பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 51 கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 51 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1995 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப் பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.*- மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை எந்த மொழியையும் பிழையறப் பேசவும் எழுதவும் அதன் இலக்கணவறிவு இன்றியமையாததென்பது எவரும் மறுக்கொணாதது. இலக்கணம் பொதுவாய் மாணவர்க்கு வெறுப்பை விளைத்தற்கு, அதன் அரிதுணர் பொருண்மையினும் அதில் அவர்க்கு விருப்பின்மையே பெரிதுங் காரணமாகும். மாணவர் மனம் பெரும்பாலும் ஆங்கிலமயமா யிருக்கின்ற இக்காலத்தில், ஆங்கிலத்தினும் மிக விரிந்த தமிழிலக்கணம் அவர்க்கு ஏற்கின்றிலது. நன்னூல் மிகையென நீக்கி அதிற் சில இன்றியமையாத பகுதிகளையே புது முறைப் பள்ளியிறுதிப் பாடத்திட்டக் கழகத்தார் பாடமாக ஏற்படுத்தினும் அவையும் மிகையென மாணவரால் மதிக்கப்படுகின்றது. இலக்கண வறிவின்றிப் பிழையறப் பேசுவதும் எழுதுவதுமோ முயற்கோடும் ஆமையிறகுமே யாகும். இலக்கண வறிவின்மையானேயே பல பாடசாலைகளில் ஆறாம் பார மாணவர்கூட ஆறாம் வகுப்பு மாணவர் போன்றே பிழை மலிய எழுதுகின்றனர். அவரது வியாசங்களை ஆசிரியர் கைவலிக்கவும் மனஞ்சலிக்க வும் ஓயாது திருத்தித் திருத்தி ஓய்வு நேரத்தையெல்லாம் ஒழிப்பினும் அம் மாணவரது அறிவு திருந்தாமையின் அவ் வாசிரியர் உழைப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீர்போல் வீணாகின்றது. மாணவர் இலக்கண நூல்கள் எல்லாம் வியாசத்திற்கு வேண்டியவும் வேண்டாதனவுமான பல இலக்கணங்களை விரவிக் கூறுவன. அவற்றுள் வியாசத்திற்கு மிக வேண்டிய புணரியலோ சொற்புணர்ச்சிகளைத் திட்டம்பட வகுக்காமல் பெரும்பாலும் தவிர்ப்பும் (Exception) உறழ்ச்சியும் (Alternative) படவே வகுத்துக்கூறும். இதனால் மாணவர்க்குத் தெளிவான அறிவு பிறப்பதில்லை. ஆதலால், வியாசத்திற்கு வேண்டிய இலக்கணங்களை மட்டும் இயன்றவரை சுருக்கமாகவும் விளக்கமாகவும் கற்பிப்பின் மாணவர்க்குப் பயன்படுமென்றெண்ணி, பல ஆண்டுகளாக ஆயத்தம் செய்து இந் நூலை எழுதத் துணிந்தேன். ஈராண்டுகட்கு முன்னரே இந் நூல் எழுதப்பட்டதேனும் சில தடைபற்றி இதுகாறும் வெளிவந்திலது. மாணவர் பிழைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழையும் சொற்பிழையுமா யிருத்தலின் அவற்றை நீக்குவதற்குப் பல வழிகள் இந் நூல் நெடுமையும் கையாளப்பட்டன. உதாரணமாக ரகர றகர பேதங்களையும், வலி மிகும் இடங்களையும் நோக்குவார்க்கு இவ் வுண்மை இனிது புலனாம். இந் நூற் றிருத்தம்பற்றி அறிஞர் தம் கருத்துகளைத் தெரிவிப்பின் அவை நன்றியறிவுடன் அடுத்த பதிப்பிற் றழுவப்படும். புத்தூர், திருச்சிராப்பள்ளி 12.12.1936 ஞா.தேவநேயன் தமிழிலக்கக் குறிகள் குறுக்க விளக்கம் - Abbreviations இ - இழிசொல், இழிவழக்கு (Slang word or usuage) இ.கா - இறந்த காலம். இந் - இந்தி, இந்துஸ்தானி உ-ம். - உதாரணம் எ-கா. - எதிர்காலம் ஏ - ஏவல் வினை (Verb Imperative) கு - குறை (Loss of Letter or Letters) குறு - குறுக்கம் (Abbreviation) கொ - கொச்சை (Barbarism) நி. கா. - நிகழ்காலம் பெ. - பெயர்ச்சொல் (Noun) பெ. எ. - பெயர் எச்சம் (Adjective or Adjectival Participle) போ - போலி (Permutation) ம - மரூஉ (Corruption) வ - வடசொல் (Sanskrit Word) வி - வினைச்சொல் வி. எ - வினை எச்சம் (Adverb or Adverbial Participle) வி.மு - வினைமுற்று (Finite Verb) உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளசிறப்பு vi சான்றிதழ் viii முகவுரை ix தமிழிலக்கக் குறிகள் x குறுக்கவிளக்கம் xi நூல் I எழுத்தியல் - Orthography 1. சில எழுத்துகளின் வடிவங்கள் - Forms of some of the Tamil Letters 1 2. சில இனவெழுத்துகளின் பெயர்கள் - Names of some Cognate Letters 1 3. ரகர றகர பேதம் - Distinction between ‘u’ and ‘w’ 2 4. ழகர ளகர பேதம் - Distinction between ‘s’ and ‘H’ 9 5. மொழிமுதலெழுத்துகள் - Initial Letters 13 6. மொழியிடை யெழுத்துகள் - Medial Letters 13 7. மொழியிறுதி யெழுத்துகள் - Final Letters 14 8. வடவெழுத்து - Sanskrit Letters 14 9. புணர்ச்சி - Combination of words. 17 10. வலிமிகும் இடங்கள் - Combinations in which the Hard consonants are doubled 22 11. வலிமிகா இடங்கள் - Combinations in which the Hard consonants are not doubled 24 II. சொல்லியல் - Etymology 1. எண்ணடி உயர்திணைப் பெயர்கள் - Personal nouns derived from Numerals 26 2. இருபாற் பெயர்கள் - Masculine and Feminine nouns 26 3. இழிவடைந்த சொற்கள் - Degraded words 28 4. உயர்வடைந்த சொற்கள் - Elevated words 28 5. இகழ்ச்சிச் சொற்கள் - Ridiculous Terms 29 6. இழிசொற்கள் - Slang words 29 7. வழூஉச் சொற்கள் - Erroneous words 29 8. மரூஉச் சொற்கள் - Disguised and Corrupted words 31 9. குறைச்சொற்கள் - Loss of Letters 33 10. போலி - Interchange and Permutation of letters 33 i எழுத்துப்போலி - Permutation 33 ii. இலக்கணப்போலி - Metathesis 34 iii போலித்திரிபு - Corruption on the principle of Permutation 34 11. பல்வடிவச் செற்கள் - Polyforms of words 34 12. சொன்மயக்கம் - Confusion of words 37 13. சொற்குறுக்கம் - Abbreviations 39 III சொற்றொடரியல் - Syntax 1. வாக்கிய அமைப்பு - Structure of Sentence 40 1. சொன்முறை - Order of words 40 2. முறைமாற்று - Hyper baton 40 3. சொல்லிடையீடு - Inter - verbal space 40 4. முன்மைநிலை - Proximity 40 5. அண்மைநிலை - Priority 41 6. தெளிவு - Perspicuity 41 7. பொருள்வலி - Energy of Force 42 8. திட்டம் - Precision 42 9. பொருத்தம் - Propriety 42 10. இனிமை - Euphony 43 11. சுருக்கம் - Brevity 43 12. தூய்மை - purity 44 13. இசைவு - Concord or Agreement 44 14. வாக்கிய முடிபு 47 (1) முன் முடிபு, பின் முடிபு - ‘Loose’ and ‘Periodic’ Construction 47 15. வாக்கிய அளவு - Length of a sentence 47 16. வாக்கியவொருமை - Unity of Sentence 47 17. ஒருபோகமைப்பு - Parallel Construction 47 2. பாகியமைப்பு - Structure of Paragraph 48 3. உம்மைத்தொடர் - The Conjunction ‘c«’ 48 4. வினா மரபு - Principles regarding Questioning 49 5. நடை - Style 49 6. வழக்கியல் - Idiomatic Usages 51 i. தகுதி வழக்கு - Euphemism and Conventional Terms 51 ii. திசை வழக்கு - Provincialism 51 iii. இழிவழக்கு - Slang Expressions 51 iv. அயல் வழக்கு - Foreign idioms 52 7. நிறுத்தக்குறிகள் - Punctuation 52 8. தற்கூற்று, அயற்கூற்று - Direct and Indirect Narration 57 9. மரபு - Idiom 58 10. இணைமொழிகள் - Words in Pairs 58 11. தொடர்மொழிகள் - Idimatic Phrases and Expressions 59 IV. அணியியல் - Rhetoric 1. சொல்லணி - Figures of Speech relating to sound 63 i மோனை - Alliteration 63 ii எதுகை - Rhyme 63 iii மடக்கு - Pun 63 2. பொருளணி - Figures of speech relating to sense 63 i தன்மை - Natural Description 63 ii உவமை - Simile 63 iii உருவகம் - Metaphor 63 iv வேற்றுமை - Contrast 63 v முரண் - Epigram, Antithesis and Oxymoron 63 vi உயர்வு நவிற்சி - Hyperbole 63 vii பலபடப்புனைவு - Multiform comparison 63 viii வஞ்சப் புகழ்ச்சி - Irony or Sarcasm 63 ix தற்குறிப்பேற்றம் - Assignment of plausible reasons for natural events 63 x சுவை - Description of Sentiments 63 xi வேற்றுப்பொருள் வைப்பு - Inference 63 xii நிகழ்ச்சி - Vision 63 xiiii ஆட்படையணி - Personification 64 xiv ஏற்றவணி - Climax 64 xv இறக்கவணி - Anti - climax 64 xvi ஒலியணி - On - om - a - to- poe - ia 64 V. வியாசவியல் Essay - writing 1. கடிதமெழுதல் - Letter - writing 65 2. வியாச விதிகள் - Rules of Composition 66 3. மாதிரி வியாசம் - Model Essay 67 4. வியாச வகை - Classification of Essays 69 5. வியாசப் பொருள்கள் - Subjects for Composition 69 இணைப்பு (அனுபந்தம்) - Appendices ஆங்கிலச் சொன் மொழி பெயர்ப்பு - Anglo Tamil equivalents 73 பாவாணரின் வாழ்க்கைச் சுவடுகள் 76 கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் I எழுத்தியல் - Orthography 1. சில எழுத்துகளின் வடிவங்கள் - Forms of the Tamil Letters இவ் வடிவங்கட்கு மாறா யெழுதுவதெல்லாம் வழுவாகும். 2. சில இனவெழுத்துகளின் பெயர்கள் எழுத்து பெயர் i ண டண்ணகரம், முச்சுழி ணகரம். ந தந்நகரம், மொழிமுதல் நகரம் ன றன்னகரம், இருசுழி னகரம் ii ர இடையின ரகரம், சின்ன ரகரம் ற வல்லின றகரம், பெரிய றகரம் iii ழ சிறப்பு ழகரம், பெரிய ழகரம், மகர ழகரம் ள பொது ளகரம், சின்ன ளகரம் இவ் வினவெழுத்துகளை விதந்து கூறற்கு வெவ்வேறு அடைகள் (epithets) இருப்பினும், இவற்றின் ஒலிகள்மட்டும் எவ்விதத்தும் மாறாவென்பதை மாணவர் திட்டமா யறியக் கடவர். பெரிய ரகரம், பெரிய ளகரம் என்று கூறுவது வழுவாகும். ணகரம், ரகரம், ழகரம் என்று கூறுவதில் கரம் என்பது சாரியை. (இங்குச் சாரியையாவது ஒரு பொருளில்லாது எழுத்துகளை எளிதா யுச்சரித்திற்குக் கூட்டப்படும் அசை அல்லது ஒலி.) இவற்றை, ண, ர, ழ, என்று சாரியை யின்றியுங் கூறலாம். ணகரம் என்பது ண் என்னும் மெய்யெழுத்தையாவது, ண என்னும் உயிர்மெய்யெழுத்தையாவது, ண முதல் ணெள வரையுள்ள பன்னீருயிர் மெய்யெழுத்துகளில் ஏதேனு மொன்றையாவது, அவையெல்லாவற்றையும் தொகுதியாகவாவது இடத்திற் கேற்ப உணர்த்தும். ஆனால் `ணகரமெய்' என்பது ண் என்னும் மெய்யை மட்டும் குறிக்கும். இங்ஙனமே பிறவும். குறிப்பு: ஆசிரியர் மாணவரை எல்லா எழுத்துகளையுஞ் செவ்வையாய் உச்சரிக்கப் பயிற்றல் வெண்டும். மாணவர் குறில் நெடில்களை மாத்திரை வேறுபாடில்லாமலும், இனவெழுத்துகளை ஒலி வேறுபாடில்லாமலும் உச்சரிப்பது வழக்கம். அவர் தாம் தவறாய் உச்சரிப்பது போன்று எழுதுவதினாலேயே பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் நேர்கின்றன. ஆகையால் கீழ்வகுப்பிலிருந்தே ஆசிரியர் அதைத் திருத்தல் வேண்டும். சில ஆங்கிலவழித் தமிழறிஞர் ஆங்கிலத்திலுள்ள ‘t’ போல ஒன்றுபட்டொலிக்கும் றகர விரட்டையைப் பிளவுபடத் திரித்துச்சரிப்பர். அது தவறு. உ-ம். சொல் பிழை திருத்தம் வெற்றி Vetri Vetti றகரம் னகர மெய்க்குப்பின் வரும்போது candle என்னும் ஆங்கிலச் சொல்லிலுள்ள ‘d’ ஒத்தொலிக்கும். உ-ம். கன்று - kandu 3. ரகர றகர பேதம் ரகரம் வருமிடங்கள் : வடசொற்களும் திசைச்சொற்களும் வடசொற்களிலும் திசைச்சொற்களிலும் வருவது இடையின ரகரம். றகரம் தமிழ்க்கே சிறப்பெழுத்தாதலின், பிறமொழிச் சொற்களில் வருபவை பெரும்பாலும் இடையின ரகரமே. கிறிஸ்து, சீறாப்புராணம், உமறுப்புலவர் என்னும் சில திசைச்சொற்களில் மட்டும் வல்லின றகரம் வைத்தெழுதப்படும். பிற திசைச் சொற்களிலெல்லாம் அது வழுவாகும். உ-ம்: பிழை திருத்தம் பிழை திருத்தம் றாமசாமி (வ)இராமசாமிஉறுமால்(இந்.) உருமால் பிறாமணன் (வ) பிராமணன் குறுமh(இந்.) குருமா அபறாதம்(வ) அபராதம் தமிழிலில்லாத வடவெழுத்துகளிருப்பதனாலும், தமிழில் மொழிமுதலிடை கடைகளில் வராத எழுத்துகள் மொழி முதலிடை கடைகளில் வருவதனாலும், வடசொற்களை ஒருவாறு அறியலாம். தமிழறிவில்லாத மாணவர் தமிழாசிரியர் வாய்க்கேட்டே வடசொற்களை யறிதல் கூடும். 2. bமய்யீறு மாழிக்கு இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமே யன்றி வல்லின றகர மன்று. உ-ம்: அவர், ஊர், குதிர், இடக்கர் 3. இணைமெய் மொழியிடையில் இணைந்து (இசைந்து) வரும் இரு மெய்களில் முதன் மெய்யாயிருக்கக் கூடியது இடையின ரகரமே. வல்லின றகர மெய்யை யடுத்து வேறொரு மெய்யும் வருவதின்று. உ-ம்: பிழை திருத்தம் நேற்த்தி நேர்த்தி முயற்ச்சி முயற்சி குறிப்பு: கரம், காரம் என்னும் எழுத்துச் சாரியைகளிலும் காரம், காரன், காரி என்னும் பெயர் விகுதிகளிலும், தா, வா என்னும் வினைப்பகுதிகளின் திரிபுகளிலும் வருவது இடையின ரகரம். பிறவிடங்களை ஆசிரியர்வாய்க் கேட்டறிக. உ-ம்: இகரம், ஈகாரம் இளக்காரம், அதிகாரன், அதிகாரி. தரவு, தருகிறான்; வரவு, வருகிறான். றகரம் வருமிடங்கள் 1. இரட்டித்தல் இரட்டிக்குமிடமெல்லாம் வல்லின றகரமே. இடையின ரகரம் இரட்டிக்காது. உ-ம்: வெற்றி, அற்ற, கற்றோர், ஆற்றை 2. னகரமெய்யும் ஆய்தமும் அடுத்தல் னகரமெய்க்கும் ஆய்தத்திற்கும் பின்வருவதெல்லாம் வல்லின றகரமே. உ-ம்: கன்று, சென்றான், பஃறி. 3. நிகழ்கால இடைநிலைகள் கிறு, கின்று, ஆநின்று. உ-ம்: இருக்கிறான், எழுகின்றான், ஓடாநின்றான். 4. இணைக்குறின் மொழியல்லாத சொற்களிலெல்லாம் உகரவீறு ஏறி வருவது வல்லின றகரம் உ-ம்: காறு, களிறு. பிழை திருத்தம் ஊரு, குளிரு ஊர்,குளிர் 4. குற்றியலுகரம் குற்றியலுகரம் ஏறிவரக்கூடிய மெய் வல்லின றகரமே. ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின்மே லேறிவரும் உகரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க. உ-ம்: ஆறு, கிணறு, மற்று, கன்று. 5. புணர்ச்சித் திரிபு ல், ன் என்ற மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் வல்லின றகரமே. உ-ம்: ல் - கல் + பலகை = கற்பலகை. கல் + தாழை = கற்றாழை வருதல் + கு = வருதற்கு. ன் - தன் + பெருமை = தற்பெருமை. பொன் + தோடு = பொற்றோடு. அதன் + கு = அதற்கு. வந்ததன் + கு = வந்ததற்கு. 5. தற்பவத்திரிபு வடசொற்களிலுள்ள த், ஸ், ல் என்னும் எழுத்துகள் தமிழில் திரியக் கூடியது வல்லின றகரமாயே. உ-ம்: உத்சவம் - உற்சவம் பஸ்மம் - பற்பம் அல்பம் - அற்பம் ரகர றகரச் சொற்கள் அரம் = ஓர் ஆயுதம் அறம் = தருமம் அரவு = பாம்பு, ஒர் தொழிற்பெயர் விகுதி அறவு = நீக்கம், முடிவு அரன் = சிவன் அறன் = தருமம் (போலி) அரா = பாம்பு, சிவனே! அறா = நீங்கா, நீங்காத (m«gwh¤öÂ) அரா = ஏ. காய்களைச் சிறிதாயறு, அறி = தெரிந்துகொள். பொருள்களைச் சிறிது சிறிதாய்ச் சேர், பயிர்களை அறு, எறும்புபோல் பொருள்களைத் தின் பெ. அரிக்கட்டு, திருமால் அரு = பெ. வடிவில்லாதது அறு = ஏ. நீங்கு பெ. எ. அரியஅருமையான பெ. எ. ஆறு (six) அருகு = பக்கம் அறுகு = ஒரு புல் அரை = பாதி, இடை அறை = room ஆரை = ஒரு கீரை, சக்கர வுறுப்பு ஆறை = ஆற்றூர் என்பதன் மரூஉ இர = வேண்டு, பிச்சையெடு இற = சா இரக்கை = பிச்சையெடுத்தல் இறக்கை = சாதல், சிறகு இரங்கு = அருள்கூர் இறங்கு = descend இரப்பு = பிச்சை யெடுத்தல் இறப்பு = சாவு, இறவாணம். இரவு =night இறவு = முடிவு இரா = இரவு, இருக்கமாட்டா இறா =இறால் இராட்டு = கைராட்டினம் இறாட்டு = இறால் இரு = be, sit, wait இறு = முடி, அறு, செலுத்து, தங்கு, வடி. இருக்கு = முதல் ஆரியவேதம் இறுக்கு = இறுகச்செய் இரும்பு = ஓர் உலோகம் இறும்பு = குறுங்காடு, சிறுமலை இரை = விலங்குணவு இறை = ஏ.சிதறு, இழு,தெறி பெ. சிறிது, வளைவு, முன்கை, வரி, அரசன். உரவு = வலிமை உறவு = கலந்து வாழ்தல் உரல் = mortar உறல் = பொருந்துதல் உரி = ஏ. கழற்று, தோலுரி உறி = பாத்திரம் வைக்கத் தூக்குவது பெ. தோல், அரைப்படி, ஒருவகைச் சொல், சுதந்தரம். உரிஞ்சு = உரசு, தீண்டு உறிஞ்சு = (வாயால்) உள்ளிழு உரு = வடிவம்,நிறம்.அச்சம்,பொருள்,மந்திரம் உறு = ஏ. பொருத்து, பெ.எ. மிகுந்த உருமு = இடி உறுமு = ஒருவகைச் சத்தம் செய் உருமி = புழுங்கு உறுமி = ஒருவகைப் பறை உரை = ஏ. சொல், உரசு உறை = ஏ. இறுகு. பெ. மூடி பெ. சொல், அருத்தம், புகழ் எரி = ஏ. வேகு, காந்து, சின. பெ. நெருப்பு எறி = வீசு throw ஏரல் = பிராணிகள் ஊர்வதால் நிலத்தில் ஏறல் = ஏறுதல் விழுங்கோடு ஒரு = ஒன்று one ஒறு = தாண்டி to punish கர = மறை கற = பீச்சு கரகரப்பு = தொண்டையரிப்பு கறகறப்பு = தொண்டையில் நீரொலித்தல் கரம் = கை, மயம், குறிற்சாரியை கறம் = வர்மம் கரி = பெ. அடுப்புக்கரி, யானை ஏ. கருப்பாகு,தீ கறி = பெ. curry, இறைச்சி ஏ. புல்லைக் கடி கரு = ஏ. கருப்பாகு, தீ. பெ. முட்டை, கறு = கோபி, கருப்பாகு கருப்பம், மூலம் கருப்பு = ஒரு நிறம் கறுப்பு = ஒரு நிறம், கோபம் கரை = ஏ. dissolve, கத்து, அழு கறை = களங்கம், இரத்தம் பெ. அணை, எல்லை, பங்கு கிரி = மலை கிறி = இடும்பு, கிறுக்கு குரம் = குளம்பு குறம் = குறிசொல்லல், ஒரு பிரபந்தம், ஒரு கலம்பககவுறுப்பு குரவன் = பெரியோன் குறவன் = ஒரு குலத்தான் குரங்கு = ஒரு விலங்கு குறங்கு = தொடை (thigh) குரவை = ஒரு கூத்து குறவை = ஒரு மீன் குரு = நிறம் , ஆசிரியன் குறு = ஏ. கொய் பெ. எ. குட்டையான குறுகுறு = ஓர் இரட்டைக்கிளவி குருகு = நாரை, கொக்கு, அன்னம் குறுகு = கிட்டு, சுருங்கு குருக்கு = ஒரு செடி குறுக்கு = ஏ. சுருக்கு வி. எ. ஊடே பெ. நடுமுதுகு குருமா = ஒருவகைக் குழம்பு குறுமா = சிறு விலங்கு குருமான் = குருவின் மகன், குறுமான் = சிறுமான், சிறுமகன் ஒரு குலம், விலங்கின்குட்டி குரும்பை = தென்னை, பனை குறும்பை = ஓர் ஆடு முதலியவற்றின் பிஞ்சு குரை = ஏ. குலை குறை = ஏ. சுருக்கு பெ.நிரம்பாமை, குற்றம் பெ. குலைத்தல், ஓர் அசைநிலை கூரை = முகடு கூறை = ஆடை சுரா = ஒரு பானம் சுறா = ஒரு மீன் சூரை = ஒரு செடி சூறை = கொள்ளை, சுழல் காற்று (சூறாவளி) செரி = சீரணி, செறி = ஏ. திணி, அடக்கு, நெருங்கு, பெ. ஓர் அணி செரு = போர். செறு = ஏ.கோபி, அழி, நெருங்கு, நிறை, திணி அடக்கு, பெ. வயல் சொரி = பொழி சொறி = ஏ. பறண்டு, தினவுநோய் பெ. ஒரு நோய். சுரசுரப்பு தரி = அணி, பொறு தறி = ஏ. வெட்டு பெ. கம்பம், முளை தரிப்பு = கடுக்கன் தறிப்பு = வெட்டுதல் தரு = பெ. மரம், தருகிற பெ. எ. தறு =கட்டு, முடி திரம் = உறுதி, ஒரு தொழிற்பெயர் விகுதி திறம் = வலிமை, பக்கம், வகை திரை = ஏ. மேலிழு, திரள் அலைபோல் திறை = கப்பம் மேடுபள்ளமாகு பெ. screen, curtain, அலை துர = செலுத்து துற = பற்றுவிடு, நீக்கு துரு = அழுக்கு துறு = நெருங்கு துரை = பிரபு, வெள்ளைக்காரன் துறை = நீர்நிலையில் இறங்குமிடம், வண்ணான் துவைக்கும் இடம், துறைமுகம் (harbour) பிரிவு தெரி = தோன்று, அறி, select தெறி = இறைத்துவிழு, தகர்ந்து விழு விரலாற் சுண்டு. தெரு = வீதி தெறு = அழி தேரல் = ஆராய்தல் தேறல் = தெளிதல், தேன், தேர்வில் தேறுதல் நரை = ஏ. மயிர் வெளு. பெ.