்கண் முதன்முதல் மாண்புற மலர்ந்த தண்டமிழ் நாட்டில் தொன்றுதொட் டோங்கித் திணைதொறும் ஒவ்வொரு திறமாய் வழங்கியும் துன்புறும் அழுகைத் தொழிலிலும் கலந்தும் வாயினும் கருவி வகையினும் வளர்ந்தும் ஒன்பது குறைந்த பன்னீ ராயிரம் பண்களாய் நால்வகைப் பாற்படப் பரந்தும் இசைச்தமிழ் என ஒரு மொழிப்பிரி வாகியும் தேவரும் விரும்பும் தீவிய கலையாய்த் திகழ்ந்த தொல்பெருந் தென்னிசை பின்னர் ஆரியத் தாலுரு மாறி வழங்கிக் குலப்பிரி வினையால் புலத்துறை மறைந்து கருநா டகமெனக் கரைபெயர் கொண்டு பன்னூற்றாண்டு படர்ந்த பின்னர் முத்தமிழ்க் கடலுள் முழுகிமுத் தெடுத்துக் கருணா மிர்தக் கடற்பெயர் நூலில் இசைத்தமிழ் இயல்பை இனிது விளக்கிய உரவோர் தஞ்சை இராவு சாகிபு ஆபிர காம்பண் டிதரின் மகனார் வரகுணமிக்க வரகுணபாண்டியர் கன்று முதவுங் கனியைப் போல ஒருநரம் புற்ற சுரையாழ் முதலா ஆயிர நரம்புறும் ஆதியாழ் வரையுள நரப்புக் கருவியின் நாயக மாக வலிவு மெலிவு சமனென வழங்கிய மூவகை நிலையும் ஒருநிலை இயக்கும் எழுநரம் புற்ற இன்னிசைக் கலமாய்ச் சங்ககா லத்திற் செங்கோட்டி யாழெனச் சிறப்புற் றோங்கிய செந்தமிழ்க் கருவி பண்டை நாளில் பழமலை என்னப் பெற்ற தமிழ்நகர் பிற்றை நாளில் விருத்தா சலமென வேறு பெயர்கொளல் போலும் இன்று வீணை என்றே வழங்கும் வகையை விளக்கித் தந்தனர் பாணர் கைவழி என்னும் யாணர் நூலை யாவரும் கொளவே பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல் கழக வெளியீடு : 531 ; 1950. ஆசிரியர் டாக்டர் ஆ. வரகுணபாண்டியன்.