வெண்மயிர், நறை = தேன் வெள்ளை நிரை = ஏ. வரிசையாய் வை. நிறை=ஏ. நிரப்பு பெ. வரிசை, மந்தை, ஓர் அசை பெ. கனம், நிறுத்தல், மனவடக்கம். நெரி = உடை, நொறுங்கு, நெருக்கு, நசுக்கு, நெறி = பெ. வழி, அண்டை, மதம், விரல் சுடக்கு ஏ. புருவத்தை வளை, மயிர் சுருள் பர = ஏ. விரி, பரவு. பெ.எ. மற்ற. பற = to fly பரவை = கடல், சுந்தரமூர்த்தியின் பறவை = பட்சி முதல் மனைவி, செவி வழக்கு பரம்பு = ஏ. பரவு, அடி பறம்பு = பாரியின் மலை பரம்படித்தல் = உழுதநிலத்தைச் சமம்படுத்துதல் பரி = இரங்கு, வருந்து, விரும்பு. அன்புகூர். பறி = பிடுங்கு, அபகரி, தோண்டு பரை = பார்வதி பறை = ஏ. சொல். பெ. மேளம், ஒரு குலம் பாரை = கம்பி பாறை = பெருங்கல், கல்நிலம் பிர = ஒரு வடமொழி உபசர்க்கம் (prefix) பிற = ஏ. தோன்று, உண்டாகு. பெ. எ. மற்ற பிரை = புளித்த மோர் பிறை = குறைச் சந்திரன், சந்திரன் கலை புரம் = ஊர், நகர், காப்பு புறம் = பக்கம், முதுகு, பின்பு, வெளி. புரவு = காப்பு, ஆட்சி புறவு = முல்லைநிலம், புறம்போக்கு, புறா பெரு = பெரிய பெறு = அடை, பிள்ளைபெறு, விலைபெறு, மதிப்புப் பெறு பொரி = ஏ. தானியம் பொரி, பொறி = ஏ. தீட்டு, எழுது, செதுக்கு பொரிபோலெழும்பு, தீ பெ. தீத்துகள், புலனுறுப்பு, trap பெ. வறுத்த தானியம் பொரு = ஒப்பாகு, பொருந்து, போர்செய். பொறு = சும, சகி, காத்திரு, ஏல் பொருக்கு = சோற்று வடு பொறுக்கு = ஒவ்வொன்றாயெடு, தெரிந்தெடு பொருப்பு = மலை பொறுப்பு = உத்தரவாதம் மர = ஏ. கடினமாகு, உணர்ச்சியறு மற = ஏ. forget பெ. எ- மறச்சம்பந்த பெ. எ. மரத்தாலான மரம் = விருட்சம் மறம் = வீரம், பாவம், ஒருகுலம், ஒரு கலம்பக உறுப்பு மரல் = ஒரு பூண்டு மறல் = வீரம், பாவம், சினம் மரி = இற மறி = ஏ. தடு. மடக்கு, பெ. ஓர் ஆடு, சில விலங்கின் பெண் மரு = ஏ. பொருந்து மறு = ஏ. refuse, deny.bg. குற்றம், பெ. மணம், ஒரு பூண்டு, மகனுக்குப் களங்கம் பெ. எ. மற்ற பெண்வீட்டில் முதல் விருந்து மருகு = மருக்கொழுந்து மறுகு = ஏ. மயங்கு. பெ. வீதி மரை = ஒரு மான். விளக்குக்காய், மறை = ஏ. ஒளி திருகுசுரை பெ. ஒளிவு. இரகசியம், வேதம், மறுத்தல் மாரன் = மன்மதன் மாறன் = பாண்டியன், பகைவன் முருகு = மனம், இளமை, அழகு, முறுகு = திருகு, பதங்கடந்து வேகு முருகன், ஒரு காதணி முருக்கு = ஒரு மரம் முறுக்கு = ஏ. திருக்கு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி. பெ. திருக்கு, ஒரு பலகாரம் வரம் = gift வறம் = வறட்சி வரை = ஏ. draw, marry, நீக்கு வறை = பொரித்த காய்கறி பொருந்து பெ. வரி, கணு, மூங்கில், மலை, அளவு விரகு = தந்திரம் விறகு = எரிக்குங் கட்டை விரல் = finger விறல் = வெற்றி, வல்லமை, மெய்ப்பாடு, சுவை விரை = ஏ. விதை. வேகமாகு. பெ. விதை விறை = கடினமாகு, நீள், இறந்துடம்பு நீள், குளிரால் நடுங்கு வெரு = அச்சம் வெறு = ஏ. பகை, நிரம்பு. பெ. எ. ஒன்று மில்லாத, தனியான. சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவையாவன:- காரல், காறல்; சுரண்டு, சுறண்டு; சுரீர், சுறீர்; சுருத்து, சுறுத்து; சுருசுருப்பு, சுறுசுறுப்பு ; தருவாய், தறுவாய்; புரந்தா, புறந்தா; முரி, முறி. தவிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்கக் கூடாது. தவிர = except, தவற = to fail. சில சொற்களில் வருபவை ரகரமா, றகரமா என்னும் ஐயப்பாட்டை அச் சொற்களின் மூலத்தையேனும் பகுதியை யேனும் அறிந்து அகற்றிக் கொள்க. உ-ம்: உருக்கு என்பது உருகு என்னுந் தன்வினையின் பிறவினை. பொறாமை என்பது பொறு என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைத் தொழிற்பெயர். அவ்வாறு, எண்ணியவாறு என்னும் தொடர்மொழிகளின் ஈற்றில் உள்ளது ஆறு என்னும் பெயர். இங்ஙனமே பிறவும். ஒருவகையானும் ரகர றகரம் அறியப்படாத சொற்களை ஆசிரியர்வாய்க் கேட்டுணர்க. செலவாய்ப்போய்விட்டது என்னும் பொருளில், அருவாய்ப் போய்விட்டது, அறவாய்ப் போய்விட்டது என இரு விதத்தும் எழுதலாம். ழகர ளகர பேதம் ளகரம் வருமிடங்கள் 1. இரட்டித்தல் : இரட்டிக்குமிடமெல்லாம் ளகரம். ழகரம் இரட்டிக்காது. உ-ம் : வெள்ளை, தெள்ளிய 2. தனிக்குறில்மெய் : தனிக்குறிலையடுத்த மெய்யாய் வருவது ளகரம். ழகரமெய் தனிக்குறிலை யடுத்து வராது. உ-ம் : எள், கொள், கள். 3. ஆள், ஆளன், ஆளம், ஆளி என்னும் பெயரீறு (nounsuffix) களும், அள், ஆள் என்னும் பெண்பால் விகுதிகளும். உ-ம் : வேலையாள், மணவாளன், மலையாளம், மலையாளி, அவள், வந்தாள். 4. திரிபுபுணர்ச்சி: புணர்ச்சியில் டகர ணகரமாய்த் திரிவது பெரும் பாலும் ளகரம். ழகரம் மரூஉச் சொற்களிலன்றித் திரிவதில்லை. உ-ம்: கள் + குடி = கட்குடி தெள் + நீர் = தெண்ணீர் தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம் யாழ் + பாணம் = யாழ்ப்பாணம் ழகரம் சிறுபான்மை மரூஉப் புணர்ச்சியில் திரியும். உ-ம் : வாழ் + நன் = வாணன். மகிழ் + நன் = மகிணன் சோழன் (சோழ்) + நாடு = சோணாடு (òiH) பூழ் + கை = பூட்கை (யானை) நாழி + உரி = நாடுரி (1½go) 5. பெரும்பாலும்) திசைச்சொற்களும் வடசொற்களும் உ-ம் : பிரளயம் குறிப்பு : தொழிற்பெயர் விகுதிகளில், உள் தவிர மற்றவற்றின் ஈற்றில் வரக்கூடியது லகர மெய்யே. உ-ம் : தல், அல், கல், சல் ளகர ழகரச் சொற்கள் அளம் = உப்பு அழம் = பிணம் அளகு = பெண்பறவை, கோழி அழகு = அலங்காரம் அளி = ஏ. தா. அருள், கா, குழை அழி = கெடு பெ. அருள், வண்டு, சேறு அளை = ஏ. கல. குழை. பெ. வளை அழை = கூப்பிடு, பெயரிடு ஆளம் = ஒரு விகுதி ஆழம் = depth ஆளி = அரசன், அரசி, சிங்கம், யாளி ஆழி = கடல், மோதிரம், சக்கரம் ஆள் = ஏ. பழங்கு, பயன்படுத்து, அரசு செய், ஆழ் = to be deep, to immerse, to merge அதிகாரம் செலுத்து பெ. a person இள = ஏ. மெலி, மென்மையாகு இழ = to lose பெ.எ. மெல்லிய young இளி = ஏ. தாழ் பெ. தாழ்வு, ஓர் சுரம் இழி = தாழ், இறங்கு இளை = ஏ.மெலி, களை, மூச்சுவாங்கு இழை = ஏ. தேய், செய், நூலிடு பெ. காவற்காடு பெ. நகை. நூல். உளவு = வேவு உழவு = உழுதல், பயிர்த்தொழில், வருத்தம், முயற்சி உளி = ஓர் ஆயுதம், இடம், 7ஆம் வேற்றுமை உழி = இடம், 7ஆம் வேற்றுமை உருபு உருபு உளு = புழுவரி உழு = to plough உளை = ஏ. நோகு. பெ. சேறு உழை = ஏ. வருந்தி வேலைசெய் பெ. இடம், மான் ஒளி = ஏ. மறை. பெ. வெளிச்சம், புகழ் ஒழி = அழி, நீக்கு களி = ஏ. மகிழ், கட்குடி கழி = நீக்கு, to subtract, நீராய் பெ. மகிழ்ச்சி குடியன். வெளிக்குப்போ பெ. கோல், கடற் கால்வாய் களை = ஏ. இளை, வலியிழ, நீக்கு. கழை = கோல், கரும்பு, மூங்கில் பெ. முகவழகு, வேற்றுப்பயிர், அலகு (சங்கீதம்) காளி = ஒரு பெண் தெய்வம்,பேய்த் தலைவி காழி = சீகாழி சீகாளி = திருக்காளி சீகாழி = ஓர் ஊர் காள் = நாயொலி காழ் = எ. முற்று. பெ. வைரம், விதை, முத்து, முத்துமாலை, பகை. கிளவி = சொல் கிழவி = முதியாள் கிளி = ஒரு பறவை கிழி = ஏ. to tear பெ. துணி, பணமுடிச்சு, படம் கீள் = கிழி, தோண்டு கீழ் = வி. எ. down, under, பெ. எ. தாழ்ந்த, இழிவான குளவி = காட்டுமல்லிகை, தேனீ குழவி = குழந்தை குளம்பு = குதிரை, மாடு முதலியவற்றின் அடி குழம்பு = ஏ. கல, மயங்கு. பெ. சாறு, சேறு குளி = முழுகு குழி = ஏ. பள்ளம் விழு, பள்ளமாக்கு. பெ. பள்ளம், கிடங்கு, துளை குளுகுளு = குளிர்ச்சிக் குறிப்பு, குழு = கூட்டம் குழைவுக்குறிப்பு கூளம் = மாட்டின வைக்கோலுணவு, கூழம் = எள் கீரையிலுள்ள தூசி கூளி = பேய் கூழி = குள்ளப்பசு கேள் = ஏ.செவிகொடு, விசாரி, வினவு, கேழ் = ஏ.பொருந்து. பெ. நிறம் கேட்டறி, பெ. இனம். கேழ்வரகு = ஒரு தானியம் கொளு = ஏ.பொருந்து, பொருத்து கொழு = ஏ. கொழுப்புவை, செழி. பெ. ஏரூசி பெ. பொருத்து, clue கொளுந்து = எரி கொழுந்து = இளஇலை கோளி = கொள்பவன், பூவாது கோழி = ஒரு பறவை காய்க்கும் மரம் சளக்கு = ஒர் ஒலிக்குறிப்பு சழக்கு = குற்றம் சளி = குளிர், தடுமம் சழி = சப்பையாகு சுளி = முகங்கோணு, கோபி சுழி = ஏ. வளை, வட்டமிடு. பெ. வட்டம், வட்ட மயிரொழுங்கு, ஒரு எழுத்து, (பிள்ளையார் சுழி) சூள் = ஆணை சூழ் = ஆராய், நாற்புறமும் வளை, முற்றுகையிடு சோளம் = ஒரு தானியம் சோழம் = ஒரு நாடு தளை = ஏ. கட்டு. பெ. கட்டு, விலங்கு, தழை = ஏ. செழித்தோங்கு. பெ. இலை, குழை ஒரு செய்யுளிலக்கணம் தாளம் = இசைக்காலவறுதி தாழம் = தாழ்வு தாளி = ஏ. குழம்பைத் தாளி தாழி = பெரும்பானை பெ. ஒருவகைப் பனை, கள்ளி, தாளியடித்தல் = பரம்படித்தல் தாள் = நெற்பயிர் முதலியவற்றின் இலை, தாழ் = ஏ. கீழாகு, இறங்கு பாதம், முயற்சி பெ. கதவடைகோல் தெளி = தெளிவாகு, சிதறு, ஐயம் நீங்கு தெழி = அதட்டு தோளன் = தோளையுடையவன் தோழன் = நண்பன் நாளி = மூங்கில், நாய் நாழி = படி, நாழிகை நுளை = செம்படவர் குலம். நுழை = புகு, நுணுகு பளிச்சு = ஒளிவீச்சுக் குறிப்பு பழிச்சு = புகழ், வாழ்த்து, துதி பளு = கனம் பழு = ஏ. முதிர், கனி, மஞ்சள் நிறமாகு, பெ. ஒரு நிறம் (பழுக்காவி) பாளி = ஒரு மொழி பாழி = சிறுகுளம், நகர் பாளை = மடல் பாழை = மொழி பாள் = கம்பி பாழ் = வீண், அழிவு, வெறுமை பிளா = ஆட்டொலி பிழா = இறைகூடை, ஓலைத்தட்டு பீளை = கண்மலம் பீழை = துன்பம் புளுகு = பொய் புழுகு = புனுகு பூளை = ஒரு செடி பூழை = துவாரம், சிறுவாசல் பொளி = ஏ. கொத்து பெ. வரப்பு பொழி = ஊற்று, விரைந்து பேசு, நிரம்பக்கொடு, திரட்டு முளவு = முள்ளம்பன்றி முழவு = மத்தளம் முளை = ஏ. தோன்று. பெ. விதை முழை = குகை முளை, கட்டுத்தறி, மூலம் மூளை = brain, எலும்புள்ளீடு மூழை = அகப்பை மூள் = மிகு மூழ் = மூடு வளி = காற்று வழி = ஏ. நிரம்பிவிழு. பெ. பாதை வளை = ஏ. கோணலாகு, வட்டமாகு, வழை = சுரபுன்னை மரம் சூழ், முற்றுகையிடு. பெ. துவாரம், முகட்டு விட்டம் வாளி = அம்பு, வளையம், கடகால் வாழி = வாழ்க வாளை = ஒரு மீன் வாழை = ஒரு மரம் வாள் = ஒளி, ஓர் ஆயுதம் வாழ் = உயிரோடிரு, மேன்மையாயிரு விளவு = விளாமரம் விழவு = திருவிழா, கொண்டாட்டம் விளா = ஒரு மரம் விழா = திருவிழா, கொண்டாட்டம் விளி = ஏ. கூப்பிடு, முடி,. இற. பெ.கூப்பிடுதல் விழி = ஏ. கண்திற, பார். விளை = ஏ. வளர், முதிர். பெ. வயல் விழை = விரும்பு வேளம் = பகையரச மகளிர் சிறைக்களம் வேழம் = கரும்பு, மூங்கில், யானை சில சொற்கள் ளகர ழகர பேதமின்றி எழுதப்படும். அவையாவன: இளிவு இழிவு = நிந்தை உளறு உழறு = பிதற்று, நாத்தடுமாறு குளறு குழறு = நாத்தடுமாறு சுளி சுழி = முகங்கோணு, கோபி துளாய் துழாய் = துளசி பவளம் பவழம் திரிசொற்களிலும் (Derivatives) தொடர்களிலும் வரும் ளகர ழகரங்களை, அச் சொற்றொடர்களின் பகுதிகளையேனும் நிலைமொழி வருமொழிகளை யேனும் நோக்கிப் பெரும்பாலுந் துணிதல் கூடும். உ-ம்: பழக்கு என்பது பழகு என்பதன் பிறவினை. தாழங்குடை = தாழை + குடை ளகர ழகரந் துணியப்படாத பிறசொற்களை ஆசிரியர்வாய்க் கேட்டுணர்க. மொழி முதலெழுத்துகள் - Initial Letters மெய்யெழுத்துகளும், ஆய்தமும், ண, ர, ல, ழ, ள, ற,ன என்னும் ஏழெழுத்துகளின் உயிர்மெய்களும் தமிழில் மொழிமுதல் வரா. மெய்யெழுத்து வரி முதலிலும் வராது. டகரம் டம், டப் போன்ற ஒலிக்குறிப்புகளிலும், அவற்றினடியாகப் பிறந்த டங்கா, டமாரம், டம்பம், டப்பி முதலிய சொற்களிலும் வசனத்தில் வரலாம். முன்னோர் டகர முதலைத் தகர முதலாக எழுதினர். உ-ம்: டமருகம் (வ.) - தமருகம், டொப்பி (ஹி) - தொப்பி நிலைமொழி யீற்றிலுள்ள யகரமெய்யோடாவது, இ, ஈ, ஐ என்ற உயிர்களோடாவது இகரம் புணர்ந்து,யி தமிழில் மொழிமுதல் வரலாம்; ஆனால் தனித்து மொழிமுதல் வரவே வராது. உ-ம்: போய் + இருக்கிறான் = போயிருக்கிறான் துடி + இடை = துடியிடை பிழை திருத்தம் யிருக்கிறான் இருக்கிறான். நிலைமொழி ஈற்றிலுள்ள இ, ஈ, ஐ ஒழிந்த மற்ற ஒன்பதுயிர்களுடன் உகரம் புணர்ந்து,வு மொழி முதல் வரலாம்; ஆனால்,தனித்து மொழிமுதல் வராது. உ-ம்: பல + உள = பலவுள பிழை திருத்தம் வுள, வுண்டு உள, உண்டு மொழியிடை யெழுத்துகள் - Medial Letters மொழியிடையில் ட், ற் என்ற மெய்களுக்குப்பின் வேறொரு மெய் வரவே வராது. உ-ம்: பிழை திருத்தம் வெட்க்கம் வெட்கம் முயற்ச்சி முயற்சி ளகரமெய் வல்லினத்தோடு புணரின் டகரமாகத் திரியும். ழகரமெய் சில மரூஉச் செற்களிலன்றித் திரிவதின்று. உ-ம்: ஆள் + சி = ஆட்சி பிழை திருத்தம் (Nœ + சி) சூட்சி சூழ்ச்சி மொழியிறுதியெழுத்துகள் - Final Letters சட்சட், கப்கப் போன்ற இரட்டைக்கிளவிகளிலும் குறிப்புச் சொற்களிலுமன்றி, வல்லின மெய்களும் ஙகர மெய்யும் மொழியிறுதி வரவே வரா. குறிப்பு: பிற மொழிகளிலுள்ள சிறப்புப்பெயர்களும் (Proper names), கலைக்குறியீடுகளும் (Technical Terms), எழுத்துப் பெயர்ப்பில் (Transliteration) மொழி முதலிடை கடை பற்றிய தமிழ் விதிகட்கு மாறாக இயன்றவரை மூலமொழியொலி யொட்டி யெழுதப்படும். உ-ம்: லிங்க்கண், கலெக்ற்றர், ரஞ்சிட்சிங் வடவெழுத்து - Sanskrit Letters வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது, சில எழுத்துக்கள் பின் வருமாறு திரியும்: எண் எழுத்து திரிபு உதாரணம் இடம் 1. ஜ ச ஜாதி - சாதி முதல் ச ப்ரயோஜனம் - பிரயோசனம் இடை ச பூஜா - பூசை கடை ய பங்கஜம் - பங்கயம் இடை ஜ்யோ சோ ஜ்யோதி - சோதி முதல் ஜ் (கெடுதல்) ஜ்ஞானம் - ஞானம் முதல் 2. ஷ ச ஷண்முகம் - சண்முகம் முதல் ச பொக்கிஷம் - பொக்கிசம் இடை பொக்கசம் ச மகிஷி - மகிசி கடை ட புஷ்பம் - புட்பம் இடை ட ரிஷி - இருடி கடை ழ பாஷா - பாழை கடை (Exceptional) 3. ஸ ச ஸபா - சபை முதல் ச வாஸம் - வாசம் இடை ச தபஸ் - தபசு கடை த வாஸனை - வாதனை இடை ஸ் சு ஸ்வாமி - சுவாமி, சாமி முதல் சி ஸ்நேகம் - சிநேகம் முதல் (bfLjš) ஸ்தானம் - தானம் முதல் ஸ்வ சு ஸ்வதேசி - சுதேசி முதல் சொ ஸ்வர்க்கம் - சொர்க்கம் முதல் ஸ் த் புஸ்தகம் - புத்தகம் இடை ற் பஸ்மம் - பற்பம் இடை 4. ஹ கெடுதல் ஹிமம் - இமம் முதல் க ரோஹிணி - ரோகிணி இடை க மஹீ - மகி கடை எண் எழுத்து திரிபு உதாரணம் இடம் 5. க்ஷ க க்ஷணம் - கணம் முதல் ச க்ஷேமம் - சேமம் முதல் க்க லக்ஷ்மி இலக்குமி இடை க்க தீக்ஷா - தீக்கை கடை ட்ச பக்ஷணம் - பட்சணம் இடை ட்ச பக்ஷி - பட்சி கடை ச்ச அக்ஷரம் - அச்சரம் இடை ச்ச பிக்ஷா - பிச்சை கடை 6. க்த த்த சக்தி - சத்தி இடை கடை 7. த் ற் உத்ஸவம் - உற்சவம் சித்தம்பலம் - சிற்றம்பலம் } இடை 8. ந ன ஜநகன் - சனகன் இடை விநோதிநி - விநோதினி கடை 9. ப வ பாபம் - பாவம் இடை ப்த த்த சப்தம் - சத்தம் இடை கடை 10. ய இய யந்திரம் - இயந்திரம் முதல் எ யந்திரம் - எந்திரம் முதல் கெடுதல் யூகி - ஊகி முதல் 11. ர் ரு தர்மம் - தருமம் இடை ன் தர்மம் - தன்மம் இடை ர்ண ண்ண நிர்ணயம் - நிண்ணயம் இடை ன்ன கர்ணன் - கன்னன் இடை ர்ந ன்ன துர்நிமித்தம் - துன்னிமித்தம் இடை 12. ல் ற் அல்பம் - அற்பம் இடை 13. ஆ ஐ பிக்ஷா - பிச்சை கடை 14. ஈ இ நதீ - நதி கடை வடசொற்களின் இடையிலும் கடையிலும், தகரத்தொடு சேராது தனித்தும் இரட்டித்தும் வரும் நகரத்தை நகரமாயெழுதுவதினும் னகரமா யெழுதுவது நலம். உ-ம்: அயநம் - அயனம். ஜந்நியம் - ஜன்னியம், மநு - மனு. கர்த்தா, அர்த்தம் முதலிய வடசொற்களிலுள்ள ரகரமெய் இக் காலத்து உகரமேற்றாதும் எழுதப்படும். வடசொற்களின் (அல்லது திசைச்சொற்களின்) முதலில் மெய்வரின், அம் மெய்யின்மேல் ஏற்றதோர் உயிர்க்குறில் ஏற்றப்படும்; அல்லது அம் மெய் நீக்கப்படும். உ-ம்: த்ராவகம் - திராவகம் (உயிர் ஏறுதல்) ஸ்தானம் - தானம் - (மெய் கெடுதல்) வடசொற்களிலும் திசைச்சொற்களிலும் முதலில் ர, ல, என்னும் எழுத்துகள் வரின், அவற்றுக்குமுன் ஓர் ஏற்ற உயிர்க்குறில் சேர்த்தெழுதப்படும். உ-ம்: ராமன் - இராமன் ரத்நம் - அரதனம், இரத்தினம் லாபம் - இலாபம் லோபி - உலோபி ரோமர், ரொட்டி முதலிய சில ரகரமுதற் சொற்களும், எல்லா யகர முதற்சொற்களும் இயல்பாக எழுதப்படினும் இழுக்கின்று. வடசொற்களின் இடையில், வேற்றுநிலை மெய்ம்மயக்கில் (அதாவது மெய்கள் தம் உயிர்மெய்யோடு கூடாது பிற உயிர்மெய்களோடு கூடிவரின்), தமிழ் முறைக்கு மாறான மெய்களின்மேல் ஓர் ஏற்ற குறில் ஏற்றப்படும்; இசைந்தவிடத்து அம் மெய்கள் இரட்டிக்கவும் பெறும். உ-ம்: பக்வம் - பக்குவம் பத்மம் - பதுமம் புண்யம் - புண்ணியம் காவ்யம் - காவியம், காப்பியம் வம்சம் - வமிசம். வடசொற்களின் இறுதியில் வல்லினமெய்வரின், அதன்மேல் ஓர் உகரம் ஏற்றி யெழுதப்படும். அப்பொழுது அவ் வல்லினம் இரட்டிக்கும். உ-ம்: விராட் - விராட்டு, சத் - சத்து சூடு, சீரகம் முதலிய தூய தென்சொற்களை ஜூடு, ஜீரகம் என்று சொல்வதும், காட்சி, மாட்சி முதலிய செந்தமிழ்ச் சொற்களைச் காக்ஷி, மாக்ஷி யென்றெழுதுவதும் சிலர் வழக்கமாயிருக்கின்றது. ஆசிரியர் இதைக் கண்டிக்க. காண் + சி = காட்சி, மாண் + சி = மாட்சி, ஆள் + சி = ஆட்சி சில மாணவர் காட்க்ஷி, சாட்க்ஷி என மிகைபடவும் எழுதுவர். இது பெருந் தவறு. தென்சொற்களாயின் க்ஷகரம் வருதலே கூடாது. வடசொற்களாயின் சாட்சி, சாக்கி, சாக்ஷி என மூவகையாயும் எழுதலாம். திட்டாந்தம் (திருஷ்டாந்தம்), கிட்டிணன் (கிருஷ்ணன்) முதலிய வடசொற்றிரிபுகள் சிறந்தனவல்ல. தென்சொற்கள் வழக்கிலிருக்கும்போது அவற்றுக்குப் பதிலாக வடசொற்களை வேண்டாது (அனாவசியமாய்) வழங்குவது வழுவாகும். புணர்ச்சி - Combination of words சொற்களைப் புணர்த் தெழுதாவிடின் பொருள் வேறுபடுவதுண்டு. உ-ம்: அவன் உடனே = He at once அவனுடனே = with him வந்தான். ஆனால் = He came, but வந்தானானால் = If he came or comes ஆகையால் புணர்ச்சி அவசியம். புணர்கின்ற இருசொற்களில் முந்தினது நிலைமொழியென்றும், பிந்தினது வருமொழியென்றுங் கூறப்படும். புணர்ச்சி இயல்பாயிருப்பின் இயல்பு புணர்ச்சியென்றும், விகாரப்படின் விகாரப்புணர்ச்சி யென்றுங் கூறப்படும். விகாரம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். உ-ம்: இராமன் + வந்தான் = இராமன் வந்தான் இயல்பு புணர்ச்சி. வாழை + காய் = வாழைக்காய் - தோன்றல் கல் + மலை = கன்மலை - திரிதல் விகாரப் புணர்ச்சி மரம் + வேர் = மரவேர் - கெடுதல் } புணர்கின்ற இருசொற்கிடையில், 2ஆம் வேற்றுமை முதல் 7ஆம் வேற்றுமைவரை ஏதேனுமோர் வேற்றுமை வுருபு தொக்கேனும் வெளிப்பட்டேனும் வரின், வேற்றுமைவழிப் புணர்ச்சி யென்றும், அல்லாதவழி அல்வழிப் புணர்ச்சி யென்றுங் கூறப்படும். உயிரீற்றுப் புணர்ச்சி உயிரும் உயிரும் புணர்தல் உயிரோடுயிர் புணரும்போது, நிலைமொழி யீற்று இ, ஈ, ஐ என்னும் உயிர்களின் பின் யகரமெய்யும், ஏனை யுயிர்களின் பின் வகரமெய்யும், ஏகாரத்தின் பின் இவ் விருமெய்களும் (உடம்படுமெய்யாகத்) தோன்றும். உ-ம்: வாழை + இலை = வாழையிலை -ய் திரு + அடி = திருவடி - வ் ஒரே + இடம் = ஒரேயிடம் -ய் சே + அடி = சேவடி - வ் இப் புணர்ச்சியை அறிதற்கு ஆவன்னா, ஈயன்னா, ஊவன்னா, ஏயன்னா, ஐயன்னா, ஓவன்னா, ஔவன்னா என்னும் பண்டை யுச்சரிப்பைக் கவனிக்க. யான்னா வருமெழுத்தின் பின் யகர மெய்யும், வன்னா வருமெழுத்தின் பின் வகரமெய்யும் உடம்படுமெய் யாகு மென்றறிக. ஒரு நெடில் போன்றே அதன் குறிலும் புணரும். ஏகாரம் ஓரெழுத்துச் சொல்லா யிருக்கும்போதே வகர வுடம்படுமெய் பெறும். அதுவும் சிறுபான்மையே. உ-ம்: ஏ + அறை = ஏவறை. சுட்டெழுத்தும் வினாவெழுத்தும் நாற்கணத்துடன் புணர்தல் (t‹fz«, மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்பன நாற்கணமாகும். கணம் = இனம், T£l«). சுட்டெழுத்துக்களும் எகர வினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகரந் தோன்றும்; உயிரொடு புணரின் வகரம் இரட்டிக்கும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும். அ + உயிர் = அவ்வுயிர் உயிர் அ + யானை = அவ்யானை அ + ரகரம் = அவ்ரகரம் அ + லகரம் = அவ்லகரம் இடையின மெய் அ + வழி = அவ்வழி அ + ழகரம் = அவ்ழகரம் } அ + ளகரம் = அவ்ளகரம் அ + காலம் = அக்காலம் வல்லினமெய் அ + மனிதன் = அம்மனிதன் மெல்லினமெய் இங்ஙனமே பிறவும். உயிர்மெய்யில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஈரெழுத்திருத்தலால், உயிர்மெய்ம் முதலெல்லாம் மெய்ம்முதலென்றும் உயிர்மெய் யீறெல்லாம் உயிரீறென்றும் தெரிந்துகொள்க. அது என்னுஞ் சொல் தனித்துவரினும் சொல்லீறாய் வரினும் ஏகாரத்தொடு புணரும்போது உகரங்கெட்டும் கெடாதும் இருவகையாய்ப் புணரும். உ-ம்: அதே, அதுவே; அழைப்பதே, அழைப்பதுவே. எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணர்தல் எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணரும்போது, ஒன்று என்பது உயிர்க்குமுன் ஓர் என்றும், மெய்க்கு முன் ஒரு என்றும் திரியும். உ-ம்: ஓர் ஊர், ஒரு மனிதன். இக்காலை ஓர் என்பது மெய்ம்முன்னும் வைத்தெழுதப்படுகின்றது. உ-ம்: ஓர் மரம். இரண்டு என்பது உயிர்க்கு முன் ஈர் என்றும், மெய்க்கு முன் இரு என்றும் திரியும். உ-ம்: ஈர் ஆயிரம், இரு திணை மூன்று என்பது உயிர்க்கு முன்னும் இடையினமெய்க்கு முன்னும் மூ என்றும், பிறமெய்கட்கு முன் மு என்றும் திரியும். உ-ம்: மூவுலகு, மூவேந்தர் முக்காலம், மும்மழை நான்கு என்பது நால் என்று திரியும். உ-ம்: நாலாள், நாற்பொருள் ஐந்து என்பது ஐ என்று திரியும். உ-ம். ஐயாயிரம், ஐம்பூதம், ஐந்நூறு ஆறு என்பது உயிர்க்குமுன் இயல்பாயிருக்கும்; மெய்க்கு முன் குறுகும். உ-ம்: ஆறாயிரம், அறுகால் ஏழு என்பது உயிர்க்குமுன் ஏழ் என்றும், மெய்க்கு முன் எழு என்றும் திரியும். உ-ம்: ஏழுலகு, எழுபிறவி எட்டு என்பது எண் என்று திரியும். உ-ம்: எண்ணாயிரம், எண்குணம். இரண்டுமுதல் எட்டுவரையுள்ள எண்ணுப்பெயர்கள் இரண்டுபேர், மூன்றுநாள் எனத் திரியாதும் பெயரைத் தழுவும். ஆயினும், அது அத்துணைச் சிறப்பின்று. முதற் பத்தெண்ணுப் பெயர்களும் பகிர்வுப் பொருளில் இரட்டிக்கும்போது, ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒவ்வொன்பது, பப்பத்து எனப் புணரும். ஒன்றொன்றாய், இரண்டிரண்டாய் என்பதினும் ஒவ்வொன்றாய், இவ்விரண்டாய் என்பது சாலச் சிறந்ததாகும் . வெவ்வேறு பப்பாதி என்பனவும் இங்ஙனமே. மெய்யீற்றுப் புணர்ச்சி மெய்யெழுத்துகள் உயிரோடு கூடின் உயிர்மெய்யாகும். இது இயல்பு புணர்ச்சியே. உ-ம்: போய் + இருக்கிறான் = போயிருக்கிறான் தனிக்குறிலையடுத்த மெய்கள் உயிரோடு கூடின் இரட்டிக்கும். இது விகாரப் புணர்ச்சியாம். உ-ம்: பொய் + உரைத்தான் = பொய்யுரைத்தான். போய்யிருக்கிறான் என்பது தவறு. ண்,ம்,ல்,ள்,ன் என்ற மெய்கள் ண், ம், ல், ள், ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புணரின், இருவழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும். எழுத்து திரிபு உதாரணம் 1. ண் ட் மண் + கலம் = மட்கலம் 2. ம் ங் மரம் + குறிது = மரங்குறிது ஞ் மரம் + சிறிது = மரஞ்சிறிது ந் மரம் + தழைக்கும் = மரந்தழைக்கும் 3. ல் ற் கல் + பலகை = கற்பலகை 4. ள் ட் கள் + குடம் = கட்குடம் 5. ன் ற் பொன்+ பணி = பொற்பணி ண்,ள் என்னும் மெய்கள் தகரத்தொடு புணர்ந்து டகரமாகும் போது, அத் தகரமும் டகரமாகும். உ-ம்: மண் + தாழி = மட்டாழி முள் + தாழை = முட்டாழை மட்தாழி, முட்தாழை என்று எழுதுவது தவறு. ல்,ன் என்னும் பெயர்கள் தகரத்தோடும் புணர்ந்து றகரமாகும் போது அத் தகரமும் றகரமாகும். உ-ம்: கல் + தாழை = கற்றாழை பொன் + தோடு = பொற்றோடு கற்தாழை, பொற்தோடு என்றெழுதுவது தவறு. நகரம் ண்,ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் ணகரமாகவும், ன், ல் என்ற மெய்களுக்குப்பின் வரின் னகரமாகவும் இரு வழியிலும் திரியும். ளகரத்தொடு புணர்ந்து நகரம் ணகரமாகும்போது, அவ்ளகரமும் ணகரமாகும். லகரத்தொடு புணர்ந்து நகரம் னகரமாகும்போது, அவ்லகரமும் னகரமாகும். உ-ம்: கண் + நீர் = கண்ணீர் - ண் + ந = ண்ண கள் + நீர் = கண்ணீர் -ள் + ந = ண்ண பொன் + நன்று = பொன்னன்று -ன் + ந = ன்ன கல் + நன்று = கன்னன்று - ல் + ந = ன்ன மேற்கூறிய புணர்ச்சிகளுள், நிலைமொழி யீறு தனிக்குறிலை யடுத்த மெய்யா யிருந்தால்தான், புணர்ச்சியால் தோன்றிய இரு ணகரமும் இரு னகரமும் நிற்கும்; நெடிலை அல்லது பல வெழுத்துகளை யடுத்த மெய்யாயின் ஒரு ணகரமும் னகரமுங் கெடும். உ-ம்: தூண் + நெடிது = தூணெடிது ஆள் + நலம் = ஆணலம் ஒரு ணகரம் கெட்டது. பனங்கள் + நன்று = பனங்கணன்று } மான் + நன்று = மானன்று கால் + நான்கு = கானான்கு ஒரு னகரம் கெட்டது. மகன் + நல்லன் = மகனல்லன் } ம் என்ற மெய் நகரத்தோடு புணரும்போது, தான் தனிக்குறிலை யடுத்த மெய்யாயின் நகரமாகத் திரியும்; நெடிலை அல்லது பலவெழுத்துகளை யடுத்த மெய்யாயின் கெடும். உ-ம்: வெம் + நீர் = வெந்நீர் - திரிபு வேம் + நீர் = வேநீர் பரம் + நெறி = பரநெறி } கேடு குறிப்பு : தந்நகரமும் றன்னகரமும் ஏறத்தாழ ஒன்றுபோல் ஒலிப்பதால், அவற்றை ஒன்றிற்கு இன்னொன்றாக எழுதக்கூடாது. எழுதின் பொருள் மாறும். உ-ம்: முந்நாள் = மூன்று நாள், முன்னாள் = முன் + நாள் தன்னலம் = தன் + நலம், தந்நலம் = தம் + நலம் தனிக்குறில் யகரமெய்யும் தனி ஐகாரமும் தனிக்குறிலை யடுத்த யகர மெய்யின் பின்னும் தனி ஐகாரத்தின் பின்னும் வரும் மெல்லினம் மிகும். உ-ம்: செய் + நன்றி = செய்ந்நன்றி கை + மாறு = கைம்மாறு வலிமிகும் இடங்கள் - Combination in which the Hard consonants are doubled பின்வருமிடங்களில் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும். 1. 2ஆம் வேற்றுமைக்கும், 4ஆம் வேற்றுமைக்கும் பின். (இங்கு வேற்றுமை யென்றது வேற்றுமை விரியை) உ-ம்: பாடத்தைப் படித்தான். ஊருக்குப் போனான். 2. நிகழ்கால வினையெச்சத்திற்குப் பின் (After the Infinitive Mood). உ-ம். செய்யப் போனான் விரைவாகப் பேசினான்; வலியச் சொன்னான். இங்கு ஆக என்னும் துணை வினை (auxiliary verb) ஆகு என்னும் பகுதியடியாய்ப் பிறந்த நிகழ்கால வினையெச்சம். 3. யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சங் (past participle) கட்குப் பின். உ-ம்: போய்ப் படித்தான், ஆய்ப் போயிற்று. விரைவாய்ப் போனான். விரைவாய் என்பதில், ஆய் என்னும் துணைவினை ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சம். 4. தான, தத்த, தாத்த, தனத்த என்னும் சந்த வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின். தனி நெடிலடுத்த குறிலாய் வருவது தான வாய்பாடு. உ-ம்: ஒடிப்போனான். இரு குறிலுக்கிடையில் வல்லின மெய் வருவது தத்த வாய்பாடு. (jÄÊš ஒரு சொல்லில் வல்லின மெய்க்குப்பின் வரும் எழுத்தெல்லாம் வல்லின உயிர்மெய்யாகவே யிருக்கும்.) உ-ம்: தட்டிச் சொன்னான், விட்டுக்கொடுத்தான். தனிநெடிற்குங் குறிலுக்குமிடையில் வல்லின மெய் வருவது தாத்த வாய்பாடு. உ-ம்: சேர்த்துக்கொள், காத்துக்கொண்டான், வாழ்த்திக்கொடு, மாற்றிப் பேசு குறிலிணைக்குங் குறிற்கு மிடையில் வல்லினமெய் வருவது தனத்த வாய்பாடு. உ-ம்: எடுத்துச்சொல், வருத்திப்பார் இணை = இரண்டு, சோடு. இங்குக் கூறப்பட்ட வாய்பாட்டுச் சொற்கள் பிற சொற்களோடு கூடி நிற்பினும் வலிமிகும் விதி தவறா. இது அடுத்த விதிக்கும் ஒக்கும். 5. இகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின் (ï« மூன்று வாய்பாடுகளிலும் இறுதியில் வருவது வல்லின உயிர் மெய்க் குறிலே.) இரு குறிற்கிடையில் மெல்லின மெய்வரின் தந்த வாய்பாடாம். உ-ம்: மங்கிப்போனது. ஒரு தனி நெடிற்குங் குறிலுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் ‘jhªj’thŒghlh«. உ-ம்: வாங்கிக்கொண்டான். ஒரு குறிலிணைக்கும் குறிலுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் ‘jdªj’ வாய்பாடாம். உ-ம்: விரும்பிப் படித்தான். இங்குக் கூறப்பட்டுள்ள சந்த வாய்பாடுகளைத் திருப்புகழ் வாயிலாய் ஆசிரியர் மாணவர்க்குத் தெளிவாக்குக. 6. அ, இ, உ, எ; அந்த, இந்த, உந்த, எந்த; அப்படி, இப்படி, உப்படி, எப்படி; அங்கு, இங்கு, உங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு; ஆண்டு, ஈண்டு, ஊண்டு, யாண்டு என்னும் சுட்டுவினாவெழுத்து கட்கும் சொற்கட்கும் பின். உ-ம்: அப்பையன், அந்தப் பையன், அப்படிச் சொன்னான். அங்குச்சென்றான், ஆங்குச்சொன்னான், ஆண்டுப்பெற்றான், இங்ஙனமே பிறவும். அப்படி, அங்கு, ஆங்கு, ஆண்டு முதலியவை இறுதியில் ஏகாரம் பெறின் இயல்பாம். உ-ம். அப்படியே, அங்கே, ஆங்கே, ஆண்டே - போனான். படி என்னுஞ்சொல் சுட்டுவினாவெழுத்துகளை யடுத்து வராது பெயரெச்சங்களை யடுத்து வரின் இயல்பாம். உ-ம்: சொன்னபடி செய், சொல்லுகிறபடி செய். சொல்லும்படி செய். 7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கட்கும், செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்கும் பின். உ-ம்: உண்ணாக்குதிரை - ஈ. எ. பெ. எ. படியாச் சென்றான் - ஈ. எ. வி. எ. பெய்யாக் கொடுக்கும் - செ. வி. எ. 8. மகரஈறு கெட்டுக் குறிப்புப் பெயரெச்சமாய் நிற்கும் பெயர்கட்குப்பின். உ-ம்: மரப்பலகை, வட்டக்கல். 9. ட,ற இரட்டித்த நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கட்குப்பின். உ-ம்: ஆட்டுக்கால், கிணற்றுத்தவளை. கேடுகாலம், பேறுகாலம், வீடுபேறு, நாடுகிழவோன் முதலிய தொடர்களில் ட,ற இரட்டியாமையின் வலி மிகவில்லை. ஆறு என்னும் பெயர் எண்ணைக் குறிப்பின், வேற்றுமையினும் இரட்டியாது (ஆகவே இயல்பாய்ப் புணரும்); பிறவற்றைக் குறிப்பின் இரட்டிக்கும். உ-ம்: ஆறில் ஐந்தைக் கழி, ஆற்றில் இறங்கு, அவ்வாற்றால் 10. புணர்ச்சியில் வன்றொடரான மென்றொடர்க் குற்றிய லுகரங்கட்குப் பின் உ-ம்: இருப்புப்பாதை 11. ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்கட்குப் பின். உ-ம்: பண்டைக்காலம், அற்றைக்கூலி, ஒற்றைப்பனை, இரட்டைப்பிள்ளை 12. அத்து இற்றுச் சாரியைப் பெயர்கட்குப்பின். உ-ம்: பட்டினத்துப்பையன், பதிற்றுப்பத்து 13. மு, எட்டு, பத்து, கோடி என்னும் எண்ணுப்பெயர்கட்குப் பின். உ-ம்: முக்கால், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கோடிக்கணக்கு. 14. உயிரையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய நிலைமொழிக ளுள்ள தொகைமொழி (Compound word) களில். உ-ம்: கிளிக்கூண்டு,இடைச்சேரி, ஏப்புழை வாய்க்கால், ஊர்க்குருவி, தமிழ்ச்சங்கம் வலிமிகா இடங்கள் - Combination in which the Hard consonants are not doubled 1. 3M« வேற்றுமை ஒடு, ஓடு என்னும் உருபுகட்குப்பின் உ-ம்: இராமனோடு பேசினான். 2. 6M« வேற்றுமைக்குப்பின் சீதை கற்பு எனது புத்தகம், என்னுடைய கை, என கால்கள் 3. அகரவீற்றுப் பல்வகைப் பெயரெச்சங்கட்குப் பின் உ-ம்: வந்த பையன், வருகிற திங்கள், பெரிய பட்டினம், செய்யாத பையன், அல்லாத காலம். 4. வினைத்தொகையில் உ-ம்: சுடுசாதம், விடிகாலை 5. உகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தால வினையெச்சங்கட்குப் பின் உ-ம். என்று சொன்னான் - தந்தவாய்பாடு நீண்டு சென்றது. -தாந்த வாய்பாடு ஒளிந்துகொண்டான் விரைந்து பேசினன் தனந்த வாய்பாடு 6. தனிக்குறிலை யடுத்த யகரமெய்யா யிருக்கும் வினைப் பகுதிகளின் இறந்தகால வினையெச்சத்திற்குப் பின் உ-ம்: செய்துகொள், கொய்து தின் 7. துவ்வீற்றுக் குறிப்பு வினையெச்சத்திற்கும் எதிர்மறை வினையெச்சத்திற்கும் பின் உ-ம்: நெடிது பேசினான். செய்யாது போனான், இல்லாது போயிற்று 8. துவ்வீற்றுச் சுட்டு வினாப் பெயர்கள் பெயரெச்சமாய் நிற்கும்போது. உ-ம்: அது போழ்து, எது போழ்து 9. பலவின்பால் வினைமுற்றுக்குப் பின் உ-ம்: வந்தன குதிரை, பறந்தன பறவைகள் 10. ஆ, ஏ, ஓ என்னும் இடைச்சொற்கட்குப்பின் உ-ம்: இராமனா பெரியன், செய்யவே செய்வான், எவனோ கொண்டான். 11. மு, எட்டு, பத்து, கோடி என்பவை யல்லாத பிற எண்ணுப் பெயர்கட்குப் பின். உ-ம்: ஒரு பையன், அறுபது, நூறு பேர் எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும்பாலும் வலிமிகா. உ-ம்: கோழி கூவிற்று, இராமா! செல். II சொல்லியல் - Etymology எண்ணடி உயர்திணைப்பெயர்கள் - Personal nouns derived from Numerals ஒருவன் (ஆண்பால்), ஒருத்தி (பெண்பால்), ஒருவர் (பொதுப்பால்) என்பன ஒன்று ஒருமை எண்ணடியாய்ப் பிறந்த உயர்திணைப்பெயர்களாகும். ஒருவள் என்பது தவறு. இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், பதினொருவர், பன்னிருவர், பதின்மூவர், பத்தொன்பதின்மர், இருபதின்மர், இருபத்தொருவர், தொண்ணூற்றுவர், நூற்றுவர், நூற்றொருவர், நூற்றுப்பதின்மர், நூற்றுத்தொண்ணூற்றுவர், தொள்ளாயிரவர், ஆயிரவர், பதினாயிரவர், இலக்கவர், கோடியர் என்பன இரண்டு முதலிய பன்மை யெண்ணடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர்களாகும். இரண்டுபேர், மூன்றுபேர், இருபேர், முப்பேர் என்பதினும் இருவர், மூவர் என்பது சிறந்ததாகும். இருபாற் பெயர்கள் - Masculine and Feminine nouns உயர்திணை - மக்கட்பெயர் ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் அந்தணன் அந்தணி குணவான் குணவதி அரசன் அரசி, தேவி குணாளன் குணாட்டி ஆசிரியன் ஆசிரியை கூத்தன் கூத்தி,விறலி ஆடவன் பெண்டு சிறுவன் சிறுமி ஆடூஉ மகடூஉ சீமான் சீமாட்டி உபாத்தியாயன் உபாத்தியாயினி தனவந்தன் தனவந்தி { உபாத்திச்சி தூர்த்தன் தூர்த்தை உழவன் உழத்தி தேவராளன் தேவராட்டி ஐயன் ஐயை நம்பி நங்கை கணவன் மனைவி பத்தன் பத்தினி கிழவன் (தலைவன்) கிழத்தி பண்டிதன் பண்டிதை கிழவன் (முதியோன்)கிழவி பாணன் பாடினி ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் பார்ப்பான் பார்ப்பாத்தி வணிகன் வணிகச்சி பார்ப்பனன் பார்ப்பனி வாலன் பிரான் பிராட்டி வாலிபன் வாலை புண்ணியவான் புண்ணியவதி வாலியோன் } பெருமான் பெருமாட்டி வீரன் வீரி மாணவன் மாணவி வெள்ளாளன் வெள்ளாட்டி மாணாக்கன் மாணாக்கி வேளாளன் வேளாட்டி குருவிக்காரிச்சி, கொல்லைக்காரிச்சி, வெள்ளாட்டிச்சி முதலிய பெண்பாற் பெயர்கள் ஒருபயனுமின்றி இருபெண்பால் விகுதியேற்ற மையின் வழுவாகும். தெய்வப் பெயர் ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் இந்திரன் இந்திராணி திருமால் திருமகள் காமன் இரதி நான்முகன் நாமகள் சிவம் சத்தி (பிரம்மா) (சரஸ்வதி) சிவன் சிவை பரன் பரை அஃறிணைப் பெயர் ஆண்பால் பெண்பால் பொதுப்பால் அலவன் பெடைநண்டு நண்டு அன்னச்சேவல் அன்னப்பெடை அன்னம் எருமைக்கடா எருமைக்கிடாரி எருமை கடா மறி ஆடு கடுவன் மந்தி குரங்கு கலை பிணை மான் களிறு பிடி யானை சேங்கன்று கிடாரிக்கன்று கன்று சேவல் பெட்டைக்கோழி கோழி இங்குக் கூறிய அஃறிணையிருபாற் பாகுபாடு வழக்குப்பற்றியது; இலக்கணம் பற்றியதன்று. இங்குக் கூறாத பிற அஃறிணைப் பெயர்கட்கெல்லாம் ஆண்பாற்கு ஆண் என்பதும், பெண்பாற்குப் பெண் என்பதும் அடையாகச் சேர்க்கப்படும். பெண் என்பது பெட்டை என்றும் திரியும். பெட்டை என்பது விலங்கிற்கும், பெடை என்பது பறவைக்கும் பெரும்பாலும் உரியவாகும். மறி என்பது உலக வழக்கில் கழுதை குதிரைகளின் பெண்பாலை உணர்த்தும். ஏறு என்பது நூல் வழக்கில் சிங்கம், புலி, மாடு முதலியவற்றின் ஆண்பாலை யுணர்த்தும். இழிவடைந்த சொற்கள் - Degraded Words சில சொற்கள் வழக்குப்பற்றியும், மக்களின் ஒழுக்கக்குறைபற்றியும் இழிவடைந்துள்ளன. அவற்றை விலக்கல் வேண்டும். உ-ம்: சொல் முன்னைப்பொருள் இற்றைப்பொருள் தாசி a female devotee வேசி, விலைமகள் தேவடியாள் a female devotee வேசி, விலைமகள் சிறுக்கி சிறுமி கீழ்மகள் பயல் பையன் கீழ்மகன் உயர்வடைந்த சொற்கள் - Elevated Words சில சொற்கள் நாளடைவில் தம் தீப்பொருள் மாறி நற்பொருள் பெற்றுள்ளன. அவற்றை நற்பொருளிற் கொள்ளவேண்டும். உ-ம்: சொல் முன்னைப்பொருள் இற்றைப்பொருள் களி குடிவெறி மகிழ்ச்சி பொருட்டிரிபு - Change of Meaning சில சொற்கள் தாம் முதலிற் குறித்த பொருளை யிழந்து இன்று வேறு பொருள் குறிப்பனவாகும். அவற்றைப் புதுப் பொருளிலேயே வழங்கவேண்டும். உ-ம்: சொல் முன்னைப்பொருள் இற்றைப்பொருள் எண்ணெய் நல்லெண்ணெய் oil (vŸ +நெய்) பண்டாரம் ஞானி, துறவி காவியுடுத்த பிச்சைக் காரன், பூக்காரன் பரதேசி அயல்நாட்டான் பண்டாரம் போக்கிரி (போக்கிலி) ஏழை துன்மார்க்கன் விருந்து விருந்தாள் விருந்துணவு சில துணைவினைகள் உடன்பாட்டில் தம் பழம் பொருளையும், எதிர்மறை யில் அதையிழந்தும் இழவாதும் ஒரு புதுப்பொருளையும் உணர்த்துவனவாகும். உ-ம்: உடன்பாடு எதிர்மறை செய்யமாட்டுவேன் - I can do செய்யமாட்டேன் I will not do செய்யக்கூடும் - can do செய்யக்கூடாது - Should not do செய்யமுடியும் - can do செய்யமுடியாது - cannot do, will not do செய்யப்படும் - will be done செய்யப்படாது - will not be done, should not do, or should not be done. படாது என்னும் துணைவினை விலக்குப் (prohibition) பொருளில் எல்லாப் பாற்கும் இடத்திற்கும் ஏற்கும்; நிகழாமை அல்லது கூடாமைப் பொருளில் படர்க்கை ஒன்றன்பாற்கு மட்டும் ஏற்கும். உ-ம்: 1. அவன், அவள், அவர் இங்கே வரப்படாது அது, அவை. } (impersonal) 2. அது அகப்படாது - It cannot be got or caught. அது சொல்லப்படாது - It will not be told. நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான சில குணப்பெயர்கள் நாளடைவில் பொதுமை நீங்கி, நல்லது அல்லது தீயதைமட்டும் உணர்த்தும். உ-ம்: மணம், வாசணை - நறுமணம், நல்ல வாசனை நாற்றம், வீச்சம் - தீய வாசனை இகழ்ச்சிச் சொற்கள் - Ridiculous Terms கிழம், கிழடு போன்ற இகழ்ச்சிச் சொற்களைக் நீக்கிக் கிழவன் கிழவி போன்ற சிறந்த சொற்களைக் கொள்ளவேண்டும். இழிசொற்கள் - Slang words அன்னா! (mªjh!), ஆச்சு, கண்ணாலம், தவக்களை, தவக்கா, பீச்சங்காய், பெண்சாதி, மச்சான், மச்சாவி, வரச்சே, வரச்சில, வெஞ்சனம் முதலிய இழிசொற்களை நீக்கி உயர்சொற்களை வழங்கவேண்டும். வழூஉச் சொற்கள் - Erroneous Words சில முறைப்பெயர்களின் விளிவேற்றுமைகள் முதல் வேற்றுமைக்குப் பதிலாக வழங்கி வருகின்றன. அவை வழக்கு நோக்கி அமைக்கப்படும். ஆனால், அவற்றுக்குமேல் உயர்வு கருதி ரகரவொற்றுச் சேர்ப்பது வழுவாகும். உயர்வுப் பன்மைவிகுதி முதல் வேற்றுமை யோடுதான் சேரும். அம்மாள், அக்காள், என்பன விளிவேற்றுமையுடன் ளகரமெய் சோந்தவை. தங்கா, தங்காள் என்பன வழு. உ-ம்: 1ஆம் வே. 8ஆம் வே. பிழை திருத்தம் ஐயன் ஐயா அப்பன் அப்பா அப்பார் அப்பனார் அண்ணன் அண்ணா அண்ணார் அண்ணனார் மாமன் மாமா அண்ணன்காரன், அக்காக்காரி என்று முறைப்பெயர்களுடன் காரன், காரி யீறுகளைச் சேர்ப்பதும், வரப்பட்ட, போகப்பட்ட என்று செயப்படுபொருள் குன்றிய வினைகளைச் செயப்பாட்டு வினைகளாகக் கூறுவதும், என்னங்க, வந்தானுங்க என முன்னிலைக்குரிய உங்கள் (உம் + கள் ) விகுதியைப் படர்க்கைச் சொல்லொடு சேர்த்துக் கூறுவதும், சும்மா யிரு என்னும் பொருளில் பேசாமலிரு என்று சொல்லுவதும் வழுவாகும். நீன், மேக்கு, சீலை முதலிய சொற்கள் வழுவாய்க் கருதப்படினும் வழுவல்ல. சில சொற்றொடர்கள் உலக வழக்கில் மிகைபடக் கூறல் (redundancy) ஆக வழங்கி வருகின்றன. உ-ம்: பிழை திருத்தம் அரைஞாண் கயிறு, கொடி அரைஞாண் ஆண்பிள்ளைப் பிள்ளை ஆண்பிள்ளை ஆண்பிள்ளை ஆள் ஆடவன், ஆண்பிள்ளை காரான் பசு காரா, காரான் பெண்பிள்ளை ஆள் பெண், பெண்டு பெண்பிள்ளைப் பிள்ளை பெண்பிள்ளை மாங்காய்ப்பழம் மாம்பழம் வெந்நீர்த் தண்ணீர் வெந்நீர் மரூஉச்சொற்கள் - Disguised and Corrupted words அலங்காரம் - ஆங்காரம், அதிகமான் - அதியமான், அருமருந்தன்ன - அருமந்த, அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் - அமுதம், அவிழ்து - அமிழ்து - அமுது, ஆள்வார் - ஆழ்வார், இயல் - ஏல், இராக்கதன் - இராக்கன் - அரக்கன், (இ) ராமம் - நாமம், காடுகிழாள் - காடுகாள், காமம் உறு - காமுறு, காமம்மருவு - காமரு - காமர், கிடங்கு - கிட்டங்கி, கிழவன் - கிழான், கொள் கொம்பு - கொளுகொம்பு - கொழுகொம்பு, கோபாலம் - கோப்பாளம் (வழு), கோர் - கோ, கோர்வை - கோவை, சார்த்து - சாத்து, சீர்த்தி - கீர்த்தி, ஸ்மரணா - சுரணை - சுணை, சுருதி - சுதி, சுமையடை - சும்மாடு, தமப்பன் - தகப்பன், திரு - ஸ்ரீ, சீ; துணை - தனை, எத்துணை - எத்தனை, நியமி - நேமி, பகுதி - பாதி, படாகை - பதாகை, பரிகாரி - பரியாரி; பறண்டு - பிறாண்டு, பெயர் - பேர், பெயரன்- பேரன், பெருமகன் - பெருமான் - பெம்மான் - பிரான், பெருமாட்டி - பிராட்டி, பேர்த்தி - பேத்தி, பொழுது - போழ்து - போது, மணவாட்டி - மணாட்டி, மணவாளன் - மணாளன், மயல் - மால், மருமகன் - மருமான்- மருகன், மருமகள்- மருமாள் - மருகி, மார்யாப்பு - மாராப்பு, மிகு - மீ, மிகுதி - மீதி, முகக்கூடு - முக்காடு, முகட்டுப்பூச்சி - மோட்டுப்பூச்சி - மூட்டைப்பூச்சி - மூட்டை, முகனை - மோனை, மூஞ்செலி (மூஞ்சி + எலி) - மூஞ்சுரு - மூஞ்சூறு - மூஞ்சுறு, மேல் - மே, மீ; மைந்தன் - மைஞ்சன் - மஞ்சன், வரணம் - வருணம், வாழ்நன் - வாணன், விகிதம் - வீதம், வியர் - வேர், விழு - வீழ், விழுது - வீழ்து, (வெந்த + ஆணம்) - வெந்தாணம் - வெஞ்சாணம் - வெஞ்சணம் - வெஞ்சனம்; வேண்மகள் - வேண்மாள், வேய்வு - வேவு. இடப்பெயர் மரூஉ அமராபதி - அமராவதி. அளகாபுரி - அளகை, ஆற்றூர் - ஆறை, உஜ்ஜயினி - உஞ்சை, உறையூர் - உறந்தை, எருசலேம் - எருசலை, சாலேம், கரிவலம் வந்தநல்லூர் - கருவை, களத்தூர் - களந்தை. காஞ்சிபுரம் - காஞ்சி -கஞ்சி - கச்சி, **காளிக்கட்டம் - கல்கத்தா (Calcutta), கும்பகோணம் - குடந்தை - குடமூக்கு, கைலாயம் - கைலை, கோயம்புத்தூர் - கோவை. * கோழிக்கோடு கள்ளிக்கோட்டை, சனகாபுரம் - சனகை, *செங்கழுநீர்ப்பட்டு - செங்கற்பட்டு, சென்னப்பபட்டினம் - சென்னபட்டினம் - சென்னை, சேரன்மாதேவி - சேர்மா தேவி, சேற்றூர் - சேறை, சோழநாடு - சோணாடு, சோழபுரம் - சோளபுரம், சோழன்வந்தான் - சோளவந்தான். தஞ்சாக்கூர் - தஞ்சை, தஞ்சாவூர் - தஞ்சை திரிசிராப்பள்ளி - (திரிசிரபுரம்) - திருச்சினாப்பள்ளி - திருச்சி, (திரு)ச்செந்தூர் - செந்தில்; (திரு)நெல்வேலி - நெல்லை; திருவாவடுதுறை - துறைசை; திருவதங்கோடு - திருவிதாங்கூர் - திருவாங்கூர்; துவாரகை - துவரை; தொண்டைமான்நாடு - தொண்டைநாடு; நாகபட்டினம் - நாகை; பட்டினம் - பட்டிணம் - பட்டணம்; பல்லவபுரம் - பல்லாவரம்; பாண்டவர் மங்கலம் - பாண்டமங்கலம்; பாண்டியநாடு - பாண்டிநாடு; புதுச்சேரி - புதுவை; புத்தூர் - புதூர்; பூவிருந்தவல்லி - பூந்தமல்லி; பெண்ணாகடம் - பெண்ணாடம்; பெத்லகேம் - பெத்தலை, பெத்தேல்; பொதியில் - பொதியம் - பொதிகை; மகாமல்லபுரம் - மகாபலிபுரம், மயிலாப்பூர் - மயிலை: மலையமான் நாடு - மலாடு; மழவராயன் பட்டினம் - மழவை; மாயூரம் - மாயவரம்; விருதுநகர் - விருதை; வீரகேரளன்புத்தூர் - வீரளம்புத்தூர்; வைகுந்தம் - வைகுண்டம். * இக்குறியிடப்பட்டவை இப்போது வழக்கற்றவை. கோடி (கோடைக்கானல்), ஊட்டி (உதகமண்டலம் - Ottakamund) முதலிய ஆங்கில மரூஉக்களை அகற்றல்வேண்டும். குறைச் சொற்கள் - Loss of Letters i. முதற்குறை - Apheresis கனல் - அனல்; கன்று - அன்று (ஏ); கோநாய் - ஓநாய்; சமண் - அமண்; சமரம் - அமரம்; சமர் - அமர்; சமையம் - அமையம். சிப்பி - இப்பி; சுளுக்கு - உளுக்கு; சேமம் - ஏமம்; தழல் - அழல்; தாமரை - மரை; திமில் - இமில்; நணுகு - அணுகு; நண்- அண்; நண்ணு - அண்ணு; நும் - உம்; நுங்கள் - உங்கள்; நுமர் - உமர்; நுன் - உன்; புலர் - உலர்; மலர் - அலர், மிளை - இளை; யாக்கை - ஆக்கை, யாடு - ஆடு; யாப்பு - ஆப்பு; யாமை - ஆமை, யார் - ஆர், யாளி - ஆளி, யானை - ஆனை, யாறு - ஆறு, வளை -அளை. ii. இடைக்குறை - Syncope இலங்கு - இலகு, உருண்டை - உண்டை, ஊஞ்சல் - ஊசல், கூண்டு - கூடு, தேய்வட்டை - தேய்வடை, தொள்ளை - தொளை, பூண்டு - பூடு, பெட்டை - பெடை, விலங்கு - விலகு. iii. கடைக்குறை - Apocope உம்பின் - உம்பி, எம்பின் - எம்பி, தம்பின் - தம்பி, நும்பின் - நும்பி. போலி - Interchange and Permutation of Letters i. எழுத்துப்போலி - Permutation அ - ஆ: அளவு - அளாவு, உலவு - உலாவு, கடம் - கடாம் , கடவு கடாவு, குலவு - குலாவு, சுலவு - சுலாவு, துழவு - துழாவு, நடத்து - நடாத்து, நிலவு - நிலாவு, படம் - படாம், பரக்கு - பராக்கு, பரவு - பராவு, வளவு - வளாவு, விரவு - விராவு, வினவு, - வினாவு. அ - ஐ அரசன் - அரைசன் ஐ - அ சமையம் - சமயம், நிலைமை - நிலமை, பையல் - பயல், பையன் - பயன், மையல் - மயல். ஐ - அய் கைலை - கயிலை, வைரம் - வயிரம். ஔ -அவ் ஔவை - அவ்வை ச-ய அரைசன் - அரையன், கலசம் - கலயம், கைலாசம் - கைலாயம், சாமம் - யாமம், தேசம் - தேயம், நாராசம் - நாராயம், ட - ர படவர் - பரவர், முகடி - முகரி. ந - ஞ ஐந்நூறு - ஐஞ்ஞூறு, நயம் - ஞயம், நாண் - ஞாண், நாயிறு - ஞாயிறு, பைந்நீலி - பைஞ்ஞீலி. ப - வ பகு - வகு, பதி - வதி, படிவம் - வடிவம். ம - ந முகம் - நுகம், முனி - நுனி, முனை - நுனை. ம - வ குமி - குவி, மிஞ்சு - விஞ்சு, மீறு - வீறு, மேய் - வேய். ம - ன அறம் - அறன், கடம் - கடன், கலம் - கலன், குணம்- குணன், குலம் - குலன், பயம் - பயன், புலம் - புலன், புறம், புறன். ய -ச அயர் - அசர், இயை -இசை, ஈயல் - ஈசல், கயம் - கசம், குயவன் - குசவன், கைகேயி - கைகேசி, நெயவு - நெசவு நேயம் - நேசம், பியை - பிசை, வயம் - வசம். ர - ல இருப்பை - இலுப்பை. ல - ர குடல் - குடர், குதில் - குதிர், சாம்பல் - சாம்பர், பந்தல் - பந்தர், போக்கிலி - போக்கிரி. ல - ள கம்பலம் - கம்பளம், செதில் - செதிள், திமில் - திமிள், மங்கலம் - மங்களம், மதில் - மதிள். வ - க குவை - குகை, சிவப்பு - சிகப்பு, சாவ - சாக, செய்வேன் - செய்கேன், தாவம் - தாகம், படவு - படகு. கெருடன், கெர்வம், தெரிசனம், பிச்சு (பித்து), வைச்ச (வைத்த) முதலிய போலிகள் வழுவும், அசிரை, உசரம், உசிர். பசன், மசங்கு முதலிய போலிகள் இழிவழக்குமாகும். ii. இலக்கணப்போலி - Metathesis கோவில் - கோயில், சதை - தசை, விசிறி - சிவிறி, வைசாகி - வைகாசி - சும்மாவிரு - சும்மாயிரு. iii. போலித்திரிபு - Corruption on the principle of Permutation இகல் - இசல் (to compete); ஈந்து - ஈஞ்சு ; உடம்பிறந்தான் உடன்பிறந்தான் - உடப்பிறந்தான்; என்னவோ - என்னமோ ; ஐந்து - அஞ்சு; கூதல் - கூதிர்; கை -கய - கச ; கோடரி - கோடாரி, கோடாலி; கோடு -கோணு; கௌதாரி - கவுதாரி - கதுவாலி; சேலை - சீலை; திறம் - திறன், திறல்; துருக்கர் - துலுக்கர்; நீத்து - நீச்சு; நீந்து - நீஞ்சு ; பக்கம் - பக்கல்; பையன் - பையல்; - மறம் - மறன் - மறல்; மைந்தன் - மஞ்சன்; வண்டி - பண்டி; வாயில் - வாயல் - வாசல்; விதை - விரை. பல்வடிவச் சொற்கள் - Polyforms of words அக்கை, அக்காள், தமக்கை; அங்கு, ஆங்கு; அடைமானம், அடைவு, அடவு, அடகு; அண்ணன், அண்ணாச்சி, அண்ணாத்தை, தமையன்; அண்மை, அணிமை; அம்மை, அம்மாள்; அரண், அரணம்; அரா, அரவு, அரவம்; அவகாசம், சாவகாசம்; அவை, அவையம்; அற்பசி, ஐப்பசி; ஆ, ஆன்; ஆசனம், ஆதனம்; ஆசிரியன், ஆசான்; ஆன்மா, ஆத்துமா, ஆத்துமம்; இங்கு, ஈங்கு, இடக்கு, இடக்கர், இடம், இடை, இயேசு, ஏசு, இரவு, இராத்திரி; இருள், இருட்டு; இலை, இலக்கு; இறப்பு, இறவாணம், இறவு; இறா, இறால், இறாட்டு; உச்சி, உச்சம்; உடல், உடம்பு; உடுக்கு, உடுக்கை; உடு,உடுத்து; உத்தரம், உத்திரம் (தூண்); உத்தரவு, உத்திரவு, உத்தரம், உத்தாரம்; உபாத்திரியாயர், வாத்தியாயர், வாத்தியார்; உரு, உருவு,உருவம்; உலாவு, உலாத்து; எலுமிச்சை. எலாமிச்சை, எழு, எழும்பு; என், என்ன, என்னை; ஒட்டகம், ஒட்டை. ஒப்புவி, ஒப்பி; ஒருவன், ஒருத்தன்; ஒன்பது, ஒன்பான்; ஓணான், ஓந்தான், ஒந்தி,ஓதி; கடிகை, கடகம்; கடிகை, கடிகாரம்; கடிதம், கடிதாசி; கடை, கடைசி; கதவு, கதவம், கதவல்; கருடன், கலுழன்; கருப்பு, கருத்தை, கருவல், கருமை; கருமம், கன்மம்: கர்த்தா, கர்த்தன்; கவி, கவிதை; கழாய், கழை; களம்பழம், களாம்பழம், களாப்பழம்; களா, களவு; கனா, கனவு; காக்கை, காகம்; காதம், காவதம்; கால், காலம், காலை; காவிரி, காவேரி; கிழம், கிழடு; குச்சு, குச்சி, குச்சு, குஞ்சம்; குஞ்சு, குஞ்சி; குடம், குடக்கு; குடுக்கை, குடுவை; குடும்பி, குடுமி; குடும்பு, குடும்பம்; குட்டு,கொட்டு; குணம், குணக்கு; குமாரி, குமாரத்தி; குவை, குவால், குவியல், குப்பல், கும்மல்; குழவு, குழந்தை; குழு, குழூஉ; குளிர்ச்சி, குளிர்மை; குள்ளம், குள்ளல், குள்ளை; குறும்பி, குதும்பி; குற்று, குத்து; குன்று, குன்றம்; கூடகாரம், கூடாரம்; கூவல், கூவம்; கூற்று, கூற்றுவன்,கூற்றம்; கொசு, கொசுகு, கொதுகு; கொப்பூழ், கொப்புள், தொப்பூழ், தொப்புள்; கொம்பு, கொப்பு (branch): கோ, கோன்; சகடு, சகடம், சாகாடு; சக்கரை,சர்க்கரை, சருக்கரை; சட்டம், சட்டகம்; சதுரம், சதுக்கம், சமுக்கம், சவுக்கம்(வ.); சமம், சமானம்; சமர்த்து, சாமர்த்தியம்; சரண், சரணம்; சரிதை,சரித்திரம்; சாணி, சாணம்; சாந்தம், சந்தனம்; சாமான், சாமானம்(ஹி.); சாயுங்காலம், சாயங்காலம், சாயுந்தரம், சாயந்தரம்; சிவப்பு, சிவலை, சிவத்தை, செம்மை, செக்கர்; சிறார், சிறுவர்; சிறை, சிறகு; சுப்பி, சுப்பல்; சுள்ளை, சூளை; சுறா, சுறவு, சுறவம்; சூடாமணி, சூளாமணி; சொட்டை, சொத்தை; செம்மை, செவ்வை, செப்பம்; சொற்கேட்டான், சொக்கட்டான்; தங்கை; தங்கச்சி, தட்டான்பயறு, தட்டைப்பயறு; தந்தை, தாதை; தபம், தவம், தபசு, தவசு; தப்பு, தப்பிதம்; தயை, தயவு (வ.);தருமம், தன்மம்; தழல், தணல்; தாவு, தாண்டு; திரணை, திண்ணை; துண்டு, துண்டம்; துளி, துள்ளி, துமி; துலா, துலை; துளசி, துளவு, துளவம், துளாய், துழாய்; துறட்டி, தோட்டி; தூண், தூணம்; தெய்தி, தேதி; தென்னை, தெங்கு; தொட்டி, தொட்டில்; தொள், தொடு, தோண்டு; தொலை, தொலைவு; தொள்ளை, தொளை, துளை; தொறும், தோறும்; தோல், தொலி; தோன்று, தோற்று; நடு, நடுவண், நாப்பண்; நடம், நட்டம், நடனம், நாட்டியம்; நட்டம், நட்டி; நண்பு, நட்பு; நலம், நன்மை; நறா, நறவு, நறவம்; நனா, நனவு; நா, நாவு, நாக்கு; நாயகன், நாயன்; நாயக்கன், நாய்க்கன்; நாரத்தை, நாரந்தம்; நான்கு, நாலு; நிதி,நிதியம்; நிலா, நிலவு; நின், நுன், உன்; நீல், நீலம்; நுனி, நுதி; நெஞ்சு, நெஞ்சம்; பச்சை, பசுமை, பைமை; படிவம், வடிவம், வடிவு; பண்டசாலை, பண்டகசாலை; பரவு, பராவு, பரசு; பரீட்சை, பரீச்சை (வ.); பா, பாட்டு; பாசம், பாசி; பிடர், பிடரி; புட்டி, புட்டில்; புலை, புலால், புலவு; புழுகு, புனுகு; புறா, புறவு, புறவம்; பூனை, பூசை; பெடை, பெட்டை, பேடு; பெட்டி, பெட்டகம்; பெண், பெண்டு; பொத்தகம், புத்தகம்; மகாமகம், மாமாங்கம்; மகிழ்நன், மகிணன்; மங்கலியம், மாங்கலியம்; மடம், மடமை; மதி, மதியம்; மத்திமம், மத்திபம் (வ.); மத்தியானம், மதியம்; மனம், மனது, மனசு; மனிதன், மனுடன் (வ.); மன்று, மன்றம்; மார், மார்பு, மருமம்; மாதம், மாசம்; முத்து, முத்தம்; முழவு, முழா; முழுது, முழுவது, முழுவன்; முன்றில், முற்றம்: ரூபா, ரூபாய்; வலி, வலிமை, வல்லபம்; வழமை, வழக்கம்; வளை, வளைவி, வளையல்; வாணிகம், வாணிபம், வணிகம்; வாய்பாடு, வாய்ப்பாடு; (விஷ்ணு) விட்டுணு, விண்டு; விட்டி, விட்டில்; வித்து, விதை; விழா, விழவு;விளா,விளவு, வெள்ளில்; வெள்ளை, வெளுப்பு, வெண்மை; வேடன், வேடுவன், வேட்டுவன்; வேட்டம், வேட்டை; வேண்டாம், வேண்டா. தொழிற்பெயர்கள் விகுதி மாறும்போது வேறு வடிவாகத் தோன்றும். சில விகுதிகட்குப் பொருள்மாறும்; சில விகுதிகட்குப் பொருள் மாறா. உ-ம்: வினைப்பகுதி தொழிற்பெயர்கள் i. கொள் கொள்ளல், கொள்கை, ii. வஞ்சி வஞ்சம், வஞ்சனை, வஞ்சகம் பன்முறைச் சொற்கள் - Alternative forms of Words and Phrases பெயர்ச்சொல் முன்கை, முன்னங்கை; வருவாய், வருமானம் வேற்றுமை 4M«.nt. அவற்கு, அவனுக்கு (ஒருமை) அவர்க்கு, அவருக்கு பன்மை அல்லது அவர்கட்கு, அவர்களுக்கு } உயர்வுப் பன்மை வினைப்பகுதி, வினைமுற்று, வினையடிப்பெயர் ஆ, ஆகு; ஆயிற்று, ஆயினது; உடையது, உடைத்து; ஏற்கா, ஏலா; சிறியது, சிறிது; நகு, நகை; நக்கான், நகைத்தான்; நினைந்தான், நினைத்தான்; நினைவு, நினைப்பு (ஞாபகம்); போ, போகு, போது; போகடு, போடு; போனான், போயினான், போந்தான், போகினான்; விடுத்தான், விட்டான். பல வினைகளின் புடைபெயர்ச்சி (conjugation) ஒன்றுபோலிருப்பதால், இங்குக் கூறியவற்றுட் சிலவற்றை வாய்பாடுகளாகவே கொள்க. பின் வருவனவற்றிற்கும் ஈதொக்கும். சில ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுகள் அது, து என்னும் இரு விகுதிகளையும் ஏற்கும். உ-ம்: அன்னது, அற்று (அன் + து); கண்ணது, கட்டு (கண் + து); தன்மையது, தன்மைத்து; தாளது, தாட்டு (தாள் + து); பாலது, பாற்று (பால் + து). ண்,ர்,ல்,ழ்,ள்,ன் என்ற மெய்யீற்று வினைப் பகுதிகள், புடைபெயர்ச்சியில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உகரச்சாரியை பெற்றும் பெறாதும் வரும். வழக்கறிந்து கடைப்பிடிக்க. உ-ம்: நி. காலம் எ. காலம் உண்ணுகிறான், உண்கிறான் உண்ணுவான், உண்பான் சோருகிறான், சோர்கிறான் சோருவான், சோர்வான் சொல்லுகிறான், சொல்கிறான் சொல்லுவான், சொல்வான் அமிழுகிறான், அமிழ்கிறான் அமிழுவான், அமிழ்வான் கொள்ளுகிறான், கொள்கிறான் கொள்ளுவான், கொள்வான் தின்னுகிறான், தின்கிறான் தின்னுவான், தின்பான். பெயரெச்சம் ஆன, ஆகிய, ஆய; போந்த, போதிய, போதுமான; போன, போகிய, போய,போந்த. வினையெச்சம் ஆய், ஆக (உ-ம்: விரைவாய், விரைவாக); ஆய், ஆகி; இருக்க, இருப்ப; என்று, என; செய்ய, செய; செய்யின், செயின்; தூய், தூவி; வர, வரற்கு, வருவதற்கு; வரின், வந்தால், வந்தக்கால். சில வினைகள் எதிர்மறையில் வலிமிக்கும் மிகாதும் இரு வடிவாய் நிற்கும். உ-ம்: பெ.எ. வி.எ. வி.மு.(ஒன்றன்பால்) இராத, இருக்காத இராமல், இருக்காமல் இராது, இருக்காது இடைச்சொல் But- ஆயின், ஆனால்; Either... or - ஆவது, ஆகிலும், ஆயினும், ஆனாலும். ஆதல், ஆக, எனினும், ஏனும். சொன்மயக்கம் - Confusion of Words பின்வருஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்குதல் கூடாது. அரிவாள், அறுவாள். பொருள்களைச் சிறிதாயரியும் வாள் அரிவாள். (அரிவாள்மணை) பொருள்களை அறுக்கும் வாள் அறுவாள். (வெட்டறுவாள்) அரைப்படித்தவன் - குறைவாகக் கற்றவன் அறப்படித்தவன் - முற்றக்கற்றவன். அல்ல, இல்லை. ஒன்று இன்னொன் றல்லாமையை அல்ல என்னுஞ் சொற்குறிக்கும்; ஒன்று ஓரிடத்தி லின்மையை இல்லை என்னுஞ் சொற் குறிக்கும். உ-ம்: அவன் இராமன் அல்ல - He is not Rama. இராமன் இங்கே இல்லை - Rama is not here. அவன் இராமனில்லை என்பது வழு. இதில் இராமன் என்பது இராமனாய் என்று எச்சப்பொருள்படின் வழாநிலை. அவசரம் - urgency. அவசியம் - necessity. அளி - ஏ -present கொடு - ஏ. give. ஊர்கோலம் - ஊரை வலமாகச் சுற்றாமல் ஊர்ந்து செல்லல். ஊர்தல் = வாகனத்திற் செல்லல், பையச் செல்லல். ஊர்வலம் = ஊரை வலமாகச் சுற்றுதல். கட்டடம் = binding. setting, construction, building. கட்டிடம் = site கருப்பு - blackness. கறுப்பு - rage, darkening of the face through anger. குமரன் - இளைஞன், வீரன். குமாரன் - மகன். குமரி - இளையள், வீரி. குமாரி - மகள். குற்றஞ்சாட்டு - accuse. குற்றஞ்சாற்று - tell the crime. சவரஞ்செய்தேன் (பிறர்க்கு). சவரஞ்செய்துகொண்டேன் (vd¡F). கொள் - reflexive sign. தகப்பனார் - ஒருமை (உயர்வுப்பன்மை). தகப்பன்மார் - பன்மை தாழ்மை - humility. தாழ்வு = இழிவு, கீழ்மை. தீஞ்சுவை = இனிய சுவை. தீச்சுவை = தீய சுவை. தேன் + சுவை = தேஞ்சுவை, தீஞ்சுவை. தீ (தீமை) + சுவை = தீச்சுவை. இத்தகைய தொடர்களில் மெலிதோன்றுமிடத்து இனிமைப் பொருள்; வலிதோன்றுமிடத்துத் தீமைப் பொருள். தீன் - தின்பண்டம். தீனி - விலங்குணவு, சாப்பாடு - மக்களுணவு. தேர்ந்தெடு - ஏ. examine and select. தெரிந்தெடு - ஏ. select, elect. நட்டு - ஏ. fix in the earth. நாட்டு - ஏ. establish. நிறுத்து - ஏ. stop. post, make anything stand. நிறுவு - V.establish. பண்டிகை - வீட்டிற் கொண்டாடப்படுவது. திருவிழா - வெளியே கொண்டாடப்படுவது. பருமை - bulk. பெருமை - greatness, dignity, pride,excess, increase. புறக்கடை - backyard. புழைக்கடை - narrow passage. பூக்கொல்லை = flower garden, பூங்கொல்லை - அழகிய தோட்டம். இத்தகைய தொடர்களில் பூ என்பது மலரைக் குறிப்பின் பெரும்பான்மை வலியும் சிறுபான்மை மெலியும் மிகும் ; அழகைக் குறிப்பின் மெலியே மிகும். பொருள் - object, substance, matter, subject. காரியம் - effect, purpose, deed. affair. மாமன் - father - in- law. அம்மான்- maternal uncle. மாமி - mother - in- law. அத்தை - paternal aunt. மிக்க - பெ. v., மிக - வி. எ. உ-ம். மிக்கவூண், மிகவுண்டான் மயில் - peacock, மைல் - mile யாது, எது; சிறிதும் அறியாப் பொருளைப்பற்றி யாது என்றும், சிறிது அறிந்த பொருளைப்பற்றி எது என்றும் வினவல் வேண்டும். இங்ஙனமே யார், எவர் என்பனவும். வருமானம் - proper income. வரும்படி - additional incame. வழக் கம் - habit, custom. பழக்கம் - practice, acquaintance. விவரி - ஏ. give the details of. விரி. - ஏ. expand. சொற்குறுக்கம் - Abbreviations மாணவர் வியாசங்களில், மகா - ள - ள - ஸ்ரீ, மீ, உ, ரூ - அ - பை, கி.மு., கி.பி என்ற குறுக்கங்களைத் தவிரப் பிற குறுக்கங்க ளிருத்தல் கூடாது. பெருந்தொகைகளைக் குறிப்பிடும்போது, ஐஞ்சொல்லுள் அமைபவற்றை எழுத்தாலும், பிறவற்றை எண்ணாலும் குறிக்கலாம். உ-ம்: நாலாயிரத்தெழுநூற்றொன்று, 23714 III சொற்றொடரியல் - Syntax 1. வாக்கிய அமைப்பு - Structure of Sentence i. சொன்முறை - Order of Words ஒரு வாக்கியத்தில் எழுவாய் முன்னும், பயனிலை பின்னும், செயப்படுபொருள் இடையு மிருத்தலே இயல்பான முறையாகும். உ-ம்: சம்பந்தர் சமணரை வென்றார். எழுவாயில்லாது ஒரு வாக்கியமும் எழுதுதல் கூடாது. தற்கூற்றில் (Direct Speech) மட்டும் தன்மை முன்னிலை எழுவாய்கள் தொக்கு நிற்கலாம். ii. முறைமாற்று - Hyperbaton or Inverted Order சில வாக்கியங்களில் வற்புறை (emphasis) நிமித்தம் வாக்கிய வுறுப்புகள் முறை மாறி வரும். உ-ம்: கண்டேன் சீதையை. அடித்தான் இராமன். iii. சொல்லிடையீடு - Inter - verbalspace சொற்கட்கிடையில் போதுமான இடம் விடல் வேண்டும். இல்லாவிடின், உரைஞன் அல்லது எழுத்தாளன் கருதிய தொடர்கள் வேறு தொடர்களாக மாறிவிடலாம். உ-ம்: அரிசி, வசம்பு - அரி, சிவசம்பு iv. முன்மைநிலை - Priority தழுவுகின்ற சொற்களும் சொற்றொடர்களும், தழுவப்படுகின்ற சொற்கட்கும், சொற்றொடர்கட்கும் முந்தவேண்டும். உ-ம்: தம் தாய் தந்தையர் பெயர் ஆதி பகவன் என்பதைத் திருவள்ளுவர் தம் முதற் குறளாற் குறிப்பித்தார் என்பது, திருவள்ளுவர் தம் தாய் தந்தையர் பெயர் ஆதிபகவன் என்பதைத் தம் முதற் குறளாற் குறிப்பித்தார் என்றிருத்தல் நலம். அறிவும் தொழிலும்பற்றிய சிறப்புப் பெயர், இயற்பெயர்க்கு (Proper Name) முன்னும் பின்னும் வரலாம்; முன்வரின் இயல்பாம்; பின் வரின் இயற்பெயர் சிலவிடத்து விகாரமாம். உ-ம்: புலவன் வள்ளுவன், வள்ளுவப் புலவன் ஆசிரியர் பிரகாசம் சாமுவேல், பிரகாசம் சாமுவே லாசிரியர். v. அண்மைநிலை - Proximity தழுவுகின்ற சொற்களும், சொற்றொடர்களும், தழுவப்படுகின்ற சொற்கட்கும், சொற்றொடர்கட்கும் முந்துவதுடன் இயன்றவரை அணித்தாயு மிருத்தல் வேண்டும். நீ வந்த காரணத்தை என்னிடம் சொல் என்பதை, நீ என்னிடம் வந்த காரணத்தைச் சொல் என்று மாற்றினாற் பொருள் மாறுதல் காண்க. எண்ணுப் பெயர்கள் பிற சொற்களோடு கூடிப் பெயரைத் தழுவும் போது, பிற சொற்கள் பிளவுபடாது ஒரு தொடரா யிசைப்பின் அவற்றுக்கு முன்னும், அவை பிளவுபட்டு இரு தொடரா யிசைப்பின் அவற்றுக் கிடையும், ஒரு தொடரேனும் நெடுந்தொடராய்ப் பெயரெச்சத்தில் முடியின் அதற்குப் பின்னும் நிற்கும். உ-ம்: ஒரு நல்ல தென்னாட்டுத் தமிழப் பையன் - முதல் செந்தமிழாக்கம் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு நல்லிசைப்புலவர். }- இடை தன் காலத்தை வீணாய்க் கழிக்கும் ஓர் இளைஞன் - கடை நல்ல ஒரு பையன் என்பது தவறு. தழுவப்படுவது அஃறிணைப் பெயராயின் நல்ல என்பது நல்லது என மாறி முன்னிற்கலாம். உ-ம்: நல்லதொரு காலம், நல்லதோர் காலம். vi. தெளிவு - Perspicuity திசைச்சொற்கள், அயற்சொற்கள் (Foreign Words), அருஞ்சொற்கள், பல்பொருட்சொற்கள், பொருண்மயக்கம், குன்றக்கூறல் முதலியனவில்லாமல், வாசிக்கக் கற்றோர்க்கெல்லாம் பொருள் விளங்குமாறு எளிய சொற்களால் வாக்கிய வுறுப்புகள் நிரம்ப எழுதுவது தெளிவாகும். உ-ம்: “Û‹fŸ இடுகின்ற முட்டையெல்லாம் பொரிந்து சிறு மீன்களாகி வளருமாயின், நீண்டகன்ற பெருங்கடலும் அவற்றிற் கிடமளிக்கப் போதியதாகாது ..... இரண்டு மீன்களிலிருந்து பன்னூறாயிரம் மீன்கள் தோன்றும்..... இவற்றைத் தோற்றுவித்த பெரிய மீன்களே அதிவிரைவில் இவற்றைப் பிடித்துத் தின்றுவிடுகினற்ன. (பா.வே. மாணிக்க நாயகர்) - திரு. க. ப. சந்தோஷம் அவர்கள் மொழிபெயர்ப்பு. மா வீழ்ந்தது என்று மயங்கக் கூறாது, மாமரம் வீழ்ந்தது, பரிமா வீழ்ந்தது என்று தெளியக் கூறுக. செம்பொன் பதின்பலம் என்பதைப் பொருட்கேற்ப, செம்பு ஒன்பதின்பலம் எனப் புணர்க்காதும், செம்பொன் பதின்பலம் எனப் பிரித்தும் எழுதுக. புலிகொன்றயானை என்பதை, புலியாற் கொல்லப்பட்ட யானை, புலியைக் கொன்ற யானை என்று விரித்தெழுதுக. ஸ்கெளடோ செலவிற் குக் கல்வி கற்றார் என்பதை, குக் ஸ்கெளடோ செலவிற் கல்வி கற்றார் என்று மாற்றியெழுதுக. vii. பொருள்வலி - Energy or Force ஒரு செய்தியைப் பிறர் நம்புமாறு, தக்க ஏதுவும் மேற்கோளும் உவமையும் எடுத்துக்காட்டித் தகுந்த சொற்களால் வற்புறுத்திக் கூறுவது பொருள் வலியாகும். உ-ம்: தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார், தமது தெய்வச் செந்தமிழ் மொழிமேல் வைத்த பற்றினையுஞ் செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணுந் தம் காலத்து நல்லிசைப் புலவர் மேற்கொண்ட தனிச் செந்தமிழ் வழக்கினையும் மீறி, ஆதிபகவன்' என்னும் வடசொற்றொடரால் முழுமுதற் கடவுளுக்குத் தமது நூலின் முதலிலேயே பெயர் கூறுவாரானது, அத் தொடரின் முன்நின்ற ஆதி என்பது தம் அன்னையர்க்கும், பின்நின்ற பகவன் என்பது தம் தந்தையார்க்கும், பெயராயமைந்து, அவ் விருவரையுந் தமது நினைவிற் கொணர்தல் பற்றியேயாமென்பது திண்ணம்'' - ஆசிரியர், மறைமலை யடிகள். பொருள் வலியுறுத்தும் முறைகள்: “ஒருவன் உலக முழுதும் ஆதாயப்படுத்தினாலும், தன் ஆத்துமாவை யிழந்துவிடின் அவனுக்கு இலாபமென்ன? - வினா (Interrogation or Rhetorical Question). ``அவன் அரைகுறையாய்ப் படித்தவனல்லன்'' - எதிர்மறை (Litotes) “அறத்தினும் ஆக்கமில்லை; அதை மறத்தலினுங் கேடில்லை- - உடன்பாடும் எதிர்மறையும். நாள் தவறினும் நாத்தவறான் - எதிர்மறையும்மை. கண்டேன் சீதையை - முறைமாற்று. செய்யவே செய்வான் - தேற்றேகாரம். viii. திட்டம் - Precision ஒரு பொருளை ஐயமும் மதிப்பும் பொதுநிலையுமின்றி இயன்றவரை வரையறையாய்ச் சொல்வது திட்டமாகும். உ-ம்: கம்பர் பல நூற்றுண்டுகட்கு முற்பட்டவர் என்னாது, 9ஆம் நூற்றாண்டின ரென்க. இங்ஙனமே பிறவும். ix. பொருத்தம் - Propriety ஒரு சொல்லை அதற்குரிய பொருளிலும், ஒரு பொருளுக்கு அதற்குத் தகுந்த சொல்லையும் வழங்குவது பொருத்தமாகும். உ-ம்: உண்டி வினை கூறுமிடத்து, சோறு உண்டான், சாப்பிட்டான்; தண்ணீர் குடித்தான்; பலகாரம் தின்றான் என்று கூறல்வேண்டும். ஒருவனிடம் ஒரு பொருளைக் கேட்கும்போது, கொடு என்பது உயர்ந்தோன் சொல்; தா என்பது ஒத்தோன் சொல்; ஈ என்பது இழிந்தோன் சொல். x. இனிமை - Euphony இழிசொல்லும் வழூஉச்சொல்லும் நீக்கிப் பெரும்பாலுந் தென் சொற்களால், ஓசையின்பம்பட இயல்பான மோனையெதுகை யமைத்தெழுதுவது இனிமையாகும். உ-ம்: திருமயிலையில் ஒரு துளுவ வேளாளர்பால் விடப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டு வந்த மகவை (திருவள்ளுவரை)க் கண்டு, அவ் வேளாண் டலை வரின் உறவினர் யாரோ இழிகுலத்தார் காமத்தாற் பெற்றுப்போகட்ட அகதிப் பிள்ளையை இவர் வளர்க்கின்றார். ஈதென்னை! என்று பழி கூறாநிற்ப, அதற்கு மிக வருந்திய அச் செல்வர் அம் மகவைப் பிரிதற் காற்றாராய்த் தம் விளைபுலத்தில் உழுதொழில் செய்யும் பறைக்குடிகளுக்குக் குருவாயுள்ள ஒரு வள்ளுவனை அழைத்து, அவன் கையில் அதனை ஈந்து, “இதனைப் போற்றி வளர்ப்பாயாக எனக் கூறி, அவற்கு அதன்பொருட்டு ஆம் செலவுகட்கும் வேண்டும் பொருள் நல்கினார். - ஆசிரியர் மறைமலையடிகள். இனிமைபற்றிக் கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்: 1. சொற்களைப் பெரும்பாலும் புணர்த்தெழுதல். 2. சில சொற்களின் பல்வடிவங்களில் இன்னோசை யுள்ளவற்றைக் கொள்ளல். உ-ம்: சொல் இனியவடிவம் அதனால்,என்ன, அதனான், என்னை, செய்கிறான், செலவுகளுக்கு, செய்கின்றான், செலவுகட்கு, செய்யவேண்டும். செய்தல்வேண்டும். 3. இயன்றவரை தென்சொற்களை அமைத்து எழுதல். 4. சொற்சுருக்கம். உ-ம்: ஏற்கமாட்டா - ஏலா. xi. சுருக்கம் - Brevity வேண்டாத சொற்களை விலக்கிப் பொருள் விளங்குமளவில் இயன்றவரை சுருக்கி யெழுதுவது சுருக்கமாகும். இரண்டுபேர் என்பது இருவர் என்றும், எவன் தேறுகிறானோ அவனுக்கு என்பது தேறுகிறவனுக்கு என்றும், வடக்கேயுள்ள ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த ஓர் ஆரிய வமிசத்து மன்னன் என்பது ஒரு வடநாட்டையாண்ட ஆரிய மன்னன் என்றும் சுருக்கி யெழுதப்படும். அரைஞாண்கயிறு, அவைகள் என மிகைபடக் கூறலும் (redundancy), அவர்களுக்குள் அவன் தலைசிறந்தவன்; அவனுக்குச் சமானம் ஒருவருமில்லை எனக் கூறியது கூறலும் (tautology) குற்றமாகும். xii. தூய்மை - Purity அயலெழுத்து, அயற்சொல், வழூஉச்சொல் முதலியவற்றை நீக்கித் தனித்தமிழ் எழுத்துகளாலுஞ் சொற்களாலு மெழுதுவது தூய்மையாகும். சிறப்புப்பெயராயின் அயலெழுத்தும் அயற்சொல்லுந் தழுவப்படும். உ-ம்: சிறந்த தமிழ்ப் புலவருள் ஒருவராகிய கபிலர் தமது நண்பனாகிய பாரி என்னும் வள்ளல் தன் மகளிர் இருவரைத் துணையின்றி விட்டு மாண்டனனாக, அம் மகளிர்க்கேற்ற கணவரைத் தேடிக் கொடுப்பது தமது கடமை என்று அங்குமிங்கும் அலைந்து தேடினர். இது நிறைவேறாது போகவே, புலனழுக்கற்ற அப் புலவர், வடக்கிருந்து இவ்வாழ்வை நீத்தனர். வடக்கிருத்தல் என்னும் இச் செய்தி ஒருவரது நாணுடைமை புரைபட்டபொழுது உணவு நீக்கி உயிர் துறக்கும் ஓர் ஒழுக்கமாகும். (பா.வே.மாணிக்க நாயகர்) - திரு. க. ப. சந்தோஷம் அவர்கள். xiii. இசைவு - Concord எழுவாயும் பயனிலையும், அல்லது முற்பெயரும் (Antecedent) சுட்டுப்பெயரும், அல்லது முற்பெயரும் தற்சுட்டுப்பெயரும் (Reflexive Pronoun), அல்லது இயற்பெயரும் சிறப்புப் பெயரும் திணை, பால், எண் இடங்களில் ஒத்திருக்க வேண்டும். உ-ம்: இராமன் வந்தான் சீதை வந்தாள் இராமர் வந்தார்(உயர்வுப்பன்மை) } எழுவாயும் பயனிலையும் மக்கள் வந்தார்கள் மகன் - அவன் - தன் மகள் - அவள் - தன் முற்பெயரும் சுட்டுப் ஒருவர் - அவர் - தம் } பெயரும் தற்சுட்டுப்பெயரும். மக்கள் - அவர்கள் - தங்கள் ஆசிரியன், பாரத்துவாசி, நச்சினார்க்கினியன் - சிறப்புப்பெயரும் இயற் பெயரும். உயர்திணையில், ஆண்பால் பெண்பால் என்னும் இருபாற்பெயரும் உயர்வுப்பன்மை விகுதியேற்கும். உ-ம்:. அரசர் வந்தார், அரசியார் வந்தார். ஆர் விகுதி பெரும்பாலும் உயர்வுப் பன்மையாக ஒருமைக்கு வழங்கி வருதலின், அது பன்மை குறிக்கத் தவறும்போது விகுதிமேல் விகுதி வேண்டப்படும். உ-ம்: சபையார் வந்தார்கள். அன் சாரியை பெற்ற அர்விகுதியாயின் விகுதிமேல் விகுதி வேண்டிய தின்று. உ-ம்: சபையார் வந்தனர். கடவுளை ஆண்பாலிலும் உயர்வுப் பன்மையிலும் ஒன்றன் பாலிலும் கூறலாம். உ-ம்: கடவுள் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது. குழந்தை என்னும் பெயரை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், என்னும் மூன்றுபாலிற் கூறலாம். உ-ம்: குழந்தை வருகிறான் (ஆண்), வருகிறாள் (பெண்), வருகிறது (ïUgh‰bghJ). மகவு, சேய், குழவி, பிள்ளை என்ற பிற இளமைப் பெயர்களும் இங்ஙனமே. ஆள் என்னும் பெயர் ஒருமையில் பாலறியப்படாவிடத்து ஒன்றன்பால் வினைகொண்டும், பாலறியப்பட்டவிடத்து ஆண்பால் அல்லது பெண்பால் அல்லது உயர்வுப் பன்மை வினைகொண்டும், பன்மையில் எப்போதும் பலர்பால் வினைகொண்டும் முடியும். அம்மாள் வருகிறது என்பது தவறு. அம்மாள் வருகிறாள் என்று பெண்பாலிலாவது, அம்மாள் வருகிறார்கள் என்று உயர்வுப் பன்மையிலாவது கூறல்வேண்டும். து என்னும் ஒன்றன்பால் விகுதியும், அ, வை என்னும் பலவின்பால் விகுதிகளும் பெறாத அஃறிணைப் பெயர்களெல்லாம் ஒருமை பன்மை என்னும் இருமைக்கும் பொதுவாகும். அவற்றை ஒருமையாகவும் பன்மையாகவும் ஆளலாம். அவற்றின் எண்ணை அவற்றின் பயனிலைகளே காட்டும். இத்தகைய பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர் எனப்படும். உ-ம்: மரம் வளர்கின்றது, வளர்கின்றன. அறிவின்மை, மூப்பு, உறுப்பறை (அங்கவீனம்) முதலிய காரணம்பற்றி, மக்கள் இழிவாய்ப் பண்புப் பெயராற் கூறப்படும்போது, அப் பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர்போற் பாவிக்கப்படும். உ-ம்: கிழம் போகிறது, போகின்றன. சிலவிடத்து உயர்திணைப் பெயர்கள், வடிவில் ஒருமையாயிருப்பினும் பொருளிற் பன்மையாகும். அவை சாதியேக வசனமென்று வடமொழியிலும், வகுப்பொருமை யென்று தென்மொழியிலுங் கூறப்படும். உ-ம்: பெற்ற தாயைப் பேணாத மூடர். பெயர்களின் இகர விகுதி பெண்பால் விகுதியாயிராது எழுவாய் விகுதியாயிருப்பின், சிலவிடத்து உயர்திணை ஒருமைப்பால்கள் இரண்டிற்கும், சிலவிடத்து இருதிணை ஒருமைப் பால்கள் மூன்றிற்கும் பொதுவாம். உ-ம்: விறகுவெட்டி வந்தான், வந்தாள் கண்ணிலி வந்தான், வந்தாள், வந்தது. பேதை என்னும் பெயர், ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாம். உ-ம்: இவன், இவள் - ஓர் பேதை (அறிவிலி) வேறு, இல்லை என்னும் குறிப்பு வினைமுற்றுகள் ஐம்பால் மூவிடம் ஈரெண்ணிற்கும் பொதுவாம். உண்டு (உள் + து ) என்னும் ஒன்றன்பாற் குறிப்புவினைமுற்றும் அல்ல என்னும் பலவின்பாற் குறிப்புவினைமுற்றும், ஐம்பால் மூவிட ஈரெண் பொது வினைகளாக வழங்கி வருவது வழுவமைதி யாகும். யார் என்னும் வினாப்பெயர் உயர்திணை முப்பாற்கும் பொது. உ-ம்: அவன், அவள், அவர் - யார்? என் (எவன்) அல்லது என்னை என்னும் வினாச்சொல் அஃறிணை யிருபாற்கும் பொது. உ-ம்: அது, அவை - என் (எவன்)? என்னை? என் என்பது ஒருமையில் என்னது என்றும், பன்மையில் என்ன அல்லது என்னவை என்றும் இருக்கும். என்ன என்பது ஒருமையில் வழங்குவது வழுவமைதி. குலப்பெயர்களைத் தனித்தனி கூறும்போது, ஆண்பால், பலர்பால், பால்பகா அஃறிணை என்ற மூன்று பாலிலும் கூறலாம். உ-ம்: வேளாளன், வேளாளர், வேளாண். உயர்திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் சேர்ந்து, ஒரு முடிபு கொள்ளும் போது, உயர்திணை வினைகொண்டு முடியும். உ-ம்: இராமனும் நாயும் வந்தார்கள். உயர்திணை எழுவாய் இழிவு பற்றியதாயின், இருதிணை எழுவாய்களும் ஒரு முடிபு கொள்ளும்போது அஃறிணை வினைகொண்டு முடியும் உ-ம்: பேதையும் நாயும் வந்தன. வெவ்வேறு சிறப்பு வினைகட்குரிய பல பொருள்களின் பெயர்கள், தனித்தனியாகவேனும் தொகுதியாகவேனும் கூறப்பட்டு ஒரு வினை கொண்டு முடியின், பொது வினைகொண்டு முடியும். உ-ம்: பாலும் சோறும் பலகாரமும் தேனும் உண்டார்கள். நால்வகை யுண்டியும் உண்டார்கள். பாலும் சோறும் தின்றார்கள் (அல்லது பருகினார்கள்) என்பது தவறு. ஒருவரைப் பல பெயர்களாற் சிறப்பித்துப் பெயர்தோறும் வினை கொடுப்பின், ஒரு வினைகொடுத்துக் கூறல் வேண்டும். உ-ம்: ஐய! வருக, அண்ணால்! வருக, அறிஞ! வருக. இங்ஙனமன்றி, ஐய! வருக, அண்ணால் அமர்க என வேறு வினை கொடுப்பின் எழுவாய் வேறுபடல் காண்க. பல தொடர்கள் ஒரு வினைகொண்டு முடியின், தனித்தனி அம் முடிபிற் கேற்றவா யிருத்தல் வேண்டும். உ-ம்: ஏசு தாம் உலக முடிவில் இங்குத் திரும்ப வருவதாகவும், தம்மை நம்பினாரெல்லாம் வீட்டைப் பெறுவாரென்றும் சொல்லிப் பரத்திற் கெழுந்தருளினார். iv. வாக்கிய முடிபு முன் முடிபு, பின் முடிபு - ‘Loose’ and ‘Periodic’ Constructions ஒரு கலப்பு வாக்கியத்தில், தலைமை வாக்கியத்தை முற்கூறுவது முன் முடிபாம்; பிற் கூறுவது பின் முடிபாம். உ-ம்: மாணிக்க நாயகர் கூறுகின்றார், மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல்லலாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றன வென்று - முன்முடிபு. மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல்லாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றனவென்று, மாணிக்க நாயகர் கூறுகின்றார் - பின்முடிபு. முன்முடிபினும் பின்முடிபே சிறப்புடைத்து. xv. வாக்கிய அளவு - Length of a Sentence ஒரு வாக்கியம் மிகக் குறிதாயும் மிக நெடிதாயு மில்லாது, வாசித்தவுடன், அல்லது வாசிக்கக் கேட்டவுடன், முழுப்பொருளும் ஒருங்கு தோன்றுமாறு ஓர் அளவா யிருத்தல் வேண்டும். ஒரு வாக்கியத்தின் பேரெல்லை பத்து வரியாயிருத்தல் நலம். xvi. வாக்கியவொருமை - Unity of Sentence ஒரு வாக்கியத்தில் ஒரு கருத்தே யிருத்தல் வேண்டும். ஒரு வாக்கியத்தில் பல (தலைமைக்) கருத்துகளிருப்பினும், ஒரே வாக்கியத்திற்கேற்ற செய்தி பல சிறு வாக்கியங்களாக எழுதப்படினும், ஒரு வாக்கியமாவது, அதன் இடைப்பிவைப்பாவது (paranthesis) மிக நெடிதா யிருப்பினும், வாக்கிய வொருமை கெடும். இதையறிந்து கடைப்பிடிக்க. xvii. ஒருபோகமைப்பு - Parallel Construction ஒரு பெரு வாக்கியத்தின் பகுதிகளான எச்சச் சொற்றொடர்களெல்லாம், ஒரே போங்கான அமைப்பாயிருப்பது ஒருபோகமைப்பாகும். உ-ம்: உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்; தாழ்ந்தோர் பிறர் குற்றங்களையே எடுத்துக் கூறுவர். இங்ஙனமன்றி, உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்; பிறர் குற்றங்களையே தாழ்ந்தோர் எடுத்துக் கூறுவர், என்பது ஒருசார் வழுவாகும். 2. பாகியமைப்பு - Stucture of Paragraph ஒரு பாகி ஒரே ஒரு குறிப்பை, அல்லது கருத்தைத் தழுவியதாய் எவ்விதத்தும் காற்றாளில் ஒரு பக்கத்திற்கு மிகாததாயிருத்தல் வேண்டும் பாகிப்பொருள் (Theme of Paragraph) முதலிலேனும் இடையிலேனும் கடையிலேனும், குறிப்பாகவேனும் வெளிப்படையாகவேனும் இருக்கலாம். முதலிலிருப்பதும் வெளிப்படையாயிருப்பதும் சிறப்பாகும். பாகிப்பொருள் பெயராய்மட்டுமல்லாது முழுவாக்கியமா யிருத்தல்வேண்டும். ஒரு பாகி ஒரு வாக்கியமாயேனும் பலவாக்கியங்களாயேனு மிருக்கலாம்; பத்துவரிக்கு மேற் பட்டதாயின் பலவாக்கியங்களா யிருத்தல் நலம். பாகியைச் சிலர் பத்தியென்பர். 3. உம்மைத்தொடர் - The Conjunction உம் எண்ணும்மை : பல சொற்கள் அல்லது சொற்றொடர்கள் உம்மைச் சொல்லால் இணைக்கப்படின் சொற்றொறும் அல்லது சொற்றொடர் தொறும் உம்மை வேண்டும். உ-ம்: அறமும் பொருளும் இன்பமும் வீடும். ஒரு வாக்கியத்தில் உம்மை யேற்று ஒரு முடிபு கொள்ளும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எல்லாம், ஒரு வடிவினவா யிருத்தல் வேண்டும். (ï§F ஒருபோகமைப்பை நினைக்க). உ-ம்: பாண்டித்துரைத் தேவர் ஓர் அரசரும் புலவரும் வள்ளலு மாயிருந்தார். ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராயும் அமைச்சராயும் புலவராயு மிருந்தார். ஆசிரியராயும் அமைச்சருமாய் என்பது தவறு. ஐயவும்மை : சிலவிடத்து உம்மைச்சொல் ஆவது (either... or) என்னும் பொருள்பட வருவதுண்டு. அங்ஙனம் வருவது ஐயவும்மையாகும். உ-ம்: புகைவண்டி முன்னும் பின்னும் போகும். முற்றும்மை : ஒருவகுப்புப் பொருள்கள் எல்லாவற்றையுங் குறிக்கும் போது உம்மை கொடுத்துக் கூறவேண்டும். உ-ம்: இருகண்ணுஞ் சிவந்தன, மூவுலகுந் தொழும் முனிவன். உம்மைத்தொகை : உயர்திணைப் பெயர்த்தொடர்கள் உம்மைத் தொகையாய் வரும்போது, இறுதியிற் பலர்பால் விகுதிபெறும். உ-ம்: கபிலபரணர், சேரசோழபாண்டியர். உயர்திணைப் பெயர்கள் உலக வழக்கில் வழங்கிவரும் இணைமொழி களாயின், இறுதியிற் பலர்பால் விகுதி பெற்றும் பெறாதும் வரும். உ-ம்: தாய்தந்தை, தாய்தந்தையர். அஃறிணைப் பெயர்கள் உம்மைத் தொகையாயின், இறுதியிற் பல வின்பால் விகுதி பெற்றதும் பெறாதும் வரும். உ-ம்: இராப்பகல், இராப்பகல்கள்; காய்கறி, காய்கறிகள். 4. வினாமரபு - Principles regarding Questioning ஒரு பொருளை வினாவும்போது, அப் பொருளைக் குறிக்குஞ் சொன்மேல் வினாவெழுத்திருத்தல் வேண்டும். உ-ம்: இராமனா வந்தான்? - ஆள் இராமன் நேற்றா வந்தான்? - காலம் ஐயமும் சினமும் பற்றிய வினாவில், முறையே சிறிதறியப்பட்ட பொருளும் உண்மைப்பொருளும் முன்னர்க் கூறப்படல் வேண்டும். உ-ம்: அது மனிதனா? மரமா? -ஐயம் நீ மனிதனா? மாடா? - சினம் ஒரு பொருளைப்பற்றி உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறைச் சொல்லும், அல்லது நன்மைச் சொல்லும் தீமைச் சொல்லும் அடுத்த வினாவாய் வரின், உடன்பாட்டுச் சொல்லும் நன்மைச் சொல்லும் முன்னர்க் கூறப்படும். உ-ம்: தமிழ்நாட்டிற்கு இந்தி வேண்டுமா? வேண்டாவா? எந்திரத்தினால் நன்மையா? தீமையா? ஒரு வாக்கியம் எந்தெந்த, என்னென்ன என்று தொடங்கினால், அதன் பிற்பகுதியும் அந்தந்த, அன்னன்ன என்று இரட்டித்திருத்தல் வேண்டும். அந்த, அன்ன என்று ஒற்றித்திருப்பது தவறு. 5. நடை - Style உரைகள் சொன்னிலையும் இலக்கணவமைதியும்பற்றிப் பலநடையாகச் சொல்லப்படும். 1. வெள்ளை நடை உ-ம்: ஒரு செலவாளி ஒரு சிக்கனக்காரனைக் கடன் கேட்டான். “Ú எப்படிக் கடனைத் தீர்ப்பாய் என்று சிக்கனக்காரன் கேட்டதற்கு, என் மாதச் சம்பளத்திலிருந்து கொஞ்சங்கொஞ்சமாய்க் கொடுத்துத் தீர்ப்பேன் என்று செலவாளி சொன்னான். 2. கொடும்புணர் நடை உ-ம்: நான்றென்காட்டின் மேய்ந்து கொண்டிருக்கையிற் கேளுங்க ளொரு கிழப்புலி பலவீனத்தாலாகாரஞ் சம்பாதிக்கக் கூடாமலோரேரிக் கரையினீராடிக் கையிற்றர்ப்பை வைத்துக் கொண்டுட்கார்ந்திருந்தது. - பஞ்சதந்திரம் 3. மணிப்பவளநடை i. தற்சம மணிப்பவளம் உ-ம்: மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரஸாதத்தாலே, க்ரமாகதமாய் வந்த அர்த்தவிசேஷங்களைப் பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி, ப்ரபந்தரூபேண உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஜ்ஞை பண்ணியருளுகிறார் - உபதேசரத்நமாலை ii. தற்பவ மணிப்பவளம் உ-ம்: பிரகிருதி மாயையினின்றுஞ் சிருட்டிமுறைபற்றிக் குணதத்துவ முதல் வைத்தெண்ணப்படும் போக்கிய தத்துவ மிருபத்துநாலுந் தோன்றும். இங்ஙனஞ் சடரூபமான விந்து மோகினி மான் மூன்றுந் தத்தங் காரியங்களைச் சிவசத்தி சங்கற்பரூப சந்நிதியினின்றுந் தோற்றுவிக்கும் - சிவஞான சித்திஉரை 4. செந்தமிழ் நடை உ-ம் கபிலரகவல் எளிய தமிழ்நடையில் இயற்றப்பட்டிருந்தல் கொண்டும், கபிலர்க்குப் பூணூல் இட ஒருப்படாத பார்ப்பனக் குழுவினர்க்கு அறிவு தெருட்டல் வேண்டிச் சிறுபிள்ளையாயிருந்த கபிலர் இதனைச் செய்தார் என வழங்குங் கதை நம்பத்தகாததா யிருத்தல் கொண்டும், இது கபிலராற் செய்யப்பட்ட தன்றென்றும், இஃதொரு கட்டுநூல் என்றுங் கூறினாருமுளர். இக் கபிலரகவல் இயற்றப்பட்டதற்குக் காரணங் கூறுங் கதை நம்பத்தகாததுபற்றி இந் நூலையே கட்டுநூலென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லாதார் கூற்றாகும் - ஆசிரியர் மறைமறையடிகள் 5. கொடுந்தமிழ்நடை - திசைச்சொல் நிரம்பி வருவது உ-ம்: நேற்று நீன் இருந்த இலக்கிலே ஓர் இளவட்டம் நின்று கொண்டிருந்தான். 6. கொச்சை நடை - Barbarism உ-ம்: அவங்க வூட்டுக்குப் போகச்சே நல்லா விடுஞ்சு போச்சு. 7. செய்யுள் நடை அல்லது எதுகை நடை உ-ம்: அவளும் உடன்பிறந்து, உடன் வளர்ந்து, நீர் உடனாடிச் சீர் உடன் பெருகி, ஓல் உடனாட்டப் பால் உடனுண்டு, பல்உடனெ ழுந்து, சொல் உடன்கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார், பற் பன்னூறாயிரவர் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதன் மகளிர் தற்சூழத் தாரகை நடுவண் தண்மதிபோலச் செல்வாளென்பது முடிந்தது. - இறையனாரகப் பொருளுரை 8. இலக்கிய நடை உ-ம்: ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து, நஞ்சுண்டு சாவலென்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டிவைத்து, விலக்குவாரில்லாத போழ்துண்பலென்று நின்றவிடத்து, அருளுடையானொருவன் அதனைக் கண்டு ..... அவளைக் காணாமே கொண்டுபோ யுகுத்திட்டான். அவளுஞ் சனநீக்கத்துத்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள் அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக் களவினான் அவளை உய்யக்கொண்டமையான் நல்லுழிச் செல்லும் என்பது. - இறையனாரகப் பொருளுரை கொடும்புணர், தற்சம மணிப்பவளம், கொச்சை என்னும் இம்மூன்று நடைகளும் வியாசத்திற் கேலா. கொடுந்தமிழ் நடை அதற்குரிய திசைக்கு அல்லது நாட்டிற்கு ஏற்கும். எதுகை நடையும் இலக்கிய நடையும் தமிழறவு சிறந்தாரால் தழுவப்படுவன. 6. வழக்கியல் i. தகுதிவழக்கு (Euphemism & Conventional Terms) இதை இலக்கண நூல்களுட் கண்டுகொள்க. ii. திசை வழக்கு - Provincialism சில பொருள்கட்கு வெவ்வேறு திசைகளில், அல்லது இடங்களில், வெவ்வேறு சொற்கள் அல்லது சொற்றொடர்கள் வழங்கி வருகின்றன. அவ்வவ்விடங்களில் அவ்வவ் வழக்கையே தழுவல் வேண்டும். உ-ம். நெல்லை காணாமற் போயிற்று பதநீர் தஞ்சை கெட்டுப் போயிற்று பதநீர் சென்னை காணாமற் போயிற்று பனஞ்சாறு வடார்க்காடு தாரைவார்த்து போயிற்று தெளிவு iii. இழிவழக்கு - Slang Usage பெண்சாதி, வெஞ்சனம், மச்சான், அடித்துக் கொளுத்திவிட்டான், வெளுத்துவாரிவிட்டான், அலசிவிட்டான், கம்பியை நீட்டிவிட்டான், அந்தப் பருப்பு இங்கே வேகாது முதலிய இழிவழக்குச் சொற்களையும் சொற்றொடர்களையும் விலக்கல் வேண்டும். iv. அயல் வழக்கு - Foreign Idioms சில மாணவரும் பெரியோரும் ஆங்கில வழக்கைத் தழுவித் தமிழ் பேசுகின்றனர். தமிழுக் கொவ்வாத இடமெல்லாம் அது வழுவாகும். பிழை திருத்தம் விளையாட்டில் நன்றாய்ச் விளையாட்டு நன்றாய் செய்தார்கள். விளையாடினார்கள். அப்பியாசம் எடுக்கவேண்டும் அப்பியாசம் செய்யவேண்டும். எல்லாரும் இக் கொண்டாட்டத்திற் எல்லாரும் இக் கொண்டாட் பங்கெடுக்க வேண்டும். டத்திற் சேரவேண்டும். 7. நிறுத்தக் குறிகள் - Punctuation நிறுத்தக் குறிகளின்றி எழுதல் கூடாது. 1. காற்புள்ளி - (Comma) வருமிடங்களாவன: i. பொருள்களை எண்ணல் உ-ம்: அறம், பொருள், இன்பம், வீடு ii. ஓரெழுவாய்ப் பயனிலைகள் உ-ம்: கந்தன் வந்தான், இருந்தான், எழுந்தான், சென்றான். iii. எச்சச் சொற்றொடர் உ-ம்: வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத் தாகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவ தல்லது, இலக்கண வகையாற் கூறப்படாது. iv. விலாசப் பெயர்கள் உ-ம்: கனம் வாட்சன் அவர்கள், B.A. (Hons.), மானேஜர், பிஷப் ஹீபர் உயர்தரப் பாடசாலை, புத்தூர், திருச்சிராப்பள்ளி v. பட்டப் பெயரிடையீடு உ-ம்: கனம் தியோடர் சாமுவேல் அவர்கள், M.A., L.T. vi. எண் தானம் உ-ம்: 1,00,000. vii.உதாரணம். உ-ம்: உண்ட, உண்கின்ற, உண்ணும். viii. இணைப்புச் சொற்கள் - Conjunctions. உ-ம்: அவற்றுள், ஆனால், ix. திருமுக விளி உ-ம்: ஐயா, x. இணைமொழிகள் உ-ம்: நல்லவன் கெட்டவன், செல்வன் ஏழை, இளைஞன் முதியன் என்று பாராதவன். xi. நெடுந்தொடரெழுவாய். உ-ம்: செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு புலவர், வடசொல் வழங்குவதற்கோர் காரணம் வேண்டும். xii. இடைப்பிறவரல் (இங்கு முன்னும் பின்னும் குறிவரும்) உ-ம்: அரசன், எப்படியிருந்தபோதிலும், மனிதன்தானே. xiii. மறுத்துக்கூறும் வாக்கியப்பகுதி. உ-ம்: அது அறியாமையன்று, கவலையீனமே. xiv. வாக்கிய வுறுப்பாய் வரும் மேற்கோள். உ-ம்: அன்பே சிவம் என்றார் திருமூலர். குறிப்பு: காற்புள்ளி இருக்குமிடத்துப் புணர்ச்சியிராது; புணர்ச்சி யிருப்பின் காற்புள்ளி யிராது. 2. அரைப்புள்ளி (Semi colon) வருமிடங்களாவன:- i. ஒரே யெழுவாயின் பல வினைக்குறை வாக்கியங்கள். உ-ம்: இயந்திரம் உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கிறது; இடம் பெயர்விக்கிறது; போர் செய்கிறது; இன்னும் எத்துணையோ வினைகளைச் செய்கிறது. ii. ஒப்புநோக்காய் வரும் புணர்வாக்கியம். உ-ம்: அறிவுடையோர் அமைந்திருப்பர்; அறிவிலிகள் ஆரவாரிப்பர். 3. முக்காற்புள்ளி (Colon) வருமிடங்களாவன: i. தலைப்பு உ-ம்: சார்பெழுத்து: ii. அதிகார எண் உ-ம்: மத்தேயு 8:6 iii. தன் விலாசத்தில் நகர்ப்பெயர். உ-ம்: எடின்பரோ: 339, ஹைரோடு. iv. ஒப்புநோக்காய் வரும் பெரும்புணர் வாக்கியம் உ-ம்: கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்; செல்வமோ வெள்ளத்தாலழியும்; நெருப்பால் வேகும்; திருடரால் திருடப்படும்; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும். 4. முற்றுப்புள்ளி (Full Stop) வருமிடங்களாவன: i. வாக்கிய முடிவு. ii. விலாச முடிவு. iii. வாக்கியவுறுப்பாய் வராத மேற்கோண் முடிவு. iv. தலைப்பு. v. சொற்குறுக்கம் - Abbreviation. c-«: ».K.,S.M. மல்லையா B.A., B.L. vi. பிரிவும் மணியும் குறிக்கும் எண். c-«: 1., 2.30 (2 1/2 மணி) vii. கையெழுத்து. உ-ம்: T.G நாகலிங்கம் பிள்ளை. viii. தனித்து நிற்குஞ் சொல். 5. வினாக்குறி - Note of Interrogation ஒரு வினா வாக்கியம் முற்றுவாக்கியமாயும் தற்கூற்று (Direct Narration) வாக்கியமாயுமிருப்பின், இறுதியில் வினாக்குறி பெறும்; அயற்கூற்று (Indirect Narration) வாக்கியமாயும் புணர்ச்சி பெற்றதாயுமிருப்பின் வினாக்குறிபெறாது. உ-ம்: i. அது என்ன?, நீ வருகிறாயா? என்று கேட்டான். ii. நான் வருவேனாவென்று கேட்டான்., நீ வருகிறாயாவென்று கேட்டான். 6. வியப்புக்குறி - Note of Exclamation வியப்பு வாக்கியமும் வினாவாக்கியம்போன்று, முற்றுவாக்கியமாயும் தற்கூற்று வாக்கியமாயு மிருப்பின் வியப்புக்குறி பெறும்; புணர்ச்சிபெறின் வியப்புக்குறி பெறாது. (வியப்புக்குறியே விளிக்குறியும்.) உ-ம்: என்னே இதன் பெருமை!, ``என்னே இதன் பெருமை! என்றான். என்னே யிதன் பெருமை யென்றான. 7. மேற்கோட் குறி - Quotation Marks or Inverted Commas இரட்டைக்குறி வருமிடமாவன: i. தற்கூற்று. உ-ம்: நான் வருவேன் என்றான். ii. மேற்கோள். உ-ம்: ஒழுக்கமுடைமை குடிமை, என்றார் திருவள்ளுவர். ஒற்றைக்குறி வருமிடமாவன: தற்சுட்டு (ஓர் எழுத்து அல்லது சொல் அல்லது சொற்றொடர் தன்னையே குறித்தல்). உ-ம்: எ, பேடு. ii. வாய்பாடு. உ-ம்: செய்யும்,தான iii. சிறப்புக் குறியீடு உ-ம்: வடக்கிருத்தல் iv. மேற்கோட்குள் மேற்கோள். உ-ம்: இயேசு ஜனங்களை நோக்கி, ஆயக்காரன் ஆலயத்திற்கு வெளியே நின்று,தேவனே பாவியாகிய என்மீது இரக்கமாயிரும் என்றான் என்றார். v. பழமொழி. உ-ம். நூறுநாள் ஒதி ஆறுநாள் விடத் தீரும். குறிப்பு:- மேற்கோட்குறி யிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது. 8. பிறைக்கோடு - Brackets ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன: i. மொழியெர்ப்பு. உ-ம்: கட்டி (Solid) ப்பொருள். ii. பொருள் கூறல். உ-ம்: பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன். iii. விளக்கம். உ-ம்: நிலைமொழி (அதாவது முதலிலே நிற்கின்ற மொழி). iv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல். உ-ம்: ஒருவன் பிறரிடத்தில் (முக்கியமாய் எளியவரிடத்தில்) இன்சொல்லாற் பேசவேண்டும். v. எண் (சிறுபிரிவு) உ-ம்: (1) vi. பாடபேதம். உ-ம்: கண்டது கற்கப் பண்டிதனாவான் (or ஆகான்). vii. உரையிற் சொல் வருவித்தல். உ-ம்: கல்லிடை - (இமய)மலையில். viii. எழுத்தாளர் குறிப்பு. உ-ம்: பாண்டியன் என்னும் பெயர் பாண்டு என்னும் பெயரி னின்றும் பிறந்தது (பாண்டியன் என்பது வடசொல்லென மயங்கினர்போலும் )- கால்டுவெல். இரட்டைப்பிறைக்கோடு (Double Brackets) வருமிடம்: பலவரிப் பொதுமை. உ-ம்: சாத்தனது கருமை பண்புத்தற்கிழமை. சாத்தனது வரவு } பகர அடைப்பு (Large Bracket) வருமிடம்:- i. வரிக்கு மிஞ்சிய பகுதி. உ-ம்: ஒருமையுடன் நினதுதிருவடிதன்னை நினைக்கின்ற உத்தமர்தம் (உறவு வேண்டும். ii. பிறைக்கோட்டை உட்கோடல் உ-ம்: (இங்குச் சாரியை (சார் + இயை) என்பது இரு சொற்களைச் சார்ந்து இசைக்கும் அசை) குறிப்பு:- மொழிபெயர்ப்பு, பொருள்கூறல், விளக்கம் என்னும் மூவிடத்தும், பிறைக்கோட்டுச் சொற் சொற்றொடர் இயன்றவரை, தான் குறிக்குஞ் சொற் சொற்றொடரின் வடிவிலிருத்தல் வேண்டும். 9. இடைப்பிறவைப்புக்குறி - Parantheses or Double Dashes உ-ம். ஐயா! உங்களைக் கண்டபோது - உண்மையைச் சொல்லுகிறேன் - எனக்கு அடையாளமே தெரியவில்லை. 10. இடைக்கோடு (Dash) வருமிடங்களாவன : i. தலைப்பு. உ-ம்: பெயர்ச்சொல் ii. தலைப்பு மொழிபெயர்ப்பு. உ-ம்: எழுத்தியல் - Orthography. iii. எண்ணியிடையீடு: (கணித அளவையிலும் காலக்கணக்கிலும்) உ-ம்: ரூ. 12-10-3, 24-9-1934. iv. சொற்றிரிபு குறித்தல். உ-ம்: முன்னில் - முன்றில் - முற்றம். v. வினா. உ-ம்: வெருவு, நீர்மை, கடமா - பொருள்தருக. vi. இலக்கணங் கூறல். உ-ம்: கொல்களிறு - வினைத்தொகை. vii. பொருள் கூறல். உ-ம்: விளித்தல் - அழைத்தல். viii. தன் கருத்துரைத்தல். உ-ம்: இத்தாலியர் ஆயிரக்கணக்கான எத்தியோப்பியரை நச்சுக் காற்றாற் கொன்றனர் - என்ன அநியாயம்! ix. இடைநிறுத்தம் அல்லது சடுதியான கருத்துமாற்றம். உ-ம்: என் தந்தையார்மட்டு மிருந்திருந்தால் - அதையின்று சொல்லி என்னபயன்? x. தொகுத்துக் கூறல். உ-ம்: மாணவர், ஆசிரியர், சேவகர், அலுவலாளர் - எல்லா வகுப்பாரும் வந்திருந்தார்கள். xi. இடையளவு உ-ம்: அதிகாரம் 8 - 10 11. வரலாற்றுக் குறி உ-ம்: மிக்கோன் உலகளந்த வரலாறு:- ஊறு (ஸ்பரிசம் ) எண்வகைப்படும. அவையாவன:- 12. தொகைக்குறி - Apostrophe. உ-ம்: 8-10, 35. 13.மேற்படிக்குறி உ-ம்: பாடம் படித்தான் 2-ம் வேற்றுமைத் தொகை. பாடத்தைப் படித்தான் 2-ம் வேற்றுமைத் விரி. 14. விடுபாட்டுக்குறி ஒரு மேற்கோளில், வேண்டாத பகுதி விடப்படும். அது ஒரு புள்ளி வரிசையாலாவது உடுக்குறி வரிசையாலாவது குறிக்கப்படும். உ-ம்: அகரமுதல...... உலகு 8. தற்கூற்று, அயற்கூற்று - Direct and Indirect Speech ஒருவர் கூற்றை அவர் கூறியபடியே தன்மையிடத்திற் கேற்பக் கூறுவது தற்கூற்றாகும். அதைப் பொருள் மாற்றாது சொன்மாற்றிப் படர்க்கை யிடத்திற்கேற்பக் கூறுவது அயற்கூற்றாகும். தமிழில் தற்கூற்றே அயற்கூற்றினும் பெருவழக்காய் வழங்கும். தற்கூற்று என்றான்,என்று சொன்னான், எனச் சொன்னான் என்பன போன்ற சொற் சொற்றொடர்களாலும், அயற்கூற்று ஆகச் சொன்னான் என்பது போன்ற தொடராலும் முடிக்கப்படும். உ-ம்: அவன் நான் வருவேன் என்றான் - தற்கூற்று. அவன் தான் வருவதாகச் சொன்னான் - அயற்கூற்று. தற்கூற்று வாக்கியம் எழுவாயோடு தொடங்கி என்றான் என்று முடிவது இயல்பு. கூற்றுக்கு முன் சொன்னான் என்னுஞ் சொல்லை நிறுத்தி முன் முடிபு வாக்கியமாகக் கூறின், என்று என்னும் சொல் இறுதியில் நிற்றல் வேண்டும். தற்கூற்று சொன்னதாவது என்னுந் தொடர்க்குப் பின் வரின் என்பது என்னுஞ் சொல்லால் முடிதல்வேண்டும். தற்கூற்றில் மேற்கோட்குறி யிருப்பினும் இராவிடினும், என்று அல்லது என்பது என்னும் இணைப்புச் சொல் இன்றியமையாததாகும். இராமன் சொன்னான், நான் வருவேன் என்று ஆங்கிலத்திற் போலெழுதல் வழுவாகும். இராமன் சொன்னதாவது நான் வருவேன், என்பது, என்னும் முடிபினும், இராமன் நான் வருவேன் என்று சொன்னான், என்னும் முடிபே இயல்பும் இனிதுமாகும். ஓர் உரையாட்டிலுள்ள கூற்றுகளை முடிபுச் சொற்களின்றி மாறி மாறி யெழுதுவது நூனடையே யன்றி மாணவர் வியாசநடையன்று. 9. மரபு - Idiom பொருள்கட்குச் சான்றோர் தொன்றுதொட்டு வழங்கி வரும் சொற்களையே வழங்குதல் மரபாகும். மரபு தவறின் வழுவாம். பிழை திருத்தம் கம்பவைக்கோல் கம்பந்தட்டை நண்டுக்குட்டி நண்டுக்குஞ்சி 10. இணைமொழிகள் - Words in Pairs பெருவழக்கானவும் வழக்கற்றனவுமான இணைமொழிகள் இங்குக் கூறப்பட்டில. அகட விகடம், அக்குத் தொக்கு, அந்தியும் சந்தியும், அருமை பெருமை, அருவுரு, அல்லும் பகலும், அழுகையுங் கண்ணீரும், அறம் மறம், ஆடல் பாடல், ஆடை அணி, ஆண்டான் அடிமை, ஆதியந்தம், ஆய்ந்து ஓய்ந்து, இண்டு இடுக்கு, இயங்குதிணை நிலைத்திணை, இயலும் செயலும், இளைத்துக் களைத்து, ஈகையிரக்கம், ஈடும் எடுப்பும், உடை நடை, உண்டு உடுத்து, உருட்டும் புரட்டும், உருண்டு திரண்டு, உருவும் திருவும், உள்ளது உரியது, உற்றார் உறவினர், ஏடாகோடம், ஒட்டி உலர்ந்து, ஒப்பு உயர்வு, கங்கு கரை, கட்ட நட்டம், கட்ட நிட்டூரம், கண்டது கேட்டது, கண்ட துண்டம், கண்ணீரும் கம்பலையும், கரடு முரடு, கல்லும் கரம்பும், கல்வி கேள்வி, கள்ளம் கவடு, கனவோ நனவோ, குணம் குறி, குலமுங் குணமும், குறுக்கும் மறுக்கும், குறுக்கும் நெடுக்கும், குற்ற நற்றம், கேளுங் கிளையும், கொடி கோத்திரம், கொத்தடிமை குலவடிமை, கொள்வனை கொடுப்பனை, கோள் குண்டுணி, சட்டதிட்டம், சந்தி சதுக்கம், சிவமுஞ் சத்தியும், சின்ன பின்னம், சீதனம் சீராட்டு, சீரும் சிறப்பும், சீராட்டிப் பாராட்டி, சீறிச் சினந்து, சுகதுக்கம், சுற்றும் முற்றும், தடுத்து மடுத்து, தட்டாமல் தடுக்காமல், தட்டாமல் முட்டாமல், தாங்கித் தடுக்கி, தாயும் சேயும், தாரதம்மியம், தாவர சங்கமம், திருகல் முறுகல்; துணிமணி, துதி தோத்திரம், தேக்கித் தெவிட்டி, தோட்டம் துரவு, நகை நட்டு, நயபயம், நரை திரை, நலம் பொலம், நல்லது பொல்லது, நல்லார் பொல்லார், நாடு நகர், நாட்டிலும் காட்டிலும், நாயும் பேயும், நாளுங் கிழமையும், நாளுங் கோளும், நிரந்து கலந்து, நைய்ந்து பிய்ந்து, நொண்டி சண்டி, நொண்டி நுடம், நோய் நொம்பலம், பட்டி தொட்டி, பயறு பச்சை, பயிர் பச்சை, பழக்க வழக்கம், பாங்கு பரிசனை, பாமரர் பண்டிதர், பாவபுண்ணியம், பாலுந்தேனும், பூர்வோத்தரம், பெற்றது பிறந்தது, பேரும் புகழும், பொட்டுப்பொடி, பொய்யும் புலையும், போக்குப்புகல், போற்றிப் புகழ்ந்து, மட்டு மிதம், மண்மனை, மந்திர தந்திரம், மயக்கம் தியக்கம், முட்டி மோதி, முத்தி மோந்து, முள்ளும் முருக்கும், முற்ற முடிய, வந்தனை வழிபாடு, வம்பு தும்பு, வற்றி வறண்டு, வாடி வதங்கி, வாய்க்கால் வரப்பு, வாரி வகிர்ந்து, வாழ்வு தாழ்வு, வானகமும் வையகமும், விண்ணும் மண்ணும், விதிவிலக்கு, விருந்து வேற்று, விருப்பு வெறுப்பு, வீரசூரம், வெட்கி விறைத்து, வேரும் தூரும், வேர்த்துப் பூத்து. தாட் பூட், லொட்டு லொசுக்கு முதலியவை இழிவழக்காம். 11. தொடர்மொழிகள் - Idiomatic Phrases and Expressions அகப்பற்றுப் புறப்பற்றுகளை அறவே ஒழித்து, அகண்ட பரிபூரண சச்சிதானந்தப் பிழம்பாகிய, அகத்து மகிழ்ச்சி முகத்து நிகழ்ச்சியாக, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, அஞ்சினவனொழிய மிஞ்சின வனில்லை, அடிதண்டம் பிடிதண்டம், அடிதலை தடுமாற்றம், அடிமுதல் முடிவரை, அடிமை முதல் அரசன்வரை, அடியற்ற மரம்போல் படிமேல் விழுந்து, அண்டபிண்ட அகில சராசரங்கள், அமிழ்தினு மினிய தமிழ்மொழி, அரிதுணர் பொருளவற்றை எளிதுணர் பொருள வாக்கி, அரைக்காசிற்கும் வழியில்லாத அட்ட தரித்திரம், அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாய், அறம் பொருளின்பம் வீடு, அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி, அன்பு அருள் வாய்மை, அடக்கம் முதலிய நற்குணங்களை யுடையராய், அன்புள்ள அரசனும் அறிவுள்ள அமைச்சனும்; ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய், ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் அசுவதாட்டியாகப் பாடக்கூடிய, ஆசைகாட்டி மோசஞ் செய்து, ஆடையாபரணாலங்கிருதனாய், ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி, ஆணவம் மாயை காமியங்கள், ஆண்டில் இளையராய் அறிவில் முதியராய்,ஆயிரம் பிறை கண்டவர், ஆலமுண்ட நீலகண்டன், ஆளுக்கேற்ற வேடம் காலத்திற் கேற்ற கோலம், ஆனந்தக் கடலில் ஆழ்ந்து or அமிழ்ந்து; இகபர சுகங்கள், இடம் பொருளேவல், இட்டது சட்டம் வைத்தது வரிசை, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பதாய், இயன்றவரை முயன்று, இருகையினு மேந்திச் சிரசில் தாங்கிக் கண்ணிலொற்றி, இருபகட் டொரு சகடு, இருவினையொப்பு மலபரிபாகம், இலை மறை காய் போல், இளமையிலேயே இலக்கண விலக்கிய சித்தாந்தங்களையெல்லாம் முற்றுக் கற்று, இறைவனுக்கே வெளிச்சம், இன்னோரன்ன; ஈர்ங்கை விதிராத உலோபி; உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து, உபகாரம் செய்தவனுக்கு அபகாரஞ் செய்யாமல், உப்புக் குழையாமல், உயிர் ஒடுங்கி உடல் நடுங்கி, உயிருக்குயிராய், உரப்பியுங் கனைத்தும் எடுத்தும் ஒலிக்கின்ற (வடமொழி யெழுத்துகள்), உலக வழக்குச் செய்யுள் வழக்கு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, உவர்க்கடலன்ன செல்வர், உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணி, உள்ளும் புறமும் ஒத்து, உற்று நோக்கி ஊகித்தறிந்து; ஊணுறக்க மொழிந்து, ஊராருடைமைக்குப் பேராசை கொண்டு, ஊருக்குழைத்து ஊதாரித்தனமாய்; எடுத்த காரியம் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டு, எடுப்பார் கைப்பிள்ளையாய், எட்டிரண்டு மறியாத, எண்சாணுடம்பு ஒரு சாணாகக் குன்றி, எண்ணுக்குமெட்டா ஈசன், எந்நாட்டினு மினிய தென்னாட்டில், எல்லார்க்கும் நல்லவனாய், எல்லாம் வல்ல இறைவன்; ஏராளமாயும் தாராளமாயும், ஏற இறங்கப் பார்த்து, ஏனோதானோ என்றிராமல், ஐயந்திரிபறக் கற்று; கடல்மடை திறந்தாற் போலக் கவிபாடவல்லவராய், கட்டியணைத்து உச்சிமோந்து, கணக்கு வழக்கின்றி, கண்கவர் கவின்பெறு கட்டடம், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, கண்ணீர் வார மெய்ம்மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்விட்டுக் கதறியழுது, கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக் குயிராகவும், கண்ணைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டது, கண்மணிபோற் காத்து, கந்த மூல பலாதிகள், கயல்விழியுங் குயின்மொழியும்,கரிபரி தேர்கால், கல்வி யறிவொழுக்கங்களிற் சிறந்து, கற்றோர்க்கே யன்றி மற்றோர்க்கு விளங்காமல்; காடிடையிட்டும் நாடிடையிட்டும், காடு வாவாவென வீடு போபோவென, காமவெகுளி மயக்கங்கள், காரியத்திற் கண்ணுங் கருத்துமா யிருந்து, காலாலிட்டதைக் கையாற்செய்து, காற்றினுங் கடுகிச் சென்று; குடிக்கக் கூழுக்கும் கட்டக் கந்தைக்கும் வழியற்று, குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர், குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும், குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டு, கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும், கைகட்டி வாய்புதைத்து, கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல், வாய்க்கெட்டினது வயிற்றுக் கெட்டாமல், கைம்மாறு கருதாமல், கொடாக் கண்டனுக்கு விடாக்கண்டன், கொடியாரை நீக்கி அடியாரைக் காத்து, கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே தமியராய், கோடானுகோடிச் சூரியச் பிரகாசமுள்ள; சந்தன களப கஸ்தூரி, சம்பளமும் உம்பளமும் பெற்று, சாங்கோ பாங்கமாய், சாதுரியமாயும் மாதுரியமாயும், சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், சிறுகக்கட்டிப் பெருக வாழ்ந்து, சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினர், சுருதியுக்தி யனுபவங்கட்குப் பொருந்த, சுவையொளி யூறோசை நாற்றம், செய்வனசெய்து தவிர்ப்பன தவிர்த்து, சொற்சுருக்கம் பொருட்பெருக்கம், சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து, சொற்புத்தியும் சுயபுத்தியும் இல்லாமல், சொன்னயம் பொருணயம், சொன்னோக்கும் பொருணோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும், சோற்றுக்குச் செலவும் பூமிக்குப் பாரமுமாய்; தட்டுத்தடையின்றித் தாராளமாய்ப் பேசும்வன்மை, தட்டுக்கெட்டுத் தடு மாறி; தட்பவெப்பநிலை (சீதோஷ்ண ஸ்திதி), தமிழ்நாடுசெய்த தவப்பயனாகத் தோன்றி, தருமஞ்செய்யக் கருமமாயிற்றேயென்று, தலையுங் காலும் தெரியாது தம்முள்மயங்கி, தளர்நடை நடந்து மழலை மொழிந்து, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், தனுகரண புவன போகங்கள், தன்னுயிர் போல் மன்னுயி ரெண்ணும் தனிவள்ளல், தான்றோன்றித் தம்பிரான்; துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம், துள்ளித் திரிகின்ற காலத்தில் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வையாமல், தூப தீப நைவேத்தியங்கள்; தெற்கு வடக்குத் தெரியாமல், தென்றல் வீசித் தேன் சொரிந்து வண்டுபாடும் வளமரக்கா, தேனினுமினிய தென்மொழி, தொகை வகை விரி, தொல்காப்பியத்திற் பல்காற் பயின்று,தொல்காப்பியத்தும் தொல்காப்பியத்தும் பல்காற் பயின்று, தோற்றம் நடுவிறுதி; நடை யுடை பாவனை, நலிந்தும் வலிந்தும் பொருள் கொண்டு, நாஸ்திகம் பேசி நாத்தழும் பேறி, நாத்தளர்ந்து வாய் குழறி, நாநயமும் நாணயமும், நால்வேதம் ஆறு சாஸ்திரம் பதினெண் புராணம் அறுபத்து நான்கு கலைஞானம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், நாளைக்கொரு திறமும் வேளைக்கொரு நிறமும், நிலம் நீர் தீ வளி வெளி, நீர் சூழ்ந்த நில வுலகம், நீர் வளம் நில வளம் பொருந்திய; நுண்மாண் நுழைபுலம்; நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி, நெற்றியின் வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு; பகை நட்பு அயலென்னும் முத்திறத்தும் ஒத்து, படை நாலும் புடைசூழ, படைப்புக்காப்பழிப்பு, பட்ட பாடும் கெட்ட கேடும், பட்டி மாடுபோற் கட்டுக் காவலின்றிச் சுற்றித் திரிந்து, பருத்த மேனியும் கருத்த கண்களும், பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி, பார்த்த கண்ணும் பூத்துப்போய்; பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு; புலியும் மானும் ஒரு துறை யுண்ண, புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை; மணி மந்திர மருந்துகள், மயிலாடக் குயில்பாட மணங்கமழும் மலர்ச்சோலை, மலையிலக்கு, மனமொழி மெய்கள், மனோவாக்குக் காயங்கள், மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணி; மாடமாளிகை கூடகோபுரம்; வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவராய், வழி துறை தெரியாமல், வாசா கைங்கரியம், வாழையடி வாழையாய், வாழ்நாளை வீணாளாகக் கழித்து, வானுற வோங்கி வளம்பெற வளர்ந்து, வானோர் புகழ மண்ணோர் மகிழ, விதித்தன செய்து விலக்கியன ஒழித்து, விலாப் புடைக்க வுண்டு; வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாய், வெண்சாமரை வீசி ஆலவட்டம் பரிமாறி, வெள்ளிடைமலை, வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் தெரியும், வெறுவாய்ச்சொல் வீரர், வேதாகம புராணேதிகாசங்கள். IV அணியியல் - Rhetoric உரைகளை அழகாகவும் பொருள்வலியோடும் உரைப்பதும் எழுதுவதும் அணியாகும். அது சொல்லணி பொருளணி என இருவகைப்படும். I. சொல்லணி- Figures of Speech relating to sound (1) மோனை, (2) எதுகை, (3) மடக்கு - இவற்றை இலக்கண நூல்களுள் கண்டுகொள்க. II. பொருளணி - Figures of Speech relating to Sense (1) தன்மை, (2) உவமை, (3) உருவகம், (4) வேற்றுமை - இவற்றை இலக்கண நூல்களுள் கண்டுகொள்க. (5) முரண் அணி. பொருள்களை முரண் (மாறுபாடு) படக் கூறுவது முரண் அணியாம் அது மூவகைப்படும். i. எதிர்நிலை முரண் - Oxymoron உ-ம்: மெய்யானபொய், இது அதினும் சிறிது பெரிது. ii. ஒரு பொருள் முரண் - Epigram உ-ம்: அவன் ஆண்டில் இளைஞன், அறிவில் முதியன். iii. இருபொருள் முரண் - Antithesis உ-ம்: காலையு மாலையுங் கைகூப்பிக் கால்தொழுதல். (6) உயர்வுநவிற்சி, (7) பலபடப்புனைவு, (8) வஞ்சகப்புகழ்ச்சி, (9) தற்குறிப் பேற்றம், (10) சுவை , (11) வேற்றுப்பொருள் வைப்பு. இவற்றை இலக்கண நூல்களுள் கண்டு கொள்க. (12) நிகழ்ச்சியணி - Vision ஓர் இறந்தகால அல்லது எதிர்கால நிகழ்ச்சியை, இன்று நிகழ்வது போலக் கூறுவது நிகழ்ச்சியணியாம். உ-ம்: கெத்செமனேயில் இயேசு சீடர்களைவிட்டுத் தனித்துச் செபம் பண்ணுகிறார். சீடர்கள் தூங்குகிறார்கள். இயேசு அவர்களைத் தட்டி எழுப்புகிறார். ஒரு பெரிய பகைக்கூட்டம் வருகிறது. யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான். பகைவர் இயேசுவைப் பிடிக்கிறார்கள். (13) ஆட்படையணி - Personification. ஓர் அஃறிணைப்பொருளை உயர்திணையாகக் கூறுவது ஆட்படை பணியாம். உ-ம்: கதிரவன் மேலைக்கடலில் ஆழ்ந்தான். இறந்தோரையும் பிரிந்தோரையும், உயிரற்ற பொருள்களையும் கருத்துகளையும், விளிப்பது விளியணி (Apostrophe) யாம். உ-ம்: மரணமே! உன் கூர் எங்கே?”- புதிய ஏற்பாடு. (14) ஏற்றவணி - Climax பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று மேலாகக் கூறுவது ஏற்றவணியாம். உ-ம்: இலக்கணமும் இலக்கியமும் சேர்ந்தது இயற்றமிழ்; அதனொடு இராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ்; அதனொடு அபிநயமும் ஆட்டமும் சேர்ந்தது நாடகத்தமிழ். (15) இறக்கவணி - Anticlimax or Bathos பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று கீழாகக் கூறுவது இறக்கவணியாம். உ-ம்: ஒரு நன்மையைப் பெரியோர் சொல்லாமற் செய்வர்; சிறியோர் சொல்லிச் செய்வர்; கீழ்மக்கள் சொல்லியுஞ் செய்யார். (16) ஒலியணி - On - Om - a- to - Poe- ia. சொற்களின் ஒலியினால் அச்சம், வெகுளி முதலிய சுவை (ரசம்) தோன்றக் கூறுவது ஒலியணியாம். உ-ம்: உலகமெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கும்படி ஓர் இடி முழங்கிற்று. V வியாச வியல் - Essay Writing 1. கடிதமெழுதல் - Letter - Writing கடிதப் பகுதிகள்: (1) இருக்கையும் தேதியும் இருக்கையும் தேதியும் சாதாரணக் கடிதத்தில் வலப்புறம் மேலும், விண்ணப்ப மனுக்களில் இடப்புற அடியிலும் குறிக்கப் படல் வேண்டும். (2) முகவுரை விண்ணப்பத்திலும் மனுவிலும், தலைப்பில் இன்னாரிடமிருந்து இன்னாருக்கு என்று, முகவரி (address) யுடன் எழுதுவது முகவுரையாகும். இது சாதாரணக் கடிதத்திற்கு வேண்டுவதன்று. (3) விளி - Address or Salutation. கடிதம் பெறுவாரைச் செய்தியறிவிக்கு முன் விளிப்பது விளியாகும். உ-ம்: ஒருமை உயர்வுப்பன்மை பன்மை நண்ப, நண்பரீர், நண்பர்காள், ஐய, ஐயரீர், ஐயன்மீர், அன்பு குறித்தற்கு அருமை, அன்பார்ந்த என்னும் அடைகளையும் வணக்கங் குறித்தற்குக் கனம், கனம் பொருந்திய என்னும் அடைகளையும் விளிப்பெயர்க்கு முன் சேர்த்தல் வேண்டும். கனம் பொருந்திய ஐயா, என்று விளி முறையிலும், கனம் பொருந்திய ஐயாவுக்கு எழுதுவது என்று முகவுரை முறையிலும், கடிதங்களை இரு வகையாய்த் தொடங்கலாம். (4) செய்தி - Body of the Letter அறிவிக்கப்படவேண்டிய செய்தி, அளவிற்கும் பொருளுக்குந் தக்கபடி, ஒரு பாகியாய் அல்லது பல பாகிகளா யிருக்கலாம். (5) முடிப்பு - Subscription செய்தியின் கீழ் வலப்புறத்தில், தங்களின் தாழ்மையுள்ள, தங்களின் வணக்கமுள்ள, தங்களின் கீழ்ப்படிதலுள்ள, தங்களின் உண்மையுள்ள, தங்களின் அன்பான என்னும் தொடர்களில் ஏற்றதொன்று எழுதப்படலாம். இனத்தார்க் கெழுதியதாயின், எழுதுவார் தம் இனமுறையையுங் குறிக்கலாம். கீழோர்க் கெழுதியதாயின், வெறுமையாய் இங்ஙனம் என்று குறித்தால் போதும். (6) கையெழுத்து - Signature முடிப்பின் கீழ்க் கையெழுத்திருத்தல் வேண்டும். (7) முகவரி அல்லது விலாசம் - Direction or Superscription கடிதத்தின் மறுபுறத்திலாவது, கடிதக் கூட்டின் (cover) மேற்புறத்திலாவது, கடிதம் பெறுவாரின் முழு விலாசமும் எழுதப்படல் வேண்டும். நண்பர்க்கும் சமானர்க்கும், திரு (ஸ்ரீ), திருவாளர் என்றும் பெரியோர்க்குத் திருமான் (ஸ்ரீமான்), மகா - ள-ள ஸ்ரீ கனம், மகாகனம், என்றும் அவரவர் நிலைக்கேற்ற அடைகொடுத்துப் பெயரெழுதல் வேண்டும். பெண்டிர்க்குத் திரு. திருமகள், திருமதி என்னும் அடைகளிலொன்று எழுதப்படலாம். இருபாலார்க்கும் உயர்வு கருதும்போது, பெயர்க்குப் பின் அவர்கள் என்று குறிப்பிடல் வேண்டும். முகவரி ஆங்கில முறையில் ஆட்பெயர், அலுவல், கதவெண், தெரு, தபால் நிலையம், தாலுகா, ஜில்லா, மாகாணம், தேசம் என்னும் முறையிலும், தமிழ் முறையில் இதன் தலைகீழாகவும் இருக்கலாம். இவற்றுள் முன்னதே சிறப்புடைத்தாம். 2. வியாசம் - Essay வியாச விதிகள் - Rules of Composition மாணவர் வகுப்புவியாசம், தலைப்பில் பொருள் குறிக்கப் பெற்றும், இடப்பக்கம் வரந்தை (margin) யில் மேலே வியாச எண்ணுந் தேதியுங் குறிக்கப்பெற்றும் பெரிதுஞ் சிறிதுமின்றி வழக்கமா யெழுதும் எழுத்தில், பொருட் கோவைபடப் பாகியமைப்புடன், உயர்தரப் பாடசாலை மாணவரதாயின் காற்றாட் பக்கத்தில் மூன்று பக்கமும், கல்லூரி மாணவரதாயின் காற்றாட் பக்கத்தில் ஆறு பக்கமும் பேரெல்லையாகவைத்து, எழுத்துப் பிழை சொற்பிழை பொருட் பிழைகளின்றித் தெளிவா யெழுதப்படல்வேண்டும். வியாச நோட்டுப் புத்தகங்களில் என்றும் வலப்புறமே எழுதி, இடப்புறமெல்லாம் பிழை திருத்த வெற்றிடமாய் விடல் வேண்டும். வியாசப் பொருளமைப்பு வியாசப் பொருள் பொதுவாய், (1) முகவுரை அல்லது தோற்றுவாய், (2) பொருள் இலக்கணம் (Definition), (3) வகை, (4) கருவி, (5) செய்ம்முறை, (6) பயன், (7) உதாரணக் கதை, (8) முடிவு என்னும் எண் பாகுபாடு படுவதாகும். ஒருவரின் வாழ்க்கை வரலாறாயின் (1) பிறப்புவளர்ப்பு, (2) கல்வி, (3) அலுவல், (4) இல்லறம், (5) அருஞ்செயலும் பொதுநலத் தொண்டும், (6) குணம் அல்லது ஒழுக்கம் என்னும் அறுபாகுபாடு படுவதாகும். இவற்றுட் பொருட்கேற்பன கொண்டு, இடையிடை தொடர்மொழி, உவமை, பழமொழி, மேற்கோள் என்பன ஏற்ற பெற்றி யமைத்தெழுதல் நலம். ஒரு பொருளைப்பற்றிப் பல கருத்துகள் அமைத்துக்கொண்டு, அல்லது ஒரு கதையைப் பல நிகழ்ச்சிகளாக வகுத்துக்கொண்டு, அவற்றை முறைப்படுத்தி ஒவ்வொன்றையும்பற்றி ஒவ்வொரு பாகி யெழுதவேண்டும். 3. மாதிரி வியாசம் - Model Essay நாகரிகம் * நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லினின்றும் பிறந்தது. நகரகம் என்பது முறையே நகரிகம், நாகரிகம் எனத் திரிந்தது. ஆங்கிலத்திலும் நாகரிகம்பற்றிய வினை நகரப்பெயரினின்றும் பிறந்ததே. (Civilise from Civitas (Latin), city) * நாகரிகம் என்னுஞ்சொல் நாகர் என்னும் பெயரினின்றும் பிறந்த தென்றும், நாகரென்பார் பண்டைக் காலத்தில் நாகரிகத்திற் சிறந்திருந்தன ரென்றும், ஆயிரத்தெண்ணூறாட்டை முற்றமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. நாகர் என்பார் பண்டைக்காலத்தில் நாகநா டெனப்பட்ட கீழ்த்திசை நாடுகளில் வாழ்ந்துவந்த ஒரு மக்கள் வகுப்பார். நாக வணக்கமுடைமையின் அவர் நாகரெனப்பட்டார். நாகருடைய நாடு நாகநாடு. நாகரில் நாகரிகரும் அநாகரிகருமான இருவகுப்பார் இருந்துள்ளமையும், அவருள் நாகரிகரும் எவ்விதத்தும் தமிழரினும் உயர்ந்தவரல்லர் என்பதும் மணிமேகலையா லறியப்படும். ஆதலால், நாகரிகம் என்னுஞ் சொல் நாகர் என்னும் பெயரடிப் பிறந்ததன்று. நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை எனப் பொருள்படும். திருந்திய வாழ்க்கை உலகத்தில் முதன்முதல் நகரத்தில் தோன்றினமையின் நாகரிக மெனப்பட்டது. இக்காலத்தும் நாகரிகமில்லாதானைப் பட்டிக்காட்டா னென்றும், நாட்டுப்புறத்தானென்றும், பழித்தல் காண்க. நகரமல்லாதது நாடும் பட்டியும். * நாகரிகம் என்னுஞ் சொல்லைத் திருவள்ளுவர், பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் என்னும் குறளில், கண்ணோட்டம் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். இது பரிமேலழகர் உரையால் விளங்கும். கம்பரும் இச் சொல்லை இதே பொருளில் ஆண்டுள்ளார். கண்ணோட்டம் திருந்திய குணங்களில் ஒன்றாதலின் நாகரிக மெனப்பட்டதென்க. அறிவும் அதன்வழிப்பட்ட ஒழுக்கமுஞ் சேர்ந்து திருந்திய வாழ்க்கை யாகும். ஒழுக்கமின்றி அறிவுமட்டு மிருப்பின், அது நாகரிகமாகாது அநாகரிகத் தின் பாற்படுவதேயாகும். ஒழுக்கமில்லாத கற்றோன் கற்ற மூடன் என இழித்திடவேபடுவான். அறிவென்பது ஒழுக்கத்திற்குக் காரணமாகி, இயற்கையும் செயற்கையு மாகிய இருவகையா யிருப்பது. அவற்றுள், இயற்கையாவது குடிப்பிறப்பாலும் தெய்வத்தாலும் அமைவது; செயற்கையாவது கல்வியாலும் நல்லினத்தாலும் உண்டாவது. ஒழுக்க மென்பது அகம் புறமென்னும் இருவகைத் தூய்மை. அவற்றுள், அகத்தூய்மையாவது மனம் வாய் மெய் என்னும் முக்கரணங்களும் தூயவா யிருத்தல்; புறத்தூய்மையாவது உடம்பு, உடை, உணவு, காற்று, உறையுள் முதலியன தூயவாயிருத்தல். * பரிமேலழகர் திருக்குறளுரைப் பாயிரத்தில், ஒழுக்கத்தைப்பற்றி “xG¡fkhtJ அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று, அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல்'' என்று கூறியுள்ளார். இஃது எல்லார்க்கும் பொதுவான உயர்தர வொழுக்கமன்று. இதை அவ் வுரையாசியரே மீண்டும். அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடை மையின், சிறுபான்மையாகிய அச் சிறப்பியல்புகளொழித்து, எல்லார்க்கு மொத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி, இல்லறந் துறவ மென இருவகைநிலையாற் கூறப்பட்டது என்று நூலாசிரியர் கருத்திற்கேற்பக் குறித்துள்ளார். ஆதலால் ஒழுக்கமென்பது எல்லார்க்கும் பொதுவான முக்கரணத் தூய்மையே யன்றிக் குலந்தொறும் வேறுபட்ட வருணாச்சிரம தருமமன்று. இல்லறத்தில் அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஒருநிகரவா யெண்ணப் படும்; துறவறத்தில் அகத்தூய்மை புறத்தூய்மையினும் பன்மடங்கு சிறந்ததா யெண்ணப்படும். ஒருவன் எத்துணை எளியவனா யிருப்பினும், தன்னையும் தன் பொருள் களையும், உள்ளும் புறம்பும் தூயவாய் வைத்துக்கொள்வதே நாகரிகமாகும். கந்தையானாலும் கசக்கிக் கட்டுவதும், கூழானாலுங் குளித்துக் குடிப்பதும், குடிலானாலுங் கூட்டிக் குடியிருப்பதும் உயர்தர நாகரிகமே. அழகியனவும் விலையுயர்ந்தனவுமான உடைகளால் உடம்பைப் பொதிவதும், விலையும் சுவையுமிக்க உண்டிகளைப் பன்முறை யுண்பதும், மேனிலையும் அகலிடமுமுள்ள மாளிகைகளில் வாழ்வதும், வசதியும் விலையுயர்ந்தனவுமான வாகனங்களிற் செல்லுவதும்,இயந்திரத்தாலும் ஏவலாளராலும் வினைசெய்வதும், இன்னும் இவை போன்ற பிறவும், அறிஞரும் அறிவிலிகளுமான செல்வர்க்கே யுரிய ஆடம்பர வாழ்க்கையன்றி நாகரிக வாழ்க்கையாகா. இவற்றை நாகரிகமென் றெண்ணுவது மேலைப் புது நாகரிகம்பற்றிய திரிபுணர்ச்சியாகும். மேலைக் கல்விகற்று மேனாட்டுடை யணிபவரெல்லாம் நாகரிகத்திற் சிறந்தரென் றெண்ணுவதும் அறியாமையே. கல்வி எம்மொழியினு மிருக்கலாம். உடையுந் தட்பவெப்பநிலைபற்றித் தேசந்தோறும் வேறுபடுவதாகும். நாகரிகத்திற்கு இன்றியமையாத வேளாண்மை (ãwiu யுபசரித்தல்) தாழ்மை முதலிய சிறந்த குணங்களை, மேலை நாகரிக மறியாத நாட்டு மக்களிடையே மிகுதியாய்க் காண்கின்றோம். ஆகையால், நாகரிகமென்பது, செல்வர் வறியர் என்னும் இரு சாரார்க்கும் பொதுவான, துப்புரவும் ஒழுக்கமும் பற்றியதேயன்றி, செல்வர்க்கும் மேலையொழுக்கத்தார்க்குமே யுரிய பொருள்களின் அழகும் விலையுயர்வும் பற்றியதன்று. * இக் குறியிட்ட பாகிகள் உயர்தரப் பாடசாலை மாணவர்க்கு வேண்டாதவை. 4. வியாசவகை - Classification of Essays வியாசங்கள் ஒன்றன் வரலாறுரைப்பதும், ஒன்றை வருணிப்பதும், ஒன்றைக் கருதியுரைப்பதும்பற்றி வரலாறு, வருணணை, கருதியல் என மூவகைப்படும். 1. வரலாறு - Narrative Essay வரலாற்று வியாசம் (1) கதை, (2) சரித்திரம் (History) (3) வாழ்க்கை வரலாறு (Biography), (4) நிகழ்ச்சி (Event), (5) உரையாட்டு அல்லது தருக்கம், (6) வழிப்போக்கு என ஆறுவகைப்படும். 2. வருணணை - Descriptive Essay வருணணை வியாசம் (1) பொருள், (2) இடம், (3), காலம், (4) சினை, (5), குணம், (6) தொழில், (7) காட்சி, (8) நிகழ்ச்சி என எண்வகைப்படும். 3. கருதியல் - Reflective Essay கருதியல் வியாசம் (1) அறிவுரை, (2) சீர்திருத்தம், (3) கண்டனம் அல்லது மறுப்பு, (4) நகைமொழி ( Wits and Humour), 5. உன்னம் (Imagination) என ஐவகைப்படும். நிகழ்ச்சி இரண்டனுள், முன்னது உள்ளவாறுரைப்பது; பின்னது புனைந்துரைப்பது. 5. வியாசப் பொருள்கள் - Subjects for Composition 1. புலவர் - தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவை, கம்பர் முதலியோர். 2. அரசர் - கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலியோர். 3. சிற்றரசர் - பாரி, விசுவநாத நாயக்கர் முதலியோர். 4. சமயத்தலைவர் - புத்தர், ஏசுகிறிஸ்து, முகமது முதலியோர். 5. சமயத்தொண்டர் - நால்வர், இராமாநுஜர், விவேகானந்தர் முதலியோர். 6. பெருமக்கள் - பச்சையப்ப முதலியார், முத்துசாமி ஐயர் முதலியோர். 7. சீர்திருத்தியர் - ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் முதலியோர். 8. அடியார் - கண்ணப்பர், பட்டினத்தார் முதலியோர். 9. கலைஞர் - எடிசன், சந்திரபோஸ் முதலியோர். 10. கற்புடை மகளிர் - வாசுகி, கண்ணகி, திலகவதியார் முதலியோர். 11. பிராணிகள் - பட்டுப்பூச்சி, நாய் முதலியன. 12. இடம் - துறைநகர், புகைவண்டி நிலையம், பழநகர், மலைவளம், பொருட்காட்சி (Exhibition), விலங்கினச் சாலை (Zoo), சுரங்கம், தங்கசாலை, பல்பொருட்களம் (Museum) முதலியன. 13. காலம் - இளவேனில், மழைநாள். 14. நிகழ்ச்சி - வெள்ளம், பூகம்பம், எரிமலை, கடல்கோள், போர், பஞ்சம், புறப்போக்கு (Excursion). 15. வரலாறு - அகராதி, அச்சுவித்தை, ஆகாயவிமானம், கடிகாரம், நாணயம், பத்திரிகை, முச்சங்கம். 16. கொண்டாட்டம் - பண்டிகை, திருவிழா, விளையாட்டு, பட்ட மளிப்புவிழா (Convocation). 17. சீர்திருத்தம் - சமுதாயம், மதம், கிராமம், திருமணம். 18. தருக்கம்: அகத்தூய்மை, புறத்தூய்மை - எது சிறந்தது? அறக்கருணை, மறக்கருணை - எது சிறந்தது? ஆங்கிலம், தமிழ் - எது சிறந்தது? இயந்திரத்தினால் நன்மையா? தீமையா? இல்லறம், துறவறம் - எது சிறந்தது? உயர்தரப் பெண்கல்வி - நல்லதா? தீயதா? உருவ வணக்கம் - நல்லதா? தீயதா? உழவு, கைத்தொழில் - எது சிறந்தது? கடவுட்கும் உயிர்க்குமுள்ள இயைபு - பேதமா? அபேதமா? பேதாபேதமா? கட்டாய விளையாட்டு - மாணவர்க்கு நல்லதா? தீயதா? கல்வி, கேள்வி - எது சிறந்தது? கல்வி, கைத்தொழில் - எது சிறந்தது? கல்வி, செல்வம் - எது சிறந்தது? கல்வி வாயில் ( Medium of Instruction) - ஆங்கிலம், தமிழ் - எது ஏற்றது? குடியரசு (Republic), தனியரசு (Monarchy) - எது சிறந்தது? குடியரசு, பொதுநலக் குடியரசு (Communism)- பொதுமக்களரசு (Democracy), கற்பிப்பரசு (Dictatorship) - எது சிறந்தது? கொலைமறுத்தல் - இயலுமா? இயலாதா? செய்யுள், வசனம் - எது சிறந்தது? ஜாதகக்கணிப்பு - மெய்யா? பொய்யா? தனி வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை - எது சிறந்தது? திருமணத்தில் பெருஞ் செலவு - நல்லதா? தீயதா? நாட்டுக்கு நன்மை விளைப்பவன் - சிக்கனக் காரனா? செலவாளியா? நாட்டு வாழ்க்கை, நகர வாழ்க்கை - எது சிறந்தது? பத்திரிகை, சொற்பொழிவு - எது வலியுள்ளது? புலவன், போர்வீரன், அமைச்சன் - எவன் சிறந்தவன்? பெண்டிர் சமத்துவம் - தகுமா? தகாதா? மறுபிறப்பு - உண்டா? இன்றா? மரவுணவு, ஊனுணவு - எது சிறந்தது? மேலை நாகரிகத்தால் நன்மையா? தீமையா? மேனாடு, கீழ்நாடு - எது சிறந்தது? மேனாட்டிசை, கீழ்நாட்டிசை - எது சிறந்தது? மேனாட்டுடை, கீழ்நாட்டுடை - எது சிறந்தது? மேனாட்டு விளையாட்டு, கீழ்நாட்டு விளையாட்டு - எது சிறந்தது? விடுதிப்பள்ளி (Boarding School) வாழ்க்கை - நல்லதா? தீயதா? 19. பல்வகைப் பொருள்கள்: அருள், அற்ப அறிவு அல்லற்கிடம், அற்பம் அற்பமன்று, அன்பு, ஆசிரிய வணக்கம், ஆராயாமற் செய்தல், ஆலயப்பிரவேசம், இந்திரவிழா, இற்றைக்கல்வி யிருக்கவேண்டிய முறை, உடற்பயிற்சி, உணவுபற்றிக் கவனிக்கவேண்டியவை, ஒலிம்பிய விளையாட்டு, விரிவளர்ச்சி (Evolution), உருவுகண்டெள்ளாமை, உலக ஒற்றுமையை வளர்க்கும் விதம், உலகப் புதுமைகள், உலகம் ஒரு கூட்டுறவுச் சங்கம், உழைப்பின் சிறப்பு, எய்ப்பில் வைப்பு (Provision for the Future), எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது, ஒருவர் துன்பம் மற்றொருவர்க் கின்பம், ஒழுக்கம், ஒற்றுமை உரம், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல், கடன்படல், கல்வி, கள்ளுண்ணாமை, கற்றோர் கடமை, கற்பு, காலத்தின் அருமை, காலத்தின் மாறுதல், காலந்தவறாமை, குமரிநாடு, (Lemuria), கூர்நுதிக் கோபுரம் (Pyramids), கெடுவான் கேடு நினைப்பான், சகுனம் பார்த்தல், சர்வதேச சங்கம், செந்தமிழ்ச் சிறப்பு, தட்பவெப்பநிலையாற் குணம் வேறுபடல், தமிழிலக்கணத்தின் தத்துவ அமைதி, தமிழிலக்கியம், தமிழின் தொன்மை, தமிழை வளர்க்கு முறை, தமிழ் நாட்டிற் சங்கால சமுதாய நிலை, தனக்குழைப்பவன் பிறர்க்கும் உழைக்கிறான், தன்னலம் பாராட்டல், தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப் பற்று, தீண்டாமை விலக்கு, துன்ப நேர்ச்சி (Accident), நகர நலவழி, நட்பு, நலவழி (சுகாதாரம்), நன்றி மறவாமை, நற்பழக்கங்கள், நாட்டின் பொருளாதாரம், நிலையாமை, நூல்நிலையப் பிரசாரம், நோபெல் பரிசு, பண்டைத் தமிழரசியல், பண்டைத் தமிழ்க் கலைகள், பண்டைத் தமிழ்த் தெய்வங்கள், பண்டைத் தமிழர் நாகரிகம், பண்டைத் தமிழர் வாணிகம், பண்டைப் போர்முறை, பயணத்தின் பயன், பற்றாட்டு (Hobby), பாராளுமன்றம், பிறப்பால் சிறப்பில்லை, புது நிருமாணங்கள், புலான் மறுத்தல், பெற்றோர்ப் பேணல், போரின் நன்மை தீமை, முயற்சி, வறுமையிற் செம்மை, வாய்மை, வாழ்வை நீட்டிக்கும் வழிகள், வாழ்க்கையிற் சிறந்த பருவம், விஞ்ஞானக் கலை வளர்ச்சி, விடுமுறை கழிக்கும் விதம், விலங்கினத்திற் கிடர்செய்யாமை, வீட்டமைப்பு, வீரவித்தை (Circus), வேலையின்மையை விலக்கும் வழிகள். ------- இணைப்பு (அனுபந்தம்) - Appendix ஆங்கிலச்சொன் மொழிபெயர்ப்பு - Anglo - Tamil Equivalents Abbey - மடாலயம் Absent - (இராமன்) வரவில்லை Absence - இன்மை Admission - சேர்ப்பு Algebra - வரிக்கணக்கு Arch Bishop - அரசக் கண்காணியார், இராஜாதியட்சர் Art - தொழிற்கலை Astronomy - வானநூல் Attendance - வரவுப் பதிவு Attendance Register - வரவுப் பதிவுப் புத்தகம் Badminton - பூம்பந்து Band - மேலை வாத்தியம் Bank - நாணய நிலையம், வட்டிக் கடையம் Bar - at - law - சட்டப்பாரர் Basket Ball - கூடைப் பந்து Bat - மட்டை Blottting Paper - மையொற்றி Boarding School - விடுதிப் பள்ளிக்கூடம் Botany - மரநூல், தாவரநூல் Brush - புருசு, தூரிகை Camera - படம்பற்றி Camp - பாளையம் Cathedral - மகாலயம் Certificate - தகுதித் தாள் Challenge - அறைகூவு Chapel - சிற்றாலயம் Chemistry - இரசாயனம், இயைபு நூல் Cinema - நிழற்படம் Coach - கோச்சு, வையம் Collect - தண்டு Collector - தண்டலாளர் Competition - இகல், போட்டி Cork - தக்கை, அடைப்பான் Corporation - மாநகராண்மை Cricket - மண்டிலப் பந்து Cub Pack - குருளையர் குழு Cup - கிண்ணம் Cycle - மிதிவண்டி District Board - நாட்டாண்மைக் கழகம் Drawing - ஓவியம், சித்திரம் Duster - துடைப்பான் Engine - எந்திரம், சூழ்ச்சியம் Engineer - எந்திரிகர் Entrance Ticket - நுழைவுச் சீட்டு Evening Bazaar - அல்லங்காடி Examination - தேர்வு, பரீட்சை Experiment - ஆய்வு, சோதனை Fair Note - book - செவ்வைக் குறிப்புப் புத்தகம் Foot Ball - காற்பந்து Fountain Pen - ஊற்றிறகி Game - விளையாட்டு, வேட்டை Geography - திணைநூல், பூகோளநூல் Geology - நிலநூல் Goods Train - பொருட் புகைவண்டி Governer - General - தலைமை ஆள்நர் Gramophone - ஒலிப்பெட்டி Grand Howl - பேரூளை Graph - கொட்டறைக் கணக்கு Graph paper - கொட்டறைத்தாள் History - சரித்திரம், சரித்திர நூல் Hockey - கோற்பந்து Hostel - ஊணகம் Instrument Box - (கணிதக்) கருவிச் செப்பு Intervel - இடையீடு Judge - தீர்ப்பாளர், நடுவர், காரணிகர், நீதிபதி Laboratary - ஆய்வுக்களம் Lawer - சட்டப் புலவர், வழக்கறிஞர் Leaving Certificate - விலகற் பத்திரம் Leisure - ஒழிவு Lens - வில்லை Life Insurance - ஆயுள் வைப்பு Life Insurance Co - ஆயுள் வைப்பகம் Light House - கலங்கரை விளக்கம் Logic - தருக்க நூல் Long Term - நெடுந்தவணை Machine - மணை, பொறி Magic Lantern - ஒளிப்படம் Majority - பெரும்பான்மை Manager - பாலனர் Manage - பாலி, சமாளி Mark - வரை, அம்சம் Match - சமனாட்டு Mathematics - கணிதம் Medical Doctor - மருத்துவ வைத்தியர் Metropolitan - தலைமைக் கண்காணியார், பிரதமாத்தியட்சர் Minority - சிறுபான்மை Mission - விடையூழியம் Missionary - விடையூழியர் Motor - மோட்டார், இயக்கி Municipality - நகராண்மை Natural Science - இயற்கை நூல் Observer - அவதானிகர், நோக்குநர் Office - காரியாலயம், அலுவலகம் Officer - அலுவலாளர் Oil Painting - நெய்வண்ணப் பூச்சு Parliament - பாராளுமன்று, மகா மந்திரசபை Pass a resolution - தீர்மானத்தை நிறைவேற்று Passport - கடவுச் சீட்டு Passenger Train - ஆட்புகைவண்டி Paster - பாதிரியார், ஐயர், குரு Pen - இறகி Pencil - எழுதுகோல் Photo - புகைப்படம் Philology - மொழிநூல் Philosophy - தத்துவ நூல், மெய்ப்பொருளியல் Physiology - உடம்பு நூல் Physics - பூதநூல் Ping - Pong - மேசைப் பந்து Play - ஆட்டு, ஆட்டம் Playground - ஆடிடம் Point - புள்ளி Police - நகரச் சேவகம் Policeman - நகரச்சேவகன் Post Office - தபாலகம், அஞ்சலகம் Present - (ïuhk‹) வரவு Presence - உண்மை, முன்னிலை Principal - தலைவர், முகாமையர் Principal Speaker - தலைமை யுரைஞர் Professor - பாரகர் Progress Report - தேர்ச்சியறிக்கை Propose - முன்னிடு Proposal - முன்னீடு Psychology - மெய்ப்பாட்டியல் Public Hall - பொதுமன்றம் Race - பந்தயம் Radio - ஒலிவிளம்பி Recess - இடைவிடுதி Record - பதிவு Referee - பொதுவர் Register - பதிவுப் புத்தகம் Retire - ஓய் Rikshaw - இழுவண்டி Rough Note - book - கரட்டுக் குறிப்புப் புத்தகம் Rover - மேற்சாரணன் Rubber - அழிப்பான் Savings - மீத்தம் Savings Bank - வைப்பகம் Science - சாஸ்திரம், அறிவியற் கலை Scout Troop - சாரணப்படை Second - வழிமொழி, ஆதரி Selection - தேர்தல், தெரிப்பு Shield - கேடகம் Short Term - குறுந்தவணை Solicitor - மன்றாடியார் Sound Box - ஒலிக்கரண்டகம் Speak against - வெட்டிப்பேசு Speak for - ஒட்டிப்பேசு Sports - பந்தய விளையாட்டு Station - கெடி, நிலையம் Substitute - பதிலி Supervise - மேற்பார் Superviser - மேற்பார்வலர் Supervision - மேற்பார்வை Supplementary Speaker - சார்புரைஞர் Surgeon - அறுப்பு வைத்தியர் Team - கட்சி Telegram - தந்தி, தொலைவரி Telegraph - தந்தித்தபால், தொலைவரியஞ்சல் Telephone - தொலைவாணி, தொலைபேசி Telescope - தொலையாடி Television - தொலைகாணி, தொலைக்காட்சி Tennis - மட்டைப்பந்து Training School - (ஆசிரியப்) பயிற்சிச்சாலை Tram - மின்சாரவண்டி Tournament - போர்விளையாட்டு Union - ஊராண்மை Vice - Roy - துணையரசர் Volley Ball - கைப்பந்து Volume - சம்புடம், கவளிகை Wireless - கம்பியிலி Wireless Telegraph - கம்பியில்லாத் தந்தி Writer - எழுத்தாளர் Zoology - விலங்கு நூல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1963 (1932) கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. தி.பி. 1965 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1974 (1943) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பாவாணர் அவர்கள் சேலம் கல்லூரியில் பணி யாற்றியபோது தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் அவர்கள் அக்கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத் திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல் லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக் காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?” - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். *****